இதி ஸ்ரீராம நாம்நேஹ யாதவாத்ரி நிவாஸிநா
த்ராவிட ப்ரஹ்ம ஸூத்ராணாம் விபாகஸ் ஸம் ப்ரதர்ஸித
ஸ்வபாநுப பாத்ர ஸூத்தாஷ்ட மீஜ்யேஷ்டாபு,த, வாஸரே
யதாத் யயநமக்,ரே ப்ரகரணைஸ் ஸ்யாத் ப்ரபஞ்சநம்
—
1 -ஸாஸ்த்ராரம்ப–பாதம்—1 -ஸாஸ்த்ர ப்ரதாநாதி,கரணம்— -1-முதல் -15முடிய -மொத்தம் –15 சூர்ணைகள்
ஆசார்ய ஸ்வாந்த வக்தாரம் அபி ராமவராபிதம்!
ஸ்ரீக்ருஷ்ண தநயம் வந்தே, ஐகத் குருவராநுஜம் ॥–ஆச்சார்யருடைய திரு உள்ளக்கருத்தை அருளிச் செய்தவர்-ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்- -ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை திருக் குமாரர் –ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருத் தமையானார்
பணவாளரவணைப் பள்ளி பயில் பவர்க்கெவ்வுயிரும்
குண போகமென்று குருகைக் கதிபனுரைத்ததுய்ய
உணர்பாவினுட்பொருள் ஒன்றுமறியா உலகறிய
மணவாளன் மாறன் மனமூரைத்தான் வண்முடும்பை வந்தே.–மாறன் மனமே ஆச்சார்ய ஹ்ருதயம்
உலகு இயல்வில் இருந்து மாறியவர் அன்றோ -பாகவத பிரபாவம் அருளிச் செய்தவர் அன்றோ
குண போகங்கள் -ஜீவர்கள் -அவனே போக்தா
மாதவத்தோன் மாறன் மனங்கூறும் மணவாளன்
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார் – நீதியினா
லாங்கவர் தாள் சேர் பெற்றார் ஆயி மணவாளமுனி
பூங்கமலத் தாள்கள் நெஞ்சே போற்று–தோதவத்தி –ஆச்சார்ய அனுஷ்டானம் உள்ளோர் -நடுவில் உள்ளோர் மூலம் பெற்ற-நீதி -வருகிற முறை வழுவாமல் பிரபன்ன ஜன கூடஸ்தர் -நம்மாழ்வார் -மாறன்
பெற்றார் -ஸ்ரீ நாயனார் ஸச் சிஷ்யர் என்பர் ஸ்ரீ ஆய் ஸ்ரீ மா முனிகள் இருவரும் ஸ்ரீ பெற்றாருடைய திருவடிகளை பெற்றார்கள்–ஸ்ரீ நாயனார் -மூலம் ஸ்ரீ பெற்றி பெற்றார் –அவர் மூலம் திரு நாராயண புரத்து ஆய் ஸ்வாமிகளும் – ஸ்ரீ மணவாள மா முனி ஸ்வாமிகளும் பெற்று வியாக்கியானங்கள் அருளிச் செய்தார்கள் –
ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: !
ஸ்ரீஸாநு தாஸ மமலம் தே,வராஜம் தமாஸ்ரயே ॥–திருத்த தாழ்வாரை தாசர் அமல தேவ ராஜம் –ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீ ஆய் ஸ்வாமிக்கு சமர்ப்பிக்க —ஸ்ரீ யதி கிரியில் ஐப்பசி பூராடம் திரு அவதாரம் –
–பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ -ஸ்ரீ ஆய் ஸ்வாமி சமர்ப்பித்த பாசுரம்
த்,ராவிட ஆம்நாய ஹ்ருத.யம் கு,ருபர்வ க்ரமாக,தம் ।
ரம்ய ஜாமாத்ரு தே,வேந தர்ஸிதம் க்ருஷ்ண ஸூநுதா–குரு பரம்பரை மூலம் பெற்றார்
மா முடும்பை மன்னு மணவாள வண்ணலொடு சேமமுடன் வைகுந்தம் சென்றக்கால் –
மாம் என்று தொட்டு உரைத்த சொல்லும் துயம் தன்னின் ஆழ் பொருளும் எட்டு எழுத்தும் இங்கு உரைப்பார் யார் –ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் இரங்கி அருளிச் செய்தார்
பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ பூ கமழும் தாதார் மகிழ் மார்பன் தான் இவனோ
தூதூர வந்த நெடுமாலோ மணவாள மா முனிவன் எந்தை இவர் மூவரிலும் யார்–ஸ்ரீ ஆய் ஸ்வாமி அருளிச் செய்தது
வாழி உலகாரியன் வாழி யவன் மன்னு குலம் வாழி முடும்பை என்னும் மா நகரம்
வாழி மனம் சூழ்ந்த பேர் இன்பம் மல்கு நல்லார் இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு —
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திரு மாளிகைக்கு எழுந்து அருளி -ரஹஸ்யம் விளைந்த மண் என்று ஸ்ரீ மணவாள மா முனிகள் ஈடுபட்டு அருளிச் செய்தார்
அவதாரிகை–
ஸ்ரீய பதியாய் -சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரன்– நிரதிசய ஆனந்த மயமான ஸ்ரீ வைகுண்டத்திலே-
நித்ய நிர்மல ஞானாதி குணகராய் ஸ்வ சந்தான அனு வ்ருத்தி-இறைவன் நினைவைப் பின் பற்றிச் செல்லுகின்ற -(நீதி வானவர் -அவன் சந்தா அனுவர்த்தகர்) ஸ்வரூப-ஸ்வம் ரூபம் ஸ்வரூபம் -என்றபடி- ஸ்திதி பிரவ்ருத்தி பேதரான நித்ய ஸூரிகளாலே- அநவரத பரிசர்யமான சரண நளினனாய் கொண்டு எழுந்து அருளி இரா நிற்க,
லீலா விபூதி விபூதியில்-உள்ளோர் அவர்களோபாதி தன்னை அனுபவிக்க பிராப்தி உண்டாய் இருக்க ,-
இழந்து கிடக்கிற படியைக் கண்டு ,அதி வியாகுலனாய் ,இவர்களை உஜ்ஜீப்பிக்க உண்டான நசையாலே –அசித விசேஷிதான் பிரளய அசீமகி சம்ஸ்ரத கரண களேபர கடயிதம் தயமாநின-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்-உத்தர சதகம் -41– என்கிற படியே–கரண களேபர விதுரராய் அசித விசேஷிதராய்
அத ஏவ போக மோஷ சூன்யராய் கிடக்கிற தசையிலே-, தயமான மனாவாய்க் கொண்டு-ஸ்வ சரண கமல ஸமாஸ்ரயேண உப கரணமான-(உபகார பரம்பரைகள் )1-கரண களேபரங்களை கொடுத்து-இந்த்ரியங்களுடன் கூடிய சரீரத்தைக் கொடுத்து-2–ஞான விகாசத்தையும் –பிரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தியையும் உண்டாக்கி– ஞான கார்யமான- த்யாஜ்ய உபாதேய விவேக பரிகரமாக–
மானம் பிரதீபமிவ காருணிகோ ததாதி –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்-உத்தர சதகம்-1- -என்கிற படி
வேத பிரதானத்தை பண்ணி அநந்தரம் . 3-மன்வாதிகளுக்கு அந்தர்யாமியாய் நின்று சேதனருடைய விசிஷ்ட வேஷ விஷயமான-சாஸ்த்ரத்தை வெளி இட்டு அருளி ,-4-அந்த சாஸ்திர அப்யாசம் அநேக யோக்யதா சபேஷமாய்(யோக்யதை இருக்க வேண்டுமே )- சிரகால சாத்யமுமாய் இருக்கையாலே , துஷ்கரமாய் இருக்கிற படியை திரு உள்ளம் பற்றி-, தாத்ருச யோக்யதா நிரபேஷத்வாதிகளாலே , ஸூகரமாய் ,சேதன நிஷ்க்ருஷ்ட வேஷ விஷயமான- திரு அஷ்டாஷர ப்ரஹ்ம வித்யயை ஸ்வயமேவ வெளிப் படுத்தின அளவிலும்-கார்ய கரம் ஆகாமையாலே–4-ஓலைப் புறத்தில் செல்லாத ராஜ்யத்தை எடுத்து விட்டு-செலுத்திக் கொள்ளும் ராஜாக்களைப் போலே தாமே சென்று திருத்தக் கடவோம் என்று- ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாத்வ அவதார முகேன , இவர்கள் இருக்கிற இடத்தில்-தான் வந்து திருத்தப் பார்த்த இடத்திலும் ,ஒருவரும் திருந்தக் காணாமையாலே–5-விஜாதீயரான நம்மால் ஒரு படியாலும் இவர்களைத் திருத்தப் போகாதாய் இருந்தது .-.
இனி இணைக்குப்பார்வை பார்க்க -இணைக்கு பார்யை இட்டு மிருகம் பிடிப்பாரைப் போலே-
சஜாதீயரை கொண்டே கார்யம் கொள்வோம் என்று அறுதி இட்டு-அதற்க்கு-ஆம் முதல்வரை உண்டாக்குகைக்காகா சர்வ பூத ஸூஹ்ருத்தான தன்னுடைய நிர்கேதுஹ பிரசாதத்தாலே-,
எங்கும் பார்த்து இலக்கு காணாமல் வாரா நிற்க அந்த பார்வை தனக்கு பள்ள மடையான தென் திசை யான அளவிலே- மாறி மாறி பல பிறப்பும் பிறந்து – திருவாய் -2-6-8- என்கிற படியே ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறி-நித்ய சம்சாரயாய் போகிற இவர் மேல் பட, அந்த நிர்ஹேதுக கடாஷ விசேஷ லப்த திவ்ய ஞான பக்திகரான ஆழ்வார்-6-தத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை விசத விசததர விசத தமமாக அனுபவித்து-அவ் அனுபவ பரிவாக ரூபேண பேசுகிற பாசுரமானது
சோக வேக ஜனிதமான -மாநிஷோத் -யாதி ஸ்லோகம்–(மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வம் அகம ஸாஸ்வதீஸ்ஸமா –யத் க்ரௌஞ்ச மிதுநா தேகம் அவதீ காம மோஹிதம்–பாலா -2-15-)
பிரம்மா வின் பிரசாதத்தாலே –சர்வ லக்ஷண உபேதமான-எல்லா இலக்கணங்களும் அமைந்த – பிர பந்தமாய் தலைக் கட்டிற்று-இதி தானும் திராவிட வேததயா விஸ்தீர்ணமாய் ,அநேகார்த்த பிரதி பாதகமாய் இருக்கையாலே- இதில் தாத்பர்யார்தம் சர்வர்க்கும் பிரதி பத்தி விஷயமாகை அரிது என்று பார்த்து-,
இதில் அர்த்த விசேஷங்களையும் ,
இவற்றில் ஆழ்வார் திரு உள்ளக் கருத்தின் பிரகாரத்தையும்-,
இவ் ஆச்சார்ய ருசி பரிகிருஹீதமான அர்த்தமே எல்லாருக்கும் தஞ்சம் என்னும் அத்தையும்-,
(உரு பெரும் செல்வமும் –இத்யாதி மாறன் விளங்கிய சீர் ஆரணமே )
இவர் தம்முடைய பரம கிருபையினாலே ,பிரகாசிப்பியா நின்று கொண்டு-, ஆசார்ய பரம்பரா ப்ராப்தமான இவ் அர்த்தங்கள் எல்லோருக்கும் பிரதிபத்தி யோக்யமாம் படி- அதி ஸங்க்ரஹ அதி விஸ்தரமாக இவ் ஆச்சர்ய ஹிருதய பிரபந்த முகேன அருளிச் செய்கிறார்–ஆத் யஸ்ய ந குலபதே -ஸ்தோத்ர ரத்னம் -5- என்கிற படியே வைதிக சந்தானத்துக்கு பிரதம ஆச்சார்யான ஆழ்வார்- அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்களில் அவருடைய திரு உள்ளக் கருத்துகளைச் சொல்லுகையாலே-இறே
இப் பிர பந்தத்துக்கு ஆச்சார்ய ஹிருதயம் என்று நிரூபகம் ஆய்த்து.-இப் பிரபந்தத்தில் இவர் அருளிச் செய்கிற வாக்யங்கள் எல்லாம் அருளிச் செயல் சந்தைகள் சேர்த்து-அருளிச் செய்கிறது —
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்கள் பேசின திவ்ய ஸூக்திகள் ஆகையாலே-
ஆப்த தமமுமாய்-அத்யந்த போக்யமுமாய் இருக்கிற இதுவே தமக்கு அநவரத அபிமதம் ஆகையாலும் ,-
முகம் அறிந்தவன் கோத்த முத்து பெரு விலையனாம் போலே சந்தைகளே தாம் சேர்த்த சாதுரியாலே-
அருளிச் செயலில் ரசஞ்ஞருக்கு இதில் அர்த்தத்திலும் காட்டிலும்-சப்தம் தானே மிகவும் இனிதாய் இருக்கும்-என்னும் அபிப்ப்ராயத்தாலும் – ஆகையால் இப் பிரபந்தம் சப்த அர்த்தங்கள் இரண்டின் ரசத்தாலும் விசேஷ ஜனன மநோ கரமாய் இருக்கும்-
ஆய் ஸ்வாமிகள்—-ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரன் ““அசித,விஸேஷிதாந் ப்ரளய ஸீமநி” (ஸ்ரீர. ஸ்தவ- 2 -41) என்று சொல்லுகிறபடியே கரண களேபரங்களை இழந்து அசித் அவிஸேஷிதமாய், அத ஏவ போக, மோக்ஷ ஸூந்யமாய்க் கிடக்கிற சேதந வர்க்கத்தை, இவற்றின் பக்கல் தனக்குண்டான ஸ்வாபாவிக ஸம்பந்தமே ஹேதுவாக “ததைக்ஷத’” (தை. ஆ. 6) என்கிறபடியே பார்த்தருளி, ‘ஸூரிகளுடைய அநுபவத்துக்கு இட்டுப் பிறந்த இச் சேதநர் இவ் வநுபவத்தை இழந்து இங்ஙனே க்லேஸிக்க வொண்ணாது” என்று ‘“கரண களேபரைர் கடயிதும் தயமாந மநா: ‘ (ஸ்ரீர. ஸ்தவ- 2 – 41) என்கிறபடியே தயமாந மநவாய்க் கொண்டு கரண களேபர ப்ரதாநம் பண்ணுவதாக “‘பஹு ஸ்யாம்”’ (தை, ஆ. 6) என்று ஸங்கல்பித்து “*தத் ஸ்ருஷ்ட்வா’” (தை. ஆ. 6) என்சிறபடியே யதா ஸங்கல்பம் இவர்களுக்குக் கரண களேபரங்களைக் கொடுத்து, அநந்தரம், “‘ததநுப்ரவிய்ய ” என்கிறபடியே அநு ப்ரவேயித்து வஸ்துத்வ நாம பாக்த்வங்களை உண்டாக்கி, “அந்த: ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா” என்கிறபடியே ஜ்ஞாந விகாஸத்தையும், ப்ரவருத்தி நிவ்ருத்தி யோக்,யதையையும் பண்ணிக் கொடுத்து இந்த ஜ்ஞாந கார்யமான தயாஜ்யோபாதே,ய விவேகத்துக்குப் பரிகரமாக ““மாநம் ப்ரதீபமிவ காருணிகோ ததாதி” (ஸ்ரீர, ஸ்தவே 2 – 1) என்கிறபடியே வேத ப்ரதாநத்தைப் பண்ணி, அநந்தரம் மந்வாதிகளுக்கு அந்தர்யாமியாய் தின்று சேதநருடைய விஸிஷ்ட வேஷ விஷயமான ஸாஸ்த்ரத்தை வெளியிட்டருளியும், அந்த ஸாஸ்த்ர ஜந்ய ஜ்ஞாநம் சிரகால ஸாத்,யமுமாய், அதிக்ருதாதி,காரமுமாய், அநேக யோக்யதா ஸாபேக்ஷமுமா யிருக்கையாலே துஷ்கரமுமாயிருக்கும் என்று, ஏவமாதி,தோஷ ரஹிதமுமாய், நிஷ்க்ருஷ்ட வேஷ விஷயமான திருவஷ்டாக்ஷர ப்,ரஹ்மவித்யைத் தானே உபதேஸித்த விடத்திலும் இதில் இழிவாரற்ற படியாலே ஓலைப் புறத்திலே செல்லாத ராஜ்யத்தை எடுத்து விட்டுச் செலுத்திக் கொள்ளும் ராஜாக்களைப் போலே ““அஜாயமாந:”’ (யஜு. ஆர. பீ – 17) என்று சொல்லப்படுகிற தானே ஸாது, பரித்ராணார்த்தமாக வந்து அவதரித்துப் போருகிற அளவிலும், இவை ஒன்றிலும் அர்த்த,க்ரியாகார்யமாகா திருக்கிற படியாலே, ‘விஸஜாதீயரான நம்மால் ஒன்றாலும் இவர்களைத் திருத்த வொண்ணாது. இனிப் பார்வை காட்டி ம்ரூகம் பிடிப்பாரைப் போலே ஸஜாதீயரைக் கொண்டே கார்யம் கொள்ளக் கடவோம்” என்று அறுதியிட்டு ““ஸுஹ்ருத.ம் ஸர்வ பூ,தாநாம்’” (கீதை 5 – 29) என்கிறபடியே ஸர்வ பூ,த ஸூஹ்ருத்தாகையாலே தன்னுடைய நிர்ஹேதுகமான ப்ரஸாதத்தாலே எங்கும் பார்த்து இலக்குக் காணாதிருக்கிற அளவிலே, அந்தப் பார்வை தானே தாஷிண்யமானவளவிலே, ““மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து”‘ (திருவாய். 2 – 6 – 8) என்கிறபடியே ஸம்ஸரிக்கிற ஆழ்வார் மேலே நிர்ஹேதுகமாகப்பட அது தானே “மா நிஷாத, ப்ரதிஷ்டாம் த்வமக,மஸ் ஸாஸ்வதீஸ் ஸமா : । யத் க்ரெளஞ்ச மிதுநாதே கமவதீ,! காம மோஹிதம்”’ (ரா. பா – 2 – 15) என்கிறபடியே ஸோகம் ஸ்லோகமாய் அவதரித்தாப் போலே ஸர்வ லக்ஷணோபேதமான ப்ரப,ந்த,மாய்த் தலைக் கட்டிற்று–-அது தானும் த்ராவிட வேதமான படியாலே பலவான அர்த்தங்களை உடைத்தாய், பரந்திருக்கையாலே இதில் தாத்பர்யம் எல்லார்க்கும் ப்ரதிபத்தி பண்ணப் போகாதென்று பார்த்து, இதில் அர்த்த, விஸேஷங்களையும், இவற்றில் இவ்வாழ்வார்க்குத் திருவுள்ளக் கருத்து இன்னபடிப் பட்டிருக்குமென்று, இவ்வாசார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தமே எல்லார்க்கும் தஞ்சம் என்னுமிடத்தையும், இவர் தம்முடைய பரம க்ருபையாலே-ஆசார்ய பரம்பரா ப்ராப்தமான அர்த்த விஸேஷங்களை எல்லார்க்கும் ப்ரதிபத்தி யோக்யமாம்படி ஸங்க்ரஹேண இவ்வாசார்ய ஹ்ருதய ப்ரபந்த முகத்தாலே அருளிச் செய்கிறார்–
—
தமஸ் அந்தகாரம் போக்கி -பகுத்து அறிய -சத்தையும் அசத்தையும் -பிரமாணங்களை -விளக்கு போலே-ஹர்த்தும் தமஸ் சதசதீ ச விவேக்துமிசோ மானம் பிரதீப மிவ காருணிகோ ததாதி-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர -1–என்கிற படியே , ஆகஸ்மிகக் ரூபவானான சர்வேஸ்வரன் அஞ்ஞரான சம்சாரி-சேதனருக்கு சத் அசத் விவேக பரிகரமாக சாஸ்திர பிரதானதத்தை பண்ணி-அருளின படியை அருளி செய்கிறார்-
இதில் முதல் சூர்ணையாலே பரம காருணிகனான ஸர்வேஸ்வரன் “*தத் ஸ்ருஷ்ட்வா” என்கிறபடியே ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணி –ஸ்ருஷ்ட்யநந்தரம் அஜ்ஞாந அந்தகாரா வ்ருதரான சேதநர் ஜ்ஞாந ப்ரகாஸத்தை உடையராய் அஜ்ஞாநம் நீங்கி, –வேதாந்த வேத்யனாய், நித்யனாய், ஸ்வயம் ப்ரகாஸனாய் இருந்துள்ள தன்னைக் கண்டு ஸாராஸார விவேகம் பண்ணுகைக்கு ஸகல ஸாஸ்த்ர ஸங்க்,ரஹமாய், ஸகல ஸப்தங்களும் தன்னுடைய கார்யமாகையாலே தான் காரணமாய், ஸகலார்த்த, ப்ரகாஸகமான அகாரத்தில் நின்றும் விஸ்த்ருதமான ஸாஸ்த்ரங்களைத் தன் க்ருபையாலே வெளியிட்டருளினான் என்கிறார்-
காருணிகனான சர்வேஸ்வரன் – அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி- பிறங்கு இருள் நீங்கி மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு-நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை நீர்மையினால் அருள் செய்தான்–சூர்ணிகை 1..
காருணிகனான சர்வேஸ்வரன் –-கிருபா யோகச்ச ஸாஸ்வதாத்– ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -கிருபா விசிஷ்ட ஸ்வதந்த்ரன் என்ற படி–(ஸ்வதந்த்ரன் -ப்ராப்தன் -சம்பந்தத்துக்கே முதன்மை –இவை நம் உடைமை அன்றோ -என்கிற மனப்பற்றோடு-பர துக்க அஸஹிஷ்ணுத்வம்- பிறருடைய துக்கத்தைப் பொறுக்காத தான் –அருளும் கூடி இருத்ததாலே-மேலும் மேலும் மக்கள் உய்வு பெறுவதற்குத் தக்க செயல்களைச் செய்து போருமவன்-என்றபடி –)கிருபாவான் ஆனாலும் ஸ்வதந்த்ரன் அன்று ஆகில் தான் நினைத்த படி கார்யம் செய்ய போகாது–கேவல ஸ்வதந்த்ரன் ஆனாலும் (சம்சார மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான ஸ்வாதந்த்ர்யம்- )சேதன உஜ்ஜீவன அர்த்தமான க்ருஷிக்கு உறுப்பு ஆக மாட்டாது-
(ஆன பின்பு க்ருபா விசிஷ்டமான ஸ்வாதந்த்ர்யம்- இறே-சம்சார சேதன உஜ்ஜ்ஜீவன விஷயமாக-அவன் பண்ணும் க்ருஷிக்கு ஹேது வாவது-)
காருணிகனான சர்வேஸ்வரன் –க்ருபா விஸிஷ்ட ஸ்வதந்த்ரன் என்றபடி
சர்வேஸ்வரன்–என்று ஈஸ ஈஸி தவ்ய ஸம்ப,ந்த,ம் சொல்லுகிறது.-இத்தால் ஸம்பந்தமே ப்ரதாநம் என்றபடி. ஸம்பந்த முள்ள விஷயத்திலே கிருபையுமாகப் பெற்றது என்கிறார். ஸ்வாதந்தர்ய விஸிஷ்டமான கிருபை என்று கிருபைக்கு ஸ்வாதந்தர்யம் உபயுக்தம் என்பாருமுண்டு. அத்தை வ்யாவர்த்திக்கிறது–
அறிவிலா மனிசர் – அறிவிலா மனிசர் எல்லாம் -திருமாலை -13—என்கிற படி
அஞ்ஞான தமோ யுக்தரான சேதனர் -அந்தம் தம இவ அஞ்ஞானம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-62–என்னக் கடவது இறே –ஹர்த்தும் தம -ஸ்ரீ லஷ்மி தந்திரம்-1–என்று அஞ்ஞானத்தை தமஸ் சப்தத்தாலே அருளி செய்தார் இறே-இத்தால் அநாதய அஞ்ஞான அந்த காரத்தாலே அபி பூதராய் அத்தாலே
பிரகிருதி-ஆத்மா விவேகம் முதலான ஒரு விவேகம் இன்றிக்கே இருக்கிற சம்சார சேதனர் என்கை–
அறிவிலா மனிசர் -அறிவிலா மனிசர்’ (திருமாலை – 13) என்கிறபடியே அஜ்ஞாந அந்த காரத்தாலே ஆவ்ருதரான சேதநர் –
எறியு நீர் வெறி கொள் வேலை மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெறி கொள் பூம் துளவ மாலை விண்ணவர் கோனை ஏத்த
அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில்
பொறியில் வாழும் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே –13-தத்வ ஜ்ஞானம் நிரம்பாத அந்த மனிதர் யாவரும்-மனுஷ்ய ஜன்மத்திலே பிறந்து வைத்து-அறிவின்றிக்கே இருந்தார்களே யாகிலும்
திருவரங்க பிராவண்யம் வேண்டா-உக்தி மாத்ரமே அமையும் –ஆகில் –என்றது – பாப பிரசுரர்க்கு இது தானும் சித்தியாது -என்கை-
உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி –
உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி என்றும்-ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் என்றும் சொல்லுகிற படியே-தைல வர்திகளால் உண்டான வழுக்கு அன்றிக்கே திணுங்கின-தேஜஸ் ஆய் இருக்கிற ஞானம் ஆகிற உஜ்ஜவல தீப பிரகாசத்தை உடைத்தாய்-ஞானத்தை விளக்கு என்கிறது ஸ்வ பர பிரகாசத்வம் ஆகிற ஸ்வாபவ சாம்யத்தாலே–(விளக்குக்கு -ஞானம் நம்மையும் பிறரையும் காட்டும் -ஸ்வ பாவ சாம்யம்)
உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி
வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் -மெத்தனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்
பொன்றாமல் மாயன் புகுந்து –மூன்றாம் திரு அந்தாதி-94––உணர்வு ஆகிற –தைலவர்த்திகளால் (எண்ணெய் தீ இத்யாதிகளால் )யுண்டான அழுக்கு இன்றிக்கே- திணுங்கின தேஜஸ்ஸை -ஒளி விளக்கு ஏற்றி –
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்-1-பர பக்தி -பரஜ்ஞானமாகிற பிரகாசமான தீபத்தை ஏற்றினேன்.
உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி) ”உய்த்துணர் வென்னும் ஒளி கொள் விளக்கேற்றி”’ (மூ. திரு. 94) என்றும், ““ஞானச் சுடர் விளக்கேற்றினேன்” (இர, திரு, 1) என்றும் சொல்லுகிறபடியே உஜ்ஜிவந கரமுமாய், ஸ விபூ,திகனான ஸர்வேஸ்வரனை விஷயமாக உடைத்தாய், (பரஸ்மை) ஸ்வயம் ப்ரகாஸமுமாய், ஸ்கலார்த்த,ப்ரகாஸாகமுமான ஜ்ஞாந தீ,பத்தை உடையராய்
பிறங்கு இருள் நீங்கி –
பிறங்கு இருள் நிறம் கெட என்றும்
பின் இவ் உலகினில் பேர் இருள் நீங்க என்றும்
சொல்லுகிற படியே மிகுந்த அஞ்ஞான அந்த காரம் போய்
மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவருலகும்
துன்னு மா இருளாய்த் துலங்கு ஒளி சுருங்கித் தொல்லை நான்மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறங்கிருள் நிறம் கெட ஒரு நாள்
அன்னமாய் அன்று அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-3-தேவர்கள் பக்கலிலும் பிராமணர்கள் பக்கலிலும் ஸ்நேஹத்தைப் பண்ணி மிக்க இருளானது கழியும் படியாக –
துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திடப்
பின் இவ்வுலகினில் பேரிருள் நீங்க அன்று
அன்னமது ஆனானே அச்சோ அச்சோ அருமறை தந்தானே அச்சோ அச்சோ -1 8-10 – இந்த லோகத்தில் உண்டான மகாந்தகாரமானது நீங்கும்படியாக -அக் காலத்தில் வேதத்தை வெளிப்படுதுக்கைகாக
சார அசார விவேக சக்திகமான ஹம்சமாய் வந்து தோன்றினவனே-உன்னைப் பெறிலும் பெறுதற்கு அரிதான வேதத்தை உபகரித்தவனே-
“பிறங்கிருள் நிறங்கெட”” (திரு மொழி 5-7 – 3) என்றும், ““பின்னிவ்வுலகினில் பேரிருள் நீங்க”” (பெரியாழ் . திரு. 1 – 9 -10) என்றும் சொல்லுகிறபடியே மிகுந்த அஜ்ஞாநம் போய்
மேல் இருந்த நந்தா விளக்கை கண்டு
வேதார்த்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு என்றும்
நந்தா விளக்கு என்றும்
வேத விளக்கினை என்றும்
சொல்லுகிற படியே வேதாந்தங்களில் சர்வ ஸ்மாத் பரனாக பிரகாசியா நிற்ப்பானுமாய்
நித்தியமாய்-ஸ்வயம் பிரகாசமான ஞானத்தை ஸ்வரூபமாக உடையவனுமாய்
வேதை க சமதி கம்யனுமான தன்னை
என் தக்க ஞானக் கண்களால் கண்டு என்கிறபடியே—ஞான சஷுசாலே தர்சித்து
மால் இரும் சோலை என்னும் மலையை உடைய மலையை
நாலிரு மூர்த்தி தன்னை நால் வேத கடல் அமுதை
மேலிரும் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளின்
மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனவே -4 -3-11 –வேதாந்த பிரதிபாத்யங்களான-சீரிய அர்த்தங்களுக்கு எல்லாம் மேலாய் இருந்துள்ள ஸ்வயம் பிரகாச வஸ்து வானவனை –வேதாந்த பிரதிபாத்யங்களான-சீரிய அர்த்தங்கள் ஆவன –போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா -ஸ்வேதாஸ்வரம்-ஷரம் ப்ரதானம் அம்ர்த அஷரம் ஹர ஷராத்மாநா வீசதே தேவ ஏக –
பிரதான ஷேத்ரஜ்ஞ பதிர் குணேச – இத்யாதிகளாலே சொல்லப் படுகிற தத்வ த்ரயமும்–மேல் இருந்த என்றது –இந்த தத்வ த்ரயத்திலும் வைத்துக் கொண்டு- மேலாய் இருந்துள்ள என்றபடி–அதாவது
சேதன அசேதனங்கள் இரண்டும் பிரகாரமாக -தான் பிரகாரியாய் –-நதத் சமஸ் அப்யதிகச்ச தர்ச்யதே -என்னும்படி -சர்வ ஸ்மாத் பரனாய் -இருக்கை
நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கரு மா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மண மல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-1-சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் -மெய் மதிக் கடலே -ஸ்வரூப நிரூபகம் –நந்தா விளக்கே ! – விச்சேதியாத விளக்கு-பிரபா பிரபாவான்களாய் இருக்கையாய் இறே
விளக்காகிறது -நித்யமாய் ஸுயம் பிரகாசமாய் – ஜ்ஞானத்தை ஸ்வரூபமாக உடையவன் -என்ற படி –(ஞானத்தை–குணமாகவும் ஸ்வரூபமாகவும் கூட்டுவது – -ஞான ஸ்வரூபன் ஞான குணகன் –அவனே ஞானமாகவும் உள்ளான் ஞானம் உடையவனாயும் இருப்பான் -தர்மி ஞானம் தர்ம பூத ஞானம் இரண்டும் உண்டே-ஆத்மாவும் இதே போலவே -ஆனால் கர்மத்தால் மழுங்கும் தர்ம பூத ஞானம் )
சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10-பரிபூரணமான ஞானத்தையே ஸ்வரூபமாக யுடைய –வேதமாகிற விளக்கிலே காணப் படுமவனை–எனக்கு தக்காப் போலே ஒரு ஞான த்ருஷ்ட்டி யுண்டாய் அத்தாலே கண்டு அனுபவிப்பன்-காணப் பெறாமையாலே ப்ரேமம் கிலேச ஹேது வாகிறாப் போலே -நெஞ்சில் பிரகாசமும் கிலேச ஹேது வாகா நின்றது-மதி நலம் அருளினன் என்கிற ஞான பக்திகள்-இரண்டும் கழுத்துக்கு கட்டியாய் விட்டது
மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு) ““வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கு!” (பெரியா. திரு-4-3 – 11) என்றும், “நந்தா விளக்கு” (திருமொழி 3 – 8-1) ”மிக்க ஞான மூர்த்தியாய வேத வீளக்கினை” (திருவாய். 4 – 7 – 10) என்றும் வேதாந்தங்களியே ஸர்வ ஸ்மாத் பரனாக ப்ரகாஸியா நிற்பானுமாய், நித்யனுமாய், வேதத்தாலே ப்ரகாஸ ஸ்வரூபனாக ப்ரதிபாத்யனுமா யிருந்துள்ள தன்னை, “என் தக்க ஞானக் கண்களாலே கண்டு”” (திருவாய்-4 -7. 10) என்கிறபடியே ஜஞாந த்,வாரா ஸாக்ஷாத்கரித்து,
நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய என்கிற படியே-சத் அசத் விவேகம் பண்ணுகைக்கு
சத் அசதீச விவேக்தும் –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -உத்தர -1- -என்றார் இறே
நல்லதும் தீயதும் விவேக்கிகைக்கு -என்கிற இது ஸாமான்யேன விலஷண அவிலஷண விவேகத்தை காட்டுமே ஆகிலும் இவ் இடத்தில் பகவத் விஷயம் நன்று சம்சாரம் தீது என்று விவேகிக்கையைக் காட்டக் கடவது
நந்தா வேத விளக்கை கண்டு நல்லதும் தீயதும் விவேக்கிகைக்கு -என்கையாலும்
விவேக பலமான த்யாக ஸ்வீகார விஷயங்கள் சம்சார மோஷங்கள் ஆகவே மேல் சொல்லுகையாலும் ..
(விவேக பலம் வீடு பற்று மேலே வரும் ) பகவத் விஷயத்தை கண்ட பின்பு சத் அசத் விவேகம் பண்ணுகை யாவது என் என்னில் ? பிரதி கோடி கண்டால் ஒழிய அதின் தோஷம் -யதாவாக-ஹேயதாக தோன்றாமை யாலும் இத்தை பற்ற இது நன்று இது தீது என்னும் போது உபய கோடியும் கண்டு கொள்ள வேண்டுகையாலும் சொல்லிற்று
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என் —3-புகழோம் மதியோம் – மதியோம் இகழோம் –என்கிற இவை நல்ல-புகழ்வோம் பழிப்போம் என்கிற இவை பொல்லாது–இவை இப்படி என்று பரிச்சேதித்து அறிந்தேன் ஆகிலும்–
ஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும் ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–1—காருணிகனான பெரிய பெருமாள் அஞ்ஞானம் இருளை போக்கவும் த்யாஜ்ய உபாதேயங்களை விவேகிக்கவும்
சாஸ்திரமான விளைக்கை அளித்தான் -புண்யம் செய்தவர்கள் அந்த விளக்கை கொண்டு அவனை அறிந்து கொள்ள விவேகம் அற்றவர்கள் வீட்டில் பூச்சி போலே அந்த விளக்கில் மடிகின்றனர் —
முரணாக அர்த்தம் செய்து வீண் வாதம் செய்கிறார்-
நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு–) ‘“இவை யன்றே நல்ல இவை யன்றே தீய இவையன்றிவை அறிவனேலும்”’ (பெரிய திருவ. 3) என்கிறபடியே ஸாராஸார விவேகம் பண்ணுகைக்கு. அதாவது – ப,க,வத் விஷயம் நன்று, ஸம்ஸாரம் தீது – என்று அறிகைக்காக; ப,க.வத், விஷயத்தைக் கண்ட பின்பு ஸாராஸார விவேகம் பண்ணுகையாவது என் என்னில் – ப,க,வத், விஷயத்தில் வைலக்ஷண்யம் கண்ட பின்பிறே ஸம்ஸாரம் அவிலக்ஷணம் என்று அறியலாவது
மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை–மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை ” (திருமொழி -8-9-4-), துளக்கமில் விளக்கு (திருச்சந்த-4) என்றும் சொல்லுகிற படியே-அகாரோ வை சர்வா வாக்-என்கையாலே ஸகல வேத ஸங்க்ரஹ்மாய், நித்யமாய், ஸகலார்த்த, ப்ரகாஸ கமான அகாரத்தில் நின்றும் விஸ்த்ருதமான, ‘“மாநம் பரதீபமிவ காருணிகோ ததாதி” (ஸ்ரீ, ர ஸ்தவ 2 – 1) என்றும், ‘“பன்னு கலை நால் வேதப் பொருளை’ (திருமொழி 7 – 8 – 2) என்றும், ”கலைகளும் வேதமும் நீதி நூலும்”’ (திருமொழி 2 – 8 – 5) என்றும் சொல்லப்படுவதாய், த்யாஜ்யோபாதே,யார்த்த,ப்ரகாஸகமான -ஸ்ருதியும் தத் உப ப்ரும்ஹணங்களுமான .ஸாஸ்த்ரங்களை
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே –8-9-4-மிக்கான் -சர்வ ஸ்மாத் பரன்-மறையாய் விரிந்த விளக்கை- வேறு ஒன்றால் காண வேண்டாதே தனக்குத் தானே பிரகாசகமாய் இருப்பது –
பிரமாணங்களால் அறியப் பார்க்கும் அன்று அவற்றாலே பிரகாசிக்கிற மேன்மைக்கு எல்லை அன்றிக்கே இருப்பது –மறையால் விரிந்த விளக்கு -என்று அகாரத்தைச் சொல்லுகிறது -அகாரம் தானே மறைகளாய் பரம்பிற்று-வாச்ய வாசக பாவ சம்பந்தத்தால் அவனையே குறிக்கும் –
மூன்று முப்பத்தாறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
மூன்று மூர்த்தி யாகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கமில் விளக்கமாய்
என் தன் ஆவியுள் புகுந்தது என் கொலோ வெம் மீசனே –4-மூன்று அஷரம் –பிரணவம் -அதில்
தோன்றும் ஜோதி-அழிவு அற்ற விளக்காகிய -அ காரம் -ஓம்காரத்தில் திகழ்கின்ற ஜோதி மயன்-ஒம்காரோ பகவான் விஷ்ணு -சகலதுக்கும் காரண பூதன் -தனக்கு வேறு ஒரு காரணம் அற்றவன் -அதனால் துளக்கமில் விளக்கம் என்கிறார்
மறையார் விரிந்த விளக்கை என்றும்-துளக்கமில் விளக்கமாய் என்றும்-அகாரத்தை ஈச்வரனோடு சாமாநாதிகரித்து-அ இதி ப்ரஹ்ம -என்கிற படியே வாச்ய வாசக சம்பந்த்தாலே-(அக்ஷராணாம் அஹம் அஸ்மி -ஸ்ரீ கீதை )
ஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும் ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–1—காருணிகனான பெரிய பெருமாள் அஞ்ஞானம் இருளை போக்கவும் த்யாஜ்ய உபாதேயங்களை விவேகிக்கவும்
சாஸ்திரமான விளைக்கை அளித்தான்மறையார் விரிந்த விளக்கை என்றும்-துளக்கமில் விளக்கமாய் என்றும்-அகாரத்தை ஈச்வரனோடு சாமாநாதிகரித்து-அ இதி ப்ரஹ்ம -என்கிற படியே வாச்ய வாசக சம்பந்த்தாலே-(அக்ஷராணாம் அஹம் அஸ்மி -ஸ்ரீ கீதை )
அக்ஷராணாமகாரோஸ்மி த்வந்த்வஸ் ஸாமாஸி கஸ்ய ச.—-
அஹமேவாக்ஷயஸ் காலோ தாதாஹம் விஸ்வதோமுக-–৷৷10.33৷৷-எழுத்துக்களுக்குள் நான் அகாரம் ஆகிறேன்-
முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண முனிவரோடு தாநவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம் பரி முகமாய் அருளிய வெம் பரமன் காண்மின்
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் சங்க மவை முரலச் செங்கமல மலரை ஏறி
அன்னமலி பெடையோடு மமரும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த யமரர் கோவே –7-8-2-பரம்பின கலைகளை உடைத்தான நாலு வகைப் பட்ட வேதங்களின் உடைய-அர்த்தத்தை எல்லாம்-ஹயக்ரீவ முகத்தாலே-அருளிச் செய்த சர்வ ஸ்மாத் பரன் கிடீர் –
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்து நீண்ட
மலைகளும் மா மணியும் மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற
அலைகடல் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-5-கலைகளும் –
வேதத்தில் உபரிதன பாகத்தையும் வேதாந்த ஸூத்ரங்களையும்-வேதமும்-பூர்வ பாகமும்-நீதி நூலும்
அவற்றை உப ப்ரும்ஹிக்க கடவ இதிகாசங்களும்-கற்பமும்-கல்ப ஸூத்தரமும்–சொல் பதங்களை நிர்வஹித்துக் கொடுக்கக் கடவ வ்யாகரணமும்-பொருளும்-அர்த்த விசாரம் பண்ணக் கடவ மீமாம்சையும்-நிலைகளும்-இவற்றில் சொல்லுகிற சாதனங்களை அனுஷ்டித்தாருக்கு ப்ராப்யமாக சொல்லுகிற பூமிகளும்-ப்ரஹ்மாதிகளுக்கும் மனுஷ்யருக்கும்-நீர்மையினால் அருள் செய்து
சேஷித்வ ஸ்வபாவத்தாலே கொடுத்து
நீர்மையினால் அருள் செய்தான்
நீர்மை– ஸ்வ பாவம் –தன் ஸ்வாபத்தினால் கொடுத்தான் என்கை-(ஸ்வரூபம் -தனிமை -ஸ்வம் ஆஸ்ரய ரூபாயதி -ஸ்வ பாவம் -பொது -)-அதாவது தன் சேஷித்வ ஸ்வாபத்தாலே என்னுதல் -சமுச்சயமாதல்-
சேஷித்வம் காருணிகத்தவம் இரண்டும் மூன்று யோஜனைகள்
1–பூர்வ யோஜனை-நீர்மையினால் என்கிறதற்கு பூர்வர்கள் இட்ட -பெரிய திரு மொழி-2-8-5—வியாக்யனத்திற்க்கும்-இந்த உதிர தெறிப்பு திரை குணிய விஷயம் ஆனவற்றுக்கு பிரகாசம்-சூத்ரம் -13-என்று இவர் தாமே மேல் அருளி செய்வதற்கும் சேரும்
2-நடுவில் யோஜனை -காருணிகனான -என்று இவர் பிரதமத்திலே எடுத்ததுக்கும்
ஸ்ரீ பட்டர்–கருணிகோ ததாதி-என்று அருளி செய்ததற்கும் -சேரும்
3-மூன்றாம் யோஜனை–காருணிகனான சர்வேஸ்வரன் -என்கிற இடத்தில் சொன்ன இரண்டாம் யோஜனைக்கு சேரும்-
ஆக இத்தால் “ஹர்த்தும் தமஸ் ஸத.,ஸதீ ச விவேக்துமீஸோ மாநம் ப்ரதீ,பமிவ காருணிகோ ததாதி” (ர.ஸ்தவே -2-1) என்கிறபடியே ஸம்ஸாரிகள் அஜ்ஞாந நிவருத்தி பூர்வகமாக ஜ்ஞாந ப்ரகாநத்தை உடையராய் ஸாராஸார விவேகம்பண்ணி உஜ்ஜீவிக்கைக்காக ஸாஸ்த்ர ப்ரதாநம் பண்ணினதுக்கடி நிர்ஹேதுக க்ருபை என்றதாய்த்து-
ஆக இச் சூர்ணையால் அஜ்ஞரான சம்சாரி சேதனர் ஞான பிரகாசத்தை உடையவராய்-அந்த அஞ்ஞானம் நீங்கி தன்னைக் கண்டு சத் அசத் விவேகம் பண்ணுகைக்கு உறுப்பாக-ஸ்ரீ ஈஸ்வரன் சாஸ்திர பிரதானம் பண்ணின படியை தன் நிதாதானத்தோடே-அதற்கு உரிய காரணத்தோடு – அருளிச் செய்தார் ஆய்த்து-இந்த சூர்ணையில்
1-ஞானம் ஒரு விளக்கு
2-எம்பெருமானை ஒரு விளக்கு
3-அகாரம் ஒரு விளக்கு
4-சாஸ்திரம் ஒரு விளக்கு-மறையாய் விரிந்த விளக்கு-எம்பெருமானை ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் -இவர் சகல வாக்குக்கும் வித்தான அகாரத்தை சொல்லி சாமாநாதி கரண்யா நிதானத்தினால் எம்பெருமான் பொருள் படுகிறான்-
—
விவேக பலம் வீடு பற்று- -சூரணை -2
இந்த விவேகத்துக்கு பலம் என்பதை சொல்கிறது மேல்-அதாவது இப்படி அவன் கொடுத்த சாஸ்திர ஜன்ய ஞானத்தாலே-நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு பலம்-த்யாஜ்யத்தை விடுகையும்
உபாதேயத்தை பற்றுகையும் என்கை-
த்யாக ஸ்வீகாரம் என்னாதே வீடு பற்றுகை என்கையாலே
வீடு முன் முற்றவும்–1-2-1-
அற்று இறை பற்று–1-2-5- என்று ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை உள் கொண்டு அருளிச் செய்தமை தோற்றுகிறது- (பரித்யஜ்யா மயா லங்கா )
(விவேக பலம்) இப்படி இவன் கொடுத்த ஸாஸ்த்ர ஜந்ய ஜ்ஞாதத்தாலே ஸாராஸார விவேகம் பண்ணினதுக்கு பலம் என்னென்னில் ;
(வீடு பேறு) விடுகையும் பற்றுகையும்; இவை இரண்டையும். “*வீடுமின் முற்றவும்”” (திருவாய். 1 – 2 – 1) என்றும், “அற்றிறை பற்றே”’ (திருவாய். 1 – 2-5) என்றும் சொல்லக் கடவதிறே.
வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே –1-2-1-விடுமின் -என்றபடி-இன்னத்தை விடுங்கோள் என்னாது ஒழிவான் என் என்னில் -சிறு பிரஜை சர்ப்பத்தைப் பிடித்துக் கொண்டு இருந்தால் விட்டுக் கொள் என்று பின்னை இ றே சர்ப்பம் என்பது –-அது போல் விடுகிறவனுடைய த்யாஜ்யாதிசயம் தோற்றுகைக்காக முதலிலே விடுங்கோள் என்கிறார்-உபதேசம் அஷட்கர்ணமாய் இருக்க பஹூர் வசனத்தாலே சொல்லிற்று -சிலர் தாந்தராய் அர்த்திக்கச் சொல்லுகிறார் அல்லாமையாலும்-அனர்த்தம் சர்வ சாதாரணம் ஆகையாலும் எல்லாரையும் குறித்துச் சொல்லுகிறார்-எத்தை விடுவது என்னும் அபேஷையிலே-முற்றவும் –-என்கிறார் –அஹம் மமேதி சண்டால-சண்டாலர் குடியிருப்பை பிராமணனுக்கு ஆக்கும் போது சண்டால ஸ்பர்சம் உள்ள பதார்த்தம் அடைய த்யாஜ்யம் ஆனால் போலே –அஹங்கார கர்ப்பமாக ஸ்வீகரித்த வற்றில் த்யாஜ்யம் அல்லாதன இல்லை -என்கை–
அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5-பற்று அற்றது என்னில்-இதர விஷயங்களில் பற்று அற்ற மாத்ரத்திலே ஆத்மா மோஷத்தை-உற்றது-கையுற்றது-வீடுயிர்-அநித்யமாய்-ஜடமான அசித் சம்சர்க்கம் அற்றவாறே -நித்யமாய்-ஜ்ஞானானந்த லஷணமாய் ஆத்மா தன் பக்கலிலே கால் தாழப் பண்ணும் –நிச்சதம்-செற்றது-அத்தை ஜெயித்து -அத்தை முகம் சிதறப் புடைத்து-மன்னுறில் நிரதிசயமான பகவத் கைங்கர்யத்தைப் பெற்று நிலை நிற்க வேண்டி இருந்தாய் ஆகில்
அற்றிறை பற்றே — இதர விஷயங்களிலே தொற்று அற்று -சர்வேஸ்வரனைப் பற்று என்னுதல்
ஆஸ்ரயிக்கும் போதே உன்னை பகவச் சேஷமாக அத்யவசித்து ஸ்வாமி யானவனை ஆஸ்ரயி என்னவுமாம் – அன்றிக்கே-விபக்தியை மாறாடி இறையைப் பற்றி அத்தை அறுங்கோள் என்னவுமாம் –
—
த்யாஜ்ய உபாதேயம் தான் எவை என்ன சொல்லுகிறது மேல்-
த்யஜ்ய உபாதேயங்கள் ஸுக துக்கங்கள்-சூரணை -3
(வீடு பற்றுதல் -என்றதைச் சொல்லாமல் த்யாஜ்ய உபாதேயங்கள் -பர்யாய சப்தங்கள் )-அதாவது –ஸுகீ பவேயம் துக்கி மா பூவம்-என்று சர்வருக்கும் துக்கம் அநிஷ்டமாய் ஸுகம் இஷ்டம் ஆகையாலே துக்கம் த்யாஜ்யம் ஸுகம் உபாதேயம் என்கை–த்யாஜ்யோபாதே.யங்கள் எவை என்னில் ;(த்யாஜ்யோபாதே,யங்கள் ஸுக, துக்க,ங்கள்) என்கிறார். “ஸுகீ, பவேயம், துக்கீ, மா பூ,வம்” என்று ஸர்வர்க்கும் துக்கம்-த்யாஜ்யமாய், ஸுக,ம் உபாதே,யமாயிறே இருப்பது.-
—
இவை தான் கர்ம அனுகுணமாக நின்ற நின்ற நிலைகளிலே உண்டாகையாலே
இவற்றின் பரம அவதியை சொல்லுகிறது மேல்-
இவற்றுக்கு எல்லை இன்பு துன்பளி பன்மா மாயத்து அழுந்துகையும்
களிப்பும் கவர்வும் அற்று பேர் இன்பத்து இன்புருகையும்-சூரணை -4
அதாவது துக்கத்துக்கு பரம அவதி -இன்பு துன்பளி-திருவாசிரியம் -6– -என்று தொடங்கி
(இன்பு துன்பளி தொல் மா மாய பிறவியில் நீங்கா பல் மா மாயத்து அழுந்தும் –திருவாசிரியம் -6)
ஸுக துக்க அவாஹங்களாய் அநாதியாய் துஸ்தரமாய் இருந்துள்ள பிரகிருதி சம்பந்த நிபந்தனமான ஜன்மங்களில் நின்றும் ஒருகாலும் நீங்காமைக்கு உருப்பானவையாய் பல வகை பட்டு இருப்பனவாய்
அகப்பட்டார் தப்ப அரிதா மவையாய்-இன்னமுது-திருவாய் மொழி -7-1-8– என்று தோன்றி
(இன்னமுது எனது தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த முன்ன மாயம் எல்லாம் –திருவாய் மொழி -7-1-8-) எத்தனையேனும் அறிவுடையாரையும் கலங்கப் பண்ணுகையாலே ஆச்சர்யங்களாய் இருந்துள்ள சப்தாதி விஷயங்களில் அகப்பட்டு அழுந்துமா -என்கிற படி அனந்த க்லேச பாஜனமான-ஜிதந்தா- சம்சாரத்தில் அழுந்துகை-
சுகத்துக்கு பரம அவதி
களிப்பும் கவர்வும் அற்று -என்று தொடங்கிச் சொல்லுகிற
(களிப்பும் கவர்வும் அற்று பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று ஒளிக் கொண்ட சோதி மயமாய் –திருவாய் -2-3-10 –) அல்ப அஸ்திரத் வாதி தோஷ துஷ்டமான விஷய லாபத்தாலே வரும் கர்வமும்
தத் அலாபத்தாலே வரும் க்லேசமும்-கழிந்து ஷட் பாவ விகாரங்களும் -அஸ்தி ஜாயதே இத்யாதி -நீங்கி
சுத்த சத்வ தயா பிரகாசமாய் இருக்கிற அப்ராக்ருத விக்ரகத்தை பெற்று-அந்தமில் பேர் இன்பம்-திருவாய் –10-9-11-என்கிற படி (வந்து அவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை -திருவாய் –10-9-11-) அபரிமித ஆனந்த மயமான பரமபதத்திலே அடியார்கள் குழாங்களை உடன் கூடி-சுழி பட்டோடும் சுடர் சோதி வெள்ளத்து இன்புற்று-திருவாய் -8–10–5-
(வழி பாட்டோட அருள் பெற்று மாயன் கோல மலரடிக் கீழ் சுழி பாட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று –திருவாய் -8–10–5-)-என்கிற படி அநவரத பகவத் அனுபவத்தாலே ஆனந்த நிர்பரனாய் இருக்கை-–கவர்வுடன் கூடிய களிப்பு இங்கு -அங்கு ஸ்வரூப ஆவிர்பாவம் -கர்மம் அற்று –
இயற்கையான ஆனந்தம் -சுத்த சத்வ மயம் -அப்ராக்ருதம் -அம்ருத சாகரத்தில் நிமக்நராய் அங்கு அன்றோ
இதுக்கு மேலே ஏழு படிக்கட்டுக்கள் காட்டி அருளுகிறார் –
அர்த்த பஞ்சக ஞானம் -ஞாதவ்ய பஞ்சக ஞானம் -அறிந்து கொள்ள வேண்டிய ஐந்தும் -நிரதிசய ஆனந்த ஹேது–ஞாதவ்ய பஞ்சக அஞ்ஞானம் -சம்சாரத்துக்கு ஹேது–சத்வம் -அசத்வம்-அடுத்த படி –
இவற்றுக்கு ஹேது ஜென்ம ஜாயமான கால கடாக்ஷம் இருப்பதும் இல்லாமலும்
கடாக்ஷத்துக்கு அடி கிருபா-கர்மமும்–அநாதிகால அவித்யா / ஸுஹார்த்தம் இவற்றுக்கு காரணம் –
இங்கு சாஸ்த்ர ஞானம் -மேலே சொன்னது அர்த்தபஞ்சக ஞானம் இருப்பதும் இல்லாமையும் —
சர்வ பூத ஸுஹார்த்தம் -கிருபா -கடாக்ஷம் -சத்வ குணம் -ஞானம் -மோக்ஷம்
அவித்யா -கர்மம் -ஜென்மம் -சத்வம் -அஞ்ஞானம் -அனந்த கிலேச பாஜநம்-இப்படி படிக்கட்டுக்கள்
இவற்றுக்கு அடி -அசித் அயன சம்பந்தம் இவற்றுக்கு மூலம் –
இப்படி ஏழையும் அருளிச் செய்கிறார் –
அசித் சம்பந்தமும் அயன சம்பந்தமும் நித்யம் அநாதி –-அசித் சம்பந்தம் அந்தத்துடன் கூடியது
ஒழிக்க ஒழியாத நவவித சம்பந்தம் அவனுடன் தானே –
இந்த ஸுக துக்கங்களுக்கு எல்லை எவை என்னில் (இன்பு துன்பளி பன் மா மாயத்தழுந்துகையும், களிப்பும் கவர்வு மற்றுப் பேரின்பத் தின்புறுகையும்)
(இன்பு துன்பளி) துன்பத்தோடே கூடின இன்பத்தைத் தருமதாய் இருக்கை.
இதுக்கு ப்ரமாணம் “அத்யந்தஸ்திமி தாங்காநாம் வ்யாயாமேந ஸுகைஷீணாம் ப்,ராந்தி ஜ்ஞாநவதாம் பும்ஸாம் ப்ரஹாரோபி ஸுகாயதே’” என்று திமிர்வாதம் பற்றின ஸரீரத்தை யுடையவர்களாய், வ்யாயாமத்தினாலே ஸுகத்திலே ஆசை யுடையவர்களுக்கு ஸரீரத்திலே குத்த, ப் ராந்தி ஜ்ஞாநத்தாலே அது ஸுகமாகிறாப் போலேயிறே.
இன்புதுன்பளி பன்மா மாயத் தமுந்துகையாவது– ‘“ஓ ஓ உலகினதியல்வே ” (திருவாசிரியம் 6) என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே பர ஹிம்ஸாதி, ஸாத,ந முக,த்தாலே க்ஷத்ர தேவதா ஸமாஸ்ரயணம் பண்ணி, தத் ப,லமாய் துக்க,மிஸ்ரமான க்ஷுத்ர ஸுகங்களை அநுபவிக்கைக் கீடான தேவாதி ஸரீரங்களிலே அஹமபி,மாநம் பண்ணி ஸம்ஸரிக்கை.
களிப்பும் கவர்வுமற்றுப் பேரின்பத் தின்புறுகையாவது-– “களிப்பும் கவர்வுமற்று” (திருவாய். 2 – 3 – 10) என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே ப்ராக்ருத பதார்த்த,ங்களினுடைய லாபா லாபங்களாலே வருகிற ஸோக ஹர்ஷங்கள் போய், ஷட்,பாவ விகாராஸ்பதமான ஸ்தூ,ல ஸூஷ்ம ரூபமான ப்ரக்ருதி ஸம்பந்த முமற்று, ”பேரின்ப வெள்ளத்தே”’ (திருவாய். 7 – 2- 11) என்று சொல்லுகிற நிரதிஸய ஆநந்த, மயமான தேஸ விஸேஷத்திலே போய், அப்ராக்ருத விக், ரஹ பரிக்,ரஹம் பண்ணி, தி,வ்யாஸ்தாந மண்டபத்திலே நிரதிஸய ஆநந்த., மக்நரான நித்ய ஸூரிகளோடே “ ௬ழி பட்டோடும் சுடர்ச்சோதி வெள்ளத் தின்புற்று (திருவாய். 8 10 – 5) என்கிறபடியே ப.கவதநுபவம் பண்ணி, ஆநந்த நிர்பரராய் இருக்கையும், அந்த ஸாஸ்தர ஜந்ய ஜ்ஞாநத்தாலே பிறந்த விவேகத்துக்கு ப்ரயோஜநம் த்யாக, ஸ்வீகாரங்களென்றும், த்யஜிக்கைக்கும் ஸ்வீகரிக்கைக்கும் ஹேது ஸுக துக்கங்களாகையாலே என்றும், இவை இரண்டுக்கும் எல்லை ஸம்ஸார ஸம்பந்தமும், பரமபதத்திலே போய் ஆநந்த நிர்பரரா யிருக்கையும் என்றதாய்த்து
ஒ! ஒ! உலகினது இயல்வே ஈன்றோள் இருக்க
மணை நீர் ஆட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப புடை பல தானறி
தெய்வம் பேணுதல் தனாது
புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து அழுந்து மா நளிர்ந்தே –திருவாசிரியம்–6–இருந்தார் இருந்த இடங்களிலே செவிப்படும்படி கூப்பிடுகிறார்–ஒரு விபூதியாக தன்னை அனுபவிக்கிற அனுபவத்துக்கு விச்சேதம் இன்றிக்கே செல்லுகிறாப் போலே-இது ஒரு விபூதி தன் பக்கல் வைமுக்யம் பண்ணும்படி வைப்பதே – இது ஒரு லோகத்தினுடைய ஸ்வ பாவமே –உத்பத்திக்கு முன்னே உண்டாக்குகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ணி – பின்னை கர்ப்பத்தில் தரித்து – பிரசவ வேதனையை அனுபவித்து – அநந்தரம் தண்ணிய இட்டுக் கொடு துவண்டு நோக்கினால்-அறிவு பிறந்து பண்ணின உபகாரத்தை ஸ்மரிக்கும் அளவானவாறே–அவளை விட்டு ஒரு உபகாரமும் பண்ணவும் அறியாதே இவன் பண்ணின உபகாரத்தையும் ஸ்மரிக்கவும் அறியாதே இருபத்தொரு அசித் பதார்த்தத்தை கொண்டாடுவாரைப் போலே வகுத்த விஷயத்தை விட்டு அப்ராப்த விஷயத்தை ஆதரியா நின்றார்கள்—இன்பு துன்பு அளி
ஸூக துக்க மிஸ்ரமான பலத்தை யாயிற்று தருவது – நிஷ்க்ருஷ்ட ஸூகமான மோக்ஷம் அவற்றுக்கு இல்லையே–வகுத்த விஷயத்தைப் பற்றி நிஷ்க்ருஷ்ட ஸூகத்தைப் பெறப் பாராதே சேதனர் அப்ராப்த விஷயத்தை ஆஸ்ரயித்து அனர்த்தத்தைப் பெறப் பார்ப்பதே – இது என்ன படு கொலை என்கிறார்
இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா!இமையோர்தம் குலமுதலே!–7-1-8-முகப்பிலே நிரதிசய போக்யம் போலே தோன்றி –அக்ரே அமிருதம் இவ -என்னும்படியே -விபாகத்தில் இருக்கும் இருப்பு உபக்ரமத்தில் தோன்றிற்று ஆகில் மேல் விழாது ஒழியல் யாயிற்று -வாயில் இட்டால் ரசித்து அநந்தரம் முடிப்பன சில விஷங்கள் உண்டு அது போலே ஆயிற்று-தனித் தனியே பிரபலமாய் அத்விதீயமான சப் தாதிகள் ஐந்தும் யாவரையும் மயக்க-எத்தனையேனும் அதிசயித ஞானரையும் கலங்கப் பண்ணும் படியாக-சர்வ சக்தியான நீ வைத்த-அநாதியான ப்ரக்ருதி சம்பந்தத்தை காரியத்தோடு கூட-
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-அல்ப அஸ்திரத்தவாதி தோஷ துஷ்டமான விஷய லாபத்தாலே வந்த களிப்பும் –அவை கிட்டாது ஒழிந்தால் இவை கிட்டாது ஒழிய பெற்றோமே என்று இராதே பண்ணும் சாபலமும் -இரண்டுக்கும் அடியானை ஜென்மம் ஜென்ம ப்ரயுக்தமான வியாதி -ஒன்றால் பரிஹரிக்க ஒண்ணாத அவ்ரஜ நீயமாய் வரும் மூப்பு இவற்றோடு யாகிலும் ஜீவிக்க நினைத்தால் வரும் நிரன்வய விநாசம் -ஆக ஷட்பாவ விகாராதிகள் அற்று
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-முகில் வண்ணன் உடைய வானம் என்னுதல் -அவனுடைய நிழல் ஈடான வானம் என்னுதல் -தாம் மோஹித்து திருத் தாயார் தனியே கூப்பிட இருந்த இவருடைய கிலேசமும் இன்றிக்கே -நித்ய ஸூரிகள் நடுவே ஆனந்த நிர்ப்பரராய் இருக்கப் பெறுவர்கள்
வழி பட்டு ஓட அருள் பெற்று மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ முழுதுமே–8-10-5-ஆறு பெருகுமா போலே சுழித்துச் செல்லுகிற ஒளி அலைகளை உடைத்தான தேஜஸ் சமுத்ரமான பரம பதத்தில் –அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோ மகாதமன-ஸ்வ யைவ ப்ரபயா ராஜன் துஷ்ப்ரேஷம் தேவதா நவை -பாரதம் -ஆரண்ய பர்வம் – ஏஷக்யேவ ஆனந்தயாதி -தைத்ரியம்–சூர்யன் அக்னி ஆகியவற்றின் ஒளிகளைக் கடந்துள்ள-ஒளியுடன் விளங்குகிற மாகாத்மாவின் ஸ்ரீ மன நாராயணன் உடைய ஸ்ரீ வைகுண்டம்-என்று அவன் ஆனந்திப்பிக்க -ஆனந்த நிர்ப்பரனாய் இருந்தாலும்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-யவாதாத்ம பாவியாய் நிரதிசயமான ஆனந்தத்தை யுடையராய்க் கொண்டு -ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு –சம்சாரத்தில் துக்கத்துக்கு எல்லை யுண்டாகில் யாய்த்து -அஸ் ஸூகத்துக்கு அவதி சொல்லலாவது –அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்று ஆசைப் பட்ட படியே இருந்தமையை -அவர்களும் தங்களுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு துணை தேடி இறே இருப்பது–
—
சூரணை-5
ஏவம் பூத துக்கமும் சுகமும் இவனுக்கு உண்டாக ஹேது என்ன சொல்லுகிறது மேல்-
அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது--,) ”ஸம்ஸார ஸாக,ரம் கோரம் அநத்த கலேஸ பாஜநம்” (ஜித. 1) என்கிறபடியே அநந்த துக்காவஹமான ஸம்ஸாரத்துக்கும், நிரஸ்தாதிஸயாஹ்லாத, ஸூக, பாவைக லக்ஷணா பேஷஜம் பகவத ப்ராப்தி ரேகோந் தாத்யந்திகீ மதா” (வி.பு. 6 – 5 -59) என்கிறபடியே நிரதிஸய ஆநந்தா வஹமான மோஷத்துக்கும் ஹேது என் என்னில் மறந்தேன் -என்று தொடங்கி ”ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஸ் ச ப்ரத்யகாத்மந:। ப்ராப்த் யுபாயம் ப,லம் ப்ராப்தே! ததா ப்ராப்தி விரோதி, ச ” (வ்ருத்த,ஹாரீத, 8) என்று இத்யாதிகளில் சொல்லுகிற அர்த்த, பஞ்சக ஜ்ஞாநமும், தத் விஷயமான அஜ்ஞாநமும் என்கிறார் மேல்.
அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது–மறந்தேன் அறியகிலாத உணர்விலேன் ஏணிலேன் அயர்த்து என்றும்–உய்யும் வகை நின்ற ஒன்றை நன்கு அறிந்தனன்–உணர்வினுள்ளே ஆம் பரிசு என்றும் சொல்லுகிற ஞாதவ்ய பஞ்சக ஞான -அஞ்ஞானங்கள் –சூரணை-5
அதாவது சம்சார சாகரம் கோரம் அநந்த க்லேச பாஜனம் -ஜிதந்தா -1–என்கிற சம்சார ஆரப்ய ப்ரயுக்த அனந்த துக்க ஹேது
மறந்தேன் உன்னை முன்னும் -என்கிற பர விஷய அஞ்ஞானமும்
(மறந்தேன் உன்னை முன்னும் மறந்த மதியால் மனத்தால் இருந்தேன் எத்தனையும் அதனால்
இடும்பைக் குழியில் பிறந்தே ஏய்த்து ஒழிந்தேன் -பெரிய திருமொழி -6-2-2–)
என்னை அறியகில்லாதே -என்கிற ஆத்ம விஷய அஞ்ஞானமும்
(யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -திருவாய் 2-9 -9)
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன் -என்கிற விரோதி விஷய அஞ்ஞானமும்
(கோடிய மனத்தால் சினத்தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் -பெரிய திருமொழி -1-6-6-)
பிறவி நோய் அறுப்பான் ஏணிலேன் இருந்தேன் -என்கிற உபாய அஞ்ஞானமும்
(பிறவி நோய் அறுப்பான் ஏணிலேன் இருந்தேன்– பெரிய திருமொழி -1-6-1-)
ஆழி அம் கையானை ஏத்தாது அயர்த்து -என்கிற புருஷார்த்த விஷய அஞ்ஞானமும்-
(கரந்துருவின் அம்மானை அந்நான்று தொடர்ந்த ஆழி அம் கையானை ஏத்தாது
அயர்த்து -பெரிய திருவந்தாதி -82 )
ஜ்ஞாதவ்யார்த்த பஞ்சக ஞான அபாவம்-
ஸம்சார ஸாகரம் கோரம் அநந்த க்லேஸ பாஜநம்
த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண —4–ஸம்சார ஸாகரம் – ஸம்சாரம் ஆகிறது -அவித்யா கர்ம வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்களும்-ஷட் பாவ விகாரங்களும்-புத்ர மித்ர களத்ராதிகளும்-தத் கார்யம் ஆகையாலே –-ஸம்சார சப்த வாச்யங்கள் ஆகிற இத்தனை – ஜன்ம சம்சார பந்தநாத் –முச்யதே -என்று ஜன்மாதிகளைக் கார்ய வர்க்கங்களாகவும் அவித்யாதிகளைக் காரண வர்க்கமாகவும் சொல்லிற்று இறே –-பரிச்சேதிக்க ஒண்ணாமை யாலும் தன் பக்கல் இழிந்தாரைக் கொண்டு இழியுமதாகையாலும்-புகலாம் இத்தனை போக்கி புக்கால் தம்தாமால் கரையேற ஒண்ணாமையாலும்
இத்தை -சாகரமாக நிரூபிக்கிறது –கோரம் – கொடிதாய் இருக்கை -அதாவதுசர்வர்க்கும் துக்கம் என்று மீளலாம் நரகாதிகளைப் போல் அன்றிக்கே-ஆத்மாவுக்கு விநாச ஹேதுவாய் இருக்கச் செய்தேயும்
இன்னமுது எனத் தோன்றி -திருவாய் -7-1-8-என்று முகப்பிலே ஆகர்ஷகமாய் இருக்கும் தன்மையை உடைத்தாய் இருக்கை –-அஹங்கார சித்திக்கும் விஷயாந்தர போகத்துக்கும் சம்சாரிகள் உபாய அனுஷ்டானம் பண்ணுகிறார்கள் -இறே-அநந்த க்லேஸ பாஜநம் – தாப த்ரய துக்கத்தால் தொகை அற்ற க்லேசத்துக்கு எல்லாம் உத்பத்தி ஸ்தானமாய் இருக்கை-நலமந்த மில்லதோர் நாடு -திருவாய் -2-8-4- என்று ஒரு தேச விசேஷத்தில் ஸூகத்திற்கு முடிவு இல்லாதாப் போலே இதில் துக்கத்துக்கு முடிவு இல்லை -என்கை –
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியில் மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில்
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா
சிறந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே —6-2-2-மறந்தேன் உன்னை முன்னம் –
அந்த பொருள் இன்பங்களோ பாதி உன்னையும் ஒரு மூலையிலே ஆதரித்துக் கொடு போரப் பெற்றிலேன் – அது செய்து போந்தார் ஆகில் அப்போதைக்கு இப்போது அவற்றுக்கு இப்போது பரிஹாரம் பண்ணினார் ஆவரே –மறந்தேன் – யாதொரு விஷயம் விடாதே நினைக்க வடுக்கும்
அது ஒன்றையும் மறந்து போனேன்-நம்பிள்ளை மதுரையிலே நிர்வஹியா நிற்கச் செய்தே
ஒப்பிலாத பெருமாள் -த்யேயோ நாராயணஸ் சதா – என்கிற விஷயத்தை யாகாதே மறந்து போந்தது -என்றார் –(கங்கை கொண்ட சோழ புரம் -குருகைக் காவல் அப்பன் நினைக்க வழி கேட்டவர்களுக்கு –
நீங்கள் –மறக்க வழி சொல்லில் அன்றோ நான் சொல்ல முடியும்-எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன் அன்றோ) அல்லாதவை செய்தபடி செய்ய உன்னை முந்துற முன்னம் மறந்து மறந்து கொடு நின்றேன் -என்னுதல்–அன்றிக்கே-அநாதி காலம் மறந்து போனேன் -என்னுதல்-இம்மறப்பு போருகிறது நெடு நாள் உண்டாகில் உன்னை முன்னம் மறந்திலேன் என்று அன்றோ சொல்ல அடுப்பது என்னில்
அது வேண்டா யாய்த்து (பல நாள்களாக மறந்தேன் என்றால் அதுக்கு முன்னம் மறந்திலேன் சொல்ல வழி இல்லாமல் – முன்னம் என்று அநாதியாகவே என்றத்தைச் சொன்னவாறு _-உன்னை-என்கிற இடத்தில் சம்பந்தத்தை ஸ்மரித்தவர் ஆகையாலே-சம்பந்தம் ஸ்வா பாவிகமே யாகையாலே
முன்பு நெடு நாள் மறந்து போரச் செய்தேயும்-சில நாள் ஸ்மரித்து மறந்தால் போலே இருக்கத் தோற்றிற்று –(உறவில் உறைப்பு தோன்ற உன்னை என்கிறார் என்னைப் பார்த்தால் அநாதி –
உன்னைப் பார்த்தால் நினைத்து இருந்த காலமும் உண்டு என்று தோன்றுமே )கலங்கா பெரு நகரம் தன்னிலே இருந்து மறுக்கிறது அன்று இறே சம்சாரத்த்லே இருந்து மறக்கை குற்றமோ என்ன -அவ்வளவே என்று நான் சேதனாகப் பெற்றிலேன் -என்கிறார்-சேதனன் ஆகில் மறந்தோம் என்னும் அனுதாபம் பிறக்க வேணும் இறே மறந்தால் – மறந்தோம் என்கைக்கு யோக்யதை இல்லை இறே அசித்துக்கு- சித்துக்கு ஞாத்ருத்வம் ஆகிறது -ஜ்ஞான குணங்களுக்கு ஆஸ்ரயம் ஆகை இறே-
அக் குணங்கள் தன பக்கல் காணாமையாலே அவற்றுக்கு ஆஸ்ரயம் உண்டாகப் பெற்றது இல்லை
(அசித் சமமாக அன்றோ இருந்தேன் )-மறந்தோம் என்கிற மதி இல்லாத நெஞ்சை உடையேன் என்கையாலே அனுதாப ரூப ஜ்ஞானமும் த்வாரம் மனஸ் இறே-அது இல்லாமையால் -உண்டாய் இருக்கச் செய்தேயும் இல்லை என்று வ்யவரிக்கலாம் படி நசித்தேன்–மறந்த மதி இல் மனத்தால் இறந்தேன் இத்தனையும் –-அசித்துக்கு அவ்வருகே ஆனேன்-முதலிலே நினைக்கைக்கும் யோக்யதை இல்லை இறே அசித்துக்கு-சித்துக்கு யோக்யதை உண்டாயிருக்கச் செய்தேயும்-நினையாமையாலே
அசித்துக்கும் அவ்வருகே கை கழியப் போனேன்-அசந்நேவ என்று பிரமாணங்களும் சொல்லும்படி யானேன் (ப்ரஹ்மம் இல்லது என்றால் இல்லாமல் -உண்டு என்றால் உளனாகி இருப்பானே –
ஆத்மா இருந்தால் ஞானம் இருக்க வேண்டும்-மறந்தேன் -மறந்த மதி இல்லாமல் அனுதாபமும் படாமல் இருக்கவே இறந்ததுக்கே சமம் )–மறந்த மதியில் – நினையாது ஒழிந்தேன் என்கிற ஜ்ஞான அனுதாபமும் இல்லாதாகையால்-மனத்தால் -மனசை உடையேனாக எத்தனையும் -மிகவும் அசித்தைக் காட்டிலும் இறந்தேன் -கை கழியப் போந்தேன்-அதனால் –அவித்யா தருசம்பூதி பீஜமே தத்த்விதா ஸ்த்திதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்கிறபடியே-அநாத்ம ந்யாத்ம புத்தியும் அஸ்வே ஸ்வ புத்தியும்
சம்சாரத்துக்கு பீஜம் என்று இருப்பார்கள் இவர் அனுதாபம் இல்லாமை சம்சார பீஜம் என்று இருக்கிறார் – (அஹங்காரம் மமகாராம் வேர் முதல் ஆழ்வார் -பீஜம் இங்கு இருந்தேன் -அனுதாபம் கூட இல்லாமல் இருந்தேன் –அதனால் இடும்பை குழியில் பிறந்தேன் என்கிறார் அன்றோ -ஆகவே இதுவே பீஜம் )(ஜனன மரணம் -ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம்-சொல்வைதை விட சாவது பிறப்பது இங்கே-லவ குசர் குசலவர் மாற்றி அன்றோ சொல்லுகிறோம் ) பிறந்தே- இப்படி சாவது பிறப்பதாய் போரா நின்றால்-நடுவில் காதாசித்கமாக பகவத் சமாஸ்ரயணம் பண்ணினால் இறே-அது ஒரு ஜென்மத்துக்கு பிரதி பந்தமாக வற்றாவது – அப்படி புருஷகாரம் காட்டி மீண்டது இல்லை –எய்த்து ஒழிந்தேன்- இன்னும் பிறக்கைக்கு அடியான கர்ம வாசனை உண்டே யாகிலும் பிறக்கைக்கு த்ரவ்யம் இல்லாத படி ஆனேன் கர்ம வாசனை கிடந்தது பிறக்க வேண்டினாலும் பிறக்கைக்கு ஷமன் அல்லேன்
யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-அவனுக்கு கலக்கம் இல்லாமையால் -தன்னைத் தருகைக்கு எதிர் சூழல் புக்கு திரிய -நான் என்னை முடிய சூழ்த்துக் கொண்டேன்–தேஹாத்ம அபிமானத்தாலே என்னை அவனுக்கு பிரகாரம் என்று அறிந்திலேன்-ஈஸ்வரோஹம் என்று இருந்தேன்-இவன் நான் என்றால் ஈஸ்வரனுக்கு கிட்ட அரிதாய் இறே இருப்பது-நானும் எனக்கு உரியேன் இன்றிக்கே இருக்க எனக்கு ஒரு உடைமையும் உண்டாக நினைத்து இருந்தேன்-தேகத்தை ஆத்மாவாகவும் -ஈஸ்வர விபூதியை என் உடைமை யாகவும் இந்த விபரீத அஞ்ஞானமே யாய் இருந்தேன்-இருந்தேன் – இப்படி ஸ்வரூபம் நசித்துக் கிடைக்க அனுதாபம் இன்றிக்கே க்ருதக்ருத்யனாய் இருந்தேன்-அஹம் சர்வம் கரிஷ்யாமி –என்று இருக்கை பிராப்தமாய் இருக்க ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே இருந்தேன்
கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே பாற் கடல் கிடந்தாய்
நாடி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-6-நல் விஷயத்தில் இருந்தும் விலகி –அனுகூல விஷயத்திலும் நெஞ்சு விலகியாயிற்று இருப்பது –மறச் செயல் செய்து –ஹிம்ஸ்ர பதார்த்தங்களோடே -வேட்டையாடித் திரிந்தபடியைச் சொல்லுதல் – தண்ணியவர்களோடே கூடி விளையாடிக் களித்து திரிந்தபடி யாதல் –ஒருவனை ஹிம்சிக்கலாம் பதின் காத மாறு போகலாமோ -என்றால் ஹிம்சித்ததாம் போது -சால வருந்த வேணும் என்றால் அப்படி வருந்தி வ்யாபரித்தும் –தட்டுப் பாராதே அவ்வளவும் ஓடியும் –ப்ராண விஸ்லேஷ பர்யந்தமாக்கிப் போந்தேன்
புடைவை யுரிந்து விட்டிலேன் –உணர்விலேன் – சர்வேஸ்வரன் ஒருவன் உளன் என்றும் இச்சாண் சந்தையும்-(சொல்ப வாக்கியமும்) நெஞ்சிலே படாத போது செய்யாதது உண்டோ-
வாணிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை யெனக் கருதிப் பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் –1-6-1-இப்படி அறிவு கேடன் ஆகையாலே – சம்ஸாரம் ஆகிறது அல்பம் -அஸ்தரம் -துக்காவஹம் -ஆனபின்பு இத்தைத் தவிர்த்துக் கொள்ள வேணும் -என்னும் மநோ ரதத்தை உடையேன் அன்றிக்கே இருந்தேன் –இத்தை தவிர்த்துக் கொள்ளுகைக்கு ஈடான உயர்த்தியை உடையேன் அல்லேன் -என்னுதல் –
தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-கைகேயி வாரத்தில் அகப்படா விட்டது திருக் கையில் அருகாழி ஒன்றுமே யாகாதே-வடிவைக் கரந்து வர்த்திக்கிற அம் மாய மானை அன்று தொடர்ந்த அருகாழியைக் கையிலே யுடைய ஸர்வேஸ்வரனை இளைய பெருமாளும் உதவாத தசையில் ஏத்தப் பெறுவது அறிவு கெட்டுக் கிடந்த நான் பழுதே போக்கினேன்–ஏத்துகை –அடிமையாய் இப்படி அடிமை செய்யப் பெற்றிலேன்
“மறந்தேனுன்னை முன்னம்” (திருமொழி -6- 2 – 2) என்கையாலே பர விஷயமான அஜ்ஞாநமும்
அறியகிலாத — “யானே என்னை அறியகிலாதே”’ (திருவாய் 2 – 9 – 9) என்கையாலே ஆத்ம விஷயமான அஞ்ஞாநமும்
உணர்விலேன் -”ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன்” (திருமொழி 1 – 6 – 6) என்கையாலே விரோதி விஷயமான அஜ்ஞாநமும்
ஏணிலேன் -) ”பிறவி நோயறுப்பான் ஏணிலேனிருந்தேன்” (திருமொழி 1 – 6- 1) என்கையாலே உபாய விஷயமான அஜ்ஞாநமும்
அயர்த்து என்றும்-”ஆழியங்கை யம்மானை ஏத்தாதயர்த்து” (பெரியதிரு – 82) என்கையாலே புருஷார்த்த விஷயமான அஜ்ஞாநமும்-
ஏத்துகையிறே புருஷார்த்தம். அத்தை மறக்கையாலே புருஷார்த்த, விஷயமான அஜ்ஞாநமும் என்கிறார். “*சூழ்ந்திருந்தேத்துவர்’” (திருப்பல். 12) என்றும், ““ஏதத் ஸாம் காயந் நாஸ்தே” (தை. ப்ருகு,.) என்றும் சொல்லக் கடவதிறே-
பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில்லாண்டான் தன்னை வில்லி புத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணா என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –12—நம புரஸ்தாத தப்ருஷ்ட தஸ்தேத மோஸ் தூதே -என்கிற படியே முன்பே நில்லா-முறுவலை அனுபவித்து அதிலே ஈடுபடும் -பின்பே நில்லா பின்பும்-பிறகு வாளி யாவது -தண்டிகை கொம்பு போலே வளைந்து திரு பிடரியிலே
தொங்குகிற அசாதாராண ஆபரண விசேஷம் -பிறகு வாளி யுமான அழகை அனுபவித்து அதிலே ஈடுபடும் –இப்படி சுழி யாறு படா நிற்கச் செய்தே கால் வாங்க ஒண்ணாத வடிவு அழகு -அதி சங்கையை விளைத்து மங்களா சாசனத்தில் மூட்டும் என்கை-
நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸுக பாவைக லக்ஷணா–ஸ்ரீ விஷ்ணு புராணம் –6 -5–59 -என்கிற பகவத் பிராப்தி ரூப மோஷ ப்ரயுக்த நிரதிசய ஸுக ஹேது
(ஸூக பாவைக லக்ஷணம் -பகவத் பிராப்தி ரூபம் -நிரதிசய ஆனந்தம் -ஸ்ரீ வைகுண்டம் ஸ்தானம் –
பகவத் பிராப்தி ரூப மோக்ஷ பிரயுக்த-நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவைக லக்ஷணம் -துக்கம் கலசாத -ஆனந்தம் )
நின்னை நெஞ்சில் உய்யும் வகை உணர்ந்தேன் -என்கிற பர விஷய ஞானமும்
(இவையாய நின்னை நெஞ்சில் உய்யும் வகை உணர்ந்தேன் -பெரிய திருமொழி -6-3-6-)நின்ற ஒன்றை உணர்ந்தேன் -என்ற ஆத்ம விஷய ஞானமும்-
(அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆம் அவை நன்கு அறிந்தனன்—திருவாய் -5-7-8-)
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆம் அவை நன்கு அறிந்தனன்-என்ற விரோதி விஷய ஞானமும்
அவனது அருளால் உறல் பொருட்டு என் உணர்வின் உள்ளே நிறுத்தினேன் -திருவாய்-8-8-3–என்கிற உபாய விஷய ஞானமும்
ஆம் பரிசு அறிந்து கொண்டு -என்கிற புருஷார்த்த விஷயம் ஆகிற ஞானமும்
(மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து ஆம் பரிசு அறிந்து கொண்டு –திருமாலை -38-) ஆகிய இவை ஜ்ஞாதவ்யார்த்த பஞ்சக ஞானம் என்கை-
உய்யும் வகை – “உணர்ந்தேன் உண்மையாலினி யாதும் மற்றோர் தெய்வம் பிறிதறியேன்”’ (திருமொழி 6 – 3 – 6) என்கையாலே பர விஷயமான் ஜ்ஞாநமும்
நின்ற ஒன்றை -நின்ற வொன்றை உணர்ந்தேன்” (திருவாய், 8 – 8 – 5) என்கையாலே ஸ்வருப விஷயமான ஜ்ஞாநமும்
நன்கு அறிந்தனன்- ‘ அகற்ற நீ வைத்த மாய வல்லைம் புலன்களாமவை நன்கறிந்தனன்’” (திருவாய். 5 – 7 – 8) என்கையாலே விரோதி, விஷயமான ஜ்ஞாநமும்
உணர்வினுள்ளே -) *’உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவுமவனதின்னருளே”” (திருவாய். 8 – 8 – 3) என்கையாலே உ.பாய விஷயமான ஜ்ஞாநமும்
ஆம் பரிசு என்றும்– ”ஆம்பரிசறிந்து கொண்டு” (திருமாலை 38) என்கையாலே புருஷார்த்த, விஷய ஜ்ஞாநமும் சொல்லிற்று.
மை ஒள் கருங்கடலும் நிலனும் அணி வரையும்
செய்ய சுடர் இரண்டும் இவையாய நின்னை நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்றோர்
தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே—6-3-6-இப்படி ஜகதா காரனாய் இருக்கிற உன்னை –நெஞ்சாலே அசந்நேவ-என்கிறபடியே அசத் கல்பனாய் உரு மாய்ந்து போன நான் இப்போது உஜ்ஜீவிக்கும் படி தேவரை அனுவர்த்தித்தேன் –இவ் வாத்மாவுக்கு நீயே சேஷி-உன்னைக் குறித்து இவ் வாத்ம வஸ்து அத்யந்த சேஷம் -என்கிற முறையாலே –தத்வம் இருந்தபடி அல்லது பிரதிபத்தி பண்ணக் கடவது அல்லாத படியான பின்பு வேறு சிலரை ஆஸ்ரயணீயனாக நினைத்து இரேன் –
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய்நன்றாய் ஞானம் கடந்ததே–8-8-5—தேஹ இந்திரிய மன பிராணாதி களில் காட்டில் -அந்நியமாய் -இவை அழியும் அன்றும் அழியாதே ஏக ரூபமாய் -இவற்றுக்கு நியாந்தாவுமாய் விலக்ஷணமுமான ஆத்மாவை–உயர்வற உயர் நலமுடையவன் -என்று அவன் கல்யாண குணங்களிலே இழிந்தவர் ஆகையால் -இதுக்கு முன்பு மின்மினி போலே இருக்கிற ஆத்ம ஸ்வரூபத்தில் கை வைத்திலர்-பரிகரமும் பக்தி ரூபா பன்ன ஞானம் ஆகையால் இத்தை அனுசந்திக்க போது பெற்றிலர் –முக்தன் நோ பஜனம் ஸ்மரன் -பண்ணுமா போலே இ றே பகவத் ப்ரவணனுக்கும் ஆத்ம ஞானம் அவிஷயமாய்-இருந்த படி -இத்தை யாராய்ந்தவாறே இருந்த படி என்—அதினுடைய வை லக்ஷண்யம் -அது இது என்று-அநு பூதங்களின் படி என்றாதல் -அநு பவிக்கிற வற்றின் படி என்றாதல் -அறியப் போகாது-எத்தனையேனும் அதிசயித ஞானர்க்கும் ஏக தேசமும் அறியப் போகாது –கிலேச அதிகதரஸ் தேஷாம் அவ்யக்த அசக்த சேதஸாம் –வருந்தி அறிந்தாலும் சாஷாத் கரிக்க ஒண்ணாது –
சென்று சென்று பரம்பரம் ஆய்-போய் போய் ஒன்றுக்கு ஓன்று மேலாய் இருக்கிற அன்ன மயாதிகளுக்கும் பரமாய்–அவற்றின் ஸ்வ பாவம் ஒன்றும் தட்டாத படி அவற்றோடு அற தொற்று அற்று-தேஹத்தைக் காட்டிலும் இந்திரியம் -அத்தைக் காட்டிலும் மனஸ் ஸூ -அதில் காட்டிலும் பிராணன் -அதில் காட்டிலும் புத்தி -என்கிறதில் வை லக்ஷண்யம் உண்டாகிறாப் போலே -ப்ராக்ருதங்களில் உண்டான நன்மை தீமைகள் சொல்ல ஒண்ணாது இருக்கை-இவற்றில் காட்டில் அதி வி லக்ஷணமாய்-இந்திரிய ஞானத்துக்கு எட்டாது இருக்கும் –கீழில் அவை ஒன்றுக்கு ஓன்று நெடு வாசி உண்டாய் இருக்கச் செய் தேயும் ஏக பிராமண கம்யத்வ சாம்யம் உண்டு -அதுவும் இல்லை என்கிறது இப்பாட்டில் –
-இப்பாட்டில் –சாங்க்யத்தில்-தத்வ சங்க்யானக்ரமத்தால்-ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லும்படியைச் சொல்லிற்று-
அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8—அத்யாச்சர்யமான செயல்களை யுடைத்தாய் ஒருவரால் தப்ப ஒண்ணாதே இருக்கிற ஐந்து இந்திரியங்களும் -நீ வேண்டாதாரை யகற்ற வைத்தாய் என்னும் இடம் வ்யக்தமாக அறிந்தேன் –மயர்வற மதி நலம் அருள பெற்றவன் ஆகையால் அழகிதாக அறிந்தேன் -யுகாவாதாரை யன்றோ யகற்றுவது–அவை அபுருஷார்த்தம் என்று அறிந்த என்னையும் –புக்கால் கால் வாங்க ஒண்ணாத சப்தாதி விஷயங்களில் தள்ளுகிறாய் என்று அஞ்சா நின்றேன் -உன்பக்கல் ந்யஸ்த பரனான என்னையும்-என்றுமாம் -நீர் அஞ்சக் கடவீரோ என்ன -விளம்ப ஹே து இன்றிக்கே இருக்க விரோதி கிடைக்கையாலே அஞ்சா நின்றேன்
உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3—அவனுடைய பிரசாதத்தாலே பெறுகைக்காக –ப்ராப்யம் அவன் என்கிற நிர்பந்தத்தோபாதி ப்ராபகமும் அவன் பிரசாதம் என்று இறே இவர் இருப்பது -ப்ராப்யமும் ப்ராபகமும் அவனே யாகில் நீர் வர நின்ற அம்சம் ஏது என்னில்
என்- உணர்வினுள்ளே யிருத்தினேன்-வைத்தேன் –மதியால் –என்றது தான் இறே –அவனை என்னுடைய ஞானத்துக்கு விஷயம் ஆக்கினேன் -இச்சித்தேன் என்கை -இச்சை தான் ஸ்வ ஆதீனமோ என்னில்-அதுவுமவன தின்னருளே-அந்த இச்சை தானும் பிறந்தது அவன் பிரசாதத்தாலே -நின்ற நின்ற வளைவுகள் தோறும் -இவ்வளவு அவனாலே பிறந்தது -என்னும்படியாய் யாயிற்று இருப்பது -அவனுடைய நிருபாதிக ஸுஹார்த்தம் -தன் பொன்னடிக்கு கீழ் இருத்தும் வியந்து -என்று ப்ராப்ய ப்ராபகன் அவனே என்று அருத்தித்து -என்றது இறே -அத்தை இறே இங்குச் சொல்கிறது –
மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசறிந்து கொண்டு ஐம் புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே–38–ஆம் பரிசு ஆவது –கைங்கர்யமே யாய்த்து –
ஆம் பரிசு வர்த்திக்கும் படியை அறிந்து –ஆத்மா அபிமான ரூபமாக வாய்த்து வ்ருத்தி ஹேதுக்கள் தான் இருப்பது –1-தன்னை திர்யக்காக அபிமானித்த போது -தர்ண சமூஹம் ஆய்த்து வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –2-மனுஷ்யோஹம் -என்று அபிமானித்த போது-அன்னம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –-3-தேவோஹம் -என்று அபிமானித்த போது -அம்ருதம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –-4-தாசோஹம் -என்ற போது –கைங்கர்யமே வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –பிரகிருதி பிராக்ருதங்களில் சங்கோசம் போய் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால் சஹஜ கைங்கர்யமே இறே வ்ருத்தி ஹேதுவாவது –
இத்தால் ஞாநான் மோஷ அஞ்ஞானாத் சம்சார -ஆகையாலே-
பிராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம்-பிராப்துஸ்ச பிரத்யக் ஆத்மன பிராப்து உபாயம் பலம் பிராப்தே
ததா பிராப்தி விரோதி ச வதந்தி சகலா வேதாஸ் ச இதிகாச புராண கா முனய ச மகாத்மானோ வேத வேதார்த்த வேதின–ஸ்ரீ ஹாரீத சம்ஹிதை – என்கிற படியே சகல சாஸ்திர தாத் பர்யமாய் ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு அவஸ்ய ஞாதவ்யமான அர்த்த பஞ்சகத்தையும் அறியாமையும் அறிகையுமே சம்சார மோஷங்களுக்கு ஹேது என்ற தாயிற்று-
ஆக, கீழ்ச் சொன்ன ஸம்ஸார ஸம்பந்தத்துக்கும் மோக்ஷ ப்ராப்திக்கும் ஹேது ‘ஜ்ஞாநாந் மோக்ஷம், அஜ்ஞாநாத் ஸம்ஸாரம்’ என்று அறியப்படுமதான அர்த்த, பஞ்சக ஜ்ஞாநமும், தத் அஜ்ஞாநமும் என்றதாய்த்து.
—
சூர்ணிகை -6
இவ் வஞ்ஞானாதிகளுக்கு அடி எது என்ன சொல்லுகிறது மேல்-
இவற்றுக்கு காரணம் இரண்டில் ஒன்றினில் ஒன்றுகைகள்-சூர்ணிகை -6
அதாவது இவ் அர்த்த பஞ்சக அஞ்ஞானத்துக்கு காரணம்-முத்திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றுகை ஆகிய ரஜஸ் தமஸ் பிரசுரதை- (முத்திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றும் நீசர்கள் மத்தராய் மயங்குகின்றது -திருச்சந்த -68)
இவ் அர்த்த பஞ்சக ஞானத்துக்கு காரணம்-முக் குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில் ஒன்றுகை ஆகிய சத்வ பிரசுதை என்கை-
(ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி முக் குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில் ஒன்று நின்று அங்கு இரு பிறப்பு அறுப்பதோர் அறிவரும் தன்மை –திரு வெழு கூற்று இருக்கை )
ரஜஸ் தமச்கள் அன்யதா ஞான விபரீத ஞான ஹேதுவாய்-சத்வம் யதா ஞான ஹேதுவாய் இறே இருப்பது- அங்கு தான் சுத்த சத்வம் மிஸ்ர சத்வம்-ரஜஸ் தமஸ் கலந்த இங்கு -அதுவும் த்யாஜ்யம்
இந்த அர்த்த,பஞ்சக ஜ்ஞாநமும், அஜ்ஞாநமுமாகிற இவற்றுக்குக் காரணம் – இரண்டில் ஒன்றினில் ஒன்றுகைகள். அதாவது இரண்டில் ஒன்றுகையும், ஒன்றினில் ஒன்றுகையும்.
இரண்டில் ஒன்றுகையாவது – ““முத்திறத்து வாணியத் திரண்டிலொன்றும் நீசர்கள்” (திரு. ச வி. -68) என்கிறபடியே ரஜஸ் தமஸ் : ப்ரசுரனாகை.
ஒன்றினில் ஒன்றுகையாவது “முக் குணத்திரண்டவை யகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ” (திருவெழு.) என்கிறபடியே ஸத்த்வ ப்ரசுரனாகை.
இத்தால் அர்த்த, பஞ்சக ஜ்ஞாநாஜ்ஞாந காரணம் ஸத்த்வாஸத்த்வ ப்ராசர்யங்கள் என்றபடி,
முத்திறத்து வாணியத்தில் இரண்டில் ஓன்றும் நீசர்கள்
மத்தராய் மயக்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து
எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை யுய்குறில்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ –68-சாத்விக ராஜஸ தாமஸ தேவதைகளை தம் தாமுடைய குண அநுகூலமாக பற்றி ஆராதிக்கப் பெறும் மூன்று வகைப்பட்ட பலங்களிலும்-திறம் -ப்ரகாரம்–பலங்களை –வாணியம் என்கிறது-வ்யாபாரம் அல்பமாய் -பலம் விஞ்சிதாய் இருக்கை–அக்நௌ ப்ராஸ்தா ஹூதிஸ் சம்யக் -என்றும் –-பத்ரம் புஷ்பம் பலம் தோயம் -என்றும் –த்ரை குண்ய விஷயா வேதா -என்கிறபடியே வேதங்களும் குணத்ரய வச்யரான சேதனருக்கு குண அநுகூலமாக ஆராத்ய தேவதைகளையும் தத் ஆராதன பிரகாரங்களையும் -ஆராதன பலன்களையும் சொல்லி -வைத்தது—இரண்டில் ஒன்றும் நீசர்கள் –ஸ்வ குணங்களுக்கு அநுகூலமாய் இருக்கையாலும் -சாஸ்திர அனுமதியாலும் நித்ய சத்வத்தையும் -தத் ஆராத்யனான ஈஸ்வரனையும் -தத் ஆராதன பலமான மோஷத்தையும் ஒழிந்து -ராஜஸ தாமஸ பலங்களில் ருசியைப் பண்ணும் நீசர் –நீசர் ஆகிறார் -சம்சாரத்தை வர்த்திப்பித்து கொள்ளும் ஹேயர்–கர்ம அவசாநத்திலே அந்த பலத்தை இட்டு-அவ் வவ தேசங்களில் போக சரீரங்களை முடித்து–அந்த போக பூமியில் நின்றும் ஆகாச மேக அவச்யாதிகளிலே கிடந்தது கர்ப்ப வாஸ அர்த்தமாக போந்து- ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி -என்கிறபடியே பூமியிலே பிறந்து –மத்தராய் – தேக ஆத்ம அபிமானத்தாலே ப்ராக்ர்த பதார்த்த லாபத்தாலே களித்து மயங்குகின்றது –ஆத்மாவை ஆதல் – ஈஸ்வரனை ஆதல் – உள்ளபடி அறியாமையாலே மோஹாங்கதரைப் போலே இருக்கிறது இறே–ஸ்வர்க்காதி பல அனுபவங்களை புண்யம் ஷயித்த அளவிலே மத்யே விட்டு அந்த போக சரீரங்களையும் முடித்து -கர்ப்ப வாஸ அர்த்தமாக அதி கிலேசத்தோடே போந்தபடியை அனுசந்தியாமையால் இறே சேதனர் ப்ரக்ர்த போகங்களில் களித்து வர்த்திக்கிறது என்கை-
முக் குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில்-ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை–சத்வ ரஜஸ் தமஸ் ஸூக்களில் வைத்துக் கொண்டு ரஜஸ் தமஸ் ஸூக்களை கழித்து-நிஷ்க்ருஷ்ட சத்வத்தை யுடையராய்க் கொண்டு நின்று–அந்த யோகத்தாலே –புண்ய பாப ரூப கர்மங்கள் அடியான சம்சாரிக துக்கத்தை-அறுத்துக் கொள்ள வேணும் என்று இருப்பார்
அறியும் ஸ்வ பாவத்தை யுடையனாய் இருக்கும் –உபாசகராலே அறியப்படும் ஸ்வ பாவத்தை யுடையையாய்-இப்படி இருந்த யோகத்தாலே அனுபவிக்கை யாவது – ஸ்ரீ கஜேந்த்ர ஆழ்வானுடைய மிடுக்குள்ள தசையோடு ஒக்கும் அத்தனை ஆன பின்பு அவனையே உபாயமாகப் பற்றிப் பிழைக்க வேணும் –
—
சூர்ணிகை-7
இவற்றுக்கு நிதானம் எது என்ன சொல்லுகிறது மேல்-
சத்வ அசத்வ நிதானம் இருள் தரும் அமலங்களாக வென்னும் ஜன்ம ஜாயமான கால கடாஷங்கள்-சூர்ணிகை-7-(சத்வ நிதானம் இருள் தரும் வென்னும் ஜன்மம் ஜாயமான கால கடாஷங்கள்-
அசத்வ நிதானம் அமலங்களாக வென்னும் ஜாயமான கால கடாஷங்கள்-)
அதாவது-சத்வ இதரங்களான ரஜஸ் தமஸ்களுக்கு நிதானம்-இருள் தரும் மா ஞாலத்தில் இனி பிறவி நான் வேண்டேன் –வாட்டாற்றான் அடி வணங்கே-என்கிற அஜ்ஞான அவஹமான சம்சாரத்தில் ஜன்மம் –அவிவேக தின்முகம் -துக்க வர்ஷினி –சம்சாரம் –ஸ்ரீ ஆளவந்தார்
சத்வத்துக்கு நிதானம் –ஜாயமானம் ஹி புருஷம் யாம் பச்யேத் மது ஸூதன சாத்விகஸ் சது விஞாயேஸ் ச வை மோஷார்த்த சிந்தக-மோக்ஷ தர்மம்- என்கிற படியே ஜாயமான காலத்திலேயே –அவன் கண்களால் கமலக்கண்ணன் –அமங்கலங்களாக விளிக்கும் -திருவாய்-1-9-9–என்கிற
நிரமலத்வகரமான பகவத் கடாஷம் என்கை-
இந்த ஸ்லோகத்தில் நான்கு படிகளும் உண்டே –கடாக்ஷம் தொடங்கி மோக்ஷ அர்த்த சிந்தக – அங்கண் மா ஞாலம் பாசுரம் அர்த்தம் -த்யான ஸ்லோகம் இதுவே பூதாத்தி ரகு நந்தன -பூதராக்கின நெடு நோக்கு -அசுத்தி போக்கினை கடாக்ஷங்கள்-
இப்படிப்பட்ட ஸத்த்வத்துக்கும் அஸத்த்வத்துக்கும் நிதாநம் என் என்னில் – (இருள்தரும் அமலங்களாக என்னும் ஜந்ம ஜாயமாந கால கடாக்ஷங்கள்). அவையாவன – “’இருள் தரு மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்”’ (திருவாய். 10 – 6 – 1) என்கிறபடியே அஜ்ஞாநாவஹமான ஸம்ஸாரத்திலே பிறப்பு. ““ஜாயமாநம் ஹி புருஷம் யம் பஸ்யேந் மது ஸூதந: । ஸாத்த்விகஸ் ஸ து விஜ்ஜேய: ஸ வை மோக்ஷார்த்த சிந்தக:”” (பாரதே சபா . ப. 348 -73) என்கிற ஜாயமாந காலத்தில் “அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும்” (திருவாய். 1 – 9 – 9) என்கிற பகவத் கடாக்ஷமும் –
அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-–நான் அவன் வழியே போகப் பார்த்தேன் -இங்கு உகந்து அருளின நிலங்களும் பாகவத ஸஹவாசமும் உண்டாய் இருக்க அவன் வழியே போக வேண்டுகிறது என் -என்ன –அஞ்ஞான அவஹமான ஸம்ஸாரமாகையாலே-ஞானாதிகனான ப்ரஹ்லாதனையும் எதிரிடப் பண்ணிற்று இறே –இச் சரீரத்துக்கு வசப்பட்டவன் ஆக்கி ஐம்புல இன்பங்களிலே கொடு போய் மூட்டும் -என் புத்தியால் விட்டேன் – அவன் இருத்தில் செய்யலாவது இல்லை–இவ் உலகத்தின் தன்மையை நினைந்த பின்பு பின்பு விடுவதாகவே துணிந்தேன் –அவன் கருத்தை அறிந்த பின்பு –வானுயிர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -என்கிற அது நான் வேண்டேன் -இனி ஈஸ்வர அபிப்ராயத்தாலே இருக்கில் இருக்கும் அத்தனை —
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9—அவன் திருக் கண்களால் நிர் தோஷனாம் படியும் –காண வல்லேனாம் படியும் விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணினான்-விஷய பிரவணமான இந்திரியங்கள் செய்வது என் என்னில்-ஐம்புலனும் அவன் மூர்த்தி – அவையும் அவன் அழகைக் கண்டு அவனுக்கு சரீரவத் விதேயம் ஆயிற்றின-அவனைக் காண்பதற்கு முன்பு அவிதேயமானவை அவனைக் கண்டவாறே விதேயம் ஆயிற்றன–
—
இவை தனக்கு மூலம் எது என்ன சொல்கிறது மேல்-
இவற்றுக்கு மூலம் இரு வல் அருள் நல் வினைகள்-சூர்ணிகை-8
இரு வல் வினை -பாப புண்ய ரூப வலிய கர்மாக்கள்
அருள் நல் வினை -கிருபா மூலம் வரும் ஸூஹ்ருதம் –இவனும் அறியாதே சாஸ்திரமும் அறியாதே —
வரவாறு ஒன்றும் இல்லாமல் வெறிதே அருள் செய்வான்–இரு வல் லருள் நல் வினைகள் என்றது-இரு வல் வினையும் அருள் நல் வினையும் என்ற படி-
அதாவது
இஜ் ஜென்மத்துக்கு மூலம் சார்ந்த இரு வல் வினை-
சார்ந்த இரு வல் வினைகளும் சரிந்து மாய பற்று அறுத்து தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி
வீடு திருத்துவான் – திருவாய்-1-5-10–என்று ஆத்மா உடன் பிரிக்க ஒண்ணாத படி பொருந்தி கிடக்கிற
பிரபலங்களான புண்ய பாபங்கள்-
இக் கடாஷத்துக்கு மூலம்-தொல் அருள் நல் வினை–
தொல் அருள் நல் வினையால் சொலக் கூடுங்கோல் தோழிமீர்காள் தொல் அருள்
மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நாமம்-திருவாய்-5-9-10–என்கிற அவனுடைய ஸ்வாபாகிக கிருபை ஆகிய ஸூஹ்ருதம் என்கை–தொல் அருள் பூர்வ ஸூஹ்ருதம் -கிருபையால் நம் தலையில் போடுகிறார் அன்றோ-
(இவற்றுக்கு மூலம்) இந்த ஜந்ம கடாக்ஷங்களாகிற இவற்றுக்குக் காரணம் என் என்னில் –
(இரு வல்லருள் நல் வினைகள்). ““சார்ந்த இரு வல் வினை ”யும், ”தொல்லருள் நல்வினை”’ யும்.-அவையாவன – ஆத்மாவுக்கு ஸஹஜம் என்னலாம்படி பொருந்தி இருந்துள்ள புண்ய பாபங்களும், ஈஸ்வரனுடைய ஸ்வாபாவிக க்ருபையும்
சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10—சார்ந்த-இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அனுபந்தியோ என்னலாம் படி பொருந்தி இருக்கை–விரு வல்வினைகளும் சரிந்து--இருவகைப்பட்ட புண்ய பாப ரூபமான கர்மங்களை விரகர் நெடும் சுவர் தள்ளுமா போலே அநாயாசேன போக்கி–சர்வ சக்தியானவனும் அனுசந்தித்தால் நெஞ்சு உளுக்க வேண்டும்படி இருக்கை-சார்ந்த-எள்ளும் எண்ணெயும் போலே சேர்ந்து இருக்கை-மாயப் பற்று அறுத்து-விஷயங்களில் ருசி வாசனைகளைப் போக்கி-மாயை –அஜ்ஞ்ஞானம் –அத்தாலே ருசியை நினைக்கிறது –பற்று -வாசனை
தீர்ந்து-க்ருதக்ருத்யனாய் என்னுதல் அநந்ய பிரயோஜனனாய் என்னுதல்
தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10—தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?-ஸ்வாபாவிக கிருபையால் யுண்டான ஸூ க்ருதத்தாலே அவனைக் கண்டு திரு நாமங்களை சொல்லக் கூட வற்றோ என்னுதல் –ஸ்வாபாவிக கிருபையால் அவனைக் காணப் பெற்று ப்ரீதியாலே யுகந்து கொண்டு திரு நாமத்தை சொல்லக் கூட வற்றோ என்னுதல் -நல்வினை -உகப்பு –அன்றிக்கே, ஸ்வாபாவிகமான கிருபையால் உண்டான புண்ணியத்தாலே அவனைக் கண்டு திருநாமங்களைச் சொல்லக் கூடவற்றோ என்னுதல்.-நல்வினை-புண்ணியத்தாலே -ஸூஹ்ருதத்தாலே–“நா, நீர் அற்று இருக்கை பாபத்தின் பலம் அன்றோ.-புண்ணியத்தாலே- ஸூஹ்ருதத்தாலே-நாக்கிலே நீர் உண்டாய்த் திரு நாமம் சொல்ல வல்லோமே என்கிறாள்’
என்று அம்மங்கி அம்மாள் வாக்கியார்த்தமாக அருளிச் செய்வர் என்று அருளிச் செய்வர்.-
—
இவை தன்னுக்கு அடி என்ன சொல்லுகிறது மேல்-
கர்ம க்ருபா பீஜம் பொய் நின்ற அருள் புரிந்த என்கிற அவித்யா சௌஹார்த்தங்கள்-சூர்ணிகை-9
நிதானம் மூலம் பீஜம் நிமித்தம் அடி -பர்யாய சப்தங்ககள்-அதாவது கர்மத்துக்கு பீஜம்-பொய் நின்ற ஞானம்-திருவிருத்தம் 1– என்ற அவித்யை-
கிருபைக்கு பீஜம்-அருள் புரிந்த சிந்தை -அடியார் மேல் வைத்து –இரண்டாம் திரு-59
நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து
வேம்பின் பொருளை நீர்மையாயினும் பொன்னாழி பாடென்று அருள் நீர்மை தந்த அருள் -இரண்டாம் -58- -என்கிற சௌஹார்தம் என்கை-
ஈஸ்வரஸ்ய ச சௌஹார்தம் -என்று இவ் ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு அவன் கிருஷி பண்ணுகையில் இழிகைக்கு மூல காரணமாக சௌஹார்தத்தை சொல்லிற்று இறே–ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -யாத்ருச்சிக ஸூஹ்ருதம் -விஷ்ணோர் கடாக்ஷம் -அத்வேஷம் -ஆபிமுக்யம் – சாத்விக சமாகமம்—ஆச்சார்ய அபிமானம் மூலம் விஷ்ணு பிராப்தி-கீழ் மேல் ஆறு படிகள் இவற்றைக் குறிக்கும்
இஸ் சௌஹார்தம் அடியாக ஆயிற்று இவ் ஆத்மா விஷயமாக அவன் திரு உள்ளத்தில் இரக்கம் பிறப்பது-
கர்ம க்ருபா பீஜம் ) ஏவம் விதமான கர்மத்துக்கும் க்ருபைக்கும் பீஜம் – (பொய்ந் நின்ற அருள் புரிந்த என்கிற அவித்,யா ஸெளஹார்த்த.ங்கள்.- அவையாவன – ‘*’பொய்ந் நின்ற ஞானம்”! (திருவிரு. 1) என்கிற அவித்யையும், “அருள்புரிந்த சிந்தை” (இரண்டாம் திரு. 59) என்றும், ““ஈஸ்வரஸ்ய ச ஸெளஹார்த்தம்”’ ( ) என்றும் சொல்லுகிற ஈஸ்வரனுடைய ஸெளஹார்த்தமும்-
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–அநாத்மநி ஆத்ம புத்தி -அஹங்காரம்–அந்யதா ஞானம்–பிரகிருதி ப்ராக்ருதங்களைப் பற்றிய ஞானம் தேகத்துடன் -அனுபந்தி -சம்பந்தி -புத்ராதிகள் பற்றிய ஞானம்-ஸ்வர்க்காதிகள் -ஆத்ம அனுபவம் என்று தப்பாக புரிதலும்-அஸ் வேஸ்ய புத்தியையும் –பொய்யான விஷயங்களைப் பற்றி நிற்கையாலே நஸ்வரம் விஷயமாகக் கொண்ட அறிவு -எப்பொழுதும் மாறும் அசேதனத்தைப் பற்றிய ஞானம் த்யாஜ்யம் என்று அறிய வேண்டும்–அநித்யமானதை நித்யம் என்றும்-அபோக்ய மானதை போக்யம் என்றும் -அஸ்திரமானதை ஸ்திரம் என்றும் -அல்பமானதை நிறைவாக என்றும்–நாஸ்தி -என்றால் அஸ்தி யாக இருந்து நாஸ்தி ஆவது-தத்வ தர்சிகள் நிர்ணயம் அசத்துக்கு பாவம் வராது -சத்துக்கு அபாவம் வராது இப்படி யதார்த்த -ஒருபடிப்பட உள்ளதால் –உத்பத்தி விநாசாதி யோகத்தாலே அஸத்ய ஸப்த வாஸ்யமான அசேதன விஷயத்தில் ஆத்ம ஞானமும்-ஸ்வரூப அந்யதா ஞானம் -விபரீத ஞானம் -தேஹாத்ம அபிமானம்-ஸ்வ பாவ அந்யதா ஞானம் -அந்யதா ஞானம் -பரதந்த்ரனான தன்னை ஸ்வ தந்த்ரனாக நினைக்கை-உத்தேசியத்தை ஒழிந்த அர்த்த ஞானங்கள் அனைத்தும் அஞ்ஞானம்-காண்கின்ற ப்ரக்ருதி பொய் என்னலாமோ என்னில் சூன்யவாதியைப் போலேயாய் என்கிறது அன்று-மாயாவாதி போலே துச்சம் என்கிறது அன்று-ஆத்மாவைப் போலே ஒருபடிப் பட்டு இராமையாலே-ஆத்மா ஏக ரூபமாய் இருக்கும் இறே-அநாத்மன்யாத்மா புத்தியையும் -சொல்லுகிறது – ஜடமாய் இருக்கும் தனக்கு ஞானமும் பாரீர்-பரிணாமம் இல்லாத ஆத்மா பரமாத்மா பற்றிய ஞானமே ஸத்யம் -அதுவே அஸ்தி -ஷட் பாவ விகாரம்-அஸ்தி பிறக்கிறது மாறுதல் வளர்ந்து தேய்ந்து முடிதல்–சம்சார பிரக்ருதியைப் பொய் என்கிறது –நின்ற
இது தான் என்றும் ஒக்க நிலை நின்ற படி -அழுந்தின படி –ஞானமும்-ஜடமாய் இருப்பதுக்கு தனக்கு – ஞானம் என்பது பாரீர் -இதுக்கு ஞானம் என்ற பெயரா-தேஹாத்ம அபிமானம் அஞ்ஞானம் தானே–
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59–சேஷத்வ ஞானம் உள்ள )அடியோமான எங்கள் மேல்
அருள் புரிந்த சிந்தையை வைத்து-(அருள் புரிந்த சிந்தை அனைவர் இடமும் இருந்தாலும் அது கார்யகரமாவது நாம் சேஷபூதன் என்று இசைந்தாலே தானே)அத்தாலே-நாங்கள் பதார்த்தங்களை அறிந்து காண உற்ற போது நீ சேஷி நான் சேஷ பூதன் என்கிற ஞானத்துக்கு விரோதியான
அஞ்ஞானத்தைப் போக்கி-உணர்ந்து உன்னுடைய கமலம் போன்ற திருவடிகளை நினைத்தேன்
ஆராய்ந்து பார்த்து பரதந்த்ரமாய் இருக்கையாலே என்னை உன் திருவடிகளிலே சமர்ப்பித்தேன்-அருள் புரிந்த உன் திரு உள்ளத்தை எங்கள் மேல் வைத்து எங்களை ஒரு பதார்த்தமாக புத்தி பண்ணின போது -என்றுமாம்-இத்தால் கருணையாலேயே தூண்டப்பட்ட திரு உள்ளத்தை யுடைய அவன் ஒரு கைம்முதலும் எதிர்பாராமல் இவரைக் கடாஷித்த படியையும் அக் கடாக்ஷத்தாலேயே -அவன் ஸ்வரூபம் -ப்ராப்யம் -ப்ராபகம் -ஆகியவற்றை உணர்ந்த படியையும் – அவனை அடையைப் பதற்றமும் அவனே உபாயம் என்ற துணிவும் உண்டான படியை அருளிச் செய்தார் ஆயிற்று
—
இவ் அவித்யா சௌஹார்தங்களுக்கு அடி என்ன சொல்லுகிறது மேல்-
ஏதம் நிமித்தம் முன்னமே முதல் முன்னமே யான-அசித் அயன அநாதி சம்பந்தங்கள்-சூர்ணிகை -10
ஏதத் சப்தத்தாலே இரண்டையும் பராமர்சிக்கிறது-அதாவது-அவித்யைக்கு நிமித்தம்-மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே (யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும் மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -திருவிருத்தம் -95-) என்கிற அநாதியான அசித் சம்பந்தம்-
சௌஹார்தத்துக்கு நிமித்தம்-அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே-
(சார்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே –திருவாய் -2-3-5-) என்று அநாதியான அயன சம்பந்தம் என்கை-அயன சப்தத்தாலே ஈஸ்வரனை சொல்கிறது நாராயணன் இறே —
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே –அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 –ஏதேனும் ஒரு சரீரத்தில் பிரவேசித்து –அது தண்ணிய ஸூ கர-ஜன்மாவில் (ஸூ கர -பன்றியாய் )ஜனித்தாலும் –மம அயம் தேக -என்று அதிலேயே அபிமானித்து – அங்கே-உண்டானவத்றோடு சில சம்பந்த விசேஷங்களும் –அவை தன்னை விட மாட்டாமையாலேயாய்-போரா நிற்கும் ஆயிற்று –ஆக்கை -என்கையாலே-உபசயாத்மகம் என்று தோற்றுகிறது-(தேகம் வளர்ந்து -சரீரம் தேய்ந்து )புக்கு –சேதனனுக்கு அசித் சம்சர்க்கம் ஸ்வதா உள்ளது ஓன்று அன்று –-கர்ம நிபந்தனம் என்கை –அங்கு ஆப்புண்டும் –-கர்ம வாசனையாய்- ருசி வாசனையாய் -அதிலே பத்தனாய் இருக்கும் –இது தண்ணிது என்று ஆசார்ய உபதேசாதிகளாலும் –சாஸ்திர வாசனையாலும் – பிரத்யஷத்தாலும்-அறியா நிற்கச் செய்தே –இத்தை விடில் செய்வது என் என்று துணுக் துணுக் என்னா நிற்கும் –ஆப்புண்டும் –சிநேகத்தைப் பண்ணியும் –ஆப்பு அவிழ்ந்தும் –கர்மம் அடியாக வந்தது என்று அறியாதே –அவன் தான் இதிலே இலை அகலப் படுத்தா-நிற்கும் –கர்ம ஷயம் வந்தவாறே=அது தான் குலைந்து கொடு நிற்கும் இறே –மூதாவியில் –இத்தால் பழைமையை நினைக்கிறது-ஆவி -என்று பிராணனாய் –அசித் விசேஷமாய் பிராணனாய் இருக்கையாலே-இப்போது ஸூஷ்ம சரீரத்தை ஆவி என்கிறது –இது தன்னை பிரகிருதி கார்யம் என்பாரும் உண்டு –பிரகிருதி அம்சம் என்பாரும் உண்டு –இது தான் மோஷ தசை அளவும் அனுவர்த்திக்குமது —சேதனனுடைய கமந ஆகமநாதிகளுக்கும் உடலாய் இருக்கும் –தடுமாறும் –பஞ்சாக்னி வித்தையில் சொல்லுகிறபடியே மேகங்களில் புக்கு – வர்ஷ முகத்தாலே-பூமியிலே பதித்து –அந்த முகத்தாலே புருஷன் பக்கலிலே அந்வயித்து –சுக்ல சோணித ரூபத்தாலே -ஸ்த்ரி பக்கலிலே-சங்க்ரமித்து – இப்படி தடுமாற்றமாய் இருப்பது –இச் சேதனனுக்கு புக்க புக்க இடம் எங்கும் தடு மாற்றமே உள்ளது –அத்தை தான் அறிந்த இடமும் அறியாத இடமுமாய் இருக்கும் –உயிர் –ஜ்ஞான ஆனந்த லஷணமாய்- நித்தியமான வஸ்து கிடீர் இப்படி படுகிறது –இப்படி தடுமாறி சம்ஸரிக்கிறது என்று தொடங்கி என்றால் –முன்னமே –அநாதியாய் போருகிறது ஆயிற்று –அதனால் –அந்த வாசனையே உபாத்யாயராக –முன்னமே யாகையாலே –யாதானும் பற்றி –பகவத் வ்யதிரிக்த விஷயம் ஆகையே வேண்டுவது –பற்றுவது ஏதேனும் ஒன்றாக-அமையும் –அவற்றில் குண தோஷங்கள் நிரூபிக்க வேண்டா –நீங்கும்-பகவத் விஷயம் இத்தனையே வேண்டுவது விடுகைக்கு விரதத்தை –நீ பற்றுகிற விஷயங்கள் அடைய ஸ தோஷமாய் இருக்கும் –-பகவத் விஷயமே கிடாய் நல்லது -என்று சிலர் உபதேசித்தாலும் –அது நன்றே ஆகிலும் –நான் அத்தை விடுகையிலே-சங்கல்பித்தேன் என்னும் –சர்வேஸ்வரன்-ஏதத் வ்ரதம் மம -என்று ரஷிக்கைக்கு வ்ரதம் கொண்டு இருக்குமா போலே யாயிற்று-இவன் அவனை விடுகைக்கு வ்ரதம் கொண்டு இருக்கும் படி –த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம் -என்கிறபடியே இரண்டாகப் பிளக்கிலும் தலை சாயேன்-என்று ஆயிற்று இருப்பது
சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –2-3-6–அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –
அநாதி காலம் இழந்த இழவை மறக்கும் படி வந்து கலக்கையாலே–இன்றோ பெற்றது – இவ்வாத்மா உள்ள வன்றே பெற்றேன் அல்லேனோ -சேஷத்வம் ஸ்வதஸ் ஸித்தம்-அசித் சம்சர்க்கமாய் அது புழுதி ஏறின வோ பாதி –அத்தை மறக்கும் படி கலந்தான் ஆகையால் சொல்லலாம் இறே-சம்சாரிகளில் வ்யாவ்ருத்தனாக்கி முறையை அறிவித்த அன்றே பெற்றேன் அல்லேனோ என்றுமாம்
வாயும் திரையுகளில் -முன்பு சம்ச்லேஷித்ததேற்றமும் கலங்கி விஸ்லேஷமாய் சென்றால் போலே கலவியின் மிகுதியால் அத்தை மறந்து முன்பே பெற்றேன் அல்லேனோ -என்றுமாம் முதன் முன்னமே -முன்பே -பழையதாக -என்றபடி–
ஆக
அநாதி அசித் சம்பந்தம் அடியாக அவித்யையாய்
அதன் அடியாக புண்ய பாப ரூப கர்மமாய்
அது அடியாக அஜ்ஞான ஹேதுவான ஜென்மமாய்
அது அடியாக ரஜோ தமஸ் அவிருத்தயாய்
அது அடியாக அர்த்த பஞ்சக ஞான அபாவமாய்
அது அடியாக அஜ்ஞாநாத் சம்சார என்கிற படியே சம்சார துக்கம் வரும்-
அநாதி அயன சம்பந்தம் அடியாக பகவத் சௌஹார்த்தம் உண்டாய்
அது அடியாக கிருபை உண்டாய்
அது அடியாக விசேஷ கடாஷம் உண்டாய்
அது அடியாக சத்வ விருத்தி உண்டாய்
அது அடியாக அர்த்த பஞ்சக ஞானம் உண்டாய்
அது அடியாக ஞானான் மோஷம் -என்கிற படியே மோஷ ஸுகம் உண்டாம் என்று ஆய்த்து-
(ஏதந் நிமித்தம்) இந்த அவித்,யைக்கும் ஸெளஹார்த்த,த்துக்கும் ஹேது ஏதென்னில்
[முன்னமே முதல் முன்னமேயான அசித,யநாநாதி,ஸம்பந்தங்கள்). அவை யாவன “மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே”” (திரு விரு. –95) என்கிற அநாதியான அசித் ஸம்பந்த,மும், *’அடியேனடைந்தேன் முதல் முன்னமே’ (திருவாய், 2 – 3 – 6) என்கிற அநாதி யான அயந ஸம்பந்தமும்.
—
இவ் உபய சம்பந்தமும் ஆத்ம வஸ்துவுக்கு செய்யும் அவற்றை சொல்லுகிறது மேல்-
இவை கிட்டமும் வேட்டு வேளானும் போலே ஒண் பொருள் பொருள் அல்லாதவை என்னாதே நானிலாத யானும் உளன் ஆவான் என்கிற ஸாம்யம் பெற தின்றூதி அந்தமும் வாழ்வும் ஆகிற ஹானி சத்தைகளை உண்டாக்கும்-சூர்ணிகை– 11
இவை கிட்டம் போலே -ஒண் பொருள் என்னாதே நானிலாத என்கிற ஸாம்யம் பெற-தின்று அந்தம் ஆகிற ஹானியை உண்டாக்கும்–இவை வேட்டு வேளானும் போல பொருள் அல்லாதவை என்னாதே யானும் உளன் ஆவான் என்கிற ஸாம்யம் பெற ஊதி வாழ்வும் ஆகிற சத்தையை உண்டாக்கும்-
அதாவது-அசித் சம்பந்தம் தன்னோடு சேர்ந்த மாணிக்கத்தை ஒளி அற தின்று உரு அழித்து தன்னை போலே ஆக்கும் கிட்டம் போலே – (எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள்-திருவாய் –1-2-10-) அந் நலத்து ஒண் பொருள் -என்கிற விலக்ஷண ஜ்ஞான குணகமாய் ஸூயம் பிரகாசமான வஸ்து என்று இதன் சீர்மை பாராதே- (இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு -1-2-4-)-இல்லது-என்றும்-
யன்நாஸ்தி – ஸ்ரீ விஷ்ணு புராணம் -2–12–37- என்றும் சொல்லுகிற தன்னோடே-நானிலத முன் எலாம்-திருச்சந்த –65 -என்கிற ஸாம்யம் பெரும் படியாக ஞானம் லேசம் அற தின்று அந்தமும் வாழ்வும் என்கிற வற்றில் அந்தம் ஆகிற ஹானியை உண்டாக்கும்-அசந்நேவ ச பவதி-தைத்ரியம்-என்கிற படியே சத்தா ஹானியை பண்ணும் என்கை-
அசித் ஸம்பந்தம் கிட்டம் போலே. ”எண் பெருக்கந் நலத்தொண் பொருள்”’ (திருவாய். 1 – 2 -10) என்கிற விலக்ஷணமான ஆத்ம வஸ்து வென்று பாராதே ”நானிலாத முன்னெலாம்”’ (திரு ச வி.- 57 என்னும்படி ஸாம்யம் பெற. *அறுத்துத் தின்று”” (திருமொழி 7 – 7. 7) என்கிறபடியே தின்று. ‘அந்தமும் வாழ்வும்” (திருமொழி 5 – 7 – 2) என்கிறதில் அந்தமாகிற ஹாநியை உண்டாக்கும். ““அஸந்நேவ ஸ பவதி”” (தை. ஆந.) என்னக் கடவதிறே.
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-எண் பெருக்கு இத்தால் -ஜீவ அனந்யத்வத்தைச் சொல்கிறது-அந் நலத்து – கல்யாணமான ஜ்ஞானாதி குணங்களை யுடைத்தாகை-ஒண் பொருள்
ஸ்வயம் பிரகாசமாய் இருக்கை-ஈறில நித்தியமாய் இருக்கை –இப்படிப் பட்ட ஆத்மா வர்க்கத்தையும்
இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே –1-2-4-நச்வரமான அசேதனத்தின் ஸ்வ பாவமும் – ஏக ரூபனான சேதனன் படியும் இன்றிக்கே இருக்கும் அவன் ஸ்வ ரூபம்-இல்லது என்று துச்சத்வம் இத்யாத்வங்களை சொல்லுகிறது அன்று -நச்வரதையைச் சொல்லுகிறது-உள்ளது என்று அஸ்தித்வ மாத்ரத்தை சொல்லுகிறது அன்று -நித்யதையைச் சொல்லுகிறது
நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே –65–நான் இலாத முன்னெலாம்–தன்னோடு உண்டான முறையை அறியாதே நான் அசத் சமனாய் இருந்த காலம் எல்லாம்-
கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும் முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும் ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் தின்ற வம்மானே–7-7-7–இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி போகங்களைப் புஜிக்க வேணும் என்று ஐவர் நெருக்கி புஜிப்பிக்க அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்ணில் பல் குணங்களே யியற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப்
பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் அரங்க நகர் அமர்ந்தானே —5-7-2–அந்தம் –லய ஸ்தானம் –வாழ்வு ஸூகம் –சகல சேதனருக்கும் லயத்தில் இருப்பிடமாய் இருக்குமவனும் பாலநத்தால் வரக் கடவதான சுகமும் இவ்விரண்டாலும் சிருஷ்டியை நினைக்கிறது-
அயன சம்பந்தம்-கீட பேசக்ருதா ருத்த குட்யாந்தர அனுசிந்தயன் சம்ப்ரம்பபய யோகேன விந்ததே தத் ஸ்ரூபதாம்-என்கிற படியே-ஏதேனும் ஒரு கீடத்தை கொண்டு வந்து வைத்தூதி-ஸ்வ சாம்யாபந்னம் ஆக்கும் வேட்டு வேளானைப் போலே-பொருள் அல்லாத என்னை-திருவாய்-5-7-3–என்கிற படியே
ஞான அபாவத்தாலே அவஸ்து சப்த வாச்யமாய் கிடக்கிற இதின் சிறுமை பாராதே ஸ்வரூபேண விபுவான தன்னோடு பரமம் ஸாம்யம் உபைதி-முண்டகம் –3-1-3–என்கிறபடியே உள்ள உலகு அளவும் யானும் உளன் ஆவான் –(வினைப்படலாம் விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால் உள்ள உலகு அளவும் யானும் உளன் ஆவன் என் கொலோ உலகு அளந்த மூர்த்தி உரை –பெரிய திருவந்தாதி –76- )என்று ஜ்ஞனத்வாரா வரும் விபுத்வ ஸாம்யம் பெறும்படி தன் நிறமாக ஊதி வாழ்வு ஆகிய சத்தையை உண்டாக்கும் என்கை-
தன்நிறம் -உண்டாக்கும் என்றது அஷ்ட குணங்களில் சாம்யம் என்றபடி
பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல்லுயிர்க்கு எல்லாம் அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான்
அரங்க மா நகர் அமர்ந்தானே –பெரிய திருமொழி -5-7-2-என்கிறபடி வாழ்வாகிற இருப்பை உண்டாக்கும் – சந்த மேனம் ததோ விது-தைத்ரியம்- என்று பகவத் ஞான அனந்தரம் ஆத்ம சத்தா சித்தியாக சொல்லிற்று இறே-
அயந ஸம்பந்தம் வேட்டு வேளான் போலே *“‘பொருளல்லாத என்னைப் பொருளாக்கி (திருவாய், 5 – 7 – 3) என்கிறபடியே அவஸ்து ஸப்த,வாச்யமான இத்தை வஸ்து சப்த வாச்யமாக்கி, “உள்ள உலகளவும் யானுமுளனவனென் கொலோ ” (பெரியதிருவ. 76) என்கிறபடியே இவனும் தர்ம பூத ஜ்ஞாந த்வாரா விபு வாகையாலே ஈஸ்வரன் உள்ளவளவும் இவ்வாத்மா உண்டாம்படி ““பரமம் ஸாம்யமுபைதி” (மு. 3-1- 3) என்கிற ஸாம்யம் பெற ஊதி, வாழ்வாகிற ஸத்தையை உண்டாக்கும். ““ஸந்தமேதம் ததோ விது,” (தை. ஆந.) என்றும், ”கீட: பேஸாக்ருதா ருத்த,: குட்,யாத்ந்ரநுசிந்தயந் । ஸம்ரம்ப பய யோகே,ந விந்ததே தத் ஸரூபதாம் | ஏவம் க்ருஷ்ணே பகவதி மாயாமநுஜ ஈஸ்வரே ! கோவிந்தே, மதிமாவேஸ்ய நரஸ்ஸத்யோ விமுச்யதே’” ( ) என்றும் ‘அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான்”’ (திருமொழி 5 – 7 – 2) என்றும் சொல்லக் கடவதிறே
கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3—ஓர் அறிவு இன்றிக்கே இருக்கிற என்னை -உன் வாசியை அறிவித்து ஒரு வஸ்துவாக்கி –அசன்னேவ -என்கிற என்னை சந்தமென்னும் என்று உஜ்ஜீவிக்கும் படி பண்ணினாய்-பெரு மக்கள் உள்ளவர் -என்கிற நித்ய சித்தர் செய்யக் கடவ கைங்கர்யத்தை என்னைக் கொண்டாய் -உண்டாக்கின அளவே அன்றிக்கே-ஜீவனமும் இட்டிலையோ -மயர்வற மதி நலம் அருள பெற்றவர் இப்படி சொல்லுகையாலே ஸ்வ நிகர்ஷம் சொல்லுகை ஞான கார்யம் –ஈஸ்வரோஹம் என்று இருக்கை அஞ்ஞான கார்யம்—
உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப் படலம்
விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால் உள்ள
உலகளவும் யானும் உளனாவன் என் கொலோ
உலகளந்த மூர்த்தி உரை –76—உன்னை அனுசந்திக்கில் ஸ்த்தூலமான தேகம் போலே
அமூர்த்தமான ஹ்ருதயம் தடியா நின்றது–பாப ஸமூஹம் விண்டு போம்படி நீ பார்த்து உன்னை சாஷாத்கரித்து-என்றுமாம்-மெய்யுற்றால் -சாஷாத்கரித்தால்-இங்கே மானஸ சாஷாத்காரம் ஆதல்-அங்கே பாஹ்ய சாஷாத்காரம் ஆதல்–வியாபக தத்வம் இரண்டு ஆகிறது போலே
(வியாபகத்வம் இரண்டு ஸ்வரூபமம் ஞானமும் -அவனைப் போலவே ஆனதே )ஞான வியாப்தி இவரது-சிறிய வடிவைக் கொண்டு லோகத்தை எல்லாம் வ்யாபித்து இருக்கிற நீயே சொல்லு-இந்த ஆச்சர்யத்தை நீ சொல் என்றபடி
—
இப்படி அநாதியாக சொன்ன உபய சம்பந்தமும் ஆத்மாவுக்கு நித்தியமாய் இருக்குமோ -அந்தம் உண்டோ -என்கிற சங்கையில் சொல்லுகிறது மேல்-(மோக சாந்த்யர்த்தமாக -நித்ய ஆத்மா -கர்மா பற்று இன்றி செய்ய வேண்டியதை ஸ்ரீ கீதையில் இரண்டாவது அத்யாயம்–கர்மத்தால் சரீரம் -காரணம் போனால் கார்யம் போகுமே -கர்மாதீனமே தேகம் கவலைப்படாதே என்று அருளிச் செய்கிறார் -)இந்த உபய ஸம்பந்தமும் அநாதியாய் நித்யமா யிருக்குமோ வென்னில் ; அசித் ஸம்பந்தம் வந்தேறியுமாய், கர்மோபாதி கமாகையாலே அநித்யமுமா யிருக்கும். அயந ஸம்பந்தம் அநாதியுமாய், நிருபாதிக மாகையாலே நித்யமுமாயிருக்கும் என்கிறார் மேல்
ஓன்று கூடினதாய் பற்று அறுக்க மீண்டு ஒழிகையாலே பழ அடியேன் -என்னும் அது ஒன்றுமே ஒழிக்க ஒழியாதது-சூரணை 12
அதாவது–அசித் சம்பந்தம் –பெரும் துயர் இடும்பையில் பிறந்து கூடினேன் – என்கையாலே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அன்றிகே வந்தேறியாய்-வினை பற்று அறுக்கும் -என்ற ஒரு சர்வ சக்தி ஸ வாசனமாக போக்க-அடைந்த வரு வினையோடு அல்லல் நோய் பாவம் மிடைந்து அவை மீண்டு ஒழிய – என்கிற படி நிவ்ருத்தமாய் விடுகையாலே-திரு மாலே நானும் உனக்கு பழ அடியேன் -என்னும் படி அநாதியாய் இருக்கிற சேஷ சேஷி பாவ ரூப பகவத் சம்பந்தம் ஒன்றுமே –உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கிற படி ஈஸ்வரனாலும் சேதனனாலும் கழிக்கப் பார்த்தாலும் கழிக்கப் போகாது என்கை- வந்தேறி இல்லையே —
பெருந் துயரிடும்பையில் பிறந்து கூடினேன்”” (திருமொழி 1 – 1 – 1) என்கையாலே அசித் ஸம்பந்தம் ஆகந்துகம். ஆனால் அசித் ஸம்பந்தம் அநாதி, என்று சொல்லுவான் என் என்னில் ; வந்தேறின காலம் பழையதாகையாலும், ப்ரமாணங்கள் தான் அநாதி, என்கையாலும். இனி ““வினை பற்றறுக்கும் விதியே” (திருமொழி 11 – 4– 9), “அடைந்த அருவினையோ டல்லல் நோய் பாவம் மிடைந்தவை மீண்டொழிய வேண்டில்”: (முதல் திரு -59) என்றும் சொல்லுகிறபடியே ஒருநாள் வரையிலே பகவத் ப்ரஸாதத்தாலே கழியக் காண்கையாலே ஆகந்துகம் என்கிறது. ஆகையாலே ”நானுமுனக்குப் பழவடியேன்”’ (திருப்பல். 11) என்கிறபடியே ஜீவ பரர்களுக்குண்டான ஸேஷ ஸேஷி பாவ ஸம்பந்த மொன்றுமே ““உறவேல் நமக்கிங்கொழிக்க ஒழியாது ” (திருப்பாவை 28) என்கிறபடியே கழியாதது
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -1-1-1—பெரும் இடும்பையில் பிறந்து-மிகுந்த துன்பத்துக்கு கொள்கலமாய் -துன்பங்கள் வரக் காரணம் –பிறப்பு சரீரம் கொள்வது
கூடினேன் கூடி -சரீரம் என்றும் ஆத்மா என்றும் பகுத்து அறியாத படி உடலே ஆத்மா என்று மயங்கி கூடினேன்-இப்படி நெடும் காலம் இருந்து–
துணை நிலை மற்று எமக்கோர் உளது என்று இராது தொழுமின்கள் தொண்டர் தொலைய
உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
பணை முலை யாயர் மாதர் உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே —11-4-9—ஓன்று என்னலாம் படி நின்ற மருதுகள் முறிந்து விழும்படியாக நடை கற்ற தெள்ளியவன் நம்முடைய பாபத்தை ச வாசனமாக போக்கும்-இது நிச்சிதம் –(பூதநா நிரசனமும் சகடாசூர பங்கமும் இதுக்கு நிதர்சனம்
கர்ம பலன்களை -ருசி வாசனைகள் உடன் போக்குவான் என்றபடி )
அடைந்த வருவினையோ டல்லல் நோய் பாவம்
மிடந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் —முதல் திரு—-59—(ஞான ஆனந்த சேஷத்வ பாரதந்த்ரங்களே ஸ்வரூபமான )ஆத்ம ஸ்வரூபத்தில் இன்றியே அசித் பிரத்யாசத்தியால் ( தேஹத்தின் அருகாமையாலே )வந்தேறியான அஞ்ஞானாதிகள்-அல்லல் –மானஸ வியாதி-நோய் –சரீர வியாதி -ஆதி -வியாதிகள் என்றபடி – பாவம்-பரிக்ரஹித்த சரீரத்தாலே பண்ணின நிஷித்த அனுஷ்டானம்(புண்யாபுண்ய ஈஸ்வர ப்ரீதி கோப )மிடந்தவை-சரீர ஆரம்ப ஹேதுவான பாபங்களுமாக நெருங்கினவை-அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னும் படி ஒரு (யாதவ ராஜ- ராகவ ராஜ )ராஜ குல சம்பந்தத்தாலே மீளாத படி போக வேண்டில்-பண்டு இலங்கையில் வைத்தவனுடைய மிடுக்கை ஒழிய –தன்னுடைய திரு வில்லை அழகிய திருக் கையிலே வைத்தவன் உபாயம் –சர்வ சக்தியைக் கொண்டு கார்யம் கொள்ள வேண்டாவோ—இப் பாசுரம் ரத்ன காரத்துக்கு நடு நாயகக் கல் போல்-ஸம்ஸாரம் -சீதாபிராட்டி சிறையில் இருந்தது போல்-தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்-மற்ற உபாயந்தரங்களை விட்டு அவனையே பற்ற வேண்டுமே-சிந்தித்து இரு -41–வாரி சுருக்கி –உணர்வார் காண்பரே -47-மருவாழி –நெஞ்சே -48-
முயல்கிற்ப்பார்க்கு அல்லால் –ஆதி காண்பார்க்கும் அரிது -49- அரிய புலன் ஐந்து அடக்கி –புல்கில் –எளிது -50- திரு நாமம் எண் –51- தொழுது எழுதும் எழு –58-என்று சொன்னது எல்லாம் உபாயாந்தர புத்தியால் அல்ல -தேஹ யாத்ரை நடக்க உடலாகவே மற்ற உபாயாந்தரங்களை உபதேசித்து அதனால் ஸ்வரூபம் தெளிவடைந்து – திரு உள்ளம் சோகம் அடைந்த பின்பே சரம ஸ்லோக உபதேசம் போல் இப்பாசுரமும் –இச்சேதனன் ஸ்வரூபத்தை உணர்ந்த அன்று அவன் அல்லது உபாயம் இல்லை என்பதே இப்பாசுர சாரார்த்தம் இப்பிரபந்த சாரார்த்தமும் இதுவே –)
அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-திருமாலே – இவ்வாத்ம வஸ்து ஒரு மிதுன சேஷம் -என்று சேஷத்வ பிரதி சம்பந்தியை சொல்லுகிறார்கள்-இத்தால்-மாதா பித்ர் சேஷத்வமும் -தேவதாந்தர சேஷத்வமும் கர்ம உபாதிகம் என்கை-அதவா-தேவரீருக்கு பிராட்டி நிரூபக பூதையாய் இருக்கிறாப் போலே எங்களுக்கும் தாஸ்யம் நிரூபகம் என்கிறார்கள் -என்றுமாம்
நானும் – பிரயோஜனாந்தர பரதையாலே அநாதி காலம் அன்யார்ஹனாய் போந்த நானும் –
சேஷி பக்கல் பிரயோஜனாந்தரத்தை அபேஷிக்கை யாவது -பதிவ்ரதை பர்த்தாவின் பக்கலிலே
வ்யபிசாரத்தை அபேஷித்தவோபாதி இறே-உனக்குப் பழ வடியேன் –உனக்கு சேஷித்வம் அநாதி யானவோபாதி எனக்கும் சேஷத்வம் அநாதி என்கை-உனக்கு – பிரயோஜனாந்தரத்தை அபேஷித்து திருவடிகளில் கிட்டினதுவே ஹேதுவாக அநந்ய பிரயோஜநன் ஆக்க வல்ல உனக்கு
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்–28-உன்னோடு உண்டான சம்பந்தம் -உன்னாலும் விட ஒண்ணாது –எங்களாலும் விட ஒண்ணாது –இருவரும் கூட க்ருத சங்கேதர் ஆனாலும் விட ஒண்ணாது –நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே -நீ என்னை அன்றி இலை -என்ற
பிரமாணத்தைக் கொண்டு -என்ன -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று அடியிலே சொன்னோம் -என்றபடி –-நீ சர்வ பிரகார பரி பூரணன் ஆகையாலே நாங்கள் நித்ய சாநித்யசாபேஷராய் இருக்கிற உறவு –என்றுமாம்- தயா பூர்ணனான உன்னோடு தயநீயதயா பூரணை களான -எங்களுக்கு உண்டான உறவு -என்றுமாம் –கோவிந்தா உன் தன்னோடு உறவேல் -இங்கு ஒழிக்க ஒழியாது
உன்னுடைய நாராயணத்தில் உறவு பழம் கிணற்றில் கண் வார வேணுமோ – எங்களுக்கு இவ் வுறவு போராதோ –ஒழிக்க ஒழியாது-உன்னால் விட ஒண்ணாது –-எங்களால் விட ஒண்ணாது –-உன்னுடைய பந்துக்களால் விடுவிக்க ஒண்ணாது –-எங்களுடைய பந்துக்களால் விடுவிடுவிக்க ஒண்ணாது –
ஊராக சங்கித்தாலும் விடுவிக்க ஒண்ணாது –
இத்தால்-அசித் சம்பந்தம் ஆகந்துகமாய் கர்மோபாதிகம் ஆகையாலே அநித்யமாய் இருக்கும்
அயன சம்பந்தம் அநாதியாய் நிருபாதிகம் ஆகையாலே நித்தியமாய் இருக்கும் என்றது ஆயிற்று–ஆனால் ஆகந்துகமான இத்தை அநாதி என்பான் என் என்னில்-வந்தேறின காலத்துக்கு அடி தெரியாமையாலே அநாதி என்று பிரமாணங்கள் சொல்லுகையாலே ஒரு நாள் வரையிலே பகவத் பிரசாதத்தாலே அது கழிய காண்கையாலே வந்தேறி என்னும் இடம் நிச்சிதம் இறே-
—
இவ் அயன சம்பந்தமே கீழ் சொன்ன சாஸ்திர பிரதானத்துக்கு
ஹேது என்கிறார் மேல்-
இந்த உதர தரிப்பு திரை குணிய விஷயம் ஆனவற்றுக்கு பிரகாசம்-சூரணை -13
அதாவது-இந்த நாராயணத்வ பிரயுக்தமான குடல் துவக்கு-திரை குணிய விஷயா வேதா -என்கிற படி சத்வ ரஜஸ் தமோ குண த்ரய வச்யரான சேதனரை விஷயமாக உடைய வேதங்களை பிரகாசிப்பைக்கு ஹேது என்ற படி-தம பிரசுரராயும் ரஜோ பிரசுரராயும் சத்வ பிரசுரராயும் இருக்கும் சேதனர் உடைய ருசி அனுகுணமான புருஷார்த்த தத் சாதனங்களை இறே பூர்வ பாகத்தில் பரக்க சொல்கிறது-ஆகையால் திரை குணிய விஷயம் ஆனவை என்கிறது–இத்தால் –நீர்மையினால் அருள் செய்தான் -என்று கீழ் சொன்ன சாஸ்திர பிரதானத்துக்கு பிரதான ஹேது – சம்பந்தம்- என்றது ஆயிற்று-
இந்த நாராயணத்வ ப்ரயுக்தமான குடல் துடக்கு, “’த்ரை குண்ய விஷயா வேத?” (கீதை 2 – 45) என்கிறபடியே த்ரிகுணவஸ்யரான சேதநரை விஷயமாக உடைய வேதங்களை ப்ரகாஸிப்பிக்கைக்கு ஹேது என்றபடி. -தமஸ் ப்ரசுரராயும், ரஜஸ் ப்ரசுரராயும், ஸத்த்வ ப்ரசுரராயுமிறே சேதநர் இருப்பது. ஆக, இந்த உதரத் தரிப்பு த்ரைகுண்ய விஷய மானவற்றுக்கு ப்ரகாஸகம் என்கிற இத்தால் ருச்யநுரூப புருஷார்த்தங்களையும் தத் ஸாதநங்களையும் விதிக்கிற ஸாஸ்த்ர ப்ரதாநத்துக்கு அடி இந்த ஸம்பந்தம் என்றதாய்த்து.-கீழ் ‘ நீர்மையினாலருள்செய்தான்”’ (திருமொழி 1 -8 – 5) என்று சொன்ன ஸாஸ்த்ர ப்ரதாநத்துக்கு ஹேது சொல்லிற்று ஆய்த்து
த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந
நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோக÷க்ஷம ஆத்மவாந்-2-45-மூன்று குணங்களுக்குட்பட்டனவற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக. இருமைகளற்று, எப்போதும் உண்மையில் நின்று, யோக ÷க்ஷமங்களைக் கருதாமல், ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.
—
இப்படி சம்பந்தம் அடியாக செய்தான் ஆகில் மோஷ ஹேதுவான சாஸ்திரங்களையே காட்டாதே
ஐகிக பார லௌகிக போக சாதனவிதயா கதயா பந்த ஹேதுவான சாஸ்திரங்களையும் காட்டுவான் என் என்ன சொல்லிகிறது மேல்-
வச்தலையான மாதா பிள்ளை பேகணியாமல் மண் தின்ன விட்டு பிரத் ஔஷதம் இடுமா போலே எவ் உயிர் க்கும் தாயாய் இருக்கும் வண்ணமான இவனும் ருசிக்கு ஈடாக பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் காட்டும் இறே–((பந்தமும் காட்டும் – பந்தம் அறுப்பதோர் மருந்தும் காட்டும் ))சூரணை-14
அதாவது-வாச்தல்யை யுக்தையான பெற்ற தாய் ஆனவள்-மண்ணை ஆசை பட்ட பிள்ளை பேகணியாமல் முந்துற மண்ணைத் தின்ன விட்டு பின்னை அதுக்கு மாற்று மருந்து இடுமா போலே
எவ் உயிர்க்கும் தாயோன் -என்றும் தாய் இருக்கும் வண்ணமே -என்றும் (திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் எல்லா எவ் உயிர்க்கும் தாயோன் தான் ஒருவனே -திருவாய் -1-5-3- -என்றும்
தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்று இருத்தி உய்யக் கொண்டான் -பெரிய திருமொழி -11-6-6- -என்றும்) சொல்லுகிற படி சகல ஆத்மாக்கள் அளவிலும் மாத்ருவத் வச்தலனான இவனும்
சேதனர் உடைய ருசிக்கு ஈடாக பந்தங்களையும் தர்சிப்பித்து ,பின்னை பந்த நிவ்ருத்தக பேஷஷம் ஆனவற்றையும் தர்சிப்பிக்கும் இறே என்கை-இத்தால் இப்படி செய்தது சம்பந்த பிரயுக்த வாச்தல்ய கார்யம் ஆகையாலே சம்பந்த கொத்தை வாராது என்றது ஆயிற்று-
இப்படி ஸாஸ்தர ப்ரதாநம் பண்ணுகிறது ஸம்பந்த, மடியாக வாகில் விமோசக. ஸாஸ்த்ரத்தையே வெளியிடாதே பந்தக ஸாஸ்த்ரங்களையும் வெளியிடுவான் என் என்னில்; வத்ஸலனாகையாலே சேதநருடைய ருச்யநு குணமாக வெளியிட்டான் என்கிறது மேல் (வத்ஸலையான மாதா) என்று தொடங்கி- ப்ரிய ப்ரவர்த்தகத்வத்தைப் பற்றவும் அதுக்கடியான வாத்ஸல்யத்தைப் பற்றவும் இப்போது மாதாவை த்ருஷ்டாந்தமாக்குகிறது. ““எல்லா வெவ்வுயிர்க்கும் தாயோன்” (திருவாய். 1 – 5 – 3) என்றும், “’தாயிருக்கும் வண்ணமே” (திருமொழி 11 – 6 – 6) என்றும் சொல்லுகிறபடியே இவனும் அப்படியே ஸர்வாத்மாக்கள் பக்கலிலும் மாத்ருத்வ ப்ரயுக்கமான வாத்ஸல்யத்தை உடையனாகையாலே சேதநருடைய ருசிக்கீடான “பந்தமும்” என்கிற பந்தக ஸாஸ்த்ரங்களையும், ““பந்த மறுப்பதோர் மருந்தும்” என்கிற விமோசக ஸாஸ்த்ரத்தையும் விதிக்கும் என்கிறார்-
மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே –1-5-3-லோகங்களை எல்லாம் திருவடிகளாலே அளந்து கொண்டவன் நாய்ச்சிமாரும் தொடும் போது கூச வேண்டும்படியான திருவடிகளைக் கொண்டு கிடீர் காடும் ஓடையும் அளந்தது இங்கனம் செய்வான் என் என்னில்-எல்லாரோடும் சம்பந்தம் ஒத்து இருக்கை-எல்லாம் என்று சாகல்ய பரம் – எவ்வுயிர் என்று விலஷணம் அவிலஷணம் -என்று பாராது ஒழிந்தபடி-தாய் போலே பரிவன் ஆனவன்-இது ஒரு பிரகாரமே
மேன்மைக்கு ஒப்பு இல்லாதா போலே நீர்மைக்கும் அவதி இன்றிக்கே இருக்கிறபடி என் -என்று விஸ்மிதர் ஆகிறார் –
பேயிருக்கு நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீதோடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான்
போயிருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாயிருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே —11-6-6—பிரஜையைப் பெறுகைக்கு
நோன்பு நோற்று அப் பிரஜையை வயிற்றிலே வைத்து கொடு இருக்கும் தாயைப் போலே உம்மை வயிற்றிலே வைத்து உய்யக் கொண்டவன் –நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு நம்மைப் பற்றப் பாராதே புறம்பே போயிற்றன-என்று வெறுத்து போய் இருக்க – அங்கே புதுசாக இருக்கிற தேவதைகளை கொண்டாடுகிற தொண்டீர் – (தன்னை வணங்க வைத்த கரணம் இவை -இராமானுஜர் காட்டிக் கொடுக்க )அசேதனமாய் இருப்பது ஒன்றை வெந்நீர் ஆட்டுதிரோ – செய்ய மாட்டாத கிருபை அற்றீரே –
—
இப்படி வச்தல்யத்தால் செய்தான் ஆகையிலும் குண த்ரய வச்யரான சேதனருக்கு ருசி அனுகுணமான பல சாதனங்களை விதிக்கிற பந்ந்தக சாஸ்திரங்களையும் தர்சிப்பித்தால் அவர்கள் சம்சரித்தே போகைக்கு உடல் ஆகாதோ என்ன அதுவும் க்ரமேண அவர்கள் ஈடேற இட்ட வழி என்கிறார் மேல்-
(மஹா கிரம -676-திரு நாமம்-க்ரமேண படிக்கட்டுகளை கட்டி வைத்து இருப்பவர் )இப்படி பந்தகமாக ஸாஸ்த்ரத்தையும் கலசி விதித்தால் அது கொண்டு சேதநர் ஸம்ஸரித்தே போமித்தனையோ என்னில் ; அது தானும் விமோசக ஸாஸ்த்ரத்திலே வருகைக்கிட்ட வழி என்கிறார் மேல்
அது தானும் ஆஸ்திக்ய விவேக அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தி பார தந்த்ர்யங்களை உண்டாக்கின வழி-சூரணை -15(ஆஸ்திக்யம் உண்டாக்கி -மறு பிறவி உண்டு கர்மாக்கள் உண்டு பர ப்ரஹ்மம் உண்டு என்கிற ஆஸ்திக எண்ணம் -உண்டாக்கி -விவேகம் உண்டாக்கி -பகுத்தறிவு உண்டாக்கி-அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி உண்டாக்கி -ஸ்வ ஸ்வாதந்தர்ய நிவ்ருத்தி உண்டாக்கி )
அதாவது-மோஷைக சாஸ்திரம் மாத்ரம் தர்சிப்பியாதே சேன விதி முதலான பந்தக சாஸ்திரங்களையும் தர்சிப்பித்து தானும் தம பிரசுரராய் அர்த்தார்த்த ஜனத்துக்காக பரஹிம்சா சீலராய் திரிகிற நாஸ்திகரை குறித்து மோஷத்தை விதித்தால் ,அவர்களுக்கு அது ருசியாமையாலே அந்த பரஹிம்சா ரூபமான அபிசார கர்மத்தை சியேனந அபிசரன் யஜதே—ஆபத்ஸ்தம்ப சூத்ரம் -என்று விதித்து தத் பல சித்தியாலே அவனுக்கு சாஸ்திரம் உண்டு என்கிற ஆஸ்திக்யத்தை உண்டாக்கி--ஆஸ்திகன் ஆன பின்பு ஜியோதிஷ்டோமேன ஸ்வர்க காமோ யஜதே–இத்யாதிகளாலே ஸ்வர்க்காதி புருஷார்த்த தத் சாதனங்களை விதித்து-அவ் வழியாலே பிரகிருதி ஆத்ம விவேகத்தை உண்டாக்கியும்-இப்படி பிரகிருதி ஆத்ம விவேகம் பிறந்த பின்பு ஆத்ம போகத்துக்கு வழி காட்டி- அவ் வழியாலே அந்ய சேஷ நிவ்ருத்தியை உண்டாக்கி- அநந்தரம்-பரமாத்மா போக வைலஷண்யத்தையும் தத் பிராப்தி சாதன பக்தியையும் காட்டி அவ் வழியாலே ஸ்வ ஸ்வாதந்த்ர்யா நிவ்ருத்தியையும் உண்டாக்கியும்-அநந்தரம்-உபாயாந்தர துஷ் கரத் வாதிகளாலே தளரும் அளவில் ஸ்வ யத்ன நிவ்ருத்தி ரூப பிரவ்ருதியில் மூட்டி ஸ்வ ரூப யாதாத்மா வேஷமான பார தந்த்ர்யத்தை உண்டாக்கியும்- இப்படி கிரமத்திலே ஈடேறுகைக்கு இட்ட வழி என்ற படி-
அதுதானும் -பந்தக ஸாஸ்த்ரத்தைக் கலசி விதித்தது தானும். பர ஹிம்ஸா ஸீலனாய் ஸாஸ்த்ர ஸாமர்த்யம் {ஸாஸ்த்ரத்தில் ஆஸ்திக்யம்) முதலிலே இல்லாதவனைக் குறித்து மோக்ஷத்தை விதித்தால் அது அவனுக்கு ருசியாதாகையாலே அநபரஹிம்ஸா ரூபமான அபிசார ஸாஸ்த்ரத்தை விதித்து அது அவனுக்கு பலித்தவாறே அவ் வழியாலே ஸாஸ்தரம் உண்டென்கிற் ஆஸ்திக்யத்தை ௨ண்டாக்கியும், ஆஸ்திகனானவாறே ் ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க காமோ யஜேத” ( ) என்று இத்யாதி,களில் சொல்லுகிறபடியே ஸ்வர்க்காதி, புருஷார்த்தங்களையும், தத் ஸாதநங்களையும் சொல்லுகிற ஸாஸ்த்ரங்களையும் விதித்து, அவ் வழியாலே ப்ரகருத் யாத்ம விவேகத்தைப் பிறப்பித்தும், இப்படி ப்ரக்ருத் யாத்ம விவேகம் பிறந்தவாறே ஆத்ம லாப, ரூப புருஷார்தத்தைக் காட்டி அந்ய ஸேஷத்வத்தை நிவர்த்திப்பித்தும், அநந்தரம் பகவத் கைங்கர்ய ருப புருஷார்த்தத்தைக் காட்டி ஸ்வ ஸ்வாதந்தர்யத்தை நிவர்த்திப்பித்தும், ஆத்மா வினுடைய அத்யந்த பாரதந்தர்யத்தை உண்டாக்குகைக் கிட்ட வழி என்கிறார் –
இவை கிட்டமும் வேட்டு வேளானும் போலே -சூர்ணிகை 11- தொடங்கி இவ் வளவாக சம்சார மோஷ காரண பரம்பரைகளிலே சரம அவதிகளான அசித் அயன சம்பந்தங்கள் ஆத்ம வஸ்துவுக்கு செய்யுமவைகளும்-அதில் அசித் சம்பந்தம் அநித்தியம்-அயன சம்பந்தம் நித்யம் என்றும்
அந்த அயன சம்பந்தம் கீழ் சொன்ன சாஸ்திர பிரதானத்துக்கு ஹேது என்றும்
அதில் மோஷைக சாஸ்திரம் அன்றிக்கே பந்தக சாஸ்திரத்தையும் தர்சிப்பித்து
வச்தலன் ஆகையாலே சேதன ருசி அனுகுணம் ஆக வேண்டும் என்றும்
அது தானும் கிரமத்திலே அவர்களை உஜ்ஜீவிப்பிக்கைக்கு இட்ட வழி என்றும் சொல்லிற்று ஆயிற்று–
–——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்