Archive for October, 2025

ஸ்ரீ அருளிச் செயல்களில் -முமுஷுத்வ-ப்ரபன்னத்வ- லக்ஷணங்கள்-

October 29, 2025

வார்த்தை -265-
பிரபன்னத்வம் ஆவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் –திருவாய்மொழி -5-8-8-என்றும் –(அநந்ய கதித்வம் மஹா விஸ்வாஸம்)
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேன் -(கத்யந்தர ஸூன்யத்வம் மஹா விஸ்வாஸம்-)பெருமாள் திருமொழி -5-5-என்றும் –
அருள் நினைந்தே அழும் குழவி அது போன்று இருந்தேனே (ஸம்பந்த உறைப்பால் தருதுயரம் -அவனையே சொல்லலாம் அன்றோ)-பெருமாள் திருமொழி -5-1-என்றும்
அருளே புரிந்து இருந்தேன் -பெரியாழ்வார் திருமொழி -5-4-1-என்றும் –
கடைத்தலை இருந்து வாழும் -திருமாலை -38 என்றும் –
படியாய் கிடந்தது (அசித்வத் பாரதந்தர்யம் -குலசேகரன் படி)-பெருமாள் திருமொழி -4-9-என்றும்
அவ்வருள் அல்லன அருளும் அல்ல -திருவாய்மொழி -9-9-6-என்றும் —
நல்லான் அருள் அல்லால் நாமநீர் வையகத்து பல்லார் அருளும் பழுது -முதல் திருவந்தாதி -15-என்றும் –
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -பெரிய திருமொழி -11-8-8-என்றும் –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3-என்றும்
சேமம் செங்கோன் அருளே -திரு விருத்தம் -27 என்றும்
அவன் செய்யும் சேமம் -திருவாய்மொழி -7-5-10 என்றும் –
அவன் செய்வது செய்து கொள்ள -பெரியாழ்வார் திருமொழி -3-7-9-என்றும்– இருக்கை

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-

உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை –அஹமஸ் அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி  த்வம் ஏவ உபாய பூதோ மே பவ-என்கிற அம்சத்தில் குறை இல்லை-–அறிவிப்பே அமையும் – –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்ம தான பின்பு கிருஷியும் உம்மை தாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ-என்னுடைய ரக்ஷணத்துக்காக அன்றோ இக்கிடை என்கிறார் மேல்-

வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவ கோட்டு அம்மானே !
எங்கு போய் வுய்கேன் ? உன் இணை அடியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே— 5-5-

தானே ஏறிட்டுக் கொண்ட அகலம் எல்லாம் நீரிலே ஆழுகைக்கு உடலாம் அத்தனை இறே –
அவன் கை நெகிழ்ந்தான் என்று தோற்ற அடி மட்டையை உரக்கப் பற்றும் அத்தனை இறே –

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -5-1-

தானே கர்மம் பண்ணினவன் தானே சாதன அனுஷ்டானம் பண்ணித் தவிர்த்துக் கொள்ளுகிறான் என்று நம்மைப் பழியிட்டு தள்ள நினைத்தான் ஆகிலும் நானும் தன்னைக் குறித்து பரதந்த்ரன் – நான் செய்த கர்மமும் பரதந்த்ரம் – நான் பண்ணும் சாதன அனுஷ்டானத்துக்கு பல பிரதன் ஆகையாலே அதுவும் தன்னைக் குறித்து பரதந்த்ரம் ஆகையாலே –தரு துயரம் -என்கிறார் –

ஸ்ரீ முதலிகள் எல்லாரும் கூட ஸ்ரீ பெரிய திரு மண்டபத்துக்கு கீழாக இருந்து ரகஸ்யார்த்தங்கள் விசாரித்து எழுந்து இருப்பார்களாய்த்து- ஒரு நாள் நித்ய சம்சாரியாய்ப் போந்தவனுக்கு ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி பிறக்கைக்கு அடி என் என்று விசாரிக்கச் செய்தே – யாத்ருச்சிக ஸூஹ்ருதம் என்ன -அஜ்ஞ்ஞாத ஸூஹ்ருதம் என்னப் பிறந்தது –அவ்வளவிலே ஸ்ரீ கிடாம்பி பெருமாள் இருந்தவன் நமக்கு ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணம் போலே
ஸ்ரீ ஸூக்ருத தேவர் என்று ஒருவர் உண்டோ ஆஸ்ரயணீயன் என்றான் –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் ஸூஹ்ருதம் என்று சொல்லுகிற நீர் தாம் நினைத்து எத்தைக் காண் என்றார் —அதாவது ஒன்றை ஆராயப் புக்கால் அதுக்கு அவ்வருகு வேறு ஓன்று இன்றி இருப்பது இறே -அடியாவது –யாதொன்று பல பிரதமானது இறே உபாயமாவது -அல்லது நடுவே அநேக அவஸ்தை பிறந்தால் அவற்றின் அளவில் பர்யவசியாது இறே-இளைப்பாறுவது இதிலே சென்று இறே -நடுவு இளைப்பாறாது இறே –தரு துயரம் -என்னலாம் -இறே –தடாயேல் – நீ விளைத்த துக்கம் நீயே போக்காயாகில் –
மம மாயா துரத்யயா -என்றும் –மா மேவயே ப்ரபத்யந்தே மாயா மேதான் தரந்திதே –என்றும் நம்முடைய மாயை ஒருவரால் கடக்க ஒண்ணாது காண் என்றும் – இது கடக்க வேண்டி இருப்பவன் நம்மைப் பற்றி கழித்துக் கொள்வான் என்றும்-நீயே சொல்லி வைக்கையாலே நீயே துயர் தந்தாய் என்னும் படி தோற்றப் படுகிறது இறே – துக்கத்தை விளைப்பான் ஒருவனும் போக்குவான் ஒருவனுமாய் அன்று இறே இருப்பது – பண்ணினவன் தானே போக்கும் இத்தனை இறே

ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் – ஒரு -குருவி பிணைத்த பிணையல் ஒருவரால் அவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை-ஒரு சர்வ சக்தி பிணைத்த பிணையை எலி எலும்பனான இவன் அவிழ்க்க என்று ஒரு கார்யம் இல்லை இறே –அவன் தன்னையே கால் கட்டி போக்கும் அத்தனை இறே -என்றார்-உன் சரண் அல்லால் சரண் இல்லை –இவ்வளவாக விளைத்துக் கொண்ட நான் எனக்கு இல்லை-பிறர் ரஷகர் உண்டாகிலும் நான் அவர்களை ரஷகராக கொள்ள மாட்டாமையாலே அவர்களும் இல்லை – நான் பண்ணும் சாதன அனுஷ்டானமும் எனக்கு கழுத்துக் கட்டி யாகையாலே-தேவரீர் திருவடிகள் அல்லது வேறு ஒரு உபாயம் இல்லை

அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன் அவனே ரஷகன் என்னும் அத்யவசாயம் உண்டானாலும் -பேறு தாழ்த்தால் அவனை வெறுக்க வேண்டும் பிராப்தி உண்டு இறே சேதனன் ஆகையாலே – தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்று அசித் சாமானமாக பாரதந்த்ர்யத்தைச் சொல்லி வைத்து எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –என்கிறது புருஷார்த்த சித்தி சேதனனுக்கு ஆக வேண்டி இறே –
அவனைக் குறித்து சேதன அசேதனங்கள் இரண்டுக்கும் பாரதந்த்ர்யம் அவிசிஷ்டமாய் இருக்கச் செய்தே புருஷார்த்த சித்தி இவனுக்கு உண்டாகிறது சேதனன் ஆகையால் இறே-அரி சினத்தால் –அரிந்து போக வேண்டும் சினத்தை யுடையாளாய்க் கொண்டு-ஈன்ற தாய் –
வளர்த்த தாய் -என்னாதே-ஈன்ற தாய் -என்றத்தாலே பிராப்தம் சொல்லிற்று-அகற்றிடினும்
அகற்றிடினும் என்கையாலே அகற்றுகை அசம்பாவிதம் -என்கிறது-ஈன்ற தாய் -என்கையாலே பெறுகைக்கு நோன்பு நோற்கையும்-பத்து மாசம் சுமக்கையும் -பிரவச வேதனை படுகையும் என்கிற இவை எல்லாம் உடையவள் -என்கை-அகற்றிடினும் –
இப்படி பெறுவதுக்கு முன்புள்ள வெல்லாம் துக்கமும் பட்டவள் ஆகையாலே வருகிறதை நினைக்குமது ஒழிய அகற்ற நினையாள் இறே -அவள் தான் அகல விடினும் – இத்தால் சொல்லிற்று யாய்த்து -நிருபாதிக தேவரீர் கை விடிலும் வேறு எனக்கு புகல் இல்லை என்கிறார் –மற்று அவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி – இவள் கோபித்து விட்டாலும் வேறு ஒருவருடைய அருளை அபேஷியாது இறே பிரஜை – அதுக்கு அடியான பிரேமத்துக்கு அவதி உண்டாகில் இறே கோபத்துக்கு அவதி உள்ளது – ஸ்நேஹம் இல்லாமையாலே கோபமும் இல்லை இறே பிறருக்கு –

ஸ்ரீ நம்பி திரு வழுதி வள நாடு தாசரை ஸ்ரீ முதலியாண்டான் கோபித்து கையாலும் காலாலும் துகைத்து இழுத்தவாறே திண்ணையிலே பட்டினியே ஒரு நாள் போகாதே கிடந்தார் –ஸ்ரீ ஆண்டான் மற்றை நாள் அமுது செய்யப் புகுகிறார் -அவன் செய்தது என் என்று கேட்ட வாறே பட்டினியே வாசலிலே கிடந்தான் என்று கேட்டு அழைத்து -நீ போகாதே கிடந்தது என் -என்ன –ஒரு நாள் ஒரு பிடி சோறிட்டவன் எல்லா படியாலும் நிந்தித்தாலும் வாசல் விட்டுப் போகிறது இல்லை –ஸ்ரீ நாத நான் எங்கே போவது –என்றார்-அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே –வேறு சிலரால் ஆற்ற ஒண்ணாது இறே-முன்னாள் முலை கொடுத்த உபகாரத்தை நினைத்து இருக்குமதாகையாலே -அவள் தானே ஆற்ற வேணுமே
ஸிஸூஸ்தநந்தய -என்றும் – அளவில் பிள்ளைமை -என்றும் சொல்லுகிறபடியே
அதாவது – ரக்த ஸ்பர்சம் உடையார் எல்லாரையும் அறியாதே மாதா ஒருத்தியையுமே அறியும் அளவே யாய்த்து அதி பால்யம் அப்படியே ஸ்ரீ எம்பெருமானைக் குறித்து இவ்வாத்ம வஸ்து நித்ய ஸ்தநந்த்யமாய்த்து இருப்பது-ஆகையால் இறே இவன் பேற்றுக்கு அவன் உபாயம் ஆகிறது –

சென்னியோங்கு தண்  திருவேம்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையும்  உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 –

என்னையும் என் உடைமையும் –ஆத்மாவையும் சரீரத்தையும் திரு இலச்சினை சாத்தி
ஆத்மாவுக்கு சாத்துகையாவது -அனந்யார்க்க சேஷத்வ ஞானம் பிறப்பிக்கை
அது பிறந்தமை தோற்ற இறே தோளுக்கு திரு இலச்சினை இடுவது –நின் அருளே –
இவர் அடியாகையால் இறே புதைத்து வார்ப்பது-அவன் அடியாக வரில் – விதி வாய்க்கின்றது காப்பார் யார் -என்னும்படி இறே பெருகுவது –புரிந்து எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள் மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல் (பெருமாள் திருமொழி -5-7-)-இத்யாதி-இருந்தேன் – உபாயாந்தரமும் -உபேயாந்தரமும் குலைகை-அனந்யார்ஹ சேஷத்வ ஞானமும் பிறந்து –விரோதி நிவ்ருத்தியும் பிறந்து –அபேஷிதமும் பெற்றதாகில்  –இனி பதறுகிறது என் –இனி என் திருக் குறிப்பே –என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென் நன் திருமாலிருஞ்சோலை திசை கைகூப்பி சேர்ந்த யான்
இன்னும் போவேனே கொலோ என்-கொல் அம்மான் திருவருளே(10-7-9)-திருக் குறிப்பு -திரு உள்ளத்தில் நினைவு-

மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசறிந்து கொண்டு ஐம் புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே–38-

உன் கடைத் தலை இருந்து –உன் தலைக்கடை -என்றபடி –சரணவ் -என்கிற ஸ்தானத்திலே -கடைத்தலை -என்கிறார் –ஸ்வ நிகர்ஷத்தை அனுசந்தித்து திருவடிகளிலே கிட்டாமையாலும் சம்சாரத்தின் தண்மையை அனுசந்தித்து புறம்பு போக மாட்டாமையாலும்
திரு வாசலைப் பற்றுகிறார் -திருக் கண்ண மங்கை யாண்டான் -ஒரு சம்சாரி தன் வாசலைப் பற்றி கிடந்ததொரு நாயை நலிந்தவனை வெட்டி தானும் குத்திக் கொண்ட படியை கண்டு
ஒரு தேகாத்ம அபிமானி அளவு இது வானால் பரம சேதனன்-யமாதிகள் கையில் நம்மை விட்டுக் கொடான் –என்று திரு வாசலைப் பற்றிக் கிடந்தான் இறே-இருந்து – விஷயாந்தர பிராவண்யத்தால் பரகு பரகு என்று திரிந்தவன் – மரக்கலத்துக்கு நங்கூரம் அவிழ்த்து விட்டாப் போலே-அதஸோ பயங்கதோ பவதி -என்று-அபய ஸ்தானத்தைப் பற்றி நிர்ப்பயனாய் இருந்த படி –வாழும் –உபாயம் ஈச்வரனே யானால் போகம் இறே பின்பு உள்ளது –இருந்து வாழும் -என்று அவ்விருப்பு தானே வாழ்ச்சியான இருப்பு -என்றுமாம் –சோம்பரை உகத்தி போலும் –உன் பக்கலிலே ந்யஸ்த பரராய்-ஸ்வ ஹிதத்தில் சோம்பினவர்களைக் கண்டால் உனக்கு திரு உள்ளம் இங்கனே உகந்தாகாதே இருப்பது –வாழும் சோம்பர் -என்று கெடும் சோம்பரை வ்யாவர்த்திக்கிறது -என்றுமாம் –
அதாகிறது சாஸ்த்ரத்தில் நாஸ்திகராய் கர்த்தவ்யங்களை விடுகை அன்றிக்கே
ஆஸ்திக் யதிரேகத்தாலே நிரபேஷ உபாயத்தை ஸ்வீகரித்து பகவத் அனுபவமே யாத்ரையாய் ஸ்வ ஹிதத்தில் சோம்பி இருக்கை போலும் நித்ய ஸூரிகளை உகக்குமா போலே சோம்பரை உகப்புதி –

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9-

தேவரீருடைய திரு வாசலிலே-அநந்ய பிரயோஜனரும் –பிரயோஜனாந்தர பரரும்-
அந்ய பரரும் கிடந்தது சஞ்சரியா நின்றால் ஒரு நினைவுற்று அசேதனவத் கிடக்க வேணும்-பார தந்த்ர்யத்துக்கு அசேதன சமாதியாகவும் வேணும் –அது புருஷார்த்தமாகைக்கு காணவும் வேணும் –

அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெறுமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-

அவனுடைய பிரசாதம் பெறுகை அரிதாகா நின்றது –கொள்வார் தேட்டமான அருள் நமக்குத் தேட்டமாவதே -தண்ணீர் பந்தலிலே சேர்ந்த விடாயர்க்கு குளிர்ந்த தண்ணீர் அரிதாய்-இருக்குமாறு போலே அன்றோ எனக்கு அவன் திருவருள் அரிதானபடி –சர்வ சாதாரணமான ஜலம் அது ஒழியச் செல்லாத தத்துவங்களுக்கு அரிதாப் போலே அவன் அருள் கிடைக்கும் அளவும் பந்துக்களுடைய இன் சொல்லாலே தரித்தாலோ என்ன –அவ்வருள் அல்லன வருளும் அல்ல–தாபார்த்தர் அக்னியைக் கொண்டு விடாய் தீருமா போலே தாயமாருடைய ஹித வசனத்தாலே தரிக்கவோ –விடாய் தீராத அளவல்ல –விடாயை விளைப்பதும் செய்யும் —நல்லான் அருள் அல்லால் பல்லார் அருளும் பழுது -முதல் திருவந்தாதி -15 -என்றதே அன்றோ –விடாய்த்தவனுக்கு நெருப்பு கூட்டங்களைக் கொண்டு விடாயை நீக்கினாப் போலே அன்றோ பிறர் உடைய அருள் நீக்க ஒண்ணாமை மாத்ரமே அன்று-தீமையையும் விளைவிக்கும் –அவன் அருள் தப்பாத பின்பு கிட்டும் தனையும் ஆறி இருந்தாலோ என்னில் –அவன் அருள் பெருமள வாவி நில்லாது-அவன் பிரசாதம் கிட்டும் அளவும் பிராணன் தரிக்கிறது-இல்லை – க்ரம ப்ராப்தியை சஹிப்பதொரு பிராணனை பெற்றோம் ஆகில் ஆறி இருக்கலாம் இறே-கிரமத்திலே அடைகிற வரையிலும் பொறுத்து இருப்பது-ஓர் உயிரைப் பெற்றோம் ஆகில்-ஆறி இருக்கலாயிற்றே –

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது —-15-

இதுக்கு அடங்க காரண பூதனுமாய்-இவற்றை உடையானும் ஆகையாலே இவற்றின் பக்கல் வத்சலனுமாய் இருந்துள்ள அவனுடைய அருள் அல்லது பிரசித்தியை யுடைத்தான நீர் சூழ்ந்த பூமியில் உள்ள –பலருடைய பிரசாதமும் பழுது -வ்யர்த்தம்-இவனை ஒழிந்த மற்றை இருவருடைய அருளோடு கீழ்ச் சொன்னவர்கள் அருளோடு வாசி யடைய வ்யர்த்தம்-நீர் சூழ்ந்த பூமியில் நாம மாத்ரமான பல்லார் அருளும் பழுது -என்றதாகவுமாம் –பழுது தான் பலியாமையே அல்ல பகவத் பிரசாதத்தையும் இழப்பிக்கும் -அத் தேவதைகள் உடைய உபேஷையும் இவ்வாத்மாவுக்கு பகவத் பிரசாதத்தோடு ஒக்கும்-திருவடி நாமம் மறந்தும் புறம்  தொழா மாந்தர்  -நான்முகன் திரு -68–மார்க்கண்டேயனை ருத்ரன் கை விட
ராவணன் தம்பியைக் கைவிடக் க்ருதார்த்தனானாப் போலே க்ருதார்த்தனாய்த்து இலனோ-தேவ தாந்தரங்களுக்கும் உபாயாந்தரங்களுக்கும் தானே உள்ளீடாய் நிற்கையால் தான் காண வேண்டாதவரை அவற்றிலே ருசியை வர்த்திப்பித்துத் தன்னை யகற்றும்-தான் உகந்தாரை அவற்றில் ருசிகளை விட்டுத் தன்னை உகக்கும் படி பண்ணும்-

அணியார் பொழில் சூழ் அரங்க நரகரப்பா
துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு
மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி  -11-8-8-

ஸ்ரமஹரமான தேசத்திலே வந்து சாய்ந்து அருளின நிருபாதிக பந்துவான தேவர் அவசர ப்ரதீஷராய் வந்து நிற்க-நான் வேறு சிலரை அபாஸ்ரயமாக நினைத்திரேன் – தேவரீருடைய சௌஹார்த்தம் ஒழிய வேறு ஒன்றைத் தஞ்சம் என்று வ்யவசிதனாய் இரேன் –

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பவ -“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”- ஸ்ரீகீதை. 9. 34.“என்னை நமஸ்காரம் செய்வாய், என்னை அடைவாய்” என்றால் எனக்குச் சோகம் போகாது கண்டாய்.
ஓதி நாம் குளித்து -நமக்கே நலம் ஆதலால் -திருப் புல்லாணி-நமக்கு நலம் தேடும் –
உபாயாந்தரம் வேண்டாம் -என் நலம் நீ தேடுவதே உக்தம் –
உபாயம் தன்னைப் பொறுக்கும் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி எதையும் பொறாதே 

யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாய பாவம் ஒரு சேதனனாலே என்றிருக்கையாலே.-அன்றிக்கே, பெறுவது உன்னையே யாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன்,-என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன்.
மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே ஸ்வரூப விரோதியானது எனக்கு வேண்டாம்.
கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது, இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன்.
அன்றிக்கே, ‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி,
‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை’ என்று சொல்லுவாருமுளர்.

உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார்.
அவற்றுள், முதலது, “என் நான் செய்கேன்” என்றதனை மாத்திரம் கடாக்ஷித்து அருளிச்செய்வது. என்றது, உன்னால் வரும் உன்னை ஒழிய, வேறு உபாயங்களால் வரும் உன்னையும் வேண்டேன் என்கிறார் என்றபடி. இதனையே அருளிச் செய்கிறார் ‘என்னை நமஸ்காரம் செய்’ என்று தொடங்கி. அங்ஙனமாயின், ‘யாவையாலும்’ என்னாது, “யாவராலும்” என்றது என்னை? எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘யாவையாலும்’ என்று தொடங்கி.

இரண்டாவது பொருள்.
“என் நான் செய்கேன், யாரே களை கண்” என்னும் இரண்டனையும் கடாக்ஷித்து அருளிச்செய்வது. என்றது,-உன்னாலே பெறும் உன்னை ஒழிய, வேறு உபாயங்களாலும், வேறு தெய்வங்களாலும் பெறும் உன்னையும் வேண்டேன் என்கிறார் என்றபடி.
இதனையே, ‘பெறுவது உன்னையேயாகிலும்’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.
பெறுவது நம்மையானால், வேறு உபாயங்களாலும், வேறு தெய்வங்களாலும் நம்மைப் பெற்றால் விரோதம் என்? என்ன,அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘மற்றையவற்றிற்கும்’ என்று தொடங்கி. காலன் கொண்டு – காலபுருஷதானம் வாங்கி. அப்படி வேண்டாம் என்று இருந்த பேர் உளரோ? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘கடல் கடத்த’ என்று தொடங்கி.-‘கடல் கடத்த’ என்றது, திருவடியினால் கடல் கடத்தப்பட்ட என்றபடி. ‘சபித்துப் பெற’ என்றது, பிராட்டியாகிய தான் சபித்து என்றபடி.-அப்படிச் செய்தால், அவனுடைய ரக்ஷகத்வத்துக்கும் தன்னுடைய பாரதந்திரியத்திற்கும் சேராது என்கிறார் ‘என்றது’ என்று தொடங்கி.

மூன்றாவது பொருள்: உம்மாலும் பிறராலும் சாத்யம் அல்லாத என்னை விட்டு,
உபய சாத்யமான ஐஸ்வர்யாதிகளைப் பெற்றுப்போம் என்ன,
‘உன்னால் அல்லால்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார். ‘உன்னை ஒழிய மற்றொன்றால்’ என்றது, பிராப்யனான உன்னை ஒழிய வேறோர் ஐஸ்வர்யாதிகளால் என்றபடி.அசேதனமான ஐஸ்வர்யாதிகளை “யாவராலும்” என்றது,-பிராப்பியம் ஒரு பரம சேதனம்’ என்கிற வாசனையாலே என்க. ‘சொல்லுவாருமுளர்’ என்கையாலே, இப்பொருள் அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பது போதரும்.

சேமம் செம் கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்கள் தோறும் எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து  தண் என்றதே –27-

இவ் ஆத்மாவுக்கு வகுத்த சேஷியான ஸர்வேஸ்வரனுடைய கிருபையே இதுக்கு ரஷை
அவனே இதுக்கு ரஷையாமோபாதி– இவன் தானும் தனக்கு  அநர்த்த அவஹானாய் இருக்கும்-எங்கனே என்னில் —ஜகத்தை உண்டாக்குகையும் , சேதனருக்கு கரண களேபராதிகளை கொடுத்து-பக்த்யாதி உபாயங்களை உண்டாக்கி
திரு மலை தொடக்கமாக உகந்து அருளின தேசங்களிலே-சந்நிஹிதனாய் நிற்கச் செய்தேயும்-இத்தை கால் கடை கொண்டு ,-தேக ஆத்மா அபிமானம்-பண்ணும் படி இறே தன் படி இருப்பது-மாமேகம் -என்று தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில் அத்தை அறுத்து விழ விடும் அவனாய் இறே  இருப்பது அவன் படி(பக்தி உழவனின் பெரும் உபகாரங்கள் –ஷேம க்ருஷி பரம்பரைகளைப் பட்டியல் இடுகிறார்-யாதானும் பற்றி அன்றோ நாம் இவற்றைத் தப்புவது )இவன் சைதன்யம் -தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்-அவன் சைதன்யம்-உளன் கண்டாய் நல் நெஞ்சே –முதல் திரு அந்தாதி -69-என்னும் படி இவ் அளவில் இவனை எடுத்துக் கொள்ளுகைக்காய் இருக்கும்- தான் தனக்கு தஞ்சம் அல்லாதவோபாதி பிறரும் தனக்கு தஞ்சம் அன்று-உத்தமன் என்றும் உளன் கண்டாய் –நாம் பாராமுகனாய் இருக்கும் அவஸ்தையிலும் அவன் ரஷித்தே தீருவான்-செம்கோன்-செவ்விய நிர்வாககன் —பதிம் விஸ்வஸ்ய —யஸ்யாஸ்மி ந தம் அந்தரேமி
பாரார்த்யம் ஸ்வம்
—என்று சொல்லலாம் படி இருக்கும்–அருளே- அவன் கிருபை அல்லது இல்லை — அவ் வருள் அல்லன அருளும் அல்ல — இடையீடான பக்தியாதிகளும் வேண்டா-

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10-

ஆத்ம ஸ்வரூபம் தெரியாத படி அறிவு கெடுக்கும் ஜென்மம் என்ன -அது புக்க இடத்தே புக்க கடவதான வியாதி என்ன -அத்தை பொறுத்தாலும் அவர்ஜனீயமாய் வரக் கடவதான மூப்பு என்ன -அதுக்கு எல்லையான மரணம் என்ன -இவற்றை அடைய –விரகர் நெடும் சுவ போக்க வேண்டும் படி இறே அதின் கனம்-அஹம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி –என்றான் இறே–மஹாபாரதம் எல்லாவற்றாலும் சொல்லிற்றாயிற்றது ஒரு வார்த்தை அன்றோ?
வார்த்தையாவது, பிரயோஜனத்தோடு கூடி இருப்பது அன்றோ
?-மேலே சொன்னவை அடங்கலும் கடல் போலே; அதில் அமிருதம் போலே இது.–கீதையிலும் இத் திருவாய்மொழியிலும்-ஆத்ம அனுபவம் ஆகிற மஹா துக்கத்தை வாசனையோடு போக்கி -ப்ரக்ருதி ப்ராக்ருதங்களுக்கு அஸ்த்தர்ம் என்பதொரு நன்மை உண்டு -அபுருஷார்த்தம்-ஸ்திரமானத்துக்கு மேல் இல்லை இறே மஹா துக்கம் -அதுக்கு மேலே -பாத ரேகை போலே இருக்கத் திருவடிகளிலே சேர்த்து.-நித்ய கைங்கர்யத்தை கொடுத்து அருளி-இவற்றினுடைய ஹிதமே பார்த்துச் சம்சாரம் தொடக்கமான எல்லாத் துன்பங்களும் மறுவலிடாதபடி போக்கித் தன் திருவடிகளின் கீழே வைத்துக் காத்த பெரிய நீர்மை-இவனுக்கு ஒன்றும் செய்யாதாரைப் போலே என் செய்வோம் என்று இருக்கும் என்னுதல்-இக் கைங்கர்யத்துக்கு நிலவரான நித்ய ஸூரிகளோடு சேர்த்து யாவதாத்மபாவி யாக்கும் என்னுதல்-இம் மஹா உபகாரத்தை அனுசந்தித்து -இதுவே அர்த்தம் என்று தெளிந்து வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?-

கைத் தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்து கொண்டு  என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த் தலை எழு நாற்றுப் போலே   அவன் செய்வன செய்து கொள்ள
மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே – 3-7-9-

செய்த் தலையிலே விளைந்த நாற்று உடையவன் வேண்டினபடி விநியோகம் கொள்ளுமா போலே இவளையும் அவன் வேண்டினபடி செய்து கொள்ள-கழுத்தே கட்டளையாக நீரை பருகையாலே கறுத்து பெருத்து இருந்துள்ள மேகம் போலே இருக்கிற வடிவை உடையவன் பக்கலிலே இவள் வளரும்படியாக நீங்களே சேர்த்து விடும் கோள்

———————————————

வார்த்தை -266-

முமுஷுத்வம் ஆவது –
அடியேற்கு வானுலகம் தெளிந்தே என்று எய்வது -பெரிய திருமொழி -6-3-8-என்றும் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-என்றும் கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -திருவாய்மொழி -6-9-3-என்றும் –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7-என்றும் –
செந்நாள் எந்நாள் -திருவாய்மொழி -5-8-3-என்றும் –
முகப்பே கூவிப் பணி கொள்வாய் -திருவாய்மொழி -8-5–7-என்றும் –
உனக்கு ஆட் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -திருவாய்மொழி -5-8-10–என்றும் –
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ -திருவாய்மொழி -3-2-2-என்றும்
மங்கவொட்டு -திருவாய்மொழி -10-7-10-என்றும் இருக்கை –

——————————————————–

முளிந் தீய்ந்த வெம் கடத்து மூரிப் பெரும் களிற்றால்
விளிந் தீய்ந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந் தோர்ந்த சிந்தை நின் பால் அடியேற்கு வானுலகம்
தெளிந்தே என்று எய்துவது திரு விண்ணகரானே –
6-3-8-

அளிந் தோர்ந்த சிந்தை நின் பால் அடியேற்கு வானுலகம் தெளிந்தே என்று எய்துவது
உன் பக்கலிலே தெளிவை உடையேனாய் -ஸ்நேஹத்தை உடையேனாய் -அநவரதம் உண்டான அவதானத்தை உடைத்தான மநோ ரதத்தை உடைய -அநந்ய கதியான -எனக்கு
அ புநரா வ்ருத்தி லஷணமான மோஷத்தை என்று தருவது-திரு விண்ணகரானே – அவ் வருகு படுத்துகைக்காக வந்து இருக்கிற உனக்கு தரும் நாள் இந்நாள் என்று தெரியும் இறே -வெட்டிதான நிலத்திலே வலியதொரு பதார்த்தாலே தள்ளுண்டு போகிற மா மரம் போலே
சம்சாரத்திலே இருந்து ஜீவித்து முடிந்து போவாரை மநோ ரதியாதே தேவர் பக்கலிலே ஸ்நேஹித்து அவதானத்தைப் பண்ணி அநவரதம் மநோ ரதிக்கும் படியான தெளிவை உடைய எனக்கு புநரா வ்ருத்தி இல்லாத மோஷத்தை தரப் பார்த்தது என்று அத்தைத் தருகைகாக வந்து நிற்கிற நீ–

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே –2-3-10-

இவன் தன்னையே அன்றிக்கே இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும்-இவ் விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் -நான் எனக்கு என்று அகன்று நிற்க வேண்டாதே-அத் திரளில் ஒரு நீராகக் கூடுவது என்றோ
வைஷ்ணவ ஸஹவாசம் இனிது என்று இருக்கச் செய்தேயும் அஹங்காரத்தால் செய்யப் போகாது ஒழிகிறது இறே-

காக்கின்ற அக் காத்தல் தொழிலுக்குத் தோற்றிருப்பராய், அவ் விறைவனைப் போன்றே அடையத் தக்கவருமாய்-ஓக்க ப்ராப்யருமாய் – இறைவனுடைய நற் குணங்களுக்குத் தேசிகராய் இருப்பாருமாய், போதயந்த பரஸ்பரத்துக்கு -தம் அனுபவங்களை ஒருவர்க்கொருவர் உணர்த்திக் கொண்டு கலந்து பழகுவதற்குத் துணையாக இருக்கின்றவர்களுமாய் உள்ள நித்திய ஸூரிகளுடைய குழாங்களைச் சென்று சேர்வது எப்போதோ!’ என்கிறார். -கலியர் கல அரிசிச் சோறு உண்ண வேண்டும்’ என்று நினைக்குமாறு போன்று,-இவரும் ‘அத்திரளில் போய்ப் புகப் பெறுவது என்றோ!’ என்கிறார்.
ஆற்றாமையின் மிகுதி இங்ஙனம் கூறச் செய்கின்றது.    

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–

பிராப்தமாய் -ஸூ லபமாய் நிரதிசய போக்யமான திருவடிகளை கிட்டி -என்கிற ஸ்தானத்தில் சேர்ந்து என்கிறது கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே இருக்கை –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குதச்சந-என்று ஸூ ஸ் த்ரனாய் இருப்பது-இன்ன நாள் என்று ஓர் அவதி பெறிலும் பெற்றத்தோடு ஒக்கும் –அது எந்நாளாக வற்றோ? அபீதா நீம் ச காலஸ் ஸ்யாத் ‘காட்டினின்றும் மீண்டு வருகிற உன்னை எந்த நாளில் பார்ப்பேனோ,
அந்தநாள் இந்த நாளாகவேண்டும்,’ என்பது போன்று ‘எஞ்ஞான்று கொலோ!’ என்கிறார் 

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

என் ஆத்மா யுண்டாய் செல்லும் நாள் எத்தனை நாள் யுண்டு -அத்தனை நாளும் உன் திருவடிகளையே பெற்றுச் செல்லும் படி பார்த்து அருள வேணும்
அடியேன் அரு-உனக்கு அநந்யார்ஹ சேஷமான ஆத்மவஸ்து தான் நினைத்த பரிமாற்றம் கிட்டாமையாலே -அதுக்கடியான அத்யாவசாயம் குலைகிறதோ என்று அஞ்சி அது குலையாதபடி பார்த்து அருள வேணும் என்கிறார் என்றுமாம்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -என்கிறபடி குலையாத படி பார்த்து அருள வேணும்-காற்கூறும் விடாதபடி பார்த்தருள வேண்டும். ‘ஒன்றும் குறை வேண்டேன்’ என்ற பின்னர், வந்து குறை நிரப்பக் கண்டிலர்;
இனி அநுபவம் பெற்றபோது பெற, ‘உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்’ என்கிற இந்த உறுதி குலையாதபடி பார்த்தருள வேண்டும் என்கிறார்.
அடிவிடில் உறுதி குலையுமே, அடியே பிடித்து ஜீவித்தவர் அதனை விடாரே இப்போதாக. 
அத்யாவசாயம் இது -ருசியில் வந்தால் பரமபக்தி யுக்தர்-விளம்பத்துக்கு அடி என் என்னில் -பக்தி விபாகத்துக்காகவும் இவருடைய ப்ரேமம் வழிந்த சொல்லாலே நாட்டைத் திருத்துகைக்கும் –

வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10-

நீ இருக்கிற பரமபதத்தே நான் கிட்டவேண்டும்படியாயிருக்க, நான் இருக்கிற இடத்திலே நீ கிட்ட வந்து கிடக்கிறவனே! என்றபடி-சம்சாரிகளை அனுபவிக்க வந்து கிடக்கிற உனக்கு ஆட்பட்டும் -பரமபதத்தில் இருப்பிலே யாதல் -அவதாரங்களிலே யாதல் -ஆசைப் பட்டேனோ –ஆருடைய வஸ்து இங்கனம் அலமந்து திரிகிறது -என்னுடைய முயற்சிகள் எல்லாவற்றையும் உன் திருவடிகளிலே பொகட்டு, நீ செய்து தலைக்கட்டக் கடவையாக
நினைத்திருக்கிற நான், இன்னமும் எத்தனை திருப்பதிகள் தட்டித் திரியக் கட வேன்-

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ
.–6-9-9-

வரையாதே எல்லார்க்கும் கொடுக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளில் -அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –விஷயாந்தர தர்சன மாத்திரத்திலே முடியும் படி யானாலும் அணித்தாகாதோ -தாவி வையம் கொண்ட -என்கிறது உபாய அம்சம் –தடந்தாமரைகள் -என்கிறது உபேய அம்சம் —கூவிக் கொள்ளும் காலம்-என்று தாம் சென்று காண்கை அன்றிக்கே தானே அழைத்துக் காட்டுகை முறையாகையாலே கிட்டும் பிரகாரம் சொல்லுகிறது-

அந்நிய பர உக்தியில் -வேறு ஒன்றைக் குறிக்கும் வாக்கியத்திலே வைத்துப் பேற்றினை அறுதியிடுகிறார்.-கால அவதி -கேட்க்கும் பிரகரணத்தில் பிராப்ய நிஷ்கரஷம் பண்ணுகிறார் –தாவி வையம் கொண்ட தடம் தாமரை’ என்றதனால், நினைத்தது தலைக் கட்ட வல்லன் என்னும் சத்தி யோகம் கூறியபடி-பூமிப் பரப்பு அடங்கலும் வருத்தம் இன்றி அளந்து கொண்டபடி.-இனிமை அளவிறந்த திருவடிகளாதலின் ‘தடம் தாமரை’ என்கிறது.
இதனால் பிராப்யம் சொல்லுகிறது.-கூவிக் கொள்ளும் காலம்’ என்கையாலே பிராபகத்தின் தன்மை சொல்லுகிறது.-இன்னம் குறுகாதோ’ என்கையாலே, ருசியின் தன்மை சொல்லுகிறது.-இதர விஷயங்களின் காட்சி முடியும்படியாய்,-உன் திருவடிகளின் இனிமை அறிந்து விட மாட்டாத அளவு பிறந்து பின்பு – இன்னம் தாழ்க்குமத்தனையோ?-பிள்ளானுடைய அந்திம தசையில் நோவு அறிய நஞ்சீயர் புக்கு இருக்க,-‘கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ?’ என்று பல கால் சொல்ல,-இதனைக் கேட்டுச் சீயர் அழ,
‘சீயரே! நீர் கிடந்து அழுகிறது என்?-அங்குப் போய்ப் பெறப் புகுகிற பேறு இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ?’ என்று பணித்தான்.

வந்து தோன்றாயன்றேல் உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால் சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7-

முகப்பே கூவிப் பணி கொள்ளாய்க்ரியதாம் இதி மாம் வத -என்று கண் முகப்பே அடிமை கொள்ள வேணும் -குண ஞானத்தால் தரித்து இருக்கும் ஸ்ரீ பரத ஆழ்வான் ப்ரக்ருதி யல்லேன் –ஜலான் மத்ஸ்யா விவோத்தருதவ் -என்னும் இளைய பெருமாள் பிரக்ருதியான என்னை அடிமை கொண்டு அருள வேணும் –குண ஞானத்தால் தரித்து இருக்கும் ஸ்ரீ பரத ஆழ்வான் தன்மையன் அல்லன் – தண்ணீரின் நின்றும் மேலே எடுக்கப் பட்ட மீன்களைப் போன்றவர் -என்னும் இளைய பெருமாள் தன்மையனான என்னை அடிமை கொள்ள வேணும் என்பார் –திருப் புளி கீழ் இருந்தாலும் -இவர் மநோ ரதம் இருந்த படி –பணி கொள்ளாய் –என்கிறார் –சோற்றை இட்டுப் பணி கொள்வாய்– திரு மிடற்றின் ஓசை இனிமையாக இருக்கையாலே கூவிப் பணி கொள்ள வேண்டும் என்கிறார்-

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–
9-3-7-

மாக வைகுந்தம் காண்பதற்கு-விரோதி நிரசன சீலனானவன் நித்ய வாஸம் பண்ணுகிற பரமபதத்தை காண வேணும் என்று-என் மனம்-ஏகம் எண்ணும் –இராப்பகல் இன்றியே–-என் மனஸ்ஸூ ஒருபடிப்பட நினையா நின்றது-எப்போதும் ஒக்க உச்சி வீடு விடாதே -இதனையே-எண்ணா நின்றது – -சேதனர்க்கு இரா ஒரு காரியமும் பகல் ஒரு காரியமும் இருக்கும் இறே -இவருக்கு அஹோ ராத்ர விபாகம் அற இதுவேயாய்ச் செல்லா நின்றது –சமா த்வாதச தத்ராஹம் ராக வஸ்ய நிவேசனே புஞ்சானம் அநு ஷான் போகான் சர்வகாம ஸம்ருத்தி நீ –நான் அங்கு இராகவனுடைய திரு மாளிகையில் பன்னிரண்டு ஆண்டுகள் முடிய மனிதர்களுக்கு உரிய இன்பங்களை அனுபவித்தேன் -என்று பிராட்டி திரு அயோத்யையை நினைத்தால் போலே யாயிற்று இவர் திரு உள்ளத்துக்கு பரமபதம் ஸ்வ தேசமாய் இருக்கிற படி –

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே
–10-7-10-

மங்க ஒட்டு உன் மா மாயை -ஒருவராலும் தப்ப ஒண்ணாத படி -நீ பந்தித்த பிரக்ருதியை மங்க இசை –த்யாஜ்யம் என்று அறிந்த பின்பு உம்முடைய சரீரத்தை நீரே உபேக்ஷிக்கும் அத்தனை யன்றோ -நம் இசைவு என் என்ன -சர்வ சக்தியான நீ பிணைத்த பிணையை அசக்தனான நான் -அவிழ்க்கவோ –மமமாயா துரத்யயா -என்றிலையோ–வெண்ணெய் பால் உண்டு வெறும் கலத்தை உடைத்தீரே -அது போலே செய்ய வேண்டும் 

————————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ஸூர்யாஷ்டகம்–ஸ்ரீ வாஸ்து ஸூக்தம்–

October 28, 2025

ஆதி³தே³வ நமஸ்துப்⁴யம் ப்ரஸீத³ மபா⁴ஸ்கர
தி³வாகர நமஸ்துப்⁴யம் ப்ரபா⁴கர நமோஸ்துதே

ஸப்தாஶ்வ ரத⁴ மாரூட⁴ம் ப்ரசண்ட³ம் கஶ்யபாத்மஜம்
ஶ்வேத பத்³மத⁴ரம் தே³வம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

லோஹிதம் ரத⁴மாரூட⁴ம் ஸர்வ லோக பிதாமஹம்
மஹா பாப ஹரம் தே³வம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

த்ரைகு³ண்யம் ச மஹாஶூரம் ப்³ரஹ்ம விஷ்ணு மஹேஶ்வரம்
மஹா பாப ஹரம் தே³வம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

ப்³ரும்ஹிதம் தேஜஸாம் புஞ்ஜம் [தேஜபூஜ்யம் ச] வாயு மாகாஶ மேவ ச
ப்ரபு⁴ம் ச ஸர்வலோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

ப³ந்தூ⁴க புஷ்பஸங்காஶம் ஹார குண்ட³ல பூ⁴ஷிதம்
ஏக சக்ரத⁴ரம் தே³வம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

விஶ்வேஶம் விஶ்வ கர்தாரம் மஹாதேஜ: ப்ரதீ³பனம்
மஹா பாப ஹரம் தே³வம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

தம் ஸூர்யம் ஜக³தாம் நாத⁴ம் ஜ்னான விஜ்னான மோக்ஷத³ம்
மஹா பாப ஹரம் தே³வம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

ஸூர்யாஷ்டகம் படே²ன்னித்யம் க்³ரஹபீடா³ ப்ரணாஶனம்
அபுத்ரோ லப⁴தே புத்ரம் த³ரித்³ரோ த⁴னவான் ப⁴வேத்

ஆமிஷம் மது⁴பானம் ச ய: கரோதி ரவேர்தி⁴னே
ஸப்த ஜன்ம ப⁴வேத்³ரோகீ³ ஜன்ம கர்ம த³ரித்³ரதா

ஸ்த்ரீ தைல மது⁴ மாம்ஸானி ஹஸ்த்யஜேத்து ரவேர்தி⁴னே
ந வ்யாதி⁴ ஶோக தா³ரித்³ர்யம் ஸூர்யலோகம் ஸ க³ச்ச²தி

இதி ஶ்ரீ ஶிவப்ரோக்தம் ஶ்ரீ ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்

—————————-

ஸ்ரீ வாஸ்து ஸூக்தம்

ரு’க்³வேத³ஸம்ஹிதாயாம் ஸப்தமம் மண்ட³லம், 7.54;1-3, 7.55;1,
ரு’க்³வேத³ஸம்ஹிதாயாம் அஷ்டமம் மண்ட³லம், 8.017.14।
வாஸ்தோ॑ஷ்பதே॒ ப்ரதி॑ ஜாநீஹ்ய॒ஸ்மாந்ஸ்வா॑வே॒ஶோ அ॑நமீ॒வோ ப॑⁴வா ந: ।
யத்த்வேம॑ஹே॒ப்ரதி॒தந்நோ॑ ஜுஷஸ்வ॒ஶம் நோ॑ ப⁴வ த்³வி॒பதே॒³ ஶம் சது॑ஷ்பதே³ ॥
7.054.01
வாஸ்தோ॑ஷ்பதே ப்ர॒தர॑ணோ ந ஏதி⁴ க³ய॒ஸ்பா²நோ॒ கோ³பி॒⁴ரஶ்வே॑பி⁴ரிந்தோ³ ।
அ॒ஜரா॑ஸஸ்தே ஸ॒க்²யே ஸ்யா॑ம பி॒தேவ॑ பு॒த்ராந்ப்ரதி॑ நோ ஜுஷஸ்வ ॥ 7.054.02
வாஸ்தோ॑ஷ்பதே ஶ॒க்³மயா॑ ஸம்॒ஸதா॑³ தே ஸக்ஷீ॒மஹி॑ ர॒ண்வயா॑ கா³து॒மத்யா॑ ।
பா॒ஹி க்ஷேம॑ உ॒த யோகே॒³ வரம்॑ நோ யூ॒யம் பா॑த ஸ்வ॒ஸ்திபி॒:⁴ ஸதா॑³ ந: ॥ 7.054.03
அ॒மீ॒வ॒ஹா வா॑ஸ்தோஷ்பதே॒ விஶ்வா॑ ரூ॒பாண்யா॑வி॒ஶந் ।
ஸகா॑² ஸு॒ஶேவ॑ ஏதி⁴ ந: ॥ 7.055.01
வாஸ்தோ॑ஷ்பதே த்⁴ரு॒வா ஸ்தூ²ணாம்ஸ॑த்ரம் ஸோ॒ம்யாநா॑ம் ।
த்³ர॒ப்ஸோ பே॒⁴த்தா பு॒ராம் ஶஶ்வ॑தீநா॒மிந்த்³ரோ॒முநீ॑நாம்॒ஸகா॑² ॥ 8.017.14
ஸ்வரரஹிதம் ।
வாஸ்தோஷ்பதே ப்ரதி ஜாநீஹ்யஸ்மாந்ஸ்வாவேஶோ அநமீவோ ப⁴வா ந: ।
யத்த்வேமஹே ப்ரதி தந்நோ ஜுஷஸ்வ ஶம் நோ ப⁴வ த்³விபதே³ ஶம் சதுஷ்பதே³ ॥
7.054.01
வாஸ்தோஷ்பதே ப்ரதரணோ ந ஏதி⁴ க³யஸ்பா²நோ கோ³பி⁴ரஶ்வேபி⁴ரிந்தோ³ ।
அஜராஸஸ்தே ஸக்²யே ஸ்யாம பிதேவ புத்ராந்ப்ரதி நோ ஜுஷஸ்வ ॥ 7.054.02
வாஸ்தோஷ்பதே ஶக்³மயா ஸம்ஸதா³ தே ஸக்ஷீமஹி ரண்வயா கா³துமத்யா ।
பாஹி க்ஷேம உத யோகே³ வரம் நோ யூயம் பாத ஸ்வஸ்திபி:⁴ ஸதா³ ந: ॥ 7.054.03
அமீவஹா வாஸ்தோஷ்பதே விஶ்வா ரூபாண்யாவிஶந் ।
ஸகா² ஸுஶேவ ஏதி⁴ ந: ॥ 7.055.01

வாஸ்தோஷ்பதே த்⁴ருவா ஸ்தூ²ணாம்ஸத்ரம் ஸோம்யாநாம் ।
த்³ரப்ஸோ பே⁴த்தா புராம் ஶஶ்வதீநாமிந்த்³ரோ முநீநாம் ஸகா² ॥ 8

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் வார்த்தை பத பிரயோகங்களும் ஸ்ரீ வியாக்யானம் ஸ்ரீ ஸூக்திகளும்–

October 25, 2025

சிறுமையின் வார்த்தையை மாவலியிடை சென்று கேள் – நாலாயி:61/2 

சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலி இடைச் சென்று கேள்
சிறுமை பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்
நிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான் –1 4-8 –

இவனுடைய பால்யத்தினுடைய விசேஷத்தை –வாமனனாய் சென்று –தன்னை வசீகரித்து மூவடி -என்று இரந்து-இரண்டு அடியாலே ஜகத்தை அடைய வளந்து –ஓரடிக்கு தன்னை சிறையிலே வைக்கப் பட்ட மஹா பலி பக்கலிலே சென்று கேட்டுக் கொள் -அவன் சிறுமைப் பெருமை அறிந்திலை –மகா பலி பாதாள லோகத்தில் கர்ம பாவனையாலே வந்த ஔதார்ய செருக்குப் போய் ப்ரஹ்ம பாவனையோடு இருக்கிறான் – அங்கே சென்று கேட்டுக் கொள் –

என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா முலை உணாயே – நாலாயி:133/4

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேச முலை உணாயே -2 2-6 – –

நாட்டில் பிள்ளைகள் போல் அன்றிக்கே -ரூப குண சேஷ்டிதங்களால் வ்யாவர்தனாய் இருக்கிற உன்னைக் கண்டவர்கள் –நாட்டிலே பாக்யாதிகைகளாய் விலஷணமான பிள்ளைகளை பெறுவாரும்  உண்டு இறே –அவ்வளவு அன்றிக்கே –லோகத்தில் கண்டு அறியாத வைலஷண்யத்தை உடைய இவனைப் பெற்ற வயிறு உடையவள் –இதுக்கு உடலாக என்ன தபஸை பண்ணினாளோ என்று ஸ்லாகித்து சொல்லும் வார்த்தையை –எனக்கு உண்டாக்கித் தந்த

உன்னைக் கண்ட பாக்யாதிகர் –ஸூக தாதம் -என்னும்படி யான வ்யாசாதிகள் உடைய உபாசன மாத்ரங்கள் அன்றிக்கே இதுவே இறே ஒரு படியாய் இரா நின்றதீ -என்று விஸ்மிதராய்-இவனைப் பெற்ற வயிறு யுடையாள்-என்ன நோன்பு நோற்றாள் கொலோ-என்று பல காலும் சொல்லும் படியான வார்த்தையால் வந்த பிரசித்தியை யுன்டாக்கித் தந்த

வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பது ஓர் வார்த்தையும் உண்டு – நாலாயி:197/2

கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம்மயிர் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு
மஞ்சு தவழ மணி மாட மதிள் திரு வெள்ளறையில் நின்றாய்
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் -2- 8-6 – –

இருள் தான் ஒரு வடிவு கொண்டால் போலே கருத்த நிறத்தையும் அக்னி ஜ்வாலை  போலே சிவந்த தலை மயிரையும் உடையாளாய் இருக்கிற பேய்ச்சியை- நேர் கொடு நேர் சென்றால் அவனை உன்னால் சாதிக்கப் போகாது –வஞ்சனத்தால் சென்று சதி – பேய்ச்சியை
நீ நேர் கொடு வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு
நேரே சென்றால் அவனை உன்னால் சாதிக்கப் போகாது – நீ க்ருத்ரிம ரூபத்தால் சென்று சாதிக்க வேணும் காண் -என்று சொன்னான் என்கிற வார்த்தையும் உண்டு காண்
பிறக்கிறது ––பிறக்கிற போது –இவ் வார்த்தை தான் ஸ்ரீ நந்தகோபர் வசுதேவர் பக்கல் கேட்டு வந்து சொன்னார் ஆதல் –ஸ்ரீ மத் துவரையில் –பரவை வழக்கம் -செவி வழிச் செய்தி -உலக வழக்கம்- இங்கே வந்து பிறந்தது ஆதல் –

———
மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன் – நாலாயி:295/3

பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம் இல்லத்துள்ளே
இருத்துவான் எண்ணி நான் இருக்க இவளும் ஓன்று எண்ணுகின்றாள்
மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன்
ஒருப்படித்திடும் இனி இவளை உலகளந்தான் இடைக்கே -3-7-10 –

நம்முடைய எண்ணுதலுக்கு விபரீதமாக இவளும் ஒன்றை எண்ணா நின்றாள்
அதாவது –இங்குத்தை இருப்பு காராஹ்ரக வாசமாய்-அவன் பக்கலிலே போகவே மநோரதியா நின்றாள் -என்கை-மருத்துவனானவன் சமைக்கிற ஒவ்ஷதத்திலே -பாகம் பார்த்து செய்யாத போது –அது கை தவறுமா போலே –இவள் பதம் பார்த்து நாம் செய்யாமையாலே இவள் கை கழிந்தாள் என்னும் வார்த்தை  லோகத்தில் உண்டாவதுக்கு முன்பே-நீங்கள் சேராத போது-இவள் ஸ்வபாவத்தாலும் இரண்டு தலையும் சேர்ந்தே  விடும்
ஆன பின்பு ஏற்கவே நீங்களே சேர்த்து விடும் கோள் என்று த்வரிப்பிக்கிறார்கள்-

—————

தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்

காசின் வாய்க் கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு
தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய்  குறளா என்று
பேசுவார் அடியர்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே – 4-4 -10-

யஜஸ் கரமான  வார்த்தைகளை படைக்கும்-அதாவது-இருந்தார் இருந்த இடங்களிலே -தங்களுடைய ஒவ்தார்யம் கிருபை முதலான குணங்களை சொல்லிக் கொண்டாடும்படி யாகை –இவர்கள் புகழை நச்சி செய்யாது இருந்தாலும் தன்னடையே வந்து உண்டாமிறே இது

———–

சாமத்தின் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே – நாலாயி:578/2

மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே
காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே—8-2-

வேங்கடத்து-ஏக தேச வாசித்வத்தால் உங்களுக்கு தெரியாமை இல்லை இறே-சாமத்தின் நிறம் கொண்ட-அவ்வளவு இன்றிக்கே வடிவிலேயும் போலி யுண்டே இறே உங்களுக்கு-தாளாளன் –இவற்றுக்கு இன்றிக்கே அவனுக்கு உண்டான ஏற்றம்-பிறருக்காக கண்ட உடம்பை தனக்கு என்று இருக்குமவன் ஆயத்து-பக்தாநாம் –என்று இருக்கிற உடம்பை தனக்கு என்று இருக்கிறவன் –இவ்வடிவு படைத்த நாமோ சென்று அணைவோம்-
இதில் அபேஷை உடையார் வேணுமாகில் தாங்களே வருகிறார்கள் -என்று எழ வாங்கி இருக்குமவன்-வார்த்தை என்னே –இங்கே வாராராகிலும் -இழவு தமக்கு என்று இருந்தாராகில் வார்த்தை சொல்லி விடாமை இல்லை இறே-என்னே-நாம் முற்பாடராய் உதவப் பெற்றிலோம் -என்ற லஜ்ஜையாலே நீங்கள் அவள் செய்தது என் என்று அறிந்து வாருங்கோள் என்னுதல்-அன்றிக்கே –ந ஜீ வேயம் ஷணம் அபி -என்னுதல்-அங்கன் இருப்பார் உண்டாவதாக நாம் அறிந்திலோமே என்னுதல்-துஷ்யந்தனுடையவும் சகுந்தலையுடையவும் கதையைச் சொல்லிக் கொள்வது -ஒன்றும் சொல்லாமை இறே-ஒரு வார்த்தை கொண்டு தரித்து இருக்கலாமோ இவளுக்கு -என்னில் –-ஒரு வார்த்தை கேட்கில்-ஸ்திதோச்மி-ஸ்ரீ கீதை -18-73-என்று இருக்கலாம் இறே-பாவி நீ என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே -திருவாய் –4-7-3– என்றாவது கேட்க ஆசைப் பட்டார் அன்றோ-வார்த்தை என்னே -என்ற இடத்தில் இன்னது என்று சொல்லக் கேட்டிலள்-

——————

பதியாக வாழ்வீர்காள் பாம்பு_அணையான் வார்த்தை என்னே – நாலாயி:585/2

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-

வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்-வந்தேறிகளாய் திருநாள் சேவித்து போவாரைப் போலே போராதே-அங்கே நித்ய வாசம் பண்ணப் பெறுவதே நீங்கள் –சேறு தோய்ந்து கழுவினவர்கள் அன்றிக்கே –முக்தரைப் போலே அன்றிக்கே –நித்ய சித்தரைப் போலே யாய்த்து –அங்குத்தை வர்த்தநத்தை இறே வாழ்வாகச் சொல்லுகிறது-கீழே முமுஷுக்களில் வ்யாவ்ருத்தி சொல்லி-இங்கே முக்தர்களில் வ்யாவ்ருத்தி சொல்கிறது-இரண்டு ஆற்றுக்கும் நடுவில் வாசம் போலே –நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -11-5- என்னக் கடவது இறே-பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் -6-9-9- என்றும் –புறத்து இட்டு இன்னம் கெடுப்பாயோ -6-9-8-என்றும்-இதர விஷய ப்ராவண்யம் விநாச ஹேதுவாய் இருக்கும் –பகவத் ப்ராவண்யம் வாழ்வாய் இருக்கும்பாம்பணையான் வார்த்தை என்னே-படுக்கைத் தலையில் சொல்லும் வார்த்தைகள் –வேங்கடத்தை பதியாக உடைய உங்களுக்கு -அந்தரங்கர்க்கு தெரியும் இறே-கருதாது ஓர் பெண் கொடியை வதை செய்தான் என்னும் சொல்-தனக்கு வருகிற ஸ்வரூப ஹானியை புத்தி பண்ணாது-ஒரு கொள் கொம்பிலே சேர்க்க வேண்டும் கொடியை தரையில் இட்டு வைக்கையாவது -வதைக்கை இறே-ந ச சீதா த்வயா ஹீ நா —அயோத்யா -53-31–பகவத் விச்லேஷமும் பர்யாயம் காணும் –வையகத்தார் மதியாரே–அத் தலையிலே சத் பாவத்தாலே இத் தலையில் சத்தை என்னுமது போய்த்தே-ஒரு கால் முடிந்தார்க்கு இரு கால் முடிய வேண்டாவே-இனி நாட்டார் தம்மை ரஷகர் என்று விரும்பார்கள் என்று சொல்லுங்கோள் –தம் தாம் அழிந்தாலும் அத் தலைக்கு வரும் அவத்யம் பரிஹரிக்கும் குடி அன்றோ –

———–

ஆலின் இலை பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே – நாலாயி:594/4

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-

எல்லாருடையவும் ரஷணத்தில் ஒருப்பட்டு இருக்கிறவன்-பதினாறாயிரம் பெண்களோடு ஆனைக்கு குதிரை வைத்து பரிமாறின பரம ரசிகன்-ப்ரணய தாரையிலே விஞ்சி இருக்கும் பெருமான்-அகடிதகட நா சாமர்த்தியத்தை உடையவன்-அவன் வார்த்தை சொல்லா நின்றான்

——————-

மெய்ம்மை பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர் – நாலாயி:616/2

செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —11-10-

செம்மை யுடைய திருவரங்கர் –மநோ வாக் காயங்கள் மூன்றும் மூன்று படியாய் இருப்பாரை ஒருங்க விடுகைக்கு –தாம் மநோ வாக் காயங்கள் மூன்றும் ஒருபடிப் பட்டு இருக்குமவர் –ஸூ ஹ்ருதம் சர்வ பூதா நாம் -ஸ்ரீ கீதை -5-29-என்கிறபடியே –சோபனமான ஹ்ருதயத்தை உடையராய் இருப்பார்-குற்றம் செய்தாரையும் விட மாட்டாதே –ந த்யேஜ்யம்-என்று வார்த்தை சொல்லுமவர்-அது தன்னை அர்த்த க்ரியாகாரியாக்கிக் கொண்டு கோயிலிலே சாய்ந்து அருளினார் –தாம் பணித்த-நினைவும் சொலவும் செயலும் ஒருபடிப் பட்டவர் தாம் அருளிச் செய்த –மெய்ம்மைப் பெரு வார்த்தை –யதார்த்தமுமாய் ––மெய்மை –சீரியதுமாய் —பெரு —ஸூ லபமுமான –வார்த்தை என்பதால் –மூன்றும் சேர்ந்த வார்த்தை யாய்த்து -அதாவது –உன் கார்யத்துக்குனான் உளேன் -நீ ஒன்றுக்கும் கரையாதே –உன் சர்வ பரத்தையும் என் தலையிலே சமர்ப்பித்து நிர்ப்பரனாய் இரு -என்று திருத் தேர் தட்டிலே அருளிச் செய்த வார்த்தை-பிள்ளை அர்ஜுனனுக்கு அன்றோ சொல்லிற்று இவர்க்கு என் என்னில்-அவன் சர்வ சமனாகையாலே–என் கார்யம் என்னால் செய்ய ஒண்ணாது -என்று இருப்பார் எல்லாருக்குமாக அடியிலே சொன்ன வார்த்தை இறே-ஆகையாலே இவர் கேட்டிருக்கக் குறை இல்லை –

—————–

உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை பெற்றிருந்தாளை ஒழியவே போய் பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி – நாலாயி:617/2,3

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்–12-1-

மற்று –வேறாய் இருந்தீர்கட்கு -என்னுதல் –மற்று –உரைப்பது எல்லாம் -என்று மேலே கொடு போய்-அந்வயித்தல்-இருந்தீர்கட்கு அறியலாகா –ஏக தேச வாசமே போராது காணும் கோள்-
எனக்கு ஓடுகிற தசை அறிகைக்கு-இருந்தீர்கட்கு–நான் இருந்த தேசத்திலே நீங்களும் இருந்தி கோள் என்னா-எனக்கு ஓடுகிற தசை உங்களால் என்னை அறியப் போகாதே –மாதவன் என்பதோர் அன்பு தன்னை உற்று இருந்தேனுக்கு –ப்ரஹ்மசாரி எம்பெருமானை ஆசைப் பட்டேன் ஆகில் தான் ஆறி இரேனோ–மாதவன் விஷயமான அன்பு -என்னுதல் –
மாதவன் ஆகிற அன்பு -என்னுதல்-அன்பு -என்றும் – அன்புக்கு ஆஸ்ரயம் என்றும் தோன்றாதே   –அன்பு தான் என்னலாய்த்து இருப்பது-தான் முந்துற இத்தலையிலே அன்பைப் பண்ணி –பின்னை யாய்த்து இத்தலையில் அன்பை விளைத்தது –கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -திருவாய் -10-10-7-என்னுமா போலே – சர்வ பிரகாரத்தாலும் விலஷணமான விஷயத்தை இறே இவள் தான் ஆசைப் பட்டது – அப்படிப் பட்ட வைலஷண்யம் உள்ளது  ஸ்ரீ யபதிக்கு இறே – அவன் பக்கலிலே யாய்த்து இவள் அன்பைப் பண்ணிற்று –அன்பு தன்னை உற்று –அவனைக் கிட்டி -என்னுதல்-அவன் விஷயமான பக்தியை மாறுபாடுருவ உடையேனாய் -என்னுதல்-இருந்தேனுக்கு –இப்படி அவனை ஒழிய செல்லாமை உண்டானால் அவன் இருந்த இடத்தில் சென்று கிட்ட இறே அடுப்பது –அதுக்கு கால் நடை தாராத படி இருக்கிற எனக்கு –உரைப்பது எல்லாம் – அங்கே சென்று கிட்ட ஆசை உடைய எனக்கு –நான் சென்று சேராமைக்கு உறுப்பாகச் சொல்லும் வார்த்தை எல்லாம்-மற்று –உரைப்பது எல்லாம் – அவனோடு கிட்டாமைக்குச் சொல்லும் வார்த்தை எல்லாம்-ஊமையரோடு செவிடர் வார்த்தை-என் தசையை அறியாத உங்களுக்கு தோற்றினபடி சொல்லுகைக்கு பரிகரம் இல்லை-எனக்குக் கேட்கைக்கு பரிகரம் இல்லை
ஊமைக்கு வ்யவஹார யோக்யதை இல்லை-செவிடர்க்கு கேட்கைக்கு யோக்யதை இல்லை
செவிடரோடு ஊமையர் வார்த்தை என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்

————-

வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும் – நாலாயி:1113/2

தன் குடிக்கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயிலங்கை
வன் குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின்புறும் மயங்கும்
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயத்திருந்த
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-6-

ஊரிலே அரணே அன்றிக்கே வர பலத்தாலே பல்கிப் பரந்துள்ள குடியானது திரியட்டும் முடிந்து போம் படியாக – ராஷசரைப் போலே மாயையால் அன்றிக்கே-நிறம் உடைத்தான பூசலிலே வன் குடி மடங்க துளைத்த வார்த்தை உண்டு -ஸ்ரீ இராமாயண வ்ருத்தாந்தம் –
அத்தைக் கேட்டு
-நம் அவஸ்தை உடையாள் இருப்பாள் ஒருத்திக்கு உதவின போதே
எனக்கும் உதவினவன் அன்றோ -என்று அத்தாலே இனியளாம்-உதவாதவன் உதவாது ஒழிகை அன்றிக்கே உதவும் ஸ்வ பாவனாய் இருந்து வைத்து நம் தசை இதுவாய் இருக்க உதவாது ஒழிவதே – என்று மோஹிக்கும்-

—————–

வார்த்தை பேசீர் எம்மை உங்கள் வானரம் கொல்லாமே – நாலாயி:1868/3

ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்
சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே  –10-3-1-

முன்பு பிராட்டியை பிரித்த பையலுக்கு பரிகரமாய் நின்று இன்று வந்து அனுகூலிக்கும் காட்டில் ரஷிக்கையாவது என் -என்று பேசாதே நின்றார் –அவ்வளவிலே முதலிகள் வந்து கைக் கொள்ளப் புக்கார்கள் –அல்லாதது பார்த்துக் கொள்ளுகிறோம் -எங்களோடு வார்த்தை சொல்ல அமையும் -ராஜாவோடு வார்த்தை சொல்லுகிறவர்கள் என்று முதலிகள் கொல்லாதபடி -என்கிறார்கள் –

———————-

அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த – நாலாயி:2492/2

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-

அறியிலும்-அறியக் கூடாது என்று இருக்கிறாள்-இவள் விரஹம் தான் அவகாகித்த பின்பும்
வாய் புகு நீரும் நில நீருமாய் இருக்கிற படியாய் இருக்கையாலே ,-அவகாகியாதார்க்கும் ,அறியலாமோ என்று இருக்கிறாள் .-பண்டு இவரை  கண்டு அறிவது எவ் ஊரில் என்னா –
இன்னார் என்று அறியேன் என்பாரை போலே-கிட்டின போது சம்சயமாய் ,-உள் புக்கவாறே அறியாமையாலே நிர்ணயமாய் இருக்கிறபடி–பாஷிக  தோஷம் பரிகரிக்க வேணும்  இறே-ஈது என்ன வார்த்தை –1-(வெறுப்பில் )இச் சேராச் சேர்த்தியான வார்த்தை எங்கே உள்ள-முகம் அறியாதார் ஒருவர் வந்து நின்று முகம் அறியாத வார்த்தைகளை சொல்லா நின்றீர்- –2-ஆற்றாமை தோற்ற இங்கனம் சொல்லில் புறம்புள்ளார் என் நினைத்து இருப்பார்கள் –நாங்கள் பரண் இடுவது ஆயோ வென்பதாய் கோபிக்கிறதை எல்லாம் வெளியிடா நின்றீர் –3-(கொண்டாட்டம் )தென்றலும் சிறு துளியும் போலே-உத்தேசியத்தோடே சேர்ந்ததொரு வார்த்தை இருந்தபடி என்-(கலங்கி இருப்பவனைப் பார்ப்பதே காதலிக்கு உத்தேச்யம் )
வார்த்தையைக் கேட்டு எத்திறம் என்கிறாள் –4-நீர் வார்த்தைக்கு பாவிகளோ என்கிறாள் –
உம்முடைய பாடு வார்த்தை இறே -அனுஷ்டானம் இல்லை என்கிறாள்- ஷேபம் -கேலி -ஆச்சர்யம் -கொண்டாட்டம் -நான்கு நிர்வாகம் )எங்கள் பாடு அனுஷ்டானம் இல்லையே யாகிலும் உங்கள் பாடு அனுஷ்டானம் உண்டோ என்ன –(இது பகவான் வார்த்தை-எனது பக்கம் இல்லை என்றால் உங்கள் இடம் உண்டோ என்ன-திவ்ய தேசம் சேவை சாதிக்கா விட்டாலும் நாங்கள் ரக்ஷித்து உள்ளோமே )உமக்காக வன்றோ -நாங்கள் குடில் கட்டிக் கொண்டு கிடக்கிறது என்கிறாள் –

—————-

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்ததும் – நாலாயி:3441/1

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும்
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்ன லாவன அல்ல என்னைஉன் செய்கை நைவிக்கும்
முதுவைய முதல்வா! உனைஎன்று தலைப்பெய்வனே?–5-10-2-

வதுவை-விவாஹம் -வார்த்தையில் -எருதுகள் ஏழையும் நிரசித்தார்க்கு இவளைக் கொடுக்கக் கடவோம் என்று பிறந்த பிரசித்தி –எருதுகள் மேலே விழுந்த படி -இவருக்கு ம்ருத்யுவின் வாயிலே விழுந்தால் போலே யாயிற்று இருக்கிறது -பொய்கையில் பாய்ந்தது போலே இறை நின்றது அவனுக்கு -கருமாரி பாய்ந்தால் ஆகாதோ -காமாஷி ஆலயம் சங்கு த்வயம் மத்யம் விழுகை-என்னும் படி இறே -இவளுடைய போக்யத்தை –

————————–

நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரை கண்கள் நீர் மல்க – நாலாயி:3442/3

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.
–5-10-3-

———————

ஆய்ச்சி ஆகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டு அழு – நாலாயி:3472/1

ஆய்ச்சியாகிய அன்னையால்அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்றமுண்டழு
கூத்த அப்பன்
தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.–6-2-11-

அன்னை என்று பொதுவில் சொன்னால் -தேவகி பிராட்டி பக்கலிலும் ஏறும் என்று ஆய்ச்சியாகிய என்று விசேஷிக்கிறார் -தேவகிப் பிராட்டியார் அடிக்கில் இத்தனை நோவாது காணும்.–முலை உண்டு வளர்ந்த இடத்திலே இறே அச்சம் உள்ளது –வெண்ணெய் களவு போயிற்று என்கிற வார்த்தையிலே -இவனே செய்தான் -என்று தாயார் பொடிய பொடி யுண்டு கண்ணும் கண்ண நீருமாய் நின்றால் போலே யாயிற்று -இன்று இவர்கள் திரளில் புகுற வேண்டா என்ற போது நின்ற நிலை-அழு-கூத்த அப்பன்-அழுகிற தசையில் கால் மாறி இட்ட போது வல்லார் ஆடினால் போலே இருந்த படி-“தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி” -இது, பெரிய திருமொழி, 8. 3 : 5.-என்கிறபடியே,‘இவள் நம்மை அதட்டுவதே!’ என்று உளைந்தன்றோ கிடப்பது.-தெய்வம் அறியத் தாய் ஆயினமை அன்றோ தேவகியார் பக்கல் உள்ளது;-முலைச் சுவடு அறிந்ததும் முகம் பழகிற்றும் வளர்ந்ததும் எல்லாம் இங்கே அன்றோ.ஊரில் ‘வெண்ணெய் களவு போயிற்று’ என்றார்கள்; அவ்வளவிலே ‘நாம் அன்றோ இதற்கு இலக்கு’ என்று அழப் புக்கான்.-‘மடம் மெழுகுவார் யார்?’ என்ன, ‘அஸ்ரோத்திரியன்’ என்றார்கள்; ‘இப் பரப்பு எல்லாம் என்னாலே மெழுகப் போமோ’ என்றான்; அதுபோலே.
யாரேனும் ஏதேனும் செய்யிலும் இவனைச் சொல்லும்படி யன்றோ இவனுடைய தீம்பு தான் இருப்பது!“பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் எல்லாம் உன்
மேலன்றிப் போகாது”
-பெரியாழ்வார் திருமொழி, 2. 8 : 5.-என்னும்படியன்றோ இருப்பது.

—————

என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலைவில்லிமங்கலம் என்று அல்லால் – நாலாயி:3501/2

அன்னைமீர்! அணி மாமயில் சிறு மானிவள்நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-

தொலை வில்லி மங்கலம் என்கை ஒழிய ஏதேனும் ஒரு வார்த்தையும் கேட்க்கிறீலள் -என்னுடைய வார்த்தையும் கேட்க்கிறீலள் -உங்களை மறைத்ததும் சொல்லுவது எனக்கு இறே-தன் நினைவினை யான் சொல்லிலும் மீட்பதற்கு நினைத்துச் சொல்லுகிறேன் என்று,
என் வார்த்தையையும் கேட்கை தவிர்ந்தாள். -அவ் வூரை நான் சொல்லிலும் கேட்க்கும் –திருத் தொலைவில்லி மங்கலம் என்னில் நான் சொன்னதையும் கேட்பாள்.

———————–

வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் வைகல் வந்திருந்தே – நாலாயி:3536/4

பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த்திரை மேல்உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த்திரள் மாமுகில்போல் கண்ணன் விண்ணவர்கோனைக்கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே
.–6-8-9-

கறுப்பு எல்லாம் திரண்டால் போல் இருக்கிற மஹா மேகம் போன்ற வடிவை உடையவன் -கார் காலத்தில் திரண்ட மேகம் என்றுமாம் –மா முகில் -மாறாதே கொடுக்க வல்ல முகில் –கண்ணன் -தன்னை பிறருக்கு ஆக்கி வைக்குமவன் –விண்ணவர்கோனை-மத்ஸ்யத்துக்கு தண்ணீர் வார்பாரை போலே இவ் வழகையும் குணத்தையும் நித்ய ஸூ ரிகளை அனுபவிப்பித்து இருக்கிறவனை-பிரிவதற்குச் சம்பாவனை இல்லாதார்க்குத் தன்னைக் கொடுத்துக் கொடு நிற்கிறவனைக் –கண்டு -வார்த்தைகள் -காணப் பெற்று சொல்லும் வார்த்தைகளை கேட்க்க கடவி கோள் இறே -மாஸூச என்ற பலத்தோடு வியாப்தமான வார்த்தைகளைக் கொண்டு-கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–என் பக்கலிலே கிருபை பண்ணி -அங்குத்தை வார்த்தைகளைக் கேட்டு வந்து இருந்து -நாள் தோறும் எனக்குச் சொல்லி உஜ்ஜீவிப்பிக்க வேணும் –வந்திலனாகிலும் சில வார்த்தைகள் சொல்லக் கடவன் அன்றோ.-காட்சிக்கு மேலே வார்த்தையும் கேட்க அன்றோ நீங்கள் புகுகிறது;-“பாவி நீ என்று ஒன்று சொல்லாய்” –திருவாய். 4. 7 : 3.-என்னுமவரன்றோ.
இப்போது இவர்க்கு ‘மாட்டேன்’ என்னும் வார்த்தையும் அமையும்.-விண்ணவர் கோமானான கண்ணனைக் கண்டு வார்த்தைகள் கொண்டு-“மாசுக:” என்று பலத்தோடே முடிவு பெற்றிருக்கிற வார்த்தைகளைக் கொண்டு, என் பக்கலிலே கிருபையைச் செய்து வந்திருந்து வைகலும் உரையீர்-வாரான் என்றோ பல வ்யாப்த வார்த்தை யாகவோ –மாட்டேன் என்கிற வார்த்தை -தனது சத்தை தரிக்க அவன் பக்கலில் இருந்து ஏதேனும் -தாராயினும் –போலே -வேண்டும் –ஜீவிஷ்ய பேஷஜம் போலே சீதை வார்த்தை சொல்லு அத்தைக் கொண்டு ஜீவிப்பேன் -என்றாரே பெருமாள் திருவடி இடம் –

—————-

நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே – நாலாயி:3613/4

மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமோ.–7-5-9-

தன் க்ருஹத்திலே புக கொண்டு சிறை செய்யத் தேடும் துரியோதனாதிகள் போல்வார் இருக்கிற தேசத்தை விட்டு எல்லாரும் ஓக்க பரியும் தேசத்திலே நிரபாயமாக எழுந்து அருளின படியை பேசின பிராமண ஸ்ரேஷ்டமான மஹா பாரதத்தை அறிந்து வைத்தும் -மாயவற்கு ஆளன்றி ஆவரோ?– –தன் மேலே அம்பு மழையாகப் பெய்கிற இத் தண்ணிய பூமியினின்றும் தன் வரவுக்கு எதிர் கொள்வார் இருந்த இடத்தே போய்ப் புக்கான் என்கிற பெரிய வார்த்தையை அறிந்தும்-‘நீண்ட கண்களை யுடைய கண்ண பிரான் பூமியினுடைய பாரத்தைப் போக்கி உலகத்தை எல்லாம் மோஹிக்கச் செய்து மேலான தம் இருப்பிடத்தை அடைந்தார்’ என்கிறபடியே,துரியோதனாதியர்கள் இல்லாத இடத்தே போய்ப் புகப் பெற்றது அன்றோ?

‘க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருதுலோசந:
மோஹயித்வா ஜகத் ஸர்வம் கத: ஸ்வம் ஸ்தாநமுத்தமம்
’-என்பது, பாரதம், மௌசல். பர்.

‘மேலே கூறிய செயல்கள் அடங்கலும் தன் ஸ்வாதந்திரியம் கிடக்கச் செய்தே செய்தவை அன்றோ?தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதற்குத் திரு உகிராலும் உண்டே அங்கு; அவை போல அன்றே இங்கு?தன்னை அடைந்தவர்க்குப் பரதந்திரனாய்த் தன்னை அழிய மாறி,பாண்டவர்களுக்கு உடம்புக்கு ஈடு இடாதே-ஈடு -கவசம் –எதிரிகள் அம்புக்கு இலக்கு ஆக்கின இந்நீர்மைக்குப் போருமோ. மேலே கூறிய குணங்கள்?’ என்கிறார்.

————————

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3614/1

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10-

ப்ரஸ்துதமான மஹா பாரதம் கடலோசை என்னும் படி சாரமான மாமேகம் சரணம் வ்ரஜ என்கிற வார்த்தையை அறியுமவர்கள் –ஆச்சர்யமான ஸுலப்யத்தை யுடையவனுக்கு -திரௌபதியினுடைய குழலை முடிக்கைக்காக ஹ்ருதகதமான அர்த்தத்தை வெளியிட்ட ஆஸ்ரித பவ்யதை யுடையவனுக்கு -பரம ஆப்தனான என்னைப் பெற்றால் -அவனை விட்டு வேறு சிலருக்கு ஆளாவாரோ-மஹாபாரதம் எல்லாவற்றாலும் சொல்லிற்றாயிற்றது ஒரு வார்த்தை அன்றோ?-வார்த்தையாவது, பிரயோஜனத்தோடு கூடி இருப்பது அன்றோ?
‘என் ஒருவனையே சரணமாகப் பற்று,’ என்றதனை அன்றோ இங்கு வார்த்தை என்கிறது?
மேலே சொன்னவை அடங்கலும் கடல் போலே; அதில் அமிருதம் போலே இது.-
கீதையிலும் இத் திருவாய்மொழியிலும்-அவன் ‘என்னையே பற்று’ என்று சொல்லா நின்றார், இவர்கள் அவனை ஒழியவும் பற்றுவார்களோ? ரஹஸ்யங்கள் எல்லாவற்றையும் வெளியிட்டான் அன்றோ அவள் சூழல் முடிக்கைக்காக?

————-——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமான் ஸ்ரீ தசாவதார எச்சரிக்கை–

October 24, 2025

கசாவதாரனைக் கார்த்த சாரதி மேல்
தசாவதார வெச்சரிக்கை யதுசொல
நிசாவதாரனாய் நிகழ் குருகூரெனுந்
திசாவதாரன் திருவடி யேத்துவாம்–ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்துதி.

கசாவதாரன் இந்திரத்யும்நன் என்னும் அரசன் இவன் அகத்தியரது சாபத்தினால் யானையாகிக் காட்டில் திரிந்த போது, மடுவில் வந்து நீரருந்த இவன் காலைப் பிடித்தவன் தேவல முனிவனால் முதலையாகச் சபிக்கப்பட்ட ஆகா என்னும் கந்தருவன்

திருவல்லிக்கேணிப்பதி ஸ்ரீ பார்த்த ஸாரதியே
அரு வேதவல்லித்தாயார் எச்சரிக்கை

ஸ்ரீ தாயார் கருணைக்கடாக்ஷமே ஓர் உருவாய்க்கொண்டு ஆருயிர்த்திரள்கள் மோக்ஷம் பெரும் பொருட்டே ஏணியாக எழுந்தருளி ஸேவை சாதிக்கும் பெருமாள்

ஒளிமேவிடுங் கமலாசனன் உயரிந்திரன் விண்ணோர்
அளிமேவிடப் போற்று முர ஹரியே எச்சரிக்கை.

பொங்கெழின் மிகுந்த பங்கய மலரைத் தவிசாக வுடைய சதுர்முகப் பிரம்மனும் உயர் வமைந்த விண்ணுலகரசாதிபனாகிய தேவேந்திரனும் இன்னும் அனந்த கோடித் தேவர்களும் தேவரீரது திருவாயிலின் கண் திருவருளுதயத் தரிசனார்த்தத்தின் நிமித்தம் நெக்கு நெக்குருகி நிலமிசை வீழ்ந்து திரிகரணம் என்னும் – மனம் வாக்கு காயத்தால்-ஒற்றுமைப்பட அட்டாங்க பஞ்சாங்கமாக நமஸ்கரித்தெழும் சிறப்பினை வாய்ந்த -முரஹரி யென்னும் திரு நாமத்தை யுடையவனே! எச்சரிக்கை.

மேல் கீழொடு யேட்டுத் திசை மேவும் பல வண்டம்
சூல் கொண்டெனக் காக்கு மதுசுதனா எச்சரிக்கை.

மேல் நாடெனச் செப்பும் விண்ணுலகத்தின் கண் உள்ளனவும், கீழ்நாடெனச் செப்பும் மண்ணுலகத்தின் கண் உள்ளனவும், அஷ்ட திசையின் கண் உள்ளனவும், இன்னும் எவராலும் அளவிட்டுச் சொல்லுவதற் கரிதாகிய அண்டரண்ட பகிரண்டங்களில் உள்ளனவுமாகிய ஜீவ கோடிகளைத் தன் தாய் கருப்பத்தில் சிசுவை வைத்துக் காப்பாற்றும் தன்மை யினும் ஆயிர மடங்கதி மாக அன்பு வைத்து அவ்வவ் வுயிர்களை ஸ்வதந்திரத்தால் காத்து இரக்ஷிக்கும் மாஷிமை யுடைய மதுசூதனா! எச்சரிக்கை.

துதி சேர் தசாவதார நற்றுளபா பத்ம நாபா
கதி சேர்ந்திட வருள் தாமரைக் கண்ணா எச்சரிக்கை.

நித்திய பத்தியைச் சதா இடைவிடாது செய்து உய்யும் அன்பர்களுடைய துதி யமையப் பெற்ற திவ்யத் திருமங்கள திரு மேனி பத்தாக வுடையவனே! தேன் கசிதலமையப் பெற்ற நல்ல துளப மாலையை அணிந்தவனே! பதுமம் பூத்த திருநாபியை உடையவனே ! இப் பிறப்பிறப்பென்னும் துக்க சாகரத்தில் மூழ்கி திருவடிகட்குப் பாத்திரனாகா நிற்கும் இந் நாயேனைத் தேவரீரது அழியாத மோக்ஷ இன்பானுபவ ஸ்திதியில் சேர்த்து அத் திருவடிகட்குப் பாத்திரனாச் செய்குவாய். தாமரைக் கொப்பாகிய தடங் கண்களை உடையவனே ! எச்சரிக்கை.

அருமாமறை களவாடிய அடல் சோமுகசுரனை
பெரு மச்சவதாரங்கொடு பிளந்தோய் எச்சரிக்கை.

அரிய சிறப்பினை வாய்ந்த இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்கு வேதங்களையும் திருடிக் கொண்டு ஓடிக் கடல் புகுந்த தபோ பலத்தினால் பெற்ற நிகரில்லாத ஆற்றலை வகித்த சோமுகாசூரன் என்பவன் தருக்கு ஒழிய, அக்கணமே தேவர்கள் வேண்டுகோளுக்கிரங்கி பெரிய மச்சாவதாரத் திருமேனி கொண்டெழுந்தருளி அவன் மார்பைப் பிளந்து அழித்தவனே! எச்சரிக்கை

விருப்பாய்சுரர் திருப்பாற்கடல் மேவிக் கடைந்திடுநாள்
உருப்பாய்ந்திடு கூர்மத்துரு உற்றோய் எச்சரிக்கை.

மிர்தத்தினின்றும் நீங்கற் பொருட்டு மிக்க சந்தோஷத்தினால் தேவர்கள் யாவரும் ஒருங்கு
கூடி ஷீராப்தியினின்றும் அமிர்தம் எடுக்க மந்தர கிரியை மத்தாகவும் வாசுகியைத் தாம்பாகவுங் கொண்டு கடைந்திட்ட போது அம் மந்தரகிரி நிலத்தில் புதைந்து எழாது நிற்க அத் தருணம் எழிலமைந்த ஐயுருவமையப் பெற்ற கூர்மாவதாரத் திருவுருவங் கொண்டெழுந்தருளி அம்மந்தரகிரியை முதுகினால் தாங்கி தேவர்களைக் காத்து அமிர்தம் பகிர்ந்தவனே !எச்சரிக்கை.

பாயாய் தரை சுருட்டும் படும்பாவி இரண்யரக்கண்
மாயப்பெரும் கோலத்துரு மகிழ்ந்தோய் எச்சரிக்கை

பஞ்சபூத காரிய சராசர பேதமாகத் தெற்றென விளங்கும் இந்நில உலகத்தை தன்னுடைய தபோ பராக்ரமத்தினால் பாயாகச் சுருட்டி கக்கத்தில் வைத்ததோடி நரகில் கோட்டை கட்டி அதனுட் ஒளித்த மிக்க பாதகனாகிய ஹிரண்யாக்ஷன் என்பவன் உயிரை எமன் உண்டு போக பெரிய வராஹ திருவவதார திருமேனி கொண்டருளி தனது வலிமைமிக்க கோட்டினால் குத்தித் தூக்கி எறிந்து அழித்தவனே எச்சரிக்கை

எனக்கோர் தெய்வம் எதிரில்லெனும் இரண்யக் கசிபவனை
சினந்தே வரு தூணின் நரசிங்கா எச்சரிக்கை.

இராகத் துவேஷத்தினால் கட்டுப்பட்டு அஞ்ஞான மல மாயாதிகளால் நெற்றுண்டு
நான் என்னும் ஆணவப் பெரும் பேய்ப் பிடித்துத் தன் சுதந்திரம் பாராட்டி எனக்கு நிகர் அகிலத்தில் ஒன்றுமில்லை; எந்தத் தெய்வமுமில்லை ; நானே தெய்வமெனக் கூறித் திரிந்த மிக்க வலி யமைந்த இரண்யக்கசிபு என்னும் துஷ்டனை நிக்ரஹஞ்செய்து, பழ வன்பிற் சிறந்த இளங்குழவியாகிய பிரகலாதாழ்வானென்னும் சிஷ்டனைக் காத்து ரக்ஷித்து அனுக்கிரஹஞ்செய்வான் வேண்டி ஆற்றொணாப் பெருங்கோபமுற்று ஆங்கு எதிரில் இருந்த ஓர் தம்பத்தின் கண் நரசிங்காவதாரத் திருமேனி கொண்டருளி க்ஷணமே அவன் மணிக்குடலைப் பிடுங்கிக் கழுத்தில் மாலையாகத் தரித்தவனே! எச்சரிக்கை.

ஒருமாபலிப் பெருமாவலி உற்றே யழித்திடவே
அருவமனனென வந்திடும் அச்சுதா எச்சரிக்கை.

தனக்கு நிகரில்லை யெனத் தருக்குற்று வாழ்ந்த மஹாபலிச் சக்ரவர்த்தியின் மிகுந்த பராக்கிரமத்தை அழித்து, அவன் அடங்குமாறு வாமனாவதாரத் திருமேனி கொண்டருளி அச்சக்ரவர்த்தியினிடம் மூன்றடி மண் யாசித்து மண்ணும் விண்ணும் ஈரடியால் அளந்து மற்றோரடிக்கு இடம் இல்லாமையால் அவன் சிரத்தில் பாதத்தை அமைத்து பாதாளத்தில் இறுத்தி அவன் ஆற்றலடக்கின புருடோத்தமனே ! அச்சுதனே! எச்சரிக்கை

உயரந்தணர் நிமித்தம் உலகரசர் தமைக் கொல்ல
செயமேவிய வடிவாம் பரசுராமா எச்சரிக்கை.

பிருகு வம்சத்தில் பிறந்த ஜமதக்கினி என்னும் பிராமணோத்தமருக்கும் ஸ்ரீரேணுகா தேவிக்கும் செல்வத் திருக்குமாரனாய்த் தோன்றி தனக்கு எவரும் எதிரில்லை யெனத் திரிந்து வாழ்நாளில், தந்தையை ஓர் க்ஷத்திரிய வம்சஸ்தன் -கார்த்த வீர்யார்ஜுனன் -கொல்லக் கோபமுற்று இது முதல் க்ஷத்திரியப் பூண்டுகளைக் கரு வறுப்பேனென பிரதிக்ஜை செய்து, மிக்க பராக்கிரமமும் அழகிய வடிவும் அமைந்த பரசு என்னும் ஆயுதம் ஏந்தி பரசுராமாவதாரத் திருமேனி கொண்டு எழுந்தருளினவனே ! எச்சரிக்கை.

வலமேவிய இலங்கைத்தலம் வளர் ராவணன்
அழிவுற்று இலகத் தசரத புத்ர ஸ்ரீ ராமா எச்சரிக்கை

தேவர்கள் யாவரும் மும்முறை வலம் வந்து தொழும் பெருமை வாய்ந்துள்ள -முன்னொரு கல்பத்தில் குபேரனுடைய வாசஸ் ஸ்தானமாக இருந்த -இலங்கைத் தலத்தில் மிக்க கீர்த்தி வளரப்பெற்ற ராவணேஸ்வரனும் இவன் கிளைகளும் அழிய ஆஞ்சநேயர் முதலான சேனாவசினியப் பெருக்கோடு சென்று அழித்து தன் பராக்கிரமத்தை நிலை நிறுத்திய காகுத்த திலகனே -தசை திக்குகளிலும் தன் ரத்தத்தைச் செலுத்தி வெற்றி கொண்ட தசரத சக்ரவர்த்திக்குத் திருக்குமாரனாக ஸ்ரீ ராமாவதார திருமேனி தரித்து எழுந்தருளினவனே -எச்சரிக்கை –

ப்ரலம்பன் முற்பலராக்கதர் பிரதாபங்கள் கெடவே
திரமேவிய பலராமனாய் திகழ்வாய் எச்சரிக்கை

யாவராலும் அழியப்படாத வரங்களைப் பெற்று சொர்க்க மத்திய பாதாளங்களை எல்லாம் கிடு கிடு என்றும் நடுங்கச் செய்து ஆணவத்தால் அழிந்த ப்ரலம்பன் முதலான மஹா கொடிய இராக்கதர்களை நிக்ரஹித்து அவர்களுடைய வீர பிரதாபங்கள் கெட்டொழியத் திறம் அமைந்த பலராமாவதாரத் திருமேனி பூண்டு உலகம் புகழ வந்தருளினவனே எச்சரிக்கை –

சீர் பாரதம் நடக்கத் திருவுள்ளம் கொடு செப்பும்
ஓர் கிருட்டினப் பரமாய் வரும் உச்சிதா எச்சரிக்கை

துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்யும் பொருத்தும் கௌரவர் முதலானவர்களுடைய வீறு அழியவும் -பூமிப்பாரம் ஒழியவும் பாண்டவர்களுடைய சத்தியம் எங்கும் செழிக்கவும் கருணை ஸ்வரூபனாய் திருவுள்ளம் கொண்டு ஸ்ரீ மஹா பாரதம் நடத்த சொல்வதற்கு அரிய கிருஷ்ண பரம அவதாரம் கொண்டு எழுந்தருளிய அகில லோக சரண்யனே உச்சிதனே எச்சரிக்கை

வெற்றிப் பெரும் உலகம் தன்னை வீறுற்று அழித்திடவே
கற்கிப் பெயர் புனை சக்கரக் கையா எச்சரிக்கை

ஜயம் பெற்ற இப்பூவுலகில் கண் ஸத்யம் பிறழ்ந்தும் அஸத்யம் உறழ்ந்தும் காம க்ரோத மத லோப மோக மாத்சர்யங்களால் அழிந்துமுள்ள வன் நெஞ்சம் பொருந்தின பெரும் பாதகர்களை அழித்து உலகில் ஸத்யம் செழித்து நிலத்து ஒங்க பத்தாவது அவதாரமான கற்கி அவதார திருமேனி பூண்டு விளங்குபவனே -அழகிய சங்கு சக்கரங்களை ஏந்திய திருக்கரங்களை யுடையவனே எச்சரிக்கை


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தில் ஸ்ரீ ராமானுஜ ஸப்த பிரயோகங்கள்-

October 24, 2025

ஸ்ரீ அயோத்யா காண்டம்
ஹா ராம ராமானுஜ ஹா ஹா வைதேஹி தபஸ்விநி
ந மாம் ஜாநீத துக்கேந ம்ரியமாணம் அநாதவத் –2-59-27-

ஸ து ராமாநுஜ சாபி சத்ருக்ந ஸஹித ததா
ப்ரதஸ்தே பரத யத்ர கௌசல்யாயா நிவேஸநம் –2-75-8-

ஸ்ரீ கிஷ்கிந்தா காண்டம்
ததஸ்து ராமாநுஜ ராம வாநர ப்ரக்ருஹ்ய ஸாஸ்த்ராணி உதித உக்ர தேஜஸ
புரீம் ஸூரேஸாத்மஜ வீர்ய பாலிதாம் வதாய சத்ரோ புநராகதா இஹ -3-13-30-

அவஷ்டப்ய அதிஷ்டந்தம் ததர்ஸ தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்து சைவ ததா அநுஜம் –3-19-25-

ஸ காமிநம் தீநம் அதீன சத்த்வ சோகாபி பன்னம் ஸாமுதீர்ண கோபம்
நரேந்திர ஸூநு நரேந்திர புத்ரம் ராமாநுஜ பூர்வஜம் இதி உவாஸ –3-31-1-

யதா உக்த காரி வசனம் உத்தரம் சைவ ஸ உத்தரம்
ப்ருஹஸ்பதி ஸமோ புத்த்யா மத்த்வா ராமாநுஜ ததா –3-31-12-

ஏஷ ராமாநுஜ ப்ராப்த த்வத் ஸகாஸம் அரிந்தம
ப்ராதுர் வ்யஸன சந்தப்த த்வாரி திஷ்டதி லஷ்மண –3-31-33-

ந ராம ராமாநுஜ ஸாஸநம் த்வயா கபீந்த்ர யுக்தம் மனஸாபி அபோஹிதம்
மநோ ஹி தே ஜ்ஞாஸ்யதி மாநுஷம் பலம் ஸ ராகவஸ்ய அஸ்ய ஸூரேந்த்ர வர்சஸ–3-32-22-

ஸ்ரீ ஸூந்தர காண்டம்
நூநம் ஸ காலோ ம்ருக ரூபா தாரே மா மல்பபாக்யம் லுலுபே ததா நீம்
யத்ர ஆர்ய புத்ரம் விஸ ஸர்ஜ மூடா ராமாநுஜம் லஷ்மண பூர்வஜம் –4-28-10-

அறிவிலியான நான் எந்த சமயத்தில் சக்ரவர்த்தித் திருமகனுடைய தம்பியானவரான இளைய பெருமாளையும், இளைய பெருமாளுடைய தமயனாராய், எனது கணவரான பெருமாளையும் விரட்டி விட்டேனோ, அப்போதே ஸுப்ரஸித்தனான யமன் மானாக உருக் கொண்டு அற்பமான புண்ணியத்தை யுடைய என்னை வஞ்சித்து விட்டான்.]

உபஸ்திதா ஸா ம்ருது ஸர்வ காத்ரீ ஸாகாம் க்ருஹீத்வாத நகஸ்ய தஸ்ய
தஸ்யாஸ்து ராமம் ப்ரவி சிந்த யந்த்யா ராமாநுஜம் ஸ்வம் ச குலம் ஸூபாங்க்யா –4-28-19-

பரிஸ்ரமாத் ப்ரஸுப்தா ச ராகவாங்கே அப்யஹம் சிரம்
பர்பாயேண ப்ரஸுப்தஸ் ச மமாங்கே ப,ரதாக்ரஜ: ]ரா-ஸு 38-21]
[ராகவனுடைய திருத்தொடையில், நான் களைப்பினால் வெகுநேரம் தூங்கினேன். பரதனுடைய தமையனாரான அவரும் என் தொடையில் தூங்கினார். ]

ஸ்ரீ யுத்த காண்டம்
ஸ பாண வர்ஷம் து வவர்ஷ தீவ்ரம் ராமானுஜ கார்முக ஸம் ப்ரயுக்தம்
ஷுரார்த சந்த்ரோத்தம கர்ணி பல்லை ஸராம்ஸ் ச சிச்சேத ந சுஷுபே ச –5-59-101-

தத் த்ருஷ்ட்வேந் த்ரஜிதா கர்ம க்ருதம் ராமாநுஜ ததா
அசிந்தயித்வா ப்ரஹசன்நைதத் கிம் சிதிதி ப்ருவந் –5-88-52-

ஸ்ரீ உத்தர காண்டம்
இதோ கச்சதா பஸ்யத்வம் வத்யமானம் மாஹாத்நா
ராமாநுஜேந வீரேண லவணம் ராக்ஷஸ உத்தமம் –6-61-29-

ததோ ராமாநுஜ க்ருத்த காலஸ் யாஸ்த்ரம் ஸூதாருணம்
ஸம் வர்தம் நாம பரதோ கந்தர் வேஷ்வப்ய யோஜயத் –6-91-6-

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ மஹரிஷி ஜாபாலி! –

October 24, 2025

ஸ்ரீ ஜாபாலி என்ற பெயரில் நான்கு மஹரிஷிகள் இருப்பதை புராண, இதிஹாஸங்களில் காண்கிறோம்.

நாம் இங்கு ராமாயண காலத்து மஹரிஷியான ஜாபாலி குறித்து மட்டும் பார்ப்போம்.ஜாபாலி ராமரைப் பார்த்துக் கூறிய நாத்திக வாதம் வால்மீகி ராமாயணத்தில் மட்டுமே உள்ளது; கம்ப ராமாயணத்தில் கம்பன் இதைச் சொல்லவில்லை.

தசரதரின் அரசவையில் எட்டு ரிஷிகள் இருந்ததாக வால்மீகி ராமாயணம் பால காண்டம் 48ஆம் ஸர்கத்தில் காண்கிறோம். சுயக்ஞர், வாமதேவர், ஜாபாலி, கஸ்யபர், வசிஷ்டர் போன்றோர் தசரதரின் அரண்மனையில் வசித்து வந்து அவருக்கு ஆலோசனைகள் கூறி வந்தனர்.

பரதன் ராமரை மீண்டும அயோத்திக்கு வருமாறு வேண்டிக் கொள்ள ஆரண்யம் சென்ற போது ஜாபாலியும் பரதனுடன் கூட வே சென்றார்.

அங்கு அவர் ராமரிடம் மீண்டும் அயோத்தி வருவதற்காகப் பல காரணங்களைக் கூறினார். இவையனைத்தும் ராமருக்கும் கோபத்தை உண்டு பண்ணின. ஒரு மஹரிஷியிடம் ராமர் கோபம் கொண்டது இந்த ஒரு தடவை தான் என்பதைப் பார்த்து வியக்க முடிகிறது.

ஏன் ராமர் கோபம் கொண்டார் எனில் ஜாபாலி ராமரிடம் கொண்ட அளவு கடந்த அன்பால் நாத்திக வாதம் பேச ஆரம்பித்தார்.

அதையெல்லாம் செவி மடுத்த ராமர் அஸத்தியத்தைப் பேசும் அவரது ஒரு வார்த்தையைக் கூடத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்ட வட்டமாகத் தெரிவித்தார்.

அது மட்டுமல்ல,

“விஷமபுத்தியைக் கொண்ட உம்மை எனது தந்தையார்  தமது சேவையில் சேர்த்துக் கொண்டார் என குற்றம் சாட்டுகிறேன். இப்படிப்பட்ட தவறுதலான வழிகாட்டும் புத்தியால் உண்மையை விட்டு விலகும் நாஸ்திகத்தில் நீர் வீழ்ந்து விட்டீர்” என்று கடுமையான வார்த்தைகளையும் ராமர் கூறுகிறார்.

“நிந்தாம்யஹம் கர்ம பிது: கர்தும் த

த்யஸ்த்வாமாஹ்ரிநாத்ய விஷமஸ்த புத்திம்

புத்தயாநயைர்ஏவம் வித்யயா சரந்தம்

சுநாஸ்தீகம் தர்மர்பயாதபேதம் ||

33. aham = I; nindaami = accuse; tat = that; karma = act; kR^itam = done; pituH = by my father; tvam aagR^ihNaat = in taking you into his service; yaH = you; viSamastha buddhim = with your misleading intelligence; charantam = moving; evam vidhayaa = with this type; buddhyaa = of intelligence; sunaastikam = a firm atheist; apetam = fallen; dharma pathaat = from the true path.

“I accuse the act done by my father in taking you into his service, you with your misleading intelligence, a firm atheist fallen from the true path.”

இப்படி ராமரைக் கோபமுறை வைத்த அவர் பேசிய நாத்திக வாதம் என்ன என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

ஜாபாலி பற்றி மஹாபாரதம், அநுசாஸன பர்வத்தில் நான்காம் அத்தியாயத்தில் 55வது ஸ்லோகத்தில் ,”அவர் விஸ்வாமித்திரரின் புதல்வர்களில் ஒருவர்” என குறிப்பிடுகிறது.

ஆனால் அவர் வசிஷ்டரிடம் சிஷ்யராக இருந்து பாடம் கேட்டார். (வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் இடையே உள்ள போட்டி, பகையை நினைத்தால் இது சற்று ஆச்சரியமாகத் தான் இருக்கும்!)

வியாஸர் வேதத்தை நான்காக வகுத்து அதர்வண வேதத்தை சுமந்துவுக்குக் கற்பித்தார். சுமந்து தனது சிஷ்யர் கபந்தருக்குக் கற்பிக்க, அவர் அதை இரண்டு பகுதிகளாக்கி  தமது இரண்டு சிஷ்யர்களான தேவதர்ஸருக்கும் பத்யருக்கும் கற்பித்தார்.

தேவதர்ஸர் தனது சிஷ்யர்களான மகதர், ப்ரஹ்மபாலி, சௌத்காயனி ஆகியோருக்கு இதைக் கற்பிக்க பத்யர் தமது பங்கிற்கு தான் கற்றதை ஜாபாலி, குமுதர், சௌனகர் ஆகிய மூவருக்குக் கற்பித்தார்.

ஆக ஜாபாலி அதர்வண வேதத்தில் நிபுணர் என்பது தெரியவருகிறது. இந்தத் தகவல்களை விஷ்ணுபுராணம் மூன்றாம் அம்சத்தில் தெரிவிக்கிறது.

வால்மீகி ராமாயணத்தில் பட்டாபிஷேக ஸர்க்கத்தில் (யுத்த காண்டம் 131வது ஸர்க்கம், 60ஆம் ஸ்லோகம்) ராமரின் பட்டாபிஷேகத்தின் போது அந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆசி கூறிய ரிஷிகள் எண்மர். வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஸ்யபர், காத்யாயனர், சுயக்ஞர், கௌதமர், விஜயர் ஆகிய இந்த எண்மரில் ஜாபாலியும் ஒருவர். இவர் ராமரின் மீது கொண்ட பேரன்பாலேயே அவர் அயோத்திக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆசையினாலேயே நாத்திகவாதத்தை முன் வைத்தார் என்று கொள்ள வேண்டியிருக்கிறது.

ஜாபாலி வாதம் இன்றைய நாஸ்திகர்களுக்கு பெரிதும் பிடித்த வாதம்.

ஓ! ராமா! தனது தேசத்தின் ஒழுக்கங்களில் பற்றுடையவனும் குலதர்மானுஷ்டம் உடையவனுமான்  உனக்கு பாமர மனிதனுக்கு ஏற்ற இந்த சமயத்திற்கொவ்வாத புத்தி நிச்சயம் கூடாது. (அயோத்யா காண்டம் அத்தியாயம் 108 ஸ்லோகம் 2)

யாருக்கு யார் பந்து? யாரால் யாருக்கு என்ன ஆக வேண்டும்? ஏனெனில் ஒரு ஜீவன் தனியாகவே பிறக்கிறது. தனியாகவே இறக்கிறது. (3)

ஒ! ராமா! எந்த மனிதன், “இவர் எனது தந்தை,இவள் எனது தாய்” என்று பாசம் வைக்கிறானோ அவன் முழுப் பித்தன் என்று அறி!  எவனும் எவனுக்கும் எந்த உறவும் இல்லை. (4)

ஓ! ராமா! ஒரு மனிதன் ஒரு கிராமத்தைக் கடக்கும் போது ஓரிடத்தில் இரவைக் கழிக்கிறான். அடுத்த நாள் அந்த இடத்தை விட்டுக் கிளம்பி தனது பயணத்தைத்  தொடர்கிறான். அதே போலத் தான் தாய், தந்தை, வீடு, உடைமைகள் எல்லாம்! அவை தங்குமிடமே! புத்திசாலி அவற்றின் மேல் பற்று கொள்வதில்லை. (5,6)

ஓ! புருஷோத்தம!  தந்தையிடமிருந்து வந்த அந்த ராஜ்யத்தைத் துறந்து துன்பம் தருவதும் பல பீடைகளையுடையதுமான இதுவரை முன்னோர்களால் அனுஷ்டிக்கப்படாததுமான வக்ர வழியை நீ அனுஷ்டிக்கக் கூடாது. (7)

நகர தேவதையானது ஒற்றைப் பின்னலுடன் உன்னையே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள். உன்னை பாக்கியம் பெற்ற அயோத்தியில் அபிஷேகம் செய்து கொள். (8)

ஓ! சக்ரவர்த்தி குமாரா! தேவ லோக அரசனான இந்திரனுக்கு நிகராக அயோத்தியில் மிகச் சிறந்த அரச சுக போகங்களை அனுபவி. (9)

தசரதன் உமக்கு உறவினர் அல்லர்;  அவருக்கு நீரும் உறவுமில்லை. அரசன் வேறு; நீர் வேறு. ஆகவே நான் சொல்வதைக் கேள். (10)

இவ்வுலகில் தந்தை ஒரு ஜீவனுக்கு நிமித்த மாத்திரமே. ஒருவனுக்கு ருது நீராடியுள்ள தாயால் சேகரிக்கப்பட்ட  சுக்கிலம், சோணிதமே முழு முதற் காரணம். (11)

அந்த அரசன் அவர் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டார். இதுவே மனிதர்களுக்கு இயல்பு. ஆகவே பொய்யான சம்பந்தத்தால் நீ துன்புற்றுக் கொள்கிறாய். (12)

பொருள், தர்மம் இவற்றில் எவரெல்லாம் பற்றுள்ளவர்களோ அவர்களைக் கண்டு நான் வருந்துகிறேன். மற்றவர்களைப் பற்றி நான் வருந்தவில்லை. ஏனெனில் அவர்கள் இவ்வுலகிலும் துன்பத்தை அடைந்து  செத்தும் அழிந்தனர். (13)

இந்த மூட ஜனம் அஷ்டகா சிரார்த்தம் (எட்டாம் நாள் கிரியை), பிதிரு சிரார்த்தம் என்று இதுவே நோக்கமாக அனுஷ்டிக்கிறது. எவ்வளவு உணவு வீணாகிறது என்று நீயே பார்! செத்த மனிதன் எப்படி உண்ணுவான்? (14)

அன்னமானது ஒருவனால் இங்கு உண்ணப்பட்டு இன்னொரு உடலைச் சேருமானால், தூரப் பயணம் மேற்கொண்டு வேறு தேசம் செல்பவனுக்கு இவ்விடத்திலேயே சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும். அப்போது அவர்களுக்கு வழியில் கட்டுச்சாதம் தேவையில்லை. (15)

யாகம் செய்; தானம் கொடு; தீக்ஷை மேற்கொள்; தவம் புரி; அனைத்தையும் துற என்று கூறும் இந்த நூல்கள் தானங்களில் ஆசை உண்டு பண்ணுவதற்காக புத்திமான்களால் செய்யப்பட்டவையே! (16)

ஓ! புத்திசாலியே! ஆகவே,  இந்த உலகமன்றி பரலோகம் இல்லை என்றே தீர்மானி!! எது கண்களுக்கு புலன் ஆகின்றதோ அதை மட்டும் எடுத்துக் கொள்; கண்ணுக்குப் புலன் ஆகாததை விட்டு விடு. (17)

பரதனால் வேண்டப்பட்ட நீ,உலகத்தார் எல்லோரும் ஒப்புக் கொண்ட முன் சொன்ன நிச்சயத்தை முன்னிட்டு ராஜ்யத்தை ஏற்றுக் கொள். (18)

இப்படி ஜாபாலி நாத்திகர்களுக்குத் தலைவனாக இருந்து அந்தப் பழைய காலத்திலேயே நாத்திகத்தைச் சொல்லி இருக்கிறார்.  இதை ராமர் தூக்கி எறிந்து விட்டார்.

“அஸத்தியத்தைப் பேசாதீர்” என்று அவரை அடக்கி விட்டார். அவர் மீது சிறிது கோபமும் கொண்டார். ராமரின் பதிலையும் மஹரிஷி ஜாபாலி பற்றிய இதர சில விஷயங்களையும் அடுத்த கட்டுரையில் காண்போம்!

ஜாபாலி ராமரைப் பார்த்துக் கூறிய நாத்திக வாதத்தை, ராமர் வெறுத்து ஒதுக்குவதை வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் 109வது ஸர்க்கம் விரிவாகச் சொல்கிறது. இந்த ஸர்க்கம் 40 ஸ்லோகங்களைக் கொண்டது.

அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

ஜாபாலியின் நாத்திக வாதத்தைக் கேட்ட ராமபிரான் தனது சுபுத்தியாலேயே இப்படிச் சொல்ல ஆரம்பித்தார் என்று முதல் ஸ்லோகம் கூறி இயல்பாகவே ராமர் ஆத்திகர் என்பதைக் கூறுகிறது. (இறைவன் ஒரு ஆத்திகன்!)

நீர் சொல்வது செய்யக் கூடாதது (அகார்யம்!), இதமளிக்காதது (அபத்யம்).

ஒருவன் சுசியா அல்லது அசுசியா என்பதை ஒழுக்கம் ஒன்றே உரைக்கின்றது. (சாரித்ரம் ஏவ வ்யாக்யாதி)

ராஜானுஷ்டானம் சத்யம் மட்டுமே தான்! (ராஜவிருத்தம் சத்யம் ஏவ!)

சத்யம் ஏவ பஜேத்! (ஒவ்வொருவனும் சத்யத்தையே சர்வமுமாகக் கொள்ள வேண்டும். சத்யத்தை  மேற்கொண்ட நான் அதன்படியே நடப்பேன்!)

பரலோக நம்பிக்கை கொண்டவனாக இருந்து கொண்டு உலக வாழ்வை நடத்துவேன். (ச்ரத்ததான: சன் லோகயாத்ராம் ப்ரவர்த்தயே)

ஒரு புத்திமானானவன் ஜனங்களுக்கு நாத்திகவாதத்தால் சந்தேகப்படுபவனாக எவன் ஒருவன் இருக்கிறானோ அவனுக்கு முகமே கொடுக்க மாட்டான். (நாத்திகவாதியை முகத்தாலும் பார்க்க மாட்டான்!)

     கோபத்துடன் (சரோஷம்) இப்படிக் கூறிய ராமரைப் பார்த்து தணிந்த குரலில் ஜாபாலி கூறினார் இப்படி : நான் நாத்திகர்களுடைய வசனத்தைச் சொல்லவில்லை. (அஹம் நாஸ்திகானாம் வசனம் வ்ரவீமி ந). நான் நாத்திகனும் இல்லை. (அஹம் நாஸ்திக: ச ந) எதுவும் இல்லை என்பதும் இல்லை (கிஞ்சன ந அஸ்தி ந). சமயத்திற்கேற்றபடி ஆத்திகனாய் இருப்பேன். (காலம் சமீக்ஷய ஆஸ்திக: பவேய). இச்சமயத்தில் சமயத்திற்கேற்றபடி நாஸ்திகனாய் இருந்தேன். (காலே புன: ஏவ நாஸ்திக: அபவம்)

இப்படி  ஒரேயடியாக மாறிய (பல்டி அடித்த) மஹரிஷி ஜாபாலி ராமரை திருப்பி அழைத்துப் போவதன் பொருட்டே தனது வார்த்தைகள் சொல்லப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறார்.

இப்படியாக ஜாபாலியின் போலி வாதம் ஒரு முடிவுக்கு வந்தது.

அடுத்து ஜபல்பூர் நகரமே ஜாபாலி மஹரிஷியின் பெயரால் அமைந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நர்மதை நதிக் கரையில் ஜாபாலி வெகு காலம் தவம் புரிந்ததாகவும் நாம் காண்கிறோம்.

திருப்பதியில், கோவிலிலிருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் ஜாபாலி தீர்த்தம் என்று ஒரு அழகிய தீர்த்தம் உள்ளது. இந்த இடத்தில் தான் மஹரிஷி ஜாபாலி தவம் செய்து முக்தி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது.

இங்கு ஒரு ஆஞ்சனேயர் ஆலயமும் அஞ்சனா தேவி தீரத்தமும் உள்ளன.

திருப்பதியில் உள்ள இன்னொரு பிரசித்தி பெற்ற தீர்த்தமான பாபவினாசன தீர்த்தமும் கூட ஜாபாலி மஹரிஷியுடன் தொடர்பு படுத்தப்பட்டு இங்கு ஜாபாலி தவம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

சென்னையிலிருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள தலம் சிங்கப்பெருமாள் கோவில். முன்னொரு காலத்தில் இது காடாக இருந்தது. அப்போது ஜாபாலி மஹரிஷி விஷ்ணு எடுத்த நரசிம்ம கோலத்தை இங்கு காண விரும்பியதாகவும்  அதன்படி விஷ்ணு அவருக்கு அருள் பாலித்து தன் நரசிம்ம கோலத்தைக் காண்பித்ததாகவும் இந்தத் தலத்தின் தல வரலாறு கூறுகிறது.

 இதே போல வட நாட்டிலும் ஜாபாலி மஹரிஷியை தொடர்பு படுத்திக் கூறப்படும் தலங்களும் உள்ளன.

மஹரிஷி ஜாபாலி விஷ்ணு பக்தர் என்பதையும் ராமரின் அரசவையில் இடம் பெற்றவர் என்பதையும் இராமாயணம் மற்றும் புராணங்கள், தல வரலாறுகள் ஆகியவற்றால் அறிந்து கொள்ள முடிகிறது.

பெரும் மஹரிஷிகளில் இடம் பெறும் ஜாபாலி வித்தியாசமான ஒரு மஹ ரிஷி!


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

அகத்தியர் மலை: பொதிகை சுற்றுலா

October 24, 2025

அகத்தியர் வாழ்ந்து வரும், தென்றல் தவழ்ந்தோடும் பொதிகை மலையை, அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர்.

தமிழ் இலக்கணம், சித்த மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைப் படைத்து, சித்தர்களுக்கெல்லாம், தலையாய சித்தராக விளங்கும் தமிழ் முனிவர் அகத்தியரை, இறைவனாகவே சித்தர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் வணங்கி வருகின்றனர் என்றால் அது மிகையாகாது. வழிபாடு என்பது நம்பிக்கையும், உளவியல்பூர்வமான உணர்வுமாகும்.

அது போலவே சித்தர் வழிபாடும். ஆம், சித்தர்களை யாராவது கண்டுள்ளார்களா என்றால் அதை விவரிக்க முடியாது. அது உளப்பூர்வமான உணர்வே.

அகத்தியர் வாழும் இப் பொதிகை மலையில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரத்திலுள்ள அகத்தியரை தரிசிக்கச் செல்வதை புனித பயணம் என்றும் சாகச பயணம் என்றும் கூறலாம்.

ஆபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும் அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள், எங்கு காணினும் இயற்கைக் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள், பசுமையான புல்வெளிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இப் பொதிகை மலை இயற்கை நமக்கு அளித்த கொடை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த அடர்ந்த காட்டில் சிறு அட்டை முதல் மான், மிளா, காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி, யானை, செந்நாய், பாம்பு, உடும்பு மற்றும் காடுகளில் உள்ள ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து வனவாழ் உயிரினங்களும் உள்ளன (அச்சம் கொள்ள வேண்டாம், அகத்தியர் துணை இருக்கிறார்).

தமிழ் முனிவரைத் தரிசிக்க கேரளத் தலைநகரான திருவனந்தபுரம் பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் முலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது.

போணக்காடு பிக்கெட் ஸ்டேசனிலிருந்து நடக்கத் தொடங்கிய அரை மணி நேர பயணத்தில் முதலில் அடைவது, முழு முதல் கடவுளான விநாயகர் கோவிலை. அங்கு அவரை வணங்கி, அவரது துணையுடன் (வழியில் யானைகளால் நமக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கு வேண்டுமென்றாலும் சரி, நாம் எந்தச் செயலைத் தொடங்கினாலும் விநாயகரை வழிபட்டுத்தான் தொடங்குவோம் என்ற நிலையில் எடுத்து கொள்ளலாம்) நடைப்பயணம் மீண்டும் தொடங்குகிறது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் கரமனையாறு என்ற பகுதியை அடைகிறோம். இங்கிருந்துதான் அடர்ந்த வனப்பகுதி தொடங்குகிறது. ஒருவர்பின் ஒருவராக நடந்து செல்ல வேண்டும். சில இடங்களில் கொஞ்சம் அகலமான பாதையும் உண்டு.

இவ்வாறு மலை ஏற்றம், இறக்கம், சிற்றாறு, அருவிகள், புல்வெளி, அடர்ந்த வனம் ஆகிய வழிகளில் நடந்து, சுமார் 6 மணி நேர பயணத்தில் (நன்றாக நடைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரம் ஆகலாம்) அதிருமலை எஸ்டேட் என்ற இடத்தை அடைகிறோம். அங்கு கேரள வனத் துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்குகிறோம்.

குறுமுனிவரின் வழிபாட்டுக்குக் கொண்டு செல்லும் பூஜைப் பொருள்களை எடுத்துக் கொண்டு, அதிருமலையில் காவல் தெய்வமாக உள்ள தெய்வத்தை (கருப்பசாமி என்றுóம், வனதேவதை என்றும் கூறுகின்றனர்) வணங்கிவிட்டு நடைப்பயணம் தொடங்குகிறது.

சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் மிகவும் அடர்த்தியான வனப் பகுதியைக் கடந்து (இப் பகுதி முழுவதும் யானைகள் வாழ்விடமாகும்) பொதிகை மலையின் அடிவாரத்தை அடைகிறோம். அங்கு சிறிது நேரம் ஓய்வு, அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு (இது முற்றிலும் மூலிகை நீரைக் கொண்டது) மீண்டும் நடைப்பயணம் தொடங்குகிறது. 15 நிமிட நடைப்பயணத்தில் தமிழக வனப் பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடத்தை அடைகிறோம்.

இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது.(இப் பகுதி சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர் வந்துள்ளது என்கின்றனர்) கேரளத்தினர் இப் பகுதியை பொங்காலைப்பாறை என்று கூறுகின்றனர். (இப் பகுதியில் உள்ள பாறைகளில் நமது வீடுகளில் உள்ள மாவு அரைக்கும் ஆட்டுக்கல் குழி போன்று உள்ளது. இதில் சித்தர்கள் மூலிகைகள் அரைக்க பயன்படுத்துகின்றனர் என்ற செவிவழிச் செய்தியும் உள்ளது) கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது.

இச் சங்கு முத்திரை பகுதியின் மற்றொரு பள்ளத்தாக்கில் நமது வற்றாத ஜீவநதியாம், பொருநை என்று அழைக்கப்படும் தாமிரவருணி உற்பத்தி இடமான பூங்குளம் சுனை உள்ளது.

இந்த சங்கு முத்திரை பகுதியிலிருந்துதான் பொதிகை மலையை நோக்கிய மிகவும் செங்குத்தான பாதை தொடங்குகிறது. இப் பாதையில் பெரும் பகுதி பாறைகளாகவே காணப்படுகிறது. இச் சிகரத்தின் பாதி உயரம் வரை, இடது புறத்தின் மரங்கள் நிறைந்த மழைநீர் வழியும் சாய்வான பகுதி வழியே ஏறி சென்று, பின் வழித்தடங்கள் அற்ற பாறைகள் வழியே துன்பத்தைப் பொருள்படுத்தாது, காலும், கையும் ஊன்றி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி, நாக்கு வறண்டு, பின் செங்குத்தான பகுதியில் கயிறு மற்றும் இரும்புக் கயிறு (ரோப்) பிடித்து கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம்.

(சுமார் 2,000 அடி உயரம் கொண்ட இச் செங்குத்தான பகுதியை நாம் கடந்து செல்லும்போது நமது உடலில் உள்ள அனைத்து அவயங்களும் வேலை செய்யும், இப்படி ஒரு பயணம் நமக்குத் தேவைதானா என்றுகூட சிலருக்கு எண்ணம் ஏற்படலாம்.)

அங்கு குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறு முனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையைத் தரிசிக்கும்போது, அந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்தத் தரிசனத்துக்குத்தான் நாம் இப்பிறவி எடுத்தோமோ என்ற நிலை நமக்கு ஏற்படும். அந்த உணர்வில் நம்மில் எத்தனை ஆனந்தம், எத்தனை உள்ளப் பூரிப்பு, வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. கண்களில் ஆனந்த நீர் மல்கி நம்மை நாம் மறக்கும் பரவச நிலையை என்னவென்று சொல்வது!

இந்த உச்சிப் பகுதியில் திடீர், திடீரென சீதோஷ்ண நிலை மாறும், சில நேரங்களில் திடீரென வெயில் ஏற்படும், சில நேரம் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர் காற்றும், சில நேரம் மழையும், சாரலும் ஏற்படும்.

மேலும் மூடுபனியுடன் பலத்த காற்று வீசும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். அப்போது அருகில் இருப்பவர் யார் என்று பகல் பொழுதில்கூட சில நேரங்களில் தெரியாது.

இப்படி ஆனந்த அனுபவத்துடன், கொண்டு சென்ற பூஜைப் பொருள்களால், குறு முனிவருக்கு அபிஷேக, ஆராதனை செய்து, கூட்டு வழிபாடு நடைபெறும். வழிபாட்டின் நிறைவில் அனைவரது வேண்டுதலும், மீண்டும் எங்களுக்கு இந்தத் தரிசன வாய்ப்பைத் தாருங்கள் என்பதாகத்தான் இருக்கும்.

தொடர்ந்து மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, மூன்று மணி நேரப் பயணத்தில் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடைந்து அங்கு உணவருந்தி விட்டு, சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் இரவு 7 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். அதன் பின் இரவு பொழுதை அங்கு கழித்துவிட்டு, மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு பயணம் தொடங்கி, சுமார் 5 மணி நேர நடைப்பயணத்துக்கு பின் போணக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பயணம் நிறைவு பெறுகிறது.

இந்த மூன்று நாள் பயணத்தின்போது சுத்தமான காற்று, மூலிகை கலந்த நீர், செல்போன் தொந்தரவு இல்லாத வெளி உலகத் தொடர்பின்மை, பார்க்கும் இடங்கள் எல்லாம் மனதைக் கவரும் பசுமை வெளி ஆகியவற்றால் நமது உடலும், உள்ளமும் புத்துணர்வு பெற்றது என்றால் அது மிகையாகது.

இந்தப் பயணத்தின்போது காட்டு மிருகங்களின் தொந்தரவு ஏற்படாமல் இருக்கவும், பயணக் களைப்பு தெரியாமல் இருக்கவும் அனைவரும் “கும்ப முனிக்கு அரோகரா, குறுமுனிக்கு அரோகரா’ என்று உச்சரித்தவாறே சென்று வருவர்.

பொதிகை மலைப் பயண அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சென்று வந்தால் மட்டுமே உணர்வுப்பூர்வமாக அறிய முடியும்.

இந்தப் பயணத்தில் விரதமிருந்து சென்று வந்தால் அகத்தியர் அருளைப் பெறலாம். ஜாதி,மதங்களுக்கு அப்பாற்பட்டு விரதமிருந்து சென்று வரும் இப்பொதிகை மலை யாத்திரையில், அகத்திய பெருமான் பக்தர்களுக்கு, ஓளி வடிவில் அவ்வப்போது காட்சி அருள்வதையும் அறியமுடிகிறது.

தமிழ் முனிவரைத் தரிசிக்க ஆண்டுதோறும் ஜனவரி 15 முதல் சிவராத்தரி வரை கேரளத்தவர்கள் தினமும் குழுவாக (நாள் ஒன்று சுமார் 200 பேர்) சென்று வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல் மாதம் முதல் சென்று வருகின்றனர். வனத்தில் அதிக மழை உள்ள நேரங்களில் பாதுகாப்பு கருதி பக்தர்களை வனத்துக்குள் செல்ல அனுமதிப்பதில்லை.

தமிழ் முனிவரைத் தரிசிக்க கேரள வனத் துறை செய்துள்ள ஏற்பாடு மற்றும் நடவடிக்கையை கேரள அரசையும், கேரள வனத் துறையையும் தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். குறிப்பாக பக்தர்களை வனத்துக்குள் அழைத்துச் செல்ல வழிகாட்டியை ஏற்படுத்தியுள்ளதைக் குறிப்பிடலாம்.

வனத்தில் ஆங்காங்கே குப்பைகள் போட, கூடைகள் வைத்து அவற்றை அவ்வப்போது எரிப்பது, முற்றிலும் விலங்குகள் நடமாட்டமுள்ள பகுதியில் பக்தர்கள் பாதுகாப்புடன் தங்கவும், அங்கு குளியலறை மற்றும் கழிப்பறைகள் ஏற்படுத்தி அவற்றை சுத்தமாகப் பராமரிப்பது உள்ளிட்ட செயல்களை பாராட்டாமல் இருக்க முடியாது. இதைத் தமிழக வனத் துறையினர் பின்பற்றுவார்களா?

தமிழ் முனிவரை தரிசிக்க, தமிழகம் அனுமதிக்க வேண்டும்: பொதிகை மலை உச்சியில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பொதிகை அடியைச் சேர்ந்த எம்.எஸ்.சுந்தரம்பிள்ளை என்பவர்தான் முதன் முதலில் 1970-ல் அகத்தியர் சிலையை நிறுவியுள்ளார் (தற்போது உள்ளது மூன்றாவது அகத்தியர் சிலை என்றும். இது கேரள அரசால் நிறுவப்பட்டது என்றும் கூறுகின்றனர்). அதுமுதல் அவரது குடும்பத்தினரும், பாபாநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், திருச்செந்தூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தமிழக வனத் துறை மற்றும் கேரள வனத் துறை அனுமதி பெற்று காரையாறு அணையிலிருந்து படகில் அக்கரைக்குச் சென்று துலக்கர் மொட்டை, உள்ளாறு, சிற்றாறு, கன்னிகட்டி வனத்துறை ஓய்வு விடுதி, பேயாறு, காட்டாறு, சங்குமுத்திரை வழியாக பொதிகை மலைக்குச் சென்று வந்தனர்.

1998-ம் ஆண்டு தமிழக வனத் துறை பொதிகை மலை செல்ல அனுமதி மறுத்து விட்டது. பின் பொதிகை மலை புனித யாத்திரைக் குழுவினர் மற்றும் பக்தர்களின் முயற்சியால், வனத் துறை சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999-ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது.

இந்நிலையில், 2009-ல் தமிழக வனத் துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல அனுமதி மறுத்ததுடன், கேரளம் வழியாக செல்ல அறிவுறுத்தியது. தற்போது தமிழக பக்தர்கள் கேரளம் வழியாகச் சென்று வருகின்றனர். இதனால் பக்தர்களுக்கு கூடுதல் வழிப் பயணம் மற்றும் பயணச் செலவு ஏற்படுகிறது.

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் தங்களோபாதி பிரகிருதி மான்களாகநினைத்து இருக்கும் புல்லிமை இன்றிக்கேயாய் யற்று இருப்பது-

October 24, 2025

வார்த்தை -275-
நம் மனிச்சர் ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் தங்களோபாதி பிரகிருதி மான்களாக
நினைத்து இருக்கும் புல்லிமை இன்றிக்கேயாய் யற்று இருப்பது –
திரு உடை மன்னர் -திருவாய்மொழி -4-4-8-
செழு மா மணிகள் -திருவாய்மொழி -5-8-9-
நிலத்தேவர் -திருவாய்மொழி -7-10-10-
தெள்ளியார் -நாச்சியார் திருமொழி -4-1-
பெருமக்கள் -திருவாய்மொழி -3-7-5-
பெரும் தவத்தார் -திரு நெடும் தாண்டகம் -24-
உரு உடையார் இளையார் -நாச்சியார் திருமொழி -1-6-
சிறு மா மனிசர் -திருவாய்மொழி -8-10-3-
எம்பிரான் தன் சின்னங்கள் அவர் இவர் -பெரியாழ்வார் திருமொழி -4-4-9-
எம் குல நாதரான ஆழ்வார்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இப்படி திரு நாமம்
சாத்துகையாலே கேவலம் தன்னோடு ஒக்க மனுஷ்யன் என்று நினைத்து இருக்ககை அபசாரம்

(ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த- -ஸ்ரீ மாணிக்க மாலை-நல்லடிக் காலத்தில்  நம்மாச்சார்யர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களை தங்களோ பாதி பிரக்ருதிமான்களாக நினைத்து இருக்கும் புல்லிமை இன்றிக்கே யாயிற்று இருப்பது –
திருவுடை மன்னர் –
செழு மா மணிகள் –
நிலத் தேவர் –
தெள்ளியார் –
பெரு மக்கள் –
பெரும் தவத்தர் –
உருவுடையார்  இளையார் 
ஒத்து வல்லார் –
தக்கார் மிக்கார் –
வேதம் வல்லார் –
வேத விமலர் –
சிறு மா மனிசர் –
எம்பிரான் தன் சின்னங்கள் -என்று
நம் குல நாதரான ஸ்ரீ ஆழ்வார்கள்- ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இப்படி திரு நாமம் சாற்றுகையாலே
கேவலம்  தன்னோடு ஒக்க ஒரு மனுஷ்யர் என்று- ஸ்ரீ வைஷ்ணவர்களை நினைத்து இருக்கை -ஸ்ரீ பாகவத அபசாரம் –

ஸ்ரீ பகவத் அபசாரம் பண்ணுகையாவது – ஸ்ரீ எம்பெருமானுடைய நல் சீவனான ஸ்ரீ வைஷ்ணவர்கள் திறத்துப் பண்ணும் அபசாரம் –

ஸ்ரீ பாகவத அபசாரம் பண்ணுகை யாவது -ஸ்ரீ வைஷ்ணவர்கள் யுடைய உயிர் நிலையான ஸ்ரீ எம்பெருமான் திறத்துப் பண்ணும் அபசாரம் –

ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷம்  ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷத்தைப் பிறப்பிக்கும் –

ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷ பர்யந்தம் அல்லது இராது-

அபாகவத ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பாகவத விஸ்லேஷத்தையும் பிறப்பித்து -ஸ்ரீ பகவத் விஸ்லேஷத்தையும் பிறப்பித்து -இவனையும் முடித்து விடும் –

ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷத்தையும் பிறப்பித்து -அபாகவத விஸ்லேஷத்தையும் பிறப்பித்து
இவனையும் எடுத்துக் கரை மரம் சேர்த்து விடும் –

இவ் வெல்லை மயக்கு ஸ்ரீ ஆசார்யன் கண் வட்டத்திலே வர்த்திக்குமவனுக்கு வாராது –
ஸ்ரீ ஆசார்யன் கண் வட்டம் விட்டால் -நித்ய சம்சாரியாய்ப் போம் இத்தனை –
ஸ்ரீ ஆசார்யனாவான் ஓட்டை ஓடத்தோடே ஒழுகல் ஓடமாய் தன்னைக் கொண்டு முழுகுமவன் அன்று –
தன்னைக் கரை ஏற்ற வல்லனாய் -தன்னை  அடைந்தாரையும் கரை ஏற்ற வல்லனான ஜ்ஞானாதி பரிபூர்ணனாய் இருப்பான் ஒருவன் –
ஸ்ரீ ஆசார்யனுடைய ஜ்ஞானம் வேண்டா -சிஷ்யனுக்கு விக்ரஹமே அமையும்
கருட த்யானத்துக்கு விஷம் தீருமா போலே ஸ்ரீ ஆசார்யனை த்யாநிக்கவே சம்சாரம் ஆகிற விஷம் தீர்த்துக் கொள்ளலாம் என்று அருளிச் செய்வார்கள் –
குரோர வஜ்ஞாயா ம்ருத்யு மந்த்ராவஜ்ஞா  தரித்ரதா  குரு மந்த்ர பரித்யாகீ ரௌரவம் நரகம் வ்ரஜேத் -என்றும் யுண்டு-)

————–

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8-

குறைவற்ற ஐஸ்வர்யத்தை உடைய ராஜாக்களை காணில் ஸ்ரீ யபதியைக் காணப் பெற்றேன் என்னும்-குறைவற்ற ஐஸ்வர்யம் உடையான் ஸ்ரீ யபதி இறே-பெரிய முதலியார் ஒரு ராஜாவைக் கண்டு அவன் பின்னே தொடர்ந்து போனார் என்னவும்-ஒரு சாமந்தன் தலையிலே அடியிட்டு ஆனையிலே ஏறுகிற போதுஅத்தைக்கு கண்டு மோஹித்தார் என்னவும் கடவது இறே-இராஜா தன் சேனையோடே கங்கை கொண்ட சோழபுரத்து ஏறப் போகச்செய்தே,பெரிய முதலியார் மன்னனார் திருவடிகளிலே சேவித்திருக்கச் செய்தே, பெண் பிள்ளை வந்து,‘நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்ணுமாய் வந்து புகுந்தார்கள்,’ என்றவாறே,‘பெருமாளும் இளைய பெருமாளும் பிராட்டியும் ஐந்திர வியாகரண பண்டிதனும்’ என்று புத்தி பண்ணிப் பின் தொடர்ந்து போய்,முன்னே போகின்றவர்கள் ‘போகின்றார்கள், போகின்றார்கள்’ என்னக் கேட்டுக் கீழை வாசலிலே சென்றவாறே,‘இப்படிப் போகின்றவர்களைக் கண்டீர்களோ?’ என்று வாசலில் அவர்களைப் பார்த்துக் கேட்க,அவர்கள் ‘கண்டிலோம்’ என்ன, அதுவே காரணமாகத் திரு நாட்டிற்கு எழுந்தருளினார் அன்றோ?-காணும் அளவும் போனாரே-

—————-

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9-

ஆராமுத ஆழ்வார் ஆதல் -திரு மழிசைப் பிரான் போல்வார் ஆதல் -புருஷ ரத்தினங்கள் சேருமூர் யாயிற்று

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-நித்ய ஸூ ரிகளைப் போலே மநோ வாக் காயங்களினால் பூ ஸூ ராரான முமுஷுக்கள் திரள் திரளாக வந்து ஆஸ்ரயிப்பார்கள்-கார்ய காரண விசாரம் -சிந்தித்தல் மனசின் கார்யம் போலே-மனம் மொழி மெய் -மூன்றாலும் செய்யும் கார்யங்களை சொன்னவாறு-

தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–4-1-

தெள்ளியார் – அவர்களும் சிலரே –அலாபத்தோடே இருந்து கூடல் இழையாதே-லாபத்தோடு இருந்து -போது போக்குகிற வர்களும் சிலரே –பிரியில் சர்வதா கூடல் இழைக்க வேணும் என்று அறிந்து-பிரியாதே நித்ய அனுபவம் பண்ணும் அத்தனை -அளவுடையவர்கள் ஆயத்து (கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-)

பலர் –த்ரிபாத் விபூதியாக அனுபவத்தோடு காலம் செல்லுகிறது இறே-இங்கு தான் ஒருத்தியுமாய் -கூடல் இழையா நின்றாள்-இங்கு வ்ருத்த கீரத்த நத்துக்கும் ஆளில்லை –
அங்கு வ்ருத்த கீர்த்தனம் பண்ண வேண்டா –பெற்ற அனுபவத்தை பேசிப் போது போக்காமல் நித்தியமாய் அனுபவம் செல்லுமே-கைந்தொழும்-நித்ய அஞ்சலி புடா -என்கிறபடியே தொழுகையே யாத்ரையாய் இருக்குமவர்கள்

பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5-

பெருமக்கள்–நித்தியசூரிகள்; ‘பெரியோர்’ என்றபடி. ‘பேராளன் பேர் ஓதும் பெரியோர்’ என்பது அன்றோ மறைமொழி?–‘மஹாத்துமாக்களோ என்றால்’ என்றும், ‘என்னையே அடைகின்றவன் மஹாத்மா ஆவான்; அவன் கிடைப்பது அரிது,’என்றும்,‘இவர்கள் நல்ல மஹாத்மாக்கள்,’ என்றும் வருவன இறைவன் வார்த்தை அலவோ? சமுசாரத்திலே முமுக்ஷீவாய் எதிர்முகம் பண்ணின மாத்திரத்திலே சொல்லுகிறபடி இதுவானால்,நித்தியசூரிகளை இப்படிச் சொல்லக் கேட்க வேண்டா அன்றே?
உள்ளவர் –‘பரம்பொருள் இலன் என்று அறிந்தானாகில் இவனும் இல்லாதவன் ஆகிறான்,’ என்பது, ஒரு நாள் வரையிலே ‘பரம் பொருள் உளன் என்று அறிந்தானாகில் இவனும் உள்ளவன் ஆகிறான்,’ என்பதாகாதே, என்றும் ஒக்க உள்ளவர்கள் என்பார், ‘உள்ளவர்’ என்கிறார்.-அசந்நேவ-சந்தமேவ ஆகாமல் நித்யர்கள்–‘சொரூபமான அடிமை ஞானம் அழியாமையாலே உள்ளவர்கள் என்கிறார்,’ என்றபடி.-நிரூபகம் இல்லையானால் நிரூபிக்கப்படும் பொருள் இல்லையாம் அன்றே?ஆக, ‘அடிமையாயிருக்கும் தன்மைக்கு ஒரு நாளும் குறைவு வாராதவர்கள்’ என்றபடி.

இரு கையில் சங்கிவை நில்லா வெல்லே பாவம்
இலங்கொலி நீர்ப் பெரும் பௌவம் மண்டியுண்ட
பெரு வயிற்ற கரு முகிலே யொப்பர் வண்ணம்
பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி
உலகுண்ட பெரு வாயர் இங்கே வந்து என்
பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து
புனலரங்க மூரென்று போயினாரே –24–

பெரும் தவத்தர் இத்யாதி –ஒருவர் இருவராய் சென்று கிட்டுகிறாரோ –அம்ருதத்தை அமரர்கள் சூழ நின்று காக்குமா போலே காண்-என்னைப் பிரிந்த சமனந்தரம் பரிகரம் வந்து சூழ்ந்து கொண்ட படி இது காண் -என்கிறாள் –
பக்த்தைர் பாகவதைஸ் ஸஹ-என்றும்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் -என்கிறபடியே
நித்ய ஸூரிகளை சொல்கிறது –பகவத் பிரேமத்தால் அதிசயித்தவர்கள் –-வணக்குடை தவ நெறி -என்று பக்தியை தபஸ் சப்தத்தால் சொல்லக் கடவது இறே –-தங்களுடைய சேஷத்வத்தையும்-அவனுடைய ஸ்வாமித்வத்தையும் உணர்ந்து இருக்குமவர்கள் பரிவராய்க் கொண்டு ஒருவர் கிட்ட ஒண்ணாத படி எங்கும் ஒக்க சூழ்ந்து நிற்கையாலும் கிட்டப் போய்த்தில்லை –

உருவுடையார் இளையார்கள் நல்லார் ஒத்து வல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காம தேவா
கருவுடை முகில் வண்ணன் காயா வண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத்
திருவுடை முகத்தினில் திருக் கண்களால் திருந்தவே நோக்க எனக்கு அருள் கண்டாய் -1-6-

வடிவுடையாராய் –யுவாக்களாய் –வ்ருத்தவான்களாய்-காம ஸூத்ரம் கண்ணழிவு அற கைவந்து இருப்பாராய்-இருக்கிறவர்களை முன்னாகக் கொண்டு-நாள் தோறும் அவன் வருகிற வழியிலே எதிர் கொண்டு-பெரிய திரு நாளிலே கலங்காதே தெளிந்து இருந்து –
உன்னை ஆஸ்ரயிக்கும் படி அன்றோ எனக்கு உண்டான த்வரை –

உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே-8-10-3-

ப்ரபாவங்களைப் பார்த்தால் -பரிச்சேதிக்கப் போகாதே -வடிவைப் பார்த்தால் நம்மோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை -சர்வேஸ்வரன் மனுஷ்ய சஜாதீயனாய் முகம் கொடுத்து கொண்டு இருக்குமா போலே யாயிற்று இவர்களும் -சிறுமை பெருமை யாகிற விருத்த தர்ம த்வய சமாவேசம் ஏக வ்யக்தியில் கூடுமோ -என்று பட்டர் ஆழ்வானைக் கேட்க -நம்மோடு ஓக்க அன்ன பானாதிகள் தாரகம் என்னலாய்-பகவத் விஷயத்தில் அவகாஹனம் பார்த்தால் -நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள் என்னலாம் படி இருக்கிற -ஆண்டான் -அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த பெருமாளார்-இவர்கள் காண் சிறு மா மனுசர் ஆகிறார் -என்று பணித்தான் -என்னை அடிமை கொண்டவர்கள் –என் கண் வட்டத்திலே சஞ்சரியா நிற்க-இவருடைய கண்ணி நுண் சிறு தாம்பு இருக்கிறபடி– ஸ்ரீ மதுர கவிகட்கும் அடி இது அன்றோ – பொய் நின்ற ஞானம் தொடங்கி-முனியே நான்முகனே -என்ற திருவாய் மொழி முடிய இவரைத் தொடர்ந்து பின் பற்றிய இடத்து-ஆழ்வார் தமக்கு பிரயோஜனமாக சொன்ன பயிலும் சுடர் ஒளி – நெடுமாற்கு அடிமை- என்னும் திருவாய் மொழி களையே தமக்கு தஞ்சமாக பற்றினார்-

கொம்பினார் பொழில் வாய் குயில் இனம் கோவிந்தன்  குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று  ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4- 9-

ப்ரீதிக்கு போக்கு விட்டு சொல்லுவார்களைக் கண்டக்கால் -கண் படைத்த பிரயோஜனம் பெறலாம்-ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே (பெருமாள் திருமொழி )-என்னக் கடவது இறே-எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று –சின்னம் என்று -அவனுடைய அடையாளம் –இவர்களைக் கண்டக்கால் -அவன் -சாத்விக சேவ்யன்-என்று தோன்றும் –அவநீத ப்ர்த்யவர்க்கன் (விநிதம் இல்லாதவ் பூத கணங்கள் )என்று இறே அவனை (ருத்ரனை )கழித்தது –கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய் -என்று அவற்றோடு வாராத போது -போகாய் -என்று இறே இவர் இருப்பது-என் ஆவி சேர் அம்மானுக்கு அந்தாம வாண் முடி சங்காழி நூலாரமுள-என்னக் கடவது -இறே-ஆசைகள் தீர்வேனே–ஆசைகள் -என்று-காண -என்றும் –கிட்ட -என்றும் –கூட இருக்க என்றும் இறே இவர்களுடைய ஆசைகள்-அவனைக் காண வேணும் -என்கிற ஆசைகள் தீரும் உகந்து அருளின நிலங்களை அனுபவித்தால் அடியார்கள் குழாங்ளை உடன் கூடுவது என்று கொலோ -என்கிற இழவுகள் தீரும் இங்கே-ஸ்ரீ வைஷ்ணவ திரள்களைக் கண்டால்-கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் (திரு விருத்தம் )-என்கிறபடியே கண்டவாறே ஆசைகள் தீரும் இறே
ஈஸ்வரனைக் கண்டால் ஆசைகள் தீராது இவர்களைக் கண்டால் ஆசை தீரும்கடிவார் தண் அம் துளி கண்ணன் (2-3-9 )-இத்யாதி-அடியேன் வாய் மடுத்து பருகிக் களித்தேனே -என்று பூர்ண அனுபவம் பண்ணின பின்பு இறே-அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -என்று பிரார்த்தித்து-தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே (3-6-10 )-என்று ஆசைகள் தீர்ந்தது-பயிலும் சுடர் ஒளி யிலே (3-7 ) இறே-திரு நாவாய் அவையுள் புகலாவதோர் நாள் ( 9-8 )-என்று அத் திரள் இறே உத்தேச்யம்-ஒண விழவில் ஒலி அதிர  பேணி வரு வேம்கடவா என்னுள்ளம் புகுந்தாய் (நான் முகன் )-என்று
அவன் வரும் இடத்தில் அவர்களும் மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு கூட வந்து புகுவார்கள் –

தக்கார் மிக்கார்களை சஞ்சலம் செய்யும் சலவரை
தெக்கா நெறியே  போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
எக் காலமும் சென்று சேவித்து இருக்கும் அடியரை
அக் கான் நெறியை மாற்றும் தண் மால் இரும் சோலையே – 4-2- 3-

தக்கார் –ஈஸ்வரனோடு கிருபை ஒத்து இருக்கும் அவர்கள்-ஈஸ்வரனுக்கு தகுதியானவர்கள்
அதாவது-நினைவு ஒன்றாய் இருக்கை-சர்வாத்மாக்களும் உஜ்ஜீவிக்க வேணும் -என்கிற கிருபை ஒத்து இருக்கை –மிக்கார்களை –அவனைப் போலே ஸ்வதந்த்ரராய் –
அபராதங்களைக் கண்டவாறே –ஷிபாமி ந ஷமாமி என்கை அன்றிக்கே-எப்போதும் ஒக்க அனுக்ரஹ சீலராய் இருக்கையாலே – அவனிலும் காட்டிலும் அதிகராய் இருக்கும் அவர்களை-ஆகையால் இறே இவர்களை பற்றும் இடத்தில் புருஷகார நிரபேஷமாக பற்றலாய் இருக்கிறது –

அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள்குலைக் கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம்கண்டு என்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7-

அவனுடைய ஆச்சர்ய குண சேஷ்டிதங்களுக்கு தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆஸ்ரயிங்கோள் –வேதம் வல்லார் என்கிறது –நாராயண பரா வேதா -வேதைச்ச சர்வைரஹ மேவ வேத்ய-என்று சகல வேத தாத்பர்யமும் கைப்பட்டவர்கள் என்கை –சகல தேவதைகளும் பகவத் பரதந்த்ரம் ஆகையால் அவற்றுக்குத் தனித்து உயிர் இல்லை என்று இருக்குமவர்கள் வேதம் வல்லவர்கள்-(பரன் திறம் அன்று பல்லுலகீர் தேவம் ஒன்றும் இல்லையே )
‘தேவதைகள் தோறும் தனித்தனியே காரியம் உண்டு’ என்று இராமல்,
‘எல்லாச் சொற்களும் ஒரே பொருளைச் சொல்லுவது’ என்று இருக்குமவர்களைப் பற்றப் பாருங்கோள் என்கிறாள்’ என்றபடி.

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து
,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8-

சர்வேஸ்வரனே-ப்ராப்யமும் ப்ராபகமும்-என்கிற வேத தாத்பர்யம் கைப் பட்டவர்களை புருஷகாரமாகக் கொண்டு-வேறாக வேத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம், என்கிறபடியே அவர்கள் தாங்களே ஆஸ்ரயணீயர்–சஜாதீய பாவத்தால் அத்தனை ருசி விசுவாசங்கள் வாராதாகில் அவர்களை புருஷகாரமாக வாகிலும் கொள்ளப் பாருங்கோள்-வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை –பிதாமஹம் நாதமுனிம் வி லோக்ய ப்ரஸீத-இங்கு இருக்கும் நாள்களுக்குப் புருஷகாரமாக முமுக்ஷூக்கள் உளர்; அங்குதானே நித்தியசூரிகள் உளரே அன்றோ? ‘அந்த அமாநவன் முத்தர்களைப் பரம்பொருளிடம் சேர்ப்பிக்கின்றான்,’ என்கிறபடியே, அவர்கள் கொடுபுக்கு இருத்தலே அன்றோ அவ்வோலக்கத்தில் இருப்பது?

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே
உன்னை யானே –2-9-8-

பகவத் ப்ரேமத்தால் அதிசயித்தவர்கள்-வேதத்திலே நிர்மலராக ப்ரஸித்தர் ஆனவர்கள் –யத்ர ருஷய பிரதமஜா யே புராணா-நித்ய அனுபவம் பண்ணும்-அவர்களுக்கு சர்வ வித போக்யமும் தானே என்னும் இடத்துக்கு உப லக்ஷணம் –அக்காராம் போலேயும் கனி போலேயும் இருக்கை –அக்காராம் வ்ருஷ ஸ்தானே யாய் -அது கோட் புக்கு பலித்தால் போலே இருக்கை -அவர்களுக்கு நிரதிசய போக்யனான உன்னை எனக்கு காட்டினவனே

—————————————————————————–———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வேங்கடாசல மஹாத்ம்யம்-

October 23, 2025

புளிய மரம் செண்பக மரம் துவஜஸ்தம்பம் வல்லது பக்கமும் இடது பக்கமும் -பெருமாளும் பிராட்டிமாரும் வேடர்கள் வழிபட்டவை –
வராஹமூர்த்தி உத்சவம் ராமானுஜர் -ஐப்பசி திருவோணம் பிரதிஷ்டை செய்து அருளினவன் -அவதார உத்சவம் -வராஹ ஜெயந்தி -அத்யயன உத்சவம் ஒரு நாள் -மூன்று நாள்கள் இன்றும் நடக்கிறது
நாகாபரணமும் ராமானுஜர் சாத்தி அருளினார்
ஸ்ரீ பாத ரேணு ப்ரஸாதம் முக்கியம்

வழித்துணை நரஸிம்ஹர் திருக்கோயிலும் நடைபாதையில் உண்டாம்-

தேசிகேந்த்ரன் அப்பனுக்கு சங்காழி அளித்தவன் வாழியே -அமர்ந்த திருக்கோலம் திருமலையில் -சிஷ்யனாக அப்பன் நின்ற திருக்கோலம் -வேதார்த்த ஸங்க்ரஹம் -உபதேசித்து அருளினார் –

———-

10 புராணங்களில் திருமலையின் பெருமைகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அவை கீழ்காணுமாறு :

1) வராஹ புராணம் (புராணம்)
2) பாத்ம  புராணம் (புராணம்)
3) கருட புராணம் (புராணம்)
4) ப்ரம்மாண்ட புராணம் (புராணம்)
5) மார்கண்டேய புராணம் (புராணம்)
6) வாமன புராணம் (புராணம்)
7) ப்ரம்ம புராணம் (புராணம்)
8) ஸ்காந்த புராணம் (புராணம்)
9) ஆதித்ய புராணம் (உபபுராணம்)
10) பவிஷ்யோத்தர புராணம் (உபபுராணம்)

இவற்றோடு , மகாபாரதத்தின் 19 வது பர்வம் என்று போற்றப்படும் ஹரிவம்சத்திலும் திருமலையின் பெருமைகளை காணலாம்.

வேங்கடாசல  மாஹாத்ம்யத்தில் , வராஹ பெருமானின்  வைபவம், ஸ்ரீநிவாஸன்  திருவேங்கடத்தை வந்தடைந்தமை, அனைத்துலகிற்கும் தாயான பத்மாவதி ஸ்ரீநிவாஸனை திருக் கல்யாணம் செய்து கொண்டமை,  திருக் கோனேரியின் பெருமை, ஏனைய தீர்த்தங்களின் பெருமை மற்றும் வைஷ்ணவ லக்ஷணம் உள்ளிட்டவைகளை அனுபவிக்கலாம்-எம்பெருமானார் யாதவராஜனின்  சபையிலே திருமலையில் கோயில் கொண்டுள்ள தெய்வம் ஸ்ரீநிவாஸனே என்று நிரூபித்த அந்த சந்தர்ப்பத்திலும், மேலும் திருமலையப்பன் கோயில் திருப்பணிகளை சீர் திருத்தி நிர்வகித்த சந்தர்ப்பங்களிலும் , பல புராண ஸ்லோகங்களை மேற்கோள் காட்டியுள்ளார். ஆக , இவற்றையும் அறிந்து கொள்ளுதல்  இராமனுசனுடையார்களுக்கு இன்பம் பயக்க வல்லதே  ஆகும்.

ஸ்ரீ வேங்கடேச ப்ரீயதாம்-ஸ்ரீநிவாஸாய மங்களம்
ஸ்ரீ பாஷ்யகாரய மங்களம்

ஸ ஏஷ ஏவ புருஷ பஞ்சதா பஞ்சாத்மா -ஸ்ருதி -எல்லா உலகங்களுக்கும் காரண பூதனாய் இருக்கும் இப்பரம புருஷன் தான் பரம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமி அர்ச்சை முதலியவைகளாலும் விஷ்ணு புருஷன் ஸத்யன் அச்யுதன் அநிருத்தன் முதலியவைகளாலும் கூடி யிருக்கிறான்

அத்ப்ய: ப்ருதிவ்யை ரஸாத் ஸம்பூத்‌: – விச்வ கர்மண: – ஸமவர்த்தத – . தஸ்ய – , த்வஷ்டா – , ரூபம்‌ -விததத்‌ – தத்‌- , புருஷஸ்ய – , அகரே – விச்வம்‌ – ஆஜாநம்‌ -.அத்ப்ய: ஜலத்தினுடையவும்‌, ப்ருதிவ்யை – பூமினுடையவும்‌, ரஸாத் – ஸாரமான பாகத்‌தினால்‌, ஸம்பூத்‌: – உண்‌டான சிலையானது, விச்வ கர்மண: -நான்முகனால்‌, ஸமவர்த்தத – நன்றாக செய்யப்பட்டது. (நான்முகனின்‌ ஸங்கல்பத்தால்‌ பகவானின்‌ திவ்ய மங்கள விக்ரஹ மண்டப ப்ராகாராதிகளின்‌ நிர்மாணத்துக்கு உசிதமான சிலை (கல்லு)
உண்டாயிற்று – என்று – கருத்து.) தஸ்ய – அந்த சிலைக்கு , த்வஷ்டா – சிற்பி
யானவன்‌, ரூபம்‌ – கர சராணாதிகளோடு கூடிய மனேஹரமான விக்ரஹத்தை,
விததத்‌ – நிர்மித்தான்‌, தத்‌- அந்த நிர்மாணமானது , புருஷஸ்ய – பரம புருஷனுடைய, அகரே – உண்டாகப் போகும்‌. விச்வம்‌ – ப்ரஸித்தமான, ஆஜாநம்‌ – ஆவிர்பாவத்திற்கு காரணமாயிருக்கிறது

அஸ்ய ரூபம்‌ ஸந்த்ருசே ந திஷ்டதி கச்சித்‌ ஏநம்‌ சஷுஷா ந பஸ்யதி ஹ்ருதா மநீஷா மநஸா அபிக்லுப்த: யே விது: தே அம்ருதா –அஸ்ய – இந்த பகவானுக்கு, ரூபம்‌ – ரூபமானது, ஸந்த்ருசே – திருஷ்டி. விஷயமாய்‌, ந திஷ்டதி – இருப்பதில்லை, கச்சித்‌ – எவனும்‌, ஏநம்‌ – இவனை, சஷுஷா – கண்ணால்‌, ந பஸ்யதி – பார்க்க முடியாது . ஆகிலும்‌, ஹ்ருதா -ஸ்ருதி ப்ரமாணத்தாலும்‌, மநீஷா – மந்வாதி ஸம்ருதிகளாலும்‌, மநஸா – பார்கவாதி பகவச்‌ சாஸ்‌த்ரங்களாலும்‌, அபிக்லுப்த: – பிம்ப ரூபமாக. யே- எவர்கள்‌, விது: – தெரிந்து கொள்ளு கிறார்களோ, தே- அவர்கள்‌, அம்ருதா – மோக்ஷத்தை அடைவார்கள்‌,

வீர ஸுதஷ தேவகாம்‌: யுக்தக்ராவ; ஜாயதே-வீர -பகவான் அர்ச்சனாதிகளால்‌ ஆராதிக்கப்பட்டு, ஸுதஷ – பக்தர்களின்‌ அபிஷ்டங்களை அருளுமவனாய்‌, தேவகாம்‌: – கிரீடிக்க வேணுமென்ற திரு வுள்ளம் பற்றி, யுக்தக்ராவ; – சிலா மூர்த்தியாக, ஜாயதே – ஆகிறான்‌.

அச்மாணம்‌ ஆகணம்‌ ப்ரபத்யே”-அச்மாணம்‌ -சிலா மூர்த்தியான பகவானை -ஆகணம்‌ -சிற்பியினால் ஸாஸ்த்ர யுக்தமாகச் செய்யப்பட்டு -பகவத் ஸாஸ்த்ர விதிகளின்படி ப்ரதிஷ்டாதிகள் செய்யப்பட ப்ரபத்யே”-சரணம் புகுகிறேன்

அந்தஸ: ப்ரபாந்தம் மஹேசூராய விஷ்ணவே வ: த்யாய அர்ச்சத-அந்தஸ: – ஆஹாராதிகளால்‌ வ்ருத்தி யடையும்‌ கரண களேபரங்களை ஸ்ருஜித்து , ப்ரபாந்தம் -ரக்ஷிக்குமவனான. மஹேசூராய – ஸர்வ சக்தனான, விஷ்ணவே – பகவானை,
வ: – உங்களுக்கு, த்யாய – மோக்ஷ ப்ராப்‌திக்காக, அர்ச்சத – பூஜியுங்கள்‌,
என்று ருக் வேதத்தில்‌ சொல்லப்பட்டது

ஸ்ம்ருதிகளில்‌ :–” ஏதுத் ரூபம்‌ ப்ரதிஷ்‌டாப்ய சுத்தயா சிலயா ந்ருப “ -என்றும் *ஸுரூபாம்‌ ப்ரதிமாம்‌ விஷ்ணோ:-முதலான வாக்யங்களாலும்‌ விக்ரஹ ஆராதனம்‌ சொல்லப்பட்டுள்ளது -ப்ரவ: பரந்த மந்தஸோ அதிபாய தே” பக்த்யா பகவந்தம்‌ நாராயணம்‌ அர்ச்சயேத்‌–மன்மனா பவ மத் பக்தோ மத்யாஜி மாம்‌ நமஸ்குரூ”” என்னும்‌ ப்ரமாணங்கள்‌ *எம்பெருமானுடைய அர்ச்சநம் மிகவும்‌ உபாதேயம்‌’”–என்று ௮றுதி யிடுகின்‌றன.

ஹே அராயி காணே விகடே கிரிம்‌ கச்ச ஸதான்வே
ஸ்ரிம் பிடஸ்ய ஸத்வபி: தே அபிஷ்ட்வா சாதயாமஸி
.-என்று ருக்வேத்‌தில்‌ திருவேங்கடமும்‌, அதின்‌ ஸ்வாமியான ஸ்ரீநிவாஸனும்‌ வர்ணிக்கப்பட்டு இருக்கிறார்கள்‌.

ஏவம்‌ ஸ்ரீக்ருஷ்ண ருபேண க்ரீடிதோ வேங்கடாசலே
அரரயி காணே விகடே கிரிம்‌ கச்சே ” திஸ்தம்‌ விது:
ஸோ$யம்‌ வேதாமய? ஸாக்ஷாத்‌ கிரீச. பந்நகாசல-
-என்று வேங்கடாசல புராணத்தில்‌ இந்த அர்த்தம்‌ சொல்லப்‌ பட்டிருக்கிறது .

ஹே அராயி -ஏழையே
காணே -குருடனே
விகடே கிரிம்‌ -வேங்கடாசலத்தை
கச்ச -அடைவாயாக
ஸதான்வே-எப்‌பொழுதும்‌ ௮ந்வேஷணத்தைப் பண்ணும்‌ அவ்விடத்தைச்‌ சென்று,
அசஞ்சலமான த்யானத்தைப்‌ பண்ணுவாயாக,
ஸ்ரிம் பிடஸ்ய -ஸ்ரீ மஹாலஷ்மிக்கு இருப்பிடமாய் ஸ்ரீ நிவாசனுடைய
ஸத்வபி: -ஸாத்விக குணங்களான
தே பி -அந்த தயா வாத்சல்யத்தி கல்யாணம் குணங்களாலே
அபிஷ்ட்வா சாதயாமஸி.-உன் பாபங்களை நீக்கி பேரின்பத்தையும் அளிக்கிறோம்

அதோ யத்தாரு ப்லவதே ஸிந்தோ: பாரே ௮பூருஷம்‌,
ததராபஸ்வ துர்ஹண: தேந கச்ச பாஸ்தாம்‌.
(10-155-3) -என்னும்‌ ஸ்ருதிக்கு ஜகந் நாத க்ஷேத்ர பரமாக அர்த்தம்

ரயி: ககுத்மான்‌ விததத்வி நஷ்டம்‌ ரயிவத் விதானம்‌
தஸ்மை கருத்ரே விகடாய பித்ரே ஸ்வாஹா,
-என்னும் பராமாத்மிக–உபநிஷ்த்தில்‌ சொல்லப்பட்டிருக்கிறது
ரயி: -ஐஸ்வர்ய ஸ்வரூபனும்‌ (பெருஞ்செல்வ ஸ்வரூபன்‌-என்று கருத்து.)
ககுத்மான்‌ -வ்ருஷபாசலத்தில்‌ நித்ய வாஸம்‌ செய்யுமவனும்‌ (அல்லது சிறக்தவனலும்‌),
விததத்வி நஷ்டம்‌ –எல்லோருக்‌கும்‌ எல்லா வரங்களையும்‌ கொடுக்குமவனும்‌.
ரயிவத் விதானம்‌–ருக்‌- யஜுஸ்‌-ஸாம-அதர்வணங்களாகிற வேதங்களில்‌ (ஸத் புருஷர்களுக்கு ஸம்பத்‌ – வேதங்களே தான்‌ “ஸாஹி ஸ்ரீர் அம்ருசா ஸதாம்‌’” என்று
சொல்லப்‌ பட்டிருக்கிறது )ப்ரஸித்தனானவனும்‌,
தஸ்மை கருத்ரே -வ்ருஷபாசலத்தின்‌ அக்ரா பாகத்தில்‌ இருக்குமவனும்‌,
விகடாய -வேங்கடாசலத்தி லிருக்கும்‌ பெருமானுக்கு,
பித்ரே ஸ்வாஹா,-என் ஆத்மாவை ஸமர்ப்பிப்பேன்‌–

வராஹ புராணத்தில்‌–ஸர்வ பாபானி வேம்‌ ப்ராஹு:, கட தத்தாஹ உச்யதே
ஸர்வ பாபாபஹாரித்வாசத் வேங்கடாத்ரி ரீதிரித -என்று, வேம்‌”
என்ற சொல்லுக்கு எல்லாப்‌ பாபங்களும்‌”என்று பொருள்‌–என்றும்‌, * கட – சப்தத்திற்கு எரித்தல்‌ என்று
பொருள்‌ என்றும்‌, நிரூபிக்கப்பட்டு. யிருக்கிறது,

வாமன புராணத்தில்‌-வகாரோ அம்ருத பீஜம்‌ து , கட மைஸ்வர்ய முச்யதே ,
அம்ருசைஸ்வர்ய ஸங்கத்வாத்‌, வேங்கடாத்ரி ரிதி ஸ்ம்ரித..-
என்று. “வேம் ” என்ற சொல்லுக்கு * அம்ருதம்‌” என்றும்‌-௧ட– என்பதற்கு ஐஸ்வர்யம்‌” என்றும்‌ – பொருள்‌ கூறப்பட்டன.

ஸ்ரீநம்மாழ்வார்‌ -வேம் கடங்கள் என்னும்‌ பாசுரத்திலே கடங்கள் எல்லாம் – வேம்‌- தீயினில்‌ தூசாகும்‌ – என்று பொருள்‌ கூறினார்‌.-ஸ்ரீபகவத் ராமானுஜாசார்யர்‌, தமது ஸ்ரீபாஷ்ய மங்கள ஸ்லோகத்தில்‌ “** ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே ”’, என்று திருவேங்கடமுடையானைத்‌ தொழுவதுமன்றி, வேதார்த்த ஸங்க்ரஹத்தைத்‌ திரு வேங்கடமுடையான்‌ திருமுன்பே தான்‌ உபந்யஸித்தார்‌.
வேதாந்த தேசிகரும் தயா சதகத்தில் -“ப்ரபத்யே தம்‌ கிரிம்‌” என்று திருவேங்கடத்தையும் – கம ப்யந வதிம்‌ வந்தே கருணாவருணாலயம்‌”’… என்று திருவேங்கட முடையானையும்‌, ஸ்ரீ ஸ்துதியில்‌ தாயாரையும்‌ அடைக்கலம்‌ புகுந்தார்‌.அதிகார சங்கரஹத்‌தில்‌:–
கண்ணனடி யிணை யெமக்கு காட்டும்‌ வெற்புக்‌
கடுவினைய ரிருவினையுங் கடியும்‌ வெற்புத்
திண்ணமிது வீடென்னத் திகழும் வெற்புத்
தெளிந்த பெரும் தீர்த்தங்கள்‌ செறிந்த வெற்புப்‌
புண்ணியத்தின்‌ புகலிதெனப்‌ புகழும்‌ வெற்புப்‌
பொன்னுலகிற் போகமெல்லாம்‌ புணர்க்கும்‌ வெற்பு
விண்ணவரும்‌ மண்ணவரும்‌ விரும்பும்‌ வெற்பு
வேங்கடவெற்‌பென விளங்கும் வேத வெற்பே
–என்றும்‌ திருவேங்கடத்தைச்‌ சிறப்பித்துள்ளார்‌.

ஸாளுவ நரஸிம்ஹ ராஜாவுக்கு ஸேநா நாயகனா யிருந்த துளுவ நரசிங்கராயர்‌ 1487-ம்‌ வருஷத்தில்‌ கர்னாடக ராஜ்‌யாதிபதியானார்‌, இந்தத் துளுவ நரசிங்க தேவராயர்‌ ஆந்திர போஜ ராஜன்‌”! என்று புகழ் பெற்ற ஸ்ரீ கிருஷ்ண தேவராயருக்குத் தகப்பனார் –ஸ்ரீ கிருஷ்ண
தேவராயர்‌
திருவேங்கடமுடையானைத்‌ தனக்கு இஷ்ட தெய்வமாகச்‌ சொல்லிக்‌ கொண்டு, அவனைப்‌ பாட்டுடைத் தலைவனாக்‌கி பிரஸித்தமான * ஆமுக்தா மால்யதை ” என்னும்‌ ஆந்திர பிரபந்தத்தைத் திருவேங்கடமுடையானுக்கே உரிமை யாக்கினார்‌.

ஏறக்குறைய 6000 ஆண்டுகட்கு முன்னர்த்‌ தோன்றியதும் மிகப்‌ பழையதுமாகிய தொல்காப்‌பியம்‌’ என்னும்‌ இலக்கணத்திற்கு, ௮தன்‌ ஆசிரியராகிய தொல்காப்பியர்‌ காலத்தில் இருந்தவராகிய பனம்பரானுர்‌ என்பார்‌ சிறப்புப் பாயிரம்‌ அளித்துள்ளார் -அவர்‌ தமிழ்‌ காட்டிற்கு எல்லை கூறுங்கால்‌- வட வேங்கடம்‌ தென்குமரி‘” என்று வேங்கடத்தை வட எல்லையாகக் கூறியுள்ளார் -கடைச் சங்க நூல்களுள்‌ ஒன்றாகிய அகநானூற்றில் -இம்மலை, ்‌
கழல்புனை திருந்தடிக்‌ கள்வர்‌ கோமான்‌
மழபுலம்‌ வணக்கிய மாவண்‌ புல்லி
விழவுடை விழுச்சீர்‌ வேங்கடம்‌ பெரினும்‌
பழகுவ ராதலோ அரிது.
”-என்றும்‌,
வென்வேல்‌ திரையன்‌ வேங்கட நெடுவரை , ”என்றும்‌,
வினைநவில்‌ யானை விறற்போர்த் தொண்டையர்‌
இனமழை தவழும்‌ ஏற்றரு நெடுங்கோட்‌(டு)
ஒங்கு வெள்‌ ளருவி வேங்கடத் தும்பர்‌.
”-என்றும்‌,சிறப்பிக்கப்‌ பட்டுள்ளது

சிலப்பதிகாரம்‌, மாங்காட்டு மறையவன்‌ கூற்றாக
வீங்கு நீரருவி வேங்கட மென்னும்‌
ஒங்குயர்‌ மலயத்‌ துச்சி மீமிசை
விரி கதிர்‌ ஞாயிறும்‌ திங்களும்‌ விளங்கி
இருமருங் கோங்கிய விடை நிலைத்‌ தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்கு விற்‌ பூண்டு
கன்னிற மேகம்‌ நின்றது போலப்‌
பகை யணங்‌ காழியும்‌ பால் வெண்‌ சங்‌கமும்‌
தகை பெறு தாமரைக்‌ கையி நேந்தி
நலங்கிள ராரமார் விற்‌ பூண்டு
பொலம்பூ வாடையிற்‌ பொலிந்து தோன்றிய
செங்கண்‌ நெடியோன்‌ நின்ற வண்ணமும்‌.”
என, * வேங்கட மலையில்‌ எழுந்தருளிய பெருமான்‌–திருவாழித் திருச் சங்குகளைத் தரித்து முகில்‌ நிறத்தோடு விளங்கும்‌ திருமாலே ”என்பதை விளக்கமாகக்‌ கூறுகின்றது.

சமணப்‌ புலவராகிய * ஐயனாரிதனார்‌” என்பவர்‌, தாம்‌ எழுதிய-புறப் பொருள்‌ வெண்பா மாலையில் – புலவர் ஆற்றுப் படைக்கு மேற்‌கோளாக :
வெறி கொள்‌ அறை யருவி வேங்கடத்துச்‌ செல்லின்‌
நெறி கொள்‌ படிவத்தோய்‌ நீயும்‌ -பொறிகட்டு
இருளீயும்‌ ஞாலத் திடரெல்லாம்‌ நீங்க
௮ருளீயும்‌ ஆதி யவன்‌,
”-என்னும்‌ வெண்பாவில்‌ “: திருவேங்கடவன்‌ திருமாலே “என்று கூறிப்‌ போந்தார்‌.

வேங்கட நாதனை வேதாந்தக்‌ கூத்தனை
வேங்கடத்துள்ளே விளையாடும்‌ நந்தியை
வேங்கடம்‌ என்றே விரகறியாதவர்‌,”
-என்னும்‌ திருமூல நாயனார்‌ திருமந்திரத்தையும்‌,
அரியாரும்‌ பூம்பொழில்சூழ்‌ ஆமாத்தூரம்மான்‌
௮ரியாரும்‌ பாகத்‌தமுதன்‌-அரியாரும்‌
வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்‌
வேங்கடத்து நோயால்‌ விளிந்து
. ‘என வரும்‌ கபில தேவ நாயனார்‌ * சிவபெருமான்‌ திருவந்தாதியையும்‌ கொண்டு சைவருட்‌ சிலர்‌, திருவேங்கடமுடையான்‌ சிவபெருமானே” எனக்‌ கூற முற்படுவர்‌.அருணகிரிநாதர்‌, திருமலையில்‌ முருகப்‌ பெருமானைப்‌ பாடியிருக்‌கிறார்‌ என்றால்‌, ௮து திருவேங்கடமுடைய திரு மாலைக்‌ குறிப்பதன்று – திருமலைப்‌ பெருமையை அறிவிக்கும்‌ புராணத்தில்‌, * குமார தாரை ’ என்னுமிடத்தில்‌, முருகன்‌ திருமாலைக்‌ குறித்துத் தவம்‌ செய்து ௮ருள்‌ பெற்றமையால்‌ அங்கே யிருந்ததாகக் கூறப்படும்‌ ௮ம்‌முருகப் பிரானை யென்பது –* குமார தாரை என்னும்‌ பெயராலும்‌
௮மைவுடைத்தாதலின்‌, ௮த் திருப்புகழுக்‌ கரிய முருகன்‌, திருவேங்‌கட வள்ளலாகிய திருமால்‌ அல்லன்‌. என்பது போதரும்‌ ; வேதத்‌தில் யுவா குமார ” என்று திருமாலைக்‌ “குமரன்‌‘” என்னும்‌ சொல்‌லால்‌ கூறியிருத்தல்‌ அறிக. ஆழ்வார்களும்‌, பலவிடங்களில்‌, திருமாலைக் குமரன் என்றும் * இளையோன்‌ ‘ என்றும் அருளிச்‌ செய்திருத்தலும்‌
அறியத்தக்கது .

ஸ்தானோத்கர்ஷாத்‌ ஸூதீப்தம்‌, ச்ரம ஹர வபுஷம்‌, ஸ்வாங்க பர்யாப்பத
பூஷம்‌,
தேஜிஷ்டம்‌ நீசயோகாத்‌, ப்ரணமித புவனம்‌, பாவனம்‌ ஸந்நதானாம்‌ |
ப்ராப்த் யர்ஹ ஸ்தானம்‌, ௮ஹ: ப்ரசமன விஷயம்‌, பந்த விச்சேதி பாதம்‌,
பேஷே சீக்காரபியான க்ஷம சுபவஸதிம்‌, லம்பி தார்ச்சாபி முக்யம்‌ –த்ரவிடோபநீஷத்‌ தாத்பர்ய ரஈத்நாவஸி.

ஸ்தானோத்கர்ஷாத்‌ ஸூதீப்தம்‌, –திருமலையிலே நின்றும் அருளுகையாலே அளவில்லாத காந்தியை யுடையவனுமாய்
ச்ரம ஹர வபுஷம்‌, –காள மேகம் போலே கண்டார்க்கு ஸ்ரம ஹரமான வடிவழகை யுடையவனுமாய்
ஸ்வாங்க பர்யாப்பத பூஷம்‌, –தாமரை போன்ற தம்முடைய திருக்கண் மலர் முதலான அவயவங்களினாலே பூஷண யுக்தனுமாய்
தேஜிஷ்டம்‌ நீசயோகாத்‌, -அபகர்ஷத்தையும் அபூர்த்தியையுமுடைய தாழ்ந்தவர்களோடு சம்பந்திக்கையாலே மிகவும் விளங்குகிறவனாயும்
ப்ரணமித புவனம்‌, -எல்லா உலகங்களாலும் தொழப்படுகிறவனாகவும்
பாவனம்‌ ஸந்நதானாம்‌ |-வணங்குபவர்களை அவர்களது பிரதிபந்தகங்களைப் போக்கி பரிசுத்தமாக்குபவனாயும்
ப்ராப்த் யர்ஹ ஸ்தானம்‌, -மோக்ஷத்தை அளிக்க வல்ல இருப்பிடத்தை யுடையவனாயும்
௮ஹ: ப்ரசமன விஷயம்‌, –தன்னை அடைவதற்கு விரோதிகளைப் போக்க வல்ல திவ்ய தேசத்தை யுடையவனாயும்
பந்த விச்சேதி பாதம்‌,-ஜென்ம ஜரா மரணாதி வியாதிகளைப் போக்கவல்ல திருவடித் தாமரைகளை யுடையவனாயும்
சீக்காரபியான க்ஷம சுபவஸதிம்‌, —
மெள்ளப் போகிறோம் என்றும் இராதே தள்ளிக்கொண்டு முன்னே செல்ல வேண்டும்படியான திருமலையில் நித்யவாஸம் பண்ணுகிறவனாயும் இருக்கிற எம்பெருமானை
பேஜே -ஆழ்வார் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் -படியே நினைத்தபடியே உகப்போடே கண்டு அனுபவித்து அருளினார் –

ஆபத் சம் ரக்ஷணாத் அரி உபகரணத்தயா மேக சாம்யாதி பூம்னா
தீப்தி மத்வம் ஸ்வானாம் விச்வாஸ தானாத் ஸூர கண பஜ நாத்
திவ்ய தேச உபசத்தி பிராப்ய அப்ராப்யத்வ யோகாத் சத் பிரபத் தவ்ய பாவாத்
சர்வ வேதாந்த ஸூ பிரசித்தம் ஸ்ருதி சத விவஸிதம்

1-ஆபத் சம் ரக்ஷணாத் -உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!-பிரளய ஆபத்தில் உண்டு ரஷித்து-

2-அரி உபகரணத்தயா –சீறா எரியும் திரு நேமி வலவா! தெய்வக் கோமானே!

3-4-மேக சாம்யாதி பூம்னா –3/4 —வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!—
ஸாம்யம் –ஆதி–தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!-

5-தீப்தி மத்வம் –திரு மா மகள் கேள்வா!

6-ஸ்வானாம் விச்வாஸ தானாத்–புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒரு வில் வலவாவோ!

7-ஸூர கண பஜ நாத் -எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி

8-திவ்ய தேச உபசத்தி–செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!

9-பிராப்ய அப்ராப்யத்வ யோகாத்–நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!

10-சத் பிரபத் தவ்ய பாவாத் –வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே!–

சர்வ வேதாந்த ஸூ பிரசித்தம் -ஸ்ருதி சத விவஸிதம்-

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ரஹஸ்ய நிஷ்கர்ஷம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள்-

October 23, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

1-ஸம்ஸாரத்தை அடியறுக்கும் மந்த்ரங்கள் இரண்டு -குரு தரமான பக்தி யோகமும் -லகுதரமான ந்யாஸ யோகமும்

தோஷ சப்தகங்கள் –துக்க மூலம் -துக்க மிஸ்ரம் -துக்க உதர்க்கம் -அல்பம் -அஸ்திரம் -விபரீத அபிமான மூலத்வம் -ஸ்வாபாவிக ஆனந்த வ்ருத்தம் -அதாவது
துன்பத்திலிருந்து பிறப்பது – துன்பத்துடன் கலந்திருப்பது -துன்பத்தை உண்டாக்குவது-அளவில் மிகக் குறைவானது -நிலையற்றது -தகாத ஆசைக்கு கருவியாய் இருப்பது -எம்பெருமானை அனுபவிப்பது என்னும் இட்டுப் பிறந்து வைத்தால் இயற்க்கைக்கு மாறாக இருப்பது-ஆகிய ஏழுவித குறைகள் இல்லாத நிலையில்லா –பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் -இதற்குத்தடையாய் பிறப்பு இறப்பில் சுழன்று நிற்கும் கூடிய நரகமே இந்த ஸம்ஸாரம்-இதன் நின்றும் மீள பக்தியோகமும் பிரபத்தியும் இரண்டு மார்க்கங்கள்

2-இவற்றில் பக்தி யோகம் -யாதொருவனை இவன் வரிக்கிறானோ என்னும் ஸ்ருதி வாக்யத்தாலும் -பக்த்யா லப்ய து அநந்யயா -ஸ்ரீ கீதா வாக்யத்தாலும் -இத்யாதிகளாலும் ப்ரதிபாதிக்கப்படுகிறது

நாயமாத்ம ப்ரவசனேன லப்4யோ ந மேத4யா ந ப3ஹுனா ஶ்ரதேன |
யமேவைஷ வ்ருணுதே தேன லப்4யஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம்ஸ்வாம் ||
-கட ஸ்ருதி-23-ஈஸ்வரன் எதன் அடிப்படையில் மனிதனை ஆத்ம ஞானம் அடைவதற்கு தேர்ந்தெடுப்பார் என்றால் எவனொருவன் மோட்சத்தை அடைவதில் தீவிர வைராக்யத்துடன் இருக்கின்றானோ அவனைத் தான் தேர்ந்தெடுக்கின்றார்.   அவர்களுக்குத்தான் ஆத்ம ஞானத்தை அடைவதற்கு அனுக்கிரகம் செய்கின்றார்.

 பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந
:-9-26-நல்ல மனமுடையாரது பக்திவலையொன்றில் மட்டும் அவன் படுகிறான்

சர்வாதிகாரமாய் -சர்வ அநிஷ்ட நிவர்த்தந ஷமமாய்-சர்வ இஷ்ட சாதனமாக வற்றாய்-
ஸூ கரமாய் -சக்ருத் கர்தவ்யமாய் -ஆசுகாரியாய் -ப்ரதிபன்னா நர்ஹமாய்
ப்ரஹ்மாஸ்த்ர பந்தம் போலே ஸ்வ பலத்திலே உபயாந்தர பிரயோக அசஹமாய் இருந்துள்ள ப்ரபத்தி

3-இத்தாலே -ஸ்வ கத ஸ்வீ கார அநுபாயத்வமும் -பரகத ஸ்வீ கார உபாயத்வமும் -சொல்லப்படுகின்றன என்று சிலர் சொன்னார்கள்கீழ் சொன்ன ஸ்ருதி வாக்யத்தை பக்தி பரமாக யோஜிக்கிற ஸ்ரீ பாஷ்ய ஸூக்திக்கும் விரோதிக்கும்

பலம் அத உபபத்தே —3-2-37--இவன் இடம் இருந்தே கர்ம பலன் பெறுகிறார்கள்
கர்மம் க்ஷணிகம்-ஸர்வஞ்ஞன்-ஸர்வசக்தன் -காருணிகன் -உதார குணம் -ஆதியும் அந்தமும் இல்லாதவன்-ஆகவே கர்மத்தால் ப்ரீதனாகி இவனே பலன் அருளுகிறார் -நாம் உபாஸனம் செய்யத் தேவையில்லை என்பது பொருந்தாது-

4-பக்தியால் அஹங்கார வாதம் -நான் செய்கிறேன் என்னும் வாதம் -விலக்கத்தக்கது -ஸ்வ ஆத்ம சரீரகதயா பரமாத்ம உபாஸந விதாயக -தன்னை சரீரமாக யுடையவனாக பகவானை உபாஸிக்கும் படி யாணையிடும் -ஸ்ருதி ஸூத்ர பாஷ்யாதி பரிசய வைதேசிகருக்கும் -தேர்ச்சி இல்லாதவருக்கும் கூட அருசிக்கும் -சுவைக்காது

அஹம் என்ற மாத்ரத்தாலே -என்பதாலே மட்டுமே -அஹங்காரம் வரில் -வரும் என்றால் -பகவத் கைங்கர்யாதிகளிலும் இது துஷ் பரிஹரமாம் -தவிர்க்க முடியாத ஓன்று அன்றோ -கைங்கர்யத்தையும் விட்டு விடலாமோ -கூடாதது அல்லவா-வ்யாஸாதிகளுடைய தன்னிஷ்டையும் -அதன் நிலைப்பும் -விரோதிக்கும் -வ்யாஸாதிகளுக்கும் பகவத் பாரதந்தர்ய ஞானத்தில் -தத் உபதேஸம் கடியாது –

கர்ம யோகங்கள் தேவதா அந்தர்யாமி -பரமாத்ம பரங்கள் -எம்பெருமானார் சரீரங்களாகக் கொள்பவை -ஆகையால் தத் அங்கத்வத்தால் -கர்ம யோகங்கள் அங்கமாக இருப்பதால் -வரும் அவத்யம் கேடு இல்லை -அவ்வாறு உண்டாகில் நைமித்திகங்களும் த்யாஜ்யமாம் -விட வேண்டியவையே –

இஷ்டாபத்தியில் -பிடித்த கர்மாக்களைச் செய்வதில் -மநீஷீ வைதிக ஆசாரம் மநஸாபி ந லங்கயேத் -லஷ்மீ தந்த்ரம் -17-94-அறிவுள்ளவன் வேதத்தில் விதித்த நடைமுறைகளை மனதாலும் மீறக்கூடாது -இத்யாதி பிரமாணங்களும் தந் நிஷ்டாசாரமும் -அதில் நிலைத்தவர்களின் செயலுக்கும் விரோதிக்கும்-

மஹா பாரதத்தில் -சாந்தி பர்வாவில் -யஞ்ஞ அக்ரஹர அத்தியாயத்தில் -தேவர்களைக்குறித்து செய்யும் யாகத்தின் ஹவிஸ்ஸை ஏற்றுக் கொண்டு அவர்களின் அந்தர்யாமியான எம்பெருமான் மகிழ்ந்து பாலன்ஸ் அளிக்கிறான் -அக்னி -அக்ரம் நயதி -முன் நின்றும் ஜீவர்களை நடத்திச் செல்பவன் என்றும் எம்பெருமானையே குறிக்கும் -இதே போலவே இந்திரன் சிவன் சப்தங்களும் அவனையே குறிக்கும் –
ஸாஷாத் அபி அவிரோதம் ஜைமினி -1-2-29–அனைத்துப் பெயர் சொற்களும் நேராகவே கூட எம்பெருமானையே குறிக்கும் எனக்கொள்வதில் முரண்பட்டு இல்லை என்கிறார் ஜைமினி
ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யத்திலும் ப்ரம்மா வேள்வியைச் செய்ய பரஞ்சுடர் உகந்து பேர் அருளாளன் ஆவிர்பவித்து அருளினார் அன்றோ –

பக்தி த்யாகத்தில் ஹேது -தத் அசக்தியும் விளம்ப அஷமதையும் அபிராப்தமாயுமாகையும் -ஆழ்வார்களில் விளம்ப அஷமதையும்-அபிராப்தமாயுமாகையும் -நம்மிடம் அசக்தியும் காணலாம்பாலாழி நீ கிடைக்கும் பண்பை யாம கேட்டேயும்
காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
நீலாழிச் சோதியாய் ஆதியாய் தொல்வினை என்பால் கடியும்
நீதியாய் நிற் சார்ந்து நின்று
ஆழ்வார்களும் பக்தி அனுஷ்டான அசக்தியும் சொல்லலாம்

அவபோதிதவாநிமாம் யதா
மயி நித்யாம் பவதீயதாம் ஸ்வயம் |
க்ருபயைததநந்ய போக்யதாம்
பகவந்! பக்திம் அபி ப்ரயச்ச மே ||
-ஶ்லோகம் 54 –

என் ஸ்வாமியே! எப்படி உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் என்னுடைய சேஷத்வத்தை எனக்கு அறிவுறுத்தினாயோ, அதேபோல வேறு எங்கும் கிடைக்காத, உன்னிடத்தில் பக்தி செய்யும் அந்த இனிய அனுபவத்தையும், நீயே அளிக்க வேண்டும்.

நநு ப்ரபந்நஸ் ஸக்ருதேவ நாத!
தவாஹம் அஸ்மீதி ச யாசமாந: |
தவாநுகம்ப்ய: ஸ்மரத: ப்ரதிஜ்ஞாம்
மதேகவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே ||
-ஶ்லோகம் 64 –

ஸ்வாமி! “நான் உன்னிடத்தில் ஒருமுறை சரணடைந்துள்ளேன்” என்றும்
“உனக்கே நான் தொண்டு செய்ய வேண்டும்” என்றும் சொல்லி,
நீ கடற்கரையில் விபீஷணன் சரணடைய வந்த ஸமயத்தில் செய்த சபதத்தை நினைக்கும் நான்,உன்னுடைய கருணையைப் பெறத் தகுந்தவன்; தேவரீருடைய சபதம் என் ஒருவனைத் தவிர்த்தோ?-ப்ரபன்னர் பக்தி பிரார்த்தனையும் ஸ்வயம் ப்ரயோஜநமாகவும்ரஸ்யதா அதிசயத்தாலே ஒழிய சாதந புத்தியால் அன்றுபஜந ஸூகம் ஏகஸ்ய விபுலம் -பல ரூபமான பக்தி மூலம் பெரும் பகவத் அனுபவம் அபரிச்சேதம்

யா ப்ரீதி அவிவேகாநாம் விஷயேஷு அநபாயிநீ த்வாம் அநு ஸ்மரத ஸா மே ஹ்ருதயாத் மாபஸர்ப்பது – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-19-(விவேகம் அற்றவர்களுக்கு சிற்றின்பத்தில் மிக்க ஈடுபடக் உள்ளது போல் உன்னையே அனைவரதும் நினைத்துக்கொண்டு இருக்கும் அடியேனுக்கு உம்மிடம் ஈடுபடக் விலகாமல் இருக்காய் அருளிச் செய்யவேணும் -ப்ரஹ்லாதாழ்வான் பிரார்த்தனை –இத்யாதிகள் படியே) ரஜஸ் தமோ குண உன்மேஷம் இல்லாத -ஸத்வஸ்தருக்கு -சத்வ குணம் மிக்கிருப்பாருக்கே பக்தியானது ரஸ்ய தமமாய் இருக்கும் –
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.
–6-1-11-காமினிகளுக்குக் காமுகர் எவ்வளவு, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவ்வளவு ஆவர் இதனைக் கற்க வல்லவர்கள்.

பூர்வோக்த பக்தி பரித்யாக ஹேது -உடையவனுக்கு ப்ரபத்தியில் அதிகாரம்-பக்தியில் அசக்தியே ப்ரபத்திக்கு அதிகாரம் –
நயநே வ்ருஷாசல இந்தோ தாரா மைத்ரீம் ததா நயா கருணே
த்ருஷ்டஸ் த்வயா ஏவ ஜனிமான் அபவர்க்கம் அக்ருஷ்ட பச்ச்சயம் அநு பவதி —தயாசாதகம் -20-
தயா தேவியே! திருமலையில் உதித்த குளிர்ந்த சந்திரன் போன்ற ஸ்ரீநிவாஸனின் திருக்கண்களின் விழியினுடைய நட்பை நீ கொண்டுள்ளாய் . உன்னால் பார்க்கப் பட்ட மனிதன் ஒருவன், உழவு போன்ற சிரமம் இன்றி கிட்டும் பலன் போன்று, எந்த விதமான முயற்சியும் இன்றி மோக்ஷம் அடைகிறான்.

இப் பிரபத்தி தான்-அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகுக்கும் – ஸர்வாதிகாரமாய் -ஸர்வ பல ப்ரதமாய் -சதுர்வித பலத்துக்கும் ஸாதனமாய் -ஆநு கூல்ய சங்கல்பம் -பிரதிகூல வர்ஜனம் -மஹா விஸ்வாஸம்-கார்ப்பண்யம் -கோப்த்ருத்வ வரணம் என்னும் அங்க பஞ்சக உபேதமாய் -இச்சா அநு குணமாக பிராரப்த கர்மங்களையும் போக்குவதாய் இருக்கும் –
தாவதார்த்தி ததாவாஞ்சா தாவந் மோஹா ததா அ ஸூகம் -யாவந் ந யாதி சரணம் த்வாம் அசேஷ அக நாஸகம்
-விஷ்ணு -1-9-73-சரணாகதி செய்யாத வரையில் தானே ஜீவர்களுக்கு இழந்த செல்வத்தைப் பெறவும் புதிதாக செல்வத்தைப் பெறவும் ஆத்ம அனுபவத்தை பெறவும் ஆசையும் அனுபவிக்கப் பெறாத நிலையும் கவலையும் இருக்கும்
மோக்ஷத்தையே மட்டுமே குறித்துச் செய்யும் பிரபத்திக்கு பல -சங்க -கர்த்ருத்வ த்ரிவித -தியாகமும் வேண்டும் –

ப்ராரப்தே தர பூர்வ பாபமகிலம் ப்ராமதிகம் சோத்தரம்
ந்யாசேன ஷபயன் நநப்யுபகத பிராரப்த கண்டம் ச ந
தீ பூர்வோத்தர பாப்மா நாமஜந நாஜ் ஜாதே அபி தன்நிஷ்க்ருதே
கௌடில்யே சந்திம் சிஷயா அப்ய நதயநம் க்ரோடீகரோதிம் ப்ரபு
–அபராத பரிஹார அதிகாரம்-18-

இவ்வர்த்தத்தில் ஸ்ரீ பாஞ்சராத்ரம் அத்யந்த ஜாகரூபமாய் இருக்கும் -இதனுடைய மஹாத்ம்யம் பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயண ஸ்வயம் -சாந்தி பர்வம் -359-58-இத்யாதிகளிலே கண்டுகொள்வது
-ஆநு கூலஸ்ய ஸங்கல்ப பிராதி கூலஸ்ய வர்ஜனம் ரஷிஷ்ய தீதி விஸ்வாஸ கோப்த்ருத்வ வரணம் ததா ஆத்மநிஷேப்ய கார்ப்பண்யே ஷட் விதா ஸரணாகதி அஹிர்புத்ந்யா ஸம்ஹிதை -37-28-29-
ஸத் கர்ம நிரதா ஸூத்தோ சாங்க்ய யோக விதஸ் ததா -நார்ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடி தமீமபி -லஷ்மீ தந்த்ர -16-62-
நிஷே பாபர பர்யாய ந்யாஸ பஞ்சாங்க ஸம்யுத ஸந் ந்யாஸ ஸத்யாக இத் யுக்த ஸரணாகதி ரித்யபி -லஷ்மீ தந்த்ர-17- 74-இத்யாதிகளைக் கொண்டு அறியலாம் –

தயிரில் வெண்ணெய் -உயிர் இனத்தில் அந்தணன் -வேதங்களில் ஆரண்யகம் -ஒவ்ஷதங்களில் அம்ருதம் – இதே போல் பாஞ்சராத்ரம் நான்கு வேதங்களுக்கும் சமம் -ஸாரம் –ஸ்வயமாக தானே அருளிச் செய்த ஏற்றமும் உண்டு -முனி ஸ்ரேஷ்டர்களால் ப்ரமாணமாகக் கொள்ளப்பட்டது -தர்க்கபாதம் –

ஸூத்ரம் –211-விஞ்ஞானாதி பாவே வா தத் அப்ரதிஷேத –2-2-41-வேதாந்தத்தில் கூறப்பட்ட பரம புருஷனின் உபாசனத்தையும் அவனை அர்ச்சிப்பதையும் பாஞ்ச ராத்ரம் விளக்குவதால் அது முழுவதுமே பிரமாணம் என்பது சித்தம் –ஸூத்ரம் –212–விப்ரதிஷேதாச் ச -2-2–42--இந்த பாஞ்சராத்ரத்திலும் ஜீவனின் உத்பத்தியை விசேஷமாக நிஷேதித்து இருப்பதால் இது வேதத்துக்கு முரண் அற்றது-அசேதநா பரார்த்த ச நித்யா சதத விக்ரியா த்ரி குணா கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே வ்யாப்தி ரூபேண ஸம்பந்த தஸ் யாச்ச புருஷஸ் யச ஸஹ்ய நாதி ரநத் தச்ச பரமார்த்தே நிச்சித -என்று பாஞ்ச ராத்ரத்திலே ஜீவனுக்கு உத்பத்தி நிஷேதிக்கப்பட்டது ஆகையால் ஸ்ருதியுடன் சிறிதும் முரண்பாடு இல்லை-பாஞ்சராத்ரத்தின் அப்ரமாண்யம் பரபக்ஷமாகையாலே தந் நிராகரணமும் இப்பாத சங்கதமாகக் குறையில்லையே -இதை உத்சர்க்க அபவாத முறை –

பாஞ்ச ராத்ரே ச பவ்த்தே ச ஸ்காந்த புராணம் இத்யாதிகள் தாமஸகங்கள் ஆகையால் ஸாத்விக ப்ரதிபன்னமான ஏதத் ப்ராமண்யத்திற்கு பாதகங்களாக மாட்டா-

சிலர் ஸ்வார்த்த ப்ரபந்நன் -என்ற ஒரு அதிகாரி உண்டு என்றார்கள் -பூனைக்குட்டியைத் தாய்ப்பூனை காப்பது போல் அவனே நன்மை காத்தருள இருக்க-மோக்ஷ பலனுக்காகவும் நாமே செய்யும் ப்ரபத்தியும் கூடாதே –ஸ்வாதீந கர்த்ருத்வ போக்த்ருத்வ -ஸ்வார்த்த கர்த்ருத்வ போக்த்ருத்வ ப்ரம ரூபங்களான அஹங்கார மமகாரங்கள் அடி அறுத்தவர்களே -அஹங்கார ரஹிதர்களுக்கே முமுஷுத்வம் ஸாஸ்த்ர ஸித்தமாகையாலே மோஷார்த்த ப்ரபத்தியில் ஸ்வார்த்ததா ப்ரபத்திக்கு அவகாசமில்லை -ஆகையால் இது அத்யந்த ஹாஸ்யம்-என்பர்-ஆநு கூல்ய ஸங்கல்ப-ப்ராதி கூல்ய வர்ஜனங்கள் ஸம்பாவித ஸ்வபாவங்களாம் இத்தனை ஒழிய அங்கங்கள் அன்று என்று சிலர் சொன்னது -தத் அங்கத்வ போதக வசன ஸத பாதிதமாகையாலே அநுப பந்நம் -பிரபத்தி காலத்தில் இவை தேவைதான் -அதற்குப்பிறகு தொடர்பு நாட்களில் ஒருகால் இவை இல்லாது போனாலும் தகுந்த ப்ராயச்சித்தம் செய்து கொண்டால் செய்த பிரபத்திக்கு பலன் குறைவற்று இருக்கும் என்பதே தாத்பர்யம் –ஸாத்ய உபாய சோதன அதிகாரத்தில் தேசிகர் ஸாதித்து அருளுகிறார்-பராபேஷா ந வித்யதே -அங்கங்களை எதிர்பார்ப்பதில்லை -ஸநத்குமார ஸம்ஹிதை -என்றது பிரபத்தியைப் பற்றியது அல்ல -மற்ற உபாயங்களைப் பொறுத்தே விதிக்கப்பட்டவை -ஸாமான்ய நிஷேதத்துக்கு விஹித வ்யதிரிக்த விசேஷம் விஷயத்வம் -பொதுவானவற்றை விலக்குவதற்கு குறிப்பிட்டுச் சொல்லும் வசனம் -வேண்டுமிறே -இல்லையாகில் நிர்விசேஷ வாதம் பிரசங்கிக்கும்
பராபேஷா ந வித்யதே –இதற்கு முன்பு பிரபத்தே க்வசித்தபி ஏவம் என்றும் கீழ் பக்தியோகத்தின் அங்கங்களை விளக்கி மற்றொரு நிவ்ருத்தி தர்மமான ப்ரபத்திக்கும் அவ்விதம் இருக்கும்போதே என்கிற சங்கைக்கு பதிலாக அங்கங்களை எதிர்பார்க்காது என்றுள்ளது

விஸ்வாஸம் அங்கம் -மற்றவை அங்கங்கள் அன்று என்பதாலேயே – விஸ்வாஸ பூர்வகம் (பாஷ்யகாரரின் முக்தக வாக்யம் என்று நிஷேப ரக்ஷையில் பூர்வபக்ஷ ப்ரகரணத்தில் ) என்று அருளிச் செய்ததும் தத் ப்ரதான்ய அபிப்ராயத்தாலே தான் -இல்லையாகில் துல்ய நியாயதையாலே இதற்கும் அங்கத்வம் இல்லையாம் -ஸாஸ்த்ர பிரதிபன்னங்களில் -ஒன்றைச் சொன்னது ஹானோ பாதாந ந்யாயத்தாலே மற்றவைகளுக்கும் உப லக்ஷணம் -மந்திரத்தில் இவ் வுருப்புக்கள் இருக்கும்படியை ரஹஸ்ய த்ரய சாராதிகளிலே அருளிச் செய்கிறார் -த்வயத்தில் இவ்வைந்து அங்கங்களும் குறிப்பிட்டு இருக்கும்படியை ரஹஸ்ய த்ரய ஸாரம் -நிஷேப ரக்ஷை -சில்லறை ரஹஸ்யங்களிலும் அருளிச் செய்கிறார் –இதில் பர ந்யாஸம் ப்ரபத்தியின் அங்கிது சாங்க அனுஷ்டானத்துக்கு நடாதூரம்மாள்(இவர் ஸ்ரீ வாத்ஸ்ய வரதகுரு. தேசிகனின் ஆசார்யரான அப்புள்ளாரின் ஆசார்யர் ) அருளிச் செய்யும் சுருக்கு –அநாதி காலம் தேவரீருக்கு அநிஷ்டாசரணம் பண்ணுகையாலே சம்சரித்துப் போந்தேன்-இன்று முதல் அனுகூலனாய் வர்த்திக்கக் கடவேன் –பிரதிகூலாசரணம் பண்ணக் கடவேன் அல்லேன் –தேவரீரைப் பெறுகைக்கு என் கையில் ஒரு கைம் முதல் இல்லை –தேவரீரையே உபாயமாக அறுதி இட்டேன் –தேவரீரே உபாயமாக வேணும் –அநிஷ்ட நிவ்ருத்தி இலாதல் இஷ்ட ப்ராப்தி இலாதல் எனக்கு இனி பரமுண்டோ

க்வசித் ததஸ்கத்வ (அதுவே என ) வாதம் -உபாய கோப்த்ரு பத ஏகார்த்த அபிப்ராயம் தத் பேத வ்யபதேசம் (அவற்றுள் வேறுபாடு என்ற குறிப்பு ) உபாயே க்ருஹ ரஷித்ரோ இத்யாதி பிரமாண ஸித்தம் -அங்காதிகளுக்கு பிரமாண ஸம்ப்ரதாய அனுகுணமாக ஈஷத் பேதம் (சிறிது வேறுபாடு கண்டு கொள்வது ) -உபாயத்வ யாஸ்ந அங்கத்வம் சொல்லுகிற இடத்திலும் உபாய ஸப்தம் கோப்த்ருத்வ பரம் -கோப்த்ருத்வ வரண அங்கித்வம் சொல்லுகிற வசனங்களில் கோப்த்ருத்வ பரம் உபாயத்வ பரம்-பிரபத்யங்க பக்தி பலத்தை பிரபத்தி மாத்ரத்தாலே தருகையாலே ப்ரபன்னனுக்கு ஈஸ்வரன் விசேஷத-குறிப்பாக -உபாயம் -என்றது

பிரபத்தி மோக்ஷ உபாயம் அன்றாகில் பஹு பிரமாண ஸம்ப்ரதாய விரோதங்கள் ப்ரசங்கிக்கும் -ந்யாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு -ஓமிதி ஆத்மாநம் யுஞ்ஜீத -பக்த்யா பரமயா வாபி ப்ரபத்யா வா மஹாமதே ப்ராப்யோஹம் -பல பிரமாணங்கள் உண்டு -அகலகில்லேன் இத்யாதியாலே ஆழ்வார் பிரபத்தி பண்ணுகிறார் -இதிலே த்வயத்தில் போலே பர ந்யாஸ ப்ரதிசம்பந்தி -சேஷி விசேஷண தயா பெரிய பிராட்டியாரைச் சொல்லுகையாலே அவனுக்கும் உபாயத்வம் தோற்றுகிறது

1-லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேஸ தேவ்யா காருண்ய ரூபயா-ரஷக ஸர்வ சித்தாந்தே வேதாந்தேஷு ச கீயதே -லஷ்மீ தந்த்ரம் -ஆணையிடுபவன் எம்பெருமான் -கருணையே வடிவெடுத்தவளும் இந்த விபூதியில் விளையாட்டு நிலமாக்கி லீலா ரஸத்தை அனுபவிப்பவளுமான பெரிய பிராட்டியாருடன் கூடி நின்றே அனைத்தையுமே காப்பவனாகிறான் என்று எல்லா ஸித்தாந்தங்களாலும் உபநிஷத்துக்களாலும் புகழப்படுகிறான் –

2-ஆத்ம வித்யா தேவி த்வம் விமுக்தி பலதாயிநீ -விஷ்ணு புராணம் -ஹே தேவி மோக்ஷம் அடைவிக்கும் வித்யைக்கு அதிபதியானவளும் ஸம்ஸார பந்தத்தில் இருந்து விடுவிப்பவளும் நீயே

3-ஸர்வ ஐஸ்வர்ய குணோபேதா நித்யம் தத் தர்ம தர்மிணீ -லலிதா ஸஹஸ்ரநாமம்-அனைத்தையும் நியமிக்கும் குணமுடையவளும் -எல்லா நன்மைகளையும் பெற்றவளும் எப்போதும் எம்பெருமான் செயல்களையே ஒட்டியே நடப்பவளும் நீயே-4-ஸர்வேச்சா பரிபூரிகா -லலிதா ஸஹஸ்ரநாமம் -அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் திறன் உடையவளும் நீயே-5-தர்ம காமார்த்த மோக்ஷதா -லலிதா ஸஹஸ்ரநாமம் -அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய அனைத்து பலன்களை அளிப்பவள் நீயே -6-பர நிர்வாண தாயிநீ -லலிதா ஸஹஸ்ரநாமம் –உயர்ந்த பலமான மோக்ஷத்தையும் அளிப்பவளும் நீயே –

7-வாச பரம் ப்ரார்த்தயிதா பிரபத்யேத் நியத ஸ்ரியம் -சவ்ந ஸம்ஹிதை -வேதத்தில் சொன்ன உயர்ந்த புருஷார்த்தத்தைத் பெற விரும்புபவர்கள் தவறாமல் பெரிய பிராட்டியாரை சரணம் அடைய வேண்டும் –
8-ஸர்வ காம ப்ரதாம் ரம்யாம் ஸம்ஸார ஆர்ணவ தாரிணீம் -ஸ்வயாம்புவம் -அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுபவளும் நம் ஹிதத்தை விரும்புபவளும் ஸம்ஸாரமாகிற கடலைக் கடத்து விப்பவளும் நீயே –
இத்யாதி பிரமாணங்களையும் இங்கே பராமர்சிப்பது -விசிஷ்டேண மோக்ஷ உபாயம் என்பதை நிரூபிக்க எட்டு பிரமாணங்களை நிரூபிக்கிறார் –

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

1- ஸ்ரீ நிவாஸனுக்கு லோகங்களைப் படைத்தல் காத்தல் அழித்தல் விளையாட்டு போல் எளிதானவை
2-சிந்தனை எப்போதும் அடியார்களை ஸம் ரக்ஷணம் செய்வது மட்டுமே
3- வேதாந்தங்களில் இரத்தினம் போல் ஒளிவிடும் ப்ரஹ்மம் அவனே
4- மென்மையான அவனிடம் எனக்கு பக்தி ரூபாபன்ன ஞானம் உண்டாக அவன் அருளட்டும்

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரங்களில் எங்குமே ப்ரஹ்ம லக்ஷ்மீ சம்பந்தம் குறிப்பிடப்படக் காணோம்.
ஆகிலும் ஸ்ரீ எம்பெருமானார் நூல் சுருக்கமே போலத் தோற்றும் முதல் ச்லோகத்திலேயே ஸ்ரீ எம்பெருமானை ஸ்ரீ நிவாசன் என்றார்.
இது ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லார்க்கும் மிக்கோனான எம்பெருமானை ஸ்ரீரிய:பதி என்றே கண்டதாலும்,
திரு இல்லாத் தேவரைத் தேரேன்மின் தேவு என்றதாலுமே ஆகும்.

பிரஹ்மணி! ஸ்ரீநிவாஸே – அவனே ஸ்ரீநிவாஸ பர பிரஹ்மம் என்று
1. ஸ்ரீயப் பதித்தவம்;
2. ஸ்ருஷ்டி ஸ்திதி லயகாரகத்வம் ;
3. ஸர்வாத்ம ஸம்ரக்ஷகத்வம் ;
4. பிரஹ்மணத்வம்
இத்யாதி விசேஷண விசிஷ்ட பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்பதாக தொடக்கத்தேலேயே
குணாஸ்ரய உபய லிங்க விசேஷ விசிஷ்ய பிரஹ்ம தத்வத்தை பிரதி பாதித்து
அத்வைதிகளின் மிடற்றைப் பிடிக்கிறார் ஸ்வாமி.
-ஐஸ்வர்யம் -உபய விபூதி நாதன் –

ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம் ஸம்ப்ரத்யனந்தோதயம்
ச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன: காந்தா ப்ரஸாதாத்ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத் வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்“-ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ – 3வது ஸ்லோகம்
“இந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது.-அது கிடைக்காததால் முன்பு அழிந்தது. இப்போது பல வகையாகத் தோற்றமளிக்கிறது.-ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத் தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை ஒரு போதும் எதிர் பார்க்கப் படுவதில்லை யன்றோ”

ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–58-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ? நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு
–84-

பகவத் விஷயத்திலே ஒன்றும் செய்யாத நெஞ்சே அவனை வாழ்த்தி அவன் திருவடிகளிலே பூக்களைப் புனைந்து உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே (தமது கைகளை திருக்கைகள் என்று வெறுப்பால் அருளிச் செய்கிறார் )பாழ்த்த விதி என்று தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம் பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே
–4-5-11-இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பலம் கொடுப்பாள் பெரிய பிராட்டி,’ என்கிறது

இவளை -ஸ்ரியம் தேவீம் தேவஜூஷ்டாம் உதாராம் -ஸ்ருதி பறை சாற்றும் -அப்படி இருக்க- மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச -இத்யாதிகள் சேரும்படி எங்கனே என்னில் –விஸிஷ்ட தாத்பர்யத்தாலே கூடும் -இல்லையாகில் நிர்விசேஷ சரண்யதை பிரசங்கிக்குமே –விஸிஷ்ட அத்வைத ஸித்தாந்தம் அன்றோ வேதாந்த-நம் ஸித்தாந்தம்-ஆகையாலே ஸ்ரீ விஸிஷ்டனே மோக்ஷ உபாயம் எனத் தட்டில்லை -விஸிஷ்ட பரத்வமிறே பதங்களுக்கு ஸ்வபாவ ஸித்தம்ஸ்வரூபத்தைச் சொல்லும் போது அவ்வோ தர்மங்களைக் இட்டல்லது சொல்ல ஒண்ணாது -அவற்றைக் கழித்துப் பார்க்கில் ஸஸ விஷாண துல்யமாம் –தத்வத்ரய சிந்தன அதிகாரம்

ஸ்ருதி ஸ்ம்ருதி பாஞ்சராத்ர ஸம்ப்ரதாய விருத்தங்களாக -கேவல தர்க்கங்களாலே ஓர் அர்த்தம் ஸித்தியாது -ஸித்திக்குமாகில் ஸ்வ அபிமத புருஷகாரத்வாதிகளும் நிர்விசேஷங்களாக ப்ரசங்கிக்கும்
ஸ்ருதேஸ் து ஸப்த மூலத்வாத் –2-1-27-என்றார் இறே ஸூத்ரகாரர் -ப்ரஹ்மத்தை அவயவம் கிடையாதா போது பஹுஸ்யாம் -ப்ரஹ்மமே பலவாகக் ஆயிற்று என்பதை எவ்வாறு பொருந்தும் எனில் விலக்ஷணமான தர்மம் -பிராட்டிக்கு எப்போதும் சேர்ந்தே இருப்பது -என்று வேதம் சொல்வதைக் ஒத்துக் கொள்ளத் தானே வேண்டும் என்கிறது இதில்-

து சப்தம் பக்ஷத்தை விலக்குவது
ஸ்ருதேஸ்–ப்ரஹ்மத்தின் இருப்புக்கு ஸ்ருதியே பிரமாணம் ஆகையாலே -இப்படி நேராது
சப்த மூலத்வாத்-ஸ்ருதி என்னும் சப்தத்தையே ஆதாரமாக -நம்பிக்கை காரணமாக -ஏற்று இருப்பதால்-பிரமாணாந்தரங்களுக்கு விஷயமாகாத ப்ரஹ்மத்திற்கு ஸ்ருதி கூறியபடி
நிர் அவயவத்வம் -காரணத்வம் -சர்வ சக்தத்வம் -முதலிய தர்மங்களை ஏற்றுக் கொள்வதால் எல்லாம் பொருந்தும்-இதனால் விரோதம் இல்லை-ஆகையால் ஸ்ருதி ஸ்ம்ருதி பாஞ்சராத்ர ஸத் ஸம் ப்ரதாயாதி ஸித்தமான இவ்வர்த்தம் -ஸ்ரீ விஸிஷ்டமான எம்பெருமானே மோக்ஷ காரணம் -என்னும் இவ்வர்த்தம் -ஒருவராலும் ஒரு ஹேதுவாலும் சலிப்பிக்க ஒண்ணாது –
பரதேவதா பாரமார்த்யாதிகார ஆரம்ப ஸ்லோகத்தில்-

ஆத்மைக்யம் தேவதைக்யம் த்ரிகசமதிகதா துல்ய தைக்யம் த்ரயாணாம்
அந்யத்ர ஐஸ்வர்யம் இத்யாதி அநிபுணா பணிதீ ஆத்ரியந்தே ந சந்த
த்ரயந்தை ஏக கண்டை தத் அனுகுண மனு வியாச முக்ய உக்திபி ச
ஸ்ரீ மான் நாராயணோ ந பதி அகிலதநு முக்தித முக்த போக்ய
—சாஸ்த்ர அறிவு முற்றும் அற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் எனில் ,-ஆத்மாக்கள் எல்லாம் ஒன்றே ; தேவதைகள் யாவரும் ஒன்றே ; த்ரிமூர்த்திகளின் தன்மையும் ஒன்றே;-இவர்களின் ஆத்மஸ்வரூபமும் ஒன்றே; இந்த மூவரையும்விட மேலாக இருப்பவன் ஒருவனே ஈச்வரன். ஆனால், இது ஸாரமுள்ளது , இது ஸாரமில்லாதது என்று பிரித்து அறியும் வல்லமையுடையவர்கள், இவைகளை ஏற்பதில்லை-ஒரே கருத்தைச் சொல்லும் உபநிஷத்துக்களினாலும் ,அவைகளோடு ஒத்திருக்கிற , மநு , வ்யாஸர் முதலியவர்களின் ஸூக்திகளாலும் ,எல்லாவற்றையும் சரீரமாக உடையவனும் ,மோக்ஷத்தை அளிப்பவனும், முக்தர்களால் அநுபவிக்கப்படுபவனுமான பிராட்டியுடன் எப்போதும் பிரியாமல் இருக்கிற நாராயணனே , நமக்கும் அனைவருக்கும் எஜமானன் –சேஷீ என்பதாகும் 

அர்த்த ஸ்வபாவ அனுஷ்டாந லோக த்ருஷ்ட்டி குரூக்திபி -ஸ்ருதி ஸ்ம்ருப்தியாம் ஸம் ஸித்தம் கடகத்வம் ஸ்ரியோ விது –லஷ்மீ புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி -பிராட்டியுடைய புருஷகாரத்வத்தை நிரூபிக்கும் பிரமாணம் -ஆறு ஹேதுக்கள் –1-அர்த்த ஸ்வ பாவம் -பெயரின் பொருளால் கிடைப்பது –2-அனுஷ்டானம் -முன்னோர்கள் செய்து காட்டியது -3-லோக த்ருஷ்ட்டி -உலகு நடப்புப்படி நடப்பது –4-குரூக்தி -ஆழ்வார் முதலானோர்களின் அருளிச் செயல்கள் –5-ஸ்ருதிகள் சொல்லுவது –6-ஸ்ம்ருதிகள் சொல்லுவது-

ஸ்ரீயதே -ஸ்ரயதே -ஸீதா சமஷம் காகுத்ஸ்தம் இதம் வசனம் அப்ரவீத் –ரா -3-15-6-
நித்யம் அஞ்ஞான நிக்ரஹாம்-கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-தேவஜூஷ்டாம் -ஸ்ருதி
வாசஸ் பரம் பிரார்த்தயிதா பிரபத்யேத் நியத ஸ்ரியம் -ஸ்ம்ருதி
அர்த்த ஸ்வ பாவ அனுஷ்டான லோக திருஷ்ட்டி குரூக்திபிர் -ஸ்ருத்யா ஸ்ம்ருத்யா ச ஸம் ஸித்தம் கடகார்த்த அவலம்பநம் -நிஷேப ரக்ஷை வசனம் –

ஸ்ரியம் கடக பாவேந ப்ரபத்ய ப்ரதமம் தத-
ஸ்ரீ மந் நாராயணஸ் யாங்க்ரி பஜேதா பீஷ்ட காங்ஷாய
-இத்யாதி பிரமாணங்களை இங்கே அனுசந்திப்பது –

இவ்விடத்தில் சிலர் காருண்ய ரூபையான இவள் விபரீதர் அளவாகவும் க்ருபார்த்த ஹ்ருதயை யாகையாலே இவளிடத்தில் சரண வரணம் பண்ண வேண்டுவதில்லை -என்றார்கள் —மாதர் மைதிலி ராக்ஷஸீஸ் த்வயி ததைவ ஆர்த்த அபராதஸ் த்வயா ரஷந்த்யா பவனாத்மஜாத் –லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா –குணரத்னகோசம் -50-
இது அதிவாதம் ரஸோக்தி -அவளை சரணம் புகுந்த பின்பே அவனை சரணம் அடைய வேண்டும் -கத்யத்ரயத்திலும் பார்க்கிறோம் -அது-இவளிடத்தில் சரண வரணம் பண்ண வேண்டுவதில்லை என்பது – மந்த்ர ரத்ன பிரதம பத வ்யுத்பத்தி –ஸ்ரீ யதே இதி ஸ்ரீ -நம்மால் அடையப்படுபவள் -அதைச் சார்ந்த பிரமாண நிர்த்தேச வையர்த்த்ய ப்ரசங்கங்களாலே ஸூதராம் அப ஹாஸ்யம்
ஸ்ரீ நரஸிம்ஹ அவதார வ்ருத்தாந்தத்தில் கொண்ட சீற்றம் தணிக்க பிராட்டியாரை முன்னிட்டு வேண்டி நின்றதை நினைத்துப் பார்க்க வேண்டும் –
இவ்விடத்தில் இவளுக்கு ஈஸ்வரேண ஸ்வரூபத அபி நித்ய ஸம்ஸ்லேஷம் விவஷிதம் என்றும் ஸத்துக்கள்-அல்வழக்கில் நம்மைப் படிய ஒட்டாதவர்கள் – அருளிச் செய்வர்கள்

சாந்தானந்த மஹாவிபூதி பரமம் யத்ப்ரஹ்ம ரூபம் ஹரே:

மூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத்ப்ரியதரம் ரூபம் யதத்யத்புதம்

யாந்யந்யானி யதாஸுகம் விஹரதோ ரூபாணி ஸர்வாணி தாநி

ஆஹுஸ்வைரநுரூபரூபவிபவைர் காடோப கூடாநி தேசது:ஶ்லோகீ – ஸ்லோகம் 4

“பகவானுடைய எல்லா வகையான உருவங்களிலும் உன் சம்பந்தம் உண்டென்பது இதில் பேசப்படுகிறது. அமைதியோடு முடிவில்லாத மகாவிபூதி என்னும் பரமபதத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்குத் திருமேனியாக உள்ள எந்த உருவமோ அதைவிட மிகவும் பிரியமான உருவம் எதுவோ, எது ஆச்சர்யமானதோ சுகத்துக்கேற்றவாறு அவ்வப்போது எடுக்கப்பட்ட லீலையாக எடுக்கின்ற வேறு பல உருவங்களோ அந்த எல்லா உருவங்களும் தனது தகுந்த உருவங்களுடன் பெருமையுடனும் அழுந்தி ஆலிங்கனம் செய்யப்பட்டவையே. இதனால் பகவானுடைய எல்லா நிலைகளிலும் பிராட்டியின் சேர்த்தி சொல்லப்பட்டது.”ப்ரபந்ந பாரிஜாதத்தில் வரத குரூபாத்தா -நடாதூர் அம்மாள் மேற்கோள் காட்டி அருளிய ஸ்ரீ விஷ்வக்ஸேன ஸம்ஹித ஸ்ரீ ஸூக்தியை இங்கே அனுசந்திப்பது

மயா யதா ₂ ஜக₃த்₃வ்யாப்தம் ஸ்வரூபேண ஸ்வபா₄வத ꞉ ।
தயா வ்யாப்த மித₃ம் ஸர்வம் நியந்த்ரீ ச ததே₂ஶ்வரீ ॥॥

மேற் சொல்லிய படி ஸ்வரூபத்தினாலும் குணத்தினாலும் என்னால் இவ்வுலகம் எவ்வாறு வியாபிக்கப்பட்டு இருக்கின்றதோ அவ்வாறே இம்மஹா லஷ்மியினாலும் வியாபிக்கப்பட்டு இருக்கின்றது -என்னைப் போலவே இவளும் இவ்வுலகத்துக்கு நியாமிகையாகவும் ஈஸ்வரியாகவும் இருக்கின்றாள் –

ஸ ஏகோ விபூ –எம்பெருமான் ஒருவனே வியாபித்து இருப்பவன் -என்னில் விபு -நியந்த்ரு பரம் -ஆளும் தன்மையைக் குறிக்கும் என்பதால் ப்ரக்ருத பாதமில்லை –இல்லையாகில் ஞான விபுத்வங்களும் ஸித்தியாது –எங்கும் பரந்து நிற்கும் பொருள்களிலும் ஞானத்தையும் சொல்கிறோமே -அதே கணக்கில் இவளுக்கு சொல்லலாம் அன்றோ –

அணுத்வே சதி சேதனத்வம் –மிதுன சேஷமே சேதன லக்ஷணமாகக் கடவது யதா ஸர்வகதோ விஷ்ணு : ததைவ இயம் த்விஜோத்தம”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுராணம், 1. 8 : 17 -இத்யாதிகளை இங்கே அனுசந்திப்பது -ஈஸ்வரனைப் போலவே இவளையும் ஸூஷ்மை என்றால் -அவ்யாஹத ஸர்வாந்த ப்ரவேஸ சமர்த்தை -என்றதாம் -அளவில் சிறியவள் என்னும் பொருளில் இல்லை –எல்லா வஸ்துக்களிலும் உள்ளே புகுந்து நியமிக்கும் திறன் உள்ளவள் என்பதையே சொல்லிற்றாம் –

விப்வீ ச -எங்கும் பரந்தவள் என்றும் அபியுக்தர் சொன்னார்கள் –
வந்தே ஸர்வ கதாம் விஷ்ணு வல்லபாம் விஸ்வ ரூபிணீம் -எங்கும் நிறைந்த யாவுமாய் இருந்து எம்பெருமானுக்கு இனியவனாய் இருப்பவள் -என்று நஞ்சீயர் அருளிச் செய்தார் –
ஸ்ரீ ரிதி விஸ்வ வ்யாபிநீ லஷ்மீ அபி தீயதே -ததா விஷ்வக்ஸேன ஸம்ஹிதாதிஷு அபி தீயதே -உலகெங்கும் பரந்த பிராட்டிமார் ஸ்ரீ என அறியப்படுகிறாள் -இவ்விதமே விஷ்வக்ஸேன ஸம்ஹிதை முதலியவற்றால் அறியப்படுகிறாள் -என்று இவளுடைய விபுத்வத்தை அருளாளப்பெருமாள் எம்பெருமானாரும் த்வய விவரணத்திலே ஸமர்த்தித்தார் –

முகுந்தப்பெருமாளும் தத்வ நிரூபணத்தில் -ஸ்ரீரபி நாராயணவத ஏவ ஸ்வரூபேண குண தஸ்ச விப்வீ -யதா ஆஹ பராசர யதா ஸர்வ கதோ விஷ்ணு ததைவேயம் இதி -எம்பெருமானைப் போலவே இவளும் ஸ்வரூபத்தாலும் குணத்தாலும் எங்கும் பரந்தவள் -பராசரரும் விஷ்ணு புராணத்தில் இவ்வாறு அருளிச் செய்கிறார் -என்று ஸ்பஷ்டமாக இவளுடைய விபுத்வத்தை உபபாதித்தார் -கடாம்புப் பெருமாளும் -தஸ்மாத் ஸ்வரூபதஸ் ஸ்வபாவதஸ் ச ஸ்ரியா வ்யாப்த பரமபுருஷ இதி ஸித்தம் என்று மிதுன நிர்ணயத்தில் விஸ்தரமாக ப்ரதிபாதித்தார்-

சோமாசி யாண்டானும் தத்வ ஸங்க்ரஹத்தில் -ஸேயம் ஸ்ரீ பகவான் இவ முமுஷு உபாஸ்யா ஸர்வ வ்யாபிநீ ச இதி அவ கம்யதே -மோக்ஷ உபாய ஞான விஷயீ பூதஸ்ய பகவத ஸ்ரீ நிவாஸத்வே விசேஷணாத் -ஸ்ரீ யதே இதி ஸர்வ ஸமாஸ்ரயணீய தாயா ஸ்ரீ ஸப்தத ஏவ ப்ரதிபாதநாத் -என்று அந்த உபாசனத்துக்கு விஷயமான ஸ்ரீ நிவாஸனுடன் எப்போதும் கூடியிருப்பவள் என்பதால் மோக்ஷம் விரும்புபவர்களால் எம்பெருமானைப் போலே இந்தப் பிராட்டி மோக்ஷத்துக்கான அறிவுக்கு விஷயமான எம்பெருமான் ஸ்ரீ நிவாஸனின் விசேஷணமாக உபாசிக்கத் தகுந்தவள் -எங்கும் பரந்தவள் என எண்ணப்படுகிறவள் -ஸ்ரீ யதே இதி ஸ்ரீ -அடையப்படுபவள் -என்பதை பெயரே காட்டும் –

வேதார்த்த ஸங்க்ரஹே -பகவத் பாஷ்யகாரர் -பகவத் ஸ்வரூப அனுரூபத் வஸ்ய லஷ்ம்யா ப்ரதிபாதநாத்
ஐஸ்வர்யமபி கைவல்யம் பகவத ப்ராப்தி மேவ ச
ததாதி பஜதாம் ஏஷா தயிதா பரமாத்மந
தயா பரேண பும்ஸேவ வ்யாப்தம் ஏதத் சராசரம்
தயா தேநாபி ரஹிதம் வித்யதே நது கிஞ்சன
ப்ரீதா ஸா சரணாகத்யா ஸஹைவ பரமாத்மநா
போகான் அபவர்க்கம் ச விதரதி அனுகம்பயா
ஞானதஸ் ச ஸ்வரூபேண விஸ்வம் வியாப்ய வ்யவஸ்திதாம் ஞானதஸ் ச ஸ்வரூபேண வியாப்ய தேவ ஸ்திதோ ஹரி
வ்யாப்த ப்ரியாபி அந்யாபி ஞானத பரமேஸ்வர
ந ஸ்வரூபத இத்யேஷ விஸேஷோ ஹி ஸ்ரியோ அநயோ
ஸ்ரிய புருஷகாரத்வ ஸ்த்ரீத்வாத்யா பேதகா ஹரே
பத்யு தண்ட தரத்வாத்யா வதான்யத்வாதய ஸமா -இத்யாதி லஷ்மீ தந்த்ர பரிஸிஷ்ட பாரத்வாஜ ஸம்ஹிதா பரிஸிஷ்ட வசநை
யுக்தார்த்த த்வயஸ்யாபி ப்ரதிபாதநாத்
-என்று ஸ ப்ரமாணமாக லஷ்மீ ஸ்வரூபத்தை நிரூபித்தார்

ஸ்ருதியும் ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ந்யவ் –அஸ்ய ஈசானா ஜகத விஷ்ணு பத்நீ –-இவையும் பிரமாணங்கள்-லஷ்மீ தந்திரத்தில் அடங்கிய பாரத்வாஜ ஸம்ஹிதையிலும் -எம்பெருமானின் பிரிய மனைவியான பிராட்டிமார் தன்னை வணங்குபவருக்கு -செல்வம் கைவல்யம் மோக்ஷம் -ஆகிய அனைத்தையுமே வழங்குபவள் -எம்பெருமானைப் போலவே உலகனைத்தும் இவளால் சூழப்பட்டவை –அவர்கள் இருவராலும் சூழப்படாத வஸ்து ஒன்றுமில்லை -சரணாகதியால் எம்பெருமானிடம் சேர்ந்து அவளும் மகிழ்பவளாய் கருணையினால் இவ்வுலக மற்றும் மேல் வுலக இன்பங்களையும் அளித்து அருளுகிறவள் -தனது ஸ்வரூபத்தாலும் ஞானத்தாலும் உலகை சூழ்ந்து நடத்துகிறாள் -ஹரியும் இப்படியே தான் ஸ்வரூபத்தாலும் ஞானத்தாலும் உலகைச் சூழ்ந்து இருக்கிறான் -பிராட்டியினுடையவும் மற்றவர்களுடையவும் ஞானத்தால் எம்பெருமான் சூழப்பட்டு இருக்கிறானோ -ஞானத்திற்கு விஷயமாகிறான் – மற்றவர்கள் ஞானத்தால் மட்டுமே சூழ்கிறார்கள் -பிராட்டியைப் போல் ஸ்வரூபத்தால் அல்ல
ஹரியைக் காட்டிலும் இவள் வேறுபட்டு இருப்பது -பெண்களுக்கே உரிய தன்மையாலும் -பரிந்து பேசும் புருஷகாரத்வத்தாலும் -இவளைக் காட்டிலும் அவனுக்கு தண்டகரத்வம் உண்டு -இருவருக்குமே காருண்யம் பிரியவசனம் போன்றவை பொதுவானவை –
இவற்றால் பிராட்டியினுடைய ஸ்வரூபம் இன்னது என்றும் நிரூபிக்கப்பட்டது –

கூரத்தாழ்வானும் மந்த்ர விவரணத்திலே –அத்ர அயம் அகார அவ ரக்ஷணே இதி தாதோ நிஷ்பன்ன பரம புருஷம் அபிததாதி-அத்ர ஸ்ரீ மத்வம் விவஷிதம் ஸ்ரீ மத ஏவ ரக்ஷகத்வாத் -என்று திருமந்திர பிரகரணத்தில் அருளிச்செய்து –
த்வய பிரகரணத்திலும் –மந்த்ர அபிப்ரேதம் பகவதோ ரக்ஷகத்வ உபயுக்தம் விசேஷம் அத்ர கண்டத உபாதத்தே ஸ்ரீ மத் பதேந ப்ராப்யத்வம் இவ ப்ராபகத்வம் அபி ஹி ஸ்ரீ மதே ஏவம் -ஸ்ரீமாந் ஏவ ஹி ரக்ஷகோ பவதி -என்று அருளிச் செய்தார்-தேவத்வமும் ரக்ஷகத்வமும் -திருவுடன் சேர்ந்தவனுக்கே –ஸ்ரத்தயா தேவ தேவத்வம் அஸ்னுதே -திருவில்லாத்தாத் தேவரை தேறேன்மின் தேவு –
த்வயத்தில் ஸ்ரீ மத் பதம் -மந்திரத்தில் சொல்லப்பட்ட நாராயணனுக்கு ரக்ஷகத்வத்துக்குப் பொருத்தமான விசேஷணம் -அதாவது அடையப்படுபவனாகவும் அடைவிப்பவனாகவும் உள்ள தன்மை பிராட்டியுடன் சேர்ந்தவனுக்கே —பிராட்டியை யுடையவனே ரக்ஷகனாவான்

அவர் தாமே -சாரீரிக சாரத்தில் –ஆனந்தா தய ப்ரதாநஸ்ய -என்ற ஸூத்ரத்தில் -ஆதி சப்தேந -அத்ர ஸ்வரூப நிரூபகம் ஸ்ரீயபதித்தவம் ச பராம்ருஸ்யதே -அத ஸ்வரூப நிரூபகத்வாத் யத்ர யத்ர பகவான் அபிதீயதே தத்ர தத்ர ஸ்ரீரபி –ததா ச சகல பல ப்ரதோ ஹி விஷ்ணு (விஷ்ணு தர்மம் ) பலம் அத இத்யாதி ஷு அபி ஸா தத் விசேஷணம் பவதீதி -ததேவம் பகவத இவ அஸ்யா அபி சகல பல சாதனத்வம் அபி -என்று மோக்ஷ உபாயத்வத்தை அருளிச் செய்தார் –

ஆனந்தாதய ப்ரதா நஸய —3-3-11-ஞான ஆனந்த அமல அந்நதத்வ ரூபங்களான ஸ்வரூப நிரூபக தர்மங்கள் ஸர்வ பர வித்யைகளிலும் உப ஸம்ஹரிக்கத் தக்கவையா இல்லையா என்று சம்சயம்-ஒரு பிரகரணத்தில் உள்ள குணங்களை வேறு பிரகரணத்தில் உப ஸம்ஹரிக்கையில் பிரமாணம் இல்லாமையால் உப ஸம்ஹார்யங்கள் அன்று என்று பூர்வ பக்ஷம்

அதை நிரசிக்கிறார்-ஸர்வ அபேதாத் -என்ற ஸூத்ரத்தில் இருந்து -அபேதாத் -என்பது இங்கு அனுவர்த்திக்கிறது
ஆனந்தாதய ப்ரதா நஸய-ஆனந்தாதி குணங்கள் எல்லா வித்யைகளிலும் உப ஸம்ஹரிக்கத் தக்கவையே-ப்ரஹ்மத்துக்கு சர்வ வித்யைகளிலும் அபேதத்தாலே -ப்ரஹ்ம ஸ்வரூபத்துக்கு இன்றியமையாத ஆனந்தாதி குணங்கள் அனுசந்திக்கக் கூடியவையே
இதனால் ப்ரஹ்ம குணங்கள் அநந்தமாய் இருந்தாலும் உப ஸம்ஹரிக்கக் கூடியவையே என்று கருத்து –-ப்ரஹ்மத்தின் ஆனந்தம் போன்ற தன்மைகள் அனைத்து இடங்களிலும் பொருந்தும் –ஒரு சில குணங்களே சில வித்யைகளுக்கு கூறப்பட்டாலும் –அனைத்து குணங்களுன் கூடிய ப்ரஹ்மம் அனைத்து உபாசனைகளிலும் ஒன்றாகவே இருப்பதால்

எம்பெருமான் ஸ்வரூபத்தை நிரூபிக்கும் தன்மையாக பிராட்டி இருப்பதால் எங்கெல்லாம் அவன் சொல்லப்படுகிறானோ அங்கெல்லாம் இவளும் சொல்லப்பட்டவளாகிறாள் -ஆகையால் அனைத்து பலன்களை அளிப்பவன் விஷ்ணுவே -மாங்கல்ய ஸ்தவம் -49-
பலம் அத உபபத்தே —3-2-37–யாகாதிகளில் கர்மமே அபூர்வத்தின் மூலமாக பலன் தரும் என்று பூர்வ பக்ஷம்

பரம் பொருளின் இடம் இருந்தே பலம் கிட்டுகின்றன -இதுவே பொருந்தும் –
எங்கும் உள்ளவன் -அனைத்தும் அறிந்தவன் -சர்வ சக்தம் -உதாரன் –
யஜ்ஞம் தானம் ஹோமம் உபாசனம் இவற்றால் மகிழ்ந்து அளிக்கின்றான்
ஷணம் நேரம் அழியக் கூடிய கர்மங்கள் பலன்களை தர வல்லமை அற்றனவே என்றவாறு-

நிகரில் புகழாய் –என்று வாத்சல்யம் சொல்லப்படுகிறது -தோஷ போக்யத்வம் வாத்சல்யம் என்று சிலர் மிகையாகச் சொல்லில் -தோஷங்கள் உபாதேயங்களாகும் –தோஷ அதர்சித்வம் -என்றால் ஸார்வஞ்ஞ ப்ரதிபாதிக ஸ்ருதி -ஸ்ம்ருதிகள் விரோதிக்கும்-பக்த தோஷேஷு அதர்ஸனம்--பாவிதம் -நடிப்பு – -தயா சதகம் -அடியார்களின் குற்றங்களை பொருள் படுத்தாது இருக்கச் செய்யும் அன்பு-அவனது சரீரமாகிய நம் மேல் அவன் ஆசை கொள்ளாமல் இருப்பானோ -சாரீரிக மீமாம்ஸைக்கு இதுவே தாத்பர்ய விசேஷமாக இருக்கும் -முமுஷுக்களுக்கு நித்ய அனுபாவ்யமாய் இருக்கும் –

உலகம் மூன்றுடையாய் -என்று ஸ்வாமித்வம் சொல்கிறது –ஸ்வ ரக்ஷண ப்ரவ்ருத்தி அர்ஹன் -உடையவன் உடைமையை ரக்ஷிக்குமதே பிராப்தம் -பிரதான பிரதிதந்தர அதிகாரம் –

என்னை ஆள்வானே -ஸுசீல்யம் ப்ரதிபாதிக்கப்படுகிறது –மஹதோ மந்தை ஸஹ நீரந்த்ர ஸம்ஸ்லேஷ ஸ்வ பாவம் இறே -இது ஸர்வாதிகாரமான ந்யாஸத்தை -ஸரணாகதியை -உள் கொண்டு இருக்கிறபடியை வித்யாபேத அதிகரணத்திலும் -விகல்ப அதிகரணத்திலும் ப்ரஹ்ம ஸூத்ரத்தில் ஸ்பஷ்டமாகக் காணலாம் -பலவான ப்ரஹ்ம வித்யைகள் இருக்க ஏதேனும் ஒன்றைச்செய்ய வேணும் -ந்யாஸ விதியையும் இவற்றுள் ஓன்று –இவற்றுக்கு எல்லாமே ஸுசீல்ய குணம் உறுப்பாய் இருக்கும்

திருவேங்கடத்தானே-அர்ச்சாவதார ப்ரதிபாதகம் -ஸுலப்யம் —ஸ்ருதி ஸ்ம்ருதி பாகத்திலும் -விவஷித குண உப பத்தேஸ் ச இத்யாதி -1-2-2-ஸூத்ரம் தன்னிலும் ப்ரஸித்தம் -ஸூத்ரம் -34–விவஷித குணோபபத்தே —1-2-2-குணங்கள் பொருந்த வேண்டும் என்றால் பரம் பொருளைக் குறித்தே ஆக வேண்டும்-

புகுந்தேன் என்று பர ஸமர்ப்பணம் வ்யஞ்சிதம் ஆயிற்று -தத் அங்கமான விஸ்வாஸமும் இவ்விடத்தில் கண்டோக்தம்

அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே பிராதிகூல்ய வர்ஜனமும் ஆனுகூல்ய சங்கல்பம் திருவடியை நினைத்தாலே தோன்றும்படி -அபயமளிப்பதும் -அணுக எளியதாயும் -போக்யமாயும் -பாவனமாயும் -இருக்கும் திருவடிகளே–அவனும் அவளும் கைவிட்டாலும் விடாத திண் கழலாய் இருக்கும் அன்றோ-

புகல் ஒன்றில்லா -என்று கார்ப்பண்யமும் யுக்தமாயிற்று –புகுந்தேன் என்று அங்கி தோன்றுகிற விடத்தில் கோப்த்ருத்வம் வரணம் தோன்றும்-

இவையெல்லாம் யாமுநாதி சரணாதிகளிலும் உண்டு என்றும் ஸ்தோத்ர பாஷ்ய -ரஹஸ்யத்ரய சாரா -அபய பிரதான சாராதிகளிலே பிரபஞ்சித்தோம்

நிகமன காரிகை ஸ்லோகங்கள்
1-பக்த்யா வ்யாஸாதய ஸக்தா அஸக்தாஸ் ச ப்ரபத்தித
ப்ராப்நுவந்தி பரம் பூர்வே விலம்ப்ய ஸஹஸா அபரே

ஸக்தா-திறனுள்ளவர்களான
வ்யாஸாதய-வ்யாஸர் முதலானோர்
பக்த்யா-பக்தி யோகத்தாலும்
அஸக்தாஸ்-திறன் அற்றவர்கள்
ச ப்ரபத்தித-ப்ரபத்தியாலும்
ப்ராப்நுவந்தி பரம்-பரம புருஷனாலே எம்பெருமானை அடைகிறார்கள்
அதில்
பூர்வே -முதலில் சொன்ன பக்தி யோகிகள்
விலம்ப்ய -தாமதமாகவும்-இனிமையாக இருந்தாலும் -ப்ராரப்தம் அனுபவித்து கழித்த பின்பே-பல பிறவிகளில் பின்பே பலம்
அபரே -மற்றவரான ப்ரபன்னர்கள்
ஸஹஸா -தாமதம் இல்லாமலும் அடைகிறார்கள்
வேண்டிய பொழுதிலேயே பலனைத் தரும் இன்றே இசையின் இணையடி சேர்ப்பர் -இனிப் பிறவோம்

2- கேநாபி ஸூக்ருதேந ஆர்த்தி கேஷாஞ்சித் இஹ ஜாயதே
கேஷாஞ்சித் ததபாவேந ஸஹஸா ஸா ந ஜாயதே

இஹ-இவ்வுலகில்
கேநாபி ஸூக்ருதேந -ஏதோ ஒரு நல்வினையால்
ஆர்த்தி -இந்த ஷணத்திலேயே மோக்ஷம் வேணும் என்னும் துடிப்பு
கேஷாஞ்சித் ஜாயதே -எவருக்காவது பிறக்கும்
கேஷாஞ்சித் -மற்றவருக்கு
ததபாவேந -இவ்வித நல்வினை இல்லாமையால்
ஸா-இத்துடிப்பு
ஸஹஸா ஸா ந ஜாயதே -உடனே பிறப்பதில்லை

3-அத அதிகாரி பேதேந சாதன த்வய ஸம்பவ
பலே து நாநயோ பேத விகல்ப கில ஸூத்ரித

அத -ஆதலால்
அதிகாரி பேதேந-செய்யத் தகுதி உள்ளவர்களுக்குள் உள்ள வித்யாஸத்தைப் பொறுத்து
சாதன த்வய ஸம்பவ -இவ்விரு உபாயங்களும் நேரும்
விகல்ப கில ஸூத்ரித-ஸூத்ரத்தில் இதுவோ அதுவோ என்று சொல்லி யிருக்கிறது அல்லவோ -இது நியத விகல்பம்
பலே து ந அநயோ பேத -ஆனாலும் இருவருக்குள் பலனைப் பொருத்த வரையிலும் வித்யாஸமில்லை

4-கஸ்ஸித் க்ருதீ ஸ்வ யத்நேந நிஹத்ய ரிபு மண்டலம்
புங்க்தே போகான் மஹாராஜ தமேவ ஆஸ்ரித்ய கஸ்ஸன

கஸ்ஸித் க்ருதீ -ஒரு செயலைச் செய்யும்
மஹாராஜ-அரசன்
ஸ்வ யத்நேந-தன் முயற்சியினால்
நிஹத்ய ரிபு மண்டலம் -பகைவரின் கூட்டத்தை அழித்து
புங்க்தே போகான் -அதன் போகத்தை அனுபவிக்கிறான் –
அதே நேரத்திலே ஒரு உயர்ச்சியும் செய்யாமலே
தமேவ ஆஸ்ரித்ய கஸ்ஸன -அவனை அண்டியதாலேயே அப்பலனை அனுபவிக்கிறார்கள் அன்றோ

5-தஸ்மிந் ந்யஸ்த பர தேந துல்ய போகோ மஹீ பதே
தத்வத் பக்தே பிரபத்தேஸ் ச யுஜ்யதே துல்ய போகதா

தஸ்மிந் மஹீ பதே -அந்த எம்பெருமானிடத்தில்
ந்யஸ்த பர-பக்தி யோகம் செய்ய வேண்டிய பளுவை வைத்தானாகில்
தத்வத் தேந துல்ய போக யுஜ்யதே-உண்மையில் எம்பெருமானுக்கு நிகரான இன்பத்தை அடைகிறான் –
பக்தே பிரபத்தேஸ் ச -பக்தியோகம் செய்பவனுக்கும் பிரபத்தி செய்பவனுக்கும்
துல்ய போகதா -அனுபவம் ஒன்றே தான்

6-உபாஸித குணாதே யா ப்ராப்தாவபி அபஹிஷ்க்ரியா
ஸா தத் க்ரது நய க்ராஹ்யா நாகாராந்தர வர்ஜனம்

உபாஸித குணாதே -உபாஸிக்கப்பட்ட குணம் முதலியவைகள்
ப்ராப்தாவபி-பகவானை அனுபவிக்கும் போதும்
யா அபஹிஷ்க்ரியா -எப்படி தள்ளப்பட வில்லையோ
ஸா தத் க்ரது நய க்ராஹ்யா -அவை தத் க்ரது நியாயப்படி அறியத்தக்கது -அதாவது
நாகாராந்தர வர்ஜனம் -உபாஸிக்கப்படாத ஆகாரங்கள் இல்லை என்பது இல்லை –
இருதி நேரத்தில் உபாஸிக்கும் போது தியானித்த குணங்களையே அங்கும் அனுபவிக்கிறான் என்பதால் மற்ற குணங்கள் இல்லை என்பதை இல்லையே

7-க்ருதே த்யாயந் யஜந் யஜ்ஜை த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயந்
யதாப்நோதி ததாப்நோதி கலவ் சங்கீர்த்ய கேஸவம்

க்ருதே த்யாயந் -க்ருத யுகத்தில் த்யானத்தாலும்
யஜந் யஜ்ஜை த்ரேதாயாம் -த்ரேதா யுகத்தில் யாகங்கள் செய்தும்
த்வாபரே அர்ச்சயந் –த்வாபர யுகத்தில் பூஜிப்பதாலும்
யதாப்நோதி -எவரை அடைவார்களோ
தத் கேஸவம்-அந்த கேஸவனை
தத் ஆப்நோதி கலவ் சங்கீர்த்ய -கலியுகத்தில் ஸ்தோத்ரம் செய்வதாலேயே ஒருவன் அடைகிறான் –
இவ்வாறு ஸ்தோத்ரம் செய்து பின்பு பக்தி யோகத்திலோ பிரபத்தியிலோ மூட்டி பலனை அளிக்கும் -ஆக பரம்பரை யாகக் காரணம் கொள்ள வேண்டும் –

8-நஹி ஸாஸ்த்ர விரோதேந கஸ்ஸின் ந்யாய ப்ரவர்த்ததே
தஸ்மான் ந முக்தி பேதோஸ்தி இத்யாஹு ஆகம வேதிந

ஸாஸ்த்ர விரோதேந-ஸாஸ்த்ரங்களுக்கு விரோதமாக
கஸ்ஸின் ந்யாய-நியாயங்கள் ஏதும்
நஹி ப்ரவர்த்ததே -சொல்ல இயலாது
தஸ்மான் –ஆகவே
முக்தி பேத-மோக்ஷத்தில் வித்யாஸம் ஏதும்
ந அஸ்தி இதி -இல்லை என்பதாக
யாஹு ஆகம வேதிந–ஆகமங்களை நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள்
பரம்பரையாகக் காரணங்கள் சொல்வதே பொருத்தம் என்றவாறு –

—————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –