ஏஎபா வம்!பர மே!ஏழ் உலகும்
ஈபா வம்செய்து அருளால் அளிப்பார்ஆர்?
மாபா வம்விட அரற்குப் பிச்சைபெய்
கோபால கோளரி 3ஏறுஅன் றீயே?
பொ – ரை : ‘பிரமனுடைய தலையினைக் கிள்ளியதனால் உண்டான பெரிய தீவினையானது விட்டு நீங்குபடி, சிவனுக்குப் பிச்சையினைப் பெய்து அவனைக் காப்பாற்றிய, கோகுலத்திற்பிறந்தார்க்கு எல்லாம் வலிய ஆண் சிங்கத்தினை ஒத்த கிருஷ்ணனை அன்றி, உலகங்கள் ஏழிலும் உள்ள அவ்வவ்வுயிர்கள் செய்த தீவினைகளையெல்லாம் போக்கி அவற்றை அருளோடு காப்பாற்றுகின்றவர் வேறு யாவர்? ஐயோ! பாவம்! இவ்வுண்மையினைக் கூறல் நம்மைச் சார்ந்து ஆவதே!’ என்கிறார்.
வி – கு : ‘ஏஎ’ என்பது, இரக்கத்தின்கண் வந்தது. பரம் – பாரம்; கடமை.
ஈ – அழித்தல். ‘தழல் – அழல்; மலர் – அலர்’ என்பன போன்று, ‘வீ’ என்பது மெய்ம்முதல் கெட்டு ‘ஈ’ என உயிர்
மாத்திரையாய் நின்றது. ‘உலகு’ என்பது, ஈண்டு உயிர்களுக்கு ஆயிற்று. ‘விடப்பெய் கோபாலன்’ என முடிக்க, ‘அருளால் ஈ பாவம் செய்து’ என்று அருளால் என்பதனை முன்னுங்கூட்டுக. கோளரி ஏறு அன்றி அருளால் அளிப்பார் ‘ஆர்?’ என்க. யார் என்பது ‘ஆர்’ என மருவிற்று.
ஈடு : இரண்டாம் பாட்டு. ‘அல்லது இல்லை’ என்று நீர் சொல்லுவான் என்? பிரமனும் சிவனும் இறையவர்களாகப் பேசப்படுகின்ற பிரமாணங்களும் சில இருக்கின்றனவே?’ எனின், ‘‘அவர்கள் நிலையினை ஆராய்ந்தால், தலை அறுப்பாரும் தலை அறுப்புண்டு நிற்பாருமாக இருக்கிறார்கள்; அவர்கள்ஆபத்தினைப் போக்கிக் காத்தளிக்கின்றான் இவன்; அவர்களோ, இவனோ சர்வேஸ்வரன்?’ என்கிறார்.
‘ஏஎ’ என்றது ‘ஓஒ’ என்றபடி. இதனால் துக்கத்தின் மிகுதியினைக் குறிக்கிறார். ஏஎ பாவம் – இரத்தினத்திற்கும் காட்டில் உலர்ந்து கிடக்கும் வரட்டிக்கும் வேறுபாடு உண்டு என்று சொல்ல வேண்டுவதே! மக்கள் சிற்றறிவினர்களாய் இருத்தலின், பகவானுடைய பரத்துவத்தை விளக்கவேண்டி இருக்கின்றதே என்னும் இன்னாப்பாலே ’என்னே பாவம்!’ என்கிறார். பரமே –1‘பகவானுடைய குணங்களைஅநுபவிக்குமது ஒழிய, இது நமக்குக் கடமை ஆவதே! இதுநாம்செய்யக்கூடியதாக வந்து விழுவதே!’ என்றபடி. ஏழ் உலகும் -ஏழ் உலகங்களிலும் உண்டான மக்கள் இருக்தே குடியாகப் பாவங்களைச் செய்து அப்பாவங்களால் தங்களை நிறைத்துக்கொள்ள. ஈ பாவம் செய்து – பாவங்களை அழியும் படியாகச் செய்து. அருளால் – பாவங்களை அழிக்கும் போது, மக்கள் விரும்ப, தான் செய்தல் அன்றி நிர்வேஹதுகக் கிருபையாலே. அளிப்பார் ஆர் – இவர்களை ஈரக்கையால் தடவிக் காப்பார் ஆர்? அளிப்பான் இவன் என்னாதே ‘ஆர்’ என்கிறார். அவர்களுக்கும் சத்துவம் தலை எடுத்தபோது, ‘நீர் சொல்லுகிறவனே’ என்று இசையவேண்டும் பிரசித்தியாலே. 2‘ஸ்ரீராமா!! நீதான் எல்லா உலகங்களிலும் இருக்கின்ற எல்லா உயிர்களினுடைய பாவங்களை எல்லாம் போக்கித் தூய்மை ஆக்குபவன்,’ என்றும், 3‘காப்பாற்றுவதில் நிலை நின்றவனாயும் எல்லா உயிர்கட்கும் ஈஸ்வரனாயும் மகாத்துமாவாயும் இருக்கின்ற விஷ்ணுவைத் தவிர,
காத்தலாகிய ஆற்றலானது வேறு ஒருவர்க்கும் இன்று,’ என்றும் வருகின்ற பிரமாணங்களைக் காண்க. ‘மக்கள், தாங்கள் செய்த பாவங்களைப் பிராயச்சித்தத்தால் (கழுவாய்) போக்கிக்கொள்ள ஒண்ணாதோ?’ எனின், இவர்கள் செய்த பாவம் அவன் அருளால் போக்கில் போமத்தனை அல்லது, தாங்கள் பிராயச்சித்தம் செய்து போக்குதல் என்பது, அவற்றை மேன்மேலும் வளர்த்தலாகவே முடியும்.
‘அவன் எல்லாப் பொருள்களையும் காக்கின்ற தன்மை நிற்க; 1தந்தம் காலைத் தாம்தாம் நீட்டி முடக்க வல்லராய் இருக்கிறவர்களும் ஓரோர் அளவுகளிலே ஆபத்தை அடைவர்களாயின், அவற்றைப் போக்கிக் காக்கும்படியைப் பார்க்கலாகாதோ?’ என்கிறார் மேல்: மா பாவம் விட – 2‘பின்னால், கோபத்தால் பீடிக்கப்பட்டவனாயும் சிவந்த கண்களையுடையவனாயும் இருக்கிற என்னால் இடக்கைக் கட்டைவிரல் நகத்தின் நுனியால் அந்தப் பிரமனுடைய தலை கிள்ளப்பட்டது,’ என்கிறபடியே, உலகத்திற்கெல்லாம் குருவாயும் தனக்குத் தந்தையாயும் இருக்கிறவன் தலையை அறுத்துப் பாவத்தையுடையவனாய் நின்றான்; நின்ற அவனுடைய பெரிய பாவமானது அவனை விட்டு நீங்கும்படி. மற்றைத் தேவர்களைக்காட்டிலும் ஞானம் சத்தி முதலியவற்றால் ஓர் ஆதிக்கியத்தைப் படைத்த சிவனாற்செய்யப்பட்ட பாவமாதலின், ‘யானைக்கும் தனக்குத் தக்க வாதம்’ என்பது போன்று, அப்பாவத்தினை ‘மா பாவம்’ என்கிறார்.
அரற்குப் பிச்சை பெய் கோபால கோள் அரி ஏறு – ‘சிவன், அழிக்கும் தலைவனான வேஷத்தோடே அதிகாரம் குலையாதே நின்று பாவத்தை விளைத்துக்கொண்டான்’ என்பார், ‘அரன்’ என்கிறார். ‘இறைவன், அவனுடைய துக்கத்தைப் போக்கியது அங்கே இங்கே தோன்றித் திரிகிற இடத்திலே என்பார், ‘கோபாலன்’ என்கிறார். இதனால், இவர்கள் எத்துணை உயர நிற்பினும் கேட்டினையே சூழ்த்துக் கொள்ளுவார்கள் என்பதும், இறைவன் எத்துணைத் தன்னைத் தாழவிட்டாலும் காப்பாற்றுமவனாம் என்பதும் சொல்லப்பட்டன. கோபால கோள் அரி ஏறு – கோபாலருடைய மிடுக்கையுடைத்தான ஆண் சிங்கம். கோள் – வலிமை. ‘பிறருடைய வலிமையினைக் கொள்ளுகின்ற’
என்று உரைத்தலுமாம். நித்தியசூரிகளை எல்லாம் ஏவுகின்ற இறைவன் ஆயர்களால் ஏவப்படுகின்றவனாய் இருக்கும் செருக்கினைத் தெரிவிப்பார், ‘அரியேறு’ என்கிறார்.
‘தீவினைகளால் பீடிக்கப்பட்டவர்களாய்த் துன்பத்தினை அடைகின்ற இவர்களை ஈஸ்வரர்கள் என்போமோ, ஆபத்துகளைப் போக்கிப் பாதுகாக்கும் இவனை ஈஸ்வரன் என்போமோ?’ என்கிறார்.
பிரமாணங்கள் பிரம ருத்ராதிகளுக்கும் உண்டே
அவர்கள் நிலைகளை ஆராய்ந்து பார்த்தல்
தலை அறுப்பார் சிலரும் அறுப்புண்டு சிலரும்
அவர்கள் ஆபத்தை போக்கி ரஷித்தவன் இவன் தானே
எ பாவம் பரமே
இது கூட உங்களுக்கு சொல்ல வேண்டி இருக்கே
பிரசித்தமான விஷயம்
பரம் பாரம்
ஏழு உலக்கையும் ஈ பாபம் செய்து
பாகங்கள் அழித்து காத்து
மா பாபம் விட அரனுக்கு -பிச்சை பெய்த கோபால கோளரி
ஏ -ஒ ஒ பிராந்திய பாஷை -ஏ என்ன இப்ப வந்தாய்
ஒ ஒ உலகினது இயல்பே
விஷாத அதிசய சூசகம் துக்கம் மிகுந்து .
ஏ பாவம் ரத்னம் கரிக்கு வாசி சொல்லியா வைஷன்மயம் சொல்ல வேண்டுமா –
ரசிகனே இல்லாதவனுக்கு சொல்ல வேண்டி இருக்கே ஏ பாவம் பரமே
மந்த மதிகளாய் -பகவத் பரத்வம் சொல்ல என்ன பாவம்
பகவத் குண அனுபவம் சொல்லி போகாமல் இது நமக்கு சாத்தியமாய் போனதே
ஏழு உலகும் -இருந்ததே குடியாக பாவங்களை கூடு பூரிக்க -மேலே மேலே சேர்த்து -கொண்டு –
ஈ பாவம் செய்து ஈயும் படியாக செய்து
அழியும் படி
இது தான் சேதனர் அர்த்திக்காமல் அருளால் கிருபையால்
ஈரக்கையால் தடவி ரஷிப்பார் யார்
அவன் அருளால் தான் போக்க முடியும்
பிராயச்சித்தம் செய்து போக்கினால் மேலும் வர்த்திக்கப்பண்ணும்
அளிப்பான் இவன் எண்ணாதே அளிப்பான் யார்
அவர்களுக்கும் சத்வம் தலை எடுக்கும் பொழுது
பாவனம் ஏற்படுத்துபவன் அவன் தான் என்பார்களே
பாலான சாமர்த்தியம் ஹரிம்
ஹரி அம்சம் கொண்டே ரஷணம் தர்ம சாஸ்திரம் –
ராஜ ஆக்ஜை தடையாக இருந்தால் அதை பின் பற்று-
விஷ்ணு அம்சம் கொண்டவனே ராஜா -சட்டம் சாஸ்திரம் விட உயர்த்தி இதனால்
பிரளய -சர்வ விஷயம்
தம் தாம் கால் தாம் தான் நீட்டி மடக்க -சாமர்த்தியம் -ஓர் ஓர் அளவுகளிலே ஆபன்னராய் ஆனால்
மா பாபம்விட -பெரிய பாபம்
பெரியவன் ஆனைக்கு தக்க வாதம் இறே
ஞான சக்திகளாலே ஆதிக்கம் அதிகம் -ஆபத்தும் அதிகம் –
அவற்றை கொண்டு லோக குரு தனக்கு பிதா -சங்கரனை தான் படைத்தான்
தலையை அறுத்து பாதகனே நின்றான்
இடது கை நகத்தால் கட்டை விரலால் எடுத்தான் மாத்ச்ய புராண ஸ்லோகம்
கபாலம் நிறைந்து அகலும் -ஹிமவந்தம் தத்ர நாராயணா ஸ்ரீ மான்
தாரை -தஸ்ய விஷ்ணு பிரசாதம் சுச்ரோணி -பார்வதி பார்த்து சொல்லுகிறான் –
சகஸ்ரமாக சிதற சொப்பன தனம் போனது போலே கையில் அடையாளம் இன்றி போனது
பிரமாணம் –
அடி முடி தேடின கதை சிவன் பரத்வம் சொல்லுவார் புராணங்களில் இல்லை
ஸ்தல புரானனம் யாரோ கட்டி வைத்தது
அரக்கு பிச்சை
சம்கர்த்தா வேஷத்துடன் –
அழிக்கிற உத்தியோகம் செய்ததும் பாபமாக போக
அங்கெ இங்கே ஆவிர்பவித்து திரிகிற இடம் –
கோபால கோளரி -பிச்சை பெய்தவன்
தாழ விட்டாலும் ரஷகன் இவன்
அவர்கள் எத்தனை ஏற விட்டாலும் பாப்பம்
கோபால கோளரி
ஏறு எழும் வென்று அடர்த்த எந்தை -நம்பி திரு வழுதி நாட தாசர்
ஏறி உருவம் உடையவன் எருது வாகனம் கொண்டவன்
ஏறு ஏறி
பாறேறி உண்ட தலை பருந்துகள் கவ்வ
தலை வாய் நிறைய
சொல்லில் கதை .
ஏழு எருதுகளை வதம் பண்ணி பாபம் இல்லை
தகப்பன் தலை கிள்ளி பாபம் இவனுக்கு
கோ கத்தி பாவம் வல்லையே
அவன் தான் பர தேவதை
கோள் மிடுக்கு -பிரதி பஷம் கொள்ளும் விரோதி அழித்து
நித்ய சூரிகளுக்கு நியமிக்கிறவன் இடையராக வந்த மிடுக்கு
மா பாவம் குருபாதகம் -வேத அபகார -தைத்ய பீடா அசுரர்களால் ஆபத்து
குரு பாதகம் பெரிய பாபம் மா பாபம்
ஆபத்து போக்கி ரஷணம்
ஏறு அன்றி அருளால் காப்பவர் யாரும் இல்லை
அன்வயம் எதிரேகம் இரண்டாலும் சொல்லி இங்கும் .
யார் அகத்தினார் கபாலம் பிள்ளை பெருமாள் ஐயங்கார்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.