Archive for the ‘திருச்சந்த விருத்தம்’ Category

ஸ்ரீ அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் -சொல் தொடர் ஒற்றுமை–வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகளுடன் -ஸ்ரீ திருச் சந்த விருத்தம் —ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

September 13, 2023

164-
பூநிலாய ஐந்துமாய் -1
தன்னுளே -10
உபாதான காரணத்வத்தை திருஷ்டாந்த சஹிதமாக சொல்லி அருளி –
ஸ்வ இதர சமஸ்த வஸ்துக்களிலும் விலஷணன் -ஐந்து மாய் என்றும் தத் தத்கத குணங்கள் என்றும்
ஒருமைப் படுத்திக் கூடுவது -சாமாநாதி கரண்யம் -சரீர ஆத்ம சம்பந்தம் –
அவற்றின் சத்தாதிகள் அவன் அதீனம் -இதை யார் நினைக்க வல்லர் –

பரமாணுக்களே -உபாதான காரணம் -என்னும் வைசேஷிகர் நினைக்க வல்லர் அல்லர்
பிரதானமே -உபாதான காரணம் -என்னும் –சாங்க்யர் நினைக்க வல்லர் அல்லர்
நிமித்த உபாதனங்களுக்கு பேதம் சொல்லும் சைவர் நினைக்க வல்லர் அல்லர் –
சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயமும் பரஹம பரிணாமம் என்னும் பேத அபேத வாதிகள் நினைக்கவோ –
நிர்விசேஷ சிந் மாத்ரம் ப்ரஹ்மம் தத் வ்யதிகரங்கள் அபரமார்த்தங்கள் என்னும் மாயாவாதிகள் நினைக்கவோ –
வேதாந்த ப்ரேமேயம் கைப்பட்டார் ஒழிய ஆர் நினைக்க வல்லர்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் நினைக்க ஒண்ணாது -என்கிறார் –

அண்டாகாரணமாய் -ஸ குணமான ப்ருத்வ்யாதி பூத பஞ்சகங்களுக்கு அந்தராத்மாவாய்
நிற்கிற நீயே ஜகத்துக்கு உபாதான காரணம் -இவ்வர்த்தம் வேதாந்த ப்ரமேயம் கை படாத
பாஹ்ய குத்ருஷ்டிகளால் நினைக்க ஒண்ணாது என்கிறார் –

பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லீரே –1-

பூநிலாய ஐந்துமாய்
பூமியிலே வர்த்திக்கிற சப்தாதி குணங்கள் ஐந்துமாய்
பூதேப்யோண்டம் -என்றும்
கந்தவதீ ப்ரத்வீ -என்றும் –
தஸ்யா கந்தோ குணோ மதஸ் -என்றும்
ப்ர்த்வி குணம் கந்தமாய் இருக்க -சப்தாதிகள் ஐந்தும் அதுக்கு குணமாகச் சொல்லுவான்
என் என்னில்

சப்தாதிபிர் குணைர் ப்ரஹ்மன் சம்யுதான் யுத்தரோத்தரைஸ் -என்கிறபடியே
காரண குண அனுவர்த்தியாலே -சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்களையும் கூட்டிச் சொல்கிறது –

புனல் கண் நின்ற நான்குமாய் –
அப்பிலே வர்த்திக்கிற சப்த ஸ்பர்ச ரூப ரசங்களுமாய்
சம்பவந்தித தோம்பாம்சி ரசாதாராணிதாநிது -என்கிறபடியே தத் குணம்
ரசமாய் இருக்க அதிலும் காரண குண அனுவர்த்தியாலே சப்த ரச ரூபங்களையும் கூட்டிச் சொல்லுகிறது

தீ நிலாய மூன்றுமாய்
ஜ்யோதி ருத்பத்ய தேவா யோஸ் தத் ரூபம் குண உச்யதே (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்கிறபடியே
அக்நி குணமான ரூபத்தோடே சப்த ஸ்பர்சங்களைக் கூட்டி –மூன்றுமாய் -என்கிறது –

சிறந்த கால் இரண்டுமாய் –
ஸ்வ சஞ்சாரத்தாலே சேதனர்க்கு ஆதாரமான பலத்தை உடைய வாயுவினுடைய குணம்
இரண்டுமாய் –

பலவான் பகவசந் வாயுஸ் தஸ்ய ஸ்பர்சோ குணோ மதஸ் -என்கிறபடியே
வாயு குணமான ஸ்பர்சதோடே ஆகாச குணமான சப்தத்தையும் கூட்டிச் சொல்லுகிறது

மீநிலாயதொன்றுமாகி –
மீதிலே வர்த்திக்கிற சப்த குணம் ஒன்றுமாய் –
ஆகாசம் சப்த லஷணம் -என்கிற படியே ஆகாச குணம் ஒன்றையும் சொல்லுகிறது

உக்தமான பூத பஞ்சகங்களுக்கு காரணமான ஏற்றத்தாலும் ஸ்வ வ்யதிரிக்தங்களுக்கு
அவகாச பிரதானம் பண்ணும் ஏற்றத்தாலும் –மீது -என்று ஆகாசத்தைச் சொல்லுகிறது –

அண்ட காரணம் ப்ர்திவ்யாதி குணங்களாய் இருக்க -சப்தாதி குணங்களோடே ஸாமாநாதி கரித்தது
பரத்வ்யதிகளோபாதி தத் குணங்களும் ஸ்வாதீநமாய் இருக்கையாலே (பகவத் ஆதீனம் -சரீரம் என்றவாறு )
பிருதிவி வாதி களோடு ஸாமாநாதி கரண்யம் சரீர ஆத்ம சம்பந்த நிபந்தனம்

குணங்களோடு ஸாமாநாதி கரண்யம் அவற்றின் உடைய சத்தாதிகள் ஸ்வாதீநமாய் இருக்கையாலே(பிரகாரம் பிரகாரி பாவம் )
அண்டத்துக்கு மஹத் அஹஙகாரங்களும் காரணமாய் இருக்க பூதங்கள் ஐந்தையும்
சொல்லுவான் என் என்னில் 

தஸ்மா த்வாஸ் தஸ்மா தாத்மன ஆகாரஸ் சம்பூத (ஆனந்த வல்லி )-என்கிற
ஸ்ருதி சாயையாலே அருளிச் செய்கிறார் –

பூதோப்யோஸ்ண்டம் -என்று ரிஷிகள் சொல்லுகிற பஞ்சீ கரணத்தாலே –
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்ம காரணம் ஆகையாலே சித் அந்தர்பூதமான புருஷ சமஷ்டியையும் நினைக்கிறது

இவ்வளவாக பரகத  ஸ்ருஷ்டி சொல்லிற்று ஆய்த்து

வேறு வேறு தன்மையாய்
அண்டாந்த வர்த்திகளாய் -ஒன்றுக்கு ஓன்று விலஷணமான தேவாதி பதார்த்தங்களுக்கும்
ஆத்மாவாய்
ஆத்மாக்களுடைய ஸ்வரூபம் -ஏக ரூபமாய் இருக்க –வேறு வேறு -என்கிறது கர்மத்தால்
வந்த தேவாதி ரூபங்களைப் பற்ற

நீ நிலாய வண்ணம் –
சித் அசித் சரீரி யான நீ -கார்ய காரண வர்க்கத்தில் நிற்கிற பிரகாரம் -அதாகிறது
அசித் கதமான பரிணாமம் என்ன
சேதன கதமான அஞ்ஞான துக்காதிகள் என்ன
இவை உன் பக்கல் ஸ்பர்சியாதபடி நிற்கை

நின்னை
சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமான உன்னை
ஆர் நினைக்க வல்லர்

நினைக்க வல்லார் ஆர்
பரமாணுக்கள் உபாதான காரணம் என்னும் வைசேஷிகர் நினைக்கவோ
பிரதானம் உபாதான காரணம் -சித் அசித் சம்வர்க்கத்தாலே ஜகன் நிர்வாஹம் என்னும் சாங்க்யர் நினைக்கவோ
நிமித்த உபாதனங்களுக்கு பேதம் சொல்லும் சைவர் நினைக்கவோ
சித் அசித் ஈஸ்வர தத்த த்ரயங்களும் ப்ரஹ்ம பரிணாமம் என்னும் பேத அபேதிகள் நினைக்கவோ
நிர்விசேஷ வஸ்து வ்யதிரிக்தங்கள் அபரமார்தம் என்னும் மாயாவாதிகள் நினைக்கவோ
வேதாந்த பிரமேயம் கைப்பட்டார் ஒழிய ஆர் நினைக்க வல்லர் என்கிறார் –

பத்தாம் பாட்டு -அவதாரிகை –
சர்வ சமாஸ்ரயணீ யத்வத்தால் வந்த உபாயஸ்யத்வமே அன்றிக்கே –
காரணந்து த்யேய -என்கிறபடி ஜகது உபாதான காரண வஸ்துவே சமாஸ்ரயணீயம்
என்று சொல்லுகிற காரணத்வ ப்ரயுக்தமான ஆஸ்ரயணீயத்வமும் தேவரீருடையது
என்று த்ர்ஷ்டாந்த சஹிதமான உபாதான காரணத்வத்தை அருளிச் செய்கிறார் –

(முதல் பத்து பாசுரங்களும் பகவானே உபாதான காரணம் -நின்னை யார் நினைக்க வல்லார் என்பார்
கடலில் உருவாகும் அலை அதிலேயே சேருமா போல் என்று த்ருஷ்டாந்தம் காட்டி இந்தப் பிரகரணம் நிகமிக்கிறார்)

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –10-

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல் இத்யாதி –
த்ருஷ்டாந்த்தத்திலே அர்த்தத்தை சிஷித்து த்ருஷ்டாந்திகத்திலே அதிதேசிக்கிறார் 
தன்னுளே
 -என்கிற இத்தால் -சரீர பூதசேதன அசேதனங்களும் -ஸ்ருஷ்டாத வியாபாரங்களும்
-ஸ்வரூப அந்தர்பூதம் என்கை –

திரைத்து எழும் தரங்கம் –
நிஸ்தரங்க ஜலதி யானது வாயுவாலே கிளர்ந்து எழுந்து எங்கும் ஒக்க சஞ்சரியா நின்றுள்ள
திரைகளை உடைத்தாகை –

த்ருஷ்டாந்திகத்திலே வாயு ஸ்தாநீய பகவத் சங்கல்பம் அடியாக ஸ்ருஷ்டி காலத்திலே
பிறந்த குண வைஷம்யம்

வெண் தடம் கடல் –
சஞ்சாரியான திரையையும் அசஞ்சாரியான வெண்மையும் உடைத்தான இடமுடைய கடல் –

இது மேலே –நிற்பவும் திரிபவும் -என்கிறதுக்கு திருஷ்டாந்தம்

தன்னுளே திரைத்து எழும் தடங்குகின்ற தன்மை போல் –
வாயு வசத்தாலே பரம்பின திரைகள் மற்றப்படி ஒன்றிலே ஓன்று திரைத்து எழுந்து
உப சம்ஹரிக்கிற ஸ்வபாவம் போலே -இத்தால் ஏக த்ரய பரிணாமத்தை சொல்லுகிறது அன்று –

கீழ்ப் பாட்டிலே உபாசனம் சொல்லிற்றாய் -இப்பாட்டில் உபாஸ்யமான ஜகத் உபாதான
காரணத்தை சொல்லுகிறது -அதாகிறது

ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே காரணம் -ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே
கார்யம் என்று வேதாந்த பிரசித்தமான அர்த்தம் -இது எத்தாலே அறிவது என்னில் –

ந கர்மா விபாகாத் -என்கிற ஸூத்ரத்தாலே
சதேவ -என்கிற அவிபாக ஸ்ருதியாலே -அக்காலத்தில் ஷேத்ரஞ்ஞர் இல்லாமையாலே
கர்மம் இல்லை என்று பூர்வ பஷித்து -ஞானவ் த்வா வஜ்ர வீச நீ சௌ –என்றும்
நித்யோ நித்யாநாம் -என்று ஷேத்ரஞ்ஞர்களுக்கும் தத் கர்ம ப்ரவாஹத்துக்கும் அநாதித்வம்
உண்டாகையாலே -அது அர்த்தம் அன்று என்று நிஷேதித்து -நாம ரூப விவேக பாவத்தாலே
சதேவ என்கிற அவதாரணம் உபபன்னம் என்றது இறே

திருஷ்டாந்தம் ஏக த்ரவ்ய முகத்தாலே சொன்னார் இவரே அன்று –

யதா சோம்யை கேந  ம்ர்த்பிண்டேந -என்று உபநிஷத்து
கடகமகுட கர்ணிகாதி பேதைஸ் -என்று ஸ்ரீ பராசுர பகவான்
இத்தை த்ருஷ்டாந்திகத்திலே அதிதேசிக்கிறார்

நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் –
உன் ஸ்வரூபத்துக்கு உள்ளே உத்பத்தியும் விநாசமுமாய் போருகிற ஸ்தாவர ஜங்க மாத்மகமான சகல பதார்த்தமும் –
ப்ரக்ர்த உபசம்ஹார வேளையிலே -தம ஏகி பவதி -என்கிறபடியே தேவரீர் பக்கலிலே
அடங்குகின்ற இந்த ஸ்வபாவம்

நின் கண் நின்றதே –
தேவரீர் பக்கலிலே உள்ளது ஓன்று -இவ் உபாதான காரணத்வம் வ்யக்த்யநதரத்தில் இல்லை என்கை

முதல் பாட்டில் சொன்ன காரணத்வத்தை -பத்தாம் பாட்டில் திருஷ்டாந்த சஹிதமாய்
சொல்லி முடித்தாராய் விட்டது –

———————-

165-
ஊறோடு ஓசை -2
உண்ணும் சோறு பருகு நீர் -திருவாய்மொழி -6-7-1-
சேலேய் கண்ணியரும் -திருவாய் மொழி -5-1-8-
சப்தாதிகள் ஐந்துக்கும் உப லஷணம்-

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞாநமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே –2-

ஊறோடு ஓசையாய ஐந்துமாய்
பரமபத்தி உக்தராக இருப்பருக்கு சர்வவித போக்யமாய் இருப்பவன்

ஊறோடு ஓசை என்றது சப்தாதிகள் ஐந்துக்கும் உப லஷணம் –
உண்ணும் சோறு பருகும் நீர் -என்றும்

கண்டு கேட்டு வுற்று மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட இன்பம் எம்பெருமான் ஆயிரே-என்றும்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் -என்னக்  கடவது இறே

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1-

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் –
இவள் அவ்வருகே ஒரு வாய் புகுநீர் -உன்மத்தக அனுபவம் -தேடிப் போனாளோ. என்றது,-
தேக யாத்ரை பார்க்க வேண்டுமோ இவள்
இங்கு இருந்த நாள் அந்நம் பானம் முதலியவைகளாலே தரித்து, அங்கே புக்கு அவனாலே தரிக்கப்போனாளோ என்றபடி.
“அஹம் அந்நம், அஹமந்நாதா: – நான் பகவானுக்கு இனியன், நான் பகவானாகிய இனிமையை அநுபவிக்கிறவன்” என்று
இருப்பார்க்கும் -இங்கேயே பெற்று இருப்பார்க்கு -அவ்வருகு போக வேணுமோ?

சோறு, நீர், வெற்றிலை என்ன அமையாதோ?
‘உண்ணுஞ் சோறு’ என்பது போன்ற அடைமொழிகட்குக் கருத்து என்? என்னில்,
வேட்ட பொழுதின் அவை யவை போலுமே, தோட்டார் கதுப்பினாள் தோள்” என்று வள்ளுவனும் சொன்னான் அன்றோ;
(ஆசைப்பட்ட சமயத்தில் அவை அவை பெற்றால் உகக்குமா போல் பூ சாத்தும் தோள் உடன் அணைவது உகக்குமே -)
அப்படியே, இவை தாமே, விருப்பம் இல்லாதவைகளாகவும் இருக்கும் ஒரோ நிலைகளிலே;
அதற்காக, விரும்புகிற சமயத்தில் இவைதாம் யாதொரு படியிருக்கும் அப்படியே யாயிற்று இவர்க்கு
எப்போதும் பகவத் விஷயம் என்கைக்காகக் கூறப்பட்டன என்க.
தாரக போஷக போக்கியங்கள் எல்லாம் “வாஸு தேவஸ் ஸர்வம்”
“பஹூநாம் ஜந்மநாம அந்தே ஞானவாந் மாம் ப்ரபத்யதே
வாஸுதேவஸ் ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு துர்லப:”-என்பது ஸ்ரீகீதை, 7 : 19
என்று கொண்டு ‘எல்லாம் கிருஷ்ணன்’ என்று இருக்கும் என்பாள் ‘எல்லாம் கண்ணன்’ என்கிறாள்.

‘உண்ணும் சோறு’ என்ற நிகழ் காலத்தாலே, அல்லாதது உண்டு சமையும் சோறு என்கையும்,
இது மாறாதே உண்ணும் சோறு என்னுமதுவும் தோற்றுகிறது.

“கணை நாணில், ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன்னெஞ்சே,
ஓவாத ஊணாக உண்” -பெரிய திருவந். 78.-என்னக் கடவதன்றோ.
மாறாதே உண்ணலாவதும்,
மாளாததும் இதுவே அன்றோ;
“அப்பொழுதைக்கப் பொழுது என் ஆராவமுதம்”-திருவாய். 2. 5 : 4.- என்றும்,
கொள்ள மாளா இன்ப வெள்ளம்” -திருவாய். 4. 7 : 2.-என்றும் அன்றோ இருப்பது.
இவற்றில் ஆகாதது ஒன்று இல்லை கண்டீர்,
இவை எல்லாம் வகுத்தவனேயா யிருக்கை என்பாள் ‘எம்பெருமான்’ என்கிறாள்.
இவள் சந்நிதியே அமையும் கண்டீர் எங்களுக்கு.

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10-

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8-

சேல் ஏய் கண்ணியரும்
தங்கள் நோக்காலே துவக்க வல்ல பெண்களும்.
பெரும் செல்வமும்-
நிரவதிகமான செல்வங்களும்.
நன்மக்களும் –
குணங்களால் மேம்பட்ட புத்திரர்களும்.
மேலாத் தாய் தந்தையும்
தங்கள் தங்களை அழித்து மாறியாகிலும் குழந்தைகளை நோக்கும் தாய் தந்தையர்களும் எல்லாம்.

இனி அவரே ஆவார்
இனி அவரையே எனக்காகப் பற்றப் பார்த்தேன் என்கிறார். துக்கங்களைக் கொடுக்கக்கூடிய அவர் அவர்களுடைய
சம்பந்தத்தால் துக்கப்பட வேண்டா என்பார் ‘அவரே ஆவார்’ எனப் பிரிநிலை ஏகாரங் கொடுத்து ஓதுகிறார்.
தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் இருப்பிடமும் காப்பவனும் சிநேகிதனும் மோக்ஷ உலகமும்
ஸ்ரீமந் நாராயணனாகவே இருக்கிறான்” என்பது உபநிடதம்.
யானோ தசரத சக்கரவர்த்தியிடத்தில் தகப்பன் என்ற முறையைப் பார்க்கிறேன் இல்லை;
எனக்கு ஸ்ரீ ராமபிரானே தமையனும் சுவாமியும் உறவினர்களும் தமப்பனுமாக இருக்கிறார்” என்றார் இளைய பெருமாள்.
அஹம் தாவத் மஹாராஜே பித்ருத்வம் நோபல க்ஷயே பிராதா பர்த்தாச பந்துஸ்ச பிதாச மம ராகவ:”-அயோத். 58 : 31.

நற்றாதை நீ தனிநாயகன் நீ வயிற்றிற் பெற்றாயும் நீயே பிறரில்லை பிறர்க்கு நல்கக்
கற்றா யிது காணுதி இன்றெனக் கை மறித்தான் முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அனான்.- என்பது கம்ப ராமாயணம்

————————————————————————————————-

166-
ஆதியாய -5-
நிற்கின்றது எல்லாம் நெடுமால் -நான்முகன் திருவந்தாதி -54
பிரதீதி வ்யவஹாரங்களிலே வந்தால் பிரதானவன் ஆனவனே சாஷாத் கரிக்கும் போது
நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்கிறபடி –
விசேஷ்யமான தேவரீர் பிரதானராய் சேதன அசேதனங்கள் விசேஷண மாத்ரமாய் இருக்கையும் -சப்த வாச்யங்களில் பிரதானனாய் நிற்கையும்
நிற்கின்ற -சமஸ்த வஸ்துக்களிலும் சேதன த்வாரா பிரவேசித்து -அவற்றுக்கு வஸ்துத்வ
நாம பாகத்வம் உண்டாகும் படி நிற்கிற நிலை -என்றவாறு –

நின்று இயங்கும் ஒன்றிலா உருக்கள் தோறும் ஆவியாய்
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னதென்று
என்றும் யார்க்கும் எண்ணிறந்த வாதியாய் நின்னுந்தி வாய்
அன்று நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே –5-

இன்னதென்று –
ஏவம் விதம் என்று -திருஷ்டாந்த முகத்தாலே உபபன்னம் என்று

என்றும் யார்க்கும் –
வர்த்தமான காலத்தோடு பவிஷ்ய காலத்தோடு வாசி யற அதிசயித ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளுக்கும்

எண்ணிறந்த –
மநோ ரததுக்கும் அவ்வருகாய் நின்ற

வாதியாய் –
ப்ரதீதி வ்யவஹாரங்களிலே வந்தால் ப்ரதானன் ஆனவனே

சாஷாத் கரிக்கும் போது –நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்கிறபடியே விசேஷ்யமான தேவரீர்
பிரதானமாய் -சேதன அசேதனங்கள் விசேஷண மாத்ரமாய் இருக்கையும்
வ்யவஹாரத்தில் வந்தால் –வசசாம் வாச்யமுத்தமம் -என்கிறபடியே சப்த வாச்யங்களில் பிரதானனாய் நிற்கையும்

அன்று-நின்னுந்தி வாய்  நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே –
இது கிடக்க -ஜகத் ஏக காரணனாய் நிற்கிற நிலை தான் ஒருவருக்கும் அறிய நிலமோ –

சர்வரும் பகவத் சேஷம் என்று அறியாதார் கல்வி எல்லாம் வ்யர்த்தம் -என்கிறார்-

தேவராய் நிற்கும் அத்தேவும் அத தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் –யவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை –54-

தேவர்களே நிற்கின்ற வேண்டற்பாடும்-
அத்தேவதைகளில் பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளாய் நிற்கிற பழையதான செயலும்
எல்லாருமாய்க் கொண்டு
மற்றும் மனுஷ்யாதிகளுமாகக் கொண்டு   -நிற்கிற இது எல்லாம் சர்வேஸ்வரனுக்கு சேஷம் என்று
அறியாதார் கற்கின்றது எல்லாம் வ்யர்த்தம் –

தேவராய் நிற்கும் அத்தேவும் -நெடுமால் —அத்தேவரில்-மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் நெடுமால்
யவராய்-நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்று அறியவாருடைய கல்வியே பயன் பெற்றதாம்
அனைத்துக்கும் அந்தர்யாமி அவன் அன்றோ -த்ரி மூர்த்தி அவதாரம் எடுத்ததும் திருமாலே
இப்படி பிரித்து பிரித்து சொல்லுவான் என் –சர்வம் அவனே என்ற
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் நிலையே கற்று உணர்ந்தார் நிலை என்றவாறு –

————————————————————————————————–

167-
ஓன்று இரண்டு மூர்த்தியாய் -7
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி -திரு நெடும் தாண்டகம் -2-
ஓன்று பிரதானமான மூர்த்தியும் -அப்ராதமான இரண்டு மூர்த்தியும் -பிரம ருத்ராதிகளைக்
சரீரமாக கொண்டு -அவர்களுக்கு நிர்வாஹனான ஸ்ரீ மன் நாராயணன் –
ஒன்றாம் சோதி -ஒன்றே யாம் சோதி -உத்பாதகமாயும் சரீரியாயும் சேஷியாயும் இருக்கும் தேஜஸ் ஒன்றே
மற்ற இரண்டும் உபபாதமாயும் -சரீரமாயும் -சேஷமாயும் இருக்கும் -எங்கே கண்டோம் என்னில் –

ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் -என்று ஜகத் காரண வஸ்துவைச் சொல்லி –
ந பிரம்மா நேசான நேமே த்யாவா ப்ருத்வீ -என்று அசேதனமான ப்ருத்வ்யாதிகளோபாதி பிரம ருத்ராதிகளையும்
சம்ஹாரத்திலே கர்மீபவிக்கச் சொல்லுகையாலும் -ஸ ப்ரஹ்ம ஸ சிவ -இத்யாதிகளில்
இவர்களுடைய ஷேத்ரஜ்ஞத்வ சேஷத்வத்தை சொல்லுகையாலும் –
ஏஷ சர்வ பூதாந்தராத்மா என்று சர்வ சப்தத்தாலே க்ரோடீ க்ருதமான வ்யாப்ய பதார்த்தங்களிலே
அந்ய தமர் ஆகையாலும் -கார்யத்வமும் -ஷேத்ரஜ்ஞத்வமும் சேஷத்வமும் சரீரத்வமும் சம்ப்ரதிபன்னம் என்கை –

ஓன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்
ஓன்று இரண்டு காலமாகி வேலை ஞாலமாயினாய்
ஓன்று இரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே
ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே –7

ஓன்று இரண்டு மூர்த்தியாய் –
ப்ரதானமான ஒரு மூர்த்தியும் அப்ரதானமான இரண்டு மூர்த்தியுமாய்
ப்ரஹ்ம ருத்ராதிகளை சரீரமாகக் கொண்டு -அவர்களுக்கு நிர்வாஹனாய் –
திவ்ய மங்கள விக்ரஹத்தை இதர சஜாதீயமாக ஆக்கிக் கொண்டு அவதரித்து
பிரயோஜனாந்தர பரரோடு முமுஷுகளோடு வாசி யற சர்வ நிர்வாஹகனாய் –

முனியே நான்முகனே முக்கண் அப்பா –

பாருருவி நீர் எரி கால் விசும்புமாகி பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற விமையவர் தம் திரு வுரு வேறு எண்ணும் போது
ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ யொன்று மா கடலுருவம் ஒத்து நின்ற
மூ வுருவம் கண்ட போது ஒன்றாம் சோதி முகிலுருவம் எம் அடிகள் உருவம் தானே–2-

மூ வுருவம் கண்ட போது –
மூன்று தத்வத்தையும் பிரமாணத்தால் கண்ட போது –

ஒன்றாம் சோதி –
அவற்றில் வைத்துக் கொண்டு ஒன்றேயாம் சோதி –
உத்பாதகமாயும் –
சரீரியாயும் –
சேஷியாகவும் -இருக்கும் –

எங்கே கண்டோம் -என்னில் –
ஏகோஹவை நாராயண ஆஸீத் -என்று ஜகத் காரண வஸ்துவைச் சொல்லி –
ந ப்ரஹ்ம நேசாந நேமேத்யாவா பர்த்வீ (மஹா உபநிஷத் )–என்று
அசேதனமான ப்ரத்வ்யாதிகளோபாதி
ப்ரஹ்ம ருத்ராதிகளையும் சம்ஹாரத்திலே கர்மீபவித்து
சொல்லுகையாலும் –

ஸ ப்ரஹ்ம ஸ சிவா ஸ இந்த்ர (தைத்ரியம் நாராயண வல்லி )-இத்யாதிகளாலே
இவர்களுடைய ஷேத்ரஞ்ஞ்த்வ சேஷத்வத்தைச் சொல்லுகையாலும்

ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா (ஸூ பாலா உபநிஷத் ) – என்று
சர்வ சப்தத்தாலே க்ரோடீ க்ர்தமான வ்யாப்ய பதார்த்தங்களிலே
அந்ய தமராகையாலும் –
கார்யத்வமும்
ஷேத்ரஞ்ஞத்வமும்
சரீரத்வமும்
சம் பிரதிபன்னம் -என்கை –

ஆம் சோதி -என்கையாலே
நிர்வாஹ்ய ஜ்யோதிஸ் ஸூக்களான -ஆத்மாக்களை -வ்யாவர்த்திக்கிறது –
சேதனரும் ஸுவயம் பிரகாசமாய் இறே இருப்பது –
ஆகையால் இறே
நாராயண பரோஞ்சோதி -(தைத்ரியம் நாராயண வல்லி)என்றும் –
ஜ்யோதிஷாம் ஜ்யோதி -(ப்ருஹதாரண்யம் )என்றும்
சொல்ல வேண்டிற்று –

மூ வுருவும் கண்ட போது ஒன்றாம் ஜோதி -என்கிறது –
ஏக த்ரவ்யாதிகளுக்கு சேருமா போலே இருக்கும் –
இது இவருக்கு தர்சனம் அல்லாமையாலே பஷம் அல்ல –

இன்னமும்
மின்னுருவாய் –என்றும் –பின்னுருவாய் -என்றும் –பொன்னுருவாய் -என்றும்
தத்வ த்ரயங்களை அகலகல பிரித்துச் சொல்லுகையாலும் –
இப் பாட்டிலே –ஏருரு -என்றது சரீர ஆத்ம பாவங்களைச் சொல்லுகையாலும்
இந்த்ரற்கும் பிரமனுக்கும் முதல்வன் தன்னை -என்று மேலே (4 பாசுரம் )சொல்லுகையாலும்
பிரகரண விரோதம் உண்டு –

—————————————————————————————————–

168-
ஆதியான வானவர்க்கும்-8
ஏழு உலகின முதலாய வானோர் -திருவாய்மொழி -1-5-1-
அஸ்த்ர பூஷணா தயா க்ரமத்தாலே நித்ய ஸூரிகளை ஜகத்துக்குக் காரண பூதராக சொல்லக் கடவது இறே
அஸ்த்ர பூஷண அத்யாயத்திலே ஸ்ரீ கௌஸ்துபத்தாலே ஜீவ சமஷ்டியை தரிக்கும் என்றும் –
ஸ்ரீ வத்சத்தாலே பிரகிருதி ப்ராக்ருதங்களை தரிக்கும் என்றும்சொல்லா நின்றது இறே

ஆதியான வானவர்க்கும் அண்டமாய வப்புறத்து
ஆதியான வானவர்க்கும் ஆதியான வாதி நீ
ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி
ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே

ஆதியான வானவர்க்கும்
ப்ரஹ்ம -தஷ பிரதாபதிகள் -சப்த ரிஷிகள் -த்வாதச ஆதித்யர்கள் ஸ்ருஷ்டி கர்த்தாக்கள்

இந்திரன் சதுர் தச மனுக்கள் ஸ்திதி கர்த்தாக்கள்

ருத்ரன் அக்நி யமன் -சம்ஹார கர்த்தாக்கள் இவர்களை இத்தால் சொல்லிற்று

அண்டமாய வப்புறத்து ஆதியான வானவர்
நித்ய ஸூரிகள்

அண்ட சப்த வாச்யமான லீலா விபூதிக்கு அப்புறத்தில் -பரம பதத்தில் -வர்த்திக்கிற
ஜகத் காரண பூதரான நித்ய ஸூரிகளுக்கும் –

அஸ்த்ர பூஷணாத்யாய க்ரமத்தாலே
நித்ய ஸூரிகளை ஜகத் காரண பூதராக சொல்லக் கடவது இறே

(ஸ்ரீ விஷ்ணு புராணம் அஸ்திர பூஷண அத்யாயம்
ஸ்ரீ கௌஸ்துபம் -ஜீவாத்மா தரிக்கும்
ஸ்ரீ வத்ஸம் -பிரகிருதி மண்டலம் தரிக்கும்)

அதவா

(அநாதி யான பழைமையான என்ற அர்த்தத்தில்)
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்திதேவ -என்றும்-

யத்ரர் ஷயஸ் ப்ரதம ஜாயே புராணா -என்றும் சொல்லுகிற -அநாதி-ஆதி தேவர்கள் என்றுமாம்

ஆதியான வாதி நீ –
அவர்களுக்கும் நிர்வாஹகனாய் –

இப்படி உபய விபூதியிலும் ப்ரதானரான இவர்கள் உடைய சத்தாதிகளுக்கு ஹேதுவான ப்ரதானன் நீ –

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1-

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
வளிவிதான ஏழ் உலகு -என்று லீலா விபூதியாய்-ததீயத்வ ஆகாரத்தால் வளப்பம் –
வானோர் இறை -என்கையாலே நித்ய விபூதியைச் சொல்லிற்றாய்
இப்படி உபய விபூதி நாதனைக் கிடீர் நான் அழிக்கப் பார்க்கிறது -என்கிறார் – கள்வா என்பான் –
வளவியனாய் ஏழ் உலகுக்கும் முதலாய் -வானோர் இறையாய் இருக்குமவனை -என்று அவன் தனக்கே விசேஷணம் ஆகவுமாம்
வளவியராய் ஏழ் உலகுக்கும் முதலாய் இருக்கும் வானோர் -என்று நித்ய ஸூரிகளுக்கு விசேஷணம் ஆக்கவுமாம்
இவர்கள் வளவியராகை யாவது -பகவத் அனுபவத்தில் குசலராகை
அஸ்த்ர பூஷண அத்யாயத்திலே -ஸ்ரீ கௌச்துபத்தாலே ஜீவ சமஷ்டியைத் தரிக்கும் என்றும்
ஸ்ரீ வத்சத்தாலே பிரகிருதி ப்ராக்ருதங்களை தரிக்கும் என்றும் சொல்லா நின்றது இறே –
ஜகத் வியாபார வர்ஜம் -சூத்ரம் -நித்ய சூரிகள் ஜகத் காரணத்வம்-சக்தி இருந்தாலும் துரந்தார்கள் என்பதால் – சொல்ல முடியாதே –
இவர்கள் மூலமாக தரிக்கிறார்கள் என்றவாறு -புத்தி -கதா -/-பூதாதி இந்த்ரியாதி சங்க சார்ங்க /சக்கரம் மனஸ்/ஸ்ரீ வத்சம் -மூல பிரகிருதி

——————————————————-

169-

நிலாய  சீர் வேத வாணர்-9
மிக்க வேதியர் -கண்ணி நுண் சிறு தாம்பு -9
நிலாய சீர்-வர்த்திக்கிற குணங்கள் -அமாநித்வாத ஆத்ம குணங்களாலும் -உபாசன அங்கமான
சம தமாதி குணங்களாலும் -சம்பன்னராய் இருக்கை
அங்கன் இன்றிக்கே நிலாய சீர் வேத -என்று வேத விசேஷணமாய்
நித்யத்வ அபௌருஷேயத்வ நிர்த்தோஷத்வங்களாலே -காரண தோஷ பாதக பரய யாதி
தோஷ ரஹித கல்யாண குணங்களைச் சொல்லிற்றாகவுமாம்
மிக்கார் வேத விமலர் -என்ற ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்தி கேட்டு -மிக்க வேதியர்-என்கிறார் –
பகவத் ப்ராப்தியே புருஷார்தம் என்றும் -சரணாகதியே பரம சாதனம் என்றும் -வேதாந்த விஜ்ஞானத்தாலே
ஸூநிச்சிதராய் இருக்குமவர்கள் -அன்றிக்கே மிக்க வேதியர் வேதம்-என்று வேதத்துக்கு விசேஷணம் ஆகவுமாம் –
சுடர் மிகு சுருதி-என்கிறபடியே பிரத்யஷாதி பிரமாணங்களில் அதிகமான வேத பிரமாணம் என்கிறபடியே

தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –9-

நிலாயா சீர் –
வர்த்திக்கிற குணங்கள் –
அதாகிறது ஞான சாதனமான அமாநித்வாத் யாத்ம குணங்களாலும்
உபாசன அங்கமான சம தமாதி குணங்களாலும் சம்பன்னராய் இருக்கை

அங்கன் அன்றியே –
நிலாய சீர் வேதம் -என்று வேத விசேஷணமாய் -நித்யத்வா -அபௌருஷேயத்வ
நிர் தோஷத்வங்களாலே  -காரண தோஷ பாதக ப்ரத்யயாதி தோஷ ரஹித கல்யாண
குணங்களைச் சொல்லிற்று ஆகவுமாம்

வேத வாணர்
வேதங்களுக்கு நிர்வஹகர் என்னலாம் படி வேதார்த்தத்தை கரை கண்டவர்

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9

மிக்க வேதியர் –
ப்ரமாண ஸ்ரேஷ்டமான வேதத்தை நிரூபகமாக உடையவர்கள் –
உளன் சுடர் மிகு சுருதியுள் -என்று ஆழ்வார் அருளிச் செய்ய கேட்டிருக்கையாலே –
அநேக சாக அத்யயனம் -பண்ணினவர்கள் என்றுமாம் –

வேதத்தின் உட் பொருள் –
சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை –
வேதாந்த ரஹஸ்யம் –ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வம் என்று இ றே
வைதிக சாஸ்திரம் நிர்ணயித்தது-

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்-
எம்பெருமான் பக்கலிலே ஜ்ஞான பக்திகளைப் பூரணமாக வுடைய வைதிகர்-
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தீ தேவா -என்கிறபடியே-வேதத்துக்கு பிராணனான பிரமேயம்  (-இலக்கு -சார தமம் -)திருவாய்மொழி-திருவாய் மொழிக்கு பிரமேயம்-(-இலக்கு -சார தமம் -) பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை –

வேதியர்
வேதியர் ஆகிறார் -பாஹ்ய சாஸ்த்ரங்களை -காண்பரோ கேட்பாரோ தான் என்று கண்ணாலும் பாராதே செவியாலும் கேளாதே-நித்ய நிர்த்தோஷமான வேத பிரமாண நிஷ்டர் ஆனவர்கள்-
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி -வேத நூல் ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை என்று இருக்குமவர்கள்-(பரம் -வேறு -உயர்ந்த இரண்டும் -இங்கு வேதம் தவிர வேறு சாஸ்திரம் இல்லை -கேசவனை தவிர தெய்வம் இல்லை )
மிக்க வேதியர்
அவ்வேதத்திலும் வேத வாதரதா -என்றும் த்ரை வித்யா மாம் சோமபா பூத பாபா -என்றும் சொல்லுகிறபடியே-
ஆபாத ப்ரதீதமாய் அல்ப அஸ்திரங்களான ஸ்வர்க்காதி புருஷார்த்தங்களையும் தத் சாதனங்களான ஜ்யோதிஷ்டோமாதிகளையும்-புருஷார்த்த தத் சாதனங்களாக அறுதி இட்டிருக்கை அன்றிக்கே
உத்தம புருஷார்த்தமான பகவத் பிராப்தியே புருஷார்த்தம் என்றும் தத் சாதனமும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -இத்யாதி வாக்யோக்தமான வேதனம் ஆதல்
முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே என்கிற சரணாகதி ரூபமான சரம சாதனமாதல் என்று-வேதாந்த விஜ்ஞ்ஞானத்தாலே ஸூ நிச்சிதார்த்தராய் இருக்குமவர்கள்-(வேத ஞானம் -வேத விஞ்ஞனம் -வேதாந்த  ஞானம் -வேதாந்த விஞ்ஞனம் -நான்கு நிலைகள் )
மிக்க வேதியர்
மிக்கார் வேதியர் என்று ஆழ்வார் பாடே கேட்கையாலே மிக்க வேதியர் என்கிறார் –
அன்றிக்கே மிக்க வேதியர் என்று சுடர் மிகு சுருதி என்கிறபடியே பிரதஷ்யாதிகளில் அதிகமான வேத பிரமாண நிஷ்டர் என்றுமாம்
வேதியர் வேதம்
ப்ரஹ்மணா நாம் தனம் வேத -என்றும்-அந்தணர் மாடு என்றும் சொல்லுகிறபடியே அவர்களுக்கு பரம தனமான வேதம்
வேதியர் வேதம்
வேதத்தை தங்களுக்கு நிரூபகமாகவும் தனமாகவும் உடையராய் இருப்பவர்கள்

வேதத்தின் உட்பொருள்
அந்த வேதத்தில் உண்டான அர்த்த விசேஷத்தை
வேதத்தின் பொருள்
அதாவது -வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்றும்
வேதப் பொருளே என் வேங்கடவா -என்றும் -வேதாந்த விழுப் பொருள் -என்றும் சொல்லுகிறபடியே
சகல வேதங்களும் ஒரு மிடறாக ஓதித் தலைக் கட்டுவது பகவத் ஸ்வரூபாதிகளை இ றே
உட்பொருள்
அதில் தத் விஷய பிரதிபாதிதமான அம்சம் புறப்பொருளாய்-ததீய பிரதிபாதிதமான அம்சம் உட்பொருளாய் இருக்கும்
அதில் புறப் பொருளையே சொல்லி விடுகை அன்றிக்கே அதுக்கு ஹ்ருதயமான ததீய வைபவத்தை -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை இரண்டாலும் அருளிச் செய்தார்

—————————————————–

170-

சொல்லினால் படைக்க நீ படைக்க-11
எப்பொருளும் படைக்க–நான்முகனைப் படைத்த -திருவாய்மொழி -2-2-4-
லோக ஸ்ரஷ்டாவான பிரமனும் நாரணனாலே படைக்கப் பட்டவன் –
யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்ற ஸ்ருதி சாயையிலே இருவரும் அருளிய படி –

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே -11-

சொல்லினால் படைக்க-
யோவை வேதாம்ச்ச ப்ரஹிணோ தி தஸ்மை -நீ கொடுத்த வேதத்தை த்ர்ஷ்டியாகக் கொண்டு-
ஜகத் சிருஷ்டி பண்ணுவாராக -ஸ பூரி திவ்யாஹரத்

நீ படைக்க வந்து தோன்றினார் –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -என்கிறபடியே நீ ஸ்ருஷ்டிக்க உன் திரு நாபீ
கமலத்திலே வந்து தோன்றின ப்ரஹ்மா முதலான தேவர்கள் –

தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே –2–2-4–

தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த
தேவ ஜாதியையும் சகல பதார்த்தங்களையும் உண்டாக்குகைக்காக ஒரு பூவிலே நாலு பூ பூத்தால் போலே சதுர்முகனை உண்டாக்கினவன் –
தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே —
தேவன் –
1-க்ரீடா-2- த்யுதி–3- ஸ்துதி-4- மோத-5- மத-6- ஸ்வப்ன-7- காந்தி-8- கதிஷூ –பொருள்கள் உண்டே
சதுர்முக ஸ்ரஷ்டா வாகையாலே வந்த த்யுதியைச் சொல்லுதல் -விளையாட்டாக படைத்து -அதனால் ஒளி தேஜஸ் பெற்ற –அகில ஜன்ம –லீலே –
இது தன்னை லீலையாக உடையவன் -என்னுதல்-சௌந்தர்யாதிகளால் வந்த விளக்கம் -என்னுதல்

———————————————————

171

உலகு தன்னை நீ படைத்தி –உலகு தன்னுளே பிறத்தி -12
இருவர் அவர் முதலும் தானே இணைவனாம் -திருவாய் மொழி -2-8-1-
சகல பதார்த்தங்களுக்கும் ஜநகனான நீ -உன்னாலே ஸ்ருஜயனாய் இருப்பான் ஒரு ஷேத்ரஞ்ஞனை ஜனகனாக்கிக்
கொண்டு ஜநிப்பதே -என்று ஆழ்வார் விஸ்மிதர் ஆகிறார் –
இருவர் -இருவரான பிரம ருத்ராதிகளுக்கும் உத்பாதகன் நாரணனே என்றும் -கூறி
இணைவனாம் -அவர்களோடு சமமாக எண்ணலாம்படி விஷ்ணுவாய் அவதரித்த அவதார சௌலப்யம்
ஆக -பரத்வ சௌலப் யங்களை ஆழ்வார்கள்  அனுபவித்தபடி-
காரணத்வத்தாலே வந்த பரத்வமும் கார்யத்வத்தாலே வந்த அபரத்வமான நீர்மையும் இறே- பராவர சப்தார்த்தம் –
தஸ்மின் த்ருஷ்டே பராவரே -என்று பகவானை வேதாந்தம் பராவரன் -என்று இறே கூறுவது –

உலகு தன்னை நீ படைத்தி யுள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகு தன்னுளே பிறத்தி ஓர் இடத்தை அல்லை ஆல்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகு நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே –12-

உலகு தன்னை நீ படைத்தி –
அசித்தை உபகரணமாக கொண்டு ப்ராக்ர்த சிருஷ்டியைப் பண்ணின நீ ப்ரஹ்மாதி
சகல தேவதா அந்தர்யமியாய்க் கொண்டு சகல பதார்த்தங்களையும் சிருஷ்டியா நிற்றி

உள் ஒடுக்கி வைத்தி –

நித்ய நைமித்திகாதி பிரளய ஆபத்துக்களிலே நாம ரூபங்களை இழந்த பதார்த்தங்களை
உன் திரு வயிற்றில் வைத்து ரஷியா நிற்றி –

இத்தால் -சகல பதார்த்த சிருஷ்டிக்கும் கர்த்தாவாய் -சகல சம்ஹாரங்களிலும் ரஷகனாய் இருக்கிறான் –
அடியிலே பஹூஸ்யாம் -என்கிற ஜகத் உபாதான காரண பூதன் என்றது ஆய்த்து

மீண்டு உலகு தன்னுளே பிறத்தி
ஜகத் ஏக காரணத்வத்தால் வந்த வைபவத்தின் நின்றும் மீட்டு உன்னாலே ஸ்ருஷ்டமான
உலகத்திலே சில ஷேத்ரஞ்ஞருக்கு புத்ரனே வந்து அவதரியா நிற்றி –

மீண்டு –
அது போராமே திரியட்டும் என்றுமாம் -சகல பதார்த்தங்களுக்கும் ஜனகனான நீ
உன்னாலே ஸ்ர்ஜயனாய் இருப்பான் ஒரு ஷேத்ரஞ்ஞனை ஜனகனாகக் கொண்டு ஜனிப்பதே –
பிரளய ஆபத்திலே சகல பதார்த்தங்களையும் உன் திரு வயிற்றில் வைத்து ரஷித்த நீ
ஒரு ஸ்த்ரி வயிற்றில் கர்ப பூதன் ஆவதே

ப்ரீத்யாத்வம் தாரயே சாநம் தாத்மயே நாகிலம் ஜகத் -என்னக் கடவது இறே

ஓர் இடத்தை அல்லையால் –
ஓர் ஸ்தலத்தாய் என்று நிர்ணயிக்க ஒண்ணாத வனாகையாலெ ஒரு கோடியிலே
சேர்த்து அறியப் போகிறது இல்லை -அதாகிறது உபாதான காரணத் வத்தாலே புரை
இல்லாமையாலே கார்யம் என்ன ஒண்ணாது –

அவதாரத்தில் சஜாதீய பாவத்தில் புரை இல்லாமையாலே கார்யம் என்ன ஒண்ணாது –
இது என்னபடி என்கிறார் –

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன்  பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

இருவரவர் முதலும் தானே
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு காரண பூதனாய் இருக்கும்
ஸ ப்ரஹ்ம ஸ சிவா -என்கிற பிரசித்தியாலே –இருவரவர் -என்கிறார்
அவ்விபூதியைச் சொல்லுகிற இடத்தில் அணைவது புணைவது -என்கையாலே அது போக பூமியுமாய் -நித்யமுமாய் -இருக்கும் என்னும் இடமும்
இங்கு முதல் -என்கையாலே இவ்விபூதியில் கார்ய காரண பாவத்தால் வந்த சம்பந்தமும் -இது தான் ஆவதும் அழிவதாம் என்னும் இடமும் சொல்லுகிறது
முதல் -உத்பத்தி -முதல் இருந்தாலே முடிவும் உண்டே -சம்ஹாரம் -இரண்டும் உண்டே –
இத்தால் ப்ரஹ்ம ருத்ரர்கள் சம்சார பக்தர்கள் என்னும் இடமும் ஈஸ்வரனே மோஷ ப்ரதனாக வல்லான் என்னும் இடமும் சொல்லுகிறார்
ஆக -ஆஸ்ரயணீயன் அவனே -ப்ரஹ்ம ருத்ராதிகள் ஆஸ்ரயணீயர் அல்லர் -என்கை
ஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா ஜகத்தந்தர் வ்யவஸ்திதா பிராணின கர்மஜனித சம்சார வச வர்த்தின -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்னா நின்றது இறே
ஸ்ரீ சௌனக பகவான் வார்த்தை -அர்ச்சா மூர்த்திகள் பற்றி பல சொல்லி இருக்கிறார்
இப்படி ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் காரண பூதன் ஆகையாலே வந்த மேன்மையை உடையவன் –
இணைவனாம் எப்பொருட்கும்
தேவாதி சகல பதார்த்தங்கள் தோறும் சஜாதீயனாய் வந்து அவதரிக்கும்
ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவில் வந்து –விஷ்ணுவாக -ஜகதாதிஜா -அவதரிப்பது –உபேந்த்ரனாவது
சக்கரவர்த்தி ஸ்ரீ வசுதேவர்கள் அளவிலே வந்து பிறப்பது -மஹா வராஹமாவது -குப்ஜாம்மரமாவதாக நிற்கும்

—————————————————————

172-
பணத்தலை-15
பைந்நாகணை-திருப் பல்லாண்டு -9-
பகவானுடைய திரு மேனி ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை உடையவர் திரு வனந் தாழ்வான் –
பணத்தலை -என்ற இடத்தில் இவ்விஷயம் அஸ்புடம்
திருப் பல்லாண்டில் அதிஸ்புடம் ஆகிறது –

அங்கமாறு வேத நான்கு மாகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வா மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சாரங்க பாணி யல்லையே –15-

பணைத் தலை செங்கண் நாகணைக் கிடந்த செல்வாஉன்னுடைய ஸ்ப்ர்சத்தாலே விகசிதமான பணத்தின்
தலையிலே மதுபாநமத்தரைப் போலே சிவந்த திருக் கண்களை உடையவனான
திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளி -நிரவதிகமான
ஐஸ்வர்யத்தையும் கல்யாண குணங்களையும் உடையவனே

உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் முடி சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திரு விழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே –9

படுத்த இத்யாதி –
அதிலும் பர்யாப்தி பிறவாமையாலே
திரு வநந்தாழ்வான் மேலே சாய்ந்த போதை அழகுக்கு கண் எச்சில் வாராமைக்கு
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் -படுக்கப்பட்டு ஸ்வ சம்ச்லேஷத்தாலே விகசிதமாக
நின்றுள்ள பணைத்தை உடையனாய் -மென்மை -குளிர்த்தி -நாற்றம் என்கிறவற்றை
பிரக்ர்தியாக உடைய திரு வநந்தாழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளுகிற
அழகுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் -ஸ்வதஸ் சர்வஞ்ஞனையும் மயங்கப்
பண்ணும் படுக்கை -அவன் ஸ்வ ஸ்பர்சத்தாலே விக்ர்தனாகப் பண்ணும்
இவனுடைய வடிவும் -அவனுடைய வடிவும் -கிடந்ததோர் கிடக்கை -என்கிறபடியே
பரிச்சேதிக்க ஒண்ணாத அழகு இ றே கண் வளர்ந்து அருளுகிற போதை அழகு –
ஒரு வெள்ளி மலையிலே காள மேகம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிற போதை-பரபாக ரசத்தை அனுசந்தித்தால் மங்களா சாசனம் ஒழியச் செல்லுமோ என்கிறார்கள்

—————————————————————–

173
செங்கண் நாகணை -15
அழல் உமிழும் பூங்கார் அரவு-நான் முகன் திருவந்தாதி -10
சிகப்பு நிற காரணங்கள் பல -பகவத் களிப்பின் மிகுதியால் கண் சிவந்து இருக்கும் -திரு சந்த விருத்த கருத்து –
பரம பதத்தில் அஸ்த்தானே பய சங்கை ஏற்பட்டு அழல் உமிழும் கோபத்தாலே கண் சிவந்து
ஆங்கு -என்றது பரம பதத்தை நினைத்து இறே -ஈட்டில் -1-10-1-வ்யக்தம் –

அங்கமாறு வேத நான்கு மாகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வா மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சாரங்க பாணி யல்லையே –15-

உன்னுடைய ஸ்ப்ர்சத்தாலே விகசிதமான பணத்தின்
தலையிலே மதுபாநமத்தரைப் போலே சிவந்த திருக் கண்களை உடையவனான
திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளி -நிரவதிகமான
ஐஸ்வர்யத்தையும் கல்யாண குணங்களையும் உடையவனே

ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி யாம் காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து–10-

ஆங்கு ஆரவாரம் -இத்யாதி
லோகத்தை யளக்கிற தசையில் ஆரவாரத்தைக் கேட்டுத் தன் பரிவாலே
பிரதி பஷத்தின் மேலே அழலை யுமிழ்வதும் செய்து
மேகம் போலே அழகிய சீலத்தை யுடையனான திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடையவனுடைய
ஸ்ப்ருகஹணீயமான திரு மேனியை நாம் காண வல்லோம் அல்லோமோ –

ஆங்காரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவணை இறே
ஆங்கு -தேசம் அது
ஆரவாரம் அது -அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத -என்கிற ஆரவாரம்
அங்கே இது கேட்டு அப்படி படுகிறவர்கள் இங்கே இது கண்டால் இப்படிப் படச் சொல்ல வேணுமோ

———————————————————————–

174-
ஏக மூர்த்தி -17
குன்றில் நின்று -48
விண் மீது இருப்பாய்-திரு வாய் மொழி -6-9-5-பர வ்யூஹ விபவ ஹாரத்த அர்ச்சா -திருமேனிகள் அனுபவம் -பஞ்ச பிரகாரங்கள்
பகல் ஓலக்கம் இருந்து -கறுப்பு உடுத்து சோதித்து கார்யம் மந்தரித்து
வேட்டையாடி ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி -விண் மீது
என்கிற ஐந்திலும் காணலாம் -ஆச்சர்ய ஹ்ருதயம் ஸ்ரீ ஸூக்தி

ஏக மூர்த்தி இரு மூர்த்தி*  மூன்று மூர்த்தி பல மூர்த்தி-ஆகி,–4-3-3

ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல்
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் ஆதி தேவனே –17-

ஏக மூர்த்தி
வாசுதேவோசி பூர்ண -என்கிறபடி ஞாநாதி ஷட் குண பூர்ணனாய் -நிஸ்தரங்க ஜலதி
போலே பரமபத நிலயத்திலே எழுந்து அருளி இருந்து -நித்ய சித்தரும் முக்தரும் அனுபவிக்க
இருக்கிற அத்விதீயமான மூர்த்தியை உடையாய் –

மூன்று மூர்த்தி –
அந்த ஷட் குணங்களில் இவ்விரண்டு குணங்களை பிரகாசிப்பித்துக் கொண்டு

ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணுகைக்காக சங்கர்ஷணாதி ரூபத்தாலே மூன்று மூர்த்தியாய்

நாலு மூர்த்தி –
பர அவஸ்தையும் வ்யூஹங்களோடு எண்ணலாம் படி பரார்தமாய் இருக்கையாலே
அத்தையும் கூட்டி நாலு மூர்த்தி -என்கிறது –

அதவா –
வ்யூஹ கார்யமான ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு உபயோகமாய் இருக்கிற பிரதான புருஷ
அவ்யக்த காலங்களைசரீரமாக உடையனாய் இருக்கறபடியை  சொல்லுகிறது என்னவுமாம் –

நன்மை சேர் போக மூர்த்தி –
அனுக்ரஹ ப்ராசுர்யமாகிற நன்மையை உடைத்தாய் -சம்சாரிகளுக்கு போக யோக்யமான மூர்த்தி –

அனுக்ரஹ ப்ராசுர்யமாவது -ஸ்வ அசாதாரணமாய் அப்ராப்ரக்ருதமான விக்ரஹத்தை –

தேவாதி சஜாதீயமாக்கிக் கொண்டு சம்சாரிகளுக்கு சஷூர் விஷயமாம் படி பண்ணுகை –

அதவா –
ஆமுஷ்மிகத்தில் நித்ய அனுபவத்தோடு சேர்ந்த நன்மையை உடைத்தாய் -ஐஹிகத்தில்
போக ரூபமாய் இருக்கும் மூர்த்தி என்னவுமாம் –

புண்ணியத்தின் மூர்த்தி –
அது தான் பாக்யாதிகருடைய புண்ய விபாகத்தில் பலிப்பதாய் இருக்கை –
பரித்ராணாயா ஸாதூநாம் -என்று பரம பக்தி உக்தருக்கு ஸ்வயம் பிரயோஜனமாய் –

சித்த சாதன பரிக்ரஹ உக்தருக்கு சரணமாயும் -உபாசகருக்கு சுபாஸ்ரயமாயும் இறே இருப்பது –

மாநுஷீம் ததுமாச்ரிதம் பரம்பாவமஜா நந்த -என்று பாஹ்ய ஹீநராய் -அவதாரத்துக்கு இழவாளராக சொல்லா நின்றது இறே –

எண்ணில் மூர்த்தியாய் –
இப்படி அசங்யாதமான விபவ ஜாதீயமான விக்ரஹத்தை உடையையாய் –
பஹுதா விஜாயதே -என்று ஸ்ருதி –

பஹூநி -என்று ஸ்வ வாக்யம் –

சன்மம் பல பல -என்று அபி உக்தர் வாக்யம் –

குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே –48-

குன்றில் நின்று –
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் -என்கிறபடியே தாழ்ந்தாருக்கு முகம்
கொடுக்கைகாக சிலர் அபேஷியாது இருக்க திருமலையிலே நின்ற நிலை

வான் இருந்து –
அச்ப்ர்ஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளுக்கு நித்ய அனுபவம் பண்ணுகைகாக
பரம பதத்திலே இருக்கிற பெரிய மேன்மையாய் உடையையாய் இருக்கச் செய்தே
யன்றோ திரு மலையில் வந்து நின்றது

நீள் கடல் கிடந்தது –
தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி -என்கிறபடியே
அசங்குசிதமாக கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளிற்று

மண் ஓன்று சென்று –
இந்த்ரன் இழந்ததும் மகா பலி அபஹரிததும் த்ரை லோகத்து அளவாய் இருக்க
ப்ரஹ்ம லோக பர்யந்தமாக -ஒருத்தர் அபேஷியாது இருக்க எல்லார் தலைகளிலும் திருவடிகளை
வைத்திலையோ -பிரதான பூமியை அளந்து –
சென்று -என்று பத விஷேபமாய் அளந்து என்றபடி

பூமியிலே ஓர் ஓர் இடங்களிலே சென்று அவதரித்தது என்னவுமாம்

அ து  ஒன்றை உண்டு –
அந்த பிரதானமான பூமியை பிரளயம் கொள்ளப் புக அர்தித்வ நிரபேஷமாக
திரு வயிற்றிலே வைத்து ரஷித்தது இல்லையோ

அது ஓன்று இடந்து பன்றியாய் –
மஹா வராஹமாய் பிரளயம் கொண்ட பூமியை உத்தரித்து

நன்று சென்ற நாள் அவற்றுள் நல்லுயிர் படைத்து –
நன்றாகச் சென்ற நாள்களிலே மனுஷ்யர்களை ஸ்ர்ஷ்டித்து –நன்று சென்ற நாள் –என்று
மஹா வராஹ வேஷத்தைக் காணலாம் காலம் என்னுமத்தாலே வராஹ கல்பத்தைக்
கொண்டாடுகிறார் –நல்லுயிர் என்று சாஸ்திர அதிகாரத்தாலே ஸ்ரேஷ்டரான
மனுஷ்யர்களைச் சொல்லுகிறது -துர்லபோ மானுஷோ தேஹ -என்னக்  இறே –

விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண் மீதியன்ற புற அண்டத்தாய்! என தாவி
உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ!–6-9-5-

ஸர்வத்ர ஸந்நிஹிதனாய் -எல்லாவிடங்களிலும் அண்மையிலிருப்பவனாய்
என் மனத்திலும் தெளிவாகப் பிரகாசித்து வைத்து,
என் கண்களுக்கு விஷயமாகாது ஒழிந்தால் நான் தளரேனோ? என்கிறார்.

விண் மீது இருப்பாய் –
எப்பொழுதும் காணும்படியான பாகம் பிறந்தவர்களுக்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கும்படி.
இவர்க்கு இங்குத்தையிற் காட்டிலும் பரம பதத்தில் இருப்புக் காணும் முற்படத் தோற்றுகிறது.

மலை மேல் நிற்பாய் –
நித்திய ஸூரிகளையும் நித்திய சம்சாரிகளையும் ஒரு துறையிலே நீர் உண்ணப் பண்ணுகிற இடம். என்றது,
இங்குள்ளாரும் தன் நிலையின் வாசி அறியும்படி ருசி உண்டாக்குமவனாய் நின்றபடி.
வேங்கடத்து ஆடு கூத்தன் அல்லனோ–பெரிய திருமொழி, 2. 1 : 9.-

கடல் சேர்ப்பாய்-
கால் நடை தந்து போக வல்ல பிரமன் சிவன் முதலாயினோர்களுக்காகத் திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்தபடி.

விண் மீது இருப்பாய்’ என்று இருப்பில் வீறு சொன்னார்,
‘மலை மேல் நிற்பாய்’ என்று நிலையில் வாசி சொன்னார்.
‘கடல் சேர்ப்பாய்’ என்று திருப்பாற்கடலிலே கிடை அழகு நிரம்பப் பெற்றது-பர்யவசியம்
பர்யவசிப்பாய் -சப்தங்கள் அவன் வரை பர்யவசிக்கும் போலே ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் –
ஆறு கடலில் சேருமா போலே திருப் பாற் கடலில் சேர்ந்து இருப்பார் என்றவாறு

மண் மீது உழல்வாய்-
அவ்வளவு போக மாட்டாத சம்சாரிகளுக்காக அவதரித்து அவர்கள் கண் வட்டத்தில் திரியுமவனே!
“தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளகப் பாம்பால் ஆப்புண்டு பாடற்றாலும் –பெரிய திருவந். 18.– என்கிறபடியே,
அநுகூலராய்க் கட்டுவாரும் பிரதி கூலராய்க் கட்டுவாருமான சம்சாரமாதலின் ‘உழல்வாய்’ என்கிறார்.
அனுகூலை யசோதை பிரதி கூலன் காளியன் பாடாற்றல் துக்கம் -இளக-இரட்டிப்பாக –

இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
கண்ணாலே காணில் சிவிட்கு என்னுமவர்களுக்கு, அவர்கள் காண ஒண்ணாதபடி மறைந்து வசிக்கின்றவனே!
சிற்றின்பத்திலே ஈடு பாடுடைய ஒருவன் ‘தாய் முகத்திலே விழியேன்’ என்றால்,
தான் மறைய நின்று அவன் உகந்தாரைக் கொண்டு ரக்ஷிக்கும் -இரா மடம் ஊட்டும் -தாயைப் போலே.
“அதாவது, சிசுபாலன் முதலாயினோர் நறுகு முறுகு -பொறாமை -என்றால்,
அவர்கள் கண்களுக்குத் தோற்றாதபடி அந்தர்யாமியாய் நின்று நோக்கும்படி.

எண் மீது இயன்ற புற அண்டத்தாய் –
எண்ணுக்கு மேலே இருக்கிற மற்றுள்ள அண்டங்களிலும் இப்படி வசிக்கின்றவனே!
“இப்படிப்பட்ட அண்டங்கள் கோடி நூறு கோடியாக இருக்கின்றன” என்பது ஸ்ரீ விஷ்ணுபுராணம்
அண்டாநாம் து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராணி அயுதாநி ச ஈத்ருஸாநாம் ததா தத்ர
கோடி கோடி ஸதாநி ச”–என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 2. 7 : 97.

எனது ஆவியுள் மீது ஆடி
என் மனத்தினுள்ளே குறைவறச் சஞ்சரித்து.
அன்றிக்கே,
என் ஆத்மாவுக்குள்ளும் புறம்பும் சஞ்சரித்து என்னுதல்.

உருக் காட்டாதே ஒளிப்பாயோ
வடிவு காணப் பெறா விட்டால், மறந்து பிழைக்கவும் பெறாது ஒழிவதே.
குண ஞானத்தாலே தரிப்பார்க்கே அன்றோ வடிவு காணாது ஒழிந்தாலும் தரிக்கலாவது?

பகல் ஓலக்கம் இருந்து கறுப்பு உடுத்துச் சோதித்து காரியம் மந்தரித்து வேட்டையாடி
ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி
ஆதும் சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்த வென்னும் முடிக்கு உரிய இளவரசுக்கு
விண் மீது என்கிற ஐந்திலும் காணலாம் -சூர்ணிகை –157

———–

ஏக மூர்த்தி இரு மூர்த்தி*  மூன்று மூர்த்தி பல மூர்த்தி- 
ஆகி,*  ஐந்து பூதம் ஆய் இரண்டு சுடர் ஆய் அருவு ஆகி,* 
நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற*  நாராயணனே உன்- 
ஆகம் முற்றும் அகத்து அடக்கி*  ஆவி அல்லல் மாய்த்ததே. –4-3-3-

ஒரு மூர்த்தியாகி இருமூர்த்தியாகி மும்மூர்த்தியாகிப் பல மூர்த்தியாகி ஐம்பூதங்களாகி இருசுடர்களான சூரிய சந்திரர்களாகி
இவற்றுக்கு உள்ளுயிராகித் திருப்பாற்கடலின் நடுவில் ஆதிசேஷனாகிய படுக்கையின்மேலே ஏறி யோகநித்திரை செய்கின்ற நாராயணனே!
உன் திருமேனிக்கு வேண்டும் சாந்து பூமாலை முதலிய இன்பப்பொருள்கள் எல்லாம் என்னுள்ளேயாம்படி செய்து
உன் திருவுள்ளமானது துன்பத்தை நீக்கியது,’ என்கிறார்.என்றது, ‘ஒருபடி கரை மரம் சேர்க்க வல்லனே’ என்று
இருந்த உன்னுடைய திருவுள்ளத்தில் துன்பம் கெட்டு, கிருதார்த்தன் ஆனாயே!’ என்றபடி.
ஆவி – ஈண்டு, மனம். ‘ஆவி அடக்கி அல்லலை மாய்த்தது’ என்க.

‘இத்தலையை உனக்கு ஆக்கி அத்தாலே கிருதக் கிருத்தியன் ஆனாயே!’ என்கிறார்.

ஏகமூர்த்தி –
‘சோமபானம் செய்தற்குரிய சுவேத கேதுவே! காணப்படுகிற இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே ‘சத்’ என்று
சொல்லக்கூடியதாயும் நாமரூபங்கள் இன்மையால் ஒன்றாகவும் அடையக்கூடிய வேறு பொருள் இல்லாததாயும் இருந்தது,’ என்கிறபடியே,
படைப்பதற்கு முன்னே ‘இது’ என்ற சொல்லுக்குரிய பொருளாய்க் கிடந்த உலகமுழுதும்,
அழிந்து ‘சத்’ என்று சொல்லக்கூடிய நிலையாய் -பொடி மூடிய தணல்-நீறு பூத்த நெருப்புப்போலே
இவை அடையத் தன் பக்கலிலே கிடக்கத் -தான் ஒருவனுமேயாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது.
ஆக, ‘படைப்புக்கு முன்னே இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது,’ என்றபடி.

இரு மூர்த்தி –
பிரகிருதியும் மஹானும் ஆகிய இரண்டையும் நோக்கிக்கொண்டு அவற்றைத் திருமேனியாகக் கொண்டிருக்கும்
இருப்பைச் சொல்லுகிறது; என்றது, ‘காரிய காரணங்கள் இரண்டையும் தனக்குத் திருமேனியாக வுடையனாய் இருக்கும்
இருப்பைச் சொல்லுகிறது,’ என்றபடி. இரண்டுக்கும் உண்டான அண்மையைப் பற்றச் சொல்லுகிறது.
அவ்யக்தத்தினுடைய மலர்ந்த விளக்கமான நிலையன்றோ மஹானாகிறது?
காரணம் கார்யமாகட்டும் என்று அனுக்ரஹிக்க கடாஷிக்கிறார் என்றபடி -இரண்டையும் பிடித்து
-காரண கார்ய அவஸ்தைகள் இரண்டையும் சொன்னபடி –

மூன்று மூர்த்தி –
மூன்று விதமான அகங்காரங்களைச் சரீரமாகக் கொண்டிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.
சாத்விகமாயும் இராஜசமாயும் தாமசமாயும் மூன்று வகைப்பட்டே அன்றோ அகங்காரந்தான் இருப்பது?
பல மூர்த்தியாகி ஐந்து பூதமாய் –
மேலே கூறிய முறை அன்று இங்குச் சொல்லுகிறது; சாத்துவிக அகங்காரத்தின் காரியம்,
பதினோரிந்திரியங்கள்; தாமச அகங்காரத்தின் காரியம், மண் முதலான ஐம்பெரும்பூதங்கள்; இரண்டற்கும் உபகாரமாய் நிற்கும்,
இராஜச அகங்காரம்-ராஜச அஹங்காரம் மேற்பார்வையாளர் போலே ; ஆக பதினோரிந்திரியங்களையும், குணங்களோடு கூடிய
ஐம்பெரும்பூதங்களையும் சொல்லி -அவற்றைத் திருமேனியாகவுடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.
(நம்பிள்ளை -ச குணமான பூத பஞ்சகம் என்பதால் வியாசர் பஷத்தை சொன்னபடி )

அவ்யக்தம் பிரக்ருதியின் அவஸ்தா பேதம்
பிரகிருதி -அவிபக்த தமஸ் -விபக்த தமஸ் அஷர தமஸ் அவ்யக்தம் தமஸ் -நான்கு நிலைகள் உண்டே
பூதலே -விதை -போலே பிரகிருதி -பீஜ ச்தாநீயம்
நிச்சிருத வெடித்த -நிலை விபக்தி
சலில சம்ஸ்ருஷ்ட -நீரை வாங்கி -சிதில –
உஜ்ஜூன பீஜ சமான ஆகாரம் -முளை அவ்யக்தம்
அங்கூர ஸ்தானம் முளை ஸ்தானம் மகான் -நான்கு நிலைகளை தாண்டி –
சகுணமான பூத பஞ்சகம்-வேத வியாசர் அபிப்ராயம் இது –
தன் மாத்ரா விசிஷ்டமான பூதம் எகமாக்கி ஐந்து பூதம் என்கிறது
ஏகாதச இந்த்ரியங்கள் -தன்மாத்ரா விசிஷ்ட பூதங்கள் ஐந்தும்
சப்தாதி குணங்கள் ஐந்தும் -பிரித்து -24 தத்வங்கள் –
பராசரர் -ஏகாதச இந்த்ரியங்கள் -தன்மாத்ரைகள் ஐந்தும் -பிரித்தே சொல்லி -இவரும் 24 தத்வங்கள் -என்பர் –

இரண்டு சுடராய் –
‘பிரமாவானவர் சூரிய சந்திரர்களை முன்பு போலே படைத்தார்,’ என்கிறபடியே, படைத்த சூரிய சந்திரர்களைச் சொல்லுகிறது.
இவற்றைக் கூறியது, காரியமான பொருள்கள் எல்லாவற்றிற்கும் உபலக்ஷணம்.

அருவாகி –
‘அவற்றைப் படைத்து அவற்றுக்குள் அநுப்பிரவேசித்தார்; அவற்றுக்குள் அநுப்பிரவேசித்துச்
சேதனமாயும் அசேதனமாயும் ஆனார்,’ என்றபடியே, இவற்றை உண்டாக்கி இவைகள் பொருள் ஆகைக்காகவும்
பெயர் பெறுகைக்காகவும் தான் அவ்வவ் வுயிருக்குள் அந்தராத்துமாவாய் அநுப் பிரவேசித்து நிற்கும் நிலையைச் சொல்லுகிறது.
‘நன்று; மேலே, அசித்தை அருளிச் செய்தாராதலின், அங்கு ‘அரு’ என்பதற்கு ஆத்துமா என்று பொருள் கூறுதல்
ஏற்புடைத்தாம் அன்றோ?’ என்னில், சரீரமாகவுடைய நான் அந்தரியாமியாய்ப் புகுந்து நாம ரூபங்களை உண்டு பண்ணுகிறேன்,’ என்கிறபடியே,
இந்த ஆத்துமாக்களையெல்லாம் சரீரமாகவுடைய சர்வேசுவரனுக்கு அநுப் பிரவேசமாகையாலே அப்பொருளும் சொல்லிற்றாயிற்று.

நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே –
தன்னால் படைக்கப்பட்ட பிரமன் முதலானோர்கட்குப் பற்றப்படுமவன் ஆகைக்காகத் திருப்பாற்கடலின் நடுவில்
திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்தருளினவனே!
அன்றிக்கே, ‘பயிரைச் செய்து செய்த்தலையிலே குடி கிடக்குமாறு போன்று, படைக்கப்பட்ட பொருள்களைப் பாதுகாத்தற்காகக்
கண்வளர்ந்தருளுகின்றவனே!’ என்னவுமாம். ‘இப்படி எல்லாக் காலமும் ஒரு படிப்படத் திருவருள் புரிதலையே
இயல்பாகவுடையன் ஆகைக்கு அடியான சம்பந்தத்தையுடையவன்’ என்பார், ‘நாராயணனே’ என்கிறார்.
அனைவரையும் சமமாக பார்க்க வேண்டுமே இத்தை அறிந்த பின்பு வித்யா விநய தர்சனம் பண்டிதம் சம தர்சினி -என்றானே –

உன் ஆகம் முற்றும் –
உன் திருமேனிக்கு வேண்டும் சாந்து பூமாலை பரிவட்டம் ஆபரணங்கள் இவையெல்லாம்.
அகத்து அடக்கி –
என்னுள்ளே உண்டாம்படி செய்து. ‘இதுவே அன்றோ படைப்புக்குப் பிரயோஜனம்? இப்படிச் செய்த காரணத்தால்
துக்கம் இல்லாதவர் ஆனார் யார்?’ என்னில்,
‘அவன்’
என்கிறார் மேல்;
ஆவி அல்லல் மாய்த்தது –
உன் திருவுள்ளத்தில் உண்டான துன்பம் ஒருபடி அழியப்பெற்றதே! என்றது,
‘இத்தலையை ஒருபடி கரைமரஞ் சேர்த்து நீ கிருதக்கிருத்யன் ஆனாயே!’ என்றபடி.
அன்றிக்கே, ‘என் உள்ளமானது துக்கம் இல்லாததாயிற்று,’ என்னுலுமாம்.

இனி, இப்பாசுரத்திற்கு, ‘ஏகமூர்த்தி என்பது, பரத்துவத்தைச் சொல்லுகிறது’ என்றும்,
‘இருமூர்த்தி’ என்பது, வியூகத்தைச் சொல்லுகிறது; அதாவது, ‘வாசுதேவ சங்கர்ஷணர்களைச் சொல்லுகிறது’ என்றும்,
‘மூன்று மூர்த்தி என்பது, ‘வியூகத்தில் மூன்றாம் மூர்த்தியான பிரத்யும்நரைச் சொல்லுகிறது’ என்றும்,
‘பல மூர்த்தி’ என்பது, அவதாரங்களைச் சொல்லுகிறது என்றும்,
‘ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!’ என்பது,
இன்னார் படைப்புக்குக் கடவர், இன்னார் பாதுகாத்தலுக்குக் கடவர் என்கிற படியாலே சொல்லுகிறது’ என்றும் நிர்வஹிப்பார்கள் உளர்.
‘உளர்’ என்பதனாலே, இவ்வாறு பொருள் கூறுதல் தமக்குத் திருவுள்ளம் அன்று என்பது போதரும்.

‘இந்த ஆத்துமாக்களை எல்லாம் காரிய காரணங்கள் இரண்டையும்’ என்றது, மஹானாகிய காரியத்தையும்
மூலப்பகுதியாகிய காரணத்தையும் குறித்தபடி.
‘அகங்காரம் முதலான தத்துவங்களும் மூலப்பகுதியின் காரியமாயிருக்க,
‘மஹத்’ என்னும் தத்துவத்தை மாத்திரம் சொல்லுவான் என்?’ என்னும்
வினாவிற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இரண்டுக்கும் உண்டான’ என்றுதொடங்கி. ‘
அண்மை எப்படி?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘அவ்யக்தம்’ என்று தொடங்கி. ‘அவ்யக்தத்தினுடைய மலர்ந்த விளக்கமான நிலை’ என்றது,
அவ்யக்தமாவது, பிரகிருதியினுடைய நிலை வேறுபாடுகளுள் ஒன்று;
பிரகிருதியானது. ‘அவிபக்த தமஸ்’ என்றும், ‘விபக்த தமஸ்’ என்றும்,‘அக்ஷரம்’ என்றும்,
‘அவ்யக்தம்’ என்றும் நான்கு வகையாக இருக்கும்;
அவற்றுள் ஒன்றான அவ்யக்தத்தினுடைய காரியநிலை மகானாய் இருத்தலால் என்றபடி,
‘அவிபக்த தமஸ்’ என்பது, பூமியில் விதைக்கப்பட்ட விதை போன்றது.
‘விபக்த தமஸ்’ என்பது, பூமியிலிருந்து எழும் விதை போன்றது.
‘அக்ஷரம்’ என்பது, நீருடன் கலந்து நனைந்து பிரிந்த உறுப்புகளையுடைய விதைபோன்றது.
‘அவ்யக்தம்’ என்பது, ஊறிப் பருத்து மேலெழுந்து வெடித்த விதை போன்றது.
‘மகத்’ என்பது, வித்தினின்றும் எழுந்த முளை போன்றது.

‘மேலே கூறிய முறையன்று இங்குச் சொல்லுகிறது’ என்றது,
‘ஏகமூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி’ என்ற இடங்களில் காரணகாரியங்கள் என்ற முறை பற்றி அருளிச்செய்தார்;
‘இனி, அருளிச்செய்வது அம்முறையில் அன்று,’ என்றபடி. அதனை விளக்குகிறார், ‘சாத்விக அகங்காரம்’ என்று
தொடங்கி. பதினோர் இந்திரியங்கள் ஆவன, ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து,
மனம் ஒன்று. இங்குக் கூறிய தத்துவங்களின் முறையையும் விரிவையும் பரம காருணிகரான
ஸ்ரீமத் பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த தத்துவத்திரயத்தில் அசித் பிரகரணத்தாலும்,
பாகவதத்தில் சுகமுனி தத்துவமுரைத்த அத்தியாயத்தாலும் தெளிவாக உணரலாகும்,

‘ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி’ என்றதனால், இன்னார் படைப்புக்குக் கடவர் என்றும்,
‘நாகமேறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே’ என்றதனால், இன்னார் பாதுகாத்தலுக்குக் கடவர் என்றும் பிரித்துக் கூட்டிக்கொள்க.
‘ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி’ என்றது, சிருஷ்டியைக் கூறுவதனால்,
மேலே கூறிய பிரத்யும்நரது தொழிலாகிய சிருஷ்டியைக் கூறுகின்றது என்பது பொருள்.
‘நாகமேறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே’ என்பது,
‘அநிருத்தரையும் அவருடைய காரியமான பாதுகாத்தலையும் கூறுகின்றது’ என்பது பொருள்.
‘ஆயின், சங்கர்ஷணருடைய தொழிலாகிய சம்ஹாரத்தைக் கூறவில்லையே?’ எனின்,
‘அழித்தலானது, படைத்தற்றொழிலில் லயப்பட்டிருப்பது ஒன்றாகையால்,
அது, பொருளாற்றலால் தானே சித்திக்கும்’ என்க

————————————————————————

175-
புள்ளின் மெய்ப் பகை-திருச்சந்த விருத்தம் -19
நாகப் பகைக் கொடியான் -திருப்பல்லாண்டு -8-
திருவடிக்கு சகஜ சத்ரு -சாதாரண திருஷ்டியில்
இருவரும் கூட விரும்பி கைங்கர்யம் செய்யும் -கண் வளர்ந்து அருளுகிறது என் கொலோ –
இருவரையும் ஏக கண்டராக்கி அடிமை கொண்ட இது சர்வ சக்தித்வம் பிரகாசிக்க –
அநாதியாக அஹங்காரத்தை விரும்பி போந்த சேதனனை சேஷ தைகதசரான
நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக்குவது இந்த சக்தி இறே –
இத்தையே அஹம் -என்று சரம ஸ்லோகத்தில் அருளிச் செய்தான் –

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின் வாய் பிளந்து புட் கொடி பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி யாதலால் என் கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே –19-

புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தல்  காதலித்தது அது என் கொல் –
சாமான்ய த்ர்ஷ்டியால் பார்த்தால் திருவடிக்கு சஹஜ சத்ரு என்னலாம் படி இருக்கிற
திருவநந்த ஆழ்வான் மேலே திருப் பாற் கடலிலே இருவரும் கூடி விரும்பி அடிமை செய்யும்படி
கண் வளர்ந்து அருளுகிற இது என் கொலோ

சஹஜ சத்ரு என்று புத்தி பண்ணி இருக்கும் சம்சாரத்தில் இருவரையும் ஏக கண்டராக்கி
அடிமை கொண்ட இது தேவரீர் உடைய சர்வ சக்தித்வத்தை பிரகாசிப்பிக்கைக்காக அன்றோ என்று கருது –

அநாதியாய் அஹங்காரத்தை விரும்பிப் போந்த சேதனனை சேஷதைகரசரான
நித்ய ஸூரிகளோடு ஒரு கோவை யாக்குவது இச் சக்தி இறே –

நெய்யிடை நல்லதோர் சோறு நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே –9-

பையுடை இத்யாதி-மங்களா சாசனத்துக்கு விஷயம் ஏது என்ன -அவ் விஷயத்தை சொல்லுகிறார்
தன்னோட்டை  ஸ்பர்ச சுகத்தாலே விகஸித பணமான நாகத்தினுடைய பகை உண்டு
பெரிய திருவடி -அவனை கொடியாக உடையவனுக்கு
அநந்த சாயியாய் கருடத்வஜனானவனுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறேன் என்கை
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே திரு வநந்த வாழ்வானோட்டை சேர்த்தியால்
வரும் அழகு நித்ய ஸ்ரீ யாக வேணும் என்றும்
ஏதேனும் ஒன்றை அபேஷித்து வந்தவர்களையும் எனக்காக்கிக் கொள்ள வல்லேன்
என்று கொடி கட்டி இருக்கிற சக்தி நித்ய ஸ்ரீ யாக செல்ல வேண்டும் என்றும்
திருப்பல்லாண்டு பாடுகிறேன் என்கிறார்

————-

176-
ஆமையான கேசவா-20
கேழல் ஒன்றாக இடந்த கேசவன்-திருவாய்மொழி-1-9-2-
கேசவா என்றது பிரமாதிகள் சரணம் புகுர -தத் ரக்ஷண அர்த்தமாக கூர்ம சஜாதியன் ஆகையாலே -மேன்மை அழியாதபடி –
கேழல் -கேசவன் -பிரசஸத கேசன் -அப்போதை திருமேனியும் உளை மயிருமாய் நின்ற நிலை –
கூர்ம வராக அவதாரங்களிலும் அஜகதசவ ஸ்வபாகனாகவே ஆழ்வார்கள் கூறுகிறார்கள் –
கீதையிலும் –அஜோபிசன் அவ் யயாத்மா பூதானம் ஈஸ்வரோபிசன் -என்றான் இறே –

கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏசவன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே-20-

பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா –
சமுத்திர மதன வேளையில் வருண பாசங்களை உடைத்தான கடலிலே முதுகிலே
மந்த்ரம் சுழலுகிற இது ஸ்வயம் பிரயோஜனமாக நினைத்து கூர்ம சஜாதீயன் ஆனவனே –

பாச நின்ற நீர் -என்று
பரம பதத்தில் காட்டில் பிரேம ஸ்தலமான கடலிலே என்னவுமாம்

கேசவா
ப்ரஹ்மாதிகள் சரணம் புகுர தத் ரஷண அர்த்தமாக கூர்ம சஜாதீயன் ஆகையாலே
அவ்வளவாலும் ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு உத்பாதகனான மேன்மை அழியாது இருக்கிறபடி

சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே –1-9-2-

கேழல் ஒன்றாகி
தன் மேன்மையோடு அணைந்து இருப்பதொரு வடிவை தான் கொள்ளப் பெற்றதோ –
ஒன்றாகி –
பின்பு சர்வ சக்தியான தானே -இவ்வடிவைக் கொள்ள -எந்நாளும் ஒண்ணாத படி அத்விதீயமாய் இருக்கிறபடி-
பூமி பிரளயத்திலே அகப்பட்ட வாறே நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்ட வித்தனை அவன் தான்-அழிவுக்கு  இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கும்-அது அவன் கொண்ட வடிவாகையாலே
பன்றியாம் தேசு -நாச்சியார் திருமொழி -11-8–இறே
பிரணியித்வம்-தோற்றின வடிவம் கொண்டான் -நிரந்குச ஸ்வ தந்த்ரன் கொண்டதால் பிரிய தமம் –ஸ்வரூபம் விட ரூபத்தில் ஆழ்வார்கள் ஆழ்வார்கள்
இடந்த-
அஜ் ஜாதிக்காக உள்ளதொரு குணமாயிற்று செருக்கு
ஸ்ரீ யபதி அவ்வடிவைக் கொண்டால் சொல்ல வேண்டா விறே
அண்ட பித்தியில் சேர்ந்த பூமியைப் புக்கு எடுத்துக் கொண்டு ஏறினான்
கேசவன் –
பிரசச்த கேசவன்
அப்போதை திருமயிரும் உளை மயிருமாய் நின்ற நிலை
என்னுடை யம்மான்
சம்சார பிரளயம் கொண்ட என்னை எடுத்தவன் –

————————————————————————

177-
பண்டும் இன்றும் மேலும் -22
மனனக மலமற -திருவாய் மொழி -1-1-2-
இப்பாட் டுக்களில் கிரியா பதம் இல்லை
பண்டும்- பூமி – நாதனே இப்படிப் பட்ட தேவரீருக்கு ஆஸ்ரித வத்சலர் என்னுமிது ஓர் ஏற்றமோ –
என்று வாக்ய சேஷம் கொள்ள -வேண்டும் -அன்றிக்கே -பகவான் ஆழ்வாருக்கு வட தள சயனத்தை
காட்டிக் கொடுக்க -அதிலே வித்தராய் வாய்ப் பேச்சு அற்று போனார் -என்னவுமாம்
மனனக  மலமற –இனன் எனதுயிர் -என்றும் கொள்ளலாம்
அன்றிக்கே
எனன் உயிர் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே -என்று கீழ்ப் பாட்டோடு அந்வயம் ஆகவும் கொள்ளலாம் –

பண்டும் இன்றும் மேலுமாய் பாலனாகி ஞாலம் ஏழும்
உண்டும் மண்டி ஆலிலைத் துயின்ற வாதி தேவனே
வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேருமார்ப பூமி நாதனே –22-

பண்டு இன்று மேலுமாய் –
பண்டு -சிருஷ்டி பூர்வ காலத்தை
இன்று -சிருஷ்டி காலத்தை
மேல் -பிரளய வேளையில்

சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் -என்கிறபடியே நாம ரூபங்களை இழந்து அசித விசேஷிதமாய்
சோச்ய தசாபன்னமான சகல பதார்த்தங்களையும் –

ஸ்ருஷ்டி வேளையில் கர்ம அநுரூபமாக ஸ்ருஷ்டித்து

தத் அநுரூபமாக ரஷித்தும் –

பிரளயம் கொள்ளும் அளவில் வயிற்றிலே வைத்து நோக்கியும்
போருமவன் ஆகையாலே

ஆய் -என்றது ஆகையாலே என்று ஹேது கர்ப்பமாய் கிடக்கிறது

பிரளய ஆபத்திலே வரையாதே எல்லாரையும் வட தள சாயியாய் சர்வ சக்தித்வம்
தோற்ற சிறு வயிற்றிலே வைத்து ரஷித்த தேவரீருக்கு -ஆஸ்ரித விஷயத்தில் வத்சலர் -என்னும் இது ஒரு ஏற்றமோ -என்கிறார் –

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே

மனனகம் -என்று தொடங்கிச் சொல்லுகிற இதுக்கு கருத்து என் என்னில் –
ஸ்வரூப வைலஷண்யத்தை அனுபவிக்கிற இவருடைய பிரதிபத்தி க்ரமம்-இருக்கிறபடி –மனன் -என்றது -மனம் -என்றபடி –
அகம் -நிரவவயமாய் இருக்கிற மனஸ்ஸூ க்கு ஓர் உள்ளும் புறம்பும் இல்லாமையாலே –மனனகம் -என்றது -மனசிலே -என்றபடி –
அன்றியே –
பராகர்த்த விஷயமாயும் -பிரத்யகர்த்த விஷயமாயும் போருகையாலே -பராகர்த்தத்தைத் தவிர்ந்து –
பிரத்யகர்த்த விஷயமானத்தை அகம் -என்கிறது ஆகவுமாம்-உட் பொருளிலே செல்லும் மனம் என்றபடி –

மனனக மலமற மலர் மிசை எழு தரும் மனன் உணர்வு அளவிலன்-பொறி உணர்வு யவை இலன் –
-எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் -மிகுநிரையிலன் -உணர் முழு நலம் -இனன் எனன் உயிர் -என்று அந்வயம்

எனன் உயிர் -எனன் உயிர் -என் உயிர் என்றவாறு
இப்படி இருகிறவன் எனக்கு தாரகன்யஸ்யாத்மா சரீரம் -என்கிறபடி -இத்தத் தனக்கு சரீரமாகக் கொண்டு –
தான் சரீரியாய் -தாரகனாய் இருக்கும் என்னும் அர்த்தமும் சொல்ல வேண்டுவது ஓன்று இறே –யோகி ஹிருதயத் த்யான கம்யம் -அந்தர்யாமி -இரண்டு வகை -ஸ்ரீ லஷ்மி விசிஷ்டன் -விசேஷ வியாப்தி-அசேதனம் உள்ளும் இருக்கிறார் -ஆட்சி செய்வதை புரிந்து கொள்ள வேண்டும் –

அன்றிக்கே
என் உயிரானவன் துயர் அடி தொழுது எழு என் மனனே -என்று கீழ்ப் பாட்டோடு அந்வயம் –

—————————————————————–

178-
வரத்தினில் சிரத்தை மிக்க -25
மதிள் இலங்கைக் கோ -திருவாய்மொழி -4-3-1-
பிரம்மா தனக்கு தந்த வரத்தினில் அத்யாதரத்தை பண்ணி -வர ப்ரதனான பிரம்மாவுக்கு
உத்பாதகனான அவனோடு விரோதித்து -தன் வரத்துக்கு புறம்பான வடிவு கொள்ள வல்லை –
என்று உன்னை அறியாதே வரத்தையே விஸ்வசித்து இருந்தவன் –
இம் மதிளும் ஊரும் உண்டே நமக்கு -என்று சர்வ ரஷகனான பெருமாளை மதிளை ரஷகம் என்று
இருந்து சக்கரவர்த்தி திருமகனை எதிரிட்டான் ஆயிற்று -இது இ றே தானே தனக்கு பண்ணிக் கொள்ளும்
ரஷை -ஆக ஆசூர ராஷசர்கள் ரஷகரான பெருமாளை விட்டிட்டு அரஷகத்தை ரஷகமாக பிரமித்த படி –
இத்தன்மை உடையார் எல்லாரும் ஆசூர ராஷசர்களே –

வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ யிது என்ன பொய் யிரந்த மண் வயிற்றுளே
கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே –25-

வரத்தினில் சிரத்தை மிக்க –
தனக்கு தந்த வரத்தில் -அத்ய ஆதரத்தைப் பண்ணி -வரப்ரதானனான ப்ரஹ்மாவுக்கு
உத்பாதகன் ஆனவனோடே விரோதித்து -அவனாலே உத்பன்னனான ப்ரஹ்மா தனக்கு
தந்த வரத்திலே இறே மிக்க சிரத்தையைப் பண்ணிற்று -கோயம் விஷ்ணு -என்றான் இறே –
தன் வரத்துக்கு புறம்பான வடிவு கொள்ள வல்லை என்று உன்னை அறியாதே வரத்தையே
விஸ்வசித்து இருந்தவன் –

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குல நல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1-

மதிள் இலங்கைக் கோவை வீயச் சிலை குனித்தாய் –
‘மதிளை உடைத்தான இலங்கைக்கு நிர்வாஹகன் அல்லனோ?’ என்று செருக்கு உற்றிருக்கிற இராவணன் முடிய வில்லை வளைத்தாய்;
‘இம்மதிளும் ஊரும் உண்டே நமக்கு,’ என்று சக்கரவர்த்தி திருமகனை எதிரிட்டவன் ஆதலின், ‘மதிள் இலங்கைக்கோ’ என்கிறார்.
சர்வ இரட்சகனான பெருமாளை விட்டு, மதிளை இரட்சகம் என்று இருந்தானாயிற்று.
இது அன்றோ தான் தனக்குச் செய்து கொள்ளும் காவல்?
ஆக, ‘மதிள் இலங்கைக் கோ’ என்றதனால், ‘இராவணனால் ஆளப்படுகின்ற இலங்கை’ என்கிறபடியே,
மண்பாடு தானே ஒருவர்க்கும் புகுவதற்கு அரிது; அதற்குமேலே உள் நின்று நோக்குகின்றவனுடைய வலிமையைக் கூறியபடி.

—————

179-
பௌ நீர் –கிடந்தது கடைந்த -28
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –வங்கக் கடல் கடைந்த-திருப்பாவை 2-30-
சமுத்திர சயன சமுத்திர மதனங்களை அனுபவித்தபடி –

படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே –28-

படைத்து பார் இடந்து –
பௌவ நீர் -படைத்து பார் இடந்து –என்று அந்வயமாகக் கடவது –
அபயேவ ஸ சர்வஜா தெவ் -என்கிறபடியே -அண்ட காரணமான -ஏகார்ணவத்தை
சங்கல்ப லேசத்தால் சிருஷ்டித்து -ஜகத் காரணமான அண்டத்தையும் -அண்டாதிபதியான ப்ரஹ்மாவையும்
சிருஷ்டித்து -ப்ரஹ்மாவாலே ஸ்ரஷ்டமான பிரளய ஆர்ணவத்திலே அந்தர்பூதையான
பூமியை -ஸூரி போக்யமான திவ்ய விக்ரஹத்தை வராஹ சஜாதீயமாக்கி அண்ட புத்தியிலே
புக்கு இடந்து எடுத்து -இது சங்கல்ப்பத்தாலே செய்ய முடியாதது ஓன்று அன்றே –
சம்சார பிரளய ஆபத்தில் நின்றும் எடுப்பவன் இவனே -என்று ஆஸ்ரிதர் விஸ்வசிக்கைகாக இறே

அளந்து –
அதுக்கு மேல் -மகாபலியாலே அபஹ்ர்தமான பூமியை -ஸ்ரீ வாமனனாய் எல்லை நடந்து மீட்டுக் கொண்டு –
இதுவும் தன்னுடைமை பெறுகைக்கு தானே அர்த்தியாய் வருமவன் என்று ஆஸ்ரிதர்
விஸ்வசிக்கைகாக

அது உண்டு உமிழ்ந்து –
நைமித்திக பிரளயம் வர வட தள சாயியாய் -தன்னுடைய சிறிய வயிற்றில் த்ரிலோகத்தையும்
வைத்து ரஷித்து -உள்ளே இருந்து நோவு படாமல் -அவற்றை உமிழ்ந்து –

இதுவும் சங்கல்பத்தால் -அப்படி செய்ததும் சர்வ சக்தி என்றும் -உரு வழிந்த பதார்த்தங்களை
உண்டாக்குமவன் என்றும் –ஆஸ்ரிதர் விஸ்வசிக்கைகாக -பௌவ நீர் படைத்து அடைத்து –
என்று இங்கேயும் அந்வயிக்கக் கடவது –

அண்ட காரணமான ஏகார்ணவத்தை சங்கல்ப லேசத்தால் ஸ்ர்ஷ்டித்த நீ அண்ட அந்தர்வர்த்திகளான
சமுத்ரங்களில் ஒரு சமுத்ரத்தை வருணனை சரண் புக்கு படை திரட்டியும் அடைத்து -இதுவும்
ப்ரணியி நி யுனுடைய விச்லேஷத்தில் தேவரீர் உடைய ஆற்றாமை பிரகாசிப்பித்த இத்தனை இறே

முன் அதில் கிடந்த
ப்ரஹ்மாதிகள் ஆர்த்தரான தசையிலே தூரஸ்தராக ஒண்ணாது என்றும்
அபிமுகீ கரித்தாருக்கு அவதரித்து சுபாஸ்ர்யமம் ஆகைக்கும் திருப் பாற் கடலில்
கண் வளர்ந்து அருளி -ஜ்யோதீம் ஷி விஷ்ணு -என்கிறபடி சர்வருக்கும் சந்நிஹிதரான தேவரீர்
இப்படி செய்து அருளிற்று –ஆஸ்ரித ரஷணத்தில் சதோத்உக்தர் என்று தோற்றுகைக்காக இறே –

கடைந்த பெற்றியோய் –
துர்வாச சாபத்தால் தேவர்கள் இழந்த பதார்த்தங்கள் அடங்க கடலிலே உண்டாக்கிக் கொடுக்கைகாக
அக்கடலைக் கடைந்த மஹா பிரபாவத்தை உடையவனே –பெற்றி -ஸ்வபாவம் –
இதுவும் ஆஸ்ரிதர் இழவுகளை தானே வ்யாபரித்து தீர்க்கும் என்று தோற்றுகைகாக –

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்-2-

பாற் கடலுள் பையத் துயின்ற –
பரம பதத்தில் நின்றும் ஆர்த்த ரஷணத்துக்காக-
திருப் பாற் கடல் அளவும் ஒரு பயணம் எடுத்து-
ஜகத் ரஷண சிந்தையிலே அவகாஹிதனாய்-
ஆர்த்த த்வனிக்கு செவி கொடுத்துக் கொண்டு கிடக்கிற படி

கீழே நாராயணன் -என்றார்களே –
அந்த நாராயண சப்த வாச்யனான ஸர்வேஸ்வரன் திருப் பாற் கடலிலே
ப்ரஹ்மாதிகளுடைய கூக்குரல் கேட்க்கும் படி குடில் கட்டிப் பயிர் நோக்கும் கிருஷிகனைப் போலே
தோள் தீண்டியாக வந்து கண் வளர்ந்து அருளுகிறான் என்கிறார்கள் –

மன்னு வடமதுரை மைந்தன் -என்று மேலே சொல்லப் புகுகிறார்கள் ஆகையால் –
நாராயணன் -என்பது –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் என்பதாகா நின்றார்கள் –

ஸ்ரீ பீஷ்மர் பரத்வமே பிடித்து உபபாதித்திக் கொண்டு வாரா நிற்க –
ச ஏஷ ப்ருது தீர்க்கா ஷஸ் சம்மந்தீ தே ஜனார்த்தன -என்று மூதலித்துக் காட்டினால் போலே –

அபரம் பவதோ ஜென்ம பரம் ஜென்ம விவஸ்தத-என்று அர்ஜுனனுக்குத் தானும் அருளிச் செய்தான்

திருப் பாற் கடலிலே திரு அநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே
பிராட்டியார் திருமுலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும்
அவர்களுக்கு முகம் கொடாத படி ஜகத் ரஷண சிந்தைனையினில்
அவஹிதனாய் கண் வளர்ந்து அருளுகிறவனாய்

அத ஏவ பரம பதத்தில் நின்றும் சம்சார சேதன சம்ரஷணார்த்தம்
திருப் பாற் கடலிலே அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலே
வந்த குணாதிசயத்துக்கு ஒப்பு இல்லாதவனாய்
திரு அநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளுகையால் வந்த பரபக சோபைக்கு ஒப்பு இல்லாதவனாக இருக்கிற
எம்பெருமான் உடைய திருவடிகளை ப்ரீதிக்கு போக்கு வீடாக பாடி போக்யாந்தராங்களிலே அந்வயியோம்

பையத் துயின்ற –
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து-அதன் மேல் கள்ள நித்தரை கொள்கின்ற -என்னக் கடவது இறே
இவ் உறக்கத்தின் உண்மை அறிந்தவர் கள்ளம் என்று வெளி இட்டார் இறே

பையத் துயின்ற-
பிராட்டி மாரோடு போகத்துக்கு இடம் கொடாதே-
ஆராலே ஆருக்கு என்ன நலிவு வருகிறதோ என்று அதிலே-அவஹிதனாய் கொண்டு சாய்ந்தபடி

முதல் பாட்டிலே நாராயணத்வம் சொல்லி-
இப் பாட்டில் அங்கு நின்றும் திரு அவதார அர்த்தமாக-திருப் பாற் கடலிலே சாய்ந்த படியைச் சொல்லுகிறது-

ஆர்த்த நாதம் கேளாத போது காணும்-பிராட்டிமார் போகமும்
மதுரா மதுரா லாபா -என்று பிச்சேறப் பண்ணுமவள் பேச்சும் அஸஹ்யமாம் —
ஜகத் ரக்ஷணத்தில் திரு உள்ளம் பற்றின போது –

பாற் கடலுள்-பையத் துயின்ற
கீழ் நாராயணன் -என்றது -இங்கு அவன் கிடந்த படி சொல்லுகிறது
சதா பஸ்யந்தி -என்று தன்னைப் பிரியில் வாடுமவர்களை விட்டுப் போந்து -சம்சாரிகளோடு கலக்கப் பெறாதே
நடுவே தனியே இவற்றின் ஆர்த்தி தீர்த்துக் கலக்கைக்கு உபாயம் சிந்தித்துக் கிடக்கிறபடி

பையத் துயின்ற
கர்ப்பிணிகள் வயிற்றில் பிரஜைகளுக்கு நோவு வாராமல் சாயுமா போலே அங்கு பிராட்டிமார்களும் கழகங்களுமாய்ச் செல்ல
ஆனைக்குப்பு (சதுரங்கம் )பாடுவாரைப் போலே அநாதரித்து
மஹாபலி போல்வார் நலிந்தார்கள் என்று கூப்பிடும் கால் கேட்டுக் கிடக்கை –

பரமன்
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே-திரு அனந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின பின்பு-
வடிவில் பிறந்த புகரின் பெருமையைச் சொல்லுகிறது-

அன்றியே
ஜகத் ரஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகையாலே-
குணத்தின் ஏற்றத்தை சொல்லிற்றாகவுமாம்-
சர்வத்தாலும் அதிகன் என்றபடி-(அதமன் -மத்யமன் -உத்தமன் -பரம உத்தமன் இதர ஸமஸ்த விலக்ஷணன் )

பரமன் –
இருந்து அருளின போதையிலும்
சாய்ந்து அருளின போது காணும் அங்க ப்ரத்யங்கங்களில் புக்கு அநுபவிக்கலாவது-
நாட்டார்க்கு மற்றப்படியே –
இங்கு கிடந்ததோர் கிடக்கை -என்றும் –
கோலம் திகழக் கிடந்தாய் என்றும் சொல்லலாம் படி இருக்கும் –
சர்வாதிகன் என்று -தோற்றுமாய்த்து கண் வளர்ந்து அருளும் போதை –அழகில் பிரசித்தி –

மயா போதித-காகம் என்று ஒரு வியாஜ்யம் இடுகிறேன் அத்தனை -என்னாலே கெட்டேன்
ஸ்ரீ மான் -கண் வளர்ந்து அருளுகிற போதை காந்தி பிராசர்யம்
ஸூக ஸூப்த -படுக்கைக்கு ஈடாய் இறே உறக்கம் இருப்பது
பரந்தப -எழுப்பிக் -கொள்ள நினைத்த காரியத்துக்கும்- உறக்கமே அமையும் கிடீர்
(போதித ஸ்ரீ மான் –துயின்ற பரமன் )

சிம்மம் உறங்கும் போதும் துஷ்ட மிருகங்கள் அணைய மாட்டாதே –

கௌசல்யா ஸூ ப்ரஜா ராம —
உண்ணப் புக்கு வாயை மறப்பாரை போலே -வந்த காரியத்தை மறந்தான் –
ஒரு திருவாட்டி பிள்ளை பெறும் படியே என்கிறான் –

படுத்த பைந் நாகணை (பெரியாழ்வார் )–

பரமன்
கிட்ட வந்து கிடக்கிற குணாதிக்யத்தாலே வந்த ஏற்றம் ஆகவுமாம்

பரமன்
சர்வாதிகன் தன்னை பரார்த்தமாக்கி வைக்கும் குணாதிகன்

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

வங்கக் கடல் கடைந்த
கடல் கடையா நிற்க
மரக்கலம் அலையாதபடி-கடைந்த நொய்ப்பம் –
கடைந்த போது சுழன்று வருகையாலே
கடலடைய மரக்கலமாய் நின்றபடி -என்றுமாம் –
பிரயோஜனாந்த பரருக்கும் உடம்பு நோவ கடல் கடைந்து
அபேஷித சம்விதானம் பண்ணும் சீலவான் என்கை –

கிருஷ்ணனை யாகில் கவி பாடிற்று
ஷீராப்தி மதனம் பண்ணினவனை சொல்லுகை பின்னம் சேருமோ என்னில் –
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதம் உண்ட எம்பெருமானே -என்று
தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
பெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக
கடல் கடைந்தபடி –

ஊரார் கார்யத்தை ஒரு வ்யாஜ்யமாக்கி
பெண்களைப் பெறுகைக்காக நோன்பிலே அன்வயிப்பித்த
கிருஷ்ணன் உடைய
ஸ்வ பாவத்தோடு சத்ருசமாய் இருக்கையாலே
சொல்லுகிறார்கள் –

வங்கக் கடல் கடைந்த
தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
பெரிய பிராட்டியார் ஆகிற பெண்ணமுதை பெற்று
அப்போது உகப்போடே இருந்தால் போலே
ஊரார் காரியத்தை வியாஜ்யமாக்கி-
பெண்களைப் பெற்ற ஹர்ஷத்தோடே கிருஷ்ணன் இருக்கிற இருப்பைக் கண்டவாறே
அன்யார்த்தமான செயலில் அபிமதம் இவனுக்கு இன்றாக வருகிறதோ என்கிறார்கள் –

வங்கக் கடல் கடைந்த
பாற் கடலைக் கடைந்து பிராட்டியைப் பெற்றால் போலே
இங்குத் தயிர் கடைய என்று ஒரு வியாஜ்யமாய்
கன்னிகைகளை பெறக் கடவனாய் இறே இருப்பது

ஒல்லை நானும் கடைவன் என்று (பெருமாள் திருமொழி )
திரு மஞ்சனம் செய்து திவ்ய மால்யாம்பரதரையாய்
பூஷண பூஷிதையாய்
சகல தேவதைகளும் பார்த்துக் கொண்டு நிற்க
மார்பிலே சென்று அணைந்த போதைச் செவ்வி
(திகழ்கின்ற திருமார்பில் ஏறி அமர்ந்து )

மார்கழி நீராடி
ஆடை யுடுத்து சம்மா நிதைகளாய் –
பல் கலனும் அணிந்து –
பெண்கள் கூடி இருந்த போது பிரகாசிக்கும் படி இருக்கையாலே
அத்தைச் சொல்லுகிறார்கள்

வங்கக் கடல் கடைந்த
விண்ணவர் அமுதுண்ண என்று
ப்ரயோஜனாந்தர பரருக்கும் அகப்பட உடம்பு நோவக் கடல் கடைந்து
அபேக்ஷித சம்விதானம் பண்ணும் படி சீலவானனான கிருஷ்ணன்
அநந்ய பிரயோஜனம் கார்யம் செய்யச் சொல்ல வேணுமோ

அமரர்க்கு அமுதீந்த்த ஆயர் கொழுந்தை (திருவாய் -1-7 )-என்கிற படியே
கிருஷ்ணன் இறே தேவர்களுக்கு அமுதம் இட்டவன் –
ஷீராப்தி நாதன் கடையில் கடல் தான் அம்ருதம் சுரவாதே –
கண்ணன் கையால் மலக்குண்கையாலே இறே சுரந்தது
(பாலைக் கறந்து பழகினவன் அன்றோ இவன்
வங்கக்கடல் -கப்பலாக ஷீராப்தி நாதன் இருக்க கண்ணன் அன்றோ கடைந்தான் )

வங்கக் கடல் கடைந்த
கீழில் அமிருதம் எல்லாம் மேலே கிளறும்படி
படு திரை விசும்பிடைப் படரும் படி கடையா நிற்க -(பெரிய திருமொழி -5-7 )
மரக் கலம் அசலாத படி கடைந்த நேர்ப்பம் சொல்லுகிறது

வங்கக் கடல்
கடைந்த போது சுழல மலை திரிக்கையாலே கடல் அடங்கலும் மரக்கலமாய் நின்ற படி
வங்கம் விட்டுலவும் கடல் இறே ஷீராப்தி –
வைகுந்தன் என்பதோர் தோணி சேர்ந்த இடம் என்று (பெரியாழ்வார் )
(விஷ்ணு போதம் )
ஆழ் கடலைப் பேணாதே கடைந்தான்

பாற் கடலில் பையத் துயின்ற (2)-என்று
ஷீரார்ணவ சயனத்தைத் தொடங்கி
அதனுடைய மதனத்தைச் சொல்லி நிகமிக்கிறார்கள் –
அதில் கிடந்து முன் கடைந்த -(திருச்சந்த )

வங்கக் கடல் கடைந்த
கீழில் உள்ள பதார்த்தங்கள் மேல் எழக் கடையா நிற்க –
கடலிலே மரக்கலம் அசையாமல் கடைந்த நொய்ப்பம் சொல்லுகிறது
கடைந்த போது சுழன்று வருகையால் கடலடைய மரக்கலமாய் நின்றபடி என்றுமாம்
கிருஷ்ணனே ப்ரயோஜனாந்தர பரர்க்கும் கார்யம் செய்யும் ஸீலவான் என்கை
ஆஸ்ரயணீய தத்வம் ஸ்ரீ லஷ்மீ நாதமாய் இருக்கும் -என்கை –
தாய் முன்பு பிதாவுக்கு பிரஜை செய்த குற்றம் பொறுக்க வேண்டுமா போலே
ஆத்மாவின் குற்றம் பொறுக்கைக்குப் புருஷகாரம் என்கை
அவள் சந்நிதியில் குற்றம் மிக்க காகம் பிழைத்தது
அவள் சந்நிதி இல்லாமை அத்தனை குற்றம் இன்றிக்கே இருக்கச் செய்தே ராவணன் தலை அறுப்புண்டான்

—————————————————————

180-
கூனகம் புகத்தெறித்த -30
கொண்டை கொண்ட கூன்–அரங்க ஒட்டி -49
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் -திருவாய்மொழி -1-5-5-
ஒருகால் நின்று உண்டை கொண்டு-பெரிய திருமொழி -10-6-2-
உள்ளங்கை நெல்லிக்கனியாக சாஷாத் கரித்த ஸ்ரீ வால்மீகி பகவானும் அறியாத
ஸ்ரீ ராம வ்ருத்தாந்தத்தை அறிந்த ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூக்திகள் -நிர்ஹேதுக கிருபையால்
மதிநலம் அருளப் பெற்ற படியால் -அபரிச்சின்ன ஞானம் ஆழ்வார்களுக்கு –
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக்  கொண்டேன் –
கூனி கூன் நிமிர்தவர்-பெருமாள் அஹங்கரிக்கும் ஜீவனுடைய அஹங்காரத்தை அழித்து
குனிய வைக்கிறார் -திருவரங்கம் பெரிய பெருமாள் -எனபது திருமழிசைப் பிரான் அனுபவம் –

வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே
தேனகம் செய் தண்ணறு மலர்த் துழாய் நன் மாலையாய்
கூனகம் புகத்தெறித்த கொற்ற வில்லி யல்லையே –30-

கூனகம் புகத்தெறித்த –
கூனி உடைய கூன் உள்ளே அடங்கும்படி யாகச் சுண்டு வில்லைத் தெறித்த
இத்தால் -அவதாரத்தில் மெய்ப்பாட்டால் வந்த மௌக்த்யமும் ரஷகமாய் இருக்கும் என்கை –
ரஷக வஸ்துவானால் அதில் உள்ளது எல்லாம் ரஷகமாய் இறே இருப்பது

கொற்ற வில்லி யல்லையே —
வில் பிடித்த போது -அக்கையையும் வில்லையும் கண்ட போதே ராவணாதிகள் குடல்
குழம்பும்படியான வீர ஸ்ரீ யைச் சொல்லுகிறது –

கொற்றம் -வென்றியும் -வலியும்

புண்டரீகனே -கொற்ற வில்லி அல்லையே என்று அவதார அந்தரமாய் இருக்கச் செய்தேயும்
தரம்யைக்யத்தாலே -பால்ய யவன அத்யவஸ்தா விசேஷங்கள் போலே தோன்றுகிறது  ஆய்த்து

கொண்டை  கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அம் தண் நீர் அரங்கமே –49-

கொண்டை  கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி-
மயிர் முடியிலே உண்டான மாலையின் மேல் வண்டுகள் சஞ்சரிக்கும்படியான
ஒப்பனையாலே ஸ்ப்ர்ஹணீ ய வேஷை யான கூனி –
இத்தால் –சேதனனுடைய நிஷ்க்ர்ஷ்ட ஸ்வரூபம் ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஈஸ்வரனுக்கு
ஸ்ப்ர்ஹணீ யம் என்று கருத்து –

கூனி கூன் –
கீழ்ச் சொன்ன வடிவுக்கும் ஒப்பனைக்கும் சேராதே அவளுக்கு நிரூபகமாகப் போந்த கூனை
இத்தால் -ஸ்வரூப விரோதியாய் -தேவோஹம் மனுஷ்யோஹம் –என்று நிரூபகமாய்
ஸ்வரூபத்துக்கு அவத்யமுமாய் இருந்துள்ள அஹங்காரத்தை நினைக்கிறார்

உண்டை கொண்டு அரங்கவோட்டி-
லீலார்தமாக வில்லிலே உண்டியை வைத்து கூனை உள்ளே புகும்படி ஒட்டித்
தெறித்து -அவத்யமான அஹங்காரத்தை அநாயேசேநப் போக்க வல்ல சக்தியை நினைக்கிறார்-

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5-

கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
அவள் அருகு இன்றிக்கே ஒழியவன் ஆனால் தான்–(பெருமாள் -கிருஷ்ணன் இருவருக்கும் கூனி விருத்தாந்தம் பொழுது பிராட்டி அருகிபோல் இல்லையே _-உ ன்னைக் கிட்டினார்க்கு அவத்யம் வருமோ –கூன் சிதைய -என்றது
இவளுடைய அல்லாத அவயவங்களுக்கு ஒரு வாட்டம் வாராத படி நிமிர்த்த அத்தைப் பற்றா
வன வாச ஹேது பூதையான குப்ஜையைச் சொல்லிற்றாய்-பால்யத்திலே சுண்டு வில் கொண்டு திரியா நிற்க பெருமாள் லீலா ரசம் அனுபவித்தார்
என்று உண்டு -அத்தைப் பற்றிச் சொல்லிற்று ஆகவுமாம்
வேலைக்காரர்கள் இடம் சரியாக நடக்கிறாயா -பரத ஆழ்வான் இடம் பெருமாள் –ஏதோ பட்டு சொல்லுகிறாயே-அப்போது கோவிந்தா -என்றது பூமிக்கு ரஷகன் ஆனவன் என்கிறது-
அன்றிக்கே தீம்பு சேருவது கிருஷ்ணனுக்கே யாகையாலே போம் பழி எல்லாம் அமணன் தலையோடு -என்னுமா போலே அவன் தலையிலே ஏறிட்டு சொல்லுதல்
கன்னக் கோல்-திருடன் -சாக -அவள் பெண் -சிற்றாள் கலவை -பானை அளவு அதிகம் -குயவன் -ஸ்திரீ பார்த்து -வண்ணான் இடம் துணி வாங்க –
அமணன் உட்கார்ந்து கால தாமதம் -மௌன சந்நியாசி
அதுவும் அன்றிக்கே சாந்து இட்ட கூனி தன்னை சொல்லிற்றாய் -வருத்தம் அற சுண்டு வில் நிமிர்க்குமா போலே நிமிர்த்தவன் -என்னுதல்
தெறிக்கை யாவது -க்ரியையாய்- நிமிர்த்தாய் என்றபடி
கிருஷ்ணனுக்கு வில்லுண்டோ பின்னை என்னில் வேலிக் கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி திரியும் இறே
தருமம் அறியாக் குறும்பனை தன கைச் சார்ங்கம் அதுவே போலே -என்று வில் உண்டாகவே அருளிச் செய்தாள் இறே
கோவிந்தா -திர்யக்குகளோடும் பொருந்துமவன் அல்லையோ நீ –

குன்றொன்று மத்தா வரவமளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு ஒரு கால்
நின்றுண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர நினைந்த  பெருமான் அதுவன்றியும் முன்
நன்றுண்ட தொல் சீர் மகரக் கடலேழ்  மலையேழ்   உலகேழ்  ஒழியாமை  நம்பி
அன்றுண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப் புண்டு இருந்தவனே -10-6-2-

நின்றுண்டை கொண்டோட்டி வன் கூன் நிமிர நினைந்த  பெருமான் –
முன்பு நின்ற நிலையிலே நின்று
வில்லில் உண்டான உண்டைகளை நடத்தி
வலிய கூன் நிமிரும்படி செய்த சர்வேஸ்வரன் –
(கண்ணனுக்கு முன்பு நின்ற நிலை -ராமனின் சேஷ்டிதம் என்றும்
உண்டை வில் தெரித்தாய் கோவிந்தா )

————————————————————

181-
ஆதி ஆதி ஆதி நீ -34
வேர் முதல் வித்தாய் -திருவாய்மொழி -2-8-10-
சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்வதீயம் -என்கிறபடி
த்ரிவித காரணமும் நீ -என்றவாறே –
வேர் -சஹ காரி காரணம் -முதல்-நிமித்த காரணம் -வித்து-உபாதான காரணம்
பரம வைதிக சித்தாந்தம் -இது-

ஆதி யாதி யாதி நீ ஓர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ யது உண்மையில் விளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே –34-

ஆதி யாதி யாதி நீ –
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் -ஏகமேவ அத்வதீயம் -என்கிறபடி யே த்ரிவித காரணமும்நீயே
எதுக்கு காரணம் ஆகிறது என் என்னில் -மஹதாதி விசேஷாந்தமான ப்ரகர்தி சிருஷ்டிக்கு –
பஹூஸ்யாம் -என்கிற சங்கல்ப்பத்தாலே காரண பூதன் –

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

வித்து –மாறி மரம் ஆகும் -உபாதானம் -சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் உபாதான காரணம்
முதல் -சங்கல்பம் -நிமித்த -சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம்-நிமித்த காரணம்
வேர் -கெட்டியாக இருந்து நிற்கும் சஹ காரி காரணம் -ஞான சக்த்யாதி குண விசிஷ்ட ப்ரஹ்மம்
பரமபததுக்கு காரணத்வம் உண்டோ -நித்யம் அன்றோ
பரம பதம் – நித்யா இச்சா வேஷத்தால் நிமித்த காரணம் -கைங்கர்யம் கொண்டு கொண்டே இருப்பேன்-வேற மாதிரி சங்கல்பம் அங்கே –நித்யா இச்சா விசிஷ்ட ப்ரஹ்மம்-அப்ராக்ருத அசித் சித் ஜீவ விசிஷ்ட ப்ரஹ்மம் -மண்டப கோபுராதிகள் அங்கே-நித்யர்-

வேர் முதலாய் வித்தாய் –
த்ரிவித காரணமும் தானேயாய்
பரந்து –
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யச்சா பவேத் –என்கிறபடியே — தஜ்ஜ தல்ல தன்ன தஜலன –
முந்துற இவற்றை யடைய உண்டாக்கி
பின்னை இவற்றினுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்காக அநு பிரவேசித்து -இப்படி ஜகதாகாரனாய் நின்று –

——————————————————

182-
பாலின் நீர்மை -44
நிறம் வெளிது செய்து -மூன்றாம் திருவந்தாதி -56
நிகழ்ந்தாய் பால் பொன் -நான்முகன் திருவந்தாதி -24
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் -பெரிய திருமொழி -4-9-2-
திருமால் கரு நெடுமால் சேயன் -திரு நெடும் தாண்டகம் -3
யுக அநு குணமாக தனது காள மேக நிபஸ்யாமமான நிறத்தை அழிய மாறி -முகம் காட்டுகிறான் –
கலி யுகத்தில் தன் பக்கல் அபிமுகராய் ஒரு வர்ண விசேஷத்தில் ருசி பண்ணுவார் இல்லாமையாலே
ஸ்வாபாவிகமான வடிவு தன்னை கருநீல வர்ணனாய் இருக்கும் படி –

பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம்
போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா
நீல நீர்மை யென்றிவை நிறைந்த கால நான்குமாய்
மாலின் நீர்மை வையகம் மறைந்ததென்ன நீர்மையே –44-

பாலின் நீர்மை –
க்ர்த யுகத்தில் உள்ளார் சத்வ ப்ரசுரராய் வெளுப்பு உகக்குமவர்கள் ஆகையாலே
அவர்களுக்கு பால் போன்ற நிறைத்தைக் கொள்ளும் ஸ்வபாவம் –அதாகிறது நிறம் –
வளை வுருவாய்த் திகழ்ந்தான் -என்றும் -சங்க வண்ண மன்ன மேனி -என்றும் –
சொல்லுகிற ஸ்தானத்தில் பாலின் நீர்மை -என்றது -இவ் வெளுப்புக்கு ஆஸ்ரயம்
சர்வ ரச -என்கிற விஷயம் என்று தோற்றுகைக்காக –

செம்பொன் நீர்மை –
த்ரேதா யுகத்திலே வந்தால் -ருக்மாபம் -என்றும் –
கட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது -என்றும் சொல்லுகிறபடியே
சிவந்த நிறத்தை கொள்ளும் -சேயன் என்றும் த்ரேதைக் கண் -என்கிற ஸ்தானத்திலே –
செம்பொன் நீர்மை -என்றது அந் நிறத்துக்கு ஆஸ்ரயமான விக்ரஹம் மஹார்க்கம்
என்று தோற்றுகைக்காக –

பாசியின் பசும்புறம் போலும்  நீர்மை –
த்வாபர யுகத்திலே வந்தால் பாசியினுடைய புறத்தில் பசுமை போல ஸ்ரமஹரமான
திரு நிறத்தை உடையவனாய் –

பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா நீல நீர்மை –
கலி யுகத்தில் வந்தால் எல்லா வடிவும் கொண்டாலும் அபிமுகீ கரிப்பர் இல்லாமையாலே
ஸ்வாபாவிகமான நீல நிறமாய் இருக்கும் –

நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் -என்னக் கடவது இறே –

கலௌ ஜகத் பதிம் -அழகிய தடாகத்திலே வண்டுகள் நெருங்கப் படிந்து மது பாநத்தை
பண்ணி -அத்தால் வந்த ஹர்ஷத்தாலே சிறகு விரித்து வுலவா நின்றுள்ள நீலப்
பூவின் நிறம் போலே இருக்கிற நிறத்தை உடையவனாய் -இத்தால் ஸ்ரமஹரமாய்
செவ்வியை உடைத்தான நீலப் பூ என்கை –

பொற்பு-அழகு

நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறை யுருவம் யாம் அறியோம் எண்ணில் -நிறைவுடைய
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு ——-56-

நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று-இறையுருவம் —யாம் அறியோம் எண்ணில் —
இறையினுடைய வடிவானது
வெளுப்பு சிவப்பு பசுமை கருமை என்று எண்ணில் நாம் அறியோம் –

நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
இகழ்ந்தாய் இருவரையும் வீயப் புகழ்ந்தாய்
சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய்
மனப் போர் முடிக்கும் வகை-24-

பொருளின் வண்ணம் சொல்லாமல் பொருளையே அருளிச் செய்கிறார் பால் இத்யாதியால்
பால் -வெளுப்பு மட்டும் அல்ல ரஸம் –ரஸோ வை ஸஹ
பொன் சிகப்பு மட்டும் அல்ல ஸ்ப்ருஹனீயம் –
பாசி -மாந்தளிர் பச்சை மட்டும் அல்ல பார்த்தாலே குளிர்ச்சி –
கார் வண்ணம் -கறுப்பு மட்டும் அல்ல வண்மை -இயற்கை வர்ணம்

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே —-4-9-8-

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும்  நிலை நின்ற பின்னை வண்ணம்
கொண்டல் வண்ணம் பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும்
க்ருத யுகத்தில் புருஷர்கள்
சத்வ பிரசுரர் ஆகையால்
வெளுத்த நிறத்தை உகப்பவர்கள் என்று
அதுக்காக வெளுத்த நிறத்தை கொண்டான் ஆய்த்து-
அவர்கள் உகந்ததை நாம் செய்யவே
நாம் உகந்ததை இவன் செய்தான்
நாமும் இவன் தன்னை உகப்போம் -என்று
ஆதரிப்பார்கள் என்று பார்த்து –
அவ் வழியாலே
அனந்தரத்தில் உள்ளாருக்கு ரஜோ குணம் அளாவி இருக்கையாலே
அவர்கள் உகந்த சிவந்த நிறத்தை உடையவன் ஆனான்
அதுக்கு அனந்தரம்
மணியின் வண்ணத்தை உடையவன் ஆனான்-

வண்ணம் எண்ணும் கால்
இவனுடைய வடிவை ஆராயப் புக்கால்
நித்தியமான அசாதாராண விக்ரஹம்
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே யாய்த்து இருப்பது –

திருமேனி இன்ன வண்ணம் என்று காட்டீர்
இவன் யுகங்கள் தோறும் அவ்வவர் உகந்த
வடிவுகளைக் கொள்ளும்
இவனுடைய அசாதராண விக்ரஹம் காள மேகம் போலே இருக்கும்
என்று சாஸ்த்ரங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே
நீ இப்படி சாஸ்த்ரங்களில் கேட்டுப் போந்த வடிவு தான்
இருக்கும்படி இது காண்
என்று ஒரு வார்த்தை அருளிச் செய்து
அவ் வடிவைக் காட்ட வேண்டும்

திரு வடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
த்ரேதைக் கண் வளை யுருவேத் திகழ்ந்தான் என்றும்
பெருவடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவத் தோர் உருவன் என்று உணரலாகாது
ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக்
கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே

திரு வடிவில் –
வடிவிடை யாட்டத்தில் –
கீழே -சேஷத்வத்தின் இடையாட்டமாகவும்
அந்ய சேஷத்வ நிவ்ருத்தியின் இடையாட்டமாகவும் -செய்தவை போலே
இவ்விடை யாட்டத்தில் செய்தவை கிடீர் என்கிறார் –

திரு வடிவு
1-வி லஷணமான வடிவு -என்னுதல் –
2-திருவினுடைய வடிவு -என்னுதல் –

வடிவு -யென்ன அமைந்து இருக்க
திரு வடிவு -என்கிறது
அகலகில்லேன் இறையும்-என்கிறபடியே
பிராட்டி தண்ணீர் தண்ணீர் -என்னும்படி இருக்கிற
துர்லபமான வடிவைக் கிடீர் நாட்டார்க்கு அழிய மாறி –
முகம் கொடுத்தது என்று
அவ்வடிவின் வை லஷண்யம் தோற்றுகைக்காக –

(நித்ய அநபாயிநி -திருவே அவளும் அனுபவிக்க உரிய வடிவு -திருவை அனுபவிக்கக் கொண்ட வடிவு

அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-)

அவ்வடிவை உபகரித்த படியை சொல்லுகிறது மேல் –
கரு நெடு மால் –
காள மேய நிபஸ்யாமமான வடிவை உடையனாய்
உபய விபூதிக்கும் அவ்வருகான
பெரிய மேன்மையை உடையவன் –

இத்தால் –
விலஷண விக்ரஹ உக்தனாய்
ஸ்வயம் நிரபேஷனாய்
சர்வாதிகனாய் இருக்குமவன் கிடீர் -இப்படி ஆனான் -என்கிறார் –

அதவா
மால் -என்று – வ்யாமோஹமாய்
அதி வ்யாமுக்தன் என்னவுமாம் –

இத்தால்
இப்படி இருக்கிறவன் -தன்னை அழிய மாறி முகம் காட்டுகைக்கு ஹேது
ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆகையாலே என்ற ஹேது ஆகவுமாம் –

சேயன் என்றும் -த்ரேதைக் கண் –
த்ரேதா யுகத்தில் வந்தால் -சிவந்த வடிவை உடையவனாய் இருக்கும் –
அக் காலத்திலே புருஷர்கள் ரஜஸ் பிரசுரர் ஆகையாலே சிவப்பிலே யாய்த்து ருசி உண்டாய் இருப்பது –
அந்த ருசி அனுகுணமாக சிவந்த வடிவைக் கொண்டு முகம் காட்டும் –

ரஜஸ் ஸூ சிவந்து இருக்கக் கடவதாய் –
சத்வம் வெளுத்து இருக்கக் கடவதாய் –
தமஸ் ஸூ கறுத்து இருக்கக் கடவதாய் -இறே இருப்பது –
லோஹித சுக்ல க்ர்ஷ்ணம் -என்று இறே

(வேத வாக்கியத்தில்
* அஜாமேகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம் * (ஸ்வேதார உபநிஷத் ) என்று சிவப்பு வெளுப்பு கறுப்பு என்கிற அடைவிலே
ஓதி யிருக்கையாலே அந்தச் சாயையாலே அருளிச் செய்கிறபடி எனலாம்.

பிரக்ருதியை முக்குண கலவி கொண்ட பெண்ணாக உருவகம் -முமுஷு இதில் தண்மை அறிந்து அவன் மேன்மை அறிந்து முக்தன் ஆகிறான்

முதல் யுகத்தில் கொண்ட வெண்மையை முதலில் சொல்லாமல் சிகப்பைச் சொல்லி வெண்மை சொன்னது போல் இங்கும் அருளிச் செய்கிறார் )

பிரக்ர்திக்கு அசாதாரண குண த்ரயத்தையும் சொல்லிற்று –
சிவந்த வடிவை பிரதமத்திலே சொல்லிற்று –
லோஹித சுக்ல க்ர்ஷ்ணம் -என்கிற ஸ்ருதி சாயையாலே
அருளிச் செய்கிறார் -என்னும் இடம் தோற்ற –

சேஷி உகப்புக்கு அனுகுணமாக சேஷ பூதன் தன் வடிவை அமைக்கை அன்றிக்கே
(நிவாஸ சய்யா –இத்யாதி
சென்றால் குடையாம் -இத்யாதி )
சேஷ பூதன் உகப்புக்கு அனுகுணமாக சேஷி தன் வடிவை
அழிய மாறுகிறான் இறே
தமர் உகந்தது எவ்வுருவம் -என்கிறபடியே

என்றும் -என்றும் -என்கிற இவை
ஊழி தூறு ஊழி -நின்று ஏத்தல் அல்லால் என்கிற இடத்தில் அந்வயிக்கக் கடவது

(சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு –ஸ்ரீ முதல் திருவந்தாதி-53-

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 40 –

ஆபாஸ விருத்திக்கு ஐம்பது சரீரம் கொண்டானே ஸுபரி

“மீனாயாமையுமாய் நரசிங்கமுமாய்க் குறளாய்க் காணோரேனமுமாய்க் கற்கியாம்“ இத்யாதிப்படியே
தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர யோநிகளிலே பலவகைப் பட்ட வடிவுகளையும்

சதங்கை அழகியார் -நம்பிள்ளை ஆராதன தெய்வம் -நாவல் பழம் கேட்ட வ்ருத்தாந்தம்

தமருகந்த   தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் —ஸ்ரீ முதல் திருவந்தாதி —44–)

பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் –
கிருத யுகத்தில் வந்தால் –
திரேதைக் கண் -என்றவோபாதி –க்ர்த யுகம் -என்னாதே
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் -என்கிறது-
திரேதைக் கண் -என்று மலட்டுக் காலம் போலே இருக்கையாலே
பகவத் ஸ்பர்சியான காலம் என்று அருளிச் செய்கிறார் –
அக் காலத்தில் பண்ணின வியாபாரம் தமக்கு அபிமதமாய் இருக்கையாலே-

இப்படி பகவத் ஸ்பர்சத்தை இட்டுச் சொன்ன இடத்துக்கு த்ருஷ்டாந்தம் –
பெரிய திரு நாளில் ஆதரம் உடையார் -பங்குனி மாசத்துக்கு அப்புறம் கார்யம் செய்கிறோம் என்ன பிராப்தமாய் இருக்க
பெரிய திருநாளுக்குப் பின் கார்யம் செய்கிறோம் -என்னுமா போலே –

ஆனால் –கடல் அமுதம் கொண்ட காலம் -யென்ன அமையாதோ
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் -என்பான் -என்னில் –
பதினாலு நூறாயிரக் காதமாறு பரப்பை உடைத்தாய் இறே ஷீராப்தி இருப்பது –
(14 லக்ஷம் காதம் நீளமும் அகலமும் காய்ந்த பாற் கடல் )இப் பரப்பு அடங்கலும் விம்மும்படி யிறே
தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி -என்கிறபடியே
கண் வளர்ந்து அருளுவது –

நாளும் வாய்க்க நங்கட்கு நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக் காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே–8-10-8-)

அவ் வடிவோடே எழுந்து இருந்து -கடைகிற போது
ஒரு கடல் செவ்வே நின்று கடல் கடைந்தால் போலே இருக்கையாலே
அருளிச் செய்கிறார் -(பாற் கடலை குணக் கடல் அன்றோ கடைந்து )
ஸ்ரமஹரமாய் அபரிச்சின்னமாய் இறே கடல் இருப்பது –
அப்படியே ஸ்ரமஹரமுமாய் அபரிச்சின்ன போக்யமுமாய் இருக்கிற படி –

அதவா
பெரு வடிவு -என்று
அசங்க்யாதமான வடிவாலே -என்னவுமாம் –
1-மந்த்ரம் அழுந்தாமைக்கு கூர்ம ரூபியாகவும்
2-மேலே கொந்தளியாமைக்கு ப்ர்ஹத் ரூபியாயும் –
3-தேவதைகளோடு அந்ய தமமான வடிவைக் கொண்டும்
4-அசுரர்களோடு அந்ய தமமான வடிவைக் கொண்டும் –
5-அவர்களுடைய மத்யே நின்று வலித்தும்-
5-வாஸூகிக்கு பலமாய் புகுந்து நின்றும் –
யன்ன த்ரஷ்டும் சூராசூரை -என்று
மலையோடு தேவதைகளோடு அசுரர்களோடு வாசி அற –
வியாபித்து -பலாதானம் பண்ணுவதாயும்
இப்படி அநேகம் வடிவைக் கொண்டபடி –

கடல் அமுதம் கொண்ட காலம் –
துர்வாசவினுடைய சாபத்தால் நஷ்ட ஸ்ரீகராய்
அம்ர்தத்தை இழந்து தரித்ரராய் –
சரணம் த்வா மநு ப்ராப்தா சமஸ்தா தேவ கணா-(ஸ்ரீ விஷ்ணு புராணம் )என்கிறபடியே

பிறிகதிர் படாதபடி சகல தேவதைகளும் வந்து சரணம் புகுர –
அவர்களுக்கு கடலைக் கடைந்து அமர்த்தம் கொடுத்த படி –

கொண்ட –
அவர்களுக்கு கொடுத்தது தன் பேறாய் இருக்கை –

கடல் அமுதம் கொண்ட காலம் –
1-தேவதைகளுக்கும் -2–தனக்கும் -3–எனக்கும் –
கடலிலே அமுதத்தை உண்டாக்கின காலம் –
1-தேவதைகள் பந்தகமான அம்ர்தத்தைக் கொண்டு போனார்கள் –
2-தான் பெரிய பிராட்டியார் ஆகிற அம்ர்தத்தை ஸ்வீகரித்தான் –
விண்ணவர் அமுது உண்ண அமுதினில் வரும் பெண்ணமுதம் உண்ட
இவை இரண்டும் அன்று இவருக்கு போக்கியம் –
3-நால் தோள் அமுது –என்கிறபடியே
கையும் திரு ஆழியும் கொண்டு
கடல் கடைந்தானே யாய்த்து இவருக்கு போக்கியம் –

(வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9-)

1-தேவதைகளும் தங்கள் அபிமதத்தைப் பெற்றுப் போந்தார்கள் –
2-அவனும் தன் அபிமதம் பெற்றான் –
3-நானும் என் அபிமதம் பெற்றேன் –
பஸ்யதாம் -சர்வ தேவாநாம் யவௌ வஷஸ் த்தலம் ஹரே –
என்கிறபடியே
சகல தேவதைகளும் பார்த்து இருக்க
திரு நாபீ கமலத்திலே அடியை இட்டு திரு மார்பிலே ஏறினாள் ஆய்த்து –

(சிந்து கன்யை -பாற் கடலில் பிறந்தவள்-திவ்ய மால்ய அம்பர தரா
பதுமா -வாமனன் அவதாரம் பொழுது
தாரணி -பரசுராமன்
ருக்மிணி -கண்ணன்
சீதா -ராமன்)

இவர்களைப் பாராதே திரு மார்பிலே ஏறுவான் என் என்னில்
தன் அபிமதம் பெற்றால் இறே பிறர்க்கு அபிமதம் செய்வது –
அங்கன் அன்றியே
அவன் கடாஷம் அடியாக விறே நம்முடைய கடாஷம் என்று அவன் முகத்தைப் பார்த்தாள் –
அவன் நினைவு அறிந்து செய்கைக்காக –

இவ்விடத்திலே ஜீயர் பட்டர் –இடம்
தேவதைகள் அடங்க நிரம்பக் கிடக்கச் செய்தே
திரு மார்பிலே ஏறுகை ஸ்த்ரீத்வத்துக்கு போருமோ -என்று கேட்க –
பர்தர் சம்ஸ்லேஷத்தில் இழியும் பொழுது (கூனர் குறளர்  வயசானவர் பணி செய்யும் )கலசப்பானை எடுப்பார்க்குக் கூச வேணுமோ –
என்று அருளிச் செய்தார் –

சகல தேவதைகளும் ஈஸ்வரோஹம் -என்று இருந்தாலும்
இம் மிதுனத்துக்கு கிஞ்சித் கரிக்க யோக்யமாய் இறே ஸ்வரூபம் இருப்பது –

அமுதம் கொண்ட காலம் –
அதுவும் ஒரு காலமே -என்கிறார்
அநந்ய பிரயோஜனருக்கு முகம் காட்டுகை அன்றியே
பிரயோஜனாந்த பரருக்கும் கூட வாழும் காலம் இறே –
1-மேன்மையும்–2- நீர்மையும்–3- போக்யதையும் பிரகாசிக்கும் காலம் இறே –

சகல தேவதைகளும் வந்து சரணம் புகுருகையாலே மேன்மை பிரகாசியா நின்றது
பிரயோஜனாந்த பரர்கள் –ஈஸ்வரோஹம் -என்று இருக்கும் துர்மானிகள் என்று பார்த்தல் –
செய்யாதே கார்யம் செய்கையாலே நீர்மையும் பிரகாசியா நின்றது –
பிராட்டியும் தானும் சேர்ந்த சேர்த்தியால் போக்யதையும் பிரகாசியா நின்றது –

வளை வுருவாய் திகழ்ந்தான் -என்று
க்ர்த யுக புருஷர்கள் சத்வோத்தராகையாலே வெளுப்பாய்த்து அவர்கள் உகப்பது –
ஆகையால் அவர்கள் ருசி அனுகுணமாக சுக்ல வர்ணமான வடிவை உடையனாய் இருக்கும் –

வளை வுருவாய் -சங்க வர்ணனாய் –
சசி வர்ணம் சதுர்புஜம் -என்னக் கடவது இறே –

கடல் கடைந்த காலம் க்ருத யுகம் யென்ன பிரமாணம் என் என்னில் –
ஸ்வேத வர்ணம் -என்கையாலே –க்ர்த யுகம் என்னும் இடம் தோற்றுகிறது

(ஸூக்ல அம்பர தரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ந உப சாந்தயே

சுக்லாம்பரதர”வெள்ளை வஸ்த்திரம் கட்டிக் கொண்டிருப்பவர்.
விஷ்ணு’ என்றால் எல்லா இடத்திலேயும் பரவியிருப்பவர், ஸர்வ வ்யாபி என்று அர்த்தம்.
சசிவர்ண”: நிலா மாதிரி நிறமுடையவர்.-சதுர்புஜ”: நாலு கை உள்ளவர்.
ப்ரஸந்ந வதந”: நல்ல மலர்ந்த முகமுள்ளவர்
த்யாயேத்’ என்பதற்கு ‘த்யானிக்க வேண்டும்’
“ஸர்வ விக்ந உப சாந்தயே”- எல்லா விக்னங்களும், தடைகளும் இடையூறுகளும் அடங்கி மறைந்து போவதற்காகவே,)

அங்கமாறு வேத நான்கு மாகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வ மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சாரங்க பாணி யல்லையே –(ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-15-)

பாலின் நீர்மை —நிறைந்த காலம் நான்குமாய் -என்று
நாலு யுகத்துக்கும் நாலு வர்ணமாக அருளிச் செய்தார் இறே ஒருவர் –

(பாலின் நீர்மை செம் பொன் நீர்மை* பாசியின் பசும் புறம்,*
போலும் நீர்மை பொற்பு உடைத்தடத்து* வண்டு விண்டு உலாம்,*
நீல நீர்மை என்று இவை* நிறைந்த காலம் நான்குமாய்,*
மாலின் நீர்மை வையகம்* மறைத்தது என்ன நீர்மையே?–ஸ்ரீ திருச்சந்த விருத்தம் -44-)

—————————————–

183
எழுந்து இருந்து பேசு -61
வகை யருளாய் -வந்தே-திருவாய்மொழி -3-2-4-
கண் வளர்ந்து அருளா நிற்க அருளிச் செய்ய ஒண்ணாது
எனது பயம் கெட எழுந்து இருந்து அருளிச் செய்ய வேணும்
எழுந்து இருக்கும் போதை சேஷ்டிதத்தாலும் -அருளிச் செய்யும் போதை ஸ்வரத்தாலும்
எனக்கு பயம் கெட வேணும்-என்கிறார் திரு மழிசைப் -பிரான்
சேரும் வகை அருள வேணும் -என்கிறார் நம் ஆழ்வார் –
அது செய்யும் இடத்து முகம் தோற்றாது  அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது
வந்து அவதரித்து உனது குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாதபடி வந்து
சேர்த்து அருள வேணும் என்கிறார் –

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –61-

எழுந்து இருந்து பேசு-
இதுக்கு ஹேதுவை -கண் வளர்ந்து அருளா நிற்க -அருளிச் செய்ய ஒண்ணாது
என் பயம் கெட எழுந்து இருந்து அருளிச் செய்ய வேணும் –

எழுந்து இருக்கும் போதை சேஷ்டிதத்தாலும் –
அருளிச் செய்யும் பொழுது ஸ்வரத்தாலும் –
எனக்கு பயம் கெட வேணும்

வாழி –
அப்படி அருளிச் செய்யாமையாலே -ஆயுஷ்மான் -என்னுமா போலே -ஒரு தீங்கு
இன்றிக்கே கண் வளர்ந்து அருளுகிற இவ்வழகு நித்யமாய் செல்ல வேணும் என்று மங்களா
சாசனம் பண்ணுகிறார் –

கேசனே —
கேசவ சப்தமாய்  கடைக் குறைத்தலாய் கிடக்கிறது -என்னுதல்
கேசத்தை உடையவன் -என்னுதல்
இரண்டுக்கும்
ஸ்நிக்த நீல குடில குந்தளன் -என்று அர்த்தம்

இத்தால் -கேசவா க்லேச நாஸ -என்கிறபடியே திருக் குழலைப் பேணி என்னுடைய
க்லேசத்தை தீர்த்து அருள வேணும் -என்கை

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-

தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து
உன்னை ஒழிந்த மற்றுள்ள இடத்திலும் வரக்கடவதான தாழ்ச்சியையும் தவிர்ந்து
யாதானும் பற்றி -திருவிருத்தம் -95–என்கிறபடியே நீ யன்றிக்கே ஒழிய அமையுமே நான் மேல் விழுகைக்கு-

நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி
வகுத்ததாய்-நிரதிசய போக்யமாய் இருக்கிற உன் திருவடிகளில் உண்டான கைங்கர்யத்தை -வாழ்ச்சி என்றாலே கைங்கர்யம் தானே –
இதுக்கு முன் புதியது உண்டு அறியாத கிட்டுவது ஒரு பிரகாரம் அருளிச் செய்ய வேண்டும் -புதியது -ஏக தேசத்திலும் –
இரண்டு இடத்திலும் ப்ராவண்யம் ஒத்து இருக்க தாழ்ச்சி என்றும் வாழ்ச்சி என்றும் சொல்லுகிறார்
சர்வம் பரவசம் துக்கம் -என்றும்-ஸ்வ வசம் ஸூகம் -அப்ராப்த விஷயத்தில் இது -அவனுக்கு வசம் ஸூகம் என்றபடி
சேவா ஸ்வ வ்ருத்தி-என்றும் அவற்றைச் சொல்லா நின்றது இறே
சாயா வா சத்வம் அநு கச்சேத்-என்று இத்தை விதியா நின்றது –
அவற்றைப் பற்ற இவ்வாழ்ச்ச்சிக்கு இட்டுப் பிறந்து வைத்து அத்தை இழந்து இருக்கிற நான் கிட்டுவது ஒரு பிரகாரம் அருளிச் செய்ய வேணும்
யான் சேரும் வகையருளாய்
வந்தே
அது தானும் முகம் தோற்றாதபடி நின்று அருள ஒண்ணாது
என் கண்ணுக்கு இலக்கு ஆம்படி
ராம கிருஷ்ணாத் யாவதாரங்கள் போலே எனக்காக ஒரு அவதாரத்தைப் பண்ணியே யாகிலும் வந்து அருள வேணும் –

———————————————————-

184-
எம்மாதி -69
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -திருவாய்மொழி -3-2-1-
எம்மாதி என்பான் என் என்னில் -ஈஸ்வரன் ஜகத் சிருஷ்டியை பண்ணுகிறது முமுஷு
ஸிச ருஷையாலே யாகையாலே -அந்த ஸ்ருஷ்டி பலித்தது அநந்ய பிரயோஜனர்
பக்கலிலே என்று எம்மாதி என்கிறார் –
எம் முகில் வண்ணனே -ஸ்ருஷ்டி சர்வ சாதாரணம் ஆனாலும் இவர் தமக்காக என்று இருக்கிறார்
எங்கும் ஒக்க வர்ஷித்தாலும் -அது கொண்டு விளைத்துக் கொண்டவன் -எனக்காக -என்று
இருக்குமா போலே -எல்லாருக்கும் ஒக்க அவன் செய்தாலும் -கிருதஞ்ஞன் எனக்காக என்று
இருக்கும் இறே –
ஸ்ருஷ்டி அவதாராதிகளைப்  போலே -ஸ்வார்தமாக என்று இறே ஞானாதிகர் அநு சந்திப்பது –
ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி

காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கிலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்
பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே —69-

எம் ஆதி பால் பேணி –
எங்களுக்கு காரண பூதனானவன் பக்கலிலே ஆதரத்தைப் பண்ணி –
ஜகத் காரண வஸ்துவாய் இருக்கிறவனை

எம்மாதி -என்பான் என் என்னில் –
ஈஸ்வரன் ஜகத் ஸ்ர்ஷ்டியைப் பண்ணுகிறது முமுஷூ சிஸ்ர்ஷையால் யாகையாலே
அந்த ஸ்ர்ஷ்டி பலித்தது அநந்ய பிரயோஜனர் பக்கலிலே என்று எம்மாதி -என்று
விசேஷிக்கிறார்

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-

முந்நீர்
1–ஆற்று நீர் -ஊற்று நீர் வர்ஜ ஜலம்-என்று சொல்லுகிறவற்றை-அப ஏவ ச சார்ஜ தௌ –மனு ஸ்ம்ருதி -1-8-என்று
2–முற்பட ஜல சிருஷ்டியைப் பண்ணி பின்பிறே அண்ட சிருஷ்டி தான் பண்ணிற்று
மேலைத் தண் மதி என்றால் கீழை கதிரவன் வாங்கிக் கொண்டு அர்த்தம் போலே முந்நீர் பின் ஞாலம் தருவித்துக் கொள்ள வேண்டும் –
ஞாலம் படைத்த -திருவாய் மொழி -9-5-9–இந்திர ஞாலங்கள் காட்டி என்பதற்கு ஏற்ப –
1-விசித்தரமாக ஜகத் சிருஷ்டியைப் பண்ணின -தய நீய தசையைக் கண்டு –
2-இவை கரண களேபரங்களைப் பெற்று கரை மரம் சேர வேணும் என்று தயா பரதந்த்ரனாய் சிருஷ்டித்த படி
எம் முகில் வண்ணனே
அவன் சர்வ விஷயமாக உபகரிக்கச் செய்தே -மதர்த்தம் -என்று இருக்கிறார்
1-இவர் ஒருவர் சாதனானுஷ்டானம் பண்ணி வர்ஷிப்பிக்க – நாடு வாழ்ந்து போமா போலே -பகீரதன் -கங்கை –
2-அவன் எனக்காக ஜகத் சிருஷ்டியைப் பண்ணினான் நாடு வாழ்ந்து போயிற்று என்று இருக்கிறார் –
முகில் வண்ணனே
1-சர்வ விஷயமாக உபகரித்த படியும்
2-பிரத்யுபகாரம் கொள் இராமையும் பற்ற முகில் வண்ணனே என்கிறார் –

—————————————————-

185
நடந்த கால்கள் நொந்தவோ -61
தாளால் உலகம் அளந்த அசைவே கொல் -நான் முகன் திருவந்தாதி -35
அடியார் அல்லல் தவிர்ந்த அசைவோ -திருவாய் மொழி -8-3-5-
அர்ச்சா சமாதியிலே -அர்ச்சக பராதீன ஸ்வ வ்யாபாரங்களை உடையவனாய்
குளிர நோக்குதல் –வினவுதல் -திரு மேனி அசைதல் -எழுந்து உலாவுதல்
இன்றிக்கே இருக்கை -ஆழ்வார்கள் வயிறு பிடிக்கிறார்கள் -இவனுடைய அர்ச்சா சமாதி
என்று தெளியாதே  கலங்கி -பகவானுக்கு என் வந்ததோ -பலவாறு அபேஷிக்கிறார்கள் –
திருக்குடைந்தை -திருவல்லிக்கேணி -திருக்கோளூர் -திருப்புளிங்குடி -எழுந்து அருளிய
பெருமாளை இங்கனம் வேண்டியபடி –

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –61-

நடந்த கால்கள் நொந்தவோ
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்கிறபடியே
ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு திரு உலகு அளந்த இது பொறாமே நொந்து
கண் வளர்ந்து அருளுகிறதோ –

சக்கரவத்தி திருமகனாய்  காட்டிலும் மலையிலும் ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு
திரிந்த வது பொறாமே நொந்து கண் வளர்ந்து அருளுகிறதோ –

எவ்வாறு நடந்தனை எம் இராமாவோ -என்று -சௌகுமார்யத்தை அறியுமவர்கள்
கூப்பிடும்படியாய் இ றே இருப்பது –
நடந்து பொறாமே கண் வளர்ந்து அருளுகிற தாகில் -நான் திருவடிகளைப் பிடிக்க –

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-

பெரிய அலைகள் வந்து அடிக்கிற ஸ்லாக்யமான மயிலாப்பூருக்கு அடுத்த ஸ்லாக்யமான
திருவல்லிக்கேணியில் எழுந்து அருளி இருக்கிறவன்
ஐந்து சிரஸ்ஸூக்களையும் முகங்களையுமுடைய திரு வனந்த ஆழ்வான்
ஆகிற படுக்கை மேல் சலியாமல் கண் வளர்ந்து அருளுகிறான்
ஒரு வார்த்தையும் சொல்லான்
இது திருவடிகளினால் லோகங்களை அளந்த ஆயாசத்தினாலேயாய் இருக்கலாமோ –

தாளால் உலகம் அளந்த அசைவே  கொல்-
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்று
பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும் திருவடிகளைக் கொண்டு-
காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-
(அசைவு -தளர்த்தி )

இல்லாததை உண்டாக்கும் சங்கல்பம் போராதோ –
உண்டானதை உஜ்ஜீவிப்பிக்க-

வாளா கிடந்தருளும்  வாய் திறவான்-
ஏக ரூபமாய் கிடப்பதும் செய்து
வார்த்தையும் பேசுகிறிலன்-

(வாளா -வெறுமனே
ஓரு படியாய் -ஏக ரூபமாய் -என்றபடி )

(கள்வப் பணி மொழி கேட்க பார்க்கிறார்
மாஸூ ச
தாதாமி ஏதத் விரதம்
அஹம் ஸ்மாரமி நயாமி பரமாம் கதி
போன்ற இடங்கள் உண்டே
விரோதி நிரசனம் -தாதாமி புத்தி யோகம் -அஹம் வோ பாந்தவ ஜாத -இஷ்ட பிராப்தி
க்ஷமாமி என்றும் வாய் திறந்ததும் உண்டே
சீறியாவது அருளலாமே
வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு
அஸ்துதே -சொன்ன இடமும் உண்டே )

கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசைவோ பணியாயே–8-3-5-

நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் –
அவிகாரியாய் இருக்கிற நீ -ஒருபடியே கண் வளர்ந்து அருளி-
அதனாலே இனியன் ஆகைக்கு காரணம் என் –
இவன் முகத்தில் தெளிவு உண்டாய் இருந்தது அதுக்கடி முன்பே ஸ்ரமம் உண்டாகை அன்றோ -என்று இருக்கிறார்-
சிரமம் உடையாருக்கு உறங்க உறங்க முகம் தெளிந்து வரக் காண்கையாலே-

அடியார் அல்லல் தவிர்த்த வசைவோ
திருவடிகளில் சரணம் புகுந்த இந்த்ரன் முதலானவர்கட்காக–இராவணாதிகளை அழியச் செய்து
அவர்கள் துக்கங்களை கெடுத்த இளைப்போ –

அன்றேல் –
அன்றாயின்

இப்படி தான் நீண்டு தாவிய வசைவோ-
நீண்டு இப்படிதான் தாவிய அசைவோ –
அன்றே பிறந்து அன்றே வளர்ந்து மிருதுவான திருவடிகளைக் காடும் ஓடையும்
அளந்து கொள்ளுகையாலே திருவடிகள் நொந்ததோ

 தோள் நொந்தோ-திருவடிகள் நொந்தோ-அருளிச் செய்யாய் -என்றது –
தோள் நொந்தது என்னில் தோளைப் பிடிக்கவும்–தாள் நொந்தது என்னில் தாளைப் பிடிக்கவும்
அருளிச் செய்ய வேண்டும் -என்றபடி

——————————————————

186
எங்கள் செங்கண் மாலை -75
உள்ளமாக் கொள்ளோமே -பெரிய திருமொழி -11-7-6-
மற்று உள்ள ஆழ்வார்களைக் கூட்டிக் கொள்கிறார்கள் இப்படி –

ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம்
நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே –75-

எங்கள் செங்கண் மாலை –
சரணாகத வத்ஸலனான புண்டரீகாஷனை

எங்கள்-என்று மற்ற ஆழ்வார்களையும் கூட்டிக் கொள்கிறார் என்னுதல் –
தம்மையே பற்றி வர்த்திக்கும் சரணாகத சமூஹத்தை கூட்டிக் கொள்கிறார் -என்னுதல்

செங்கண் மால் என்றது -ஜிதந்தே புண்டரீகாஷ-என்கிறபடியே
ருசியே தொடங்கி பரமபக்தி பர்யந்தமாக -அத்தலையிலே விசேஷ கடாஷத்தாலே
சித்தி என்று தோற்றுகைக்காக

கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே  –11-7-6-

உள்ளாதார் உள்ளத்தை –
நினைவே அமையும் –
செயல் மிகை –

உள்ளமாக் கொள்ளோமே 
வேறேயும் நினைப்பன யுண்டு இறே அவர்கள்
தான் நினைக்கும் அவை ஒழிய
நினைக்குமவை ஹிருதயம் அன்று -என்கிறார் –

ரத்ன பரிஷகன் கையிலே புகுந்து
இவன் விலை இட்டால் இறே விலை பெறுவது –
அவ்வளவும் முடி கொண்டு திரியும் அத்தனை –

————————————————————-

187
வேங்கடம் அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ-81
கண்ணன் கழலிணை -திருவாய் மொழி -10-5-1-
இப்படி இருவரும் பரோபதேசத்தை தலைக் கட்டுகிறார்கள் –

கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ –81-

வ்யூஹ விபவங்கள் -தேச கல -விபகர்ஷத்தாலே நிலம் அன்று என்ன வேண்டாதபடி
பிற்பாடர் இழவாமைக்கு –
திருமலையிலே வந்து நின்று அருளினான் –
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிகப் பாரும் கோள் என்று உபதேசத்தை
தலைக்கட்டுகிறார் –

வேங்கடம் அடைந்து மால பாதமே யடைந்து –
பிரயோஜனாந்த பரருக்கு முகம் கொடுத்த சீலமும் –
அவதாரத்தில் தாழ்ந்தாருக்கு முகம் கொடுத்த சீலமும் –
பிற்பாடானவர்கள் இழவாமைக்கு திரு மலையில் ஆஸ்ரயித்து நிற்கிற வ்யாமுகன்
திருவடிகளை அநந்ய ப்ரயோஜனராய் ஆஸ்ரயித்து நாளும் உய்மினோ

நாளும் -அடைந்து உய்மின் என்றுமாம் –
கைங்கர்யம் என்றும் உஜ்ஜீவனம் என்றும் பர்யாயம்
சுடரடி தொழுது எழு -என்னக் கடவது இறே

ஆஸ்ரிதருக்கு திருவேங்கடமுடையான் திருவடிகளே ஆஸ்ரயணீய  ஸ்தலம்

திருவேங்கடமுடையானுக்கு ஆஸ்ரயணீய  ஸ்தலம் திருமலை –

கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-

பரோபதேசத்திலே ஒருப்பட்டு
அவன் தம்மை பரம பதத்துக்கு கொடு போவதாக விரைகிறபடியாலும்
கேட்கிற இவர்கள் அறிவுக்கு புலன் ஆக வேண்டும் என்னும் அதனாலும்-பாசுரப் பரப்பு அறும்படி சுருங்கக் கொண்டு
அந்த பக்திக்கு – -பற்றுக் கோடான -எண்ணும் திரு நாமம்-திருப் பெயரைச் சொல்லி –
இதில் இழிவார்க்கு நினைக்க தகும் மந்த்ரம் -நாரணம் –இன்னது என்றும் –
அதனுடைய பொருள் நினைவே -3/4-பாசுரங்களால் -மோஷத்துக்கு சாதனம் என்றும்-
தாள்வாய் மலரிட்டு நாள்வாய் நாடீர் -அவ்வழியாலே பக்தியைப் பண்ணுங்கோள் என்றும் –
முக்கரணங்களாலும் அவனைப் பற்றுங்கோள் என்றும் –5-
இப்படிப் பற்றுவார்க்கு அவன் -மேயான் வேங்கடம் – சுலபன் என்றும் –6-
மாதவன் -திருமகள் கேள்வன் ஆகையாலே எளிதில் ஆராதிக்கத் தக்கவன் -என்றும் –7-
மாதவன் என்று என்று -இவனை இடுவித்து பற்றச் செய்து இதனையே
அவன் திரு உள்ளத்தில் படுத்தி குவால் ஆக்குவாரும் அருகே உண்டு -என்றும்-8-
பேர் ஆர் ஓதுவார் -மனம் உடையீர் -பற்றும் இடத்தில் அதிகாரிகளுக்கு சொன்ன முறைகள் வேண்டா-
ருசி உடையார் எல்லாரும் இதற்கு அதிகாரிகள் என்றும்-9-
சுனை நன் மலரிட்டு -மலர் முதலான சாதனங்களைக் கொண்டு-அடையுங்கோள் என்றும்-10-
இதில் இழிய விரோதிகள் -அமரா வினைகள் -வினை வல் இருள் -தன்னடையே போம் -என்றும்-
இப்புடைகளிலே சொல்லி-
நாம் இன்னமும் சில நாள்கள் இங்கே இருக்கிறோம் அன்றிக்கே
போக்கு அணித்தான பின்பு எல்லோரும் இதனைக் கொள்ளுங்கோள் -என்று-உபதேசித்து-
அதனோடே தொடங்கின பரோபதேசத்தை தலைக் கட்டுகிறார்-

வீடு முன் முற்றவும் -திருவாய் மொழியில்
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -என்று
வணங்குதற்கு பற்றுக் கோடாகச் சொல்லப் பட்ட மந்த்ரத்தை-
எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -என்று காட்டுகிறார் இங்கு-

பக்தியை உடையராய்க் கொண்டு-அவனை நினைப்பார்க்கு-
பற்றுக் கோடானா-திருமந்தரம் -இன்னது –என்கிறார்

கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் –என்று மேலே சொன்னதனையே
இங்கே கண்ணன் கழல் இணை -என்கிறார் –திரியவும் ஒருக்கால் சொல்கிறார்
இவர்கள் கேட்க வேண்டுவதனை சொல்லுகைக்கு உறுப்பாக –
கிருஷ்ணன் திருவடிகளை கிட்ட வேண்டும் என்று இருப்பீர் –
பரம பதத்தில் சென்று காண வேண்டும்படி இருக்கை அன்றிக்கே-
எல்லா வகையாலும் சுலபனானவன் உடைய திருவடிகள் -என்பார் -கண்ணன் கழலிணை -என்கிறார் –
அடியார்கட்கு தூது போதல்-தேர் ஒட்டுதல் செய்யும் திருவடிகள் —
-பிரிந்து கூடினாரைப் போலே இருக்கிறது காணும்-ஆதலின் -நண்ணும் -என்கிறார் -வந்தான் என்பது போலே –
இத் யுக்த பருஷம் வாக்யம் ராவணம் ராவணா நுஜ-ஆஜகாம முஹூர்த்தேன யத்ர ராம ஸ லஷ்மண-யுத்தம் -17-1-
ஜகாம என்னாமல் ஆஜகாம -நண்ணும் -ஸூ ஸ்தானம் போலே -இக்கரை ஏறி இளைத்து இருந்தேன் -அக்கரையில் இருந்து அநர்த்தப் படாமல் –
கரங்கள் மீச்சுமந்து செல்லும் கதிர்மணி முடியன் கல்லும்
மரங்களும் உருக நோக்கும் காதலன் கருணை வள்ளல்
இரங்கினன்-நோக்குத் தோறும் இரு நிலத்து இறைஞ்சுகின்றான்
வரங்களின் வாரி யன்ன தாளிணை வந்து வீழ்ந்தான் –கம்பர்
மனம் உடையீர் -என்கிறார் -நிதி உடையீர் -என்னுமாறு போன்று-இதனையே குவாலாக நினைத்து இருத்தலின் –
இதனால் -இதற்கு அதிகாரம் தேட வேண்டா-ருசி உடையார் எல்லாரும் அதிகாரிகள் -என்பது போதரும் –
சுவர்க்கம் அடைவதற்கு இன்னார் இனியார் என்ற வரை யறையும்-கழுவாயும் -பிராயச் சித்தம் -வேண்டா நின்றது –
மீண்டு வருதல் இல்லாத தன்மையை உடைய மோஷத்திற்கு-அது வேண்டாது ஒழிகிறது-
பெரும் பேற்றுக்குத் தக்கதான அதிகாரம் இவனால் சம்பாதிக்க முடியாமையாலே-
தோல் புரையே போமதுக்கு பழுதிலா யோக்யதை வேணும்-
மனம் உடையீர் என்கிற ச்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு –
நானும் நமரும் -என்னும்படி -சர்வரும் அதிகாரிகள் –-சூர்ணிகை -18-

எண்ணும் திருநாமம் –
நினைக்கப் படும் திருப்பெயர் –சுலபமான அநுஸந்திக்கும் திரு நாமம்
அன்றிக்கே –பக்திமான்களைச் சொல்லுகையாலே அது தான் -அது அது –என்னும்படியாய் ரசமாக இருக்கையாலே சொல்லுதல் -என்னுதல் –
தேனும் பாலும் — நானும் சொன்னேன் நமரும் உரைமின் –
எண்ணும்- திருமந்தரம் -என்னாமல்-நாமம் -என்கிறது-இதற்கு ஒரு அதிகாரி நியதி -அங்க நியதி -வேண்டா-
குழந்தை தாயின் பெயரைச் சொல்லுமாறு போன்று அமையும் -என்கைக்காகா –

அது தான் எது -என்னில் –
நாரணம்
இது தான் இறைவன் திருப் பெயர் ஆகையால் -ஸ்வாமி வாசகம் -–அம்மே -என்பாரைப் போலே இருக்கிறதாயிற்று-
இதுவும் இன்னம் எதுவும் வேண்டுமோ என்றால்-
இத்துணையே அமையும் -என்பார் -நாரணமே -எனத்-தேற்றகாரம் கொடுத்து ஓதுகிறார் –

கனத்த பேற்றுக்கு இவ்வளவு போருமோ -என்னில்
திண்ணம் –
நிச்சயம்
சத்யம் சத்யம்மீண்டும் சத்யம் கையைமேலே உயர்த்தி சொல்லுகிறேன் –
வேதம் ஆகிற சாஸ்திரத்தைக் காட்டிலும் மேலான பிரமாணம் கிடையாது –
கேசவனைக் காட்டிலும் மேலான தெய்வம் கிடையாது-என்னுமாறு போலே -திண்ணம் -என்கிறார் –
நாரணமே -என்ற ஏகாரத்தாலே
பிரணவத்தை ஒழியவும்-நமஸை ஒழியவும்-நான்காம் வேற்றுமையை ஒழியவும்-இத்துணையே நிறைந்தது -என்கை –
நாரணம் -என்று இல்லாத மகரத்தையும் கூட்டி-உள்ளவற்றைக் குறைத்துச் சொல்லுகையாலே-
அளத்தில் பட்டன எல்லாம் உப்பு ஆமாறு போன்று-இதனோடு கூடிய வெல்லாம் உத்தேச்யம் -என்றும்-
குறைந்தாலும் -அங்கம் தப்பிற்று -ஸ்வரம் தப்பிற்று என்று-ப்ரஹ்ம ரஷஸ்ஸாகப் போக வேண்டுமவற்றை-
காட்டிலும் இதற்கு உண்டான எல்லா பெருமையும்-சொல்லிற்று ஆயிற்று-
பூமியைப் போலே பொறுமை -தாரை சகாரம் விட்டு சொன்னால் போலே -ஷமாவான் ச காராம் இல்லாமல் சொன்னால் போலே

————————————————————–

188-
என்னாவி தான் இன்ப வீடு பெற்றதே -120
வீடு பெற்ற குருகூர் சடகோபன்-திரு வாய் மொழி -10-10-11
யாவதாத்மபாவி விச்சேதம் இல்லாத நிரதிசய ஆனந்தமான கைங்கர்ய ரூப  மோஷத்தை
இப்படி அருளி இருவரும் தங்கள் பிரபந்தங்களைத் தலைக் கட்டின படி –

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே -120-

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி-
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து என்கிறபடியே விச்சேதியாதே
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ஆத்மகமான பல வகைப் பட ஜன்மங்களில் நின்றும் –
அஞ்ஞனாய் -நித்ய சம்சாரியாய் போந்த என்னை மாற்ற நினைத்து –

இயக்க யறாமை யாவது -ஒரு தேகத்துக்கு ஆரம்பகமான கர்மத்தை அனுபவிக்க இழிந்து –
அநேக தேக ஆரம்பகமான கர்மங்களைப் பண்ணுகையாலே
தேக பரம்பரைக்கு விச்சேதம் இன்றி செல்லுகை –

இயக்கு -நடையாட்டம் –

இயக்கல் -என்று வல் ஒற்றாய் கிடக்கிறது –

மாற்ற நினைப்பதை –மாற்றி -என்பான் என் என்னில் –
உயிர் முதலாய் முற்றுமாய் -என்றாப் போலே –

இன்று வந்துதுயக் கொண் மேக வண்ணன் நண்ணி –
விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து
தன பக்கலிலே பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை தரும்
காளமேக நிபச்யாமானவன் –
எனக்கு நினைவு இன்றிக்கே இருக்க
இன்று நிரஹேதுக கிருபையினால்
நான் இருந்த இடத்தே வந்து கிட்டி –

நண்ணுதல் -அணைதல்

நச்சு நாகணைக் கிடந்தான் -என்றும் –

பொன்னி சூழ் அரங்கமேயபூவை வண்ணா -என்றும் –
சொல்லிப் போந்தவர் ஆகையாலே -இங்கும் உய்யக் கொள் மேக வண்ணன் என்று
பெரிய பெருமாள் திருமேனியைத் தமக்கு உஜ்ஜீவன ஹேது-என்கிறார்-

என்னிலாய தன்னுளே –
அஹம் புத்தி சப்தங்கள் தன்னளவிலே பர்வசிக்கும்படி –
தனக்கு  பிரகாரமான என்னுடைய ஹ்ர்த்யத்திலே –
தத்வமஸி -என்று -உபதேசித்து -அஹம் ப்ரஹ்மாசி -என்று அனுசந்தித்துப் போந்த
அர்த்தம் இ றே இவர் இங்கு அருளிச் செய்கிறார் –

இந்த சரீர ஆத்ம சம்பந்தம் இங்கே சொல்லுகிறது -தன்  பேறாக உபகரித்த விதுக்குக் ஹேதுவாக –

மயக்கினான் தன் மன்னு சோதி –
அபிமதமாய் -அநுரூபமாய் -ஜ்யோதிர் மயமான –
திவ்ய மங்கள விக்ரஹத்தை பிரிக்க ஒண்ணாதபடி கலந்தான் –

மயக்கம் -செறிவு – தன்னை ஒழிய எனக்கு ஒரு ஷண காலமும் செல்லாதபடி பண்ணினான் என்கை –

ஆதலால் –
இப்படி தான் மேல் விழுந்து இவ்வளவும் புகுர நிறுத்துகையாலே

என்னாவி தான் –
தனக்கு அநந்ய சேஷமாய் -ஸ்ரீ கௌஸ்துபம் போலே -அபிமதமுமான என் ஆத்மாவானது –

இயக்கெலா மறுத்து –
அந்யோந்ய கார்ய காரண பவத்தாலே ஒழுக்கறாத -அவித்யா கர்ம வாசன ருசி ப்ரகர்தி
சம்பந்தங்களை யறுத்து –

இயக்கறாத பல் பிறப்பில் -என்று காரணமான தேக சம்பந்தகளை சொல்லிற்றாய் –
தத் கார்யமான அஞ்ஞான கர்மங்கள் என்ன –
தத் ஆஸ்ரயமான வாசனா ருசிகள் என்ன -இவற்றையும் கூட்டி -எலாம் –அறுத்து என்கிறார்

அறாத இன்ப வீடு பெற்றதே –
யாவதாத்மபாவி விச்சேதம் இல்லாத –நிரதிசய ஆனந்தமான
கைங்கர்ய ரூப மோஷத்தைப் -பெற்றது

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

அவா அறச் சூழ் அரியை –
விரும்பியவற்றை எல்லாம் அருளும் சர்வேஸ்வரனை –தம்முடைய காதல் கெட வந்து கலந்த படியாலே-
ஒரு அடைவு கொடாதே அது தன்னையே சொல்கிறார் –
அவா அறச் சூழுகையாவது-
தன்னைக் காண வேண்டும் என்னும் விடாய் உள்ள-அடியவர்களின் விடாயை தீர கலக்கை –

அயனை அரனை அலற்றி-
தன்னுடைய ஏவல் ஆள்களான பிரமன் சிவனுக்கும் அந்தராத்மாவானவனை-
அயனை அரனை -என்கிற சாமாநாதி கரண்யத்தால்-
பிரமன் சிவன் போல்வார் ஈஸ்வரர் ஆவார்களோ என்னும் மக்கள் கொள்ளும் ஐயத்தை அறுக்கிறார்-
அவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் சர்வேஸ்வரன் அதீனமாய்-
இருப்பதாலே அவர்களுக்கு பாரதந்த்ர்யமே ஸ்வரூபம் –தலைவர்களாய் இருக்கும் தன்மை அவர்கள் செயல்கள் காரணமாக வந்த இத்தனை –
இச் சாமாநாதி கரண்யத்தை அறியும் தன்மை இன்றியே எளியராய் இருப்பார்-அறியத் தகும் முறையிலே கூறப்படும் வகைகளும் உண்டு-
அவை
அயனை அரனை அவா அற்று-அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -ஒரு வகை –
அயனை அரனை அவா அறச்-சூழ் அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் –மற்று ஒரு வகை-

அலற்றி அவா அற்று வீடு பெற்று
கூப்பிட்டு அவனைப் பெற்று எல்லா தடைகளும் நீங்கியவர்-ஆகையாலே துக்கம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்த-

————————————————-

198
அங்கமாறும் வேதம் நான்கும் -15
அமரவோர் அங்கமாறும் வேதமோர் நான்கும் -திருமாலை -43–

அங்கமாறு வேத நான்கு மாகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வா மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சாரங்க பாணி யல்லையே –15-

அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று –
சீஷாத் யங்கங்கள் யாறும் –

சீஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம்

அஷரங்களை உச்சரிக்க வேண்டியதை சீஷை சொல்லும்
பிரகிருதி பிரத்யாயங்களை பாகுபடுத்தி வியாகரணம் சொல்லும்
அர்த்த விவேகம் நிருக்தம் சொல்லும்
காலங்களை ஜ்யோதிஷமும்
வைதிக கர்மங்களை அனுஷ்டிக்க வேண்டிய முறைகளை கல்பமும் சொல்லும்

அங்கியான வேதங்கள் நாலும் -ஆகிற இவற்றுக்கு பிரவர்தகனாய் நின்று
அவற்றுளே தங்குகின்ற தன்மையாய் –
சாங்கமான வேதங்களினுள்ளே ப்ரமேயமாய் வர்த்திக்கிற ஸ்வபாவங்களை உடையவனே –

ஆகி நின்று அவற்றுளே –
நிர்தோஷ பிரமாணமாய் நின்றவற்றுள் என்னவுமாம்

சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம்
ஸோஅஸ்னுதே ஸர்வான் காமாந்சஹ ப்ரஹ்மணோ விபஸ்ஸிதேதி
(தைத்ரியம் ஆனந்த வல்லி -1-2)

வேத ப்ரதிபாத்யமான ஸ்வபாவங்கள் ஆவன -சத்யம் ஞானம் -இத்யாதிகளில் சொன்ன சர்வாதிகத்வம் என்ன –

யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித் யஸ்ய ஜ்ஞாநமயம் தப:
(முண்டக உபநிஷத் -1-1-10)

யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -இத்யாதிகளில் சொன்ன கல்யாண குணங்கள் என்ன –

யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ருயதே அபிவா
அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித
(தைத்ரியம் நாராயண ஸூக்தம் -11)

வ்யாப்ய நாராயணஸ்  ஸ்திதி -இத்யாதிகளில் சொன்ன உபய விபூதி நாதத்வம் என்ன –

மகாரஜதம்வாஸ -இத்யாதிகளில் சொன்ன விக்ரஹ யோகம் என்ன –
யாஷோந்தராதித்ய ஹிரண்மய புருஷ -இத்யாதிகளில் சொன்ன அவதாரங்கள் என்ன –

தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய
திவீவ சக்ஷூராததம்
தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாம்ஸஸ் ஸமிந்ததே
விஷ்ணோர்யத் பரமம் பதம் (ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் )

தத் விஷ்ணோ பரமம் பதம் -இத்யாதிகளில் சொன்ன நித்ய விபூதி யோகம் என்ன –இவை

அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே

அமர ஓர் அங்கம் ஆறும்-
அத்விதீயமான ஷட் அங்கங்களையும் அழகிதாக பாடங்களையும் தரித்து
அர்த்தத்தையும் தரிக்குமவர்கள் ஆகை –

அங்கங்களுக்கு அத்விதீயம் ஆவது
ஓர் அங்கத்தில் ஜ்ஞானம் குறைவு அற உண்டானால்
லோகத்தார் அவனை சர்வஞ்ஞன் என்று சொல்லும்படி இருக்கை –
சீஷாயாம் வர்ண சிஷா -இத்யாதி –

வேதம் ஓர் நான்கும் –
வேதங்களுக்கு அத்விதீயம் அபௌருஷேயத்வம் –
பௌருஷேய சப்தங்களில் காட்டில் வ்யாவர்த்தி யாதல் –
தனித் தனியே விநியோக பேதத்தால் வந்த வ்யாவர்த்தி யாதல் –

ஓதித் –
அங்கங்களோடு
வேதங்களோடு
வாசி யற
ஆச்சார்ய உச்சாரண அனுச்சாரண முகத்தாலே கிரஹிக்கை –
இப்படிகளிலாலே -எம்பெருமானை உள்ளபடி அறிபவர்கள் ஆகை –

———————————————–

199-
மற்றவன் -25
மாறாளன்-திருவாய்மொழி -4-8-1

வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ யிது என்ன பொய் யிரந்த மண் வயிற்றுளே
கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே –25-

மற்றவன் –
சத்ருவானவன் –
சம்பந்தம் ஒத்து இருக்க –மற்றவன் -என்கிறது -ஆஸ்ரித சத்ருவே தனக்கு சத்ரு என்னும் நினைவாலே

ஏறு ஆளும் இறையோனும், திசை முகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குல மா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே.–4-8-1-

மாறாளன் –
‘மிடுக்கன்’ என்னுதல்; ‘பகைவன்’ என்னுதல். துரியோதனன் ‘உண்ண வேண்டும்’ என்ன,
‘பகைவனுடைய அன்னம் உண்ணத்தக்கது அன்று; பகைவர்களையும் உண்பிக்கக்கூடாது,’ என்கிறபடியே,
தன் அடியார்களுடைய பகைவர்களைத் தனக்குப் பகைவர்களாகக் கொண்டு வழக்குப் பேசுமவன் அன்றோ?

—————————————————

200
படைத்து அடைத்து அதில் கிடந்தது -28
படைத்து அடைத்து அதில் கிடந்தது –92

படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே –28-

படைத்து பார் இடந்து –
பௌவ நீர் -படைத்து பார் இடந்து –என்று அந்வயமாகக் கடவது –
அபயேவ ஸ சர்வஜா தெவ் -என்கிறபடியே -அண்ட காரணமான -ஏகார்ணவத்தை
சங்கல்ப லேசத்தால் சிருஷ்டித்து -ஜகத் காரணமான அண்டத்தையும் -அண்டாதிபதியான ப்ரஹ்மாவையும்
சிருஷ்டித்து -ப்ரஹ்மாவாலே ஸ்ரஷ்டமான பிரளய ஆர்ணவத்திலே அந்தர்பூதையான
பூமியை -ஸூரி போக்யமான திவ்ய விக்ரஹத்தை வராஹ சஜாதீயமாக்கி அண்ட புத்தியிலே
புக்கு இடந்து எடுத்து -இது சங்கல்ப்பத்தாலே செய்ய முடியாதது ஓன்று அன்றே –
சம்சார பிரளய ஆபத்தில் நின்றும் எடுப்பவன் இவனே -என்று ஆஸ்ரிதர் விஸ்வசிக்கைகாக இறே

அளந்து –
அதுக்கு மேல் -மகாபலியாலே அபஹ்ர்தமான பூமியை -ஸ்ரீ வாமனனாய் எல்லை நடந்து மீட்டுக் கொண்டு –
இதுவும் தன்னுடைமை பெறுகைக்கு தானே அர்த்தியாய் வருமவன் என்று ஆஸ்ரிதர்
விஸ்வசிக்கைகாக

அது உண்டு உமிழ்ந்து –
நைமித்திக பிரளயம் வர வட தள சாயியாய் -தன்னுடைய சிறிய வயிற்றில் த்ரிலோகத்தையும்
வைத்து ரஷித்து -உள்ளே இருந்து நோவு படாமல் -அவற்றை உமிழ்ந்து –

இதுவும் சங்கல்பத்தால் -அப்படி செய்ததும் சர்வ சக்தி என்றும் -உரு வழிந்த பதார்த்தங்களை
உண்டாக்குமவன் என்றும் –ஆஸ்ரிதர் விஸ்வசிக்கைகாக -பௌவ நீர் படைத்து அடைத்து –
என்று இங்கேயும் அந்வயிக்கக் கடவது –

அண்ட காரணமான ஏகார்ணவத்தை சங்கல்ப லேசத்தால் ஸ்ர்ஷ்டித்த நீ அண்ட அந்தர்வர்த்திகளான
சமுத்ரங்களில் ஒரு சமுத்ரத்தை வருணனை சரண் புக்கு படை திரட்டியும் அடைத்து -இதுவும்
ப்ரணியி நி யுனுடைய விச்லேஷத்தில் தேவரீர் உடைய ஆற்றாமை பிரகாசிப்பித்த இத்தனை இறே

முன் அதில் கிடந்த
ப்ரஹ்மாதிகள் ஆர்த்தரான தசையிலே தூரஸ்தராக ஒண்ணாது என்றும்
அபிமுகீ கரித்தாருக்கு அவதரித்து சுபாஸ்ர்யமம் ஆகைக்கும் திருப் பாற் கடலில்
கண் வளர்ந்து அருளி -ஜ்யோதீம் ஷி விஷ்ணு -என்கிறபடி சர்வருக்கும் சந்நிஹிதரான தேவரீர்
இப்படி செய்து அருளிற்று –ஆஸ்ரித ரஷணத்தில் சதோத்உக்தர் என்று தோற்றுகைக்காக இறே –

கடைந்த பெற்றியோய் –
துர்வாச சாபத்தால் தேவர்கள் இழந்த பதார்த்தங்கள் அடங்க கடலிலே உண்டாக்கிக் கொடுக்கைகாக
அக்கடலைக் கடைந்த மஹா பிரபாவத்தை உடையவனே –பெற்றி -ஸ்வபாவம் –
இதுவும் ஆஸ்ரிதர் இழவுகளை தானே வ்யாபரித்து தீர்க்கும் என்று தோற்றுகைகாக –

விடைக்குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேற் கண் மாதரார்
கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி யாயா வேலை நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின் தனக்கு
அடைக்கலம் புகுந்த என்னை யஞ்சல் என்ன வேண்டுமே –92-

முன் வேலை நீர் படைத்தது –
அப ஏவஸஸர்ஜா தௌ -என்கிறபடியே -ஏகார்ணவ ஸ்ர்ஷ்டியைப் பண்ணி

வேலை நீர் -என்றது எல்லையான கடல் -என்னுதல்
திரைக் கிளர்தியை உடைய கடல் -என்னுதல்

வேலை -என்று எல்லையும் -திரையும் –

நீர் -என்று -கடல் –

அதில் கிடந்து –
அதிலே கிடந்து –

ஸ்ரஷ்டமான ஜகத்திலே சேதனருக்கு ஆஸ்ரயண ருசி பிறந்தவன்று சரண்யரான நாம்
தூரஸ்தர் ஆக ஒண்ணாது என்று ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளி

கடைந்து –
அக்கிடை பலித்து தேவர்கள் ஐஸ்வர்யத்தை இழக்க
சரணம் த்வாம் அநு ப்ராப்தாஸ் சமஸ்தா தேவதா கணா -என்கிறபடி சரணம் புக
அவர்கள் இழந்தவற்றை –கடலைக் கடைந்து -அக்கடலிலே உண்டாக்கிக் கொடுத்தவன் -என்கை

அடைத்து –
அந்த தேவதைகளை குடி இருப்பு அழியும்படி அதிக்ரமத்திலே நடந்த ராவணாதி
கண்டக நிரசன அர்த்தமாக -தசரதாத் மஜனாய் வந்து அவதரித்து லவணார்ணவத்தை யடைத்து –

————-

201-
ஏழை நெஞ்சமே-115
ஏழை நெஞ்சே -பெரிய திருமொழி -8-9-7-

அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-

ஏழை நெஞ்சமே –
பகவத் விஷயத்தில் கை வைப்பதற்கு முன்பு சோகிக்கவும் அறியாதே –
ஆனை கழுத்திலே இருந்தால் போல் இருக்கிற அறிவுகேடு போலே காண்
நம் கார்யத்துக்கு அவன் கடவனான பின்பு இன்று சோகிக்கிற அறிவு கேடும் -என்கை –

ஏழையர் -அறிவிலோர்

முக்தனார் முகுந்தனார் -ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான் –
அத்தனாகி அன்னையாகி – யாளும் எம்பிரானுமாய் -நம்முள் புகுந்து மேவினார் –
ஏழை நெஞ்சமே -எத்தினால் இடர் கடல் கிடத்தி -என்று அந்வயம் –

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே—8-9-7-

இனி இது சொல் என் ஏழை நெஞ்சே
சம்சாரத்தே சில விடவுமாய்
பற்றவுமாய் இருக்கிற இருப்பைக் கொண்டு
பகவத் விஷயத்தை மறக்கலாம் என்று இருக்கிற நீ சொல்லு –

—————————————————————-

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் பக்திசாரர் ஆனமை–/ஆனைக்கும் இவனுக்கும் உள்ள சாம்யம்-/கைங்கர்யத்தைப் பெற்றேன் என்று – என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று உபகார ஸ்ம்ர்தி–

June 20, 2020

எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை -என்கிறது என்
தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்தால் உஜ்ஜீவிக்க ஒண்ணாமை என் என்ன –
அந்த தேவதாந்தர சமாஸ்ரயணம் துஷ்கரம்
அத்தைப் பெற்றாலும் அபிமத பிரதானத்தில் அவர்கள் அசக்தர்
ஆனபின்பு ஜகத் காரண பூதனான யாஸ்ரயித்து சம்சார துரிதத்தை அறுத்துக் கொள்ள
வல்லிகோள் -என்கிறார் –

காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கிலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்
பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே —ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–69-

காணிலும் உருப்பொலார் –
தாமஸ தேவதைகள் ஆகையாலே முமுஷுக்களுக்கு அவர்கள் த்ரஷ்டவ்யர் அல்லர் –
ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா பிரதி ஷித்தாஸ் து பூஜநே –
அசுத்தாஸ் தே சமஸ்தாச்ச தேவாத்ய கர்மயோநய -என்னக் கடவது இ றே –
ஆத்மாவாரேத்ரஷ்டவ்ய -என்னும் அவன் அல்லன் இறே
இங்கன் இருக்கச் செய்தே உங்கள் குண அநுரூபமான ருசியாலே கண்டாலும்
விருபா ஷத்வாதிகளாலே வடிவு பொல்லாதாய் இருப்பர்
திரு உள்ளத்தில் தண்ணளியை கோட் சொல்லித் தாரா நின்ற புண்டரீகாஷனைப் போலே
வடிவு ஆகர்ஷமாய் இருக்கிறது அன்றே
அவர்களுடைய ஹ்ர்தயத்தில் க்ரௌர்யமே அவர்கள் வடிவில் பிரகாசிப்பது

செவிக்கினாத கீர்த்தியார் –
த்ரஷ்டவ்யர் அல்லாதவோபாதி ச்ரோதவ்யரும் அல்லர்
கேட்க வேண்டி இருந்தி கோளே யாகிலும்
பித்ர் வத ப்ரசித்தி என்ன –
தத் பலான பிஷாடந சாரித்ர ப்ரதை என்ன –
அத்வரத்வம்ச கதை என்ன –
சுர அசுர வத கதை -என்ன –
இத்யாதி சரவண கடுகமான கீர்த்தியை உடையராய் இருப்பர் –
ம்ர்தனான புத்ரனை சாந்தீபிநிக்கு மீட்டுக் கொடுத்தான்
புநராவ்ர்த்தி யில்லாத தேசத்தில் நின்றும் வைதிகன் புத்ரர்களை மீட்டுக் கொடுத்தான்
என்று -இத்யாதிகளாலே ஸம்ச்ரவே மதுரமான கீர்த்தி இ றே

பேணிலும் –
ஆஸ்ரயணீயரும் அல்லர் –
ஆஸ்ரயித்தார் திறத்தில் -உன் பயலை அறுத்து இடும் -என்றும் -ஊட்டியிலே தட்டிற்றிலை
காண் -என்றும் சொல்லுகையாலே -உங்கள் ருசியாலே அவற்றையும் பொறுத்து
ச்ரவண கடோரமான கீர்த்தியையும் ஸ்வரூபத்தையும் பொறுத்து ஆஸ்ரயித்தாலும் –
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் -என்றும் -ஸூ ஸூகம் கர்த்தும் -என்றும் ஆஸ்ரயணம்
ஸூக கரமுமாய் ஸூக ரூபமுமாய் இருக்கிறது அன்றே –
வரந்தர மிடுக்கிலாத தேவரை –
பர ஹிம்சையிலே வந்தால் -ஜகது உபசம்ஹார ஷமராய்
அபிமத பலம் தருகைக்கு சக்தி இல்லாத தேவதைகளை
ஒரு பிசாசுக்கு மோஷம் கொடுப்பது
ஒரு பஷிக்கு மோஷம் கொடுப்பது
உதாராஸ் சர்வ யேவைதே -என்று தானும் -பிறரும் –
சகல பல ப்ரதோ ஹி விஷ்ணு -என்னும் விஷயம் அன்று இறே
நீ தந்த நித்யத்வம் எனக்கு கழுத்து கட்டி யாய்த்து -என்று மார்கண்டேயன் அவனை வளைக்க
மோஷ ப்ரதன் கையிலே காட்டிக் கொடுத்து நழுவும் சீலம் இறே பிறரது

ஆணம் என்று அடைந்து –
இப்படி இவர்கள் ஆஸ்ரயணீயரும் அன்றிக்கே இருக்கச் செய்தே தங்கள் பிரேமத்தால் ஆஸ்ரயித்து
ஆணம் -அரண்
நத்யஜேயம் -என்னும் விஷயம் அன்றே
மா சுச -என்ன மாட்டான்
ஏறுண்டவன் ஆகையாலே-
வாழும் ஆதர்காள் –
ம்ர்த்ராய் இருக்கிற அறிவு கேடர்காள்
ஆதர் -குருடரும் -அறிவு கேடரும்
நா ஹாரயதி சந்த்ரா சம்பாஹூ ராமஸ்ய சம்ஸ்ரிதா -என்றும்
பாஹூ இச்சாயமவஷ்ட ப்தோ யஸ்ய லோகோ மகாத்மாந -என்றும் –
அதஸோ பயங்கதோ பவதி -என்றும் -இருக்கிறார்கள் அன்றே

எம் ஆதி பால் பேணி –
எங்களுக்கு காரண பூதனானவன் பக்கலிலே ஆதரத்தைப் பண்ணி –
ஜகத் காரண வஸ்துவாய் இருக்கிறவனை
எம்மாதி -என்பான் என் என்னில் –
ஈஸ்வரன் ஜகத் ஸ்ர்ஷ்டியைப் பண்ணுகிறது முமுஷூ சிஸ்ர்ஷையால் யாகையாலே
அந்த ஸ்ர்ஷ்டி பலித்தது அநந்ய பிரயோஜனர் பக்கலிலே என்று எம்மாதி -என்று
விசேஷிக்கிறார்
நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே –
ஒருத்தராலும் அறுக்கப் போகாத உங்களுடைய பிறப்பு என்கிற தூற்றை அறுத்துக் கொள்ள
வல்லி கோளே
பிணப்பு அறுக்க -ஜன்மம் அறுக்க
ஜென்மத்தை தூறு என்கிறது அகப்பட்டவனுக்கு புறப்படாது போக ஒழிகையும்
தன்னால் தரிக்க ஒண்ணாது ஒழிகையும்
முதலும் முடிவும் காண முடியாது இருக்கையும் –

காணிலும் உருப்பொலார் -கண்டாலும் விஹார உருவம் உடையவர்கள்
செவிக்கினாத கீர்த்தியார்
கடினமான வார்த்தைகள் உடையவர்
பேணிலும் -எப்படி இருந்தாலும் ஆஸ்ரயித்தால்
வரந்தர மிடுக்கிலாத தேவரை-ஆணம் என்று அடைந்து-சரணம் என்று அடைந்து கேட்டுப் பெரும் குருடர்களே
வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்-பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே-
தேவ தாந்த்ரங்களை பார்க்கவே கூடாதே -அவற்றின் அயோக்யதைகளை சொல்லி –
ஜகத் காரணனைப் பற்றி முக்தர் ஆகணும் என்கிறார்

மற்ற தேவர்கள் “பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவர்களே” என்கிறார். மேலும், “காணிலும் உருப்பொலார்” என்கிறார்.
மற்ற தேவர்களை (தெய்வங்களை) அப்படியே போய் ஆஸ்ரயித்தாலும் (பற்றினாலும்), அவர்கள் பார்ப்பதற்கும் அழகாக இல்லை;
பகவான் புண்டரீகாஷன் (தாமரைக் கண்ணன்) – மற்றொருத்தன் (சிவன்) விரூபாக்ஷன்.
பகவான் சந்தனத்தைத் தன் திருமார்பிலே ஈஷிக்கொண்டவன்; சிவனோ சாம்பலை எடுத்து திருமார்பிலே பூசிக்கொண்டவன்.
பகவானுக்கு இருப்பதோ சிறந்த கேஸ வாசம்; சிவனுக்கு இருப்பதோ சடைமுடி!
பகவான் தலையில் இருப்பதோ உயர்ந்த புஷ்பஹாரம்; சிவன் தலையில் இருப்பதோ வெறும் கங்கா தீர்த்தம்!
இவன் ஏறுவது கருடன் மீது; அவன் ஏறுவது ரிஷபமான தாழ்ந்த வலிய பந்தமான ஜந்துவைப் படைத்திருக்கிறான்!
இவனுக்கு அடியார்கள் அத்தனை பேரும் நித்யஸுரிகள்; அவனது அடியார்களோ பேய்க் கணங்களும் பூதகணங்களும்!
இவன் பிடித்திருப்பதோ சிறந்த சங்க சக்கரங்களை; அவன் பிடித்திருப்பதோ ஒண்மழுவான ஆயுதத்தை!
எப்படிப் பார்த்தாலும் இருவருக்கும் ஒருநாளும் ஒத்துவரப்போவது கிடையாது.
ஆகவே “காணிலும் உருப்பொலார்” என்று பாடியுள்ளார் ஆழ்வார். சிவனது காட்சி ஒருநாளும் உருப்பெறுவது முடியாது.

“செவிக்கினாத கீர்த்தியார்” –
செவிக்கு இனிய கீர்த்தி என்றால், பகவானுடைய ஸ்ரீ திரிவிக்கிரம அவதாரமா – ஸ்ரீ வாமன மூர்த்தியாய் உலகளந்தானே –
அந்தப் புகழைக் கேட்பதா அல்லது ஸ்ரீ ந்ருசிம்ஹ மூர்த்திக்காகவா?
ஒவ்வொன்றும் அடியார்க்காக அடியார்க்காக என்று அவன் புகழ் செவிக்கு இனியதான கீர்த்தியாக இருக்கிறது.
“ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம்” என்பது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம அத்தியாயத்திலே தெரிவித்ததார்.
“ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:” – “ஸ்தவ்ய:” என்றால் ஸ்தோத்ரம் என்று பண்ணணும்னா, பகவான் ஒருத்தன் தான்;
அதற்கு அருகதை என்றும், மற்ற யாருக்கும் அதற்கு அருகதையே கிடையாது என்று அர்த்தம்.
ஆக, பகவான் ஸ்தவ்யன்! ஆனால், சிவனை என்னவென்று சொல்லி ஸ்தோத்ரம் செய்வது?
இவர் தானும் சுடுகாட்டிலே பஸ்பதாரியாய் சுற்றித் திரிகிறார்;
தன் தகப்பனார் பிரமனின் தலைகளில் ஒன்றைக் கிள்ளித் தன் கையில் வைத்துக் கொண்டிருந்தவர்;
பத்மாசுரனைக் கண்டு பயந்து ஓடிவிட்டார்; வாணாசுரனையும் கண்டு பயந்து ஓடிவிட்டார்;
தன் சிஷ்யனிடத்திலேயே அவர் “பிள்ளைக் கறி கொண்டுவா என்று! தலையை அறுத்து தனக்கு யாக யஞ்ஞம் செய்” என்று கூறினார்.
இவற்றை எல்லாம் பாடினால் அது கீர்த்தி (புகழ், தோத்திரம்) ஆகுமோ?
அப்படியே இவற்றைப் பற்றிப் பாடினாலும், அது செவிக்குத்தான் இனியதாக இருக்குமா?
இத்தனையும் உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், மறுபடியும் நீங்கள் அவனைத்தான் விடாமல் பிடித்துக்கொள்வோம் என்று
பிடிவாதம் பிடித்தாலும் பிடிக்கலாம்! அவர்களுக்கும் ஆழ்வார் சமாதானம் சொல்லிவிட்டார் –

“பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவரை” என்று
பாடி! அதாவது, இத்தனையும் தாண்டி நீங்கள் அவனையே ஆஸ்ரயிக்க (பற்ற) நினைத்தாலும்,
நீங்கள் கேட்கப் போவதைக் கொடுக்கிற சக்தி மட்டும் அவனுக்குக் கிடையாது!
அது இருக்குன்னாலும் அவனிடத்தில் போய் நீங்கள் ஆஸ்ரயிப்பதில் அர்த்தமுண்டு.
அதுவும் இல்லாதவனைப் போய் ஆஸ்ரயிப்பதில் ஏதானும் இலாபம் உண்டா?
அவனே லக்னனாகத் திரிய, அவனிடத்தில் போய் வேஷ்டி தானம் வேணும்னு கேட்டா தருவானா?
ஒரு கடையில் நிறைய வேஷ்டிகள் அடுக்கப் பட்டிருக்க, அவனிடத்தில் ஒரு வேஷ்டி தானமாகக் கேட்டால் கேட்டால்,
அவன் கொடுத்துவிடுவான். ஒருத்தன் இடுப்பில் ஒன்று ஒன்று கொடியில் மாட்டிவைத்திருக்க,
அவனிடம் ஒரு வேஷ்டி தானமாகக் கேட்டாலும் ஒன்றைக் கொடுத்துவிடுவான்;
இன்னொருத்தன் ஒரே ஒரு வஸ்திரத்தை இடுப்பில் அணிந்து கொண்டிருக்க, அவனிடம் தானம் கேட்டாலும்
அவன் அதையும் கழற்றிக் கொடுத்துவிடுவான்! ஆனால், சிவனோ, லக்னனாக, அவனே வேஷ்டி இல்லாதவனாக இருக்க,
அவனிடம் போய் வஸ்திர தானம் வேணும்னு கேட்டா, கொடுக்கமுடியலை என்றுமட்டுமில்லை; அவனும் கொடுக்கபோறதில்லை;
நமக்கும் கிடைக்கப் போறதில்லை!ஐயோ! என்னிடமே ஒன்றுமில்லை; என்னிடத்தில வந்து கேட்கிறாயே! என்று வருத்தமும் படுவான்.
இதனால்தான், ஸ்ரீ ஆழ்வார் தெரிவித்தார்: “அப்படி உங்கள் சிவனுக்கு வருத்தம் ஏற்படும்படி நீங்கள் இருக்கவேண்டாம்!
நீங்கள் ஒவ்வொரு நாளும் அவனிடத்தில் போய் கேட்கக் கேட்க, கொடுக்கமுடியாத ஸ்ரமத்தாலே அவர் துடிக்க போறார்!
ஏன் வீணாக அவனையும் சிரமப்படுத்திண்டு, உங்களுக்கும் கிடைக்காமால்….!
ஆகையால், சிரமப்பட வேண்டாம் என்று தவிர்க்கிறார் ஸ்ரீ ஆழ்வார்.

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை. மேலே உள்ள பாடலுக்கு வேத அர்த்த ரீதியாகவும் இவர் மேற்கோள்கள் காட்டியுள்ளார்.
“திவுக்ரீடாயாந் தாது; || திவு விஜிஹீஷாந் தாது; || திவு வியவஹாரந்: தாது; || திவு த்யுதீந்: தாது; || திவு ஸ்துதிந்:தாது; ||
திவு மோதாந்: தாது; || திவு மதாந்: தாது; || திவு காந்தீந்:தாது; || திவு கதீந்:தாது.”

“கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தனே! (இராமபிரான்) (நான்.திரு.53) – அவன் ஒருத்தன் தான் தெய்வமே தவிர,
மற்ற அனைவரும் பொல்லாத தேவரே” என்றும்,
அதனால் “திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு” –
எவனுக்குத் திருமகள் சம்மந்தம் இருக்கிறதோ அவனே பரதெய்வம்; அப்படிப்பட்ட சம்மந்தம் இல்லாதவர்கள் தெய்வம் அல்லர்;
ஆகையால், அவர்களை வணங்குவதில் எந்தப் பயனும் இல்லை என்று அற்புதமாகத் தன் பாசுரத்தில் காட்டினார் ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் .
இவருக்கும் பரமசிவனாருக்கும் நடந்த வாக்குவாத யுத்தத்தின் முடிவில்தான் பரமசிவன் இவர் பக்தியை மெச்சி,
இவருக்கு ஸ்ரீ “பக்திஸாரர்” என்ற திருநாமத்தையும் கொடுத்தார் பரமசிவனார்.

——

அநந்த க்லேச பாஜனம் -என்கிறபடியே துக்க ப்ரசுரமான இஸ் சம்சாரத்தில் சுகம்
உண்டாகக் கூடுமோ -என்னில்
ப்ராப்தி தசையில் சுகமும் –
சம்சாரத்தே இருந்து வைத்து தேவரீர் திருவடிகளிலே விச்சேதம் இல்லாத ப்ரேமத்தால்
பிறக்கும் சுகத்துக்கு போராது -என்கிறார் –

மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய் புலன் கழல்
விட்டு வீள்விலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக்
கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே –83-

மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய்-
தேன் மாறாத செவ்வித் திருத் துழாய் மாலையாலே அலங்க்ர்தன் ஆனவனே
இத்தால் -திருத் துழாய் யோட்டை சம்பந்தத்தால் -சர்வாதிக வஸ்து -என்னும் இடமும் –
உபய விபூதி நிர்வாஹணத்துக்கு இட்ட தனி மாலை என்னும் இடமும் –
ஒப்பனை யழகும் -சொல்லிற்று ஆய்த்து

புலன் கழல்விட்டு வீள்விலாத போகம் –
தர்சநீயகமாய் -நித்ய சூரிகளுக்கு சதா தர்சநீயமான தேவரீர் திருவடிகளை விட்டு
வேறு போக்கில்லாத போகத்தை
புலன் கழல் -புலப்படும் திருவடிகளை
விண்ணில் நண்ணி ஏறினும்-
பரமபதத்தில் ஏறிக் கிட்டினும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால்-திருஅஷ்டாஷரம் -த்வயம் –
எட்டும் இரண்டும் கூட்டு –பத்தாய் -அத்தை பக்தி -என்கிறது
பகவத் பக்தியிலே தமக்கு உள்ள கௌரவாதி அதிசயத்தாலே மறைத்துச் சொல்லுகிறார் –
கயிறு -என்று பந்தகம் என்றபடி –
மனம் தனைக்கட்டி –
சர்வ இந்திரியங்களுக்கும் ப்ரதானமான மனசை விஷயாந்தரங்களில் போகாதபடி
பந்தித்து –
வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே-
விச்சேதம் இல்லாதபடி தேவரீர் திருவடிகளிலே வைத்த ப்ரேமம்
சுகத்துக்கு சாதனமாய் இருக்கை யன்றிக்கே
தானே சுகமாய் இருக்கும் –

மட்டுலாவு –
தேன் நித்தியமாய் இருக்கும்
தண் துழாய் அலங்கலாய் புலன் கழல் விட்டு-
திருவடிகளை இந்த பூ உலகத்திலேயே அனுபவிப்பதை விட்டு
வீள்விலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்-அழிவில்லாத கைங்கர்யம் பரம பதத்திலே சென்று கிட்டினாலும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி
பத்து என்ற பக்தி யாகிற பாசத்தால் மனசைக் கட்டுப் படுத்தி
வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே –
விச்சேதம் இல்லாத அமைக்கப் பட்ட ப்ரேமையால் கிடக்கும் ஆனந்தத்துக்கு ஈடு இல்லை
பத்துடை அடியவர்க்கு எளியவன் போலே –பத்து -பக்தி –வைத்த காதலே இன்பம் பயக்கும்
வைத்த காதலே இன்பமாகும் -ப்ரேமம் ஒரு ஸூகத்துக்கு சாதனமாக இல்லாமல் ஸ்வதஸ் ஸூகமாகவே இருக்கும்

அநுபவரசிகர்களான ஆழ்வார்கள் எம்பெருமானை யானையாகவே பல இடங்களில் பேசுவார்கள்.
யானைக்கும் எம்பெருமானுக்கும் பல விதங்களில் ஒத்த கருத்து நிலவும்

1.யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வ வஸ்து போலவே இருந்து பரமாநந்தம் பயக்கும்.
எம்பெருமானும் எப்பொழுதும் நாள், திங்கள், ஆண்டு ஊழியூழிதோறும் அப்பொழுதைக்கப்பொழுதென்னாராவமுதம் என்னும்படியிருபான்.
2.யானையின் மீது ஏறவேண்டியவன் யானையின் காலைப்பற்றியே ஏறவேண்டும்.
எம்பெருமானிடம் சென்று சேரவேண்டியவுர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேரவேண்டும்.
3.யானை தன்னை கட்ட தானே கயிற்றை எடுத்துகொடுக்கும். எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் (திருச்சந்த விருத்தம்) என்கிறபடியே,
எம்பெருமானை கட்டுபடுத்தும் பக்தியாகிற கயிற்றை அவன் தந்தருள்வான்.
4. யானையை நீராட்டினாலும் அடுத்த ஷணத்திலேயே அழுக்கோடு சேரும் எம்பெருமான் சுத்தஸத்வமயனாய் பரம பவித்ரனாய்
இருக்கச் செய்வதாயும் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குமுடைய நம் போல்வாரோடு சேர திருவுள்ள மாயிருப்பான் வாத்ஸல்யத்தாலே.
5.யானையைப் பிடிக்க வேனில் பெண்யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும் அதன் போன்றே பிராட்டியின் புருஷாகாரமின்றி எம்பிரான் வசப்படான் .
6.யானை பாகனுடைய அனுமதியின்றி தன்னிடம் வருபவர்களை தள்ளிவிடும்.
எம்பெருமானும் “வேதம் வல்லார் துணைக்கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்கிறபடியே
பாகவதர்களை முன்னிட்டு புகாதாரை அங்கீகரத்தருளான்.
7. யானையின் மொழி யானைப் பாகனுக்குத் தெரியும், எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பிகள் போல்வார்க்கே தெரியும்
(பேரருளானப் பெருமானோடே பேசுபவர் நம்பிகள்).
8. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடிநூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும்
எம்பெருமான் அமுது செய்து சேஷித்த பிரசாதத்தாலே பலகோடி பக்தவர்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம்.
9.யானைக்கு கை நீளம் எம்பெருமானு அலம்புரிந்த நெடுந்தடக்கையளிறே “நீண்ட அந்தக் கருமுகிலை யெம்மாள் தன்னை.”(பெரிய திருமொழி 205-2)
10.யானை இறந்த பின்பும் உதவும் எம்பெருமானும் தீர்த்தம் பிரசாதித்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளின பின்பும்
இதிகாச புராணங்கள் உணர்த்தி உதவுகின்றன.
11. யானை ஒரு கையே உள்ளது எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழிய கொள்ளும் கையில்லை
12. யானை பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும். எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகம் பிரக்குருதிகளுக்கு சம்பாத்யத்திற்கு வழி செய்கிறார்.
13. யானை மெல்ல அசைந்து அசைந்து செல்லும். எம்பெருமானும் உலாவரும் பொழுது அசைந்து அசைந்து வருவார்.
14. யானை சாதுவானது எம்பெருமானும் சாதுவானவரே-

———-

120-பாட்டு –அவதாரிகை –

உன்னபாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர் மன்ன வந்து பூண்டு –
என்று வடிவு அழகிலே வந்த ஆதரத்துக்கு அவ் வடிவே விஷயமான படியை சொன்னார் -கீழ்-
இதில் –
கிடந்தானை கண்டேறுமா போலே தாமே அவ் விக்ரஹத்தை பற்றுகை அன்றிக்கே
நிர்ஹேதுகமாக பெரிய பெருமாள் தம்முடைய விக்ரஹத்தை என்னுள்ளே பிரியாதபடி வைக்கையாலே விரோதி வர்க்கத்தை
அடையப் போக்கி – அபுநா வ்ர்த்தி லஷணமாய் நிரதிசய ஆநந்த ரூபமான கைங்கர்யத்தைப் பெற்றேன் என்று –
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று உபகார ஸ்ம்ர்தியோடே தலைக் கட்டுகிறார் –

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே -120-

வியாக்யானம்-

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி-
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து என்கிறபடியே விச்சேதியாதே
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ஆத்மகமான பல வகைப் பட ஜன்மங்களில் நின்றும் –
அஞ்ஞனாய் -நித்ய சம்சாரியாய் போந்த என்னை மாற்ற நினைத்து –
இயக்க யறாமை யாவது -ஒரு தேகத்துக்கு ஆரம்பகமான கர்மத்தை அனுபவிக்க இழிந்து –
அநேக தேக ஆரம்பகமான கர்மங்களைப் பண்ணுகையாலே
தேக பரம்பரைக்கு விச்சேதம் இன்றி செல்லுகை –
இயக்கு -நடையாட்டம் –
இயக்கல் -என்று வல் ஒற்றாய் கிடக்கிறது –
மாற்ற நினைப்பதை –மாற்றி -என்பான் என் என்னில் –
உயிர் முதலாய் முற்றுமாய் -என்றாப் போலே –

இன்று வந்துதுயக் கொண் மேக வண்ணன் நண்ணி –
விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து
தன பக்கலிலே பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை தரும்
காளமேக நிபச்யாமானவன் –
எனக்கு நினைவு இன்றிக்கே இருக்க
இன்று நிரஹேதுக கிருபையினால்
நான் இருந்த இடத்தே வந்து கிட்டி –
நண்ணுதல் -அணைதல்
நச்சு நாகணைக் கிடந்தான் -என்றும் –
பொன்னி சூழ் அரங்கமேயபூவை வண்ணா -என்றும் –
சொல்லிப் போந்தவர் ஆகையாலே -இங்கும் உய்யக் கொள் மேக வண்ணன் என்று
பெரிய பெருமாள் திருமேனியைத் தமக்கு உஜ்ஜீவன ஹேது-என்கிறார்-

என்னிலாய தன்னுளே –
அஹம் புத்தி சப்தங்கள் தன்னளவிலே பர்வசிக்கும்படி –
தனக்கு பிரகாரமான என்னுடைய ஹ்ர்த்யத்திலே –
தத்வமஸி -என்று -உபதேசித்து -அஹம் ப்ரஹ்மாசி -என்று அனுசந்தித்துப் போந்த
அர்த்தம் இ றே இவர் இங்கு அருளிச் செய்கிறார் –
இந்த சரீர ஆத்ம சம்பந்தம் இங்கே சொல்லுகிறது -தன் பேறாக உபகரித்த விதுக்குக் ஹேதுவாக –

மயக்கினான் தன் மன்னு சோதி –
அபிமதமாய் -அநுரூபமாய் -ஜ்யோதிர் மயமான –
திவ்ய மங்கள விக்ரஹத்தை பிரிக்க ஒண்ணாதபடி கலந்தான் –
மயக்கம் -செறிவு – தன்னை ஒழிய எனக்கு ஒரு ஷண காலமும் செல்லாதபடி பண்ணினான் என்கை –

ஆதலால் –
இப்படி தான் மேல் விழுந்து இவ்வளவும் புகுர நிறுத்துகையாலே
என்னாவி தான் –
தனக்கு அநந்ய சேஷமாய் -ஸ்ரீ கௌஸ்துபம் போலே -அபிமதமுமான என் ஆத்மாவானது –

இயக்கெலா மறுத்து –
அந்யோந்ய கார்ய காரண பவத்தாலே ஒழுக்கறாத -அவித்யா கர்ம வாசன ருசி ப்ரகர்தி
சம்பந்தங்களை யறுத்து –
இயக்கறாத பல் பிறப்பில் -என்று காரணமான தேக சம்பந்தகளை சொல்லிற்றாய் –
தத் கார்யமான அஞ்ஞான கர்மங்கள் என்ன –
தத் ஆஸ்ரயமான வாசனா ருசிகள் என்ன -இவற்றையும் கூட்டி -எலாம் –அறுத்து என்கிறார்

அறாத இன்ப வீடு பெற்றதே –
யாவதாத்மபாவி விச்சேதம் இல்லாத –நிரதிசய ஆனந்தமான
கைங்கர்ய ரூப மோஷத்தைப் -பெற்றது

————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருச்சந்த விருத்தம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானங்களில் இருந்து அமுத துளிகள் –

June 20, 2020

முதல் பத்து பாசுரங்களால் எம்பெருமானே உபாதான காரணம் என்று அறுதியிட்டு
11-48- தேவதாந்த்ர விலக்ஷணம் -கூர்மாவதாரம் நரசிம்ம கிருஷ்ண அவதாரங்களில் ஈடுபட்டு பரத்வ ஸ்தாபனம்
49–தொடங்கி 56-திரு அரங்கனுக்கு -ஏழு பாசுரங்கள்
திருக்குறுங்குடி ஒரு பாசுரம்
ஆறு பாசுரங்கள் திருக்குடந்தை
63-64-65-நெஞ்சுக்குள் வந்தமை
சம்சாரி இழவை -66 பாசுரத்தால் அனுசந்தித்து
67-73- பர உபதேசம் அ ல்பம் அஸ்திரம் –
74- தன்னைப் பார்த்து-அவனது நிர்ஹேதுக கிருபை
75-81உபாயாந்தரங்களின் தோஷம் அப்ராப்தம் -மீண்டும்
82-120-பகவான் உடம் சம்வாதம் -ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம்
நெஞ்சுக்கு உபதேசம் சில பாசுரங்கள் இவற்றில் உண்டு
ப்ராப்ய ருசியை விண்ணப்பம் 119 பாசுரம்
பெற்ற பேற்றைச் சொல்லி நிகமிக்கிறார்

———-

இவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் -பர வியூகங்கள் தேச விப்ரக்ர்ஷ்டத்வத்தாலே
அஸ்மத்தாதிகளுக்கு ஆஸ்ரயணீயம் ஆக மாட்டாது –
அவதாரங்கள் கால விப்ரக்ர்ஷ்டதை யாகையாலே ஆஸ்ரயணீயங்கள் ஆக மாட்டாது –
இரண்டுக்கும் தூரஸ்தரான பாஹ்ய ஹீநருக்கும் இழக்க வேண்டாதபடி
அர்ச்சக பராதீநனாய் -சர்வ அபராத சஹனாய் -சர்வ அபேஷித ப்ரதனாய் -வர்த்திக்கும்
அர்ச்சாவதாரத்தின் நீர்மையை அனுசந்தித்து –ஆகிஞ்சன்யத்தை அதிகாரமாக்கி –
ப்ரபத்தியை அதிகாரி விசேஷணமாய் ஆக்கி -பகவத் கிருபையை நிரபேஷ உபாயம் என்று அத்யவசித்து
அவனை ஆஸ்ரயித்து -அவன் கிருபை பண்ணி முகம் காட்ட இவ்விஷயத்தை லபிக்கப் பெற்றேன் என்று
தமக்கு பிறந்த லாபத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –

உபய விபூதி யோகத்தை நிர்ஹேதுக க்ருபையால் தேவரீர் காட்ட
வருத்தமற நான் கண்டாப் போலே வேறு ஸ்வ சாமர்த்யத்தால் காண வல்லார் இல்லை என்கிறார் –

ஜகத் ஏக காரணத்வத்தாலும் சகல ஆதாரனாய் இருக்கும் ஸ்வபாவத்தை திரள
அறியும் இத்தனை ஒழிய தேவரீர் காட்ட நான் கண்டால் போலே ஏவம்விதன்
என்று ஒருவருக்கும் அறிய ஒண்ணாது என்கிறார்

தாரக பதார்த்தங்களும் பகவதாஹித சக்திகமாய் கொண்டு தரிக்கின்றன
அரவணை மேல் பள்ளி கொண்ட பெருமாளே அனைத்துக்கும் தாரகம்-

தாம்தாம் சத்தாதிகள் தேவரீர் இட்ட வழக்காய் இருந்த பின்பு தேவரீரை
பரிச்சேதிக்க வல்லார் உண்டோ – -என்கிறார்-

முதல் பாட்டில் சொன்ன காரணத்வத்தை தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –-பத்தாம் பாட்டில் திருஷ்டாந்த சஹிதமாய்
சொல்லி முடித்தாராய் விட்டது –

ஜகத் காரண பூதனாய் -ஸ்ருஷ்டியாதி முகத்தால் ரஷிக்கும் அளவே அன்றி
அசாதாராண விக்ரஹ உக்தனாய் அவதரித்து ரஷிக்கும் உன் படியை லோகத்திலே ஆர்
நினைக்க வல்லார் என்கிறார்

உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி
ஜகத்து உனக்கு சரீரம் ஆகையாலே உன்னை பிரியாதே நிற்க -அசாதாராண விக்ரஹ
உக்தனாய் கொண்டு வ்யாவர்த்தனாய் இருத்தி –
அதாகிறது –
விமுகரான காலத்திலே ஆத்மாவே நின்று சத்தியை நோக்கியும் –
அபிமுகீ கரித்த வன்று சுபாஸ்ரயன் ஆகைக்கு அசாதாராண விக்ரஹ உக்தனாய் இருக்கும் என்கை –
ஆகையால் ஒரு வகையாலும் பரிச்சேதிக்கஒண்ணாமையாலே
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே –
ஆச்சர்யமான படிகளை உடைய உன்னை லௌகிக புருஷர்களில் அறிய வல்லார் ஆர் –

கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த நீ காட்டித்தர -உன் வைலஷண்யம் காணும்
அது ஒழிய ஸ்வ சாமர்த்யத்தாலே காண முடியாது என்கிறார் –
இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து நிற்கச் செய்தே -சர்வ விஸ ஜாதீயமான வைலஷ்ண்யத்தை உடைய
விக்ரஹம் என்ன -அவதாரத்தில் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான
திருநாமங்கள் என்ன -அவதரித்த தேசப் பிரபாவம் என்ன -அவதார விக்ரஹத்துக்கு
நிதானம் என்ன -இவற்றை உடையனான உன்னை ஸ்வ சாமர்த்யத்தாலே காண முடியாது என்கிறார் –

ஆமையாகி –
பிரயோஜநாந்தர பரரான தேவர்களுக்கு அமர்த மதனதுக்கு அனுகூலமான கூர்ம வேஷத்தை கொண்டு
ஆழ் கடல் துயின்ற –
அகாதமான கடலிலே மந்த்ரம் அமிழ்ந்தாத படி உன் முதுகிலே அது நின்ற சுழலக் கண் வளர்ந்து அருளினவனே –
சாமவேத கீதனாய சக்ர பாணி அல்லையே —
நீ அழிவுக்கு இட்ட கூர்ம விக்ரஹம் சாந்தோக்ய சித்தமாய் -கையும் திரு வாழியுமான
அதி ரமணீய விக்ரஹம் என்று அறிந்தேன்

ஷீரார்ணவசாயித்வம் பரத்தாசை என்னும்படி அங்கு நின்றும் க்ருத யுகத்திலே
சேதனர் விரும்புகைகாக சங்கம் போலே இருக்கிற திரு மேனியை உடையாய் அவதரித்து –
அதுக்கு மேலே த்ரேதா யுகத்தில் ஆஸ்ரித விரோதிகளான ராவணாதி கண்டகரை
நிரசிக்கைகாக ஷத்ரிய குலத்தில் வந்து அவதரித்து ஸ்ரீ சார்ங்கத்தை திருக் கையில் தரித்தவன் அல்லையோ –
இப்படி காளமேக நிபாஸ்யாமமான திரு நிறத்தை அழிய மாறியும் –
ஆத்மாநாம் மாநுஷம் மநயே -என்று பரத்வத்தை அழிய மாறியும் ரஷித்த உன்னுடைய
நீர்மையை பரிச்சேதித்து அறியலாவார் ஆர்

மேலாக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் –
அதுக்கு மேலே ஆஸ்ரிதர் தேவரீருக்கு விக்ரஹமாக நினைத்த த்ரவ்யத்திலே ஸ்வ அசாதாராண
விக்ரஹத்தில் பண்ணும் விருப்பத்தை பண்ணுகிற இஸ் ஸ்வபாவம் என்னாய் இருக்கிறது –

ஆத்ம குணங்களால் ரஷகன் ஆனால் போலே ரூப குணங்களாலே போக
பூதனான படியைச் சொல்லுகிறது

அநாதியாய் அஹங்காரத்தை விரும்பிப் போந்த சேதனனை சேஷதைகரசரான
நித்ய சூரிகளோடு ஒரு கோவை யாக்குவது இச் சக்தி

நீர்மைக்கு எல்லை பாற் கடல் சயனம் –
மேன்மைக்கு எல்லை கடல் கடைந்தது –
இவற்றை பிரித்து எனக்கு அருளிச் செய வேணும் –
எல்லா அவதாரங்களிலும் இரண்டும் கலந்து இருக்குமே-

ஈஸ்வரன் ஒருவன் உளான் என்று அறியாத சம்சாரத்தில் இஸ் ஆஸ்ரித பஷபாதத்தை-பிரகாசிப்பிக்கைகாக
அர்ச்சையாய் வந்து கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற தேவரீர்-
இத்தை விசேஷித்து தெரிய அருளிச் செய்ய வேணும் -கீழ்-
வ்யூஹத்திலும் விபவத்திலும் சொன்ன பஷபாதங்கள் காணலாவது பெரிய பெருமாள் பக்கலிலே என்று கருத்து

சர்வாதிகன் கிடீர் பிரளய ஆர்ணவத்திலே ஒருவர் இல்லாதாரைப் போலே தனியே கண் வளர்ந்து அருளுகிறான்

சிங்கமாய தேவ தேவ –
அத் திவ்யாயுதங்கள் அசத் சமமாம் படி வரம் கொண்ட ஹிரண்யனை நக ஆயுதமான
சிம்ஹமாய் அழியச் செய்த ஆஸ்ரித பஷபாதத்தாலே நித்ய சூரிகளை எழுதிக் கொண்டவனே –
திவ்ய மங்கள விக்ரஹத்தின் சுவடு அறியும் நித்ய சூரிகளுக்கு இறே அவ்வடிவையும் அழிய மாறி
ரஷித்த ஆஸ்ரித பஷபாதத்தின் எல்லை தெரிவது-

அநந்ய பிரயோஜனனான பிரகலாதனோடு -பிரயோஜநாந்த பரனான இந்த்ரனோடு விமுகரான
சம்சாரிகளோடு வாசியற ரஷிக்கிற உன் நினைவை ஜ்ஞானாதிகர் ஆர் தான் அறிய வல்லார்

ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்யும் இடத்தில் சங்கல்பத்தால் அன்றிக்கே கை தொட்டு
ஆயுதத்தால் அழிக்குமவன்

பகவத் சம்பந்தத்தை அறுத்துக் கொள்ளும் சம்சாரிகளை -தன்னை அழிய மாறி ரஷிக்கிற
அனுக்ரஹத்தை எவர் அறிய வல்லரே –

திருவடிகளின் சௌகுமார்யமும் பார்த்திலை –-மகாபலி பக்கல் ஔதார் யமும் பார்த்திலை –
அர்திக்கிறவன் பிரயோஜநாந்த பரன் என்றும் பார்த்திலை -இந்த இந்தரனுடைய இரப்பையே பார்த்த இத்தனை இறே

அதீந்த்ரியிமான இவ் விக்ரஹத்தை கோபால சஜாதீயமாக்கிக் கொண்டு ருசி இல்லாருக்கு ருசி ஜனகனாயக் கொண்டு
வந்து அவதரித்த இது என்ன ஆச்சர்யம் –

ஒரு கோப ஸ்திரீக்கு கட்டவும் அடிக்கவுமாம்படி ந்யாம்யனாய் வந்து அவதரித்த குணாதிக்யம் உண்டு இறே
ஸ்வரூபம் ஸ்வா தந்த்ர்யம் -என்கிற ஸ்வரூபமும் அழிந்தது இறே இதில் –

கல்பாதியிலே ஒரு ஸ்ரீ வராஹமாய் -ஒருத்தர் அர்த்தியாக இருக்க பூமியை எடுத்து ரஷித்து
அந்த பூமியை மகாபலி அபஹரிக்க ஸ்ரீ வாமனனாய் அளந்து கொண்டவனே –
தன்னை அழிய மாறி ரஷித்த சௌலப்யத்துக்கும்–வரையாதே எல்லாரையும் தீண்டின சீலத்துக்கும்
க்ருஷ்ணாவதாரத்தொடு சாம்யம் உண்டாகையாலே இவ்வதாரங்களை அனுபவிக்கிறார்

சாஸ்திர வஸ்ய ஜன்மத்திலே பிறந்து ஏழு கோ ஹத்தியைப் பண்ணச் செய்தேயும்
ஈச்வரத்வம் நிறம் பெற நின்றாய் நீ –

புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே —
தோளும் தோள் மாலையுமான அழகைக் காட்டி -விஷயாந்தர ருசி என்ன -சோரேண ,ஆத்ம
அபஹாரிணா -என்கிற ஆத்ம அபஹாரம் என்ன -இவ் வசுதங்களைத் தவிர்த்த பரம-பாவனனே-

நாயினேன் வீடு பெற்று –இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே —
அநாதி காலம் திறந்து கிடந்த வாசல் எல்லாம் நுழைந்து சர்வராலும் பரிபூஹதனான நான்
உகந்து தொட்டாலும் எதிர்தலைக்கு அசுத்தியை விளைப்பிக்கும் நிஹீநதையை உடைய நான்
இப்படி பட்டு இருந்துள்ள நான் உனக்கு ஸத்ர்சராய் இருந்துள்ள நித்ய ஸூரிகள் பேற்றைப் பெற்று
அகிஞ்சனான நான் பூரணனுடைய பேற்றைப் பெற்று-இச் சரீரத்தினுடைய விமோசனத்தோடே இனி ஒரு சரீர பரிக்ரஹம்
பண்ண வேண்டாதபடி சம்சாரத்தை அறுக்கும் விரகு அருளிச் செய்ய வேணும் –
சிறைக்கூடத்தில் இருக்கும் ராஜ குமாரன் தலையிலே அபிஷேகத்தை வைத்து பின்பு
சிறையை வெட்டி விட்டால் போலே ப்ராப்தி முன்பாக விரோதியைப் போக்கும் விரகு அருளிச் செய்ய வேணும் –

சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே —
பரமபதம் தேசத்தால் விபக்ர்ஷ்டம் ஆகையாலும்-அவதாரம் காலத்தால் விபக்ர்ஷ்டம் ஆகையாலும் –
ஷீராப்தி அதிக்ர்த அதிகாரம் ஆகையாலும்-அந்தர்யாமித்வம் பிரதிபத்திக்கு அபூமி ஆகையாலும் –
த்ரைவர்ணிக அதிகாரம் ஆகையாலும் – நிலம் அல்ல –அயோக்யனான நான் -இதம் -என்று புத்தி பண்ணி
ஆஸ்ரயிக்கலாம் படி ஆஸ்ரயணீய ஸ்தலத்தை அருளிச் செய்ய வேணும் –

நீலமே அண்டை கொண்டு கெண்டை மேயும் –
அதன் மிகுதியைக் கண்டு கெண்டை யானது பயத்தாலே பரப்பு மாற பூத்த நீலத்தின் இருட்சியை அண்டை கொண்டு –
அரணுக்கு உள்ளே வர்த்திப்பாரைப் பயம் கெட்டு மேய்ந்து வர்த்திக்கிற தேசம் –
இத்தால் -சம்சாரிகளை நலிகிற அஹங்காரத்தைக் கண்டு பீதராய் –முமுஷுக்களாய்-உபாசநத்திலே இழிந்த சாதகரைக் கண்டு
இவை இரண்டும் பய ஸ்தானம் என்று சர்வேஸ்வரனையே உபாயமாகப் பற்றி நிர்ப்பரராய் -ஸ்வரூப அநுரூபமான
பகவத் குண அநுபவமே யாத்ரையாய் வர்த்திக்கும் பிரபன்னரருக்கு ஸ்மா ரகமாய் இருக்கிறது ஆய்த்து –
கெண்டைகளினுடைய யாத்ரை -என்கை-

வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே –50
அவதாரத்துக்கு பிற் பாடரான ஆஸ்ரிதருக்கு ஸ்வ அநுபவ விரோதியான சப்தாதிகளில் ப்ராவண்யத்தைப் போக்குகைக்காக
கோயிலிலே நித்ய வாஸம் பண்ணுகிறபடி -என்கை-

அற்ற பத்தர் –
புருஷார்த்தாந்தரங்களிலும் சாதநாந்தரங்களிலும் பற்று அற்று பெரிய பெருமாளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று இருக்குமவர்கள் –
த்ரிதண்ட தாரிகளாய் பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயராய் பகவத் வ்யதிர்க்தங்களை த்ரணமாக புத்தி பண்ணும் சந்நியாசிகள்-
சுற்றி வாழும் –
சர்வ அவஸ்தையிலும் விடாதே கோயில் வாசமே வாழ்வாக இருக்குமவர்கள்
தேச ஸம்ர்த்தியை மநோரதித்து அதுவே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள்-

ஆஸ்ரிதருக்கு விரோதிகளாம் இத்தனையே வேண்டுவது –எதிர்தலை திர்யக் ஆகவுமாம்-சர்வாதிகனான ருத்ரன் ஆகவுமாம்
அழியச் செய்கைக்கு குவலயாபீடம் -கொலை யானையாய்த் தோற்றுகையாலே கொன்று அருளினான் –
க்ருஷ்ணனைத் தோற்ப்பித்து பாணனை ரஷிக்க கடவோம் என்று வந்த ருத்ரன் தோற்று போம்படி பண்ணி யருளினான் –
பாராய மம கிம் புஜை -என்று தோள் வலி கொண்டு வந்த பாணனுடைய தோள்களைக் கழித்தான் –
ஆக –அவர்கள் உடைய நினைவு அவர்கள் தலையிலே யாக்குமவன் என்கை –

புண்டரீக அவயவன் அல்லையோ –திவ்ய அவயவங்களுக்கு ஸ்ரமஹரமான தேச வாசத்தாலே பிறந்த செவ்விக்கு மேலே
என்னோட்டை சம்ச்லேஷத்தாலேயும் புதுக் கணித்தது என்கை –

கிடந்த புண்டரீகனே —
தாமரைக்காடு பரப்பு மாறப் பூத்தாப் போலே இருக்கிற திவ்ய அவயவங்களோடு தன்னை
அனுபவிக்கைக்காக கண் வளர்ந்து அருளுகிறவன் –

தன் வாத்ஸல்யத்தாலே-பிற்பாடருக்கு உதவ வந்து கிடக்கிற தேசம் திருக் குடந்தை கிடை அழகிலே துவக்குண்டு அனுபவிப்பார்
ஆரோ -என்று அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற வ்யாமுக்தன் அல்லையோ –

சர்வாதிகனாய் அத்யந்த ஸூகுமாரமான அவன் –விமுகரான சம்சாரிகள் நடுவே திருக் குருங்குடியிலே வந்து தாழ்ந்தாருக்கு
முகம் கொடுக்க நிற்கிற நிலை யாய்த்து அவ் ஊரில் பதார்த்தங்களுக்கு அதி சங்கை மாறாதே செல்லுகைக்கும்
இவ் வாழ்வாருக்கு நம்பி உடைய சௌகுமார்யத்தையே அனுசந்திகைக்கும் ஹேது

பாடகத்தும் ஊரகத்தும் நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே –63-
உன்னை நோக்கோம் என்று இருந்த சம்சாரிகள் உடைய உகப்பை ஆசைப்பட்டு வளைப்பு கிடக்கிற இது என்ன நீர்மை -என்கிறார்
உபய விபூதி நாதனான தான் -சம்சாரியான எனக்கு ருசி பிறவாத காலம் எல்லாம் ருசி பிறக்கைக்காக -நிற்பது இருப்பது கிடப்பது ஆவதே –
என்னுடைய சத்தை தன்னுடைய கடாஷம் அதீனமாய் இருக்க -இத்தலையில் கடாஷம் தனக்கு தேட்டமாவதே

எனக்கு மறக்க ஒண்ணாதபடி ருசி பிறந்த பின்பு -அவன் திருப்பதிகளில் பண்ணின செயல்கள் எல்லாவற்றையும் –
திருப்பதிகளை காற்கடைக் கொண்டு என்னுடைய ஹ்ர்தயத்தில் பண்ணி அருளா நின்றான்-
முதலிலே தான் என் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் –அசத் சமனாய் இருந்துள்ள என்னையும் உளனாம்படி பண்ணி –
தன்னை மறக்க ஒண்ணாத பிரேமத்தை விளைத்து – அதுக்கு விஷய பூதனாய் -தன்னுடைய விடாயும் தீர்ந்தான் என்றது ஆய்த்து –
தன் திருவடிகளில் போக்யதையை எனக்கு அறிவித்த பின்பு -பரம பதத்தில் இருப்பை
மாறி -என் நெஞ்சிலே போக ஸ்தானமாய் இருந்தான் –
தாபார்த்தோ ஜல சாயிநம் -என்கிறபடியே திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியைக் காட்டி –என்னுடைய சாம்சாரிகமான
தாபத்தை தீர்த்த பின்பு திருப் பாற் கடலில் கிடையை மாறி என் நெஞ்சிலே கண் வளர்ந்து அருளி தன் விடாய் தீர்ந்தான் –
இப்படி என் பக்கலிலே பண்ணின வ்யாமோஹம் என்னால் மறக்கலாய் இருக்கிறது இல்லை -என்கிறார் –

சிந்திப்பே அமையும் -என்னக் கடவது இறே-ஆஸ்ரயணத்தில் ஆயாசம் இன்றிக்கே ஒழிந்தால் -பலமும் ஷூத்ர மாய் இருக்குமோ என்னில்
வானின் மேல் சென்று சென்று – அர்ச்சிராதி மார்க்கத்திலே போய் அபுநா வ்ர்த்தி லஷணமான பரமபதத்திலே சென்று
சென்று சென்று –-தேசப் ப்ராப்தியில் காட்டில் வழிப் போக்குக்கு தானே இனிதாய் இருக்கிறபடியை சொல்லிற்று ஆகவுமாம் –

வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே –தேவதாந்தரங்கள் ரஷகர் ஆனாலும் ஆபத்துக்கு உதவாதவர்கள்
ஈஸ்வரன் முனிந்த தசையிலும் ஆபத்சகன் என்றது ஆய்த்து– க்ருபயா பர்ய பாலயத் –
விரோதி நிரசந சீலனான தசரதாத்மஜன் பிரசன்னரானார்க்கு அல்லது
ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய அதிகாரத்தாலே நின்றாருக்கும் நித்யமான மோஷத்தை ப்ராபிக்க விரகு இல்லை

அறிந்து அறிந்து -என்று–சாஸ்திர ச்ரவணத்தாலும் -ஆசார்ய உபதேசத்தாலும்

இந்த்ரியங்களுக்கு விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து – பகவத் விஷயமே விஷயமாக்கி –தத் விஷய ஜ்ஞானம்
பக்தி ரூபாபன்ன ஜ்ஞாநமாய் அது பரபக்தியாதிகளாய் பழுத்தால் அல்லது சர்வேஸ்வரனை லபிக்க விரகு இல்லை -ஆய்த்து –

திரு அஷ்டாஷரத்தை வாயாலே உச்சரிக்குமவர்கள் – வல்லர் வானம் ஆளவே –
அர்த்தத்தை மனசாலே அனுசந்தித்தும் –வாயாலே சப்தத்தை உச்சரித்தும் –சாரீரமான ப்ரணாமத்தை பண்ணியும்
இப்படி மநோ வாக் காயங்களாலே பஜிக்குமவர்கள் இட்ட வழக்கு பரம பதம் -என்கை-
அவன் பெயர் எட்டு எழுத்தும் –
ஷீராப்தி நாதன் திருநாமமான திருவஷ்டாஷரத்தையும் –ஏஷ நாராயண ச ஸ்ரீ மான் -என்றும் –
நாராயணனே நமக்கே பறை -தருவான் என்றும் –பவான் நாராயணோ தேவ -என்றும் –
தர்மி புக்க விடம் எங்கும் இத்திருநாமம் பிரதம அபிதாநமாய் இருக்கும் –

உன்னுடைய விரோதி நிரசன சீலதயை அனுசந்தித்து உன் பக்கலிலே ப்ரேமம் உடையாருக்கு அல்லது
நித்ய ஸூரிகளோடு ஸத்ர்சராய் தேவரீரை அனுபவிக்கப் போமோ -என்கிறார் –

ஆஸ்ரிதருக்கு திருவேங்கடமுடையான் திருவடிகளே ஆஸ்ரயணீய ஸ்தலம்
திருவேங்கடமுடையானுக்கு ஆஸ்ரயணீய ஸ்தலம் திருமலை –

எத்திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே —
சரீரத்தோடே இருக்கும் இருப்பிலும் –பரம பதத்தில் இருக்கும் இருப்பிலும் –உத்க்ரமண தசையிலும் –
அர்ச்சிராதி மார்க்கம் என்கிற அவஸ்தா விசேஷங்களிலும் –ஸூ கமேயாய் இருக்கும் –
எத்திறத்தும் இன்பமான சர்வேஸ்வரனான -உன்னுடைய – ஸ்வரூப ரூப குண விபூதிகளை அநுபவித்து பிரகார பேதங்களிலும்
த்வத் அநுபவத்தால் வந்த ஸூகமே யல்லது இல்லை-விஷயாந்தர ப்ராவண்யாம் எங்கனம் யாகிலும் துக்கமே யானவோபாதி
பகவத் பராவண்யம் எங்கனம் யாகிலும் ஸூகமேயாய் இருக்கும் -என்கை –

வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே-
விச்சேதம் இல்லாதபடி தேவரீர் திருவடிகளிலே வைத்த ப்ரேமம் சுகத்துக்கு சாதனமாய் இருக்கை யன்றிக்கே தானே சுகமாய் இருக்கும் –

ஓர் அன்பிலா அறிவிலாத நாயினேன் –
அவன் ஸ்வரூப ரூப குண விபூதிகளிலே ப்ரேம கந்தம் இன்றிக்கே – அதுக்கடியான ஜ்ஞான லேசமும் இன்றிக்கே ஹேயனான நான் –
ப்ரேம கந்தம் இன்றிக்கே -அது இல்லை என்கிற அறிவும் இல்லாத -என்றுமாம் –
பிறந்த பின் மறந்திலேன் -என்கிற ஜ்ஞாநத்தையும்-நடந்த கால்கள் நொந்தவோ -என்கிற பிரேமத்தையும் -உபாயம் -என்று இருக்கிலர்
ஈஸ்வரன் நினைவே தனக்கு உபாயம் -என்று இருக்கிறார் –
எதிர் அம்பு கோக்க பண்ண வல்லை -பிராதிகூல்யத்தில் வ்யவஸ்திதனான சிசுபாலனுக்கு சாயுஜ்ய ப்ரதனாகவும் வல்லை –
இதுவன்றோ தேவரீர் உடைய ஸ்வாதந்த்ர்யம் -என்கிறார்

அஹங்கார லேசம் உண்டானால் அது நிரஸநீயம் என்று தோற்றுகைக்காக சகடாசூர நிரசநத்தை அருளிச் செய்தார் –
தனக்கு போக்யமான ஆத்மாவுக்கு விஷ ஸம்ஸர்க்கம் போலே நிரஸநீயம் தேக சம்பந்தம் என்று தோற்றுகைக்காக
காளியமர்த்தனத்தை அருளிச் செய்தார்-

புனித –
விஷயாந்தர ப்ராவண்யத்தால் அசுத்தராய் -தாம்தாம் பக்கல் சுத்தி ஹேது இன்றிக்கே இருக்கும் குறைவாளரையும்
ஸ்வ ஸ்பர்சத்தாலே சுத்தராக்க வல்ல சுத்தியை உடையவன் அல்லையோ
அதாவது –
உத்கர்ஷ்ட ஜன்மம் என்ன –வேத ஸ்பர்சம் என்ன -வேதார்த்த அனுஷ்டானம் என்ன –-இவற்றினுடைய ஸ்தானத்திலே
பகவத் அனுக்ரஹம் நின்று விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து தருகை
நின்னிலங்கு பாதமஅன்றி மற்று ஓர் பற்றிலேன் –
இருட்டு மிக்கதனையும் விளக்கு ஒளி வீறு பெறுமாபோலே-குறைவாளர்க்கு முகம் கொடுக்கையாலே விளங்கா
நின்றுள்ள திருவடிகளை ஒழிய வேறு ஜீவன உபாயத்தை உடையேன் அல்லேன்-
எம் மீசனே-வேறு முதல் இன்றிக்கே அகதிகளான எங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –

நின்னை என்னுள் நீக்கல் –என்றுமே-
சர்வ சக்தியாய் இருந்துள்ள உன்னை –அகிஞ்சனனாய் இருந்துள்ள என் பக்கலில் நின்றும்-ஷூத்ரமான உபாயாந்தரங்களைக்
காட்டி அகற்றாது ஒழிய வேணும் -நான் கலங்கின வன்றும் என்னை விடாது ஒழிய வேணும் –

அரங்க வாணனே –கோயிலுக்கு நிர்வாஹகனாகக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவனே –
தம் தாம் பக்கலிலே முதல் இன்றிக்கே இருக்க -அனுபவத்திலே இழிந்தவர்களுக்கு தேவரீர் அழகாலே –
விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து –தேவரீர் பக்கலில் ஆதரத்தை பிறப்பித்து – அனுபவிக்கைக்காக அன்றோ
கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறது –
போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வாய்த்த அழகன் –என்னக் கடவது இறே
கரும்பு இருந்த கட்டியே –இவருக்கு ருசி பிறப்பித்த உபாத்யாயரைச் சொல்லுகிறது –

1-ப்ராப்தராய் -2–சந்நிஹிதராய் -3–நிரதிசய போக்ய பூதராய்-4- -விரோதி நிரசன சீலராய் -தேவரீர் இருக்க –
5-இத்தலையில் ருசி உண்டாய் இருக்க –நான் இழக்க வேண்டுகிறது என்

வந்து நின்னடைந்து –உய்வதோர் உபாயம் –நல்க வேண்டுமே
ஒரு தேச விசேஷத்திலே வந்து-நிரதிசய போக்யனான உன்னை ப்ராபித்து-அடிமை செய்து -உஜ்ஜீவிப்பதொரு வழியை
நீ எனக்கு –1-ஸ்ரீ ய பதியாய் –2-திவ்ய ஆயுத உபேதனாய் –3-எனக்கு இல்லாதவை எல்லாம் தரக் கடவ-நீயே –
4-எல்லாவற்றுக்கும் உன் கையை எதிர்பார்த்து இருக்கிற எனக்கு-தந்தருள வேணும் –
எனக்கு நல்க வேண்டுமே –
பெற வேண்டுமவை எல்லாவற்றுக்கும் உன் கிருபையை அல்லாது அறியாத எனக்கு-அந்த பக்தியை தேவரீர் தந்து அருள வேணும்
பிரயோஜநாந்த பரருக்கு மோஷ ருசியைப் பிறப்பித்து -தத் சாதனமான பக்தியைக் கொடுத்தருளக் கடவ தேவரீர் –
அநந்ய ப்ரயோஜனனாய் –அநந்ய சாதனனாய் –இருந்துள்ள எனக்கு த்வத் அனுபவ பரிகரமான அந்த பக்தியை தந்து அருளுகை
தேவரீருக்கு அபிமதம் அன்றோ -அத்தை தந்து அருள வேணும் -என்றது ஆய்த்து –

என் நினைவும் -என் செயலும் -அகிஞ்சித்கரம்-உன் நினைவுக்கே பல வ்யாப்தி உள்ளது -என்கை –

அத் திருவடிகளை தஞ்சம் என்று நினைத்து இருக்கிற எனக்கு -ஊனத்தை விளைக்கும்-சரீர சம்பந்தம் ஆகிற
நோயை போக்க நினைத்து இருக்கிற விரகு
ஊனமாகிறது –ஸ்வ ஸ்வரூப விஷயமான ஜ்ஞான சங்கோசமும் –பகவத் ஜ்ஞான சங்கோசமும் –பகவத் அனுபவ சங்கோசமும் –
இவற்றை விளைக்கும் அது இறே தேக சம்பந்தம் –சரீரம் -என்றும் -வியாதி -என்றும் -பர்யாயம் இறே
இத்தால் –வேறு ஒன்றைத் தஞ்சம் என்று இழக்கிறேனோ –சரீரத்தில் ஆதாரம் உண்டாய் இழக்கிறேனோ –

ஸ்ரீ ய பதி-அயர்வறும் அமரர்கள் அதிபதி -ஹேயப் ப்ரத்யநீகன் -விலஷண விக்ரஹ உக்தன் –ஆஸ்ரித சுலபன் -என்று
நிர்தோஷ பிரமாண ப்ரதிபாத்யனான உன் குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை-
வடிவு அழகோடே -இடைவிடாதே நான் பேசுகைக்கு வழியை அருளிச் செய்ய வேணும் –
உன்னுடைய விசேஷ கடாஷத்துக்கு அடியான வாத்ஸல்யாதி குணங்கள் ஒழிய உன் வடிவு அழகே எனக்கு
இம் மநோ ரதத்துக்கு ஹேது என்கை-

ப்ரயோஜநாந்த பரரான இந்த்ராதிகள் உடைய ஆபத்தை ஆயுதத்தாலே அழித்தும்
ஸ்வ அபிமாநத்துக்கு உள்ளே கிடக்கிற பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தை மலையை எடுத்து ரஷித்தும்
இப்படியால் வந்த உன் ஆபத் சகத்வத்துக்கு அல்லது என் நெஞ்சுக்கு வேறு ஒரு ஸ்நேஹம் இல்லை

எம் ஈசனே –-என் நாதனே-விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவான பாபங்களையும் தேவரீர் பக்கலில் பிரேமத்துக்கு
விரோதியான பாபங்களையும் போக்கி இவ்வளவும் புகுர நிறுத்துகைக்கு அடி -இத்தை உடையவன் ஆகை -என்கை-

வீற்று இருந்த போதிலும் – கைங்கர்ய உபகரணங்கள் குறைவற்று இருந்த போதிலும் -என்னுதல்
நிரதிசய ஆனந்த நிர்பரனாய் இருந்த போதிலும் -என்னுதல்
கைங்கர்ய உபகரண சம்பத்தி சங்கல்ப மாத்ரத்திலே உண்டாமது இறே -போக மோஷங்கள் ஏக ஆஸ்ரயத்தில் சம்பவிக்கிலும்-
கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே –
உன்னைக் கூட வேணும் என்னும் யாசை யல்லது வேறு ஒன்றை நெஞ்சால் விரும்புவனோ-

தேவரீர் உடைய சௌலப்யத்தையும் -விரோதி நிரசன சீலத்தையும் பேசி-கால ஷேபம் பண்ணி யல்லது நிற்க மாட்டாமையாலே
யானும் ஏத்தினேன் இத்தனை-இது ஒழிய ஒரு சாதனா புத்த்யா ஏத்தினேன் அல்லேன்

இது தம்மைப் பெறுகைக்கு ஹேது அருளிச் செய்கிறார்-திருப் பாற் கடலிலே படுக்கையோடே -அக்கடல் செவ்வே நின்றாப் போல்
ஸ்ரமஹரமான வடிவோடே -ஆஸ்ரிதர் உடைய ஹ்ர்தயத்தில் சகல தாபங்களும் போம்படி நித்ய வாஸம் பண்ணும் ஸ்வபாவனே –
ஆஸ்ரிதர் உடைய ஹ்ர்தயத்தில் புகுரக் கணிசித்து -திருப் பாற் கடலிலே அவசரப் ப்ரதீஷனாய் வந்து கண் வளர்ந்து அருளி –
ஆசாலேசம் உடையாருடைய ஹ்ர்தயத்தில் ஸ்ரமஹரமாகப் புகுருமவன் ஆகையாலே என்னைப் பொறுத்து நல்க வேணும் -என்கிறார் –

அநந்ய பிரயோஜனரான நம்முடைய துர்மாநாதிகளைப் போக்குவிக்கக் குறை இல்லை –
நீ அவனை ப்ராபிக்கும் பிரகாரம் அவன் இரக்கமே என்று புத்தி பண்ணி இரு
அதாகிறது –அவனை நம் தலையாலே ப்ராபிக்க விரகு இல்லை –
அவன் தானே இரங்கி தன்னைத் தந்து அருள வேணும் என்று வ்யவஸ்திதனாய் இருக்கை-

பாதம் எண்ணியே – அவன் திருவடிகளையே உபாயமாக அனுசந்தித்து – மஹா வராஹமாய் -பிரளய ஆர்ணவத்தின் நின்றும்
பூமியை உத்தரித்தாப் போலே சம்சார ஆர்ணவத்தின் நின்றும் நம்மை உத்தரிக்கும் என்று அத்யவசித்து வணங்கி வாழ்த்தி -என்கிறார்-

புகுந்து நம்முள் மேவினார் –ஷிபாமி -என்கிறபடிய த்யாக விஷயமாம் படி சூழ்த்துக் கொண்ட நம்முடைய நெஞ்சில் –
ஹேய பிரத்யநீகர் ஆனவர் புகுந்து -ஒரு நீராக பொருந்தினார் –
நம்முடைய தண்மை பாராதே –தம்முடைய பெருமை பாராதே –
சர்வ பரத்தையும் தாமே ஏறிட்டுக் கொண்டு செய்வாராக புகுந்து பொருந்தினார் -என்கிறார்

எத்தினால் இடர் கடல் கிடத்தி –நம்முடைய ஹிதம் அறிக்கைக்கு நாம் சர்வஜ்ஞராயோ -அவன் அஜ்ஞனாயோ –
ஹிதத்தை ப்ரவர்த்திப்பிக்கைக்கு நாம் சக்தராயோ -அவன் அசக்தனாயோ –கார்யம் செய்து கொள்ளுகைக்கு நாம் ப்ராப்தராயோ –
அவன் அப்ராப்தனாயோ –தன் மேன்மை பாராதே தாழ நின்று -உபகரிக்குமவனாய் இருக்க – துக்க சாகரத்திலே கிடக்கிறது எத்தினாலே –
ஏழை நெஞ்சமே –பகவத் விஷயத்தில் கை வைப்பதற்கு முன்பு சோகிக்கவும் அறியாதே –
ஆனை கழுத்திலே இருந்தால் போல் இருக்கிற அறிவுகேடு போலே காண்
நம் கார்யத்துக்கு அவன் கடவனான பின்பு இன்று சோகிக்கிற அறிவு கேடும் -என்கை 0

வாட்டமின்றி எங்கும் நின்றதே – ஷூத்ர விஷய வாசனையால் சலிப்பிக்க ஒண்ணாத படி உன்னுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகள் எனக்கு ப்ராப்தமாய் நின்றது –
அவ் விக்ரஹம் தான் ஷாட் குண்ய விக்ரஹம் என்னும்படி குண பிரகாசகம் என்கையாலே குணங்களிலே மூட்டிற்று –
அக்குணங்கள் தான் ஸ்வ ஆஸ்ரயமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தில் மூட்டிற்று –
அஸ் ஸ்வரூபம் தான் ஸ்வ ந்யாம்யமான விபூதியிலே மூட்டிற்று –
ஆக –
என்னுடைய ஆதரத்துக்கு உள்ளே ஸ்வரூப ரூப குண விபூதிகள் -எல்லாம் அந்தர்பூதமாய்த்து -என்கை –

மயக்கினான் தன் மன்னு சோதி –
அபிமதமாய் -அநுரூபமாய் -ஜ்யோதிர் மயமான – திவ்ய மங்கள விக்ரஹத்தை பிரிக்க ஒண்ணாதபடி கலந்தான் –
மயக்கம் -செறிவு – தன்னை ஒழிய எனக்கு ஒரு ஷண காலமும் செல்லாதபடி பண்ணினான் என்கை –
ஆதலால் –இப்படி தான் மேல் விழுந்து இவ்வளவும் புகுர நிறுத்துகையாலே
என்னாவி தான் –தனக்கு அநந்ய சேஷமாய் -ஸ்ரீ கௌஸ்துபம் போலே -அபிமதமுமான என் ஆத்மாவானது –
இயக்கெலா மறுத்து –
அந்யோந்ய கார்ய காரண பவத்தாலே ஒழுக்கறாத -அவித்யா கர்ம வாசன ருசி ப்ரகர்தி சம்பந்தங்களை யறுத்து –
இயக்கறாத பல் பிறப்பில் -என்று காரணமான தேக சம்பந்தகளை சொல்லிற்றாய் –
தத் கார்யமான அஞ்ஞான கர்மங்கள் என்ன – தத் ஆஸ்ரயமான வாசனா ருசிகள் என்ன -இவற்றையும் கூட்டி –
எலாம் –அறுத்து என்கிறார்
அறாத இன்ப வீடு பெற்றதே –
யாவதாத்மபாவி விச்சேதம் இல்லாத –நிரதிசய ஆனந்தமான -கைங்கர்ய ரூப மோஷத்தைப் -பெற்றது

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருமழிசைப்பிரான் வைபவம் —

February 10, 2020

ஸ்ரீ மகாயாம் மகரே மாஸே சக்ராம்சம் பார்கவோத்பவம்
மஹீ சார புராதீசம் பக்திசாரம் அஹம் பஜே

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார்
தொண்டை நாட்டில் உள்ள திருமழிசையில் தை மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் அவதரித்த
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் 216 பாசுரங்களை அருளியவர்.
அவை நான்முகன் திருஅந்தாதி (96 பாசுரங்கள்), திருச்சந்த விருத்தம் (120 பாசுரங்கள்) என்று அழைக்கப் படுகின்றன.

ஸ்ரீ முதல் ஆழ்வார்களும், ஸ்ரீ திருமழிசை ஆழ்வாரும் தொண்டை நாட்டினர். நால்வரும் அந்தாதி பாடி அருளியவர்கள்; சமகாலத்தவர்கள்.

தொண்டை நாட்டில் உள்ள ஸ்ரீ திருமழிசை என்ற ஊரில் பிறந்தவர். கடலுக்கு மேற்கில் காஞ்சிபுரத்துக்குக் கிழக்கில் உள்ள ஊர்.
“தொண்டை நன்னாடு சான்றோருடைத்து” என்கிறார் ஒளவையார்.
இவரது பிறப்பும் கண்ணனின் அவதாரத்தை ஒத்தது.
தேவகியின் மகனாகப் பிறந்து, யசோதையின் அரவணைப்பில் வளர்க்கப் பெற்றது போல ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் வளர்ந்தார்.
ஸ்ரீ திருமாலின் அடியவராகத் திகழ்ந்த பார்க்கவ முனிவருக்கும், கனகாங்கி என்னும் தேவமங்கைக்கும்,
ஸ்ரீ திருமழிசை என்ற திருத்தலத்தில் பெருமானின் ஸ்ரீ சுதர்சனச் சக்கரத்தின் அம்சமாய் அவதரித்தவர் ஸ்ரீ திருமழிசையாழ்வார்.
கை, கால்கள் இன்றிப் பிறந்ததால் பெற்றோர் இக்குழந்தையை ஒரு பிரம்புப் புதரின் கீழ் போட்டுவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்பு பிரம்பு அறுக்கும் தொழில் செய்யும் திருவாளன், அவரது மனைவி பங்கயச் செல்வி என்பவர்களால்
வளர்க்கப் பெற்றதாக குருபரம்பரை கூறுகிறது.

இவர் ஸ்ரீ திருமழிசையில் பிறந்ததால் ஸ்ரீ திருமழிசையாழ்வார் என்றும், ஸ்ரீ பக்திசாரர், ஸ்ரீ திரு மழிசைப் பிரான் என்றும் அழைக்கப்பட்டார்.
ஆழ்வார் என்ற பெயரை பெருமாள் ஏற்றுக் கொண்டதாக ஸ்ரீ ஆராவமுதாழ்வார் என்று கூறுவர்.

இவர் மங்களாசாசனம் செய்த திருத்தலங்கள் 17.
1) திரு அரங்கம் 2) திரு அல்லிக்கேணி 3) திரு அன்பில் 4) திரு ஊரகம் (காஞ்சிபுரம் அருகில்) 5) திரு எவ்வுள் (திருவள்ளுர்)
6)திரு கபிஸ்த்தலம் 7) திருக் குடந்தை 8) திருக் குறுங்குடி9) திருக் கோட்டியூர்10) திருத் துவாரபதி 11) திருக் கூடல்
12) திருப் பரமபதம் 13) திருப் பாடகம் 14) திருப் பாற்கடல் 15) திரு வடமதுரை 16) திரு வெக்கா 17) திரு வேங்கடம் ]

————-

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் – யான்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை
சிந்தாமல் கொண்மின்நீர் தேர்ந்து–(3484)

பிரமனை நாராயணன் படைத்தான்; பிரமன் சங்கரனைப் படைத்தான். எனவே நாராயணனே முதற்பொருள் என்பதை நான்
இவ்வந்தாதியின் மூலம் அறிவிக்கிறேன்; நீங்கள் இதனைக் குறைவற மனத்தில் கொள்ளுங்கள் எனத் தன் நோக்கத்தை விளக்கி,
ஸ்ரீ நான்முகன் திருவந்தாதியைத் தொடங்குகின்றார், ஸ்ரீ திருமழிசைப்பிரான்.

அடுத்தே, எப்படி இருப்பினும் எத்தவம் செய்தாருக்கும் ‘அருள் முடிவது ஆழியானிடம்’ என்கின்றார் (3485).

மெய்ப்பொருள்-ஸ்ரீ நான்முகன் திருவந்தாதியில் ‘எல்லாப் பொருள்களுக்கும் சொல்லாகி நின்றவனைத் தொகுத்துச் சொல்வேன்’ (3487) என்பர்.
அவனை ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அறிந்தது போல் யாரும் அறியவில்லையாம்.

பாலிற் கிடந்ததுவும் பண் டரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதும் ஆரறிவார் – ஞாலத்
தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளைஅப்பில்
அருபொருளை யானறிந்த வாறு?– (3486)

ஆல்இலை மேல் துயின்றவனை வழிபட,
வாழ்த்துக வாய்;காண்க கண்;கேட்க செவி மகுடம்
தாழ்ந்து வணங்குமின்கள் தண்மலராய் -(3494:1-2)

இருகரம் கூப்பி, வாய் அவன் புகழ்பாட, கண் அவன் திருஉருவைக் காண, செவி (காது)யில் அவன் அவதாரத்தைச் சொல்லும்
பாசுரங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பர்.
ஏனென்றால் ‘நாக்கொண்டு மானிடம் பாடேன்’ (3558) எனச் சொன்னவர் ஸ்ரீ திருமழிசை ஆழ்வார்.

செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்
புவிக்கும் புவியதுவே கண்டீர் – கவிக்கு
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான் (3552)

(புவி = பூமி, புவி = இடம்) என யாதுமாகி நின்ற மாயனை மீண்டும் மீண்டும் கவிப்பொருளாக்கிக் கைகூப்பி வணங்குகின்றார்.

வீடுபேறு அடையும் வழி அறியாது உடலை வருத்தி, எலும்புக்கூடு போலத் தோற்றம் உருவாகும்படி தவம் புரிந்து வாழவேண்டாம்.
வீடுபேற்றைக் கொடுக்க வல்லவன், வேத முதற் பொருளான நாராயணன் தான் (3496) என வீடுபேறு பெறும் வழி காட்டுகின்றார்.

பூதங்களும் புனிதனும்
‘வானும் தீயும் கடலும், மலையும் கதிரும் மதியும் கொண்டலும் உயிரும், திசை எட்டும், இந்த உலகமும்
திருமாலின் வெளிப்பாடுதான்’ (3520) என இயற்கை அனைத்தையும் அவனாகவோ
அல்லது அவன் படைப்பாகவோ காண்கின்றார் ஆழ்வார்.

குலங்களாய ஈரிரண்டி லொன்றிலும் பிறந்திலேன்
கலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்
புலன்களைந்தும் வென்றிலேன், பொறியிலேன்,புனித! நின்
இலங்குபாத மன்றி மற்றோர் பற்றிலேனெம் ஈசனே!– (841)

மேற்குலங்களில் பிறத்தலும் கலைகளில் சிறத்தலும் ஐம்பொறிகளை வெல்லுதலும் ஆகிய சிறப்புகள் ஏதும் எனக்கு இல்லை.
உன் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றையும் நான் அறியேன் என்று தம் இயலாமையையும் அளவில்லாத பக்தியையும்
ஸ்ரீ ஆழ்வார் தம் ஸ்ரீ திருச்சந்த விருத்தத்தில் குறிப்பிடுகிறார்.

பாம்பணையில் துயில் கொண்டிருக்கும் நாதன் தமக்குக் கண்ணாக இருந்து நெறிப்படுத்துபவன் எனச் சொல்லும் திருமழிசை ஆழ்வார்,

ஊனில்மேய ஆவிநீ; உறக்கமோடு உணர்ச்சிநீ
ஆனில்மேய ஐந்தும்நீ: அவற்றுள்நின்ற தூய்மைநீ
வானினோடு மண்ணும்நீ; வளங்கடற் பயனும் நீ
யானும்நீ, அதன்றி எம் பிரானும் நீ; இராமனே! (845)

(ஊனில் = உடம்பில், ஆனில் மேய ஐந்தும் = பசுதரும் பயன்கள்-பால், தயிர், நெய், கோமியம், சாணம்,
கடற்பயன் = அமுதம், பவழம் போன்றன) என்று பாடி ‘உன்னை என்னிலிருந்து பிரித்து விடாதே’ என வேண்டுகிறார்.

பேசு, கேசனே!–காட்டில் நடந்து கால்களும், ஏனமாய் உலகைச் சுமந்து உடலும் நொந்ததால்
ஸ்ரீ திருக்குடந்தையில் துயில் கொண்டாயோ என வினாவுகின்றார்.

நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞான மேனமாய்
இடந்தமெய் குலுங்கவோ? இலங்குமால் வரைச்சுரம்
கடந்தகால் பரந்தகாவி ரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசுவாழி கேசனே! (812)
(ஏனம் = வராக அவதாரம்) எனத் திருமாலின் அருளிச் செயல்களுக்குக் காரணம் கற்பிக்கின்றார் ஆழ்வார்.

எல்லாம் நெஞ்சுள்ளே-
ஸ்ரீ திருமழிசை பிறக்கும் முன்பு ஸ்ரீ திருவூரகத்தில் நின்றும்,ஸ்ரீ திருப்பாற்கடலில் இருந்தும், ஸ்ரீ திருவெஃகாவில் கிடந்தும்
அருளிய ஸ்ரீ திருமால், பிறந்தபின் தம் நெஞ்சிலே எல்லாக் கோலமும் கொண்டருளினார் என்கிறார் அவர். எப்படி?

அன்றுநான் பிறந்திலேன்; பிறந்தபின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததுமென் நெஞ்சுளே (815)
என்பர். பிறந்த உயிர் அழிவது தெரிந்திருந்தும் இந்த உலகத்தில் உள்ள மக்கள் ஏன் இறைவனை எண்ணி
வாழ முடியாமல் உள்ளனர் என வினவுகின்றார் (817).

கால் வலையில்படுதல்
வீடுபேறு அடையும் வழி தெரியாது உடலை வருத்தி, தவம்புரிந்து அலைந்து திரிய வேண்டாம்.
வீடுபேறு கொடுக்கவல்ல மெய்ப்பொருளும் வேதமுதற் பொருளும் விண்ணவர்க்கு நற்பொருளும்
நாராயணன் தான் (நான்முகன் திருவந்தாதி – 3496) என வழிகாட்டுகின்றார். அந்த வழி மிக எளிது.
பல மலைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது ஸ்ரீ திருவேங்கடமலையைச் சொன்னேன்.
இதனால் வீடுபேறு உறுதி என்னும் நிலையை அடைந்தேன். அதை இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.

வெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் – (3523)

அவதாரம்
‘ஆமையாகி ஆழ்கடல் துயின்ற ஆதி தேவன்’ எனக் கூர்ம அவதாரத்தைப் (765, 771) போற்றும் ஸ்ரீ ஆழ்வார்
ஒவ்வொரு அவதாரத்திற்கும் உள்ள பெருமையாகக் கூறுவனவற்றுள் சில:

ஸ்ரீ வாமனன் அடியினை வணங்கினால் ‘ஞானமும் செல்வமும் சிறந்திடும்! ஸ்ரீ திருமாலைப் போற்றினால் தீவினைகள் நீங்கும் (825),
அவன் ‘விண் கடந்த சோதி, ஞான மூர்த்தி, பாவநாச நாதன்’ (778), விண்ணின் நாதன் (798), கடல் கிடந்த கண்ணன் (844),
வேதகீதன் (868), சாம வேத கீதன் (765) எனப் போற்றிப் புகழ்கின்றார்.
காளிங்கன் என்னும் பாம்பின்மேல் நடனம் ஆடியவன்; குடக்கூத்தாடிய கொண்டல் வண்ணன்,
கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்தவன். விளங்கனி வடிவில் வந்த அரக்கனைக் கொன்றவன் (789).

ஆய்ச்சிபாலை யுண்டு மண்ணை யுண்டு வெண்ணெயுண்டு,பின்
பேய்ச்சிபாலை யுண்டு பண்டொ ரேனமாய வாமனா! (788:3-4)
என ஸ்ரீ வாமன அவதாரத்தைச் சொல்லும் ஆழ்வார் ஸ்ரீ வராக அவதாரத்தைச் சுட்டி விளிக்கின்றார்.
‘உரத்தில் (மார்பு) கரத்தை (கை) வைத்து நகத்தால் கீறியவன், ஸ்ரீ வாமனன் ஆகி மண் இரந்தவன் (776) என
ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரத்தையும் ஸ்ரீ வாமன அவதாரத்தையும் ஒரு பாசுரதத்தில் சுட்டுவர்.

ஸ்ரீ திருமால் உள்ளங்கையில் ஆழி (சக்கரம்), சங்கு, தண்டு, வில், வாள் ஏந்தியவன் (775, 848, 857).
கூனியின் முதுகின் மீது வில்லுண்டை எறிந்த நாதன் வாழ்கின்ற ஊர் ஸ்ரீ திருவரங்கம்.

கொண்டை கொண்ட கோதைமீது தேனுலாவு கூனிகூன்
உண்டைகொண் டரங்கவோட்டி உள்மகிழ்ந்த நாதனூர் (800)
‘இலங்கை மன்னன் சிரங்கள் பத்தும் அறுத்து உதிர்த்த செல்வர்’ வாழும் இடம் ஸ்ரீ திருவரங்கம் ஆகும்.
அரங்கமென்பர் நான்முகத் தயன்பணிந்த கோயிலே(802)
இலங்கையை அழித்த ஆழியானை நான்முகன் வந்து பணிந்த ஊர் அரங்கம் எனப் பாசுரம் செய்கின்றார்
ஸ்ரீ திருமழிசையாழ்வார், ஸ்ரீ திருச்சந்தவிருத்தில்.

திவ்ய தேசங்களின் புகழ்பாடும் அடியார் பழைய புராணக் கதைகளைப் பொதிந்து புதிய விளக்கம் கொடுக்கின்றார்.

கூடல் இழைத்தல்
தலைவனைப் பெற விரும்பும் தலைவி கூடல் இழைத்தல் அகப்பொருள் மரபாகும்.
இங்கு ஸ்ரீ நான்முகன் திருவந்தாதியில் ஸ்ரீ திருமழிசையாழ்வார் நாயகி நிலையில் நின்று,

அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண இழைப்பன் திருக்கூடல் கூட (3522)
எனப் பாடுவது, மானுடக் காதல் இறைவன் மீது கொண்ட காதலாக மாற்றம் செய்யப் பெற்றதைக் காட்டுகின்றது.

நிலையாமை
வாள்களாகி நாள்கள்செல்ல நோய்மைகுன்றி மூப்பெய்தி
மாளும்நாள்அது ஆதலால் வணங்கிவாழ்த்தென் நெஞ்சமே! (863)

எனப் பிறப்பு இறப்பு நீங்க, உடம்பின் நிலையாமையைச் சொல்லி மனத்தை மாயன்பால் வைக்க வேண்டுகிறார்.
வீடுபேறு தருபவன்; வெற்றி அளிப்பவன்; ஞானம் ஆனவன், அத்தலைவன்.

அத்தனாகி, யன்னையாகி யாளுமெம்பி ரானுமாய்
ஒத்தொவ்வாத பல்பிறப் பொழித்துநம்மை ஆட்கொள்வான் (866:1-2)
அச்சம், நோய், அல்லல் (துன்பம்), பல்பிறப்பு, மூப்பு (முதுமை) ஆகியவற்றை அகற்றி வான் ஆளும் பேறு கொடுப்பான்.
நாகணையில் (பாம்பணை) கிடந்த நாதன் என்பர்.

பலபிறவிகள் எடுத்த தம் உடம்பை, அவனே உய்யக் கொள்வான்.
‘என் ஆவி தான் இயக்குஎலாம் அறுத்து அறாத இன்பவீடு பெற்றதே’ (871) எனத் திருச்சந்த விருத்தத்தின் இறுதிப் பாசுரம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வாரின் பற்று அறுத்த நிலையைக் காட்டுகின்றது.

ஒன்று சாதல், நின்றுசாதல், அன்றியாரும் வையகத்து
ஒன்றிநின்று வாழ்தலின்மை கண்டுநீச ரென்கொலோ
அன்று பாரளந்த பாத போதை யுன்னி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே? (812)

என்னும் பாசுரம் தம்முயிர் போலவே பிற உயிரும் உய்திபெறும் வழியை நாட வேண்டும் என
ஏங்கும் ஆழ்வாரின் விழைவைக் காட்டுகின்றது.

மறம்துறந்து வஞ்சமாற்றி யைம்புலன்க ளாசையும்
துறந்துநின் கண் ஆசையே தொடர்ந்துநின்ற நாயினேன் (849)

எனப் பாடி மீண்டும் பிறவாமல் இருக்கும் பேறும், உன்னை மறவாதிருக்கும் பேறும் வேண்டும் என்பர்.

——————

சிவவாக்கியம்

இரண்டுமொன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே
சுருண்டு மூன்று வளையமாய் சுணங்கு போல் கிடந்ததீ
முரண்டெழுந்த சங்கினோசை மூல’நாடி ஊடுபோய்
அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே!–98

நாலொடாறு பத்து மேல் நாலு மூன்றும் இட்டபின்
மேலு பத்து மாறுடன் ஊமேதிரண்ட தொன்றுமே
கோலி அஞ்செழுத்துடே குருவிருந்து கூறிடில்
தோலி மேனி நாதமாய்த் தோற்றி நின்ற கோசமே–174

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறும் ஓசையாய் அமர்ந்த மாயமாயம் மாயனே–270

எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டும் ஒன்றும் மூன்றுமாகி நின்ற ஆதி தேவனே
எட்டுமாய் பாதமோடு இறைஞ்சி நின்ற வண்ணமே
எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே–271

பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடும் ஒன்பதாய்
பத்து நாற்திசைக்கு நின்ற நாடு பெற்ற நன்மையாய்
பத்துமாய் கொத்தமோடும் அத்தலம்மிக் காதிமால்
பத்தர்கட்கலாது முத்தி முத்தி முத்தி யாகுமே–272

திருச்சந்த விருத்தம்

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறொடாசை ஆய ஐந்தும் ஆய ஆய மாயனே -2 (சிவவாக்கியர் 270)-

எட்டும் எட்டும் எட்டுமாய் ஓரேழும் ஏழும் ஏழுமாய்
எட்டு மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதிதேவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்று அவன்பெயர்
எட்டெழுத்தும் ஓதுவார்கள் வல்ல வானம் ஆளவே –77 (சிவவாக்கியர் 271)

பத்தினோடு பத்துமாய் ஓரேழினோடு ஓர் ஒன்பதாய்
பத்தினால் திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்
பத்தினாய தோற்றமோடு ஓராற்றல் மிக்க ஆதிபால்
பத்தராம் அவர்க்கல்லாது முத்தி முற்றலாகுமே? –79 (சிவவாக்கியர் 272)

இதுபோல் நிறைய ஒற்றுமைகளைப் பார்க்க முடிந்தது. ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் 4700 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகவும்,
ஆரம்பத்தில் சிவ வாக்கியராக இருந்தவர் கடைசியில் ஸ்ரீ திருமழிசை யாழ்வாராகினர்

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் இவ்வுலகத்தில் இருந்தது 4700 ஆண்டுகள்.
அதிலே துவாபர யுகத்திலே 1100 ஆண்டுகளும், கலியுகத்திலே 3600 ஆண்டுகளுமாக வாழ்ந்திருக்கிறார்
என்று “பன்னீராயிரப்படி” வியாக்யானம் தெரிவிக்கிறது.
தனது காலத்திலே, ஆழ்வார் சமணம், பௌத்தம், சைவம் என பல்வேறு சமயங்களையும் கற்று,
அந்த சமயத்தின் கோட்பாடுகள், அவற்றைச் சார்ந்த நூல்கள் ஆகிய அனைத்திலும் புலமை பெற்றவராய் இருந்தார்.

“சாக்கியம் கற்றோம் சமணமும் கற்றோம் அச் சங்கரனார்
ஆக்கிய ஆகமநூலும் ஆராய்ந்தோம்” என்று உரைத்தார்.

சைவ மதத்தில் புகுந்து, சிவ வாக்கியராய் இருந்து சிவனைப் போற்றித் துதிகள் பாடி, அதிலும் தான் காணவேண்டிய வஸ்து கிடைக்காமல்,
பின்னர் ஸ்ரீ பேயாழ்வாரால் திருத்தப்பட்டு, எம்பெருமானே சிறந்த தெய்வம் என்று உணர்த்தப்பெற்று, ஸ்ரீ வைஷ்ணவரானார் .

—————-

ஸ்ரீ திருமழிசையார்வார் பற்றி பல கதைகள் உண்டு; கணி கண்ணனைப் பற்றிய கதை முக்கியமானது.

ஆடவர்கள் எங்கன் அன்று ஒழிவார் வெக்காவும்
பாடகமும் ஊரகமும் பஞ்சரமா நீடிய மால்
நின்றான் இருந்தான் கிடந்தான் இது வன்றோ
மென்றார் பொழில் கச்சி மாண்பு –ஸ்ரீ கனி கண்ணன் மன்னனிடம் பாடிய பாடல்

இவரது சீடனான ஸ்ரீ கணி கண்ணன் என்பவன் பல்லவ மன்னனின் ஆணைப்படி, ஸ்ரீ கச்சியை விட்டு வெளியேறிய போது,
ஸ்ரீ திருமழிசை ஆழ்வாரின் பாட்டுக்கு ஏற்ப ஸ்ரீ திருவெஃகாவில் பள்ளி கொண்டிருந்த பெருமான்,
தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு இவர் பின் சென்றாராம். பிறகு மனம் வருந்தி மன்னன் மன்னிப்புக் கோரியவுடன்,
இவரது வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஊர் திரும்பித் தன் பைந்நாகப் பாயை விரித்துப் பள்ளி கொண்டதாகக் கூறுவர்.
இந்தக் கதையின் ஆதாரம் ஸ்ரீ திருமழிசை பாடியதாக சொல்லப்படும் இரண்டு தனிப் பாடல்கள்:

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்.–என்று முதல் பாட்டுக்கு ஸ்ரீ பெருமாள் எழுந்து செல்ல, சமாதானமானதும் அதைச் சற்றே மாற்றி

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் துணிவுடைய
செந்நாப் புலவரும் செலவொழிந்தான் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் படுத்துக்கொள்.–என்று முடியுமாறு பாட, திரும்ப வந்து விட்டாராம்.

அதே போல் பெற்ற தாயின் பாலை இவர் அருந்தாது, வளர்த்த தாயின் பாலையும் மறுத்து,
தன்பால் பரிவுடன் நின்ற உழவர்குல முதியவர் ஒருவர் கொடுத்த பாலை அருந்தி வளர்ந்தார் என்பதை

எந்தையே வினையேன், தந்த இந்தத் தொள்ளமுதினை அமுது செய்க என்று,
சிந்தையோடு அவன் பரவிட, அவன் அருள் செய்தே
அந்த நற்சுவை அழிழ்தினை அமுது செய்தனனால்–என்று திவ்வியசூரி சரிதம் ( பாடல் 57 ) சொல்கிறது.

———–

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார், ஸ்ரீ திருக்குடந்தை ஸ்ரீ ஆராவமுதனை ஸேவிக்க விரும்பி, ஸ்ரீ திருக்குடந்தை செல்லும் வழியில்,
பெரும்புலியூர் என்ற இடத்தில் ஓய்வெடுக்க தங்கினார். அங்கு சில அந்தணர்கள் வேதம் ஓதிக்கொண்டிருந்தனர்.
வேற்று மனிதர் ஒருவர் வந்து அமர்ந்ததைக் கண்ட அந்த அந்தணர்கள் வேதம் ஓதுவதை நிறுத்திக் கொண்டனர்.
இதனை உணர்ந்து கொண்ட ஆழ்வாரும் அவ்விடத்தை விட்டு கிளம்ப, அந்தணர்கள் மீண்டும் வேதம் ஓத விழைந்தனர்.

ஆனால் அவர்கள் எந்த இடத்தில் தாங்கள் நிறுத்திய வேத மந்திரத்தை தொடங்குவது என்பது புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.
இதனை கண்ட ஸ்ரீ திருமழிசை ஆழ்வார், அவர்கள் தொடங்க வேண்டிய
ஸ்ரீ கிருஷ்ணாநாம் வரீஹீனாம் நக நிர்ப்பின்னம் -மந்திரத்தை
உணர்த்த ஒரு விதையை எடுத்து அதனை உரித்து காண்பித்து,
பூடகமாக எந்த இடத்தில் அவர்கள் வேத மந்திரத்தை தொடங்க வேண்டும் என்று சைகை காட்டினார்.
தங்கள் தவறினை புரிந்து கொண்ட அந்த அந்தணர்கள் , ஸ்ரீ திருமழிசை ஆழ்வாரிடம் மன்னிப்பு கேட்டு,
அவரையும் வேத கோஷ்டியில் கலந்து கொள்ள வேண்டினர்.

பெரும்புலியூர் வேதியர் யாகம்
ஸ்ரீ திருமழிசையாழ்வார் அவ்வூரில் பிட்சை பெறும் பொருட்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வூரில் கோயில் கொண்டிருந்த ஸ்ரீ திருமால் விக்கிரகத்தின் முகம் அவர் செல்லும் திசைகளில் எல்லாம்
திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டு அர்ச்சகர்கள் பெரும் வியப்பெய்தினார்கள்.
வேதியர் சிலரிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அவர்களுக்கு அது வியப்பை அளித்தது.
அவர்கள் யாகசாலைக்குச் சென்று அங்கு வேள்வித் தலைவராக யாகம் தொடங்கும் பெரும்புலியூர் அடிகளிடம் எடுத்துரைத்தார்கள்.
பெரும்புலியூர் அடிகள் பெருமான் இவ்வாறு செய்வதன் காரணத்தை உணர்ந்தார்.
யாகசாலையை விட்டுச் சென்று ஸ்ரீ திருமழிசையாரை அடைந்து, அவருடைய காலில் விழுந்து வணங்கினார்.
அவரை யாகசாலை, உன்னதமான பீடத்தில் அமரச் செய்து உபசரித்தார். யாகம் தொடங்கியது.
வேள்வித் தலைவர் முதலாவதாகச் செய்ய வேண்டிய பூஜையை ஸ்ரீ திருமழிசையாருக்குச் செய்தார்.
அப்போது வேள்விச் சடங்குகள் செய்வதற்கு அமர்ந்திருந்த வேதியர் சிலர், “நான்காம் வருணத்தானுக்கு அக்கிர பூஜை செய்வதா?”
என்று ஆத்திரப்பட்டார்கள். பெரும்புலியூர் அடிகள் அதைக் கண்டு மனம் வருந்திக் கண்ணீர் விட்டார்.

இதைக் கண்ட ஸ்ரீ திருமழிசையாழ்வார், அவர்களுக்கு புத்தி புகட்ட எண்ணி, ஸ்ரீ திருமகள் நாதனை நோக்கி,
“சக்கரத்தைக் கையில் ஏந்திய ஸ்ரீ திருமாலே, இக் குறும்பை நீக்கி, என்னையும் உன்போல் ஓர் ஈஸ்வரனாக்க முடிந்தால்,
இவ்வேள்விச் சடங்கர் வாய் அடங்கிட என் உள்ளத்தினுள்ளே நீ கிடக்கும் வண்ணமே என் உடம்புக்கு வெளியேயும்
உன் உருவப் பொலிவை காட்டிவிடு” என்று வேண்டி பின்வரும் பாடலைப் பாடினார்:

அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவது தம் கொலோ?
இக் குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லயேல்
சக்கரம் கொள் கையனே, சடங்கர் வாயடங்கிட
உட் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே!

இப்படிப் பாடியவுடனேயே, பாற்கடலில் பாம்பணையில் தன் திருவடிகளை ஸ்ரீ திருமகளும் ஸ்ரீ பூமகளும் வருடிட,
தான் பள்ளி கொண்ட காட்சியை அனைவரும் காணும் வண்ணம் ஸ்ரீ திருமழிசையாரின் உடல் மீது காட்டியருளினார்.
அந்த அற்புதத்தைக் கண்டு அனைவரும் வியந்தார்கள். தங்கள் குற்றத்தை உணர்ந்து அவரைப் பணிந்தார்கள்.
பிறகு ஸ்ரீ திருமழிசையார் அவர்களிடமும் பெரும்புலியூர் அடிகளிடமும் நன்மொழிகளைக் கூறி விடைபெற்று
ஸ்ரீ திருக்குடந்தை புறப்பட்டுச் சென்றார்.

————

உலகத்தின் பார்வையாலும், வேதத்தின் பார்வையாலும், பக்தியின் பார்வையாலும்,
எம்பெருமான் தானே தன்னைக் கொண்டுவந்து காட்ட,
முதலாழ்வார்கள் மூவரும் எம்பெருமானைக் கண்டு அனுபவித்தார்கள்.
அதாவது, இவர்கள் மூவருக்கும் பகவான் நேரே ஞானத்தை வழங்கி,
தானே பரம்பொருள் என்பதையும் உணர்த்த, அவர்களும் அவனை மனமாரத் தரிசித்து, அவன் புகழைப் பாடினார்கள்.

நான்காமவரான திருமழிசை ஆழ்வார் முதலில் நெடுங்காலம் பிற சமயங்களில் இருந்து விட்டு,
பின்னர் எது உண்மையான பரம்பொருள் என்பது பேயாழ்வாரால் காட்டப்பட்டு,
அதன்பின் இவரும் முதலாழ்வார்களைப் போலவே, அந்த நிலையை அடைந்த போது, தானும் அனுபவித்து மகிழ்ந்தார்.

ஆனால், வேதத்தின் அடிப்படையில், நியமிப்பவன் எம்பெருமான்; நியமிக்கப்படுபவர்கள் ஜீவாத்மாக்கள்
என்கின்ற உண்மைத் தன்மை உலகில் வெளிப்படாமல் மறைந்திருப்பதைக் கண்டு,
இப்படி, எது உண்மையான பரம்பொருள் என்று உலகோர்கள் அறியாமல் இருப்பதைக் கண்டு,
அப்படி அஜ்ஞானத்துடன் இருப்பவர்கள் மீது பரிவு (இரக்கம்) கொண்டு,
அனைத்து வேதங்களின் ரகசியங்களையும் உபதேசித்து அருளினார் (அறிவுறுத்தினார்) தனது திவ்யப் பிரபந்தங்களின் மூலம்.

பெருமான் மீது எத்தனையோ பிரபந்தங்களைப் பாடியுள்ளார் திருமழிசைபிரான்.
ஆனால், இன்று நமக்குக் கிடைத்துள்ளது இரண்டே இரண்டு.
அதாவது,
ஆழ்வார் தானும், தான் இயற்றிய அபாரமான ப்ரபந்தங்கள் அத்தனையையும் காவிரி ஆற்றினில் போட,
இரண்டே இரண்டு பிரபந்தங்களை மட்டும் இந்தக் காவிரி ஆறு அவரிடத்திலே மீண்டும் கொண்டுவந்து சேர்த்ததாம்!
உடனே திருமழிசை ஆழ்வார் நினைத்தார் – இந்த ரெண்டு போதும்,
“ஸ்ரீமன் நாராயணனே பரதெய்வம் என்று உலகத்தாருக்கு அறிவிக்க!
இன்னும் அவர் இயற்றிய அத்தனையும் இருந்திருந்தால் மற்ற சமயங்கள் என்ன பாடுபடுமோ தெரியாது!
இந்த ரெண்டை வைத்துக் கொண்டே இவரை “உறையிலிடாதவர்” என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்றால்,
அவர் பாடினது அத்தனையும் நம் கைக்கு வந்திருந்தது என்றால், எப்படி இருக்கும் என்பதை நாம் அறியோம்.
நமக்குக் கிடைத்த அந்த இரண்டு பிரபந்தங்கள் :
நான்முகன் திருவந்தாதி மற்றும்
திருச்சந்தவிருத்தம் ஆகியவை ஆகும்.

நான்முகன் திருவந்தாதியின் முதல் பாடலிலேயே “நான்முகனை நாராயணன் படைத்தான்”
(பிரமனைப் படைத்தவன் நாராயணன்) என்று சொல்லி,
அவனே ஜகத்காரணன் – அதாவது,
இந்தப் பிரபஞ்சமானது அவனிடத்தில் இருந்துதான் உருவாகிறது என்பதால்,
அப்படிப் பட்டவனே முழுமுதற்கடவுள் ஆவான் என்று உணர்த்தி, இதை “சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து” –
நாராயணனே பரம்பொருள் என்பதை நான் உணர்ந்தேன்; அதை உங்களுக்கும் அறிவிக்கிறேன்;
நீங்களும் நன்கு ஆராய்ந்து, கை நழுவவிடாமல் இதைக் கொள்ளுங்கள்” என்றும் உணர்த்தினார்.

அடுத்து, நான்.திரு.2ஆவது பாடலில்,
“தேருங்கால் தேவன் ஒருவனே என்றுரைப்பர், ஆரும் அறியார் அவன் பெருமை,
ஓரும் பொருள் முடிவும் இத்தனையே” என்று உபதேசித்தார்.
இதன் அர்த்தம், “ஆராய்ந்து பார்த்தால் பரதேவதை ஒருவனே என்று ஞானிகள் கூறுவார்;
யாரும் அவன் பெருமையை (வேதத்தில்) உள்ளபடி யாரும் அறியமாட்டார்கள்.
வேதங்களில் ஆராயப்படும் அர்த்தத்தின் முடிவும் இவ்வளவே” என்பதாகும்.
“ஓரும் பொருள்” – வேத வாக்கியங்களின் அர்த்தம்.
“வேதைஸ்ச ஸர்வை: அஹமேவ வேத்ய:” (கீதை, அத்யாயம் 15, ஸ்லோகம் 15) –
“வேதங்கள் எல்லாவற்றாலும் நானே அறியப்படுகிறேன்” – என்று
கண்ணன் எம்பெருமான் கீதையில் உரைத்துள்ளான்.
ஆழ்வார் இதை நேரே தமிழ்படுத்திக் காட்டினார் “ஓரும் பொருள் முடிவும் இத்தனையே” என்று!

“பரம்பொருள்” (முழுமுதற்கடவுள்) தானே என்பதை கீதை முழுவதும் உபதேசித்துள்ளார் கண்ணன் எம்பெருமான்.
“மாமேகம் சரணம் வ்ரஜ:” – என் ஒருவனையே சரணடை;
அதுமட்டுமே உன் துன்பங்களைத் தீர்க்கும் என்று கீதையின் இறுதியில் வெளியிட்டு,
தன் பரத்வத்தை (தானே பரம்பொருள் என்னும் தத்துவத்தை) உறுதிபடுத்துகிறார்.

மேலும் கண்ணன் எம்பெருமான்,
“யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம், ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத” (கீதை, அத்.15, ஸ்லோ.19) –
எவன் புருஷோத்தமனான என்னைக் கலக்கமில்லாமல் அறிகிறானோ, அவன் என்னை அடைவதற்குரிய வழி அனைத்தையும்
அறிந்தவனாகிறான்; என்னை எல்லாப் பிரகாரங்களாலும் (வழிகள்) பக்தி செய்தவனாகிறான்” என்று உரைத்துள்ளார்.

இப்படி கண்ணன் எம்பெருமான் கீதையில் உரைத்துள்ளதை நன்கு உணர்ந்து, தேர்ந்தால் நல்லது நடக்கும்;
அப்படி உணராமல் இருப்பவர்களை மிகவும் தாழ்ந்தவர்கள் என்று சாடுகிறார் இவ்வாழ்வார்.
“மாயன் அன்று ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில் எதிலராய் மெய்ஞானம் இல்” (நான்.திரு., 71) –
“எம்பெருமான் பாரத யுத்தம் நடந்தபோது அருளிய சரம ச்லோகமாகிய வாக்கைக் கற்காதவர்கள்
எதுவும் இல்லாதவர்களாய் மெய்யான அறிவும் இல்லாதவர்கள் ஆவர்” என்று சாடியுள்ளார்.

இவ்வாழ்வார் அருளியுள்ள ரெண்டு பிரபந்தங்களாலே, தேறின பொருள் எதுவென்று பார்த்தால்,
நாராயணனே பரதெய்வம்! மற்றபேரைப் (மற்ற தெய்வங்கள், தேவதைகள்) பற்றி
நாம் பேசுவதற்குக் கூட யோக்கியதை கிடையாது! என்பது தெளிவாகும்.
இவர் அருளிய “திருச்சந்த விருத்தம்” பிரபந்தத்தில் ஒரு பாடலை ஆராய,
ஆழ்வார் கூற வந்தது என்ன என்பது இன்னும் நன்கு விளங்கும்.

“காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்
பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவரை
ஆணமென்றடைந்து வாழும் ஆதலால் எம்மாதர்காள்
பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்ககிற்றிரே!” (திருச்.விரு., 69)

மேற் பாசுரத்தின் (பாடல்) சுருக்கமான அர்த்தம்:
மற்ற தேவதைகள் காண்பதற்குச் சகியாதவர்களாய் இருக்கிறார்கள்;
அவர்கள் சரித்திரமோ கேட்பதற்குச் சகியாமல் உள்ளது;
அவர்கள் கேட்கும் வரங்களைக் கொடுக்க முடியாதவர்களாய் இருக்கிறார்கள்;
கம்பீரம் அற்றவர்களாய் இருக்கிறார்கள்; இப்படிப் பட்ட பலவீனமான தேவதைகளைத் தேடிப்போய் பற்றி,
ஆதரவாகக் கொள்பவர்கள் “குருடர்கள்” (ஆதர்காள் – குருடர்கள்) ஆவார்கள்.
குருடர்களே! இனியும் அவர்களிடத்தில் சிக்கி உழலாமல், எது பரம்பொருளோ,
எவன் காணக் காண அழகாக இருக்கிறானோ, எவனது சரித்திரம் கேட்கக்கேட்க திகட்டாமல் இருக்கிறதோ,
எவன் கேட்கும் வரம் எதுவாக இருந்தாலும் கொடுக்கக் கூடியவனோ, எல்லாவற்றுக்கும் மேலாக,
எவன் நம் பிறவி என்னும் துயர்க்கடலை வற்றச் செய்து “மோக்ஷம்” என்னும் நற்கதி அளிப்பவனோ,
அவனையே பற்றி உய்யுங்கள் (நல்ல கதியை அடையுங்கள்) என்று அறிவுறுத்துகிறார். இது மேலோட்டமான அர்த்தம்.

இதற்கு “பெரியவாச்சான் பிள்ளை” – இவர் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள்
அத்தனைக்கும் அற்புதமான விளக்க உரை அருளியுள்ளார் (எழுதியுள்ளார்).
கண்ணன் எம்பெருமானே, ஆழ்வார்களின் பாடல்களுக்கு விளக்கம் தருவதற்காக “பெரியவாச்சான் பிள்ளை” என்னும்
மகானாக அவதரித்தார் என்று வைணவப் பெரியோர்கள் இவரைப் போற்றுகின்றனர்.
ஏனென்றால், கண்ணன் எம்பெருமானும் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்;
பெரியவாச்சான் பிள்ளையும் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்.
இனி, இவ்வாசாரியர் (பெரியவாச்சான் பிள்ளை) மேற்பாசுரத்திற்கு அளித்துள்ள விரிவான உரையைக் கீழே அனுபவிப்போம்.

அதாவது, மற்ற தேவர்கள் “பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவர்களே” என்கிறார்.
மேலும், “காணிலும் உருப்பொலார்” என்கிறார்.
மற்ற தேவர்களை (தெய்வங்களை) அப்படியே போய் ஆஸ்ரயித்தாலும் (பற்றினாலும்),
அவர்கள் பார்ப்பதற்கும் அழகாக இல்லை;
பகவான் புண்டரீகாஷன் (தாமரைக் கண்ணன்) – மற்றொருத்தன் (சிவன்) விரூபாக்ஷன்.
பகவான் சந்தனத்தைத் தன் திருமார்பிலே ஈஷிக்கொண்டவன்; சிவனோ சாம்பலை எடுத்து திருமார்பிலே பூசிக்கொண்டவன்.
பகவானுக்கு இருப்பதோ சிறந்த கேஸ வாசம்; சிவனுக்கு இருப்பதோ சடைமுடி!
பகவான் தலையில் இருப்பதோ உயர்ந்த புஷ்பஹாரம்; சிவன் தலையில் இருப்பதோ வெறும் கங்கா தீர்த்தம்!
இவன் ஏறுவது கருடன்மீது; அவன் ஏறுவது ரிஷபமான தாழ்ந்த வலிய பந்தமான ஜந்துவைப் படைத்திருக்கிறான்!
இவனுக்கு அடியார்கள் அத்தனைபேரும் நித்யஸுரிகள்; அவனது அடியார்களோ பேய்க்கணங்களும் பூதகணங்களும்!
இவன் பிடித்திருப்பதோ சிறந்த சங்க சக்கரங்களை; அவன் பிடித்திருப்பதோ ஒண்மழுவான ஆயுதத்தை!

எப்படிப் பார்த்தாலும் இருவருக்கும் ஒருநாளும் ஒத்துவரப்போவது கிடையாது.
ஆகவே “காணிலும் உருப்பொலார்” என்று பாடியுள்ளார் ஆழ்வார்.
சிவனது காட்சி ஒருநாளும் உருப்பெறுவது முடியாது.

“செவிக்கினாத கீர்த்தியார்” -செவிக்கு இனிய கீர்த்தி என்றால்,
பகவானுடைய திரிவிக்கிரம அவதாரமா – வாமன மூர்த்தியாய் உலகளந்தானே –
அந்தப் புகழைக் கேட்பதா அல்லது ந்ருசிம்ஹ மூர்த்திக்காகவா?
ஒவ்வொன்றும் அடியார்க்காக அடியார்க்காக என்று அவன் புகழ் செவிக்கு இனியதான கீர்த்தியாக இருக்கிறது.

“ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம்” என்பது விஷ்ணு ஸஹஸ்ரநாம அத்தியாயத்திலே தெரிவித்ததார்.
“ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:” – “ஸ்தவ்ய:” என்றால் ஸ்தோத்ரம் என்று பண்ணணும்னா, பகவான் ஒருத்தன்தான்;
அதற்கு அருகதை என்றும், மற்ற யாருக்கும் அதற்கு அருகதையே கிடையாது என்று அர்த்தம்.
ஆக, பகவான் ஸ்தவ்யன்! ஆனால், சிவனை என்னவென்று சொல்லி ஸ்தோத்ரம் செய்வது?
இவர் தானும் சுடுகாட்டிலே பஸ்பதாரியாய் சுற்றித் திரிகிறார்;
தன் தகப்பனார் பிரமனின் தலைகளில் ஒன்றைக் கிள்ளித் தன் கையில் வைத்துக் கொண்டிருந்தவர்;
பத்மாசுரனைக் கண்டு பயந்து ஓடிவிட்டார்;
வாணாசுரனையும் கண்டு பயந்து ஓடிவிட்டார்; தன் சிஷ்யனிடத்திலேயே அவர்
“பிள்ளைக்கறி கொண்டுவா என்று! தலையை அறுத்து தனக்கு யாகயஞ்ஞம் செய்” என்று கூறினார்.
இவற்றை எல்லாம் பாடினால் அது கீர்த்தி (புகழ், தோத்திரம்) ஆகுமோ?
அப்படியே இவற்றைப் பற்றிப் பாடினாலும், அது செவிக்குத்தான் இனியதாக இருக்குமா?
இத்தனையும் உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், மறுபடியும் நீங்கள் அவனைத்தான் விடாமல் பிடித்துக் கொள்வோம் என்று
பிடிவாதம் பிடித்தாலும் பிடிக்கலாம்! அவர்களுக்கும் ஆழ்வார் சமாதானம் சொல்லிவிட்டார் –

“பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவரை” என்று பாடி!
அதாவது, இத்தனையும் தாண்டி நீங்கள் அவனையே ஆஸ்ரயிக்க (பற்ற) நினைத்தாலும்,
நீங்கள் கேட்கப் போவதைக் கொடுக்கிற சக்தி மட்டும் அவனுக்குக் கிடையாது!
அது இருக்குன்னாலும் அவனிடத்தில் போய் நீங்கள் ஆஸ்ரயிப்பதில் அர்த்தமுண்டு.
அதுவும் இல்லாதவனைப் போய் ஆஸ்ரயிப்பதில் ஏதானும் இலாபம் உண்டா?
அவனே லக்னனாகத் திரிய, அவனிடத்தில் போய் வேஷ்டி தானம் வேணும்னு கேட்டா தருவானா?
ஒரு கடையில் நிறைய வேஷ்டிகள் அடுக்கப்பட்டிருக்க, அவனிடத்தில் ஒரு வேஷ்டி தானமாகக் கேட்டால் ,
அவன் கொடுத்துவிடுவான். ஒருத்தன் இடுப்பில் ஒன்று ஒன்று கொடியில் மாட்டிவைத்திருக்க,
அவனிடம் ஒரு வேஷ்டி தானமாகக் கேட்டாலும் ஒன்றைக் கொடுத்துவிடுவான்;
இன்னொருத்தன் ஒரே ஒரு வஸ்திரத்தை இடுப்பில் அணிந்து கொண்டிருக்க,
அவனிடம் தானம் கேட்டாலும் அவன் அதையும் கழற்றிக் கொடுத்துவிடுவான்!
ஆனால், சிவனோ, லக்னனாக, அவனே வேஷ்டி இல்லாதவனாக இருக்க,
அவனிடம் போய் வஸ்திர தானம் வேணும்னு கேட்டா, கொடுக்கமுடியலை என்றுமட்டுமில்லை;
அவனும் கொடுக்கபோறதில்லை; நமக்கும் கிடைக்கப் போறதில்லை!
ஐயோ! என்னிடமே ஒன்றுமில்லை; என்னிடத்தில வந்து கேட்கிறாயே! என்று வருத்தமும் படுவான்.
இதனால்தான், ஆழ்வார் தெரிவித்தார்: “அப்படி உங்கள் சிவனுக்கு வருத்தம் ஏற்படும்படி நீங்கள் இருக்கவேண்டாம்!
நீங்கள் ஒவ்வொரு நாளும் அவனிடத்தில் போய் கேட்கக்கேட்க, கொடுக்கமுடியாத ஸ்ரமத்தாலே அவர் துடிக்கபோறார்!
ஏன் வீணாக அவனையும் சிரமப்படுத்திண்டு, உங்களுக்கும் கிடைக்காமால்….!
ஆகையால், சிரமப்படவேண்டாம் என்று தவிர்க்கிறார் ஆழ்வார்.

ஏதோ, ஆழ்வார்கள் வேதங்களைத் தமிழ்படுத்திப் பாடிவிட்டுச் சென்றுவிட்டார்கள்;
அத்தோடு அவர்கள் வேலை முடிந்துவிட்டது என்று இல்லாமல், அவர்கள் மனதில் இருந்த ஆதங்கம் என்ன
என்பதை அணு அணுவாக ஆராய்ந்து, ஏன் இப்படி ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள் என்பதை அறிய,
அவர்களுக்கும் மேலே ஒருபடி ஏறி, அவர்கள் பாடிய பாடல்களுக்கு உரை அளித்துள்ளார் பெரியவாச்சான் பிள்ளை என்னும் பெரியவர்.
இவர் மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால், ஆழ்வார்களின் தேனிலும் இனிய பாடல்களின் அர்த்தம் என்ன என்றே தெரியமாமல் போயிருக்கும்.

வெறுமே ஆழ்வார்கள் பாடலுக்கு உரை அளித்ததோடு நின்றுவிடாமல்,
வேதங்களிலிருந்தும், இதிகாசங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் ஆழ்வார்களின் பாடல்களுக்கு ஏற்ப
என்னென்ன மேற்கோள்கள் (உதாரணங்கள்) காட்ட வேண்டுமோ காட்டித்தான்,
உரை நூலை அருளிச் செய்துள்ளார் பெரியவாச்சான் பிள்ளை.
மேலே உள்ள பாடலுக்கு வேத அர்த்த ரீதியாகவும் இவர் மேற்கோள்கள் காட்டியுள்ளார்.

“திவுக்ரீடாயாந் தாது; ||
திவு விஜிஹீஷாந் தாது; ||
திவு வியவஹாரந்: தாது; ||
திவு த்யுதீந்: தாது; ||
திவு ஸ்துதிந்:தாது; ||
திவு மோதாந்: தாது; ||
திவு மதாந்: தாது; ||
திவு காந்தீந்:தாது; ||
திவு கதீந்:தாது.”
இந்த வேத வாக்கியங்களின் விரிவான அர்த்தங்களையும், மேலே உள்ள “காணிலும் உருப்பொலார்” பாசுரத்தின்
விரிவான அர்த்தங்களையும் ஒன்றுசேர்த்து அனுபவித்தால்தான் ஒரு பாடலுக்கான உரை
(வியாக்யானம், explanations) எவ்வளவு அழகாக அமைந்துள்ளது என்பது புரியும்.

ஏன் உரைநூல் எழுதுபவர் இவ்வளவு சிரமப்படவேண்டும் என்றால், அது நம் பயனுக்காக என்று புரிந்துகொள்ளவேண்டும்.
ஏனென்றால், ஆழ்வார்கள் எம்பெருமானைப் பற்றிய மெய்ஞானத்தைப் பெற்றபின், இதுபோதும் என்று இருந்திருக்கலாம்;
ஆனால், நாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு,
பகவான் அருளிய ஞானத்தைக் கொண்டு, நாமும் அவற்றை அறிந்து, இன்பம் பெறவேண்டும் என்பதாலேயே
பகவானின் திருக்குணங்களைப் போற்றிப்பாடி, அவற்றை நாமும் அறியும்படி பரப்பினார்கள்.

மேலும், ஆழ்வார்கள் பாடிய பாடலின் அர்த்தங்களை நன்கு புரிந்துகொண்டார்கள் முன்பு வாழ்ந்திருந்த வைணவப் பெரியோர்கள்.
சரி; அவர்களுக்குப் புரிந்து அவர்கள் நன்மை பெற்றார்கள் என்று அதை அப்படியே விட்டுவிடாமல்,
அந்த உயர்ந்த, மங்களகரமான பாடல்களின் அர்த்தங்கள் எல்லோரையும் சென்று அடைந்து,
எல்லோரும் நன்மை பெறவேண்டும் என்று அவர்கள் நல்லெண்ணம் கொண்டார்கள்;
அதனால், ஆழ்வார்களின் பாடல்களுக்கு மேலே சொன்னபடி
வேதங்களிலிருந்தும், இதிகாசங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் உதாரணங்களைக் காட்டி,
உரைநூல் (Explanations அண்ட் Commentaries) அருளினார்கள்.
வைணவப் பெரியோர்களால், அவை அனைத்தும் இன்றும் நன்று பாதுகாக்கப்பட்டு,
அனுதினமும் பல இடங்களில் சொற்பொழிவுகளின் மூலமும் பரப்பபடுகின்றன என்றால்,
ஒருபோதும் இவ்வுலகத்தார் உண்மையை அறியாமல் சீரழிந்துவிடக்கூடாது என்ற நன்னோக்கே ஆகும்.

ஏற்கனவே தெரிவித்தபடி, தெய்வம்னு ஒருத்தன் இருக்கிறான் என்றால்,
அவன் “கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தனே! (இராமபிரான்) (நான்.திரு.53) –
அவன் ஒருத்தன்தான் தெய்வமே தவிர, மற்ற அனைவரும் பொல்லாத தேவரே” என்றும்,
அதனால் “திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு” – எவனுக்குத் திருமகள் சம்மந்தம் இருக்கிறதோ அவனே பரதெய்வம்;
அப்படிப்பட்ட சம்மந்தம் இல்லாதவர்கள் தெய்வம் அல்லர்;
ஆகையால், அவர்களை வணங்குவதில் எந்தப் பயனும் இல்லை என்று அற்புதமாகத் தன் பாசுரத்தில் காட்டினார் திருமழிசை ஆழ்வார் .

இவருக்கும் பரமசிவனாருக்கும் நடந்த வாக்குவாத யுத்தத்தின் முடிவில்தான் பரமசிவன் இவர் பக்தியை மெச்சி,
இவருக்கு “பக்திஸாரர்” என்ற திருநாமத்தையும் கொடுத்தார் பரமசிவனார்.

அதன்பின்,திருமழிசைப்பிரான் திருக்குடந்தையிலே பல ஆண்டுகள் யோகத்தில் அமர்ந்து உலகத்தோர் இனிதுடன் வாழ அருளி,
திருநாட்டுக்கு எழுந்தருளினார் (எம்பெருமான் திருவடியில் முக்தியை அடைந்தார்) திருமழிசை ஆழ்வார்.

திருமழிசைப்பிரான் அவதரித்தது திருமழிசையில்.
பரமபத கதியை (முக்தி) அடைந்தது திருக்குடந்தை என்னும் திவ்யதேசத்தில்.
ஆழ்வாரது “திருவரசு” (முக்தி அடைந்த இடம்)திருக்குடந்தையில் உள்ளது.
ஆழ்வாரை ஸ்தூலமாக திருமழிசையிலும் மற்ற தேசத்துக் கோயில்களிலும் ஸேவிக்கலாம்;
சூஷ்ம ரூபமாகவும் அவரை, திருக்குடந்தையில் உள்ள அவரது திருவரஸில் ஸேவிக்கலாம்.
ஸேவித்து, ஆழ்வார் பெற்றிருந்த ஞான வைராக்யத்தை எளிதில் அடையலாம்.

“தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்திற்குச் சாற்றுகின்றேன் – துய்யமதி
பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாளென்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள்”

என்று திருமழிசைப்பிரானின் அவதாரத்தைப் போற்றிப் பாடியுள்ளார் மணவாள மாமுனிகள் (உபதேச இரத்தினமாலை, பா.12).
ஸ்ரீமன் நாராயணனே பரதெய்வம் என்ற தூய்மையான அறிவைப் பெற்றிருந்ததனால்,
“துய்யமதி பெற்ற” மழிசைப்பிரான் என்று போற்றியுள்ளார் மாமுனிகள்.
இப்படித் தூய்மையான மதியுடன் திகழ்ந்த திருமழிசைப்பிரானின் திருவடிகளிலேயே தன்னைப் புகுத்திக் கொண்டவர்,
இந்த உலகோர் உய்ய பகவானால் அருளப்பட்ட ஆசார்யரான பகவத் இராமானுசர்.

“ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி” என்றும்,
“ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி” என்றும் – அதாவது,
அவர்கள் அருளிச்செய்த திவ்யப்பிரபந்தங்களுக்கு அற்புதமான உரைகள் (வியாக்யானம் – Explanations)
இட்ட ஆசார்யர்களையும் வணங்குகிறேன் என்று சொல்வதற்குத் துளியும் அருகதை இல்லாதவனாய் அடியேன் இருந்தாலும்,
அவர்கள் அனுக்ரஹத்தைப் பெறும் பாக்கியம் திருமழிசை ஆழ்வார் அருளியுள்ளபடி இன்று இல்லாவிட்டாலும் சரி;
நாளை இல்லாவிட்டாலும் சரி; அல்லது இன்னும் சிறிது நாட்கள் கழிந்தாலும்
அது கிடைக்காமல் போகாது என்ற நம்பிக்கையுடன் இருந்து, ஆன்மீக எழுத்துப் பணியைத் தொடரும்
பாக்கியத்தையாவது அவர்கள் அருளுவார்கள் என்று இருக்கக் கடவேன்.

——————–

மாற்று சமயக் கருத்துகளைவிட திருமாலே பரம்பொருள் என்னும் பேருண்மையை நிலைநாட்டுவதில்
மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் இவர் அழுத்தமாகச் சொல்லுவதால், ஸ்ரீ ஆழ்வாரை, ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்,
“உறையில் இடாதவர்” என்று அழகிய ஆசாரிய ஹ்ருதயத்தில் போற்றியுள்ளார்.
( என்றும் பகை அழிக்க ஆயத்தமாய் இருப்பவர் என்று பொருள், இங்கே பகை என்பது மாற்றுச் சமய கருத்துகளைக் குறிக்கும் )

மற்றைச் சமயங்கள் பல தெரிந்து, மாயோன்
அல்லால், தெய்வம், மற்று இல்லை என உரைத்த
வேதச் செழும் பொருள்–என்று ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ தேசிக பிரபந்ததில் இதைக் குறிப்பிடுகிறார்.

வேதச் செழும்பொருள் நான்முகன் தொண்ணூற்று ஆறு பாட்டும்
மெய்ம்மிகுந்த திருச்சந்த விருத்தப் பாடல் விளங்கிய நூற்று இருபதும் என்றும்
எழில் மிசைப் பிரான் இருநூற்று ஒரு பத்தாறும் என்று தேசிக பிரபந்ததில் வேதாந்த தேசிகன் குறிப்பிடுகிறார்.
“ஆழ்பொருளை அறிவித்தேன், சிந்தாமல் கொண்மின் நீர்தேர்ந்து”–என்று தொடங்கி,
“இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன், எம்பொருமான் உன்னை”–என்று ஸ்ரீ திருமாலே பரம்பொருள் என்ற கருத்தினைக் கூறி முடிக்கிறார்.

ஸ்ரீ மணவாள மாமுனிகள் “துய்மதி பெற்ற மழிசை பிரான்” ( உபதேசரத்தினமாலை 4 ) என்றும்
இவர் அவதரித்த திருநாளை “நல்லவர்கள் கொண்டாடும் நாள்” ( உபதேசரத்தினமாலை 12 ) என்றும் சிறப்பித்துக் கூறுகிறார்.
இன்று ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம் நாமும் அதைக் கொண்டாடலாம்.

இப்பூவுலகிலே நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகள் வாழ்ந்தவர் திருமழிசை ஆழ்வார்.

“தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்திற்குச் சாற்றுகின்றேன் – துய்யமதி
பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாளென்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள்”

அன்புடன் அந்தாதி தொண்ணூற்றுஆறு உரைத்தான் வாழியே!
அழகாரும் திருமழிசை அமர்ந்த செல்வன் வாழியே!
இன்பமிகு தையில் மகத்து இங்கு உதித்தான் வாழியே!
எழில் சந்த விருத்தம் நூற்றிருபது ஈந்தான் வாழியே!
முன்புகத்தில் வந்து உதித்த முனிவனார் வாழியே!
முழுப் பெருக்கில் பொன்னி எதிர் மிதந்த சொல்லோன் வாழியே!
நன்புவியில் நாலாயிரத்து எழுநூற்றான் வாழியே!
நங்கள் பத்திசாரன் இரு நற்பதங்கள் வாழியே!

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-61-80- -ஸ்ரீ உ வே -PBA -ஸ்வாமிகள்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

February 10, 2020

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –61-

பதவுரை

விலங்கு

நீர் பெருகவொண்ணாதபடி    தடையாயிருக்கிற
மால் வரை

பெருப்பெருத்த மலைகளையும்
கரம்

பாலைநிலம் முதலிய அருவழிகளையும்
கடந்த

(வேகத்திலே) கடந்துகொண்டு வருகின்ற
கால் பரந்த

விஸ்தாரமான வாய்க்கால்களையுடைய
காவிரி

திருக்காவேரி நதியினுடைய
கூரை

கூரைமீது
குடந்தையும்

திருக்குடந்தையிலே
கிடந்த ஆறு

திருக்கண் வளர்ந்தருளுகிறபடியானது
நடந்த கால்கள் நொந்தவோ

உலகளந்த திருவடிகள் நொந்ததனாலோ? (உலகளந்த வீடாய் தீரவோ?)
ஞாலம்

பூமிப்பிராட்டியானவள்
நடுங்க

(பாதாளத்திலே உருமாய்ந்து நம்மை யெடுக்க வல்லார் ஆருமில்லையே’ என்று) நடுங்கிக் கிடந்த காலத்து)
ஏனம் ஆய்

மஹாவராஹமூர்த்தியாகி
இடந்த

அப்பூமியை அண்டபித்தியில் நின்றும் விடுவித்து உத்தரிப்பித்த
மெய்

திருமேனி
குலுங்கவோ?

ச்ரமப்பட்டதனாலோ? (ஏனமாய் உலகிடந்த விடாய்தீரவோ?)
கோனே

கோவனே!
எழுந்திருந்து போ

(எந்தவிடாய் தீரக் கிடக்கிறாயென்பதை) எழுந்திருந்து அருளீச்செய்க;
வாழி

இக்கிடையழகு என்றும் வாழ்க.

நடந்த கால்கள் நொந்தவோ-உலகு அளந்த திருவடிகள் நொந்ததாலோ
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலா மகள் பிடிக்கும் மெல்லடியாலே அளந்து அருளினாய்

நடுங்க ஞாலம் ஏனமாய்-
பூமிப் பிராட்டி தம்மை எடுக்க வல்லவர் யாரும் இல்லை என்று பாதளத்தில் உரு மாய்ந்து இருந்த காலத்தில்
மகா வராஹ மூர்த்தியாய்

இடந்த மெய் குலுங்கவோ -பூமியை விடுவித்த சிரமம் தீரவோ
திருவடிகளைப் பிடிக்கவும் திருமேனியைப் பிடிக்கவும் பாரிக்கிறார்-

விலங்கு மால் வரைச் -நீர் பெருக தடையாய் இருந்த பெருத்த மலைகளையும்
சுரம்-பாலை நிலம் போன்ற ஆறு வழிகளையும்
கடந்த கால் பரந்த -வேகத்தால் கடந்து கொண்டு வருகிற விஸ்தாரமான வாய்க்கால்களை உடைய
சீதோ உபசாரம் பண்ணவே திருக்காவேரி பாரித்து ஓடி வருகிறாள் –

காவிரி கரைக் குடந்தையுள்- காவேரி கரை மீது
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே-

வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலம் மகள் பிடிக்கும் மெல்லடி
உலகளந்த விடாய் தீரவோ -அல்லது என்னமாய் உலகு இடந்த விடாய் தீரவோ -எதனால் வந்த ஆயாசம்-
மலைகளையும் நிலங்களையும் கடந்து காவேரி சீதோ உபசாரம் பண்ண ஓடி வருகிறாள்

எழுந்து இருக்கும் போது உண்டாகும் சேஷ்டிதங்கள் காணவும்
அருளிச் செய்யும் போது ஸ்வரத்தை கேட்கவும் ஆசை

சித்ர கூடத்தில் சீதா பிராட்டி எழுப்பிய பின்பு அனுதாபப் பட்டது போலே இவரும் உணர்ந்து வாழி என்கிறார்

ஆராவமுதன் எழுந்து இருந்து பேச முயலும் போது ஆழ்வார் அர்ச்சாவதார சமாதி குலைய கூடாது என்று வாழி என்கிறார் –
உத்தான சயனம் –

இப்படி ஆரவாமுதாழ்வார் திருவடிகளிலே அநுபவிக்க இழிந்த இவ்வாழ்வாரை நோக்கி

அப்பெருமான் வாய்திறந்து ஒரு வார்த்தை யருளிச் செய்யாமலும்

கைகோவி அணைத்தருளாமலும் ஏகாகாரமாகக் கண்வளர்ந்தருளக் காண்மையாலே

‘இது அர்ச்சாவதாரஸமாதி’ என்று இவர் திருவுள்ளம் பற்றாமல், ஏதோ அளவற்ற ச்ரமத்தினால் இப்படி

திருக்கண் வளர்ந்தருள்கிறாரென்று அதிசங்கை பண்ணி,

“வடிவினையில்லா மலர்மகன் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி” என்கிறபடியே

பரமஸுகுமாரமான திருவடிகளைக்கொண்டு உலகங்களை அளந்ததனாலுண்டான ஆயாஸத்தாலோ?

அன்றி, பூமியைப் பாயாகச்சுருட்டி எடுத்துப் போன ஹிரண்யாக்ஷனை மஹா வராஹமூர்த்தியாய்க் சொன்று

அப்பூமியைக் கொணர்ந்து பழையபடி விரித்ததனாலுண்டான ஆயாஸத்தாலோ

இங்ஙனே தேவரீர் ஆடாது அசங்காது திருக்கண்வளர்த்தருள்கிறது?;

இதை எனக்குத் தெரியவருளிச் செய்யவேணும் என்கிறார்.

உலகளந்த ச்ரமமாகில் திருவடிகளைப் பிடிக்கவும் உலகிடந்த ச்ரமமாகில் திருமேனியைப் பிடிக்கவும் பார்க்கிறார்போலும்.

(விலங்குமால் இத்யாதி.) பல மலைகளையும் பல பாலை நிலங்களையும் கடந்துகொண்டு,

பெருமாளுக்கு கீதோபசாரம் பண்ணவேணுமென்னும் அபிநிவேசத்தாலே காவேரி ஓடி வருகின்றானென்க.

எழுந்திருந்து போசு = கண் வளர்ந்த***யின் காரணத்தை சயனித்துக் கொண்டே அருளிச் செய்யலாகாது;

என்னுடைய அச்சம் தீரும்படி எழுந்திருந்து அருளிச்செய்யவேணும் என்கிறார்.

எழுந்திருக்கும்போது உண்டாகக்கூடிய சேஷ்டிதங்களைக் காணவும் அருளிச் செய்யும் போதை ஸ்வரத்தைக்கேட்கவு>ம் விரும்புகிறபடி.

வாழி – ***-***-***- என்று- சித்ரகூடத்திலே திருக்கண்வளர்ந்தருளின இராமபிரானைப் பிராட்டி தட்டி யுணர்த்தி

யெழுப்பினதற்காகப் பின்பு அநுதாபப்பட்டாற்போல், ஆச்சரியமான இந்த சயாத்திருக்கோலத்தைக் குலைத்து

அடுத்த க்ஷணத்திலே நாமும் அநுதாபப்படும்படி நேர்ந்துவிடுமோ வென்றஞ்சின ஆழ்வார் வாழியென்று

அந்த சயனத்திருக்கோலத்துக்கே உகந்து மங்களாசாஸகம் செய்தருள்கிறார்.

ஒரு தீங்கு இல்லாமே கண்வளர்ந்தருளுகிற இவ்வழகு நித்யமாய்ச் செல்லவேணுமென்கிறார்.

திருமழிசைப்பிரான் ஆராவமுதாழ்வாரைநோக்கி “கிடந்தவாறெழுந்திருந்து பேசு” என்று பிரார்த்திக்க,

பெருமாளும் பந்தபாரதீகனாகையாலே அப்படியே எழுந்திருக்கப்புக அது கண்ட ஆழ்வார்

அர்ச்சாவதாரஸமாகி குலைய வொண்ணாதென்று திருவுள்ளம்பற்றி வாழிவாழி என்று மங்களாசாஸநமுகத்தால்

அப்படியே கிடந்தருளும்படியை விரும்ப,

ஆராவமுதாழ் வாரும் அவ்வண்ணமே தன்னுடைய எழுச்சிமுயற்சியை நிறுத்திக்கொண்டாரென்றும்,

இப்போதைய அர்சாவதார நிலைமையில் இவ்வம்சம் விளங்குமாறு உதாந†யியாக ஸேவைஸாதிப்பதும்

இதுபற்றியேயென்றும் பெரியோர் ஐதிஹ்யங்கூறக்கேட்டதுண்டு.

——————————————————

கரண்ட மாடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடும் தகாய்
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் எனபது உன்னையே –62-

பதவுரை

கரண்டம் ஆடு பொய்கையுள்

நீர்க்காக்கைகள் உலாவுகின்ற பொய்கையிலே
கரு பனை பெரு பழம்

கரிய பெரிய பனம்பழங்களானவை
புரண்டு வீழ

விழுந்துபுரள (அவற்றைக் கண்டு நீர்க்காக்கைகளாக ப்ரமித்து அஞ்சின)
வாளை

மீன்கள்
பாய்

துள்ளியோடி யொனிக்கின்ற
குறுங்குடி

திருக்குறுக்குடியிலே எழுந்தருளியிருக்கிற
நெடுந்தகாய்

மஹாதுபாவனே!
திரண்ட தோள்

திரண்டதோள்களையுடையவனான
இரணியன்

ஹிரண்யனுடைய
சினம்கொள் ஆகம் ஒன்றை

மாத்ஸர்யம் விளங்குகிற கடுமையின் அத்விதீயமான சரீரத்தை
இரண்டு கூறு செய்து

இருபிளவாகப் பிளந்து
உகந்த

மகிழ்ந்த
சிங்கம் என்பது

நரஸிம்ஹ மூர்த்தியென்று சொல்வது
உன்னையே

உன்னையோ? (ஸுகுமாரனானவுன்னை முரட்டுச் சிங்கமென்னத்தகுமோ?.)

கரண்ட மாடு பொய்கையுள்
நீர் காக்கைகள் இருக்கும் பொய்கையுள்
கரும் பனைப் பெரும் பழம் புரண்டு வீழ
கரிய பெரிய பனம் பழங்கள் விழுந்து புரள
அத்தைப் பார்த்து நீர்க் காக்கைகள் என்று என்று பிரமித்து மீன்கள் அஞ்சின
அஸ்தாநே பய சங்கை பண்ணுவதும் உப லக்ஷணம்

வாளை பாய் குறுங்குடி நெடும் தகாய்
மீன்கள் துள்ளி ஓடி ஒளிகின்ற திருக் குருங்குடியில் எழுந்து அருளும் மஹானுபாவனே
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் எனபது உன்னையே
ஸூகுமாரமான உன்னை முரட்டு சிம்ஹம் என்னலாமா
கடுமையில் அத்விதீயமான சரீரம்
சினம் விம்முதலுக்கும் வாசகமாய் விம்ம வளர்ந்த சரீரம் என்றுமாம்

இப்போதும் இங்கே பொய்கையின் பெயர் கரண்ட மாடு பொய்கை –
அதன் கரையில் திரு பனை மரம் நம்பியின் கடாஷமே தாரகமாக கொண்டு இன்றும் உண்டே

—————————

நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த தேவ தேவனே
குன்று இருந்து மாட நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே –63-

பதவுரை

நன்று இருந்து

(யோகப்பயிற்சிக்கு உரிய ஆஸனத்திலே முறைப்படி நிலைத்திருந்து
யோகம் நீதி

யோகமாகியு உபாயத்தை
நண்ணுவார்கள்

ஸாதிக்கின்ற யோகிகளுடைய
சிந்தையுள்

ஹ்ருதயத்தினுள்ளே
சென்று இருந்து

ப்ரவேசித்திருந்து
ஊரகத்தும்

திருவூரகத்திலும்
வெஃகனை

திருவெஃகாவிலும்
தீ வினைகள் தீர்த்த

(அவர்களுடைய) தீ வினைகளைத் தொலைத்தருளின
தேவ தேவனே!

தேவாதி தேவனே!
குன்று இருந்த நீடு மாடம்

மலைகளைக் கொணர்ந்து சேர்த்து வைத்தாற்போன்றிரா நின்ற ஓங்கின மாடங்களையுடைய
பாடகத்தும்

திருப்பாடகத்திலும்
இருந்து நின்று கிடந்தது

(க்ரமேண) வீற்றிருக்க திருக்கோலமாகவும் நின்ற திருக்கோலமாகவும் சயனத்திருக்கோலமாகவும் எழுந்தருளியிருப்பது
என்ன நீர்மை

என்ன ஸௌஹார்த்தமோ!

நன்று இருந்து
யோக பயிற்சிக்கு உரியது போலே ஆசனத்தில் முறைப்படி நன்று இருந்து
யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள் சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த

தேவ தேவனே குன்று இருந்து மாட நீடு பாடகத்தும்
மலைகளைக் கொண்டு சேர்த்து வைத்தது போலே மாடங்கள் உடைய திருப் பாடகத்திலும்

ஊரகத்தும் நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே
பிரகலாதனுக்கு என்று முரட்டு சிங்கமாக வந்தது பொருந்தலாம்
சர்வ பிரகாரத்தாலும் விமுகரான சம்சாரிகளுடைய விமுகத்தை கூட கணிசியாமல்
ஆபிமுக்யத்தை எதிர்பார்த்து உன்னுடைய மேன்மையைப் பாராதே திருக் கோயில்களில்
சம்சாரிகளை கடைத்தேற
இப்படி நின்றும் இருந்தும் கிடக்கிறாய் என்கிறார்

வெக்கணை-வெக்கா-யதோத்தகாரி சந்நிதி

ஊரகம் -உலகளந்த பெருமாள் சந்நிதி-

தேவரீர் ஸௌகுமார்யத்தைக் கணிசியாமல் பக்த சிகாமணியாகிய ப்ரஹ்லாதன் திறத்திலுள்ள

வாத்ஸல்யமே காரணமாக முரட்டவதாரமெடுத்து இரணியனை அழியச் செய்தது பொருந்தலாம்;

ஸர்வப்காரத்தாலும் விமுகரான ஸம்ஸாரிகளுடைய அபிமுக்யத்தை எதிர்பார்த்து

உம்முடைய மேன்மையைப் பாராதே கோயில்களிலே நிற்பது இருப்பது கிடப்பதாகிற விது

அந்தோ! என்ன நீர்மை! என்று ஈடுபடுகிறார்.

ஊரகம் – ஆதிசேஷனென்னும் பொருளையுடைய ** மென்ற வடசெல் ஊரகமென்று நீண்டு கிடக்கிறது;

பெருமாள்கோயிலில் உலகளந்த பெருமாள் ஸந்நிதி ஊரகமென வழங்கும்.

அங்கே திருவனந்தாழ்வானுடைய ஸரப்ரஸாதித்வம் ப்ரஸித்தம்.

வெஃகணை- வேகவணை’ என்பது வெஃகணையென்று கிடக்கிறது. **  என்று வடசொல் வழக்கம்; ஸ்ரீயதோக்தகாரி ஸந்நிதி

————-

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –64-

பதவுரை

எந்தை

எம்பெருமான்
ஊரகத்து

திருவூரகத்திலே
நின்றது

நின்றருளினதும்
பாடகத்து

திருப்பாடகத்திலே
இருந்தது

வீற்றிருந்ததும்
வெஃகனை

திருவெஃகாவில்
கிடந்தது

திருக்கண்ணை வளர்ந்தருளினதும் (எப்போதென்றால்)
என் இலாத முன் எலாம்

நான் பிறவாதிருந்த முற்காலத்திலேயாய்த்து
அன்று

அப்போது
நான் பிறந்திலேன்

நான் ஜ்ஞானஜன்மம் பெற்றேனில்லை
பிறந்தபின்

அதுபெற்ற பின்பு (அறிவு பிறந்தபின்பு)
மறந்திலேன்

மறக்கவில்லை
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே

ஆதலால் அவன் ஊரகம் முதலிய திருப்பதிகளில் பண்ணும் செயல்களையெல்லாம் எனது நெஞ்சினுள்ளே செய்யா நின்றான் காணீர்.

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
நான் பிறவாத முன் காலத்திலே
அன்று நான் பிறந்திலேன்
அப்பொழுது நான் ஜ்ஞான ஜன்மம் பெற வில்லை

பிறந்த பின்பு மறந்திலேன்-நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே
கைங்கர்ய கடனைப் பெற்றுக் கொள்ள -கடனைத் தீர்த்தால் அல்லது போக மாட்டேன் என்று நின்று இருந்து கிடந்து-எல்லாம்
அவன் மேல் ருசி விளைவிக்க -ருசி பிறப்பது சாத்தியம் -பலன் கிடைத்தவாறே இத்தத் தவிர்த்து
அரவத் தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து –
அந்த செயல்கள் எல்லாம் நமது நெஞ்சிலே பண்ணுகிறான்

நான் இலாத முன் எலாம் என்று அருளாமல் என்னிலாத முன்னெலாம்- என்றது
அப்பனை என்று மறப்பேன் என்னாகியே -திருவாய் மொழி போலே பிரயோகம்-

உலகத்திலே ஒருவனுக்கு ஒருவன் கடன் கொடுத்திருந்தால் அந்தக் கடனைத் திருப்பி வாங்கிக் கொள்வதற்காகக்

கடனாளி வீட்டிலே வந்து கேட்கும்போது முதலில் சிலநாள் நின்று கொண்டே கேட்டு விட்டுப் போய்விடுவன்:

அவ்வளவில் காரியம் ஆகாதே; மறுபடியும் வந்து சிலநாள் வரையில் திண்ணை மீது உட்கார்ந்து கொண்டு கடனை நிர்பந்தித்துப்போவன்;

அவ்வளவிலும் கைபுகாவிடில் ‘கடனைத் தீர்த்தாலொழியப்போல தில்லை’ என்று படுக்கைபடுத்து நிர்ப்பந்திப்பன்;

இப்படியாகவே எம்பெருமானும் அஸ்மதாதிகள் செலுத்தவேண்டிய கைங்கரியக் கடனைப் பெற்றுக் கொள்வதற்காக

ஓரிடத்தில்    நின்று பார்க்கிறான். மற்றோரிடத்தில் வீற்றிருந்து பார்க்கிறான்; இன்னுமோரிடத்தில் சாய்ந்து பார்க்கிறான்-

திருவூரகத்திலே நிற்கிறான், திருப்பாடகத்திலே இருக்கிறான்; திருவெஃகாவிலே கிடக்கிறான்;

இப்படி நிற்பது இருப்பது கிடைப்பதாகிறவிவை எப்போதென்னில்;

நான் ஆபிமுக்யம் பண்ணப்பெறாத காலத்திலே யாய்த்து,

உபயவிபூதிநாதனான தான் ஸம்ஸாரியான வெனக்கு ருசி பிறவாத காலமெல்லாம்

ருசி பிறக்கைக்காக நின்றா னிருந்தான் கிடந்தான்;

எனக்கு ருசியைப் பிறப்பிக்கை அளவுக்கு ருசிபிறக்கைக்காக நின்றானிருந்தான் கிடந்தான்;

எனக்கு ருசியைப் பிறப்பிக்கை அவனுக்கு ஸாத்யம் (பலன்):

அதற்கு ஸாதகம்- நிற்றவிருத்தல் கிடத்தல்கள்,

பலன் கைபுகுந்தவாறே திவ்ய தேசங்களிலே நிற்றலிருத்தல் கிடத்தல்களைத் தவிர்த்து

(“அரவத்தமணியினோடு மழகிய பாற்கடலோடும். அரவிந்தப்பாவையுந்தானு  மகம்படி வந்து புகுந்து” என்னுமாபோலே)

அவ் விருப்புகளை யெல்லாம் எனது நெஞ்சிலே செய்தருளினானென்கிறார்.

இரண்டாமடியில், நானிலாத என்ன வேண்டுமிடத்து என்னிலாத என்றதை

வடமொழியில் ஆர்ஷப்ரயோகங்களைப் போலவும் சாந்தஸப்ரயோகங்களைப்போலவும் கொள்க:

‘அப்பனையென்று மறப்பன் என்னாகியே” என்ற திருவாய்மொழிப் பிரயோகமும் நோக்கத் தக்கது.

—————

நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே –65-

பதவுரை

அற்புதன்

(ஞானம் சக்தி முதலியவற்றால் ஆச்சரியபூதனும்
அனந்த சயனன்

அரவணைமேற் பள்ளி கொள்பவனும்
ஆதிபூதன்

ஜகத்காரணபூதனும்
மாதவன்

ச்ரியாபதியுமான பெருமான்
ஓர் வெற்பு அகதது நிற்பதும் வீண்

விலக்ஷணமான திருவேங்கடமலையிலே நின்றருள்வதும் பரமாகாசமென்னும் திருநாட்டிலே
இரும்பும்

வீற்றிருப்பதும்
நல் பெருதிரை கடலுள் கிடப்பதும்

நல்ல பெரிய அலைகளையுடைய திருப்பாற்கடலிலே சாய்ந்தருள்வதும்,
நான் இலாத முள் எலாம் :

நான் முறையறியாதே அனத்தாய்க் கிடந்த காலத்திலேயாம்; (இப்பொழுதோவென்றால்)

நிற்பதும்  இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சனே.

நிற்பதும் ஓர் வெற்பகத்து
நின்ற சேவை ஒப்பற்ற திருவேங்கடத்தில்

இருப்பும் விண்
வீற்று இருந்த சேவை பரம பதத்தில்

கிடப்பதும் நற் பெரும் திரைக் கடலுள்
கிடப்பது நல்ல பெரிய அலைகளை உடைய திருப் பாற் கடலிலே
நான் இலாத முன்னெலாம்
நான் முறை அறியாமல் அசத்தாய்க் கிடந்த காலத்தில்

இப்பொழுதோ என்றால்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே
அந்த பரிமாற்றங்கள் எல்லாமே எனது நெஞ்சுக்குள்ளே அன்றோ –

தம்முடைய திருவுள்ளத்தினின்றும் எம்பெருமான் பேராமல் இங்கேயே ஸ்தாவர ப்ரதிஷ்டை யாயிருக்கிற

இருப்பிலே மிகவும் ஈடுபட்டு,

எம்பெருமான் திருவேங்கட மலையில் நிற்பதும் திருநாட்டிலே இருப்பதும் திருப்பாற்கடலிலே கிடப்பதுமெல்லாம்

தன்னோடுண்டான முறையை அறியாதே நான் அஸத்கல்பனாயிருந்த காலத்திலேயாம்:

நான் முறையறிந்து பரிமாறின பின்பு அவ்வெம்பெருமானுடைய பரிமாற்றமெல்லாம் எனது நெஞ்சினுள்ளே யாய்த்து என்கிறார்.

———————————————

இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என் கொலோ
அன்று பாரளந்த பாத போதை யொன்றி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே –66-

பதவுரை

பிறந்தானென்கிற க்ஷணத்திலே செத்துப்போவதோ
நின்று சாதல்

சிலகாலமிருந்து செத்துப் போவதோ
அன்றி

இவ்விரண்டத்தொன்று தவிர
யாரும்

மேன்மக்களான ப்ரஹ்மாதிகளும்
வையகத்து

இந்நிலத்திலே
ஒன்றி நின்று

சிரஞ்சீவியாயிருந்து
வாழ்தல் இன்மை கண்டும்

வாழ முடியாதென்பதை ப்ரத்யக்ஷமாகப் பார்த்திருந்தும்
நீசர்

அறிவில்லாதவர்கள்
அன்று பார் அளந்தபாதபோதை உன்னிசென்று

முன்பு பூமி முழுவதையும் அளந்தருளின பாதாரவிந்தத்தைச் சிந்தித்து
சென்று

அர்ச்சிராதிமார்க்கத்தாலே சென்று
வானின்மேல் சென்று

பரமபதத்தேறப் புகுந்து
தேவர் ஆய் இருக்கிலாத வண்ணம் என் கோல்

நித்யஸூரிகளோடொக்க இராதது ஏனோ?

இன்று சாதல் நின்று சாதல்
பிறந்த உடன் சாவது -சிறிது காலம் இருந்த பின் சாவது

அன்றி யாரும் வையகத்து ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் –அன்று பாரளந்த பாத போதை யொன்றி
வானின் மேல் சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே என் கொலோ
இவை இரண்டும் இல்லாமல் அன்று உலகு அளந்த திருவடித் தாமரையை நினைந்து ஆஸ்ரயித்து
அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று
நித்ய ஸூரிகளுடன் இருக்க முயல்வார் யாரும் இல்லையே என்கிறார்

கருவிலேயே சிலவுயிர்கள் மாண்டொழிகின்றன;

கருவில் நின்றும் கீழே விழுந்தவாறே சிலவுயிர்கள் மாண்டொழிகின்றன;

சில காலம் ஜீவித்திருந்து சிலர் மாள்வர்;

இப்படியல்லது, என்றைக்கும் அழிவில்லாதவர்களென்று சொல்லும்படியாக இந்நிலத்தில்

சிரஞ்ஜீவிகளாயிருப்பார் ஆருமில்லை என்னுமிடத்தைக் கைவிலங்கு நெல்லிக்கனியாக ப்ரத்யக்ஷ்கரித்துவைத்தும்,

அன்றொருநாள் குணதோஷ நிரூபணம் பண்ணாமல் ஸகலலோகங்களிலுமுண்டான கைல சேதநர் தலையிலும்

பொருந்தி முறையையுணர்ந்ததின ஸர்வ ஸுலுபமான திருவடித்தாமரைகளை ஆச்ரயித்து

அர்ச்சிராதிமார்க்கத்தாலே சென்று மீட்சியற்ற வைகுந்த மாநகரைக் கிட்டி நிர்யஸூரிகளோடு

ஒரு கோவையாயிருப்பதற்கு முயல்வார். ஆரூமில்லையே! இஃது என்ன பாவம்!! என்கிறார். “

பாதபோதை யொன்றி” என்றும் பாடமுண்டு.

————

இந்த பாசுரம் முதல் ஏழு பாட்டாலே நமக்கு உபதேசம் பண்ணி அருளுகிறார்-

சண்ட மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று மேல்
கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர்
புண்டரீக பாத புண்ணிய கீர்த்தி நுஞ் செவி மடுத்தி
உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கி யுய்மினோ –67-

பதவுரை

சண்டன் மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று

ஸூர்யமண்டல மத்யமார்க்கத்தாலே போய்
வீடு பெற்று

பரமபதத்தை அடைந்து (அவ்விடத்தில்)
மேல்வீடு இலாத

பக்தியின் பயனான கைங்கர்ய
காதல் இன்பம்

ஸுகத்தை நித்தியமாகப் பெற
நாளும் கண்டு

விருப்பமுடையவர்களே!
எய்துவீர்

(முமுக்ஷுக்களே)
புண்டரீக  பாதன்

தாமரைபோன்ற திருவடிகளையுடைனான பெருமானுடைய
புண்ய கீர்த்தி

பரிசுத்தமான திருப்புகழ்களை
நும் செவி

உங்களுடைய காதுகளிலே
மடுத்து

தேக்கி
உண்டு

அநுபவித்து.
நும் உறு வினை துயரும் நீங்கி உய்ம்மின்

உங்களுடைய ப்ரபல பாபங்களின் பலனை துக்கங்களின் நின்றும் நீக்கி உஜ்ஜிவித்துப்போங்கோள்.

சண்ட மண்டலத்தினூடு சென்று -சூர்ய மண்டல மத்திய மார்கத்திலே போய் வீடு பெற்று
பரம பதம் அடைந்து அங்கே

மேல் கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர்
அழிவில்லா பக்தியின் பலனாக கைங்கர்ய இன்பம் நித்யமாக பெற விருப்பம் உடையவர்களே –

காதல் இன்பம் -காதல் பக்தி -அதன் பலனாக கைங்கர்ய ஸூகம் –

முமுஷூக்களே
புண்டரீக பாத புண்ணிய கீர்த்தி நுஞ் செவி மடுத்தி உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கி யுய்மினோ
அவனது திருப் புகழ்களை காதுகளில் தேக்கி அனுபவித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள் –

இது முதல் மேலேழுபாட்டாலே பரோபதேசம் பண்ணியருளுகிறார்.

ஸம்ஸாரிகள் தங்களுக்கு ஹிதயமானதை அறிந்து கொள்ளாவிடிலும்

நாமாவது அறிவித்து அவர்களை உய்விப்போமென்று திருவுள்ளம்பற்றி,

அவர்களுடைய துர்கதியைக் கண்டு பொறுத்திருக்கமாட்டாத க்ருபாவிசேஷத்தாலே உபதேசத்திலே மூளுகிறபடி,

அர்ச்சிராதிமார்க்கத்தாலே சென்று நிலைநின்ற புருஷார்த்தத்தைப்பெற விருப்புமுடையீர்!

ப்ராப்யமும் ப்ராபகமுமான பகவத் விஷயத்தை ஆச்ரயித்து உங்களுடைய விரோதிகளைப் போக்கிக்

கொண்டு உஜ்ஜீவித்துப் போங்கள் என்கிறார் இப்பாட்டில்.

வடமொழியில் ஸூர்யனுக்கு *** என்று பெயர்; அதில்  ஏகதேசத்தைக் கொண்டு சண்டன் என்கிறாரிங்கு.

காதலின்பம்- காதல் என்று பக்திக்குப்  பெயர்: -பக்தியின் பலமான இன்பமாவது கைங்கர்யஸுகம்.

“செவிமடுத்துண்டு” என்றவிடத்து, “செவிக்குணவில்லாதபோது சிறிது, வயிற்றுக்கு மீயப்படும்” என்ற குறள் நினைக்கத்தக்கது.

————————

முத்திறத்து வாணியத்தில் இரண்டில் ஓன்றும் நீசர்கள்
மத்தராய் மயக்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து
எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை யுய்குறில்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ –68-

பதவுரை

மூத்திறந்து

மூன்று வகைப்பட்ட (ஸாத்வீக, ராஜஸ, தாமஸங்களான) பல்களுக்குள்ளே
இரண்டில்

(ஸாத்விகமொழிந்த) மற்றையிரண்டு பலன்களில்
ஒன்றும்

விருப்பமுடையரான
நீசர்கள்

நீசரான மனிசர்கள்
அதில் இட்டு

அந்த லோகத்திலே அந்தக் கரும பலன்களையொழித்து
இறந்து

அவற்றை யநுபவிப்பதற்காகப் பூண்டுகொண்ட சரீரத்தை முடித்து
போந்து

(மறுபடியும் கர்ப்பவான வழியாலே) பூலோகத்தில் வந்து
மத்தர் ஆய்

“தேஹமே ஆத்மா” என்கிற ப்ரமத்தையுடையராய்
மயங்குகின்றது

மோஹித்துப்போவார்கள்; (அப்படிப்பட்டவர்கட்கு)
உய்வது ஓர் உபாயம்

உஜ்ஜீவ்நோபாயம்
எத்திறத்தும் இல்லை

எவ்வழியாலுமில்லை, (மேலேறுவதும் கீழிறங்குவதுமாய்த் திரித்லொழிய நிலைநின்ற புருஷார்த்தம்பெற விரகில்லை)
உய்குறில்

(உங்களுக்கு) உஜ்ஜீவிக்க விருப்பமுண்டாகில்
கொத்து இறுத்த

கொத்துக்கொத்தாகச் செறிந்த
தண் துழாய்

குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையனான
நம் மாலை

பரமபுருஷனை
வாழ்த்தி

துகித்து
வாழ்வின்

உஜ்ஜீவித்துப் போங்கோள்.

முத்திறத்து-சாத்விக ராஜச தாமஸ-என்ற மூ வகைப் பட்ட
வாணியத்தில் இரண்டில் ஓன்றும் நீசர்கள்
பலன்களுக்குள் சாத்விகம் ஒழிந்த மற்ற இரண்டின் பலன்களில் விருப்பம் உடையீரான நீசர்களே
மத்தராய் மயக்குகின்றது-தேகமே ஆத்மா என்று மோஹித்து
இட்டு அதில் இறந்து போந்து-அந்த லோகத்தில் அந்த கர்ம பலன்களை ஒழித்து அத்தை அனுபவிக்கும் சரீரம் முடித்து –
மறுபடியும் கர்ப்ப வாசம்-வழியே பூ லோகத்தில் வந்து –எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை-
உஜ்ஜீவன உபாயம் எவ்வழியிலும் இல்லை -பல பல ஜன்மங்கள் தான் எடுப்பார்கள்

யுய்குறில்
உய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தால்

தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ
புனத் துழாய் மாலையானை ஆஸ்ரயித்து உஜ்ஜீவனம் அடைய வேணும் –

ஸம்ஸாரிகள் ஸத்வ குணமொன்றையே மேற்கொள்ளாமல் ரஜஸ் தமோ குணங்களுக்கும் வசப்பட்டிருப்பதால்

அக்குணங்கட்குத் தகுதியான ராஜஸ தேவதைகளையும் அவர்கள் ஆச்ரயிக்கக் கூடுமாதலால்

அப்படி மதிகெட்டுப்போகாதபடி ஸர்வாதிகனான புனத்துழாய் மாலையானையே ஆச்ரயித்து உஜ்ஜீவிக்கச் சொல்லுகிறார்.

உலகததில் அவரவர்கள் பெறும் பலன்கள் மூன்று வகைப்படும்;

ஸாத்வீக தேவதையை ஆச்ரயித்தால் ஸாத்விகபலன் பெறலாகும்;

ராஜஸ தேவதைகளை ஆச்ரயித்தால் ராஜஸபலன்; தாமஸ தேவதைகளை ஆச்ரயித்தால் தாமஸபலன்;

இம்மூவகைப்பட்ட பலன்களினுள் ஸாத்விக பலனைப்பேணாது மற்ற இருவகைப் பயன்களை விரும்பி

அவ்வழியிலே ஊன்றித்திரிகின்ற நீச மனிசர்கள் நியத்ஸுகத்தை அடையமாட்டார்கள்;

அந்தப் பலன்களைச் சில தேசவிசேஷங்களில் அநுபவிப்பதும் மீண்டும் இவ்வுலகத்திலே பிறந்துழல்வதுமாய்

இப்படியே தேஹாத்மாபிமாநிகளாய் நசித்துப்போவர்களேயன்றி எவ்விதத்திலும் உஜ்ஜிவிக்கக் கடமைப்பட்டவர்களல்லர்.

உஜ்ஜீவிக்க வேண்டில், ஸர்வரக்ஷகனென்னுமிடத்துக்கு ப்ரகாசமாகத் திருத்துழாய் மாலையை

யணிந்துள்ள பெருமானைப் பணிந்து வாழ வேண்டும்.

—————————

காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கிலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்
பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே —69-

பதவுரை

காணிலும்

கண்டாலும்
உரு போலார்

விகாரமான உருவத்தையுடையராயும்
செவிக்கு இனாத கீர்த்தியார்

காதுக்குக் கடூரமான சரித்திரங்களையுடையராயும்
பேணிலும்

(இப்படிப்பட்ட விகாரமான உருவத்தையும் ஹேமயமான சரிதையையும், கவனியாமல்) ஆச்ரயித்தாலும்
வரம் தர

(ஆச்ரயித்தவர்கட்கு) இஷ்டத்தைக் கொடுக்க
மிடுக்கு இலாத

சக்தியற்றவர்களாயுமுள்ள
தேவரை

தேவதைகளை
ஆணம் என்று

சரணமென்றுகொண்டு
அடைந்து வாழும்

அவற்றையடைந்து கெட்டுப்போகிற
ஆதர்கள்

குருடர்களே!
என் ஆதிபால்

ஸர்வகாரணபூதனான எம்பெருமானிடத்து
பேணி

வழிபாடுகளைச் செய்து
நும்

உங்களுடைய
பிறப்பு எனும்

ஸம்ஸாரமாகிற
பிணக்கு

பெரும்புதரை
அறுக்க கிற்றிரே

அறுத்தொழிக்க வல்லீர்களே?

காணிலும் உருப்பொலார் -கண்டாலும் விஹார உருவம் உடையவர்கள்
செவிக்கினாத கீர்த்தியார்
கடினமான வார்த்தைகள் உடையவர்
பேணிலும் -எப்படி இருந்தாலும் ஆஸ்ரயித்தால்
வரந்தர மிடுக்கிலாத தேவரை-ஆணம் என்று அடைந்து-சரணம் என்று அடைந்து கேட்டுப் பெரும் குருடர்களே
வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்-பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே-
தேவ தாந்த்ரங்களை பார்க்கவே கூடாதே -அவற்றின் அயோக்யதைகளை சொல்லி –
ஜகத் காரணனைப் பற்றி முக்தர் ஆகணும் என்கிறார்-

மற்ற தேவர்கள் “பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவர்களே” என்கிறார். மேலும், “காணிலும் உருப்பொலார்” என்கிறார்.
மற்ற தேவர்களை (தெய்வங்களை) அப்படியே போய் ஆஸ்ரயித்தாலும் (பற்றினாலும்), அவர்கள் பார்ப்பதற்கும் அழகாக இல்லை;
பகவான் புண்டரீகாஷன் (தாமரைக் கண்ணன்) – மற்றொருத்தன் (சிவன்) விரூபாக்ஷன்.
பகவான் சந்தனத்தைத் தன் திருமார்பிலே ஈஷிக்கொண்டவன்; சிவனோ சாம்பலை எடுத்து திருமார்பிலே பூசிக்கொண்டவன்.
பகவானுக்கு இருப்பதோ சிறந்த கேஸ வாசம்; சிவனுக்கு இருப்பதோ சடைமுடி!
பகவான் தலையில் இருப்பதோ உயர்ந்த புஷ்பஹாரம்; சிவன் தலையில் இருப்பதோ வெறும் கங்கா தீர்த்தம்!
இவன் ஏறுவது கருடன் மீது; அவன் ஏறுவது ரிஷபமான தாழ்ந்த வலிய பந்தமான ஜந்துவைப் படைத்திருக்கிறான்!
இவனுக்கு அடியார்கள் அத்தனை பேரும் நித்யஸுரிகள்; அவனது அடியார்களோ பேய்க் கணங்களும் பூதகணங்களும்!
இவன் பிடித்திருப்பதோ சிறந்த சங்க சக்கரங்களை; அவன் பிடித்திருப்பதோ ஒண்மழுவான ஆயுதத்தை!
எப்படிப் பார்த்தாலும் இருவருக்கும் ஒருநாளும் ஒத்துவரப்போவது கிடையாது.
ஆகவே “காணிலும் உருப்பொலார்” என்று பாடியுள்ளார் ஆழ்வார். சிவனது காட்சி ஒருநாளும் உருப்பெறுவது முடியாது.

“செவிக்கினாத கீர்த்தியார்” –
செவிக்கு இனிய கீர்த்தி என்றால், பகவானுடைய ஸ்ரீ திரிவிக்கிரம அவதாரமா – ஸ்ரீ வாமன மூர்த்தியாய் உலகளந்தானே –
அந்தப் புகழைக் கேட்பதா அல்லது ஸ்ரீ ந்ருசிம்ஹ மூர்த்திக்காகவா?
ஒவ்வொன்றும் அடியார்க்காக அடியார்க்காக என்று அவன் புகழ் செவிக்கு இனியதான கீர்த்தியாக இருக்கிறது.
“ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம்” என்பது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம அத்தியாயத்திலே தெரிவித்ததார்.
“ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:” – “ஸ்தவ்ய:” என்றால் ஸ்தோத்ரம் என்று பண்ணணும்னா, பகவான் ஒருத்தன் தான்;
அதற்கு அருகதை என்றும், மற்ற யாருக்கும் அதற்கு அருகதையே கிடையாது என்று அர்த்தம்.

ஆக, பகவான் ஸ்தவ்யன்! ஆனால், சிவனை என்னவென்று சொல்லி ஸ்தோத்ரம் செய்வது?
இவர் தானும் சுடுகாட்டிலே பஸ்பதாரியாய் சுற்றித் திரிகிறார்;
தன் தகப்பனார் பிரமனின் தலைகளில் ஒன்றைக் கிள்ளித் தன் கையில் வைத்துக் கொண்டிருந்தவர்;
பத்மாசுரனைக் கண்டு பயந்து ஓடிவிட்டார்; வாணாசுரனையும் கண்டு பயந்து ஓடிவிட்டார்;
தன் சிஷ்யனிடத்திலேயே அவர் “பிள்ளைக் கறி கொண்டுவா என்று! தலையை அறுத்து தனக்கு யாக யஞ்ஞம் செய்” என்று கூறினார்.
இவற்றை எல்லாம் பாடினால் அது கீர்த்தி (புகழ், தோத்திரம்) ஆகுமோ?
அப்படியே இவற்றைப் பற்றிப் பாடினாலும், அது செவிக்குத்தான் இனியதாக இருக்குமா?
இத்தனையும் உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், மறுபடியும் நீங்கள் அவனைத்தான் விடாமல் பிடித்துக்கொள்வோம் என்று
பிடிவாதம் பிடித்தாலும் பிடிக்கலாம்! அவர்களுக்கும் ஆழ்வார் சமாதானம் சொல்லிவிட்டார் –

“பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவரை” என்று
பாடி! அதாவது, இத்தனையும் தாண்டி நீங்கள் அவனையே ஆஸ்ரயிக்க (பற்ற) நினைத்தாலும்,
நீங்கள் கேட்கப் போவதைக் கொடுக்கிற சக்தி மட்டும் அவனுக்குக் கிடையாது!
அது இருக்குன்னாலும் அவனிடத்தில் போய் நீங்கள் ஆஸ்ரயிப்பதில் அர்த்தமுண்டு.
அதுவும் இல்லாதவனைப் போய் ஆஸ்ரயிப்பதில் ஏதானும் இலாபம் உண்டா?
அவனே லக்னனாகத் திரிய, அவனிடத்தில் போய் வேஷ்டி தானம் வேணும்னு கேட்டா தருவானா?

ஒரு கடையில் நிறைய வேஷ்டிகள் அடுக்கப் பட்டிருக்க, அவனிடத்தில் ஒரு வேஷ்டி தானமாகக் கேட்டால் கேட்டால்,
அவன் கொடுத்துவிடுவான். ஒருத்தன் இடுப்பில் ஒன்று ஒன்று கொடியில் மாட்டிவைத்திருக்க,
அவனிடம் ஒரு வேஷ்டி தானமாகக் கேட்டாலும் ஒன்றைக் கொடுத்துவிடுவான்;
இன்னொருத்தன் ஒரே ஒரு வஸ்திரத்தை இடுப்பில் அணிந்து கொண்டிருக்க, அவனிடம் தானம் கேட்டாலும்
அவன் அதையும் கழற்றிக் கொடுத்துவிடுவான்! ஆனால், சிவனோ, லக்னனாக, அவனே வேஷ்டி இல்லாதவனாக இருக்க,
அவனிடம் போய் வஸ்திர தானம் வேணும்னு கேட்டா, கொடுக்கமுடியலை என்றுமட்டுமில்லை; அவனும் கொடுக்கபோறதில்லை;
நமக்கும் கிடைக்கப் போறதில்லை!ஐயோ! என்னிடமே ஒன்றுமில்லை; என்னிடத்தில வந்து கேட்கிறாயே! என்று வருத்தமும் படுவான்.

இதனால்தான், ஸ்ரீ ஆழ்வார் தெரிவித்தார்: “அப்படி உங்கள் சிவனுக்கு வருத்தம் ஏற்படும்படி நீங்கள் இருக்கவேண்டாம்!
நீங்கள் ஒவ்வொரு நாளும் அவனிடத்தில் போய் கேட்கக் கேட்க, கொடுக்கமுடியாத ஸ்ரமத்தாலே அவர் துடிக்க போறார்!
ஏன் வீணாக அவனையும் சிரமப்படுத்திண்டு, உங்களுக்கும் கிடைக்காமால்….!
ஆகையால், சிரமப்பட வேண்டாம் என்று தவிர்க்கிறார் ஸ்ரீ ஆழ்வார்.

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை. மேலே உள்ள பாடலுக்கு வேத அர்த்த ரீதியாகவும் இவர் மேற்கோள்கள் காட்டியுள்ளார்.
“திவுக்ரீடாயாந் தாது; || திவு விஜிஹீஷாந் தாது; || திவு வியவஹாரந்: தாது; || திவு த்யுதீந்: தாது; || திவு ஸ்துதிந்:தாது; ||
திவு மோதாந்: தாது; || திவு மதாந்: தாது; || திவு காந்தீந்:தாது; || திவு கதீந்:தாது.”

“கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தனே! (இராமபிரான்) (நான்.திரு.53) – அவன் ஒருத்தன் தான் தெய்வமே தவிர,
மற்ற அனைவரும் பொல்லாத தேவரே” என்றும்,
அதனால் “திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு” –
எவனுக்குத் திருமகள் சம்மந்தம் இருக்கிறதோ அவனே பரதெய்வம்; அப்படிப்பட்ட சம்மந்தம் இல்லாதவர்கள் தெய்வம் அல்லர்;
ஆகையால், அவர்களை வணங்குவதில் எந்தப் பயனும் இல்லை என்று அற்புதமாகத் தன் பாசுரத்தில் காட்டினார் ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் .

இவருக்கும் பரமசிவனாருக்கும் நடந்த வாக்குவாத யுத்தத்தின் முடிவில்தான் பரமசிவன் இவர் பக்தியை மெச்சி,
இவருக்கு ஸ்ரீ “பக்திஸாரர்” என்ற திருநாமத்தையும் கொடுத்தார் பரமசிவனார்.

தேவதாந்தரங்களினுடைய அயோக்யதைகளை நன்றாகச்சொல்லி, இப்படிப்பட்ட தேவதாந்தரங்களை உதறித்தள்ளிவிட்டு

ஸர்வ ஜகத்காரண பூதனான எம்பெருமானை யடிபணிந்து முந்தர்களாய் போகலாகாதா? என்கிறார்.

காணிலும் உருப்போலார்- அந்தத் தேவதாந்தரங்களைக் காணவே கூடாது;

கண்டால் வடிவாவது கண்ணுக்கு நன்றாயிருக்குமோவென்றால், இராது, மஹாகோரமாயிருக்கும்: ‘

விருபாக்ஷன்’ என்கிற பெயரே போராதோ வடிவின் பொல்லாங்கைக் காட்டுகைக்கு.

அங்குப் புவியினதளுமான கோலம் காணப்பொல்லாதாயிருக்குமே.

வடிவின் பொல்லாங்கு இருக்கட்டும்;  சரித்திரமானது காதுகொடுத்துக்கேட்க இனிதாயிருக்குமோவென்னில்;

செவிக்கு இனாத கீர்த்தியாய்-

தகப்பன் தலையைக் கிள்ளினான்; கபாலதாரியாய் உலகமெங்குந்திரிந்து பிச்சையெடுத்தான்;

யாகத்தைக் கெடுத்தான்; மாமனாரை மாய்த்தான்; என்றிப்படிப்பட்ட சரிதைகள் காதுகொண்டு கேட்கக்கூடாதவையிறே.

‘இவற்றையெல்லாம் ஸஹித்துக்கொண்டு வருந்தி ஆச்ரயித்தாலும் இஷ்டத்தை நிறைவேற்றித்தரவல்ல சக்தியாவது உண்டோவென்னில்;

பேணிலும் ‘வரந்தர மிடுக்கு இலாத தேவர்- கண்டா கர்ணனுடைய சரித்திரத்தை ஆராய்ந்தால் இது தெரியும்.

இப்படிப்பட்ட தேவதைகளைச் சரணமாகப் பற்றிநின்ற அறிவுகேடர்களே!

நமக்கெல்லார்க்கும் காரணபூதனான பரமபுருஷன் பக்கலிலே ஆதரத்தைப்பண்ணி,

ஒருவராலும் அறுக்கப்போகாத உங்களுடைய பிறவியென்னும் துற்றை அறுத்துக்கொள்ள மாட்டீர்களோ?.

‘வரந்தரும் மிடுக்கிலாத” என்றும் பாடமுண்டு.

ஆணம்- சரணம்.

அடைந்து வாழும் = அயோக்ய ஸதவங்களை யடைந்து பாழாய்ப்போகிறீர்களே! என்று க்ஷேபித்தபடி.

ஆகவே, வாழும் என்றது விபரீதலுலக்ஷணை.

ஆதர்- குருடும், அறிவுகேடும்.

————————————

குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள்
பந்தமான தேவர்கள் பரந்து வானகமுற
வந்த வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
அந்தவந்த வாகுல மமரேரே யறிவரே –70-

பதவுரை

குந்தமோடு குலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள்

ஈட்டிகளென்ன சூலங்களென்ன வேலாயுதங்களென்ன இருப்புலக்கைகளென்ன கதைகளென்ன வாள்களென்ன (இவற்றோடு கூட)
பந்தம் ஆன தேவர்கள்

கூட்டங் கூட்டமாயிருந்த ருத்ராதிதேவதைகள்
பரந்து

(பல திக்குகளிலும்) சிதறிப் போய்
வானகம் உற

தங்கள் தங்களிருப்பிடமான மேலுலகங்களிற் சென்றுசேர
வந்த வாணன்

(பிறகு தோள்களை வீசிக்கொண்டு) எதிர்த்து வந்த பாணாஸுரனுடைய
ஈர் ஐநூறு தோள்களை

ஆயிரந்தோள்களை
துணிந்த நாள்

அறுத்துத் தள்ளினபோது (அத்தெய்வங்ள்)
அந்த அந்த அகுலம்

வாயாற்சொல்ல முடியாதபடி வியாகுலப்பட்டமையை
அமரரே அறிவர்

(நாம் அறியோம்;) அத் தெய்வங்கள் தாமே அறிவர். (அவர்களையே கேட்டுக் கொள்வது.)

குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள்
ஈட்டி சூலாயுதம் வேலாயுதம் இரும்பு உலக்கை கதை வாள் இவற்றுடன் இருக்கும்

பந்தமான தேவர்கள்-
கூட்டம் கூட்டமாக இருந்த ருத்ராதி தேவர்கள்

பரந்து வானகமுற
பல திசைகளிலும் சிதறிப் போக -தங்கள் இருப்பிடம் சென்று சேர

வந்த வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்-அந்தவந்த வாகுல மமரேரே யறிவரே
ஆகுலம் — வியாகுலம் பட்டு
ரஷகமாக வேண்டிய ஆயுதங்கள் எல்லாம் கால் கட்டு போலே ஆயின

ராவணன் கையில் வில் போலே -இருந்த வரை அடி பட்டான் -வெறும் கை வீரன்
வரம் தரும் மிடுக்கு இலா யஜவருக்கு திருஷ்டாந்தம் வாண விருத்தாந்தம் –

“வரந்தரமிடுக்கிலாததேவர்” என்று கீழ்ப்பாட்டிற் கூறியதைக்கேட்ட சிலர்,

‘இப்படிச் சொல்லலாமோ? அவர்களுக்கு சக்தி இல்லையோ?

அவர்களை ஆச்ரயித்து இஷ்ட ஸிக்தி பெற்றவர்கள் பலபேர்களில்லையோ?” என்ன;

ருத்ரனை யாச்ரயித்து அவனுக்கு தந்தரங்கனாயிருந்த பாணாஸுரன் பட்டபாடும்,

அந்த ருத்ரன் தானும் கண்கலங்கினபடியும் அப்போது உடன்பட்ட தேவர்கட்கே தெரியுமத்தனையென்கிறார்.

பந்தமான தேவர்கள் = பந்தமாவது ஸம்பந்தம்; ருத்ரனோடு ஸம்பந்தமுடையவர்களான ஷûப்ரஹ்மண்யன் முதலான தேவதைகள் என்றபடி

வாணனுக்கு உறவான ருத்ராதிகள் என்றுமாம்.

இங்ஙனன்றிக்கே, “குந்தமோடு சூலம் வேற்கள் தோடரங்கள் தண்டுவாள் பந்தமான” என்று சேர்த்து அந்வயிக்கவுமாம்;

குந்தம் முதலான ஆயுதங்கள் காற்கட்டாகப் பெற்ற தேவர்கள் என்றதாகிறது.

ரக்ஷகமாக வேண்டிய ஆயுதங்கள் காற்கட்டானபடி; இராவணனுக்குப்போல.

———————————

வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி யோடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே -71-

பதவுரை

வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால்

(மகரந்தத்திற்காக) வண்டுகள் உலாவப்பெற்ற பூமாலையை அணிந்திருந்த உஷையின் நிமித்தமாக
வெகுண்டு

கோபங்கொண்டு
இண்ட

செறித்துவந்த
வாணன்

பாணாகரனுடைய
ஈர் ஐ நூறு தோள்களை

ஆயிரந்தோள்களை
துணித்தநாள்

கழித்தபோது
முண்டன் நீறன்

மொட்டைத்தலையனாய் நீறு பூசினவனான ருத்திரனும்
மக்கள்

அவனுடைய குமாரர்களும்
வெப்பு

ஜ்வரதேவதையும்
மோடி

பிடாரியும்
அங்கி

அக்நி தேவதையும் (மற்றுமுள்ளவர்களும்)
ஓடிட

(பாணாசுரனை வஞ்சித்துவிட்டு. தங்களுயிரைக் காத்துக் கொள்ள) ஓடிப்போன வளவிலே
கண்டு

பார்த்து
நாணி

(இந்த முதுகுகாட்டிப் பயல்களோடு போர் செய்யவா நாம் வந்தோமென்று) வெட்கப்பட்டு
வாணனுக்கு

பாணாகரன் விஷயத்தில்
இரங்கினான்

கிருபைபண்ணினவன்
எம்மாயனே

ஆச்சரிய சக்தியுக்தனான எம்பெருமானேயாவன். (‘எம் ஆயனே’ என்று பிரிக்கவுமாம். ஆயன் கண்ணபிரான்.)

வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
மகரத்துக்காக வண்டுகள் உலாவும் பூ மாலை அணிந்து இருந்த உஷையின் நிமித்தமாகக் கோபம் கொண்டு

இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
செறிந்து வந்த வாணனது ஆயிரம் கரங்களையும் துணித்து

முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி யோடிடக்கண்டு நாணி
மொட்டைத் தலையனும் திரு நீறு பூசினவனுமான ருத்ரனும் -அவனுடைய குமாரர்களும் ஜுர தேவதையும் பிடாரியும்-
அக்னி தேவனும் மற்று எல்லாரும் ஓடிட
பாணாசுரனை வஞ்சித்து தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள ஓடிப் போன போது
பார்த்து இந்த புற முதுகு காட்டி ஓடும் பயல்களுடனே போர் செய்ய வந்தோம் என்று வெட்கப் பட்டு

வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே –
இவன் தானே ரக்ஷகன் -என்ன ஆச்சர்யம் எம் ஆயனே என்றும் கொள்ளலாம் –

ருத்ரனானவன் பாணனை ரக்ஷிப்பதாகப் பிரதிஜ்ஜை பண்ணிவைத்து,

பரிகாரங்களோடு கூட ரக்ஷிக்க முயற்சியுஞ்செய்து ரக்ஷிக்க முடியாமல்

எதிரி கையிலே அவனைக் காட்டிக் கொடுத்துத் தப்பிப்போனபடியாலும்,

கண்ணபிரான் க்ருபை பண்ணி அவனடைய ஸத்தையை நோக்கினபடியாலும்

அந்தச்சிவன் ரக்ஷகனல்லவென்றும் கண்ணபிரானே ரக்ஷகனென்னும் ப்ரத்யக்ஷஸித்தமாயிற்றென்கிறார்.

தன்னுடைய பெண்ணான உஷையானவள் தன் ஆசை தீர அதிருந்தாழ்வானோடு கலவி செய்திருக்கச்செய்தே

அதனையுணர்ந்து ஸந்தோஷியாமல் கோபங்கொண்டவனாய் யுத்தத்திலே வந்து மேல்விழுந்த வாணனுடைய

ஆயிரத்தோள்களை யறுத்தவக்காலத்தில், மொட்டைத் தலையனும் சம்பலாண்டியுமான சங்கரனும்

அவனது புதல்வரான ஷண்முகாதிகளும், ஜ்வரதேவதை, பிடாரி, நாற்பத்தொன்பது அக்நிகளுக்குக் கூடஸ்தனான அக்நி இவர்களும்

தங்கள் தங்கள் பிராணனைக் காப்பாற்றிக்கொண்டால் போதுமென்றெண்ணி முதுகுகாட்டி ஓடிப்போக,

உயிரிழக்கவேண்டியவனான வாணன் மீது பரமகிருபையைச் செய்தருளி நான்கு தோள்களையும் உயிரையும் கொடுத்தருளினான் எம்பெருமான்;

ஆனபின்பு இவன் ரக்ஷகனோ! மற்றையோர் ரக்ஷகரோ? ஆராய்ந்து காண்மின் என்றவாறு.

————————

போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன் மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே –72-

பதவுரை

போதில் மங்கை

பூமகளான லக்ஷிமியும்
பூதலம் கிழத்தி

பூமிப்பிராட்டியும்
தேவி

தேவிமாராவர்;
அன்றியும்

மேலும்
போது தங்குநான் முகன்

பூவிலே பொருந்திருப்பவனான பிரமன்
அவன் மகன்

பேரனாயிரா நின்றான்;
என்று

இவ்வண்ணமாக
வேதம்நூல்

வேத சாஸ்த்ரம்
ஓதுகின்றது

உரைப்பதானது
உண்மை

ஸத்யம்
மகன்

புத்திரனாயிரா நின்றான்;
சொலில்

மேலும் சொல்லப்புக்கால்
மாது தங்கு கூறன்

ஒரு பக்கத்திலே பார்வதி தங்கப் பெற்றவனாய்
ஏறு அது ஊர்தி

எருதை வாஹனமாக வுடையனான சிவன்
மற்று

இங்ஙனன்றிக்கே
அல்லது

இப்படியல்லாத வேறொரு அர்த்தத்தை (சிவபாரம்யத்தை)
உரைக்கில்

(சைவ ஆகமாதிகளைக் கொண்டு) சொல்லப்பார்க்கில்
இல்லை

அது அஸத்யம்

போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
ஸ்ரீ மகா லஷ்மியும் ஸ்ரீ பூமிப் பிராட்டியும் தேவிமார் ஆவார் -அன்றியும்

போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
பூவில் பொருந்திய இருக்கன் பிரமன் -புத்திரன் -மேலும் சொல்லப் பார்க்கில்

மாது தங்கு கூறனேற தூர்தி –
ஒரு பக்கம் பார்வதி தேவி தங்கப் பட்டவனாய் -எருமையை வாகனமாக கொண்டவனாய் உடைய சிவன் –
அவனது பேரனாய் இருக்கிறான்
என்று வேத நூல் ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே
இது தான் சத்யம் -வேறு பட சொல்வது அசத்தியம் என்கிறார்
இவனது பரத்வத்தையும் ப்ரஹ்மாதிகளுடைய அவரத்வத்தையும் வேதமே ஸ்தாபித்துக் கொடுக்கிறதே –

எம்பெருமானுடைய பரத்வஹேதுவான பெருமைகளைப் பேசுகிறார்.

பூவிலே பிறந்த பெரியபிராட்டியாரும்; ஸ்ரீபூமிப்பிராட்டியாரும் தேவிமாராக இருக்கிறார்கள்;

நாபிக் கமலத்திலே பிறந்த நான்முகம் புத்திரனாக அமைந்திருக்கிறான்;

ஸாம்பமூர்த்தியாய் ஸ்ரூஷபத்வஜனான ருத்திரன் பௌத்திரனாக அமைந்திருக்கிறான் –

இது நான் சொல்லும் வார்த்தையல்ல;

வேதங்களில் முறையிடப்படும் பொருள் இதுவேயாம்.

இது யதார்த்தமேயன்றி ப்ரசம்ஸாவாக்யமல்ல.

ச்ரிய: பதி என்னுமிடமும் பிரமனுக்குப்பிதா என்னுமிடமும் சிவனுக்குப் பிதாமஹன் என்னுமிடமும்

எம்பெருமானுடைய பரத்துவத்தை ஸ்தாபித்துக் கொடுத்து சிவாதிகளுடைய அவரத்வத்தையும் நிலைநாட்டித் தருமென்க.

——————————

மரம் பொதச் சரம் துரந்து வாலி வீழ முன்னோர் நாள்
உரம் பொதச் சரம் துரந்த வும்பர் ஆளி எம்பிரான்
வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது வானம் ஆளிலும்
நிரம்பு நீடு போகம் எத்திறத்தும் யார்க்கும் இல்லையே –73-

பதவுரை

முன் ஓர் நாள்

முன்னொரு காலத்திலே
மரம் பொத

ஸம்பஸாலவ்ருஹங்கள் துளைபடும்படியாக
சரம் துரந்து

அம்பைப் பிரயோகித்து (அதற்குப் பிறகு)
வாலி வீழ

வாலியானவன் முடியும்படியும்
உரம் பொத

அவனது மார்பிலே பொத்தும் படியும்
சரம் துரந்த

பாணத்தைப் பிரயோகித்த
உம்பர் ஆளி எம் பிரான்

தேவாதி தேவனான எம்பெருமான்
வரம் குறிப்பில்

(தன்னுடைய) சிறந்த திருவுள்ளத்திலே
வைத்தவர்க்கு அலாது

யாரை விஷயீகரிக்கிறானோ அவர்கட்குத் தவிர;
வானம் ஆளினும்

மேலுலகங்கட்கு அதிபதிகளாயிருந்தாலும்
யார்க்கும்

மற்றவர்கட்கும்
நிரம்பு நீடு போகம்

சாச்வதமாய்ப் பர்பூர்ணமான கைங்கர்யஸுகம்
எத்திறத்தும்

எவ்வழியாலும்
இல்லை

கிடைக்கமாட்டாது.

மரம் பொதச் சரம் துரந்து
சப்த சால மரங்கள் துழாய் படும்படி அம்பை பிரயோகித்து

வாலி வீழ முன்னோர் நாள் உரம் பொதச்
வாலி முடியும் படியும் அவனது பார்பில் பொருந்தும் படியும்

சரம் துரந்த வும்பர் ஆளி எம்பிரான்-வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது
தன்னுடைய சிறந்த திரு உள்ளத்தில் யாரை விஷயீ கரிக்கிரானோ அவரைத் தவிர

வானம் ஆளிலும்
மேல் உலகங்களுக்கு அதிபதியாக இருந்தாலும்

நிரம்பு நீடு போகம் எத்திறத்தும் யார்க்கும் இல்லையே –
நித்ய சுகானுபவம் அவர்களுக்கு ராமனின் திரு உள்ளத்தில் இல்லாதவர்களுக்கு இல்லை என்கிறார்-

அந்தப் பரமபுருஷனை இராமபிரானாகத் திருவவதரித்தன னென்றுசொல்லி

அந்த மஹாநுபாவனால் திருவுள்ளம் பற்றப்படாதவர்கள் உத்தமாதிகாரிகளாயிருந்தாலும்

யத்ய ஸுகாநுபவத்திற்கு உரியரல்லர் என்கிறார்.

ஸப்தஸாலவ்ருக்ஷங்களைத் துளைத்ததுபோலவே வாலியின் மார்பையும் பாணத்தினால் துளைத்து

அவனுயிரை மாய்த்த மஹாநுபாவனது திருவுள்ளத்தாலே விஷயீகரிக்கப்பட்டவர்களுக்கன்றி

மற்றெவர்க்கும் நித்யமான மோக்ஷத்தைப்பெற வழியில்லை.

மூன்றாபடியில், அலாது = ‘அல்லது’ என்பது அலது எனத் தொக்கி நீட்டல் பெற்றது.

வானம் ஆளினும் = சிறந்த ஞானத்தையுடையராய்ப் பதினான்கு லோகங்கட்கும் நிர்வாஹகரான ப்ரஹ்மாதிகளாயிருந்தாலும் என்றபடி.

——————————————

அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –74-

பதவுரை

முதலாயிரம்

திருச்சந்தவிருத்தம்
வாமணன்

உலகளந்த பெருயாமனுடைய
அடி இணை

அடியிணைகளை
அறிந்து அறிந்து

உபாயமென்றும் உபேயமென்றும் தெரிந்து கொண்டு
வணங்கினால்

நமஸ்கரித்தால்
செறிந்து எழுந்த ஞானமொழி

பரம ச்லாக்யமாகக் கிளர்ந்த ஞானமும்
செல்வமும்

பக்தியாகிற செல்வமும்
செறித்திடும்

பரிபூர்ணமாக விளையும்
மறிந்து எழுந்த

பரம்பிக்கிளர்ந்த;
தென் திரையுள்

தெளிந்த அலைகளையுடைய திருப்பாற்கடலிலே
மன்னு

நிதய்வாஸம் செய்தருள்கின்ற
மாலை

ஸர்வேச்வரனை
வாழ்தினால்

ஸங்கீரத்தகம் பண்ணினால்
எழுந்த தீவினைகள்

ஆத்மஸ்வரூபத்திலே வளர்ந்து கிடக்கிற கொடு வினைகள்
பற்று அறுதல்

வாஸனையும் மிகாதபடி நசித்துப்போதல்
பன்மையே

இயற்கையேயாம் (அநாயானமாக நசிக்குமென்கை.)

அறிந்து அறிந்து
உபாயமும் உபேயமும் என்று தெரிந்து கொண்டு

வாமனன் அடி இணை வணங்கினால் செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும் மறிந்து எழுந்த தெள் திரையுள்
பரம்பி கிளர்ந்த தெளிந்த அலைகளை உடைய திருப் பாற் கடலிலே

மன்னு மாலை வாழ்த்தினால்
நித்ய வாசம் செய்யும் சர்வேஸ்வரனை சங்கீர்த்தனம் பண்ணினால்

பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –
நசிவித்து இயற்க்கை-அவனது திரு உள்ளம் பற்றுதல் தான் மோஷ சாதனம்

திரு நாமங்களைச் சொன்னால் பாபங்கள் தானாகவே ஒழியும்

பரமபுருஷனுடைய திருவுள்ளம்பற்றல்தானே மோக்ஷஸாதநமாகில்

முமுக்ஷுலான அதிகாரி செய்ய வேண்டிய சூது ஒன்றுமில்லையோவெனில்;

அவ்வெம்பெருமானுடைய திருவடித்தாமரைகளை வணங்குதலும்

அவனது திருப்புகழ்களை வாயார வாழ்த்துதலும் இவனுக்குக் காலக்ஷேபமாகக் கடவது;

இவற்றால் இவனுடைய பாவங்களை தொலைந்து நல்ல ஞானபக்திகள் தழைக்கும் என்கிறார்.

எம்பெருமான் தன்னுடமையைப் பெறுவதற்குத் தானே யாசகனாய் நிற்பவன் என்பதையும்,

அடியாரை ஆட்கொள்ளுமிடத்தில் வஸிஷ்ட சண்டாள விபாகம் பாராமல்

எல்லார் தலையிலும் ஒரு ஸமமாகத் திருவடிகளை வைத்து ஆட்படுத்திக் கொள்பவன் என்பதையும்

சாஸ்த்ர ச்ரவணைத்தாலும் ஆசார்ய உபதேசத்தாலும் நன்கு தெரிந்துகொண்டு அத்திருவடிகளை வணங்கினால்

ஞான ஸம்பத்தும் பக்தி ஸம்பத்தும் குறைவின்றி உண்டாகும்;

திருப்பாற் கடலிலே துயில்கின்ற அப்பெருமானுடைய திருநாமங்களை வாயாலே சொன்னால்

அவனைப் பெறுதற்கு ப்ரதிபந்தகங்களாயுள்ள பாவங்கள் அவலீலையாக அற்றொழியும் என்கை.

பான்மை- இயற்கை;

பாவங்களை ப்ரயானப்பட்டுப் போக்கினதுபோலாகாமே தன்னடையே போனதாகப் போமென்றபடி.

——————————

ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம்
நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே –75-

பதவுரை

ஒன்றி நின்று

மனம் சலியாமல் நிலைத்து நின்ற
நல் தவம்

விலக்ஷணமான தபஸ்ஸை (அதாவது  கர்மயோகத்தை)
ஊழி ஊழிதோறு எலாம் செய்து

பலபல ஜந்மபரம்பரைகளிலே அநுஷ்டித்து
அவன் குணங்கள்

அப்பெருமானுடைய திருக்குணங்களை
நின்று நின்று உள்ளி

ஸாத்மிக்க ஸாத்மிக்க அநுஸந்தித்து
உள்ளம் தூயர் ஆய்

கல்மஷமற்ற நெஞ்சை யுடையராய்
சென்று சென்று

மேல்மேல் படிகளிலே ஏறி (ச்ரவணம்  மநநம் நிதித்யாஸதம் என்கிற பர்வங்களிற் சென்று)
உம்பர் உம்பர் உம்பர் ஆய் அன்றி தேவதேவர்

பரபக்தி யுக்தராய் பரஜ்ஞாந யுத்தராய் பரம பக்தியுந்தராய் இப்படி யெல்லா மானால்லது
தேவதேவர்

(மற்றபடி) தேவதேவராயிருந்தாலும்
எங்கள் செம் கண் மாலை

செந்தாமரைக் கண்ணாலே எம்மை விஷயீகரித்தருளும் பெருமானை
யாவர் காணவல்லர்

யார் காணக்கூடியவர்கள்.

ஒன்றி நின்று
மனம் சலியாமல் நிலைத்து நின்று

நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி-சாத்மிக்க சாத்மிக்க அனுசந்தித்து

நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம் நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று -ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம் போன்ற படிகளில் ஏறி-

உம்பர் உம்பர் உம்பராய் அன்றி-பர பக்தி பர ஞான பரம பக்த உக்தராய் அல்லது
தேவ தேவர் -மற்றபடி தேவதேவராய் இருந்தாலும்

எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே
எங்கள் பெருமான் -எங்கள் ஈசன் என்று சொல்லாமல் எங்கள் செங்கண் மால் என்கிறார்

ருசி பிறந்து பரம பக்தி பர்யந்தமாக -அவனது கடாஷத்தால் தான் சித்தி கிட்டும் –
செந்தாமரைக் கண்ணால் விஷயீ கரித்து அருளினால் தானே சித்தி கிட்டும்-

விசாலமான விஷயாந்தர வழிகளிலே ஓடக்கடவதான நெஞ்சை அவற்றில் நின்றும் வருந்தி மீட்டுப்

பகவத் விஷயத்திலே நிலை நிறுத்தி நெடுங்காலம் கர்மயோகத்தை யநுஷ்டித்து

அவ்வெம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை க்ரமேண அநுஸந்தித்து,

ஆகவிப்படி கர்மயோகா துஷ்டாகத்தாலும்

குணாநுஸந்தாகதத்யாலும்

மனம் பரிசுத்தமாகப் பெற்று, க்ரமத்தில் அநவரதபாவகையனவிற்சென்று பரமபக்தி தலையெடுத்துப்

பரமபதத்திற்சென்று சரணாகதவத்ஸலனான புண்டரீகாக்ஷனை ஸேவிக்கப்பெறலா  மத்தனையொழிய

வேறு எவ்வழியாலே அவனை ஸாக்ஷாத்கரிக்க முடியும்? என்கிறார்.

எங்கள் பெருமானை யென்றாவது,

எங்களீசனை யென்றாவது அருளிச்செய்யாது

“எங்கள் செங்கண்மாலை” என்றருளிச் செய்த தன் உட்கருத்தைப் பெரிய வாச்சான் பிள்ளை யருளிச்செய்கிறார். காண்மின்-

ஜிதந்தே புண்டரீகாஷ–என்கிறபடியே ருசியே தொடங்கிப் பரமபக்தி பர்யந்தமாக

அத்தலையில் விசேஷ கடாக்ஷத்தாலே ஸித்தி யென்று தோற்றுகைக்காகச் செங்கண்மால் என்றது என்று.

————————————

புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
நன் புல வழி திறந்து ஞான நற் சுடர் கொளீ இ
என்பில் எள்கி நெஞ்சு உருகி யுள் கனிந்து எழுந்தது ஓர்
அன்பில் அன்றி ஆழி யானை யாவர் காண வல்லரே –76-

பதவுரை

புல்

க்ஷுத்ரங்களான
புலன் வழி

சப்தாதிவிஷயங்களிலே இந்திரியங்கள் ஓடுவதற்குரிய வழியை
அடைத்து

அடைத்து
அரக்கு இலச்சினை செய்து

(விஷயமார்ந்த த்வாரத்திலே) அரக்கு முத்திரையிட்டு
நன் புலன் வழி திறந்து

ஸத்விஷய மார்க்கத்தைத் திறந்து விட்டு
ஞானம்

ஞானமாகிய
நல்சுடர்

விலக்ஷமான ப்ரபையை
கொளீ இ

கொளுத்தி (ஞானத்தை நன்கு பிரகாசிக்கச் செய்து)
என்பு இல்

எலும்பு வீடாகிய சரீரம்
என்கி

சிதிலமாகி
நெஞ்சு உருகி

நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்)
உள் கனிந்து

நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்)
உன் கனிந்து எழுந்தது ஓர் அன்பில் அன்றி

பரிபக்குவமாய்க் கிளர்ந்த யிலக்ஷணமானதொரு ப்ரேம முண்டானலல்லது
ஆழியானை

திருவாழியைக் கையிலேந்தின பெருமானை

யாவர் காண வல்லர்  ?.

புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
விஷய மார்க்க த்வாரத்தில் அரக்கு முத்தரை இட்டு அடைத்து

நன் புல வழி திறந்து ஞான நற் சுடர் கொளீ இ
ஞானமாகிய விலஷணமான பிரபையைக் கொளுத்தி

என்பில் எள்கி நெஞ்சு உருகி
எலும்பு வீடாகிய சரீரம் சிதிலமாக்கி

யுள் கனிந்து எழுந்தது ஓர் அன்பில் அன்றி ஆழி யானை யாவர் காண வல்லரே
எப்பொழுதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
விஷயாந்தரங்களில் அவகாகிப்பதற்கு அடியான பாபங்களையும் -அவன் பக்கல் வைமுக்யமாக இருக்கைக்கு
அடியான பாபங்களையும் திருக்கையில் உள்ள திருவாழி கொண்டு வெட்டி
திருக்கையும் திருவாழி யான சேர்த்தி அழகைக் காட்டி தன் பக்கல் பக்தி -காதலை வளர்க்குமவன் அன்றோ –

கடல் நிற கடவுள் எந்தை அரவணை துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமாலோ இங்கும் எள்கி என்கிறார் இதிலும்

க்ஷûத்ர விஷயங்களைப் பற்றியோடுகிற இந்திரியங்களின் ஓட்டத்தைத் தடுத்து

அவ்விஷயமார்க்கமே புல்மூடிப் போம்படி அடைத்து அரக்கு முத்திரையிட்டு வானனையும் மறுவலிடாதபடி பண்ணி,

விலக்ஷண விஷயத்தில் இந்த்ரியங்களைப் பரவவிட்டு விலக்ஷணமான ஜ்ஞாநப்ரபையை நன்றாக விளக்கி

எம்பெருமானுடைய ஸ்வரூபரூப குணவிபூதிகளை ஸ்வரூபரூப குணவிபூதிகளை ஸ்வஜ்ஞாநத்துக்கு விஷயமாக்கி,

அஸ்திமயமான சரீரம் சிதிலமாய் ஹ்ருதயம் உருகிக் கனிந்த ப்ரேம முண்டானவல்லது

சக்ரபாணியான எம்பெருமானை யார் ஸாக்ஷாத்கரிக்கவல்லர்?-

“எப்போதுங் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்” என்கிறபடியே-

விஷயாந்தரங்களிலே அவகாஹிப்பதற்கு அடியான பாபத்தையும்

எம்பெருமான் திறத்தில் வைமுக்கியத்துடனிருக்கைக்கு ஹேதுவான பாபத்தையும்

கையில் திருவாழியாலே இரு துண்டமாக வெட்டி, கையுந் திருவாழியுஞ் சேர்ந்த சேர்த்தியைக் காட்டித்

தன் விஷயமான பக்தியை வளரச்செய்த அப்பெருமானை நான் கண்டாப்போனே வேறுயார் காணவல்லாரென்றவாறு.

புன்புலவழிகளில் அரக்கிலக்கினை (ஸீல்) வைக்க முடியுமோ வென்னில்;

மறுபடியும் அந்த வழி காணவொண்ணாதபடி நன்றாக அதனை மறந்து என்றபடி,

என்பிலென்கி = என்பு- எலும்பு; எலும்புகட்கு, இல்- இருப்பிடம், சரீரம் ;

அது என்குமோ வெனில்

“கடல்நிறக்கடவுளெந்தையரவணைத்துயிலுமா  கண்டு, உடலெனக் குருகுமானோ” என்றாரே தொண்டரடிப் பொடியாழ்வார்.

—————————

எட்டும் எட்டும் எட்டுமாய் ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டு மூன்று ஒன்றுமாகி நின்ற வாதி தேவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்றவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –77-

பதவுரை

எட்டும் எட்டும் எட்டும் ஆய்

இருபத்தினான்கு தத்துவங்களுக்கு நிர்வாஹகனாயும்
ஓர் ஏழும் ஏழும் ஆய்

ஸப்தத்வீபங்களுக்கும் ஸ்பத குலபர்வதங்களுக்கும் ஸ்பத ஸாகரங்களுக்கும் நிர்வாஹகனாவும்
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற

த்வாரதசாதித்யர்களுக்கு அந்த ராத்மாவாயுமிருக்கிற
ஆதி தேவனை

பரமபுருஷனை
எட்டியைப் போதமோடு இரஞ்சி நின்று

ஸாஷ்டாங்கப்ரணாமம் பண்ணி
அவள் பெயர் எட்டு எழுத்தும்

அவ்வெம்பெருமானுக்கு வாசகமான திருவஷ்டாக்ஷரமந்த்ரத்தை
ஓதுவார்கள்

அநுஸந்திக்குமவர்கள்
வானம் ஆன வல்லர்

பரமபதத்தை ஆளவல்லவர்களாவர்

எட்டும் எட்டும் எட்டுமாய்
24 தத்துவங்களுக்கும் நிர்வாஹகனாய்

ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய்
7 தீவுகள் 7 மலைகள் 7 கடல்கள் இவற்றுக்கும் நிர்வாஹகனாய்

எட்டு மூன்று ஒன்றுமாகி
12 ஆதித்யர்களுக்கும் அந்தராத்மாகவும்

நின்ற வாதி தேவனை எட்டினாய பேதமோடு இறைஞ்சி
இப்படி சர்வ ஜகத் காரண பூதனான சாஷ்டாங்க ப்ரணாமம் பண்ணி
நின்றவன் பெயர் எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே

எட்டும் எட்டும் எட்டுமாய் = மூவெட்டு இருபத்தினான்கு;

கருமேந்திரியங்கள் ஐந்து; ஞானேந்திரியங்கள் ஐந்து; சப்தாதி விஷயங்கள் ஐந்து; நிலம் நீர் முதலிய பூதங்கள் ஐந்து;

மநஸ் , மஹாந், அஹங்காரம், ப்ரக்ருதி – ஆக இருபத்தினான்கு தத்துவங்களுண்டிறே;

அந்தத் துவங்களுக்கு அந்தராத்மாவாயிருக்கும்படியைச் சொல்லுகிறது.

(ஓர் ஏழும் இத்யாதி. “ஜம்பூத்வீபம் முதலிய ஏழு தீவுகளென்ன, ஏழு குலபர்வதங்களென்ன, ஏழு கடல்களென்ன

இவற்றுக்கு நிர்வாஹகனென்கிறது.

எட்டும் மூன்றும் ஒன்றும் கூடினால் பன்னிரண்டாம்; த்வாதசாதித்யர்களுக்கு அந்தர்யாமியானவ னென்றபடி,

இப்படிப்பட்ட ஸர்வ ஜகத் காரண பூதனான எம்பெருமானை அஷ்டாங்க ப்ரமணாமபூர்வமாக ஆச்ரயித்துத்

திருவஷ்டாக்ஷரத்தை ஓதுமவர்கள் பரமபதத்தை ஆளப்பெறுவார்களென்கிறார்.

எட்டினாய பேதமோடிறைஞ்சுகையாவது- “*** *** ***” என்றபடி ஸாஷ்டாங்கப்ரணாமம் பண்ணுகை.

பேதம் – *** மென்ற வடசொல் விகாரம். பேதமாவது ப்ரகாரம்.

————————

சோர்விலாத காதலால் தொடக்கறா மனத்தராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –78-

பதவுரை

நீர்

திருப்பாற்கடலிலே
அரா அணை

திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
கிடந்த

கண் வளர்ந்தருள்கிற
நின்மலன்

அகில ஹேயப்ரத்யநீகனான எம்பெருமானுடைய
நலம் கழல்

நன்மைபொருந்திய திருவடிகளை
ஆர்வமோடு

அன்புடன்
இறைஞ்சி நின்று

அச்ரயித்து
சோர்வு இல்லாத காதலால்

விஷயாந்தரப்பற்றினால் தளராத காதலோடு
துடக்கு அது மனத்தர் ஆய்

விச்சேதமில்லாமல் ஏகாந்ரமான மனமுடையவர்களாய்

அவன் பெயர் எட்டு எழுத்தும்

வாரம் ஆக

இதுவே நமக்குத் தஞ்சம் என்கிற அத்யவஸாயத்தோடு
ஓதுவார்கள்

அநுஸந்திக்குமவர்கள்
வானம் ஆன

பரமபதத்தை ஆள்வதற்கு
வல்லர்

ஸமர்த்தராவர்.

சோர்விலாத காதலால்
விஷயாந்தர பற்றினால் தளராத காதலோடு-பகவத் விஷயத்திலே ஏகாக்ர மான காதல்-

தொடக்கறா மனத்தராய்
விச்சேதம் இல்லாமல் ஏகா க்ரமமான மனம் உடையவராய்

நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல் ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே
இதுவே தஞ்சமாக -பகவத் விஷயம் ஒன்றிலேயே காதல் சோர்வில்லாத காதல் ஆகும் –

ஷீரா சாகர சேஷசாயியினுடைய திருவடிகளை போக்யதா புத்தியுடன் ஆஸ்ரயித்து
திரு அஷ்டாக்ஷரத்தை அன்புடன் அதிகரிக்க வல்லவர்கள் பரமபதத்துக்கு நிர்வாஹகராகப் பெறுவார்கள் என்றபடி –

ஒருவன் பகவத்விஷயத்தில் மிக்க ப்ராண்யமுடையனாயிருந்தாலும்

அவனுக்கு விஷ்யாந்தரப்பற்றும் சிறிது கிடக்குமாகில் அதுவானது

பகவத் விஷயப்ரவண்யத்தை விரைவில் குலைத்துவிடும்.

அங்ஙனல்லாமல் பகவத்விஷயமொன்றிலேயே ஏகாக்ரமான காலானது சோர்விலாத காதலெனப்படும்.

அப்படிப்பட்ட ப்ரேமத்தினால் பகவதநுஸந்தாநம் மாறாத நெஞ்சையுடையராய்க் கொண்டு,

க்ஷீரஸாகரசேஷசாயியினுடைய திருவடிகளை போக்யதாபுத்தியோடே ஆச்ரயித்துத்

திருவஷ்டாக்ஷாரத்தை அன்புடன் அதிகரிக்கவல்லவர்கள் பரமபதத்துக்கு நிர்வாஹகராகப் பெறுவார்கள்.

—————————

பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய்
பத்து நான்கு திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப்
பத்தினாய தோற்றமொடு ஓர் ஆற்றல் மிக்க வாதி பால்
பத்தர் ஆமவர்க்கு அலாது முக்தி முற்றல் ஆகுமே –-79-

பதவுரை

பத்தினோடு பத்தும் ஆய்

பத்து திக்குகளுக்கும் பத்து திக்பாலகர்களுக்கும் அந்தர்யா மியாய்
ஓர் ஏழினோடு ஓர் ஒன்பது ஆய்

ஸப்தஸ்வரங்களென்ன நவநாட்ய ரஸங்களென்ன இவற்றுக்குப் ப்ரவர்த்தகனாய்
பத்து நூல் திசை கண் நின்ற

பதினான்கு வகைப்பட்ட
நாடு

லோகங்களிலுள்ளவர்கள்
பெற்ற

பெறக்கூடிய
நன்மை ஆய்

நன்மைக்காக
பத்தின் ஆய தோற்றமோடு

தசாவதாரங்களோடு (ஆவிர்ப்பவித்து)
ஆற்றல்மிக்க

பொறுமையினாலே பூர்ணனான
ஓர் ஆதி பால்

எம்பெருமான் விஷயத்திலே
பக்தர் ஆமவர்க்கு அலாது

க்தியுடையவராயிருப்பவர்களுக்கன்றி (மற்றையோர்க்கு)
மூர்த்தி

மோக்ஷபுருஷார்த்தம்
முற்றல் ஆகுமே

பரிபக்வமாகுமோ?

பத்தினோடு பத்துமாய்
பத்து திக்குகளுக்கும் பத்து திக் பாலர்களுக்கும் அந்தர்யாமியாய்

ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய்
சப்த ஸ்வரங்கள் நவ நாட்டிய ரசங்கள் இவற்றுக்கு பிரவர்த்தனாய்
பத்து நான்கு திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப்
14 வகைப் பட்ட லோகங்களில் உள்ளவர்க்களின் நன்மைக்காக

பத்தினாய தோற்றமொடு
தசாதவரங்களோடு ஆவிர்பவித்து

ஓர் ஆற்றல் மிக்க வாதி பால் பத்தர் ஆமவர்க்கு அலாது முக்தி முற்றல் ஆகுமே
ஆற்றலாவது பொறுமை -சம்சாரிகள் பலவகைகளில் திரஸ்காரங்கள் பண்ணினாலும் அவற்றைக் கணிசியாது
பொறுமை காட்டுபவன்-

பத்து திக்குகளுக்கும் அவற்றுக்கு அத்யக்ஷர்களான தேவர்கள் பதின்மர்க்கும் நிர்வாஹகனாய்,

ஸப்தஸ்வரங்களுக்கும் ஒன்பது  நாட்டிய ரஸங்களுக்கும் நிர்வாஹகனாய்,

பதினான்கு வகைப்பட்ட உலகங்களி லுள்ளார்க்கு போக்யனாகைக்காக தசாவதாரங்கள் செய்தருளி

அவ்வவதாரங்களில் ஸம்ஸாரிகள் பண்ணும் பரிபவங்களையெல்லாம் பொறுத்து ரக்ஷிக்குமவனான எம்பெருமான் திறத்தில் பக்தியுள்ளவர்களாயிருப்பார்க்கல்லது மோக்ஷபலம் பக்குவமாகைக்கு வழியில்லை.

பதினான்றிசைக் கண்நின்ற = பத்தோடு கூடிய நான்கு – பதினான்கு; திசை – ப்ரகாரம்;

பதினான்கு வகையிலேயிருக்கிற நாடுகளாவன – சதுர்த்தச புவனங்கள். ஆகுபெயரால், நாட்டிலுள்ளவர்களெனப் பொருள்படும்.

அவர்கள் பெறும் ப்ரயோஜநமாகைக்காக- (அதாவது) பயன் பெற்றோமென்று களித்து அநுபவிப்பதற்காக;

மீனோடாமை கேழலரி குறளாய் மூன்று பிராமனாய்த் தானாய்ப் பின்னுமிராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியுமானான்” என்கிறபடியே

தசாவதாரங்கள் செய்தருளின ஸர்வ ஜகத்தாரணபூதனனான எம்பெருமான் திறத்திலே

நன்றியறிவுடையார்க்கன்றி மற்றையோர்க்கு மோக்ஷபலன் பக்குவமாக வழியில்லை.

ஆற்றல் மிக்க – ஆற்றலாவது பொறுமை; ****** என்றபடி ஸம்ஸாரிகள் பலவகைகளிலே திரஸ்காரங்கள் பண்ணினாலும்

அவற்றைக் கணிசியாது பொறுமை பாராட்டுபவனென்கை.

——————————

வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு
ஆசையாம் யவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே –80-

பதவுரை

வாசி ஆகி

(கோவேறு) கழுதையின் வடிவங்கொண்டு
நேசம் இன்றி வந்து

பக்தியற்றவனாய் வந்து
எதிந்த

எதிரிட்ட
தேனுகன்

தேநுகாஸுரனை
நாசம் ஆகி நான் உலப்ப

ஆயுள் ஸுமாண்டு அழிந்து போம்படியாக
மேல் நிமிர்ந்த தோளின்

உயர்த்தூக்கப்பட்ட தோளாலே
நன்மை சேர் பணங்கனிக்கு வீசி

அழகிய பணம்பழங்களின் மேலே தூக்கியெறிந்து
இல்லை ஆக்கினாய் கழற்கு

(அவ்வசுரனை) ஒழித்தருளின தேவரீருடைய திருவடிகளுக்கு
ஆசை ஆமவர்க்கு அலால்

நேசிக்குவமர்களுக்கன்றி மற்றையோர்க்கு
அமரர் ஆகல்

நித்யஸூரிகளோடு ஒப்படைத்தல்
ஆகுமே

கூடுமோ?

வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன்
கோவேரி கழுதை வடிவம் கொண்டு -பக்தி அற்றவனாய் வந்த தேனுகாசுரனை

நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
ஆயுசு மாண்டு அழிந்து போகும் படி -அழகிய பனம் பழங்களின் மேலே தூக்கி எறிந்து

வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு
உயரத் தூக்கப் பட்ட தோள்களாலே அந்த அசுரனை ஒழித்து அருளின திருவடிகளுக்கு

ஆசையாம் யவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே-
ஆஸ்ரித விரோதி நிவர்த்தகனான எம்பெருமான் திருவடிகளில் ஆசை உடையார்க்கு அன்றி
மற்றையோர்க்கு நித்ய ஸூரி போக்யத்வம் கிட்டாது என்றவாறு-

கீழ்ப்பாட்டில் “பத்தினாபதோற்றமோடு” என்று ப்ரஸ்தாவிக்கப்பட்ட தசராவதாரங்களுள்

ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தை அநுஸந்தித்து அவ்வவதார சேஷ்டிதங்களுன் ஒன்றான தேநுகாஸுர நிரஸந விருத்தாந்தத்தைப் பேசி,

இப்படிப்பட்ட ஆச்ரித விரோதி நிவாதகனான எம்பெருமான் திருவடிகளிலே ஆசையுடையார்க்கன்றி

மற்றையோர்க்கு நித்யஸூரிபோகம் கிடைக்கமாட்டாதென்கிறார்.

—————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-101-120- -ஸ்ரீ உ வே -PBA -ஸ்வாமிகள்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

February 10, 2020

இரந்து உரைப்பது உண்டு வாழி ஏமம் நீர் நிறத்தம்மா
வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்ப்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -101-

பதவுரை

ஏமம் நீர் நிறத்து

மஹாஜலமான கடல்போன்ற நிறத்தையுடைய
அம்மா !

ஸ்வாமி!
இரந்து உரைப்பது உண்டு

(தேவரீரை) யாசித்துச் சொல்லும் வார்த்தையொன்றுண்டு
வாழி

பல்லாண்டு பல்லாண்டு;
மன்னு சீர்வரம் தரும் திருக்குறிப்பில்

(சேதநர்க்குச் ) சிறந்த வரங்களையருள்வதே இயல்வான (தேவரீருடைய) திருவுள்ளத்தில்
வைத்தது ஆகில்

அடியேனுக்கு ஏதாவது வரங்கொடுக்க நினைவுண்டாகில் (இந்த வரம் கொடுக்க வேணும்.)
பரந்த

கண்ட விடங்களில் அலைந்து திரிகிற
சிந்தை

எனது நெஞ்சானது
ஒன்றி நின்று

(தேவர் விஷயத்திலேயே) ஸ்திரமாயிருந்துகொண்டு
நின்ன

தேவரீருடைய
பாதபங்கயம்

திருவடித்தாமரைகளை
நிரந்தரம்

இடைவிடாமல்
நினைப்பது ஆக

தியானித்திருக்கும்படியாக
நீ நினைக்க வேண்டும்

தேவரீர் திருவுள்ள மிரங்க வேணும்.

இரந்து உரைப்பது உண்டு
தேவரீரிடம் யாசித்து சொல்லும் வார்த்தை ஓன்று உண்டு

வாழி ஏமம் நீர் நிறத்தம்மா
கடல் போன்ற நிறத்தை உடைய ஸ்வாமியே

வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்-
சேதனர்களுக்கு வரம் அருளுவதே இயல்பாக உன்னது திரு உள்ளத்தில் அடியேனுக்கு ஏதாவது வரம் தர வேண்டுமானால்
இத்தை தந்து அருள வேண்டும்

பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே
கண்ட இடங்களில் திரியும் எனது நெஞ்சை தேவரீர் விஷயத்திலே ஸ்திரமாக இருந்து நின்ன பாத பங்கயம் நிரந்தரம்
நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே-

வாழி-என்றதும் பரவசமாக நோக்கி அருளினான் —ஏமம் நீர் நிறத்தம்மா-என்கிறார்-
இரந்து உரைப்பது ஓன்று உண்டு -என்று பல காலும் விண்ணப்பம் செய்தாலும் முகம் காட்டாமல்
வாழி என்று ஒரு கால் மங்களா சாசனம் செய்ததும் பரவசனாய் திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டி அருள
ஏம நிறத்து அம்மா என்று பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்-

கீழ்ப்பாட்டில், பக்தியைத் தந்தருள வேணுமென்று பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்,

‘உமக்கு நான் பக்தியைக் கொடுப்பதாவதென்ன?

விஷயாந்தரங்களில் நின்றும் மீட்கப்பட்ட இந்திரியங்களைக்கொண்டு நம்மை நிரந்தரமாக நினைத்தால்

அதுவே பரமபக்தியாகத் தலைக்கட்டுகிறது; காரியம் உம் கையிலே கிடக்க என்னை நிர்பந்திப்பானேன்?’ என்ன;

பிரானே! அப்படி நிரந்தர சிந்தனை பண்ணுவது என் முயற்சியினாலேயே தலைக்கட்டி விடுமோ?

தேவரீர் ஸங்கல்பியாதவளவில் அதுதானும் நடைபெறுமோ?

ஆகையாலே அடியேன் தேவரீரையே நிந்தரம் நினைப்பேனாம்படி திருவுள்ளம்பற்றி யருளவேணுமென்கிறார்.

முதலடியின் முடிவில், அமா என்றது அம்மா! என்றபடி: தொகுத்தல், ஸ்வாமிந்!  என்கை.

‘இரந்துரைப்பதுண்டு” என்றவாறே எம்பெருமான் முகங்காட்டவில்லை; ‘

இவ்வாழ்வார்க்கு காரியமொன்றுமில்லை; திருப்பித்திரும்பி ‘அருளாய், இரங்கு’ என்று பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்;

இவர்க்கு நாம் முகங்கொடுக்கலாகாது’ என்று நினைத்து பாராமுகனாயிருந்தான்;

அங்ஙனிருந்ததுகண்டு, வாழி என்று கம்பீரமான மிடற்றோசையோடே பேசினார்;

அந்த மங்களசாஸன சப்தம் செவிப்பட்டவாறே எம்பெருமான் பரவசனாய் ஆழ்வாரை நோக்கினான்;

நோக்குதலும் அபரிச்சிந்நமான கடல்போலே ச்ரமஹரமான திவ்ய விக்ரஹத்தை ஸேவித்து

‘ஏமநீர் நிறத்து அம்மா!” என்று பெருமிடறு செய்து கூப்பிடுகிறார் என்று விவரித்துக் கொள்க.

——————

விள்விலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து
உள்ளுவேனது ஊன நோய் ஒழிக்கும் ஆ தெழிக்கும் நீர்
பள்ளி மாய பன்றியாய வென்றி வீர குன்றினால்
துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் ஓன்று சொல்லிடே -102-

பதவுரை

தெழிக்கும் நீர்

கொந்தளிக்கின்ற கடலிலே
பள்ளி

சயனங்கொண்டிருக்கிற
மாய

ஸர்வேச்வரனே!
பன்றி ஆய

மஹாவராஹமாகக் திருவவதரித்த
வென்றி வீர

ஜயசீலனான வீரனே!
துள்ளும் நீர்

துள்ளின கடலிலே
குன்றினால்

மலைகளைக் கொண்டு
உள்ளு வேனது

(அத்திருவடிகளையே தஞ்சமாக) அநுஸந்தித்திருக்கிற என்னுடைய
ஊனம் நோய்

சரீர சம்பந்தமான நோய்களை
வரம்பு செய்த

அணைகட்டின
தோன்றல்

ஸ்வாமியே!
யிலவு இலாத காதலால்

நீக்கமில்லாத அன்பினால்
விளங்கு பாத போதில் வைத்து

(உனது) விளங்குகின்ற பாதாரலிங்கத்திலே (நெஞ்சை) வைத்து
ஒழிக்கும் ஆ

ஒழிக்கும் வழிகளில்
ஒன்று

ஒருவழியை
சொல்லிவிடு

அருளிச் செய்க

விள்விலாத காதலால்
நீக்கம் இல்லாத அன்பினால்-அநந்ய ப்ரயோஜனனாய்க் கொண்டு பண்ணும் ப்ரேமம் –

விளங்கு பாத போதில் வைத்து
உனது பாதாரவிந்தத்திலே நெஞ்சு செலுத்தி

உள்ளுவேனது ஊன நோய்
அந்த திருவடிகளையே தஞ்சமாக இருக்கும் எனது சரீர சம்பந்தமான நோய்களை

ஒழிக்கும் ஆ
ஒழிக்கும் வழிகள்

தெழிக்கும் நீர்
கொந்தளிக்கும் கடலிலே

பள்ளி மாய பன்றியாய வென்றி வீர துள்ளு நீர் குன்றினால் வரம்பு செய்த தோன்றல் ஓன்று சொல்லிடே
நிரந்தரம் கைங்கர்யம் பண்ண சரீரம் தொலைத்து அருள பிரார்த்திக்கிறார்-

ஓன்று சொல்லிடே-இன்ன காலத்தில் இதனைப் போக்குகிறேன் என்று அருளிச் செய்தாலும் போதும் என்கிறார் –

‘நின்னபாதபங்கயம் நிரந்தரம் நினைப்பாக நீ நினைக்க வேண்டுமே” என்று பிரார்த்தித்த ஆழ்வாரைநோக்கி

எம்பெருமான் “ஆழ்வீர்! இந்த சரீரம் உள்ளவரையில் அப்படிப்பட்ட நிரந்தரசிந்தனை கூடமாட்டாதுகாணும்;

சரீர சம்பந்தம் அற்றொழிந்த பின்புதான் அது வாய்க்கும்” என்ற, ‘

பிரானே! இந்த சரீரம் தொலைய வேணுமென்கிற ருசியோ எனக்குப் பூர்ணமாயிராநின்றது;

இதனைத் தொலைத்தருளத் தட்டுண்டோ; வாய் திறந்தொரு வார்த்தை அருளிச் செய்யவேணும்” என்கிறார்.

விள்விலாத காதல்= விள்வாவது பிரயோஜநந்தரங்களை நச்சி நெகிழ்ந்து போகை;

அஃது இல்லாத காதல்- அநந்யப்ரயோஜகனாய்க்கொண்டு பண்ணும் ப்ரேமம்.

அப்படிப்பட்ட ப்ரேமத்தாலே திருவடித் தாமரைகளிலே நெஞ்சை வைத்து அவற்றையே சரணமாக

அநவரதம் அநுஸந்தித்துக் கொண்டிருக்கிற அடியேனுக்கு ஊனத்தை விளைக்கும் சரீர ஸம்பந்தமாகிய

நோயைப் போக்கியருளும் வகையில் ஒருவகை அருளிச் செய்யவேணும்.

‘இன்ன காலத்திலே இதனைப் போக்குகிறேன்’ என்று சொன்னாலும் போருமென்று திருவுள்ளம்

——————————

திருக்கலந்து சேரு மார்ப தேவ தேவ தேவனே
இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா
கருக்கலந்த காள மேக மேனி யாய நின் பெயர்
உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே –103-

பதவுரை

திரு கலந்து சேரும்

பெரிய பிராட்டியார்  நித்யஸம்ச்லேஷம் பண்ணி வாழப்பெற்ற
மார்பு

திருமார்பையுடையனே!
தேவர் தேவர் தேவனே

ப்ரஹ்மாதிகளிற் காட்டிலும் மேற்பட்ட நித்யஸூரிகளுக்கும் தலைவனே!
இருக்கு கலந்த வேதம் நீதி ஆகி நின்ற

(பலவகைப்பட்ட) ருக்குக்கன் சேர்ந்திருக்கிற வேதங்களால் பிரதி பாதிக்கப்படுகையை ஸ்வபாவமாகவுடையனான
நின் மலா

பரிசுத்தனே
கரு கலந்த

பொன்னோடு  சேர்ந்த
காளமேகம் மேனி

காளமேகம்போன்ற திருமேனியையுடைய
ஆய

கண்ணபிரானே!
நின் பெயர்

உன் திருநாமஙக்ளை
ஒழிவு இலாது

நிரந்தரமாக
உரு கலந்து  உரைக்கும் ஆறு

திவ்யமங்களவிக்ரஹத்தோடு சேர்ந்து அநுஸந்திக்கும் வகையை
உரைசெய்

அருளிச் செய்யவேணும்.

திருக்கலந்து சேரு மார்ப தேவ தேவ தேவனே இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா
பலவகைப் பட்ட ருக்குகள் சேர்ந்து இருக்கும் வேதத்தில் பிரதிபாதிக்கப்படும் பரி சுத்தமானவனே

கருக்கலந்த காள மேக மேனி யாய நின் பெயர் உருக் கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே –
பொன்னோடு சேர்ந்த திவ்ய மங்கள விக்ரகத்தோடு சேர்ந்து உனது திரு நாமங்களை நிரந்தரமாக அனுசந்திக்கும்
வகையை அருளிச் செய்ய வேணும்

சரீர சம்பந்தம் தீரும் வரை திரு நாம சங்கீர்த்தனம் பண்ணும் படியை அருளிச் செய்யப் பிரார்த்திக்கிறார் –

வேர் சூடுவார் மண் பற்றை உகக்குமா போலே சரம விமல சரீரத்தை விரும்பி அனுபவிப்பான் அன்றோ

ஆக அந்திம சமயம் வரை உனது திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுபவித்துக் கொண்டே
திரு நாம சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டே இருக்க அருளுவாய் என்கிறார்-

ஆழ்வார் தம்முடைய சரீரபந்தத்தை அறுத்து தந்தருள வேணுமென்று எம் பெருமானைப் பிரார்த்தித்தாலும்

அவன் இப்போதே அது செய்யமாட்டானே; இந்த சரீரத்தோடே இவரைச் சிறிது காலம் வைத்து

அநுபவிக்க விருப்பமுடையவனாதலால்

‘வேர்சூடுவார் மண்பற்றை உகுக்குமாபோலே’ இந்த ப்ராக்ருத சரீரத்தையே மிகவும் விரும்பியிருப்பவனிறே;

அதனால், ‘ஆழ்வீர்! நீர் பிரார்த்திக்கிறபடி சரீரபந்தத்தை இப்போதே அறுத்துத் தர முடியாது;

அதற்கு ஒரு காலவிசேஷம் உண்டு; பொறுத்திரும்’ என்ன;

அப்படியாகில் தேவரீருடைய மேன்மைக்கும் நீர்மைக்கும் வடிவழகுக்கும் வாசகமான திருநாமங்களையாவது

அடியேன் இடைவிடாது அநுஸந்தித்துக் கொண்டிருக்கும்படி அருள்புரிய வேணுமென்று பிரார்த்திக்கிறார்.

இருக்கு+கலந்த = இருக்கலந்த; “

சங்கு – கதை, சங்கதை” போல.

மூன்றாமடியில், ஆய! என்பது ‘ஆயன்’ என்பதன் விளி.

ஹிரண்யவர்ணையான பிராட்டி சேர்ந்த கரிய திருமேனிக்குக் கருக்கலந்த காளமேகத்தை ஒப்புச் சொல்லிற்று ஒக்கும்.

கரு- பொன்; மின்னலைச் சொல்லிற்றாகக் கொள்க.

கரு என்று சர்ப்பத்தைச் சொல்லிற்றாகவுமாய்;

நீர்நிறைந்த காளமேகமென்றபடி.

உருக்கலந்து = திருநாம ஸங்கீர்த்தகம் பண்ணும்போது திவ்யமங்கள விக்ரஹாநுபவம் நடைபெறவேண்டுமென்ற ஆசை விளங்கும்.

———————

கடுங் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை
இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே
கிடந்து இருந்து நின்றி யங்கு போது நின்ன பொற் கழல்
தொடர்ந்து வீள்விலாத தோர் தொடர்ச்சி நல்க வேண்டுமே -104-

பதவுரை

கடு

க்ரூரனான
கவந்தன்

கபந்ததென்ன
வக்கரன்

தந்தவக்த்ரனென்ன
கரன்

கரனென்ன
முரன்  சிறை அவை

முரனென்ன (இவர்களுடைய தலைகளை
இடந்து கூறு செய்த

சிந்நபிந்நமாக்கினவனும்
பல்படை தடகை

பலவகைப்பட்ட ஆயுதங்களைப் பெரிய திருக்கைகளிலே உடையனுமான
மாயனே

பெருமானே!
கிடந்து இருந்து நின்று இயங்குபோதும்

படுக்கை இருக்கை நிற்கை திரிகை முதலிய ஸர்வாவஸ்தைகளிலும்
நின்ன

தேவரீருடைய
பொன்கழல்

அழகிய திருவடிகளையே
தொடர்ந்து வீள்வு இலாதது ஓர் தொடர்ச்சி

இடைவிடாது அதுவர்த்தித் திருக்கையாகிற ஒரு தொடர்பை
நலக் வேண்டும்

தந்தருளவேணும்.

 

சர்வ அவஸ்தைகளிலும் அவனது சிந்தை தொடர பிரார்த்திக்கிறார் –

ஸர்வாவஸ்தைகளிலும் எம்பெருமானுடைய திருவடிகளிலேயே நிரந்தர சிந்தனை நடைபெறவேணுமென்று பிரார்த்திக்கிறார்.

(கிடந்திருந்து இத்யாதி.) ****** என்ற ச்லோகம் இங்கு அநுஸந்திக்கத்தக்கது.

படுத்துக்கொண்டிருக்கும் போதும் உட்கார்ந்திருக்கும்போதும் நிற்கும்போதும் திரியும் போதும்

ஆக எல்லா வவஸ்தைகளிலும் தேவரீருடைய பாதாரவிந்த சிந்தனையே மேன்மேலும் கடந்து வருமாறு

அருள் புரியவேணு மென்று பிரார்த்தித்தாராயிற்று.

—————–

மண்ணை உண்டு உமிழ்ந்து பின்னிரந்து கொண்டு அளந்த மண்
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலமாயினாய்
பண்ணை வென்ற வின் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக்
கண்ண ! நின்ன வண்ண மல்ல தில்லை எண்ணும் வண்ணமே -105-

பதவுரை

மண்ணை உண்டு

பூமியைப் பிரளயகாலத்திலே திருவயிற்றில் வைத்து நோக்கியும்
பின் உமிழ்ந்து

பிரளயம் கழிந்த பிறகு வெளிப்படுத்தியும்
இரந்துகொண்டு

(மஹாபலியிடத்தில்) பிக்ஷையேற்றுப் பெற்று
அளந்து

அளந்துகொண்டும்.
மண் கண்ணுள் அல்லது இல்லை என்று

‘இவ்வுலகமானது நமது கடாக்ஷத்தாலன்றி ஸத்தை பெற்றிருக்கமாட்டாது’ என்று திருவுள்ளம்பற்றி
வென்று

(அவ்வுலக முழுவதையும்) ஸ்வாதீகப்படுத்திக் கொண்டும் போந்த
காலம் ஆயினும்

ஸர்வகால நிர்வாஹகனே!
பண்ணை வென்ற இன்சொல் மங்கை

பண்களைத் திரஸ்கரித்த இனிமையான பேச்சையுடைய பிராட்டியினுடைய
கொங்கை

திருமுலைத்தடத்திலே
தங்கு

பிரியாது வாழ்கிற
பங்கயக்கண்ண

புண்டரீகாக்ஷனே!
நின்ன வண்ணம் அல்லது

உன் வடிவழகுதவிர
எண்ணும் வண்ணம் இல்லை

தியானிக்கக்கூடிய வடிவு மற்றொன்றுமில்லை.

 

மண்ணை உண்டு உமிழ்ந்து பின்னிரந்து கொண்டு அளந்த மண் கண்ணுள் அல்லது இல்லை என்று
இந்த உலகம் நமது கடாஷத்தால் அன்றி சத்தை பெறாது என்று திரு உள்ளம் கொண்டு

வென்ற காலமாயினாய்
உலகம் எல்லாம் ஸ்வ அதீநம் பற்றிக் கொண்டு போந்த சர்வ கால நிர்வாஹகனாய்

பண்ணை வென்ற வின் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண ! நின்ன வண்ண மல்ல தில்லை எண்ணும் வண்ணமே
உனது திவ்ய மங்கள விக்ரஹ அனுபவம் மட்டுமே நெஞ்சால் த்யானித்து இருப்பேன் என்கிறார்-

அடியேன் பிரார்த்தித்தபடி நீ அருள்வாய், அருளாதொழிவாய்;

என்னுடைய அத்யவஸாயம் எப்படிப்பட்டது தெரியுமோ?

உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹகத்தின் அநுபவமல்லது வேறென்றுமில்லை.

நெஞ்சில் நடவாதென்று தமது உறுதியை வெளியிடுகிறார்.

———————

கறுத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூடவன்று
அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
தொறுக்கலந்த ஊனம் அஃது ஒழிக்க வன்று குன்றம் முன்
பொறுத்த நின் புகழ்கு அலாலோர் நேசம் இல்லை நெஞ்சமே -106-

பதவுரை

அன்று

முன்னொரு காலத்து
கறுத்து எதிர்ந்த காலநேமி

கோபித்து எதிரியிட்ட காலநேமியானவன்
காலனோடு கூட

யமலோகம் போய்ச்சேரும்படியாக
அறுந்த

அவன் தலையை அறுத்த
ஆழிசங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்

பஞ்சாயுதாழ்வார்களை
ஏந்தினாய்

திருக்கையிலே அணிந்து கொண்டிருக்கும் பெருமானே!
தொறு கலந்த ஊனம் அஃது

பசுக்களுக்கு நேர்ந்த அப்படிப்பட்ட ஆபத்தை
அன்று ஒழிக்க

அப்போதே போக்குவதற்காக
முன்

எல்லாருடையவும் கண்முன்னே
குன்றம் பொருத்த நீ

கோவர்ததனமலையை (குடையாகத்) தூக்கினெயேடுத்த தேவரீருடைய
புகழ்க்கு அலால்

திருக்குணங்களுக்குத் தவிர (மற்றெவ்விஷயத்திலும்)
நெஞ்சம்

எனது நெஞ்சுக்கு
ஓர் கேசம் இல்லை

சிறிதும் ப்ரதியில்லை.

கறுத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூடவன்று அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்-
தொறுக்கலந்த ஊனம் அஃது ஒழிக்க வன்று
பசுக்களுக்கு நேர்ந்த அப்படிப்பட்ட ஆபத்தை அப்போதே போக்க

குன்றம் முன் பொறுத்த நின் புகழ்கு அலாலோர் நேசம் இல்லை நெஞ்சமே-
எல்லோருடைய கண் முன்னே குன்றம் எடுத்து அருளிய சேஷ்டிதங்களை பேசி அனுபவிக்கிறார்-

திவ்ய சேஷ்டிதங்களையே புகழ்ந்து பேசுவதிலேயே அடியேனுடைய அபிநிவேசம் பெருகுகிறது என்கிறார் –

தேவரீருடைய திவ்யசேஷ்டிதங்களைப் புகழ்ந்து பேசுவதிலேயே அடியேனுக்கு அபிநிவேசம் பெருகுகின்ற தென்கிறார்.

காலநேமியை முடித்தருளினபடியையும்

கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்துக் கோநிரையைத் காத்தபடியையும்

கூறிப் புகழ்ந்தாராய்ந்து.

———————

காய் சினத்த காசி மன்னன் வக்கிரன் பவுண்டிரன்
மாசினத்த மாலிமான் சுமாலி கேசி தேனுகன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கலால்
நேச பாசம் எத் திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே -107-

பதவுரை

எம் ஈசனே

எம்பெருமானே!
காய் சினந்த காசிமன்னன்

மஹா கோபியான காசிராஜாவும்
வக்கரன்

(ருக்மினி விவாஹ காலத்தில் வந்து போர் செய்த) தந்தவக்த்ரனும்
பவுண்டிரன்

பௌண்ட்ரக வாஸுதேவனும்
மா சினந்த மாலி

அதிகோபிஷ்டனான மாலியும்
மா கமாலி

மஹானான ஸுலிமாலியும்
கேசி

(குதிரை வடிவங்கொண்டு கொல்ல வந்த) கேசியும்
தேனுகன்

தேநுகாஸுரனும்
நாசம் உற்று வீழ

துக்கத்தையநுபவித்து மாண்டு போம்படியாக
நாள் கவர்ந்த

(அவர்களுடைய) வாழ்நாளை முடித்த
நின்

தேவரீருடைய
கழற்கு அலால்

திருவடிகளுக்குத் தவிர
எத்திறந்தும்

வேறு எவ்விஷயத்திலும்
நேச பாசம்

ஆசாபாசத்தை
வைத்திடேன்

வைக்கமாட்டேன்

நேச பாசம் -ஆசா பாசம்-

————-

கேடில் சீர் வரத்தனாய்க் கெடும் வரத்தயனரன்
நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும்
வீடதான போகமெய்தி வீற்று இருந்த போதிலும்
கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே -108-

பதவுரை

கேடு இல் சீர் வரத்தன் ஆம் அயன்

அழிவில்லாத ஸம்பத்தை யுடையவனாம்படி வரம்பெற்றவான பிரமனென்ன
கெடும் வரத்து அரன்

எல்லாவற்றுக்கும் முடிவை உண்டு     பணிணுவனாக வரம் பெற்ற சிவனென்ன (இவர்களுடைய)
நாடினோடு கூட

நாடுகளோடு கூட
கூடும் ஆசை அல்லது

எம்பெருமானோடு சேரவேணும் சேரவேணும் என்று மநோரதத்திருக்கை தவிர
நாட்டம் ஆயிரத்தன் நாடு

ஆயிரங்கண்ணுடைய இந்திரனுடைய நாட்டையும்
கண்ணீரும்

அடையப்பெறுவதாயிருந்தாலும்
வீடு ஆனஅது போகம் எய்தி வீற்றிருந்த போதிலும்

மோக்ஷமாகிய அவ்வநுபவத்தையே பெற்று (ஆநந்தமயமாய்) வீற்றிருக்க பெறுவதானாலும்
ஒன்று குறிப்பில் கொள்வனோ

மற்றொன்றை நெஞ்சினுள் நினைப்பேனோ.

கேடில் சீர் வரத்தனாய்க் கெடும் வரத்தயனரன்
அழிவில்லாத சம்பத்தை உடையவனாம் படி வரம் பெற்ற பிரம்மனும் –
எல்லா வற்றுக்கும் முடிவு உண்டு பண்ணுவதாக வரம் பெற்ற சிவனும்

நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும்
இவர்களின் நாடுகளின் கூட 1000 கண் கொண்ட இந்தரனின் நாட்டையும் நண்ணினும்

நாட்டம் என்று கண் -நாட்டம் ஆயிரத்தன் -ஆயிரம் கண்ணன் இந்திரன்

வீடதான போகமெய்தி வீற்று இருந்த போதிலும் கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே
அவனை அனுபவிப்பதை விட அவனைப் பற்றும் மநோ ரதமே சிறந்தது என்கிறார் –

எம்பெருமானைக் கிட்ட அனுபவிப்பதிலுங்காட்டில் அவ்வநுபவத்தைப் பற்றின மநோரதமே நித்யமாய்ச் செல்லுமாகில்

அதுவே சிறக்குமென்பது ஆழ்ந்த பக்தியுடையவர்களுடைய ஸித்தாந்தம்;

அதனை யருளிச் செய்கிறார் இப்பாட்டில்.

நாட்டம் என்று கண்ணுக்குப் பெயர்;

நாட்டமாயிரததன் என்று ஸஹஸ்ராக்ஷனுடைய இந்திரனுக்கு காமதேயமாகிறது.

இதனையுணராது, “காடினோடு நாட்டமாய் இரத்தனோடு கண்ணிலும்” என்று

ஓதுமவர்களுடைய ஞானப்பெருக்கை என் சொல்வோம்.

———————

சுருக்குவாரை இன்றியே சுருக்கினாய் சுருங்கியும்
பெருக்குவாரை இன்றியே பெருக்கமெய்து பெற்றியோய்
செருக்குவார்கள் தீக் குணங்கள் தீர்த்த தேவ தேவன் என்று
இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன் -109-

பதவுரை

சுருங்குவாரை இன்றியே

சுருங்கச்செய்வதற்கு ஹேதுவான கருமமம் முதலியவை ஒன்றுமில்லாமலே
சுருங்கினாய்

(ஸ்ரீவாமனாகச்) சுருங்கின பெருமானே!
சுருங்கியும் பெருக்கு வாரை இன்றியே

அப்படிக் குறுகினபின்னும் பெருகச் செய்வதற்கு ஹேதுவான கருமம் முதலியவை ஒன்றுமில்லாமல்
பெருக்கம் எய்து

(த்ரிவிக்ரமனாகத்) திருவளர்த்தி
பெற்றியோய்

பெற்ற பெருமானே
செருக்குவார்கள்

அஹங்காரிகளாய்த் திரிந்த மஹாபலி போல்வாருடைய
தீ குணங்கள்

அஹங்கார மமகாரங்களாகிற தீயகுணங்களை
தீர்த்த

தொலைத்தருளின

தேவதேவன்! தேவாதிதேவனே!

என்று

இவ்வாறு பல ஸம்போதகங்களையிட்டு
இருக்குவாய் முனி கணங்கள் ஏந்த

வேதமோதும் வாயையுடையரான  மஹரிஷிகளின் திரள் துதிக்க (அதைக்கண்டு)
யானும் ஏத்தினேன்

அடியேனும் துதித்தனித்தனை.

சுருக்குவாரை இன்றியே
சுருங்க செய்ய ஸ்ரீ வாமனனாய் சுருங்கினாய்

சுருங்கியும் பெருக்குவாரை இன்றியே பெருக்கமெய்து பெற்றியோய்
திரிவிக்ரமனனாய் பெருக்கமும் எய்தினாய்

செருக்குவார்கள் தீக்குணங்கள் தீர்த்த தேவ தேவன் என்று
அஹங்காரம் கொண்டு இருந்த மகா பலி போல்வாரின் அஹங்காரம் மமகாரம் போன்ற தீய குணங்களைத் தீர்த்தாய்

இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன்
வேதம் ஓதும் வாய் உடைய முனிவர்கள் துதிக்க அத்தைக் கண்டு நானும் துதித்தேன் –
நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்-

எப்படி ஊராம் இலைக்கக் குருட்டாம் இலைக்கும் என்னும் அப்படி யானும் சொன்னேன் அடியேன்
மற்றி யாது என்பேனே-திரு விருத்தம்

இரைத்து நல் மேல் மக்கள் ஏத்த நானும் ஏத்தினேன் –திருவாய் மொழி

எம்பெருமானே! உன்னுடைய வடிவழகு, திருக்கல்யாணகுணங்கள், திவ்ய சேஷ்டிதங்கள் முதலியவற்றைப்பற்றி

நான் பேசுவதெல்லாம் நானாகவே கண்டறிந்து பேசுவதல்ல, சிற்றறிவினனாகிய எனக்கு ஒன்றும் தெரியாது.

வைதீக புருஷர்கள் ஸ்தோத்ரம் பண்ண ககண்டு காணும், அநுவாதரூபமாக ஏதோ பேசினே னுத்தனை என்று

ஸநச்யானுஸந்தாநம் பணிக்கொள்ளுகிறார்.

“எப்படி ஊராமிலைக்கக் குருட்டாமிலைக்கு மென்னும் அப்படியானுஞ் சொன்னேன், அடியேன் மாற்றியாதென்பனே” (திருவிருத்தம்)

“இரைத்து நல்ல மேன்மக்களேத்த யானுமேத்தினேன்” (திருவாய்மொழி.) என்ற நம்மாழ்வாரருளிச் செயல்களுங் காண்க.

———————————

தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய்
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்துமீதெலாம்
நீயு நின் குறிப்பினில் பொறுத்து நல்கு வேலை நீர்ப்
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே -110-

பதவுரை

கரும்பு உலாவு

வண்டுகள் உலாவப்பெற்ற
தண் துழாய்

குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய
மாய!

ஆச்சர்ய சந்தியுக்தனான பெருமானே!
நாயினேன்

நீசனான அடியேன்
தூயனாயும்

பரிசுத்தனாகவோ
அன்றியும்

பரிசுத்தனல்லாதவனாகவோ
நின்னை

தேவரீரை
வணங்கி

ஸேவித்து
வேலை நீர்  பாயலோடு

திருப்பாற்கடலாகிற படுக்கை யோடுங்கூட
பக்தர் சித்தர்

பக்தர்களுடைய ஹ்ருதயத்திலே
மேய

குடியிருக்கின்ற
வேலைவண்ணனே!

கடல்வண்ணனே!
வாழ்த்தும் இது எலாம்

துதிப்பதாகிற இதனையெல்லாம்
நீயும்

(ஸர்வஸஹிஷ்ணுவான) தேவரீரும்
நின் குறிப்பினில் பொறுத்து

திருவுள்ளத்திலே க்ஷமித்திருள்
நல்கு

அநுக்ரஹம் செய்ய வேணும்.

தூயனாயும் அன்றியும்
பரிசுத்தனாகவோ அல்லாதானாகவோ

சுரும்பு உலாவு தண் துழாய் மாய –
வண்டுகள் உலாவப் பெற்ற குளிர்ந்த திரு துழாய் மாலையை உடைய பெருமானே

நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்துமீதெலாம் நீயு நின் குறிப்பினில் பொறுத்து நல்கு
திரு உள்ளத்தில் ஷமித்து அருளி அனுக்ரஹம் செய்ய வேணும்

வேலை நீர்ப் பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே
திருப் பாற் கடல் படுக்கை உடன் கூட பக்தரின் நெஞ்சில் குடி கொண்டு இருக்கும் கடல் நிற வண்ணன்

தூயனாயும் அன்றியும் -அஹங்காரம் மமகாரம் நிறைந்து அசுத்தனாகவும்
தேவரை பரம பரிசுத்தராக அனுசந்திப்பதால் சுத்தனாகவும் இருக்கிறேன்

தூயனாயும் அன்றியும் = என்னை ஒருவிதத்திலே பார்த்தால் பரிசுத்ததென்னலாம்;

மற்றொருவிதத்திலே பார்த்தால் அபரிசுத்தனென்றும் சொல்லலாம்;-

தேவரீரைப் பரமனை பரிசுத்தாக அநுஸந்திப்பதே எனக்கு சுத்தியாதலால் அந்த விதத்தாலே அடியேன் சுத்தனாகவுமாம்;

அஹங்கார மமகாரங்களால் நிறைந்திருக்றேனாதலால் அந்த விதத்தாலே அபரிசுத்தனாகவுமாம்;

சுத்தனாயோ அசுத்தனாயோ தேவரீரை வணங்கித் துதித்துவிட்டேன்; இனி க்ஷமிப்பதே நலம்.

————————————————

வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயின் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தலாகும் என்பர் ஆதலால் எம்மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே -111-

பதவுரை

நின்னை வைது

தேவரீரை நிந்தித்து
வல்லஆ பழித்தவர்க்கும்

சக்தியுள்ளவரைக்கும் அபவாதங்களை சொன்ன சிசுபாலாதிகளுக்கும்
மாறு இல்போர் செய்து

ஒப்பில்லாத யுத்தம்பண்ணி
நின்ன செற்றும்

தேவரீருடைய
தீயில்

கோபாக்நியில்
வெந்தவர்க்கும்

வெந்துபோன வாலி முதலானோர்க்கும்
உனைவந்து எய்தல் ஆகும் என்பர்

தேவரீரைக் கிட்ட உஜ்ஜீவிக்கப்பெறலாகுமென்று (மஹரிஷிகள்) சொல்லாநின்றனர்;
ஆதலால்

ஆகையாலே
எம் மாய!

எம்பெருமானை!
ஞானம் நாதனை

ஸர்வலோக ஸம்ரக்ஷகனே!
நாயினேன்

அடியேன் பண்ணின
செய்த குற்றம்

குற்றங்களை
நற்றம் ஆகவே கொள்

குணமாகவே கொள்ளல் வேண்டும்.

வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும்
தேவரீரை நிந்தித்து சக்தி உள்ளவரையில் அபவாதங்கள் சொன்ன சிசுபாலர் போல்வாருக்கும்

மாறில் போர் செய்து
ஒப்பில்லா யுத்தம் பண்ணி

நின்ன செற்றத் தீயின்
உனது கோப அக்னியில்

வெந்தவர்க்கும்
வாலி போல்வார்

வந்து உனை எய்தலாகும் என்பர்
உன்னைக் கிட்டி உஜ்ஜீவிக்கலாம் என்று மக ரிஷிகள் சொல்லுவார்கள்

ஆதலால் எம்மாய நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் போலே
அவனது வாத்சல்யத்தால் பொறுத்து நல்கு -என்று பிரார்த்திப்பது அபசாரம் என்று
நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள்-என்கிறார்

கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான்
காடுகள் சாதியாயும் ஆகப் பெற்றான் பற்றி உரல் இடை ஆப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சு கொலோ
என்று ஆண்டாள் வயிறு எரிந்து பேசும் படி தூஷித்தவர்களும் ப்ராப்தரானார்கள்

அதே போலே பிரதிகூலனான அடியேன் செய்யும் குற்றங்களை போக்யமாக கொண்டு அருள வேணும் என்கிறார்

கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளையே வையும் சேட்பால் பலம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரே அறிந்துமே

வைதல் -இல்லாததை சொல்லி தூஷிப்பது

பழித்தல் -உள்ளதை இழிவாக சொல்லி தூஷிப்பது-

தம்முடைய அபசாரத்தைப் பொறுத்தருளும்படி பிரார்த்தித்தார் கீழ்பாட்டில்;

எம்பெருமானுடைய வாத்ஸல்யமென்னும் குணவிசேஷத்தை ஆராய்ந்து பார்த்தார்;

என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்று குற்றத்தையும் குணமாகக் கொள்ளுகிற

எம்பெருமானுடைய திருவுள்ளம் புண்படும்படி “பொறுத்துநல்கு” என்று பிரார்த்திப்பது மஹாசாரமென்று அநுதபித்து,

அவ்வெம்பெருமானுடைய வாத்ஸல்ய குணத்துக்குத் தகுதியாயப் பேசுகிறார். –

“காயினேன் செய்த குற்றம் கற்றமாகவே கொள்” என்கிறார்.

“கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடுவாழ் சாதியுமாகப் பெற்றான்.

பற்றியுரவிடையாப்பு முண்டான் பாவிகாள் உங்களுக்கேச்சுக்கொலோ?” என்று ஆண்டாள் வயிறெரிந்து பேசும்படியாக

தேவரீரை விசேஷமாகத் தூஷித்து தேவரீரோடே எதிரம்புகோத்தும் போர்புரிந்து

கடைசியாக தேவரீருடைய கோபத்துக்கு இலக்காகி நீறாயொழிந்த சிசுபால வாலிப்ரப்ருதிகளும்

தேவரீருடைய பரதத்தைப் பராப்தரானார்களென்று மஹர்ஷிகள் சொல்லிவைத்திருக்கிறார்கள்:

மஹா த்ரோஹிகளான அவர்களுடைய அபராதங்களைப் பொறுத்தருளின தேவரீர்.

அவர்களைப்போலே ப்ரதிகூலனல்லாத அடியேனுடைய குற்றங்களையும் பொறுத்தல் விசேஷமென்!

ஆச்ரிதருடைய குற்றங்களை சுற்றமாகக் கொள்வதன்றோ சிறப்பு என்கிறார்.

வைதுவல்லவா பர்த்தவனான சிசுபாலனுக்கு மோக்ஷம் கிடைத்ததென்பதைப் பராசரர் சொல்லிவைத்தார்,  “

***“ என்பது ஸ்ரீவிஷ்ணுபுராணம்.

“கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும் சேட்பால் பழம்பகைவன் சிசுபாலன்,

திருவடி தாட்பாலடைந்த தன்மையறிவாரையறிந்துமே“ என்றார் நம்மாழ்வாரும்.

மாறில் போர் செய்து செற்றத்தீயில் வெந்தவனான வாலிக்கு மோக்ஷ ப்ராப்தியை வால்மீகிமுனிவர் கூறினர், “***“ என்பது ஸ்ரீராமாயணம்.

வைதலாவது என்ன? பழித்தலாவது என்ன? எனில்,

இல்லாத செய்திகளைச் சொல்லி தூஷிப்பது வைதல்,

உள்ள செய்திகளையே இழிவாகச் சொல்லி தூஷிப்பது பழித்தல் என்று கொள்க.

—————————————

வாள்களாக நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பெய்தி
மாளு நாளதாதலால் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஆளதாகும் நன்மை என்று நன்கு உணர்ந்த தன்றியும்
மீள்விலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே –112-

பதவுரை

நாள்கள்

தினங்களானவை
வாள்கள் ஆகி செல்ல

(நமது ஆயுளை அறுக்கும்) வாள்கள்போன்று கழிய
நோய்மை

பலவகை வியாதிகளாலே
குன்றி

உடல் பலக்குறைபட்டு
மூப்பு எய்தி

கிழத்தனமும் வந்து சேர்ந்து
மாளும் நாள் அது

மரணமடைவதோர் நாள் நெருங்கிவிட்டது;
ஆதலால்

ம்ருத்யுகாலம் குறுகிவிட்டபடியால்
என் நெஞ்சமே

எனது மனமே!
ஆனது நன்மை ஆகும் என்று

எம்பெருமானுக்கு ஆட்பட்டிருப்பதே நன்மையென்று
நன்கு உணர்ந்து

த்ருடமான அத்யவஸாயங்கொண்டு
வணங்கி வாழ்த்து

(அவ்வெம்பெருமானைத்) தொழுது ஏத்துவாயாகா;
அது அன்றியும்

அதற்கு மேலே
மால பாதமே

அப்பெருமானுடைய திருவடிகளே
மீள்வு இலாத போகம்

மறுபடி திரும்பி வருதலில்லாத நித்யபோகத்தை
நல்க வேண்டும்

அளிக்கக்கடவது

 

வாள்களாக நாள்கள் செல்ல
நமது ஆயுளை அறுக்கும் வாள்கள் போலே திங்கள் கழிய
நோய்மை குன்றி மூப்பெய்தி மாளு நாளதாதலால் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே-ஆளதாகும் நன்மை
எம்பெருமானுக்கு ஆட்பட்டு இருப்பது நன்மை என்று
என்று நன்கு உணர்ந்த தன்றியும் மீள்விலாத போகம் நல்க வேண்டும்

மால பாதமே மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
நாளைக்கு தொழுவோம் என்று இராமல் இப்பொழுதே வணங்கி வாழ்த்த வேண்டும் –
அடிமை செய்வது தானே புருஷார்த்தம் என்ற நினைவுடன்-

“மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்”என்றபடி

நமது வாழ்நாள் இன்ன போது முடியுமென்று தெரியாததாகையால் வாழ்நாளுள்ள வரையில்

எம்பெருமானை வணங்கி வாழ்த்தவேணுமென்று தமது திருவுள்ளத்தைக் குறித்து உபதேசிக்கிறார்.

நாள்களோ கடுங்குதிரைபோல் விரைந்தோடிக்கொண்டேயிருக்கின்றன; ‘

ஆயுஸ்ஸை அறுக்கிற வாள்களோ இவை என்னும்படியாக நாள்கள் பழுதே கழியாநிற்க,

யௌவநப் பருவத்திலுண்டாகக் கூடிய ரோகங்களாலே உடல் குன்றிப்போய் இடிவிழுந்தாற்போல்

திடீரென்று கிழத்தனமும் வந்து சேர்ந்து செத்துப்போகும் நாள் அணுகிவிட்டது;

ஆயுஸ்ஸு அஸ்திரமாகையாலும், உள்ள ஆயுஸ்ஸில் விக்கங்கள் பலவு முண்டாகையாலும்,

‘நாளைக்குத் தொழுவோம்’ என்றிராமல் இப்போதே திருவடிகளிலே வணங்கி வாழ்த்தப்பாராய் நெஞ்சே!;

ஆனது நன்மையாகும் என்று நன்கு உணர்ந்து வணங்கி வாழ்த்து என்று அந்வயம்.

போதைப் போக்குவதற்காகவன்றியே ‘அடிமைசெய்வதுதான். புருஷார்த்தம் என்கிற

அத்யாவசாய த்வரையுடனே வணங்கி வாழ்த்து’ என்கிறார்.

——————

சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்டலைப்
புலன் கலங்க வுண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே -113-

பதவுரை

நெஞ்சமே!

என்மனமே
வாழி

உனக்குப் பல்லாண்டு, (நான் சொல்வதைக் குறிக்கோள்
சலம் கலந்த செம்சடை

கங்கை நீரோடு வடின சிவந்த ஜடையையுடைவனும்
கறுத்த கண்டன்

(விஷத்தினால்) கறுத்த கழுத்தையுடையனும்
புலன் கலங்க

ஸர்வ இந்திரியங்களும் கலங்குமாறு
வெண்தலை

வெளுத்துப்போன கபாலத்திலே
உண்ட

பிச்சைவாங்கியுண்டு ஜீவித்த
பாதகத்தான்

கோரமாதகியுள்ள சிவபிரானுடைய
வன்துயர்கெட்

வலிதான துக்கம் தீரும்படி
அலங்கல்

திருத்துழாய் மாலையையணிந்த
மார்வில்

திருமார்பினின்றும்
வாசம் நீர்

திவ்யபரிமளமான தீர்த்தத்தை
கொடுத்தவன்

அவனுக்கு ப்ரஸாதித்தருளி
அடுத்த சீர்

என்றும்விட்டு நீங்காத திருக்கல்யாண குணங்களையுடைய
நலம்கொள் மாலை

ஆநந்தமயனான எம்பெருமானை
கண்ணும் வண்ணம்

அணுகும் வழியாகிற அவனது திருவருளையே
எண்ணு

அநுஸந்தித்து

சலம் கலந்த செஞ்சடை
கங்கை நீரோடு கூடின சிவந்த தலையுடன்

கறுத்த கண்டன் வெண்டலை
வெளுத்த கபாலத்திலே

புலன் கலங்க
சர்வ இந்த்ரியங்களும் கலங்குமாறு

வுண்ட பாதகத்தன்
பிச்சை எடுத்த ஜீவித கோர பாதகத்தன் -சிவன்

வன் துயர் கெட-அலங்கல் மார்பில்
திருத் துழாய் அணிந்த மார்பிலே

வாச நீர் கொடுத்தவன்
திவ்ய பரிமளமான தீர்த்தத்தை கொடுத்தவன்

அடுத்த சீர்
என்றும் விட்டு நீங்காத கல்யாண குணங்கள் உடைய

நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே
ஆனந்த மயமான மாலை அணுகும் வழியாகிற அவனது திருவடிகளை அனுசந்தித்து வாழி நெஞ்சமே –

————————

ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீது போய்
வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஞானமாகி ஞாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில்
ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே -114-

பதவுரை

என் நெஞ்சமே

எனது மனமே
ஈனம் ஆய

(அறிவுக்குக்) குறைவை விளைக்கவல்ல
எட்டும்

அவித்யை. கருமம், வாஸகா, ருசி, பிரகிருதி ஸம்பந்தம், தாப த்ரயம் ஆகிய எட்டையும்
நீக்கி

போக்கி
ஏதம் இன்றி

ஸம்ஸார துக்கங்களெல்லாம் போய்
மீது போய்

(அர்சிராதி மார்க்கத்தாலே லீலா விபூதிக்கு) மேலே சென்று
வானம்

பரமபதத்தை
ஆளவில்லை நூல்

அநுபவிக்க வேண்டியிருந்தாயாகில்
ஞானம் ஆகி

ஆத்மஞானத்தை யளிப்பவனாயும்
ஞாயிறு ஆகி

ஸூரியனைப்போலே இந்திய ஞானத்தை அளிப்பவனாயும்
ஏனம் மூர்த்திஆய்

மஹா வராஹமூர்த்தியாய்
ஞாலம் முற்றும்

பூமி முழுவதையும்
ஓர் எயிறு

ஒரு கோட்டினாலே
இடந்த

அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்தெடுத்து ரக்ஷித்த
எந்தை

எம்பெருமானது
பாதம்

திருவடிகளை
எண்ணி

சிந்தித்து
வணங்கி

நமஸ்கரித்து
வாழ்த்து

துதிக்கக்கடவை

ஈனமாய எட்டும் நீக்கி
அறிவுக்கு பாதகம் விளைக்க வல்ல
அவித்யா கர்மம் வாசனை ருசி பிரகிருதி சம்பந்தம் தாப த்ரயம் ஆகிய எட்டையும் போக்கி

ஏதமின்றி மீது போய்
சம்சாரிக்க துக்கங்கள் எல்லாம் போக்கி -அர்ச்சிராதி கதியிலே சென்று

வானமாள வல்லையேல்
பரமபதத்தை அனுபவிக்க ஆசை கொண்டு இருந்தால்

வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
நமஸ்கரித்து துதித்து

ஞானமாகி
ஆத்ம ஞானம் அளிப்பவனாயும்

ஞாயிறாகி
சூர்யன் போலே

ஞாலம் முற்றும் –எண்டறிய ஞானம் அளிப்பவனாயும்
ஆக அக இருளையும் புற இருளையும் போக்குபவனாயும்

ஓர் எயிற்றில் ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே
ஸ்ரீ வராஹ மூர்த்தியாய் பூமி முழுவதையும் ஒரு கோட்டினிலே பிரளய கடலில் இருந்த ஸ்ரீ பிராட்டியை
உத்தரித்து அருளினது போலே
நம்மையும் சம்சார கடலில் இருந்தும் உத்தரித்து அருள வேணும் என்கிறார் –

ஞானமாகி ஞாயிறாகி–ஸ்ரீ வராஹ மூர்த்தி தானே ஸ்ரீ ஞானப்பிரான் -சம்சாரக்கடலில் இருந்து
நம்மை உத்தரித்து அருளுவான்-

ஈனமாயவெட்டும் என்று- ஆத்மாவுக்குப் பொல்லாங்கைப் பண்ணுவதான

காமம், க்ரோதம்,கோபம், மோஹர், மதம்,மாத்ஸர்யம், அஜ்ஞானம்,அஸூயை என்ற எட்டும் சொல்லிற்றாகவுமாம்.

(இந்த நிர்வாகஹம் ஆசார்ய ஹ்ருதய வியாக்கியானத்திலுள்ள.)

காமமாவது- விரும்பின பதார்த்தத்தை அநுபவித்தே தீரவேண்டும்படியான அவஸ்தை

க்ரோதமாவது- அப்படி விரும்பின பதார்த்தம் கிடையாதொழியில் அணுகினவர்கள் மேல் பிறக்கும் சீற்றம்.

லோபமாவது- கண்ட பதார்த்தங்களிலும் அளவற்ற அபேக்ஷை.

மோஹமாவது- கார்யமின்னது அகார்யமின்னது என்று ஆராயமாட்டாமை.

மதமாவது- பொருள் முதலியவை கிடைப்பதனால் உண்டாகும் களிப்பு.

மாத்ஸர்யமாவது- பிறர்மினுக்கம் பொறாமையை அநுஷ்டாநபர்யந்தமாக நடத்துகை.

அஜ்ஞாகமாவது- இவற்றால் மேல்வருங்கெடுதியை நிரூபிக்கமாட்டாமை.

அஸூயையாவது- குணங்களிலே தோஷத்தை ஆவிஷ்கரிக்கை.

இவை யெட்டும் நீங்கினால் ஏதம் கழியுமாதலால் ஏதுமின்றி எனப்பட்டது.

ஞானமாகி ஞாயிறாகி = ஞானத்தையளித்து உள்ளிருளை நீக்குவானும் எம்பெருமானே;

ஸூர்யனை யுண்டாக்கி அவன் மூலமாக புறயிருளை யொழிப்பானும் எம்பெருமானே என்ற கருத்து உணரத்தக்கது.

ஆத்ம ஜ்ஞாநத்துக்கும் இந்த்ரிய ஜ்ஞாநத்துக்கும் நிர்வாஹகனென்றவாறு

ஸ்ரீ வாரஹமூர்த்திக்கு ஞானப்பிரான் என்ற திருநாமம் ப்ரஸித்தமாதலால்

அதனைத் திருவுள்ளம் பற்றியே ஞானமாகி ஞாயிறாகி என்கிறார்போலும்.

பிரளயக் கடலில் அழுந்திக் கிடந்த பூமிப்பிராட்டியை உத்தரித்தருளினதுபோலவே

ஸம்ஸாரக் கடலில் அழுந்திக்கிடக்கிற நம்மையும் உத்தரித்தள்வான் என்று அநுஸந்திக்க வேணுமென்பது தோன்ற “ஞாலமுற்றோமோரெயிற்றேனமாயிடந்தமூர்த்தி என்கிறார்.

———————

அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-

பதவுரை

முத்தனார்

ஸம்ஸார ஸம்பந்தமில்லாதவரும்
முகுந்தனார்

மோக்ஷபூமியை அளிப்பவருமான பெருயாமன்;
ஒத்து ஒவ்வாத  பல் பிறப்பு ஒழித்து

ஞானமுடைமையால் ஒத்தும் யோநிபேதத்தால் ஒவ்வாமலுமிருக்கிற பலவகைப்பட்ட பிறவிகளைப்போக்கி
நம்மை ஆட்கொள்வாள்

நம்மை அடிமை கொள்வதற்காக
அத்தன் ஆகி

பிதாவாயும்
அன்னை ஆகி

மாதாவயும்
ஆளும் எம்பிரானும் ஆய்

அடிமைகொள்ளும் ஸ்வாமியாயும்
நம்முன்

நம்மிடத்திலே
புகுந்து மேவினார்

புகுந்து ஒரு நீராகப் பொருந்தினார்; (ஆனபின்பு)
ஏழை நெஞ்சமே

மதிகெட்ட மனமே
எத்தினால்

எதுக்காக
இடர் கடல்

துக்கஸாகரத்திலே
கிடத்தி

அழுந்திக் கிடக்கிறாய்.

ஸ்ரீ சரம ச்லோகார்த்தம் சொல்லும் பாசுரம்
இத்தையும் வார்த்தை அறிபவர் -பாசுரத்தையும் முமுஷுப்படி முடிவில் எடுத்துக் காட்டி அருளுகிறார்
நம்முள் ஒரு நீராகப் பொருந்தி இருக்கிறார் மட நெஞ்சமே சோகப் படாதே என்கிறார்-

அகில ஹேய ப்ரத்யநீகராகையாலே சம்சார நாற்றமே கண்டு அறியாதவராய் மோக்ஷ பூமியைத் தந்து அருளுமவன்
நமது பலவகைப்பட்ட பிறவிகளைப் போக்கி நித்ய சம்சாரிகளான நம்மை நித்ய ஸூரிகளைப் போலவே
அடிமை கொண்டு அருள திரு உள்ளம் பற்றி
பிதாவையும் மாதாவாயும் கைங்களர்யம் கொண்டு அருள பிரதி சம்பந்தியான ஸ்வாமியாயும்
இப்படி சர்வ வித பந்துவாயும் -நம்முடைய சிறுமையையும் அவனுடைய பெருமையையும் பாராதே
நம்முடைய சகலவிதமான பாரங்களையும் தம் மேல் ஏறிட்டுக் கொண்டு செய்து முடிப்பதாக
நம்முள்ளே ஒள்று நீராகப் பொருந்தின பின்பு
அறிவு கெட்ட நெஞ்சே -சர்வஞ்ஞனாயும் சர்வசக்தனாயும் ப்ராப்தனாயும் இருந்து தன் மேன்மை பாராதே
தாழ நின்று உபகரிக்குமவனாயும் இருந்த பின்பு எத்தாலே துக்கக் கடலில் கிடக்கிறது -துக்கப் படாதே கொள்

முத்தனார் -சம்சார பந்தம் இருந்து கழிந்தவர்-என்று கொள்ளாமல் ஹேய ப்ரத்யநீகர்-என்றே கொள்ள வேண்டும்

முகுந்தன்–மு-முக்தியாகிய கு பூமியைக் கொடுப்பவர் என்றபடி-

அன்று திருத்தேர்த்தட்டிலே நின்று கண்ணபிரான் அர்ஜுனனை னோக்கி ‘மாசுச:- துக்கப்படாதே” என்று

சரமச்லோக மருளிச் செய்தாப்போல,

இவ்வாழ்வார் தமது திருவுள்ளத்தைநோக்கி “மாசுச.” என்கிறார். இப்பாட்டில்.

முமுக்ஷுப்படியின் முடிவிலே “வார்த்தையறிபவர் என்கிற பாட்டும்!

* அத்தனாகி என்கிற பாட்டும் இதுக்கு அர்த்தமாக அநுஸந்தேயம்.” என்று

பிள்ளையுலகாசிரியர் அருளிச்செய்தமை நோக்கத்தக்கது.

“முத்தனார் முகுந்தனார் – ஒத்தொவ்வாத பல்பிறப்பொழித்து நம்மை யாட்கொள்வான்.

அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்ப் புகுந்து நம்முன் மேவினார்.

ஏழை நெஞ்சமே! எத்தினால் இடர்க் கடல் கிடத்தி?” என்று அந்வயிப்பது,

அகிலஹேய ப்ரத்யநீகராகையாலே ஸம்ஸார நாற்றமே கண்டறியாதவராய் மோக்ஷபூமியைத் தந்தருள்பவரான பெருமான்

பல வகைப்பட்ட பிறவிகளைப் போக்கி நித்ய ஸம்ஸாரிகளான நம்மை நித்யஸூரிகளைப்போல

அடிமைக்கொள்ளத் திருவுள்ளம்பற்றி, பிதாவாயும் மாதாவயும் நம்முடைய கைங்கர்ய ப்ரதிஸம் பக்தியான ஸ்வாமியாயும்

இப்படி ஸர்வவித பந்துவாயும் நம்முடைய சிறுமையையும் தம்முடைய பெருமையையும் பாராதே

நம்முடைய ஸகலமான பாரங்களையும் தாமே ஏறிட்டுக் கொண்டு செய்து முடிப்பதாக நம்முன்னே புகுந்து ஒருநீராகப் பொருந்தினார்.

அறிவுகெட்ட நெஞ்சே! ஸ்வஜ்ஞனாயும் ஸ்ர்வசந்தநனாயும் ப்ராப்தனாயும்

தன் மேன்மை பாராதே தாழநின்று உபகரிக்குமவனாயும் அவன் நமக்கு வாய்திருக்க,

எத்தாலே  நீ துக்கக்கடலில் கிடக்கிறது? இனி துக்கப்படாதே கொள் என்கிறார்.

“ஒத்தொவ்வாத பல்பிறப்பு” என்பதற்கு மற்றொரு வகையாகவும் பொருள் கூறுவர்;

எல்லாப் பிறவிகளும் ஹேயமாயிருக்கச் செய்தேயும் ஒருவனுக்கு ப்ரியமானது ஜன்மம் மற்றொருவனுக்கு அப்ரியமாகிறது;

ஒருவனுக்கு அப்ரியமான ஜன்மம் வேறொருவனுக்கு ப்ரியமாகிறது.

ஓராத்மாவுக்கு மநுஷ்யஜ்ம்மன் ப்ரியமாயிருந்தால், இன்னுமோராத்மாவுக்கு வராஹஜன்மம் ப்ரியமாகிறது.

இப்படி ஆத்மபேதேந மனஸ்ஸுக்கு ஒத்தும் ஓவ்வாமலுமிருக்கிற பல்வகைப் பிறப்புக்களென்றவாரும்.

முத்தனார் = முக்த.” என்ற வடசொல்லுக்கு “விடுபட்டவன்” என்று பொருள்; அதாவது ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டவன் என்கை;

ஸம்ஸாரியாயிருந்த ஜீவாத்மா ஒரு காலத்தில் வீடுபெற்றால் அவன் முத்தனெனப்படுவான்;

அதுபோல எம் பெருமானை முத்தனார் என்னலாமோ எனின்;

ஸம்ஸார ஸம்பந்தம் இருந்து கழிந்தவர் என்று இவ்விடத்தில் பொருள் கொள்ளாது

ஸம்ஸாரப்ரதியார் என்று மாத்திரமே பொருள்கொள்ள வேணும்.

வேத புருஷன் எம்பெருமானை “*** என்று சொன்னவிடத்திற்குச் சொல்லிக் கொள்ள வேண்டிய  உபபத்திகள் இங்கே அநுஸந்தேயம்;

விரிப்பிற்பெருகும்

முகுந்தனார் = மு. முக்தியாகிய கு.- பூமியை உ- கொடுப்பவர்.

——————

மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே -116-

பதவுரை

மாறு செய்த

எதிரிட்ட
வாள் அரசர்கள்

ஆயுதபாணியான இராவணனுடைய
நாள் உவப்ப

வாழ்நாள் முடியும்படியாக
அன்று

முற்காலத்து
இலங்கை

லங்காபுரியை
சென்று

அடைந்து
நீறு செய்து

நீறாக்கி
கொன்று

அவனைக் கொன்று
வெற்றி கெணண்ட

ஜயம்பெற்ற
வீரனார்

மஹாவீரரான பெருமாள்
என்னை

அடியேனை
தம்முள் வேறு  செய்து வைத்திடாமையால்

தம்மில் வேறுபடுத்தி வைக்காமையினால் (என்னை அந்தரங்க பூதனாகக் கொண்டருளினபடியால் ) (இனி)
நமன்

யமனானவன்
கூறுசெய்து கொண்டு

(என்னை அம்பெருமானிடத்தினின்றும்) பிரித்து
இறந்த குற்றம்

நான் செய்து கழித்த பாவங்களை
என்ன வல்லனே

நெஞ்சாலும் நினைக்கக் கடவனோ.

மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப
எதிரிட்ட ஆயுத பாணியான ராவணின் வாழ் நாள் முடியும் படி

அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால்
என்னை அந்தரங்க பூதனாய்-வேறு படுத்தி வைக்காமல் -கைக் கொண்டு அருளினதனால்

நமன் கூறு செய்து கொண்டு
யமனானவன் அவனிடம் இருந்து பிரித்து

இறந்த குற்றம் எண்ண வல்லனே
நான் செய்து கழித்த பாபங்கள் -நெஞ்சாலும் -தனது இடத்தில் இருந்தே நினைக்க சக்தி அற்றவன் என்கிறார்-

மேல்வரும் பிறவிகட்கு அடியான கருமங்களைக் கழித்துத் தம்மை அடிமைகொள்ள

எம்பெருமான் முற்பட்டமையைக் கீழ்ப்பாட்டில் அருளிச் செய்தார்;

“நாம் நரகவேதனைகளை அநுபவிப்பதற்கு ஹேவாதன பாவங்களைப் பண்ணி கிடக்கிறோமாகையாலே

யமனுக்கு வசப்பட்டுத் துன்பப்படாதொழிய முடியுமோ” என்று கவலையற்ற திருவுள்ளத்தைக் குறித்து

நமக்கு தஞ்சமான சக்ரவர்த்தி திருமகனார் தம்மோடே நம்மைக் கூட்டிக்கொண்ட பின்பு

நாம் செய்த குற்றம் யமனால் ஆராய முடியுமோ என்கிறார்.

“எண்ணவல்லனே என்றது- பாபம் பண்ணிணானென்று தன் க்ருஹத்திலே யிருந்து நினைக்கவும் சக்தனல்லனென்றபடி” என்று

வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்க.

——————

அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பவாய மூப்பிவை
வைத்த சிந்தை வைத்த வாக்கை மாற்றி வானில் ஏற்றுவான்
அச்சுதன் அனந்த கீர்த்தி யாதி யந்தம் இல்லவன்
நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேத கீதனே -117-

பதவுரை

அச்சம்

பயமென்ன
நோயோடு அல்லலி

வியாதியோடு கூடின மகோ வியாதியென்ன
அவாயம் மூப்பு

அபாயங்களுக்கு இடமான கிழத்தனமென்ன
பல் பிறப்பு

பலவகைப் பிறப்புகளென்ன
இவை

ஆகிய இவற்றையும்
வைத்த சிந்தை

இவற்றை யனுபவிப்பதற்காகக் கண்ட நெஞ்சையும்
வைத்த ஆக்கை

கீழ்சொன்னவற்றுக்கு ஆச்ரமாகக் கண்ட சரீரத்தையும்
மாற்றி

போக்கடித்து
வானில்

(நம்மைப் ஸ்ரீபரமபதத்திலே கொண்டு சேர்ப்பவன் (ஆரென்னில்)
அச்சுதன்

அடியாரை ஒருநாளும் கைவிடாதவனும்
அனந்த கீர்த்தி

எல்லையில்லா கீர்த்திகளையுடையவனும்
ஆதி அந்தம் இல்லவன்

முதலும் முடிவும் மில்லாதவனும்
நஞ்சு நாக அணை கிடந்த நாதனை

(விரோதிகள்மீது) விஷத்தை உமிழ்கின்ற ஆசிதேஷனாகிற சயனத்திலே கிடந்தருளும் ஸ்வாமியும்
வேத கீதம்

வேதங்களினால் பிரதிபாதிக்கப்பட்டதுமான பெருமானாம்

அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பவாய மூப்பிவை

அல்லல் -மநோ வ்யாப்தி

வைத்த சிந்தை வைத்த வாக்கை
இவற்றை அனுபவிக்க நெஞ்சையும் உடலையும்

மாற்றி வானில் ஏற்றுவான்
போக்கடித்து பரம பதம் சேர்ப்பவன்-

மேன்மேலும் தேஹ சம்பந்தத்தைக் கொடுக்கும் பிராரப்த கர்மங்களையும் அவற்றுக்கு ஆஸ்ரயமான தேகத்தையும்
போக்கி பரமபதத்தில் தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானாக இருக்க நமது பேற்றுக்கு என்ன குறை

யமனுக்கு வசப்பட்டு வருந்துகைக்கு ஹேதுவான பாபங்கள் போனாலும்

மேன்மேலும் தேஹஸம்பந்தத்தைக் கொடுக்கவல்ல ப்ராப்தகருமம் கிடக்கவில்லையோவென்ன;

அந்த ப்ராப்த கருமத்தையும் அதற்கு ஆச்ரயமான தேஹத்தையும் போக்கிப் பரமபதத்திலே

நம்மை எம்பெருமான் கொண்டு போவானான பின்பு நம் பேற்றுக்கு ஒரு குறையில்லை என்கிறார்.

——————

சொல்லினும் தொழிற் கணும் தொடக்கு அறாத அன்பினும்
அல்லு நன் பகலினோடு ஆன மாலை காலையும்
அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத பாத போதினைப்
புல்லி யுள்ளம் வீள்விலாது பூண்டு மீண்டதில்லையே -118-

பதவுரை

வல்லி நாள் மலர் கிழத்திநாத!

படர்ந்த செவ்வித் தாமரைப்பூவிலே பிறந்த பிராட்டிக்கு நாதனே!
உள்ளம்

எனது நெஞ்சானது
சொல்லினும்

வாக்கிலும்
தொழில் கணும்

காயிகவ்யபாரங்களிலும்
தொடக்கு அறாத அன்பினும்

பிச்சேதமற்ற அன்பிலும் (ஒருபடிப்பட்டு)
அல்லினோடு ஆன மாலையும்

ராத்ரியோடு கூடின ஸாயம்ஸக் த்யையிலும்
நல் பகவினோடு ஆன காலையும்

நல்ல அஹஸ்ஸோடு கூடிய ப்ராதஸ் ஸந்த்யையிலும் (ஆக ஸர்வகாலங்களிலும்)
பாதம் பொதினை

உன்னுடைய திருவடித் தாமரையை
புல்லி

அனைத்து
விளைவு இலாது

(ஒரு நொடிப்பொழுதும்) விச்சேதமில்லாமல்
பூண்டு

அத்திருவடிகளையே மேற்கொண்டு
மீண்டதில்லை

நிலைத்து நிற்கின்றது.

சொல்லினும் தொழிற் கணும் தொடக்கு அறாத அன்பினும்
வாக்கிலும் -காயிக வியாபாரங்களிலும் விச்சேதம் அற்ற அன்பிலும்

அல்லு நன் பகலினோடு ஆன மாலை காலையும்
சர்வ காலங்களிலும்

அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத பாத போதினைப்
படர்ந்த செந்தாமரை பூவில் பிறந்த பிராட்டிக்கு நாதனாய்

புல்லி யுள்ளம் வீள்விலாது பூண்டு மீண்டதில்லையே
அணைத்து நெஞ்சை ஒரு நொடி பொழுதும் விச்சேதம் இல்லாமல்

அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத–அல்லி மலருக்கும் -மலர்க்கிழத்திக்கும் விசேஷணம்
படர்ந்த செவ்வித் தாமரை என்றும்
கொடி போலே இரா நின்ற மலர்க்கிலத்தில் பெரிய பிராட்டியார் என்றும் –

பூண்டு –அந்த திருவடிகளையே மேல் கொண்டு நிலைத்து இருக்கும்

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் சர்வ காலமும் அவனுடனே லயித்து இருக்க வேண்டும்

திருவுள்ளத்தை நோக்கி அருளிச்செய்து கொண்டுவந்த ஆழ்வார் இப்பாட்டில்

எம்பெருமானையோ நோக்கித் தம் திருவுள்ளத்துக்குண்டான ப்ராப்யருசியை வெளியிடுகிறார்.

பூவார் திருமாமகள் புல்கிய மார்பனான பெருமானே!

என்னுடைய ஹ்ருதயமானது உன்னுடைய திருவடித்தாமரையை ஸர்வகாலங்களிலும் பரிபூர்ணமாக அணைந்து

மறுபடி போக்கும் பகவத் விஷயமொன்றே விஷயமாகப் பெற்றமையைக் கூறுவது முதலடி.

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் அலகாஹிக்கப் பெற்றமையைக் கூறியவாறு.

வல்லிநாண்மலர்கிழத்திநாத! – வல்லியென்பதை மவர்க்கு விசேஷண மாக்குதலும்

மலர்க்கிழத்திக்கு விசேஷண மாக்குதலும் ஓங்கும்.

முதற்பக்ஷத்தில், படர்ந்த செவ்வித்தாமரைப்பூ என்றாகிறது.

இரண்டாம்பக்ஷத்தில் வல்லிபோல- கொடிபோலே யிராநின்ற நாண்மலர்க்கிழத்தியுண்டு- பெரியபிராட்டியார்;

அவட்குநாதனே! என்றாகிறது

———————

பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள்
என்னதாவி என்னும் வல் வினையினுள் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர்
மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே -119–

பதவுரை

அரங்கம்

திருவரங்கத்திலே
பொன்னிசூழ்

காவிரிசூழ்ந்த
மேய

நித்யவாஸம் செய்தருள்கிற
பூவை வண்ண

காயம்பூப்போன்ற திருமேனியையுடைய
மாய!

ஆச்சர்யபூதரான பெரிய பெருமானே!
கேள்

(இவ்விண்ணப்பத்தைக்) கேட்டருள வேணும்;
என்னது

என்னுடையது
ஆவி என்னும்

ஆத்மா என்கிற
வல்வினையினுள்

வலிய பாபராசியிலே
கொழுந்து எழுந்து உள்ள

(தேவரீர் விஷயமான அநுராகமாகிற) கொழுந்து கிளர்ந்து  உள்ள தேவரீருடைய
பாதழ் என்ன நின்று

திருவடியென்கிற
ஒண்சுடர் கொழுமலர்

அழகிய சுடர்மிக்க புஷ்பத்திலே
மன்னவந்து பூண்டு

ஸ்திரமாக வந்து படிந்து
எங்கும்

தேவரீருடைய விபூதிகள் எல்லாவற்றிலும்
வாட்டம் இன்றி நின்றது.

குறையாமல் வியாபியா நின்றது

பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள்
இந்த விண்ணப்பத்தை கேட்டு அருள வேணும்

என்னதாவி என்னும் வல் வினையினுள்
என்னுடைய ஆத்மா என்னும் வலிய பாப ராசியிலே

கொழுந்து எழுந்து உன்ன பாதம் என்ன நின்ற -ஒண் சுடர்க் கொழு மலர் மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே
தேவரீர் விஷயமாக அனுராகம் அழகிய சுடர் மிக்க புஷ்பத்திலே ஸ்திரமாக வந்து படிந்து-குறையாமல் தேவரீரின் விபூதிகள்
எல்லாவற்றிலும் வியாபித்து இருந்தது

வடிவு அழகாலும் சீலத்தாலும் ருசி பிறந்து படர்ந்தது நெருப்பிலே தாமரை பூத்தாப் போலே-
என்னது வல் வினை என்னும் ஆவியில் கொழுந்து போலே பகவத் விஷயம் படர்ந்தது-

வடிவு அழகையும் சீல குணத்தையும் காட்டி அருளி செய்த கிருஷி பலித்தது

ஞானானந்த மையமாக ஆத்மாவை வேதம் சொல்லா நிற்க இவரோ பாபராசிக் கூட்டம் வல்வினை என்று
நைச்யம் பாவிக்கிறார் -நைச்ய அனுசந்தான பரம காஷ்டை

பகவத் விஷய அநுராகத்தை கொழுந்து என்கிறார்
வல்வினையிலே கொழுந்து -நெருப்பிலே தாமரை பூத்தது போலே அன்றோ இது-

‘ஆழ்வீர்! பரமவிவக்ஷணமான இப்படிப்பட்ட அபிநிவேசம் உமக்கு நம்பக்கலில் உண்டானமை

ஆச்சரியமாயிராநின்றதே! இதற்கு அடி என்?’ என்று எம்பெருமான் கேட்டருள;

வடிவழகையும் சீலத்தையும் காட்டி தேவரீர் பண்ணின க்ருஷபலித்த பலமன்றேவிது என்கிறார்போலும்.

காவிரிசூழ்ந்த திருவரங்கம் பெரியகோயிலிலே நித்யவாஸம் செய்தருள்கிற விலக்ஷணமான திருமேனி படைத்த மாயோனே!

உன்னுடைய அழகாலும் சீலத்தாலும் எனக்குப் பிறந்த ருசிவிசேஷத்தைக் கேட்டருளவேணும்;

உபகாரம் செய்தவளின் தேவரீர் மறந்தொழிந்தாலும் நன்றியறிவுடைய நான் சொல்லக் கேட்க வேணும்;

சொல்லுகிறது தான் என்னன்னச் சொல்லுகிறார்- என்னதாவி யித்யாதியால்.

*** என்று ஜ்ஞாஸ்வரூபாகயும் ஆநநிதஸ்ரூபியாயும் சாஸ்த்ரங்களுள் சொல்லப்பட்டிராநின்ற ஆத்மா

என்னளவில் அப்படிப்பட்டதன்று; கொடிய பாபராசிகளின் பிண்டமே ஆத்ம வஸ்துவாக நிற்கிறதெனலாம்

அப்படிப்படட் என் ஆத்மவஸ்துவில் தேவரீரைப்பற்றிய அநுராகம் கிளர்ந்து

அவ்வஅநுராக மானது தேவரீருடைய பாதாரவிதத்திலே பரிபூர்ணமாக அவகாஹித்து

தேவரீருடைய ஸ்வரூபரூபகுண விபூதிகளையெல்லாம் கபளீகரித்து விளங்காநின்றது என்கிறார்

இவ்வாழ்வார்க்கு ஆவியென்றும் வல்லினையென்றும் பர்யாயம் போலும். நைச்யாநுஸக்காக பரமகாஷ்யை  யிருக்கிறபடி

“*** என்ற அநுஸந்தாகம் முதிர்ந்தபடி’

தம்முடைய ஆவிக்கு வல்வினை என்று பெயரிட்டாற்போல பகவத் விஷயாநுரகத்திற்குக் கொழுந்து என்று திருநாமம் சாற்றினர்

என்ன தாவியென்னும் வல்வினையிலே கொழுந்து எழுந்ததானது நெருப்பிலே தாமரை பூத்ததுபோலும் என்ற

திருவுள்ளந்தோற்ற அருளிச் சொல்கிறபடி பாரீர்.

——————

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே -120-

பதவுரை

உயக்கொள்

(நம்போல்வாரை) உஜ்ஜீவிக்கச் செய்பவனான
மேகவண்ணன்

காளமேக நிபச்யாமனான பெருமான்
இன்று

இன்றைக்கு (நிர்ஹேதகமாக)
இயக்கு அறாத பல் பிறப்பில்

தொடர்ச்சிமாறாமல் நெடுகச் செல்லும்படியான பலவகைப் பிறப்புகளினின்றும்
என்னை

அடியேனை
மாற்றி

மாற்றுகைக்குத் திருவுள்ளம் பற்றி
வந்து நண்ணி

இங்கேயெழுந்தருளி நெருங்கி
தன்னில் ஆய என்னுள்

தன்னோடு அவிகாபூதமான என்னுள்ளே
தன்

தன்னுடைய
மன்னுசோதி

நித்ய ஜ்யோதிர்மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை
மயக்கினான்

ஸம்ச்லேஷிப்பித்தான்!
ஆதலால்

இப்படி புரையாறக் கலந்தருளுகையாலே
என் ஆவி தான்

எனது ஆத்ம வஸ்துவானது
இயக்கு எல்லாம் அறுத்து

ஒன்றோடொன்று  இணைந்து கிடந்த அவித்யாதிகளை வேரறுத்து
அறாத இன்பம் வீடு:

ஒருநாளும் முடியாத இன்பமாகிய மோக்ஷஸுகத்தை
பெற்றது

பெற்றாதயிற்று

இயக்கறாத பல் பிறப்பில்
தொடர்ந்து வரும் பல பிறவிகளிலும்

என்னை மாற்றி இன்று வந்து
அடியேனை மாற்ற திரு உள்ளம் கொண்டு இங்கேயே எழுந்து அருளி

துயக் கொண் மேக வண்ணன் நண்ணி
உஜ்ஜீவித்து அருளிச் செய்வானாக காள மேக பெருமாள் நெருங்கி

என்னிலாய தன்னுளே
தன்னுள்ளே அவின்னாபூதமான என்னுள்ளே

மயக்கினான் தன் மன்னு சோதி
தனது நித்ய ஜோதிமயமான திவ்ய மங்கள விக்ரகத்தை சம்ஸ்லேஷிப்பித்தான்

யாதலால்-
இப்படி புரை யறக் கலந்தது அருளியதால்

என்னாவி தான் இயக்கொலா மறுத்த
எனது ஆத்ம வஸ்து ஒன்றோடு ஒன்றாக இணைந்து கிடைந்த அவித்யாதிகளை வேறு அறுத்து-

ஆராத வின்ப வீடு பெற்றதே
ஒரு நாளும் முடியாத இன்பமாகிய மோஷ சுகத்தை பெற்றது-

அந்தமில் பேரின்ப மான கைங்கர்ய சாம்ராஜ்யத்தை பெற்றத்தை அருளிச் செய்கிறார் –
பரகத ஸ்வீகாரம் பரிமளிக்க அருளுகிறார்

கீழே ஸ்வ கத ஸ்வீ காரம் -இதில் பர கத ஸ்வீ காரம் –
நித்ய ஜ்யோதிர் மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை என்னுள்ளே வைத்து புரையறக் கலந்து
அவித்யாதிகளை வேர் அறுத்து-பிரதிபந்தகங்களை நிஸ் சேஷமாகப் போக்கி அருளி
அந்தமில் பேர் இன்பமான அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் கொண்டு அருளுகிறானே –
என்று உபகார ஸ்ம்ருதியுடன் தலைக் கட்டி அருளுகிறார்

ஸ்வகதஸ்வீகாரம்போல் தோற்றும்படியன்றோ கீழ்ப்பாட்டில் அருளிச் செய்தார்;

அங்ஙனன்றிக்கே, பரகதஸ்வீகாரம் பரிமளிக்கப்பேசுகிறார்.

இதில் நிர்ஹேதுகமாகப் பெரிய பெருமாள் தம்முடைய திவ்யமங்கள விக்ரஹத்தை

என்னுள்ளே பிரியாதபடி வைத்தருளினபடியாலே ப்ரதிபந்தக ஸமூஹங்களை யெல்லாம் நிச்சேஷமாகப் போக்கி

அந்தமில் பேரின்பமான ஸகங்கர்ய ஸாம்ராஜ்யத்தைப் பெற்றோனென்று உபாகர ஸ்மருதியோடே தலைக்கட்டுகிறார்.

எனக்கு அந்தாதியாக நிகழ்ந்துவங்க பலவகைப் பிறவிகளைத் தவிர்த்தருள திருவுள்ளம்பற்றி

இன்று நிர்ஹேதுக க்ருபையினாலே நாளிருந்தவிடத்தே வந்து கிட்டித் தனக்கு ப்ரகாரபூசமான

என்னுடைய ஹ்ருதயத்திலே தனது ஐ“யோதிர்யமான திவ்யமங்கள விக்ரஹத்தைப் பிரிக்கவொண்ணாதபடி

எனக்கு ஒருக்ஷணகாலமும் செல்லாதபடி பண்ணியருளினபடியாலே

இவ்வாத்ம வஸ்துவானது ஒன்றோடொன்று பிணைந்துகிடந்த அவித்யாகர்மவாஸாநாருகி ப்ரக்ருதி

ஸ்ர்பந்தங்களையெல்லாம் முக்தியைப் பெற்றொழிந்ததென்றாயிற்று.

(மயக்கினான்) மயக்குத்ல் – அறிவுகெடுத்தலும் கலத்தலும்,

இங்கே, கலத்தல்

தன்மன்னுசோதி – “***“ (ஸுந்தரபாஹுதவம்) என்னும்படி விலக்ஷணமான திவ்யமங்கள விக்ரஹத்தை

ஜோதி என்றும் சோதி என்றும் சொல்லக்கடவது

“ஆதியஞ்சோதியுரு“ என்றாரே நம்மாழ்வாரும்.

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-81-100- -ஸ்ரீ உ வே -PBA -ஸ்வாமிகள்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

February 9, 2020

கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ –81-

பதவுரை

கடைந்த

(கூர்மாவதாரத்திலே) கடையப்பட்ட
பால் கடல்

திருப்பாற்கடலிலே
கிடந்து

கண்வளர்ந்தருளியும்
காலநேமியை

காலநேமியென்னுமசுரனை
கடிந்து

ஒழித்தருளியும்
உடைந்த

நடுங்கிக் கிடந்த

வாலி தந்தனுக்கு வாலியின் தம்பியான சுக்ரீவனுக்கு

உதவ

உபகாரம் செய்ய
இராமன் ஆய் வந்து

இராமபிரானாய் வந்து தோன்றி
மிடத்தை

ஒன்றொடொன்றாகப் பிணைந்து கிடந்த
ஏழ் மரங்களும்

ஸப்தஸால வ்ருக்ஷங்களையும்
அடங்க

ஏழேழாகவுள்ள ஸப்தகுலபாவதாதிகளான மற்றவற்றையும்
எய்து

பாணத்தாலே துளைபடுத்தி
வேங்கடம் அடைந்த

திருவேற்கடமலையிலே எழுந்தருளியிருப்பவான
மால

எம்பெருமானுடைய
பாதமே

திருவடிகளையே
நாளும்

நாள்தோறும்
அடைந்து

ஆச்ரயித்து
உய்ம்மின்

உஜ்ஜிவியுங்கள்

கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து–கூர்ம அவதாரத்தில் கடையப் பெற்ற

உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்–நடுங்கிக் கிடந்த சுக்ரீவனுக்கு

உடைந்த -தளர்ந்த -வாலிக்கும் சுக்ரீவனுக்கும் விசேஷணம் –

(உடைந்தவாலி தந்தனுக்கு.) ‘உடைந்த’ என்ற அடைமொழி வாலிக்கும் ஆகலாம்; வாலிதம்பிக்குமாகலாம்.

உடைதல்- தளர்வு.

வாலி, ‘நமக்குப் பகையான ஸுக்ரீவன் நாம் புகவொண்ணாதரிச்யமூகமலையிலே ஹனுமானைத் துணைகொண்டு வாழாநின்றான்;

எந்த ஸமயத்திலே நமக்கு என்ன தீங்கை விளைப்பானோ’ என்று உடைந்து கிடப்பவன்.

ஸுக்ரீவனுடைய உடைதல் சொல்ல வேண்டா. “வாலி தன்பினுக்கு” எனப் பாடமிருந்திருக்க மென்பர்.

—————————————————————–

எத்திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்
முத்திறத்து மூரி நீர் அராவணைத் துயின்ற நின்
பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு
எத்திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே –82-

பதவுரை

எத்திறத்தும் ஒத்து நின்று

எந்த ஜாதியில் அவதரித்தாலும் ஸஜாதீயன் என்ற காரணத்தால் சேதநா சேதநங்களோடு ஒத்திருக்கச் செய்தேயும்
உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்

(குணவிசேஷத்தால்) மேன்மேலுமுயர்ந்த ப்ரபாவத்தையுடையோனே!
மூத்திறத்து மூரி நீர்

திருப்பாற்கடலிலே
அரா அணை துயின்ற

சேஷசயனத்திலே திருக்கண் வளர்ந்தருள்கின்ற
நின்

தேவரீர் விஷயத்திலே
பத்து உறுத்த சிந்தையோடு நின்று

பக்தி அழுந்தின நெஞ்சோடு கூடியிருந்து
பாசம் விட்டவர்க்கு எத்திறத்தும் இன்பம்

விஷயாந்தரப் பற்றுக்களை விட்டவர்கட்கு ஸர்வவித ஸுகமும்
இங்கும்

இவ்வுலகத்திலும்
அங்கம்

அவ்வுலகத்திலும்

எங்கும் மற்றெவ்வுலகத்திலும்

ஆகும்

எளிதாம்.
பாட்டு

பின்பிறக்கவைத்தனன் கொல்.

எத்திறத்தும் ஒத்து நின்று
எந்த ஜாதியில் பிறந்து இருந்தாலும் -சேதன அசேதனர்களுடன் ஒத்து இருந்து

பத்து உறுத்த சிந்தையோடு நின்று
பக்தி அழுந்தின நெஞ்சத்தோடு கூடி இருந்து

பாசம் விட்டவர்க்கு
விஷயாந்தர பற்றுக்களை விட்டவர்களுக்கு

எத்திறத்தும் -சர்வ பிரகாரங்களிலும்
இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே –
இவ்வுலகத்திலும் அவ்வுலகத்திலும் எவ்வுலகத்திலும் இன்பம் கிட்டும்

தேவ மனுஷ்ய ஜந்து ஸ்தாவர ஜாதியிலும் அவதார ஜாதியில் ஒத்து இருந்தாலும் குண பெருமையால் உணர்ந்தவன்

மூரிநீர் கடல் ஆற்று ஊற்று– மழை நீர் என்னவுமாம்

மூரி –பழையதாக என்றும் பெருமையாக என்றும் –

தேவஜாதியிலும் மநுஷ்யனாதியிலும் திர்யக்ஜாதியிலும் ஸ்தாவரஜாதியிலும் ஸஜாதீயனாய் அவதரித்து

தஜ்ஜாதியர்களை அந்தந்த ஜாதியாலே ஒருபுடையொத்திருந்தாலும் குணப்பெருமயாலுண்டான மேன்மையையுடையவனே!

திருப்பாற்கடலிலே திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்தருளாநின்ற உன்பக்கல் பக்திமிகுந்த மநோரதத்தோடே நின்று

விஷயாந்தரங்களில் பற்றை அறுத்துக்கொள்பவர்கட்கு

இம்மண்ணுலகத்திலும் வானுலகத்திலும் மற்றெவ்வுலகத்திலும் ஸர்வப்காரங்களாலும் ஆநந்தம்- நிரம்புமென்கிறார்.

முந்நிறத்து மூரிநீர், ஊற்றுநீர், மழைநீர் என்று மூன்றுவகைப்பட்ட நீரையுடையது கடல்.

“முந்நீர்’ என்னக்கடவதிறே.

மூரி- பழையதான; பெரிதான என்றுமாம்.

——————————————————

மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய் புலன் கழல்
விட்டு வீள்விலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக்
கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே –83-

பதவுரை

மட்டு உணவு

தேன் நித்யாயிருக்கபெற்ற
தண்

குளிர்ந்த
துழாய்

திருத்துழாயினால் தொடுக்கப்பட்ட
அலங்கலாய்

திருமாலையை அணிந்துள்ளவனே!
புலன் கழல் விட்டு

(உன்னுடைய) விலக்ஷணமான திருவடிகளை (இந்நிலத்திலேயே அநுபவிப்பதை) விட்டு
விண்ணில் ஏறி

பரமபதத்திற் சென்று
வீழ்வு இலாத போகம் கண்ணிலும்

அழிவில்லாதொரு போகத்தை அடையப்பெற்றாலும். (அது கிடக்கட்டும்)

(இந்நிலத்தில் இருந்துகொண்டே)

எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால்

பத்து என்கிற பக்தியாகிற பாசத்தினாலே
மனம் தனை

மநஸ்ஸை
கட்டி

கட்டுப்படுத்தி
வீடு இலாது

விச்சேதமில்லாபடி
வைத்த

அமைக்கப்பட்ட
காதல்

ப்ரேமத்தினாலுண்டாகக் கூடிய
இன்பம் ஆகுமே

ஆநந்தத்தை ஒக்குமோ அப்பரமபதாநுபவம்!

மட்டுலாவு –
தேன் நித்தியமாய் இருக்கும்

தண் துழாய் அலங்கலாய் புலன் கழல் விட்டு-
திருவடிகளை இந்த பூ உலகத்திலேயே அனுபவிப்பதை விட்டு

வீள்விலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்-அழிவில்லாத கைங்கர்யம் பரம பதத்திலே சென்று கிட்டினாலும்

எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி
பத்து என்ற பக்தி யாகிற பாசத்தால் மனசைக் கட்டுப் படுத்தி

வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே –
விச்சேதம் இல்லாத அமைக்கப் பட்ட ப்ரேமையால் கிடக்கும் ஆனந்தத்துக்கு ஈடு இல்லை

பத்துடை அடியவர்க்கு எளியவன் போலே –பத்து -பக்தி –வைத்த காதலே இன்பம் பயக்கும்
வைத்த காதலே இன்பமாகும் -ப்ரேமம் ஒரு ஸூகத்துக்கு சாதனமாக இல்லாமல் ஸ்வதஸ் ஸூகமாகவே இருக்கும்

எட்டினோ டிரண்டெனுங் கயிற்றினால் – எட்டோடு இரண்டு சேர்ந்தால் பத்து;

இவ்விடத்தில் பத்து என்கிற எண் விலக்ஷிதமல்ல. ‘பத்துடைபடியவர்க்கெளியலன்” என்றபடி

பக்திக்கும் பத்து என்று பேருண்டாதலால் அப்பொருளே இங்கு விவக்ஷிதம்.

வைத்தகாதலின்பமாகுமே- வைத்தகாதலே இன்பமாகும் என்று அந்வயித்து,

உன் திருவடிகளில் வைக்கும் ப்ரேமமானது ஒரு ஸுகத்துக்கு ஸாதகனமாகையன்றிக்கே ஸ்வதன்ஸுகமாயிருக்கமென்றுமாம்.

அநுபவரசிகர்களான ஆழ்வார்கள் எம்பெருமானை யானையாகவே பல இடங்களில் பேசுவார்கள்.
யானைக்கும் எம்பெருமானுக்கும் பல விதங்களில் ஒத்த கருத்து நிலவும்

1.யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வ வஸ்து போலவே இருந்து பரமாநந்தம் பயக்கும்.
எம்பெருமானும் எப்பொழுதும் நாள், திங்கள், ஆண்டு ஊழி யூழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது
என்னாராவமுதம் என்னும்படி யிருப்பான்.
2.யானையின் மீது ஏற வேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏறவேண்டும்.
எம்பெருமானிடம் சென்று சேர வேண்டியவுர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேர வேண்டும்.
3.யானை தன்னை கட்ட தானே கயிற்றை எடுத்துக் கொடுக்கும். எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் (திருச்சந்த விருத்தம்) என்கிறபடியே,
எம்பெருமானை கட்டுப் படுத்தும் பக்தியாகிற கயிற்றை அவன் தந்தருள்வான்.
4. யானையை நீராட்டினாலும் அடுத்த ஷணத்திலேயே அழுக்கோடு சேரும் எம்பெருமான் சுத்த ஸத்வ மயனாய் பரம பவித்ரனாய்
இருக்கச் செய்வதாயும் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குமுடைய நம் போல்வாரோடு
சேர திருவுள்ள மாயிருப்பான் வாத்ஸல்யத்தாலே.
5.யானையைப் பிடிக்க வேண்டில் பெண் யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும்
அதன் போன்றே பிராட்டியின் புருஷாகாரமின்றி எம்பிரான் வசப்படான் .
6.யானை பாகனுடைய அனுமதியின்றி தன்னிடம் வருபவர்களை தள்ளி விடும்.
எம்பெருமானும் “வேதம் வல்லார் துணைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து” என்கிறபடியே
பாகவதர்களை முன்னிட்டு புகாதாரை அங்கீகரித்தருளான்.
7. யானையின் மொழி யானைப் பாகனுக்குத் தெரியும், எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பிகள் போல்வார்க்கே தெரியும்
(பேரருளானப் பெருமானோடே பேசுபவர் நம்பிகள்).
8. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும்
எம்பெருமான் அமுது செய்து சேஷித்த பிரசாதத்தாலே பல கோடி பக்த வர்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம்.
9.யானைக்கு கை நீளம் எம்பெருமானும் அலம் புரிந்த நெடுந்தடக்கையன் இறே
“நீண்ட அந்தக் கருமுகிலை யெம்மான் தன்னை.”(பெரிய திருமொழி 205-2)
10.யானை இறந்த பின்பும் உதவும் எம்பெருமானும் தீர்த்தம் பிரசாதித்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளின பின்பும்
இதிகாச புராணங்கள் உணர்த்தி உதவுகின்றன.
11. யானை ஒரு கையே உள்ளது எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழிய கொள்ளும் கையில்லை
12. யானை பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும். எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகம் பிரக்குருதிகளுக்கு சம்பாத்யத்திற்கு வழி செய்கிறார்.
13. யானை மெல்ல அசைந்து அசைந்து செல்லும். எம்பெருமானும் உலா வரும் பொழுது அசைந்து அசைந்து வருவார்.
14. யானை சாதுவானது எம்பெருமானும் சாதுவானவரே

————————

பின் பிறக்க வைத்தனன் கொல் அன்றி நின்று தன் கழற்கு
அன்புறைக்க வைத்த நாள் அறிந்தனன் கொல் யாழியான்
தன் திறத்தோர் அன்பிலா வறிவிலாத நாயினேன்
என்திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே -84-

பதவுரை

ஆழியான்

சக்ரஹஸ்தனான எம்பெருமான்
பின் பிறந்த வைத்தனன் கொல்

நான் இன்னும் சில பிறவிகள் பிறக்கும்படியாகத் திருவுளம் பற்றி யிருக்கிறானோ!
அன்றி

அல்லது
தன் கழற்கு

தன் திருவடிகளிலே
நின்று

நிலைத்துநின்று
அன்பு உறைக்க வைத்து

(எனக்கு) அன்பு ஊர்ஜிதமாம்படியாக ஸங்கல்பித்து
அந்நாள் அறிந்தனன் சொல்

பரமபதத்திலே சென்று அநுபவிக்குமொரு நாளைத்திருவுள்ளம் பற்றியிருக்கிறானோ!
தன் திறந்து

தன் விஷயத்திலே
ஓர் அன்பு இலா

சிறிதும் அன்பு இல்லாதவனும்
அறிவு இலாத

விவேகமில்லாதவனும்
நாயினேன்

நீசனுமாகிய
என் திறத்தில்

என் விஷயத்திலே
எம்பிரான்

எம்பெருமான்
குறிப்பில் வைத்தது

திருவுள்ளம்பற்றி விருப்பதானது
என் சொல்

எதுவோ (அறியேன்)

பின் பிறக்க வைத்தனன் கொல்
நான் இன்னும் பல பிறவிகள் எடுவிக்க திரு உள்ளமா

பின்பு இறக்க வைத்தனன் கொல்-இறப்பு -மறப்பு-அவனை மறந்து இருப்பதே ஆத்மாவுக்கு இறப்பு
தன் பக்கல் ஞானம் பிறந்த பின்பும் தன்னை மறக்கும் படி வைக்கிறானோ என்றுமாம்

அன்றி நின்று தன் கழற்கு அன்புறைக்க வைத்த நாள்-நிலைத்து நின்று-அறிந்தனன் கொல் யாழியான்
பரம பதத்தில் சென்று அனுபவிக்கும் நல்ல திரு உள்ளமா

தன் திறத்தோர் அன்பிலா வறிவிலாத நாயினேன்
தன் விஷயத்தில்

என் திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே
அவன் திரு உள்ளம் உகப்பு தான் பரம பதம் அடைய உபாயம்

கீழ்ப்பாட்டிலே ப்ரஸ்தாவித்த பக்தியானது தம்மிடத்தில் இல்லாமையாலும்

தாம் ப்ரக்ருதி பரவசராயிருக்கக் காண்கையாலும்,

எம்பெருமான் கேட்பாரற்ற ஸ்வதந்தரனாகையாலும்-,

அவன் திருவுள்ளமுகந்தாலல்லது பேறு பெற முடியாதாகையாலும்

இக்காரணங்களையெல்லாம் கருதி

‘எம்பெருமான் என்னைத் தன் திருவடிகளிலே பரமபக்தனாம்படி பண்ணியருள நினைத்திருக்கிறானோ!

அன்றி நித்ய ஸம்ஸாரியாக்க நினைத்திருக்கிறானோ?

என் திறத்தில் என் நாதன் திருவுள்ளப்பற்றியிருப்பது என்னோ! என்கிறார்.

இந்த சரீரம் முடிந்தபின்பும் கூட இன்னும் சில சரீரங்களையும் நான்  கொள்ளும்படியாக நினைத்திருக்கிறானோ?

அன்றியே, தனது திருவடிகளில் இடையறாத அன்பை எனக்கு உறைக்க வைத்து

அத்திருவடிகளை  யநுபவிப்பேனாம்படி ஒரு நல்ல காலமுண்டாக நினைத்திருக்கிறானோ?

அவன் விஷயத்திலே அணுமாதரமும் அன்பில்லாத அஜ்ஞனும் நீசனுமாகிய என் விஷயத்திலே

எது செய்வதாகத் திருவுள்ளமோ தெரியவில்லையே! என்று அலமருகின்றார்.

“பின் பிறக்கவைத்தனன் கொல்” என்றவிடத்து, ‘பின்பு இறக்கவைத்தணன்’ கொல் என்றும் பிரிக்கலாம்;

இறப்பானது மறுப்பு; (எம்பெருமானை மறந்திருப்பதே ஆத்மாவுக்கு இறப்பு.)

தன் பக்கலிலே எனக்கு ஞானம் பிறந்த பின்பும் தன்னை மறக்கும்படியாக்கி வைக்கிறானோ? என்றவாறு.

————————————

நச்சராவணைக் கிடந்த நாத பாத போதினில்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம்
மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன் நின் மாயமே
உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே –85-

பதவுரை

நஞ்சு அரா அணை

(ஆச்ரித விரோதிகள்மேல்) விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வானாகிற சயனத்திலே
கிடந்த

திருக்கண் வளர்ந்தருள்கிற
நாத

ஸ்வேச்வரனே!
பாத போதினில்

(உன்னுடைய) திருவடித் தாமரைகளிலே
வைத்த

(இப்போது) வைக்கப்பட்டுள்ள
சிந்தை

மகஸ்ஸை
வாங்குவித்து

அதில் நின்றும் திருப்பி
நீங்குவிக்க

வேறு விஷயங்களில் போக்க
நீ

ஸ்வதந்த்ரனான நீ
இனம்

இன்னமும்
மெய்த்தன்

மெய்யாகவே
வல்லை ஆதல்

ஸமர்த்தனாயிருக்கிறாய் என்பதை
அறிந்தனன்

அறிந்திருக்கிறேன்
மாயனே!

ஆச்சரியசக்தியுக்தனே!
என்னை

அடியேனை
நின் மாயமே உய்ந்து

உன்னுடைய மாயச்செயலையே கடத்தி
மயக்கினில்

ப்ராக்ருத பாசங்களிலே (வைத்து)
மயக்கல்

மயக்கவேண்டா

நச்சராவணைக் கிடந்த நாத
ஆஸ்ரித விரோதிகளின் மேலே விஷத்தை உமிழும் திரு வநந்த வாழ்வான் என்னும் சயனத்தில்
திருக் கண் வளரும் சர்வேஸ்வரனே

பாத போதினில் வைத்த சிந்தை
திருவடி தாமரைகளில் எப்போதும் வைத்து இருக்கும் மனசை
வாங்குவித்து-அதில் நின்றும் திருப்பி

நீங்குவிக்க நீயினம்-வேறு விஷயத்தில் போக்க -ஸ்வ தந்த்ரனான நீ இன்னம்

மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன் நின் மாயமே
மெய்யாகவே சமர்த்தன் என்பதை அறிந்தனன்

உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே
அடியேனை ப்ராக்ருத பாசங்களில் மாய்க்க வேண்டாம் என்கிறார்

உனது ஸ்வா தந்த்ர்யத்தால் என்னை சம்சார படு குழியில் தள்ளாமல் கிருபை பண்ணி அருள வேணும் என்கிறார் –

அடியேன் விஷயத்திலே எம்பெருமான் திருவுள்ளம் எப்படிப்பட்டதோ வென்று ஸந்தேஹித்தார் கீழ்ப்பாட்டில்;

என்னை உன் ஸ்வாதந்திரியத்தினால் ஸம்ஸாரப்படுகுழியிலே இன்னமும் தள்ளாமல்

கிருபைபண்ணி யருளவேணுமென்று இரக்கிறார். இப்பாட்டில்

——————————

சாடு சாடு பாதனே சலங்கலந்த பொய்கை வாய்
ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே
கோடு நீடு கைய செய்ய பாத நாளும் உள்ளினால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என் கொல் கண்ணனே –86-

பதவுரை

சாடு நாடு பாதனே

சகடாஸுரனை உதைத்தொழித்த திருவடியையுடையவனே!
சலம் கலந்த பொய்கை வாய்

(விஷமே அதிகமாகி அத்துடன் சிறிது) ஜலமும் கலந்திருக்கப்பெற்ற ஒரு மடுவிலே
ஆடு அரவின்

(செருக்கினால் படமெடுத்து) ஆடிக்கொண்டிருந்த காளியநாகத்தினுடைய
வன்பிடர்

வலியதான பிடரியிலே
நடம் பயின்ற

நர்த்தனம் செய்த
நாதனே!

ஸ்வாமியே
கோடு நீடு கைய

ஸ்ரீபாஞ்சஜந்யத்தினால்  நித்ராஸங்க்குதாமன திருக்கையையுடையவனே!
கண்ணனே

கண்ணபிரானே!
செய்ய பாதம்

(உனது) செந்தாமரைபோற் சிவந்த திருவடிகளை
நாளும்

நாள்தோறும்
உன்னினால்

அடியேன் தியானித்துக் கொண்டிருக்கும்போது
மெய்

மெய்யாகவே
வீடன் ஆக செயாத வண்ணம் என் கொல்

(அடியேனை) முத்தனாக்காதது ஏனோ!

சாடு சாடு பாதனே
சகடாசுரனை உதைத்து ஒழித்த திருவடிகளை உடையவனே

சலங்கலந்த பொய்கை வாய்
விஷமமாகவே இருந்த அத்துடன் சிறிது தண்ணீரும் கலந்த மடுவில்

ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே
செருக்கினால் படம் எடுத்து ஆடும் காளிங்கனின் வலிய பிடரியில் நர்த்தனம் செய்த ஸ்வாமியே

கோடு நீடு கைய
பாஞ்ச ஜன்யம் நீங்காது வைத்து இருக்கும் திருக் கையின் கண்ணபிரான்

செய்ய பாத நாளும் உள்ளினால்
த்யானம் பண்ணிக் கொண்டு இருந்தால்

வீடனாக மெய் செயாத வண்ணம் என் கொல் கண்ணனே
மெய்யாகவே அடியேனை முக்தன் ஆக்காதது ஏனோ-

விரோதி போக்கி அருளும் சமர்த்தன் நீ எனது விரோதிகளை நிவர்த்தித்து அருள வேண்டாவோ என்கிறார்-

எம்பெருமான் விரோதிநிரஸநத்தில் ஸமர்த்தன் என்னுமிடத்தை நிரூபித்துக் கொண்டு

இப்படி ஸமர்த்தனான நீ என் விரோதியை மாத்திரம் நிவர்த்திப்பியாமல் உபேக்ஷை பண்ணுவது தகுதியோவென்கிறார்.

சலம் கலந்த பொய்கை = அப்பொய்கையிலே விஷமே விஞ்சினதென்றும் அத்தோடு கூட ஜலமும் சிறிது சேர்ந்திருக்குமென்றும் உணர்க.

வீடன் = வீட்டையந்தவன், முக்தன்.

—————————

நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல்
நல் தவத்த நாதனோடு மற்றும் உள்ள வானவர்
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே –87-

பதவுரை

நெற்றிபெற்ற கண்ணன்

நெற்றியிலே கண்ணைப் பெற்றவனான சிவனும்:
விண்ணின் நாதன்

தேவேந்திரனும்
போதின் மேல் நல் தவத்து நாதன்

தாமரைப்பூவிலே பிறந்த நல்ல தபாஸனான நான்முகக் கடவுளும்
மற்றும் உள்ள வானவர்

மற்றுமுண்டான பல தேவதைகளும்
கற்ற வெற்றியால்

தாங்கள் தாங்கள் அப்பயணித்துள்ள முறைமைக் கிணங்க
வணங்குபாத!

வந்து வணங்கப்பெற்ற திருவடிகளை யுடையவனே!
நாத!

நாயகனே!
வேத!

வேதப்ரதிபாத்யனே!
உரைக்கில்

(என் அத்யவஸாயத்தைச்) சொல்லப்புக்கால் (சொல்லுகிறேன் கேளாய்.)
நின் பற்று அலால்

உன்னையே ஆச்ரயமாகக் கொண்டிருப்பது தவிர
மற்றது ஓர் பற்று

வேறொர் ஆச்ரயத்தை
உற்றிலேன்

நான் நெஞ்சாலும் ஸ்பர்சிக்கவில்லை.

நெற்றி பெற்ற கண்ணன்
நெற்றிக் கண் உள்ள சிவன்

விண்ணின் நாதனோடு போதின் மேல் நல் தவத்த நாதனோடு
இந்த்ரன் பிரமன்

மற்றும் உள்ள வானவர் கற்ற பெற்றியால் –
தங்கள் தாங்கள் அப்யசித்த முறைப்படி

வணங்கு பாத நாத-

வேத-வேதத்தில் சொல்லப் பட்டவனே

நின் பற்று அலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே –
எனது அத்யவசாயத்தைச் சொல்லப் புகுந்தால் -உன்னையே பற்றி இருப்பேன் –
வேறு புகலிடம் நெஞ்சாலும் நினைக்க மாட்டேன்

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -போல
தங்களன்பார தமது சொல் வலத்தால் தலைத் தலை சிறந்து பூசிப்ப -திருவாய்-போலே
தேவர்கள் எல்லோரும் இவன் திருக்கை எதிர் பார்த்து இருக்கிறார்கள்-

முக்கண்ணன் முதலிய தேவதைகளுங்கூடத் தங்களுடைய அபீஷ்ட ஸித்திக்கு

தேவரீருடைய கையையே எதிர்பார்த்திருக்கறார்களாகையாலே

அடியேனுக்கும் தேவரீரொழிய வேறு புகலில்லையனென்று தம்முடைய அநந்யயதித்வத்தை விளம்புகிறார்.

நெற்றிக்கண்ணனான சிவனென்ன, ஸ்வர்க்கத்துக்கு நிர்வாஹகனான இந்திரனென்ன,

திருநாபிக்கமலத்திலே பிறந்து மஹாபஸ்வியான பிரமனென்ன இவர்களும்

மற்றுமுள்ள பற்பல தேவதைகளும் தங்கள் தங்களறிவுக்குத் தகுதியானத் திருவடி பணியப்பெற்றவனே!

உலகங்கட்கெல்லாம் தனி நாயகனான வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்டுள்ளவனே!

“களைவாய் துன்பங் களையாதெழிவாய் களை கண்மற்றிலேன்” என்றாற்போல

உன்னையே சரணமாகப் பற்றியிருக்குமதொழிவாய்

களை கண் மற்றிலேன்” என்றாற்போல உன்னையே சரணமாகப் பற்றியிருக்குமதொழிய

வேறொரு சரணமும் அடியேனுடைய நெஞ்சினால் கொள்ளப்படவில்லை யென்கிறார்.

இரண்டாமடியில் ‘நற்றவத்து” என்றும் “நற்றவத்த” என்றும் பாடபேதங்களுண்டு.

“கற்ற பெற்றியால்” என்றவிடத்து

“தங்களன்பாரத் தமதுசொல் வலத்தால் தலைத்தலைச் சிறந்து பூசிப்ப” என்று திருவாய்மொழி நினைக்கத்தக்கது.

—————————

வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள் எயிற்று அரவு அளாய்
அள்ளலாய் கடைந்த வன்று அருவரைக்கு ஓர் ஆமையாய்
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம்
வள்ளலாரை யன்றி மற்று ஓர் தெய்வம் நான் மதிப்பேனே –88-

பதவுரை

வெள்ளை வேலை

வெண்கடலாகிய திருப்பாற்கடலிலே
வெற்பு

மந்தரமலையை
நாட்டி

நட்டு
வேள் எயிறு அரர்

வெளுத்த பற்களையுடைய வாஸுகி நாகத்தை
அளாய்

(கடைகயிறாகச்) சுற்றி
அள்ளல் ஆ

அலைகள் செறியும்படி
கடைந்தஅன்று

(கடலைக்) கடைந்தருளின காலத்தில்
அருவரைக்கு

தாங்க முடியாததான அம்மலைக்கு
ஓர் ஆமை நெய்

(தாரகமான) ஒரு ஆமையாகி
வானவர்களுக்கு

தேவதைகளுக்கு
உள்ள நோய்கள் தீர் மருந்து

ஏற்பட்டிருந்த நோய்களைத் தீர்க்கவல்ல மருந்தாகிய அம்ருதத்தை
அளித்த

(கடலிற் கடைந்தெடுத்து) அருளின
எம் வள்ளலாரை

உதாரனான எம்பெருமானை
அன்றி

யன்றி
மற்று ஓர் தெய்வம்

வேறொரு தேவதையை
நான் மதிப்பவனே

நான் (ஒருபொருளாக) மதிப்பனோ!

வெள்ளை வேலை
வெண்மையான கடலான திருப் பாற் கடலில்

வெற்பு நாட்டி
மந்தர மலையை நாட்டி

வெள் எயிற்று அரவு அளாய்
வெளுத்த பற்களை உடைய வாசுகி நாகத்தை கயிறாக சுற்றி

அள்ளலாய்
அலைகள் செறியும்படி

கடைந்த வன்று அருவரைக்கு
தாங்க முடியாத அந்த மலைக்கு–ஓர் ஆமையாய்

உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம் வள்ளலாரை யன்றி
மற்று ஓர் தெய்வம் நான் மதிப்பேனே-

வெளுத்தகடலிலே மந்தரமலையை மத்தாகநாட்டி வெளுத்த பற்களையுடைய

வாஸுகியென்னும் நாகத்தைக் கடை கயிறாக அதிலேற்றி

அந்த மாகடலை “கடல்மாறு சுழன்றழைக்கின்ற வொலி” என்னும்படியே

திசைகள் எதிரேவந்து செறியும்படியாகக் கடைந்தருளின காலத்து

அம்மலை ஆழந்துபோகாமல் தன் முதுகிலே நின்று சுழலும்படி கூர்மரூபியாய்த் தாங்கிக் கிடந்து,

தேவதைகட்கு ஏற்பட்டிருந்த துன்பங்களெல்லாம் தீரும்படியான மருந்தாகிய அம்ருதத்தை அவர்கட்கு எடுத்தருளி

பரமோதானான பரமபுருஷனையன்றி வேறொரு தெய்வத்தை ஆச்ரயபணீயமாக நினைப்பனோ நான் என்கிறார்.

——————————————

பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன்
தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம்
சீர் மிகுத்த நின் அலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே –89-

பதவுரை

முன்

முற்காலத்தில்
பார் மிகுந்த பரம்

பூமியிலே அதிமாகவுண்டான சுமையாகிய துஷ்டவர்க்கத்தை
ஒழிச்சுவான்

ஒழிப்பதற்காக
அருச்சுனன்  தேர் மிகுத்து

அர்ஜுனனுடைய தேரை நன்றாக நடத்தி
மாயம்

(பகலை இரவாக்குகை முதலான) ஆச்சரியச் செயல்களை
ஆக்கி நின்று

உண்டாக்கி
கொன்று

(எதிரிகளைக்) கொன்று
வெள்ளிசேர் மாரதர்க்கு

ஐயம்பெறுவதாக நினைத்திருந்த மஹாரதர்களான துர்யோதநாதிகளுக்கு
வான் கொடுத்து

வீரஸ்வர்க்கத்தைக் கொடுத்து
வையம்

பூமண்டலத்தை
ஐவர் பாலது ஆம்

பஞ்சபாண்டவர்களுடையதாக அக்குவித்த
சீர் மிகுந்த

புகழ் மிகுந்த
நின் அலால்

உன்னைத்தவிர
ஓர் தெய்வம்

மற்றொரு தெய்வத்தை
நான் மதிப்பனே

நான் ஆதரிப்பேனோ!

பார் மிகுத்த பாரம் முன்
முன் ஒரு காலத்தில் பூமியில் பாரமாக இருந்த துஷ்ட வர்க்கத்தை

ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று
பகலை இரவாக்கியும் போன்ற பல மாயங்களைச் செய்து எதிரிகளைக் கொன்று

வென்றி சேர் மாரதர்க்கு வான் கொடுத்து
வெற்றி பெறுவதற்காக நினைத்து இருந்த மகா ரதர்களான துரியோதானாதிகளை வீர ஸ்வர்க்கம் அனுப்பி

வையம் ஐவர் பாலதாம்
பூ மண்டலத்தை பஞ்ச பாண்டவர்களுக்கு ஆக்குவித்து அருளி

சீர் மிகுத்த நின் அலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே

அதி ரதர் -1-1000
மகா ரதர் -1- பல 1000
சம ரதர் -1-1-
அர்த்தரர் -1-தோற்று -இப்படி ரதர்கள் -நான்கு வகைகள் உண்டே

(மாரதர்க்கு.) அதிரதர், மஹாரதர் , ஸமரதர், அர்த்தரதர் எனத் தேர்வீரர் நால்வகைப்படுவர்;

அஸஹாயராய்த் தாம் ஒரு தேரின் மேலிருந்து தமது ரதகஜ துரகபதாதிகளுக்கு அழிவுவராமல் காத்துக்கொண்டு

பல்லாயிரம் தேர் வீரர்களோடு பொருது வெல்லும் வல்லமையுள்ளார் அதிரதர் என்றும்,

கீழ்சொன்னபடியே தாமிருந்து பதினோராயிரம் தேர்வீரரோடு பொருபவர் மஹாதரர் என்றும்,

ஒரு தேர்வீரரோடு தாமுமொருவராய் நின்று எதிர்க்கவல்லவர் ஸமரதர் என்றும்,

அங்ஙனமே பொருது தம் தேர் முதலியவற்றை இழந்துவிடுபவர் அர்த்தரதர் என்றும் சொல்லப்படுவர்.

இப்பாட்டில் மாரதர் என்றது மஹாரதர் என்றபடி,

போர்க்களத்திலே மடிந்த வீரர்கட்கு ஸ்வர்க்கம் கிடைப்பதாக சாஸ்திரம் கூறுவது பற்றி “மாரதர்க்கு வான் கொடுத்து” என்றார்.

தோற்றொழிந்த மாரதர்கட்கு வென்றிசேர் என்ற அடைமொழி தருமோவெனின்;

ஐயம் பெறுதற்கு யோக்யதையுடையவர்கள் என்று பொருளேயல்லது வெற்றிபெற்றவர்களென்று பொருளல்ல;

ஆகவே,வென்றிசேர்- ஐயமுண்டாவதாக நினைத்திருந்து- என்றதாயிற்று.

—————————

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன் –நாவிலும் என்றும் பட பேதம் -இங்கே
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின்
இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே –90-

பதவுரை

புனித

பரிசுத்தமான
எம் ஈசனே

எம்பெருமானே!
குலங்கள் ஆய ஈர் இரண்டில்

(ப்ராஹங்மணாதி) நான்கு வர்ணங்களுக்குள்

ஒன்றிலும்  ஒரு வர்ணத்திலும்

பிறந்திலேன்

நான் பிறக்கவில்லை
கலங்கள் ஆய நல்கலைகள் காலிலும்

(சேதநர்க்கு) நன்மையைக் காட்டுவதான நல்ல நான்கு வேதங்களிலும்
நவின்றிலேன்

பயிற்சி செய்யவில்லை;
புலன்கள் ஐந்தும்

பஞ்சேந்திரியங்களையும்
வென்றிலேன்

ஜயிக்கவில்லை.
பொறியிலேன்

பச்தாகி விஷயங்களில் அகப்பட்டிருக்கிறேன்; (ஆனபின்பு)
நின்

உன்னுடைய
இலங்கு பாதம் அன்றி

ஒளிமிக்க திருவடிகளைத் தவிர
மற்று ஓர் பற்று இலேன்

வேறொரு ஆச்ரயத்தை யுடையேனல்லேன்

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நான்கு வர்ணங்களில் ஒன்றிலும் பிறந்திலேன்

நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன் —
நான்கு வேதங்களையும் நவின்றிலேன்
நாவிலும் என்றும் பட பேதம் -இங்கே

புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன்
சப்தாதி விஷயங்களிலே அகப்பட்டு இருக்கிறேன்

புனித நின் இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே –
இலங்கு ஒளி மிக்க

முன் பாசுரத்தில் அநந்ய கதித்வம் சொல்லி இதில் ஆகிஞ்சன்யம் அருளுகிறார்

உபாயமும் உபேயமும் அவன் திருவடிகள் தான் என்கிறார் –

அநந்ய கதித்வமும் ஆகிஞ்சன்யமும் சொல்லி உபாயாந்தரங்கள் அனுஷ்ட்டிக்க அயோக்யனாய் இருந்து
உன் திருவடிகளே உபாயம் என்கிற அத்யாவசாயம் மாத்திரம் குறைவற்று இரா நின்றேன் என்கிறார் –

கீழ்ப்பாட்டுக்களில், தாம் வேறுகதியற்றவர் என்னுமிடத்தை வெளியிட்டதுபோல

இப்பாட்டில் வேறு உபாயமொன்றுமில்லாகையை வெளியிட்டருள்கிறார்.

ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமுமாக இரண்டு முண்டாக வேணுமே;

அவற்றுள் அநந்யகதித்வ முண்டானமை கீழே சொல்லிற்றாயிற்று.

ஆகிஞ்சந்யஞ் சொல்லுகிறது இதில்.

ஆக இரண்டாலும். உபாயமும் உபேயமும் எம்பெருமானே என்றதாகிறது.

ப்ரஹ்ம க்ஷத்ரிய வைச்ய சூத்ரரூபமான நான்கு வருணங்களுள் ஒரு வருணத்திலும் ஜகிக்கப் பெற்றிலேன்;

சேதநர்களுடைய அதிகாரங்கட்கும் குணங்கட்கும் தக்கபடி ப்ரியஹிதங்களை விதிக்கும்

விலக்ஷணமான சாஸ்த்ரங்களையும் அதிகரிக்கப் பெற்றிலேன்;

இந்திரியங்கள் என்னைத் தம் வசமாகப் பிடித்திழுத்துக் கொண்டுபோக

நான் அவையிட்ட வழக்காய்த் திரிந்தொழிந்தேனே யொழிய

அவற்றிலே ஓர் இந்திரியத்தையும் சிக்ஷிக்க ஸமர்த்தனாகப்பெற்றிலேன்;

ஆகவே சப்தாதி விஷயப்ரவணனாய்ப் போந்தேன்;

ஆகையாலே ஒருவித உபாயமும் அநுஷ்டிக்கைக்கு அயோக்யனாயிருந்தேனெனும்

“உன் திருவடிகளே உபாயம்” என்ற அத்யவஸாயம் மாத்திரம் குறைய்றறரா நின்றது என்கிறார்.

————————————

பண்ணுலாவு மென் மொழி படைத்தடம் காணாள் பொருட்டு
எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
கண்ணலாலோர் கண்ணிலேன் கலந்த சுற்றம் மற்றிலேன்
எண்ணிலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே -91-

பதவுரை

பண் உலாவும் மென்மொழி

(குறிஞ்சி காந்தாரம் காமரம் முதலிய) ராகங்கள் விளங்குகின்ற இனிய பேச்சை யுடையவளும்
படை தடம்கணாள் பொருட்டு

வாள் போன்று பெரிய கண்களையுடையவளுமான பிராட்டிக்காக
எண் இலா அரக்கரை

கணக்கிலாத ராக்ஷஸரை
நெருப்பினால்

அம்புகளின் தீயினால்
நெருக்கினாய்

தொலைத்தருளினவனே!
கண் அலால்

(எனக்கு நீ) நிர்வாஹகனேயொழிய
ஓர் கண் இலேன்

வேறொரு நிர்வாஹகனே காணுடையேனல்லேன்;
கலந்த சுற்றும்மற்று இலேன்

நெஞ்சு பொருந்தின உறவும் வேறில்லை;
எண் இலாத மாய!

அநந்தமான ஆச்சரிய சக்தியையுடையவனே!
நின்னை

உன்னை
என்றும்

எக்காலத்திலும்
என்னுள் நீக்கல்

என்னைவிட்டுப் ப்ரிக்கவே கூடாது.

பண்ணுலாவு மென் மொழி
ராகங்கள் -குறிஞ்சி காந்தாரம் காமாரம் விளங்கும் இனிய பேட்சு உடையவள்

படைத்தடம் காணாள் பொருட்டு
வாள் போன்ற பெரிய கண் உடைய பிராட்டியின் பொருட்டு

எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
அம்புகளின் தீயால் தொலைத்து அருளினாய்

கண்ணலாலோர் கண்ணிலேன்
நீயே தான் நிர்வாஹகன் -வேறு நிர்வாஹகன் யாரும் இல்லை

கலந்த சுற்றம் மற்றிலேன்
நெஞ்சு பொருந்தின சுற்றம் வேறு இல்லை

எண்ணிலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே
அநந்தமான ஆச்சர்ய சக்தி உடையவனே உன்னை எக்காலத்திலும் என்னை விட்டுப் பிரிக்கக் கூடாது -என்கிறார் –

——————————

விடைக்குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேற் கண் மாதரார்
கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி யாயா வேலை நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின் தனக்கு
அடைக்கலம் புகுந்த என்னை யஞ்சல் என்ன வேண்டுமே –-92-

பதவுரை

வேலை நீர்

ஜலதத்துவமாகிய கடலை
படைத்து

(முதல்முதலாக) ஸ்ருஷ்டித்தும்
அடைத்து

(ஸ்ரீராமாவதாரத்திலே அக்கடலில்) அணைகட்டியும்;
அதில் கிடந்து

(தங்கள் தங்கள் ஆபத்தை முறையிட்டுக் கொள்வார்க்கு முகங்கொடுக்க) அக்கடலில் பள்ளிகொண்டளியும்
முன்

முன்னொருகாலத்திலே
கநைடபுது

(தேவதைகளுக்காக அதைக்) கடைந்தும் (இப்படியெல்லாம் செய்தது மல்லாமல்)
ஏழ்விடை குலங்கள்

நாநாவர்ணமான ஏழு ரிஷபங்களையும்
அடர்ந்து

கொழுப்படக்கி
வென்றிவேல் மண்மாதரர்

ஜயசீலமான வேல்போன்ற கண்ககளையுடையளான நப்பின்னைப் பிராட்டியினுடைய
கடி கலந்த

பரிமளம் மிக்க திருத்தோளோடே
புணர்ந்த

ஸம்ச்லேஷித்த
காலி ஆய

கோபாலகிருஷ்ணனே!
நின் தனக்கு

உன் பக்கலிலே
அடைக்கலம் புகுந்த என்னை

சரணம் புகுந்த என்னை நோக்கி
அஞ்சல் என்ன வேண்டும்

“பயப்படாதே” என்றொரு வார்த்தை யருளிச்செய்ய வேணும்.

விடைக்குலங்கள் ஏழு அடர்த்து
ஏழு ரிஷபங்களையும் கொழுப்பை அடக்கி

வென்றி வேற் கண் மாதரார்
ஜெயசீலமான வேல் போன்ற கண்கள் உடைய நப்பின்னை பிராட்டி உடைய

கடிக் கலந்த தோள் புணர்ந்த
பரிமளம் மிக்க தோள்களுடன் சம்ஸ்லேஷித்த

காலி யாயா
கோபால கிருஷ்ணனாக

வேலை நீர் படைத்து
ஜல தத்வமான கடலை சிருஷ்டித்து

அடைத்து
ஸ்ரீ ராமாவதாரத்திலே அணை கட்டி அடைத்து

அதில் கிடந்து
தங்கள் ஆபத்தை சொல்லி முறை இட ஹேது வாக அதிலே பள்ளி கொண்டு அருளி
முன் கடைந்த நின் தனக்கு அடைக்கலம் புகுந்த என்னை யஞ்சல் என்ன வேண்டுமே

எனக்கும் மாஸுசா என்று அருளிச் செய்ய வேணும்-

ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கு அபயப்ரதாநம் செய்தருளினாற் போலவும்

அர்ஜுநனை நோக்கி “மாசுச:” என்றாற்போலவும்

அடியேனை நோக்கி அஞ்சேல் என்றருளிச் செய்யவேணும் பிரானே! என்கிறார்.

“முன்கடைந்த நின்றனக்கு” என்றும் பாடமுண்டு.

அஞ்சல்- எதிர்மறை வினைமுற்று.

—————————

சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே-93-

பதவுரை

கரும்பு இருந்த கட்டியே

கருப்பங் கட்டிபோலே பரம போக்யனாயிருந்தவனே!
கடல் கிடந்த கண்ணனே

திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளும் ஸுலபனே!
இரும்பு

இரும்புபோல் வலிய ராக்ஷஸசரீரங்கள்
அரங்க

அழியும்படி
வெம்சரம்

தீக்ஷ்ணமான அம்புகளை
துரந்த

பிரயோகித்த
வில்

ஸ்ரீசார்ங்கவில்லையுடையவனே!
இராமனே

இராமபிரானே!
அரங்கம் வாணனே

கோயிலில் வாழ்பவனே
கரும்பு

வண்டுகளானவை
அரங்கு

படிந்திருக்கபெற்ற
தண் துழாய்

குளிர்ந்த திருத்துழாய்
துதைத்து

நெருங்கி
அலர்ந்த

விசுஸித்திருக்கப்பெற்ற
பாதமே

(உனது) திருவடிகளையே
விரும்பி நின்று

ஸ்வயம்ப்ரயோஜகமாக ஆசைப்பட்டு
இறைஞ்சு வேற்கு

தொழுகின்ற அடியேன் பக்கல்
இரங்கு

க்ருபைபண்ணியருள்.

சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே
வண்டுகள் படிந்த குளிர்ந்த திரு துழாய்

துகைத்து அலர்ந்த பாதமாய் –
நெருங்கி விகசிக்க பெற்ற உனது திருவடிகளையே

விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே -கரும்பு இருந்த கட்டியே -கடல் கிடந்த கண்ணனே-
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே
இரும்பு போன்ற ராஷச சரீரங்கள் அழியும் படி
அஞ்சேல் என்று மட்டும் அருளினால் போராது-உனது திருவடியில் நித்ய கைங்கர்யம் பண்ணும் அனுபவம்
தந்து அருள வேண்டும் என்கிறார்-

கீழ்ப்பாட்டில் “அஞ்சலென்னவேண்டுமே” என்று அபயப்ரதாநமாத்ரத்தை வேண்டினாயினும்

அவ்வளவினால் த்ருப்திபெறக் கூடியவரல்லரே;

பெரியபெருமாள் திருவடிகளிலே நித்யாநுபவம் அபேக்ஷிதமாயிருக்குமே;

அவ்வநுபவம் வாய்க்குமாறு கிருபை செய்தருளவேணுமென்கிறார் இதில்.

“நான்காமடியில், இரும்பு போல் வலியநெஞ்சினரான அரக்காக என்ன வேண்டு மிடத்து

இரும்பு என்று அபேதமாகச் சொன்னது ரூபகாதிரயோக்தியாம்.

அரங்குதல்- (இங்கு) அழிதல்.

———————

ஊனின் மேய வாவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ யவற்றின் நின்ற தூய்மை நீ
வானினொடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ
யானும் நீ யதன்றி எம்பிரானும் நீ யிராமனே –94-

பதவுரை

இராமனே

இராமபிரானே!
ஊனில் மேய ஆவி நீ

சரீரத்திலே பொருந்தியிருக்கின்ற பிராணன் நீயிட்ட வழக்கு
உற்றமோடு உணர்ச்சி நீ

ஜ்ஞாநமும் அஜ்ஞானமும் நீ விட்ட வழக்கு.
ஆனில் மேய ஐந்தும் நீ

பசுக்களிடத்து உண்டான பஞ்சகவ்யமும் நீ;
அவற்றுள் நின்ற தூய்மை நீ

அப்பஞ்ச கவ்யங்களுக்குள்ள பரிசுத்தியும் நீ ஸங்கல்பித்தது;
வானினோடு மண்ணும் நீ

நித்ய விபூதி லீலா விபூதியென்ற உபய விபூதியும் நீயிட்ட வழக்கும்
வளம் கடல் பயனும் நீ

அழகிய ஸமுத்திரத்திலுண்டான (அம்ருதம் ரத்னம் முலான) பிரயோஜனங்களும் நீ;
யானும் நீ

அடியேனு“ உன் அதீகன்;
அது அன்றி

இப்படி பலவாறு பிரித்துச் சொல்வதல்லாமல்
எம்பிரானும் நீ

ஸர்வேச்வரனும் நீ காண்.

ஊனின் மேய வாவி நீ-
சரீரத்தில் உள்ள பிராணன் நீ இட்ட வழக்கு

உறக்கமோடு உணர்ச்சி நீ
ஜ்ஞானமும் அஜ்ஞ்ஞானமும் நீ இட்ட வழக்கு

ஆனில் மேய ஐந்தும் நீ
பசுவின் பஞ்ச கவ்யமும் நீ

யவற்றின் நின்ற தூய்மை நீ வானினொடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ யானும் நீ யதன்றி எம்பிரானும் நீ யிராமனே
அவன் சர்வ பிரகாரி -கடல் அமுதம் தேவர்களுக்கு தந்தது போலே ரத்னம் போன்றவற்றை ஐஸ்வர் யார்த்திகளுக்கும் தருகிறாய்

வானினொடு மண்ணும் நீ -என்றது –
ஆகாசத்தில் பல பல தேவதைகள் ஏங்குவதும் நீரிலே கரையாமல் பூ லோகம் இருப்பதும் உன்னாலே தான்

யானும் நீ என்றது –
எனக்கு உன் பக்கல் ருசி பிறவாத காலத்திலும் எனக்கு நல்ல மதி அளித்து ருசியை பெருக்கினதும் நீ தான் என்கிறார்

எம்பெருமான் ஸர்வப்ரகாரி என்னுமிடத்தை யருளிச்செய்கிறார்.

உறக்கமோடு உணர்ச்சி நீ = தமோகுணத்தின் காரியமான உறக்கமும்

ஸத்வகுணத்தின் காரியமான புத்திய விகாஸமும் நீயிட்ட வழக்கு;

சிலர் விஷயாந்தா ப்ரவணராய் அறிவுகேடராய்க் கிடப்பதும்,

சிலர் உன்பாதமே பரவிப்பணிந்து கிடப்பதுமெல்லாம் நீ. ஸங்கல்பிக்கும் வகைகளேயா மென்றவாறு.

வளங்கடற்பயனும்நீ = சிறந்த கடலிலுள்ள பயன்- அம்ருதம் ரத்னம் முதலியவை; அவையும் உன் ஸங்கல்பாதீநமென்றபடி,

பிரயோஜநாந்தா, பரர்களான தேவர்களுக்குக் கடலினின்றும் அமுதமாகிற பிரயோஜநரந்தரத்தை யெடுத்துக் கொடுத்தருளினதுபோல்

மற்றுள்ள பிரயோஜநாந்தர பரர்கட்கும் நீயே அப்பிரயோஜகங்களை அளிக்கவல்லை என்பது உட்கருத்தாம்.

(ஆனின்மேய இத்யாதி.) சுத்தியை வினைக்கக்கூடிய பதார்த்தங்களுள் முதன்மையாகக் கூறப்படுகிற பஞ்சகவ்யமும்,

அவற்றிலுண்டான பரிசுத்தியும் உனது ஸங்கல்பத்தினாலாயது.

ஊனின்மேய ஆலிநீ என்றது – சரீரம் நின்றிருப்பதும் நசித்துப் போவதும் உன்னுடைய இச்சா தீநமென்றபடி.

வானினோடு மண்ணும் நீ என்றது- ஆலம்பநமற்ற ஆகாசத்திலே பலபல தேவதைகள் ஸஞ்சரிக்கிறதும்,

நீரிலேகிடக்கிற பூமியானது கரையாமல் ஸகலத்துக்கும் ஆதாரமாயிருப்பதும் உன்னாலே என்றபடி,

யானும் நீ என்றது- எனக்கு உன்பக்கல் ருசி பிறவாதகாலத்திலும் எனக்கு நல்லமதியை யளித்து ருசியைப் பெருக்கினதும் நீயென்றபடி.

———————

அடக்கரும் புலன்கள் ஐந்தும் அடக்கி யாசையாம் யவை
துடக்கு அறுத்து வந்து நின் தொழில் கண் நின்ற வென்னை நீ
விடக்கருதி மெய் செயாதே மிக்கோர் யாசை யாக்கிலும்
கடல் கிடந்த நின்னலாலோர் கண் இலேன் எம் அண்ணலே -95-

பதவுரை

எம் அண்ணலே!

எம்பெருமானே!
அடக்க அரு

அடக்க முடியாத
ஐந்து புலன்கள்

பஞ்சேந்திரியங்களை
அடக்கி

பட்டிமேயாதபடி நியமித்து
ஆசை அரும் அவை

விஷயந்தரப் பற்றுக்களை
துடக்கு அறுத்து வந்து

ஸவாஸகமாகத் தொல்லைத்து விட்டு வந்து
நின் தொழில் கண்

உன் கைங்கரியத்திலே
நின்ற

நிஷ்டனாயிருக்கிற
என்னை

அடையேனே

நீ

இவ்வளவு ஆளாக்கின நீ

விட கருதி

உபேக்ஷிக்கத் திருவள்ளம்பற்றி
மெய் செயாது

என் உஜ்ஜீவநார்த்தமான க்ருஷியை மெய்யாக நடத்தாமல்
மிக்க ஓர் ஆசை ஆக்கிலும்

விஷயாந்தரப்ராவண்யத்தை அதிகரிப்பித்தாலும்
கடல் கிடந்த நின் அலால்

க்ஷீரஸாகர சாயியான உன்னையல்லது
ஓர் கண் இலேன்

வேறொரு ஸ்வாமியையுடைய னல்லேன்.

என்னை நெகிழ்கிலும் என்னுடைய நல் நெஞ்சம் தன்னை அகல்விக்க தானும் இங்கிலன் போலே
நீ எது செய்தாலும்-ஒரு கால் கை விட்டாலும் – என் மனம் உன்னை விட்டு போகாது

மெய் செயாது -என்னை உஜ்ஜீவிப்பிக்க திரு உள்ளம் பற்றி தொடங்கின கிருஷிகளை
மெய்யாகத் தலைக் காட்டாமல் -என்கை-

புறப்பண்டான விஷயங்களில் விருப்பத்தை விலக்கி உன்னளவில் அபிநிவேசத்தைப் பிறப்பித்து

கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கும்படி அடியேனை இவ்வளவு நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்த நீ

தானே என்னை உபேக்ஷித்து விஷயாந்தர ப்ரவணானகக் கெட்டுப்போகும்படி ஒருகால் கைவிட்டபோதிலும்

உன்னையொழிய வேறொரு கதி இல்லை யெனக்கு என்று தம்முடைய அத்யவ ஸாயத்தை அருளிச்செய்கிறார்.

ஆசார்யனுடைய நல்ல உபதேசங்களைக்கொண்டும் சாஸ்த்ர பரிசயத்தைக் கொண்டும்

இந்திரியங்களை அடக்கப்பார்த்தால் அடக்கமுடியாத இவ்விந்திரியங்களை

உன் திவ்யமங்கள விக்ரஹவலக்ஷண்யத்தைக் காட்டி ஈடுபடுத்தி விஷயாந்தாங்களில் போகாதபடி தகைந்து

புருஷார்த்தங்களின் மேலெல்லையாகிய கைங்கர்ய ப்ரார்த்தனையிலேயே நிலைநிற்கும்படி

உன் திருவருளுக்குப் பாத்திரமாøகி நின்ற என்னை நீ உபேக்ஷிப்பதாகத் திருவுள்ளம்பற்றி

எனது உஜ்ஜீவ நக்குஷியை முட்டமுடியா நடத்தாமல் இன்னும் விஷயாந்தரங்களிலேயே ருசியைப் பிறப்பித்து

உன்னைவிட்டு நீங்கும்படி நீ செய்தாயாகிலும் என் மனம் உன்னைவிட்டு நீங்காது என்றவாறு.

“என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சந்தன்னை அகல்விக்க தானுங் கில்லாணினி” என்ற நம்மாழ்வாரைப்போல அருளிச் செய்கிறபடி.

மெய்செயாது- என்னை உஜ்ஜிவிப்பிக்க வேணுமென்ற திருவுள்ளத்துடன் தொடங்கின க்ருஷிகளை மெய்யாகத் தலைகாட்டாமல் என்கை.

——————

வரம்பிலாத மாயமாயா வையம் ஏழும் மெய்ம்மையே
வரம்பிலூழி யேத்திலும் வரம்பிலாத கீர்த்தியாய்
வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல்
பொருந்துமாறு திருந்த நீ வரம் செய் புண்டரீகனே–96-

பதவுரை

வரம்பு இலாத மாய

அளவிறந்த ஸ்வரூபத்தையுடைய பிரகிருதிதத்துவத்தை ஸ்வாதீகமாகவுடையவனே
மாய!

ஆச்சரியசக்தியுக்தனே!
வையம் எழும்

ஏழுலகத்திலுமுள்ள ஜனங்களும் (கூடி)
மெய்ம்மையே

மெய்யாகவே
வரம்பு இல் ஊழி

பலபல கற்பகங்கள் வரையிலும்
ஏத்திலும்

தோத்திரம் பண்ணினாலும்
வரம்பு இலாத கீர்த்தியாய்

எல்லைகாண முடியாத புகழையுடையோனே!
புண்டரீகனே

புண்டரீகாக்ஷனே! (அடியேன்)
வரம்பு இலாயா

முடிவில்லாமல் நேரக்கூடியவனான
பல் பிறப்பு

பற்பல ஜன்மங்களை
அறுத்து

இன்றோடு முடித்துவிட்டு
நின் கழல் வந்து

உனது திருவடிகளைக் கிட்டி
பொருந்தும் ஆ

அவற்றிலேயே ஸக்தனாயிருக்கும்படி
திருந்த

நன்றாக
நீ வரம் செய்

அநுக்ரஹித்தருள வேணும்

வரம்பிலாத மாயமாயா வையம் ஏழும் மெய்ம்மையே வரம்பிலூழி யேத்திலும்
பல பல கல்பங்கள் ஸ்தோத்ரம் பண்ணினாலும்

வரம்பிலாத கீர்த்தியாய்
எல்லை காண முடியாத புகழ் உடையோனாய்

வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல் பொருந்துமாறு
உனது திருவடிகள் கிட்டி அவற்றிலே சக்தனாய் இருக்கும் படி

திருந்த நீ வரம் செய் புண்டரீகனே
தம்முடைய பிராப்யத்தை ஸ்பஷ்டமாக பிரார்த்திக்கிறார்-

அஞ்சல் என்ன வேண்டுமே -இரங்கு அரங்க வாணனே-என்று பொதுப்பட அருளிச் செய்ததை
விவரியா நின்று கொண்டு
சம்சாரத்தை வேர் அறுத்து உன் திருவடிகளில் பொருந்தும்படி அனுக்ரஹம் பண்ணி அருள வேணும் –
என்று ப்ராப்ய நிஷ்கர்ஷம் இதில் –

“அஞ்சலென்னவேண்டுமே” என்றும்

“இரங்கு அரங்கவாணனே!” என்றும் பொதுப்பட அருளிச்செய்ததை விவரியாநின்றுகொண்டு,

“ஸம்ஸாரத்தை வேரறுத்து உன் திருவடிகளிலே பொருந்தும்படியாக அநுக்ரஹம் பண்ணியருளவேணும்” என்று

தம்முடைய ப்ராப்யத்தை ஸ்பஷ்டமாகப் பிரார்த்திக்கிறார்.

———————

வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க்
கைய ! செய்ய போதில் மாது சேரு மார்பா !நாதனே !
ஐயிலாய வாக்கை நோய் அறுத்து வந்து நின்னடைந்து
உய்வதோர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே -97-

பதவுரை

வெய்ய ஆழி

(எதிரிகள்மேல்) தீக்ஷ்ணமான திருவாழியையும்
சங்கு தண்டு வில்லும் வாளும்

திருசங்கையும் கதையையும் ஸ்ரீசார்ங்கத்தையும் நந்தகவாளையும்
சேரும் மார்ப

நித்யவானம் பண்ணுகிற திருமார்பையுடைவனே!
நாதனே

ஸர்வஸ்வாமியே!
ஐயில் ஆய ஆக்கை நோய்

சிலேஷ்யம் முதலியவற்றுக்கு இருப்பிடமாகிய சரீரமாகிய வியாதியை
ஏந்து சீர் கைய!

தரித்துக் கொண்டிருக்கிற அழகிய திருக்கைளையுடையவனே
செய்யபோதில் மாது

செந்தாமரை மலரில் பிறந்த பிராட்டி
அறுத்து வந்து

தொலைத்து வந்து
நின் அடைந்து

உன்னை அடைந்து
உய்வது ஓர் உபாயம்

நான் உஜ்ஜீவிக்கும்படியானவொரு உபாயத்தை
எனக்கு

அடியேனுக்கு
நீ நல்கவேண்டும்

அருள வேணும்.

ஐயிலாய வாக்கை நோய்-ஸ்லேஷ்யம் முதலியவற்றுக்கு இருப்பிடமாகிய சரீரம் என்கிற வியாதியை

——————————

மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம் புலன்கள் ஆசையும்
துறந்து நின் கண் ஆசையே தொடர்ந்து நின்ற நாயினேன்
பிறந்து இறந்து பேர் இடர் சுழிக் கண் நின்று நீங்குமா
மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே -98-

பதவுரை

மாய!

ஆச்சரிய சக்தி யுக்தனான பெருமானே!
மறம் துறந்து

கோபத்தை ஒழித்து
வஞ்சம் மாற்றி

கன்னங்சுவடுகளைத் தவிர்த்து
ஐம்புலன்கள் ஆசையும் துறந்து

பஞ்சேந்த்ரியங்களினுடைய விஷயாந்தரப் பற்றையும் ஒழித்து
நின் கண்

உன் பக்கலில்
ஆசையே தொடர்ந்து நின்ற காயினேன்

பக்தியே மேன்மேலும் பெருகி வரப்பெற்ற அடியேன்
பிறந்து இறந்து

பிறப்பது இறப்பதுமான விகாரங்களையடைந்து கொண்டு
பேர் இடர் கழிக்கண் நின்றும்

மஹாதுக்க மண்டலான ஸம்ஸுரத்தில் நின்றும்
நீக்கும் ஆ

நீங்கும் பிரகாரத்தையும்
மற்று

அதற்கு மேற்பட்டுப் பரமாநந்த மடையும் பிரகாரத்தையும்
எனக்கு

அடியேனுக்கு
மறந்திடாது

மறவாமல்
கல்க வேண்டும்

அருளவேணும்

மறம் துறந்து -கோபத்தை ஒழித்து

நீங்குமா– நீங்குமா ஆ -வழியையும்

நீங்கும் ஆ மற்று–நீங்கும் பிரகாரத்தையும் அதற்கு மேற்பட்ட பரம ஆனந்தம் அடையும் பிரகாரத்தையும்
இரண்டையும் மறந்திடாது எனக்கு மாய நல்க வேண்டுமே-

பிறர்க்கு ஒரு ஏற்றமிருந்தால் அதனை பொறுக்கமாட்டாமையும்

பிறர்க்குத் தீங்கு விளைவிப்பதையே சிந்திக்கையும் மறம் எனப்படும்.

அதனை யொழித்து, வஞ்கமாவது- அநுகூலன் போலத் தோற்றி முடிவில் பிரதிகூலனாய் நிற்றல்;

அதனையும் தொலைத்து, இந்திரியங்களுக்கு விஷயாந்தரங்களிலுண்டான ஆசையையும் அகற்றி

உன்பக்கல் ஆசையே மேன்மேலும் தொடர்ந்து பெரும்படியான நிலைமையிலேயே நின்ற அடியேன்,

பிறப்பதும் இறப்பதுமான மஹா துக்கசக்கரத்தில் நின்றும் நீங்கும் விதத்தையும்

அதற்குப் பிறகு ப்ராப்தமாகக் கூடிய பரமாநந்த ஸாம்ராஜ்யத்தையும் நீயே தந்தருளவேணும்.

மற்று என்பதை அசைச்சொல்லாகக் கொண்டு,

பேரிடர் சுழிக்கணின்று நீங்குதலை மாத்திரமே பிரார்த்திக்கின்றா ரென்னவுமாம்.

—————————————

காட்டி நான் செய் வல் வினைப் பயன்தனால் மனம் தனை
நாட்டி வைத்து நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக்
கேட்டதன்றி என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும்
பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே -99-

பதவுரை

பூவை வண்ணனே

காயாம்பூப்போன்ற நிறமுடையவனே!
பின்னைகேள்வ!

!  நப்பின்னைப் பிராட்டிக்கு நாதனே
(யமகிங்கர ரானவர்கள்)

நான் செய் வல்வினை காட்டி

நான் செய்த பிரபலமான பாவங்களை எனக்கு ஞாபகப்படுத்தி
பயன் தனில்

அப்பாவங்களின் பலன்களை அநுபவிப்பதில்
மனம் தனை

எனது மநஸ்ஸை
நாட்டி வைத்து

துணியும்படி செய்வித்த
நல்ல அல்ல

அஸஹ்ரயமான ஹிம்ஸைகளை
செய்ய எண்ணினார்

செய்ய நினைத்திருக்கிறார்கள்
என கேட்டது அன்றி

என்று நான் கேட்டிருக்கிற படியாகையாமைக்காக
உன்னது ஆவி

என்னுடைய ஆத்மாவை
நின்னொடும் பூட்டிவைத்த என்னை

உன் பக்கலில் ஸமர்ப்பித்து நீர்ப்பரனாயிருக்கி என்னை

காட்டி நான் செய் வல் வினை-
நான் செய்யும் பெரிய பாபங்களை எனக்கு நினைவு படுத்தி

பயன்தனால் மனம் தனை நாட்டி வைத்து
அந்த பாபங்களின் பயன்களை அனுபவிப்பதில் மனசை செலுத்தி
நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக
ஹிம்சைகளை செய்ய நினைத்து இருக்கிறார்கள் என்று

கேட்டதன்றி
நான் கேட்டு இருக்கிற படி யாமைக்காக

என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும் பூட்டி வைத்த வென்னை
என்னுடைய ஆத்மாவை உன் பக்கலில் சமர்ப்பித்து நிர்ப்பரனாய் இருக்கும் என்னை-

நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே
உன்னை விட்டுப் பிரித்திட வேண்டாம்-

நான் கணக்கு வழக்கில்லாதபடி செய்திருக்கும் பாவங்களுக்குப் பலன் அனுபவித்தே தீரவேண்டியதாகும்;

நான் செய்த பாவங்கள் இவ்வுலகத்தில் அந்தந்த க்ஷணங்களில் அழிந்துபோய்விட்டாலும்

அவற்றை நான் மறந்தொழிந்தாலும் பாபபலன்களை ஊட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள யமகிங்கரர்கள்

என்னுடைய ஒவ்வொரு பாவத்தையும் எடுத்தெடுத்துக்கூறி

‘இவற்றின் பலனை அநுபவித்தே தீரவேணும்’ என்று வற்புறுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்களென்பதை

நான் பெரியோர் முகமாகவும், சாஸ்திரமுகமாகவும் கேட்டிருக்கிறேன்;

அப்படிப்பட்ட பயங்கராமன யமகிங்கரயாதனைகள் அடியேனுக்கு நேரக்கூடாதென்று ஏற்கனவே

தேவரீர்பக்கல் ஆத்மஸமர்ப்பணம் பண்ணியிருக்கிறேன்;

இவ்வடியேனை அந்த ரங்கபூதனாக தேவரீர் திருவுள்ளத்தில் கூட்டிக்கொண்டருளினால்

*** என்றபடி அந்த நரகவேதனைகட்கு ஆளாகதொழியலாம்;

ஆகையாலே தேவரீர் அடியேனை அவிநாபூதனாகக் கொண்டருள வேணும் என்று பிரார்த்திகிறார்.

செய்யவெண்ணினார் என்ற வினைமுற்றுக்கு ஏற்ப “நமன் தீமர்” என்ற எழுவாய் வருவித்துக் கொள்ளவேணும்.

என்றைக்கோ செய்து முடிந்துபோன வல்வினைகளைக் காட்டுவதாவது- நினைப்பூட்டுகை;

இன்ன இன்ன பாவங்களைச் செய்தாயென்று தெரிவித்தல்

“பயன்றனால்” என்பதும் சிலருடைய பாடம்.

பயன்றனில் மனந்தனை நாட்டி வைக்கயாவது – பிறரை வஞ்சித்து ஏகாந்தாமகப் பாவங்களைச் செய்து தீர்த்தோம்;

அவற்றின் பலன்களை இப்போது அநுபவித்தே தீர வேண்டும்;

இப்போது யமபடர்களை வஞ்சிக்க முடியாது என்று தீர்மானித்துக் கொள்ளுகை.

யமபடர் செய்யக்கூடிய ஹிம்ஸைகளின் கொடுமையை நினைத்து இன்ன ஹிம்ஸையென்று சொல்ல அஞ்சி

நல்ல அல்ல என்று பொதுவிலே அருளிச் செய்கிறார்: நல்லதாகாத செயல்களையென்கிறார்.

—————————

பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது
இறப்ப வைத்த ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றமா
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே -100-

பதவுரை

பெறற்கு அரிய மாயனே

(ஒருவர்க்கும் ஸ்வயத்தக்கதாலே பெறுவதற்கு முடியாத எம்பெருமானே!
பிறப்பினோடு பேர் இடர் கழிக்கன் நின்றும்

பிறப்பு முதலிய பெருப்பெருத்த துக்கங்களை நினைக்கின்ற ஸம்ஸாரத்தில் நின்றும்
நீங்கும் அஃது

நீங்குவதற் குறும்பான தத்வ ஹிதரங்கள்
இறப்ப வைத்த

மறந்தொழிந்த
ஞான நீசரை

ஸர்வஜ்ஞராகத் தங்களை நினைத்துக்கொண்டிருக்கிற நீசர்களை
கரை கொடு

ஏற்றம் ஆ

கரையிலே கொண்டு சேர்க்கும்படியாக

பெறற்கு அரிய

துர்லபமான
சின்ன பாதம் பத்தி ஆன

உன் திருவடிகளில் பக்தியாகிற
பாசனம்

மரக்கல (ஓட) த்தை
எனக்கு நல்க வேண்டும்

அடியேனுக்கு அருளவேணும்.

பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது இறப்ப வைத்த -மறந்து ஒழிந்த
ஞான நீசரைக் -சர்வஜ்ஞ்ஞராக நினைந்து கொண்டு இருக்கும் நீசரை

கரைக்கொடு ஏற்றமா-கரையில் கொண்டு சேர்க்கும் படியாக

பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்-மரக் கலம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே-

‘என்னை நின்னுள் நீக்கல்’ என்ற ஆழ்வாரை நோக்கி

எம்பெருமான் ‘ஆழ்வீர்! அவிச்சிந்நமான திவ்ய ஸம்ச்லெஷத்தைப் பிரார்த்திக்கின்றீரே;

அது பெறவேணுமானால் நீர் பரமபக்தியோடு கூடியிருக்க வேணுமே’ என்ன;

அப்படிப்பட்ட பரமபக்தியையும் நீயே தந்தருளவேணுமென்று இரக்கிறார்.

தேவரீருடைய பாதாரவிந்தத்திலே பக்தியுண்டாவது ஸாமாந்யமல்ல;

அஃது அனைவர்க்கும் எளிதில் பெறுதற்கு அரிது;

அதனை அடியேனுக்கு நிர்ஹேதுகக்குபையினால் தந்தருளவேணுமென்று பின்னடிகளில் பிரார்த்திக்கிறார்.

அப்படிப்படட் பக்தி அடியேனுக்கு தேவரீர் அருளினால் அஃது என்னொருவனுடைய உஜ்ஜீவநத்துக்கு மாத்திரம் உபயுக்தமாகாது;

அதனைக்கொண்டு பல நீசர்களை நான் கரையேற்றப் பார்ப்பேனென்கிறார் முன்னடிகளில்.

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-41-60- -ஸ்ரீ உ வே -PBA -ஸ்வாமிகள்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

February 9, 2020

ஆயனாகி ஆயர்மங்கை வேய தோள் விரும்பினாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தோடு இம்பராய்
மாய மாய மாயை கொல் அதன்றி நீ வகுத்தலும்
மாய மாய மாக்கினாய் யுன் மாயம் முற்றும் மாயமே –41-

பதவுரை

மாய !

ஆச்சரியபூதனே. (நீ)
அயன் ஆகி

இடப்பிள்ளையாய்ப் பிறந்து
ஆயர் மங்கை

இடைப்பெண்ணான நப்பின்னைப்பிராட்டியினுடைய
வேய தோள்

வேய்போன்ற தோள்களை

விரும்பினாய் விரும்பிப் புணர்ந்தாய்;

அம்பரத்தோடு இம்பராய்

மேலுலகத்தவர்களும் இவ்வுலகத்தவர்களுமா யுள்ளவர்களில்
யாவர்

யார்தான்
நின்னை ஆயவல்லர்

உன் ஸ்வரூபத்தை ஆராய்ந்து அறியவல்லர்? (யாரும் அறிய கில்லார்.)
மாயம் மாயை கொல்!

(இப்படி அறியமாட்டாதது) பிரகிருதியைப் பற்றின அஜ்ஞாகத்தலல்ல. (ஸர்வஜ்ஞராயிருந்தாலும் உன் ஸ்வரூபம் அறியமுடியாததே.)
அது அன்றி

அது அப்படியிருக்கட்டும்;
நீ

ஸர்வசக்தனான நீ
வகுத்தலும்

(உன்னை வணங்கி வழிபடுவதற்கு உறுப்பாகக் கரணகளே பராதிகளை) உபகரித்திருக்கச் செய்தேயும்.
மாய

(சேதகர்கள் அவற்றைக்கொண்டு நல்வழியில் புகாமல்) மாய்ந்துபோக

(அந்த விநாசத்தை நீ ஸஹிக்கமாட்டாமல்)

மாயம் ஆக்கினாய்

(இவரக்ளை ஸம்ஹரிப்பதே க்ஷேமமென்று) ப்ரக்ருத்யவஸ்தையிலே கொண்டு நிறுத்தினாய்;
உன் மாயம் முற்றும்

உன்னுடைய ஸங்கல்பமெல்லாம்
மாயமே

ஆச்சரியமாயிருக்கின்றன.

ஆயனாகி ஆயர்மங்கை வேய தோள் விரும்பினாய்-
இடையனாகி –இடைப்பெண் நப்பின்னை பிராட்டியின் மூங்கில் போன்ற தோள்களை விரும்பி புணர்ந்தாய்

ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தோடு இம்பராய்-
உனது ஸ்வரூபத்தை ஆராய மேல் உலகத்திலும் இவ் உலகத்திலும் வல்லார் யார்

மாய மாய மாயை கொல்-இப்படி அறியாததற்கு பிரகிருதி காரணம் அன்று –
ஆச்சர்ய பூதனாய் -சர்வஜ்ஞ்ஞனாய் இருந்தும் உன்னாலேயும் உனது ஸ்வரூபம் அறிய முடியாதே

அதன்றி நீ வகுத்தலும் மாய மாய மாக்கினாய் யுன் மாயம் முற்றும் மாயமே –
அது அப்படி இருக்கட்டும் –
சர்வ சக்தனான நீ உன்னை வணங்கி வழிபட கரண களேபரங்களை கொடுத்து இருந்தும்
சேதனர்கள்-நல் வழியில் புகாமல் மாய்ந்து போக அந்த விநாசத்தை நீ சகிக்க மாட்டாமல் –
பிரகிருதி அவஸ்தையில் நிறுத்தினாய்

உனது மாயம் -சங்கல்பம் எல்லாம் எவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறதே
நல் வழி தவிர்ந்து தீய வழிகளில் செல்லும் சம்சாரிகளை சம்ஹரிப்பதும் –
கர்ம அனுகுணமாக ரஷணம் என்று அருளுகிறார்

எம்பெருமானே! நீ உகந்தாரைத் தத்ஸஜாதீயவான்ய வந்தவதரித்து ஸ்வரூபாநுரூபமாக ரக்ஷித்தருளும்படியையும்,

விமுகரான ஸம்ஸாரிகளை ஸங்கல்பத்தாலே கர்மாநுகூலமாக ரக்ஷித்தருளும்படியையும்

அநுஸந்திக்கப்புகுந்தால் பரிச்சோதிக்க முடியாத ஆச்சர்மாயிருக்கிறதே! என்கிறார்.

(நீ வகுத்தலும் இத்யாதி.) ஸம்ஸாரிகளுடைய இழவைக்கண்டு இரங்குமவனான நீ

அவர்கள் உன்னையடைந்து உய்வதற்காக அவர்கட்கு நீ கரணகளேபரங்களைக் கொடுத்திருக்கச் செய்தேயும்

அவர்கள் அவற்றைக்கொண்டு நன்மை தேடிக்கொள்ளாமல் விஷயாந்தரப்வணராய் அழிந்துபோக,

‘இவர்கட்கு இனி ஸம்ஹாரமே நல்லது’ என்று திருவுள்ளம்பற்றி அவர்களை ப்ரக்ருத்யவஸ்தையிலே கொண்டு நிறுத்தினாய்;

உன்னுடைய மாநஸவயாபாரரூபமான ஸங்கல்பஜ்ஞாநமடங்கலும் ஆச்சர்யகரமாயிருக்கினற்து காணென்கிறார்.

நல்வழி தவிர்ந்து தீயவழியிற்சென்ற ஸம்ஸாரிகளை ஸம்ஹரிப்பதும் கர்மாநுகுணமான ரக்ஷணமென்று திருவுள்ளம்

——————————————————————-

வேறு இசைந்த செக்கர் மேனி நீறணிந்த புன் சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்தவன் கபால மிசை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை
ஏறு சென்று அடர்த்த வீச பேசு கூசம் இன்றியே –42-

பதவுரை

கூசம் இன்றியே சென்று ஏறு அடர்ந்த ஈச

கூசாமல் சென்று (நப்பின்னைப் பிராட்டிக்காக) எருதுகளை வலியடக்கின பெருமானை!
வேறு

வேறாக
இசைக்க

ஸம்ஹாரத்தொழிலுக்குத் தகுதியான
செக்கர் மேனி

சிவந்த உடலையுடையனாய்
நீறு அணிந்த

பஸ்தாரியாய்
புண் சடை கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த

ஹேயாமன ஜடையிலே சந்திரகலையை வைத்துக் கொண்டிருப்பவனான ருத்திரன்
கை வைத்த

தன்கையில் வைத்துக் கொண்டிருந்த
வல் கபால் மிசை

வலிதான கபாலத்தை
ஊறுசெம் குருதியால்

உள் திருமேனியிலே ஊறா நின்றுள்ள சிவந்த ரத்தத்தாலே
நிறைந்த காரணம்தனை

நிறைந்த காரணத்தை
பேசு

அருளிச் செய்யவேணும்.
பாட்டு

பாலினீர்மை

வேறு இசைந்த செக்கர் மேனி -வேறாக சம்ஹார தொழிலுக்கு தக்க சிவந்த உடலை உடையானாய்
நீறணிந்த புன் சடைக் கீறு திங்கள் வைத்தவன் -ருத்ரன் –
கை வைத்தவன் கபால மிசை-தன் கையில் வைத்து இருந்த வழிய கபாலத்தை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை-ஏறு சென்று அடர்த்த வீச பேசு கூசம் இன்றியே-
கூசாமல் சென்று நப்பின்னை பிராட்டிக்காக எருதுகளை வலி அடக்கிய பெருமானே அருளிச் செய்ய வேணும்-
கூசம் இன்றியே பேசு என்றும்
கூசம் இன்றியே ஏறு சென்று அடர்த்த யீச-என்றும் அன்வயம்

“அரசுடைய கபாலத்தை நிறைந்தது எதற்காக? சொல்” என்று கேட்பதற்குக் கருத்து-

நீ ஸர்வஸ்மாத்பரனாய் அவன் உன் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டவனாயிருக்கையாலே அவன் யாசிக்கவும்

நீ அவனை அநுக்ரஹிக்கவும்  நேர்ந்ததென்று நாங்களெல்லாரும் நினைத்திருக்கிறாய்;

இப்படி உனது பரத்வத்தை வெளியிடுதல் தவிர வேறு காரணமுண்டாகில் அருளிச்செய்யவேறும் என்கை.

“கூசமின்றியே பேசு” என்றாவது, “கூசமின்றியே ஏறு சென்றடர்த்தவீச!” என்றாவது அந்வயிக்கலாம்.

“ஏறு சென்றடர்த்தவீச! பேசு” என்ற ஸம்போதந் ஸ்வாரஸ்யத்தால்-

நீ சாஸ்த்ரத்துக்கு வசப்படாத ஜந்மத்திலே பிறந்து ஏழு கோ (ஹோ) ஹத்யை பண்ணச் செய்தேயும் ஈச்வரத்யம் நிறம் பெறநின்றாய்;

ருத்ரன் தன் ஈச்வரத்வத்தால் வந்த மேன்மை குலையாமல் நிற்க செய்தேயும் பாதகியானான்;

அந்தப் பாதகத்தை உனது திருவருளால் போக்கிக் கொண்டான்;

இந்த நெடுவாசியை அறியவல்லாரார்; என்பதாக உட்கருத்துத் தோனறும்.

வேறு இசைந்த செக்கர் மேனி = எம்பெருமான் ஸர்வரக்ஷகனாயிருக்குந் தன்மைக்கு ஏற்ப அவனுக்குக் கடல்

போன்ற அழகிய வடிவம் அமைந்தால்,

சிவன் ஸர்வஸம்ஹாரகனாயிருக்குந்தன்மைக்கு ஏற்ப அவனுக்குக் கோபாவேச ஸூசகமாய்ச் செந்நிறமான உடல் அமைந்ததாம்.

கபால்- ‘கபாலம்’ என்ற வடசொல்லின்குறை. எவ்வளவு ப்ரயாஸப்படும்

அக் கபாலம் கையைவிட்டு நீங்காதிருந்ததனால் வன் கபால் எனப்பட்து.

——————————————————————

வெஞ்சினத்த வேழ வெண் மருப்பொசித்து உருத்தமா
கஞ்சனைக் கடிந்து மண் அளந்து கொண்ட காலனே
வஞ்சனது வந்த பேய்ச்சி யாவி பாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணனாய வாதி தேவன் அல்லையே –43-

பதவுரை

வெம்சினந்த

உக்ரமான கோபத்தையுடைய
வேழம்

குவலயாபீட மென்னும் யானை யினுடைய
வெண் மருப்பு

வெண்ணிறமான தந்தத்தை
ஒசித்து

ஒடித்து (அந்த யானையை முடித்து)
உருத்த

கோபிஷ்டனாயும்
மா

பல்ஷ்டனாயுமிருந்த
கஞ்சனை

கம்ஸனை
கடிந்து

வதைசெய்து
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி

வஞ்சனையால் வந்த பூதனையின் உயிரை
பாலுன் வாங்கினாய்

முலைப்பாலுண்கிற பாவனையினால் ஆகர்ஜித்தவனே!
மண் அளந்து கொண்ட காலனே!

(த்ரிவிக்ரமனாய்) பூமியெல்லாமளந்துகொண்ட திருவடியையுடையவனே! நீ.
அஞ்சனந்த வண்ணன் ஆய

மைபோன்ற காந்தியையுடையனான
ஆதிதேவன் அல்லையே

ஆதிபுருஷனன்றோ?

வெஞ்சினத்த வேழவெண் மருப்பொசித்து-உக்ரமான கோபத்தை உடைய குவலயாபீடம் என்ற யானையின்
வெண்மையான தந்தத்தை ஒடித்து அந்த யானையை முடித்து
உருத்த மா கஞ்சனைக் கடிந்து –கோபிஷ்ட பலிஷ்டன் ஆகிய கம்சனை வதம் செய்து
மண் அளந்து கொண்ட காலனே-திரு விக்ரமனாய் உலகம் எல்லாம் அளந்த திருவடியை உடையவனே-
ப்ரஹ்மாதி புல்லீறாக சர்வ ஜகத்தையும் அளந்து சர்வ சேஷித்வத்தைக் காட்டி அருளிய படியாலும் நீயே ஜகத் காரண பூதன்

ருத்ரனுடைய பாதகத்தைப் போக்கினவளவேயன்றிக்கே க்ருஷ்ணனாய் வந்தவதரித்த மண்ணின் பாரமான

கம்ஸனைக் கூண்டோடு களைத்தருளுகையாலும்,

அந்த ருத்ராதிகளோடு க்ரிமிகீடோதிகளோடு வாசியின்றி

எல்லார் தலைகளிலும் த்ரிவிக்ரமனாய்த் திருவடிகளை வைத்து ஸர்வேஷித்வத்தை விளக்கிக்கொண்டபடியாலும்

ஜதத்காரணபூதன் நீயேயென்கிறார்.

————————————————————————

பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம்
போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா
நீல நீர்மை யென்றிவை நிறைந்த கால நான்குமாம்
மாலின் நீர்மை வையகம் மறைத்ததென்ன நீர்மையே –44-

பதவுரை

பாலின் நீர்மை

பாலின் நிறம்போன்ற வெண்மையென்ன
செம்பொன் நீர்மை

சிவந்த பொன்னின் நிறம் போன்ற செம்மையென்ன
பாசியின் பசும்புறம் போலும் நீர்மை

பாசியினுடைய பசும்புறம் போன்ற பசுமை நிறமென்ன
பொற்பு உடை தடத்து வண்டு விண்டு உலாம் நீலம் நீர்மை

அழகையுடைய தடாகத்திலேயுள்ள வண்டுகள் சிறகு விரித்து பரவாநிற்கும் கருநெய்தல் பூவின் நிறம்போன்ற கருநிறமென்ன.
என்று இவை நிறைந்த

என்கிற இந்த நான்கு நிறங்களும் நிறையப்பெற்ற
காலம் நான்கும் ஆம் மாவின் நீர்மை

நான்கு யுகங்களுக்கும் நிர்வாஹகனான எம்பெருமானுடைய ஸௌலப்யகுணத்தை
வையகம்

இவ்வுலகத்திலுள்ளவர்கள்
மறைத்தது

திரஸ்கரித்தது
என்ன நீர்மை

என்ன ஸ்வபாவம்!

பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம் போலு நீர்மை-
பால் போலே வெண்மை நிறம் கொண்டும்
சிவந்த பொன்னின் நிறம் போலே செம்மை நிறமும்
பாசியின் வெளி நிறம் பச்சை போலே
பாசி போலும் நீர்மை என்னாதே பாசியின் பசும் புறம் போலும் நீர்மை என்றது
பசுமை நிறத்தின் சிறப்புத் தோற்றவே
பாசியில் பசுமை குறைந்த புறமும் உண்டே

பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா நீல நீர்மை
அழகான தடாகத்தில் உள்ள வண்டுகள் சிறகை விரித்து கரு நெய்தல் பூவின் நிறம் போலே கரு நீலம் என்ன
நீலத்துக்கு இத்தனை அடைமொழி உபமேயத்தின் போக்யதையை காட்டவே

யென்றிவை நிறைந்த கால நான்குமாய் மாலின் நீர்மை
நான்கு யுகங்களுக்கும் நிர்வாஹகனாய் இருக்கும் எம்பெருமானின் சௌலப்ய குணத்தை
வையகம் மறைத்ததென்ன நீர்மையே –இப்படி முகம் காட்டினத்தை அனுசந்தித்து இன்னும் சம்சாரிகள் கடை தேற வில்லை
ஏது என்ன துர்வாசன பலம் என்கிறார்

நான்குமாம் மாலின் -சரியான பாடம் -நான்குமாய் மாலின் பாடம் உபேக்ஷிக்கத் தக்கது

கீழ்ப்பாட்டின் “அஞ்சனத்தவண்ணனாய்” என்று திருமேனி நிறம் ப்ரஸ்துதமாகவே,

க்ருதம் முதலிய யுகங்களில் சேதநர் தமது ஸத்வம் முதலிய குணங்கட்குத் தகுதியாக

ச்வேதம் முதலிய வர்ணங்களை விரும்புகையாலே அவ்வக் காலங்களிலே அந்தந்த நிறங்களைப் பரிக்ரஹித்து

முகங்காட்டினபடியை அநுஸந்தித்து, இப்படி முகங்காட்டச் செய்தேயும் ஸம்ஸாரிகள் காற்கடைக் கொள்ளுகிறார்களே!

இதென்ன துர்வாஸநாபலம்!! என்று வருந்துகிறார்.

“பாசிபோலும் நீர்மை” என்னாதே “பாசியின் பசும்புறம்போலு நீர்மை” என்றது- பசுமை நிறத்தின் சிறப்புத்தோற்றலாம்;

பாசியின் பசுமை குறைந்த புறமும் உண்டிறே. “நீலநீர்மை” என்னுமளவே போதுமாயிருக்க

“பொற்புடைத்தடத்து வண்டுவிண்டுலல்” என்று நீலத்திற்கு அடைமொழி கொடுத்தது-

உபமேயத்தில் போக்யதையைத் தோற்றுவிக்கைகாக வென்க.

மூன்றாமடியின் முடிவில் “நான்குமாய்” என்று பெரும்பாலும் பாடமோதுவார்களேனும் அது உபேக்ஷிக்கத்தக்கதாம்.

“நான்குமாம் மாலின்” என்க.

———————————————————

மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் மண்ணுளே மயங்கி நின்று
எண்ணும் எண் அகப்படாய் கொல் என்ன மாயை நின்தமர்
கண்ணுளாய் கொல் சேயை கொல் அநந்தன் மேல் கிடந்த வெம்
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே –45-

பதவுரை

அனந்தன் மேல் கிடந்த

திருவனந்தாழ்வான்மேலே  சாய்ந்தருள்கின்ற
எம் புண்ணியா

எங்களுடைய  ஸுக்ருத ஸ்வரூபியான எம்பெருமானே!
புனம் துழாய் அலங்கல்

தன்னிலத்திலே வளர்ந்த திருத்துழாயாலே செய்யப்பட்ட மாலையையுடைய
அம் புனிதனே

பரமபாவகனே!
மண் உளாய்

லீலாவிபூதியில் அவதரித்திரா நின்றாய்;
விண் உளாய்

பரமபதத்தில் எழுந்தருளியிரா நின்றாய்;
மண்ணுள் மயஙகி நின்று எண்ணும் எண் அகப்படாய்

இந்நிலத்திலே விபரீதஜ்ஞாநிகளாயிருக்கிற ஸம்ஸாரிகளுடைய எண்ணங்களுக்கு விஷயமாகாதிருக்கிறாய்;
நின் தமர்

உன்னுடையவர்களான அநந்ய ப்ரயோஜநர்களுக்கு
கண்ணுளாய்

சக்ஷுர்விஷயமாகாநின்றாய்;
சேயை

(மற்றையோர்க்கு) தூரஸ்தனாயிரா நின்றாய்;
என்ன மாயை

இது என்ன ஆச்சரியம்!

மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் –
லீலா விபூதியிலே திருவவதரித்தாய் -பரம பத நாதனாய் இருந்து வைத்தும்
மண்ணுளே மயங்கி நின்று எண்ணும் எண் அகப்படாய்
சம்சாரிகளின் எண்ணங்களுக்கு விஷயம் ஆகாது இருக்கின்றாய்

கொல் என்ன மாயை நின்தமர் கண்ணுளாய் கொல்
உனது அநந்ய பிரயோஜன அடியார்களுக்கு எளிதாக விஷயம் ஆகிறாய்

சேயை கொல்
மற்றவர்களுக்கு தூரஸ்தனாய் இருக்கிறாய்

அநந்தன் மேல் கிடந்த வெம் புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே
பல பல வகையாக பரந்து நிற்கிற எல்லா ஆற்றல் -இது என்ன ஆச்சர்யம் என்கிறார் –

தானும் சம்சாரத்தில் இருந்தும் அவனது சௌலப்யங்களையும் பரத்வங்களையும்
ஏடு படுத்தி அருளுவது அவனாலேயே என்கிறார்

வாய் வெருவுதலே போது போக்காகாப் பெரும் படி அருளுகிறாயே-

“மாலின் நீர்மை வையகம் மறைத்தது என்ன நீர்மையே!” என்று ஸம்ஸாரிகளின் கொடுமையை நினைத்து வருந்தினார் கீழ்ப்பாட்டில்.

அப்படிப்பட்ட ஸம்ஸாரிகளிலே தாமும் ஒருவராயிருக்கச் செய்தேயும் தாம் அவர்களைப் போலன்றியே

எம்பெருமானுடைய பரத்வம், ஸௌலப்பம் முதலிய குணங்களிலே ஈடுபட்டு அவற்றை வாய்வெருவுதலே

போதுபோக்காயிருக்கப் பெற்றமை அருளிச் செய்கிறார்.

“மண்ணுவாய்” “விண்ணுளாய்” இத்யாதி பதங்களுக்கு அடுத்தபடியாக உள்ள (சொல்) என்ற இடைச்சொற்களெல்லாம்

வாக்யாலங்காரமாக நினைக்கத் தக்கன.

‘மண்ணுளாய், என்ன மாயைகொல்? விண்ணுளாய், என்ன மாயைசொல்?” என்றிங்ஙனே யோஜிக்கவுமாம்.

அப்ராக்ருதமாய் அதீத்ரியமான திவ்ய மாயைசொல்?” என்றிங்ஙனே யோஜிக்கவுமாம்.

அப்ராக்ருதமாய் அதீந்த்ரியமான திவ்ய விக்ரஹத்தை ப்ராக்குத ஸஜாதீயமாக்கிக் கொண்டு அவதரித்துக் கண்ணுக்கு விஷயமாக்கா நின்றாய்;

ஸம்ஸார நாற்றமே தெரியாத நித்யஸூரிகட்கும் அபரிச்சேத்யனாக விண்ணிலே உள்ளாய்;

ப்ரக்குரதி ஸம்பந்தத்தாலேவந்த விபரீதஜ்ஞாதத்தையுடையராய் ப்ரயோஜநாந்தபாரான ஸம்ஸாரிகள் மநோரதிக்கும் மகோதங்களுக்கு அவிஷயமாயிராநின்றாய்;

உன் திருவடிகளிலே அநந்யப்ரயோஜநராயிருப்பார்க்கும் உனது  நிஜஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிப்பியா நின்றாய்;

ஆச்ரித விரோதிகள் உன்னை அறியவொண்ணாதே எதிரிட்டு முடிந்துபோம்படி அவர்கட்கு தூரஸ்தனாயிரநின்றாய்;

இப்படி பல்வகையாகப்பரந்து நிற்கவல்ல ஆற்றல் உனக்கே உள்ளது- என்று ஈடுபடுகிறார்

———————————————

தோடு பெற்ற தண் துழாய் அலங்கலாடு சென்னியாய்
கோடு பற்றி யாழி யேந்தி யஞ்சிறைப் புள்ளூர்தியால்
நாடு பெற்ற நன்மை நன்மை யில்லை யேனும் நாயினேன்
வீடு பெற்று இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே –46-

பதவுரை

தோடு பெற்ற

இதழ்களையுடைய
தண் துழாய்

குளிர்ந்த திருத்துழாயினாலாகிய
அலங்கல்

மாலையானது
ஆடு

விளங்கப்பெற்ற
சென்னியாய்

திருமுடியையுடைவனே!
கோடு

ஸ்ரீபாஞ்சஜக்யாழ்வானை
பற்றி

தரித்து
ஆழி

திருவாழியாழ்வானை
ஏந்தி

ஏந்திக்கொண்டு
அம் சிறைபுள்

அழகிய சிறகையுடைய பெரிய திருவடியை
ஊர்தி

வாஹகமாக நடந்தாநின்றார்;
நாடு பெற்ற நன்மை

மற்ற பேர்கள் பெற்ற நன்மையை
கண்ணம் இல்லையேனும்

நான் பெற்றிலேனாகிலும்
காயினேன்

நீசனான அடியேன்
வீடுபெற்று

மோக்ஷத்தைப் பெற்று
இறப்பொடும் பிறப்பு அறுக்கும் ஆ

இறப்பதும் பிறப்பதுமான ஸம்ஸாரத்தைத் தொலைக்கும் வகையை
சொல்

அருளிச் செய்யவேணும்.

தோடு பெற்ற தண் துழாய் அலங்கலாடு சென்னியாய்-
இதழ்கள் உடைய குளிர்ந்த திருத் துழாய் மாலை சூடிய திரு அபிஷேகத்தை உடையவனாய்

கோடு பற்றி யாழி யேந்தி யஞ்சிறைப் புள்ளூர்தியால்-
சங்கு சக்கரம் ஏந்தி கொண்டு கருட வாகனாகவும் உள்ள உன்னால்

நாடு பெற்ற நன்மை நன்மை யில்லை யேனும்
மற்ற பேர்கள் பெற்ற நன்மை நான் பெற வில்லை யாயினும்

நாயினேன் வீடு பெற்று இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே
நீசனான அடியேன் மோஷம் பெற்று சம்சாரம் தொலைக்கும் வகையை அருளிச் செய்ய வேண்டும் –

நித்ய ஸூரிகளுடைய ஒலக்கத்திலே புக்குத் திளைக்கும்படியாக அருள வேணும் –
உன்னையே விச்சேதமாக அனுபவிக்கும் அடியார் குழாங்களை உடன் கூட வேண்டுமே-

அநாதிகாலம் இழந்தொழிந்த நான் இனியாகிலும் உய்யுமாறு அருள்செய்ய வேணுமென்கிறார்.

நாடுபெற்ற நன்மையாவது- திருத்துழாய் மாலையும் திருமுடியுமாக விளங்க நின்ற ஸமயத்தையும்

திவ்யாயுதபாணியாய்ப் பெரிய திருவடியின் மீதேறி எழுந்தருளின ஸமயத்தையும் அநபவிக்கப்பெற்ற நன்மை.

அந்த நன்மையை அடியேன் பெறாதிருந்தாலும் இனியாகிலும் இந்த ஸம்ஸாரபந்தம் அறும்படியான பாக்கியம் பெற்று

நித்யஸூரிகளுடைய திருவோலகத்திலே புக்குத் தினைக்கும்படியாக அருள்செய்ய வேணுமென்று வேண்டுகிறார்.

—————————————————————

காரோடு ஒத்த மேனி நாங்கள் கண்ண விண்ணின் நாதனே
நீரிடத்து அரவணைக் கிடத்தி என்பர் அன்றியும்
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே –47-

பதவுரை

காரொடு ஒத்த மேனி

காளமேகத்தோடு ஒத்த திருமேனியையுடையனாய்
நங்கள் கண்ண

எங்களுக்கு அநுபால்யனான கண்ணனே!
விண்ணின் நாதனே

நித்யஸூரிகட்குத் தலைவனே!
நீர் இடத்து

(நீதி) திருப்பாற்கடலிலே
அரா அணை

திருவனந்தாழ்வான் ஆகிறபடுக்கையிலே
கிடத்தி

பள்ளிகொண்டருளா நின்றாய்
என்பர்

என்று (ஞானிகள்) சொல்லுவார்கள்
அன்றியும்

அது தவிரவும் (நீ)
ஓர் இடத்தை அல்லை

ஓரிடத்தை இருப்பிடமாகவுடையையல்லை.
எல்லை இல்லை

(நீ உறையுமிடங்கட்கு) எல்லை இல்லை.
என்பர்

என்றும் சொல்லுவார்கள்
ஆதலால்

இப்படி உன் இருப்பிடம் ஸுல பமல்லாமையாலே
காயினேன்

மிகவும் நீசனாகிய அடியேன்.
சேர்வு இடத்தை தெரிந்து

ஆச்ரயிப்பதற்கு உரியஸ்தலத்தை (இன்னதென்று) தெரிந்துகொண்டு
இறைஞ்சும் ஆ

ஆச்ரயிக்கலாம்படியை
சொல்

அருளிச் செய்யவேணும்.

 

காரோடு ஒத்த மேனி நாங்கள் கண்ண விண்ணின் நாதனே நீரிடத்து அரவணைக் கிடத்தி என்பர் அன்றியும்-
ஷீராப்தி நாதனாகவும் இருந்து–அதுக்கும் மேலே-

ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதார நிலைகளில்
நீர் உகந்து அருளி இருக்கும் இடங்களுக்கு எல்லை இல்லையே

சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே
ஆஸ்ரியர்க்காக உறையும் இடத்தை தெரிந்து கொண்டு ஆஸ்ரயிக்கும் படியை அருளிச் செய்ய வேண்டும் –

சர்வ வஸ்துக்களிலும் வ்யாப்தியாய் இருக்கிறான் என்கிறார்-

கீழ்ப்பாட்டில் “வீடுபெற்றிறப்பொடும் பிறப்பறுக்குமா சொல்” என்று பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கி

எம்பெருமான், “ஆழ்வீர்! பரவ்யூஹ விபவங்களென்ற நமது நிலைகள் ஆச்ரயிக்கத்தக்க ஸ்தலங்களன்றோ?

அவற்றில் ஒரு நிலையைப் பற்றி யாச்ரயித்து நன்மை பெற்றுப்போம்” என்றருளிச்செய்ய;

அந்த நிலைகள் அடியேனுக்கு ஆச்ரயனார்ஹமான நிலங்களல்ல;

மிகவும் நிஹீகநனான அடியேன் ப்ரதிபத்திபண்ணி ஆச்ரயிக்கத்தக்கதோரிடத்தை அருளிச் செய்யவேணுமென்கிறார்.

ஓரிடத்தை அல்லை= இன்னஸ்தலமென்று குறிப்பிடக்கூடிய ஓரிடத்தை இருப்பிடமாக வுடைந்தாயிருக்கின்றாயில்லை.

ஒருவர் கண்ணுக்கும் புலப்படாதபடி அந்தர்யாமியாய் ஸர்வ வஸ்துக்களிலும் வ்யாப்தனாய் இராநின்றாய் என்றபடி.

எல்லையில்லை என்பர் = தஹாவித்யை,சாண்டில்பவிதத்யை, வைச்வாநரவித்யை உபகோஸலவித்யை என்றாப்போலே

சொல்லப்படுகிற வித்யைகளுக்கு எல்லையில்லாமையாலே அவற்றில் சொல்லப்படுகிற ஆச்ரணிய ஸ்தலங்கட்கும் எல்லை என்கை.

ஆகையால் = இப்படி, பரமபதம் தேசத்தால் விப்ரக்ருஷ்டமாய், க்ஷீராப்தி அதிக்ருதாதிகாரமாய்,

அந்தர்யாமித்வம் ப்ரதிக்கே ட்டாததாய் ஆச்ரயணீயஸ்தலம் அபரிச்சேத்யமாயிருக்கையாலே என்றவாறு.

அயோக்யனான அடியேன் “இது நமக்கு ஆச்ரயணார்ஹமான ஸ்தலம்” என்று ஓரிடத்தை நிஷ்கர்ஷித்து ஆச்ரயித்து

உஜ்ஜீவித்துப்போம்படியாக ஓரிடத்தைக் காட்டிக்கொடுக்க வேணுமென்று தலைக்கட்டுகிறார்.

ஓரிடத்தை = ‘ஓரிடத்தன்’ என்பதன் முன்னிலையுருவம்.

———————————————————

குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே –48-

குன்றில் நின்று

திருவேங்கடமலையில் நின்றும்
வான் இருந்து

பரமபதத்தில் வீற்றிருந்தும்
நீள் கடல் கிடந்து

பெரிதான திருப்பாற்கடலிலே திருக்கண்வளர்ந்தருளியும்
மண் ஒன்று சென்று

இப்பூமண்டலத்தை ஒருகால் (த்ரிவிக்ரமனாய்) வியாபித்தும்
ஒன்று அதை உண்டு

மற்றொருகால் அப்பூமியை விழுங்கியும்
ஒன்று அது பன்றி ஆய் இடந்து

மற்றொருகால் அப்பூமியை வராஹருபியாய் இடந்தும்
கன்று சென்ற நாள் அவற்றுள்

கன்றாய் சென்ற நாட்களிலே
நல் உயிர் படைத்து

நல்ல உயிரான மனிதர்களை ஸ்ருஷ்டித்தும்
அன்று

அப்போது
அவர்க்கு

அந்த மனிதர்கட்கு
தேவு

(தங்கள் தங்கள் குணங்களுக்குத் தக்கபடி ஆச்ரயிக்கத்தக்க) தேவதைகளை
அமைத்து

ஏற்படுத்தியும் (இப்படிகளாலே)
அளித்த

நன்மை செய்தருளின
ஆதிதேவன் இல்லையே

பரமபுருஷன் நீயேகாண்.
பாட்டு

மன்னுமாமலர்

குன்றில் நின்று
திருவேங்கட திருமலையிலே நின்று
வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண் ஓன்று சென்று
ஒரு திருவடியால் -ஒரு காலத்தில் — திரிவிக்ரமனாய் எல்லை கடந்து அளந்து –
அது ஒன்றை உண்டு-
மற்று ஒரு கால் அந்த பூமியை விழுங்கியும்
ஓன்று இடந்து பன்றியாய்-
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு-
நன்றாய் சென்ற நாட்களிலே நல்ல உயிரான மனுஷ்யர்களை ஸ்ருஷ்டித்தும்
அளித்த வாதி தேவன் அல்லையே-
தங்கள் குணங்களுக்குத் தக்க தேவாதிகளை ஏற்படுத்தி அருளிய பரம புருஷன் நீயே என்கிறார் –

————————————

இது முதல் ஏழு பாசுரங்களால் திரு அரங்கம் மங்களா சாசனம் செய்து அருளுகிறார் –

கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அம் தண் நீர் அரங்கமே –49-

————

வெண் திரைக் கரும் கடல் சிவந்து வேவ முன்னொரு நாள்
திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேருமூர்
எண் திசைக் கணங்களும் இறைஞ்சி யாடும் தீர்த்த நீர்
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே –50-

————–

சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்தறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்
பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே –51-

———–

பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே –52-

———–

மோடியோட இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே –53-

பதவுரை

மோடியோடு

காளியும்
இலச்சை ஆய சாபம் எய்தி முக்கணான்

வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும்
மக்களோடு

ஸ்வஜனங்களோடு
கூடு

திரண்ட
சேனை

ஸேனையை
கொண்டு

அழைத்துக்கொண்டு
வெம் சமத்து

பயங்கரமான போர்க்களத்திலிருந்து
மண்டி ஓட

வேகமாக ஓடிப்போன வளவிலே
வாணன்

பாணாஸுரனது
ஆயிரம் கரம்

ஆயிரம் கைகளை
கழித்த

அறித்தொழித்த
ஆதி மால்

பரமபுருஷனுடைய
பீடுகோயில்

பெருமைதங்கிய கோயில்
நீர் கூடு

காவேரியோடு கூடின
அரங்கம் என்றபோது

திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்

 

மோடியோட-காளி உடன் –
இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்-வெட்கத்தை விளைப்பதான சாபம் பெற்ற ருத்ரனும்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து ஓட-ஸ்வ ஜனங்களோடு திரண்ட சேனையை அழித்துக் கொண்டு
பயங்கரமான போர் களத்தில் இருந்து வேகமாக ஓடி போக
வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்-பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்றபேரதே
இலச்சை -லச்சை என்னும் வேதா சொல்லின் திருப்பு –

இலச்சை- ‘லஜ்ஜா’ என்ற வடசொல் திரிபு; வெட்கமென்று பொருள்.

லஜ்ஜாவஹமான சாபத்தை யடைந்த முக்கண்ணன் என்றவாறு.

சாபமெய்தி = வினையெச்சமல்ல; பெயர்.

—————————————————————-

இலைத்தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலைத்தலைப் பிறந்து இழிந்து நுந்து சந்தனம்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –54-

பதவுரை

இலை தலை

இலைபோன்ற நுனியையுடைய
சரம்

அம்புகளை
துரந்து

பிரயோகித்து
இலங்கை

எல்லையினுடைய
கட்டு

அரண்களை
அழித்தவன்

அழியச்செய்த இராமபிரான்;
மலைத்தலை

(ஸஹ்யமென்னும்) மலையிலே
பிறந்து

பிறந்து
இழிந்து

அங்கு நின்றும் ப்ரவஹித்து
வந்து

நெடுக ஓடிவந்து
சந்தனம்

சந்தன மரங்களை
நுந்து

(போர்த்துத்) தள்ளாநின்றதாயும்,
குலைத்து

(குங்குமப்படர்கொடியை சிதிலப்படுத்தி
அலைத்து

அலசி
இறுத்து

முறிக்க
எறிந்த

(அக்கொடிகள் தம்மிலிருந்து) வெளிப்படுத்தின
குங்குமம் குழம்பினோடு

குங்குமத் துகள்களினாலாய குழம்புடனேகூட
அலைத்து ஒழுகு காவிரி

அலைமோதிக்கொண்டு பெருகா நின்றதாயுமுள்ள திருக்காவேரியுடைய
அரங்கம்

கோயிலிலே
மேய

எழுந்தருளியிருக்கிற
அண்ணன்

ஸ்வாமியாவர்.

 

இலைத்தலைச் சரம் துரந்து-
இலை போலே நுனி உடைய அம்புகளை உபயோகித்து
இலங்கை கட்டு அழித்தவன்-
இலங்கையின் அரண்களை அழித்த ராம பிரான்
மலைத்தலைப் பிறந்து இழிந்து நுந்து சந்தனம்–
சக்யம் என்னும் மலையிலே பிறந்து -அங்கேயே பிரவகித்து நெடுதாய் ஓடி வந்து சந்தன மரங்களை பேர்த்தும்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு-
கும்குமப் படர் கொடியை சிதில படுத்தி -அந்தக் கொடிகளில் இருந்து வெளிப்பட்ட கும்கும குழம்புடன் கூடி
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –
அலை மோதிக் கொண்டு நெருக்கமாக இருக்கும் திருக் காவேரி உடைய –
இலங்கையை கட்டழித்தவன் அரங்கம் மேய அண்ணலே என்கிறார்-

இந்த பாசுரத்தை ஸ்ரீ வைஷ்ணவர்கள் நாள் தோறும் நீராடும் பொழுது அனுசந்திப்பார்கள்-

(இலங்கை கட்டழித்தவன் அரங்கமேய அண்ணல் என்றவாறு.

ஸ்ரீவைஷ்ணவர்கள் நாடோறும் நீராடும்போது இப்பாட்டை அநுஸந்திப்பது ஸம்ப்ரதாயம்.

———————————————-

மன்னு மா மலர்க்கிழத்தி வைய மங்கை மைந்தனாய்ப்
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்
பொன்னி சூழ் அரங்கமேய புண்டரீகன் அல்லையே –55-

பதவுரை

மா மலர் மன்னு கிழத்தி

சிறந்த தாமரைப்பூவில் பொருந்திய பிராட்டுக்கும்
வையம் மங்கை

ஸ்ரீபூமிப்பிராட்டிக்கும்
மைந்தன் ஆய்

(விரும்பத்தக்க) யுவாவாய்,
பின்னும்

மேலும்
ஆயர் பின்னை

(கோபாலரான ஸ்ரீகும்பருடைய மகளான நப்பின்னைப் பிராட்டியினுடைய
தோள்

தோளோடே
மணம் புணர்ந்து

ஸம்ச்லேஷித்து (விளங்குமவனாய்)
அது அன்றியும்

அதுக்கு மேலும்
உன்ன பாதம்

உன்னுடைய திருவடிகளை
என்ன சிந்தை

என்னுடைய நெஞ்சினுள்ளே
மன்னை வைத்து

பொருந்தவைத்து
கல்கினாய்

அருள்செய்த பெருமானே!
பொன்னி சூழ் அரங்கம் மேய

(நீ) காவிரி சூழ்ந்த கோயிலிலே எழுந்திருளியிருக்கிற
புண்டரீகன் அல்லையே

தாமரைபோன்ற அவயங்களையுடைய தேவனன்றோ.

மன்னு மா மலர்க் கிழத்தி-
சிறந்த தாமரை பூவில் பொருந்திய பிராட்டிக்கும்

வைய மங்கை மைந்தனாய்ப் பின்னும்-
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும் விரும்பத் தக்க யுவாவாய்

ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும்-
கோபாலரான கும்பனின் மகள் நப்பின்னை பிராட்டி உடைய தோளோடு சம்ச்லேஷித்து இருக்கும்

உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் பொன்னி சூழ் அரங்க மேய புண்டரீகன் அல்லையே –
அவர்களுடன் இருக்கும் திவ்ய அனுபவம் அசாதாரணம் என்று நினைத்து எனது ஹிருதயத்திலே நொடிப் பொழுதும் அகலாமல்
உனது திருவடிகளை வைத்து அருளினாய் -என்ன வாத்சல்யம்-

அவர்கள் இடத்திலே அன்பு மட்டம் என்று விளங்கும் படி அன்றோ உனது வாத்சல்ய அதிசயத்தாலே
அடியேனுடைய புன்மையைப் பார்க்காமலும் உன்னுடைய மேன்மையைப் பார்க்காமலும்
என்னை அங்கீ கரித்து அருளுகிறாய் –

எனக்கு மட்டும் இல்லாமல் சர்வ ஜனங்களும் சேவிக்க திருவரங்கத்தில் பள்ளி கொண்டாய்

புண்டரீகன்–தாமரைக் காடு பூத்த தாமரை போன்ற அவயவங்களுடன் இருப்பதாலேயே இந்த விழிச் சொல் –

லக்ஷ்மீபூமிநீளாதேவிகளுக்கு நாயகனாயிருந்துவைத்து உனக்கு அவர்களிடத்திலே அன்பு மட்டம் என்று

விளங்கும்படியாக என்னை அங்கீகரித்தருளின மஹோபகாரம் என்னே! என்கிறார்.

தாமரைப் பூவிலே பிறந்த பெரிய பிராட்டியாரென்ன, பூமிப் பிராட்டியென்ன, நப்பின்னைப் பிராட்டியென்ன

இவர்களுக்கு கொழுநனாய் இவர்களோடு திவ்யாநுபவங்களை இடைவிடாது அநுபவிக்கச் செய்தேயும்

அவ்வநுபவம் அஸாரம் என்றிட்டு, ஸூரிபோக்யான உன் திருவடிகளை நித்ய ஸம்ஸாரியாயிருக்கிற

என்னுடைய ஹ்ருதயத்திலே நொடிப்பொழுதும் விச்லேஷமின்றி வைத்தருளி என் பக்கலுள்ள ப்ரீதி விசேஷத்தைக் காட்டியருளினாய்;

உன்னுடைய வைலக்ஷணியத்தைப் பார்த்தாலும் என்னை விஷீகரிக்க ப்ராப்தியில்லை;

என்னுடைய புன்மையைப் பார்த்தாலும் விஷயீகரிக்க ப்ராப்தியில்லை;

இப்படியிருக்கச் செய்தேயும் வாத்ஸல்யாதிசயமன்றோ இப்படி செய்வித்தது.

என்னொருவனை விஷயீகரித்தது மாத்திரமேயோ?

காவிரி சூழ்ந்ததென் திருவரங்கத்திலே  கிடந்தருளிப் பரமயோக்யமான திவ்யாவயங்களை

ஸர்வஜந ஸேவ்யமாகக் காட்டிக் கொடுக்கும் மஹோபகாரகனமாயிருக்கின்றாயிறே.

புண்டரீகன் = புண்டரீகம்போன்ற அவயங்கள் நிறைந்து கிடக்கின்றமை பற்றிப் புண்டரீகன் என்று எம்பெருமானையே சொல்லுகிறார்.

—————————————————-

இது முதல் ஆறு பாசுரங்களால் திருக் குடந்தை பெருமாளை மங்களா சாசனம் செய்து அருளுகிறார் –

இலங்கை மன்னன் ஐந் தொடு ஐந்து பைந்தலை நிலத் துகக்
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலம்கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –56-

பதவுரை

அன்று

முற்காலத்தில்
இலங்கை மன்னன்

இராவணனுடைய
ஐந்தொடு ஐந்து

பத்தாகிய
பை தலை

வலிய தலைகள்
நீலத்து உலக

பூமியிலே விழுந்தொழியவும்
கலங்க

(அவ்வரக்கன் அஞ்சிக்) கலங்கவும்
சென்று

இலங்கையிற் புகுந்து
கொன்று

(அவனைக் கூட்டத்தோடு) கொலை செய்து
வென்றி கொண்ட

விஜயம் பெற்ற
வீரனே

மஹாவீரனே!
விலக்கு நூலர்

உடம்பிலே யஜ்ஞோபவீதத்தையுடையவரும்
வேதம் நாவர்

வேதங்களை நாக்கின் நுனியிலோ உடையரும்
நீதி ஆன கேள்வி யார்

(நல்லாசிரியர் பக்கலிலே) ஸாரமான அர்த்தங்களைக் கேட்டுணர்ந்தவர்களுமான வைதிகர்கள்.
வலம் கொள

வழிபாடுகள் செய்யும்படியாக
குடந்தையுள்

திருக்குடந்தையிலே
கிடந்த

திருக்கண் வளர்ந்தருளா நின்ற
மாலும் அல்லையே

ஸர்வேச்வரனும் நீயன்றோ

 

பைந்தலை நிலத்துக-வலிய தலைகள் பூமியில் விழுந்து ஒழியவும்
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் –பூணூல் தரித்த
வேத நாவர் -வேதங்களை நாவின் நுனியில் உடையவர் –
நீதியான கேள்வியார்-நல்ல ஆசரியர் பக்கல் சாரமான அர்த்தங்களைக் கேட்டு உணர்ந்த வைதிகர்களும்
வலம் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே-
வழி பாடுகள் செய்யும் படி குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே

இப்பாட்டுமுதல் மேல் ஆறு பரசுரங்களாலே, திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளுகிற படியை அநுபவிக்கிறார்.

—————————————————————-

சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்க மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த வாழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே –-57-

பதவுரை

சங்கு தங்கு முன் கை நங்கை

(நித்ய ஸம்ச்லேஷத்தாலே) சங்கு வளைகள் பொருந்தியிருக்கப்பெற்ற பிராட்டியினுடைய
கொங்கை

திருமுலைத்தடத்திலே
தங்கல் உற்றவன்

விஹாரத்தை விரும்பின படுபாவியினுடைய (இராவணனுடைய)
அங்கம்

சரீரமானது
மங்க

மாளவேணுமென்று
அன்று சென்று

முன்பு (இலங்கைக்கு) எழுந்தருளி
அடர்ந்து

அவ்வூரை ஆக்ரமித்து
எறிந்த

(அவன் தலைகளை) அறுத்தொழித்தவனாய்.
ஆழியான்

கடல்போன்ற ச்ரமஹராமன திருமேனியையுடையவனான இராமபிரான்
கொஞ்கு தங்குவார் குழல்

நீண்ட கூந்தலையுடையவர்களான
மடந்தையார்

திவ்யஸுந்தரிகள்
குடந்தை

அவகாஹிக்கப்பெற்ற
நீர்

தீர்த்தமானது
பொங்கு

வ்ருத்தியடைந்திருக்கப்பெற்ற
தண் குடந்தையுள்

குளிர்ந்த திருக்குடந்தையிலே
கிடந்த

பள்ளிகொண்டிராநின்ற
புண்டரீகன்

ஸுந்தராங்கன்.

சங்கு தங்கு முன்கை நங்கை-நித்ய சம்ஸ்லேஷத்தாலே-சங்கு வளைகள் பொருந்திய பிராட்டி
கொங்கை தங்கல் உற்றவன் அங்க மங்க-ராவணன் சரீரம் மாள

வன்று சென்று அடர்த்து எறிந்த வாழியான்-
கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர் பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே
பரிமளம் பொருந்திய -நீண்ட கூந்தலை உடைய திவ்ய ஸூந்தரிகள் –

மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே என்றது போலே –மடைந்தமார் -திவ்ய ஸ்த்ரீகளை அருளிச் செய்கிறார்-

புண்டரீகன் -ஸூந்தராங்கன் –

“கொங்கைதங்கு வார்குழல் மடந்தைமார்” என்றது லௌகிக ஸ்த்ரீகளையல்ல;

“மதிமுக. மடந்தைய ரேந்தினர்வந்தே” என்று ஆழ்வாரருளிச் செய்தபடி பரமபதத்திலே

எதிர்கொண்டழைக்கு மலர்களான திவ்யஸுந்தரிகளைச் சொல்லுகிறது.

—————————————————————–

மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து
உரம் கெடப் புடைத்து ஓர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர்
வரம் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –58-

பதவுரை

மரம் கெட கடந்து

யமனார்ஜுந ஸ்ருக்ஷங்கள் முடியும்படி கடைகற்று.
மத்த யானை அடர்ந்து

(குவலயாபீடமென்னும்) கொழுத்த யானையை மத மொழித்து
மத்தகத்து

(அவ்வானையின்) தலைமேல்
உரம்கெட புடைத்து

(அதன்) வலிமான ப்ரஹாரங்கள் கொடுத்து
ஓர்கொம்பு ஒசித்த உத்தமர்

(அதன்) தந்தத்தை முறித்தெறிந்த பரமபுருஷனே!
துரங்கம்

குதிரை வடிவங்கொண்டு  வந்த கேசியென்னுமசுரனுடைய
வாய்பிளந்து

வாயைப்பிளந்து (அவனையொழித்த பெருமானே)
மண் அளந்த பாத!

உலகங்களை யளந்து கொண்ட திருவடிகளையுடையோனே! (நீ.)
வேதியர் வசம் கொள

வைதியர்கள் தங்கள் தங்களுடைய விருப்பங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு

குடந்தையுள் கிடந்தமால் அல்லையே.

மரம் கெட நடந்து-யமளார்ஜுன மரங்கள் முடியும் படி நடந்த
அடர்த்து மத்த யானை-குவலயாபீடம் என்ற கொழுத்த யானையின் மதம் ஒழித்து
மத்தகத்து-அதன் தலையிலே

உரம் கெடப் புடைத்து-அதன் வலி மாள பிரகாரங்கள் கொடுத்து
ஓர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா-
துரங்கம் வாய் பிளந்து-குதிரை வடிவம் கொண்ட கேசி என்னும் அரக்கனை வாயைப் பிளந்து அவனை ஒழித்தவனை
வேதியர் வரம் கொளக் குடந்தையுள் கிடந்த–வைதிகர்கள் தங்கள் தங்கள் விருப்பங்களைப் பெற்றும் கொள்ளுமாறு
கிடந்தது அருளுகிறான் –

——————————————————————

சாலி வேலி தண் வயல் தட கிடங்கு பூம் பொழில்
கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா
காலநேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே –59-

பதவுரை

சாலிவேலி

செந்நெற் பயிர்களை வேலியாகவுடைய
தண் வயல் தடம் கிடங்கு

குளிர்ந்த கழனிகளென்ன பெரிய அகழிகளென்ன
தண்

குளிர்ந்ததான
குடந்தை

திருக்குடந்தையிலே

மேய எழுந்தருளியிராநின்ற

கோவலா

க்ருஷ்ணனே!
காலநேமி

காலநேமியென்ன
வக்கரன்

தந்தவக்ரனென்ன
பூபொழில் கோலம் நீடு மாடம்

புஷ்பித்த சோலைகளென்ன அழகாக ஓங்கின மாடங்களென்ன இவற்றையுடைத்தாய்
கரன் முரன்

கொடியவனான முரனென்ன இவர்களுடைய
சிரம் அவை

தலைகளானவை
காலனோடு கூட

யமலோகம் போய்ச் சேரும்படியாக
வில்குனித்த

வில்லை வளைத்த
வில் கை

அழகிய திருக்கையையுடைய
வீரனே

தனி வீரனே! (என்று ஏத்துகிறார்)

சாலி வேலி -தண் வயல்–செந்நெல் பயிர்கள் வெளியாக உடைய வயல்கள்
தட கிடங்கு பூம் பொழில்-பெரிய அகழிகள் புஷ்பங்கள் மிக்க சோலைகள்
கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா-அழகிய ஓங்கிய மாடங்கள்
கால நேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை-தலைகளை யம லோகம் சேரும்படி செய்த
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே-வில்லை வளைத்த –

கால நேமி -ராவணனின் மாதுலன் -தாரகாசுர யுத்தத்தில் கொல்லப் பட்டவன்
தந்த வக்ரன் -ருக்மிணி பிராட்டியை சுவீகரிக்கும் பொழுது எதிர்த்த அரக்கன்
முரன் நரகாசுரனின் மந்த்ரி -இவர்கள் மூவரும் கிருஷ்ணனால் வதம் செய்யப் பட்டார்கள்
கரன் -ராம திருவவதாரத்தில் வதம் செய்யப் பட்டவன்-

காலநேமி யென்பவன் இராவணனுடைய மாதுலன்;

இவன், தாரகாசுர யுத்தத்தில் எம்பெருமானாற் கொல்லப்பட்டவன்,

வக்கரன் – தந்தவக்ரன்; தத்துவக்த்ரன் என்று சொல்வதுமுண்டு.

கண்ணபிரான் ருக்மிணிப்பிராட்டியை ஸ்வீகரித்தருளினபோது எதிர்த்து வந்து போர்செய்த அரசர்களில் இவனொருவன்,

முரண் = நரகாசுரனுடைய மந்திரி. கரன் என்று ஒரு ராக்ஷணுண்டாகிலும் அவன் இங்கே விவக்ஷிதனல்லன்;

அவன் ராமாவதாரத்தில் கொல்லப்பட்டவன்;

இப்பாட்டில் க்ருஷ்ணாவதார சரிதங்கள் அநுஸந்திக்கப்படுவதால் கரன் என்பது முரனுக்கு அடைமொழியாயிற்று.

*** என்ற வடசொல் க்ரூரனென்ற பொருளையுமுடையது.

“சிரமவை காலனோடுகூட” என்றவிடத்து “அறுத்து” என்றொரு வினையெச்சத்தை வருவித்துக்கொண்டு உரைத்ததுமொன்று.

——————————————————————–

செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட வுயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று
எழுந்து இருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக் கொழும்
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –60-

பதவுரை

செழும் கொழும் பெரும்பணி

இடைவிடாதே தாரைகளாய் விழுகிற கனத்த மூடுபனியானது.
பொழிந்திட

பொழிந்தவளவிலே
உயர்ந்த வேய் விழுந்து

முன்பு ஓங்கியிருந்த மூங்கிற்பணைகள் (அப்பணியின் கனத்தாலே) தரையிலே சாய்ந்து
உலர்ந்து எழுந்து

(பிறகு ஸூர்யகிரணங்களாலே அப்பனி) உலர்ந்த பின்பு
எழுந்து

(அம்மூங்கிற்பணைகள்) உயரக் கிளம்பி
விண் புடைக்கும்

விண்ணுலகத்தை முட்டும்படியான உந்நதியை யுடைய
வேங்கடத்துள்

திருவேங்கடமலையிலே
நின்று

நின்றருளி
தேன்

வண்டுகளானவை
எழுந்து இருந்து பொருந்து

மேலே கிளம்புவதும் கீழே படிந்திருப்பதுமான நிலைமைகளோ பொருந்தியிருக்கப் பெற்ற
பூ பொழில்

புஷ்பங்கள் நிறைந்த சோலைகள்
தழை கொழும்

தழைத்தோங்கா நிற்கப்பெற்றதாய்
செழும்கடல்

செழுமை தங்கிய தடாகங்களையுடைத்தான்
குடந்தையுள்

திருக்குடந்தையிலே
கிடந்த

திருக்கண்வளர்ந்தருளா நின்ற
மால் அல்லையே

பெருமாள் நீயிறே.

செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட-இடை விடாத தாரைகளாய் விழுகிற கனத்த மூடு பனியானது பொழிந்த அளவிலே
வுயர்ந்த வேய் விழுந்து-முன்பு ஓங்கி இருந்த மூங்கில் பனைகள் அந்த பனியின் கனத்தால் தரையிலே சாய்ந்து
உலர்ந்து எழுந்து-பின்பு சூர்ய கிரணங்களால் உலர்ந்து -அந்த மூங்கில் பனைகள் உயர கிளம்பி
விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று எழுந்து இருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக் கொழும்-வண்டுகள் மேலே கிளம்புவதுவும்
கீழே படிந்தும் இருக்குமாறு -புஷ்பங்கள் மிகுந்த சோலைகள் தழைத்து ஓங்கி
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே-செழுமையான தடாகங்கள் உடைய -திருக் குடந்தையுள்
நின்றும் கிடந்தும் சேவை அருளுகிறான்

நிலையார நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே-
கிடந்ததோர் கிடக்கை கண்டு எங்கனம் மறந்து வாழ்வேன்-
வ்யாமோஹத்தால் நின்றும் கிடந்தும் ஆசைப்பட்டார்க்கு சேவை அருளுகிறாயே –

“நிலையார நின்றான் தன் நீள்கழலே யடைநெஞ்சே” என்று நிலையழகிலே ஈடுபடுவார்க்கும்

“கிடந்ததோர் கிடக்கைகண்டு மெங்ஙனம் மறந்து வாழ்கேன்?” என்று சயகத் திருகோலத்திலே ஈடுபடுவார்க்கும்

போக்யமாகத் திருவேங்கடமலையில் நின்றருளியும் திருக்குடந்தையில் சாய்தருளியும் போருகிறது.

அடியார் பக்கலுள்ள வ்யாமோஹத்தின் காரியமன்றோ வென்கிறார்.

உலர்ந்து= பணி உரை; எச்சத்திரிபு.

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-21-40- -ஸ்ரீ உ வே -PBA -ஸ்வாமிகள்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

February 9, 2020

அரங்கனே தரங்க நீர் கலங்க வன்று குன்று சூழ்
மரங்கள் தேய மா நிலம் குலுங்க மா சுணம் சுலாய்
நெருங்க நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார்
குரங்கை யாள் உகந்த வெந்தை கூறு தேற வேறிதே –21-

பதவுரை

குரங்கை

வானரப்படைகளை
ஆள் உகந்த எந்தை !

உகந்த ஆட்கொண்ட நாயனே!
அரங்கனே

ஸ்ரீஅரங்கநாதனே!
அன்று

(துர்வாஸ மஹர்ஷியின் சாபத்தினாலே தேவர்கள் செல்வமிழந்து வருந்தி உன்னைச் சரணம் பற்றி நின்ற) அன்று
தரங்கம் நீர் கலங்க

அலைகளையுடைய ஸமுத்ரமானது கலங்கவும்
மா நிலம் குலங்க

பெரிய பூமியானது குலுங்கவும்
மாகணம் நெருங்க கலாய்

வாஸுகி யென்னும் நாகத்தை அழுந்தச் சுற்றி
நீ கடைந்த

(கடலை) நீ கடைந்தருளின காலத்திலே
நின்ற

அருகே நின்று கொண்டிருந்த
சூரர்

மிக்க பராக்ரமசாலிகளென்று பேர்பெற்ற தேவாஸுர ப்ரப்ருதிகள்.
என் செய்தார்

என்ன  காரியம் செய்தார்கள்
இது

இவ்விஷயத்தை
வேறு

விசேஷித்து
தேற

நான் தெரிந்து கொள்ளும்படி
கூறு

அருளிச் செய்யவேணும்.

 

அரங்கனே தரங்க நீர் கலங்க வன்று –
அரங்கனே அன்று துர்வாச மஹா ரிஷியின் சாபத்தால் தேவர்கள் செல்வம் இழந்து வருந்தி
உன்னை சரணம் அடைந்த போது-
அலைகள் உடைய சமுத்ரம் கலங்கவும்

குன்று சூழ் மரங்கள் தேய –
மந்திர மலை சூழ் மரங்கள் தேயவும்

மா நிலம் குலுங்க
பெரிய பூமியானது குலுங்கவும்

மா சுணம் சுலாய் நெருங்க-
சர்ப்ப ஜாதி -வாசுகி என்னும் -நாகத்தை அழுத்திச் செற்ற

நீ கடைந்த போது நின்ற சூரர்
கடல் நீ கடைந்து நீ அருளின காலத்திலேயே அருகே நின்ற பராக்கிரம சாலிகள் என்ற பேர் பெற்ற தேவ அசுர பிரக்ருதிகள்

என் செய்தார் இது வேறு தேற கூறு
என்ன செய்தார்கள் என்று இவ் விஷயத்திலே நான் தெரிந்து கொள்ளும் படி விசேஷித்து அருளிச் செய்ய வேணும்
தானே அசகாசனாய்க் கடைந்து -தேவர்களும் அசுரர்களும் கடைந்தார்கள் என்று விஜய பெயர் பெறும் படி கொடுத்து அருளினாய்

குரங்கை யாள் உகந்த வெந்தை
வானர படைகளை வகுத்து -அது கொண்டு நாயகனாய் ராவணனைத் தொலைத்தது எல்லாம் தனது சேஷ்டிதங்கள் என்றாலும்
வானரங்கள் இலங்கையை தவிடு பொடி ஆக்கினார்கள் என்ற பெயர் வாங்கிக் கொடுத்து அருளினாய்-
என்ன ஆஸ்ரித பஷ பாதம் என்கிறார்-

இந்திரன் முதலிய தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மந்தர மலையை மத்தாக  நாட்டி-

வாஸுகி நாகத்தைக் கடை கயிறாகச் சுற்றிக் கடல் கடைந்த போது தேவர்கள் அசுரர்கள் முதலியோர்

தாங்கள் கயிற்றை வலித்துக் கடைவதாகக் கைவைத்து க்ஷண காலத்திற்குள் இளைத்துப்போய் கைவாங்கினவாறே ‘

நீங்கள் வெறுமனே இருங்கள்’ என்று அவர்களைச் சுகமாக உட்காரவைத்து விட்டு

எம்பெருமான் தானே அஸஹாயனாய்க் கடைந்து தலைக் கட்டியிருக்கச் செய்தேயும்

“தேவதைகள் கடல்கடைந்தார்கள்” என்று நாட்டார் தேவதைகளுக்கு விஜயப் புகழ் கூறுமாறு அவர்களை அபிமாநித்ததும், –

அதிமாநுஷக்ருத்யங்களைச் செய்து இராவணனைத் தொலைத்ததெல்லாம் தன்னுடைய திவ்ய

சேஷ்டிதமாயிருக்கச் செய்தேயும். ‘வாநர வீரர்கள் இலங்கையைப் பொடிபடுத்தினார்கள்’ என்று உலகத்தார்

அவர்கள் தலையிலே விஜயப்புகழை ஏறிட்டுகூறுமாறு அவர்களை அபிமாநித்ததும்-

என்ன ஆசரித பக்ஷபாதம்! என்று விஸ்மப்படுகிறார்கள்.

கடல் கடைந்தவிதம் மிகவும் பயங்கரமாயிருந்தது என்கைக்காக,

“தரங்க நீர் கலங்க, குன்றுசூழ் மரங்கள் தேய, மாநிலம் குலுங்கக் கடைந்தபோது” என்கிறார்.

ஸர்ப்பஜாதிக்கு வாசகமாகிய மாசுணம் என்றசொல் இங்கு வாஸுகி யென்று சிறப்புப் பொருளைத் தந்தது.

கலாய் = சுலாவி என்றபடி: சுலாவுதல்- சுற்றுதல்.

இப்படி நீ கடைந்த காலத்திலே, “நாங்கள் பராக்ரமசாலிகள்” என்று செருக்கி மார்புதட்டிக் கிடப்பவர்களான தேவர்கள்

“கடலில் நின்றும் அமுதம் கிளர்ந்து வருவது எப்போதோ!” என்று தாங்கள் உணவு பெறுங்காலத்தை எதிர்பார்த்து

அக்கடலையே நோக்கிக் கொண்டிருந்தது தவிர ஸமுத்ரமதந காரியத்துக்கு உறுப்பாக ஒரு காரியமும் செய்யவில்லை;

செய்ததுண்டாகில் பிரானே! நீயே சொல்லிக்காண்; மந்தரமலைக்கு அதிஷ்டநமா யிருந்தார்களா?

வாஸுகிக்கு நல்லசக்தியுண்டாம்படி வரமளித்தார்களா?

அல்லது கடை கயிற்றைத்தான் சற்றுப்பிடித்து வலித்தார்களா? என்னதான் செய்தார்கள்?

அவர்கள் செய்தது ஒன்றுமில்லை.

(அப்படி யிருக்கச்செய்ததேயும் ‘தேவர்கள் கடல் கடைந்தார்கள்’ என்று நாடெங்கும் புகழும்படி

அவர்களை அபிமாநித்தது என்ன ஆச்ரித பக்ஷபாதம்! என்ற வியப்பு உள்ளுறை.)

—————————————————————————

பண்டும் இன்றும் மேலுமாய் பாலனாகி ஞாலம் ஏழும்
உண்டும் மண்டி ஆலிலைத் துயின்ற வாதி தேவனே
வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேரு மார்ப பூமி நாதனே –22-

பதவுரை

பண்டும் இன்றும் மேலும் ஆய்

மூன்று காலங்களிலும் கைவிடாதே நின்று ரக்ஷித்தருளுமவனாகையாலே
ஞானம் எழும்

உலகங்களையெல்லாம்
மண்டி உண்டு

(ப்ரளய வெள்ளம் கொள்ளாதபடி) விரும்பி அமுது செய்து
ஓய் பாலன் ஆகி

ஒப்பற்ற சிறு குழந்தையாய்
ஆலிலை துயின்ற

ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளின
ஆதிதேவனே !

மூல புருஷனே!
வண்டு

வண்டுகளானவை
கிண்டு

(மதுவுக்காக வந்து) குடையும்படியான
தண்துழாய் அலங்கலாய்

குளிர்ந்ததிருத்துழாய் மாலையை அணிந்தவனே!
சீர் கலந்த புண்டரீக பாவை சேரும்மார்ப!

அழகு சேர்ந்த தாமரை மலரிற்பிறந்த பெரிய பிராட்டியார் வந்து புணரும்படியான திருமார்பையுடையவனே!
பூமி நாதனே!

பூமிப்பிராட்டிக்கு நாதனே! (என்று ஈடுபடுகிறார்.)

பண்டும் இன்றும் மேலுமாய்-
மூன்று காலத்திலும் -சிருஷ்டி காலத்து முன்பும் -சிருஷ்டி காலத்திலும் -பிரளய காலத்திலும்
கை விடாமல் ரஷித்து அருளி
ரக்ஷகத்வம் முக்காலத்திலும் குறைவற்றது என்பதையே பேண்டும் இன்றும் மேலும் என்கிறார்
ஸ்ருஷ்டிக்கு முன்பும் ஸ்ருஷ்டியின் பொழுதும் பிரளய காலத்திலும் என்றுமாம்

ஓர் பாலனாகி ஞாலம் ஏழும் உண்டும் மண்டி –
அத்விதீயமான சிறு குழந்தையாய் -பிரளய வெள்ளம் கொள்ளாத படி உலகங்களை எல்லாம் விரும்பி அமுது செய்து

ஆலிலைத் துயின்ற வாதி தேவனே-வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப்-
புண்டரீகப் பாவை சேரு மார்ப பூமி நாதனே –
ஒருவரையும் விலக்காமல் அனைவரையும் திரு வயிற்றிலே கொண்டவன் ஆஸ்ரிதர் பக்கல் கொள்ளும்
பஷ பாதம் வியப்பு அல்ல –என்கிறார் –

புண்டரீகப் பாவை சேரு மார்ப பூமி நாதனே –-ஸ்ரீ யபதி அன்றோ –
பிறந்த இடமான தாமரையும் கொதிக்கும்படியான திரு மார்பு –
அவளைத் தண்ணீர் தண்ணீர் என்னப் பண்ணும் திரு மார்பு-

எல்லா வுலகங்களையும் கொள்ளை கொள்ளவந்த ப்ரளய காலத்திலே

வஸிஷ்ட சண்டாள விபாகம் பாராமல் எல்லாரையும் திருவயிற்றிலே வைத்து நோக்கின உனக்கு

ஆச்ரியதர்கள் விஷயத்திலே வாத்ஸல்யமுள்ளமை ஒரு வியப்போ? என்கிறார் இப்பாட்டில்.

அநாச்ரிதர்கள் என்று ஒருவரையும் விலக்காமல் ஆச்ரிதர்களோடு மையமாகவே அவர்களையும் வயிற்றிற் கொண்டவன்

ஆச்ரித விஷயத்தில் காட்டும் பக்ஷபாதம் உண்மையில் வியப்பன்றே.

எம்பெருமானுடைய ரக்ஷகத்வம் மூன்று காலங்களிலும் குறையற்ற தென்கிறார்-

பண்டும் இன்றும் மேலும் என்று.

பண்டும் என்றது ஸ்ருஷ்டிக்கு முற்காலத்திலே என்றபடி.

இன்றும் என்றது- ஸ்ருஷ்டிகாலத்தைச் சொன்னபடி.

மேலும் என்றது ப்ரளய காலத்தைச் சொன்னபடி.

ஸ்ருஷ்டிக்கு முற்காலத்தில் எம்பெருமானுடைய ரக்ஷகத்வம் எப்படிப்பட்ட தென்னில்;

ஒன்று ஒன்றிலே  லயிக்கிறதென்று சொல்லிக்கொண்டு வருமிடத்து இறுதியாக

“துக்ஷ†*** என்று சொல்லியிருக்கையாலே தன் பக்கலிலே ஏறிட்டுக்கொண்டு நோக்கும் விதம் அறியத்தக்கது.

ஸ்ருஷ்டி தசையில் எல்லா வுயிர்கட்கும் ஏககாலத்தில் கரண களே பரங்கள் கொடுத்தருளியதும்,

ப்ரளய தசையில் அனைத்தையும் வயிற்றிலே வைத்து நோக்கியதும் ரக்ஷண ப்ரகாரஙக்ள்

—————

வால் நிறத்தோர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன்
ஊனிறத் துகிர்த் தல மழுத்தினாய் உலாய சீர்
நானிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கி
பால் நிறக் கடல் கிடந்த பத்ம நாபன் அல்லையே –23-

பதவுரை

வால் திறந்து

வெளுத்த நிறத்தையுடைய
ஓர் சீயம் ஆய்

ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாயவதரித்து
வளைந்த வாள் வயிற்றினன்

வளைந்தும் ஒளிபெற்றுமிருக்கிற பற்களையுடையனான இரணியனுடைய
ஊன் நிறத்து

சரீரத்தில் மர்ம ஸ்தானத்திலே
உதிர் தலம் அழுத்தினாய்

கை நகங்களை அழுத்தினவனே!
உலாய சீர்

உலகமெங்கும் உலாவுகின்ற சீர்மையையுடைய
கால் நிறத்த வேதம்

உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம்,ப்ரசயம் எனகிற நால்வகை ஸ்வரங்களையுடைய வேதங்களை
நாவர்

நாவிலே உடையவர்கள் (ச்ரோத்ரியர்கள்)
நல்ல யோதினால்

விலக்ஷணமான உபாயத்தினாலே
வணங்கு

வணங்குவதற்கு இடமான
பால்நிறக் கடல்

திருப்பாற் கடலிலே
கிடந்த

பள்ளிகொண்டருளின
பற்பநரபன் அல்லையே

பத்மநாபன் நீயேயன்றோ

வால் நிறத்தோர் சீயமாய் –
வெளுத்த நிறத்தை உடைய ஒப்பற்ற நரசிம்ஹ மூர்த்தியாக திருவவதரித்து
ஸ்வரூபம் மட்டும் இன்றி நிறத்தையும் மாற்றிக் கொண்டானே என்கிறார்-

காளமேக ஸ்யாமளானாய் இருந்தும் வெண்ணிறமாக்கிக் கொண்டாயே –

யுக வர்ண கிரமம் ஆஸ்ரிதர் விரும்பும் வர்ணம் கொள்பவனே

வால் நிறத்து -வாண் நிறத்து என்று திவ்யமான தன்மை என்றும் கொள்ளலாம்

வளைந்த வாள் எயிற்றவன்-
வளைந்தும் ஒளி பெற்ற பற்களையும் உடைய ஹிரண்யனை

ஊனிறத் துகிர்த் தல மழுத்தினாய்
மர்ம ஸ்தானத்தில் -ஹிருதயத்தில் திருக் கை நகங்களை அழுத்தினவனே

உலாய சீரநானிறத்த வேத நாவர்
எங்கும் உலாவுகின்ற சீர்மையை உடைய -நான்கு ஸ்வரங்கள் -உதாத்தம் அனுதாதம் ஸ்வரிதம் பிரசயம் -உடைய வேதங்களை –

நாவர் -நாவிலே உடையவர்கள் -ஸ்ரோத்யர்கள்

நல்ல யோகினால் வணங்கி-பால் நிறக் கடல் கிடந்த பத்மநாபன் அல்லையே
மனுஷ்ய திர்யக் ஜாதிகள் இரண்டையும் ஏக விக்ரஹமாக்கி தூணிலே தோன்றிய விந்தையை அருளுகிறார்

ப்ரளயகாலத்து ஆபத்தைப்போக்கி வடதளசாயியாக அமைந்தது மிகவும் அற்புதமான செயல் என்று

அதிலே ஈடுபட்டுப் பேசினார் கீழ்ப்பாட்டில்.

இது அகடிதகட நாஸாமர்த்தியமானது நரசிங்கவுருவங்கொண்ட ஸாமர்த்தியத்தின் முன்னே ஒரு பொருளாக மதிக்கத்தக்கதோ?

******  என்கிறபடியே சரீரத்தில் ஏகதேசத்தை மநுஷ்ய ஸஜாதீயமாக்கியம் ஏகதேசத்தைத் திர்யக் ஸஜுதியமாக்கியும்

இப்படி இரண்டு ஜாதியை ஏகவிக்ரஹமாக்கித் துணிலேவந்து தோன்றிய வித்தகம் ஸாமாந்யமானதோ?

இதனைப் பரிசோதிக்க வல்லார்? என்கிறார் இப்பாட்டில்.

வால் நிறத்தோர் சீயமாய் = புருஷோத்தமன் தன்ஸ்ரூபத்தை அழித்து ஸிம்ஹஸஜா தீயனது போலவே

காளமேகம்போன்ற தன்நிறத்தையும் மாற்ற வெண்ணிறத்தை ஏறிட்டுக்கொள்வதே! என்று ஈடுபடுகிறார்.

வால் வெண்மை.

இனி, வான் நிறம்” எனப் பிரித்து, திவ்யமான தன்மையையுடைய என்று பொருள் கொள்ளுதலும் நன்றே.

சீயம் = சிங்கம்.

“வளைந்தவா ளெயிற்றவன்” என்றதனால் இரணியனுடைய பயங்கரமான வடிவுடைமை தோன்றும்.

ஊன்நிறம்- சரீரத்தின் மர்மஸ்தாநம்- ஹ்ருதயமென்க.

உகிர்த்தலம் என்ற விடத்து, “தலம்” என்றது வார்த்தைப்பாடு. ‘உலாய” என்றது ‘உலாவிய’ என்றபடி.

————–

கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே
அங்கை யாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
சிங்கமாய தேவ தேவ தேனுலாவு மென் மலர்
மங்கை மன்னு வாழு மார்ப வாழி மேனி மாயனே –24-

பதவுரை

கங்கை நீர்

கங்கா தீர்த்தத்தை
பயந்த

உண்டாக்கின
பாத பங்கயத்து எம் அண்ணலே

தீருவடித் தாமரையையுடைய எம்பெருமானே!
அம் கை

அழகிய திருக்கையிலே
ஆழி சங்கு தண்டும் வில்லும் வாளும்

பஞ்சாயுதாழ்வாரக்ளை
ஏந்தினாய் !

ஏந்திக் கொண்டிருப்பவனே!
சிங்கம் ஆய

நரஸிம்ம மூர்த்தியாயவதரித்த
தேவ தேவ!

தேவாதி தேவனே;
தென் உலாவும் மெல்மலர் மங்கை

தேன் பொருந்திய ஸுகுமாரமான தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டி
மன்னிவாழும் மார்ப

(அப்பூவை விட்டு வந்து) பொருந்தி வாழும்படியான திருமார்பையுடையவனே!
ஆழி மேனி

கடல் போன்ற திருமேனியையுடைய
மாயனே

ஆச்சர்ய பூதனே! (என்று ஈடுபடுகிறார்.)

கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே
கங்கை தீர்த்தம் உண்டாக்கிய திருவடித் தாமரையை உடைய எம்பெருமானே

அங்கை யாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்-
அழகிய திருக்கைகளிலே பஞ்சாயுத ஆழ்வார்களையும் ஏந்திக் கொண்டு இருப்பவனே-

சிங்கமாய தேவ தேவ
நரசிம்ஹ மூர்த்தியாய் திருவவதரித்த தேவாதி தேவனே –

தேனுலாவு மென் மலர் மங்கை மன்னு வாழு மார்ப –
தேன் பொருந்திய சுகுமார பூவினில் பிறந்து அத்தை விட்டு வந்து பொருந்தி வாழும் படியான திரு மார்பு உடையவனே

வாழி மேனி மாயனே-
கடல் போன்ற திருமேனி உடைய ஆச்சர்ய பூதனே -என்கிறார்

அஹங்கார்களில் தலைவனான ருத்ரருக்கும் ஸ்ரீ பாத தீர்த்தம் தந்து அருளினாய்
கால தாமதம் இராமல் எப்போதும் திவ்ய ஆயுதம் தரித்துக் கொண்டு இருப்பவனே
இத்தை ஒரு நொடியிலே அங்கே அப்பொழுதே தோன்றி வெளியிட்டாய் நரசிம்ஹ மூர்த்தியாய் –
இப்படிப்பட்ட கல்யாண குணங்களில் தோற்று பெரிய பிராட்டியார் மன்னிக் கிடக்கிறார்

உனது திருமேனியை சேவித்த கண்கள் குளிர்ந்து தாப த்ரயங்கள் அற்றதே-
கரும் கடலைக் கண்டவாறே கண்களும் குளிர்ந்து சகல தானங்களும் ஆறுமே –

அஹங்காரிகளில் தலைவனான ருத்ரனுக்கும் ஸ்ரீபாத தீர்த்தத்தை தந்தருளி

அவனைப் பாவனஞ் செய்தருளினவனன்றோ நீ; ****** என்றபடி-

இடர்ப்பட்டு வரும் அடியார்களைத் துயர்நீக்கி ரக்ஷிப்பதில் காலதாமதம் நேரிடாமைக்காகப்

பஞ்சாயுதாழ்வார்களை எப்போதும் திருக்கையிலே எந்திக் கொண்டிருப்பவனன்றோ நீ:

அந்த ஆச்ரிதரக்ஷண சீக்ஷையை இருஸமய விசேஷத்திலே நரசிங்கமாய்த் தோன்றி வெளியிட்டவனன்றோ நீ;

இப்படிப்பட்ட குணங்களுக்குத் தோற்றுப் பெரிய பிராட்டியார் உன்னை விடமாட்டாதே எப்போதும் மார்பில் மன்னியிருக்கின்றாள் அன்றோ;

கருங்கடலைக் கண்டவாறே கண்களுங் குளிர்ந்து கைல தாபங்களும் ஆறவதுபோல உன் திருமேனியை ஸேவித்தவாறே

என் கண்கள் குளிர்ந்த தாபத்ரயமும் ஆறம்படியா யிரா நின்றதே! என்று ஈடுபடுகிறார்.

————-

வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ யிது என்ன பொய் யிரந்த மண் வயிற்றுளே
கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே –25-

பதவுரை

வரத்தினில்

(பிரமன் கொடுத்த) வரத்திலே
சிரத்தை மிக்க

அதிகமான நம்பிக்கையுடையவனாய்
வாள் எயிறு

வாள் போன்ற (பயங்கராமன) கோரப்பற்களையுடையவனான
மற்றவன்

ஆச்ரித சத்ருவான இரணியனுடைய
உரத்தினில்

மார்விலே
கரத்தை வைத்து

திருக்கைகளை வைத்து
உகிர்த்தலத்தை

நகரங்களை
ஊன்றினாய்

அழுத்திக் கொன்றாய்;
நீ

இப்படிப்பட்ட நீ
இரத்தி

(ஒரு ஸயம் மாவலியிடத்தே சென்று) யாசிக்கிறாய்;
இது என்ன பொய்

இது என்ன இந்திரஜாலம்!
இரந்த மண்

யாசித்துப்பெற்ற உலகத்தை
வயிற்றுளே கரத்தி

(ஒரு கால்) திருவயிற்றுக்குள்ளே ஒளித்து வைக்கிறாய்;

கண்ணனே! கண்ணபிரானே!

உன் கருத்தை

(இப்படியெல்லாம், செய்கிற) உன்னுடைய கருத்தை
யாவர் காண வல்லர்

யார்கண்டறிவல்லார்! (யாருமில்லை.)

வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
பிரமன் கொடுத்த வரத்தில்-அதிகமான நம்பிக்கை உடைய வாள் போன்ற பயங்கரமான கோர பற்களைக் கொண்ட
ஆஸ்ரித சத்ருவான ஹிரண்யன்

உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
மார்பினில் திருக் கரத்தை வைத்து திரு நகங்களால் அழித்துக் கொன்றாய்

இரத்தி நீ யிது என்ன பொய்
இப்படிப்பட்ட நீ ஒரு சமயம் மாவலியிடம் சென்று -யாசிக்கிறாய் -இது என்ற ஜாலம்

யிரந்த மண் வயிற்றுளே கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே
யாசித்துப் பெற்ற உலகத்தை ஒரு கால் திரு வயிற்றிலே ஒழித்து வைக்கிறாய்

அநந்ய பிரயோஜனனான பிரகலாதனுக்கு உதவி அருளினாய்
பிரயோஜனாந்த பரனான இந்த்ரனுக்காக யாசக வேஷம் பூண்டு -இது என்ன மாயம்
அப்படி இந்த்ரன் அளவு ஆபி முக்கியம் இல்லாத சம்சாரிகளையும் திரு வயிற்றிலே வைத்து ரஷித்து அருளினாய் –
இது என்ன இந்த்ரஜாலம் -அபார சக்தி யுக்தன் என்று ஸ்ரீ நரசிம்மனாயும்
அசக்தன் என்று வாமனனாயும்
சர்வஞ்ஞன் சர்வசக்தன் என்று பிரளய ரக்ஷகனாம் மாறி மாறிக் காட்டி அருளும் உள் கருத்தை
நீயே எனக்கு அருள வேணும்

அநந்யப்ரயோஜநனான (உன் அநுக்ரஹந்தவிர வேறொன்றையும் பயனாகக் கருதாதவனான) ப்ரஹ்லாதாழ்வானுடைய

விரோதியைக் கழித்தருளினாய் என்பது ஒருபுறமிருக்கட்டும்;

ப்ரயோஜநாந்தரபரனான இந்திரனுக்காக யாசக வேஷம் பூண்டு வந்தாயே இதென்ன மாயம்?

அவ்வளவேயோ? இந்திரனளவு ஆயிரமுக்யமுமில்லாமல் விமுகரான ஸம்ஸாரிகரீ… ப்ரளயாபத்திலே திருவயிற்றில் வைத்து ரக்ஷித்தாயே,

இதற்குத்தான் என்ன கருத்து?

பாரமார்த்திகனான ஆச்ரிதனையும் க்ருத்ரிமனான ஆச்ரிதநாமத்தாரியையும் ராவண ஹிரண்யாதிகளின் வரிசையிலே கணக்கிடத்தக்க ஸம்ஸாரிகளையும் ஒரு ஸமயமாகக் காத்தருள்கின்ற உன்னுடைய உட்கருத்து என்ன?

நீயே எனக்கருளிச் செய்ய வேணுமென்கிறார்.

நீ நரஸிம்ஹாவதார மெடுத்தவற்றைப் பார்த்தாலோ ‘அபார சக்தியக்தன்’ என்று தோன்றுகிறது;

அடுத்தபடியாக, இந்திரனது வேண்டுகோளுக்கிணங்கி வாமநனாய் வந்து யாசகம் செய்தவாற்றைப் பாரத்தாலோ ‘அசந்தன்’ என்று தோற்றாநின்றது;

ப்ரளயாபத்துக்கு உதவுந்தன்மையைப் பார்த்தாலோ ‘இவனுக்கு மேற்பட்ட ஸர்வஜ்ஞனும் ஸர்வசக்தனும் எவ்வுலகத்திலுமில்லை’ என்று என்னும்படியாயிருக்கிறது.

இப்படி சக்தியையும் அசக்தியையும் மாறி மாறிக் காட்டிக்கொண்டு நீ பலபலமாயச் செயல்கள் செய்வதற்குக் கருத்து எதுவோ?

எனக்குத் தெரிய வருளிச் செய்யவேணுமென்கிறார்- என்றுங் கொள்ளலாம்.

——————

ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய்
ஊணோடு ஓசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்ப்
பூணு பேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்க்
காணி பேணு மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே –26-

பதவுரை

ஆணினோடு பெண்ணும் ஆகி

புருஷஜாதி, ஸ்த்ரீஜாதி என்ற இரண்டு சாதிக்கும் ப்ரவர்த்தகனாய்
அல்லவோடு நல்ல ஆய்

மேற்சொன்ன இரண்டு ஜாதியிலும் சேராத நபும்ஸக பதார்த்தங்களென்ன இம்மூன்று வகுபபிலும் சிறந்தவையென்ன இவற்றுக்கெல்லாம் நிர்வாஹகனாய்
ஊணொடு ஓசை கூறும் ஆகி

ரஸம், சப்தம், ஸ்பர்சம் முதலிய விஷயங்களுக்கு நியாமகனாய்
என்று அலாத மாயை ஆய்

உலகிலுள்ள எல்லாப் பொருளாகவும் பரிணமிக்கின்ற ப்ரக்ருதிக்கு நிர்வாஹகனாய்
பூணி பேணும்

பசுக்களை மேய்கிக்கிற
ஆயன் ஆகி

இடையனாய்
பொய்யினோடு மெய்யும் ஆய்

பொய்யரான துர்யோதநரதிகன் பக்கலிலே பொய்யனாய் மெய்யரான பாண்டவர் பக்கலிலே மெய்யனாய்
காணிப்பேணும் மாணி ஆய்

(மூவடி) நிலத்தை ஆசைப்பட்ட பிரமசாரியாகி
கரந்து சென்ற கள்வனே!

(மஹாபலியின் யாக பூமியிலே) க்ருத்ரிமமாக எழுந்தருளின் மாயனே!
உன்னை யார் மதிக்கவல்லர்!

உன்னை அளவிடக்கூடியவர்கள் யார்?

ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு –புருஷ ஸ்த்ரீ ந பும்சக மூன்று ஜாதிக்கும் பிரவர்த்தனாய்
நல்லவாய் இவற்றில் சிறந்தவைக்கு எல்லாம் நிர்வாஹகானாய்

ஊணோடு ஓசை யூறுமாகி -ரசம் சப்தம் ஸ்பர்சம் முதலிய விஷயங்களுக்கு நிர்வாஹகனாய்
லீலா விபூதியை விஸ்தாரப் படுத்த ஆணினோடு பெண்ணுமாய் அவர்களுக்குள் அந்தர்யாமியாகவுமாகி
சம்பந்தம் ஏற்படுத்தி நிர்வஹிப்பவன்

நல்ல வாய் –
உலகில் சிறப்பு பெற்ற வஸ்துக்கள் அவனது தோற்றம் மிக வீறு பெற்று இருக்கும்

யொன்றலாத மாயையாய்ப்
உலகத்தில் உள்ள எல்லா பொருள்களாகவும் பரிணமிக்க பிரக்ருதிக்கு நிர்வாஹகனாய்

பூணு பேணு மாயனாகிப்
பசுக்களை மேய்க்கும் இடையனாகி

பொய்யினோடு மெய்யுமாய்க்
பொய்யர்களான துரியோதனாதிகளுக்கு பொய்யனாகவும் -மெய்யர்களான பாண்டவர்கள் பக்கம் மெய்யனாகவும்

காணி பேணு மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே
மூவடி நிலம் ஆசைப்பட்டு ப்ரஹ்மசாரியாய் -மகா பலியின் யாக சாலையில் க்ருத்ரிமாக எழுந்து அருளின மாயனே

சங்கல்ப ஏக தேசத்தாலேயே சர்வத்தையும் பண்ணவல்லனாய் இருந்தும் ஆஸ்ரித -சாது -பரித்ராணத்துக்காக
தேவ சஜாதீயமாக்கியும்
கோபால சஜாதீயமாக்கியும்
அவதரித்துப் பண்ணின ஆச்சர்ய சேஷ்டிதங்களை யார் நினைக்க வல்லார்

எல்லாவற்றிற்கும் நிரவாஹகனான நீ நித்யஸூரி போக்யமான உன்வடிவை ஆச்ரிதர்கட்கான தேவஸஜாதீயமாக்கியும்

கோபாலஸஜா தீயமாக்கியும் அவதரித்துப் பண்ணின ஆச்சரியசேஷ்டைகளை யார் அறியவல்லார் என்கிறார்.

வாமநாவதாரும் க்ருஷ்ணாவதாரமும் ஒருபுடை ஒத்திருக்கையாலே அவ்விரண்டவதாரங்களையும் சேர்த்து அநுஸந்திக்கின்றாரென்ப.

ப்ரஜைகளை அதிகப்படுத்தி லீலாவிபூதியை விஸ்தாரமாக்க வேணுமென்ற திருவுள்ளத்தினால்

ஸ்த்ரீஜாதிகளையும் புருஷ ஜாதியையும் ஏராளமாகப் படைத்து அவற்றிலே தான் அந்தராத்மாவாய் நின்று

பரஸ்பர ஸம்பந்தத்தை உண்டு பண்ணி இவ்வகையாலே நிர்வஹிக்கின்றான் என்ற கருத்து ஆணினோடு பெண்ணுமாகி என்பதற்கு,

ஆனால் ஒன்றுக்கு முதவாத … ஸகநுயாதிக்கு எம்பெருமான் நிர்வாஹகனல்லனோவென்ன,

அதற்கும் இவனே நிர்வஹாகனென்கிறது

அல்லவோடு என்று. அல்ல= ஸ்த்ரீஜாதியும் புருஷாஜாதியுமாகாதவை;

அவையாவன- நபும்ஸகவ்யத்திகள்.

நல்லவாய்= நல்ல பார்த்தங்களாகையாவதென்னென்னில்;

பகவத்கீதையில் பத்தாவது அத்யாயத்தில் ****** அதாவது- எந்த எந்த வஸ்துவானது செல்வம் மிக்கதாயும் அழகுமிக்கதாயும் நற்காரியங்களில் முயற்சிமிக்கதாயும் விளங்குகின்றதோ அவ்வப்பொருளெல்லாம் எனது தேஜஸ்ஸின் ஏகதேசத்தினுடைய இயைபுகொண்டதென அர்ஜுனே! நீ தெரிந்துகொள்! என்று அருளிச் செய்தபடி

உலகத்திலுள்ள ஸர்வபதார்தங்களிலும் சிறப்பு பெற்றவஸ்துக்களில் எம்பெருமானுடைய தோற்றம் மிக்க வீறுபெற்றிருக்குமென்கை.

இதனால், ஹேமமானவஸ்துக்களில் எம்பெருமானுடைய தோற்றம் இல்லையென்றபடி யல்ல;

எல்லாவற்றிலும் ஸமாமாந்யமாகத் தோற்றமிருந்தாலும் சிறந்தவஸ்துக்களில் தோற்றம் அதிசயித்திருக்குமென்க.

ஒன்றலாக மாயையாய் = ஒன்றலாத – ஒன்று அல்லாத; பலவாகப் பரிணமிக்கக்கூடிய என்றபடி,

எல்லாப் பொருளுமாய்க்கொண்டு பரிணமிக்கக்கூடியது ப்ரக்ருதிதத்வமேயாகையாலும், ****** என்றபடி

மாயையென்று ப்ரக்ருதிதத்வத்துக்குப் பேராகையாலும், ஸர்வவஸ்துவாயும் பரிணமிக்கவல்ல ப்ரக்ருதி

தத்துவத்துக்கு நியாமகனானவனே! என்று பொருளுரைக்கப்பட்டது.

அன்றியே, மாயை என்று ஆச்சர்யத்தையும், சொல்லுவதுண்டாதலால், ஒன்றிரண்டு வஸ்துக்களுக்கு மாத்திரம் நிர்வாஹகையன்றிக்கே ஸகலப்தார்த்தங்களையும் சேதநனுடைய கர்மாநுகூலமாக நிர்வஹிக்கவல்ல ஆச்சர்யத்தையுடைவனே! என்றதாகவுமாம்.

ஸங்கல்பத்தினாலேயே ஸகலத்தையும் நிர்வஹிக்கவல்லனா யிருக்கச் செய்தேயும் ஸாது பரித்ராணத்துக்காக

அஸாதாரணவிக்ரஹத்தை *** ஸஜாதீயமாக்கிக்கொண்டு அவதரித்து, தன்னைப்பேணாமல்

பசுக்களைப் பேணினானென்கிறது பூணிபேணுமாயனாகி என்றும் அப்படி ஸ்ரீக்ருஷ்ணனாய்த் திருவவதரித்து ரக்ஷித்தருளுங்காலத்துப் பொய்யராயிருந்த துரியோன தநாதிகளுக்குத்தானும் பொய்யனேயாகவும்,

மெய்யராயிருந்த பாண்டவர்கட்குத்தானும் மெய்யனேயாகவு மிருந்தபடியைச் சொல்லுகிறது பொய்யினோடு மெய்யுமாய் என்று.

———–

விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
பண் கடந்த தேசமேவு பாவ நாச நாதனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே –27-

பதவுரை

விண் கடந்த சோதியாய்

விபுவான மூலப்ரக்ருதி உனக்குள்ளேயாம்படி அதனை அதிக்ரமித்த ஸ்வாம்ப்ரகாசனே!
விளங்கு

ஸ்வயம்ப்ரகாசனான
ஞானம்

ஜீவாத்மாவை
மூர்த்தியாய்

சரீரமாக வுடையவனே!
பண்கடந்த தேசம் மேவு

வேதங்களாலும் அளவிட முடியாத பரமபதத்திலே நித்யவாஸம் பண்ணுமவனாய்
பாவநாச நாதனே!

ஹேயப்ரத்யநீகனான ஸர்வேச்வரனே!
எண் கடந்த யோகினோடு

எண்ணமுடியாத ஆச்சர்ய சக்தியோடு கூடினவனாய்க் கொண்டு
மாணி ஆய்

வாமனாய்
இரந்து சென்று

(மூவடிமண் வேணுமென்று) யாசித்துச் சென்று
மண் கடந்த வண்ணம்

பூமியை யளந்துகொண்ட விதத்தையும்
நின்னை

உன்னையும்
ஆர் மதிக்க வல்லர்

அளவிடக்கூடியவர்கள் யார்?

விண் கடந்த சோதியாய்
விபுவான மூல பிரகிருதி உனக்கு உள்ளே ஆகும் படி அத்தனை அதி ரமித ஸ்வயம் பிரகாசம் உடையவனே
சுரர் அறி அரு நிலை விண் -எட்ன்று மூல பிரக்ருதியை விண் சப்தத்தால் போலவே இங்கும்

விளங்கு ஞான மூர்த்தியாய்-
ஸ்வயம் பிரகாசமான ஜீவாத்மாக்களை சரீரமாக கொண்டவனே

பண் கடந்த தேசமேவு –
வேதங்களால் அளவிட முடியாத பரம பதத்தில் நித்யம் வாசம் பண்ணி அருளுபவனே

பாவ நாச நாதனே
ஹேய பிரத்ய நீக சர்வேஸ்வரனே

எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்-
எண்ண முடியாத ஆச்சர்ய சக்தியோடு இருக்கும் வாமனாய்

இரந்து சென்று மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே-
யோகி -யோகம் -உபாயத்துக்கும் கல்யாண குணத்துக்கும் –
நல்ல உபாயம் அறிந்து கொண்ட கோல உருவம் அன்றோ –

“விண்கடந்தசோதியாய்!” என்றது-  விபுவான மூலப்ரக்ருதியானது உனக்குள்ளேயாம்படியான

ஸ்வரூவைபவத்தையுடைய ஸ்வயம்ப்ரகாச வஸ்துவானவனே, என்றபடி.

விண் என்றால் ஆகாசமென்று பொருளாமே யல்லது மூலப்ரக்ருதியென்று பொருளாகக் கூடுமோவென்னில்; ஆம்;

ப்ருஹதாரண்யக உபநிஷத்திலே ஐ(ரூ-அ-எ ***” என்றவிடத்தில் ஆகாச சப்தத்தை மூலப்ரக்ருதிபரமாக வியாக்கியானித்துள்ளார்கள்;

“சுரரறிவருநிலை விண்” என்று திருவாய்மொழியிலும் விண் என்று மூவப்ரக்ருதியை அருளிச்செய்திருக்கிறார்.

“விளங்கு ஞான மூர்த்தியாய்” என்றது – ஸ்யம்ப்ரகாசமாய் ஜ்ஞாநசப்தவாச்யமான ஆத்மஸ்ரூபத்தை சரீரமாகவுடையவனே! என்படி.

ஆக, முதலடியிலுள்ள இரண்டு ஸம்போதநங்களாலும் எம்பெருமானுக்கு ‘துணோ ***” என்று சொல்லப்பட்டுள்ள

விபுத்வ ஹூக்ஷ்மத்வங்கள் சொல்லப்பட்டனவென்க.

“விண்கடந்த சோதியாய்” என்ற முதல் ஸம்போதநத்தில் *** என்னுமிடம் சொல்லுகிறது;

விளங்கு ஞானமூர்த்தியாய்” என்ற இரண்டாவது ஸம்போதநத்தில் *** என்னுமிடம் சொல்லுகிறது.

(பண் கடந்த இத்யாதி.) பண் என்று ஸ்வரத்துக்குப் பேராகிலும் இங்கு ஸ்ரப்ரதமான வேதத்தை லக்ஷணையால் குறிக்கும்.

பண்கடந்த = வேதத்தை அதிக்ரமித்த- வேதத்திற்கு விஷயமாகாத என்கை;

வேதங்களாலே பரிச்சேதிக்க முடியாத அப்ராக்ருத ஸ்தலமான பரமபதத்திலே நித்யவாஸம் செய்தருள்கின்ற பரமபுருஷனே!

பாவநாசநாதன் – வட மொழித்தொடர். ஆக இரண்டு அடிகளம் ஸம்போதநமாய் முடிந்தன;

இனி பின்னடிகளில் உலகளந்த சரிதம் அளவிட முடியாத ஒப்பற்றதொரு சரிதமென்கிறார்.

யோக = யோஹ’ என்ற வடசொல் ‘யோகு’ எனக் குறைந்து கிடக்கிறது.

யோக மென்று கல்யாண குணத்துக்கும் உபாயத்துக்கும் பெயர்.

இங்கு அவ்விரண்டுபொருளும் ஆகலாம். யாசகவேஷத்துக்கும் உபாயத்துக்கும் பெயர்.

இங்கு அவ்விரண்டுபொருளும் ஆகலாம்.

யாசகவேஷத்தோடு எழுந்தருளச் செய்வதேயும் மற்றபடி கல்யாண குணயோகத்தில்  குறையில்லை யென்கை.

மஹாபலியின் செருக்கை யடக்குவதற்கு நல்ல உபாயமறிந்து செய்து செயலாதலால் உபாயப்பொருளும் பொருந்துமென்க

———————–

படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே –28-

பதவுரை

பௌவம் நீர்

(அண்டங்களுக்குக் காரணமான) ஏகார்ணவத்தை
படைத்து

ஸ்ருஷ்டித்து
படைத்த

(பிறகு, அண்டப்ரஹ்மஸ்ருஷ்டி பூர்வமாக) ஸ்ருஷ்டிக்கப்பட்ட
பார்

பூமியை
இடந்து

(ஸ்ரீவராஹமூர்த்தியாய் அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவித்தெடுத்து
அளந்து

(த்ரிவிக்ரமனாய்) அளந்து
உண்டு

(ப்ரளயகாலத்தில்) திருவயிற்றில் வைத்து நோக்கி
உமிழ்ந்து

(ப்ரளயங்கழிந்த பின்பு) வெளிப்படுத்தியும்.
பௌவம் நீர்

(இலங்கைக்கு அழகான) கடலை
அடைத்து

ஸேதுகட்டித் தூர்த்து.
முன் அதில் கிடந்து

முன்பொருகால் அக்கடலிற் கண்வளர்ந்தருளி
கடைந்த

(ஒருகால் அமுதமெடுப்பதற்காக அதனைக்) கடைந்தருளின
பெற்றிபோய்!

(இப்படிப்பட்ட அளவற்ற பெருமைகளையுடையவனே!
மிடைத்த

செருக்கி வந்த
மாலி

மாலி என்றகிற ராக்ஷஸனென்ன
விலங்கு மான் மாலி

அதிக்ஷுத்ரனான ஸுமாலியென்னும் ராக்ஷஸனென்ன இவர்கள்
காலன் ஊர் புக

யமலோகம் போய்ச் சேரும்படியாக
படைக்கலம் விடுத்த

ஆயுதங்களை ப்ரயோகித்தருளின
பல் படை தடகை மாயனே!

பலவகைப்பட்ட திவ்யாயுதங்களை விசாலமான திருக்கையிலே  யுடையனான பெருமானே! (உன்னையார் மதிக்கவல்லர்? என்று கீழ்ப்பாட்டின் க்ரியைக் கூட்டிக்கொள்வது)

 

படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர் படைத்து அடைத்து
பௌவ நீர் -அண்டங்களுக்கு காரணமான ஏ காரணவத்தை சிருஷ்டித்து பிறகு அண்ட பிரம்ம சிருஷ்டி பூர்வகமாக
சிருஷ்டிக்கப் பட்ட பூமியை
ஸ்ரீ வராஹ மூர்த்தியாய் அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுத்து எடுத்து
திருவிக்ரமனாய் அளந்து பிரளய காலத்தில் வயிற்றில் வைத்து நோக்கி
பிரளயம் கழிந்த வாறே வெளிப்படுத்தியும் –
அடைத்து -சேது கட்டி தூர்த்து

அதில் கிடந்து முன் –
முன் அதில் கிடந்தது -முன்பு ஒரு கால் அதன் முன்னே கண் வளர்ந்து அருளி

அதில் கடைந்த பெற்றியோய்
ஒரு கால் அமிர்தம் பெறுவதற்காக கடைந்து அருளிய -இப்படிப்பட்ட அளவற்ற பெருமைகளை உடையையாய்

மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப் படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே
செருக்கி வந்த மாலி என்னும் ராஷசனும் அதி சூரனனான ஸூ மாலி என்னும் அரக்கனும் யம லோகம் சேரும் படி
அதி ஷூத்ரர்களான மாலி மாலி மான் விலங்கு என்று மூவரையும் என்னவுமாம் –
ஆயுதங்களைப் பிரயோகித்த பலவகைப் பட்ட திவ்ய ஆயுதங்களை விலாசமான திருக் கரங்களிலே உடைய எம்பெருமானே
உன்னை யார் நினைக்க வல்லார்

“மாலிமான்” என்றதை ‘மான் மாலி’ என்று மாற்றி அந்வயித்து ஸுமாலியென்று பொருள்கொள்ளப்பட்டது.

‘ஸு’ என்பதன் ஸ்தாநத்தில் மான் என்றது மஹாந் என்பதன் விகாரம்.

அன்றி, ‘மாலியவான்’ என்பவனை ‘மாலி மான்’ எனக் கூறிக்கிடப்பதாகவுங் கொள்ளலாம்.

அங்ஙனுமன்றி, மாலி, மாலி, மான் விங்கு- மாலியென்ன, சுமாலியென்ன, மாரீச மாயாமிருகமென்ன

இவர்கள் காலனூர்புக- என்று முரைக்கலாம்.

விலங்க என்றது மாலி சுமாலிகட்கு அடைமொழியானபோது, அதிக்ஷுத்ரர்களான என்று பொருள் கொள்க.

இப்பாட்டில் வினைமுற்று இல்லையாகிலும் கீழ்ப்பாட்டோடேயாவது மேற்பாட்டோடேயாவது கூட்டிக் கொள்ளலாம்.

———————————————————————————-

பரத்திலும் பரத்தையாதி பௌவ நீர் அணைக் கிடந்தது
உரத்திலும் ஒருத்தி தன்னை வைத்து உகந்தது அன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞான மூர்த்தி யாயினாய்
ஒருத்தரும் நினாது தன்மை இன்னதென்ன வல்லரே –29-

பதவுரை

நாத

ஸ்வாமிந்!
ஞானம் மூர்த்தி ஆயினாய்

ஜ்ஞாநஸ்வருபியானவனே!
பரத்திலும் பரத்தை ஆகி

பராத்பரனாயிராநின்றாய்.
ஒருத்தி தன்னை

ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை
உரத்தில்

திருமார்பிலே
வைத்து

பிரியாமல் அணையவைத்து
உகந்து

மகிழ்ந்து
பௌவம் நீர் அணை கிடந்து

திருவாற்கடலாகிய சயநத்திலே கண்வளர்ந்தருளி
அது அன்றியும்

இப்படிகளாலே ஆச்ரிரக்ஷணம் செய்வது மல்லாமல்
நரத்திலும்

ஹேயமான மானிட சாதியிலும்
பிறத்தி

வந்து பிறக்கின்றாய்;
நினாது தன்மை

உன்னுடைய அநுக்ரஹ ஸ்வபாவத்தை
ஒருத்தரும்

யாராகிலும்
இன்னது என்ன வல்லரே?

இப்படிப்பட்டதென்று பரிச்சேததிக்க ஸமர்த்தர்களோ? (யாருமில்லை.)

பரத்திலும் பரத்தையாதி -பரா பரனாய் இருந்தாய்
பௌவ நீர் அணைக் கிடந்தது-திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளி
உரத்திலும் ஒருத்தி தன்னை வைத்து உகந்தது -திரு மார்பிலே ஒப்பற்ற பெரிய பிராட்டியை
பிரியாமல் அணைய வைத்து மகிழ்ந்து

அன்றியும் நரத்திலும் பிறத்தி -அதுவும் அன்றியும் மனுஷ்ய சஜாதீயமாக திருவவதரித்து
நாத ஞான மூர்த்தி யாயினாய் ஒருத்தரும் நினாது தன்மை இன்னதென்ன வல்லரே
மேன்மைக்கும் எளிமைக்கும் எல்லை நிலமாய் இருக்கும் உன் தன்மையை அருளுகிறார்

பராத்பரன் ஷீராப்தி நாதன் ஸ்ரீ யபதித்வம் -பரத்வ பரமாகவும்-எளிமைக்கும்-
ராம கிருஷ்ணாதி அவதாரங்கள் – எளிமைக்கும் எல்லை நிலம்-

மேன்மை எல்லை காண முடியாதாப் போலே நீர்மையும் எல்லைகாண வொண்ணாதபடி யிருக்குமாற்றை அநுபவித்து ஈடுபடுகிறார்.

க்ஷீரஸாகரசாயித்வமும் லக்ஷ்மீபதித்வமும் பராத்பரத்வ ப்ரகாசகமாதலால் “பரத்திலும் பரத்தையாதி” என்றதற்கு உபபாதகமாக அவ்விரண்டையும் அருளிச்செய்தார்.

பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியனத்திற்கு அரும்பதவுரை வரைந்த வொருவர்- “பரத்தையாதி யென்றது- ‘பரத்தையாகி’ என்று பாடமாக வேணுமென்று கண்டு கொள்வது” என்றெழுதிவைத்தது மறுக்கத்தக்கது.

ஆதி என்பது ‘ஆ’ என்னும் வினைப்பகுதியடியாப் பிறந்த நிகழ்கால முன்னிலை யொருமை வினைமுற்று என்பதை அவர் அறிந்திலர்.

ஆதி= ஆகின்றாய் என்றபடி.

பரத்தை = முன்னிலை; படர்க்கையில் பரத்தன் என்றாம். மேற்பட்ட வஸ்துக்களிலும் மேற்பட்ட வஸ்துவாக இராநின்றா யென்கை.

நரத்திலும் பிறத்தி = ராமகிருஷ்ணாதிரூபேண மனுஷ்ய ஜாதியிலும் பிறக்கின்டறா யென்கை.

நினாது = நினது என்றதன் நீட்டல்.

————————————————————————————

வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே
தேனகம் செய் தண்ணறு மலர்த் துழாய் நன் மாலையாய்
கூனகம் புகத்தெறித்த கொற்ற வில்லி யல்லையே –30-

பதவுரை

வானகமும்

வானுலகத்திலுள்ளளாரயும்
மண்ணகமும்

மண்ணுலகத்திலுள்ளாரையும்
ஏழ் வெற்பும்

ஸப்தகுலபர்வதங்களையும்
ஏழ் கடல்களும்

ஸப்தஸாகரங்களையும்
போனகம் செய்து

அமுது செய்து
ஆல் இலை துயின்ற

ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளின்
புண்டரீகனே!

தாமரை போன்ற அவயவங்களையுடைய பெருமானே!
தேன் செய் அகம்

தேன் நிறைந்த உட்புறத்தை யுடைத்தாய்
தண்

குளிர்ந்ததாய்
நறு

பரிமளிதமான
மலர் துழாய்

திருத்துழாயை
கல் மாலையாய்!

நல்லமாலையாக அணிந்தவனே! (நீ)
கூன்

(கூனியினுடைய) கூனானது
அகம் புக

உள்ளே யொடுங்கும்படி
தெறித்த

விட்டெறிந்த
கொற்றம் வில்லி அல்லையே

வெற்றி வில்லை யுடையவனான்றோ

போனகம் செய்து -அமுது செய்து
தேனகம் செய் -தேன் செய் அகம் தேன் நிறைந்த உட் புறத்தை யுடைய-
புண்டரீகனே –தாமரை போன்ற அவயவங்களை உடையவனே

————–

கால நேமி காலனே கணக்கிலாத கீர்த்தியாய்
ஞாலம் ஏழும் உண்டு பண்டோர் பாலனாய பண்பனே
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின்
பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே –31-

பதவுரை

காலநேமி காலனே!

காலநேமியென்னும் அஸுரனதுக்கு யமனானவனே!
கணக்கு இலாத கீர்த்தியாய்

எண்ணிறந்த புகழையுடையவனே!
பண்டு

முன்பொருகால் (ப்ரளய காலத்திலே)
ஞாலம் எழும் உண்டு

ஏழுலகங்களையும் அமுது செய்து
பாட்டு

மின்னறதெயிற்றரக்கன் வீழ
ஓர் பாலன் ஆய

ஒரு சிறுகுழந்தைவடிவமெடுத்த
பண்பனே!

ஆச்சர்யபூதனே
வேலைவேவ

கடல்நீர் வெந்து போம்படி
வில்வளைத்த

வில்லை வளைத்த.
வெல் சினத்த  வீர!

எதிரிகளை வென்றேவிடும்படியான சீற்றத்தையுடைய வீரனே!
நின்பாலர் ஆய பக்தர் சித்தம்

உன்பக்கல் அன்பு பூண்டவர்களின் சித்தத்தின்படி
முத்தி செய்யும்

(அவர்கட்கு) மோக்ஷம் தந்தருள்கிற
மூர்த்தியே!

ஸ்வாமியே!

கால நேமி -ராவணின் மாதுலன் –
வேலை வேவ -கடல் நீர் வெந்து போகும் படி
வில் வளைத்த வெல் சினத்த வீர -சிலர் கோபம் கொஞ்ச நேரம் சென்ற பின்பு தீரும் –
இவனது சினம் ஜயித்ததின் பின்பே தீரும் என்கிறார்

நின்பாலராய -உன்னிடத்து உள்ளவர்கள்
பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே –
மூர்த்தி -திவ்ய மங்கள விக்ரஹம் -வடிவு அழகைக் காட்டி தன் பக்கலில் ஆழம் கால் படுத்திக் கொள்ளுவான்
அன்பு பூண்டவர்களின் சித்தம் படி அவர்களுக்கு மோஷம் தந்து அருளிய ஸ்வாமியே

காலநேமி என்பவன் இராவணனுடைய மாதுலன்; இவன், தாரகாசுர யுத்தத்தில் எம்பெருமானாற் கொல்லப்பட்டவன்.

வேலை- கடற்கரைக்குப் பெயர்; இலக்கணையால் கடல்நீரைக் குறிக்கும்.

வெல்சினந்தவீர! = சிலருடைய கோபம் காலக்ரமத்தில் தன்னுடையே சாந்தமாவதுண்டு;

அங்ஙனன்றியே ஸமுத்ரராஜன்மீது பெருமாளுக்குண்டான கோபம் வெல்சினமாய்த்து;

வென்றாலன்றித் தீராத பாதச்சாசையிலே ஒதுங்கிவர்த்திக்கிற பக்தர்கள் என்கை.

முத்திசெய்தல்- வேறு விஷயங்களில் ஆசையற்றதாகச் செய்தல்.

மூர்த்தி- ஸ்வாமி; திவ்யமங்கள விக்ரஹமாகவுமாம்;

வடிவழகைக் காட்டித் தன் பக்கல் ஆழங்காற்படுத்திக் கொள்ளுமவனே! என்றவாறு

————-

குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய்
அரக்கர் அரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ
இரக்க மண் கொடுத்து அவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப நாபன் அல்லையே –32-

பதவுரை

குரங்கு இனம் படைகொடு

வாநகர்களின் திரளான சேனையைத் துணைகொண்டு
குரை கடலின் மீது போய்

கோஷிக்கின்ற கடலில் (அணைகட்டி) எழுந்தருளி
அங்கு

அவ்விலங்கையிலுள்ள
அரக்கர்

ராவணாதி ராக்ஷஸர்கள்
அரங்க

அழியும்படி
வெம் சரம்

தீக்ஷ்ணமான அம்புகளை
துரந்த

அவர்கள் மேல் பிரயோகித்த
ஆதி

வீரர்களில் தலைவன்
நீ

(எம்பெருமானே;) நீயே காண்க;
இரக்க

நீ வாமநனாய்ச் சென்று யாசிக்க
மண்கொடுத்தவற்கு

உனக்கு மூவடி நிலம் தானங் கொடுத்த மஹாபலிக்கு
இருக்க

குடியிருப்பதற்கு
ஒன்றும் இன்றியே

ஒருசாண்நிலமும் மிகாதபடி
பரக்க வைத்து

(திருவடியை) மிகவும் விஸ்தாரமாக வைத்து
அளந்து கொண்ட

(மூவுலகங்களையும்) ஸ்வாதீகப்படுத்திக் கொண்ட
பற்பபரதன் அல்லையே

தாமரைபோன்ற திருவடிகளையுடைய பெருமானும் நீயே காண்.

குரக்கினப் படை கொடு -வானரங்களில் திரளான சேனை கொண்டு
குரை கடலின் மீது போய்-கோஷிக்கின்ற கடலில் -சேது அணை கட்டி எழுந்து அருளி
அரக்கர் அரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ-இலங்கையிலே ராவணன் போன்றாரை அழிக்கும் படி
பரக்க -விஸ்தீரமாக அளந்து மா வுலகமும் ஸ்வீகாரமாகக் கொண்டார்-
இரக்கம் ஓன்று இன்றியே -என்றும்- இருக்க ஒன்றும் இன்றியே-என்றும் -பாட பேதம்-

யாசகவேஷத்தைப் பூண்டுகொண்டு சென்று யாசிப்பதும், பிறகு யாசகங் கொடுத்தவனுக்குக் குடியிருக்க

ஒரு அடிநிலமும் மிகாதபடி ஸர்வஸ்வாபஹாரம் பண்ணுவதும் உனக்குத்தான் ஏற்றிருக்குமென்கிறார் போலும்.

“இரக்கமொன்று மின்றியே” என்றே பெரும்பாலும் பாடம் வழங்கும்; பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்த வியாக்கியானத்தில்

“பூமியில் அவனுக்கு ஒரு பதயாஸமும் சேஷியாதபடி” என்றருளிச் செய்திருந்தலால்

“இருக்க ஒன்றுமின்றியே” என்று பாடமிருந்திருக்க வேணுமென்று பெரியோர் கூறுவர்.

“இரக்கமொன்றுமின்றியே” என்ற பாடத்திலும் வியாக்கியான வாக்கியத்தைப் பொருந்தவிடலாமென்பர்.

இதில் ஆக்ரஹமுடையோமல்லோம்

————–

மின் நிறத்து எயிறு அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து
பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய்
நன் நிறத்து ஓர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர்ப்
பொன்னிறத்த வண்ணனாய புண்டரீகன் அல்லையே –33-

பதவுரை

மின் நிறத்து எயிறு அரக்கன்

மின்னல் நிறத்தையொத்த பற்களையுடையனான இராவணன்
வீழ

மாளும்படி
வெம் சரம்

கொடிய அம்புகளை
துரந்து

அவன் மேல் பிரயோகித்து (அவனை முடித்தருளி)
பின்னவற்கு

அவனது தம்பியான விபீடணனுக்கு
அருள் புரிந்து

க்ருபை செய்தருளி
அரசு அளித்த

பட்டாபிஷேகம் செய்து வைத்த
பெற்றியோய்!

பெருமானே!
நல் சிறத்து

நல்ல நிறத்தையுடையவளாய்
ஓர் இன் சொல்

ஒப்பற்ற மதுரமான வாக்கையுடையவளாய்
ஏழை

உன்பக்கல் சாபல்யமுடையவளான
பின்னை

நப்பின்னைப் பிராட்டிக்கு
கேள்வி

நாயகனானவனே!
மன்னு சீர்

நித்யளித்த கல்யாண குணங்களையுடையனாய்
பொன் நிறந்த வண்ணன் ஆய

பொன்போன்ற திவ்யமங்கள விக்ரஹத்தையுடையனான
புண்டரீகன் அல்லையே

புண்டரீகாக்ஷனென்பவன்  நீயே காண்

மின் நிறத்து எயிறு அரக்கன் -மின்னலை ஒத்த பற்களை உடைய ராவணன்
பின்னை கேள்வ -நப்பின்னை நாயகனாய்

இராவணனைக் கொன்றொழித்து ஸ்ரீவிபீஷணாழ்வானை இலங்கையரசனாக்கி

அருள் புரிந்தவாற்றைச் சொல்லிப் புகழ்கிறார் முன்னடிகளில்.

இராவணன் பார்க்கும் போதே பயங்கரமான வடிவுடையவன் என்பது தோன்ற மின்னிறத்தெயிற்றரக்கன் என்கிறார்.

வீழ – விழ என்பதன்  நீட்டல். பின்னவன் – தம்பி. வெற்றி – பெருமை.

—————-

ஆதி யாதி யாதி நீ ஓர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ யது உண்மையில் விளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே –34-

பதவுரை

ஆதி ஆதி ஆதி நீ

மூன்று விதமான காரணமும் நீயே யாகிறாய்:
ஒரு அண்டம் ஆதி

அண்டத்துக்குட்பட்ட  ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனுமாகிறாய்;
ஆதலால்

இப்படியிருக்கையாலே
சோதியாத சோதி நீ

பரீக்ஷிக்கவேண்டாத பரம்பொருள் நீ நீயேயாகிறாய்;
அது உண்மையில்

அந்த சோதியானது ப்ரமாணஸித்தாமகையாலே
விளங்கினாய்

(வேறொன்றாலன்றிக்கே) தானாகவே நீ விளங்குகின்றாய்;
வேதம் ஆகி

வேதங்கட்கு நிர்வாஹகனாய்
வேள்வி ஆகி

யஜ்ஞ்களாலே ஆராத்யனாய்
விண்ணினோடு மண்ணும் ஆய்

உபய விபூதிக்கும் நியாமகனாய்
ஆதி ஆகி

இப்படி ஸர்வகாரண பூதனாயிருந்து வைத்த
ஆயன் ஆய மாயம்

இடையனாய்ப் பிறந்தாமயம்
என்ன மாயம்

என்ன ஆச்சரியமோதான்.

ஆதி யாதி யாதி நீ
உபாதான சககாரி நிமித்த முக் காரணங்களும் நீயே

ஓர் அண்டம் ஆதி –
அண்டத்துக்கு உட்பட சகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகன்

ஆதலால்
சோதியாத சோதி நீ –
பரீஷிக்க வேண்டாத பரம் பொருள் நீயே-நாராயணா பரஞ்சோதி அன்றோ-

யது உண்மையில் விளங்கினாய்-
அந்த ஜோதி பிரமாண சித்தம் -வேறு ஒன்றாலும் அன்றிக்கே தானாகவே விளங்கிற்றே

வேதமாகி வேள்வியாகி-
வேதங்களுக்கு நிர்வாஹகனாய் யாகங்களால் ஆராத்யனாய்

விண்ணினோடு மண்ணுமாய்-
உபய விபூதிக்கும் நிர்வாஹகனாய்

ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே –
இப்படி சர்வ காரண பூதனாய் இருந்து ஆயனாய மாயம் என்ன மாயமே

உலகத்தில் ஒரு காரியம் பிறக்கவேணுமானால் அதற்கு மூன்று வகையான காரணங்கள் உண்டு:

உபாதாநகாரணம், ஸஹகாரிகாரணம் , நிமித்தகாரணம். குடம் என்கிற

ஒரு காரியம் பிறக்க வேண்டுமிடத்து மணல் உபாதான காரணமென்றும்,

சக்கரம் தடி தண்ணீர் முதலியவை ஸஹகாரிகாரணமென்றும்,

குயவன் காலம் அத்ருஷ்டம் முதலியவை நிமித்த காரணமென்றும் கொள்ளப்படும்;

அப்படியே ஜகத்தாகிற காரியத்துக்கு மூவகைக் காரணங்கள் அமையவேண்டுமே.

அவற்றில் எம்பெருமான் எவ்வகைக் காரணமாகிறானென்றால், மூவகைக் காரணமும் இவனொருவனே யென்கின்றார்

ஆதியாதியாதிநீ என்று. ஆதி என்றது காரணம் என்றபடி.

ஆதிசப்தத்தை மூன்று தடவைப் பிரயோகித்ததனால் மூவகைக் காரணமும் நீயே என்றதாகிறது.

ஓரண்டமாதி = அண்டமென்றது ஜாத்யேக வசநமாகக் கொள்ளத் தக்கது.

அண்டராசிகளை ஸ்ருஷ்டித்து அவற்றுள் பிரமன் முதல் எறும்பளவான ஸகல பதார்த்தங்களையும் ஸ்ருஷ்டித்து

அவற்றுக்கு அந்தர்யாமியாயிருக்கிறாய் என்றபடி.

இவ்விடத்தில் ஆதி என்றது- ஆகின்றாய் என்னும் பொருளையுடையதான நிகழ்கால முன்னிலை யொருமைவினைமுற்று.

ஆ- பகுதி;  தி- விகுதி.

ஆதலால் சோதியாத சோதி நீ = கார்யவர்க்கங்களிலே ஒருவனாயிருந்தால்

நீ பரஞ்சோதியா அன்றா என்று சோதித்துப் பார்க்க வேண்டியதாகும்;

அப்படியன்றியே ஸகல ஜகத் காரண பூதனாக அமைந்தயாகையினால் ஜ்யோதிச் சப்த வாச்யன் நீதான் என்று

எளிதாக நிர்ணயிக்கலாயிராநின்றது என்படி.

ஜகத் காரண பூதமான பொருள் எதுவோ அதுதான் உபாஸிக்கத் தகுந்ததென்றும்

அதுதான் பருங்சோதியென்றும் தோந்தங்களிற் கூறப்பட்டிருத்தலால்

உன்னைப் பற்றி சோதிக்க வேண்டிய வருத்தமில்லையென்கிறார். “***- என்றது காண்க.

————————————————————————–

அம்பு உலாவு மீனுமாகி யாமையாகி யாழியார்
தம்பிரானுமாகி மிக்க தன்பு மிக்க தன்றியும்
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என் கொலோ எம் ஈசனே –35-

பதவுரை

என் இசனே

எம்பெருமானே! (தேவரீர்)
ஆழியார் தம் பிரானும் ஆகி

திருவாழியாழ்வானையுடைய பரமபுருஷனாயிருந்து வைத்து
அம்பு உலாவும் மீனும் ஆகி

ஜலத்தில் உலாவுகின்ற மீனாகியும்
ஆமை ஆகி

ஆமையாகியும் (அவதரித்து)
மிக்கது

அதிசயத்தை அடைந்தருளிற்று
அன்பு மிக்கது

மிகுந்த அன்பையும் காட்டியருளிற்று;
அன்றியும்

இதற்கு மேலும்
கொம்பு அராவு நுண்மருங்குல் ஆயர் மாதர் பிள்ளை ஆய்

வஞ்சிக்கொம்பு போலும் அரவு போலும் நுட்பமான இடையையுடைய இடைப் பெண்ணுக்குப் பிள்ளையாய்ப் பிறந்து
எம்பிரானும் ஆய வண்ணம் என் கொல்

எம்பிரானுமாக நின்ற நிலையும் என்ன அற்புதம்!.

ஆழியான் தம்பிரான் ஆகியும் -சக்கரக்கையனாய் -பராத்பரனாய் இருந்தும்
அம்பு உலாவு மீனுமாகி -ஜலத்தில் உள்ள மீனுமாகியும்
மிக்க தன்பு மிக்க தன்றியும்-மிகுந்த அன்பையும் காட்டியும் அருளி
பல பிறப்பாய் ஓளி வரும் முழு நலம் -எனவே மிக்கதாய் –
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
கொம்பு போலேயும் பாம்பு போலவும் நுட்பமான இடை உடைய இடை பெண்ணின் பிள்ளையாய் பிறந்து

“ஆழியார் தம்பிரானாகியும் அம்புலாவு மீனுமாகி ஆமையாகி” என்று அந்வயித்துக் கொயாள்ள வேணுமென்பர்.

சக்கரத்தாழ்வாரை அடக்கி ஆளுமவன் என்றால் பரத்வத்திற்கு அதனில் மேற்பட்ட லக்ஷணமில்லை;

சக்கரக்கையன் என்பதும் பராத்பரன் என்பதும் பரியாயமாகக் கொள்ளத்தக்கவை;

ஆகவே, “ஆழியார் தம்பிரானாகியும்” என்றது- பாரத்பரனா யிருந்துவைத்தும் என்றபடியாம்-

பரத்வத்தைப் பேணாமல் மீனாவும் ஆமையாயும் பிறந்தவாறு என் கொல்? என்கிறார்.

மிக்கது = இப்படி க்ஷûத்ரயோநிகளிற் பிறந்ததைப் பாவிகள் தாழ்வாக நினைத்தாலும்

ஞானிகள் “பி பிறப்பாயொளிவரு முழுநலம்” என்று- பிறக்கப் பிறக்க ஒளிவளர்வதாக அருளிச் செய்வராகையாலே

அப்படியே இவருமருளிச் செய்கிறார்.

மிக்கது- தாழ்ந்து பிறந்தாலும்  மேன்மையே விளங்க நின்றீர் என்கை.

இது முன்னிலைப் பொருளில் வந்த படர்க்கை; ***- என்று வடநூலார் பிரயோகிப்பதுபோல:

இப்பிரயோகம் கௌரவாதி சயத்தைக் காட்டும். அன்புமிக்கது என்ற விடத்தும்

இங்ஙனமே. தாழ்பிறந்தாகிலும் அடியார்களின் காரியத்தைக் குறையறச் செய்து முடிக்க

வேணுமென்னும் அன்பினால் இப்படி பிறந்தாய் என்று கருத்து.

———————————————————————————

ஆடகத்த பூண் முலை யசோதை யாய்ச்சி பிள்ளையாய்ச்
சாடுதைத்த தோர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள்
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பாலமுது செய்
தாடகக் கை மாதர் வாய் அமுதுண்டது என் கொலோ –36-

பதவுரை

ஆடகந்தபூண் முலை

ஸ்வர்ணமயமான ஆபரணங்களையணிந்த ஸ்தமங்களையுடையளான
அசோதை ஆய்ச்சி பிள்ளை ஆய்

யசோதையென்னும் கோபிகைக்கு புத்திரனாய்ப் பிறந்தருளி
சாடு உதைத்து

சகடாசுரனைத் திருவடிகளால் உதைத் தொழித்து
ஓர் புள்ளது அவி கள்ள தாயபேய் மகள்

சிறு குழந்தைகளை அனுங்கப் பண்ணுவதொரு பறவையின் வடிவுகொண்டு வந்தருத்ரிம மாதாவாகிய பூதனையானவள்
வீட

நீ உயிர்விட்டு மாளும்படி
வைத்த

உன் திருப்வளத்திலே வைத்த
வெய்ய  கொங்கை

(விஷம் தீற்றின) கொடிய முலையிலுள்ள
ஐய பால்

ஸூக்ஷ்மமான பாலை
அமுதுசெய்து

உறிஞ்சியுண்டு
ஆடகம் கை மாதர்

பொன்வளைகள் அணிந்த கைகளையுடைய ஸ்த்ரீகளினுடைய
வாய் அமுதம் உண்டது

அதரத்திலுள் அமுதத்தைப் பருகினது
என்கொல்

என்ன வித்தகம்!

ஆடகத்த பூண் முலை –
ஸ்வர்ண மயமான ஆபரணங்களை அணிந்த ஸ்தனங்களை உடையவளான
யசோதை யாய்ச்சி பிள்ளையாய்ச்-சாடுதைத்த தோர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள்-
சகடாசுரனை திருவடிகளால் உதைத்து ஒழித்து -சிறு குழந்தைகளை அணுகப் பண்ணும் பறவை வடிவும் கொண்டு
க்ருத்ரிமான தாய் வடிவம் கொண்டு வந்த பூதனை உயிர் விட்டு மாளும் படி
தாடகக் கை மாதர்-பொன் வளைகள் அணிந்த மாதர்கள்
வாய் அமுதுண்டது என் கொலோ -அதரத்தின் அமுதத்தை பருகினது –
உன்னையும் ஓக்கலையில் கொண்டு தமில் மருவி உன்னோடு தங்கள் கருத்தாயின செய்து வரும் கன்னியரும் மகிழ
என்றபடி இவனை இடுப்பில் எடுத்துக் கொண்டு
தங்கள் தங்கள் மனைகளுக்கு கொண்டு போக அவர்களின் வாய் அமுதத்தை உண்பான் –
பூதனை பக்கலில் உண்ட விஷத்துக்கு இந்த அமிர்தம் பரிகாரமோ என்கிறார் –

ஆடக்கை மாதர்வா யமுதமுண்டது என்கொல்?  =

“உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தமில்மருவி உன்னோடுதங்கள் கருத்தாயின செய்துவருங் கன்னியரும் மகிழ” என்றபடி

திருவாய்ப்பாடியிலுள்ள கன்னிகைகள் இவனை யிடுப்பில் எடுத்துக்கொண்டு தங்கள் தங்கள் மனைகளிலே கொண்டுபோக,

யௌவந தசையைப் பரிக்ரஹிந்து வித்தகனாய்க்கலந்து  அவர்களது வாயமுகத்தை உண்பன்; அதனைச் சொல்லுகிறார்.

ஆடகக்கை மாதர் என்றது- பொன்வளைகளாலே அலங்கரிக்கப்பட்ட கையையுடைய பெண்கள் என்றபடி.

(ஆடகம் என்ற காரணச்சொல் காரியத்திற்கு இலக்கணையால் வாசகமாயிற்று.)

கண்ணபிரான் பிடிக்கும் கையென்றும், கண்ணபிரான் அணைக்குங் கையென்றும் அலங்கரிப்பவர்களாம்.

வாயமுதமுண்டது என்கொல்! = பூதபக்கல் உண்ட விஷத்திற்கு இவ்வமுதம் பரிஹாரமோ? என்றவாறு

——————

காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம்
சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா –37-

பதவுரை

காய்ந்த

காய்கள் நிறைந்ததும்
நீள்

உயர்த்தியையுடையதுமான
விளங்கனி

(அஸுராவிஷ்டமான) விளாமரத்தின் கனிகளை
உதிர்த்து

உதிரச்செய்து (அவ்வசுரனைக் கொன்று)
எதிர்த்த பூ குருந்தம்

எதிரிட்ட வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனை இரு துண்டமாகப் பிளந்து
சாய்த்து

முடித்து
மா பிளந்த

குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனை இரு துண்டமாகப் பிளந்த
கைத் தலத்த

திருக்கைகளையுடைய
கண்ணன் என்பர்

கண்ணன் என்று (உன்னை அறிவுடையார்) சொல்லுவார்கள்.
ஆய்ச்சி பாலை

யசோதைப் பிராட்டியினுடைய முலைப்பாலை
உண்டு

அமுது செய்து
வெண்ணெய் உண்டு

நவநீதத்தை அமுத செய்து
பேய்ச்சிபாலை உண்டு

பூசதனையினுடைய முலைப்பாலை உண்டு
பின்

கல்ப்பத்தின் முடிவில்
மண்ணை

பூமியை
உண்டு

திருவயிற்றிலே வைத்து
பண்டு

கல்பத்தின் ஆதியிலே
ஓர் ஏனம் ஆய

ஒப்பற்ற வராஹருபியாய் அவதரித்த
வாமனா

வாமந மூர்த்தியே!

காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து –
காய்கள் நிறைந்தும் உயர்த்தியையும் உடைய -அசூர விசிஷ்டமான விளா மரத்தின்-
கனிகளை உதிரச் செய்து -அவனைக் கொண்டு
எதிர்ந்த பூங்குருந்தம் சாய்த்து-
எதிர்த்த அழகிய குருந்த மரத்தில் உள்ள அசுரனை முடித்து
மா பிளந்த –
குதிரை வடிவு கொண்டு வசந்த கேசி என்னும் அசுரனை இரண்டு துண்டாக பிளந்த
கைத்தலத்த கண்ணன் என்பரால்
திருக் கைகளை உடைய கண்ணன் என்று அறிவுடையார் சொல்லுவார்கள்
ஆய்ச்சி பாலை உண்டு –
யசோதைப் பிராட்டி உடைய முலையில் பால் உண்டு
மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின்-பேய்ச்சி பாலை உண்டு
பாலை உண்டு வெண்ணெய் உண்டு பின் மண்ணை உண்டு -கல்பத்தின் முடிவில் பூமியைத் திரு வயிற்றிலே வைத்து
பண்டு ஓர் ஏனமாய வாமனா –
கல்பத்தின் ஆதியிலே ஒப்பற்ற வராஹ ரூபமாகி -திருவவதரித்த வாமன மூர்த்தியே

—————————————————————–

கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஓர் பொய்கை வாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண தண் துழாய்
வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே –38-

பதவுரை

கடம் கலந்த

மதஜலத்தால் வ்யாப்தமான
வன் கரி

வலிய (குவலயாபீடமென்ற) யானையினுடைய
மருப்பு

கொம்பை
ஒசித்து

முறித்தெறிந்து
ஓர் பொய்கை வாய்

ஓர் மடுவின் துறையிலே
விடம் கலந்த பாம்பின் மேல்

விஷமனான காளியநாகத்தின் மேல்
நடம் பயின்ற

நர்ததனம் செய்தருளின

நாதனே! ஸ்வாமியே!

குடம் கலந்த கூத்தன் ஆய

குடக்கூத்தாடின
கொண்டல் வண்ண!

காளமேகம் போன்ற கண்ணபிரானே!
தண் துழாய் வடம் கலந்த மாலை மார்ப

குளிர்ந்த திருத்துழாய் வடத்தோடு கூடன மாலையை அணிந்த திருமார்பையுடையவனே!
காலநேமி காலனே!

காலநேமியென்னும் அசுரனுக்கு ம்ருத்யுவானவனே! (என்று ஈடுபடுகிறார்.)

கடம் கலந்த –
மத ஜலத்தால் வ்யாப்தமான
வன் கரி –
வலிய குவலையா பீடம் என்னும் யானையை
மருப்பு ஒசித்து-
கொம்பை முறித்து எறிந்து
ஓர் பொய்கை வாய்-
ஒரு மடுவின் துறையிலே
விடம் கலந்த பாம்பின் மேல் –
விஷ மயமான காளியன் நாகத்தின் மேலே
நடம் பயின்ற நாதனே-
நடனம் செய்து அருளின ஸ்வாமியே
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண-
குடக் கூத்தாடின கார் மேகம் போன்ற நிறம் உடைய கண்ண பிரானே

——————————————————————

வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே –39-

பதவுரை

வெற்பு எடுத்து

மந்தர பர்வதத்தைக்கொண்டு
வேலை நீர்

கடல் நீரை
கலக்கினாய்

கலங்கச் செய்தாய்
அது அன்றியும்

அதுவு மல்லாமல்
வெற்பு எடுத்து

மலைகளைக்கொண்டு
வேலை நீர்

(தெற்குக்) கடலிலே
வரம்பு கட்டி

திருவணையைக்கட்டி
வேலைசூழ்

கடலாலே (அகழாகச்) சூழப்பட்டதாயும்
வெற்பு எடுத்த இஞ்சி சூழ்

மலையான மதினாலே சூழப்பட்டதாயுமுள்ள
இலங்கை

லங்கையினுடைய
கட்டு

அரணை
அழித்த

அழியச் செய்த
நீ

தேவரீர்
வெற்பு எடுத்து

கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்து
மாரி காத்த

மழையைத் தடுத்த
மேகம் வண்ணன் அல்லையே

காளமேக நிபச்யாமரன்றோ!

வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் –
மந்திர பர்வதத்தைக் கொண்டு கடல் நீரைக் கலங்கச் செய்தாய்
அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி –
மலைகளைக் கொண்டு தெற்குக் கடலில் அணை கட்டினாய்
வேலை சூழ் வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ-
கடலாலே அழகாக சூழப் பட்ட -திரிகூட பர்வத மலையாலும் சூழப் பட்ட இலங்கையை -அரணை அழியச் செய்த தேவரீர்
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே-
கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்து மழையைக் காத்த காள மேக சியாமளன் தானே என்கிறார்

————-

ஆனை காத்து ஓர் ஆனை கொன்று அதன்றி ஆயர் பிள்ளையாய்
ஆனை மேய்த்தி ஆ நெய் உண்டியன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மை யரிக்கண் மாதரார் திறத்து முன்
ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –40-

பதவுரை

ஆனை காத்து

கஜேந்த்ராழ்வானைக் காத்தருளி
அது அன்றி

அவ்வளவேயல்லாமல்
ஆயர்பிள்ளை ஆய்

கோபாலகுமாரனாகி
ஓர் ஆனை கொன்று

குவலயாபீடமென்ற ஒரு யானையைக் கொன்று
ஆனை

பசுக்களை
மேய்த்தி

மேய்த்தருளா நின்றாய்;
ஆ நெய்

பசுக்களின் நெய்யை.
உண்டி

அமுது செய்யா நின்றாய்;
அன்று

இந்திரன் விடாமழை பெய்வித்தகாலத்தில்
குன்றம் ஒன்றினால்

கோவர்த்தநமென்ற ஒரு மலையைக் கொண்டு
ஆனைக் காட்டு

பசுக்களை ரக்ஷித்து
மை அரி கண் மாதரார் திறந்து

மையணிந்து செவ்வரி படர்ந்த கண்ணையுடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக
அன்று

அக்காலத்திலே
முன்சென்று

அவளெதிரே நின்று

ஆனை அடர்ந்த மாயம் எருதுகளேழையுங் கொன்ற ஆச்சரியம்

என்ன மரயம்

என்ன ஆச்சரியம்!

 

ஆனை காத்து ஓர் ஆனை கொன்று-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானைக் காத்து -குவலயா பீடம் என்ற யானையைக் கொன்று
அதன்றி ஆயர் பிள்ளையாய்-ஆனை மேய்த்தி –
பசுக்களை மேய்த்து அருளினாய்
ஆ நெய் உண்டியன்று குன்றம் ஒன்றினால் ஆனை காத்து-
பசுக்களின் நெய் அமுதத்தையும் உண்டு அருளினாய் –
இந்த்ரன் மழை பெய்வித்த அந்த காலத்தில் கோவர்த்தன மலை கொண்டு-பசுக்களைக் காத்து அருளினாய்
மை யரிக்கண் மாதரார் திறத்து முன் ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –
மை அணிந்து செவ்வரி படர்ந்த நப்பின்னை பிராட்டிக்காக –
அக்காலத்திலே அவள் எதிரிலே சென்று ஏழு எருதுகளையும் கொன்றது என்ன ஆச்சர்யம்
ஆ –ஆன் -இரண்டுமே பசுவுக்கு பெயர் –

இரண்டாமடியில், ஆனை= ஆன் ஐ;  ஆன்- பசு ஜாதி; ஐ- இரண்டாம் வேற்றுமையுருபு.

மேய்த்தி. உண்டி = முன்னிலையொருமை வினைமுற்றுக்கள்.

மூன்றாமடியில் “ஆனைக்காத்து” என்று ஸந்தியாகவேண்டுமிடத்து ‘ஆனைகாத்து’ என இயல்பாக நின்றது எதுகை நயம் நோக்கியென்க.

ஆ என்றும் ஆன் என்றும் நோக்களுக்குப் பெயர்.

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-1-20- -ஸ்ரீ உ வே -PBA -ஸ்வாமிகள்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

February 9, 2020

ஸ்ரீ திருக் கச்சி நம்பி அருளிச் செய்த தனியன்

தருச்சந்த பொழில் தழுவு தாரணியின் துயர் தீரத்
திருச்சந்த விருத்தம் செய் திரு மழிசைப் பரன் வருமூர்
கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கு மண நாறும்
திருச்சந்ததுடன் மருவு திருமழிசை வளம் பதியே –

தருச்சந்த பொழில் தழுவு தாரணியின் -விருக்ஷங்களினுடைய அழகை யுடைய சோலைகளாலே சூழப்பட்ட
பூமியில் உள்ளவர்களுடைய
துயர் தீர–துக்கம் தீரும் படியாக
திருச்சந்த விருத்தம் செய் திரு மழிசைப் பரன் வருமூர்-திருவவதரித்த திவ்ய தேசம் ஏது என்றால்
கருச்சந்தும் -பெருமை பொருந்திய சந்தன மரங்களும்
காரகிலும் -கறுத்த அகில் கட்டைகளும்
கமழ் கோங்கு –மணம் மிக்க கோங்கு மரங்களும்
மண நாறும்-பரிமளம் வீசப் பெற்றதாய்
திருச்சந்ததுடன் மருவு -பெரிய பிராட்டியார் அபி நிவேசத்துடன் பொருந்தி வாழப் பெற்றதான
திருமழிசை வளம் பதியே –செல்வம் மிக்க திவ்ய தேசம்

தாரணியின் துயர் தீர ..திருமழிசை வளம் பதியே
”கண்டியூர் அரங்கம் மெய்யம் கட்சி பேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே போல .
“பதியே பரவி தொழும் தொண்டர் தமக்கு கதியே போல
திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே
விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடம் –
சமன் கொள் வேங்கடமே -போலே திவ்ய தேசமே பரம ப்ராப்யம்

———-

திரு அவதார ஸ்தலம் பாடுகிறார் –

உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து தம்மில்
புலவர் புகழ்க் கோலால் தூக்க -உலகு தன்னை
வைத்து எடுத்த பக்கத்தும் மா நீர் மழிசையே
வைத்து எடுத்த பக்கம் வலிது

சர்வஞ்ஞராகிய சதுர் முகர் விஸ்வகர்மாவைக் கொண்டு துலாக்கோலால் நாட்டி
வசிஷ்டர் பார்க்கவர் போன்றோருக்கு எடுத்துக் காட்டிய விருத்தாந்தம் -புராண சித்தம் –
புலவர் -பார்க்கவாதி மஹரிஷிகளான மஹா கவிகள் -என்பர் ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்
புகழ்க்கோல்-பெருமையை விளக்கும் துலாக்கோல்
திருமழிசையின் அநந்ய அசாதாரணமான ஏற்றம் சொல்லிற்று ..மஹீஷா சார ஷேத்ரம்
ஜகன் நாதன் இறே அங்கே நித்ய வாஸம் பண்ணுகிறது –
சிந்தயேத் ஸ ஜகந்நாதம் விஷ்ணும் ஜிஷ்ணும் சநாதனம் -என்னக் கடவது இறே
அத்தாலே வைத்தெடுத்த பக்கம் வலிதாய்த்து

————-

எழுத்து அசை சீர் தளை அடி தொடை -இந்த ஆறு உறுப்புக்களையும் கொண்டு
வெண்பா -ஆசிரியப்பா -கலிப்பா -வஞ்சிப்பா -என்ற நான்கு பா இனங்களுக்கும்
துறை தாழிசை விருத்தம் -மூன்று இனங்கள் யாப்பு இலக்கணத்தில் உண்டு
இது எழு சீர்க் கழி நெடில் அடி ஆசிரிய விருத்தத்தில் அமைந்த திவ்ய பிரபந்தம்
ஓன்று முதல் ஆறு சீர்கள் மாச்சீர்கள் ஏழாவது விளாச் சீர்
தான தான தான தான தான தான தானனா –சந்தங்களில் அமைத்தது -சந்த விருத்தம் என்றும்
கவி விருத்தம் என்றும் சொல்வர் –

ஒரு பிறவியில் இரண்டு குலங்கள்-யது குலம் ஆய்க்குலம் கண்ணனைப் போலவே
ரிஷி குலம் பிரம்பு அறுத்த தாழ்ந்த குலம் இவரும்
சர்வேஸ்வரன் மயர்வற மதிநலம் அருளி சர்வத்தையும் காட்டிக் கொடுக்க நெடும் காலம் இவ்விபூதியிலே இருந்து
ஸ்ரீ மன் நாராயணனுடைய பரத்வத்தை பலவாறும் அருளிச் செய்த இடத்தும் சம்சாரிகள் திருந்தக் காணாமையாலே
அவனது பெருமையை வாய் வேறுவப்பெற்ற தமது பாக்யத்தை அவன் திரு அருளால் பெற்றதை பேசி அருளுகிறார் இதில்

————-

பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லீரே –1-

பூநிலாய ஐந்துமாய் -பூமியில் தங்கி இருக்கிற சப்தாதி -சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்கள்-ஐந்து குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
புனல் கண் நின்ற நான்குமாய்-நீரிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள்-நான்கு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
தீநிலாய மூன்றுமாய் -தேஜஸ்ஸிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப-மூன்று குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
சிறந்த கால் இரண்டுமாய்-சர்வ பிராணிகளுக்கும் ஜீவன ஹேது வாகையாலே ஸ்ரேஷ்டமான வாயுவில் உள்ள
சப்த ஸ்பர்சங்கள் இரண்டு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
மீநிலாய தொன்றுமாகி -ஆகாசத்தில் உள்ள சப்த குணம் ஒன்றுக்கும் நிர்வாஹகனாய்
வேறு வேறு தன்மையாய்-பரஸ்பரம் விலக்ஷணமான தேவாதி பதார்த்தங்களும் அந்தராத்மாவாய்
நீநிலாய வண்ண –கார்ய காரண வர்க்கத்தில் நிற்கும் பிரகாரத்தை உடையனாய்-நீ நிற்கிற படியையும்
நின்னை –சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமாய் நிற்கிற உன்னையும்
யார் நினைக்க வல்லீரே –ஸூவ ப்ராயத்தினால் யார் தான் சிந்தித்து அறியக் கடவர்

பூ நிலாய ஐந்து .”பிராக்ருத சிருஷ்டி அருளுகிறார் ..பூமிக்கு ஐந்து குணங்களும்(மணம் ரசம் , ரூபம் ,ஸ்பர்சம் சப்தம் )
புனல் =நீருக்கு நான்கும் ,தீ -தேஜஸ் மூன்றும் ,வாயு (சிறந்த கால் =சர்வ பிராணிகளுக்கும் ஜீவன ஹேது )இரண்டும்
ஆகாசத்துக்கு மீநிலாயது )ஒன்றும் -சப்தம் மட்டும் ..இப்படி பஞ்ச பூதங்களும் குணங்களும் அவன் இட்ட வழக்காக இருக்கும்
”வேறு வேறு தன்மையாய் நீர் நிலய வண்ணம் நின்னை “என்று விலஷணமாய் இருக்கும் யாவற்றுக்கும் ஆத்மாவாக இருக்கிற படியையும்
உன்னையும் “யார் நினைக்க வல்லார் யாராலே ஸ்வ பிரயத்தனத்தால் நினைக்க முடியும் என்கிறார்-

ஆகாசாத் வாயு -வாயோர் அக்னி -அக்நேர் ஆப -அத்ப்ய ப்ருத்வீ–தைத்ரியம்

ஆகாசத்தில் சப்தம் ஒன்றும்
காற்றில் -சப்தம் ஸ்பர்சம்
தீயில் -சப்தம் ஸ்பர்சம் ரூபம்
புனல் கண் -சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரசம்
பூமியில் -சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரசம் கந்தம்

ஆத்மாக்கள் ஞாத்ருத்வாதிகளால் ஒன்றாக இருந்தாலும் கர்மாதீனமாக தேவாதி உபாதிகள் இருப்பதால்
வேறு வேறு தன்மையாய் உண்டே

இது வேதாந்த பிரமாணம் கைப்படாத குத்ருஷ்டிகளுக்கோ -பேதாபேதிகளுக்கோ –மாயா வாதிகளுக்கோ நினைக்க ஒண்ணாதே
பரமாணுக்களே -உபாதான காரணம் -என்னும் வைசேஷிகர் நினைக்க வல்லர் அல்லர்
பிரதானமே -உபாதான காரணம் -என்னும் -சாங்க்யர் நினைக்க வல்லர் அல்லர்
நிமித்த உபாதனங்களுக்கு பேதம் சொல்லும் சைவர் நினைக்க வல்லர் அல்லர் –
சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயமும் பரஹம பரிணாமம் என்னும் பேத அபேத வாதிகள் நினைக்கவோ –
நிர்விசேஷ சிந் மாத்ரம் ப்ரஹ்மம் தத் வ்யதிகரங்கள் அபரமார்த்தங்கள் என்னும் மாயாவாதிகள் நினைக்கவோ –
வேதாந்த ப்ரேமேயம் கைப்பட்டார் ஒழிய ஆர் நினைக்க வல்லர்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் நினைக்க ஒண்ணாது -என்கிறார் –

அண்டங்களுக்குக் காரணமாய் குணங்களோடு கூடிய நிலம் நீர் தீ கால் விசும்பெனும் ஐம்பூதங்கட்கு அந்தராத்மாவாய்  நிற்கிற நீயே உபாதாந காரணம்;

இப்பரமார்த்தமானது வேதாந்தப்ரமேயம் கைப்படாத பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு நெஞ்சில்புக வழியில்லையென்கிறது, இப்பாட்டு,

இது எம்பெருமானை முன்னிலையாக்கிச் சொல்லும் பாரசுமாயிருத்தலால் விளி வருவித்துக் கொள்ளப்பட்டது.

இப்பாட்டின் முன் இரண்டரையடிகளால் பிராக்ருத ஸ்ருஷ்டி சொல்லப்படுகிறது,

ஸாதாரனமாய் ப்ருதிவிக்கு மனம் குணமென்றும்,

அப்புக்கு ரஸம்குணமெனறும்,

தேஜஸ்ஸுக்கு ரூபம் குணமென்றும்,

வாயுவுக்கு ஸ்பர்சம் குணமென்றும்,

ஆகாசத்திற்கு  சப்தம் குணமென்றும்

இங்ஙனே ஒவ்வொரு பூதத்திற்கு ஒவ்வொன்று குணமாகச் சொல்லப்பட்டிருந்தாலும், ‘

காரணவஸ்துவிலுள்ள குணங்கள் காரியத்தில் வந்து சேருகின்றன’ என்ற நியாயப்படி

பூமிக்கு ஐந்து குணங்களும்,

ஜலத்திற்கு நான்கு குணங்களும்,

தேஜஸ்ஸுக்கு மூன்று குணங்களும்,

வாயுவுக்கு இரண்டு குணங்களும் உண்டு.

கைத்திரீயோப நிஷத்தில்- “ஆகாசாத்வாயு; வாயோரக்நி; அக்நேராப: அத்ப்ய: ப்ருதீவீ,” என்று

ஆகாசத்தில் நின்றும் வாயுவும்,

வாயுவில் நின்றும், அக்நியும்,

அக்நியில் நின்றும் ஜலமும்,

ஜலத்தில் நின்றும் ப்ருதிவியும் உண்டாவதாக ஓதப்பட்டிருக்கின்றது.

ஆகாசத்தில் நின்றும் பிறக்கிற வாயுவானது தன் குணமாகிய ஸ்பர்சத்தோடு கூட ஸ்வ காரணமான ஆகாசத்தின் குணமாகிய சப்தத்தையும் உடைத்தானதாம்.

வாயுவின் நின்றும் பிறக்கிற அக்நியானது தன்குணமாகிய ரூபத்தோடு கூட ஸ்வகாரணமான வாயு வினிடத்துள்ள சப்தஸ்பர்சங்களையும் உடைத்தானதாம்.

அக்நியில் நின்றும் பிறக்கிற ஜலமானது தன்குணமாகிய ரஸத்தோடுகூட ஸ்வகாரணாமன அக்நியிடத்துள்ள சப்தஸ்பர்சரூபங்களையும் உடைத்தானதாம்.

ஜலத்தில் நின்றும் பிறக்கிறபூமியானது தன் குணமாகிய கந்தத்தோடுகூட ஸ்வகாரணமாக ஜலத்திலுள்ள சப்தஸ்பர்ரூபரஸங்களையும் உடைத்ததானதாம்.

ஆகவே, பூமியானது ஐந்து குணங்களை உடைத்தானதாகவும்,

ஜலமானது நான்கு குணங்களை உடையதாகவும்,

அக்நியானது மூன்று குணங்களையுடையதாகவும்,

வாயுவானது இரண்டு குணங்களையுடையதாகவும்,

ஆகாசமானது ஒரு குணத்தை உடையதாகவும் ஆயிற்று.

இந்த ப்ரக்ரியையைத் திருவுள்ளம் பற்றியே “பூநிலாயவைந்தும்” இத்யாதிகள் அருளிச்செய்யப்பட்டனவென்க.

இப்படி ஒரு பூதத்தில் நின்றும் மற்றொரு பூதமுண்டாவதாகச் சொல்லப்பட்ட ப்ரக்ரியை தவிர,

தந்மாத்ரத்தில் நின்றும் தந்மாத்ரம் பிறக்கை,

பூதத்தில் நின்றும் தந்மாத்ரம் பிறக்கை முதலிய ப்ரகாராந்தரங்களும் உண்டாயினும்,

அதுவுமன்றி, பஞ்சீகரண ப்ரக்ரியையாலே எல்லாப்பூதங்களிலும் எல்லாக் குணங்களுமே ஏற்றத்தாழ்வாக இருக்குமென்கிற கோட்பாடு முண்டாயினும்,

இங்கே *ஆகாசாத் வாயு:* என்று கீழே உதாஹரிக்கப்பட்ட ச்ருதிச் சாயையாலே அருளிச் செய்யப்பட்டிருக்கிறதென்றுணர்க.

இந்தப்ரக்ரியை ஸ்ரீவிஷ்ணு புராணத்திலும் (முதல் அம்சம், இரண்டாமத்தியாயம், ச்லோ 50.) ஸ்பஷ்டம்.

(1). பூமியில்- சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம்

(2) புனற்கண் -சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம்.

(3) தீயில்- சப்தம், ஸ்பர்சம், ரூபம்.

(4) காற்றில் – சப்தம், ஸ்பர்சம்.

(5) ஆகாயத்தில்- சப்த மொன்றே.

ஆக இப்பஞ்சபூதகுணங்கள் எம்பெருமானாயிருக்கையாவதென்? எனில்;

பஞ்சபூதங்கள் எப்படி எம்பெருமானிட்ட வழக்காயிருக்கின்றனவோ,

அப்படியே அவற்றின் குணங்களும் அவ்வெம்பெருமாளிட்ட வழக்காயிருக்கின்றனவென்றவாறு.

“வேறு வேறு தன்மையாய்” என்றது அண்டத்துக்கு உட்பட்டவையாய் ஒன்றுக்கொன்று விலக்ஷணங்களாயுள்ள தேவாதி பதார்த்தங்கட்கெல்லாம் ஆத்மாவாயிருக்கும்படியைச் சொல்லுகிறது.

ஆத்மாக்கள் அனைவரும் ஜ்ஞாத்ருத்வாதிகளாலே வேற்றுமையின்றி ஒரு படிப்பட்டிருந்தாலும் கர்மாதீநமாக வருகிற தேவத்வமநுஷ்யத்வாதிகளாகிற உபாதிகள் வெவ்வேறுபட்டனவாதல்பற்றி “வேறு வேறு தன்மையாய்” எனப்பட்டதென்ப.

ஆர் நினைக்கவல்லர்? என்றது- நினைக்கவல்லார் ஒருவருமில்லை யென்ற குறிப்பு.

பேதாபேதிகள் நினைக்கவோ?

நிர்விசேஷவஸ்துவ்யதிரிக்தங்கள் அபரமார்த்த மென்னும் மாயாவாதிகள் நினைக்கவோ? என்கிறார்.

—————

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞாநமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே –2-

“ஆறும் ஆறும் ஆறு மாய “..
முதல் ஆறு
அந்தணர்கள் ஆறு கர்மாக்களை —அத்யயனம் (தான் ஓதுதல் ),அத்யாபனம் (ஓதுவித்தல் )
யஜனம் தான் வேள்வி செய்தல் ),யஜனம் (பிறரை வேள்வி செய்வித்தல் ),தானம் (தான் கொடுப்பது )
ப்ரதிக்ரஹம் (பிறர் தருவதை வாங்கி கொள்ளுதல் ) இந்த கருமங்களுக்கு அவன் நிர்வாஹகன் .
முதல் ஆறு, வேதமோதல் முதலான தொழில்களைச் சொல்வது. படிப்பது, கற்பது, படிக்க வைப்பது, கற்பிப்பது,
கொடுப்பது, பெறுவது என்று ஆறு செயல்கள் சொல்லப்படுகின்றன

அடுத்து ருது ஆறு —
வசந்தம் ,க்ரீஷ்மம் ,வர்ஷ ,சரத் ,ஹேமந்தம் ,சிசிரம் –இந்த ருதுக்களும் அவன் பிரவர்தகன்.
அவை கார்; கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகியன.

அடுத்த ஆறு
யக்ஜம் –ஆக்ஞேயம் ,அக்நீஷோமீயம் ,வுபாம்சுயாஜம் ,ஐந்தரம் ,இரண்டு ஐந்த்ராஞ்ஞம் —
ஆக்னேயம் முதலிய யாகங்கள். வேதம் ஓதல், வேள்வி வளர்த்தல், திருப்பலி கொடுத்தல்,
தானம் செய்தல் போன்று யாகங்கள் செய்பவர்கள் அனுஷ்டிக்கத் தக்க ஆறு செயல்கள்.
இவற்றில் முதல் மூன்றும் பவுர்ணமியில் செய்யப்படும் யாகங்கள் -பவுர்ணமாஸம் என்றும்
அடுத்த மூன்றும் அமாவாசையில் செய்யப்படும் யாகங்கள் என்பதால் தர்சம் என்றும்
இவை ஆறும் ஸ்வர்க்க பலத்துக்காக செய்யப்படுவதால் தர்ச பவுர்ணமாஸம் என்று ஒரே பெயராகச் சொல்லப்படும்
இவனே சர்வ தேவதைகளுக்கும் சரீரியாய் இருந்து தானே சர்வ யஜ்ஞா போக்தாவாகிறான்

அடுத்து ஐந்து
யஜ்ஞம் தேவ ,பித்ரு ,பூத ,மனுஷ ,ப்ரஹ்ம –பஞ்ச மஹா யக்ஜம் அருளுகிறார்
பஞ்ச யஜ்ஞா போக்தாவும் இவனே

அடுத்த ஐந்து -பிராணன ,அபான ,வ்யான ,வுதான ,சமான .பஞ்ச ஆஹுதிகள் ..
இவை ஐந்தும் அந்தர்யாமியான இவனுக்கு ஆராதனம்
அடுத்த ஐந்து
பஞ்ச அக்னிகள் –கார்ஹா பதியம் ,ஆஹஅவநீயம் ,தஷினாக்னி ,சப்யம் ,ஆவசட்யம் …இவற்றை சரீரமாக கொண்டவன் .

ஏறு சீர் இரண்டுமாய்
மிக்க அதிசயத்தை வுடைய ஞானம் , விரக்தி இரண்டையும் தர வல்லவன் .
அவனை மட்டும் நோக்கும் ஞானமும் , கடை அற பாசங்கள் விடுகை யாகிய வ்ரக்தியும்
மால் பால் மணம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
கடையறப் பாசங்களைக் கை விட்டு
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
இவை இரண்டுமே முக்கியம் என்பதால் ஏறு சீர் -ஆகின்றன –

“மூன்றும் “-
கீழ் சொன்ன ஞான விரக்திகள் பயனாக பெரும்
பரபக்தி பரஞான ,பரம பக்தி –
அல்லது
ஐஸ்வர்ய ,கைவல்ய ,பகவத் ப்ராப்திகளையும் .

அடுத்து “ஏழும் ” என்று
விவேகாதிகள் ஏழையும் ..
விவேகம் (ஜாதி ஆஸ்ரய நிமித்த திஷ்ட தோஷங்கள் இல்லாத அன்ன சுத்தியால் உண்டாகும் காய சுத்தி )
விமோஹம் காமம் ,க்ரோதம் இல்லாமை ),
அப்யாசம்-(ஸூப ஆஸ்ரயமான வஸ்துவில் பலகாலம் பரிசீலனம் பண்ணுகை )
க்ரியை-(பஞ்சம மஹா யஜ்ஜாதிகளை -நித்ய நைமித்திக கர்ம அனுஷ்டானம் )
கல்யாணம் -( சத்யம் ஆர்ஜவம் தயை அஹிம்சை பிறர் அபசாரங்களில் கண் வையாமை போன்றவை )
அனவசடம் (சோக நிமித்தம் ,-மனசை மழுங்காது இருத்தல் )
அனுடர்ஷம் (சந்தோஷத்தால் தலை கால் தெரியாமல் பொங்காது இருக்கை )
எம்பெருமானை சிந்திக்க வேண்டிய மன தெளிவுக்கு இந்த விவேகாதி சப்தம் எல்லாம் தேவை –

அடுத்த ஆறும் –
ஞான பால ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் குணங்கள் இவற்றுக்கும் நிர்வாஹகன் அவன் ”

எட்டும் “ என்று –
அபஹத பாபமா -பாபம் சம்பந்தம் அற்றவன் -விஜரஹ -கிளத் தன்மை அற்று நித்ய யுவாவாய் இருப்பவன்
விமிருத்யு மரணம் அற்றவன் -விசோக-சோகம் அற்றவன் – விஜிகத்சக பசி அற்றவன் -அபி பாஷா தாகம் அற்றவன்
சத்ய காம சத்ய சங்கல்ப ,ஆகிய எட்டு குணங்களும் தம்மைத் தொழும் அடியார்க்குத் தர வல்லவன்
தம்மையே ஓக்க அருள் செய்யுமவன் அன்றோ

வேறு வேறு ஞானமாகி –
வணங்கும் துறைகள் பல பல வாக்கி -கள்ள வேடத்தைக் கொண்டு போய் புறம் புக்க வாறும் என்று
புத்த அவதாரமும் ஆனவனே

மெய்யினோடு பொய்யுமாய் –
மெய்யர்க்கு மெய்யனாகும் விதி இல்லா என்னைப் போலே பொய்யர்க்கே பொய்யனாகும் .
“புள் கொடி உடைய கோமான் போலே ஆஸ்திகர்களுக்கு தனது மெய்யான ரூபம் நாஸ்திகர்களுக்கு காட்டித் தராமலும்
முமுஷுக்களுக்கு அவனையே தந்து -மற்றவர்களுக்கு சூத்திர பலமும் தந்து ,தள்ளி நிற்பவன்

ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே நின்னை யார் நினைக்க வல்லரே –
ஸ்பர்சம் சப்தம் மற்றும் ரூபம் ரசம் கந்தம் ஐந்தையும் அவனாவது
உண்ணும் சோறும் பருகும் நீறும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -போலே ..
“கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐம்கருவி .கண்ட .இன்பம் எம்பெருமான் தானே
மெய்ப்பொருள் கண்டார்க்கு சர்வவித போக்யமும் அவனே
ஆயர் ஏறே மெய் பொருள் கண்டார்க்கு –ஆய- மாய மாயனே -நம்மிடையே வந்து -திவ்ய மங்கள விக்ரஹத்தை
சம்சாரி சஜாதீயமாக்கி வந்து பிறந்து அருளிய ஆச்சர்யம்

————

முன் இரண்டு அடிகளால் லீலா விபூதியையும் -அடுத்து நித்ய விபூதியையும் சொல்லி
தனக்கு நிர்ஹேதுக கிருபையைக் காட்டி அருளியதைச் சொல்கிறார்

ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி அல்லவற்றுள் ஆயமாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற வாதி தேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி யந்தரத்து யணைந்து நின்று
ஐந்தும் ஐந்துமாய நின்னை யாவர் காண வல்லரே —3-

பதவுரை

ஐந்தும்

ஆகாசாதி பூதங்கள் ஐந்தும்
ஐந்தும்

ஜ்ஞாநேந்திரியங்கள் ஐந்தும்
ஐந்தும்

கருமேந்திரியங்கள் ஐந்தும்
ஐந்தும்

தந்மாத்ரைகள் ஐந்தும்
மூன்றும்

ப்ரக்ருதி, மஹாந், அஹங்காரம் என்ற மூன்றும்
ஒன்றும்

மநஸ்ஸாகிய ஒன்றும்
ஆகி

(ஆக இப்படிப்பட்ட இருபத்தினாலு தத்துவங்கட்கு) நிர்வாஹகனாய்
அல்ல வற்றுளாயும் ஆய் நின்ற

கீழ்ச்சொல்லப்பட்ட அசித்துப் போலன்றியே சேதநராயுள்ளவர்கட்கும் அந்தர்யாமியாய் எழுந்தருளியிருக்கிற
ஆதிதேவனே!

முழு முதற்கடவுளே!
அந்தரத்து அணைந்து! நின்று

பரமபதத்திலே பொருந்தி நின்று
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி

அப்ராக்ருத பஞ்சசக்திகளுக்கும் ஜ்ஞாநேதிரியங்களைந்துக்கும், கருமேந்திரியங்களைந்துக்கும் நிர்வாஹகனாய்
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை

சப்தாதிபோக்யங்களைந்துமாய், போகஸ்தாகம், போகோபகரணம், வைகுந்தத்தமர் முனிவர் முக்தர் என்ற ஐந்து வகுப்புகட்கு நியாமகனுமா யெழுந்தருளியிருக்கிற உன்னை.
யாவர் காண வல்லர்

யார் அறியவல்லர்? (யாருமறியகில்லார்.)

ஐந்தும் ஐந்தும் ஐந்தும் –முதல் ஐந்து –பஞ்ச பூதங்கள்–அடுத்த ஐந்து –ஞான இந்திரியங்கள்
அடுத்த ஐந்து கர்ம இந்திரியங்கள் –
அல்ல வற்றுள் நின்று -இப்படிச் சொன்ன அசித் போன்று இல்லாமல் சித் எல்லா வற்றிலும்
அந்தர்யாமியாய் இருந்து நிர்வகிக்கும்
மூன்றும் ஒன்றும் ஆகி -பிரகிருதி -அவிபக்த தமஸ் -அக்ஷரம் போன்ற அவஸ்தைகளைக் கொண்ட பிரகிருதி –
அதில் இருந்து குண வைஷம்யம் அடியாக பிறக்கும் விகாரங்களான மஹானும்
அதில் நின்றும் பிறக்கிற அஹங்காரம் -ஆகிய மூன்றும் – மனசாகிய ஒன்றும்
ஐந்தும் -தன் மாத்ரைகள் ஐந்தும் ஆகி -இப்படி 24 தத்துவங்களுக்கும் நிர்வாஹகனாய் ஆகி
ஆதி தேவனாய் -முழு முதல் கடவுளாய்
அந்தரத்து அணைந்து நின்று -பரமபதத்தில் பொருந்தி இருந்து –
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி -அப்ராக்ருத பஞ்ச சக்திகளுக்கும் ஞான இந்திரியங்களுக்கும்
கர்ம இந்திரியங்களுக்கும் – நிர்வாஹகனாய்
ஐந்தும் -சப்தாதி போக்யங்கள் ஐந்துமாய்
ஐந்துமாய-போக ஸ்தானம் போக உப கரணங்கள் -வைகுந்தத்தது அமரரரும் முனிவரும் முக்தர் என்கிற ஐந்து வகுப்புக்களும் –
நியாமகனாய் எழுந்து அருளி இருக்கிற உன்னை யார் நினைக்க வல்லவர் என்கிறார்
லீலா விபூதி விசிஷ்டானாயும் நித்ய விபூதி விசிஷ்டானாயும் -திவ்ய மங்கள விக்ரஹத்தையும் நீ எழுந்து அருளி இருக்கும் இருப்பை
நிர்ஹேதுக கிருபையால் நீ காட்டி அருள நான் எளிதில் கண்டால் போலே காணக் கூடியவர்கள் யாரும் இல்லையே –

லீலாவிபூதி விசிஷ்டனாயும் நித்யவிபூதி விசிஷ்டனாயும் நீ எழுந்தருளியிருக்குமிருப்பை நிர்ஹேதுக க்ருபையாலே எனக்கு நீ காட்டியருள நான் எளிதிற்கண்டாப்போல் ஸ்வஸரமர்த்தியத்தாற் காணக்கூடியவர்கள் யாருமில்லை யென்கிறார்.

முன்னிரண்டடிகளால் லீலாவிபூதியோகமும், பின்னிரண்டடிகளால் நித்யவிபூதியோகமும் அருளிச்செய்யப்படுகின்றன.

முதலடியில், ஐந்தும்- ப்ருதிவி. அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் (நிலம் நீர் தீ கால்விசும்பு) என்ற பஞ்சபூதங்கள்.

ஐந்தும் = த்வக்கு, சக்ஷûஸ், ச்ரோத்ரம், ஜிஹ்வா, க்ராணம் (செவ் வாய் கண் மூக்கு உடல்) என்ற பஞ்சஜ்ஞாநேந்திரியங்கள்.

ஐந்தும்- வாக்கு’ பாணி, பரதம், பாயு, உபஸ்தம் (வாய்,கை, கால், குதம்,குறி)என்ற பஞ்சகர்மேந்திரியங்கள்.

இரண்டாமடியில், ஐந்தும் = சப்ததந்மாத்ரை, ஸ்பர்சதந்மாத்ரை,ரூபதந்தமாதரை, ரஸதந்மாத்ரை, கந்ததந்மாத்ரை என்னும் பஞ்சதந்மாத்ரைகள்.

மூன்றும் = அலிபக்ததமஸ்ளென்றும் அக்ஷரமென்றும் சில அவஸ்தைகளை யுடைந்தாயிருக்கிற ப்ரக்ருதி (1), அந்தப்ரக்ருதியில் நின்றும் குணவைஷம்யமடியாகப் பிறக்கிற விகாரங்களுள் முதலதான மஹாக் (2), அந்த மஹத்தத்வத்தில் நின்றும் பிறக்கிற அஹங்காரம் (3), ஆக மூன்று,

ஒன்று- மநஸ்ஸு. ஆக இருபத்தினாலு தத்துவங்கள் சொல்லப்பட்டன. (முதலடியில் பதினைந்து; இரண்டாமடியில் ஒன்பது, ஆக-24.)

ஆகிநின்ற என்ற ஸாமாநாதிகரண்யம்- இத் தத்துவங்களுக்கும் எம்பெருமானுக்குமுள்ள ஸம்பந்தங்களெல்லாவற்றையும் உளப்படுத்தியதாம்.

அல்லவற்றுளாயுமாய்- இப்படி இருபத்தினாலாக வகுக்கப்பட்ட ப்ரக்ருதியிலே ஸம்ஸ்ருஷ்டரான ஜீவாத்மாக்களுக்கு அந்தர்யாமியாய் என்றபடி,

அல்லாவை என்றால் ஜீவாத்மாக்களை எங்ஙனே குறிக்கும்படியென்னில்; அல்லவை என்பதற்கு ‘அப்படியாகாதவை’ என்று பொருள்.

ப்ரகரணாநுகுணமாக ‘அசித்தாகாதவை’ என்று பொருளாய் அசேக்நவ்யாவ்ருத்தரான சேதநர்களைக் குறிக்கிறபடி.

இனி பின்னடிகளில், திவ்யமங்களவிக்ரஹத்தையும் நித்யவிபூதியோகத்தையும் தமக்குக் காட்டித்தந்தருளினபடியை அருளிச்செய்கிறா.

(1) ஐந்தும் = *** ***  பஞ்சசக்திகளாவன – “*** ***  என்று சொல்லப்படுகிறவையாய் நித்யவிபூதியிலுள்ளவையான பஞ்சபூதங்கள். வாஸுதேவனுடைய திவ்யமங்களவிக்ரஹம் பஞ்ச சத்திமயமென்று வேதாந்த நூற்கொள்கை.

ஐந்தும், ஐந்தும், ஐந்தும் – அப்ராக்ருதங்களான ஜ்ஞாநேந்திரியங்கனைந்தும், கருமேந்திரியங்களைந்தும், சப்தாதி போக்யங்களைந்தும். ஐந்தும் = ***  நங்களென்ற வகுப்பு (1), ஜொஹொவதுரணங்களென்ற வகுப்பு (2), “வைகுந்தத்தமரரும் முனிவரும்” என்ற இரண்டு வகுப்புகள் (4), முக்தர் என்ற வகுப்பு (50)- ஆ க ஐந்து கோடிகள்.

அந்தரம் = ஆகாசம்; பரமாகாசமெனப்படுகிற பரமபதம்.

————

மூன்று முப்பத்தாறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
மூன்று மூர்த்தியாகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கமில் விளக்கமாய்
என் தன் ஆவியுள் புகுந்தது என் கொலோ வெம் மீசனே –4-

பதவுரை

மூன்று முப்பது

முப்பத்து மூன்று ஹல்லெழுத்துகட்கும்
ஆறினொரு ஒரு ஐந்தும் ஐந்தும்

பதினாறு அச்செழுத்துகட்கும்
ஐந்து

ளகாராதி பஞ்சாக்ஷரங்கட்கும்
ஆய்

நிர்வாஹகனாய்
மூன்று மூர்த்தி ஆகி

ருக்கு, யஜுஸ், ஸரமம் னஎ“கிற வேதத்ரய ஸ்வரூபியாய்
மூன்று மூன்று மூன்று மூன்றும் ஆய்

த்வாதசாக்ஷரீ ப்ரதி பாத்யனாய்
மூன்று தோன்று சோதி ஆய்

மூன்று ட்அஷரமாகிய ப்ரணவத்திலே விளங்கும் ஜ்யோதிரிமயனாய்
துளக்கம் இல் விளக்கம் ஆய்

என்று மழிவற்ற விளக்காகிய அகாரத்துக்கு வாச்யனாய்
எம் ஈசனே

எமக்கு நிருபாதிக சேஷியாயிருப்பவனே!
என்று

(என் காரியங்களையெல்லாம் நீயே உன் தலைச்சுமையாக) ஏறிட்டுக்கொண்டு
என் ஆவியுள்

என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே
புகுந்தது

புகுந்திருப்பது
என் கொல்?

என்ன நீர்மை!

மூன்று முப்பது –33 ஹல் எழ்த்து
ஆறினொடு ஒர் ஐந்தும் ஐந்தும் –16 அச்சு எழுத்துகள்–
ஐந்தும் – ளகராதி பஞ்சாட்ஷரம்
ஆய் –நிர்வாஹகானாய்
மூன்று மூர்த்தி ஆகி நின்று “-ரிக் ,யஜுர் ,சம வேத வேத திரைய ஸ்வரூபியாய்-
ப்ரதிபாத்யன்–ப்ரவர்த்திப்பித்தவன் என்றுமாம்

மூன்று மூன்று மூன்று மூன்றும் ஆய –த்வாதச அஷரீ பரதி பாத்யனாய் ..”ஒம் நமோ வாசுதேவாய “.

தோன்று சோதி மூன்றுமாய் ”-மூன்று தோன்று சோதியாய் என்று மூன்று அஷரம்-பிரணவம் -தோன்றும் ஜோதி ..’

துளக்கம் இல்லா விளக்கம் “-அழிவற்ற விளக்காக –
அ ” காரம் ..ஓம்காரத்தில் திகழ்கின்ற ஜோதி மயன் ஓம்கரோ பகவன் விஷ்ணு போல
சகலத்துக்கும் காரணம் தனக்கு காரணம் அற்றவன் ஆதலால்
துளக்கமில்லா விளக்கு என்றார் .

எம் ஈசனே “-எனக்கு நிருபாதிக சேஷியனவானே
என்று -எனது காரியங்களை நீயே உன் தலைச் சுமையாய் ஏறிட்டு கொண்டு .

என் ஆவியுள் புகுந்தது என் கொல் “.-என்ன நீர்மை வேதங்கள் மந்த்ர ரஹஸ்யங்களை தேவரீர் உண்டாக்கி வைத்தும் –
அவ்வழியாலே உபாசியாமல் இருக்க
தேவரீரே அடியேனுடைய அஞ்ஞான அசக்திகளைக் கண்டு அறிந்து நிர்ஹேதுகமாக ஹ்ருதயத்தில் எழுந்து அருளி
ஸ்வரூபத்தை சாஷாத்கரிப்பித்து என்னை இடைவிடாமல் அடிமையும் கொண்டு அருளி உபகரித்தமை என்ன நீர்மை –

வேதங்களையும் மந்த்ர ரஹஸ்யங்களையும் தேவரீர் உண்டாக்கி வைத்திருக்கச் செய்தேயும் அடியேன் அவ்வழியாலே அறிந்து உபாஸியாதே யிருக்க தேவரீரே அடியேனுயைட ஹ்ருதயத்தினுள்ளே புகுந்தெழுந்தருளியிருக்கிறவிது என்ன நீர்மை! என்று ஈடுபட்டுப் பேசும் பாசுரம், இது.

மூன்று மூர்த்தியாகி = ருக்கு, ஸாமம், யஜுஸ் என்று மூன்று உருக்கொண்ட வேதங்களுக்கு ப்ரதிபாத்யன் (அல்லது) ப்ரவர்த்தகன் என்றபடி,

மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் = நாலுமூன்றுகள் கூடியப் பன்னிரண்டாய், “ஓம் நமோ பகவதே வாஸுதேவாய’ என்கிற தவ்யாதசாக்ஷரியாலே ப்ரதிபாத்யன் என்றதாகிறது.

தோன்று சோதி மூன்றுமாய் = ‘மூன்று தோன்று சோதியாய்’ என்று மொழிமாற்றி இயைக்கவேணும்.

மூன்றிலே தோன்றுகிற சோதியாய் என்றபடி.

மூன்று என்கிறது- மூன்று திருவக்ஷரமான ப்ரணவத்தை.

இது ஸம்ஹிதாகாரத்தாலே ஏகாக்ஷரமாயிருந்தாலும் உட்பிரிவிலே அ, உ, ம் என மூன்று திருவக்ஷரமாய் மூன்று அர்த்தங்களைப் பிரதிபாதிக்கவற்றாயிருக்குமிறே.

இப்படிப்பட்ட ஓங்காரத்திலே திகழ்கின்ற ஜ்யோதிர்மயன் எம்பெருமானிறே.

“ஓங்காரோ பகவாந் விஷ்ணு.” என்றதும் காண்க.

துளக்கமில் விளக்கமாய் = அந்த ப்ரணவத்திலே ப்ரதமாக்ஷரமான அகாரத்தைத் “துளக்கமில்விளக்” கெள்கிறது.

ஸகல வேதங்கட்குக் காரணமான ப்ரணவத்துக்குங் காரணமாய், தனக்கொரு காரணமற்றிறே அகாரமிருப்பது.

ஆகையாய் துளக்கமற்ற விளக்குப் போன்றதாய்த்து.

ஆக இவ்வழியாலே நான் அறிந்து உபாஸிப்பதற்கு நீ விஷயமாக வேண்டியிருக்க,

அங்ஙனாகாதே நீயே எனது அஜ்ஞாக அசக்திகளைக் கண்டறிந்து இப்படிப்பட்ட உன் ஸ்வரூபத்தை

எனக்கு ஸாக்ஷாத்கரிப்பித்து என்னை இடைவிடாது அடிமைகொண்டனையே! என்கிற உருக்கம் ஈற்றடியில் தோற்றும்.

————

வேதங்களும் மந்திர ரஹஸ்யங்களும் இருக்க -யாவர் காண வல்லரே -என்று எம்பிரான் கேட்க
அந்தராத்மாவாகவும் ஜகத் காரணத்வத்தாலும் -சகல ஆதாரமாய் இருக்கும் ஸ்வ பாவத்தை –
சமுதாய ரூபமாக அறியலாமே தவிர
தேவரீர் எனக்கு காட்ட நான் அலகு அலகாக கண்டால் போலே ஒருவருக்கும் காண முடியாதே என்கிறார்-

நின்று இயங்கும் ஒன்றிலா உருக்கள் தோறும் ஆவியாய்
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னதென்று
என்றும் யார்க்கும் எண்ணிறந்த வாதியாய் நின்னுந்தி வாய்
அன்று நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே –-5-

பதவுரை

நின்று

ஸ்தாவரமாயும்
இயங்கும்

ஜங்கமமாயுமிருக்கிற
ஒன்று அலா ருக்கள் தோறும்

பலவகையான சரீரங்கள் தோறும்
ஆவி ஆய்

ஆத்மாவாய்
ஒன்றி

பொருந்தி
உள் கலந்து நின்ற

பரிஸமாப்ய வர்த்தியாநின்ற
நின்ன

உன்னுடைய
தன்மை

ஸ்வபாவம்
இன்னது என்று

இத்தகையதென்று
என்றும்

எக்காலத்திலும்
யார்க்கும்

எப்படிப்பட்ட ஞானிகட்கும்
எண் இறந்த

சிந்திக்க முடியாதிருக்கிற
ஆதியாய்

ஆதிகாரணபூதனனான எனம்பெருமானே! (நீ)
அன்று

முற்காலத்திலே
நின் உந்திவாய்

உனது திருநாபியில்
நான் முகன்

சதுர்முகப்ரஹ்மாவை
பயந்த

படைத்த
ஆதிதேவன் அல்லையே

முழு முதற் கடவுளல்லையோர்.

நின்று -ஸ்தாவரமாயும் -நிலை பேராமல் நிற்கும் மலை போன்றவை
இயங்கும் -அசையக் கூடிய பசு பக்ஷி யாதி ஜங்கமமாயும் இருக்கிற
ஒன்றிலா உருக்கள் தோறும் ஆவியாய்-பலவகை சரீரங்கள் தோறும் ஆத்மாவாய்
ஒன்றி -பொருந்தி
உள் கலந்து நின்ற நின்ன தன்மை -பரிசமாப்யா வர்த்தியா நின்ற உன்னுடைய ஸ்வ பாவம்
இன்னதென்று-இத்தகையது என்று
என்றும் -எக்காலத்திலும்
யார்க்கும் -எப்படிப்பட்ட ஞானியர்க்கும்
எண்ணிறந்த -சிந்திக்க முடியாது இருக்கிற
வாதியாய் நின்னுந்தி வாய்-ஆதி காரண பூதனான எம்பெருமானே நீ உனது திரு பாபியிலே
அன்று நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே -முற்காலத்தில் சதுர்முகனைப் படைத்த முழு முதல் கடவுள் அன்றோ

எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி “ஆழ்வீர்! நம்மை உள்ளபடி அறிவிக்கவற்றான வேதங்களும் மந்த்ரஹஸ்யங்களும் பலபல உண்டாயிருக்க ‘யாவர் காணவல்லரே’ என்பானேன்?” என்ன;

அந்தர்யாமித்வத்தாலும் ஜகதேக காரணத்வத்தாலும் ஸகலாதாரனாயிருக்கிற ஸ்வபாவத்தை

ஸ்தூலத்ருஷ்டியாலே ஸமுதாயருபே அறியில் அறியலாமத்தனையொழிய,

தேவரீர் காட்ட நான் அலகலகாகக் கண்டாற்போலே ஒருவர்க்குங் காண முடியாதென்கிறார்-

இதில் நின்று என்னு- நிலைபேராதே நிற்கும் மலை முதலிய ஸ்தாவர பதார்த்தங்களைச் சொல்லுகிறது;

இயங்கும் என்று- அசையக்கூடிய பசுபக்ஷ்யாதி ஜங்கம பதார்த்தங்களைச் சொல்லுகிறது;

இயங்கும் என்று- அசையக்கூடிய பசுபக்ஷ்யாதி ஜங்கம பதார்த்ங்களைச் சொல்லுகிறது.

ஒன்று அலா = ஒன்று அல்லாத என்றாய், பலபலவென்றபடி.

நின் உந்திவாய் இத்யாதி. தேவரதி ஸகலபதார்த்தங்களும் அழிந்து கிடந்த அக்காலத்தில் உன்னுடைய திருநாபிக் கமலத்திலே பிரமனைப் படைத்த ஜகதேக காரணனல்லையோ நீ

உந்திவாய் = வாய்- ஏழனுருபு. நான் முகன் + பயந்த, நான்முகற்பயந்த.

—————-

உலகத்தில் ஒன்றுக்கு ஓன்று தாரகமாய் இருக்கும் பொருள்களுக்கும் இவனே தாரகம் என்கிறார்
இத்தால் அரவணை மேல் பள்ளி கொண்ட பெருமானே என்று விளிக்கிறார் —

நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை
நாகம் ஏந்து மாகம் மாகம் ஏந்து வார் புனல்
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின் கணேயியன்றதே –6-

நாகம் ஏந்தும் ஆக–திரு அனந்தவாழ்வானாலே தரிக்கப் பட்ட திருமேனியை யுடைய எம்பெருமானே
நாகம் ஏந்து மேரு வெற்பை -ஸ்வர்க்க லோகத்தை தரிக்கிற மேரு பர்வதத்தையும்
தனது தேஜஸ்ஸாலேயே தரிக்கிறது என்பர்
நாகம் ஏந்து மண்ணினை–திருவனந்தாழ்வான்-அல்லது திக்கஜங்களால் தரிக்கப்பட்ட பூமியையும்
நாகம் -சர்ப்பத்துக்கும் யானைக்கும் –
மாகம்–பரம பதத்தையும்
மாகம் ஏந்து வார் புனல்–ஆகாசத்தால் தரிக்கப்பட்ட கங்கையையும்
மாகம் ஏந்து மங்குல் -ஆகாசத்தால் தரிக்கப்பட்ட மேக மண்டலத்தையும்
தீ ஓர் -ஓர் தீ -வைச்வானர அக்னியையும்
வாயு ஐந்து -பஞ்ச வ்ருத்தி பிராணங்களையும்
அமைந்து காத்து-பொருந்தி ரஷித்து அருளி
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை -எல்லாவற்றையும் ஒரு வஸ்துவே தரித்துக் கொண்டு நிற்கிறது என்று
உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டுள்ள ஸ்வ பாவம் –
நின் கணேயியன்றதே-உன்னிடத்தில் தான் இருக்கின்றது –

கைலவஸ்துக்களுக்கும் எம்பெருமான் அந்தர்யாமியாயிருந்து கொண்டு அனைத்துக்கும் ஆதாராமகிறான் என்னுமர்த்தம் கீழ்பாட்டிற் சொல்லப்பட்டது;

உலகத்தில் ஒன்றுக்கொன்று தாரகங்களாகத் தோற்றும் பதார்த்தங்கட்கும் இம்வெம்பெருமானே தாரகன் என்கிறது இப்பாட்டு.

இரண்டாமடியிலுள்ள “நாகமேந்துமாக!” என்பது ஸம்போதகம். அரவணைமேற் பள்ளிகொண்ட பெருமானை! என்று விளித்தபடி.

மேருபர்வதம் ஸ்வர்க்கத்தை எங்ஙனே தரிக்கிறதென்றால், தன் சிகரத்திலுள்ள தேஜ்ஸ்ஸின் வழியாலே என்பர்.

முதலடியின் முதலிலுள்ள நாகம்- நாசா” என்ற வடசொல்லிகாரம். ***- ***-  என்பது ச்ருதி.

அதற்கு மேல் நாகம்- நாஹா என்ற வடசொல் விகாரம். அந்த பதத்திற்கு ஸர்ப்பமென்றும், யானையென்றும் இரண்டு பொருள்களுண்டு . இரண்டு பொருளும் இங்கு ஏற்கும்.

பூமியானது ஆதிசேஷனாலும், திக்கஜங்களாலும் தாங்கப்படுவதால். இரண்டாவடியிலுள்ள நாகமும் – நாஹா என்ற வடசொல் விகரம் (“நாகமேந்துமாகன்” என்பதன் அண்மைவிளி.)

இரண்டாமடியில், மாகம் இரண்டும் ஹோவா என்ற வடசொல் விகாரம்.

முதல் மாகம்- பரமாகாசவாசகம்.

இரண்டாவது மாகம்- ப்ரஸித்தாகாசவாசகம்.

மூன்றாமடியிலுள்ள மாகமும்- ஹோவா. என்ற வடசொல் விகாரமே.

ஏகமேந்தி நின்ற நீர்மை- “***- ***- ” என்றிவை முலான வேதாந்த வாக்கியங்களில் ஓதப்பட்டுள்ள அர்த்தம் உன் பக்கலில்தான் பொருந்தியிரா நின்றதென்றபடி.

ஏகம்- வன்கம்.

நின் கண்= கண்- எழலுருபு.

——————–

ஓன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்
ஓன்று இரண்டு காலமாகி வேலை ஞாலமாயினாய்
ஓன்று இரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே
ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே –7-

பதவுரை

ஒன்று இணர்டு மூர்த்தி ஆய்

ப்ரதாநமான ஒரு மூர்த்தியும் அப்ரதாநமான இரண்டு மூர்த்தியுமாய்
உறக்கமோடு உணர்ச்சி ஆய்

அஜ்ஞாநத்துக்கும் ஸத்ஜ்ஞானத்துக்கும் நியாமகனாய்
ஒன்று இரண்டு காலம் ஆகி

மூன்று காலங்களுக்கும் நிர்வாஹனாய்
வேலை ஞாம் ஆயினாய்

கடல்சூழ்ந்த பூமண்டலத்துக்கு ப்ரவத்தகனாய்
ஒன்று இரண்டு தீயும் ஆகி

மூன்று அக்நிகளுக்கும் நிர்வாஹனாய்
ஆயன் ஆய

கோபாலஸஜாதீயனாய் அவதரித்த
மாயனே!

ஆச்சர்யபூதனான எம்பெருமானே!
ஒன்று இரண்டு கண்ணினாலும்

முக்கண்ணனான சிவபிரானும்
உன்னை

உன்னை
ஏந்த வல்லனே

துதிக்க வல்லவனே!

ஓன்று இரண்டு மூர்த்தியாய் –பிரம்மா ருத்ரன் இவர்களை சரீரமாகக் கொண்டு அவர்களுக்கும் நிர்வாஹகன் –
முனியே நான் முகனே முக்கண் அப்பா போலே
ஓன்று பிரதானம் -இரண்டு அப்ரதானம்

உறக்கமோடு உணர்ச்சியாய்-அஞ்ஞானத்துக்கும் ஞானத்துக்கும் நியாமகனாய்
உறக்கம் -என்றது அஜ்ஞ்ஞானத்தை –
அஜ்ஞ்ஞானம் அன்யதா ஜ்ஞானம் விபரீத ஜ்ஞானம் சம்சயம் மறப்பு எல்லாம் -உறக்கம் தானே –
ஸ்வரூப யாதாம்யத்தை சிலருக்கு உள்ளபடி சாஷாத் கரிக்கச் செய்பவனும்
திரிமூர்த்தி சாம்யம் வ்யாமோஹாதிகளாலே சிலரை மயங்கச் செய்பவனும் இவனே

ஓன்று இரண்டு காலமாகி-இறந்த நிகழ் எதிர் காலங்கள் -முக்காலங்களுக்கும் நிர்வாகனாய் -சாதாரண அர்த்தம் –
சாத்விக ரஜஸ் தமஸ் காலங்களுக்கும் கடவன் என்றபடி

வேலை ஞாலமாயினாய் –கடல் சூழ்ந்த பூ மண்டலத்துக்கு ப்ரவர்த்தனாகி

ஓன்று இரண்டு தீயுமாகி –ஆஹவநீயம் -கார்த்தபத்யம் தஷிணாக்னி என்ற மூன்று அக்னிகளுக்கும் நிர்வாஹகன் .

ஆயனாய-கோபால சஜாதீயனாய் திருவவதரித்த

ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே –
ருத்ரனும் துதிக்க வல்லவன் அல்லன் என்கிறார் –

ப்ரஹ்ருத்ராதிகளைச் சரீரமாகக்கொண்டு அவர்களுக்கு நியாமகனாய் என்கிறது முதலடைமொழி.

முனியே நான்முகனே முக்கண்ணப்பா” இத்யாதிகளிற்போல இங்கும் ஸாமாநாதிகரண்யம் சரீர சரீர பாவத்தைப் பற்றியதாம்.

உறக்கமோடு உணர்ச்சியாய்= இலக்கணையால் அஜ்ஞானத்தை உறக்கமென்கிறது.

ஞானமற்றவனுக்கு உறக்கம் தவிர வேறு தொழிலிலாமை அறியத்தக்கது.

அஜ்ஞாகம், அந்யதாஜ்ஞாநம், விபரீதஜ்ஞாகம், ஸம்சயம், மறப்பு இவையெல்லாம் உறக்கமேயாம்.

உறக்கத்துக்கும் உணர்ச்சிக்கும் எம் பெருமான் நிர்வாஹகனாகையாவ தென்னென்னில்;

தன் ஸ்வரூப யாதாத்மியத்தைச் சிலர்க்கு உள்ளபடி ஸக்ஷாத்கரிக்கச் செய்பவனும் தானே; த்

ரிமூர்த்திஸாம்ய வ்யாமேஹாதிகளாலே சிலரை மயங்குபவனும்தானே என்கை.

ஒன்றிரண்டு காலமாகி = இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்  என்று மூன்று காலங்களுக்கும் நிர்வாஹகன் என்பது ஸாமாந்யமான அர்த்தம்.

ஸத்வகுணம் மிகும்படியான ஸாத்விககாலத்துக்கும்,

ரஜோகுணம் மிகும்படியான ராஜஸ காலத்துக்கும்,

தமோகுணம் மிகும்படியான தாமஸகாலத்துக்கும் கடவன் என்கை விசேஷார்த்தம்.

—————–

ருத்ரனுக்கு மட்டும் இல்லை -உபய விபூதியில் உள்ளார் அனைவருக்கும் முடியாது என்கிறார்

ஆதியான வானவர்க்கும் அண்டமாய வப்புறத்து
ஆதியான வானவர்க்கும் ஆதியான வாதி நீ
ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி
ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே –8-

பதவுரை

ஆதி ஆன கால

ஆதிகாலத்துக்கு நிர்வாஹகனானவனே!.
ஆதி ஆன

ஜக்த்ஸ்ருஷ்டி முதலினவற்றுக்குக் கர்த்தாக்களான
வானவர்க்கும்

(பிரமன் முதலிய) தேவதைகட்கும்.
அண்டம் ஆய அப்புறத்து ஆகி ஆன வானவர்க்கும்

அண்டமென்று பெயர் பெற்ற அப்பரமபதத்திலுள்ள ப்ரதாநகர்களான நித்யஸூரிகளுக்கும்
ஆதி ஆன

நிர்வாஹகனான
ஆதி

அதிபதி
நீ

நீயாகிறாய்;
ஆதி ஆன

ஜகத்துக்குக் கடவர்களாக ஏற்பட்டிருக்கிற
வானம் வாணர்

(பிரமன் முதலிய) மேலுலகத்தவர்களினுடைய
அந்த காலம்

முடிவு காலத்தை
நீ உரைத்தி

நீ அருளிச்செய்ய நின்றாய்.
ஆதி காலம ஆன நின்னை

ஆதிகாலத்துக்கு நிர்வாஹகனான உன்னை.
யாவர் காணவல்லர்

பரிச்சேதிக்க வல்லார் யார்?

ஆதியான வானவர்க்கும் –
பிரம்ம -தஷ பிரஜாபதிகள்- சப்த ரிஷிகள்- த்வாசதச ஆதித்யர்கள் -சிருஷ்டி கர்த்தாக்கள் -இந்த்ரன் -சதுர்தச மனுக்கள்-
ஸ்திதி கர்த்தாக்கள் -ருத்ரன் -அக்னி- எமன் இவர்கள் போன்ற சம்ஹார கர்த்தாக்கள் போன்றறோரை இத்தால் சொல்லிற்று .

அண்டமாய வப்புறத்து ஆதியான வானவர்க்கும் –
நித்ய ஸூரிகளுக்கும்

ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி-
ஜகத்துக்கு கடவர்களாக ஏற்படுத்தி இருக்கும் மேல் உலகத்தவரின் முடிவு காலத்தை நீ அருளிச் செய்கிறாய்

ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே
ஆதி காலம் ஆன நின்னை என்று மாற்றி ஆதி காலத்துக்கு நிர்வாஹகனான உன்னை யாவர் காண வல்லரே –என்கிறார்-

உபயவிபூதியிலுமுள்ள ஸகல பதார்த்தங்களினுடையவும் ஸத்தாதிகள் தானிட்ட வழக்காகப்பெற்ற உன்னை ருத்ரன் ஒருவனையோ பரிச்சேதிக்கமாட்டான்? உபயவிபூதியிலும் பரிசேதிக்க வல்லர் இல்லையென்கிறார்.

ப்ரஹ்மா, தக்ஷப்ரஜாபதிகள், ஸப்தரிஷிகள், ஆதித்யர்கள் ஆகிய இவர்கள் ஸ்ருஷ்டி கர்த்தாக்கள்; இந்திரன், சதுர்த்தச மநுக்கள் ஆகிற இவர்கள் ஸ்திதிகர்த்தாக்கள்; ருத்ரன், அக்நி, யமன் முதலானவிவர்கள் ஸம்ஹாரகர்த்தாக்கள், ஆகிய இவர்களைச் சொல்லுகிறது- முதலடியில்

“ஆதியானவானவர்” என்று. ‘அண்டமாயவப்புறத்தாதி யானவானவர்’- நித்யஸூரிகள்.

“அண்டமாள்வதாணை” “அண்டம்போ யாட்சி அவர்க்கதறிந்தோமே” இத்யாதிகளில் அண்ட சப்தம் பரமபதவாசகமாக வருதல் காண்க.

இவ்விடத்துப் பெரியவாச்சர்ன்பிள்ளை வியாக்கியானத்தில் “அண்டசப்தவாச்யமான “லீலாபூதிக்கு அப்புறத்தில் அண்ட சப்தவாச்யமான பரமபதத்தில் வர்த்திக்கிற” என்பது சுத்தபாடம்.

ஜகத்துக்கு நிர்வாஹமான காலதத்துவமும் அவம்பெருமாளிட்ட வழக்கென்கிறது- மூன்றாமடி.

எம்பெருமான் ப்ரவர்த்திப்பித்த சாஸ்த்ரங்களிலே ***-***- இத்யாதிகளாலே ப்ரஹ்மாதி தேவர்களுக்கு அவஸாநகாலம் கூறப்பட்டிருந்தலால் “அந்தகாலம் நீயுரைத்தி” எனப்பட்டது.

அந்த காலம் = *** என்ற வடசொல் விகாரம். ப்ரஹ்மாதிகளுடைய ஆயுஸ்ஸுக்கு ஓர் எல்லை ஏற்பட்டிருப்பதாலும் எம்பெருமானுக்கு அது இல்லாமையாலும் இவனே முழுமுதற் கடவுள் என்பது ஸ்பஷ்டம்.

ஆதி ஆன காலம்நின்னை = ஆதி காலம் ஆன நின்னை என மாற்றியுரைக்கப்பட்டது;-

கார்யரூபமான ஜகத்துக்களெல்லாம் லயமடைந்து போனவளவிலே ***- என்றபடி ஆதிகாலத்துக்கு நிர்வாஹகனாயிருந்த உன்னை என்றவாறு.

————

தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –9-

பதவுரை

தாது உலாவு

தாதுகள் உலாவுகின்ற
கொன்றை மாலை

கொன்னைப்பூ மாலையையும்
துன்னு செம் சடை

நெருங்கிய சிவந்த சடையையுடைய
சிவன்

ருத்ரன்
நீதியால்

முறைமைப்படி
வணங்கு

வணங்கப்பெற்ற
பாத

திருவடிகளையுடையவனே!
நின்மலா!

நிர்மலஸ்வரூபியே!
நிலாய சீர்வேதம் வாணர்

நிரம்பிய குணங்களையுடைய வைதிகர்களென்ன
கீதம்

வேள்வியார்

ஸாமகானம் மிகுந்த யஜ்ஞயாகங்களை நடத்துமவர்களென்ன

நீதி ஆன கேள்வி யார்

சிரமப்படி ச்ரவண மநநங்களை ச் செய்கிற மஹான்களென்ன (இவர்கள்)
நீதியால்

சாஸ்த்ரவிதிப்படி
வணங்கு நின்ற நீர்மை

வணங்குகைக்கு உரிய தன்மை.
நின் கண்ணே நின்றது

உன் பக்கலில்தான் உள்ளது.

தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
பிரயோஜனாந்தரர்களில் முதல்வரான சிவனும்

நீதியால் வணங்கு பாத நின்மலா–
அநந்ய பிரயோஜனரான வைதிக உம்பர்களும் உன்னையே ஆஸ்ரயிக்கிறார்கள்
நீயே சர்வ சமாஸ்ரயணீயன் என்கிறார்

நிலாய சீர் வேத வாணர்–
நிரம்பிய கல்யாண குணங்கள் உடைய வைதிகர்கள்

கீத வேள்வியார் –
சாம வேத ஞானம் உடையவர் முகுந்த யாக யஜ்ஞங்கள் நடத்துபவர்கள் .

நீதியான கேள்வியார்-
க்ரமப்படி ஸ்ரவண மனனநாதிகளை செய்பவர்கள் –

ப்ரயோஜநாந்தரபார்களில் முதல்வனான சிவனும் அநந்யப்ரயோஜநரான வைதிகோத்தமர்களும் உன்னையே ஆச்ரயிக்கக் காண்கையாலே நீயே ஸர்வ ஸாச்ரயணீயன் என்கிறார்.

—————-

காரணந்து த்யேயா -காரண வஸ்துவே உபாஸ்யம் என்கிறார் இதில்

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –10-

பதவுரை

தன்னுள்ளே திரைத்து

தன்னிலே கிளர்ந்து
எழும்

பரவுகின்ற
தரங்கம்

அலைகளையுடைத்தாய்
வெண்தடம்

வெளுத்த ப்ரதேசங்களையுடைத்தான
கடல்

கடலானது
தன்னுள்ளே  திரைத்து எழுந்து

தனக்குள்ளே கிளர்துலாவி
அடங்குகின்ற தன்மைபோல்

(மறுபடியும்) சாந்தமாவதுபோல.
நிற்பவும்

ஸ்தாவரஜங்கமரூபமான ப்ரபஞ்சமெல்லாம்
நின்னுள்ளே

உன் ஸ்வரூபத்துக்குள்ளே
பிறந்து

உத்பந்தமாய்
இறந்து

லாபமடைந்து
நின்னுள்ளே அடக்குகின்ற நீர்மை

(இப்படி) உன் ஸ்வரூபத்துக்குள்ளேயே ஒடுங்கிப்பொருகைக்கு உரிய தன்மை
நின் கண்ணே நின்றது

உன் பக்கலில் தான் உள்ளது.

தன்னுளே திரைத்து எழும்-
பகவத் சங்கல்பத்தால் தோன்றி உள்ளதும் பின்பு அழிவதும் அவனது ஸ்வரூபத்தில் பிறந்து லயிப்பது
கடலில் அலைகள் தோன்றி அழிவது போலேவே
தரங்கம் -அலைகள்-

நிற்பவும் திரியவும்–
நிற்பனவும் திரிவனவும் -ஸ்தாவர ஜங்கம ரூபமான பிரபஞ்சம் எல்லாம்

நின்னுளே பிறந்து இறந்து-உன் ஸ்வரூபத்துக்கு உள்ளே உத்பன்னமாய் லயம் அடைந்து
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே-உன் ஸ்வரூபத்துக்கு உள்ளே
ஒடுங்கிப் போக உரிய தன்மை உன் பக்கத்திலே தான் உள்ளது –

அதர்வசிகையிலே “*** “  – என்று ஓதப்பட்டிருக்கிறது. ‘

ஜகத்துக்கு எது உபாதாநகாரண்மோ அதுதான் உபாஸ்யம்’ என்பது அந்த ச்ருதிவாக்யத்தின் பொருள்.

அப்படி உபாதாக காரணத்வ ப்ரயுக்தமான ஆச்ரயணியத்துவமும் எம்பெருமானிடத்தே யுள்ளது என்கிறது இப்பாட்டு.

அலையெறிவு ஓய்ந்துகிடந்த கடலானது வாயுஸஞ்சாரத்தாலே எங்கும் அலையெறியப்பெற்று,

மீண்டும் காற்று ஓய்ந்தவாறே அவ்வலையெறிவு அடங்கி, கடலானது சாந்தமாவதுபோல- என்பது முன்னடிகளின் கருத்து.

பின்னாடிகளிற் கூறப்படும் அம்சத்திற்கு இது த்ருஷ்டாந்தம்.

தார்ஷ்டாந்திகத்தில் வாயுவின் ஸ்தானத்திலோ பகவத் ஸங்கல்பத்தைக்கொள்க.

ஸங்கல்பமில்லாதபோது பகவத்ஸ்வரூபம் சாந்தமாயிருக்கும்.

***- என்றாற்போன்ற ஸங்கல்பம் உண்டானவாறே ஸ்தாவர ஜங்கமாத்மகமான ப்ரபஞ்சங்கள் தோன்றுதலும்

பின்பு அழிதலுமான அவஸ்தைகளையடைந்து கடைசியாக

***- என்றபடி எம்பெருமானளவிலே உயஸம்ஹ்ருதங்களாய்ப் போகிறபடியை சொல்லுகிறது.

நிற்பவும் திரிபவும்- நிற்பனவும் திரிபனவு மென்றபடி.

—————

பிரஜாபதி பசுபதிகள் இவனுக்கு புத்ரராகவும் பரனாகவும் சுருதி சொல்லுமே –
ஸ்ருஜ்யர்-அஞ்ஞர்-ஆஸ்ரயணீயர் ஆக மாட்டார்களே

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –11-

பதவுரை

சொல்லினால்

வேதாந்த சாஸ்த்ர முகத்தாலே
தொடர்ச்சி நீ

(ஏகாந்திகளுக்கு) உறவை உண்டு பண்ணுமவன் நீ;
சொலப்படும் பொருளும் நீ

(சில புராணாதிகளில் ஆச்ரயணீயராகச்) சொல்லப்படுகிற தேவாதி பதார்த்தங்களுக்கு அந்ராத்மா நீ;
சொல்லரினால் சொல்லப்படாது தோன்றுகின்ற சோதி நீ சொல்லினால்

நீ காட்டிக்கொடுத்த வேதத்திற் சொல்லியபடி
படைக்க

(உலகங்களை) உண்டாக்குவதற்காக
நீ படைக்க வந்து தோன்றினார்

உன்னாலே ஸ்ருஷ்டிக்கப்பட்டு வந்து பிறந்தவர்களான ப்ரஹ்மாதிகன்
சொல்லினால்

சப்தங்களைக் கொண்டு
சுருங்க

சுருக்கமாவாவது
நின் குணங்கள்

உனது கல்யாண குணங்களை
சொல்லவல்லரே.

வர்ணிக்க சக்தர்களோ? (அல்லர்.)

சொல்லினால் –
வேதாந்த சாஸ்திர முகத்தால்

தொடர்ச்சி நீ-
ஏகாந்திகளுக்கு .உறவை உண்டுபவன் நீ

சொலப்படும் பொருளும் நீ-
சில புராணங்களில் சொல்லப் படும் தேவாதி அனைத்துக்கும் அந்தர்யாமி நீயே .

சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ-
வேதத்தால் சொல்ல முடியாது என்று தோன்றுகின்ற தேஜஸ் சப்த வாக்யனும் நீயே .

சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்-
நீயே காட்டிக் கொடுத்த வேதத்தில் சொல்லிய படியே உலகத்தை உண்டாக்கிய உன்னாலேயே சிருஷ்டிக்கப் பட்டு
வந்து பிறந்த பிரம்மா முதலானோர்

சொல்லினால் –
சப்தங்களைக் கொண்டு

சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –
சுருக்கமாக வாவது -உனது கல்யாண குணங்களை வர்ணிக்க சக்தர்களோ

***- ப்ரஹ்ருத்ராதிகள் ஆச்ரயணீரல்லர்களென்றும் எம்பெருமானொருவனே ஆச்ரயணீயனென்றும் சொல்லிவிடலாமோ?

வேதங்களில் ***-***- இத்யாதிகளான சில வாக்கியங்கள் சிலபாரம்யத்தையும்

***- இத்யாதிகளான சில வாக்யங்கள் ப்ரஜாபதி பாரம்யத்தையும் சொல்லிக்கிடக்கின்றனவே;

அவர்கள்- ஆச்ரயணீயராகத் தடையென்ன? என்று சிலர்க்கு சங்கையுண்டாக

அந்த ப்ரஜாபதி பசுபதிகள் எம்பெருமானுக்குப் புத்ரபௌத்தர்களான வேதங்கள் முறையிடா நிற்பதுந் தவிர,

அவர்கள் எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை விரிவாகப் பேசமாட்டாமையன்றிக்கே

சுருக்கமாகவும் பேசமுடியாதவர்களென்று ப்ரமாண ப்ரஸித்தமாயிருக்க,

இப்படி ஸ்ருஜ்யர்களாகவும் அஜ்ஞர்களாயுமுள்ள அவர்கள் ஆச்ரயணீயராகைக்கு ப்ரஸக்தியேயில்லை யென்றாயிற்று.

————–

உலகு தன்னை நீ படைத்தி யுள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகு தன்னுளே பிறத்தி ஓர் இடத்தை அல்லை ஆல்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகு நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே –12-

பதவுரை

உலகு தன்னை

லோகங்களை
நீ படைத்தி

நீ ஸ்ருஷ்டியாகின்றாய்;
உள் ஒடுக்கி வைத்தி

(நித்யஸநமித்திகாதி ப்ரளயாபத்துக்களிலே அவ்வுலகங்களைத்) திருவயிற்றினுள்ளே ஒடுங்கவைத்து நீயே நோக்கா நின்றாய்.
மீண்டு

அதுமன்றியில்
உலகு தன்னே

இவ்வுலகத்தினுள்ளே
பிறத்தி

வந்து அவதரியா நின்றாய்;
ஓர் இடத்தை அல்லை

ஓரிடத்தை இருப்பிடமாகவுடையை என்று நிர்ணயிக்க முடியாதவனாயிரா நின்றாய்;
உலகு

ப்ரபஞ்சம் முழுதும்
நின்னொடு ஒன்றி நிற்க

(சரீரியான) உன்னோடு (சரீரமாய்) அணைந்து நிற்க
வேறு நிற்றி

அஸாதாரண விக்ரஹகத்தோடு கூடி வ்யாவ்ருத்தனாயிரா நின்றாய்;

ஆதலால்:

உலகில்

லோகத்திலே
குழல் உள்ள நின்னை

ஆச்சரியமான படிகளையுடைய உன்னை
யாவலர் உள்ள வல்லவர்

அறியவல்லாரார்?

 

உலகு தன்னை நீ படைத்தி-
ஜகத் காரண பூதனாய் நின்று நோக்கும் அளவே அன்று
வேறு நிற்றி -அசாதாரண விக்ரஹத்தோடு கூடி வந்து திருவவதரித்து நோக்குகின்ற உன் படிகளை
சூழல் உள்ள நின்னை-ஆச்சர்யமான படிகளை உடைய உன்னை
அறிய வல்லார் யாரும் இல்லை என்கிறார்-

ஜகத்காரணபூதனாய்நின்று நோக்குமளவே யன்றிக்கே அஸாதாரண விக்ரஹத் தோடுங் குடிவந்தவதரித்து நோக்குகின்ற உன்படிகளை அறியவல்லார் ஆருமில்லை யென்கிறார்.

நான்காமடியை, சூழல் உள்ள நின்னை  உலகில் யாவருள்ளவல்லர்” என மாற்றி அந்வயித்துக்கொள்க.

ஆச்சர்யமான படிகளையுடைய உன்னை லௌகிக புருஷர்களில் அறியவல்லார் ஆருமில்லை யென்க.

இனி, நின்னை என்பதற்கு ‘உன்னிடத்திலே’ என்று பொருள்கொண்டு உன்னிடத்திலே உள்ள சூழலை ஆர் அறியவல்லார்? என்னவுமாம்.

படைத்தி-, வைத்தி, பிறத்தி, நிற்றி= இவை முன்னிலை யொருமை வினை முற்றுக்கள்.

—————-

இன்னை என்று சொல்லலாவது இல்லை யாதும் இட்டிடைப்
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு பேருமூரும் ஆதியும்
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே –13-

பதவுரை

இன்னை என்று

‘நீ இப்படிப்பட்டவன்’ என்று
சொல்லலாவது

சொல்லக்கூடியது
யாதும் இல்லை

ஒரு படியுமில்லை;
உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்

உன்னுடைய அவதாராதி விஷயங்களில் ஆச்ரிதர்க்கும் அநாச்சரிதர்க்கு முள்ள விவாதத்தை அறிந்திருக்கும் மஹான்கள் (உன்னை)
ஆதியும்

(விக்ரக்ஷபரிக்ரக்ஷம் பண்ணினதற்குக்கு) காரணத்தையும்
நீர்மையால் நினைக்கில் (அல்லது)

உன்னுடைய கிருபையினாலே நீ அறிவிக்க இறியுமதெழிய
இட்டிடை பின்னை கேள்வன் என்பர் நின்னை

நுண்ணிய இடையை யுடையளான நப்பின்னைப்பிராட்டிக்கு வல்லபனானகக் கூறுவர்கள்; உன்னுடைய
பின்னை ஆய கோல மோடு

ஸர்வவிலக்ஷணமான திவ்விய மங்கள விக்ரக்ஷத்தையும்
பேரும் ஊரும்

திருநாமங்களையும் திவ்யஸ்தானங்களையும்
ஆர் நினைக்க வல்லர்

(மற்றைப்படி) அறிய வல்லாரார்?

 

“இன்னை என்று சொல்லலாவது இல்லை-
நீ இப்படிப் பட்டவன் என்று சொல்லக் கூடியது ஒரு படியும் இல்லையே

உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்-
உன்னுடைய திருவவதாரத்து விசேஷங்களை ஆஸ்ரிதர்களுக்கும் அநாஸ்ரிதர்களுக்கும்
உள்ள விவாதத்தை அறிந்த மகான்கள்

இட்டிடைப் பின்னை கேள்வன் என்பர் –
நுண்ணிய இடையை உடைய நப்பின்னை பிராட்டியாருக்கு வல்லபனாக கூறுவார்கள்

பின்னையாய கோலமோடு-
சர்வ விலஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும்

பின்னையாய கோலம் –
மானிட ஜாதிக்கும் கீழாக திரியும் ஜாதியில் வந்து திருவவதரித்து -என்றும் கொள்ளலாம்

பேருமூரும் ஆதியும்-
திரு நாமங்களையும் -திவ்ய தேசங்களையும் விக்ரஹ பரிக்ரஹம் பண்ணியதற்கு காரணத்தையும்

நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே-
நீர்மையால் நினைக்கில் அல்லது நின்னை யார் நினைக்க வல்லர் -ஒழிய மற்றப்படி யாராலும் அறிய முடியாதே-

ஆதி அம் ஜோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த

பிணக்காவது-ஆஸ்ரியர்கள் பேரும் ஓர் ஆயிரம் பிற பல உடைய எம்பெருமான் -என்றும்
அநாஸ்ரிதர்கள் பேரும் ஓர் உருவமும் உள்ளதில்லை என்பர் –

எம்பெருமானுடைய வைலக்ஷண்யத்தையும் அவதார ரஹஸ்யங்களையும் அவன் தானே காட்டிக் கொடுக்கில் காணுமதொழிய ஸ்வப்ரயத்நத்தாலே ஆர்க்கும் காணமுடியாதென்கிறார்.

“ஆகியஞ்சோதியுருவை அங்கு வைத்திருங்குப்பிறந்த” என்றபடி

தன்படிகளில் ஒன்றும் குறையாமே எல்லாவற்றோடுங் கூடிவந்து திருவவதரித்து நிற்கிற நிலையிலே

உன் படிகளில் ஏதாவதொருபடியையும் பரிச்சேதித்து அறிய முடியாதென்பது முதலடியின் கருத்து.

உன்னாலே *மயர்வர மதிநல மருளப்பெற்ற உன் விஷயங்களை யெல்லாம் நன்கறிந்துள்ள மஹான்கள்

“மிதுநமே ஆச்ரசணீயம்” (அதாவது பெருமாளும் பிராட்டியுமாக இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்கை முறை)

என்று சொல்லுவார்கள்- என்பது இரண்டாமடியின் கருத்து.

பிணக்காவது – “பேருமோருருவமும் உளதில்லை” என்று அநாச்ரிதர்கள் கூறுவதும்,

“பேருமோராயிரம் பிறபலவுடைய வெம்பெருமான்” என்று ஆச்ரிதர் கூறவதுமான இப்படிப்பட்ட விவாதம்:

இதனையறிந்தவர்களென்றால், அநாச்ரிதர்கள் கூறுவது அஸம்பத்தமென்றும் ஆச்ரிதர்கள் கூறுவதே பொருத்தமுடைத்தென்றும் சோதித்தறிந்தவர்களென்கை.

“பிள்ளையாயகோலம்” என்றது- இதர வ்யாவ்ருத்தமான விக்ரஹமென்றபடி.

அன்றி, மானிட சாதிக்கும் ” பிற்பட்டதான் (ஹேயமான) திர்யக்காதி ஜாதியிலேயான திருமேனி யென்னவுமாம்.

“***- என்று கீதையிலே அறிவித்தாப்போலே நீறே அறிவிக்கில் அறியுமத்தனையொழிய மற்றைப்படியாக அறியமுடியாதென்பது ஈற்றடியின்கருத்து.

இப் பாட்டின் முடிவில் நினைக்கிலே என்றவிடத்து அல்லது என்று கூட்டிக் கொள்ளவேணுமென்பர்.

—————

தூய்மை யோகமாயினாய் துழாய் அலங்கல் மலையாய்
ஆமையாகி ஆழ் கடல் துயின்ற வாதிதேவ நின்
நாமதேயமின்ன தென்ன வல்லமல்ல வாகிலும்
சாம வேத கீதனாய சக்ர பாணி அல்லையே –14-

பதவுரை

தூய்மை யோகம் ஆயினாய்

ஸம்ஸாரிகள் அழுக்குடம்பு நீங்கிப் பரிசுத்தமான அப்ராக்ருத சரீரம் பெறும்படி அருள் செய்யுமவனே!
துழாய் அலங்கல் மழையாய்

திருத்துழாய்மாலை யணிந்துள்ளவனே!
ஆமை! ஆகி! ஆழ்! கடல்! துயின்ற! ஆதிதேவ!

கூர்மருபியாய் ஆழ்ந்த கடலிலே திருக்கண் வளர்ந்தருளின ஆதி தேவனே!
நின் நாமதேயம்

உனது திருநாமங்களுக்கு வாச்யமான குசேஷ்டிதங்கள்
இன்னது என்ன

இன்னின்னவை யென்று சொல்ல
வல்லம் அல்ல ஆகிலும்

யாம் ஸமர்த்தர்களல்லோ மாயிலும்
சாம வேத கீதன் ஆய

ஸாமவேதத்திலே ப்ரதிபாதிக்கப்பட்டவனான
சக்ர பாணி அல்லையே

கையிலே திருவாழி யணிந்த பரமபுருஷன் நீயேயிறே (என்று சொல்லவல்லோம்)

தூய்மை யோகமாயினாய் –
சம்சாரிகள் அழுக்கு உடம்பு நீங்கி அப்ராக்ருத சரீரம் பெறும் படி அருள் செய்பவன்

நின் நாமதேயமின்ன தென்ன வல்ல மல்ல வாகிலும்–
உனது திரு நாமங்களுக்கு வாச்யமான திருக் கல்யாண குண சேஷ்டிதங்கள்
உனது எண்ண முடியாத பல பல திருக் கல்யாண குணங்களையும் இன்புறும் விளையாட்டுக்களையும் இவை இவை என்று
பகுத்து சொல்ல அடியேன் சமர்த்தன் அல்லேன் என்றாலும்
நீ பரிஹரித்து அருளின ஸ்ரீ கூர்ம விக்ரஹம் –திருக்கையில் திருவாழியுமான சேர்த்தியை சாம வேதத்தில் அருளிய
அதி ரமணீய ஹிரண்மய விக்ரஹம் என்று அறிந்தேன் என்கிறார் —

“நம் அவதாரரஹஸ்யத்தை நீர் அறிந்தபடி யென்?” என்று எம்பெருமான் திருவுள்ளமாக,

“ப்ரயோஜநாந்தர பரர்க்காக இதர ஸாஜாதீயராகத் திர்யக் யோநியிலே திருவவதரித்தருளின தேவரீருடைய குண சேஷ்டிதங்களை அடியேன் பரிச்சேதித்து அறியமாட்டேனேலும் அவ்வழக்கு ***- என்றறிந்தேன்” என்கிறார்.

தூய்மை யோகமாயினாய்! = அசித் ஸம்ஸர்க்கத்தாலே அசுத்தனான ஸம்ஸாரிக்கு உன் “க்ருபையாலே அந்த அசித்ஸம்ஸர்வர்க்கத்தை யறுத்து நித்யஸூரிகளோடே சேர்த்து உன்னை அநுபவிப்பிக்கவல்ல சுத்தியோகத்தையுடையவனே! என்ற படி.

(நின்நாமதேயம் இத்யாதி.) நாமதேயமாவது- குணங்களையும், சேஷ்டிகளையும் சொல்லுகிற திருநாமம். ஆயினும் இச்சொல் இங்கு இலக்கணையால் திருநாமவாச்யமான குணசேஷ்டிதஙக்ளையே சொல்லக்கடவ’தாமென்பர்.

“நின்னாமதேயமென்று-வாச்யமான குணசேஷ்டிதங்களை ***-கமான சப்தத்தாலே லக்ஷிக்கிறது” என்ற வியாக்கியான ஸூக்தி காண்க.

உன்னுடைய எண்ணில் பல்குணங்களையும் இன்புறு மிவ் விளையாட்டுகளையும் இவை யிவையென்று பகுத்துச் சொல்ல அடியேன் அமஸமர்த்தனேயாகிலும் என்றவாறு.

சாமவேதநீதனாய சக்ரபானியல்லையே = நீ பரிக்ரஹித்தருளின் கூர்மவிக்ரஹம் ஸாமாக்யமானதல்லவென்றும் ஸாக்ஷாரத் ***- மாய்க் கையுந்திருவாழியுமான அதிரமணீய ஹிரண்மய விக்ரஹம் என்றும் அறிந்தேனென்கை

————-

அங்கமாறு வேத நான்கு மாகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வ மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சாரங்க பாணி யல்லையே –15-

பதவுரை

அங்கம் ஆறும்

சீக்ஷை முதலிய ஆறு அங்கங்களென்ன
வேதம் நான்கும்

(அங்கியான) நான்கு வேதங்களென்ன (இவற்றுக்கு)
ஆகி நின்று

ப்ரவர்த்தகனாய் வேதங்களினுள்ளே
தங்குகின்ற தன்மையாய்

ஸுப்ரதிஷ்டிதமாயுள்ள ஸ்வரு பஸ்வாபங்களையுடையவனே!
தடம் கடல்

மஹா ஸமுத்திரத்திலே
பணம் தலை செம் கண் நாக அணை

படங்களின் தலையிலே சிவந்த கண்களை யுடையனான தீருவனந்தாழ்வானாகிற அணையிலே
கிடந்த

கண்வளர்ந்தருளுகிற
மல்குசெல்வம் சீரினாய்

நிறைந்த செல்வத்தையும் குணங்களையுடையவனே!
சஙக வண்ணம் அன்னமேனி

சங்கினுடைய வர்ணம் போன்ற திருமேனியையுடையனாய் (கிருதயுகத்தில் திருவவதரித்து)
சாரங்கபாணி அல்லையே

(த்ரேதாயுகத்தில் இக்ஷ்வாகு குலத்திலே) கையும் வில்லுமாய் வந்து பிறந்தவன் நீயேயன்றோ?

 

அங்கமாறு–
சீஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறு வேத அங்கங்களும்
அஷரங்களை உச்சரிக்க வேண்டியவற்றை சிஷை சொல்லும்
பிரகிருதி பிரத்யங்களின் பாகுபாடு வியாகரணத்தில்
அர்த்த விவேகம் சொல்லும் .நிருக்தம்
காலங்களை ஜ்யோதிஷமும்
வைதிக கர்மங்களை அனுஷ்டிக்க வேண்டிய முறைகளை கல்பமும் சொல்லும் –

இந்த ஆறு அங்கங்களும் நான்கு வேதங்களுக்கும் உண்டு -இவற்றால் அவனுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்கள் சொல்லப்படும் .

அவன் தான் –மா கடல்
திருப் பாற் கடலில்-
பணைத் தலை-செங்கண் நாகணைக் கிடந்த.-
பணங்களின் தலையில் சிவந்த கண்களை உடைய திரு அனந்தாழ்வான் என்னும் அணையில் பள்ளி கொண்டு இருக்கும் .

மல்கு செல்வம் சீரினாய்.”-
நிறைந்த செல்வத்தையும் குணங்களையும் கொண்ட

சங்க வண்ண மன்ன மேனி-
சங்கின் வண்ணம் போன்ற திருமேனியை உடையவன்-கருத யுகத்தில் திருவவதரித்து

சாரங்க பாணி யல்லையே –
த்ரேதா யுகத்தில் இஷ்வாகு குலத்திலே திருக்கையிலே திருச் சார்ங்கம் என்னும் கோதண்டம் கொண்டு
வந்து திரு வவதரித்த நீயே அன்றோ -என்கிறார்-

வேதங்கட்கும் அவற்றின் அங்கங்கட்குமே விஷயமாகவல்ல ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய நீ

ஆச்ரிதர்களை அநுக்ரஹிக்கைக்காகத் திருப்பாற்கடலிலேயே திருக்கண் வளர்ந்தருளி,

அதுதானும் பரதசை யென்னும்படி அங்கு நின்னும் புறப்பட்டு ஆச்ரிதர் உகந்த ரூபத்தையே

உனக்கு ரூபமாகக் கொண்டு வந்தவதரித்தாய் என்கிறார்.

அங்கம் ஆறும் = சீக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என வேதாங்கள் ஆறு.

அச்சுக்கள், ஹல்லுக்கள் என்னும் அக்ஷரங்களை உச்சரிக்க வேண்டிய முறைகளும்,

அவை ஒன்றோடொன்று சேர வேண்டும் முறைகளும் சீக்ஷையில் சொல்லப்படும்;

ப்ரக்ருதி ப்ரத்யயங்களின் பாகுபாடும், அவற்றின் அர்த்தவிவேகமும் வியாகரணத்திலும் நிருக்தியிலும் நிர்ணயிக்கப்படும்;

காயத்ரீ, த்ரிஷ்டுப், ஜகதீ இத்யாதி ***-சந்தங்களில் கூறப்படும்;

வேதோக்கர்மங்களைக் காலமறிந்து அநுஷ்டிக்க வேண்டுகையாலே அக்காலங்களை யறிவிக்கும் ஜ்யோதிஷம்:

ஆச்வலாயநர், ஆபஸ்தம்பர் முதலிய மஹர்ஷிகளால் செய்யப்படட் கல்பங்களில்

வைதிக கருமங்களை அநுஷ்டிக்க வேண்டிய முறைமைகள் விளக்கப்படும்.

இப்படிப்பட்ட ஆறு அங்கங்களோடு கூடிய வேதங்கள் நான்கு. ருக், யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்பன.

ஆக இந்த ஸாங்கவேதங்களாலும் எம்பெருமானுடைய ஸ்வரூபஸ்பாவங்களே ப்ரதிபாதிக்கப்படுகின்றமை

ஒன்றரை யடிகளாற் கூறப்பட்டதாயிற்று.

———–

தலைக் கணத் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய் –
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடிரும்
கலைக் கணங்கள் சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின் தன் மாட்சியே —-16 –

பதவுரை

தலைக்கணம்

முதன்மைபெற்ற தேவகணமென்ன
துகள்

க்ஷுத்ரமான ஸதாவரகணமென்ன
குழம்பு சாதி

மிச்ரயோனிகளான மநுஷ்ய திர்யக்ஜாதிகளென்ன இவற்றிலே
சோதி

அப்ராக்ருதமான தேஜஸ்ஸோடே கூட
தோற்றம் ஆய்

திருவவதரித்து
நிலைக்கணகங்கள் காண

(தேவாதிகள் மாத்திரமே யன்றியே) ஸ்தாவரங்களும் (உன்னை) அனுபவிக்கும்படி
வந்து நிற்றி

வந்து நிற்கிறாயாகிலும்
ஏலும் நீடு  இரும் கலை கணங்கள்

நித்தியமாய் விரிந்தவையான வேதசாஸ்திர ஸமூஹங்கள்
சொல் பொருளினால்

அபிதாநவ்ருத்தியாலும்
கருத்தினால்

தாம்பர்ய வ்ருத்தியாலும்
நினைக்க ஒணா

(உன் பெருமைகளை) நினைக்கவும் மாட்டாமல்
மலை கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி

பர்வத ஸமூஹஙக்ள்போல் அபரிச்சேத்யமாக அறிவிக்கும் வைலக்ஷண்யமானது
நின் தன் மாட்சியே

உன்னுடைய வைலக்ஷண்ய மென்னுமித்தனை

தலைக்கணம் –
முதன்மை பெற்ற தேவ கணங்கள்

துகள் –
ஷூத்ரமான ஸ்தாவர கணங்கள்-
குப்ஜ மரமாய் -சிறிய மரமாயும் திருவவதாரம் செய்ததை புராணம் கூறும் –

குழம்பு சாதி –
மிஸ்ர யோநிகளான மனுஷ்ய ஜங்கம ஜாதிகள் இவற்றிலே ”

சோதி தோற்றமாய் –
அப்ராக்ருத தேஜஸ் உடன் திரு வவதரித்து

நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும்-
தேவர்கள் மட்டும் இல்லாது அனைவரும் அனுபவிக்கும் படியாக வந்து நிற்பாயாகிலும்
நிலைக் கணங்கள்-அசையாமல் நிலை நிற்கும் ராசிகள் -ஸ்தாவர சமூகங்கள்

நீடிரும் கலைக் கணங்கள் –
நித்தியமாயும் விரிந்தும் உள்ள வேத சாஸ்திர சமூகங்கள்

சொல் பொருள் கருத்தினால் –
அபிதான வ்ருத்தியாலும் தாத்பர்ய வ்ருத்தியாலும்

நினைக்கொணா-
உனது பெருமைகளை நினைக்கவும் மாட்டாமல் .
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி-
பர்வத சமூகங்கள் போலே அபரிச்சேத்யமாக அறிவிக்கும் வைலஷண்யம்

நின் தன் மாட்சியே –
உன்னுடைய வைவைலஷண்யம் எத்தனை

திருப்பாற்கடலில் நின்றும் தேவ மதுஷ்பாதி யோநிகளிலே அவதரித்து ரக்ஷிப்பது மாத்திரமே யன்றி

ஸ்தாவர பர்யந்தமான நால்வகை ஸ்ருஷ்டிகளிலும் அவதரித்து நீ உன்னை ஸர்வாநுபயோக்யனாக, ஆக்கினாலும்

சாஸ்த்திரங்களானவை பரிச்சேதித்து அறியமாட்டாதபடியன்றே உன்னுடைய அவதார வைக்ஷைண்ய மிருப்பது என்கிறார்.

மநுஷ்யாதிகளுக்கு மேற்பட்ட தேவகணத்தைத் தலைக் கணமென்கிறது

க்ஷுத்ரகணங்களாகிய ஸ்தாவராதிகளைத் துகள்கண மென்கிறது. மநுஷ்ய கணங்களும் திர்யக்கணங்களும் குழம்பு சாதி யெனப்படும்.

தேவகணங்கள் புண்யயோநியாய், ஸ்தாவரங்கள் பரபயோநியாய் இருப்பது போன்றியே மநுஷ்ய திர்யக்ஜாதிகளிரண்டும் புண்யபாப மிச்ரயோநிகளாகையாலே குழம்புசாதி என்கை உசிதம்;

ஆக இந்நான்கு யோநிகளிலும் *** என்றபடி அப்ராக்ருத திவ்யளம்ஸ்தாகத்தோதே பிறந்தருளின படியைக் கூறுவது முதலடி.

ஸ்தாவரஜாதியில் எம்பெருமான் பிறந்தனை யுண்டோவென்னில் உண்டு;

கும்ஜாம்ரமாய் (-அதாவது சிறியதொரு மாமராய்)த் திருவவதரித்த வரலாறு புராண ப்ரஸித்தம்.

இப்படி திருவதரித்து, நிலைக்கண்கள் காணவந்து நிற்றியேலும் = தேவாதிகள் மாத்ரமில்லாமல் ஸ்தாவரங்களும்கூட உன்னை அநுபவிக்கும்படி நீ வந்து நின்றாயாகிலும்,

நிலைக் கணகங்கள் – அசையாமல் நிலைநிற்கும் ராசிகள், ஸ்தாவர ஸமூஹங்கள்.

நீ இப்படி தாழநின்றாலும் வேதம் முதலிய சாஸ்த்ரங்களானவை உன் வைபவத்தை ஒருபடியாலும் பரிச்சேதிக்கமாட்டாமல்,

பர்வத ஸமூகங்களை வர்ணிக்கப்புகுந்த வொருவன் அவற்றைப் பரிசேசதித்து வர்ணிக்கமாட்டாதே

ஒரு ஸமுதாய ரூபேண வர்ணிக்குமாபோலே வர்ணிக்குமித்தனை யல்லது வேறில்லை யென்கிறார்

நீடிருங் கலைக்கணகங்கள் இத்யாதியால்

——————-

ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல்
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் ஆதி தேவனே –17-

பதவுரை

ஆதி தேவனே

ஸர்வகாரண பூதனான பெருமாளே!
ஏகமூர்த்தி ஆய்

(பரமபதநிலயனான) பரவாஸு தேவமூர்த்தியாய்
மூன்று மூர்த்தி ஆய்

ஸங்கர்ஷண, ப்ரத்யம்ந, அநிருத்தர்களாகிற மூன்று மூர்த்தியாய்
முதலாயிரம்

திருச்சந்த விருத்தம்
நாலு மூர்த்தி ஆய்

ப்ரதாநம், புருஷன், அவ்யக்தம், காலம் என்னுமிவற்றை சரீரமாகக்கொண்ட நாலு மூர்த்தியாய்
நன்மை சேர் போகம் மூர்த்தி ஆய்

விலக்ஷணமாய்ப் போகத்தக்கு அர்ஹமான மூர்த்தியாய்
புண்ணியத்தின் மூர்த்தி ஆய்

புண்யமே வடிவுகொண்டதொரு மூர்த்தியாய்
எண் இல் மூர்த்தி ஆய்

(இப்படி) எண்ணிறந்த (பல பல) மூர்த்தியாய்
நலம் கடல்

நல்ல திருப்பாற்கடலில்
நாகம் மூர்த்தி சயனம் ஆய் கிடந்து

திருவனந்தாழ்வானுடைய திருமேனியைப் படுக்கையாக வுடையவனாய்க் கண் வளர்ந்தருளி
மேல்

அதுக்குமேலே
ஆக மூர்த்தி ஆய வண்ணம்

அடியார்கள் உகந்த உருவமாகிய அர்ச்சரவதாரமாய் அவதரித்த தன்மை
என் கொல்

என்னாயிருந்தது.

ஏக மூர்த்தி
பரமபத நிலையனான பர வாஸூ தேவ மூர்த்தியாய்

மூன்று மூர்த்தி யாய் –
சங்கர்ஷன பிரத்யுமான அநிருத்தன் ஆகிய மூன்று மூர்த்திக்களுமாய்

நாலு மூர்த்தி யாய்
பிரதானம் புருஷன் அவ்யக்தம் காலம் என்னும் இவற்றை சரீரமாகக் கொண்ட

நன்மை சேர் போக மூர்த்தி யாய் –
விலஷணமாய் போகத்துக்கு அர்ஹ்யமான மூர்த்தியாய்

புண்ணியத்தின் மூர்த்தி யாய்
புண்யமே வடிவு கொண்ட தொரு மூர்த்தியாய்

எண்ணில் மூர்த்தியாய்-
இப்படி எண்ணிறந்த பல பல மூர்த்தியாய்

நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது –
நல்ல தொரு பாற் கடலிலே திரு வநந்த ஆழ்வான் திரு மேனியைப் படுக்கையாகக் கொண்டு கண் வளரும்

மேல்
அதற்கும் மேலே

ஆக மூர்த்தி யாய வண்ணம் –
அடியார்கள் உகந்த உருவமாகிய அர்ச்சாவதாரமும் எடுத்த தன்மையை

என் கொல் ஆதி தேவனே ––
தமர் உகந்த உருவம் அவ்வ்ருவம் தானே போலே ஆதி தேவனே இது என்ன விந்தை என்கிறார் –

ஆதி காரணமாய் இருக்கும் நீ கார்ய வர்க்கத்துக்கு உள்ளே அதி ஸூத்ரனாய் இருப்பான் ஒரு சேதனனுடைய
அதீனமாய் இருப்பது என்ன வித்தகம் –

பரவாஸுதேவ மூர்த்தியா யிருந்துகொண்டு நித்யவிபூதியை நிர்வஹித்தும்,

வ்யூஹம் முதலாக ஸ்தாவரஜந்மபர்யந்தமாகத் திருவவதரித்து லீலாவிபூதியை நிர்வஹித்தும் போருகிற இவை

ஓரொன்றே சாஸ்த்ரங்களுக்கு அவிஷமாயிருக்க,

அதுக்குமேலே* தமருகந்த தெவ்வுரு மவ்வுருவந்தானாய் ஸர்வஸுலபனாய் ஸர்வ ஸஹிஸ்ணுவாய்

ஸர்வஜுஸமாராத்யனாய் அர்ச்சாவதார ரூபியாய்த் தன்னை அமைத்துநின்ற தன்மை என்னே! என்று

அது தன்னிலே உள் குழைகின்றார்.

“மேல் ஆகமூர்த்தியாய வண்ணம் என்கொல்!”- கீழ்க்கூறிய பற்பல திருவுருவங்களை ஏற்றுக் கொண்டதுமல்லாமல்

இப்படிப்பட்ட ஊர்வாத்மா பரதந்த்ரமான தொரு நிலைமையை ஏற்றுக்கொண்டவிது என்ன

ஸௌலப்ப பரமகாஷ்டை! என உள்குழைகிறபடி

ஆதிதேவனே! = ஜகத்துக்கெல்லாம் ஆதிகாரணமாயிருக்கிற நீ கார்யவர்க்கத்துக்குள்ளே

அதிக்ஷûத்ரனாயிருப்பானொரு சேதானுடைய விருப்பத்துக்கிணங்கி நடப்பது என்ன வித்தகம்! என்று கேட்கிறபடி-

——————————-

நாக மூர்த்தி சயனமாய் -என்றும் –
தடம் கடல் பணை தலை செங்கன் நாகனைக் கிடந்த -என்றும்- அருளிச் செய்த அநந்தரம்
அதிலே ஆழம் கால் பாட்டு அடுத்த பாசுரம் அருளுகிறார்

விடத்த வயோராயிரம் ஈராயிரம் கண் வெந் தழல்
விடுத்து விள்விலாத போக மிக்க சோதி தொக்க சீர்
தொடுத்து மேல் விதாநமாய பௌவ நீர் அராவணைப்
படுத்த பாயில் பள்ளி கொள்வது என் கொல் வேலை வண்ணனே –18-

பதவுரை

வேலை வண்ணனே

கருங்கடல் வண்ணனான எம்பெருமானே!
விடத்த

விஷத்தையுடைத்தான
ஒரு ஆயிரம் வாய்

ஓராயிரம் வாய்களினின்றும்
இரு ஆயிரம் கண்

ஈராயிரம் கண்களினின்றும்
வெம் தழல்

வெவ்விய தழலை
விடுத்து

புறப்படவிட்டுக்கொண்டு,
வீழ்வு இலாத போகம்

ஒரு காலும் விச்சேதமில்லாத பகவநறுபவத்தையுடையனாய்
மிக்க சோதி

மிகுந்த ஜ்யோதிஸ்ஸையுடையனாய்
விதானம் ஆய்

மேற்கட்டிபோன்ற படங்களினுடைய
மேல்

மேற்புறத்திலே
தொக்க

திரள்திரளாயிருக்கிற
சீர்

அழகை
தொடுத்து

தொடுத்து
பௌவம் நீர்

ஸமுத்ரஜலத்திலே
படுத்த

படுக்கையாக அமைந்த
அரா அணை பாயல் பள்ளி கொள்ளது

திருவனந்தாழ்வானாகிய சயகத்திலே பள்ளிகொண்டருளும் தன்னை
என் சொல்

எத்திறம்!

விடத்த வயோராயிரம்-
விடாத்தை உடைய ஆயிரம் வாயில் என்றும்

ஈராயிரம் கண் வெந்தழல்-விடுத்து-
ஈராயிரம் கண்கள் என்றும் வெவ்விய தழலை புறப்பட விட்டுக் கொண்டு

விள்விலாத போக
ஒரு காலும் விச்சேதம் இல்லாத பகவத் அனுபவத்தை உடையானாய்

மிக்க சோதி
மிகுந்த ஜ்யோதிசை உடையனாய்

தொக்க சீர்
திரள் திரளாக இருக்கும் அழகை

தொடுத்து மேல் விதாநமாய
தொடுத்து மேல் புறத்திலே மேல் கட்டி போன்ற படங்கள் உடைய

பௌவ நீர் அராவணைப் படுத்த பாயில் பள்ளி கொள்வது என் கொல் வேலை வண்ணனே –
சமுத்திர ஜலத்தில் படுக்கையை அமைத்த திரு வநந்த ஆழ்வான் சயனத்திலே பள்ளி கொண்டு அருளும் தன்மை எத்திறம் –

ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும் பூங்கார அரவு -போலே

விள்விலாத போகம் –
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமும் நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புணையாம்
அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும் அரவாம் திருமாற்கு அரவு –

பகவத் அனுபவம் மாறாமல் இருப்பதால் மிக்க சோதி -என்கிறார்-

கீழ் “நாக மூர்த்தி சயனமாய்” என்றும்

“தடங்கல்பணத்தலைச் செங்கணாகணைக் கிடந்த” என்றும்

க்ஷீரஸநகரசயநம் ப்ரஸ்துதமானவாறே திருவுள்ளம் அங்கே ஆழங்காற்பட்டு

அந்நிலையிலே அபிநிவேசாதிசயம் தோற்ற அருளிச் செய்கிறார்.

“விடத்தவாயொராயிர மிராயிரங்கண் வெந்தழல் விடுத்து” என்னுமளவால்

“ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு” (என்முகன் திருவந்தாதி.) என்ற அர்த்தத்தை அருளிச்செய்தபடி.

ஆபத்து நேருவதற்கு ப்ரஸந்தியற்ற இடத்திலுங்கூட ஆதராதி சயத்தினால் ஆபத்தை அதிசங்கித்துக் காப்பிடுந்தன்மை

நித்யஸுரிகளுக்கெல்லாம் உண்டாயிருக்கச் செய்தேயும் திருவனந்தாழ்வானுக்கு அது விசேஷித்திருக்குமாய்த்து.

வீழ்வு இலாத போகம் = “சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாய் நின்றால் மாவடியாம். நீள்கடலுள்-

என்றும், புணையாமணிவிளக்காம் பூம்பட்டாம் புக்கு மணையாந் திருமாற்கரவு.” என்றபடி

பஹுமுகாமகத்திருமால் திறத்தில் கிஞ்சித்கரிக்கும் தன்மையினால் பகவதநுபவமாகிற போகததிற்கு எப்போதும் விச்சேதமில்லாதவன் என்கை.

மிக்க சோதி = பகவதநுபவம் மாறாதே செல்லுமவர்கட்கு விலக்ஷணமானதொரு ஜேஸ்ஸு உண்டாகக் கடவதிறே;

அதனைச் சொல்லுகிறது.

கீழ்ப் பாட்டில் “பௌவநீரராவணைப் படுத்தபாயல் பள்ளிகொள்வதென்கொல்?” என்று-

ஏதுக்காகத் திருப்பாற்கடலில் கண்வர்ளந் தருளாநின்றாய்? என்று எம்பெருமானை நோக்கி வினவிய ஆழ்வாரைக்குறித்து

அப்பெருமான் “ஆழ்வீர்! ஸம்ஸாரிகளை ரக்ஷிப்பதற்காகத்தான் நாம் இக்கிடை கிடைக்கிறோம்” என்றருளிச்செய்ய;

அதுகேட்ட ஆழ்வார், ‘பஹுமுகமாக ஸம்ஸாரிசேதநர்களை ரக்ஷித்தருளின நீ ரக்ஷணக்ருத்யத்திலே இன்னும் சேஷம் வைத்திருக்கிறாயோ?

பண்டை எல்லாம் செய்தருளிற்றே! ஆயிருக்க, ஒன்றும் செய்யாதவன் போலவும்

இன்னும் பல செய்யக் கூடியவன் போலவும் திருப்பாற் கடலிலே வந்து கண்வளர்ந்தருள்வது என்னோ? என்கிறார்.

“புள்ளதாகி வேதான்கு மோதினாய்” என்று- ப்ரமாணத்தைக் கொடுத்தபடியையும்,

“புள்ளின்வாய் பிளந்து” என்று – ப்ரமேயபூதனான தன்னைக் கொடுத்தபடியையும் சொல்லிற்றாயிற்று.

இப்படிப்படட் ரக்ஷணம் என்றைக்கோ செய்யப்பட்டதாகில் இன்றைக்கும் மேலுள்ள காலத்துக்கும் என்னாயிற்று? என்று

சங்கிப்பார்க்கு இடமறும்படியருளிச் செய்கிறார்

புட்கொடியித்யாதி, தான் ரக்ஷணத்தொழிலொன்றிலேயே தீக்ஷிதன் என்பது தோன்றக் கொடிகட்டிக் கிடக்கிறபடி

ஆபத்து அடைந்தவர்கள் அனைவரும் தன்பக்கலிலே வந்து காரியங் கொள்ளும்படி ரக்ஷண தர்மத்தைத்

தெரிவிக்கைக்காகவிறே பெரிய திருவடியை தவ்ஜமாகக் கொண்டிருக்கிறது.

கருடனை த்வஜமாகக் கொண்ட மாத்திரத்தால் என்னாகும்? என்று சங்கிப்பார் தெளியுமாறு அருளிச் செய்கிறார். புள்ளையூர்தி என்று.

ஆச்ரிதர்கட்கு ஆபத்து நேர்ந்தால் பறவையேறிக் கடிதோடிக் காப்பிடுமவன் யல்லாமல்;

புன்னை ஊர்தி- ஆச்ரிதர் ஆபந்நராய் இருந்தவிடங்களிலே வந்து உதவுகைக்கு அவனை வாஹநமாகக்

கொண்டு நடந்தா நின்றாய்,  என்கை. ஊர்தி- ஊர்கின்றாய் என்றபடி.

“புட்கொடிப் பிடித்த பின்னரும்” என்று இப்போதைய பாடமிருந்தாலும்

“புட்கோடிப் பிடித்தி பின்னரும்” என்றே ப்ராசீகமும் சுத்தமுமான பாடமென்று அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்யக் கேட்டிருக்கை.

ஊர்தி என்றது போலவே பிடித்தி என்றதும் ‘பிடிக்கின்றாய்’ என்ற பொருளுடைய முன்னிலை யொருமை நிகழ்கால வினைமுற்று.

ஆகவே, “புள்ளதாகி வேத நான்குமோதினாய்,அதன்றியும் புள்ளின்வாய் பிளந்து புட்கொடிபிடித்தி, பின்னரும் புள்ளையூர்தி” என்றிங்ஙனே மூன்று வாந்யார்த்தமாகக் கொள்ளுதல் சிறக்குமென்க.

பின்னரும் என்னது- அன்றியும் (***) என்றபடி

ஆதலால் என்றது- இப்படியெல்லாம் செய்திருக்கச் செய்தேயும் என்றபடி-

அர்த்த ஸ்வாரஸ்யத்துக்கான சப்தத்தை செருக்குவது உசிதமேயாமென்க.

இப்படி பஹுமுகமாக ரக்ஷகத்வத்தை வெளிப்படுத்திக்கொண்டு ரக்ஷணைக தீக்ஷிதனாய் எழுந்தருளியிருக்கச் செய்தேயும்

திருப்பாற்கடலிலேவந்து குளிரிலே கிடப்பதேன்? என்று *** பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில்

இப்பாட்டின் அந்வயக்ரமம் சிறிது மாறுபட்டிருப்பினும் ஸுகு மாரமதிகளின் ஸௌகரியத்துக்காக இங்ஙனே யாம் உரைத்தோமென்றுணர்க.

கீழும் மேலும் இங்ஙனே யாமெழுது மிடங்களில் இதுவே ஸமாதாகமென்று கொள்க.

கடல் புள்ளிள் பகை மெய் கிடத்தல் காதலித்தது என்கொல்?- என்று மாற்றி அந்வயித்துக்கொள்க.

நித்யஸுரிகளில் தலைவராயும் எம்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரர்களாயுமுள்ள

பெரிய திருவடி திருவநந்தாழ்வான்களுக்கு உண்மையில் பகைமையென்ன ப்ரஸக்திதானுமில்லையேயாகிலும்

கருடஜாதிக்கும் ஸர்ப்பஜாதிக்கும் உலகவியற்கையிலே பகைமை காணப்படுவதுபற்றி “புள்ளின்பகை” என்று அருளிச் செய்தார்.

வியாக்கியானத்திலும்- “ஸாயாமர்ய த்ருஷ்டியால் பார்த்தால் திருவடிக்கு ஸஹஜத்ருவென்னலாயிருக்கிற

திருவனந்தாழ்வான்மேலே” என்று அருளிச்செய்துள்ளமை காண்க.

————————————————-

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின் வாய் பிளந்து புட் கொடி பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி யாதலால் என் கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே –19-

பதவுரை

மின்கொள்  நேதமியாய்

தேஜஸ்வியாய் விளங்காநின்றுள்ள திருவாழியையுடைய பெருமானே!
புள் அது ஆகி

ஹம்ஸரூபியாய் அவதரித்து
வேதம் நான்கும்

நான்கு வேதங்களையும்
ஓதினாய்

உபதேசித்தருளினாய்,
அது அன்றியும்

அதுவுமல்லாமல்,
புள்ளின் வாய் பிளந்து

(உன்னை விழுங்குவதாக வாயைத் திறந்துகொண்டு வந்த) பகாஸுரனுடைய வாயைக் கிழித்து (அவனை முடித்து விட்டு)
புள்கொடி பிடித்த பின்னரும்

பெரிய திருவடியை த்வஜமாகப் பிடித்ததுமல்லாமல்
புள்ளை

அப்பெரிய திருவடியை
ஊர்தி

வரஹநமாகக்கொண்டு செல்லா நின்றாய்
ஆதலால்

இப்படி பலவகையான ரக்ஷணோபாயங்களைச் செய்தருளா நிற்கச் செய்தேயும்
கடல்

திருப்பாற்கடலிலே
புள்ளின் பகை மெய்

கருடஜாதிக்குப் பகையென்று தோற்றும்படியான திருவளர் தாழ்வானுடைய திருமேனியிலே
கிடத்தல்

பள்ளிகொள்வதை
காதலித்தது

விரும்பிப்போவதாகிய
என்கொல்

என்ன திருவுள்ளத்தாலே?

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் –
ஹம்ச ரூபனாய் திருவவதரித்து நான்கு வேதங்களையும் உபதேசித்து அருளினாய்

அதன்றியும் புள்ளின் வாய் பிளந்து –
அதுவும் அல்லாமல் பகாசுரனாய் -உன்னைக் கொல்ல வந்த பஷியின் வாயைப் கிழித்துக் கொன்று

புட் கொடி பிடித்த பின்னரும
பெரிய திருவடியை த்வஜமாக பிடித்ததும் அல்லாமல்

புள்ளை ஊர்தி யாதலால்
அந்த பெரிய திருவடியை வாகனமாயும் கொண்டு இப்படி பல பல ரஷண உபாயங்களைச் செய்து அருளி

என் கொல் மின் கொள் நேமியாய் புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே –
திருப்பாற் கடலிலே கருட ஜாதிக்கு பகை என்றும் தோற்றும்படியான திரு வநந்த ஆழ்வான் உடைய திரு மேனியிலே
பள்ளி கொள்வதை விரும்பிப் போர்வதான இக்கார்யம் என்ன திரு உள்ளம்
திருப் பாற் கடலிலே சயனித்து இருப்பது எதற்கு என்று வினவ
சம்சாரிகளை ரஷிக்க என்ன
முன்பே ஹம்சமாக வேதம் அனைத்தும் உபதேசித்து அருளினாய் என்ன –

இத்தால் பிரமாணம் கொடுத்து அருளி –
புள்ளின் வாய் கீண்டு –பிரமேய பூதமான தன்னை ரஷித்து அருளியும் சர்வ ரஷகன் என்று கொடி கட்டி பறை சாற்றிக் கொண்டு
ஆஸ்ரிதற்கு ஆபத்து வந்தால் பெரிய திருவடியை வாகனாமக் கொண்டு வந்தும் ரஷித்து அருளுகிறான் என்றவாறு-

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் -பிரமாணத்தைக் கொடுத்தபடி
புள்ளின் வாய் பிளந்து-ப்ரமேயபூதனான தன்னைக் கொடுத்தபடி
புட் கொடி பிடித்த–ரக்ஷணத்தில் தீஷிதனான படி
புள்ளை ஊர்தி–ரக்ஷணத்துக்கு கடிது ஓடி வரும் படி

கீழ்ப் பாட்டில் “பௌவநீரராவணைப் படுத்தபாயல் பள்ளிகொள்வதென்கொல்?” என்று- ஏதுக்காகத்

திருப்பாற்கடலில் கண்வர்ளந் தருளாநின்றாய்? என்று எம்பெருமானை நோக்கி வினவிய ஆழ்வாரைக்குறித்து

அப்பெருமான் “ஆழ்வீர்! ஸம்ஸாரிகளை ரக்ஷிப்பதற்காகத்தான் நாம் இக்கிடை கிடைக்கிறோம்” என்றருளிச்செய்ய;

அதுகேட்ட ஆழ்வார், ‘பஹுமுகமாக ஸம்ஸாரிசேதநர்களை ரக்ஷித்தருளின நீ ரக்ஷணக்ருத்யத்திலே இன்னும் சேஷம் வைத்திருக்கிறாயோ?

பண்டை எல்லாம் செய்தருளிற்றே! ஆயிருக்க, ஒன்றும் செய்யாதவன் போலவும்

இன்னும் பல செய்யக் கூடியவன்போலவும் திருப்பாற் கடலிலே வந்து கண்வளர்ந்தருள்வது என்னோ? என்கிறார்.

“புள்ளதாகி வேதான்கு மோதினாய்” என்று- ப்ரமாணத்தைக் கொடுத்தபடியையும்,

“புள்ளின்வாய் பிளந்து” என்று – ப்ரமேயபூதனான தன்னைக் கொடுத்தபடியையும் சொல்லிற்றாயிற்று.

இப்படிப்படட் ரக்ஷணம் என்றைக்கோ செய்யப்பட்டதாகில் இன்றைக்கும் மேலுள்ள காலத்துக்கும் என்னாயிற்று?

என்று சங்கிப்பார்க்கு இடமறும்படியருளிச் செய்கிறார் புட்கொடியித்யாதி,

தான் ரக்ஷணத்தொழிலொன்றிலேயே தீக்ஷிதன் என்பது தோன்றக் கொடிகட்டிக் கிடக்கிறபடி

ஆபத்து அடைந்தவர்கள் அனைவரும் தன்பக்கலிலே வந்து காரியங் கொள்ளும்படி ரக்ஷண தர்மத்தைத் தெரிவிக்கைக்காகவிறே

பெரிய திருவடியை தவ்ஜமாகக் கொண்டிருக்கிறது.

கருடனை த்வஜமாகக் கொண்ட மாத்திரத்தால் என்னாகும்? என்று சங்கிப்பார் தெளியுமாறு அருளிச் செய்கிறார். புள்ளையூர்தி என்று.

ஆச்ரிதர்கட்கு ஆபத்து நேர்ந்தால் பறவையேறிக் கடிதோடிக் காப்பிடுமவன் யல்லாமல்;

புன்னை ஊர்தி- ஆச்ரிதர் ஆபந்நராய் இருந்தவிடங்களிலே வந்து உதவுகைக்கு அவனை

வாஹநமாகக்கொண்டு நடந்தா நின்றாய்,  என்கை. ஊர்தி- ஊர்கின்றாய் என்றபடி.

“புட்கொடிப் பிடித்த பின்னரும்” என்று இப்போதைய பாடமிருந்தாலும் “புட்கோடிப் பிடித்தி பின்னரும்” என்றே ப்ராசீகமும் சுத்தமுமான பாடமென்று அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்யக்கேட்டிருக்கை.

ஊர்தி என்றது போலவே பிடித்தி என்றதும் ‘பிடிக்கின்றாய்’ என்ற பொருளுடைய முன்னிலையொருமை நிகழ்கால வினைமுற்று.

ஆகவே, “புள்ளதாகி வேத நான்குமோதினாய்,அதன்றியும் புள்ளின்வாய் பிளந்து புட்கொடிபிடித்தி, பின்னரும் புள்ளையூர்தி” என்றிங்ஙனே மூன்று வாந்யார்த்தமாகக் கொள்ளுதல் சிறக்குமென்க.

பின்னரும் என்னது- அன்றியும் (***) என்றபடி

ஆதலால் என்றது- இப்படியெல்லாம் செய்திருக்கச் செய்தேயும் என்றபடி- அர்த்த ஸ்வாரஸ்யத்துக்கான சப்தத்தை செருக்குவது உசிதமேயாமென்க.

இப்படி பஹுமுகமாக ரக்ஷகத்வத்தை வெளிப்படுத்திக்கொண்டு ரக்ஷணைக தீக்ஷிதனாய் எழுந்தருளியிருக்கச் செய்தேயும்

திருப்பாற்கடலிலேவந்து குளிரிலே கிடப்பதேன்? என்று *** பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில்

இப்பாட்டின் அந்வயக்ரமம் சிறிது மாறுபட்டிருப்பினும் ஸுகு மாரமதிகளின் ஸௌகரியத்துக்காக இங்ஙனே யாம் உரைத்தோமென்றுணர்க.

கீழும் மேலும் இங்ஙனே யாமெழுது மிடங்களில் இதுவே ஸமாதாகமென்று கொள்க.

கடல் புள்ளிள் பகை மெய் கிடத்தல் காதலித்தது என்கொல்?- என்று மாற்றி அந்வயித்துக்கொள்க.

நித்யஸுரிகளில் தலைவராயும் எம்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரர்களாயுமுள்ள

பெரிய திருவடி திருவநந்தாழ்வான்களுக்கு உண்மையில் பகைமையென்ன ப்ரஸக்திதானுமில்லையேயாகிலும்

கருடஜாதிக்கும் ஸர்ப்பஜாதிக்கும் உலகவியற்கையிலே பகைமை காணப்படுவதுபற்றி “புள்ளின்பகை” என்று அருளிச் செய்தார்.

வியாக்கியானத்திலும்- “ஸாயாமர்ய த்ருஷ்டியால் பார்த்தால் திருவடிக்கு ஸஹஜத்ருவென்னலாயிருக்கிற திருவனந்தாழ்வான்மேலே” என்று அருளிச்செய்துள்ளமை காண்க.

————————————————-

கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏசவன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே –-20-

பதவுரை

முன்

அநாதிகாலமாக.
வேலைநீர்

ஸமுத்ரஜலத்திலே
கூசம் ஒன்றும் இன்றி

சிறிதும் கூசாதே
மாசுணம்

திருவனந்தாழ்வானை
படுத்து

படுக்கையாக விரித்து
பேச நின்று தேவர் வந்து பாடக் கிடந்ததும்

ஸ்தோத்தரம் பண்ணுவதற்கென்று அமைந்த ப்ரஹ்மாதி தேவர்கள் வந்து பாடும்படி சமநித்தருளினபடியையும்
அன்று

தேவர்களுக்காகக் கடல் கடைந்த அக்காலத்தில்
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா (என்று) ஏச நீ கிடந்த ஆறும்

“வருண பாசங்கள் கிடக்கிற கடலிலேவாழ்கின்ற ஆமையென்னும் க்ஷுத்ர ஜந்துவாகப் பிறந்த கேசவனே!” என்று (அவிவேகிகள்) ஏசும்படி கிடந்தபடியையும்
தேற

அடியேன் நன்குதெரிந்து கொள்ளும்படி
கூறு

(எனக்கு) அருளிச் செய்யவேணும்.

 

கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
சிறிதும் கூசாதே -திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக விரித்து -சமுத்திர ஜலத்தில்

பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
ஸ்தோத்ரம் பண்ணுவதற்கு என்று -அமைந்த -ப்ரஹ்மாதிகளும் வந்து பாடும் படி அநாதி காலமாக
சயனித்து இருந்து அருளியதையும்

அன்று –
தேவர்களுக்கு கடல் கடைந்த அன்று

பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
வருண பாசங்கள் கிடக்கிற கடலிலே வாழுகின்ற ஆமை என்னும் ஷூத்ர சஜாதீயனாக திருவவதரித்த கேசவனே

ஏசவன்று நீ கிடந்தவாறு
அறிவிலிகள் ஏசும்படி கிடந்த படியும்

தேற கூறு –
அடியேன் நன்கு தெரிந்து கூறும்படி எனக்கு அருளிச் செய்ய வேணும்

நீர்மைக்கு எல்லை பாற் கடல் சயனம்
மேன்மைக்கு எல்லை கடல் கடைந்தது
இவற்றைப் பிரித்து எனக்கு அருளிச் செய்ய வேணும் என்கிறார்
எல்லா அவதாரங்களிலும் பரத்வ சௌலப்யங்கள் இரண்டுமே கலந்தே இருக்குமே –

பாசம் நின்ற நீர் –
பரம பதத்தை விட இந்த பாற் கடலிலே சயனம் போக்யமாய் இருக்கை –
ஆஸ்ரித ரஷணத்துக்காக வென்றே –கூப்பாடு கேட்கும் இடம் அன்றோ-
எல்லா அவதாரங்களில் பரத்வ ஸுவ்லப்யங்கள் ஒன்றுக்கு ஓன்று தொழாதே வீறு பெற்று இருக்குமே

ஆனி மாத சுக்ல பக்ஷ துவாதசி ஸ்ரீ கூர்ம ஜெயந்தி

ஜலாராசிக்ம்க்கு அதிஷ்டான தேவதை வருணனுக்கு ஆயுதம் பாசம் -பாசன் என்று வருணனைச் சொல்வர்

பரமபதத்தில் காட்டில் பாசம் மிக்கு உறங்குவான் போலே யோகு செய்கிறானே திருப் பாற் கடலிலே

ப்ரயோஜநரந்தபரரான நான்முகன் முதலானோர் எந்தத் திருப்பாற்கடலிலே

திருக்கண்வளர்ந்தருளுகிற மேன்மைதானே நீர்மைக்கு எல்லை நிலமாயிராநின்றது;

அமரர்க்கு அமுதமளிக்கக் கடல் கடைந்தபோது மந்தரமலையைத் தாங்குவதற்காக ஆமையாக உருவெடுத்த

நீர்மைதானே மேன்மைக்கு எல்லை நிலமாயிராகின்றது;

இவற்றைப் பிரித்து என்நெஞ்சிலே நன்குபடும்படி அருளிச்செய்யவே அருளிச்செய்யவேணுமென்கிறார்.

க்ஷீரஸாகரசயநவ்ருத்தாந்தம் முன்னடிகளில் கூறப்படுகிறது;

கூர்மாவதாக வ்ருத்தாந்தம் பின்னடிகளில் கூறப்படுகிறது.

க்ஷீரஸாகரசயநம் பரத்வப்காசகமாயினும் ப்ரயோஜநாந்தாபர்களும் வந்து கிட்டித் துதிக்கலாம்படி

எம்பெருமான் தன்னை அமைத்துக்கொண்டு கிடக்கிறபடியை நோக்கினவாறே

“இப்படியும் ஒரு எளிமை உண்டோ?” என்று உள்குழையும்படி யிருந்தலாலும்,

ஆமையாய்ப்பிறந்த பிறவி எல்லார்க்கும் ஏசுகைக்கிடமாயிருந்தாலும்

தேவதே வாதி தேவனான பரமபுருஷன் *** “பின் பிறப்பாய் ஒளிவரு முழுநலம்” இத்யாதிப்படியே

தண்ணிய பிறவியிற் பிறந்த விடத்தும் பரத்வம் குன்றாமற் பொலியநிற்பதே! என்று ஈடுபடும்படியாயிருத்தலாலும்,

மற்றுள்ளார்க்குப் பரத்வம் தோன்றுமிடத்தில் எளிமையும்,

எளிமை தோன்றுமிடத்தில் பரத்வமும் இவ்வாழ்வார்க்குத் தோன்றாநின்ற தாய்த்து.

எல்லா அவதாரங்களிலும் பரத்வஸௌலப்யங்கள் ஒன்றுக்கொன்று தோலாதே வீறு பெற்றிருக்குமென்பதுவே இப்பாட்டின் உள்ளுறை.

ஸௌலப்யத்தோடு இணங்காத பரத்வமும், பரத்வத்தோடு இணங்காக ஸௌலப்யமும்

ஒருபொருளாக மதிக்கத்தக்கவையல்ல வாகையால் இரண்டொடுங் கூடி நிற்கும் நிலையே மெச்சத்தக்காதென்க.

பாசம் நின்ற  நீரில்- ஜலராசிக்கு அதிஷ்டாக தேவதை வருணனாகையாலும்,

அவ்வருணனுக்குப் பாசம் ஆயுதமாகையாலும் “பாசம் நின்ற நீர்” எனப்பட்டது.

“பாசன் நின்ற” என்றும் பாடமுண்டாம்; பாசன் =வருணன்.

இனி, “பாசம் நின்ற நீரில்” என்பதற்கு, “பரமபதத்திற்காட்டில் ப்ரேமஸ்தலாமன கடலிலே” என்றும் பொருள் அருளிச்செய்வர்.

பாசம் என்றது ஆசை;

‘பரமபத்திற்காட்டிலும் இந்த நீர்நிலமே நமக்கு போக்யமான இடம்’ என்று எம்பெருமான் ஆசைப்படத்தக்க நீர் என்றபடி.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்