மூன்றாந்திருவாய்மொழி -‘ஊனில்வாழ்’
முன்னுரை
ஈடு : ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான துன்பமெல்லாம் தீரும்படி வந்து கலந்த கலவியினை அருளிச்செய்கிறார். இத்திருவாய்மொழியில். ‘ஆயின், இது, ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியினைச் சார்ந்தன்றோ இருத்தல் வேண்டும்?’ எனின், ஆம்; முதல் திருவாய்மொழியின் ஈற்றுப் பாசுரத்தில் இறைவனுடைய முதன்மையினை அருளிச் செய்தாராயின், அது சம்பந்தமாகத் தோன்றிய அம்முதன்மையினை இரண்டாந்திருவாய்மொழியில் அருளிச்செய்தார்; பின்னர், துன்பம் எல்லாம் தீரும்படி வந்து கலந்த கலவியினை அருளிச்செய்கிறார் இத் திருவாய்மொழியில். ஆக, இரண்டாந்திருவாய்மொழி, நடுவில்1பிராசங்கிகமாக வந்ததித்தினை.
2தாம் பெற்ற பேற்றின் கனத்தைப் பார்த்தார்; அது அளவு இறந்ததாய் இருந்தது; தமது முயற்சி காரணமாக வந்ததாயின் அளவுபட்டு இருக்கும்; எல்லாம் வல்ல இறைவன் காரணமாக வந்த தாகலின் அவ்வின்பம் கனத்திருந்தது. மற்றும், தாம் அநுபவித்த அநுவபத்துக்குள்ளே 3எல்லா ரசங்களும் உண்டாய் ஒப்பும் உயர்வும் அற்றதாய் இருந்தது; ‘இத்தகைய பேற்றுக்கு உசாத்துணையாவார் யார்?’ என்று பார்த்த இடத்தில் சம்சாரத்திலே ஆள் இல்லாமையாலே, அவன் தன்னோடு ஒக்கப் 4பிராப்பியருமாய் அவனை நித்தியாநுபவம் பண்ணாநிற்பாருமாய், பகவானுடைய அநுபவத்துக்குத் தேசிகருமாய் இருக்கிற நித்திய சூரிகள் திரளிலே சென்று புக்கு ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு அநுபவிக்கப் பெறுவது எப்பொழுதோ?’ என்னும் 1அநவாப்தியோடே இத்திருவாய் மொழியினைத் தலைக்கட்டுகிறார். ‘ஆயின், ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியிற்கூறியது போன்று, பிரீதிக்கும் பறவை முதலியவற்றைத் தேடாது, ஈண்டு நித்திய சூரிகளைத் தேடுவதற்குக் காரணம் என்னை?’ எனின், ‘வாயும் திரை உக’ளில் ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திரியக்குகளையும் 2அசேதநங்களையும் சேர்த்தார்; இங்கு, கலவியால் வந்த பிரீதிக்கு இயற்கை அறிவையுடைய நித்தியசூரிகளைத் தேடுகிறார்.
இறைவன் ஆழ்வாரோடு கலந்த கலவி, பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி 3கலந்த கலவியைப் போன்று இருந்தது.
3. இவ்விடத்தில், ஸ்ரீராமாயணச் சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள்:
ராமஸ்து – பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி கலந்த கல்வியைச்
சொல்லுகிறது. ‘பித்ரு ஸூஸ்ரூஷண பரரானார், தர்மங்களைப் பிரவர்த்திப்பித்தார், தேவ
சமாராதளம் பண்ணினார்’ என்றாயிற்றுச் சொல்லிக் கொண்டு போந்தது: இப்படிப் போந்த
இவர், இப்போது, ‘வாத்ஸ்யாயநங் கற்றுக் காமதந்த்ரமேயோ நடத்திப் போந்தது?’
என்னும்படி வேறுபட்டார். சீதயா ஸார்த்தம் 5 பரமபதத்திலே செவ்வியோடே வந்தவளும்
பிற்பாடையாம்படி போக ஸ்ரோதஸ்ஸிலே முற்பாடரானார். விஜஹார – இப்படிப்
பரிமாறச் செய்தேயும் போக உபோத்காதத்துக்கு அவ்வருகு பட்டிலர். பஹூந் ருதூந் –
‘பஹூந் சம்வத்ஸாரந்’ என்னாதொழிந்தது, ‘ அவ்வோ கால விசேஷங்களுக்கு அடுத்த
போக உபகரணங்களைக்கொண்டு புஜித்தார்’ என்னுமிடம் தோற்றுகைக்காக. மனஸ்வீ –
ம்ஸ்லேஷத்தில் பிராட்டி கோலின அளவுக்கு அவ்வருகு பட்டுப் பரிமாறினார். தத் கத:-
தஸ்யாம் கத: – சாதி குணங்கள் திரவியத்துப் பிரகாரமாய்ப் பிரிக்க ஒண்ணாதபடியாய்
இருக்குமா போலே, பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி. தஸ்யா நித்யம் ஹ்ருதி
ஸமர்ப்பித : – இவர் உயர்த்தியை அறிந்திருப்பாள் ஒருத்தி ஆகையாலே ‘அப்பெரியவன்
இப்படித் தாழ விடுவதே!’ என்று அச் செயலிலே தன் நெஞ்சு துவக்குப்பட்டு ‘அது அது’
என்று கிடக்கு மாயிற்று. அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவிதான்.
நேர் சங்கதி இது தன்
நடிவில் திண்ணன் வீடு
பிராசங்கிகமாக வந்தது
அடியவர் உடன் என்று கூடப் போகிறேன் மனோ ரதம் வெளி இடுகிறார்
கட்டி அழ -முன்பு –
ஈச்வரத்வம் நடுவில் -வாயும் திரை உகளும் -அடுத்து –
நேர் சங்கதி –
ஈஸ்வரன் இவர் பிரகிருதி அறியும் என்பதால்
தரிப்பை கொடுக்க பரத்வம் காட்டி –
இது போல் பிராசங்கிகம் எங்கு எல்லாம் என்பதை பட்டியல் -அரும் பொருளில் காட்டி அருளுகிறார் .
தாம் பெற்ற பேற்றை கணம் பார்த்தார்
சர்வேஸ்வரன் தானே கொடுத்தது
தம் அடியால் வந்தால் -குறைவாக இருக்கலாம் –
பெருமாளுக்கு கொண்டை பண்ண -ராஜா பட்டார் உடன் -நல் முத்து
15000 rs அன்று 40 வருஷம் முன்பு -21 வாசி ஸ்வாமிகளுக்கு
தனிகர் இடம் -கேட்டு நாலு பேரும் போக –
என்ன தோன்றுதோ கொடுங்கோ -பட்டர் சொல்ல –5000 –
அடுத்த நாள் பாங்கு சென்று அனைத்தையும் கொடுக்க
அன்றி சவரன் 400 rs விலை .
அது போல் -தம் அடியாக வந்தால் அளவு பட்டதாக இருக்கும் -உதாரணம்
தான் அனுபவித்த ரசங்களில் எல்லா ரசமும்
தேன் பால்கன்னல் அமுதும் ஒத்து
சமாத்யபிதிக்க -சமமாகவோ மேலாகவோ இன்றி
பேற்றுக்கு உசாத் துணை யாவார்யார்
சம்சாரத்தில் ஆள் இல்லையே –
நித்ய சூரிகளை -எப்பொழுது சேரப் போகிறோம்
அவனோடு ஒக்க பிராப்யர் -அவனை நித்ய அனுபவம் செய்யும் -பகவத் அனுபவத்தில் தேசிகர் வல்லவர் –
அனுபவம் செய்தவர் காட்டிக் கொடுப்பவர் -உசாத் துணை -பொருத்தம் நித்யர் –
போதயந்தக பரஸ்பரம் -மத் சித்தா -துஷ்யந்தி ரமந்திச –
ஸ்வாமி – இரண்டும் சந்தோஷம் –
பரஸ்பரம் பாவயந்தி சங்கர
பக்த்யாந்தா ச்ரோத்யந்தா -இரண்டும் கேட்பவரும் சொல்பவரும் ஆனந்தம்
அனுப்பிக்க பெறுவது எப்போதோ பாரிப்புடன் அருளிய திரு வாய் மொழி
வானின் நிலம் அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ –
வாயும் -திரை உகளும் கட்டி அழ -அறிவு கலங்கி அறிவு நடை யாடாத திர்யக்-அங்கு
இங்கு அறிவு கூடி சம்ச்லேஷத்தால் வந்த ப்ரீதி
அறிவில் மிக்கவர் உடன் சகவாசம் பிரார்த்திக்கிறார் இங்கே
ராமச்து சீதா -சார்த்தம் -திருக் கல்யாணம் ஆன பின்பு -அயோத்யாயாம் -வன பிரவேசம் முன்பு
ருதுக்கள் அனுபவிக்க –
ராமகா து -ஏக தத்வம் போல கலந்த கலவி
து -பித்ரு சுஸ்ருனு இது வரை தர்மம் நிலை நாட்டி இதுவரை
காம திர்ஹந்த்ரம் நடத்தி கரை கண்டவர் போல்
சீதையா சார்த்தம் -அவளும் -இன்பக்கேளிகள்
பரம பதத்தில் செவ்வி உடன் வந்தவளும் இந்த விஷயத்தில் பின்பட்டு
போக உபோத்காததுக்கு அவ்வருகில் போக -ஆரம்பித்தார்கள்
பகு குண்- ருது வருஷம் சொல்லாமல்
அந்த கால போக வஸ்துகள் கொண்டு ரசித்தார்கள்
மனச்வி -சம்ச்லேஷத்தால் பிராட்டி கோலின அளவு அதிகமாக
தத்-ஜாதி குணங்கள் பிரிக்க ஒண்ணாத படிஒறு நீராக கலந்து
அப்ருக்தக் பிரிக்க முடியாத –
உயர்த்தி அறிந்தவள் ஆகையாலே -அப்பெரியவன் இப்படி தாழ விடுவதே
சீதை அது அது என்று கிடக்குமா போலே
பிராவண்யம் -துவக்கு பட்டு –
ஒரு நீராக கலந்த படி இங்கு அருளி
உசாத் துணை பாரிப்புடன் தலைக் கட்டுகிறார் .
ஊனில்வாழ் உயிரே! நல்லை, போ! உன்னைப்பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என்அம்மான்
தானும்யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும்பாலும் நெய்யும் கன்னலும் அமுதும்ஒத்தே.
பொ – ரை : சரீரத்தில் வசிக்கிற மனமே! நீ மிகவும் நல்லை நல்லை! உன்னை நான் துணையாகப் பெற்ற காரணத்தால், நித்தியசூரிகட்குத் தலைவனும், மது என்னும் அரக்கனைக் கொன்றவனும், என்னை அடிமை கொண்டவனுமான இறைவனுக்கு யானும் கலந்த கலவியிலே எல்லாச் சுவைகளும் உண்டாகுமாறு, தேனும் பாலும் நெய்யும் கருப்பஞ்சாறும் அமுதுமாகிய பொருள்கள் தம்மில் கலந்தாற்போன்று கலந்தோம்.
வி-கு : ‘ஊன்’ என்பதில் னகரம் சாரியை, ‘ஊ’ என்பதே பெயர், ஊ – தசை. ‘கலந்தொழிந்தோம்’ என்பது, ஒரு சொல் நீர்மையது; தொடர்மொழியாகக் கோடலுமாம்.
ஈடு : முதற்பாட்டில், 1இராச்சியத்தை இழந்த இராஜபுத்திரனை ஒருவன் இராச்சியத்திலே பிரவேசிப்பித்தால், ‘இவனாலே நாம் இப்பேறு பெற்றோம்’ என்று, அவன் அவனைக் கொண்டாடுமாறு போன்று, ‘கைங்கரிய சாம்ராச்சியத்திற்கு இட்டுப் பிறந்த வைத்து நெடுநாள் அதனை இழந்து கிடக்க, இந்நெஞ்சு அன்றோ இப்போது அதனைத் தந்தது?’ என்று தம் திருவுள்ளத்தைக் கொண்டாடுகிறார்.
ஊனின் வாழ் உயிரே – சரீரத்திலே வசிக்கிற உயிரே! இவ் விளியால், ‘பரமபதத்தைப் பெற்று அங்குப் பல வகை வடிவை உடையனாகி அனுபவிக்கிற இடத்திலேயோ நீ உதவி செய்தாய்? 2எழுவகைத் தாதுக்களாலான சரீரத்திலே நித்தியசூரிகள் அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ உதவினாய்?’ என்ற தொனிப்பொருள் தோன்றும், இனி, ‘ஊனில் வாழ் உயிரே’ என்பதற்குச் ‘சரீரத்தைப் பற்றி அனுபவிக்கிற அனுபவத்தையன்றி, அதற்கு அப்பால் வேறு ஒன்றனையும் அறியாதே வாழ்ந்து போன உயிரே!’ என்று பொருள் கூறலுமாம். இவ்விளியால், ‘நெடுநாள் இவ்வுலக இன்பங்களை நுகர்ந்து போந்த நீ, அவ்வுலக இன்பத்துக்குக் கைதர நிற்பதே!’ என்ற தொனிப்பொருள் தோன்றும். இப்பொருளில் வாழ்தல் – அனுபவித்தல். ஈண்டு ‘உயிர்’ என்றது, மனத்தினை. ‘ஆயின், மனத்தை ‘உயிர் ‘ என்பான் என்?’ எனின், உயிருக்கு 1தர்ம பூத ஞானம் நித்தியமாய் இருக்கவும், 2’மனிதனுக்கு மனமே பந்தங்கட்கும் மோக்ஷத்திற்கும் காரணம்’ என்கிறபடியே, ‘பந்த மோக்ஷங்களுக்குக் காரணம் மனமே,’ என்கிற பிரபதாந்யத்தைப் பற்ற ‘உயிரே’ என்று ஆத்துமாவை விளிக்குமாறு போன்று விளிக்கிறார். 3‘நல்லை போ – நல்லை வா’ என்றபடி. இனி, ‘நல்லை நல்லை!’ என்று கொண்டாடுகிறார் என்று கோடலுமாம். அன்றி ‘போ’ என்பது, விளியாகவுமாம்.
‘நடுவே என்னைக் கொண்டாடுகிறது என்?’ என்ன, ‘உன்னைப் பெற்று – பிறப்பிற்குக் காரணமாகப் போந்த உன்னை மோக்ஷத்திற்குக் காரணமாகப் பெற்று. அதாவது, இறைவனும் என்றும் உளன்; அவன் சம்பந்தமும் அநாதி; அவன்4எதிர் சூழல் புக்குத் திரியா நிற்கவும், நீ அவனுக்கு முகங்காட்டாமையால் அன்றோ நெடுங்காலம் இழந்திருந்தது? இன்று நீ முகங்காட்டினமையால் அன்றோ இப்பேறு பெற்றது?’ என்றபடி. ‘ஆயின், நீர் பெற்ற பேறு எது? என்ன, சொல்லுகிறார் மேல்: வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் தானும யானும் – தான் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும் அவதரித்து, மதுவாகிற அசுரனைப்போக்கியது போன்று, என்னுடன் கலப்பதற்குத் தடைகளாய் இருந்தனவற்றைப் போக்கி என்னைத் தோற்பித்துத் தன் பக்கலிலே கைங்கரியத்திலே மூளும்படி செய்த தானும் கைங்கரியத்திற்கு விஷயமாக உள்ள யானும், இனி, ‘தானும் யானும்’ என்பதற்கு, ‘என்னைப் பெறுகைக்கு நெடுநாள் எதிர்சூழல் புக்கு விடாய்ப்பித்த தானும், ‘வாயுந் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியில், ‘கண்ணாற்கண்ட பொருள்கள் அடங்கலும் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றனவாக நினைத்து விடாய்த்த நானும்’ என்றும், ‘கிருஷி செய்த தானும், கிருஷிக்கு விஷயமாக உள்ள நானும்’ என்றும் பொருள் கூறலும் ஆம்.
எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம் –1‘ஆயிரத்தில் ஒன்றும், கடலிற்குளப்படியும் போலே, தானும் நானும் ஆன சேர்த்தியிலே எல்லா ரசங்களும் பிறக்கும்படி கலந்தோம்; நித்திய விபூதியிற் சென்று புகினும் இப்பேற்றை அசையிட்டு இருக்குமித்தனை; அங்கு ஏற்றமாகச் செய்யலாவது இல்லை; இதனுடைய பிரவின்மையே அங்குள்ளது,’ என்பார், ‘கலந்தொழிந்தோம்’ என்கிறார். இனி, பரமபதத்திற்குப் போகத் தேடுவது, உசாத்துணைக்காவும், இச் சேர்த்தி இடைவீடு இன்றி இருத்தற்குமாம். ‘நன்று; என்போலே கலந்தோம்?’ என்னில், ‘தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தோம்’ என்கிறார். இதற்கு, ‘ஒரு சாதிப் பொருள்கள் தம்மில் ஒன்றனோடு ஒன்று கலந்தது போன்று கலந்தோம்’ என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பொருள் அருளிச்செய்வர். அதாவது, தேனும் தேனும் கலந்தாற் போலவும், பாலும் பாலும் கலந்தாற்போலவும், கன்னலும் கன்னலும் கலந்தாற்போலவும் அமுதும் அமுதும் கலந்தாற்போலவும் என்பதாம்.
2இதற்கு இவற்றைச் சுவையுடைப்பொருள்களுக்கு எல்லாம் உபலக்ஷணமாக்கித் ‘தானும் நானுமாக கலவிக்குள்ளே எல்லா ரசங் களும் பிறக்கும்படி கலந்தோம் என்கிறார்’ என்று எம்பெருமானார் பொருள் அருளிச்செய்வர். 1‘சர்வ ரஸ: சர்வ கந்த:’ என்கிற இறைவனோடே கலக்கும் கலவி ஆதலானும், ஞான ஆனந்தங்களையுடைய இறைவனும் ஆத்துமாவும் கலக்கிற கலவி ஆதலானும் சர்வ ரகங்களும் பிறக்கத் தட்டு இல்லை.
நன்று; ஆளவந்தார் நிர்வாகத்திலே, ‘தேனும் தேனும் கலந்தாற்போலே கலந்தோம்’ எனின், 2இவ்விரண்டனையும் சேர்த்துச் சொல்லும்போது, வருவது ஓர் அளவின் மிகுதி உண்டு அன்றே? அவ்வளவின் மிகுதிதானே பொருள்கள் இரண்டு என்பதற்கு ஏற்ற பிரமாணமாம்.
1. ‘ஆயிரம் என்ற எண்ணுடன் ஒன்று என்ற எண்ணும், கடல் நீருடன் குளப்படி நீரும்
சேர்ந்தது போன்று’ என்பதாம். இவ்வுவமைகள் இறைவனுடைய ஞான ஆனந்தங்களின்
மிகுதியையும், ஆழ்வாருடைய ஞான ஆனந்தங்களின் சிறுமையினையும் காட்ட வந்தன.
குளம்பு அடி – குளப்படி: ‘ஒரு விலங்கானது வைத்த குளம்பினது அடிச்சுவட்டில் தங்கிய
நீர்’ என்பது பொருள்.
2. ஆளவந்தார் நிர்வாஹத்தில், ‘தானும் யானும் எல்லாம் தன்னுள் தேனும்பாலும் நெய்யும்
கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தொழிந்தோம்’ என்று கூட்டிப் பொருள் காண்க.
எம்பெருமானார் நிர்வாஹத்தில், ‘தானும் யானுமான தன்னுள் (கலவிக்குள்) தேனும்
பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் எல்லாம் ஒத்து (உண்டாம்படி) கலந்தொழிந்தோம்’
எனக் கூட்டிப் பொருள் காண்க.
சோராமல் -அனைத்தையும் கொண்டவன் -தன்னையும் கொண்டு கலந்தான் என்றார் முன்னம் –
ராஜ புத்திரன் பிரவேசித்து -இழந்த ராஜ்ஜியம் காட்டி கொடுத்து சேர்த்தவனை கொண்டாடுவது போல்
இவனாலே இப் பேறு பெற்றோம்
நெடு நாளாக இழந்ததை கொடுத்தவனை கொண்டாடுவது போல்
முன்புற்ற நெஞ்சே
நம்பியை காண நங்கைக்கு ஆயிரம் கண் வேண்டும்
தம்பியை -காண -தவம் உடைத்து
முனிவனை இறைஞ்சும் என்பர்
விச்வாமித்ரரை கொண்டாடினது போல்
தேனும் பாலும் நெய்யும் கன்னல்கும் அமுதும் ஒத்தே
ஊன் சரீரம் வர்த்திக்கும் உயிர் என்னுதல்
சரீரம் பற்றி அதையே வாழ்ச்சியாக கொண்ட உயிர் –கிணற்று தவளை போலே
அவ்வருகு ஓன்று அறியாத உயிர்
இந்த சரீரத்திலே வாழ்கிறாயே ஆச்சர்யம் தானே
வையத்து வாழ்வீர்கள்
வாழ்ச்சி -போதுவீர் போதுமினோ -வையத்து -இங்கும் வாழ்வீர்காள்
ஓடி வந்தீர்களே
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளினை கீழ் வாழ்ச்சி
ஊனிலும் வாழும் உயிர் -இங்கும் அது போல் -அவனை அனுபவிக்க சகாயம் பண்ணி –
ஆக மூன்று அர்த்தம் -கொண்டாடும் அர்த்தம் இந்த பிரகரணத்தில்
மாம்ச -மஜ்ஜாச்திகள் சரீரத்தில் நித்ய சூரிகள் அனுபவம் கொடுத்தாயே
நானா பாவம் -அங்கு அனுபவிக்க -சகஸ்ர்ச பவதி -அனுபவத்துக்கு தடை இல்லையே
பஞ்ச உபநிஷத் மயமான சரீரம்
மாம்ச –மூத்திர -எலும்பு -தோல் =மலம் -நரம்பு வேண்டா நாற்றம் -இங்கு கொடுத்தாயே
வேதனை –வேத மயன் -தொழுவார் விண்ணுலாரிலும் சீரியரே –
விரோதிகள் நடுவில் அனுபவிக்க –
நாரதர் -எண்ணெய் கிண்ணி கொண்டு சுத்தி -அவனை நினைக்காமல் புராண கதை
எண்ணெய் கொண்டு என்னையே மறந்தாயே –
வைராக்யத்துக்கு பழக்க–அனைத்தையும் – சாதித்து உண்ணாமல் தனியன் எல்லாம் –
அப்யாசம்-மனசு வாயு விடகட்டுபடுத்த துர் லபம்-அப்யாசத்தாலும் வைராக்யத்தாலும் உறுதி கொண்டே –
பாவே வைராக்கியம் -இருக்கும் பொழுது வைராக்கியம் –
நெஞ்சே இந்த சரீரத்தில் இருந்தும் உபகரித்தாயே -வாழ்ச்சி
அனுபவிக்கி
பிராக்ருத புசித்து போன நீ அப்ராக்ருத அனுபவம்துணை வந்தாயே –
மனசை கொண்டாடுகிறார் உயிர் என்பான் என் என்னில்
ஆத்மாவுக்கு தர்ம பூத ஞானம் நித்யம்
பந்த மொஷதுக்கு ஹேது மனஸ் தானே –
மனசா ஏவ மனுஷ்ய பந்த மோஷ ஹேது பிராதாண்யம் பற்ற உயிர் என்கிறார்
நல்லை போ -நல்லவன் போ
விபரீத லஷனையால் வா என்கிறார்
நல்லை கொண்டாடுகிறார்
போ –சம்போதனம் -நல்லை நல்லை என்னுதல் –
அல்ல -நான் அல்ல -தப்பு நன் அல்லேன் -நீ அல்லை -அவள் அல்லள்- அது அல்ல –
நல்லை -சப்தம் முன்னிலை வார்த்தை
நடுவே எண்ணெய் கொண்டாடுவது எதற்கு
எம்பெருமானுக்கும் உமக்கும் நடுவில் யார் -நெஞ்சு கேட்டதாம்
பந்த ஹேதுவாக போந்த நீ மோஷ ஹேதுவாக
ஈஸ்வரனும் என்றும் உண்டு -தத் சம்பந்தமும் அநாதி
இன்று தான் மனஸ் சககரிக்க அனுபவம் பெற்றோம்
அதனால் -கொண்டாடுகிறார்
அவனுன் எதிர் சூழல் புக்கி நிற்க
ஆபி முக்க்யம்செய்ததால் பேறு பெற்றோம்
என்ன பேறு
வானுளார் பெருமான் -நித்ய சூரிகள் அதிபதி –கலந்து ஒழிந்தோம்
மது சூதனன்
போக்கினது போல்
என் அம்மான் -சம்ச்லேஷ விரோதி போக்கி –
என்னை எழுதி கொண்டான் –
தன் பக்கல் கைங்கர்யம் கொண்டான்
வாயும் -கண்ணால் கண்ட பதார்த்தங்கள் -பகவத் அலாபத்தால் நோவு படுவதால் -கட்டி அழுது விடாய்த்த நானும்
எதிர் சூழ புக்கு அவனும் விடாய்
கிருஷி பண்ணின தானும் கிருஷிக்கு விஷயமான நானும்
திரு வெள்ள குளம் -அண்ணன் கோவில் பெருமாளுக்கு அந்த பெயர்
பெரும் குளம் -அங்கும் பெருமாள் பெயர் -மரகத மணி தடம்
வாசத் தடம் போல் வருவானே
தான் அடிமை செய் விடாய் தானானான்
அடிமை கொள்ள அவன் விடாய்த்தான்
வெள்ளத்தில் முழுகி பிள்ளை பெருமாள் ஐயங்கார் பாசுரம் –
தன்னுள்ளே கலந்து ஒழுந்தோம்
ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குழப்படி போல்கலந்தோம்
எல்லா ரசங்களும் பிறக்கும்படி
ஒழிந்தோம் நித்ய விபூதியில் புக்காலும் அசை இட வேண்டியது தான்-
மறுபடியும் நினைத்து -நினைத்து இதே அனுபவம்
இதனுடைய அவிச்செதமே அங்கு உள்ளது -இது ஒன்றே வாசி –
இடை வெளி இல்லாமல் விட்டு போகாமல் நித்தியமாய் இருக்கும்
இப்படி இங்கே இருக்க பரம பதம் தேட இரண்டு காரணங்கள்
உசாத் துணை உண்டு -நித்தியமாய் இருக்கும் பிரகிருதி சம்பந்தம் –
இங்கு பண்ணினால் முதுகு கடுக்கும் -தினவு எடுக்கும் சரீர உபாதை -இங்கு உண்டே –
விசசேதம் இன்றி கைங்கர்யம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் -கருப்பஞ்சாறு -அமுதும் –
ஆள வந்தார் அருளி செய்ததாக திரு மாலை ஆண்டான் நிர்வாகம்
தேனும் தேனும் கலந்தால் போலே ஏக ஜாதி த்ரவ்யம் போலே
எம்பெருமானார் -தம் கலவியில் எல்லா ரசங்களும் கலந்தது போல் பஞ்சாமிர்தம் –
ராசா பதார்த்தங்கள் உபலஷனம்
கலவியில் இல்லாத ரசமே இல்லை என்னும் படி சம்ச்லேஷித்தோம்
சர்வ கந்த சர்வ ரச என்கிற வச்துவுடன் கலந்தது
ஞான ஆனந்த வஸ்து இரண்டுமே -அனைத்துமே உண்டே
அத்வைதமா -ஐக்கியம் இல்லை –
பரிமாண ஆதிக்யம் உண்டே -சேர்த்த தேனும் சேர்க்க பட்ட தேனும் சேர்ந்து அளவு கூடுமே
த்ரவ்ய சத்பாவம் பிரமாணம் –
நாழி தேனும் நாழி தேனும் கூட்டி இரண்டு நாழி தென் ஆகுமே
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.