இவ்வாறு நடந்தது இவ்வாறு நடந்தது என்பதை இதிஹ இதிஹ என்று விவரிப்பதால், விவரண நூல்கள் இதிஹாஸங்கள் எனப்படுகின்றன-அருளிச்செயல், அவற்றின் விரிவுரைகள், இதிஹாஸங்கள் அவற்றின் விரிவுரைகள், ஸ்ரீவசன பூ4ஷணம் முதலிய செம்பொருள் நூல்கள் யாவும் செவி வழியாகவே வந்துள்ளன. ஓரோர் ஆசார்யர் தத்தம் சீடர்களுக்கு இவற்றை விளக்கும் பொழுது சுவை சேர்த்து சில நிகழ்வுகளையும் சொன்னார்கள். இவை குருபரம்பரா ப்ரபா4வத்தில் பதிவாகியுள்ளன. ஈடு போன்ற வ்யாக்யான நூல்களிலும் இவை உள்ளன.-
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை உயிரளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே.–பாசுரம் 1:
ஆழ்வார், த3ண்ட3காரண்யத்தில் ரிஷிகள் “ஏஹி பஶ்ய ஶரீராணி” என்று பெருமாளிடம் தம்மை அரக்கர்கள் அடித்தும் பொடித்தும் துன்புறுத்தியத்தைத் தங்கள் ஶரீரங்களில் இருந்த காயங்களையும் தழும்புகளையும் காட்டிக் குறை இரந்தாப்போல் இப்பாசுரத்தில் ஞான ஸ்வரூபனும், ஞான கு3ணகனுமான ஆத்மாவை ப்ரக்ருதி (அநாதி3 ஜன்ம, கர்ம, அவித்3யா, பாபம் முதலியன) தின்றிருப்பதை எம்பெருமானிடம் காட்டுகிறார் என்று ஆளவந்தார் நிர்வாகம். அம்மங்கி அம்மாள் எனும் ஆசார்யர், “உதிரக் கூறை காட்டுகிறார்” என்றார். அதாவது, பெருமாளுக்கு ரிஷிகள் உடம்பைக் காட்டினாப் போல் தம் குருதிக் கறை படிந்த நிலை (அஞ்ஞானாதிகள்) காட்டுகிறார்.-“
பிறந்தாய்!”: என்பதற்கு ப4ட்டர் ஒரு சுவையான விளக்கம் தந்ததாக ஸ்ரீவத்ஸாங்க தா3ஸர் கூறியதாக நஞ்சீயர் ஸாதி4ப்பார்: அதாவது: எம்பெருமான் பல பிறவிகளில் அவதரித்திருந்தாலும், அவனால் உலகினரைத் திருத்திப் பரமபதம் கொண்டு செல்ல முடியவில்லை, உடுத்த துணியோடு பரமபதம் திரும்பிச் சென்றான்; அதையும் பிடுங்கிக் கொள்ளாமல் அவனை அதோடு விட்டது விஶேஷம். ஆனால் ஆழ்வார் அவதரித்தபின் அவனது திருவுள்ளம் நிறைவேறப் போகிறது என்பதால், இனி அவன் பிறக்க வேண்டிய தேவை இல்லை என்று ப4ட்டர் ரஸமாகக் கூறுவார் என்பது நஞ்சீயர் குறிப்பு.
குழற்கோ வலர்மடப் பாவையும் மண்மகளும் திருவும்
நிழற்போல்வனர் கண்டு நிற்குங்கொல்? மீளுங்கொல் ? தண்ணந்துழாய்
அழற்போல் அடுஞ்சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக்கடவும்
தழற்போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே–பாசுரம் 3
இதில் -அப்புள்ளின் பின்னே அன்றோ நெஞ்சு போயிற்று–சம்பந்த ஸத்ருச பதார்த்தங்கள் -பாதகம் ஆகும் விஸ்லேஷத்தில்-ராமம் மே அநு கதா த்ருஷ்ட்டி -சக்ரவர்த்தி-இருவருக்கும் நிழல் -பெருமானுக்கு நிழல் போல் -நமக்கும் நிழல் – மானஸ அனுபவம் கிட்டியது -பாஹ்ய அனுபவம் கிட்டுமா திருமலை நம்பி அருளிச் செய்ததாக பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்வதாக -நம்பிள்ளை ஈடு -இதுக்கு சங்கதி-பிராகிருத சம்பந்தம் போனது -சாஷாத்காரம் பெற்றது -சாத்மிக்குமா- நிலைக்குமா–நம்மால் அனுபவிக்க முடியுமா –என்றுமாம் -இப்படி மூன்று சங்கதிகள் இப்பாட்டுக்கு
முதல் பாட்டில் இமையோர் தலைவா என்று வியந்த தலைவியின் இயல்பில் மாறுபாடு கண்டாள் தோழி. இப்பாசுரத்தில், தலைவி, சக்கரக்கையன், ஸ்ரீ பூ4 நீளாதே3விமார் நாதன் ஆகிய எம்பெருமானை ஒருக்கணமும் பிரியாதிருக்கும் க3ருட3னின் பா4க்கியம்தான் என்னே எனத் தன்னைக் கண்டுவிட்டுச் சென்ற பெருமாளை நினைத்து, அவன் அவர்களோடுள்ள சேர்த்தி கண்ட என் நெஞ்சு மீளுமோ மீளாதோ எனப் பராங்குஶ நாயகி நினைப்பது.-திருமலை நம்பி இதை, உண்மையிலேயே தமக்கு எம்பெருமானை அனுபவிக்க இயலுமா என ஆழ்வார் நினைப்பதாகக் கூறுவார் என பிள்ளை திருநறையூர் அரையர் விளக்குவார்.–நஞ்சீயரோ, ப4ட்டர் “உலகியலில் தமக்குள்ள ஸம்பந்தத்தை அறுக்க வேண்டுமென எம்பெருமானை முதல் பாட்டில் வேண்டிய ஆழ்வார், அவனை முதலில் கண்டபோது தம்மால் அந்த ஆனந்தத்தைத் தாங்க முடியுமா என ஐயுற்றார்” என்று விளக்குவார் என்கிறார்.
தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே —-4—-தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு ஆற்றாது வருந்தி கூறல் –
இங்கு அவர் புள்ளே-உறங்கா வல்லி தாசர் பொன்னாச்சியார் –காது தோடு -பாகவதர்கள் அபகரித்த வ்ருத்தாந்தம்-
ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7-கால மயக்கு –இன்னுயிர்ச் சேவல் -9-5–எம்பெருமானார் உகந்த பாசுரம்-திருவெள்ளறை இருந்து அரையர் திருவரங்கம் கூட்டி வந்த பதிகம்
ஸ்மாரக பதார்த்தம் -கிளி மேகம் -)
காண்கின்றனைகளும் கேட்கின்றனகளும் காணில் இந்நாள்
பாண்குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றமேந்தி தண் மாமலை வேங்கடத்துள் உம்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே –பாசுரம் 8:
இது தலைவன் பொருள்வயின் (பொருள் தேடி) பிரிவது பற்றிக் குறிப்புத்தர, தலைவி வருந்தும் நிலை.-இதை விளக்க நம் பூர்வர்கள் எம்பெருமானார், அவர் ஆசார்யர் திருமலை நம்பி, திருக்கச்சி நம்பிகள் பற்றியொரு விருத்தாந்தம் தெரிவிக்கிறார்கள்.-திருமலையில் இருந்த எம்பெருமானார், யாராவது காஞ்சி சென்று திருக்கச்சி நம்பிகள் எவ்வாறு உள்ளார் என்று கண்டு வரமுடியுமா என்று கேட்க ஒருவரும் இசையவில்லை. திருமலை நம்பி தாமே சென்று திருக்கச்சி நம்பிகளை சந்தித்து, உடனே கிளம்பவும், நம்பிகள் அவரை “எதற்கு தேவரீர் வந்தது? இவ்வளவு அவசரம் ஏன் ? தேவப்பெருமாள் திருநாள் கண்டு போகலாமே ” என்றார். திருமலை நம்பி, உடையவர் விருப்பம் தெரிவித்து, அவர் திருவுளம் பற்றி வந்ததாகச் சொல்லிக் கிளம்பினார். இதில் இரு சுவையான விஷயங்கள்: 1. தம் ஆசார்யர் காஞ்சியில் எப்படி உள்ளாரோ என்று எம்பெருமானார்க்கு ஓர் அஸ்தானே (காரணமற்ற ) பயம், அவர் மீது இருந்த அன்பினால். இந்தத் தலைவி போன்ற நிலை. 2. ஆசார்யர்கள் எவ்வளவு நைச்சியம் , பணிவு காட்டினார்கள் என்பது.-தலைவன் தலைவி விஷயம் சொல்லும் பாசுரத்துக்கு எம்பெருமானார்/திருக்கச்சி நம்பிகள் அன்புப் பிணைப்பைப் பேசியது நினைக்கத்தக்கது.-
நம் பிள்ளை ஈட்டில்
ஸ்ரீ ராமாயணத்தில்-பெருமாள் பிராட்டியைப் பிரிந்து கழுத்து தோள் மாலை சாத்தி
சக்ரவர்தியைக் காணச் செல்ல-தாற்காலிகமாக பிரிவு-இங்கும் பிரிவு பக்தி வளர்க்க -ஆர்த்தி உண்டாக்க-பதி ஸம்மானம் சீதா-மைய கண்ணாள் பார்க்க-திவ்ய அந்தப்புரம் கனக புரம்
சக்ரவர்த்தி அருளப்பாடு கேட்டு சுமந்திரன் வர-பிராட்டி இரண்டு மூன்று திருவாசல் அளவும் மங்களா ஸாஸனம் பண்ணிக் கொண்டு புறப்பட-புரிந்து பார்த்து அருளி-அத்தைக் கண்ட பெருமாள்
அங்கும் இங்கும் –பரிவர் இல்லை -என்று நினைத்து பண்ணுவதைக் கண்ட பெருமாள்
பின்னவும் தவிர மாட்டாதே வரும் அளவும் தாரகமாக தனது தோள் மாலையை இவள் தோளிலே இட்டு
முறை மாறாடி தாழ்வுகளைச் செய்து போனாள்-
அஸீ தேக்ஷிணா -இந்தீவர மாலை இட்டாள் அப்போது பிரிவு போல்- இங்கும் பிரிவு
பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் என்பார்–இது எல்லாம் பகவத் விஷயத்தில்-இங்கு பாகவத விஷயத்தில்-இவர் அவகாஹம்-திருக்கச்சி நம்பி எவ்வாறு என்று எம்பெருமானார் சொல்ல -கடுக நான் என்று எழுந்து செல்வார் இல்லை-யாரும் பதில் சொல்லாமல் பெரிய நம்பி பெருமாள் கோயில் எழுந்து அருள -நிஷேதிக்க முடியாத விஷயம் எழுந்து அருள ஆகாலாதோ-திரு நாள் அணித்தாய் இருந்தது நான் வந்த கார்யம் தலைக் கட்டிற்று-இப்படி போய் வர அமையும் -பிரிந்து இருக்க முடியாதே பெரிய நம்பிக்கு உடையவர் -இருவருக்கும் பிரிவு அஸஹ்யம்
திண்பூஞ்சுடர்நுதி, நேமி அஞ்செல்வர் விண்ணாடனைய
வண்பூ மணி வல்லீயை ஆரே பிரிபவர்தாம்?…பாசுரம் 9:–இதில் தலைவன் தலைவியைத் தன்னால் நீங்கி இருக்க இயலாமையைத் தெரிவிப்பதாக ஆழ்வார் தமக்கும் எம்பெருமானுக்கு உள்ள அப்ருத2க் ஸ்திதி2யைப் பாடுகிறார்-
எம்பெருமானார் ஒரு ஸ்ரீவைஷ்ணவரை, பிள்ளை உறங்கா வில்லி தாஸரிடம் சென்று தமக்கு வேண்டிய நெல் வாங்கிக்கொள்ள அனுப்பினார். அவர், தாஸரிடம் சென்று உடனே நெல் பெறாமல் திரும்பிவிட, உடையவர் துணுக்குற்று என்ன ஆயிற்று நெல் என் பெறவில்லை? என்ன, அவர், “அடியேன் சென்றபோது தாஸர் கண்ணும் கண்ணீருமாக அழுதுகொண்டிருந்தார்” என்றார் . உடையவர் யாதோ ஒரு வருத்தம்பற்றி, திருவரங்கத்திலிருந்து திருமலை செல்ல நினைத்திருந்ததால் தாஸர் இந்நிலையில் இருந்தார் என்று எம்பெருமானார் புரிந்துகொண்டார்.-மணிவல்லி என்பது சம்பிரதாயத்தில் நெறி வழுவாது அநந்யார்ஹ ஶேஷத்வம் பேணும் ஆத்மாவைக் குறிக்கும்.-இங்கு எம்பெருமானாரின் ஆருயிர்ச் சீடரான பிள்ளை உறங்கா வில்லி தாஸருக்கு இது இயல்வாகப் பொருந்துகிறது.
“உமது வாயோ? அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ? அடும் தொண்டையோ? அறையோ! இதறிவரிதே”–பாசுரம் 10:இப்பாசுரத்தில் ஆழ்வாரின் அவயவ அழகிலும் இனிய சொல் திறனிலும் ஈடுபட்ட அடியார்கள் அவரைப் பற்றிப் பிரிவு தாங்காது சொல்வது போல, நாயகன் நாயகியைப் புகழும் வகையில் பொருள் வருகிறது.
திரு மலைக்குப் போக நினைத்தான் என்று பழி இட்டாள்-நீ காண் நினைத்தாய் -என்கிறான்
அவன்-அதாவது-பாகவத் சம்ஸ்லேஷம் பிறந்த பின்பு பாகவத் சம்ஸ்லேஷம் மட்டுமேயாய் இருந்த படி
ஸ்வரூப ஜ்ஞானம் கண்டிலோம் –எங்களை அறியச் செய்யாது ஒழிந்தால் உன்னை அறிய வேண்டாமோ –(எங்களை -என்று மதுரகவி ஆழ்வார் போல் உள்ள அனைவரையும் சொன்னவாறு )
ஸ்வரூபம் -விக்ரஹம் -உன்னுடைய விக்ரக வைலஷண்யம் நீ அறியாய் –(உம்மை விட்டுப் பிரிந்தால் தரிக்க மாட்டாத எங்களையும் நீ அறியாய்-உன்னுடைய ஸ்லாக்யதையையும் நீ அறியாய்-
கீழ்ப் பாசுரம் -இப்பாசுரம் -பிரிந்தால் அஸஹ்யம்-பிரிய மாட்டேன் இரண்டுக்கும் -இரண்டுக்கும் சேர்ந்து ஐதிக்யம்-இங்கும் திருவேங்கட யாத்ரை உள்ளதே )
எம்பெருமானார் திரு மலைக்குப் போவதாய் பிறந்த படி கேட்டு-பிள்ளை உறங்கா வல்லி தாசர்
அது தாங்க மாட்டாமல் தம் அகத்தே போய் மூடிக் கொண்டு கிடந்து-காண்கின்றனகளும் -என்கிற பாட்டை அனுசந்தியா நிற்க-அங்குச் செய்கின்ற அளவு என்ன என்று ஒரு வைஷ்ணவரை போக விட-இப் பாட்டை அனுசந்தித்து சோகித்து கிடந்தார் -என்ன–உடையவர் -நெல் கொடுத்து வா என்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை அனுப்ப அவர் வாங்கிக் கொள்ளாமல் அழுது இருக்க அத்தை அவர் வந்து உடையவருக்கு தெரிவித்தார்-இது நம்பிள்ளை ஈட்டில் உண்டே
மாறு ஓன்று இல்லா மாருதி சிறியாண்டான் ஸ்வாமியை மேல்கோட்டையில் இருந்து அனுப்பி கூரத்தாழ்வானைப் பற்றி அறிந்தார் உடையவர் இவ்வாறு அடிக்கடி சிஷ்யர்களைப் பற்றி விசாரிப்பார் வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் -என்று சொல்லி போர மாட்டிற்று இல்லையோ என்று அருளிச் செய்தார்–
பின் அடிகளில், இந்த இதழ்கள் என்ன வாயா, அல்லது கிளியும் நாணும் அவயவமா, அல்லது (சிவப்புப் பொருந்திய) கொவ்வைப் பழமா என்று அழகை வியந்து சொல்வது. நம் ஆசார்யர்கள் தமது பூர்வர்களின் திருமேனியிலும் மிக ஈடுபாடும் பக்தி பாரவச்யமும் கொண்டிருந்தமைக்கு இதைக் காட்டி, எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பி தொடர்பான ஓர் ஐதிஹ்யம் சொல்லப்படுகிறது. அதாவது, எப்போதும் நம்பிகள் திருவரங்கம் வந்து திரும்பத் திருக்கோட்டியூர் புறப்படுகையில் எம்பெருமானார் மரியாதை நிமித்தமாக அவரை சிறிது தூரம் வரை பின் தொடர்வார். அப்போது ஒருமுறை, “அடியேனுக்கு உய்வு பெற எப்போதும் தியானிக்க ஒன்று அருளிச் செய்ய வேண்டும்” என்கிறார். ஏற்கெனவே அவரிடம் ரஹஸ்ய உபதே3ஶம் பெற்றவர் இப்படி வேண்ட, நம்பிகளும், “அடியேன் ஆற்றில் இறங்கி நீராடும்போது ஆமை முதுகு (கூர்மாசனம்) போல் தெரியும் அடியேன் ஆசார்யர் ஆளவந்தார் முதுகுத் தோற்றத்தையே அவர் திருநாடு எய்தியபின் நினைத்திருப்பேன். நீரும் அப்படியே இரும்” என்றார். இதனால் ஆசார்யர்களின் திருமேனியில் ஶிஷ்யர்களின் ஈடுபாடு அவர்களின் உபதே3ஶத்திற்போன்றே அவசியம் என்றதாயிற்று.-ஆசார்யர்கள் தம் ஶிஷ்யர்களின் ஆத்ம க்ஷேமத்தைப் பாதுகாப்பார்கள்; ஶிஷ்யர்கள் அவர்தம் திருமேனி நலத்தைப் பேணுவார்கள்.-ஆசார்யன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்-தேசாரும் சிச்சன் அவன் சீர்வடிவை ஆசையுடன் நோக்குமவன்” -பகவத் ஶேஷத்வத்தைவிட பாகவத ஶேஷத்வமே இறுதி நிலை என்பதை ஆழ்வாரின் இப்பாசுரங்களில் நம் பூர்வாசார்யர்கள் கண்டு அநுபவித்து நமக்குக் காட்டியுள்ளனர்.
அரியன யாம் இன்று காண்கின்றன கண்ணன் விண் அனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்கு
உரியன ஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்தி ஓரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே.–பாசுரம் 11-
தலைவியுடன் இருக்கும் தலைமகன் தான் பொருள் ஈட்டுவதற்காக அவளைப் பிரிந்து செல்ல வேண்டும் என்பதை நேர்படச் சொல்லாமல் எல்லாரும் பொருள் சம்பாதிப்பதற்கு அவ்வப்போது தத்தம் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்வதுண்டு என்றான். இவன் தான் பிரிந்து செல்லப்போவதையே இப்படிக் குறிப்பாக உணர்த்துகிறார் என்று அவள் நினைத்தாள்.-கூடி இருக்கும் வேளையில் பிரிவை நினைப்பதோ அல்லது நினைப்பூட்டுவதோ மிகவும் துன்பம் விளைவிப்பது.-இதை ப4ட்டர் சுவைபடக் கூறி விளங்க வைத்தது ஓர் ஐதிஹ்யம். அவர் திரு அத்4யயனத் திருநாளில் எல்லாரும் திருவாய்மொழி அநுப4வத்திலும் நம்பெருமாள் அழகிலும் ஆழ்ந்துள்ளனர்; இவ்வேளையில் இந்த ஏகாத3ஶி எனும் (பட்டினி கிடப்பதாகிய) உடல் வலிமை குறைந்து ப4க3வத3நுப4வத்துக்கு இடையூறாக ஏற்படுத்தியது யார் என்று வெறுத்துச் சொன்னதாகக் கூறுவர்.
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனி யவர் கண் தங்காது என் றொரு வாய் சொல்
நன்னீல மகன்றில்காள்! நல்குதிரோ நல்கீரோ?–1-4-4-என் நீர்மை கண்டு-என் ஸ்வபாவம் -மார்த்த்வம் – மென்மைதனைக் கண்டு அருள் செய்து,-நாம் பிரியுமது தகாது’ என்னாதே பொகட்டுப் போனவர்க்கு.
ஸ்ரீ பட்டரை ஒரு தமிழ்ப் புலவர் ‘கேட்டு இரங்கி’ என்னாது, ‘கண்டிரங்கி’ என்னப் பெறுமோ?’ என்ன,
‘அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத் தகாது என்று இருக்க வேண்டாவோ?’ என்று அருளிச் செய்தார்.-கேட்ட புலவர், ‘இவ்வாறு நிகழ்வதும் உளதோ?’ என்ன,
‘புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில், அள்ளிக் கொள் வற்றே பசப்பு,’
‘காதலர் தொடுவுழி தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே’ என்பன போன்ற
தமிழ்ப் பாக்களை நீ அறியாயோ?’ என்று அருளிச்செய்தார்.
பலபல ஊழிகளாயிடும் அன்றி ஒர் நாழிகையைப்
பலபல கூறிட்ட கூறாயிடும் கண்ணன் விண்ணனையாய்
பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பலபல சூழலுடைத்து அம்ம! வாழி இப்பாயிருளே.–பாசுரம் 16:
தலைவனைப் பிரிந்த தலைவி தோழியிடம் இருளை வியந்து சொல்வதாக இப்பாட்டு உள்ளது. அவனோடு இருந்து, பின் பிரிந்துள்ளபோது நேரம் ஊழி போல் நீளுவதாக அவள் வருத்தம். அந்த இருளும் கண்ணன் போல் நிறம் கொண்டுள்ளது. ஆழ்வார் தம் பாசுரங்களில் எம்பெருமானை நினைவுறுத்தும் அசேதனங்களால் பராங்குஶ நாயகி படும் துயரைக் குறித்துள்ளார்.-இதை விளக்கும் நஞ்சீயர், ஸ்ரீராமாயணத்தில் பெருமாளைக் காட்டில் விட்டபின் குகனோடு மூன்று நாட்கள் இருந்து பின் அயோத்தி செல்லும் ஸுமந்திரனை நினைவு கூர்ந்தார்.-“கு3ஹேன ஸார்த4ம் தத்ரைவ ஸ்தி2தோऽஸ்மி திவஸான் ப3ஹூன்” எனும் ஶ்லோகத்தை மேற்கோள் காட்டினார். ஶிஷ்யர் நம்பிள்ளை, “ஸுமந்திரன் குகனோடு மூன்று நாள்களே இருந்தான். ஆனால் பலநாள்கள் எனப் பொருள்பட ‘திவஶான் பஹூன்’ என்பானேன்” என்று வினவ, ஆசார்யர், அதற்கு, “ஒன்றைப் பிரிந்திருக்கும்போது, அதை நினைவூட்டுபவர் முன் இருந்தால் பிரிவு நெடிதாகத் தோன்றுமே. குகனோடு இருந்ததால் பெருமாளை நெடு நாள் பிரிந்த மாதிரி ஸுமந்திரனுக்குத் தோற்றியது” என்றார்.-காதலர்க்குப் பிரிவின் போது காலம் நீளுவது போல் எம்பெருமானைப் பிரிந்த ஆழ்வார்க்கும், அவரைப் பிரிந்த அடியார்க்கும் தோற்றும். பா4க3வத விஶ்லேஷமும் (பிரிவும்) ப4க3வத் விஶ்லேஷம் போன்றே உள்ளது. ஆழ்வார் பாசுரங்களில் பா4க3வத ஸமாக3மம் (சேர்த்தி) பகவத் ஸமாக3மம் போன்றே வலியுறுத்தப்படுகிறது.-நெடுமாற்கடிமை, பயிலும் சுடரொளி என இரு திருவாய்மொழிகள் பா4க3வத ஶேஷத்வத்தை வியந்து பேசும். பொலிக பொலிக திருவாய்மொழி அடியார்களால் கலியும் கெடும் என்பதை அவர்கள் வரவை முன் கூட்டி இயம்பும்.-
புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாடு அமரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே –23-தலைவன் குறை யுற உரைத்தல் –
அருவினையேன் மனமோ–
எங்கேனும் போகிலும் புனத்தயலே வழி போக வேண்டும்-பாபத்தை பண்ணினேன் —
பாகவதர்களை அடைந்த பின்பு மீளவே கூடாதே-பிள்ளை திரு நறையூர் அரையர் -உகந்து அருளின தேசம் எல்லாம் கிடக்க- திரு நகரி அருகே போக வேண்டும் பாபம் உண்டாவதே – இது பாவம் ஆனால் இதற்க்கு எதிர் தட்டான பகவத் விஷயம் புண்ணியம்-தென் ஆனாய்-நாலு பக்கமும் யானையைத் தேடிப் போவார் தப்பலாம்-பாகவதர்கள் இடம் சேர்ந்து விலகாமல் -ஆழ்வார் திருவடிகளில் ஈடுபட்டு மீள முடியாமல் சிக்குண்டதுக்கு ஐதிக்யம்-சீரார் வேங்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் -மண்டின இடங்களில் புகுந்தவர்-வேலிக்கு வெளியில் திருக்குருகூரில் அகப்பட்டதுக்கு – பிள்ளை உறங்கா வல்லி தாசர் உடையவர் பாதமே என்று இருந்ததற்கு–(நம்பிள்ளை ஈட்டில் ஆப்பான் திருவழுந்தூர் அரையர் மச்சிலே பிள்ளை திரு நறையூர் அரையர் இப்பாட்டை அநுஸந்தியா நிற்க-ஸீ ல குணம் காட்டும் எம்பெருமான் எங்கும் உண்டாகா நிற்க-திருப்புளிக் கீழ் -அடைந்தேன் -சிக்கினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே சீலாதி குணம் அளவு இல்லையே-குண வித்தர் படி -பகவத் விஷயத்தை சமாஸ்ரயித்து கொண்டை மேலே காற்று அடிக்க திரிய பெறாதே மீள ஒண்ணாத பாகவத சம்ச்லேஷத்தில் இழிவதே-என்று- கொண்டை மேல் காற்று அடிக்க -என்றது-தலைக்கு மேல் காற்று அடிக்க -அதாவது கவலை இன்றி இருத்தல்–கொண்டை மேல் காற்று அடிக்க -என்றது-அதிகமாக ஸூகப்படுவதுக்கு இந்த வார்த்தை-
எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25-தலைவன் மாலைக்குத் தலைவி ஆசைப்படுதல் –
பண்டு உய்யக் கொண்டார் பக்கலிலே -இவர் நாதமுனி சிஷ்யர் அல்லர்-சாதனாந்தர நிஷ்டர் வேறே உய்யக் கொண்டார் ராமானுஜர் காலம் அவரும் இல்லை-நான்காம் வர்ணம் பாகவத பிரபாவம் அறிந்தவர்-இவர் இடம் உசாவி -அருளாளப்பெருமாள் எம்பெருமானார் தாசர் இருவரும் சங்கை
அவரைக் கண்டு தான் இருந்த இடத்தை அவருக்கு கொடுத்து கடக்க நிற்க-தாசரும் தனது தன்மை அறிந்தவர் எல்லாரும் தாசர் என்று அறிந்து இருப்பார்களே என்ன-என்னால் உம்மை அறியப்போமோ
பகவான் நிர்ஹேதுகமாக கிருபையால் படைத்து -ஜகத்காரணம் இவனே என்று அறிந்தவன்
தேவர்கள் கூட அந்த பாகவதர் பெருமையை அறியவே மாட்டார்கள் பாரதம்-பிரானே உம்முடைய பெருமை தெரியாது என்று சொல்ல தேவர்கள் வேணும் -நான் யார் சொல்ல
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேன்மினோ கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவரிடை நீர்
இன்னம் சொல்லீரோ? இதுவோ தகவு என்று இசைமின்களே!–பாசுரம் 30:
எம்பெருமான் மற்ற தேவர்களைப்போல் அன்றி சரணடையவும், உபாஸிக்கவும் எளியன் என்பதை ஆழ்வார் பல வகைகளிலும் காட்டுவார். அத்துடன், அவன் தன்னிடம் வந்தவரிடம் அல்லது தானே சென்றடைந்தவரிடமும் ஒன்றும் எதிர்பார்க்க மாட்டான் என்பதையும் பலப்படச் சொல்வார். ஆழ்வார்கள் அனைவருமே ஒரு மிடறாகக் காட்டும் அரும்பொருள் இது. இப்பாசுரத்துக்கு விளக்கம் அளிக்கும்போது கிடாம்பி ஆச்சான் ஓர் அத்புதமான விளக்கம் அருளினார்:-அதாவது, தன் நாயகனைக் காணச் சென்ற தன்னால் அனுப்பப்பட்ட தன் நெஞ்சு தான் தூது செல்வதை மறந்து பெருமானோடே நின்று தங்கிவிட அந்த நெஞ்சுக்குப் பறவைகளைப் பராங்குஶ நாயகி தூது அனுப்புகிற சூழல் இப்பாசுரத்தில் வருகிறது. இதில் ” தொழுது இரந்தேன்” என்கிறார் ஆழ்வார். தொழுதால் போதாதோ இரங்கவும் வேண்டுமோ?–எம்பெருமான் சரணாக3தனிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டான் என்பதை விளக்க, கிடாம்பி ஆச்சான் இவ்விடத்துக்குச்சேர-“அந்யத் பூர்ணாத் அபாம் கும்பா4த் அந்யத் பாத3வநே ஜநாத் அந்யத் குசல ஸம்ப்ரஶ்நாத் ந ச இச்ச2தி ஜநார்த3ந:”-என்கிற அழகான ஶ்லோகத்தை எடுத்தார்.-கிருஷ்ணன் ஒரு பூர்ண கும்ப4ம், திருவடி விளக்குவது, நலமா என்று அன்புடன் விசாரிப்பது இது தவிர வேறு எதுவும் எதிர்பார்க்க மாட்டான் என இந்த மஹாபா4ரத ஶ்லோகம் க்ருஷ்ணனின் எளிமையை விளக்குகிறது.-இதுகூட ஒருக்கால் ( ஒரே ஒரு முறை) செய்தால் போதுமா என்று ஶிஷ்யர்கள் கேட்டபோது, ஆச்சான் “ஒருக்கால் என்ன அரைக்கால் போதும்” என்றார்!-அதாவது உபசாரம் செய்யவே வேண்டா மனத்தால் செய்ய நினைத்தாலே போதும் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்துவிடுகிறான்.-இவ்வாறு கிடாம்பி ஆச்சான் இறைவனின் எளிமையை விளக்கினார் என்பர்.
கிடாம்பி ஆச்சானோடு நம்பி திரு வழுதி நாடு தாசரும் மற்றும் நம் முதலிகளும் இருந்து
அந்யத் பூர்ணாத் ஸ்லோஹம்–அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதாவநேஜனாத் அந்யத் குசல சம்ப்ரசனா அந்ந சேச்சதி ஜனார்த்தன– – கேளா நிற்க -அந்யத் என்கிறது ஒரு கால் அமையும் என்கிறதோ என்ன-அரை கால் அமையும்-என்று கிடாம்பி ஆச்சான் நியமித்தான்-(தொழுது இரந்தால் இரண்டும் வேண்டாமே )கிருத அபராதச்ய ஹிதே நாந்யத் பச்யாம் யஹம் ஷமம் அந்தரேனா அஞ்சலிம் பத்வா லஷ்மணஸ்ய ப்ரசா தானாத் –கிஷ்கிந்தா காண்டம் -32-17- தீரக் கழிய அபராதம் பண்ணின வுமக்கு இளைய பெருமாள் பிரசாதிக்கும் போது ஓர் அஞ்சலி நேராமல் போகாது என்று திருவடி மகாராஜற்கு சொன்னால் போல —அஞ்சலிக்கு அவ் அருகு இல்லை-என்று இருக்க-இரப்பவும் செய்தேன்–தொழுகையும் இரக்கையும் தன்னதே ஆய் இருந்த படி –உவாச ச மஹா ப்ராஜ்ஜா -யுத்த காண்டம் -17-11-விபீஷணன் சரண் அடைந்து இரக்கம் படும் படி பல சொல் சொன்னது போல்–வந்ததே போதும்-அஞ்சலியும் செய்தான்–உவாச ச மேலும் பேசவும் செய்தான்–
யாம் கபிநாம் சகஸ்ராணி ஸுப ஹூன்ய யுதானிச திஷு சர்வாஸூ மார்கந்தே சேய மாயாதி தாமயா–சுந்தர காண்டம் -30-3- என்று முதலிகள் எல்லாரும் கூட புஜித்தாலும் புஜித்து முடிய ஒண்ணாத ப்ரீதியாலே தனியே அகப் பட்டேன் என்று-முதலிகள் எல்லோரும் கூட மது வனத்தில் புகுந்த பொழுது-ததி முக பிரப்ருதிகள் நலிய –அஹம் ஆவார் யிஷ்யாமி யுஷ்மா கம்பரி பந்தின -சுந்தர காண்டம் 62-2—என்று உங்களுக்கு விரோதி ஆனவர்களை நான் போக்குகிறேன் நீங்கள் அமுது செய்யுங்கோள் என்ன —இப்படி மது வனம் அழிந்த படி யை மகா ராஜர் கேட்டு– இது வெறுமனே ஆக மாட்டாது –பிராட்டியை கண்டார்கள் –-த்ருஷ்டா தேவி -சுந்தர காண்டம் 63-17–என்று நிச்சயித்து ,-அப்போது அவ் அருகுக்கு உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தாலே வாலானது வளர்ந்து ருஷ்ய முக பர்வதத்திலே சென்று அமைந்தது- அறைந்தது —அம் மது வனம் இன்றாகில் ராஜ புத்ரர்கள் முதுகோடே போம் -என்று பட்டர் அருளி செய்வார்-
துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –36–
இரங்கார் –வாராது ஒழிந்தால் –பூசுவனவும் புலர்த்துவனவும் இரட்டிக்க வேணுமோ(பூசும் சந்தனம் இரண்டு மடங்கு பூசிக் கொள்கிறானே )அம்மனோ – புலி என்னுமா போலே – ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்கிற தத்துவத்தை அம்மே என்று அஞ்ச வேண்டும்படி இவளுக்குப் பிறந்த ஸ்வரூப அந்யதா பாவம்-ஆனந்தோ ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதத்ஸ்ஸன-என்று புத்தி பூர்வம் பண்ணின பாபத்துக்கு அஞ்ச வேண்டாத படி இருக்க –ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்தை அறிந்தவனுக்கு ப்ரஹ்மம் தன்னையே அறியச் செய்தேயும்- அஞ்ச வேண்டும்படி இறே இவள் தசை –ஓ என்று–க்ரூர்யத்தைச் சொல்லுகிறது –-அசை என்றுமாம் –இலங்கைக் -குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –
ஒருத்திக்காக கடலை யடைத்து- இலங்கையை ராமன் என்றும் லஷ்மணன் என்றும் எழுத்து வெட்டின அம்புகளை புக விட்டு குட்டிச் சுவரும் மட்டைத் தெங்குமாக்கி மூலையடி போகப் பண்ணின இந்த உபகாரகனுடைய இந்த நீர்மை எல்லாம் எங்கே குடி போயிற்றோ -என்று எம்பார் அருளிச் செய்தார் ––இதுவும் அழகியது ஒன்றாய் உண்டாய் இருக்கலாகாது என்று அஸூ யையாலே அழித்தான் அத்தனை காண் –ஒருத்திக்காக உதவினன் அல்லன் காண் -என்பர் திருமலை நம்பி –
கடமாயினகள் கழித்துத் தன்கால் வன்மையால் பலநாள்
நடமாயின புக்கு நீர்நிலை நின்றதவம் இதுகொல்?
குடமாடி இம்மண்ணும் விண்ணும் குலுங்க உலகளந்து
நடமாடிய பெருமான் உருவொத்தன நீலங்களே.–பாசுரம் 38-
யோகிகள் யோக அப்யாசம் பண்ணும் போது யோகம் சாத்மிக்கைக்காக லோக யாத்ரையிலே ஒன்றுவார்கள்— அது போல் இவரும் பகவத் அனுபவம் சாத்மிக்கைக்காக லோகங்களில் பதார்த்தங்களின் மேல் கண் வைததார் –அவையும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி –
மயர்வற மதி நலம் அருள பெற்றவர் ஆகையாலே –நம்மை லோக யாத்ரையின் நின்றும் வேத (வைதிக )யாத்ரையில் மூட்டும் தனை அருமை போரும்-ஆழ்வார்களை – வேத (வைதிக )யாத்ரையில் நின்றும்
லோக யாத்ரையிலே மூட்டுகை –நம்மை சம்சாரத்தில் உண்டான ருசி வாசனையை தவிர்த்து பகவத் விஷயத்தில் உண்டாக்குக்கைக்கு உள்ள அருமை போரும்-ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் ருசி வாசனையை தவிர்த்து –சம்சாரத்தில் உண்டாக்குக்கைக்கு – இரண்டும் எம்பார் அருளி செய்தார் –
இது தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் எனும் துறையில் வருகிற பாசுரம். காதலர் பிரிந்திருக்கும்போது ஒருவர் மற்றவரை நினைந்து அவர் போன்றவற்றை அவராகவே பாவித்து அப்போதைக்குப் பிரிவுத் துயரை மறப்பது ஒன்று உண்டே. ஆழ்வார் இப்படியில் அனுகாரம் என்கிற ரீதியில் பலகாலும் எம்பெருமானை அனுபவிக்கிறார். ஆனது பற்றியே ஆழ்வார்களின் பாசுரங்களில் ஆன்மிக விஷயங்களை விவரிக்கும்போதும் ஓரோர் இடம், திவ்ய தேஶம், அவ்விடத்து இயற்கை எழில், அவ்விடத்து மாந்தர் தோற்றச் சிறப்பு, கல்வி, செல்வ மேன்மைகளைச் சொல்வதும். இதை ஈடு வ்யாக்யானத்தில் நம்பிள்ளை ஆழ்வார் இவ்விபூ4தியும் அவன் உடைமை என்பதால் அனுபவிக்கிறார் என்பர். உண்மையில் அருளாளர்களான ஆழ்வார்களும் ஆசார்யர்களும் தாமும் அனுபவித்து நம்மையும் அனுபவிப்பிக்கிறார்கள்.-இப்பாசுரத்தில் மண்ணும் விண்ணும் அளந்த எம்பெருமான் திருமேனி நிறத்தை நீலோத்பல மலர்கள் நாயகிக்கு நினைப்பூட்டியது தெரிகிறது. ஒரு மலரைக் கண்டாலும் அதன் நிறம் எம்பெருமானை நினைவூட்டுகிறது. இந்த விபூ4தியில் உள்ளன யாவும் அவன் ஸ்வரூபம் என்பதால் அதில் அவளுக்கு மகிழ்ச்சியும் மன நிறைவும் வருகிறது.-ஆளவந்தாரின் ஆசார்யரும், நாத2முனிகளின் சீடரும் ஆன குருகைக் காவலப்பனை அவரது சீடர் ஒருவர், “ஜகத் ஈச்வரர்களுக்கு என்ன தொடர்பு?” (அதாவது உலகுக்கும் எம்பெருமானுக்கும் என்ன ஸம்பந்தம்?) என்று கேட்டார். அதற்கு குருநாதர் “இந்த உடலுக்கும் ஆத்மாவுக்கும் என்ன ஸம்ப3ந்த4மோ அதேதான் உலகுக்கும் ஈச்வரனுக்கும் .” என்கிறார். சீடர் மேலும், “எனக்கு எம்பெருமானை நினைப்பதற்கு ஒரு வழி சொல்லித் தர வேண்டும்” என்று வேண்டினார். அதற்கு குருகைக் காவலப்பன், “நான் உமக்கு எம்பெருமானை எப்போதும் நினைக்க வழி சொல்லித் தருகிறேன்; ஆனால், நீர் எனக்கு அவனை எப்படி மறப்பது, நினையாமல் இருப்பது என்று சொல்லிக் கொடும்!” என்றாராம்.-நீல மலர்களைக் கண்டதும் பராங்குஶ நாயகிக்கு எம்பெருமான் நினைவு வந்தது. ப்ரக்ருதியில் உள்ள அனைத்திலும் “ஶரீரம் யத் அவாப்னோதி” என்று கீதையில் சொன்னபடி அவனே நிறைந்திருப்பதால் எந்தப் பொருளைக் கண்டாலும் ஆசார்யருக்கு அது எம்பெருமானின் ஶரீரமாகவே தோற்றுகிறது. அவ்வாறிருக்க எம்பெருமானை எவ்வாறு நினையாது இருக்க முடியும் என்று கருத்து
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -39-தலைவனின் உருவம் பற்றித் தலைவி கூறுதல் –-
நீல தட வரை மேல்– பச்சை மா மலை போல் மேனி -என்னுமா போலே ஒரு நீல கிரி போலே காணும் திரு மேனி இருப்பது–புண்டரீக -இத்யாதி –அதன் மேல் பூரணமாக தாமரை பூத்த பெரிய தடாங்கள் போலே மிகா நின்றன –-உடம்பு எல்லாம் கண்ணாய் இருக்கிறபடி –-அவ் அவயவம் ஒழிய அவயாந்தரத்தில் போக ஒண்ணாத படி இருக்கிற படி —(கிருபையா -சர்வ-இத்யாதி -பராசர பட்டர் -கண்கள் நாடு பிடிக்கப் புறப்பட )–தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவ அஷணீ – என்று உபநிஷத்களில் -சாந்தோக்ய உபநிஷத் -16-7-சொல்லுகிற தாமரை –எமக்கு எல்லா இடத்தவும் –கந்தவ்ய பூமியில் இல்லாத படிக்கு ஈடாக திருக் கண்கள் தொடர்ந்த படி –கண்ணை செம்பளித்தவாறே கண்ணுக்குள்ளே தோற்றின படி –(திருக் கமல பாதம் வந்து என் கண்ணின்னுள்ளே ஒக்கின்றதே ) புறம்பு எங்கும் தோற்ப்பித்து என்னை தோற்ப்பிக்க வந்தபடி —சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -திருவாய்மொழி -7-7-1-கரு மாணிக்க மலை மேல் மணித் தடம் தாமரைக் காடுகள் போல் -திருவாய்மொழி -8-9-1—இத்யாதி-
கண்ணின் கோலங்களே –கண்களின் அழகுகள் ஆனவை–அதாவது
1-பரபாக சோபையும்
2-மிளிர்த்தியும்
3-பெருமையும்
4-சிவப்பும்
5-குளிர்த்தியும்–தொடக்கமானவை
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்கள் நீலத் தடவரை மேல் நெடும் தடங்கள் போலப் பொலிந்து எமக்கு எல்லா விடத்தவும்-என்று அந்வயம்-
கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பரப்பால் மிக்கு மற்றெப்பால் யவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே.–பாசுரம் 43-
தலைவி பராங்குஶ நாயகி தலைவன் கண்ணனின் உருவ எழிலை உரைக்கும் பாசுரம் இது. இதில் ஆழ்வார், எம்பெருமானின் திருக்கண் அழகை முதலில் வியக்கிறார்; பின்பு தம்மை அணைக்கும் கையும் தாமரை போன்றது என்கிறார்; இவ்வாறு வியந்து அனுபவித்துப் போற்றியவர் திருவடிகளையும் தாமரை என்று நினைத்துப் போற்றுகிறார். திருமேனியோ கருமுகில் போலாகி அவன் வள்ளன்மையும் குளிர்த்தியும் தெரிவது என்கிறார்.-இதை விவரித்தபோது ஒரு சீடர், கண்கள், கைகள், திருமேனி இவற்றை எல்லாம் விவரித்து எதற்காகத் திருவடியைப் பேசுகிறார் என்று ஐயம் எழுப்பினார். இதற்குப் பிள்ளைப் பிள்ளை ஆழ்வான் மிகவும் சுவைபட, “குழந்தைக்குத் தாயின் முலை போல அடியார்க்கு எம்பெருமானின் திருவடிகள் ; அது தாயின் பால் உண்டு பின் தாயின் முகம் நோக்கும். அதேபோல் இவர்களும் எம்பெருமானின் ஸர்வ அவயவ ஸௌந்த3ர்யங்களையும் கண்டு பருகினாலும் அவனது திருவடிகளிலேயே நோக்காய் இருப்பர்” என்று விளக்கினார்.
கண் இட்டு கொடுக்க அணைத்த கை –சம்ஸ்ப்ருச்யா க்ருஷ்ய சப்ரீத்யா ஸூகாடாம் பரிஷஸ்வஜே-என்று அக்ருரனை அணைத்தால் போலே –அடியோ அவையே –அணைத்த போதே ஸூக ஸ்பர்சத்தால் துவண்டு விழுந்த எல்லை –-புண்டரீகாஷா நம -இறே– கண்ணுக்கு தோற்றவர்கள் காலிலே விழும் அத்தனை இறே –வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால் –எல்லையில் கிடந்தவர்கள் உடைய ஜீவனம் –பிரஜை முலையிலே வாய் வைத்து தாய் முகத்தை பார்க்குமா போலே -என்று பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்—விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்–மதி விகற்ப்பால் எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறம்-என்று அந்வயம்-மதி விகற்ப்பால்-புத்தி பேதங்களால் –விண்ணும் இத்யாதி –சம்சாரிகளுக்கு அவ் வருகே சர்வேஸ்வரன் பக்கலிலே உத்பத்தி ஸ்தானத்தை உடையவனுமாய் –அவனாலே லப்த ஞானனுமாய் இருந்துள்ள பிரம்மா தொடக்கமானவர் –அதுக்கு அவ் வருகான முக்தர் –-நித்யர் –இவர்களுக்கு மநோ ரதத்துக்கு நிலமோ ?-எனக்கு உபகாரனான அவன் உடைய எழிலின் பிரகாரம் –யானைக்கு குதிரை வைப்பாரைப் போல் நித்யர்களுக்கும் இவனது அழகு-உயர்வற உயர் நலம் உடையவன் அன்றோ இவன் —எம்பிரான்– தமக்கு அவ் வழகை இறையிலி யாக்கின உபகாரத்தை கொண்டாடுகிறார் –மயர்வற மதி நலம் அருளினான் அன்றோ –உபகாரம் கொண்டாடும் பாசுரம் அதே போல் இதுவும்-நித்யராலும் பரிச்சேதித்து அறிய முடியாத அவயவ சோபையையும் திருமேனியின் எழிலையும் அவனது நிர்ஹேதுக கிருபையால் உள்ளபடி அறிந்து அனுபவித்தேன் என்கிறார் –
நிறமுயர் கோலமும் பேரும் உருவும் இவை இவை என்று
அறமுயர் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கங்கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி ஒன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான பெருமையே.–பாசுரம் 44-இப்பாசுரம் தலைவி தலைவன் பெருமையை உணர்த்துவதாக அமைந்தது.
எம்பெருமான்பால் மிக்கிருக்கும் கணக்கற்ற மிகு நலன்களை எண்ணுவதோ முழுமையாக விரித்துரைப்பதோ இயலாது. அவனது ஈடற்ற தோற்றப் பொலிவு இது என்றவாறு சிலர் சில சொல்லலாகும். அல்லது அவன் திருநாமங்கள் சிறப்பு என்று சில சொல்லக்கூடும். அவனது திவ்ய அவயவ ஸௌந்த3ர்ய லாவண்யாதிகளை ஒரு சிலர் சொல்ல முயற்சி செய்யலாம். ஆயினும் ஒவ்வோரிடத்திலும் அவன் திவ்ய ஞான ஒளி விளக்காய் அவர்களுக்குத் தோற்றியதன்றி இன்னது, இவ்வளவு இவன் படி என்று சொல்ல முடிவதில்லை. “சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ” என்பதற்கேற்ப எப்போதும் சொல்லையும் அதனால் பெறப்படும் பொருளையும் கடந்து நிற்கிறான். அப்ராப்ய மனஸா ஸ–இப்படிப்பட்ட எம்பெருமானின் திருநாம மஹிமை அதன் இனிமை இவற்றை நம் ஆழ்வார்களும் ஆசார்யர்களும் வாய் வெருவிய படியே இருப்பர். இந்தப் பாசுர விளக்கத்தில் பெரியவாச்சான் பிள்ளை ஓர் அழகிய ஐதிஹ்யத்தைக் காட்டியருளுகிறார்.-எம்பெருமானாரின் மாதுலரும் ஆசார்யருமான திருமலை நம்பி தமது அந்திம த3ஶையில் இருந்தபோது கணியனூர் சிறியாத்தான் அவரைக் காணச் சென்றார். நம்பிகள், அவரை, ப4ட்டரைக் குறித்து, தமக்குத் தஞ்சமாக நினைத்திருக்கும் திருநாமம் எது எனச்சொல்ல வேண்டும் என்று வேண்டினார். கேட்பவர் எம்பெருமானார்க்கே ஆசார்யர். ஆகவே, என்ன சொல்வது என்று வெட்கமும் திகைப்பும் அடைந்த சிறியாத்தான் மௌனமாய் இருந்தார். நம்பிகள் விடாமல், “தா3ஶரதீ2 இது மௌனம் ஸாதி4க்கும் விஷயமன்று – சொல்லவேணும்” என்றார். சிறியாத்தான் , “நாராயணன் போன்ற திருநாமங்களும் சொல்வார்; ஆனால் விரும்பியிருப்பது அழகிய மணவாளப் பெருமாள் என்பதையே” என்றார் .“இது கணவன் பேரைச் சொல்வதுபோல் உள்ளது; ஆயினும் ப4ட்டர் நினைத்து சொல்வதைத் தவிர வேறு சிறப்பான தஞ்சம் (உபாயம்) இல்லை” என்று அருளிச் செய்த திருமலை நம்பிகள் “அழகிய மணவாளப் பெருமாளே ஶரணம்” என்று கூறியவாறே திருநாடு அடைந்து விட்டார்.தமக்குப்பின் ப4ட்டரையே ஆசார்யராகக் கருதும்படி எம்பெருமானார் கட்டளை இருந்ததால் அவர்தம் சீடர்கள் அனைவரும் அப்படியே ஒழுகினர். ஆதலால், மூத்தவராய் எழுந்தருளியிருந்த நம்பிகளும் ப4ட்டர் திருவாக்கை ஶிரஸா வகித்து அனுஷ்டித்தார் என்பதில் அவர் பெருமையும், ஆசார்யர்க்கு உண்டான தனித்துவமும், திருநாமத்துக்குள்ள ஏற்றமும் தெளிவாகிறது.-இப்பாசுரத்தில் எம்பெருமான் திருக்கோலம், திருநாமம், திருவுருவம் ஆகிய மூன்றும் குறிக்கப் பெறுகின்றன. ஆழ்வார் எப்போதும் எம்பெருமானை ஸ்வரூப, ரூப , கு3ண வைப4வங்களைச் சிந்தித்தும் சொல்லியுமே போது போக்குபவர். இந்த அநுப4வத்தை அடியொற்றியே ஆசார்யர்களும் கு3ண அநுபவமும் நாம ஸங்கீர்த்தனமும் தம் வாழ்வில் முக்கிய அம்ஶங்களாகவும் இவற்றையே பகவத் கைங்கர்ய வெளிப்பாடுகளாகவும் அமைத்துக் கொண்டனர்.-
இப்பாசுர வ்யாக்யானத்தில் பெரியவாச்சான் பிள்ளை திருமலை நம்பிக்கு எம்பெருமான் திருநாமத்தில் இருந்த ஆத3ரத்தை விளக்கினார். அவரே இந்த “பேரும் ” என்பதை விளக்க இன்னோர் ஐதிஹ்யமும் காட்டுகிறார்.-ஆச்சி மகன் எனும் ஆசார்யர் தமது இறுதி நிலையில் உணர்வற்று இருந்தார். ஆசார்ய ஶ்ரேஷ்டரான பராஶர ப4ட்டர் அவரைக் காண எழுந்தருளினார். அவர் அருகே சென்று அவர் செவியில் மிக மென்மையாக “அழகிய மணவாளப் பெருமாள் திருவடிகளே சரணம்” என்று கூறினார். இதை ப4ட்டர் தம் திருவாக்கால் ஸாதி4த்த மாத்திரத்தில் ஆச்சி மகன் தம் பூர்வ வாசனையால் ப்ரக்ஜ்ஞை வர பெற்று அவர் தாமும் அத்திருநாமத்தை உச்சரித்தவாறே உடனே திருநாட்டுக்கு எழுந்தருளினாரென்று வரலாறு. எம்பெருமான் திருநாமம் உய்திக்கு வழி என்பதை ஆசார்யர்கள் இவ்வாறு காட்டுகிறார்கள்
பேரும் –
இவ் அழகுக்கு வாசகமான திரு நாமமும் –-மகர நெடும் குழைக் காதர் போல –திரு மலை நம்பி-(பெரிய திரு மலை நம்பியின் திரு குமாரர் -பிள்ளை திரு மலை நம்பி)அந்திம தசையில் கணியனூர் சிறியாத்தானை- பிள்ளை (பட்டர்-கூரத் ஆழ்வானோ பாதி யாகையாலே பட்டரை பிள்ளை என்பர் )தமக்கு தஞ்சமாக நினைத்திருக்கும் திரு நாமம் என் – அத்தை சொல்ல வேணும் -என்ன –இவர் முன்னே நாம் எத்தை சொல்லுவது -என்று கூசி இரா நிற்க –தாசரதீ பேசாது இருக்கும் அவஸ்தை அன்று காண் இது -என்ன-நாராயண ஆதி நாமங்களும் சொல்லிப் போருவர் –ஆகிலும் விரும்பி இருப்பது அழகிய மணவாள பெருமாள் -என்னும் திரு நாமத்தை -என்ன-பர்த்ரு நாமத்தோபாதியாய் இரா நின்றது – ஆகிலும் பிள்ளை நினைத்து இருந்தது போக்கி தஞ்சம் இல்லை -என்று அழகிய மணவாள பெருமாளே சரணம் -என்று திரு நாட்டுக்கு நடந்தார் –நா அகாரியம் சொல்லில்லாதவர் அவதாரிகையில் இந்த ஐ திக்யம் உண்டே ஆச்சார்ய திரு நாமம் சொல்லாதது நாவுக்கு அக்காரியம் என்றவாறு பஞ்சம உபாய நிஷ்டர் -கணியனூர் சிறியாத்தான்)ஆச்சி மகன் அந்திம தசையிலே தன்னை அறியாதே கிடக்க-பட்டர் எழுந்து அருளி-செவியி னில் ஊதி னாரை போலே -அழகிய மணவாள பெருமாளே சரணம் -என்ன பூர்வ வாசனையாலே அறிவு குடி புகுந்து அத் திரு நாமத்தைச் சொல்லி
திரு நாட்டுக்கு நடந்தார் –
பெரியவாச்சான் பிள்ளை இதற்கு மற்றுமொரு நிகழ்வாக ஆளவந்தார் திருமகனார் ஆகிய சொட்டை நம்பி வைபவமும் கூறுகிறார். நம்பிகள் தாம் இறுதி நிலை அடையும் தருவாயில் ஆசார்யர்கள் அனைவரும் அவர் திருமாளிகை சென்று, வணங்கி, “தேவரீர் இப்போது திருவுள்ளத்தில் விரும்புவது என்ன?” என்று வினவினர். அவர், “அடியேன் ஸ்ரீ வைகுண்டம் சென்றால் அங்கே ஸ்ரீ வைகுண்ட நாதன் திருமுகம் நம்பெருமாள் திருமுகம் போலே குளிர்ந்து இராமல் போனால், வானைக் கிழித்துக்கொண்டு மீளவும் இங்கேயே வந்து விடுவேன் என்று எண்ணி இருக்கின்றேன்” என்றாராம்!-ஆசார்யர்கள் நம்பெருமாள் எனும் திருநாமத்தின் மீதும், அவரது திருமேனி அழகிலும் எவ்வளவு ஈடுபாடும் ஆழ்ந்த அழகுணர்வும் கொண்டிருந்தனர் என்பது வியக்கத்தக்கது.
உருவும் –
ஆளவந்தார் மகனார் சொட்டை நம்பி அந்திம தசையில் முதலிகள் அடைய-புக்கிருந்து –-நீர் நினைத்து கிடக்கிறது என் -என்ன-வைகுண்டத்திலே சென்றால் நம்பெருமாளுடைய குளிர்ந்த முகம் போலே
ஸ்ரீ வைகுண்ட நாதன் முகம் குளிர்ந்து இல்லையாகில் முறித்து கொண்டு இங்கு ஏற ஓடிப் போரும் இத்தனை என்று கிடக்கிறேன் -என்றார் – (இதே விஷயம் பட்டரும் அருளிச் செய்ததாகவும் உண்டே )பட்டர் பெருமாள் பாடு புக்கிருக்க -பெருமாள் திருமஞ்சனத்து ஏறி அருளுகிறவர் –
பட்டரை கண்டு -உனக்கு வேண்டுவது என் -என்று கேட்டு அருள –சேலையை கடுக்கி (விலக்கி )திருவரையையும் துடைப்பற்றையும் ஒரு கால் காட்டி அருள வேணும் -என்றார் –
பெருமாள் -அஞ்சினாயோ -என்று கேட்டருள –நாயந்தே -பரமபதம் என் சிறு முறிப்படி அழியும் -உம்முடைய குளிர்ந்த திரு முகமும் – திரு நாம தழும்பும் இழக்கிறேனாக கருதி அஞ்சா நின்றேன் -என்றார்-(பெருமாள் காட்டி அஞ்சினாயோ என்று கேட்டு அருள பரமபதம் போவதும் அஞ்சினாயோ–அதில் பயம் இல்லை -சங்கையும் இல்லை வைத்த அஞ்சல் என்ற கை இருக்க அஞ்சுவேனோ)-
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -45-தலைவி தலைவன் நீரில் உதவியதை நினைந்து உரைத்தல் –
வரத-ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி –அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்-விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் –-ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்-ச து –அந்த எம்பெருமானாரோ-யமுந முநேஸ் குல ப்ரதீபத்வ ஆஸீத் –ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்-ராமானுஜரும் –தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்று உடையன் அன்றோ –ச ச –அந்த ஆளவந்தார் தாமும்-நாத வம்ஸ்யஸ் –வித்யா அந் வயத்தாலும் குடல் துடக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்-பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்ற குடல் துவக்கும் உண்டே–ச ச -அந்த நாதமுனிகளும்-பராங்குச முநேஸ் வம்ஸ்யஸ் –நம்மாழ்வாருடைய வம்சத்தவர்-குருகையில் வந்த குல முனிவனுடைய குலக் கொழுந்து
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திரு வாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்க்கு
இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனி அன்றோ—ச ச ஸோபி–அந்த ஆழ்வாரும்
தவ தேவ்யாஸ் தாஸஸ் –உனது பிராட்டிக்கு அடியவர்-ஆழ்வாரும் உனக்குப் படுக்கைப் பற்று அன்றோ –
பங்கயத்தாள் திரு அருளும் கொண்டவர் அன்றோ—இதி தவ கடாக்ஷணீயஸ் அஸ்மி –இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத் தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ-நிகமத்தில் தம்மைக் கடாக்ஷித்து அருள வேண்டுவது பேர் அருளாளனும் அவர்ஜநீயம் என்னும் இடத்தை மூதலிக்கிறார்
மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாயப் பிரான்
அலை கண்டுகொண்ட அமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கம் இவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே.–-பாசுரம் 51:
கடற்கரையில் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி கடல் அலை ஓசைக்கு ஆற்றாமல் வருந்திச் சொல்லுகிற இப்பாசுரத்தில் ஆழ்வார் எம்பெருமானின் கருணையைக் காட்டுவதாக நம் முதலிகள் நிர்வஹிப்பர்.எம்பெருமான் மந்தர மலையை மத்தாக்கி, வாஸுகிப் பாம்பை நாணாக்கி ஸமுத்3ர மந்த2னம் செய்து அமுதம் எடுத்தான். அந்த மாயன் இராமபிரானாக வந்தபோது கடல் கடந்து சென்று பிராட்டியை மீட்க, கடலைக் கடக்கவேண்டி வந்தது. விபீ4ஷணன் சொன்னபடி பெருமாள் ஸமுத்திர ஶரணாக3தி செய்து கேட்டும் கடல் அரசன் வராது தாழ்த்தியதால் சினம் கொண்ட பெருமாள் ஒரே அம்பினால் இக்கடலை வற்றச் செய்வேன் என்று சூளுரைக்க, அப்போது கடல் அரசன் வணங்கி வந்து நின்றான்.இந்த சந்தர்ப்பத்தை விளக்கிய ப4ட்டர் அதற்குத் தக்க வால்மீகி ராமாயணம் யுத்த காண்ட ஶ்லோகம் ஒன்றைச் சொன்னார்:ரக்த மால்யாம்ப3ரத4ர: பத்3மபத்ர நிபே4க்ஷண: ஸர்வபுஷ்ப மயீம் தி3வ்யாம் ஶிரஸா தா4ரயன் ஸ்ரஜம்। ஜாத ரூப மயைஶ்சைவ தபநீய விபூ4ஷிதை: ஆத்மஜாநாம் ரத்னானாம் பூ4ஷிதௌ பூ4ஷணோத்தமை:।।-6-22-20] என்கிற அழகிய ஶ்லோகத்தைச் சொல்லி விளக்கினார். இந்த ஶ்லோகத்தில் வால்மீகி, கடல் அரசன் பெருமாளைக் காண வந்து வணங்கியபோது சிவந்த மாலைகளைச் சூடி, அழகிய மணிகள் ஒளிரும் ஆப4ரணங்களை அணிந்து வந்தான் என்றுள்ளதைச் சுட்டி ஶிஷ்யர் ஒருவர், “பெருமாள் மிக்க சினத்தோடு வில்லையும் அம்பையும் ஏந்தி கடலை வற்றடிப்பேன் என்று நிற்கையில் அவன் இவ்வளவு அலங்கரித்து வந்தது என்ன துணிவில்?” என்று வினவினார். அதற்கு ப4ட்டர், “கிணற்று நீர் சூடாகி , கிணற்றைச் சுடுமோ? அதன் தன்மை குளிர்ந்து இருப்பதன்றோ? எம்பெருமான் தன்னிடம் கார்யம் கொள்ள ஓர் அச்சுறுத்தலாக வில்லை வளைத்தானே அல்லாமல் தன்னை ஒருபோதும் தண்டிக்கமாட்டான் என்ற உணர்வு இருந்ததால் கடல் அரசன் இவ்வாறு வந்தான்” என்று சாதுர்யமாக ஸமாதா4னம் கூறியருளினார்.-எம்பெருமான் எப்போதும் எவரையும் ஒறுப்பவனல்லன். அவன் ஶாஸ்த்ர விதி4 மீறுபவரையும் இறுதி வரை ஏதாவது ஒரு சாக்கில் மன்னிப்பதையே விரும்புபவன். இராவணன், ஶிஶுபாலன் போன்றோரிடத்தும் மித்ர பா4வநை இருந்தாலே போதும் என்றவன். உபாய நைரபேக்ஷ்யம் (ஓர் உபாயத்தை எதிர்பாராமை) போன்றே அபராத4 ஸஹத்வமும் அவனது விஶேஷ இயல்பு என்பதை ஆழ்வார் பல இடங்களிலும் பலவாறாகக் காட்டியருளுகிறார்.-எம்பெருமானுக்கு எவர் மீதும் வெறுப்போ காழ்ப்போ கிடையாது பாரபக்ஷமும் இல்லை என்பது ஶாஸ்த்ர ஸித்3த4ம். அதையே ப4ட்டர் விளக்கினார்.
அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்
மழைக் கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே – 52-
மழைக் கண் மடந்தை –போக ஸ்தானத்தையும் பார்த்து இவளையும் பார்த்தால்-பின்னை அவள் பின்னே போம்படியாய் –ஒரு பாட்டம் மழை விழுந்தால் போலே ஆயிற்று –குளிர நோக்கினால் நோக்கி இருப்பது –பின்னை அவள் கருத்தை பின் செல்ல வேண்டும்படியாய் இற்று இருப்பது –அரவணை ஏற –திரு அனந்தாழ்வான் மேலே சம்ஸ்லேஷ அர்த்தமாக சென்று ஏற –மண் மாதர்- பூமிப் பிராட்டி–விண் வாய் அழைத்து –விண்ணாகிற வாயாலே அழைத்து -என்னுதல் –விண்ணிலே (வாய் -இடம் )நின்று அழைத்து என்னுதல் –திரைகள் மேல் நோக்கிக் கொந்தளித்து -ஆகாசத்திலே சப்தித்த போது-பூமியானது அழைத்தால் போலே ஆயிற்று இருக்கிறது –புலம்பி பல பாசுரங்களைச் சொல்லி புலம்பி–முலை மலை மேல் நின்றும் –முலைகளாகிற மலைகளில் நின்றும்-ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு பூமி விபூதி ஆகையாலே -மலைகளை முலைகளாக சொல்லலாம் இறே–காரார் வரை கொங்கை -இத்யாதி--ஆறுகளாய் –வர்ஷித்தவாறே – மலைகளில் நின்றும் அருவிகள் விழுந்து நிரம்பி போகா நிற்கும் இறே –மழைக் கண்ண நீர் – மழை போல் இருந்துள்ள கண்ணீர் – மற்றை போது மழையான கண்ண நீர் தானாய் இருக்கும் இறே–திருமால் கொடியேன் என்று –-இருவருமான சேர்த்தி பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –அது நமக்கு இழவுக்கு உடல் ஆவதே –நீர்மைக்கு உடலானது -க்ரௌர்யத்துக்கு உடலாய் தலைக் கட்டுகிறதே –என்று வார்கின்றதே –அவனுடைய கொடுமையைச் சொல்லி அழுகிறவளுடைய கண்ணீர் ப்ரவஹிக்கிற படி காண் –பிராட்டியும் சர்வேஸ்வரனும் சம்ஸ்லேஷத்தில் ஆரம்பிக்க – ஸ்ரீ பூமிப் பிராட்டி அது கண்டு பொறுக்க மாட்டாமை-அழுகிறாள் காண் என்று- அவன் குறித்து போன கார் காலம் வந்து வர்ஷிக்க அத்தை மயக்குகிறாள் தோழி-அவளோடு அவன் கலந்த போது அவயவியோடு கலந்தால் போலே இவர்கள் இருக்கவும் –
இவர்களோடு கலந்த போது தன்னுடைய ஸ்தன பாஹூ திருஷ்டிகள் உடன் கலந்தால் போலே அவள் நினைத்து இருக்கவும் – இப்படி இவர்களுடைய ஸ்வரூபமாய் அபரிச்சின்ன விஷயம் ஆகையாலே –
எல்லாரும் கூடி அனுபவிக்க வேண்டி இருக்க -இருவருக்கும் பாத்தம் போராதே ஷூத்தர விஷயங்களில் உண்டான சாபத்ன்யம் இவ்விஷயத்தில் உண்டாக சொல்லுமது உப பன்னம் ஆம் படி எங்கனே என்ன –இச் சோத்யத்துக்கு முன்புள்ள முதலிகள்- தானும் அவளுமான போகத்துக்கு நாம் ஸ்ரக் சந்தனாதிகளோ பாதியாய் இருக்க என்னை அநாதரித்து போவதே என்று இன்னாதாய் அழுகிறாள் -என்று பரிஹரித்தார்கள் –இத்தை ஆளவந்தார் கேட்டருளி –-வடிவிணை இல்லா மலர் மகளை இந்நீர் நடுங்க நடுங்கும்படி கடலிலே கொடு போவதே – படுக்கையாக நான் கிடக்கச் செய்தே -என்று
ஸ்ரீ பூமிப் பிராட்டி அழுகிறாள் காண் -என்று அருளிச் செய்தார்–இத்தை ஸ்ரீ பட்டர் -கேட்டருளி –
இது எல்லாம் வேண்டாம் காண்- அனுபபன்னமாய் இருப்பதோர் அர்த்தத்தைச் சொல்லவே -இது எங்கனே கூடும்படி என்று தலைமகள் நெஞ்சிலே படும் — அவள் விசாரித்து நிர்ணயிக்கும் காட்டில் அவன் வந்து கொடு நிற்கும் -என்னும் விஸ்ரம்பத்தாலே சொன்னார்களாக அமையும் காண் -என்று அருளி செய்தார்-–ஒரு ஆச்சார்யர் நம்பிள்ளை இடத்தில் குறைய நினைத்து தாமே திரு விருத்தத்தைப் பார்த்துக் கொண்டு போக இப் பாட்டு அளவாக ஒரு வகையாக நிர்வஹித்து இது தெரியாமையாலே ஒருத்தரும் அறியாதபடி அர்த்த ராத்திரியிலே வந்து பிள்ளையை அழைக்க இப் பாட்டினுடையவும் இவருடையவும் ஸ்வ பாவம் அறியுமவர் ஆகையால் அழைக்கும் கருங்கடலோ என்றாராம் என்று ஆத்தான் அருளிச் செய்வர்–
வாராயின முலையாள் இவள் வானோர் தலை மகனாம்
சீராயின தெய்வ நன்னோய் இது தெய்வத் தண்ணந்துழாய்த்
தாராயினும் தழை ஆயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே.–பாசுரம் 53:
இது கட்டுவிச்சி பேச்சாக வரும் பாசுரம். சிறிய திருமடலிலும் திருமங்கை ஆழ்வாரின் கட்டுவிச்சி தலைமகளின் நோய் திருமால் மீதான காதல் நோய் என்பதைப் பரக்கச் சொல்லி அதற்கு மருந்து எம்பெருமான் தொடர்பானவற்றையே ஸ்மரிப்பதும், ஸ்மரிப்பிப்பதும் என்று அவனது பல விப4வ அவதார சேஷ்டிதங்களை விவரிப்பாள்.-இக்கட்டுவிச்சி, தாயரிடம் உங்கள் மகளைப் பிடித்திருப்பது தெய்வ நன்னோய் ; இதைத் தணிக்க எம்பெருமானின் திருத்துழாய் மாலையோ, தழையோ, அல்லது துளசிக் கொம்பு கிளையோ, அல்லது அடி வேரோ கொண்டு வீசினால் அவள் துன்பம் தணியும் என்கிறாள்-இப்பாசுரத்தை மிக அழகாக ப4ட்டர் விரித்துரைத்தார்.
கண புரத்து பொன் மலை போன்று நின்றவன் தன்-–பெரிய பிராட்டியும் தானுமாய் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க ஒண்ணாது—திருக் கண்ண புரத்திலே வந்து நிற்கிறவனாக வேணும்–பொன்னகலம் தோயாவேல் –-அவனுடைய வீறுடைத்தான மார்பிலே அணைக்கப் பெற்று-தன்னுடைய கிலேசம் தீரா வாகில்–என்னிவைதான் வாளா--இவற்றினுடைய சிருஷ்டிக்கு ஒரு பிரயோஜனம் வேண்டாவோ–எனக்கே பொறையாகி--இருவர் கூட தரிக்கிற இத்தை – நான் ஒருத்தியும் எங்கனே தரிக்கும்படி எனக்கே தான்–சுமை ஆயிடுக – இவை தான் முதுகிலே ஆக பெற்றோம் ஆகில் கண் காண இருந்து செவ்வி அழிய வேணுமோ மூவாமை காப்பதோர் மன்னு மருந்து அறிவீர் இல்லையே ––இதுக்கு பட்டர் –
நாட்டில் ஓர் அந்தர் ஆளிகர் ( நடுவே சஞ்சரிப்பவர்-தூதர்-கடகர் )இல்லையோ -என்கிறார் காண் -என்று அருளி செய்தார் –(கொடி -ஜீவன்–மலர் -ஞானம்–நறு மணம் -பக்தி –திருமங்கை ஆழ்வார் ஞானம் பக்தி அனுபவிக்க திருமால் ஒருவனால் முடியும் என்றபடி – ஆந்தராளிகர் -தலைவன் தலைவி நடுவில் ஊடலை தீர்க்கும் நடுவர் -)
இவ் வார்த்தையைக் கேட்ட போது பிள்ளை திரு நறையூர் அரையர் உள்ளிட்டார் அடைய நாலைந்து நாழிகை போது வேறொரு வார்த்தைக்கு இடம் கொடாதே-
கொண்டாடியவர்கள்-பட்டது காணும் -என்று நம் ஜீயர் அருளி செய்வர் –வளர்த்ததனால் பயன் பெற்றேன் -என்கிற பாட்டை – பட்டர் அருளிச் செய்த சில வார்த்தைகளைக் கேட்டு – இதுக்கு முன் பூர்வாசார்யர்கள் பக்கலிலும் இவ் வார்த்தை கேட்டு அறியோம் -என்று கொண்டாட –
(பிள்ளை திரு நறையூர் அரையர் -வயசில் மூத்தவர் இளையவரான பட்டரைக் கொண்டாட )பிள்ளாய் (பூஜ்ய யுக்தி இது )பண்டும் இப்படி ஸ்லாகித்தாரும் உண்டு காணும் –-ஒரு திர்யக்கை வளர்த்து –
திரு நாமங்களைக் கற்பித்து – பின்னை அது சொல்லக் கேட்டு – அதன் காலிலே விழுந்தாரும் உண்டு காணும் -என்று அருளிச் செய்தார் –(ராமானுஜ சம்பந்தி என்று அன்றோ கொண்டாடினீர் என்றபடி
இதே போல் பெரிய நம்பி ராமானுஜர் விஷயத்திலும் உண்டே )நீர் உமக்கு வேண்டின நிலையிலே ஹேதுக்களை வையும் – உம்மை அனுபவிக்கிற இது -இழவாது ஒழியும் அத்தனையே வேண்டுவது -என்றாராம் –
அது கேட்டு மிகவும் மூத்த ஆசார்யர்களும் பட்டரின் பேரறிவாண்மையையும் பாசுரங்களை விளங்கும் பான்மையையும் பாராட்டினார்கள். இதைப்போல் பல நிகழ்வுகளும் கு3ருபரம்பரா ப்ரபா4வம் முதலிய நூல்களில் காணக் கிடைக்கும். அடியார்களைக் கொண்டாடுவது எம்பெருமான் திருவுள்ளத்துக்கு மிகவும் உவப்பானது என்பதை இது காட்டும்.-பெரியவாச்சான் பிள்ளை தம் திருவிருத்த வியாக்கியானத்தில் இப்பாசுரத்தை விளக்குகையில் எம்பெருமானார் தொடர்பான ஒரு ஐதிஹ்யத்தைக் கூறுகிறார்:நம்பெருமாள் ஒரு திருவிழாவின்போது திருப்புன்னை மரத்தடியில் எழுந்தருளியிருந்தார். அப்போது சற்று தொலைவில் எம்பெருமானார் எழுந்தருளியிருக்க, பெருமாளை வணங்க வந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானரையும் சேவித்தார்கள். இதுகண்ட உடையார் ஸுப்3ரமணிய ப4ட்டர் எனும் அரசு அதிகாரி, சுவாமியிடம், “ஸ்வாமி ஓர் ஐயம் அடியேனுக்கு: பெருமாள் ஸந்நிதி3யிலேயே சிலர் உம்மை வணங்குகிறார்கள்; தேவரீரும் அவர்களைத் தடுப்பதில்லை; இது ஏன் ?” என்றார். அதற்கு சுவாமி, “நீர் அரசு வேலை செய்பவர். ஒரு வேலையாக அரசரிடம் வருபவர் அரசரின் காலணிகளைத் தம் தலையில் வைத்துக் கொண்டால் நீர் தடுப்பீரோ? அல்லது அக்காலணிகள் தம்மைக் கொண்டாட வேண்டாம் என்று கூறுமோ? அவர் உண்மையில் அக்காலணிகளையா கொண்டாடுகிறார்? அவற்றைத் தலையில் அவர் சுமந்தால் மகிழ்ச்சி அரசனுக்கே அன்றி, அக்காலணிகளுக்கு அன்றே! அடியாரைத் துதிப்பதால் சிறப்பு அடியாருக்கன்று, மகிழ்ச்சியும் பெருமாளுக்கே” என்று கூறினர்.-இதில் எம்பெருமானாரின் பணிவும், எல்லாப் பெருமைகளும் எம்பெருமானுக்கே எனும் கைங்கர்ய மனோபா4வமும், பாகவதருக்குத் தரும் சிறப்பு ப4க3வானுக்கே சேரும் என்பதும் தெளிவாகிறது.
வியலிடமுண்ட பிரானார் விடுத்த திருவருளால்
உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம்தோழி! ஓர் தண் தென்றல் வந்து
அயலிடையாரும் அறிந்திலர் அம்பூந்துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன்களே .–பாசுரம் 56:
தலைவன் இரவிடைக் கலந்தமையைத் தோழி தலைவிக்கு உரைத்தல் எனும் வகையில் இப்பாசுரம் அமைந்துள்ளது.-அகன்ற இடத்தை உடையவளான பூமி பிராட்டி எம்பெருமானிடம் தனக்கு உதவ வேண்டும் என்று கேட்டிலள்; ஆகிலும் அருள் உணர்வுள்ள எம்பெருமான் அவளை ப்ரளய நீரிலிருந்து மீட்டெடுத்தான். அதே போல் அவன் பராங்குஶ நாயகிக்கும் உதவுவான்.-இதை விளக்கும்போது வங்கிபுரத்து நம்பி “நாம் உய்தி பெறத் தஞ்சமாக நினைக்கத் தக்கது எது” என்று கேட்ட சீடர்களுக்கு, விஷ்ணு த4ர்மத்தில் க்ஷத்ர ப3ந்து3 சொல்வதாக அமைந்துள்ள ஶ்லோகத்தைக் கூறி, எவ்வகையிலும் தகுதி அற்ற, அல்ப அறிவினன் ஆகிய என்னைக் காக்க வேணும் எனும் ப்ரார்த்தனை தகும் என்கிறார். எம்பெருமானார், அது அங்கனமன்று; காளியன் செய்த ப்ரார்த்தனை தகும் என்கிறார்..எம்பெருமானார்,”க்ஷத்ரப3ந்து3 ப்ரார்த்தனையில் நான் உன்னை வணங்குகிறேன் ஆகவே அருள் புரி என்றுள்ளது. அவன் அருளை பெற க்ஷத்ரப3ந்து3 தான் வணங்கியதைக் காரணமாக் கூறுகிறான். ஆனால், மடுவில் கிருஷ்ணனை முற்றாக வளைத்துத் துன்புறுத்திய காளியனோ, தனது தகுதி எதையும் காட்டாமல், அதற்காக எம்பெருமான் தன்னை ரக்ஷிக்க வேண்டும் என்னாத, உன்னை அர்ச்சிக்கவும் துதிக்கவும் நான் ஆற்றல் இல்லாதவன், க்ருபா மாத்ரை மனோ வ்ருத்தி: ப்ரஸீத மே – உன்னுடைய க்ருபை ஒன்றையே நீ காட்டி என்னை ரக்ஷித்தருள்வாய் என்றான். தான் வணங்கியதையோ, ப்ரார்த்தித்ததையோ ஒரு சாதனமாகக் காட்டாமல் எம்பெருமான் க்ருபை ஒன்றையே நினைத்த காளியனின் நினைவே நமக்குத் தஞ்சம்” என்று விளக்கினார்.ஒரு பயனை எதிர்பாராமல், எம்பெருமானை வணங்குவது நம் ஸ்வரூபம் என்பதால் மட்டுமே அநன்ய ப்ரயோஜனராய் ப்ரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை ஸ்வாமி இதில் நல்ல உதாரணத்தோடு நம் மனதில் பதியும்படி அருளிச் செய்தார்.
முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60-தலைவியின் இளமைக்குச் செவிலி இரங்குதல் –
கடல் இத்யாதி –இவ் விடத்தை பட்டர் அருளிச் செய்யா நிற்க – அல்லாத அவயவங்களினுடைய-நிரம்பாமையைச் சொல்லி வைத்து இதனுடைய பெருமையைச் சொன்னால் விரூபமாகாதோ -என்று ஜீயர் கேட்க –இதிலும் சிறுமையே காணும் சொல்கிறது –இங்கனே சொல்லலாவது தானும் இன்று -(பால்யத்தில்)-நாளை-இது தானும் சொல்லப் போகாது -என்று அருளிச் செய்தார் — இப்படி விசதமாக பார்க்கிறது இந்த பால்யத்தில்-இத்தனை –யௌவனம் குடி புகுந்தால் ஒறுக்கிப் பார்க்குமது ஒழிய இப்படி நன்றாகப் பாராள் –ஆகையால் இதுவும் பால்யத்துக்கு ஸூசகம் என்றபடி-
இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62–தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்குக் கூறுதல்
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே–செங்கற் சீரை கட்டி கூப்பிட்டாகிலும் பெற வேண்டும் படி யாயிற்று வடிவு அழகும் படுக்கையும் –அரவணை மேல் – இவள் கடின ஸ்த்தலத்திலே கிடக்க–நீர் மெல்லிய படுக்கையை தேடிக் கிடக்கிறீரே –முகில் வண்ணனே-இத்தை எம்பார் அருளிச் செய்கிற போது –இயலைச் சொல்லுகிறவரைப் பார்த்து -இவ்வளவிலே முகம் காட்டாதே-செங்கற் சீரை கட்ட இருக்கிறவர் -முதலிகளாய் இருப்பார் –தலையிலே பிரம்புகள் விழிலும்-முகில் வண்ணரே -என்னீர் -என்று அருளிச் செய்தார் –இருவருமான வன்று சேர நிற்கவும்- பிரிந்த வன்று தாய்க் கூற்றிலே நிற்குமவர் இறே இவர் –முகில் வண்ணன் -என்று ஏக வசனமாக சொன்னால் – நம்மை ஏக வசனமாக உதாசீனமாக சொல்லுகிறது -என் -என்றபடி – ஆகையால் முகில் வண்ணர் -என்று பூஜ்யமாக சொல்லீர் என்று அருளிச் செய்தார் -என்றபடி –மிதுனமே உத்தேச்யமாய் இருக்க – எம்பார் பிராட்டி பஷமாய் இருந்து ஈஸ்வரனை வெறுக்கிறது என் என்ன என்று அருளிச் செய்கிறார்-(அன் விகுதி இல்லாமல் அர் விகுதி வெறுத்துப் பேசுவான் என் என்னில் பிரிந்தால் தாயார் பக்கமே ஒதுங்கி இருப்பார் அது போல் பட்டரும் நாச்சியார் திருவிழி விளிக்க ஒண்ணாது என்றாரே )
இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64 –தலைவன் பேர் கூறி தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல் –
பாமுரு மூவுலகும் -7-6-இதன் விவரணம்-ஓ ஓ என்று அடையாமல் -ஆழ்வார் ஆர்த்தி நம்மால் சொல்ல முடியாதே என்பர் அம் மங்கி அம்மாள் -அதில் வியாக்யானம்-வினையோடு நொந்து இங்கு -வினை -ஸஹஜ பக்தி -பகவத் ப்ரீதியையே சொன்னவாறு-லௌகிக விஷயத்துக்கு மடைமாற்ற விடமுடியாமல் தடுக்கும்-வினை என்பது கர்மம் அர்த்தம் கொண்டால் லௌகிக விஷய ஆசையை பகவத் விஷயத்தில் மாற்ற முடியாமல் தடுக்கும்-அரன் அயன் பெற்றார்கள் என்று கொல் சார்வது -அங்கு அதிகாரம் இல்லாத நான் வணங்குகிறேன் இங்கு ப்ரயோஜனாந்தர பரர்களே அடைந்தார்கள் எனக்கு கிட்டவில்லை அங்கு-ஆர்த்தி மிக்கு உரைத்த பாசுரம் –
சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே – 72-இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் –
இவ்விடத்தே பிள்ளை அமுதனார் -ஒரு கதை சொல்லுவார் –-ஒரு சாது பிராமணர் காட்டிலே தனி வழியே போனானாய்- ஒரு பசு தொடர்ந்து வந்ததாய் – இத்தால் வந்த நலிவை போக்கி நம்மை ரஷிப்பார் யார் -என்று இருக்கிற சமயத்தில் ஒரு புலி வந்து தோன்றி அப்பசுவையும் கொன்று –
அதனுடைய ரத்த பானத்தைப் பண்ணி – இவன் முன்னே வந்து தண்டையை முறுக்கி இட்டு இருந்ததாய் அந்த பசுவையாகில் ஒருபடி பிராண ரஷணம் பண்ணி போகல் ஆயிற்று –-இனி இத்தைத் தப்பி நம் சத்தையை நோக்குகை என்று ஒரு பொருள் இல்லை ஆகாதே -என்று-அது போலே இறே இதுக்கும் –-இப்படி பிறரும் அதி சங்கை பண்ணும் படி பலத்தில் த்வரையை யுடைய இவருக்கு அனுபவ ஸித்தி இல்லாமையாலே பிறந்த மோஹமும் பல வை லக்ஷண்ய விஷயமான ஞானமும் நடந்து அலாப நிபந்தநமான கிலேசத்தை விளைக்க ஆர்த்தரான பிரகாரத்தை இருளுக்கு ஆற்றாத ஈடுபாட்டின் மேலே
இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்த தலைவி வார்த்தையால் அருளிச் செய்கிறார்–திங்களம் பிள்ளையும் போழ்க – அதுவும் நம்மை வந்து நலிந்திடுக –வந்து தோன்றிற்று வாலியதே –
அவ்விருளுக்கு மேலே இத் திங்களும் வந்து பாதகமாய் தோற்றிற்று – மாமைக்கு இன்று வாழ்கின்றவாறு இதுவோ -என்று அந்வயம் –
உலாகின்ற கெண்டை யொளி யம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள் முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – -75 –தலைவன் தலைவியின் வூரைப் பற்றி விசாரித்தல் -சன்மம் பல பல -3 -10 –
மானாவிச் சோலை போலே ஆவது அழிவதாய் –காதாசித்கமாக அவன் வந்து முகம் காட்டிப் போகும்-லீலா விபூதியோ –உங்களுடைய வாஸ ஸ்தானம் —வானவர் நாடு -என்கிறபடியே –அவர்கள் இட்ட வழக்காய் இருக்கும் இறே அவ் விபூதி –அஹங்கார மமஹாரங்களாலே -ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம்-நடை யாடாதபடி –பண்ணிக் கொண்டு இருப்பார்கள் இறே இங்கு உள்ளோர் –(அவனது வைகுண்டமோ அடியார்களான நமது வையமோ என்று நாம் நினைப்போம்-மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே-அங்கு ஆழ்வார் ஏக ராஜா-இங்கு ஆழ்வார் தேவநாதன் இருவரும் ராஜாக்கள்
ஈர் அரசு கிடையாதே அங்கு அவர்கள் நீதி வானவர்கள் அன்றோ ) பிள்ளை திரு நறையூர் அரையர் –
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ – அன்றிக்கே அவனதான வையமோ -என்று பணிப்பாராம்-இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- ஆழ்வாரது ஸ்வரூபத்தைக் கண்டு ஈடுபட்ட பாகவதர் அவரையும் அவரோடொத்த அவரது அன்பரையும் நோக்கி ‘நுமது இடம் அந்த நித்யவிபூதியோ? என்று வியந்துரைத்தலாம்.–அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – என்கையாலே
ஸ்வரூப பிரகாசம் யுடையாருக்கு உத்தேச்யம் நித்ய விபூதி என்றும் இந்த விபூதியிலே யானாலும்
நேமிப்பிரான் தமர் போந்தார் -திருவாய் -5-2-6- என்று அங்குள்ளார் இங்கே வந்தார் என்று சொல்ல வேண்டும்படியாய் இருக்கும் என்றதாயிற்று –
சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – -80 –பிரிவு ஆற்றாத தலைவி மாலைப் பொழுதுக்கு இரங்குதல் –
பேரரசே –-எளிய செயல்கள் செய்யுமவன் அல்லனே –செய்யுமவை அடங்க பெருத்தாயிற்று இருப்பது –எம் விசும்பரசே –பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் பிறந்த பின் சம்சாரத்தில் காட்டில் பரம பதம் அணித்தாய் காணும் இவருக்கு இருப்பது –பொன் உலகு ஆளீரோ -என்று முதல்-அதுவே இறே கொடுத்தது –எம்மை நீத்து வஞ்சித்து ஓரரசே –-உபய விபூதிக்கும் தனித் தனியே கடவனோபாதி- என்னை அகற்றி-முடிக்கைக்கும் தனி முடி சூடி இருக்கிறவனே -என்று பிள்ளான் –(என்று எம்பார் என்றும் சிலர் சொல்வர் -என்னை அகற்றி -அது செய்கிற போது பிரியேன் என்று வைத்து பிரிந்து – இஸ் ஸ்வபாவதுக்கு புறம்பு-என்னோடு ஒப்பார் யார் -என்று இருக்கிறவன் ஆயிற்று — என்னால் அல்லது செல்லாதவரை பொகட-வல்லார் யார் – என்னோபாதி இல்லையே -என்று இதுக்கும் தனி முடி சூடி இருக்கிறவன் ஆயிற்று-என்று பட்டர்-–எம் விசுபரசே!= பரமபதத்தைப் போலவே எம்மையும் அநந்யார்ஹ சேஷமாக்கிக் கொள்ளதக்கவனே! என்றபடி.-முதலில் என்னை விட்டுப் பிரியவேமாட்டேன், என்று சொன்னதும், பின்பு ‘இன்ன காலத்தில் வருவேன்’ என்று காலங் குறித்துக் கூறினாலும் இரண்டும் பொய்யாம்படி. தன்னைப் பிரிந்து சென்று நெடுநாள் வாராது விளம்பித்தது பற்றி “எம்மைநீத்து வஞ்சித்த ஓராசே” என்றாள். ‘இவ்விடத்து ஓராசே!’ என்றது இப்படியும் ஒரு தலைவனுண்டோவென்று குறை கூறியவாறு.–“எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே!” என்பதற்கு- “என்னை உபேக்ஷித்து உன்னைக் காட்டாதிருக்கிற இந்த ஸ்வபாவத்திலே முடிசூடியிருக்கிறவனே!”
என்று விசேஷார்த்தம் உரைப்பர்.
விளரிக் குரலன்றில் மென்பெடைமேகின்ற முன்றிற் பெண்ணை
முளரிக் குரம்பையிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே – – -83 –அன்றிலின் குரலுக்கு தலைவி தளர்வதைக் கண்டு தோழி இரங்குதல் –
விளரிக் குரல் அன்றில்–விளரி என்று உச்சமான த்வனிக்கு பெயர் – -உயர்ந்த த்வனியை உடைத்தாம் படி கார்யப்பாட்டால் கூப்பிடுகிற அன்றிலினுடைய-மென்பெடை-கலக்கும் போதும் பூ தொடுமா போலே தீண்டும்படி யாயிற்று மார்த்வம் –இம் மார்த்வத்திலே விரஹமுமானால் பாடாற்றப் போகாது இறே-மேகின்ற –மேவா நிற்கிற –நித்ய சம்ஸ்லேஷமாய் செல்லா நிற்கும் இறே – அநபாயினிக்கு ஸ்மாரகமாய் இருக்கிறபடி –முன்றில் பெண்ணை –முன்றில் என்று முற்றத்துக்கும் வாசலுக்கும் பெயர்-முற்றத்துப் பனை நடலாமோ என்று இவ் விடத்துக்கு நிர்வஹியா நிற்கச் செய்தேவங்கி புரத்து நம்பியை சிலர் கேட்க – அதுவோ இவள் கார்யம் தளிரும் முறியுமாய் செல்லுகிறது-என்று பணித்தாராம் –(அநர்த்தப்பட்டுப் போனதுக்கு இதுவே ஹேது என்றவாறு ) முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந் தீர்கின்ற வன்றிலின் கூட்டை- பிரிக்க கிற்பவர் யார் கொலோ -பெரிய திரு மொழி – 11- 2- 1- –அவனை கொடு வருவர் யாரோ -என்கிறபடி இறே –(நம்மாழ்வார் அங்கி பாசுரம் போல் அங்க பேசுறதுக்கு இதுவும் )அல்லது பிரிப்பன பிரித்து கூட்டுவன கூடித் திரிகிறாள் அன்றே இவள்-முளரிக் குரம்பை –-இதனுடைய சௌகுமார்யத்துக்கு ஈடாக – தாமரை இலைகளையும் பூக்களையும்-கொடு வந்து – கூடாக பண்ணிவிக்கும் இறே –அன்றிக்கே –முளரி -என்று முள்ளாய் –முள்ளாலே செய்த-கூடு என்னவுமாம் –இது இதுவாக –இக் கூடு கூடாக –இது இப்படி குடில் கட்டி கொண்டு போந்து – பாதகமாய் அற்ற பின்பு-மென் பெடையோடே மேவா நின்றுள்ள விளரி குரல் அன்றிலினுடைய முன்றில் பெண்ணை–முளரிக் குரம்பை இது இதுவாக –முகில் வண்ணன் பேர் கிளறிக் கிளறிப் பிதற்றும் –
மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே – – -85-மாலைப் பொழுது கண்டு தலைவி வருந்துதல் –
ஆழ்வான்-திருக்கோட்டியூர் நம்பி பாடு நின்றும் வந்த அனந்தரத்தில்-பிள்ளைப் பிள்ளாய் -என்னுள்ளான் என்ன – வேண்டும் ஸத்தாநே –ஆழ்வார் -அடியேன் உள்ளான் -என்றபடி-கண்டாயே -என்று பணித்தார் –பிள்ளைப் பிள்ளாய் -என்று ஆழ்வானைக் குறித்து நம்பி அருளிச் செய்தார் என்னவுமாம் –அன்றிக்கே-ஆழ்வான் தம்முடைய சிஷ்யரான பிள்ளை பிள்ளையைக் குறித்து அருளிச் செய்தார் -என்னவுமாம் –அடியேன் அடி யாவி –பெண் பிள்ளை ஆவி என்னவுமாம் தாயார் வார்த்தையாக –
அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும்
முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – – 86-தலைவனைப் பிரிந்த தலைவி வருந்துதல் –
அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் -தாமரைப் பூ பசிய இலையின் மீது உயர்ந்து விகஸிப்பது போலே திரு நாபித் தாமரை மலர் பசிய திருமேனி மீது எழுந்து தோன்றி இருக்குமே
அடைக்கமலமாக புகுந்த சிவனுக்கு நீக்கி -ரக்ஷகமாக இருந்து நீக்கினவன் என்றுமாம் – அடைக்கலத்தோங்கு அயன் –என்று தன்னிடம் அடைக்கலமாக வந்த நான் முக்கண் என்றுமாம் அடைக்கலம் என்றால் ரஷிப்பதற்கு உரிய பொருளும் ரக்ஷகனையும் குறிக்கும்
கமலத்து அலர் -தாமரைப் பூ என்று கொண்டால் தோன்றிய -வருவித்திக் கொள்ள வேண்டும் – முடை -கெட்ட நாற்றம்-புடைக் கலந்தானை-புடைக்க அலர்ந்தானை–பட்டர் திருகோட்டியூரி லெழுந்தருளி யிருக்கும்போது ஒரு ஸ்வாமி வந்து ‘அடியேனுக்கு ஓருரு திருவிருத்தம் பொருளருளிச் செய்யவேணும்’ என்று பிரார்த்திக்க, ‘நம்பெருமானைப்பிரிந்த துயரத்தினால் எனக்கொன்றும் சொல்லப் போகிறதில்லை;-நஞ்சீயர் பக்கலிலே கேட்டுக்கொள்ளும் என்று சொல்லி, நஞ்சீயர்க்கு நியமிக்க, சீயரும் பொருளருளிச் செய்து வகையில் இப்பாட்டளவிலே வந்தவாறே “புடைக்க அலந்தானை” என்கிற பாடப்படியே நஞ்சீயர் பொருளுரைக்க, பட்டர் அதுகேட்டு ‘ஜீயா!” “அலந்தானை” என்ற பாடத்திற்காட்டிலும் “அலர்ந்தானை” என்ற பாடம் ஆழ்வார் திருவுள்ளத்திற்கு மிகப் பொருந்தும் போரே இன்று தோன்றுகின்றது’ என்றருளிச் செய்தாராம். –அவதார பிரயோஜனம் பெற்றோமே என்று மகிழ்வான்-ஆற்றாமை மிக்கு ஆழ்வார் திருக் கல்யாண குணங்களையும் திரு நாமங்களையும் சொல்லி முறையிடுகிறார் –
தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89-தலைவனது கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல் —
பூவினை மேவிய தேவி மணாளனை-அத்யந்த போக்யதையைப் பூரிப்பதான போக்ய அதிசயத்துக்கு ஸூசகமாய் இருக்கிற பூவிலே நித்ய வாஸத்தை யுடையளாய்-நிரதிசய வை லக்ஷண்யத்தை யுடைத்தான ஸ்வரூபாதிகளாலே த்யோதமானையாய் இருக்கிற-பெரிய பிராட்டியாருக்கு நித்ய போக்யனானவனை-(இதம் இத்தம்-ஸ்வரூபத்துக்கும் ஸ்வாதந்தர்யத்துக்கும் நீயே நிரூபணம் பட்டர்) புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் வல்லாயனை-இந்த மேன்மை யுண்டாய் இருக்கச் செய்தே சிறுமை என்று இகழாதே பசுக்களை மேய்க்கக் கடவனாய் அதிலே நிலை நின்ற சிக்கனவை யுடைய இடையனானவனை-அன்றுலகீரடியால் தாவின வேற்றை-இப்படி இனியனானாலும் தன்னுடைமை பிறர் கொள்ளும் அளவில் தன் கால் கீழே இட்டுக் கொள்ளும் மேனாணிப்பை யுடையவனை–எம்மானை-கீழ்ச் சொன்ன ஸ்வபாவங்களைக் காட்டி என்னை அடிமையாக்கிக் கொண்ட ஸ்வாமி யானவனை–எஞ்ஜான்று தலைப் பெய்வனே –இப் பிரகாரங்களாலே கிட்டக் குறை யில்லை-அது எக்காலம் என்றதாயிற்று –
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 ––தலைவி அறத்தோடு நிற்கத் துணிதல் –
அநாதியான சரீர ஸம்பந்தத்தாலே விஸ்லேஷித்துப் போகாத படி என்னை அங்கீ கரித்து அருள வேணும் என்று நிருபாதிக பந்துவான ஸ்ரீ யபதியை ஆஸ்ரயித்து இருப்பன் என்று தம்முடைய பிரபத்தி நிஷ்டையை அருளிச் செய்கிறார் ––பக்தி பாரவச்யத்தாலே யாதல் –அயோக்யா அனுசந்தானத்திலே யாதல் –ஏதேனும் ஒரு படி-கண் அழிவு சொல்லிக் கை வாங்காதே –தன் பக்கலிலே பிராவண்ய அதிசயத்தை உடையேனாய் –இதர விஷயங்களிலே அருசியையும் உடையேனாய் –பண்ணின மகோ உபகாரத்தை அனுசந்தித்து –
அவன் திருவடிகளிலே விழுகிறேன் என்கிறார் –இவ்விடத்தில் ஜீயர் குறியாக அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு –திருக் கோட்டியூரிலே பட்டர் எழுந்து அருளி இருக்கச் செய்தே –அங்கே ராமானுஜ தாசர் என்கிற ஸ்ரீ வைஷ்ணவர் –அடியேனுக்கு திரு விருத்தம் அருளிச் செய்ய வேணும் என்ன பெருமாளைப் பிரிந்த சோகத்தாலே நான்-ஒன்றுக்கும் ஷமண் அல்ல –ஜீயரே நீரே அருளிச் செய்யும் என்ன –ஜீயரும் அருளிச் செய்து கொடு போக்கு நிற்கச்-செய்தே –வளவன் பல்லவதரையர் -என்று திருக் கோட்டியூர் நம்பி-ஸ்ரீ பாதத்தை உடையார் ஒருவர் அனுசந்தித்து கொடு போந்தராய் – அவர் இப்பாட்டு-அளவிலே வந்தவாறே -கண்ணும் கண்ணநீருமாய் -புளகித காத்ரராய் -இருக்க –
இத்தைக் கண்டு — பாட்டுகளில் வார்த்தை சொல்லுவது -இனி பிரசங்கித்த மாத்ரத்திலே வித்தர் ஆனீரே என்ன –நம்பி எனக்கு ஹிதம் அருளிச் செய்த அனந்தரத்திலே- எம்பெருமான்-திரு முன்பே இப் பாட்டை நாள் தோறும் விண்ணப்பம் செய் -என்று அருளிச் செய்தார் – அத்தை-இப்போது ஸ்மரித்தேன் என்ன –அவர் இதிலே ஏதேனும் அருளிச் செய்யும் வார்த்தைகளை நினைத்து-இருப்பது உண்டோ -என்ன –அது எனக்கு போகாது –இப் பாசுர மாத்ரத்தை நினைத்து இருப்பேன் -என்றாராம் –
நம்பி ஆதரித்த பாட்டாகாதே என்று ஐந்தாறு நாழிகை போது இத்தையே கொண்டாடி அருளிச் செய்தார்–
ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99-தலைவி தனக்குத் தலைவன் இடத்து உள்ள அன்பு உறுதியைத் தோழிக்கு கூறல் —
ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்க புக்கால் –பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண்ணும் கண்ணீருமாய் அத்தை இத்தை (பரத்வத்தையும் ஸுலப்யத்தையும் )பிரசங்கித்து சிதிலராவார் –அத்தைக் கண்டு -கூரத் ஆழ்வானாய்-மகா பாஷ்யம் கற்று – சதுர் ஆஸ்ரமாக ஒன்றை நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே – பகவத் குண பிரசங்கத்திலே சிதிலராகும்படி பிறந்த உம்முடைய ஜன்மம் ஒரு ஜன்மமே -என்றானாம் –ஆழ்வான் தான் வீராணத்திலே ஒரு பெண் பிள்ளை புக்காளாய்-
மடியிலே வைத்துக் கொண்டு-இருந்து –கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து -என்று சந்தை சொல்லுவியா-நிற்க —அந்த பெண் பிள்ளையின் பர்த்தா அவளை அழைத்துக் கொண்டு போக –மேற் சந்தை இட மாட்டாதே மோஹித்து விழுந்தான் –-இப்படி இருக்கிறவன் இறே தன்னை-வன் நெஞ்சனாக்கி வார்த்தை சொன்னான் –ஸ்வாமிகள் திரு மழிசை தாசராய் -(இவரே நஞ்சீயர் பட்டர் இடம் சேர்த்து வைத்தார் -தீர்த்த வாசி ப்ராஹ்மணர் இவ்வாறு திருமழிசை தாசர் ஆனார்)
நஞ்சீயரை பட்டர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரியப்பித்தராய் –அர்த்தாத் -யாத்ருசிகமாக -அவரும் தாமாக பகலிருக்கையில் போயிருந்து – அவரும் தாமுமாக (திருமழிசை தாசரும் நஞ்சீயருமாக )திருவாய் மொழி ஓதா நிற்க –(கந்தாடை )ஆண்டான் பின்னிட்டு சென்றானாய் -அவனைக் கண்டு-ஜீயர் எழுந்து இருக்க-புக -வேண்டா -என்று கை கவித்து கொடு வந்து –நீங்கள் கோயில் கூழைத் தனம் (நியதி இல்லா அனுபவம் )-அடிக்கிற படி இதுவோ -தான் -என்ன –லௌகிகர் அன்ன பாநாதி நிமித்தமாக வ்யாபாரித்தது போலே –உங்களுடைய யாத்ரை இதுவே யென்று வித்தரானாராம் ஆண்டான் –
திரு வாய் மொழி ஓதிற்று ஸ்ரீ (பட்டர்)பாதத்திலே யாயிற்று -என்றாராம் –
பகல் எல்லாம் பாஷ்யத்திலே அந்ய பரராய் இருப்பார் -(எம்பெருமானார் பற்றிய வ்ருத்தாந்தம் )
இரவு (பால்)அமுது செய்து பள்ளிக்கட்டில் எறி-அருளினால் –சந்தை சொல்ல வாராயோ -என்று அழைப்பர் –முந்துற சந்தை சொன்னால்-புளகிதகாத்ரர் ஆவார் –இரண்டாம் சந்தைக்கு சிதிலர் ஆவார் என்று-எங்கேனும் ஒரு கால் புக்கார் ஆகில் நாலிரண்டு ஒவியல் (உத்தரீயம் )கொண்டு பரிமாற-
வேண்டுபடியாய் ஆயிற்று கண்ண நீர் வெள்ளமிட்ட படி -(வடுக நம்பி இப்படி ஆவாராம் )பெருமாள் அமுது செய்யும் போது இன்னதனை கறியமுதும் நெய்யமுதும் என்று கடக்கிட்டு அவை தன்னை அமுது செய்வதற்கு முன்னேயும் எனக்கு காட்டி அமுது செய்தாலும் எனக்கு காட்டிக் கொடு போம் கோள்-என்றாராய் – அவர்களும் திரு உள்ளத்தில் ஓடுவது-அறியாதாராய் –அப்படியே செய்து கொடு போந்தார்களாய் – இப்படி ஆறு மாசம் சென்ற பின் -ஒரு நாள் பார்த்து – இத்தை ஒரு நாள் குறி அழித்திட்டு வைத்தால் ஆகாதோ -என்று அருளிச் செய்தாராம் –
கிடாம்பி ஆச்சான் ஆழ்வான் உடன் திருவாய் மொழி கேட்கிற நாளிலே ஒருநாள் ஸ்ரீ பாதத்திலே
புகும் போதிலே தாழ்த்து புக –ஏன் நீ வேகினாயீ -என்ன – ஆழ்வான் பாடே திருவாய் மொழி கேளா நின்றேன் -என்றானாய் –இன்று என்ன திருவாய்மொழி நிர்வஹித்தான் -என்று கேட்டருள –
பிறந்தவாறு -என்றானாய் –அதில் சொன்ன வார்த்தைகள் என் -என்ன –ஒரு வார்த்தையும் இல்லை -என்றானாய் –நீ கேட்ட படி என்-அவன் சொன்ன படி என்-என்ன -நிர்வஹிப்பதாக ஆரம்பித்து இயல் சொல்லி –அநந்தரம்-ஆழ்வாருடைய-பாரவச்யத்தை அனுசந்தித்து –நெடும் போது கண்ணும் கண்ண நீருமாய் இருந்தது – இவ் வாழ்வாரும் ஒருவரே – இவர்க்கு ஓடுகிற பாவ வ்ருத்தி நாம் இருந்து பாசுரம் இடுகையாவது என் –இற்றைக்கு விடலாகாதோ -என்று விட்டான் -என்ன –என்ன பரம சேதனனோ-என்று அருளிச் செய்தாராம் –
நீர் தெளிந்து இருக்கிற போதே –உம்முடைய சித்தாந்தத்தை எங்களுக்கு அருளிச் செய்ய வேணும்-என்ன – ஆகில் அத்தைக் கேட்கலாகாதோ -என்று தம்முடைய சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –மித்ர பாவேன -என்கிற ஸ்லோகம் ராம சித்தாந்தமாய் இருக்கிறாப் போலே – இப் பாட்டு ஆழ்வாருடைய-சித்தாந்த்தமாய் இருக்கிறது –போக்யதையில் நவநீத ஸுர்ய அபதாநத்தில் காட்டில் இல்லை என்றீர்-ஸம்ஸார உத்தாரணத்துக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது இவ்விஷயத்தை என்ன-பிரஜை விழுந்த கிணற்றிலே ஒக்கக் குதித்து எடுக்கும் தாயைப் போலே ப்ரளயம் கொண்ட பூமியை முழுகி எடுத்த மஹா உபகாரகனே என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்கிறார் –
ஒரு விசை திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு நடந்த இடத்தே இவ் அர்த்தத்தை அருளிச் செய்வதாக ஒரு ஏகாந்த ஸ்தலத்தை எம்பெருமானாரையும் கொண்டு புக்கராய் –திருப்பணி செய்வான் ஒருத்தன் அங்கே உறங்கி குறட்டை விடா நிற்க –அவனைக் கண்டு அனர்த்தப் பட்டோம் -என்று-
இவ் விசைவுக்கு தவிர்ந்து பிற்றை இசைவிலே இத்தை நம்பி அருளிச் செய்ய கேட்டு அருளி
ஆழ்வான் அகத்திலே அமுது செய்து இருக்கிற அளவிலே-உச்சி வெய்யிலிலே வந்து புகுந்து
நம்பி இவ் வர்த்தத்தை ஒருவருக்கும் சொல்லாதே கொள் என்று அருளிச் செய்தார் –உனக்கு இது சொல்லாது இருக்க மாட்டேன் இறே -என்று சஹகாரி நைர பேஷயத்தை அருளிச் செய்தார் இறே –அல்லால் இல்லை என்பது இதுவே—ஈஸ்வரனை ஒழிந்த தன் ஸ்வீகாரமும் உபாயம்-இல்லை என்பதற்கு இந்த ஐதிஹ்யம் அருளிச் செய்கிறார் –பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயிலான எம்பெருமானாரும் –அர்ச்சாவதாரத்தில் விபவ சமாதி பண்ணுவதும் –மதுரகவி பிரக்ருதிகள் அந்தரங்கர் கேட்க ஆழ்வார் அருளுகிறார் –தம்முடைய பரம சித்தாந்தத்தை வெளி இடுகிறார் பரம ஔ தார்யத்தால் -இதில்—இங்கும் அங்கும் ஞானப்பிரானை அல்லார் இல்லை நான் கண்ட நல்லதுவே-ஞானம் ப்ரேமம் பக்தி கொடுத்து அதுக்கும் மேலே –நமக்காக அஹம் ஸ்மராமி- நயாமி பரமாம் கதிம் –அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் -காஞ்சி தேவப்பெருமாள் ஆறு வார்த்தைகளில் ஓன்று -இதன் அடிப்படையிலே –பட்டர் -கௌசிக புராணத்தில் மற்ற அவதாரங்களை விட வராஹ அவதார ஏற்றம்-ரஹஸ்ய சிந்தாமணி -தேசிகன் வராஹ சரம ஸ்லோக வியாக்யானம்-
நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100-முனியே நான்முகன் -10-10-
சாதநாந்தரங்களை அனுஷ்டித்தாலும் அவன் கை பார்த்து இருக்க வேண்டி இருக்கும் படியையும் சொல்லிக் கொண்டு ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆணை இட்டு-தடுத்தும்-வளைத்தும் அவனைப் பெற வேண்டும்படியான பரம பக்தி தலை எடுத்து நிர்க்குணர் உடைய ஹிருதயங்களும் கூட இரங்கும் படியாகவும் அவனுக்கும் தம் கார்யம் செய்து அல்லது ஸ்ரீ திரு நாட்டிலே குடி இருப்பு அரிதாம்படியாகவும்
பெரும் மிடறு செய்து கூப்பிட்டு பெரிய ஆர்த்தியோடே திருவடிகளிலே சரணம் புக
ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட இவர் அபேஷித்த படியே ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து தோற்றி கால் கட்டான பிரகிருதி சம்பந்தத்தையும் அறுத்து ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் நித்ய சூரிகளோடே ஒரு கோவை யாக்கி-நித்ய கைங்கர்யம் கொண்டருள-
அத்தாலே-தாம் நிரஸ்த பிரதிபந்தகராய் பிராப்த சமஸ்த மநோ ரதரான படியை-சொல்லித் தலைக் கட்டுகிற முனிய நான் முகனே யில் அர்த்தத்தை முனி மாறன் இத்யாதியாலே அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்—சாஷாத் கரித்த பரம பிராப்திக்கு தலை மிசையாய் வந்து-தாள்களைப் பூண்டு-போகாமல் தடுத்து திரு வாணை இட்டு-கூசம் செய்யாதே-செய்திப் பிழை யற்று-கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும் பழி-புறம்பு போனால் வரும் இழவு உண்டிட்ட முற்றீம்பு-அன்பு வளர்ந்த அடி யுரம்-உயிர் உறவு முதல் அளவு துரக் கைகளாலே-பெறா வாணை அல்லவாக்கின-பேரவா-குளப்படியாம்படி-கடல் போன்ற ஆதாரத்தோடு சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை-வெளியிடுகிறார் பத்தாம் பத்தில் -என்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச் செய்தார் –கண்டு களிப்பளவும் -பரஞ்ஞான கர்ப்ப பரபக்தி–இருந்தமை -என்றது பூர்ண பரஞ்ஞானம்–முடிந்த அவா என்றது பரமபக்தி—இவை ஞான தர்சன பிராப்தி அவஸ்தைகள் -என்று இந்த பரபக்தியாதி பேதத்தையும் அருளிச் செய்தார் —ஏவம்விதமான பரமபக்தியாலே-பரிபக்வராய்-பலத்தோடு சேர்ந்தார் -என்கிற ஸ்ரீ திருவாய்மொழியில் அர்த்தத்தை-இப்பிரபந்தத்தில்-இப்பாட்டாலே சேகரித்து அருளினார் ஆயிற்று —
—-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –