மூன்றாந்திருவாய்மொழி -‘ஊனில்வாழ்’
முன்னுரை
ஈடு : ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான துன்பமெல்லாம் தீரும்படி வந்து கலந்த கலவியினை அருளிச்செய்கிறார். இத்திருவாய்மொழியில். ‘ஆயின், இது, ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியினைச் சார்ந்தன்றோ இருத்தல் வேண்டும்?’ எனின், ஆம்; முதல் திருவாய்மொழியின் ஈற்றுப் பாசுரத்தில் இறைவனுடைய முதன்மையினை அருளிச் செய்தாராயின், அது சம்பந்தமாகத் தோன்றிய அம்முதன்மையினை இரண்டாந்திருவாய்மொழியில் அருளிச்செய்தார்; பின்னர், துன்பம் எல்லாம் தீரும்படி வந்து கலந்த கலவியினை அருளிச்செய்கிறார் இத் திருவாய்மொழியில். ஆக, இரண்டாந்திருவாய்மொழி, நடுவில்1பிராசங்கிகமாக வந்ததித்தினை.
2தாம் பெற்ற பேற்றின் கனத்தைப் பார்த்தார்; அது அளவு இறந்ததாய் இருந்தது; தமது முயற்சி காரணமாக வந்ததாயின் அளவுபட்டு இருக்கும்; எல்லாம் வல்ல இறைவன் காரணமாக வந்த தாகலின் அவ்வின்பம் கனத்திருந்தது. மற்றும், தாம் அநுபவித்த அநுவபத்துக்குள்ளே 3எல்லா ரசங்களும் உண்டாய் ஒப்பும் உயர்வும் அற்றதாய் இருந்தது; ‘இத்தகைய பேற்றுக்கு உசாத்துணையாவார் யார்?’ என்று பார்த்த இடத்தில் சம்சாரத்திலே ஆள் இல்லாமையாலே, அவன் தன்னோடு ஒக்கப் 4பிராப்பியருமாய் அவனை நித்தியாநுபவம் பண்ணாநிற்பாருமாய், பகவானுடைய அநுபவத்துக்குத் தேசிகருமாய் இருக்கிற நித்திய சூரிகள் திரளிலே சென்று புக்கு ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு அநுபவிக்கப் பெறுவது எப்பொழுதோ?’ என்னும் 1அநவாப்தியோடே இத்திருவாய் மொழியினைத் தலைக்கட்டுகிறார். ‘ஆயின், ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியிற்கூறியது போன்று, பிரீதிக்கும் பறவை முதலியவற்றைத் தேடாது, ஈண்டு நித்திய சூரிகளைத் தேடுவதற்குக் காரணம் என்னை?’ எனின், ‘வாயும் திரை உக’ளில் ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திரியக்குகளையும் 2அசேதநங்களையும் சேர்த்தார்; இங்கு, கலவியால் வந்த பிரீதிக்கு இயற்கை அறிவையுடைய நித்தியசூரிகளைத் தேடுகிறார்.
இறைவன் ஆழ்வாரோடு கலந்த கலவி, பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி 3கலந்த கலவியைப் போன்று இருந்தது.
3. இவ்விடத்தில், ஸ்ரீராமாயணச் சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள்:
ராமஸ்து – பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி கலந்த கல்வியைச்
சொல்லுகிறது. ‘பித்ரு ஸூஸ்ரூஷண பரரானார், தர்மங்களைப் பிரவர்த்திப்பித்தார், தேவ
சமாராதளம் பண்ணினார்’ என்றாயிற்றுச் சொல்லிக் கொண்டு போந்தது: இப்படிப் போந்த
இவர், இப்போது, ‘வாத்ஸ்யாயநங் கற்றுக் காமதந்த்ரமேயோ நடத்திப் போந்தது?’
என்னும்படி வேறுபட்டார். சீதயா ஸார்த்தம் 5 பரமபதத்திலே செவ்வியோடே வந்தவளும்
பிற்பாடையாம்படி போக ஸ்ரோதஸ்ஸிலே முற்பாடரானார். விஜஹார – இப்படிப்
பரிமாறச் செய்தேயும் போக உபோத்காதத்துக்கு அவ்வருகு பட்டிலர். பஹூந் ருதூந் –
‘பஹூந் சம்வத்ஸாரந்’ என்னாதொழிந்தது, ‘ அவ்வோ கால விசேஷங்களுக்கு அடுத்த
போக உபகரணங்களைக்கொண்டு புஜித்தார்’ என்னுமிடம் தோற்றுகைக்காக. மனஸ்வீ –
ம்ஸ்லேஷத்தில் பிராட்டி கோலின அளவுக்கு அவ்வருகு பட்டுப் பரிமாறினார். தத் கத:-
தஸ்யாம் கத: – சாதி குணங்கள் திரவியத்துப் பிரகாரமாய்ப் பிரிக்க ஒண்ணாதபடியாய்
இருக்குமா போலே, பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி. தஸ்யா நித்யம் ஹ்ருதி
ஸமர்ப்பித : – இவர் உயர்த்தியை அறிந்திருப்பாள் ஒருத்தி ஆகையாலே ‘அப்பெரியவன்
இப்படித் தாழ விடுவதே!’ என்று அச் செயலிலே தன் நெஞ்சு துவக்குப்பட்டு ‘அது அது’
என்று கிடக்கு மாயிற்று. அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவிதான்.
நேர் சங்கதி இது தன்
ஊனில்வாழ் உயிரே! நல்லை, போ! உன்னைப்பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என்அம்மான்
தானும்யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும்பாலும் நெய்யும் கன்னலும் அமுதும்ஒத்தே.
பொ – ரை : சரீரத்தில் வசிக்கிற மனமே! நீ மிகவும் நல்லை நல்லை! உன்னை நான் துணையாகப் பெற்ற காரணத்தால், நித்தியசூரிகட்குத் தலைவனும், மது என்னும் அரக்கனைக் கொன்றவனும், என்னை அடிமை கொண்டவனுமான இறைவனுக்கு யானும் கலந்த கலவியிலே எல்லாச் சுவைகளும் உண்டாகுமாறு, தேனும் பாலும் நெய்யும் கருப்பஞ்சாறும் அமுதுமாகிய பொருள்கள் தம்மில் கலந்தாற்போன்று கலந்தோம்.
வி-கு : ‘ஊன்’ என்பதில் னகரம் சாரியை, ‘ஊ’ என்பதே பெயர், ஊ – தசை. ‘கலந்தொழிந்தோம்’ என்பது, ஒரு சொல் நீர்மையது; தொடர்மொழியாகக் கோடலுமாம்.
ஈடு : முதற்பாட்டில், 1இராச்சியத்தை இழந்த இராஜபுத்திரனை ஒருவன் இராச்சியத்திலே பிரவேசிப்பித்தால், ‘இவனாலே நாம் இப்பேறு பெற்றோம்’ என்று, அவன் அவனைக் கொண்டாடுமாறு போன்று, ‘கைங்கரிய சாம்ராச்சியத்திற்கு இட்டுப் பிறந்த வைத்து நெடுநாள் அதனை இழந்து கிடக்க, இந்நெஞ்சு அன்றோ இப்போது அதனைத் தந்தது?’ என்று தம் திருவுள்ளத்தைக் கொண்டாடுகிறார்.
ஊனின் வாழ் உயிரே – சரீரத்திலே வசிக்கிற உயிரே! இவ் விளியால், ‘பரமபதத்தைப் பெற்று அங்குப் பல வகை வடிவை உடையனாகி அனுபவிக்கிற இடத்திலேயோ நீ உதவி செய்தாய்? 2எழுவகைத் தாதுக்களாலான சரீரத்திலே நித்தியசூரிகள் அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ உதவினாய்?’ என்ற தொனிப்பொருள் தோன்றும், இனி, ‘ஊனில் வாழ் உயிரே’ என்பதற்குச் ‘சரீரத்தைப் பற்றி அனுபவிக்கிற அனுபவத்தையன்றி, அதற்கு அப்பால் வேறு ஒன்றனையும் அறியாதே வாழ்ந்து போன உயிரே!’ என்று பொருள் கூறலுமாம். இவ்விளியால், ‘நெடுநாள் இவ்வுலக இன்பங்களை நுகர்ந்து போந்த நீ, அவ்வுலக இன்பத்துக்குக் கைதர நிற்பதே!’ என்ற தொனிப்பொருள் தோன்றும். இப்பொருளில் வாழ்தல் – அனுபவித்தல். ஈண்டு ‘உயிர்’ என்றது, மனத்தினை. ‘ஆயின், மனத்தை ‘உயிர் ‘ என்பான் என்?’ எனின், உயிருக்கு 1தர்ம பூத ஞானம் நித்தியமாய் இருக்கவும், 2’மனிதனுக்கு மனமே பந்தங்கட்கும் மோக்ஷத்திற்கும் காரணம்’ என்கிறபடியே, ‘பந்த மோக்ஷங்களுக்குக் காரணம் மனமே,’ என்கிற பிரபதாந்யத்தைப் பற்ற ‘உயிரே’ என்று ஆத்துமாவை விளிக்குமாறு போன்று விளிக்கிறார். 3‘நல்லை போ – நல்லை வா’ என்றபடி. இனி, ‘நல்லை நல்லை!’ என்று கொண்டாடுகிறார் என்று கோடலுமாம். அன்றி ‘போ’ என்பது, விளியாகவுமாம்.
‘நடுவே என்னைக் கொண்டாடுகிறது என்?’ என்ன, ‘உன்னைப் பெற்று – பிறப்பிற்குக் காரணமாகப் போந்த உன்னை மோக்ஷத்திற்குக் காரணமாகப் பெற்று. அதாவது, இறைவனும் என்றும் உளன்; அவன் சம்பந்தமும் அநாதி; அவன்4எதிர் சூழல் புக்குத் திரியா நிற்கவும், நீ அவனுக்கு முகங்காட்டாமையால் அன்றோ நெடுங்காலம் இழந்திருந்தது? இன்று நீ முகங்காட்டினமையால் அன்றோ இப்பேறு பெற்றது?’ என்றபடி. ‘ஆயின், நீர் பெற்ற பேறு எது? என்ன, சொல்லுகிறார் மேல்: வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் தானும யானும் – தான் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும் அவதரித்து, மதுவாகிற அசுரனைப்போக்கியது போன்று, என்னுடன் கலப்பதற்குத் தடைகளாய் இருந்தனவற்றைப் போக்கி என்னைத் தோற்பித்துத் தன் பக்கலிலே கைங்கரியத்திலே மூளும்படி செய்த தானும் கைங்கரியத்திற்கு விஷயமாக உள்ள யானும், இனி, ‘தானும் யானும்’ என்பதற்கு, ‘என்னைப் பெறுகைக்கு நெடுநாள் எதிர்சூழல் புக்கு விடாய்ப்பித்த தானும், ‘வாயுந் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியில், ‘கண்ணாற்கண்ட பொருள்கள் அடங்கலும் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றனவாக நினைத்து விடாய்த்த நானும்’ என்றும், ‘கிருஷி செய்த தானும், கிருஷிக்கு விஷயமாக உள்ள நானும்’ என்றும் பொருள் கூறலும் ஆம்.
எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம் –1‘ஆயிரத்தில் ஒன்றும், கடலிற்குளப்படியும் போலே, தானும் நானும் ஆன சேர்த்தியிலே எல்லா ரசங்களும் பிறக்கும்படி கலந்தோம்; நித்திய விபூதியிற் சென்று புகினும் இப்பேற்றை அசையிட்டு இருக்குமித்தனை; அங்கு ஏற்றமாகச் செய்யலாவது இல்லை; இதனுடைய பிரவின்மையே அங்குள்ளது,’ என்பார், ‘கலந்தொழிந்தோம்’ என்கிறார். இனி, பரமபதத்திற்குப் போகத் தேடுவது, உசாத்துணைக்காவும், இச் சேர்த்தி இடைவீடு இன்றி இருத்தற்குமாம். ‘நன்று; என்போலே கலந்தோம்?’ என்னில், ‘தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தோம்’ என்கிறார். இதற்கு, ‘ஒரு சாதிப் பொருள்கள் தம்மில் ஒன்றனோடு ஒன்று கலந்தது போன்று கலந்தோம்’ என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பொருள் அருளிச்செய்வர். அதாவது, தேனும் தேனும் கலந்தாற் போலவும், பாலும் பாலும் கலந்தாற்போலவும், கன்னலும் கன்னலும் கலந்தாற்போலவும் அமுதும் அமுதும் கலந்தாற்போலவும் என்பதாம்.
2இதற்கு இவற்றைச் சுவையுடைப்பொருள்களுக்கு எல்லாம் உபலக்ஷணமாக்கித் ‘தானும் நானுமாக கலவிக்குள்ளே எல்லா ரசங் களும் பிறக்கும்படி கலந்தோம் என்கிறார்’ என்று எம்பெருமானார் பொருள் அருளிச்செய்வர். 1‘சர்வ ரஸ: சர்வ கந்த:’ என்கிற இறைவனோடே கலக்கும் கலவி ஆதலானும், ஞான ஆனந்தங்களையுடைய இறைவனும் ஆத்துமாவும் கலக்கிற கலவி ஆதலானும் சர்வ ரகங்களும் பிறக்கத் தட்டு இல்லை.
நன்று; ஆளவந்தார் நிர்வாகத்திலே, ‘தேனும் தேனும் கலந்தாற்போலே கலந்தோம்’ எனின், 2இவ்விரண்டனையும் சேர்த்துச் சொல்லும்போது, வருவது ஓர் அளவின் மிகுதி உண்டு அன்றே? அவ்வளவின் மிகுதிதானே பொருள்கள் இரண்டு என்பதற்கு ஏற்ற பிரமாணமாம்.
1. ‘ஆயிரம் என்ற எண்ணுடன் ஒன்று என்ற எண்ணும், கடல் நீருடன் குளப்படி நீரும்
சேர்ந்தது போன்று’ என்பதாம். இவ்வுவமைகள் இறைவனுடைய ஞான ஆனந்தங்களின்
மிகுதியையும், ஆழ்வாருடைய ஞான ஆனந்தங்களின் சிறுமையினையும் காட்ட வந்தன.
குளம்பு அடி – குளப்படி: ‘ஒரு விலங்கானது வைத்த குளம்பினது அடிச்சுவட்டில் தங்கிய
நீர்’ என்பது பொருள்.
2. ஆளவந்தார் நிர்வாஹத்தில், ‘தானும் யானும் எல்லாம் தன்னுள் தேனும்பாலும் நெய்யும்
கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தொழிந்தோம்’ என்று கூட்டிப் பொருள் காண்க.
எம்பெருமானார் நிர்வாஹத்தில், ‘தானும் யானுமான தன்னுள் (கலவிக்குள்) தேனும்
பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் எல்லாம் ஒத்து (உண்டாம்படி) கலந்தொழிந்தோம்’
எனக் கூட்டிப் பொருள் காண்க.
சோராமல் -அனைத்தையும் கொண்டவன் -தன்னையும் கொண்டு கலந்தான் என்றார் முன்னம் –
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply