Archive for the ‘Madurakavi Aazlvaar’ Category

ஸ்ரீ ஆழ்வார்களும் மங்களா சாசன திவ்ய தேசங்களும் –

October 23, 2021

ஸ்ரீ பொய்கையாழ்வார் ஸ்ரீ காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயிலில்(திருவெக்கா)
உள்ள பொய்கையில்(குளம்)அவதரித்தார்.

மாதம் – ஐப்பசி
நட்சத்திரம் – திருவோணம்
திவ்விய ப்ரபந்தம் – முதல் திருவந்தாதி
இவர் திருமாலின் ஆயுதமாகிய பாஞ்சச்சன்னியத்தின் அம்சமாக தோன்றினார்.

ஸ்ரீ பொய்கையாழ்வார் பாடி திவ்ய தேசங்கள்-6

திருவரங்கம்
திருக்கோவலூர்
திருவெஃகா
திருவேங்கடம்
திருப்பாற்கடல்
திருபரமபதம்

—————-

ஸ்ரீ பூதத்தாழ்வார் சென்னையை அடுத்த ஸ்ரீ மாமல்லபுரத்தில் உள்ள
ஸ்ரீ தலசயனப் பெருமாள் கோயில் அருகில் அவதரித்தார்.

மாதம் – ஐப்பசி
நட்சத்திரம் – அவிட்டம்
திவ்விய ப்ரபந்தம் – இரண்டாம் திருவந்தாதி
இவர் திருமாலின் ஆயுதமாகிய கொளமேதகியின்(கதை)அம்சமாக தோன்றினார்.

ஸ்ரீ பூதத்தாழ்வார் பாடி திவ்ய தேசங்கள் – 13

திருவரங்கம்
திருக்குடந்தை
திருத்தஞ்சை மாமணிக்கோயில்
திருக்கோவலூர்
திருக்கச்சி
திருப்பாடகம்
திருநீர்மலை
திருகடல்மல்லை
திருவேங்கடம்
திருதண்கால்
திருமாலிருஞ்சோலை
திருக்கோட்டியூர்
திருப்பாற்கடல்

————–

ஸ்ரீ பேயாழ்வார் சென்னையில் உள்ள ஸ்ரீ திருமயிலையில்(மயிலாப்பூர்) அவதரித்தார்.

மாதம் – ஐப்பசி
நட்சத்திரம் – சதயம்
திவ்விய ப்ரபந்தம் – மூன்றாம் திருவந்தாதி
இவர் திருமாலின் ஆயுதமாகிய நாந்தகம்(வாள்)அம்சமாக தோன்றினார்.

ஸ்ரீ பேயாழ்வார் பாடிய திவ்யதேசங்கள் – 15

திருவரங்கம்
திருக்குடந்தை
திருவிண்ணகர்
திருக்கச்சி
அஷ்டபுயகரம்
திருவேளுக்கை
திருப்பாடகம்
திருவெஃகா
திருவல்லிக்கேணி
திருக்கடிகை
திருவேங்கடம்
திருமாலிருஞ்சோலை
திருக்கோட்டியூர்
திருப்பாற்கடல்
திருபரமபதம்

—————–

ஸ்ரீ திருமழிசையாழ்வார் ஆழ்வார்கள் வரிசையில் 4-வது ஆழ்வார்.
இவர் சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ திருமழிசை என்ற ஊரில் அவதரித்தவர்.

மாதம் – தை
நட்சத்திரம் – மகம்
திவ்விய ப்ரபந்தம் – நான்முகன் திருவந்தாதி, திருச்சந்தவிருத்தம்.

இவர் திருமாலின் சக்கராயுதத்தின் அம்சமாக அவதரித்தார்.

ஸ்ரீ திருமழிசையில் பார்கவர் என்பவர் யாகம் புரிகையில் அவரது மனைவி கனகாங்கிக்கு தலை,கை,கால் உள்ளிட்ட
உறுப்புகளின்றி ஓர் பிண்டமாக அவதரித்தார்.
இதனால் மனம் வருந்தி பெற்றோர், பிண்டத்தை ஒரு பிரம்புதூற்றின் அடியில் விட்டுச் சென்றனர்.
பின்னர் திருமகளின் அருளால், எல்லா அவயவங்கள் பெற்று ஒரு குழந்தையானார்.
பின்னர், திருவாளன் என்பவன் பிரம்பு அறுக்க போனவிடத்தில் குழந்தை அழுகுரலைக் கேட்டு,
அதை எடுத்துக்கொண்டு வந்து தமது மனைவி, பங்கயச்செல்வியுடன் சேர்ந்து வளர்த்தார்.
அக்குழந்தைக்கு, பசி, துக்கமின்றி இருந்தும் உடல் சிறிதும் தளரவில்லை.

இந்த ஆச்சர்யத்தை கேள்வியுற்று அருகில் இருந்த சிற்றூரில் இருந்து வந்த வயதான தம்பதியர் பால் கொடுத்தனர்.
அவர்களின் அன்பின் மிகுதியால் குழந்தை பால் குடிக்கத் தொடங்கியது.
சிறிதுகாலம் கழித்து, தனக்கு பால் கொடுத்த தம்பதியருக்கு கைம்மாறு பொருட்டு,
தனக்கு கொடுத்தப் பாலில் மீதியை உண்ணுமாறு செய்தார்.
அவ்வாறு உண்டபின் அவர்களுக்கு இளமை திரும்பியது.
அவர்களுக்கு ஸ்ரீ கணிகண்ணன் என்ற குழந்தை பிறந்தது.
ஸ்ரீ கணிகண்ணன் பின்னர் ஸ்ரீ திருமழிசையாழ்வார் சீடரானார்.

இவர் சமணம், சாக்கியம், சைவம் முதலிய மதங்களை கற்று பின்னர் வைணவத்திற்கு வந்தார். இதை,இவரே பாடினார்-

சாக்கியம் கற்றோம், சமணம் கற்றோம், சங்கரனார் ஆக்கிய ஆகமநூல்
ஆராய்ந்தோம்; பாக்கியத்தால் வெங்கட்கரியனை சேர்ந்தோம்

இவர் சிவவாக்கியர் என்ற பெயரில் சைவத்தை முதலில் பின்பற்றி
பின்னர் வைணவம் தழுவினார் என்ற வரலாறும் உண்டு.

ஸ்ரீ திருமழிசையாழ்வாரும் ஸ்ரீ சொன்னவண்ணம் செய்த பெருமாளும்
தமது சீடர் கணிகண்ணனுடன் சேர்ந்து, காஞ்சிபுரத்தில் உள்ள திருவெக்காவில் உள்ள திருமாலுக்கு தொண்டு செய்துவந்தார்.
அவர்கள் குடிலை சுத்தம் செய்து வரும் வயதான கிழவிக்கு தன யோகப்பலதாலே அனுக்ரக்ஹிக்க விரும்பினார்.
கிழவிக்கு என்ன வரம் வேண்டும்மென கேட்க, அவளும் தன் வயது முதிர்வினால் ஏற்பட்ட இயலாமையை நீக்குமாறு கேட்க,
ஆழ்வார் எப்போதும் இளமையாக இருக்கும்படி வரம் கொடுத்தார்.பல காலம் சென்றாலும் இளமைக்குன்றாத
அப்பெண்ணின் அழகில் மயங்கிய காஞ்சியை ஆண்ட பல்லவராயன் அவளைத் திருமணம் செய்துகொண்டான்.
பலகாலம் சென்றாலும் தன் மனைவியின் மாறாததை கண்டு வியப்புற்ற அரசன் மனைவியிடம் வினவினான்.
அவள் ஆழ்வாரின் பெருமையை எடுத்துச் சொல்ல தனக்கும் இளமை கிடைக்க வேண்டும் என்று கணிகண்ணனிடம் சொல்ல
ஆழ்வார் அவ்வாறு செய்ய மாட்டார் என்று பதிலளிக்க, குறைந்தபட்சம் தன்னைப் பற்றி கவிதை பாடுமாறு சொல்ல,
‘அவர் நாராயணனையன்றி எந்த நரனையும் பாடேன்‘ என்று சொல்ல, இதைக் கேட்டு, கோபமுற்ற அரசன்,
கணிகண்ணை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
இதைக் கேள்வியுற்ற ஆழ்வார், தானும் நாட்டை விட்டு செல்வதாக முடிவுசெய்து, ஸ்ரீ யதொக்தகாரி பெருமானிடம்-

கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்–என்று பாடினார்.

பெருமானும் அவ்வாறு சென்றார்.அவர்கள் ஒருநாள் இரவு தங்கியிருந்த இடம் “ஓர் இரவு இருக்கை” என்று அழைக்கப்பட்டு,
அப்பெயர் மருவி “ஓரிக்கை” என்று இப்போது வழங்கப்படுகிறது. இவ்விஷயத்தை கேள்வியுற்ற அரசன்,
தான் செய்த தவறை மன்னிக்குமாறு வேண்டி, நாடு திரும்ப வேண்டிக்கொண்டார்.
ஸ்ரீ திருமழிசையாழ்வாரும் திருமாலை நோக்கி-

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.–என்று வேண்ட திருமாலும் திரும்பினார்.

ஸ்ரீ ஆழ்வார் சொன்னபடி செய்தமையால்,
பெருமானுக்கு “ஸ்ரீ சொன்னவண்ணம் செய்த பெருமான்” என்ற பெயர் பெற்றார்.

ஸ்ரீ திருக்குடந்தையில் ஸ்ரீ திருமழிசையாழ்வார்
ஸ்ரீ கும்பகோணம் சென்று ஆராவமுதனை தரிசிக்கச் சென்றார்.பெரும்புலியூர் என்னும் கிராமத்தில் ஒரு வீட்டின் திண்ணையில் சென்று அமர்தார்.
அங்கு வேதம் ஓதிக்கொண்டிருந்த சில பிராமணர்கள், ஆழ்வார் வேதத்தை கேட்க தகுதியற்றவர் என்று கருதி ஓதுவதை நிறுத்தினர்.
இதைப் புரிந்துக்கொண்ட ஆழ்வார் அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.அதன்பின்,பிராமணர்கள் தாங்கள் விட்டவிடத்தை மறந்தனர்.
ஆழ்வார் ஒரு கருப்பு நெல்லைக் நகத்தால் கீறி வேத வாக்கியத்தை குறிப்பாலே உணர்த்தினார்.
”கிருஷ்ணனாம் வ்ரீஹிணாம்நகநிர்பிந்நம்“
என்ற ஞாபகம் வர, ஆழ்வாரிடத்தில் மன்னிப்பு வேண்டினர்.

ஆழ்வாரின் பெருமையறிந்த சிலர், அவரை அங்கு நடந்த யாகசாலைக்கு அழைத்துசென்று மரியாதை செய்தனர்.
யாகசாலையில் இருந்த சிலர், இவர் வருங்கயைப் பொறுக்கவில்லை.
இதனால் கோபமுற்ற ஆழ்வார் தன்னுள் அந்தர்யாமியாய் இருக்கும் கண்ணனை இவர்களுக்கு காட்டுமாறு பாடினார்-

அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவது என்கொலோ
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்கவல்லையேல்
சக்கரம் கோல்கையனே சதங்கர் வாய் அடங்கிட
உட் கிடந்தவண்ணமே புறம் பொசிந்து காட்டிடே

பெருமானும் இவருள்ளே தோன்றி அவர்களுக்கு தன்னைக் காட்டினார்.

ஸ்ரீ ஆராவமுதனை சென்று சேவித்த அவர், பக்தியால் பாடினார்-

நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்கு ஞால மேனமாய்
இடந்தமெய் குலுங்கவோ விலங்கு மால் வரைக்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்கரை குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே (திருச்சந்த விருத்தம்-61)

இப்பாடலில் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு எனப் பாடியபோது, ஸ்ரீ ஆராவமுதன் தன் சயன கோலத்தை விட்டு எழுந்திருக்க,
பதறிய ஆழ்வார், “வாழி கேசனே” என்று பாடினார்.அவர் சொன்னதை தட்டாமல், பெருமான் அப்படியே இருந்தார்.
இக்கோலத்தை இன்றும் இக்கோயிலில் சேவிக்கலாம்.

பிறப் பெயர்கள்
ஸ்ரீ பக்திசாரர்
ஸ்ரீ உறையில் இடாதவர் – வாளினை உறையில் இடாத வீரன் எனும் பொருள்பட (இங்கு ஆழ்வாரின் நா வாள் எனப்படுகிறது)
ஸ்ரீ திருமழிசைபிரான்
இவர் நிறைய திவ்யபிரபந்தங்கள் எழுதிக் காவிரியில் விட்டார்.
அவற்றுள் நான்முகன் திருவந்தாதியும், திருச்சந்தவிருத்தமும் திரும்ப வந்தது

———–

ஸ்ரீ மதுரகவியாழ்வார் ஆழ்வார்கள் வரிசையில் 5வது ஆழ்வார் ஆவர்.இவர் தூத்துக்குடி மாவட்டம்,
ஸ்ரீ ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள ஸ்ரீ திருக்கோளூர் என்னும் திவ்ய தேசத்தில் அவதரித்தார்.

மாதம் – சித்திரை
நட்சத்திரம் – சித்திரை
திவ்விய ப்ரபந்தம் – கண்ணிநுண்சிறுத்தாம்பு என்று தொடங்கும் பதினோரு பாசுரங்கள்.

ஸ்ரீ மதுரகவியாழ்வார் திருமாலின் வாகனமான ஸ்ரீ கருடனின் அம்சமாக அவதரித்தார்.

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்? என்று கேட்டார்

அதற்கு ஸ்ரீ நம்மாழ்வார், அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்றார்.

பதிலின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்ட ஸ்ரீ மதுரகவிகள், ஸ்ரீ நம்மாழ்வாரின் மேதாவிலாசத்தை புரிந்துக்கொண்டு அவரின் சீடரானார்.

இந்த வினா விடையில் இரு தத்துவம் புதைந்துள்ளது.

செத்ததின், அதாவது உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன் என்னும் சிறியது பிறந்தால்,
பாவ புண்ணியங்களின் பயன்களை நுகர்வதே அதற்கு வாழ்க்கையாக இருக்கும்.

தன்னை பற்றிய அறிவு, பரமாத்வான திருமாலை பற்றிய அறிவற்ற ஜீவனுக்கு,
பரமாத்மாவை பற்றிய அறிவு ஏற்பட்டால், அதைக்கொண்டே பக்தி வளரும்.

ஸ்ரீ மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் பாசுரங்களை பட்டோலைப் படுத்தினார்.
ஸ்ரீ நம்மாழ்வார் திருவைகுண்டத்திற்கு சென்ற பிறகு தங்கத்தால் ஆன நம்மாழ்வாரின் விக்ரகம் கிடைத்தது.
அவ்விக்ரகத்தை எழுதருளப்பண்ணி கொண்டு ஸ்ரீ மதுரகவியாழ்வார் பல ஊர்களுக்கு சென்று
ஸ்ரீ நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்ல முடிவுசெய்தார்.

“வேதம் தமிழ்செய்த பெருமாள் வந்தார்,திருவாய்மொழிப்பெருமாள் வந்தார்,திருநகரிப்பெருமாள் வந்தார்,
திருவழுதிவளநாடர் வந்தார், திருக்குருகூர்நகர்நம்பி வந்தார், காரிமாறர் வந்தார், சடகோபர் வந்தார், பராங்குசர் வந்தார்”
என்று நம்மாழ்வாரின் பலவிருதுகளைப் பாடிக்கொண்டே மதுரகவியாழ்வார் மதுரையுள் சென்றார்.

அங்கே இருந்த சங்ககாலப் புலவர்கள், நம்மாழ்வாரின் பாடல்களை சங்கப்பலகையில் ஏற்றாமல்,
விருதுகளைப் பாடக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். அக்காலத்தில், சங்க பலகையில் பாடலை எற்றுவர்.
பலகை அப்பாடலை கிழே தள்ளிவிட்டால், புலவர்கள் அப்பாடலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நம்மாழ்வார் எட்டு வரி, நான்கு வரி கொண்ட பாடல்கள் நிறையப் பாடியுள்ளார். அவற்றை விட்டு, இரண்டே வரியுள்ள,

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
என்னும் திருநாமம் திண்ணம் நாரணமே! (திருவாய்மொழி 10.5.1)

என்ற பாடலை பலகையில் மதுரகவியாழ்வார் ஏற்றினார்.பலகை அப்பாடலைத் தள்ளாமல் ஏற்றுக்கொண்டது.
நம்மாழ்வாரின் பெருமையை புரிந்துக்கொண்ட சங்ககாலப் புலவர்களும் தாம் செய்த தவற்றின் பரிகாரமாக
நம்மாழ்வாரின் பெருமையை தாம் பாடலாக இயற்றினர்.

ஈயடுவதோ கருடற்கெதிரே இரவிர்கெதிர் மின்மினி ஆடுவதோ
நாயாடுவதோ உறுமும்புலிமுன் நரி கேசரிமுன்நடையாடுவதோ
பேயடுவதோ ஊர்வசிக்குமுன் பெருமானடிசேர் வகுளாபரணன்
ஓராயிரமாமறையின் தமிழிற்ஒருசொற்பொறுமோ இவ்வுலகிற்கவியே

இதில் வியப்பு என்ன வென்றால், அங்குக் கூடியிருந்த அனைத்து புலவர்களும் மேற்சொன்ன ஒரே பாடலை எழுதினர்.
இவ்வாறு மதுரகவியாழ்வார் மேலும் சிலகாலம் நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்லி
அவரும் தம் பெரியவரான நம்மாழ்வாரின் திருவடியைச் சென்று சேர்த்தார்.

ஸ்ரீ மதுரகவியாழ்வார் ஆச்சார்ய பக்தியின் பெருமையை எடுத்துச்சொல்ல அவதரித்தவர்.
அதாவது, ஆச்சார்ய பக்தியும், பெருமானிடத்தில் உள்ள பக்தியும் படிக்கட்டுகளாக் கருதினால்,
பெருமான் மீது கொண்ட பக்தி என்பது முதல் படியாகும், ஆச்சார்ய பக்தி இரண்டாவதுப் படியாகும்.
ஒருவேளை பெருமானிடத்தில் உள்ள பக்தி குறைந்து அப் படிக்கட்டில் இருந்து தவறினால்,
சம்சாரம் என்னும் கடலில் விழுந்து விடுவோம். ஆச்சார்ய பக்தி என்னும் படியில் இருந்து தவறினால்,
அடுத்தப்படியான பெருமானின் மீது கொண்ட பக்தி காப்பாற்றி விடும்.

—————-

ஸ்ரீ நம்மாழ்வார் தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்ரீ திருக்குறுங்குடி (ஸ்ரீ ஆழ்வார் திருநகரி) என்னும் ஊரில் அவதரித்தார்.
ஸ்ரீ நம்மாழ்வார், ஆழ்வார்களுக்கு தலைவராய் கொண்டாடப்படுபவர். அவர் அவயவி என்றுப் போற்றப்படுவர்.
அதாவது, மற்றைய ஆழ்வார்களை உடலாக எடுத்துக்கொண்டால், நம்மாழ்வார் அவர்களுக்கு ஆத்மா அவர்.

மாதம் – வைகாசி
நட்சத்திரம் – விசாகம்

திவ்வியப்பிரபந்தம் – திருவாய்மொழி, திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி.

காரியார், உடையநங்கை ஆகியோருக்கு இன்றைய கேரளாவில் உள்ள ஸ்ரீ திருவண்பரிசாரத்தில் திருமணம் நடைபெற்றது.
அதன் பின் அவர்கள் ஸ்ரீ திருக்குறுங்குடி திரும்பினர். தங்களுக்கு குழந்தை வேண்டி இருவரும் ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பியிடத்தில் பிரார்த்திக்க,
அவரும் அர்ச்சகர் முகமா “நாமே வந்து அவதரிக்கிறோம்” என்று சொன்னார்.

அவ்வாறே விஷ்வக்சேனர் அம்சமாக வைகாசி மாதம், சுக்ல பக்ஷம், பௌர்ணமி திதியில், விசாக நட்சத்திரத்தில் அவதரித்தார்.
அவருக்கு துணையாக ஆதிசேஷனும் திருப்புளி ஆழ்வாராக(புளிய மரம்) அவதரித்தார்.பொலிந்து நின்ற பிரான் சன்னதி
குழந்தையை எடுத்துச்சென்று மாறன் என்றுப் பெயரிட்டனர். பிறந்தவுடன் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால்
பெற்றோர் இவருக்கு “மாறன்” என்றுப் பெயரிட்டனர்.

மாறன் கோயிலில் உள்ள புளியமரத்தில் சென்று அமர்ந்துவிட்டார். யாரிடமும் பேசாமல், எதுவும் உண்ணாமல்,
கண்களை மூடிக்கொண்டு த்யானத்தில் 16 வருடம் இருந்தார். பின்னர் மதுரகவி ஆழ்வார் வந்தபின் தான் நம்மாழ்வார் கண் திறந்தார்.

கலி பிறந்த 43வது நாளில் அவதரித்தவர்.

நம்மாழ்வார் வடமொழி வேதங்களை தமிழ் படுத்தியதால் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்று போற்றபடுகிறார்.
அவர் பாடியப் பாசுரங்களில், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி முறையே
ரிக், யஜுர், அதர்வண,சாமவேத சாரங்களாகும்.
திருவாய்மொழி – 1102 பாசுரங்கள்
திருவிருத்தம் – 100 பாசுரங்கள்
திருவாசிரியம் – 7 பாசுரங்கள்
பெரிய திருவந்தாதி – 87 பாசுரங்கள்

கம்பர் திருவரங்கத்தில் கம்பராமாயணத்தை அரங்கேற்ற சென்ற போது, அரங்கநாதன் “நம்மாழ்வாரை பாடினியோ”
என்று கேட்க கம்பர் நம்மாழ்வாரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டே “சடகோபர் அந்தாதி” இயற்றினார் .

பாடிய திவ்யதேசங்கள்

ஸ்ரீ நம்மாழ்வார் பாடிய திவ்ய தேசங்கள் மொத்தம் 37

திருவரங்கம்
திருப்பேர்நகர்
திருக்குடந்தை
திருவிண்ணகர்
திருக்கண்ணபுரம்
திருத்தஞ்சை மாமணிக்கோயில்
திருவெக்கா
திருவயோத்தி
திருவடமதுரை
திருத்வாரகை
திருவேங்கடம்
திருநாவாய்
திருக்காட்கரை
திருமூழிக்களம்
திருவல்லவாழ்
திருக்கடித்தானம்
திருசெங்க்குன்றூர்
திருப்புலியூர்
திருவாறன்வினை
திருவண்வண்டூர்
திருவனந்தபுரம்
திருவாட்டாறு
திருவண்பரிசாரம்
திருக்குறுங்குடி
திருச்சிரீவரமங்கை
திருவைகுண்டம்
திருவரகுணமங்கை
திருப்புளிங்குடி
திருத்தொலைவில்லிமங்கலம்
திருக்குளந்தை
திருக்கோளூர்
தென்திருப்பேரை
திருக்குருகூர்
திருமாலிரும்சோலை
திருமோகூர்
திருப்பாற்கடல்
திருப்பரமபதம்

பிற பெயர்கள் –கீழ் உள்ளவை, நம்மாழ்வாரின் பிற பெயர்கள்.
சடகோபன்
மாறன்
காரிமாறன்
பராங்குசன்
வகுளாபரணன்
குருகைப்பிரான்
குருகூர் நம்பி
திருவாய்மொழி பெருமாள்
பெருநல்துறைவன்
குமரி துறைவன்
பவரோக பண்டிதன்
முனி வேந்து
பரப்ரம்ம யோகி
நாவலன் பெருமாள்
ஞான தேசிகன்
ஞான பிரான்
தொண்டர் பிரான்
நாவீரர்
திருநாவீறு உடையபிரான்
உதய பாஸ்கரர்
வகுள பூஷண பாஸ்கரர்
ஞானத் தமிழுக்கு அரசு
ஞானத் தமிழ் கடல்
மெய் ஞானக் கவி
தெய்வ ஞானக் கவி
தெய்வ ஞான செம்மல்
நாவலர் பெருமாள்
பாவலர் தம்பிரான்
வினவாது உணர்ந்த விரகர்
குழந்தை முனி
ஸ்ரீவைணவக் குலபதி
பிரபன்ன ஜன கூடஸ்தர்

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கண்ணி நுண் சிறுத்தாம்பு – அருளிச் செயலில்– பாசுரங்கள் பிரவேசம் -சங்கதி –

April 8, 2019

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –
முதல் -பாட்டில் -ஆழ்வார் உடைய நிரதிசய போக்யதையை -சொல்லுகிறது –
கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் –
ப்ராப்ய காஷ்டையான ஆழ்வாரைப் பற்றுகிற இவர் -ப்ரதம அவதியான பகவத் விஷயத்தில்-இழிவான் என் -என்னில் –
ஸ்ரீ ஆழ்வார் உடைய போக்ய அதிசயம் தோற்றுகைக்காகவும் –
ஸ்ரீ ஆழ்வார் உடைய முக முலர்த்திக்காகவும் –
அவர் உகக்கும் பகவத் விஷயம் -ஆகையாலும் –பேசுகிறார்
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எழில் எத்திறம் -என்றும் –
பிறந்தவாறும் -வளர்ந்தவாறும் -என்றும் –
பையவே நிலையும் -என்றும்
ஸ்ரீ ஆழ்வார் ஆழம் கால் பட்ட விஷயம் ஆகையாலும் அத்தைப் பேசுகிறார் –

————-

ஸ்ரீ நஞ்சீயர் –

ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தம் ஆகையாலே ஸ்ரீ கிருஷ்ண வ்ருத்தாந்தம் சொல்லிற்று
மேல் உத்தேச்யமான விஷயத்தைச் சொல்லாதே அவனை என்னப்பன் என்பான் என் என்னில்
ஆழ்வார் அங்கீ கரிக்கைக்காக அங்கே தமக்கொரு சம்பந்தம் சொல்கிறார்
ஒன்றைக் குறித்துப் போம் போது நீரும் நிழலும் நன்றாய் இருந்தது என்று ஒதுங்கினால் உத்தேச்யம் ஆக வேணுமோ –

———————————

ஸ்ரீ நம்பிள்ளை –

உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் -என்றும் பிறந்தவாறும் -பையவே நிலையம் -என்றும்
அவர் உத்தேச்யமாய்ப் பற்றுகிற விஷயம் இறே இவருக்கு இப்போது வெளிறாய்க் கழியுண்கிறது
நவநீத சௌர்ய நகர ஷோபத்தை அனுசந்தித்து அவர் மோஹித்துக் கிடக்கும் துறையில் இறே
இவர் இவர் இப்போது தெளிந்து இருந்து வார்த்தை சொல்லுகிறது –
ஆழ்வார் பக்கலிலே நயஸ்தபரராரான படி
அவருடைய உத்தேச்ய வஸ்துவைக் கட்டின கயிற்றினுடைய உள் மானம் புற மானம் ஆராயும்படி இறே
இவர் கை ஒழிந்த படி பகவத் விஷயத்திலே –

——————————

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -–

ஆத்மாஸ்து காமாய சர்வம் ப்ரியம் பவதி -என்கிறபடியே தனக்கு அபிமதம் என்றாய்த்து இவன் சர்வத்தையும் ஆதரிக்கிறது –
அதில் சாத்யமாய்-அபிமதமாதல் -அதுக்கு உறுப்பாக சாதனமாய் அபிமதம் ஆதலாய் இரண்டு வகையாய்த்து இருப்பது –
அதில் பகவத் விஷயம் -ரசோவை ஸ ரசம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தீ பவதி -என்றும் –
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனம் மேவியே -என்கிறபடியே -என்றும் சொல்லுகிறபடியே
சாஷாத் அபிமதமாய் தன்னைப் பெறுகிற இவனுக்கு புறம்பு போக்கடி இல்லாமையினாலே தானே சாதனமாய் இருக்கும்
இப்படி சரச வஸ்து வாகையாலே ஸ்மரித்தல் சங்கீர்த்தனம் பண்ணுதல் செய்யுமவர்களுக்கு –
வைகுண்ட சரணாம் போஜ ஸ்மரணாம் ருதசேவின-என்றும்
பாதேயம் புண்டரீகாஷா நாம சங்கீர்த்த நாம்ருதம் -என்றும் சொல்லுகிறபடியே ரசிக்கக் கடவதாய் இருக்கும் –
அப்படியே ஆழ்வாருடைய போக்யதையை இப் பாட்டாலே வெளியிடுகிறார்-
சப்தாதி விஷயங்களின் உடைய போக்யதையும் ஆழ்வாருடைய போக்யதையும் பார்த்தவாறே விசத்ருசமாய் இருந்தது
இனி பகவத் போக்யதை இறே கூட்டுதல் கழித்தல் செய்யலாவது -அந்த பகவத் போக்யதையிலும் விஞ்சி இருந்தது ஆழ்வாருடைய போக்யதை –
அதுக்குத் தானும் உட்பட -உருவமும் ஆர் உயிரும் உடனே யுண்டான் -9-6-5-என்னும்படி போக்ய பூதரானவர் இறே இவர் –

இனி அந்தப் பகவத் விஷயத்துக்கு –
வாஸூ தேவோ சி பூர்ண -என்கிறபடியே ஷாட் குண்ய பூர்நையாய் இருப்பதொரு பர அவஸ்தை யுண்டு –
அது ஒழிய சௌசீல்யாதி குண பூர்நையாய் இருப்பதொரு அவதார அவஸ்தை யுண்டு –
அந்த பரத்வம் பாற் கடலினுடைய ஸ்தானத்திலேயாய் அதில் அம்ருத கலசம் போலே யாய்த்து அந்த அவதார அவஸ்தை இருப்பது –
அவ்வதாரங்கள் தன்னிலும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் அந்த அவதாரங்கள் தன்னைப் பர அவஸ்தா நீயமாக்கும் படி அத்யந்த போக்யமாய் இருக்கும்
க்ருஷிர்ப் பூவாசகச் சப்தோ ணச்ச நிர்வ்ருத்தி வாசக -என்கிற வ்யுத்பத்தியாலே ஸூகரமான வ்யக்தி இறே-
அதிலும் பக்வ கிருஷ்ணனிலும் காட்டில்
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன் தன் சிந்தை போயிற்று -பெரிய திருமொழி -8-5-1-என்கிறபடி
முக்த ஸ்ரீ கிருஷ்ண அபதானம் த்ருஷ்டி சித்த அபஹாரியாய் இருக்கும் –
நவ நீத சௌர்யமும் நகர ஷோபமும் பண்ணின அபவதானம் இறே
உறிகளில் வெண்ணெயோடு அறைகளில் பெண்களோடு வாசியற இரண்டையும் களவு கண்டு போந்த அபதானம் இறே –
-இதுவாய்த்து அபதா நாந்தரங்களில் போக்யதமமாய் இருப்பது –

குணங்கள் உண்டு இறே ஸ்ரீ ராம விஷயத்தில் நல்குவார் நல்கிற்று
இங்கு அப்படி அன்றிக்கே –
வெண்ணெய் யுண்டு உரலினிடை யாப்புண்ட தீங்கரும்பினைத் தேனை நன்பாலினை -பெரிய திருமொழி -7-3-5-என்னும் படி
தீம்பு போக்யமாம்படி யாய்த்து இவ்வ்யக்தி இருப்பது -அதாவது
அகண்ட பரிபூர்ண வஸ்து ப்ராக்ருத பதார்த்தமாய் இருப்பதொரு வெண்ணெயை யாசைப்படவும் –
அத்தைக் களவு காண்கையும் –
சர்வஜ்ஞமான வஸ்து அத்தை மறைக்கவும் மாட்டாமல் வாயது கையதாக அகப்படுகையும்
சர்வ சக்தியானது ஒரிடைச்சி கையிலே கட்டுண்டு கட்டை அவிழ்க்க மாட்டாதே இருந்து அழுகையுமான
இந்நிலை அத்யந்த அனுபாவ்யமாய்த்து இருப்பது
தறியார்ந்த கரும் களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை -பெரிய திருமொழி -2-10-6-என்று
இவ்வபதாநத்திலே இறே அனுபோக்தாக்கள் ஆழம் கால் படுவது –

இவ்வபதானத்தின் போக்யதையை இவர் வ்யுத்பத்தி பண்ணிற்று ஸ்ரீ ஆழ்வார் தம்முடைய பாடே யாய்த்து
முதல் திருவாய்மொழி யிலே சர்வ காரணத்வாதி லஷணமாக ஒரு வஸ்துவைச் சொல்லி
அப்படிப்பட்ட வஸ்து ஏது என்னும் அபேஷையிலே அநந்தரம் திருவாய் மொழியிலே –
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -1-2-10-என்று ஸ்ரீ நாராயண சப்த வாச்யமாகச் சொல்லி
இவ் வஸ்துவுக்கு அடையாளம் ஏது என்னும் அபேஷையிலே -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -1-3-1-என்று
திரு மார்பில் ஸ்ரீ பிராட்டியை அடையாளமாகச் சொல்லி
இப்படி ஸ்ரீ யபதித்வத்தால் வந்த சர்வ உத்கர்ஷத்தை யுடைய வஸ்து
அநாஸ்ரிதர்க்கு அரியதாய் ஆஸ்ரிதர்க்கு எளியதாம் இடத்தில் –
மத்துறு கடை வெண்ணெயை-நெடு நாள் மலடு நின்று பிள்ளை பெற்றவள் ஆகையாலே துர்ப்பலையாய்
இவன் தான் மருங்கில் இருந்து மருங்கு தேய்ப்புண்கையாலும்
மத்தாரப் பற்றிக் கொண்டு என்னும்படி மதத்திலே உடலைச் சாய்த்து யாய்த்து கடைவது
இப்படி கடையா நிற்கச் செய்தே வெண்ணெய் படப் படக் களவு காண அவளும் இதுக்கு அடி என்
-தெய்வம் கொண்டு போகிறதா என்று விசாரித்து இவனுடைய வாயையும் கையையும் பார்க்கும் –

கண்ணன் என்னும் கரும் தெய்வம் இறே களவு கண்டு கொண்டு போகிறது –
இவன் கள்ளன் என்று வாயது கையதாகப் பிடித்து கிடந்ததொரு கயிற்றாலே பண்டும் இவன் களவுக்கு பெரு நிலை நிற்கும்
உரலோடு அணைத்துக் கட்ட -இவனும் கட்டுண்டு இருந்து அழப் புக்கவாறே வாய் வாய் என்று
கையிலே கயிற்றைக் கொள்ள ஏறிட்ட குரலை இறக்க மாட்டாதே இருந்து அழுது ஏங்கும் யாய்த்து –
இப் பிரகாரம் ஏதாய் இருக்கிறது -இது பெருமையிலே முதலிடுமதோ-எளிமையிலே முதலிடுமதோ -என்று மோஹங்கதரானார் இறே
இத்தை அனுசந்தித்து போந்த இவரும் ஸ்ரீ ஆழ்வார் ஈடுபட்டுப் போந்த அபதானம் இதுவாய் இருந்தது -என்று பார்த்து
இதிலும் காட்டில் முதலடியிலே இமையோர் தலைவா -என்று ப்ராப்யத்திலே கண் வைத்த இவரை அவா வற்று வீடு பெற்ற -என்னும் அளவும்
லோக உபகார அர்த்தமாக ஈஸ்வரன் இவர் அழுவது அலற்றுவது ஆண் பெண்ணாக மடல் எடுப்பது -தூது விடுவதாம் படி
தன் சங்கல்ப பாசத்திலே கட்ட இவரும் அதை அவிழ்க்க மாட்டாதே அறியா மா மாயத்து அடியேனை வைத்தையால் -2-3-3-என்னும் படி
கட்டுண்டு இருந்த இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிறபடியை இப் பாட்டாலே அருளிச் செய்கிறார் –
அவன் கட்டுண்ட இடத்தில் -பற்றி உரலிடை யாப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ -என்று
பிறருக்கு ஏசுகைக்கு உறுப்பாய் விட்டது
இவர் கட்டுண்டது இறே நாட்டாருடைய கட்டை அவிழ்கைக்கு உறுப்பாய் பரம சாத்விக வர்க்கத்துக்கு போக்யமாய்த்து –

ஸ்ரீ தம்பிரான் படி -–அவதாரிகை –

ஸ்ரீ ஆழ்வாருடைய நிரதிசய போக்யதையைச் சொல்லுகிறது -ப்ராப்ய காஷ்டையான ஆழ்வாரைப் பற்றுகிற இவர்
பிரதம அவதியான பகவத் விஷயத்திலே இழிவான் என் என்னில்
ஸ்ரீ ஆழ்வாருடைய போக்யாதிசயம் தோற்றுகைக்காகவும் அவருடைய முக மலர்த்தி தோற்றுகைக்காகவும்
அவர் உகக்கும் பகவத் விஷயம் ஆகையாலும் பேசுகிறார் –

சரம அதிகாரி சேகரர் ஆகிறார் இவர் -ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே தாரகாதி -யாகக் கொண்டவர்
1-அவர் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராமுதம் -இவர் -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -போக்யதா பிரகர்ஷம்
2-அவர் -மலக்கு நாவுடையேற்கு என்றார் -இவர் நாவினால் நவிற்று –
3-அவர் அடிக் கீழ் அமர்ந்து –இவர் மேவினேன் அவன் பொன்னடி
4-கண்ணன் அல்லல் தெய்வம் இல்லை -தேவு மற்று
5-பாடி இளைப்பிலம் என்றார் -பாடித் திரிவேனே -ஆனந்தப் பட்டார் வாசி உண்டே
6-இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்றேன் -திரி தந்தாகிலும்
7-உரிய தொண்டர் தொண்டர் —நம்பிக்கு ஆள் உரியனே
8-தாயாய் தந்தையாய் -அன்னையாய் அத்தனாய்
9-ஆள்கின்றான் ஆழியான் -என்னை ஆண்டிடும் தன்மையான் -வெப்பம் இல்லை குளிர்ந்து அன்றோ
10-கடியனாய் கஞ்சனைக் கொன்ற பிரான் -தக்க சீர் சடகோபன்
11-யானே என் தனதே என்று இருந்தேன் -நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் –நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
12-எமர் கீழ் மேல் ஏழ் ஏழ் பிறப்பும் நம்முடிய வாழ்வு வாய்கின்றவா -மா சதிர் -இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
13-என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசன் -நின்று தன புகழ் ஏத்த அருளினான்
14-ஒட்டுமே இனி என்னை நெகிழ்க -என்றும் என்னை இகல்விலன் காண்மின் -நீங்களே பாருமின் -சங்கையே இல்லை
15-மயர்வற மதிநலம் அருளினான் -ஒண் தமிழ் சடகோபன் அருளையே
16-அருள் உடையவன் -அருள் கண்டீர் இவ் உலகத்தில் மிக்கதே -உயர்ந்த அருள் என்கிறார் இவர்
17-பே ரே ன் என்று -நெஞ்சு நிறைய புகுந்தான் –நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -கண்ணன் அங்கே திருவாய்மொழி இங்கே
18-வழு விலா அடிமை செய்ய வேண்டும் -ஆட்புக்க காதல் அடிமைப் பயன்
19-ஆராத காதல் -ஆட்புக்க காதல் -தாஸ்யம் ஸ்பஷ்டம் இங்கே தான்
20-பொருள் அல்லாத என்னை பொருள் ஆக்கி -அடிமை கொண்டான் -பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல்
21-கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ -தென் குருகூர் நம்பிக்கு அன்பன் -திருஷ்டாந்தம் இல்லை இங்கு -போட்டி இல்லை இங்கு
22-உலகம் படைத்தான் கவி -மதுர கவி -இவர்
23-உரைக்கவல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம்மூர் எல்லாம் -நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே பிரத்யஷம் -சங்கையே இல்லையே –

பிரத்யுபகாரம் செய்ய இயலாமல் குண அனுசந்தானம் செய்து -முனிவர்கள் யோகிகள் -குண நிஷ்டர் கைங்கர்ய நிஷ்டர்
1-போக்யதா பிரகர்ஷம் -முதல் பாட்டில்
2-தேக யாத்ரைக்கு தாரகம் -பாவின் இன்னிசை பாடத் திரிவனே
3-பகவத் விஷயம் உத்தேச்யம் ஆழ்வார் உகந்த விஷயம் -திரி தந்தாகிலும்
4-விஷயீ கரித்து அருளி -அன்னையாய்
5-இதர விஷய பிராவண்யம் விட்டு தம் அளவு வரும் படி சாதுர்யம் -நம்பினேன்
6-ஆழ்வார் தம்மை விஷயீ கார உறுதி -ஆறாம் -இன்று தொட்டும் எழுமையும் -ஒன்பது குளிக்கு நிற்கும் -புகழ் ஏத்த அருளினான்
7-கிருபா பிரகாசம் -சடகோபன் அருளையே
8-ஆழ்வார் கிருபை விஞ்சி -அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
9-சகல வேத ரகசியம் -ஸூ பிரதிஷ்டியாக நெஞ்சில் நிறுத்தி -மிக்க -வேதத்தின் உட் பொருள் -நிற்கப்பாடி
10-உபகாரம் பிரத்யுபகார நிரபேஷம் -முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே -பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்

—————————————————————-

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே-2-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –

முதல் -பாட்டில் ஆழ்வார் -என்றால் தமக்கு ரசிக்கிற படியை சொன்னார் –
இப்பாட்டில் அவருடைய பாசுரமே தேக யாத்ரையாம் படி-தாரகமான படியை சொல்லுகிறார் –

————————

ஸ்ரீ நஞ்சீயர்

ஆழ்வாருடைய ஏற்றம் ஓர் உக்தியாலே இச் சரீரரத்தோடே அனுபவிக்கலாம் என்கிறார் –

——————-

ஸ்ரீ நம்பிள்ளை -–

ஸ்ரீ ஆழ்வாருடைய பாசுரமே தமக்கு தேக யாத்ரையாம் படி தாரகமான படி சொல்லுகிறார் –

———————————

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் –

ஆழ்வார்கள் பகவத் விஷயத்திலே ஆச்சார்ய பிரதிபத்தி பண்ணிப் போந்தார்கள் –
இவர் ஆச்சார்ய விஷயத்திலே பகவத் பிரதிபத்தி பண்ணிப் போருகிறவர் ஆய்த்து-
பகவத் விஷயத்திலும் ஆழ்வாருக்கு உண்டான வாசி
யதி சக் நோஷி கச்ச த்வமதி சஞ்சல சேஷ்டித-இத்யுக்த்வாத நிஜம் கர்ம சா சகார குடும்பி நி-என்கிறபடியே
இடைச்சி கட்டி–வல்லை யாகில் நான் கட்டின கட்டை அவிழ்த்துப் போய்க் காண்-
உன் துறு துறுக்கைத் தனத்தாலே அறப் பட்டதீ-என்று கையாலும் வாயாலும் கட்டி கறப்பன கடைவன குவாலாகையாலே
பெரிய திரு நாளிலும் சந்த்யா வந்தனம் முட்டாமல் நடத்துவாரைப் போலே
அவள் தன் கார்யத்திலே போந்தாள் என்று சொல்லுகையாலே ஓர் அபலை கட்ட அது அவிழ்க்க மாட்டாமல் இருந்தான் –
கட்டினவர்களே இரங்கி அவிழ்க்க வேணும் என்று இறே அவன் நினைவு
அப்படியே ஆழ்வாரும் இவனுடைய சௌசீல்ய குணத்தாலே கட்டுண்டு-எத்திறம் என்று போக மாட்டாமல் இருந்தார்

இவர் அப்படி அன்றிக்கே
ஆழ்வார் ஈடுபட்ட அபதானத்தை அனுசந்தித்து இருக்கச் செய்தேயும் அதில் ஆழம் கால் படாதே
அத்தை விட்டு ஆழ்வாருடைய போக்யதையிலே நின்றவர் ஆய்த்து –
கீழ்ப் பாட்டிலே நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே -என்று ஆழ்வார் பக்கல்
ஸ்ம்ருதி சாரச்யத்தையும் சங்கீர்த்தன சாரச்யத்தையும் சொல்லக் கேட்டவர்கள்
நாட்டார் அடைய பகவத் விஷயத்தையே ஸ்மர்த்த வ்யமாகவும் சங்கீர்த்த நீயமாகவும் சொல்லா நிற்க
நீர் ஆழ்வாரை இவை இரண்டுமாக அனுசந்திப்பான் என்
பகவத் விஷயத்திலேயும் அன்வயிக்கப் பார்த்தாலோ வென்ன அதுக்கு இப்பாட்டாலே உத்தரம் சொல்லுகிறார் –

தாம்தாம் பற்றின விஷயத்தை விட்டுப் புறம்பு சில போக வேண்டுவது-
1- அவ் விஷயம் இஹ லோக ஸூக ஜனகம் அல்லவாயாதல்-
2–பர லோக ஸூ கத்துக்கு சாதனமன்றாயாதல்–
3- பற்றினவர்கள் இவ்விஷயத்தை ஒழிய வேறே ஒரு ஸ்வாமி யுண்டாக நினைத்து இருத்தல் –
4-கால ஷேப விஷயம் அல்லாமையாலே யாதல் அன்றோ—-

அதில் -1-எனக்கு இஹ லோக ஸூக ஜனகரும் ஆழ்வாரே-
2 -பர லோக ஸூ கத்துக்கு சாதனமும் ஆழ்வாரே-
3-எனக்கு ஸ்வாமியும் ஆழ்வாரே –
4-கால ஷேப விஷயமும் ஆழ்வாரே –

ஆன பின்பு பகவத் விஷயத்திலே அன்வயிக்க வேண்டுகிறது என் என்கிறார் –
நான்குக்கும் நான்கு அடிகள் இந்த பாசுரம் –
1-நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்-
2-மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே-
3-தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி-
4-பாவின் இன்னிசை பாடித் திரிவனே-

———————————————————————–

திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -3-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -–
மூன்றாம் பாட்டில் -தேவு மற்று அறியேன் -என்று -புருஷார்தங்களோடே கூட பகவத்
விஷயத்தையும் காற் கடைக் கொள்ளக் கடவீரோ -என்ன –
எனக்கு அபுருஷார்த்தம் என்னும் அளவாயிற்று காற் கடைக் கொண்டது –
ஆழ்வார் உகந்த விஷயம் -என்னும் இவ்வழியாலே -தேவு மற்று அறியிலும் அறிவன் என்கிறார் –

1-சூர்ப்பணகையைப் போலே கிடந்தானை கண்டு ஏறும் அது இறே தவிர்த்துக் கொண்டது –
2–விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -என்று
3-பெரியாழ்வாரை முன்னாகப் பற்றும் ஆண்டாளைப் போலே ஆழ்வார் முன்னாகப் பற்றும் பற்றுத் தவிர்ந்திலரே –
ஆழ்வார் முன்னாக வரும் உத்தேச்யத்தை தவிர்ந்திலர் இறே
பவத பரமோ மத -என்று கேட்க -தர்மோதிகதாமோ மக என்று ஆச்சார்யா ருசி பரிக்ருஹீதமாய் வருமது ஆதரணீயம் இறே இவர்க்கு –
4-ஸ்ரீ திரிபுரா தேவியார் வட கீழ் மூலையில் தத்வத்தையும் ஆஸ்ரயணீயாம் என்று ஸ்ரீ உடையவர்-அருளிச் செய்தார் ஆகில் –
எனக்கும் அதுவாம் அத்தனை அன்றோ -என்றாள் –
5-ஸ்ரீ குணமலைப் பாடி உடையார் ஸ்ரீ காங்கேயர் தெற்கே எடுத்து விட்ட போது
ஸ்ரீ பிள்ளை ஆத்தான் (ஸ்ரீ கோயில் ஆச்சான் என்றும் சொல்வர் )-அங்கே குறைவறுப்புச் சமைக்க -அவர் -உமக்கு வேண்டுவது என் –
என்று கேட்க -இவர் உம்மைக் கொண்டு பண்டே உபகாரம் கொண்டோம் காணும் -என்ன-
ஆவது என் என்னை அறியாதே வருவதோர் உபகாரம் உண்டோ -என்ன-
எங்கள் ஆச்சார்யர் நான் கோயிலில் மண் பெற்றது அவ் வேளானாலே -என்று
அருளிச் செய்ய கேட்டு இருந்தோம் -இதுக்கு மேற்பட்டதோர் உபகாரம் உண்டோ -நமக்கு -என்றார் –
6-ஸ்ரீ உடையவர் வெள்ளை சாத்தி எழுந்து அருளின காலத்தில் அவர் திருவடிகளில் சம்பந்தம் உடையாரை-
பெருமாளை திருவடி தொழ வேண்டா -என்று விலக்க
ஸ்ரீ ஆழ்வானை -நீர் ஆர் எனக்கு விரோதிகளோ நீர் புக்குத் திருவடி தொழல் ஆகாதோ -என்ன-
ஆத்ம குணம் மோஷ ஹேது என்று இருந்தோம் -அது பந்த ஹேதுவான பின்பு
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தத்தை யறுத்துக் கொள்ளவோ -என்று மீண்டு போந்தார்-

——————————–

ஸ்ரீ நஞ்சீயர் – –

ஸ்ரீ ஆழ்வார் உகந்த விஷயம் என்று உகக்கிறார்-

———————

ஸ்ரீ நம்பிள்ளை —

தேவு மற்று அறியேன் என்றார் கீழ் –
ஆழ்வார் பற்றின விஷயம் என்று அவ் வழியாலே பற்றுகிறார்
கிடந்தானை கண்டு ஏறுமா போலே தந்தலையாலே வருமது இறே தவிர்த்துக் கொண்டது
தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல்-என்று அத்தலையாலே வருமது தவிர்த்துக் கொண்டு இலரே –
ஸூர்ப்பணகை போலே வழி எல்லா வழியே வருமத்தை இறே தவிர்த்தது -ஆழ்வார் தலையாலே வருமது தவிர்ந்திலரே
பவத பரமோ மத -என்று கேட்க -தர்மோதிகதாமோ மக என்று ஆச்சார்யா ருசி பரிக்ருஹீதமாய் வருமது ஏதேனும் ஆகிலும் அமையும் இவர்க்கு –

ஸ்ரீ குண மலைப் பாடியுடையார் ஸ்ரீ காங்கேயர் தெற்கே எடுத்து விடுகிற வளவிலே
ஸ்ரீ கோயிலாச்சான் இவருக்குச் சில அரிசியும் பச்சையும் வரக் காட்டினான் –
அப்போது சங்குசிதமாய் இருக்கையாலே அபேஷிதமாய் இருக்கும் இறே
இவ்வளவிலே உபகரித்தவனுக்கு பிரத்யுபகாரம் பண்ண வேணும் என்று நினைத்து இருந்து பின்பு ஒரு நாளிலே கண்டு
எங்கள் பக்கலிலேயும் ஓர் உபகாரம் கொள்ள வேண்டும் -என்ன நான் முன்பே கொண்டேன் என்ன
என்னை அறியாமல் எங்கனே கொண்டபடி என்ன
எங்கள் ஆச்சார்யர் கோயில் அளவிலே நீர் அனுகூலித்த படியை நினைத்து அவ்வேளாளனாலே இம்மண் பெற்றோம் என்று
பல காலும் அருளிச் செய்யக் கேட்டேன் -இனிக் கொள்ள வேண்டுவதொரு உபகாரம் இல்லை என்றான் –
ஸ்ரீ திரிபுரா தேவியார் வடகீழ் மூலை தத்வத்தையும் ஆஸ்ரயணீய வஸ்து என்று நினைத்து இரஏனோ ஸ்ரீ எம்பெருமானார் அங்கீகரித்தாராகில் –
அவர் அங்கீ கரியாமை அன்றோ அவர தேவதையாக நினைத்து இருக்கிறது என்றார் –

———————————-

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் –

தேவு மற்று அறியேன் என்றார் கீழில் பாட்டில்
இங்கு ஈஸ்வரன் தான் இவர் பக்கலிலே மண்டினபடியைச் சொல்லுகிறார்
பகவத் விஷய ப்ரீணநமாக ஆச்சார்ய விஷயத்தில் ப்ரவணனாகக் கடவன்
ஆச்சார்ய ப்ரீணநமாக பகவத் விஷயத்தில் ப்ரவணனாகக் கடவன்
ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்தமஹம் ச ச மம ப்ரிய-என்கிறபடியே ஒருவருக்கு ஒருவர் ப்ரிய விஷயமாய் இருக்கும் இறே
ஒருவனை ஒருவன் உகந்தானாவது அவன் உகந்தாரையும் உகக்கை யாய்த்து –
இவர் கீழ் தேவு மற்று அறியேன் என்று நம்மையும் மறந்து ஆழ்வார் பக்கல் ப்ரவணர் ஆனாரே
எல்லாம் கூட நம்மை அறிவித்தவர் என்று இறே ஆழ்வார் பக்கல் இவர்க்கு ஆதாரம்
இப்படி நம்மை யுகந்தாருக்கு இவர் ப்ரீதராம் இடத்தில் -மம மத்பக்தபக்தேஷூ ப்ரீதிரப்யதிகா பவேத் -அன்றோ
ஆகையாலே நாம் கொடுக்கும் பாரிஸில் எது என்று பார்த்து ஆழ்வார் பக்கல் பக்தி பூரணமான இவர் திரு உள்ளத்திலே
நீர் வெள்ளத்திலே நெய்தல் பாரித்தாப் போலே தன்னுடைய வடிவைக் கொடுவந்து பாரிக்க
இதைக் கண்டு ப்ரீதரான இவர் இதுக்கு நிமித்தம் என் என்று ஆராய்ந்து பார்த்து அது பகவச் சேஷத்வ ஜ்ஞானத்தாலும் வந்தது அன்று
-பாகவத சேஷத்வ மாத்ரத்தாலும் வந்தது அல்ல -பகவத் ஆஸ்ரயணத்தாலும் வந்தது அல்ல
எல்லாம் கூட நான் ஆழ்வாருக்கு அனன்யார்ஹ சேஷ பூதனாய் பெற்ற பேறு இ றே இது என்று ஸ்வ கதமாக ப்ரீதர் ஆகிறார்
ஆச்சார்ய விஷயத்தைப் பற்றி இருப்பான் ஒருவனை பகவத் விஷயம் தானே மேல் விழும் என்னும் இடத்துக்கு உதாஹரணம் இது வி றே
பிராட்டியைப் பற்றினாலும் அவள் அவனோடு சேர்க்கையாலே அவன் கை பார்த்து இருக்க வேணும்
-இங்கு அவன் தானே மேல் விழுந்து தன்னை இவனுக்குக் கொடுக்கும் –

—————————————————————–

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே-4

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –

நாலாம் பாட்டில் –
என் அப்பனில் -என்று காற் கடைக் கொண்ட விஷயத்தை -ஆழ்வார் உகந்தார் -என்று விரும்புகைக்கு அடி என் என்னில் –
என் தண்மையைப் பாராதே -என்னை விஷயீ கரித்த நீர்மையை அனுசந்தித்தால் –
அவர் உகந்த விஷயத்தை உகவாது ஒழிவேனோ -என்ன –
உம்முடைய தண்மை யேது -அது பாராதே அவர் விஷயீ கரித்த படி என் -என்ன -அத்தைப் பேசுகிறார் –

————————–

ஸ்ரீ நஞ்சீயர் –

உமக்கு இந்த நன்மைக்கு அடி என் என்னில் –
சத்துக்களாலும் கர்ஹிதனான வென்னை பித்ராதிகள் செய்வதும் செய்து உபகரித்தான் என்கிறார்
இப்படி ஆழ்வார் உம்மை விஷயீ கரிக்கைக்கு நீர் இட்ட பச்சை என் என்னில் –
சத்துக்களும் கைவிடும்படி தண்ணியன் ஆனேன் என்கிறார் –

———————————–

ஸ்ரீ நம்பிள்ளை – –

நான் என்றது தான் முன்பு உம்மை எவ்வளவாக நினைத்து என்ன
இது இறே முன்பு என்னுடைய ஸ்திதி என்கிறார்-

———————————–

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் –

தேவு மற்று அறியேன் –
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற நன்மை -என்று இவர் சொல்லக் கேட்டவர்கள்
சர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ -என்றும்
பிதாஹா மாஸய ஜகதோ மாதா -என்றும் -உலக்குக்கோர் முந்தைத் தாய் தந்தையே என்கிறபடியே
ரிஷிகளும் ஆழ்வார்களும் அவன் தானும் ஏக கண்டமாக சர்வ லோகங்களுக்கும் மாதா பிதாவாக சர்வேஸ்வரனை சொல்லா நிற்க
நீரும் அந்த லோகத்திலே ஒருவராய் இருக்க இப்படி பந்துவானவனை ஆஸ்ரயித்தல்-
அதுவும் அன்றிக்கே
வாஸூ தேவஸ் சர்வமிதி ச மகாத்மா -என்றும் –
பெரு மக்கள் -என்றும் –
சிறு மா மனிசர் -என்றும் –
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயனும் ஆழ்வார் தாமும் கொண்டாடும் படியான விலஷண வர்க்கத்திலே
சிலரை ஆஸ்ரயித்தல் செய்யாதே ஆழ்வாரையே நீர் ஆஸ்ரயிக்கைக்கு ஆழ்வார் உமக்குச் செய்த உபகாரம் எது என்ன –
என் தோஷ அதிசயத்தாலே அந்தப் பரம சாத்விகரும் என்னை நெகிழ அதுவே பற்றாசாக
எனக்கு முகம் தந்து மாதா பிதாவும் தாமேயாய்
என்னை அடிமை கொண்டு போந்த ஸ்வ பாவம் ஆழ்வார்க்கு உள்ளது ஒன்றாகையாலே அவரே அன்றோ
எனக்குப் பூரணரான உபகாரகர் என்று இப்பாட்டிலே அவர்களுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்-
ஆழ்வாருடைய பூர்த்தியை உபபாதித்த படி –

——————————————

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -–

ஐந்தாம் பாட்டில் –
உம்மை புன்மையாகவும்
உமக்கு ஆழ்வார் சர்வ பிரகாரத்தாலும் உபகாரகர் ஆகவும் சொன்னீர்
உம்முடைய புன்மையையும் –
உமக்கு ஆழ்வார் உபகரித்த நன்மையையும்
சொல்லிக் காணீர் –என்ன சொல்லுகிறார் –

——————

ஸ்ரீ நஞ்சீயர் -–

சத்துக்களும் கை விடும்படி உம்முடைய பக்கல் குற்றம் ஏது என்னில்
அநாதி காலம் பரதார பரிக்ரகாம் பரத்ரா வ்யபஹாரம் பண்ணிப் போந்து இளிம்பனானேன்-
இன்று ஸ்ரீ ஆழ்வாருடைய நிர்ஹேதுக விஷயீ காரத்தாலே சதுரனானேன் என்கிறார்
இதுக்கு முன்பு யுண்டான அநாத்ம குணங்களை அனுசந்தித்து ஸ்ரீ ஆழ்வாருடைய நிர்ஹேதுக விஷயீ காரத்தாலே
க்ருதக்ருத்யன் ஆனேன் என்கிறார் –

————–

ஸ்ரீ நம்பிள்ளை -–

உம்மைப் புன்மையாகவும் உமக்கு ஆழ்வார் சர்வ பிரகாரத்தாலும் உபகாரராகவும் சொன்னீர் –
உம்முடைய பூர்வ வ்ருத்தத்தையும் அவர் உமக்கு உபகரித்த எல்லையையும் சொல்லிக் காணீர் என்னச் சொல்லுகிறார் –

——————

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் – –

கீழ் நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர் என்று சொல்லக் கேட்டவர்கள்
அந்தப் புன்மை யாகிறது ஏது என்றும் அவற்றிலே ஒன்றை இரண்டைச் சொல்லீர் என்றும்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியேன் என்றீர் -நீர் தாம் ஆழ்வாருக்கு அடிமையான பிரகாரம் என்
முன்பு என்ன நிலையிலே நின்று பின்பு ஆழ்வாரைக் கிட்டினீர்
நீர் ஸ்ரீ ஆழ்வாரைக் கிட்டுகைக்கு ருசி ஜனகர் ஆர் என்றும் கேட்க
அநாதி காலம் அஹங்கார அர்த்த காம பரவசனாய் அதில் பிரதான புருஷார்த்தமான காமம் அர்த்த சாத்யம் ஆகையாலும்
அவ்விஷய சங்கம் ஓன்று இரண்டு என்ற அளவில் நில்லாமையாலே அவ்விஷயங்கள் பலவற்றையும் போய் அனுபவிக்கைக்கும்
அதுக்கு அர்த்தார்ஜநார்த்தமாகவும் தேசாந்தர பர்யடனம் பண்ணா நிற்க ஸ்ரீ திரு நகரியில் மாடங்கள் மேரு சிகரத்தைக் கொடு வந்து
வைத்தாப் போலே மின்னித் தோற்றிற்று இது ஒரு தேச விசேஷம் இருந்தபடி என்
இத் தேசத்தின் விசேஷங்களை ஆராய்ந்து விலஷண விஷயங்கள் உண்டாகில் அனுபவிக்கிறோம் என்று ஊரிலே புக்கேன்
அதுவே பற்றாசாக அத்தேச நிர்வாஹகரான ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே ஆதாரம் ஜனித்து அவர்க்கே ஆளாய் விஷயாதிகளை வென்றேன்
இது இறே நான் நின்ற நிலை என்று அவர்களுக்கு உத்தரம் சொல்லுகிறார் –

—————————————————————————-

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன் காண்மினே-6–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -–
ஆறாம் பாட்டில் –
ஸ்ரீ ஆழ்வார் இப்போது இங்கே விஷயீ கரித்தாலும் –
நீர் தாம் அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்த-விஷயம் ஆகையாலே மறுவல் இடிலோ -என்ன –
அங்கன் மறுவல் இடும்படியாயோ ஆழ்வார் பிரசாதம் என் பக்கல் இருப்பது -என்கிறார் –
ஸ்ரீ ஆழ்வார் -கிருபை -ஸூசீநாம் ஸ்ரீ மதாம் கேஹே யோகப் ரஷ்டோபி ஜாயதே -என்றும் –
சமாதி பங்கஸ் தஸ்யா சீத்-என்றும் பிரம்சம் பிரசங்கிக்கும்-
ஸ்ரீ பகவத் கிருபை அளவில் நினைத்து இருக்கலாமோ-
(நழுவுதல் உண்டு என்பதற்கு பிரமாணம் –பிராப்யா புண்ய க்ருதா லோகம் –பூர்வ பாதி ஸ்லோகார்த்தம் -மான் குட்டி ஜடபிரதர் -)

————————–

ஸ்ரீ நஞ்சீயர் – –

நீர் க்ருதக்ருத்யரான படி எங்கனே என்னில்-
வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன் என்கிறபடியே
கால தத்வம் உள்ளதனையும்-ஸ்ரீ ஆழ்வார் தம்மையே ஏத்தும் படி பண்ணினார் என்கிறார் –

————————–

ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –

ஸ்ரீ ஆழ்வார் இப்போது இங்கனே விஷயீ கரித்தார் ஆகிலும்
நீர் தாம் அநாதி காலம் புறம்பே அந்ய பரராய்ப் போந்தேன் என்றீர்
இன்னமும் அப்படிப் புறம்பே போகிலோ வென்ன-அங்கனே போகலாம் படியோ
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செயல் இருப்பது என்கிறார்-

——————————————

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -–

கீழ் இரண்டு பாட்டாலே தம்முடைய தோஷ அதிசயத்தையும் –
அத்தோஷமே பற்றாசாக தம்மை ஸ்ரீ ஆழ்வார் அங்கீ கரித்த படியையும் –
ஸ்ரீ ஆழ்வார் அங்கீ கரித்த அநந்தரம் அத் தோஷங்களைத் தாம் வென்ற படியையும் –
அவை போகையாலே-ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் தமக்கு உண்டான ஆதரத்தையும் சொன்னார் –
இத்தைக் கேட்டவர்கள் இப்போது உம்முடைய குற்றம் கழிந்ததே யாகிலும் உமக்கு பிரகிருதி சம்பந்தத்தாலே பின்னையும்
மறுவல் இடாதோ-(புகை நெருப்பு -பிரியா பாபங்கள் / கண்ணாடி அழுக்கு -துடைக்க துடைக்க திரும்பும் /
பனிக் குடம் கர்ப்பம் -தானே உடைந்து வராதே -மூன்றும் பாபங்களை போக்க -)
அதுக்குப் பரிஹாரமாக நீர் கண்டு வைத்தது என்ன -கீழ் உள்ள தோஷமும் நான் சாதனா அனுஷ்டானம் பண்ணிப் போக்கினேனோ-
ஸ்ரீ ஆழ்வார் அங்கீ காரத்தால் போய்த்தாகில் அவ்வங்கீ காரம் மாறினால் அன்றோ அது மேலிடுவது
ஸ்ரீ ஆழ்வார் என் தோஷம் கண்டு ஒரு காலும் இகழார்-இது காண மாட்டி கோளோ வென்று இப் பாட்டாலே உத்தரம் சொல்லுகிறார் –

கீழ்ப் பாட்டில் ஆழ்வார் திருவடிகளில் உண்டான தம்முடைய-1- ஜ்ஞான-2- பக்திகளைச் சொன்னார்-
(சதிர்த்தேன் என்பதால் ஞான பக்தியை சொல்லி-ஆழ்வார் திருவடிகளில் கைங்கர்யமே பக்தி )
இதில் அவர் பக்கல் தமக்குப் பிறந்த-3- வ்யவசாயம் சொல்லுகிறார்-( உறுதி முக்கியம் -நின்று -என்பதால் உறுதி -)
தாம் அங்கீ கரித்த இன்று முதல் யாவதாத்மா பாவியாகத் தம்முடைய குண கீர்த்தனம் பண்ணிப் போரும்படி என் பக்கலிலே
கிருபையைப் பண்ணின ஸ்ரீ ஆழ்வார் குற்றம் கண்டு கைவிடப் புகுகிறாரோ என்று இகழாமைக்கு அடி சொல்லுகிறார்
இப் பாட்டின் முற்கூற்றாலே-

————————————————————————

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை – –

ஏழாம் பாட்டில் –
ஸ்ரீ ஆழ்வார் தம் பக்கலில் பண்ணின நிர்ஹேதுக விஷயீ காரத்தை கண்டு –
இவ் விஷயீ காரத்துக்கு யோக்யதை உண்டாய் இருக்க நாட்டார் இழக்கைக்கு அடி என் –
என்று அனுசந்தித்து –
இவருடைய பெருமையை அறியாமையாலே இருக்கிறார்கள் -என்று
எல்லாரும் அறியும்படி சொல்லக் -கடவேன் என்கிறார் –

—————

ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –

என்னுடைய சகல பிரதிபந்தகங்களையும் போக்கின ஸ்ரீ ஆழ்வாருடைய நிர்ஹேதுக விஷயீ காரத்தை
ஸூ பிரசித்தம் ஆக்குவேன் என்கிறார் –

——————

ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –

ஸ்ரீ ஆழ்வார் தம் பக்கல் நிர் ஹேதுகமாக விஷயீ கரித்த விஷயீ காரத்தைக் கண்டு இத்தை நாட்டார் அறியாதே-
அனர்த்தப் படுகிற படியைப் பார்த்து இத்தை எல்லாரும் அறியும் படி கூப்பிடுவேன் என்கிறார் –

—————————————

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் – –

கீழ் மூன்றாம் பாட்டிலே தம்முடைய புன்மையைக் கண்டு பெரியவர்களும் தம்மை இகழ்ந்த படி சொல்லி
இவனுக்கு நம்மை ஒழிய இனிக் கதி இல்லை என்று ஸ்ரீ ஆழ்வார் மாதா பிதாவே நின்று தம்மளவிலே அபிமானித்த படியையும் சொல்லி
அநந்தரம் பாட்டிலே அந்தப் புன்மை தான் ஏது –
ஸ்ரீ ஆழ்வார் தம்மை நீர் கிட்டின வழி என் என்று கேட்க -அவற்றுக்கு உத்தரம் சொல்லி
கீழில் பாட்டிலே இப்போது கைக்கொண்ட ஸ்ரீ ஆழ்வார் உம்முடைய குற்றம் கண்டு இன்னும் இகழில் செய்வது என் என்ன –
இன்று தொடங்கி கால தத்வம் உள்ளதனையும் என்னை இகழாதே தம்முடைய குண ஸ்துதியே கால யாத்ரையாம் படி பண்ணினார்
ஆன பின்பு என் குற்றம் மேலிடுமோ -மேலிட்டாலும் பரிபூர்ணர் ஆனவர் என்னை நெகிழப் புகுகிறாரோ என்றார் –
இதில் ஸ்ரீ ஆழ்வார் என்னை அங்கீ கரிக்கிற போதே என்னுடைய துர்க்கதி கண்டு இவன் பக்கல் இவை கிட்டக் கடவது அல்ல
என்று பழையதாய் வலியதான பாபங்களைப் பாறிப் போம்படி பண்ணி யன்றோ கிருபை பண்ணிற்று –
இனி இவற்றுக்கு உயிர் உண்டோ என்று கீழ் உக்த்தத்தைப் பரிஹரித்துக் கொண்டு தன் புகழ் ஏத்த அருளினான் என்று
ஸ்ரீ ஆழ்வாருடைய கிருபை கீழே ப்ரஸ்துதம் ஆகையாலே
அவருடைய க்ருபா பிரபாவத்தை திகந்தரங்கள் தோறும் வெளியிடக் கடவேன் என்கிறார் –

குரும் பிரகாசயேந்நித்யம்-என்கிற வித்தய நுஷ்டானம் பண்ணக் கடவேன் என்கிறார்
இனி ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் விஷயத்திலே-
1- பரத்வ புத்தி –
2-தேவ தாந்தரங்களிலே பரத்வ புத்தி நிவ்ருத்தி –
3-அப்பர வஸ்துவின் பக்கல் ததீய சேஷத்வ பர்யந்தை யான சேஷத்வ புத்தி –
4-விஷயாந்தர விரக்தி-
5- பகவத் விஷயத்தை விச்லேஷிக்கில் தரைப் படும்படியான ப்ராவண்யாதிசயம் –
6-அவன் கை விடில் தமக்குப் புறம்பு போக்கில்லை என்னும் படியான விஸ்வாச அதிசயம் –
7-சம்சார பீதி-
8-புருஷார்த்த லாபத்தில் அதிசயித்தவரை-அர்ச்சாவதாரங்களில் உண்டான ப்ராவண்யம் –
என்றாப் போலே சொல்லுகிற ஆத்ம குணங்களில் காட்டில்
வீடு மின் முற்றவும் என்று தொடங்கி கண்ணன் கழலிணை ஈறாக பல இடங்களிலும்
சம்சாரி சேதனர் உடைய துர்க்கதி கண்டு பொறுக்க மாட்டாமே உபதேசிக்கைக்கு அடி கிருபை யாகையாலே-
அந்த க்ருபா பிரபாவத்தை அனுசந்தித்து அத்தை எல்லாரும் அறியும் படி வெளியிடக் கடவேன் என்கிறார்
ஸ்ரீ ஈஸ்வரன் நிரதிசய க்ருபாவானாய் இருந்தானே யாகிலும் ஸ்வாதந்த்ர்யா விசிஷ்டன் ஆகையாலே தோஷ தர்சனத்தாலே-
உபேஷிப்பதும் ஒரு புடை யுண்டு-
ஸ்ரீ ஆழ்வார் அப்படி அன்றிக்கே பற்றினாரை இகழாதவர் ஆயிற்று –

—————————————————————

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -–

எட்டாம் பாட்டில் –
எண் திசையும் அறிய இயம்புகேன் -என்கைக்கு ஹேது என் -என்னில் –
ஸ்ரீ ஆழ்வாருடைய அருள் -சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும் கபளீ கரித்து இருக்கையாலே -என்கிறார் –

—————————

ஸ்ரீ நஞ்சீயர் – –

வேத ரஹஸ்யத்தை வெளியிட்ட ஸ்ரீ சர்வேஸ்வரன் கிருபையைக் காட்டில் -ஸ்ரீ திருவாய்மொழியை அருளிச் செய்த-
ஸ்ரீ ஆழ்வாருடைய கிருபை ஜகத்துக்கு மிக்கது -என்கிறார் –

——————————

ஸ்ரீ நம்பிள்ளை – –

எண் திசையும் அறிய இயம்புகேன் -என்கைக்கு அடி –
ஸ்ரீ ஆழ்வாருடைய அருள் கொண்டாடும் அருள்-சித் அசித் ஈஸ்வர தத்வத்ரயங்களையும்
கபளீகரித்து இருக்கையாலே -என்கிறார் –

—————————–

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் – –

ஸ்ரீ ஆழ்வாருடைய கிருபையை கீழில் பாட்டிலே –
எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ்ச் சடகோபன் அருளை -என்று
இவர் சொல்லக் கேட்டிருக்குமவர்கள் பகவத் கிருபை யன்றோ நாட்டார் அடையக் கொண்டாடுவது –
நீர் ஸ்ரீ ஆழ்வாருடைய கிருபையை-எண் திசையும் அறிய இயம்புகேன் -என்கைக்கு அடி என் என்ன-
ஸ்ரீ பகவத் கிருபையையும் ஸ்ரீ ஆழ்வார் கிருபையும் ஆனால் ப்ராப்தி சித்திக்கும் அன்று அன்றோ ஸ்ரீ பகவத் கிருபை வேண்டுவது –
அந்த ப்ராப்தி யுன்டாவது ஜ்ஞானத்தாலே அன்றோ -அந்த ஜ்ஞான சித்தி ஸ்ரீ ஆழ்வாராலே யன்றோ –
ஆகையாலே-ஸ்ரீ ஆழ்வார் கிருபை யன்றோ லோகத்தில் விஞ்சி இருப்பது என்கிறார்-
பிராப்தி ஜ்ஞான சாபேஷமாய் இருக்கும்
(ஆத்ம ஞானமும் -சேஷத்வ பாரதந்ரய ஞானம் இருந்து அதன் பலனாக -அப்ரதிஷேதம் விலக்காமை யும் வேண்டும் )-
ஜ்ஞானம் ப்ராப்தி சாபேஷமாய் இராது-
கீழே நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர் -என்று
தம்முடைய புன்மையைச் சொல்ல அந்தப் புன்மை ஏது என்ன-
அத்தை நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன் எலாம் -என்று இரண்டு வகையாகப் பேசி-
அநந்தரம் –பண்டை வல்வினை பாற்றி அருளினான் -என்று அத்தை போக்கின படியைச் சொல்லி
போக்கின பிரகாரத்தை இப் பாட்டிலே சொல்லுகிறார் –

அநாத்மன் யாத்ம புத்தியையும் அபோக்யங்களில் போக்ய புத்தியையும் அத்யாத்ம ஜ்ஞானத்தாலே போக்க வேணும்-
ஆச்சார்யன் ஜ்ஞான பிரதானம் பண்ணின வாறே -அந்த ஜ்ஞானம் மேல் உண்டான கர்மார்ஜனத்தை மாற்றும் –
முன்பு உண்டான அவித்யையாலே ஆர்ஜித்து வைத்த கர்மங்களை ஈஸ்வரன் போக்கும்படி பண்ணுவதுமது-
சங்கல்ப ஜத்தை இவன் போக்கும் -(மனசால் நினைத்த பாபத்தை அறிந்து -ஆச்சார்யர் சர்வஞ்ஞன் ஆகையால் போக்கும் என்றபடி )-
கர்ம ஜத்தை அவன் போக்கும் -அவன் போக்குகைக்கு அடி இவன்-ஜ்ஞான சித்தியைப் பண்ணிக் கொடுக்கையாலே இறே-
அத்தைப் பற்ற இறே- அம்ருதச்ய ஹி தாதானம் தமாசா பாரம் தர்சயதி சனத்குமார -என்றும் ஆச்சார்யனைச் சொல்லுகிறது –

எனக்கு அத்யாத்ம ஜ்ஞானத்தைப் பிறப்பிக்கக் கடவதாக வேதார்த்தங்களை ஸ்ரீ திருவாய் மொழி முகத்தாலே
வெளியிட்டு-அருளினார் என்னப் பார்த்து -அந்த ஸ்ரீ திருவாய்மொழி பாடினதற்கு வேறேயும் ஒரு பிரயோஜனம் சொல்லுகிறார் –

—————————————————————————

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -–

ஒன்பதாம் பாட்டில் –
ஸ்ரீ ஆழ்வாருடைய அருள் உலகினில் மிக்கது -என்கைக்கு அடி என் என்னில் –
என்னுடைய தண்மை பாராதே-சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை பாடி –அத்தை எனக்கு உபகரித்தார் -என்கிறார் –
(வேதம் -பொருள் -பகவத் சேஷத்வம் -உட் பொருள் பாகவத சேஷத்வம் )-
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதி -என்று அவ் விஷயத்தில்
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தத்தை-ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே இவர் அருளிச் செய்கிறார்-

——————-

ஸ்ரீ நஞ்சீயர் –

சகல வேத தாத்பர்யமான பாகவத சேஷத்வத்தை -பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கடிமை-என்கிற-
இரண்டு ஸ்ரீ திருவாய் மொழிகளிலும் அருளிச் செய்து -என் நெஞ்சின் உள்ளே நிறுத்தினான் என்கிறார் –

————————-

ஸ்ரீ நம்பிள்ளை – –

உமக்கு அருளின அருளுக்கு அவதி ஏது என்ன -என்னுடைய தண்மை பாராதே
சகல வேதங்களினுடைய ரஹஸ்யார்த்தத்தை-எனக்கு உபகரித்தான் என்று –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் நம் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே என்று
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தால் போலே இவரும் உபகார ச்ம்ருதியாலே ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே அருளிச் செய்கிறார் –

—————————-

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்- –

கீழே ஸ்ரீ ஆழ்வாருடைய குண கீர்த்தனம் பண்ணும்படி அவர் தமக்கு கிருபை பண்ணும் படியைச் சொல்லி
அதுக்குத் தண்ணீர்த் துரும்பான அநாதி கர்மங்களை ஸ்ரீ ஆழ்வார் தம்முடைய பார்வையாலே பாறு படுத்தியத்தைச் சொல்லி
அப்படியான ஸ்ரீ ஆழ்வாருடைய க்ருபா வைபவத்தை திக்குகள் தோறும் அறிவிக்கக் கடவேன் என்று தம்முடைய ஆதர விசேஷத்தைச் சொல்லி
கிருபா பர்யபாலயத் -என்றும் –
அருளினன் -என்று தொடங்கி -ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் -என்றது முடிவாக
ஸ்ரீ ருஷிகளும் ஸ்ரீ ஆழ்வார் தாமுமாக பகவத் கிருபையை ஆதரித்துப் போரா நிற்க
நீர் ஸ்ரீ ஆழ்வாருடைய கிருபா பிரசித்தியிலே பிரவணர் ஆனபடி என் என்ன
ஸ்ரீ பகவத் கிருபையில் காட்டில் ஸ்ரீ ஆழ்வாருடைய கிருபையே இந்த லோகத்தில் அபிவ்ருத்தம் ஆகையாலே என்றும் சொல்லி நின்றது கீழ் –

இதில் கீழே ஸ்ரீ ஆழ்வாருடைய ஜ்ஞான பிரதானம் ப்ரஸ்துதம் ஆகையாலே அவர் சகல வேதாந்த தாத்பர்யமான அர்த்த விசேஷத்தை
தமக்கு அறிவித்த பிரகாரத்தைச் சொல்லி அதுக்கு ஈடான குணங்களை யுடையராகையாலே பூரணரான ஸ்ரீ ஆழ்வார் விஷயத்தில்
சேஷ பூதன் பிரமமே யன்றோ அவர்க்கு அடிமை செய்கையிலே பிரயோஜனம் என்று உபகார ச்ம்ருதியாலே-
அவருக்கு சேஷ பூதன் என்று பிரேம பூர்வகமாகப் பிறக்குமாதரம் அன்றோ அடிமையில் முடிந்த நிலம் என்கிறார் –
(அன்பு -ஆதரவு -கைங்கர்யம் –மூன்று நிலைகள் –ஆதரவே ப்ரேமம் கைங்கர்யம் என்றுமாம் )

கீழ் நாலாம் பாட்டிலே ஆச்சார்ய விஸ்வாசம் சொன்னார்-
மேல் இரண்டு பாட்டாலே ஆச்சார்ய வைபவமும் அவனுடைய உபகார வைபவமும் சொன்னார்-
இதில் உபகார பிரகார உபபாதனம் பண்ணா நின்று கொண்டு தம்முடைய் க்ருதஜ்ஞதையைச் சொல்லுகிறார்-
ஆசார்யனுக்கு கிருபையே வேஷமாய் சிஷ்யனுக்கு க்ருதஜ்ஞதையே வேஷமாய் இருக்கும் –

————————————————————————————-

பயனன் றாகிலும் பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

(ஆட் புக்க காதல் அடிமைப்பயன் -சொல்லி உடனே பயன் இல்லை பாங்கு இல்லை என்கிறீரே –
அவர் திருத்த திருந்தி உள்ளீர் -பாங்கும் உண்டே -என்னில் தம்மைப் பார்த்தால் இப்படி தின்றும் –
அவர் செய்து அருளினை உபகாரம் அனுசந்தித்த வாறே இப்படி தோற்றும் -)
ஆழ்வார் தமக்கு உபகரித்த உபகாரத்தை அனுசந்தித்தவாறே தாம் இதுக்கு முன் ஆழ்வார் விஷயத்தில் நின்ற நிலை யடங்க
முதலடி இட்டிலராகித் தோற்றுகையாலே –அவர் பண்ணின உபகாரத்தைப் பேசுகிறார் –
ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லையோ என்னில் –
க்ருத்ஸ்நாம் வாப்ருதிவீம் தத்யான்ன தத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே-
பஞ்சாசத் கோடி விச்தீர்ணையான பூமியும் சத்ருசமம் அல்ல என்று இறே சாஸ்திரம் –
(பொன்னுலகு ஆளீரோ புவனம் எல்லாம் ஆளீரோ – )அவன் இவனுக்கு உபகரித்தது சர்வாதிகமாய் இருப்பதொரு மிதுனைத்தை யானால்-
அப்படியே இருப்பதொரு மிதுனத்தை உபகரித்தால் இறே இவன் பிரத்யுபகாரம் பண்ணினான் ஆவது –
ஆகையால் -ஆச்சார்யர் விஷயத்தில் எல்லாம் செய்தாலும் -அவன் பண்ணின
உபகாரத்தைப் பார்த்தால் -ஒன்றும் செய்திலேன் நான் -என்று முகக் குறைவாளனாய் போரும் இத்தனை –

————————-

ஸ்ரீ நஞ்சீயர் –

பயிர்கள் எறி மறியக் கடவது இறே -அப்படியே ஸ்ரீ ஆழ்வார் பண்ணின உபகாரத்தை ஸ்மரிக்கையாலே
தாம் பண்ணின பக்தி-ஒன்றும் இல்லையாய்த் தோற்றி தேவரீர் திருவடிகளிலே இப்போது இறே நான்
ஸ்நேஹிக்கத் தொடங்கினேன் என்கிறார் –

—————————-

ஸ்ரீ நம்பிள்ளை – –

ஸ்ரீ ஆழ்வார் தமக்கு உபகரித்த உபகாரத்தை அனுசந்தித்தவாறே தாம் இதுக்கு முன்பு ஸ்ரீ ஆழ்வார் விஷயத்தில்-
நின்ற நிலை யடங்க முதல் அடி இட்டிலராக தோன்றுகையாலே அவர் பண்ணின உபகாரத்தைப் பேசுகிறார்-
க்ருத்ஸ்நாம் வாப்ருதிவீம் தத்யான்ன தத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே ஆசார்ய விஷயத்தில் எல்லாம் செய்தாலும்-
அவன் பண்ணின உபகாரத்தைப் பார்த்தால் ஒன்றும் செய்யப் பெற்றது இல்லை என்னும் படியாய்த்து இருப்பது –
அவன் இவனுக்கு உபகரித்தது சர்வேஸ்வரனை யானால் இன்னமும் ஒரு சர்வேஸ்வரன் உண்டாகில் இறே
இவனுக்குக் கொடுத்து பிரத்யுபகாரம் பண்ணினான் ஆகலாவது
ஆகையால் என்றும் குறைப்பட்டே போம் அத்தனை –

———————————–

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் – –

கீழ் பிரபந்தத்தில் ஓடின தாத்பர்யம் ஆழ்வாருடைய சர்வ பிரகார வைலஷண்யமும்
(பிராப்யம் பிராபகம் ஞானம் பிரதத்வம் தோஷம் பிரதிபடத்வம் -நான்கும் உண்டே )இப்படி விலஷணரான ஸ்ரீ ஆழ்வார்
தம்-பக்கல் பண்ணின உபகார வைபவமும் இறே –
தம்முடைய தோஷத்துக்கு எதிர்த் தட்டான ஆழ்வார் வைலஷண்யமும்-
தம்முடைய குறைக்கு எதிர்த் தட்டான உபகாரத்வமும்
இவ் விரண்டையும் சொல்லிக் கொண்டு போந்தார் கீழ் –
இப் பாட்டில் அவ்வுபகாரத்துக்கு பிரத்யுபகாரம் தேடிக் காணாமையாலே தெகுடுகிறார்-
(தடுமாறுகிறார் -எதுவும் ஒன்றும் இல்லை செய்வது அங்கும் இங்கும் -என்கிறபடி முமுஷு திசையிலும் முக்தி திசையிலும் )
வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் –
யோ மா ததாதி ச இ தேவ மாவா -என்று-முமுஷு தசையோடு முக்த தசையோடு வாசியற உபகார ஸ்ம்ருதி நடக்குமது போக்கி
பிரத்யுபகாரம் பண்ணித் தலைக் கட்டப் போகாது இறே-
பரத்வ உபகார நிரபேஷத்வம் ஆசார்ய லஷணமாய் பிரத்யுபகார சாபேஷத்வம் சிஷ்ய லஷணம் ஆகையாலே-
அதுக்கு வழி தேடிக் காணாமையாலே அலமருகிறார்-
உபகாரம் அதுக்கு பிரத்யுபகாரம் தேடுகையிலே மூட்டும் -உபகார கௌரவம் -பிரத்யுபகாரம் இல்லாதபடி பண்ணும் –
அதுக்கு சத்ருச பிரத்யுபகாரமாக வேணும் –
அது உண்டாகில் இறே இவன் பண்ணலாவது-இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
இவன் திருத்தித் தருகையாலே ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு ஆத்ம சமப்பர்ணம் பண்ணலாம் –
இவன் தானே திருத்தினவற்றை இவனுக்குச் கொடுக்கை சத்ருசம் அன்றே -(
ஸ்ரீ ஆச்சார்யர் திருத்தி ஸ்ரீ பகவான் இடம் கொடுக்கையாலே ஆத்மா ஆச்சார்யர் சொத்து ஆகி விட்டதே –
அதனாலே அத்தை ஸ்ரீ பகவானுக்கு சமர்ப்பிக்கலாம் -ஸ்ரீ ஆச்சார்யருக்கு முடியாதே என்றபடி )

——————————————————————————————-

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை – –
நிகமத்தில் இப் ப்ரபந்தத்தையே தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு
வாசபூமி ஸ்ரீ பரம பதம் -என்கிறார்-

————————

ஸ்ரீ நஞ்சீயர் –

நிகமத்தில் இவர் அருளிச் செய்த பிரபந்தத்தைக் கற்றார்க்கு ஸ்ரீ ஆழ்வார் ஆணை பரிமாறும்
ஸ்ரீ வைகுண்டமே தேசம் என்கிறார்-

—————————

ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –

நிகமத்தில் இவர் பிரபந்தத்தைத் தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு வாஸ பூபி ஸ்ரீ பரம பதம் என்கிறார் –

—————————–

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் – –

நிகமத்தில்- இப்பாட்டில் இப்பிரபந்தம் கற்றார்க்கு வஸ்தவ்ய பூமி ஸ்ரீ பரம பதம் என்கிறார்
1-ஸ்ரீ ஆழ்வாருடைய போக்யதையும்-அவர் தமக்கு ஸ்வாமி என்னும் இடத்தையும்
2–தமக்கு கால ஷேப விஷயம் அவருடைய ப்ரபந்தம் என்னும் இடத்தையும்
3-ஸ்ரீ ஆழ்வாரோட்டை சம்பந்தம் அடியாக ஈஸ்வரன் மேல் விழுந்து அனுபவித்த படியையும்
4-தம்முடைய தோஷம் பாராமல் ஸ்ரீ ஆழ்வார் விஷயீ கரித்த படியையும்
5-தோஷம் தானே அவருடைய தேச பிரவேச மாத்ரத்திலே தம்மை விட்டுக் கழன்ற படியையும்
6-பின்பு அத்தோஷம் மேலிடாதபடி ஸ்ரீ ஆழ்வார் குண கீர்த்தனமே தமக்குக் கால யாத்ரையாம் படி அவர் தம்மைத் திருத்தின படியும்
7-அவருடைய க்ருபா வைபவத்தை லோகம் அடங்கலும் தாம் பரப்ப வேண்டும்படி தமக்குப் பிறந்த ஆதரத்தையும்
8-ஸ்ரீ பகவத் கிருபையில் காட்டில் ஆழ்வாருடைய கிருபை லோகத்திலே அதிசயித்த படியையும்
9-அக் கிருபை அடியாக அவர் உபகரித்த உபகாரமும்
10-அவ்வுபகார பரம்பரைகளுக்கு பிரத்யுபகாரம் தேடி அவருடைய பூர்த்தியாலே பிரத்யுபகாரத்துக்கு அவகாசம் காணாமல்-
தாம் அலமருகிற படியையும் இறே கீழ்ச் சொல்லி நின்றது –

இவ் வர்த்தங்களுக்கு வாசக சப்தம் இட்டுச் சொன்ன இப் பிரபந்தத்திலே ஆதரம் உள்ளார்க்கு நித்ய ஸூரிகள்-
ஸ்ரீ பரம பதத்திலே ஒரு பிராப்தி பண்ணிக் கொடுப்பார்கள் என்கிறார்-
இவர்களுக்கு ஸ்ரீ திரு நகரியே ப்ராப்ய ஸ்தலமாய் இருந்ததே யாகிலும் அவர்கள் ஆதரத்துக்காக அங்கே போய்-
அங்கும் ஸ்ரீ ஆழ்வாரை அனுபவிக்கப் பெறுவார்கள் –
கவி பாட்டுண்ட விஷயத்தையும்–
கவி பாடின தம்மையும்–கவியையும் –
கவியை ஏதேனும் ஒரு வழியால் கற்றவர்களுக்குப் பலமும் சொல்லுகிறது –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தம்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

நீராட்டம்–அருளிச் செயல்களில் -பிரயோகங்கள்

July 29, 2018

திருப்பாவையில் – நீராட்டம்–6-பிரயோகங்கள்

மார்கழி —நீராடப் போதுவீர் போதுமினோ
ஓங்கி –நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
ஆழி –நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
புள்ளின் வாய் –குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
முப்பத்து மூவர் –இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்
மாலே –மார்கழி நீராடுவான்-

நாச்சியார் திரு மொழி –

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம் –3–1 –

பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்து ஆடும் சுனையில் அரக்க நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய் —3-4-

அஞ்ச யுரப்பாள் யசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -3-9-

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் –6–10-

செங்கண் மால் தன்னுடைய வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம் புரியே – -7–6-

——————–
பெரியாழ்வார்

அஞ்சன வண்ணனோடு ஆடலாட யுறுதியேல்-மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா – 1–4–2-

ஆடுக செங்கீரை ஆடுக ஆடுகவே -1–5 –

நீராட்டு பதிகம் -2-

பேடை மயில் சாயல் பிணை மணாளா நீராட்டமைத்து வைத்தேன் —3-3-3-

அரும் தவ முனிவர் அவபிரதம் அங்கு குடைந்தாட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடிநகரே –4-7-6-

பொங்கு ஒலி கங்கைக் கறை மலி கண்டத்து உரை புருடோத்தமன் அடி மேல்
வெம் கலி நலியா வில்லி புத்தூர்க் கோன் விட்டு சித்தன் விருப்புற்று தங்கி அவன் பால் செய் தமிழ் மாலை
தங்கிய நாவுடையார்க்கு கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே –4-7-11-

—————————–

பெருமாள் திருமொழி

ஆடிப்பாடி அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் அடிப்பொடி யாட நாம் பெறில் கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே -2-2-

கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கரு மணியே -8-3-

————————————————–

பெரிய திரு மொழி –

ஆயர் மட மக்களை பங்கய நீர் குடைந்தாடுகின்றார்கள் பின்னே சென்று ஒளித்திருந்து அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு -10-7–11-

——————————

திரு நெடும் தாண்டகம்

அணியரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் என் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன் -12-

அணியரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் பெற்றேன் வாய்ச சொல் இறையும் பேசக் கேளாள் -19-

———————————————————-

திருவாய்மொழி

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன் நேர்தல்யாயிரத்து ஓர்தல் இவையே -1-8-11-

வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் களித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே-2-6-4 –

தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே ஒருநாள் காண வாராயே -8-5-1-

அவன் கையதே எனதாருயிர் அன்றில் பேடைகாள் எவம் சொல்லி நீர் குடைந்தாடுதிர் புடை சூழவே -9-5-3-

பெயர்கள் ஆயிரமுடைய வல்லரக்கர் புக்கழுந்த தயரதன் பெற்ற மரகத மணித்தடத்தினையே -10-1-8-

—————————————————

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா –மூன்றாம் திருவந்தாதி -76-

மால் தான் புகுந்த மடநெஞ்சம் மற்றதுவும் பேறாகக் கொள்வேனோ பேதைகாள்
நீராடி தான் காண மாட்டாத தாரகல சேவடியை யான் காண வல்லேற்கிது –நான்முகன் -27-

சூட்டு நன்மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீர் ஆட்டி அந்தூபம் தாரா நிற்கவே –திருவிருத்தம் –21 —

அழைத்துப் புலம்பி முலை மேல் நின்றும் ஆறுகளாய் மழைகே கண்ணநீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே -52-

ஓ ஓ உலகின் இயல்வே ஈன்றோள் இருக்க மணை நீராட்டி –திருவாசிரியம் -6-

———————————————-

பெருமாள் வீர கல்யாண குணத்தில் ஆழ்ந்தார் திருவடி –பாவோ நான்யத்ர கச்சதி வீர –
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்மின் -நம்மாழ்வார் -ஸுலப்ய ஸுசீல்ய குணங்களில் ஆழ்ந்தார் நம்மாழ்வார் –
குணவான் –என்றாலே சீல குணத்தை சொல்லுமே –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளிச் செயல்களில் -கரணத்ரய அனுபவம்-

July 26, 2018

திருப்பல்லாண்டு –

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் -வந்து –கூடும் மனம் உடையீர்கள்–வந்து பல்லாண்டு கூறுமினோ -4-

————————————

பெரியாழ்வார் திருமொழி –

காறை பூணும் –ஆயிரம் பேர்த்தேவன் திறம் பிதற்றும் —
மாறில் மா மணி வண்ணன் மேல் இவள் மால் உறுகின்றாளே –3-7-8-

குருந்தம் ஓன்று ஓசித்தானோடும் சென்று கூடியாடி விழாச் செய்து –
திருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்
கரும் தட முகில் வண்ணனைக் கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள் -4-4-7-

ஆசை வாய்ச சென்ற சிந்தையராகி –அன்னை யத்தன் ஏன் புத்திரர் –என்று மயங்கி வாய் திறவாதே —
கேசவா புருடோத்தமா வென்றும் –பேசுவார் எய்தும் பெருமை -4-5-1-

மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு –உய்யலும் ஆமே -4-5-3-

சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச் செய்த மாலை இவை பத்தும் வல்லார்
சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே -4-5-10-

————————————————————————————–

திருப்பாவை –

தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -5-

வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து
அரி என்ற பேர் அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் –6-

நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் -25-

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைத் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் —
உன் தன்னோடு உற்றோமே யாவோம்
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் -29-

——————————————

நாச்சியார் திருமொழி
தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூ மலர் தூய்த்து தொழுது ஏத்துகின்றேன் –
-பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெற -1-9-

——————————————————————————————–

பெருமாள் திருமொழி –

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற -1-3-

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப் புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி -1-9-

திருமாது வாழ் வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்டம் மேவி அலந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -2-1-

நிரை மேய்த்ததும் இவையே நினைந்து ஆடிப்பாடி அரங்கவோ என்று அழைக்கும் தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் -2-2-

என் அரங்கனுக்கு அடியார்களாய் நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என்நெஞ்சமே -2-4-

மாலை உற்று எழுந்து ஆடிப் பாடித் திரிந்து அரங்கன் எம்மானுக்கே மாலை உற்று இடும் தொண்டர் வாழ்வுக்கு
மாலை உற்றது என் நெஞ்சமே -2-8-

மொய்த்துக் கண் பணி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடிப்பாடி இறைஞ்சி
என் அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையோர் முற்றும் பித்தரே -2-9-

——————————————————————————————-

திருச் சந்த விருத்தம் –

சோர்வில்லாத காதலால் தொடக்கறா மனத்தராய் நீர் அரவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லார் வானம் ஆளவே –78-

———————————————————————————–

திருமாலை
போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன் -தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே –26-

—————————————————————————-

பெரிய திருமொழி –
சிக்கெனைத் திருவருள் பெற்றேன் உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எலாம் கண்ண நீர் சோர
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா வென்னும் நாமம் -1-1-5-

ஓதிலும் உன் பேர் அன்றி மற்றோதாள் -உருகும் நின் திருவுரு நினைந்து காதன்மை பெரிது கையறவுடையள்
-கயல் நெடும் கண் துயில் மறந்தாள்–என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே –2-7-5-

ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை -2-10-4-

நீடு பன்மலர் மாலையிட்டு -நின் இணை அடி தொழுது ஏத்தும் -என் மனம் –3-5-5-

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும் புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் -3-5-6-

ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின்னடைந்தேற்கு -3-5-9-

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர் பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாதலில் –9-3-9-

—————————————————————————————

திருவாய் மொழி –

உள்ளம் உரை செயல் -உள்ள இம் மூன்றையும் -இறை உள்ளில் ஒடுங்கே-1-2-8-

உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே –1-3-6-

ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து நன்று என நலம் செய்வது -1-3-7-

எந்தாய் என்பன் நினைந்து நைந்தே -1-5-1-

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் -1-5-2-

கள்வா வெம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய இறைவன் என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்த்தி கழல் பணிந்து ஏத்துவரே -2-2-10-

குழாங்கள் ஆயிரத்துள் இவை பத்துமுடன் பாடி குழாங்களாய் அடியீருடன் கூடி நின்று ஆடுமினே -2-3-11-

ஆடியாடி அகம் கரைந்து இசை பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி
எங்கும் நாடி நாடி நரசிங்கா வென்று வாடி வாடும் இவ்வாணுதலே -2-4-1-

எம்பிரானைப் பொன் மலையை நா மருவி நன்கெத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட -2-6-3-

நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் களித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே -2-6-4-

உன்னைத் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை பாடி யாடி
என் முன்னைத் தீ வினைகள் முழு வேர் அரிந்தனன் யான் -2-6-6-

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினான் காமனைப் பயந்தாய் என்று என்று
உன் கழல் பாடியே பணிந்து தூ மனத்தனனாய்ப் பிறவித் துழதி நீங்க
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

சிரீஇதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப் பகல்வாய் வெரீஇ
ஆழமானது கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீஇயதீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே -2-7-9-

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம் மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராய் -2-9-6-

கண்ணன் எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் சொல்லீர் -3-5-1-

வார் புனல் அம் தண் அருவி வட திருவேங்கடத்து எந்தை பேர் பல சொல்லிப் பிதற்றி பித்தர் என்றே
பிறர் கூற ஊர் பல புக்கும் புகாதும் உலகர் சிரிக்க நின்றாடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே -3-5-8-

தேவபிரானை ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே -3-5-10-

கறை யணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த வம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டிலனே -3-10-2-

திருக்குருகூர் அதனை பாடி யாடிப் பரவிச் சென்மின்கள் பல்லுலகீர் பரந்தே-4-10-2-

மாதவன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடிப் பரந்து திரிகின்றனவே -5-2-2-

இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே -5-2-4-

நேமிப்பிரான் தமர் போந்தார் நன்று இசை பாடியும் துள்ளி யாடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர் சிந்தையைச் செந்நிறுத்தியே–5-2-6-

திரு வண் வண்டூர் புணர்த்த பூந்தண் துழாய் முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே -6-1-5-

புகர்கொள் சோதிப்பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் நுகர
வைகல் வைகப் பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே -6-4-3-

தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரைத் தடம் கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமிறுமே -6-5-1-

தொலைவில்லி மங்கலம் கரும் தடம் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்து இருந்து அரவிந்த லோசனை என்று என்றே நைந்து இரங்குமே -6-5-8-

பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்
என்ன மாயம் கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே -6-5-10-

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் சடகோபன் –6-6-11-

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே
கண்கள் நீர்கள் மல்கி மண்ணினுளவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ணம் எண்ணிலமான் புகுமோர் திருக்கோளூரே– 6-7-1-

என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்குமது நிற்க -7-1-10-

சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திருவாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே –7-10-10-

தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே -7-10-11-

பணங்கள் ஆயிரமுடைய பைந்நாகப் பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானு நீ தானே -8-1-8-

வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே — 9-5-4-

நினைதொறும் சொல்லும்தோறும் நெஞ்சு இடிந்து உகும் வினைகொள் சீர் பாடிலும் வேம் எனதாருயிர்
சுனை பூஞ்சோலைத் தென்காட்கரை என்னப்பா நினைக்கிலென் நாண் உனக்கு ஆட் செய்யும் நீர்மையே –9-6-2-

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற தகையான் சரணம் தமர்கட்கோர் பற்றே -10-4-10-

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -10-5-5-

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
அரு மா மாயத்து எனதுயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என்னூழி முதல்வன் ஒருவனே -10-7-8-

——————————————

முதல் திருவந்தாதி –

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால்
நற்றாமரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று –20 –

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி யுரலோடு அறப்பிணித்த நான்று
குரல் ஓவாது ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே ஓங்கோத வண்ணா உரை -24-

நகரமருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல் பகர மறை பயந்த பண்பன்
பெயரினையே புத்தியால் சிந்தியாது ஓதி யுரு வெ ண்ணும் அந்தியாலாம் பயன் அங்கு என் –33-

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும் புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி
திசை திசையின் வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த வூர் -37-

மனமாசு தீரும் அருவினையும் சாரா தனமாய் தானே கை கூடும்
புனமேய பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி தாம் தொழா நிற்பார் தமர் –43-

அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி உய நின் திருவடியே சேர்வான்
நயநின்ற நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும் சொல்மாலை கற்றேன் தொழுது -57-

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி எழுதும் ஏழு வாழி நெஞ்சே
பழுதின்றி மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான் அந்தரம் ஒன்றில்லை யடை -58-

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம் தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த
படமுடைய பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும் கொய்ந்நாகப் பூம்போது கொண்டு -78-

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும் பாடிலும் நின் புகழே பாடுவன்
சூடிலும் பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு என்னாகில் என்னே எனக்கு -88-

நா வாயிலுண்டே நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே
மூவாத மாக் கதிக் கண் செல்லும் வகை யுண்டே இன்னொருவர் தீக்கதிக் கண் செல்லும் திறம் -95-

——————————————————

இரண்டாம் திருவந்தாதி –

நகர் இழைத்து நித்திலத்து நாண் மலர் கொண்டு அங்கே திகழு மணி வயிரம் சேர்த்து
நிகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன் பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி -4-

அறிந்து ஐந்தும் உள்ளடக்கி ஆய்மலர் கொண்டு ஆர்வம் செறிந்த மனத்தராய்ச் செவ்வே
அறிந்தவன் தன் பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே காரோத வண்ணன் கழல் -6-

பழிபாவம் கையகற்றிப் பல் காலும் நின்னை வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ
வழுவின்றி நாரணன் தன் நாமங்கள் நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும் காரணங்கள் தாமுடையார் தாம் -20-

தா முளரே தம்முள்ளம் உளதே தாமரையின் பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே
வாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே அரு நரகம் சேர்வது அரிது -21-

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் புகையால் நறு மலாரால் முன்னே
மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப்பட்டேனுக்கு என் பாக்கியத்தால் இனி -34-

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே தமக்கு என்றும் சார்வம் அறிந்து
நமக்கு என்றும் மாதவன் என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் ஒத்து -38-

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன்
அறம் தாங்கும் மாதவன் என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் உள்ளு -44-

திருமங்கை நின்று அருளும் தெய்வம் நா வாழ்த்தும் கருமம் கடைப்பிடிமின் கண்டீர்
உரிமையால் ஏத்தினோம் பாதம் இருந்த தடக்கை எந்தை பேர் நால் திசையும் கேட்டீரே நாம் -57-

பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்
துணிந்தேன் புரிந்து ஏத்தி உன்னைப் புகலிடம் பார்த்து அங்கே இருந்து ஏத்தி வாழும் இது -65-

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு வந்திவாய் வாய்ந்த மலர் தூவி வைகலும்
ஏய்ந்த பிறைக் கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான் இறைக்கு ஆட்படத் துணிந்த யான் -73-

அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும் அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும்
அமுதன்ன சொல்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட நன்மாலை ஏத்தி நவின்று -85-

——————————————-

மூன்றாம் திருவந்தாதி –

நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே வா
மருவி மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய் கண்ணனையே காண்க நம் கண் -8-

அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி
மறை என்றும் நன்கு ஓதி நன்கு உணர்வார் காண்பரே நாடோறும் பைங்கோத வண்ணன் படி -12-

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான்
இலாத சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூய்க் கை தொழுது முந்தையராய் நிற்பார்க்கு முன் -19-

வடிவார் முடி கோட்டி வானவர்கள் நாளும் கடியார் மலர் தூவிக் காணும்
படியானை செம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே மெய்ம்மையே காண விரும்பு -22-

காண் காண் என விரும்பும் கண்கள் -கதிர் இலகு பூண்தார் அகலத்தான் பொன்மேனி
பாண் கண் தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம் பொற் கழல் பாடி யாம் தொழுதும் கை -35-

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம் தாழ்த்தி வணங்கத் தழும்பாமே
கேழ்த்த அடித்தாமரை மலர் மேல் மங்கை மணாளன் அடித்தாமரையாமலர் -96-

———————————————————–

நான்முகன் திருவந்தாதி –

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு -9-

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால்
சூழ்த்த துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை வழா வண் கை கூப்பி மதித்து -11-

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம் மலர் ஏற விட்டு இறைஞ்சி வாழ்த்த
வலராகில் மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் நீற் கண்டன் கண்ட நிலை -15-

தரித்து இருந்தேனாகவே தாரா கணப்போர் விரித்துரைத்த வெந்நாகத்து உன்னை
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது -63-

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத் தீக்கொண்ட செஞ்சடையான் சென்று
என்றும் பூக்கொண்டு வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச் செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-

—————————————————————-

திருவாசிரியம்

உலகு படைத்து உண்ட வெந்தை அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கு அவாவாருயிருகி யுக்க
நேரிய காதல் அன்பிலின்பீன் தேறல் அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருட்க்கு அசைவோர் அசைக-2-

————————

பெரிய திருவந்தாதி –

வாழ்த்தி அவன் அடியைப் பூப் புனைந்து நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத
பாழ்த்த விதி எங்குற்றாய் என்றவனை ஏத்தாது என் நெஞ்சமே தங்கத்தானாமேலும் தங்கி -84-

——————————————————

இராமானுச நூற்றந்தாதி –

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும்தகையே !–71-

நையும் மனம் உன் குணங்களை யுன்னி என் நா இருந்து எம் ஐயன் ராமானுசன் என்று அழைக்கும்
அருவினையேன் கையும் தொழும் கண் கருத்திடும் காணக்
கடல் புடை சூழ் வையம் இதினில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே -102-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நம்மாழ்வார் திரு அத்யயன உத்சவ திருமஞ்சனக் கட்டியங்கள் –

May 26, 2018

ஸ்ரீ மதுரகவி ப்ரப்ருதி சாத்விக சஜ்ஜனங்கள் ஒரு மகா மேருவாக விண்ணப்பம் செய்யா நின்றார்கள் –
ஸ்ரீ :
ஸ்ரீ மதே சடகோபாய நம:

சத்த்வாஸ்ரயம் ஷட்பத பாவ யுக்தம் ஸூ ஹம்ச சேவ்யம் ஸூ மனஸ் சமேதம்
ஸூ ரேஸ் வராஹ்லாத கரம் விபும் த்வாம் வதந்தி சந்த சடகோப மேரும்-

நாயந்தே ! நாயந்தே !
ஜாயமானம் ஹி புருஷம் யம் பச்யேத் மது ஸூதன சாத்விகஸ் சாது விஜ்ஞேய ச வை மோஷார்த்த சிந்தக -என்னும்படி
உத்பத்தி காலத்திலே தன்னுடைய விசேஷ கடாஷத்தாலே சம்சாரி சேதனரை நிரஸ்த ரஜஸ் தமஸ்கரராயும்
ப்ரவ்ருத்த சத்வ குணராம்படியாகவும் பண்ண வல்ல சர்வேஸ்வரனுடைய நிரந்தர கடாஷ பாத்ர பூதராய்
உபாய உபேயங்கள் இரண்டும் ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுடைய திருவடிகளும் –
அந்தத் திருவடிகளில் பண்ணும் கைங்கர்ய முகமாகவே நிஷ்கர்ஷித்து இருக்குமவராய்
ஜிதேந்த்ரியராலே சேவிக்கப் படுமவராய் –
சம்சார சேதனரை உஜ்ஜீவிப்பிக்கையில் நோக்கமான திரு உள்ளத்தை உடையவராய்
உக்தி விருத்திகளாலே சர்வேஸ்வரனை உகப்பிக்கும் ஸ்வபாவராய்
அபரிச்சேத்ய மகிமரான தேவரை சத்துக்களானவர்கள் ஸ்வ பாவ சாம்யத்தாலே மகா மேருவாக விண்ணப்பம் செய்யா நின்றார்கள் –
அது இங்கனே இரா நின்றது -எங்கனே என்னில் –

சத்த்வாஸ்ரயம் –
அந்த மகா மேருவானது -பஞ்சாசத்கோடி விச்தீர்ணமாய் பூமிக்கு ஒரு ஆணி அடித்தால் போலே
நிற்கைக்கு ஈடான பலத்துக்கு ஆஸ்ரயமாய் இருக்கும் –
தேவர் ரஜஸ் தமஸ்ஸூக்கள் கலசாதபடி சத்வ குணம் ஒன்றுக்குமே ஆஸ்ரயமாய் எழுந்து அருளி இருப்பீர்-

ஷட் பத பாவ யுக்தம்
அந்த மகா மேருவானது நாநாவித புஷ்ப ரஸா ஸ்வாத மத்த ப்ருங்கா வளியாலே சேஷ்டாயுக்தமாய் இருக்கும்
தேவரீர் ஆறு விதமான சரணாகதி விஷயமான திரு உள்ளத்தை உடையராய் எழுந்து அருளி இருப்பீர்-

ஸூ ஹம்ச சேவ்யம் –
மகா மேருவானது மானசாதி சரோவர்த்திகளான அழகிய அன்னங்களாலே சேவிக்கப் படுமதாய் இருக்கும்
தேவர் நாத யாமுன யதிவராதிகளான பரம ஹம்சர்களால் சேவ்யமானராய் எழுந்து அருளி இருப்பீர்-

ஸூ மனஸ் சமேதம்
அந்த மகா மேருவானது உத்யான தடாக ஜலங்களிலே இருக்கிற நாநாவித புஷ்பங்கள் உடன் கூடி இருக்கும்
தேவர் சர்வேஸ்வரன் கை விட்ட சம்சாரிகளையும் திருத்துகையிலே தத்பரர் ஆகையாலே
அழகிய திரு உள்ளத்தை உடையராய் எழுந்து அருளி இருப்பீர்-

ஸூ ரேஸ் வராஹ்லாத கரம் –
அந்த மேரு தேவர்களுக்கு நிர்வாஹகரான ப்ரஹ்மாதிகளுக்கு ஸ்வ வை லஷண்யத்தாலே ஆஹ்லாத கரமாய் இருக்கும்
தேவர் -பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரைக் கண்ணன் -என்றபடி
நிரந்தர கடாஷம் பண்ணி கொண்டு இருக்கும் படி அயர்வறும் அமரர்கள் அதிபதிக்கும் ஆஹ்லாத காரராய் எழுந்து அருளி இருப்பீர்-

விபும்
அந்த மேருவானது பூமிக்கு மேலே 84000 யோஜனை உயர்த்தியை உடையதாய் பர்வதாந்தரங்களை காட்டிலும் பெரியதாய் இருக்கும்
தேவர் அடியார் நிலை நின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே -என்னும்படி
உபய விபூதியிலும் அடங்காத பெருமையை உடையராய் எழுந்து அருளி இருப்பீர் –

ஆக இப்படிகளால் தேவரீரை- வதந்தி சந்த சடகோப மேரும்-
ஸ்ரீ மதுரகவி ப்ரப்ருதி சாத்விக சஜ்ஜனங்கள் ஒரு மகா மேருவாக விண்ணப்பம் செய்யா நின்றார்கள் –

—————————————

திரு அத்யயன உத்சவம்-இரண்டாம் நாள் திரு மஞ்சனக் கட்டியம் –
திருமஞ்சனம் சேவிப்பாரை எல்லாம் சிந்தயந்தி ஆக்கி அருளுகிறீர் –

காதும் பூர்ணஸ்தி தேந்தும் மதுரகவிமுகை ப்ருத்ய வரக்கை ஸ் ச ஸார்த்தம்
ஸ்நாதும் வேத்யாம் நிஷண்ணஸ் தத் அனுகுண மால்யாத் யம்ப ரஸ்த்வம் சடாரே
தாதும் முக்திம் ஸ்வ காந்த யேச்ச ஸி கிமிஹ ந்ருணாம் சாஸ்திர மார்க்காதிகா நாம்
ஸ்வ தந்தர்யாதேவ கிருஷ்ண பிரதம மிஹ யதா சிந்தயந்த்யா ஸ்வரூபம்-

நாயந்தே ! நாயந்தே !
அந்தம் தமஸ் திமிர நிர்மித மேவ யத்ச்யாத் தத் சாரசாதித ஸ்வ தந்தயதி வ்ருத்தவார்த்தம் -என்கிறபடியே
திமிர சார நிர்மிதம் என்னும் படி இருண்ட சுருண்ட திருக் குழல் கற்றையும்
அஷ்டமி சந்திர நிபமான திரு நெற்றியும்
அந்த சந்திர மத்யத்திலே ஒரு அம்ருத தாரை என்னலாம்படி திரு நெற்றியிலே அழகு பெறச் சாத்தின திரு நாமமும்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலையையும் தன் அழகாலே வெல்லும் திருப் புருவமும்
அநவதிக தய அனுராக வாத்சல்ய ஸூசகங்களாய் அப் பொழுதைத் தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களும்
கல்ப லதா கல்பமான திரு மூக்கும்
பிம்ப வித்ரும தம்ப ஹாரியான திரு வதரமும்
ஸூத்த நிஸ்த லாலி போலே இருக்கிற திரு முத்து நிறையும்
கர்ணிகா விலசிதமான கர்ண பாசமும்
திருஷ்டி சித்த அபஹாரிகளான சுபுக கபோலங்களும்
க்ரமுக தருண க்ரீவாகம்பு பிரதிமமான திருக் கழுத்தும்
கனக கிரியைக் கடைந்து எடுத்தால் போலேயாய் ப்ரணத ரஷண தீஷிதமான திருத் தோள்களும்
ஜ்ஞான ப்ரதன் என்னும் இடத்தை கோள் சொல்லுகிற ஜ்ஞானமுத்ரா சஹிதமான கர காந்தியும்
அகில ஜன மநோ ஹரமாய் -அநேக பூஷண பூஷிதமாய் வகுள தாம விராஜிதமான வஷஸ் ஸ்தலமும்
அஷய பாப ஹாரியான குஷி பிரதேசமும்
சௌந்தர்ய அம்ருத நீர பூர பரிவாஹவர்த்த கர்த்தாயிதமான திரு நாபியும்
திருவரை பூத்தால் போலே இருக்கிற திவ்ய அம்பர சோபையும்
ரம்பா ஸ்தம்ப சஹோதரமான திருத் தொடைகளும்
க்குத் மத்ககுத் நிபமான திரு முழம் தாள்களும்
பங்கஜ நாள துல்யைகளான ஜங்கைகளும்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனச்ய -என்கிறபடியே-

அசரண்ய சரணமுமாய்
தத் ஷண உன்மீலித சரசிஜா ஜைத்ரமான சரண யுகளுமுமாய்
ஆக
இப்படி சர்வ அவயவ ஸூந்தரமான திவ்ய விக்ரஹத்தை தேவர் இப்போது
திரு அத்யயன உத்சவ தீஷிதராய் ஸ்வ சிஷ்ய தாரரான மதுரகவி ப்ரப்ருதி சஜ்ஜனங்களோடு
பொலிந்து நின்ற பிரானை பாடி அருளுவதாக சங்கல்ப்பித்து
அலங்க்ருதகாத்ரராய்ச் சென்று சேவிக்க வேண்டுகையாலே
தத் அங்கமாக திரு மஞ்சனம் செய்ய வேணும் என்று மஞ்சன வேதிகா மத்யத்திலே
ஜ்ஞானமுத்ரா சஹிதராய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருப்பு இங்கனே இரா நின்றது
எங்கனே என்னில்-

சிந்தயந்தீ ஜகத் ஸூ திம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம்
நிருச்ச் வாசதயா முக்திம் கதான்யா கோப கன்னிகா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13
அஜ்ஞ்ஞாத பகவத் விஷயையான சிந்தயந்திக்கு ஸ்வ விக்ரஹ ஸ்மரண ஹேதுவாக
தன்னுடைய நிரந்குச ஸ்வாதந்த்ர்யத்தாலே முக்தியைக் கொடுத்த கிருஷ்ணனைப் போலே
இஹ லோகத்தில் விஷய பிரவணராய் ரூப ஆபாசம் கண்டு விஷயங்களிலே மேல் விழுந்து திரிகிற
சம்சாரி சேதனருக்கு தேவர் வடிவு அழகாலே விஷயாந்தர வைமுக்ய பூர்வகமாக
ஸ்வ விஷய ருசியை விளைவித்து
நம்பினேன் மடவாரையும் முன்னெலாம் செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே
என்று வாய் புலம்பும்படி பண்ணி
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்று அறியேன் -என்று
அவிதான்ய தைவிதமாய்க் கொண்டு தேவர் திருவடிகளைப் பற்றி நின்று
அடிமை செய்கையாகிற கைங்கர்ய ஆனந்தத்தையும் கொடுத்து அருளுவதாக திரு உள்ளம் பற்றி
ததர்த்தமாக திரு மஞ்சனம் செய்ய எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது

————————————————————–

திரு அத்யயன உத்சவம்-இரண்டாம் நாள் திரு மஞ்சனக் கட்டியம் –

பிரதஷிண நமஸ் க்ரியா ப்ரப்ருதிபிர்வ நாதரே புரா
பஜ த்வமிதி சோதிதம் பகவதோ குண உபாசனம்
யதத்யய ந்லஷ்யதே பிரகடயன் ஸ்வ வ்ருத்யாதி நா
சமஸ்த ஜன கோசரம் சடாரி போதய சம்ஸ் நாசிபோ —

நாயந்தே ! நாயந்தே !
தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜாயதே
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே -நாராயணாத் ருத்ரோ ஜாயதே
ப்ரஜ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ-என்கிறபடியே
இருவர் அவர் முதலான அரவணை மேல் திரு மாலாலே மயர்வற மதி நலம் அருளப் பெற்றுடையவராய்
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்தோ லஷ்மணோ லஷ்மி வர்த்தன -என்றும்
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து என்றும் சொல்லுகிறபடியே
பேதைப் பருவத்திலே மூதுவராம் விண்ணாட்டவருடைய நித்ய வ்ருத்தியிலே அபி நிவிஷ்டராய்
ந ச சீதா த்வயா ஹீநா நசா ஹம்பி ராகவா முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்த்ருதௌ-என்றும்
நின்னலால் இலேன் காண்-என்றும் சொல்லுகிறபடி
மா மலராள் கோனை விடில் நீரில் குதித்து எழுந்த மீன் எனவே ஆக்கை முடியும்படியான தசையை யுடையவராய்
ந தேவ லோகா க்ரமணம் நாமரத்வ மஹம் வ்ருணே ஐஸ்வர்யம் வாபிலோகா நாம் காமயே ந த்வயா விநா-என்கிறபடியே-

கைம்மா துன்பம் கடிந்த அம்மானுடைய செம்மா பாதபற்பு தலை சேருகையிலே த்வரையாலே
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -என்றும்
தருணீ க்ருதா நுத்தம புத்தி முக்தகராய் பெரு நிலம் கடந்த நல்லடிப்போது அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் என்று
திரு வுலகு அளந்த திருவடிகளிலே த்ரிவித கரணங்களாலும் உண்டான
விவித கைங்கர்யங்களே சர்வ வித புருஷார்த்தம் என்று அறுதி இட்டு அருளி

தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்று
அந்த புருஷார்த்தத்தை நிஷ் பிரயோஜனம் ஆக்குமதான ஸ்வ பிரயோஜனத்தைக் கழித்து
சபிரயோஜனம் ஆக்கி அருளின தேவரீர்
இப்போது திரு அத்யயனம் என்கிற வ்யாஜத்தாலே கிண்ணகத்துக்கு படல் இட்டால் போலே
க்ரீடாதி நூபுர அந்தமான மெய்யமர் பல் கலன்களையும் நன்கு அணிந்து
த்வஜ சத்ர சாமர பேரீ கீதா காஹள சங்காஸீஸ் ஸ்துதி கோலாஹலத்துடனே புறப்பட்டு அருளி
தணியா வெந்நோய் உலகில் தவிர்த்து ஆளுமாளார் என்கிறவனுடைய தனிமையைத் தீர்க்கைக்கு ஆள்பார்த்து உழி தந்து
மீண்டு எழுந்து அருளி திருமேனி இன்ன வண்ணம் என்று காட்டீர் என்று இருப்பார்க்கு
காட்சி கொடுக்கைக்காக

சர்வ பூஷண பூஷார்ஹா -என்கிறபடியே
ஆபரண ஸ்யாபரணமான திருமேனியில் அழகு வெள்ளத்தை முழு மதகாகத் திறந்து
செழு மா மணிகள் சேரும் திரு மா மணி மண்டபமான இத் திரு வோலகத்திலே ஒரு நாயக ரத்னம் அங்குரித்தால் போலே
மஞ்சன வேதிகா மத்யத்திலே ஜ்ஞான முத்ரா சஹிதமாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருக்கும் இருப்பு இங்கனே இரா நின்றது
அது எங்கனே என்னில்-

தஸ்மின் யதந்தஸ் ததுபாசிதவ்யம் தஸ்மின் யதந்தஸ் ததன்வேஷ்டவ்யம் -என்று சாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடியே
பலமுந்து சீரில் படிமின் -என்று விதித்த பகவத் குண உபாசனத்தை சாங்க மாக்க வேண்டுகையாலே
மாலிரும் சோலை தளர்விளர் ஆகில் சார்வது சதிரே –
மாலிரும் சோலை பதியது ஏத்தி எழுவது பயனே
மாலிரும் சோலை தொழக் கருதுவதே துணிவது சூதே
மாலிரும் சோலை வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே
மாலிரும் சோலை நெறி படவதுவே நினைவது நலமே -இத்யாதிகளால்
ஷேத்திர வாச
சங்கீர்த்தன
அஞ்சலி
பிரதஷிண
கதி -சிந்தநாத் அங்கங்களை மலை இலக்கா முன்பு விதித்த படியை அக்காலத்தில் அனுஷ்டிக்கப் பெறாத
கர்ப்ப நிர்பாக்யரான அடியோங்களும் இழவாத படி
அன்பன் தன்னை அடைந்தவர்க்கு எல்லாம் அன்பனான தேவருடைய இவ்வுலகினில் மிக்க அருளாலே
மாட மாளிகை சூழ்ந்து அழகாகிய திருக் குருகூர் அதனைப் பாடி யாடி பரவிச் சென்மின்கள் -என்கிறபடியே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் நீள் குடக் கூத்தனாய் மேவி உறை கோயில் விஷயமான தேவர் உடைய
வந்தன
கீர்த்தன
அர்ச்சனாதி பிரகாரங்களாலே வெளியிட்டு அருளுவதாக திரு உள்ளம் பற்றி
ததார்த்தமாக திரு மஞ்சனம் செய்ய எழுந்து அருளி இருக்கும் இருப்பு என்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

————————————————-

திரு அத்யயன உத்சவம்-மூன்றாம் நாள் திருமஞ்சனக் கட்டியம் –

அவிச் சின்னம் காலம் சகலமவிபோக ந ஸூத்ருடம்
சமஸ்தம் கைங்கர்யம் சட மதன குர்யா மஹமிதி
யதாப்யாத்யா ப்ரோக்தம் ஸூப தரருசே சர்வ ஸூஹ்ருதே
புநஸ் ஸ்பஷ்டீ குர்வன்நிஹ சதசி சம்ஸ் நாஸி ததயோ-

நாயந்தே ! நாயந்தே !
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-
விஸ்வ மேவ தகும் புருஷ –என்று சொல்லுகிறபடியே
சர்வ சப்த வாச்யத்தை -முழுதுமாய் முழுதி யன்றாய்-என்று அருளிச் செய்தும்
அது தான் க்ராமேசயம் புருஷ -என்னுமா போலே அமுக்யம் ஆகாதபடி
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித –
அணோர் அணீ யான் மஹதோ மஹீ யான் -இத்யாதிகளால் அவனுக்கு சொல்லுகிற பரி சமாப்தி வ்யாப்தியை
எங்கணும் நிறைந்த வெந்தாய்-என்றும்
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவர நிறைந்து நின்ற -என்று அருளிச் செய்தும் -அது தான் ஆகாச வ்யாப்தி போலே யாகாத படி
அந்த பிரவிஷ்டா சாஸ்தா ஜநாநாம் சர்வாத்மா -என்று அவனுக்குச் சொல்லப்படுகிற நியந்த்ருத்வேன வ்யாப்தியை
ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி -என்று அருளிச் செய்தும்
அது தான் ஜீவாத்மாவுக்கு போலே ஹேய ஸ்பர்ச சஹம் ஆகாத படி
அனஸ் நன்நன்யோ அபி சாக சீதி-என்று அவனுக்குச் சொல்லப்படுகிற தத் கத தோஷ ஸ்பர்ச ராஹித்யத்தை
அவரவர் சமயம் தோறும் தோய்விலன் -என்று அருளிச் செய்தும்
ஆக
இப்படி சர்வ அந்தர்யாமிதயா
சர்வ சப்த வாச்யனான
சர்வேஸ்வரனுடைய
சர்வ ஹேய ப்ரத்ய நீகமான -ரூபத்தை அருளிச் செய்து

ஹிரன்யமஸ் மஸ்ரு ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண –
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்று
ஆணிப் பொன்னுருவமான திவ்யாத்மா ஸ்வரூபத்துக்கு மாணிக்கச் செப்பு போலே பிரகாசகமாய்
அனுக்ரஹ ஏக பாத்ரமான அவர்களுடைய விரோதியை நிக்ரஹிக்கைக்காக பரிக்ரஹித்த விக்ரஹத்தை
முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ -என்று தொடங்கி
சுட்டுரைத்த நன்பொன் நின் திருமென் ஒளி ஒவ்வாது -என்றும்
அப்பொழுதைத் தாமரைப் பூ கண் -என்றும் அருளிச் செய்தும்-

ச ஏக்தா பவதி த்விதா பவதி த்ரிதா பவதி சத்தா பவதி அபரிமிததா பவதி
இமான் லோகான் காமான் காம ரூப்யநுசஞ்சரன் ஸ தத்ர பர்யேதி -என்று சொல்லப்படுகிற
விக்ரஹ அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யத்தில் அபி நிவேச அதிசயத்தை
தெழி குரல் அருவித் திருவேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா யடிமை செய்ய வேண்டும் நாம் -என்று பிரார்த்தித்து அருளி-

இப்படி பிரார்த்தித்தது சார்த்தமாம் படி
எங்கும் தானாய் நின்ற தன் சர்வாத்ம பாவத்தை சர்வேஸ்வரன் சாஷாத் கரிப்பிக்கையாலே பெரும் காற்றில் விழு பழம் எடுப்பாரைப் போலே
புகழு நல ஒருவன் என்கோ-என்று தொடங்கி
இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ -என்றும்
கூவுமாறு அறிய மாட்டேன் யாவையும் எவரும் தானே -என்று துரும்பை கூடாகக் கண்டு யாசிதையான வாசிக வ்ருத்தியை செய்து அருளி

அது தான் அவ்வளவிலே தவறிப் போகாத படி
நங்கள் வானவர் ஈசன் நிற்க–இழியக் கருதியோர் மானிடம் பாடல் என்னாவது –
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளும் –
வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என் வள்ளல் மணி வண்ணன் -தன்னைக் கவி சொல்ல வம்மின் என்று
நிஷ்க்ருஷ்டையான ஸ்வ வ்ருத்தியிலே மூட்டி யருளி
ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ -என்று மீளவும் தேவரீர் உடைய அனுஷ்டானத்திலே பிரகாசிப்பித்தது
அருளுவதாக திரு உள்ளம் பற்றி ததார்த்தமாக திருமஞ்சனம் செய்து அருள எழுந்து அருளி இருக்கிற இருப்பு என்று
விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

—————————————————-

திரு அத்யயன உத்சவம் -நாலாம் நாள் திருமஞ்சன கட்டியம் –

பிரஜாபதி சிவாதி ஷூ பரவண சேத சாமா கமை
பராவர விபாகதம் பரம சாஸ்திர முக்த்வா புரா
விபாதி சடகோப தத் பிரபல சாஸ்திர சங்கா ஹ்ருதாம்
பவான் ஸ்நபந பூர்வகம் சத்த மத்ய கர்த்தும் யதா —

நாயந்தே ! நாயந்தே !
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் –
ப்ரஹ்மவா இத மேகமே வாக்ர ஆஸீத் –
ஆத்மா வா இத மேகமே வாக்ர ஆஸீத்
ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சாந-
தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜாயதே –
புத் புதா ரஷய ஸூ ல பாணி புருஷோ ஜாயதே –
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே
ப்ரஹ்மாதி ஷூ ப்ரலீ நேஷூ நஷ்டே லோகே சராசரே ஏகதிஷ்டதி விச்வாத்மா ச து நாராயண பர –
தஸ்மின் ஜஞ்ஞே ஸ்வயம் ப்ரஹ்மா ப்ரஹ்மணஸ் சாபி சம்பூதஸ் சிவா – என்னும் இப்படி

ஜகத் காரண முகேன நாராயணன் உடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
ஸ்ருதி ஸ்ம்ருதி புரஸ் சரமாக சகல சாஸ்திரங்களும் ஏக கண்டமாக நின்று கோஷிக்கச் செய்தேயும்
ஸ்ரஷ்ட்ருத்வ சம்ஹாரகத்வ முகேன ருத்ர பிரஜாபதி முக தேவதாந்தர பரத்வத்தையும்
அநாகலித மூல பிரகிருதி சம்பந்த பங்க வாசனா ரூஷித மாநாசர் ஆகையாலே
வைதிக பத விமுகராய் -பாஹ்ய பத அபிமுகராய் லோகாயதர் என்று பேரிட்டு அநாதி மாயையாலே
ஸூ ப்தரான தங்களை புத்தராக பிரதிபத்தி பண்ணியும்

பகவத் விமுகராய் கொண்டு துர்க்கதராய் இருக்க ஸூகதர் என்று பேரிட்டுக் கொண்டு
பகவத் குண கதனத்தாலே சௌ பாஷிகராய் இருக்க மாட்டாதே வை பாஷிகராயும்
ப்ரஹ்ம ஸூத்திர வேதனத்தாலே அசௌத்ராந்திகர் என்ன வேண்டி இருக்க
சௌ த்ராந்திகர் என்று பட்டம் கட்டி யோகாசாரன் என்று பேரிட்டு
வைதிக சரணியில் அயோகாசாரராயும் மாத்யமிகர் என்னச் செய்தே ஸூந்ய பஷவாதிகளாயும்
நியாய வாதிகள் என்று பேர் பெற்று பிரத்யஷத்துக்கு அனுமானம் சொல்லி அநியாய வாதிகளாயும்
பிரமாண பிரமேய விசேஷம் அறியாமையாலே அவைசேஷிகராய் இருக்க வைசேஷிகர் என்று விருது பிடித்தும்

ஸூ பர்ண ஆஸ்ரிதமான வாசூதேவ தருச் சாயையை விட்டு அபர்ண ஆஸ்ரிதமான ஸ்தாணுவின் கீழே ஒதுங்கி
பாசூபத தீஷிதராய் சம்சார வடத்திலே -கர்த்தத்திலே -ஆஸூ பதிதராயும்
இப்படி இவர்கள் தாங்கள் சர்வஞ்ஞர் என்னும்படி மானம் ப்ரதீபவமிவ என்கிறபடியே
சகல சாஸ்திர ப்ரகாசகமான பிரமாணத்தை அவலம்பித்து வைத்து
விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றிலே விழுவாரைப் போலே
அதபதிதர் ஆகையாலே ஸூ த்ருஷ்டிகலான வேதாந்திகளால் குத்ருஷ்டிகள் என்று பேர் பெறுவாரும்
இவை இத்தனைக்கும் தப்பி –

ஸ்வத்வமாத்மநி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்று
நித்ய சேஷத்வ பிரதிபத்திக்கு ய்க்தமான மனசை யுடையனாய் வைத்து
அந்த சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷித்வ
ஹிரண்ய கர்பஸ் சமவர்த்த தாக்ரே –
பூதஸ்ய ஜாத பதிரேக ஆஸீத் –
ததா யதா பூர்வம கல்பயத் –
பிரஜாபதி பிரஜா அச்ருஜத்-
ந சந் நாசச்சிவ ஏவ கேவல –
சம்பு ராகாஸ மத்யே த்யேய-
ஏக ஏவ ருத்ர -என்றும் சொல்லுகிறபடியே-

ஹிரண்ய கர்ப்ப -தாத்ரு -பிரஜாபதி -சப்தங்களாலும்
சிவ சம்பு ருத்ர சப்தங்களாலேயும் பிரதிபாதிதமான சாம்யத்தாலே
சம்ப்ரதிபன்ன ஷேத்ரஞ்ஞரான ப்ரஹ்ம ருத்ராதிகள் அளவிலே சேஷித்வ புத்தியைப் பண்ணியும் அனர்த்தப் படுகிற சேதனருக்கு
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே –
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடில் சீர்ப்புகழ் ஆதிப்பிரான் –
பரன் திறம் அன்றி பல்லுலகீர் தெய்வம் மற்று இல்லை –
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டுகொண்மின் –
ஈசன் பாலோர் அவம் பறைதல் என்னாவது
நும் தெய்வமும் ஆகி நின்றான் –பொலிந்து நின்ற பிரான் கண்டீர் –
உம்மை இன்னே தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே –
ஆடு புட்கொடி ஆதிமூர்த்திக்கு அடிமை புகுவது
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே
உம்மை உய்யக்கொண்டு போகுறில் திருக் குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்முன்
குறிய மாண் யுருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே உறுவதாவது
என்று இப்படி பத்தும் பத்தாக பர அவர விபாக போதன பரம சாஸ்த்ரமான திருவாய்மொழியை
முன்பே அருளிச் செய்து அருளின தேவரீர்

இப்போது திரு அத்யயன உத்சவ வ்யாஜ்யத்தாலே புறப்பட்டு உலாவி அருளி
மீண்டு எழுந்து அருளி
திருமஞ்சனம் செய்து அருளுவதாக மஞ்சன வேதி காம்யத்திலே
ஜ்ஞான முத்ரா சஹிதராய் இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது
எங்கனே என்னில் உகத நிர்தோஷ சாஸ்திர சித்தமான அர்த்த தாத்பர்ய சம்சய மநாக்களை
லப்த விஸ்வாச யுக்தராம்படி சசேல ஸ்நான பூர்வகமாக சப்த கர்மத்தினாலே தீஷித்துக் கொண்டு
எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது-

———————————————————————————–

திரு அத்யயன உத்சவ ஐந்தாம் நாள் திருமஞ்சன கட்டியம் –

ஸ்ரீ மன் ஸ்ரீ சடகோப சம்ப்ரதி பவான் பூர்ண ப்ரவாவோத்தராம்
கீதிம் காதும் உபக்ரமன் ஸூ விஹிதஸ் நா நக்ரியோ ராஜதே
சத்யம் மாம் ந ஜகாதி ஸ ஷணமபி ச்நேஹாத் குருங்காதிப
சித்தே மே வ சதீதி வாச முதிதான் உத்தர்த்தம் இச்சந்நிவா –

நாயந்தே ! நாயந்தே !
த்ரைவித்ய வ்ருத்த ஜன சிரோ பூஷணமாய்
சாத்விக ஜன சாதன சம்பத்தாய்
ஆஸ்ரித சர்வவித பந்து பூதமாய்
அசரண்ய சரண்யமாய் இருக்கையாலே
மேவினேன் அவன் பொன்னடி -என்கிறபடியே சரணவரண அர்ஹமான சரண யுகளமும்
பங்கஜ நாள துல்யைகளான ஜங்கைகளும்
ஜ்ஞானத்வந்த கதிதி வர்த்தகமான ஜா நுத்வந்த்வமும்
சாருக்களான ஊருக்களும்
பத்தலேசமான மத்ய சௌந்தர்யமும்
அஷிப்ரியா வஹமான குஷி பிரதேசமும்
ஆவர்த்த ரூபமான திரு நாபியும்
அதி விசால பீநமாய்-அநேக பூஷித பூஷிதமாய் -வகுள தாம விராஜிதமான வஷஸ்தலமும்
பஜதாம பயதமான புஜ காந்தியும்
க்ரமுக தருண க்ரீவை போலே பந்துரையான கந்தரையும்
ஸூ வர்ண குண்டல மண்டிதமான கர்ண பாசமும்
திருஷ்டி சித்த அபகாரிகளான சிபுக கபோலங்களும்
அருணராக விமோசகமான அதரராகமும்
கந்தர்ப்ப மத ஹரமான மந்த ஸ்மிதமும்
பாசா மநோ ஹரமான நாஸா வலியும்
கிருஷ்ண ராக சஹிதமாய் ஸ்ருத்ய வலம்பி களான திருக் கண்களும்
லோலாயதமான ப்ரூ லதா யுகமும்
அர்த்த சந்திர தளாயுதமான அளீகதேசமும்
அதில் அம்ருதச்யுதி என்னாலான திரு நாமமும்
திமிர கோசமான கேசபாசமும்
ஆக இப்படி பாதாதி கேசாந்தமான அவயவ சோபையாலும்
பரமார்த்த போதகையான ஜ்ஞான முத்ரையாலும்
ஸ்ரீ மான் என்றும் ஸ்ரீ சடகோபன் என்றும் சொல்லப் படுகிற தேவர்

இப்போது நம்பியினுடைய திருவாய் மொழியைப் பாடி அருளுவதாகக் கோலி
சக்ரமமாகத் திரு மஞ்சனம் செய்ய வேணும் என்று மஞ்சன வேதிகா மத்யத்திலே
ஜ்ஞான முத்ரா சஹிதராய் கொண்டு எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது – எங்கனே என்னில்

அல்லு நன்பகலும் இடைவீடு இன்றி நல்கி என்னை விடான் நம்பியே -என்று
குருங்க ஷேத்திர வாசியான பூர்ணாபி நாதன் என்னுடைய ஹிருதயத்திலே சச்நேஹமாக நித்ய வாஸம் பண்ணி
என்னை ஒருக்காலும் விட்டு அகலகில்லேன் என்று
தேவரீர் அருளிச் செய்து அருளின வசனத்திலே
அவிஸ்ரம்ப புத்திகளுக்கு
நிறைந்து என்னுள்ளே நின்று ஒழிந்தான் நீல மேனியும் நான்கு தோளும் என்நெஞ்சம் நிறைந்தனவே
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு என்நெஞ்சுள் எழும் -என்று
சொல்லி சபதம் பண்ணிக் கொடுக்க எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது-

————————————————–

திரு அத்யயன உத்சவம் -ஆறாம் திருநாள் திரு மஞ்சன கட்டியம் –

புரா லோகம் புக்த்வா புநரபி நிவிஷ்டம் பஹூ குணம்
பரா பாவ்யாப் தாங்கம் விபுல மகிலாத்மா நமமலம்
க்ருதாவாசம் தேவம் தரணி திலகே வேங்கட கிரௌ
சடரோத்ய ஸ்நாநம் சரண முபகந்தும் வித நுஷே –

நாயந்தே ! நாயந்தே !
அச்யேசானா ஜகதோ விஷ்ணு பத்னீ –
நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோஸ் ரீர நபாயி நீ-என்றும் சொல்லுகிறபடியே
சகல ஜகத் ஸ்வாமிநியாய -உனக்கு ஏற்கும் -யென்னும்படியாய் -தனக்கு ஹிருதய காமினியாய்
மலர்மகள் -என்றும் -மலர்ப்பாவை -என்றும் -தாமரை மங்கை என்றும்
பூவின் மிசை மங்கை -என்றும் சொல்லுகிறபடி -பங்கயத்தில் பரிமளத்தை பருக்கை யற வடித்து
பாவையாக வகுத்து மங்கைப் பருவத்தில் மங்கையாய் -வாஸம் செய் பூம் குழலாள்-என்கிறபடியே
சர்வகந்த -என்கிற வாசத் தடத்துக்கும் வாஸம் செய்யுமதான கேசத்தை உடையளாய்
விதி தஸ் ஸ ஹி தர்மஜ்ஞ் சரணாகத வத்சலா மித்ரமௌபிகம் கர்த்தும் ராமஸ் ஸ்தானம் பரீப்சதா-இத்யாதிப்படியே
அவிஹிதசாரி யாகையாலே அஹிதனானவன் விஷயத்திலும் அத்யந்த ஹித பாஷிணியாய்
ப்ரியம் ஜன மபச்யந்தீம் பச்யந்தீம் ராஷசீ கணம் ஸ்வ கணேன ம்ருகீம் ஹீ நாம் ஸ்வ கணை ராவ்ருதமிவ -என்கிறபடியே

ஏகாஷீ எககர்ணீ முதலான துர் ஜனங்கள் உடைய தர்ஜனங்களாலே
பத்துக்கோடி செந்நாய்களால் சுற்றப் பட்ட மான்பெடை போலே தான் பட்டது ஒன்றையும் பாராதே
பவேயம் சரணம் ஹிவ -என்றும்
தா ஸீ நாம் ராவணஸ் யாஹம் மர்ஷயாமீஹ துர்பலா -என்றும்
விதேயா நாஞ்ச தாசி நாம் க குப்யேத் வானரோத்தம -என்றும்
கார்யம் கருண மார்யேண் ந கச்சின் ந அபராத்யதி -என்றும் சொல்லுகிறபடியே
புருஷகாரிகள் ஆனவர்கள் விஷயத்திலும் புருஷகார பரையாய்

ஸ்ரீர்தேவி பயசஸ் தஸ்மாத் துத்திதா -என்றும்
செழும் கடல் அமுதினில் பிறந்தவள் என்றும்-சொல்லுகிறபடியே
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுதான பெரிய பிராட்டியார் அனபாயினியாய் இருக்கச் செய்தேயும்
அபாயாதி சங்கையாலே-இறையும் அகல கில்லேன் -என்று மார்பிலே இருந்து மடல் எடுக்கும்படியான வடிவை உடையவனாய்
உலகமுண்ட பெரு வாயா இத்யாதிப்படியே பிரளய அபி பூதையான பூமியை ரஷித்து இருக்கச் செய்தேயும்
ரஷணத்தில் அபிவ்ருத்தமான அபி நிவேசத்தையும் ரஷண அநு குணமான குண கணத்தையும்
ரஷகத்வ ப்ரகாசகமான விக்ரஹத்தையும் உடையனாய்
சௌகுமார்யாதி கல்யாண குண விசிஷ்டனாய் சம்ஸ்ரித சத்தா தாரகனாய்
உலகுக்குத் திலதமான திரு வேங்கட மா மலையிலே -வட மா மலை யுச்சி என்னும்படி
அதன் உச்சியிலே பச்சை மா மலை போல் நிற்கிற நச்சு மா மருந்தான அச்சுதனை அனுபவித்து
நிரபயமான உபாயத்தை பிரார்த்தித்து அருளின தேவரீர் இப்போது திரு அத்யயன உத்சவ அங்கமாக
திவ்ய ஸ்ரகம்பர பரிஷ்கரண அங்க ராகாதிகளால் அழகிய திரு மேனியை அலங்கரித்துக் கொண்டு

நல்லார் நவில் குருகூரிலே எல்லாருடைய பொல்லாங்குகளையும் போக்கி –
பயன் நன்றாகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வதாகப் புறப்பட்டு அருளி
அதி விலாசத்துடனே உலாவி யருளி -மீண்டு எழுந்து அருளி
சாம்சாரிக சகல தாபங்களையும் மாய்க்குமதான வாய்க்கும் தண் பொருநலிலே தெளிந்து எழுந்த நீரிலே
திரு மஞ்சனம் செய்து அருளுவதாக மஞ்சன வேதிகா மத்யத்திலே ஜ்ஞான முத்ரா சஹிதராய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது – எங்கனே என்னில் –

த்வயேன மந்த்ர ரத்நேன -என்கிறபடியே தந்திர சித்தமான மந்திர ரத்னத்திலே பூர்வ வாக்ய பிரக்ரியையாலே
அகலகில்லேன் -என்று தொடங்கி
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று சாபராத சேதனர் உடைய சர்வ அபராதங்களையும் சர்வேஸ்வரனை சஹிப்பித்து
சமாஸ்ரயிப்பிக்கும் புருஷகார நித்ய யோகத்தையும்
சமாஸ்ரயண சௌகர்ய ஆபாதங்களான சௌலப்யாதி சத்குண சாஹித்யத்தையும் அருளிச் செய்து
ஆஸ்ரயணத்துக்கு ஆகாங்ஷிதங்களான-ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களையும் ஆவிஷ்கரித்து
ஆஸ்ரயணத்துக்கு அடைந்த விஷயமான அவன் துயர் அறு சுடர் அடிக் கீழே அமர்ந்து புகுந்து
இப்படி பக்தி யுபாயத்திலே சக்தி ஹீனர்க்கும் முக்தி யுபாயமாய் விதிக்கப்பட்ட ஸ்வ சித்த உபாய நிஷ்டையை
உக்த்ய அனுஷ்டானங்களாலே வ்யக்தமாக்கி அருளிச் செய்தேயும்

அநாதி பாப வாசனா தூஷித அசேஷ சேமுஷீகர் ஆகையாலே
இவ்வர்த்தத்தில் மகா விஸ்வாச பஞ்சகமான சங்க அவகாச லேசங்களை யுடைய சமஸ்த சேதனர் யுடையவும்
சம்ரஷண விஷயமான
தேவருடைய சௌஹார்த்தாதிசயத்தாலே
சக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்த க்ருதோசயம் தார யேந்தரம் -என்கிறபடியே
சக்ருத் கரணீயமாய் இருக்கச் செய்தேயும் போக்யாதிசயத்தாலே அசக்ருதா வ்ருத்திக்கு யோக்யதை யுண்டாய் இருக்கையாலே
திரு வேங்கட மா மலையிலே சென்று சேர்ந்து திருக் குருகூர் அதனுள் பரன் அடிக் கீழ் மீளவும் அமர்ந்து
சரணம் புகுவதாக கோலி ததார்த்தமாக திரு மஞ்சனம் செய்ய எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது –

————————————————————

திரு அத்யயன உத்சவத்தில் ஏழாம் நாள் திரு மஞ்சன கட்டியம் –

ஷீராப்தே ரங்க நாம் நா சஹ விதி சதநம் ஸ்ரீ விமாநேன கத்வா
ரூபேண ஸ்வேன ஸார்தம் ஸூ சிரமத பு வீஷ்வாகு புர்யா முஷித்வா
மத்யே காவேரி ஸூ ப்தம் பணி நிதத இஹ த்வத்க்ருதே ரங்கராஜம்
மத்வா காதும் சடாரோ அபி ஷவ விதி முகைஸ் த்வாமி வா லங்கரோஷி –

நாயந்தே ! நாயந்தே !
பக்தி பிரபாவ பவதத்புத பாவ பந்த சந்து ஷித ப்ரணய சார ரசௌக பூர்ண – என்றும்
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன் -என்றும் சொல்லுகிறபடியே
கிருஷ்ண த்ருஷ்ணா தத்தவ கல்பராய் -த்ரைவித்ய வ்ருத்த ஜனத்துக்கும்
சாத்விக ஜனத்துக்கும் அசரண்ய ஜனத்துக்கும் சிரோ பூஷண சம்பத் சரண்யமாய்
மாதா பித்ரு பரப்ருதி சர்வவித பந்துவுமான சரண நளின யுகளத்தை யுடையரான தேவர் இப்போது
திரு நஷத்ர உத்சவ தீஷிதராய்
கரசரசி ஜத்ருத கௌதுகராய்
நிரவதிக சௌந்தர்யாதி கல்யாண குண கண நிதியான திவ்ய மங்கள விக்ரஹத்தை
சகல மநுஜ நயன விஷயமாக்கிக் கொண்டு புறப்பட்டு உலாவி யருளி மீண்டு எழுந்து அருளி திரு மஞ்சனம் செய்து அருளுவதாக
மஞ்சன வேதிகா மத்யத்திலே ஜ்ஞான முத்ரா சஹிதராய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது எங்கனே என்னில் –

வைகுண்டே து பரே லோகே -என்கிறபடியே பரமபதமான ஸ்ரீ வைகுண்டத்திலே
ஸூ த்த சத்வ மயமாய் ஸ்வயம் பிரகாசமாய் -நிரவதிக தேஜோ ரூபமான
திவ்ய மங்கள விக்ரஹத்தோடே நித்ய முக்தர்க்கு போக்யனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற இது
பக்த சேதன ஜாதத்துக்கு தேச விப்ரக்ருஷ்டம் ஆகையாலே புக்த போகத்தில் நெஞ்சு செல்லாமல் என் செய்வோம் என்று ஊகித்துக் கொண்டு வ்யூஹித்து

அடையும் வைகுந்தமும் பாற்கடலும் -என்கிறபடியே படுக்கைப் பற்றான திருப் பாற் கடலிலே எடுத்து விட்டு
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்று
நிதாநஞ்ஞர் யீடுபடும்படி பவாப்தி மக்நரான சம்சாரிகளை உத்தரிப்பிக்கைக்காக மகாபதி மத்யே பள்ளி கொண்டு அருளின இதுவும்
அதி சயித பாகதேயரான விதி சிவ சனகாதிகளுக்கு லபிக்குமதாய்-
மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடர்க்கு கண்ணுக்கு விஷயாகப் பெறாமையாலே அந்த ஜல சயனத்தை விட்டு
ஸ்தல சயனத்தை விரும்பி -பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும் -என்கிறபடி
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயிலுவதாக கோலி எழுந்து அருளி இருக்கிற அளவில்

சதுர்முக தப்பல நிர்வஹணார்த்தமாக ஸ்ரீ ரெங்க விமானத்தோடு ஸ்வ அசாதாராண திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனாய் கொண்டு
ப்ரஹ்ம லோகத்தில் எழுந்து அருளின பின்பு இஷ்வாகுவினுடைய தபோ வ்யாஜ்யத்தாலே
அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோதியை என்னும் அணி நகரத்திலே எழுந்து அருளி இருந்து
இஷ்வாகு பிரப்ருதி தசரத பர்யந்தமான ராஜாக்களாலும்
தயரதர்கு மகனான தம்மாலும் அர்ச்சிதராய்
ராமாவதார சரமத்தில் -ஸ்ரீ மத் ரங்கம் மஹத்தாம சத்த்வஜம் சபரிச்சதம் பிரதத்தம் ராஷசேந்தராய ப்ரியாய ப்ரிய காரிணே –
என்கிறபடியே செல்வ விபீடணற்கு வேறாக நல்லன் ஆகையாலே
மின்னிலங்கு பூண் விபீடன நம்பிக்கு கோயில் ஆழ்வாரோடு தம்மை உபகரித்து அருள
அவரும் தம்முடைய படைவீடான இலங்கையை நோக்கி எழுந்து அருளுவித்துக் கொண்டு போகா நிற்க-

கங்கையில் புனிதமாய காவேரி நடுவில்
ஸ்ரீ சந்திர புஷ்கரணி தீர பிரதேசமான புளினத்திலே எழுந்து அருளிவித்த அனந்தரம்
அவராலும் எழுந்து அருளுவிக்க ஒண்ணாதபடி அவ்விடத்திலே திரு உள்ளம் வேர் பற்றி
மன்னுடைய விபீடணனை அனுக்ரஹித்து -மதிள் இலங்கை ஏறப் போக விட்டு
அரவரசப் பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
பரத்வம் போலே ஆஸ்ரியிப்பார்க்கு அந்தரம் பட்டு இருத்தல்
வ்யூஹம் போலே கடல் கொண்டு கிடத்தல்
விபவம் போலே தாத்காலிகமாய் இருத்தல்
அந்தர்யாமி போல் அப்ரத்யஷம் ஆதல் செய்கை இன்றிக்கே
வடிவுடை வானவர் தலைவனே -என்றும்
கடலிடம் கொண்ட கடல் வண்ணா காகுத்தா கட்கிலீ -என்னும்படி பரத்வாதிகளில் உள்ள
பரதவ சௌலப்யாதிகளை பிரகாசிப்பித்துக் கொண்டு

அன்போடு தென் திசை நோக்கி பக்கம் நோக்கி அறியாதே தேவரை கடாஷித்துக் கொண்டு
பள்ளி கொண்டு அருளுகிற முகில் வண்ணரான பெரிய பெருமாளை
அடியை அடைந்து அருள் சூடி உய்ந்து சொல் மாலை ஆயிரமும் அருளிச் செய்து அருளின தேவரீர் இப்போது
கங்குலும் பகலும் பாடி அருளுவதாக திரு உள்ளம் பற்றி
பர்த்ரு போகார்த்தமாக குளித்து ஒப்பித்துச்செல்லும் பார்யை போலே
என் திருமகள் சேர் -என்கிறபடியே விஸ்வ பதியான அழகிய மணவாளர்க்குத் திரு என்னும்படி லஷ்மி சத்ருசர் ஆகையாலே
அலங்க்ருத சர்வ காத்ரராய்ச் செல்ல வேணும் என்று ததார்த்தமாக
திரு மஞ்சனம் செய்ய எழுந்து அருளி இருக்கும் இருப்பு என்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

——————————————————

திரு அத்யயன எட்டாம் நாள் உத்சவ திரு மஞ்சன கட்டியம் –

பராவரே சாங்க்ரி சரோஜசேவா பராதிராகாதி தரான் விஹாய
புரேப்சிதா மத்யே ததங்க்ரி வ்ருத்தம் சரன் சடாரே தநுஷே அபிஷேகம்

நாயந்தே ! நாயந்தே !
தேவிமார் ஆவார் திருமகள் பூமி -என்கிறபடியே
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மணமகள் ஆயர் மடமகள் -என்கிற தேவிமார் மூவரையும் உடையனாய் –
மற்று அமரர் ஆட்செய்வார் -என்கிறபடியே ஏழ் உலகும் தனிக் கோல்செல்ல வீற்று இருந்து அருளுகிற சேர்த்திக்கும்
போற்றி என்று ஆட்செய்கிற அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்
மேவிய உலகம் மூன்றவை யாட்சி என்கிறபடியே அந்த நித்ய சூரிகளோபாதி ப்ரகாரதயா சேவ்யமான ஆகாரத்தாலே
தனக்குத் தகுதியாய் இருக்கிற லோகத் த்ரயத்துக்கும் ஏக நாயகனாய்
வேண்டு வேண்டுருவம் நின்னுருவம் -என்கிறபடியே
ஆஸ்ரித அதீனமான ஸ்நான ஆசன சயநாதிகளை உடைய சர்வேஸ்வரனுடைய சௌஹார்த்த விசேஷத்தாலே
சஹஜ சார்வஜ்ஞ்யாதி சத் குண சமேதராய் –

என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசன் -என்கிறபடியே
திறத்துக்கே துப்புரவாம் திருமாலான அவன்
தேவரைக் கொண்டு திருவாய் மொழி பாடுவித்த சீரை
இறைப் பொழுதில் காலம் பருகி இருக்கச் செய்தேயும் அதில் ஆராமையாலே
இன் கவி பரம கவிகளால் தன் கவி தான்தன்னைப் பாடுவியாது -என்கிறபடியே
வியாச பராசர வால்மீகி ஸூ க சௌநகாதிகளும்
முதல் ஆழ்வார்களும் ஆகிற பாலேய் தமிழரும் பத்தருமான பரம கவிகளாலே பாடுவியாதே
தேவரை ஆம் முதல்வன் இவன் என்று நா முதல் வந்து புகுந்து தூ முதல் பத்தரான
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகளை வாய் முதல் அப்பனாய்தப்புதல் அறச் சொன்ன உதவிக் கைம்மாறு
என்னுயிர் என்ன உற்று எண்ணில்-

இயம் சீதா மம ஸூ தா சஹாதர்ம சாரீதவ
ப்ரதீச்ச சைநாம் பத்ரம் தே பாணிம் க்ருஹணீஷ்வ பாணிநா-என்கிறபடியே
வேந்தர் தலைவனான சனகராசன் எனது பெருமை இராமனுக்கு
காந்தள் முகிழ் விரல் சீதையை கடும் சிலை சென்று இறுக்க உதவிக் கைம்மாறாக கைப் பிடித்தாப் போலே
தாள்களை எனக்கே தலைத் தலை சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை ஆரத்தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் என்கிறபடியே
உபகார ஸ்ம்ருதி கொண்டும் மார்பும் தோளும் பணைக்கையாலே
ஆரத் தழுவி அறவிலை செய்த ஆத்மா ஸ்வரூபத்தின் உடைய அத்யந்த போக்யதையும்
அனன்யார்ஹ சேஷத்வத்தையும்
அதனுடைய பரா காஷ்டையான ததீய பாரதந்திர பரம புருஷார்த்தையும்
அவனே பிரகாசிக்கப் பெற்று உடையீர் ஆகையாலே
வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே யானாலும் சுழி பட்டோடும் சுடர் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
அவன் அடியாரான சிறு மா மனிசர் அடியே கூடும் இது வல்லால் பாவியேனுக்கு உறுமோ
என்று அதிகரித்ததான அந்த புருஷார்த்தத்தில் ஆதார அதிசயத்தையும்
வ்யதிரிக்தமான விஷயங்களில் வைத்ருஷ்ண்யத்தையும் விசதமாக்கி அருளின தேவர்
இப்போது-திரு அத்யயன வ்யாஜத்தாலே

வரையார் மாட மன்னு குருகூரில் திரு வீதிகள் தோறும் சிறப்புடனே புறப்பட்டு உலாவி அருளி
மீண்டு எழுந்து அருளி திரு மஞ்சனம் செய்து அருளுவதாக எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது
எங்கனே என்னில்

இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த செங்கோலத்த பவளச் செவ்வாய் செந்தாமரைக் கண் என்னம்மான்
பொங்கேழ் புகழ்கள் வாய் வாய்ப்புலன் கொள் வடிவு என்மனத்ததாய்
அங்கேய் மலர்கள் கையவாய் வழி பட்டோட அருளில் இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் -என்று
ஆபத்சகனானவன் திருவடிகளில் அகில கரணங்களாலும் உண்டான நிகில கைங்கர்யங்களுமே
அந்த பாகவதர்களுக்கு உகப்பு ஆகையால் பரந்த தெய்வமும் பல்லுலகும் அன்று உடனே விழுங்கி கரந்து உமிழ்ந்த
திருக் குருகூர் அதனுள் பரன் திறத்தில் அந்தக் கைங்கர்யத்தைச்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் செய்து அருளத் திரு உள்ளம் பற்றி
ததர்த்தமாக திரு மஞ்சனம் செய்ய எழுந்து அருள இருக்கிற இருப்பு என்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

————————————————-

திரு அத்யயன உத்சவத்தில் ஒன்பதாம் திருநாள் திருமஞ்சன கட்டியம் –

ந்யசன பஜன பாதாவாப்தி வாங் மாத்ர காந
பிராணி பத கராணாம் முக்தி ருக்தாசபி தஸ்யாம்
அபி ருசிர ஹிதா நாம் கிருஷ்ண வச்ச க்தி யோக்யம்
சட மதன ஜநா நாம் ஸ்நாசி சரவாக சாந்த்யை-

நாயந்தே ! நாயந்தே !
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதும் இல்லை -இத்யாதிகளாலே
நல்ல புதல்வர் ,மனையாள் ,நவையில் கிளை இல்லம் மாடு இவை யனைத்தும் அல்ல வென்று
ஔபாதிக பந்துக்கள் உடைய அபந்துத் வாதிகளையும்
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்டபிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் கண்டீர் துணை-இத்யாதிகளால்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் மேலாய்த் தாய் தந்தையரும் அவரே -என்று
சர்வேஸ்வரனுடைய நிருபாதிக பந்துத்வாதிகளையும் உபதேசித்து அருளி-

இப்படி அசேவ்ய சேவாதிகளான அப்ராப்த விஷய பிராவண்யம் கழிகையாலே
அநந்த சாகமாக நிரந்தர அபிவ்ருத்தமான அபி நிவேச அதிசயத்தை யுடையராய்
ஆகம் சேர் நரசிங்கமதாகி -என்கிறபடியே விருத்தமான நரத்வ ஹரித்வங்களை பொருந்தின திருத்தத்தாலே
அரி பொங்கிக் காட்டும் அழகு என்ற சீரிய சிங்கமதாகிய வடிவைக் கண்ட போதே
பயாக்னி கொழுந்திலே தும்பிப் பதம் செய்த வாள் அவுணன் உடைய உடலை வாடின கோரை கீறினால் போலே வளர்ந்த
வாள் உகிராலே அளைந்த கோளரியான அவுணன் உள்ளம் பொருந்தி உறைகிற விளங்கும் சுடர்ச் சோதி உயரத்தொருத்தா என்றே யதுவது என்று
ஒருபடிப் படத் திரு உள்ளம் பற்றி நாளேல் அறியேன் எனக்கு உள்ளன வென்று நித்ய கைங்கர்யத்தை கழித்து-

வைத்தநாள் வரை எத்தனை என்கிற பிரச்னத்துக்கு உத்தரம் தத்தமாவதற்கு முன்னே சைதில்யம் பிறந்து
மல்லிகை கமழ் தென்றலும் மாலைப் பூசலுமாய் மயங்குகையாலே
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்கிறபடியே
சரண -சரணவரண பலசித்தியை திருக் கண்ணபுரத்து தரணியாளன் கருணையாலே
மரணாவதியாக்கி தந்தருளப் பெற்றுடையீர் தேவர்
இப்போது திரு அத்யயன வ்யாஜத்தாலே புறப்பட்டு உலாவி அருளி மீண்டு எழுந்து அருளி
மஞ்சன வேதிகா மத்யத்திலே ஜ்ஞான முத்ரா சஹிதராய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது -எங்கனே என்னில் –

காலை மாலை கமல மலரிட்டு மாலை நண்ணித் தொழுது எழுமின் -என்று அர்ச்சநாதி அங்க யுக்தமான பக்தியையும்
அதில் அசக்தருக்கு -தனதாள் அடைந்தார்க்கு எல்லாம் சரணமாகும் -என்று -ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபையான பிரபத்தியையும் –
அதில் அசக்தருக்கு -திருக் கண்ணபுரம் செல்ல நாளும் துயர் பாடு சாராவே -என்று அர்ச்சா ஸ்தலத்தின் உடைய உச்சாரண மாத்ரத்தையும்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் பாடி யாடிப் பணிமின் -என்று
பூர்வ உகத சர்வ உபாயங்களிலும் அந்வய ஸூன்யர் ஆனவர்களுக்கு ந்ருத்த பிரமாண உக்தமான
இப்பத்துப் பாட்டின் உடைய கீரத்த நத்தையும்
துர்ஜன பீடிதரான அர்ஜுனாதிகளுக்கு தூதனாய் கீதாச்சார்யனைப் போலே
அதிகார அனுகுணமாக நெறி எல்லாம் எடுத்து உரைத்து இருக்கச் செய்தேயும்
அதில் ஆசை இன்றிக்கே ஈசி போமின் என்பர் அளவிலே நாசமான பாசத்தில் நலிவு படுகிற நீசரான
அடியோங்கள் உடைய பிரபல பாப நிபந்தனமான
சகல தாபங்களையும் போக்கி விமலர் ஆக்குகைக்காக எழுந்து அருளி இருக்கும் இருப்பு என்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

—————————————————————–

திரு அத்யயன உத்சவ பத்தாம் திரு நாள் திரு மஞ்சன கட்டியம் –

பர்யாயேண சமேதிதா பகவதா பக்தி பராயா பரம்
ஜ்ஞானம் தே பரமா ச பக்திரிதி யா தத் ப்ராப்திரூபா தசா
தச்சங்காம் சடகோப சம்சமயிதும் சப்ரத்யயம் பிராணி நாம்
சம்ஸ் நாத கரிய யாதசாம் விசத யந்தாம் தாமி வாபாசிபோ.

நாயந்தே
த்ரைவித்ய வருத்த ஜன சிரோ பூஷணமாய்
சாத்விக ஜன சனாதன சம்பத்தாய்
ஆஸ்ரித சர்வ வித பந்து ரூபபூதமுமாய்
அசரண்ய சரணமுமாய் இருக்கையால்

மன்னுயிர்கட்கு எல்லாம் அரனமான சரண பங்கஜங்களும்
நளின நாள லலிதங்கள் ஆகையாலே அவற்றைப் போலான இணைக் காலான கணைக் கால்களும்
யௌவன ப்ரகர்ஷ ப்ரருதோத்போதம் பொழு உத் பானுக்களான ஜானுக்கள்ளும்
கரிப்பிரவர கரங்கள் போலே உருக்களான ஊருக்களும்
கனகாசல தடி போலே இருக்கிற கடி காந்தி லோகாந்தையான படி காந்தையும்

வடபத்ர புடம் போலே ஸூ ந்தரமான துந்தி ஸ்தலமும்
சௌந்தர்ய சரிதாவர்த்த கர்தாபமாய் அதி கம்பீரமான நாபீ சரஸ் ஸூம்
நிரந்தர சஞ்சல புத்தி ஜனகமான மத்திய தேசமும்
அவிரளதரள விராஜிதமாய் அமுகுள வகுள அலங்க்ருதமாய் அதிதரா ஹார பூஷிதம் ஆகையாலே
அநவரத தாஹிச்தமான வஷஸ் ஸ்தலமும்

அவஞ்சகரான அகிஞ்சனருக்கு ஸ்வ ஸ்திதாயியான ஹஸ்த பத்மமும்
அரக்க சாமான தர்க்க ஜாலத்தின் உடைய மாநஹாரியான ஜ்ஞான முத்ரையும்
சம்சார போகி சந்தஷ்ட ஜீவா ஜீவாதுவான க்ரீவா பிரதேசமும்
அகவாயில் அனுராகத்துக்கு வாய்த்தலை போலேயாய்முகிழ் விரிகிற பங்கயமனைய செங்கனி வாயும் திரு முத்து நிரையும்
மகரம் தழைக்கும் தளிரோ என்கிற வர்ண நிர்ணாயகமான கர்ண பாசமும்

சித்தம் சிறை கொள்ளுமதான முத்தின் குழையும்
கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ என்கிற உபமானசம்சயத்துக்கு உதாசிகையான நாசிகையும்
கர்ணாந்தர பிரத்யபேஷையாலே சரவண குதூஹலங்களாய் பரவண ரஷண தீஷிதங்களான ஈஷணங்களும்
நயன பங்கஜங்களை வளைந்து படிகிற மதுகர நிகரங்கள் போலே கருத்தை வருத்துமதான திருப் புருவங்களும்
நாள் மன்னு வெண் திங்கள் போல் கோள் மன்னி ஆவி யடுகிற திரு நுகிலும்

ருக்ணே தோகே சர்வ ஜனனீ தத் கஷாயம் பிபந்தீ -என்கிறபடியே கருநாடு காடு எழச் சாத்தின திரு நாமமும்
சம்சார துக்கார்க்க தாப நாசகரமான வாசத் தடம் என்று பேசத் தகுதியான திரு முக மண்டலமும்
வக்தரமாகிற சித்ர பானுவுக்கு பரபாகமாய் அதி காளிகையான அளகாளிகையும்
சேஷித்வத்துக்கு தலையான தண் துழாய் பொன் முடி போலே சேஷத்வத்துக்கு அடியான மணி முடியும்

ஆக இப்படி ஆராகிலும் நீராய் அலைந்து கரையும்படி
ப்ராவண்ய ஜனகமான லாவண்ய ராசி ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற தேவரீர் இப்போது
திரு அத்யயன உத்சவ வ்யாஜத்தாலே

குன்றம் போலே மணி மாட நீடு திருக் குருகூர் அதனுள் நின்ற ஆதிப் பிரான் உலாவி அருளின நெடு வீதிகள் தோறும்
யேன யேன தாதா கச்சதி தேன தேன சஹ கச்சதி -என்கிறபடியே
உலாவி அருளி மீண்டு எழுந்து அருளி
பொருநல் சங்கணித் துறையில் துகில் வண்ணத் தூ நீராலே திரு மஞ்சனம் ஆடி அருளி ஸ்நானா சனத்திலே
நாநாவித கந்த புஷ்பாதிகளால் அலங்க்ருதராய் எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது
எங்கனே என்னில்

ஜ்ஞானாதி கல்யாண குண கண பூஷிதனான சர்வேஸ்வரன் நிதா நஜ்ஞர் ஈடுபடும்படி ஆமத்தை அறுத்து
பசியை மிகுத்து சோறிடுவாரைப் போலே
மயர்வற மதி நலம் அருளினான் -என்கிறபடியே-அஜ்ஞ்ஞானத்தை சவாசனமாகப் போக்கி அருளி
பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை தந்து அருளி
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்து -என்றும்
காதல் கடலில் மிகவும் பெரிதால் -என்றும்
காதல் உரைக்கில் தோழி மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
அதனில் பெரிய என் அவா -என்கிறபடியே
தத்வ த்ரயத்தையும் விளாக் குலை கொள்ளும்படி

பரபக்தி பரஞான பரம பக்தி ரூபேண அந்த பக்தியையும் அபி வருத்தை யாக்கி
என்னை அவா அறச் சூழ்ந்தாயே -என்னும்படி
கடல் போன்ற ஆதாரத்தோடு சோந்து தாபங்களை ஹரித்து
அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -என்னும்படி

ஸ்வ சரண கமல ப்ராப்தி பர்யந்தமான பர்வ க்ரமேண விளைத்த சர்வ அவஸ்தைகளையும்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பான் அவாவுவன் நான் –
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் -என்றும்
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்த அளவில் முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து என்று
தேவர் தெருள் கொள்ள அருளி இருக்கச் செய்தேயும்
அநாதி பாப வாசனா தூஷித அசேஷ சேமுஷீகர் ஆகையாலே இவ்வர்த்த விசேஷமாக சந்தேஹித்து இருக்கிற
மந்த மதிகளுடைய சங்கா வாகாச லேசங்களை சப்ரத்யயமாக
அவ்வோதசைகளிலே அனுஷ்டானத்தாலே விசதமாக்கா நின்று கொண்டு சமிப்பித்து அருளுவதாக திரு உள்ளம் பற்றி
ததார்த்தமாக திரு மஞ்சனம் செய்து எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது –

———————————————————-

வீடுவிடைத் திருமஞ்சனக் கவி

மேசம் கேசாதி தேவாவிதித நிஜபதம் வ்யூடம் ஆத்யாமரேந்தரம்
ச்வேசம் ஸ்வாசாதிரேக ப்ரவஹித வாசநா பிஷ்டுதம் த்வத்ய க்ருத்வா
கீதம் கீத்வாசத கோதா க்ருதமிஹா தமலம் தர்ப்பயித்வா ச லப்த்வா
கேஹம் தஸ்மாத் க்ருதார்த்த ஸ்தவமிஹ சடரிபோ ஸ்நாசி ந ஸ்ராந்தி சாந்த்யை

நாயந்தே நாயந்தே
ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் –
சமஸ்த கல்யாண குணாத் மகனாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேத்னாய்
நித்ய ஸூரி பரிஷம் நிரந்தர சேவ்யமான சரண நளிதனாய்க் கொண்டு
நித்ய ஆனந்த நிர்பரனாய் செல்லா நிற்கச் செய்தே

ச ஏகாகீ ந ரமேத -என்று உண்டது உருக்காட்டாதே அசித் விசிஷ்டமான சேதன சமஷ்டி பக்கல்
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து -என்கிற படியே பரம காருணிகனாய்
ஸ்வ சரண கமல சமாஸ்ரயண அனுகூலமான கரண களேபரங்களை கொடுக்கக் கோலி-

ப்ரஹ்மாதி ஷூ ப்ரவீ நேஷூ நஷ்டே லோகே சராசரே
ஏகஸ் திஷ்டதி விச்வாத்மா ச து நாராயண பர -என்றும்

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமிலா யன்று நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றபடி
சதுர்முக பிரமுக பஹூ முக சிருஷ்டியைப் பண்ணி
ஸ்ருஷ்டரான சேத்னர்களுக்கு நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு சாஸ்தரங்களான நேத்ரங்களை கொடுத்து இருக்கச் செய்தேயும்

அஜ்ஞ்ஞான ஆர்ணவ மகனாரான இவர்களை உத்தீர்ணா ஆக்குகைக்கு
மனிசரும் மற்றும் முற்றுமாய் மாயாப்பிறவி பிறந்து -என்கிறபடியே ராம கிருஷ்ணாதி ரூபேண அவதரித்து அருளியும்

இப்படி பண்ணின அவதாரங்கள் தானும் தத் காலி நர்களுக்கே உஜ்ஜீவன மாத்ர சேஷம் ஆகையாலே
தத் அனந்தரகாலீ நரரான அச்மதாதி சகல பாமர ஜன உஜ்ஜீவன அர்த்தமாக
மாட மாளிகை சூழ்ந்து அழகாய திருக் குருகூரிலே வீடில் சீர்ப் புகழ் ஆதிபிரானாய் மேவியும்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள் பொலிந்து நின்ற பிரானே நின்றும்

நிலை அழகிலே கண்ட வாற்றால் தனதே உலகென நின்றான் -என்றும்
நீயும் திரு மகளும் நின்றாயால் -என்றும்
நிலையார நின்றான் -என்றும் சொல்லுகிறபடியே
சர்வ ஸ்மாத் பரன் என்னும்படியை அறுதி இட்டு
ஈடுபட்டு அறிவுடையார் அடங்கலும் ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கும் படி

நல்லார் நவில் குருகூரிலே நித்ய சந்நிதி பண்ணி இருக்கிற குறிய மாண் உருவாகிய
நீள் குடக் கூத்தனை பாடி அருளுவதாக சங்கல்பித்து
ஸ்தோத்ரம் வேத மயம்கர்த்தும் தத்ர திராவிட பாஷயா தத்ர வேதாஸ் சமஸ்தாஸ் ச திராவிட த்வாம் உபாகத -என்கிறபடியே

ருக் யஜூஸ் சாம அதர்வணங்களை -திருவிருத்தம் முதலான திவ்ய பிரபந்த சதுஷ்ட்யமாக்கி
மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறையை அதிகரித்தார்க்கு
உடைந்து நோய்களை ஒடுவிக்குமே -என்றும்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே -என்றும்
மீட்சி இன்றி வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே -என்றும்
ஐஹிக ஆமுஷ்மிக பல பிரதான சஹிதமாக விண்ணோர் பெருமான் தன்னை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி அருளின தேவர்

இப்போது சாத்விக ஜன சார்த்தங்களை க்ருதார்த்தராம்படி திவ்ய உத்சவ வ்யாஜத்தாலே
கோயில் நின்றும் புறப்பட்டு அருளி விவித விதான புஜ்ஞ ரஞ்சிதமாய் செழு மா மணிகள் சேரும்
திரு மா மணி மண்டபமான இத் திரு ஓலக்கத்திலே ஒரு நாயக ரத்னம் அங்குரித்தால் போலே
மஜ்ஞன வேதிகா மத்யத்திலே ஜ்ஞான முத்ரா சஹிதராய் கொண்டு ஏறி அருளி
பொங்கிள யாடை அரையில் சாத்தி – திருச் செய்ய முடியும் ஆரமும் படையுமான திவ்ய அலங்காரத்துடனே
அபிஷேக ஜலார்த்த காத்ரராய்
சாத்விக ஜன நேத்ரோத்வச காரராய் -ஆர்த்த வசன பூஷண பூஷிதராய் எழுந்து அருளி இருக்கும் இருப்பு இங்கனே இரா நின்றது
எங்கனே என்னில்

மேசம் மா -என்ற திரு நாமம் உடைய பெரிய பிராட்டியாருக்கு நாயகனாய்
கேசாதி தேவாவிதித நிஜபதம் –
க என்றும் ஈசன் என்றும் சொல்லப் படுகிற ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சர்வ தேவதைகளாலும்
அறிய அரியதான ஸ்ரீ வைகுண்டத்தை இருப்பிடமாக உடையவனாய் –
வ்யூடம்
வி -பஷி வாசகம் -த்ரயீமயனான திருவடியை வாஹனமாகக் கொண்டு
ஆத்யாமரேந்தரம் –
முன்னை அமரர் -என்கிறபடியே ஆத்யரான அமரர்கள் அதிபதி யாய்
ச்வேசம் –
ஆத்மேச்வரம் -என்கிறபடி தனக்குத் தானே நியாமகனாய்

ஆக இப்படி
ஸ்ரீ யபதித்வ -பரமபத நிலயத்வ -கருட வாகனத்வ -ஸூரி போக்யத்வ –
நிரந்குச ஸ்வா தந்த்ரங்கள் உடன் கூடிய சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரனை
ஸ்வாசாதிரேக ப்ரவஹித வாசநா பிஷ்டுதம் த்வத்ய
க்ருத்வா –
அவாவில் அந்தாதி -என்கிறபடியே
தேவரீர் உடைய பக்தி பிரகர்ஷத்தாலே வழிந்து புறப்பட்ட சொற்களாலே வாயாரப் புகழ்ந்து
கீதம் கீத்வாசத கோதா க்ருதமிஹா தமலம் தர்ப்பயித்வா ச –

அவ்வளவும் அன்றிக்கே
பெரியாழ்வார் உடைய குடல் துவக்காலே தேவரீருக்கு திரு மகளாரான ஆண்டாள் உடைய சங்கத் தமிழ் மாலையான
திருப் பாவையை பாடி அருளி
தேவரீர் உடைய திவ்ய பிரபந்த ஸ்ரவணத்தாலே ப்ரீதனான அவனை மிகவும் பிரியப் படுத்தி
லப்த்வா கேஹம் தஸ்மாத் –

திரு அத்யயன உத்சவ அர்த்தமாக
பத்னீ பரிஜனாதிகள் உடன் தேவரீர் உடைய திருப் புளிக் கீழ் வீட்டிலே
பத்து நாளும் எழுந்து அருளி இருந்து
மேவி உறை கோயிலிலே ஏறி அருளுவதாக உத்யோகித்து அருளிய பொலிந்து நின்ற பிரானை
ராஜ நீதியை அனுசரித்து நின்று
ஒரு ரசத்தை விளைப்போம் என்று பார்த்து
வீடு தர வேண்டும் என்று அபேஷித்து
சசானமாகப் பெற்று
க்ருதார்த்த ஸ்தவமிஹ சடரிபோ –

ஆக இப்படி அத்தலைக்கும் சர்வ பிரகார சாவஹர் ஆகையாலே க்ருதார்த்தரான தேவரீர் இப்போது
ஸ்நாசி ந ஸ்ராந்தி சாந்த்யை –
ஸ்நான வ்யாஜத்தாலே படி களைந்து மதகு திறந்தால் போலே ஒரு மடை கொள்ள ப்ரவஹிக்கிற தேவரீருடைய
திருமேனி அழகு வெள்ளத்திலே
முழுக்காட்டி அடியோங்கள் உடைய சாம்சாரிக சகல தாபங்களும் ஆறுவதாக
எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது –

————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மதுரகவி பிரப்ருதிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -3-4–

August 22, 2016

தாம் முன்பு பிரார்த்தித்த அடிமை கொள்ளுகைக்காக எம்பெருமான் தன்னுடைய சர்வாத்ம பாவத்தை காட்டி அருளக் கண்டு
பகவத் குணங்களோ பாதி விபூதியும் ததீயத்வ ஆகாரேண உத்தேச்யம் ஆகையால்
பூதங்களையும் பவ்திகங்களையும்அசாதாரண விக்ரகத்தையும் மாணிக்யாதி ஸ் ப்ருஹணீய பதார்த்தங்களையும் -போக்யமான ரஸ்யமான பதார்த்தங்களையும்
செவிக்கு இனிய காநாதி சப்த ராசிகளையும் மோஷாதி புருஷார்த்தங்களையும் ஜகத்துக்கு பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளையும்
ஜகத்துக்கு எல்லாம் காரணமான ப்ரக்ருதி புருஷர்களை விபூதியாக உடையனாய் அந்த சரீர பூதமான விபூதியில் ஆத்ம தயா வியாபித்து
ததகத தோஷை ரசம்ஸ்ப்ருஷ்டனான மாத்திரம் அன்றிக்கே
ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள எம்பெருமானை -இவனுக்கு தகுதியாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து பகவத் குண அனுசந்தானம் பண்ணினால்-
கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் என்னும் கணக்கால் காயிகமான அடிமையில் ஷமர் இல்லாமையாலும்
கோவை வாயாளில் படியே எம்பெருமான் இவர் தாம் பேசின பேச்சை எல்லா அடிமையுமாக கொள்ளுவான் ஒருவன் ஆகையாலும்
விபூதி வாசகமான சப்தம் விபூதி முகத்தால் அவனுக்கு பிரதிபாதகம் ஆகையாலும்
விபூதி விஷயமான சப்தத்தோடு நாராயணாதி நாமங்களோடு வாசி அற்று இருக்கிற படியால்
அவற்றைச் சொல்லும் சொல்லாலே சர்வ சப்தங்களாலும் அவனைச் சொல்லி –வாசகமான அடிமையில் பிரவ்ருத்தர் ஆகிறார் –

————————————————————————————————————————–

முதல் பாட்டில் இது திருவாய் மொழியில் சொல்லுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

புகழும் நல் ஒருவன் என்கோ!
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ
தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ!
நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!
கண்ணனைக் கூவு மாறே.—————–3-4-1—

புகழும் நல் ஒருவன் என்கோ!
சுருதி ஸ்ம்ருதி யாதிகளால் புகழப் பட்ட நன்மையை உடையனான அத்விதீய புருஷன் என்பேனோ
என்கோ என்கிறது என்பேனோ என்றபடி
பிள்ளான் -சர்வைஸ் சம்ஸ் தூயமாநன் -என்பேனோ என்னும் –
கீழ்ச சொன்ன குண யோகத்தால் வந்த வை லக்ஷண்யத்தோடு ஓக்க விபூதி யோகம் சொல்லுகிறது மேல் –
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
ஒப்பில்லாத க்ஷமாதி குணங்களை உடைய பூமி என்பேனோ -பொரு-ஒப்பு
திகழும் தண் பரவை என்கோ-தீ என்கோ! வாயு என்கோ!-
காரணத்தவத்தால் வந்த உஜ்ஜ்வல்யத்தையும் குளிர்த்தியையும் உடைத்த ஜல தத்வம் –தத் காரணமாய் ஊர்த்தவ ஜலனமான அக்கினி -தத் காரணமான வாயு –
நிகழும் ஆகாசம் என்கோ!-
நிகழுகையாவது -வர்த்திக்கை
இதர பூதங்களுக்கு முன்னே ஸ்ருஷ்டமாய் இவை ஸம்ஹ்ருதம் ஆனாலும் சில நாள் நிற்கும் என்னுதல்-
தன்னை ஒழிந்தவை தன்னுள்ளே வர்த்திக்கும் படியாய் இருக்கும் என்னுதல் –
நீள் சுடர் இரண்டும் என்கோ!
மிக்க ஒளியை உடைய சந்த்ர சூ ர்யர்கள் என்பேனோ –
கார்ய வர்க்கத்துக்கு உப லக்ஷணம்
தாபத்தை ஆற்றுகைக்கும் -நீர்க் களிப்பை அறுக்கைக்கும் உறுப்பான சந்த்ர சூ ர்யர்கள்
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!-
ஓன்று ஒழியாமே எல்லாம் என்னுதல் -உபாதேய தமமான எல்லாம் என்னுதல் –
கண்ணனைக் கூவு மாறே.-
அர்ஜுனன் -ஹே கிருஷ்ண ஹே யாதவ -என்றத்தோடு -பூமி -என்றத்தோடு வாசி அற்று இருக்கிறது இ றே-

—————————————————————————————————————-

கார்ய வர்க்கத்தை சொல்லுகிறது –

கூவுமாறு அறிய மாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ!
விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே.–3-4-2-

கூவுமாறு அறிய மாட்டேன்,
பக்தி பாரவசியத்தாலே-பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டேன் என்னுதல் –
இயத்தா ராஹித்யத்தாலே சொல்ல மாட்டேன் என்னுதல் அல்லது அர்த்தங்களில் அவிசதமாய் இருப்பது ஓன்று உண்டாய் சொல்லுகிறார் அல்லர்
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
கீழ்ச் சொன்ன பூமி என்கோ என்கிறதின் காரியமாய் -அதனுடைய காடின்யம் திரண்டால் போலியாய் -பூமிக்கு தாயகமான பர்வதங்கள் என்பேனோ
மேவு சீர் மாரி என்கோ!
திகழும் தண் பரவையினுடைய கார்யம் -வடிவு அழகாலும் குளிர்த்தியாலும் எல்லாராலும் மேவப்படும் ஸ்வபாவத்தை உடைய மேகம் என்பேனோ
இவருக்கு இரண்டு ஒரு காரியமாக இருக்கிறது இ றே திருமேனிக்கு போலியாய் இருக்கையாலே
விளங்கு தாரகைகள் என்கோ!
தீ என்கோ என்கிறதன் கார்யம் –விளக்கத்தை உடைய நக்ஷத்ராதிகள் –
நாவியல் கலைகள் என்கோ!
வாயு என்கோ என்கிறதன் கார்யம் -நாவால் இயற்றப் பட்ட சதுஷ்ஷட்டி கலைகள் –
வாயு கார்யம் -பிரயத்தனம் -பிரயத்தன அபிவியங்கம் இ றே வித்யை -ஆகையால் சொல்லுகிறது –
ஞான நல் ஆவி என்கோ!
நிகழும் ஆகாசம் என்றதன் கார்யம் -ஞானத்துக்கு சாதனமான சப்தம் –ஆவி என்று லக்ஷணையால் சரீரத்தை சொல்லுகிறது
ஞான சரீரம் என்று ஞான சாதனமான சப்தத்தை சொல்லுகிறது
குண வாசி சப்த்தத்தாலே குணியை நினைக்கிறது
நல்லாவி என்று இந்திரியங்களை வியாவ்ருத்திக்கிறது
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பரந்த குணங்களை உடைய கிருஷ்ணன்
பங்கயக் கண்ண னையே.–
தன் கண் அழகால் என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனை –

—————————————————————————————————-

அசாதாரணமான விக்ரகத்தை அனுபவிக்கிறார் -விபூதியின் நடுவே திவ்ய மங்கள விக்கிரகத்தை சொல்லுகிறது –
விபூதியும் திருமேனியோபாதி தகுதியாய் இருக்கும் என்னும் இடம் தோற்றுகைக்காக –

பங்கயக் கண்ணன் என்கோ!
பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ!
அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ!
திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ
சாதி மாணிக்கத்தையே!–3-4-3-

பங்கயக் கண்ணன் என்கோ!
கிட்டினாரோடு முதல் உறவு பண்ணும் கண்
பவளச் செவ் வாயன் என்கோ!
கண் அழகிலே துவக்கு உண்டாரை ஆதரித்து ஸ்மிதம் பண்ணும் போதை திரு அதரத்தின் பழுப்பை அனுபவிக்கிறார் –
அங் கதிர் அடியன் என்கோ!
நோக்குக்கும் முறுவலுக்கும் தோற்றார் விழும் திருவடிகள் –
அஞ்சன வண்ணன் என்கோ!
திருவடிகளில் விழுந்தார்க்கு அநு பாவ்யமாய் -சிரமஹரமாய் ஸூபாஸ்ரயமான வடிவு
செங் கதிர் முடியன் என்கோ!
அனுபவிக்கிற விஷயம் பிராப்தமுமாய் சர்வாதிகமுமாய் இருக்கிற படியை கோள் சொல்லித் தருகிற திரு அபிஷேகம் -செம்மை -அழகு
திரு மறு மார்பன் என்கோ!
அவன் ஸ் வா தந்தர்யத்தைக் கண்டு அகல வேண்டாத படியான லஷ்மீ சம்பந்தத்தை சொல்லுகிறது
திருவையும் மறுவையும் உடைய மார்பை உடையவன்
சங்கு சக்கரத்தின் என்கோ
இவர்கள் சேர்த்திக்கு என் வருகிறதோ என்று பயப்பட வேண்டாத படி ஆழ்வார்களை உடையவனை
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்னா
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு என்னக் கடவது இ றே
சாதி மாணிக்கத்தையே!–
ஆகரத்தில் பிறந்ததாய் பெரு விலையனான ரத்னம் போலே சிலாக்கியமான திரு மேனியை உடையவன்
நிர்த்தோஷமாய் சகஜமான அழகை உடையவன் என்கை –

————————————————————————————————-

தேஜோ விசிஷ்டமான மாணிக்யாதி பதார்த்தங்களை விபூதியாக உடையனான படியைப் பேசுகிறார்
வேதாந்த வ்யுத்பத்தி பிறந்தால் -யத்யத் விபூதிமத் சத்தவம் ஸ்ரீமதூர்ஜ் ஜிதமேவ வா -என்கிறபடியே
ஸ்வ தந்திரம் அன்றிக்கே சகல பதார்த்தங்களும் அவனுக்கு விபூதியாகத் தோற்றுகையாலே அருளிச் செய்கிறார் –

சாதி மாணிக்கம் என்கோ!
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ!
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ!
ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை
அச்சுதன் அமலனையே.–3-4-4-

சாதி மாணிக்கம் என்கோ!
ஆகாசத்தில் பிறந்த மாணிக்கம் என்பேனோ
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
புகர் விஞ்சின பொன் என்பேனோ -நீர்மை மிக்க முத்து என்பேனோ
சாவி என்று பொன்னிலே யான போது புகராய் -முத்திலே ஆனபோது நீர்மையாய் கடவது –
சாதி நல் வயிரம் என்கோ!
ஆகரத்தில் பிறந்த நன்றான வைரம்
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
விச்சேதம் இல்லாத நன்றான விளக்கம் என்பேனோ –
விளக்கம் என்று அந்த தீபத்தின் உடைய பிரகாச அம்சத்தை சொல்லிற்று ஆகவுமாம்
ஆதி அம் சோதி என்கோ!
ஜகத் காரணமாய் நிரவதிக தேஜோ ரூபமான பரமபதம் –
காரியாணாம் காரணம் பூர்வம் -அத்யாக்கா நல தீபம் –
ஸ்ரீ கௌஸ்துபத்தைப் பற்றி ஜீவ சமஷ்டியும்-ஸ்ரீ வத்ஸத்தைப் பற்றி அசேதனமும் கிடைக்கும் என்கிற
அஸ்திர பூஷண அத்யாய க்ரமத்தாலே திருமேனியைச் சொல்லிற்று ஆகவுமாம்
ஆதி அம் புருடன் என்கோ!
சர்வ காரணமாய் அத்தேசத்திலே எழுந்து அருளி இருக்கிற புருஷோத்தமன்
ஆதும் இல் காலத்து எந்தை
எனக்கு ஒரு துணை அல்லாத சம்சார அவஸ்தையில் தன்னோடே உண்டான சம்பந்தத்தை அறிவித்தவன்
அச்சுதன் அமலனையே.
என்னை நழுவ விடாதவன்
இந்தச் செயல் ஒரு பிரயோஜனத்துக்காக அன்றிக்கே தன் பேறாகச் செய்தவன்
அன்றிக்கே பிரளய காலத்தில் தன் ஸ்வாமித்வ ப்ராப்தியாலே இவை நழுவாமே தன் மேல் ஏறிட்டுக் கொண்டு நின்று
தத்கத தோஷை அச்மஸ்ப்ருஷ்டனாய் நிற்கிறவன் என்றுமாம் –

———————————————————————————————-

ரஸவத் பதார்த்தங்கள் அவனுக்கு விபூதி என்கிறார் –

அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மா மருந்தம் என்கோ!
நலம்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!
கனி என்கோ! பால்என் கேனோ!–3-4-5—

அச்சுதன் அமலன் என்கோ!
அச்சுதன் என்கிறது பரமபதத்தில் இருப்பை –
அமலன் ஹேய ப்ரத்ய நீகனாய் கல்யாண குணகனாய் இருக்கும் என்கை –
அடியவர் வினை கெடுக்கும்
தன் பக்கலிலே நிஷிப்பத பரராய் இருப்பார் உடைய சகல துரிதங்களையும் போக்குபவன்
தூரஸ்தன் என்று கூசாதே விசுவசிக்கலாம் படி மடுவின் கரையில் ஆனைக்கு வந்து உதவுகை
நச்சு மா மருந்தம் என்கோ!
நச்சப்படும் மஹா ஒளஷதம்
மா மருந்தம் -வியாதியின் அளவு இன்றிக்கே இருக்கை-அபத்ய ஸஹமான ஒளஷதம் –
நலம்கடல் அமுதம் என்கோ!
கடைய வேண்டாதே-கடலிலே கிடக்கிற அமுதம்
அச்சுவைக் கட்டி என்கோ!
கீழ்ச சொன்ன அம்ருதத்தின் சுவையை உடைய கருப்புக் கட்டி
அறுசுவை அடிசில் என்கோ!
ஷட்ரஸ யுக்தமான அடிசில்
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!
சுவையை உடைய ணெய் என்பேனோ -சுவையை உடைத்தான் மது என்பேனோ
கனி என்கோ! பால்என் கேனோ!–
கனி – ஓர் அவஸ்தையில் ரசிக்குமது
பால் -நை சர்க்கிகமான ரசம் –

————————————————————————————-

வேதம் தொடக்கமான இயலும் இசையுமான சப்த ராசியை விபூதியாக உடையனாய் இருக்கிற படியை பேசுகிறார் –

பால் என்கோ! நான்கு வேதப்
பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி
இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க
பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ

பால் என்கோ!-
முன்புத்தை ரசம் பின்னாட்டுகிற படி
நான்கு வேதப்பயன் என்கோ!
பிரமாண ஜாதத்தில் சார பூதமான நாலு வேதம்
சமய நீதிநூல் என்கோ!
வைதிக சமயத்துக்கு நிர்வாஹகமான சாஸ்திரம் -வேத உப ப்ரும்ஹணமான இதிஹாச புராணாதிகள்
நுடங்கு கேள்வி-இசை என்கோ!
ஸ்ரவண மாத்திரத்திலே ஈடுபடுத்த வல்ல இசை
இவற்றுள் நல்ல-மேல் என்கோ!
இவற்றிலும் வி லக்ஷணமான போக்யம் என்பேனோ
வினையின் மிக்க-பயன் என்கோ!
அல்ப யத்னத்தாலே நிரதிசய பலத்தை தருமது என்பேனோ
சாதன ரூபமான யத்னத்து அளவில்லாத அதி மாத்ர பலம் என்பேனோ
மித்ர பாவம் அடியாக யாவதாத்ம பாவியான அநுபவித்தை தரும் என்கை –
கண்ணன் என்கோ!
உனக்கு நான் உளேன் -மா ஸூ ச –நீ சோகியாதே கொள்-என்னுமவன் என்பேனோ
மால் என்கோ!
ஆச்ரித விஷயத்தில் வ்யாமுக்தன் என்பேனோ
மாயன் என்கோ
தூத்ய சாரத்யங்கள் பண்ணும் ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடையவன் என்பேனோ
வானவர் ஆதி யையே.–
ப்ரஹ்மாதிகளுக்கும் சத்தா ஹேது வானவனை –
தன் சத்தை ஆச்ரித அதீனையாய் இருக்கும் என்கை –

——————————————————————————–

ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்கள் எல்லாவற்றையும் விபூதியாய் உடையனாய் இருக்கிற படியை பேசுகிறார் –

வானவர் ஆதி என்கோ!
வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ!
வானவர் முற்றும் என்கோ!
ஊனம்இல் செல்வம் என்கோ!
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம்இல் மோக்கம் என்கோ
ஒளிமணி வண்ண னையே!–3-4-7-

வானவர் ஆதி என்கோ!
நித்ய ஸூ ரிகளுக்கு சத்தா ஹேது என்பேனோ
வானவர் தெய்வம் என்கோ!
அவர்களுக்கு சூட்டு நன் மாலை படையே ஆராத்யன் என்பேனோ
வானவர் போகம் என்கோ!-வானவர் முற்றும் என்கோ!-
அவர்களுக்கு உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் ஆனவன்
முற்றும் -அனுக்தமான சர்வவித பந்துவும்
ஊனம்இல் செல்வம் என்கோ!
அனஸ்வரமான சம்பத்து
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
த்வம்ச என்னாதே ஆகல்பாவ சானமான சுவர்க்கம்
ஊனம்இல் மோக்கம் என்கோ
ஆத்ம அனுபவம் மாத்திரம் அன்றிக்கே பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷம்
ஒளிமணி வண்ண னையே!
சிலாக்கியமான மணி போலே இருக்கிற திரு நிறத்தை உடையவனை
வி லக்ஷணமான அழகை உடையவன் என்கை
கீழ்ச சொன்னவையோடே இவ்வழகோடு வாசி யற அனுபவிக்கிறார் –

————————————————————————————–

பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளை விபூதியாக உடையானுடைய படியை அருளிச் செய்கிறார் –

ஒளி மணி வண்ணன் என்கோ!
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ!
நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
கண்ணனை மாயனையே.–3-4-8-

ஒளி மணி வண்ணன் என்கோ!
கீளில் வடிவு அழகு பின்னாடுகிற படி
ஒருவன் என்று ஏத்த நின்ற
தம பிரசுரராய் இருப்பார் அத்விதீயன் என்று ஏத்தா நின்றால்-தான் ஈஸ்வரனாக பிரமித்து ஆசிரயணீயனாய் இருக்கும் –
நளிர் மதிச் சடையன் என்கோ!
அது பிரமம் என்னும் இடத்தைக் காட்டுகிறது -சாதக வேஷமும் -போக ப்ராதான்யமும் -நளிர் மதி -குளிர்ந்த சடையன்
நான் முகக் கடவுள் என்கோ!
அவனுக்கு ஜனகனான சதுர்முகனான தைவம்-
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்-படைத்து அவை ஏத்த நின்ற
கிருபையை உகந்து -ஸ்ருஷ்ட்யாதி ரக்ஷணத்தை உகந்து –
லோகத்தை எல்லாம் ஸ்ருஷ்டித்து -அந்த ஸ்ருஷ்ட்டி பிரயோஜனம் பெற்று அவர்கள் ஏத்தும் படி நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்-
தேனையையும் மலரையும் உடைய திருத்த துழாயாலே அலங்க்ருதனாய் -அத்தாலே என்னை அநந்யார்ஹன் ஆக்கினவன்-களி -தேன்
கண்ணனை மாயனையே.–
எத்திறம் என்று மோஹிக்கும் படியான ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடைய கிருஷ்ணனை –

———————————————————————————————

நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே-என்று அவன் படிகள் என்னால் பேச முடியாது
கார்ய காரண உபய அவஸ்தமான சகல சேதன அசேதனங்களும் அவனுக்கு விபூதி என்று
பிரயோஜகத்தில் சொல்லலாம் அத்தனை என்கிறார் –

கண்ணனை மாயன் றன்னைக்
கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை
அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
யாவையும் எவரும் தானே.–3-4-9-

கண்ணனை மாயன் றன்னைக்
ஸுலப்யமும்-ஆச்சர்ய குண சேஷ்டிதங்களும் பின்னாடுகிற படி
கடல் கடைந்து அமுதம் கொண்ட-அண்ணலை –
ஷூத்ர பிரயோஜனத்தை அபேக்ஷித்தார்கள் என்னாதே உடம்பு நோவ கடல் கடைந்து அவர்கள் பிரயோஜனத்தை கொடுக்கும் ஸ்வாமியை
அச்சு தன்னை
அநந்ய பிரயோஜனராய் கிட்டினாரை துக்க சாகரத்தில் நழுவ விடாதவனை
அனந்தனை
ஸ்வரூப ரூப குணங்களுக்கு எல்லை இல்லாதவனை
அனந்தன் றன்மேல்-நண்ணி நன்கு உறைகின்றானை
அபரிச்சின்னனான தன்னையும் விளாக்குலை கொள்ள வல்ல அவன் மேலே கிட்டி நாய்ச்சிமாறாலும் எழுப்ப ஒண்ணாதபடி கண் வளர்ந்து அருளுகிறவனை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
ஆபத்து கண்டால் படுக்கையில் பொருந்தாதே ரக்ஷிக்கும் சர்வேஸ்வரனை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
இவன் படிகளுக்கு என்னால் பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது
யாவையும் எவரும் தானே.–
சேதன அசேதனங்கள் உடையான் என்று பிரயோஜகத்தை சொல்லலாம் அத்தனை -என்கிறார் –

————————————————————————————————–

சேதன அசேதனங்களுக்கு அந்தராத்மா தயா வியாபித்து நின்றால் தத்கத தோஷை அச்மஸ்ப்ருஷ்டனாய் இருக்கும் –

யாவையும் எவரும் தானாய்
அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும்
சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்,
அவனையும் கூட லாமே.–3-4-10-

யாவையும் எவரும் தானாய்-அவர் அவர் –
சகல சேதன அசேதனங்களுக்கு அந்தராத்மாவாய் அவற்றினுடைய துக்கித்தவ பரிணாமித்வங்கள் தட்டாத படி யாய் இருக்கிறவன் –
சமயந் தோறும்-தோய்வு இலன்;
அசித்துக்கு பரிணாமித்வமும்-தத் ஸம்ஸ்ருஷ்ட சேதனனுக்கு துக்கித் வாதிகளும் வியவஸ்திதம் என்கை
புலன் ஐந்துக்கும்-சொலப்படான்;
சஷூராதி கரணங்களுக்கு விஷயமாகச் சொல்லப் படான் -அவற்றால் அறியப் படான் என்கை –
உணர்வின் மூர்த்தி;
ஞான ஸ்வரூபன்
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆவி என்று சரீரம் -அத்தோடு சேர்ந்த ஆத்மாவில் சரீரத்தில் உண்டான பரிணாமித்வாதி தோஷங்கள் தட்டாது என்கிற
விவேக அனுசந்தானம் ஆத்மாவின் பக்கலிலே கூடுமாகில் –
உள்ளால்-உள்–ஆல்-அசை-உள் -உள்ளே
ஆதும் ஓர் பற்று இலாத
ஏதேனும் ஒரு தொற்று இல்லாத
பாவனை அதனைக் கூடில்,
அதனை -ஆத்மாவை -ஆத்மாவின் பக்கலிலே என்றபடி
அவனையும் கூட லாமே.–
அசித் கத பரிணாமாதிகளும் -சேதன கதமான துக்கத்வாதிகளும் தட்டாது என்கிற இதுவும் சர்வேஸ்வரன் பக்கலிலே கூடலாம்
இப்பாட்டில் பக்தி உடையோருக்கு அவனைக் கிட்டலாவது என்கிறார் என்பாரும் உண்டு –
இதர விஷய சங்கம் அற்றார்க்கு அவனைக் கிட்டலாவது என்கிறார் என்பாரும் உண்டு
அந்திம ஸ்ம்ருதி உடையோருக்கு கிட்டலாம் என்பாரும் உண்டு
சர்வாத்ம பாவம் சொல்லி நிற்கையாலே அவற்றின் பக்கல் தோஷம் தட்டாதான் ஒருவன் என்னும் இடம்சொல்ல வேணும்-
அத்தை சொல்லுகிறது என்பர் எம்பெருமானார் –

—————————————————————————————————

இப்பத்தைக் கற்றவர்கள் நித்ய கைங்கர்யத்தை பெற்று நித்ய ஸூ ரிகளால் விரும்பப் படுவர் -என்கிறார் –

கூடிவண்டு அறையும் தண்தார்க்
கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில் குருகூர்
வண்சட கோபன் சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள்
இவையும்ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி
விரும்புவர் அமரர் மொய்த்தே.–3-4-11-

கூடிவண்டு அறையும் தண்தார்க்-கொண்டல்போல் வண்ணன் றன்னை-
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே வண்டுகள் திரண்டு மது பானம் பண்ணி த்வநிக்கிற தோள் மாலையையும்
வர்ஷூக வலாகஹம் போலே சிரமஹராமான வடிவையும் உடையவனை யாய்த்து கவி பாடிற்று
கீழ்ச் சொன்ன விபூதி தோள் மாலையோ பாதி தகுதியாய் இருக்கும் என்றதாய்த்து
மாடுஅலர் பொழில் குருகூர்-வண்சட கோபன் சொன்ன
பர்யந்தம் ஆடிய அலர்ந்த பொழிலை உடைய திரு நகரி
பாடல்ஓர் ஆயி ரத்துள்-
பாடல் கானம் -புஷபம் பரிமளத்தோடே அலருமா போலே இசை முன்னாகத் தோற்றின ஆயிரம்
இவையும்ஓர் பத்தும் வல்லார்-வீடுஇல போகம் எய்தி
விச்சேதம் இல்லாத கைங்கர்ய போகத்தை பெற்று
விரும்புவர் அமரர் மொய்த்தே.
நித்ய ஸூ ரிகள் சூழ்ந்து கொண்டு ஆதரிக்கும் படி ஆவர்
ததீயத்வ ஆகாரேண லீலா விபூதியை அநுஸந்திக்குமது தங்களதே யாகையாலே இங்கேயே இருந்து இவ் வனுசந்தானம் உடையார் சென்றால் ஆதரிப்பார்கள் –

——————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -94- திருவாய்மொழி – -4-5-1….4-5-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

May 30, 2016

மேல் திருவாய்மொழியிலே அப்படி விடாய்த்தவர், ‘இனி என்ன குறை எழுமையுமே?’ என்னப் பெறுவதே!
உன்மச்தக ப்ரீதி அப்ரீதி மாறி மாறி வருமே -இந்த இரண்டு திருவாய்மொழிக்கும் ஏற்றம் என் என்னில் –
மேல் ‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கிக் ‘கோவைவாயாள்’ என்ற திருவாய்மொழி முடிய,
‘மண்ணையிருந்து துழாவி’ என்னுந் திருவாய்மொழியில் உண்டான விடாய்க்குக் கிருஷி செய்தபடி.
அப்படி விடாய்க்கும்படி செய்த கிருஷியின் பலம் சொல்லுகிறது இத்திருவாய்மொழியில்.
‘பேற்றுக்கு இதற்கு -பல்லாண்டு பாடுவதற்கு மேல் என்றபடி -அவ்வருகு சொல்லலாவது இனி ஒன்று இல்லை.
‘அங்குப் போய்ச் செய்யும் அடிமைகளை இங்கே இருந்தே செய்யும்படி தன் சொரூபம் முதலானவைகளைத் தெளிவாகக் காட்டிக்
கொடுத்தானாகையினாலே,அவ்வருகு சொல்லலாவது இல்லை,’ என்றபடி.
அவ்வர்ச்சிராதி கதியைப்பற்றிப் பேசுகின்ற-‘சூழ்விசும்பு அணி முகில்’ என்ற திருவாய்மொழிக்குப் பின்
இத்திருவாய்மொழியாகப் பெற்றது இல்லையே!’ என்று அருளிச்செய்வர் நஞ்சீயர்.
-நம்மாழ்வார் மங்களா சாசனப் பதிகம் இது –
( பல்லாண்டு என்று பரமேஷ்ட்டியை -என்று நிகமத்தில் பெரியாழ்வார் அருளிச் செய்தலால் அது அங்கு சென்று
பெற்ற பேறு என்பதில் சங்கை இல்லையே -ஆகையால் இதுவும் சூழ் விசும்புக்கு அப்புறம் இருக்க வேண்டும் என்றார் ஆயிற்று )

பெருமாளும் இளைய பெருமாளுமான இருப்பிலே பிராட்டிக்குப் பிரிவு உண்டாக, மஹாராஜரையும் சேனைகளையும் கூட்டிக்கொண்டு
சென்று பகைவர்கள் கூட்டத்தைக் கிழங்கு எடுத்து அவளோடே கூடினாற்போலே, போலி கண்டு இவர் மயங்கின இழவு எல்லாம் போகும்படி,
நித்திய விபூதியையும் லீலா விபூதியையுமுடையனாய் இருக்கின்ற தன் படிகள் ஒன்றும் குறையாதபடி கொண்டு வந்து காட்டிக் கொடுத்து,
‘கண்டீரே நாம் இருக்கின்றபடி?
இந்த ஐசுவரியங்களெல்லாம் ஒன்றாய்த் தலைக்கட்டுவது, நீர் உம்முடைய வாயாலே ஒரு சொல்லுச் சொன்னால் காணும்,’ என்று
இவர் திருக்கையிலே தாளத்தைக் கொடுக்க, அவ்விருப்புக்கு மங்களாசாசனம் பண்ணி,
‘இவ்வுலகம் பரமபதம் என்னும் இரண்டு உலகங்களிலும் என்னோடு ஒப்பார் இலர்,’ என்று மிக்க பிரீதியையுடையவர் ஆகிறார்.

ஆழ்வார் விடாய் கொண்டமைக்குப் பெருமாளைத் திருஷ்டாந்தமாக்கினாற்போலே, விடாய் தீர்ந்தமைக்கும் பெருமாளைத்
திருஷ்டாந்தமாக்குகிறார் இங்கு. என்றது, இச் சேர்த்தியைச் சேர்த்து வைக்கின்றவர்கள் கூட இருக்கச் செய்தே பிரிகையும்,
போலி கண்டு மயங்குகையும், தக்க பரிகரத்தைக்கொண்டு பரிஹரிக்கையும்,
இரண்டு இடங்களிலும் உண்டு ஆகையாலே, திருஷ்டாந்த தார்ஷ்டாந்திக பாவத்தைத் தெரிவித்தபடி.
அங்கு, அச்சேர்த்திக்குக் கடகர் இளைய பெருமாள்; இங்கு, நித்தியசூரிகள்;
அங்கு மிருகத்தின் போலி; இங்கு அவன் போலி.
அங்குப் பரிகரம் மஹாராஜர் முதலானோர்;
இங்கு யாதோர் ஆகாரத்தைக் கண்டு மயங்கினார், அந்த ஆகாரத்தோடு கூடிய வேஷத்தைக் காட்டுகை.
அங்குப் பிராட்டியோடு கூடிச் சந்தோஷித்தாற்போலே இவர் திருக்கையிலே தாளத்தைக் கொடுக்க,
இவரும் சந்தோஷித்து மங்களாசாசனம் பண்ணுகிறார்-என்க.

நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமால்’ ஆக மயங்கின மயக்கத்திற்கு வான மாமலையான தன்னைக் காட்டிக்கொடுத்தான்;
‘நீறு செவ்வே இடக்காணில் நெடுமால் அடியார் என்று’ மயங்கி ஓடினதற்கு,
‘தூவி அம்புள் உடையான் அடல் ஆழி அம்மான்’ என்கிற நித்திய புருஷர்களைக் காட்டிக்கொடுத்தான்;
‘செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தி ஈது’ என்றதற்கு,
‘மைய கண்ணாள் மலர்மேல் உறைவாள் உறைமார்பினன்’ என்று தானும் பெரிய பிராட்டியாருமாய் இருக்கிற இருப்பைக் காட்டிக்கொடுத்தான்;
‘திருவுடை மன்னரைக் காணில் திருமால்’ என்றதற்கு, உபய விபூதிகளையுடையனான தன் ஐசுவரியத்தைக் காட்டிக்கொடுத்தான்;
‘விரும்பிப் பகவரைக் காணில், வியலிடம் உண்டான்’ என்று சிறிய ஆனந்தமுடையாரைக் கண்டு மயங்கினவர்க்கு,
‘வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்’ என்று ஆனந்தமயனாய் இருக்கிற இருப்பைக் காட்டிக்கொடுத்தான்;
பிறர் வாயால் ‘என் செய்கேன்’ என்றதைத் தவிர்த்து, தம் திருவாயாலே ‘என்ன குறை எழுமையுமே’ என்னப் பண்ணினான்.

——————————————————————————————

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

சமஸ்த லோக நிர்வாகன் -பல்லாண்டு பாடப் பெற்ற தமக்கு எக்காலமும் குறை இல்லையே -என்கிறார்
வீற்றிருந்து -விலஷணன் -வேற்றுமை தோற்ற வீற்று இருந்து -சர்வ ஆதாரத்வ -சர்வ நியந்த்ருத்வ –
சர்வ சேஷித்வ -சர்வ வியாபகத்வ -இவற்றால் –
பக்தன் -விசுத்த முக்தன் -நித்யர் விட புருஷோத்தமன் –
கண்டவாற்றால் தனதே உலகு என்று நிற்பான் –
திவ்ய விபூதியில் திவ்ய பர்யங்கத்தில் தர்மாதி பீடம் -இருந்து
ஏழுலகும் தனிக்கோல் செல்ல, -லீலா விபூதி நாயகத்வம் -வியக்த -அவ்யக்த- கால ரூபமாய்
-சுத்த சத்வ ரூபம் சதுர்வித அசேதன ரூபம் -காரண கார்ய ரூபேண அங்கும் இங்கும் –
சுத்த திவ்ய கோபுரம் மண்டபம் -அங்கு -பிரகிருதி காரணம் -மகான் -பிருத்வி காரணம் இங்கு
பக்த முத்த நித்ய த்ரிவித-சேதனர் -ஏழு வகை
அசஹாய -செங்கோல் ஒன்றே கொண்டு ஆளுகிறான் -சங்கல்ப ரூபமான அத்விதீயமான –
வீவு இல் சீர்-நித்ய விபூதி நாயகத்வம் -அப்ரதிகதமான தடங்கல் இல்லாத பண்ண முடியாத–
ஞான சக்த்யாத் கல்யாண குணா கணன்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை-மஹத்தால் வந்த உத்ரேக ரஹிதமாய்-முக்குறும்பு இல்லாமல் –
சாந்தியால் வந்த ஆற்றல் இவனுக்கு -பிரசாந்த ஆத்மா -ஆழ்கடலில் உள்ள பரம சாந்தி –
ஸ்வா பாவிகம் -ஸ்வரூப வைபவம்
சர்வ சுவாமி
வெம்மா பிளந்தான்றனை–கேசி ஹந்தா -ரஷணத்துக்கு உதாரணம் –
செம்மையே நிரூபகம் இவனுக்கு வெம்மையே நிரூபகம் இதுக்கு
நாரதர் -பயப்பட -ஜகத் அஸ்தமிக்கும் -பார்த்தால் கேசி அஸ்தமிக்க
ரஷநீய வர்க்கத்துக்கு விரோதி அன்றோ -செற்றார் திறல் அழிய -இடையர் கண்ணனுக்கு எதிரி
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா -பாகவத விரோதிகள் -செற்றார் த்வயம்
குதிரை -கைம்மா யானை -இரு கூறாக விடும்படி -பில த்வாரம் –
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது-பலபடிகளாலும் போற்றி -மங்களா சாசனம் பண்ணி
விண்ணைத் தொழுத ஆகாசம் பார்த்து -பசி உடன் அங்கு
இங்கு ஆர தொழுது -கையும் பசிக்குமே -முடியானே -பார்த்தோம்
அஞ்சலி பண்ணி
,சொல் மாலைகள் ஏற்ற நோற்றேற்கு -சப்த சந்தர்ப்ப ரூபமான -சிரசா வஹிக்கும் படி -சமர்ப்பிக்கைக்கு
நோற்றேன் -விதி வாய்க்கின்றது காப்பார் யார்
பெருமாள் கிருபை -நிர்ஹேதுகம் -இதுவே ஆழ்வாருக்கு புண்ணியம்
இனி என்ன குறை எழுமையுமே-ஏழு ஜன்மங்களிலும் போற்றிக் கொண்டே இருப்பேன் -இனி என்ன குறை –
மனத்திடை வைப்பதாம் மாலை –அதிகாரி ஸ்வரூபம் ஏரி வெட்டுவது -உபாயம் இல்லையே –
சப்த சப்த சப்தச -சரீர விமோசன தேச பிராப்தி குறைகள் இல்லை -நித்ய விபூதி அனுபவம் இங்கேயே உண்டே
பாலர் போலே இப்படி பேசுவார் -பக்தர் மௌக்த்யம் கண்டு ஆனந்திப்பான் –
பதட்டுத்துக்கு மயங்குவான் -ப்ரபன்ன ஜன கூடஸ்தர் ஆகிறார் இத்தால்

‘வேறுபாடு தோன்ற இருந்து ஏழுலகங்களிலும் ஒரே கோல் செல்லும்படியாகப் பொறுமை மிகுந்து ஆளுகின்ற அழிதலில்லாத
கல்யாண குணங்களையுடைய அம்மானும், கொடிய கேசி என்னும் அசுரனது வாயைப் பிளந்தவனுமான சர்வேசுவரனைப்
‘போற்றி போற்றி’ என்று சொல்லிக்கொண்டே கைகள் வயிறு நிறையும்படி தொழுது சொற்களாலாகிய மாலைகளை
அவன் தலைமேல் தாங்கும்படி பாட வல்ல புண்ணியத்தையுடைய எனக்கு
இனி ஏழேழ்படிகாலான பிறவிகள் வரக்கூடியனவாக இருந்தாலும்,
என்ன குறை இருக்கின்றது? ஒரு குறையும் இன்று,’ என்றவாறு.
வி-கு : ‘ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருந்து ஆற்றல் மிக்கு ஆளும் வீவில்சீர் அம்மான்’ என்க.
‘வீ’ என்பதற்கு ‘அழிதல்’ என்பது பொருள்.
‘போற்றி – பரிகாரம்’ என்பர் நச்சினார்க்கினியர். ‘போற்றி -பாதுகாத்தருள்க;
இகரவீற்று வியங்கோள்’ என்பர் அடியார்க்கு நல்லார்.
‘இனி எழுமையும் என்ன குறை?’ என மாறுக. எழுமையும் – ‘எப்பொழுதும்’ என்னலுமாம்.
இத்திருவாய்மொழி கலித்துறை என்னும் பாவகையில் அடங்கும்.

‘சர்வேசுவரனாய் வைத்து அடியார்களைக் காப்பாற்றுவதற்காக மனிதர் கதியில் வந்து அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணனைக் கவி
பாடப் பெற்ற எனக்கு நாளும் ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.

வீற்றிருந்து –
வீற்று என்று வேறுபாடாய், தன் வேறுபாடு அடங்கலும் தோற்ற இருந்து.
ஈண்டு ‘வேறுபாடு’ என்றது, தன்னினின்று வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தனக்கு அடிமையாகத் தான்
இறைவன் ஆகையாலே வந்த வேறுபாட்டினை. இங்ஙன் அன்றாகில்,
ஒன்றற்கு ஒன்று வேறுபாடு எல்லாப் பொருள்கட்கும் உண்டே அன்றோ?
ஆதலால், இங்கு ‘வேறுபாடு’ என்றது, உயர்த்தியால் வந்த வேறுபாட்டினையே என்க.
எல்லா ஆத்துமாக்களுக்கும் ஞானமே வடிவமாய் இருப்பதாலே, அவனோடு ஒப்புமை உண்டாயிருக்கச் செய்தேயும்,
எங்கும் பரந்திருத்தல், எல்லாப்பொருள்கட்கும் இறைவனாயிருத்தல்,
எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாயிருத்தல் ஆகிய
இவை அந்தச் சர்வேசுவரன் ஒருவனிடத்திலேயே கிடக்குமவை அல்லவோ?’
தன்னை ஒழிந்தார் அடையத் தனக்கு அடிமை செய்யக்கடவனாய், தான் எங்கும் பரந்திருப்பவனாய்,
ஆகாசம் பரந்திருத்தலைப் போல அன்றிக்கே,
ஜாதி பொருள்கள் தோறும் நிறைந்திருக்குமாறுபோலே இருக்கக்கடவனாய், இப்படிப் பரந்திருத்தல் தான் ஏவுவதற்காக அன்றோ?
இவ்வருகுள்ளாரை அடையக் கலங்கும்படி செய்யக்கூடியவைகளான அஞ்ஞானம் முதலானவைகள்-
தர்மாதீ பீடம் ஞான அஜ்ஞ்ஞான –தர்ம அதர்ம –வைராக்ய -அவைராக்ய –ஐஸ்வர்யம் அநஸ்வர்யம்-எட்டு கால்கள் –
முழுதும் தன் ஆசனத்திலே கீழே அமுக்குண்ணும்படி அவற்றை அதிஷ்டித்துக்கொண்டு இருக்கும் படியைத் தெரிவிப்பார்,
‘இருந்து’ என்கிறார்.
அன்றிக்கே, ‘தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களையும் உடையவன் ஆகையால்
வந்த ஆனந்தம் தோற்ற இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது’ என்னுதல்.

ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல –
சுற்றுப்பயணம் வந்து உலகத்தையெல்லாம் நிர்வாகம் செய்கையன்றிக்கே, இருந்த இருப்பிலே
உலகமடையச் செங்கோல் செல்லும் படியாக ஆயிற்று இருப்பது. ‘ஏழ் உலகு’ என்று பரமபதமும் அதற்குக் கீழே உள்ள
உலகங்களுமான இரு வகை உலகங்களையும் சொல்லிற்றாதல்;
பரமபதத்திற்கு இப்பால் உள்ள உலகங்கள் மாத்திரத்தைச் சொல்லிற்றாதல். இரு வகையான உலகங்களையும் சொல்லும் போது
மூன்று வகையான ஆத்துமாக்களையும் நான்கு வகையான பிரகிருதியையும் சொல்லுகிறது.
நான்கு வகையான பிரகிருதிகளாவன : காரிய காரண உருவமான இரு வகைப்பட்ட பிரிவுகள் அங்கு;
இங்கும், அப்படியுண்டான இரு வகைப்பட்ட பிரிவுகள். லீலாவிபூதி மாத்திரத்தைச் சொன்னபோது,
கீழேயுள்ள உலகங்களையும் பூமியையும் கூட்டி ஒன்று ஆக்கி, பரமபதத்திற்கு இப்பாலுள்ள உலகங்களை ஆறு ஆக்கி,
ஆக ஏழையும் சொல்லுகிறது என்று கொள்க.

வீவு இல் சீர் –
அழிவில்லாத கல்யாண குணங்களைச் சொல்லுதல்; நித்தியமான பரமபதத்தைச் சொல்லுதல்.
ஆக, ‘ஏழ் உலகு’ என்பதற்கு உபயவிபூதிகளையும் என்று பொருள் கொண்டால், ‘
இங்கு வீவில்சீர்’ என்பதற்குக் கல்யாண குணங்கள் என்ற பொருளும்,
அங்கே, லீலாவிபூதியை மாத்திரம் கொண்டால், இங்கு நித்தியவிபூதி என்ற பொருளும்
கோடல் வேண்டும் என்பதனைத் தெரிவித்தபடி.

‘இப்படி உபயவிபூதிகளையுமுடையவனான செருக்கால் தன் பக்கல் சிலர்க்குக் கிட்ட ஒண்ணாதபடி இருப்பானோ?’ என்னில்,
‘அங்ஙனம் இரான்’ என்கிறார் மேல் : ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் –
‘ஸ்ரீராமபிரான் இராச்சியத்தை விநயத்தோடு கூடினவராய் நடத்துகையாலே இராச்சியத்தை உபாசித்தார்’ என்பது போன்று
‘செருக்கு அற்றவனாய் ஆளுகின்ற அம்மான்’ என்கிறார். என்றது,
வழி அல்லா வழியே வந்த ஐசுவரியமுடையவன் பிறர்க்குத் திரிய
ஒண்ணாதபடி நடப்பான் என்பதனையும், உடையவனுடைய ஐசுவரியமாகையாலே தகுதியாய்
இருக்கின்றமையையும் தெரிவித்தபடி.
அன்றிக்கே, ‘ஆற்றல்’ என்றது, வலியாய், ‘இவ்வுலகமனைத்தையும் நிர்வஹிக்கைக்கு அடியான
தரிக்கும் ஆற்றலைச் சொல்லுகிறது’ என்று சொல்லுவாரும் உளர்.
இனி, ‘அம்மான்’ என்பதற்கு, ‘எல்லாரையும் நியமிக்கின்ற தன்மையால் வந்த
ஐசுவரியத்தையுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.

வெம் மா பிளந்தான் தன்னை –
‘ஆற்றல் மிக்கு ஆளும்படி சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச் செய்யும்படி. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
இவ்வுலகங்கள் அனைத்தையம் உடையவன் ஆனால், இருந்த இடத்தே இருந்து,
‘தஹபச – கொளுத்து அடு’ என்று நிர்வஹிக்கையன்றிக்கே,
இவர்களோடே ஒரே சாதியையுடையனாய் வந்து அவதரித்து, இவர்கள் செய்யும் பரிபவங்களை அடையப் பொறுத்து,
களை பிடுங்கிக் காக்கும்படியைச் சொல்லுகிறது என்றபடி. சமந்தக மணி முதலியவைகளிலே பரிபவம் பிரசித்தம்;
‘நான் ‘பந்துக்களுக்கு இரட்சகன்’ என்பது ஒரு பெயர் மாத்திரமேயாய்,
இவர்களுக்கு அடிமை வேலைகளையே செய்துகொண்டு திரிகின்றேன்,’ என்றும்,
‘நல்ல பொருள்களை அனுபவிக்கும் அனுபவங்களில் பாதியைப் பகுத்திட்டு வாழ்ந்து போந்தேன்;
இவர்கள் கூறுகின்ற கொடிய வார்த்தைகளையெல்லாம் பொறுத்துப் போந்தேன்,’ என்றும் அவன் தானும் அருளிச் செய்தான்.

இனி, ‘வெம் மா பிளந்தான்றன்னை’ என்பதற்கு, ‘ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் யார்?’ என்றால்,
இன்னான் என்கிறது என்று அம்மங்கி அம்மாள் நிர்வஹிப்பர்.
கேசி பட்டுப்போகச் செய்தேயும் தம் வயிறு எரித்தலாலே ‘வெம்மா’ என்கிறார் இவர்.
‘நன்றாகத் திறந்த வாயையுடையவனும் மஹாபயங்கரமானவனுமான அந்தக் கேசி என்னும் அசுரன்,
இடியினாலே தள்ளப்பட்ட மரம் போலே
கண்ணபிரானுடைய திருக்கையாலே இரண்டு கூறு ஆக்கப்பட்டவனாய்க் கீழே விழுந்தான்,’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம்.
கேசி வாயை அங்காந்துகொண்டு வந்த போது, சிறு குழந்தைகள் துவாரம் கண்ட இடங்களிலே கையை நீட்டுமாறு போலே,
இவன் பேதைமையாலே அதன் வாயிலே கையை நீட்டினான்;
முன்பு இல்லாதது ஒன்றைக் கண்ட காட்சியாலே கை பூரித்துக் கொடுத்தது;
கையைத் திரும்ப வாங்கினான்; அவன் இருபிளவாய் விழுந்தான் என்பது.

போற்றி –
சொரூபத்திற்குத் தக்கனவாய் அன்றோ பரிவுகள் இருப்பன? கேசி பட்டுப் போகச் செய்தேயும்
சமகாலத்திற் போலே வயிறு எரிந்து படுகிறாராயிற்று இவர்.
என்றே – ‘நம’ என்று வாயால் எப்பொழுதும் சொல்லிக்கொண்டு இருக்கும்
தன்மை வாய்ந்தவர்களாய் இருப்பார்கள்,’ என்பது போன்று,
அன்று இவ்வுலகம் அளந்தான் போற்றி -ஆறு தடவை ஆண்டாள் போலே –
ஒருகால், ‘பல்லாண்டு’ என்றால், பின்னையும் ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்னுமத்தனை

கைகள் ஆரத் தொழுது –
‘வைகுந்தம் என்று கைகாட்டும்’ என்று வெற்று ஆகாசத்தைப் பற்றித் தொழுத கைகளின்
விடாய் தீர்ந்து வயிறு நிறையும்படி தொழுது.
சொல் மாலைகள் –
வாடாத மாலைகள். என்றது, ‘அநசூயை கொடுத்த மாலை போலே செவ்வி அழியாத மாலைகள்’ என்றபடி.
ஏற்ற –
‘ஆராதனத்தைத் தாமாகவே தலையாலே ஏற்றுக்கொள்ளுகிறார்’ என்கிறபடியே, திருக்குழலிலே ஏற்றும்படியாக.
நோற்றேற்கு –
இவர் இப்போது நோற்றாராகச் சொல்லுகிறது,
1- ‘மண்ணையிருந்து துழாவி’ என்னும் திருவாய்மொழியில் சொல்லப்பட்ட விடாயை;
முன் கணத்திலே நிகழ்வது ஒன்றேயன்றோ ஒன்றுக்கு ஏதுவாவது?
அன்றிக்கே,2-‘பகவானுடைய கிருபையை’ என்னலுமாம்.
கிருபை என்றுமே இருந்தாலும்–பூர்வ ஷண வர்த்தி இறே ஒன்றுக்கு ஹேது வாகும்–
அதனால் விடாய்த்தது அன்றோ என்கிறார் –

இனி என்ன குறை –
பரமபதத்திற்குச் சென்றாலும் தொண்டு செய்தலாலேயாகில் சொரூபம்;
அதனை இங்கே பெற்ற தனக்கு ஒரு குறை உண்டோ?
இங்கே இருந்தே அங்குத்தை அனுபவத்தை அனுபவிக்கப்பெற்ற எனக்கு ‘
அங்கே போகப் பெற்றிலேன்’ என்கிற குறை உண்டோ?
அங்கே போனாலும் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே அன்றோ?’ ‘இது எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்னில்,
எழுமையுமே –
முடிய நிற்குமவற்றை எவ்வேழாகச் சொல்லக்கடவதன்றோ?
‘கீழே பத்துப் பிறவியையும் தன்னையும் பரிசுத்தப்படுத்துகிறது’ என்றும்,
‘மூவேழ் தலைமுறையைக் கரை ஏற்றுகிறது’ என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது அன்றே?

‘பூவளரும்திரு மாது புணர்ந்தநம் புண்ணியனார் தாவள மான தனித்திவம் சேர்ந்து, தமருடனே
நாவள ரும்பெரு நான்மறை ஓதிய கீதமெலாம் பாவளரும் தமிழ்ப் பல்லாண் டிசையுடன் பாடுவமே.’- என்பது வேதாந்த தேசிகன் ஸ்ரீசூக்தி.

————————————————————————————————

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-

ஸ்ரீ யபதி -கடகர் உண்டே -மேன்மைக்கு அடியான லஷ்மி சம்பந்தம் –உடையவனை -என்னுடைய ஜகத் சம்பந்தியான
சகல கிலேசங்களைத் தீரும் படிக்கு புகழப் பெற்றேன்
மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்-அஸி தீஷணை -ஸ்வ பாவத்துக்கு மேல் மை தீட்டி
பிறந்த புகுந்த இரண்டையும் சொல்லி –அவன் வடிவு நிழல் இட்டது அடியாக -நீல மேக சியாமளன்
மார்பில் அமர்ந்தது இயற்க்கை -நித்ய யோகம் -அகலகில்லேன் இறையும் என்று
ஆபிரூப்யம் அபிஜாதம் இரண்டையும் சொல்லி பரிமளமே வடிவாகக் கொண்ட போக்யதையாயும்
நித்ய வாசம் செய்யும் நிரதிசய போக்ய பூதை-
செய்ய கோலத்தடங் கண்ணன் -அழகை உடைத்தாய் -பிரேம பாரவச்யத்தாலே விச்தீர்ணமான –
அவளை நோக்கி மேலும் சிவந்த கண்ணுக்கு விஷயாதீனம் இந்த பாசுரம் –
(ஒன்பதாம் பத்தில் திருமேனிக்கு விஷய ஆதீனம் உண்டே )
இவள் கண் அவன் கறுத்த மேனி பார்த்து -அவன் திருக்கன் இவள் திரு மேனியைப் பார்த்து என்றபடி
விண்ணோர் பெருமான் தனை-இந்த ரசத்தை அனுபவிப்பித்து -அமரர்கள் அதிபதியை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்-செறிந்து -சப்தம் -வாக்கியம் -பாடம் -இசை உடைத்தான
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.-விச்தீர்ணமான ஜகத்தில் -பரிதாப ஹேது
திருமந்தரம் சமசித்த யத்ர அஷ்டாஷர -மகாத்மா எங்கே கொண்டாடப் படுகிறார்களோ
வியாதி துர்பிஷம் திருட்டு சஞ்சரிக்க மாட்டார்கள் -தஸ்கரம் திருட்டு -பிரணவார்த்தம் நன்றாக அறிந்தால் போகுமே
துர்பிஷம் -நமஸ் -அர்த்தம் சம்சித்தியில் போகுமே -நாராயணாய– அர்த்தம் சம்சித்தியில் -வியாதி போகும்
வாழ்கிறவர் இருக்கும் தேசம் இல்லை -அவர்களை கொண்டாட வேண்டும்
இசை மாலைகளில் நாராயணாய ஏத்தினேன் -அதனால் வியாதி போகுமே என்கிறார்
அவித்யா கர்ம வாசனா ருசி பிரகிருதி -ஜன்ம -சம்பந்த சமஸ்த வியாதிகள்
அவித்யா காரணமாகவே -பகவத் ஆத்மா ஞானம் ஒன்றே அடிப்படை -பொய் நின்ற ஞானம்
அதன் அடியாக -பொல்லா ஒழுக்கம் -அதுக்கு அடியாக -அழுக்கு உடம்பு –
இதுவே கர்மா வாசனை ருசி பிரகிருதி ஜன்ம சம்பந்தம் என்றது
ஏத்தி உள்ளப் பெற்றேன் -ஸ்தோத்ரம் பண்ணி -அவன் திரு உள்ளம் மலர அத்தைக் கண்டு ஆனந்தப் பட்டேன் என்றபடி –

‘மையணிந்த கண்களையுடையவளும் தாமரை மலரில் வசிப்பவளுமான பெரிய பிராட்டி நித்திய வாசம் செய்கின்ற மார்பையுடையவனும்,
செந்நிறம் பொருந்திய அழகிய விசாலமான திருக்ண்களையுடையவனும், நித்திய சூரிகளுக்குத் தலைவனுமான
சர்வேசுவரனைச் செறிந்த சொற்களாலே தொடுக்கப்பட்ட இசை பொருந்திய மாலைகளாலே, அகன்ற இவ்வுலகத்திலே
கொடிய நோய்கள் முழுதும் அழியும்படியாகத் துதித்து அனுபவிக்கப் பெற்றேன்,’ என்கிறார்.

மைய கண் – கரிய கண் என்னலுமாம். ‘விண்ணோர் பெருமான்றன்னை வியன் ஞாலத்து வெய்ய நோய்கள் முழுதும்
வீய இசை மாலைகள் ஏந்தி உள்ளப்பெற்றேன்’ எனக் கூட்டுக.

இம்மஹத்தான ஐசுவரியத்துக்கு அடியான திருமகள் கேள்வனாம் படியை அருளிச்செய்கிறார்.

சர்வேசுவரன் திருவருளாலே அவன் கருத்து அறிந்து நடத்தும் பிரமனுடைய திருவருள் காரணமாக, நாரதர் முதலிய முனிவர்கள்
மூலமாக ஆயிற்று ஸ்ரீமத் ராமாயணம் தோன்றியது; இப்படிப்பட்ட ஸ்ரீராமாயணத்திற்காட்டில் தாம் அருளிச்செய்த பிரபந்தத்திற்கு
ஏற்றம் அருளிச்செய்கிறார். ‘திருமாலால் அருளப்பட்ட சடகோபன்’ என்கிறபடியே, அவர்கள் இருவருடையவும் திருவருள் அடியாக
ஆயிற்று இப்பிரபந்தங்கள் பிறந்தன. ‘சீதாயாஸ்சரிதம் மஹத் – சீதையினுடைய பெருமை பொருந்திய சரிதம்’ என்னுமது இரண்டுக்கும் ஒக்கும்;
‘திருமாலவன் கவி யாது கற்றேன்?’ என்றாரே அன்றோ இவரும்? அவன் பாடித் தனியே கேட்பித்தான்;
அவளோடே கூடக் கேட்பித்து அச்சேர்த்தியிலே மங்களா சாசனம் செய்தார் இவர்;
மையகண்ணாள் மலர்மேலுறைவாள் உறை மார்பினனை ஆயிற்றுக் கவி பாடிற்று.
கவிக்கு விஷயம் ஒக்கும்
1-ஐஸ்வர்யஹேது-மிதுனத்தால் /2-ஹேது அவளும் அவனும் ஆகையாலும் -/3-இவர்களைப் பாடி /4-இவர்களால் கேட்க்கப்பட்டு
இப்படி ஐஸ்வர்யத்தாலும் ஹேதுத்வத்தாலும் விஷயத்தாலும் ஸ்ரோத்ரத்வத்தாலும் இதுக்கு ஏற்றம் உண்டே –

மைய கண்ணாள் –
‘கறுத்த கண்களையுடையவள்’ -அஸி தேஷிணா-ஸ்ரீராமா. சுந். 16 : 5.-என்னக் கடவதன்றோ?
அன்றிக்கே, பெரிய பிராட்டியார் திருக்கண்களாலே ஒருகால் பார்த்தால்
ஒருபாட்டம் மழை விழுந்தாற்போலே சர்வேசுவரன் திருமேனி குளிரும்படி யாயிற்று இருப்பது;
ஆதலால், ‘மைய கண்ணாள்’ என்கிறார் என்னுதல். ‘மழைக்கண் மடந்தை’-திருவிருத்தம், 52.- என்னப்படுமவளன்றோ அவள்?’
இவள் திருவருள் இல்லாமையேயன்றோ அல்லாதார் விரூபாக்ஷர் ஆகிறது? ‘இந்த உலகமானது எந்தப் பிராட்டியின் புருவங்களினுடைய
செயல்களின் விசேடத்தால் நியமிக்கும் பொருளாயும், நியமிக்கப்படுகின்ற பொருளாயும் ஆகுகையாகிற தாரதம்மியத்தாலே
மேடு பள்ளமுள்ளதாக ஆகின்றதோ, அந்த ஸ்ரீரங்கநாயகியின்பொருட்டு நமஸ்காரம்,’ என்கிறபடியே,
அவள் உண்மையாலும் இன்மையாலுமே யன்றோ ஒருவன் அழகிய மணவாளப் பிள்ளையாயிருக்கிறதும்,
ஒருவன் பிச்சையேற்பானுமாயிருக்கிறதும்?
பட்டர் தானே இப்படி தைர்யமாக நாம் நாமவதற்கும் அழகிய மணவாளன் அப்படி ஆவதற்கும் இவள் கடாஷமே காரணம் என்கிறார் –
(பரம/ அபரம /அப ரம- சம்பந்தம் /இல்லாமல் -திரு இல்லா தேவர் )

மலர்மேல் உறைவாள் –
செவ்வித்தாமரை மலரின் வாசனை வடிவு எடுத்தாற்போன்று பிறந்தவள். அவயவ சோபை அது; சௌகுமார்யம் இது.
உறை மார்பினன் –
பூவிலும் கூசி அடியிடுமவள் பொருந்தி வசிக்கும் மார்வு படைத்தவன். ‘ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் பெருமாளைக் கை பிடித்த பின்பு
ஸ்ரீ மிதிலையை நினையாதது போன்று, இவளும் இவன் மார்வில் இனிமை அறிந்த பின்பு தாமரையை நினையாதவள்’ என்பார்,
‘உறை மார்பினன்’ என்கிறார். ‘மக்களின் அண்மையில் இருக்கிற தன் சரீரத்தை முத்தன் நினைப்பது இல்லை,’ என்கிறபடியே,
முத்தர்கள் இல்லறவாழ்வினை நினையாதது போன்று இவளும் தாமரை மலரை நினையாதபடி.

இப்பாசுரத்தில் ‘மையகண்ணாள் மலர்மேலுறைவாள் உறை மார்பினன்’(ஸ்ரீயபதித்வம்) என்று
கூறுவதற்கு நான்கு வகையில் கருத்துஅருளிச்செய்கிறார்:
‘இம்மஹத்தான ஜஸ்வர்யத்துக்கு அடியான திருமகள்கேள்வனாம்படியை அருளிச்செய்கிறார்’ என்பது, முதல் கருத்து.
‘இம்மஹத்தான ஐஸ்வரியம்’ என்றது, முதற்பாசுரத்தின் முன்னிரண்டு அடிகளையும் திருவுள்ளம் பற்றி.
‘சர்வேசுவரன் திருவருளாலே’ என்றது முதல் ‘இப்பிரபந்தங்கள் பிறந்தன’ என்றது முடிய, இரண்டாவது கருத்து.
இந்த இரண்டாவது கருத்தால், ஸ்ரீராமாயணத்தைக்காட்டிலும்
திருவாய்மொழிக்கு ஏற்றத்தையும் ஏற்றத்திற்குரிய காரணத்தையும் அருளிச்செய்கிறார்.
இங்கு,‘நாரணன் விளையாட் டெல்லாம் நாரத முனிவன் கூற ஆரணக் கவிதை
செய்தா னறிந்த வான்மீகி என்பான்’-கம்பராமாயணத் தனியன்
‘சீதாயாஸ் சரிதம்’ என்றது முதல், ‘என்றாரேயன்றோ இவரும்’ என்றது முடிய,
மூன்றாவது கருத்து. கவிக்கு விஷயம் பிராட்டியும் அவனும் என்கிற இது,
ஸ்ரீராமாயணத்திற்கும் இப்பிரபந்தத்திற்கும் ஒக்கும் என்பது மூன்றாவதன் கருத்து.
‘அவன் பாடித் தனியே’ என்றது முதல் ‘ஆயிற்றுக்கவி பாடிற்று’ என்றது முடிய, நான்காவது கருத்து,
‘அவன்’ என்றது, ஸ்ரீவால்மீகி பகவானை.ஆக, ஸ்ரீராமாயணத்துக்கும் பிரபந்தத்துக்கும் இரண்டு ஆகாரத்தாலே
வேறுபாடும், ஓர் ஆகாரத்தாலே ஒப்புமையும் கூறியபடி.

செய்ய கோலத் தடம் கண்ணன் –
சிவந்து காட்சிக்கு இனியனவாய்ப் பரப்பையுடையனவான திருக்கண்களையுடையவன்.
ஓர் இடத்திலே மேகம் மழை பெய்யாநின்றால்
அவ்விடம் குளிர்ந்திருக்குமாறு போலே, ‘மைப்படி மேனி’ என்கிறபடியே, சர்வேசுவரனுடைய கரிய மேனியை ஒருபடியே
பார்த்துக்கொண்டிருப்பாளே அன்றோ இவள்? இவள் திருக்கண்களிலே
அவன் திருமேனியின் நிறம் ஊறி இவள் மைய கண்ணாளாயிருக்கும்;
‘செய்யாள் திருமார்வினில் சேர் திருமால்’–9-4-1- என்கிறபடியே, மார்பில் இருக்கின்ற
அவளை ஒருபடியே பார்த்துக் கொண்டிருக்கையாலே
அவள் திருமேனியில் சிவப்பு ஊறி இவன் தாமரைக் கண்ணனாய் இருக்கும்;
‘இருவர் படியும் இருவர் கண்களிலே காணலாம்;
அவன் படி இவள் கண்களிலே காணலாம்; இவள் படி அவன் கண்களிலே காணலாம்.
இவர்களுடைய கண் கலவி இருக்கும்படியிறே இது.
கண்ணோடு கண்ணினை கவ்வி கம்பர் –
இவர் கவி விண்ணப்பம் செய்யக் கேட்டு அத்தாலே வந்த பிரீதிக்குப் போக்கு விட்டு
அவன் பிராட்டியைப் பார்க்க, அவள்,அந்ய பரதை பண்ணாமல் –
‘வேறு ஒன்றிலே நோக்கில்லாமல் -என்னைப் பார்க்காமல் –அத்தைக் கேட்கலாகாதோ?’
என்று சொல்ல, இப்படிக் காணும் கேட்டது.

விண்ணோர் பெருமான் தன்னை –
இக்கண்ணின் குமிழிக்கீழே விளையும் நாட்டினைச் சொல்லுகிறது.
அன்றிக்கே, ‘இக்கண்ணழகும் இச்சேர்த்தியழகும் காட்டில் எறித்த நிலா ஆகாமல்,
‘தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவுந்தலைமகனை என்கிறபடியே,
அனுபவிக்கின்றவர்களை யுடையவனை’ என்னுதல்.
ஆக, பெரிய பிராட்டியாரும் அவனும் கூடவிருக்க நித்தியசூரிகள் ஓலக்கங்கொடுக்க
ஆயிற்றுக் கவி கேட்பித்தது,’ என்றவாறு.

மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேன் –
சர்வேசுவரனுடைய வேறுபட்ட சிறப்பினை நினைத்துக் ‘கவி பாட’ என்று ஒருப்பட்டு,
‘வேதவாக்குகள் மனத்தால் நினைக்கவும்
முடியாமல் எந்த ஆனந்த குணத்தினின்றும் மீளுகின்றனவோ’ என்கிறபடியே மீளாமல்,
விஷயத்துக்கு நேரான பாசுரம் இட்டுக் கவி பாடப் பெற்றேன்.
‘மொய்’ என்பது செறிவைச் சொல்லுதல்; அல்லது, பெருமையைச் சொல்லுதல், என்றது,
‘செறிவில்லாத பந்தமாய் இருக்கையன்றிக்கே, கட்டுடைத்தாய் இருக்கையாதல்,
விஷயத்தை விளாக்குலை கொள்ளவற்றாய் இருக்கையாதல்’ என்றபடி.
வாசனை மிக்குள்ள மாலை போலே,
கேட்டார் கட்டு உண்ணும்படி இசை மிகுந்து இருப்பனவாதலின், ‘இசை மாலைகள்’ என்கிறது.
நினைத்து அன்று போலேகாணும் ஏத்திற்று; ஆதலால், ‘ஏத்தி உள்ளப் பெற்றேன்’ என்கிறது.
இதனால், ‘மனம் முன்னே வாக்குப் பின்னே’ என்கிற நியதி இல்லையாயிற்று இவர் பக்கல் என்கிறது.
‘என் முன் சொல்லும்’-திருவாய்மொழி, 7. 9 : 2.- என்கிறபடியே,
அவன் நினைவு மாறாமையாலே இது சேர விழுமே அன்றோ?’
‘ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி’என் நாமுதல் வந்து புகுந்து நல் லின்கவி
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன
என் வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ?’ என்பது திருவாய்மொழி, 7. 9 : 3.‘ என்றபடி.
அன்றிக்கே, ‘‘முடியானே’ என்ற திருவாய்மொழியில் உறுப்புகள் விடாய்த்தாற்போலே, இங்கும் தனித்தனியே
ஆயிற்று அனுபவிக்கிறது’ என்னலுமாம். தாமும் உறுப்புகளைப்போன்று ஈடுபட்டார். என்றது,
‘நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக, மாட்டினேன் அத்தனையே கொண்டு
என் வல்வினையைப், பாட்டினால் உன்னை என் நெஞ்சத் திருந்தமை காட்டினாய்,
கண்ணபுரத்து உறை அம்மானே!’-பெரிய திருமொழி, 8. 10 : 9.- என்கிறபடியே,
இவர் வாக்குக் கவி பாட, இவர்தாம் நம்மைப் போன்று சொல்லினாரித்தனை என்றபடி.
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக – அடிமையில் இனிமையறியாத என்னை,
‘இவன் நம்முடையான்’ என்று அங்கே நாடு என்று நிறுத்தி வைத்தாய்;
உன்னுடைய அங்கீகாரத்தைக்கொண்டு முன்புள்ள கர்மங்களை வாசனையோடே போக்கினேன்.
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்திருந்தமை காட்டினாய் –
பாடின வழியாலே, சர்வஞ்ஞனாய் சர்வசத்தியாயிருக்கிற நீ
என் மனத்திலே இருந்தமையைப் பிரகாசிப்பித்தாய்.
கண்ணபுரத்துறை அம்மானே – பாடுவித்த ஊர் திருக்கண்ணபுரம், பாடுவித்த முக்கோட்டை இருக்கிறபடி.

வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீய –
‘அவசியம் அனுபவித்தே தீரவேண்டும்’ என்கிறபடியே,
அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவன அல்லாத கர்மங்கள் முழுதும் நசிக்க.
இவ்வுலகத்திலே இருக்கச் செய்தே, இவை முழுதும் அழிந்தன என்று சொல்லலாம்படி யாயிற்று,
பகவானுடைய அனுபவத்தாலே பிறந்த தெளிவு;
ஆதலால், ‘வியன் ஞாலத்து வீய’ என்கிறது.
அன்றிக்கே,
‘பனை நிழல் போலே தம்மை ஒருவரையும் நோக்கிக் கொள்ளுகை யன்றிக்கே, ஊரும் நாடும் உலகமும்
தம்மைப் போலே யாம்படி தாம் இருந்த உலகத்தில் உண்டான கர்மங்களும் முழுதும் அழிந்தன,’ என்னுதல்.
அங்ஙனம் அன்றிக்கே,
‘வியன் ஞாலம்’ என்று வேறு ஒரு தேசம் போலே இருக்கச் சொல்லுகையாலே,
தாம் ‘வீற்றிருந்து ஏழுலகு’ என்னும் இத் திருவாய்மொழியை அருளிச் செய்கிறது
பரமபதத்திலே இருந்து போலே காணும்,’ என்று அருளிச் செய்வர்.
பாவனையின் மிகுதியாலே திருவுள்ளம் பரமபதத்திலேயாய் அங்குற்றாராய்த் தோன்றுகிறபடி.
வியன் ஞாலம் – ‘ஆச்சரியப்படத் தக்க உலகம்’ என்னுதல்; ‘பரப்பையுடைத்தான உலகம்’ என்னுதல்.

————————————————————————————————–

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-

மேன்மையாலும் -ஸ்ரீ யபதித்வத்தாலும் சித்தமான ஆனந்தாதி கல்யாண குணமயன்-யோகம் உடையவனை
ஸ்தோத்ரம் பண்ண ஆனந்த பூரணன் ஆனேன்
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்-அவிச்சின்ன மான ஆனந்தம் -ஆனந்த வல்லி-மிகுதியான எல்லை –
மனுஷ்ய யௌவனம் -தொடங்கி-மேலே மேலே –
வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத -என் போல்வாருக்கும் கொடுப்பதில் நழுவாத நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான்றனை
ஆனந்தத்துக்கு அடி -எல்லை இல்லாத கல்யாண குண யோகம் -யௌவன தொடக்கமான -நித்ய –
ஸூ சகமான புண்டரீகாஷன் -அகவாய் தெரியுமே திருக் கண்களில்
இதனால் விண்ணோர் பரவும்
வீவு இல்காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;-ஒழிவு இல்லாத -கான ரூபம்
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே-ஆனந்த மயனைக் கிட்டி -அவனது ஒட்டுமே கிட்டினால் -வெட்டினால் விலகுவோம்
-முடிவு இல்லாத அவன் ஆனந்தம் பெற்றோம் -பட்டோமே -உயர்த்தியால் -பஹூமான உக்தி

‘நித்தியமான இன்பத்தினது மிக்க எல்லையிலே தங்கியிருக்கின்ற நம் அச்சுதனும், அழிவில்லாத கல்யாண குணங்களையுடையவனும்,
தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையவனும். நித்திய சூரிகளுக்குத் தலைவனுமான சர்வேசுவரனை ஒழிவில்லாத காலமெல்லாம்
இசை பொருந்திய பாமாலைகளால் துதித்துக் கிட்டப்பெற்றேன்; அவ்வாறு அவனைக் கிட்டியதனால்,
முடிவில்லாத மிக்க இன்பத்தினது எல்லையையுடையவன் ஆனேன்,’ என்கிறார்.
‘மிக’ என்பது, ‘மிக்க’ என்ற சொல்லின் விகாரம். ‘மேவி வீவில் மிக்க இன்ப எல்லை(யிலே) நிகழ்ந்தனன்,’ என மாறுக.

‘எல்லா நற்குணங்களையும் உடையனாய் உபயவிபூதிகளையும் உடையனான சர்வேசுவரனைக் கிட்டிக் கவி பாடுகையாலே,
அவனுடைய ஆனந்தத்தையும் விளாக்குலை கொள்ளும்படியான ஆனந்தத்தையுடையன் ஆனேன்,’ என்கிறார்.

வீவு இல் இன்பம் –
அழிவு இன்றிக்கே இருப்பதான ஆனந்தம். ‘அதுதான் எவ்வளவு போதும்?’ என்னில்,
மிக எல்லை நிகழ்ந்த – ‘
இனி, இதற்கு அவ்வருகு இல்லை’ என்னும்படியான எல்லையிலே இருக்கிற. நம் –ஆனந்த வல்லியில் பிரசித்தி.
அச்சுதன் –
இதனை ஒரு பிரமாணம் கொண்டு விரித்துக்கூற வேண்டுமோ? இவ்வானந்தத்திற்கு ஒருகாலும் அழிவு இல்லை
என்னுமிடம் திருப்பெயரே சொல்லுகிறதே அன்றோ?

வீவு இல் சீரன் –
இந்த ஆனந்தத்திற்கு அடியான பரமபதத்தை உடையவன்.
அன்றிக்கே, ‘நித்தியமான குணங்களையுடையவன்’ என்றுமாம்.

குணங்களும் விபூதியும் ஆனந்தத்திற்குக் காரணமாய் அன்றோ இருப்பன?
மலர்க்கண்ணன் –
ஆனந்தத்தை இயல்பாகவேயுடையவன் என்னுமிடத்தைத் திருக்கண்கள் தாமே கோள் சொல்லிக் கொடுப்பனவாம்.
விண்ணோர் பெருமான் தன்னை –
இக்கண்ணழகுக்குத் தோற்று ‘ஜிதம் – தோற்றோம்’ என்பாரை ஒரு நாடாகவுடையவனை.
‘தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவுந் தலைமகனை’ என்னக்கடவதன்றோ?

வீவு இல் காலம் –
‘சிற்றின்பங்களை அனுபவிக்கப் புக்கால், அவை அற்பம் நிலை நில்லாமை முதலிய குற்றங்களாலே கெடுக்கப்பட்டவை ஆகையாலே,
அனுபவிக்குங்காலமும் அற்பமாய் இருக்கும்; இங்கு, அனுபவிக்கப்படும் பொருள் அளவிற்கு அப்பாற்பட்டதாகையாலே,
காலமும் முடிவில்லாத காலமாகப் பெற்றது,’ என்பார், ‘வீவில் காலம்’ என்கிறார்.
‘ஒழிவில் காலமெல்லாம் என்ன வேண்டியிருக்கும்’ என்றபடி.
இசை மாலைகள் –
‘கருமுகை மாலை’ என்னுமாறு போன்று இசையாலே செய்த மாலை. வாசிகமான அடிமை அன்றோ செய்கின்றது?
ஏத்தி மேவப் பெற்றேன் – ஏத்திக்கொண்டு கிட்டப் பெற்றேன். ‘இதனால் பலித்தது என்?’ என்னில்,
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் –
நித்தியமாம் எல்லை இல்லாததான ஆனந்தத்தையுடையேன் ஆனேன்.

‘சர்வேசுவரனுடைய ஆனந்தத்தையும் உம்முடைய ஆனந்தத்தையும் ஒன்றாகச் சொன்னீர்; பின்னை உமக்கு வேற்றுமை என்?’ என்னில்,
‘வேற்றுமை எனக்குச் சிறிது உண்டு,’ என்கிறார் மேல் :ஆனந்தத்தில் சாம்யாபத்தி உண்டே -அதனாலே அதே சப்தங்கள் -பின்னும் –
மேவி – அவனுக்கு இயல்பிலே அமைந்தது; எனக்கு அவனை அடைந்த காரணத்தால் வந்தது; அவனுடைய ஆனந்தத்திற்கு அடி இல்லை;
என்னுடைய ஆனந்தத்திற்கு அடி உண்டு. என்றது, ‘இந்தப் பரமாத்துமா தானே ஆனந்தத்தைக் கொடுக்கிறான்,
என்கிற ஏற்றம் உண்டு எனக்கு; அவனுக்குத் தான் தோன்றி என்றபடி.

——————————————————————–

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-

அநந்ய பிரயோஜநாதிகளை காத்தூட்ட -பரிகரம் உண்டே -வாஹனம் -பெரிய திருவடி -திரு ஆழி உண்டே –
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்-சேர்ந்து -கலந்து -அநந்ய -விரோதி பாபங்கள் ஸ்வயமேவ நசிக்கும் படி
சம்ச்லேஷித்து –
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான்றனை-சிறகு -தூவி -அழகிய -தன்னைக்கொண்டு வர பஷபாதம் –
அம் சிறைப் புள் -வெஞ்சிறை புள் கூட்டிப் போகும் போது
கை கழலா நேமியான் மண் மேல் வினை கடிவான் -யுத்தோன்முகன்-சர்வேஸ்வரன் நியந்தாவை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;-கான ரூபம் சந்தர்ப்பம்
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே-அனைவருக்கும் ஆவி –என்னாவி -ஸ்ரீ ரெங்க நாத மம நாத
பிரிகதிர் படாமல் சர்வாத்மா
தாரகன் -அந்தராத்மா பூதன் -தனக்கு சரீரமான என் ஆவியை -ஸ்துதிப்பித்து-உகப்பித்து விரும்புகிற பிரகாரம் -யான் அறியேன்
ஏவம்விதம் என்று பரிச்சேத்து-அறியேன் -இதுவும் -இந்த அறியாமையும் -ஆழம் கால் பட உறுப்பாயிற்று

‘வேறு பயன் ஒன்றையும் கருதாது பொருந்தி நின்று தொழுகின்ற அடியார்களுடைய பாவங்கள் போகும்படி அவர்களோடு சேர்கின்ற உபகாரகனும்,
சிறகையுடைய அழகு பொருந்திய கருடப்பறவையை வாகனமாக உடையவனும், பகைவர்களைக் கொல்லுகின்ற சக்கரத்தைத் தரித்த தலைவனுமான
சர்வேசுவரனை, நாவின் தொழிலாலே இசை மாலைகளைக்கொண்டு ஏத்திக் கிட்டப் பெற்றேன்;
பரமாத்துமாவான சர்வேசுவரன் என் ஆத்துமாவைச் செய்த தன்மையினை யான் அறியமாட்டுகின்றிலேன்,’ என்கிறார்.
தொழுவார் – பெயர். ‘ஆவி, என் ஆவியைச் செய்த ஆற்றை யான் அறியேன்,’ என்க.

‘அநந்யப் பிரயோஜனரையும், முதலிலேயே பயன்களில் இழியாத நித்தியசூரிகளையுமுடையனாய் வைத்து,
நித்தியசூரிகளுக்கு அவ்வருகான தான், பிறந்து இறந்து உழல்கின்ற தம் பக்கல் செய்த மஹோபகாரத்தைத் தம்மால்
அளவிட்டு அறிய முடிகிறது இல்லை,’ என்கிறார்.

மேவி நின்று தொழுவார் –
கிட்டக்கொண்டு –தேஹி மே ததாமி தே -‘நான் உனக்குத் தருகிறேன்; நீ எனக்கு ஒன்று கொடு,’ என்று
வேறு பிரயோஜனங்களுக்கு மடியேற்றுக்கொண்டு போகை அன்றிக்கே
,எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை வழுவா வகைநினைந்து வைகல் தொழுவார்’-முதல் திருவந்-26-என்கிறபடியே,
அவன் றன்னையே பிரயோஜனமாகக் கொண்டு தொழுமவர்கள். என்றது,
‘இன்று வந்தித்தனையும் அமுது செய்திடப்பெறில் நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும்
ஆளும் செய்வன்’- நாய்ச்சியார் திருமொழி, 9 : 7.என்கிறபடியே தொழுமவர்கள் என்றபடி.
கொடுத்துக் கொள்கை அன்றிக்கே கொண்டதுக்குக் கைக் கூலி கொடுக்க வேண்டும் –
வினை போக –
‘அவர்களுக்குப் பின்னை வினை உண்டோ?’ என்னில், வேறு பிரயோஜனங்களிலே
நெஞ்சு செல்லுகைக்கு அடியான பாவங்கள் போகும்படியாக.
‘ஆஸ்ரயண விரோதி கழிந்ததேயாகிலும், பாப ஹேதுவான சரீரம் இருக்கையாலே வேறு பிரயோஜனங்களிலே மனம்
செல்லுகைக்கு அடியான பாபம் உண்டாகைக்குக் காரணம் உண்டே யன்றோ? அத்தகைய பாபங்கள் போம்படி’ என்பது கருத்து.
மேவும் பிரான் –
இவன் வேறு பிரயோஜனங்களைக் கருதாதவனாய்க் கிட்டினவாறே சர்வேசுவரனும்
வேறு பிரயோஜனத்தைக் கருதாதவனாய்க் கிட்டுவானே அன்றோ?
நடுவில் வினைகளுக்கு ஒதுங்க இடமில்லாமையாலே அழிந்து போகும்;
‘இங்கில்லை பண்டு போல் வீற்றிருத்தல் என்னுடைய செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம் – அங்கே
மடியடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் மீண்டு அடி யெடுப்ப தன்றோ அழகு?’-என்பது பெரிய திருவந். 30.’ என்றாரே அன்றோ?
பிரான் -உபகாரமே இயல்பு என்னும்படி இருக்குமவன்.

ஆக, முதலடியில், முன்பு சில நாள்கள் வேறு பிரயோஜனங்களைக் கருதினவர்களாயிருந்து, பின்பு தன்னையே
பிரயோஜனமாக விரும்பினார் திறத்தில் உபகரிக்கும்படி சொல்லிற்று.
முதலிலேயே வேறு பிரயோஜனங்களில் நெஞ்சு செல்லாதபடி
இருக்கின்ற திருவனந்தாழ்வான் பெரிய திருவடி முதலானவர்களை உடையனாயிருக்கும்படி சொல்லுகிறது மேல்

தூவி அம் புள் உடையான் –
‘தூவி’ என்ற அடைமொழியால், நினைத்த இடத்திலே கொண்டு ஓடுகைக்கு அடியான கருவியை யுடையவன் என்பதனையும்,
‘அம் புள்’ என்றதனால், ‘தேவரீர் திருவடிகளாலே நெருக்கி அழுத்தின தழும்பினாலே சோபிக்கிறவன்’ என்கிறபடியே,
சோபிக்கிற அழகையுடையவன் ஆகையாலே வந்த ஏற்றத்தையுடையவன் என்பதனையும் தெரிவித்தபடி.
தூவி – சிறகு. அம் -அழகு. அடல் ஆழி – ‘பரமபதத்திலுங்கூட அவனுக்கு என்வருமோ என்று
அச்சங்கொண்டிருப்பவன் ஆகையாலே, எப்போதும் ஒக்க யுத்த சந்நத்தனாய் இருப்பவன்’ என்பார்
அடல் ஆழி’ என்கிறார். அடல் – மிடுக்கு. அம்மான் தன்னை – ‘பெரிய திருவடி திருத்தோளிலே பெயராதிருத்தல்,
திருவாழியைச் சலியாதே பிடித்தல் செய்ய வல்லவனே எல்லார்க்கும் தலைவன்,’ என்பார்,
‘தூவியம் புள்ளுடையான் அடலாழி அம்மான்’ என்று ஒரு சேர அருளிச்செய்கிறார்.-
ஆங்கார வார மதுகேட்டு அழலுமிழும் பூங்கா ரரவணையான் பொன்மேனி – யாங்காணவல்லமே யல்லமே மாமலரான் வார்சடையான்
வல்லரே யல்லரே? வாழ்த்து.’-பரமபதத்திலுங்கூட அவனுக்கு என்வருமோ என்று அச்சங்கொண்டிருப்பவன்–அஸ்தானே பயசங்கிகள் –

நா இயலால் இசை மாலைகள் ஏத்தி –
நெஞ்சு ஒழியவும், வாக்கின் தொழில் மாத்திரமே இசை மாலைகள் ஆயிற்றன; என்றது, நாப் புரட்டினது எல்லாம்
இயலும் இசையுமாய்க் கிடக்கையைத் தெரிவித்தபடி.

ஏத்தி நண்ணப் பெற்றேன் –
இவர் நண்ணியன்று ஏத்தியது; ஏத்தியாயிற்று நண்ணியது.
ஆவி என் ஆவியைச் செய்த ஆற்றை யான் அறியேன் –
‘உலகங்கட்கு எல்லாம் ஓர் உயிரேயோ’ என்றும், ‘ஆத்மந ஆகாஸ : ஸம்பூத :- பரமாத்துமாவினின்றும் ஆகாசம் உண்டாயிற்று’ என்றும்,
‘சர்வாத்துமா’ என்றும் சொல்லுகிறபடியே, ஒரு காரணமும் பற்றாமே எல்லாப் பொருள்கட்கும் ஆவியாய் இருப்பவனை ‘ஆவி’ என்கிறார்,
அன்பன் -அனைவருக்கும் -பொதுவான சப்தம் போலே ஆவி இங்கும் -சநிருபாதிக சர்வாத்மாத்வம் –
தாம் மிகமிகத் தாழ்ந்தவர் என்பதனைத் தெரிவிப்பார், ‘என் ஆவியை’ என்கிறார், என்றது,
அவன் விபு; தாம் அணு என்பதனைத் தெரிவித்தபடி. ‘இந்தப் பரமாத்துமாதானே சந்தோஷத்தைக் கொடுக்கின்றான்?’ என்றும்,
‘வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன்’ என்றும் சொல்லுகிறபடியே, அவனோடு ஒத்த ஆனந்தத்தை உடையவராம்படி
தம்மைச் செய்தமையைத் தெரிவிப்பார், ‘செய்த ஆற்றை’ என்கிறார்,
அன்றிக்கே, ‘உலகமே உருவமாய் இருக்கின்ற ஒருவன், தன் சரீரத்திலே ஒன்றைப் பெறாப்பேறு
பெற்றானாகத் தலையாலே சுமப்பதே!’ என்கிறார் என்னுதல்
அனுபவித்துக் குமிழி நீர்உண்டு போமித்தனை போக்கி, அது பேச்சுக்கு நிலம் அன்று என்பார், ‘யான் அறியேன்’ என்கிறார்.
அன்றிக்கே, ‘செய்த நன்றியை அறிதலும் அவனது,’ என்கிறார் என்னலுமாம்.

——————————————————————–

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5-

அனுபவ உபகரணமான -ஞானாதிகளைக் கொடுத்து அனுபவிப்பிக்கும் சர்வேஸ்வரனை -சகல கிலேசங்களும் –
ச காரணமாக-சடக்கென -ஸ்வயமேவ -நசிக்கும் படி ஸ்துதிக்கப் பெற்றேன்
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை-சாத்மிக்கப் சாத்மிக்க -பொறுக்க பொறுக்க –
ஞானா பக்திகள் -பரபக்தி -பரஞான பரம பக்தி பர்யந்தமாக -பிரபன்ன —
சாஸ்திரங்கள் கொடுத்து -தானே அவதரித்து -ஆச்சார்ய மூலம் –
பகவத் சம்பந்தி -பர ச்மர்த்தியையே நோக்காகக் கொண்டு –
போக்தாக்களுக்கு பிரகாசிப்பிகும் -நிருபாதிக சுவாமி
அமரர் தம் ஏற்றை -நித்ய சூரிகளுக்கு தருவது போலே -நமக்கும் அருளி -செருக்கை உடையவனாய்
நிரங்குச ஸ்வா தந்த்ரன் –
எல்லாப் பொருளும் விரித்தானை -கீதா உபநிஷத் மூலமாக தன்னையும் தன்னை அடையும் பிரகாரங்களையும்
தன்னை அடைந்து அனுபவிக்கும் பிரகாரங்களையும் -உபாய உபேயங்களை -கர்மாதி -பக்தி யோகம் -அருளிச் செய்தானே
தத்வ ஹித புருஷார்த்தங்களை -மூன்றுமே தானே என்று விரித்தானே
எம்மான்றனை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
சொற்கள் -மறுமாற்றம் -ஸ்தோத்ரம் பண்ணி –
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே-வாயு வேகம் மநோ வேகம் என்பார்களே –
ஞான ப்ரேமாதி பிரதிபந்தங்கள் –ராகத்வேஷாதி மகா வியாதிகளையும்
சீக்ரமாக -வெந்து போகும் படியாக -உரு மாய்ந்து போகும் படி

‘பொறுக்கப்பொறுக்க அனுபவிப்பதற்கு நல்ல வகையைக் காட்டுகின்ற அம்மானை, நித்தியசூரிகளுக்குத் தலைவனை,
எல்லாப் பொருள்களையும் பகவத்கீதை மூலமாக விரித்தவனை, எனக்குத் தலைவனை, வினைகளும் நோய்களும் காற்றிற்கு முன்னே
விரைந்து சென்று கரிந்து போகும்படியாக, சொற்களாலே மாலை புனைந்து ஏத்தி எப்பொழுதும் மகிழ்ச்சியுடையவன் ஆனேன்,’ என்கிறார்.
‘வினைகளும் நோய்களும் காற்றின் முன்னம் கடுகிக் கரிய, எம்மானை மாற்றம் மாலை புனைந்து ஏத்தி, நாளும் மகிழ்வு எய்தினேன்,’ எனக் கூட்டுக,
‘கடுகிக்கரிய, புனைந்து ஏத்தி, மகிழ்வு எய்தினேன்,’ என்க.

‘தான் எல்லார்க்கும் தலைவனாய் இருந்து வைத்து அருச்சுனனுக்கு எல்லாப் பொருள்களையும் பொறுக்கப் பொறுக்க அருளிச்செய்தாற் போலே,
எனக்குத் தன் படிகளைக் காட்ட, கண்டு அனுபவித்து, நான் என்னுடைய தடைகள் எல்லாம் போம்படி திருவாய்மொழி பாடி,
எல்லை அற்ற ஆனந்தத்தையுடையவன் ஆனேன்,’ என்கிறார்.

ஆற்ற –
அமைய : பொறுக்கப் பொறுக்க என்றது, ‘குளப்படியிலே கடலை மடுத்தாற் போலே யன்றிக்கே,
பொறுக்கப் பொறுக்க ஆயிற்றுத் தன் கல்யாண குணங்களை அனுபவிப்பித்தது’ என்றபடி.
‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்றதன் பின்
‘வீற்றிருந்து ஏழ் உலகு’ என்ற திருவாய்மொழியின் அனுபவத்தை அனுபவிப்பித்தானாகில்,
நான் உளேன் ஆகேன் ஆன்றோ?’ என்கிறார் என்றவாறு.

நல்ல வகை காட்டும் –
தன்னுடைய குணங்களையும் செயல்களையும் அனுபவிப்பிக்கின்ற.
அம்மானை –
உடையவன் உடைமையின் நிலை அறிந்தன்றோ நடத்துவான்?
அமரர் தம் ஏற்றை –
சிறிய விஷயங்களையும் உண்டறுக்க மாட்டாதே போந்த என்னை அன்றோ நித்தியசூரிகள் எப்பொழுதும் அனுபவம்
பண்ணுகிற தன்னை அனுபவிப்பித்தான்?
அன்றிக்கே,
‘தனக்கு ஒரு குறை உண்டாய் அன்று;
அனுபவிக்கின்றவர்கள் பக்கல் குறை உண்டாய் அன்று;
தான் சர்வேசுவரனாய் இருந்து வைத்தும், தன் படிகளை அனுபவிக்கும் நித்திய சூரிகளையுடையனாய் இருந்து வைத்தும்
என்னை அனுபவிப்பித்தான்,’ என்கிறார் என்னுதல்.
தம்மை அனுபவிப்பித்த வகையைச் சொல்லுகிறார் மேல்:

எல்லாப் பொருளும் விரித்தானை –
முதல் வார்த்தையிலே ‘தர்மம் இன்னது என்றும், அதர்மம் இன்னது என்றும் அறிகின்றிலேன்,
‘நான் உனக்கு மாணாக்கன்; உன்னைச் சரணம் அடைந்தேன்; என்னைத் தெளியச் செய்வாய்,’ என்ற அருச்சுனனுக்குப்
பிரகிருதி புருஷ விவேகத்தைப் பிறப்பித்து, கரும யோகத்தை விதித்து, ‘அதுதன்னை, நான் செய்கிறேன் என்ற எண்ணத்தைப்
பொகட்டுப் பலத்தில் விருப்பமில்லாமல் செய்வாய்’ என்று, பின்னர் ஆத்தும ஞானத்தைப் பிறப்பித்து, பின்பு பகவத் ஞானத்தைப் பிறப்பித்து,
எப்பொழுதும் நீங்காத நினைவின் உருவமான உபாசனக் கிரமத்தை அறிவித்து, இவ்வளவும் கொண்டு போந்து இதன் அருமையை
அவன் நெஞ்சிலே படுத்தி, ‘இவை என்னால் செய்யத் தக்கவை அல்ல’ என்று கூறிச் சோகித்த பின்பு,
‘ஆகில், என்னைப் பற்றிப் பாரம் அற்றவனாய் இரு,’ என்று தலைக்கட்டினாற்போலே ஆயிற்று,
கிரமத்தாலே தன்னுடைய குணங்களையும் செயல்களையும் இவரை அனுபவிப்பித்தபடி.

அஸ்தானே சிநேக காருண்யம் -கர்ணன் இத்தாலே இழந்தானே -அதே போலே அர்ஜுனன் கொண்டான் –
மூன்று குற்றங்களை பச்சை இட்டான் -அர்ஜுனன் விஷாத யோகம் முதலில் –தர்மம் அதர்மம் த்யாகுலம் –
பிரகிருதி புருஷ விவேக ஞானம் பிறப்பித்து -பால்யாதி போலேவே -ததாகா தேகாந்திர பிராப்தி –
சத்துக்கு அபாவம் வராது -அசத்துக்கு பாவம் வராது –
நியதம் குரு கர்ம அகர்ம-ஞான யோகம் விட கர்ம யோகம் சிறந்தது -சர்வம் கிருஷ்ணார்ப்பணம் –
ஜனகர் போல்வார் கர்ம யோகத்தால் -காட்டி -த்ரிவித தியாகம் -ஆத்மா சரீரம் பிராணன் இந்திரியங்கள் பரமாத்மா -ஐவரும் உண்டே
கர்த்த்ருத்வ புத்தி இல்லாமல்–கர்த்ருத்வம் சாஸ்திரம் அர்த்தத்வாத் -பராத்து தத் ஸ்ருதே –
அவனுக்கு அடங்கி -பலாபிசந்தி பூர்வகமாக -அஹங்கா மமகாரங்கள் இல்லாமல்
ஞானம் என்னும் அக்னியால் கர்மங்களைத் தொலைத்து -ஆத்ம ஞானம் வளர்த்து –
இத்தை விட பவித்ரமான வேறு உபகரணம் இல்லை –
ஸூவ யாதாத்ம்யம் ஏழாவதில் ஆத்ம ஸ்வரூபம் அறிவித்து மேலே – ஸூவ மஹாத்ம்யம் ஒன்பதாவில்
சர்வஸ்ய-வியாப்தன் தான் -அஹம் சர்வஸ்ய பிரபவம் -தரித்து நிர்வகித்து -தன் பெருமையும் காட்டி அருளி
மன் மநாபவ–நித்ய யுக்தா உபாச்யதே -ஞான தர்சன பிராப்திக்கு -பக்தி ஒன்றே வழி
அனசூயை பொறாமை இல்லாததால் இத்தை சொல்கிறேன் -ராஜ குஹ்ய ராஜ யோகம் –
வகை காட்டி அருள வேணும் -நல்ல வகை என்னை தேர்ந்து எடுத்து சொல்லக் கூடாதே
சரம ஸ்லோகம் -அத்தனையும் செய் -விடு -உபாய பாவமாக இல்லாமை கைங்கர்ய ரூபமாக –
ஸ்வீகாரத்தில் உபாய புத்தி தவிர்த்து -சோகப்பட வேண்டாம் –
பற்றினது என்னை -நம் ஆதீனம் -கரிஷ்யே வசனம் தவ -சொல்லி வந்தான் –
அன்று -மாயன் தெய்வத் தேரில் செப்பின கீதையின் செம்மைப் பொருள் அன்றோ –
புறம்பு சொன்னவை எல்லாம் இவன் நெஞ்சை சோதிப்பதற்காக –
இங்கு வகை –உபாயம் இல்லை -அடியிலே இவனே உபாயம்
கிருஷ்ண த்ருஷ்ணையை வளர்த்ததே –குண சேஷ்டிதங்களை அனுபவிப்பது
அர்ஜுனனுக்கு உபாயம் -ஆழ்வாருக்கு ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களை அனுபவிப்பித்து
பக்தியை வளர்த்ததே ஆற்ற நல் வகை

எம்மான் தன்னை –
‘அருச்சுனனுக்குப் பலித்ததோ, இல்லையோ, அறியேன். அந்த உபதேசத்தின் பலம் நான் பெற்றேன்,’ என்கிறார்.
அவனும் இப்பொருளைக் கேட்ட பின்னர், ‘அடியார்களை நழுவ விடாதவரே! தேவரீர் திருவருளால் என்னால்
தத்துவ ஞானம் அடையப்பட்டது; விபரீத ஞானம் நீங்கியது; எல்லாச் சந்தேகங்களும் நீங்கி நிலைபெற்றவனாய் இருக்கிறேன்;
போர் செய்ய வேண்டும் என்கிற தேவரீருடைய வார்த்தையை இப்போதே நிறைவேற்றிவிடுகிறேன்,’ என்று கூறியவன்,
மீண்டும், ‘சந்தேகத்தையுடையவனாய் இருக்கிறேன்’ என்றானே அன்றோ? –அநு கீதை மீண்டும் பிறந்ததே –
உத்தேசிக்கிறவனும் எல்லார்க்கும் பொதுவானவன்; உபதேசிக்கிற பொருளும் எல்லார்க்கும் பொதுவானது.
ஆகையாலே, அதனை யறிந்த இவர்க்குப் பலித்தது என்னத் தட்டு இல்லை அன்றோ?
‘செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்.’ நாய்ச்சியார் திருமொழி, 11 : 10.
என்னக் கடவதன்றோ? இவர் மநோரதத்திலே நின்று போலே காணும் அருளிச் செய்தது.

த்ரைவர்ணிகர்களுக்கே கீதா சாஸ்திரம் -உபாசனம் -இவர்களுக்கும் பாரதந்திர ஞானம் வந்து ஸ்வாதந்திர லேசம்
இல்லாதவர்களுக்கும் பிரபத்தியே தானே ஸ்வரூப விரோதம் உபாசனம் -சர்வ சாதாரணம் பொது நின்ற பொன்னம் கழலே உபாயம் –
இதனாலே தான் ஆழ்வாருக்கு உபதேசித்து -இது பலித்ததே –
அர்ஜுனன் ரதம் இல்லாமல் விஷ்ணு சித்தர் மநோ ரதம் –
இந்த தேர் தட்டிலே இருந்து இத்தை அருளிச் செய்தார் ஆயிற்று இந்த நல்ல வகையை

மாற்றம் மாலை புனைந்து ஏத்தி –
சொன்மாலையைத் தொடுத்து ஏத்தி. என்றது, அவன் செய்த உபகாரத்திலே தோற்று ஏத்தினார்;
அது திருவாய்மொழியாய்த் தலைக்கட்டிற்று,’ என்றபடி.
மாற்றம் – சொல். நாளும் மகிழ்வு எய்தினேன் – அழிவு இல்லாத ஆனந்தத்தையுடையவன் ஆனேன். எய்துகை – கிட்டுகை.
‘இப்படிப் பெரிய பேற்றினைப் பெற்றீராகில், விரோதிகள் கதி என்ன ஆயிற்று?’ எனின்,

காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே –
வினைகளும் வினைகளின் பயனான பிறவியும், காற்றினைக்காட்டிலும் விரைந்து எரிந்து சாம்பல் ஆயின.
புதுப்புடைவை அழுக்குக் கழற்றுமாறு போலே, கிரமத்தாலே போக்க வேண்டுவது தானே போக்கிக் கொள்ளப் பார்க்குமன்றே அன்றோ?
அவன் போக்கும் அன்று அவனுக்கு அருமை இல்லையே?
‘வினைப்படலம் விள்ள விழித்து’ என்கிறபடியே, ஒருகால் பார்த்துவிட அமையுமே?
‘பாப ரூபமான கர்மத்தினுடைய கூட்டங்கள், மேருமலை மந்தர மலை இவைகளைப் போன்று
உயர்ந்திருந்தாலும், வைத்தியனைக் கிட்டிக் கெட்ட வியாதி
அழிந்து போவது, கிருஷ்ணனை அடைந்து பாவங்கள் அழிகின்றன,’ என்கிறபடியே,
வியாதியின் மூலத்தை அறிந்த வைத்தியனைக் கிட்டின வியாதி போலே அன்றோ சர்வேசுவரனைக் கிட்டினால் இவை நசிக்கும்படி?

‘வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ? கானோ? ஒருங்கிற்றும் கண்டிலமால் ;- ஆனீன்ற
கன்றுயரத் தாம் எறிந்து காயுதிர்த்தார் தாள் பணிந்தோம் வன்துயரை யாவா மருங்கு.’-இது, பெரிய திருவந். 54.

—————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் –65– திருவாய்மொழி – -2-9-1…2-9-5—-ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

May 18, 2016

எம்மா வீடு -பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் –நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர் -என்று இவர் தாமும் அருளிச் செய்து
சர்வேஸ்வரனும் இவருக்கும் இவர் பரிகரத்துக்கும் மோஷம் கொடுப்பானாகப் பாரிக்க -அத்தைக் கண்டு –
தேவரீர் எனக்கு மோஷம் தந்து அருளப் பார்த்ததாகில் இங்கனே தரப் பார்ப்பது –
அதாகிறது -உனக்கு மோஷம் கொள் -என்று எனக்காகத் தருகை அன்றிக்கே –நமக்காகக் கொள் -என்று தேவர்க்கே
யாம் படியாகத் தர வேணும் –என்று -தாம் நினைத்து இருந்தபடியை அவன் திரு முன்பே பிரார்த்திக்கிறார் –

கைங்கர்யம் பண்ணியே பொழுது போக்க வேண்டும் –கைங்கர்யம் தூண்டவே அருளிச் செயல்களும் அவற்றுக்கு வியாக்யானங்களும் –
இந்த புருஷார்த்த நிர்ணயம் இதில் -அத்தை பிரார்த்தித்தது ஒழிவில் காலம் எல்லாம் -3-3–வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்றாரே –மேல் –
ஸ்ரீ ராம சிகாமணி -நம்பிள்ளைக்கு- தொட்ட இடம் எல்லாம் ஸ்ரீ ராம திருஷ்டாந்தம் கொண்டு விளக்குவாறே –
தொழுது எழு-என்று தாம் நினைத்து இருந்து –தொழுது எழுகையே-அவன் திரு முன்பே அருளிச் செய்கிறார் –
ஸ்வதந்த்ரம் பாரதந்த்ரம் / ச்வார்த்ததா -பரார்த்ததா /அசித்வத் பரதந்த்ரம் -பிறருக்காகவே இருக்கும் -புஷ்பம் சந்தனம்-போலே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -நின் செம்மா பாதம் -தலை மேல் ஒல்லை -என்றே முன் நிலையாக அருளிச் செய்கிறார் –

ஆனால் இது தான் பின்னை இத்தனை நாள் நிஷ்கர்ஷியாது ஒழிவான் என்-என்னில் -அவன் மேன்மேல் என குண அனுபவத்தை
பண்ணுவிக்கையாலே-அதுக்குக் காலம் போந்தது அத்தனை அல்லது இது நிஷ்கர்ஷிக்க அவகாசம் பெற்றிலர் –
ஆனாலும் இப்போது குண அனுபவமே அன்றோ பண்ணுகிறது என்னில் -அது அப்படியே
அவன் தம் பக்கலிலே மேன்மேல் எனப் பண்ணுகிற விருப்பத்தைக் கண்டு -இவனுக்கு இந்த வ்யாமோஹம் முடிய அநுவர்த்திப்பது ஒன்றாய் இருந்தது
நாம் இவனை மீட்டாகிலும் நம்முடைய பிராப்யத்தை நிஷ்கர்ஷிப்போம் என்று பார்த்து
நீ இங்கனே நில் -என்று அவனை நிறுத்தி வைத்து ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிறார் –இரண்டாவது சங்கதி –

18 பதிகங்களிலும் -குண அனுபவம் -முடிய அனுவர்த்திப்பதாக -நிரந்தரமாக இருக்கும் -காதல் குறையாதே –
பரத்வம் /பஜநீத்வம் /சௌலப்யம் /அபராத சஹத்வம் /சௌசீல்யம் /
ஸூ வாரதன்/பரம போக்யத்வ ஆராதனன்/ ஆர்ஜவம் /சாத்ம்ய போக பிரதானத்வம் /ஔதார்யம் /
வியசனப் பட வைக்கும் குணாத்மகன் -/விபவ பரத்வன் -சர்வேஸ்வரன் /சர்வ ரசத்வம் /தேடப்படுபவன் /கலவி இன்பம்
தொங்குமா -அதிசங்கை பண்ணுவானே ./சம்பந்திகள் அளவிலும் /மோஷ ப்ரதன்
நிறுத்தி வைத்து -பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிறார் –
ஆச்சார்ய சம்பந்தம் உள்ளார்களுக்கு மட்டுமே -வய்வசாயம் குலையும் என்று தலை குனிந்து திரு முகம் பார்க்காமல்
கை ஓலை பண்ணிக் கொடுக்கிறார் அனுபவிக்க எண்ணம் வரும் -ச்வார்த்தயயா புத்தி வருமே –
ஸ்ரவணம் மனனம் -செய்து -நிரஸ்த அகில துக்கம் நீங்கி –அனந்த ச்வாராட் பவேயம் –
ஸூ போகார்த்தாம் -சந்தன புஷ்பம் தாம்பூலம்போலே- கட வல்லி உபநிஷத் சித்த -த்வயம் –ஸ்ரீ மதே நாராயண நம –நிஷ்டர்க்குத் தான் இது தெரியும்
குஹ்ய ரகஸ்யம்-முதலிலே சொன்னால் பகவத் விஷயத்துக்கே வர மாட்டார்கள் -நிலையே வேறே –

எம்பார் -இத் திருவாய்மொழி அருளிச் செய்யப் புக்கால் இருந்தவர்களை யார் என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து
குஹ்யமாகவும் அருளிச் செய்வது –

ப்ராப்யமாகில் இப்படி அன்றோ இருப்பது இவர் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் -என்னில்
சர்வேஸ்வரன் இவ்வாத்மாவுக்கு சேஷியாய்-இவனும் சேஷ பூதனுமாய் -அவனுடைய உபாய பாவமும் நித்தியமாய் இருக்கச் செய்தே
யன்றோ இவனுக்கு இன்று ச்வீகாரம் வேண்டுகிறது –சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக –
அப்படியே அவன் ஸ்வ தந்த்ரன் ஆகையாலே நினைத்த போது நினைத்த படி கொள்வான் ஒருவன் ஆகையால் பிராப்தி சமயத்தில்
அனுபவம் இருக்கும் படியையும் நிஷ்கர்ஷித்துப் பெற வேணும் இறே-
உத்தரார்த்தத்திலும் இவ்வர்த்தத்தை சொல்லா நின்றது இறே
-த்வயம் தன்னில் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் என்னில் பூர்வார்த்தத்தில் சொன்ன சாதனம் சர்வ பல ப்ரதமாகையாலே
-பிரயோஜனாந்த பரராய் சரணம் புகுவாருக்கும் அவற்றைக் கொடுத்து விடுவான் ஒருவன் இறே சர்வேஸ்வரன்
இது தன்னில் ஓடுகிறது என் என்னில்-1- -முக்தனாய் நிரதிசய ஸூக அனுபவத்தை பண்ணவுமாம் -2–ஆத்மா பிராப்தியைப் பெறவுமாம் –
3–ஆத்மா வி நாசமே யாகவுமாம் -4– நரக அனுபவத்தை பண்ணவுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை-(இவை எல்லாம் அதிசய யுக்தி -பிராப்யத்தில் நோக்கு )
உனக்காய் வரும் அன்று இவை இத்தனையும் வரவுமாம் -எனக்காய் வருமன்று இவை இத்தனையும் வேண்டா–
ஆன பின்பு —தேவருக்கு உறுப்பாம் இதுவே எனக்கு வடிவாம் படி பண்ணி அருள வேணும்–என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார் –

சேஷத்வ பலம் -ஸூ பிரயோஜன நிவ்ருத்தி/-பாரதந்த்ர பலம் -ஸூ பிரயத்ன நிவ்ருத்தி –

இப்படிப் பட்ட பரிமாற்றம் தான் லோகத்தில் பரிமாறுகிறது ஓன்று அல்ல -17 லஷம் ஆண்டு களுக்கு முன்பே —
இவ்வாழ்வார் பக்கலிலே காணுதல் -இராமாயண புருஷர்களில் ஸ்ரீ பரத ஆழ்வான்-இளைய பெருமாள்
இவர்கள் பக்கலிலே காணுதல் செய்யும் அத்தனை –
பகவத் ஏக பாரதந்த்ர தயா -சேஷி க்கு அத்யந்த பிரிய -கைங்கர்ய கரணம் மாத்ரம் -ஸ்வார்த்த கர்த்ருத்வ-போக்த்ருத்வ -ரஹித -பாரதந்த்ர்யா அனுகுண குணம் -இப்படிப் பட்ட பரிமாற்றம்-
கைகேயி ராஜன் -என்ற சொல் பொறுக்க மாட்டாமே திரளிலே வந்து கூப்பிட்டான் இறே
தஸ் ஸ்ருத்வா—விலலாப சபா மத்யே -ஒரு திரளாக இருந்து என்னுடைய சேஷத்வத்தை அபஹரிப்பதே -திருட்டுக் கூட்டமாக இருந்து –
தஸ்யபிர் முஷி தே நேவா யுகத மாக் ரந்திதம் ப்ருசம் -என்னும்படி இழந்த வஸ்துவுக்கு தக்கபடியாய் இருக்கும் இறே கூப்பீடும்-
பெருமாளையும் பாரதந்த்ர்யத்தையும் அன்றோ இழந்தான் –
ஜ கர்ஹே ச -சந்த்யாவந்தனத்துக்கு பிற்பாடரை சிஷ்ட கர்ஹை பண்ணுவாரைப் போலே கர்ஹித்தான்
புரோஹிதம் -அழகியதாக இக்குடிக்கு முன்னாடி ஹிதம் பார்த்தாய் –-புரஹா ஹிதம் பஸ்யதி புரோஹிதம் –
சபா மத்யே புரோஹிதம் ஜ கர் ஹே -நியமாதி க்ரமம் ரஹசி போதயேத்-என்கிற நிலையும் பார்த்திலன் –
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -ஒருவனுக்கு இரண்டு வஸ்து சேஷமானால் ஒன்றை ஓன்று நிர்வஹிக்குமோ –
ஆனால் ராஜ்ஜியம் தான் என்னை ஆண்டாலோ-தர்மம் வக்தும் இஹ அர்ஹசி–பெருமாள் காடேறப் போனார் -சக்கரவர்த்தி துஞ்சினான்
-நாடு அராஜமாகக் கிடக்க ஒண்ணாது -நின்றாரில் பிரதானர் தலையிலே முடியை வைக்க வேணும் என்று பார்த்தாய் அத்தனை போக்கி
இதுக்கு விஷய பூதனான என்னைப் பார்த்து வார்த்தை சொல்லிற்று இல்லை
கதம் தசரதாஜ்ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரக –அவர் பொகட்டுப் போன ராஜ்யத்தை அபஹரித்து அவரைப் பிரித்து
அனந்தரத்திலே முடிந்தவன் வயிற்றிலே பிறந்தேனாம் படி எங்கனே நான் –

பெருமாள் உள்ளப்படி தான் இருப்பதாக -ஆளுவதோ மீளுவதோ எதுவாக இருந்தாலும் -இதுவே ஸ்ரீ பரத ஆழ்வான் நிலை
அசித்வத் பாரதந்த்ரம் படி ராஜ்யமும் என்னை ஆளலாமே –
ஸ்வரூபம் பார்க்க வேண்டாமோ -ராஜ்யம் அபஹரிப்பவன் சக்கரவர்த்தி பிள்ளை யாவாரோ –

இளைய பெருமாள் நில் என்ன குருஷ்வ என்றார் இறே –
அன்வயத்தாலே தரிக்கக் கடவ வஸ்துவை வ்யதிரேகத்து நிற்கச் சொல்லுகையாவது அழிக்கை இறே
குரு என்னாதே குருஷ்வ என்றார் இறே —ஆத்மைநிவ பதம்
ஆருடைய பிரயோஜனத்துக்கு ஆர் தான் இருக்கிறார்
உம்முடைய இழவுக்கு நீர் பதறாது இருக்கிறது என்
அநு சரம் பண்ணும் பிரகாரத்தை விதிக்கிறார்
நீர் தாம் நில் என்று அருளிச் செய்தது -நான் நிற்கச் சொல்லுகைக்கு யோக்யனாம் படி இருக்கை இறே
உம்முடைய சாயையை நில் -என்று சொல்லிற்று இலீரே -தனி சைதன்யம் -ஜீவன் -என்று நினைத்தது உம் குற்றம் –
சாயையோபாதி உம்மைப் பின் செல்வேனாக வேணும் –
நீரும் நிழலும் வாய்ந்து இருப்பதொரு பிரதேசத்தைப் பார்த்து பர்ண சாலையை அமையும் -என்ன நம் தலையில்
ஸ்வா தந்த்ர்யத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கை விட்டார் -என்று வேறு பட்டார்
ஏவ முக்தஸ்து ராமேண-இதுக்கு முன்பு எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம் -இவர் தாமே நம் ஸ்வரூபம்
அழியக் கார்யம் பார்த்தார் -இனி நம் ஸ்வரூபம் என்று ஓன்று உண்டோ என்று வேறுபட்டார் –
முன் நம் குறையாலே இழந்தோம் -இப்பொழுது இவராலே இழக்கிறோமே -ஸ்வரூபம் அழிக்கப் பார்க்கிறார் –
லஷ்மண -பாரதந்த்ர்யத்தை நிரூபகமாக உடையவர் -லஷ்மி சம்பன்ன –அடையாளம் கொண்டவர் -பாரதந்த்ர்யமே நிரூபகம்
சமய தாஞ்ஜலி-நாம் நம் ஸ்வரூபத்தை அழித்துக் கொண்ட வன்று நோக்குகை யன்றிக்கே சேஷி தானே அழித்த வன்றும்
ஸ்வரூபத்தை தர வாயிற்று அஞ்சலி -சர்வ அபிமத சாதனம் ஆயிற்று
லீதா சமஷாம்-பண்ணின அஞ்சலிக்கு அந்ய பரதை பாவிக்க ஒண்ணாதவன் சந்நிதியிலே
காகுத்சம் -பிராட்டி சந்நிதியும் மிகையாம் படியான குடிப்பிறப்பை உடையவரை –
ககுஸ்த வம்சே விமுகே -கை கூப்பி வந்தால் ஏமாந்து போகமாட்டானே –
இதம் வசனம் பிரவீத் -இவ்வார்த்தையை சொல்லுவானே என்று கொண்டாடுகிறார் ருஷி
பரவா நஸ்மி -உம்முடைய அஸ்மிதை போலே அல்ல காணும் என்னுடைய அஸ்மிதை
தேவரீர் உடையவனாக உள்ளேன் நான் -உம்முடைய-அஸ்மிதை -ஸ்வா தந்த்ர்யம் வேற -நான் ஸ்வ தந்த்ரன் அல்லேன் என்று சொல்லும் ஸ்வ தாந்த்ரம் உண்டே –

இப்படிக்கொத்த பார தந்த்ர்யத்தை யாயிற்று இவர் ஆசைப்படுகிறது-
இது தான் ஒருவர் அபேஷிக்குமதுவும் அல்ல – அபேஷிப்பார் இல்லாமையாலே நாம் கொடுத்துப் போருமதுவும் அல்ல -17 லஷம் வருஷமாக —
அவ்வழி புல் எழுந்து போயிற்று காணும் -என்று அவன் அநாதரித்து இருக்க –
புருஷன் அர்த்திக்க வருமது இறே புருஷார்த்தம் ஆவது
இப் பேறு இத்தனையும் நாம் பெற்றேனாக வேணும் என்று இவர் அபேஷிக்க-அவனும் தலை துலுக்கப் பெற்றாராய்த் தலைக் கட்டுகிறார்
வகுள பூஷண பாஸ்கரர் உதயம் ஆன பொழுதே இத்தை மீண்டும் கேட்கப் பெற்றான் –

————————————————————–

அவதாரிகை –

முதல் பாட்டில் -எவ்வகையாலும் விலஷணமான மோஷத்திலும் எனக்கு அபேஷை இல்லை –
உன் திருவடிகளை என் தலையிலே வைக்க வேணும் -என்கிறார் –

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

அடிமை ஆண்டான் –சேஷத்வ அநு ரூபமான கைங்கர்யம் -பிராப்ய நிஷ்கர்ஷம் -சர்வ பிரகார விசிஷ்டம்மோஷத்திலும்--திருவடிகளோட்டை சம்பந்தமே அபேஷிதம் /வீடு -ஐஸ்வர்யம் /மா வீடு -கைவல்யம் /எம்மா வீடு -மோஷம் –
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்-எவ்வகைப்பட்ட –மா உத்கர்ஷமான -ப்ருஹத் -வீட்டின் -மோஷத்தின் பிரகாரம்
சொல்லோம் -செப்பாதே -நீயும் நானும் சொல்ல மாட்டோம் -பிரஸ்தாபிக்க வேண்டாம் -இருவருமே
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக் -இத்தையே பேசுவோம் -சிவந்த உத்தேச்யமான திருவடித் தாமரைகளை சீக்கிரமாக சேர்க்க வேண்டும்
சேர்த்த இடம் உண்டே -நினைவு படுத்துகிறார்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே -நீண்ட துதிக்கை மட்டுமே -அழுந்தின ஆனையின் உடைய இடரை போக்கி அருளிய மகா உபகாரனே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே-இந்த அபதானத்தை வைத்து என்னை எழுதிக் கொண்டவனே -அடிமை கொண்ட ஸ்வாமி
அடியேன் -ஸ்வரூபம் அறிந்த -பிரார்த்திப்பது இது ஒன்றே -ஸ்வரூபத்துக்குத் தக்க பலம் –புருஷன் அர்த்திப்பது தானே புருஷார்த்தம் –
ஈதே -அறுதியிட்டு சொல்கிறார் -மற்றவை செப்போம் என்றாரே -அபேஷை இல்லாமலே திருவிக்ரமனாக முன்பே அருளினீர் –

எம்மா வீட்டுத் திறமும் செப்பம்
1-ஆழ்வீர்-மோஷத்தைக் கொள்ளும் என்றான் ஈஸ்வரன் -வேண்டா என்றார் –
2-மா வீடு கிடீர் –விலஷணமான மோஷம் கிடீர் -என்றான் -அதுவும் வேண்டா என்றார் –
3-எம் மா வீடு கிடீர் -ஐஸ்வர்யம் ஆத்ம லாபம் -என்று இருக்க வேண்டா -பரம புருஷார்த்த லஷண மோஷம் என்றான் -அதுவும் எனக்கு வேண்டா என்கிறார்
நிரஸ்த அகில துக்கோஹம்-தொலைக்கப் பெற்று- அனந்தஆனந்த பாஹ் -ச்மராட் பவேயம் -மோஷார்த்தி ஸ்ரவணாதி —
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -மதுரகவி சொன்ன சொல் வைகுந்தம் காண்மினே -என்றாரே -பரார்த்த பரமான
வைகுந்தத்தில் தானே ஆழ்வார் உள்ளார் -உமக்காக -உம்மா வீடு தான் வேணும் என்கிறார் –
எவ்வகையாலும் நன்றான மோஷத்து இடையாட்டமும் -பிரசங்கமும் -செப்பம் –செப்போம் –சொல்லோம்
நீ பிரசங்கிக்கக் கடவை யல்ல -நான் பிரதிஷேதிக்கவும் கடவேன் அல்லேன் –

எம்மா வீட்டுத் திறமும் செப்பம்-பண்பு தொகை -செவ்வியவாக இருப்பது
ஒரு தமிழன் எம்மா வீட்டு விகல்பமும் செவ்வியவாம் என்றான் –திறம் –-சமூகம் -விகல்பம் —அந்த பஷத்தில் வீட்டு விகல்பமாவது
சாலோக்ய -சாரூப்ய -சமீப்ய -சாம்யாபத்தி -சாயுஜ்யம் -என்கிறவை –திறமும் -செப்பம்–செவ்வியவாகை யாவது -சாலோக்யாதிகள் எல்லாம் இம் மோஷத்தில் –பாத பற்புத் தலை சேர்ப்பதில் -உண்டாகை-
உன் தனக்கு எத்தனை இன்பம் தரும்இவை எனக்கு ஈந்து அருளே –கூப்பீடு கேட்கும் இடமும் –அனைத்தும் வகுத்த இடமே –
லோகேஷூ விஷ்ணு நிவஸந்தி சாலோக்யம் /கேசித் சமீபம் சாமீப்யம் /அன்யேது ரூபம் சத்ருசம் சாரூப்யம் /
கல்யாண குணம் அனுபவிப்பது சாயுஜ்யம் /குளிர்ந்த நோக்கு பெற்ற அவஸ்தை-மற்றவை குளப்படி –

ஆனால் உமக்கு வேண்டுவது என் என்னில்
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து –
இது எனக்கு வேண்டுவது –செம் -என்று சிவப்பாய் –மா என்று கறுப்பாய்-
உன்னுடைய அகவாய் சிவந்து புறவாய் ச்யாமமாய் -விகாசம் செவ்வி குளிர்த்து நாற்றங்களுக்குத் தாமரையை ஒரு போலி
சொல்லலாம்படி இருக்கிற திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க வேணும்-
அன்றிக்கே –
செம்மையால் நினைக்கிறது –செவ்வையாய் ஆஸ்ரிதற்கு வருந்த வேண்டாத படியான ஆர்ஜவத்தை உடைத்தாய்
பொது நின்ற பொன்னம் கழல் அன்றோ –
மா -என்று மஹத்தையாய் -பரம பூஜ்யமான திருவடிகள் என்னவுமாம்
சேர்த்து -என்று சேர்க்க வேணும் -என்றபடி -வினை எச்சம் இல்லை –சேர்துக –என்றபடி -ஈறு கேட்ட வினை முற்று
கொக்குவாயும் படு கண்ணியும் போலே உன் திருவடிகளும் என் தலையும் சேர வேணும்
ஆபரண விசேஷங்கள் -பந்தகமான -சுருக்கு கயிறு -கொக்கு வாய் -கொக்கை அகப்படுத்தி வைக்க
சேர்த்து என்று ல்யப்பாகை -வினை எச்ச மாதரம் -யன்றிக்கே விதியாய் -சேர்த்து அருள வேணும் -என்கை-
யாவந்த சரனௌ ப்ராது பார்த்திவவ் யஞ்ஜநான்விதௌ சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர் பவிஷ்யதி -அயோத்யா-98-8-
பெருமாள் திருவடிகளில் லாஞ்சனை இருக்குமே பாரை ஆளுவதற்கு –கதா புன –இத்யாதி -தாங்காத வரை சாந்தி
அடைய மாட்டேன் -ஸ்ரீ பரத ஆழ்வான் –சத்ருக்னா உனக்கு அந்த இழவின் வருத்தம் தெரியாதே –
ஒல்லை -சடக்கென அது வரை-ந மே சாந்திர் பவிஷ்யதி
பிள்ளாய் உன்னுள் வெப்பு ஆறுவது எப்போது என்றார்கள் -கௌசல்யாதிகள் இடமும் சொல்லி இருந்தானே –
பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி நானும் எனக்கு வகுத்த முடி சூடின அன்று என்றான் இறே
கைங்கர்ய சாம்ராஜ்யம் நமக்கு -குண அயோத்யா சாம்ராஜ்யம் பெருமாளுக்கு –அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து
மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போலே இவரும் ஈறில் இன்பத்து இரு வெள்ளத்தில் –2-4-8-முழுகிப் பூச்சூட இருக்கிறார் காணும்
அப்படியே செய்கிறோம் -என்றான்
அக்க்ரமம் பற்றாது
ஒல்லைக்
செய்து கொடு நின்று –செய்கிறோம் -என்ன வேணும்
இப்படித் த்வரிக்க வேண்டும் இடம் உண்டோ என்னில்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே –
நீ த்வரித்து வந்து விழும்படி அறியாயோ -பரமபதமாபன்ன -சர்வேஸ்வரன் தன்னைப் பேணாதே வந்து விழ வேண்டும்படியான ஆபத்து ஆயிற்று
மனஸா அசிந்தயத் –சாது நாகவர ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம்-கூப்பீடு ஒவிற்று
கைம்மா துன்பம்
ஆனையும் தன்னளவிலே இறே நோவு படுவது -துதிக்கை முழுத்தின ஆபத்து இறே
அப்படி -உமக்கு ஆபத்து உண்டோ என்ன–1- -அங்கு முதலை ஓன்று –எனக்கு முதலை ஐந்து –2–அங்கு ஆயிரம் தேவ சம்வத்சரம்
இங்கு அநாதி காலம் –3–அங்கு ஒரு சிறு குழி –இங்கு பிறவி என்னும் பிறவிக்கடல் 4–அதுக்கு சரீர நாசம் –எனக்கு ஆத்மா நாசம்-
5–ஆனையின் காலை யாயிற்று முதலை பற்றிற்று – இங்கு என்னுடைய நெஞ்சை யாயிற்று அருவித் தின்றிடுகிறது
-ஆனால் அதுக்கும் இதுக்கும் உள்ள வாசி பாராய்
பிரானே –
ஸ்ரீ கஜேந்த்ரனுடைய துக்கத்தைப் போக்கின இதுவும் -நமக்கு உபஹரித்தது -என்று இருக்கிறார்
அதுக்கு உதவினமை உண்டு உமக்கு என் என்ன
அம்மா –
அதுக்கும் எனக்கும் ஒவ்வாதோ தேவரோட்டை சம்பந்தம் -நீ ஸ்வாமி யன்றோ
நீர் ஆர் என்ன-
மதியம் ஸ்வாமித்வம் சர்வ விஷயம் பவதி -வேண்டுவது எதற்கு -பிரார்த்தனை எதற்கு –துவத் பிரசாத லப்த மதி நலம் -ஸ்வரூப ஞானம் -பெற்றவன் –
வடியேன்
நான் சேஷ பூதன் -இருவர் உடைய -ச்வாமித்வ சேஷித்வ-அம்மா அடியேன் – ஸ்வரூபத்தையும் பற்றி -தவிர ஒண்ணாது -என்று அபேஷிக்கிறீரோ-என்ன
வேண்டுவது-
ராக பிராப்தம் -இதுவாகில் வேண்டுவது -விதிக்காக இல்லை -ஆசையுடன் பிரார்த்திக்கிறேன்
இது செய்கிறோம் இதுவும் இன்னம் எதுவும் வேணும் என்றான்
ஈதே
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்ற இதுவே என்கிறார் –
சேஷத்வமே புருஷார்த்தம் -விக்ரகமே உத்தேச்யம் -ரிஷிகள் ஸ்வரூபத்தில் மண்டி -ஆழ்வார்கள் –திண் கழல் இருவர் -மிதுனம் -விட்டாலும் விடாதே

————————————————————————————

அவதாரிகை –

முதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்-இதிலே மானசமான பேற்றை அபேஷிக்கிறார்-

ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே –2-9-2-

காயிக கைங்கர்யம் முன்பு -இதில் -இந்த சம்பந்த விஷயமான ஞானம் அபேஷிகிறார் -மானச கைங்கர்யம்
என் மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்-வடிவு அழகு -கொண்ட ஸ்வாமி -மணி போன்ற நிறம் -மைப்படி மேனி
ஈதே யானுன்னைக் கொள்வது -எஞ்ஞான்றும் -எப்போதும் கொள்ளும்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக் கைதா -தெளிவான ஞானம் -மயர்வற மதி நலம் அருளப் பெற்றார்
ஆலம்பனம் என்பதால் ஞானத்தை கை என்கிறார் -ததாமி புத்தி யோகம் தம் -ஏனமாம் உபயாந்தையே –அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் –
காலக் கழிவு செய்யலே-கால விளம்பம் இல்லாமல்-

கீழில் பாட்டில்- ஈதே -என்னச் செய்தேயும் ஒரு அர்த்தத்தையே பலகால் கேட்டவாறே மற்று ஒன்றிலே தடுமாறிச் செல்லவும் கூடுமே –
இதிலே நிலை நின்றமை அறிய வேண்டும் -என்று -இதுவும் இன்னம் எதுவும் வேணும் -என்றான்
ஈதே -என்கிறார் –
நீர் இதிலே நிலை நின்றீர் என்னும் இடம் நாம் அறியும் படி என் என்ன –
யானுன்னைக் கொள்வது –
இருவருடையவும் தர்மியே இதிலே பிரமாணம் –சேஷ சேஷி சம்பந்தம் -பாவம் உண்டே –
ஸ்வாமியான உன் பக்கலிலே சேஷ பூதனான நான் கொள்ளுமது இதுவே –
நம்முடைய ஸ்வாமித்வமும்-உம்முடைய சேஷத்வமும் கிடக்கச் செய்தே யன்றோ நெடு நாள் இழந்து போந்தது
ஆனபின்பு நமக்கு அதி சங்கை வர்த்தியா நின்றது காணும் –
திருமாலே நானும் உனக்கு பழவடியேன் -அறிவில் உறுதி குலைகிறதே சம்சார சம்பந்தத்தால் –
தலை சேர்த்து ஒல்லை என்றீரே -இது -எத்தனை குளிக்கு நிற்கும் என்ன –

நசிகேத் உபாத்யாயனம்-கடோ உபநிஷத் -தஷிணை-வைகல்யம் -வர -சொத்து முழுவதும் கொடுத்தால் தான் யாகம் பூர்த்தி யாகும்
-என்னை யாருக்கு கொடுப்பீர் அடிக்கடி கேட்க கோபம் கொண்டு -மிருத்யு இடம் கொடுப்பேன் -மிருத்யுசதனம் –
யமன் அதர்சநாத் த்ரி திவசம் வாசலில் இருக்க நிராகாரம் -உடன் இருந்ததால் –மூன்று வரம் கொடுக்க –
பித்ரு பிரசாதம் -நெருப்பு இவன் பேரில் –பிராண பிராப்ய காலத்தில் ஆத்மா ஸ்வரூப ஸ்வ பாவ உபதேசம் –
அதிகாரி சோதன -இதமேவ அபேஷிதம் -அந்ய அபேஷிதம் இல்லை என்றான் பின்பு உபதேசம் அருளினார் –அதே போலே இங்கும் ஈதே -என்கிறார் –

எஞ்ஞான்றும் –
யாவதாத்மபாவி இதுவே எனக்கு வார்த்தை –
இதிலே நிலை நிற்கும்படி உம்மை இத் துச் சிஷை பண்ணு வித்தார் ஆர் -என்றான் ஈஸ்வரன்
இப்படி ஆர் கற்ப்பித்தார்-மற்றும் உண்டோ -தேவர் வடிவு அழகு இறே
என் மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்-
மை தோய்ந்து இருந்துள்ள தேஜஸ்சை யுடைத்தான மணியினுடைய நிறம் போன்ற திரு நிறத்தைக் காட்டி
என்னை அனந்யார்ஹன் ஆக்கி உன் சேஷித்வத்தை அறிவித்தவனே -அழகு தான் வாத்யாயார் -துச் சிஷை பண்ணினவர் –
அழகிது உமக்குச் செய்ய வேண்டுவதாவது என் என்ன
எய்தா நின் கழல் யான் எய்த
1-ஸ்வ யத்னத்தால் ஒருவருக்கும் பிராபிக்க ஒண்ணாத திருவடிகளை -உன்னாலே பேறு-என்று இருக்கிற நான் ப்ராபிக்கும் படி பண்ணி –
அது நீர் மயர்வற மதிநலம் பெற்ற அன்றே பெற்றிலீரோ என்ன
ஞானக் கைதா –
2-இது நீ நினைத்து இருக்கும் அளவு போறாது -அது நான் பெற்றேன் என்று தெளியும்படி பண்ண வேணும்
அமிழ்ந்தினார்க்கு கை கொடுத்தால் போலே இருக்கையாலே ஜ்ஞான லாபம் –பிரத்யஷ சமானாகார ஞானம்
ஜ்ஞானமான கையைத் தா -என்கிறார் -சர்வம் ஞான பிலவம்-தெப்பம் -கீதை –
இங்கே எம்பாருக்கு ஆண்டான் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-அதாவது
ஒரு கிணற்றிலே விழுந்தவனுக்கு இரண்டு பேர் கை கொடுத்தால் எடுக்குமவர்களுக்கும் எளியதாய் ஏறுமவனுக்கும்
எளிதாய் இருக்கும் இறே -அப்படியே ஆகிறது என்று –
ஞானக் கை தா –
3-அங்கன் அன்றிக்கே -அது பின்னை பரபக்தி பர ஞான பரம பக்திகளை உடையார் பெரும் பேறன்றோ என்ன
ஞானக் கை தா –
அவற்றையும் தேவரே பிறப்பித்து தேவர் திருவடிகளைப் பெற பெற வேணும் என்னவுமாம்
அப்படியே செய்கிறோம் என்ன
காலக் கழிவு செய்யலே —
ஒல்லை என்றது தானே யன்றோ எனக்கு எப்போதும் வார்த்தை –
ஷிப்ரம் -கோதாவரிக்கு சீதை -விபீஷணன் —நிவேதய மாம் முதலிகள் இடம் –சக்ருதேவ -சடக்கென கூரத் தாழ்வான்

——————————————————————————————–

அவதாரிகை –

இதில் வாசிகமான பேற்றை அபேஷிக்கிறார் –

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3-

வாசிக கைங்கர்யம் -அறிவுக்கு ஈடாக ஆபத் தசையிலும் ஸ்தோத்ரம் பண்ணும் படி அருள வேணும்
கேட்பது தானே வேண்டியது –காலக் கழிவு செய்யேல் என்றதுமே –ஞானம் அருளினானே -என்றவாறு –
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் -கிருத்திய அகரணம் -அக்ருத்ய கரணம் -தீ வினை -செய்யாதே கொள்-என்று அனுக்ரகிக்க வேண்டும் -இது தீ வினை செய்யக் கடவன் அல்லன் என்பர் -நேராக விதிக்க மாட்டார்
அபிப்ராயம் தான் சாஸ்திரம் சொல்லும் –ஜீவ ஸ்வா தந்ர்யம் கொடுப்பாரே –
பிரியதமராக வரித்த பின்பு அருள வேண்டும் -அருள் செய்வதற்கு தேவையான -உபகரணம் கொண்டீரே -சௌலப்ய அவதாரமும் பண்ணினீர்-
உபகாரகன்என் கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் -தாழ்ந்த தசையிலும் -கபம் ச்லேஷ்யம் அடைத்தாலும் -நிர்விவரமாக -உக்தி சாமர்த்தியம் இல்லாத பொழுதும்
நின் கழல் எய்யாது ஏத்த -1-விரோதி நிவர்த்தன் -2-சுலபன் -3–பிராப்தன் -4-பிரான்
நழுவாமல் –எய்யாது -இளைத்தல் / அருளிச் செய் எனக்கே-எனக்கு மட்டுமாக
ஐ-ச்லேஷமம்– வாதம் பித்தம் கபம் -சமமாக இருந்தால் -ஆயுர்வேதம் நாடி பார்த்து -சத்வம் ரஜஸ் தமஸ் -சமமாக இருந்தால் சிருஷ்டி ஆகாதாம் –

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ண பிரானே-
கையும் திரு வாழியும் பொருந்தி இருக்கும் இருப்பைக் கண்டாயே
நம் பவ்யத்தை கண்டாயே
நம்மை அனுபவிக்கை அழகியதோ
ஷூத்ர விஷயங்களில் பிரவணனாய் அனர்த்தப் படுக்கை அழகியதோ -என்று
கையில் திரு வாழியையும் பவ்யதையும் காட்டி யாயிற்று இவருடைய விஷய பிராவண்யத்தைத் தவிர்த்தது –
சாஸ்திர ப்ரதா நாதிகளால் அன்று -ஐயப்பாடு அறுத்து –ஆதரம் பெருக வைத்த அழகன் –
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே
துக்க நிவ்ருத்-ஜிதந்தே -என்கிறபடியே ஏதேனும் உத்க்ரமண சமயத்திலும் உன் திருவடிகளை நான் இளையாதே ஏத்தும் படி பண்ணியருள வேணும்
செறிந்த ச்லேஷமாவானது கண்டத்தை அடைக்கிலும் உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை நான் மறவாதே
ஏத்த வல்லேனாம் படி பண்ணி யருள வேணும்-
உத்க்ரமண தசை பார்த்து இருப்பார் காணும் கோழைப் பையலார் வந்து மிடறு பிடிக்க
நீர் சொல்லுகிற அது ஸூக்ருத பலம் அன்றோ என்ன
அருள் செய்
இவன் பெற்றிடுவான் என்று இரங்கி யருள வேணும்
இது பின்னை சர்வர்க்கும் பிரயோஜனம் ஆகாதோ என்ன
எனக்கு
எனக்கு ஒருவனுக்கே செய்து அருள வேணும் –
பிரார்த்தித்த எனக்கே அருள் செய் -வேண்டுதல் -அதிகாரி ஸ்வபாவம் -உனது அருளே உபாயம் –

————————————————————————————————

அவதாரிகை –

இத் திருவாய் மொழியிலே இவர் நிஷ்கர்ஷித்த பிராப்யமாவது-(முக்கரணங்களால் கைங்கர்யம் )-ஸ்ரக் சந்த நாதிகளோபாதி தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று இறே
இவ்விடத்தில் எம்பார் அருளிச் செய்யும் படி –
சர்வேஸ்வரன் த்ரிவித சேதனரையும் ஸ்வரூப அனுரூபமாக அடிமை கொள்ளா நின்றான் -நாமும் இப்படி பெறுவோமே -என்று –
முக்தரும் நித்யரும்-தாங்களும் ஆனந்தித்து அவனையும் ஆனந்திப்பார்கள் -பத்தர் தாங்கள் ஆனந்தியாதே-அவனை ஆனந்திப்பார்கள்இன்புறும் இவ்விளையாட்டுடையான் –3-10-7-இறே –

இத் திருவாய் மொழிக்கு –நிதானம் இப்பாட்டு-
ஸூ ரசத்துக்கு உடலாக அனைவரும் பிரவர்த்திப்பாராக இருக்க -ஞான சூன்ய தத்வம் போலேவாக இருக்க வேண்டுமா –
சேதனர் அன்றோ -இப்படி பிரார்த்தனை பொருந்துமா -உலகோர் இப்படி இல்லையே -சங்கைக்கு எம்பார் பதில்
முக்தர் நித்யர் -அஹம் அன்னம் -என்று அவனை -ஆனந்திப்பித்து -அவன் உகந்த வழியாலே–அஹம் அந்நாத என்று தாங்களும் ஆனந்திப்பார்கள் –
போக ரசம் கொடுத்து -அத்தைக் கண்டு தாங்கள் ஆனந்திப்பார்கள் –படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –
ஈஸ்வர முகோலாசாமே பிரயோஜனம் -ஆஸ்ரயித்து பெரும் பலன் -சம்பந்தம் உணர்ந்து -மலர்ந்து -ஈஸ்வர கிருபையால் மாறுவார் பத்தர்-
லோகவத்து லீலா கைவல்யம் –
பத்தர் -தாங்கள் துளியும் ஆனந்திக்காமல் -இவர்கள் சிற்றின்பத்தில் தானே -லீலா ரசம் -அவனுக்கு கொடுப்பார்களே -அங்கே போக ரசம் –
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -லீலா உபகரணத்தில் இருந்து போக உபகரணமாக மாற வேண்டும்

மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று பிரார்த்திப்பான் என்-
திரு உள்ளம் ஆனபடி செய்கிறான் என்று இராதே -என்று பிள்ளை திரு நறையூர் அரையர் எம்பாரைக் கேட்க
அது கேளீர் -முன்பு பிரிந்து அன்று -பின்பு பிரிவுக்கு பிரசங்கம் உண்டாயன்று -இரண்டும் இன்றி இருக்கத் திரு மார்வில் இருக்கச் செய்தே
அகலகில்லேன் அகலகில்லேன் -என்னப் பண்ணுகிறது விஷய ஸ்வபாவம் இறே –
-அப்படியே பிராப்ய ருசி பிரார்த்திக்கப் பண்ணுகிறது -என்று அருளிச் செய்தார் –எம்பார்-

எம்மா வீட்டில் எம்மா வீடாய்–ஸ்ரீ  வைஷ்ணவ சர்வ ஸ்வமுமாய் -உபநிஷத் குஹ்யமுமாய் -சர்வேஸ்வரன் பக்கலிலே-அபேஷித்துப் பெறுமதுவாய்-(ராக ப்ராப்தமாய் )-இவ்வாத்மாவுக்கு வகுத்ததுமான பார தந்த்ர்யத்தை– அவன் பக்கலிலே அபேஷிக்கிறார் –

ராக பிராப்தமுமாய் -ஸ்வரூப பிராப்தமாய் இருக்கும் -என்றவாறு -சிஷ்டாசாரமும் மூல பிரமாண சித்தமுமாயும் இருக்குமே -இத்தனையுமாய் இருப்பதால் சாரதமங்களுக்குள் சார தமம் -எம்மா வீட்டில் எம்மா வீடு –

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-

முக் கரண கைங்கர்யங்களைப் பிரார்த்தித்த அனந்தரம்
தனக்கும் அவனுக்குமாக -முதல் படி / அவனுக்காகவேயாக இருப்பது -சரம படி
எம்மா வீட்டில் எம்மா வீடு -பிரதானமான தத் ஏக பாரதந்த்ர்யத்தை -தேர்ந்த பொருளை -நிஷ்கர்ஷிக்கிறார் –
இதுவே இந்த மூன்றிலும்-முக் கரண கைங்கர்யங்களில் வேண்டும் –
ஸ்வா தந்திர லேசம் இல்லாமல் -கலசாத தத் ஏக பாரதந்த்ர்யம் -அவனே பிரதானம் -அடியேனுக்கு இல்லை –அவன் உகப்பே பரம பிரயோஜனம் –
எனக்கே யாட்செய் –எனக்கே அடிமை செய்வாய்
எக்காலத்தும் என்று -தேவரீர் சொல்ல வேண்டும் -அவ்வளவில் நில்லாதே
என் மனக்கே வந்து -மனத்தே –
இடைவீடின்றி-மன்னி -பேராமல் -விச்சேதம் இல்லாமல் -நித்ய வாசம் செய்து
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -தனக்காக இல்லாமல் தனக்கேயாக -கிங்கரனாக கொண்டு-சமித்து பாதி சாவித்திரி பாதி யாக எனக்கும் உனக்கும் என்று இல்லாமல்
எனக்கே கண்ணனை-கண்ணன் இடத்தில் வேற்றுமை உருபு மயக்கம் –
யான் கொள் சிறப்பே-மோஷம் -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் –
கிருஷ்ணா த்ருஷ்ண தத்வம் -இருவரும் ஒவ் ஒருவருக்கு ஏற்ற வர்கள் –

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி தனக்கேயாக-
ஏழு சொற்களால் —ஏழு சங்கைகள் தீர்ந்து மகிழ்கிறார் ஆழ்வார் –
முதலிலே ஆட்செய்ய -என்ன வேணும் -ஆட்செய் -என்று -ஸ்வா தந்த்ர்யத்தை வ்யாவர்த்திக்கிறது -பரதன் சங்கை தீர்ந்தது –முதல் சங்கை தீர்ந்தது –
அதில் –எனக்கு ஆட்செய் -என்ன வேணும் -எனக்கு ஆட்செய் -என்று அப்ராப்த விஷயங்களை வ்யாவர்த்திக்கிறது –இரண்டாம் சங்கை தீர்ந்தது –
அதில் எனக்கே ஆட்செய் என்று தனக்கும் எனக்கும் பொதுவான நிலையைத் தவிர்த்து -எனக்கே ஆட்செய் என்ன வேணும் -மூன்றாம் சங்கை தீர்ந்தது
இது தான் ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி நிற்க வேணும் -நான்காம் சங்கை தீர்ந்தது
க்ரியதாமிதி மாம் வத -என்கிறபடியே -இன்னத்தைச் செய் –என்று- ஏவிக் கொள்ள வேணும்
இப்படி ஒரு வார்த்தை அருளிச் செய்து நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது
என் மனக்கே வந்து-என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுர வேணும் -ஐந்தாம் சங்கை தீர்ந்தது
புகுந்தாலும் போக்கு வரத்து உண்டாக ஒண்ணாது-இடைவீடின்றி மன்னி -ஸ்த்தாவர பிரதிஷ்டையாக எழுந்து அருளி இருக்க வேணும் – ஆறாம் சங்கை தீர்ந்தது
இருந்து கொள்ளும் கார்யம் என் என்றால்
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
ஸ்ரக் சந்த நாதிகளோ பாதியாகக் கொள்ள வேணும்
அது சூடுமவனுக்கும் பூசுமவனுக்கும் உறுப்பாய் -மிகுதி கழித்துப் பொகடும் அத்தனை இறே
ஒரு மிதுனமாய் பரிமாறா நின்றால் பிறக்கும் இனிமையும் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்கும் இறே
அங்கன் என்னுடைய ப்ரீதிக்கு நான் அன்வயித்தேன் ஆக ஒண்ணாது – ஏழாம் சங்கை தீர்ந்தது –

பரமம் சாம்யம் உபைதி -சக ப்ரஹ்மம் -சக சாம்ய -சப்தங்கள் -சாம்யா பத்தி சாஸ்திரங்கள் சொல்ல
-இவர் தமக்கு அந்வயம் இல்லாமல் அவனுக்கு மட்டுமே என்கிறது என்-
ஆனந்தத்தில் சாம்யா பத்தி -கைங்கர்யத்தால் வருகிற ஆனந்தம் வேண்டாம் என்கிறார் -அவன் ஆனந்தத்தால் இவருக்கும் ஆனந்தம் –
அஹம் அன்னம் அஹம் அந்நாத –சாஸ்திர வாசனையாலே -தானே அருளிச் செய்கிறார் –
ஜகத் வியாபார வர்ஜம்-ஹேது மாறுவதால் ஹர்ஷத்தில் மாறுபாடு வாராதே -பிள்ளை தமப்பன் சம்பாதித்த சொத்தை பிரீதியாக அனுபவிப்பது போலே

நின் என்றும் அம்மா என்றும் முன்னிலையாக சம்போதித்துக் கொண்டு போரா நிற்கச் செய்தே இங்குப் படர்க்கையாகச் சொல்லுவான் என் என்னில்
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற சமயத்திலே திரு முகத்தைப் பார்க்கில் வ்யவசாயம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார்
கோல -நெஞ்சம் நிறையும் -நிறைந்த சோதி நெடு வெள்ளம் ஆழ்ந்து போவேனே -நோக்கும் ஸ்மிதமும் சுழி யாறு பட்டு ஆழ்த்துமே-
அப்பாஞ்ச ஜன்யமும் பல்லாண்டு போலே இங்கும்
வங்கி புரத்து நம்பி திருமாளிகையில் மேல் கோட்டையில் ராமானுஜர் கையோலை இன்றும் வைத்து மகிழ்கிறார்கள் –
எனக்கே கண்ணனை-
தனக்கேயாக என்ற பின்புத்தை எனக்கே இறே -புருஷார்த்தம் ஆகைக்காக சொல்லுகிறது –
பாரதந்த்ர ஞானம் வந்த பின்பு வரும் ஸ்வா தந்த்ர்யம் –
ஞானாதிக்யத்தால் வரும் அஜ்ஞ்ஞானம் —என்னுடைய பந்தும் கழலும் தந்து போ போலே -அடிக் கழஞ்சு பெரும் -ஏற்றுக் கொள்ளத்தகுமே
அவன் ஆனந்தம் கண்டு ஆனந்தம் அடைவதில் தப்பில்லையே
ஒரு சேதனன் இறே அபேஷிப்பான்-
நீர் அபேஷிக்கிற இது செய்வோமாகப் பார்த்தால் எல்லார்க்கும் செய்ய வேணும் காணும் என்ன
யான் கொள் –
ஸ்வரூப ஞானத்தை நீ பிறப்பிக்க -அத்தாலே ஸ்வரூப ஞானம் உடைய நான் ஒருவனுமே பெறும்படி பண்ண வேணும்
உமக்கும் எப்போதும் நம்மால் செய்யப் போகாது என்ன
சிறப்பே —
பல கால் வேண்டா -ஒரு கால் அமையும்
அது தன்னிலும் திருவாசலைத் திருக் காப்புக் கொண்டு ஒருவர் அறியாதபடி சிறப்பாக செய்யவும் அமையும்
சிறப்பாகிறது -ஏற்றம் -அதாவது -புருஷார்த்தம் –
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தைக் கொண்டருள வேணும் -என்றபடி
சிறப்பாவது -1-முக்தியும்-2- சம்பத்தும் –3-நன்றியும்
இவற்றில் நான் உன் பக்கல் கொள்ளும் மோஷம் உனக்கேயாக எனைக் கொள்ளுமதுவே –
உன் பக்கல் நான் கொள்ளும் சம்பத்து என்னவுமாம் –நன்றி என்னவுமாம் –

எனக்கு மட்டும் என்னலாமோ -புருஷார்த்தத்தை -சைதன்ய -கார்யம் -ஸ்வரூப ஞானம் வருவதே -ஸ்வரூப யாதாம்ய ஞானம் வந்தவனே
பரார்த்த கைங்கர்யம் -பிரார்த்திப்பான் -பராங்குசனுக்கு -அவயவ பூதர் ஆனால் நாமும் பெறுவோமே
தேவும் மற்று அறியேன் என்று இருப்பார்கள் யாவரும் அவயவ பூதர் -மாதா பிதா -இதனாலே ஆளவந்தார் அருளிச் செய்தார் –
பொய்கை ஆழ்வார் தொடக்கமாக நாம் ஈறாக -அவயவ பூதர்களே -வகுள பூஷண தேசிகர் -பிரபத்தி மூலம் அடைய நியதர்கள் –
ஆறங்கம் கூற அவதரித்தான் -உபாங்கங்கள் மற்றவர்கள்
கண்ண பிரான் ஓன்று உடையாருக்கு அடியேன் ஒருவருக்கு உரியேனோ-தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
தண்டம் பவித்ரம் விடாமல் உடையவர் திருக் கோஷ்டியூர் நம்பி இடம் சென்றால் போலே

———————————————————————–

அவதாரிகை –

கீழ் மநோ வாக் காயங்கள் மூன்றாலும் உண்டான பேற்றை ஆசைப்பட்டு -இவை மூன்றாலும் உண்டான அனுபவத்தில் உன்னுடைய பரிதியிலே
அந்தர்பூதனாம் இதுக்கு மேற்பட எனக்காய் இருக்கும் ஆகாரத்தை தவிர்க்க வேணும் -என்றார் –
இது தான் சம்சாரிகள் பக்கல் பரிமாறுவது ஓன்று அல்ல -இவர் தாம் தம்மை யாராக நினைத்து இந்த பேற்றை அபேஷிக்கிறார் என்று
ஆராய்ந்து பார்ப்போம் என்று -நீர் ஆராயத்தான் நம்மை இப்படி அபேஷிக்கிறது என்ன –
17 விதமாக -முதல் ஸ்ரீ யபதியில் அருளின -பல பிறவியில் உழன்று இருந்தோமே –
தேஹமே ஆத்மா என்பார் -சாருவாகன் -லோகாயுதன்
கேவல தேஹத்துக்கு இந்த்ரியம் ஒழிய அனுபவம் இல்லாமையாலே இந்த்ரியங்களே காண் ஆத்மா என்பார் –
அந்த இந்த்ரியங்களும் மனஸ் சஹகாரம் இல்லாத போது பதார்த்த க்ரஹணம் பண்ண மாட்டாமையாலே மனசே காண் ஆத்மா என்பார் –
அம் மனஸ்ஸூ தனக்கும் பிராணன்கள் சஹகரிக்க வேண்டுகையாலே பிராணன் காண் ஆத்மா என்பார் –
இவை எல்லாமே உண்டானாலும் அத்யவசாயம் வேணுமே -அதுக்கு கருவியான புத்தி தத்வமே காண் ஆத்மா என்பார் –
இவை அத்தனைக்கும் அவ்வருகாய் ஜ்ஞான குணகமாய் ஜ்ஞான ஸ்வரூபமாய் இருப்பது ஓன்று ஆத்மா என்பாராகா நிற்பார்கள் –
அதில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை — ஏதேனுமாக உண்டான வஸ்து தேவர்க்கே உறுப்பாம் இதுவே வேண்டுவது -என்கிறார் –
வபுராதி ஷூ யோபி கோபி வா –மயா சமர்ப்பிதா –ஜீவன் உனக்கு உரியவன் —ஸ்தோத்ர ரத்னம் -52-என்னுமா போலே –

சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-

பாரதந்த்ர பிரகாசகனான ஈஸ்வரனை மறக்காமல் ஒழிய அருள வேணும்
இறப்பில் சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம் எய்துக எய்தற்க -ஆனந்தமான மோஷம் -சுக ஆபாசமான ஸ்வர்க்கம் துக்க ஏககதமான நரகம்
தேகம் பிரிந்து எய்தாலும் எய்யா விடிலும் -தேக விலஷண ஆத்மா -ஒத்துக் கொண்டாலும் இல்லாமலும் –
தேஹமே ஆத்மா தான் என்றாய் இவற்றைக் கிட்டாதே முடிந்தாலும்
யானும் பிறப்பில் பல் பிறவிப் பெருமானை -பிறப்பே இல்லாதவர் -ஹேது கர்மம் இல்லையே -கிருபா இச்சையால் பிறக்கிறான் –
பஹதா பிறக்கக் கடவன்
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே-ஒன்றும் மறக்காமல் என்றும் மகிழ்வேன் -விச்ம்ருதி இல்லாமல் சேஷ்டிதங்களை நினைத்து அனுபவிப்பேன்
முந்திய இந்த பாசுரம் –தனக்கு பாடி– அனுபவிக்கிறார்

சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம் இறப்பில் எய்துக எய்தற்க –
நித்ய சம்சாரியாய்ப் போந்தவன் நித்ய ஸூரிகளுடைய அனுபவத்தைப் பெற்று அனுபவிக்கக் கடவதாகச் சொல்லுகிற மோஷம் -(சிறப்பை இல்லாத வீடாக கொண்ட மோக்ஷம் )
பரிமித ஸூகத்தை உடைத்தான ஸ்வர்க்கம்
நிஷ்க்ருஷ்ட -வடிகட்டின -துக்கமேயான நரகம்
இவற்றை சரீர வியோக சமயத்திலே -பிராபிக்க -பிரபியாது ஒழிக-
இதுக்குக் கருத்து என் என்னில்
தேஹாதிரிக்தனாய் இருப்பான் ஒரு ஆத்மா யுண்டாகவுமாம்-தேஹமே ஆத்மா வாகவுமாம்-இதில் நிர்பந்தம் இல்லை என்கை –
தேஹாதிரிக்தமாய் இருப்பதொரு வஸ்து உண்டாகில் இறே ஸ்வர்க்காத் யனுபவங்கள் உள்ளது –
கேவல தேஹம் இங்கே தக்தமாக காணா நின்றோம் இறே
யானும்
சப்தத்தாலே நான் இப் பேறு இத்தனையும் பெறுவது காண் என்கிறார் –நைச்சய அனுசந்தானம் –
ஸ்வரூப நிர்ணயித்ததில் நிர்பந்தம் இன்றிக்கே -நான் ஆரேனுமாக அமையும் -என்று இருக்கிற நானும் -உனக்கு பரதந்த்ரனுமாய் இருக்கும் நான்-
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
பிறக்கைக்கு ஹேதுவான கர்மம் இன்றிக்கே இருக்கச் செய்தே கர்ம வச்யரும் பிறவாத ஜன்மங்களிலே பிறக்க வல்ல சர்வாதிகனை
அஜாய மாநோ பஹூதா விஜாயதே -அவதாரேண சௌலப்யம் —
மறப்பு ஓன்று இன்றி –
அவதாரங்களிலும் சேஷ்டிதங்களிலும் ஒரு மறப்பு இன்றிக்கே –
மறப்பு ஓன்று இன்றி –
இத்தலையில் உள்ளது எல்லாம் மறக்கலாம் -மறக்க வேண்டும் –
அத்தலையில் உள்ளது ஒன்றும் நழுவ ஒண்ணாது –
என்றும் மகிழ்வேனே –
மகிழ்ச்சி என்றும் அனுபவம் என்றும் பர்யாயம்-அனுபவிப்பேன் என்கிறார் –தொழுது எழு -பர்யாய சொற்கள் –
ஆக -இத்தாலே –ஜீவாத்மா -ஸ்வரூபமும் வெளியிடுகிறார் -(மகாரார்த்தம் )
பெருமான் -என்கையாலே தம்முடைய-1- சேஷத்வமும்
மறப்பு ஓன்று இன்றி -என்கையாலே -2–ஜ்ஞாத்ருத்வமும்
என்றும் -என்கையாலே-3- நித்யத்வமும்
மகிழ்வு -என்கையாலே-4- போக்த்ருத்வமும் -போக்யமாக முதலில் இருந்து அவன் போக்கியம் கண்டு நாம் போகிக்க –
ஆக -இத்தாலே –ஜீவாத்மா -ஸ்வரூபமும் வெளியிடுகிறார் –அருளிச் செய்கிறார் யாயிற்று –

———————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -53– திருவாய்மொழி – -2-2-6 ….2-2-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

May 12, 2016

அவதாரிகை —
ஆபத் சகன் ஆகையாலும் இவனே ஈஸ்வரன் –என்கிறார் –

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6-

ஆஸ்ரித ரஷண அர்த்தமாக ஷீராப்தியில் கண் வளர்ந்து
யவரும் யாவையும் எல்லாப் பொருளும் -சேதன அசேதனங்கள் -விபாகம் அற -சமஸ்த பதார்த்தங்கள்
கவர்வின்றித் -இடித்துக் கொள்ளாமல் -மிச்சம் இல்லாமல் -சோர்வு இல்லாமல்
தன்னுள் ஒடுங்க நின்ற பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி -பரவும் -ஞானம் தேஜஸ் -பிரபையாக கொண்ட -ஸ்வாமி
சங்கல்பத்தாலே சிருஷ்டித்து -கிரஹித்து கொள்வான் -லயம் -முன் நிலை அடைவதே -அழியாத நித்ய வஸ்துக்கள் –
அவர் எம்-நமக்கு —ஆழியம் பள்ளியாரே -ஷீராப்தி நாதன் -போக்யனாய்- கண் வளர்ந்து அருளுகிறார்
ஆகவே அவரே சர்வேஸ்வரன் -என்றதாயிற்று –

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
சேதன வர்க்கத்தையும் -அசேதன வர்க்கத்தையும் -இப்படி இரண்டு வகையாகச் சொன்னவற்றைக் கூட்டி -இப்படி இருக்கிற
சகல பதார்த்தங்களும் பிரளய ஆபத்தில் தன் வயிற்றிலே சேரும்படியான போது
கவர்வின்றித்
கவர்கையாவது -க்ரஹிக்கை-அதாவது ஹிம்சையாய் -ஒருவரை ஒருவர் நெருக்காத படி
திருவயிற்றுள் கவர் வின்றி -வெளியில் விடுபடாமல் -என்றுமாம் –
தன்னுள் ஒடுங்க நின்ற
தத் பஸ்யமஹம் சர்வம் தஸ்ய குஷௌ மகாதமன -என்னக் கடவது இறே
13 வருஷங்களும் ரிஷிகள் இடம் தர்ம உபதேசம் பெற்றார்களே பாண்டவர்கள்
பிரத்வி பதே -அரசே –என்று விளித்து -மார்கண்டேயர் -பெற்ற சேவையை சொல்லி -தன்னையும் சேர்த்து பார்த்து -கண்ணாடி அறை சேவை போலே –
பர்யங்கே -பாலம் பஸ்யாமி–நீ யார் கேட்க -விரலை வைத்து ஸ்ரீ யபதி -காட்டி –
தன்னுள் -தன் சங்கல்ப ஏக தேசத்திலே என்னவுமாம்-
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
இவர்கள் ரஷிக்கைக்கு உறுப்பான பரம்பின ஞான வெள்ளத்தை உடையனாய் -இப்படி ரஷிக்கப் பெற்றவிடம் தன் பேறு என்று
தோற்றும்படி இருக்கிற திவ்ய விக்ரஹத்தை உடையரான
அவர் எம் ஆழியம் பள்ளியாரே —
தாம் சம்சார மத்யஸ்தராய் இருக்கையாலே எல்லாரையும் கூட்டிக் கொண்டு-எம்- எங்களுடைய ரஷண அர்த்தமாக வந்த
ஏகார்ணவத்தை அழகிய படுக்கையை உடையரானார்
பயலும் பள்ளியும் பாழியும் படுக்கை -நிகண்டு –இப்படி ஆபத்சகனாய் அணியனாகையாலே இவனே ஈஸ்வரன் என்கிறார் –

——————————————————————————————-

அவதாரிகை –

அகடி கடநா சாமர்த்த்யத்தாலும் இவனே ஈஸ்வரன் -என்கிறார் –

பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –-2-2-7-

அகடி கடநா சாமர்த்தியம் -சேராததை சேர்த்து -ஆலிலை தளிரில் -பரத்வம் துரவபோதம் -அறிய முடியாததே–அளவிட்டு தெரிந்து கொள்ள முடியாதே
பள்ளி யாலிலை-ஆலிலையை பள்ளியாய்-கொண்டவனாய்
யேழுலகும் கொள்ளும் வள்ளல் -திரு வயிற்றுக்குள் வைத்து உதாரன்
வல் வயிற்றுப் பெருமான் -திடமான –
அவன் தன் கள்ள மாய மனக் கருத்தே -தர்ம ஷேத்ரம் சொல்லி -இவனே பல அதர்மங்கள் செய்த மாயம் -தர்மம் காக்க செய்த செயல்கள்
அவருடைய மானச வியாபாரம் -உள்ளுள்ளார் அறிவார் -மனசில் அறிவார் யார் -யாரும் இல்லை -பிரிநிலை ஏகாரம்-

பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
பள்ளி -படுக்கை -பவனாய் இருப்பதொரு ஆலந்தளிர் -இப்பொழுதே உத்பத்தியாய் இருக்கும்-
யாலிலை யேழுலகும் கொள்ளும் -இப்படுக்கையிலே சப்த லோகங்களையும் வயிற்றிலே வைத்துக் கண் வளரும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
வள்ளல் -புக்க லோகங்களுக்கு அவ்வருகே இன்னம் கொண்டு வா -என்னும்படி இடமுடைத்தாய் இருக்கை –

கரியவாய –நீண்ட அப்பெரியவாய கண்கள் -ஜகம் முழுவதும் மூலையில் அடங்கும் படி -பார்த்த பார்வையிலே பிராட்டியார் பெருமிதம் அடைய –
ரஷ்ய வர்க்கம் குறைவாய் ரஷண பாரிப்பு மிக்கு இருக்குமே-
புநர் உக்தி தோஷம் உண்டோ -சங்கை -கீழ் ஆபத் சகத்வம் -கவர்வின்றி தன்னுள் ஒடுங்க -இங்கே அகடிகடநா சாமர்த்தியம் -மேலும் ஒரு சங்கை பரிகரம் –
அவாந்தர பிரளயம் மூன்று லோகம் தானே -பிராக்ருத பிரளயம் -ஷீராப்தியே இல்லையே-ரஷணத்தில் உண்டான ஈஸ்வரன் உடைய பாரிப்பைச் சொல்லுகிறது -ஏழு உலகம்-த்ரை லோக்யம் -பூமி கீழ் -மேல் உள்ளவை -மகா பலி மூன்று -ஏழு லோகத்தை அளந்தால் போலே-

வல் வயிற்றுப் பெருமான் -உட்புக்க பதார்த்தங்களுக்கு பய பிரசங்கம் இன்றியே ஒழியும்படி மிடுக்கை உடைத்தாய் இருக்கை
இவ் வேழ் உலகும் உண்டும் இடமுடைத்தால் -பெரிய திருமொழி -11-5-2-
பெருமான் –
இப்படி ரஷிக்க வேண்டிற்று உடையவனாகை
அவனுடைய உள்ளுளாய கள்ளமாய மனக் கருத்தை உள்ளுள்ளார் அறிவார் அவன் தன் கள்ள மாய மனக் கருத்தே
யார் அறிவார்-
நீர் அறிந்து சொன்னீரே -என்ன- மார்க்கண்டேயரும் கண்ட அம்சம் மட்டுமே அறிந்து சொன்னார் –கண்டது ஒன்றைச் சொன்ன வித்தனை போக்கி-
உள்ளுள் -இன்னம் உள்ளே உள்ளே உண்டாய்
கள்ளமாய் -ஒருவருக்கும் தெரியாதபடியாய்
மாயமாய்- ஜ்ஞாதாம்சம் ஆச்சர்யமாய் இருக்கிற அவனுடைய மனக்கருத்து -மநோ வியாபாரத்தை ஒருவரால் அறியலாய் இருந்ததோ
மனக்கருத்தே தெரியாமல் மாயம் என்று அறிவான் எப்படி -துளி கண்டது மாயமாக இருப்பதால்
அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட -ஆழ்வார் அனுக்ரக லப்த ஞானம் -தெரிந்த அம்சம் அத்புதமாய் இருப்பதால்-

——————————————————————————–

அவதாரிகை –

சிருஷ்டியும் பாலநமும் ஸ்வ அதீனமாக உடையானாகையாலே இவனே ஈஸ்வரன் -என்கிறார் –

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8-

சர்வ பிரகார ரஷகன் அவனே -காக்கும் பிரான் கண்ண பிரானே
கருத்தில் -சங்கல்பத்தாலே
தேவும் எல்லாப் பொருளும் -சகல
வருத்தித்த மாயப்பிரானை யன்றி -வர்த்திப்பித்த -வளர்த்த -சத்தை பெற்று அபி வ்ருத்தி அடைய -ஈஸ்வரனை
சிருஷ்டித்து –
யாரே மூவுலகும் திண்ணிலை-திருத்தி-அநிஷ்டம் தொலைந்து திண்ணியதாக நிலை யுடைத்தாம் படி திருத்தி
தன்னுள் இருத்திக் -தன்னுள்ளே வைத்து அருளி
காக்கும் இயல்வினரே-ரஷித்து -இருவரும் இவரே -சம்ஹாரம் சேர்த்து அடுத்த பாசுரம் –
முதலாம் திரு உருவம் மூ என்பார்-ஒன்றே முதல் என்பர் -பேச நின்ற பிரமனுக்கும் சிவனுக்கும் -ஆபாத ப்ரதீதி
இருத்திக் காக்கும் இயல்வினரே-வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே –வருத்தித்த -உண்டாக்கி -காக்கும் -பாலனம்

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும் வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
தன்னுடைய சங்கல்ப்பத்தில் தேவ ஜாதியையும் மற்றும் உண்டான சகல பதார்த்தங்களையும் வர்த்திப்பித்த -உண்டாக்கின -சிருஷ்டித்த
ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரனை யன்றி
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள் இருத்திக் காக்கும் –
மூன்று லோகங்களையும் திண்ணிதான ஸ்திதியை யுடைத்தாம் படியாக திருத்தி —திருத்தி லோக மரியாதைகளை ஏற்படுத்தி -சத்தை உண்டாக்கி
வாக் /மனஸ் /காய அபசாரங்கள் அடியாக பிறவிகள் –
தம்முள் இருத்தி
அவ்வோ பதார்த்தங்களுக்கு அனுரூபமான ரஷணங்களையும் திரு உள்ளத்தே வைத்துக் காக்கும்
நஹி பாலன சாமர்த்தியம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-19–என்கிறபடியே ரஷணத்தைப் பண்ணும்
இயல்வினரே —
இத்தை இயல்வாக வுடையவர் –
ஸ்வபாவமாக யுடையவர் ஆர் –
மாயப்பிரானை அன்றி காக்கும் இயல்வினர் ஆர் -என்று அந்வயம்

——————————————————————————————–

அவதாரிகை —

ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றும் ஸ்வ அதீநமாம்படி இருக்கையாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார் –

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9-

ஜகத் உத்பத்தி சம்ஹாரங்களும் ரஷணத்தோ பாதி அவன் அதீனம்
காக்கும் இயல்வினன்-ரஷணம் -இவனுக்கு ஸ்வபாவிகம் –
கண்ண பெருமான் -கிருஷ்ணனா -சுலபனான -சர்வேஸ்வரன்
சேர்க்கை செய்து-சம்ஹாரம் -நாம ரூப விபாவ ரஹிதமாய் தம பர தேவி ஏகி பவதி -லயம் -கீழே கபளீகரம் —
மைத்ரேயர் -ஸ்ரீ விஷ்ணு புராணம் முதலில் -கேட்க -பராசரர் இடம் -ப்ரஹ்மா –ஏகே அநேக சூஷ்ம ஸ்தூல -நம-இதே இதே என்று சோம்பல் இல்லாமல் சொல்லி அருளி -சேர்த்தார் -ஒன்றாக வில்லை -இரண்டுமே இருக்குமே -அப்ருதக் சித்த விசேஷணம்-தம -ஏகி பவத் –சொல்லி -தத்வ த்ரயம் என்பதால் –தமஸ் மூல  பிரகிருதி அவன் இடம் சேர்ந்ததும் இதை கபளீகரம் இல்லையே -நாம ரூப விபாகம் இல்லாமல் ஒன்றி என்றபடி –
தன்னுந்தி யுள்ளேவாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் ஆக்கினான்- தெய்வ வுலகுகளே-வாசச் ஸ்தானங்கள் உடன் சிருஷ்டித்து –
திருநாபி -சத்ய லோகம் கொடுத்து -பிள்ளைக்கு தனி லோகமும் கொடுத்த –உந்தி யுள்ளே வாய்த்த திசை முகன் -என்றுமாம்
வாய்த்த -சமர்த்தனான –

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
ந சம்பதாம் சமாஹாரே -என்கிறபடியே பாலன கர்மத்தை ஸ்வபாவமாக உடையவன் –
ரஷண அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்து அவதரித்த சர்வேஸ்வரன் -ஏஷ நாராயண ஸ்ரீ மான் –ஆகதோ மதுராம் புரம் —
சேர்க்கை செய்து
சம்ஹார காலம் வந்தவாறே கார்ய ரூப பிரபஞ்சம் அடைய தன் பக்கலிலே சேர்க்கையாகிற செயலைச் செய்து –
தன்னுந்தி யுள்ளே வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் ஆக்கினான் தெய்வ வுலகுகளே –
தன்னுடைய திரு நாபீ கமலத்திலே -தான் ஒரு கால் ஸ்ருஷ்டி என்று விட்டால் பின்பு தன்னையும் கேட்க வேண்டாதபடி
ஸ்ருஷ்டி ஷமனான சதுர்முகன் இந்திரன் மற்றும் உண்டானே தேவர்களோடு கூட இவர்களுக்கு இருப்பிடமான
லோகங்களையும் கட்டளைப்பட உண்டாக்கினான் –தன் உந்தியுள்ளே ஆக்கினான் –

————————————————————————————

அவதாரிகை –

இவ்வளவும் வர நான் பிரதிபாதித்த பரத்வத்தை நீங்கள் ஆஸ்ரயணீயராக நினைத்து இருக்கிறவர்கள்-மேல் எழுத்தைக் கொண்டு விஸ்வசியுங்கோள் என்கிறார்-

கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10-

சர்வ ஸ்மாத் பரன் -அவன் -அனைவராலும் வணங்கப்படும் படியால் சர்வேஸ்வரன் இவனே –
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் -ரிஷபம் தர்ம பிரதிநிதி -கலி -சூத்திர புருஷன்
-மாடுக்கு ஒரே கால் -பரிஷித் -எருது -தர்ம தேவதை பசு பூமி சத்யம் தானம் இத்யாதி நான்கு கால்களில் ஒன்றே கலியுகத்தில்-
கர்மவச்யரான ருத்ரன் –
புள்ளூர்தி -வாகனமாக உடையவனது -வேதாத்மா -விஹகேச்வர -வேதாந்த வேத்ய பரதெய்வம் -இவனே -வேதாந்த பிரதிபாத்யன்
கழல் பணிந்து
கள்வா-கிருத்ரிமனே -அவதார முகத்தாலே தனது ஆதிக்யம் மறைத்து
எம்மையும் ஏழுலகும் நின் னுள்ளே தோற்றிய இறைவ -சங்கல்பத்துக்குள் -என்று ஏத்துவரே-ஸ்துதித்து-
கேசவாதி நாமங்களை நன்றாக சொன்னதால் -வரம் கேட்க -இந்த விருத்தாந்தம்

கள்வா –
சர்வேஸ்வரன் பக்கலில் வந்து வரம் கொள்ளுகிற இடத்தில் தேவர் இன்னம் எனக்கு ஒரு வரம் தர வேணும் -நீர் தந்த வரம் நிலை நிற்கும்படி
என் பக்கலிலே வந்து ஒரு வரம் பெற்று போக வேணும் என்று ஆர்த்திக்க -அப்படியே செய்கிறோம் என்று விட்டு -ருக்மிணிப் பிராட்டிக்கு
ஒரு பிள்ளை வேணும் என்று சென்று –நமோ கண்டாய கர்ணாயா -என்னுமா போலே ஏத்த அவனும் -உமயா சார்த்தமீசாநா-என்கிறபடியே
புறப்பட்டு -நீ கறுப்புடுத்து தாழ நின்ற நிலையிலே இச் செயலைச் செய்தால் இத்தை நாட்டார் மெய் என்று இருப்பார்களோ கள்வா -என்பர்கள்
தன் ஸ்வா தந்த்ர்யத்தை மறைத்து பர தந்த்ரனாய் நிற்கை இறே களவாகிறது

உமா -மலைமகள் -ஹிமாசலம் பெண் இலை  மட்டும் உண்டு இளைத்து -உ மா இப்படி செய்யாதே அபர்ணா -இலை  கூட சாப்பிடாத
ராஜ தர்பார் -கருப்புடுத்து சோதித்தல் -அந்தர்யாமி -நாயனார் -இங்கே விபவம்

கைலாச யாத்ரையிலே நமோ கண்டாய கர்ணாய நம கடகடாயச –என்று ஸ்தோத்ரம் பண்ணின படியே கேட்ட பிராமணன்
-இதுக்கு முன்பு ஒருவரை ஸ்தோத்ரம் பண்ணி அறியாத வாயானாவாறே மீன் துடிக்கிற படி பாராய் -என்றான் நாத்தழும்ப நான்முகனும்
ஈசனுமாய் முறையால் ஏத்த -பெரிய திருமொழி -1-7-8-என்கிறபடியே ஸ்தோத்ரம் பண்ணி நாத்தழும்பு பட்டுக் கிடக்கிறது அன்றே –
இவன் தாழ நின்ற நிலையும் ஸ்தோத்ரம் பண்ணின நிலையும் –களவு -என்னும் இடத்தை உபபாதிக்கிறது மேல்
கொள்வன் நான்– மாவலி –மூவடி என்றானே
என்னை வகித்து என்னிடம் வரம் வாங்கிக் கொள்ள வேணும் –வகித்தது மேகமாய் –என்று வருளிச் செய்வார் –
நூறு வருஷம் மேகமாய் இருந்து –மேகமாய் வகித்தான் திருமால் காண் சாழலே -திரு வாசகத்தில் சாழல் பாசுரம் –
அகிர்த்ரும சேஷ்டிதம்-சொக்கட்டான் -காசி ராஜ்யம் -புண்டரக வாஸூ தேவன் -சீமாலிகன் –உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல்
காசி ராஜன் கோபித்து படை எடுத்த வர -நிராதாரத்துடன் -சக்கராயுதம் கொண்டு எரித்து -அவன் இடமே வரம்கேட்ட சேஷ்டிதம் என்னே –
பிஞ்சுத் திருவடியால் தாத்தா பெறக் குழந்தை காலை தலையில் அடித்து கொண்டது போலே -பாரதந்த்ரம் -உனது ஸ்வதந்த்ர்யத்தால் செய்த செயல்

எம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய –
நீ இவற்றை மனைகிற-படைக்கிற-போது -எங்களையும் மனைந்து பின்னை யன்றோ திர்யக் ஜாதிகளை உண்டாக்கிற்று
இறைவ என்று
இறைவா என்னா நிற்பார்கள்
இங்கனே சொல்லுகிறவர்கள் தான் ஆர் என்னில்
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
ராஜ சேவை பண்ணுவார் தந்தாம் அடையாளங்கள் உடன் சட்டையும் பிரம்புமாய் சேவிக்குமா போலே இவர்களும் தாம்தாம்
அடையாளங்கள் உடன் ஆயிற்று வந்து சேவிப்பது
இரவியர் மணி நெடும் தேரோடும் –இத்யாதி
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–
சர்வேஸ்வரன் பெரிய பிராட்டியாரும் தானுமாய் இருக்கிற இருப்பிலே புகப் பெறாமையாலே திருப் பாற் கடலுக்கு இவ்வருகே கூப்பிட்டால்
இவர்களுக்கு காட்சி கொடுக்கைக்காக திருவடி திருத் தோளிலே ஏறிப் புறப்படும் ஆட்டத்து வெளியிலே -வையாளி வெளியே –
ஆனைக்காலிலே துகை யுண்ணா நிற்பார்கள் –

————————————————————————————-

அவதாரிகை

நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார்களுக்கு தேவதாந்த்ரங்கள் பக்கல்
ஈச்வரத்வ புத்தி பண்ணுகை யாகிற ஊனம் இல்லை -என்கிறார்

ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11-

பலமாக சர்வ பிரகார வைகல்யத்தை அருளிச் செய்கிறார்
ஏத்த வேழுலகும் – ஏத்தும் இதே விளை நீராக
வேழுலகும் கொண்ட-அளந்து கொண்ட கோலக் கூத்தனை -வல்லார் ஆடுவது போலே -வடிவு அழகு -அநாயாசேன-அளந்த
குருகூர்ச் சடகோபன் சொல் வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன் -லோகத்துக்கு அலப்ய லாபம்
சொல் வாய்த்த -சொல்லாலே வாய்ந்த திருவாய்மொழி
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே-உடன்பட்டு -அர்த்தத்துடன் -ஸ்துதி ரூபமாக -ஊனம் குறைவுகள் இல்லை
த்ரிதேவதா சாம்யம் என்னும் ஊனம் இல்லை –

ஏத்த வேழுலகும் கொண்ட –
சங்கைஸ் ஸூராணாம்-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்கிறபடியே ஏத்த –
மங்களங்களை வளர்த்துக் கொடுக்க -அனைவரும் -ஸ்துதிதிக்க-
அந்த ஹர்ஷத்தாலே சகல லோகங்களையும் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட
கோலக் கூத்தனை –
திரு வுலகு அளந்து அருளின போது வல்லார் ஆடினால் போலே யாயிற்று இருப்பது
அப்போதை வடிவு அழகை அனுபவிக்குமது ஒழிய இந்திரனைப் போலே ராஜ்ய ஸ்ரத்தை இல்லையே இவர்க்கு
வங்கக் கடல் கடைந்த கேசவனை மாதவனை -ஆண்டாள் மட்டுமே கேசத்தின் அழகைக் கண்டாள் –
குருகூர்ச் சடகோபன் சொல்
ஆப்திக்கு இன்னார் சொல்லிற்று என்னக் கடவது இறே
சடகோபன்
வேதாந்தத்தில் காட்டில் ஆழ்வார் பக்கலிலே பிறந்த ஆபிஜாத்யம் –லோக விக்ராந்த சரனௌ -வேதம் தான் தோன்றி போலே இல்லையே
வாய்ந்த வாயிரத்துள் –
இத்தனை போது இவர் பிரதிபாதித்த பர வஸ்து நேர் பட்டால் போலே யாயிற்று இப்பிரபந்தமும் நேர்பட்டபடி -ஸ்தாபித்ததாயிற்று-
வாச்யத்தில் காட்டில் வாசகம் நேர்பட்ட படி என்றுமாம்
அதாவது விஷயத்தை உள்ளபடி பேச வற்றாய் இருக்கை
இவை பத்துடன் ஏத்த வல்லார்க்கு
இத் திருவாய் மொழியை சஹ்ருதயமாக ஏத்த வல்லவர்களுக்கு
இல்லையோ ரூனமே —
இவ்வாத்மாவுக்கு ஊனமாவது அபர தேவதைகள் பக்கலிலே பரத்வ பிரதிபத்தி பண்ணுகையும்-பரதேவதை பக்கலிலே பரதவ புத்தி பண்ணாமையும்
இப்படி வரக் கடவதான ஊனம் இது கற்றார்க்கு இல்லை –

முதல் பாட்டில் -மேல் பரக்க அருளிச் செய்கிற இத் திருவாய் மொழியின் அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்தார்
இரண்டாம் பாட்டு முதல் –துக்க நிவர்த்தகன் ஆகையாலும்
சீலவான் ஆகையாலும்
ஸூகுமாரன் ஆகையாலும்
புண்டரீகாஷன் ஆகையாலும்
ஆபத்சகன் ஆகையாலும் அகடிதகடநா சமர்த்தன் ஆகையாலும்
ஸ்ருஷ்டி ஸ்திதிகளைப் பண்ணுகையாலும்
சம்சாரம் ஆகிற செயலைச் செய்கையாலும்
ஈஸ்வர அபிமாநிகளாய் இருக்கிறவர்களுடைய ஸ்தோத்ராதி களாலும்
இப்படி பஹூ பிரகாரங்களாலே -அவனுடைய பரத்வத்தை அருளிச் செய்து இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

————————————————————————————————-

——————————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 12-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவரவர் அடிக்கே ஆங்கு அவர் பால்
உற்றாரை மேலிடா தூன் ——————12-

ஊனம் இல்லை -அங்கு -/ ஊன் இல்லை இங்கு -பிறவியே இல்லை நம்மாழ்வார் கழல் பிடித்தால் –

———————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர்

ஸம்ஸ் லிஷ்ய துக்க சமநாத் முதித பிரசங்காத்
தந் மூலமப் ஜநயநஸ்ய மஹேஸ் வரத்வம்
ஆஹாந் வயாதி தாதோ அபி மநுஷ்ய பாவே
பவ் ராணி கோத்த நயதஸ் சடஜித் த்விதீயே

ஸம்ஸ் லிஷ்ய —1-10-நம்பியை சேராத துக்கம்-
துக்க சமநாத் –2-1-வாயும் திரைஉகளும் -சமாஹிதர் ஆனாரே
முதித –ஆனந்தப்பட்டு
பிரசங்காத்
தந் மூலமப் ஜநயநஸ்ய மஹேஸ் வரத்வம் –சர்வேஸ்வரவேஸ்வர-
ஆஹாந் வயாதி தாதோ அபி மநுஷ்ய பாவே
பவ் ராணி கோத்த நயதஸ் -விபவத்வதில் -இதிகாச புராண பிரக்ரியை-
சடஜித் த்விதீயே

—————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் பவ துரித ஹரம் வாமநத்வே மஹாந்தம்
நாபீ பத்மோத்த விஸ்வம் தத் அநு குண த்ருஸம் கல்ப தல்பீ க்ருதாப்திம்
ஸூப்தம் ந்யக்ரோத பத்ரே ஜகத வநதியம் ரக்ஷணா யாவ தீர்ணம்
ருத்ராதி ஸ்துத்யலீலம் வ்யவ்ருணுத லலித உத்துங்க பாவேந நாதம் —

பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் -விபவ பரத்வம்
பவ துரித ஹரம்-சம்சார துக்க –சிவன் துக்கம் -போக்கி/பவன் –சிவன் சம்சாரம்
வாமனத்வே மஹாந்தம்
நாபி பத்மோத்ப விச்வம்
தத் அணுகுண த்ருசம் –திருக்கண் படைத்து -தகும் கோல தாமரைக் கண்ணன்
கல்ப தல்பீ –ஆழியை படுக்கை யாக
ஸூக்தம்–பத்ரே –ஆலிலை
ஜகத் அவதீர்ணம்
ரஷணாய அவதீர்ண்யம்
ருத்ராதி துத்ய லீலம்
விவ்ருணத லலிதோத்துங்க பாவேனே நாதம் –

1-பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் -திண்ணன் வீடு -இத்யாதி -நம் கண்ணன் கண் அல்லையோர் கண்ணே –
பூர்ணமான ஐஸ்வர்யத்தோடே கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும்

2-பவ துரித ஹரம் -மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
ஹரனுடைய துரிதத்தைப் தீர்த்ததும்

3-வாமநத்வே மஹாந்தம் –மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
வாமனனாக தான் த்ரி விக்ரமனாய் வளர்ந்து பூமிப் பரப்பு எல்லாம் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டும் –

4-நாபீ பத்மோத்த விஸ்வம் -தேவும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த
தேவாதி பதார்த்தங்களை உண்டாக்குகைக்காகத் திரு நாபீ கமலத்தில் திசை முகனை ஸ்ருஷ்டித்தும்

5-தத் அநு குண த்ருஸம் -தாக்கும் கோலத் தாமரைக் கண்ணன்
அதுக்குத் தகுதியாய்த் தாமரைப் பூ போலே இருக்கிற திருக்கண் மலரை யுடையனாயும்

6-கல்ப தல்பீ க்ருதாப்திம் -எம் ஆழி யம் பள்ளியாரே
பிரளய காலத்தில் பயோ நிதியைப் படுக்கையாகக் கொண்டும்

7-ஸூப்தம் ந்யக்ரோத பத்ரே -பள்ளி ஆலிலை ஏழுலகும் கொள்ளும் வள்ளல்
அப்போது அகடி கடநா சாமர்த்தியத்தாலே ஸப்த லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்துக் கொண்டு
ஆலிலை மேல் கண் வளர்ந்து அருளியதும்

8-ஜகத வநதியம் -மூ உலகும் தம்முள் இருத்திக் காக்கும்
த்ரி லோகீ ரக்ஷணத்தை எப்போதும் சிந்தித்தும்

9-ரக்ஷணா யாவ தீர்ணம்-காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
தத் அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும்

10-ருத்ராதி ஸ்துத்யலீலம் -வெள்ளேறன் நான்முகன் இத்யாதி
பிரம்மா ருத்ராதிகளாலே ஸ்துதிக்கப் படுமவையான சேஷ்டிதங்களை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமானை

வ்யவ்ருணுத லலித உத்துங்க பாவேந நாதம் –மநுஷ்ய ஸஜாதீயனாய் அவதரிக்கச் செய்தேயும் பரத்வம் தோற்ற இருக்கும்
என்று திண்ணன் வீடு -என்கிற ஸதகத்திலே ஆழ்வார் தெளிவித்து அருளினார் என்கிறார் –

———–

அவதாரிகை –

ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான பரத்வத்திலே
அவதாரத்திலே அனுசந்தித்து
பரோபதேசம் பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
பிரிந்தாரை கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் அளவன்றிக்கே
கூடினாலும் பிரிவை மறக்கும்படி பண்ணவற்றான விஷய வைலஷண்யம்
அதுக்கு ஈடான குண வைலஷண்யம்
அதுக்கு அடியான சர்வேஸ்வரத்வம்
இவற்றை அனுவதித்து
இப்படி ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான சர்வேஸ்வரத்வத்தை  
இதிஹாச புராண பிரக்ரியையாலே
பிறரைக் குறித்து உபதேசித்துச் செல்லுகிற
திண்ணன் வீட்டில் அர்த்தத்தை –
திண்ணிதாம் மாறன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————————————————

வியாக்யானம்-

திண்ணிதா மாறன் –
கீழே
மூவா முதல்வா இனி வெம்மைச் சோரேல் -2-1-10-
என்ற அநந்தரம் –
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி -2-1-11–என்கிற
காரணத்வத்தால் வந்த பரத்வத்தைக் காட்டி சமாதானம் பண்ண
அத்தாலே தரித்த தார்ட்ட்யத்தை யுடைய ஆழ்வார் -என்னுதல்
எல்லாருக்கும் ஸூ த்ருடமாம்படி பரத்வத்தை-அருளிச் செய்த ஆழ்வார் -என்னுதல் –

திருமால் பரத்துவத்தை –
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை
நீயும் திருமாலால் -என்று இறே அருளிச் செய்தது –

நண்ணி யவதாரத்தே நன்குரைத்த –
திருமால் பரத்வத்தை
அவதாரத்தே நண்ணி
நன்குரைத்த
முதல் திருவாய் மொழியிலே ஸ்ருதி சாயலிலே
பரத்வே பரத்வத்தை அருளிச் செய்தால் போல் அன்றிக்கே
இதிஹாச புராண பிரக்ரியை யாலே
அதி ஸூலபமான அவதாரத்திலே
பரத்வத்தை ஆஸ்ரயணீயமாம் படி நன்றாக அருளிச் செய்த
-அன்றிக்கே –
திருமால் பரத்வத்தை தாம் நண்ணி
அவதாரத்திலே நன்கு உரைத்த -என்றாகவுமாம்-

நன்கு உரைத்த வண்ணம் அறிந்து –
நன்கு உரைத்த வண்ணம் அறிகை யாவது –
இப்படி அவதாரே பரத்வத்தை
ஸூஸ்பஷ்டமாம்படி
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -என்றும்
கோபால கோளரி ஏறு அன்றி ஏழுலகும் ஈ பாவம் செய்து
அருளால் அளிப்பார் யார் -என்றும்
அருளிச் செய்த பிரகாரத்தை அறிகை –
மற்றும் தத் சேஷமாக-
தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே -என்றும்
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் மிகுஞ்சோதி மேல் அறிவார் எவரே -என்றும்
கள்வா -என்று துடங்கி –புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவர்
என்றும் அருளிச் செய்தவையும் உண்டு இறே –
இப்படி அருளிச் செய்யும் இடத்தில்
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்தி ரபி சாப்யாய -என்றும்
ஸ ஏஷ ப்ருது தீர்க்கா ஷச சம்பந்தி தேஜ நார்த்தன -என்றும்
அர்ச்சய மர்ச்சிதும் இச்சா மஸ்சர்வம் சம்மதம் து மர்ஹத -என்றும்
பாதேன கமலா பேன ப்ரஹ்ம ருத்ரார்சித நச -என்றும்–பேதைக் குழவி பிடித்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே -என்றும்
சொல்லுகிற பிரமாணங்களைப் பின் சென்று இறே அருளிச் செய்தது –
ராமா– கமலா பத்ராஷஸ் –சர்வ சத்வ மநோஹரா-என்றும்–படி எடுத்து உரைக்கும் படி யன்றே அவன் படி -மூவாறு மாசம் மோகித்து –
சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்று –முலை மேல் சோர்கின்றாளே -கல் எடுத்தது பெரியது இல்லை சொல் என்று –
லாவண்யம் சௌந்தர்யம் -இரண்டையும் சுருங்கச் சொல்லி –
பாவநஸ் சர்வ லோகா நாந்த்வமேவர ரகு நந்தன -இத்யாதி
பிரமாணங்களைப் பற்ற
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் -என்றும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் -என்றும் அருளிச் செய்தார் இறே
இப்படி பரோபதேச பிரகாரத்தை அறிந்து
பரத்வ ஸ்தாபகரான ஆழ்வார் இடத்திலே –

வண்ணம் அறிந்து -அற்றார்கள்யாவர் –
அற்றுத் தீர்ந்து
அனந்யார்ஹராய் இருப்பார் யாவர் சிலர் –

அவர் அடிக்கே ஆங்கு அவர் பால் உற்றாரை மேலிடா தூன்
அவர்கள் திருவடிகளுக்கு அனந்யார்ஹராய்
அவ்விடத்திலே அப்படியே
அவர்கள் விஷயத்தில் அந்தரங்கராய் கிட்டினவர்களை
மாம்ஸாஸ்ருகாதி மல ரூபமான தேஹம் அபி பவியாது-
இத்தால் தேக சம்பந்தம் மேலிடாது -என்றபடி-

————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -21–திருவாய்மொழி தனியன்கள் –ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

April 23, 2016

ஸ்ரீ நாத முனிகள் அருளிய தனியன்

பக்த அம்ருதம் விஸ்வ ஜன அனுமோதனம்
சர்வ அர்த்ததம் ஸ்ரீ சடகோப வாங்மயம்
சஹச்ர சாக உபநிஷத் சமாகமம்
நமாம் யஹம் திராவிட வேத சாகரம் –

இரண்டாம் வேற்றுமை உருபில் அனைத்தையும் –திராவிட வேத சாகரம் –அஹம் நமாமி-திராவிட சாகரத்தை வணங்குகிறேன்-
அனுமோதனம் -பேர் ஆனந்தம்
சர்வ வர்த்ததம் -எல்லா ஆழ்ந்த பொருள்கள் கொண்டது
ஸ்ரீ சடோ கோப வாங்மயம் -திரு வாய் மொழி –

பக்த அம்ருதம்
பண் கொள் ஆயிரத்து இப்பத்தால் பத்தராகக் கூடும் -3-6-11-
– பத்தர் பரவும் ஆயிரத்தின் –3-5-11-
-பத்தர் பித்தர் பேதையர் பேசின -கம்பர் -நாத முனிகள் அரங்கேற்றம்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலை சொன்னேன் -9-4-9-

விஸ்வ ஜனம் -அனுமோதனம் -பிரபன்னர்களுக்கு மட்டும் இல்லை -ஜனம் -பிறந்த அனைவருக்கும் –
கண்டவாற்றால் உலகு தனக்கே நின்றான்தன்னை வண் தமிழ் நூற்க நோற்றேன் -நோற்றது அவன் -நான் நூற்க -அடியார்க்கு இன்ப மாரி – கோரா மா தவம் செய்தனன் கொல் -பெரிய பெருமாள் அன்றோ தவம் செய்தார் –
ஏர்விலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை பார் பரவு இன் கவி 7-9-5-

சர்வார்த்ததம்
ஆற்ற நல்ல வகை –காட்டும் அம்மானை –அமரர் தம் ஏற்றை –எல்லாப் பொருளும் விரித்தானை –4-5-5-
மிக்க இறை நிலையும் தொடங்கி -பகவத் சேஷத்வம் தொடங்கி -உயர்வற உயர்நலம் உடையவன் –
-மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்க பாடி -என் நெஞ்சுள் நிறுத்தினான் -பாகவத சேஷத்வம் வரை அருளி
கங்கை காங்கேயன் பாடிய எச்சில் வாய் இல்லையே -அசத் கீர்த்தனம் இல்லையே
அறிய வேண்டிய அர்த்தம் –

ஸ்ரீ சடகோப வாங்மயம்
குருகூர் சடகோபன் சொல் -1-1-11–சாட்யம் போக்கி -பிறர் சாட்யமும் போக்கி-சஹச்ர சாக உபநிஷத் சமாகமம்–வேத சார -சாம வேத சார -சாந்தோக்யம் சார -உத்கீதம் -உத்கீத பிரணவம்
உ து -விளக்க 1102- உயர்வற –பிறந்தார் உயர்ந்தே
உத்காதா -தொனியில் பாட உத்கீத பிரணவம்

நமாம் யஹம் திராவிட வேத சாகரம்
வேத அரும் பொருள் நூல்களை -வண் தமிழ் நூலாக்கி 9-3-3-
எய்தற்கு அரிய –ஆயிர இன் தமிழ் பாடினான் –
-அளவியன்ற அந்தாதி –வான் ஓங்கு பெரு வளமே -1-4-11-
– பத்தர் பரவும் படி சொல்லிற்று -1-5-11-

கடல்– திருவாய்மொழி ஒப்புமை –
பக்தர்களுக்கு அமுதம் இது –மறைப் பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து –துறைப் பால் படுத்தி
தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம் -பாம்பணைப் பள்ளியன் அன்பர் -ஈட்டம் களித்து அருந்த நிறைப்பான் கழல் அன்றி ஜன்ம விடாயுக்கு நிழல் இல்லை
கம்பர் -நாய் போல் –பிறவி என்னும் நோய் –இம்மைக்கும் எழுமைக்கும் மருந்து
விண்ணவர் அமுது உண்ண -அது -தேவர்களுக்கு போக்கியம் விண்ணின் மீது அமரர்க்காக
இது பாலோடு அமுதம் அன்ன ஆயிரம் -8-6-11-அவனித்தேவர் களுக்காக -8-4-10-விளையாடும் பூமியில் உள்ளார் –பூ சுரர் போக்யம்
ஆராவமுதத்தை உடைத்தாய் இருக்கும் இது –அது அமுதம்
-கடல்-அது சர்வ ஜன சந்தோஷம் -அபிமத ப்ரதம் -தர்ச நீயம் –
இது-முதல் பத்தர் வானவர் என் அம்மான் -ஆச்சார்ய ஹிருதயம் -187 சூர்ணிகை –
வீட்டின்ப இன்ப இன்ப பாக்களில் -த்ரவ்ய பாஷா ஆராய்ச்சி–இன்ப மாரியில் ஆராய்ச்சி -மாத்ரு யோனி பரிஷை உடன் ஒக்கும் –
இவற்றில் பிராவண்யம் -அர்ச்சாவதாரத்தில் -இவள் பரமே –திரு விருத்தம் இளைமை -பிராயத்தில் இருந்து -இவளுக்கு பக்தி உண்டு
இவள் பரமே என்ன உண்டாய் -தேவர் போகய அமிர்தம் போல் அன்றிக்கே –
என் நாவில் இன் கவி தமிழர் இசை காரர் என் வாய் முதல் அப்பன் பத்தர் வானவர் கேட்டு ஆரார் –
தென்னா என்னும் என் எம்மான் -அவனும் தலை -மகுடம் சாய்க்க வல்ல கவி பாடும்
பார் பரவும் என்னும் படி –சேஸ்வர விபூதி த்வய போக்யமாய் இருக்கும் –
ஈஸ்வர ஈசிதவ்ய வாசி இன்றி போக்யமாய் இருக்கும் -இது
அம்பஸ்அகஸ்த்யர் வாயில் இருந்து வந்த நீர் கடல்
இது சடகோப வாங்மயம் -சந்தஸ் –
திரு வாய் மொழி -நேரான மொழி பெயர்ப்பு -ஸ்ரீ சடகோப வாங்மயம்-
சந்தன சாகா சாமான்யம் -கடல் -சகஸ்ர சாகா -சார -சந்தனம்-
சாம வேத சாரம் -சர்வ சாகா சாரம் -சந்தன சாகா சமாகத்தை அருகாமை
சர்வ வேத சாகா உபநிஷத் சமம்
அஞ்சலிம்-ப்ராங்முகம் க்ருத்வாஅசரண்யனுக்கு சரண்யமாய் இருக்கும் –கடலுக்கு முன் பெருமாள் கடல்
வண் தமிழ் நூல்களான இது சடகோபன் பாட்டு என்றவாறே நாடு அடைய கை எடுக்கும் படியாக அனுசந்திக்க -என்றதும் கை கூப்புவோம் உலகமே –

வந்தே இராமாயண ஆர்ணவம் -போலே
ஸ்லோகஜால ஜல தீர்ணம் -நீர்
சர்க்கம் -500 -கல்லோலங்கள்
காண்டம் -6 முதலைகள் –
அங்கு 24000/சதுர விம்ச -இங்கு சீர்த் தொடை ஆயிரம் 24
தீர்த்தங்கள் ஆயிரம்
500 சர்க்கம் -பத்து நூறு என்னும் படி இருக்கும்
ஷட் காண்டம்- ஷட் பதார்த்த த்வய பிரதிபாத்யமாய் இருக்கும்-தீர்த்த சரணாகதி திருவாய் மொழி என்பதை சார சங்க்ரஹத்தில் சொன்னோம் –
7 காண்டங்கள்- 630 சர்க்கம் -24000 ஸ்லோகங்கள்
6 காண்டங்கள் 500 சர்க்கம் –
பத்து பத்தாக இருக்கும் தமிழ் வேத சாகரம்
அது ரகு வம்ச சரிதம்– இது முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல்மாலை ஆயிரம்
இஷ்வாகு -தண்டகன் –அம்பரிஷன் –ககுஸ்தன் –பகீரதன் -ரகு -ராகவன் –
வால்மீகி பகவான் ரிஷி –-ஔபசாரிகம் வாய்பேச்சுக்காக-ப்ரோக்தம் குருகூர் சடகோபன் சொல்
மகா பாதக நாசனம் -அரு வினை நீர் செய்யும் படியாய் இதுவும் இருக்கும்
சம்சார பதவி நீக்கும் -வானின் மீது ஏற்று -8-4-11-அருள் கொடுக்கும்
திருவடியே அடைவிக்கும் – -4-9-11-கீதா உபநிஷத் -கோதா உபநிஷத் -போலே இதுவும் சடகோப உபநிஷத் –தனிக் கேள்வி அது -இது மிதுனத்தில் இன்பம் பயக்க -எழில் மாதரும் –

————————————————————————–

ஸ்ரீ ஈஸ்வர முனிகள் அருளிச் செய்த தனியன்–

திருவழுதி நாடு என்றும் தென் குருகூர் என்றும்
மருவினிய வண் பொருநல் என்றும் -அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து —

இத்தால் உத்தேச்ய வஸ்துவின் சம்பந்த சம்பந்தம் பெற்ற வஸ்துக்களும் உத்தேச்யம்

பெண் புக்ககத்தாரை ஆசைப்பட்டு இருக்கும் பிள்ளை வேட்டகத்தாரை ஆசைப் பிடித்து இருக்கும் –
நாடு ஊர் ஆறு –வாசி அற அனைத்தும் -உத்தேச்யம் -வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை திருக் கோயில் -அப்பன் கோயில் –
ஆழ்வார் திருவடி ஸ்பர்சம் -பட்டதால் -பிரசன்னமான மனசே -வைகுந்த சேவகனார் சேவடியோபாதி வைகுந்த வானோடும் உத்தேச்யம்-இறந்தால் தங்குமூரான-கண்ணன் விண்ணூர் -அமுத விரஜை ஆறும் -ஆர்த்தி பிரபந்தம் -20-மூன்றும் உத்தேச்யம் போலே -இங்கும் இவை உத்தேச்யம் -இணை அடி மூன்றிலும் ஸ்பர்சித்து இருக்குமே -அதனால் சேர்த்து சிந்தியாய் -இவற்றுடன் –
கவளை யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்னும் —-காமருசீர் குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என்னானை என்னும் –
தவள மாடு நீடு நான்கைத் தாமரையாள் கேள்வன் என்னும் –பவள வாயாள் என் மடந்தை பார்த்தன் -பள்ளி பாடுவாளே -4-8-1-மூன்று என்னும் -இங்கு போலே அங்கும்
மூன்று என்றும்  உண்டே
வாய்ந்த வழுதி வள நாடன் -நிரூபகம் ஆழ்வாருக்கு -திருவடிகள் நாட்டோடு நடக்கிறது
குருகூர் நகரான் -அதுவும் அப்படியே
பொருநல் சங்கணித் துறைவன் -10-3-11—நரசிம்ஹ சந்நிதி -பின் பக்கம் தீர்த்தவாரிக்கு எழுந்து அருளுவார்
ஆற்றில் துறையில் ஊரில் உள்ள வை ஷம்யம் வாசாம் அகோசரம் -நாயனார் –
மருவ இனிதாய் இருக்கும் -வலைச் சேரி இடைச் சேரி இல்லையே -மீன நவநீதங்கள் இல்லையே —இப்பொழுதும் இறங்கி தீர்த்தம்-
நல் ஞானத் துறையிலே படிந்து ஆடி –வண் சடகோபன் போலே இதுவும் -திருவடியும் வண்மை யுடைத்தாய் இருக்கும் -சடகோபன் எங்கும் சாதிப்பார்களே -குரு பதாம் புஜாம் த்யாயேத் -மற்று ஒன்றில் மருளாதே –
அன்றிக்கே
பொலிந்த நின்ற பிரான் ஆதிப்பிரான் அடி இணையே சிந்திப்பாய்
நாடு ஊர் ஆறு  மூன்றுக்கும் அவனுக்கும் பொருந்தும்
வைகுண்ட புவன லோகம் -நாட்டையும் –புரி -ஊரும் -திருமா மணி மண்டபம் -விரஜையும்-அமிருத வாஹினி-தத் விஷ்ணோ பரமம் பதம் -அருமறையின் தாத்பர்யம் அர்ச்சை -வேத சரம நிலை அருளிச் செயல் -திருக் குருகூர் –ஆதி பிரான் நிற்க -நீள் கழலையும் திருவாய்மொழியில் சொல்லிற்று-இத்தை மற்றை உகந்து அருளின திவ்ய தேசங்களுக்கும் உப லஷணம்-அன்றிக்கே-
குட்ட நாடு -நாட்டையும் அருளிச் செய்வது-திரு வண் வண்டூர்-தண் புனல் சூழ் திருவரங்கத்து உள்ளே -7-2-6–திவ்ய தேச திவ்ய நகர திவ்ய ஆறு திருவாய் மொழி முகேன தர்சிப்பித்தார் –அடியிணைகளை சிந்தியாய் எப்பொழுதும் சிந்தியாய் -என்று அரு மறைகள் அந்தாதி செய்து ஆழ்வார் வெளியிட்டு அருளினார்
ஆதிப்பிரான் தான் -யானாய் தன்னைத் தான் பாடி -என்றுமாம்
அதவா-
வேத வேத்ய ந்யாயத்தாலே பரத்வ பர முது வேதம் வ்யூஹ வ்யாப்தி அவதரணங்களிலே ஓதின நீதி கேட்ட மனு படு கதைகளாய்-ஆக மூர்த்தியில் பண்ணிய தமிழ் ஆனவாறே வேதத்தை த்ராவிடமாகச் செய்தார் –70-சூர்ணிகை-
முது வேத முதல்வன் -பரத்வ பரம் /வ்யாப்தி -அந்தர்யாமி –
ஓதின நீதி -வ்யூஹம் பரம்-பாஞ்சராத்ர ஆகமம்
கேட்ட மனு -மனு ஸ்ம்ருதி-அந்தர்யாமி பரம்-
படு கதை -இதிஹாச புராணங்கள்-அவதரணங்கள் பரம்–
ஆக மூர்த்தியாய் -அர்ச்சை –அருளிச் செயல்கள் பரம்–இப்படி ஐந்தும்
திருநாம பாட்டுக்கள் தோறும்- நாடு ஊர் ஆற்றை- சொல்லி தமக்கு நிரூபகம் மிக்க வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி-என்பதால் -திருவடிகள் உடன் இவற்றை இணைத்து-ததீய வைபவம் தானே வேத தாத்பர்யம்
சிந்தித்து தெளிந்து–திராவிட உபநிஷத் ஆச்சார்யர் உடைய அங்க்ரி யுகளம் -தெளிவுற்ற சிந்தையர் -7-5-11- தெளிந்த என் சிந்தை -உபாயம் உபேயம் என்று தெளிந்து –மனசே சந்ததம் நினைத்து கொண்டு இருப்பாய் –

————————————————————————–

ஸ்ரீ சொட்டை நம்பிகள் அருளிச் செய்த தனியன்

மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும்
இனத்தாரை யல்லாது இறைஞ்சேன் -தனத்தாலும்
ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன்
பாதங்கள் யாமுடைய பற்று –

வாசா யதீந்திர மனசா வபுஷா ச யுஷ்மத்–பாதாரவிந்த யுகளம் குருணாம் –கூரேச நாத குருகேச –போலே-
பேணுகை -திருக் குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே– 4-10-9-குருகூர் புர மாகாத்ம்யம் -அறிந்து -சிந்தனைக்கு விஷயம் -பாடி ஆடி பரவிச் சென்மின்கள் -4-10-2-சம்ப்ரம நர்த்தனம் –
மனசால் நினைத்தும் வாயாலே பாடி விரும்பி-பேணுகை- விரும்புகை -பாடுகை நினைக்கை -ஆடுகை
மனத்தால் -முதலில் -நினைத்ததை தானே பேச வேண்டும் மனம் பூர்வ வாக் உத்தர -க்ரமம்
மனஸ் ஏகம் கர்மம் ஏகம் வாய் ஏகம்-ஆர்ஜவம் — மனசால் நினைத்து வெட்கி பேசாமல் இருக்கக் கூடாது –
ஆடி ஆடி அகம் கரைந்து —மால் கொள் சிந்தையராய் ஆட்டம் -ஈட்டம் கண்டு
ஆழ்வார் சம்பந்தம் உடைய தேசத்தில் விருப்பம் உள்ளார் அடைய பஜித்தேன் -அந்யரை ஆதரித்து பஜிக்க மாட்டேன் –
நல்லார் நவில் குருகூர் -திருவிருத்தம் -100-
சமூஹமாய் உள்ளவர்கள் இனத்தார் ஒரே மனஸ் யுடையவர் ஒரே கோஷ்டி சஜாதீயர்
10-6-11- குருகூர் சடகோபன் பாட்டில் அன்வயம் உள்ளவர்கள்
குழாங்கள் தென் குருகூர் -2-3-11-
பிசாசான் -தனவான் யக்ஷன் –பஹு  வசனம் -விரல் நுனியால் பெருமாள் அழிப்பார்-கூட்டம் கூட்டமாக எடுத்தது போலே –
திருவாய் மொழியில் அதி பிராவண்யம் உள்ளார் இடம் கூடுவேன் என்றவாறு –
அந்யரை அநாதரிப்பேன்
மற்று ஒரு தெய்வம் உளது என்பார் உடன் உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை – போலே
இதுக்கு அடி மேலே சொல்லுகிறது –தனத்தாலும் ஏதும் குறைவிலேன் -தனம் மதியம் தவ பாத பங்கஜம்-ஆழ்வார் திருவடிகளைப் பற்றிய நமக்கு விபூதி சர்வம் என்னும் படி -ஆளவந்தார் ஆழ்வாரை மாதா பிதா ஸ்லோகத்தில் அருளிச் செய்தாரே
எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று –அன்னையாய் அத்தனாய் -மாதா பிதா -பிரியம் ஹிதம் –ஜனகரான ஆழ்வார் –பிராப்த சேஷியான ஆழ்வார் திருவடிகள் எந்தை பாதங்கள் -வகுத்த சேஷி
யாமுடைய -தத் சேஷ பூதர் -சரீரமான அனைவருக்கும் அடிமை தானே -அனன்யார்ஹ சேஷத்வத்துக்கு கொத்தை வராது-
-ராவணன் -ஒத்துக் கொள்ள வில்லையே -அதனால் கூடாது
சமஸ்த பரிவாராய ஸ்ரீ மதே நாராயணாய நம-நித்யம் சொல்லுகிறோம் -அந்தர்பூதர்கள் -பணியா அமரர் -நித்ய சூரிகள் வணங்கா முடி -தலை குனியாத வர்கள் இடத்தில் கூழைக் கும்பிடு போடாதாவர்
பற்று என்று பற்றிப் பரம பரம் பரனை -10-4-10-

————————————————————————–

ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்த தனியன் –

ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனி தன்
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் -ஆய்ந்த பெரும்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராத உள்ளம் பெற –

நிற்கப் பாடி -மதுரகவி நாத முனிகள் -ஆழ்வார் பிரசாதம் நமக்கோ
எம்பெருமானார் திருவடிகளே சரணம் -ஆர்த்தி பிரபந்தம் -ஸ்ரீ ஸூக்தி -இவரே உடையவர் -அனைத்தும் -பொறுப்பு -உய்ய ஒரே வழி உடையவர் திருவடி –
உடமையை நாம் பிரார்த்திக்க யுடையவர் இடம் தானே
உள்ளம் தேங்கி அனுஷ்டான பர்யந்தம்
அஷட் கரணம் ஆறாவது காதுக்கு கேட்க்கக் கூடாது -மூன்றாவர் -ஐஞ்சாம் காதுக்கு சொல்ல வில்லை
பாதம் -பாதங்கள் என்றபடி
ஆய்ந்த -விலஷணம் என்றபடி
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல் -3-9-11-
கம்பர் -தம்மை சடகோபர் அந்தாதி சொல்லிக் கொண்டார்-
அங்குத்தைக்கு-ஏற்புடைய -அனுரூபமாய் -ஆழ்வாருக்கு -இவர் மாறன் அடி பணிந்து உய்ந்தவர்
ரெங்கராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம் -பராங்குச  பாதாம்புஜ ப்ருங்க ராஜம் -பெருமாள் ஆழ்வார் இருவருக்கும் பொருந்திய இராமானுச முனி –
முனி மனன சீலர் -சம்சாரிகளை கடைத்தேற மார்க்கம் -சொத்தை சுவாமி இடம் சேர்க்க –அப்போது ஓர் சிந்தை செய்து –
மிடற்றைப் பிடிக்குமா போலே ஆழ்வார் அருளிச் செயல்கள் -கூரத் ஆழ்வான்-
என்றோ அபசாரப் பட்ட வண்ணான் –ஈரம் கொல்லி –கைங்கர்யம் கொண்டு அருளிய பின்பு -அரங்கன் இடம் பிரார்த்தித்தார் முனி –
பிரணதி பண்ணா  நின்றேன்- திருவடிகள் -ஒப்புச் சொல்ல முடியாத பொருந்திய திருவடிகள் -ஊமையன் பேறு பெற்ற ஐதிகம் -செம்மா பாத பற்பு தலை சேர்த்து ஒல்லை
பிராப்ய புத்த்யா-ராமானுஜ்ச்ய சரணம் பிரபத்யே -வர்த்தமானம் -வணங்குகின்றேன் -பிரபத்யே த்வயம் போலே
உபாயம் புத்தி -சக்ருத்–பிராப்யத்வேன-
சக்ருதேவ -சடக்கு என கூரத் ஆழ்வான்
நூறு தடவை -செய்தாலும் கிடைக்கும் பேற்றுக்கு ஒரு தடவை போலே
உபாயத்வேன –
சம்சார பீதி வரும் பொழுது -பிரபத்யே சொல்லிக் கொண்டு நம்பிக்கை
கைங்கர்ய ரூபேண எப்பொழுதும்
மனஸ் பெற பிரார்த்திக்கிறோம் -அழுக்கு-காமாதி தோஷாதி-போக்கி அருளுவார் -ஸூ பிரதிஷ்டம்-பேராத உள்ளம் பெற –
ஆய்ந்த -ஆய் கொண்ட சீர்-வள்ளல் ஆழிப் பிரான் –3-9-9- -ஆய பெரும் புகழ் எல்லையிலாதன பாடிப் போய் 3-9-8-
விலஷணம் -விசேஷ விசித்திர விபரீத விசேஷணம் –விசேஷமான லஷணம் நிரவதிகம் –எல்லை இல்லா கல்யாண குணங்களால் பூர்ணர்சீரார் -சீர் ஆர்ந்து பொருந்தி உள்ள -ஞான பல ஐஸ்வர் யா வீர்ய சக்தி தேஜஸ் – -ஷாட் குண்யம் –
ஆறு பத்துக்களுக்கும்– பரத்வ ஞானம் ஞப்த்தி-முக்தி -வ்ருத்தி-கைங்கர்ய பிரார்த்தனை – –விரக்தி -வைராக்கியம் —பக்தி -ஆராத பெரும் காதல் -பேர் அமர் காதல் பின் நின்ற காதல் கழிய மிக்க காதல் –பிரபத்தி -அடிக் கீழ் புகுந்து அமர்ந்தேனே-நிரவதிக இந்த ஆறு குணங்கள்-
அதி ஸூலபமான திராவிட வேதம் தரிக்கும் படி-நிச் சலனமான மனசை பெற –
அன்றிக்கேஆய்ந்த பெரும் சீர் -சடகோபனுக்கும் -திருவாயமொழிக்கும் கொள்ளலாம் –
ஆய்ந்த பெரும் சீர்மை -விசேஷணம் -செந்தமிழ் வேதம் -திருவாய்மொழி –அடை மொழி ஆக்கி –
சீர்த் தொடை ஆயிரம் –பிரபந்த தாரணத்துக்கு —
தீ மனம் கெடுத்து–ஸ்ரீதரனே -மருவித் தொழும் மனம் –ஆச்சார்யர் அருள வேண்டுமே -2-7-கேசவன் தமர் –
ஆழ்வார்கள் அனைவருக்கும் அவனே ஆச்சார்யர் -நமக்கு ஆச்சார்யரே தெய்வம் –
தங்கு மனம் நீ எனக்கு தா -பெரிய திருமொழி தனியன் -தவராசா -எதிராஜர் -பொங்கு புகழ் மங்கையர் கோன் -ஈந்த மறை ஆயிரம் அனைத்தும் –
மாறன் பணித்த மறை உணர்ந்தவர் –இராமானுச நூற்று அந்தாதி 44-இவர் தானே -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் –
தென் குருகைப் பிரான் பாட்டு என்னும் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும் -29
பாய் மதகமாக யுடையவர் –எங்கள் இராமானுச வேழம்–வலி மிக்க சீயம் இராமானுசன் -பரபரப்பு பெருமதம்-சிம்மம் யானை இரண்டும் –
மோகனாச்த்ரம் தூங்கும் கோபிகள் -ஜ்ரும்பனாச்த்ரம் -வெளியில் உள்ள கோபிகள்-துடித்தும் மயங்கியும் கோபிகள் இரண்டு வர்க்கம் உண்டே –
திருவாய்மொழி மணம்–உரு பெரு செல்வமும் -அறிதர நின்ற -19- தந்தை தாய் எல்லாம் திருவாய்மொழி -செம் தமிழ் ஆரணமே-இன் நீணிலத்தோர் அறியும் படி
அவர் திருவடிகள் ஆகையாலே இவரை அர்த்திக்கிறது -ஸ்ரீ ராமானுசன் ஆழ்வார் திரு நகரி சாதிப்பார்கள் -மற்ற திவ்ய தேசங்களில் மதுரகவி ஆழ்வார் திருவடி நிலைக்கு –
அங்கி -அங்கம் -உபாங்கம் -வித்யா ஸ்தானங்கள் -4/6/8 -வேத சதுஷ்டயம் அங்க உபாபங்கள் 14-அருளிச் செயல்கள் அனைத்தையும் பேராத உள்ளம் பெற அனுக்ரஹிக்க வேணும் என்ற பிரார்த்தனை –
தத் இதர கிரந்தங்களில் சபலமான மனஸ் இல்லாமல் இவை ஒன்றிலுமே நின்று -ஏகாக்ர சித்தம் -கொடுத்து அருளுவீர் -என்றபடி

————————————————————————–

ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த தனியன்

வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத் தாய் இராமானுசன் –

தேவகி யசோதை போலே– ஆழ்வார் உடையவர் இருவரும் –கண்ணன் -திருவாய்மொழி
வ்ருஷ ஷண்டம்-மரக் கூட்டங்கள் -சூர்யன் நுழைய கேட்டே வர
வான் ஏந்து சோலை -சோலை அணி திருவரங்கம் – -ஆபரணம் போல்
திட் கொடி மதிள் சூழ்-7-3-2–ஸூக்த ப்ருங்க –தீர்த்தம் -சுந்தரி -ஸ்யாமம் -வேதம் மறைத்த பெருமாளை உயர்த்தி காட்டும் காவேரி –
மதிள் திருவரங்கம் -திருமாலை -42–வானை யுந்து மதிள் -9-10-4-ஏழு மதிள்கள் திருக் கண்ண புரம்-இருந்ததாம் –
வண் புகழ் மேல்-ஸ்லாக்கியமான கல்யாண குணங்களுக்கு விஸ்த்ரமாக அருளிய முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரமும் –
ஆழ்வார் -திருவேங்கடமுடையான் பஷபாதி
ஆழ்வார்கள் ஸ்ரீ ரெங்கம் -நம் பெருமாள் -பட்டர் -கொண்டாட்டம் -வைத்த அஞ்சல் என்ற கையும் -உபய பிரதானம்
சீர்த் தொடை ஆயிரம் –
பத்து அர்த்தங்களும் கங்குலும் பகலும் திருவாய்மொழியில் உண்டே -இதனால் தான் ஆயிரமும்-
நலம் உடையவன் –ஈறில வண் புகழ் நாரணன் –ஆராதய ஜகன் நாத –இஷ்வாகு குலதனம் –-நாராயண –விசாலாட்சி –
வாழ் புகழ் நாரணன் -தமரைக் கண்டு உகந்தே-10-9-
திருவாய் மொழிக்கு இலக்கு இவரே -உபக்கிரமம் உபசம்ஹாரம் –நலம் திகழ் நாரணன் -பெருமாள் திருமொழி 10-11--இவர்-
நாராயண பர ப்ரஹ்மம்-
பத்து குணங்கள் –
1- பரத்வம் -2-காரணத்வம் –3-வியாபகத்வம் -4-நியந்த்ருத்வம் –
5-காருணிகத்வம்-6-சரண்யத்வம்–7-சக்தித்வம் -8-சத்யகாமத்வம்
9-ஆபத் சகத்வம் -10-ஆர்த்தி ஹரத்வம் –பத்து பத்துக்களிலும் அருளிச் செய்தார்
1-1-பரபரன் -/2-1- சோராத எப் பொருளுக்கும் ஆதி
3-1-முழுதுமுமாய்/4-1-மருகலில் ஈசன் –வீடு அக்தே
ஆவா என்று அருள் செய்து -5-1- /ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள்-
6-1-சரண்யன்-ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் /6-3-7- வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவருக்கும் வன் சரண்-/
7- 1–எண்ணிலா பெரு மாயனே -சக்தித்வம்/
தேவிமாராவார் –திரு மகள் பூமி -சத்யா காமத்வம் 8-1-/
முற்றவும் உண்ட பிரான் -9-1-/
காள மேகத்தை அன்றி மற்று ஓன்று இலோம் கதியே -10-1-ஆர்த்தி ஹரத்வம்-பத்து அர்த்தங்களும் -கங்குலும் பகலில் காணலாய்
வடிவுடை வானோர் தலைவனே என்னும் -பரத்வம்
முன் செய்து இவ்வுலகம் -காரணத்வம்
உண்டு உமிழ்ந்து அளந்தாய் -ஆபத் சஹத்வம்
விண்ணோர் முதல் -பரத்வம் -காரணத்வம்
கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய் -வியாபகத்வம்
என்னுடைய ஆவி -வியாபகத்வம்
கால சக்கரத்தாய்–மூ உலகு ஆளி –நியந்த்ருத்வம்
இவள் திறத்து அருளாய்– காருணிகத்வம்
பற்றிலார் பற்ற நின்றான் -சரண்யத்வம்
அலை கடல் கடைந்த ஆரமுதே -சக்தித்வம்
என் திருமகள் —ஆய மகள் அன்பனே என்னும் -பத்னி பரிஜன-சத்யகாமத்வம்
முகில் வண்ண அடியை அடைந்து -அருள் சூடி உய்ந்தேன் -ஆர்த்தி ஹரத்வம் –
ஆழ்வார்களில் நம்மாழ்வார் அதிகர் ஆனால் போலே நம் பெருமாள் அதிகர் என்னவுமாம் -மூன்றாவது காரணம் இது-சேராதன உளவோ பெரும் செல்வருக்கு -என்னக் கடவது இ றே--பெரிய பெருமாள் விஷயமாகவே திருவாய்மொழி

-வண் தமிழ் நோற்க நோற்றேன் –4-5-10-என்றபடி தவம் செய்தவர் ஆழ்வார்
வருந்தி பெற்ற பிள்ளையை வளர்க்கும் தாய் -தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ -வர்த்திப்பித்த மாதா எம்பெருமானார்-
ஞானக் கலையான திருவாய்மொழிக்கு ஜன்ம பூமி ஆழ்வார்-தத் வர்த்தகர் எம்பெருமானார்
ஞான சந்தானம் வளர்த்தி யோடு நடந்து செல்வது -ஞான புத்திர பேறு-
பெற்றார் பெற்று ஒழிந்தார்-பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை –
மிடுக்காலே காத்து நோக்கும் -4000 வருஷம் சென்ற பின் வளர்த்த தாய் திருவவதாரம்

தேவகி பெற்ற உருவு கரிய ஒளி மணி வண்ணனை -வண்ணன் புருவம் இருந்தவாறு -பெரியாழ்வார் -1-3-17-வளர்க்கும் தாய் மிடுக்காலே -யசோதை –
தாயரில் கடையாயின தாய் -புலம்பும் படி-
ஒருத்தி மகனாய் –ஒருத்தி -பட்டர் -மற்று -விட்ட காரணம் -பெற்ற வைபவம் வளர்த்த வைபவம்-சாயாமிவ பூமி நீளா போலே அங்கே -இங்கே சமமான வைபவம்
என் அவலம் களையாய் ஆடுக செங்கீரை –அம்மா சொன்னதை கேட்க வேண்டுமே -பிள்ளையை வசப்படுத்தி-
நாராயணன் வசதி -திருவாய்மொழியில்-கண்ணனே திருவாய்மொழி-
எம்பெருமானார் திருவாய்மொழி யை தன் வசம் ஆக்கி கொண்டு -விரோதிகள் இடம் இருந்து காத்து —
போதரு கண்டாய் –அசல் அகத்தார் –கேட்க மாட்டேன் –
தூஷணம் – தூசனம் சொல்லும் தொழுத்தை மாறும் தொண்டரும் -நின்ற இடத்தில் நின்றும் –தாய் சொல்லு கொள்ளுவது தன்மம் கண்டாய் –தன்மம் -தர்மம் –குற்றம் சொல்வாரையும் -வாய்ப்புடை புடைத்து -தன் வசம் ஆக்கி –
தீய புஞ்சிக் கஞ்சன் உன் மேல் சினம் உடையன் கருத்தை குலைத்து -கஞ்சன் கொடியன் –காப்பாரும் இல்லை என்று இரந்து–
மைத்தடம் கண்ணி–நீல நிறத்து சிறு பிள்ளை –நிறம் பெற வளர்த்து -கட்டுண்ணப் பண்ணி —அவதார பிரயோஜனம் சித்திக்கும் படி வளர்த்து — பிரமேய சாரத்தை வர்த்தித்தால் போலே-பிரமாண சாரத்தை வர்த்திப்பித்த ராமானுஜர்-
பிள்ளை லோகாச்சார்யார் பிரமேய ரக்ஷணம் தேசிகன் பிராமண ரக்ஷணம் பண்ணினைத்து போலே – ஆழ்வார் -அவா அற்று வீடு பெற்று எழுந்து அருளின பின்பு
பாஹ்ய குத்ருஷ்டிகள் பாஷா கானம் சாம வேத சாரம் -அபிபூதமாய் வருகிற -படியைக் கண்டு ஸ்ரீ பாஷ்ய ஸூ க்திகளால்-நிரோதித்து
அத்தை இதுக்கு காவலான வேலியாக கற்ப்பித்து-திருவாய்மொழி யை தன் வசம் ஆக்கி-ஸ்ரீ பாஷ்யம் வேலி திருவாய் மொழி பயிர் –
திருக் குருகைப் பிள்ளானைக் கொண்டு -இன்பம் மிகு ஆறாயிரம் ஏவி இட்டு -கீதாச்சார்யர் இட்ட பயிரை அடியார் ரஷித்து-தேவர்களை நியமித்து அருளினது போலே -இங்கும் ஆழ்வார் ஆகிற –ஆண்டவன் இட்ட பயிரை வர்த்திப்பிக்க வேண்டுமேஅடியான் -மாறன் அடி பணிந்த அடியவர் அன்றோ இவர் –

————————————————————————–

ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த தனியன்

மிக்க இறை நிலையும் மெய்யா உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகி தொக்கியலும்
ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழினிசை வேதத்தியல் —

அர்த்த பஞ்சகம் -அறுத்த பஞ்சகம் -அஹங்கார மமகாரம் தொலைக்க -அறிய வேண்டும் -ஸ்ரீ பதி-அஸ்ய சேதனச்ய
சேதனச்ய-
ஹேதுத்வேன உபாய -சமாஸ்ரைய
அநிஷ்ட ஹானிம் -விரோதி
இஷ்டச்ய பிராப்தி -குருதே ஸ்வயம் -நிர்ஹேதுகமாக தானே-அருளுகிறார் –
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் முதலில் இத்தை அருளி -இரண்டு பத்துக்களும் ஒவ் ஒன்றுக்கும்-
ஸ்ரீ யபதி சேதனச்ய அஸ்ய ஹேதுத்வேன சமாஸ்ரைய அநிஷ்ட ஹானிம் இஷ்டச்ய பிராப்தி குருதே ஸ்வயம்-
திருமந்தரம் -வேதம் -சங்க்ரஹம்–ஓங்கார -வித்து –
பத த்ரயத்தால் பிரதி பாதிக்கப்படும் அர்த்த பஞ்சகம்
அகாரம்/ நாராயண -பர ஸ்வரூபம்
மகாரம் -ஜீவ ஸ்வரூபம்
உபாயம் -நமஸ் சொல்லும்
விரோதி -மக-எனக்கு உரியவன் என்பதே விரோதி
ஆய -பிராப்யம்
திருமால் அவன் கவி -திருமாலால் அருளப் பெற்ற சடகோபன் -மருள் மயர்வு அற -மதி நலம் –

வாழ் வினை -அடை மொழி போட ஒன்றும் இல்லை பேச்சுக்கு எட்டாதே

இறை நிலைமிக்க -இரண்டு நிலைகள் -ஆபாத ப்ரதீதி –
உணர்ந்து உணர்ந்து இறை நிலை உணர்வு அரிது உயிர்காள்-1-3-6-
அறிந்து கொள்ள அப்பால் பட்டது
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து -ஆத்மஸ்வரூபம் சொல்லி மேலே -உணர்ந்து -ஞானம் -ஞானம் உடையவன்-
-ஜீவாத்மா ஞப்த்தி மாதரம் மாயாவாதிகளை கண்டிக்கிறார்
ஞானமயம் -ஞான குணம் -ஞானமாகவும் ஞானம் உடையவனும் -ஸ்வரூபம் குணம் இரண்டும் ஞானம்
இழிந்து அகன்று உயர்ந்து -உருவியந்த இந்நிலைமை உருவம் வேறு பட்ட -பிரகிருதி வேற ஆத்மா வேற -உணர்த்தியாலே ஞானத்தாலே வியாபித்து
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து -பிரக்ருதியை சொன்னது போலே
உடல் மிடை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -தர்ம பூத ஞானம் வியாபிக்கும் ஆத்மாவுக்கு
சௌபரி-பல சரீரம் இத்தைக் கொண்டே –
உணர்ந்து உணர்ந்து –இறை நிலை உணர்வு அரிது -அலங்க்ருத சிறைச்சேதம்-முடியாது சொல்ல இவ்வளவு பீடிகை
அசேதன சேதன வ்யா வ்ருத்தி –சர்வ ஸ்மாத் பரன் -புருஷோத்தமன்
பரமம் மஹீச்வரம் -நாராயண பரஞ்சோதி -பர ப்ரஹ்மம் -பர தத்வம் -பரமாத்மா -நான்கு பர –
மனிசற்கு தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ –
தேவ தேவனை என்றும்
3-1-பரஞ்சோதி நீ –பரமாய் மிகும் ஜோதி முழுதுண்ட பரபரன் என்றும்
வானோர் இறை என்றும் -கழி பெரும் தெய்வம் என்றும்
பெரும் தெய்வம் -என்றும்
பெரியவப்பனை என்றும்-நம் திருவுடை அடிகள் -1-3-8- என்றும் –சர்வ ஸ்மாத் பரன் -மிக்க இறை நிலை -ஆயிற்று –
அழுந்த பதித்த சிகப்பு குழம்பு – திரு மார்பில் காட்டிக் கொடுக்குமே -வேதாந்த விசாரம் நிறுத்திற்று –
ஸ்ரீ யபதித்வம்
திருவுடை அடிகள் திரு மகளார் தனிக் கேள்வன் -திரு மா மகள் கேள்வா தேவா -சர்வ ஸ்மாத் பிரான்
திருமங்கை நின்று அருளும்
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் -திரு வில்லா தேவரை —
பரன் திறம் அன்றி தெய்வம் வேறு இல்லை
மிக்க -இறை -எளிமைக்கு எல்லை காண முடியாது
ஆஸ்ரித பாரதந்த்ரம் உடன் நிற்கும் அர்ச்சை -அவன் இவன் என்று கூளேன் மின் -வைகுந்த நாதன் இவன் என்று குறைக்காமல்
-அர்ச்சையே -அருகில் -பெருமை இவனே அவன் என்று சொல்லலாம் –எளிவரும் இயல்பினன்-எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
இதுவே ஸ்வரூப யாதாத்ம்யம்மிக்க இறை நிலையும்
மெய்யாம் உயிர் நிலையும்
உருவியந்த –பிரகிருதி -வாசி நித்யன் ஆனந்த
எண் பெருக்கு அன்னலத்து ஒண் பொருள்-
உணர்வைப் பெற ஊர்ந்து -யானும் தானாய் ஒழிந்தான் -8-8-3-கண்கள் சிவந்து -ஆழ்வாருக்கு காட்டி அருளின ஜீவ ஸ்வரூபம்
உன்னில் என்னில் வேறு இல்லை பிரகார பாவம் -உணர்வும் – உடம்பு பழுதேயாம்-ஆத்மஸ்வரூபம் உயர்ந்ததே
தேக இந்த்ரிய மனம் பிராண புத்தி விலஷணன்
நின்ற ஒன்றை உணர்ந்தேன் -ஜீவாத்மாகவே நின்றான்
சரீரமாக உணர்ந்தேன்
உயிர் வீடுடையான் -வீடாக சரீரமாக ஆத்மாவை யுடையவன் –
பிரக்ருதே பரனாய்–ஞானானந்த ஸ்வரூபனே ஞான குணகனாய் -நித்யனாய் ஈஸ்வரனுக்கு சரீரவத் பரதந்த்ரனாய் -படியைச் சொல்லுகிறது –

மெய்யாம் -உயிர் நிலை என்றது -பிரகிருதி மெய் இல்லை என்றவாறு
சத்யஞ்ச -என்றும் சேதனன் உண்மை -அசேதனம் மாறுமே என்பதால்
உள்ளது என்றும் -மேம் பொருள் –மெய்ம்மையே -என்றும் –
பிரகிருதி ஸ்வ பாவங்களில் காட்டில் ஆத்மஸ்வரூப நித்யத்வம் சொல்லிற்று
அன்றிக்கே
மெய்யாம் -சரீரமாக இருக்கும் ஜீவன் என்றபடி -பரமாத்மாவுக்கு
யஸ்யாத்மா சரீரம் -அந்தர்யாமி பிராமண்யம் -மெய்யாம் உயிர் நிலை தமிழ் மொழி –
சரீர சரீரி பாவம் சொல்லிற்று
மெய்ம்மையை மிக உணர்ந்து -மிக –ததீய சேஷத்வ பரதந்த்ரன்
தம் அடியார் அடியார் -3-7-10-என்றும் -சப்த பர்வ-
தொண்டர் தொண்டன் சடகோபன் –7-1-11-என்றும்
சிறு மா மனிசரே என்னை ஆண்டார் இங்கே திரியவே ததீய சேஷத்வம்

தக்க நெறி -அத்யந்த -பரதந்த்ரனுக்கு தகுந்த நெறி -தந்த்ரம் -பிரதானம் -பர -பகவான் -யஸ்ய -யாருக்கோ அவன் பரதந்த்ரன் –
நெறி காட்டி நீக்குதியோ -நின் பால் கரு மா -மேனி காட்டுதியோ -இதுவே தக்க நெறி தகாத நெறி-சாதனாந்தரங்கள்-
நீ அம்மா காட்டும் நெறி -பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தையும் நீயே
9-1- கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் –அவன் அடி சேர் -கண்ணன் அல்லால் இல்லை அல்லை சரண்
சரீர ரஷணம் சரீரி தானே போக்க வேண்டும்-
என் உடம்பில் அழுக்கை யானே போக்கிக் கொள்ளேனோ -மாசுச -அர்ஜுனனுக்கு அருளி -எம்மை ஆளும் பரமர் -என்றும் உபாயமும் பாகவதர் திருவடிகளே ததீய சேஷத்வம் ஸ்வரூபம்-
3-3-7- எம்மை நாள் உய்யக் கொள்ளும் நம்பர் –உபாய யாதாத்ம்யம் இதுவே –

தடையாகி -தொக்கி –இயலும் -ஊழ் வினை –
விரோதியாய் திரண்டு வர்த்திக்கிற
முன் செய்த முழு வினை -பாரமாய பழ வினை –
ஊழ்மை பழைமை பழைமையான கர்மம்
பொய் நின்ற ஞானமும் அவித்யா பொல்லா ஒழுக்கும் -தப்பான ஆசாரம் -அழுக்கு உடம்பும்
அவித்யா கர்மா வாசனை ருசி பிரகிருதி சம்பந்தம் -பகவத் ஸ்வரூப திரோதானம் –
விரோதி ஸ்வரூப யாதாம்யம் -அஹங்கார மமகாரங்கள் –யானே என்னை அறியகில்லாதே யானே என் தனதே என்று இருந்தேன் –
நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து
பீஜம் -அநாத்மா ஆத்மா புத்தி தன்னது அல்லாத பொருளில் தன்னது -விஜ பீஜம்
யாதேனும் ஓர் ஆக்கையில் புக்கு -திரு விருத்தம் -95-மூதாவியில் தடுமாறும் முன்னமே
இது தான் அனுகூலர் பக்கல் -அநாதரத்தை பிறப்பிக்கும்- பாகவத அபசாரம்
-தேகாத்ம பிரமம் மூலமாக ஸ்ரீ வைஷ்ணவர் திறத்தில் ஜன்ம நிரூபணத்தை மூட்டி
மன் பக்கல் –சன்மம் நிரூபணம் ஆவிக்கு -நேர் இழுக்கு -சப்தகாதை
ஆங்கே அவர்கள் தாம் புலையர் போலும் –

வாழ்வினை பிராப்ய ஸ்வரூபம் -வாழ்வை என்ற படி வாழ்வினை -ஒரே சொல்
நின் தாளிணை கீழ் வாழ்ச்சி –வாழ்வார் வாழ்வு எய்து ஞாலம் புகழவே -வாழ்வு -கைங்கர்யம்
பகவத் அனுபவ ப்ரீதி காரித  கைங்கர்யம்
தனக்கேயாக எனைக் கொள்ளும்  ஈதே
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -அவன் உகந்த படியை செய்து ஆனந்திப்பிக்கை
அன்றிக்கே
அவன் அடியார் நனிமா கலவி இன்பமே -நாளும் வாய்க்க நம்கட்கே
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை -அங்கும்
அடியார்கள் தம் ஈட்டம் –அது காணும் கண் பயன் ஆவாதே
சரம பிராப்யம் இதுவே –

ஆதாரம் -அதிகரணம் -இருப்பிடம் -அர்த்தபஞ்சக ஞானத்துக்கு இருப்பிடமாக இருக்க வேண்டும்-பரமாத்மா ஜீவாத்மா இருவரும் -ஞானம் உடையவர்கள் அன்றோ -ஜடப் பொருள் இல்லையே -அடிமைத் தனத்தால் பரமாத்மா இடம் சேர்ந்து இருப்போம் –
ஸ்ரீ கௌச்துப ஸ்தானம் -ஆத்மா –
பிரதி யோகி -பரமாத்மா ஜீவாத்மா -கூடியே இருக்கும் -விட்டுப் பிரியாத சம்பந்தம் சேஷித்வம் அவனது சேஷத்வம் நமக்கு-
பிரத்யக்கு தனக்கு தோற்றினால்– -பராக் பிறருக்கு தோற்றுவது-
பிராப்தச்ய -ப்ரஹ்மணோ ரூபம் -இத்யாதி -வேத வேதார்த்த வேதியன -முனி -சட கோப முனி ஆகிய இவர் திவ்ய ஸூ க்தியும்-
ரகச்யத்துக்கு ஓர் எழுத்தும்-பிரணவம் அதுக்கு ஓர் உருவும் போலே – அகாரம் -யானவற்றிலே-இமையோர் அதிபதி- அடியேன் மனனே– பொய் மயர்வு –பிறந்து அருளினான் -விண்ணப்பம் -தொழுது எழு என்ற பஞ்சகத்தோடே-ஆதித்ய ஹிருதயம் -சூர்ணிகை -212-இமையோர் அதிபதி- பர ஸ்வரூபம்
அடியேன் மனனே -ஜீவ ஸ்வரூபம்
பொய் மயர்வு -விரோதி ஸ்வரூபம் -விகாரம் அடைவதால் பொய் -பொய்யைப் பற்றிய ஞானம் -அஜ்ஞ்ஞானம் -கர்மம் -ஜன்மம் –
பிறந்து அருளினான் -உபாய ஸ்வரூபம் -அவனது இன்னருள் பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு
விண்ணப்பம் தொழுது எழு– -பிராப்ய ஸ்வரூபம் -வாசிக கைங்கர்யம் -விண்ணப்பம் -காயிக கைங்கர்யம் தொழுது எழு என் மனனே மானச கைங்கர்யம் –என்று இ றே அடியிலே அருளிச் செய்தது -அடி என்று உபக்ரமத்திலே 
அவித்யாதி ஸ்வரூப ஸ்வ பாவத் மேஸ்வர பந்த ரஷண க்ரம குண விக்ரஹ விபூதி யோக ததீய அபிமான-உபதேச விஷய அந்யதாபதேச ஹேத்வாதிகளும் சங்க்ருஹீதம் -சூர்ணிகை -212-

உயர்வற -பரத்வே பரத்வம் —திண்ணன் வீடு —அணைவது அரவணை மேல்-உத்பாதகன் இணைவனாம் சுசீலன் —ஒன்றும் தேவு -பரத்வம் -அர்சாயாம் பரத்வம்
பயிலும் சுடர் –பாகவத சேஷத்வம் -ஜீவாத்ம ஸ்வரூபம் –-ஏறாளும்—இடம் கொடுத்து -சௌசீல்யம் —கண்கள் சிவந்து -8-8–அம்சம்
ஜீவாத்மா –கருமாணிக்கம் -8-9–குட்ட நாட்டு திருப்புலியூர் அனந்யார்ஹத்வம் –ஜீவ ஸ்வரூபம்-
வீடு மின் முற்றவும் —சொன்னால் -அசேவ்ய சேவா –ஒரு நாயகமாய் -ஐஸ்வர்யம் கைவல்யம் விரோதிகள் —கொண்ட பெண்டிர் -ஆபாச பந்துக்கள் -விரோதி ஸ்வரூபம்
நோற்ற நாலும்-உபாய ஸ்வரூபம் 5-7/8/9/10 –நோற்ற நோன்பு –ஆராவமுதேமானே நோக்கு -பிறந்தவாறும் -கிருஷ்ணாவதாரத்தில் -உருகாமல் இருக்க-மோஷார்த்தமாக இல்லை இதில் –
உலகம் உண்ட பெருவாயா -6-10–பிராட்டி உடன் -சேர்ந்த இடத்தில் சரண் –ஐந்தாவது -அர்ச்சையில் –
எம்மா–பிராப்ய நிஷ்கர்ஷம் -2-9–ஒழிவில் –3-3- பிராப்யம் புருஷார்த்தம் கைங்கர்யம் -இறைஞ்சி -பிரார்த்தித்து-
நெடுமாற்கு அடிமை —பாகவத கைங்கர்யமே பிராப்யம் –பயிலும் ஜீவ ஸ்வரூபம் -அவர்கள் ஸ்வாமிகள் காட்டி –
வேய் மறு தோளிணை-அவன் உகந்த கைங்கர்யம் –
இருப்பதில் விசதமாக்கி -எண்பதிலே பரப்புகையாலே –
வேதத்தியல் ஓதும் -குருகையர் கோன் யாழின் இசை வேதம் -தான் தோன்றி குறை இல்லையே-ஆழ்வார் அருளிச் செய்த அதிசயம்-
எய்தற்கு அரிய –சடகோபன் –பெரியவர் பாதங்களே -தரிக்கும் ராமானுஜன் -அமுதனார்
கான ஸ்வரூபி யாகிய -யாழின் இசையே அமுதே -சர்வேஸ்வரனை பிரதி பாதிக்கையாலே
பண் கொள் ஆயிரம் -சாம வேதம் போல் சரசமாய் இருக்குமே-பண்ணார் -பாடல் பண்புரை இசை கொள் வேதம் -சூர்ணிகை -50-வேத சாம்யம் -விசதமாக ஆச்சார்யா ஹிருதயம்
-வேத நூல் -இருந்தமிழ் நூல் /ஆஜ்ஞை -ஆணை /வசையில் -ஏதமில் /சுருதி -செவிக்கு இனிய /-ஓதுகின்றது உண்மை -பொய்யில் பாடல் /பண்டை -நிற்கும் – முந்தை -அழிவில்லா -என்னும் லஷணங்கள் ஒக்கும் -சூர்ணிகை 45-
சொல்லப்பட்ட வென்றவிதில் கர்த்ருத்வம் ஸ்ம்ருதி -அத்தை ஸ்வயம்பூ படைத்தான் என்றது போலே-அநாதி -ப்ரஹ்மா பிரவர்த்தனம் பண்ணி -உபதேசித்தார் போலே -சூர்ணிகை 46-
நால் வேதம் கண்ட புராண ரிஷி மந்திர தர்சிகளைப் போலே இவரையும் ரிஷி முனி கவி என்னும் -சூர்ணிகை 47-அதிக்ரமித்து பார்ப்பவர் -என்றதாயிற்று –மந்த்ரம் தர்சித்து ரிஷி -நம்மை முன்னேற்ற மனன முனி-படைத்தான் கவி என்ற போதே இதுவும் யதா பூர்வ கல்பநமாமே –சூர்ணிகை 48-
இயற்பா மூன்றும் வேதத்ரயம் போலே -பண்ணார் பாடல் பண்புரை இசைகொள் வேதம் போலே -சூர்ணிகை -50-ருக்கு சாமத்தாலே சரசமாய் ச்தோபத்தாலே பரம்புமா போலே சொல்லார் தொடையல் இசை கூட்ட அமர்சுவை யாயிரம் யாயிற்று -சூர்ணிகை -51-
அமர்ந்த சுவை -திரு விருத்தம் இசை கூட்ட –சாம வேதம் -ஹாவு ஹாவு ஹாவு -போலே பரம்புமா போலே –

விண் மீது இருப்பாய் -பர ப்ரஹ்ம ஸ்வரூபம் காணலாம் -பராத் பரன் உடைய ஐந்து நிலைகள் என்றவாறு —அர்ச்சையும் பரன் -ஒன்றும் தேவும் அர்ச்சை பரத்வம் –
அடியார்ந்த வையம் உண்டு –அடியார் -3-7-10-பாகவத சேஷத்வம் -ஜீவ ஸ்வரூபம் காணலாம்-
உழலையிலே உபாய ஸ்வரூபம் -5-8-11–காணலாம் –கழல்கள் அவையே சரணாகக் கொண்ட -நாம் பற்றும் பற்றும் உபாயம் இல்லையே
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்கள் -5-7-8-விரோதி ஸ்வரூபம் காணலாம்
பலம் -பிராப்யம் –புருஷார்த்தம் ஸ்வரூபம் -உற்றேனில் உணரலாம் உற்றேன் –உன பாதம் உகந்து பணி செய்தது உன் பாதம்-உற்றது உன பாதம் உபாயமும் திருவடிகள் – –உகந்து பணி செய்தது பலம் புருஷார்த்தம் -இதுவும் திருவடிகளே – உணரலாம்  -காணலாம் – சொல்லாமல் –

திருமந்திரத்தில் அர்த்த பஞ்சகம் உண்டே என்கிறார் மேல்
எண் பெருக்கு -அந்நலம் –திண் கழல் சேர -1-2-10
வண் புகழ் நாரணன் -பர ஸ்வரூபம் – -அகாரம்
ஒண் பொருள் ஜீவ ஸ்வரூபம் -மகாரம் –
திண் கழல்-பிராப்யம் -புருஷார்த்தம்
திண் கழல் சேரே -உபாய ஸ்வரூபம் -நமஸ்
பொருள் -அசேதனம்-விரோதி ஸ்வரூபம் -சேராதது விரோதி என்றுமாம்-
எனக்கே ஆட் செய்வாய் –தனக்கே யாக –
தனக்கே –கண்ணன் பர ஸ்வரூபம்
என் மனக்கே வந்து- ஜீவ ஸ்வரூபம்
இடை வீடு இன்றி மன்னி -உபாய ஸ்வரூபம்
இடை வெளி முன் விட்டது -விரோதி ஸ்வரூபம் -எனக்கே யாக கொண்டது -எனக்கும் தனக்குமாக கொள்வதும்– விரோதி
ஆட்செய்-பிராப்ய-
-ஒழிவில் காலம் -வேங்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் -3-3-1/6-இரண்டிலும் –நமஸ் உபாயம் மட்டும் வேங்கடங்கள் -நம வேன்னலாம் கடமை -உபாய
திரு வேங்கடத்து எழில் கொள் சோதி பர ஸ்வரூபம்
நாம் -ஜீவ ஸ்வரூபம்
அடிமை செய்ய -பிராப்ய ஸ்வரூபம்
வழு உள்ளவை -விரோதி ஸ்வரூபம் -மம விரோதி –
திருமந்த்ரார்த்தம் காணலாய் இருக்கும் -வேத சாரம் –
சீலம் இல்லா சிறியேன் –நாராயணா கோல மேனி
சீலம் இல்லா சிறியேன் -மகாரம்
ஞாலாம் உண்டாய் -பர ஸ்வரூபம்
கோல மேனி காண–பிராப்யம்
வாராய்- உபாயம்
செய்வினையோ பெரிதால் -விரோதி ஸ்வரூபம்-
களைவாய் துன்பம் -உபாயம்
களை கண் மற்று இலேன் -ஜீவ
மா மாயா -பர ஸ்வரூபம்
துன்பம் -விரோதி ஸ்வரூபம்
இளையாது உன தாள் பிடித்து -பிராப்ய ஸ்வரூபம்
ஞலாத்தூடே –நடந்தும் -கிடந்தும்–6-9-3-
சாலப் பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பான் -உபாயம்
காக்கும் இயல்பினன் கண்ண பிரான்-கோலத் திருமா மகளோடு நீ -பர ஸ்வரூபம்
உன்னைக் கூடாதே -சாலப் பல நாள் அடியேன் -ஜீவ ஸ்வரூபம்
இன்னம் தளர்வேனோ -விரோதி ஸ்வரூபம்
அர்த்த பஞ்சகமும் காணலாம் –

அகாரத்தாலே மகாரத்தாலும் ரஷகனும் ரஷ்யமும் -பர ஸ்வரூபம் ஜீவ ஸ்வரூபம்
பிரணவம்- சேஷத்வ ஞானம் ஸ்வரூப ஞானம் -ஸ்வரூப சிஷா
நம -உபாய சிஷா
நாராயணாய – புருஷார்த்த சிஷா–திருத்திப் பணி கொள்ள இந்த திரு மந்த்ரம் –
சாதி மாம் பிரபன்னம் -குழப்பம் தீர்த்து -அர்ஜுனன் -சிஷை இது
வித்யா தானம் முதலில் இருந்து சொல்லுவது
ஆய – சதுர்த்தி-உகாரம் -பிராப்தி பலம் சொல்லும் ரஷிக்கும் ஹேது -காரணம் பலம் -ஒழிக்க ஒழியாத சம்பந்தம் –
அவனுக்கே கைங்கர்யம் தானே பலம் -அனன்யார்ஹ சேஷ பூதன்
விபத்தி உடன் உள்ள நாராயண -பிரார்த்தனாயாம் சதுர்த்தி இது -அது தாதர்த்ய சதுர்த்தி -சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளில் கைங்கர்யம்-திருவாய் மொழியில் சொல்லப்பட்ட அர்த்தங்கள் எல்லாம் திரு மந்த்ரத்திலும் -அர்த்த பஞ்சகத்திலும் உண்டே -என்றவாறு -உற்றேனிலே உணரலாம் பிராப்யம்-திரு மந்த்ரத்திலும்-
திருமந்தரம் பிராப்ய பிரதான்யம்
சரம ஸ்லோகம் உபாய பிரதான்யம்
த்வயம் உபாய பிராப்ய- உபய பிரதான்யம்
-திருவாய் மொழி -உற்றேனில் உணரலாம் -ஐந்தை சுருக்கி ஓன்று பிராப்யமே –

திலதம் உலகுக்காக நின்ற -திருவேங்கடத்தானை
அலகில் புகழ் அந்தாதி ஆயிரமும்
உலகில் உரைத்தான் சடகோபன் உத்தமர்கள் நெஞ்சில்
விரித்தான் பெரும் பூதூர் வேந்தே –
இருவரும் ஒருவரே நின்றான் கிடந்தான் -மந்தி பாய் –இத்யாதி

-ஸ்ரீ ராமானுஜர் ஏவ பிள்ளான் ஆறாயிரப்படி -மேலும் பல வியாக்யானங்கள் -இறுதியில் -ஸ்ரீ மணவாள மா முனிகள் ஈட்டுப் பெருக்கர்

————————————————————————–

ஸ்ரீ கோவில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மன் நாத முனிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-