Archive for the ‘Divya desams’ Category

ஸ்ரீ வீரராகவர் போற்றிப் பஞ்சகம்-

February 21, 2026

தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி
வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி
அண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி.

பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி
நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி
தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி
வேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி
கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி
வேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி.

அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி
பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி
வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி
வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கனக வல்லித்தாயார் வீர ராகவ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவல்லிக்கேணி அத்யாபக கோஷ்ட்டி 760 ஆண்டு விழா மலர் -1982-

January 29, 2026

ப்ருந்தாரண்ய நீவாஸாய பல ராமாநுஜாய ச ருக்மிணீ பிராண நாதாய பார்த்த ஸூதாய மங்களம்

Swami Vivekananda ‘s letter -20-8-1983-Go now this minute to the Temple of Sri Parthasarathy and bow to him who was friend to the poor and lowly cowherds of Gokul -Parthasaarathy is ready to be our Sarathy and his name with eternal faith shall suffice for our salvation

760 ஆண்டு விழா மலர் -1982-April 9-18-உத்ஸவம் கொண்டாட்டம்-வேத பிரபந்த கோஷ்ட்டி விமரிசையாக நடக்கும் விவரங்கள் தினமணி-27-3-1982- கோஷிக்கிறது-அதாவது கிபி 1223 இருந்து ஆரம்பம்-(வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவவதாரம் -கிபி 1217- பெரியவாச்சான் பிள்ளை திருவவதாரம் -1228)

ஸ்ரீ மணவாள மா முனி காலத்துக்கு முன்பிருந்தே அத்யாபக கைங்கர்யம் -760 ஆண்டுகளாக நடந்து வருகிறது என்று Hindu -9-4-82—என்றும்-700 ஆண்டுகளாக நடந்து வருகிறது என்று remarks oj Judge in suit no cs-349 of 1923-சட்டரீதியான அங்கீகாரம் கிடைத்த அறுபதாம் ஆண்டு விழாவும் இதுவே-

கஜேந்திர வரதர் பரத்வம் -மந்நாதப்பெருமாள் வ்யூஹம் -சக்ரவர்த்தி திருமகள் வைபவம் -தெள்ளிய சிங்கர் அந்தர்யாமி -இவ்வாறு நான்குக்கும் நான்கு பாசுரங்கள் -பார்த்தசாரதியை திருவல்லிக்கேணியில் கண்டேனே என்று அர்ச்சாவதாரம் ஐந்து பாசுரங்கள் என்று திருமங்கையாழ்வார் மங்களா ஸாஸனம்-பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவ அவசிஷ்யதே ஸர்வம் பூர்ணம் ஸஹோம் -பின்னானார் வணங்கும் சோதியான சர்ச்சையில் தானே ஸமஸ்த கல்யாண குண புஷ்கலம்

ஸ இதாநீ மபிமுநே த்ருஸ்யதே தத்ரமா நவைஸ்
ருக்மிண்யா ச அநிருத்தேந ப்ரத்யும்நே நச ஸேவித
ஹலாயுதேந ஸஹிதஸ் ததா சாத்யகிநா ஸஹ
பார்த்த சாரதி ரித்யேவ விஸ்ருதோ ஜெகதீ பதி
-ஆத்ரேயர் ஸூமதி ரிஷிகளுக்கு ஸேவை

ஆத்ரேய த்வம் மஹா பாக கத்வா பிருந்தாவனம் சுபம்
கமதேராஸ்ரமம் ஸவ்மய வஸநேந மஹாத்மநா
தத்ர ரம்யே வநோ த்ருஸே ஸம் ஸ்தாப்ய ப்ரதிமாம் இமாம்
வைகாநஸேந விதிநா ஸ்மர்ச்சய ஜகத்குரும்
-வ்யாஸ மஹரிஷியின் சிஷ்யனான ஆத்ரேயர் ப்ரதிஷ்டை

ஸததர்ச விமா நஸ்ய மத்யே பாஸ்கர ரோசிஷ ஆஸீநம் பரமம் தேவம் நரஸிம்ஹ ஸ்வரூபிணம் -அத்ரி முனிவருக்கு ஸேவை தெள்ளிய சிங்கர்

மகா மாஸே மஹா தேஜாஸ் த்வாதஸ்யாம் ஸஹரிஸ் ஸ்வயம்
ப்ராதுராஸே ப்ருகோஸ்தாஸ்ய ஹ்யாஸ்ரமே புண்ய கர்மண
யதோ மந்நாத இத்யாஹ வேத வல்லீ ஸூசிஸ்மிதா
ததோ மந்நாத இத்யேவ விஸ்ருதோ புவந த்ரய –
பிருகு புத்ரி -மாசி த்வாதஸி -வேதவல்லி ஸமேத மன்னாதான்

ததஸ்மிந் திநேரஸ்து ப்ருந்தாரண்யே மஹாமதி மந்நாதம் பிரணமேத் விப்ர ஸ யாதி பரமம் பதம் -ப்ரஹ்மாண்ட புராணம்

யா த்ருகா ஸீத் புரா ராம ராஞ்ஜோ தசரதஸ்ய ஹி
ப்ராத்ருபிஸ் ஸஹிதஸ் தாத்ருக் ஸ ஸீதஸ் ப்ரத்யய த்ருஸ்யதே
–மதுதான் ரிஷிக்கு ஸஹ குடும்பத்துடன் ஸேவை

ஸோபி ஸம் ப்ரதி ஸர்வேஷாம் ப்ராணிநாம் கோஸரீ பவந்
வரதோ நாம தேவேஸ் த்ருஸ்யதே தத்ரவை ஹரி
–சப்தரோமா மகரிஷிக்கு கருடாரூடனாக ஸேவை

ந தேவா யஷ்டி மாதாயா ரஷந்தி பசு பாலவத்
யம்ஹி ரஷிதம் இச்சந்தி புத்யா ஸம் யோஜயந்தி தம்
-பற்றலர் வீயக்கோல் கைக்கொண்டு தேர் முன் நின்றானை -மாதலி தேர் முன்பு கோல் கொள்ள -ஆண்டாள்

ஆராதனாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதனம் பரம் யேநகேந விஷ்ணோர் அர்ச்சனம் உத்தமம் ஆத்மாத்ர்த்தம் வா பரார்த்தம் வா க்ருஹ தேவாலயேபி வா அர்ச்சனம் வாஸூ தேவஸ்ய லக்ஷ கோடி குணம் பவேத் -அர்ச்சன நவநீத ஸ்லோகம்

ஆழ்வார்கள் கண்ட அல்லிக்கேணி -ஸ்ரீ நல்லான் சக்ரவர்த்தி ராமகிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் -1951-திருவல்லிக்கேணியில் வெளியிட்டு அருளி கோஷ்ட்டி ஊர்வலம் -வை மு கோபல க்ருஷ்ணமாச்சார்யார் ஸ்வாமிகளும் கலந்து கொண்டார்-

பேயார் திருமழிசைப் பெம்மான் அருட் கலியன்
வாயாரச் சொன்ன வளங்கவியில் -மேயான்
திருவல்லிக்கேணியான் சீர் அருளே வாளாம்
கருவல்லிக் காலறுக்குங் கால்

எறி கடல் வந்தலைக்கும் எழில் அல்லிக்கேணி கண்ட
அறிவுடை யாழ்வார் பாடற்கு அனைவரும் அறிய ஆன்றோர்
முறையிலே பிறழாது ஏகி மூண்ட பேரன்பினாலே
சிறியேன் உரை செய்தேனால் சீர் திருமலை நல்லானே

ஆயர் விளக்கு–என்பதே மருவி ஆயிரம் விளக்காயிற்று
ஆழ்வார் பேட்டை -முதல் ஆழ்வார்கள் திருமழிசைப்பிரான் -ஆள்வார் பேட்டை ஆயிற்று
ஆனைக்குளம் -கஜேந்திர வரதரின் முந்தைய ஸ்தானம் –

அந்தமிலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளைச்
செந்தமிழாகத் திருத்திலனேல் நிலத்தேவர்களும்
தம்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகும் குருகூர் வந்த பண்ணவனே
-கம்பர்

கோயில் திருமலை பெருமாள் கோயில் பிரசித்தம் –திருமந்திரம் சரம ஸ்லோகம் த்வயம் போல் இம் மூன்றும் –திருவிருத்தம் மங்களா ஸாஸனம் இவற்றுக்கு என்பதால்-இமையோர் தலைவா –அமரர்கள் அதிபதி -பிரதம சதகே வீஷ்யே வரதம் -துயரறு சுடரடி -தொழுது எழு என் மனனே –பெருமாள் கோயில் விசேஷணம் இது ஒன்றுக்கே -தினமும் ஐம்பது பாசுரங்களான வருஷத்தில் ஐந்து ஆறு ஆவ்ருத்தி நாலாயிரம் அருளிச் செயல்களை செவி சாத்தி அருளுகிறவன்-இயல் தொடங்கும் பொழுது பிடாத்தை விழவிட்டு அத்யாபகர்கட்க்கு ஸர்வ ஸ்வதானம் செய்யும் முறையில் அவகுண்டத்தைக் களைந்து ஸேவை ஸாதித்து அருளுகிறவன்

தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –28-

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் இளம் சோலை  அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே  —-26-

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60-

பகாரோ பாப நாஸாயீ விகாரோ விக்ந சாந்தயே த்ருகாரம் த்ராணந ப்ரோக்தம் இதி பவித்ரஸ்ய லக்ஷணம் -பவித்ரா உத்ஸவ மஹிமை

ரதஸ்தம கேஸவம் த்ருஷ்டா புநர் ஜென்ம ந வித்யதே

பார்த்தசாரதிக்கு சித்ர ஸ்ரவண தீர்த்தவாரி -தெள்ளிய சங்கருக்கு ஆனி ஸ்ரவண தீர்த்தவாரி

ப்ருந்தே த்வ யக்ஷர யுக்மஞ்ச துளஸீத் யக்ஷர த்ரயம் ஸங்கீர்த்தயதி யோநாம தஸ்ய புண்யம் அநந்தகம்

பஞ்ச தீர்த்த ஸமாயுக்த மீத்ரு ஸீம்தாம் ஸரோவராம் ஸ்நாநாயாத் கைரவணீம் விப்ரயதீச்சதி ஹரேபேதம் -இந்திர சோம அக்னி மீன விஷ்ணு தீர்த்தங்கள் மத்தியில் பாவனையாக கைரவணி தீர்த்த ஸ்பரிஸமே சர்வபாபேயோய மோக்ஷ ஹேதுவாகும்-

சைத்ரே மாஸே ஸிதே பக்ஷே சதுர்தஸ்யாம் திதவ் முநே
ஸோபநே ஹஸ்த நக்ஷத்ரே ரவிவார ஸமந்விதே
வபோ ஹோமே ப்ரவ்ருத்தே து ப்ராதஸ் ஸவந காலிகே
தாதுத்தர வேத்யந்த ப்ராதுர் ஆஸீத் ஜநார்த்தன
-சித்திரை ஹஸ்தம் தேவராஜன் திருவவதாரம் -ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம்

வேகவத் யுத்தரே தீரே புண்யகோட்யாம் ஹரிஸ் ஸ்வயம்
வரத ஸர்வ பூதாநாம் அத்யாபி பரித்ருஸ்யதே

வஸிஷ்டர் வாமதேவர் ஸூ யஜ்ஞர் ஜாபாலி கஸ்யபர் கௌதமர் மார்க்கண்டேயர் காத்யாயனர் விசயர் -நவ ரிஷி ரத்தினங்கள் சக்ரவர்த்தி திருமகனை ரக்ஷிக்கும் அரண் போல் இருந்தார்கள்

அத்ரி ப்ருகு குத்சர் வஸிஷ்டர் கௌதமர் கஸ்யபர் ஆங்கீரஸர் -பிரஸித்த ஸப்த ரிஷிகள்
இப்போது நடப்பது ஏழாவதான வைவஸ்வத மன்வந்த்ரம் -முந்தியவை –1-ஸ்வாயம்பூ -2- ஸ்வா ரோசிஷ -3-ஒவ்த்தம -4-தாமஸ -5-ரைவத -6-சாஷுஷ மந்வந்தரங்கள்

அல்லித் தாமரையாள் -திரு உகந்த அல்லிக்கேணி -ஸ்ரீ வேதவல்லித்தாயாரின் பிறந்தகம் -மந்நாதனின் ஸ்வசுர க்ருஹம்-மாமனார் திருமாளிகை –

வைரம் இனி இல்லை மண்ணில் பிறப்பில்லை
கைரவிணி நம் கருத்துளதால் -பையரவில்
மன்னாதன் சிங்கன் பரதன் இராமன் கண்ணன்
இந் நாள் அருள் பெய்வர் இங்கு

அபஹர மம துரிதாநி ப்ரதிஸ த்வம் நிருபமாம் யஸோ லஷ்மீம்
பகவதீ கைரவணீ த்வாம் ப்ரணமாமி ஜனார்த்தந ப்ரியே ஸூபகே
—வஸிஷ்ட பகவான் -கைரவம் என்பது செவ்வல்லி -ஆம்பலின் வகை

பூதம் சரஸ்ய மஹதாஹ்வய பட்ட நாத ஸ்ரீ பக்தி சார குலசேகர யோகி வாஹான்
பக்தாங்க்ரி ரேணு பரகால யதீந்திர மிஸ்ரான் ஸ்ரீ மத் பராங்குச முநிம் பிரணாதோஸ்மி நித்யம்-மஹதாஹ்வய –மகாதாஹ்வயர்-ஆகிறார் -மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி -என்னும்படியான அத்தேசத்துக்கு சமமாய் இருந்துள்ள-மாட மா மயிலையில் –மா வல்லிக் கேணியில்செவ்வல்லிப் பூவிலே அவதரித்து-யானுமோர் பேயன் – பித்தர் என்றே பிறர் கூர
என்று பேசும்படியான பெயர் –

——–

கமப்யாத்யம் குரும் வந்தே கமலா க்ருஹ மேதிநம்
ப்ரவக்தா சந்தஸாம் வக்தா பாஞ்சராத்ரஸ்ய யஸ் ஸ்வயம்
-புராணம் வேதம் வேதாந்தம் சாங்க்யம் யோகம் ஸாஸ்திரங்கள் அனைத்தும் இதம் எதிரில் இரவாகின்றன
பஞ்சாயுத அம்சமான ஒவ்பகாயனர் சாண்டில்யர் பரத்வாஜர் கௌசிகர் மௌஞ்யாயனர் -ஐவருக்கும் ஐந்தும் தினங்களில் தானே உபதேசித்து அருளினார் –
ஆகமம் பரதம் சில்பம் வைத்தியம் ஜ்யோதிஷ மேவ ச
பஞ்ச சாஸ்த்ராணி ஸம் யோகாத் பாஞ்சராத்ரம் இதி ஸ்ம்ருதம்

ஸூ ரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ ப்ரஸந்ந வதந ஈஷணம்
க்ருத்வா ஆத்மந ப்ரீதிகரிம் ஸூவர்ண ரஜதாதிபி
தாம் அர்ச்சயேத் தாம் பிரணமேத்தாம் விசிந்தயேத்
விசத்ய பாஸ்த தோஷஸ்து தாமேவ ப்ரஸ்ம ரூபிணாம்
–ஸுநகபகவான்

108 ஸம்ஹிதைகள் கொண்டதும் பாஞ்சராத்ர ஆகமம் -இவற்றுள் ரத்ன த்ரயம் -சாஸ்வத பவ்ஷ்கர ஐயாக்ய ஸம்ஹிதைகளால் திருநாராயண புரம் திருவரங்கம் காஞ்சிபுரம் இவற்றில் திரு ஆராதனம்-திருவேங்கடமுடையான் வைகாநஸ ஆகமத்தினால் திருவாராதனம் கண்டு அருளுகிறான்

த்வாம் பாஞ்ச ராத்ரிகந யேந ப்ருதக் விதேந வைகாநஸேந ச பதா நியதாதிகாரா
சம்ஜ்ஞா விசேஷ நியமேன சமர்ச்ச யந்த ப்ரீத்யா நயந்தி பலவந்தி திநாநி தன்யா
-சரணாகதி தீபிகா–32–வெவ்வேறு வகைப் பட்ட பாஞ்ச ராத்ர மார்க்கத்தாலும் வைகானச மார்க்கத்தாலும் அதிகார நியதி யுள்ளவர்கள் வாஸூ தேவாதி சம்ஜ்ஞா விசேஷ நியமத்தோடு உன்னை பக்தியோடு திருவாராதனம் செய்து ஸூ க்ருதிகளாய்க் காலத்தை சபலமாகக் கழிக்கிறார்கள்–

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமான் ஸ்ரீ தசாவதார எச்சரிக்கை–

October 24, 2025

கசாவதாரனைக் கார்த்த சாரதி மேல்
தசாவதார வெச்சரிக்கை யதுசொல
நிசாவதாரனாய் நிகழ் குருகூரெனுந்
திசாவதாரன் திருவடி யேத்துவாம்–ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்துதி.

கசாவதாரன் இந்திரத்யும்நன் என்னும் அரசன் இவன் அகத்தியரது சாபத்தினால் யானையாகிக் காட்டில் திரிந்த போது, மடுவில் வந்து நீரருந்த இவன் காலைப் பிடித்தவன் தேவல முனிவனால் முதலையாகச் சபிக்கப்பட்ட ஆகா என்னும் கந்தருவன்

திருவல்லிக்கேணிப்பதி ஸ்ரீ பார்த்த ஸாரதியே
அரு வேதவல்லித்தாயார் எச்சரிக்கை

ஸ்ரீ தாயார் கருணைக்கடாக்ஷமே ஓர் உருவாய்க்கொண்டு ஆருயிர்த்திரள்கள் மோக்ஷம் பெரும் பொருட்டே ஏணியாக எழுந்தருளி ஸேவை சாதிக்கும் பெருமாள்

ஒளிமேவிடுங் கமலாசனன் உயரிந்திரன் விண்ணோர்
அளிமேவிடப் போற்று முர ஹரியே எச்சரிக்கை.

பொங்கெழின் மிகுந்த பங்கய மலரைத் தவிசாக வுடைய சதுர்முகப் பிரம்மனும் உயர் வமைந்த விண்ணுலகரசாதிபனாகிய தேவேந்திரனும் இன்னும் அனந்த கோடித் தேவர்களும் தேவரீரது திருவாயிலின் கண் திருவருளுதயத் தரிசனார்த்தத்தின் நிமித்தம் நெக்கு நெக்குருகி நிலமிசை வீழ்ந்து திரிகரணம் என்னும் – மனம் வாக்கு காயத்தால்-ஒற்றுமைப்பட அட்டாங்க பஞ்சாங்கமாக நமஸ்கரித்தெழும் சிறப்பினை வாய்ந்த -முரஹரி யென்னும் திரு நாமத்தை யுடையவனே! எச்சரிக்கை.

மேல் கீழொடு யேட்டுத் திசை மேவும் பல வண்டம்
சூல் கொண்டெனக் காக்கு மதுசுதனா எச்சரிக்கை.

மேல் நாடெனச் செப்பும் விண்ணுலகத்தின் கண் உள்ளனவும், கீழ்நாடெனச் செப்பும் மண்ணுலகத்தின் கண் உள்ளனவும், அஷ்ட திசையின் கண் உள்ளனவும், இன்னும் எவராலும் அளவிட்டுச் சொல்லுவதற் கரிதாகிய அண்டரண்ட பகிரண்டங்களில் உள்ளனவுமாகிய ஜீவ கோடிகளைத் தன் தாய் கருப்பத்தில் சிசுவை வைத்துக் காப்பாற்றும் தன்மை யினும் ஆயிர மடங்கதி மாக அன்பு வைத்து அவ்வவ் வுயிர்களை ஸ்வதந்திரத்தால் காத்து இரக்ஷிக்கும் மாஷிமை யுடைய மதுசூதனா! எச்சரிக்கை.

துதி சேர் தசாவதார நற்றுளபா பத்ம நாபா
கதி சேர்ந்திட வருள் தாமரைக் கண்ணா எச்சரிக்கை.

நித்திய பத்தியைச் சதா இடைவிடாது செய்து உய்யும் அன்பர்களுடைய துதி யமையப் பெற்ற திவ்யத் திருமங்கள திரு மேனி பத்தாக வுடையவனே! தேன் கசிதலமையப் பெற்ற நல்ல துளப மாலையை அணிந்தவனே! பதுமம் பூத்த திருநாபியை உடையவனே ! இப் பிறப்பிறப்பென்னும் துக்க சாகரத்தில் மூழ்கி திருவடிகட்குப் பாத்திரனாகா நிற்கும் இந் நாயேனைத் தேவரீரது அழியாத மோக்ஷ இன்பானுபவ ஸ்திதியில் சேர்த்து அத் திருவடிகட்குப் பாத்திரனாச் செய்குவாய். தாமரைக் கொப்பாகிய தடங் கண்களை உடையவனே ! எச்சரிக்கை.

அருமாமறை களவாடிய அடல் சோமுகசுரனை
பெரு மச்சவதாரங்கொடு பிளந்தோய் எச்சரிக்கை.

அரிய சிறப்பினை வாய்ந்த இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்கு வேதங்களையும் திருடிக் கொண்டு ஓடிக் கடல் புகுந்த தபோ பலத்தினால் பெற்ற நிகரில்லாத ஆற்றலை வகித்த சோமுகாசூரன் என்பவன் தருக்கு ஒழிய, அக்கணமே தேவர்கள் வேண்டுகோளுக்கிரங்கி பெரிய மச்சாவதாரத் திருமேனி கொண்டெழுந்தருளி அவன் மார்பைப் பிளந்து அழித்தவனே! எச்சரிக்கை

விருப்பாய்சுரர் திருப்பாற்கடல் மேவிக் கடைந்திடுநாள்
உருப்பாய்ந்திடு கூர்மத்துரு உற்றோய் எச்சரிக்கை.

மிர்தத்தினின்றும் நீங்கற் பொருட்டு மிக்க சந்தோஷத்தினால் தேவர்கள் யாவரும் ஒருங்கு
கூடி ஷீராப்தியினின்றும் அமிர்தம் எடுக்க மந்தர கிரியை மத்தாகவும் வாசுகியைத் தாம்பாகவுங் கொண்டு கடைந்திட்ட போது அம் மந்தரகிரி நிலத்தில் புதைந்து எழாது நிற்க அத் தருணம் எழிலமைந்த ஐயுருவமையப் பெற்ற கூர்மாவதாரத் திருவுருவங் கொண்டெழுந்தருளி அம்மந்தரகிரியை முதுகினால் தாங்கி தேவர்களைக் காத்து அமிர்தம் பகிர்ந்தவனே !எச்சரிக்கை.

பாயாய் தரை சுருட்டும் படும்பாவி இரண்யரக்கண்
மாயப்பெரும் கோலத்துரு மகிழ்ந்தோய் எச்சரிக்கை

பஞ்சபூத காரிய சராசர பேதமாகத் தெற்றென விளங்கும் இந்நில உலகத்தை தன்னுடைய தபோ பராக்ரமத்தினால் பாயாகச் சுருட்டி கக்கத்தில் வைத்ததோடி நரகில் கோட்டை கட்டி அதனுட் ஒளித்த மிக்க பாதகனாகிய ஹிரண்யாக்ஷன் என்பவன் உயிரை எமன் உண்டு போக பெரிய வராஹ திருவவதார திருமேனி கொண்டருளி தனது வலிமைமிக்க கோட்டினால் குத்தித் தூக்கி எறிந்து அழித்தவனே எச்சரிக்கை

எனக்கோர் தெய்வம் எதிரில்லெனும் இரண்யக் கசிபவனை
சினந்தே வரு தூணின் நரசிங்கா எச்சரிக்கை.

இராகத் துவேஷத்தினால் கட்டுப்பட்டு அஞ்ஞான மல மாயாதிகளால் நெற்றுண்டு
நான் என்னும் ஆணவப் பெரும் பேய்ப் பிடித்துத் தன் சுதந்திரம் பாராட்டி எனக்கு நிகர் அகிலத்தில் ஒன்றுமில்லை; எந்தத் தெய்வமுமில்லை ; நானே தெய்வமெனக் கூறித் திரிந்த மிக்க வலி யமைந்த இரண்யக்கசிபு என்னும் துஷ்டனை நிக்ரஹஞ்செய்து, பழ வன்பிற் சிறந்த இளங்குழவியாகிய பிரகலாதாழ்வானென்னும் சிஷ்டனைக் காத்து ரக்ஷித்து அனுக்கிரஹஞ்செய்வான் வேண்டி ஆற்றொணாப் பெருங்கோபமுற்று ஆங்கு எதிரில் இருந்த ஓர் தம்பத்தின் கண் நரசிங்காவதாரத் திருமேனி கொண்டருளி க்ஷணமே அவன் மணிக்குடலைப் பிடுங்கிக் கழுத்தில் மாலையாகத் தரித்தவனே! எச்சரிக்கை.

ஒருமாபலிப் பெருமாவலி உற்றே யழித்திடவே
அருவமனனென வந்திடும் அச்சுதா எச்சரிக்கை.

தனக்கு நிகரில்லை யெனத் தருக்குற்று வாழ்ந்த மஹாபலிச் சக்ரவர்த்தியின் மிகுந்த பராக்கிரமத்தை அழித்து, அவன் அடங்குமாறு வாமனாவதாரத் திருமேனி கொண்டருளி அச்சக்ரவர்த்தியினிடம் மூன்றடி மண் யாசித்து மண்ணும் விண்ணும் ஈரடியால் அளந்து மற்றோரடிக்கு இடம் இல்லாமையால் அவன் சிரத்தில் பாதத்தை அமைத்து பாதாளத்தில் இறுத்தி அவன் ஆற்றலடக்கின புருடோத்தமனே ! அச்சுதனே! எச்சரிக்கை

உயரந்தணர் நிமித்தம் உலகரசர் தமைக் கொல்ல
செயமேவிய வடிவாம் பரசுராமா எச்சரிக்கை.

பிருகு வம்சத்தில் பிறந்த ஜமதக்கினி என்னும் பிராமணோத்தமருக்கும் ஸ்ரீரேணுகா தேவிக்கும் செல்வத் திருக்குமாரனாய்த் தோன்றி தனக்கு எவரும் எதிரில்லை யெனத் திரிந்து வாழ்நாளில், தந்தையை ஓர் க்ஷத்திரிய வம்சஸ்தன் -கார்த்த வீர்யார்ஜுனன் -கொல்லக் கோபமுற்று இது முதல் க்ஷத்திரியப் பூண்டுகளைக் கரு வறுப்பேனென பிரதிக்ஜை செய்து, மிக்க பராக்கிரமமும் அழகிய வடிவும் அமைந்த பரசு என்னும் ஆயுதம் ஏந்தி பரசுராமாவதாரத் திருமேனி கொண்டு எழுந்தருளினவனே ! எச்சரிக்கை.

வலமேவிய இலங்கைத்தலம் வளர் ராவணன்
அழிவுற்று இலகத் தசரத புத்ர ஸ்ரீ ராமா எச்சரிக்கை

தேவர்கள் யாவரும் மும்முறை வலம் வந்து தொழும் பெருமை வாய்ந்துள்ள -முன்னொரு கல்பத்தில் குபேரனுடைய வாசஸ் ஸ்தானமாக இருந்த -இலங்கைத் தலத்தில் மிக்க கீர்த்தி வளரப்பெற்ற ராவணேஸ்வரனும் இவன் கிளைகளும் அழிய ஆஞ்சநேயர் முதலான சேனாவசினியப் பெருக்கோடு சென்று அழித்து தன் பராக்கிரமத்தை நிலை நிறுத்திய காகுத்த திலகனே -தசை திக்குகளிலும் தன் ரத்தத்தைச் செலுத்தி வெற்றி கொண்ட தசரத சக்ரவர்த்திக்குத் திருக்குமாரனாக ஸ்ரீ ராமாவதார திருமேனி தரித்து எழுந்தருளினவனே -எச்சரிக்கை –

ப்ரலம்பன் முற்பலராக்கதர் பிரதாபங்கள் கெடவே
திரமேவிய பலராமனாய் திகழ்வாய் எச்சரிக்கை

யாவராலும் அழியப்படாத வரங்களைப் பெற்று சொர்க்க மத்திய பாதாளங்களை எல்லாம் கிடு கிடு என்றும் நடுங்கச் செய்து ஆணவத்தால் அழிந்த ப்ரலம்பன் முதலான மஹா கொடிய இராக்கதர்களை நிக்ரஹித்து அவர்களுடைய வீர பிரதாபங்கள் கெட்டொழியத் திறம் அமைந்த பலராமாவதாரத் திருமேனி பூண்டு உலகம் புகழ வந்தருளினவனே எச்சரிக்கை –

சீர் பாரதம் நடக்கத் திருவுள்ளம் கொடு செப்பும்
ஓர் கிருட்டினப் பரமாய் வரும் உச்சிதா எச்சரிக்கை

துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்யும் பொருத்தும் கௌரவர் முதலானவர்களுடைய வீறு அழியவும் -பூமிப்பாரம் ஒழியவும் பாண்டவர்களுடைய சத்தியம் எங்கும் செழிக்கவும் கருணை ஸ்வரூபனாய் திருவுள்ளம் கொண்டு ஸ்ரீ மஹா பாரதம் நடத்த சொல்வதற்கு அரிய கிருஷ்ண பரம அவதாரம் கொண்டு எழுந்தருளிய அகில லோக சரண்யனே உச்சிதனே எச்சரிக்கை

வெற்றிப் பெரும் உலகம் தன்னை வீறுற்று அழித்திடவே
கற்கிப் பெயர் புனை சக்கரக் கையா எச்சரிக்கை

ஜயம் பெற்ற இப்பூவுலகில் கண் ஸத்யம் பிறழ்ந்தும் அஸத்யம் உறழ்ந்தும் காம க்ரோத மத லோப மோக மாத்சர்யங்களால் அழிந்துமுள்ள வன் நெஞ்சம் பொருந்தின பெரும் பாதகர்களை அழித்து உலகில் ஸத்யம் செழித்து நிலத்து ஒங்க பத்தாவது அவதாரமான கற்கி அவதார திருமேனி பூண்டு விளங்குபவனே -அழகிய சங்கு சக்கரங்களை ஏந்திய திருக்கரங்களை யுடையவனே எச்சரிக்கை


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வேங்கடாசல மஹாத்ம்யம்-

October 23, 2025

புளிய மரம் செண்பக மரம் துவஜஸ்தம்பம் வல்லது பக்கமும் இடது பக்கமும் -பெருமாளும் பிராட்டிமாரும் வேடர்கள் வழிபட்டவை –
வராஹமூர்த்தி உத்சவம் ராமானுஜர் -ஐப்பசி திருவோணம் பிரதிஷ்டை செய்து அருளினவன் -அவதார உத்சவம் -வராஹ ஜெயந்தி -அத்யயன உத்சவம் ஒரு நாள் -மூன்று நாள்கள் இன்றும் நடக்கிறது
நாகாபரணமும் ராமானுஜர் சாத்தி அருளினார்
ஸ்ரீ பாத ரேணு ப்ரஸாதம் முக்கியம்

வழித்துணை நரஸிம்ஹர் திருக்கோயிலும் நடைபாதையில் உண்டாம்-

தேசிகேந்த்ரன் அப்பனுக்கு சங்காழி அளித்தவன் வாழியே -அமர்ந்த திருக்கோலம் திருமலையில் -சிஷ்யனாக அப்பன் நின்ற திருக்கோலம் -வேதார்த்த ஸங்க்ரஹம் -உபதேசித்து அருளினார் –

———-

10 புராணங்களில் திருமலையின் பெருமைகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அவை கீழ்காணுமாறு :

1) வராஹ புராணம் (புராணம்)
2) பாத்ம  புராணம் (புராணம்)
3) கருட புராணம் (புராணம்)
4) ப்ரம்மாண்ட புராணம் (புராணம்)
5) மார்கண்டேய புராணம் (புராணம்)
6) வாமன புராணம் (புராணம்)
7) ப்ரம்ம புராணம் (புராணம்)
8) ஸ்காந்த புராணம் (புராணம்)
9) ஆதித்ய புராணம் (உபபுராணம்)
10) பவிஷ்யோத்தர புராணம் (உபபுராணம்)

இவற்றோடு , மகாபாரதத்தின் 19 வது பர்வம் என்று போற்றப்படும் ஹரிவம்சத்திலும் திருமலையின் பெருமைகளை காணலாம்.

வேங்கடாசல  மாஹாத்ம்யத்தில் , வராஹ பெருமானின்  வைபவம், ஸ்ரீநிவாஸன்  திருவேங்கடத்தை வந்தடைந்தமை, அனைத்துலகிற்கும் தாயான பத்மாவதி ஸ்ரீநிவாஸனை திருக் கல்யாணம் செய்து கொண்டமை,  திருக் கோனேரியின் பெருமை, ஏனைய தீர்த்தங்களின் பெருமை மற்றும் வைஷ்ணவ லக்ஷணம் உள்ளிட்டவைகளை அனுபவிக்கலாம்-எம்பெருமானார் யாதவராஜனின்  சபையிலே திருமலையில் கோயில் கொண்டுள்ள தெய்வம் ஸ்ரீநிவாஸனே என்று நிரூபித்த அந்த சந்தர்ப்பத்திலும், மேலும் திருமலையப்பன் கோயில் திருப்பணிகளை சீர் திருத்தி நிர்வகித்த சந்தர்ப்பங்களிலும் , பல புராண ஸ்லோகங்களை மேற்கோள் காட்டியுள்ளார். ஆக , இவற்றையும் அறிந்து கொள்ளுதல்  இராமனுசனுடையார்களுக்கு இன்பம் பயக்க வல்லதே  ஆகும்.

ஸ்ரீ வேங்கடேச ப்ரீயதாம்-ஸ்ரீநிவாஸாய மங்களம்
ஸ்ரீ பாஷ்யகாரய மங்களம்

ஸ ஏஷ ஏவ புருஷ பஞ்சதா பஞ்சாத்மா -ஸ்ருதி -எல்லா உலகங்களுக்கும் காரண பூதனாய் இருக்கும் இப்பரம புருஷன் தான் பரம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமி அர்ச்சை முதலியவைகளாலும் விஷ்ணு புருஷன் ஸத்யன் அச்யுதன் அநிருத்தன் முதலியவைகளாலும் கூடி யிருக்கிறான்

அத்ப்ய: ப்ருதிவ்யை ரஸாத் ஸம்பூத்‌: – விச்வ கர்மண: – ஸமவர்த்தத – . தஸ்ய – , த்வஷ்டா – , ரூபம்‌ -விததத்‌ – தத்‌- , புருஷஸ்ய – , அகரே – விச்வம்‌ – ஆஜாநம்‌ -.அத்ப்ய: ஜலத்தினுடையவும்‌, ப்ருதிவ்யை – பூமினுடையவும்‌, ரஸாத் – ஸாரமான பாகத்‌தினால்‌, ஸம்பூத்‌: – உண்‌டான சிலையானது, விச்வ கர்மண: -நான்முகனால்‌, ஸமவர்த்தத – நன்றாக செய்யப்பட்டது. (நான்முகனின்‌ ஸங்கல்பத்தால்‌ பகவானின்‌ திவ்ய மங்கள விக்ரஹ மண்டப ப்ராகாராதிகளின்‌ நிர்மாணத்துக்கு உசிதமான சிலை (கல்லு)
உண்டாயிற்று – என்று – கருத்து.) தஸ்ய – அந்த சிலைக்கு , த்வஷ்டா – சிற்பி
யானவன்‌, ரூபம்‌ – கர சராணாதிகளோடு கூடிய மனேஹரமான விக்ரஹத்தை,
விததத்‌ – நிர்மித்தான்‌, தத்‌- அந்த நிர்மாணமானது , புருஷஸ்ய – பரம புருஷனுடைய, அகரே – உண்டாகப் போகும்‌. விச்வம்‌ – ப்ரஸித்தமான, ஆஜாநம்‌ – ஆவிர்பாவத்திற்கு காரணமாயிருக்கிறது

அஸ்ய ரூபம்‌ ஸந்த்ருசே ந திஷ்டதி கச்சித்‌ ஏநம்‌ சஷுஷா ந பஸ்யதி ஹ்ருதா மநீஷா மநஸா அபிக்லுப்த: யே விது: தே அம்ருதா –அஸ்ய – இந்த பகவானுக்கு, ரூபம்‌ – ரூபமானது, ஸந்த்ருசே – திருஷ்டி. விஷயமாய்‌, ந திஷ்டதி – இருப்பதில்லை, கச்சித்‌ – எவனும்‌, ஏநம்‌ – இவனை, சஷுஷா – கண்ணால்‌, ந பஸ்யதி – பார்க்க முடியாது . ஆகிலும்‌, ஹ்ருதா -ஸ்ருதி ப்ரமாணத்தாலும்‌, மநீஷா – மந்வாதி ஸம்ருதிகளாலும்‌, மநஸா – பார்கவாதி பகவச்‌ சாஸ்‌த்ரங்களாலும்‌, அபிக்லுப்த: – பிம்ப ரூபமாக. யே- எவர்கள்‌, விது: – தெரிந்து கொள்ளு கிறார்களோ, தே- அவர்கள்‌, அம்ருதா – மோக்ஷத்தை அடைவார்கள்‌,

வீர ஸுதஷ தேவகாம்‌: யுக்தக்ராவ; ஜாயதே-வீர -பகவான் அர்ச்சனாதிகளால்‌ ஆராதிக்கப்பட்டு, ஸுதஷ – பக்தர்களின்‌ அபிஷ்டங்களை அருளுமவனாய்‌, தேவகாம்‌: – கிரீடிக்க வேணுமென்ற திரு வுள்ளம் பற்றி, யுக்தக்ராவ; – சிலா மூர்த்தியாக, ஜாயதே – ஆகிறான்‌.

அச்மாணம்‌ ஆகணம்‌ ப்ரபத்யே”-அச்மாணம்‌ -சிலா மூர்த்தியான பகவானை -ஆகணம்‌ -சிற்பியினால் ஸாஸ்த்ர யுக்தமாகச் செய்யப்பட்டு -பகவத் ஸாஸ்த்ர விதிகளின்படி ப்ரதிஷ்டாதிகள் செய்யப்பட ப்ரபத்யே”-சரணம் புகுகிறேன்

அந்தஸ: ப்ரபாந்தம் மஹேசூராய விஷ்ணவே வ: த்யாய அர்ச்சத-அந்தஸ: – ஆஹாராதிகளால்‌ வ்ருத்தி யடையும்‌ கரண களேபரங்களை ஸ்ருஜித்து , ப்ரபாந்தம் -ரக்ஷிக்குமவனான. மஹேசூராய – ஸர்வ சக்தனான, விஷ்ணவே – பகவானை,
வ: – உங்களுக்கு, த்யாய – மோக்ஷ ப்ராப்‌திக்காக, அர்ச்சத – பூஜியுங்கள்‌,
என்று ருக் வேதத்தில்‌ சொல்லப்பட்டது

ஸ்ம்ருதிகளில்‌ :–” ஏதுத் ரூபம்‌ ப்ரதிஷ்‌டாப்ய சுத்தயா சிலயா ந்ருப “ -என்றும் *ஸுரூபாம்‌ ப்ரதிமாம்‌ விஷ்ணோ:-முதலான வாக்யங்களாலும்‌ விக்ரஹ ஆராதனம்‌ சொல்லப்பட்டுள்ளது -ப்ரவ: பரந்த மந்தஸோ அதிபாய தே” பக்த்யா பகவந்தம்‌ நாராயணம்‌ அர்ச்சயேத்‌–மன்மனா பவ மத் பக்தோ மத்யாஜி மாம்‌ நமஸ்குரூ”” என்னும்‌ ப்ரமாணங்கள்‌ *எம்பெருமானுடைய அர்ச்சநம் மிகவும்‌ உபாதேயம்‌’”–என்று ௮றுதி யிடுகின்‌றன.

ஹே அராயி காணே விகடே கிரிம்‌ கச்ச ஸதான்வே
ஸ்ரிம் பிடஸ்ய ஸத்வபி: தே அபிஷ்ட்வா சாதயாமஸி
.-என்று ருக்வேத்‌தில்‌ திருவேங்கடமும்‌, அதின்‌ ஸ்வாமியான ஸ்ரீநிவாஸனும்‌ வர்ணிக்கப்பட்டு இருக்கிறார்கள்‌.

ஏவம்‌ ஸ்ரீக்ருஷ்ண ருபேண க்ரீடிதோ வேங்கடாசலே
அரரயி காணே விகடே கிரிம்‌ கச்சே ” திஸ்தம்‌ விது:
ஸோ$யம்‌ வேதாமய? ஸாக்ஷாத்‌ கிரீச. பந்நகாசல-
-என்று வேங்கடாசல புராணத்தில்‌ இந்த அர்த்தம்‌ சொல்லப்‌ பட்டிருக்கிறது .

ஹே அராயி -ஏழையே
காணே -குருடனே
விகடே கிரிம்‌ -வேங்கடாசலத்தை
கச்ச -அடைவாயாக
ஸதான்வே-எப்‌பொழுதும்‌ ௮ந்வேஷணத்தைப் பண்ணும்‌ அவ்விடத்தைச்‌ சென்று,
அசஞ்சலமான த்யானத்தைப்‌ பண்ணுவாயாக,
ஸ்ரிம் பிடஸ்ய -ஸ்ரீ மஹாலஷ்மிக்கு இருப்பிடமாய் ஸ்ரீ நிவாசனுடைய
ஸத்வபி: -ஸாத்விக குணங்களான
தே பி -அந்த தயா வாத்சல்யத்தி கல்யாணம் குணங்களாலே
அபிஷ்ட்வா சாதயாமஸி.-உன் பாபங்களை நீக்கி பேரின்பத்தையும் அளிக்கிறோம்

அதோ யத்தாரு ப்லவதே ஸிந்தோ: பாரே ௮பூருஷம்‌,
ததராபஸ்வ துர்ஹண: தேந கச்ச பாஸ்தாம்‌.
(10-155-3) -என்னும்‌ ஸ்ருதிக்கு ஜகந் நாத க்ஷேத்ர பரமாக அர்த்தம்

ரயி: ககுத்மான்‌ விததத்வி நஷ்டம்‌ ரயிவத் விதானம்‌
தஸ்மை கருத்ரே விகடாய பித்ரே ஸ்வாஹா,
-என்னும் பராமாத்மிக–உபநிஷ்த்தில்‌ சொல்லப்பட்டிருக்கிறது
ரயி: -ஐஸ்வர்ய ஸ்வரூபனும்‌ (பெருஞ்செல்வ ஸ்வரூபன்‌-என்று கருத்து.)
ககுத்மான்‌ -வ்ருஷபாசலத்தில்‌ நித்ய வாஸம்‌ செய்யுமவனும்‌ (அல்லது சிறக்தவனலும்‌),
விததத்வி நஷ்டம்‌ –எல்லோருக்‌கும்‌ எல்லா வரங்களையும்‌ கொடுக்குமவனும்‌.
ரயிவத் விதானம்‌–ருக்‌- யஜுஸ்‌-ஸாம-அதர்வணங்களாகிற வேதங்களில்‌ (ஸத் புருஷர்களுக்கு ஸம்பத்‌ – வேதங்களே தான்‌ “ஸாஹி ஸ்ரீர் அம்ருசா ஸதாம்‌’” என்று
சொல்லப்‌ பட்டிருக்கிறது )ப்ரஸித்தனானவனும்‌,
தஸ்மை கருத்ரே -வ்ருஷபாசலத்தின்‌ அக்ரா பாகத்தில்‌ இருக்குமவனும்‌,
விகடாய -வேங்கடாசலத்தி லிருக்கும்‌ பெருமானுக்கு,
பித்ரே ஸ்வாஹா,-என் ஆத்மாவை ஸமர்ப்பிப்பேன்‌–

வராஹ புராணத்தில்‌–ஸர்வ பாபானி வேம்‌ ப்ராஹு:, கட தத்தாஹ உச்யதே
ஸர்வ பாபாபஹாரித்வாசத் வேங்கடாத்ரி ரீதிரித -என்று, வேம்‌”
என்ற சொல்லுக்கு எல்லாப்‌ பாபங்களும்‌”என்று பொருள்‌–என்றும்‌, * கட – சப்தத்திற்கு எரித்தல்‌ என்று
பொருள்‌ என்றும்‌, நிரூபிக்கப்பட்டு. யிருக்கிறது,

வாமன புராணத்தில்‌-வகாரோ அம்ருத பீஜம்‌ து , கட மைஸ்வர்ய முச்யதே ,
அம்ருசைஸ்வர்ய ஸங்கத்வாத்‌, வேங்கடாத்ரி ரிதி ஸ்ம்ரித..-
என்று. “வேம் ” என்ற சொல்லுக்கு * அம்ருதம்‌” என்றும்‌-௧ட– என்பதற்கு ஐஸ்வர்யம்‌” என்றும்‌ – பொருள்‌ கூறப்பட்டன.

ஸ்ரீநம்மாழ்வார்‌ -வேம் கடங்கள் என்னும்‌ பாசுரத்திலே கடங்கள் எல்லாம் – வேம்‌- தீயினில்‌ தூசாகும்‌ – என்று பொருள்‌ கூறினார்‌.-ஸ்ரீபகவத் ராமானுஜாசார்யர்‌, தமது ஸ்ரீபாஷ்ய மங்கள ஸ்லோகத்தில்‌ “** ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே ”’, என்று திருவேங்கடமுடையானைத்‌ தொழுவதுமன்றி, வேதார்த்த ஸங்க்ரஹத்தைத்‌ திரு வேங்கடமுடையான்‌ திருமுன்பே தான்‌ உபந்யஸித்தார்‌.
வேதாந்த தேசிகரும் தயா சதகத்தில் -“ப்ரபத்யே தம்‌ கிரிம்‌” என்று திருவேங்கடத்தையும் – கம ப்யந வதிம்‌ வந்தே கருணாவருணாலயம்‌”’… என்று திருவேங்கட முடையானையும்‌, ஸ்ரீ ஸ்துதியில்‌ தாயாரையும்‌ அடைக்கலம்‌ புகுந்தார்‌.அதிகார சங்கரஹத்‌தில்‌:–
கண்ணனடி யிணை யெமக்கு காட்டும்‌ வெற்புக்‌
கடுவினைய ரிருவினையுங் கடியும்‌ வெற்புத்
திண்ணமிது வீடென்னத் திகழும் வெற்புத்
தெளிந்த பெரும் தீர்த்தங்கள்‌ செறிந்த வெற்புப்‌
புண்ணியத்தின்‌ புகலிதெனப்‌ புகழும்‌ வெற்புப்‌
பொன்னுலகிற் போகமெல்லாம்‌ புணர்க்கும்‌ வெற்பு
விண்ணவரும்‌ மண்ணவரும்‌ விரும்பும்‌ வெற்பு
வேங்கடவெற்‌பென விளங்கும் வேத வெற்பே
–என்றும்‌ திருவேங்கடத்தைச்‌ சிறப்பித்துள்ளார்‌.

ஸாளுவ நரஸிம்ஹ ராஜாவுக்கு ஸேநா நாயகனா யிருந்த துளுவ நரசிங்கராயர்‌ 1487-ம்‌ வருஷத்தில்‌ கர்னாடக ராஜ்‌யாதிபதியானார்‌, இந்தத் துளுவ நரசிங்க தேவராயர்‌ ஆந்திர போஜ ராஜன்‌”! என்று புகழ் பெற்ற ஸ்ரீ கிருஷ்ண தேவராயருக்குத் தகப்பனார் –ஸ்ரீ கிருஷ்ண
தேவராயர்‌
திருவேங்கடமுடையானைத்‌ தனக்கு இஷ்ட தெய்வமாகச்‌ சொல்லிக்‌ கொண்டு, அவனைப்‌ பாட்டுடைத் தலைவனாக்‌கி பிரஸித்தமான * ஆமுக்தா மால்யதை ” என்னும்‌ ஆந்திர பிரபந்தத்தைத் திருவேங்கடமுடையானுக்கே உரிமை யாக்கினார்‌.

ஏறக்குறைய 6000 ஆண்டுகட்கு முன்னர்த்‌ தோன்றியதும் மிகப்‌ பழையதுமாகிய தொல்காப்‌பியம்‌’ என்னும்‌ இலக்கணத்திற்கு, ௮தன்‌ ஆசிரியராகிய தொல்காப்பியர்‌ காலத்தில் இருந்தவராகிய பனம்பரானுர்‌ என்பார்‌ சிறப்புப் பாயிரம்‌ அளித்துள்ளார் -அவர்‌ தமிழ்‌ காட்டிற்கு எல்லை கூறுங்கால்‌- வட வேங்கடம்‌ தென்குமரி‘” என்று வேங்கடத்தை வட எல்லையாகக் கூறியுள்ளார் -கடைச் சங்க நூல்களுள்‌ ஒன்றாகிய அகநானூற்றில் -இம்மலை, ்‌
கழல்புனை திருந்தடிக்‌ கள்வர்‌ கோமான்‌
மழபுலம்‌ வணக்கிய மாவண்‌ புல்லி
விழவுடை விழுச்சீர்‌ வேங்கடம்‌ பெரினும்‌
பழகுவ ராதலோ அரிது.
”-என்றும்‌,
வென்வேல்‌ திரையன்‌ வேங்கட நெடுவரை , ”என்றும்‌,
வினைநவில்‌ யானை விறற்போர்த் தொண்டையர்‌
இனமழை தவழும்‌ ஏற்றரு நெடுங்கோட்‌(டு)
ஒங்கு வெள்‌ ளருவி வேங்கடத் தும்பர்‌.
”-என்றும்‌,சிறப்பிக்கப்‌ பட்டுள்ளது

சிலப்பதிகாரம்‌, மாங்காட்டு மறையவன்‌ கூற்றாக
வீங்கு நீரருவி வேங்கட மென்னும்‌
ஒங்குயர்‌ மலயத்‌ துச்சி மீமிசை
விரி கதிர்‌ ஞாயிறும்‌ திங்களும்‌ விளங்கி
இருமருங் கோங்கிய விடை நிலைத்‌ தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்கு விற்‌ பூண்டு
கன்னிற மேகம்‌ நின்றது போலப்‌
பகை யணங்‌ காழியும்‌ பால் வெண்‌ சங்‌கமும்‌
தகை பெறு தாமரைக்‌ கையி நேந்தி
நலங்கிள ராரமார் விற்‌ பூண்டு
பொலம்பூ வாடையிற்‌ பொலிந்து தோன்றிய
செங்கண்‌ நெடியோன்‌ நின்ற வண்ணமும்‌.”
என, * வேங்கட மலையில்‌ எழுந்தருளிய பெருமான்‌–திருவாழித் திருச் சங்குகளைத் தரித்து முகில்‌ நிறத்தோடு விளங்கும்‌ திருமாலே ”என்பதை விளக்கமாகக்‌ கூறுகின்றது.

சமணப்‌ புலவராகிய * ஐயனாரிதனார்‌” என்பவர்‌, தாம்‌ எழுதிய-புறப் பொருள்‌ வெண்பா மாலையில் – புலவர் ஆற்றுப் படைக்கு மேற்‌கோளாக :
வெறி கொள்‌ அறை யருவி வேங்கடத்துச்‌ செல்லின்‌
நெறி கொள்‌ படிவத்தோய்‌ நீயும்‌ -பொறிகட்டு
இருளீயும்‌ ஞாலத் திடரெல்லாம்‌ நீங்க
௮ருளீயும்‌ ஆதி யவன்‌,
”-என்னும்‌ வெண்பாவில்‌ “: திருவேங்கடவன்‌ திருமாலே “என்று கூறிப்‌ போந்தார்‌.

வேங்கட நாதனை வேதாந்தக்‌ கூத்தனை
வேங்கடத்துள்ளே விளையாடும்‌ நந்தியை
வேங்கடம்‌ என்றே விரகறியாதவர்‌,”
-என்னும்‌ திருமூல நாயனார்‌ திருமந்திரத்தையும்‌,
அரியாரும்‌ பூம்பொழில்சூழ்‌ ஆமாத்தூரம்மான்‌
௮ரியாரும்‌ பாகத்‌தமுதன்‌-அரியாரும்‌
வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்‌
வேங்கடத்து நோயால்‌ விளிந்து
. ‘என வரும்‌ கபில தேவ நாயனார்‌ * சிவபெருமான்‌ திருவந்தாதியையும்‌ கொண்டு சைவருட்‌ சிலர்‌, திருவேங்கடமுடையான்‌ சிவபெருமானே” எனக்‌ கூற முற்படுவர்‌.அருணகிரிநாதர்‌, திருமலையில்‌ முருகப்‌ பெருமானைப்‌ பாடியிருக்‌கிறார்‌ என்றால்‌, ௮து திருவேங்கடமுடைய திரு மாலைக்‌ குறிப்பதன்று – திருமலைப்‌ பெருமையை அறிவிக்கும்‌ புராணத்தில்‌, * குமார தாரை ’ என்னுமிடத்தில்‌, முருகன்‌ திருமாலைக்‌ குறித்துத் தவம்‌ செய்து ௮ருள்‌ பெற்றமையால்‌ அங்கே யிருந்ததாகக் கூறப்படும்‌ ௮ம்‌முருகப் பிரானை யென்பது –* குமார தாரை என்னும்‌ பெயராலும்‌
௮மைவுடைத்தாதலின்‌, ௮த் திருப்புகழுக்‌ கரிய முருகன்‌, திருவேங்‌கட வள்ளலாகிய திருமால்‌ அல்லன்‌. என்பது போதரும்‌ ; வேதத்‌தில் யுவா குமார ” என்று திருமாலைக்‌ “குமரன்‌‘” என்னும்‌ சொல்‌லால்‌ கூறியிருத்தல்‌ அறிக. ஆழ்வார்களும்‌, பலவிடங்களில்‌, திருமாலைக் குமரன் என்றும் * இளையோன்‌ ‘ என்றும் அருளிச்‌ செய்திருத்தலும்‌
அறியத்தக்கது .

ஸ்தானோத்கர்ஷாத்‌ ஸூதீப்தம்‌, ச்ரம ஹர வபுஷம்‌, ஸ்வாங்க பர்யாப்பத
பூஷம்‌,
தேஜிஷ்டம்‌ நீசயோகாத்‌, ப்ரணமித புவனம்‌, பாவனம்‌ ஸந்நதானாம்‌ |
ப்ராப்த் யர்ஹ ஸ்தானம்‌, ௮ஹ: ப்ரசமன விஷயம்‌, பந்த விச்சேதி பாதம்‌,
பேஷே சீக்காரபியான க்ஷம சுபவஸதிம்‌, லம்பி தார்ச்சாபி முக்யம்‌ –த்ரவிடோபநீஷத்‌ தாத்பர்ய ரஈத்நாவஸி.

ஸ்தானோத்கர்ஷாத்‌ ஸூதீப்தம்‌, –திருமலையிலே நின்றும் அருளுகையாலே அளவில்லாத காந்தியை யுடையவனுமாய்
ச்ரம ஹர வபுஷம்‌, –காள மேகம் போலே கண்டார்க்கு ஸ்ரம ஹரமான வடிவழகை யுடையவனுமாய்
ஸ்வாங்க பர்யாப்பத பூஷம்‌, –தாமரை போன்ற தம்முடைய திருக்கண் மலர் முதலான அவயவங்களினாலே பூஷண யுக்தனுமாய்
தேஜிஷ்டம்‌ நீசயோகாத்‌, -அபகர்ஷத்தையும் அபூர்த்தியையுமுடைய தாழ்ந்தவர்களோடு சம்பந்திக்கையாலே மிகவும் விளங்குகிறவனாயும்
ப்ரணமித புவனம்‌, -எல்லா உலகங்களாலும் தொழப்படுகிறவனாகவும்
பாவனம்‌ ஸந்நதானாம்‌ |-வணங்குபவர்களை அவர்களது பிரதிபந்தகங்களைப் போக்கி பரிசுத்தமாக்குபவனாயும்
ப்ராப்த் யர்ஹ ஸ்தானம்‌, -மோக்ஷத்தை அளிக்க வல்ல இருப்பிடத்தை யுடையவனாயும்
௮ஹ: ப்ரசமன விஷயம்‌, –தன்னை அடைவதற்கு விரோதிகளைப் போக்க வல்ல திவ்ய தேசத்தை யுடையவனாயும்
பந்த விச்சேதி பாதம்‌,-ஜென்ம ஜரா மரணாதி வியாதிகளைப் போக்கவல்ல திருவடித் தாமரைகளை யுடையவனாயும்
சீக்காரபியான க்ஷம சுபவஸதிம்‌, —
மெள்ளப் போகிறோம் என்றும் இராதே தள்ளிக்கொண்டு முன்னே செல்ல வேண்டும்படியான திருமலையில் நித்யவாஸம் பண்ணுகிறவனாயும் இருக்கிற எம்பெருமானை
பேஜே -ஆழ்வார் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் -படியே நினைத்தபடியே உகப்போடே கண்டு அனுபவித்து அருளினார் –

ஆபத் சம் ரக்ஷணாத் அரி உபகரணத்தயா மேக சாம்யாதி பூம்னா
தீப்தி மத்வம் ஸ்வானாம் விச்வாஸ தானாத் ஸூர கண பஜ நாத்
திவ்ய தேச உபசத்தி பிராப்ய அப்ராப்யத்வ யோகாத் சத் பிரபத் தவ்ய பாவாத்
சர்வ வேதாந்த ஸூ பிரசித்தம் ஸ்ருதி சத விவஸிதம்

1-ஆபத் சம் ரக்ஷணாத் -உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!-பிரளய ஆபத்தில் உண்டு ரஷித்து-

2-அரி உபகரணத்தயா –சீறா எரியும் திரு நேமி வலவா! தெய்வக் கோமானே!

3-4-மேக சாம்யாதி பூம்னா –3/4 —வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!—
ஸாம்யம் –ஆதி–தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!-

5-தீப்தி மத்வம் –திரு மா மகள் கேள்வா!

6-ஸ்வானாம் விச்வாஸ தானாத்–புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒரு வில் வலவாவோ!

7-ஸூர கண பஜ நாத் -எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி

8-திவ்ய தேச உபசத்தி–செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!

9-பிராப்ய அப்ராப்யத்வ யோகாத்–நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!

10-சத் பிரபத் தவ்ய பாவாத் –வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே!–

சர்வ வேதாந்த ஸூ பிரசித்தம் -ஸ்ருதி சத விவஸிதம்-

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ புருஷோத்தம வித்யா -ஸ்ரீ புரீ ஜகந்நாத யாத்ரா- ஸ்ரீ க்ஷேத்ர மஹாத்ம்யங்கள் -ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள்-

October 9, 2025

” ஸ்ரீரங்கம் வேங்கடாத்ரிச்ச ஸ்ரீமுஷ்ணம் தோதபர்வதம்
ஸாளக்ராமம் புஷ்கரம் நரநாராயணாச்ரமம் நைமிஷம்
சேதி மே ஸ்தானானி அஸெள முக்தி ப்ரதானி வையே து
அஷ்டாக்ஷர ஏகைக : வர்ணமூர்த்தி: வஸாமி அஹம்”

1. ஸ்ரீரங்கம்
2. திருப்பதி
3.ஸ்ரீமுஷ்ணம்
4.நாங்குநேரி
5.முக்திநாத்
6.புஷ்கரம்
7.பத்ரிநாத்
8.நைமிசாரண்யம்

இறைவன் தானாக விக்கிரகமாக ஒரு இடத்தில் தோன்றினால் அதை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்கிறோம். வியக்தம் என்ற சொல்லுக்கு வெளிப்படுதல் என்று பொருள். இறைவன் தாமாக விரும்பி வெளிப்பட்ட தலத்தை ஸ்வயம் வியக்தம் என சொல்கிறோம்.

தைவிகம் – பிரம்மா, இந்தியன், சூரியன் உள்ளிட்ட தேவர்கள் பெருமாளை ஒரு கோவிலில் பிரதிஷ்டை செய்தால் அதற்கு தைவிகப் பிரதிஷ்டை என்று பெயர்.

ஆர்ஷம் – முனிவர்கள் மற்றும் ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்கள் ஆகும்.

மானுஷம் – அரசர்கள், பக்தர்கள் போன்ற மனிதர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்கள்.

இவ்வாறு நான்கு ஷேத்ரங்களிலும் க்ரோசம் -கால் யோஜனை /அரை யோஜனை /யோஜனை /2 யோஜனை வாழ்பவர்கள் பாபங்கள் போக்கப்படுமாம்

  ஸ்ரீரங்கம் கரிஸைலம் அஞ்ஜநகி ரிம் தார்க்ஷயாத்ரி ஸிம்ஹாசலௌ ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமம் ச பதரீ நாராயணம் நைமிசம் ஸ்ரீமத் த்வாராவதீ ப்ரயாக மதுரா அயோத்யா க யா புஷ்கரம் சாலக்ராம கிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனி:

பகவத் ராமானுஜர், திருவரங்கம், திரூவேங்கடம், அஹோபிலம், -ஸிம்ஹாசலம், ஸ்ரீ கூர்மாம் புரி ஜகந்நாதம் , பதரீ, நைமிசாரண்யம், த்வாரகா , ப்ரயாகம்,  ,மதுரா , அயோத்யா, கயா , புஷ்கரம், ஸாளக்ராமம் , ஆகிய தேசங்களுக்குச் சென்று மங்களாசாசனம் செய்து இன்புறுகிறார்.-மேற்கண்ட ஸ்லோகப் பொருளில் அடிக்கோடிடப்பட்ட முக்யமான திவ்ய க்ஷேத்ரங்கள் மற்றும் மங்களகிரி, பத்ராசலம் ஆகிய திவ்ய க்ஷேத்ரங்களை தரிசிப்பதற்காக புருஷோத்தம வித்யா எனும் யாத்ரை ஏற்பாடாகியுள்ளது. அதைப் பயனுள்ளதாக்க நாம் அறிந்து கொள்ள வேண்டியவற்றையும், ஒவ்வொரு க்ஷேத்ரத்தின் பெருமைகளையும் இனிப்பார்ப்போம்.

மங்களகிரி

இம்மலையின் பெயரிலேயே மங்களம் உள்ளது. அனைத்து மங்களங்களையும் கொடுக்க வல்ல மலை-என்பது இதன் பொருள். ஒரு யானையின் வடிவத்தில் அமைந்திருக்கும் இம்மலையின் பின்னணியில் ஒரு சுவையான வரலாறும் உள்ளது.

பரியாத்ரா எனும் மன்னனின் மகன் ஹ்ரஸ்வ ஸ்ருங்கி என்பவன், அவனது உடல் குள்ளமாக இருந்தது. தன உடலின் அழகைத் திரும்பப் பெற இவன் பல இடங்களில் தவம் புரிந்து இறுதியில் இம்மலையில் எழுந்தருளியிருக்கும் பாநகால நரசிம்ஹ ஸ்வாமியை சுமார் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து வேண்டினான். தந்தை இவனை வற்புறுத்தித் தன நாட்டிற்குத் திரும்ப அழைத்துப் போக முற்பட்டபோது , இவன் பகவானை வேண்டி யானை வடிவம் பெற்று அவனையே எப்போதும் வணங்கி வருகிறான். ” எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே!” என்று குலசேகர ஆழ்வார் வேண்டினார். ஆனால் இவனோ பகவானை எப்போதும் வணங்குவதற்காக மலையாகவே ஆகி, இருந்து அனைவருக்கும் மங்களங்களையும் நல்குகிறான்.

இவ்வூரில் மூன்று நரஸிம்ஹர்கள் எழுந்தருளியுள்ளனர் . மலையடிவாரத்தில்
ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹஸ்வாமி,  மலையில் பாநகால நரசிம்ஹஸ்வாமி , இன்னம் மேலே கண்டால நரஸிம்ஹஸ்வாமி  ( கண்டால நரஸிம்ஹஸ்வாமி  சன்னிதியில் இப்போது விளக்கு மட்டும் ஏற்றப்படுகிறது) படிக்கட்டுகள் ஏறி மலைக்குச் செல்லும் வழியில் ஸ்ரீ சைதன்ய மகாப்ரபுவின் பாதச்சுவடுகள் காணப்படுகின்றன. மலையில் நரஸிம்ஹஸ்வாமி கோயிலின் பின்புறம் லக்ஷ்மி தேவியின் கோயில் உள்ளது. அங்கிருந்து ஒரு குகைப்பாதை” உண்டால் ” மலைக்குச் செல்லுகிறது. முன்னாட்களில் இங்கு தவம் புரிந்த ரிஷிகள் இக்குகை வழியே கிருஷ்ணா நதிக்கு நீராடச் செல்வாராம்.

நரஸிம்ஹர் இங்கு எழுந்தருளிய சரித்ரம்

க்ருத யுகத்தில் நமுதி எனும் அரக்கன் கடும் தவம் புரிந்து , தன்னை நனைந்தோ, உலர்ந்தோ உள்ள எந்த ஆயுதமும் கொல்லககூடாது என்று வேண்டி சாகாவரம் பெற்றான். செருக்கின் மிகுதியால் தேவர்களை துன்புறுத்தத் தொடங்கிய அவன் தனக்கு, எப்போது ஆபத்து வந்தாலும் தன ஸ்தூல உடலைத் துறந்து நுண்ணிய உடலோடு இம்மலையில் மறைந்து கொள்வான். இந்திரன் இவனை அழிக்க எண்ணி இம்மலையில் வந்து தவம் செய்தான். அப்போது தோன்றிய சிங்கப்பிரான் தன ஸுதர்சந சக்ரத்தை கடல் நுரையில் தோய்த்து, சக்ரத்தின் நடுவே தானும் அமர்ந்து கொண்டு குஹைக்குள் சென்றார். உள்ளே நரசிம்ஹர் பெருமூச்சுக் காற்று விட அது கடல் நுரையை அள்ளிக்கொண்டு போய் நுண்ணிய வடிவில் இருந்த அரக்கனைக் கொன்றது. பின்னர் நரஹரிப்பெருமானை ஸாந்தமடையச் செய்ய இந்திரன் அமுதத்தை அன்புடன் அர்ப்பணம் செய்தான். இதனை அனுசரித்து த்ரேதா யுகத்த்டில் நெய் , த்வாபர யுகத்தில் பால், கலி யுகத்தில் பானகம் ஆகியவற்றை ஸமர்ப்பித்தால் பெருமாள் குளிர்ந்திருப்பார்- என்பதால் இக்கலியுகத்தில் இவ்வேம்பெருமானுக்கு பானகமே ஸமர்ப்பிக்கப்படுகிறது.

இப்பெருமானை இன்றுள்ள நிலையில் பாண்டவர்களில் மூத்தவரான தர்ம புத்திரரே ஸ்தாபித்தார். இன்றும் அவரே ப்ரகுமொத்ஸவத்தை நடுத்துவதாகக் கருதப்படுகிறது.

பானகப் ப்ரஸாதம்

இம்மலையிலேயே நரசிம்ஹரின் திருமுகம் உள்ளது. புராணத்தின்படி இன்றும் நரசிம்ஹருக்கு அவர் திருவாயிலேயே பானகம் ஸமர்ப்பிக்கபடுகிறது. எவ்வளவு ஸமர்பபித்தாலும்  அதில் பாதியை அருந்தி விட்டு , மீதியை ப்ரசாதமாகக் கொடுக்கிறார். இத்தனை பானகம் இருந்தாலும் இக்கோயிலில் இனிப்பினை மொய்க்கும் ஒரு எறும்பு கூட இல்லாதது வியப்பாக உள்ளது.

காலி கோபுரம்

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் ராஜா வாசி ரெட்டி வெங்கடாத்ரி நாயுடு என்பவர், 153 அடி உயரமுள்ள 11 நிலைகளுள்ள இக்கோபுரத்தைக் கட்டினார்.

க்ஷீர வ்ருக்ஷம்

மங்களகிரியில் , பால் மரம் என்று பெண்டிரால் போற்றப்படும் இம்மரம் வேறு யாருமல்ல – தேவ ரிஷியான நாரதரே ஸஸபந்தி எனும் மன்னனைக் குறித்து , அவன் தன மனைவி மக்களைத்துறந்து க்ஷேத்ராடனம் போக நாரதர் உபதேசித்தார். மன்னனும் அப்படியே செய்ய , இது கண்டு கோபாமுற்ற ராணி, நாரதரை இம்மலையில் ஒரு பால் மரமாக இருக்கும்படி ஸபித்தாள் . நாரதர் இதனையே ஒரு வரமாக ஏற்று , இங்கு மக்கட்பேறு வேண்டி வரும் பெண்களுக்கு ஸந்தான ப்ராப்தி வரத்தினை அருளுகிறார்.

ஸிம்ஹாசலம்

பிரஹ்லாதனை ரக்ஷிப்பதர்காக ஸ்ரீ மன்நாராயணனை ஸிம்ஹாசலத்தில் வராஹ நரசிம்ஹனாக அவதரித்தார். பிரஹ்லாதனை ஹிரண்யன் ஸிம்ஹாச்சலத்தின் அருகிலிருக்கும் கடலில் தள்ளிவிட ப்ரஹ்லாதன்               ” த்ராஹி, த்ராஹி ” என்று பகவானைச் சரணம் புக ஸ்ரீமந்நாராயணன்  கஜேந்த்ராழ்வானை ரக்ஷிப்பதற்க்கு வந்த வேகத்தை விட ஸீக்ரமாகக் குதித்து அவிழும் பீதாம்பரத்தை முடிச்சிட்டால்  நேரம் கடந்து விடும் என்று ஒரு திருக்கையில் பீதாம்பரத்தைப் பிடித்துக்கொண்டு மற்றொரு திருக்கையிலுள்ள கட்டை விரலால் கருடனுக்கு வாயில் அம்ருதத்தைக் கொடுத்துக்கொண்டு குதித்தார். குதித்த அந்த வேகம் தாளாமல் பூமி பிளந்து பகவான் திருவடிகள் பாதாளம் வரை சென்றன. அப்படிக் குதித்த பெருமாள் ஹிரண்யனுடன் (ஹிரன்யகசிபுவுடன்) த்வாத்ரிம்ஸத் (32) ரூபங்கள் எடுத்து யுத்தம் செய்தார். அதில் ஒன்று தான் வராஹந்ருஸிம்ஹாவதாரம் . ப்ரஹ்லாதனுக்காக எடுத்த அதே திருவுருவத்துடன் அர்ச்சாமூர்த்தியாக எல்லாருக்கும் ஸேவை ஸாதிக்கிறார் . சிறிது காலம் ப்ரஹ்லாதன் எவரை ஆராதித்தார். பிறகு தன ராஜ்யத்துக்குத் திரும்பினார். அந்த சமயம் பெருமானுக்கு திருவாராதநம் இல்லாமல் போய் பெருமானை வல்மீகம் (புற்று) மூடிக்கொண்டது .  இந்த இடம் காடாக மாறியது.

காலக்ரமத்தில்  புரூரவஸ் சக்ரவர்த்தி இந்த இடத்தைக் கடக்கும்போது அவரது விமானம் இந்த இடத்தைத் தாண்ட முடியவில்லை. வியந்த புரூரவஸ் கீழே இறங்க பகவான் கனவில் தோன்றி “நான் இங்கு இருக்கிறேன்” என்று சொல்ல புரூரவஸ் எம்பெருமானை வேண்ட இங்கிருக்கும் “காங்க தாரா” என்ற தீர்த்தத்தின்  அருகிலிருக்கும் புற்றில் தான் இருப்பதாக எம்பெருமான் அருளினார்.

காங்க தாரா ஸாமம்தீர்த்தம் க்ஷேத்ரம் ஸிம்ஹாத்ரிநாஸமம்

நாரசிம்ஹ ஸமோ தேவ: த்ரைலோக்யே நாஸ்தி நிச்சய:

என்ற சிலாசாஸனம் க்ஷேத்திர மாஹாத்ம்யத்தில் உள்ளது.
எம்பெருமானைப் புற்றிலிருந்து வெளியே எழுந்தருளப் பண்ணி காங்க தாரா தீர்த்தத்தில் திருமஞ்சனம் செய்து பிரதிஷ்டை செய்தான். பிரதிஷ்டை செய்த நாள் வைசாக சுக்ல த்ருதீயையாகும். இது அக்ஷயத்ருதீயை என்று கொண்டாடப்படுகிறது. அன்று சந்தநோத்ஸவம் என்ற உத்சவம் நடக்கிறது. அன்று எம்பெருமானின் நிஜரூபதர்ஸநம் எல்லாருக்கும் கிட்டுகிறது. அதாவது அன்று சந்தனக்காப்பு இல்லாமல் ஸேவை ஸாதிக்கிறார் .

3 மணுகு சந்தனம் என்றால் சுமார் 125 கிலோ  சந்தனமாகும்.
வைசாக சுக்ல திருதீயையன்று 3  மணுகு சந்தனம் சாற்றுகிறார்கள் .

வைசாக பௌர்ணமியன்று 3  மணுகு சந்தனம் சாற்றுகிறார்கள் .

ஜ்யேஷ்ட பௌர்ணமி  ஆணி பௌர்ணமி யன்று 3 மணுகு சந்தனம் சாற்றுகிறார்கள்

ஆஷாட பௌர்ணமி  ஆடி பௌர்ணமியன்று  3 மணுகு சந்தனம் சாற்றுகிறார்கள்

ஆகா 12 மணுகு ( சுமார் 500 கிலோ) சந்தனத்துடன் எம்பெருமான் எப்பொழுதும் ஸேவை ஸாதிக்கிறான் .

பெருமானுக்கு திருமஞ்சனம் மற்றும் ப்ராசாதத்துக்காக இன்றும் காங்க தாரா தீர்த்தம் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது.

ஸ்ரீ ஸிம்ஹாசல க்ஷேத்திர மாஹாத்ம்யம் முற்றிற்று .

ஸ்ரீ வராஹ நரஸிம்ஹ ஸ்வாமியின் த்வாத்ரிம்ஸத்  ( 32 ) திருநாமங்கள்

ஸ்தம்போத்பவ  நரஸிம்ஹர்                 காரஞ்ச நரஸிம்ஹர்

பாவன                    நரஸிம்ஹர்                 கருடாரூப நரஸிம்ஹர்

பஞ்சமுகி             நரஸிம்ஹர்                  கண்டபோண்ட நரஸிம்ஹர்

ப்ரஹ்லாதவரத நரஸிம்ஹர்                 வராஹ  நரஸிம்ஹர்

ஜ்வாலா உக்ர     நரஸிம்ஹர்                  அஹோபில நரஸிம்ஹர்

யோகா ஸ்ரீ            நரஸிம்ஹர்                   ஸ்ரீ வித்யா நரஸிம்ஹர்

சாளக்ராம           நரஸிம்ஹர்                   யோகபட  நரஸிம்ஹர்

யோகானந்த       நரஸிம்ஹர்                    மாலோல நரஸிம்ஹர்

வீர                          நரஸிம்ஹர்                     க்ரோட நரஸிம்ஹர்

ஸர்வதோமுக நரஸிம்ஹர்                      அபய நரஸிம்ஹர்

ஸ்ரீ மஹாவிஷ்ணு நரஸிம்ஹர்                லக்ஷ்மி நரஸிம்ஹர்

சாத்ரவட            நரஸிம்ஹர்                        ஸ்ரீ வித்யாசக்ர நரஸிம்ஹர்

ராஜ்யலக்ஷ்மி நரஸிம்ஹர்                யோகவட லக்ஷ்மி நரஸிம்ஹ நரஸிம்ஹர்

ஸ்ரீ பார்கவ        நரஸிம்ஹர்                          கிரிஜா நரஸிம்ஹர்

ஸ்ரீ ஸுதர்ஸந நரஸிம்ஹர்                          கல்யாண நரஸிம்ஹர்

வ்யாக்ர             நரஸிம்ஹர்                          வராஹலக்ஷ்மி நரஸிம்ஹர்

ஸ்ரீ கூர்மம்

ஸ்ரீ கூர்மக்ஷேத்ரமாஹாத்ம்யமானது அஷ்டாதஸ புராணங்களில் ஒன்றான ப்ரஹ்மாண்ட புராணந்தர்கதமான பத்ம புராணத்தில் சொல்லப்பட்டது. இந்த கூர்மக்ஷேத்ரத்திளிருந்து 12 கி.மீ. தொலைவில் காரா என்ற பிராந்தியத்தில் “சாலிஹுண்டா ” என்ற இடம் உள்ளது. இவ்விடங்களை ஸ்வேதசக்ரவர்த்தி ஆண்டு வந்தார்.அவருடைய கோட்டைதான் “சாலிஹுண்டா “. வம்ஸ தாரா என்ற நதியல் சூழப்பட்டிருக்கின்றன இவ்விடங்கள் . ராணியின் பெயர் ஹரிப்ப்ரியா . ராணி பீஷ்ம ஏகாதஸிவ்ரதம் இருக்கும்போது காமத்துக்கு வசப்பட்ட ராஜா , ராணியிடம் செல்ல , வ்ரதத்திலிருக்கும் ராணி பகவானை வேண்ட இருவருக்கும் இடையில் ஒரு பெரிய ஊற்று பிறந்தது. அது தான் வம்ஸ தாரா . ராஜா ஏமாற்ற்றத்துடன் கோட்டைக்குத் திரும்பினார். வருத்தத்தில் இருந்த அவரைப்பார்த்த நாரதர் அவருக்கு ( ராஜாவுக்கு) கூர்ம மந்திரத்தை உபதேசித்து இங்கிருக்கும் எட்டு புண்ய தீர்த்தங்களில் நீராடி தவம் புரியும்படி சொன்னார். அரசனும் அவ்வாறே கடுந்தவம் புரிந்தான். ஸ்ரீ மஹாவிஷ்ணு ப்ரத்யக்ஷமாகி என்ன வரம் வேண்டும் ? என்று கேட்டார். ஸ்வேத சக்ரவர்த்தியும் எம்பெருமானை கூர்மாவதாரத்தில் எல்லாருக்கும் ஸேவை ஸாதிக்க வேணுமென்று பிரார்த்தித்தார். மற்ற அவதாரங்களை அந்தந்த காலத்தில் இருப்பவர்கள் தான் ஸேவித்திருப்பார்கள் . ஆனால் மந்தரமலை கடலுக்குள் அழுந்திவிடாமல் இருப்பதற்காக பண்ணின கூர்மாவதாரத்தை தேவர்களும் தானவர்கல்ம் கூட ஸேவிக்காமல் விட்டார்கள். அமுதத்தை மட்டும் அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்ததால் அந்த அவதாரகாலத்தில் அவர்கள் இருந்தும் கூட ஸேவிக்காமல் இருந்தார்கள்.அந்த குறை தீர உலகில் எல்லாருக்கும் ஸேவை ஸாதிக்க கூர்ம ரூபியாக இங்கு எழுந்தருலவேனுமென்று பிரார்த்தித்தான் அரசன். பகவானும் இசைந்து ராஜாவின் பெயரிலேயே மலையை ஏற்படுத்தினார்.

“ஸ்வேதாசல நிவாஸாய கூர்மநாதாய மங்களம்” என்பது இந்த திவ்ய தேசத்து எம்பெருமானுக்கான மங்கலஸ்லோகம் . இந்த ஆலயத்தைப் பிரமன் ஏற்படுத்தினார். இங்கே நூற்றெட்டு  ( 108 ) விதமான தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தீர்த்தம் கிடைக்காமல் போக பகவானே தன சக்ரத்தால் குளத்தை ஏற்படுத்த “சக்ர தீர்த்தம்” இங்கு உண்டாயிற்று. அக்குளத்திளிருந்துதான் “தாயார்” அவதரித்தார். க்ருத யுகத்தில் பிரமன் , த்ரேதா யுகத்தில் லவ குசர்கள் , த்வாபர யுகத்தில் பலராமன் ஆகியவர்கள் இந்த பகவானுக்கு ஆராதநம் செய்திருந்தார்கள். கலியுகத்தில் எம்பெருமானார் எழுந்தருளி மங்களாஸாஸநம் செய்தார்.

ஸ்ரீ கூர்ம க்ஷேத்திர மாஹாத்ம்யம் முற்றிற்று .

புரி ஜகந்நாத க்ஷேத்ரம்

வர்ஷாணாம் பாரத ஸ்ரேஷ்ட: தேஸாநாம் உத்கல: ஸ்ம்ருத:

உத்கலஸ்ய ஸமோ தேஸ : தேஸோ நாஸ்தி மஹீதலே

வர்ஷங்களுக்குள் பாரதமும் , தேசங்களில் உத்கலமும் ( ஓடிஷா ) ஒப்பு உயர்வற்றவை .

இந்த உத்கல க்ஷேத்ரம் என்பது சங்க க்ஷேத்ரம் (புரி ), பத்ம க்ஷேத்ரம்
 ( கோனார்க் ) , சக்ர க்ஷேத்ரம் ( புவனேஸ்வர்), கதா க்ஷேத்ரம் (ஜாஜபுரா )

ஆகியவற்றை உள்ளடக்கியது. இவை அனைத்தும் சேர்த்து சுமார் 100 சதுர மைல் பரப்பளவு உள்ளது. இவற்ற்றுள் 5 க்ரோசங்கள் ( ( 10 மைல்கள்) உள்ள புரி க்ஷேத்ரம் சாலச் சிறந்தது.. திருமாலின் சங்க வடிவத்தில் இருக்கும் இத்தலத்தின் 6 மைல்கள் கடலுக்குள்ளும் , 4 மைல்கள் நிலத்திலும் உள்ளன.
சுமார் 20 கி.மீ. சுற்றளவு உள்ள இத்தளத்தை பகவானின் சங்கம் தோன்றிய நாளான மார்கழி மாதத்து தேய்பிறையின் பஞ்சமி அன்று வலம் வருவது மரபு.
இத்தளத்தின் மஹாத்ம்யத்தை பத்ம புராணம், பிரம்ம புராணம் , ஸ்கந்த புராணம் ஆகியவற்றில் கூறியபடி இங்கு பார்ப்போம்.

சார் ( நான்கு ) தாம் – பதரீ , புரி, ஸ்ரீரங்கம் , த்வாரகா ஆகியவை பாரதத்தின் நான்கு எல்லைகளில் இருக்கும் புன்யக்ஷேத்ரங்கள். இந்த நான்கு க்ஷேத்ரங்களுக்கும் யாத்ரை செல்வது பரம பாவநமாகக் கருதப்படுகிறது. ஸ்ரீமன் நாராயாணன், விடியற்காலையில் பாதரியில் நீராடி, த்வரகாவில் வஸ்த்ரம் தரித்து, புரியில் அமுது செய்து திருவரங்கத்தில் சயனிக்கிறார்.

இதில் புரி ஜகந்நாதம் கீழ்கண்ட பெயர்களில் விளங்குகிறது.

ஸ்ரீ க்ஷேத்ரம் : ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கேள்வனே புருஷோத்தமன் என்று வேதாந்தம் கூறுகிறது. ஆகவே புருஷோத்தமன்  உறையும் இவ்விடம் ஸ்ரீ க்ஷேத்ரம்.

சங்க க்ஷேத்ரம்: இவ்விடம் திருமாலின் சங்க வடிவத்தில் இருப்பதால் இப்பெயர்.

புருஷோத்தம க்ஷேத்ரம் : அபுருஷன் என்று அறிவற்ற ஜடமான அசேதனப் பொருள்களையும், என்று   பந்த ( உலகியற்கட்டுண்ட ) ஜீவர்களையும், உத்புருஷன் என்று முக்த ஜீவர்களையும் , உத்தர புருஷன் என்று நித்ய ஸூரிகைகளையும் சொல்வர். இவர்கள் அனைவரையும் விட மிகவும் உயர்ந்தவனான பகவான் உத்தம புருஷன் எனப்படுகிறான். இதக் கண்ணன் கீதை பதினைந்தாம் அத்தியாத்தில் விளக்குகிறார். அந்த புருஷோத்தமன் கோயில் கொண்டிருக்கும் இவ்விடம் புருஷோதமக்ஷேத்ரம் .

நீலாசலம் : இவ்விடம் நீல மலையில் உள்ளபடியால் இப்பெயர். இதுவே இவ்விடத்தின்  புராதனப்பெயர்.

பூஸ்வர்கம் : சுவர்க்கத்தில் உள்ள மிதமான தட்பவெப்பமும் , இன்பமும் இங்கு எப்போதும் இருக்கிறபடியால் இது பூலோகத்தில் உள்ள சுவர்க்கம் எனப்படுகிறது.

நரசிம்ஹ க்ஷேத்ரம் : இத்திருக்கோயில் கட்டி முடிக்கப்பட்டவுடன் பர்மா ஒரு யாகம் செய்ய அதிலிருந்து ஸ்ரீ நரசிம்ஹர் உக்ர வடிவத்துடன் தோன்றி, பின் சாந்தமடைந்தார். ஆகவே இவ்விடத்திற்கு இப்பெயர்.

ஸ்தலபுராணம்

க்ருத யுகத்தில் , சிறந்த விஷ்ணு பக்தனான இந்த்ரத்யும்ணன் எனும் அரசன் அவந்தி நகரத்தைத் தலைநகரமாகக் கொண்ட மலாயா தேசத்தை ஆண்டு வந்தான். அவன் ஒரு நாள் தன குல குருவினிடம் ” பகவானை நேருக்கு நேரே தரிசிக்கும் பெருமையுடைய புன்யக்ஷேத்ரத்தைக் கண்டுபிடித்துக் கூறுங்கள்” என்றான்.

குருவும் க்ஷேத்ராடனம் போய் வரும் யாத்ரிகர்களிடம் வினவ, அதில் ஒருவர் ” நான் அனைத்துப் புன்யக்ஷேத்ரங்களையும் தரிசிக்கும் பாக்யம் பெற்றவன்.பாரத வர்ஷத்தில் உத்கலதேசத்தில்  ( ஓடிஷா ) கடலுக்கு வடக்கே இருப்பது புருஷோத்தமா க்ஷேத்ரம். அங்கு அடர்ந்த கானகத்தின் நடுவே கம்பீரமான நீலமலை உள்ளது. அங்கிருக்கும் கல்பவடம் எனும் ஆலமரத்தின் மேற்கே ரோகிணி குண்டம் எனும் புண்ய தீர்த்தம் உள்ளது. அதன் கிழக்கே, ஒளி விடும் நீல மணியாலான வாசுதேவர் கோயில் கொண்டுள்ளார். தீர்த்தத்துக்கு மேற்கே சபர் தீபக் எனும் ஆச்ரமத்திலிருந்து சற்றுத் தொலைவில் பகவான் ஜகந்நாதர் கோயில் கொண்டுள்ளார்.
 ஒரு முழு ஆண்டு அவருக்குத் தொண்டு செய்யும் பாக்கியம் இந்த ஏழைக்குக்
கிடைத்தது.
 மன்னா ! தாங்கள் உடனே அங்கு சென்றால் பகவானை நேரே தரிசிக்கலாம்” என்று கூறி மறைந்தார்..

உடனே அரசன் குல குருவிடம் நீலாசலம் சென்று ஜகந்நாதனை தரிசித்து மோக்ஷம் பெற உதவ வேண்டினான். குருவும் தன தம்பி வித்யபதியை முதலில் அங்கு சென்று விவரம் அறிந்து வரச் சொன்னார்.

வித்யாபதி ஒரு சுபமுஹுர்த்த தினத்தில்  சில பக்தர்களோடு நேரில் நீலாசலத்தை நோக்கிப் புறப்பட்டான். விரைவில் மகாநதியை அடைந்து அனுஷ்டானங்களை முடித்து ஏகாம்பர கானனம் என்ற புவநேஸ்வரத்தைத் தாண்டி தூரத்தில் நீலாத்ரியை கண்டார். தீர்த்த யாத்ரிகர் வர்நித்தபடியே மலை உச்சியில் கல்ப வடத்தைத் தரிசித்தார். உடனே பெருமாளை தரிசிக்க நினைத்தாலும் இரவாகிவிட்டபடியால் இருட்டில் அடர்ந்த காட்டில் செல்வதற்கு வழி காட்ட ஆளில்லாமல் அங்கேயே தங்கினார். அப்போது சிலரின் குரல் கேட்டுத் தொடர்ந்து சென்றபோது சபர் ( மலைவாசி )  தீபக் ஆஸ்ரமத்தை அடைந்தார். அங்கு பல வைஷ்ணவர்களோடு இருந்த விஸ்வாசு  இவரை வரவேட்ட்று பிரசாதம் அளித்து ஓய்வெடுக்கச் சொன்னார். ஆனால் வித்யாபதி  ” நான் நல்ல செய்தியோடு போனால் தான் எங்கள் மன்னர் உபவாசத்தை முடிப்பார். ஆகவே உடனடியாக மலைமேல் போகவேண்டும்” என்று சொல்ல விச்வாசுவும்  : இந்த்ரத்யும்ணன் எனும் மன்னன் இங்கு வந்து தங்குவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். போவோம் வாருங்கள்” என்று இருளில் வழி கட்டினார். போகப்போக பதை குகியும் முள் நிறைந்ததாயும் இருந்தது. விடியலில் புன்யமான ரோஹிணி குண்டத்தை தர்சித்தனர். பின் கல்ப வடத்த வணங்கி , இவ்விரண்டுக்கும் நடுவே உள்ள தோப்பின் உள்ளே சென்று பேரொளியோடு எழுந்தருளியிருந்த பகவானை வியந்து வணகினார்.
பின் வேகமாக மலையிறங்கி ஆஸ்ரமத்தை அடைந்து விஸ்வாசு கொடுத்த அமானுஷ்யமான சுவை உடைய மஹாப்ரசாதத்தை உண்டார்.
” இந்திரன் சமைத்து ஜகந்நாதனை ஆராதித்து அதன் சேஷமான இந்த பிரசாதத்தை உண்டால் பாபமெல்லாம் தொலையும் ” என்று ஜகந்நாத பிரசாதத்தின் பெருமையை உரைத்தார். விஸ்வாசு. உடனே வித்யாபதி
 ” எங்கள் மன்னர் இங்கு வந்து நீல மாதவனை தரிசித்து ஒரு பெரிய கிளை எழுப்பி சிறப்பான பூஜை முறைகளையும் ஏற்படுத்துவார்” என்றார். ஆனால்  விஸ்வாசு “மன்னர் வருவார். ஆனால் இப்போது இருக்கும் பெருமான் அவர் கண்ணுக்குப் படாமல் மறைந்து விடுவார். மன்னன் உபவாசம் இருக்க, பகவான் வேறு மாற உருவத்தில் தோன்றி , பிரம்மாவால் ஸ்தாபிக்கப்பட்டு, பின் நெடுங்காலம் காட்சி கொடுப்பார். ஆனால் இவ்வுண்மைகளை மன்னனிடம் வெளிடவேண்டாம்” என்று வேண்டினார். வித்யாபதி விடை பெற்றுக்கொண்டு புருஷோத்தம க்ஷேமத்தை ப்ரதட்சிணம் செய்து மீளவும் அவந்தி புரியை அடைந்தார்.

திரும்பிய வித்யாபதியின் உத்ஸாகத்தைக் கண்ட மன்னன் போன கார்யம் ஸித்தித்தது என்று உவந்து அவரை உபசரித்தான். குலகுருவின் தம்பி தன அனுபவத்தை மன்னனிடம் விளக்கி ஜகந்நாத பிரசாதத்தைகே கொடுத்தார்.  நீல மாதவனின் சொல்லொனா வடிவழகைக் கேட்ட இந்த்ரத்யும்ணன் உடன் அங்கு செல்ல விருப்பம் கொண்டான்.அப்போது தெய்வ சங்கல்பத்தால் நாரத ரிஷி அங்கு வந்து ” மன்னனின் விருப்பம் ஈடேரும்” என்று ஆசிர்வதித்தார். ஜ்யேஷ்ட மாத்த்தின் பஞ்சமி திதியன்று அவர், நாரதர், ராணி, ப்ரஜைகள்  ஆகியோர் புடை சூழ , தேரில் புறப்பட்டு அன்றிரவே மஹாநதியின்  க்ஸ்ர்சிய்சி ச்ட்சிந்து தங்கினர். உண்டு மடித்து, நாரதர் புருஷோத்தம வைபவம் கூறிக்கொண்டிருந்தபோது வாயிற்காபோன்  வந்து உத்கல தேசத்து மன்னன் வந்திருப்பதாக தெரிவித்தான்.

இரு மன்னர்களும் ஒருவரை ஒருவர் நமச்கரித்தனர். உத்கல மன்னன் , ” தங்கள் வரவு நல்வரவு ஆகுக. ஆயின் தற்போது ஒரு சூறாவளியால் தாங்கள் தரிசிக்க நினைக்கும் நீல மாதவன் மண்ணால் மூடப்பட்டுள்ளார். நாட்டைப் பல ஆபத்துக்கள் சூழ்ந்துள்ளன. உங்கள் வரவு அவற்றைத தீர்க்கும் என நம்புகின்றேன் ” என்று கூறினார். இந்த்ரத்யும்ணனின் கவலையைத் தீர்ப்பதற்காக நாரதர் , “அனைத்தும் ப்ரஹ்மா கூறியபடி நடக்கிறது. பகவான் நான்கு உருவங்களோடு உனக்குத் தோன்றுவார். என்னோடு வா! நல்லதே நடக்கும்” என்றார். அனைவரும் நீலாசலத்தை நெருங்கும்போது ஓர் உக்ரமான நரசிம்ஹ விக்ரஹத்தைக் கண்டனர். மேலும் நீல மாதவன் மண்ணால் மூடப்பட்டிருப்பதையும் கண்டனர். நாரதர் கூறியபடி நரசிம்ஹப் பெருமானை மேற்கு முகமாக எழுந்தருளப் பண்ணி அருகே யஞ்ஞ சாலை அமைத்து ஆயிரம் அஸ்வமேத யாகங்களை செய்யத் தொடங்கினான். அனைத்தும் முறைப்படி நடந்து முடியும் தருவாயில் மன்னன் தினத்தில் ஸ்வேத த்வீபத்தைக் கண்டான்  அது ஸ்படிகக்கல்லால் ஆக்கப்பட்டு பார்கடள்ள சூழப்பட்டு இருந்தது. அங்கு ஆதி சேஷ பீடத்தில் ஸ்ரீ மன்நாராயணன் சதுர்புஜனாய் எழுந்தருளியிருந்தார். இக்கனவை மன்னன் கூற நாரதர் ,
 ” பெருமாள் எழுந்தருளும் தருணம் நெருங்கிவிட்டது. அவர் மறக்கட்டியாக (தாரு ) உருவேடுக்கவிருக்கிறார் . வா! கடற்கரைக்குச் செல்வோம்”  என்றார்.
கிழக்குக் கடலில் வெண் படலம் உருவாகி ஒரு மரம் உருவாகி மிதந்து வந்தது. அவ்விடம் “சக்ரதீர்த்தம்” எனப்படுகிறது. அந்த மரக்கட்டையை பக்தியோடு ராஜாவும் ராணியும் பெட்ட்ருக்கொண்டனர். உடன் ஓர் அசரீரி வாக்கு “இம்மரத்தை வஸ்த்ரத்தில் சுற்றி வையுங்கள். சில நாட்கள் கழித்து ஒரு தச்சன் வந்து செதுக்குவார். அப்படிச் செதுக்கும் பொது யாரும் உள்ளே செல்லக்கூடாது. செதுக்கும் ஒலி  வெளியில் கேட்காதபடி வாத்யம் வாசிக்கவும் ”  என்று ஒலித்தது. அரசர் அதன்படியே செய்தார். தச்சன் வந்து செதுக்கத்தொடங்கினார். பதினைந்து நாட்கள் சென்றன. செதுக்கும் ஒழி நின்றது. ராணி குண்டிச்சா கதவைத் திறந்து பார்க்க விரும்பினாள் . அரசன் தடுத்தும் கேளாமல் ராணி அறையைத் திறக்க ஆணையிட்டாள் . திறந்த பொது தச்சன் அங்கு இல்லை. விக்ரகங்கள் பத்தி முடிந்த நிலையில் இருந்தது கண்டு அனைவரும் திகைத்தனர். ஆனால் அசரீரி வாக்கு ” பகவான் இந்த எளிய நிலையிலேயே இங்கு தரிசனம் கொடுப்பார்” என்று கூறவே, அன்று முதல் ஜகந்நாதப் பெருமான் அவ்வண்ணமே இங்கு கோயில் கொண்டுள்ளார்.

புருஷோத்தமன் இவ்வுருவத்தில் இருக்கும் ரஹஸ்யம்

கண்ணன் ட்வரகையில் தன அஷ்ட மகிஷிகளுடன் ஆனந்தமாக ராஜ்யத்தை ஆண்டபோதும் , அவர் நினைவில் கோகுலப்பெண்டிரே நிறைந்து இருந்தனர். இதன் காரணத்தை அறிய முற்பட்ட எட்டு ராணிகளும் ரோகிணி தேவியை வினவினர். ரோஹிணி தேவி ” கோகுலத்தில் நடந்த ரஸமான லீலைகள் போல் வேறெங்கும் நடந்தது இல்லை. அதுவே காரணம்”  என்று சொல்ல , கோகுல லீலைகளை மகிஷிகள் கேட்க விருப்பம் கொண்டனர். ரோகினி மாதா, கூறுகிறேன்: ஆனால் கண்ம்ணனும் பலராமனும் வராமல் பார்த்துக்க் கொள்ளுங்கள்” என்றார். காவலுக்கு சுபாத்ராவை நிறுத்திவிட்டு அனைவரும் கதை கேட்கத் தொடங்கினர். கதையில் லயித்துத் தன்னையே மறந்த சுபத்ரா, அருகில் இரு புறத்திலும் ராம கிருஷ்ணர்கள் வந்து நின்றதை கவனிக்கவில்லை. கதை கேட்டு , மூவரும் மெய் மறந்து, கை கால்கள் சுருங்கி, விழிகள் விரிய நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நாரதர் அவ்வரிய சேவையைக் கண்டு ஆனந்தக்கூத்தாடினார். மூவரும் தம் நிலையினை உணர்ந்து , இயல்பு நிலையை அடைய முயன்றனர். நாரதர் அதைத் தடுத்து , ” தேவரீர் ஆனந்தத்தில் மயங்கி நிற்கும் இந்நிலையை தரிசித்தால் பக்தர்கள் அனைவரும் பாப்பம் தொலைந்து முக்தி அடைவார்கள். ஆகவே தயை கூர்ந்து இந்த விநிதமான எளிய திருக்கோலத்தோடு இங்கு எப்போதும் கோயில் கொண்டருளவேனும் ” என்று கேட்டுக் கொள்ள அதன்படியே இன்றும் எழுந்தருளியுள்ளார் “பத்துடையடியவர்க்கு எளியனான ” எம்பெருமான்!

கடைத்தலை சீய்த்த அரசன்

கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை கலையலாமென்ற உபதேசத்தால்  சுவாமி நம்மாழ்வார் , திருவனந்தபுரம் ஆனந்தபத்மனபா ஸ்வாமி சந்நிதியில் குப்பை போகப் பெருக்கினால் நம் பாபங்களும் தொலையும் என்கிறார். ஆனால் க்ஷேத்ரத்தில் ஜகந்நாதனின் ரத யாத்ரைக்கு முன் பெருக்கிய அத்தேசத்து அரசன் புருஷோத்தமனுக்கு கல்யாணமே நடந்தது. ( ஆண்டு தோறும் அரசன் ரத யாத்ரைக்கு  முன் தங்கத் துடைப்பத்தால் பெருக்குவது மரபு) மன்னன் ஒரு முறை காஞ்சிபுரம் சென்று வரதராஜப்பெருமானை தரிசித்தான். காஞ்சி மன்னனின் மகளைக் கண்டு மையம் கொண்டான். இரு மன்னர்களும் சம்மதித்தனர். புருஷோத்தமன் புரி திரும்பினான். காஞ்சி மன்னன் முறையாகப் பேசி முடிப்பதற்காக தன மந்திரியை புரி அனுப்பினான். அவ்வமயம் ரத யாத்ரை நாளாக இருக்கவே , மன்னன் ரதம் வரும் பாதையை துப்புரவு செய்தான். மன்னன் தாழ்ந்த செயலில் ஈடுபட்டதாகக் கருதி , அது பொறுக்காத மந்திரி காஞ்சி திரும்பி மன்னனிடம் கூற , பெண் பெண் கொடுப்பதில் தடை ஏற்பட்டது. இதனைத் தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதிய புரி அரசன் காஞ்சி நகரின் மேல் படைஎடுத்தான். ஆனால் அவன் படை சிறியது. இரு மன்னர்களும்-  புரி படை  தோற்றதால் ஜகந்நாதர் பலபத்ரர் ஸுபத்ரா மற்றும் ஸுதர்சனர் விக்ரஹங்களை காஞ்சிக்குக் கொடுத்து விட வேண்டும் என்றும், காஞ்சி படை தோற்றால் அவர்கள் ஆராதிக்கும் விநாயகர் விக்ரஹத்தை புரிக்கு கொடுத்து விட வேண்டும் என்றும் சபதம்செய்தனர். புருஷோத்தமன் ஜகந்நாதரிடம் ” தேவரீரது அருளால் அடியேனது சிறிய படை வெற்றி பெற வேணும்” என்று வேண்டினான்.அரசன் புறப்பட்டபோது ஜகந்நாதர் கறுப்புப் புரவியிலும் , பலராமர் வெள்ளைக் குதிரையிலும் அரொஹனித்து யாரோ இரு வீரர்கள் போல் கஞ்சி நோக்கிச் சென்றனர்.வழியில் ஒரு கிராமத்தில் தாகத்துக்காக ஒரு முதிய இடைப் பெண்ணிடம் மோர் வாங்கிக் குடித்தனர். கையில் காசில்லாததால் மோதிரத்தைக் கொடுத்து, அவ்வழியே வரப்போகும் மன்னரிடம் லோதிரத்தைக் காட்டி பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள். புருஷோத்தமன் தன படையோடு அவ்வழி வர , முதியவள் கொடுத்த மோதிரத்தைக் கண்டு வியந்து பகவானே தனக்காகப் போரிடுவதை நினத்து உருகினான். இரு வீரர்களின் உதவியால் போர் முடிந்து புரி மன்னன் வெற்றி பெற்றான்.காஞ்சி இளவரசியைச் சிறையெடுத்து வந்து புரியில் மந்திரியிடம் “இவளை தெருவைத் துப்புரவு செய்யும் ஒருவனுக்கு மனம் முடியுங்கள்” என்று பழி தீர்க்கும் வகையில் ஆணையிட்டான். பக்தரான மந்திரி இளவரசியிடம் தனிமையில் பேசி , அவளின் பக்தியையும் மன்னனிடம் அவள் கொண்ட காதலையும் அறிந்து அவர்களை சேர்த்து வைக்கும் தக்க தருணத்திற்குக் காத்திருந்தான். அடுத்த ரத யாத்ரையினபோது , இளவரசியை மணக்கோலத்தில் தயார் செய்தான். மன்னன் தங்கத்துடைப்பத்தால் பெருக்கத் துவங்கியவுடன் மந்திரி இளவரசியை அருகே அழைத்தப் போய் ” மன்ன! இவளுக்கு எற்ற தெருப்பெருக்கும் மணமகனைத் தேடினேன். அப்படிப்பட்டவர் நீர் ஒருவரே! எனக்கண்டு கொண்டேன். ஆகவே இவளை இப்போதே ஸ்ரீ ஜகந்நாதப பெருமாளின் முன் திருமணம் செய்து கொள்ளும்” என்று வேண்டினான். அரசனும் மந்திரியின் சமயோசித புத்தியைப் பாராட்டி இளவரசியைக் கல்யாணம் செய்து கொண்டான். ஆகவே கடைத்தலை சீய்க்கப் பெற்றால் க்டுவினையும் களையலாம்: கல்யாணமும் செய்யலாம்.

புண்ய தீர்த்தங்கள்

மஹாநதி

மகாநதி – (கிழக்கு சமுத்ரம் ) – கண்ணன் கீதையில் :ஸரஸம் அஸ்மி ஸாகர: ” அதாவது – நீர் நிலைகளுள் நான் கடலாக இருக்கிறேன்) என்கிறார். அதன்படி இங்குள்ள கிழக்குக் கடலே மிக புன்யமான ‘சக்ர தீர்த்தம்’ என்று கொண்டாடப்படுகிறது. இங்கு தான் ” தாரு ப்ரஹ்மம் ” (மரக்கட்டை வடிவில் வந்த பரம்பொருள்)  சக்ர முத்ரையோடு தோன்றினார். கருத யுகத்தில் பார்கவி எனும் நதி கடலில் கலக்கும் இவ்விடத்தில்தான் (பாங்கி முஹானா) பங்குனி சுக்ல த்வாதசியன்று தாறு ப்ரஹ்மன் தோன்றினார். கடலில் இவ்விடத்தில் தான் இந்த்ரத்யும்ந மகாராஜாவும் மகாராணியும் தாறு பிரமத்தைப் பெற்று , பெருமானின் பிம்பத்தை வடிவமைக்க வேண்டினார். பாரத தேசத்தின் முக்ய நதிகளான கங்கா, யமுனா,கோதாவரி, காவேரி, தாமரபரணி ஆகியவை இக்கடலிலேயே கலக்கின்றன.

இந்த்ரத்யும்ந ஸரோவரம் – இந்த்ரத்யும்ந மன்னன் பகவானை பிரதிஷ்டை செய்தபோது ஆயிரம் பசுக்களை தானம் செய்தார்.  அவற்றின் குளம்பு பட்டுப்  பள்ளம் ஏற்பட்டு மன்னன் தானம் கொடுத்தபோது விழுந்த தீர்த்தத்தால் அது நிரம்பி இந்தக் குளம் ஏற்பட்டது

 மார்க்கண்டேய ஸரோவரம் –  ரிஷியின் வேண்டுகோளின்படி பகவான், தான் ப்ரளயக்கடலின் ஆளிலைத்தளிரில் சயநித்திருப்பதைக் காட்ட , அன்று முதல் இவ்வூரில் ஏற்பட்ட அந்த தீர்த்தத்தின் கரையிலிலேயே ரிஷி தவம் புரிந்து வந்தார்.

ஸ்வேத கங்கா : இங்கு ஸ்வேத மாதவன் மற்றும் மத்ஸ்ய மூர்த்தியின் கோயில் உள்ளது. இது த்ரேதா யுகத்தில் வாழ்ந்த ஸ்வேத மன்னரால் தோற்றுவிக்கப்பட்டது.

ரோகினி குண்டம் – இது கோயிலுக்குள் உள்ளது. கடந்த ப்ரளயத்தின் சிறிதளவு தீர்த்தம் இதில் உள்ளது. அடுத்த ப்ரளயமும்  இந்த தீர்த்தத்தில் இருந்தே உருவாகும் எனப்படுகிறது. ப்ரஹ்மா இங்கு வந்த பொது ஒரு காக்கை இதில் விழுந்து நான்கு கைகளோடு விஷ்ணு ஸ்வரூபம் பெட்டரு முக்தி அடைந்ததைக் கண்டார்.

ஜகந்நாத் புரி  திருக்கோயிலின் அமைப்பு

இப்போது இருக்கும் இத்திருக்கோயில் சோட கங்க தேவனால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு அநங்க பீமா தேவனால் ஆங்கில ஆண்டு 1200 ல் முடிக்கப்பட்டது. இத்திருக்கோயில் நிலா மட்டத்திலிருந்து 214 அடி உயரத்தில் நீலாசலம் எனும் மலையில் உள்ளது. 10.7 ஏக்கர் நிலப்பரப்பில் இருபது அடி உயரமுள்ள செவ்வக வடிவில் , 15 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, இரண்டு நீண்ட மதிள் சுவர்களால் சூழப்பட்டு உள்ளது. வெளி மதிள் மற்றும் ப்ராகாரத்திற்கு மேகனந்த ப்ராசீரம் (665 x 640 அடி)   என்றும் உல் சுற்றுக்கு கூர்ம பேதம் ( 420 x 315 அடி) என்றும் பெயர்கள்.

திருக்கோயிலின் ப்ராதான கிழக்கு வாசல் ஸிம்ஹ (சிங்கம்) த்வாரம் என்றும், தெற்கு வாசல் அஸ்வ ( குதிரை) த்வாரம், மேற்கு வாசல் வயாக்ரா (புலி) த்வாரம், வடக்கு வாசல் ஹஸ்தி (யானை) த்வாரம் என்றும் பெயர்களைப்பெற்றுள்ளன. அந்தந்த வாசல்களில் அவ்வவ்வற்றின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கிழக்கு வாசலுக்கு வெளியே 36 அடி உயர அருணஸ்தம்பம் உள்ளது. 18 ம் நூற்றாண்டில் கொனாரக்கிலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட இதன் உச்சியில் ஸூரியனின் தேரோட்டியான அருணன் அமர்ந்துள்ளார்.

இக்கோயில் நான்கு பகுதிகளாக உள்ளது.

1. போக மண்டபம் – ஜகந்நாதருக்கு ப்ரசாதம் கண்டருளப்பன்னும் மண்டபம் பெரிய மண்டபம் ( 60 x 57 அடி ). இதில் கிருஷ்ணா லீலைகள் அழகான சித்திரங்காக வரையப்பட்டுள்ளன.

2. நட மண்டபம் –   ஜகந்நாதரை உசிப்பிக்க இசை மற்றும் நாட்டியம் நடக்கும்
 ( 70 x 67 அடி) மண்டபம்.

3. ஜகந்மோகன மண்டபம் ( முக ஸாலா ) – இது தான் பக்தர்கள் நின்று கொண்டு பகவானை தர்சிக்கும் இடம். இதில் கருட ஸ்தம்பம் உள்ளது.

4. விமான மண்டபம் – இதுவே கர்பக்ரகாம். இதில் ரத்ன சிம்ஹாசனத்தில்
 ( 16 x 13 x  4 அடி)  பல தேவர் ( 6 அடி உயரம் – வெள்ளை நிறம்) ஸுபாத்ரா (4 அடி – மஞ்சள் நிறம்) ஜகந்நாதர்  ( 5 அடி கருப்பு நிறம்) ஸுதர்சனர் , லக்ஷ்மி, நீல மாதவர், ஸரஸ்வதி  ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் ( ரத்ன வேதிகையில் ஏறி) இவ்வனைவரையும் வளம் வரலாம்.

திருக்கோயில் பூஜாரிகள் ( ஸேவகர்கள்) – சுமார் ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் 36 வகையான கைங்கர்யங்களைச் செய்கின்றனர்.

  கோயிலுக்குள் இருக்கும் மட்டற்ற தர்ஸன ஸ்தலங்கள்

பைஸாபஹாஸா : கிழக்கு வாசலிலிருந்து உள்ளே ஏறிச் செல்லும் 22 படிகள் பக்தர்களின் பாத தூளிபட்டுப் புனிதமானது. இப்படிக்கட்டு யமதர்மராஜனும் கூட ஸாஷ்டாங்கமாக ப்ரணாமம் செய்யும் பெருமை பெற்றது.

கல்பவடம் : பல நூற்றாண்டுகளாக நம் விருப்பங்களை நிறைவேற்றும் ஆலமரம் .

முக்தி மண்டபம் : வேத விற்பன்னர்கள் கூடி ப்ரமத்தைப் பற்றி ஆலோசித்து த்யானிக்கும் 16 கால் மண்டபம். பிரம்மா ஸபா என்றும் இது அழைக்கப்படுகிறது.

நரசிம்ஹர் ஸந்நிதி : முக்தி மண்டபத்துக்கு அருகே உள்ளது.

ஸ்ரீ தேவி பூதேவி ஸந்நிதி : இங்கிருக்கும் மூலிகைச் சாற்றினால் வரையப்பெற்ற சித்திரங்களில் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் பகவத் ராமானுஜர் ஆகியோர் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

கோய்லா  மண்டபம் : ஜகந்நாதரின் திருமேனி சுமார் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புது தாருவால் செய்யப்படும். இந்த உத்ஸவத்திற்க்கு நவ களேவரம் ( புது திருமேனி) என்று பெயர்.  பழைய திருமேனி இவ்விடத்தில் பூமிக்குக் கீழே எழுந்தருளப் பண்ணப்படும்.

ஆனந்தபஜார் : ஜகந்நாதரின் மஹாப்ரஸாதம் விநியோகிக்கப்படும் இடம் இது.

கோயிலுக்கு வெளியே இருக்கும் சந்நிதிகள்

குண்டிசா  மந்திர் : இக்கோயில் ராணி குண்டிசாவின் பெயரில் உள்ளது.
படாதாண்டா சாலையின் (க்ராண்ட் ரோட்) ஒரு கோடியில் ஜகந்நாதர் கோயிலும், மறுமுனையில் குண்டிசா மந்திரும் உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சாலை இது தான். இக்கோயிலில் தான் முதலில் தாரு ப்ரஹ்மத்திலிருந்து ஜகந்நாதர் முதலான விக்ரஹங்கள் செதுக்கப்பட்டன. ஆகவே பகவானின் பிறப்பிடம் இதுவே. இவ்வளாகத்தில் தான் அரசன் ஆயிரம் அஸ்வமேத செய்தார். ரதோத்ஸவத்தின் போது ஜகந்நாதர், பலதேவர், ஸுபத்ரா , ஸுதர்ஸனர் ஆகியோர் இங்கு தான் எழுந்தருளியிருப்பார்.

யக்ஞ நரசிம்ஹ தேவர் : இப்பெருமான் குண்டிசா மந்திரிலிருந்து இந்த்ரத்யும்ந ஸரோவர் போகும் வழியில் மஹாவேதி எனும் இடத்தில் எழுந்தருளியுள்ளார்.  இந்த்ரத்யும்ந மன்னன் இவ்வூருக்கு வந்தபோது இவரை முதலில் ப்ரதிஷ்டை செய்து ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்து பின்பே ஜகந்நாதர் தோன்றினார். இவருடைய திருமுகம் முன்னால் தர்சிக்க சாந்தமாகவும் , மற்றொரு புறம் உக்ரமாகவும் இருக்கும்.

அலர்னாத் : இங்கிருந்து சுமார் இருபது மைல் தள்ளி உள்ளது. ஆலாலனாதன் என்ற பெயருடைய இவர் உண்மையில் ” ஆழ்வர் நாதன்” . அதாவது ஆழங்கால் பட்டோர்க்கு ஆட்படுபவர் . ஸ்ரீகேதன் என்பவர் தனது மகனான மது என்னும் சிறுவனிடம் கொதிக்கும் சர்க்கரைப் பொங்கலைத் தந்து அதனை உண்மையான அன்புடன் பெருமானுக்கு அமுது செய்யச் சொல்ல , அச்சிறுவனும் உண்மையாகவே அமுது செய்வித்தார். பொங்கலின் சூடு பட்டு பெருமாளின் திருவிரல்கள் சிவந்திருப்பதை இன்றும் காணலாம். இங்கு சைதன்ய மஹாப்ரபு தருசிக்க வந்தபோது பெருமானின் ஆச்ரித பாரதந்த்ர்யத்தைக் கேட்டு உருகி பூமியில் மயங்கி வோழுந்து கிடந்ததன் சிவடை இன்றும் காணலாம்.

சாக்ஷி கோபால் : மேற்க்கே 15 மைல்  தொலைவில் உள்ள சந்நிதி இது. கண்ணனின் பேரன் வஜ்ரானாபரால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டவர்கள் ஐவரும், வ்ருந்தாவனத்தில் இருக்கும் மதன மோகனரும் , இவர் முதலில் புரியில் ப்ரதான கோயிலில் தான் இருந்தார். ஆனால் அனைத்து ப்ரசாதங்களையும்ஜகந்நாதருக்கு முன்னமேயே உண்டு முடித்து விடுவார். ஆகையால் இருவருக்கும் லீலா ரஸமாக ஓர் பிணைப்பு ஏற்பட்டுப் பின் ஒரு முடிவுக்கு வந்து , அதனால் இவர் ஊருக்கு வெளியே கோயில் கொண்டுள்ளதாக ஐதீஹம். ஒரு அந்தண இளைஞனுக்குப் பெண் கொடுக்க இசைந்த முதியவர் ஒருவர், பின் பண வ்யவஹாரத்தால் மறுக்க, அப்போது தன பக்தனுக்காக மக்கள் மன்றத்தில் ஸாக்ஷி சொல்லிக் கல்யாணத்தை நடத்தி வைத்தபடியால் அன்று முதல் இவர் ஸாக்ஷி கோபால் என்று அழிக்கபடுவதாகவும் வரலாறு.

ராமானுஜ ஸம்பந்தம் : பகவத் ராமானுஜர் புரி ஜகந்நாதனை தருசிக்க வந்தபோது இங்கிருக்கும் பூஜை முறை ஆகமத்தின்படி , இல்லாததைக் கண்டு தனை சரிபடுத்த எண்ணினார். அதனால் பள்ளண்டுகலாகத்தொண்டு புரிந்து வரும் பூசாரிகளை விட்டுக் கொடுக்க மனமில்லாத ஜகந்நாதர் , அன்று இரவு துயில் கொண்டிருந்த ராமானுஜரை அவரே அறியாவண்ணம் ஸ்ரீ கூர்மத்தில் கொண்டு போய்விட்டார். விடியற்காலை எழுந்து பார்த்த ராமானுஜர், தான் வேறு இடத்தில் இருப்பதைக் கண்டு ஜகந்நாதரின் ஆச்ரித பக்ஷபாதத்தை உணர்ந்து பல்லாண்டு பாடினார். இன்றும் புரியில் ராமானுஜர் தங்கியிருந்த மேடம், மற்றும் எம்பார் மேடம் ஆகியவை உள்ளன. இம்மாதத்தில் இருக்கும் சன்யாசிகளுக்கு இத்திருக்கோயிலில் பரம்பரையாகப் பெறப்பட்ட கைங்கர்யமும் உள்ளது.

ஜகந்நாதரின் மஹாப்ரசாத மகிமை.:
உலகின் ஜகந்நாதருக்கு நைவேத்யம் பண்ணப்பட்ட ப்ரஸாதம் யாருக்கும் கிடைக்காமலே இருந்தது. தினமும் அதனைச் சமைத்து கண்டருளப் பண்ணும் ஸ்ரீ மகாலக்ஷ்மியிடம் நாரதர் தனக்கு ப்ரஸாதம் வேண்டும் என்று வெகு நாட்களாக வேண்டி வந்தார். இறுதியில் ஒரு நாள் , லக்ஷ்மிதேவி பெருமாளிடம் மன்றாடி நாரதருக்குச் சிறிதளவு ப்ரஸாதம் பெற்றுக் கொடுத்தாள். அதனை உண்ட நாரதர் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று கூத்தாடினார். இதனைக் கண்ட பரமசிவன் தனக்கு ப்ரஸாதம் வேண்டினார். நல்லவேளையாக ப்ரஸாதம் சிறிது மீந்து இருக்கவே, பெட்டரு, உண்டு ஆனந்த நர்தனம் ஆட , அதனால் மேருவும் கைலாஸமும் நடுங்கின. உடனே பார்வதி தேவி தனக்கும் ப்ரஸாதம் வேண்டும் எனக் கேட்க , ஆனால் சிறிதும் ப்ரஸாதம் மீதம் இல்லாதபடியால் கோபப்பட்டு , ” இன்று சபதம் செய்கிறேன். இனி உலகில் அனைவருக்கும் ஜகந்நாத ப்ரஸாதம் எப்போதும் கிடைக்கும்படி செய்வேன்” என்று சூளுரைத்தாள். அவளது பக்தியை மெச்சிய பகவானும் ” புரி ஜகந்நாதத்தில்  இனி அன்ன பிராமமாகவே இருப்பேன்” என்று அருளினார். மட்டற்ற க்ஷேத்ரங்களில் பெருமானை தரிசித்தாலோ, த்யநித்தாலோ, வலம் வந்தாலோ, சங்கீர்த்தனம் செய்தாலோதான் புண்யம் கிட்டும்: ஆனால் புரியில் ஜகந்நாத பிரசாதத்தை உண்பதாலேயே பாபங்கள் அனைதும்விலகி நமைகளே விளையும்.
புரியி பிரசாதத்தை உன்ன சில முறைகள் உண்டு : பூமியில் அமர்ந்தே உண்ணவேண்டும்: விநியோகம் செய்ய கரண்டி முதலானவைகளை உபயோகப்படுத்தக் கூடாது. இலைகளை உபயோகபடுத்தலாம்: ஜகந்நாதரை நினைத்துக் கொண்டே உண்ணவேண்டும்: உண்டு முடித்தவுடன் வாய் கொப்பளிக்கும்போது முதல் வாய் தண்ணீரைத் துப்பாமல் விழுங்கவேண்டும். அடுத்த வாய் நீரினை மண்ணில்தான் துப்பவேண்டும். சாப்பிட்ட இடத்தைக் கைகளால் தான் சுத்தம் செய்யவேண்டும். இத்தனை பெருமை உடைய மஹாப்ரஸாதத்தை எங்கு எப்படிச் சமைக்கிறார்கள் என்று பார்ப்போம்.

திருமடைப்பள்ளி மாஹாத்ம்யம் : உலகிலேயே மிகப்பெரிய சமையல் கூடம் இதுவே. கோயிலின் தென்கிழக்கு மூலையில் ஒரு ஏக்கர் பரப்பில் திருமடைப்பள்ளி அமைந்துள்ளது. 3 x 4 அளவு கொண்ட 752 மண் அடுப்புகள் கொண்டது. விறகுக்கட்டைகள் , சட்டிப்பானைகள் தவிர அந்தவிதமான யந்த்ரமோ உலோகமோ கிடையாது.   மடப்பள்ளியிலிருந்து சுமார் 20 படிக்கட்டுகள் இறங்கினால் இருக்கும் பெரிய கேணியிலிருந்து ராட்டினம் இல்லாமல் தாம்புக் கயிற்றால் கைகளாலேயே இழுக்கப்பட்ட சுத்தமான தண்ணீரை 30 தொண்டர்கள் இடைவிடாமல் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இங்கு மிளகாய், வெங்காயம், பூண்டு, காரட், உருளை, தக்காளி போன்ற நிஷித்தமான பல காய்கறிகள் உபயோகபடுத்தப்படுவதில்லை. திருமடப்பள்ளியில் சுமார் 400 முக்ய கைங்கர்யபரர்களும் மேலும் 400 உதவியாளர்களும் உள்ளனர். காய்கறி  திருத்தவும், தேங்காய் திருகவும் சுமார் 100 பேர் உள்ளனர். வேற்று  மனிதர் யாருக்கும் ப்ரவேச அனுமதி இல்லை.  பொதுவாக ஒரு நாளைக்கு 72 குவின்டல்  ( சுமார் 500 படி) ப்ரசாதமும் , விசேஷ நாட்களில் 900 குவின்டல் ( சுமார் 6000 படி) ப்ரசாதமும் சமைக்கபடுகின்றன. அனைத்து பிரசாதங்களும் பானைகளில் ஏற்றப்பட்டு , சிறு உரிகளில் கட்டி, மூங்கில் கம்புகளின் இருபுறமும் தொங்கவிட்டுக்கொண்டு கைங்கர்யபரர்கள் தொழில் சுமந்து போய் பெருமான் முன்னே அவை படைக்கப்படுகின்றன. இத்தொண்டை சுமார் 60 பேர் செய்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் 56 வகையான பிரசாதங்கள் ( சப்பான் போகி) செய்யப்படுகின்றன. அவை 9 வகையான சித்ரான்னம், 14 வகைக் கறியமுது,மற்றும் கூட்டு, 9 வகை பால் பாயசம், 11 வகை இனிப்புகள், 13 வகையான திருப்பநியாரங்கள். போகத்தின் பெயர்கள் மற்றும் நேரம்:

காலை 8 மணி                     : கோபால் வல்லப போகம்

காலை 10 மணி                   :  ஸகல போகம்

பகல் 11 மணி                        :  போக மண்டப விநியோக போகம்

மதியம் 12:30 மணி              :   மத்யாஹ்ந  போகம்

மாலை 7 மணி                     :   ஸயன போகம்

இரவு 11:15 மணி                  :    மகாஸ்ருங்கார போகம்

தினமும் நிகழும் கொடி எற்றம் :  ஜகந்நாதரின் விமான கோபுரம் 214 அடி உயரம். அதன் மேல் நீல சக்ரம் அன்று பெயர் பெற்ற ஸுதர்ஸன சக்ரம் பொருத்தப்பட்டுள்ளது. எட்டு உலோகங்களால் செய்யப்பட இது 36 அடி சுற்றளவு உள்ளது. இதன் மேல் சிகப்பு வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறம் கொண்ட கொடிகள் தினமும் மாலை 6:30 மணி அளவில் ஏற்றப்படுகின்றன . கருட சேவகர்கள் அன்று அழைக்கப்படும் தொண்டர்களில் ஒருவர், பரம்பரையாக தினமும் அனைத்துக் கொடிகளையும் சுமந்த் கொண்டு இக்கோபுரத்தின் 214 அடி உயரத்தையும் 15 நிடங்களில் எந்த யந்த்ரத்தின் உதவியும் இல்லாமல் சர சர வென ஏறி அடுத்த 10 நிடங்களில் கொடிகளைக் கட்டுகிறார். கனத்த மழை, சூறாவளி அடித்தாலும் கோடி காட்டப்படும். இப்பரம்பரையில் வந்தவர்களுக்கு கருட பகவானின் அருளால் 8 வயது முதல் இத்தொண்டில் பழக்கம் ஏற்படுகிறது.

நவ கலேவர ( புது திருமேனி) உத்ஸவம் :

ஜகந்நாதர் , பலதேவர், ஸுபத்ரா , ஸுதர்சனர் ஆகியோரின் திருமேனி சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட்டு புது தாருவால் செய்யப்படும். எந்த ஆண்டில் அதிக மாஸமாய் ஆணி மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வருமோ அந்த ஆண்டு. இவ்வுத்ஸவத்திற்கென்றே நியமனம் பெற்று இருக்கும் பூஜாரிகள் சுமார் 40 மைல் தூரத்தில் ப்ராசீ  நதிக்கரையில் இருக்கும் காகாத்பூர் எனும் ஊரின்  காடுகளில் தகுந்த வெப்ப மரங்களைத் தேடுவர். சில விசேஷ அடையாளங்களோடு இருக்கும் ஒரு மரத்தை எடுத்து வந்து பூசித்து, அதடின கோய்லா வைகுண்டத்தில இருக்கும் மண்டபத்தில் தச்சர்கள் பகவானின் திருவுருவங்கலாகச் செதுக்குவார்கள். புதுத் திருமேனிகள் உருவானவுடன், அமாவாசை இரவு அவர்களை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து கர்பக்ரஹத்தில் உள்ள பழைய திருமேனிகளுக்கு அருகே வைப்பார். ( அன்று ஊர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படும். பூஜாரிகளுள் மூத்தவர் கண்களைக் கட்டிக் கொண்டு , கைகளிலும் துணி சுற்றிக் கொள்வார். பின் பழைய மற்றும் புதுத் திருமேனிகளுக்கு இடையே நின்று கொண்டு, பழிய திருமேனியின் நாபியில் இருக்கும் ப்ரஹ்மபதார்த்தத்தை எடுத்து புதுத் திருமேனியில் பொருத்துவார். பின் பழைய திருமேனிகள் கோய்லா வைகுண்டத்தில் பூமிக்கு கீழே எழுந்தருளப் பண்ணப்படுவர். சுமார் நான்கு மாதங்கள் நடக்கும் இவ்வுத்ஸவம் முழுவதும் பரம ரஹஅச்யமாக நடத்தப்படும். பழிய திருமேனிக்காக , தாயாதிகள் ( தயிதர்கள்) எனும் வர்கத்தினர் 13 நாள்கள் துக்கம் அனுஷ்டிப்பார். கடந்த நவகலேவர உத்ஸவம்
நடந்த சில ஆண்டுகள் 1912, 1931, 1950, 1969, 1977, 1996 ஆகியவை.

ஜகம் புகழும் ரத யாத்ரை :  ராணி குண்டிசாவின் வேண்டுகோளுக்கிணங்க பல்லாயிரம் ஆஅண்டுகலாக மூன்று மூர்த்திகளும் மூன்று தேர்களில் தங்கள் கோயில்களிலிருந்து புறப்பட்டு 2 மைல்கள் உள்ள க்ராண்ட் வீதியில் பவனி வந்து குண்டிசா மந்திர் அடைவர். ஆணி மாதம் பௌர்ணமியில் (நீலாத்ரிபிஜே ) முடியும். இத்தேர்த்திருவிழாவை தரிசிக்க உலகமெங்கும் இருந்து பல லக்ஷம் மக்கள் திரண்டு வருவர். ரத யாத்ரா குண்டிசா யாத்ரா கோஷா யாத்ரா என்று அழைக்கப்படும்  10 , கண்ணன்  கோகுலத்திலிருந்து தன பிறந்த ஊரான மதுராவிற்கு     வந்ததை நினைவு கூர்கிறது.ஆகவே தான் ஜகந்நாதர் தன பிறந்தகமான குண்டிசாவிற்க்குச் செல்கிறார்.

தேர்களின் அமைப்பு :

மூன்று தேர்கலுமே முழுவதும் மரத்தால், கைகளாலேயே செய்யப்பட்டவை. ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவிற்கு இரண்டு மாதங்களுக்கு முன் புதியதாகவே 125 தச்சர்கள் 2188 மரத்துண்டுகளை இணைத்து இத்தேர்களைச் செய்வர். ஜகந்நாதரின் தேரின் பெயர் நந்தி கோஷ், 7 அடி உயரமுள்ள 16 சக்ரங்கள் ( கலைகள்) பொருத்தப்பட்ட இதன் உயரம் 45 அடி. தேர்ச்சீலைகளின் வர்ணம் மஞ்சள், சங்கிகா, ரேசிகா, மொசிகா மற்றும் த்வாலினி எனும் பெயருடைய நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். இதற்க்கு தாருகன் தேரோட்டி: சங்கசூடன் தேர்க்கயிராக (250 அடி நீளம்) உள்ளான்.

பாலராமரின் தேரின் பெயர் தாலத்வஜம், 14 சக்ரங்கள் (மன்வந்தரங்கள்) பொருத்தப்பட்ட இதன் உயரம் 44 அடி, தேர்ச்சீளைகளின் வர்ணம் மீளம். ருக், யஜுஸ், ஸாம மற்றும் அதர்வணம் எனும் பெயருடைய நான்கு குதிரைகள்: மாதவி தேரோட்டி: வாசுகி தேர்க்கயிறு:

ஸுபாட்ராவின் தேரின் பெயர் பத்மத்வஜம்: தேவதாலனம்: ஓராண்டில் பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கும் வண்ணம் 12 சக்ரங்கள் பொருத்தப்பட்ட இதன் உயரம் 43 அடி. தெர்ச்சீலைஒகலின் வர்ணம் சிவப்பு. ப்ரஜ்ஞா , அனுஷா, கோஷா, மற்றும் அக்ரி என்று பெயருடைய நாண்டு குதிரைகள்: அர்ஜுனன் தேரோட்டி: ஸ்வர்ணசூடன்  தேர்க்கயிறு: இத்தேரில் தான் ஸுதர்ஸனர் எழுந்தருளியிருப்பார்.

விழாவுன் முக்யமான நாட்கள் :

ஆணி பௌர்ணமி – ஸ்நான யாத்ரா – தாரு பிரமத்திலிருந்து ஜகந்நாதர் தோன்றிய நாள்.இன்று பகவானை 108 குடம் பன்னீரால் நீராட்டுவர். ஆகையால் அவருக்கு ஜலதோஷம் பிடித்து அடுத்த பதினைந்து நாட்கள் தனிமையில் இருப்பதாக பக்தர்கள் நம்பிக்கை. அதனால் அந்நாட்களில் தரிசனம் கிடையாது.

ஆணி சுக்ல த்வீதியை – முதலில் பலராமர் அடுத்து ஸுபாத்ரா கடைசியாக ஜகந்நாதர் சிறந்த அலங்காரத்தோடு ஒவ்வொருவராக நகர்ந்து  நகர்ந்து வெளியே வந்து தேரில் எழுந்தருளுவர்/அரசன் தங்கத் துடைப்பத்தால்  பெருக்கியவுடன் தேர்கள் புறப்பட்டு மாலையில் குண்டிசா மந்திர் சென்றடையும். மூர்த்திகள் உள்ளே சென்று அடுத்த ஒன்பது நாள்கள் இங்கேயே எழுந்தருளியிருப்பர். அனநிது பிரஸாதங்களும் இங்கேயே தளிகை பண்ணப்படும்.

ஆணி சுக்ல பஞ்சமி – ஹேரா பஞ்சமி – தன்னை விட்டுச் சென்றதற்காகக் கோபம் கொண்ட லக்ஷ்மி பிரதான கோயிலிலிருந்து பல்லக்கில் குண்டிசா மந்திர் வந்து ஜகந்நாதர் தேரில் ஒரு சிறு பகுதியை உடைப்பதாக ஒரு லீலா ரஸமும் உண்டு.

ஆணி சுக்ல தசமி – உல்டா  ரதம் – மூர்த்திகள் அனைவரும் திரும்ப எழுந்தருள்வர். லக்ஷ்மியின் கோபத்தால் (ப்ரணய கலஹமாகிற மட்டையடி உத்ஸவம்) பிரதான கோயில் மூடப்பட்டு பெருமாள் வாசலிலேயே காத்திருப்பார்.

ஆணி சுக்ல ஈகடசி – ஸுனா வேஷ தர்ஸனம் – இன்றிரவு பல கிலோக்கள் ஸ்வர்ண திருவாபரணங்களை மூர்த்திகள் அணிவர். இதை தரிசிக்க ஒரிய மாநிலத்தின் மூலை முடுக்குகளிருந்து மக்கள் வெள்ளமெனப் பெருகி வருவர்.

ஆணி சுக்ல த்வாதசி – இன்றிரவு பெருமாள் உள்ளே எழுந்தறுள்வார். வீதியில் தேரில் இருக்கும்போது மட்டும் பக்தர்கள் அனைவரும் தேரில் ஏறி பெருமானைத் தொட்டு தரிசிக்கலாம்.

இன்னமும் , ஜகன் பகழும் ஜகந்நாதன் உறையும் புரி க்ஷேத்ரத்தின் மாஹாத்ம்யத்தை சொல்லிக் கொண்டே போகலாம்.   ஆயின் அறிவின் வரையறைக்குட்பட்டு இத்துடன் நிற்கிறேன். அனைத்துக்கும் மேலாக, அவனருளையே நாடி நாம் அனைவரும் முழங்கிடுவோம்.

 ”  ஜய்  ஜகந்நாத் ! புரி புருஷோத்தம் தாம் கீ – ஜய்

நீலசால நிவாஸாய நித்யாய பரமாத்மநே

ஸுபத்ரா பிராண நாதாய ஜகந்நாதாய மங்களம்

பத்ராசலம் ராமதாஸர் கோயில்

அயோத்யையை ஆண்ட தசரதனின் ஆணைப்படி ஸ்ரீ ராமன் ஸீதையுடனும் , இலக்குவனுடனும் காட்டுக்குப் புறப்பட்டான். நாடே துயரத்தில் ஆழ்ந்தது. அப்பிரிவைத்தான் தேவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இது எளியோரைக் காப்பதற்காக பகவான் செய்த லீலையாகும். இந்தப் பிரிவே ஸ்ரீ ராமபிரான் தன் திருவடிப்படும்படி பாரதநாடு முழுவதும் நடப்பதற்கும் காரணமாயிற்று. பத்ராசலம் போன்ற பல க்ஷேத்ரங்கள் உருவாகவும் காரணமாயிற்று. பல்வேறு நதிகள் காடுகளைக் கடந்து தண்டகாரண்யம்  அடைந்தனர். ஸ்ரீ ராமன் அகஸ்த்யர், ஸரபங்கர், ஸுதீஷ்ணர் , மதங்கர் போன்ற ரிஷிகள் நிறைந்த தண்டகாரண்யத்தில் தான் கரன், தூஷணன் , த்ரிஸிரஸ் போன்ற ராக்ஷஸர்களும் இருந்தார்கள். எனவே அவர்களின் தவத்துக்கு மிகுந்த இடைஞ்சல் உண்டாயிற்று. தம்மை ஸேவித்த ராமபிரானுக்கு திவ்யமான வைஷனவவில், அஸ்தரம் (மந்தரத்தால் புனிதப்பட்ட பாணம் ) ஆகியவற்றைப் பரிசாக வழங்கினார் அகஸ்த்யர். இயற்க்கை அழகால் சூழப்பட்டு கோதாவரி சலசலத்து ஓடும் பஞ்சவடியில் ஸ்ரீ ராமபிரான் தங்குவதற்கு அகஸ்த்யர் வழி காட்டினார்.

ஸூர்ய ஒளியைக் கண்டிராத ஸீதை அயோத்யையிளிருந்து இவ்வளவு தூரம் கடந்து வந்ததால் இளைப்பாற வேண்டியிருந்தது.

  அதை அறிந்து கொண்ட ராமபிரான் ஒரு சரியான இடத்தைத் தேடும்போது , ஒரு சிறிய குன்று நன்றாக விரிந்து இளைப்பாற எற்றதாகவிருந்தது. மனமுவந்த ஸ்ரீ ராமபிரான் இந்தக் குன்று அடுத்த ஜன்மத்தில் தன பக்தனாகப் பிறந்து உலகில் விஷ்ணு பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குவான் என்று ஆசிர்வதித்தார். அந்தக் குன்றே ராமபத்ரனின் அருளால் பதற மஹர்ஷியாய் மேருமளைக்கும் – மேருதேவிக்கும் மகனாய்ப் பிறந்தார். சிறு வயது முதலே ப்ரஹ்லாதன், தருவன், போன்ற விஷ்ணு பக்தியில் ஆழ்ந்திருந்த பத்ரனுக்கு நாரதர் ஸ்ரீராமதாரக மந்த்ரத்தை உபதேசித்தார். நாரதரின் மூலமாகத்தன்னுடய  முற்பிறவியின் ரஹஸ்யத்தை அறிந்த பத்ரன் தாய் தந்தையரின் ஆசியோடு பகவானை நோக்கித் தவம் செய்வதற்காக தண்டகாரண்யத்துக்குப்  புறப்பட்டான். அங்கே புனிதமான கௌதமி நதிக் கரையை அடைந்து தவம் புரியத் தொடங்கினான்.
பத்ரனின் தவ வலிமை தாங்காத இந்த்ராதி தேவர்கள் ப்ரஹ்மனிடம் முறையிட்டனர். அனைவரும் பார்கடலுக்குச் சென்று பகவானை வேண்டினார்கள். எம்பெருமானும் கஜேந்த்ரனை ரக்ஷிப்பதற்க்கு எந்த வேகத்துடன் இறங்கினாரோ அதே வேகத்துடன் இப்பொழுதும் பத்ரனுக்கு ஸேவை ஸாதிப்பதற்க்காக இறங்கினார். அவரைத் தொடர்ந்து பிராட்டி கருடன், ஆதிசேஷன், விஸ்வக்சேனர், நாரதர் முதலான ரிஷிகள் இறங்கினர்.

இதையறிந்த அனுமனும் அவரை வரவேற்பதற்கு கந்த மாதந மலையிலிருந்து விரைந்தார்.ஸ்ரீமந்நாராயணன் பிராட்டியுடன் இதுவரையாரும் ஸேவித்திராத திருக்கோலத்தில் பாஞ்சஜன்யம், மேல் இடது கரத்தில் ஸ்ரீஸுதர்ஸந சக்ரம்,கீழ் இடது கரத்தில் வில், கீழ் வலது கரத்தில் அபாய ஹஸ்தத்துடன் கூடிய அம்புடன் ஸேவை ஸாதித்ததை அனைவரும்  ஸேவித்து “வைகுண்ட ராமன்” என்று போற்றிப பாராட்டினர். பிராட்டி ஸீதையாக ஆதிசேஷன், வில் மற்றும் அமுகளுடன் லக்ஷ்மனனாகச் சேர அனைவரும் “வைகுண்ட ராமன்” என்றும் , ஸ்ரீராமநாராயணன்  என்றும், அகார உகார மகாரங்களுக்கு வாச்யர்கலான பெருமாளும் பிராட்டியும் ஆதி செஷனும் ஒரு சேர ஸேவை ஸாதித்தபடியால் “ஓங்கார ராமன்” என்றும் போற்றினர் . இதே திருக்கோலத்தில் பத்ரனுக்கு ஸேவை ஸாதித்தார்.இடது தொடை மேல் வீற்றிருந்த பிராட்டியுடனும் இலக்குவனுடனும் ஸேவை ஸாதித்த ஸ்ரீராமனின் திருவடியைத் தன தலை மேல் தாங்கவேனும் என்று பிரார்த்தித்தார். இந்த ஸேவை எல்லாருக்கும் கிடைக்கவேணும் என்றும் தானும் பகவானைத் தாங்கும் மலை யாக இருக்கவேணும் என்றும் வேண்டினார். இப்படியாக பத்ரன் பத்ராச்சலமாக உருவெடுத்தார்.

இப்படி அவதரித்த பகவானுக்கு முதன் முதலில் பாஞ்சராத்ர ஆகமப்படி நாரதர் திருவாராதநம் செய்தார். நடந்தவற்றை அறிந்து கொண்ட மேரு தம்பதிகள் தம் குமாரனான பத்ரன் மழையாகி பகவானைத் தாங்குவத வந்து ஸேவித்து ஆனந்தமடைந்தனர். தேவ் சிற்பி விஸ்வகர்மா  ஆலயத்தைத் தங்கமயமாகக் கட்டி முடித்தார். நாரதரும் நித்யதிருவாராதநம் செய்து கொண்டிருந்தார். இவை யாவும் த்வாபர யுகத்தில் நடந்தன.

த்வாபர யுகம் முடிந்து கலி யுகம் ஆரம்பித்த வேளையில் பத்ரன் பகவானிடம் “கலியின் கொடுமையால் மக்கள் துன்பத்துக்கு ஆளாவார்கள்.அவர்களுக்கு கலியின் பிடியிலிருந்து விடுதலை கொடுத்து ஸேவை ஸாதிக்கவேனும்” என்று பிரார்த்தித்தார். காலப்போக்கில் தேவர்களால் கட்டப்பட்ட திருக்கோயில் மறைந்து போயிற்று. அவ்விடத்தில் மற்றொரு திருக்கோயில் தோன்றியது.மகார்ஷிகளாலும் அரசர்களாலும் அத்திருக்கோயிலில் உள்ள ராமபிரான் ஆராதிக்கப்பட்டு வந்தார். திருமங்கையழ்வரும் இப்பெருமானை ஸேவித்ததாகச சான்று உள்ளது. ஆகையால் பெரிய திருவாய்மொழியிலுருந்து இன்றும் சில பாசுரங்கள் இங்கு ஸேவிக்கப்படுகின்றன.

மீண்டும் பதராசலத் திருக்கோயில்  மறைந்தது. பத்நேழாம் நூற்றாண்டில் இவ்விடத்துக்கு அருகில் ‘போகல தம்மக்க’ என்னும் பெண் வசித்து வந்தாள். மலைஜாதியைச் சேர்ந்த இவளுக்கு பத்ராசலராமன்  கனவில் ஸேவை ஸாதித்து ‘நான் அருகில் இருக்கிறேன்’ என்றான். இரண்டு நாட்கள் தேடியும் அவளுக்கு பத்ராசல ராமன் கிடைக்கவில்லை. மீண்டும் அவள் கனவில் தோன்றி , தானிருக்கும் இடத்தைக் காட்டினார்.  அவள் அடுத்தநாள் மலையேறி ஒரு புட்ட்ருக்குள் எம்பெருமான் இருப்பதை அறிந்து அவரை வெளியே எடுத்து கோதாவரி தீர்த்தத்தால் திருமஞ்சனம் செய்வித்தாள். ஸ்ரீராமபிரான் வெளியே எழுந்தருளினார். வேடுவச்சியான தம்மக்க பனை ஓலைகளாலான ஒரு மேற்கூரை அமைத்து அதற்குள் பெருமானை எழுந்தருளப் பண்ணினாள். த்ச்ன்ச்க்கு கிட்சிக்கும் காய்கனிகளை அவருக்கு ஸமர்பித்து அங்கேயே வசித்து வந்தாள்.

அக்காலத்தில் தானிஷா என்ற பெயருடைய ஒரு துருஷ்கராஜாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது இந்த இடம். அவருக்கு முக்ய மந்திரிகளாக அக்கன்னா, மாதன்னா என்ற இருவர் இருந்தனர். அந்த இருவருக்கும் உறவினர் ‘ கஞ்சொல் கோபண்ணா’ என்பவர் . அவரைஇந்த இடத்துக்கு வரி வசூலிப்பதற்காக நியமித்தான் ராஜ. கிராமத்துக்கு வந்த கோபண்ணா விஷயத்தைக் கேட்டறிந்து மலை மேல் வீற்றிருக்கும் ராமபிரானை ஸேவிப்பதற்க்கு விரைந்தார். வந்த அதிகாரியைப் பார்த்த மூதாட்டியான தம்மக்கா , “ராமபிரான் இப்படி வெயிலிலும் மழையிலும் இருப்பது சரியன்று: உடனே திருக்கோயில் கட்டவேணும்” என்று வேண்டினாள். ராமபக்தரான கோபன்னாவும் ஸ்ரீராமபிரானை ஸேவித்து மெய்மறந்து ‘தாசரதி ஸதகம் ‘ என்ற நூலை இங்கேயே இயற்றிக் கோயிலும் கட்ட இசைந்தார். தம்முடைய ஆசார்யரான ஸ்ரீ ரகு நாத பட்டறை வரவழைத்தார். பிரம்மா புராணத்தில் கௌதமி மாஹாத்ம்ய கண்டத்தில் பத்ராசல மாஹாத்ம்யம் கண்டறியப்பட்டது. இந்தப் பெருமாள் ஸ்வயம் வ்யக்தர்  என்றும் இந்த மலை தான் பத்ரன் என்றும் தெரிந்து கொண்டு இதற்க்கு பத்ராச்சலமென்று பெயரிட்டார். எம்பெருமானை பத்ராத்ரிராமன் என்றும் பத்ராத்ரிநாதன் என்றும் கொண்டாடினார். திருக்கோயிலின்  நிர்மாணம் கோபண்ணாவின் தலைமையில் வேகமாக நடைபெற்றது. பெருமானுக்கு வேண்டிய திருவாபரணங்கள் ஸித்தமாயின. ராஜ கோபுரங்கள், ப்ரகாரங்கள் , கட்டி முடிக்கப்பட்டு ஆலயப் ப்ரதிஷ்டைக்கு நாள் குறித்தாகிவிட்டது. நித்யப்படி திருவாராதநத்துக்கு மட்டுமின்றி நாம சந்கீர்த்தநத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருவரங்கத்திலிருந்து வந்து பாஞ்சராத்ர ஆகம வித்வான்கள் எம்பெருமானின் நித்யப்படி திருவாராதநத்துக்காக வரவழைக்கப்பட்டார்கள். விசித்ரமான பகவத் ஸங்கல்பத்தால்  ஆலயத்தின் ,எல் வைக்கப்படவேண்டிய ஸ்ரீ ஸுதர்ஸந சக்ரம் காணாமல் போயிட்ற்று. கோபண்ணா தம் மேல் தான் குற்றம் என்று தீர்மானித்து கோதாவரி நதியில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். நதியில் விழுந்தவர் தலையில் ஏதோ ஒரு வஸ்து பட , பார்த்த கோபண்ணா அதி ஸ்ரீ ஸுதர்ஸந சக்ரம் என்று அறிந்து கொண்டார்.. யாரோஒருவர் தம்மைக் கரைக்கு இழுத்துச் செல்வதையும் உணர்ந்தார். கரையில் ஒதுங்கிய கோபண்ணாவைக் கண்டு  யாவரும் வியந்து அவரை ‘ராமதாசர்’ என்று போற்றினார்கள். அன்று முதல் கோபண்ணா, பக்த ராமதாஸராகவே பகழ் பெற்றார். ஆலய ஸம்ரோக்ஷனம் இனிதே நிறைவேறியது.பக்தர்கள் தினமும் பெருந்திரளாக வந்து பகவானை ஸேவித்தார்கள். தினமும் எம்பெருமானின் பிரஸாதமாக அன்னதாநம்  நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பாடல்களை ராமதாசர் ஸ்ரீராமபிரானின் மேல் இயற்றினார். ஸ்ரீராமபிரானின் குணங்களை விளக்கும் இவற்றில் நாமஸங்கீர்த்தநமஹிமை,
 ஸரணாகதிததத்வம் , தாயாரின் பெருமை, அடியார்களின் பெருமை ஆகியவை உள்ளன.

ஒரு நாள் திடீரென்று ராமதாஸரின் மகன் குளத்தில் தவறி விழுந்ததில் உயிர் பிரிந்தது. அறிந்த ராமதாஸர்  கோயிலிலிருந்து ஓடி வந்து ராமபிரானைப் பிரார்த்தித்தார். ராமபிரானுடைய அபயஹஸ்தம் ஆகாயத்தில் தோன்றியது. அதிலிருந்து ஒளிகற்றையொன்று குழைந்தையின் மேல் பட்டது. குழைந்தை உயிர் பெட்டரு எழுந்தது. ராமதாஸரின் புகழ் மேலும் பரவியது.

இதையறிந்த சில விஷமிகள் தானிஷா நவாபிடம்புரம் கூறினார்கள். ராமதாஸரைச் சிறைப்பிடித்து அரண்மனைக்கு வரவழைத்தான் நவாப். அவரும் மன்னரின் ஆணைப்படி அரசவைக்கு வந்து திருக்கோயில் முழுவதும் மக்களிடமிருந்து திரட்டப்பட்ட பணத்தால் கட்டப்பட்டது என்றும், தாம் செளுத்தவேண்டிய வரியை இன்னும் சிறிது காலத்தில் கட்டுவேன் என்றும் சொன்னார். அதற்க்கு செவி சாய்க்காத நவாப் அவருக்கு பன்னிரண்டு வருடம் சிறைவாஸம் விதித்தான். கடினமான தண்டனைகளை அனுபவித்துக் கொண்டு சிரையிலிருந்தபோதும் பெருமாளையும் பிராட்டியையும் குறித்தே பாடினார். பத்ராசலத்தில் நடக்கும் ஸ்ரீராமபிரானின் நித்யோத்ஸவங்களை சிறையிலிருந்து கொண்டு மனஸ்ஸாலேயே அனுபவித்தார்.

ஒரு நாள் இரவு ஓர் அற்புதம் நடந்தது. ஸ்ரீராமபிரானும் இலக்குவனும் காவலாளிகள் வேடத்தில் தானிஷாவின் கோட்டைக்கு வந்து ராமதாஸர் திருக்கோயில் கட்டுவதற்க்குச் செலவழித்த ஆறு லக்ஷம் வெள்ளிக்காசுகளுக்காக அந்த அளவுக்கான தன்காகாசுகளைக் கொடுத்தார்கள். அதில் ஒவ்வொரு காசிலும்  பட்ராச்சலராமனின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருந்தது. இன்றும் அந்தக் காசுகளில் இரண்டு காசுகள் இருக்கின்றன. அவர்கள் தங்களது பெயர் ராமோஜி, லக்ஷ்மோஜி என்று கூறி ” உடனே ராமடாஸரை  விடுதலை செய்யவேணும்” என ஆணையிட்டனர்.
நாணயங்களைப் பார்த்த நவாப் அதில் ராமபிரானின் உருவத்தைப் பார்த்து ராமதாஸரின் பக்தியை உணர்ந்து அவரை விடுவித்து அவரிடம் மன்னிப்பு வேண்டினான். “பத்ராசலம் முதலிய இடங்கள் இனி உங்கள் வசமாகட்டும், அவட்ட்ருக்கு இனி நீங்கள் கப்பம் கட்டத்தேவைஇல்லை”, என்றும் கூறினான்.

ஆககவியான ராமதாஸர் இருபத்துநாலு (24) எழுத்துக்கள் கொண்ட காயத்ரி மந்த்ரத்தைப் போல இருபத்து நாலாயிரம் (24000) ஸ்லோகங்கள் கொண்ட ஸ்ரீராமாயனத்தை இருபத்து நாலு (24) சுலோகங்களில் சுருக்கமாகப் பாடினார்.
தமது இறுதிக்காலம் வரை பத்ராசலராமனுக்கு கைங்கர்யம் செய்து பரமபுருஷனுடைய திருவடியடைந்தார் ராமதாஸர்.

பத்ராசல க்ஷேத்திர மாஹாத்ம்யம் முற்றிற்று

.
ஸ்ரீ அஹோபிலம்

அஹோ வீர்யம் அஹொசௌர்யம் அஹோபாஹுபராக்ரம:

நாரஸிம்ஹம் பரம் தைவம் அஹோபலம் அஹோபலம்

எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற  ஆழ்வார்களது மங்களாசாஸனம் பெற்ற நூற்றெட்டு திவ்யதேசங்களில், ஆந்திரப்ப்ரதேசத்தில் அமைந்துள்ள நரசிம்ஹ க்ஷேத்ரமான ஸ்ரீ அஹோபிலம்
திருமங்கையாழ்வாரது  பெரிய திருமொழி முதற்பத்து- ஏழாம் திருமொழிப் பாசுரங்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்று “திருச்சிங்கவேள் குன்றம் “
என்று போற்றப்படுகிறது.

பகவானது திருவதாரங்கள் பலவற்றில் நரசிம்ஹ அவதாரத்திற்கு ஒப்பட்ட்ரதோர் தனிச் சிறப்பு உண்டு. ஒரே சமயத்தில் மனித உருவையும் சிங்க உருவையும் இணைத்துக் காட்டியது போல், தனது ஸர்வாந்தர்யாமித்வத்தையும் , ஸர்வ வியாபகத் தன்மையையும் இவ்வதாரத்தில் ஒரு சேரக் காட்டியருளினான் எம்பெருமான். ஒரே சமயத்தில் பக்தனான ப்ரஹ்லாதன் மீது கருணைப் பார்வையினைப் பொழிந்தும், அசுர வேந்தனான இறநியனைத் தன உக்ரமான பார்வை ஒன்றாலேயே உருக்குலைய வைத்ததும் இந்த அவதாரத்தில் தான்.

நல்லோரை நலியும் தீயோரை அழித்தொழிக்க வெளிப்படுத்திய அளப்பரிய ஆற்றல் ! பக்தனான ஒரு பாலகன் தன கையால் காட்டிய இடத்திலிருந்தும் விரைந்து வந்து காத்தருளும் பேரன்பு! எங்கும் நிறைந்து உறையும் தன்மை! ‘அக டித கலனா ஸாமார்த்யம் ‘ எனப்படும் செராதவட்ட்ரையும் சேர்த்துவைக்கும் திறல்! இது போன்ற தன மகிமைகள் பலவற்றைப் பிரகடனப்படுத்திய சிங்கப்பிரானின் சீர்மை குறித்து நம்மாழ்வார் , ‘எங்கும் நாடி நாடி, நரசிங்க!’ என்றழைத்து உருகுகிறார். ‘ஸத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்’ என்று ஸ்ரீஸுகரும் ஸ்ரீமத் பாகவதத்தில் இந்த வைபவத்தைக் கொண்டாடுகிறார்.

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ‘நாரசிம்ஹ வபு: ஸ்ரீமான்’ என்ற திருநாமம் ஸ்ரீ லக்ஷ்மீ நருசிம்ஹனை அழகியசிங்கப்பெருமாளாக எடுத்துக் காட்டுகிறது. இதனையே திருமழிசைப்பிரானும், ‘அழகியான்தானே! அறியுருவம்தானே!’ என்று அறுதியிடுகிறார். வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதையும் ‘கோளரி மாதவன் ‘ என்றும் ‘அரிமுகன் அச்சுதன்’ என்றும் கல்யாணக் கனவில் தான் கண்ட கண்ணனின் அழகை சிங்கத்திருவுருவுடன் சேர்த்து அனுபவிக்கிறாள்.

ஸ்ரீ ருக்மணிப் பிராட்டியாரும் கண்ணனுக்கு அனுப்பிய தன் சரணாகதிக் கடிதத்தில் ‘காலே ந்ருசிம்ஹ!’ என்றழைத்து, “பக்தனுக்காக சடக்கென நரசிங்கமாய்த் தோன்றிக் காத்தருளியது போல என்னையும் காலம் தாழ்த்தாது கடிதொடிவந்து கைக்கொள்ளவேனும்!” என்று பிரார்த்திக்கிறாள். அப்போது அவள் சிந்தையுள்ளே சிங்கப்பிரானே திகழ்கின்றான்.

உக்கிரமான அவனது அறியுருவம்கூட பக்தநிடத்தில் அவன் கொண்ட பேரன்பின் வெளிப்படன்றோ!

வெட்வேத்யனான ஸர்வேஸ்வரனின் வுஹமூர்தியான ஸங்கர்ஷண ஸ்வரூபமே நரஸிம்ஹனாய்த் தோன்றியதை ஸ்ரீந்ருஸிம்ஹபூர்வதாபிநீ
உபநிஷத் பரக்க உரைக்கின்றது.திருமால் தன் நாபிக்கமலத்தில் நான்முகனைப் படைத்தபின் அவன் முன்னே தனது திவ்யமான நரசிம்ஹ ரூபத்தில் தோன்றி ,
” உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் மருத்யு – ம்ருத்யும் நமாம்யஹம் “

என்ற நரஸிம்ஹ அனுஷ்டுப் மந்த்ரத்தைக் கொண்டு, தன்னைக் குறித்துத் தவம் செய்து உலக சிருஷ்டிக்கு ஆதாரமான நான்மரைகளைப் பெரும் திறலடைய உபதேசித்தார்.

இந்த நரஸிம்ஹ அனுஷ்டுப் மந்திரம் எம்பெருமானுடைய எண்ணிறந்த திருக்கல்யானகுனங்களில் ஒன்பது மஹா குணங்களை உணர்த்தும் வண்ணம் 1. உக்ர நரஸிம்ஹர் ,  2. வீர நரஸிம்ஹர்,  3.  ஸர்வ வ்யாபக நரஸிம்ஹர்,  4. ஜ்வாலா நரஸிம்ஹர்,  5. ஸர்வஜ்ஞ நரஸிம்ஹர்,  6. ஸ்ரீலக்ஷ்மீ நரஸிம்ஹர்,  7. பீஷண நரஸிம்ஹர், 8. மங்கள நரஸிம்ஹர், 9.ஸம்ஸார நரஸிம்ஹர் ஆகிய நவ நரஸிம்ஹர்கலை நம் கண்முன்னே எழுந்தருளச் செய்கிறது.

ஞானக் கண்ணுக்கு இலக்காகும் இந்த நரஸிம்ஹர்களும் நம் ஊனக்கண்ணுக்கும் இலக்காயின்  எத்தனை இனிது! அதற்காகவே, பின்னானார் வணங்கும் ஜோதியாய் – அர்ச்சாமூர்தியாய் – இந்த நவ நரஸிம்ஹர்களும் ‘ஸ்ரீ அஹோபிலம்’ என்ற திவ்யதேசத்தில் சேவை ஸாதித்தருல்கின்றனர்.

மார்க்கம் : மிகப்புராதனமான இந்த நரஸிம்ம திவ்யக்ஷேத்ரம் ஆந்திராவில் நந்தியால் ரயில்வே நிலையத்திலிருந்து 68 கி.மீ. தூரத்திலும், அர்லகட்டா தாலுக்கா தலைமையிடத்திலிருந்து 24 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. நந்தியாலிலிருந்து அர்லகட்டா வழியாகவோ அல்லது சென்னை – மும்பை மார்கத்தில் உள்ள கடப்பா ரயில் நிலையத்திலிருந்து 64 கி.மீ. தூரத்தில் உள்ள அர்லகட்டாவிர்க்கு வந்தோ அங்கிருன்துன் 32 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீ அஹோபிலத்தினை பேருந்துப் பயணத்தின் வாயிலாக வந்தடையலாம். தான் (Dhone )ரயில் நிலையத்திலிருந்து பங்கனபள்ளி, கொஇல்குண்ட வழியாகவும் இந்த திவ்யதேசத்தை அடையலாம்.

பெயர்க்காரணம் : இந்த திவ்ய தேசம் அஹோபிலம், அஹோபலம், சிங்கவேள்  குன்றம், நவ நரஸிம்ஹ க்ஷேத்ரம், பஞ்சக்ரோஸ  க்ஷேத்ரம் (பத்து மைல் / 16 கி.மீ. சுற்றளவுப்ப்ரதேசம் )  வேதாசலம், கருடாச்சலம், வீரக்ஷேத்ரம் என்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் ‘ அஹோபலம்’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஹோ வீர்யம் அஹோ சௌர்யம் அஹொபாஹூ பராக்கிரம

நாரஸிம்ஹம் பரம் தைவம் அஹோபலம் அஹோபலம்

என்ற நரஸிம்ஹ ப்ரபத்தி ஸ்லோகத்தில் தேவர்கள் சிங்கப்பெருமானது வலிமையைக் குறித்து ‘அஹோபலம்’ (என்னவொரு வலிமை) என்று வியந்து துதித்த அச்சொல்லே இந்தக்ஷேத்ரத்திர்க்குப பெயராகியது என்பர்.

தன்னைக் குறித்துத் தவம் செய்த கருட பகவானுக்கு இந்த மலையின் அகன்ற (அஹோ) குகையில் (பிலத்தில்)  பகவான் நரஸிம்ஹ திவ்ய மங்கள ரூபங்களில் ஸேவை ஸாதித்ததால் இதற்க்கு “அஹோபிலம்” என்ற பெயர் ஏற்பட்டதாகவும் வரலாறு.

புராணப் பெருமைகள் :

   ஆந்திரப்பிரதேசம் கர்நூலில் தொடங்கி சித்தூர் மாவட்டம் வரை நெடுகவிரிந்த ‘நல்லமலா’ என்றழைக்கப்படும் நல்லமளைத்தொடர் ஆதிசேஷா வடிவாய் திருமலை திருப்பதியைத் தன தலைப்பகுதியாகவும் ஸ்ரீ அஹோபிலத்தைத் தன மையப்பபகுதியாகவும் , ஸ்ரீ சைலத்தைத் தன வாழ் பகுதியாகவும் கொண்டது என்ற புராணப் பிரசித்திபெட்ட்றது.

‘ஸிம்ஹாச்ச்ள மஹாத்ம்யம் ‘ என்கிற ஸிம்ஹாச்ச்ள ஸ்தலபுராணமும் இப்பூவுலகில்  மிகுந்த முக்யத்வம்  வாய்ந்த நான்கு திவ்ய க்ஷேத்ரங்களில் அஹோபிலமும் ஒன்று என அறுதியிடுகிறது. இந்த திவ்யதேசத்தின் ஸ்தலபுராணம் பதிநேன்புரானங்களில் ஒன்றான ப்ரஹ்மாண்ட புராணத்தின் பத்து அத்தியாயங்களில் விளக்கப் பெட்ட்ருள்ளது. அவையாவன : 1. இந்த திவ்ய தேசத்தின் மேன்மை 2. பகவத் தரிசனத்திற்காக கருடன் செய்த தவம் 3. க்ஷேத்ரத்தில் உள்ள தீர்த்தங்களைப் பற்றிய விவரங்கள் 4. இந்த நரஸிம்ஹ க்ஷேத்ரத்தில் பர்மா, பரத்வாஜ – கோபில ரிஷிகள், பரசுராமர் ஆகியோர் செய்த தவம் 5. ஜெயா- விஜயர்கள் ஹிரண்யாக்ஷ – ஹிரன்யகசிபுக்கலாக அசுரப்பிரவிஎடுத்த வரலாறு, 6. ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானின் பிறப்பு , தந்தையான இரணியன் அவனுக்கிழைத்த துன்பங்கள் 7. பாலகன் ப்ரஹ்லாதனுடைய  உறுதியான பகவத்பக்தி, அவனுக்காகத் தூணிலிருந்து வெளிப்பட்ட சிங்கப்பிராநிரனியன் மார்வம் கீண்டாமை 8. சிவனுடைய சரபரூபத்தை சிங்கப்பெருமான் அழித்ஹோழித்தமை , 9. பனாசினி என்ற புண்ய நதியினை இந்த திவ்யக்ஷேத்ரத்திற்குகே கொண்டுவர கடும் முயற்ச்சிகள் செய்த பைரவமூர்த்தி இந்த ஸ்தளத்திற்குக் காவல் தெய்வமாக அனா சரித்திரம் , 10. சாஸ்திர விதிகளைக் கடைபிடிக்க இயலாத ஒரு பாமரனும் கூட பக்தியுடன் இங்குள்ள ஸ்ரீலக்ஷ்மீ நரஸிம்ஹனை வழிபட அதனால் மோக்ஷ உலகினையே அடையமுடியும் என்கிற பேருண்மை ஆகியவற்றை விரிவாக விளக்குகிறது ப்ரஹ்மாண்டபுரானம் .

ஸந்நிதியின் அமைப்பு :

ஸ்ரீ அஹோபில டியதேசத்தை அடைந்தஉடன் மலையடிவாரத்தில் உள்ள கோயிலில் ப்ரஹ்லாத வரத நரஸிம்ஹப் பெருமானின் ஸந்நிதி அமைந்துள்ளது. இது ‘சின்ன அஹோபிலம்’ என்றும் ‘திகுவ திருப்பதி’ என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் மேல அஹோபிலம் எனப்படும் மலை மேல் உள்ள கோயிலுக்கு வாகனம்களில் செல்லமுடியும். கடல் மட்டத்திலிருந்து 2800 அடிக்கு மேல் உள்ள இந்த மேல் அஹோபிலத்திற்க்குச் செல்லும் வழியெங்கும் இயற்கை எழில் கொஞ்சம் பசுமையான வனப் பிரதேசங்களும் , மனங்கவர் மலைகளும், அவற்றின் சுனைகளிலிருந்து பொங்கிப்பாயும் அருவிகளும் நம்மை வியக்கவைக்கின்றன. ஆங்கே, செழுமையும் வனப்பும் மிக்க வேதாத்ரி, கருடாத்ரி என்ற இருமலைச் சிகரங்களின் இடையே பவநாசினி என்ற புன்யதீர்த்தம் அந்தர்வாகினியாகப் பாய்கிறது.

மேல அஹோபிலம் ‘நகரி நிதினி’, ஏகுவ திருப்பதி’, பெத்த (பெரிய) அஹோபிலம்’ என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பெரிய திருவடி, விநதாசுதன் , வைனதேயன், பக்ஷிராஜன், கருத்மான் என்றெல்லாம் போட்ட்ரப்படும் கருடன் தனது நாதனான பகவான் ஸ்ரீ மன்நாராயணனது ஆவேச அவதாரத்தை – பக்தவாக்ய பரிபாலகனாய், பர்மா இரணியனுக்குக் கொடுத்தவரம் பழுதாகாவண்ணம்  அவதரித்தருளிய நரஸிம்ஹ ரூபத்தைத் தரிசிக்கும் வேட்கையுடன் இந்த மலையில் நெடிய தவம் புரிய, அவருக்கு இங்குள்ள பெரிய மலைக்குகையொன்றில் ச்வயம்புமூர்த்தியாக ஸ்ரீ அஹோபில நரஸிம்ஹப பெருமான்  காட்சிகொடுத்து, பிற்காலத்தவரான நம்போல்வாரும் கண்ணாரக் கண்டு உருகும் வண்ணனம் எழுந்தருளியிருக்கிறார்.

பின்னும், கருடனுக்குத் தன ஒலியுருவைக் காட்டியருல்வதர்க்காக ஸத்ஸ்வரூப மகாபுருஷ்ணாகிற பகவான் அவரை அன்புடன் அழைக்க, அங்கிருந்து பத்துக்கல் தொலைவில் உள்ள மலைக்குகைக்கு மகிழ்வுடன் சென்ற கருடாழ்வானுக்கு ஜ்வாலா நரஸிம்ஹனாகக் காட்சி தந்தருளினார். :அஹோபிலமே அஹோபலம் அடியேனுக்கு!” என்று குதூஹலத்துடன் துதித்தான் ‘வினைதைதன் சிறுவனான’ வைநதேயன். ‘தெய்வமல்லால் சொல்லவொன்னா சிங்கவேள் குன்றமே!’ என்ற மங்கை மன்னன் பாசுரவரிக்கு எடுத்த்க்கட்டி அமைந்துள்ளது இந்த பவித்ரச்தலம்.

ஸத்யமும் தர்மமும் எங்கும் நிறைந்திருந்த மிகப்பழங்காலத்தில் இந்த அஹோபிலம்க் குகையின் ஒரு பகுதியிலிருந்து, பசும்புல் கூடப்பற்றி அறியும்படியான உக்ரமான பெருவெப்பம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது என்றும், அதனால் இக்குகையின் அந்த வாயில் பெரும் கற்பாறையினால் அடைக்கப்பட்டது என்பதும் கர்ண பரம்பரைச் செய்தி.

கருடன் தவம் புரிந்ததால் கருடாச்சலம் என்ற பெயர் பெற்ற இம்மலைக்கு வேதாசலம் என்ற பெயரும் உண்டு. ஸோமகன் என்ற அரசன் ப்ரஹ்மனிடமிருந்து நான்மரைகளைக் கவர்ந்து செல்ல அவற்றை மீட்க வேண்டி நான்முகன் இத்தளத்தில் எழுந்தருளியிருக்கும் நரஸிம்ஹப பெருமானை வேண்ட, அவர் அவ்வசுறனைக் கொன்று வேதங்கள பிரமனுக்கு மீட்டுக் கொடுத்ததால் இம்மலைக்கு /வேதாசலம்’ என்ற பெயரும் ஏற்பட்டது என்பர். ப்ரஹ்மாண்ட புராணத்தைத் தவிர கூர்மபுராணம், பாத்மபுராணம், விஷ்ணுபுராணம்-ஏன் -ஐந்தாவது வேதம் எனப்போற்றப்படும் இதிகாசமான மகாபாரதத்திளும்கூட இந்த அஹோபில க்ஷேத்ரத்தின் வைபவமும் இங்கு எழுந்தருளியிருக்கும் நரஸிம்ஹப பெருமானின் மகிமைகளும் பரக்க உரைக்கப்பெற்றுள்ளன.

ஸ்ரீ ப்ரகுலாதாழ்வானின் பக்திச் சரித்தரமும், அவனிடத்து அபசாரப்பட்ட அவனது தந்தையான வாளெயிற்று அவுணன் ஆணவத்தால் தூன்புடைப்ப ஆங்கோர் ஆளுகிர்ச்சிங்கவுருவாய் சிந்தி பறக்கச் சீறிவந்து அந்தியம்போதில், அரண்மனைப்படியில் , கோளரி தன மடி மேல் இட்டு கூர்ணகன்கொண்டு அவன் மார்வகம் கீண்ட வரலாறும் அனைவரும் அறிந்ததே!

அந்த ஈரானிய வதைக் காட்சியினை தத்ரூபமாக இன்று நாமும் கண்டு மெய் சிலிர்க்கும்படியாக கீழ் அஹோபிலத்தில் எழுந்தருளியிருக்கும் உக்ர நரஸிம்ம  உத்ஸவமூர்த்தி பத்துத் திருக்கரங்களுடன் ஸம்ஹாரமூர்த்தியாகக் காட்சி தருகிறார்.

அகன்ற விழிகளில் கோபம் கொப்பளிக்க , அனலாய்க் கிளர்ந்தெழும் ஆவேசத்துடன் தனது மடியில் இரணியனைக் கிடத்தி ஒரு கரத்தால் அவனது தலையையும், மறு கரத்தால் இரு கால்களையும் நெருக்கிப்பிடிக்க, மட்டற்ற இரு கரங்கள் அவன் வயிற்றினைக் கிழிக்க, அடுத்த இரு கரங்கள் குருதியைக் குடிக்க, மேலெழுந்த இரு கரங்கள் துஷ்டனிக்ரஹ திவ்யாய்தங்கள் தரித்திருக்கும் கட்சி தந்து நம்மிடத்தேயுல் அநாதிகால பாபவாசனைகலாக்கி அசுரனை ஒழித்தருள்கிறார்.

நல்லோரை நலியும் வலியோரை நடிங்கவைப்பதாய்த் தனது ரௌத்ர ரூபம் இருப்பினும், அது ஆறாத காதல் கொண்ட அடியார்களது கண்களில் படாமலிருக்க, தனது திருமேனியை அலங்கரிக்கும் திவ்ய வஸ்த்ர-ஆபரனங்களுக்கிடையே அதனை மறைத்தக் கொண்டு ஸேவை ஸாதிக்கிறேன் போலும் அழகிய சிங்கப்பெருமான்.

ஸ்ரீ அஹோபில திவ்ய தேச ஸ்தலபுராணம் காட்டும் நரஸிம்ஹர்கலை வரிசையாக நாம் இங்கு அனுபவிப்போம் இனி.

1. ஸ்ரீ ப்ரஹ்லாத வரத நரஸிம்ஹப பெருமான்

அஹோபில மலையடிவாரத்தில் உள்ள கோயிலில் ப்ரஹ்லாத வரதனான ஸ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹர் கிழக்கு நோக்கிய திருமுகமண்டல்த்துடன் ஸேவை ஸாதிக்கிறார். மூலமூர்த்தியின் இடப்புரத்தில்பாவன நரஸிம்ஹரம், அவருக்கு முன் புறத்தே உபய நாச்சிமார்களுடன்  கூடிய ப்ரகுலாதவரதப் பெருமானும் உத்சவமூர்த்திகளாக எழுந்தருளியிருக்கின்றனர். அவர்களுக்கு முன்புறம் புறப்பட்டு கண்டருளும் மூர்த்தியாக பத்துத் திருக்கரங்களுடன் கூடிய ஜ்வாலா நரஸிம்ஹப பெருமான் ஸ்ரீதேவி,பூதேவி ஸமேதராக எழுந்தருளியிருக்கிறார். ஸ்ரீ அஹோபில மடத்தினை ஸ்தாபித்தருளிய ஒன்றான ஸ்ரீ ஆதிவன்சடகோப ஜீயர் ஸ்வாமியும் அருகிலிருந்து பெருமாளை ஸேவிக்கும் திருக்கோலத்தில் தெற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் அர்ச்சா திருமேனியில் ஸேவை ஸாதிக்கிறார்.

2. ஸ்ரீ பார்கவ நரஸிம்ஹப பெருமான்

 இங்கு முதலில் ஸேவித்த கீழ் அஹோபிலம் ப்ரஹ்லாத வரத நரஸிம்ஹப பெருமான் ஸந்நிதி இலிருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இந்த பார்கவ
நரஸிம்ஹப பெருமான் ஸந்நிதி . அஹோபில க்ஷேத்திர மலையொன்றில் ‘பார்கவராமர்’ எனப்படும் பரசுராமர், நரஸிம்ஹ பகவானைக் கானத்தவம் செய்த இடத்தில் அவரது பெயரால் ‘பார்கவா தீர்த்தம்’ என்றழைக்கப்படும் பவித்ரமான நீர்நிலை உள்ளது. அதனருகே அமைந்துள்ள இந்த ஸந்நிதியில் பார்கவராமனாகிய பரசுராமனுக்குக் காட்சி அளித்த சிங்கப்பிரான் பார்கவா நரஸிம்ஹன் என்ற திருநாமத்துடனே ஸேவை ஸாதிக்கிறார்.

3. ஸ்ரீ யோகானந்த நரஸிம்ஹப் பெருமான்

கீழ் அஹோபிலத்திலிருந்து தென்கிழக்கே 2 1/2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஸந்நிதி . ஹிரன்ய ஸம்ஹாரத்திற்க்குப் பிற நரஸிம்ஹர்கு தன பக்தனாகிய பாலகன் ப்ரகுலாதனுக்கு, பல்வேறு யோக நிலைகளிலிருந்து கொண்டு, தன்னை எப்போதும் நெஞ்சில்நிலை நிறுத்தி ஆனந்தமாகத்யநிக்கும் முறைகளைக் கற்பித்த நரஸிம்ஹப பெருமானாக ஸேவை ஸாதித்தருள்கிறார்.

4. மேல அஹோபில நரஸிம்ஹப் பெருமான்

கீழ் அஹோபிலத்திளிருந்து 8 கி.மீ. தொலைவில் மேல் அஹோபிலத்தில் உழல கோயிலில் நரஸிம்ஹப பெருமான் ஸ்வயம்பு மூர்த்தியாக மழைக் குகையின் உட்பாறையில் புடைப்புச் சிற்ப வடிவில் ஸேவை ஸாதித்தருள்கிறார். மலைக் குகையின் உட்புறமே இங்கே கர்பக்ரஹமாக அமைந்துள்ளது. சக்கரத்தாழ்வாரும் இங்கு எழுந்தருளியுள்ளார். வேடுவர்களின் குலதேய்வமான ஸ்ரீ மஹாலக்ஷ்மி , ‘ஸ்ரீ செஞ்சுலக்ஷ்மி ‘ என்ற திருநாமத்துடன் கர்பக்ரஹத்தின் அருகே உள்ள இடைக்கழியின் அறையில் கோயில் கொண்டுள்ளார். அருகில் காலியான அரை ஒன்றுள்ளது. ஸ்ரீ வைகுண்டபதியான ஸ்ரீ மகாவிஷ்ணுவை அனைத்து அவதார காலத்திலும் ‘அகலகில்லேன் இரையும்!’ என்று உலகோர்க்கு உணர்த்தும் வண்ணம் ஜகந்மாதாவான ஸ்ரீ மஹாலக்ஷ்மி இங்கு ஸாந்நித்யம் செய்தருல்வதாக ஐதிஹ்யம் .

இந்த மேல அஹோபிலக் குகைகொஇலில் எழுந்தருளியிருக்கும் நரஸிம்ஹப் பெருமானே இந்த திவ்யதேசத்தின் ப்ரதான மூர்த்தியாவார். இவருடைய உத்ஸவமூர்த்த்தி கீழ் அஹோபில லக்ஷ்மீ நரஸிம்ஹப் பெருமானின் ஸந்நிதியில் எழுந்தருலிஉள்ளார்.

5. ஸ்ரீக்ரோடகர நரஸிம்ஹப் பெருமாள் :

மேல அஹொபிலத்தின் பிரதானக் கோவிலிலிருந்து 1  கி.மீ.தூரத்தில் மலையில் உள்ள நரஸிம்ஹ க்ஷேத்ற்றத்தில் கரோடகார நரஸிம்ஹப் பெருமாள் எழுந்தருலிஉல்லார். ‘க்ரோட’ என்ற சொல் வராஹத்தைக் குறிக்கிறது. எனவே வராஹ வதனத்துலன் எழுந்தருளியிருந்து கொண்டு பெரிய ப்ராட்டியாருலன் ஸேவை ஸாதித்தருளும் இந்த சிங்கப்பிரானுக்கு ‘க்ரோடகர’ நரஸிம்ஹர்’ என்றே திருநாமம்.
வராஹ காண்டத்தில் உள்ள நாராயண ஷடாக்ஷர ஜபபாராயனத்தை இந்த கோவிலில் தொடர்ந்து மூன்று நாள்கள் செய்து வர ஆத்மக்ஷேமத்திற்க்கான நற்பலன்கள் பெருகுவது இக்கோவிலின் தனிச் சிறப்பு என்பர்.

6. ஸ்ரீ காரஞ்ச நரஸிம்ஹப் பெருமான்

மேல அஹோபிலத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு திருத்தலம் ஸ்ரீ காரஞ்ச நரஸிம்ஹப் பெருமான் ஸந்நிதி . இது கீழ் அஹொபிலத்திர்க்குச் செல்லும் பாதையிலிருந்து ஒரு பர்லாங்க் தூரத்தில் அமைந்துள்ளது. காரஞ்ச வ்ருக்ஷத்தின் கீழ் எழுந்தருளியிருப்பதால் இங்கு எம்பருமானுக்கு ‘நரஸிம்ஹர் ‘ என்று திருநாமம். இங்கு சிங்கப்பெருமான் ஒரு திருக்கரத்தில் ‘ஸார்ங்கம் ‘ எனும் வில்லினையும், மற்றொரு திருக்கரத்தில் ஸுதர்ஸன சக்ரத்தையும் தரித்துக்கொண்டு , வீற்றிருந்த திருக்கோலத்தில் ஸேவை ஸாதிக்கிறார்.

இங்குள்ள புன்யதீர்த்தம் ‘பைரவகுண்டம்’ என்று அழைக்கப்படுகிறது. துர்வாஸ மகரிஷியால் சபிக்கப்பட்ட கோபிலரிஷி என்ற முனிவர் இங்கு வந்து பெருமானைக்குரித்து பக்தியுடன் தவம் செய்து பிரார்த்திக்க, இந்தக் காரஞ்ச மரத்தின் கீழ் அவருக்கு எம்பெருமான் நரசிம்ஹ வடிவில் தரிசனம் கொடுக்க, அதனால் சாபம் நீங்கப் பெட்டரு உய்வடைந்தார் என்பது இத்திருத்தலத்தின் வரலாறு.

7. ஸ்ரீ மாலோல் நரஸிம்ஹப் பெருமான்

மேல் அஹோபிலம் பிரதான ஸந்நிதியான சென்ச்லக்ஷ்மித் தாயாருடன் ஸேவை ஸாதிக்கும் நரஸிம்ஹப் பெருமான் கோவிலிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மற்றொரு முக்யமான ஸந்நிதி ஸ்ரீ மலோலப் பெருமான் ஸநிதி.சிங்கப்பிரான் கருணையே உருவான் ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் கூடியவனாய் பக்தர்களைக் குளிரக் கடாக்ஷித்தருல்கிறான் இங்கே! ‘மா’ என்பது பெரிய பிராட்டியாருக்குத் திருநாமம். ‘லோலன்’ என்ற சொல்லுக்கு லீலாரசம் அனுபவிப்பவன் என்பது பொருள். ‘அலகிலா விளையாட்டுடையனான’  அவன் இந்த லீலாவிபூதியின் தனது பக்தர்களைப் பக்குவப்படுத்தி இன்புறும் விளையாட்டினை ஸ்ரீ மகாலக்ஷ்மித் தாயாருடன் சேர்ந்து அனுபவிப்பதற்காக ‘ மாலோலன்’ என்ற திருநாமத்துடன் இங்கு ஸேவை ஸாதித்தறுலள்கிறான் என்பதை உணர்கையில் உள்ளம் உருகுகிறது.

இந்தப் பெருமானின் உத்சவமூர்த்தியான ஸ்ரீ நரஸிம்ஹப் பெருமான் ஸ்ரீ மத அஹோபிலமடத்தினை ஸ்தாபித்தருளிய ஒன்றான ஸ்ரீ ஆதிவண்சடகோப ஜீயர் ஸ்வாமியின் நித்ய திருவாராதனத்தில் எழுந்தருளியிருந்த காலம் தொடங்கி அந்த ஆசார்ய பரம்பரையில் தொடர்ந்து வரும் ஸ்ரீமத் அழகியஸ்ருங்கர்கள்  அனைவரது நித்ய திருவாராதனத்திலும் எழுந்தருளியிருந்து கொண்டு , விசேஷமாக இன்றளவும் அவர்களது சிஷ்யபரிபாலன மங்களாசாஸன யாத்திரைகளிலும் கூடவே எழுந்தருளி ‘ ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி , வழுவிலா அடிமைகளைப் பெற்று’ செல்லுமிடமெல்லாம் திவ்ய \தேசமாக்கியருளும் பெருமை பெற்றவர்!.

8. ஸ்ரீ ஜ்வாலா நரஸிம்ஹப் பெருமான்

ஸ்ரீ மாலோல நரஸிம்ஹப் பெருமான் கோயில் கொண்டிருக்கும் மேல அஹொபிலதிலிருந்து 4 கி.மீ.தூரத்திற்கு மேல் நோக்கிச் செல்லும் மலைமுகட்டில் அமைந்துள்ள ஆச்சர்யகரமான இந்த ஸந்நிதியில் எழுதருளியுள்ளார் ஸ்ரீ ஜ்வாலா நரஸிம்ஹப் பெருமான். ‘அசசாயா மேருமலை’ என்றழைக்கப்படும் இந்த மலையில் தான் வெஞ்சினம் அனலாய்க் கிளர்ந்தெழ எம்பெருமான் ஆளரியாய்த் தோன்றி அசுர வேந்தன் இரணியனைக் கிழித்தெறிந்த சரிதம் நடந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு உக்ர நரஸிம்ஹப் பெருமான் மூன்றடி உயர மூர்த்தியாக ‘ஜ்வாலா நரசஸிம்ஹன்’      என்ற திருநாமத்துடன் பத்துத் திருக்கரங்களுடன் ஸேவை ஸாதிக்கிறார்.

மேர்கரங்கள் சங்கசக்ரங்களை தரித்திருக்க, இரு கைகள் இராணியனைத்தன்
மடியில் கிடத்தி நெருக்கிப் பிடித்திருக்க இரு கரங்கள் ஆவேசமாய் அவனது குதலி பிரித்தெறிய, மற்ற திருக்கரங்கள் துஷ்டநிக்ரஹ திவ்யாயுதங்களை ஏந்தியிருக்க, இடது திருவடியை மடித்தும் வலது திருவடியைத் தொங்கவிட்டுக் கொண்டும் ஸுகாஸனத்தில் வீற்றிருந்தருள்கிறார்.

அருகிலேயே வலப்புறத்தில் ஸ்ரீப்ரஹலாதாழ்வான் கூப்பிய கரங்களுடன் பாலகனாய்ச் சிறு உருவில் வணகி நிற்க, நரஸிம்ஹப் பெருமாநின் ஸநிவேசம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

9. ஸ்ரீ பாவனா நரஸிம்ஹப் பெருமான்

மேல அஹஹோபிலத்திளிருந்து 6 கி.மீ. தொலைவில் பாவனா நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஸந்நிதியில் அந்த நதியின் பெயரையே தன திருநாமத்துடன் இணைத்தக் கொண்டு பாவனா நரஸிம்ஹராய் ஸே வை ஸாதித்து நம்மை பவித்ரமடையச் செய்கிறான் எம்பெருமான்.

உக்ர ஸ்தம்பம் :

மேற்சொன்ன ஒன்பது திருத்தலங்களைத் தவிர, மேல அஹோபிலத்திளிருந்து 8 கி.மீ. தொலைவில் தூண் போன்ற பெரும்பாறை அம்மளையையே இரண்டாகப் பிளப்பது போல் அமைந்துள்ளது. இந்தப் பாறைத் தூநிளிருந்துதான் சிங்கப்பிரான் வெளிப்பட்டார் என்பது நெடுங்கால நம்பிக்கை. சங்கம், சக்ரம், திருமண்காப்பு ஆககியவை இந்தப் பாரைத்தூணில் பொரறிக்கப்பெற்றுல்லன.

ப்ரஹ்லாத மேடு:

உக்ர ச்தம்பத்திர்க்கும் மேல் அஹோபிலத்துக்கும் இடையே அமைந்துள்ள குகையொன்றில் உள்ள ப்ரஹ்லாத நரஸிம்ஹப் பெருமாநின் சிறு ஸந்நிதி ப்ரஹ்லாத மேடு என்றழைக்கப்படுகின்றது . இந்தச் சிறுகுகையில் ஸ்ரீ ப்ரகுலாதாழவான் எழுந்தருளியுள்ளான்.

அஹோபில க்ஷேத்ரத்தின் தீர்த்தங்கள் :

1. ரக்தகுண்டம் :

இந்த திவ்யக்ஷேத்ரத்தில் உள்ள பல புண்ய தீர்த்தங்களில் ரக்தகுண்டம் என்கின்ற தடாகம் மிகவும் முக்யத்வம் வாய்ந்தது.சிங்கப்பிரான் இரணியனைக் கொன்றழித்த பின்னர் தன திருக்கரங்களை இத்தடாகத்தில் அமிழ்த்தி சுத்தம் செய்து கொண்டதாய்க் கருதப்படுகிறது.

2. லாஞ்ச கோனேரி :

பார்கவா நரஸிம்ஹப் பெருமான் ஸந்நிதிக்கு வடகிழக்கில் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தீர்த்தம் லாஞ்ச கோனேரி என்றழைக்கப்படுகிறது. முற்காலத்தில் ராஜசபை நடனமாது ஒருத்தி அஹோபில திவ்யதேசத்தில் நரஸிம்ஹப் பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து, தனதுபாவங்களை மன்னிக்க வேண்டி மன்றாடிப் பிரார்த்தித்தாள். அப்போது எம்பெருமானது ஆணைப்படி இத்தடகத்தினை ஏற்படுத்தி, அதனால் தன பாபங்கள் நீங்கப்பெற்றாள் என்பது வரலாறு.

3. ராம தீர்த்தம் :

கீழ அஹோபிலத்திளிருந்து 8 கி.மீ. தொலைவில் ராமதீர்த்தம் என்கின்ற திவ்யதடாகம் அமைந்துள்ளது. சக்ரவர்த்தித் திருமகனான ஸ்ரீராமன் இந்த திவ்ய தடாகத்தில் நீராடி அனுஷ்டானங்களைச் செய்ததால் இந்தத தீர்த்தம் அவரது திருப் பெயராலேயே வழங்கப்படுகிறது.

4. பவானி தீர்த்தம் :

ஸ்ரீ அஹோபில திவ்யதேசத்தின் பிரதானமான தீர்த்தம் பவநாசினி ஆகும். ஸம்ஸாரமாகிறது பவத்தை நாசம் செய்து முக்தி அடைவதர்க்கான தகுதியை
உண்டாக்குவதால் இதற்க்கு பவநாசினி என்று பெயர். இந்தத தீர்த்தத்தில் பதிமூன்று புன்யதீர்த்தங்களும் கலந்துள்ளன.அவை நரஸிம்ஹ தீர்த்தம், ராம தீர்த்தம், லக்ஷ்மண தீர்த்தம், பீம தீர்த்தம், சங்க தீர்த்தம், வராஹ தீர்த்தம், ஸுதா தீர்த்தம், தொர தீர்த்தம், கஜ குண்டம், விநாயக தீர்த்தம், பிரவ தீர்த்தம், ராஜாத குண்டம் ஆகியன. இவையனைத்தும் பவ நாசினியின் பெருமைக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

இத்திஉத்தலத்தின் மற்றைய  சிறப்புக்கள் :

ஸ்ரீ அஹோபிலமடத்தின் ஏழாவது ஜீயராக எழுந்தருளியிருந்த ஸ்ரீமத் அழகிய ச்ருங்கர் இங்குள்ள வேடுவர்களின் குலதெய்வமான சென்சுலக்ஷ்மித்தாயாருக்கும் எம்பெருமானுக்கும் நடந்த திருக்கல்யாணத்தை ‘வாசந்திகா பரிணயம்’ என்கிற தமது ஸம்ஸ்க்ருத நாடகத்தில் விவரித்துள்ளார்.

இத்திருத்தலத்து எம்பெருமான் ப்ரகுமாவாலும், ஸாக்ஷாத் பகவானது திருவவதாரங்களான ஸ்ரீ ராமபிரானாலும், ஸ்ரீ வேங்கடீப் பெருமானாலும் வானகப் பெற்றவர் என்ற பெருமை முக்யத்வம் வாய்ந்தது.

ஸ்ரீ அஹோபிலேசனான ஸ்ரீந்ருஸிம்ஹப் பெருமானை வழிபட்டதன் பலனாக திருவேங்கடமுடையான் ஸ்ரீபட்மாவதித்தாயாரை திருக்கல்யாணம் செய்து கொண்டான் எனும் மங்கள வைபவம் இத்துத்தலத்திர்கேயான மேன்மை!

அது போலவே, ஸ்ரீராமன் இந்தப் பெருமானின் புகழை ஐந்து ஸ்லோகங்களால் துதிக்க , அது ‘நரசிம்ஹ பஞ்சம்ருதம்’ என்று பிரசித்தி பெட்ட்ருள்ளது. இந்த ஸ்தோத்ரங்களும், வரலாறும் பரம ப்ரமாணமான நூல்களான ஹரி வம்சம், மோக்ஷ தர்மம் ஆகியவற்றில் பீஷ்ம- யுதிஷ்டிரர்களுக்கிடையே உரையாடலில் குறிப்ப்டப்பெற்றுள்ளன. இந்த திவ்யதேசத்து எம்பெருமானது அருளால், சிறையிலிருந்த சீதாப்பிராட்டியாரை பற்றிய விபரங்கள் ஸ்ரீராமபிரானுக்குக் கிடைக்க, அதனால் அவர் ராவணனைக் கொன்றொழித்து ஜகந்மாதாவான ஜானகியை மீட்டெடுத்தான் என்பர்.

இந்த திவ்யதேசத்தின் வைபவமும், ஸ்ரீமத் அஹோபில மடத்தின் திவ்யச்சரித்ரமும் பிரிக்கமுடியாதபடி ஒன்றினைந்தவை. பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் மேல்கோட்டை எனப்படும் திருநாராயனபுரத்தில் கிடாம்பி கேசவாச்சாரியார் ஸ்வாமியின் திருக்குமாரராக அவதரித்த ஸ்ரீநிவாசாச்சார்யர் இளம்பிராயத்திலேயே ஸகல ஸாஸ்த்ர

த திகழ்ந்து விஜயநகரப்பேரரசரான கிருஷ்ணதேவராயரது  ராஜசபை வாத ஸதஸ்ஸில் விசிஷ்டாத்வைத தர்சனத்தை நிலைநாட்டியப புகழ்ப் பெற்றார்.
பின்னர், ஒரு நன்னாளில் திருச்சிங்கவேள்குன்றத்து எம்பிரானே ஒரு அந்தன வடிவில் வந்து அவருக்கு சந்யாச தீக்ஷை அளிக்க, அன்று முதல் ஸ்ரீ ஆதிவண்சடகோப ஜீயர் என்ற திருநாமத்துடன் ஸ்ரீ அஹோபிலத்து சிங்கப்பெருமானுக்கு ஒழிவில் காலமெல்லாம் உடனே மன்னி வழுவிலா அடிமை செய்து கொண்டு எம்பெருமானார் தரிசனத்த எங்கும் பரவச் செய்ய ஸ்ரீமத் அஹோபில மடத்தை நிறுவினார். அவர் அன்று தொடங்கி வைத்த கைங்கர்யஸ்ரீயானது அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பெருகி, இன்றளவும் செழி[ப்புற நடந்து வருவது கண்கூடு.
பெரும்புலவர்களால் கொண்டாடப்பெற்ற ப்ரதாபருத்ரன் என்ற காகதீய மன்னனை ( ஆட்ச்க்காலம் கி.பி. 1295 – 1323 ) . இத்திருத்தலத்து சிங்கப்பிரான் தடுத்தாட்கொண்டு இந்த திவ்யதேசத்திற்க்கான பற்ப்பல திருப்பணிகளையும் அவனைக் கொண்டு செய்வித்தான் எனும் வரலாட்ட்ருப்பின்னணி கண்டு உய்த்துனரத்தக்கது .

விஜய நகரப் பேரரசர்கள் அனைவரும் இந்தப் பெருமானின் பரமபக்தர்கள் , ஹரிஹரர் தொடங்கி கிருஷ்ண தேவராயர், அச்சுத தேவராயர் போன்ற விஜய நகரப பேரரசர்கள் அனைவரும் இந்த திவ்யதேசத்து எம்பெருமாங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் வழிபாட்டு வந்தனர் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது.

அஹோபில க்ஷேத்திர மாஹாத்ம்யம் முற்றிற்று

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பிரஹ்மாண்ட புராணத்தில் மஹேஸ்வர நாரத ஸம்வாதத்திலுண்டான ஸ்ரீ பிருந்தாவன ஷேத்திரமென்னும் மயிலை திருஅல்லிக்கேணி மஹாத்மியம்–

October 6, 2025

ஸ்ரீ பிரஹ்மாண்ட புராணத்தில் மஹேஸ்வர நாரத ஸம்வாதத்திலுண்டான ஸ்ரீ பிருந்தாவன ஷேத்திரமென்னும் மயிலை திருஅல்லிக்கேணி மஹாத்மியம்

ஸ்ரீ ஸதாசிவ மூர்த்தியானவர் ஸ்ரீ கைலாசத்தில் சிவ கணங்களும், சித்த கணங்களும், தேவ கணங்களும், ரிஷி கணங்களும் புடை சூழ, ரத்ன ஸிம்ஹாஸநத்தில் கொலு வீற்றிருக்கின்ற சமயத்தில் நாரத பகவானானவர் உமா மஹேசரைப் பார்த்து, ஸ்வாமீ! நீர் சொல்லிக் கொண்டு வந்த பரப்பிரம்ஹ மூர்த்தியான ஸ்ரீமந் நாராயணன் வாசஞ் செய்யும் திவ்ய தேச மஹாத்மியங்களைக் கேட்டு மிகவும் ஆனந்தத்தை யடைந்தேனாயினும், நான் ருஷி சிரேஷ்டர்கள் நித்ய வாசஞ்செய்யும் நைமிஸாரண்யத்தைக் கிட்டிய போது, அங்கு ஸப்த ருஷிகளையும் மற்றுமுள்ள ருஷிகளையுங் கண்டேன். அவர்கள் மத்தியில் ஸனத்குமாரர் அஷ்ட வஸூக்களின் நடுவே யிருக்கும் இந்திரனைப் போல் வீற்றிருந்து மற்ற ருஷிகள் சொல்லும் பகவத் குணானுபவங்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது சௌனகர் அந்த ஸனத்குமாரரைப் பார்த்து ஸ்வாமீ ! முன்னம் ஜம்பூத்வீபத்தில் கெளமோதக
தாரியான புராண புருஷனுக்கு நித்திய வாஸஸ்தானங்களான ஸ்ரீரங்கம், வேங்கடாத்ரி, ஹஸ்தி ஸைலம் முதலான நூற்றெட்டுத் திவ்ய தேசங்களென்று சொல்லி இருக்கின்றீரே; அந்த திவ்ய தேசங்களின் வைபவங்களைக் கிரமமாகச் சொல்ல வேண்டுமென்று
கேட்க ; அப்போது ஸனத்குமாரர் செனகரைப் பார்த்துக் கிரமமாகச் சொல்லிக் கொண்டு வருகையில் நூற்றெட்டுத் திவ்ய தேசங்களுக்குள் மிகச் சிறப்புற்றோங்கிய திவ்ய தேசம் மயிலை பிருந்தாவன் க்ஷேத்திரமென்றும் அது ஸ்ரீமந் நாராயணனுக்கு வாசஸ்தான மென்றும் ஐஹிக ஆமூஷ்மிக ஸகல புருஷார்த்ங்களையும் கொடுக்கத்தக்கதென்றும், அந்த பிருந்தாவனத்திலே விஷ்ணுவிற்கு ஐந்து விதமான திவ்யமங்கள் விக்ரஹ ஸ்வரூபங்களுண்டா யிருக்கின்ற தென்றுஞ் சொல்லக்கேட்டு அந்தப் பிருந்தாவன வைபவங்களைத் தேவரீரிடத்தில் ஸவிஸ்தாரமாகத் தெரிந்து கொள்ளலாமென்று வந்தே
னென்று சொன்ன நாரத முனிவரைப் பார்த்து சிவபிரான் சொல்லுகின்றார்.

வாநீர் நாரதரே! பிருந்தாரண்யத்தின் மஹாத்மியத்தையும், அங்கெழுந்தருளி யிருக்கும் ஐந்து விதமான விஷ்ணு மூர்த்தியின் பெருமையையும், தீர்த்த மஹிமையையும், பிரம்ஹாதி தேவர்கள் ருஷிகள் முதலிய யாவராலுஞ்சொல்ல முடியாதாயினும் பக்தியுடன்
கேட்ட வுமக்கு நானறிந்த மாத்திரஞ் சொல்லுகின்றேன், கேளும்-என்று சொல்லத் தொடங்கினார்.
மயிலையின் சிறப்பு.
பூர்வம் நீரறிந்து, நித்யசூரிகளாலும், பிரம்ஹாதி தேவர்கள் ருஷிகள் முதலானவர்களாலும், ஆராதித்துக் கொண்டு வரும்படியான, பூலோகத்திலுள்ள திருநீர்மலை என்னுந் திவ்ய தேசத்திற்கு வடகிழக்கான ஈசான்ய திக்கிலே ஓர் ஐப்பசி மாஸம் ஸதய நக்ஷத்ரத்தில் நீர் நிறைந்த ஒர் ஓடையில் செவ்வல்லிப்பூ வொன்றில் திருவவதரித்து, ஓடித் திரியும் யோகிகளான தத்துவதரிசிகளிற் சிறந்தவராய் அனாதியான கேசவனுக்கு அந்தரங்கரான
மஹதாஹ்வயர்
அவதாரத்திற்கு ஸ்தானமாகியும், நவரத்ன கசிதமான மாட மாளிகைகளாலே அலங்கிருதமாகியு மிரா நின்ற மயூர நகரியை மூன்று லோகங்களிலும் பிரசித்தமான விருஷபுனென்னும்,ராஜ சிரேஷ்டன் பிரம்ஹாவைத் தபசினாலே சந்தோஷிப்
பித்து விசுவகர்மாவைக் கொண்டு ஸ்ருஷ்டிப்பித்தான்.
அந்த பட்டணத்தில் ஷண்முகன், சூத்ர ஜன்மாவான மந்தாரகனென்னும் ஒரு ருஷிக்குப் பிரசன்னனாகி அவர் வேண்டும் வரங்களைக் கொடுத்து வாத்ஸல்யத்தாலே ஸ்வார்க்கத்தைப் பார்க்கிலும்
மிகவுகந்து வாசத்திற்கு யோக்கியமாய் எப்போதும் க்ரீடத்துக் கொண்டிருக்கிறான்.
திவ்யகந்த திவ்ய ரஸ திவ்ய புஷ்ப திவ்ய பலங்களைடைய ஸாலம், தாலம், தமாலம், ஹிந்தாலம், சம்பகம்,நாரிகேளம், புந்நாகம், சூதம், சிந்துவாரம், கந்தபூரம், பீஜபூரம், தவம், அசோகம், பாடலம், வகுளம், வஞ்சுளம் முதலான வ்ருக்ஷங்களையும், ஸாரஸம், சக்ரவாகம், காரண்டம் முதலான ஜல பக்ஷிகளாலும்,
விகபிதங்களாய்த் தாதுக்களை யுடைத்தான தாமரை செங்குவளை முதலான புஷ்பங்களாலும், நிறைந்து தெளிந்து குளிர்ந்த நீரையுடைய ஓடைகளையு முடைத்தாய் மாயை என்றும், மாதவி என்றும், மயூரநகர் என்றும், வைஷ்ணவீ என்றும் மஹரிஷிக
ளாலே சொல்லப்பட்டதாய்
; மயூரநகர் என்று மூன்று லோகத்திலும் ப்ரஸித்தமாய் விளங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த பட்டணத்திற்கு சமீபத்தில் நூறுவிற்கடை தூரத்திற்கு வடக்கே செம்பவள வெண் முத்தம் வெண் திரைகள் வந்துதைக்கும் கடற்கரை யோரமாய் அதி மனோ ஹரமான பிருந்தாவன மென்றொருவன மிருக்கின்றது.
பிருந்தாவனத்தின் சிறப்பு.
அதில் துள வனம் மிகச் செழிப்பாய், நானா விருக்ஷங்களாலும், தெளிந்த தீர்த்தங்களாலும் சோபித்து அனேக ருஷிகளாலே சேவிதமா யிருக்கின்றது. அதில் ஸ்ரீமந் நாராயணன் தன் திருமேனியை ஐந்து விதமாகச் செய்து கொண்டு நித்ய வாசஞ்செய்கின்றான். அந்த மூர்த்திகளை சகலமான சேதனர்களும் சேவித்து ஸார்வாபீஷ்டங்களைப் பெறுகிறார்கள். அங்கு முஹுர்த்த காலம் வசிக்குமவர்கள் வாஜபேய யாக பலத்தை யடைகின்றார்கள்.ஸ்வப்னத்தில் அந்தத் திவ்ய தேச யாத்திரையை நினைத்த போதினும் அந்த< பலனை யடைகின்றார்கள்.அங்கு வாசஞ்செய்யுந் திரியக் ஸ்தாவரங்களும் பாபம் போய்க் குல விருத்தியாய்ப் பரமபதத்தை யடையும்.அந்தப் பிருந்தாவனத்தை இருந்த யிடத் திருந்தேனும் நினைக்குமவர்கள் குடும்ப விருத்தியாயவர்கள் பாகவதாளாய்த் தேஹாவசான காலத்தில் பரமபதத்தை யடைவார்கள்
வாரீர் நாரதரே! ஒரு கால விசேஷத்தில் தேவர்கள் மேருபர்வத்தின் சிகரத்திலே யொரு கார்யார்த்தமாகச் சேர்ந்திருக்கையில் தேவதைகளில் ராமாபதியும் அடியார்களில் உமாபதியும் ஸ்ரேஷ்டரானாப் போலே எம்பெருமானுடைய திவ்ய தேசங்களில் அந்த பிருந்தாவனம் சிரேஷ்டமென்று கொண்டாடினார்கள். அந்த சிரேஷ்டமான பிருந்தாவனத்தைத் தூஷிக்கின்றவர்களும், ஸ்வபனத்திலும் நினையாதவர்களும் மஹாபாபிகளாகையால் நரகத்தை யடைவார்கள். அந்த பிருந்தாவனத்திலே தாமரை ஆம்பல் கருநெய்தல் முதலான புஷ்பங்களால் அலங்கிருதமாயிருக்கும் ஸ்ரேஷ்டமான கைரவிணி சரசான தொன்றிருக்கின்றது. அதிலே ஸ்நானஞ்செய்து சேவித்து ஆசமநீயஞ் செய்கின்றவர்கள், சகல பாபங்களில் நின்றும் விடுபட்டு மோக்ஷத்தை யடைகின்றார்கள்-அந்த பிருந்தாவன மஹாத்மியத்தை யறிந்து நிர்மல மனஸ்கரனாகி அங்குள்ள கைரவிணி தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து பஞ்சமூர்த்திகளைச் சேவித்துத் தியானிக்குமவர்கள் பாபங்களற்று சமஸ்த காமங்களையும் அடைகின்றார்கள்.

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தோர் தொழு நேத்தும்
ஆதியை அமுதை என்னை யாளுடை யப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே

மந்நாதன் (ரங்கநாதன்)வேதவல்லித் தாயர், புஜங்க சயநம்,ப்ரணவவிமாநம், கிழக்கே திருமுகமண்டலம், கன்னிகாதானம் செய்து கொடுத்த ப்ருகு மஹரிஷிக்கும் மார்க்கண்டேயருக்கும் ப்ரத்யக்ஷம்.
மன்னாதன் பிருகுமருஷிக்கு ப்ரத்யக்ஷமாதல்
வாரீர் நாரதரே! அந்த பிருந்தாவனத்தில் வாதாம்பூபர்ணாசனாளாய் மோக்ஷத்தின் பொருட்டு, பிருகு, அத்ரி, மரீசி, மார்க்கண்டேயர்,சுமதி, சாப்தரோமா,ஜாலி,என்னும் சப்த ருஷிகள் தபசு செய்து கொண்டிருந்தார்கள். இப்படியிருக்க ஷீராப்தியில் ஸ்ரீயபதிக்கும் பெரிய பிராட்டியாருக்கும் ப்ரணய கலஹம் நேரிட்டு அனேக ஆத்மோஜ்ஜீவனத்தின் பொருட்டு பெரிய பிராட்டியாரானவள் திருப்பாற்கடலை விட்டு முனி கணங்கள் நிறைந்த பாவனமான அந்த பிருந்தாவனத்தில் தபசு செய்து கொண்டிருந்த பிருகு மஹாருஷியின் ஆஸ்ரமத்தை யடைந்து,ஒரு சந்தன விருக்ஷத்தினடியிலே அப்ராகிருத திவ்ய மங்கள விக்கிரஹ ரூபமான சிறு குழந்தையாய்ச் சயனித்திருந்தாள். பிருகு மஹருஷியானவர் மார்க்கண்டேயருடனும் சிஷ்யாளுடனும் பகவதாராதனத்திற்கு புஷ்பம் பறிக்க வந்த போது தற்செயலாய் அதிக சுந்தரமான அந்தக் குழத்தையைக் கண்டனர். பிருகு மஹருஷியும் ஆச்சரியத்தை யடைந்து இந்தக் குழந்தை சாக்ஷாத் லக்ஷ்மியைப் போன்றிருக்கின்ற தென்று நினைத்துத் தாமே எடுத்துக் கொண்டு வந்து தன் பார்யை முதலான ருஷி பத்னிகளிடத்தி லொப்பித்து ஜாக்கிரதையாய் ரக்ஷித்து வாருங்கோளென்று நியமித்தார். ருஷி பத்னிகளும் அப்படியே யாகட்டுமென்று சொல்லி மிகவும் ஆதராதிசயத்துடன் வளர்த்து வந்தார்கள்.

இப்படி நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து கொண்டு வருங்குழந்தைக்கு ஒரு நல்லநாளில் குஷிகளுடன் கூடி பிருகு வானவர் வேதவல்லி என்று திருநாமஞ்சாற்றினர்.வேதவல்லியும் ருஷிகளுக்குச் சிஸ்ருஷை செய்து கொண்டு சிலகாலம் வசித்திருக்கையில் ஷிராப்திநாதன் ஸ்ரீமாஹா லஷ்மியைக் காடக்ஷிக்கும் பொருட்டு இராஜ வடிவு கொண்டு அந்தப் பிருந்தாவனத்தை யடைந்தார். அங்கு ஸகிகளோடு புஷ்பம் பறித்துக் கொண்டிருந்த வேதவல்லியைக் கண்டு வியாமோஹங்கொள்ள அவளும் தன் பிதாவான பிருகுவுக்கறிவிக்க அவரும் அந்த மஹா புருஷனைக் கண்டு இவர் சாக்ஷாத் ஸ்ரீமாஹாவிஷ்ணு வென்றறிந்து வேத வேதாந்தங்களினாலே பல்லாயிரக்கோடி அண்டங்களுக்கும்,நாதனே பிரம் ருத்ரேந்திராதி தேவர்கள் முதலானோர்களுக்கும்,காரண பூதனே மந் தாதனே என்றிப்படிப் பலவாறாக ஸ்தோத்திரஞ் செய்து சாஷ்டாங்க தண்டஞ் சமர்ப்பித்துத் தேவரீர் அப்பிராகிருத திவ்ய மங்கள விக்ரஹ ஸ்வரூபத்தைச் சேவை சாதித்தருள வேண்டுமென்று பிரார்த்தித்து பத்தாஞ்சலியுடராய் நின்றுகொண்டிருந்தார்.

வாரீர்நாரதரே! இப்படிப் பிரார்த்தித்த பிருகு மஹருஷிக்கு ஷிராப்தி நாதனான ஸ்ரீமந் நாராயணன் தன்நிஜ ஸ்வரூபமான சதுர்ப்புஜ சங்கு சக்ர மகர குண்டல கிரீடக் கிரைவேய கௌஸ்துப ஹார வைஜயந்தி வனமாலிகாதி திவ்யாயுத திவ்ய பூஷண திவ்ய மங்கள விக்ரஹ ஸ்வரூபத்தைச் சேவை சாதித்தருளினர். பிருகு முனிவரும் சாஷ்டாங்கமாகத் தண்டஞ்சமர்ப்பித்து ஆனந்தித்துப் பலவாறாக ஸ்தோத்திரஞ்செய்தனர். அப்போது ஆழிவண்ணன்,அவரை நோக்கி வேண்டின வரங்களைக் கேளுமென்று அருளிச் செய்ய, பிருகு மஹாருஷியும் ஸ்வாமீ! இந்தத் திவ்ய மங்கள் விக்ரஹ ஸ்வரூபத்துடன்’ இந்தப் பிருந்தாவனத்திலே அடியேனுக்கும், மார்க்கண்டேயருக்கும் மற்றும் சமஸ்தாத்மாக்களுக்கும் எப்போதும் சேவை சாதித்துக் கொண்டெழுந்தருளி இருக்க வேண்டுமென்று பிரார்த்தித்தார். அருமாகடலும் அப்படியே சேவை சாதிக்கின்றே மென்று வரப்ரதானஞ் செய்தருளி, வாரீர் பிருகுவே உம்மிடத்தில் வளரும் வேதவல்லி என்னும் கன்னிகையை எனக்குக் கொடுத்துத் திருக்கலியாணஞ் செய்யவேண்டுமென்று அருளிச்செய்தார்
பிருகுமஹாரிஷியும் தன்யோஸ்மி என்று ஒத்துக்கொண்டு, வேத வல்லியை அழைக்க அவளும் புன்னகையுடன் வந்து ஸ்ரீயபதியைச் சேவித்து, இவர் தான் மந்நாதனான பர்த்தாவென்றும் இவரைத்தான் விவாஹஞ் செய்துகொள்ளக் கடவேனென்றுஞ் சொல்ல
அப்படியே செய்விக்கின்றேனென்று சொல்லி பிருகுவும் தேவர்களும் ரிஷிகள் சூழ ஸாஸ்திரோக்தளும் பிரகாரம் ஹோமாதிகளை வளர்த்து பாணிக்கிரஹண விவாஹ மஹோத்ஸவங்களைச் செய்வித்தார் . அப்போது ப்ரம்ஹருத்திரேந்திராதி தேவர்கள் ரிஷிகள் முதலான சகலரும் மந்நாதனன ஸ்ரீய பதியைச் ஸாஷ்டாங்கமாகத் தண்டஞ் சமர்ப்பித்து பலவாறாக ஸ்தோத்திரஞ் செய்து புஷ்ப மாரி பொழிந்து ஆனந்த பரிதராய் பிருகுவைக் கொண்டாடி இந்தவேதவல்லித் தாயாரை சாக்ஷாத் ஸ்ரீமாஹாக்ஷ்மி என்றறியு மென்று சொல்லித் தங்கள் தங்கள் ஸ்தானங்களை யடைந்தார்கள்.
அனந்தரம் மந்நாதனான என்னையாளுடை அப்பன் என்னும் ஸ்ரீயபதியானவர் மாக மாதத்துச் சுலபக்ஷத் துவாதசியில் ஆவிர்ப்பவித்து திருக்கலியாணஞ்செய்துகொண்டு அனேக ஆத்மோஜ்ஜீவனமாக அந்த பிருந்தாவனத்தில் சேவை சாதித்துக் கொண்
டிருக்கும் வைபவத்தைக் கேட்கின்றவர்கள் வாசிக்கின்றவர்கள் அந்தத் தினத்திலே அவரைத் தண்டஞ் சமர்ப் பிக்கின்றவர்கள் முதலாயினார் இஹபரைஸ்வரியத்தை யடைந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

——————-

தெள்ளிய சிங்கர்
பள்ளியி லோதிவந்த தன் சிறுவன் வாயில் ஒராயிரநாமம்
ஒள்ளிய வாகிப்போத ஆங்குஅதனுக்கு ஒன்று மோர்பொறுப்பிலனாகி)
பிள்ளையை ச்சீறிவெகுண்டுதூண்புடைப்பப் பிறையெயிற்றனல்விழி பேழ்வாய்
தெள்ளிய சிங்கமாகியதேவைத் திருவல்லிக்கேணிக்கண்டேனே.

தெள்ளியசிங்கர் (நரசிம்மர்)தைவி விமாநம், வீற்றிருந்த திருக் கோலம், மேற்கே திருமுகமண்டலம். அத்ரி மஹரிஷிக்கும் ஜாலி மஹரிஷிக்கும் பிரத்யக்ஷமாய் மோக்ஷம் தந்தவர்.
தெள்ளியசிங்கர்அத்ரி மஹாமுனிவருக்கு மோக்ஷமளித்தல்
-சிவபிரான் சொல்லுகிறார் வாரீர் நாரதரே, அந்த பருந்தாவனத்தில் மஹா ப்ரசித்தரும் பாகவதருமான அத்ரி என்னும் மஹா ரிஷியானவர் ஸ்ரீ மந் நாரயணனைக் குறித்து மோக்ஷாபேஷையை யுடையவராய் இதராளாலே செய்யவரித்தான மஹா தபசைச் செய்து கொண்டிருந்தார். கபில மஹரிஷிக்குப் பெளத்திரரும் தருண ரென்பவருக்குப் புத்திரருமான விகட மஹா ரிஷியானவர் பூவலம்செய்து கொண்டு மனோஹரமான அந்த ப்ருந்தாவனத்திற்கு வந்து சேர்ந்து தபசு செய்து கொண்டிக்கும் அத்ரி மஹா ருஷியைக் கண்டு தண்டஞ்சமர்பிக்க அத்திரி முனிவரும் அவரைப் பூஜித்து ஆலிங்கனஞ் செய்துகொண்டு வர்த்தமானங்களைக் கேட்க,விகடர் சொல்லுகின்றார். வாரீர், முனி புங்கவரே! லோகபாவனமான கங்காதீரத்தில் தடாக விரு பக்ஷி புஷ்பங்களாலும் ரிஷி கணங்களாலுஞ். சூழ்ந்து ரம்யமாயிருந்துள்ள ஜம்பூவனமொன்றிருக்கின்றது. அங்குள்ள கபிலர் புத்திரரான தருணர் என்னைப் பெற்று லோகாந்தரத்தை யடைந்தார். நான் அங்குள்ள ரிஷி களால் வளர்ந்து உபநயன அத்யயனாதிகளை யடைந்து அங்கு வெகு காலம் அந்த பெரியோர்களுக்கு சிஸ்ரூஷை செய்து கொண்டிருந்தேன்.அங்கிருக்கும் பார்க்கவ முனிவரைப் பார்க்க வேண்டுமென்று மேரு பர்வதத்தி லிருக்கும் மரீச ருஷியானவர் வந்தார். அவரைப் பார்க்கவ ருஷியும் பூஜித்து நீர் மேரு பர்வதத்தி லிருந்து வருகின்றீரே அங்குள்ள தேவ ரிஷிகள் சமுதாயத்தில் நடந்த விருத்தாந்த மேதென்று வினவினார். மாரீசர் பார்க்கவரைப் பார்த்து அந்த மஹ மேருவில் தேவ ரிஷிகள் ஸித்தர்கள் வசிஷ்டர் முதலானோர் ஏகீபவித்தார்கள் . இவர்களில் வசிஷ்டர் சொன்னதாவது, தக்ஷிண திக்கிலே துளசீ வனமானது பிரசித்தமா யிருக்கின்றது.அங்கே சிரேஷ்டரான அத்ரி மஹா முநியானவர் அரியதான தபசைச் செய்து கொண்டிருக்கின்றார். அவருக்கு ஸ்ரீயபதி பிரசன்னராய்ச் சேவை சாதிக்கப் போகின்றாரென்று வசிஷ்டர் சொன்னதாக மாரீசர் பார்க்கவருக்குச் சொன்னார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த விகடனான நான் தேவரீரைத் தண்டஞ்சமர்ப்பிக்க வேண்டி விடை கொண்டேனென்று சொல்லினர். கர்ணாம்ருதமான செய்தியைக் கேட்ட அத்ரியும் மிகவும் ஆச்சரியத்துடன் சந்தோஷித்து விகடரைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். விகட மாமுனிவரும் அங்குள்ள முனிவர்களோடே வெகுகாலம் வாசித்துக் கொண்டிருந்தார்.கேட்டீரோ நாரதரே! இப்படி அந்த ப்ருந்தாவனத்திலே ரிஷிகளுடன் கூடின அத்ரி மஹாமுனியானவர் சரத்காலம் வந்து ஆஹ்லாதகரமாய்ச் சந்திரன் பிரகாசிக்கு மொரு நாள் பிராதக் காலத்தில் அனேக ரிஷிகளுடனே பிராதஸ்ஸந்தியைச் செய்யப் புறப்பட்டு அங்குள்ள இந்திர தீர்த்தத்திலே ஸ்நானஞ்செய்து நித்தியா நுஷ்டானங்களைத் தீர்த்துக் கொண்டு ஆஸ்ரமத்தை யடைந்து அந்த ரிஷிகளுடனே ஆசனத்தி லிருந்து கொண்டு ஸ்ரீயபதியின் அனந்த கல்யாண குண வைபவங்களை யனுபவித்துக் கொண்டிருந்தார். நிர்ஹேதுகமாய் தேவதுந்தும் முழங்கிற்று. புஷ்பமாரி பொழிந்தது . தேவர்கள் ரிஷிகள் முதலான கூட்டங்கள் வந்தன.அப்சரசுக்கள் நடனஞ்செய்தனர்.இப்படி ஆச்சரியகரமான சப்தத்தைக் கேட்டுத் தேவர்கள் ரிஷிகள் முதலானோர்களையுங் கண்டு அவர்களுடளே யெழுந்திருந்து நான்கு திக்குகளையும் சிஷ்யாளுடனே பார்த்துக் கொண்டிருந்தார். கிழக்கு முகமாக விருக்கும் இந்த அத்ரி மஹாரிஷிக்கு முன்பாகத் திவ்ய தேஜசை யுடைத்தான ஒரு விமானம் தோன்றிற்று. அதின் உபய பார்சுவங்களிலும் சாமரங்களை வீசிக் கொண்டிருக்குஞ் சர்வாபரண பூஷிதாளான் இரண்டு திவ்ய புருஷர்களையும் பின்பக்கத்தில் தைத்ய தானவர்களை ஸம்ஹரிப்பவரான சூர்யகாந்தி போன்ற கருட பகவானையும் முன்புறத்தில் பொற் பிரம்பேந்திய சேனை முதலியாரையும் இடப்பக்கத்தில் சந்திரகாந்தியை யொத்த ஆதி ஸேஷனையும் தக்ஷிண பார்சுவத்தில் சனகாதி முனிவர்களையுங் கண்டு தண்டஞ்சமர்ப்பித்தனர்.அனந்தரம் அந்த விமானத்தின் மத்தியில் ஆஸ்ரிதாளுக்கு செளம்யாரூபராகியும் அனாஸ்ரிதாளுக்கு பயங்கர ரூபியாகியும் சதுர்ப்புஜ சங்க சக்ர மகர குண்டல கிரீடாதி திவ்யாயுத திவ்யபூஷ யுக்க திவ்ய திருமேனியுடனே சேவை சாதித்தருளும் நரசிம்ஹ மூர்த்தியைக் கண்டு சாஷ்டாங்கமாகத் தண்டஞ்சமர்ப்பித்து எழுந்திருந்து மயிர்கூச்சிட்டு ஆனந்த பரவசராய்-வாரீர் தேவாதீரரே, மஹாபாஹுவே! ஜகந் நாயகரே ஜகத் குருவே புண்டரீகாக்ஷ ப்ரபுவே! அனேக காலம் ஸ்தோத்திரஞ் செய்த போதிலும் அறியக் கூடாத தேவரீரை ஸ்தோத்திரஞ்செய்ய நானெப்படி சக்தனாவேன். வாரீர் ஸ்வாமீ, நிரஞ்சனராயும் நித்ய நிரவத்யராயும் பரிசுத்தராயும் சத்ய சங்கற்பராயும் குண சஹிதராயும் ஞானானந்த ஸ்வரூபியாயும் ஜகத்ருஷ்டி ஸ்திதி லய கர்த்தராயும் ஜகத்காரண பூதராயும் சேஷியாயும் சகல ஜகதீ ராயும் சேஷசாயியாயும் பிரம்ம ஸ்வரூபியாயும் பிரணவ ஸ்வரூபியாயும் வேத ஸ்வரூபியாயும் வேத வேத்யராயும் ஏக ஸ்வரூபியாயும் ஏக நாதராயும் ஏக போக்தாவாயும் அனந்த கல்யாண குண பரி பூர்ணதாயும் புத்தி ஸ்வரூபியாயும் பரமாத்ம ஸ்வரூபியாயும் ஸ்தூல சூக்ஷ்ம ரூபராயும் குருவாயும் லகுவாயும் துர்பராயும் சுலபராயும் ஆயிரந்திருமுடிகளையும், ஆயிரந்திருக்கண்களையும் ஆயிரந்திருக்கைகளையும்.ஆயிரந்திருவடிகளையும் உடைத்தானவராயும் அனந்தராயும் ஸ்ரீதர மாதவ அச்சுதானந்த கோவிந்த நரஹரி கேசவ நாராயணாதி திருநாமங்களை யுடைத்தான ஸ்வாமீ! என்றிப்படி பலவாறாக ஸ்தோத்திரஞ் செய்தார்.

வாரீர் நாரதரே இப்படி ஸ்தோத்திரஞ்செய்த மஹாநுபாவரான அத்ரி மஹாமுனிவரைப் பார்த்து அழகியசிங்கர் அருளிச் செய்கின்றார். அத்திரி முனிவரே! இதராளாலே செய்ய வரித்தான தபசையும் ஸ்தோத்திரத்தையுஞ் செய்தபடியாலுமக்குப் பிரசன்னனானேன். என்னைத் தியானித்து துதிக்கின்றவர்களுக்கு வேண்டின வரங்களையும் என் பதத்தையுங் கொடுப்பேனாகையால் உமக்கு வேண்டினதைக் கேளும் என்றனர். அத்ரியும், ஸ்வாமீ, கொழுப்பு,எலும்பு, ரக்தம், தண்ணீர், மல மூத்திராதிகளாலே கட்டப்பட்டு குசிதமாய் ஹோலயமா யிருக்கு மிந்த சரீரத்தைத் தரிக்கைக்குச் சக்தனல்லேனாகையால் முக்தியைக் கொடுத்தருள வேண்டும்.அன்றியில் அடியேனுடனிருக்குமிந்த ஜாலி மஹாருஷிக்கும் முக்தியைக் கிருபை செய்தருளவேண்டுமென்று விண்ணப்பம் செய்தனர்.
அழகியசிங்கர் அத்ரியை கடாக்ஷித்து அப்படியே கொடுக்கின்றே னென்றருளிச்செய்து உம் நிமித்தமாக இதராளான சகல ஜனங்களுக்கும் முக்தியைக் கொடுக்கத் துளசீ வனத்தாலும் சோலைகளாலும் ரம்யமாய்த் தாமரை முதலான புஷ்பங்களாலும் ஹம்சம் முதலான பக்ஷிகளாலும் நிறைந்து மனோஹரமா யிருக்கின்ற கைரவிணீ புஷ்கரிணி முதலான ஸரசுக்களாலும் பிரகாசிக்ன்றது உமதாஸ்ரமமான இந்த பிருந்தாவனத்திலே பாப ரஹிதர்களாகியும் பரிசுத்தர்களாசியும் மஹா நுபாவர்களாகியு மிருக்கின்ற இந்த மஹாருஷி களானவர்கள் என் பொருட்டுத் தீக்ஷணமான விருதத்தைக் கைக் கொண்டவர்களாய் வாசஞ்செய்கின்றார்கள். ஆகையால் இப்படி மனோஹரமான இந்தப் பிருந்தாவனத்திலேயே பிரம்மஸி கல்ப பரியந்தம் ஆத்மாக்களின் செளக்கியத்தின் பொருட்டு வசிக்கப் போகின்றேன். வாராய் அத்ரியே; ஸம்சாரமாகின்ற மருகாந்தாரத்தில் சஞ்சாரத்தாலே யுண்டான தாபத்திரையாதுராளாயுத் பகவதலாப க்கிலேசத்தாலே துக்கிதாளாயும் புத்திஹீனாளாய் மிருக்கின்ற மநுஷ்யாஹிதத்தின் பொருட்டு அனே கால மிங்கே வசிக்கின்றேன். வாராய் அத்ரியே! கர்மத்தாலே துக்கமுண்டாக்கும் அத்தால் குரோதமுண்டாகும், அத்தால் அக்யான் முண்டாகும். அத்தால் பாபங்களுண்டாகு மாகையால் சேதனர்கள் ஸம்சாரமாம் சமுத்திரத்திலே மூழ்கிப் பாபங்களைப் பெருக்கச் செய்து பரந்தாமனான என்னைக் காரண பூதனென்றறியாமல் நசித்து நரகத்திலே யழுந்துகின்றார்கள்.அனாதியான என்னை ஜகத்காரண பூதனென்றறியத் தக்க மஹாநுபாவர்கள் துர்லபாள். இந்த லோகத்தில் ஒருவனுக்குத் தருமத்தில் புத்தி யுண்டாய் அத்தாலே அர்த்தத்தை யடைந்து காமத்தின் பொருட்டு எத்தனிக்கின்றானே யல்லது மோக்ஷத்திலெத்தன முடையவனில்லை. ஓரனொருவன் ஜன்மாந்தர சஹஸர நற்றவங்களாலே யொரு ஜன்மத்தில் பாப ரஹிதனாகி என்னை யாஸ்ரயித்து ஞானியா யிருப்பனேயானால் அவனுக்குப் பாபங்களில்லை.ஒருவேளை பிரமாதத்தாலே இஞ்சித்து உண்டானாலும் அதுகளை நானே போக்கி அதோ லோகத்தில் பிரவேசியாமல் ரக்ஷிக்கின்றேன். என் பக்தாளுக்கு ஒரிடத்திலும் பயமில்லை.அவர்களைக் கண்டால் பிசாசங்கள் ராக்ஷசாள் அசுராள் முதலினோர்கள் பயப்படுவார்கள். என் பக்தர்களின் சேவை மாத்திரத்தினாலேயே எம தூதர்கள் பயமோஹிதர்களாய்க் கைகளைக் கூப்பிக் கொண்டு தூர விலகிப் போகின்றார்கள். சகலலோக ஹிதர்களாகியும் பூஜ்யர்களாகியும் மஹாத்மாக்களுமான என் பக்தர்களைச் ஸகலமான தேவ சமூஹங்கள் தண்டஞ் சமர்பபிக்கின்றார்கள். எந்தப் புருக்ஷனானவன் மூடனாய்க் கொணடு என் பக்தர்களை நிந்திக்கின்றானோ அவன் குலபந்துக்களோடே நரகத்தை யடைவான், என் பக்தன் குலீன்னானாலும் துஷ்குல ஜாதனானாலும் நல்ல ஸ்வபாவனானாலும் கெட்ட ஸ்வபாவனானாலும் ஆசாரமுள்ளவனானாலும் துராசாரனானாலும் அவனை நிந்திக்காலகாது. சகல வித்யாபாரிணனாகவும் ஸாங்க வேத வித்தாகவு மிருக்கின்ற புருஷனைப் பார்க்கிலும் குசலனான என்பக்தன் ஸ்ரேஷ்டன். எந்தப் புருஷாள் அர்த்த காம பராளாய் எந்தெந்த தேவர்களை உபாசிக்கின்றார்களோ அவர்களுக்கு நானே அந்தத் தேவர்களுள் அந்தரியாமியாயிருந்து அந்தந்தப் பலன்களைக் கொடுக்கிறேன். யாவரென்னைக் குறித்து அர்த்த காம விஷயங்களை ஆம் செயிக்கின்றார்களோ அவர்களுக்கு அதைக் கொடுக்கின்றேன். லோகத்தில் தர்மார்த்த காம மோக்ஷங்களென்று புருஷார்த்தங்கள் நான்கு விதங்களுண்டு. அவற்றுள் மோக்ஷத்திலிச்சை யுடையவன் மஹாத்மாவாய் விலக்ஷணனாவன்,இப்படிப்பட்ட மஹாத்மியமுடைத்தான மஹாநுபாவன் என் பக்தன் எனக்கு மிகவும் இஷ்டனாகவும் புரமேகாந்தியாகவும் பூஜிக்கத் தக்கவனாகவும் லோகங்களுக்கெல்லாஞ் ஸேவிக்கத் தகுந்தவனாகவுமாவான்- வாரீர் அத்ரியேநீ ர் இந்திரிய ஸமூகஹங்களை ஜயித்து இதர விஷங்களில் ஆசா ரஹிதராய் என் விஷயத்தில் பரிபூர்ணமான பக்தியைச் செய்தீராகையால் உமது விஷயத்தில் அனுக்கிரஹமுள்ள நான் உமக்கும் உமது சம்பந்த சம்பந்திகளுக்கும் மோக்ஷத்தைக் கொடுக்கிறேன். பரிசுத்தமாகவும் சாசுவதமாகவு மிருக்கும் பரம பதத்தைச் சீக்கிரமாக அடையக்கடவீர் என்றருளிச்செய்தனர் .லக்ஷ்மீ நரசிம்ம மூர்த்தியான அழகிய சிங்கரின் கடாக்ஷத்தைப் பெற்று அத்ரி மஹா ருஷியும் ஜாலி மஹாருஷியுடனே சர்ப்பமானது ஜீர்ணமான சர்மத்தை விடுமாப் போலே சரீரத்தை விட்டார்.இப்படி தேஹத்தைப் பரிஹரித்தவர்களிருவரும் கோடி சூர்யப்ரகாசமான விமானத்திலே மஹருஷிகள் பார்த்துப் பூஜிக்க வேறு லோகாந்தரங்களிலுள்ள தேவர்கள் கொண்டாட பால சூர்யளைப் போலே அதி சோபா சம்பன்னராய்ப் பரமபதத்தை யடைந்தார்கள் அன்று முதல் லோக குருவான ஸ்ரீநரசிம்ஹமூர்த்தி யானவர் மனோஹரமான ப்ருந்தாவனத்திலே சகல தேவர்கள் முதலான லீலாவிபூதியிலுள்ள சேதனர்கள் பூஜித்து உஜ்ஜீவிக்கும் பொருட்டு அர்ச்சாரூபமாக நிர்ஹேதுகக் கிருபையினாலே தெள்ளியசிங்கர் சேவை சாதிக்கின்றார். வாரீர்நாரதரே! ஆகையால் இந்த வைபவத்தைக் கேட்கின்றவர்கள் சர்வாபீஷ்டங்களையு மடைந்து மோக்ஷத்தையும் பெறுவார்களென்று நாரதரை பார்த்துச் சிவபிரான் சொல்லிப் பின்னுஞ் சொல்லுகின்றார்.

—————

ஸ்ரீராமபிரான்
பரதனும் தம்பித்துருக்கனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன்பகலும் துதிசெய்யநின்ற இராவணாந்தகனை எம்மானை
குரவமே கமழும்குளிர் பொழிலுடு குயிலொடு மயில்கள் நின்றால்
இரவியின் கதிர்கள் நுழைதல்செய்தறியாத் திருவல்லிக் கேணிக் கண்டேனே.

சக்கரவர்த்தி திருமகன் (ஸ்ரீராமர்,) பரதாழ்வான், சத்ருக்னாழ்வான் லக்ஷமணர், மைதிலி புஷ்பக விகாநம் தெற்கே திருமுக மண்டலம், நின்ற திருக் கோலம் சசபதர் குமாரரான மதுமான் என்னும் மஹாரிஷிக்கு ப்ரத்யக்ஷம்.
சக்ரவர்த்தி திருமகன் மதுமானுக்கு சேவைசாதித்தல்
.
வாரீர் நாரதரே! முன் திரேதா யுகத்திலே ஸ்ரீயபதியானவர் ராக்ஷஸ் வதார்த்தமாக இட்சுவாகு வம்சத்திலே ஸ்ரீராமரென்று நாமமுடையவராய் சஹோதராளுடன் மநுஷ்ய ரூபியா யவதரித்து சீதாபிராட்டியாலே ராவணாதி ராக்ஷசாளனைவரையும் சம்ஹரித்து சீதாபிராட்டியை யடைந்து தர்மமாக வெகுகாலம் ராஜ்ய பரிபலானஞ்செய்து பிராதாக்களுடனே தன்னுடை ஜோதிக்கு எழுந்தருளினார்.ஸ்ரீராமபிரானைக் குறித்து பாண்டிய தேசத்திலுள்ள பாண்ட பர்வதத்தில் மஹா தேஜஸ்வியான ஸஸபதரென்பவர் தபசு செய்து கொண்டிருந்தார். தேவேந்திரன் முதலான தேவர்களால் அநுப்பப்பிட்ட ஹேலையென்னும் அப்சர ஸ்திரியானவள் ஸஸபதரை கானத்தினாலே மயக்கி ஒர் புத்திரனை ஈன்று ஓர்குஹையிலே விட்டுப் போனாள். அந்த ஆண் சிசுவும் தெய்வீகமாகத் தேன்தன் வாயில் வந்துவிழ அத்தால் ஜீவித்திருந்த அந்த சிசுவை அங்குள்ள,ருஷிகள் கண்டனர். மதுவினால் ஜீவிந்திருந்த குழந்தைக்கு

மதுமானென்று திருநாமஞ்சாற்றி வளர்த்து வேதவேதாந்த பாரங்கதனாகச் செய்தனர். அதனாலே மதுமானும் மஹாக்யானாதிகனாக விருக்கையில் பார்க்கவரை யொத்த கார்க்கே யரானவர் மதுமானிருக்கும் அந்த வனத்திலே வரக் கண்டனர். மதுமானும் அவரை பூஜித்து நீர் யாரென்று வினவ அவரும் என்பேர் கார்க்கேயரென்று சொல்லுவர்கள்.என் குரு அனக மஹாமுனிவர்.நான் வால்மீகர் ஆஸ்ரமத்திலிருந்து அவர் சொன்ன ஸ்ரீராமாயணத்தை அகஸ்தியருக்கு விண்ணப்பஞ் செய்யப்போகின்றேனென்று சாங்கேர்பாங்கமாகச் சொல்லிப் போயினர். அது கேட்ட மதுமானும் சக்ரவர்த்தித் திருமகனார் வைபவங்களி வீடுபட்டு அத் தரும ஸ்வரூபியான சக்ரவர்த்தித் திருமகனையும், அவர் சஹோதரர்களான இளயபெருமாள், ஸ்ரீபரதாழ்வான், சத்துருகனாழ்வானையும் சீதாபிராட்டியையுங் கண்டு சேவிக்கும் பாக்கியமும்,மோக்ஷமும், நமக்கு உண்டாகப் போகின்றதா வென்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.கார்க்கேய மஹாருஷி சொல்லிப் போன அன்றிராத்திரியே ஸ்ரீயபதியும் கார்ககேயரைப் போல் ஸ்வப்னத்தில் சேவை சாதித்து நீர் தக்ஷிணத்தில் மயிலை மாநகருக்குச் சமீத்திலுள்ள பிருந்தாவனத்திற்குப் போனால், சௌக்கிய முண்டாகு மென்றருளிச் செய்தனர்.மதுமானும் விழித்துப் பார்த்துச் சற்று நேரம் யோசித்து ஸ்வப்னஞ் சாதித்தவர் விஷ்ணுவே யென்று நிச்சையித்துப் பிராத காலத்திலெழுந்திருந்து அநுஷ்டானங்களை முடித்துப் பரியோர்கள் அநுமதி பெற்று, இராப்பகலாக கடந்துவந்து, திவ்யமான மயூரநகர பிருந்தாவனத்தை யடைந்து, கைரவிணி என்னும் புஷ்கரிணியிலே தீர்த்தமாடி அங்குள்ள பெரியோர்களையும் பகவானையுந் தண்டஞ் சமர்ப்பித்து அஞ்சலி ஹஸ்தனாக நின்று கொண்டு சக்ரவர்த்தித் திருமகனை நோக்கி,அகில ஜகத் ஸ்வாமின், வீலாமாநுஷ விக்ரஹ ஸ்வரூபா, ரக்ஷச குலகாலா, தர்ம ஸம்ஸ்தாபன ஸ்வரூபா ஆஸ்ரிதவாத் ஸல்யைக ஜலதே, அபராவார கருணாம்புதே, பக்தபராதீனா, நிகில ஜகத் காரண பூதா, அகிலஹேய ப்ரத்யனீகா, ஆனந்த கல்யாண குண கண ஸ்வரூபா, ஸரணாகத வத்சலா, திருவயோத்தியில் ஒருசாதனமு மின்றிக்கே வாழும் புல்லெறும்பாதி சராசரங்களையும் நிர்ஹேதுகமாக வைகுந்தத்தேற்றி நித்யைஸ்வர்யத்தைக் கொடுத்த கிருபாநிதியே ராவணாதிகளை வதித்து பிரம்ஹாவான ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கும், பரம சிவனான ஆஞ்சனேயரென்னுந் திருவடிக்கும் லீலாவிபூதியிலே சிலகாலம் வாழுமைஸ்வரியத்தைப் பிரதானஞ் செய்த தயாநிதியே, என்றிப்படி பலவாறாக ஸ்தோத்திரஞ்செய்து நவரத்ன கசிதமான கிரீடத்தைப் பிரகாசிப்பிக்கும் பரஞ்சோதி ஸ்வரூபமான திருமுகமண்டலத்தையும், செந்தாமரை போன்ற திரு நயனங்களையும், சங்கம் போன்ற திருக்கழுத்தையும், திரண்டுருண்டு நீண்டுமிருக்கும் புஜங்களையும், தேஜோ மயமான பீதாம்பரத்தையும்,மகர குண்டல கர்ண பூஷணங்களாலும் விசாலமான திருமார்பிலணிந்த வைஜயந்தி வனமாலிகாதிக் கிரைவேய முக்தா ஹாரங்களாலும், அலங்கிருதமான திவ்ய திருமேனியையும், செந்தாமரையையொத்த திருவடிகளையும், அவரருகிலே வசிக்கும் பூஜ்யையான சீதாபிராட்டிபையும்,கைங்கர்ய ஸ்ரீயையடைந்த இளயபெருமாள், பரதாழ்வான், ஸ்ரீசத்துருக்னாழ்வான் முதலான்வர்களையுஞ் சேவித்தனர். ஆனந்த ஸமுத்திரமாகின்ற அலைகளிலே மூழ்கிக் கொண்டிருக்குகும் மஹாநுபாவரான மதுமானை பரம தயாளுவான சக்ரவர்த்தித் திருமகன் கடாக்ஷித்து, வாராய் பக்தியிலே சிறந்த மதுமானே! உமக்கு வேண்டின அபீஷ்டங்களைக் கேட்டுக் கொள் என்றருளிச் செய்தார். மதுமானும் ஸ்வாமீ! அடியேன் தேவரீரை ஆராதிக்கும்படி சேவை சாதித்தருள வேண்டுமென்று விண்ணப்பஞ் செய்ய, சக்ரவர்த்தித் திருமகனாரும் அங்கீகரித்து அந்தப் பிருந்தாவனத்திலே லோக ஹிதத்தின் பொருட்டுக் கிருபையினாலே வாசஞ்செய்து வெகு காலம் மதுமானாலாரதிக்கும்படியாக வெழுந்தருளியிருந்து மதுமானுக்குத் தேஹாவஸான காலத்திலே பரமபதத்தையுங்கொடுத்து அந்த ஸ்தலத்திலே இப்போதும் அனேக சேதனாளாலே பிரார்த்திக்கும் படியான ஸர்வாபீஷ்டங்களையுங் கொடுத்துக் கொண்டு சேவை சாதிக்கின்றாரென்று பரம சிவன் விளம்பினார்.

———————

ஸ்ரீ வரதராஜப்பெருமாள்
மீனமர்பொய்கை நாள்மலர்கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த
கானமர்வேழம் கையெடுத்தலறக் கராஅதன் காலினைக்கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாடமாமயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே.


தேவப்பெருமாள் கருடாரூடர், சேஷவிமாநம். கிழக்கேதிருமுகமண்டலம், ஸப்தரோமாவுக்கு ப்ரத்யக்ஷம்.-ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஸப்தரோமாவுக்கு மோக்ஷமளித்தல்
வாரீர்நாரதரே! அனந்த பல புஷ்ப விருக்ஷபக்ஷிமிருகாதிகளாலும், தடாகவாவீ கூபாதிகளாலுஞ் சூழ்ந்து ரமணீயமாக விருந்துள்ள அந்தப் பிருந்தாவனத்திலே வேதவேதாந்த பாரங்கதராய் பகவத் தியான தபோ ஸ்ரேஷ்டரான சதரோமாவென்னும் பிரசித்தரான ஒருமஹாரிஷி இருந்தனர்.அவர் பகவந் நியமனத்தாலே கருடாரூடரான ஸ்ரீவரதனை சாஸ்திரோக்த ப்ரகாரம் ஏறியருளச் செய்து வைகானஸ விதியினாலே ஸ்தாபித்து வெகுகாலம் ஆராதித்துவந்தனர். பிறகு பகவானான ஸ்ரீயபதியின் கடாக்ஷத்தைப் பெற்றுப் ப்ரமபதத்தை யடைந்தார். அன்று முதல் இன்றளவாகத் தம்மைச் ஸேவிக்கின்ற சேதனர்களுக்கு ஏதேதபிஷ்டமோ அவைகளை எல்லாங் கொடுத்துக் கொண்டு கஜேந்திர வரதன் என்று பிரசன்னராக வெழுந்தருளி இருக்கின்றார்.
வாரீர் நாரதரே!சோலைகளாலும் திருநந்தவன துள்சீ பிருந்தாவனங்களாலுந் தடாகங்களாலும் ரிஷிகளாலுஞ் சூழ்ந்து மனோ ஹரமாகவும் ரமஹரமாகவும் ரமணீயமாகவும் பாவனமாகவும் போக்கியமாகவும் வாசஞ்செய்வதற்கு யோக்கியமாகவுமிருந்துள்ள மயிலை திருஅல்லிக்கேணி அன்று பிரசித்தமான அந்த பிருந்தா வனத்திலே பரமபதநாதனாகும் திருவேங்கடத்தானான ஸ்ரீநிவாசன் வேங்கடகிருஷ்ணனென்னும் பார்த்தசாரதித் திருக்கோலமாகத் திருக் கைரவிணிக் கரையிலே சேவை சாதித்தருளும் வைபவத்தைக் கேளும் என்று நீலகண்டர் சொல்லுகிறார்.

—————-

பார்த்த சாரதிப் பெருமாள்,ருக்மணி பிராட்டி,பலராமர், ஸாத்யகி அநிருத்தர், பிரத்யும்நர், ஆநந்த விமாநம், கிழக்கே திருமுக மண்டலம்,நின்ற திருக்கோலம் வ்யாஸ மஹரிஷியினால் ப்ரதிஷ்டிக்கப்பட்டு ஆத்ரேய மஹரிஷியினால் ஆராதிக்கப்பட்டவர். ஸு மதி யென்னும் ராஜாவுக்கும் தொண்டைமான் சக்கரவர்த்திக்கும் பரத்யக்ஷம்.இந்திர தீர்த்தம், ஸோமதீர்த்தம், மீந்தீர்த்தம், அக்நிதீர்த்தம், விஷ்ணுதீர்த்தம், இவ் வைந்து தீர்த்தங்களால் சூழப்பட்ட கைரவணியென்னும் ஸரஸ்ஸ -பருகு,அத்ரி, மரீசி,மார்க்கண்டேயர், ஸுமதி சப்தரேமார ஜாலியென்னும் ஏழு மஹரிஷிகள் தவம் புரிந்த லிடம். பேயாழ்வார்,திருமழிசையாழ்வார் திருமங்கையாழ்வர்ர் மங்களாசாஸநம்.

ஸ்ரீபார்த்த சாரதிப் பெருமாள் சுமதி மஹாராஜனுக்கு பிரத்யக்ஷமாதல் வாரீர் நாரத்ரே! இப்படிக்கெல்லாம் அதிக மஹத்மியத்தைக் கொண்டிருக்குங் கைரவிணி தீரமான அந்த பிருந்தாவனத்தில் விஷ்ணு பக்தியிற் சிறந்தவராய் மஹா தபஸ்வியாயிருக்கும் சுமதி என்னும் ஒரு மஹாருஷி யானவர் கைரவிணி புஷ்கரணிக் கரையில் வெகுகாலம் தபசு செய்து வாசஞ் செய்து கொண்டிருந்தார். இப்படி இருக்கையில், தொண்ட மண்டலத்தில் மிகவும் ஞானியாகியும் மன்மதனைப்போல் சகல லக்ஷணங்களுடன் கூடினவராகியும்,சகல சாஸ்திரங்களை யறிந்தவராகியும், பிரஜா பரிபாலனத்தில் ஆசத்தியுடைய வராகியும், மங்களமான வார்த்தைகளைச் சொல்பவாரகியும் தைர்யசாலியாகியும் மண்டலாதிபதி யாகியும் அகண்டைஸ்வர்யத்தையும் பகவத் கைங்கர்யத்தையும் உடைத்தான வருமான சுமதி என்று பேரையுடைய ஒரு மஹாராஜனானவர் நீதியாக அரசாக்ஷிசெய்து கொண்டிருந்தார். அவர் முராசுர சம்ஹாரகரான ஸ்ரீ ய பதியினிடத்தில் நிச்சலமான பக்தியை வஹித்து ஆராதித்துக் கொண்டிருக்கையில், ஒருகால விஸேஷத்தில் அனேக விருக்ஷபக்ஷி மிருகங்களாலும் அனேக தீர்த்தங்கள் மலையருவிகள் குகைளாலும் நானாவர்ணங்களான கரிகாதிதாதுக்களென்னும் நற்சங்கப்பொன், அரிதாரப்பொடிகளுடன் கூடின உன்னதங்களான சிகரங்களாலும் ப்ரகாசித்துப் பிரம்ஹாதி தேவர்களும் பகவத் பக்த சீலாளான அனேக ருஷிகளும் தபசு செய்து சேவிக்கும் நாசரஹிதமான வேங்கடாசலத்தை யடைந்தார். ஆங்கு தீர்த்தங்களுக்கெல்லாம் ராஜாவாய் பாவனமான ஸ்வாமிபுஷ்கரணியை யடைந்து தீர்த்தமாடி நித்யா நுஷ்டானங்களை முடித்துக்கொண்டு,பிரதக்ஷணமாக வந்து, கோடி சூர்யர்களைப் போலே பிரகாசிக்கும் ஆனந்த நிலய விமானத்தைத் தண்டஞ்சமர்ப்பித்துச் சந்நிதியினுள்ளே பிரவேசித்து ஸ்ரீ அலர்மேல் மங்கை நாயகியுடன் சேவைசாதித்தருளும் சதுர்ப்புஜ சங்க சக்ர மகர குண்டல கிரீட வைஜயந்தி வனமாலிகாகிரைவேய முக்தாஹா ராதி திவ்யாயுத திவ்ய பூஷண திவ்யமங்கள விக்ரஹமான திருவேங்கடத்தானைக் கண்டு சஷ்டாங்கமாகத் தண்டஞ்சமர்ப்பித்துப் பலவாறாக ஸ்தோத்திரஞ் செய்து ஆனந்த பரவசத்தை யடைந்து தீர்த்தப் பிரசாதம் முதலான சகல வரிசைகளையும் பெற்று க்ஷேத்திரக்யரான பூவராஹப் பெருமாளையும் சேவித்துக் கிருதார்த்தனாகி ஸ்ரீநிவாசனான ஸ்ரீயபதியின் கடாக்ஷத்தைப் பெற்று இப்படி நித்யமாகச் சேவித்துக் கொண்டு அனேகவித கைங்கர்யங்களைச் செய்துகொண்டு வந்தார். ஒருநாள் திருவேங்கட முடையானைத் தண்டஞ்சமர்ப்பித்து சாக்ஷத் பரப்பிரம்ஹ மூர்த்தியான இந்த ஸ்ரீநிவாசன் தயா பரவசராய்ப் பாரத யுத்தத்தில் சுலபராய்க் கொண்டு அர்ச்சுனனுக்குச் சாரத்யாஞ்செய்த சின்னங்களுடனே நமக்குச் சேவைசாதித்தருளி யாட்கொள்வரோவென்று தியானித்துக் கொண்டிருந்தான் ஒருபோது ஸர்வாந்தரியாமிதான திருவேங்கடத்தான் அவன் முன் தோன்றியவராய், சுமதியே! நீ செய்த பக்தியாலும் கைங்கர்யங்களாலும் தியானத்தாலும் மிகவுஞ்சந்தோஷத்தை யடைத்தேன்.நீ அர்த்தித்த பார்த்தசரரதியான திருக்கோலத்தைப் பிரசித்தமான மயிலை பிருந்தாவனத்திற்கு வந்தால் ஆங்கு கைரவிணி புஷ்கரிணிக் கரையிலே நான் சேவை சாதிக்கின்றேனென் றருளிச்செய்தார். பிறகு ராஜனுக்கு விடை சாதித்தருளி வியாஸரைக் கடாக்ஷித்து நியமிக்க அவரும் மஹாபாக்கியமென்றும் ஸ்ரீய பதியின் குணா நுபவங்களை யநுபவித்து கொண்டிருந்தார். வியாசர் சிஷ்யரான ஆத்ரேயரானவர் வியாசரைத் தண்டஞ் சமர்ப்பித்து ஸ்வாமீ!பூர்வம் பிரம்ம ருத்திரேந்திராதி தேவர்கள் அசுராளாலே நலிவுபட்டு ஷீராப்திக் கரையை யடைந்து ஸ்ரீமந் நாராயணனைச் சரணாகதி செய்தார்களன்றோ? பகவான் அப்போது அவர்களுக்கு அபய ப்ரதானஞ்செய்து கண்ணனாகத் திருவவதரித்துக் கம்ஸாதிகளைச் ஸம்ஹரித்துப் பாரதத்தை முடித்து ஸ்வஸ்தானத்தை யடைந்தாரே, இனி கலி தோஷத்தாலே எப்படியாகுமோ வென்று சிந்தித்துக் கொண்டிருந்தார். சிஷ்யரான ஆத்ரேயரை வியாசர் கடாக்ஷித்துக் கலிதர்மம் மாறாடி நடந்தபோதினும் அதைப்பரிஹரிக்கும் உபாயத்தைச் சொல்லுகின்றேன் கேள் என்று சொல்லத் தொடங்கினார், என்னவென்றால் இதற்குத் தக்ஷிண திக்கிலே பிரசித்தியாய் பனோக்யமான பிருந்தாவன மொன்றிருக்கின்றது வாசஞ்செய்கின்றார்கள் . அன்றியில் அல்லித்தாமரை கருநெய்தல் முதலான புஷ்பங்களாலும் ஹம்ஸகாரண்டவ சக்ரவாகங்கள் முதலான பக்ஷிகளாலும் அலங்கிருதமா யிருந்துள்ள கைரவிணி என்னும் பிரசித்தமான சரசின் கரையில் ஸ்ரீயபதிக்கு இருப்பிடமாகிய துளசிவனமென்னும் பிருந்தாவனத்தில் சுமதி என்னும் நாமமுடையவோர் முநி சிரேஷ்டர் வசிக்கின்றார். அவருடன் நீரும் வாசஞ் செய்து கொண்டிருந்தாலுமக்குச் சிரேயசு உண்டாகுமென்று ஆத்ரேயருக்கு நியமித்து விட்டு வியாசரும் பார்த்தசாரதியை சங்கம் வலக்கையிலும் தான முத்திரை இடக்கையிலுமாக பிரமாணப்படி யமைத்து அர்ச்சாவதார விக்ரஹ ஸ்வருபமாக ஏறி யருளச்செய்து, அதில் சாஸ்திரோக்தப் பிரகாரம் பரமபதநாதனான ஸ்ரீநிவாஸன ஆவாஹனஞ்செய்து ஸாஸ்திர விதியாலாராதித்துப் பிறகு ஆத்ரேயருக்குக் காட்டிக் கொடுத்து நீர் சுமதி என்னும் முநி சிரேஷ்டரிடஞ்சென்று கைரவிணி மேலைக் கரையிலுள்ள துளசி வனத்திலே பார்த்தசாரதி திவ்யமங்கள விக்ரஹத்தைச் ,ஹாஸ்திரோக்தப் பிரகாரம் பிரதிஷ்டை செய்து வைகானச விதியாலே ஆராதித்துக் கொண்டிரும். கலி தோஷமும் நீங்கும்.வேங்கடகிருஷ்ண னென்னும் இந்தப் பார்த்தசாரதி கடாக்ஷத்தாலே சகலாத்துமாக்களும் உஜ்ஜீவிப்பார்க ளென்றருளிச் செய்தார். ஆத்ரேய முனிவரும் வியாஸ பகவானைச் சாஷ்டாங்கமாகத் தண்டஞ்சமர்ப்பித்துப் பார்த்தசாரதி திவ்ய மங்கள விக்ரஹத்தைச் சிரசாகவஹித்து எழுந்தருளச்செய்து கொண்டு பிருந்தாவனத்திலுள்ள சுமதி என்னும் முநிசிரேஷ்டரிடம் வந்து சேர்ந்தார். அங்கு அவர் சஹாயத்தால் வியாஸர் நியமித்தபடி கைரவிணி மேலைக்கரையில் கிழக்கே திருமுகமண்டலமாகப் பார்த்தசாரதி என்னும் வேங்கடகிருஷ்ணப் பெருமாளைச் சாஸ்திரோக்தமாகப் பிரதிஷ்டை செய்து தாம் ஏறியருளச்செய்த, ருக்மணி, பலராமர் சாத்துவீகி அநிருத்தான்,பிரத்யும்னான், இவர்களையும் சாஸ்திர வத்தாய்ப் பிரதிஷ்ட்டை செய்து வைகானஸ விதியாலே ஆராதித்துக் கொண்டிருந்து ஸ்ரீய: பதியின் கடாக்ஷத்தை யடைந்தார். இப்படியிருக்கத் திருவேங்கடத்தானாலே நியமனம் பெற்ற தொண்ட மண்டலத்தரகனான சுமதி என்னும் ராஜனும் தன் பட்டணத்தையடைந்து சில நாளிருந்து அங்கு நின்றும் புறப்பட்டுத் தென்தேசத்திலுள்ள மயூர பிருந்தாவனத்தை யடைந்து ஸ்ரமஹரமும் பாவனமுமான கைரவிணி புஷ்கரிணியிலே தீர்த்தமாடிச் சகல தாபங்களுமற்றுத் திருவேங்கடத்தான் தனக்குக் கிருபையாலே சேவை சாதித்தருளும் பார்த்தசாரதி திருக் கோலமான வேங்கடகிருஷ்ணப் பெருமாளைக் கண்களாரக் கண்டு வாயார வாழ்த்தி ஆனந்த பாஷ்ப யுக்தனாகிச் ஸாஷ்டாங்க தண்டஞ்சமர்ப்பித்துத் திருப்தி யடைந்து, அனந்தரம் க்ஷேத்திரக்யையான வேதவல்லித் தாயாரையும் அவள் நாயகனான மந்தாதனென்னும் என்னையாளுடை யப்பனையும், தெள்ளிய சிங்கரையும் சக்ரவர்த்தித் திருமகனாரையும், கஜேந்திர வரதராஜப் பெருமாளையும் தண்டஞ்சமர்ப்பித்து தீர்த்தப் பிரசாதம் முதலான் வரிசைகளையும் பெற்று விமான கோபுரப் பிராகார மண்டபாதி சந்நிதி கைங்கர்யங்களைச் செய்து அனேகமான திருவாபரணங்களைச் சமர்ப்பித்து ஐந்துப்பிரகாரங்களாகச் சேவை சாதித்தருளும் பெருமாள்களுக்கு திரிகால ஆராதனங்கள் நடக்கும்படியாகச் செய்வித்து ததனந்தரம் பார்த்தசாரதிக்குச் சுபமான ஆவிர்ப்பாவத்தை யுடைத்தான சைத்திர மாதத்திலே பிரம்மோற்சவத்தைச் செய்வித்து ஆனந்தித்துப் பார்த்தசாரதியான வேங்கட கிருஷ்ண ஸ்வாமியின் அநுக்ரஹத்தைப் பெற்றுத் தன் பட்டணத்தை யடைந்து திருவேங்கடத்தானைச் சர்வ காலமும் ஆராதித்துக் கொண்டிருந்தான்.இந்த வைபவங்களை வாசிக்கின்றவர்கள், கேட்கின்றவர்கள்.இஹபர சம்பத்தை யடைந்து வாழ்வார்களென்று நாரதரைப் பார்த்து சிவபிரான் சொன்னார்.

————-

கைரவிணி தீர்த்தமஹிமை.
வாரீர் நாரதரே! அந்த பிருந்தாவனத்திற்கும் அல்லித் தாமரை ஹம்ஸாதிகளால் அலங்கிருதமான கைரவிணி தீர்த்தத்திற்கும்,காசியும் கங்கையும் சமமாக மாட்டாது. ஜன்ம ஸஹஸ்ரங்களிலே கங்கையில் ஸ்நானஞ் செய்கின்றதைப் பார்க்கிலும் ஒருகால் கைரவிணி தீர்த்தத்தில் ஸ்நானஞ் செய்கை விசேஷம். அதற்கு சந்தேஹமில்லை.கங்கையில் ஸ்நானஞ் செய்கின்றவர்கள் புண்ணிய பலன்களை யடைந்து புண்ணியம் ஷீணமானால் பிறவி சாகரத்தை யடைவார்கள்; கைரவிணியில் தீர்தமாடினால் சித்தமாகப் பாபங்களெல்லாம் போய்ப் பரிசுத்தர்களாகி மோக்ஷத்தையடைவார்கள். அதன் வைபவத்தை யார் தான் சொல்லமாட்டுவர்கள்
வாரீர் நாரதரே !வியாக்ர ஜன்மாவானவர் ஸார்த்தூலரை பார்த்துச் சொல்லுகின்றார்.ஒருகால் விசுவாவசுவென்னுந் கந்தருவன் ஆகாச மார்க்கத்தில் சஞ்சரித்துக் கொண்டு வருகையில் ஹிமோத் கிரியின் மூன்று சிகரங்களுள் மேற்கு பாகத்திலுள்ள ஓர் சிகரத்திலிருக்கும் அரஜஸ் என்னுந் தீர்த்தக்கரையில் தபசு செய்து கொண்டிருந்த, அத்ரி புத்ரரான துர்வாசர் மீது அந்தக் கந்தருவன் நிழல் படக் கண்ட துர்வாசரும் அசரீரியாய் போகக்கடவா யென்று சபித்தனர். அவனும் சாபத்தைப் பெற்றுக் குபேரனை யடைய அவன் சிவபிரானை நோக்கித் தபசு செய்தால் சாப விமோசனமாகுமென்று சொல்லக் கேட்டு என்னை வந்தடைந்து என்னாலே கைரவிணி தீர்த்தத்திலே ஸ்நானஞ்செய்து சாப விமோசனமாகி எதா பிரகாரந் தேஹத்தை யடைந்து சுகித்திருந்தான். கார்த்திகை மாதக் கிருஷ்ண பக்ஷத்து அஷ்டமி திதியில் யாவர் கைரவிணியில் சிராத்தஞ் செய்கின்றார்களோ அவர்களின் பிதுருக்கள் திருப்தி யடைந்து மோக்ஷத்தை யடைவார்கள். அந்த கைரவிணி புஷ்கரிணிக்கு உத்தர பூர்வாதிக்கில் இந்திர தீர்த்த மொன்றுண்டு. அதில் ஸ்நானஞ்செய்து அசுவதானஞ் செய்யவேண்டும் கைரவிணிக்குத் தக்ஷிணபாகத்தில் சோமதீர்த்தமொன்றுண்டு. அதில் ஸ்நானஞ் செய்து பால் தயிர் வெண்ணெய் பட்டு வஸதிரம் தானஞ் செய்ய வேண்டும். கைர விணிக்குத் தென்மேற்கு திக்கில் மீன தீர்த்தமொன்றுண்டு அதில் ஸ்நானஞ்செய்து முத்து,பவளம்,தென், நெய்தானஞ்செய்ய வேண்டும். கைரவிணிக்கு வடமேற்கு திக்கில் அக்னி தீர்ததமொன்றுண்டு, அதில் ஸ்நானஞ்செய்து அஜதானஞ்செய்ய வேண்டும் கைரவிணிக்கு உத்தர திக்கில் விஷ்ணுதீர்த்தமொன்றுண்டு, அதில் ஸ்நானஞ்செய்து தானங்களெல்லாஞ் செய்யலாம்.இப்படிக் கைரணியைச் சூழ்ந்துள்ள இந்த ஐந்து தீர்த்தங்களும் இஷ்ட காம்யங்களை எல்லாங்கொடுக்கும், உத்தமமான கைரவிணியானது சர்வாபீஷ்டங்களையுங் கொடுத்து மோக்ஷத்தையுங் கொடுக்கும். பூர்வம் கண்ணுவர் புத்திரரான முத்கலரென்பவர் கோகாண ஷேத்திரத்தில் தபசுசெய்து கொண்டிருக்கையில் கோஹிலர் முதலான ஐந்து ருஷிகள் வரக்கண்ட முத்கலர் நீங்களெங்கே போகின்றீர்களென்று வினவ, நாங்கள் தபோ சித்திக்கு யோக்கிமாகி ரமணியமான பிருந்தாவனத்திற்குப் போகின்றோமென்ன ஆகில் நானுங் கூடவருகின்றேனென்று எல்லோருஞ் சேர்ந்து கைரவிணி தீரத்திலுள்ள பிருந்தாவனத்தை யடைந்து கைரவிணியில் ஸ்நானஞ்செய்து தபசு செய்து கொண்டிருந்தார்கள். இப்படியிருக்க கைரவிணி புஷ்கரணிக் கரையிலே தபசு செய்து கொண்டிருக்கும் முத்கலரானவர் அந்தக் கைரவிணியிலிருக்கும் அனேக மத்சியங்களின் ஆரவார லீலா வினோதங்களாலே தபோ விக்னமாகின்ற தென்று அந்த மத்பியங்களுக்கு நாதனான ஒருபெரிய மீனைப் பார்த்து உங்கள் வம்சங்களிலொன்றாகிலும் இந்த புஷ்கரணியிலிராமல் உங்களுக்குத் தகுதியான இடத்திற்கு நாளை சூர்யோதயத்திற்குள்ளாகப் போய்ச் சேருங்கோ ளென்று சொல்லித் தபசுசெய்து கொண்டிருந்தார். அனந்தரம் அவராக்யைப்படியே மத்ஸ்யங்கள் ளெல்லாம் மறுநாள் சூர்யோதயத்திற்குள்ளாகப் போய்விட்டன.ஆகையாலிது பர்பந்தமும் அந்தக் கைரவிணி புஷ்கரணியிலொரு மீனாகிலுங்கிடையாது. பிரமதேவர் கைரவிணி புஷ்கரணியின் மஹாத்மியத்தை வசிஷ்டருக்குச் சொல்லி அபஹரமமதுரிதானி பிரதி ஸேத்வம் நிருபமாம்ய ஸோலக்ஷ்மீம் பகவதி கைரவிணி த்வாம் ப்ரணமாமி ஜநார்த்தன ப்ரியேஸ் சுபகே

ஸ்ரீமந் நாராயணனுக்கு அர்க்கிய பாத்யாதி யுபசாரங்களுக்கு அர்ஹையாய் அத்தால் ப்ரியையாய்ப் பாக்யவதியா இருக்கின்ற கைரவிணியே உன்னை தண்டஞ் சமர்ப்பிக்கினறேன் என் சகல பாபங்களையும் அபஹரி,உபமான ரஹிதையான யசோ லக்ஷ்மியை உண்டாக்கு, என்னும் மந்திரத்தையும் உபதேசித்தார். இந்தப் பிரகாரம் பிரஹ்மாண்ட புராணத்தில் மஹேஸ்வர நாரத சம்வாதத்தில் திரு அல்லிக்கேணி என்னும் பிருந்தாவன மஹாத்மியத்தில் ஐந்து மூர்த்திகளின் வைபவங்களையும் அவைகளில் திருவேங்கடத்தானே பார்த்தசாரதி என்னும் வேங்டகிருஷ்ணனாகக் சேவை சாதித்தருளும் பிரகாரத்தையும் கேட்கின்றவர்கள் சர்வாபீஷ்டங்களை யுமடைந்து தேஹாவசான காலத்திலே பரம பதத்தையும் பெற்று வாழ்வார்சுள்
திருவல்லிக்கேணி மஹாத்மியம் முற்றிற்று

—————————————————————————-———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நூற்று எட்டு திருப்பதி அகவல்–

September 20, 2025

உலகுய ரரங்க முறையூர்‌ தஞசை
அன்பில் கரம்பனூராதனூர் வெள்ளறை
கண்டியூ ரழுந்தூர் கவித்தலம் புள்ளம்‌
பூதங்குடி சிறுபுலியூர் குடந்தை
திருவிண்ணகரந் திருத் தலைச் சங்க
நாண்மதியம் திருப்பேர் நகர் திருச் சேறை
வெள்ளியங்குடி யரிமேய விண்ணகரம்‌
வண் புருடோத்தம மாலி நறையூர்‌
சித்ரகூடஞ் சீராம விண்ணகரம்‌
காவளம்பாடி கண்ண மங்கை
நந்தி புர விண்ணகர் நாகை யிந்தளூர்
கண்ணங்குடி திருக் கண்ண புர மணி
மாடக் கோயில் வைகுந்த விண்ணகரம்‌
கூடலூர் வெள்ளக்குள மணிக்கூடம்‌
தேவனார் தொகை திருத் தெற்றி யம்பலம்‌
செம்பொன் செய் கோயில் திருப் பார்த்தன் பள்ளி
சோழ நாட்டிடை மறை சொற் பதி நாற்பதின்‌
மாலிருஞ்சோலை வரகுணமங்கை
புல்லாணி மெய்யம் புளிங்குடி மோகூர்‌
குருகூர் கோட்டி கூடல் வைகுந்தம்
குளந்தை குறுங்குடி கோளூர் புதுவை
தொலை வில்லி மங்‌கலந் தூய்த் திருப்பேரை
சீ வர மங்கை திருத் தண் காலூர்‌
பாண்டி நாட்டிடை வாழ்பதி பதினெட்டின்‌
போற்று மனந்தபுரம் புலியா் செங்‌
குன்றூர் வித்துவக் கோடு மூழிக்‌
களம் வண்பரிசாரம் காட்கரை நாவாய்‌
வாறன்விளை வண்வண்டூர் வல்லவாழ்‌
திருக் கடித்தானசம் திருவாட்டாறு
பகர் மலை நாட்டிடைப் பதி பதின் மூன்‌றின்‌
திருவகீந்த்ர புரத் திருக்கோலலூர் நடு
நாட்டிடையிரண்டு நலந் தருபதியின்‌
அத்தி மா மலை யூரகத் திருத் தண்கா
புட்குழி யட்டபுயங்க நீரகம்‌
காரகம் வெக்கா கள்வனூர் பாடகம்‌
நின்‌றவூ ரெவ்வளூர் நிலாத் திங்கள் துண்டம்‌
திருவேளுக்கை திருக் கார்வானம்‌
பவள வண்ணம் பரமேச்சுர விண்ணகரம்‌
திருவிடவெந்தை திருக் கடன்‌ மல்லை
அல்லிக்கேணி வளர்‌ திருக் கடிகை
நீர்மலை தொண்டை நாடு நாட்டிடையின்‌
இன்புறும்பதிக ளிருபதிரண்டின்‌
வேங்கடஞ் சிங்கவேள் குன்‌ற மயோத்தி
தேங்கிய வதரி யாச்சிரம் நைமி
சாரணியம் பிரிதி சாளக் கிராமம்‌
கங்கைக்கரை வாழ் கண்டம் திருவாய்ப்‌
பாடி துவாரகை பாற்கடல் மதுரை
வட நாட்டிடையின்‌ மன்னிய பதிகள்‌
பத்‌துடனிரண்டிற் பரம பதமெனும்
திருநாடொன்றிற் சேர்த்து நூற்றெட்டில்‌
யதிபதி யருளாலியற்றிய திரு நா
ராயண புரம் திரு ராச மன்னார் கோயில்‌
மன்னிய விருரந் தாவனம் பெரும்பூதூர்‌
மெய்ப் புகழ்ப் பாபவிநாசாசஞ் சீர் முட்டம்‌
புராண நூற்றலங்கள் போற்றுமோர் ஆறின்
உலகிடை மற்றுளவோங்கிய பதியின்‌
மலர் மகளுடனே மன்னிய திருமால்‌
ஏழையேனுள்ளது இருந்து இங்கு
ஊழி யினயூழியா வுலகளித்‌திடவே –

நூற்றெட்டுத் திருப்பதி யகவல்‌ முற்றிற்று,

—————-———————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஒரு விலக்ஷணமான திவ்ய தேசானுபவம்

July 13, 2025

ஒரு விலக்ஷணமான திவ்ய தேசானுபவம்

‘ஆழ்வார்பாடின ஊர்கள் எத்தனை?–உலகேத்துமாரியானத்தியூர் (ஹஸ்திகிரி ) திருவெவ்வுளூர் . திருநின்றவூர்,-திருக்கோவலூர் (கூந்தல் கமழுங்) கூடலூர், திருக்கண்டியூர், திருவிந்தளுர். திருநாங்கூர்-திருநறையூர், உறையூர், கரம்பனூர்.சிறுபு யூர். தேரழுந்தூர், ஆதனூர்,திருக்கோட்டியூர்,திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குருகூர்,திருக்கோளுர்.குட்டநாட்டுத் திருப்புலியூர், திருவண்வண்டூர் ஆக இருபத்தோர் ஊர்கள் தான் ஆழ்வார் பாடியவை யென்றுஉள்ளபடி சொல்லுகிறேன்.

ஆழ்வார்கள் பாடிய நகரங்கள் எத்தனை?-பரமேச்சுரவிண்ணகரம். காழிச்சீராம் விண்ணகரம், வைகுந்த விண்ணகரம் அரிமேயவிண்ணகரம்,நந்திபுரவிண்ணகரம் விண்ணகரம்(திருவிண்ணகர்)

ஆழ்வார்கள்பாடிய நகர்கள் எத்தனை?-தீருப்பேர்கர். திருவல்லவாழ் நகர், கண்டமென்னும் கடிநகர் . சிரிவரமங்கலநகர். அனந்தபுரநகர் .கண்ணபுரநகர்.(திருவின்ணகர் நன்னகரே )

ஆழ்வார்கள் பாடிய குடிகள் எத்தனை?-திருவெள்ளியங்குடி, புள்ளம்பூதங்குடி, திருக்கண்ணங்குடி, திருப்புளிங்குடி, திருக்குறுங்குடி.

கழ்வார்கள் பாடிய ‘கா எத்தனை? ‘கால் ‘எத்தனை?-கா இரண்டு.கால் ஒன்று. திருவெஃகா, திருத்தண்க ா – திருத்தண்கால்

ஆழ்வார்கள் பாடிய மலை எத்தனை?-திருவேங்கடமலை. திருநீர்மலை, திருமெய்யமலை. வானமாமலை, திருமாலிருஞ்சோலை மலை

ஆழ்வார்பாடிய மங்கையும். மங்கலமும் எத்தனை?-திருக்கண்ணமங்கை, வரகுணமங்கை. துலைவில்லி மங்கலம். ச்ரீவரமங்கை மங்கலம்.

ஆறு எத்தனை? கரை எத்தனை அறை எத்தனை? ஆணிஎத்தனை?-திருச்சிற்றாறு. திருவாட்டாறு. – திருக்காட்கரை, ஆற்றங்கரை, (கபிஸ்தலம்) திருவெள்ளறை-திருப்புல்லாணி

உத்தமம் எத்தனை? –உத்தமம் ஒன்றுதான், வண்புருடோத்தமம். அப்படியே உத்தமனும் ஒருத்தன்தான்.கரம்பனூர் உத்தமன்,

கூடம் எத்தனை-திருமணிக்கூடம். சிருச்சித்ரகூடம்

ஐகார வீற்றதான ஊர்கள் எத்தனை?-தஞ்சை குடந்தை. சேறை. நாகை. திருக்கடன்மல்லை. திருவிடவெந்தை, வேளுக்கை. குருகை (குருகூர்) அழுந்தை.

அகம் எத்தனை?-ஊரகம்,நீரகம்.காரகம்.பேரகம் (திருப்பேர்நகர்)

புரம் எத்தனை?-திருவயிந்திரபுரம்,திருவனந்தபுரம். கணபுரம்.

கோயில் எத்தனை?திருவரங்கம் பெரிய கோயில், செம்பொன்செய்கோயில், நாச்சியார் கோயில்-மணிமாடக் கோயில்.

பாடிஎத்தனை?-காவளம்பாடி, திருவாய்ப்பாடி

கிராமம்எத்தனை?-சாளக்கிராமம்

ஆச்ரமம் எத்தனை ?பதரிகாஸ்ரமம்

அரணியம் எத்தனை,-கைமிசாரணியம்,

குன்றம்(குன்று)எத்தனை?-ிங்கவேள் குன்றம்(அஹோபிலம்)

குளம் எத்தனை?-திருவெள்ளக்குளம். பெருங்குளம்.

இல் எத்தனை?-அன்பில்.

தானம் எத்தனை?-திருக்கடித்தானம்.

கால்எத்தனை? கை எத்தனை? வாய்எத்தனை? மூக்கு எத்தனை? முலைஎத்தனை?-கால் ஒன்றே- திருத் தண்கால் கைகள்- ெருநாகை. நாங்கை கண்ணமங்கை. ரீவரமங்கை வாய்ஒன்றே- திருநாவாய் மூக்கு ஒன்றே சூடமூக்கு (குடமூக்ல் கோயிலாக்கொண்டு). முலை இரண்டு தென்னனுயர் பொருப்பும் தெய்வ வட மலையும் என்னுமிவையே முலை’

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை*
மேற்சென்று செய்யப் படும்’
*என்று வள்ளுவர் கூறுவது அறச்செயல்களுக்கு மட்டுமல்ல. .‘நல்வினை’-திருத்தலங்களை தரிசிப்பதற்கும் தான்-வைஷ்ணவ திவ்ய தேசங்களை தரிசிக்க முதலில் செல்லவேண்டிய கோவில் காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில்.காரணம் இந்த ஒரு தலத்தை தரிசித்தாலே 108 வைணவ திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் உங்களுக்கு கிடைக்கும்-இந்த ஊரின் பெயர் வீரநாரயணபுர சதுர்வேதிமங்கலம் என்று கல்வெட்டுகளில் உள்ளது. வீரநாராயணன் என்ற பேர் பெற்ற முதலாம் பராந்தகன், இவ்வூரை அமைத்தார். இவ்வூர் சிதம்பரத்திலிருந்து 26கி. மீ தூரத்தில் இருக்கிறது. இதன் அருகில் தான் தமிழகத்திலேயே மிகப் பெரிய ஏரியான
வீராணம் ஏரி இருக்கிறது.-‘வீரநாராயண ஏரி’ என்பதே நாளடைவில் ‘வீராணம் ஏரி’ என்று மருவிட்டது. பெருமாளுக்கும் பிராட்டியாருக்கும் திருமணம் நடைபெற்ற போது இது பெருமாளுக்கு சீராக கொடுக்கப்பட்டதாம்.-காட்டுமன்னார் கோவில் ஊரின் நடுவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் ஆலயம். மூலவர் ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். மரத்தினாலான நெடிய வீரநாராயணப் பெருமாளின் சிலை கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் சுதை உருவாக அமைக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.-இறைவனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி பல அடி எடுத்து வைப்பான்.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக்கண்ணபுர மஹிமை–ஸ்ரீ சௌரி ராஜ ஸ்தவம்-

May 14, 2025

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல், சன்னாநல்லுõர் அருகே நான்கு கிலோமீட்டார் தொலைவில் திருக்கண்ணபுரம் உள்ளது. வடக்கே திருமலைராயன் ஆறும், தெற்கே வெட்டாறும் ஓடிக் குளிர்விக்க இடையே கிழக்கு மேற்காக அமைந்துள்ளது இந்த ஊர். ஊர் சிறப்பு! பூலோக வைகுந்தம், முக்தி தரும் தலங்களில் முதன்மை தலம், பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று என்று அடுக்கடுக்கான பெருமைகளைப் பெற்ற தலம் திருக்கண்ணபுரம். 108 வைணவ தலங்களில் வடக்கே திருவேங்கடம் என்றும், தெற்கே திருமாலிருஞ்சோலைமலை என்றும், திருவரங்கம் மேலை வீடு என்றும் திருக்கண்ணபுரம் கீழை வீடு என்றும் அழைக்கப்படுகிறது. கம்பீர கோபுரம்! 95அடி உயரமும் 7 நிலைகளையும் கொண்டு கம்பீரமாய்க் காட்சி தருகிறது. ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் கோயிலின் ராஜ கோபுரம். கருவரை மூலவர் ‘நீலமேகப் பெருமாள் ‘ஸீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். தாயார் ‘கண்ணபுர நாயகி‘ தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றாள். சௌரிராஜப் பெருமாள்: திருக்கண்ணபுரக் கோயில் உற்சவருக்கு ‘சௌரிராஜ பெருமாள்‘ என்று பெயர். 

பொதுவாக கோயில்களை நிர்மாணிப்பதும் நிர்வாகம்செய்ய இறையிலியாக நிலங்களை மான்யமாய் அளித்து செலவினங்களுக்கான வருவாய்க்கு வழிசெய்வதும் மன்னர்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். இதற்கு நன்றியாக இறைவனுக்கு அடுத்த நிலையில் மன்னர்களை மதித்து மரியாதை செய்துவந்தனர் கோயில் நிர்வாகிகள். இறைவனுக்கு அணிவித்த மாலையை மன்னனுக்களித்து மரியாதை செய்வர். கோயில் அர்ச்சகர் வழக்கம்போல் ஒரு நாள் உத்சவருக்கணிவித்த மாலையை மன்னரிடம் கொண்டுபோய்க் கொடுக்க அதில் ஒரு தலைமுடியைக் கண்டு அர்ச்சகரிடம் அது பற்றிக் கேட்ட போது, மன்னர் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக ‘தலைமுடி இறைவனுடைய முடிதான்’ என்று கூறிவிட்டார். மன்னன் இதை நம்ப மறுத்து நேராகக் கோயிலுக்குச் சென்றான். உத்சவருடைய தலையிலிருந்த நீண்ட குழற்கற்றையைக் கண்டான். அது உண்மையான முடியா என்றறிய தலையிலிருந்து ஒரு முடியை எடுத்துக் காண்பிக்குமாறு அர்ச்சகரைக் கேட்டான். அவரும் ஒரு முடியைப் பிடித்திழுக்க அந்த இடத்திலிருந்து ரத்தம் பீரிட்டுத் தெறித்தது. அஞ்சி நடுங்கிய மன்னன் தன் தவறினை உணர்ந்தான். திருக்கடவூரில் அபிராம பட்டருக்கு அமாவாசையை பௌர்ணமியாகத் திகழச் செய்த இறைவனின்அருளுக்கு ஒப்ப, இங்கும் அர்ச்சகர் இயலாமைக்கு இரக்கப்பட்டு திருமால் சௌரி முடியுடன் காட்சி தந்தார். அன்று முதல் உத்சவருக்கு தலையலங்காரம் சௌரிமுடியுடன் தான், பெயரும் சௌரிராஜப் பெருமாள் என்று வழங்கப்படலாயிற்று. நடையழகு! *இராவண வதம் முடிந்தபின் அயோத்தி திரும்பும் இராமனைப் பிரிய மனமில்லாது வருந்திய விபீஷணனுக்கு இராமபிரான் தன் நடை அழகைக்காட்டி அருள் செய்த தலம் இத்திருக்கண்ணபுரம் . இதனை நிறுவுவதுபோல் இக்கோயிலில் விபீஷணனுக்கென்றே தனியாக ஒரு சன்னிதி உள்ளது. இராமானுஜருக்கும் தனிக்கோயில் உள்ளது. சக்கரத்தின் பெருமை! *அரக்கர் தொல்லையிலிருந்து தங்களைக் காத்தருளுமாறு வேண்டிக் கொண்ட முனிவர்களுக்காக பெருமாள் தன் சக்ராயுதத்தைப் பிரயோகித்து’வீகடாக்ஷன்’ என்ற அசுரனை அழித்த தலம் என்பதால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் வலக்கரத்தை நீட்டி சக்ராயுதத்தை வீசுவதுபோல் காட்சி தருவது மற்றொரு விசேஷம். முனையதரையன் பொங்கல் வந்த கதை… *முனையதரையன் என்ற பக்தன் ஒருவன் இரவு தான் உண்ணக் கையில் எடுத்த பொங்கலின் நறுமணத்தை வியந்து, இது இறைவன் சுவைக்க வேண்டிய பொங்கல் என்று எண்ணிய மாத்திரத்தில் மானசீகமாக அவனால் அது இறைவனுக்கு நிவேதனம் ஆயிற்று. அடுத்த நாள் காலையில் இறைவன் மேனியில் முந்தைய நாளின் மானசீகமாய் நிவேதனமான பொங்கல் நெய்யோடு வழிந்திருப்பது கண்டு மக்கள் திகைத்ததுடன் அன்று முதல் தினமும் அர்த்தசாம பூஜையின் போது இந்த பக்தன் செய்து தரும் பொங்கலையே நிவேதனம் செய்ய ஏற்பாடாயிற்று. ஆழ்வார்கள் பாடிப்பரவிய தலம் : தமிழ்க் குடும்பங்களில் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டு பாடும் தாய்மார்கள் குலசேகர ஆழ்வார் பாடிய தாலாட்டைத்தான் பாடுவார்கள் ‘மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே‘ என்று தொடங்கி 10 பாசுரம் பாடியுள்ள குலசேகர ஆழ்வார் இத்திருத்தலத்து பெருமாளைத்தான் தாலாட்டிப் பாடியுள்ளார். ‘சிலைவலவா சேவகனே‘ என்றும், ‘ஏ மருவும் சிலை வலவா‘ என்றும் ‘ஏ வரி வெஞ்சிலை வலவா‘ என்றும் இராமபிரான் வில்லாற்றலைத்தான் புகழ்ந்து பாடுகிறார். கண்ணனைக் குழந்தையாகவும் தன்னை யசோதையாகவும் பாவித்து கண்ணனை சீராட்டி, நீராட்டி தாலாட்டிப் பெரியாழ்வார் பாடும் பாசுரங்கள்தாம் பிற்காலப் பிள்ளைத் தமிழ் என்னும் சிற்றிலக்கியத்திற்கு வித்திட்டது. பிள்ளைத்தமிழில் கூறப்படும் 10 பருவங்களில் செங்கீரைப் பருவம் தவழ்ந்துவரும் குழந்தை தலை நிமிர்த்தி முன்னும் பின்னும் ஆடும் அழகைப் பாடுவதாகும். பெரியாழ்வாரும் இத்தலத்து இறைவனை அழைத்து, ‘கண்ணபுரத்தமுதே ஆடுக செங்கீரை ஏழுலகும் உடையாய் ஆடுக ஆடுகவே‘ என்று பாடுகிறார். தந்தை பாடி மகிழ்ந்த அதே கண்ணபுரப் பெருமாளை மகள் கோதை நாச்சியாரும் ’நாச்சியார் திருமொழி’யில் கூடலிழைத்துப் பார்த்துப் பாடுகிறாள். தான் எண்ணிய எண்ணம் நிறைவேறுமா என்பதைக் கூடலிழைத்துப் பார்க்கும் வழக்கம் உண்டு. கோதையும் தான் கண்ணனை மணத்தல் சாத்தியமா என்றறிய ‘காட்டில்வேங்கடம் கண்ணபுரநகர் வாட்டமின்றி மகிழ்ந்துறைவாமனன் ஒட்டாரவந்து என்கைப்பற்றி தன்னோடும் கூட்டுமாகில் நீகூடிடுகூடலே‘ என்று பாடுகின்றாள். திருக்கண்ணபுரத்தைப் போற்றி அதிக எண்ணிக்கையில் பாசுரங்கள் பாடியிருப்பவர் திருமங்கை ஆழ்வார்.100க்கும் மேற்பட்ட பாசுரங்கள் இவர் பாடியவை. நம்மாழ்வாரும் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். பூலோக வைகுந்தம் ! திருமால் இத்தலத்தில் எட்டு அக்ஷரங்களிலும் உருக்கொண்டு உறையும் தலமாதலால் ‘அக்ஷ்டாக்ஷர மகா மந்திர ஸித்தி ஷேத்திரம்‘ என்று பேசப்படுகிறது. பூலோக வைகுந்தம் என்பதால் இங்கு சொர்க்க வாசல் தனியாகக் கிடையாது. திருவிழாக்கள்: 15 கி.மீ.தூரத்திலுள்ள திருமலைராயன்பட்டினக் கடற்கரையில் மாசி மாத பௌர்ணமி தினத்தில் பெருமாளைத் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்து தீர்த்தவாரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசிமாதத்தில் பிரம்மோத்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாதப் பிறப்பு, ஏகாதசி மாதத்தில் இரண்டு நாள்களில் திருமஞ்சனமும் உத்சவர் புறப்பாடும் உண்டு. இத்தலத்து அமாவாசை உத்சவம் குறிப்பிடத்தக்க ஒன்று. விபீஷணனுக்கு பெருமாள் தன் நடை அழகைக் காட்டி அருள் செய்தது ஒரு அமாவாசை நாளில் என்பதை நினைவுகூறும் விதத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் திருமஞ்சனம் செய்து சௌரிமுடி அணிவித்து உற்சவர் புறப்பாடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. துயர் துடைக்கும் ஊர்! ‘பாதம்நாளும் பணியத்தணியும்பிணி ஏதம்சாரா எனக்கேலல் இனியென்குறை? வேதநாவர்விரும்பும் திருக்கண்ணபுரத்து ஆதியானை அடைந்தார்க்கு அல்லலில்லையே “இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன் கல்லிலேயந்த மதில் சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே” திருவாய்மொழி 9-10-10 (3665) திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலே எனது துயர்கள் எல்லாம் பாழடைந்துவிட்டன

ஒவ்வொரு வருடமும் தமிழ் வருடப்பிறப்பு அன்று மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். சரியாய் நண்பகல் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

பாத்ம புராணத்தின் ஐந்தாவது காண்டத்தில் 96 முதல் 111 வரை உள்ள அத்தியாயங்களில் இத்தலம் விதந்து விதந்து பேசப்படுகிறது. விரைந்துமோட்சம் அளிக்க வல்லவர் யாரென்று நைமி சாரண்ய முனிவர்கள் ஒருங்கே திரண்டு ஸு த முனிவரைக் கேட்க, அவர் இத்தலத்துப் பெருமையைப் பரக்கப் பேசுகிறார். வஸு என்னும் ஒரு மஹராஜன் வானத்தில் பறக்கும் சக்தி பெற்றிருந்ததால், அவன் உபரிசரவசு என்றழைக்கப்பட்டான். ஒரு காலத்தில் தேவர்கட்கும் அசுரர்கட்கும் நடந்த யுத்தத்தில் தோற்றுப்போன தேவர்கள் உபரிசரவசுவின் உதவியை நாட இம்மன்னின் உதவியால் தேவர்கள் வெற்றிபெற்றனர். போர் முடிந்து திரும்பிய வசு தாகவிடாய் தீர்க்க கிருஷ்ணாரண்யத்தில் இறங்க அங்கு (“ஒரு விரலில் தம் உலர்ந்த சரீரத்தை உலர்த்துமாப் போல்”) மெலிந்த தேகத்தினரான முனிவர்கள் தவம் செய்துகொண்டிருக்க, அவர்களைச் சாமைக் கதிர்கள் என்று எண்ணிய உபரிசரவசுவின் வீரர்கள் தம் வாளால் கொய்ய, முனிவர்களின் அபயக் குரல் கேட்ட எம்பெருமான் 16வயது பாலகனாய் வந்து படையைத் துவம்சம் செய்ய அசுரர்களை வென்ற நமக்கு இச்சிறுவன் ஒரு பொருட்டோ என்றெண்ணிய உபரிசரவசு பல அஸ்திரங்களையும் ஏவி அதிர்ந்து போக இறுதியில் அஷ்டாச்சர மந்திரத்தை ஜெபித்து நாராயணஸ்திரத்தை ஏவ அது சுழன்று சுழன்று அப்பாலகனின் காலடியில் சரணடைய தன்னோடு போரிட்டவன் மஹாவிஷ்ணுவே என்றறிந்த வஸு மன்னன், பாலகனின் பாதத்தில் வீழ்ந்து பாவமன்னிப்பு வேண்டினான். என் பக்தர்களான மஹரிஷிகள் உலர்ந்த மாமிசத்தை உடையவர்களாய் தபஸ் பண்ணி இந்த விமானத்தைச் சேவிப்பதால் இதற்கு உத்பலவதாக விமானம் என்றும் இங்கு ஸாநித்யம் கொண்ட எனக்கு சௌரி என்றும் திருப்பெயர். உமது தவறை மன்னித்தோம். நீ வேண்டிய வரம்கேள் என்று பெருமாள் அருள, தன் மகளை திருமணம் புரிய வேண்டும் என்று மன்னன் கேட்க, மாயவனும் அதற்கிசைந்து அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு.

 மூலவர் நீலமேகப் பெருமாள், சௌரிராஜன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம். உற்சவர் சௌரி ராஜாப் பெருமாள் தாயார் கண்ணபுர நாயகி தீர்த்தம் நித்ய புஷ்கரிணி விமானம் உத்பாலவதாக விமானம் காட்சி கண்டவர்கள் கன்வ முனிவர், கருடன், தண்டக மஹரிஷி உபரிசரவசு.-விமான தரிசனம் செய்ய முடியாத கோயில்! விமான தரிசனம் சுவாமியை தரிசனம் செய்த பலன்களைத் தரக்கூடியது. கோயில்களில் கருவறைக்கு மேல் இருக்கும் விமானத்தை சுவாமியின் வடிவமாகவே கருதுவர். ஆனால் திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோயிலில் கருவறைக்கு மேல் உள்ள விமானத்தை தரிசனம் செய்ய முடியாது. உத்பலாவதகம் எனப்படும் இவ்விமானத்தில் மகரிஷிகள் தவம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே, இவ்விமானத்தை தரிசனம் செய்ய முடியாத வகையில் சுற்றிலும் உயரமான சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது

ராமபக்தரான விபீஷணருக்கு தனிசன்னதி உள்ளது. மனித அவதாரமாக வந்த மகாவிஷ்ணுவிற்கு சேவை செய்த விபீஷணர், அவரது தெய்வ நடையைக் காண வேண்டுமென அவரிடம் வேண்டினார். மகாவிஷ்ணுவும் அவ்வாறே நடந்து காட்டினார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் விபீஷணருக்கு, விஷ்ணு நடையழகு காட்டும் நிகழ்ச்சி ஒவ்வொரு அமாவாசையன்றும் நடக்கிறது. சுவாமியின் நடையழகை தரிசிப்போரின் பாவம் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

1. முக்தியளிக்கும் ஸ்தலங்களான வேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், திருவரங்கம், தோத்தாத்ரி, ஸாளக்கிராமம், பத்ரிகாச்ரமம். நைமிசாரண்யம் இவற்றில் ஒவ்வொன்றிலும் அஷ்டாச்சரத்தின் ஒவ்வோர் எழுத்தாக இயங்கும் பெருமாள் இவ்விடத்து திருவஷ்டாச்சர எழுத்துகளின் மொத்த சொரூபமாக இலங்குகிறார். இதைப்பற்றி பாத்ம புராணத்தில் 5 ஆம் காண்டத்தில் 110வது அத்தியாயத்தில் 44, 45, 46 ஆம் சுலோகங்களில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் வேங்கடாத்ரிஞ்ச முஷ்ணம் தோதபர்வம் ஸாளக்கிராம புஷ்கரஞ்ச நரநாரயணச்ரமம் நைமிசம் சேதிமே ஸ்தாநா ந்யஷ்டௌ முக்தி பரதாநிவ ரதேஷ் வஷ்டாசஷரை கை வர்ணுமுர்திர், வஸாம்யகம் திஷ்டாமி க்ருஷ்ண சேஷத்ர புண்ய ஸ்பதக யோகத அஸ்டாச் சரஸ்யை மந்தரஸ்ய சர்வாட்ச்சர மயந்த்ஸதா.

2. சௌரி என்னும் சொல்லுக்கு யுகங்கள் தோறும் அவதாரம் எடுப்பவன் என்பது பொருள். 75 சதுர்யுகங்களைக் கொண்டது. இந்த ஸ்தலம் என்றும் கூறுவர்.

3. இவ்விடத்தில் பெருமாள் மும்மூர்த்திகளாக காட்சி அருளுகிறார். வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7 ஆம் நாளில் “ஸ்திதி காத்தருளும்” நிலையில் மஹாவிஷ்ணுவாகவும், இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு தாமரை புஷ்ப மத்தியில் ச்ருஷ்டி நிலையில் பிரம்மாவாகவும், அன்றே விடியற்காலையில் ஒரு முகூர்த்த நேரம் (3 3/4 மணி நேரம்) ஸம்ஹாரம் செய்யும் ருத்ரனாகவும் (சிவனாகவும்) காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் இது எங்கும் இல்லாத பெருஞ்சிறப்பு.

4. நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன். நின் நடையழகையும் காண வேண்டும் என்று வீபிஷணர் கேட்க, கண்ணபுரத்தில் காட்டுவோம் வாவென்ன வீடணணுக்கு நடையழகு காட்டியதாக ஐதீகம். இன்றும் அமாவாசை தோறும் இந்நிகழ்சியை சித்திரிக்கும் திருவிழா இங்குண்டு.

5. தலம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என்ற 7 புண்ணியங்களும் ஒருங்கே அமைந்துள்ள ஸ்தலம். இவ்வமைப்புள்ள இடத்தில்தான் அஷ்டாச்சர மந்திரம் சித்திக்கும் என்பது சூட்சுமம்.

6. கிருஷ்ணாரண்யம் என்றும், தண்டகாரண்யம் என்றும் இத்தலம் வழங்கப்படும்.

7. இத்தலத்திற்கு எதிரில் இரண்டு யோஜனை தொலைவில் (ஒரு யோஜனை என்பது 10 மைல்) ஒரு மலை கடலுள் அமிழ்ந்துள்ளது. கருடனின் வடிவங்கொண்ட இம்மலை கருடபர்வதமென்றே அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் மலைகளின் இறக்கைகளை வெட்ட இம்மலை மட்டும் கடலுக்குள் மூழ்கி இந்திரனுக்குத் தப்பித்து விட்டதாம். இவ்விதம் தப்பித்ததால் இறுமாப்புக் கொண்ட கருடன் இறுமாப்போடு இங்குமங்கும் பறக்க, இத்தலத்தின் விமானத்தின் மீது பறக்க, இத்தலத்து பாலகர்கள் இவன் நிழலைப் பற்றியிழுக்க கீழே விழுந்த கருடன் தன் தவறு உணர்ந்து கருட பர்வதத்தின் மீதமர்ந்து இப்பெருமானை நோக்கிக் கடுந்தவமியற்றி மோச்சம் பெற்றான், என்றும் இத்தலத்தைப் பற்றி புராணங்கள் கூறும்.

8. சித்த சரவசு என்னும் பாண்டிய மன்னன் மணலூரைத் தலநகராகக் கொண்டு ஆண்டான். அவன் தனது மகள் உத்தமையுடன் தாமிரபரணியில் நீராட இறங்கும் தருவாயில் திடீரென்று வெள்ளம் உயர்ந்து உடனே வடிந்து காணாமல் போய்விட்டது. மன்னனைக் காணாது அவன் மனைவி மக்களும், மந்திரி பிரதானிகளுந் திகைத்து நிற்க, பாண்டியனின் அவைக்கு வந்த சகல லோக சஞ்சாரியான அகத்தியரின் சீடர், மந்திரி பிரதானிகளை நோக்கி, மன்னனும் அவன் மகள் உத்தமையும் பிரம்ம லோகத்தில் இருக்கிறார்களென்று பின்வரும் நிகழ்வைச் சொன்னார். கங்கை முதலான சகல தீர்த்தங்களும், தம்மிடம் பல தரப்பட்ட மக்களும் நீராடி தமது புண்ணியங் குறைந்து பாவம் பெருக்கெடுத்துவிட்டதெனவும், இம் மாசினைப் போக்க யாதாயினுமோர் உபாயங்கூறு மென்றும் பிரம்மாவைக் கேட்க, சகல பாவங்களையும் போக்கும் பெருமாள் எழுந்தருளியுள்ள கண்ணபுரத்தில் உள்ள நித்ய புஷ்கரணியில் நீராடி அப்பெருமானைத் துதித்தால் எல்லாப் பாவங்களும் உடனே தீருமென்று பிரம்மா உரைக்க, சகல தீர்த்தங்களும், இப்புஷ்கரணியில் புகுந்தன. அப்போது தாமிரபரணி தீர்த்தமும் இந்த புஷ்கரணியில் புக அதனால் பூலோகத்தை அடைந்த பாண்டியனும் அவன் மகளும் இப்பெருமானை வழிபாடு செய்து நிற்க, இவ்வரலாறு உணர்ந்த சோழன், பாண்டியனை எதிர் கொண்டழைத்து தன் அரண்மனையில் விருந்தினனாய்த் தங்க வைத்து இறுதியில் பாண்டியன் மகள் உத்தமையை சோழராஜனின் மகன் சுசாங்கனுக்கு திருமணம் செய்துவைத்ததாகவும் வரலாறுண்டு. பாண்டி நாட்டின் வரலாற்று ஆராய்ச்சிக்கு இந்நிகழ்ச்சி ஒரு ஆய்வுக்குரிய விஷயமாகும்.

9. வசு என்னும் மன்னன் (உபரிசரவஸு ) விஸ்வகர்மாவைக் கொண்டு இக்கோயிலை கட்டுவித்தான். அவன் புத்திரப் பேறு இன்மையால் இத்தலத்தில் அசுவமேதயாகம் செய்யயாக குண்டலியிலிருந்து தோன்றிய ஒரு புருஷன் இரண்டு செங்கழு நீர் மலர்களைத் தர அவற்றை முகர்ந்த வசுவன் மனைவி சுந்தரி அழகிய பெண்மகவைப் பெற்று பத்மினி (பதுமினி) என்று பெயரிட்டழைக்க, அப்பெண்தான் சௌரிராஜனையே மணவாளனாக ஏற்க வேண்டுமென்று, தவமியற்ற பெருமாளும் அவ்விதமே செய்து பத்மினியைத் தம் நெஞ்சில் ஏற்றுக் கொண்டார் என்பது பாத்ம புராணம் செப்பும் செய்தியாகும்.

11. இவ்வூரில் வாழ்ந்த “முனைய தரையர்” என்பவர், பெருமாளுக்கு வேண்டிய திருப்பணிகளை செய்து உண்மை பக்தராயிலங்கி வந்தார். அவர் பெருமாளுக்கு திருவாராதனம் செய்யாமல் ஒரு நாளும் உண்பதில்லை. அவ்வாறிருக்கையில் ஒரு நாள் வெளியூருக்குச் சென்று விட்டு அர்த்த சாமத்தில் திரும்ப, அவர் மனைவி ஆக்கி வைத்த பொங்கலை மானஸிகமாக இறைவனுக்குப் படைக்க, மறு நாள் காலை கோவில் திறக்கும் போது பொங்கல் மணம் எங்கும் வீச, தம் அடியார் பொருட்டு பகவான் அப்பொங்கலை உகந்து ஏற்றுக் கொண்டார் என்றும் முனியோதரம் பொங்கல் என்றே பெயர் கொடுத்து, இன்றும் அர்த்த சாமத்தில் இப்பெருமானுக்கு முனியோதரம் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

12. இத்திருத்தலத்திற்கு திருவரங்கத்தைப் போன்று மதில்கள் இருந்தன என்றும் சோழ மன்னன் ஒருவன் இம்மதில்களை இடித்து கருங்கற்களை அருகிருந்த இன்னொரு கோயிலுக்கு எடுத்துச் சென்றான் எனவும். இது கண்டு மனம் வருந்திய இப்பெருமானின் பரம பக்தர் அரையர் என்பர் “பொருவரைமுன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை” என்பது பொய்த்ததோ என்று தம் கையில் உள்ள தாளத்தை பெருமானின் மீது விட்டெறிய, பெருமாள் தமது பிரயோகச் சக்கரத்தை யேவி, மன்னனைக் கொன்றார். இதனால் இப்பெருமானின் நெற்றியில் தாளம் பட்டு புண்ணான “நெற்றி வடு” இன்றும் உள்ளதைக் காணலாம். 6 மதில்களை இடித்தது போக எஞ்சியிருப்பது இப்போது உள்ள மதில் ஒன்றுதான்.

13. விருத்திரன் என்னும் அரக்கன் தேவலோகத்தையழிக்க அவனைக் கொன்று இந்திரனுக்கு மீண்டும் இந்திர போகத்தை இப்பெருமாள் அளித்தார் என்றும் புராணம் கூறும்.

14. இப்பெருமாளைப் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரங்களிலும், திருமங்கையாழ்வார் 100 பாசுரங்களிலும், குலசேகர ஆழ்வார் 10 பாசுரங்களிலும், ஆண்டாள் ஒரு பாசுரத்தாலும், பெரியாழ்வார் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

15. 108 திவ்ய தேசங்களில் “கீழைவீடு” என்று குறிக்கப்படுவது இத்தலம்தான்.

16. இங்கே ஸ்ரீமணவாள மாமுனிகள் ஓராண்டு காலம் எழுந்தருளியிருந்து மங்களாசாசனம் செய்தருளினார்.

ஆண்டாளும் திருக்கண்ணபுரமும் நோய் தீர மருந்து... செங்கமலக்காவிலுள்ள சீராரிளங்கோதை அங்கதனை நோக்கி அடி வணங்கி தெண்டனிட்டு என்னுள்ளம் நோய் தீர மருந்துண்டோ சொல் தோழீ என்ன உண்டுண்டு ஆய்ச்சியரே ஒரு மருந்து சொல்கிறேன் கேள் தென்னன்குறுங்குடி திருமாலிருஞ்சோலை யென்னும் சுக்கைத் திகழத் தட்டி ஸ்ரீசைலேச பாத்திரத்தில் சேர்த்து வஞ்சி நகரமென்னும் இஞ்சியை நறுக்கி மண்டங்குடி என்னும் வஸ்திரத்தில் வடி கட்டி பிருந்தாவனமென்னும் அடுப்பை வைத்து திருவேங்கடமென்னும் விறகை முறித்து வைத்து ஓம் நம: என்னும் உமியைத் தூவி திருநீர்மலை யென்னும் நெருப்பை மூட்டி திருமாமணிக்கூடத்தில் இறக்கி வைத்து திருவாய்மொழி என்னும் தேனைக் கலந்து அமலனாதிபிரான் என்று அழுத்தி பிசைந்து கண்ணபுரம் என்று கலக்கி எடுத்துச் சாப்பிட்டால் இந் நோய் தீருமம்மா ஆண்டாள் சொல்வது இது நல்ல மருந்து தோழீ : இதை எங்கிருந்து நீ கொண்டு வந்தாய்? இது ஊரில் இல்லாத மருந்து உல்கோர் அறியாத மருந்து ஆழ்வார்களும் ஆசார்யர்களும் விரும்பும் மருந்து இது பற்றற்ற ஞானியர் பருகும் மருந்து பாகவதோத்தமர்கட்குகந்த மருந்து நாராயணனே நமக்கே பறை தருவானென்று பாடிப்பறை கொள்ளும் மருந்து போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் மருந்து செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறும் மருந்து எருதுக் கொடியானும் பிரமனும் இந்திரனும் மற்றும் யாரும் அறியாத மருந்து நோய் மூப்பு ,பிறப்பிறப்பு பிணி வீயுமாறு செய்யும் மருந்து கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதுமில்லை என்பவர்கள் கருதும் மருந்து ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவரில்லை பாரில் நின் பாத மூலம் பற்றினேன் என்பவர்கள் பகரும் மருந்து அணியனார் செம்பொன் ஆய அறுவரை அனைய கோயில் மணியனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கும் மருந்து தாயே தந்தையென்றும் தாரமே கிளை யென்றும் நோயில்பட வொட்டாத மருந்து இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் சேமம் இன்னோய்க்கும் ஈதே மருந்து உன்னுள்ளம் நோய் தீர்வதற்கு இதுவேஉகந்த மருந்தம்மா காளமேக புலவரும் திருக்கண்ணபுரமும் கடவுளிடமே இந்தக் கவிதை விளையாட்டை நிகழ்த்தியவன் அவன். ஒருமுறை அவன் திருக்கண்ணபுரம் வழியே போய்க் கொண்டிருந்தான். திடீரென்று கன மழை பிடித்துக் கொண்டது. ஒதுங்க இடம் பார்த்தான். அருகில் பெருமாள் கோயில் தென்பட்டது. மழைக்கு ஒதுங்க அங்கே ஓடியபோது அங்கிருந்த வைணவர்கள் உள்ளே வரக் கூடாது என்று தடுத்தனர். ஏனென்றால் அவன் தீவிர சிவ பக்தன். அதோடு வைணவர்களின் எதிரியும் கூட. சிவனைப் பற்றி ஏராளமாகப் பாடி உள்ளானே தவிர பெருமாளைப் பற்றிப் பாட மறுப்பவன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வைணவர்கள், ‘எங்கள் பெருமாளை உன் சிவனை விட உயர்த்திப் பாடினால் உள்ளே விடுவோம்‘ என்றனர். காளமேகம் பார்த்தான். ‘சரி, உங்கள் பெருமாளைத் தானே உயர்த்திப் பாட வேண்டும்? இதோ…‘ என்று சொல்லி ‘கண்ண புர மாலே கடவுளிலும் நீ அதிகம்‘ என்று முதலடியைப் பாடினான். தடுத்த வைணவர்கள் வெற்றிப் பூரிப்புடன் அவனை உள்ளே விட்டார்கள். மண்டபத்துக்குள் நுழைந்து துணியைப் பிழிந்து துடைத்துக் கொண்டு, ‘என்ன சொன்னேன்.? என் கடவுப்ளை விட உங்கள் கடவுள் அதிகம் என்றா சொன்னேன்? அடுத்துக் கேளுங்கள்: ‘கண்ண புர மாலே கடவுளிலும் நீ அதிகம்; உன்னை விட நான் அதிகம்‘ என்று சொல்லி நிறுத்தினான். வைணவர்கள் திகைத்து ‘அதெப்படி?‘ என்றார்கள். ‘ஓன்று கேள்- உன் பிறப்போ பத்தாம், உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை, என் பிறப்போ எண்ணத் தொலையாதே‘ என்று புதிரை விடுவித்தான். ’சிவன் தன் பக்தர்களை ரட்சிக்க பிறவி ஏதும் எடுத்ததில்லை. ஆனல் பெருமாளோ பத்து அவதாரம் எடுத்தார். அந்த வகையில் சிவனை விடப் பெருமாள் அதிகம். ஆனால் மானிடனான எனக்கு எண்ண முடியாத பிறவிகள். இதில் நான் பெருமாளை விட அதிகம். இல்லையா?’ என்று விளக்கம் சொன்னான். கண்ண புர மாலே …..கடவுளிலும் நீ அதிகம் உன்னை விட நான் …..அதிகம்- ஒன்று கேள் உன் பிறப்போ பத்தாம் …..உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை என் பிறப்போ …..எண்ணத் தொலயாதே. கண்ண புர கோயில் கதவடைத்து… கண்ணபுரம் கோயில் கதவு அடைத்துத் தாழ் போட்டார் மண்ணை உண்டார் வெண்ணெய் உண்ட மாயனார் என்னும் சிரக்கப் புரை ஏந்திச் செங்காட்டில் ஈசர் இரக்கப் புறப்பட்டார் என்று. திருக்கண்ணபுரம் சவுரி நாராயணப் பெருமாள் பிறந்த நாள் இதுவாம் எனப் பாடியது: உத்திரத்துக்கு ஓர் நாள் உரோகணிக்குப் பத்தாம் நாள் சித்திரைக்கு நேரே சிறந்த நாள் – எத்திசையும் கார்ஆரும் பூஞ்சோலைக் கன்னபுரம் வாழ் சவுரி நார யணன்பிறந்த நாள்.- திருக்கண்ணபுரமும் வடுவூர் சிலை அழகும் திருவாரூர் தேரழகு, மன்னார்குடி மதிலழகு, வடுவூர் சிலையழகு என்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட கிராமங்களில் கூறுவார்கள்.திருவாரூர் – தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லைப்புற கிராமம், எங்கும் பச்சை பட்டாடை உயர்த்திய நெல் வயல்கள், ஊர் எல்லையில் 364 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக வரவேற்கும் பெரிய ஏரி போன்ற சிறப்புகளுடன் உள்ள ஊர் வடுவூர். இதில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் சிலையைத் தான் மக்கள் இப்படி அழைக்கிறார்கள். மற்ற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை விட இந்த ராமர் சிலைக்கு அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா ? பார்ப்பவர் பரவசம் கொள்ளும் வகையில், மந்தகாச புன்னகை காட்சி தருகிறார். வேறு எங்கும் இது போல் சிலைகளைப் பார்க்க முடியாது என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள். இதற்கு சாட்சியாக வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு முறை வந்து வந்து விட்டு, ஸ்ரீ ராமரின் மந்தகாச புன்னகையில் மயங்கி, அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் ஏராளம். இந்த சிலை இங்கு வந்ததுக்கு கூறப்படும் செவி வழிக் கதை, ஸ்ரீ ராமர் வனவாச காலத்தின் முடிவில் அயோத்திக்கு செல்ல ஆயத்தமாகிறார். அப்போது காட்டில் உள்ள ரிஷிகள் ராமர் மீது கொண்ட பிரியத்தால் தங்களுடனே ராமர் இருக்க வேண்டுகோள் விடுக்கிறார்கள். அவர்களின் அன்பு கட்டளையில் சிக்குண்ட நிலையில் ராமர், தனது உருவத்தை சிலையாக வடித்து ஆசிரம வாயிலில் வைக்கிறார். அடுத்த நாள் அங்கு வரும் ரிஷிகள் சிலையின் அழகில் மயங்கி நிற்கிறார்கள். அப்போது ராமர் தங்களுடனேயே தங்க மீண்டும் வேண்டுகிறார்கள். இதை மறுக்க முடியாமல் தவிக்கும் ராமர், நான் வேண்டுமா? இந்த சிலை வேண்டுமா ? என்கிறார். ஏற்கனவே சிலையின் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், சிலையை வாங்கிக் கொள்கிறார்கள். இதை பல ஆண்டுகளுக்கு பிறகு திருக்கண்ணபுரம் என்ற ஊரில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கிறார்கள். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சிலை, இத்துடன் இருந்த சீதை, லட்சுமணர், பரதன், ஹனுமன் சிலைகளையும் தலை ஞாயிறு என்ற ஊரில் உள்ள ஒரு ஆலமரத்துக்கு அடியில் புதைத்து வைக்கிறார்கள். கால ஓட்டத்தில் இது பற்றி மக்கள் மறந்து விட்ட நிலையில், அப்போது தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி பரம்பரை மன்னர் ஒருவர் கனவில் ராமர் வந்து, ஆலமரத்து அடியில் தான் புதையுண்டு இருக்கும் தகவலை சொல்லி, தன்னை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கட்டளை யிடுகிறார். திடுக்கிட்டு எழும் அந்த மன்னர், அந்த நள்ளிரவு நேரத்தில் தனது படைகளுடன் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு செல்கிறார். சிலைகளை மண்ணில் இருந்து வெளியில் எடுக்கிறார். அப்போது மன்னரை சூழ்ந்து கொள்ளும் அப்பகுதி மக்கள் சிலைகளை அங்கேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள். அவர்களை சமாதானம் செய்து, பரதன், லட்சுமணர் சிலைகளை மட்டும் அங்கே பிரதிஷ்டை செய்கிறார். சிலைகளைக் கொண்டு தஞ்சாவூர் செல்லும் வழியில் வடுவூரில் தங்குகிறார். இது பற்றி தகவல் அறிந்து இந்த ஊர் மக்கள், ராமர் சிலையை அங்கிருந்த கோபாலன் சந்நிதியில் பிரதிஷ்டை செய்ய வேண்டுகிறார்கள். மன்னர் மறுக்கவே, பக்தர்கள் சிலர் கோயில் கோபுரத்தில் இருந்து விழுந்து உயிர் துறப்போம் என்றதும், மன்னர் சம்மதிக்கிறார். அன்று முதல் கோபாலன் கோயில் ஸ்ரீ கோதண்டராமர் கோயிலாக மாறியது. (இன்றும் இதை பெருமாள் கோயில் என்றே அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்). சிலையில் உள்ள கலை நுணுக்கம், பார்த்தவரை மயக்கும் மந்தகாச புன்னகை, மக்கள் கொண்டுள்ள பக்தி இவற்றைக் கொண்டு மேற் சொன்ன செவிவழிச் செய்தி உண்மைதான் என்கிறார்கள் ஊர் பெரியவர்கள். மேலும் ராமர் சிலைக்கு அருகில் வைக்க லட்சுமணர் சிலை வடிக்கப்படுகிறது. இது பெண் வடிவமாக அமைந்து விடுகிறது. இதனால் அந்த சிலையை அருகில் அழகிய சுந்தரி அம்மன் (பிடாரி கோயில்) என்று பிரதிஷ்டை செய்துள்ளார்கள். வேறு லட்சுமணர் சிலை வடிக்கப்பட்டு, தற்போது ஸ்ரீ கோதண்ட ராமர், சீதாபிராட்டி, லட்சுமணர், ஹனுமன் சமேதராய் காட்சியளிக்கிறார். இதை கண்வ மகரிஷி, குலசேகர பெருமாள் மற்றும் பல ஆன்மீக பெரியோர்கள் தரிசித்துள்ளனர்.

முனையதரையன் என்ற அரசனுக்கு திருக்கண்ணபுரம் தாசி சொல்கிறாள்: இன்றுவரி லென்னுயிரை நீ பெறுவை இற்றைக்கு நின்று வரிலதுவும் நீயறிவை – வென்றி முனையா கலவி முயங்கியவா றெல்லாம் நினையாயோ நெஞ்சத்து நீ. *

திருக்கண்ணபுரத்தின் சிறப்பை கூறும் பாடல்கள்: பாடல் 1: கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் நின்றமணித் திருக்கோலம் நினைவினிலே நிறைந்திருக்கும் என்றும் அவன் திருப்பாதம் நெஞ்சிலே உறைந்திருக்கும் கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் .. முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நின்றிருக்கும் முடியழகும் சடையழகும் ஒன்றை ஒன்று வென்றிருக்கும் தன்னழகு ஈடில்லா தனியழகு சிறந்திருக்கும் மன்னவனின் சன்னிதியில் மற்றதெல்லாம் மறந்திருக்கும் கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் … சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்திடுவான் செக்ற்நிற பட்டாடை தக்கபடி உடுத்திடுவான் சங்கு முழங்குதற்கு செங்கை பிடித்திடுவான் சக்கரம் சுழற்றிடவே தனிக்கரம் எடுத்திடுவான். கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் … பூமாதும் புவிமாதும் புடை சூழ கண்ணனுக்கு பூமாலை சூட்டியவள் புகழ் மாலை பாடிவர வேறோர் வலைச்சி வலை வீசிட நால்வருடன் விளையாடும் கோமானை வேறேங்கும் கண்டதுண்டோ கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் … * கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன். கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன். திருக்கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன். வண்ண வடிவழகை கண்குளிரக் காண்பேன் எண்ணமெல்லாம் அவனின் இணையடியே என்பேன். கண்ணபுரம்… நித்திய புஷ்கரனி நீரினிலே குளிப்பேன் நிமிர்ந்த கோபுரத்தை கண்டு கைகள் குவிப்பேன் உத்பலாவதக விமானத்தை நினைப்பேன் உள்ளத்தில் அள்ளி வைத்தே உவகையிலே திளைப்பேன். கண்ணபுரம்… கருட மண்டபத்தை கடந்து தொடர்ந்திடுவேன் கண்ணாடி சேவை கண்டு கண்கள் கசிந்திடுவேன். பெருமான் சன்னிதி முன் பித்தாகி நின்றிடுவேன் பிறவிப் பிணி அறுத்து உலகை வென்றிடுவேன். கண்ணபுரம்.. எட்டெழுத்தைச் சொல்லி கிட்ட நெருங்கிடுவேன். ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா என்ற என்னை தெரிகிறதா என்றே கேட்டிடுவேன். கட்டி அணைத்தெனக்கு கை கொடுப்பான் கண்ணன். கற்பூரம் மணக்கின்ற கால் பிடித்தே உய்வேன்

    திருக்கண்ணபுரம் பண்டித ரத்நம் உபய வேதாந்த வித்வான் டி.எஸ். ஸ்ரீநிவாஸ ஐயங்கார் ஸ்வாமி(சிரோமணி) அருளிய ஸ்ரீசௌரிராஜஸ்தவத்தின் பகுதி ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் திருப்பாதகேசம்

    உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேக்ஷணம்! சௌரிராஜ மஹம் வந்தே ஸதா- ஸர்வாங்க-ஸீந்தரம்!! பத்மா-பயோதர-தடீ- பாடீர- த்ரவ- ரஞ்ஜிதம்! பாது ஸ்ரீசௌரிராஜக்யம் ஜ்யோதி: பத்ம- விலோசநம்!

    1-திருமேனி ப்ரபுல்ல- முக- பங்கஜம் ஸ்மித- விகாஸி- தந்த ப்ரபம் விகாஸ-நயநோஜ்வலம் விகஸித-ப்ரவாளாதரம்! ஸமுந்நத- சதுர்புஜம் வித்ருத-சங்க-சக்ரம் மஹ: ஸஹஸ்ர- தபந-ப்ரபம் சௌரி-ஸ்ஜ்ஞம் ஹ்ருதி!! அலர்ந்த முகமாகிற தாமரை, புன்முறுவலால் விளங்குகின்ற பற்களின் காந்தி, மலர்ந்த கண்களின் ஒளி, பவளுமும் தோற்கும்படியான அதரம், எடுப்பான நான்கு தோள்கள், தரித்துள்ள சங்குச்சக்கரம், ஆயிரம் சூர்யர்களின் ஒளி இவை வாய்ந்த, சசௌரி என்ற பெயருடையதான சோதி என் மனத்தில் விளங்குக.

    2-யாவர்க்கும் அரியன் தண்டகாதி- யோகி-ப்ருந்த- வந்திதாங்க்ரி-பங்கஜம் பஞ்சபாண- பீதயேவ பத்மயாச்ரிதோரஸம்! ஸ்ரீபராங்குசாதி- பஞ்ச-ஸீரிபிஸ் ஸமீடிதம் பாவயேய சௌரி மத்ய க்ருஷ்ணபத்த நாதிபம்!! தண்டகரிஷி முதலிய முனிவர்களது கணங்களால் வணங்கப்படும் திருவடித் தாமரைகளை உடையவனும், மன்மதனால் அஞ்சுபவன் போல லட்சுமிதேவி தன் உறைவாகக்கொண்ட திருமார்பை உடையவனும், நம்மாழ்வார் முதலிய ஐந்து ஆழ்வார்களால் துதிக்கப்பட்டவனும், திருக்கண்ணபுரத்திற்கு அதிபனுமான ஸ்ரீசௌரிராஜனை இப்போது மனத்தால் நினைப்போமாக.

    3-திருமேனி அழகு, ஒளி நீரத்ந-மய-பூதராக் ருதிஸ் த்வம் ஸஹஸ்ரகர-பாஸீரார்சிஷா! ப்ராஜஸே பவி-வரேண பாநுமாந் நீலவர்ண இவ ஸாநுமாந் புவி!! பெருமானே! நீ நீலக்கல் மயமான மலையின் உருவை உடையவன். ஆயிரம் கிரணங்கள் வாய்ந்த சூர்யன் போலே ஒளிச் சுடரை உடைய சிறந்த கதாயுதத்தை உடையவனாய், சூர்யனோடு கூடிய கருநிறமுடைய மலைபோலே நீ இவ்வுளகில் விளங்குகிறாய்.

    4-திவ்யாயுதங்களால் திருமேனி மேலும் விளங்குதல் நீலாத்ரி-ச்ருங்க- விஹரத்-தபநேந்து- முக்யைர் ஜ்யோதிர்கøணைரிவ தநுஸ் தவ பூஷணைர் ஹி! ரம்யை:கிரிட-வர- குண்டல- சுந்தரஹார- ஸ்ரீகௌஸ்துபாதிபி ரஹோ ப்ரவிபாதி தீப்தா!! நீலபர்வதத்தின் கொடுமுடியில் உலாவுகின்ற சந்த்ர, சூர்யர்கள் முக்கியமாக வாய்ந்த நட்சத்திரங்களின் திரள் போலே அழகியவான கிரீடம், சிறந்த குண்டலங்களை,சந்தரஹாரம், ஸ்ரீகௌஸ்துபம் முதலான ஆபரணங்களாலே உனது திருமேனி ஒளிர்ந்து விளங்குகிறது. ஆச்சர்யம்!

    5-திருவடிகள் யத்பாத-பத்ம-யுசுளம் ம்ருதுலம் ஹி தேவ்ய: பத்மா-தரா-வஸீஸீதாஸ் ஸதயம் ஸகோதா: ஸம்வாஹயந்தி ஸீகுமாரதரை:கரைஸ் தத் சௌரே! விதாத்ரு- விநதம் மம சேதஸி ஸ்யாத்!! ஸ்ரீதேவி, பூமிதேவி, வஸீவின் திருமகளான பத்மிநி இவர்கள் ஆண்டாளுடன் மிகவும் ஸீகுமாரமான தங்களது கரங்களாலே தயையுடன் மிருதுவான உனது திருவடிகள் இரண்டையும் பிடிக்கின்றனர். ஸ்ரீசௌரிராஜனே! ப்ரஹ்மாவால் வணங்கப்படும் அப்படிப்பட்ட அந்த இரண்டு திருவடிகளும் எனது மனத்துள்ளே உறைக.

    6-திருவடிகள் யத்-பாத-பல்லவ மிதம் தவ காம- தப்தா கோப்யோ ததுஸ் ஸ்தந-யுகே விஜஹீச் ச தாபம்! சௌரே! விதாய மம மூர்த்தநி தந் துராபம் ஸம்ஸார தாப மபநோதய மாமகீநம்!! காமத்தால் தாபங் கொண்ட கோபிமார்கள் உனது பாதங்களாகிய தளிரைத் தம் ஸ்தனங்களில் தரித்துத் தமது தாபம் நீங்கினர். சௌரிராஜனே! கிடைத்தற்கு அரிதான அந்தப் பாதங்களாகிய தளிரை நீ எனது தலையில் வைத்து எனது ஸம்ஸார தாபத்தை நீக்கி அருளவேணும்.

    7-திருவடிகள் யத்-க்ஷாள நாம்பு-பரிபூத-சிராச் சிவோபூத் யத்வந்தநம் விதி-சிவேந்த்ர-துராப மாஹூ:! யச்சிஹ்நிதாநி ஹி சிராம்ஸி ஸதர் ப்ரபந்நா வாஞ்சந்த்யமீ பதயுகம் தவ தந் நதாஸ்ம:!! உனது திருவடிகளை விளக்கிய தீர்த்தத்தினால் சிவன் புனிதமான சிரத்தையுடையவனாவன்,(இத்) திருவடிகளை வணங்குதல் என்பது பிரம்மன், சிவன், இந்திரன் இவர்களுக்கும் பெறற்கு அரிது எனக் கூறுகின்றனர். உன்னையே சரணாகாக பற்றிய ப்ரபந்நர்கள் தம் சிரங்கள் இத்திருவடிகளாலே அலங்கரிக்கப்பட விரும்புகின்றனர். அப்படிப்பட்ட திருவடிகளை நாங்கள் வணங்குகிறோம்.

    8.திருப்பாதுகைகள் சௌரே!(அ)வநம் யே (அ)குருதாம் தரித்ர்யா வதே(அ)டதஸ் தே கில பாதுகே த்வே! ஸீவர்ண-ரத்நாதி-விபூஷிதே தே சுபே சிரச்சேகரதா முபேதாம்!! ஸ்ரீசௌரிராஜனே! நீ (இராமபிரானால்) வனத்தில் சஞ்சாரம் செய்தபோது உனது பாதுகைகள் இரண்டும் பூமியை ரக்ஷித்தன. தங்கத்தாலும் ரத்தனங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அவை இரண்டும் என் தலைக்கு அலங்காரமாகுக.

    9.பாதபத்ம பீடம் சௌரே!! ஸீகந்தித்வ-ம்ருதுத்வ-முக்யைர் குணைர் ஜிதம் த்வத்-பதயோர் யுகேந! தத்தே கிமப்ஜம், பதபத்ம-பீடீ- மிஷேண தே பாத-யுகம் துராபம்!! ஸ்ரீசௌரிராஜனே! நறுமணம், மென்மை முதலிய பண்புகளால் உன் திருவடிகள் இரண்டாலும் ஜயிக்கப்பட்ட தாமரைமலர், (உனது) பாதபீடம் என்ற வியாஜத்தாலே (கிடைத்தற்கரிய) உன் திருவடிகள் இரண்டையும் சுமக்கின்றவா என்ன?

    10-திருவடிகளின் சோதி யத்வாத்ர சௌரே! பவத:பதாப்யா மதோ விஸாரீ மஹதாம் ஹி ராசி:! புல்லாரவிந்தாக்ருதி-பாக் கிலாயம் ஸ்புடாப்ஜ-பீடத்வ முபைதி நுõநம்!! ஸ்ரீசௌரிராஜனே! அன்றியும் பூஜ்யனான உனது திருவடிகளினின்றும் கீழே பரருவுகின்ற இந்தச் சோதியின் பிழம்பு, அலர்ந்த தாமரையின் வடிவம்போல மலர்ந்த அந்த பத்மபீடமாயிருத்தலைப் பெற்றுள்ளது; நிச்சயம்!

    11-திருவடி நகங்கள் சௌரே! தவ ப்ரபத-சும்பி-நகார்த்த-சந்த்ர- ஸம்சீதிதாயி நகரேப்ய இஹ ப்ரவ்ருத்தா:1 ஜ்யோத்ஸ்நாஸ் தரிவிக்ரம-பத-ப்ரதம-ஸ்ருதாநாம் கங்காம்பஸாம் சரதியம் ரசயந்தி ஹந்த!! ஸ்ரீசௌரிராஜனே! உனது திருவடிகளின் நுனியில் உள்ள விரல்களில் விளங்குவனவும் புதிய அஷ்டமி சந்த்ர்களோ என்ற சந்தேகத்தை உண்டுபண்ணும்வனவுமான நகங்களிலிருந்து வெளிவருகிறது சந்திரிகையாகிய ஒளி: இங்கு திரிவிக்ரமானாகிய பெருமானது திருவடிகளினின்றும் முதலில் பெருகிய கங்கா ஜலத்தின் வெள்ளமோ எனகிற எண்ணத்தை (எங்களுக்கு) இது விளைவிக்கின்றது. ஆச்சரியம்!

    12-திருத்தொடைகள் சௌரே தலேஹ ஜங்க்கே மந்மத துõணீர-யுகள-கர்வமுஷீ ஊர்வோர் யுகளி சேயம் ரம்பாஸ்தம்பாதி-கம்பீரா!! ஸ்ரீசௌரிராஜனே (இங்கு) உனது முழந்தாள்கள் இரண்டும் மன்மதனது அம்புறாப்பையின் கர்வத்தைக்கவர வல்லன. உனது தொடைகள் இரண்டும் வாழைமரத்தின் சிறப்பை ஒத்தன.

    13-அரை (கடி), இடை தே ச்ரோணீ-பலக மேதத் காங்கம் புளிநம் திரஸ்குருதே! அவலக்நம் சாபிக்ருசம் சௌரே! ஸ்மாரயதி நோ டக்காம்!! ஸ்ரீசௌரிராஜனே! உனது இந்தக் கடிதடம் இரண்டும் கங்கையின் மணற்குன்றுகளை அவமதிக்கின்றன; உனது மெலிந்த உள்ளடங்கிய இடை எங்களுக்கு உடுக்கையை நினைவூட்டுகின்றது.

    14-இடது திருக்கை வாமோரு- விந்யஸ்த-கரோ ஹி சௌரே! ஸத்வம் ஜநாநாம் ஸ்வபதாச்ரிதாநாம்! ஸம்ஸார வாராம்நிதி ருருதக்ந இதீவ ஸந்தர்சயவஸிஹ தேவ!! தேவனாகிய சௌரிராஜனே! இடது தொடையில் வைக்கபப்பட்டுள்ள உனது இடது திருக்கை உனது திருவடிகளையே தஞ்சமாகப் பற்றும் ஜனங்களுக்கு, ஸம்ஸாரமாகிய கடல் தொடையளவே ஆகும். (அஞ்சவேண்டா) என்று நீ அறீவிக்கிறாய் போலும்.

    15-வலது திருக்கை நநு வதாந்யதமஸ்ய பலேர் மகே த்ரிபுவந-ஸ்வ-வசீகரணோத்யதாம்! ப்ரகடயம் ஸ்தவ வாமநதாம் விபோ ப்ரஸ்ருத-தக்ஷிண-ஹஸ்த இஹாஸி கிம்?!! பெருமானே! மிகச்சிறந்த கொடைவள்ளலாகிய மகாபலியின் யாகத்தில் மூன்று உலகங்களையும் ஸ்வாதீனமாக வாங்கிக்கொள்ள முயன்ற உனது வாமனத் தன்மையை வெளியிடுபவனாய் நீ இங்கு நீட்டிய(குவிந்த விரல்களோடுகூடிய) வலது திருக்கை உடையவனாய் இருக்கிறாயா, என்ன?

    16-வலது திருக்கை உபாயநம் பக்த-ஜநாதிஸ்ருஷ்டம் க்ரஹீது முத்யுக்த இவேஹ சௌரே! வாமேதரம் ஹஸ்த மிஹ ப்ரஸார்ய த்வம் ப்ராஜஸே பக்த-ஜநாநுகம்பீ!! ஸ்ரீசௌரிராஜனே! பக்த ஜனங்களால் கொடுக்கப்படும் காணிக்கைளை வாங்கிக் கொள்வதை விரும்புவன்போல் வலது திருக்கையைக்குவித்த விரல்கள் உடையதாய் நீட்டி, நீ பக்த ஜனங்களிடம் தயவுடையவனாய் இங்கு விளங்குகிறாய்.

    17-வலது திருக்கை ஆதாது-காம இவ யத் ப்ரஸ்ருதே ஸ்வஹதம் வாமேதரம் வஹஸி தத் வஸீபுத்ர்யவேக்ஷ்ய! அந்யாம் கிமேஷ பரிணேஷ்யதி மாத்ருசீமித்- யாசங்கயேவ ஸவிதம் ந ஜஹாதி ஸா தே!! ஸ்ரீசௌரிராஜனே!(கொடுப்பதை) பெற்றுக்கொள்ள விரும்புவதுபோல் நீ உனது வலது திருக்கரத்தை நீட்டிக் குவிந்த விரல்களுடன் விளங்குகிறாய். அதை வஸீவின் திருமகளான பத்மிநிதேவி நன்கு பார்த்து, ‘நம்போன்ற வேறொரு பெண்ணை இவர் மணந்துகொள்ளப்போகிறாரா?’ என்ற சங்கையால் உனது ஸமீபத்தை ஒருபொழுதும் விட்டு அகல்வதில்லை போலும்?

    18-திருநாபி தவத்-திவ்ய-ஸீந்தர-வபு:ப்ரபவஸ்து சௌரே! காந்த்யா சர:கலு தநௌ தவ மயத்தேவே! ஸ்ங்கோச மேத்ய விஸரந் கிமு ஸப்ரமோய மேதீதி ஹந்த திய மாதநுதே சத்ய நாப்யா!! ஸ்ரீசௌரிராஜனே! உனது அழகிய திருமேனியிலிருந்து உண்டாகும் காந்தியின் வெள்ளம், ஒடுங்கிய உனது இடையில் குறுகியப் பாய்வதாய்க்கொண்டு உனது திருக்கொப்பூழின் சுழியோடு கூடியதாய் விளங்குகிறதோ என்ற எண்ணத்தை உண்டாக்குகின்றது; ஆச்சரியம்.

    19-திருநாபி மலர் த்வத் வாம-தக்ஷிண-த்ருசோர் ஹி விலோகநேந தந்நாபி-பங்கஜ மீகார்த்த-விகாஸ மேத்ய! தத்வா பயஸ் ஸ்வ-சிசவே த்ருஹிணாய சங்கோ லக்ஷ்ம்யா விஸ்ருஷ்ட இதி ஹந்த தியம் தநோதி!! ஸ்ரீசௌரிராஜனே! உனது இடக்கை,வலக்கண் இவற்றின் பார்வையாலே, உலகிற்குக் காரணம் எனப் புகழ் பெற்ற உனது திருக்கொப்பூழின் தாமரை பாதி மலர்ந்தும் பாதிமூடியும் உள்ள நிலையில் உள்ளது. ஸ்ரீலக்ஷ்மிதேவி தன் குழந்தையாகிய பிரம்மனுக்குப் பால் ஊட்டிக் கீழே வைத்த பாலாடைச் சங்குதானோ இது என்ற எண்ணத்தை நமக்கு விளைவிக்கின்றது. ஆச்சரியம். சந்தர ஸூர்யென ச நேத்ரே என்பது குறிப்பு.

    20-திருநாபி மலர் த்வதீய- நேத்ரத்வ முபேயிவத்ப்யாம் ஸமம் நிசா-நாத- திநேச்வராப்யாம்! த்வந்-நாபி-பத்மம் லபதே விகாஸ- ஸங்கோச-தௌஸ்த்யம் ஸததம்ஹி சௌரே!! ஸ்ரீசௌரிராஜனே! சந்த்ரஸூர்யர்கள் இருவரும் உனக்குக் கண்களாய் விளங்குவதைப் பெற்றுள்ளனர். அவர்களால் ஒருங்கே பார்க்கப்படும் உனது திருக்கொப்பூழ் தாமரையானது எப்போதும் மலர்வதும் குவிவதுமாய் ஒரு நிலை பெறாது விளங்குகின்றது; இதனால் துஸ்திதி ஒருநிலை பெறாமை பெற்றுள்ளது.

    21-திருவயிறு த்வயா நிகீர்ணம் ப்ரளயேப்யண்ட ஜாதம் த்ருத்வாபி லோயம் க்ருசதா முபேத:! குக்ஷிர் கிமண்டாநி பஹூநி பூயோ தர்த்தும் ச வாங்சத்யவநாய தேஷாம்!! ஸ்ரீசௌரிராஜனே! பிரளய காலத்தில் உன்னால் விழுங்கப்பட்ட அண்டங்களின் கணங்கள் பலவற்றை உள்ளே தரித்துக் கொண்டிருந்தாலும் வற்றுதலை அடைந்து விளங்கும் இந்த உன் திருவயிறு, மீண்டும் பல அண்டங்களை விழுங்கி உள்ளே தரித்துக்கொள்ள விரும்புகிறதா, என்ன?

    22-அரை வடம் உபகுக்ஷிதடே கலிதா ரசநா- நவ-கிங்கிணிகா-ததி ரத்ர புந:! கிமிஹாண்ட- ததிர் கிரணே ஸ்கலிதா லபநா திதி நோ திய மாத நுதே!! ஸ்ரீசௌரிராஜனே! உனது திருவயிற்றின் கீழ்பாகத்தில் அணிந்துள்ள அரை வடத்தின் புதிய சிறு சதங்கைகளின் திரள், நீ அண்டங்களை விழுங்கியபோது முன்புறத்தில் முகத்திலிருந்து சிதறி விழுந்த அண்டங்களின் திரளோ என்ற எண்ணத்தை இங்கு நமக்கு விளைவிக்கின்றது.

    23-திருவரை கௌசேய-புஷ்பித-கடிம் பரிவேஷ்ட்ய பட்ட பந்தேந சித்ர-பரிகர்ம-பரிஷக்குருதே ந! தஸ்மிந் நிகாய கலு நந்தக மஞ்ஜநாத்ரிர் பாபாஸி கைரிகவிசித்ர இவாத்ய சௌரே!! ஸ்ரீசௌரிராஜனே! பட்டு உடுத்தி, அதனாலே பூத்தாற்போன்ற உனது திருவரையில் இறுகக்கட்டிச் சுற்றி நன்கு அலங்கரிப்பது பட்டுக் கச்சு, அதில் நாந்தகம் என்ற கத்தியைச் சொருகிக் கொண்டு நிற்கும் நீ, நீலத்தடவரை ஒன்று (தன்னிடமுள்ள) மனச்சிலை முதலிய பல நிறங்கள் வாய்ந்த தாதுப் பொருட்களால் விளங்குவதுபோல் பிரகாசிக்கிறாய்!

    24-திருக்கைகள் ஹந்த! கல்பக-தரோஸ் ஸமுதீர்ணாஸ் ஸ்பீததா முபகதா:கிமு சாகா:! இத்யமீ பரிக- தைர்க்யம்- ஜூஷஸ் த்வத் பாஹவோ விரசயந்தி தியம் ந:!! உழல்தடிபோல் மிகவும் நீண்ட உன் கைகள் கற்பகத் தருவினின்றும் மேலே எழுந்தவையும், செழிப்பை உடையவுமான அதன் கிளைகளோ என்ற எண்ணத்தை நமக்கு விளைவிக்கின்றன; ஆச்சரியம்.

    25-திருமார்பில் பிராட்டி ரம்ய- மோக-சிலாதல-பாஸ்வத்- வக்ஷஸீஹ கமலா கநகப்ரபா! கௌஸ்துபேந மணிநா கிமு ரக்தா பாஸதே ப்ரியதமா இவ சௌரே! ஸ்ரீசௌரிராஜனே! அழகிய இந்திர நீலக் கல் மயமான கற்பாறைபோல் விளங்குகின்றது உனது திருமார்பு. அதில் வீற்றிருக்கிறாள் பொன்னிறமான லட்சுமிதேவி. உன் திருமார்பிலுள்ள கௌஸ்துபம் என்னும் ரத்தினத்தால் அவள் சிவப்புடையவளாய் (ஆசையுடையவளாய்) உனது பிரியத்திற்கு விஷயமாக விளங்குகிறாளா, என்ன?

    26-திருமார்பில் பிராட்டி கமலாலயா ஹி கலிதாவஸதா ருசிரம் கடவாட- ஸீத்ருடம் விபுலம்! ந ஜஹாதி ஜாத்வபி யதீய முரஸ் ஸஹி சௌரி ரத்ர லஸதீ ஹ புர:!! தாமரை வாழ்விடமாகக் கொண்ட லட்சுமீதேவி, கதவுபோல் மிகத் திண்ணியதும் விசாலமுமான ஸ்ரீசௌரிராஜனது திருமார்பைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டு, அதை ஒருபோதும் விடுவதில்லை. அந்த ஸ்ரீசௌரிராஜன் திருவுறை மார்பனாக நமக்கு எதிரில் விளங்குகிறான்.

    27-ஸ்ரீகௌஸ்துபம் வக்ஷஸீஹ விபுலே தவ சௌரே! கௌஸ்துபம் மணிவரம் ருசி- தீப்ரம் த்வம் பிபர்ஷி கமலா-ப்ரியகாமஸ் ஸோதரம் பரிஸரே கிம முஷ்யா:? ஸ்ரீசௌரிராஜனே! நீ லட்சுமி தேவியின் விருப்பத்தைச் செய்வதில் ஆசையுடையவனாகி,மிகவும் அகலமான உன்திருமார்பில், அவளுக்கு ஸஹோதரத்தன்மை பெற்றதும், காந்தியால் ஜ்வலிப்பதுமான கௌஸ்துபம் என்னும் சிறந்த இரத்தினத்தை அங்கு அவளுடைய பக்கத்திலேயே (அமையும்படி) தரித்துக்கொண்டிருக்கிறாயா,என்ன?

    28-திருமார்பில் முத்துவடங்கள் நீல-சிலாதல-பாஸ்வர- வக்ஷஸ்- ஸங்கி-மநோஹர=மௌக்திக-ஹாரா:! தே ஹி விபாந்தி கிரேர் நிபதந்த்யஸ் ஸித-சிசிரா இவ நிர்சர-தாரா:!! கறுப்பான மணிப்பாறைபோல் விளங்கும் உன்திருமார்பில் சாத்தப்பட்டுள்ள அழகிய முத்துவடங்கள் மலையினின்றும் கீழே விழுவதும் வெளுத்தும் குளிர்ந்துமிருக்கிற மலையருவியின் தாரைகள் போல ஒளிர்கின்றன.

    29-திருப்பூணுல் த்வத்-காந்தி-பூர-ப்ரஹதா நிவ்ருத்தா: அபீஹ ச தே பக்த- த்ருசஸ்து சௌரே த்வத்-யஜ்ஞஸூத்ரந் த்வவலம்ய தேந பவந்தி வக்த்ரேந்த்வலோக-த்ருப்தா:!1 ஸ்ரீசௌரிராஜனே! உனது பக்தர்களின் கண்கள் உன்திருமேனியின் காந்தி வெள்ளத்தாலே தள்ளுண்டு திரும்பிய போதிலும், உனது யஜ்ஞோபவீதமாகிய ஸூத்ரத்தைப் பற்றிக்கொண்டு, மீண்டும் மேலே சென்று உனது சந்திரன் போன்ற முகத்தைப் பார்த்து, அதனால் திருப்தி பெற்றனவாக ஆகின்றன.

    30-வனமாலை ஆப்ரபதீநா தே வநமாலா சித்ர-ஸீமா த்வத்-கண்ட முபேதா! கல்பக-துல்யம் த்வாம் விததாநா கஸ்ய மநோ நாகர்ஷதி சௌரே?!! ஸ்ரீசௌரிராஜனே! நுனிக்கால் வரையில் தொங்குவதும், பல நிறமலர்கள் வாய்ந்ததும் உனது திருக்கழுத்தை அடைந்ததுமான வனமாலை, கல்பக தருவோடு சாம்யம் உள்ளவனாக உன்னைச் செய்துகொண்டு விளங்குகின்றது. அது எவருடைய மனத்தைத்தான் கவர்வதில்லை.

    31-பாஞ்ச சந்நியம் சௌரே! சிரோதிரேஷா ஸமுந்நதா த்வத்-த்ருதம் சங்கம்! பரிஹஸதீவாக்ருத்யா கம்பீரேணாபி கோஷேண!! ஸ்ரீசௌரிராஜனே! உயர்ந்து எடுப்பான உனது திருக்கழுத்து, உன்னாலே கையில் தரிக்கப்படும் பாஞ்சசந்நியம் என்ற சங்கின் வடிவாலும் கம்பீரமான ஒலியாலும் அந்தப் பாஞ்சசந்நியத்தை பரிஹாசஞ் செய்வதுபோல் இருக்கிறது.

    32-சக்ராயுதம் த்வத்-ஸம்ச்ரிதாநாம் ஹ்யவநே விலம்பம் த்வம் ஹாதுகாம: கிமு தேவ! சௌரே! பஞ்சாயுதீ மாபரணைர் விகல்ப்யாம் கரைர் பிபர்ஷீஹ ஸதா விநேதா!! தேவனே! சௌரிராஜனே! ரக்ஷகனாகிய நீ உன்னைப் பற்றியவர்களது ரக்ஷணத்தில் கால விளம்பத்தை நீக்க விருப்பமுள்ளவனாகி, ஆபரணங்கள் என்று கருதுமாறு அழகுடைய சக்கரம் முதலான ஐந்து ஆயுதங்களையும் உனது திருக்கரங்களில் எப்போதும் ஏந்துகிறாயா, என்ன?

    33.ப்ரயோக சக்கரம் ஸம்ஹ்ருதே சபி ஸகணே விகடாக்ஷே தாநவே ச்ரித-விரோதி-நிவ்ருத்தைய! ஹேதிராஜ மிஹ தீப்தி-விதீப்த- முத்யதம் னஹஸி க்ருஷ்ணபுரேச!! திருக்கண்ணபுரத்தரசே! விகடாக்ஷன் என்ற அசுரன் தனது பரிவாரங்களோடு முன்பு உன்னாலே கொல்லப்பட்டான். எனினும் நீ எப்போதும் சக்கரத்தைப் பிரயோகநிலையில் கையில் ஏந்திக் கொண்டிருக்கிறாய். ஆயுதங்களுக்கு அரசாய், காந்தியால் ஜ்வலிக்கும் அந்தச் சக்கராயுதத்தைக் கையில் ஏந்தி நிற்பது உன்னை அண்டியவர்களது விரோதிகளை அகற்றும் பொருட்டே.

    34-பாஞ்சசந்நியம் ஸ்வாதிதாதர-ஸீதா-மதுரிம்ணச் ச்லாகநாதய தவ க்ருஷ்ணபுரீச! ஸவ்ய-கர்ண-நிகடம் ஸமவாப் ய சங்க ஏவ லஸதீவ கராப்ஜே!! திருக்கண்ணபுரத்தரசே! இந்தச் சங்கு, தன்னால் சுவைக்கப்பட்ட உனது அதர அமுத இனிமையை உன்னிடம் தெரிவிப்பதற்கே. உனது இடக் காதின் பக்கத்தில் வந்தடைந்து, தாமரை போன்ற உனது இடக்கரத்தில் விளங்குகின்றது போலும்.

    35-திருவதரம் குந்த-துல்ய தர-சுப்ர-ரோசிஷஸ் த்வத்ஸ்மிதாதஹஹ! பக்தகோசராத்! பக்வ-பிம்ப-பல-துல்ய-ரக்திமா பாடலீ பவதி தேசதர: புந:!! பழுத்த கோவைக் கனிபோல் நல்ல சிவப்புடைய உனது திருவதரம் (கீழுதடு), பாடல வர்ணமாகின்றது(வெளுப்பும் சிவப்பும் கலந்ததாக). இது உனது புன்முறுவலால், குந்தமலர்கள் போல் வெளுத்த பற்களின் காந்தி உடையதாய் இதனால் பக்தர்களை விஷயமாக்கிக் கொள்வது(அதாவது அவர்களது மனத்தைக் கவர்வது) இந்தப் புன்முறுவல்

    36.புன்முறுவல் த்வத்-ஸ்மிதே ஹ்யதர-ரக்த- ருசைதே குந்த-குட்மல-நிபாஸ் தவ தந்தா:! பீஜபூர-பல பீஜ-ஸமாநா பாந்தி ரம்ய-ருசய: கலு சௌரே! ஸ்ரீசௌரிராஜனே! குருக்கத்தி அரும்புபோலே வெளுப்பானவை உன் பற்கள். நீ புன்முறுவல் செய்யும்போது உன் அதரத்தின் சிவப்பால் இப்பற்கள், மாதுளம்பழத்தின் விதைகளைப்போல் அழகிய காந்தியை உடையவனாவாய் விளங்குகின்றன.

    37-திருச்செவிகள் ஸகுண்டலே தே ச்ரவஸீ கபோல மூலே சமலே தர்பண-துல்ய- சோபே! ஸபுஷ்ப-கல்ப-த்ரும- பல்லவாப்யாம் ஸமே விபாத: ப்ரதிபிம்ப்யமாநே!! கண்ணாடி போன்ற சோபை உடைய உனது நிர்மலமான கன்னத்தில் கீழ்பாகத்தில் குண்டலங்கள் அணிந்த உன் திருச்செவிகள் பிரதிபலிக்கின்றன. மலர்களோடு கூடிய கற்பகத் தருவின் தளிர்களுக்குச் சமமாக இவை பிரகாசிக்கின்றன.

    38-திருக்கண்கள் சபர-ஸ்புரிதாபிபாவுகே ஹ்யருணாபாங்க-விலோசநே தவ! மம பாபததேர் நிபர்ஹணம் குகுதாம் த்ருஷ்டி-ஸீதாபிவர்ஷணாத்!! உனது திருக்கண்கள் கெண்டையின் துடிப்பை அவமதிப்பன. செவ்வரி ஓடிய கடைப்பகுதி உடையன. இவை கடாக்ஷமாகிற அம்ருதத்தைப் பொழிவதால் எனது பாவக் குவியலை நாசஞ் செய்யட்டும்.

    39-திருப்புருவங்கள் அநீகபஸ் தே கலு கார்யஜாதம் யதீய-சேஷ்டாபி ரிஹா வகத்ய! தநோதி தே காம-சராஸ-கர்வ- முஷௌ ப்ருவௌமே லஸதாம் ஹ்ருதப்ஜே!! உனது புருவங்களின் நெறிப்பாலே உனது காரியங்கள் யாவற்றையும் சேனை முதலியார் அறிந்து முடிக்கின்றார். அப்புருவங்கள் மன்மதனுடைய வில்லின் கர்வத்தை நீக்குவன; இவை எனது மனமான தாமரை மலரில் அமர்ந்து விளங்கட்டும்.

    40-திருநெற்றி தவாஷ்டமீ- சந்த்ர- நிபோ லலாடஸ் ஸ்வநிஸ் ஸ்ருதை: காந்தி சரைஸ் ஸீதாபி:! தாபத்ரயீ தாபித ஜீவ- வர்கா- நாந்யாயந் ஹந்த! திநோதி சௌரே!1 ஸ்ரீசௌரிராஜனே! அஷ்டமி சந்திரனுக்கு நிகரான திருநெற்றியிலிருந்து வெளிவருகின்றது காந்தியின் ப்ரவாஹங்களகிற அம்ருதம். தாபத்ரயத்தாலே வாட்டப்படும் ஜீவராசிகளை இந்த அம்ருதம் போஷித்துக் களிக்கச் செய்கிறது.

    41-திலகம் புவிசந்த்ர-கோடி ஸத்ருசம் ருசிரம் தவ தேவ! திவ்ய வதநம் விமலம்! இஹ துஷ்ட-த்ருஷ்டி-விஷயம் ந பவே திதி கிம் பிபர்ஷி திலகம் த்வஸிதம்!! தேவனே! இப்புவியில் கோடி சந்திரர்களுக்கு நிகரானதும், அழகியதும், களங்கமற்றதுமான உனது திவ்ய முகத்தில் நெற்றியில் கறுத்த நிறமுள்ள திலகத்தை தரித்திருக்கிறாய். பொல்லாங்கு படைத்த கண்களால் த்ருஷ்டி தோஷம் வாராமைக்காககஇதை தரித்திருக்கிறாயா, என்ன?

    42-திருமுக மண்டலம் பாலம் கலு சந்த்ரம் த்வாந்தம் பரிபூய காடம் புவி கீர்ணம் சௌரே! லபநம் தே! பூர்ணம் த்விஜராஜம் மத்வா கிமு பீத்யா பூத்வா தவ கைச்யம் நந்தும் ஸமுபைதி!! ஸ்ரீசௌரிராஜனே! இளம்பிறைச் சந்திரனை அவமதித்து பூமியில் எங்கும் அடர்ந்து பரந்துள்ள இருட்டானது, உனது திருமுக மண்டலத்தைப் பூர்ணசந்திரனாக மதித்து, பயத்தினால், உனது கேச சமுகமாக மாறி (அந்த முகத்தை) வணங்க வந்துள்ளதா, என்ன?

    43-திவ்யபீடம் அநேக- கோட்யண்ட-மஹாதிபத்ய ஸம்ஸூசகேநார்யமகோடி- பாஸா! ஸர்வாங்க-ஸௌந்தர்ய-பவம் ஹி தேஜஸ் ஸஞ்சாத்யதே தே முகுடேந சௌரே! ஸ்ரீசௌரிராஜனே! அநேக கோடி அண்டங்களுக்கும் நீ பெரிய அதிபன் என்பதை குறிப்பாகக் காட்டுகின்றது உனது கிரீடம். அது கோடி சூர்யர்களின் காந்தி வாய்ந்தது. உனது திருமேனியின் அங்கங்கள் எல்லாவற்றின் அழகால் உண்டாகும் ஒளியானது, இந்தக் கிரீடத்தால் முட்டாக்கிடப்படுகிறது(மூடப்படுகிறது).

    44-திருக்குழல் சௌரே! கநீபுத-தமிஸ்ர- ஸம்ஜ்ஞ- கார்ப்பாஸிகா-புஞ்ஜ-விநிர்காத யே! தே ஸம்யதாஸ் தந்தவ ஏவ நுõநம் த்ம்மில்லதாம் ப்ராப்ய லஸந்தி பச்சாத்!! ஸ்ரீசௌரிராஜனே! அடர்ந்த இருளென்னும் பஞ்சுப்பட்டையிலிருந்து வெளிவந்த நுõல்கள் எவையோ, கறுத்துத்திரண்ட அந்த நுõல்களே துõக்கிக் கட்டப்பட்டவையாகித் தலைக்கொண்டையாய் உன் பின்புறத்தில் துலங்குகின்றன.

    ஸ்ரீமத்- க்ருஷ்ணபுரீ சாநா- நயநாநந்த-தாயிநே- உத்பலாவதகேசாய சௌரிராஜாய மங்களம்!! *

    ——————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ கண்ணபுரநாயகி ஸமேத ஸுவ்ரி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ -பகல் பத்து- இராப் பத்து அனுபவம்-

    January 20, 2025

    ஸ்ரீ திருவல்லிக்கேணி -பகல் பத்து- இராப் பத்து அனுபவம்-

    பகல் பத்து முதல் நாள்–ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் திருக்கோலம்
    ஸ்ரீ பார்த்தா சாரதி ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் மஹா மண்டலத்தில் திரு ஓலக்கம் -1-45-pm திரு ஆராதனம் -தளிகை -அருளப்பாடு -2-11 pm
    சேவை தொடக்கம்-திருப்பல்லாண்டு -பெரியாழ்வார் திரு மொழி –2-25 pm தொடங்கி -4-20-pm வரை 2 பதிகம் –
    சாற்று முறை -தீர்த்த்ம் சடகோப விநியோகம்
    உள் புறப்பாடு -6 pm மணிக்கு தொடங்கி -வரதர் சந்நிதி திருமழிசை ஆழ்வார் சந்நிதி ஆனால் சந்நிதி -6-45-pm
    ஆளவந்தார் சந்நிதி -7-25-pm
    ஒய்யாளி -பின்பு 8-00 pm -மணிக்கு

    தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
    மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
    என் இலங்கு   நாமத்து அளவும் அரசு என்ற
    மின் இலங்கு ஆரற்க்கு  ஓர் கோல் கொண்டு வா
    வேம்கட வாணற்க்கு   ஓர் கோல் கொண்டு வா -2 -6-9 –

    மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு-அந்தரிஷ கத ஸ்ரீ மான் -என்கிறபடியே
    இலங்கையை விட்டு அந்தரிஷ கதனான போதே ராவண சம்பந்தத்தால் வந்த அஸ்ரீ குடி போய் – ராம சம்பந்தத்தால் வந்த ஸ்ரீ யால் பூரணன்- ஆகையாலே –நம்பி என்கிறது-என்னுடைய உஜ்வலமான நாமம் இந்த லோகத்தில் எவ்வளவு செல்லும்
    அவ்வளவும் உனக்கு ராஜ்ஜியம் நடக்க கடவது என்று அருளி செய்த
    ராமனாய்
    மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்

    கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
    உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
    மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
    அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ
    –81-என்கிறபடியே அவ் அவதார குணம் எல்லாம் இங்கே பிரகாசிக்கும்படி திருமலைக்கு- நிர்வாஹகனாய் இருக்கிறவனுக்கு –

    பகல் பத்து -2 நாள் ஸ்ரீ வேணு கோபாலன் திருக்கோலம்

    சிறு விரல்கள் தடவி பரிமாற செம்கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க 
    குறு வெயர்ப் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடூதின போது 
    பறைவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப 
    கறைவையின் கணங்கள் கால் பரப்பி இட்டுக் கவிழ்ந்து இறங்கி செவி ஆட்ட கில்லாவே -3-6-8 – –

    சிறு விரல்கள் தடவி பரிமாற –
    கரும் சிறுக்கன் -என்ற பருவத்துக்கு தகுதியாம்படி சிறுத்து இருந்துள்ள திரு விரல்கள் ஆனவை –
    திருக் குழலின் துளைகளில் புதைக்க வேண்டுவது –
    புதைத்து திறக்க வேண்டுவது –
    திறக்கைகாக குழலின் துளைகளை தடவிக் கொண்டு வ்யாபரிக்க

    செம் கண் கோட –
    இட வணரை இடத் தோளோடே சாய்த்து துளை தோறும் கண்ணோட நின்று ஊதுகையாலே 
    சிவந்து இருந்த திருக் கண்கள் ஆனவை வக்கரிக்க 

    செய்ய வாய் கொப்பளிக்க –
    வாய் கடை கூட -என்கிறபடியே
    இரண்டு கடை வாயையும் குவித்து ஊதுகிற போது –
    சிவந்த திருப் பவளமானது அக வாயில் உண்டான வாயுவினுடைய பூரிப்பாலே குமிழ்க்க 

    குறு வெயர்ப் புருவம் கூடலிப்ப-
    உலாவி உலாவி குழலூதுகிற ஆயாசம் பொறாமல் ஸௌ குமார்யத்தாலே 
    குறு வெயர்ப்பு அரும்பின-பரம்பின – திருப் புருவமானது மேலே கிளர்ந்து வளைய 

    கோவிந்தன் குழல் கொடூதின போது –
    கோ ரஷணத்திலே தீஷிதனாய் –
    அவற்றை மேய்த்துக் கொண்டு திரியுமவன் –
    அவன் மேய்ந்து வயிறு நிறைந்த ஹர்ஷத்தால் –
    சர்வ ஜந்து ஜாத மநோஹரமான  திருக் குழலைக் கொண்டு ஊதின போது 

    பறைவையின் கணங்கள்
    பஷிகளினுடைய திரள்கள் 

    கூடு துறந்து –
    தம் தாமுடைய வஸ்தவ்ய ஸ்தலங்களை விட்டு  

    வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப –
    குழலோசை வழியே ஊதுகிறவன் அளவும் வந்து சூழ்ந்து கொண்டு –
    வெட்டி விழுந்த  காடு போலே பரவசமாய் கிடக்க 

    கறைவையின் கணங்கள்-
    பசுக்களினுடைய திரள்கள் ஆனவை 

    கால் பரப்பி இட்டுக் –
    பாரவச்யத்தாலே கால்களை பரப்பி 

    கவிழ்ந்து இறங்கி –
    தலைகளை மிகவும் நாற்றிக் கொண்டு 

    செவி ஆட்டகில்லாவே –
    செவியை இசைக்கில் இசைக்கு பிரதிபந்தகம் ஆம் -என்று 
    செவியை ஆட்டவும் மாட்டாதே நின்றன — 

    பெரியாழ்வார் திரு மொழி சாற்று முறை -உள் புறப்பாடு

    ————————————-

    பகல் பத்து -3 நாள் ஸ்ரீ காளிங்க நர்த்தன திருக்கோலம்

    திருப்பாவை -நாச்சியார் திரு மொழி -ஸேவை9 பத்து வரை

    மகுடியும் வாசிப்பார்கள் புறப்பாட்டின் முடிவில்-

    ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
    பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
    வாய்த்த காளியன் மேல் நடமாடிய
    கூத்தனார் வரில் கூடிடு கூடலே–4-4-

    ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட-
    பயமே ஸ்வ பாவம் ஆனவர்களும் –
    பயம் வ்யுத்பத்தி பண்ணி அறியாதவர்களும் –

    உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபன்- போல்வாரும்
    அதுவே போர்க்களமாக இறே ந்ருத்தம் செய்தது – –
    போர்க்களமாக ந்ருத்தம் செய்த பொய்கைக் கரை
     -12-7-

    பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
    விஷ தக்தமான கடம்பு -திருவடிகள் பட்டவாறே பூத்தது
    அங்கோல தைலத்துக்கு உள்ள சக்தியும் இங்கு இல்லை அன்றே –
    கல்லு பெண்ணானால் கடம்பு பூக்கச் சொல்ல வேணுமோ

    நீள் கடம்பு –
    இலக்கு வாய்க்கைக்காக உயர ஏறிப் பாய்ந்தான்

    புகப் பாய்ந்த –
    கால் ஆழக் குதிக்க

    வாய்த்த காளியன்
    தன் முலைகளிலே -இவள் கணிசிக்கும் நடமடைய அவன் தலையிலே பெற்றான்
    அமிர்தம் பொதிந்த முலைகள் பெறாது ஒழிவதே –

    மேல் நடமாடிய-
    ந்ருத்த சாஸ்தரத்துக்கு ஸூத்ரம் இறே –
    ஸ்ரீ பாஷ்யத்துக்கு ஸூத்ரம் போலே –

    கூத்தனார் வரில் –
    ஆடின ஒசிவோடே வந்து அணைய வேணும்

    கூடிடு கூடலே-
    உன் இசைவு கொண்டு பெற இருக்கிறேன் நான் –

    —————————

    பகல் பத்து -4 நாள் ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் திருக்கோலம்

    பெருமாள் திருமொழி ஸேவை-

    வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
    வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
    மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
    வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
    செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
    தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
    அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
    அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–

    வந்து எதிர்ந்த தாடகை
    தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு – ஒப்பில்லாதவள் –
    தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –

    தன் உரத்தை கீறி-
    ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து

    வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
    செம்பாட்டுத் தரையிலே-செம்மண் தரையிலே- மலை யருவி விழுந்தால் போலே ருதிரம் வந்து கொழிக்க –
    வலிக்கு ஒப்பில்லாத திருச் சரத்தை நடத்தி

    மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
    ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
    யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி

    வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
    யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை
    மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து

    செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை-தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
    சிவந்த தளிர்கள் நடுவே விகசியா நின்றுள்ள புஷ்பங்களை உடைத்தாய் -தர்ச நீயமான ஸ்ரமஹரமான
    சோலையாலே அலங்க்ருதமான ஊரிலே

    அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
    அநந்ய பிரயோஜனரான பிராமணர் மூவாயிரம் பேர் -திரண்டு மங்களா சாசனம் பண்ண

    அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே–
    கோப்புடைய சீரிய சிங்காசனம் என்னும்படியே மஹார்கங்களான ரத்னங்களை யுடைத்தான-சிம்ஹாசனத்திலே
    தன் மேன்மை தோற்ற வீற்று இருந்த ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் –

    ———

    பகல் பத்து -5 நாள் ஸ்ரீ ஏணிக் கண்ணன் திருக்கோலம்

    முதல் ஆயிரம் சாற்று முறை ஸேவை

    காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம்
    சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால்
    ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின்
    பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா –37-

    காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து –
    க்ருஷ்ணன் மேலே விழுகைக்கு உறுப்பாக பரப்பு மாறக் காய்ந்து ஓங்கி நின்ற விளாவான
    அசுரனுடைய கனிகளை -கன்று விட்டு எறிந்து உதிர்த்து

    எதிர்ந்த பூங்குருந்தம் சாய்த்து –
    விளாவான அசுரனை அழியச் செய்து க்ருஷ்ணன் கிட்டின பின்பும் பேராதே நின்ற
    பூங்குருந்தை ஊசி வேரோடே பறித்து விழ விட்டு –

    இதுவும் அவன் மேலே விழுந்து புஷ்பாபசயம் பண்ணுகைக்கு உறுப்பாக பரப்பு மாறப்
    பூத்து நின்றது ஆய்த்து –

    இவை இரண்டாலும் அனுகூல வேஷராய் நலிய வந்த அசுரர்களை அழியச் செய்தபடி
    சொல்லிற்று –

    மா பிளந்த –
    ப்ரதிகூலனாயே வாய்பாறி ஊரை அழிக்க வல்ல கேசியை அநாயேசேந இரு கூறாகப்
    பிளந்து அவ்வாபத்தைப் போக்கினான்

    கைத்தலத்த கண்ணன் என்பரால் –
    ஓர் ஆயுதத்தால் அன்றிக்கே லீலையாக அழித்த திருக்கையை உடைய க்ருஷ்ணன்
    என்று ஜ்ஞாநாதிகாரான வியாச பராசராதிகள் சொல்லா நிற்பர்கள்

    ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின் பேய்ச்சி பாலை உண்டு
    ஆய்ச்சி பாலை உண்டு -வெண்ணெய் உண்டு –
    யசோதை பிராட்டியாருடைய பாலையையும் வெண்ணெயையும் அமுது செய்து –
    இத்தால் -விஜி கத்ஸ -என்கிற தத்வத்துக்கு ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யத்தால்
    அன்றிக்கே செல்லாது இருக்கிறபடியைச் சொல்லிற்று –

    பேய்ச்சி பாலை உண்டு –
    தாய் வடிவு கொண்டு விநாசிகையாய் வந்த பூதனையினுடைய முலையை அமுது செய்து –
    அவ்வழியாலே அவளை முடித்து –

    யசோதையினுடைய பாலோபாதி பூதனையினுடைய ப்ராணனும் தாரகமாய் இருக்கிற படி
    பின் மண்ணை உண்டு –
    க்ருஷ்ணனுடைய மௌக்த்யத்தை அனுபவித்த சமனந்தரம் தத் ஸத்ர்சமான வட தள
    சாயினுடைய மௌக்த்யத்தை யனுபவிக்கிறார் –
    கல்ப அவசாநத்திலே சிறிய திரு வயிற்றிலே ஜகத்தை அடைய அமுது செய்தால்
    சாத்மியாது என்று அறியாதே மௌக்த்யம் இ றே வட தள சாயி உடைய மௌக்த்யம்

    பண்டு ஓர் ஏனமாய வாமனா —
    கல்பாதியிலே ஒரு ஸ்ரீ வராஹமாய் -ஒருத்தர் அர்த்தியாக இருக்க பூமியை எடுத்து ரஷித்து
    அந்த பூமியை மகாபலி அபஹரிக்க ஸ்ரீ வாமனனாய் அளந்து கொண்டவனே –

    1-தன்னை அழிய மாறி ரஷித்த சௌலப்யத்துக்கும்
    2-வரையாதே எல்லாரையும் தீண்டின சீலத்துக்கும்
    க்ருஷ்ணாவதாரத்தொடு சாம்யம் உண்டாகையாலே
    இவ்வதாரங்களை அனுபவிக்கிறார் –

    ——————————————————

    பகல் பத்து -6 நாள் ஸ்ரீ பரம பத நாதன் திருக்கோலம்
    இன்று தொடங்கி மூலவர் தர்சனம் -மீசை இல்லாமல் ஐந்து நாள்களுக்கு ஸேவை

    பெரிய திரு மொழி தொடக்கம்
    ஸ்தல பாசுரம் -சேவை பொழுது மூலவர் ஹார்த்தி -ஐந்து நாள்களுக்கு மீசை இல்லாமல் சேவை

    விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
    செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
    பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
    சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
    -2-3-1-

    அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால்
    விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன்
    கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத்
    தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-5-

    வியாக்யானம் –

    அடுத்து –
    மேல் விழுந்து கிட்டி

    ஆர்த்து எழுந்தாள் –
    ஆரவாரத்தைப் பண்ணிக் கொண்டு –
    கிளர்ந்து வந்து தோற்றினவள் –

    பிலம் போலே இருக்கிற வாயைத் திறந்து கூப்பிட அவள் மூக்கை
    (காதுக்கும் இது உப லக்ஷணம்
    நாசிகா -நாசி மூக்கு -கோதாவரிக்கு இரு பக்கமும் பஞ்சவடியும் நாசிக் நகரமும் உண்டே )
    அயில்
    கூர்மை கூரிய
    திருக்குற்றுடை வாளை வாங்கிப் போக்கினான்

    விளங்கு இத்யாதி
    கையும் திருவாழி யுமான சேர்த்தி அழகைக் காட்டி
    நித்ய சூரிகள் கார்யத்தை நிர்வஹித்து கொண்டு போகிறவன்-

    நண்ணார் -இத்யாதி –
    சத்ருக்கள் முன்பே
    இந்த்ரனுடைய அபிசந்தி பூர்வகமாக வருகிறது ஆகையாலே
    (நண்ணார்-எதிர்த்து வந்த இந்திரனும் -அவனுக்கு எதிரிகளான கோப கோபிமார்கள் -)
    பெரிய வேகத்தோடு கோஷித்துக் கொண்டு தோற்றின
    மஹா வர்ஷத்தை கோவர்த்தன கிரியைத் தரித்து
    பண்ணின உபகாரத்தையும் அறியாதே
    ஸ்வ ரஷணத்துக்கும் பரிகாரம் இல்லாத (அநந்யார்ஹ -ஆகிஞ்சன்யம்)பசுக்களை
    நோக்குகைகாக தடுத்தான் ஆயிற்று

    தடாகங்களாலே சூழப்பட்ட தர்ச நீயமான சாளக்கிராமத்தை அடை நெஞ்சே –

    —————

    ————–

    பகல் பத்து -7 நாள் ஸ்ரீ பகாசூர வத திருக்கோலம்

    பெரிய திரு மொழி -3 பத்தும் 4 பத்தும் ஸேவை

    தூ விரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே
    பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
    தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திரு வாலி
    ஏ வரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே–3-6-1-

    —————

    பகல் பத்து -8 நாள் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக திருக்கோலம்

    பெரிய திருமொழி -5-6-7 ஸேவை

    ஏழை  ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
    மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை  உகந்து
    தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
    ஆழி வண்ண நின்னடி இணை  அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-

    இரக்கம் முதல் படி -அருள் அடுத்து – இன்னருள் அடுத்து -இத்தை உபபாதிக்கிறது மேல் –
    இங்கு ஒழி-பிரிவு இருந்தால் தானே சேர்க்கையில் சுகம் உண்டு இங்கேயே நில்
    சொற்கள் வந்து-கர்ணா கர்ணிகையாய் வந்து

    ஏழை –
    அஞ்ஞன்
    ஏழை என்ன அஞ்ஞன் என்று காட்டுமோ என்னில் -சபலன் என்ற படி –
    விஷய சாபல்யம் -அஞ்ஞான கார்யம் இறே –
    அஞ்ஞானம் தான் -ஜ்ஞான அநுதயம்-அந்யதா ஜ்ஞானம் – விபரீத ஜ்ஞானம் –
    என்று த்ரி பிரகாரமாய் இறே இருப்பது –
    ஜ்ஞானம்   பிறந்தவாறே ஜ்ஞான அநுதயம் போம் –
    யதா ஜ்ஞானத்தாலே அந்யதா ஜ்ஞானம் போம் –
    விஷய ப்ராவண்ய ரூபமான விபரீத ஜ்ஞானம் இறே போக்க வரிது
    தர்மஞ்ஞா -யசஸ் வீ -ஜ்ஞான சம்பன்ன -என்கிற தேவர்க்கு எதிர் தட்டாய் இருக்கிறபடி –
    (மற்ற வேறே பெண்ணை ஏர் எடுத்துக் பார்க்காத யசஸ்ஸூ )
    இத்தால் ஜ்ஞான கொத்தையைச்   சொல்லிற்று –

    (விஷய சாபல்ய ஹேதுவான அஞ்ஞானம்
    அபோக்யங்களில் போக்யதா புத்தி பண்ணுவது –
    கீழ் இரண்டையும் -அவாந்தர பேதங்களைச் சொன்னது இதன் குரூரம் அறிவதற்காக
    விஷய ப்ராவண்யமாக பரிணமிக்கும் விபரீத ஞானம் -)

    ஏதலன் –
    சத்ரு
    தாயைச் சோறு வேண்டும் போது
    வாளை விதிர்த்த வேண்டும்படியான  சாத்ரவத்தை சொல்லுகிறது –
    ரிபூணாம் அபி வத்சல-என்கிறதுக்கு எதர் தட்டாய் இருக்கிறபடி
    (யுத்த காண்ட ஸ்லோகம் -கருட இறக்கையால் நாக பாசம் –
    விரோதிகள் இடம் வாத்சல்யம் -குகன் தாய் இடம் விரோதி )
    மர்யாதா நாஞ்ச-என்கிறவர்க்கு   எதிர் தட்டாம்படி
    மர்யாதா பங்கம் பண்ணி இறே இருப்பது
    இத்தால் வ்ருத்தத்தில் கொத்தை சொல்லுகிறது-
    (ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் -அனுஷ்டானத்தைச் சொன்னவாறு )

    கீழ் மகன் -இவை இத்தனையும் பூஷணமாம் படியான ஜென்மத்தை உடையவன்
    கீழ்ச் சொன்னவை இரண்டும் ஜ்ஞான சாத்யமாயும்
    பிராயச்சித்த சாத்யமாயும் இருக்கும் இறே –
    இது வேறு ஒன்றால் கழிக்க ஒண்ணாதே
    இஷ்வாகு வம்ச பிரபவ -என்கிறவர்க்கு எதிர் தட்டாய் இருக்கும் படி –
    இத்தால் ஜன்மத்தின் கொத்தை சொல்லுகிறது –

    இம் மூன்றாலுமாக
    பெருமாள் உடைய நீர்மையின் ஏற்றம் சொல்லிற்று ஆய்த்து –

    ஏழை  ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி-
    இவை ஒன்றும் பாராதே யாய்த்து இரங்கிற்று –
    ருஷீணாம் அக்னி கல்பா நாம் -என்று
    ஜன்ம வித்யா வ்ருத்யங்களை உடையராய் இருக்கும்
    உபாசகரான ருஷிகளுக்கும்
    அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்னும் இளைய பெருமாளுக்கும்
    சாதன சித்த்யர்த்தமாகவும்
    போக சித்யர்த்தமாகவும்
    இரங்கும் இரக்கத்தை இறே
    இவர் அளவில் இரங்கிற்று –
    (சாதனா நிஷ்டர்களுக்கும் கைங்கர்யமே பிரார்த்திக்கும் இளைய பெருமாளுக்கும்
    இவர் இரக்கமே உபாயம் )

    அதவா
    என்னாது இரங்கி –
    இப் பாசுரம் சொல்லாது இருக்க -இரங்கி –
    ந தர்ம நிஷ்டோஸ்மி-ந ஆத்மவேதி –
    அமர்யாதா-
    (நல்லவை இல்லை தீயவை சகலமும் உண்டு என்பதுக்கு இரண்டு பிரமாணங்கள் ஸ்தோத்ர ரத்னம் )
    ராவணே நாம -இத்யாதிகளில்
    சரணம் புகுவார் ஸ்வ நிகர்ஷத்தை  முன்னிட்டு
    கொள்ளக் கடவர்கள் என்னா நின்றது இறே –

    ஸ்ரீ குகப் பெருமாள் சொல்லக் கடவ பாசுரத்தை
    இவர் சொல்லுவான் என் என்னில்
    அவருடைய கருத்தாலே-

    மற்று அவர்க்கு –
    அவனுக்கு அதுக்கு மேலே –

    இன்னருள் சுரந்து –
    இவ் விஷயீ காரத்துக்கு மேலே
    இனிய அருளைச் சுரந்து
    இன்னருள் –
    தன் பேறான அருள்

    சுரந்து –
    வத்ச சகாசத்தில் தேனு வானது ஷீரத்தை
    சுரக்குமா போலே
    குணங்களைச் சுரந்து –

    இத்தை உபபாதிக்கிறது மேல் –
    மாழை மான் மட நோக்கி-
    நிகர்ஷம் சொன்னால்
    பிரதமத்தில் முன்னிடக் கடவ
    அர்த்தத்தைச் சொல்லுகிறது –
    முக்த்தமான மானின்  உடைய மிருதுவான நோக்குப் போலே
    உள்ள நோக்கை உடையவள் –
    இத்தால் சம்பந்தம் இருவரோடும் ஒத்து இருக்கச் செய்தே
    இவளுடைய கடாஷத்தின் உடைய முற்பாடு சொல்லுகிறது –
    இவனைப் பாரா அவனைப் பார்க்கும் –
    ப்ரேஷிதாஜ்ஞாச்து கோசலா இறே –
    பிரணயினி பிரணயிகளுக்கு வாயால் சொல்லுவது இல்லை இறே –
    (உள்ளே ஓடும் எண்ணத்தை அறிபவர் கோசல தேசத்தார்
    அதுக்கும் மேலே அபிமத அநுரூப பிரணயி )
    இத்தனை குறைவாளனை  விஷயீ கரியாது ஒழிகிறது என் –
    என்னாப் போலே யாய்த்து பார்வை இருக்கிறது –
    இவள் பருவத்தையும் நோக்கையும் கண்டால்
    இவள் வழியே போவான் ஒருவன் இறே –

    யுன் தோழி –
    உனக்கு ஸ்வாமிநி- என்னாதே
    தோழி என்கிறார் -நீர்மையாலே
    சீரியார் சேஷ பூதரையும் -அண்ணா ஆச்சி -என்னா நிற்பார்கள் இறே
    இவர்கள் தான் இங்கன் அல்லது சொல்லா நிற்க மாட்டார்கள்
    மித்ர பாவேன-
    (சர்வ லோக சரண்யனாக வந்தவனை -நண்பனாகக் கொண்டு )
    மித்ர மௌபயிகம்-
    தேன மைத்ரீ பவதுதே –
    (காலைப் பிடிக்கவும் யோக்யதை இல்லா ராவணனுக்கு உபதேசம் நட்பு கொள்வாய்
    உன் குடி இருப்பு நிலைக்க -சரணாகத வத்சலன் என்று சொல்லியும் )

    இவ் வார்த்தை போழ்க்கனாய் இருக்கை
    (உபசார வார்த்தையாக கபடமாக இல்லாமல்
    பிராப்தி சமயத்தில் நிரஞ்சனம்- சாம்யா பத்தி-ஸாதர்மம் ஆகதா
    சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே )
    குண சாம்யத்தையும்
    போக சாம்யத்தையும்
    தேக சாம்யத்தையும்
    போக்ய சாம்யத்தையும்
    கொடுத்து இறே வைப்பது –

    உம்பி யெம்பி –
    உன்னுடைய தம்பி என்னுடைய தம்பி –
    இங்கனே சொல்லுவான் என் என்னில்
    பெருமாள் விஷயீ கரித்து இருக்குமவர்களை
    அவரோபாதியாக நினைத்து இருக்கும்
    இளைய பெருமாள் கருத்தாலே

    பக்தி ரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே
    தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் சச பூஜ்யோ யதாஹ்யஹம் -என்றும்
    தொழுமின் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க வழிபட வருளினாய் -என்றும்
    சொல்லுகிறபடியே
    பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் -என்று
    சம்சாரத்தில் நின்றும் ஒருவன் முக்தனாய்ச் சென்றால்
    ஸ்ரீ பாதம் விளக்கி ஸூரிகள் ஆதரிக்கக் கடவர்கள்
    என்னா நின்றது இறே
    அவர்களிலே பிறி கதிர் பட்டு  போந்தவர் இறே இளைய பெருமாள்

    இத்தால்
    ஸ்ரீ வைஷ்ணவ அங்கீ காரம் பண்ணிக் கொடுத்த படி-
    தன் தாளிணைக் கீழ் சேர்த்து அவன் செய்யும் சேமம் -என்றும்
    அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்றும் –
    சொல்லக்  கடவது இறே  –
    (பாகவத அபிமானம் பெற்றுக் கொடுப்பதே சேமம் விமலத்வம் )

    என்று ஒழிந்திலை-
    அவ்வளவிலே விட்டிலை
    பிராட்டியை தோழி என்றும்
    இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே
    ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை –

    உகந்து –
    உகப்பாலே -தோழன் நீ -எனக்கு என்கிறார்
    உகப்பு ஓர் அளவில் நிற்குமது அன்றே
    (உனக்கு நான் தோழன் என்றால் தனது ப்ராதான்யம் சித்திக்கும் -ஆகவே இப்படி )

    தோழன் நீ எனக்கு –
    ஸ்வ நிகர்ஷத்தைச் சொல்லி
    புருஷகாரத்தை முன்னிட்டு
    ஸ்ரீ வைஷ்ணவ அங்கீ காரம் உண்டானால்
    அநந்தரம்
    உபாய ஸ்வரூபம் அனுசந்தேயமாகக் கடவது இறே
    அத்தைச் சொல்லுகிறது –
    (நாலடி வந்ததே இவற்றுக்கு சமம் )

    இங்கு ஒழி –
    பின்பு தொடர்ந்து போகப் புக்கால் காணும் இவரும் ( கலியனும் )-
    படை வீடு கெடாமைக்கு ஒருவனை வைத்தோம்-
    வழி யடி கெடாத படி   இங்கே இரும்-
    ஸ்வ இச்சா அனுரூபமாக வன்றியிலே
    க்ரியதாம் இதி – யிலே அங்கும் உள்ளது-
    (சிஷ்யச்ச தசஸ் ச என்று சொல்லி பரதாழ்வான் -வருவான் அவனுக்கு வழி காட்ட வேண்டுமே
    இதுவும் பாகவதருக்கு சேஷமாக்குதல்
    தான் ஆசைப்பட்ட -இஷ்ட விநியோக அர்ஹனாக்கி )

    என்ற சொற்கள் –
    அவ் வர்த்தங்கள் அன்றிக்கே
    அப் பாசுரம் காணும் இவரை வருத்துகிறது

    வந்து –
    ஒரு கால விசேஷத்திலேயாய் இருக்க
    கர்ண பரம்பரையாக வந்து
    இவர் நெஞ்சிலே யாய்த்து ஊற்றி இருந்தது
    இப் பாசுரம் தன்னை
    குஹே  ந சஹிதோ ராமோ லஷ்மணனேன  ச சீதயா-என்று
    ஸ்ரீ வால்மீகி பகவான் சொல்லி வைத்தான் இறே –
    ( வேதம் தமிழ் செய்த பரகாலன் )

    அடியேன் மனத்து இருந்திட-
    சம்ஸ்மராம் யஸ்ய வாக்யாநி -என்னுமா   போலே
    இவர் நெஞ்சிலே யாய்த்து வேர் விழுந்தது
    சேஷ பூதன் உடைய தய நீயமான பாசுரம்
    சேஷி நெஞ்சிலே வேர் விழுந்து ரஷணத்துக்காய்க் கிடைக்குமா போலே
    சேஷி பாசுரம் சேஷ பூதன் உடைய நெஞ்சிலே கிடக்கக் கடவது இறே கைங்கர்யத்துக்காக –

    (சம்ஸ்மராம் யஸ்ய வாக்யாநி பிரியாணி மதுரானி அம்ருதாணி பரதன் பேச்சைப் பற்றி பெருமாள் –
    எப்பொழுது நான் சேருவேனோ என்று எல்லாம் பிதற்றி
    சேஷன் வார்த்தை சேஷி திரு உள்ளத்தில் அது
    இங்கு ஒழி -பரதன் கைங்கர்யத்துக்காக சொன்னது போல் எனக்கும் கொடுத்து அருள வேணும் )

    ஆழி வண்ண –
    ரத்னங்களால் கடல் நிரம்பி இருக்குமா போலே
    ஆஸ்ரயநீயத்துக்கு ஏகாந்தமான  குணங்களால் நிரம்பின கடல் –
    அபார காருண்யா -இத்யாதி
    யதா ரத் நாநி ஜலதேர சந்க்க்யே யானி புத்ரக
    ததா குணாஹ்ய நந்தச்ய
    அஸங்யேய மகாத்மான
    உத்பத்தியும் அங்கேயுமாய்
    வாசமும் அங்கேயுமாய்
    புறம்பு ஓர் இடத்தில் அன்றிக்கே
    எல்லாரும் ஆதரிக்கும்படி ரத்னங்கள்
    இருக்குமாப் போலே யாய்த்து குணங்கள் இருக்கும்படி

    அதவா
    கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனே
    வடிவைக் கண்ட போதே
    சாம்சாரிகமான தாபங்கள் உடைய ஆறும்படி யாய்த்து இருப்பது –

    நின்னடி இணை  –
    அனந்தரத்தில் சரணவ் என்கிற பதத்தை நினைக்கிறது –
    (பூர்வ வாக்ய அர்த்தமே இப்பாசுரம் -ஆழி வண்ண நாராயண -)

    அடைந்தேன்
    பிரபத்யே வர்த்தமான கிரியா பதம் அமுக்கியம் இவருக்கு

    அணி பொழில் திருவரங்கத் தம்மானே
    ராமாவதாரத்தைச் சொல்லி இங்கே சேர்க்கையாலே
    நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் -என்கிறபடியே
    அவரே இங்கே சாய்ந்தார் என்கிறது

    அணி -என்று
    பொழிலுக்கு விசேஷணமுமாய்
    கோயிலுக்கும் விசேஷணுமுமாய்  இருக்கிறது
    அதாகிறது
    சம்சாரத்துக்கு ஆபரணம் போலே இருக்கை
    சோலை வாய்ப்புக் கண்டு சாய்ந்தால் போலே இருக்கச் செய்தேயும்
    ஆஸ்ரிதர் தேட்டமாய் அன்றோ இங்கு சாய்ந்து அருளிற்று

    அம்மானே -உடையவன் ஆகையாலே
    உடைமை தேட்டமாய் அன்றோ
    இங்கு வந்து சாய்ந்து அருளிற்று –

    ——————

    பகல் பத்து -9 நாள் ஸ்ரீ முரளி கண்ணன் திருக்கோலம்

    பகல் பத்து -10 நாள்-சாற்றுமுறை – ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம்

    இராப்பத்து -2 நாள் வேணுகோபாலன் திருக்கோலம்
    5 நாள் ரத்னாங்கி ஸேவை
    6 நாள் திருவேங்கடமுடையான் திருக்கோலம்
    7 நாள் -முத்தங்கி ஸேவை
    8 நாள் -ராஜ மன்னார் ஸேவை
    9 நாள் -கோவர்த்தன கிரி திருக்கோலம்

    —————————

    பகல் பத்து முதல் திரு நாள்
    நம் பெருமாள் பீதாம்பரம் -மஞ்சள் நிறப் பட்டாடை அணிந்து அருளி
    ரத்ன பாண்டியன் கொண்டை சாற்றி அருளி
    திரு நெற்றிப் பூ சாற்றி
    ஸேவை சாதித்து அருளுகிறார்

    அரங்கன்
    வைகுண்ட ஏகாதசி உற்சவம் : பகல் பத்து 3ஆம் நாள் நாச்சியார் திருமொழிக்காக
    நம்பெருமாள் – மாம்பழ நிற பட்டு அணிந்து
    அஜந்தா சௌரிக் கொண்டை அணிந்து: கலிங்கத்துராய்; கல் இழைத்த ஒட்டியாணம் கீரடத்தில் நெற்றி கட்டாக அணிந்து, வைர அபய ஹஸ்தம், கல் இழைத்த கோலக் கிளி; மார்பில் பங்குனி உத்திர பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 6வட முத்து சரம்
    பின்புறம்
    அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம், புஜ கீர்த்தி,திருக் கைகளில் தாயத்து சரம் , ரத்தின திருவடி அணிந்து புறப்பாடு கண்டுருளினார்


    நீராட்டு உத்சவம் –
    பகல் பத்தில் நான்கு நாள்கள்
    காலை பெரிய வீதிப்புறப்பாடு 8-20 தொடங்கி ஒரு மணி நேரம் கழித்து நீராட்டு மண்டபம் வந்து சேர்க்கிறாள்
    பின்பும் போர்வைகள் களைதல்-உபசாரம் -நலுங்கு -நீராட்டம்
    பின்பும் குளக்கரை புற்ப்பாடு
    மாலை மாத்துதல்
    பெரியாழ்வார் விருந்து முதல் நாள் -நம்மாழ்வார் விருந்து அடுத்த நாள் -ஆளவந்தார் விருந்து அடுத்த நாள்

    அடுத்து உடையவர் விருந்து -அடுத்து பேயாழ்வார் விருந்து –பூதத்தாழ்வார் விருந்து –

    ————

    ஸ்ரீ ஆண்டாள் -நாச்சியார் திருக் கோயிலே திரு அத்யயன உத்ஸவம்
    பகல் பத்து முதல் நாள்
    ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் சேர்த்தியில் மூல ஸ்தானத்தில் -கோபால விலாஸத்தில் -இருந்து பகல் பத்து மண்டபத்துக்கு மாலை புறப்பாடு
    ஸ்ரீ வேதாப்பிரான் பட்டர் திருமாளிகையில் பச்சை பரப்பக் கடாஷித்து கோபால விலாஸம் சேர்தல்
    விண்ணப்பம் செய் கோஷ்ட்டி
    ஸ்ரீ பெரிய பெருமாள் கருட வாகனம் -ஸ்ரீ பெரியாழ்வார் யானை வாகனம் -ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி கல்யாணம் மண்டலத்தில் திருப்பல்லாண்டு தொடக்கம்
    இரவில் நாச்சியார் மாட வீதி -பெரிய பெருமாள் மாட வீதி கண்டருளி தோளுக்கு இனியானில் பகல் பத்து மண்டபம் சேர்தல்
    ஆழ்வார்கள் பகல் பத்து மண்டபம் சேர்ந்து திருத்திரை வாங்குதல்
    திருவாராதனம் கோஷ்ட்டி அருளப்பாடு -திருப்பல்லாண்டு வியாக்யானம்
    பெரியபெருமாள் பக்தி உலாவுதல்
    ஸ்ரீ ரெங்க மன்னாருடன் புறப்பாடு -மூலஸ்தானம் சேர்தல்
    முதல் நாள் மட்டுமே இரவில் நடக்கும்
    இதே போல் இராப்பத்திலும் முதல் நாள் மட்டுமே பகலிலே நடக்கும்
    வியாக்யானம் பாசுரங்கள்
    2 நாள் -சென்னியோங்கு வியாக்யானம்
    3 நாள் -திருப்பாவை
    4 நாள் -ஊனேறு செல்வம்
    5 நாள் -திருமாலை
    6 நாள் -கண்ணி நுண் சிறுத்தாம்பு -வாடினேன் வாடி
    7 நாள் -தூவிரிய மலர்
    8 நாள் -பண்டை நான் மறை
    10 நாள் -தெள்ளியீர் -அக்கும் புலியின் -முந்தூர்ஸ்
    10 நாள் -அமிர்த மதனம் -திரு நெடும் தாண்டகம் –
    வைகுண்ட ஏகாதசி
    காலை ஸ்ரீ பெரிய பெருமாள் தோளுக்கு இனியானாலும் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் சேர்த்தியிலும் வேத விண்ணப்பமாகி
    விரஜை தீர்த்தம் பிரசாதம்
    ஸ்ரீ வைகுண்ட வாசல் திறப்பு -ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்தால் -மாடவீதி கந்தாடை வீதி எழுந்தருளி இராப்பத்து மண்டபம் சேர்தல்
    முதல் நாள் திருக்கொட்டகையிலே நடக்கும்
    திருவாய் மொழி துவக்கம் -அரையர் அருளிப்பாடு -உயர்வற muthal பாசுரம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பக்தி உலாவுதல்
    அரையர் வியாக்யானம் உயர்வற உயர் நலம்
    மற்ற நாள்கள் வியாக்யானம் பாசுரங்கள்
    2 நாள் -கிளர் ஒளி இளமை
    3 நாள் -ஒழிவில் காலம்
    4 நாள் -ஒன்றும் தேவும்
    5 நாள் -எங்கனேயோ
    6 நாள் -உலகமுண்டா பெருவாயா
    7 நாள் -கங்குலும் பகலும்
    8 நாள் -நெடுமாற்கு அடிமை
    9 நாள் -மாலை நண்ணி
    10 நாள் -சாத்து முறை -தாள தாமரை -முனியே நான்முகனே
    11 நாள் -இயற்பா சாத்துமுறை
    8 நாள் -திருவேடுபரி -குதிரை வாகனம் புறப்பாடு -இராப்பத்து ஸ்ரீ ஆண்டாள் சென்னியில் நடக்கும்
    நீராட்ட உத்ஸவம்
    பிரியா விடை
    இரவில் ஸ்ரீ ஆண்டாள் மூல ஸ்தானத்தில் இருந்து புறப்பாடு -மாட வீதி வழியாக ஸ்ரீ பெரிய பெருமாள் சந்நிதி சேர்தல்
    அங்கு ஸ்ரீ ஆண்டாள் ஏகாந்த திருமஞ்சனம்
    கைத்தல ஸேவை
    பெரிய பெருமாள் மூல ஸ்தானம் சேர்தல்
    திருவாராதனம்
    அரையர் வியாக்யானம் -திருப்பாவை முதல் பாட்டு -மற்ற பாசுரங்கள் ஸேவை
    ஸ்தலத்தார் உத்சவ வைபவம் வாசித்தல் -பஞ்சாங்கம் வாசித்தல் –
    பொது ஜன ஸேவை
    அதிகாலை ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு -ஸ்ரீ பெரியாழ்வார் மங்களா ஸாஸனம் -மூல ஸ்தானம் சேர்தல்
    ஸ்ரீ ஆண்டாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி கோபுர வாசலில் போர்வை படி களைந்து திருவடி விளக்கம்
    அரையர் நாள் பாட்டு -தீர்த்த கோஷ்ட்டி
    விடாய் ஆற்றி மண்டபங்களில் விடாயாற்றி யாகி எண்ணெய் காப்பு மண்டபம் சேர்தல்
    பட்டர் பிரான் சுருள் கோஷ்ட்டி
    ஸ்தலத்தார் திருவாசிரியம் ஸேவித்தல்
    எண்ணெய் காப்பு சேவை -ஷோடச உபசாரம்
    பக்தி உலாவுதல்
    நீராட்டத்தொட்டிக்கு எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்
    ஈரவாடை தீர்த்தக்கோஷடி பக்தி உலாவுதல் -அம்மானை விளையாடுதல் -படியேற்ற சேவை
    முதல் நாள் காலை யில் தங்கப்பல்லக்கில் புறப்பாடு -மாலையில் துளசி வாகன புறப்பாடு
    இரண்டாம் நாள் காலை -தங்கப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் ஆண்டாள் ஸேவை -மாலை சந்திரன் பிரபை ஸேவை
    மூன்றாம் நாள் காலை -தங்கப்பல்லக்கில் கண்ணன் திருக்கோலத்தில் ஆண்டாள் ஸேவை -மாலை தோளுக்கு இனியானில் புறப்பாடு
    நான்காம் நாள் -தங்கப்பல்லக்கில் முத்தங்கி ஸேவை -முத்து மாலையுடன் -மாலை சேஷ வாகனம்
    ஐந்தாம் நாள் காலை -தங்கப்பல்லக்கில்
    பெரிய பெருமாள் திருக்கோலத்தில் ஆண்டாள் ஸேவை -மாலை தங்க ஹம்ஸ வாகனம்
    ஆறாம் நாள் காலை வீற்று இருந்த திருக்கோலம் சவுரித் திருமஞ்சனம்
    மூக்கூத்தி ஸேவை -இரவு கனக தண்டியல்
    ஏழாம் நாள் காலை தங்கப்பல்லக்கில் தங்க கவசம் -இரவு ஆளேறும் பல்லக்கு
    8 நாள் -ஸ்ரீ மணவாள மா முனிகள் மங்களா ஸாஸனம் -ஸ்ரீ ஆண்டாள் மா முனிகள் சந்நிதிக்கு எழுந்து அருளி ஸேவை
    அசுத்த நாள் கனு -ஸ்ரீ ஆண்டாள் தோளுக்கு இனியானில் ஸ்ரீ பெரியாழ்வார் சந்நிதிக்கு எழுந்து அருளி தொடர்ந்து
    முத்துக் குறி அரையர் சேவை ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியில் நடைபெறும்
    காலை ஸ்ரீ பெரிய பெருமாள் பல்லக்கில் எண்ணெய் காப்பு மண்டபம் எழுந்து அருளி கனுப்பரி வேட்டை நடைபெறும்

    ————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ ருக்மிணி பிராட்டி ஸமேத வேங்கட கிருஷ்ணன் பார்த்தா சாரதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் —