விஶ்வாவஸூ ௵ தை ௴ புனர்பூசம் ஸ்ரீ எம்பார் ஆயிரமாவது திருநக்ஷத்திர மஹோத்ஸவம் –திரு அவதார ஸ்தலம் : ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலம்–
ஸ்ரீ ராமானுஜ பதாச்சாய கோவிந்தா ஆஹ்வான பாயிநீ
ததாயத்த ஸ்வரூபாஸா ஜீயான் மத் விஸ்மரஸ் தலீ
புஷ்யே புனர் வஸூ தினே ஜாதம் கோவிந்த தேஸிகம்
ராமானுஜ பதாம்புஜ ராஜ ஹம்ஸம் ஸமாஸ்ரயே
மங்களம் கோவிந்தார்யாய நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்
வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம்
த்யாயேயம் யாமுநார்யம் மம ஹ்ருதி தாநவை ராமமேவாபியாயாம்
பத்மாஷம் ப்ரேஷிஷீய ப்ரதமமபி முநிம் நாதமீடே சடாரிம்
ஸ்தௌமி ப்ரேஷேய லஷ்மீம் சரணம் சரண ஸ்ரீ தரம் சம்ஸ்ரயேயம்–ஸ்ரீ குரு பரம்பரா வணக்கம்
வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம் த்யாயேயம் –
ஆச்சார்யரான ஸ்ரீ கோவிந்தர் என்னும் ஸ்ரீ எம்பார் -தந்தையான ஸ்ரீ கூரத்தாழ்வான் –
த்வந்த ஸமாஸம் -சம பிரதானம் இல்லை -அர்த்த கௌரவத்தால் கோவிந்த முதலில்
இதிஹாச புராணம் -அத்தாலே அது முற்பட்டது -பிரபலம் போல் இங்கும்
ஸ்ரீ கோவிந்த பட்டரையும்
என் பிதாவான ஸ்ரீ வத்ஸாங்க மிஸ்ரரையும்
வந்தனம் செய்கிறேன்
அதன் பிறகு ஸ்ரீ மத் ராமானுஜ முனிவரை எப்போதும் சிந்திக்கக் கடவேன்
பெரிய நம்பியை த்யானம் செய்வேன்
யாமுனாச்சார்யரை ஹ்ருதயத்தில் வைக்கக் கட வேன்
ராம மிஸ்ரரை அடையக் கடவேன்
புண்டரீகாக்ஷரைப் பார்க்கக் கடவேன்
சம்பிரதாயத்துக்கு பிரதம ஆச்சார்யரான ஸ்ரீ மன் நாதமுனிகளை ஸ்துதிக்கிறேன்
நம்மாழ்வாரைப் புகழ்கிறேன்
ஸ்ரீ மஹா லஷ்மியைத் தர்சிக்கக் கடவேன்
வேறு சரணம் இல்லாதவனாய் ஸ்ரீ யபதியை சரணம் அடைகிறேன் –
சகல சாஸ்திர வித்தமரான -பட்டருக்கு -ஆத்மதமரான -எம்பார்–குழந்தை பிறந்த உடனேயே ஆச்சார்யரான– —பட்டர் தொழும் எம்பார் -வாழித்திருநாமம் –பட்டரை எம்பெருமானாராகவே திரு உள்ளம் பற்றி இருக்கும் முதலிகள் -கூரத்தாழ்வானால் தனக்கும் பேறு -அர்வாஞ்சோ இத்யாதி போல் இருவரும் -இல்லை எனக்கு எதிர் -சாத்விக அஹங்காரம் -பட்டருக்கும் எம்பாருக்கும் இருக்குமே-
ஆஸ்திகனாய் இவ் அர்த்தத்தில் ருசி விச்வாசங்கள் உடையனாய் உஜ்ஜீவித்தல் –
நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய நடுவில் நிலை இல்லை -என்று
பட்டருக்கு எம்பார் அருளிச் செய்த வார்த்தை –சூரணை -275-இவ் அர்த்தத்தில் இழிந்த வனுக்கு ஆஸ்திகனாய் உஜ்ஜீவித்தல் நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய மத்யம ஸ்திதி இல்லை -என்னுமத்தை பூர்வாச்சார்யா வசனத்தாலே அறிவிக்கிறார் –அதாவது – இவ் அர்த்தத்தில் அன்விதனானவன் பகவத் ப்ரபாவத்தால் -இது சத்யம் -என்று ஆஸ்திகனாய் இவ் அர்த்தத்தில் ருசியும் -இது தப்பாது -என்கிற விசுவாசமும் உடையவனாய் உஜ்ஜீவித்தல் – சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தலையும் இது ஒரு தலையுமாய் இப்படி இருப்பது ஓன்று உண்டோ – என்று நாஸ்திகனாய் இத்தை அநாதரித்து நசித்தல் இத்தனை ஒழிய -நடுவில் ஒரு நிலை இல்லை –என்று சகல சாஸ்திர வித்தமரான -பட்டருக்கு -ஆத்மதமரான -எம்பார் அருளிச் செய்த வார்த்தை -என்கை –
பெரிய திருவடி அம்சம் இவர் என்பர் -எண்ணற்கரிய வைபவம் இவருக்கு –திருவடி பெருமாளுக்கு போல் எம்பெருமானாருக்கு எம்பார் -=கருடத்வஜன் -பார்த்த சாரதியை எம்பெருமானார் -அவர் கருடனான எம்பாரை சிந்திக்க -அவர் த்வய மந்த்ரம் சொல்லி குழந்தைகளைக் கூட்டி வர -த்வயம் பரிமளித்ததே -பெருமாளுக்கு திருவடி போல் கைங்கர்யம் செய்ய ஆசை கொண்டு பெரிய திருவடி எம்பராகி எம்பெருமானாருக்கு கைங்கர்யம் செய்தார் அன்றோ –
சிஷ்யன் ஆச்சார்யன் தேஹம் ரக்ஷணம் பண்ணக் கடவன் -ஆச்சார்யன் சிஷ்யன் ஆத்ம ரக்ஷணம் பண்ணக் கடவன் -எம்பார் எம்பெருமானை யாதவப்ரகாசரிடம் இருந்து ரஷித்த விருத்தாந்தமும் திருமலை நம்பி மூலம் எம்பாருடைய ஆத்ம ரஷணம் பண்ணி அருளியதும் பிரஸித்தம் அன்றோ –
திருமலை நம்பி இவருக்கு சமாஸ்ரயணம் பண்ணி இவருக்கு ஆச்சார்யராக இருக்க எம்பெருமானாரை ஆச்சார்யராக கொள்ளுவான் என் என்னில் -தாரை வளர்த்துக் கொடுத்த பின்பு-விற்ற மட்டுக்கு புல்லிடுவார் உண்டோ -என்றாரே –
ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வா நபாயிநீ |
ததாயத்தத் ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விஸ்ரமஸ்தலீ ||–ஸ்ரீ ராமானுஜரை எப்போதும் விட்டுப் பிரியாத அவர் திருவடி நிழலாகவும், அத்திருவடிகளாலே ஸ்வரூபம் நிறம் பெற்றிருப்ப வராகவும், ஸ்ரீ கோவிந்தப் பெருமாள் என்ற திருநாமம் உடையவராகவும், அடியேனுக்கு இளைப்பாறும் இடமாகவும் உள்ள எம்பார் விஜயத்துடன் விளங்க வேண்டும் பல்லாண்டு பல்லாண்டு.–எம்பார் நமக்கு நிழல் தருபவர் -எம் விஸ்ரமஸ்தலீ —
திருமழிசை ஆழ்வாரும் எம்பாரும் ஒரே சந்நிதியில் ஸ்ரீ ரெங்கத்தில் இன்று சேவிக்கலாம் -ஒரு பிறவியிலே இரு பிறவியானார்கள் -இருவரும் பல சம்ப்ரதாயம் இருந்து விட்டு வந்தவர்கள் –
எம்பாரின் திருநக்ஷத்ரமும் எம்பெருமானாரை திரு நக்ஷத்ரமும் அடுத்தடுத்து -குரு பரம்பரையிலும் அடுத்தடுத்து -உள்ளார்கள் -நமக்கு காக்கும் நிழலாக இருப்பவர்–
சாயா -பல அர்த்தங்கள்-மதுரம்- தாப ஹரத்வம் -தொடர்ந்து வரும் நிழல்–சாயா க்ரஹம் –உருவாக்குவது ஸூர்யன்-ராமானுஜ திவாகரன் அன்றோ- -ராகு கேது -சாயா கிரஹங்கள் -ஸாத்ருஸ்யம் -பிரதிபிம்பம் -ஸன்யா தேவி ஸூர்யன் பத்னி -வைஸ்வந்த மனு -யமன் -யமி -மூவரும் பிறந்தார்கள் -வெப்பம் தங்கள் விஸ்வகர்மா தந்தையிடம் சென்று-பெண் குதிரையாகஇருக்க ஸூர்யன் ஆண் குதிரையாக இவர்களுக்கு அஸ்வினி குமாரர்கள் பிறந்தார்கள் -பிரதிபிம்பம் இங்கு வைத்துப் போனாள் -சனி பகவான் பிறந்தார் -மெதுவாக நகரம் -30 வர்ஷம் -குரு ஒரே வருஷம் –
அறிவோமாய் வல் வினை தீர்ப்பான் நிழலும் அடி தாறுமானோம்-பெரிய திருவந்தாதி -தொடர்ந்து சேஷப்பட்டு இருக்கும்-நிழல் அநந்யார்ஹ சேஷத்வம் –அடி தாறு-பாதுகையும் ரேகையும் -சாயாயிவ -பூமி தேவியும் நீளா தேவியும் பெரிய பிராட்டியாருக்கு நிழல் போல்வனர்-மரத்தின் நிழல் தஞ்சமாக இருக்கும் –வாஸூ தேவ தருச்சாயா-கற்பக வ்ருஷ வாஹனம் -பாஹுச்சாயா அவஷ்டாப்யாம் ஸீதா தேவி – -எம்பார் நிர்வாஹகங்கள் -வார்த்தா மாலை -கால ஷேபம் செய்து இளைப்பாறலாம் -ராகு கேது -மனம் வேறுபாடு -உள்ளங்கை நாயனார் -பரம விரக்தரானார் அன்றோ –பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -வைராக்ய நிதி -ஆகவே சாயா க்ரஹமும் பொருந்தும்-நிஜம் அல்ல நிழல் என்ற எண்ணம் -பெரிய நம்பி உடன் கூரத்தாழ்வான் சென்ற ஐதிக்யம் –பலர் அடியார் முன்பு அருளிய பாம்பணை அப்பன் -எம்பெருமானாரை விட்டு தனித்து இல்லாமல் இருந்தார் அன்றோ-
சாத்ருஸ்யம் -இருவரும் இன்றும் அர்ச்சா திருமேனிகளில் சாத்ருஸ்யம் சேவிக்கிறோம் -அருளிச் செயலில் அனுபவத்திலும் சாத்ருஸ்யம் -காண்கிறோம் –
பெருமாள் ஆச்சார்ய சிஷ்ய ரக்ஷணம் மூன்றையும் செய்து அருளியவர் எம்பார்-தர்மம் ரக்ஷணம் -வேசி வ்ருத்தாந்தம்-எவ்வுலகத் எவ்வவையும் காக்கும் எம்பெருமானுக்கு மூன்று ஆபத்துக்கள் வந்து கழிந்தன என்று எம்பார் அருளிச்செய்வார்.பாஞ்சாலியும், கஜேந்திரனும், ப்ரஹ்லாதனும் எம்பெருமானை அழைத்த போது, எம்பெருமானுக்கு தான் ஆபத்து ஏற்பட்டது என்பது எம்பாரின் திருவுள்ளம்.ஆகவே எம்பெருமான் இவர்களுக்கு, இருக்குமிடங்களில் இவர்களுக்கு வந்த ஆபத்தை போக்கி, தனக்கு வந்த ஆபத்தையும் போக்கிக் கொண்டான் என்று எம்பார் அருளிச்செய்வார்.
கொம்பினார் பொழில் வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4- 9-எம்பார் அருளி செய்யும் வார்த்தை –ஈஸ்வரனுக்கு மூன்று ஆபத்து வந்து கழிந்தது -என்று அருளிச் செய்வர் –
அதாவது-திரௌபதிக்கும்-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கும் -ஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கும்
உதவிற்றிலன் ஆகில் -சம்சாரிகள் ஈச்வர தத்வம் இல்லை என்று எழுத்து இடுவர்கள் இறே-ஆழ்வாரும் –எங்கனம் தேறுவர் தமர் -என்று தம்முடைய இழவிலும் ஸ்ரீ வைஷ்ணவர்களின் அத்யாவசாயம் குலைகிறதோ -என்று இறே அஞ்சுகிறது – பிழைக்கின்றது அருள் (திருவாய்-9-4-3 )-என்று இறே அஞ்சுகிறது பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவன்-என்று தம்முடைய இழவுக்கு நோகை அன்றியிலே ஈஸ்வரன் அருளுக்கு இறே இவர் நோவுவது
அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3-அருள் -பிழைக்கின்றது – என்று பேதுறுவனே –
வரையாதே காத்த மகா குணம் எனக்கு உதவாமையாலே அதனை இழக்கப் புகா நின்றாய் என்று-
பேகணியா நின்றேன் -என்று ஆளவந்தார் அருளிச் செய்யும்படி –
அதனை எம்பெருமானார் கேட்டருளி
இது பொருள் அழகிது-ஆனால் இது இப்போது இவர்க்கு ஓடுகிற நிலைக்கு சேராது-
ஆனபின்பு-பசுக்களும் ஆயர்களும் மழையிலே நோவு படாதபடி மலையை எடுத்து மறித்த-இம் மகா குணத்துக்கு நான் புறம்பு ஆகிறேனோ-என்று பேதுறா நின்றேன் -என்கிறார் என்று அருளிச் செய்தார்
அவ்வருள் அவனை தப்பிப் போகிறது -ஆளவந்தார் நிர்வாகம்-
அவ்வருள் இவரை தப்பிப் போகிறது -எம்பெருமானார் நிர்வாகம்-
முதல் நாள் காலையில் பல்லக்கிலும் மாலையில் மங்களகிரியிலும்
இரண்டாம் நாள் காலையில் பல்லக்கிலும் மாலையில் யாளி வாஹனமும்
மூன்றாம் நாள் காலையில் பல்லக்கிலும் மாலையில் மங்களகிரியிலும்
நான்காம் நாள் காலையில் ஸிம்ஹ வாஹனமும் மாலையில் ஹம்ஸ வாஹனமும்
ஐந்தாம் நாள் காலையில் பல்லக்கிலும் மாலையில் சந்திர பிரபை வாஹனமும்
ஆறாம் நாள் காலையில் குதிரை வாஹனமும் மாலையில் மங்களகிரி வாஹனமும்
ஏழாம் நாள் காலையில் பல்லக்கு வாஹனமும் மாலையில் யானை வாஹனமும்
எட்டாம் நாள் காலையில் பல்லக்கு வாஹனமும் மாலையில் மங்களகிரி வாஹனமும்
ஒன்பதாம் நாள் திருத்தேரும்
திருவவதார திரு நக்ஷத்ரம் காலையில் சாற்று முறையும் மாலையில் மங்களகிரி வாஹனமும் இரவில் புஷ்ப பல்லக்கு வாஹனமும்
அடுத்த நாள் காலையில் சாற்று முறை தீர்த்த கோஷ்டியும் ஸ்கந்தப் பொடி உத்ஸவமும் நடைபெறும் –
தை புஷ்ப பிரஸாதம் வருஷா வர்ஷம் எம்பெருமானார் எம்பாருக்கு அனுப்பி அருள்கிறார்
விஷ்ணு த்வீதீயர்-கருட பஞ்சாசத் தேசிகர் –ஏக -பார்த்தசாரதி எம்பெருமானாராக -த்வீதீயர் -எம்பார் -பெரிய திருவடி அம்சம் -குருபரம்பரையிலும் எம்பெருமானருக்கு அடுத்த ஸ்தானம் -இவருக்கே -இவர் திருவடி நிலையில் பட்டரையும் நாம் ஸேவிக்கலாம்–
ஆச்சார்ய அபிமான துங்கனாக -எம்பார்
எம்பெருமானாரை ரஷித்துக் கூட்டி வந்ததால் தேவப்பெருமாளின் அபிமானம் பெற்றவர்
பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே-பிராட்டியார் அபிமானம் ஸ்பஷ்டம்
பெரிய திருமலை நம்பி ராமானுஜர் அபிமானம் இவர் சரித்ரத்திலே ஸ்பஷ்டம் –
ஞானக்கை தா –முதலியாண்டான் -எம்பார் -இவரும் ஒரு முதலியாண்டான் சிஷ்யரை கைங்கர்யம் ஏற்றுக் கொள்ள-அபராத ஷாபனம் கொள்ள -கீழே விழுந்தவனை இருவரும் கைக்கொள்ள கரையேறுவது ஸூலபம் அன்றோ -என்றாராம்–
மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையின்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே –-10-2-
இதுக்கு திருமலை நம்பி பணிக்கும் படி —
தான் பிரிவாலே நொந்த படியாலே –ஜரா மரண மோஷாயா-ஸ்ரீ கீதை -7-29–என்று
ஆஸ்ரயிக்கும் திரளின் நடுவே என்னைக் கொடு போய் வைக்க வல்லையே -என்கிறாள் -என்று அருளிச் செய்வர்-பகவத் அனுபவம் பண்ணுமதிலும் துக்க நிவ்ருத்தி தேட்ட மான படியாலே சொல்லுகிறாள் என்று —கைவல்ய கோஷ்டியில் –மாற்றோலை பட்டவர் –ஓலை மாறப்படுகை கேவலர் -முக்தர் இருவருக்கும் ஒக்கும் –மாற்றுகை -நீக்குகை-பகவத் அனுபவத்துக்கு மாற்றோலை -கேவலர்
சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர் என்றுமாம்
கேவலர் தனித் தனியே யாய்த்து அனுபவிப்பது —திரளாய் இருக்கக் கூடாது -என்று –
எம்பார் அருளிச் செய்யும் படி
மாற்றோலைப் பட்டவர் கூட்டமாகிறது -அடியார்கள் குழாங்களாய்-என்னை அத்திரளின் நடுவே கொடு போய் வைக்க வல்லையே என்கிறாள் என்று —சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர்கள் –
நாம் ரஹஸ்யத்திலும் அனுசந்திப்பது சம்சார நிவ்ருத்தி -நமஸ் சப்தார்த்தம் -பூர்வகமாக அனுபவிக்கும் அனுபவத்தை இறே-சதுர்த்தியாலும் நாராயண சப்தார்த்தத்தாலும் –இங்கே பகவத் அனுபவம் உண்டானாலும் காதாசித்கம் இறே-சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக பெறும் அன்று இறே பரிபூர்ண கைங்கர்யத்தைப் பெறலாவது-
அங்கன் அன்றிக்கே கூரத் ஆழ்வான் சிஷ்யர் ஆப்பான் பணிக்கும் படி –
ஆழ்வான் பணிக்கக் கேட்டிருக்கவுமாம் இறே – அவன் கொடு வரச் சொன்னவர்களைத் தவிர்ந்து –
மாற்றோலைப் பட்டோம் என்று அவர்கள் திரளிலே என்னை வைக்க வல்லையே -என்கிறாள் –
அவன் தானே நலிய கூட்டி வரச் சொல்லும் சிஸூ பாலாதிகள் திரளில் வைத்தாலும்
அவனை பார்க்கும் பாக்கியம் பெறுவேனே- அவர்கள் நடுவே இருந்து நலிவு படுவதிலும் கொடியதாய் உள்ளதே உங்கள் நலிவு என்றுமாம் –
வீர சுந்தரனோடே எம்பார் விரோதித்து இருக்க , அவ் ஊரில் உள்ளான் ஒருவன் அவனுடைய எதிரியாய் அவனுக்கு அஞ்சி , எம்பார் திரு அடிகளில் சரணம் புக , ஸ்ரீ பாதத்திலே வர்திக்கிறவர்கள் அவனுடன் பண்டே விரோதம் உண்டாய் இருக்கச் செய்தே இவனையும் கைக் கொள்ளக் கடவதோ என்ன
நம்மை -சரணம்-என்று புகுந்தவனை நாம் கை கொண்டால்சரணா கதி தர்மமே எல்லா வற்றையும் ரஷிக்க வல்லது காண் என்று அருளி செய்தார்-
வைராக்யம் -ராஸிக்யம் -ஒவ்வொன்றிலும் ஸீமா பூமியாக இருந்தவர் என்பதை விளக்கும் ஐதிஹ்யங்கள் பலவுண்டு
நம்பனை நரஸிம்ஹனை — -பிரகலாதன் -கஜேந்திரன் -திரௌபதிக்கு ஆடை சுரந்தது -மூன்று பரீஷைகளிலும் தேறின தத்வம்-என்பாராம் எம்பார் ஸ்வாமிகள்
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-
ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று ஸ்ரீ எம்பாரைச் சிலர் கேட்க,
ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச் செய்தார். என் போலே என்னில் ,‘நாமும் எல்லாம் பிரபந்நர்களாய் இருக்கச் செய்தே ஆண்டு ஆறு மாசத்துக்கு ஜீவனம் தேடுகிறாப் போலே –உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ இறே இவர்க்கு.
அருளினன் –நிர்ஹேதுகமாக ( ஒரு விதக் காரணமும்
மெச்சூது சங்கம் இடத்தான் நல்வே யூதி
பொய் சூதில் தோற்ற பொறை உடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாத அன்று பாரதம் கை செய்த
அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2-1 1- –
இவ் விடத்தை ஸ்ரீ உய்ந்த பிள்ளை-ஸ்ரீ திரு வரங்கம் பெரிய கோவிலில் ஸ்ரீ எம்பெருமானார்
காலத்தில் எழுந்து அருளி இருந்தார் ஒரு அரையர் – பாடா நிற்க –
திரு வோலக்கத்திலே
அத் தூதன் என்று -பெருமாளை காட்டுவது –
அப் பூச்சி என்று கண்ணை இறுத்து கொண்டு வருவதாக அபிநயிக்க –
ஸ்ரீ உடையவர் பின்னே சேவித்து எழுந்து அருளி இருந்த ஸ்ரீ எம்பார் –
திருக் கைகளை திருத் தோள்களோடு சேர்ந்து காட்ட –
அவரும் அப்படியே அபிநயித்து கொண்டு வர –
இதுக்கடி என் என்று விசாரித்து புரிந்து பார்த்து அருளி –
ஸ்ரீ கோவிந்த பெருமாள் இருந்தீரோ -என்று அருளிச் செய்தார்-என்று பிரசித்தம் இறே –
துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –36–ஒருத்திக்காக கடலை யடைத்து- இலங்கையை ராமன் என்றும் லஷ்மணன் என்றும் எழுத்து வெட்டின அம்புகளை புக விட்டு குட்டிச் சுவரும் மட்டைத் தெங்குமாக்கி மூலையடி போகப் பண்ணின இந்த உபகாரகனுடைய இந்த நீர்மை எல்லாம் எங்கே குடி போயிற்றோ -என்று எம்பார் அருளிச் செய்தார் –
கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பெருமான் உரு ஒத்தன நீலங்களே -38-தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் –யோகிகள் யோக அப்யாசம் பண்ணும் போது யோகம் சாத்மிக்கைக்காக லோக யாத்ரையிலே ஒன்றுவார்கள்— அது போல் இவரும் பகவத் அனுபவம் சாத்மிக்கைக்காக லோகங்களில் பதார்த்தங்களின் மேல் கண் வைததார் –அவையும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி –
மயர்வற மதி நலம் அருள பெற்றவர் ஆகையாலே –நம்மை லோக யாத்ரையின் நின்றும் வேத (வைதிக )யாத்ரையில் மூட்டும் தனை அருமை போரும்-ஆழ்வார்களை – வேத (வைதிக )யாத்ரையில் நின்றும்
லோக யாத்ரையிலே மூட்டுகை –நம்மை சம்சாரத்தில் உண்டான ருசி வாசனையை தவிர்த்து பகவத் விஷயத்தில் உண்டாக்குக்கைக்கு உள்ள அருமை போரும்-ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் ருசி வாசனையை தவிர்த்து –சம்சாரத்தில் உண்டாக்குக்கைக்கு – இரண்டும் எம்பார் அருளி செய்தார் –
பத்து நிர்வாஹகங்கள் திருவாய்மொழியில் உண்டு -அர்த்தபஞ்சக பாரமாக ஒவ்வொன்றிலும் இரண்டு நிர்வாஹகங்கள்
மிக்க இறை நிலை பற்றிய இரண்டு நிர்வாஹகங்கள்–2-4-5-/4-3-கோவை வாயாள் பொருட்டு ப்ரவேஸம்
இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே –2-4-5-தகவுகளே -தயநீய விஷயங்கள் பல வாகையாலே தயையும் பலவாய் இருக்கை – ‘சுத்த ஸ்வபாவரான உம்முடைய தகவுகள் எங்கே போயின?’ என்று எம்பார் அருளிச் செய்வர்.-‘உம்மைப் போலே நாலு சிஷ்டர்கள் அமையும் அபலைகள் குடிகெட’ என்று பட்டர் அருளிச் செய்வர்.
4-3-கோவை வாயாள் பொருட்டு ப்ரவேஸம்-இதுதனக்கு மூன்று படியாக நிர்வஹிப்பர்கள் நம் முதலிகள்;
ஒன்றை கேட்டால் -வேறு ஒன்றைக் காட்டி சமாதானம் பண்ணுவது-அத்தையே கொடுப்பதாகச் சொல்லுவது – அத்தையே கொடுப்பது -என்ற மூன்று நிலைகளும் மூவரும் அருளுவார்கள் –எம்பார், “அம்புலி அம்மானைப் பிடித்துத் தரவேண்டும்’ என்று அழுத குழந்தைக்குத் தேங்காயைக் –
உடைத்த தேங்காயைக்-கொடுத்து அழுகையை ஆற்றுவாரைப்போலே, வேறு ஒரு குணத்தைப் -காதற்குணத்தை.- பிரகாசப்படுத்தி அனுபவிப்பிக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர்.–
மெய்யா உயிர் நிலையும் –4-5-வீற்று இருந்து -4-6-தீர்ப்பாரை யாம் இனி–மோர் உள்ளதனையும் சோறோ -அசங்கதி ஏவ சங்கதி -என்பாராம் எம்பார்—அசங்கதி ஏவ—எம்பெருமான் சேராததால் வந்த துக்கம் தன்னடையே வந்தது என்றவாறு–
மெய்யா உயிர் நிலையும்–8-8-சரீர ஆத்ம பாவம் -ஆத்ம வஸ்து வானது சர்வேஸ்வரன் தன்னைப் பற்றி அல்லது இராமையாலே-பற்றுக் கோடான தன்னைக் காட்டி பின்பு ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்கிறான் -என்பாரும் உளர் -அன்றிக்கே-ஸ்வரூபம் இருக்கிற படியைக் காட்டித் தருவதற்கு வாரும் என்றால் இசையார் என்று தன்னை முற்பட காட்டிக் கொடுக்கிறான் -என்பாருமுளர் –
அன்றிக்கே – இரண்டரை பாசுரங்களாலும்-இருத்தும் வியந்து -என்னும் திருவாய் மொழியில் கூறியகலவி பின்னாட்டுகிறது -என்பாரும் உளர் –
தக்க நெறி–வீடுமின் முற்றவும் -அவதாரிகை –தத்வ பரமாயும் -உபாசனை பரமாயும் இறே மோக்ஷ சாஸ்திரம் தான் இருப்பது-அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய்மொழியிலே- உபாசன பரமாகச் சொல்ல வேண்டுமவற்றுக்கு எல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத் திருவாய் மொழி-இத் திருவாய்மொழியை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பிரபத்தி விஷயமாக்கி நிர்வகித்துக்கொண்டு போந்து எம்பெருமானாரும் அப்படியே அருளிச் செய்து கொண்டு போந்து, ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்த பின்னர்,பத்தி விஷயமாக அருளிச் செய்து கொண்டு போந்தார், பின்னர் எம்பாரும் அவ்வாறே அருளிச் செய்தார்.
தக்க நெறி—5-10-பிறந்த வாறும் வளர்ந்த வாறும்-ப்ரவேஸம்–பிரிந்திருக்கும் சமயத்திலே உன் குணங்கள் மனத்திலே நிலை பெற்று மிகவும் நலிய, அதனாலே நெருக்குண்டு நோவு படுகை தவிர்ந்து, உன் திருவடிகளிலே வந்து சேர்ந்து உன்னைக் கிட்டி அநுபவிக்கும்படி செய்தருள வேண்டுமென்று அவனைக் குறித்து அருளிச் செய்கிறார்’ என்று எம்பார் அருளிச் செய்வர்.– உன் திருவடிகளிலே வந்து சேர்ந்து உன்னைக் கிட்டி அநுபவிக்கும்படி–காயிக அனுபவம்-எம்பார் நிர்வாகம், “என் கண் கட்குத் திண் கொள்ள” என்பது போன்றவைகளிலே நோக்காக எழுந்தது.
விரோதி ஸ்வரூபம் –ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம் விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-ஸ்ரீ எம்பார் ஒரு உருவில் , ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு
‘இங்ஙனே காரணமானது கழிந்த போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ! பலமும் இனிக் கைப் புகுந்ததே அன்றோ! இனி, சிந்தா விஷயம் உண்டோ?’ என்று அருளிச் செய்தார்.
விரோதி ஸ்வரூபம்—மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8-சாதன கர்மங்களைப் பண்ணினார் பலம் தாழ்த்துக் கூப்பிடக்கூடிய கூப்பீட்டைப் பேற்றுக்கு ஈடாய் இருப்பதொரு கைம்முதல் இல்லாத நான் எங்கே வந்து கிட்டக் கூப்பிடுகிறேன்?’ -‘ஒரு கொசுக் கூப்பிட்டது’ என்று பிரமனது ஓலக்கத்திலே கேட்கப் போகின்றதோ? எங்ஙனே வந்து கேட்கக் கூப்பிடுகிறேன்?-என்கிறார்.-ஓவுதல் இன்றி மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன், ஓவுதல் இன்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’ என்று ‘ஓவுதலின்றி’ என்பதனை முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் அருளிச்செய்வர் எம்பார்.
வாழ்வு-–தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.–3-2-10-இவர் நசை யற்றவராய் முடியப் புக்கவளவில், ‘இவர் கிரமப் பிராப்தி -பற்றாதார் -பொறாதவர் போலும்!’ என்று நினைத்து, ‘நீர் ஒரு பெரு விடாயர் உண்டு என்றறிந்து, உமக்காக அன்றோ வடக்குத் திருமலையில் நிற்கிறோம்?’ என்று அந் நிலையைக் காட்டித் தரிப்பிக்கத் தரித்து, இனியராகிறார்.-‘அவையெல்லாம் காணக்காண விட்டுக் கடக்க நிற்க, அவற்றோடு-சஜாதீயமான – ஒத்ததான துன்பம்’ என்று எம்பார் அருளிச்செய்வர். என்றது, அவ்வோபாதி கிலேசம் – ‘அந்தத் துக்கத்தைப் போலேயிருக்கிற, பகவானைப் பிரிந்ததனால்-விஸ்லேஷத்தால் –
உண்டான துக்கமெல்லாம் இவர்க்கும் அகல’ என்றபடி.
இனி,‘பகவான் கைவிட்ட பின்னர்-பகவத் அலாபமே யான பின்பு – யமனுக்கு வஸ்யனாகையும் வந்ததேயன்றோ?-அந்த யம வஸ்யதை போம்படியாக’ என்று ஆண்டான் அருளிச்செய்வர்.
வாழ்வு-4-9–நண்ணாதார் முறுவலிப்ப–ப்ரவேஸம்-உடம்பு வேண்டா; உயிர் வேண்டா,’ என்று இவற்றை வெறுத்துப் பார்த்தார், தாம் ‘வேண்டா’ என்றவாறே தவிரும் என்று நினைந்து. அவை தவிர்ந்தன இல்லை. ஒன்றனைப் பெறுகைக்கு மாத்திரமே அன்றி முடிகைக்கும் உன் தரவு -சீட்டு-வேண்டுமாகில்
அதனைத் தந்தருள வேண்டும்,’ என்கிறார் இத் திருவாய் மொழியில். இந்த அமங்கள வார்த்தையைத் -பணி கண்டாய் சாமாறே – திரு முன்பே விண்ணப்பஞ் செய்ய வேண்டும்படியாகக் காணும் இவர் இவ்வுலக வாழ்வினை வெறுத்தபடி. –புருஷார்த்தம் பெற உனது சங்கல்பம் லோக யாத்ரையை நினைத்து -இவை கண்டு இராதே திருவடி சேர்த்து கொள்ள வேண்டும் -எனபது பொருந்தாதே –
விச்லேஷத்தில் துக்கிக்கார் -அத்தைப் போக்கி கேட்க வேணுமே -முதலில் -இதுவே தான் பிரகரணம்
இதற்கு இரண்டு வழிகளில் எம்பார் கூரத் ஆழ்வான் நிர்வாகங்கள் -மேலே வைராக்ய சீலர் எம்பார் -காமத்துக்கு இருள் தேட்டம் -அவன் எங்கும் நிறைந்து இருப்பதால் ஒளி மயமே எங்கும் என்பார் -மற்றவற்றைப் பார்க்காமல் கூரத் ஆழ்வான் -தவளையும் பார்த்து ஜீவ காருண்யம் அதிகம் அவர் நோக்கு வேற எம்பார் நோக்கு வேறே –
எம்பார்,-
உன்னைப் பிரிந்திருந்து படுகிற துன்பத்தின் அளவு அன்று, உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இம்மக்கள் நடுவே இருக்கிற இருப்பால் படுகிற துன்பம்;
இதனைத் தவிர்த் தருள வேண்டும் என்கிறார்,’ என்று அருளிச் செய்வர்
கதையைக் கையிலே யுடையவனாய் நான்கு மந்திரிகளோடு உயர எழுந்தான்,’ என்கிறபடியே,
இராவணனோடு பொருந்தாமை பிறந்த பின்பு நெருப்புப்பட்ட தரையில் கால் பாவாதாப்போலே அவ்விடம் அடி கொதித்துப் போந்தான் ஆயிற்று.-ந நமேயம் என்னாதது கதை ஒன்றே ஆயிற்று -அத்தை எடுத்து தோளில் வைக்க வேண்டும் – அதுவும் வேண்டாத படி நால்வரும் –இவன் கைகள் கால்கள் போல நால்வரும்-இத்தால், ஒருவன் ‘பகவானிடத்தில் பகைமை கொண்டு அதிலே நிலை நின்றான்’ என்று அறிந்தானாகில் தன்னைக் கொண்டு அகல அன்றோ அடுப்பது என்பது போதருகின்ற தன்றோ?-
கர்ணன் இந்த தப்பித் தானே பண்ணினான் –
ஆத்மா உஜ்ஜீவனம் பார்க்காமல் செஞ்சோற்று கடன் என்று தேக யாத்ரை பார்த்தானே –
ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் –தாழ்வாக நினைப்பார்கள் -பக்கல் நெஞ்சே கூசித் திரி –
அசோகா வனம் பிரிவு –வால்மீகி ஆஸ்ரமம் பிரிவில் அவ்வளவு துயரம் இல்லையே –
ராம விரஹத்துக்கு மேலே ராஷசி கணங்கள் கூட இருப்பது அதில் -சாதுக்கள் கோஷ்டியில் அன்றோ இது –
உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இவர்கள் நடுவினின்றும்
என்னை முன்னம் வாங்க வேண்டும்,’ என்ன, ‘
முன்பே உம்மை வாங்கினோமே! சமுசாரிகளோடு பொருந்தாதபடி செய்தோமாகில்,
இவ்வுலக வாழ்வினை நினைத்த நினைவாலே வந்த துன்பம் எல்லாம் போகும்படி உம்முடைய இருப்பு இது காணும் என்று பரமபதத்தில் அயர்வு அறும் அமரர்கள் அடிமை செய்யப் பிராட்டியாரும் யாமுமாக வேறுபாடு தோன்ற இருக்கும் இருப்பைக் காட்டித் தந்து அங்கே உம்முடைய மனம் ஈடுபடும்படி செய்தோமாகில், இனி, உமக்குப் பேற்றுக்குக் குவால் உண்டோ? நாம் செய்ய வேண்டுவது என்?’ என்ன,
இவை இரண்டனையும் நினைத்துத் தரித்துக் கிருதார்த்தராய்த் தலைக் கட்டுகிறார்,’ என்று பணிக்கும் ஆழ்வான்.-ஆழ்வான், தாம் ஓரிடத்திலே வழியிலே போகா நிற்க, ஒரு பாம்பினாலே பிடிக்கப்பட்ட தவளையானது கூப்பிடா நிற்க, இது யார் அறியக் கூப்பிடுகிறது?’ என்று மோகித்தாராம்; இவ்வாழ்வான் தன்மைக்குச் சேருமே இவர் நிர்வாஹமும். ஆழ்வார் தயாளு ஆழ்வான் பரம தயாளு என்பதற்கு சேர இந்த நிர்வாஹம் –
—-
என்னை வருக என குறித்திட்டு இன மலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளை புணர புக்கு மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன் நிற ஆடையை கையில் தாங்கி பொய் அச்சம் காட்டி நீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே– 6-8-
ஸ்ரீ உஞ்சப் பிள்ளை பாடா நிற்க ஸ்ரீ எம்பார் பார்த்து எழுந்து அருளி இருக்க இவ்விடத்துக்கு
அபி நயிக்கிறார்-காலாலே பாய்ந்து தள்ளுவதாகக் காட்ட -அது கைக் கொண்டு அருளி –
கெடுவாய் அங்கனே செய்தாள் ஆகில் அவனுக்குப் பொல்லாதோ –
அவனுக்கு அது அன்றோ தேட்டம் -அங்கன் அன்று காணும் -என்று
கையை இட்டு முகத்தை மறைத்து திரிய வைத்து அருளக் காட்டினார் –
வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 -4-11 –
ஸ்ரீ எம்பாரை சிலர் -இப் பத்துக்கு பொருள் என் -என்று கேட்க –நான் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்தில் இது கேட்டிலேன் –ஆகிலும் நீங்கள் கேட்ட இவ் அர்த்தம் போராது என்ன ஒண்ணாது – இப்பொழுதே கேட்டு உங்களுக்கு சொல்ல ஒண்ணாதபடி ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தேற எழுந்து அருளினார் –ஆகிலும் இப்பொழுதே உங்களுக்கு சொன்னேன் ஆக வேணும் -என்று
ஸ்ரீ உடையவர் திருவடி நிலைகளை எடுத்து தம் திரு முடியிலே வைத்துக் கொண்டு –
இப்பொழுது ஸ்ரீ உடையவர் எனக்கு அருளிச் செய்தார் கேட்கல் ஆகாதோ -என்று
பாட வல்லார் -சாயை போலே -தாமும் -அணுக்கர்களே -என்று அருளிச் செய்தார் –
(ராமானுஜ பதச்சாயை தாமே இவ்வர்த்தம் அருளிச் செய்யும் படி ஆய்த்தே )
ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–4-11-
நிறை புகழ் ஆய்ச்சியர் -என்கிறதுக்கு எம்பார் –
இவர்களுக்கு நிறை புகழாவது –-கிருஷ்ணனை இன்னாள் நாலு பட்டினி கொண்டாள்-
இன்னாள் பத்து பட்டினி கொண்டாள் -என்னும் புகழ் காண்-என்று அருளிச் செய்வர் –
ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம –யுத்த -18-33-
ஸக்ருதேவ ப்ரபன்னாய-
ஸக்ருச் சப்தத்துக்கு -சஹஸா ஆதேஸமாய் –சஹ சைவ ப்ரபன்னாய -உடனே-என்கிறபடி
அதாகிறது -தன் அயோக்யதையைப் பார்த்து சடக்கென -இது ஆழ்வான் நிர்வாஹம் –
கீழ் அநாதி காலம் சம்சரித்துப் போந்தவன் மேல் அநந்த காலம் பல அநு பவம் பண்ணப் புகுகிறவன் ஆகையாலே யாவதாயுஷம் அநு வர்த்தித்தாலும் -சக்ருத் -என்கைக்கு போரும் அத்தனை அன்றோ -என்று எம்பார் நிர்வாஹம் –
ஈஸ்வர விஷயீ காரத்துக்கு ஒரு கால் அமையும்-ஆவர்த்திக்கிறது உபாய வைபவத்தால் வந்த ரஸ்யதை யாகையாலே -என்று பட்டர் நிர்வாஹம் –
ஸக்ருதேவ -என்கையாலே உபாயத்துக்கு விஹிதமான அசக்ருதா வ்ருத்தியை வ்யாவ்ர்த்திக்கிறது –
தவாஸ் மீதி ஸ யாசதே –
இதுக்கு மேல் உனக்கு அடியேனாக வேணும் என்று உபேயத்தையும் ப்ரார்த்திக்குமவனுக்கு –
ஸக்ருதேவ ப்ரபன்னாய -என்கிறது பிரபத்தி
தவாஸ் மீதி ச யாசதே -என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தால் -அநவரத பாவநா ரூபமான பக்தியைச் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு-
1-3-பத்துடை யடியவர்கு எளியவன்-ப்ரவேஸம்
இச் சம்சாரி சேதனனுக்கு-பஜிக்கலாம் படி – வழிபடலாம்படி -அவன் தன்னைக் கொண்டு வந்து தாழ விட்டு எளியனாமாகில், இவனுக்கு வழி படத் தட்டு இல்லையே?’ என்று
கூறுமுகத்தால் அவன் எளிமையை அருளிச் செய்கிறார்.சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை விளங்க விரித்துச் சொல்லிக் கொண்டு போந்தோம்;-அது தானே ‘இவர்களுக்கு இத்தனை எளியனோ?’ என்று விடுகைக்கு உடல் ஆயிற்று? அவ் வெளிமை தானே ஆதரிக்கைக்கு உடல் ஆயிற்று உமக்கு ஒருவருக்குமே!’ என்று ஸ்ரீ எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச்செய்தாராம் .
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என்சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5-
ஆவி உள் குளிர – இவ் விடத்தைப் பட்டர் அருளிச் செய்யா நிற்கச் செய்தே மேல் எழ அருளிச் செய்தாராய்,-அங்கே இருந்தவரான சீராமப்பிள்ளை,
‘சீயா! எம்பார் அருளிச் செய்யும்படி கேட்டறிகை இல்லையோ?’ என்று அருளிச் செய்தார்.
கமர் பிளந்த பரப்பு அடங்கலும் மறு நனையும்படி யாயிருக்கை.-(சீயா-உயர்ச்சியாக நவில்கிறார் )
இவர் பகவத் ஸ்ரீ ராமானுஜரின் ஒன்றுவிட்ட சகோதரர் என்றும், மேலும் அவர் பகவத் ஸ்ரீ ராமானுஜரே தஞ்சம் என்று அடைந்து அவருக்கே ஆட்பட்டு வாழ்ந்தவர்-கோவிந்தப் பெருமாள் என்ற இயற்பெயர் கொண்ட இவர் எம்பெருமானின் குணங்களில் உயர்ந்த ஞானத்தைப் பெற்றிருக்க, இவருக்கு இராமானுசரே, எம்பார் என்னும் பெயரைச் சூட்டி, அவருக்கு த்ரிதண்டம்,காஷாயம் முதலியவற்றை அருளினார்.-தையில் மகத்திற்கு” ஏற்றமளித்த திருமழிசை ஆழ்வாரும், தன் வாழ்க்கையில் முதல் 1000 ஆண்டுகள் (இவர் 4700 ஆண்டுகள் வாழ்ந்தவர்) பிற மதங்களில் புகுந்து, பின் சைவ மதத்தில் சேர்ந்து, சிவ வாக்கியர் என்னும் பெயருடன் சிவனைப் பாடியும் போற்றியும் வணங்கிவர, எம்பெருமான் பேயாழ்வாரைக் கொண்டு இவரைத் திருத்திப் பணிகொள்ள விருப்பப்பட்டு, பேயாழ்வாரும் எம்பெருமானின் குறிப்பறிந்து செயல்பட்டு, திருமழிசை ஆழ்வாரைத் திருத்திப் பணிகொள்ள, ஆழ்வாரும் எம்பெருமானே பரதெய்வம் என்பதை நன்கு உணர்ந்து, பின்னர் 3700 வருடங்கள் எம்பெருமானுக்கே தன்னை ஆட்படுத்திக் கொண்டு, திருக்குடந்தையில் திருநாட்டுக்கு எழுந்தருளினார். இதைப்போல், கோவிந்தப் பெருமாளான எம்பாரும் சிவனைப் போற்றும் சைவராய் இருக்க, இவர் பின்னர் ஸ்ரீவைஷ்ணவர் ஆனார்
இராமானுச முனிக்கும் ஆளவந்தாரின் விசேஷ கடாக்ஷத்தால் விரோதிகள் கழிந்தன. அதாவது, இவரது ஸ்ரீவைஷ்ணவத் தொண்டின்மீது பொறாமை கொண்ட பலர் இவரை கொன்று விடத் துணிய, ஆசாரியர்களின் அருளாலும், சீடர்களின் உதவியாலும், விரோதிகள் இவரை விட்டு விலக, இவர் ஸ்ரீவைஷ்ணவத்துக்கே விளக்காய் இருந்து, அது எங்கும் பரவி, உலகோர் அனைவருக்கும் எம்பெருமானே அடையப்பட வேண்டியவன் என்ற அறிவைப் பெற்று உய்யும்படி செய்தவர். இப்படி உலகோர் உய்ய உதவி செய்த இராமானுசர், தம் சகோதரரான கோவிந்தப் பெருமாள் சைவராய் இருப்பதைப் பொறுக்க மாடாமல்,தம் ஆசாரியரான ஆளவந்தாரைப் பிரார்த்தித்து, நமக்கு உசாத் துணை (உதவி) உண்டாக வேண்டுமே என்று மனதில் விசாரித்தார். ஏனென்றால், கோவிந்தப்பெருமாள் சாஸ்திரங்களைப் புரையறக் (குறைவின்றி) கற்றவர்; நமக்கு ஹிதம் (நன்மை) கோருபவர்; அவரை நம்மோடு சேர்ப்பார் யாரோ? இப்போது அவர் வேறு தெய்வ வழிபாடு உடையவராக இருக்கிறார். அவரைப் பாங்காக்குபவர் (திருத்துபவர்) யாரோ என்று புழுங்கினார் பிறகு, இதைச் செய்யத் தக்கவர்,தன் தாய்மாமனான பெரிய திருமலை நம்பியே என்று தெரிந்து, அவர் பக்கலுக்கு (பக்கம்) ஒரு ஸ்ரீவைஷ்ணவரை நியமித்து, “வட்டமணி கோவிந்தரைத் திருத்தித் தேவரீர் திருவடிக்கு அடிமை கொள்ள வேண்டும்” என்று விண்ணப்பிக்கும்படி அவரிடம் விவரம் சொல்லி அனுப்பினார். கோவிந்தருக்கும் பெரிய திருமலை நம்பியே தாய்மாமன் ஆவார்.
இளையாழ்வாரின் ஆணையின்படியே அந்த ஸ்ரீவைஷ்ணவரும் திருமலைக்குச் சென்று பெரிய திருமலை நம்பிகளிடம் விவரத்தைச் சொல்ல, அவரும் “இது நம்முடைய கடமை என்றிருந்தோம்;ராமானுஜ முனியின் எண்ணமும் கலந்ததே” என உகந்து (மகிழ்ந்து) உடனே அவ்வைஷ்ணவரையும் தம்மைச் சேர்ந்தாரையும் அழைத்துக்கொண்டு காளஹஸ்திக்கு எழுந்தருளி, குளக்கரையில் அமர்ந்திருந்தார். அப்போது லிங்கம் உள்ளங்கை கொணர்ந்த நாயனாரான கோவிந்தப்பெருமாள் அங்கு நீர்கொண்டு செல்ல வந்தார். அச்சமயம் பெரிய திருமலை நம்பிகள், “கொன்றைச் சடையானைக் குளிர நீராட்டினால், உனக்குண்டாகும் பயனென்ன? என்று கூறினார். அதுகேட்டு முறுவலித்து, எதுவும் பதில் பேசாமல் போனார் கோவிந்தர். அதுகண்டு திருமலை நம்பிகள் இந்தி நம்மால் ஒன்றும் ஆகாது; இனிஅவனை ( கோவிந்தரை) எம்பெருமான் தான் திருத்தி அருளவேண்டும் என்று பிரார்த்தித்து, திருமலைக்குத் திரும்பினார் –
சிலநாள் கழித்துத் திருமலை நம்பிகள் மறுபடியும் காளஹஸ்திக்கு வந்து ஆளவந்தார் அருளிய “ஸ்தோத்ர ரத்னத்தில்” இளையாழ்வாரை (இராமானுசர்) வசீகரித்த “நாராயணனே பிரமன், சிவன், இந்திரன் இவர்களிலும் மேலானவனாயும்,வினையின் நீங்கியவனாயுமுள்ள முக்தாத்மா ஆகிய இவர்களெல்லாரும் எந்த உன் பெருமைக் கடலில் துளிகள் ஆகின்றனரோ, அந்த உன்னிடத்தில் இயற்கையானதும், எல்லையற்ற பெருமையை உடையதுமான ஐஸ்வர்யத்தை எவன்தான் பெறாதவன் ஆவான்? என்கிற 11ஆவது ஸ்லோகத்தை ஒரோலையில் எழுதி, கோவிந்தர் வரும் வழியில் போட்டு வைத்தார் -எதிர்பார்த்தபடி கோவிந்தரும் அவ்வழியே வந்தவர், அவ்வோலையை எடுத்து வாசித்துப் பார்த்துவிட்டு,அதைத் தூக்கி எறிந்துவிட்டுப் போனார். மறுபடியும் நீர்கொண்டு திரும்பும்போது, அந்த ஒளியைத் தேடி எடுத்து மறுபடியும் வாசித்துப் பார்த்தார். அதன் பொருள் அவரை மாற்றியிருக்க வேண்டுமென அவர் தோற்றம் காட்டிற்று. அவ்வோலையைக் கையில் கொண்டு, “உங்களிடமிருந்து நழுவிய பொருள் இதுவோ?”என்று நம்பிகளிடம் கேட்க, நம்பியும், “எங்கள் பொருள் நழுவுவதல்ல” (எங்கள் பொருளான எம்பெருமான் ஒழிக்க ஒழியா உறவு உடையவன் ஆகையாலே, நாங்கள் விட்டாலும் தான் விடான் ஆகையாலேயே, எங்களைவிட்டு நழுவாது) என்று இப்படிப் பலபடி பதிலுக்குப் பதிலாக அருளி, அவர் மனத்தில் மாற்றம் உண்டாக்கினார். கோவிந்தர் அதற்கும் பதில் கூறாமல் சென்றார் –
நம்பிகள் மறுபடியும் திருமலை சென்று பெருமாள் திருவடி தொழுது மீண்டும் காளஹஸ்திக்கு வந்து சோலையில் தம் சிஷ்ய கோடிகளோடு திருவாய்மொழிக்கு அர்த்தம் அருளிக்கொண்டிருந்தார். அப்போது கோவிந்தர் ஒருமாதிரி மரத்தினின்றும் பூப்பறித்துக் கொண்டிருந்தார் அச்சமயம், பெரிய திருமலை நம்பிகள் “திண்ணன் வீடு” என்ற பதிகத்துக்கு அர்த்தம் அருளிக்கொண்டிருந்தார். இதை கோவிந்தரும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் நாலாம் பாட்டில், “தேவும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த தேவன்” என்றவரை விஸ்தாரமாகப் பொருள் விரித்து, “தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனை ஆகுமே” என்று சொன்னதும் கோவிந்தர், முன்னுள்ள பாட்டுக்களின் பொருள் நெஞ்சில் உறுத்தி இருந்தமையால், சடக்கென மரத்தினின்றும் குதித்து, “தகாது தகாது என்று சொல்லிக் கொண்டே, பூக்கூடையை வீசி எறிந்துவிட்டு, தான் கழுத்தில் அணிந்திருந்த ருத்ராக்ஷ மாலையையும் கழற்றி எறிந்துவிட்டு, நம்பிகளின் திருவடிகளில் விழுந்து வணங்கினார் “அந்தோ! லோக நாயகன் என்று முடி சூடியவன் இருக்க, நாயகனை உபாசிக்கும் வேடமுடைய விரிசடையானை (பரமசிவனை) விரும்பினேனே! அழகான தாமரைக் கண்ணன் இருக்கத் தழல் (நெருப்பு) வீசும் பொறிக்கண்ணனை பூசித்தேனே! கல்லெடுத்துக் கல்மாரி காத்த கையன் இருக்க, கபாலம் ஏந்திய கையை வணங்கினேனே! திருவிருந்த மார்பன் இருக்க, திருவில்லாத் தேவனை நாடினேனே! என்று இப்படியெல்லாம் நொந்துகொண்டு, “இந்த ஆத்மாவை அடிமைகொண்டு வாழச் செய்யவேண்டும் என்று நம்பிகளின் திருவடிகளில் விழுந்து கிடந்தார் –
அவரை முடி பிடித்து எடுத்து, குளிர நோக்கித் தடவிக் கொடுத்தார் நம்பிகள். மேலும் நல் வார்த்தைகள் சொல்லி, “ஆளவந்தார் கிருபைக்குக் குறை ஏதும் இல்லை” என்று எண்ணி நெஞ்சு நெகிழ்ந்தார். இவ்விவரம் அறிந்த காளஹஸ்தி நாதனை உடையார் பலரும் ஓடிவந்து நம்பிகளைப் பார்த்து, “அம்மான் பொடித் தூவினீரோ?” என்றார்கள். அதற்கு நம்பிகள், “அவரையே கேட்டுக்கொள்ளுங்கள்” என்று பதில் கூறினார்.-அவர்களும் கோவிந்தரின் கையைப் பிடித்து, “வாரும் கோவிந்தரே”! என்றழைக்க, “என் கையை இனித் தொடவேண்டாம்; உங்களோடு எனக்கு இனி உறவில்லை” என்று கருவூலச் சாவி, இலச்சினை, மோதிரம் முதலியவற்றை அவர்களிடம் வீசிவிட்டு நம்பிகளின் பின் போனார். அவர்களும், “நேற்றே காளஹஸ்தி நாதன்” எங்கள் கனவில், தேவாம்சங்களான இவர் (கோவிந்தர்) முதலானவர்கள் பாஷண்ட, பௌத்த (பிற சமயங்கள்) நாஸ்திகங்களைப் போக்கித் திருமாலிடம் உறவை வளர்க்கத் தோன்றியவர்கள் என்று கூறியிருந்ததற்கு ஏற்ப நடந்தது” என்று சொல்லிப் போனார்கள்.
பெரிய திருமலை நம்பிகளும் கோவிந்தப் பெருமாளைத் திருமலைக்கு அழைத்துச் சென்று, பஞ்ச ஸம்ஸ்காரம் (ஸமாஸ்ரயனம்) முதலிய செய்து அவரைத் திருத்தி, அடிமை கொண்டு, திராவிட வேதங்களையும் (திவ்யப்ரபந்தங்கள்) மற்றும் சம்பிரதாய இரகசியங்களையும் தெளிவுற அருளிச் செய்து கொண்டிருந்தார். கோவிந்தப் பெருமாளும் அவர் திருவடியள்ளது வேறு அறியாதவராக வாழ்ந்திருந்தார்.
உடையவரின் தம்பியும் “எம்பார்” என்கின்ற மறுபெயரையும் உடைய கோவிந்தப் பெருமாள் தமக்குத் தாய் மாமனும், ஆசார்யருமான பெரிய திருமலை நம்பிக்கு எல்லாவித ஊழியங்களையும் செய்து கொண்டிருந்தார். ஒருநாள், ஆசார்யருக்குப் படுக்கை அமைத்து அதில் முதலில் தாம் படுத்து உறங்கி எழுவதை உடையவர் கண்டார். இதனை நம்பிகளிடம் விண்ணப்பஞ்செய்தார். நம்பிகள் கோவிந்தப்பெருமாளை, “இப்படிச் செய்யலாமோ! இதற்குப் பலன் என்ன தெரியுமோ?” எனக் கேட்டார். கோவிந்தப் பெருமாளும் “படுக்கையில் ஏதேனும் உரித்தல், ஊறுதல், கடித்தல் முதலானவற்றால் தேவரீரின் தூக்கத்துக்கு ஊறு (தீங்கு) விளையாமல் இருக்கவேண்டும் என்பதே அடியேனுடைய குறிக்கோள். அதனால் அடியேன் செய்த செயலுக்கு பலன் நரகம் தான் என்றாலும் அது அடியேனுக்கு விருப்பமே என்று பதில் கூறினார். இந்த பதிலைக் கேட்டு உடையவர் வியப்புக்கு உள்ளானார்.
மற்றொரு நாள் உடையவர் நந்தவனத்தில் குளிர நோக்கி வருகையில், கோவிந்தப் பெருமாள் ஒரு பாம்பின் வாயில் கையிட்டு வாங்கித் தீர்த்தமாடி வந்ததைக் கண்டார். என்ன காரணம் என்று உடையவர் வினவ, “பாம்பு நாக்கை நீட்டிக்கொண்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்தது; அதன் நாவில் முள் இருந்தது; அதை எடுத்துவிட்டு நீராடினேன்” என்று பதில் கூறினார். அது கேட்டு உடையவர், “என்னே இவரின் பூததயை (மற்ற ப்ராணிகளிடம் கருணை)! என்று உளங்கனிந்தார்.
ஸ்ரீ இராமாயண காலக்ஷேபம் முடிந்ததும் உடையவர் “திருவரங்கம் புறப்படுகிறேன்; விடை தரவேணும்” என்று திருமலை நம்பிகளிடம் வணங்கி வேண்டினார். நம்பிகள் “இத்தனை தூரம் வந்து செல்லும் உமக்கு நாம் ஒன்றும் கொடுக்க முடியவில்லையே” என்று குறைபட்டார். உடனே உடையவர், “அப்படியானால், அடியேனுடைய எண்ணப்படியே திருத்திப் பணிகொண்ட கோவிந்தப்பெருமாளை தந்தருள வேணும்” என்று வேண்டினார். நம்பிகளும் கோவிந்தப் பெருமாளை அழைத்து, “நம்மைப் போலே இவரையும் நினைத்திருப்பீராக!” என்று நியமித்து, தாரை வார்த்து தத்தம் பண்ணி எம்பெருமானாரோடு அனுப்பி வைத்தார்.
உடையவரும் கோவிந்தப்பெருமாளை அழைத்துக் கொண்டு சோளசிங்கபுரம் (சோளிங்கூர் என்கிற திருக்கடிகையில் அக்காரக்கனி பெருமாளையும் திருப்புட்குழியில் போறேற்றம்பெருமானையும் திருவடி தொழுது காஞ்சிபுரம் வந்து சேர்ந்து திருக்கச்சி நம்பிகளை வணங்கியிருந்தார். அவ்வளவில், கோவிந்தப் பெருமாள் ஆசார்யரான பெரிய திருமலை நம்பியைப் பிரிந்த துயராலே உடல் மெலிந்து முகம் வெளுத்துப் போனார். இந்நிலையை அறிந்த உடையவர், “வாரீர்! கோவிந்தப் பெருமாளே! திருமலை சென்று பெரிய திருமலை நம்பியை சேவித்து வாரும்” என்று கூறி இரண்டு சிஷ்யர்களுடன் அவரை அனுப்பி வைத்தார். அவரும் பேராவலுடன் திருமலை சென்று நம்பிகளை வணங்கி நிற்க, நம்பிகள் முகம் கொடாமல், “-உடையவரின் கோஷ்டியில் கலந்து உடையவரின் எளிமை, நீர்மை முதலான குணங்களால் ஈர்க்கப்பட்டு கோவிந்தப்பெருமாள் உடையவரை விட்டகலாது தொண்டு பூண்டு, ஞான பக்தி வைராக்யங்கள் வெளித்தோன்ற வாழ்ந்து வந்தார். ஒருநாள் உடையவரும் ஸ்ரீவைஷ்ணவர்களுமாகக் கூடியிருக்கையில் எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களும் சேர்ந்து கோவிந்தப்பெருமாளின் ஞானம், பக்தி, வைராக்யம், ஆசார்யனே தனக்கு எல்லாம் என்ற உயர் குணங்களைக் கொண்டாடினர். இப்படி தன் குணங்களைத் தானே கொண்டாடிக் கொள்வது ஆணவத்தைக் காட்டுமதாயிருக்கையாலே உடையவர் “எல்லாரும் உம்மைப் புகழ்ந்தால், நீர் உம்முடைய தாழ்மையை அன்றோ சொல்லிக்கொள்ள வேணும்; அதை விடுத்து நீரே உம்மை புகழ்ந்துக் கொண்டு தற்பெருமையைக் காட்டலாமா?” என்று கோவிந்தரைக் கேட்டார். அதற்கு அவர், “ஐயோ! இந்த குணங்களை எல்லாம் அடியேனிடம் தோற்றுவித்தது தேவரீர் ஆகையாலே இந்த புகழெல்லாம் தேவரீருக்கேயாம். அடியேனைக் கொண்டாட வேண்டுமென்றால் அடியேன் காலஹஸ்தியில் இருந்த நிலையை அல்லவோ சொல்லவேண்டும்?” என்று பதில் கூறினார். இது கேட்டு எல்லோரும் அவரது நிலையை வியந்து கொண்டாடினர். எம்பெருமானார், “நல்லீர்! இந்த உம்முடைய குணங்களெல்லாம் எமக்கும் உண்டாகும்படி உம்முடைய நன்நெஞ்சாலே அணைத்துக் கொள்ளீர்!” என்று வாரி அணைத்துக்கொண்டார்.உடன் வந்தவர்கள் நடந்த விவரங்களைச் சொல்ல, எம்பெருமானார் பெரிய திருமலை நம்பியின் எல்லாம் உணர்ந்த நிலையை எண்ணி மகிழ்ந்தார். பிறகு, கோவிந்தப்பெருமாளுடன் புறப்பட்டு திருவரங்கம் சென்றடைந்தார்.
முக்காலத்திலும் எம்பெருமானாரையே (இராமானுசர்) நோக்கி அவர் திருவடித் தாமரைகளே தஞ்சம் என்றிருந்த கோவிந்தப் பெருமாளை அவர் தாயார் அழைத்து, உம் மனைவி பக்குவமானாள்(பெரியவள் ஆனாள்);அவளோடு தனித்திருக்க வேண்டும் என்று கூற, இவர் தன் தாயிடம், இருட்டும் தனியாய் இருக்கும் போது சொல்லுங்கள் அப்போது வந்து அவளுடன் கூடுகிறேன் என்றாராம். பலநாட்கள், இது நடக்காமல் போகவே, அவர் தாயார் எம்பெருமானாரிடம் சென்று, தன் மகன் மனைவியுடன் கூடாமல் இருக்கிறான் என்று கூற, எம்பெருமானார் அவரை அழைத்து,”கோவிந்தரே! இது நம் ஆணை! ருது காலத்திலேயே உம் மனைவியோடு இருந்து வாரும் என்று சொல்லி அனுப்பிவைத்தார்-கோவிந்தரும், ஏகாந்தத்தில் அந்தர்யாமியையும் (எம்பெருமான் எங்கும் உறைபவன்) அவன் குணங்களையும் எடுத்துரைத்து, தன் மனைவியைத் திருப்பி அனுப்பிவைத்தார்.-இதுகண்ட அவர் தாய் இப்படிச்செய்வது சரியல்ல என்று கூற, அதற்கு அவர், இருள் அறையிலும் எம்பெருமான் அந்தர்யாமியாய் வியாபித்திருக்கிறான்;அப்படி இருக்கும் போது, அவன்முன்னே இந்தத் தவற்றைச் செய்தால் அது சரியாகுமோ என்று கேட்க, இவருடைய வைராக்யத்தைப் புரிந்து கொண்டு எம்பெருமானார், “இல்லறமில்லேன் துறவறம் இல்லை” (திருமழிசைப்பிரான், நான்முகன் திருவந்தாதி) என்றபடி கோவிந்தப் பெருமாளுக்கு த்ரிதண்டம்,காஷாயம் முதலானவைகளைக் கொடுத்து, அவருடைய பெயரை “எம்பார்” என்று சுருக்கிவைத்து அவரைப் பெருமைப் படுத்தினார்
என் நான் செய்கேன்-உபாயாந்தரம் இல்லை யாரே களை கண்–வேறே ரக்ஷகர் இல்லை – என்னை என் செய்கின்றாய் என்று பேற்றை அளிப்பாய் பரம ஐகாந்தி -ஸ்தோத்ர ரத்ன ஸ்ரீ ஸூக்திகளைக் கேட்டு எம்பார் சம்பிரதாயத்துக்கு திரும்பினார் அன்றோ
ஸ்வாமி எம்பாருக்கு ஒரு குறை இருந்ததாம்–ராமானுஜ-என்றழைத்து அத்திருநாமத்தின் அமுதச்சுவையை பருக தமக்கு ஒரு சிறுவன் இல்லையே என்று ஏங்கினாராம்-இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சுவாமி எம்பாரை அழைத்து அழகான திருவாழி திருச்சங்கு, திருமண்காப்பு இவைகளால் அலங்கரிக்கப்பட்ட தமது உபபாத்ரத்தை அவருக்குத் தந்தருளி, “இத்தை நமது பெயரால் அழைப்பீராக” என்று நியமிக்க, எம்பாரும் அப்பாத்திரத்தை நிதியெனப் பெற்றுக்கொண்டு அதை “ராமானுஜம்” என்று அழைத்து வந்தார். அது முதலாக ஸ்ரீவைஷ்ணவர்கள் தாம் கையாளும் உபபாத்ரத்தை ராமானுஜம் என்றே அழைத்து வருகின்றனர்
ஆசார்ய கைங்கர்யமே பரம பிரயோஜனமாக தம்மைப் பேணாமையும், ஆசார்ய விஷயத்தில் விற்கவும் பெறும்படி பணிந்திருக்கையும், ஆசார்யன் திறத்தில் நிழல்போல பரதந்தரனாய் இருப்பும், ஆசார்யனைப் பிரிந்தறியாத அனுஷ்டானமும் எம்பாருக்கே அமைந்த சிறப்புகள்.
பிணியவிழ நறுநீல மலர்கிழியப் பெடையோடும் அணிமலர்மேல் மதுநுகரும் அறுகால சிறுவண்டே மணிகெழு நீர் மருங்கலரும் வயலாளி மணவாளன் பணியறியேன் நீ சென்று என் பசலை நோய் உரையாயே!(“தூவிரிய”பதிகம், 3.6.2)–அறுகால சிறுவண்டே என்று ஆழ்வார் அழைத்து தூது அனுப்புகிறார். இந்த வண்டிற்கு உதாரணம் யார் என்று கருதிய உரையாசிரியர் எம்பாரை உதாரணமாகக் காட்டுகிறார்.. எம்பார் சிறிய திருமேனி உடையவர். ஆனால் பேராற்றலும் பேரறிவும் படைத்தவர். அதைப்போலவே வண்டு வடிவில் சிறியது. ஆனால் ஆழ்வாருக்காக எம்பெருமானிடமே தூது போகும் பெருங்காரியத்தை அல்லவா செய்யப்போகிறது. வடிவில் சிறு உருவம். காரியத்தில் பெருமை. வண்டுக்கு எம்பாரைத் தவிர யாரை உதாரணம் காட்ட முடியும்
சங்கை கெடுத்தாண்ட தவராசா -பொங்குபுகழ்
மங்கையர்க்கோன் ஈந்த மறையாயிரம் அனைத்தும்
தங்குமனம் நீ எனக்குத் தா. –பெரிய திருமொழித் தனியன் இட்டவர் இவர்.
பற்பமெனத் திகழ் பைங்குழலும் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராடை பதித்த மருங்கழகும்
முப்புறி நூலொடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலை யழகும்
கற்பகமே விழிகருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்
காரி சுதன் கழல் சூடிய முடியும் கன நற் சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசன் வடிவழகென் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே!–வடிவழகுப் பாட்டு) இயற்றி, அவரைப் புகழ்ந்தவர் இவர்.
ஸ்ரீ எம்பாருடைய ஸ்ரீ பகவத் ராமாநுஜ ஸிம்ஹாநுபவம்
இராமாநுச நூற்றந்தாதியில் கலிமிக்க செந்நெல் என்னும் பாசுரத்தில் எம்பெருமானார் சீரிய சிங்கமாக அருளிச் செய்யப்பட்டுள்ளார். அதே போன்று எம்பார் தாம் பணித்த முக்தக ச்லோக மொன்றில் ஸ்வாமியைச் சிங்கமாக அநு பவித்துள்ளமை காட்டுதும்.
வேதோத்தம்ஸ குஹாவிஹாரபடுநா ஸ்ரீசைல் ச்ருங்கோல்லஸந்
மாயா கேஸரி மாநிதேந கஹநந்யாயாட வீசாரினா
கம்பீரேண பராத்மபேதநமஹா நாதேந் நாதேந மே
குப்தோஹம் யதிஸார்வ பெளமஹரிணா வர்த்தே ப்ருசம் நிர்ப்பய .-இதில் ஸிம்ஹத்தோடே ஸ்வாமிக்கு ஸாம்யம் ஐந்து விசேஷணங்களினால் அற்புதமாக நிர்வஹிக்கப்படுகிறது.
[வேதோத்தம்ஸ குஹா விஹார படுநா] ‘மலை முழஞ்சில் மன்னிக்கிடந் துறங்கும் சீரிய சிங்கம்” என்ற திருப்பாவையின் படியே சிங்கம் பர்வத குஹைகளில் விஹரிக்கும். ஸ்ரீராமாநுஜ ஸிம்ஹமோ வென்னில்; வேதங்களாகிற பர்வதங்களின் உபநிஷத் பாகமாகிற குஹைகளில் வி ஹரிக்கும். தைத்திரியயர் ப்ராஹ்மண- காடகத்தில் “‘பரத்வாஜோ ஹ த்ரிபிராயுர்ப்பிர் ப்ரஹ்மசர்ய முவாஸ” என்று தொடங்கியுள்ள உபாக்கியானத்தில் தேவேந்திரன் பரத்வாஜ முனிவர்க்கு வேதங்களை மலைகளாகக் காட்டினனென்று ஓதியிருக்கையாலே வேதம் மலையாகக் குறையில்லை. “தர்மஸ்ய தத்த்வம் நிஹிதம் குஹாயாம்’‘ என்ற மஹாபாரத ச்லோகத்தின்படி தருட்பம் பொதிந்திருக்குமிடம் குஹையாகக் கருதப்படுகையாலே உபநிஷத் பாகங்களை குஹையாகக் கூறினது பொருத்தம். அதிலே விஹாரம் செய்கிறார் ஸ்வாமி யென்றது “க்ரீடார்த்தமபி யத் ப்ரூயுஸ் ஸ தர்ம: பரமோ மத ” என்றும் ”சொல்லுமவிடு சுருதியாம்” என்றும் சொல்லுகிறபடியே விளையாட்டாகச்சொல்லும் வார்த்தையும் சிறப்புற்றிருக்கு மென்றவாறு.
(ஸ்ரீசைல ச்ருங்கோல்லஸந்மாயா கேஸரி மாநிதேந.) ஸிம்ஹத்தைக் கொண்டாடவல்லது ஸிம்ஹமேயாகும்.அப்படியே இந்த ராமாநுஜஸிம்ஹத்தைக் கொண்டாடவல்ல ஸிம்ஹம் திருவேங்கடமுடையானாகிற ஸிம்ஹமேயாம். திருமங்கையாழ்வார்’ தூணாதனூடு அரியாய் வந்து தோன்றிப், பேணாவவுண்னுடலம் பிளந்திட்டாய், சேணார் திருவேங்கட மாமலைமேய, கோணாகணையாய்’ என்கிற பாசுரத்தினால் திருவேங்கடமுடையானை ஸிம்ஹமாக வநுபவித்திருப்பது காண்க. அந்த ஸிம்ஹம் இந்த ஸிம்ஹத்தை அபிமானித்த விஷயம் ஸ்ரீ வேங்கடாசல் இதிஹாஸ மாலையில் பரக்கக் காணத் தக்கது.
(கஹந ந்யாயாடவீ சாரிணா] ஸிம்ஹம் பெருங்காட்டில் சஞ்சரிக்குமே யொழியச்சிறு காட்டில் காணக் கிடைக்காது. இந்த யதிராஜ ஸிம்ஹமோ வென்னில்; சாஸ்த்ரீய ந்யாயங்களாகிற அடவிகளிலே ஸஞ்சரிக்குமது. (கம்பீரேண]சிங்கத்தின் தோற்றம் அதிகம்பீர மென்னுமிடம் சொல்லவேண்டா.
ஸ்வாமியினுடைய காம்பீர்யம் ஸ்ரீஸுக்திகளிலும் திருவுருவத்திலுமாகும்.(பராத்ம பேதநமஹா நாதே ) இந்த விசேஷணத்தில் சிலேடை அமைந்துள்ளது.ஸிம்ஹபக்ஷத்தில் “பரேஷாம் ஆத்மானம் பிநத்தீதி பராத்ம பேத :; ததாவித:மஹாநாதோ யஸ்ய” என்கிற வ்யுத்பத்தி கொள்ளத் தக்கது. ஸிம்ஹத்தின் பெரு முழக்கம் இதர ஜந்துக்களின் உயிரை மாய்க்கவல்ல தென்கை. இனி யதிராஜ ஸிம்ஹ பக்ஷத்திலோவென்னில், “பரச்ச ஆத்மானச் ச பராத்மா ; தாந்பிநத்தீதி பராத்ம பேதந , ததாவிதோ மஹா நாதோ யஸ்ய” என்றுவ்யுத்பத்தி கொள்ளக் கடவது. பரம புருஷனுக்கும் ஜீவாத்மாவுக்கும் ஐக்கியம் சொல்லுகிற விமத வாதிகளைக் கண்டித்து ஜீவபர பேதத்தை ஸாதிக்கவல்ல திருமிடற்றோசையை யுடையவரன்றோ பகவத் ராமாநுஜர் ! நூற்றந்தாதியில் “உயிர்கள் மெய்விட்டா திப்பரனோடு ஒன்றாமென்று சொல்லுமவ்வல்ல லெல்லாம் வாதில் வென்றான் எம்மிராமா நுசன் மெய்ம்மதிக் கடலே” என்றருளியது இங்கு நோக்கத்தக்கது. ஆக இத்தகைய பொருத்தங்களினால் ஸிம்ஹ மென்று போற்றத் தக்க எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கிடக்கிற நாம் நிர்ப்பயமான வாழ்ச்சியை யுடையோம் என்றதாயிற்று.
நித்ய சம்சாரிகளில் ஒருவனை உபய விபூதி விலஷணன் ஆம்படி எம்பெருமான் ஆக்கினான்
என்று எம்பார் அருளிச் செய்வர் –நூற்று எண்பத்து எட்டாம் வார்த்தை
நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கண்டு-‘ஈஸ்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ, விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, பாஷ்யகாரர் தோற்ற அருளிச் செய்து கொண்டு போந்தது, ஸ்வரூப வியாப்தியாய் இருக்கும்;-ஆகிலும், எம்பார் ஒரு நாள் ‘உபாசகர்கட்கு அநுக்கிரஹம் செய்தற்பொருட்டு அடியார்களுடைய நெஞ்சிலே விக்கிரஹத்தோட வியாபித்திருக்கும்’ என்று அருளிச் செய்யக் கேட்டேன்’ என்று பணித்தான்;’-
எம்பார் திருமலை நம்பி திருமாளிகைக்கு சர்வவித கைங்கர்யங்களும் பண்ணிக் கொண்டு
போருகிற படியைக் கண்டு -உடையவர் ப்ரீதராய் கொண்டு எழுந்து அருளி இருக்கிற அளவிலே –
ஒருநாள் நம்பிக்கு திருப்படுக்கை படுத்து -எம்பார் முதலில் அதிலே படுத்துக் கொண்டு பார்க்க –
இத்தை ஒருநாள் உடையவர் கண்டு -இவருடைய பரிமாற்றம் இருந்த பொல்லாங்கு என் -என்று இக் க்ரமத்தை திருமலை நம்பிக்கு அருளிச் செய்ய -திருமலை நம்பி எம்பாரை அழைத்து – ஸ்ரீ கோவிந்த பெருமாளே -நீர் நமக்கு படுத்த படுக்கையிலே படுத்துக் கொண்டீர் என்று கேட்டோம் இப்படிச் செய்யலாமோ -இதுக்கு பலம் ஏது -என்ன -நரகம் -என்ன -இப்படி அறிந்து இருந்து செய்வான் என் – என்ன – தேவரீர் திருமேனியிலே ஓன்று உறுத்துதல் -ஊன்றுதல் –ஊர்தல் -கடித்தல் செய்யாமல் -கண் வளரப் பெற்றால் அடியேனுக்கு நரகமே அமையும் -என்று விண்ணப்பம் செய்ய -இத்தை உடையவர் கேட்டருளி – இதொரு பிரதிபத்தி விசேஷம் இருந்தபடி என் -என்று உகந்து அருளினார் –இரு நூற்று பத்தாம் வார்த்தை–
(லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்-எம்பார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்)
(ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது -எம்பார் பட்டருக்கு அருளிச் பெய்த-10 வார்த்தைகள் அடுத்து பார்க்கப் போகிறோம் -அதில் தொடக்கத்தில் உள்ளவை ––)
எம்பார் சரம தசையிலே -கணியனூர் சிறியாச்சான் -சட்டம்பள்ளி ஜீயர் ஈச்சம் பாடி ஜீயர் போன்ற சிஷ்யர்களுக்கு உடையவர் சாதித்து அருளிய அர்த்தங்களை ஸாதித்தருளி அவர்களுக்கு பட்டர் திருவடியைக் காட்டிக் கொடுத்து உடையவருடைய திருவடித்தாமரைகளை தியானித்துக் கொண்டு அவர் திருவடி சேர்ந்தார்
எண்ணற்கரிய எம்பார் ! எம்பெருமானுடைய மற்றொரு திருவுருவமாகவே அத்விதீயரான கருடன் போற்றப்படுகிறார். வேதாந்தாசாரியர் கருட பஞ்சாஶத்தில் ஒரு ச்லோகத்தில் ஏக: என்று கருடனை அத்விதீயர் அதாவது ஒப்பற்றவர் என்றும்; விஷ்ணோ: த்விதீய: என்று பகவானுக்கு அடுத்தவர் என்றும் அவர் ( பகவான்) தாமே கொண்ட மற்றோர் வடிவம் என்றும் கொண்டாடி மகிழ்கிறார். கருடாம்ஶரான எம்பாரும் ஆசார்யர்களுக்குள்ளே ஒப்புயர்வற்றவர். அதனால் தான் அவரைப் பெறுதற்கு ஸகலவித முயற்சிகளையும் எம்பெருமானார் செய்தார். ( திருமலை நம்பிகளைக் கொண்டு கோவிந்தராம் எம்பாரைத் திருத்திப் பணி கொண்டார்.. ஆசார்ய ப்ரஸாதமாக திருமலை நம்பிகளிடமிருந்து எம்பாரைப் பெற்று தம்முடன் அழைத்துக் கொண்டு வந்தார் ) ..
விஷ்ணுவிற்கு அடுத்தவர் கருடன் என்றதாலே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மற்றொரு பொருளும் இங்குள்ளது. விஷ்ணுவே; அதாவது ஸ்ரீபார்த்தஸாரதியே இராமானுசராகத் தோன்றினார் என்பது ஸம்ப்ரதாயம். கேஶவாசார்யர் ( இராமானுசரின் திருத்தகப்பனார் ) திருவல்லிக்கேணியில் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அவருக்குத் தானே பிள்ளையாகப் பிறப்பதாக வாக்குறுதி தந்தான் பார்த்தஸாரதி எம்பெருமான். அதன் படியே ‘ சித்திரையில் செய்ய திருவாதிரையில்’ ‘ சிறந்த பெரும்பூதூரில் சீமான் இளையாழ்வாராக’ வந்து தோன்றினான் இறைவன். ஆக விஷ்ணுவே; அதாவது கண்ணனே இராமானுசரென்ப. ‘ஸ்ரீபதிர் வா இதி ஸாத்த்விகை: விதர்க்க்யாய மஹா ப்ராஜ்ஞை: பாஷ்யகாராய மங்களம்’ என்றதும் காண்க. அறிவாளிகள் ஸ்ரீய:பதியான ஸர்வேஶ்வரனுடைய அவதாரமாகவே எம்பெருமானாரைக் குலாவுகின்றனர். ஶமிதோதய ஶங்கராதி கர்வ: என்கிற யதிராஜ ஸப்ததி ஶ்லோகத்தாலும் இராமானுசர் கண்ணனே என்பது விஶதம். கருடன் எப்படி விஷ்ணுவிற்கு அடுத்த ஸ்தானமோ; அவ்விதமே கருடாம்ஶரான எம்பாரும் விஷ்ணுவினுடைய அம்ஶ பூதரான எம்பெருமானாருக்கு அடுத்த ஸ்தானத்தை வஹிக்கிறார். ஆம் ஓராண்வழி குருபரம்பரையில் எம்பெருமானாருக்கு அடுத்தவர் எம்பாரே ! ஆக விஷ்ணோ: த்விதீய: என்பது எம்பாரையே நமக்கு உணர்த்தி நிற்கும் என்றவாறு.
இன்னமும் கேளீர்! எம்பெருமானார் மிகச் சிறந்த மந்திரவாதியாகத் திகழ்கிறார். விஷத்தை முறிப்பதற்குரிய மந்த்ரங்களிலே நல்ல தேர்ச்சி பெற்றவராய்; நிபுணராக அவர் போற்றப்படுகிறார். தேசிகன் சாதிக்கிறார்.. ஸந்மந்த்ரவித் க்ஷிபதி ஸம்யமிநாம் நரேந்த்³ர: ஸம்ஸார ஜிஹ்மக³ முகை²: ஸமுபஸ்த்தி²தம் ந: l விஶ்வக்ததம் விஷய லோப⁴ விஷம் நிஜாபி⁴: கா³டா³நுபா⁴வ கருட³ த்³வஜ பா⁴வநாபி⁴: உலகவின்பங்களிலே பற்றுதல் என்பது ஒரு கொடிய விஷம். அது எங்கிருந்து புறப்படுகிறதெனின்; ஸம்ஸாரமாகிற ஸர்ப்பத்தின் வாயிலிருந்து புறப்பட்டு நாற்திசையிலும் அது பரவியிருக்கிறதாம். விஷத்தைத் தணிப்பதற்காக ‘க³ருட³ம் ஆத்மாநம் த்⁴யாயீத’ என்று மந்திர சாத்திரங்களிற் சொல்லியபடி தன்னை கருடனாக எண்ணிக் கொண்டு கருட த்வஜனான பகவானை எண்ணிடவே நமக்கு நன்மை உண்டாம். எம்பெருமானாராகிற கருடத்வஜர் ( கருளக் கொடி உடையவனான எம்பெருமான் ) எம்பாராகிற கருடனைச் சிந்தித்து; அவரையே கூரத்தாழ்வான் திருக்குமாரர்களான பராசர பட்டர் & வேத வியாஸ பட்டர் ஆகியோருக்கு (ஸம்ஸார ஸர்ப்பத்தின் கொடிய விஷம் துன்புறுத்தாமைக்காக) ஆசார்யனாக நியமித்தமை ப்ரஸித்தமிறே! ஆழ்வான் திருமாளிகைக்கு எம்பெருமானார் எழுந்தருளுகிறார். எம்பார் உள்ளே சென்று ஆழ்வான் திருக்குமாரர்களை ( குழந்தைகளை ) கைகளில் ஏந்தி வருகிறார்..உடையவர் எம்பாரிடம் குழந்தைகளிடம் த்வயம் பரிமளிக்கிறதே ! என் செய்தீர் என்று வினவவும்; குழந்தைகளுக்குக் காப்பாக ( ரட்சையாக) துவயத்தைச் சொல்லி குழவிகளைக் கொண்டு வந்தேன் என்றார் எம்பார். ஸத் மந்த்ர வித்- ஆகையால் குழந்தைகளிடமிருந்து புறப்பட்ட த்வயத்தின் பரிமளத்தை எளிதாகக் கண்டுபிடித்து விட்டார் உடையவர்.
இதிலே ஒரு ஸ்வாரஸ்யம் உண்டு. விஷத்தை முறிப்பவர்கள் தங்களை கருடனாக எண்ணிக் கொண்டு; கருடத்வஜனாம் விஷ்ணுவை த்யானிக்க வேண்டும் என்று பார்த்தோம். ஆனால் மேற்சொன்ன ஐதிஹ்யத்தில் கருடத்வஜனாம் விஷ்ணுவின் அவதாரமான உடையவர் கருடனாகிற எம்பாரை த்யானித்து ( நினைத்து ) அவரைக் கொண்டு கூரேச புத்திரர்களை ஸம்ஸார ஸர்ப்பம் தீண்டாதவாறு ரக்ஷித்தார். இந்த முரணில் உள்ள ஸ்வாரஸ்யம் ரசிக்கத் தகுந்ததாம். மேலும் பிற மதங்களாகிற சேற்றில் அழுந்தி அல்லலுற்ற எம்பெருமானை ரக்ஷித்தவர் எம்பெருமானார். கரக்ரஹ விசக்ஷணோ ஜயதி லக்ஷ்மணோயம் முநி: என்பர் தேசிகன். எம்பெருமானைக் காப்பாற்றுகிற எம்பெருமானாரையே விந்தியமலைத் தொடர் காடுகளிலிருந்து ரட்சித்தவர் எம்பார் !
இன்னொன்றும் கேளீர் ! வீர ஸுந்தரனால் தொந்தரவிற்காளான பெண்பிள்ளை ஒருத்திக்கு அபயம் கொடுத்து தம்முடைய மடத்திலே இடமளித்திருந்தார் எம்பார். இதனால் வீர ஸுந்தரனாலே நமக்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றெண்ணிய உடையவர் அவளை மடத்திலிருந்து வெளியே அனுப்பச் சொல்லுகிறார். சரணம் என்று வந்தவளை ரட்சித்தால் அந்த தருமமே நம்மைக் காக்கும் என்று உறுதியாக அவளைக் காத்து நிற்கிறார் எம்பார். விந்திய மலைத் தொடரில் எம்பாரைப் பார்த்து உடையவர் சரணம் என்று சொல்லாமலிருக்கச் செய்தே அவரை ரட்சித்த பெருந்தகையாம் எம்பார் சரணம் என்று வந்தவளையா கை விடுவர் ! பாம்பின் வாயில் தைத்திருந்த முள்ளை அகற்றி அந்த ஜீவனுக்கு இரங்கியதாகட்டும்.. வைராக்கியத்திலாகட்டும்.. பகவத் குணாநுபவத்திலாகட்டும்..ஆசார்ய பக்தியிலாகட்டும்.. எம்பாருக்கு நிகர் எம்பாரே ! அவர் தம் திருநட்சத்திர நன்னாளான இன்று அன்னாரை வணங்கி மகிழ்வோமாக !
(மதுரமங்கலம்)எம்பார் ஸ்வாமிகளின் (எம்பெருமானார் என்கிற கோவிந்த பட்டர் ) அவதார ஸ்தலம்.
தூரம் : சென்னையில் (கிண்டியில்) இருந்து 57 KM-வழி : சென்னை – பெங்களூர் ஹைவேயில் சுங்குவார் சத்திரம் ( 49 KM )அடைந்தவுடன் வலது புறம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். சுமார் 8 KM தொலைவில் மதுரமங்கலம் உள்ளது. – மழலைமங்கலமாக இருந்த இவ்வூர் காலப்போக்கில் மதுர மங்கலமாக மருவி இருப்பதாகக் கூறப்படுகிறது. எம்பார் சுவாமிகள் திருவாராதனம் செய்த பெருமாள் இங்கு உள்ள ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்.
மூலவர் : ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்-உத்சவர் : ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்-தாயார் : கமலவல்லி-புஷ்கரணி : கருட புஷ்கரணி
எம்பார் சுவாமிகள் பெரிய திருவடி கருடாழ்வாரின் அவதாரமாகக் கருதப்படுகிறார். ஆகையாலே இங்கு உள்ள புஷ்கரணி கருட புஷ்கரணி என்றழைக்கப்படுகிறது. இக் கோவில் சுமார் 1000 ஆண்டு பழமையானது என்றும் தொண்டை மண்டல மன்னர் சுபர்ணா என்பவரால் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.-சித்திரை மாதத்தில் ஸ்ரீ வைகுண்டப் பெருமாளுக்குப் பிரமோத்சவம் பத்து நாட்களுக்கு நடைபெறுகிறது.
அருளிச்செய்தவை: விஞ்ஞான ஸ்துதி
கூரத்தாழ்வானின் மனைவியாரான ஆண்டாள், பெரிய பெருமாள் கிருபையோடு அனுப்பிவைத்தபிரசாதத்தால் , இரண்டு திருக்குமாரர்களை ஈன்றெடுக்க , எம்பெருமானார் எம்பாரோடே அக்குழந்தைகளின் நாம கரணத்திற்கு (பெயர் இடும் வைபவத்திற்கு) கூரேஶரின் திருமாளிகைக்கு வருகை தந்தார். எம்பெருமானார், குழந்தைகளை எடுத்துகொண்டு வரும்படிக்கு எம்பாரைப் பணிக்க , எம்பார் குழந்தைகளை எடுத்து வரும்போது அவர்களின் ரக்ஷைக்கு வேண்டி த்வயானுஸந்தானம் செய்தார். குழந்தைகளைக் கண்டவுடன், அவர்கள் எம்பாரிடமிருந்து த்வய மஹாமந்திரத்தை உபதேசிக்க பெற்றார்கள், என்று உணர்ந்த எம்பெருமானார் , எம்பாரையே அவர்களுக்கு ஆசார்யனாய் இருக்கும் படி நியமித்தார். இதனைத் தொடர்ந்து பராஶர பாட்டரும் வேத வ்யாஶ பட்டரும் எம்பாரின் ஶிஷ்யர்கள் ஆனார்கள்.
பெரியாழ்வார் திருமொழின் இறுதிப் பாசுரத்தில் , “சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே ” என்பதற்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் அர்த்தம் ஸாதிக்கும்படி கேட்க , அதற்கு எம்பார் இந்தப் பாசுரத்திற்கு தான் எம்பெருமானாரிடம் அர்த்தம் கேட்டதில்லை என்று ஸாதிக்கிறார். ஆயினும் எம்பெருமானாரின் பாதுகைகளைத் தமது திருமுடி மேல் வைத்து ஒரு கணம் த்யானித்த பின் அக்கணமே எம்பெருமானார் இதற்கான விளக்கத்தை தமக்கு உணர்த்தியதாகவும், இது “பாடவல்லார் – சாயை போல – தாமும் அணுக்கர்களே ” , அதாவது எவர் ஒருவர் இப்பாசுரங்களைப் பாடுகிறார்களோ அவர் எம்பெருமானின் நிழல் போன்று அவரை விட்டுப் பிரியாமல் இருப்பார், என்று புரிந்து கொள்ளப்பட வேண்டியது என்றும் ஸாதித்தார்
கண்ணன் எவ்வாறு அனைவரையும் அச்சுறுத்துகிறான் என்று விளக்கும் பெரியாழ்வார் திருமொழியின் 2.1 பதிகத்திற்கு அபிநயம் காட்டுகையில் உய்ந்தபிள்ளை அரையர் , கண்ணன் தன் திருக்கண்களை அச்சுறுத்தும் விதத்தில் வைத்து கோப குமார்களை (ஆயர் பிள்ளைகளை) அச்சுறுத்துகிறார் என்று காட்டுகிறார்.இதைப் பின்னே இருந்து கவனித்து வந்த எம்பார் , திருவாழியாழ்வானையும் திருச்சங்காழ்வானையும் தோளில் வைத்துக் காட்டி கண்ணன் ஆயர் சிறுவர்களை அச்சுறுத்துகிறார் என்று காட்ட, அதைப் புரிந்துகொண்ட அரையர் எம்பார் காட்டிய படி அடுத்த முறை அபிநயம் காட்டினார். இதை கண்ட எம்பெருமானார் , எம்பாராலேயே இவ்வாறாக அர்த்தங்கள் தர இயலும் என்பதால் , ” கோவிந்தப்பெருமாளே இருந்தீரோ?” என்று கேட்டார்.
கண்ணனிடத்தே நம்மாழ்வார் , திருவாய்மொழியில் “மின்னிடை மடவார்கள் ” (6.2) பதிகத்தில், அனுபவித்த விஶ்லேஷத்தை , ஒரு ஸந்யாஸியாய் இருந்தும் எம்பாரால் உணர முடிந்தது . இப்பதிகத்திற்கு அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களும் ஆச்சர்யித்து உகக்கும் வண்ணம் எம்பார் விளக்கமும் ஸாதித்தார். இது “பரமாத்மநி ரக்த: அபரமாத்மநி நிரக்த: ” என்னும் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது . அதாவது “எம்பெருமான் விஷயத்தில் பெருத்த ஈடுபாடோடே இருத்தல் , எம்பெருமானை தவிர்த்த விஷயங்களில் ஈடுபாடின்றி இருத்தல்
திருவாய்மொழியின் 10.8.3 பாசுரத்தின் வ்யாக்யானத்தில் மிக ஆச்சர்யமான நிகழ்வு காட்டப்படுகிறது. திருவாய்மொழியில் ஆழ்ந்து மடத்தில் நடந்து கொண்டிருக்கையில் எம்பெருமானார் திடீரென்று திரும்பி பார்க்கிறார் . இதைக் கதவுகளின் பின்நின்று கண்ட எம்பார் , இப்பாசுரத்தில் “மடித்தேன்” என்பதை பற்றி எம்பெருமானார் சிந்தித்து கொண்டிருக்கிறாரோ என்று கேட்க எம்பெருமானாரும் அதை ஆமோதித்தார் . எம்பெருமானாரின் செய்கைகளைக் கொண்டே அவரின் திருவுள்ளத்தை அறியக்கூடியவர் எம்பார் .
தனது சரம தசையில் எம்பார் பட்டரை அழைத்து, சச்சம்பிரதாயத்தைத் திருவரங்கத்தே இருந்து நிர்வகித்து வரும்படியும், எம்பெருமானார் திருவடிகளையே தஞ்சமாக நினைத்து வரும்படியும் உபதேஶிக்கிறார் . எம்பெருமானார் த்யானத்தில் ஆழ்ந்து தமது சரம திருமேனியைத் துறந்து, எம்பார், நித்ய விபூதியில் எம்பெருமானாரோடே இருக்கத் திருநாட்டுக்கு எழுந்தருளினார்
மங்களம் தேசிகேந்த்ராய மங்களம் குனஸிந்தவே |-மங்களம் கோவிந்தார்யாய நித்யஸ்ரீர்நித்ய மங்களம் ||
பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே
பொய்கை முதல் பதின்மர்கலைப் பொருளுரைப்போன் வாழியே
மா வளரும் புதூரான் மலர்பதத்தோன் வாழியே
மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
தேவும் எப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே
திருமலை நம்பிக்கடிமை செய்யுமவன் வாழியே
பாவையர்கள் கலவி இருள் பகல் என்றான் வாழியே
பட்டர் தொழும் எம்பார் பொற்பதம் இரண்டும் வாழியே
பாரத்வாஜே வதீர்ணாய புண்டரீகாசக்ஷ ஜன்மனே
அஸ்மத் குலஸ்ய நாதாய கோவிந்தார்யாய மங்களம்
ஸ்ரீ சைல பூர்ண குருணா ராமா வ்ரஜ யோகினே
தத்தாய உதக பூர்வம் ஸ்யாத் கோவிந்தார்யாய மங்களம்
பட்டார்யாய ஸ்வ சிஷ்யாய வேதாந்த த்வய தாயினே
ப்ரபத்திம் ஸோபதி ஸதே கோவிந்தார்யாய மங்களம்
ஆத்மா வ்ரஜ கோவிந்த தத் தனூஜம் குருகாதிபம்
ஸ்வ வம்ஸா க்ரியம் க்ருதவதே கோவிந்தார்யாய மங்களம்
ஸ்ரீ சைல பூர்ண வ்யாக்யாதி ஸூக்தம் ஸ்ம்ருத்வ சடத்விஜ
தம் குரும் ஸம்ஸ்ரிதாயாஸ்து கோவிந்தார்யாய மங்களம்
ஸடாரி ஸூக்தி ஸ்ரோதவ்யே ஸதா ஸந்துஷ்ட சேதஸே
வைராக்யம் ஸோபதிஸதே கோவிந்தார்யாய மங்களம்
ராமாநுஜார்யாத் வேதாந்த த்ரமிட உபநிஷத் கிராம்
ரஹஸ்யார்த்தாநர்த்த வதே கோவிந்தார்யாய மங்களம்
மங்களம் தேஸி கேந்த்ராய மங்களம் குண ஸிந்தவே
மங்களம் கோவிந்தார்யாய நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –