Archive for September, 2026

ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய நான்காம் அத்யாயம் – முதல் பாத ஸாரம்- ஸ்ரீ ஆழ்வார்திருநகரி நல்லான் சக்ரவர்த்தி வித்வான்‌ ஸ்ரீ உ.வே. இராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்வாமிகள்–

September 30, 2026

ஸ்ரீ உ.வே. திருமலை நல்லான்‌ ராமகிருஷ்ண ஐயங்கார்‌ ஸ்வாமி ஆழ்வார்‌ திருநகரியில்‌ பரிதாபி வருஷம்‌ சித்திரை மாதம்‌ விசாக நக்ஷத்திரத்தில்‌ ஒரு விலக்ஷணமான ஸ்ரீவைஷ்ணவ குடும்பத்தில்‌ பிறந்தவர்‌. இளமைக்‌ கல்வியைப்‌ பிறந்த ஊரிலேயே முடித்‌துக் கொண்டு மதுரை ராமேச்வர தேவஸ்தான பாடசாலையில்‌ சேர்ந்து வடமொழியில்‌ சிரோமணிப்‌ பட்டம்‌ பெற்று, அதன்‌ பிறகு வடமொழியிலும்‌ தமிழிலும்‌ சென்னை சர்வகலா சாலையின்‌ வித்வான் பட்டம்‌ பெற்றார்‌. உபநிஷத்துக்கள்‌, இதிஹாஸ புராணங்கள்‌, ஸ்ரீ பாஷ்ய பகவத் கீதாதி கிரந்தங்கள்‌, ஆழ்வார்களுடைய திவ்ய ப்ரபந்தங்கள்‌. கம்பனின்‌ கவிதைகள்‌ முதலியவற்றில்‌ ஆழ்ந்த ஞானம்‌ படைத்த இவர்‌, சுமார்‌ 50 வருஷ காலமாக உபய வேதாந்த க்ரந்த கால க்ஷேபங்கள்‌ ஸாதித்து வருகிறார்‌. இரண்டு மொழிகளிலும்‌ கவிதா ஸாமர்த்யம்‌ அருளப் பெற்ற இவர்‌ சில வடமொழிக்‌ காவ்யங்களளை இயற்றிபும்‌, வடமொழியில்‌ பூர்வாசாரியர்கள்‌ அருளிய சில ஸ்தோத்ரங்களை பொருட் சுவை குன்றாமல்‌ தமிழ்க்‌ கவிதைகளாக யாத்துமிருக்கிறார்‌. ஸ்ரீஆண்டாளின்‌ திவ்ய சரித்திரத்தை நாடக மாகத்‌ தமிழில்‌ எழுதி வெளியிட்டிருக்கிறார்‌. திருப்பாவை தண்டகம்‌, ஸ்ரீகோதா தண்டகம்‌ முதலிய வடமொழி நூல்களும்‌, திருக்கச்சி நம்பி நான்மணி மாலை, ஆண்டாள்‌ அந்தாதி முதலிய தமிழ்க்‌ கவிதைகளும்‌, ஸ்ரீஸ்துதி, ஸ்ரீகுணரத்னகோசம்‌ போன்ற பூர்வாசார்ய ஸ்ரீஸூக்திகளுக்கு இவர்‌ இயற்றியுள்ள தமிழ்க் கவிதைகளும்‌ இவர்‌ மேதா விலாஸத்திற்குச்‌ சான்றாகும்‌-மிகவும்‌ கடினமான வேதாந்த விஷயங்களை பாமரரும்‌ உணர்ந்து கொள்ளும்படி எளிய தமிழ்‌ நடையில்‌ உபந்யஸிப்பது இவரது அநேக சிறப்புக்களில்‌ ஒன்று. கடந்த ஒரு வருஷ காலமாக சென்னை திருவல்லிக்கேணி வானமாமலை மடத்தில்‌ ஸ்ரீபாஷ்ப கால க்ஷேபமும்‌, தி. நகரில்‌ ஆசார்ய ஹ்ருதய கால க்ஷேபமும்‌ ஸாதித்து வருகிறார்‌.-

நான்காம்‌ அத்யாயம்‌-முதல்பாதம்‌-ஆவ்ருத்தி பாத ஸாரம் –
ஸ்ரீ ய:பதியான ஸர்வேஸ்வரன்‌ நல்லதும்‌ தீயதும்‌ பகுந்தறிந்து உலகம்‌ உய்வதற்காகத்‌ தன்‌ தண்ணளியால்‌ வேதத்தைத்‌ தந்தருளினன்‌. ஆயின்‌ அந்த வேதத்தின்‌ பொருள்‌ எளிதிலறியத் தக்கதாக இல்லை. பல யுக்திகளினால்‌ வேதத்தின்‌ பொருளை ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டியதாயிற்று. அவ் வழியிலே இறங்கி முறையே ஜைமிநி , காசகிருத்ஸ்நர்‌, பாதராயணர்‌ என்ற வேத வியாஸர்‌ என்னும்‌ மூவரும்‌ ஆராய்ந்து பொருள்‌ கண்டனர்‌. ஜைமிநி அங்ஙனம்‌ பொருள் கண்ட பிரிவு, கர்ம காண்ட மெனப்படும்‌. காசகிருத்ஸ்சர்‌ ‘ பொருள்‌ கண்ட பிரிவு தேவதா காண்ட மெனப்படும்‌. வேத வியாஸர்‌ பொருள்‌ கண்ட பிரிவு பிரஹ்ம காண்ட மெனப்படும்‌. இந்த மூன்று காண்டமும்‌ கொண்டது வேத மென்னும்‌ ஒரே நூலாதலின்‌ முப் பிரிவுக்கும்‌ மூவர்களும் கண்ட ஆராய்ச்சி நூல்கள்‌ மூன்றும்‌ சேர்ந்து மீமாம்ஸா சாஸ்திரம்‌ என்னும்‌ ஒரே பெயரைப்‌ பெற்றன. சீரிய பொருளைப் பற்றிய ஆராய்ச்சியை மீமாம்ஸை என்பர்‌ நூல்‌ வல்லோர்‌. மூல நூல்‌ ஒன்றே யாதலின்‌ வியாக்கியாந நூல்களும்‌ ஒரே நூலாக வழங்கப் படுவது முறையே யன்றோ ?வேத வியாஸருடைய மீமாம்ஸை, சாரீரக மீமாம்ஸை என்று சிறப்பித்து வழங்கப்‌ படும்‌. உலகினைச்‌ சரீரமாகக்‌ கொண்ட ப்ரஹ்மத்தைப்‌ பற்றிப்‌ பேசுதலின்‌ சாரீரகம்‌ என்பது இந்த மீமாம்ஸையின்‌ சிறப்புப்‌ பெயராயிற்று, சாரீரம்‌–சரீர ஸம்பந்தத்தை உடையதான ஆத்மா ; ௧ம் –அதனைச்‌ சொல்லுவது என்பது பொருளாகும்‌.-உலகினைத்‌ தனக்குச்‌ சரீரமாகக்‌ கொண்ட ப்ரஹ்மத்தைப்‌ பற்றிக்‌ கூறும்‌ இச்‌ சாஸ்திரம்‌ நான்கு அத்யாயங்கள்‌ கொண்டது. முதலில்‌ உள்ள இரண்டு அத்யாயங்கள்‌ ஒரு பிரிவாகவும்‌, பின்னைய அத்யாயங்கள்‌ மற்றொரு பிரிவாகவும்‌ பிரிக்கப்படுகின்றன-முதல் பிரிவு ஸித்த த்விகம்‌ எனப்படும்‌. இயல்பாகவே உள்ள, அதாவது ஸித்தமாயுள்ள ப்ரஹ்மத்தைப்‌ பற்றிப்‌ பேசுதலின்‌ முதற் பிரிவு ஸித்த த்விக மெனப் படுவதாயிற்று. மற்றைப்‌ பிறிவு ஸாத்ய த்விகம்‌ எனப்படும்‌ நாம்‌ செய்ய வேண்டிய ஸாதநங்களையும்‌ ஸாதிக்கப்‌ படுகின்ற பலன்களையும்‌ பற்றிப்‌ பேசுதலில்‌ இப் பிரிவு ஸாத்ய த்விகம்‌ எனப் படுவதாயிற்று –

இந்தச்‌ சாஸ்திரத்தில்‌ உள்ள நான்கு அத்யாயங்களும்‌ முறையே ப்ரஹ்மம்‌ உலகிற்குக்‌ காரணமென்பதையும்‌, அதனைக்‌ காரணமாகக்‌ கொள்ளின்‌ எத்தகைய முரண்‌ பாடும்‌ ஏற்பட வழியில்லை என்பதையும்‌, அதனைப்‌ பெறுதற்கு உரிய ஸாதநத்தையும்‌, அதனால் பெறத் தக்க பயனையும்‌ கூறுகினறன-ஒவ்வோரத்யாயத்திலும்‌ . நான்கு உட் பிரிவுகள்‌ உள்ளன, அவைகள்‌ பாதம்‌ எனப்படும்‌, நாம்‌, பயனைக் கூறும்‌ அத்யாயமான நான்காவது பலாத்யாயத்தில்‌ உள்ள முதல்‌ உட்பிரிவிற்‌ கூறிய விஷயங்களை இக்கட்டுரையிற்‌ சுருங்கத்‌ தொகுத் தெழுதுகிறோம்‌. இவ் வுட்பிரிவு ஆவ்ருத்தி பாதம்‌ எனப்படும்‌. ஆவ்ருத்தி’” என்று இந்தப்‌ பாதத்தின்‌ ஸூத்ரம்‌ தொடங்குவதனால்‌ இந்தப்‌ பாதம்‌ ஆவ்ருத்தி பாதம்‌ எனப்படுகின்றதென்க.

ஸாத்ய த்விகத்தில்‌ முதலாவதான மூன்றாமத்யாயத்தினாலே உபாயமான ஸாத்பம்‌ கூறப்பட்டது பயனாயமைந்த ஸாத்த்யம்‌ சொல்லப் படுகிறது இந்த நான்காமத்யா யத்தினாலே. உபாயமாவது ப்ரஹ்ம வித்யை எனப்படும்‌ உபாஸனை யாகும்‌. அதனுக்கு உறுப்பாக வைராக்யம் , பராப்யமான பர ப்ரஹ்மத்தில்‌ ஆசை, உபாஸனைகளுக்குள்‌ உள்ள பேதம் அல்லது அபேதம் இவற்றைச்‌ சிந்திப்பது, உபாஸனைக்கு வர்ணாச்ரமாசாரம்‌ அங்க மென்பது என்னும்‌ இவ் விஷயங்கள் முறையே நான்கு பாதங்களாலும்‌ முந்தின அத்யாயத்திற்‌ பேசப்பட்டன -இதனில்‌ அந்த உபாஸனைக்கு முதன்‌ முதலான பயன்‌, உபாஸ னைக்கு முந்திய பாபங்கள்‌ நசித்தலும்‌, பிந்தின பாபங்கள்‌ ஒட்டாது. விலகலும்‌ என்பதும்‌, ப்ரஹ்ம நாடி வழியே ஜீவன்‌ வெளியேறு மென்பதும்‌, வெளியேறிய ஜீவன்‌ அர்ச்சிராதி வழியே போகுமென்பதும்‌, அவ்வழியே போன ஜீவன்‌ ப்ரஹ்மத்தைக்‌ கிட்டி. அனுபவிக்கு மென்பதும்‌ இநத நான்காமத் யாயத்தில்‌ முறையே நான்கு பாதங்களாலும்‌ பேசப்‌ படுகின்றன.

நான்காமத்யாயத்தில்‌ முதலாவது பாதம்‌. பதினொன்று அதிகரணங்கள்‌ கொண்டது.-இந்தப்‌ பாதத்தில்‌ இரண்டு உட்பிரிவுகள்‌ அமைந்துள்ளன, முதல்‌ ஆறு அதிகரணங்கள்‌ ஒரு பிரிவு; மேலுள்ள ஐந்து அதிகரணங்கள்‌ மற்றொரு பிரிவு. முதற்‌ பிரிவில்‌ உபாஸனையினுடைய ஸ்வரூபம்‌ சோதிக்கப்படுகிறது. மூன்றாவது அத்த்யாயத்தில்‌ அந்தந்த உபாஸனை விசேஷங்கள்‌ பேசப்பட்டன. இதனில்‌ உபாஸனைகளின்‌ ஸ்வரூபம்‌ எல்லாவற்றிற்கும்‌ சேர்ந்து பொதுப்பட எத்தகைத்து என்று விமர்சிக்கப்படுகிறது. இதனை ஸாதகாத்த்யா யத்தில்‌ அமைக்காது பலாத்யாயத்தில்‌ அமைத்தது. உபாஸனை எனப்படும்‌ அன்பு வடிவான பக்தி, ஸாதநமாயிருப்பதோடு, தானே பயனாகவும்‌ அமைந்துள்ள சிறப்புத்‌ தோற்றற்கு என்க-

1-ஆவ்ருத்யதிகரணம்‌--நான்காமத்யாயத்தின்‌ முதற்பாதத்தின் கண்‌ உள்ள முதலதிகரணமிது. மூன்றாம் அத்யாயத்தின்‌ கடைசிப்‌ பாதத்தின இறுதியில்‌ உள்ள முக்தி பலா நியமாதி கரணத்திறகு அடுத்தது இது. ப்ரஹ்ம வித்துக்கள்‌ திறத்தில்‌ அபசாரமில்லா விடின்‌, தியாகத்துடன செய்த ஸத் கர்மங்களால்‌. முக்தியைப்‌ பயனாகக் கொண்ட உபாஸனை நிறைவுறும்‌ என்றது அந்த அதிகரணம்‌- ப்ரஹ்ம ப்ராப்தி ரூபமான முக்தியைப்‌ பயனாகக்‌ கொண்ட ப்ரஹ்ம ஜ்ஞாநம்‌ ஒரு கால்‌ இவனுக்கு ஏற்பட்டதற்குப்‌ பிறகு ஸத் கர்மங்கள்‌ எங்ஙனம்‌ அதனை நிறை வுறும்படி செய்ய இயலும்‌ என்னும் கேள்ளி எழ, இந்த அதிகரணம்‌ அதனுக்கு விடையிறுக்கிறதென்க, ஒருகால்‌ ப்ரஹ்ம ஜ்ஞாநம்‌ ஏற்பட்டாற்‌ போதாது, ஒரு கால்‌ ப்ரஹ்மத்தை அறிந்த மாத்திரத்தில்‌ ப்ரஹ்ம ப்ராப்தி யெனப்படும்‌ முக்தி ஏற்படின்‌, ப்ரஹ்மத்தை இடைவிடாது த்யானம்‌ செய்வதற்கும்‌ அது முதிர்ந்து ப்ரத்யக்ஷம் போல்‌ தோற்றுவதற்கும்‌ பயனில்லாமற்‌ போய் விடும்‌, ஆதலின்‌ ஞானம்‌ த்யானமாகி ப்ரத்யஷம் போல்‌ தோற்றி அன்பு வடிவமாய்‌ முதிரும்‌ நிலைகாறும்‌ திரும்பத்‌ திரும்பப்‌: பயின்று கொண்டே இருத்தல்‌ வேண்டும்‌ ; பினனர் தான்‌ உபாஸனை நிறைவுறும்‌. அதற்கு ஸத் கர்மம்‌ இன்றியமையாததென்பது இவ்வதிகரணமனளிக்கும்‌ விடையாகும்‌.-இனி, இதனைச்‌ சிறிது விவரமாகக்‌ காண்போம்‌. கேள்வி கேட்பவனுடைய கருத்து இது :-ப்ரஹ்ம ஜ்ஞானம்‌ முக்திக்கு உபாயமாக ச்ருதியில்‌ விதிக்கப்பட்டது. இத்தனை தடவை ப்ரஹ்ம ஜ்ஞாநம்‌ ஏற்பட வேண்டும்‌ என்று வரையறுக்கப் படலில்லை, இனி, வரையறுக்கப் படாவிடினும்‌ நெற் குத்த வேண்டும்‌ என்னும்‌ விதி உமி நீங்கும் வரை திரும்பத்‌ திரும்பக்‌ குத்த வேண்டுமென்பதைக்‌ காட்டுவது போல, ஸாஷாத்‌ காரமாக ப்ரஹ்மம்‌ தோற்றும்‌ வரையிலும்‌ திரும்பத்‌ திரும்ப ஏற்பட வேண்டுமென்று ப்ரஹ்ம ஜ்ஞான விதியும்‌ காட்டாதோ எனின்‌ காட்டாது என்க. உமி நீங்குதலென்னும்‌ கண் கண்ட பயனுக்கு நெற் குத்தல்‌ விதிக்கப்பட்டது போல, கண் கண்ட பயனுக்கு உபாயமாக ப்ரஹ்ம ஜ்ஞானம்‌ விதிக்கப்பட வில்லையே? ஜ்யோதிஷ்‌டோமம்‌ முதலிய வேள்விகளை ஒரு காற்‌ செய்தாலே உகந்து ஸர்‌வேச்வரன்‌ பலன்‌ அளித்து விடுவது போல, ஒருகாலேற்பட்ட ப்ரஹ்ம ‘ ஜ்ஞானத்தாலேயே உவப்புற்ற ஸர்வேஸ்வரன்‌ முக்தியை அளித்து விடுவானன்‌றோ? பின்னை ஏன்‌ திரும்பத்‌ திரும்ப அதனைச் செய்து ஸ்ரமப்பட வேண்டும்‌ –

இங்ஙனம்‌ கேள்வி கேட்கும்‌ பூர்வபஷிக்கு ஸித்தாந்தி ஸமாதானம்‌ கூறுகிறான்‌-முக்தியைப்‌ பயனாகக்‌ கொண்ட ப்ரஹ்ம ஜ்ஞாநம்‌ திரும்பத்‌ திரும்பப்‌ பயின்றேயாக வேண்டும்‌. ஏனெனில்‌, த்யாநம்‌, உபாஸநம்‌, என்னும்‌ சொற்கள்‌ கூறும்‌ பொருளையே காட்டும்‌ வேதம்‌ என்னும்‌ சொல்லினாலே சுருதி உபதேசிப்பது அப்‌ பொழுது தான்‌ பொருந்துகிறது, * வேதநம்‌ ” என்பது உபாஸநம்‌ என்னும்‌ பொருள்‌ கொண்டது -மனத்தை ப்ரஹ்மமாக உபாஸிக்க வேண்டும்‌ என்று உபாஸனை தொடங்கப்பட்டு எவன்‌ இவ்விதம்‌ வேதந(ஜ்ஞாந )த்தைச்‌ செய்கிறானோ, அவன்‌ கீர்த்தி (ஸெளலப்யத்தால்‌ வந்த புகழ்‌) யசஸ்‌ (மேன்மையினால்‌ வந்த புகழ்‌) இவைகளாலே விளங்குவான்‌ ; ப்ரஹ்ம வர்ச்சஸினாலே தபிப்பான்‌ என்று அந்த உபாஸனை வேதநமாக முடிக்கப் பட்டிருப்பதால்‌ உபாஸனையும்‌ வேதநமும்‌ ஒன்று என்பது தெளிவாகிறது. இவ்விதமே அதனை அறிகிறவர் எவரோ ; அவர் எதனை (எந்த ப்ரஹ்மத்தை அறிகிறாரோ :)அந்த ரைக்‌வரைப்‌ பற்றியும்‌ அந்த அறியப்படும்‌ ப்ரஹ்மத்தைப்‌ பற்றியும்‌ சொல்லப்பட்டது என்று வேதக(ஞாக)மென்று தொடங்கியது-எந்த தேவதையை உபாஸிக்கிறீரோ, அந்தத்‌ தேவதையை எனக்கு அநு சாஸநம்‌ (கற்பித்தல்‌) செய்தருள வேணும்‌’” என்று உபாஸனமாக முடிக்கப்பட்‌டுள்ளது.-இங்கனம் உபாஸநம் என்னும்‌ சொல்‌ இருக்க வேண்டிய இடத்தில்‌ வேதந (ஜ்ஞாந ) மென்னும்‌ சொல்லும்‌, ஜ்ஞானம்‌ என்னும்‌ சொல்‌ இருக்க வேண்டிய இடத்தில் உபாஸந மென்னும்‌ சொல்லும்‌ மாறி மாறி யமைந்து இரண்டு மொன்றே என்பதை வலியுறுத்துகின்‌றன-

இனி பசுவை (நாலு காற்‌ பிராணியை)க்‌ கொண்டு யாகம்‌ செய்ய வேண்டும்‌ என்று பொதுப்படப்‌ பசு, யாகத்திற்கு உபயோகப் படுவதாகக்‌ கூறப்படினும்‌, மேல்‌ “ சாகம்‌ ‘” என்று அந்தப்‌ பசு விசேடித்துக்‌ கூறப்படுதலின்‌ பொதுப் படக்‌ கூறப்பட்ட பசு “சாகமே'” என்று தீர்மானிப்பது போலப்‌ பொதுப் படக்‌ கூறப்பட்ட வேதநம்‌ த்யாநமாக விசேஷிக்கப் படுதலின்‌ த்யான ரூப மானதே அந்த வேதநம்‌ என்று தீர்மானிக்க வேண்டும்‌, த்யானம்‌ என்பது ப்ரஹ்மத்தைப்‌ பற்றிய ஜ்ஞாநம்‌ இடைவிடாது தொடர்ந்து நிற்பது. தொடரவே ஒரு கால்‌ ப்ரஹ்ம ஜ்ஞானம்‌ ஏற்பட்டால்‌ போதாது என்பது போதரும்‌. அநுகூலமான தக்க விஷயத்தில்‌ வைத்த மனத்தின்‌ ஓர்மை குலையாது நிலைத்து நிற்றலைக்‌ கூறும்‌, உபாஸனை என்பது, இடைவிடாத எண்ணத்தின்‌ தொடரான த்யானமாக மாறுதலின்‌ அவ்விரு சொற்களும்‌ ஒரே பொருளைக்‌ கொண்டவை யாயின. ஆகவே த்யானம்‌ அல்லது உபாஸந மெனப்படும்‌ ப்ரஹ்ம வேதநம்‌ (ஜ்ஞாநம்‌) மீண்டும்‌ மீண்டும்‌ பயின்று கொண்டே இருத்தல்‌ வேண்டும்‌ என்றதாயிற்று-ப்ரஹ்ம வேதநம்‌ (ப்ரஹ்மத்தைப்‌ பற்றிய ஞானம்‌) என்பது ப்ரஹ்மத்தைப் பற்றிய நினைப்பின்‌ இடையறாத தொடர்ச்சி யாகிய த்யானமே என்பது (தத்ரூப ப்ரத்ய யேசைகா ஸந்ததிச் சாந்ய நிஸ் ஸ்ப்ருஹா, தத் த்யாகம்‌ ப்ரதமை: ஷட்பி : அங்கைர்‌ நிஷ் பாத்யதே ததா ” (ப்ரஹ்மத்‌தைப் பற்றிய ஞானம்‌ மற்றொன்றைப்‌ பற்றியதா யன்றி யமையின்‌ அது த்யானம்‌ எனப்படும்‌; அது யமம்‌, நியமம்‌, ஆஸநம்‌, ப்ராணாயாமம்‌, ப்ரத்யாஹாரம்‌, தாரணை என்னும்‌ முந்திய ஆறு யோகங்கங்களாலும்‌ உண்டு பண்ணப்‌ படுகிறது) என்னும்‌ விஷ்ணு புராணம்‌ முதலிய நூல்களாலும்‌ அறியப் படுகிறது.-

2-ஆக்மத்வோபாஸநாதிகரணம்‌–முந்தின அதிகரணத்தில்‌ பர ப்ரஹ்மோபாஸநம்‌ மீண்டும்‌ மீண்டும்‌ செய்தாக வேண்டும்‌ எனப்பட்டது. உபாஸிக்கிறவன்‌ உபாஸிக்கப்‌ பட வேண்டிய பர ப்ரஹ்மத்தை தன்னினின்றும்‌ வேறுபட்டதாக உபாஸிக்க வேண்டுமா ; தானாகவே என்று உபாஸித்தல்‌ வேண்டுமா ? என்று விசாரிக்கப் படுகிறது இந்த அதிகரணத்திலே-கீழ்‌ அத்யாயங்களிலே பலகால்‌ ஜீவனுக்கும்‌ ப்ரஹ்மத்துக்கும்‌ பேதம்‌ வலி யுறுத்தப்‌ பட்டுள்ளமையாலும்‌ சுருதி வேறாக உபாஸிக்க வேண்டும்‌ என்பதனாலும்‌ ப்ரஹ்மத்தை வேறுபட்டதாகவே உபாஸிப்பது பொருந்தும்‌. இனி மனத்தை ப்ரஹ்மமாக உபாஸித்தல்‌ வேண்டும்‌ என்று தன்னை ப்ரஹ்மமாக பாவிக்க வேண்டும்‌ என்று கொள்ளலாமே எனின்‌, அதுவும்‌ தகாது. ஏனெனில அணு ஸ்வரூபனான தன்னை விபு ஸ்வரூபமான ப்ரஹ்மமாக பாவிப்பது பொய்யாதலின்‌ அவ் வுபாஸனை இயல்பான உண்மை நிலையா யமைந்த ப்ரஹ்ம ப்ராப்தி ரூபமான மோக்ஷத்திற்கு ஸாதநமாக மாட்டாது. ஒன்றை மற்றொன்றாகப்‌ பார்க்கும்படி விதித்திருக்தால்‌ அது ஸம்ஸார பலனைத்‌ தருமே யன்றி மோக்ஷ பலனைத்‌ தராது-என்று உணர்க. ஆக வேறுபட்டதாக ப்ரஹ்மத்தை” உபாஸிப்பதே பொருந்து மென்பது பூர்வபஷியின்‌ வாதம்‌–

இதனுக்கு ஸித்தாந்தி கூறும்‌ விடை இது:–உபாஸிப்பவன்‌, தான்‌ ஆகவே (ஆத்மாவாகவே) ‘ ப்ரஹ்மத்தை உபாஸித்தல்‌ வேண்டும்‌. உபாஸிப்பவன்‌ தன்‌ சரீரத்திற்குத்‌ தான்‌ ஆத்மாவா யிருத்தல்‌ போலத்‌ தனக்கு ப்ரஹ்மத்தை ஆத்மாவாக உபாஸிததல்‌ வேண்டும்‌ என்றபடி. ஸ்வரூபைக்யததையோ, திருஷ்டி விதியையோ கொண்டு ப்ரஹ்மத்தை ஆத்மாவாக உபாஸனை செய்திடின்‌ கீழ்‌ வலி யுறுத்திய பேதத்திற்கும்‌ சுருதிக்கும்‌ முறண்பாடு தவிர்க்க வொண்ணாததே: இங்கு அங்கனம்‌ உபாஸிக்கச்‌ சொல்ல வில்லை ; ஜீவன்‌ தன்‌ சரீரத்துக்கு ஆத்மாவா யிருத்தலின்‌ எங்ஙனம்‌ ”தேவன்‌ நான்‌”’, “மனிதன்‌ நான்‌” என்று அநுஸந்திக்கிறானோ, அங்ஙனமே ஜீவனுக்கு ப்ரஹ்மம்‌ ஆத்மாவா யிருத்தல்‌ பற்றி அவன் , தனக்கு அந்தர்யாமியான பரமாத்மாவைத்‌ தானாக உபாஸித்தல்‌ பொருந்துவதே யாகுமென்க. தேஹத்தைச்‌ சொல்லும்‌ தேவன்‌ மநுஷ்பன்‌ என்னும்‌ சொற்கள்‌ தேஹத்திற்கு அந்தர்யாமியான ஆத்மா பர்யந்தம்‌ சொல்வனவாய்த்‌ தேவனாகிய நான்‌ மநுஷ்யனாகிய நான்‌ என்று வழங்குவது போல, ஜீவனைச்‌ சொல்லும்‌ அஹம்‌ (நான்‌) என்னும்‌ சொல்லும்‌ ஜீவனுக்கு அந்தர்யாமியான ப்ரஹ்மம்‌ பர்யந்தம்‌ சொல்லுதலின்‌ நானாகிய ப்ரஹ்மமா யிருக்கிறேன்‌ என்று உபாஸிப்பது பொருந்துகின்ற தென்க. எனவே முன்னைய உபாஸகர்களும்‌ இவ்வாறே அநுஸந்திப்பவரா யுள்ளனர்‌, (நான்‌ நீயா யிருக்கிறேன்‌ ; நீ நானாக இருக்கிறாய்‌) என்று அவர்கள்‌ தம்மை ப்ரஹ்மமாகவும்‌ மாறி ப்ரஹ்மத்தைத்‌ தாமாகவும்‌ அநுஸந்திப்பது காண்க, சரீரத்தை, ஆத்மாவாகவும்‌ ஆத்மாவை விட்டுப்‌ பிரியாது அதனோடு இணைந்த பொருளா யிருத்தலின்‌ வேறுபாடின்றிச்‌ சரீரமாகவும்‌ கொள்வது போன்றது இவ்வநுஸந்தானம்‌, இங்கனம்‌ சரீரத்திற்கும்‌ ஆத்மாவிற்குமுள்ள உறவே உபாஸகனான ஜீவனுக்கும்‌ ப்ரஹ்மத்திற்கு மென்பதை சாஸ்திரங்கள்‌ அறிவுறுத்துகின்றன.-இயல்பாகவே அந்தர்யாமியாயுள்ள ப்ரஹ்மத்தை அங்ஙனமே அநுஸந்திப்பது எல்லா உபாஸநங்களுக்கு மொக்குமாதலின்‌, இங்கே அதனை விசேடித்துக்‌ கூறியது. -திருஷ்டி விதியாய்‌ மயக்கத்தை உண்டு பண்ணு மிடங்களில்‌ அங்ஙனம்‌ கொள்ளாது அந்தர்‌ யாமியாகவே அநுஸந்தாநம்‌ செய்ய வேண்டும்‌ என்னும்‌ கருத்தைக்‌ கொண்டது -ஆத்மா வல்லாததை ஆத்மா என்று உபாஸிக்க வேண்டும்‌ என்னும்‌ பொருளும்‌ தோன்றி (திருஷ்டி விதி)யாக ப்ரம்மம்‌ உண்டு பண்ணப் படுவது காண்க-

3-ப்ரதீகாதிகரணம்‌-ப்ரஹ்மோபாஸனையில்‌ தனது ஆத்மாவாக அநுஸந்திக்க வேண்டுமாயின்‌ (மனத்தை ப்ரம்ஹமாக உபாஸிக்க வேண்டும்‌) என்னும்‌ திருஷ்டி விதிகளிலும்‌ ப்ரஹ்மோபாஸந மிருப்பதால்‌ மனத்தையும்‌ ஆத்மாவாக அநுஸந்திக்க நேரிடுமே என்னும்‌ கேள்வி எழ அதற்கு விடை யளிக்கிறது இந்த அதிகரணம்-கேள்வி கேட்கும்‌ பூர்வபஷியின்‌ கருத்து: உபாஸிப்பது மனத்தையே யாயினும்‌ அதனை ப்ரஹ்மமாகவே பாவித்தலின்‌ (நான்‌ மனமாயிருக்கிறேன்‌) என்று அநுஸந்திப்பது முறையே.

ஸித்தாந்தி சொல்லும்‌ ஸமாதானம்‌ : நேரே ப்ரஹ்மத்தை உபாஸகன்‌ உபாஸிக்க வில்லை. ப்ரதீகோபாஸநமன்றோ இது ப்ரதீகோபாஸநமாவது ப்ரஹ்மமல்லாததை ப்ரஹ்மமாக அநுஸந்தித்தல்‌. ஆகவே ப்ரஹ்மமல்லாத மனத்தைத் தான்‌ ப்ரஹ்மமாக பாவித்து இவன்‌ உபாஸிக்கிறானே தவிர நேரே ப்ரஹ்மத்தை உபாஸிக்க வில்லையே. ப்ரதீகமாகிற மனம்‌ ஆத்மாவா யில்லாமையின்‌ “ அஹம்‌ மநோஸ்மி ‘ என்று அநுஸந்திப்பதற்கு வழியே யில்லைஇனி மனத்தைப்‌ ப்ரஹ்மமாக பாவியாமல்‌ ப்ரஹ்மத்தை மனமாக பாவித்தல்‌ வேண்டும்‌ என்று கொண்டால்‌ நேரே பாரஹ்மத்தையே உபாஸித்ததாக ஆகி விடுகிறது. அறிவற்ற பொருளான மனததை உபாஸிப்பது முறை கேடு. மனமாக ப்ரஹ்மத்தை உபாஸிப்பதே முறை. ஆக, இங்கும்‌ ஆத்மாவாக யநுஸந்தித்தல்‌ தவிர்க்க வொண்ணாத தாமே எனின்‌, அங்ஙன்‌ ஆகாது என்க-ஏனெனில்‌ சிறப்புடைய (உத்க்ருஷ்டமான) ப்ரஹ்மத்தைச்‌ சிறப்பற்ற (அபக்ருஷ்டமான) மனமாக பாவிப்பது அரசனைப்‌ பணியாளனாகப்‌ பார்ப்பது போன்று தவறேயா மென்க. பணியாளனையே அரசனென்றால்‌ காரியம்‌ கை கூடும்‌. அரசனைப்‌ பணியாளளாகப்‌ பார்த்திடிலோ காரியம்‌ நிறை வேறாததோடு கேடும்‌ விளையுமன்றோ -மனம்‌ போன்ற அசேதநப்‌ பொருள்களை உபாஸிப்பது என்பது அவ்வப் பொருள்களின்‌ அபிமானி தேவதைகளை உபாஸிப்பதே யாமென்று உணர்க,

4-ஆதித்யாதிமத்யநிகரணம்‌— உத்க்ருஷடமான பொருளை அபக்ருஷ்டமான பொருளாக உபாஸித்தலாகா தெனின்‌ உத்கீதோபாஸனையில்‌ பயனைத்‌ தருவது உத்கீதமே யாதலின்‌ உத்க்ருஷ்டமான உத்கீதமாகவே ஸூர்யளை உபாஸிக்க வேண்டி வருமே என்னும்‌ கேள்வி எழ விடையிறுக்கின்றது இவ்வதிகரணம்‌.பூர்வபஷி கேட்பது இது சாந்தோக்யாபநிஷத்தில்‌ -எந்த இந்தப்‌ பரிதி தபிக்கிறதோ அதனை உத்கீதமாக உபாஸிக்க வேண்டும்‌ என்று வேள்‌விக்கு உறுப்பாக உத்காதா என்பவன்‌ காநம்‌ செய்யும்‌ உத்கீத ஸாமத்தின்‌ அவயவமான ஓம்காரமாக ஸூர்யனை உபாஸிக்க வேண்டுமென்று விதிக்கப் பட்டுள்ளது. (மனத்தை ப்ரஹ்மமாக பாவிக்க வேண்டும்‌) என்னுமிடத்தில்‌ உபாஸிக்கப்‌ பட வேண்டிய மனம்‌ முதலில்‌ குறிப்பிடப்‌ பட்டிருப்பது போல, இங்கும்‌ உபாஸிக்கப்பட வேண்டிய ஸூர்யன்‌ முதலிற்‌ குறிப்பிடப்பட்டுள்ளான்‌. எந்த ஸூர்யன்‌ தபிக்கிரானோ, அவனாக உத்கீத ஓங்காரத்தை உபாஸிக்க வேண்டும்‌ என்று இந்த ச்ருதி வாக்யத்திற்குப்‌ பொருள்‌ கொள்ளலாகாது ; ஏனெனில்‌, பயனைத்‌ தருவதற்காக ஏற்பட்டது கர்மம்‌. அதனுக் குறுப்பாக இவ்‌ வுத்கீதோபாஸநம்‌ அமைதலின்‌ இதுவே ப்ரதானமாய்‌ உத்க்ருஷ்டமானது ; ஸூர்யனோ, இந்த உபாஸனைக்கு ‘உறுப்பான (கர்ம சேஷமான) தேவதையே. ஆதலின்‌ அத் தேவதை அபக்ருஷ்டமானதே, பணியாளனை அரசனாகப்‌ பார்ப்பது போல அபக்ருஷ்டமான ஸூர்ய தேவதையை உத்க்ருஷ்டமான உத்கீதமாகப்‌ பார்ப்பதே முறை –

ஸித்தாந்தி கூறும்‌ ஸமாதானமிது : பயனைத்‌ தர வல்லது கர்மமே; ஆயினும்‌, கர்மத்‌துக்கு அதனால்‌ ஆராதிக்கப்படும்‌ தேவதையினாலேயே பயன்‌ தரத் தக்க வல்லமை ஏற்படுதலின்‌ கர்மத்தை விட தேவதையே உத்க்ருஷ்டமானது. தேவ பூஜா ரூபமான யாகம்‌ என்னும்‌ கர்மம்‌ தேவதையை ப்ரீதி உறச் செய்து அதன்‌ வாயிலாகப்‌ பயனை அளிக்கின்றது என்க. எனவே யாகத்திற்கு அங்கமான உத் கீதம்‌ முதலியவற்றை ஆதித்யன்‌ முதலியவைகளாக உபாஸிப்பதே தக்கதாம்‌–

5. ஆஸீ நாதிகரணம்‌–நினைத்ததைச்‌ சொல்லாமல்‌ விடமுடியாமையினால்‌ , முந்திய இரண்டதிகரணங்களும்‌ ப்ரஸங்க ஸங்கதியினால்‌ இடையே புகுந்தன, இவ்வதிகரணத்திற்கு மோக்ஷ ஸாதநமாகச்‌ சாஸ்திரம்‌ விதித்ததும்‌ இடைவிடாது தொடரும்‌ நினைவு வடிவமானதும்‌ த்யாநம்‌ எனப்படுவதுமான ப்ரஹ்ம ஜ்ஞாநமான உபாஸனை மீண்டும்‌ மீண்டும்‌ செய்தல்‌ வேண்டும்‌ என்று முன்னர்ச்‌ சொன்னதோடு, தொடர்பு என்று உணர்தல்‌ வேண்டும்‌. இனி இவ் வதிகரணத்தில்‌ கூறப்படும்‌, ஆஸநத்தில்‌ அமர்தல்‌ * ப்ரதீகோபா – ஸநத்திலும்‌ தேவைப் படுவதாயினும்‌ ஆஸநத்தில்‌ அமருதற்கு ஹேதுவாகக்‌ கூறப்படும்‌ ஐகாக்ர்யம்‌ (மன ஓர்மை) முதலதிகரணத்தில்‌ த்யானமாக உபதேசித்திருப்பதால்‌ அவ்வதி கரணத்துடன்‌ இவ் வதிகரணத்திற்குத்‌ தொடர்பு பாஷ்யகாரராற்‌ கூறப்பட்டதென்று உணர்க-இங்கே பூர்வபஷி கூறுவது: த்யானம்‌ எப்பொழுதும்‌ செய்ய வேண்டு மென்று சொல்லப்படுகிறது. அமர்ந்து த்யானம்‌ செய்ய வேண்டுமென்னில்‌ நிற்கும் போதும்‌, நடக்கும் போதும்‌, படுத்திருக்கும் போதும்‌ த்யானம்‌ விட்டுப் போகும்‌. : ‘ உபவிச்யாஸநே யுஞ்ஜ்யாத்‌ ‘ என்று கீதையிற்‌ சொல்வது உட்கார்ந்து யோகம்‌ செய்பவர்‌ ஆஸநத்தில்‌ அமர்ந்து த்யாநம்‌ செய்ய வேண்டும்‌ என்னும்‌ கருத்துக்‌ கொண்டதே யன்றி உட்கார்ந்து தான்‌ த்யாநம்‌ செய்ய வேண்டும்‌ என்று நியமிக்க வில்லை, ஆகவே நின்றும்‌, இருந்தும்‌, கிடந்தும்‌ திரிந்தும்‌ த்யாநத்தை இடைவிடாது அநுஷ்ட்டித்தல்‌ வேண்டும்‌.

ஸித்தாந்தி கூறுவதாவது: உட்கார்ந்து தான்‌ த்யாநம்‌ செய்தல்‌ வேண்டும்‌; அப்பொழுது தான்‌ மன ஓர்மை கிட்டும்‌. நிற்கும்‌ பொழுதும்‌ நடக்கும்‌ பொழுதும்‌ யத்நம்‌ செய்ய வேண்டி யுள்ளது. அதனால்‌ மன ஓர்மை கெடும்‌. படுத்திருக்கும்‌ பொழுது உறக்கம்‌ வரும்‌. தியாநத்திற்கு மன ஓர்மை இன்றியமையாத தன்றோ – த்யாநம்‌ செய்பவன்‌ மலை போல்‌ அசையா திருத்தல்‌ வேண்டும்‌. அந் நிலை உட்கார்ந்த காலத்தில் தான்‌ வரும்‌, இந்‌ நிலையைக்‌ கருதித் தான்‌ உட்கார்ந்தே யோகம்‌ செய்தல்‌ வேண்டு மென்‌கிறது கீதையும்‌, த்யாகத்துக்குத்‌ தேச கால நியமமில்லை. எங்கே எக்காலத்தில்‌ மன ஓர்மை நேரிடுமோ அந்தத்‌ தேசமே அந்தக் காலமே த்யாகத்துக் குரியனவாம்‌-மன ஓர்மைக்குத்‌ தேசம்‌ முதலியன எதிர் பார்க்கப்‌ பட வேண்டுமாயின்‌ அம்‌ மன ஓர்மைக்கு ஆஸநத்தில்‌ ௮மர்வது எதிர்பார்க்கப் படுவதைக்‌ கேட்க வேண்டுமோ ?

6-ஆப்ரயாணாதிகரணம்‌-– இடை விடாது அநுஷ்ட்டிக்கக்‌ கூடிய இந்த த்யாந ரூபமான உபாஸநம்‌ ஒருநாள்‌ செய்தாற்‌ போதுமா? இறுதி வரை நாடோறும்‌ செய்ய வேண்டுமா என்பது இவ் வதிகரணத்தில்‌ விசாரம்‌ செய்யப்படுகிறது –மீண்டும்‌ மீண்டும்‌ செய்ய வேண்டிய உபாஸநம்‌ ஒரு நாள்‌ செய்தாலே சாஸ்திரத்திற்‌ சொன்னதை அநுஷ்ட்டித்ததாக ஆகி விடுவதால்‌ மோக்ஷ பலத்துக்காக மேலும்‌ செய்வது பயனற்றதே என்பது பூர்வ பக்ஷம்‌–ஆயுள்‌ உள்ளவரை அநுஷ்ட்டிக்க வேண்டும்‌ என்று விதி இருப்பதால்‌ இறுதி வரை நாடோறும்‌ உபாஸநம்‌ செய்யப்பட வேண்டும்‌ என்பது ஸித்தாந்தம்‌.

இதுகாறும்‌ ப்ரஹ்ம வித்யையான உபாஸனையின்‌ ஸ்வரூபம்‌ சோதிக்கப்பட்டது. உபாஸிக்கப்படும்‌ பர ப்ரஹ்மம்‌ மிகவும்‌ இனியதாதலின்‌ அதனைப் பற்றிய உபாஸனையும்‌ மிக்க இனிதாயிருப்பது பற்றி உபாயமா யிருத்தலோடு உபேயமாகவும்‌ உள்ளமையால்‌ அது பலாத்யாயத்திற்‌ சோதிக்கப்பட்து. இனி, அவ் வுபாஸாத்தின்‌ பலன்‌ பற்றிச்‌ சிந்திக்கத்‌ தொடங்குகிறார்‌.

7-தததிகமாதிகரணம்‌–ஒருவனுக்கு உபாஸனை ஸாஷாத்கார நிலை பர்யந்தம்‌ அடைந்திருக்குமானால்‌ அவனுடைய அந் நிலைக்கு முந்திய பாபங்கள்‌ 🙁போய பிழை தீயினில்‌ தூசாகும்‌) என்றும்‌ பிந்திய பாபங்கள்‌ [தாமரை இலையில்‌ நீர் போல உபாஸகனிடம்‌ பாபம்‌ ஒட்டுவதில்லை] என்றும்‌ சுருதியில்‌ ஓதப்பட்டுள்ளது, இது பொருந்துமா பொருந்தாதா என்று ஆராய்ந்து முடிவு கட்டுகிறது இவ் வதிகரணம்‌-பூர்வபஷி சொல்லுகிறான்‌ : (செய்த நல்வினைகளோ தீவினைகளோ கட்டாயமவற்றை அநுபவித்தே யற வேண்டும்‌. அனுபவிக்காத வினைகள்‌ எத்தனை கற்பங்களாயினும்‌ அற்றுப்‌ போக மாட்டா] என்று சாஸ்திரம்‌ கூறுதலால்‌ முன்னைய பாபங்கள்‌ நசித்தலும்‌, பின்னைய பாபங்கள்‌ ஒட்டறுதலும்‌ பொருந்த மாட்டா. அங்ங்னம்‌ சுருதி ஓதுவது உபாஸனையை உயர்த்திக்‌ கூறும்‌ வெறும்‌ புகழுரையே யாகும்‌. ப்ராயச் சித்தத்தாலே பாபம்‌ நசிப்பதில்லையோ எனின்‌, ஆம்‌ நசிக்கும்‌. உபாஸனை ப்ராயச் சித்தமன்றே. அது ப்ரஹ்மத்தை அடைவதற்கு ஸாதநமாயன்றோ விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே வெறும்‌ புகழுரை கொண்டு முடிவு கட்டலாகாது. பண்டைய வினைகள்‌ நசிப்பதும்‌ பின்னைய வினைகள்‌ ஒட்டறுதலும்‌ கூடாதனவே-

ஸித்தாந்தி சொல்லுகிறான்‌ : பாபங்கள்‌ நசித்தலும்‌ ஒட்டறுதலும்‌ பொருந்துவனவே. செய்த பாபங்கள்‌ ப்ராயச் சித்தத்தால்‌ பரிஹரிக்கப்படாத போது அவற்றிலிருந்து தப்ப வழியில்லை என்கிறது ஸாஸ்த்ரம் – உபாஸனை ப்ராயச்சித்த ஸ்த்தாநத்திலிருந்து நீக்க வல்லதா யுள்ளது. இவ்விதம்‌ ஒப்புக் கொள்ளா விடில்‌ கர்மங்களால்‌ பிறந்து பிறந்து எடுக்கும்‌ பிறவி தோறும்‌ கர்மங்களை மேலும்‌ மேலும்‌ ஈட்டிக் கொண்டே யிருத்தலின்‌ கர்ம ஸம்பந்தம்‌ நீங்கி எவருக்கும்‌ எப்பொழுதும்‌ மோக்ஷம்‌ பெற வழியே இல்லாமற்‌ போய் விடும்‌. உபாஸனை ப்ரஹ்ம ப்ராப்தி எனப்படும்‌ மோக்ஷத்திற்கு ஸாதநமே யன்றி பாபங்களுக்கு எங்ஙனம்‌ ப்ராயச்சித்த மாகு மெனின்‌ கூறுதும்‌ : ஸ்வர்கத்திற்கா ஜ்யோதிஷ்டோமயாகம்‌ போன்று, உபாஸனை ப்ரஹ்மப்‌ ப்ராப்திக்கு நேரே ஸாதநமன்று, ப்ரஹ்ம ப்ராப்தி இயல்‌பானது :ஒரு ஸாத்ரத்தால்‌ அது ஸாதிக்கப் படுவதன்று: அவ் வியல்பான நிலை எய்துதற்கு இடைஞ்சலாகப்‌ பாபங்கள்‌ அமைந்துள்ளன. அவற்றை நீக்குவதற்கே ஸாதநமாக உபாசஸனை உபயோகப் படுகிறது. ஸ்வர்கமோ இபல்பானதன்‌று; ஸாதநத்‌தினால்‌ ஸாதிக்கப்பட வேண்டியதாயுள்ளது. ஆகையினால்‌ ஜ்யோதிஷ்டோமம்‌ ஸ்வர்கத்தை ஸாதிக்கும்‌ ஸாதநமாகிறது. அங்கு நீக்கப்பட வேண்டிய ப்ரதிபந்தகங்களில்லை. இங்கோ போக்கப்பட வேண்டிய “பாபங்கள்‌ நிறையப்‌ ப்ரதிபந்தகங்களாம்‌. அந்த ப்ரதிபந்தகங்களைப் போக்குவதற்கு ஸாதநமாய்‌ உபயோகப்படும்‌ உபாஸனை ப்ராயச்சித்த ஸ்த்தாநத்திலிருப்பது தக்கதே என்க, ஏனைய ப்ராயச் சித்தங்கள்‌ அந்தந்தப்‌ பாபங்களுக்காகத்‌ தனித் தனியே விதிக்கப்‌ பட்டுள்ளன ; இவ் வுபாஸனையோ எல்லாப்‌ பாபங்களுக்கும்‌ ப்ராயச் சித்தமாகப்‌ பொதுவாக வுள்ள தென்றுணர்க-முந்தின பாபத்தை நசிப்பித்தலாவது; செய்த பாபங்களுக்காகத்‌ தண்டிக்க வேண்டும்‌ என்று எம்பெருமான்‌ திருவுள்ளத்தி லேற்பட்டிருந்த எண்ணத்தை மாற்றுதல்‌. பிந்தின பாபங்களை ஒட்டறச்‌ செய்தலாவது, தண்டிக்க வேண்டும்‌ என்கிற எண்ணமே எம்பெருமான்‌ திருவுள்ளத்தில்‌ எழாதபடி செய்தல்‌-பிந்தின பாபம்‌ என்பது தன்னை யறியாமல்‌ செய்த பாபமே யாகும்‌. வேணும் என்று செய்திடின் அப் பாபம்‌ ஒட்டற்றதாகா தென அறிதல் வேண்டும்‌.

8-இதராதி கரணம்‌–பாபம் போலப் புண்ணியமும் நசித்தும்‌ ஒட்டற்றும்‌ போகின்றன என்கிறது இவ் வதிகரணம்‌-பூர்வ பக்ஷி: புண்ணியம்‌ ஸுகத்தைத்‌ தருவதனால் பாபம் போல அவைகளும்‌ நசிப்பதும்‌ ஒட்டறுவதும்‌ உபாஸனையினால்‌ ஏற்பட மாட்டா-உபாஸகனுக்கு ஸுகம்‌ வேண்டாத தன்றே. மேலும்‌ புண்ணியம்‌ நசித்திடில்‌ அதன்‌ பலனான ஆயுஸ்‌, ஆரோக்யம்‌, அந்நம்‌ முதலியன உபாஸகனுக்கு இல்லாமற்‌ போய் விடும்‌, போகவே உபாஸனையே செய்ய இயலாமற்‌ போய் விடும்‌. சுருதியும்‌ (பாபங்கள்‌) என்றும்‌ (பாபச் செயல்‌) என்றும்‌ பாபத்தையே குறிப்பிட்டிருப்பது குறிக் கொள்ளத் தக்கது.

ஸித்தாந்தி: பாபம்‌ போலப்‌ புண்ணியமும் நசிப்பதுலம் ஒட்டறுதலும்‌ உண்டு. சுருதி, பாப சப்தத்தாலே புண்ணியத்தையும்‌ கருதுகிறது. அநிஷ்டத்தைத்‌ தருவது பாபம்‌. புண்ணியமும்‌ உபாஸகனுக்கு இஷ்டமான மோக்ஷத்திற்கு இடைஞ்சலான ஸுகமாகிற அநிஷ்டத்தைத தருதலின்‌ பாபமே யாகிறது. இனி உபாஸனைகளுக்கு வேண்டிய ஆரோக்யம்‌, அக்கம்‌ முதலியவற்றைத்‌ தரும்‌ புண்ணியங்கள்‌ நசித்திடில்‌ உபாஸநம் செய்ய இயலாதே எனின்‌, அத்தகைய புண்ணியங்கள்‌ மட்டும்‌ உபாஸகனுடைய சரீரம்‌ போன பிறகு ஒட்டறுகின்‌றன.

9-அநாரப்தகார்யாதி கரணம்‌–உபாஸநைக்கு முந்திய புண்ணியமும்‌ பாபமும்‌ நசித்தலும் ஓட்டற்றலும் கூறப்பட்டன முந்திய அதிகரணங்களில் –இங்கு உபாஸனைக்கு முந்திய புண்ணியங்கள் அனைத்துமே நசிக்கின்றனவா -பிராரப்த கர்மங்களைத் தவிர மற்றவை மட்டும்‌ நசிக்கின்றனவா? என்னும் விஷயம் விசாரித்து முடிவு செய்யப்படுகிறது –
பூர்வ பக்ஷி -உபாஸனைக்கு முந்திய புண்ணிய பாபங்களனைத்தும்‌ நசிப்பதாகவே கொள்ள வேண்டும்‌-
எல்லாம்‌ நசிப்பதாகச்‌ சுருதி ஓதுவது கவனிக்கத் தக்கது. இனி, கர்மங்களனைத்தும்‌ நசித்து விட்டால்‌ கர்மத்தினாலாகிய சரீர ஸம்பந்தம்‌, உபாஸனை ஏற்பட்ட பிறகு எங்ஙனம்‌ தொடருமெனிற்‌ கூறுதும்‌. உபாஸனைக்குப்‌ பிறகு தேஹ ஸம்பந்தம்‌ தொடருவது சக்கரம்‌ சுழற்றி விட்ட பிறகும்‌ தானே சிறிது நேரம்‌ தொடர்ந்து சுற்றுவது போலக்‌ கர்ம வேகத்திற்குட் பட்டுக்‌ கர்மமில்லாமலே தானாகவே தொடருகின்றது என்று கொள்ள வேண்டும்‌. முந்தின கர்மங்களனைத்தும்‌ நசிப்பதாகக் கொள்வதில்‌ யாதொரு குறையுமில்லை.

ஸித்தாந்தி: மோக்ஷத்திற்கு விளம்பம்‌ (தாமதம்‌) சரீர ஸம்பந்தம்‌ நீங்குதலே என்று ஸ்ருதி அதனை எல்லையாகக்‌ குறிப்பிட்டுக்‌ கூறுவதால்‌ அதனுக்‌கேற்ப இங்கே அச் சுருதி எல்லாமென்று கூறிடினும்‌ ப்ராரப்த கர்மத்தைத்‌ தவிர மற்றவை யனைத்தும்‌ நசிப்பதாகவே கொள்ளல்‌ வேண்டும்‌. கர்மம்‌ தவிர தேஹ ஸம்பந்தம்‌ தொடர வேறு ஏது இருப்பதற்கு ப்ரமாணமில்லை.

10–அக்நிஹோத்ராத்யதிகரணம்‌–இந்ராதிகரணத்தில்‌ உபாஸனைக்குப்‌ பிந்திய புண்ணியமும்‌ ஒட்டற்றுப்‌ பயனளிக்காது எனப்பட்டது. உபாஸனை தொடங்கியதற்குப்‌ பின்னர்‌ அக்னி ஹோத்ரம்‌ முதலிய புண்ணியங்களும்‌ ஒட்டற்றுப்‌ பயனளிக்க மாட்டா வாதலின்‌ பயனைக்‌ கருதாத உபாஸகன்‌ அவற்றை அநுஷ்ட்டிக்க வேண்டிய தில்லை யன்றோ என்னும்‌ கேள்விக்கு விடை யிறுக்கிறது இவ் வதிகரணம்‌-பூர்வபஷி இங்கனம்‌ கருதுகிறான்‌: மோக்ஷத்தையே தான்‌ பெறும்‌ பேறாகக்‌ கொண்ட உபாஸகன்‌ பயன் கருதி அக்நி ஹோத்ரம்‌ முதலிய நித்ய நைமித்திக கர்மங்களை அநுஷ்ட்டிக்க வழி இல்லை. எனவே பயனற்ற அக்நிஹோத்ராதிகளை அறிவாளனாகிய உபாஸகன்‌ அநுஷ்ட்டிக்க வேண்டிய அவசியமில்லை-ஸித்தாந்தி கூறுவதாவது : உபாஸனைக்குப்‌ பிந்திய ஏனைய புண்ணியங்களுக்கும்‌ அக்னி ஹோத்ரம்‌ முதலிய நித்ய நைமித்திக ரூபமான புண்ணியங்களுக்கும்‌ வேறுபாடு உண்டு. ஏனைய புண்ணியங்கள்‌ வெவ்வேறு பயன்களைத்‌ தருவன, அக்னி ஹோத்ராதிகளோ உபாஸனையையே பயனாகக்‌ கொண்டன. கொள்ளவே, அவை பயனற்றவையாக மாட்டா, ஆதலின்‌ உபாஸகன்‌ அவற்றை உபாஸனை ஸித்திப்பதற்காக அநுஷ்ட்டித்தே யாக வேண்டும்‌..உபாஸனைக்காக அக்நி ஹோத்ராதிகளை ஸாதநமாக அநுஷ்ட்டிக்க வேண்டு மென்பது [ப்ராஹ்மணர்கள்‌ யாகத்தாலும்‌ தானத்தாலும்‌ உபவாஸ மென்னும்‌ தவத்தாலும்‌ உபாஸிக்க விரும்புகிறாகள்‌] என்னும்‌ சுருதியினால்‌ தெரிகிறது. ஆயின்‌ யாக மெனப்படும்‌ அக்நி ஹோத்ராதிகளை ஒருகாற்‌ செய்தாலே அமையாதோ எனின்‌ உபாஸனை என்பது ஆயுள் வரை தொடர்ந்து அக்நி ஹோத்ராதிகளாலே நாடோறும்‌ பயின்று சிறப்புறச்‌ செய்யத் தக்கதாதலின்‌ சிறப்புற்ற உபாஸனை ஸித்திப்பதற்காக அக்நி ஹோத்ராதி நித்ய நைமித்திக கர்மங்களை உபாஸனைக்குப்‌ பின்னும்‌ அநுஷ்ட்டித்தே தீர வேண்டுமென்க-

இதற்கு மேல்‌ ஒரு கேள்வி எழுகிறது. உபாஸகனுடைய புண்ணியத்தை அவனுடைய நண்பர்கள்‌ பெறுகின்றனர்‌ என்று வேதம்‌ ஓதுகின்றது. உபாஸகனுக்குத் தான் புண்ணியமே இருக்க முடியாதே; அதனை நண்பர்கள்‌ எங்ஙனம்‌ பெற இயலும்‌ ? ப்ராரப்த கர்மத்தைத்‌ தவிர மற்றைய முந்திய புண்ணியங்கள்‌ அனைத்தும்‌ ஏற்கெனவே நசித்து விட்டன. ப்ராரப்த புண்ணியம்‌ அநுபவித்தே அற வேண்டியது. பயன்‌ தரத்‌ தொடங்கின ப்ராரப்த புண்ணியம்‌ அநுபவித்து எஞ்சிய பலனை ‘ இவனுக்கே தருவதாயுள்ளது. பிந்திய அக்னி ஹோத்ராதி புண்ணியங்களோ உபாஸனை சிறப்புற ஸித்திப்பதற்காக இவனுக்கு வேண்டியவைகளா யுள்ளன. இனி உபாஸகனுக்கு வேறு புண்ணியம்‌ இல்லாமையின்‌ நண்பர்கள்‌ இவனுடைய புண்ணியத்தைப்‌ பெறுவது இயலாத தன்றோ -இங்கு ஒரு விஷயம்‌ கவனிக்கத் தக்கது, வேதத்தில்‌ உபாஸகனுடைய பகைவர்கள்‌ அவனுடைய பாபத்தைப்‌ பெறுவதாகவு மோதப் பட்டுள்ளது. அவ் விஷயத்திற்‌ கேள்வி எழுப்பப் படவில்லை. உபாஸனைக்கும்‌ பிந்திய பாபங்கள்‌ அநுபவிக்கப்‌ படாதனவாயுள்ளன. அவை ப்ராரப்த மல்லாமையின்‌ உபாஸகனிடம்‌ ஒட்டாதன வாயுள்ளன, அவை அக்நி ஹோத்ராதிகள்‌ போல உபாஸனைக்காகத்‌ தேவைப்படுவனவும் அல்ல ! ஆதலின்‌ பிந்திய பாபங்களைப்‌ பகைவர்கள்‌ பெற இயலும்‌.

சிறப்புறும்‌ “உபாஸனையை ஸாதித்துக்‌ கொடுக்கும்‌ அக்னி ஹோத்ராதிகளைத்‌ தவிர வேறு நல்வினைகளும்‌ உபாஸனைக்கு முன்பும்‌ பின்பும்‌ அநுஷ்ட்டிக்கப்பட்டு ப்ரபல கர்மத்தினால்‌ பயன்‌ தரவொட்டாது தடைப் பட்டனவாய்ப்‌ பல இருத்தல்‌ கூடும்‌, அந்த நல்வினைகளை உபாஸகனுடைய நண்பர்கள்‌ பெறுவதாகச்‌ சுருதி ஓதுகின்றது. ஒட்டுவதில்லை என்று சுருதி ஓதுவதும்‌ இத்தகைய நல்வினைகளையே என்றறிக-அநுஷ்ட்டிக்கப் பட்ட கர்மம்‌ ப்ரபலமான ப்ரதிபந்தகத்தால்‌ பயனலளிக்கக மாட்டாமல்‌ தடைப்பட்டிருக்கும்‌ என்று முன்னர்‌ :! ப்ருதக்ஹி அப்ரதிபந்த: பலம்‌ * என்னும்‌ ஸூத்ரத்தில்‌ சொல்லி யிருப்பது மீண்டுமிங்கு நினைவுறுத்தப் படுகிறது. (உத்கீதோபாஸனையினால்‌ செய்யப்பட்ட வேள்வி தான்‌ பலனை யளிக்கும்‌ வீரிய மிக்கதாகிறது) என்று , உத்கீதோபாஸனை வேள்வியின்‌ பலன்‌ ப்ரபல கர்மத்தினலே தடைப் படாதபடி செய்வதாகக்‌ கூறப்பட் டிருப்பதிலிருந்து கர்மம்‌ செய்யப் பட்டிருப்பினும்‌ ப்ரதிபந்தகத்தாலே பலன்‌ தடைப்படும்‌ என்பது ஸூசிக்கப் படுகிறதன்றோ ? பலன்‌ தடைப்பட்ட அத்தகைய நல்வினைகள்‌ உபாஸகனுடைய நண்பர்களிடம்‌ வந்து சேருகின்றன என்று கொள்க.

11-இதர க்ஷபணாதி கரணம்‌ .-அநாரப்த கார்யாதிகரணத்தில்‌ ப்ராரப்த கர்மம்‌ பயனைத்‌ தருவதாய்ச்‌ சரீரமுள்ளவளவும்‌ தொடருதலின்‌ ப்ராரப்த கர்மத்தைத்‌ தவிர மற்றைய கர்மங்களே நசிக்கின்றன எனப் பட்டது. இவ் வதிகரணத்தில்‌ அந்த ப்ராரப்த கர்மங்கள்‌ உபாஸிக்கத்‌ தொடங்கின சரீரமுள்ள அளவும்‌ தொடர்கின்றனவா * அன்றி ப்ராரப்த கர்மத்தின்‌ பயனாக வரும்‌ பிறவிகளிலே இறுதியான சரீரமுள்ளவரை நீடிக்‌ கின்றவா? என்னும்‌ விஷயம்‌ விசாரித்து முடிவு கட்டப் படுகிறது-பூர்வபஷி கருதுவதாவது: -உபாஸகனது சரீரம்‌ நீங்குமளவே மோக்ஷத்திற்குத்‌ தடை எனப் படுதலின்‌ உபாஸனை தொடங்கின சரீரத்தின்‌ இறுதியிலேயே கர்ம ஸம்பந்தம்‌ நீங்கி உபாஸகன்‌ மோக்ஷ மடைந்து விடுகிறா னென்பது நன்கு புலனாகிறது-ஸித்தாந்தி கருதுவதாவது: உபாஸனை தொடங்கின சரீரம்‌ நீக்கின வளவிலே மோஷம்‌ கிடைத்து விடாது-சுருதியில் தேஹத்தின்‌ மோக்ஷம்‌ (விடுதலை) பேசப்படவில்லை. பிறப்பிற்குக்‌ காரணமாகிய கர்மங்களின்‌ மோக்ஷமே பேசப்‌ படுகின்றது. !ப்ராரப்தமான புண்ணிய பாபங்கள்‌ அநுபவித்து அற்ற பின்னரே ப்ரஹம ப்ராப்தி கிடைக்கின்றது. அந்தப்‌ புண்ணிய பாபங்கள்‌ ஒரே சரீரத்திலே அநு பவித்துத்‌ தீரத் தக்கவைகளாயிருப்பின்‌ அந்தச்‌ சரீரத்தின்‌ முடிவிலே ப்ரஹ்ம ப்ராப்தி-பல தேஹங்களிலே அநுபவித்துத்‌ தீர்க்க வேண்டியவை களாயின்‌ பல ஐன்மங்களெடுத்துக்‌ கடைசியான சரீரத்தின்‌ முடிவிலே ப்ரஹ்ம ப்ராப்தி. உபாஸனை செய்யும்‌ ப்ரஸ்ம ஜ்ஞானிகள்‌ இங்கனம் பல ஜன்மங்களெடுத்து ப்ராரப்த கர்மங்களை அநுபவிப்பது இதிஹாஸ புராணங்களிலே காணத் தக்கது.

ஆக இந்தப்‌ பாதத்தில்‌ உபாஸனை மீண்டும்‌ மீண்டும்‌ செய்ய வேண்டும்‌, அவ்வுபாஸனையில்‌ தனக்கு ஆத்மாவாகப்‌ ப்ரஹ்மத்தை அநுஸந்திக்க வேண்டும்‌, மனத்தை ப்ரஹ்மமாக பாவிப்பது போன்ற ப்ரதீகோபாஸனையில்‌ ப்ரதீகமான மனம்‌ முதலியற்றை ஆத்மாவாக அநுஸந்திப்பது ஆகாது. வேள்விக் கங்கமான உத்கீதம்‌ முதலியற்றைச்‌ ஸூர்யனாகப்‌ பார்த்தல் வேண்டும்‌. உபாஸனை அமர்ந்தே செய்தல் வேண்டும்‌. அது ஆயுள்‌ உள்ள வரை நாடோறும்‌ பயிலல்‌ வேண்டும்‌ என்று உபாஸனையின்‌ ஸ்வரூபம்‌ ஆறு அதிகரணங்களாற்‌ சோதிக்கப்பட்டது.

இனி, மேல்‌ உள்ள ஐந்து அதிகரணங்களால்‌ அவ் வுபாஸனையின்‌ பயனாக அதற்கு முந்தியனவும்‌ பிந்தியனவுமான பாபங்கள்‌ முறையே நசித்தலும்‌ ஒட்டறுதலும்‌, புண்ணியமும்‌ அங்ஙனமே ஆதலும்‌, ப்ராரப்த கர்மம்‌ அநுபவித்தே அறுதலும்‌, நித்ய நைமித்திக கர்மங்கள்‌ உபாஸனை சிறப்புற ஸித்திப்பதற்காகச்‌ செய்தாக வேண்டிய ஆவச்யகதையோடு பயன்‌ தடைப்பட்ட நல்வினைகள்‌ நண்பர்களைச்‌ சார்தலும்‌, ப்ராரப்த கர்மத்தின்‌ முடிவில்‌ மோக்ஷமும்‌ பேசப்பட்டன. ்‌

உபாஸனைக்கு அஸக்ருத்‌ ஆவ்ருத்தி போல்‌ நண்பர்‌ வரதாசார்ய ஸ்வாமியின்‌ ஷஷ்டி. அப்தபூர்த்தி மஹோத்ஸவத்திற்கும்‌ அஸக்ருத்‌ ஆவ்ருத்தி ஏற்பட்டு அடியார்களையும்‌ அரங்கனையும்‌ இன்புறுத்துவதாகுக.

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே
ஸ்ரீ ஆழ்வார் திருநகரி நல்லான் சக்ரவர்த்தி வித்வான்‌ ஸ்ரீ உ.வே. இராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய மூன்றாம் அத்யாயம் – நான்காம் பாத ஸாரம்- ஸ்ரீ உ.வே.நரசிம்ஹாசார்ய ஸ்வாமிகள்–

September 30, 2026

ஸ்ரீ உ.வே. வ்யாகரண வேதாந்த தர்ம சாஸ்த்ர வித்வான்‌ மேல் பாக்கம்‌ நரசிம்ஹாசார்ய ஸ்வாமிகள்

1-புருஷார்த்தாதிகரணம்‌--சாரீரக சாஸ்திரத்தின்‌ மூன்றாவது அத்யாயத்தில்‌ மூன்றாவது (குணோபஸம்‌ஹார) பாதத்தில்‌ வித்யையின்‌ ப்ரகாரத்தை நிரூபணம்‌ செய்தார்‌, நான்காவதான இந்த [அங்க] பாதத்தில்‌ வித்யையின்‌ அங்கமான கர்ம விசேஷாதிகளை நிரூபணம்‌ செய்கிறார்‌.
வித்யையானது ஸ்வதந்திரமாய் பலனுக்கு சாதனமாய் இருந்தால் அன்றோ அதன் அங்கமாகிய கர்ம விசேஷத்தைப் பற்றி விசாரிப்பது யுக்தமாகும் —கர்மத்தினால் அன்றோ வித்யைக்கு அங்கம் -ஸ்வதந்த்ரமன்றே என்கிற சங்கையைப் போக்குவதற்காக உபோத்காத ரூபமாய் அமைந்தது இந்த பாதத்தில் முதலாவதான புருஷார்த்த அதிகரணம் –

வித்யையினால்‌ புருஷார்த்தம்‌ ஸித்திக்கிறதா அல்லது வித்யையை அங்கமாகக்‌ கொண்ட கர்மத்தினலா வென்று ஸம்சயம்‌, இங்கு பூர்வ பக்ஷம்‌-த்விதீயா ச்ருதி, தவ்ய ப்ரத்யயமிவைகளால்‌ கர்மங்களில்‌ கர்த்தாவான ஆத்மாவுக்கு வித்யை ஒரு ஸம்ஸ்கார மென்று ஏற்படுகிறது: ஆகையினால்‌ வித்யை கார்த்தானான ஆத்மாவுக்கு ஸம்ஸ்காரத்தை உண்டு பண்ணி அதின் மூலமாய்‌ க்ரத்வர்த்தம்‌ (யாகத்துக்கு உபகாரகமே) ஆகும்‌. புருஷார்த்த ஸாதனமன்று--அஞ்சனம்‌ முதலிய ஸம்ஸ்காரங்களில்‌ சத்ரு ஹிம்ஸை பலனாகச்‌ சொல்லி இருந்தாலும் ஸம்ஸ்காரம்‌ பரார்த்தமான படியால் அதில்‌ சொல்லப் பட்ட பலன் கேவலம் ஸ்தோத்ரமே என்று எப்படி நிர்ணயிக்கப் பட்டிருக்கிறதோ அப்படியே இங்கு ஆத்ம ஸம்ஸ்காரமான வித்யையும் க்ரத் வர்த்தமான படியாம் -ப்ரஹ்ம பிராப்தியும் அர்த்தவாதமே யாகும் -அதில் தாத்பர்யம் கிடையாது –அபேத ஸ்ருதியினால் உபநிஷத்தில் சொல்லப்பட்ட ப்ரஹ்மமும் ஜீவனும் ஒன்றே தவிர வேறல்ல -இந்த சாமாநாதி கரண்யம் சரீராத்ம பாவத்தினால் ஏற்பட்டது என்பதும் சரியல்ல -உபநிஷத்தில் ப்ரஹ்மத்துக்கு வித்யை அங்கம் என்பதற்காக ஸ்ருதி லிங்கம் முதலிய பிரமாணங்கள் இருக்கிறபடியால் அதின் பலத்தினால் ஜீவனைக் காட்டிலும் ஜீவனான ப்ரஹ்மம் கிடையார் என்று ஸ்ருதியினால் நிர்ணயிக்கப் படுகிறது –

த்ருதீயாச்ருதி வித்யை கர்மத்துக்கு அங்கமென்‌று போதிக்கிறது. இங்கே வித்யா பதம்‌ ப்ரகரணத்தினால்‌ உத்கீத வித்யையைக்‌ குறிப்பிடுகிறது என்று சொல்ல முடியாது ப்ரகரணத்தைக்‌ காட்டிலும்‌ ச்ருதி பலீயஸ்ஸான படியால்‌ ஸர்வ வித்யா விஷயமேயாகும்‌. லிங்கமாவது–கேகய ராஜனான ‘அச்வபதி, தன்னிடம்‌ ஆத்ம ஜ்ஞானத்தை உத்தேசித்து வந்த மஹர்ஷிகளிடம்‌ * யாகம்‌ செய்யப் போகிறேன்‌ ; இங்கு இருங்கள்‌ * என்று சொன்ன படியால்‌ கர்மத்துக்கு ப்ராதான்யம்‌ தோற்றுகிறது- ஐனகாதிகள்‌ கர்மாநுஷ்டாநத்தினாலேயே ஸித்தியை அடைந்ததாக ஸ்ரீகீதையில்‌ சொல்லப் பட்டிருப்பதாலும்‌, ஜ்ஞானத்தைக்‌ கடைப்பிடித்திருக்கிற கேசித்வஜரும்‌ அகேக யஜ்ஞங்களைச்‌ செய்ததாக விஷ்ணு புராணத்தில்‌ கூறி யிருப்பதாலும்‌ கர்மத்துக்கு ப்ராதான்யம்‌ ஏற்படுவதால்‌ வித்யை கர்மத்திற்கு அங்கமாகும்‌, பர லோகத்திற்கு போகும்‌ மனிதனை வித்யையும்‌ கர்மமும்‌ தொடர்கின்றன -என்று இரண்டுக்கும்‌ ஸாஹித்யம்‌ சொல்லி யிருப்பதும்‌ முற் கூறியபடி வித்யை கர்மத்துக்கு அங்கமாக இருந்தால் தான்‌ பொருந்தும்‌. அதியயநம்‌ செய்தவனைக்‌ ( அர்த்த ஜ்ஞான பர்யந்தமே அத்யயநம்‌ என்று பூர்வ மீமாம்ஸையில்‌ நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது] குறித்து கிருஹஸ்தாஸ்ரம ‘கர்மங்களை விதித்திருப்பதால்‌ அந்த ஜ்ஞாநம்‌ கர்மாநுஷ்டாநத்திற்கு அங்கம்‌ என்று ஏற்படுகிறது. ஈசாவாஸ்யோப நிஷத்தில்‌ ஆயுட்காலம்‌ முழுவதும்‌ ஆத்ம ஜ்ஞாநிக்கு கர்மங்களையே செய்ய வேணுமென்று நியமம்‌ சொல்லி இருப்பதாலும்‌ கர்மத்துக்குத் தான்‌ பலன்‌. வித்யை கர்மத்துக்கு அங்கம் தான்‌. இப்படிப்பட்ட ச்ருதி லிங்காதி பலத்தினால்‌ உபநிஷத்தில்‌ சொல்லப்பட்ட ஆத்ம வித்யை கர்மாங்கமென்‌று ஏற்படுவதால்‌ மேற்படி ஆத்மா ஜீவன் தான்‌. அதின்‌ வித்யை கர்த்ரு ஸம்ஸ்காரத்தின்‌ மூலமாய்‌ க்ரத்கர்த்தம்தான்‌ ‘ என்று-

ஸித்தாந்தம்‌–எல்லா உபநிஷத்துக்களிலும்‌ கர்ம கர்த்தாவான ஜீவனைக் காட்டிலும்‌ வேறாய்‌, ஸகல ஜகத்துக்கும்‌ காரணமாய்‌, ஸகல ஜீவர்களுக்கும்‌ நியந்தாவாய்‌, அபஹத பாப்மத்வாதி கல்யாண குணங்கள்‌ நிறைந்து எல்லை யற்ற ஆநக்த ரூபனை பர ப்ரம்ஹத்தையே சொல்லி யிருப்பதால்‌ அந்த ப்ரம்ஹத்தின்‌ ஜ்ஞானத்திற்கு கர்த்ரு ஸம்ஸ்காரத்தின்‌ மூலமாய்‌ கரத்வர்த்தத்வம்‌ சொல்ல முடியாதாகையால்‌ வித்வையினால் தான் புருஷார்த்தமே தவிர அதை அங்கமாகக் கொண்ட கர்மத்தினால் அல்ல–வித்யையுடன்‌ செய்யப் படுகிற கர்மத்தை அநு வதித்து அதற்கு வீர்யவத்தரத்வ ரூபமான பலனைச்‌ சொல்லுகிற படியால்‌ அநு வாதம்‌ புரோவாத ஸாபேக்ஷமான படியால்‌ ப்ரகரணத்தினால்‌ மேற்படி வித்யாபதம்‌ உத்கீத வித்யையே குறிப்பிடுகிறது. ஆத்ம வித்யையைக்‌ குறிப்பிடாது. ஆகையினால்‌ ஆத்ம வித்யைக்குக்‌ கர்மாங்கத்வத்தை போதிக்கிற ச்ருதி இல்லை. ஆத்ம வித்யை யானது ஜீவனை விட, வேறுபட்ட பர ப்ரம்ஹ விஷயமாக நிர்ணயிக்கப்‌ பட்டபடியால்‌ வித்யை கர்மாங்க மல்லாமல்‌ ஸ்வதந்ரமாக ஏற்பட்டபடியால்‌ பரம புருஷ ப்ராப்திக்கு ஸாதனமே யாகும்‌, ப்ரம்ஹ வித்துக்களிடம்‌ கர்ம த்யாகமும்‌ காணப்படுகிறது. வித்யை கர்மத்துக்கு அங்கமானால்‌ கர்ம த்யாகம்‌ பொருந்‌தாது. ப்ரம்ஹ வித்துக்களிடம்‌ கர்மாநுஷ்டாநம்‌ கர்ம த்யாகம்‌ இரண்டும்‌ எப்படிக்‌ கூடுமென்னில்‌ ; பலாபிஸந்தி இல்லாத கர்மங்கள்‌ வித்யைக்கு அங்கமாகையால்‌ அவைகளின்‌ அநுஷ்டாநமும்‌, காம்ய கர்மங்கள்‌ விருத்தங்களாகையால்‌ அவைகளின்‌ தியாகமும்‌ கூடும்‌-பர லோகத்திற்குப்‌ போகிறவனை வித்யையும்‌ கர்மமும் தொடர்கின்றன என்கிற விடத்தில்‌ காம்ய பலார்த்தமான வித்யை அதின்‌ பலனை கொடுப்பதற்காகவும்‌, கர்மம்‌ அதின்‌ பலனைக் கொடுப்பதற்காகவும்‌ கூடச் செல்கிறது என்று அர்த்தம்‌. நிலம்‌ ரத்நம்‌ இவைகளை விற்பவனை இரு நூறு ரூபாய்கள்‌ சேருகின்றன வென்றால்‌ நிலத்திற்கு நூறும்‌, ரத்நத்திற்காக நூறும்‌ என்று விபாகம்‌ எப்படி ஏற்படுகிறதோ அப்படியே தான்‌ இங்கும்‌ கொள்ளத் தக்கது. இது ப்ரம்ஹ வித்யா விஷயமானாலும்‌ வித்யை ப்ராரப்த கர்மத்தின்‌ முடிவில்‌ மோக்ஷ ரூப பலனைக்‌ கொடுப்பதற்‌ காகவும்‌, கர்மம்‌ ஜந்மாந்தரத்தில்‌ வித்யையின்‌ துடர்ச்சிக்காகவும்‌ தொடர்கிறது என்று அர்த்தமாகையால்‌ ஒன்றும்‌ விரோதமில்லை-ஸ்ருதியில் அர்த்த ஜ்ஞானத்தை தனியாக சொல்லி யிருப்பதால்‌ அக்ஷர ராசி க்ரஹண மாத்ரமேயாகும்‌. அத்யயநத்தை அர்த்த ஜ்ஞாந பர்யந்தமாகக்‌ கொண்டாலும்‌ மீமாம்ஸையினால்‌ ஸாத்யமான ப்ரம்ஹ ஸ்வரூப ஜ்ஞான ரூபமான அர்த்த ஜ்ஞானத்தைக்‌ காட்டிலும்‌ உபாஸந ரூபமான வித்யை வேறாகையால்‌ அதற்கு கர்மாங்கத்வம்‌ ஸித்திக்காது, -கர்மா நுஷ்டாந நியமமும்‌ கர்மம்‌ வித்யைக்கு அங்கமென்கிற பக்ஷத்திலும்‌ பொருந்துமாகையால்‌ அதுவும்‌ பூர்வ பக்ஷிக்கு ஸாதகமாகாது. வாஸ்தவத்தில்‌ பற்றில்லாத ஆத்ம ஜ்ஞாநி விஷயத்தில்‌ ஆயுட்காலம் வரை ஏதாவது கர்மத்தைச்‌ செய்தாலும்‌ அவனிடம்‌ ஒட்டுவதில்லை. அதாவது பலன்‌ கொடுப்பதில்லை என்று வித்யையின்‌ மஹாத்ம்யத்தைக்‌ கூறி ஸ்துதி செய்கிறது என்பது தான்‌ அதின்‌ தாத்பர்யம்‌. சில சாகைகளில்‌ தன்னிச்சையாக க்ரஹஸ்தாச்ரம த்யாகம்‌ சொல்லி யிருப்பதால்‌ ப்ரதானமான கர்மத்தை யிட்டு அங்காநுஷ்டானம்‌ செய்வது தகாதாகையால்‌ பூர்வ பஷிக்கு இது விருத்தம்‌- வித்யையினால்‌ கர்மங்களுக்கு நாசம்‌ சொல்லப்பட்‌ டிருக்கிறது. அங்கத்தினால்‌ அங்கிக்கு நாசம்‌ கூடாதாகையால்‌ இது பூர்வ பக்ஷிக்குப்‌ பொருந்தாது. அங்கியான வித்யையினால்‌ அங்கமான கர்மங்களுக்கும்‌ நாசம்‌ ஸித்தாந்தத்தில்‌ எப்படிப்‌ பொருந்து மென்னில்‌, எந்த கர்மங்களுக்கு வித்யையினால்‌ நாசம்‌ சொல்லப்‌ பட்டுள்ளதோ அந்த கர்மங்களை வித்யாங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை யாகையால்‌’ விரோத மில்லை, பூர்வ பஷி மதத்தில்‌ ஜீவனைக் காட்டிலும்‌ ப்ரம்ஹம்‌ வேறாகக்‌ கிடையாதாகையால்‌ அதினுடைய வித்யை பரலோக ஸாதநமான எல்லா கர்மங்களுக்கும்‌ அங்கமாக ஒப்புக்‌ கொள்கிறபடியால்‌ வித்யையினால்‌ காமங்களுக்கு நாசமென்பது பொருந்தவே பொருந்தாது. ஸந்யாஸாச்ரமிகளிடமும்‌ வித்யை உள்ளது. அவர்களுக்கு யாகம்‌ முதலிய கர்மமில்லாத படியாலும்‌ கர்மத்துக்கு-வித்யை அங்கமன்று, ஆனால்‌ ஸ்ம்ருதிகளில்‌ ஸந்ந்யாஸாச்ரமம்‌ கூறப்பட்டிருந்தாலும்‌ – ச்ருதியில்‌ கர்மங்களை ஆயுட்கால பர்யந்தம்‌ விதித்திருப்பதால்‌ அதற்கு விருத்தமாகையால்‌ ஸந்யாஸாச்ரமமே கிடையாது என்னில்‌, வேதத்திலேயே ஸந்யாஸாச்ரமத்தைக்‌ குறிப்பிட்டிருப்பதனால்‌ அந்த ஸ்ம்ருதி வேத விருத்தமன்று ஆகிலும்‌ ச்ருதியில்‌ க்ருஹஸ்தாச்ரம தர்மத்தை விடுவது நிந்திக்கப் பட்டிருக்கிற படியால்‌ ஸந்யாஸாச்ரமத்தைக்‌ குறிப்பிடுவது கேவலம்‌ அநுவாதமே தவிர விதி இல்லை என்னில்‌ ச்ருதியில்‌ க்ருஹஸ்தாச்ரமத்திற்கும்‌ அநுவாதமாகையானல் அதற்கு ப்ராப்தி வேறு ப்ரமாணத்தினால்‌ சொல்லுவது ச்ருதியில்‌ தபஸ்ஸை ப்ரதாநமாகக் கொண்ட ஸந்யாஸாச்ரமத்திற்கும்‌ அநுவாதம்‌ பிரமாணாந்தர அபேக்ஷமாகக்‌ கொள்ள வேணும்‌, ஆஸ்ரமங்களை (ஸந் யாஸத்தையும் சேர்த்து )மூன்று விதமாகச்‌ சொல்லி இவர்களுள்‌ கேவலாச்ரம நிஷ்டர்கள்‌ புண்ணிய லோகமடைகிறார்‌களென்றும்‌ ப்ரம்ஹ நிஷ்டையில் இருப்பவன்‌ மோக்ஷத்தை அடைகிறானென்றும்‌ இவ் வாக்யத்தின்‌ அர்த்தம்‌- அநுவாதம்‌ போன்றவிடத்திலும்‌ அப்ராப்தமான படியால்‌ எப்படி விதி ஒப்புக் கொள்ளப் பட்டதோ அப்படியே இங்கு ஸந்யாசத்திற்கு விதியை ஒப்புக் கொள்ள வேண்டும்‌- ஜாபால ஸ்ருதியில்‌ ஸகந்யாஸத்திற்கு ஸ்பஷ்டமாக விதியும்‌ உள்ளது. ஆகையினால்‌ ச்ருதி விரக்தி யில்லாதவன்‌ விஷயம்‌. ஆக ஸந்கயாஸாஸ்ரமிகளிடம்‌ வித்யை இருப்பதனாலும்‌ வித்யை கர்மாங்கமல்ல, ஆகையினால்‌ வித்யை ப்ரதாநமானபடியால்‌ அதனால் தான் புருஷார்த்தம்‌ என்று ஸித்தம் –

2-ஸ்துதிமாத்ராதிகரணம்‌-முன்‌ அதிகரணத்தில்‌ ஸ்துதி ப்ரஸக்தமான படியால்‌ ப்ரஸங்க ஸங்கதியினால்‌ மேல்‌ இரண்டு அதிகரணங்கள்‌ ஆரம்பிக்கப் படுகின்றன. சாந்தோக்யோபநிஷக்தில்‌ உத்கீதத்‌தைப் பற்றிக்‌ கூறப்படுகிறது. ப்ராணிகளுக்கு ஆதாரமான பூமி ஸாரமானது-பூமிக்கு ஜலம்‌ ஸாரமானது. ஜலத்திற்கு ஓஷதிகள்‌ ஸாரம்‌. ஓஷதிகளுக்கு சரீரம்‌ ஸாரம்‌-சரீரத்‌ திற்கு வாக்கு ஸாரம்‌, வாக்குக்கு ரிக் ஸாரம்‌, ரிக்குக்கு ஸாமம்‌ ஸாரம்‌. ஸாமத்திற்கு உத்கீதம்‌ ஸாரமென்று சொல்லி ( ரஸங்களுக்குள்‌ உத் கீதத்தை “ரஸ தமம்‌ ‘ என்று சொல்லி யிருக்கிறது. இங்கு ரஸதமத்வாதிகள்‌ உத்கீதத்திற்கு ஸ்துதி மாத்ரமா அல்லது உத்கீதத்தை ரஸ தமமாக த்யாநிக்க வேணு மென்று த்ருஷ்டி விதியா என்று ஸம்சயம்‌ யாகததிற்கு அங்கமான ஜுாஹு முதலியவைகளை எடுத்து -பூலோக ஸ்வர்க்க லோகங்களாகச்‌ சொல்லி யிருப்பதும்‌ ‘போல்‌ இங்கும்‌ கர்மாங்கமான உத்கீதத்தை எடுத்து ரஸ தமமாகச்‌ சொல்லி யிருப்பதும்‌ ஸ்துதி மாத்திரம்தான்‌ என்று பூர்வ பக்ஷம்‌-ஜுஹூ விதி வாக்யத்தின்‌ ஸமீபத்தி லுள்ளது. ஆகையினால்‌ அது ஸ்துதியாக ஆகிறது என்பது யுக்தம்‌. உத்கீத விதி கர்ம காண்டத்திலே தான்‌ உள்ளது, இங்கு ஸமீபத்திலில்லை ஆகையினால்‌ ரஸ தமத்வத்திற்கு ஸ்துதித்வம்‌ சொல்ல முடியாது. உபாஸந விதி இருக்கிறபடியால்‌, உபாஸநம்‌ எப்படிச்‌ செய்ய வேணு மெனறு ஆகாங்க்ஷை இருக்கிறபடியால்‌ ரஸ தமமாக உபாஸிக்க வேணுமென்று இவ் வாக்யம்‌ த்ருஷ்டி விதி தான்‌ என்று ஸித்தாந்தம் –

3-பாரிப்லவாதிகரணம்‌-முன்‌ அதிகரணத்தில்‌ ரஸ தமத்வாதிகள்‌ உபாஸநார்த்தங்கள்‌. அர்த்த வாதமல்ல என்று நிர்ணயிக்கப்பட்டது. வித்யா ப்ரகரணத்தில்‌ திவோதாஸருடைய பிள்ளையான ப்ரதர்தனன்‌ என்பவன்‌ இந்திரனுடைய வீட்டிற்குச்‌ சென்றான்‌, யாஜ்ஞவல்க்யருக்கு இரண்டு பத்நிகளிருந்தார்கள்‌’ என்று ஆரம்பித்து சில உபாக்யாநங்கள்‌ சொல்லப் பட்டிருக்கின்றன, இவைகள்‌ வித்தையை ப்ரசமஸிப் பதற்காக அர்த்தவாதமா அல்லது பாரிப்லவார்த்தமா என்பது ஸம்சயம்‌. பாரிப்லவம்‌ என்றால்‌ உபாக்யாநங்களைச்‌ சொல்வது என்று அர்த்தம்‌, அச்வமேத யாகத்தில் பாரிப்லம்‌ ‘ என்கிற சஸ்திரம்‌ விதிக்கப் பட்டிருக்கிறது.- பாரிப்லவ சஸ்திரத்தின் போது எல்லா உபாக்யாகங்களையும்‌ சொல்ல வேணுமென்று விதிக்கப் பட்டிருக்கிறது. ஆகையால்‌ வித்யா ப்ரகரணத்திலுள்ள உபாக்யானமும்‌ சொல்லப்‌ பட வேண்டுமா வென்‌ று சங்கை, இங்குள்ள ‘ஸர்வ’சப்தத்திற்கு ஸங்கோச மில்லாத படியால்‌ இவைகளுக்கும்‌ பாரிப்லவத்தில்‌ விநியோக மென்று பூர்வ பக்ஷம்‌-அச்வமேத ப்ரகரணத்தில்‌ உபாக்கியானங்களை விசேஷித்துக்‌ குறிப்பிட்டிருக்கிறபடியால்‌ ஸர்வ ‘ சப்தத்திற்கு அந்த ப்ரகரணத்தில்‌ சொல்லப்பட்டுள்ள எல்லா உபாக்யாநங்களும்‌ ‘ என்று ஸங்கோசம்‌ சொல்ல வேண்டும்‌. உபாக்யானங்கள்‌ அரந்தங்களிருக்கிறபடியால்‌ எல்லாவற்றையும்‌ சொல்லுவது சக்யமாக ஆகாது. ஆகையினால்‌ கர்ம விதி யாகத்தில்‌ வெள்ளியை தானம்‌ செய்யக் கூடாது ‘ என்கிற நிஷேதத்திற்கு -ருதான்‌ அழுத கண்ணீரிலிருந்து உண்டானபடியால்‌ வெள்ளியை தானம்‌ செய்யக் கூடாது என்கிற உபாக்யாநம்‌ அந்த நிஷேதத்துடன்‌ ஓரே வாக்யமாக ஸம்பந்தித்து எப்படி அர்த்த வாத மாகிறதோ அம் மாதிரியே வித்யா ப்ரகரணத்திலுள்ள உபாக்கியாநங்களும்‌ ஒரே வாக்யமாக ஆகி வித்யையை ப்ரசம்ஸிக்கின்றன என்று ஸித்தாந்தம் –

4-அக்நீந்தனுத்யதிகரணம்‌-நடுவில்‌ இரு அதிகரணங்கள்‌ ப்ராஸங்கிகம்‌. முதல்‌ அதிகரணத்துடன்‌ இதற்கு ஸங்கதி-கீழ் ஸூத்ரத்தில்‌ ஸந்யாஸிகளுக்கும்‌ ப்ரம்ஹ வித்யையில்‌ அதிகாரம்‌ சொன்னது ஸரியல்ல -ச்ருதியில்‌ யஜ்ஞாதிகளை வித்யைக்கு அங்கமாகச்‌ சொல்லி யிருப்பதால்‌ ஸந்ந்யாஸிகளுக்கு யஜ்ஞ அதிகார மில்லாதபடியால்‌ அங்கமில்லாமல்‌ அங்கியை மாத்திரம்‌ அநுஷ்டித்தால்‌ பலன்‌ கிடைக்கா தாகையால்‌ ஸந்யாஸிகளுக்கு ப்ரஹ்ம வித்யையில்‌ அதிகாரம்‌ கிடையாதென்‌று பூர்வ பக்ஷம்‌-ச்ருதியினால்‌ -ஸந்யாஸிகளுக்கும்‌ ப்ரஹ்ம வித்யை சொல்லப் பட்டிருக்கிறது-ஸ்ம்ருதிகளில்‌ ஆச்ரம தர்மங்களையும்‌ ஸாமாந்ய தர்மங்களையும்‌ அங்கமாகச்‌ சொல்லி யிருக்கிற படியால்‌ அக்நியின்‌ ஆதாந பூர்வகமான யஜ்ஞாதிகளை அபேக்ஷிக்காமலேயே ஸந்யாஸிகளுக்கு வித்யையில்‌ அதிகாரமுண்டு என்பது ஸித்தாந்தம்‌-

5-ஸர்வாபேக்ஷாதிகரணம்‌–யதிகளிடம்‌ வித்யை’ அக்நி ஹோத்ராதிகளை அபேக்ஷிக்காமலே மோக்ஷத்திற்கு ஸாதந மாகில்‌ கிருஹஸ்தர்களிடமும்‌ யஜ்ஞாதிகளை அபேக்ஷிக்காமலேயே மோக்ஷத்தை ஸாதிக்கட்டும்‌ க்ருஹஸ்தர்களுடைய வித்யைக்கு யஜ்ஞாதிகளை ஸாதநமாக சொல்லப் பட்டிருக்கிறதே என்றால்‌ என்று சொல்லி யிருப்பதால்‌ வேதந இச்சையான விவிதிஷைக்குதான்‌ யஜ்ஞாதிகள்‌ ஸாதனமே தவிர வேதத்திற்‌கன்று. ப்ரக்ருதி ப்ரத்யயார்த்தங்களுள்‌ ப்ரத்யயார்த்தமே ப்ரதாநமாந படியால்‌ ஸந் ப்ரத்யயமே – ப்ரதாநமான ஸந் ப்ரத்யயத்தின்‌ அர்த்தமான வேதநேச்சைக்கே யஜ்ஞாதிகள்‌ ஸாதனம்‌ என்று பூர்வ பக்ஷம்‌-ப்ரத்யயார்த்தம்‌ பிரதானம்‌ என்கிற இது ஸாமாந்ய ந்யாயம்‌. இச்சார்த்தகமான சப்தங்களிருக்கும் போது இச்சிக்கப்படும்‌ அர்த்தமே ப்ரதானம்‌ என்பது விசேஷ ந்யாயம்‌ என்பது போன்ற ப்ரயோகங்களில்‌ இது ப்ரஸித்தம்‌. ஸந் ப்ரத்யயத்திற்கு ப்ரக்ருதியான கமனத்தில்‌ (செல்வதற்கு) அச்வம் கரணமாக அந்வயிக்‌கிறதே தவிர செல்வதின்‌ இச்சைக்கு கரணமன்று, அப்படியே இங்கேயும்‌ இச்சா விஷய மான வேதநத்திற்கு தான்‌ யஜ்ஞாதிகள்‌ ஸாதநமாகும்‌. யஜ்ஞாதிகளுக்கு விவிதிஷா ஸாதனத்வம்‌ சொன்னால்‌ அந்யோந்யாச்ரய தோஷமும்‌ வரும்‌. பரம ஸாத்யத்தில்‌ இச்சை யில்லாமல்‌ நடுவிலுள்ள ஸாத்யத்தின்‌ உபாயத்தில்‌ ப்ரவ்ருத்தி உண்டாகாது. ஸ்வர்கத்தில்‌ இச்சை இல்லா விடில்‌ அதற்கு ஸாதநமான யாகத்துக்கு ஸாதந மான த்ரவ்ய ஸம்பாதனத்தில்‌ ப்ரவ்ருத்தி உண்டாவதில்லை. அம் மாதிரியே விவிதிஷா (வேதநேச்சை) ஸித்திக்காக யஜ்ஞா நுஷ்டாஈம்‌ விவிதிஷையினால்‌ ஸாத்யமான வேதநத்தில்‌ இச்சை யில்லாமல்‌ உண்டாகாது. வேதநேச்சை உண்டானால்‌ வேதந உபாயமான இச்சா ஸித்திக்காக கர்மா நுஷ்டாநம்‌ ஆகையால்‌ வேதநேச்சை உண்டான பின்பு அதற்காக கர்மாநுஷ்டாநம்‌ அவச்யமில்லை யாகையால்‌ கர்மாநுஷ்டாந விதி வ்யர்த்தமாகும்‌. தன்னுடைய ஸித்தி ஸாபேஷமாக தன்னுடைய ஸித்தி என்று ஆத்மாச்ரய தோஷம்‌ வரும்‌, மேலும்‌, வேதநேச்சையினால்‌ இச்சா ஸித்திக்கான கர்மாநுஷ்டாநம்‌, இச்சா ஸித்திக்கான கர்மாநுஷ்டாநத்தினால்‌ வேதநேச்சை உண்டாகிறது என்று அந்யோந்யாச்ரய தோஷமும் கூட: ஆகையினால்‌ விவிதிஷா ஸாதனத்வம்‌ சொல்ல முடியாது. வேதந ஸாதநத்வமே. ஆக கிருஹஸ்தர்களின்‌ வித்யைக்கு யஜ்ஞாத்யபேஷை உண்டு என்று ஸித்தாந்தம்‌.

6-சமதமாத்யதிகரணம்‌-யஜ்ஞாதிகளுடன்‌ கூடின கிருஹஸ்தர்களின்‌ வித்யைக்கு சமதமாதிகளின்‌ அபேஷை உண்டா இல்லையா வென்று ஸம்சயம்‌. யஜ்ஞாதிகள்‌ பாஹ்யாப் யந்தரகரணங்‌களின்‌ (இந்த்ரியங்களின்‌) வ்யாபாரங்களாகையால்‌ சம தமாதிகள்‌ அந்த இந்த்ரியங்களின்‌ நிவ்ருத்தி ரூபமாகையால்‌ பரஸ்பரம்‌ விருத்தங்கள்‌. ஆகையால்‌ கிருஹஸ்தர்கள்‌ சம தமாதிகளை அநுஷ்டிக்க வேண்டியதில்லை என்று பூர்வ பஷம்‌. கிருஹஸ்தன்‌ யஜ்ஞாதிகளில்‌ ப்ரவ்ருத்தி உடையவனாக இருந்தாலும்‌ சமதமாதிகளையும்‌ வித்யைககு அங்கமாக விதித்திருப்பதாலும்‌ நிரந்தர ஸ்ம்ருதி ஸந்ததி ரூபமான வித்யையின்‌ உத்பத்திக்கு சித்த ஸமாதாநம்‌ காரணமாகையாலும்‌ அவைகளையும்‌ அவச்யம்‌ அநுஷ்டிக்க வேண்டும்‌. விதிக்கப்பட்ட கர்மங்களில்‌ கரண வ்யாபாரமும்‌, விதிக்கப்படாத நிஷ்பலமான கர்மங்களிலும்‌, நிஷித்தமான கர்மங்களிலும்‌ கரண வ்யாபார நிவ்ருத்தியும்‌ என்று விஷய பேதமாகையினால்‌ விரோதமில்லை என்று ஸித்தாந்தம்‌-

7-ஸர்வாந்தாநுமத்யதிகரணம்‌-ப்ரம்ஹ வித்யா நிஷ்டன்‌ (கிருஹஸ்தனும்‌) சமாதிகளை அனுஷ்டிக்க வேண்டுமென்று முன்‌ அதிகரணத்தில்‌ நிர்ணயிக்கப்பட்டது. அதின்‌ பேர்ஜன நியம ரூபமான சமமும்‌ உண்டா என்று இவ் வதிகரணத்தில்‌ விசாரிக்கப்படுகிறது -ப்ராண உபாஸகன்‌ விஷயத்தில்‌ இவனுக்கு சாப்பிடக் கூடாதது எதுவும்‌ இல்லை என்று ஸர்வாங்கத்‌ திற்கும்‌ அநுமதி சொல்லி யிருக்கிறது. இது எப்போதுமா அல்லது ப்ராணனுக்கு ஆபத்து வரும்போது தானா வென்று ஸம்சயம்‌, இந்த காலத்தில் தானென்று விசேஷம்‌ சொல்லப்‌ படாதபடியால்‌ ஸர்வ காலத்திலும்‌ தான்‌ ஸர்வாந்நாநுமதி என்‌று பூர்வபக்ஷம்‌

இந்த ஸர்வாந்நாநுமதி ப்ராணாபத் காலத்தில்தான்‌. எப்போதுமல்ல. ப்ரம்ஹ வித்யா நிஷ்டன்‌ விஷயத்தில்‌ ப்ராணாபத்திலேயே ஸர்வாந்ந ஸ்வீகாரா நுஷ்டாநம்‌ காணப்படு கிறது. அதாவது–குரு தேசத்தில்‌ ஒரு காலத்தில்‌ கல் மழை பேய்ந்து பயிர்கள்‌ நாசமடைந்து பஞ்சம்‌ ஏற்பட்டது. அப்போது ஆஹாரத்திற்கு மிகவும்‌ ச்ரமப்பட்ட உஷஸ்தி’ என்னும்‌ ப்ரம்ஹ வித்‌, வேறொரு தேசத்தில்‌ அரசனின்‌ யாகத்திற்குச்‌ சென்று யாகம்‌ செய்விக்க விரும்பி தன்‌ பத்நியுடன்‌ செல்லும் போது வழியில்‌ யானைக்காரனுடைய க்ராமத்தில்‌ தங்க நேர்ந்தது, அப்போது ஆஹார மில்லாமையால்‌ ப்ராணாபத்து ஏற்படும்‌ நிலையை அடைந்‌தார்‌ முனிவர்‌, அங்கு யானைக்காக கொள்ளைச்‌ சுண்டி, அதை மடியில்‌ வைத்து சாப்பிட்டுக்‌ கொண்டிருந்த யானைக்காரனிடம்‌ தனக்கும்‌ கொள்ளு கொடுக்கும்படி வேண்டினார்‌, இது நான்‌ சாப்பிட்ட மீதியாயிற்றே! உங்களுக்குக்‌ கொடுப்பதற்கு இதைத் தவிர வேறு இல்லையே என்றான்‌ அவன்‌. முனிவர்‌ இதிலேயே தான்‌ எனக்குக்‌ கொடு என்று கேட்க அவன்‌ கொடுத்தான்‌. அதில்‌ கொஞ்சம்‌ சாப்பிட்டு விட்டு பிராணனைத்‌ தரித்து மீதியை பத்நியிடம்‌ கொடுத்தார்‌. அதை அவள்‌ வைத்துக் கொண்டாள்‌. பிறகு யானைக்காரன்‌ ஜலத்தை சாப்பிடும்படி கேட்டான்‌. பிராணதாரணம்‌ ஏற்பட்டு விட்ட படியால்‌ இனி நான்‌ ஜலத்தை சாப்பிடுவது உன்‌ சேஷமானபடியால்‌ நிஷித்தமென்று சொல்லி மறுத்து விட்டார்‌ மஹா்ஷி. மறுநாள்‌ காலையில்‌ இம் மாதிரியே ப்ராண ஸம்சயம்‌ உண்டாக யானைக்காரனுடைய சேஷ மாயும்‌ தன்னுடைய சேஷமாயும்‌ ராத்ரி சேஷமாயும்‌ உள்ள அந்த கொள்ளை சாப்பிட்டு பிராணனை தரித்து ராஜாவின்‌ யாகத்துக்குச்‌ சென்றார்‌ ‘ என்று உபநிஷத்தில்‌ கூறப்பட்‌ டுள்ளது. ஆகையினால்‌ ப்ராணாபத்தில் தான்‌ ஸர்வாந்ந ஸ்வீகாராநுஷ்டானம்‌ ப்ரம்ஹ வித்யா நிஷ்டருக்கு இருக்கிறது- வித்யோத்‌ பத்திக்காக ஆஹார சுத்தியை விதித்திருப்பதாலும்‌ ப்ரம்ஹ வித்துக்கு ஸர்வாந்ந ஸ்வீகாரம்‌ – ஆபத் விஷயமென்று ஏற்படுகிறது. இப்படியாகில்‌ அல்ப சக்தியான ப்ராண வித்யா நிஷ்டனுக்கு ஸர்வாந்நாநுமதி எப்போதும்‌ என்று எப்படி ஏற்படும்‌ ? அதுவும்‌ ஆபத் காலத்தில்‌ தான்‌-ஆனால்‌’ ப்ரம்ஹ வித்யாநிஷ்டனுக்கு கெட்ட நடத்தை கூடாதென்று சொல்லி யிருக்கிற படியால்‌ அவன்‌ விஷயததில்‌ ஸர்வாந்ந ஸ்வீகாரம்‌ ஆபத்‌ விஷயமாகலாம்‌.. வாமதேவ்யம்‌ என்கிற ஸாமத்தை உபாஸிப்பவனுக்கு தன்னை விரும்பும்‌ எந்த ஸ்த்ரீயையும்‌ பரிஹரிக்கக்‌ கூடாதென்று சொல்லி யிருப்பது போல்‌ ப்ராண வித்யா நிஷ்டனுக்கு ஸர்வ காலத்திலும்‌ முற் கூறிய வசநத்தினால்‌ ஸர்வாந் நாநுமதி இருக்கலாமே யெனில்‌ ஸர்வ ஸ்த்ரீகளின்‌ அபரிஹாரத்தில்‌ விதி இருப்பது போல்‌ ஸர்வாந்நாநுமதி தான்‌ இருக்கிறதே தவிர ஸர்வாந்ந பக்ஷண விதி இல்லை. விதியை கல்பிப்பதும்‌ ஸாமாந்ய வசந விரோத மன்றியில்‌ தான்‌ கல்பிக்க வேணும்‌. இங்கு ஸாமாந்ய வசநம்‌ ஆபத்தில் தான்‌ ஸர்வாந்நாநுமதி பண்ணுகிறது என்று இஷ்டப்படி நிஷித்த பக்ஷணம்‌ கூடாதென்று நிஷேதமும்‌, இருக்கிறது. ஆகையினால்‌ ப்ராண வித்யா நிஷ்டனுக்கும்‌ ப்ராணாபத்‌ காலத்தில் தான்‌ ஸர்வாந்நாநுமதி என்‌று சித்தாந்தம் –

8-விஹிதத்வாதிகரணம்‌ – ப்ரம்ஹ வித்யைக்கு யஜ்ஞாதிகள்‌ அங்கங்கள்‌ என்று நிர்ணயிக்கப் பட்டது ஸர்பேஷாதிகரணத்தில்‌ ப்ரம்ஹ வித்தாக இல்லாத கேவலாச்ரமிகள்‌ யஜ்ஞாதிகளை எப்படி ஒரு தரம்‌ அநுஷ்டிக்கிறார்களோ அப்படியே ப்ரம்ஹ வித்துக்களும்‌ ஒரு தரம்‌ அநுஷ்டித்‌தால்‌ போதுமா அல்லது ஆச்ரம தர்மமாகவும்‌ வித்யார்த்தமாகவும்‌ இரண்டு தரம்‌ அநுஷ்டிக்க வேண்டுமாவென்று ஸம்சயம்‌: வித்யார்த்தமான யஜ்ஞாதிகள்‌ நித்யாக்நி ஹோத்ர மாஸாக்நி ஹோத்ரங்கள் போல்‌ வெவ்வேறு ரூபங்களாக இருந்தால்‌ அப்போது வித்யார்த்தமான யஜ்ஞாநுஷ்டாநத்தினால்‌ ஆச்ரம தர்மமான யஜ்ஞம்‌ ஸித்திக்காதாகையால்‌ தனியாக அநுஷ்டிக்க வேண்டி வரும்‌, நித்யாக்நி ஹோத்ர, காம்யாக்நி ஹோத்ரம் போல்‌ அபேத மிருக்குமானால்‌ அப்போது காம்ய ப்ரயோகத்தினாலேயே நித்யமும்‌ ஸித்திக்குமாகையால்‌ ஒரு தடவை அநுஷ்டித்தால்‌ போதும்‌, இவற்றில்‌ எது உசிதமென்னில்‌ ; ப்ரகரண பேதத்‌தினால்‌ நித்யாக்நி ஹோத்ர மாஸாக்நி ஹோத்ர ந்யாயத்தினால்‌ கர்ம பேதமாகையால்‌ இரண்டு தடவை அநுஷ்டிக்க வேண்டுமென்‌று பூர்வ பக்ஷம்‌-ஆச்ரம தர்மமாக யஜ்ஞாதிகள்‌ விதிக்கப் படுகின்றன -ஸ்ருதிகளில் வித்யாங்கமாகவும்‌ விதிக்கப்படுகின்றன. ஆக ஆச்ரமார்த்தமான தர்மங்‌களே வித்யார்த்தமாகவும்‌ விதிக்கப்படுகின்றன. விநியோகம்‌ செய்கிற வாக்ய பேதமிருக்‌ கிறபடியால்‌ நித்யாநித்ய ஸம்யோக விரோதமும்‌ கிடையாது- விநியோகிக்கிற வாக்ய பேதமிருக்கிறபடியால்‌ (யூபஸ்தம்பம்‌ கருங்காலியால்‌ செய்யப்பட வேண்டுமென்றும்‌ சொன்ன கருங்காலிக்கு) க்ரத்வர்‌த்தத்வமும்‌ புருஷார்த்தத்வமும்‌ என்று பூர்வ மீமாம்ஸையில்‌ நிர்ணயிக்கப்பட்டுள்‌ளது. இங்கும்‌ அது போல் தான்‌ யஜ்ஞாதிகளால்‌ ப்ரத்யபிஜ்ஞையைப் பண்ணி வித்யாங்கமாக விதிக்கப்படுவதால்‌ இவைகளின்‌ ஸ்வரூப பேதத்திலும்‌ ப்ரமாணமில்லை, ஆகையினால் தான்‌ ப்ரஸித்தமான யஜ்ஞாதி தர்மங்களை நிர்தேசித்து அவைகளால்‌ வித்யோத்பத்திக்கு ப்ரதிபந்தக பாபத்தின்‌ நிரஸநம்‌ சொல்லப்படுகிறது. தினந்தோறும்‌ அநுஷ்டிக்கும்‌ கர்மங்களால்‌ அந்தக் கரணம்‌ சுத்தமாகி விசத தரமான அவபாஸ்த்தை உடையதாய்‌ உத்க்ருஷ்டமான வித்யை உண்டாகிறது. ஆக காம்யாக்நி ஹோத்ர ப்ரயோகத்தினால்‌ நித்யாக்நி ஹோத்ரமும்‌ ப்ரஸங்காத் ஸித்திக்கிறது போல இங்கும்‌ வித்யார்த்தமான அநுஷ்‌டாநத்தினால்‌ ஆச்ரமார்த்தமாகவும்‌ ஸித்திப்பதால்‌ ஒரு தடவை தான்‌ அநுஷ்டாநமென்று ஸித்தாந்தம்‌.

9-விதுராதிகரணம்‌ -ஆச்ரம தர்மங்களை அங்கமாகக் கொண்டது வித்யை என்று நிர்ணயிக்கப்பட்ட பகியால்‌ அநாச்ரமிகளான விதுரனு[பத்நியை இழந்தவன்‌)க்கும்‌, ஸ்நாதகனுக்கும்‌ (ப்ரஹ்ம
சர்ய ஆச்ரமத்தை முடித்து வ்ரதங்களைச்‌ செய்து க்ருஹஸ்தாச்ரமத்தை அடைவதற்கு முன் நிலையிலிருப்பவன்‌) ப்ரம்ஹ வித்யையில்‌ அதிகாரமுண்டா என்று ஸம்சயம்‌. இவர்களுக்கு ஆச்ரம தர்மங்களில்லாதபடியால்‌ வித்யையில்‌ அதிகாரமில்லை என்பது பூர்வ பக்ஷம்‌. அநாச்ரமிகளா யிருந்தாலும்‌ ரைக்வர்‌, பீஷ்மர்‌, ஸம்வர்த்தர்‌ முதலியவர்களுக்கு வித்யாநுஷ்‌டாநம்‌ காணப்படுகிறதே என்னில்‌, நான்காம் வர்ணத்தவர்களுக்கு ப்ரம்ஹ வித்யையில்‌ அதிகார மில்லா விடினும்‌, பாரதத்தில்‌ விதுரர்‌ முதலியவர்களிடத்தில்‌ காணப்படும்‌ ப்ரம்ஹ வித்யை யானது முன்‌ ஜன்ம ஸித்தமாய்‌ அதின்‌ தொடர்ச்சி என்று எப்படி சொல்லப் பட்டுள்‌ளதோ அப்படியே அநாச்ரமிகளான ரைக்வாதிகளிடத்திலும்‌ முன் ஜன்மத்தில்‌ ப்ரம்ஹ வித்யாரம்பம்‌ என்று கல்பிக்க வேண்டும்‌ என்று பூர்வ பக்ஷம்‌.

ரைக்வர்‌ முதலானவர்களான அநாச்ரமிகளிடம்‌ வித்யாநுஷ்டாஈம்‌ காணப்படுவதாலும்‌, ச்ருதியில்‌ ஸாமாந்ய தர்மங்களால்‌ வித்யைக்கு உபகாரம்‌ சொல்லி யிருப்பதனாலும்‌, -ஜப யஜ்ஞத்தினால்‌ வித்யா ஸித்தியை ஸ்ம்ருதியில்‌ சொல்லி யிருப்பதனாலும்‌ அநாஸ்ரமிகளுக்கும்‌ ப்ரம்ஹ வித்யையில்‌ அதிகாரமுண்டு, ஆகையினால்‌ ஜந்மாத்ரத்தில்‌ இவர்களுக்கு வித்யாரம்பம்‌ என்று கல்பிக்க வேண்டிய தில்லை, அநாச்ரமியாக இருக்கக் கூடாது என்று நிஷேதமிருக்‌கிறதே எனில்‌, தனம் முதலிய ஸெளகர்யமில்லாமை, தாரம்‌ கிடைக்காத காரணம்‌, ஸந்யாஸ யோக்யமான வைராக்ய மில்லாமை, இந்த ஆபத் காலத்தில்‌ அசக்தனுக்கு அநாச்ரமித்வம்‌ இருக்கலாம்‌. சக்தனா யிருப்பவனுக்கு அநாச்ரமித்வத்தை விட ஆச்ரமியாக இருப்பது தான்‌ ஸ்ரேஷ்டம்‌. ஆகையினால்‌ அநாச்ரமிகளுக்கும்‌ வித்யையில்‌ அதிகார முண்டு என்று ஸித்தாந்தம்‌-

10-தத்பூதாதிகரணம்‌--விதுரர்களுக்குப் போல்‌ நைஷ்டிகாத்யாச்ரம ப்ரஷ்டர்களுக்கும்‌ ப்ரம்ஹ வித்யையில்‌ அதிகாரம்‌ உண்டாவென்று இவ் வதிகரணத்தில்‌ விசாரிக்கப் படுகிறது. அநாச்ரமிகளான விதுராதிகளுக்கு ஜபம்‌ முதலிய ஸாதாரண தர்மங்களின்‌ உபகாரத்தினால்‌ ப்ரம்ஹ வித்யையில்‌ அதிகார முண்டென்று நிர்ணயிக்கப் பட்டது போல்‌, நைஷ்டிக, வாந ப்ரஸ்த ஸந்யாஸ ஆச்ரமங்களிலிருக்து நழுவியவர்களுக்கும்‌ ப்ராயச் சித்தத்தின்‌ மூலமாய்‌ சுத்தியை சம்பாதித்து சாதாரண தர்மங்களை அங்கங்களாகக்‌ கொண்டு வித்யையில்‌ அதிகாரமுண்டு என்று பூர்வ பக்ஷம் –

நைஷ்டிகனுக்கும் வாந ப்ரஸ்தனுக்கும் ஸந்யாசிக்கும் அவ்வோ ஆஸ்ரம தர்மங்களில் நின்று நழுவக்கூடாது என்ற நிஷேதம் இருக்கிறபடியால் இந்த ஆஸ்ரம ப்ரஷ்டனுக்கு ப்ரஹ்ம வித்யைக்குத் தகுந்த சுத்தி கிடையாது என்று ஏற்படுகிறது -ஆகையினால் இவர்களுக்கு அதிகாரம் கிடையாது -ப்ரஹ்மச்சார்யாஸ்ரம ப்ரஷ்டனானவன் எவளால்‌ ப்ரஷ்டனானானா அவளோடோ அல்லது ஒருத்தியை விவாஹம்‌ செய்து கொண்டோ ஆதாநம் செய்து ஆஹவநீயத்தில்‌ அவகீர்ணி (ப்ரம்ஹசர்ய ப்ரஷ்ட னுக்கு விதிக்கப்பட்ட) பசு யாகத்தைச்‌ செய்யலாம்‌ என்று பூர்வ பக்ஷத்தில்‌-தம்பதிகளுக்கு தான்‌ அக்ந்யா தாநம்‌ சொல்லி யிருப்பதால்‌ பர ஸ்த்ரீயுடன்‌ அக்ந்யாதாநம்‌ கூடாது என்று ப்ரம்ஹசர்யத்திலிருந்து நழுவாதவனுக்கே விவாஹம்‌ விதித்திருப்பதனால்‌ ப்ரஷ்டனுக்கு ப்ராயச் சித்தம்‌ செய்யாத போது விவாஹம்‌ செய்வதற்கில்லை. ஆகையாவ்‌ அக்ந்யாதாநம்‌ ஸம்பவிக்காது ஆகையால்‌ உபநயந ஹோமம் போல்‌ லெளகிகாக்நியிலேயே அவகீர்ணி பசு யாகமும்‌ என்று ஸித்தாந்தம்‌ செய்யப் பட்டிருக்கிறது. இந்தப் ப்ராயச் சித்தத்தை செய்து கொண்டால்‌ சுத்தி ஏற்படுமாகையால்‌ நைஷ்டிகாதி ஆச்ரம ப்ரஷ்டர்களுக்கு ப்ரம்ஹ வித்யாதிகாரம்‌ கூடலாமென்று மேல்‌ ஆக்ஷேபம்‌. இதற்கு ஸமாதாநம்‌-இவர்களுக்கு சுத்திக்கு காரணமான ப்ராயச் சித்தம்‌ கிடையாதென்று ஸ்ம்ருதிகளில்‌ சொல்லப் பட்டிருக்கிற படியால்‌ இவர்கள்‌ பதிதர்கள்‌ என்றேற்படுகிற படியால்‌ அவகீர்ணி பசு யாகத்திலும்‌ அதிகாரமில்லை. அந்த ப்ராயச் சித்த விதி உபகுர்வாண (க்ருஹஸ்தாச்ரமத்தை அடையப்போகும்‌) ப்ரம்ஹசாரி விஷயமே தவிற நைஷ்டிகாதி விஷயமல்ல. சிலர்‌, நைஷ்டிகர்களுக்கு ப்ரம்சம்‌ நேர்ந்தாலும்‌ இது மகா பாதகத்தில்‌ சேர்க்கப்படவில்லை, உபபாதகமே. உபகுர்வாணனுக்குச்‌ சொல்லி யிருக்கும்‌ ப்ராயச்சித்தம்‌ மற்றவர்களுக்கும்‌ உண்டென்று சொல்லுகிறார்கள்‌. உபபாதகமாயினும்‌’ மஹா பாபமாயினும்‌ முற் கூறிய வசநத்தினால்‌ சுத்தி கரமான ப்ராயச்‌ சித்தம்‌ கிடையாது என்று நிஷேதித்திருக்கிற படியாலும்‌, சிஷ்டர்களான பெரியோர்கள்‌ இப்படிப் பட்டவர்‌களுக்கு ப்ரஹ்ம வித்யையை உபதேசம்‌ செய்வதில்லை யாகையாலும்‌ மேற்படி ப்ராயச்சித்தம்‌ இவர்களுக்கு நரகா நுபவத்தைத்‌ தடுப்பதற்கு மாத்திரமாக ஆகுமே தவிர ப்ரம்ஹ வித்யைக்கு அர்ஹதையை உண்டு பண்ணாது. ஆகையால்‌ இவர்களுக்கு அதிகாரமில்லை என்று ஸித்தாந்தம்‌.

11-ஸ்வாம்யதிகரணம்‌-உபாஸநம்‌ செய்பவனும்‌ செய்யாதவன்‌ என்கிற ப்ரஸக்தியினால்‌ உத்கீத உபாஸகநம்‌ பண்ணுகிறவன்‌ யாரென்று விசாரிக்கப் படுகிறது இவ்வதிகரணத்தில்‌: யாகத்திற்கு அங்கமான உத்கீதத்தை ஆச்ரயமாக உடையது உபாஸநம்‌, – இதை யஜமானன்‌ செய்ய வேண்டுமா ரித்விக்‌ செய்ய வேண்டுமா வென்று ஸம்சயம்‌. உபாஸநம்‌ தனி பலனுள்ள தாகையால்‌ பலத்தை விரும்பும்‌ யஜமானன் தான்‌ செய்ய வேண்டும்‌-பசு கறக்கும்‌ பாத்திரத்தினால்‌ அப்‌ ப்ரணயநம (ஜலத்தைக் கொணர்தல்‌) என்கிற வ்யாபாரம்‌ பசு காமனை உள்ளவனுக்குக்‌ கூறப்பட்டிருந்த போதிலும்‌ ப்ரணயநத்தை ரித்விக் செய்ய வேண்டி யிருப்பதால்‌ கோதோஹந பாத்ரத்தை யஜமானன்‌ எடுக்க முடியாது. உபாஸநம்‌ மாநஸ க்ரியா ரூபமாகையால்‌ ரித்விக்கின்‌ உத்கீதத்தில்‌ உபயாஸநத்தை யஜமானன்‌ செய்ய முடியும்‌ ஆகையினால்‌ யஜமானன் தான்‌ உத்கீதோபாஸநத்தைச்‌ செய்ய வேண்டு மென்று பூர்வ பக்ஷம்‌. உத்கீத உபாஸநம்‌ பலனுக்கு ஸாதநமாக இருந்தாலும்‌ ரித்விக் தான்‌ செய்ய வேண்டும்‌. ஸாங்கமான யாகத்தை அநுஷ்டிப்பதற்கே ரித்விக்குகளை வரிக்க வேண்டும்‌ என்று சாஸ்திரம்‌ கூறுகிற படியால்‌ (அநுஷ்டிப்பவனுக்குத் தான்‌ சாஸ்த்ரோக்தமான பலன்‌) என்கிற ஸாமாந்ய ந்யாயம்‌ பாதிக்கப்படுகிறது. இப்படி நிர்ணயித்தால்‌ உபாஸநத்திற்கு ப்ரஸித்தமான பெயரும்‌ ரஷிக்கப்பட்டதாகிறது- கர்ம கர்த்தாவிடம்‌ (ரித்விக்கு) வித்யை உள்ளதாக்ச்‌ சொல்லும்‌ வசகமும்‌ குறிப்பிடத் தக்கது. ஆகையினால்‌ உத்காதா என்கிற ரித்விக்கு தான்‌ உத்கீதாதிகளில்‌ ரஸதமத்வாத்‌ யுபாஸநத்தைச்‌ செய்ய வேண்டு மென்‌று ஸித்தாந்தம் –

12-ஸஹகார்யந்தரவித்யதிகரணம்‌-யஜ்ஞாதிகளையும்‌ சமாதிகளையும்‌ வித்யைக்கு ஸஹ காரிகளாக நிர்ணயித்து ஸங்கதி விசேஷத்தினால்‌ ஸர்வாந்நா நுமதி முதலியவைகளை விசாரித்து இந்த அதிகரணத்தினால்‌ வித்யைக்கு மற்றொரு ஸஹகாரியை நிரூபிக்கிறார்‌. சுருதி வாக்யத்தினால்‌ மெளனம்‌ அநுவதிக்கப்‌ படுகிறதா அல்லது விதிக்கப் படுகிறதா என்று ஸம்சயம்‌. மெளனம்‌ பாண்டித்யம்‌ இரு சப்தங்களும்‌ ஜ்ஞாந வாசகங்களாகையால்‌ ஜ்ஞாநம்‌ தான்‌ என்று அநுவதிக்கப்படுகிறது என்று பூர்வ பக்ஷம்‌– யஜ்ஞாதிகள்‌ விதிக்கப்படுகின்றன, சமதமாதிகள்‌ விதிக்கப்படுகின்றன. அப்படியே வாக்யத்தினால்‌ பால்யம்‌, பாண்டித்யம்‌, மெளனம்‌ என்கிற மூன்று வித்யாஸஹகாரிகளும்‌ விதிக்கப்படுகின்றன. இதில்‌ பால்யத்தை அடுத்த அதிகரணத்தில்‌ விசாரிக்கிறார்‌. மெளனம்‌ பாண்டித்யத்தை விட வேறு.ஸ்ரவண மநநங்‌களுக்குப்‌ பின்பு அதின்‌ அப்யாஸாதிசயத்தினால்‌ உண்டான ப்ரதிபையிலை ஸகல உபநிஷத் தாத்பர்ய ப்ரதிஷ்டாபநம்‌ செய்வது பாண்டித்யம்‌, மெளனமானது உயர்ந்த மநம்‌. உயர்ந்த மநந சீலர்களான வ்யாஸாதிகளிடம்‌ முனி என்கிற சப்தம்‌ ப்ரயோகிக்கப்‌ படுவதால்‌ அது தான்‌ இங்கு மெளன சப்தார்த்தம்‌. அதாவது உபாஸந காலத்தில்‌ மனதில்‌ ஐகாக்ர்யம்‌ (ஒரே இடத்தில்‌ நிலையாக இருத்தல்‌) உண்டாவதற்காக மற்ற காலங்களிலும்‌ சுபாச்ரயமான திவ்யமங்கள விக்ரஹம்‌ முதலானவைகளை அடிக்கடி மனதினால்‌ பரிசீலனம்‌ செய்து கொண்டே இருப்பது. இதுவும்‌ வித்யாநிஷ்பத்திக்குக்‌ காரணமாகும்‌. . ஆனால்‌ சாந்தோக்யோபகிஷத்தில்‌ கிருஹஸ்த தர்மத்தினால்‌ முக்தி என்று உப ஸம்ஹாரம்‌ செய்யப் படுகிறதே, அதினால்‌ கிருஹஸ்த தர்மங்கள்‌ தான்‌ வித்யா ஸஹகாரிகள்‌ என்று ஏற்படுகிறதே. யஜ்ஞாதிகளுக்காக தரவ்ய ஸம்பாதகம்‌ முதலிய பல வ்யாபாரங்களில்‌ ஈடுபட்டுள்ள கிருஹஸ்தர்களுக்கு கீழ்ச் சொன்ன சுபாச்ரயாதி ஸம்சீலன ரூபமான மனனம்‌ எப்படி. ஸாத்யமாகுமெனில்‌ ; எல்லா ஆச்ரமிகளுக்கும்‌ வித்யை உண்‌டென்று முன்னமே நிர்ணயிக்கப் பட்டதாகையால்‌ யஜ்ஞாதிகளி லீடுபட்டிருக்கும்‌ கிருஹஸ்‌ தர்களுக்கு யஜ்ஞாதிகளால்‌ சித்த சுத்தி ஏற்பட்டு ஷூ ஸம்சீலகம்‌ வரும்‌. ஒன்றும்‌ விரோத மில்லை.” ஆகையினால்‌ கிருஹஸ்த தர்மத்தினால்‌ சாந்தோக்யத்தில்‌ உபஸம்‌ஹரிக்கப்‌ பட்டது. ஆக யஜ்ஞாதி ஸர்வாச்ரம தர்மஸகஹாரத்துடன்‌ பால்ய பாண்டித்யங்களோடு மூன்றாவதான மெளநம்‌ விதிக்கப்படுகிறது என்று ஸித்தாந்தம் –

13-அநாவிஷ்காராதிகரணம்‌ -பால்யம்‌ விசாரிக்கப்படுகிறது. பாலனுடைய தன்மையான வயஸ்ஸின் நிலை அடைய முடியாதாகையால்‌ பாலனுடைய செயல்‌ இங்கு சொல்லப்படுகிறது என்று கொள்ள வேண்டும்‌. பாலனுடைய செயலான இஷ்டப்படி இருத்தல்‌, சாப்பிடுதல்‌ முதலியவைகள்‌ இங்கு பால்ய சப்தார்த்தமா அல்லது டம்பாதிகளில்லாமையா என்று ஸம்சயம்‌, விசேஷம்‌ ஒன்றும்‌ சொல்லப்படாமையால்‌ எல்லாமும்‌ தானென்று பூர்வபக்ஷம்‌– சாஸ்திரங்கள்‌ உபாஸனம்‌ செய்பவனுக்கு துச்சரிதாதி நிவ்ருத்தி, ஆஹார சுத்தி முதலியவை நியமிக்கபபடுகிறபடியால்‌ பால்யம்‌ டம்பாதிகளில்லாமையான தன்னுடை மாஹாத்ம்யத்தை வெளிக் காட்டாமையே என்று ஸித்தாந்தம்‌.

14-ஐஹிகாதிகரணம்‌-இப்படி. அங்க விசாரம்‌ முடிந்தது. அங்கியின்‌ உத்பத்தி ஸமயம்‌ விசாரிக்கப்‌ படுகிறது இவ்வதிகரணத்தில்‌. ஐஹிக போகங்களுக்கு ஸாதநமான சில உபாஸநங்கள்‌ உள்ளன. இவைகள்‌, இவைகளுக்கு ஸாதநமான புண்ய கர்மா நுஷ்டாகம்‌ பண்ணின பிறகு ‘இந்த ஜந்மத்திலேயே உண்டாகின்றனவா, அல்லது ,இந்த ஜன்மத்திலோ வேறு தேஹத்திலோ வென்‌று நியம மில்லாமையா என்று ஸம்சயம்‌. ஸ்நாநம்‌ செய்த உடனே தேஹத்‌திற்கு சுத்தி உண்டாகிறது. அது போல்‌ அங்கமாக புண்ய கர்மாநுஷ்டாநம்‌ பண்ணின உடனே இந்த ஜன்மத்திலேயே உண்டாகிறது அந்த உபாஸநம்‌. இதின்‌ பலமும்‌ இந்த தேஹத்திலேயே அநுபவிக்க வேண்டியதே தவிர ஸ்வர்காதிகள்‌ மாதிரி தேஹாந்தரத்தி லில்லை யாகையால்‌ இந்த ஜன்மத்திலேயே உண்டாகிறது என்று பூர்வ பக்ஷம்‌. ப்ரதிபந்தகம்‌ இல்லாமலிருந்தால்‌ இந்த ஜன்மத்திலேயே உண்டாகலாம்‌. ப்ரபல கர்ம ப்ரதீபந்தகமிருந்‌தால்‌ தேஹாந்தரத்திலும்‌ உண்டாகலாம்‌. ஆகையால்‌ இந்த ஜன்மத்தில் தான்‌ எனறு நியமம்‌ சொல்ல முடியாது என்று ஸித்தாந்தம் –

5-முக்திபலாதிகரணம்‌-கீழ்ச் சொன்ன அநியமம்‌ முக்தியை பலமாக உடைய உபாஸநத்திலும்‌ அதிதேசிக்கப்‌ படுகிறது. பரவித்யா ஸாதனமான கர்மங்கள்‌ ப்ரபலங்களாகையால்‌ அதை விட ப்ரபல கர்மங்களில்லாதபடியால்‌ ப்ரதிபந்தம்‌ ஸம்பவிக்காது. ஆகையினால்‌ இதே ஐந்மத்திலேயே வித்யா நிஷ்பத்தி என்று அதிகாசங்கை-பகவத் ப்ரீத்யதிசய ஹேதுக்களாகையால்‌ பர வித்யா ஸாதகமான கர்மங்கள்‌ ப்ரபலங்க ளாயினும்‌ அதை விட ப்ரபல தரங்களான ப்ரம்ஹ வித்துக்களின்‌ அபசார ரூபமான கர்மங்களால்‌ ப்ரதிபந்தம்‌ ஸம்பவிக்கலாம்‌. இந்த ப்ரதிபந்தமில்லாம லிருப்பதற்காகத் தான்‌ உத்கீதோபாஸாம்‌ விதிக்கப்படுகிறது. உத்கீத வித்யை இல்லாத கர்மங்கள்‌ அநுஷ்டித்தால்‌ மேற்படி ப்ரதிபந்தம்‌ உண்டு: ஆகையினால்‌ மோக்ஷ பலார்த்தமான உபாஸநத்திற்கும்‌ உத்பத்தி இந்த ஜந்மத்தில் தான்‌ என்கிற நியமமில்லை என்று ஸித்தாந்தம் –

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே
ஸ்ரீ ஸ்ரீ உ.வே. நரசிம்ஹாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய மூன்றாம் அத்யாயம் – மூன்றாம் பாத ஸாரம்- ஸ்ரீ உ.வே.வரதாசார்ய ஸ்வாமிகள்–

September 29, 2026

முன்பு இரு அத்யாயங்களில்‌ ப்ரஹ்ம தத்வத்தை நன்று தெளியச் செய்து அதை அடைவதற்கு வேண்டிய உபாயமான உபாஸனம்‌ முதலிய ஹிதத்தை மூன்றாவது அத்யாயத்தில்‌ நிருபிக்க வேண்டி இந்த 3வது அத்யாயத்தின்‌ 2 பாதங்களில்‌, ஜீவாத்மாக்கள்‌ தோஷமுள்ள வர்களானபடியால்‌ அவர்களை உபாசிக்கத்‌ தகாது என்பதையும்‌, பர ப்ரம்ஹம்‌ குண பூர்ணமாயும்‌ தோஷமற்றது மானபடியால்‌ அதுதான்‌ உபாஸ்யம்‌ (தியானத்திற்கு யோக்யம்‌) என்பதை விளக்கி, மூன்றாவது பாதமான இப் பாதத்தில்‌ உபாஸன விசாரத்தைச்‌ செய்ய, பகவான்‌ வியாஸர் முற்படுகின்றார்‌. இப் பாதத்திற்கு குண உப ஸம்ஹார பாதம்‌ என்று பெயர்‌.-அதனுடைய பொருள்‌, உபநிஷதங்களில் சொல்லப்பட்ட வெவ்வேறு உபானைங்களில்‌ வெவ்வேறு இடங்களில்‌ சொல்லப்பட்ட குணங்களையும் உபாசனம் ஒன்றேயாயின் அனுசந்தானம் செய்வது என்பதாம்-

முதல் அதிகாரணத்தில் வேதாந்தங்களில் உபனிஷத்துக்களில் அநேக இடங்களிலே கூறப்பட்ட தஹர உபாஸனம் வைஸ்வாநர உபாஸனம்‌ முதலிய உபாஸனங்கள்‌ ஒவ்வொன்றும் வேறுபட்டவையா அல்லது ஒன்றேதானா என்று ஸந்தேஹம்‌ ஏற்படின்‌ எல்லாம்‌ ஒன்றே தான்‌, ஒரே சொல்லால்‌ விதிக்கப்படுவதாலும்‌, பலன்‌ பெயர்‌ இவை முதலியவை ஒன்றேயாக இருப்பதாலும்‌ வேறு என்று சொல்ல இயலாது-அனேக இடத்தில்‌ சொல்லப் பட்டுளளதால்‌ வேறாகத் தான்‌ வேண்டும்‌ இல்லா விடில்‌, பல தடவை கூறுவது பயனற்றதாகுமே எனில்‌ ;அந்தந்த சாகை(பாகம்‌)யை அத்யயனம்‌ செய்பவர்கள்‌ வேறாக உள்ளபடியால்‌, அவர்களுக்காக ஆங்காங்கு ஓதப்பட்டுள்ளன என்று கொள்ளுதலால்‌ முன்பு சொன்ன ஆஷேபம்‌ சரியாகாது-ஆனாலும் சிரோ வ்ரதம்‌ (அக்னியை தலையில்‌ தரித்துக் கொள்வது) என்கிற ஸம்ஸ்காரம்‌ உள்ளவர்களுக்குத் தான்‌ ப்ரம்ஹ வித்யோபதேசம்‌ என்றுள்ளதால்‌, உபாஸனம்‌ வேறாகலாமே எனில்‌, அது வேதாத்யயனற்திற்கு மாத்ரமே அங்கம்‌ என்று அங்கு கூறப்‌ பட்டுள்ள படியால்‌ உபாஸநத்திற்குச்‌ சேர்ந்தது ஆகாது -ஆகையால் தோஷமில்லை –

2-முன்பு வைஸ்வானர வித்யை ஒன்று தான்‌ என்‌று நிச்சயிக்கப்பட்டது. ஆனால்‌ அதே ரீதியில்‌ முன்பு சொன்ன பயன்‌ ரூப விதி இவைகள்‌ இருக்கிறபடியால்‌ உத்கீத வித்யை (உபாஸநம்‌) ஒன்றே என ஆஷேபித்து பரிஹாரம்‌ செய்கிறார்‌ இந்த அதிகரணத்தில்‌-சாந்தோக்ய உபநிடதத்திலும்‌, ப்ருஹதாரண்யகத்திலும்‌ உத்கீத (௭) உபாஸனம்‌ கூறப்பட்டுள்ளது இது வெவ்வேறா அல்லது ஒன்றே தானா என்று ஸந்தேகிக்க, பெயர்‌ முதலியவை ஒன்றே யாக உள்ளபடியால்‌ முன்‌ அதிகரணத்தில்‌ சொல்லியபடி ஒன்றே தான்‌ என்று பூர்வபக்ஷம்‌ (ஆஷேபம்‌ ) எழுந்தால்‌ சரியில்லை —ரூப பேதம்‌ உள்ளபடியால்‌ உபாஸநமும்‌ வேறு தான்‌, ஒரு உப நீடதத்தில்‌ உத்கானம (ஸாம கானம்‌) பண்ணுபவனை ப்ராணன்‌ என்று நினைக்கச்‌ சொல்லியது. மற்றொரு உபகிடதம்‌ ஸாமததை (உத்கீதத்தை)யே ப்ராணன்‌ என உபாஸிக்கச்‌ சொல்லியது, அப்படியே உத்கீதத்தையே முழுவதுமாக உபாசிக்க வேண்டியது என ஒரு உபநிடதம்‌ கூறினால்‌, மற்றொரு உபகிடதம்‌ உத்கீதமெனும்‌ ஸாமத்தின்‌ அவயவமான ப்ரணவத்தை உபாஸிக்கக்‌ கூறுகிறது. இப்படி பூர்ணமான ஸாமமே ஓரிடத்தில்‌ உபாசிக்க வேண்டி யுள்ளது. அதன்‌ அவயவமான ஓங்காரத்தை ஓரிடத்தில்‌, ஆகையால்‌ உபாஸனங்களை வேறாகவே தான்‌ கொள்ள வேண்டும் என்பது ஸித்தாந்தம்‌-பர ப்ரம்ஹத்தையே விசாரிக்க வேண்டி யுள்ள இந்த சாஸ்திரத்தில்‌, வேறு பலத்துக்கு ஹேதுவான உத்கீத விசாரம்‌ எப்படிப்‌ பொருந்தும்‌ என்று சந்தேகம்‌ சிலருக்கு எழலாம்‌, சத்துருக்களை அழிப்பதை பலமாகக் கொண்டதாயினும்‌ உத்கீத உபாஸனம்‌; ப்ரம்ஹோபாஸ னத்திற்குத்‌ தடைகளை நீக்கி ப்ரம்ஹோபாஸனத்தை சரிவரச் செய்ய உபகரிப்பதால்‌ இங்கு விசாரிக்கத்‌ தடை யில்லை, அல்லது ப்ரம்ஹோபாஸனத்திற்கு அங்கமான கர்மங்களை வீர்ய முள்ளதாக உத்கீத உபாஸனம்‌ செய்யுமென வேத வாக்யம்‌ கூறுவதால்‌, இங்கு விசாரம்‌ செய்வது யுக்தமே –

3-சாந்தோக்ய, வாஜஸநேயக-கெளஷீதகீ உபநிடதங்களில்‌ உள்ள ப்ராண வித்யை (உபாஸநம்‌) “ஒன்றா வெவ்வேறா என்று இந்த அதிகரணத்தில்‌ விசாரம்‌ செய்யப்படுகிறது. கெளஷீதகீயத்திலும்‌, சாந்தோக்யத்திலும்‌, வாஜஸநேயத்திலும்‌ ப்ராணனுக்கு ஜ்யைஷ்ட்யம்‌ (முதன்மை) ( கார்யாரம்பத்தில்‌ ப்ராணனுக்குத் தான்‌ முதன்மை) ச்ரைஷ்ட்யம்‌ (மேன்மை-குணம்‌ நிரம்பி யுள்ள படியால்‌) சொல்லப் பட்டுள்ளது, கெளஷீதகத்தில்‌ இவை இரண்டையும்‌ கூறி, வஸிஷ்டத்வம்‌ எனும்‌ ஒரு அதிகமான குணமும்‌ கூறப் படவில்லை, அது சாந்தோக்ய வாஜஸேநேயகங்களில்‌ மாத்திரமே உள்ளது. ஆகையால்‌ ப்ராண வித்யை (உபாஸனம்‌) வெவ்வேறு ஆகுமென பூர்வ பக்ஷம்‌ (ஆக்ஷேபம் )-இது சரி யில்லை. ஏனெனில்‌ —ப்ராணனுக்குள்ள மேன்மை முதலிய குணங்கள்‌ … இயற்கை என்பதாயும்‌, மற்ற இந்திரியங்களுக்கு அக் குணங்கள்‌ ப்ராணனை முன்னிட்டு. வந்தவை என்பது எல்லா இடத்திலும்‌ ஸமமாக உள்ளபடியால்‌ உபாஸன பேதம்‌ சொல்ல வழியில்லை–

4-இந்த அதிகரணத்தில்‌ பர ப்ரம்ஹத்தை தெரிந்து கொள்வதற்கு மிகவும்‌ முக்யமான படியால்‌ ஸ்வரூப நிரூபகம்‌ எனப்படும்‌, ஆனந்தம்‌ முதலிய ஐந்து குணங்கள்‌ எல்லா உபாஸநங்களுக்கும்‌ சேர்ந்தவை என சொல்லப் படுகின்றது. ஸ்ரீ வியாஸர்‌ உபானைங்கள்‌ குணங்கள்‌ வேறாக உள்ளபடியால்‌ அனேகமானவை என்கிறபடியால்‌ ஒரு உபானைத்தில்‌ சொல்லப்பட்டுள்ள குணங்கள்‌ வேறோர்‌ உபாஸனத்‌திற்குச்‌ சேராது என்று தேறும்‌. ஆகையால்‌ (1) ஸத்யத்வம்‌ (2) ஞானத்வம்‌ (3) அநந்தத்வம்‌ (4) அமலத்வம்‌ (5) ஆனந்தம்‌ எனப்படும்‌ ஐக்து குணங்களும்‌, மநோ மயத்வம்‌ முதலிய மற்ற குணங்கள்‌ மாதிரி, எங்கு கூறப்பட்டனவோ அந்த உபாஸநத்திற்கே உரியன வாகும்‌. எல்லா உபாஸனங்களிலும்‌ சேர்க்க இயலா என ஆஷேபம்‌ (பூர்வபக்ஷம்‌).

ஸமாதானம்‌ (சித்தாந்தம்‌) உலகில்‌ குணங்கள்‌ இரு வகைப்படும்‌ -1-ஒரு வஸ்துவை தெரிந்து கொள்வதற்கு உபாயமானவை -2-வஸ்துவை தெரிந்து கொண்ட பிறகு அதன்‌ மஹிமையை வெளிப்படுத்தக் கூடியவை, என்று முதல்‌ வகுப்பில்‌ உள்ளவை வஸ்துவிட்டு வேறாக இல்லாதபடியால்‌ வஸ்து உடன்‌ கட்டாயம்‌ தோன்றவே செய்யும்‌ , முன் சொன்ன ஐந்து குணங்களும்‌, பரப்ரஹ்மத்தின்‌ ஸ்வரூபத்திற்கே சேர்ந்தபடியால்‌ , ஆனந்தாதிகள்‌ ஐந்தும்‌ ப்ரதானமான பிரம்ஹம்‌ எங்கும்‌ உபாஸனங்களில்‌ ஒன்றானபடியால்‌ எல்லா உபாஸநங்களிலும்‌ அநுஸந்திக்கத் தக்கவை.-ஆனால்‌ ப்ரியசிரஸ்த்வாதி குணங்களும்‌ எங்கும்‌ வருமா எனில ப்ரிய-மோத ப்ரமோதாதிகள்‌ எங்கும்‌ உண்டு -ஸ்வரூ பத்துககுச்‌ ‘சேர்ந்தபடியால்‌.. சிரா புச்சம்‌ முதலியவைகள்‌ நிரம்சமான ப்ரஹ்மத்தில்‌ சேராத படியால்‌ அவைகள்‌ உபாஸனங்களுக்கு சேரா –

5-வாஜஸநேய உபநிடதத்தில்‌, – இது ப்ராண உபாஸனத்தில்‌ உள்ளது.- இங்கு போசனத்திற்கு முன்பும்‌ பின்பும்‌ இவ் வுபாஸனத்தில்‌ ஆசமனம்‌ அங்கமாக விதிக்கப் பட்டுள்ளது, எனச்‌ சொல்ல வேண்டும்‌- இது ஸாதாரணமாக ஸ்ம்ருதியினால்‌ சொல்லப்பட்ட ஆசமனத்தைக் காட்டிலும்‌ வேறு ஆகையால்‌ இரண்டு ஆசமனங்களும்‌ அனுஷ்டிக்கத் தக்கவை என ஆஷேபம்‌ (பூர்வ பக்ஷம்‌)-சித்தாந்தம்‌, ஸ்ம்ருதி, ஆசாரம்‌ முதலிய ப்ரமாணங்களால்‌ ப்ராப்தமான ஆசமனத்தில்‌ இந்த வாக்யம்‌ ப்ராணனுக்கு அவை (ஆசமனம்‌) வஸ்த்ரம்‌ எனத்‌ தெரிந்து கொள்ள வேண்டும்‌ எனக்‌ கூறுமே தவிர புதியதாக ஆசமன விதானமில்லை. வேறு வழியில் தெரியாத விஷயங்களை விதித்தால் தான்‌ வாக்யம்‌ ஸபலமானபடியால்‌ இங்கும்‌ ஆசமனம்‌ ப்ரணானுக்கு வஸ்த்திரம்‌ எனப்படும்‌ தெரியாத விஷயத்தைச்‌ சொல்லுவதாம் –

6-வாஜயநேயகத்தில்‌ (சதபதப்ராம்ஹணம்‌) உள்ள அக்நி ரஹஸ்யத்தில்‌ சாண்டில்ய உபாசனம்‌ கூறப்பட்டுள்ளது-அதன்‌ முடிவு பாகமான ப்ருஹதாரண்யகத்திலும்‌ சாண்டில்ய உபாசனத்தைக் கூறி உள்ளது இங்கு உபாஸனம்‌ வெவ்வேறா – ஒன்றே தானா ? என ஐயமுண்டாளால்‌, வசித்வாதி குணங்கன்‌ வேறாக உள்ளபடியால்‌ உபாஸனமும்‌ வேறு தான்‌ என பூர்வபக்ஷம்‌ தோன்றும்‌-ஆனால்‌ குணங்கள்‌ இரண்டிடத்திலும்‌ ஒன்றேயாக உள்ளபடியால்‌ குணங்கள்‌ வேறாகக்‌ கூறப்பட்டவை, ஸத்ய ஸங்கல்பம்‌ எனப்படும்‌ முன்‌ சொல்லப்பட்ட குணத்தின்‌ விரிவானபடியால்‌, உபாஸன பேதம்‌ எனச் சொல்லுவது சரியாகாது என்பது சித்தாந்தம் –

7-ப்ருஹாதாரண்யகத்தில்‌ வாக்யக்தில்‌ கூறப் பட்டுள்ள உபாஸநங்கள்‌ ஒன்றேயாம்‌, அங்கு ஸத்ய சப்தத்தினால்‌ சொல்‌லப்பட்ட ப்ரம்ஹத்திற்கு வ்யாஹ்ருதி சரீரம்‌ – என்பது தலை- என்பது கைகள்‌-என்பது கால்கள்‌) முதலிய குணங்கள்‌ ஒன்றாகவே உள்ளபடியால்‌ மற்ற முதலியவைகளும்‌ ஒன்றேயான படியால்‌ இரண்டு உபானைங்களும்‌ ஒன்றேயாம்‌ என்‌று பூர்‌வ பக்ஷம்‌-இது சரியல்ல. ஓரிடத்தில்‌ ஸூர்ய மண்டலலம் , ப்ரஹ்மத்தின்‌ ஸ்தானமாகச்‌ சொல்லப்‌ பட்டுள்ளது. மற்றோரிடத்தில்‌ கண்‌ ஸ்தானமாகச்‌ சொல்லப் பட்டுள்ளது. ஆகையால்‌, ஸ்தான மாறுபாட்டால்‌ உபாஸனமும வேறாகத் தான்‌ இருக்க முடியும்‌ என்பது ஸித்தாந்தம் –

8-தைத்திரீயத்திலும்‌, ஸாம வேதத்திற்குச்‌ சேர்ந்ததான ராணாயநீயகிலத்திலும்‌ ப்ரஹ்மத்தில்‌ எல்லா சக்திகளும்‌ கூடி இருக்கை (ஆகாசம்‌ முதலிய இடத்திலும்‌ பரவி இருத்தல்‌) முதலிய குணங்கள்‌ கூறப்பட்டுள்ளன, இவைகள்‌, ஒரு உபாஸன சமீபத்திலும்‌ சொல்லப்படாத. படியால்‌, எல்லா உபாஸநங்களுக்கும்‌ சேரலாம்‌ என பூர்வ பக்ஷம்‌ ( ஆக்ஷேபம்‌) எழ-சித்தாந்தம்‌ –ஹ்ருதயம்‌ முதலிய சிறிய இடங்களில்‌ ப்ரஹ்மோபாஸனம்‌ செய்யும்படி சில இடங்களில்‌ கூறப்பட்டுள்ளது. அங்கு முதலிய குணங்கள்‌ சேராதாகையால்‌ அவ்வித உபாஸனங்கள்‌ தவிர மற்ற இடங்களில் தான்‌ குணங்களை உபாசிக்க வேண்டுமென்பதாம்‌. – [ குணத்தோடு சேர்த்து சொல்லப்பட்டுள்ள படியால்‌ -எனும்‌ குணமும்‌ எங்கு சேருமோ அங்கு தான் சேரும் –

9-தைத்திரீய உபரிடதத்திலும்‌ சாந்தோக்யோபநிடதத்திலும்‌ புருஷ வித்யை சொல்லப்பட்டுள்ளது- ஒரே பெயரைப் பெற்றுள்ளபடியால்‌ ஒன்றே தான்‌ என பூர்வ பக்ஷம்‌-இரண்டு இடங்களிலும்‌ யஞ்ஞாகார கல்பனம்‌ வேறாக உள்ளது. தைத்தரீயத்தில்‌ மாலை, காலை, நடுப்பகல்‌ இவைகளை யஞ்யத்தில்‌ வரக் கூடிய ஸவனமாகச்‌ சொல்லியது தைத்திரீயத்திற்கு மாறாக சாந்தோக்யத்தில்‌ மூன்றாக வகுக்கப்பட்ட புருஷனுடைய ஆயுஸ்ஸை ஸவனமாகக்‌ கூறப்பட்டுள்ளது, ஆகையால்‌ ரூப பேதம்‌ உள்ளது. மேலும்‌, தைத்திரீயத்தில்‌ உள்ள புருஷ வித்யை, அதே ப்ரகரணத்தில்‌ முன்‌ சொல்லப்பட்ட ப்ரம்ஹ வித்யைக்கு அங்கம்‌ என்றும்‌, அங்கத்திற்குத்‌ தனிப்பட்ட பலம்‌ ஏதுமில்லையான படியால்‌ அங்கியான்‌ ப்ரம்ஹ வித்யைக்கு எது பலமோ (முக்தி) அதே பயன்‌ என்றும்‌ சொல்லுகிறது. சாந்தோக்யத்தில்‌ உள்ள புருஷ வித்யைக்கு பூர்ண மான ஆயுள்‌ பலமென்று கூறப்பட்டுள்ளது. ஆக (பல சம்பந்தம்‌ வேறாக) உள்ள படியாலும்‌ வித்யா (௨பாஸன) பேதம் தான்‌ சரியாகும்‌ என சித்தாந்தம் –

10-முதலிய மந்திரங்கள்‌ முதலியவைகள்‌ உபாஸனங்‌ களுக்கு அங்கம்‌ எனத் தகுமா ? தகாதா? என ஐயம்‌ தோன்றிப்‌ பூர்வ பக்ஷம்‌-உபாஸனங்‌களின்‌ சமீபத்தில்‌ சொல்லப் பட்டுள்ளபடியால்‌ ப்ரம்ஹோபாஸனங்களுக்கு அங்கமாகத் தான்‌ கொள்ள வேண்டும்‌ என்பதாம்‌. சித்தாந்தம்‌–முன்னம்‌ சொல்லப்பட்ட மந்திரங்களில்‌ அர்த்த ஸாமர்த்யம்‌ என்பதை யோசித்தால்‌, சத்துருக்களை அழித்தலுக்கும்‌, வேதாத்யயன ஆரம்பத்திற்கும்‌; அவை சேர்ந்தவை எனத்‌ தெரிகின்றபடியால்‌ (சமீபத்தில்‌ படிக்கப்பட்டுள்ளது) எனும்‌ ப்ரமாணத்தைக்‌ காட்டிலும்‌ ப்ரபலமான (அர்த்தசாமர்த்யம்‌) இம் மந்த்ரங்களை அபிசாரம்‌, வேதாத்யயனம்‌ முதலிய கர்மஙகளுக்கு அங்கமாகத் தான்‌ நிர்ணயிக்கும்‌. ஆன _ படியால்‌, முன் சொன்ன மந்திரங்கள்‌ ப்ரம்ஹோபாஸநத்திற்கு அங்கமாகா –

11-சாந்தோக்யத்திலும்‌, முண்டக உபநிஷத்திலும்‌, முக்தன்‌ தன்னுடைய புண்ய பாயம்‌ இவைகளை குதிரை தன்‌ மயிரை உதறுவது மாதிரி விட்டு விடுகிறான்‌ சொல்லப்பட்டுள்ளது. ்‌ சாட்யாயனர்கள்‌—ப்ரம்ஹ ஞானியின்‌ புண்ய பாபங்கள்‌ முறையே ப்ரியாப்ரிய புத்திரர்‌ களில்‌ சேரும்‌ எனக்‌ கூறுவர்‌- இங்கு விடுவதைக் கூற வில்லை: கெளஷீக்‌ எனும்‌ உபநிடதம்‌ புண்ய பாபங்களின்‌ விடுதலையையும்‌ அவை, ப்ரிய அப்ரியர்களில்‌ போய்‌ சேரும்‌ விதத்தையும்‌ கூறும் -வேறு இடத்தில்‌ சேருதல்‌ எனும்‌ உபாயனம் மட்டும்‌, சில உபநிடதங்‌களில்‌ இரண்டும்‌ கூறப்பட்டுள்ள படியால்‌, விகல்ப்பித்து வாக்யார்த்தம்‌ கொள்ள வேணும்‌. அதாவது, விடுதல்‌ அல்லது வேறு இடத்தில்‌ சேர்வது இவைகளில்‌ ஒன்றை மட்டும்‌ உபாஸனத்திற்கு அங்கமாகக்‌ கொள்ள வேணும் என பூர்வ பக்ஷம்‌ எழ, சித்தாந்தம்‌, எங்கும்‌ இரண்டையும்‌ (புண்ய பாபங்களின்‌ விடுதலை அது போய் சேர்தல்‌) அனுசந்திக்க வேண்டும்‌. விட்ட புண்ய பாபங்கள் தான்‌ வேறு இடத்தில்‌ சேர முடியுமான படியால்‌, உபாயனம் மட்டும்‌ சொல்லப் பட்டாலும்‌ அங்கும்‌ “விடுதலை கூறப்பட்‌டது தான் ஆகும் –

12-கர்மங்களை (புண்ய பாபங்களை) ப்ரம்ஹ ஜ்ஞானி விடுகின்றது எப்பொழுது, சரீர வியோக (மரணம்‌)காலத்திலா? அல்லது, கொஞ்சம்‌ தேஹ வியோக காலத்திலும்‌, கொஞ்சம்‌ வழியிலுமா ? என்பதை இங்கு விசாரிக்கிறார்‌ – உபநிடத்தில்‌ மரண சமயத்திலேயே சர்வ கர்மங்களும்‌ தொலைகின்றன எனக்‌ கூறியது. கெளஷீதகியில்‌ வழியில்‌ புண்ய பாபங்களில்‌ கழிகின்‌றன என்று சொல்லப் படுகிறது. ஆகையால்‌ உபநிடதங்களுக்கும்‌ ஸமரஸமாக சில பாபங்கள்‌ வழியிலும்‌ என்றே சொல்ல வேணும்‌ என பூர்வ பக்ஷம்‌-இங்கு சித்தாந்தமாவது. ப்ரம்ஹே௱பாஸனம்‌ அர்ச்சிராதி மார்க்கத்தில்‌ செல்லக் கூடிய முக்தனுக்கு, புண்யா புண்ய கர்மங்களால்‌ ஆக வேண்டிய பயன்‌ ஏதுமில்லாமையால்‌, எல்லா கர்மங்களும்‌ மரண காலத்திலேயே நீங்குகின்றன என்பதாம்‌. உபாஸனத்தின்‌ மஹிமையால்‌ மோக்ஷ வழியில்‌ செல்லுதலும்‌ கூடுமானபடியால்‌ அதற்காகவும்‌ கர்மங்கள்‌ தேவையில்லை, ஆக எல்லாக் கர்மங்களும்‌ தேஹ வியோக காலத்திலேயே நீங்குகின்‌றன-ஆனலும்‌, ப்ரஹ்ம ஞானிக்கு எல்லா கர்மங்களும்‌ இங்கேயே மரண சமயத்திலேயே நீங்கின்‌, அப்பொழுதே அவன்‌ முக்தனாகி விட்டபடியால்‌ அர்ச்சிராதி மார்க கமனம்‌ வீண்‌ தானே, அர்ச்சிராதி கதி தேவை யில்லை எனக்‌ கூறுவதும்‌ தகாது- அர்ச்சிராதி வழியில்‌ சென்றே ப்ரஹ் த்தை அடைய வேணு மென்கிற வாக்கியம்‌ அவ் வழியில்‌ சென்று தான்‌ மோக்ஷம்‌ அடைய வேணும்‌ எனக்‌ கூறுகிறதே என ஆஷேபம்‌ எழ, சுக துக்கங்களுக்குக்‌ காரணமான கர்மங்கள்‌ எல்லாம்‌ தேக வியோக காலத்திலேயே நீங்கின, ஆனாலும்‌, சுருதி வாக்கியம்‌ உள்ளபடியால்‌ ஜ்ஞான ஸங்கோசத்திற்குக காரணமான ஸூஷ்மமான கர்ம சேஷம் மட்டும்‌ உள்ளது என வேத வாக்கிய பலத்தால்‌ அங்கீகரித்தே ஆக வேண்டும்‌. இதின்‌ அதிக விசாரத்தை ச்ருத ப்ரகாசிகா முதலிய கிரந்தங்களில்‌ காணலாம் –

13-அர்ச்சிராதி மார்க்க சிந்தனம்‌ எங்கு சொல்லப் பட்டுள்ளதோ உபகோஸல வித்யாதிகளில்‌, அந்த உபாஸனத்திற்கு மாத்திரம் தான்‌ அது அங்கமான படியால்‌ மற்ற உபாஸனங்களில்‌ (வித்யைகளில்‌) அது தேவை இல்லை என பூர்வ பக்ஷம்‌: பஞ்சாச்னி வித்யையில்‌ எல்லா உபாஸனங்‌ களுக்கும்‌ அர்ச்சிராதி கதியைக்‌ கூறி யுள்ள படியால்‌ எல்லா உபாளைங்களுக்கும்‌ அது சேரும்‌-என சித்தாந்தம்‌, பகவத் கீதையிலும்‌ இதை முக்கியமாக பகவான்‌ வெளி யிட்டருளினான் –

14-ப்ருஹதாரண்யக உபநிடதத்தில்‌ மைத்ரேயீ ப்ராம்ஹணத்தில்‌ ஓதப் பட்டுள்ளது. இங்கு அக்ஷர சப்தத்‌தால்‌ சொல்லப்பட்ட பர ப்ரஹ்மத்திற்கு (பருமனற்றது, குட்டையல்ல, நீளமல்ல) முதலிய குணங்கள்‌ (உலகின்‌ வேறுபாடு) சொல்லப் பட்டன. இது எந்த உபாஸனத்தின்‌ சமீபத்தில்‌ சொல்லப் பட்டதோ. அங்கு தான்‌ – அனுசந்திக்க வேண்டுமா அல்லது எல்லா உபானங்களுக்கும்‌ சேருமா? என ஸந்தேகம்‌ வரில்‌, பூர்வபக்ஷம்‌—எந்த உபாஸ்னத்தின்‌ பக்கத்தில்‌ உள்ளது. அங்கு தான்‌ சேர வேண்டும்‌ என பூர்வ பூக்ஷம்‌-“சித்தாந்தம்‌ – முன்பு 4வது அதிகரணமான ஆனந்தாத் யதிகரணத்தில்‌ ஸத்யத்வம்‌, ஞானத்வம்‌, அனந்தத்வம்‌, ஆனந்தம்‌. முதலிய குணங்கள்‌ ப்ரம்ஹத்தை தெரிந்து கொள்வதற்கு முக்யமானபடியால்‌ ப்ரஹ்மம்‌ எந்த விதம்‌ எல்லா உபாஸனங்களிலும்‌ முக்கியமோ அவ் விதமே இக் குணங்களும்‌ எல்லா உபாஸனங்களில்‌ சேரும்‌ என சொல்லப்‌ பட்டது. அவ்விதமே வாக்யத்தால்‌ சொல்லப் படுகிற அமலத்வமும்‌ பர ப்ரம்ஹத்தை ப்ரபஞ்ச விலக்ஷணம்‌ எனக் காட்டுகிற படியால்‌ எல்லா உபாஸனங்களிலும்‌ சேரும்‌-பர ப்ரம்‌ஹத்தை ஜீவன்‌, அசேதனம்‌ இவைகளைக் காட்டிலும்‌, வேறு எனத்‌ தெரிந்தால் தான்‌ அஸாதாரணமாகத்‌ தெரிந்தபடி யாகும்‌. அதற்கு உபயோகப் படக்கூடியது, முக்கியமாக அமலத்வம்‌ இத்யாதி வாக்யத்தால்‌ சொல்லப்படுவது. முன்பு சொன்ன குணங்கள்‌ ஜீவனுக்கும்‌ பொது வாகலாம்‌. ஆகையால்‌ வேறுபாடு ப்ரம்ஹத்துக்குத்‌ தேறாது. அதற்காக இக் குணமும்‌ முக்கியமாக எல்லா உபாஸனங்களிலும்‌ சேர வேண்டியது. பர ப்ரஹ் ம ஸ்வரூபத்தை தெரிந்து கொள்‌வதற்கு ஸத்யத்வாதி குணங்கள்‌ என்றும்‌, ப்ரஹ்மம்‌ மற்றவைகளை காட்டிலும்‌ மிகவும்‌ விலக்ஷணமானது எனத்‌ தெரிய வேண்டி சுருதி வாக்யமும்‌ என பாகுபாட்டைக்‌ கொள்ளில்‌, வாக்யங்கள்‌ இரண்டும்‌ ஸார்த்தகமாம் –

15-ப்ருஹதாரண்யகத்தில்‌. உஷஸ்த ப்ரசனத்தில்‌ கேள்வி எழ அதற்கு பதில்‌ உள்ளது. அதே கஹோள ப்ரச்னத்தில்‌ கேள்வியும்‌ பதிலும்‌ உள்ளது. [இங்கு தனித் தனியாக இரண்டு உபாஸனங்கள்‌ கொள்ள வேணும்‌. ஏனெனில்‌, கேள்வி கேட்கிறவர்‌கள்‌ வேறான படியாலும்‌, ஓரிடத்தில்‌ (உஷஸ்தி ப்ரச்னத்தில்‌) ப்ராணன்‌ முதலியவைகளுக்கு கர்தாவானவன்‌ ஸர்வாத்மாவாக கூறப்பட்டுள்ளான்‌. மறு இடத்தில்‌ (கஹோள ப்ரச்னத்தில்‌ )பசி , தாகம்‌, சோகம்‌, மூப்பு, பிணி, மரணம்‌ இவைகள்‌ இல்லாதவன்‌ ஸர்வாத்மா எனச்‌ சொல்லப்பட்டுள்ளான்‌. ஆகையால்‌ பதிலும்‌ வேறாகவே உள்ளது. எனவே இரண்டு இடங்களிலும்‌ வெவ்வேறு உபாஸனம் தான்‌ சரி என பூர்வபக்ஷம்‌ எழுகின்றது-சித்தாந்தம்‌, இரண்டு இடங்களிலும்‌ ப்ரம்ஹத்தைப் பற்றிய கேள்வியே உள்ளபடியால்‌ உபாஸனம்‌ ஒன்றேயாம்‌. (முதலாவதில்‌) ப்ராணாபானங்களுக்குக்‌ கர்த்தாவானவன்‌ ஜீவனாக முடியாது. தூக்கத்தில்‌ ஜீவனுக்கு எவ் விதமான கர்த்ருத்வமும்‌ சொல்ல முடியாது. ப்ரஹ்மம்‌ தான்‌ ஆக வேணும்‌. இரண்டாவதிலும்‌, பசி தாகம்‌ முதலியவைகள்‌ இல்லாமை என்பதும்‌. அமலத்வமெனும்‌ ப்ரம்ஹ குணத்தில்‌ சேர்ந்ததான படியால்‌, –பர ப்ரஹ்மத்தைத் தான்‌ சொல்ல வேணும்‌. ஆகையால்‌ இரண்டு இடங்களிலும்‌ கேள்வியும்‌ சமாதானமும்‌ ஒன்றேயாக உள்ள படியால்‌ உபாஸனமும்‌ ஒன்றேயாம்‌-எப்படி. ஸத் வித்யை எனும்‌ உபாஸனத்தில்‌, கேள்விகளுக்கும்‌ ஸமாதானங்களுக்கும்‌ அனேக முறை ஆவ்ருத்தி இருந்தாலும்‌ உபாஸன பேதம்‌ கிடையாதோ, அதே மாதிரி இங்கும்‌ கொள்ள வேணும் –

16-சாந்தோக்யத்தில்‌ தஹர வித்யையில்‌ ஆகாசத்தை உபாசிக்கச்‌ சொல்லியது, ப்ருஹாதரண்யகத்தில்‌ தஹர வித்யா ப்ரகரணத்தில்‌ ஆகாசத்தில்‌ உள்ள புருஷனை உபாஸிக்கச் சொல்லுகிறது. ஆக இரண்டு இடங்களிலும்‌ உபாஸ்யம்‌ (தியானிக்க வேண்டியது) வெவ்வேறாக உள்ளபடியால்‌ வித்யா பேதம்‌ (உபாஸன பேதம்‌) கட்டாயம்‌ தேறுமென பூர்வ பக்ஷம்‌ ( ஆஷேபம்‌) வர உபாஸனங்கள்‌ ஒன்றே தான்‌--பர ப்ரஹ்மத்தையே ஆகாச மென்றும்‌, ஆகாசத்தில்‌ உள்ள தென்றும்‌ சொல்ல வேணும்‌: ஏனெனில்‌ இரண்டிடத்திலும்‌, ஹ்ருதயாயதனத்வம்‌ (இதயத்தை இருப்பிடமாக உடைமை) ப்ரபஞ்ச தாரணம்‌ முதலிய குணங்கள்‌ சமானமாக உள்ளது, முன்பு முதலத்யாயத்தில்‌ தஹராதிகரணத்தில்‌ சர்ந்தோக்ய வாக்யம்‌ பரமாத்‌ மாவையே சொல்லும்‌ என்று நிச்சயித்திருக்க, வாஜஸனேயகத்தில்‌ (ப்ருஹதாரண்யகத்தில்‌) ஆகாசத்தில்‌ உள்ளவனுக்கு குணங்கள்‌ சொல்கிறபடியால்‌, குணமுள்ளவன்‌, பர ப்ரம்ஹம்‌ என்று தேறும்‌. அவனுக்கு இதயம்‌ ஆயதனம்‌ என்பதால்‌ இரண்டு உபநிடதங்‌களிலும்‌ ஒரே அர்த்த மென உபாஸனங்கள்‌ ஒன்றே தான்‌ என சித்தாந்தமாம்‌-ஆனாலும்‌ சாந்தோக்யத்தில (பாப சம்பந்தமின்மை) முதலிய எட்டு குணங்களுடன்‌ கூடிய ப்ரம்ஹம்‌ உபாஸ்யம்‌, ப்ருஹதாரண்யகத்தில்‌ குணங்களுடன்‌ கூடிய ப்ரஹ்மம்‌ உபாஸ்யமாகையால்‌ உபாஸன பேதம்‌ வரலாமே எனில்‌? ப்ருஹதாரண்யகத்தில்‌ சொல்லப்பட்ட வசித்வாதி குணங்கள்‌. சாந்தோக் யத்தில்‌ சொல்லப்பட்ட ஸத்ய ஸங்கல்ப குணத்தின்‌ விஸ்தாரமே யாதலால்‌ இரண்டு இடங்களில்‌ வேற்றுமை இல்லை எனத்‌ தெரியவும் –

17-உத்கீதமெனும்‌ ஸாமத்தின்‌ உபாஸனம்‌ கட்டாயம்‌ எல்லா கர்மங்களிலும்‌ உண்டா இல்லையா, என இங்கு விசாரம்‌ செய்யப் படுகிறது. இங்கு பூர்வ பஷமாவது-! (பலாச மரத்தால்‌ ஜூஹூ'(மரக் கரண்டி.) செய்க என்று விதிக்கப்பட்ட பர்ணதை (பலாச மரம்‌) எப்படி எல்லா யஜ்ஞங்களுக்குமே சேருமோ. அப்படி உத்கீத உபாஸனமும் எங்கும்‌ உண்டு என்பதாம்‌-சித்தாந்தம்‌ (பால் கறக்கும்‌ பாத்திரத்தினால்‌) பசுக்களைப் பயனாக அபேக்ஷிக்குமவன்‌ ஜலத்தைக்‌ கொணர வேணும்‌) எனும்‌ வாக்யத்தால்‌ சொல்லப்‌ பட்ட பசு கறக்கும்‌ பாத்திரம்‌, பயனில்‌ அபேஷிதிக்கு மவர்களுக்கு மட்டும்‌ எப்படி ப்ரணயன சாதனமென ஸ்வீகரிக்கப் படுகின்‌றதோ, அதே ந்யாயத்தை முன்னிட்டு உத்கீத உபாஸனமும்‌ அந்தந்த கர்மங்களின்‌ பயனைத் தவிர அதிகமான பயனை எதிர்பார்க்கிறவர்களால்‌ மட்டும்‌ செய்ய வேணும்‌. ஆகையால்‌ இது நித்யமல்ல என்பதேயாம்‌. (இந்த அதிகரணம்‌. இப்‌ பாதத்தில் முக்கியமல்ல -ப்ராசங்கிக்கமாகவே வந்தது )-

18-தஹர வித்யையில்‌ குணங்களின்‌ உபாஸனம்‌ விதிக்கப் பட்டுள்ள து, இங்கு குணங்களுடன்‌ குணியான (ஆஸ்ரயமான) ப்ரஹ்மத்திற்கும்‌ உபாஸனம்‌ உண்டா * இல்லையா என ஐயமெழில்‌ , முன்‌ சொல்லப்பட்ட குணியான ப்ரஹ்மத்திற்கு (தஹராகாசத்திற்கு) உபாஸனம்‌ சொல்லப்‌ பட்டுள்ளதால்‌, அதே ப்ரஹ்மமே இங்கு சொல்லப்படுகின்ற குணங்களுக்கும்‌ ஆஸ்ரயமாதலால்‌ தனியாக ப்ரஹ்மத்திற்கு உபாஸனம்‌ இங்கு (குணங்களின்‌ உபாஸனத்தில்‌) தேவை இல்லை என பூர்‌வ பக்ஷம்‌-சித்தாந்தமாவது, அபஹத பாப்மதவம்‌ (பாபமின்மை) முதலிய குணங்களுடன்‌ கூடிய ப்ரஹ்மத்தை உபாஸிக்கும் பொழுது, குணங்களுடன்‌ கூடிய தன்மையும்‌ வெவ்‌ வேறாக ஆகின்றபடியால்‌ ப்ரஹ்மத்திற்கும்‌ உபாஸனம்‌ அவஸ்யம் வேண்டும் –

19-தைத்தரீயத்தில்‌ ‘ அனுவாகத்தில்‌ சொல்லப்படும்‌ நாராயண ரூபமான பர ப்ரஹ்மம்‌, முன் சொல்லப்பட்ட தஹர வித்யைக்கு மட்டும்‌ உபாஸ்யமாகுமா * அல்லது எல்லா உபாஸனங்களுக்கும்‌ உபாஸ்யமா ? என சந்தேஹம் வரில்‌ இவ் வனுவாகத்தில்‌ ஓதப்பட்டுள்ளது தஹர வித்யையை நினைவூட்டும்‌ ஆகையால்‌, இவ் வாக்யத்தில்‌ சொல்லப்பட்ட நாராயணன்‌ தஹரோபாஸனத்தில்‌ மட்டும் தான்‌ உபாஸ்யம்‌ என பூர்‌வ பக்ஷம்‌. இதே அனுவாகத்தில்‌, மற்ற உபாஸனங்களில்‌ சொல்லப்பட்ட, அக்ஷரம்‌, சிவன்‌,சம்பு, பரப்ரஹ்மம்‌, பரஞ்சோதி, பரதத்வம்‌, பரமாத்மா இவைகளையும்‌ கூறி, அவ் வுபாஸநங்களை ஞாபகப்படுத்தி, அச் சப்தங்களால்‌ சொல்லப் பட்டவன்‌ நாராயணனே என்று சொல்லுகிறபடியால் எல்லா உபாஸனங்களிலும்‌ உபாஸ்யன்‌ ஸ்ரீமந் நாராயணனே யாம்‌ என ஸித்தாந்தம் –

20–ப்ருஹதாரண்யகத்தில்‌ ஓதப்பட்டுள்ள வாக்வத்தில்‌ ஜ்ஞான ரூபமான மனஸ்சிதாதிகள்‌ அக்நிகள்‌ (யஜ்ஞயத்தில்‌, ஆஹவனீயாக்கிக்கு ஆதாரமாக செங்கற்களால்‌ நிர்மாணம்‌ செய்யப்பட்ட மேடை அக்நி சப்தத்தால்‌ சொல்லப்படும்‌) செங்கற்களால்‌ செய்யப்பட்ட மேடைகளின்‌ ஸ்தானத்தில்‌ சொல்லப் பட்டுள்ளதால்‌, இவைகளும்‌ அவைகள் போன்று, யஜ்கயத்திற்கே (கிரியைக்கு) அங்கமாமென பூர்வபஷம்‌ தோன்ற ச்ருதியாலும்‌, வாக்யங்களாலும்‌, லிங்கத்தாலும்‌ உபாஸன ரூபமான வித்யைக்குத் தான்‌ இவைகள்‌ சேர்ந்தவையாம்‌. (இதன்‌ விரிவை பாஷ்யத்தில்‌ காண்‌௧) ப்ராஸங்கிகமானது இது –

21-உபாஸனங்களில்‌’பர ப்ரஹ்மத்தை (உபா ஸ்யத்தை) தியானிப்பது போல்‌ உபாஸகனான ஜீவ ஸ்வரூபத்தையும்‌ அனுஸந்திக்க வேணும் என முன்பே (1-4-6) என்று தீர்மானிக்கப் பட்டது. அஜ் ஜீவனுக்கு, கர்த்ருத்வம்‌, போக்த்ருத்வம்‌ முதலியவை ஸம்ஸார தசையில்‌ உள்ளன. அவைகளுடன்‌ உபாஸிக்க வேண்டுமா ? அல்லது மோக்ஷ ஸமயத்தில்‌ வரும்‌ அபஹத பாப்மத்வம்‌ (பாபமின்மை’ முதலிய குணங்களுடன்‌ கூடிய தன்மையுடனா ?என ஐயமெழில்‌--உபாஸன ஸமயத்தில்‌ உள்ளதான கர்த்ருத்வாதி தர்மங்களுடன்‌ கூடியவனாகத் தான்‌ உபாஸிக்க வேண்டும்‌. உபாஸன ஸமயத்தில்‌ மனதில்‌ அவைகளுக்கு மட்டும்‌ ஸ்மரணம்‌ உள்ளது என்பதை எல்லோரும்‌ அறிவர்‌ என்பது பூர்வ பக்ஷம்‌-உபாஸனம்‌ செய்யும்‌ ஜீவனுக்கு சுத்தம்‌, அசுத்தம்‌ எனும்‌ இரண்டு ரூபங்கள்‌ உள்ளன. அவைகளில்‌ சுத்தமான ரூபம்‌ மோக்ஷ தசையில்‌ பயனாகவும்‌ கருதக் கூடியது யாதோ அதையே தான்‌ உபாஸிக்க வேண்டும்‌. தத் க்ரது ந்யாயத்தின்‌ (எப்படி உபாஸனமோ அதே மாதிரி பலம்‌ வரும்‌) தீர்மானமும்‌ அது தான்‌ ஆகையால்‌ நிர்மலமான ஆகாரத்துடன்‌ கூடிய ஜீவ ப்ராப்தியே பலமென்பது உபநிஷத்‌ ஸம்மதம்‌. ஆனால்‌ ரூபத்திற்கு உபஸ்‌திதி எப்படி எனில்‌, பயனைக் கருதியே உலகில்‌ மனிதனுக்கு ஒரு செயலில்‌ ப்ரவ்ருத்தி ஏற்படுவதால்‌ முதலில்‌ பயனுக்கே உபஸ்திதியாம்‌. இங்கு சுத்த ரூபமான அபஹத் பாப்மத்‌ வாதிகள்‌ பயனேயான படியால்‌, அவைகளுக்கு உபஸ்திதி உண்டு. ஆகையால்‌, சுத்த ஸ்வரூபத்துடன்‌ கூடிய ஜீவனே உபாஸ்யன்‌ என சித்தாந்தமாகும் –

22-ஸ்ருதி வாக்யங்களால்‌ விதிக்கப்பட்ட உத்கீதாத் யுபாஸனங்கள்‌ எந்த சாகைகளில்‌ சொல்லப் பட்டுள்ளனவோ, அங்கு மட்டும்‌ தானா ? எல்லா சாகைகளிலும்‌ உள்ள உத்கீதங்களுக்கும்‌ உண்டா என சந்தேகம்‌ வரில்‌,எங்கு ஓதப்பட்டுள்ளதோ, கிட்டி யுள்‌ள படியால்‌ அந்தந்த சாகைகளில் மட்டும்‌ உத்கீத உபாஸனம்‌ சேரும்‌ என பூர்வ பஷம்‌ வர, ஸித்தாந்தம்‌- ஸர்வ ஸாகா ந்யாயத்தாலும் -ஓர் இடத்தில்‌ ஓதப் பட்டிருந்தாலும்‌ எல்லா சாகைகளிலும்‌ அன்வயிக்கலாம்‌). உத்கீத உபாஸநம்‌ எனும்‌ ச்ருதி (சப்தம்‌) ப்ரமாணத்தாலும்‌, துர்பலமான, கிட்டுதல்‌ எனும்‌ ப்ரமாணம்‌ பாதிக்கப்படலாம்‌. ஆகையால்‌ எங்கும்‌ உத்கீத உபாஸனம்‌ உண்டு என்பதாம்-

23-சாந்தோக்ய உபநிடதத்தில்‌ ஸ்ருதி ஆரம்பித்து வைஸ்வாநர வித்யை ஓதப் பட்டுள்ளது. அதில்‌ பரமாத்மா (பர ப்ரஹ்மம்‌) எல்லா உலகங்களையும்‌ தன்‌ சரீரமாகக்‌ கொண்டுள்ளான்‌ என உபாஸிக்க வேணும்‌ எனவும்‌ சொல்லப் பட்டுள்ளது. தியொள- ஸ்வர்கம்‌ பரமாத்மாவின்‌ தலை, சூர்யன்‌ -கண்‌, வாயு ப்ராணன்‌, ஆகாசம்‌ – இடை, நீர்‌- துடைகள்‌, பூமி- திருவடி எனவும்‌ கூறப்பட்டுள்ளது. இங்கு, தனித் தனியாக ஒவ்வொரு அவயவங்களாக உபாஸனம்‌ செய்ய வேணுமா அல்லது உலகங்கள்‌ எல்லாம்‌ பகவானின்‌ சரீரம்‌ எனச் சேர்த்து உபாஸனம்‌ செய்ய வேண்டுமா என ஸந்தேஹம்‌ எழுந்தால்‌ ஸ்ருதிகளிலேயே முதலில் உள்ள வாக்யங்களில்‌ ஒவ்வொரு அவயவ உபாஸனத்திற்கும்‌ பயன்‌ ஓதப் பட்டிருக்கிற படியால்‌ தனித் தனியாகவே உபாஸனம்‌ தான்‌ தகும்‌ என பூர்வ பக்ஷம்‌ ( ஆக்ஷேபம்‌)-ஸித்தாந்தம்‌-ஸ்ருதிகளிலேயே அனேக வாக்யங்களால்‌ தனி உபாஸனங்களில்‌ தோஷங்கள்‌ கூறியுள்ள படியால்‌ எல்லாம்‌ சேர்த்து ஓரே சரீரமாகத் தான்‌ உபாஸிக்க வேணும்‌-

24-எல்லா வித்யைகளும்‌ (உபாஸனங்களும்‌) ஒன்‌றே தானா அல்லது வெவ்வேறா என இங்கு விசாரிக்கப் படுகிறது. கீழ் ஸூத்திரத்தில்‌ சொல்லப்பட்ட காரணங்கள்‌ ஒரே உபாஸனம்‌ என ஸாதிப்பதற்கு, வேத்யம்‌ ப்ரஹ்மம்‌ ஒன்‌று, பலமும்‌ ப்ரஹ்மம்‌ ஒன்று. ப்ரம்ம வித்யை எனப்‌ பெயரும்‌ ஒன்று விதி ப்ரமாணமும்‌ ஒன்‌று. உள்ளபடி உபாஸனங்கள்‌ எல்லாம்‌ ஒன்றே தான்‌ என பூர்வ பக்ஷம்‌–ஸத் வித்யை, தஹர வித்யை, வைஸ்வாநர வித்யை என பெயர்கள்‌ வெவ்வேறாக உள்ள படியால்‌ உபாஸனங்கள்‌ வேறாகவே கொள்ள வேண்டும்‌. மேலும்‌, அந்தந்த வித்யா, (உபாஸன ) ப்ரகரணத்தில்‌ சொன்ன குணங்கள்‌ வேறாக உளளபடியால்‌ உபாஸ்ய ஸ்ரூபமும்‌ வேறாம்‌ மத்வாதி வித்யைகளில்‌ மிச்ரமான பலம்‌, இதர வித்யைகளில்‌ சுத்தமான ப்ரம்ஹ ப்ராப்தி பலம்‌: ஆகையால்‌ பல பேதமும்‌ கொள்ள வேண்டியது, ஆக, உபாஸன பேதம்‌ தவிர்க்க முடியாதது என ஸித்தாந்தம்‌-இங்கு சுருத ப்ரகாசிகையில்‌ – பாஷ்யத்தில்‌ உள்ள ஆதி சப்தத்திற்கு (சரணாகதி) என விவரணம்‌ உள்ள படியால்‌ சரணாகதி மோக்ஷ ஸாதன மென்பதில்‌ பாஷ்யகார ஸம்பிரதாயஸ்த்தர்க்கு விவாதம்‌ எழக்‌ காரணமே இல்லை. அதை மறுக்கில்‌ ச்ருத ப்ரகாசிகை ஸ்ரீபாஷ்யாதிகளூக்கு விரோதம்‌ தவிர்க்க முடியாதது –

25-25-எல்லா வித்யைகளையும்‌ (௨பாஸனங்களை) ஒரே புருஷன்‌ செய்யலாமா (ஸமுச்சயமா) அல்லது ஏதாவது ஒன்று தானா ? என்று ஐயமெழில்‌, ஜ்யோதிஷ்டோமம்‌, தர்ச பூர்ணமாஸம்‌, அக்நி ஹோத்திரம்‌ முதலிய ஸ்வர்க ஸாதனமான கர்மங்களை எப்படி ஒரே புருஷன்‌ செய்யலாம்‌ என ஸித்தாந்தமோ அப்படியே எல்லா வித்யைகளையும்‌ ஒருவனிடத்தில்‌ சேர்க்கலாம்‌ என பூர்வ பக்ஷம்‌-சரீரம்‌ முடியும் வரை ஒரே உபாஸனம்‌ தான்‌ செய்ய வேணும்‌ என சொல்லப்பட்ட படியால்‌ இதர உபாஸனங்களுக்கு அவகாசம்‌ இல்லாத படியால்‌ விகல்பமேயாம்‌. ஏதாவது ஒரு உபாஸனம் தான்‌ என்பது ஸித்தாந்தம்‌.–

26-‘ஸ்ருதி வாக்யங்களால்‌ சொல்லப்பட்ட உபாஸனங்கள்‌ க்ரதுக்களில்‌ உத்கீதம் போல்‌ கட்டாயம்‌ செய்யப்பட வேண்டியவையா அல்லது வேறே ஸ்ருதியில் சொல்லப்பட்ட கோதோஹனம்‌ (பால்‌ கறக்கும்‌ பாத்திரம்‌) போன்று பலத்தில்‌ ஆசை யிருந்தால்‌ செய்யலாம்‌, இல்லை எனில்‌ தேவை இல்லை என விகல்பமா என சந்தேஹம்‌ வரில்‌-கோதோஹனத்தில்‌ தன்‌ வாக்யத்திலேயே பயனும்‌ சொல்லப் பட்டுள்ளபடியால்‌ விகல்பம் தரும்‌, உத்கீத வாக்யத்தில்‌ அது இல்லை. மேலும்‌ கோதோஹனத்‌ திற்கு விதானம்‌ உண்டு. இங்கு அதில்லை. இன்னும்‌ சில காரணங்களால்‌ உத்கீத உபாஸனம்‌ புருஷார்த்தமாகா, ஆகையால்‌ கட்டாயம்‌ செய்ய வேணும்‌ என பூர்வ பக்ஷம்‌
(ஆஷேபம்‌) ஸித்தாந்தம்‌, கோதோஹனம் போல்‌ தன்‌ வாக்யத்தில்‌ பயனை ஓதாமலிருந்தாலும்‌ ஸ்ருதி வாக்யத்தில்‌ த்ருதீயா விபக்தியால்‌ பல காரணத்வம்‌ ஸ்பஷ்டமாக சொல்லப் பட்டுள்ளது. ஆகையால்‌ உத்கீத உபாஸனமும்‌ புருஷார்த்தமேயாம்‌ ஆகையால்‌ பலாபேக்ஷை இல்லை எனில்‌ இதை செய்ய வேணும்‌ எனக்‌ கட்டாயம்‌ இல்லை. ஆகையால்‌ விகல்பம்‌ (செய்தால்‌ பலம்‌ உண்டு. பயனில்‌ ஆசை யில்லை எனில்‌ விட்டு விடலாம்‌) என்பதாம்‌-ஆக இந்த பாதத்தில்‌ மோக்ஷ்த்திற்கு ஸாதனமான உபாஸன ந்யாஸாதிகளைச்‌ சொல்லி, ப்ரஹ்மத்தின்‌ குணங்களையும்‌ பரக்கப்‌ பேசியுள்ள படியால்‌, ஸாதனத்தின்‌ அனுஷ்டான மில்லை எனில்‌ மோக்ஷமில்லை என்பதையும்‌ ப்ரஹ்மம்‌ நிர்குணமன்று என்பதையும்‌ ஸ்ரீவியாஸரும்‌ ஸ்ரீபாஷ்யகாரரும்‌ அழகாக ஸித்தாந்தம்‌ செய்தருனினார்கள்‌-

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே
ஸ்ரீ உ.வே.வரதாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய மூன்றாம் அத்யாயம் – இரண்டாம் பாத ஸாரம்- ஸ்ரீ உ.வே. கொத்த மங்கலம்‌ வரதாசார்ய ஸ்வாமிகள்–

September 29, 2026

குத்ருஷ்டி குஹநா முகே நிபதத: பர ப்ரம்ஹண:
கர க்ரஹவிசக்ஷண: ஐயதி லக்ஷ்மணோ $யம்முநி
: ”
அநேகவித ஆச்சர்யங்களைத்‌ தன்னுள் கொண்ட இப் புண்ய பாரதத்தில்‌ எல்லா வற்றிலும்‌ தலையான ஆச்சர்யம்‌ இதன்‌ * அத்யாத்ம சாஸ்திரம்‌ ‘. இதை ப்ரதிபாதிப்பன ப்ரஹ்ம ஸூத்ரங்கள் நான்கு அத்யாயங்களையும்‌, பதினாறு பாதங்களையும்‌, நூற்று ஐம்பத்‌தாறு அதிகரணங்களையும் , ஜந் நூற்று நாற்பத்தைக்து ஸூத்ரங்களையும்‌ உட் கொண்ட இங்த சாஸ்திரத்தில்‌ முக்யமானது எது? என்றால் , ஒவ்வொருவர்‌ ஒவ்வொரு விதம்‌ மறு மொழி சொல்லலாம்‌. ஆலை உண்மையில்‌ ‘ உபய லிங்க பாதம்‌ ” என்கிற மூன்றாம்‌ அத்யாயத்தின்‌ இரண்டாம் பாதங் தான்‌ இந்த சாஸ்திரத்தின்‌ முக்யமான ஸாரமான பாகமாகும்

பர ப்ரஹ்மம் என்கிற பரமாத்மாவைப் பற்றி ஆயிரம்‌ சர்ச்சை செய்யலாம்‌, பதினாயிரம்‌ வாதங்கள்‌ புரியலாம்‌. ஆனால் நாம் அதனால்‌ அடையும்‌ பயன்‌ யாது? என வினவினால்‌-உபய லிங்க பாத மின்றி மறு மொழி கூற வியலாது. பகவானின்‌ மஹிமை ஓராயிரம்‌ இருப்பினும்‌ *உபய லிங்கம் * என்கிற இந்த அம்சம்‌ இன்றி நமக்கு அவனால்‌ ஒரு உபயோகமும்‌ ஆவது ஸாத்யமில்லை -ஹேய ப்ரத்ய நீகத்வ்ம் ‘, * கல்யாண குணாகரத்வம்‌ ‘ இவை தான்‌ உபய லிங்கங்கள்‌. தோஷங்களுக்கு நேர்‌ எதிரானவன்‌ பரம புருஷன்‌. அவ்வளவு மட்டுமல்லாது அனந்த கல்யாண குணாணாகரன்‌. இவ் விரண்டு தர்மமும்‌ பரமாத்மனிடம்‌ இல்லா விடில்‌ நாம்‌ அவனிடமிருந்து எந்தப் பயனை எவ்விதம்‌ அடைய முடியும்‌ ! அவனும்‌ நம் போல்‌ ஒரு சேதன னாகில் , கோப தாபாதிகளுக்கு வசமானவனாகில்‌ அவனால்‌ நாம்‌ என்ன பயன்‌ பெற முடியும்‌, அவன்‌ குறை யொன்றுமில்லாத கோவிந்தன்‌. குணக் கடல்‌. ஆகையால்‌ நாம்‌ அவனை அண்டி கரை சேர முடியும்‌- இந்த விசுவாசத்தை நமக்கு அளித்து நம்மை உஜ்ஜீவிக்கச்‌ செய்யும்‌ பரமாத்ம குணங்களில்‌ இவையே பிரதானமானவை –

அதிலும்‌, ‘ ஹேய ரஹிதன்‌ * என்று நம்‌ ஆசார்யர்கள்‌ கூறாமல்‌ ‘ஹேய ப்ரத்யனீகன்‌’ என்று கூறுவதிலுள்ள அழகையும்‌ கவனிக்க வேண்டும்‌. ஹேய ரஹிதன்‌ என்றால்‌ அவித்யாதி தோஷமற்றவன்‌ என்று பொருளாகும்‌. முக்தாத்மாக்களும்‌, நித்ய ஸூரிகளும்‌ அவித்யை இல்லாதவரே. பகவான்‌ இவ்விதமல்ல, அவன்‌ ஸ்வரூபமே தோஷத்திற்கு எதிர் தட்டானது. இதர ஆத்மாக்களின்‌ ஸ்வரூபம்‌ ஹேய ப்ரத்யனீகமன்று. நித்ய, முக்தர்‌களின்‌ ஸ்வரூபமும்‌ அத்தகைய தன்றென்று ஆசாரியர்கள்‌ நிரூபித்துள்ளனர்‌. பகவானின்‌ ஸத்ய ஸங்கல்பத்தால்‌ அவர்கள்‌ அவித்யை விலகினவரே தவிர, தானாக அதற்கு விலக்கான வர்களன்று. இங்ஙனம்‌ பகவானின்‌ ஸ்வரூபமே தோஷத்தை அண்ட விடாது என்று சொல்வதால்‌, நமக்கும்‌ அவனுக்கும்‌ இருக்கும்‌ வைலக்ஷண்யத்தைக் கூறின படியாகிறது. இதனால்‌ அவன்‌ நம்மை ரஷிக்கக்‌ கூடியவன்‌, நம் போலல்லவவன்‌ என்கிற விசுவாசம்‌ பிறந்து உதவுகிறது. தோஷமற்றவனாயினும்‌, க்ரூர ஸ்வபாவத்தானாயின்‌, அல்லது உதாஸீன ஸ்வபாவத்தானாயின்‌, அவனால்‌ யாதொரு பயனும்‌ விளையாது. அதற்காக அவனை அனந்த கல்யாண குணகண ஸாகரன்‌ ” என்றது.- * ஆச்ரித வாத்ஸல்யைக ஜலதே ‘ * அனாலோசித விசேஷாசேஷ லோக சரண்ய ‘ ‘ப்ரணதார்த்திஹர ‘ என்று முதலான ஆக்ரந்தநங்களைக்‌ கேட்ட போது மயிர்க் கூச்சலெறிவது சகஜம்‌. இவை யெல்லாம்‌ பகவானிடம்‌ நிறைந்திருப்ப தால் தான்‌ நாம்‌ கரை யேற முடியும்‌.

ஆக ஹேய ப்ரத்யனீகன்‌, கல்யாண குணாகரன்‌ என்கிற உபய லிங்கம் தான்‌ நமக்கு ரக்ஷ்யமான பகவத்‌ ஸ்வரூபங்கள்‌. இவைகளை ஸ்தாபிக்குமது ! உபய லிங்காதி கரணத்தை’ உட் கொண்ட :* உபயலிங்க பாதம்‌ ‘தான்‌. இது வேதாந்த சாஸ்திரத்தின்‌ உயிர் நாடி. இதை உலகில்‌ எடுத்துக் காட்டி, அதன்படி பகவானின்‌ குணாநுபவங்களில்‌ ஈடுபட்டு வாழ்ந்து காட்டிய வள்ளல்‌ நம்மிராமாநுஜன்‌. குத்ருஷ்டி குஹனாமுகே–இத்யாதி ஸ்லோகத்தில்‌ இதைத் தான்‌ ஆசாரியர்‌ அநுஸந்தித்து உகக்கிறார்‌-இந்த ஸ்லோகம்‌ தங்களைக்‌ குறிப்ப தாக எண்ணி ஒரு சிலர்‌ குறை கூறுவது உண்டு. பகவானின்‌ விக்ரஹ விபூத்யாதிகளையும்‌, அவனுடைய கல்யாண குணங்களையும்‌ எதிர்ப்பவனுக்காகவே ‘குத்ருஷ்டி” என்ற பதம்‌ வந்துள்ளதே தவிர யாதொரு வ்யக்தியையும்‌ அது குறிப்பதல்ல. அது நாத்திகர்களைக்‌ குறிப்பதாகும்‌. *ஆதிகர்த்தா நாராயண:…… ஞான ஐச்வர்ய சக்தி பல வீர்ய தேஜோபி; ஸதா ஸம்பன்ன: ‘ என்று ஸ்ரீ ஆதிசங்கரர்‌ நாராயணனைக்‌ கொண்டாடுகிறார்‌. * தோஷ ஹீனம்‌, குணபூயிஷ்டம்‌ ப்ரஹ்ம” என்று அவர்‌ வழிவந்த மகா பண்டிதரான விவரணகாரர்‌ கூறுகிறார்‌. ஆகையால்‌ பகவானின்‌ இந்த உபய லிங்கங்களை எந்த ஆஸ்திகரும்‌ எதிர்ப்பதில்லை. அனந்தர காலத்தில்‌ வந்த சில சூன்யவாதி வாசனையுள்ள பண்டிதர்கள்‌ தலை யெடுத்து பகவானின்‌ குண, விக்ரக, விபூதிகளை யழிக்கப்‌ புறப்பட்டபடியால்‌ அவ் விதம்‌ சொல்ல வேண்டி வந்தது.-ராமானுஜ தர்சனத்தின்‌ உயிர்‌ நாடியே இதில் தான்‌ அடங்கி யுள்ளது அவன்‌ உபய விபூதி நாயகன்‌. எல்லாம்‌ அவன்‌ விபூதிகள்‌. அவனுடைய கல்யாண குணங்களில்‌ ஈடுபட்டவனுக்கு இவ்வுலகின் ௧ண்‌ த்வேஷ ப்ரஸக்தியே இராது. *வைகுண்டவ : ஸே5பி நமே$ பிலாஷ:’ என்று கோஷிக்கத்‌ தோன்றும்‌. இத்தகைய நிலையை நாம்‌ அடையச் செய்யும்‌ குணங்களில்‌, இந்த இரு குணங்களே தலையாயவை. ஆகவே தான்‌ இந்த பாதத்தின்‌ பெயரே இதன் மூலம்‌ விளங்குவதாகியது.-இந்த பாதத்தில்‌ நாற்பது ஸூத்ரங்களும்‌. எட்டு அதிகரணங்களும்‌ உள்ளன-இவற்றின்‌ அர்த்தத்தை -(அதிகரண ஸாராவளீ 3–2–32) ஸங்க்ரஹித்துள்ளார்-

கனவில்‌ காணும்‌ விசித்ரப்‌ பொருள்களை ஸ்ருஷ்டிப்பவன்‌ பகவான்‌. தாய்‌ குழந்தையைத்‌ தன்‌ மடியிலிட்டுத்‌ தூங்கச் செய்து காப்பது போல்‌, நித்ராதி அவஸ்தைகளில்‌ நம்மை தன்னுடன்‌ வைத்துக் கொண்டு காப்பாற்றி, சமயத்தில்‌ விழிப்பைக்‌ கொடுத்து காப்‌பாற்றுவன்‌. அனந்த கல்யாண குண ஸம்பன்னன்‌. உலகை யெல்லாம்‌ தன்னுடம்பாகக்‌ கொண்டு ஸர்வாந்தர்யாமியாக யிருப்பவன்‌, ஒப்புயர் வற்றவன்‌. ஸர்வபலப்ரதன்‌, மோக்ஷம்‌ ஒன்றை மட்டும்‌ கொடுப்பவனல்லன்‌. வேண்டியதை கொடுக்கும்‌ கல்ப விருக்ஷம்‌. இங்ஙன மெல்லாம்‌ அறிவதன்‌ நோக்கம்‌, பக்தியை பெருக்கிக்‌ கொள்வது தான்‌. பர பக்தி பர ஞான பரம பக்தி–என்று பக்தியில்‌ எத்தனையோ படிகள்‌. பகவானின்‌ குணங்களை உணர உணரத் தான்‌ இந்த பக்தி வளரும்‌, *ஸததம்‌ கீர்த்தயந்தோமாம்‌ ” என்கிறது பகவத்‌ கீதை: இந்த பகவதநுபவத்தை உலகுக்குக்‌ காட்டிக்‌ கொடுத்த ஆழ்வார்களின்‌ வழி வந்த நம்மிராமாநுசன்‌ நிச்சயமாக நாத்திகர்களான குத்ருஷ்டிகளின்‌ கண்பட்டு–எதற்கும்‌ உபயோகமாகாதபடி ஒரு நிலை யடைந்த பகவானின்‌ ஸகல விபூதிகளையும்‌ மீட்டுக் கொடுத்து உலகைக்‌ காப்பாற்றிய மஹா புருஷன்‌ என்கிறதை ஆழமாக உணர்ந்து தன்யனாவதே நம் பாக்கியம்‌.

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ.வே. கொத்த மங்கலம்‌ வரதாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய மூன்றாம் அத்யாயம் – முதல் பாத ஸாரம்- ஸ்ரீ உ.வே. வித்வான்‌. பெருக்காரணை மாடபூஷி. சக்ரவர்த்தி யாசார்ய ஸ்வாமிகள்–

September 29, 2026

ஸ்ரீ வ்யாஸ மஹரிஷியால்‌ அருளிச் செய்யப்பட்டது பிரஹ்ம ஸூத்ரம்‌, இதற்கு வேதாந்த சாஸ்திரம்‌ என்றும்‌ சாரீரக மீமாம்ஸா என்றும்‌ பெயர்‌ உண்டு, இது உபநிஷத்‌ பாகத்தின்‌ அர்த்தத்தை நன்றாக வெளிப்படுத்துவதற்கு அவதரித்தது. இது நான்கு அத்தியாயங்கள்‌ கொண்டது. முதல்‌ இரண்டு அத்தியாயங்கள்‌ ஸித்தமான பர பிரஹ்ம ஸ்வரூபத்தை நிரூபணம்‌ செய்ய வந்தவை, பிந்திய இரண்டு அத்தியாயங்கள்‌ ஸாத்யமான உபாய பூத உபாஸனத்தையும்‌ பலத்தையும்‌ நிரூபணம்‌ செய்ய வந்தவை-ஸர்வ ஜகத்திற்கும்‌ பர ப்ரஹ்மம்‌ காரணம்‌ என்றும்‌, எல்லா தத்துவங்களைக்‌ காட்டிலும்‌ விலக்ஷணம்‌ என்றும்‌, மோக்ஷத்தை விரும்புகின்றவர்களால்‌ உபாஸிககத்‌ தகுந்தவர்‌ என்றும்‌ உபநிஷத்துக்களைக் கொண்டு நடந்த இரண்டு அத்தியாயங்கள்‌ மூலமாக ஸ்தாபித்‌தார்‌ வேத வ்யாஸர்‌. மூன்றாவது அத்தியாயம்‌ உபாய பூதமான உபாஸனத்தைச்‌ சொல்ல வந்தது. உபாஸனத்தில்‌ இழியமவனுக்கு முதல்‌ முதலாக இரண்டு அம்சம்‌ வேண்டும்‌ 1-அடையப்படும்‌ பர ப்ரஹ்மத்தைக் காட்டிலும்‌ வேறு பட்ட விஷயங்களில்‌ ஆசை யின்மை,-2-ப்ராப்யமான ப்ரஹ்மனிடத்தில்‌ ஆசை, இவை இரண்டும்‌ உள்ளவன் தான்‌ பரமாத்ம உபாஸனத்தில்‌ இழிவான்‌. சிற்றின்பத்திலேயே ஆசையோடு அழுந்திக் கிடப்பவன்‌ பேரின்பத்தில்‌ இழியமாட்டான்‌ அல்லவா? அதற்காக ஷுத்ரமான இன்பத்தில்‌ வைராக்யம்‌ வேண்டும்‌. இந்த வைராக்யமும்‌ அதிலுள்ள தோஷங்களை பார்ப்பவனுக்கே ஏற்படும்‌. எனவே இந்த ஜீவாத்மாவிற்கு இந்த லோகத்திலும்‌, பர லோகத்திலும்‌ உள்ள தோஷங்களைக் கூற வேண்டும்‌. இதைக்‌ காட்டவே வைராக்ய பாதம்‌ ஏற்பட்டது.

இங்கு சாமான்யமாகவே ஒரு சங்கை இடலாம்‌, ஸம்ஸாரத்தின்‌ அடிச்சூட்டை தாங்க முடியாமல்‌ மனம்‌ நொந்து தளர்ந்து இனி ஸம்சார ஸம்பந்தமே வேண்டாம்‌ என்று ஜனன மரணாதிகளுக்கு பயந்து வேதாந்த சாஸ்திரத்தை கேட்க விரும்புகின்றனர்‌ உலகில்‌. ஆகையால முதலிலேயே வைராக்யம்‌ வந்து விட்டது, மறு படி அதற்காக ஒரு பாதம்‌ ஏன்‌ ஏற் படுத்த வேண்டும்‌ என்‌று, இதற்கு உத்தரம் –வைராக்யம்‌ இரண்டு வகைப்படுகிறது-ப்ரஹ்ம ஸ்வரூபத்தை நன்றாக ஆசார்யனிடத்தில்‌ அறிந்து கொள்ள வேண்டும்‌ என்கிற ஆசை ஒருவனுக்கு ஏற்படுகிறது. பிறகு நன்கு அறிய முயற்சிக்கிறான்‌, ஆசார்யனிடமும்‌ செல்கிறான்‌, ஸதாசார்யர்களின்‌ உபதேசம்‌. மூலமாக நன்றாக ப்ரஹ்மத்தையும்‌, அதை அடையும்‌ வழியையும்‌ தெரிந்து கொள்கிறான்‌. இவன்‌ வேதாந்த சாஸ்திரத்தை ஸ்ரவணம்‌ செய்ய விரும்பினதற்குக்‌ காரணம்‌ எது என்றால்‌ வைராக்யம் தான்‌ என்று சொல்ல வேண்டும்‌, ஸம்சாரத்தில்‌ பல வித கஷ்டங்களை அனுபவித்தோம்‌, ஸத் விஷயங்களை யாவது கேட்டு மன நிம்மதியை அடையலாம்‌ என்று ஸ்ரவணம்‌ செய்ய ஆசார்யனிடம்‌ போகிறான்‌. இது முதல்‌ பர்வம்‌, ஆசார்யன்‌ மூலமாகக்‌ கேட்ட பிறகு தனக்கு எல்லா அவஸ்தைகளிலும்‌ உள்ள எல்லா தோஷங்களையும்‌ தனது ஸ்வரூபத்தையும்‌ நன்கு உணர்ந்து விடுகிறான்‌, ஏதோ ஆனந்தத்‌தைக்‌ கொடுக்கக் கூடியதாக நினைத்து இருந்த ஸ்வர்க்காதிகளும்‌ பரமாத்ம ஆனந்தத்தைம்‌ பராமர்சித்தால்‌ நரகத்திற்கு ஸமானங்கள என்பதை நன்கு அறிந்து கொள்கிறான. உடனடியாக அவனை அடைய உபாயமாகச்‌ சொல்லப்பட்ட உபாஸனத்தில்‌ இறங்குகிறான்‌. அது இரண்டாவது பர்வம்‌. இதை அறிவிக்கவே இந்த பாதம்‌ ஏற்பட்டது.
முதலில்‌ வந்த வைராக்யம்‌ சாஸ்த்ர ஸ்ரவணத்துக்கு அநுகுணமானது. இப்பொமுது கூறப்படும்‌ வைராக்யம்‌ உபாஸனததிற்கு அனுகுணமானது. -விச்வாசத்தில்‌ ஏற்றக் குறைவு இருப்பது போல்‌ வைராக்கியத்திலும்‌ ஏற்றக் குறைவு உண்டு-இந்த பாதத்தில்‌ ஆறு அதிகரணங்கள்‌ உள்ளன. முதல்‌ அதிகரணத்தில்‌ ஸ்வர்கத்‌திற்கு போகும்‌ அதிகாரியினுடைய அவஸ்தையும்‌ அங்குள்ள தசையும்‌ கூறப்படுகின்றன. இரண்டாவது அதிகரணத்தில்‌ யாகம்‌ முதலிய ஸத் கர்மங்களைச்‌ செய்து ஸ்வர்க்கத்துக்குச்‌ சென்று போகாபாஸங்களை அனுபவித்துத்‌ ‘ திரும்பியும்‌ இங்கு பாப புண்யங்கள்‌ மூலமாக பிறக்கின்றான்‌ என்று சொல்லப்படுகிறது. மூன்றாவதில்‌ இதைச் செய்‌ என்று சாஸ்திரங்களிற்‌ விஹிதமான ஸத்கர்மங்களைச்‌ செய்யாதவர்களும்‌ இதைச் செய்ய வேண்டாம்‌ என்று நிஷித்தமான கர்மங்களைச்‌ செய்கிறவர்களுமான அநிஷ்டாதிகாரிகளைப்‌ பற்றின விஷயம்‌ விசாரிக்கப்படுகிறது. நான்காவதில்‌ ஸ்வர்க்கத்தில்‌ இருந்து திரும்பி வரும்‌ இஷ்டாதிகாரிகளுக்கு வழியில்‌ ஆகாசம்‌ முதலியவைகளோடு ஓட்டிக் கொண்டு ஞானம்‌, சுகம்‌, துக்கம்‌, எதுவுமின்றி வருகை பற்றிய விஷயம்‌ பேசப்படுகிறது. ஜந்தாவதில்‌ ஆகாயம்‌, வாயு, அப்ரம்‌ முதலியவைகளோடு சம்பந்தப்பட்டு வருகிறவர்களுக்கு அந்தந்த சம்பந்தத்தில்‌ கொஞ்ச காலமே விளம்பம்‌ உண்டு. அதாவது ஆகாசாதிகளில்‌ கிஞ்சித்‌ காலம்‌ சம்பந்தப்பட்டு அப்படியே இருப்பார்கள்‌. பிறகு அதிலிருந்து விடுபட்டு நெல்‌ முதலியவைகளில்‌ சம்பந்தப்படுவார்கள்‌. இங்கு இவர்களுக்கு அதிக கால சம்பந்தம்‌ உண்டு என்று சொல்லப்படுகிறது. ஆறாவது அதிகரணத்தில்‌ தாயின்‌ கர்ப வாஸம்‌ வந்த பிறகு தான்‌ சரீரம்‌ உண்டாகிறது, அதற்கு முன் வரை சிற்சில பொருள்களுடன்‌ சம்பந்த மாத்திரமே என்று நிரூபணம்‌ செய்யப்படுகிறது.-சாந்தோக்ய உபநிஷத்தில்‌ ஐந்தாவது ப்ரபாடகம்‌ இரண்டாவது கண்டம்‌ முதல்‌ 10வது கண்டம்‌ வரையில்‌ உள்ள உபநிஷத்‌ வாக்யங்கள்‌ இங்கு விசாரிக்கப்படுகின்றன-

இந்த விஷய வாக்கியங்களை ஆதாரமாகக்‌ கொண்டு தான்‌ இந்த பாதம்‌ ப்ராப்தமானது, அருணனுடைய குமாரர்‌ ஆருணீ, இவர்‌ குமாரர்‌ ஆருணேயர்‌, இவருக்கு ச்வேத கேது என்று பெயர்‌: இவர்‌ ஒரு சமயம்‌ பாஞ்சால காட்டில்‌ உள்ள அரச சபைக்குச்‌ சென்றார்‌. ஜீபலருடைய குமாரரான ப்ரவாஹணன்‌ என்னும்‌ அரசன்‌ ச்வேத கேதுவைப்‌ பார்த்து உன்‌ தந்‌தை மூலமாக ஸகல சாஸ்திரங்களையும்‌ அப்யஸிதது இருக்கிறாயா என்று கேட்டான்‌. அதற்கு எல்லாம்‌ படித்துள்ளேன்‌ என்றார்‌ இவர்‌, அரசன்‌ இவரை ஐந்து கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான்‌.-
1-யாகம்‌ முதலிய ஸத் கர்மங்களைச்‌ செய்பவர்கள்‌ எந்த தேசத்துக்குப்‌ போகிறார்கள்‌
2-இவர்கள்‌ எப்படித்‌ திரும்பி வருகிறார்கள்‌ ? 3-தேவ மார்க்கத்திற்கும்‌, பித்ரு மார்க்கத்திற்கும்‌ உள்ள வேறுபாடு யாது ? 4-இந்த லோகத்தினின்றும்‌ அடிக்கடி போய்க் கொண்டும்‌ ஸ்வர்க்க லோகத்தை அடையாதவர்கள்‌ யாவர்‌
5-ஐந்தாவது ஆஹுதியில்‌ ஹோமம்‌ செய்யப்பட்ட அப்பு (ஜலம்‌) புருஷன்‌ என்ற பெயரை அடைவதெப்படி என்‌று ?
இந்த கேள்விகளில்‌ ஒன்றுக்குமே பதில்‌ சொல்ல முடியாமல்‌ திக் பிரமம்‌ அடைந்தார்‌ சவேதகேது. தனது தகப்பனிடம்‌ வந்து அனைத்தையும்‌ சொன்னார்‌. இதைக் கேட்ட பிதாவும்‌ ஒன்றும்‌ அறியாமல்‌ அறிய விரும்பி ப்ரவாஹண ராஜ்பத்தை வந்தடைந்தார்‌. அரசனும்‌ தன்னிடம்‌ வந்த இந்த அந்தணருக்கு அர்க்க்யம்‌ முதலிப பூஜைகளைச்‌ செய்தான்‌. நீர்‌ இங்கு வந்த காரணம்‌ யாது ? தனம்‌ அபேஷிதமானால்‌ ஏராளமாகக்‌ கொடுக்கிறேன்‌ என்றான்‌, ஆருணியும்‌ உன்னுடைய பொருள்‌ உன்னிடமே இருக்கட்டும்‌, என்‌ குமாரனிடத்தில்‌ கேட்ட ஐந்து கேள்விகளுககும்‌ உண்டான பதிலை எனக்குக்‌ கற்பித்துத் தர வேண்டும்‌ என்றார்‌. ப்ரவாஹணன்‌ மனவருத்த மடைந்து சில காலம்‌ இங்கு வாசம்‌ செய்தால்‌ உபதேசம்‌ செய்கிறேன்‌, இது உயர்ந்த வித்யை, இதை அந்தணர்கள்‌ யாரும்‌ அறிய மாட்டார்கள்‌. உமக்கு உபதேசித்த பிறரு தான்‌ அந்தணர்களுக்கு இது செல்லும்‌. க்ஷத்திரியர்கள் தான்‌ இதை அறிவார்கள்‌, ஆகவே ராஜ்ய பரிபாலன சக்தி இவர்களுக்கு ஏற்பட்டது. மற்றொரு அந்தணர் இடமிருந்து இதை நீர்‌ அப்யசிக்கவும்‌ முடியாது என்று சொல்லி சில காலம்‌ வஸிக்க உத்திரவிட்டான்‌. சில காலமானதும்‌ உபதேசம்‌ செய்தான்‌. இப்படி உபநிஷத்தில்‌ இக் கதையின்‌ போக்கு உள்ளது.

உலகத்தில்‌ ஹோமம்‌ செய்யுமிடத்தில்‌ அக்னி, ஸமித்‌, புகை, அர்ச்சிஸ்‌, கொள்ளிக்‌ கட்டை, கெளுப்புப்‌ பொறிகள்‌ இனை காணப் படுகின்றன. ஸ்வர்க்க லோகத்தை ஒரு அக்னியாக உபநிஷத்து கூறிற்று… அதற்குத்‌ தக்கவாறு ஆதித்யனை ஸமித்‌ என்றும்‌,அவனது கிரணத்தைப் புகையாகவும் பகலை அர்ச்சிஸ் என்றும் சந்திரனைக் கொள்ளிக் கட்டையாகவும் நக்ஷத்ரங்களை அதன் பொறிகளாகவும் குறித்தது -அந்த அக்னியில் அப்‌ சப்தத்தால்‌ சொல்லப்பட்ட பூத ஸூஷ்மங்களை ஜீவனுடைய இந்திரியங்கள்‌ ஹோமம்‌ செய்கின்றனவாம் -அதாவது யாகம் முதலிய கர்மங்களைச் செய்தவன் இந்த தன உடலை விட்டு ஸ்வர்க்க லோகத்துக்கு கர்ம பலத்தை அனுபவிக்கப் போகிறான் -அப்போது ஜீவன் மாத்திரம்‌ செல்வதில்லை. ஸூக்ஷ்மமான பூதங்களையும்‌ எடுத்துக் கொண்டு தான்‌ போகிறான்‌. போகம்‌, போகத்திற்கு ஸ்தானம்‌, அதற்கு உபகரணம்‌ முதலியவை அங்கு கிடைப்பது போல்‌ அங்கு வரும்‌ புதிய உடலுக்குக்‌ காரணம்‌ ஆன பூத ஸூக்ஷ்மங்களும்‌ இந்திரி யங்களும்‌ சுலபமாக கிடைக்கின்றன. ஆனாலும்‌ அங்கு அம்ருத மயமான உடலை அடையக்‌ காரணமான பூத ஸூஷ்மங்களை பூர்வ தேஹததில்‌ நின்று கடைந்து எடுக்கப் பட்டவைகளையே எடுத்துக் கொண்டு போகிறான்‌. இவன்‌ ஸ்வர்க்க லோகத்திற்கு போகும் போது இந்திரியம்‌, பூத ஸூஷ்மம்‌ இவைகளோடே போகிறான்‌ என்றே ச்ருதி சொல்கிறபடியால்‌, இதில்‌ ஆஷேபிக்க நமக்கு வழி யில்லை

ஸ்வர்க்க லோகத்தை அக்னியாக ரூபணம்‌ செய்தது. அதில்‌ ஹோமம்‌ செய்த பிறகு அம்ருத மயயமான தேஹத்தை அடைகிறான்‌. அந்த அக்னியில்‌ ச்ரத்தையை ஹோமம்‌ செய்கிறார்கள்‌ என்றது ச்ருதி, இங்கு ச்ரத்தா ஸப்தம்‌ ஜலத்தைச்‌ சொல்லும்‌. மநோ விருத்தி ரூபமான ச்ரத்தையை ஹோமம்‌ செய்ய முடியாதே, ‘ச்ரத்தா வா ஆப’ என்று ச்ருதிமிம்‌ ச்ரத்தா சப்தத்திற்கு ஜலம்‌ அர்த்தம்‌ என்று கூறப்பட்டுள்ளது. ஹோம்யமாக சொல்லப்பட்ட ஜலம்‌–ப்ருதிவீ, அப்பு, தேஜஸ்‌, வாயு, ஆகாசம்‌ என்ற எல்லா பூதங்களையுமே உப லஷிக்கின்றது கேவலம்‌ ஜலம்‌ பஞ்ச பூதமயமான சரீரத்திற்குக்‌ காரணம்‌ ஆகாது அல்லவா ? எனவே பஞ்ச பூதங்கள்‌ என்று கொள்ள வேண்டும்‌. அதிலும்‌ பெரிய பூதங்களும்‌ ஸ்வர்க்க லோகம்‌ செலலுகை ப்ரத்யக்ஷ விருத்தமானதால்‌ அந்த பூதங்‌ களிலிருந்து கடைந்தெடுக்கப்பட ஸூஷ்மங்கள்‌ என்று அங்கீகரிக்க வேண்டும்‌. அந்த பூத ஸூஷ்மங்கள்‌ மாத்திரம்‌ ஹோமம்‌ செய்யப்படுகிறன என்றும்‌ சொல்ல முடியாது. ஏனெனில்‌ மேல்‌ ஏஷ ஸோமோ ராஜா பவதி ” என்று ஸ்வர்க்க லோகத்தில்‌ ஹோமம்‌ செய்த பிறகு ஸ்வர்க்க லோகத்திற்கு யோக்யமான அம்ருத மயமான தேஹத்துடன்‌ கூடிய வனாக ஆகிறான்‌ என்று மேல்‌ சொன்னபடியால்‌ பூத ஸூக்ஷ்மங்களோடு கூடிய ஜீவனைத் தான்‌ ஹோமம்‌ செய்ய வேண்டும்‌. பித்ரு மாரக்கத்தில்‌ செல்லும போது (! ஏஷ ஸோமோ ராஜா ” என்று சந்திரனை அடைந்த ஜீவனுககு திவ்ய தேஹ ஸம்யோகம்‌ மேலே சொல்லப் பட்டிருக்‌கிறது. ஆக ஸ்வர்க லோக அகனியில்‌ பூத ஸூஷ்மங்களோடு கூடிய ஜீவனை அவனுடைய புலன்கள்‌ ஹோமம்‌ செய்கின்றன: ஜீவனுக்கு புலன்களை விட்டு பூத ஸூக்ஷ்மங்களோடே மாத்திரம்‌ ஸ்வர்க்க லோகம்‌ போக முடியாது. ஆகையால்‌ இப்படிப்பட்ட ஜீவனை இந்திரியங்கள்‌ ஹோமம்‌ செய்கின்றன என்று சொன்னது, ஸ்வர்க்க லோகம்‌ செல்வதற்கு தகுந்த புண்ணியங்களை இந்த ஜீவன்‌ இந்திரியங்களை வைத்துக் கொண்டு தானே செய்கிறான்‌, ஆகையால்‌ இந்திரியங்கள்‌ தான்‌ ஜீவனை ஸ்வர்க்க லோகம்‌ அனுப்புகின்றன. இதை மனதில்‌ வைத்தே ஜீவனைப்‌ புலன்கள் ஸ்வர்க்க லோக அக்னியில்‌ ஹோமம்‌ செய்கின்றன என்று சொன்னது.

இந்த தேஹத்தில்‌ நின்று ஜீவன்‌ வெளிக் கிளம்பும் போது ப்ராண வாயு போகிறது. அப்போது அதைப்‌ பின் தொடர்ந்து புலன்களும்‌ போகின்றன என்று உபநிஷத்‌ கூறிற்று ஒரு ஆதாரம்‌ ‘ இல்லாமல்‌ இந்திரியங்கள்‌ வெளியில்‌ போக முடியாது, புலன்களுக்கு ஆகாரம்‌ பூத சூஷ்மங்கள்‌, ஆக இந்திரியம்‌, பூத சூஷ்மம்‌ இவை அனைத்தையும்‌ எடுததுக்‌ கொண்டே ஜீவன்‌ ஸ்வர்க லோகம்‌ போகிறான்‌, கீதையிலும்‌ இவ் வர்த்தம்‌ தெளிவாகக்‌ கூறப்பட்டுள்ளது. காற்று புஷ்பங்களிலிருந்து கந்தத்தை. எடுத்துக் கொண்டு போவது போல் ஜிவனும்‌ பூர்வ சரீரத்தில்‌ உள்ள புலன்களை எடுத்துக் கொண்டு போகிறான்‌. சூஷ்மமான ஆச்ரயத்துடன்‌ கூடிய கந்தத்தை யல்லவா வாயு எடுத்துச்‌ செல்கிறது. அது போல்‌ ஆச்ரயமான பூத சூஷ்மங்களோடு கூடிய ஜீவ புலன்களையே ஜீவன்‌ எடுத்துச்‌ செல்கிறான்‌-மனிதன்‌ இறந்த உடன்‌, வாக்‌ என்னும்‌ இந்திரியம்‌ நெருப்பில்‌ லயித்து விடுகிறது. ப்ராண வாயு காற்றில்‌ லயித்து விடுகிறது. கண்‌ ஆதித்யனிடத்தில்‌ லயிக்கிறது என்று ச்ருதி ஸ்பஷ்டமாக சொல்லி யிருக்க, ஜீவனுடன்‌ புலன்கள்‌ செல்கின்றன என்று எப்படி சொல்ல முடியும்‌ என்று கேட்கலாம்‌ – இதற்கு பதில்‌–லயம்‌ சொல்வது போல்‌ தோன்றும்‌ ச்ருதிக்கு நாசம்‌, என்ற பொருள்‌ இல்லை. அங்கு, இவனுடைய தேஹத்தில்‌ உள்ள ரோமங்கள்‌ ஓஷதிகளிடத்தில்‌ லயிக்கினறன, கேசங்கள்‌ வனஸ்பதியினிடத்தில்‌ லயிக்‌கின்றன என்றும்‌ சொல்லப்படுகின்றது: ரோமங்களுக்கும்‌, கேசங்களுக்கும்‌ ஓஷதிகளிலும்‌ வனஸ்பதிகளிலும்‌ லயம்‌ ஏது? அவைகள்‌ தான்‌ பஸ்மமாக ஆகி விடுகிள்றனவே, ஆக அதற்கு அர்த்தம்‌ வேறு தான் கூற வேண்டும்‌. அதாவது ரோமததிற்கும்‌ கேசத்திற்கும்‌ அதிஷ்டான தேவதைகள்‌ அங்கங்கு மறைந்து விடுகின்றன என்று, ரோமததிற்கு அதிஷ்டான தேவதை ஓஷதியின்‌ அதிஷ்டான தேவதையை அடைகிறது. ரோமத்திற்கு அபிமானியாக இருக்கும்‌ தன்மையை விட்டு ஓஷதிக்கு அபிமானியாய்‌ இருக்கும்‌ தன்மையை மாத்திரம்‌ பெறுகிறது. இப்படியே மேலும்‌. எனவே வாக்குக்கு அபிமானியாய்‌ இருக்கும்‌ தன்மையை விட்டு நெருப்புக்கு அபிமானியாய்‌ இருக்கும்‌ தன்மையை மாத்திரம்‌ அடைகிறது என்று பொருளாகத்‌ தகுந்தவாறு சொல்ல வேண்டும்‌. ஆகையால்‌ புலன்களின்‌ அழிவு இங்கு சொல்லப்படாததாகையால்‌ ஜீவன்களோடு அவை செல்லுகின்றன என்பதில்‌ தவறு இல்லை.

யாகம்‌, தானம்‌ முதலிய கர்மங்களை செய்யும்‌ இஷ்டாதிகாரிகள்‌ பித்ரு மார்க்கமாக சென்று ஆகாசத்தை அடைந்து ஸ்வர்க்கம்‌ சென்றதும்‌ சந்திரனை அடைகிறார்கள்‌. அங்கு போக யோக்யமான அழகிய உருவத்தை அடைகின்றனர்‌ என்றது உபநிஷத்து. ஸ்வர்க்க லோகமாகிற அக்னியில்‌ ஹோமம்‌ செய்யப்படுவது பூத சூஷ்மங்களுடன்‌ கூடிய ஜீவாத்மா. புலன்கள்‌ இந்த ஜீவாத்மாவை அங்கு அனுப்பியதும்‌ பூத சூஷ்மம்‌ பெரிதாகி விடுகிறது. (உயர்ந்த சரீரமாய்‌ மாறி விடுகிறது) அங்கு இந்த ஆத்மா தேவர்களுக்கு போக உபகரணமாக, ஆகிறானாம்‌. இவ் வுலகத்தில்‌ அவர்களை ஆராதிக்கிறபடியால்‌ அவர்கள்‌ போகத்‌திற்கு இவன் உபகரணம்‌. அங்கு சென்றாலும்‌ இவன்‌ உபகரணம் தான்‌, “யதா பசு: ஏவம்‌ ஸ தேவானாம்‌””–நமக்கு பசு பால்‌ முதலியவைகளைக்‌ கொடுத்து நம்‌ போகத்திற்கு உபகரண மாகிறது. அப்படியே இவன்‌ தேவர்களுக்குப்‌ பணி விடை செய்து உபகரிக்கிறான்‌. ஆக இவன்‌ எப்பொழுதும்‌ பிறருக்கே உழைத்து ஏழை யாகிறான்‌. பரமாத்ம ஸ்வரூபத்தை உணராமல்‌ ஸத் கர்மங்களை மாத்திரம்‌ எவ்வளவு இவன்‌ செய்தாலும்‌ பலன்‌ இல்லை. ஸ்வர்க்க லோகம்‌ சென்றாலும்‌ தேவர்கள்‌ நம்மை பசுவைப்‌ போலத் தான்‌ பார்க்கின்றனர்‌. அவர்கள்‌ கொடுத்த ஆபாஸமான போகத்தை அனுபவித்துக் கொண்டு அவர்களுக்கு கைங்கர்யம் தான்‌ செய்ய வேண்டி வருகிறது. இஷ்டாதிகாரி யானாலும்‌ இவர்களுடைய ஸ்திதி இவ்வளவு தான்‌. இப்படிப்பட்ட ஹேயமான பரிஸ்திதியை பராமரிசித்து **தம்‌ தேவா பக்ஷயந்தி” என்று ச்ருதி கூறிற்று. ஸத் கர்மங்களைச்‌ செய்து ஸ்வர்க்கம்‌ வந்தவர்களை தேவர்கள்‌ சாப்பிடுகின்றனர்‌ என்று இதற்குப்‌ பொருள்

இப்படி ஸ்வர்க்க லோகத்தை அடைந்து சிறிது காலமானதும்‌ அவனுடைய புலன்கள்‌ அவனை பர்ஜன்யமாகிற (மேகம்‌) நெருப்பில்‌ ஹோமம்‌ செய்கின்றன. அவன்‌ வர்ஷமாக ஆகிறான்‌. அதாவது ஸ்வர்க லோகத்தில்‌ இவன்‌ செய்த புண்யத்திற்குத்‌ தக்கபடி போகங்களை அனுபவித்ததும்‌ இவன்‌ செய்த கர்மம்‌ செலவாகி விடுகிறது: அந்த திவ்ய சரீரம்‌ அதன்‌ காரணமாகத்‌ திரவமாகி விடுகிறது இந்த ஜீவனுடன்‌ அது மேக மண்டலத்தில்‌ விழுகிறது. பிறகு வர்ஷமாக மாறி விடுகிறது. அந்த வர்ஷத்தில்‌ இவன்‌ சம்பந்தப் பட்டிருக்கிறான் என்றபடி-பிறகு பூமி யாகிற நெருப்பில்‌ அதே புலன்கள்‌ அதை ஹோமம்‌ செய்கின்றனவாம்‌, அதனால்‌ அன்னமாக ஆகி விடுகிறது. அந்த அன்னத்தை அந்த புலன்கள்‌ புருஷனாகிய நெருப்பில்‌ ஹோமம்‌ செய்கின்றன. அதனால்‌ அது ரேதஸ் ரூபமாக ஆகிறது, இதை ஸ்த்ரீயாகிய நெருப்பில்‌ ஹோமம்‌ செய்கின்றன. அது கர்பமாகவும்‌ ஆகி விடும்‌. இப்படி ஐந்து ஆஹுதிகளில்‌ ஹோமம்‌ செய்யப்பட்ட பூத சூக்ஷ்மம்‌ புருஷன்‌ என்ற பெயரை அடைகிறது. மனுஷ்ய சரீரத்தை அடைந்தவனாக இவன்‌ பிறக்கிறான்‌. தாயின்‌ வபிற்றில்‌ கர்பமான பிறகு ஒன்பது, பத்து, பதினொன்று மாதங்கள்‌ வசித்து பூமியில்‌ பிறந்ததும்‌ இங்கு யாவதா யுஷம்‌ வாசம்‌ செய்கிறான்‌. பிறகு அவனை இந்த இந்திரியங்கள்‌ அந்த அக்னிபில்‌ மறுபடியும்‌ போடுகின்றன. த்யுலோகம்‌, பர்ஜன்யம்‌, ப்ருதிவீ, புருஷன்‌, ஸ்த்ரீ முதலிய இடங்களில்‌ இவன்‌ சுற்றிக் கொண்டே இருக்கிறான்‌. மூத்ரம்‌, புரிஷம்‌, ரக்தம்‌, பித்தம்‌ முதலிபவை களால்‌ நிறம்பி தாயின்‌ குதியில்‌ வஸிப்பதால்‌ பல கஷ்டத்தை அடைகிறான்‌, தாயின்‌ உணவைக்‌ கொண்டு வளர்ந்து வரும்‌ இவனுக்கு தனது பலம்‌ முதலியவைகள்‌ தடை பட்டு விடுகின்றன. யோனி த்வாரா வெளிப்படும் போதும்‌ அதிகமான கஷ்டம்‌ ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட துரவஸ்தைகளையும்‌, பிறந்த பிறகு, தான்‌ அனுபவிக்கிற கஷ்டங்களையும்‌ நேரில்‌ கண்டு அறிந்தவன்‌ இந்த லோகத்திலும்‌, ஸ்வர்க்க லோகத்திலும்‌ கூட வாழ விரும்ப மாட்டான்‌, இப்படி இவனுக்கு வைராக்யம்‌ உண்டாக வேண்டும்‌ என்று தான்‌ இவனுடைய வரலாற்றை உபநிஷத்து விரிவாக கூறிற்று.-

பர ப்ரஹ்மத்தை உபாசனம்‌ செய்பவன்‌ அர்ச்சிராதி மார்க்கமாகச்‌ சென்று அவனையே அடைகிறான்‌. அர்ச்சிஸ்‌, தினம்‌, பூர்வபஷம்‌, உத்தராயண மாஸம்‌, ஸம்வத்ஸரம்‌, வாயு, சூரியன்‌, சந்திரன்‌, வித்யுத்‌, வருணன்‌. இந்திரன்‌, ப்ரஜாபதி: என்று இவர்கள்‌ வழியாக பரமாத்மாவை அடைகிறான்‌. இதற்கு தேவ யானம்‌ என்று பெயர்‌. இஷ்டாதி கர்மங்களைச்‌ செய்பவன்‌, தூமம்‌, ராத்திரி, அபரபஷம்‌. தஷிணா பனமாஸம் , பித்ரு லோகம்‌, ஆகாசம்‌, சந்திரன்‌ என்கிற வழியில்‌ சென்று திவ்ய தேஹததை அடைகிறான்‌. இதற்கு – பித்ரு யானம்‌, தூம மார்கம்‌ என்று பெயர்‌. இவன்‌ திரும்பி இவ் வுலகத்திற்கு வரும் போது சந்திரனின்‌ ஸ்தானத்தினின்றும்‌, ஆகாசம்‌, வாயு, தூமம்‌, அப்ரம்‌, மேகம்‌ இவை வழியாக வருகிறான்‌. மேக ரூபமான அக்னியில்‌ சம்பந்தப் பட்டபோது வர்ஷமாக மாறுகிறாள்‌. பூமியில்‌ விழுந்தவுடன்‌ அன்னமாக மாறுகிறான்‌, பிறகு ரேதஸ்ஸாகவும்‌, கர்பமாகவும்‌ ஆகி ஸ்திரீயினிடமிருந்து யோனி த்வாரா பூமியில்‌ பிறக்கிறான்‌–

க்ருதாத்யயாதிகாணம்‌- யாகம்‌ முதலிய நற் காரியங்களைச்‌ செய்தவன்‌ ஸ்வர்க்க லோகத்தில்‌ சுகத்தை அனுபவித்து திரும்பி பூலோகம்‌ வரும் போது புண்ய பாபமாகிற கர்மங்களுடன்‌ வருகிறான்‌. எல்லா கர்மங்களுடைய பயனையும்‌ ஸ்வர்க்கத்தில்‌ அனுபவித்துக்‌ கர்மமின்றி இங்கு வருகிறான்‌ என்பதில்லை. ஸ்வர்க்கத்திற்கு காரணமான கர்மத்தின்‌ பலத்தை அனுபவிப்பதற்காக வன்றோ அங்கு அவன்‌ சென்றது. அங்கு வேறு கர்மங்களடைய பலனை அடைவதற்கும்‌ வழி இல்லை. ஸ்வர்க்கத்தில்‌ யாகாதி கர்மங்களின்‌ பலனை அனுபவித்த மாத்திரத்தாலேயே ஸர்வ கர்மங்களையும்‌ அனுபவித்தது போல்‌ ஆகாது, ஆகையால்‌ திரும்பி வரும் போது இவனால்‌ முன்‌ செய்யப்பட்ட மற்றைய எல்லா கர்மங்களுடன்‌ தான்‌ வருகிறான்‌-கர்மம்‌ உள்ள வரையில்‌ ஸ்வர்க்கத்தில்‌ வசித்து பிறகு வருகிறான்‌ என்று சொன்ன உபநிஷத்துக்கு ஸ்வர்க்கத்தைக்‌ கொடுக்கக் கூடிய கர்மம்‌ உள்ளவரை என்று தாத்பர்யம்‌. ஸ்வர்க்கத்தினின்றும்‌ திரும்பி வருபவர்கள்‌ உயர்ந்த கர்மங்களை உடையவர்களானால்‌ ப்ராம்மணாதி உயர்ந்த யோனியை அடைகிறார்கள்‌. நிந்த்பமான கர்மங்களை உடையவர்களானால்‌ தாழ்ந்த யோனியை அடைகிறார்கள்‌ என்று உபநிஷத்தே சில புண்ய பாப கர்மங்‌ களுடன்‌ வருகிறார்கள்‌ என்று சொலகிறது. இம் மாதிரி ஸ்வர்க்க ஜனகமான கர்மங்களை அனுபவித்த பிறகு, மற்ற கர்மங்களுடன்‌ இங்கு பிறந்து உயர்ந்த தேசத்தில்‌, உயர்ந்த ஜாதியில்‌, உயர்ந்த குலத்தில்‌ பிறந்தவர்களாய்‌ நீண்ட ஆயுளுடனும்‌, வித்யை யுடனும்‌ அதிக செல்வத்துடனும்‌ சுகமாக வாழ்கிறான்‌ என்று ஸ்ம்ருதியும்‌ இவ் வர்த்தத்தை பலப்‌ படுத்துகிறது-உபநிஷத்தில்‌, இங்கு பிறப்பை அடைகிறவன்‌ சரணத்தோடு கூடியவன்‌ என்றுள்ளது. இங்கு சரண சப்தம்‌ ஆசாரத்தைக்‌ கூறும்‌. புண்ய பாப வினையை கூறாது, ஆகவே வினையோடு பிறக்கிறான்‌ என்று எப்படி சொல்ல முடியும்‌? இதற்கு பதில்‌ கார்ஷணாஜனி என்ற முனிவர்‌ கூறுகிறார்‌. சரணம்‌ என்பதற்கு ஆசாரம்‌ என்று தான்‌ பொருள்‌, ஆனாலும்‌ மேலே சுக துக்கங்கள்‌ சொல்லப் படுகையால்‌ அதற்குக்‌ காரணமான புண்ய பாபமாகிற வினையையே சரண சப்தம்‌ கூறுகிறது என்று சொல்ல வேண்டும்‌. சு௧ துக்கங்களுக்கு காரணம்‌ புண்ய பாமமே தவிற ஆசாரம்‌ ஆகாது. ஸதாசாரம்‌ உள்ளவருக்கு புண்ய கர்மங்களில்‌ அதிகாரம்‌. ஆசாரமற்றவன்‌ அசுத்தனாகிறான்‌ என்றார்‌. பாதிரி என்னும்‌ மகரிஷி வேறு உத்தரம்‌ அருளிச்செய்தார்‌.—ஆசாரம்‌, சரணம்‌, கர்ம, வினை எல்லாம்‌ ஒரே பொருளைக் கூறுகிறது, ஆக உபநிஷத்தில்‌ உள்ள சரண சப்தமே நேராகவே புண்ய பாப சூபமான வினையைச்‌ சொல்லலாம்‌ என்றார்‌.-சிலர்‌ இக் காலத்தில்‌ யாகம்‌, தானம்‌, ஹோமம்‌ முதலிய புண்ய கர்மங்களைச்‌ செய்‌கின்றனர்‌. இது உயர்ந்த கார்யம் தான்‌. ஆனாலும்‌ சந்த்யாவந்தனம்‌ முதலிய நித்ய கர்மானுஷடானம்‌ இல்லாமல்‌ செய்தால்‌ பலத்தை அளிக்காது. ஸந்த்யாவந்தனாதி ஆசாரங்‌களைச செய்யாமல்‌ விட்டு விட்டால்‌ தோஷமே உணடாகும்‌, அது செய்வதினால்‌ நம்முடைய பாபமும்‌ கழியும்‌. ““வதன்ஹா பாபமகார்ஷம்‌’” என்று ஸந்த்யா வந்தனம்‌ முதலியவைகளில்‌ வரும்‌ மந்திரத்தைக் கொண்டு உணரலாம்‌- ஆக இதற்கு பலனும் உண்டு -புண்ய கர்மங்களைச் செய்ய அதிகாரமும்‌ இதனால்‌ ஏற்படுகிறது. ஆகவே யாகம்‌, ஹோமம்‌, புராண ச்ரவணம்‌ முதலிய ஸத் கர்மங்களினாலேயே உயர்ந்த உலகம்‌ கிடைக்கும்‌ என்று நினைக்க வேண்டாம்‌. ஆசாரம்‌ இல்லாதவரிடத்தில்‌ வேத மார்க்கமும்‌ நாய்த்‌ தோலில்‌ வைக்கப்பட்ட பயஸூக்கு ஸமானம்‌ ஆகும்‌ என்றனர்‌.

அநிஷ்டாதிகாரி அதிகரணம்‌-யாகம்‌ தடாகாதி நிர்மாணம்‌, தானம்‌ முதலிய ஸத் கார்யங்களைச்‌ செய்யும்‌ இஷ்டாதிகளைப் பற்றி இதுவரையில்‌ இந்த உபநிஷத்‌ விசாரித்தது. இனி சாஸ்த்திரங்களில்‌ விஹிதமான கார்யங்களைச்‌ செய்யாதவர்களும்‌, நிஷித்த கர்மங்களைச்‌ செய்பவர்களுமான அநிஷ்டாதிகாரிகளைப் பற்றி விசாரம்‌ ப்ராப்தம்‌ ஆகிறது. இவர்கள்‌ இருவருமே பாப காரிகள்‌. இவர்‌களுக்கு இஷ்டாதிகாரிகளுககுப போல்‌ சந்த்ர கமனம்‌ கிடையாது, யவர்‌ இந்த லோகத்தி னின்றும்‌ மரணத்தை அடைந்து செல்லுகின்றார்களோ அவர்கள்‌ அனைவருமே சந்திரனை அடைகின்றனர்‌ என்று சாமான்யமாக எல்லோரையும்‌ எடுத்துச்‌ சொல்லி யிருப்பதால்‌ இவர்களும்‌ சந்திரனை அடைகின்றனர்‌ என்று சிலர்‌ கூறுவர்‌

பாபம்‌ செய்பவர்‌, புண்யம்‌. செய்பவர்‌ இந்த இரண்டு அதிகாரிகளுமே ஒரே மார்க்கமாகச்‌ சென்று சந்திரனை அடைகிறார்கள்‌ என்றால்‌ அனைவருமே பாபத்தையே செய்யத் துடங்கி விடுவார்கள்‌. புண்யம்‌ செய்பவர்கள்‌ அரிதாகி விடுவார்கள்‌. பலத்தில்‌ ஏதாவது வேறுபாடு இருந்தால்‌ அல்லவோ பாபம்‌ செய்ய பயப்படுவான்‌ என்று கேட்டுக்‌ கொணடு பதிலும்‌ கூறினர்-பாபம்‌ செய்பவர்களுக்கு யம தர்மனின்‌ உத்திரவின் பேரில்‌ தண்டனை ஏற்பட்டு துக்க அனுபவம்‌ உண்டு, *’ ப்ரத்யக்ஷ ஸித்தமான இந்த உலகம் தான்‌ உண்டு, பர லோகம்‌ கிடையாது என்று சொல்பவர்கள்‌ எனக்கு வசமாய்‌ துக்கங்களையே அனுபவிப்பான்‌ ** என்று யமனுடைய வாக்யம்‌ உள்ளது. பராசராதி ஸ்ம்ருதிகளும்‌ இவ் வர்த்தத்தை வலுப்படுத்து கின்றன. ரெளரவாதி நரகங்களும்‌ இவர்களுக்கு உண்டு. இந்த நரகங்களில்‌ சென்றாலும்‌ யம தர்மனுடைய ஆக்ஞையின்‌ பேரில் தான்‌ இவர்கள்‌ யாதனைகளை அனுபவிக்கின்றனர்‌. இப்படி இவர்களுக்கும்‌ சந்திர கமநம்‌ இருந்தாலும்‌ யாதனைகள்‌ அதிகமானதால்‌ வேறு பாடும்‌ ஏற்படுகிறது என்று-உண்மையில்‌ இவர்கள்‌ சந்திரனை அடைய மாட்டார்கள்‌. பரமாத்மமாவை உபாஸிப்‌ பவனுக்கு தேவ மார்க்கம்‌, ஸத் காமங்களைச்‌ செய்பவனுக்கு பித்ரு மார்க்கம்‌ என்றது சாஸ்திரம்‌, பாபங்களைச்‌ செய்பவனுக்கு தேவ மார்க்கத்தில்‌ கமநம்‌ கிடையாது, ஏன்‌ அவனும்‌ தேவ மார்க்கத்தில்‌ செல்லலாமே என்று கேட்டால்‌ என்ன பதில்‌ சொல்ல முடியும்‌? அவனுக்கு ப்ரஹ்ம உபாஸந ரூபமான வித்யை இல்லை யாதலால்‌ அவன்‌ எப்படி தேவ மார்க்கத்தில்‌ செல்ல முடியும் என்று பதில்‌ கூற வேண்டும்‌. இப்படியே இரண்டு ஸத்‌ கர்மங்கள்‌ இல்லாதால்‌ பித்ரு மார்க்கத்திலும்‌ கமநம்‌ கூடாது எனபது தெரிகிறது. எவர்‌ கிராமங்களில்‌ பூர்த்தம்‌ (கிணறு, குளம்‌ வெட்டுதல்‌) முதலியவைகளைச்‌ செய்கிறார்களோ அவர்கள்‌ பித்ரு மார்க்கமாக செல்கிறார்கள்‌ என்று தனிப்பட்ட முறையில்‌ உபநிஷத்து கூறியும்‌ உள்ளது. ஆகவே அநிஷ்டாதிகாரிகளுக்கு பித்ரு மார்க்கம்‌ இல்லை என்பது ஸுஸ்பஷ்டம்‌. இந்த லோகத்தினின்று செல்லுகிறவர்கள்‌ அனைவரும்‌ என்று முன் சொன்ன ஸ்ருதிக்கு இஷ்டாதிகாரிகளான அனைவர்களும்‌ என்று பொருள்‌ கூற வேண்டும்–

ஸ்வர்க லோகம்‌, பர்ஜன்யம்‌, பூமி, புருஷன்‌, ஸ்த்ரீ என்ற அக்னியில்‌ ஆஹுதி செய்யப்பட்டவன்‌ ஸ்த்ரீயின்‌ யோனி த்வார பிறந்து சரீரத்தை அடைகிறான்‌ என்று முன்பு சொன்னபடியால்‌ அநிஷ்டாதிகாரிகளுக்கு சந்திர ப்ராப்தி இல்லாததால்‌ ஐந்து ஆஹுதிகளிலும்‌ சம்பந்தம்‌ இல்லாமல்‌ போய் விடுகிறது. ஐந்தாவது ஆஹாதியில்‌ ஹோமம்‌ செய்யப்பட்டவனுக்கே சரீர சம்பந்தம்‌. ஆக இவர்களுக்கு மறுபடி சரீரம்‌ எப்படி ஸம்பவிக்கும்‌ என்ற ப்ரச்னம்‌ உண்டாகலாம்‌. இதற்கு பதில்‌—சரீரம்‌ சம்பவிக்க பஞ்சம ஆஹாுதியே அவசியம்‌ வேண்டும்‌ என்ற நிர்ப்பந்தம்‌ இல்லை. அதற்கு பல காரணங்கள்‌ உள்ளன. சிலருக்கு பஞ்சம ஆஹுதி காரணம்‌, என்பதையே ச்ருதி கூறிற்று, மற்ற காரணத்தைத்‌ தடுக்கவில்லை, தேவமார்க்கம்‌, பித்ரு மார்க்கம்‌ என்ற இவ் விரண்டு வழியாக போகாதவர்கள்‌ சிலர்‌ உண்டு: அவர்கள்‌ ஷுத்ரர்கள்‌. அடிக்கடி பிறந்தும்‌ இறந்தும்‌ இருப்‌ பார்கள்‌. அவர்களால்‌ த்யு லோகம்‌ பூர்ணம்‌ ஆவதில்லை என்று ஸ்பஷ்டமாக இவ்வர்த்தம்‌ சொல்லப்பட்டது, ஆக சரீரத்திற்கு பஞ்சம ஆஹுதியின்‌ அபேஷை கிடையாது. என்று ஏற்படுகிறது. புண்ய வதியான தரெளபதி அக்னியினின்றும்‌ பிறந்தாள்‌. த்ருஷ்டத்யும்னனும்‌ பஞ்சம ஆஹுதி இன்றியே பிறந்தான்‌. ஆகையானல் அதிக புண்யவான்களுக்கும்‌ பஞ்சம ஆஹுதி வேண்டாம்‌, அதிக பாபிகளுக்கும்‌ அது வேண்டாம்‌-மரம்‌, செடி, கொடி, ரூபமான சரீரத்தை அடையும்‌ ஜீவன்களுக்கு யோநித்‌ பிரவேசமே கிடையாது. பூமியிலேயே அவை கிளம்புகின்றன. பேன் , மசகம்‌, முதலியவை களுக்கு புருஷத்வாரா ஸ்த்ரீ சம்பந்தம்‌ கிடையாதே – ஆகையால்‌ சரீரம்‌ உண்டாக பஞ்சம ஆஹாதி போல்‌ மற்றும்‌ சில காரணமாகலாம் – ஸ்வர்கம் போகிறவர்கள்‌ அனைவருமே தூமாதி மார்கமாகவே செல்கிறார்கள்‌ என்று ஒரு நிர் பந்தம்‌ செய்ய முடியாது. ஸ்ரீராமாயண பாரதாதிகளில்‌ சில புண்யவான்கள்‌ திவ்வமான சரீரத்தை எடுத்துக் கொண்டு விமானத்தில்‌ ஏறி உயர்ந்த லோகம்‌ போகின்றனர்‌ என்றும்‌ சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால்‌ தூமாதி மார்கத்திற்கு அபவாதம்‌ இருப்பது போல்‌ பஞ்சமாஹுதிக்கும்‌ அபவாதம்‌ உண்டு, பாபகசரிகளுக்கு சந்திர கமநம்‌ கிடையாது என்பது இந்த அதிகாணத்தில்‌ ஏற்பட்டது.–

தத் ஸ்வா பாவ்ய யாத் யதிகரணம் இஷ்டாதிஸாரிகள் ஸ்வர்க்க சுகத்தை அனுபவித்த பிறரூ இந்த லோகத்தை அடைகின்றனர்‌…அங்கு இவர்களது பூத ஸூஷ்மம்‌ திவ்ய தேஹமாக மாறிற்று. பிறகு வரும் போது த்ரவ்யமாய் மாறி விடுகிறது. திரவ்ய பாவத்தை அடைந்த பூத ஸூஷ்மம்‌ ஆகாசம்‌, வாயு, தூல, அப்ரம்‌, மேகம் இவைகளை அடைந்து வர்ஷ தாரையாக மாறி பூமியில்‌ விழுகிற துகள்‌. ஆகாசமாகவும் , வாயுவாகவும் …..மேகமாகவும் இருந்து என்று ச்ருதி கூறிற்று. த்யு லோக ஆஹுதியிலும் , யோஷித்‌ ஆஹுதியிலும்‌ இந்த ஜீவன்‌ சரீரத்தை அடைகிறான்‌ என்பதில்‌ சந்தேஹம் இல்லை . நடுவிலும் ஆகாசாதி சரீரத்தை அடைகிறான்‌ என்று சொன்னால்‌ ஸ்வாஸ்ரயம் உள்ளது. ச்ருதியும்‌, ஆகாசமாயும்‌, வாயுவாயும்‌ இருந்து என்றே சொல்லி உள்ளது. ஆக இவனுக்கு நடுவில்‌ ஆகாச, வாயு முதவிய சரீரம்‌ உண்டாகிறது-என்றனர் சிலர் -இதுவும் அனுப பந்நம் –பித்ரு சரீரத்தில் இவன் பிரவேசித்த போது தத்பவதி ரேதஸ்ஸிஸாக ஆகிறான்‌ என்று சொன்ன போதிலும்‌, அங்கு அப்படி அர்த்தம்‌ கொள்வதற்கு ஒளசித்யம்‌ இல்லை. ரேதஸ்ஸிக்கான பிதாவினுடைய சரீரம்‌ வேறானபடியால்‌. ஆக அவன்‌ சரீரத்தில்‌ பிரவேசிப்பது கேவலம்‌ சம்பந்தம்‌, அதைப் போலவே இவனுக்கு ஆகாசாதிகளில்‌ சம்பந்த மாத்திரமே. த்ருடமான சம்பந்தம்‌ இவனுக்கும்‌ ஆகாசாதி களுக்கும்‌ அங்கு உண்டாகிறது. வேறுபாட்டைக காட்டக்கூடிய ஸ்தூலமான ஆகாரம்‌ ஒன்றும்‌ தெரிவதில்லை. இதை காட்டவே ‘அதாகவே ஆகிறான்‌” என்றது உபநிஷத்து. முதல்‌ ஆஹுதியிலும்‌, அந்திம ஆஹுதியிலும்‌ இவனுக்கு சு௧, துக்க போகம்‌ இருப்பதாலும்‌ மற்ற இடங்களில்‌ அது இல்லாததாலும்‌ நடுவில்‌ சரீரம்‌ உண்டு என்பதற்கு வழி இல்லை.

நாதிசிராதி கரணம்‌-இவன்‌ ஆகாசாதிகளில்‌ சம்பந்தப்பட்டு இருக்கிறான்‌ என்று சொன்னோம்‌. அந்த இருப்பு சிர காலமா அல்லது சிறிது காலமா? அதிக காலம்‌ ஆகாசத்தில்‌ ஒட்டிக் கொண்டு இருக்கிறானா ? கொஞ்ச காலம் தானா என்ற ஸம்சயம்‌ உண்டாகிறது. இதை நிச்சயம்‌ செய்ய ஹேது இல்லாததால்‌ இரண்டு பிரகாரமாகவும்‌ இருக்கலாம்‌. புருஷனிடத்தில்‌ ஹோமம்‌ செய்ததும்‌, ரேதஸ்ஸாக மாறுதல்‌ அடைகிறான்‌, பிறகு தாயினிடத்தில்‌ பிரவேசிக்‌கிறான்‌. அப்போது அந்த சுக்லாவஸ்தைக்கு கால நியமம்‌ கிடையாது. பரிபூர்ண கர்பம்‌ வரையில்‌ இருந்தால்‌ சிர காலம்‌, நடுவில்‌ விழுந்தால்‌ அசிர காலம்‌. அது போலவே ஆகாசாதி அவஸ்தைகளிலும்‌ என்று சொல்லலாம்‌ என்றனர்‌-

இவன்‌ நெல்‌ முதலியவைகளை அடைகிறான்‌ என்று உபநிஷத்து கூறி அந்த நெல்‌ முதலியவைகளிலிருக்து வெளிக் கிளம்புவது கடினம்‌, சிர கால ஸாத்யம்‌ என்று விசேஷமாக மேலே ச்ருதி கூறி யுள்ளது. இதனால்‌ ஆகாசாதிகளிலிருந்து வெளிக் கிளம்புவது அவ்வளவு கடினம்‌ (விளம்பம்‌) இல்லை என்று ஏற்படுகின்ற படியால்‌ சிறிது விளம்பத்திலேயே அவைகளை விட்டு விடுகிறான்‌ என்று ஏற்படுகிறது, ஆகாயம்‌ முதலிய வழியாக வெளி வந்து வர்ஷமாக மாறி பூமியில்‌ விழுந்து நெல்‌ முதலியவைகளை அடையும் போது அவைகளி லிருந்து நெல்‌ முதலியவைகளை அடையும் போது அவைகளிலிருந்து சீக்கிரமாக வெளிக்‌ கிளம்புவது கிடையாது. நெல்‌ முதலியவைகளை இவன்‌ அடைந்ததும்‌ அந்த நெல்லை பிதா உட்கொண்ட பிறகு தானே மாதாவினிடத்தில்‌ பிரவேசித்து. மாறுதலை அடைய முடியும்‌. பிதா அந்த நெல்லை எப்பொழுது சாப்பிடுகிறான்‌ என்று எப்படி சொல்ல முடியும்‌, உட்‌ கொள்ளப்படாத நெல்‌ முதலியவை எவ்வளவோ இருக்கின்‌ றனவே ப்ரவாஹத்தால்‌ அடித்துச்‌ செல்லப்பட்டு நதியை அடைந்து சமுத்திரத்தையும்‌ அடைகின்‌ றன, அந்த நெற்களை மீன்‌ விழுங்கி விடுகின்றன, அந்த மீனை ஒரு மகரம்‌ விழுங்கி விடுகின்றது, சில சமயம்‌ சமுத்திர ஜலத்துடன்‌ மேகங்களால்‌ இழுக்கப்பட்டு மீண்டும்‌ வர்ஷ தாரா மூலமாக மலை முதலிய இடங்களில்‌ விழுந்து நிற்கின்றன. அபக்ஷ்யமான ஸ்தாவரங்களில்‌ விழுந்தால்‌ அவை உட் கொள்ளப்‌ படாமல்‌ போகின்றன: ஆகையால்‌ நெல்‌ முதலியவைகளிடமிருக்து வெளிக் கிளம்புவது விளம்ப ஸாத்யம்‌. ஆகாசாதிகளில்‌ அப்படி சொல்வதற்கு காரணம்‌ இல்லை –

அந்யாதிஷ்டிதாதிகரணம்‌-பூத ஸூஷ்மங்களோடு இறங்கி வரும்‌ ஜீவன்கள்‌ பூமியில்‌ விழுந்ததும்‌ நெல்‌, யவம்‌,திலம்‌ முதலிய ஸ்தாவரங்களாக பிறக்கின்றனர்‌ என்றது உபநிஷத்து. ஆகாசாதிகளில்‌ ஜனனம்‌ இல்லாமல்‌ போனாலும்‌ இங்கு உண்டாகின்றன என்று ஸ்பஷ்டமாக பிறப்பையே சொல்லி யிருப்பதால்‌ ஸ்தாவரங்களாக அவர்கள்‌ உண்டாகின்றனர்‌ என்று சொல்ல வேண்டும்‌. வேதாந்த ஸித்தாந்தத்தில்‌ செடி முதலிய ஸ்தாவரங்களில்‌ ஆத்மா உண்டு என்பது ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது. இப்படி அவர்கள்‌ ஸ்தாவரங்களாகப்‌ பிறக்கிறார்கள்‌ என்பதில்‌ யுக்தியும்‌ உண்டு. வேள்விகளைச்‌ செய்யும்‌ இஷ்டாதிகாரி ஸ்வர்க்கத்திற்காக யாகத்தைச்‌ செய்கிறான்‌. அதற்காக பசுவை ஹிம்ஸிக்கிறான்‌. வேதத்தில்‌, ஒருவரையும்‌ ஹிம்சை செய்யக்‌ கூடாது, செய்தால்‌ பாபம்‌ நேரிடும்‌ என்பது ஸ்பஷ்டம்‌. ஆகவே யாகத்‌தால்‌ ஸ்வர்கம்‌ கிடைத்தாலும்‌, பாபமும்‌ சேர்ந்து வருகிறபடியால்‌ அதை அனுபவிக்க வரும்‌ இஷ்டாதிகாரி ஸ்தாவர ஜன்மத்தை அடைகிறான்‌ என்று சொல்ல வேண்டும்‌. வாக்கு, மனம்‌, சரீரம்‌ என்ற மூன்று கரணங்களாலும்‌ மனிதனுக்கு பாபம்‌ சம்பவிக்கிறது, வாக்கால்‌ ஏற்படும்‌ பாபத்திற்கு பக்தி ஜன்மம்‌ பலம்‌, மனதால்‌ ஏற்படும்‌ பாபத்திற்கு அந்த்ய வர்ணத்தில்‌ பிறப்பு பலம்‌. சரீரத்தால்‌ ஏற்படும்‌ பாபத்திற்கு ஸ்தாவர ஜன்மம்‌ பலம்‌ என்றது ஸ்ம்ருதி, ஆகையால்‌ பசு ஹிம்சை சரீர மூலமாக ஏற்படுகிறபடியால்‌ இவருக்கு ஸ்தாவர பாவ யுக்தம்‌ என்றனர்‌ இங்கு சிலர்‌. இது அனுபபன்னம்‌. ரேதஸ்ஸிக்‌ புருஷனை அடைவது போலவும்‌ ஆகாசாதிகளை அடைவது போலவும்‌ இவன்‌ நெல்‌ முதலிய ஸ்தாவரங்களை அடைகிறான்‌- அங்கு பிறப்பு கிடையாது, அந்த ஸ்தாவரங்களிலே வேறு ஜீவன்‌ தான்‌ பிரவேசித்திருக்கிறான்‌, இவனே பூத ஸூக்ஷ்மங்களுடன்‌ கூடியவனாய்‌ அதில்‌ சேர்ந்திருக்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்‌. நெற்‌ பயிரை அறுக்கும் போதே அதிலுள்ள ஜீவன்‌ வெளிக் கினம்புகினான்‌. உலர்த்தும்‌ போதும்‌, அறைக்கும் போதும்‌ பசனம்‌ செய்யும்‌ போதும்‌, சாப்பிடும் போதும்‌, ஸ்தாவர ஜீவன்கள்‌ இதில்‌ அனுவர்த்திக்க மாட்டார்கள்‌. ஓட்டிக் கொண்ட ஸ்வர்க்கத்தினின்று வந்த இந்த ஜீவர்களே அனுவர்த்திப்‌பார்கள் –

இறங்கி வருபவர்கள் ஸ்தாவராதி ஜன்மத்தை அடைவது என்பதும்‌ யுக்தமன்று. அப்படி இருந்தால்‌ அதற்கு காரணமான கர்ம சம்பந்தம்‌ சொல்லப் பட்டிருக்கும்‌-ரமணிய சரணா: கபூய சரணா: என்று மேலே இவர்களுடைய மனிதப்‌ பிறப்பிற்குக்‌ காரணமான கர்மம் சொல்லப் பட்டுள்ளது. ஆகாசாதிகளை அடைகிறான்‌ எனற இடத்தில்‌ போலவே இங்கும் சாமான்யமாக சொன்னபடியால்‌ இவர்களுக்கு ஸ்தாவர பாவம்‌ சொல்ல முடியாது:மேலும்‌ வேள்வியில் பசு ஹிம்ஸை ஏற்படுகிற காரணமாக பாப சம்பந்தம்‌ உண்டு என்பதுவும்‌ அனுபபந்நம் . ஹிம்ஸை செய்ய வேண்டாம் என்று சாமான்யமாக சாஸ்த்ரம்‌ சொல்லிற்று – வேள்வியில்‌ பசு ஹிம்சை செய்‌ என்று அதற்கு அபவாதமாக அதே சாஸ்த்ரம்‌ சொல்லிற்று. எனவே சாஸ்த்ர விஹிதமான இந்த ஹிம்சை பாபத்தில்‌ சேராது… மற்ற ஹிம்சை தான்‌ பாப கரம்‌. மேலும்‌ வேள்வியில் பசு ஹிம்ஸையை ஹிம்ஸை என்று சொல்வதும்‌ பொருந்தாது. அந்தப்‌ பசுவிற்கு மேலே ஸ்வர்க்க லோகம்‌ வருகிறபடியால்‌ உயர்ந்த ஆனந்தத்தை அது அடையப்‌ போகிறது, பசுவை வெட்டும் போது தற்காலத்தில்‌ அதற்கு வேதனை உண்டானாலும்‌ உதர்க்கத்தில்‌ (மேல்‌) உயர்ந்த சுகம்‌ கிடைப்பதால்‌, அந்த ஹிம்ஸை நன்மையே கொடுக்கிறது. ஹிம்ஸை என்பது மேலே அனர்த்தத்தை கொடுக்கக்‌ கூடிய வயாபாரம்‌: தற் காலத்தில்‌ அற்பமான துக்கத்தை கொடுக்கக் கூடியதும்‌ மேல்‌ பரமானந்தத்தைக்‌ கொடுக்கக்‌ கூடியதுமான வைத்தியர்களுடைய அறுவை சிகிச்ஸை முதலிய வ்யாபாரங்களை ஹிம்ஸை என்று உலகத்தவர்‌ சொல்வதில்லை. அந்த சிகித்ஸை செய்கிறவனைப்‌ பல விதத்தில்‌ பூஜிக்கின்றனர்‌. யக்ஞத்தில்‌ பசுவின்‌ வதம்‌ அவதம்‌ என்றே சாஸ்த்ரம்‌ சொல்லிற்று,

இங்கு சாங்க்ய மதத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌ இவ்வாறு கூறுகின்றனர்‌. வேள்வியில்‌ பசு ஹிம்சை யாகத்தை பூர்த்தி செய்விக்கிறது. அத்துடன்‌ கர்த்தாவிற்கு பாபத்தையும்‌ கொடுக்கிறது. இது உண்மையாதலால்‌ வேள்வியில்‌ பிஷ்ட (மாவு) மயமான பசுவைக்‌ கொண்டு யாகத்தை செய்‌ என்று விதித்தது. உண்மையில்‌ ஹிம்சை பாப கரம்‌ இன்றி இருந்தால்‌, பிஷ்ட மயமான பசுவை வைத்துக் கொண்டு யாகம்‌ செய்‌ என்று விதிக்க வேண்டாமல்லவா ? இவ்விஷயம் பாரத்வாஜாதிகளிலும்‌ ஸ்டஷ்டம்‌ என்று. இதற்கு உத்தரம்‌ மந்த்ரத்திலும் அர்த்த வாதத்திலும்‌ ஸ்பஷ்டமாக பசு ஹிம்சை ஹிம்சையில்‌ சேராது என்று சொன்ன பிறகு அதை ஹிம்சை என்று எப்படிச்‌ சொல்ல முடியும்‌. பிஷ்ட மயமான பசுவை சொன்னது க்ருத யுகாதி காலங்களில்‌ ஏற்பட்டவை, ஸூத்த யாஜீ என்று சொல்லப்படும்‌ அதிகாரிக்கு அது விஹிதமானது. ஆகவே நம்‌ போன்ற அதிகாரிகளுக்கும்‌ இந்த யுகத்திற்கு பிஷ்ட மயமான பசுவைக்‌ கொண்டு வேள்வி செய்யக்‌ கூடாது என்பது தெளிவு. ஆக யாகத்தில்‌ பசு வதம்‌ செய்யலாம்‌, அது பாபத்தையும்‌ உண்டு பண்ணாது, -மற்றவை தான்‌ பாப கரம்‌-மேலும்‌ இவ் விடத்தில்‌ உத்ஸர்க அபவாத க்யாயத்தைக்‌ கொண்டு பரிஹாரம்‌ சொல்ல வழி இருக்க, அதை விட்டு இந்த வதத்தை பாபம்‌ என்று சொன்னால்‌, சரத் காலத்‌தில்‌ பசு வதத்தை செய்‌ என்று சாஸ்ரம்‌ எப்படி கூறும்‌. இந்த பசு வதமானது நித்யம்‌ என்‌றும்‌, அவசியம்‌ செய்ய வேண்டும்‌ என்றும்‌ சொல்லப் பட்டுள்ளவே. இந்த பசு வதத்தையும்‌ பாபம்‌ என்று தானே சொல்ல வேண்டும்‌. ஸ்வர்காதி பலத்தில்‌ ஆசைப்பட்டு யாகத்தில்‌ செய்யும்‌ பசு வதத்தை பாபம்‌ என்று சொல்வது பொருக்தும்‌. நித்யமான பசு வதத்தை பாபம்‌ என்று சொல்வதில்லை, ஆனால்‌ சாங்க்யனுடைய மதத்தின்படி இதுவும்‌ பாப கர்மம்‌ என்று தானே சொல்ல நேரிடுகிறது. விஹிதமான ஹிம்ஸை தவிற மற்ற ஹிம்சை தான்‌ பாபகரம்‌ என்று சொல்லித் தான்‌ இதை தவிர்க்க வேண்டும்‌. அதே ந்யாயப்படி வேள்வியில்‌ செய்யப்படும்‌ வதத்தையும்‌ ஹிம்சை அன்று என்று சொல்லலாமே-

எல்லோரும்‌ ஸ்வ தர்மத்தை அனுஷ்டித்தால்‌ அளவற்ற பலன்‌ கிடைக்கும்‌ என்று சாஸ்த்ரத்தில்‌ கூறப் பட்டுள்ளது. சரத்‌ காலத்தில்‌ செய்யும்‌ பசு வதமும்‌ ஸ்வ தர்மம்‌ ஆனபடியால்‌ அளவற்ற பலனைக்‌ கொடுக்கும்‌. எனவே பலத்தில்‌ ஆசையால்‌ இதைச் செய்கிறபடியால்‌ வேள்வியில்‌ செய்கிற பசு வதம்‌ போல்‌ இதுவும்‌ ஆகிறது. ஆக இதுவும் பாபகரம் தான்‌ என்றால்‌, அப்பொழுது நித்ய கர்மம்‌, காம்ய கர்மம்‌ என்ற விபாகமே ஏற்பட வழியின்றி போகும்‌. எல்லாம்‌ காம்யமாகவே முடியும்‌ ்‌ நித்ய ஸ்தலத்தில்‌ பிஷ்ட மயமான பசுவைக்‌ கொண்டு செய்வது காம்ய ஸ்தலத்தில்‌ உண்மையான பசுவைக்‌ கொண்டு செய்வது என்று ஒப்புக் கொள்கிறோம்‌. எனவே நித்ய ஸ்தலத்தில்‌ உண்மையான பசுவிற்கு ஹிம்சை இல்லாததால்‌ பாபத்திற்கு ப்ரஸக்தியே கிடையாது என்று சிலர்‌ சொன்னார்‌. இதுவும்‌ ஏற்றுக் கொள்ளப்‌ படமாட்டாது.
பஞ்ச ஸூனா க்ருஹஸ்தஸ்ய வர்த்தத்தே அஹரஹஸ் ததா, கண்டனீ பேஷணீ ?*
என்று பேஷணம்‌, கண்டனம்‌ முதலியவைகளும்‌ ஹிம்சையிலேயே படிக்கப் பட்டுள்ளன-ஆகையால்‌ க்ருஹஸ்தனுக்கு இவைகளும்‌ பாபகரம் தான்‌. ஆக பிஷ்டமயமான பசுவைக்‌ கொண்டு நித்யத்தில்‌ ஸ்வ கர்மத்தைச்‌ செய்தாலும்‌, பாபத்திலிருந்து விலக வழியில்லை-ஆகையால் உத்ஸர்க்க அபவாத ந்யாயத்தைத் தான்‌ கொண்டு இங்கு உத்தரம்‌ சொல்ல வேண்டும்‌.-விவாஹம்‌, ஸ்த்ரீ போகம்‌, ப்ராண நாசம்‌, ஸர்வ தனத்துக்கும்‌ அபஹாரம்‌, அந்தணன்‌ இவைகளின்‌ விஷயத்தில்‌ பொய் சொல்லலாம்‌ என்று சாஸ்த்ரம்‌ உள்ளது. பிறகு ப்ராயச் சித்தமும்‌ (மூன்று இரவு காரம்‌, உப்பு இல்லாமல்‌ போஜனம்‌ ஆகிற ப்ராயச்‌ சித்தம்‌) சொல்லப் பட்டுள்ளது. இதல்‌ மித்யா பாஷணம்‌ பாப ரூபமாகவும்‌, புண்ய ரூபமாகவும்‌ ஆகிறது என்பதில்‌ ஸந்தேகமில்லை. செய்‌ என்று சொன்ன படியால்‌ புண்ய ரூபம்‌, மேல்‌ ப்ராயச்சித்தம்‌ சொன்ன படியால்‌ பாப ரூபம்‌. இது போலவே யாகத்தில்‌ பசு ஹிம்சை பாபரூபமாகவும்‌, புண்ய ரூபமாகவும்‌ ஆகலாம்‌. ஹிம்சை செய்யக்கூடாது என்பதால்‌ பாப ரூபம்‌, யாகத்தைச் செய்‌ என்பதால்‌ புண்ய ரூபம்‌ என்றனர்‌. இது யுக்தமன்று. மித்யா பாஷணத்தில்‌ மேலே ப்ராயச்சித்தம்‌ சொன்னபடியால்‌ அது பாப ரூபமாக வழி யுண்டு. யாகாதி களில்‌ ஹிம்சை செய்த பிறகு, இதற்கு ப்ராயச் சித்தம்‌ சொல்ல வில்லை யாகையால்‌, இதை எப்படி பாபத்தில்‌ சேர்க்க முடியும்‌. அங்கும்‌ பொய் சொல்வது பாபம்‌ என்ற காரணத்தை முன்னிட்டு பிராயச்சித்தம்‌ சொல்லப் படவில்லை. மக்கட்பேறு பெற்றவன்‌, கருத்த கூந்தலைப்‌ பெற்றவன்‌, அக்னி ஆதானம்‌ செய்யக் கடவன்‌ என்று சொன்னால்‌, அங்கு ஜாத புத்ரத்வம்‌ மேல்‌ செய்யக் கூடிய கர்மாவிற்கு நிமித்தம்‌ என்று சொல்வார்கள்‌. அது போல்‌ அக்ருத வசனம்‌ மேல்‌ கர்மாவிற்கு நிமித்தம்‌ ஆகிறது என்று தான்‌ சொல்ல வேண்டும்‌. ஆக அது ப்ராயச்சித்த ரூபமாகாததால்‌ அக்ருத வசனத்திற்கு பாப ரூபதவம்‌ ஸம்பவிக்காது. இது தான்‌ சாஸ்த்ரார்த்தம்‌. ஆகையால்‌ ஸ்தாவர பாவம்‌ இஷ்டாதிகாரிகளுக்கு கிடையாது. அந்த நெல்‌ முதலியவைகளில்‌ பூத ஸூஷ்மங்களுடன்‌ த்ருடமாக சேர்ந்து இருக்கின்றனர்‌. அதை உட்கொண்ட புருஷனிடத்தில்‌ ரேதஸ்ஸாக மாறுதல்‌ அடைந்து, ஸ்த்ரீயினிடம்‌ சென்று கர்பமாகவும்‌ மாறி யோனி த்வாரா சரீரத்தை அடைகின்றனர்‌.

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ.வே. வித்வான்‌. பெருக்காரணை மாடபூஷி. சக்ரவர்த்தியாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய இரண்டாம் அத்யாயம் – நான்காம் பாத ஸாரம்- ஸ்ரீ உப வே. வித்வான்‌. புரிசை. நடாதார்‌ கிருஷ்ணமாசாரிய ஸ்வாமிகள்–

September 28, 2026

ஸாரீரக ஸாஸ்த்திரத்தில்‌ இரண்டாவது அத்யாயத்தின்‌ நான்காவது பாதம்‌ ப்ராண பாதம்‌ இப் பாதத்தில்‌ எட்டு அதிகரணங்கள்‌ உள்ளன-இவ்வத்யாயத்தில்‌ முதல்‌ இரண்டு பாதங்களில்‌ காரண விஷய -வேத பாஹ்ய மதங்களின்‌ விரோத பரிஹாரம்‌ செய்யப்பட்டது. மூன்றாவது நாலாவது பாதங்களில்‌ கார்யத்தை த்வாரமாகக்‌ கொண்ட ஸ்வ ஸித்தாந்த விரோத பரிஹாரத்தைச்‌ செய்கிறார்‌ ‘” என்று பாத த்விகங்களின்‌ ஸங்கதி – கார்ய விஷய விரோதி பரிஹார பரங்களான பின்புள்ள பாதங்களில்‌ இதர மதத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ சொல்லும்‌ ப்ரக்ரியை அநுஸரித்து அநுவாதம்‌ செய்து–பூர்வ பக்ஷங்களைச்‌ சொல்லி அவைகளை நிராகரிக்கும்‌ ப்ரக்ரியையாலே ஸ்வ ஸித்தாந்தத்தைச்‌ சொல்லி முடிக்கிறார் –நான்கு பக்ஷங்கள்‌ நிராகரிக்கத்‌ தக்க்கவர்கள் –

ஸாங்கியர்கள்‌ த்ரவ்யம்‌ அத்ரவ்யம்‌ ஸர்வம்‌ நித்யம்‌ என்கிறார்கள்‌. ‘* ஸர்வம்‌ அநித்‌ யம்‌–க்ஷணிகம்‌ ” என்று சொல்லுமவர்கள்‌. வைபாஷிகாதிகள்‌–பெளத்தர்கள்‌. எல்லாம்‌ நித்யமாயும்‌ அநித்யமாயும்‌ இருப்பதாகச்‌ சொல்கிறவர்கள்‌ ஸப்த பங்கியைப்‌ படிக்கிறவர்கள்‌ ஜைனர்கள்‌. பதார்த்தங்கள்‌ நித்யங்கள்‌ அநித்யங்கள்‌ என்று இருவகைப்‌படும்‌ என்பவர்கள்‌ வைசேஷிகர்கள்‌. நம் ஸித்தாந்தத்திலும்‌ பக்ஷத்தை ஒப்புக்‌ கொண்டாலும்‌, அவர்கள்‌ நம்முடைய ஸித்தாந்தத்திற்கு விருத்தமாக நித்யமானத்தை அநித்யம்‌ என்று சொல்லுகிறார்கள்‌. அவ்விதமே ப்ரமாணங்களினால்‌ ஸித்தமான ஈச்வரனுடைய திவ்ய மங்கள விக்ரஹாதிகளை அவர்கள்‌ ஒப்புக் கொள்வதில்லை. அநித்யங்களான ஜாதி வ்யக்திகளுடைய–சரீரி: ஸம்பந்தத்தை–அநித்யமான ஸமவாய ஸம்பந்தத்தை அவர்கள்‌ நித்யம்‌ என்கிறார்கள்‌. ஆக நம்‌ ஸித்தாந்தத்திற்கு மாறுபட்ட ரீதியில்‌ நித்யாநித்யங்களைச்‌ சொல்லுகிறார்கள்‌. இந் நால்வர்களும்‌ ச்ருதியைக் கொண்டே நம்முடைய ஸித்தாந்தத்தை ஆஷேபிக்கிறார்கள் –முன் பாதத்தில்‌ ப்ரஹ்மத்தைத்‌ தவிர்த்து ஆகாசம்‌ முதலானவைகள்‌ யாவும்‌ உத்பத்திமத்துக்கள்‌ ‘ என்று ஸூத்ரத்தில்‌ சொன்னார்‌. இதனால்‌ ஸித்தமானாலும்‌ ஆத்மாதிகரணத்தில்‌ உத்பத்தியானது நிராகரிக்கப்பட்டது. ஜீவ ஸ்வரூபம்‌ ஜ்ஞாதிகரணாதிகளில்‌ -இந்த்ரியங்களுக்கும்‌ முக்ய ப்ராணனுக்கும்‌ உத்பத்தி ப்ரகாரத்தை விசாரிக்கிறார்‌ –ஆக ஆத்மாதி கரணத்திற்கும்‌ ப்ராணோத்பத் யதிகரணத்திற்கும்‌ ஸாக்ஷாத்‌ ஸங்கதி சொல்லப் பட்டதாகிறது-இந்த ப்ராணோத்பத் யதிகரணத்தில்‌ இந்த்ரியங்களின்‌ உத்பத்தியைப் பற்றி விசாரிக்கிறார் –

இந்த்ரியங்களுக்கு உத்பத்தியானது-ஸ்வபாவத்தில்‌ மாறுதலையுடையதா-ஸ்வருபத்திலேயே விகாரத்தையுடையதா 7? என்று ஸம்சயம்‌- ச்ருதி ப்ரளய காலத்தில்‌ இந்த்ரியங்கள்‌ இருப்பதாகச்‌ சொல்லுகிறது-வேறு ச்ருதியானது இந்த்ரியங்களுக்கு உத்பத்தியைச்‌ சொல்லுகிறது. ஆகையால்‌ ஸம்ஸயம்‌ உண்டாகிறது.ஜீவன்களுக்குச்‌ சொல்லப்படுவது போன்ற உத்பத்தியே ப்ராணன்களுக்கும்‌ சொல்ல வேணடும்‌ ” என்கிறான்‌ பூர்வ பக்ஷி –

இங்கு பார்க்கப்படும்‌ ப்ரபஞ்சமானது ஸ்ருஷ்டிக்கு முன்‌–ப்ரளய காலத்தில்‌ இல்லாமல்‌ இருந்தது. இந்த ப்ரபஞ்ச மில்லா விடினும்‌ என்னது தான்‌ அப்பொழுது இருந்தது? என்கிற கேள்வி எழுகிறது, ருஷிகள்‌ அப்பொழுது இருந்தன. ருஷிகள்‌ என்பவை எவை? ப்ராணன்கள் தான்‌ ருஷிகள்‌ -என்று ஸ்ருஷடிக்கு முன்‌ இந்த்ரியங்கள்‌ இருந்தனவாகக்‌ கூறுகின்றன-இங்கு ஸூத்ரத்தில்‌ ப்ராண சப்தவாச்யன்‌ பரமாத்மா என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ப்ராணன்‌ என்றால்‌ மூச்சுக் காற்றைச்‌ சொல்லும்‌ என்கிறான்‌ பூர்வபஷி . இவ்விதமிருக்க இங்கு ப்ராண ஸுப்தத்தால்‌ இந்திரியங்களைச்‌ சொல்லுவது எங்ஙனம்‌? என்று சங்கிக்க வேண்டாம்‌-இந்த ச்ருதியில்‌ உள்ள பஹுவசந ப்ரயோகத்தை நோக்க வேண்டும்‌. ஈச்வரன்‌ ஒருவனே. முக்ய ப்ராணனும்‌ ஒன்றே. ஆகையால்‌ பஹு வசந ப்ரயோகம்‌ அஸங்கதமாகி விடும்‌. மேலும்‌ சரீரத்தினின்றும்‌ வெளிக்‌ கிளம்பும்‌ ஜீவனை அனு ஸரித்து முக்ய ப்ராணம்‌ போகிறது. அதை யநுஸரித்து எல்லா ப்ராணன்களும்‌–இந்த்ரியங்களெல்லாம்‌ செல்லுகின்றன என்கிற ச்ருதியில்‌ ப்ராண சப்தத்தால்‌ இந்த்ரியங்களைச்‌ சொல்லுவதைக்‌ காண்கிறோம்‌, ஆகையால்‌ இங்கு படிக்கப்பட்டுள்ள ப்ராண ஸப்தமானது இந்தரியங்களையே குறிக்கும் –

இவ் விடத்தில்‌ ஸ்ருஷ்டிக்கு முன்னமே இந்த்ரியங்கள்‌ இருப்பதாகக்‌ கூறுகின்றன. ஆதலால்‌ நித்யம்‌ என்றே ஒப்புக் கொள்ள வேண்டும்‌– ச்ருதியானது இந்த்ரியங்களுக்கு உத்பத்தியை ஸ்பஷ்டமாகச்‌ சொன்னாலும்‌ சரீர ஸம்பந்தத்தை இட்டு, ஜீவோத்பத்தியைச்‌ சொல்லும்‌ ச்ருதிக்கு அர்த்த நிர்ணயம்‌ செய்தாப் போல்‌ இங்கும்‌ அர்த்தம்‌ கூற வேண்டும்‌. ஆதலால்‌ இந்த்ரியங்கள்‌ ஜீவனைப் போல் தான்‌ ஸ்வபாவத்தில்‌ மாறுதலை உடையது என்று பூர்வபஷி கூறுகிறான்‌.-இனி ஸித்தாந்தம்‌ சொல்லப்படுகிறது. வியதாதிகளுக்குச்‌ சொல்லப்படுவது போல்தான்‌ இங்கும் ஸ்வரூப விகாரத்தையே ஒப்புக் கொள்ள வேண்டும்‌ ஸ்ருஷ்டியைப்பற்றிக்‌ கூறும்‌ வாக்யங்கள்‌, ஸ்ருஷ்டிக்கு முன்‌ ஒன்றே இருந்ததாகக்‌ கூறுகின்றன- ச்ருதி இந்திரியங்களுக்கு உத்பத்தியை ஸ்பஷ்டமாகக்‌ கூறுகிறது. ஆகையால்‌ ஸ்ருஷ்டிக்கு முன்‌ -ப்ரளய காலத்தில்‌ இந்த்ரியங்கள்‌ இருந்திருக்க முடியாது-ஜீவோத்பத்தியைப்போல்‌ இந்த்ரியங்களுடைய உத்பத்தி விஷயத்தில்‌ நிர்வாகம்‌ பண்ணுவதும்‌ முடியாது. ஆத்மோத்பத்தி விஷயத்தில்‌ உத்பத்தி ப்ரதிஷேத ச்ருதி இருக்கிறது. அதைப் போல்‌ இந்த்ரியங்களின்‌ உத்பத்தியை நிஷேதிக்கும்‌ ச்ருதி வாக்யத்தைக்‌ காண வில்லை. பஹுவச௩ ப்ரயோகத்திற்கு மட்டும்‌ ஸூத்ர காரர்‌ நிர்வாஹம்‌ பண்ணப் போகிறார்‌. ஆகையால்‌ மற்ற ஸித்தாந்த யுக்திகள்‌ அர்த்த ஸித்தம்‌ என்று ஸூத்ரகாரரின்‌ அபிப்ராயம்‌, ஸூத்ரகாரரின்‌ அபிப்ரேதார்த்தத்தையே பாஷ்யகாரர்‌ ஸித்தாந்தமாக அருளிச் செய்துள்ளார்‌.
பிராண சப்தம் பரமாத்மாவினிடத்திலும்‌ ப்ரயோகிக்கப்பட்டிருக்கிறது. ருஷி சப்தமும்‌ பரமாத்மா பரமாகச்‌ சொல்லுவதும்‌ உசிதமே. ஆகிலும்‌ பஹுவசநாந்தங்களான இவ் விரண்டு சப்தங்களுக்கும்‌ பரமாத்மாவினிடத்தில்‌ அந்வயமானது என்கிற ஆக்ஷேபத்தை பரிஹரிக்கிறார்‌-2-4-2- அதிகரணத்தில் -பரமாத்மா ஒருவன் தான்‌ ஸ்ருஷ்டிக்கு முன்‌ இருப்பதாக, ஸ்ருஷ்டியைப் பற்றி சொல்லும்‌ ச்ருதிகளில்‌ சொல்லி இருப்பதால்‌ பஹுவசந ச்ருதியானது –மேலுள்ள பஹ*வசநமானது அவயவ பஹுத்வபரமாக–கெளணமாக நிர்ணயம்‌ செய்யப்பட் டதோ, அவ் விதமே ப்ராண ஸப்தோத்தர பஹுவசநத்தையும்‌ கெளணமாக அர்த்தம்‌ கொள்ள வேண்டும்‌.

அத்ருஷ்ட ஸம்ஸ்கா ரத்தின்‌ ஸ்திதியாகிற கார்யம்‌ இருப்பதைக்‌ காண்பதால்‌ அதன்‌ காரணமான வாஸனை யானது ப்ரளய காலத்திலும்‌ இருக்க வேண்டுமாகையால்‌ அதற்கு ஆதாரமாக ஆத்மாவானது ப்ரளய காலத்தில்‌ இருப்பதாகக்‌ கல்பிக்கிறோம்‌. அதே போல்‌ இந்த்ரிய கார்யங்கள்‌ இருப்ப தாகத்‌ தெரிந்தால்‌ இந்த்ரியங்களையும்‌ ப்ரளய காலத்தில்‌ இருப்பதாகக்‌ கல்பிக்கிறோம்‌.-பரமாத்ம வ்யதிரிக்தமான ஸர்வ வஸ்து விஷயமான நாமதேயங்கள்‌ அந்தந்த வஸ்துக்களைப்‌ படைத்த பிறகே உண்டாகின்றன–ஏற்படுகிறது.-ஸ்ருஷ்டி காலத்தில்‌ முதலில்‌ ஆகாசாதிகளை ஸ்ருஷ்டித்து அதன் பிறகு அவைகளுக்கு நாம ரூப வ்யாகரணம்‌ செய்ததாகச்‌ சொல்லுகையால்‌ ஆகாசாதிகள்‌ உண்டான போதே அவற்றுக்கு வாசகங்களான நாமங்கள்‌ உண்டு. ப்ரளய காலத்தில்‌ அவைகளில்லாமையால்‌ அவற்றின்‌ நாமங்களு மில்லாமையால்‌, அப்போது ப்ராணன்‌ என்று அப்பொழுதுள்ள பரமாத்மாவையே சொல்லுகிறது.

2-4-4-இந்த்ரியங்கள்‌ வியதாதிகளைப்போல்‌ உத்பத்தியை விகாரத்தை உடையதுகள்‌ என்று நிச்சயிக்கப்பட்ட பிறகு இந்த்ரியங்களின்‌ ஸங்க்யையைப் பற்றி இவ்வதிகரணத்தில்‌ விசாரிக்‌கிறார்‌-இந்த்ரியங்கள்‌ ஏழா ? பதினொன்றா ? என்று சம்சயம்‌ உண்டாகிறது-ச்ருதிகளில்‌ மாறுபட்டு சொல்லி இருப்பதால்‌ ஸந்தேஹம்‌ ஏற்படுகிறது-பூர்வபஷி ஏழு இந்த்ரியங்கள்‌ என்கிறான்‌-ஸ்ரோத்ராதி ஜ்ஞாநேந்த்ரியங்கள்‌ ஐந்தும்‌, மனஸ்‌ புத்தியும்‌ சேர்ந்து ஏழு இந்த்ரியங்கள்‌:ஜீவன்‌ தூங்கும் சமயம் ஹ்ருதய குஹையில்‌ (பகவானால்‌) வைக்கப்பட்டிருக்கும்‌ இந்தரியங்கள்‌ ஏழு லோகங்களிலும்‌ ஸஞ்சரிக்கின்றன. அவைகள்‌ ஏழு என்கிற வீப்ஸையானது புருஷ பேதாபிப்ராயத்தால்‌ சொல்லப்பட்டது. [அதாவது ஏழு ஏழு என்று இரட்டித்துப்‌ பேசியது ஒவ்வொரு ஜீவனுக்கும்‌ ஏழு இந்த்ரியங்கள்‌ என்பதாம்‌] என்று ச்ருதி கூறுகிறது அதாவது ஜீவன்‌ போகுமிடமெல்லாம்‌ ஏழு இந்த்ரியங்கள்‌ ஸஞ்சரிக்கின்றன என்கிறது ச்ருதி. ஆகையாலும்‌,இந்த சருதியில்‌ ஏழு இந்த்ரியங்களுக்கு கமனம்‌ சொல்லி யிருப்பதால்‌ மட்டும்‌, ஏழு இந்த்ரியங்கள்‌ என்று கூறவில்லை.-ஏழு இந்தரியங்களே உண்டாகின்றன என்று முன்னமே கூறப்பட்டபடியாலும்‌ என்கிறோம்‌. -மேலும்‌ கடவல்லியில்‌ யோகஸ்வரூப நிரூபணம்‌ பண்ணும் போது,ஜ்ஞாநேந்த்ரியங்கள்‌ ஐந்தையும்‌, மநஸ்‌, புத்தியையும்‌ அடக்கினால்‌ மோக்ஷத்தை அடையலாம்‌ என்று விசேஷித்துச்‌ சொல்லுகையாலும்‌ இந்த்ரியங்கள்‌ ஏழே: இந்த ஸூத்ரம்‌ பூர்வ பக்ஷ ஸூத்ரம்‌

2-4-5-இது ஸித்தாந்த ஸூத்ரம்‌. சஷுராதி இந்தரியங்கள்‌ பார்ப்பது கேட்பது முதலான கார்யங்களால்‌ ஜீவனுக்கு உபகரணமாவது போல்‌ கை கால்‌ முதலான கா்மேந்த்ரியங்களும்‌ கார்யங்களில்‌ உபகரணங்களாகின்றன.-புரோடாசத்தை கையால்‌ எடுக்க வேண்டும்‌. நெல்‌ முதலான த்ரவ பதார்த்தத்தை ஸ்ருவத்தாலும்‌ (கரண்டியால்‌) மாம்ஸத்தை ஸ்வதிதியினாலும்‌ (கத்தியால்‌) எடுக்க வேண்டும்‌] ஆகையாலும்‌, ஜ்ஞாநேந்த்ரியங்களுக்குப்போல்‌ சாத்விகாஹங்காரத்திலிருக்து உண்டான கர்மேந்த்ரி யங்களுக்கும்‌ உண்டாகையாலும்‌ இந்த்ரியங்கள்‌ ஏழு தான்‌ என்று சொல்ல முடியாது.-ச்ருதி ஸ்ம்ருதிகள்‌ பதினோரு இந்த்ரியங்கள்‌ என்று கூறுகின்றன-பதினோரு இந்த்ரி யங்களுக்கும்‌ கமனம்‌ (உத்க்ராந்தி) சொல்லப் பட்டிருக்கிறது –மநோ வருத்தியில்‌ அத்யவஸாயம்‌, அஹங்காரம்‌, சித்தம்‌ இவை மூன்றும்‌ சேர்ந்ததாகையால்‌ இவைகளைச்‌ சேர்த்து பதினான்கு இந்த்ரியங்கள்‌ என்பதை ஒப்புக்‌ கொள்வதற்கில்லை.–யோகத்திலும்‌, கமநத்திலும்‌ ஏழு இந்த்ரியங்களைச்‌ சொன்னது, கர்மேந்த்ரியங்கள்‌ ‘ஜ்ஞாநேந்த்ரியங்களின்‌ அதீனமாகக்‌ கார்யங்களைச்‌ செய்வதால்‌, ஜ்ஞாநேந்தரியங்களைப்‌ ப்ரதானமாகச்‌ சொன்னதத்தனை, மற்ற இந்த்ரியங்களை நிஷேதிக்க வில்லை.-இவ்வதிகரணத்தில்‌ ஸ்ரீபாஷ்யத்தில்‌ ஸித்தாந்த ஸூத்ரத்தில்‌ கர்மேந்த்ரியங்‌ களுக்கும்‌ ஜீவனோடு கமநத்தைத்‌ திருவுள்ளம் பற்றி இவற்றுக்கும் உத் க்ராந்தியை அருளிச் செய்திருக்கிறார்‌.

ஆனால்‌ வேதாந்த தீபத்தில்‌ ஜ்ஞாநேந்த்ரியங்களே ஜீவனோடு போகின்‌றன -கர்மேந்த்ரியங்கள்‌ சரீரம்‌ உண்டாகும் போது உண்டாகின்றன. சரீரம்‌ நாசத்தை யடையும் போது அவைகளும்‌ எரிக்கப்படுகின்‌றன—நசித்துவிடுகின்றன என்பதாம்‌-இவ்வர்த்தம்‌ ஸ்ரீபாஷ்ய , ஸ்ரீஸூக்திக்கு முரண்பட்டதாகும்‌ ‘” என்கிற கேள்வி எழுகிறது-பதில்‌-இதற்கு ஸமாதானத்தை ந்யாய ஸித்தாஞ்ஜனத்தில்‌ ஸ்வாமி தேசிகன்‌ அருளிச்‌ செய்துள்ளார்‌. அதாவது– யாதவ ப்ரகாச மத ரீதியாக கர்மேந்த்ரியங்கள்‌ சரீரத்துடன்‌ உண்டாகி நசித்துவிட்டாலும்‌ ஹஸ்தாதிகளுக்கும்‌ இந்த்ரியத்வம்‌ ஸித்திக்கிறது ” என்று யோஜநாந்தரம்‌ ஸ்ரீ பாஷ்யகாரரின்‌ திரு வுள்ளம்‌. உண்மையில்‌ பதினோரு இந்த்ரியங்களும்‌ வேறு சரீரங்களிலும்‌ போகின்றன என்பதே ஸ்ரீ பாஷ்யகாரரின்‌ அபிப்ராயம்‌ என்று தோன்றுகிறது என்பது பதிலின் சாரம்

2-4-6-கீழ்‌ அதிகரணத்தில்‌ இந்த்ரியங்களுடைய ஸங்க்யை நிரூபிக்கப்பட்டது. இவ்வதி கரணத்தில்‌ இந்த்ரிய ஸ்வரூப பரிமாணம்‌ சிந்திக்கப்படுகிறதுஇந்த்ரியங்கள்‌ விபுவா * அணு பரிமாண-வத்தா ! என்று ஸம்சயம்‌ உண்டாகிறது.-இந்த இந்த்ரியங்களைப் பற்றி இவ்வித பரிமாணத்தை உடையன என்று எங்கும்‌ ஸ்பஷ்டமாகச்‌ சொல்ல வில்லை. ஆகையால்‌ விபு என்கிறான்‌ பூர்வபஷி -ச்ருதியானது ஜீவனை அநுஸரித்து முக்ய ப்ராணன்‌ போகிறது, அதை அநுஸரித்து எல்லா இந்த்ரியங்களும்‌ போகின்றன (தேசாந் தரத்திலிருந்து வரும் போதும்‌ வருகின்றன) என்று சொல்லுவதால்‌ இந்த்ரியங்களை அணுவாகத்தான்‌ சொல்ல வேண்டும்‌. விபுவாக இருந்தால்‌ உத்க்ராந்தி (போவதும்‌, வருவதும்‌) சொல்ல முடியாது.-இந்த்ரியங்களுக்குச்‌ சொல்லப்படும்‌ அணுத்வமானது ஜீவனுக்குச்‌ சொல்லப்‌ படுவதைப்‌ போன்று அத்யந்த ஸூஷ்மமானதன்‌ று–ஸூக்ஷ்ம பரிமாணத்தை உடையது என்று சொல்லுவதில்‌ நோக்குடையது.-ப்ரகாசமானது ப்ரதிபந்தக மில்லாவிட்டால்‌ * எல்லாவிடங்களிலும்‌ ப்ரகாசிப்பது போல்‌, தடங்கல்‌ இல்லாவிட்டால்‌ இந்த்ரியங்கள்‌ எல்லா வஸ்துக்களையும்‌ க்ரஹிக்க சக்தி யுடையவைகளாக இருப்பதால்‌, ஆநந்த்ய ஸப்தம்‌ ப்ரயோகிக்‌கப் பட்டிருக்கிறது எனறு கருத்து- உபாஸநத்தில்‌ சொல்லப்பட்ட ஆநந்த்யம்‌, இந்தரியங்களுடைய உபாஸநத்திற்கு அதிக பலன்‌ உண்டு என்பதைச்‌ சொல்லுகிறது-

2-4-7-முக்ய ப்ராணனுக்கும்‌ உத்பத்தி உண்டு-ச்ருதி பரமாத்மாவினிடத்திலிருந்து முக்ய ப்ராணன்‌ உண்டாவதாகச சொல்லுகிறது– முக்ய ப்ராணன்‌ ப்ரளய தசையில்‌ இருப்பதாக சொல்லுவதற் கில்லை-ப்ரளய தசையில்‌ வாயு இல்லை என்று ஏற்படு கிறது. அப்பொழுது (ப்ரளய தசையில்‌) பெரிய பிராட்டியாரோடு சேர்ந்து பகவான்‌ ஒருவனே இருக்கிறான்‌. இந்திரி யங்களுக்குச்‌- சொல்லப்பட்ட ந்யாயத்தைக்‌ கொண்டே முக்ய ப்ராணன்‌ விஷயத்திலும்‌ கார்யத்வத்தை–உத்பத்தியைச்‌, சொல்ல முடியுமாகிலும்‌–ந்யாயாதிதேசம்‌ பண்ணலா மானாலும்‌, இங்கு முக்ய ப்ராணனைப் பற்றி தனியாகச்‌ சொன்னது அடுத்த அதிகாணத்தில்‌ முக்ய ப்ராண ஸ்வரூபத்தைத்‌ தனியாக விசாரிப்பதற்கு ஸங்கதி வேண்டியதற்காக என்று கொள்ள வேண்டும்-

2-4-8-இந்த ஸ்ரேஷ்ட ப்ராணன்‌ என்பது மஹா பூதங்களில்‌ த்விதீயமாக–இரண்டாவதாகப்‌ படிக்கப்பட்ட வாயுவா * வாயுவினுடைய சலிக்கிற க்ரியையா ? அல்லது வாயுவே அவஸ்தா விசேஷத்தை அடைந்திருக்கிறதா ? என்று ஸம்சயம்‌.-வாயுவே முக்ய ப்ராணன்‌. வாயு மாத்ரத்தில்‌ ப்ராணத்வ ப்ரஸித்தி இல்லை வாயுக் கிரியையில்‌ ப்ராண ஸப்த ப்ரஸிததி இருப்பதால்‌ வயுக்ரியைதான்‌ ப்ராணன்‌ என்னலாம்‌ என்கிறான்‌ பூர்வபஷி – ப்ராணனையும்‌ வாயுவையும்‌ தனித் தனியாகச்‌ சொல்லி இருப்பதால்‌ வாயுவே ப்ராணன்‌ என்று சொல்ல முடியாது. தேஜஸ்‌ முதலானவற்றுக்குத்‌ தனியாக கிரியை சொல்லாததால்‌ வாயுவின்‌ கிரியை என்றும்‌ சொல்லக் கூடாது-வாயு வேறு அவஸ்தையை அடைந்ததாய்‌ ப்ராணன்‌ எனப்‌ படுகிறது. கிரியையை உடைய த்ரவ்யத்‌தையே ப்ராணன்‌ என்று சொல்ல வேண்டும்‌.

2-4-9-ப்ராணன்‌ அக்னியைப் போல்‌ வாயுவின்‌ விகாரமாய்க்‌ கொள்வதோ எனில்‌, பூதாந்தரமில்லை என்கிறார்‌-சக்ஷுராதி கராணங்கள் போல்‌ ஜீவனுக்கு உபகரண விசேஷமாகும்‌-உபகரண பூதமான இந்த்ரியங்களோடு சாந்தோக்யத்தில்‌ ப்ராண ஸம்வாதத்தில்‌ சஷுராதி இந்த்ரியங்களுக்கும்‌ முக்ய ப்ராணனுக்கும்‌ ஸம்வாதம்‌ நடந்ததாகக்‌ கூறப்பட்டுள்ளது. அதில்‌ இந்தரியங்களோடு முக்ய ப்ராணனையும்‌ சேர்த்து அதாவது இந்த்ரியங்களுக்குள்‌ விவாதம்‌ நடந்தது என்று படிக்கப்பட்‌ டிருப்பதாலும்‌, இந்த்ரியங்களுக்குள்‌ ப்ராணனுக்கு ஸ்ரைஷ்ட்யம்‌ சொன்னதாலும்‌ பூதாந்தரமில்லை-

2-4-10-ஜீவனுக்கு உபகரிக்கையால்‌ சக்ஷுராதிகள்‌ உபகரணங்களாகின்றன, அவ்விதம்‌ முக்ய பிராணன்‌ உபகரிக்காததால்‌ ப்ராணன்‌ உபகரணமாகாது என்கிற தோஷம்‌: சொல்ல முடியாது–முக்ய ப்ராணன்‌ ஜீவன்‌ விஷயத்தில்‌ செய்யும்‌ உபகார விஷயத்தை ச்ருதியே சொல்லுகிறது -ப்ராணன்‌ ஸரீரத்தில்‌ இருந்தால்‌ தேஹேந்த்ரியாதிகள்‌ ஸிதிலமாகாமல்‌ இருக்கும்படி காக்கிறது. ப்ராணன்‌ இல்லா விட்டால்‌ இந்த ஸரீரம்‌ பாபிஷ்ட தரமாக ஆகி விடுகிறது” என்று சொன்னதால்‌ ஜீவோப கரணதவம்‌ ஸித்தம்‌, பெயர்‌ வெவ்‌வேறாக இருப்பதாலும்‌, கார்யங்களும்‌ மாறுபட்டிருப்பதாலும்‌ ப்ராணாபாநாதிகள்‌ தத்வாந்தரங்களாகட்டும்‌–

2-4-11-ஒரு மனதே காமாதி வருத்தி பேதத்தால்‌ பலவாகுமா போலே ப்ராண வாயுவே ஸமஜ்ஞையை -இடமாற்றத்தால்‌ அடைகிறது. (காமபேத கார்ய பேதத்‌தால்‌) தத்வாந் தரமில்லை-ப்ராணனே ஐந்து விதமாக ஆகிறது –

2-4-12-ஜீவன்‌ சரீரத்தை விட்டு தேசாந்தரம்‌ செல்லும் போது முக்ய ப்ராணனும்‌ அதனுடன்‌ செல்வதாக ச்ருதி கூறுவதால்‌ முக்ய ப்ராணன்‌ அணு பரிமாணனாகத் தான்‌ இருக்க வேண்டும்‌ என்று ஏற்படுகிறது-இந்த்ரியங்களுக்குச்‌ சொல்லப் பட்ட ந்யாயத்தைக்‌ கொண்டே முக்ய ப்ரரணன்‌ அணு என்று ஸாதிக்கலாம்‌. இதற்காக ஒரு அதிகரணம்‌ வேண்டியதில்லை. ஆகிலும்‌ ச்ருதிகளின்‌ அர்த்தங்களைப்‌ பராமர்சித்தால்‌ ப்ராணனை விபுவாகச்‌ சொல்ல வேண்டும்‌ என்கிற ஆக்ஷேபம்‌ உண்டாகக் கூடும்‌, இதை அதிகாஸங்கை என்பார்கள்‌. இந்தரியங்களுக்கு அணுத்வத்தை ஸாதித்துள்ள அதிகரணத்தில்‌ பூர்வ பஷி சொன்ன யுக்தியை விட இவ்வாசஙகை யானது அதிகமானது, அதாவது அந்த அதிகரண ஸித்தாந்தததின் மேல்‌ ஆக்ஷேபம்‌ செய்யப் படுகிறது-இவ் வாக்ஷேபம்‌ ஸரியானதில்லை. ப்ராணனுக்கு உத் க்ராந்த்யாதிகள்‌ . சொல்லப்‌ படுவதால்‌, ப்ராணன்‌ அணு பரிமாணன் தான்‌. ஸர்வ ப்ராணிகளும்‌ ப்ராணாயத்த ஸ்திதியை உடையதாக இருப்பதால்‌ எங்கும்‌ வ்யாபித்திருப்பதாக–கெளணமாக ச்ருதியில்‌ சொல்லப்‌ பட்டிருக்கிறது. விபுவாக இருந்தால்‌ உத் க்ராந்தியும்‌, திரும்பி வருவதும்‌ கூடாமல் போகும்–

2-4-13-இவ் வதிகரணத்தில்‌ ஜ்யோதிராதிகளுக்கும்‌ ஜீவனுக்கும்‌ ப்ராணாதி விஷய அதிஷ்டான மானது பரமாத்மாதீகம்‌ என்று ஸாதிக்கிறார்‌. முன்‌ அதிகரணங்களில்‌ முக்ய ப்ராணனுக்கும்‌ இந்தரியங்களுக்கும்‌ உத்பத்தியையும்‌ பரிமாணத்தையும்‌ பற்றி விசாரித்து நிர்ணயித்தார்‌- ஜீவன்‌ தன்னுடைய போகஸாதனார்த்தம்‌, அதாவது–தான்‌ முன்‌ ஜன்மங்களில்‌ செய்த புண்ய பாப கர்ம பலன்களை அனுபவிப்பதற்காக ஸாரீராதிஷ்டானம்‌ பண்ணுவது யாவரும் அறிந்ததே -இவ்விதமே கூறுகிறது. ஆக இவைகளால்‌ சரீராத்யதிஷ்டானமானது ஜீவனுக்கும்‌, இந்த்ரியாதிஷ்டானமானது அக்ந்யாதி தேவதைகளுக்கும்‌ சொல்லப் பட்டிருககிறது. ஜீவனுக்கும்‌ அக்ந்யாதி தேவதைகளுக்கும்‌ சரீர ப்ராண விஷயமான-இந்த்ரியாதி விஷயமான அதிஷ்டானமானது ஸ்வாயத்மா * பரமாத்மாயத்தமா ? என்கிற ஸந்தேகம்‌ உண்டாகிறது: போக்தாவான ஜீவனுக்கு சரீராத்யதிஷ்டானமும்‌ அக்ந்யாதி தேவதைகளுக்கு சஷுராத்யதிஷ்டானமும்‌ என்று சொலல முடியாது. ஏனென்றால்‌ ஜீவனுக்‌கும்‌ தேவதைகளுக்கும்‌ ஈாரீராத்யதிஷ்டான விஷயத்தில்‌ ஈச்வரன்‌ ஸ்வாதந்த்ரிய மளித்‌ துள்ளான்‌. ஈச்வரன்‌ பொதுவாக–ஸாமாந்யேந எல்லா ஜீவன்களுக்கும்‌ ஸ்வாதந்த்ரியத்தை அளித்துள்ளான்‌. ஆதலால்‌ பகவானாலே கொடுக்‌கப்பட்ட ஸ்வாதந்த்ரியத்தை உடைய ஜீவன்‌ கரண களேபராத்யதிஷ்டான விஷயத்தில்‌, தானே–ஸ்வயமே -ப்ரயத்நம்‌ பண்ணுகிறான்‌. ஆகையால்‌ அக்நி யாதி தேவதைகளுக்கும்‌ ஜீவன்களுக்கும்‌ சரீராத்யதிஷ்டாநம்‌ ஸ்வா யத்தம் என்கிறான்‌ பூர்வபக்ஷி, இப் பக்ஷம்‌ ஏனெனில்‌ எல்லா ஜீவன்களும்‌ பரமாத்மாவின்‌ ஸரீரங்கள்‌. ஆகையால்‌ ஜீவன்கள்‌ பரமாத்மாவிற்கு நியமேந ஆதேயமாயும்‌ நியமேந விதேயமாயும்‌, நியமேந சேஷமாயும்‌ இருக்கின்றன. ஆகையால்‌ ஜீவன்கள்‌ எப்பொழுதும்‌ பரதந்த்ரா்க ளாகவே இருக்கிறார்கள்‌. சில விஷயங்களில்‌ ஸாமந்த ராஜாக்களுக்கு–சிற்றரசர்களுக்கு ஸ்வாதந்த்ரியம்‌ இருப்பது போல்‌, ஜீவன்‌ பரமாத்மாதீனனாக இருந்த போதிலும்‌ அவனுக்கு ஸ்வாதந்த்ரியமும்‌ உண்டு என்னலாகாது-எப்பொழுதும்‌ பரதந்தரானாகவே இருப்பதாகச்‌ சொல்லப் பட்டிருப்பதால்‌ ஸ்வாதந்தரிய லேசமும்‌ கிடையாது. ஜீவன்‌ ஜாக்ரத் தசையில்‌ உச்வாஸ நிச்வாஸங்களைப்‌ பண்ணுகிறான்‌. அதே போல்‌ தூக்கத்திலும்‌ உச்வாஸ நிச்வாஸங்கள்‌ இருக்கின்றன. ஸ்வாப தசையிலுள்ள உச்வாஸ நிச்வாஸங்கள்‌ ஜீவனுடைய அதீனமிலலை, பராதீனம்‌ என்று பூர்வ பஷியான நீயும்‌ ஒப்புக்‌ கொள்ளுகிறாய்‌. அதே போல்‌ எல்லா விஷயத்திலும்‌ எப்பொழுதும் பரமாத்மாவிற்கு –
ஆகையால்‌ ஜ்யோதிராதீநாம்‌ அதிஷ்டாநம்‌ பரமாத்மாதீனம்‌ என்று ஸித்திக்கிறது-பராயத்தாதி கரணத்தில்‌ கூறிய ஸித்தாந்தத்தையே இவ் வதிகரணத்தில்‌ நினைவு படுத்துகிறார்‌.

2-4-15-ஜீவன்‌ ‘இச் சரீரத்தினின்‌றும்‌ வெளிக் கிளம்பும் போது– முக்ய ப்ராணனோடு எல்லா ப்ராணன்களுக்கும்‌ உத் கராந்தி சொல்லி இருக்கிறது. இந்த ச்ருதியில்‌ ப்ராண ஸப்தத்தால்‌ சொல்லப்பட்டவை எல்லாம்‌ இந்த்ரியங்களா ? அல்லது முக்ய ப்ராண வ்யதிரிக்‌தங்களே இந்த்ரியங்கள்‌ எனச்‌ சொல்லப் படுகின்றனவா ? என்று ஸம்சயம்‌ உண்டாகிறது-ஸ்ரேஷ்ட ப்ராணனும்‌ இந்த்ரியம்‌ தான்‌. இந்த்ரியங்களைப்‌ போல்‌ முக்ய ப்ராணனும்‌ ஜீவனுக்கு அதிகமாக உபகரிப்பதாலும்‌, இந்த்ரியங்களுக்குள்‌ முகயமான தாகையால்‌ முக்ய ப்ராண்ன்‌ என்று பெயர்‌ பெற்றிருப்பதாலும்‌, தேஹத்தினினறும்‌ உத் க்ராந்தியை அடையும்‌ ஸமயத்தில்‌ ஜீவனுக்கு ப்ராண ஸஹாயமானது ப்ரத்யக்ஷமாகப்‌ பார்க்கப் படுவதாலும்‌ முக்ய ப்ராணனும்‌ இந்தரியங்களுள்‌ சேர்ந்ததே ” என்று பூர்வபஷி கூறுகிறான்‌-பூர்வபஷியின்‌ இம் மூன்று யுக்திகளும்‌ ஸரியில்லை என்று ஸித்தாந்தி கூறுகிறார்‌, ஸ்ரேஷ்ட ப்ராண வ்யதிரிக்த ப்ராணன்களே இந்த்ரியங்கள்‌: ஏனெனில்‌–(கீதை) வாக்யமானது சஷுஸ்‌ முதலான பத்து இந்திரியங்களையும்‌. மனத்தையுமே இந்த்ரியங்களாகக்‌ கூறுகிறது. மேலும்‌ ஸ்ருஷ்டியைச்‌. சொல்லும்‌ ச்ருதியில்‌ ப்ராணனுக்கும்‌, இந்த்ரியங்களுக்கும்‌ தனித் தனியாக உத்பததியைச்‌ சொல்லி யிருப்பதால்‌ இந்த்ரியங்கள்‌ வேறு முக்ய ப்ராணன்‌ வேறு என்று ஏற்படுகிறது-இங்கு ஒரு ஸந்தேஹம்‌ உண்டாகலாம்‌. அதாவது ஸ்ருஷ்டி ப்ரகரணத்தில்‌ ப்ராணனையும்‌ இந்த்ரியங்களையும்‌ தனியாகச்‌ சொல்லி. இருப்பதால்‌ ப்ராணன்‌ இந்த்ரியங்‌களில்‌ . சேர்ந்ததில்லை என்று சொல்லுவது யுக்தமில்லை. மனத்தைக்‌ கூடத் தான்‌ தனியாகப்‌ படித்திருக்கிறது. மனத்தை இந்த்ரியத்தில்‌ சேர்த்திருக்கிறோமே அது எங்ஙனம்‌ -உண்மையே, கீதையில்‌ மனஸ்ஸை இந்த்ரியமாக ஸ்பஷ்டமாகச்‌ சொல்லி யிருக்கிறார்‌ கண்ணன. மனது எல்லா இந்த்ரியங்களுக்கும்‌ உபகார மாக இருப்பதால்‌ அதன் மஹிமையைத்‌ தெரிவிப்பதற்காக ஸ் தியில்‌ தனியாகப்‌ படிக்கப்‌ பட்டுள்ளது.ப்ராணன்‌ இந்தரியமாகாது என்பதற்கு மற்றொரு காரணம்‌ கூறுகிறார்‌. ஸாத்விகா ஹங்காரத்திலிருந்து பதினோரு இந்த்ரியங்களே உண்டாவதாக ஸாஸ்த்ரம்‌ கூறுகிறது, அவைகளுடன்‌ முக்ய ப்ராணன்‌ (ஸாத்விகாஹங்காரத்திலிருந்து) உண்டாவதாகக்‌ கூறவில்லை-ப்ராணனுக்கு இந்த்ரியங்களைக்‌ காட்டிலும்‌ வைலக்ஷண்யம்‌ தெரிகிறது. அதாவது ஸுஷுப்தி தசையில்‌–தூங்கும் போது ப்ராணனுடைய வ்யாபாரமான உஸ்வாஸ நிச்வாஸ மானது இருப்பது தெரிகிறது. சஷுராதி இந்த்ரியங்களின்‌ வ்யாபாரமானது காணப்‌பட வில்லை-மற்றும்‌ மனஸுடன்‌ கூடிய இந்த்ரியங்கள்‌ ஜ்ஞாநத்தை உண்டு பண்ணுகின்றன ப்ராணனோ சரீரத்தை தரிப்பதை மட்டும்‌ செய்கிறது. ஆகையால்‌ இவைகளின்‌ கார்யங்‌களிலும்‌ மாறுபாட்டைக்‌ காண்கிறோம்‌ முக்ய ப்ராணாதீன ஸ்திதியை உடையதாக இருப்பதால்‌ இந்த்ரியங்களையும்‌ ப்ராணன்‌ என்று கூறுகிறோம்‌-ஆகை யால்‌ முக்ய ப்ராணன்‌ இந்தரியங்களில்‌ சேர்ந்ததில்லை-நாம ஸாம்யாத்‌ முக்ய ப்ராணனும்‌ இந்தரியங்களில்‌ சேர்ந்தது என்றால்‌ அக்ஷம்‌ என்றால்‌ இந்திரியங்களுககும்‌ சொக்கட்டான்‌ காய்களுக்கும்‌ பெயர்‌. அதனால்‌ சப்த ஸாம்யாத்‌ சொக்கட்டான்‌ காய்களையும்‌ இந்த்ரியங்கள்‌ என்று சொல்லி விட முடியுமா 7 இந்த்ரியம்‌ என்று வ்ருஷ விசேஷத்திற்குப்‌ பெயர்‌ உண்டு. அதனால்‌ இந்த்ரியங்களை வ்ருக்ஷ விசேஷம்‌ என்று கூறலாமா ? ஆதலால்‌ ப்ராணன்‌ இந்த்ரியத்தில்‌ சேர்ந்ததில்லை.

2-4-17-மூன்றாம்‌ பாதத்தில் ஸமஷடி ஸ்ருஷ்டியும்‌ ஜீவன்களுடைய கர்த்ருத்வமும்‌ பர ப்ரம்மத்தினிடத்திலிருந்து உண்டானதாகச்‌ சொல்லப்பட்டது. ஜீவன்‌களுக்கு தன்னுடைய இந்த்ரியாத் யதிஷ்டானமும்‌ ‘பரமாத்மாதீனம்‌ என்று ஜ்யோதிராத்‌ யதிஷ்டாநாதிகரணத்தில்‌ அருளிச் செய்தார்‌. அதாவது பராயத்தாதிகரணத்தில்‌ நிர்ணயம்‌ செய்வதையே நினைவு படுத்தினார்‌ .

மூன்றாவது பாதம்‌ முதல்‌ இவ்வதிகரணம்‌ வரையிலுள்ள பதினான்கு அதிகரணங்கள்‌ ஒரு பேடிகை. அதில்‌ பூதேந்த்ரியங்களின்‌ ஸமஷ்டி ஸ்ருஷ்டியானது சொல்லப்பட்டது. இவ் வதிகரணத்தில்‌ வ்யஷ்டி ஸ்ருஷடியைக்‌ கூறுகிறார்‌ என்று பேடிகா ஸங்கதி -இப்பொழுது நாம ரூப வ்யாகரணாத்மிக ப்ரபஞ்ச ஸ்ருஷ்டியான து –வ்யஷ்டி ஸ்ருஷ்டியானது , ஸமஷ்டி ஜீவனான ஹிரணய கர்ப்பனுடையதா ? அல்லது ஹிரண்‌ய கர்ப்ப சரீரகனான பரமாதமாவினுடையதா? என்று விசாரிக்கிறார் -வயஷ்டி ஸ்ருஷ்டி என்பது ஜீவன்களுக்கு அதன்‌ உபகரணங்களை -ஸரீர இந்த்ரியாதி களைச்‌ சேர்த்து ஸ்ருஷ்டிப்பதாகும்‌-வ்யஷ்டி ஸ்ருஷ்டியானது ஸமஷ்டி ஜீவனான சதுர்முக ப்ரம்மாவினால்‌ செய்யப்படுகிறது என்று பூர்வபஷி சொல்லுகிறான்‌. ஏனென்றால்‌ -ஸ்ருதியானது நாம ரூப வ்யாகரணத்தை ஜீவன்‌ செவ்வதாகச்‌ சொல்லுகிறது. ஆகையால்‌ வ்யஷ்டி ஸ்ருஷ்டியை சதுர்முகன்‌ தான்‌ செய்கிறான்‌.

இதற்கு முன்புள்ள வாக்யத்தில்‌ என்றிருப்பதால்‌ பர ப்ரஹ்மம் தான்‌ உண்ன்ற னான்‌ க௱சனாரிரிர ளோ என்று சொல்லிவிட முடியாது-ஆதலால்‌ ஸமஷ்டி ஜீவன் தான்‌ ஸங்கல்பிக்கிறான்‌. ச்ருதி ஸ்பஷ்டமாகச்‌ சொல்லி இருப்பதால்‌ நாம ரூப வ்யாகரண கர்த்ருத்வம்‌ ஜீவனுடையதே, இதற்கு ஒரு உதாஹரணத்தைச்‌ சொல்லுகிறேன்‌-சத்ரு ஸைந்யத்தில்‌ புகுந்து பர பலத்தை ஸங்கலனம்‌ செய்பவன்‌ சாரன்‌, ஆகிலும்‌ முக்யமானது சாரனிடத்திலும்‌, அரசனிடத்திலும்‌ சொல்லப்படுகிறது. அதே போல்‌ ஜீவ கர்த்ருக நாம ரூப வ்யாகரணமானது ப்ரம்மனிடத்தில்‌ கெளணமாகச்‌ சொல்லப்பட்டதாகிறது- தேவதை யன்றோ நாமரூப வ்யாகரணம்‌ செய்கிறது-இதே ந்யாயத்தாலே பரமாத்மாவுக்கே நாம ரூப வ்யாகரணத்தைச்‌ சொல்ல வேண்டாவோ * என்று சங்கிக்க ‘வேண்டாம்‌. லெளகிக வாக்யத்தில்‌ சொல்லப்பட்ட சாரனும்‌ நர பதியும்‌ வெவ்வேறானவர்கள்‌. இவ் விடத்தில்‌ அவ்விதமில்லை – ஜீவனுக்கும்‌ ஈச்வரனுக்கும்‌ என்றே இருப்பதால்‌ இவர்களை வெவ்வேறாகச்‌ சொல்ல முடியாது. ஆகையால்‌ பரமாத்‌ மாவின்‌ அம்ஸ பூதனான ஜீவன் தான்‌ நாம ரூப வ்யாகரணத்தைச்‌ செய்கிறான்‌ என்றால்‌. பரமாத்மா செய்கிறான்‌ என்றே தாத்பர்யம்‌ கொள்ள வேண்டும்‌-ஏன்‌ இவ்விதம்‌ க்லிஷ்ட கல்பனம்‌ பண்ண வேண்டும்‌? பாணினி ஸூத்ரத்தைக்‌ கொண்டு இவ்விடத்தில்‌ அர என்று ஜீவ ஸப்தோத்தரம்‌ த்ருதீயா விபக்தி வந்திருப்பதாகச்‌ சொல்லலாமே: அவர்களில்‌ தகப்பன்‌ ப்ரதானன்‌. புத்திரன்‌ அப்ரதானன. ஆகையால்‌ புத்திரனுடன்‌ தகப்பன்‌ வந்தான்‌ என்று சொல்லப் படுகிறது. அதே போல்‌ ஜீவனுடன்‌ கூட பகவான்‌ நாம ரூப வ்யா கரணம்‌ செய்கிறான்‌ என்றால்‌ பகவானுக்கு ப்ராதான்யமும்‌ ஜீவனுக்கு அப்ராதான்யமும்‌ சொல்லுவதுடன்‌, இரண்டு பேர்களும்‌ நாம ரூப வ்யாகரணம்‌ செய்கிறார்கள்‌ என்று தேர்கிறது-இந்த பக்ஷம்‌ ஸரியல்ல-உப பத விபக்தியைச்‌ சொல்லும் போது மேலும் சில பதங்கள்‌ சேர்ந்திருந்தால் தான்‌ அவைகளுடன்‌ சேர்ந்த பதத்திற்கு திருதியா விபக்தி வரும்‌. காரக விபகத்தியான து அவ்விதமன்‌ று. கர்த்ரு அர்த்தத்திலும்‌ கரணார்த்தத்திலும்‌ வரும்‌ த்ருதீயா விபக்தி யானது இதர நிர பேஷமாக உடனே வருமாகையால்‌ காரக விபக்தியானது பலீயஸீ.-இங்கு கரணார்த்தத்தில்‌ திருதீயா விபக்தி வந்ததாகச்‌ சொல்ல முடியாது, இது காரக விபக்தியே யாகிலும எது ஸாதகதமாகிறதோ அது தான்‌ கரணமாகும்‌.
இவ்வாக்ஷேபம்‌ ஸரியல்ல. இப் பக்ஷத்தில்‌ சாரகர்த்ருக ஸங்கலனத்தில்‌ அரசனுக்குப்‌ போல, ஜீவ கர்த்ருகமான வ்யாகரண கர்த்ரர்த்தத்தில்‌ த்ருதீயா விபக்தி சொன்னால்‌ அநுபபத்தி வரும் ஜீவனுக்கு அநு ப்ரவேசத்தில் தான்‌ கர்த்ருத்வம்‌, ஈச்வரனுக்கே வ்யாகரண கர்த்ருத்வம்‌, ஆதலால்‌ ஈச்வரனுக்கே-ஆகையால்‌ ஈச்வரனுக்கு கரியாபிஹிதத்வம்‌ சொன்னால்‌ ஜீவனுக்கும்‌ சொன்னதாகிறது. அதனால்‌ கர்த்ரர்தத்தில்‌ த்ருதீபை சொல்லமுடியாது.-ஆகையால்‌ ஹிரண்ய கர்ப்ப கர்த்ருகம்‌ நாம ரூப வ்யாகரணம்‌ என்றே சொல்ல வேண்டும்‌-இவ் விதமே சொல்ல வேண்டும்‌ என்பதை ஸ்ம்ருதியும்‌ கூறுகிறது, அதாவது ஹிரண்யகர்ப்ப ஸ்ருஷ்டி ப்ரகரணத்தில்‌, நாம ரூப வ்யாகரணத்தை அவனே செய்கிறான்‌ என்று ஸ்பஷ்டமாகச்‌ சொல்லுகிறது.இதற்கு மேல்‌ ஹிரண்ய கர்ப்ப: ஸரீரக பரமாத்மாவே நாம ரூப வ்யாகரணத்தைச்‌ செய்வ தாக ஸித்தாந்தி கூறுகிறார்‌. திருவருத்தக் கரணம் செய்தவனே நாம ரூப வ்யாகரணம்‌ செய்வதாக ச்ருதி கூறுகிறது -ஆகையால்‌ த்ருவ்ருத் கரணம்‌ அண்டாந்தர்வர்த்தியான ஹிரண்யகர்ப்‌ பனால்‌ செய்திருக்க முடியாது, த்ருவ்ருத் கரணம்‌ செய்யாமல்‌ தனித் தனியாக உள்ள்‌ பஞ்ச பூதங்களால்‌ ப்ரம்மாண்டத்தை ஸ்ருஷ்டித்திருக்க முடியாதாகையால்‌, ஸ்ரீமந் நாராயணனே த்ருவ்ருத் கரணத்தைச்‌ செய்து ப்ரம்மாண்டத்தை ஸ்ருஷ்டத்தான்‌, த்ருவருத்‌ கரணத்தைச்‌ செய்தவனே நாம ரூப வ்யாகரண கர்த்தா: ச்ருதியில்‌ பரப்ரம்மமே நாம ரூப வ்யாகரணத்தைச்‌ செய்கிறது-பிரம்மாண்டத்தை ஸ்ருஷ்டித்த பிறகு, அதில்‌ உண்டானவனான ஹிரண்ய கர்ப்பன்‌ த்ருவ்ருத் கரணம்‌ செய்ததாகச்‌ சொல்ல முடியாது, அதனால்‌ நாமரூப வ்யாகரண கர்த்‌ ருத்வம்‌ ஹிரண்ய கர்பபனுக்கு ஸம்பவிக்காது,

ஸ்ம்ருதியில்‌ சதுர்முக கர்த்ருகமாகச்‌ சொல்லி இருக்கிறதே எனில்‌-மற்ற ப்ரமாணங்‌களை அனுஸரித்து சதுர்முக ஸுரீரக ப்ரஹ்மமே அவைகளைச்‌ செய்வதாகச்‌ சொல்ல வேண்டும்‌. இதனால்‌ ஒருவித பாதகமும்‌ இல்லை,-க்ஷேத்ரத்திலும்‌, சரீரத்திலும்‌, இந்தரியத்திலும்‌ கரண ஸப்த ப்ரயோகம்‌ இருக்கிறது.-கரண ஸப்த ப்ரயோகம்‌ இருப்பதால்‌ கரணார்த்தத்தில்‌ த்ருதீவை சொல்வதில்‌ யாதொரு தோஷமும்‌ இல்லை.-ஆகையால்‌ ச்ருதி வாக்யத்திற்கு இவ்விதமே அர்த்தம்‌ சொல்ல வேண்டும்‌. நநு த்ருவ்ருத்கரணம்‌ செய்பவனே நாம ரூப வ்யாகரணம்‌ செய்கிறான் என்று ஒப்புக்‌ கொண்டாலும்‌ பரமாத்மாவே நாம ரூப வ்யாகரணம்‌ செய்வதாகச்‌ சொல்ல முடியாது. த்ருவ்ருத்கரணத்தை ஜீவனும செய்யலாம்‌. ஏனென்றால்‌, அண்ட ஸ்ருஷ்ட்யநந்தரம்‌ சதுர்முக ஸ்ருஷ்டி. ப்ரகரணத்தில்‌ த்ருவ்ருத் கரணமானது சொல்லப்படுகிறது. அதாவது நாம ரூப வ்யாகரணாபந்தரம்‌. த்ருவ்ருத்கரணம்‌ சொல்லப் பட்டிருக்கிறது. ஆகையால்‌ சதுர்முகனே நாம ரூப வ்யாகர்ணத்தையும்‌ த்ருவ்ருத் கரணத்தையும்‌ செய்கிறான்‌ என்று சொல்ல வேண்டும்‌ ‘ என்று ஆஷேபம்வர பதில்‌ கூறுகிறார்‌. த்ருவ்ருத் கரணத்தை சதுர்முகன்‌ செய்கிறான்‌ என்பது ஸரியல்ல.-மாம்ஸமும்‌ மனஸ்ஸும்‌ புரீஷத்தைக்‌ காட்டிலும்‌ அணுவாகவும்‌ அணிீஸ்யஸாயும்‌ இருப்பதாகச்‌ சொல்லி இருப்பதால்‌ இவைகளுக்குக்‌ காரணமான ப்ரிதிவீ பாகம்‌ அதிகம்‌ என்றும்‌, அப்பின் பாகமும்‌, தேஜஸ்ஸின்‌ பாகமும்‌ குறைந்திருக்கின்றன என்றும்‌ சொல்லுகிறது. புரீஷ, மாம்ஸ, மநஸ்‌ மூன்‌றும்‌ பெளமமே.பூ ஸம்பந்தியே-ச்ருதியில்‌ சொல்லியபடி. விகாரம்‌ ஒப்புக் கொள்ள வேண்டும்‌, ஆக “*புரீஷம்‌, மாம்ஸம்‌, மகஸ்‌ இம் மூன்றும்‌ ப்ருதிவீ விகாரங்கள்‌. மூத்ர லோஹித ப்ராணன்கள்‌ அப்பின்‌ விகாரங்கள்‌. அஸ்தி, மஜ்ஜா, வாக்‌ தேஜோ விகாரங்கள்‌ ‘” என்று அறியத் தக்கது. இல்லாவிட்டால்‌ வாக்ய சேஷத்திற்கு விரோதம்‌ வரும்‌. ஆகையால்‌ த்ருவ்ருத்கரண ப்ரகாரமானது சொல்லப் படவில்லை, முன்பே த்ருவ்ருத்கரணம்‌ செய்யப்பட்ட அங்காதிகள்‌ புருஷனை அடைந்து ஒவ்வொன்றும்‌ மூன்று விதமாகப்‌ பரிணமிக்கின்றன்‌ என்றே வாக்யங்கள்‌ சொல்லுகின்றன அண்டல ஸ்ருஷ்டிக்கு-முன்பே த்ருவ்ருத்‌ கரணம்‌ செய்யப் பட்டிருக்க வேண்டும்‌. அத்ருவருத் க்ருதமான அவைகள்‌ அண்ட ஸ்ருஷடி ரூப கார்யத்தைச்‌ செய்ய ஸமர்த்தங்களாகா. ஒன்றுக் கொன்று சேர்ந்தால் தான்‌ கார்யத்‌தைச்‌ செய்ய முடியும்‌, மூன்றும்‌ சேர்ந்திருந்தால்தான்‌ த்ருவ்ருத்கரணம்‌ என்று சொல்ல முடியும்‌. ஸ்ம்ருதியும்‌ இதையே தான சொல்லுகிறது.

நாம ரூப வ்யாகரணாந்தரம்‌ தானே த்ருவ்ருத்கரணம்‌ சொல்லி இருக்கிறது. அதனால்‌ த்ருவருத் கரணம்‌ சதுர்முகனால் தான்‌ செய்யப்படுகிறது என்று எண்ண வேண்டாம்‌. பாட க்ரமத்தைக்‌ காட்டிலும்‌ அர்த்த க்ரமம்‌ பலீயஸானதால்‌ பாட க்ரமத்தை அர்த்த க்ரமம்‌ பாதிக்கிறது. அதனால்‌ நாம ரூப வ்யாகரணத்திற்கு முன்பே த்ருவ்ருத் கரணம்‌ செய்யப் பட்டுள்ளது. அந்த திருவ்ருதகரணம்‌ அண்டத்தை ஸ்ருஷ்டிப்பதற்கு முன்பே செய்யப்பட்டது – அண்டாந்தர்வாத்தியான சதுர்முகனால்‌ செய்யப்பட்டிருக்க முடியாதாகையால்‌, ஸ்ரீமந் நாராயணனே தானே திருவ்ருத்கரணத்தை செய்துள்ளான, அவனே நாம ரூப வியாகரணத்தைச்‌ செய்கிறான்‌ என்பது ஸர்வம்‌ உபபந்நம்‌-நநு த்ருவ்ருத் க்ருதமானது ப்ருதிவீ, அப்‌, தேஜஸ்‌ என்று எப்படி பேசப்படுகிறது. அதாவது மூன்றும்‌ சேர்ந்துள்ளதை தனித்தனி பெயரிட்டு எப்படிச் சொல்லுகிறது ?

2-4-19- த்ருவ்ருத் கரணத்தினால்‌ ஒவ்வொன்றிலும்‌ மூன்றும்‌ சேர்ந்திருந்தாலும்‌ ஒவ்வொன்றினுடைய ஆதிக்யத்தால்‌ ப்ருதிவீ, அப்‌, தேஜஸ்‌ என்று சொல்லப்படுகிறது- இரண்டு தரம்‌ சொன்னது அத்யாயத்தின்‌ முடிவைக்‌ காட்டுகிறது.

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ.வே. வித்வான்‌ அபிநவ தேசிக உத்தமூர்‌ தி. வீர ராகவாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய இரண்டாம் அத்யாயம் – மூன்றாம் பாத ஸாரம்- ஸ்ரீ உ வே வித்வான்‌ வில்லி வலம்‌ க்ருஷ்ணமாசார்ய ஸ்வாமிகள்–

September 28, 2026

ஸ்ரீ சாரீரக மீமாம்ஸா பாஷ்யத்தில்‌ இரண்டாம்‌ அத்யாயத்தில்‌ மூன்றாவதான வியத் பாதத்தின்‌ அர்த்த ஸங்க்ரஹம்‌–ஸ்ரீ அஹோபிலமடம்‌ ஆஸ்தாந் வித்வான்‌, ந்யாய வேதாந்த விஷாரத வித்வன்மணி ஸதர்த்த ப்ரகாசிகராஜா ப்ரவசந் ப்ரவீண உபய வேதாந்த வித்வான்‌ வில்லி வலம்‌ க்ருஷ்ணமாசார்ய ஸ்வாமிகள்-

ஸ்ரீபாஷ்யத்தில்‌ இரண்டாவது அத்யாயத்தில்‌ உள்ள நான்கு பாதங்களை இரண்டு இரண்டாகப் பிரித்து இரண்டு பேடிகைகளாக வகுத்துள்ளனர்‌ பூர்வா சார்யர்கள்‌. முதல்‌ இரண்டு பாதங்களைக் கொண்ட பேடிகை. ப்ரஹ்மம்‌ ஜகத் காரணம்‌ என்ற விஷயத்தில்‌ வேத பாஹ்யர்களால்‌ ஏற்படும்‌ உபத்ரவங்களைப்‌ போக்குகின்றது. மூன்றாவது நான்காவது பாதங்களைக் கொண்ட மற்றொரு பேடிகை ஜகத்து முழுவதும்‌ பரஹ்மத்தினுடைய கார்யம்‌ என்ற விஷயத்தில்‌ உபநிஷத்‌ வாக்யங்களுக்குள்ளேயே ஏற்படும்‌ முரண் பாட்டைப்‌ போக்குகின்றது–இந்த அர்த்தத்தையே மற்றொரு விதத்திலும்‌ சுருக்கிக்‌ காட்டி யுள்ளனர்‌–ப்ரஹ்மத்‌திற்கு ஜகத் காரணத்வம் கூடாது என்ற ஆக்ஷேபத்தைப்‌ போக்குகிறது முதல்‌ பேடிகை, ஜகத்து முழுமைக்கும்‌ ப்ரஹ்ம கார்யத்வம்‌ கூடாது என்ற ஆக்ஷேபத்தைப்‌ போக்குகின்றது இரண்டாவது பேடிகை என்றபடி –

இந்த பாதத்தில்‌ செய்யப்படும்‌ ஸித்தாந்தத்தினால்‌ பிறர்களுடைய தவறான வாதங்கள்‌ நிரஸிக்கப்பட்டன ஆகின்றன, அவை பொதுவில்‌ நால்வகைப் படும்‌:-த்ரவ்யம்‌–அத்ரவ்யம்‌ என்ற வாசி யற ஸர்வமும்‌ நித்யம்‌ என்கின்றனர்‌ ஸாங்க்யர்‌. ஷணிகங்கள்‌ என்கின்றனர்‌ வைபாஷிகர்‌ முதலான பெளத்தர்-இவ் விருவருள்‌ ஒருவர்‌ அனைத்தையும்‌ நித்யம்‌ என்றும்‌ மற்றொருவர்‌ அனைத்தும்‌ அநித்யம்‌ என்றும்‌ வாசி அறியத் தக்கது: நித்யங்கள்‌ சில—அநித்யங்கள்‌ சில என்ற விபாகமே இவ் விருவர்களின்‌ ஸித்தாந்தங்களில்‌ கிடையாது-ஜைநர்கள்‌ ஸப்த பங்கீ வாதத்தைக் கொண்டு யாவற்றையும்‌ நித்யங்களாயும்‌. அநித்‌யங்களாயும்‌ அங்கீகரித்துள்ளனர்‌. நித்யங்களாகச்‌ சிலவும்‌, அநித்யங்களாகச்‌ சிலவும்‌ காணப்படும்‌ பதார்த்தங்களை ஒரே வகையில்‌ அடக்குவதும்‌, இரு தகைமையோடு கூடியதாகச்‌ சொல்லுவதும்‌ அத்யந்தம அநுபபந்நம்‌, ஆகவே சிலவற்றை நித்யங்கள்‌ என்றும்‌, சிலவற்றை அநித்யங்கள்‌ என்றும்‌ விபஜித்து அங்கீகரிப்பதே நிபுண க்ருத்யமாம்‌-வைசேஷிகர்கள்‌ முன்னவர்களைப் போல்‌ அன்றிக்கே நித்ய அநித்ய விபாகம்‌ கொண்‌டுள்ளனர்‌ ஆயினும்‌ அதிலும்‌ மாறுபாடு உள்ளது, நித்யமான சைதந்யத்தை அநித்யம்‌ என்கின்றனர்‌, எம்பெருமானுடைய நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை அடியோடு ஏற்க வில்லை. அநித்ய பதார்த்தங்களுடைய அநித்யமான ஸமவாய ஸம்பந்தத்தை நித்யம்‌ என்கின்றனர்‌. ஆகவே இவர்களுடைய நித்யாநித்ய விபாக வகையும்‌ மறுக்கப்பட வேண்டிய தாகிறது-ஆக இப்படிப்‌ பலவிதமான பிற மதங்களைச்‌ சார்ந்தவர்களை நிரஸிக்கவே இந்த வியத்‌ ப்ராண பாதங்கள்‌ ஏற்பட்டுள்ளன, இந்த ப்ரயோஜந விசேஷத்தை அதிகரண ஸாராவளியில்‌ ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன்‌ அருளிச் செய்துள்ளார் –

இந்த வியத் பாதத்தில்‌ ஸாதிக்கப்படும்‌ அர்த்தங்கள்‌–
1-ஆகாசத்துக்கும்‌ ஸ்ருஷ்டி (உத்பத்தி) உண்டு.
2-பூர்வ பூர்வ தத்த்வ விசிஷ்டனான எம்பெருமானிடமிருந்தே உத்தரோத்தர தத்த்வங்கள்‌ உண்டாகின்‌றன.
3-ஜீவாத்மாவுக்கு உத்பத்தி விநாசங்கள்‌ சரீர ஸம்பந்தம்‌ காரணமாய்‌ ஒளபாதி கங்களேயாம்‌,
4-ஜீவன்‌ ஜ்ஞான ஸ்வரூபனாய்‌ இருப்பதோடு மட்டுமன்றி ஜ்ஞாதாவாகவும்‌ இருக்கிறான்‌.
5-ஜீவன்‌ கர்த்தாவாகவும்‌ இருக்கிறான்‌.
6-இவனுடைய கர்த்ருத்வம்‌ பரமாத்மாதீந மாயிருக்கும்‌.
7-ஆத்மாவுக்கு சரீரம் போலே, குணிக்கு குணம் போலே, வ்யக்திக்கு ஜாதி போலே பரமாத்மாவுக்கு ஜீவாத்மாக்கள்‌ அம்சம்‌. இவற்றால்‌ எம்பெருமான்‌ பக்கலிலே பர்யவஸிக்கும்‌ ஏழு கல்யாண குணங்களையும்‌ அறிக-

முதலாவதான வியததிகரணத்தின்‌ ஸாரமான அர்த்தம்‌ –தத்த்வங்களின்‌ உத்பத்தியைச்‌ சொல்லுமிடத்தில்‌ சாந்தோக்ய உபநிஷத்‌ தேஜஸ்‌ தத்த்வத்திலிருந்தே உத்பத்தியைக்‌ கூறுகிறது. மற்றும்‌ சில உபநிஷத்துக்களில்‌ ஆகாசத்தை அம்ருதம்‌” (அழிவற்றது) என்று விசேஷித்துள்ளது. மேலும்‌ ஆகாசம்‌ நிரவயவ தரவ்யம்‌, ஆக இக் காரணங்களால்‌ ஆகாசத்திற்கு உத்பத்தி கிடையாது-சில இடங்களில்‌ உத்பத்தி உண்டு என்று கூறப் பட்டிருந்தாலும்‌ அது ஆத்மோத்‌ பத்தி வாதம்‌ போலே கெளணம்‌, அதாவது ஒளபாதிகம்‌ என்றே கொள்ள வேண்டும்‌-ஆக, *ஆகாசம்‌ நித்யம்‌” என்பது பூர்வபஷியின்‌ கருத்து, *ஆகாசத்திற்கு உத்பத்தி உண்டு” என்பது ஸித்தாந்தம்‌ சாந்தோக்யத்தில்‌ சொல்லப்பட்டுள்ள தேஜஸ்ஸின்‌ உத்பத்தி ஆகாசத்தின்‌ உத்பத்தியை நிரோதிக்க வில்லை. தத்த்வங்களின்‌ உத்பத்தியைக்‌ கூறும்‌ உதாஹரணத்திற்காக ஸர்வாநுபவ ஸித்தமான தேஜஸ்ஸை எடுத்துக்‌ காட்டியபடி–மேலும்‌ ”தேஜஸ்ஸுதான்‌ முதலில்‌ உண்டாகிறது’? என்று கூற வில்லை. ஆகவே ஆகாசத்தின்‌ உத்பத்தியும்‌ அந்த உபநிஷத்தில்‌ அநுமதமாகிறது-மற்றைய உபநிஷத்தில்‌ ஸ்பஷ்டமாகவே ஆகாசத்தின்‌ உத்பத்தி கூறப்பட்டுள்ளது-ஏக விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாந ப்ரதிஜ்ஞையும்‌ இப்பொழுது தான்‌ பொருந்தும்‌, மற்றைய தத்த்வங்களை விட ஆகாசம்‌ சிரகால ஸ்தாயியாக இருப்பது பறறி ‘அம்ருதம்‌’ எனறு சொல்லப்பட்டது. ஆகவே ஆகாசத்திற்கு உத்பத்தி உண்டு–

இரண்டாவதான தேஜோதிகரணத்தின்‌ ஸாரம்‌–இந்த அதிகாணத்தில்‌ வ்யவஹிதங்களான தத்த்வங்கள்‌ ஸாக்ஷாத்‌ ஸ்வ பூர்வ பூர்வ தத்த்வங்களிடமிருந்தே உண்டாகின்றனவா? அல்லது பூர்வ பூர்வ தத்தவங்களைச்‌ சரிரமாகக்‌ கொண்ட எம்பெருமானிடமிருக்தே உண்டாகின்றனவா என்று விசாரித்து பூர்வ பூர்வ தத்த்வ சரீரகளான எம்பெருமானிடமிருக்தே உண்டாகின்றன என்று ஸித்தாந்திக்கப்‌ படுகிறது–பூர்வபக்ஷம்‌ :–வாயோரக்நி :, அக்நோராப: ‘ என்று பூர்வ பூர்வ தத்த்வங்களி லிருந்தே உத்தரோத்தர தத்த்வங்கள்‌ உண்டாவதாகச்‌ சொல்லி யிருப்பதால்‌ அப்படியே தான்‌ இசைய வேண்டும்‌. முதல்‌ தத்த்வம் மட்டும்‌ நேரே எம்பெருமானிடமிருந்தே உண்டாகின்றது. பிந்தைய தத்த்வங்கள்‌ யாவும்‌ தனக்கு முந்திய தத்த்வங்களிடமிருந்தே யுண்டாகின்றன-ப்ரஹ்மம்‌ கூடஸ்த்தமாய்க் கொண்டு எல்லாவற்றிற்கும்‌ காரணம்‌ ஆகிறது: உலகிலும்‌ கூடஸ்த்த புருஷன்‌ ஒருவன்‌ ஒரு பிள்ளையைப் பெற–பிறகு அவன் மூலம்‌ புத்ர பெளத்ர பரம்பரை உண்டாவதைக்‌ காணா நிற்கிறோம்‌. கூடஸ்த புருஷன்‌ பெளத்ராதி களுக்கு ஸாஷாத்‌ ஜநகன்‌ ஆவதில்லை. அவ்வாறே தான்‌ இங்கும்‌ என்று பூர்வ பக்ஷியின்‌ கருத்து-ஸித்தாந்தம்‌–ஸித்தாந்தீ இதை மறுத்து பூர்வ பூர்வ. தத்த்வ சரீரகணான எம்பெருமானிட மிருந்தே உத்தரோத்தர தத்த்வங்கள்‌ உண்டாகின்றன என்று ஸ்தாபிக்கிறார்‌ :-தத்த்வங்கள்‌ உண்டாகும்‌ கர்மத்தைச்‌ சொல்லும்‌ இடங்கள் தோறும்‌ ஈஷணம்‌-அதாவது ஸங்கல்பம்‌ சொல்லப் படுகிறது–*! தத்‌ தேஜ ஐக்ஷத, தா: ஆப: ஐக்ஷந்த ” என்று. கேவல அசேதநங்களுக்கு இந்த ஸங்கல்பம்‌ ஸம்பவியாது. ஆகையால்‌ தேஜஸ் சரீரகனான எம்பெருமான்‌ ஸங்கல்பித்து ஜலத்தை ஸ்ருஷ்டிக்கிறான்‌: ஜல சரீரகனனான எம்பெருமான்‌ ஸங்கல்பித்து ப்ருதிவியை ஸ்ருஷ்டிக்கிறான்‌ என்றே கொள்ள வேண்டும் – ச்ருதிகள்‌ எம்பெருமானிடமிருந்தே தத்த்வங்கள்‌ யாவும்‌ பிறக்கின்றன என்று கூறுவதும்‌ இவ் வகையில் தான்‌ உபபந்நமாகும் –
நாம ரூப வ்யாகரண ச்ருதியினால்‌ ஸர்வ சப்தங்களும்‌ பரமாத்ம பர்யந்தமாகவே ஸ்வார்த்தத்தைச்‌ சொல்லும்‌. உலகில்‌ ** தேவதத்தன்‌-யக்ஞதத்தன்‌ £’ என்ற சப்தங்களால்‌ சேதந விசேஷத்தையும்‌, ‘*கடம்‌-படம்‌’” என்ற சப்தங்களால்‌ அசேதந விசேஷத்தையும்‌ வ்யவஹரிப்பது–நீண்ட சப்த சக்தியை நடுவே ஒடித்து (குறுக்கி) ப்ரயோகிப்பதாலாகும்‌. ஆக * வாயோரக்நி :; அக்நேராப: ‘” என்ற இடங்களில்‌ உள்ள வாயு வக்நி யாதி சப்தங்கள்‌ அவ் வவற்றை சரீரமாகக் கொண்ட எம்பெருமானிட மிருந்தே தோன்றுவனவாகும்‌ என்பது தேஜோ$திகரண ஸித்தாந்தம்‌

மூன்றாவதான ஆத்மாதிகாணத்தின்‌ ஸாரம்‌–ஏகவிஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாந * ப்ரதிஜ்ஞையை நிர்வஹிப்பதற்காக ஆகாசம்‌ உள்பட அனைத்தையும்‌ ப்ரஹ்ம கார்யம்‌ என்றே சொல்ல வேண்டும்‌ என்று வியததிகரணத்‌தில்‌ நிர்ணயித்த ரீதியில்‌ ஆத்மாவுக்கும்‌ உத்பத்தி சொல்ல வேண்டும்‌ என்பது இந்த அதிகரணத்தின்‌ பூர்வபஷம்‌. * தோயேந ஜீவாந் வ்யஸஸர்ஜ ‘ என்ற ச்ருதிகளும்‌ ஜீவாத்‌மாவுக்கு உத்பத்தியை ஸ்டஷ்டமாகக்‌ கூறுகின்றன. ஆகவே ஆத்மோத்பத்தி கொள்ள வேண்டுவது அவர்‌ஜநீயம்‌ என்பது பூர்வபக்ஷத்திற்கு ஸாதக யுக்தி.

ஸித்தாந்தம்‌–ஆத்மாவுக்கு உத்பத்தி கிடையாது என்பது ஸித்தாந்தம்‌, ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித்‌ ‘* என்ற ச்ருதியினால்‌ ஆத்மாவுக்கு உத்பத்தி கிடையாது என்று ஸ்பஷடமாகச்‌ சொல்லி யிருப்பதால்‌ ஆகாத்துக்குப் போல்‌ ஆத்மாவுக்கு உத்பத்தி கிடையாது. மேலும்‌ *நித்யோ நித்யாநாம்‌ சேதந : சேதநாநாம்‌ ‘” என்ற ச்ருதியினால்‌ ஜீவாத்‌மாக்கள்‌ நித்யங்கள்‌ என்று ஏற்படுவதாலும்‌ அவற்றுக்கு உற்பத்தி கிடையாது என்பது ஸித்தாந்தம்‌--கீழ்ச் சொன்ன ப்ரதிஜ்ஞையை நிர்வஹிக்க ஆத்மாவுக்கு ஒரு வகையில்‌ ப்ரஹ்ம்‌ கார்யத்வம்‌ அங்கீகரிக்கப்படுகிறது. அதாவது ஆத்மா நித்யமே யாயினும்‌ அதனுடைய ஸ்வபாவமான தர்மபூத ஜ்ஞாநம்‌ ஸங்கோச—விகாஸமாகிய (சுருக்கம்‌–விரிவாகிய-மாறுபாட்டை அடைகிறது. ஆகவே அதன் மூலம்‌ ஆத்மாவும்‌ கார்யம்‌ ஆகிறது. எம்பெருமான்‌ ஆத்மாவைச்‌ சில ஸமயங்களில்‌ ஸங்குசித ஜ்ஞாநம்‌ உடையதாகவும்‌, சில ஸமயங்‌களில்‌ விகஸித ஜ்ஞாநம்‌ உடையதாகவும்‌ செய்கிறான்‌. ஆகவே ஆத்மாவுக்கு ஸ்வபாவ அந்யதா பாவ ரூபமான (ஸ்வபாவ மாறுபாடாகிற) கார்யத்வம்‌ உண்டு. ஆகாசாதிகளுக்கு ஸ்வரூபாந்யதாபாவமாகிற ( உருவ வேறுபாடாகிற) கார்யத்வம்‌ உண்டு என்ற வயத்யாஸம்‌ அறிய வேண்டும்‌. ஆக கார்யத்வம்‌ இருவகைப் படும்‌- ஸ்வரூபாந்யதாபாவ ரூபான கார்யத்வமே ஆத்மாவுக்கு உண்டு என்பது பூர்வ பக்ஷியின்‌ கருத்து. இது கிடையாது. ஸ்வபாவாந்யதாபாவ ரூபமான கார்யந்தான்‌ ஆத்மாவுக்கு உண்டு என்பது ஸித்தாந்தியின்‌ நிர்ணயம்‌-இதல்‌ இடைத்த பலன்‌ அதிகரண ஸாராவளீ காட்டுகிறது.
1-தேஹமே ஆத்மா என்கிறான்‌ சார்வாகன்‌.
2-தேஹத்தை விட ஆத்மா வேறு பட்ட போதிலும்‌ அதுள்‌ளளவும்‌ இருக்கும்‌ பிராணன்‌, புத்தி-இந்த்ரியம்‌ இவற்றுள்‌ ஏதேனும்‌ ஒன்று தான்‌ ஆத்மா என்கின்றனர்‌ சார்வாகனைப்‌ பின்பற்றும்‌ மற்றும்‌ சிலர்‌.
3-க்ஷணிகமான ஜ்ஞாந ஸந்தானமே ஆத்மா என்று பெளத்தர்களில்‌ பலர்‌ சொல்லுகின்றனர்‌, இந்த ஸந்தாநம்‌ முக்தி தசையிலும்‌ ஓடுகிறதாகையால்‌ (இருப்பதால்‌) இது நித்யம்‌ என்னப் படுகிறது.
4-மற்றும் சிலர்‌ ஸ்திரனாகவே ஆத்மாவை இசைந்து ப்ரளயம் வரை இருப்பதாக ஒப்புகின்‌றனர்‌.
5-யாதவ ப்ரகாசன்‌ என்பவன்‌ ஸமுத்ரத்தில்‌ நுரை போல்‌ ப்ரஹ்மமாகிற ஸமுத்ரத்தினுடைய பரிணாமமாகவே ஜீவாத்மாவை இசைகின்‌றனர்‌. இப்படி மற்றும்‌ பலவகைகளில்‌ பலர்‌ ஆத்ம தத்வத்தை ஒப்புகின்றனர்‌. இந்த வாதிகள்‌ அனைவரும்‌ ஆத்மாதிகரண ஸித்தாந்த ரீதியில்‌ பாத தோஷம்‌ அற்ற பல ஸ்ருதிகளால்‌ வெகு தூரத்தே நிரஸிக்கப் பட்டவர்கள்‌ ஆகிறார்கள்‌ என்று அருளிச்‌ செய்கிறார்‌ ஸ்வாமி ஸ்ரீதேசிகன்‌ அதிகரண ஸாராவளியில் -… இதுவே இந்த அதிகரணத்தின்‌ பலன்‌.–

நான்காவதான ஜ்ஞாதிகரணத்தின்‌ ஸாரம்‌-இந்த அதிகரணத்தில்‌ ஆத்மா.ஜ்ஞாந ஸ்வ்ரூபனா யிருப்பதோடு ஜ்ஞாதாவாகவும்‌ இருக்கிறான்‌ என்பது நிர்ணயிக்கப் படுகிறது-பூர்வபக்ஷம்‌ :–ஸ்வபாவாந்யதா பாவத்தினால்‌ ஆத்மாவுக்கு ப்ரஹ்ம கார்யத்வம்‌ சொல்ல வேண்டுமானால்‌ இதற்கு ஸ்வபாவம்‌ என்று ஒன்றைக்‌ கொள்ள வேண்டும்‌-பிறவாதிகள்‌ ஆத்மாவை ஜ்ஞாந மாத்ர ஸ்வரூபன்‌ என்றே கொண்டு ஜ்ஞாநம்‌ என்ற ஸ்வபாவம்‌ இதற்குக்‌ கிடையாது என்கிறார்கள்‌. இந்த ரீதியில்‌ எந்த ஸ்வபாவத்தைக்‌ கொண்டு ஆத்மாவுக்கு கார்யத்வத்தை நிர்வஹிப்பது ? ஆக ஆத்மா ப்ரஹ்ம கார்யமாகாது என்பது பூர்வ பக்ஷம்‌.

ஸித்தாந்தம்‌:–* ஜ்ஜோ$த ஏவ! என்ற ஸித்தாந்த ஸூத்ரத்தினால்‌ பூர்வபஷி இசைந்துள்ள ஜ்ஞாந ஸ்வரூபத்வத்தைத்‌ தாமும்‌ இசைந்து அதற்கும்‌ மேலாக ஜ்ஞாந ஸ்வபாவத்வத்தை -ஜ்ஞாத்ருத்வத்தையும்‌ ஸித்தாந்தீ ஸ்தாபிக்கிறார்‌, ”ஜாநாத்யேவாயம்‌ ஆத்மா”’ என்றிவை முதலான பல ச்ருதிகளால்‌ ஆத்மா–ஜ்ஞாதா என்று ஏற்படுகிறது அன்றோ ! ஆகவே ஆத்மா ஜ்ஞாந ஸ்வரூபன்‌ மட்டும்‌ அல்லன்‌, ஜ்ஞாந ஸ்வபாவனும்‌ (ஜ்ஞாதாவும்‌) ஆகிறான்‌ என்பது ஸித்தாந்தம்

‌நையாயிகர்கள்‌ :–* ஆத்மா ஜட ஸ்வரூபன்‌. ஆனால்‌ ஜ்ஞாந குணகன்‌, இந்த ஜ்ஞானமும்‌ அவனுக்கு ஸ்வாபாவிகம்‌ அன்று. ஆகந்துகம்‌– வந்தேறி ‘ என்‌கிறார்கள்‌-அத்வைதிகள்‌ : “ஆத்மா ஜ்ஞாந மாத்ர ஸ்வரூபனேயன்றி ஜ்ஞாந குணகன்‌ அல்லன்‌. அதாவது ஜ்ஞாதா அல்லன்‌ ‘” என்கின்றனர்‌-நாம்‌–இரண்டையும்‌ இசைகின்றோம்‌ ச்ருதி ப்ரமாணத்தினால்‌. இதுவே இந்த அதிகரணத்தின்‌ ப்ரதாநமான அர்த்தம்‌, இவ்விரு தன்மைகளும்‌ ச்ருதி ஸித்தங்களாகை யாலே ஒன்றையும்‌ விட ஒண்ணாது. ஜாநாத்யேவாயம்‌ ஆத்மா ” என்பன போன்ற பல ச்ருதிகளால்‌ ஆத்மாவுக்கு எப்பொழுதுமே ஜ்ஞாத்ருத்வம்‌ உண்டு என்று ஏற்படுவதால்‌ ஆத்மாவை அஜ்ஞாதா என்று சொல்லும்‌ அத்வைதிகள்‌ மறுக்கப்படுகிறார்‌கள்‌-* விஜ்ஞாந கந ஏவ ” என்‌பன போன்ற ச்ருதிகளால்‌ ஜ்ஞாந ஸ்வரூபத்வம்‌ ஏற்படுகிற படியால்‌ ஆத்மா ஜடஸ்வரூபன்‌ என்கிற நையாயிகர்கள்‌ நிரஸிக்கப்படுகிறார்கள்‌-இப்படி ஜ்ஞாந ஸ்வரூபனாய்‌ ஜ்ஞாதாவுமான இந்த ஆத்மா அணு ஸ்வருபன்‌ என்றும்‌ இவனுடைய ஸ்வபாவமான ஜ்ஞாநம்‌ நித்யம்‌ என்றும்‌, இவன்‌ ஹ்ருதய தேச வர்த்தீ என்றும்‌, தன்னுடைய தர்ம பூத ஜ்ஞாநத்தினால்‌ சரீரம்‌ முழுக்க வ்யாபித்து அவயவங்கள் தோறும்‌ உண்டாகும்‌ ஸூக து:கங்களின்‌ அநுபவங்களைப்‌ பெறுகிறான்‌ என்றும்‌ பல விஷயங்கள்‌ நிர்ணயிக்கப்படுகிறன.–ஸசாநந்த்யாய கல்பதே ‘ என்ற ச்ருதியில்‌ சொல்லப்பட்டுள்ள விபுத்வம்‌ ஸ்வரூபத்‌தைச்‌ சார்ந்தது அன்று. மோக்ஷ தசையில்‌ தர்ம பூத ஜ்ஞாநத்திற்கு ஏற்படும்‌ விகாஸத்‌தைப்‌ பற்றியதாகும்
ஹரி சந்தநத்தின்‌ திவலை சரீரத்தில்‌ எங்காவது ஓரிடத்தில்‌ இருந்தாலும்‌ உடல்‌ முழுவதும்‌ சைத்யாநுபவத்தைத்‌ தருவது போல்‌ ஆத்மா அணு ஸ்வரூபனாயினும்‌. “ஹ்ருதி ஹ்யயம்‌ ஆத்மா”’ என்ற ச்ருதியினால்‌ சரீரைக தேசமான ஹ்ருதயத்தில்‌ இருந்து கொண்டு உடல்‌ முழுவதிலும்‌ ஸுக துக்கா நுபவத்தைப்‌ பெறுகிறான்‌ -தீபம்‌ ஓரிடத்தில்‌ இருந்தாலும்‌ தன்‌ ப்ரபையின்‌ மூலம்‌ எல்லா இடங்களிலும்‌ பரவுவது போல்‌ இந்த ஆத்மாவும்‌ தன்னுடைய தர்ம பூத ஜ்ஞாநத்தினால்‌ சரீரம்‌ முழுவதையும்‌ வ்யாபிக்கிறது
:-ஆத்மாவுக்கு தர்ம பூத ஜ்ஞானம்‌ ப்ரதாந குணமாயிருப்பதனால்‌ இத்தை இட்டே ஆஸ்ரயமான ஆத்மாவும்‌ ஜ்ஞானம்‌ என்றே வழங்கப்படுகிறது.-ஆத்மா அணுவாக இருப்பதனால்‌ சரீரத்தைத்‌ தவிர்த்து வெளிப் புறத்தே ஸுக துக்காநுபவம்‌ வர மாட்டாது-தர்ம பூத ஜ்ஞாநத்திற்கு ஸங்கோச விகாஸங்கள்‌ உண்டாகையால்‌ ஸுஷுப்த்யாதி வ்யவஸ்தைகளும ஸம்பவிக்கின்‌றன-।ஆத்மா–ஜ்ஞாந ஸ்வரூபன்‌–நித்யமான ஜ்ஞாநத்தை ஸ்வபாவமாகக் கொண்டவன்‌’” என்றிசைந்தால்‌–எப்பொழுதும்‌–எங்கும்‌ அநுபவமே யாகவோ– அல்லது அநுபவம்‌ இன்றியேயோ இருக்க நேரிடும்‌; ஸுஷுப்தயாதி வ்யவஸ்தைகளும்‌ கூடா ‘” என்றிவ்‌வாறான ஆக்ஷேபங்கள்‌ —ஆத்மாவை அணு ஸ்வரூபனாகவும்‌, தர்ம பூத ஜ்ஞாநத்தை ஸங்கோச விகாஸங்கள்‌ உடையதாகவும்‌ இசைவதால் பரிஹ்ருதங்களாம்‌ என்ற படி –

ஐந்தாவதான கர்த்ரதிகரணத்தின்‌ சாரம்‌-ஜ்ஞாதாவான ஆத்மா கர்த்தாவாகவும்‌ இருக்கிறான்‌ என்று நிர்ணயிக்கப்படுகிறது இந்த அதிகரணத்தில்‌-பூர்பக்ஷம்‌ ச்ருதியினாலும்‌,ஸ்ரீகீதா வசநத்தினாலும்‌ ஆத்மாவுக்குக்‌ கர்த்ருத்வம்‌ கிடையாது. மேலும்‌ கர்த்ருத்வம்‌ என்பது விகார வகையைச்‌ சேர்ந்ததால்‌ விகார ரஹிதனான ஆத்மாவுக்கு இது அறவே சேராது. ஆக ஜீவாத்மா கர்த்தன்‌ அல்லன்‌, ப்ரக்ருதிக்குத் தான்‌ கர்த்ருத்வம்‌ உண்டு என்பது இந்த அதிகரணத்தின்‌ பூர்வபக்ஷம்‌. இது ஸாங்க்யனுடைய கொள்கை-

ஸித்தாந்தம்‌ :- ஸூத்ரத்தினல்‌ முன் சொன்ன பூர்வ பக்ஷத்தை மறுத்து ஜீவாத்மா கர்த்தா என்று இங்கு ஸ்தாபிக்கப்படுகிறது-சாஸனாத் கட்டளை யிடுவதால்‌ சாஸ்த்ரம்‌-சாஸ்த்ரம்‌ ஆகிறது. சாஸநம்‌–விதி–நிஷேதம்‌ என்ற வகையில்‌ இரு விதமாக இருக்கும்‌. இரு வகைப்பட்ட இந்த சாஸநம்‌ சேதகனைப் பற்றித்‌ தானே ப்ரவ்ருத்திக்கும்‌. இட்ட கட்டளையைக்‌ கருத்தறிந்து செயலாற்றக்‌ கூடிய வனாய் அன்றோ அந்த சேதநன இருக்க வேண்டும்‌, ஆகவே இந்த விதி நிஷேத ரூபங்களான சாஸ்த்ரங்கள்‌ ஸபலங்களாக வேண்டி ஆத்மாவைக்‌ கர்த்தா என்றே கொள்ள வேண்டும்‌. அசேதநமான ப்ரக்ருதிக்கே கர்த்ருத்வம்‌ இசைந்தால்‌, அது விதி நிஷேதங்களின்‌ தாத்பர்யத்தை அறிந்து அநுஷ்டிக்க மாட்டாதே, எந்த ப்ரவருத்தியும்‌ புத்தி பூர்வகமாக அன்றோ இருப்பது -ஆகவே அசேதநத்தை நியமிக்க முடியாது. அப்பொழுது சாஸ்த்ரங்கள்‌ வ்யர்த்தங்களாம்‌-மேலும்‌ பல போக்தாதான்‌ சாஸ்த்ர விஹிதங்களான கர்மங்களை அநுஷ்டிப்பான்‌. இதுதான்‌ உசிதமும்‌. போக்த்ருத்வம்‌ ஆத்மாவுக்கு உண்டு என்று கொண்டுள்ள ஸாங்க்ய பக்ஷத்தில்‌ கர்த்ருத்வமும்‌ ஆத்மாவுக்கே தான்‌ வரும்‌: இரண்டும்‌ ஸமாநாதிகரணங்க ளாகவே இருக்க வேண்டும்‌ என்பது ஸர்வ ஸம்மதம்‌. லோகத்திலும்‌, உட்காருதல்‌-. உண்ணுதல்‌ உறங்குதல்‌ இவற்றில்‌ ஆத்மாவே கர்த்தா ஆகிறான்‌ என்பது ப்ரத்யக்ஷ ஸித்தம்‌-ஆத்மா நித்யனாகையாலே அவனைக்‌ கொல்ல முடியாது. கொல்ல முடியாத ஒரு வஸ்துவை ஒருவன்‌ கொன்றதாக நினைத்தால்‌ அது தவறு தானே: இதைத்தான்‌ முன்‌ காட்டிய ச்ருதி கூறுகிறது. அழிவற்ற ஆத்மாவை அழித்ததாக அழித்தவன்‌ நினைப்பதும்‌, அழிக்கப்பட்டதாக அழிக்கப்படுபவன்‌ நினைப்பதும்‌ ப்ரமமேயாம்‌, என்பது கீழே கூறிய ச்ருதியின்‌ உண்மைப்‌ பொருள்‌, இதனால்‌ ஆத்மாவுக்கு கர்த்ருத்வம்‌ கிடையாது என்பது சித்திக்காது. ஸ்வத: ஆத்மா விகார ரஹிதனே யாகிலும்‌ சரீர ஸம்பந்த ப்ரயுக்தமான-ஒளபாதிகமான விகாரங்கள்‌ விருத்தங்கள்‌ அல்லன-சரீரத்தில்‌ இந்தரியங்களை உபாதாநம்‌ செய்வதிலும்‌ விஹாரம்‌ செய்வதிலும்‌ கர்த்ருத்வம்‌ கேவலம்‌ ஆத்ம ஸ்வருபத்திற்குத் தானே, ஒருவன்‌ ஸ்வப்நம்‌ காண்கிறான்‌. இதில்‌ இந்த ஜீவன்‌ வேறு ஒரு சரீரம கொண்டு ஸஞ்சரிப்பதாகத்‌ தோன்றுகிறது. ஸ்வப்நம்‌ காணும்‌ ஜீவன்‌ தன்‌ சரீரத்திலுள்ள இந்த்ரியங்களை எடுத்துக் கொண்டு ஸ்வப்நத்தில்‌ காணப்படும்‌ சரீரத்தில்‌ புகுந்து தன்‌ இச்சைப்படி ஸஞ்சரிக்கிறான்‌. இங்கு இந்த்ரியங்களை எடுத்துச் செல்வதை உபாதாநம்‌ என்றும்‌, ஸ்வப்ந சரீரத்தில்‌ ஸஞ்சரிப்பதை விஹாரம்‌ என்றும்‌ ஸூத்ரகாரர்‌ குறிப்பிட்டு இவற்றில்‌ கர்த்ருத்வம்‌ ஆத்ம ஸ்வரூபத்திற்குத் தான்‌ என்று நிர்ணயிக்கிறார்‌. வெளிப்புற விஷயங்களில்‌ ப்ரவ்ருத்திககும் போது சரீரத்தின்‌ துணை உண்டு, சரீரத்தை நியமிக்கும் போதும்‌–இந்த்ரியங்களை நியமிக்கும் போதும்‌-சரீரத்தினுள்‌ ஸஞ்சரிக்கும் போதும்‌ கேவல ஆத்மாதானே கர்த்தா ஆகிறான்‌. இவ் வர்த்தம்‌ ச்ருதியினாலேயும்‌ கிடைக்கின்றது.

நித்யமான ஆத்மாவைக்‌ கர்த்தா என்று இசைந்தால்‌ எப்பொழுதும்‌ எதையாவது செய்த வண்ணமே இருக்கட்டுமே என்ற கேள்வியும்‌ எழாது, ஆத்மா நித்யமாயினும்‌ இச்சை உள்ள போது தான்‌ அவன்‌ செயல்படுவான்‌. இச்சை எப்பொழுதும்‌ வாராது. ஆகவே இச்சை உள்ள போது கர்த்தா ஆகிறான்‌. அதில்லாத போது செயல்படுவதில்லை- மரங்களைச்‌ செதுக்கும்‌ கருவி முதலியன இருந்த போதும்‌ தச்சன்‌ எப்பொழுதுமே மரத்தைச்‌ செதுக்குவதில்லையே. இச்சை உள்ள போது செதுக்குகிறான்‌. இது இல்லாத போது வெறுமனே இருக்கிறான்‌. அவ்வாறே தான்‌ இங்கும்-ஆகவே நித்யமான ஆத்மாவுக்குக்‌ கர்த்ருத்வம்‌ இசைந்தால்‌ வருவதொரு இழுக்கும்‌ இல்லை, அசேதநமான ப்ரக்ருதிக்குக்‌ கர்த்ருத்வம்‌ இசைந்தால்‌ அதற்கு பலாநுபவேச்சை உண்டாகாதபடியால்‌ இதன்‌ காரணமாய்‌ ஒரு ஸமயம்‌ செயல்படுவதும்‌, மற்றோர்‌ ஸமயம்‌ செயல்படாதொழிவதுமாகிற வ்யவஸ்தை இன்றி எபபொழுதுமே செயல்பட்ட வண்ணமே இருக்க வேண்டி வரும்–

ஆறாவதான பராயத்தாதிகரணத்தின்‌ ஸாரம்‌-இப்படி ஸ்தாபிக்கப்பட்ட இந்தக்‌ கர்த்ருத்வம்‌ ஜீவாத்மாவுக்கு ஸ்வதந்த்ரமாகவே உள்ளதா அல்லது ஈச்வராதீநமா என்று ஸம்ஸயப்பட்டு ஸ்வதந்த்ரமாகவே உள்ளது என்று பூர்வபக்ஷம்‌ வர, அதை மறுத்து பரமாத்மாதீனமே இந்தக் கர்தருத்வம்‌ என்று ஸ்தாபிக்கப்படுகிறது இங்கு.- இந்த அதிகாணத்தில் அவச்யம்‌ எடுத்துரைக்க வேண்டிய அதி ஸூஷ்மங்களான அர்த்த விசேஷங்கள்‌ பலபல இடங்களில்‌ உள்ளன. ஓரளவுக்கு அவை இங்குச்‌ சுருக்கித்‌ தரப்படுகின்‌றன-பூர்வபக்ஷ ஸாரம்‌ : ச்ருதி வாக்யங்கள்‌ ஸ்வர்காத்‌ யநுபவத்தில்‌ இச்சை உள்ள ஜீவனைக் குறித்து யாகம்‌ முதலியன செய்யுமாறு விதிக்கின்றன-ஜீவன்‌ விதியின்‌ தாத்பர்யத்தை அறிந்து தன்‌ புத்தியைக் கொண்டு ப்ரவருத்திக்க சக்தனாகில்‌ இந்த விதி சாஸ்த்ரங்கள்‌ ஸபலங்களாம்‌. இவ்வாறே நிஷேத சாஸ்த்ரங்களும்‌ அறிந்து அநுஷ்டிக்க அசக்தனா யிருப்பவனை நோக்கி இதைச் செய்‌ ‘ என்று விதிக்கவோ, ‘இதைச்‌ செய்யாதே! என்று நிஷேதிக்கவோ முடியாதன்றோ –எம்பெருமான்‌ அந்த:ப்ரவிஷ்டனாய்‌ ஜீவாத்மாவை எல்லாவற்றிலும்‌ நியமிக்கிறான்‌ என்று ” அந்தர்யாமி ச்ருதிகள்‌ சொல்லுகின்றன. ஆக ஜீவாத்மா பரமாத்மாவினால்‌ தூண்டப்பட்டே எந்த ஒரு செயலையும்‌ செய்கிறான்‌ -ஆத்மாவினால்‌ தூண்டப்பட்ட சரீரம்‌ நல்லன செய்தால்‌ அநுக்ரஹிக்கப் படுவதோ, தீயன செய்தால்‌ தண்டிக்கப் படுவதோ இல்லையே, இவ்வாறே தான்‌ ஜீவனும்‌ பரமாத்மா வுக்கு சரீரமாக இருக்கிறான்‌. ஆக இவனும்‌ நிக்ரஹாநுக்ரஹங்களுக்கு உரியவன்‌ ஆக மாட்டான்‌.

பெருங்காற்றில்‌ அகப்பட்ட புல்‌ தன் வயம்‌ இழந்து வெள்ளத்தின்‌ வழியே இழிவது போலவும்-பிசாசத்தினால்‌ பீடிக்கப்பட்டவன்‌ தன் வயம்‌ இழந்து அது ஆட்டுவிக்க ஆடுவது-வெள்ளத்திடைப்பட்ட மனிதன்‌ தன்‌ வயமிழக்து வெள்ளத்தின்‌ வழியே இழிவது போலவும் ஜீவாத்மா பரமாத்மாவினால்‌ உட் புகுந்து தூண்டப்பட்டே- ஆக்ரமிக்கப்பட்டே எல்லாவற்றையும்‌ செய்கிறான்‌-காட்டப்பட்ட உதாரணங்களில்‌ புல்லும்‌–ஜீவனும்‌ எப்படி. நிக்ரஹா நுக்ரகங்களுக்கு உரியன அல்லனவோ– அப்படியே தான்‌ எல்லாக் கார்யங்களிலும்‌ ஜீவாத்மாவின்‌ நிலையும்‌-இப்படிப்பட்டவனுக்கு: புத்தி பூர்வக ப்ரவ்ருத்தி கூடாதாகையாலே விதி நிஷேத சாஸ்த்ரங்கள்‌ வ்யர்த்தங்களாகும்‌. விலங்கிட்டு வைத்த ஒருவனை ஓடு என்று உத்திரவு இடுவது போன்‌றுளது பரமாத்ம பரதந்த்னான ஜீவனை நோக்கி–*இதைச்‌ செய்‌, இதைச்‌ செய்யாதே”’ என்று விதிப்பதும்‌ நிஷேதிப்பதும்‌-ஆக ஜீவாதமாவுக்குக்‌ கர்த்ருத்வம்‌ இசைந்தாலும்‌ அது பரமாத்மா யத்தம்‌ என்றால்‌ அப்பொழுதும விதி நிஷேத சாஸ்த்ரங்கள்‌ வ்யர்த்தஙகளேயாம்‌-ஆகையால்‌ ஜீவாத்மா–எதையும்‌ ஸ்வதந்த்ரனாகவே–பரமாத்மாவின்‌ ப்ரேரணம்‌ இன்றியே செய்கிறான்‌ என்றே கொள்ள வேண்டும்‌. இப்பொழுது அந்தர்யாமி ச்ருதியின்‌ அர்த்தத்தில்‌ ஏதாவது ஸங்கோசம்‌ சுருக்கம்‌ அல்லது கெளணார்த்த கல்பகம்‌ என்று ஒரு முறையைக்‌ கொள்ள வேணடும்‌ என்பது பூர்வ பக்ஷத்தின்‌ ஸாரம்‌.

ஸித்தாந்தமாவது :–ஜீவனுடைய கர்த்ருத்வம்‌ பரமாத்மா யத்தமே ! ஸ்வ தந்த்ர மானது அன்று. அந்தர்யாமி சருதி பலத்தினால்‌ இவ்விதமே தான்‌ கொள்ள வேண்டும்‌ என்பதேயாகும் –அந்நர்யாமி ச்ருதியானது–பரமாத்மா ஜீவனை அந்த:ப்ரவிஷ்டனாய்க்‌ கொண்டே எல்லாச்‌ செயல்களிலும்‌ ப்ரவருத்திப்பிக்கிறான்‌ என்கிறது. ஸ்ரீ கீதையிலும்‌ கண்ணன்‌-* யாவருடையவும்‌ ஹ்ருதயத்திலும்‌ நான்‌ இருக்கிறேன்‌ ‘” என்றும்‌, “ஈச்வரன்‌ ஸர்வ பூதங்களுடையவும்‌ ஹ்ருதயத்தில்‌ இருந்து கொண்டு ஸங்கல்பத்தினால்‌, யந்த்ரத்தில்‌ ஏற்றிய பூதங்களைப் போல்‌ அனைத்தையும்‌ சுழல வைக்கிறேன்‌ ‘ என்றும்‌, ‘ஸ்ம்ருதியும்‌, ஜ்ஞாநமும்‌. அதன்‌ அழிவும்‌ அனைத்தும்‌ என்னால் தான்‌ !’ என்றும்‌ அருளி யுள்ளான்‌. ஆகவே ஜீவனுடைய கர்தருதவம்‌ பரா யத்தமே-பரமாத்மாதீநமே. அந்தர்யாமி ச்ருதிகளுக்கு வேறு அர்த்தம்‌ கல்பிப்பதும்‌ பல ச்ருதிகளுக்கு விருத்தமாகும்‌. பரதந்தரனே யாகிலும்‌ ஸ்வாதந்த்ர்யமும்‌ உண்டு எனல்‌ ” :-இப்படியாகில்‌ விதி-நிஷேத சாஸ்த்ரங்களுக்கு முன்‌ கூறிய வகையில்‌ வையர்த்யம்‌ வருமே எனில்‌, வாராது. பரமாத்மா ஜீவாத்மாவைப்‌ செயல் படுத்துவது. அதாவது ப்ரவர்த்திப்பது. முதலில்‌ ஜீவன்‌ செய்யும்‌ ப்ரயத்நத்தை அபேக்ஷித்துத் தான்‌. ஆகவே முதல்‌ க்ஷணத்தில்‌ ஜீவனுக்கு ஸ்வாதந்ர்த்யம்‌ உண்டு. அவன்‌, ஈச்வரன்‌ தந்த ஜ்ஞானம்‌ சக்தி இவற்றைக் கொணடு அறிந்து, புத்தி பூர்வகமாகவே ப்ரவருத்திக்கிறான்‌ ஆகையால்‌ புத்தி பூர்வகமாகச்‌ செயல்படுபவனை நோக்கி ஏன்‌ விதி நிஷேத சாஸ்த்ரங்கள்‌ ப்ரவருத்‌திக்கா ? கட்டாயம்‌ ப்ரவ்ருத்திக்கலாம்‌, அவை ஸபலங்களாகலாம் –

ஈச்வரன்‌ முதல்‌ ஷணத்தில்‌ ஜீவன்‌ செய்யும்‌ ப்ரயத்நத்தைக் கண்டு ஸத் விஷய மாயினும்‌ அஸத் விஷயமாயினும்‌ இரண்டாவது ஷணம்‌ முதல்‌ ஜீவனுக்கு அவ்வவ விஷயத்தில்‌ அநுமதி தருகிறான்‌. ஈச்வரன்‌ முதல் க்ஷணத்தில்‌ உதாஸீகன்‌. இரண்டாவது க்ஷணத்தில்‌ அநுமந்தா என்ற பாகுபாடு அறிதல் வேண்டும்‌-இங்கு ப்ரதம ப்ரயத்நம்‌. ப்ரதம க்ஷணம்‌ என்பது –அவ்வப் பொழுது ஆரம்பிக்கப்‌ படும்‌ ஒவ்வொரு க்ரியையிலும்‌, அதாவது –படித்தல்‌, படிப்பித்தல்‌, உண்ணுதல்‌ முதலான தொடர்ந்து நடைபெறும்‌ ஒவ்வொரு க்ரியையிலும்‌ முதல்‌ க்ஷணமும்‌ அதில்‌ செய்யும்‌ ப்ரயத்னமே யாகும்‌. இச் சமயத்தில்‌ ஜீவன்‌ தன் புத்தியைச்‌ செலுத்தி ஆராய்ந்தே செய்வதால்‌ ஸ்வாதந்தர்யம்‌ உண்டு. ஆயினும்‌ இதுவும்‌ அவனது இன்னருளால்‌ பெற்றதே யாகும்‌. இதனால்‌ பாரதந்தர்யமும்‌ உண்டு-ஆக ஒருவன்‌ அறிந்து ஸத் கார்யம்‌–அஸத் கார்யம்‌ இவற்றின்‌ பலன்கனை இவன்‌ தானே அனுபவிக்க வேண்டும்‌. அறிந்து–ஆசை கொண்டு செய்வது தான்‌ ஸ்வாதந்தர்யம்‌. இது பாரதந்தர்யத்துடன்‌ முரண்படாது.

அசேதநங்களுக்கு அறிவில்லாமையால்‌ அவை ஸர்வதா பரதந்த்ரங்களே ! அவற்றை ஈச்வரன்‌ ஆட்டி வைக்கும்போது–ப்ரவ்ருத்திப்பிக்கும் போது அவற்றிக்கு நன்மை தீமைகளாம்‌ பலத்தில்‌ அந்வயமே கிடையாது-ஜீவர்களின்‌ விஷயம்‌ வேறு. கீழே காட்டிய உதாஹரணங்கள்‌ இங்குப்‌ பொருந்தா. பெருங் காற்றில்‌ அகப்பட்ட புல்‌ அசேதநம்‌. அறிவில்லாமையால்‌ அதற்கு ஸ்வாதந்தர்யம்‌ சிறிதும்‌ கிடையாது-வெள்ளத்திடைப்பட்ட மனிதன்‌ சேதநநே யாகிலும்‌ காலாழ்ந்து, நெஞ்சழிந்து, கண்‌ சுழன்று, தன்வயமின்றிச்‌ செயல்படுவதால்‌ அவன் போக்கு அப்பொழுது அவனுடைய புத்தி பூர்வகம்‌ அன்று-பிசாசத்தினால்‌ பீடிக்கப்பட்டவனுடைய நிலையும்‌ இப்படியே, அங்கும்‌ இவன்‌ ஸ்வ புத்தி பூர்வகமாக ஆடுகிறான்‌ அல்லன்‌, பிசாசம்‌ அவன்‌ புத்தியை வேலை செய்ய ஒட்டாமல்‌ தடுத்து விடுகிறது, ஆக இங்கும்‌ சிறிதும்‌ ஸ்வாதந்த்ர்யம்‌ கிடையாது-உலக வழக்கில்‌ க்ரியா கர்த்தாவான ஜீவன் நிலை முன் காட்டியது போன்றதன்று-ஸ்வ புத்தி பூர்வகமாக ஆராய்ந்து அறிந்து ஈடுபடுவதால்‌ இங்கெல்லாம்‌ ஸ்வாதந்தர்யம்‌-ஸ்வ புத்தி பூர்வகமாக ப்ரவ்ருத்திக்கும்‌ இடந்தோறும்‌ ஸ்வாதந்தர்யம்‌ உண்டு- இந்த ஸ்வாதந்த்ர்யமும்‌ பரமாத்மா தந்ததாகையால்‌ பரமாத்ம பாரதந்தர்யத்தோடு முரண்படாது

இதனால்‌ நம்‌ சரீரத்தைக் காட்டி ஆக்ஷேபமும்‌ ஏறுது. அசேதந சரீரம் போல்‌ ஜீவனும்‌ பரமாத்மாவுக்கு சரீரமே யாயினும்‌–அது அசேதநம்‌. இவன்‌ சேதநன்‌ என்ற வாசியை ஒரு நாளும்‌ மறக்கலாகாது, ஆகவே முந்தியது தண்டிக்க உரியதன்று. பிந்தியவனனான ஜீவன்‌ சேதநனாய்‌ இருந்து கொண்டு ஸ்வ புத்தி பூர்வகமாகவே ப்ரவருத்திப்பதால்‌ பராயத்த கர்த்ருத்வம்‌ உள்ள போதும்‌ தண்டிக்கத்‌ தக்கவனாகிறான்‌. என்றிவ்வாறான வேற்றுமை அறிந்தால்‌ பூர்வ பக்ஷம்‌ இடம் பெறாது ஒழியும்
இப்படி ஜீவன்‌ முதல்‌ க்ஷணத்தில்‌ செய்யும்‌ ப்ரயத்நத்தைக்‌ கண்டு கொண்டே ஈச்வரன்‌ ஜீவனை ப்ரவருத்திப்பிப்பதால்‌ ஈச்வரனுக்கு இதன்‌ பலாநுபவத்தில்‌ ஸம்பந்தம்‌ கிடையாது. முதல்‌ க்ஷணத்தில்‌ ஸ்வதந்த்ரனாய்‌ அதாவது ஈச்வரன்‌ தந்த புத்தியைக்‌ கொண்டே ஜீவன்‌ ப்ரவ்ருத்திப்பதால்‌ ஈச்வரனுடைய நிக்ரஹ–அநுக்ரஹங்களுக்கு இவன்‌ விஷயமாகிறான்‌. விதி நிஷேத சாஸ்த்ரங்கள்‌ வீணாகாமைக்காக இப்படித் தான்‌ கொள்ள வேண்டும்‌-இதற்குமேல்‌ இதில்வரும்‌ ஸந்தேஹங்களும்‌–அவற்றின்‌ பரிஹாரங்களும்‌-ப்ரதமக்ஷணத்தில்‌ ஜீவன்‌ செய்யும்‌ ப்ரவ்ருத்தியில்‌ ஈச்வரன்‌ காரணம்‌ இல்லை என்று தானே இந்த ஸித்தாந்த ரீதியில்‌ தேறுகிறது. அப்படியாயின்‌ அவனுக்கு ஸர்வகாரணத்வம்‌ கூடா தொழியுமே ? ந்யாயமும்‌ ஸர்வ ப்ரவ்ருத்திகளுக்கும்‌ எம்பெருமானே காரணம்‌ என்பதைத் தானே வலியுறுத்துகிறது. எண்ணில்‌ அடங்காத ஜிவாத்மாக்கள்‌ செய்யும்‌ ப்ரதம ப்ரவ்ருத்திகள்தான்‌ எத்தனை–எத்தனை? அவை அனைத்திலும்‌ , அவன்‌ காரணம்‌ ‘ஆகாது ஒழிபில்‌ ஸர்வ காரணத்வ ஸ்தாபகம்‌ வீணேயாம்‌, என்ற -ஸந்தேஹம்‌ அனைவருக்கும்‌ உண்டு-இதற்குரிய பரிஹாரமாவது:–ஜீவன்‌ செய்யும்‌ முதல்‌ ப்ரவ்ருத்தியிலும்‌ ஈச்வரனுக்‌குக்‌ காரணத்வம்‌ உண்டு. காரணம்‌ ஆவது இருவகையிலாகும்‌. ஸாமாந்ய காரணம்‌-விசேஷ காரணம்‌ என்று-கார்நெல்‌—சம்பாநெல்‌ என்று நெல்லில்‌ பலவகைகள்‌ உண்டு. இவை உண்டாவதற்கு அந்தந்த இனத்தைச் சார்ந்த விதைகள்‌ விசேஷ காரணம்‌. கார்நெல்‌ விதை போட்‌ டால்‌ சம்பாநெல்‌ விளைவதில்லை. சம்பாநெல்‌ விதை போட்டால்‌ கார்நெல்‌ விளைவதில்லை. ஆகவே அந்தந்த இனத்தைச்‌ சார்ந்த விதைகள்‌ விசேஷ காரணங்கள்‌ ஆகின்றன. எந்த நெல் விளைய வேண்டுமானாலும்‌ ஜலம்‌–எரு முதலியன வேண்டும்‌. பலவகை நெல்‌ பயிர்‌ களுக்கும்‌ ஒரே ஏரிபின்‌ ஜலம்‌ பாய்ச்சுகின்றனர்‌, இங்குப்‌ பாய்ச்சப்படும்‌ ஜலம்‌ ஒரே இடத்தைச்‌ சார்ந்ததால்‌ ஒரே இனம்‌: விளையும்‌ பயிர்களோ பல பல வகைகள்‌: ஆகவே ஜலம்‌ முதலியன ஸாமாந்ய காரணங்களாகின்றன. இவ்வாறே தான்‌ ஜீவன்‌ செய்யும்‌ ப்ரதம ப்ரவ்ருத்தியிலும்‌ பரமாத்மா ஸாமாந்ய காரணம்‌ ஆகிறான்‌-அசேதநமான ஜலம்‌ தான்‌ காரணம்‌ ஆகும் போது ஸங்கல்பித்துக்கொண்டு காரணம்‌ ஆவதில்லையே ! எம்பெருமானோ பரம சேதநனாகையாலே ஸங்கல்ப விசிஷ்டனாய்க் கொண்டு தானே காரணம்‌ ஆகிறான்‌. ஸங்கல்பம்‌ என்பது ஒரு விஷயத்தைப் பற்றித்‌ தானே இருக்கும்‌. ஆக ஒரு விஷயத்தைக்‌ கொண்டிருக்கும்‌ ஸங்கல்பம்‌ விசேஷ ஸங்கல்பமாக முடிய, தத் விசிஷ்டனான ஈச்வரனும்‌ விசேஷ காரணமாகத் தானே நிற்கமுடியும்‌ ! இப்படி. யிருக்க இவன்‌ ஸாமான்ய காரணமாவது எப்படி * என்று மேலும்‌ ஸந் தேஹம்‌ வரும்‌, _ இதற்கு ஸமாதாநம்‌:–ஜீவாத்மாக்கள்‌ அனைவருக்கும்‌ எம்பெருமான் தான்‌ சரீரேந்த்ரி யங்களைத்‌ தருகிறான்‌. அப்படித் தரும் போது ஸங்கல்பித்துத் தான்‌ தருகிறான்‌. இவ்வளவையும்‌ இசைந்தே தான்‌ அவனை ஸாமான்யகாரணம்‌ என்கிறோம்‌ ப்ரதம க்ஷணத்தில் அந்த ஸங்கல்பம்‌ ஸாமாந்யமானது–பொதுவானது. அதாவது–சரீரம்‌, இந்த்ரியம்‌, புத்தி இவற்றைக்‌ கொடுக்கும் போது–”இவற்றைக் கொண்டு இந்தக்‌ கார்யத்தையே இன்னான்‌ செய்யக் கடவன்‌. மற்றொருவன்‌ இவற்றைக்‌ கொண்டு வேறு ஒன்றைச்‌ செய்யட்டும்‌ ‘* என்று விசேஷித்து ஸங்கல்பிப்பதில்லை.

நன்மை தீமைகளைப்‌ பகுத்தறியும்‌ ஆற்றலையும்‌ ( புத்தி சத்தியையும் ) சரீரேந்த்ரி யங்களையும்‌ தந்து ஸ்வாதந்த்ர்யத்தையும்‌ தரும்‌ ஈச்வரன்‌ எல்லா ஜீவன்கள்‌ விஷயத்திலும்‌ இவ்வாறே ஸங்கல்பிப்பதால்‌ இந்த ஸாமாந்யாகாரத்தை இட்டு ஈச்வரன்‌ ஸாமாந்ய காரணம்‌ ஆகக் குறையில்லை, உத்கடமான புண்ய-பாபங்கள்‌ செய்துள்ள ஜீவன்கள்‌ விஷயம்‌ வேறு. அவர்கள்‌ விஷயத்தில்‌ எம்பெருமானே எல்லா ப்ரவ்ருத்திகளையும்‌ செய்விக்கிறான்‌.-ஜீவாத்‌ மாக்களுக்கு எம்பெருமான்‌ ஸ்வாதந்த்ர்ய சக்தியைக்‌ கொடுத்துள்ளமையால்‌ முதல்‌ க்ஷணத்தில்‌ செய்யும்‌ ப்ரவ்ருத்தியில்‌ ஜீவன்‌ ஸ்வதந்த்ரனான கர்த்தா ஆகிறான்‌. ஆகவே விதி நிஷேதங்களுக்கும்‌- அவ்வவற்றின்‌ பலாநுபவத்திற்கும்‌ நிக்ரஹாநுக்ரஹங்‌ களுக்கும்‌ உரியவன்‌ ஆகிறான்‌. ஆகவேதான்‌ ஸூத்ரகாரர்‌ ஜீவனால்‌ செய்யப்பட்ட ப்ரயத்னம்‌ என்ற அர்த்தம்‌ தரும்‌ ‘* க்ருத ப்ரயத்ந ” என்ற பதத்தையே ப்ரயோகித்துள்ளார்‌. ப்ரதம ப்ரவ்ருத்தியிலும்‌ ஜீவன்‌ அத்யந்த பரதந்த்ரனாய்‌ பரமாத்மா செய்விக்கச்‌ செய்கிறானாகில்‌ ஈரி என்றே தான்‌ ஸூத்ரத்தில்‌ பதம்‌ இருக்க வேண்டும்‌. ந .து. க்ருத ப்ரயத்நேதி-இதனால்‌ பகவத்‌ பாரதந்த்ர்யம்‌ ஜீவனுக்கு ப்ரதம க்ஷணத்தில்‌ இல்லை எனறு நினைக்க வேண்டாம்‌. இவன்‌ ஸ்வதந்த்ரனாய்‌ தன்னுடைய புத்தி-சரீர இந்த்ரியங்களைக் கொண்டு ப்ரவ்ருத்தித்தானாகிலும்‌ இந்த ஸ்வாதந்த்ர்ய சக்தி-புத்தி சரீர-இந்த்ரியங்கள்‌ அனைத்தும்‌ அவன்‌ தந்தவை தானே, ஆக எம்பெருமான்‌ தந்த கருவிகளைக் கொண்டே எல்லா ஜீவாத்‌ மாக்களும்‌ எப்பொழுதும்‌–எதையும்‌ செய்வதால்‌ பாரதந்த்ர்யமும்‌ போகாது-ராஜா ஒருவன்‌ தன்‌ மந்த்ரிக்குப்‌ பெரும்‌ பதவியைத்‌ தந்து போக்ய-போகோபகரணங்‌களையும்‌ தந்து பரிகரங்களையும்‌ கொடுத்து அவனை ஸ்வதந்த்ரனாக விடுகிறான்‌. அந்த நிலையிலும்‌ அந்த மந்த்ரி ராஜாவுக்கு அதீநன் தானே! பரதந்த்ரன் தானே! ஆகவே ஸ்வாதந்தர்‌ யத்துக்கும்‌, பாரதந்தர்யத்துக்கும்‌ முரண்பாடு இல்லை.

இதற்கு மேலும்‌ உண்டாகும்‌ பெரும்‌ ஸந்தேஹம்‌ ஒன்று-கீழ்க் கூறிய வகையில்‌ எம்பெருமான்‌ யாவருக்கும்‌ ஸாமாந்ய காரணமாகவே நிற்கிறான்‌ என்றால்‌ ஈச்வரன்‌ தந்த ஸ்வாததந்த்ர்யம்‌ புத்தி-சரீரம்‌ இந்த்ரியங்கள்‌ இவற்றைப்‌ பெற்றுள்ள ஜீவாத்மாக்கள்‌ அனைவரும்‌ ப்ரதம க்ஷணத்தில்‌ ஏக ரூபமான கார்யத்திலேயே-அதாவது புண்ய கார்யத்திலேயோ அல்லது பாப கார்யத்திலேயோ ப்ரவருத்திக்கட்டுமே ! ஆனால்‌ அப்படி யின்றி சிலர்‌ புண்ய கர்மங்களிலும்‌, வேறு சிலர்‌ பாப கர்மங்களிலும்‌ அன்றோ ப்ரவ்ருத்திக்கின்றனர்‌. இத்தகைய வைஷம்யம்‌ (வேறுபாடு): ஏன்‌ ? எதனால்‌ ! என்பதே இங்கு உண்டாகும்‌ ஸந்தேஹம் இதற்குப்‌ பூர்வர்கள்‌ காட்டும்‌ பரிஹாரம்‌.-ஈச்வரன்‌ ஜிவாத்மாக்கள்‌ விஷயத்தில்‌ செய்யும்‌ உபகாரங்கள்‌ இருவகைப்படும்‌. ஸாமாந்யம்‌ என்றும்‌ விசேஷம்‌ என்றும்‌. யாவருக்கும்‌ பொதுவில்‌ சரீரேந்த்ரியங்களைக்‌ கொடுப்பதும்‌, பின்னர்‌ அதை வ்யாபிப்பது, தரிப்பது, ப்ரவ்ருத்தி ஸாமர்த்யத்தை உண்டு பண்ணுதல்‌ முதலியனவும்‌ ஆன உபகாரங்கள்‌ ஸாமாந்யங்கள்‌. இவ்வளவால்‌ எம்பெருமானுக்கு ஸர்வ காரணத்வமும்‌ ஸர்வ பல ப்ரதத்வமும்‌ பொருந்துகிறது-பின்னர்‌ விஷம ப்ரவருத்தி -அதாவது ஜீவாத்மாக்களில்‌ சிலர்‌ ஸத் கார்யங்களில்‌ செய்யும்‌ ப்ரவ்ருத்தியும்‌, அஸத் கார்யத்தில்‌ செய்யும்‌ ப்ரவ்ருத்தியும்‌ உண்டாகும்‌ விஷயத்தில்‌ காரணம்‌ வேறு. எந்த ஒரு கார்யமும்‌ ஸாமாந்ய காரணத்தினால் மட்டும்‌ உண்டாவதில்லை. விசேஷ காரணமும்‌ வேண்டியுள்ள தன்றோ ! ஸாமாந்ய காரணமான ஜலமும்‌, விசேஷ காரணமான விதைகளும்‌ சேர்ந்தால் தானே நெற் பயிர்கள்‌ விளைகின்றன-அவ்வாறே எம்பெருமானுடைய ஸாமாந்ய ஸங்கல்பத்தினலே உண்டாகிற சரீரத்‌ திலே ஸத்வம்‌-ரஜஸ்‌-தமஸ்‌ என்ற குணங்களின்‌ உத்பவம்‌… அபிபவம்‌.ஒன்‌று குறைவதும்‌ மற்றொன்று மேலோங்கி நிற்பதும்‌, வாஸநா விசேஷம்‌–முன் பிறவியில்‌ அடிக்கடி ஒரு கார்யத்தைச்‌ செய்ததால்‌ உண்டாகும்‌ ஸம்ஸ்காரம்‌ என்றிவை யாகிற விசேஷ காரணங்‌ களாலே விஷம ப்ரவ்ருத்திகள்‌ உண்டாகின்றன–

பலாநுபவம்‌ பண்ணும் போது விஷயங்கள்‌ சேர்வதும்‌ எம்பெருமானுடைய ஸாமாந்ய ஸங்கல்பத்தினால் தான்‌. எம்பெருமான்‌ அநுபவ யோக்யங்களான விஷயங்களைக்‌ கொடுத்தது வேறு காரணத்திற்காக. ஆனால்‌ அவை பயன்படுவது வேறு விதத்தில்‌-அதாவது முன் செய்த முழு வினைகளின்‌ பயனை அநுவிப்பதற்காகவே ஸர்வேச்வரன்‌ விஷயங்களைச்‌ சேர்த்தான்‌. அவ்வளவே. இவ் விஷயங்களைக்‌ கண்டு இவற்றைப்‌ பெற விரும்பிப்‌ புதிதாக உபாயங்களை அநுஷ்டிப்பதற்காக அன்று. பிறகு ஸந்தர்ப்ப வசத்தினால்‌ ஜீவர்கள்‌ இவற்றைப்‌ பெற விரும்பி ஸாதநங்களை அநுஷ்டிக்கப்‌ புகுகின்றனர்‌. இங்கு எம்பெருமான்‌ ப்ரதம க்ஷணத்தில்‌ உதாஸீந மாகவே இருந்து விடுகிறான்‌-குடத்தைப்‌ பார்ப்பதற்காக ஒருவன்‌ விளக்கு ஏற்றினான்‌. துணியைத்‌ தேட விரும்பிய ஒருவன்‌ இந்த விளக்கைக் கொண்டு துணியைப் பார்க்க முயல்கிறான்‌. விளக்கு ஏற்றியவன்‌ –நான்‌ குடத்தைப்‌ பார்ப்பதற்காகவே இந்த விளக்கை ஏற்றினேன்‌. இதன்‌ உதவியைக்‌ கொண்டு துணியைப்‌ பார்க்கக் கூடாது என்று தடுப்பதில்லையே. உதாஸீநனாகத்தானே இருப்பான்‌. அவவாறே தான்‌ இங்கும்‌-மேலும்‌ ஒரு கேள்வியும்‌ அதன்‌ பதிலும்‌–அத்ருஷ்டம்‌, பூர்வ வாஸனை இவற்றால்‌ ஜீவனுக்கு இச்சை உண்டாக அதனால்‌ தூண்டப்பட்டுத்தானே ஜீவன்‌ ஒவ்வொரு கார்யத்திலும்‌ ப்ரவ்ருத்திக்கிறான்‌, இப்படியாகில்‌ இச்சைக்கு வசப்பட்ட இவன்‌ காற்றில்‌ அகப்பட்ட புல்லே போல்‌ பரவசனாகத்தானே ப்ரவ்ருத்திக்கிறான்‌. ஆகவே ஜீவனுக்கு ஸ்வாதந்த்ர்யம்‌ கிடையாது, விதி–நிஷேத சாஸ்த்ரங்கள்‌ வ்யர்த்தங்களே என்று மற்றோர்‌ ஆக்ஷேபம் முளைக்கிறது -இதற்குப்‌ பதில்‌–ஒரு விஷயத்தில்‌ இச்சை உண்டானால்‌ அதன்படியே ப்ரவ்ருத்திக்க வேண்டும்‌ என்ற நியதி கிடையாது. அதனால்‌ வரும்‌ நன்மை தீமைகளை ஆராய்ந்து அறிந்து விஷயங்களைக்‌ கொள்ளவோ-விலக்கவோ ஜீவன்‌ வல்லவனனாகிறான்‌. ஆகையால்‌ இச்சைக்கு வசப்பட்ட இவன்‌ காற்றில்‌ அகப்பட்ட புல் போல்‌ ஆகான்‌-ஒருவனுக்குப்‌ பெரும் பசி உண்டாகி விட்டது. பசி என்றால்‌ என்ன ? உண்ண வேண்டும்‌ என்ற ஆசை தானே ! இந்த ஆசையினால்‌ உந்தப்பட்டு போஜநம்‌ செய்யப் ப்ரவ்ருத்திக்கிறான்‌ இவன்‌. அந்நம்‌ முதலியனவும்‌ கொண்டு வைக்கப்படுகின்றன. நெருங்கி உண்ணப் போகும்‌ ஸமயத்தில்‌ அதில்‌ விஷம்‌ கலந்திருப்பதை அறிகிறான்‌. உடனே என்ன செய்கிறான்‌ ? உண்ண ஆசை அதிகமாக இருந்தும்‌ அதை உண்கிறானா ? இல்லையே ? உண்ணும்‌ ஆசையை உடனே விலக்கி விடுகிறான்‌ அன்றோ ! இதனால்‌ என்ன ஏற்படுகிறது ? இச்சை அதிகமாக இருப்பினும்‌ அதனால்‌ தூண்டப்பட்ட ஜீவன் தன்னுடைய ப்ரவருத்தியினால்‌ நல்லது வருமா கெட்டது வருமா ? என்று ஆராய்ந்து நல்லது கிடைக்கு மாயின்‌ எடுததுக் கொள்ளவும்‌, கெட்டது வருமாயின்‌ இச்சையை அடக்கி அதை விட்டு விடவும்‌ சக்தனாகிறான்‌ என்ற உண்மை புலனாகிறது-இப்படிப்பட்ட இவன்‌ அவச்யம்‌ கர்த்தவ்யங்களான கர்மங்களை விட விருப்பம்‌ உண்டாகும் போது அதனால்‌ வரும்‌ அர்த்தத்தை அறிந்து அந்த விருப்பத்தை விலக்க வேண்டும்‌. இவ்வாறே செய்யக் கூடாதவற்றைச் செய்ய விருப்பம்‌ உண்டாகும் போதும்‌ அதனால் வரும்‌ அநர்த்தங்களை அறிந்து அந்த விருப்பத்தையும்‌ விலக்க வேண்டும்‌. இப்பொழுது க்ருத்யங்களைச்‌ செய்யவும்‌ அக்ருத்யங்களை விடவும்‌ முற்படுவான்‌. பரம ஸ்ரேயஸ்ஸையும்‌ பெறுவான்‌. இவ்வாறு செய்யத்‌ தவறிய போது தான்‌ தண்டிக்கத் தக்கவனாகிறான்‌–

இவ்வளவும்‌ இந்த அதிகரண ச்ருத ப்ரகாசிகையின்‌ சுருக்கமே. கடைசியில்‌ அங்கு ஸார தமமான அர்த்த விசேஷத்தைக்‌ காட்டும்‌ இரண்டு வாக்யங்களை மட்டும்‌ இங்கு தருகிறேன்‌ அப்படியே –அந்தர்யாமி ச்ருதிக்கும்‌ அர்த்தத்தில்‌ ஸங்கோசம்‌ ஏற்படுகிறது-அநுமதியில்‌ வரும்‌ ஆக்ஷேபமும்‌ பரிஹாரமும்‌--இரண்டாவது க்ஷணம்‌ முதல்‌ எம்பெருமான்‌ ப்ரதம ப்ரவ்ருததி செய்த ஜீவனுக்கு அவ் விஷயத்தில்‌ அநுமதி செய்கிறான்‌ எனறால்‌ ப்ரவ்ருத்தி பலமான ஸுக துக்கா நுபவங்கள்‌ யாருக்கு ஜீவனுக்கா ? எம்பெருமானுக்கா ? அநுமதி தந்தவனுக்குத் தானே அவை பொருந்தும்‌ என்ற கேள்வி இங்கு வர, இதற்குப்‌ பரிஹாரம் இருவருக்கும்‌ பொதுவான பணம்‌ இருக்கிறது. அதில்‌ ஒருவன்‌ தன்‌ பங்கை எடுத்து ராஜாவுக்குக்‌ காணிக்கையாகத்‌ தர நினைக்கிறான்‌. தன்‌ பணமே யாயினும்‌ மற்றவனுடைய அநுமதி இன்றி அதை எடுக்க இவனுக்கு உரிமை கிடையாதே ! என்ன செய்‌கிறான்‌ ? மற்றொருவனுடைய அநுமதியையும்‌ தானே பெறுகிறான்‌. தன்‌ பங்கை எடுத்து ராஜாவுக்குக்‌ காணிக்கை வைக்கிறான்‌. ராஜா இதனால்‌ மகிழ்ந்து இவனுக்குப்‌ பரிசுகள்‌ பல தருகிறான்‌. இவை யனைத்தும்‌ அனுமதி தந்தவனுக்கா ? அதைப் பெற்றுப்‌ பணம்‌ தந்‌தவனுக்கா? அது போலவே அநுமதி தந்த. ஈச்வரனுக்கு ஸூக துக்காநுபவங்களில்‌ பங்கு கிடையாது.

தத்த்வ ஸாரத்தின்‌ ஸாரம்‌–ச்ருத ப்ரகாசிகாசார்யரின்‌ குருவான நடாதூர்‌ அம்மாள்‌ என்கிற வாத்ஸ்ய வரத குருவும்‌ தாம்‌ அருளிய தத்வ ஸாரம்‌ எனும்‌ அத்புத கரந்தத்தில்‌ இவ் விஷயத்தைத்‌ தெளிவு பட அருளி யுள்ளார்‌-முதல்‌ க்ஷணத்தில்‌ உதாஸீஈன்‌. இரண்டாது க்ஷணத்தில்‌ அநுமந்தா. பிறகு ஸஹகாரீ என்ற நிலைகளைப்‌ பெறுகிறான்‌ எம்பெருமான்‌-தயா கார்யம்‌–ஒருவன்‌ தவறு செய்யும் போது அதை விலக்க வல்ல ஒருவன்‌ விலக்காமல்‌ இருந்தால்‌ அவனை நிர் தயன்‌ என்று தானே சொல்லுவார்கள்‌. அவ்வாறே ஈச்வரன்‌ தயா வானாக இருந்தால்‌ ஜீவன்‌ அஸத் கார்யங்களில்‌ ப்ரவ்ருத்திக்கும் போது ஏன் தடுக்காமல்‌ இருக்கிறான்‌ என்ற கேள்வி அடுத்து இடம்‌ பெறுகிறது. இதற்கும்‌ பதில்‌ –ப்ரதம க்ஷணத்தில்‌ செய்த ப்ரவ்ருத்தியின்‌ பலமாக இரண்டாவது க்ஷணங்களில்‌ எம்பெருமான்‌ அநுமதிப்பதாய்‌ இவனுக்கு ஒரு குற்றமில்லை. தண்டிக்கப்பட வேண்டியவனை தண்டிப்பது ஆளும்‌ அரசனுக்கு எப்படி குணமாமோ ? அப்படியே ஸர்வ நியந்தாவான எம்பெருமானுக்கும்‌ குணமே ! என்று கொள்ள வேண்டும்‌”-இங்கு அதிகரண ஸாராவளியில்‌ ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன ப்ரதம ப்ரவ்ருத்தி யிலும்‌ ஈச்வரன்‌ ப்ரேரகனே என்று ஸாதித்து கீழே காட்டிய வகையில்‌ ப்ரேரகத்வத்திற்கும்‌ உதாஸீநத்வத்திற்கும்‌ விரோதம்‌ இல்லை என்பதை ஸூஷ்ம புத்தியைக்‌ கொண்டு அறிய வேண்டும்‌ என்று அருளி யுள்ளார்‌
ஈச்வரன்‌ ஸ்வதந்த்ரனாக இருப்பதனால்‌ கர்த்தா என்றும்‌, ஜீவனைச்‌ செய்விக்கிறபடியால்‌ காரயிதா என்றும்‌, ஒரு கார்யத்தில்‌ முன்னமே ப்ரவ்ருத்தித்தவனை மேலும்‌ ப்ரவருத்திப்‌ பிக்கிறயடியால்‌ அநு மந்தா என்றும்‌, பயிர்களின்‌ முளைகளுக்குத்‌ தண்ணீர் போல்‌ ஸர்வ. கார்யங்களுக்கும்‌ ஸாமாந்ய ஹேதுவாக. இருப்பதால்‌ உதாஸீநன்‌ என்றும்‌, ‘எல்லா நிலைகளினும்‌ யாவற்றையும்‌ கண்டு நிற்பதால்‌ ஸாக்ஷீ என்றும்‌ அவனவனுடைய கர்மங்களை அநு சரிசித்து கார்ய விசேஷங்களில்‌ ப்ரவர்த்தகனாய்‌ உடனிருந்து செய்வித்தலால்‌ ஸஹ காரீ என்றும்‌ இப்படி யெல்லாம்‌ ஈச்வரன்‌ ஒருவனே சொல்லப் படுகிறான்‌-பொருள்களை நிறுத்திக் காட்டும்‌ தராசு நிறுக்கும் போது ப்ரமாணம்‌ ( அளவை) என்ற பெயரால் பெறுகிறது. அதையே மற்றைய பொருள்களுடன்‌ ஸமமாக நிறுக்கும் போது ப்ரமேயம்‌ ஆகிறது. ஒன்றே ப்ரமாணமும்‌–ப்ரமேயமும்‌ ஆகிறது-அது போன்றே ஈஸ்வரன் ஜீவனுடைய ப்ரதம ப்ரவருத்தியில்‌ ப்ரேரகனாகவும்‌ ஆகிறான்‌. உதாஸீநன் -ஸாஷீ என்பதால்‌ ப்ரேரகத்வம்‌ இல்லை என நினைக்கலாகாது என்று அருளினார்

அம்சாதிகரணத்தின்‌ ஸாரம்‌-இந்த அதிகாணததில்‌ ஜீவன்‌ ப்ரஹ்மத்திற்கு அப்ருதக்ஸித்த விசேஷணமாகக்‌ கொண்டு அம்சன் ஆகிறான்‌ என்று ஸ்தாபிக்கப் படுகிறது.ஜீவாத்மாக்கள் –ப்ரஹ்மத்திற்கு பாதம்‌ என்றும்‌, அம்சம்‌ என்றும்‌, சக்தி என்றும்‌ ஸ்ருதி ஸ்ம்ருதிகளில்‌ சொல்லப் பட்டுள்ளமையால்‌ இரண்டு தத்தவங்களும்‌ ஒன்றே தானோ எனறு மயங்கும் பிற மதவாதிகளை நிரஸிகக இந்த அதிகரணம்‌ ஆவச்யகமாகிறது-ஜீவ-ப்ரஹ்ம தத்த்வங்களுக்கு ஸ்ருதிகளில்‌ ஓரிடத்தில்‌ பேதமும்‌ மற்றோரிடத்தில்‌ அபேதமும சொல்லி யிருப்பதால்‌ இவையையும்‌ சரீராத்ம பாவத்தைக் கொண்டே நிர் வஹிக்க வேண்டி யுள்ளது. ஆக ப்ரஹ்மம்‌ என்பது சேதநா சேதந சரீரகமாய்‌– விசிஷ்ட வஸ்துவாய் இருக்கிறது. குணியை விட்டுப் பிரியாத குணம்‌ போலவும்‌, வ்யக்தியை விட்டுப் பிரியாத ஜாதி போலவும் , பாபாவத்தான (ப்ரகாசம்‌ உடைய) வஸ்துக்களை விட்டுப்‌ பிரியாத ப்ரபையை (ப்ரகாசத்தை)ப்‌ போலவும்‌ விசிஷ்டமான ப்ரஹ்மத்தை விட்டுப் பிரியாதனவாய் ப்ரஹ்மத்துக்கு அப்ருதக் ஸித்த விசேஷணங்களாய் இருந்து கொண்டு சேதனங்களும் அசேதனங்களும் அம்சங்களாகின்றன–

இந்தப் பாதத்தில்‌ உள்ள ஏழு அதிகரணங்களில்‌ மூன்று அதிகரணங்களே ஸாக்ஷாத்‌தாக ஸங்கதங்கள்‌. ஆகாசம்‌, தேஜஸ்‌, ஆத்மா இவற்றுக்கு ப்ரஹ்ம கார்யதவத்தை ஸ்தாபிக்கிற முதல்‌ மூன்று அதிகரணங்களேயாம்‌ அவை. மற்றைய நான்கு அதிகரணங்கள்‌ ப்ரஸங்காத்‌ ஜிவ ஸ்ரூபத்தை விளக்க வந்தன ஆகும்

பூர்வ மீமாம்ஸையிலேயே ஜீவ ஸ்வரூபம்‌ நிர்ணயிக்கப் பட்டுள்ளதால்‌ மறுபடி இங்கு எதற்காக அது பற்றிய நிர்ணயம்‌– விசாரம்‌ ? என்ற ஸந்தேஹம்‌ சிலர்க்கு வருகிறது. இதற்கு அதிகரண ஸாராவளீ கூறும்‌ பதில்‌-பூர்வ மீமாம்ஸையில்‌ தேசாந்தரத்தில்‌ காலாந்தரத்தில்‌ வரக் கூடிய பலத்தை அநுபவிப்பதற்கு ஏற்ப ஜீவாத்மா சிரகால ஸ்தாயீ என்றே கூறப்பட்டுள்ளது-நமக்கு அது போதாது. ப்ரஹ்ம காண்டத்தில்‌ மூன்றாவதான அத்யாயத்தில்‌ ஜீவ ஸ்வரூப ஜ்ஞாநம்‌ கலந்த பரமாத்மோபாஸநம்‌ சொல்லப் போகிற வ்யாஸ மஹர்ஷி அதற்கு அநுகுணமாக இங்கு ஆத்மாவுக்கு நித்யத்வம்‌. ஜ்ஞாத்ருத்வம்‌, கர்த்ருத்வம்‌, பரமாத்மாதீநத்வம்‌ முதலியன அருளிச் செய்கிறார்‌ இங்கு என்று ஸமாதானம் –

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ.வே. வித்வான்‌ அபிநவ தேசிக உத்தமூர்‌ தி. வீர ராகவாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய இரண்டாம் அத்யாயம் – இரண்டாம் பாத ஸாரம்- ஸ்ரீ உ.வே. வித்வான்‌ அபிநவ தேசிக உத்தமூர்‌ தி. வீர ராகவாசார்ய ஸ்வாமிகள்–

September 27, 2026

முதல்‌ அத்யாயத்தில்‌, ஸந்தேஹத்திற் கிடமான உபநிஷத்‌ வாக்யங்களை யெல்லாம்‌ பராமரித்து ஜகத் காரணமான பர ப்ரஹ்ம மென்ற பொருள்‌ ஸ்தாபிக்கப் பெற்றது. அதன்‌ மேல்‌ இந்த அவிரோதாத்வாயத்தில்‌, யோகிகளும்‌ ஞானிகளுமான முன்னோர்களின்‌ ஸ்ம்ருதி களுக்கு விருத்தனா விருப்பதாலும்‌ புக்திகளுக்குப்‌ பொருந்‌தாம லிருப்பதாலும்‌ அப் பொருள்‌ வாதை பெறுமென்ற கேள்விகளை முதற் பாதத்தில்‌ பரிஹரித்தார்‌. அதன்மேல்‌ வேதத்திற்கு அதே பொருளானாலுல்‌ வேதம் போல அனுமானமும்‌ ப்ரமாணமாகையால்‌ பிற மதங்களை ஸ்தாபிக்கும்‌ தர்க்கங்களும்‌ தக்க வலிவுடையன என்று வினா எழ அம் மதத்‌ தர்க்கங்கள்‌ துர் பலங்களென்று ஸ்த்தாபிக்கிறார்‌. விரக்தரான வியாஸருக்குப்‌ பிறரை தூஷிப்பதிலே நோக்கில்லை. அவற்றை ஸமமாக நினைத்து நம்‌ மதத்தினர்‌ இதில்‌ நம்பிக்கை யிழக்கலாகு மென்று இவர்களைத்‌ திருத்துவதிலேயே நோக்கு-* தூஷண பெளர்வாபர்‌ய ஹேது நிரூபணம்‌ ”-வைதிகமா யிருந்து தர்க்கத்தை ப்ரதானமாகக் கொண்ட ஸாங்க்யமும்‌ வைசேஷிகமும்‌ பின்னே வேத பாஹ்ய மதங்களுமிங்கு நிரஸிக்கப்படும்‌. ஸாங்க்யமானது வேதத்திலுள்ள ப்ரக்ருதி மஹத்‌ அஹங்காராதி தத்துவங்களை விடாமற் கொண்டு யுக்தியால்‌ அவற்றிற்கு ஸ்தாபனம்‌ செய்வதால்‌ வேதத்திற்கு நெருங்கிய தென்று முன் பாதத்தில்‌ கபில ஸ்மிருதியையே ப்ரபலமாகக்‌ கொண்டதால்‌ இங்கும்‌ முதலில்‌ அதற்கே நிராஸம்‌, அதிகரண ஸாராவளியில்‌, ஸாங்க்யரும்‌ வைசேஷிகரும்‌ வேதம்‌ ஓதிய புண்ய பாபங்களை இசைந்தார்கள்‌ ; தத்துவத்தை வேறாக்கினார்கள்‌: பெளத்த ஜைந பாசுபதங்களிலே தத்துவம்‌ ஆசாரம்‌ இரண்டுக்குமே மாறுபாடு என்று ஸ்ரீதேசிகன்‌ அருளியதை நினைக்க, ஸாங்க்யம்‌ வைசேஷிகம்‌ நான்கு பெளத்த மதங்கள்‌ ஜைநம்‌ பாசுபதமென்ற எட்டு மதங்களை தூஷித்து முடிவில்‌ ஸ்ரீபாஞ்ச ராத்ரத்திற்கு முழு ப்ராமாண்யம்‌ ஸ்தாபிக்கப்படுகிறது. நம்மாழ்வார்‌ 4–10–9ல்‌ ( விளம்பும்‌ ஆறு சமயமும்‌ அவையாகியும்‌ மற்றும்‌ தன் பால்‌ அளந்து காண்டற் கரியனாகிய ஆதிப் பிரான்‌ அமரும்‌” என்று ஆறு மதங்களென்றதும்‌ ப்ரஹ்ம ஸூத்ரத்தை யூன்றியே வேறு கருத்தால் அல்ல என்ற போது, அங்கே ஸாங்க்யம்‌ யோகம்‌ காணாதம்‌ கெளதமம்‌ பெளத்தம்‌ ஜைநமென்ற ஆறென்பர்‌ சிலர்‌. காணாத கெளதமங்களை ஒன்றாககி, பாசுபதத்தைக்‌ கூட்டி ஆறென்பர்‌ பிறர்‌. வைதிகத்திலேயே ஸாங்க்யம்‌ யோகம்‌ காணாதம்‌ கெளதமம்‌ மீமாம்ஸக மதம்‌ வையாகரண மதமென்று ஆறு உண்டென்பர்‌ சிலர்‌. வேத பாஹ்யமும்‌ நான்கு பெளத்தம்‌ ஜைகம்‌ பாசுபதமென ஆறுவிதம்‌, சார்வாகம்‌ ம்ருக ஸாதாரணமாகையாலே மதமே வன்றென்பர்‌ பிறர்‌.

இங்கே ஸூத்ரகாரர்‌ பெளத்த மதத்தை நிரஸிக்கும் போது நாலுக்கு நாலு அதிகரணங்களை அமைக்காமல்‌ மூன்றே ஆதரித்தார்‌. வைபாஷிகன்‌ ஸெளத்ராந்திகள்‌ என்ற இருவருக்கும்‌ தத்தவத்தில்‌ மாறுபாடில்லை ; ப்ரத்யக்ஷ ப்ரமாணத்தாலும்‌ வெளி வஸ்து அறியப்படு மென்றான்‌ ஒருவன்‌, அனுமானத்தாலேயே என்றான்‌ மற்றொருவனென்று பிரமாண பேதமே யுளது. ஆக பாஹ்யாந்தரம்‌, ஆந்தரம்‌, சூன்யமென்று மூன்று விதமான தத்‌துவ நிலையைக் கொண்டு மொத்தம்‌ பெளத்த மதம்‌ மூன்றென்று கொண்டால்‌ அது போல்‌ சூன்ய வாதம்‌ ஷணிக வாதமென்று பெளத்த மதத்தை இரண்டாக்கினால்‌ இங்குக்‌ கூறிய மதங்களும்‌ ஆறாக்கப் படலாம்‌, ஸாங்க்யம்‌ வேதாந்தி மதத்திற்கு மிகவும்‌ நெருங்கியது. அதில்‌ ஸத் கார்ய வாதம்‌, ப்ரக்ருதி யென்ற அசேதனம்‌ ஜகத் காரணம்‌; பாமாணுக்களல்ல. ஸ்ருஷ்டி க்ரமம்‌ பெரும்பாலும்‌ வைதிக ரீதியிலேயே. ஆனால்‌ ப்ரஹ்மத்தை யிசைய வில்லை, ஸத் கார்ய வாதத்திலும்‌ சிறிது வாசி யுண்டு. உலகிலுள்ள கார்யங்களெல்லாம்‌ ஆமையின்‌ உடலினுள்‌ சில ஸமயம்‌ கால்கள் போல்‌ காரியங்கள்‌ காரணத்தில் மறைந்திருக்து சில ஸமயம்‌ தோன்றுகின்றன; எள்ளில்‌ எண்ணெய்‌ முன்னமே யிருப்பது போல்‌ இருந்து இவை வெளி வருகின்றன என்பர்‌. இதைத்‌ தார்க்கிகர்‌ பொறுக்க வில்லை. மண்ணுண்டையிலே பானைகளும்‌ தோண்டிகளுமெல்லாம்‌ மறைந்திருக்கின்றன என்றால்‌ உண்டையை உடைத்தால்‌ எல்லாம்‌ காண வேண்டாவோ என்பர்‌. அதனால்‌ முன்‌ இல்லாத த்‌ரவ்யங்கள்‌ புதியன உண்டாகின்றன என்று அஸத் கார்ய வாதம்‌ செய்தனர்‌. இதனை ஆரம்பணாதிகரணத்திலே முன்னமே நிரஸித்திருக்கிறார்‌. ப்ராமாணிகமான ப்ரக்ருதி முதலான த்ரவ்யங்களை விட்டு ப்ராமாணிகமான பரமாணுக்களைக்‌ கல்பித்து அதோடு நிற்காமல்‌ மேன் மேல்‌ கார்ய த்ரவ்யங்களைக்‌ கல்பனை செய்து அவற்றிற்குப்‌ புதிது புதிதாக குணங்களின்‌ உற்பத்தியைக்‌ கூறி, அநந்த த்ரவ்ய குணங்களுக்குள்‌ பல ஜாதிப் பிறிவுண்டென்று ஜாதி யென்ற வஸ்துவையும்‌, பரமாணுக்களில்‌ வேறுபாடு தெரிவதற்காக விசேஷமென்ற வஸ்துவையும்‌ இவற்றில்‌ ஆகாரம்‌ ஆதேய மென்ற பேதமிருப்பதால்‌ அதற்காக ஸமவாய மென்ற ஸம்பந்தத்தையும்‌ சொல்லி இவை மொத்தம்‌ பாவ பதார்த்தங்கள்‌, இவை போல்‌ அபாவ பதார்த்தங்‌களும்‌ எண்ணற்றவை யென்றனர்‌ தார்க்கிகர்‌. இப்படி யெல்லாம்‌ பற்பல ஆபாஸ தர்க்கங்க ளாலான கல்பனை யென்று “*அபரிக்ரஹாச்ச அத்யந்தம்‌ அபேஷதா * என்று மேலே பாஹ்ய துல்யமாக தூஷிக்கப் போகிறார்‌. அதன் பிறகு பெளத்த தூஷணம்‌, புத்தர்‌ இசைந்தது சூன்ய வாதமே. சிஷ்யர்கள்‌ கேள்விகளுக்கு பவ்யப்பட்டதால்‌ அசூன்ய வாதங்களும்‌ (மூன்‌றுவிதம்‌) தோன்றின. ஒன்‌றுமே யில்லை யெனபது சூன்ய வாதம்‌, அறிவினல் தானே எதையும்‌ ஸ்தாபிக்க வேண்டும்‌, அறிவில்லையேல்‌ சூன்ய தத்துவ ஸ்த்தாபகமாகாதென்று ஒரு சிஷ்யன்‌ கேட்க, அதனை மட்டும்‌ கொள்‌ என்றார்‌. முதல் வாதமே ஏற்றவன்‌ மாத்யமிகன்‌. சொன்னதை யறிந்தான்‌; எதிர்த்துக் கேட்க வில்லை, அதனால்‌ மத்யமன்‌. பிறகு ஞானம் மட்டுமிசைவித்து மற்றதில்லை யென்றவன்‌ யோகாசாரன்‌: யோகமாவது பர்வநுயோகம்‌ கேள்வி; ஆசார மாவது அங்கீகரித்தல்‌; இரண்டு முள்ளவன்‌. இவன்‌ வெளி வஸ்துவே யில்லை, வெளியில்‌ வஸ்து இருபபதாகத்‌ தோற்றம்‌ ப்ராந்தி யென்றான்‌. வெளியில்‌ வஸ்துக்கள்‌ இல்லை யாகில்‌ எல்லா ஜ்ஞானமும்‌ ஒரே விதமா யிருக்கும்‌; வேறுபாடு கூற வியலாது, ஆனால்‌ ஜ்ஞானத்தைக்‌ கண்டு வெளி வஸ்துக்களை ஊஹிக்கிறோம்‌ காண்பதில்லை யென்று மற்றொருவன்‌ கூற அதையும்‌ புத்தர்‌ இசைந்தார்‌, இப்படி சொன்ன பிறகு உபதேச ஸூத்ரத்திற்கு முடிவிங்கே என்றான்‌ அவன்‌. அதனால்‌ அவன்‌ ஸெளத்ராந்திகள்‌. அடியோடு ப்ரத்யக்ஷமே யில்லை யென்றால்‌ அனுமானமில்லை யாமென்று ப்ரத்யக்ஷத்தை யுமிசைவித்தான்‌ ஒருவன்‌. அத்னல்‌ அவன்‌ வைபாஷிகன்‌, இப்படிப்‌ பெயர்களுககுப்‌ பொருள்‌ உரைப்பது ஸர்வ ஸம்மதம் –

பெளத்த க்ரந்தங்களைக்‌ காணும் போது வேறு பொருளும்‌ தெரிகிறதென்பர்‌–அதாவது-அசோகபுத்ரகாலத்தில்‌ மரகத பாஷையில்‌ பரவின பெளத்த மதத்தில்‌ ஸுத்த பிடகம்‌ விநய பிடகம்‌ அபிதம்மபிடக மென்ற த்ரிபிடகத்தில்‌ 18 விபாகங்கள்‌ உண்டு, ஸுத்த பிடகத்தை யனு, சரித்து ஸூத்ரோபதேசமென்றும்‌, விநயபிடகத்தை யனுசரித்து விநய பரிபாஷை யென்‌றும்‌ அபிதம்மபிடகத்தைத்‌ தழுவி அபிதம்மவிபாஷா என்றும்‌ ஸம்ஸ்க்ருத க்ரந்தங்கள்‌ பிறந்தன, அவற்றில்‌ ஸூத்ரோபதேசாநுஸாரீ ஸெளத்ராந்திகன்‌, விபாஷாநுஸாரீ வைபாஷிஈன்‌. கநிஷ்கனென்ற அரசன் காலத்தில்‌ லங்காவதார ஸூத்ரத்தில்‌ கூறப்பட்ட மஹாயானமென்ற கொள்கைக்கு மாறான ஹீனயானம்‌ கொண்டு ‘வாத மாத்திரத்தினால்‌ பயனில்லை, யோகம்‌ ஆசரிக்க வேணும்‌ ‘ என்று வாதித்தவன்‌ யோகாசாரன்‌. மாத்யமிகன்‌ என்பதற்கு மத்யம என்பதைக்‌ கொண்டவனென்ற பொருள்‌. அதாவது பாவமென்றோ அபாவமென்றோ சொல்லவாகாமல்‌ ஸர்வ ஸ்வபாவமு மாகாத சூன்ய நிலை மத்யமை யென்றவாறு. கீழ்க்‌ கூறியபடி சூன்யவாதமே சுத்த பெளத்தம்‌; மற்றது அசுத்தம்‌; பின்னால்‌ வந்தது. ஸூத்ர காரர்‌ இங்குத்‌ தார்க்கிக மதத்திற்குப்‌ பிறகு அதைப்‌ போல்‌ உள் வெளி வஸ்து வெல்லாம்‌ இசைந்த பெஎத்த மதத்தை முதலிலும்‌, அதை விட நீசமான யோகாசார மதத்தைப்‌ பிறகும்‌, மிகக்‌ கேவலமான சூன்ய வாதத்தை முடிவிலும்‌ தூஷித்தார்‌. குதர்க்கங்கள்‌ மேன்மேலேறும்‌ போது படிப்படியாக சூன்யமாகிற தென்கிறார் போலும்‌,

இவர்களில்‌ தார்க்கிகர்கள்‌ எல்லாம்‌ நித்யமென்கிற ஸாங்க்யக் கொள்கையை விட்டு நித்யம்‌ அதித்யம்‌ என்று இரு வகை யுண்டென்றும்‌ த்ரவ்யங்களிலும்‌ அநித்யங்கள்‌ பல வென்றும்‌ தர்க்கித்தார்கள்‌. பெளத்தர்களில்‌ சூன்ய வாதிக்கு வஸ்துவே யில்லை. மற்றவரில்‌ ஞானம் மட்டும்‌ இசைக்தவனும்‌, அறிவு, வெளி வஸ்து என்றவற்றை யெல்லா மிசைந்தவனும்‌ தாங்கள்‌ இசைந்த வஸ்துக்களெலலாம்‌ ஷணிகங்கள்‌; ஒரு ஷணத்திற்கு மேல்‌ இராமல்‌ அழிகின்றவை. வானத்தில்‌ மேகம் போலே ஒவ்வொரு நிமிஷத்திலும்‌ வெவ்‌வேறாகும்‌. நம்‌ உடலும்‌ அவ் வண்ணமே அனுபவத்திலுள்ளதாகும்‌. தீப ஜ்வாலை போலே பெளதிக வஸ்துக்களெல்லாமும்‌ ஷணிகங்களே என்று கூறி ஷணிகவாதிகளானார்கள்‌, அதனால்‌ இவர்கள்‌ வைகாசிகர்கள்‌. தார்க்கிகர்‌ சில வஸ்து நித்ய மென்றதாலே அர்த்த வைகாசிகரெனப்படுவார்‌, தார்க்கிகரைப் போலே பரமாணு காரண வாதமே இந்த பெளத்தருக்கு. அந்தந்த குண ஸமுதாயமே த்ரவ்யம்‌. ரூப ரஸாதி குணங்களெல்லாம்‌ சேர்ந்தது ப்ருதிவீ, ஒவ்வொன்று குறைந்த போது ஜலம்‌ முதலானவை. பரமாணுக்களின்‌ சேர்க்கையே . அவயவி எனப்படும்‌ ; வேறு தரவ்யங்களில்லை யென்பர்‌. இப்படி இவர் மதத்தில்‌ ப்ருதிவீ முதலான நான்கு வித பரமாணுக்கள்‌ உண்டு, ஜைநர்‌ ஒரே விதமான பரமாணுக்களே நான்கு வித பூதங்களாக மாறுகின்றன என்பர்‌. ஷணிக வாதம்‌ ஜைனர்களுக்கில்லை. இவர்களெல்லோருக்கும்‌ புண்ய பாபங்கள்‌ உண்டு, வேத பாஹ்பர்களுக்கு வேத ப்ரமாண மின்றித்‌ தாமே தர்மாதர்ம கல்ப்பனையாம்‌. புத்தர்‌ ஜினர்‌ இவர்களுடைய உபதேசமே மூல ப்ரமாணம்‌, வேத பாஹ்யரைப் போல்‌ விலகாமல்‌ வைதிக வர்ணாச்ரமங்களை யிசைந்து வைதிக தர்மங்களை யிசைவது போலும்‌ எண்பித்து தத்துவ நிலையிற் போல்‌ தர்மாதர்ம நிலையிலும்‌ வேத விருத்தங்களாகப்‌ பல வழிகளைக்‌ கட்டி விபரீதமான புத்திக்கும்‌ ஆசாரத்துக்கும் இடமளித்திருப்பதாலே பாசு பதத்தை முடிவில் வைத்து தூஷித்தார்–

கடைசியாக ஸ்ரீ பாஞ்சராத்ர விசாரம்‌- இதற்கு ப்ராமாண்ய – ஸ்த்தாபகம்‌. , இங்கே, என்று. ஆகம ப்ராமாண்யத்திலே ஆளவந்தார்‌ அருளிச் செய்து அதற்கான ஸூத்ரங்களுக்கும்‌ பல விதமாக உரை செய்தார்‌. எம்பெருமானார்‌ அவர்‌ அருளியவற்றைச்‌ சுருக்கி ஸாராம்சத்‌தைக் கூறி ப்ராமாண்யத்திற்குக்‌ காரணங்களைப்‌ பரக்க விளக்கி நிலை நாட்டினார்‌. இதில்‌, சிலரின்‌ ஆக்ஷேபமாவது-இப்‌ பாதம்‌ பிற மதங்களை தூஷிப்பதற்காக வன்றோ? பாஞ்சராத்ரத்தை தூஷிப்பதே பொருந்தும்‌, நேர் மாறாக ப்ராமாண்ய ஸ்த்தாபகத்திற்கு இது இடமாகா தென்றவாறு. நாம்‌ சொல்வதாவது–அப்போது பாஞ்சராத்ரத்தை விஷயமாக்காமல்‌ வேறு அப்ரமாண க்ரந்த கண்டனம் தான்‌ செய்ய வேண்டும்‌: மாத்வ மதத்தில்‌ அங்ஙன மிசைந்தனர்‌., சாக்த மத கண்டகம்‌ இங்கே யென்பர்‌ மாத்வர்‌. பாஞ்சராத்ரமே இங்கு விஷயமென்று ப்ராசீன வுரைகளில்‌ தெரிகிறதெனில்‌–அது ப்ராமாண்ய ஸ்த்தாபனத்திற்கே யாகும்‌. ஏனெனில்‌, இது தர்க்க பாதம்‌. அந்தந்த மதத்திற்கான தர்க்கங்களை ப்ரதி தர்க்கஙகளைக்‌ கொண்டு புறக் கணிப்பதே இங்கு: அது போல்‌ பாஞ்சராத்‌ ரத்தில்‌ தர்க்க மூலமாக ஏதேனும்‌ ஸ்த்தாபிக்கப் பட்டிருந்து அதைக்‌ காட்டி யுக்தியால்‌ அதை தூஷித்திருந்தால்‌ அது தகும்‌. அதை விட்டு ஜீவாதிகளை வேத மோதின படி சொல்லாமல்‌ வேறு விதமாகச்‌ சொல்லி யிருப்பதால்‌-. இது அப்ரமாண மென்று வேத ப்ரமாணத்தைக்‌ கொண்டு ஸ்தாபிப்பதாகச்‌ சொல்வதால்‌ இது தர்க்க பாதத்திற்குச்‌ சேராது. மேலும்‌, பாஞ்சராத்ர ப்ராமாண்ய மிசைந்தவன்‌ வேத ப்ராமாண்ய மிசையாமல்‌ வேதம்‌ ஓதின தத்துவாசாரங்களை விட்டு இதைக்‌ கொண்டாலென்ன என்று பூர்வபக்ஷம்‌ செய்ய வேண்டும்‌. யுக்தியால்‌ ஆசார ஸ்த்தாபனம்‌ யாராலும்‌ செய்யவாகாது.” பாஞ்சராத்ரத்திலுள்ள’ தத்துவ நிலைக்கும்‌ வைதிக தத்துவ நிலக்கும்‌ மாறுபாடு எங்குமில்லை. ஸங்கர்ஷணாதி வாக்கியங்‌களுக்குப்‌ பாஞ்சராத்ர ப்ரஸித்தமான பொருளை நன்கு உணர்ந்தால்‌ வைதிக விரோதம்‌ சொல்லவாகாது. இப்படி யிருக்க வேதம்‌ அப்ரமாணமென்று பாஞ்சராத்ரிகராயிருப்பார்‌ பூர்வ பக்ஷம்‌ பண்ண ப்ரஸக்தி யில்லை. மஹாபாரதாதிகளில்‌ பாஞ்சராத்ரத்தைப்‌ புகழ்ந்து பேசும்‌ பாதராயணரும்‌ ப்ரஹ்ம ஸூத்ரத்தில்‌ அதைப்‌ புறக்கணிக்க மாட்டார்‌. பாத ஸங்கதியும்‌ எமக்கு ஒருவாறு உண்டு. பாஞ்சராத்ர விஷயத்திலே பிறமத நிராஸம்‌ செய்வதே இங்குக் கார்யமாகும்‌, ஸாங்க்யாதி மதங்கள்‌ ப்ரமாணங்களென்ற பிற மதத்தைப் போல பாஞ்சராத்ரம்‌ அப்ரமாண மென்கிற பிற மதத்தை தூஷிக்கிறா ரென்றே சொல்ல வேண்டும்‌. இப்படிச்‌ சொல்ல இது ஸ்ரீபாஞ்சராத்ர ப்ராமாணயத்திலே முடிகின்றது. அதனை ஸ்ரீபாஷ்யகாரர்‌ விளக்கி யருளினாரென்‌போம்‌. அந்தந்த மதம்‌ வைதிக மதத்தை எதிர்த்து நிற்குமென்ற எண்ணம்‌ ‘இப் பாதத்தில்‌ விலக்கப் படுகிறது, இதே ஸங்கதி. ஸாங்க்யாதி மதங்களின்‌ தர்க்கங்கள்‌ ஆபாஸங்களாகையாலே எதிர்ப்பில்லை. பாஞ்சராத்ரத்தில்‌ விரோதமிராமையாலே எதிர்ப்‌பில்லை யென்று அதிகரண ஸாராவளியில்‌ அருளிச் செய்தார்‌ : பாஞ்சராத்ர வாக்யத்திற்கு நீங்கள்‌ சொல்லும்‌ பொருள்‌ கொண்டால்‌. அது ஸத்தர்க்க விருத்தமாகையால்‌ ஸாங்க்யாதி மதம் போலே துர்பலமாம்‌. ‘எதிர்க்காது. அப்போது பாஞ்சராத்ர அப்ராமாண்யமே ஸித்திக்கு மென்று நினைக்க வேண்டா, நீங்கள்‌ சொல்லும்‌ பொருளை அவ்‌ வாக்கியத்திற்கு உண்மையில்‌ இசைய வில்லையே என்றார்‌ ஸூத்ரகாரர்‌, இதில்‌ ஸாராம்சம்‌ பாஷ்யத்திலருளிச்செய்யப்‌ பெற்றது மற்றொன்றும்‌ காண்க, இந்த –சாரீரக மீமாம்ஸை . ஜைமிநி மீமாம்ஸையைப் பின் பற்றியே யிருக்கும்‌… அவர்‌ காண்பித்த வழி–உத்ஸர்க்க-அபவாத :ஸ்த்தலங்களிலே உத்ஸர்க்கத்திற்கான பாதத்திலே, அபவாதத்தை முடிவில்‌ குறிக்க வேண்டுமென்பதே. ஜைமிநி இரண்டாம்‌ அத்தியாயத்தில்‌ கர்ம பேதத்தை ஸ்த்தாபித்தவர்‌ ஸர்வ சாகா ப்ரத்யய ந்யாயத்தாலே அபேதத்தைச்‌ சொல்லி முடித்தார்‌.. எட்டாம்‌ அத்யாயத்திலே அதிதேசம்‌ ஸ்த்தாபிப்பவர்‌ அதிதேசமில்லாத இடத்தை முடிவிற் காட்டினார்‌. அது போல அப்ரமாண்‌யத்தை மதங்களுக்கு ஸ்தாபித்து, பாஞ்சராத்ரம்‌ நீங்கலாக என்கிறார்‌ முடிவிலென்றாராய்க–

*பரமத கண்டந விரிவு ‘
இனி அவரவர்‌ செய்யும்‌ யுக்தி வாதம்‌ எத்தகையது, அததன்‌ நிராஸம்‌ எவ்வா றென்பதைச்‌ சுருக்கி வரைவோம்‌. ஸாங்கயர்‌ சொல்வதாவது–உலக ப்ரஸித்தமான சேதநம்‌ அசேதநமென்னும்‌ இரு வகை வஸ்துக்களிலே சேதனர்கள்‌ அநாதியான படியால்‌ அசேதனங்களே காரயமாகக்‌ காணப்படுவதால்‌ அவற்றிற்கே காரணம்‌ கூற வேண்டும்‌. ஸத்துவாதி குணம்‌ உடையது உலகம் . காரணமும்‌ அவ்வாறே யாகும்‌. இப்படி அனுமானத்தால்‌ ஸித்திப்பது மூல ப்ரக்ருதி. ஆக ஆநதுமாநிகமெனப்படும்‌ இது உபாதாந காரணம்‌. கர்த்தா வென்கிற நிமித்த காரணம்‌ வேண்டுமேயென்னில்‌–பல விடம்‌ கர்த்தா இருப்பது தெரிகிறதானாலும்‌ அவன்‌ வேண்டுமென்ற நிர்ப்பந்தமில்லை, பால்‌ தானே தயிராகிறது: வானநீர்‌ பனை தென்னை முதலானவற்றின்‌ காய்களில்‌ பலவித ரஸமாக மாறுகிறது, கறவைகள்‌ உட்கொள்ளும்‌ புல்‌ முதலானவை பாலாக மாறுகின்றன. அசேதனமெல்லாம்‌ பரார்த்த மாகையால்‌ ஜீவர்கள்‌ அனுபவிப்பதற்காக உலகு உண்டாகின்றதென்று ஜீவாத்மாக்களை மட்டும்‌ இசைவோம்‌. ஈச்வரன்‌ எதற்கு? ஞானம்‌ பெறாத வரையில்‌ ஸம்ஸாரிகளா யிருந்து அதைப்‌ பெற்ற போது ஜீவர்கள்‌ மோக்ஷம்‌ பெறுகிறார்களென்றவாறு.

இதற்கு மறுப்பு–கல்‌ மரம்‌ முதலானவைகள்‌ கர்த்தா இராத போது வீடு வண்டி, முதலானவற்றை உண்டு பண்ணாமையால்‌, கர்த்தா உள்ள போது உண்டு பண்ணுவதால்‌ கர்த்தாவும்‌ காரணமென்று கண்டுளோம்‌. சிற்சிலவிடத்திற்‌ கண்டாலும்‌ காரணமாகக்‌ கொள்ள வேண்டா வெனில்‌, அவனின்றியே வீடு வண்டி முதலானவையும்‌ உண்டாக வேண்டும்‌. எந்த காரியத்திற்குக்‌ கர்த்தா வேண்டும்‌, எதற்கு வேண்டாம்‌ என்று விசாரித்‌தால்‌ வரம்பிட முடியாது. பால்‌ நீர்‌ முதலானவற்றில்‌ கர்த்தா இல்லையே யெனில்‌, அங்கு கர்த்தா இல்லை யென்று நாங்கள்‌ இசையவில்லை. இருவருக்கும்‌ ஸம்மதமான இடமே த்ருஷ்டாந்தமாகும்‌. கர்த்தாவைக்‌ காணாத இடம்‌ முற்றிலுமே கர்த்தா உண்டென்று வாதிக்கிற நாங்கள்‌ அவற்றிற்கும்‌ உலகுக்குப் போல்‌ கர்த்தாவாக ஈச்வரனை ஸ்தாபிப்பதால்‌ அவற்றை ஸ்வ பக்ஷத்திற்கு உதாஹரிக்கலாகாது-அசேதந வ்யாபாரத்தை நடத்தவும்‌ நிறுத்தவும்‌ சேதநன்‌ வேண்டும்‌. வேண்டாவாகில் ஸ்ருஷ்டியிலிழிந்த மூல ப்ரக்ருதியை விபாபரிக்காமல்‌ நிறுத்த யாருமில்லை யாகில்‌ எப்போதும்‌ படைப்பே யிருக்கும்‌ ; ப்ரளயமே நேராது, இங்கே–ஈச்வரன்‌ எதற்காக அதை ப்ரேரிக்க வேண்டும்‌. குயவன்‌ குடியானவன்‌ என்றாற் போன்ற ஜீவர்கள் போலன்றி அவன்‌ பரிபூர்ண னாகையால்‌ தன்‌ பலனுக்காக வல்ல, பிறரின்‌ நன்மைக்காக வெனில்‌ அப்போது ஸுக மய மாகவே உலகம் படைக்கப்பட வேண்டும்‌. வேறு விதமாகப்‌ பலவாறாகப்‌ படைப்பதால்‌ வைஷம்யம்‌ முதலான தோஷங்களே அவனுக்காகும்‌. ஆக அவன்‌ ஈச்வரனாகான்‌ என்று வினவுவர்‌. இதற்கு விடை–ஜீவர்களின்‌ நன்மைக்காகவே அவர்கள் செய்த வினைகளைக்‌ கழிக்க. அவ்வவ் வினைக்குத்‌ தக்கவாறு பலனளிக்கிறான் ஆகையால்‌ அவனுக்கு தோஷத்திற்‌ கிடமில்லை யென்றவாறு, தயை யுள்ளவனாகில்‌ தண்டிக்க வேண்டியவர்களையும்‌ தண்டிக்காமல்‌ விட வேண்டு மென்று யாருமிசையார்‌. அப்படியோர்‌ அரசனுண்டாகில்‌ அரசே கெடும்‌. அரசு புரியத்‌ திறமை யற்றவனென்ற பழியே யாம்‌, நன்மையிலேயே எல்லோருக்கும்‌ புத்தி வரும்படி யீச்வரன்‌ செய்யலாமே யென்னில்‌, அப்படிச் செய்யத்‌ தன்னாலா மென்பதைப்‌ பரம பதத்திலே காட்டிக் கொண்டுதானிருக்கிறான்‌ . அனாதியாகக்‌ கர்ம வச்யர்‌ நிறைந்தது இந்த ஸம்ஸார மென்பதை பெளத்தர்‌ ஜைனர்‌ என்ற அவைதிக மதத்தினருட்பட எல்லோரும்‌ இசைந்திருக்கின்றனர்‌. இந்த இடத்தில்‌ அவ்வாறு அவன்‌ செய்வதாகில் எனகக நல் வினை தீ வினை யென்ற பிரிவு கெடும்‌.–

ஆனால்‌ கர்மங்களின்‌ சக்தியைப்‌ பின்பற்றியே அவன்‌ நடக்கிறானாகில்‌ அந்த சக்தியே போதுமே, அவன்‌ எதற்காக என்று ஸாங்கயர்‌ வினவலாம்‌. இதற்கு ஈச்வரனை யிசைந்தவரெல்லோரும்‌ சொல்வதாவது–கர்ம சக்தியாவன ஜீவர்களிடமுள்ள புண்ய பாபங்கள்‌. அவை அசேதனமாகையால்‌ சேதனனுடைய ப்ரேரணை யின்றி கார்யம்‌ கூடா தென்று முன்‌ கூறியதையே நினைப்பது. கர்மங்களுக் கிணங்கிப்‌ பலனளிப்பதால்‌ ஈச்வர ஸ்வாதந்தர்யம்‌ கெடாது, இணங்கி யிருப்பது ஸுஜந ஸார்வ பெளம லக்ஷணமான ஒருவித ஸ்வாதந்த்ரியமே. நம்மாழ்வாரும்‌, *இன்றென்னைப்‌ பொருளாக்கித்‌ தன்னை யென்னுள்‌ வைத்தான்‌ அன்றென்னைப்‌ புறம் போகப்‌ புணர்த்ததென் செய்வான்‌ ” என்று இந்த ஸ்வாதந்த்ர்யத்தையே ஸ்தாபித்தருளினார்‌, எம்பெருமானாரின்‌ கருத்துப்படி இங்குக்‌ கேள்விக்கே யிடமில்லை யென்‌றுமுணர்க, புண்யமும்‌ பாவமும்‌ ஜீவ தர்மமான அத்ருஷ்டம்‌ அபூர்வமென்று மீமாம்ஸகர்‌ செய்த கற்பனை. அதை மற்றவரும்‌ பின்பற்றினர்‌. இது சாஸ்த்ரங்க்ளில்‌ எங்கும்‌ த்ருஷ்டமாகாமையால்‌ அத்ருஷ்டமே, அபூர்வமே, சாஸ்த்ர வசனங்கள்‌ ஸ்பஷ்டமாகச்‌ சொல்வதாவது—யாகம்‌ ஹோமம்‌ போன்ற அந்தந்தக்‌ கர்மத்தினா’ லாராதிக்கப்பட்ட தேவதை செய்யும்‌ அனுக்ரஹமே புண்யம்‌. பொதுவாகத்‌ தன்‌ ஆஜ்ஜைப்படி நடப்பதால்‌ ஈச்வரன்‌ செய்யும்‌ அனுக்ரஹமே புண்யம்‌ ; அவ்வாறு நடவாத போது அவன்‌ செய்யும்‌ நிக்ரஹமே பாபம்‌. இப்படி யிருக்க, புண்ய பாபங்களை போதுமே ஈச்வரனெதற்காக என்று எங்ஙனே வினா எழும்‌. இது லெளகிக ராஜ ப்ரஜா ந்யாயத்திற்கும்‌ பொருந்தி யுளது. அந்தந்த தேவதைகள்‌ அருள் புரிவது மீச்வரானுக்ரஹத்தினா லென்று கீதையும்‌, “யோயோ யாம்யாம்‌’” என விளக்கி யுளது. ஆழ்வாரும்‌, *அவரவரிறையவர்‌ குறை விலர்‌ இறையவர்‌ அவரவர்‌ விதி வழியடைய நின்றனரே” என எல்லாம்‌ அருளி ஸ்வாதத்த்ர்‌ யத்தையு மிசைந்தார்‌-

இப்படி யீச்வரனை யிசைந்தால்‌, ஜீவராசிக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமென்று அவன்‌ பகல்‌ இரவென்ற பிரிவைப்‌ போல்‌ ஸ்ஷ்ருடி ப்ரளய மென்ற பிரிவையும்‌ தான்‌ நிலையாக அமைத்து வினைப் பயன்‌ அளிப்பதையும்‌ அதற்கு இணங்க வகுத்துளான்‌. அதனால்‌ ப்ரளயமும்‌ ஏற்படுகிற தென்னலாம்‌. அவனை யிசையாத போது ப்ரக்ருதி என்ற அசேதனம்‌ ஸ்ருஷ்டி யிலிழிந்ததை நிறுத்துவாரில் லாமையால்‌ எப்போதும்‌ ஸ்ருஷ்டியே யாம்‌. அதனால்‌ தான்‌ நிரீச்வரவாதிகளான மீமாம்ஸகர்கள்‌ ஸ்ருஷ்டி ப்ரளயங்களை யிசையாமல்‌ பஞ்ச பூத மயமான இவ்வுலகு என்று மிவ்வாறே உளதென்றும்‌, மேடு பள்ளம்‌ காடு காடு என்றாற்‌ போன்ற மாறுதல்கள் மட்டுமே, நிலம்‌ நீர்‌ எரி காலென்பவை யெல்லாம்‌ அழியு மென்பதில்லை வென்றனர்‌, யுக்தியாலே ஸ்ருஷ்டி ப்ரளயங்களை ஸ்த்தாபிக்க முயன்ற ந்யாயாசார்ய உதவனரின்‌ கொள்கையை எம்பெருமானார்‌ சாஸ்த்ர யோநித்வாதி கரணத்திலே களைந்தார் –அதை ஸ்ரீதேசிகன்‌ ந்யாய பரிசுத்தியிலே விரிவாக விளக்கியுளார்‌. இனி ஸாங்கியர்‌ ஸ்ருஷ்டி பரளயங்களை விட மாட்டாமல்‌ வேத ப்ரமாணத்தைப்‌ பகர்வராகில்‌ நிரீச்வர வாதம்‌ நிற்காது-இனி அசேதனத்துக்குச்‌ சேதனச் சேர்க்கை வேண்டுமென்பதை யிசைவோம்‌. ஜீவ ஸந்நிதானமே போதுமே. பசுவின்‌ வயிற்றில்‌ புல்‌ முதலிய ஆஹாரம்‌ பாலாகிறதே என்னில்‌ பசுவினிடம் போல்‌ எருதினிடம்‌ ஏன்‌ பால்‌ ஆவதில்லை. ஜீவ ஸந்நிதானம்‌ எங்குமே யிருப்‌பதால்‌ கீழே சிதறின புல்லும்‌ பாலாகலாமே. ஆகையால்‌ வ்யாபரிக்கும்‌ சேதனன் வேண்டும்‌; ஸந்நிதானம்மட்டும்‌ போதாது. ஸாங்க்யர்‌ அறிவற்ற ப்ரக்ருதியும்‌ சேதந ஸந்நிதானத்தாலே கார்யம்‌ செய்யும்‌. குருடனும்‌ கண்ணுள்ள நொண்டியின்‌ அறிவைக் கொண்டே தான்‌ வழி நடந்து குருடனையும்‌ மேலிடம்‌ சேர்க்கிறானே என்றனர்‌. இது அடியோடு பொருந்தாது. அங்கு நொண்டியைப் போல்‌ குருடன்‌ கண்ணாற்‌ காணாமற் போனாலும்‌ அறிவுள்ளவனாய்‌ அவன்‌ சொல்வதைக்‌ கேட்டறிந்து அவன்‌ கொடுத்த தடி காட்டும்‌ திக்கை யுணர்ந்து நடப்பதால்‌ ப்ரகிருதியைப் போல்‌ ஜடமாகான்‌. நொண்டியும்‌ நிர் விகார ஸாங்க்ய சேதனரைப்‌ போலன்றி வியாபரிப்பவனே. அவஸ்காந்தம்‌ இரும்பில்‌ க்ரியைக்குக்‌ காரணமாகிறதே யென்னில்‌–அங்கே இவ்வளவு அருகில்‌ இருந்தால் தான்‌ அயங்காந்தம்‌ காரணமாகு மென்ற வ்யவஸ்தை யுண்டு. அந் நிலையை யுண்டு பண்ண ஈச்வரன்‌ வேண்டும்‌. ஜீவர்கள்‌ எப்போதுமே ப்ரக்ருதிக்கு அருகிலேயே இருப்பதால எப்போதும்‌ ஸ்ருஷ்டி வ்யாபாரமே தொடர்வதாம்‌. உண்மையில ஸ்ருஷ்டியே யுண்டாகாது. ஸத்துவ ரஜஸ் தமோ குணங்‌களின்‌ ஸம நிலையில்‌ ப்ரளயம்‌; ஏற்றத் தாழ்வென்ற வைஷம்யத்தில்‌ படைப்பு என்பர்‌, ஸம ரீதியிலே பரிணமித்து வரும்‌ ப்ரக்ருதிவில்‌ திடீரென விஷம நிலை எங்ஙனே . அதற்கென்ன வ்யவஸ்தை, மேலும்‌ இவர்‌ ஜீவர்களை எதற்காக இசைந்தனர்‌. அசேதநம்‌ பரார்த்த மாகையாலே பலனை அனுபவிக்கச்‌ சேதனர்‌ வேண்டுமே யென்னில்‌ -ஜீவர்களுக்கு என்ன பலன்‌? போகமும்‌ மோக்ஷமுமென்னில்‌ –கர்த்தாவுக்கு அல்லவோ பலன்‌. ஜீவர்களுக்கு கர்த்ருத்வமில்லையே, தர்மாதர்மங்களையும்‌ கர்த்ருத்வத்தையும்‌ ப்ரக்ருதி பரிணாமமான புத்தியில்‌ இசைந்த இவர்‌ போக மோக்ஷங்களான பலன்களையும்‌ அங்கேயே கொள்ள வேண்டும்‌. ஆக புத்தி யென்ற அசேதநமே சேதநம்‌. இதனால்‌ தேஹாத்ம வாதியான சார்வாகனுக்கு மூத்தண்ணாவாவான்‌ ஸாங்க்யன்‌. இவனும்‌ ப்ரகருதி பரிணாமமான புத்திக்கே தர்மாதர்மாதிகளை யிசைகிறானே. மேலும்‌ நிர்விகாரமான ஜீவாத்மாக்களுக்கு போகம்‌ மோக்ஷமென்கிற விகாரங்கள் தாமெங்ஙனே. மேன் மேலே விசாரிக்கப் புறப்பட்டால்‌ ஸாங்கய மதத்தில்‌ முழுமையும்‌ முன்னுக்குப்‌ பின்‌ முரணான மொழிகளே. ஜீவர்கள்‌ நித்ய முக்தர்களென்பாராய்‌, ஸம்ஸரிக்குமிவர்‌ பின்னே தத்துவ ஞானத்தாலே முக்தி பெறுவரென்பர்‌. போகமும்‌ மோஷமும்‌ இவர்களுக்கு என்று சொல்லி விட்டு * ந பத்யதே நாபி முச்யதே புருஷ ‘” என்பர்‌. தனக்கு ஒரு பலனை எதிர்பாராமல்‌ ஜீவர்களுக்காகவே உழைக்‌கின்ற ப்ரக்ருதிக்கு ஈடான பரோபகாரி உலகிலுண்டோ என்று ப்ரக்ருதியை மிக்க தெளிவு பெற்ற வஸ்துவாக்குவர்‌, தன்னைக்‌ கண்ட ஜீவன்‌ மீண்டும்‌ காணாதபடி அப்புறப்படும்‌ அழகியாகும்‌ ப்ரக்ருதி யென்பர்‌, வேதம்‌ ப்ரமாண மென்பவராகவே வேதமோதின கர்மங்‌களிலும்‌ ஜீவ ஹிம்ஸையிருப்பதால்‌ அசுத்தியே யென்‌று அவற்றில்‌ குற்றம்‌ கூறி, தங்களால்‌ கூறப்பட்ட படி தத்துவ ஜ்ஞானம்‌ பெற்றவன்‌ உடனே மோக்ஷம்‌ பெறுவான்‌. பெறக் காண வில்லையே யென்ன வேண்டா, அறிவு வந்தவுடன்‌ ஜீவன்‌ முக்தனாகி விட்டான்‌. சுழற்றிய சக்கரம்‌ பின்னும்‌ சற்று சுழல்வது போல்‌ உடல்‌ இருந்தாலும்‌ முக்தனே என்பர்‌. இப்படி பல முரண்பாடு காண்க-

பொய்யென்ற பெளத்த மதத்தையும்‌ தழுவி ஒரே ஆத்மா உலகிலென்றதால்‌ அத்வைதி மதத்திலே ஸாங்க்ய மதத்திற்‌ சொன்ன தோஷங்களும்‌ மேலான தோஷங்களும்‌ சேருமென்று எம்பெருமானார்‌ இங்கே முடிவில்‌ அருளினார்‌. யுக்தி வாதங்களை யுக்திகளால்‌ நிரஸிக்கும்‌ இப்‌ பாதத்தில்‌ இந்த அதிகரணத்திலே யுக்தியினாலே ஈச்வரனை ஸ்தாபிக்கும்‌ பாதராயணர்‌, முன்னே சாஸ்த்ர யோநித்வாதி கராணத்திலே ஈச்வரனை யுக்தியால்‌ ஸ்தாபிக்க வொண்ணா தென்றாரே ; இவ் விரண்டும்‌ ஒன்றோடொன்று முரண்படு மென்னில்‌– அங்கே யுக்தியால்‌ ஈச்வரனை ஸ்தாபிக்க முடியாதென்றார்‌. இங்கே ஈச்வரனில்லை யென்று யுக்தியால்‌ ஸ்தாபிக்க முடியா தென்கிறார்‌. அறிவுள்ளவன்‌ வேண்டு மென்றதால்‌ ஈச்வரனே அவன்‌ என்றதாகாது. அவன்‌ ஈச்வரனாக முடிவதானால்‌ அவனை அனுமானம்‌ பாதிக்காது. (அதிகரண ஸாராவளி 180). கார்ய காரணங்கள்‌ விலஷணமாகவும்‌ காணப்படுவதால்‌ அசேதநமே உபாதாந மென்னலுமாகாது. ஸத்துவ ரஜஸ் தமஸ்ஸுகள்‌ மூன்றும்‌ த்ரவ்யங்களென்று கூறி ப்ரக்ருதி நிரவயவமான ஒரே த்ரவ்ய மென்றதும்‌ பொருந்தாது. நிற்க,

முன் பாதத்திற் போல்‌ யோகத்தை ஏன்‌ இங்குக்‌ கழிக்க வில்லை யென்னில்‌–கடைசி ஸூத்ரத்திலும்‌ அதற்கு முன்னும்‌ ஸாங்க்ய மதத்திற்குச்‌ சொன்னதே யோக மதத்திற்கும்‌ சொனனதாம்‌. எவ்வாறெனில்‌–ஸாங்க்யரைப் போலே யோகிகளும்‌, நிர்விகாரமாகும்‌ எல்லா ஆத்மாவும்‌; ப்ரகிருதியிலேயே கர்த்ருத்வம்‌ முதலான எல்லா வ்யாபாரங்களு மென்றதால்‌ ஈச்வரனென்ற ஆத்மாவுக்கு நேராக ஜகத் வ்யாபாரங்களில்லை யென்‌ றும்‌ ப்ரக்ருதியிலேயே அவை யென்றும்‌ பரக்ருதியில்‌ ஜீவ ப்ரதிபிம்பம் போல்‌ ஈச்வரனுக்கும்‌ ப்ரதி பிம்பமிருப்‌பதால்‌ ப்ரக்ருதியின்‌ வ்யாபாரங்கள்‌ ஈச்வரனிடம்‌ ஏற்படுகின்றன வென்றும்‌ சொல்ல வேண்டியதாயிற்று. வ்யாபார மில்லாதவன்‌ எவ்வாறு ஈச்வரனாய்‌ நிமித்த காரணமாவான்‌. ப்ரக்ருதி வ்யாபாரங்களேறிடப் பட்டதால்‌ ஈச்வரனென்ற தென்னில்‌, ப்ரக்ருதி தர்மமான உபாதாநத்வங்கூட ஏறிடப்பட்டு உபாதாநமு மீச்வரனாகலாம்‌. க்லேச.கர்ம.விபாக- ஆசயங்கள் அற்றதால்‌ ஜீவ விலக்ஷணன்‌ ஈச்வரனென்றார்கள்‌. ஜீவர்களை விட அதிக ப்ராந்தி யுள்ளவனாகையால்‌ அதம ஜீவனாக வேண்டியவன ஈச்வரனாவானோ ? * ஈச்வர ப்ரணிதாநாத்வா ” என்று இவனை எதற்கு த்யானம்‌ செய்வது. இப்படி விப்ரதிஷேதங்களை யாராய்க-பகவானின்‌ அவதாரமான கபிலரின்‌ மதமே களையப்படும் போது ஹிரண்ய கர்ப்ப மதமெங்கே நிற்கும்‌. புராணாதிகளிலே கபிலர்‌ நாராயணனென்றும்‌ அவர்‌ உபதேசித்தது ஸேச்வர ஸாங்க்யமே யென்றும்‌ தெளிவாயிருக்க, நிரீஸ்வர ஸாங்க்யம்‌ அவர்‌ மதமென்று கொண்டு பாதராயணர்‌ நிரஸிப்பது ந்யாயமா என்னலாம்‌. பாரதத்தில்‌ ஸாங்கயாதிகளை ஸர்வாத்மநா தூஷிக்கலாகா தென்கிற வ்யாஸரே ஸாங்க்யம்‌ சொன்னவர்‌ கபிலரென்று கூறி அந்தராத்மாவான புருஷனை அவர்‌ சொல்ல வில்லை யென்றறிவித் திருக்கிறா்‌, அதாவது –தேவஹூதி முதலானோர்‌ சாஸ்த்ரம்‌ அறிய விரும்பின போது சாஸ்த்ரப்படி எல்லாம்‌ உபதேசித்தார்‌. தர்க்க மூலமாகத்‌ தத்துவ ஸ்தாபனத்தை யிசைந்த சில சிஷ்யர்களுக்கு சாஸ்த்ரார்த்தத்தைச்‌ சொல்லாமலே தர்க்கம் வாயிலாகவே 25 தத்துவங்களை யுபதேசித்தார்‌. சாஸ்த்ர யோநித்‌வாதி கரணத்தின்படி ஈச்வரனைத்‌ தர்க்கத்தால்‌ ஸ்தாபிக்கலாகா தென்று அவனை விட்டார்‌. தாமே ஈச்வரனான படியால்‌ உபதேச காலத்தில்‌ ஈச்வர ப்ரணாமம்‌ செய்து கொண்டு உபதேசிப்ப தென்பதையும்‌ விட்டார்‌: ஈச்வரனில்லையா என்று: சிஷ்யர்கள்‌ கேட்டிருக்கலாம்‌ ; ௨ண்‌ மையில்‌.தாமே ஈச்வரனாகையால்‌ ..! நமக்கு மேல்‌… யார்‌ ஈச்வரன்‌.’ என்‌று இவர் உத்தரம் -அதன்‌ பொருளை யறியாமல்‌ ஜீவர்களுக்கு மேலீச்வரனில்லை யென்று அவர்கள்‌ கொண்டார்கள்‌. ஆக சாந்தோக்யத்தில்‌ ப்ரஜாபதி வாக்யத்திலே ஜீவனை உபதேசித்த ப்ரஜாபதியிடம்‌ இந்த்ரன்‌ ஈச்வரனை யறிய வியலாமை போல்‌ இவர்களும்‌ ஈச்வரோபதேசம்‌ பெறாமல் ஓழிந்தனர்‌. பின்னே நிரீச்வர வாதமாக வளர்ந்தது இது.

இனிக்‌ கணாத மஹர்ஷியின்‌ மதம்‌–வைசேஷிகம்‌(தார்க்கிக மதம்‌)-தூஷிக்கப்படும்‌ –எல்லாம்‌ நித்யமென்பர்‌ ஸாங்க்யர்‌. சில தத்துவம்‌ நித்யமென்பர்‌ தார்க்கிகர்‌. எல்லாம்‌ அநித்யமென்னும்‌ பெளத்தருக்கு நிராஸம்‌ பிறகாகும்‌. தார்க்கிக பக்ஷத்தில்‌ யுக்தி வாதம்‌ வளர்ந்தேறியது. உபநிஷத்தை மறந்தே தத்துவ விசாரம்‌ செய்தனர்‌. ப்ரக்ருதி மஹத்‌ அஹங்கார மென்றாற் போன்ற ஸாங்க்ய வாதம்‌ ருசிக்க வில்லை. அவர்களின்‌ கூற்று-அறிவுள்ளவனின்‌ துணை யின்றி அசேதன வஸ்த்துக்கள்‌ கார்யம்‌ செய்யா என்பதை இசைகிறோம்‌. ஆனாலும்‌ ஒரு ப்ரக்ருதி த்ரவ்யம்‌ முழு உலகுக்குக்‌ காரணமென்பது பொருந்தாது. மரத்தினின்று இலை பூ காய்‌ முதலானவை போலும்‌, மலையினின்று மண்‌ கல்‌ மரம்‌ முதலானவை போலும்‌ ப்ரக்ருதியினின்று பஞ்சபூத ப்ரபஞசம்‌ வருமென்றால்‌ ப்ரக்ருதியானது ஸ்த்தூலமாய்‌ ஸாவயவமுமாகும்‌, ஸூஷ்மமானது ஸ்த்தூலமாகு மென்றால்‌ பல வெளி வஸ்துக்களின்‌ சேர்க்கையால்‌ தானாகும்‌. உலகில்‌ விதைகள்‌ பல வஸ்துக்களின்‌ சேர்க்கையால்‌ ஸ்த்தூலமாகின்றன. ஒவ்வொரு ப்ராணியும்‌ சிறு பர்வத்தினின்று வளர்ந்து பெரிதாகிறது. மழை நீரும்‌ சிறுகச் சிறுக விழுந்தே ஒன்று சேர்ந்து ஆறும்‌ கடலுமாகிறது, பல அவயவங்கள்‌ மூலம்‌ அவயவி உண்டாவதே இதனால்‌ விளங்கும்‌. இனிப்‌ பிரிக்க முடியா என்றவாறு முடிவாக நின்ற அவயவங்கள்‌ பரமாணுக்கள்‌. அவை அநாதி நித்யங்கள்‌. அவை நால்வகை – ப்ருதினீ ஜலம்‌ தேசு வாயு எனப்படும்‌. அந்தந்த ஜாதி பரமாணுக்கள்‌ இரண்டு சேர ஓர்‌ அவயவி உண்டாகும்‌. அது த்வ்யணுக மெனப்படும்‌. இவை மூன்று சேர உண்டாவது த்ர்யணுகமாகும்‌. இப்படி மேன்மேல்‌ பெருக்கிக் கொள்க, அவயவங்கள்‌ அவயவியை உண்டு பண்ண பிறகு அவயவங்களிலுள்ள குணங்கள்‌ அவயவியில்‌ குணங்களை உண்டு பண்ணும்‌. அதனால்‌ எல்லாம்‌ ஸ குணங்களாய்‌ ப்ருதிவீ ஜலம்‌ என்று வெவ்வேறாக அறியப்‌ படும. இந் நாலு பூதங்கள் போல்‌ ஆகாயம்‌ முதலான நித்ய த்ரவ்யங்கள்‌ வேறு ஐந்து ௨ள . இப்படி ஒன்பது வகை த்ரவ்யமும்‌ மற்றும்‌ குணாதிகள்‌ ஆறுமாக ஏழு பதார்த்தங்களென்றவாறு. இதனை தூஷிக்கிறார்‌-–

முதல் ஸூத்ரத்திலே ஹ்ரஸ்வ பரிமண்டலங்களினின்‌று மஹத் தீர்க்கம் என்றது போலே யாகும்‌ இவர்களின்‌ வாத மென்கிறார்‌. சொற் போக்கிலேயே எல்லாம்‌ அஸமஞ்ஜஸமென்று தேறும்‌. முன்‌ ஸூத்ரத்தினின்று அஸமஞ்ஜஸ பதம்‌ சேர்க்கும் போது அது ஸ்பஷ்டமே வாகும்‌. மஹத் தீர்க்கமென்று மஹத்தாயும்‌ தீர்க்கமாயு முள்ள வஸ்துவைச்‌ சொல்லுகிறார்‌. இதை த்ரியணுகமென்றும்‌ த்ரஸ ரேணு என்றும்‌ தார்க்கிகர்‌ கூறுவர்‌, ஹ்ரஸ்வ பதத்தால்‌ த்வ்வணுகம்‌ கொள்ளப் படும்‌. பரிமண்டலமென்ற சொல்‌ அவர்கள்‌ மதத்தில்‌ பரமாணு பரிமாணத்திலும்‌ பரமாணுவிலும்‌ வழங்கப்படும்‌. நித்யம்‌ பரிமண்டலம்‌ ‘* என்று அவர்‌ ஸூத்ரம்‌, பரமாணுவையும்‌ தவ்யணுகத்தையும்‌ அணு ஹ்ரஸ்வமென்பர்‌, பரமாணு பரஹைரஸ்வம்‌ முதலிலுள்ளது. அதனின்று அணுஹ்ரஸ்வம்‌. அதன் மேல்‌ உண்டாவது என்றும் மஹத்தும்‌ தீர்க்கமுமாகும்‌. ஒரு பரிமாணத்தினின்‌று மற்றொரு பரிமாணமுண்‌டாவது என்றால் அது காரண பரிமாணத்திற்கு ஒத்ததாயும்‌ உத்க்ருஷ்டமாகவும் இருக்கு மென்பர்‌. அதனால்‌ த்ர்யணுகத்தினின்‌று மஹத்தர மஹத்தம பரிமாணங்கள்‌ வருகின்றன. இப்படி யிருக்க பரமாணுவினின்று உண்டாம்‌ த்வ்யணுகத்திலே பரமாணு பரிமாணம்‌ பரிமாணத்தை யுண்டு பண்ணுமாகில்‌ அது அணுவாகையால்‌ மேலே அணு தரமாகவேண்டும்‌, அவ்வாறு அணு தரமாகாமையால்‌ பரமாணு பரிமாணம்‌ காரணமன்று; த்வ்யணுக பரிமாணத்தினின்று த்ர்யணுக பரிமாணம்‌ உண்டாமாகில்‌ அதுவும்‌ அணுவாய்‌ உத்க்ருஷ்டமா யிருக்கும்‌. அவ்வாறின்றி மஹத்தாய்‌ தீர்க்கமா யிருப்பதாலே த்வ்யணுக பரிமாணம்‌ காரண மன்றென்பர்‌. உலகில்‌ அவயவ பரிமாண மூலமாக- அவயவியில்‌ பரிமாண முண்டாகா நிற்க அதன்படி கல்பித்த பரமாணு த்வயணுகங்களின்‌ பரிமாணத்திற்கு அத் தன்மை யிசையாமையும்‌ ஓர்‌ அஸமஞ்ஜஸமாகிறது, அப்படியானால்‌ த்ரியணுக்கத்தை விட த்வ்யணுகம்‌ சிறியதா யிருக்க வேண்‌ டுமென்பதேன்‌ ?ஸூத்ரத்தில்‌ மஹத் தீர்க்க என்பதற்கு மஹத் பரிமாணமும்‌ தீர்க்க பரிமாணமுமென்று த்வந்த்வமாய்ப்‌ பொருள் கொள்ளில்‌ சப்தம்‌ ஸாதுவாகும்‌. இந்தப்‌ பரிமாணங்களுக்குக்‌ கார்ய காரண பாவம்‌ அவர்கள்‌ இசையாமையால்‌ அப்பொருளில்லை, மஹத்தான தீர்க்க மென்று தத் புருஷமாகில்‌ மஹா தீர்க்க எனவாம்‌. அப்படி மஹா தீர்க்க என்றால்‌ த்ரவ்யத்‌தின்‌ தைர்க்யம்‌ அதாவது நீட்சியானது மஹத்து என்று பொருளாய் விடுமென்று அவ்வாறு ப்ரயோகிக்க வில்லை. மஹத்தாயும்‌ தீர்க்கமாயுமுள்ள த்ரவ்யம்‌ பொருள்‌. அது த்ர்யணுகம்‌, அது தவ்யணுகத்தினின்றே உண்டாகிறது. த்வ்யணுகம்‌ பரிமண்டலத்தினின்றே உண்டாகிறது. அவ்வாறிருக்க, ஹ்ரஸ்வம்‌ பரிமண்டலம்‌ இரண்டினின்று தர்யணுகம்‌ உண்டாவதாகச்‌ சொன்னது சேருமா என்னில்‌–மூன்று தரவ்யங்கள்‌ உண்டென்பதை மட்டும்‌ அறிவிப்பதிலேயே நோக்கு. தர்யணுக்கத்திற்கு த்வ்யணுகம்‌ நேராகக்‌ காரணம்‌; பரிமண்டலம்‌ பரம்பரையாகக்‌ காரணமென்று கருதி * ஹ்ரஸ்வ பரிமண்டலாப்யாம்‌ ‘ என்றாரென்க. தவிர, யதா ஸங்க்யமாகக்‌ கொண்டு ஹ்ரஸ்வத்தினின்று மஹத்தும்‌ பரிமண்டலத்தினின்‌ று தீர்க்கமும்‌ உண்டாகுமென்று ஒருவன்‌ கல்பனை செய்தால்‌ அது அஸமஞ்ஜஸமென்று நீங்கள்‌ நினைப்பது போல்‌ நீங்கள்‌ பரமாணுவினின்று த்வ்யணுகம்‌ அதனின்று தீர்யணுக மென்றதுங் கூட அஸமஞ்ஜஸூமே யென்றும்‌ அறிவித்ததாம்‌. உலகில்‌ சிறு கடுகு பெரு கடுகு மிளகு என்றவாறான வஸ்துக்களில்‌ ஒவ்வொன்றுமே சிலவற்றை விட. அணுவாகவும்‌ சிலவற்றை விட மஹத்தாகவும்‌ சொல்லப்படா நிற்க, தரஸரேணு முதல்‌ எல்லாம்‌ மஹத்தும்‌ தீர்க்கமுமாகு மென்றும்‌ அதன்கீழ்‌ சிலவற்றைக்‌ கல்பித்து அவை அணுக்களே என்றும்‌ பிரித்துக்‌ கூறுவது தகாதென்‌றும்‌ இதனால்‌ தெரிவித்ததாம்‌.

கண்ணாற்‌ காணப்படும்‌ – த்ரஸரேணுக்களை எதற்காக ஸாவயவங்களாகக் கொள்ள வேண்டும்‌ ? அவை ஒன்றோடொன்று சேரும் போது ஒரு பக்கம்‌ சேர்வதாய்‌ மற்றொரு பக்கம்‌ சேராமலிருந்தால் தானே மஹத் தரமான வஸ்து உண்டாகும்‌. அதனால்‌ அது ஸாவயவமாகிறது. அந்த அவயவங்களும்‌ ஒவ்வோரம்சத்திற்குச்‌ சேர வேணுமென்று பரமாணுவைக்‌ கொள்வோ மென்னில்‌–அதே ந்யாயத்தாலே பரமாணுக்களுக்கும்‌ ஒன்றோடொன்றின்‌ சேர்க்கை ஒவ்வோர்‌ அம்சத்தில்‌ மட்டுமென்று மேன் மேல்‌ அவயவ கல்ப்பனையாய்‌ முடிவில்லையாம்‌. ஆகையால்‌ பரமாணு என்று ஒன்றைக்‌ கூறலாகாது. அம்சமின்றியே பரமாணுக்கள்‌ சேருமாகில்‌ முழுமையும்‌ சேர்ந்தால்‌ எத்தனை பரமாணுக்கள்‌ சேர்ந்தாலும்‌ ஒரே பரமாணுவின்‌ அளவிலேயே பரிமாணம்‌ நின்று விடும்‌, இனி ஸம்யோகமென்பது நிரவயவமான வஸ்துவிலும்‌, அம்சமிராமற் போனாலும்‌, முழுமையிலுமிராதென்பது அதன்‌ ஸ்வபாவ மென்னில்‌ அப்போது த்ரஸரேணுவிலேயே முடிக்கலாமாகையால்‌ த்வயணுக பராமாணுக்களினின்‌று அது உண்டாகிற தென்றது அஸமஞ்ஜஸமாம்‌. அது மஹத்தாகிறதே யென்னில்‌ அது அணு என்றே சொன்னா லென்ன. அணுவுக்குப்‌ ப்ரத்யகமுண்டென்னலாமே. ஸுவர்ண விக்ரஹாதி விஷயமான சாஸ்த்ரத்தில்‌ த்ரஸரேணுவுக்கும்‌ மேலே பரமாணு இருப்பதாகத்‌ தெரிகிறதென்னில்‌–அதுபோல்‌ உலகுக்குக்‌ காரணம்‌ மூல ப்ரக்ருதியே யென்று பற்பல சாஸ்த்ரங்களில்‌ ஸ்பஷ்டமாயிருப்பதால்‌ பரமாணுகாரண வாதம்‌ நிற்காது. பற்பல பரமாணுக்கள்‌ மண்டலமாகவும்‌ நீண்டும்‌ சேர்ந்தம்‌ பல கார்யங்கள்‌ வரலாமாகை யாலே த்வயணுகம்‌ த்ர்யணுகமென்ற நிபந்தனையும்‌ தகாது, இதற்கு மேலான விசேஷ தோஷங்களை ஸ்ரீதேசிக ஸூக்திகளிலே காண்க. இவ்வாறு பல கருத்துக்களை இதில்‌ அடக்கிக் கொள்க. அணுகாரண வாதத்தில்‌ இந்த தோஷம்‌-இதன் மேல்‌ அவயவி த்ரவ்யங்களைப்‌ படிப்படியாகக்‌ கல்ப்பனை செய்ததும்‌ ஒன்பது தரவ்யங்கள்‌ மொத்தமென்பதும்‌, அதற்கு குண கல்ப்பனமும்‌, மொத்தம்‌ குணங்கள்‌ இருபத்தினாலென்றதும்‌, கர்மமென்ற தத்துவமுண்டென்றாலும்‌ அதில்‌ உத்க்ஷபணம்‌ முதலான ஐந்து வகைகளையே சொன்னதும்‌, ஸாமாக்யம்‌, விசேஷம்‌, ஸமவாயம்‌, .அபாவ மென்று மற்றும்‌ நாலென்றது மெல்லாம்‌ முயற் கொம்பு போன்றனவாம்‌. இதைக்‌ கண்டு கோபித்தே சூன்யவாதி ஒன்றுமே யில்லை யென்றான்‌ போலும்‌. தர்க்கமொன்று மெய்யாக, சூதர்க்கங்கள்‌ பலவாவதால்‌ பல தத்துவாபாஸங்கள இவ்வாறு தோன்றுகின்றன-மேலும்‌ பரமாணுக்கள்‌ சேர்வதற்கு அவற்றில்‌ க்ரியை யுண்டாவது முதன் முதல்‌ எதனால்‌ ? அத்ருஷ்டத்தினாலென்பர்‌, அத்ருஷ்டங்கள்‌ எப்போதுமே இருப்பதால்‌ ப்ரளயம்‌ எப்படி உண்டாகும்‌. ஈச்வர ஸங்கல்பத்தினா லென்னில்‌, ஈச்வரனுண்டென்றது எங்ஙனே. அனுமானத்தினா லென்பர்‌. அதை முன்னமே தூஷித்தோம்‌. சாஸ்த்ரத்தினாலென்னில்‌ சாஸ்த்ரத்தைக கொண்டால்‌ பரமாணு காரண வாதம்‌ காணாத படியாம்‌. ஈச்வரனின்‌ ஸ்ருஷ்டி பரளய ஸ்த்தாபனம்‌ செய்யலாகாதென்று முன்னமே கூறினம்‌. மேன்மேல்‌ பரமாணு கல்ப்பனையாய்‌ அநவஸ்த்தைபோலே ஸமவாய ஸம்பந்தத்திலும்‌ ஸம்பந்த கல்ப்பகா பரம்பரையாய்‌ அநவஸ்த்தையாம்‌. குடம்‌ அநித்யம்‌ ; அதன்‌ நிறம்‌ முதலான குணம்‌ அநித்யம்‌; அவ்விரண்டுக்குமான ஸம்பந்தம்‌ ஸமவாயமோ நித்யமென்று அனுபவ விருத்தமாகச்‌ சொல்வதும்‌ காண்க-

பெளத்த மதம்‌-வைசேஷிகம்‌ வைதிகமென்று பேர்‌ பெற்றிருந்தாலும்‌ ஸாங்க்யம் போலே வைதிக தத்துவத்தை யிசையாமையால்‌ மஹாபாரதத்தில்‌ இதை பரிக்ரஹிக்கவில்லை. ஆக வேத பாஹ்ய துல்யமே என்று கடையிற் கூறி மேலே வேத பாஹ்ய கண்டனம்‌ தொடங்குகிறார்‌, ஸாங்கயம் போலே ப்ரக்ருதி மஹத்‌ அஹங்காராதி தத்துவங்களை யிசைந்த ஸேச்வரமான பாசுபதத்தை அடுத்ததாக்க இஷ்டப்படாமல்‌ ஜைன மதத்திறகும்‌ பின்னால்‌ அதற்கு இடம்‌ வைத்தார்‌. வைசேஷிக மதத்தை ஒளலூக்ய மதமென்றும்‌ சொல்வர்‌. உலூகம்‌ -கோட்‌ டான்‌. பரமசிவன்‌ கோட்டானாகிக்‌ கணாத மஹரிஷிக்கு வைசேஷிகமதோபதேசம்‌ செய்ததாக அவர்களின்‌ ஸம்ப்ரதாயம்‌. எனவே கணாத மதத்திற்குப்‌ பிறகு பாசுபத மதத்தைச் சேர்த்திருக்கலாம்‌. ஸேச்வர வாதமும்‌ இரண்டிலுமுண்டு. ஆனாலும்‌ பாசு பதத்தை மிகவும்‌ ஆபாஸமாகக்‌ கொண்டு, தர்க்க மதம்போலே பரமாணு காரண வாதியாகை காரணமாக பெளத்தத்தையே மேலே தூஷிக்கிறார்‌. அதனாலேயே சூன்ய வாதத்தை முதலிற் கூறாமல்‌ பரமாணுக்களை யிசைந்த பெளத்தரை முதலில்‌ கூறுவது. தார்க்கிகர்‌ நித்ய பரமாணுக்களை யிசைந்திருக்க இவர்கள்‌ பரமாணுக்களும்‌ க்ஷணிகங்களென்றனர்‌. தார்க்கிகர்‌ சிலவற்‌றிற்கே விநாசம்‌ இசைந்ததால்‌ அர்த்த வைநாசிகர்‌. எல்லாம்‌ ப்ரதி க்ஷணம்‌ அழியுமென்கிற இப் பெளத்தர்‌ முழு வைகாசிகராவர்‌. எவ் வஸ்துவும்‌ தான்‌ உண்டாம் க்ஷணத்திற்கு அடுத்த ஷணத்திலே அழிந்து விடும்‌, அடுத்த க்ஷணத்தில்‌ அது போன்ற வஸ்து வேறு உண்டாகிறது. விளக்கின்‌ ஜ்வாலை போலே அவிவேகத்தாலே ஒன்றென நினைக்கப் படுகிறது. ஒன்றே வெகு காலம்‌ நீடித்திருந்தாலென்ன வெனில்‌– வீட்டிலே வெகுநாள்‌ வைத்திருந்த விதை வயலில்‌ விதைக்கப்பட்ட போது முளைக்கின்றதே; வீட்டிலே ஏன்‌ முளைக்க வில்லை-அது வேறு இது வேறு. வீட்டு விதை முளைக்குக்‌ காரணமன்று. வயல் விதை முளைக்கும்‌ தரம்‌ வாய்ந்தது. அத்தகைய விதைக்கு அதற்கு முன்‌ க்ஷண விதை காரணமாகும்‌. அதற்கு அதன் முன் க்ஷண விதை. ஒன்றோடொன்று ஒத்திருப்பதால்‌ அழிவு தெரியாமையால்‌ ஒன்றென ப்ரமம்‌, இப்படியே உடல்‌ குடம்‌ மடமித்யாதி எல்லாம்‌ ஷணிகமே. தடியாலடிக்கப்‌ படும் போது குடம்‌ உடைந்து உரு மாற ஒடு உண்டாம்‌. உரு மாற்றம்‌ பெறவான அழிவுக்குத்‌ தடி முதலான காரணம்‌ வேண்டும்‌. ஒரே விதமாய்த்‌ தொடர்ச்சியா யுண்டாமிடத்தில்‌ காரணமின்றி அழிவு தானே வரும்‌, கார்யம்‌ உண்டாவதற்குக்‌ காரணங்கள்‌ ஒன்றுக்‌ கொன்று துணையாகப்‌ பல வேண்டு மென்று இப்போது கல்ப்பிக்க வேண்டா. அதைப்‌ பெறுவிக்கத்‌ தரம்‌ வாய்ந்த அந்தந்த ஷணமே காரணமாகையால்‌ அதிராத போது கார்ய மில்லை, அதுள்ள போது வேறு வேண்டுவதுமில்லை யென்பர்‌. இதை மறுப்பர்‌ எல்லோரும்‌. அதே இது என்று பலகால்‌ தொடர்ந்திருப்பதாக வஸ்துக்கள்‌ அனுபவத்திலிருக்க இந்த ப்ரத்யக்ஷ விருத்தமான யுக்தி குயுக்தியாகும்‌. விதை வீட்டில்‌ முளையாமைக்குக்‌ காரணம்‌ அங்கே நீர்‌ மண்‌ முதலானவற்றின்‌ சேர்த்தி யிராமையே. வீட்டினின்று வயலுக்குப்‌ போன போது விதைக்கு எத்தனை ஷணங்கள்‌ இடையிலோ, அத்தனை க்ஷணம்‌ வீட்டிலே விதையை வைத்திருந்தால்‌ அங்குப் போல்‌ இங்கும்‌ அத்‌ தரம்‌ வாய்ந்த விதை யுண்டாகலாமே. அப்போது வீட்டிலேயே ஏன்‌ முளை உண்டாகலாகாது. அதனால்‌ துணையான காரணங்க ளிராமையால்‌ உண்டாக வில்லை யென்பதே தக்க உத்தரம்‌-

மேலும்‌ ஷணிகமெல்லா மென்னும்‌ பக்ஷத்தில்‌ பல அவயவங்கள்‌ சேர்ந்த பிறகு வரவேண்டும்‌ கார்ய மெங்குமே உண்டாகாது. பரமாணு வானாலும்‌ சரி; வேறானாலும்‌ சரி. ஒன்றோடொன்று சேர வேண்டும்‌. சேர்க்கைக்குக்‌ காரணமாக அவயவங்களில்‌ கிரியை உண்டாக வேண்டும்‌. ஷணிக வாதத்தில்‌ அவயவம்‌ உண்டானவுடன்‌ அழிகின்றதே, 2-வது ஷணத்திலேயே யில்லையே. கிரியை எதில்‌ உண்டாகும்‌? கிரியைக்கு அடுத்த க்ஷணத்தில்‌ அந்த அவயவ மில்லையே. அதில்‌ சேர்க்கை யென்கிற ஸம்யோகம்‌ எவ்வாறு உண்டாகும்‌. ஆக பூதங்கள்‌ உண்டாக வழி யில்லை. பெளதிகங்களும்‌ உண்டாகா. இந்த அவயவம்‌ அசைவு பெற்றுப்‌ புறப்பட்டு வேறிடமுள்ள அவயவத்தோடு சேர்ந்த தென்று சொல்லவாக வில்லை. மேலும்‌ மனிதன்‌ வஸ்துவைக்‌ கண்டு சேர்க்க ஆசை கொண்டு முயன்று சேர்ப்பதால்‌ வஸ்துக்கள்‌ சேருகின்றன்‌. மனிதன்‌ ஷணிகமாகையால்‌ காண்பதற்கு முன்னமே யழிந்தான்‌. காண்பவன்‌ வேறு. இசைகின்றவன்‌ அவனாகான்‌: அவன்‌ போன பிறகு யாருக்கு முயற்சி. அது போல்‌ கண்ட வஸ்துவும்‌ அழிந்து விடுகிறதே ; எதைச் சேர்க்கப்‌ பாடுபடுவது-சிலர்‌ சொல்வதாவது–எல்லாம்‌ க்ஷணிகமானாலும்‌ அவித்யையாலே எல்லாம்‌ ஸ்த்திர மென்கிற விபரீத புத்தியாலே ராக த்வேஷாதிகளேற்பட்டு எல்லா முண்டா மென்றவாறு: நீங்கள்‌ பல காரணங்கள்‌ துணையாவதால்‌ கார்யம்‌ வருவதாக இசைய வில்லையே. க்ஷணிக வஸ்து ஒன்று தானே காரணம்‌. அவித்யாதிகள்‌ எப்படி துணையாம்‌. மனிதனுக்கு விபரீத புத்தி யிருந்தாலும்‌ வஸ்து போயிட்ட பிறகு எங்கே சேர்த்தி, அம்‌ மனிதன்‌ அழிந்த பிறகு எவன்‌ சேர்ப்பான்‌. மேலும்‌ ஷணிக வாதத்தில்‌ முன் வஸ்து பின் வஸ்து உண்டாம் போது அதற்கு ஆதாரமாவதில்லையே. எப்படி அது காரணம்‌? முன் ஷணமிருந்தாலே போதும்‌; காரணமாகலாமென்னில்‌–முன் க்ஷணத்தில்‌ எங்கெங்கோ எத்தனையோ வஸ்துக்கள்‌ உள ; எல்லாம்‌ காரணமா. எதிலே உண்டாக்கும்‌ தரம்‌ உளது, எதிலில்லை யென்று எவ்வாறு அறிவது. அந்தந்த தேசத்திலிருப்பது அததற்குக்‌ காரணமென்னில்‌, தேசம்‌ ஒன்று துணையாக இசைகின்றீரா. ஸ்த்திரமாக தேச மென்ற வஸ்து தானுண்டா-மேலும்‌ கார்ய காலத்தில்‌ காரணம்‌ வேண்டா என்பதும்‌ ஸஹகாரி காரணமாக: ஒன்‌றில்லை யென்பதும்‌ நீங்கள்‌ சொல்வதற்கு முரணாகும்‌. ‘ப்ரத்யக்ஷ ஜ்ஞானம்‌ உண்டாவது நான்கு காரணங்கள்‌ சேர்ந்தால்‌; அவையாவன–இந்த்ரியமும்‌ வெளிச்சமும்‌ விஷயமும்‌ முன்‌ ஷண ஞானமும்‌’ என்றீர்களே. ப்ரத்யக்ஷ மென்கிற ஞானம்‌ வர்த்தமாக வஸ்துவையே க்ரஹிக்கு மாகையால்‌ பூர்வ ஷணத்திற் போல ஞான முண்டாகும் போதும்‌ இருக்க வேண்டுமே. நான்கு காரணங்கள்‌ சேர வேண்டு மென்ற பிறகு துணை ஒன்றும்‌ வேண்டா என்னலாமோ.-மேலும்‌ ஸஜாதீய ஸந்ததி வரும்படியாகக்‌ குடம்‌ ஒவ்வொரு ஷணமும்‌ நாசம்‌ அடைகிறது. இது அப்ரதிஸங்க்யா நிரோதம்‌; தடியாலடிக்கப் பட்டுக்‌ குடம்‌ நஷ்டமாகிறது; அங்கே விஜாதீயமான ஓடு உண்டாகிறது; அந்த நாசம்‌ ப்ரதிஸங்க்யா நிரோதமென்‌றீர்‌. இவற்றில்‌ ப்ரதிக்ஷண நாசமென்பது அனுபவ விருத்தம்‌. இரண்டாவதான கூட நாசத்திற்குத்‌ தடி. காரண மென்னலாகாது, குடம்‌ ஒன்றே காரணம்‌; துணையான காரணம்‌ வேண்டா என்றன்றோ உங்கள் பக்ஷம்‌. ஒரு திரவ்யத்திற்கும்‌ நாசமில்லை என்ற எங்கள்‌ பக்ஷத்தில்‌ குடத்திற்கு நாசமாவது குடம்‌ ஓடாக மாறுகையே.

காணாத நாசங்களை இசைந்தவர்கள்‌ காணாமையால்‌ ஆகாசமென்‌பதில்லை யென்ன லாமோ? மேலும்‌ இங்கே பறவை பறக்கின்றது என்றாப் போலே வரும்‌ ஞானங்களில்‌ ஆகாசம்‌ ஆதாரமாக விஷயமாகின்றதேயாம்‌. சூன்யவாதியைப்‌ போலன்றி வெளி வஸ்துக்களை ஷணிக ஸந்ததியாக இசைந்த பெளத்தன்‌ ஆகாசத்தையும்‌ அவ்வாறே இசைவது தகும்‌. உண்மையில்‌ ஒன்றும்‌ ஷணிகமன்று. ஒரே வஸ்து பல காலம்‌ நீடிப்பது ப்ரத்யக்ஷ ஸித்த மாகின்றதே. காரணமின்றியே நாசம்‌ வருமாகில்‌ மற்ற கார்யமும்‌ காரணமின்றி வரலாமாகையால்‌ யாரும்‌ எதற்காகவும்‌ ப்ரயத்னமே செய்ய வேண்டா. ப்ரயத்னப் படுகின்றவன்‌ அழிகிறானாகையால்‌ பலன்‌ பெறுகின்றவன்‌ ப்ரயத்னமிராத வனாகிறான்‌. அப்போது யாருமே ப்ரயத்னம்‌ செய்யார்‌. இப்படி வைபாஷதிகனுக்கும்‌ ஸெளத்ராக்திகனுககும்‌ தூஷணம்

இதில்‌ ப்ரத்யக்ஷத்திற்கு விஷயம்‌ எப்படி காரணமாகும்‌ – ப்ர்த்யஷ காலத்தில் இல்லையே என்ற கேள்வியில்‌ ஸெளத்ராந்திகன்‌ ஒன்று சொன்னான்‌. ப்ரத்யக்ஷத்திலே விஷயமாகை யென்பதற்கு ப்ரத்யக்ஷ ஜ்ஞானத்திற்கு விஷயமானது தன்‌ உருவைக்‌ கொடுக்கிற தென்றே பொருள்‌-முதல் க்ஷணத்திலிருந்தாலும்‌ அது கொடுக்கு மென்றவாறு. இது தவறு. விஷயம்‌ அழிந்த பிறகு அதன்‌ உருவம்‌ ஜ்ஞானத்தில்‌ எப்படி யிருக்கக் கூடும்‌. அது போனாலும்‌ அதன்‌ உருவமுள தென்னவாகுமோ. இருந்தாலும்‌ அதன்‌ உருவம்‌ அதை விட்டுப்‌ பிரியா தாகையால்‌ கொடுக்கப் படா.-

இனி எல்லா வஸ்துக்களையும்‌ இசைந்து அவை க்ஷணிகங்களென்ற பெளத்தர்‌களை தூஷித்த பிறகு, வெளி வஸ்துக்களை யிசையாமல்‌ ஞானத்தை மட்டுமிசைந்து அதை க்ஷணிக பரம்பரையாகச் சொன்ன யோகாசார பெளத்தனுக்கு தூஷணம்‌. இதை நான்‌ அறிகிறேன்‌, அதை நானறிந்தேன்‌ என்று ஞானம் போலே விஷயமும்‌ அனுபவ ஸித்தமா யிருக்க வெளி வஸ்துக்களை இல்லை யென்ன வொண்ணாது குடமெனகிற ஞானம்‌, .ஜலமென்கிற ஞானம்‌ என்றவாறு ஞானத்தில்‌ ஆகாரம்‌ தெரிகிறது அது போல்‌ வெளியிலும்‌ ஆகாரம்‌ உளதாகில்‌ இரண்டு ஆகாரங்கள்‌ தோன்ற வேண்டுமே. அவ்வாறில்லையே யெனில்‌-தோன்றும்‌ ஆகாரம்‌ வெளி யாகாரந்தான்‌. ஞானத்திற்கு ஆகாரமில்லை. குடமென்கிற ஞானமென்றால்‌ குடத்தை விஷயமாகக் கொண்ட ஞான மென்றே பொருள்‌. ‘விஷய மொன்று மின்றியே சொப்பனத்தில்‌ ஜ்ஞான முண்டாக வில்லையா” என்னில்‌–அது த்ருஷ்டாந்தமாகாது. அங்கே விழித்தவுடன்‌ சொப்பனத்தில்‌ தோன்றிய தெல்லாம்‌ பொய்யென்று தெளிகிறான்‌. அது போல்‌ விழித்திருக்குங் காலத்தில்‌ அனுபவித்தவை யெல்லாம்‌ பிறகு பாதிக்கப்பட வில்லையே. இதன்‌ மேல்‌ வினா -ஸூத்ரகார்‌ இங்கே சொப்பனத்தில்‌ விஷயமான வஸ்து அஸத்யமென்று சொல்லி யிருக்க சொப்பனத்திலெல்லாம்‌ மெய்‌ என்று எம்பெருமானார்‌ முன்னருளியது தகுமோ என்றவாறு. இதற்கு உத்தரம்‌–சொப்பனத்தில்‌ விஷயம்‌ மெய்‌ யென்றே வேத ஸித்தாந்தம்‌ ஆனாலும்‌ இந்தப்‌ பாதம்‌ யுக்தியால்‌ எல்லாம்‌ சொல்வதாம்‌. சொப்பனத்தில்‌ விஷயங்கள்‌ ஸத்யமானவை யென்று யுக்தியால்‌ ஸ்தாபிக்கவாகாது. முன்னம்‌ வேத ப்ரமாணத்தைக் கொண்டே அவை மெய் யென்றார்‌ வ்யாஸர்‌. வேதமிசையாதவர்‌ அதைப் பொய்யென்ற போது அதற்கு நாம்‌ பிறர்‌ இசையாத வேதத்தை ப்ரமாணமாகக்‌ காட்ட லாகாதென்று யுக்தி ப்ரமாண வளவிலே நின்று சொல்லுகிறாராகையால்‌ இப்படி தான்‌ கூறலாகும்‌. வேதத்தைக் கொண்டு சொல்லலா மென்றிசைந்தால்‌ இந்த ஸூத்ரத்திற்கு வேறு விதமாகப்‌ பொருள்‌ கொள்க. அதாவது உலகு ஸத்யமன்று என்ற உங்கள்‌ பக்ஷத்தில்‌ வைதர்ம்யமே. ஸ்வப்நத்திலும்‌ மெய்யே யென்று வேதத்தைக் கொண்‌டிசைகிறோ மாகையால்‌ அந்த வைதர்ம்யத்தாலே ஸ்வப்ந த்ருஷ்டாந்தமும்‌ தகாதென்றவாறு. விஷயமின்றி ஞான மெங்குமே அனுபவத்திலில்லை யாகையால்‌ நிர்விஷய ஜ்ஞான வாதம்‌ தவறே யாகும்‌. ப்ராந்தி ஞானத்திலே விஷய மில்லையே யென்னில்‌– அந்யதாக்யாதி பக்ஷத்திலே தர்மமும்‌ ஸத்யமே விஷயம்‌. ஸம்பந்த மிராததற்கு ஸம்பந்தத் தோற்றத்தால்‌ ப்ராந்தி யாகிறது. அக்யாதி பக்ஷத்தில்‌ தர்மி ஞானம்‌ வேறு, தர்ம ஞானம்‌ வேறு, இரண்டும்‌ யதார்த்தமே. ஆகையால்‌ நிர்விஷய க்யாதி யில்லை யென்க.

இனி புத்தரின்‌ உண்மை மதமான சூன்ய வாதம்‌ நிராகரிக்கப்படும்‌, சூன்ய மென்பதற்கு ஒன்றுமில்லை யென்றிங்குப்‌ பொருள்‌, இதை அவன்‌ நிருபிக்கும்‌ விதம் கேண்மின்‌. உலகென்றவற்றிற்கு உற்பத்தி காரணம்‌ யாது. பாவ வஸ்துவா அபாவமா, முதற்பஷத்தில்‌ ஒரு பாவ பதார்த்தமா, பலவா ? மூல ப்ரக்ருதியே காரண மென்றதே முதற்‌ பஷமாகும்‌. இது ஸாங்கய மதம்‌, இதைப்‌ பரமாணுக்கள்‌ காரண மென்ற தார்க்கிகர்‌ தூஷித்து விட்டனர்‌. இரண்டாவது தார்க்கிக பக்ஷம்‌. இதனை ஸாங்க்யர்‌ தூஷித்தொழித்‌தனர்‌. அதனால்‌ அபாவம்‌ காரணமென்ற பக்ஷத்தையே கொள்ள வேண்டும்‌. இது யுக்திக்கும்‌ பொருந்தும்‌. விதையை விதைத்தால்‌ அது வெடித்த பிறகு முளை உண்டாகிறது. ஆக விதையின்‌ அழிவே முளைக்குக்‌ காரணம்‌, அபாவமே காரண மென்றதாயிற்று. அபாவத்தினின்று உண்டாவதும்‌ அபாவமாகத் தானே யிருக்க வேண்டும்‌. இதே சூன்ய வாதம்‌. இது அடியோடு பொருந்தாது. இல்லை யென்‌று மட்டும்‌ ஒருவன்‌ சொன்னால அதனால்‌ ஒன்றும்‌ அறிவித்ததாகாது, இது இல்லை, அது இல்லை யென்று ஒரு பொருளைச்‌ சொல்லியே இல்லை யென்ன வேண்டும்‌. அது எப்போதுமே இல்லை யாகில்‌, இது அது என்றெடுக்கவே யாகாது. அதனால்‌ இது இங்கே யில்லை, இப்போதில்லை யென்று தேச விசேஷத்தையும்‌ கால விசேஷத்தையும்‌ கூட்டித் தான்‌ சொல்ல வேண்டும்‌. அப்போது இங்கில்லை யென்றால்‌ வேறிடத்தில்‌ இருப்பும்‌, இப்போதில்லை யென்றால்‌ வேறு காலத்தி லிருப்பும்‌ தேறும்‌. ஆக வஸ்துவும்‌ தேசமும்‌ காலமும்‌ உள என்றதாயிற்று-உலகை யிசைந்து ஈச்வரனில்லை யென்றார்‌ நிரீச்வரவாதிகள்‌. உலகுக்குக்‌ காரணமான ப்ரஹ்மத்தை இசைந்து கார்ய மொன்று மில்லை யென்றனர்‌ சாங்கராத்வைதிகள்‌. ஒன்றுமே யில்லை யென்றான்‌ சூன்யவாதி: இவன்‌ பேச்சைக் கொண்டு ஈச்வரனையும்‌ சேர்த்து ஸ்தாபிக்க வேண்டு மென்று திருவுளம் கொண்டு நம்மாழ்வார்‌, * உளனெனில்‌ உளன்‌ அவனுருவம்‌ இவ்வுருவுகள்‌, உளனலனெனில்‌ அவனருவம்‌ இவ்வருவுகள்‌. உளனென இலனென இவை குணமுடைமையில்‌ உளனிரு தகைமையொடு ஒழிவிலன்‌ பரந்தே ‘! என வருளினார்‌, சேதநாசேதநங்களாகிற விபூதிகளையும்‌ அவற்றின்‌ பதியான ஈச்வரனையும்‌ நாமிசைவோம்‌. ஈச்வரனென்றால்‌ சேதநாசேதங்களாகக்‌ காணப்படு மவற்றிற்கு நியந்தாவானவன்‌ என்ற தாகும்‌. இப்படிப் பட்டவனில்லை யென்றால்‌ எல்லாம்‌ கழித்ததாகு மென்‌று நினைக்கிறான்‌ சூன்ய வாதி. ஆழ்வார்‌ அருள்வதாவது–ப்ரளய காலத்தில்‌ சேதநாசேதனங்கள்‌ இப்போது போல்‌ ஸ்த்தூலங்களாக விராமையால்‌ ஸ்த்தூலங்களை நியமிக்கும்‌ நிலைமையில்‌ அவன்‌ இல்லை. ஸூஷ்ம நிலையே யப்போதென்றே சொன்னதாகும்‌.. அபாவமும்‌ பாவமே யாகிறதே. இப்போது குடமில்லை யென்றால்‌ குடம்‌ உண்டாகாமல்‌ மண்ணுண்டையே யுளதென்றோ, குடமழிந்தால்‌ ஓடேயுளதென்றோ ஒரு வஸதுவின்‌ இருப்பே தோன்றுமே. அதுபோலாகுக. காரணம்‌ அபாவமானபடியால்‌ சூன்யத்தினின்று சூன்யமே பிறக்குமென்றான்‌ அவன்‌. அபாவமும்‌ பாவமாய்‌ காரணமும்‌ ஸூக்ஷ்ம சேதநாசேதஈவிசிஷ்டமாய்‌ பூர்ணமான படியால்‌ பூர்ணத்தினின்‌ றுண்டாவதும்‌ பூர்ணமே யென்பரிவர்‌, மேலும்‌ இல்லை யென்பது ப்ரமாணமிராமல்‌ எப்படி. ஸித்திக்கும்‌. அஸ்தி என்பதற்குத் தான்‌ ப்ரமாணம்‌ வேண்டும்‌. நாஸ்தி என்பதற்கு ப்ரமாணம்‌ வேண்டா என்னில்‌—இருப்பதாக வ்‌யவஹாரத்திலுள்ளதை இல்லை யென்றால்‌ அதற்கு ப்ரமாணம்‌ அவச்யமே யாகும்‌. வ்யவஹாரத்தி லிராததை இல்லை யென்று சொல்வது வீணாகும்‌. ப்ரமாண மிராதபோது சூன்ய வாதம்‌ ஒரு ஸித்தாந்தமே யாகாது. அவன்‌ சதுஷ்கோடி விநிர் முக்தம்‌, அதாவது ஸத்துமன்று, அஸத்துமன்று, ஸதஸத்துமன்‌று, ஸத அஸத விலஷண முமன்று என்றான்‌. ஐந்தாவது கோடி யுளதென்றால்‌ சூன்யவாதம்‌ ஏது ? உண்மையில்‌ நாலு கோடி கூடக்‌ கூறவாகா. ஒன்றுமே யில்லை யென்பானாகில்‌ அப்படி ஒரு ஞானம்‌ உண்மையி லிருக்க வேண்டும்‌ இல்லையேல்‌, எல்லாம்‌ உண்டென்றதாகும்‌. இதெல்லாம்‌ பட்டர்‌ அருளிச் செய்த ஸ்ரீரங்கராஜஸ்தவத்திற்‌ காண்க-ஸர்வதா அநுபவத்தியே –

இனி ஜைந மதம்‌. தேவதைகளின்‌ அபிவிருத்திக்காக அசுரர்களை யழிக்க வேண்டு மென்‌று பகவானே புத்தனா யவதரித்துச்‌ சார்வாக மதம் போலன்றி அநாதி கர்ம வச்யர்‌ ஜீவர்களென்ற வாதத்தோடு சேர்ந்த பெளத்த மதத்தை விளைவித்தான்‌, க்ஷணிக வாதத்‌திலும்‌ சூன்ய வாதத்திலும்‌ விச்வாஸமற்று உலகில்‌ வஸ்துக்கள்‌ நீடித்திருக்கு மென்கிற பக்ஷத்தை யாதரித்த போது அப்படிப்பட்ட அசுரர்களையும்‌ கெடுக்க ஜிநனென்ற பேச்சாளனை யுண்டாக்கி அவன் மூலம்‌ ஜைந வாதம்‌ தொடங்கச் செய்தான்‌. வேத பாஹ்யராகைக்காகு வேறு விதமாக தர்ம நெறிகளையும்‌ மோஷ உபாயங்களையும்‌ கல்பித்தான்‌. பரமாணு காரண வாதத்தைக் கொண்டு ப்ரக்ருதி காரண வாதத்தை விட்டால்‌ வேத பாஹ்யத்வம்‌ பூரண மாகு மென்று அதைப்‌ பற்றினான்‌. பிறர்‌ கொள்ளாத புது விஷய மொன்‌று தனக்கு வேண்டு மென்று அநேகாந்த வாதம்‌ செய்பவனானான்‌. அதாவது ஒன்றோடொன்று முரண்படும்‌ தர்மங்களையும்‌ ஒன்‌றிலே யிசைதல்‌. ஸத்தே அஸத்துமாம்‌, நித்யமே அநித்யமுமாம்‌. பிந்நமே அபிந்நமுமாம்‌, ஒன்றே பலவுமாமென்றவாறு. ஜைனர்‌ ஒன்‌றொ டொன்று முரண்படும்‌ ஏழு தர்மங்களைக் காட்டி எல்லாம்‌ சேர ஸப்தபங்‌கி என்று பெயரிட்டார்கள்‌: சேறு கனமாகப்‌ பூசப் பெற்ற சுரைக்காய்‌ சேற்றைக்‌ கழுவின பிறகு நீரில்‌ மிதப்பது போல்‌ ஜீவன்‌ மோக்ஷத்தில்‌ கீழே விழாமலிருக்கிறானென்றும்‌, மேலே போய்க் கொண்டே யிருக்கிறானென்றும்‌, அலோகாகாசம்‌ சென்று நின்று விடுகிறானென்றும்‌ அங்கே ஓர்‌ சரீரம்‌ உணடென்றும்‌ பல விதமாக மோக்ஷத்தை வர்ணித்தனர்‌. இதற்கெல்லாம்‌ யுக்தி கிடையாதாகையால்‌ ப்ரமாண வாக்யமே காட்ட வேண்டும்‌, அதற்கு ப்ரஸக்தி யில்லை யென்று எல்லாம்‌ தூஷிக்கப்பட்ட தாகுமென்று கொண்டு யுக்தியால்‌ ஸ்தாபித்த அம்சத்தை மட்டும்‌ வ்யாஸர்‌ தூஷித்தார்‌. அதாவது அநேகாந்தவாதம்‌ பரஸ்பர விரோதமில்லை யென்பதே இந்த வாதத்தை யிசைந்தால்‌ ஜைனர்‌ எந்த மதமும்‌ முரண்படா தென்று கொள்ளலா மாகையால்‌ ஒரு மதத்தையும்‌ அவர்‌ தூஷிக்கலாகாது. இத்துடன்‌ ஜீவனுக்குப்‌ பரிமாணம்‌ எத்தகைய தென்றபோது ஈ எறும்பு ஆடு மாடு யானை மனிதன்‌ என்றாற் போன்ற சரீரங்களைக்‌ கொள்வதால்‌ அந்தந்த உடலள வுக்கு ஜீவன்‌ சுருங்கியும்‌ பரவியு மிருக்க வேண்டுமாகையால்‌ பலவித பரிமாணங்கள்‌ உண்டென்றார்கள்‌. இதை மோக்ஷத்தில்‌ ஒரே விதமான பரிமாணத்தைச்‌ சொல்ல வேண்டி யிருப்பதால்‌ அது அழியாத தாகையால்‌ உண்டாகாமல்‌ அநாதி யுமாகும்‌. ஆதலால்‌ முன்னே வெவ்வேறு பரிமாணம்‌ வர ப்ரஸக்தி யில்லை யென்றார்‌ வ்யாஸர்‌-

அனேகாந்தவாத நிராஸம்‌ இங்குச்‌ செய்ததால்‌ அகேகாந்தவாதமென்கிற பேதாபேத வாதத்தைக் கொண்ட பாஸ்கரர்‌ யாதவப்ரகாசரென்ற இரு வேதாந்திகள்‌ பக்ஷமும்‌ விலக்கிய தாகும்‌. முன்னம்‌ ஜ்ஞானமொன்றே யுளது, எல்லாம்‌ பொய்யென்ற யோகாசார மதத்தை தூஷித்ததால்‌ வ்யாஸர்‌ சாங்கராத்வைத வாதத்தை தூஷித்தவரானார்‌. இங்கே பாஸ்கராதி தூஷகருமானார்‌. அதனால்‌ பாஸ்கரர்‌ ப்ரச்சந்ந ஜைனர்‌, சாங்கரர்‌ ப்ரச்சந்ந பெளத்தரெனப் படுவார்‌.

அடுத்தது பாசுபதம்‌. இதில்‌ ஸாங்கய மதத்திற்கு மேலாக எண்ணிக்கையைப்‌ பெருக்கி 36 தத்துவங்களென்ற வாதமுளது. ஆசாரங்களும்‌ வேத விருத்தமாகப்‌ இவற்றிற்கு நிராஸம்‌ தனியே வேண்டா. ப்ரமாண மிராமையாலே நிராஸம்‌ ஸித்தம்‌. இங்கு தூஷிக்கப்பட்ட மதங்களில்‌ இதுவே கடைசி மதமாகையால்‌ தனியே ஸங்கதி வேண்டா அதுவுமுளது. ஜைநரிலும்‌ திகம்பரர்கள்‌ உண்டு; பாசுபதத்திலும்‌, முன் மதங்களில்‌ ஈச்வரனில்லை. ஆனாலும்‌ புத்தரும்‌, ஜிகரும்‌ உலகில்‌ ப்ரதான மானவர்கள்‌. இங்கே ஈச்வரன்‌. உண்டு. அவன்‌ மத ப்ரவர்த்தனுன பசுபதியே யென்றனர்‌. ஈச்வரனை அனுமானத்தாலேயே இம் மதத்தினர்‌ ஸ்தாபிக்கினறனர்‌. யுக்தியால்‌ ஈச்வரனை ஸ்தாபிக்க முடியா தென்று சாஸ்த்ர யோநித்வாதி கரணத்தில்‌ முதன் முதல்‌ கூறின போது கருத்திலிருந்த அம்சங்களை இங்கே ஸூத்ரகாரர்‌ விளக்கி யுளார்‌. இங்கு ஸூத்ரங்களிற்‌ கருதியவற்றையே பாஷ்யகாரர்‌ அங்கே விரிவாக உரைத்தருளினார்‌. எவ்வளவு யுக்திகளைத்‌ தேடினாலும்‌ சிவனே ஈச்வரன்‌, விஷ்ணுவாகா னென்பதையும்‌ அவனுக்கு மூர்த்தி யமைப்பும்‌ மற்றுமெல்லாம்‌ யுக்தியால்‌ ஸ்தாபிக்க முடியாது. அப்படி யிருக்க ருத்ராக்ஷ தாரணாதிகளே சிறந்த தர்ம மென்றாற் போன்‌ற கற்பனைகள்‌ எங்கே நிற்கும்‌. இம் மதத்தினர்‌ வேதத்தை இசைந்தாற்‌ போல்‌ அபிநயித்து வேத தூஷணமும்‌ செய்து கொண்டே தத்துவத்தையும்‌ ஆசாரத்தையும்‌ வேறாக்கியவர்‌. ஆகப்‌ பசுபதி யென்ற பரம சிவன்‌ தனது ஸமஞ்ஜஸ நிலைபிலே யிராமல்‌ உலகை மோஹிப்பிகக வேண்டு மென்ற கருத்துடன்‌ அஸமஞ்ஜஸனா யிருந்து அஸமஞ்ஜஸ யுக்திகளாலே அஸமஞ்ஜஹஸமான கள் மொடா வைத்தல் போன்ற ஆசாரத்தைச்‌ சொல்லி யிருப்பதால்‌ எல்லாம்‌ அப்ராமாணிகம்‌. பெளத்த மதமும்‌, ஜைன மதமும்‌ பகவானால்‌ சிலரைக்‌ கெடுக்க ஏற்படுத்தப் பட்டன. இந்தப்‌ பாசுபதம்‌ பகவானாலே ஏவப்பட்ட பரம சிவனால்‌, பகவானிடமும்‌, பாகவதர்களிடமும்‌ த்வேஷங்‌ கொண்டவர்களின்‌ கொடுமையான செயல்களைக் கண்டு நொந்த கெளதைமாதி பாகவதர்களுடைய சாபத்திற் கிணங்க வஞ்சனை யாகவே விளைவிக்கப்பட்ட தாகையால்‌ அடியோடு விலக்கப்படும்‌. இதன்‌ கொடுமையைக்‌ கண்டே நம்மாழ்வார்‌, வயாஸர்‌ தூஷித்த மதங்களை வ்யுத் க்ரமமாகக்‌ கூறுகின்றாராய்‌, இலிங்கத்திட்ட புராணத்தீரும்‌ சமணரும்‌ சாக்கியரும்‌ வலிந்து வாது செய்வீர்களும்‌ மற்றும் உம் தெய்வமுமாகி நின்றான்‌ ” என்று சைவ விசேஷத்தை முதலிலெடுத்தார்‌. வ்யாஸர்‌ ஸாங்க்யம்‌ தொடங்கி மேன் மேல்‌ துர்பலமான மதங்களை மேலே சொன்னார்‌, மிகக்‌ கேவலமான மதத்தை முதலிலே கழித்து மேன்மேல் சிறந்த மதங்களையும்‌ மேலே கழிக்கக்‌ கருதி சைவத்தை முதலிலெடுத்தார்‌ ஆழ்வார்‌. கீழ்‌, ”பேச நின்ற சிவனுக்கும்‌ ‘ என்றதாலும்‌ சைவ தூஷணமே முக்யமென்று தெரிகிறது, . பாஞ்ச ராத்ரத்தை விட்டு இவ்வாறு கூறியதினின்று பாஞ்சராத்ராதிகரணம்‌ அதை தூஷிக்க வந்ததல்ல என்ற கருத்தே நம்மாழ்வாருக்குமென்‌று தெரிகிறது பாசுபதம்‌, ஜைனம்‌, பெளத்தமென்ற வ்யுத்க்ரமத்தாலே, வலிந்து வாது செய்வீர்களென்றது .தார்க்கிகாதி மதத்தை என்று தெரிய வரும்‌. தார்க்கிரர்‌ ஈச்வரனை யிசைந்தாலும்‌ அவனுக்கு மூர்த்தி யுண்டென்று கொள்ள வில்லை. ஆனாலும்‌ சிவனே கோட்டானுருக் கொண்டு கணாதருக்கு உபதேசித்ததான ஐதிஹ்யத்திற் கிணங்க சிவாதி சப்தங்களால்‌ விசேஷமாக ஈஸ்வரனை வழங்கினர்‌, பாசுபத மதத்தினர்‌ யுக்தி வாதம்‌ செய்கின்றவர்‌. ஸம்ஹார சக்தி யுடையவராக ஸர்வராலும்‌ இசையப் பெற்ற சிவனாரை யாரும்‌ ஸம்ஹரிக்க வியலாரென்று அவருக்கு நித்யத்வமே யென்றும்‌, அவர்‌ ஸூகத கபிலாதிகளை விட ஸர்வஜ்ஞராக வைதிக கோஷ்டியிலும்‌ ப்ரஸித்தமான வரென்றும்‌ நினைக்கிறார்களென்று அதை நிரஸிப்பதற்காக வ்யாசர்‌ முடிவாக, * அந்தவத்த்வம்‌ அஸர்வஜ்ஞதாவா *!என்று பசுபதிக்கு அழிவையும்‌ ஸர்வஜ்ஞனாகானென்பதையும்‌ ஸ்த்தாபித்தார் போலும் –

த்ரிமூர்த்திகளிற்‌ சேர்ந்த பிரமன்‌ தன்‌ பகல்களாகிற கல்ப்பங்களிலே ரஜோ குணமோ, தமோ குணமோ மேலிடடுச் சொன்ன புராணங்களெல்லாம்‌ போனது போலும்‌, மற்றொரு மூர்த்தி யான பரம சிவன்‌ சொன்ன பாசுபதம்‌ போனது போலும்‌ விஷ்ணு மூர்த்தி பகர்ந்த பாஞ்சராத்ரமும்‌ பழுதாகட்டுமென்று சிலர்‌ கேட்க, அதில்‌ விரோதமொன்‌றும்‌ காண வில்லையே வென்கிறார்‌ மேலே. உலகில்‌ எந்த மதாபிமானிகளும தங்கள்‌ மதத்தோடு வைதிக மதம்‌ ஸமமென்று நினைக்க மாட்டார்கள்‌. ஆனாலும்‌ வ்யாஸார் சொன்னதைக்‌ கேட்பவரில்‌ சிலர்‌, *ஸாங்க்யாதிகள்‌ உங்கள்‌ மதத்தை தூஷிக்கக் கூறின தர்க்கங்கள்‌ ஆபாஸமானாலும்‌ அதனால்‌ உங்கள்‌ மதம்‌ தூஷிக்கப் படாமலிருந்தாலும்‌ உங்கள்‌ மதத்தோடு அவர்கள்‌ மதங்களும்‌ ஸமமாலிருந்தால் என்ன ” என்று கேட்க, ஸமத்வம்‌ இருக்கத் தகாது ; ஒன்றே உண்மை யாகும்‌; அவர்கள்‌ மத ஸ்த்தாபந யுக்திகளே துர்பலங்களென்றார்‌ இங்கே வ்யாஸர்‌. அது போல்‌ அவர்கள்‌ . பாஞ்சராத்ரத்தில்‌ ஓரிரண்டு வாக்யங்களுககுப்‌ பொருளை விபரீதமாக க்ரஹித்து இதே பஞ்சராத்ர ஸித்தாந்தமெனறு நினைத்து அது ஸமமான பலனுடைத்தாகா தென்றும்‌ தெளிந்து பஞ்சராத்ரமும்‌ அப்ரமாணமாகட்டுமே என்று கேட்டனர்‌. அதை நிராகரிக்கிறார்‌ மேல்‌ அதிகரணத்தில்‌. ஜீவர்கள்‌ அநாதியாய்‌ கர்ம வச்யராகி: ஒரு காலத்தில்‌ மோக்ஷம்‌ பெறுகிறார்களென்றே யுக்தி வாதிகளும்‌ இசைந்திருப்பதால்‌ யுக்தியால்‌ ஜீவர்களுக்கு உத்பத்தியைச்‌ சொல்லலாகாது. வேதம்‌ ஓதுவதும்‌ அதே யாகும்‌. வேதத்திற்கும்‌ தர்க்கத்‌ திற்கும்‌ விருத்தமாக்‌ ஜீவோத்பத்தியைப்‌ பஞ்சராத்ரம்‌ பணித்ததே. உலகில்‌ கர்த்தாவா யிருப்பவன்‌ கருவி யின்றி கர்த்தாவாகிக்‌ கருவியை யுண்டு பண்ணுகிறானென்ன வொண்ணாது, மரம்‌ வெட்டுகிறவன்‌ தானே கோடாலியைச்‌ செய்து அதன் மூலம்‌ மரம்‌ வெட்ட வில்லையா வென்னில்‌–கோடாலி செய்வதற்கும்‌ அவனுக்கு ஒரு கருவி வேண்டுமே. கருவி யற்ற ஜீவன்‌ மனத்தைக்‌ கருவியாக முதலில்‌ உண்டு பண்ணலாகுமோ., அப்படி யுண்டு பண்ணு கிறவர்களையும்‌ காணேமே: அதனாலும்‌ பஞ்சராத்ரமும்‌ அப்ரமாணமென்று கேள்வி. இதற்கு நீர்‌ கூறிய காரணங்களாலேயே அந்த வாக்யங்களுக்கு அது பொருளாகாது ; முன்‌ பின்‌ ஸந்தர்ப்பங்களைப்‌ பார்த்தாலும்‌ அங்கே ஜீவனுக்கும்‌ மனத்திற்கும்‌ உற்பத்தி சொல்லப்‌ படவில்லை யென்று தேறும்‌. ஜீவாபிமானி ஸங்கர்‌ஷண மூர்த்திக்கும்‌ மநோபிமாநி ப்ரத்யும்‌ந மூர்த்திக்கும்‌ அஹங்காராபிமானி அநிருத்த மூர்த்திக்கும்‌ அவதாரமே கூறப்படுகிற தென்று ஸ்பஷ்டமா யிருப்பதால்‌ பஞ்சராத்ரம்‌ பூர்ணமாக ப்ரமாணமே. ஸூத்ரகாரரும்‌ மூன்றாவது ஸூத்ரத்தில்‌ (வா! என்ற சொல்லைச்‌ சேர்த்து ஜ்ஞான சக்த்யாதி குணப்பிரிவை மூன்றாகக்‌ கொண்ட ஸங்கர்ஷணாதி மூர்த்திகள்‌ மூன்றே வாக்யப்‌ பொருளென்கிறார்‌. பாஞ்சராத்ரத்‌திற்கு ப்ரதிஷேதம்‌ சொல்ல வொண்ணா தென்றும்‌ ஸ்பஷ்டமாக அருளினார்‌-இந்த அதிகரணம்‌ பாஞ்சராத்ரத்திற்கு அப்ராமாண்யத்தை ஸ்தாபிக்கிற தென்னும்‌ ஸ்ரீரங்கராசார்யரும்‌, * வாஸுதேவாதி வ்யூஹாவதாரம்‌ சொல்வதில்‌ விரோதமில்லை. அபிகமந உபாதாகாதி விசேஷாராதன க்ரமங்களைச்‌ சொல்வதிலும்‌ விரோத மில்லை. நாராயணனே உலகுக்கு உபாதாந காரண மென்பதிலும்‌ விரோதமில்லை ? என்று அப்ராமாண்யம்‌ சொல்லலாகா தென்பதை ஸ்பஷ்டமாகச்‌ சொல்லிக் கொண்டே ஸூத்ர நிர்வாஹத்‌ திற்காக ஏதோ ஜீவோத்பத்தி, ஜீவனின்று மனத்தின்‌ உத்பத்தி யென்றே வாக்யத்திற்குப்‌ பொருள் கொண்டு தூஷிக்கப்‌ பிரயாசப் படுகிறார்‌. அவர்‌ பாஷ்யத்திற்கு வ்யாக்யானமான பாமதீ என்ற கிரந்தத்திற்கு உரையான கல்ப்ப தருவில்‌, *ஸாஷாத்‌ விஷ்ணுவே அருளிய அவ் வாக்யங்களுக்கு அப்ராமாண்யம்‌ தகாது. வேறு பொருளே இருக்க வேண்டும் என்று குறித்தார்‌. அப் பொருள்‌ எவ்வாறாகு மென்பதை ஸ்ரீபாஷ்யத்திலே விளக்கி யருளினார்‌. அத்வைதிகளும்‌ பாஞ்சராத்ர ப்ராமாண்ய மிசைந்திருப்பதால் தான்‌ பாஞ்சராத்ர முறையில்‌ நடக்கும்‌ கோயில்களின்‌ பூஜா க்ரமம்‌ ஸர்வ ஸம்மதமா யுலகில்‌ பரவியுளது. ஆளவந்தார்‌ இங்கே ஸூத்ரங்களுக்குப்‌ பல வகையாகப்‌ பொருள்‌ தெரிவித்திருக்கிறார்‌ தமது ஆகம ப்ராமாண்ய க்ரந்தத்தில்‌. விஜ்ஞஜாநாதி என்பதற்கு விஜ்ஞான முடையனும்‌ ஸம்ஹரிக்‌கின்றவனுமான மூர்த்தி ஸங்கர்ஷண மூர்த்தி என்ற பொருள்‌ ஸ்ரீபாஷ்யத்திலே கூறப்‌ பட்டதென்று உரைகளினின்று விளங்கும்‌. இதனின்று ப்ரத்யும்ந அநிருத்த மூர்த்திகளையும்‌ கொள்வதாம்‌. சங்கராசார்யர்‌ கூறியபடி ஜ்ஞான சக்தி பல ஐச்வர்ய வீர்ய தேஜஸ்ஸுக்‌களைக்‌ கொண்டாலும்‌ ஒவ்வொரு மூர்த்திக்கு இரண்டிரண்டு குணங்களென்ற பிரிவு காட்டப்‌ படுமாகையால்‌ ஸங்கர்ஷணாதி மூர்த்திகள்‌ பொருளாகலாம்‌. 1! ததப்ரதிஷேத: ” என்பதில்‌ தத்‌ என்ற சொல்லுக்கு உத்பத்தி யஸம்பவம்‌ பொருளானால்‌ இரண்டாவது ஸூத்ரத்திலுள்ள கேள்விக்கு உத்தரம்‌ சொன்னதாகாது. ஆகையால்‌ பொதுவாக பாஞ்சராத்ர ப்ராமாண்யத்தையோ பாஞ்சராத்ரத்தையோ தத்‌ என்ற சொல்லுக்குப்‌ பொருளாகக்‌ கொள்வது நலம்‌. ஸூத்ர ஸ்வாரஸ்யத்தை யெல்லாம்‌ கவனிக்காமல்‌ பொதுவாகப்‌ பாத ஸங்கதிக்காக அப்ராமாண்யம்‌ சொல்வது தகுமோ? பாஞ்சராத்ரம்‌ அப்ரமாண மென்றால்‌ மஹா பாரத விரோதமென்றும்‌ ஸ்ரீபாஷ்யத்திலே எல்லாம்‌ ஸமஞ்ஜஸமாக்கி யருளினார்‌.

பிற மதங்களுக்கு அப்ராமாண்யம்‌ சொல்லும்‌ பாதத்தில்‌ இதற்கு ப்ராமாண்யம்‌ ஸ்தாபிப்பதானால்‌ பாத ஸங்கதியில்லையே என்ற கேள்விக்கு ஸமாதானம்‌ தொடக்கத்‌ திலேயே சொன்னோம்‌. அதிகரண ஸாராவளியில்‌ ஒரு வகையான ஸங்கதி யருளி யிருப்பதையும்‌ குறித்தோம்‌. சிலர்‌, முன்‌ அதிகரணங்களிற்‌ போல்‌ எல்லாம்‌ ஸித்தாந்த ஸூத்ரமாயிருப்பது தகும்‌. பூர்வபக்ஷ ஸித்தாந்த ஸூத்ரங்களாகப்‌ பிரித்தல்‌ வைரூப்யமென்பர்‌, அதற்கும்‌ பரிஹாரம்‌ அந்த அதிகரண ஸாராவளி ஸ்லோகத்தில்‌ தொனிக்கிறது. அதாவது எல்லாம்‌ ஸித்தாந்த ஸூத்ரமாகவே யிருக்கலாம்‌. இங்குப்‌ பூர்வபஷமாவது–ஸாங்க்யாதி மதங்கள்‌ துர்பலங்களானாலும்‌, பாஞ்ச ராத்ரம்‌ ஸம பலமாகலாம்‌, அபெளருஷேயமாகையாலே வேதம்‌ ப்ரமாண மென்பது போல்‌ நித்ய ஸர்வஜ்ஞனும்‌ ஆப்தனுமான நாராயணனே மஹா பாரதப்படி ஸாஷாத் வக்தா வானபடியால்‌ அதுவும்‌ ஆப்த குண மேன்மையாலும்‌, தோஷ மின்மையாலும்‌ ப்ரமாணமே ‘ யாகும்‌, ஆகையால்‌ அதில்‌ ஜீவாதிகளுக்குச்‌ சொன்ன உத்பத்தி வகையையும்‌ பஞ்ச கால ப்ரக்ரியாதிகளைப்‌ போல்‌ இசைய வேண்டு மென்றவாறு. இதற்கு உத்தரம்‌—கிரியையில்‌ விரோதமிருந்தால்‌ விகல்ப்பமாகக்‌ கொள்ளலாம்‌. தத்துவத்தில்‌ விகல்ப்பமாகாது. ஜீவாதி களின்‌ உத்பத்தியைச்‌ சொல்லும்‌ பாஞ்சராத்ர வாக்யங்களுக்கு அந்தப்‌ பொருளையே கொள்வதாகில்‌ அது ஸத் தர்க்கத்திற்கு இணங்காது, கர்ம வச்யர்‌ ஜீவர்‌ அநாதியா யிருப்ப ரென்றே தர்க்க ஸித்தம்‌. அதற்கிணங்கிய ஸ்வேத வாக்யங்களே தத்துவார்த்தமாகும்‌. ஆகையால்‌ பாஞ்சராத்ரத்தில்‌ ஆபாதமான அர்த்தம்‌ கொள்ளத் தக்கதென்று முதல்‌ இரண்டு ஸூத்ரங்களால்‌ சொன்னார்‌, தர்க்க விரோத மிருப்பதால்‌ பாஞ்சராத்ரப்‌ பொருளை இசைந்து வேதப்‌ பொருளை விடலாகாதென்றும்‌ தீர்ந்தது. ஆனால்‌ பாஞ்சராத்ரம்‌ அப்ரமாணம்தான்‌ ; வேத விரோதமுள்ள விடத்தில்‌ மற்ற ஸ்ம்ருதிகளுக்கு அப்ராமாண்யம்‌ சொல்வது போலாகுமென்று நினைக்கலாகா தென்று மூன்றாவது ஸூத்ரத்தால்‌ உண்மைப் பொருளைக்‌ கூறுகிறார்‌. விஜ்ஞானமாவது பரப்ரஹ்மம்‌. அதன்‌ ஆதி பாவமாவது ஆதியான ஆவிர்பாவம்‌. அதாவது வ்யூஹாவிர்பாவம்‌. அதற்குப்‌ பிறகு தானே விபவம்‌ ஹார்த்தம்‌ அர்ச்சை என்ற ருபங்கள்‌, இப்படி முதலாவிர்பாவங்களான ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்த வ்யூஹங்கள்‌ பாஞ்சராத்ர ப்ரஸித்தமானவை. மஹா பாரதத்திலும்‌ இது விசதம்‌. அது பொருளான போது பாஞ்சராத்ர வாக்யத்திற்கு நிராகரண மில்லை. அப்ராமாண்யத்திற்கு இடமில்லை, வேத விரோதமும்‌ தர்க்க விரோதமும்‌ வருமென்பதற்காகவே இவ்வாறு பொருள்‌ கூறுகிறோமென்‌று நினைக்க வேண்டா, பாஞ்ச ராத்ரத்திலேயே இதற்கு விப்ரதிஷேதமுள்ளது. ஜீவன்‌ அநாதி என்று சொல்லப் பட்டிருக்‌கிறது. அதனால்‌ இதற்கு வ்யூஹாவதாரமே பொருள்‌. எல்லா ஜீவர்களும்‌ அநாதி யானாலும்‌ ஸங்கர்‌ஷணன்‌ என்ற ஒரு ஜீவன் மட்டும்‌ உண்டாகட்டுமே. ப்ரத்யும்னனென்கிற ஒரு மனது கர்த்தாவினிடம்‌ உண்டாகட்டும் . அநிருத்தமென்று ஒருவித அஹங்காரம்‌ மனத்தினின்‌ று பிறக்கட்டுமே யென்னலுமாகாது- எல்லா ஜீவ மந அஹங்காரங்களுக்கும்‌ வ்யூஹங்களை அபிமானிகளாக பாஞ்சராத்ரம் போல்‌ மஹா பாரதமும்‌ விளக்கி யிருப்பதால்‌ அதே பொருள்‌ இவ் வாக்யங்களுக்கு ஸ்பஷ்டமா யிருக்க வேறு பொருள்‌ கல்பிக்கலாகாது. அந்த பாரத வாக்யங்களை நமது பாரமார்த்த பூஷண க்ரந்தத்தில்‌ காண்க, ஆக பூர்வாதி கரண வைரூப்யமும்‌ ஸூத்ரங்களிலில்லை. இவ்வளவு கூற வியலுமானாலும்‌ ஜைமிநி மீமாம்ஸையை யநுஸரித்து உத்ஸர்காபவாத விஷயங்களைச்‌ சொல்வதே தகுமென்று ஸ்ரீபாஷ்யகாரர்‌ அப்ராமண்ய பூர்வ பக்ஷமும் ப்ராமாண்யம்‌ ஸித்தாந்தமுமாகவே ஸூத்ரப்‌ பொருள்‌ இசைந்தருளினார்‌. மூன்றாவது ஸூத்ரத்திற்குப்‌ பல பொருள்‌ கூடுமாயிருக்க சாங்கர பாஷ்யப்‌ பொருள்‌ தகாதென்று ஆகம ப்ராமாண்யத்தில்‌ காண்க, இவ்வாறு இவ்வதிகரண ஸ்த்திதி. இப்படி தர்க்க பாதம்‌ முற்றும்‌.

[யாருடைய ஷஷ்ட் யப்த பூர்த்திக்காக இம் மலர்‌ வெளியிடப்படுகிறதோ அத்த . வித்வத் வரிஷ்டரான ஸ்ரீ உ.வே. வேளுக்குடி. வரதாசாரியருக்கு எல்லா விசேஷார்த்தங்‌களும்‌ எழுதப்பட வேண்டுமென்கிற ஆஸ்த்தையுளதே: தமிழில்‌ எழுதுவதானாலும்‌ பார்க்கிறவர்கள்‌ எல்லோரும்‌ எல்லாம்‌ எளிதில்‌ தெரிந்து கொள்வரென்ன வொண்ணாது. 16 பண்டிதர்கள்‌ எழுத வேண்டி விருப்பதசல்‌ இதே மிகவும்‌ பெரிதாகும்‌ என்று ஒருவிதம்‌ சுருக்கிச்‌ சொன்னோம்‌. உபய வேதாந்த பஞ்சராத்ர மூலமான விசிஷ்டாத்வைத ஸித்தாந்தம்‌ போல்‌ அதற்கு ப்ரவர்த்தகரான ஸ்ரீமான்‌ நம்‌ வரதாசார்யரும்‌ நீடூழி வாழ்க.]

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ.வே. வித்வான்‌ அபிநவ தேசிக உத்தமூர்‌ தி. வீர ராகவாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய இரண்டாம் அத்யாயம் – முதல் பாத ஸாரம்- ஸ்ரீ ௨. வே. வித்வான்‌ திருக்கள்ளம்‌ நரஸிம்ஹ ராகவாசார்ய ஸ்வாமிகள்–

September 27, 2026

சமன்வயாத்தியாயம்‌ என்கிற முதல்‌ அத்தியாயத்தில்‌, ஸகல ஜகத் காரணம்‌ பர ப்ரஹ்மம்‌ என்பது நிரூபிக்கப் பெற்றது, அவிரோதாத்யாயம்‌ என்ற இந்த இரண்டாம்‌ அத்தியாயத்தில்‌ கீழே கூறிய ஜகத் காரணத்வத்தை எவ் விதத்தாலும்‌ அசைக்க முடியாது என்பது தெனிவிக்கப் பெறுகிறது -மஹா மேதாவிகளாய்‌ இருப்பவர்களுக்கு முதல்‌ அத்தியாயத்தினாலேயே, அவிசால்யமான தெளிவு ஏற்பட்டுவிடும்‌. மந்த மதிகளாய்‌ இருப்பவர்களுக்கு ஹேது வாதிகளால்‌ பலப்ரகாரமான கலக்கங்கள் ஏற்படலாம் -அந்தக் கலக்கங்களை விலக்கி அவர்களுக்கும் தெளிவு பிறப்பிக்கைக்காகவே பரம காருணிகரான ஸூத்ரகாரர் இரண்டாம் அத்தியாயத்தை அருளுகிறார் –தான்‌ நாட்டிய பந்தக் காலை, தானே அசைத்து அசைத்துப்‌ பார்த்து அது அசையாமல்‌ இருப்பவதற்கான உபகரணங்களை யிட்டு அதை அசையாமல்‌ இருக்கும்படி. செய்வது போல் ஸூத்திரகாரரும் பல ப்ராகாரமான ஆஷேபங்களைக்‌ கிளப்பிக் கொண்டு அவற்றை யெல்லால்‌ நிராகரித்து, கீழே கூறிய அர்த்தத்தை உறுதிப் படுத்துகிறார்‌. ஸதூணா காத க்ரமேண ஸதிரயதி கதிதம்‌ ப்ரஹ்மண: காரணத்வம்‌” என்கிறது அதிகரண சாராவளி –

முதல்‌ அத்தியாயத்தின்‌ முடிவில்‌, ஸாங்க்யம்‌, யோகம்‌ இரண்டுமே நிரஸ்தங்கள்‌. இப்பொழுது முதலில்‌ ஸாங்க்யன் ஸ்ம்ருதி விரோதத்தைக்‌ கூறி, அதாவது வேதாந்தம்‌, ஜகத்துக்கு எல்லாம் ப்ரஹ்ம காரணம்‌ என்று கூறுகிறது என்பது கபில ஸ்ம்ருதி விருத்த மாகையாலே அவ்விதம்‌ பொருள்‌ கொள்ளக் கூடாது என்று ஆஷேபிக்கிறான்‌. பிறகு யோக மதஸ்தன் என்பது அதிகரண ஸங்கதி-ஸ்ங்ருத்யாதிகை: அக்ஷதி:–விபரீத ஸ்ம்ருதிகளாலும்‌ விபரீத ஸ்ம்ருதிகளுக்கு அநு குணமான விபரீத யுக்திகளாலும்‌, கீழே கூறிய ப்ரஹ்மைக காரண கத்வத்துக்கு க்ஷதி: அதாவது ஹாநி கிடையாது ‘* என்கிறது அதிகரண ஸாராவளி-ஸ்ம்ருதி பாதத்தின்‌ ஸாரார்த்தத்தைக்‌ குறிக்கும் சொல்‌ இது-வேதத்தில்‌ கூறியிருக்கும்‌ அர்த்தத்துக்கு விருத்தமாகப்‌ பேசும்‌ ஸ்ம்ருதி அநாதரணீயை என்றன்றோ பூர்வ மீமாம்ஸையில்‌ நிச்சயித் திருக்கிறது. இவ்வித மிருக்க, ஸ்ம்ருத யுக்தமான அர்த்தத்துக்கு விரோதம்‌ வருகிறபடியால்‌ வேதத்திற்கு வேறு விதமாகப்‌ பொருள்‌ கூற வேண்டும்‌ என்பது எவ்விதம்‌ ஸங்கதமாகும்‌ என்று கேட்கலாம் –

எந்த வேத பாகத்தின்‌ அர்த்தம்‌ ஸ்பஷ்டமாக உள்ளதோ அதற்கு ஸ்ம்ருதி, ந்யாயம்‌ இவற்றின்‌ அபேக்ஷை கிடையாது. பொருள்‌ ஸ்பஷ்டமாக விளங்காத வேத பாகத்தின்‌ பொருளை நிர்ணமிப்பதற்கு அவை தேவைப்படுகின்றன, அவற்றை அநுஸரித்துத் தான்‌ அந்த வேத பாகத்துக்கு அர்த்த நிர்ணயம்‌ செய்ய வேண்டும்‌* கம்பீர நாநா ச்ருதிசிகர பரிச்சேத்ய துர்போததாயாம்‌ ஆப்தோக்த்யா தர்க த:ச க்ஷமம்‌ அநுஸரணம்‌ ” என்கிறது அதிகரண ஸாராவளி *அஸமர்த்தர்களால்‌ எளிதில்‌ பொருள்‌ கொள்ள முடியாதபடி ஆழ்ந்த பொருளைக்‌ கொண்டதான பற்பல வேதாந்த வாகயங்களால்‌ ப்ரஹ்ம ஸ்வரூபம்‌ முதலியவற்றின நிர்ணயம்‌ செய்ய முடியாத நிலையில்‌ ஆப்தர் களான கபிலர் முதலானோாரின் ஸ்ம்ருதிகளைக் கொண்டும் தர்க்கத்தைக் கொண்டும் , அர்தத நிர்ணயம செய்வது தான் யுக்தம்‌ * என்பது அநத ஸ்லோகத்தின்‌ கருத்து.–

(ஸூத்ரம் ) ஸ்ம்ருத்யநவகாச தோஷ ப்ரஸங்க, இதி சேத்‌ ந , அந்ய ஸ்ம்ருத்யநவகாச தோஷ ப்ரஸங்காத்‌, (2-1-1)-சிதசித்விலஷணமான ப்ரஹ்மம்‌ ஜகத் காரணம்‌ என்றால்‌ கபில ஸ்ம்ருதிக்கு அவகாச மின்றிப்‌ போம்‌. ஆகையால்‌ அதற்கு அனு குணமாக வேதாந்தங்களுக்குப்‌ பொருள்‌ கூறுவது தான்‌ யுக்தம என்பது பூர்வ பஷம்‌. இவ் விதம்‌ கொண்டால்‌, மநு முதலிய பல மஹரிஷிகள்‌ அருளி யிருக்கும்‌ பற்பல ஸ்ம்ருதிகளுக்கு இடமின்றிப்‌ போகுமாகையால்‌ அவற்றுக்கு ஏற்ப வேதாந்தங்களுக்குப்‌ பொருள்‌ கொள்வது தான்‌ ஸமீசீநம்‌ என்பது ஸிததாந்தம்‌-கபில ஸ்ம்ருதி, ப்ரதானமே–அதாவது மூல ப்ரக்ருதியே ஜகத் காரணம்‌ என்கிறது. மந் வாதி ஸ்ம்ருதிகள்‌ பர ப்ரஹ்மமே ஜகத் காரணம்‌ என்கின்றன, உப ப்ருஹ்மணம்‌ என்பது வேதத்தில்‌ புலப்படும்‌ அர்த்தத்தைத் தெளிவிப்பது, வேதத்தை அனுஸரித்த ஸ்ம்ருதிகளால்‌ அது முடியுமே தவிர ந்யாயானுக்ருஹீத வேத விருத்தார்த்த போதகமான ஸ்ம்ருதியால்‌ அது சக்யமன்‌று-மநு, “*ஆஸீதிதம்‌ தமோபூதம்‌’? என்று தொடங்கிப்‌ பல ஸ்லோகங்களால்‌, **பர ப்ரஹ்மமே ஜகத் காரணம்‌ ‘” என்பதைத்‌ தெளிவித்திருக்கிறார்‌. பகவத்கீதை, மஹா பாரதம்‌, ஸ்ரீ விஷ்ணு புராணம்‌ முதலியவற்றிலும்‌ ஸ்ரீமந் நாராயணனே ஜகத் காரணம்‌ என்பது உறுதி செய்யப் பெற்றிருக்கிறது-மந்வாதி ஸ்ம்ருதிகள்‌, வேதத்தின்‌ பூர்வ பாகமாகிற கர்ம காண்டத்தை விவரணம்‌ செய்வதற்காகவே ஏற்பட்டன வாகையால்‌ அவைகள்‌ ஸாவகாசங்கள்‌. ஆகையால்‌ அவற்‌றைக்‌ கொண்டு வேதாந்தத்தின்‌ அர்த்தத்தை நிர்ணயிப்பது உசிதமன்று. வேதாந்தர்த்‌தத்தை விசதீகரிப்பதற்காகவே அமைந்ததான கபில ஸ்ம்ருதியைக்‌ கொண்டு தான்‌ வேதாந்தார்த்தத்தைத்‌ தெளிய வேண்டும்‌ எனபதும்‌ யுக்தமன்று. மந்வாதி ஸ்ம்ருதிகள்‌, கர்மங்களைப்‌ பரம புருஷனின்‌ ஆராதனமாகவே கூறுகின்றன. ஆராத்யனா ன பரம புருஷனை பரதி பாதிப்பதில அவற்றுக்கு நோக்கில்லை என்றால்‌ பரம புருஷாராதனங்களான தர்மங்ளை அவை எவ்விதம்‌ விவரிக்க முடியும்‌ ? அஸ்திரமான தர்மங்கள்‌, காலாந்தர – பாவியான பலன்களுக்கு பகவத பரஸாதத்தின்‌ மூலமே காரணமாகின்றன என்பதன்றோ அவர்களுடைய ஸித்தாந்தம்‌. யத; ப்ரவ்ருத்தி! …… ஸ்வ கர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ। என்கிற பகவத்‌ கீதா ஸ்லோகமும்‌ உற்று நோக்கத் தக்கது –

ரிஷிம்‌ ப்ரஸூதம்‌ கபிலம்‌ ‘? என்று வேதத்தில்‌ பரமாப்த தமராகக்‌ கூறப் பெறும்‌ கபில முனிவரின்‌ ஸ்ம்ருதியைக்‌ கொண்டு தான் வேதாந்தார்த்தத்தைத்‌ தெளிவது யுக்தம்‌ என் தும்‌ உசிதமன்று. இங்ஙனமாகில்‌. அதிசயிதமான ஜ்ஞாநம்‌ பெற்றவர்களுக்‌ கெல்லாம்‌ உதாஹரண புருஷராக ஸ்ருதி, ஸ்ம்ருதிகளில்‌ ப்ரஸித்தரான ப்ருஹஸ்பதி, இயற்றிய லோகாயதத்தைக் (சார்வாக மதம்‌) கொண்டு வேதாந்தத்தின்‌ பொருளை நிர்ணயிக்க வேண்டிவரும் –

கபிலர்‌, யோக மாஹாத்ம்யத்தால்‌ தத்துவங்களை உள்ளபடி அறிந்தவர்‌. ஆகையால்‌ அவருடைய ஸ்ம்ருதியைக்‌ கொண்டு தான் வேதாந்தார்த்த நிர்ணயம்‌ செய்ய வேண்டும்‌ என்ற ஆஷேபத்துக்கு ஸமாதாநம்‌ கூறுகிறது-இதரேஷாம்‌ சாநுபலப்தே: “” என்ற ஸூத்ரம்‌–மந் வாதிகளும்‌ பரம யோகிகள்‌-யத்வை கிஞ்சந மநுவதத்‌ தத் பேஷஜம்‌ “‘ என்ற வேதம்‌ மனுவின்‌ வாக்கை ஸம்ஸாரமாகிற வியாதிக்கு மருந்தாகக்‌ கூறுகிறது. இவ்விதம்‌ மிக ப்ரஸித்தர்களான வர்களுக்குக்‌ கபிலர்‌ கூறிய ப்ரகாரம்‌ தத்‌வங்கள்‌ புலப்படவிலலை யாகையால்‌ பல மஹநீயர்களான யோகிகள்‌ கூறின ஸ்ம்ருதிகளுக்கு விருத்தை யாகையால்‌ கபில ஸ்ம்ருதி அநாதரணீயை-

யோக ப்ரத்யுக்த் யதிகரணம்‌ –ஏதேக யோக; ப்ரத்யுக்த:-கபில ஸ்ம்ருதி ப்ராந்தி பரிகல்பிதையானாலும்‌, வேதாந்த ப்ரவசனத்தில்‌ அதிக்ருதரான ஹிரண்ய கர்பன்‌ (சதுர்முகன்‌) இயற்றிய யோக ஸ்ம்ருதியை ப்ராந்தி பரிகல்பிதை என்று கூற முடியாதாகையால்‌ அதைக் கொண்டு வேதாந்தத்தின்‌ அர்த்தத்தை நிர்ணயம்‌ செய்யலாமே * என்ற ஆசங்கையைப்‌ பரிஹப்பதற்காக அமைந்தது இந்த அதிகரணம்‌, ஸாங்க்ய ஸ்ம்ருதி நிராகரணத்தால்‌ யோக ஸ்ம்ருதியும்‌ நிராகரிக்கப் பெற்றது என்பது ஸூத்ரத்தின்‌ பொருள்‌-கபில ஸ்‌ம்ருதி போலவே யோக ஸ்ம்ருதியும்‌ அதி துர்பலையாக இருந்தால்‌ அந்த அதிகரணத்தாலேயே இதுவும்‌ நிராகரிக்கப்‌ பெற்று விட்டதே. இதற்காக, ந்யாயாதிதேசம்‌ செய்யக் கூடிய தனி அதிகரணம்‌ வேண்டாமே என்று நினைக்க வேண்டாம்‌. இங்கு அதிகமான ஆசங்கை உள்ளது. அதற்காகவே ந்யாயாதிதேசம்‌ செய்யப் பெறுகிறது-யோக ஸ்ம்ருதி, ஈஸ்வரன்‌ உளன்‌ என்கிறது, வேதாந்தம்‌, யோகத்தை மோத ஸாதநமாகக்‌ கூறுவது போல்‌ இதுவும்‌ கூறுகிறது, யோக ஸ்ம்ருதியை இயற்றியவரான ஹிரண்ய கர்பரோ ஸர்வ வேதாந்த ப்ரவர்த்தகராகக்‌ கூறப் பெற்றிருக்கிறார்‌. ‘ அவர்‌ பகவா னிடத்திலேயே வேதோபதேசம்‌ பெற்றவர்‌. ஆகையால்‌ இவ்வளவு விசேஷங்கள்‌ அமைந்த யோக ஸ்ம்ருதியை ஸாங்க்ய ஸ்ம்ருதியைப்‌ போல்‌ ஸூலபமாக உதறித் தள்ளி விட முடியாது என்பது தான்‌ அதிகமான ஆசங்கை-

” யோக ஸ்ம்ருதி, அப்ரஹ்மாத்மகமான ப்ரதானத்தைக்‌ காரணமாகக்‌ கூறுகிறது. (ப்ரதானம்‌ ப்ரஹ்ம சரீரமன்று என்பது அதன்‌ கொள்கை) பகவானை நிமித்த காரணமாக மாத்திரம்‌ அது கூறுகிறது. த்யானிக்கப் பெறும்‌ ஜீவனை பகவானுக்குச்‌ சரீரமாக அங்கீ கரிக்க வில்லை. த்யானிக்கப் பெறும்‌ பகவானுக்கும்‌ ஜகதுபாதாந காரணத்வம்‌ முதலிய குணங்களை ஏற்க வில்லை, யோக ஸ்ம்ருதியை இயற்றிய சதுர்முகர்‌ ஜீவர்களில்‌ சேர்ந்தவர்‌ அவர்‌ சிற் சில ஸமயங்களில்‌ ரஜோ குணத்துக்கும்‌ தமோ குணத்துக்கும்‌ அடிமை யாகிறார்‌. வேதாபஹாரம்‌ முதலிய பற்பல துன்பங்களை அனுபவித்தவர்‌ அவர்‌. ஆகையால்‌, அவர்‌ இயற்றிய, ரஜஸ்‌ தமோ மூலமான புராணங்கள்‌ போலே ப்ராந்தி மூலையான யோக ஸ்ம்ருதியும்‌ ஏற்கத் தக்கதன்‌று என்பது பரிஹாரம் –

3-விலக்ஷணத்வாதிகரணம்‌- மந்வாதி ஸ்ம்ருதிகள்‌ தர்க்க விருத்தங்கள்‌, அவற்றை இயற்றியவர்கள்‌ பலராக இருந்தாலும்‌ அவை பயனற்றன. நூறு குருடர்களின்‌ பேச்சை விட பார்வை யுள்ள ஒருவனின்‌ பேச்சல்லவா நமக்கு ப்ரமாணம்‌. ஆகையால்‌ தர்க்கத்துக்குப்‌ பொருந்திய, கபில ஸ்ம்ருதி யைக்‌ கொண்டு வேதாந்தார்த்த நிர்ணயம்‌ செய்வது தான்‌ உசிதம்‌ என்ற ஆக்ஷேபத்தை நிராகரிப்பதற்காக அவதரிததது இந்த அதிகரணம்‌.
(ஸூ) ந விலஷணத்வாதஸ்ய ததாத்வம்‌ ச சப்தாத்‌ –இது பூர்வபக்ஷ ஸூத்ரம்‌.
அஸ்ய--ஸத்துவம்‌ முதலிப மூன்று குண மயமாயும்‌, சேதனனுடன்‌ சேர்ந்ததாயும்‌ இருக்கும்‌ இநத அசேதந ப்ரபஞ்சத்துக்கு, விலஷஷணத்‌வாத்‌-ப்ரஹ்ம விலக்ஷணத்வாத்-
ந ப்ரஹ்‌மோபாதாகநகத்வம்‌ ந ஸம்‌பவதி. இந்த ஜகததுக்கு பர ப்ரஹ்மம்‌ உபாதாந காரணம்‌ என்பது ஸங்கதமாகாது. ததாத்வம்‌-ஜகத்‌ ப்ரஹ்மவிலஷணம்‌ என்பது, சப்தாச் ச..ச்ருதியாலும்‌ ப்ரத்யஷம் முதலிய மற்ற ப்ரமாணங்களாலும்‌ அறியப் பெறுகிறது என்பது ஸூத்ரார்த்தம்‌-கார்ய (உபாதாந ) காரணங்களுக்கு ஸாஜாத்யம்‌ இருக்க வேண்டும்‌ என்பது வ்யாப்தி. மண்ணின்‌ கார்யமான பானை மண்ணாகவே இருக்கிறது. ஸ்வர்ணத்தின்‌ கார்யமான வளை முதலியன ஸ்வர்ணமாகவே இருக்கின்றன. சிதசித்ரூபமான ப்ரபஞ்சத்துக்கு ப்ரஹ்ம ஸாஜாத்யம்‌ இல்லையே. சேதனன்‌ அல்பஜ்ஞனாகவும்‌, துக்கியாகவும்‌ இருக்கிறான்‌. அசேதநம்‌ ஜடமாயும்‌ விகாரமடையக்‌ கூடியதாகவும்‌ இருக்கிறது. இது ப்ரத்யக்ஷ ஸித்தம்‌, நீங்கள்‌ கூறுகிறபடி பர ப்ரஹ்மமோ . ஸர்வ ஜ்ஞமாகவும்‌, துக்க ஸம்பந்தமே அற்றதாகவும்‌ ஜ்ஞாந ஸ்வரூபமாயும்‌, விகார மற்றதாயும்‌ இருக்கிறது–* விஜ்ஞாநம்‌ சாவிஜ்ஞாநம் ச ‘, ஜ்ஞா ஜ்ஜெள த்வெள அஜெள ஈஸ நீசவ் ‘ “இத்யாதி ச்ருதிகள்‌ ப்ரபஞ்சத்துக்கும்‌ பகவானுக்கும்‌ உள்ள வைலக்ஷண்யத்தை பறை சாற்றுகின்றன. ஆகையால்‌ ஸாங்க்ய ஸ்ம்ருதியை அநுஸரித்து, ப்ரபஞ்ச ஸஜாதீயமான ப்ரதானமே உபாதாந காரணம்‌ என்பது தான்‌ உசிதம்‌.

ஆபோவா அகாமயந்த -ஜலங்கள்‌ ஸங்கல்பித்தன, தம் ப்ருதிவ்யப்ரவீத்‌ – அவளைப்‌ பார்த்து பூமி கூறியது, இத்யாதி வாக்யங்களை ஆராய்ந்தால்‌ அசேதநங்களுக்கும்‌ அறிவு உண்டு என்று தோற்றுகிறதே. ஆகையால்‌ அறிவுள்ளதான சேதநாசேதநாத்‌ மகமான ப்ரபஞ்சத்துக்கு ப்ரஹ்ம ஸாஜாத்யம்‌ ஸம்பவிக்கலாமே என்ற சங்கைக்குப்‌ பதில்‌ கூறுகிறது அடுத்த ஸூத்ரம்‌,
(ஸூ) அபிமாநி வ்யபதேசஸ் து விசேஷா நுகதிப்யாம்‌ –இதுவும்‌ பூர்வபக்ஷ ஸூத்ரம்‌.–இங்குள்ள *து’ என்பது சங்கையை நிரஸிக்கிறது. ஜலங்கள்‌ ஸங்கல்பித்தன. பூமி கூறிற்று, என்ற இடங்களில்‌ ஆப, ப்ருதிவீ, என்ற சப்தங்களால்‌ ஜலத்துக்கும்‌, பூமிக்கும்‌ அபிமானிகளான தேவதைகளே -குறிப்பிடப் பெறுகின்றனர்‌. ஜலம்‌ ஸங்கல்‌ பித்தது என்றால்‌ ஜலாபிமானி தேவதை ஸங்கல்பித்தது என்று பொருள்‌. இவ் விதமே மேலும்‌ கண்டு கொள்ள வேண்டும்‌.
விசேஷாநுகதிப்யாம்‌, விசேஷ: விசேஷணம்‌. அநுகதி: அநுப்ரவேச: *ஹதந் நாஹம்‌ இமா: திஸ்ரோ தேவதா; *’ என்பதால்‌, தேவதா என்ற விசேஷணம்‌– அடைமொழி ஜலாதிகளுக்குக்‌ கொடுக்கப்‌ பெற்றிருப்பதால்‌ அவைகள்‌ தேவதைகள்‌ என்று புலப்படு கின்றன. – அக்னி: வாக் பூத்வா முகம்‌ ப்ராவிரத்‌…”‘ என்ற ச்ருதி, அக்னி தேவதை வாக்குக்கு அபிமானி தேவதையாகி முகத்தில்‌ ப்ரவேசித்திருக்கிறது என்றெல்லாம்‌ விவரித்‌திருக்கிறபடியால்‌ அசேதனங்களுக்கு தேவதைகள்‌ அபிமானிகளாக இருக்கின்றனர்‌ என்பது புலனாகிறது. ஆகையால்‌ அசேதனங்களான பூமி முதலியவற்றுக்கு அறிவில்லாமையால்‌ அறிவுள்ள பாஹ்மத்தின்‌ ஸாஜாத்யம்‌ அவற்றுக்கு ஒருகாலும்‌ ஸம்பவிக்காது. ஆதலால்‌ ப்ரபஞ்ச ஸஜாதீயமான ப்ரதானமே உபாதாந காரணம்‌ என்பது தான்‌ தர்க்கத்‌துக்கு அநுகுணம்‌ என்பது ஸாங்க்யனின்‌ பூர்வபக்ஷம்‌.

(ஸூ ) *த்ருச்யதேது”–இது ஸித்தாந்த ஸூத்ரம்‌. *து’ சப்தம்‌ பூர்வ பக்ஷந்தை நிரஸிக்கிறது. தன்னை விட விலக்ஷணமான ஜகத்துக்கு ப்ரஹ்மம்‌ உபாதான காரணமாக முடியாது என்பது அஸங்கதம்‌. விலக்ஷணமான பதார்த்தங்களுக்கும்‌ கார்ய காரண பாவம்‌ உலகில்‌ காணப் பெறுகிறதே. மாஷிகம்‌ முதலியவற்றிலிருந்து புழு பூச்சி முதலியன உண்டாகின்றன. கோமயத்திலிருந்து தேள்‌ முதலியவை உண்டாகின்றன-ஏதாவது ஒரு அம்சத்தில்‌ ஸாதர்ம்யம்‌ இருந்தால்‌ போதும்‌ என்பது ஸங்கதமாகாது. அப்போது எதிலிருந்து வேண்டுமானாலும்‌ எதுவும்‌ உண்டாக வேண்டி வரும்‌. இது மற்ற வற்றை விட விலக்ஷணமானது என்பதைத்‌ தெரிவிக்கும்‌ அஸாதாரணமான ஆகாரத்தின்‌ தொடர்ச்சியையே ஸாஜாத்யமாகக்‌ கூற வேணடும்‌. மற்றவற்றை விட மஷிம்‌ விலஷணமானது. கோமயம்‌ விலக்ஷ்ணமானது என்பதைத்‌ தெரிவிக்கும்‌ அஸாதாரணமான ஆகாரம்‌, புழு, தேள்‌, முதலியவற்றில்‌ புலப்படவில்லையே. மண்ணால்‌ ஆன பானையில்‌ மண்‌ புலப்படுகிறது. தங்கத்தாலான வளையலில்‌ தங்கம்‌ தெரிகிறது. தேளில்‌, சாணம்‌ தெரிய வில்லையே –ஆகையால்‌ விஜாதீயங்களுக்கும்‌ கார்ய காரண பாவம்‌ இருக்கலாம்–

(ஸூ )அஸதிதிசேத்‌ ந ப்ரதிஷேத மாத்ரத்வாத்‌-கார்ய காரணங்களுக்கு வைலக்ஷண்யம்‌ இருக்கலாம்‌ என்றால்‌ கார்யமான ஜகத்தை விட விலக்ஷணமான ப்ரஹ்மத்தில்‌ ஜகத்‌ ஏற்கனவே இல்லை என்றாகி விடும்‌. அப்படி யானால்‌ அஸத் கார்ய வாதம்‌ தலை தூக்கும்‌. ப்ரஹ்மத்தில்‌ ஏற்கனவே இல்லாத உலகன்றோ புதியதாக உண்டாகிறது. இப்படியானால்‌ * ஸர்வம்‌ கல்விதம்‌ ப்ரஹ்ம ” என்று எல்லாமே ப்ரஹ்மம் தான்‌ என்ற வ்யவஹாரம்‌ அஸங்கதமாகி விடும்‌ என்று சொல்வது தவறு. கார்ய காரணங்களுக்கு ஸாலக்ஷண்ய நியமம்‌ இல்லை. அதாவது கார்யத்தைக்‌ கண்டவுடன்‌ இது அதன்‌ கார்யம்‌ என்ற உணர்வு ஏற்படுவதற்கான அஸாதாரண அம்சத்தின்‌ அநுவ்ருத்தி அவச்யம்‌ அன்று என்று கூறப் பெற்றதே தவிர, கார்யம்‌ வேறு தரவ்யம்‌ ; காரணம்‌ வேறு த்ரவ்யம்‌ என்று கூறப் பெற வில்லை. காரணமான பாஹ்மம் தான்‌ விலக்ஷணமான ஜகத்தாக பரிணமிக்கிறது எனற கொள்கையை விட்டுவிடவில்லை. மக்ஷிகம்‌, புழு, சாணம்‌, தேள்‌, அங்கும்‌ ஸாஜாத்யம்‌ இல்லையே தவிர, த்ரவ்ய வேறுபாடில்லை என்பது உணரத் தக்கது.
(ஸூ) அபீதெள தத்வத் ப்ரஸங்காத்‌ அஸமஞ்ஜஸம்‌. இது பூர்வ பக்ஷ ஸூத்ரம்‌.–அபீதி:. ப்ரளயம்‌. இது ஸ்ருஷ்டிக்கும்‌ உபலக்ஷணம்‌. வேதாந்தங்கள்‌, ஸ்ருஷ்டியைக்‌ கூறும் போதெல்லாம்‌ ப்ரளயத்தைக்‌ கூறியே கூறுகின்றன. கார்யமான ஜகத்தும்‌, காரணமான ப்ரஹ்மமும்‌ ஒரே த்ரவ்யம்‌ என்றால்‌ கார்யமான ஜகத்துக்கு ப்ரஹ்மத்தில்‌ லயமும்‌, ப்ரஹ்மத்தினிடமிருந்து உத்பத்தியும்‌ கூறினதாகத்‌ தேறும்‌. இப்படியானால்‌ பானையில்‌ உள்ள தோஷங்கள்‌ மண்ணில்‌ உள்ளது போல்‌ உலகில்‌ உள்ள தோஷங்கள்‌ யாவும்‌ ப்ரஹ்மத்தினிடமே உள்ளனவாகும்‌. உலகிலுள்ள பரஸ்பரம்‌ விருத்தமான தர்மங்கள்‌ அனைத்தும்‌ ப்ரஹ்மத்தினிடமே ஸம்பவிக்க ப்ரஸங்கிக்கும்‌. ஆக வேதாந்தம்‌ அஸமஞ்ஸமாகும்‌.--உலகுக்கும்‌ ப்ரஹ்மத்துக்கும்‌ சரீராத்ம பாவ ஸம்பந்தத்தை வேதம்‌ கூறுகிறது. உலகம்‌-சரீரம்‌, பரமாத்மா-ஆத்மா, சரீரமான சேதநாசேதநங்களில்‌ உள்ள தோஷங்கள்‌ ப்ரஹ்மத்தில்‌ வாராது ”? ‘என்ற வாதமும்‌ ஸங்கதமாகாது. ஜகத்துக்கும்‌ ப்ரஹ்‌மத்துக்கும்‌ சரீராத்ம பாவ ஸம்பந்தமே வாராது. அப்படி வந்தாலும்‌ சரீர ஸம்பந்த ப்ரயுக்த தோஷங்கள்‌ ப்ரஹ்மத்தில்‌ ஸம்பவிக்க வேண்டி வரும்‌. கர்மத்தின்‌ பயனான ஸுக துக்கங்களை அனுபவிப்பதற்கு ஸாதநமான இந்த்ரியங்களுக்கு இருப்பிடமானதாயும்‌ ஐந்து வித அவஸ்தை யைப்‌ பெற்றிருக்கும்‌ ப்ராணனால்‌ தரிக்கப் பெறுவதாயும்‌ இருக்கும்‌ பூமி முதலிய ஐந்து பூதங்களின்‌ ஒருவிதமான அமைப்பே சரீரம்‌: ப்ரஹ்மமோ கர்ம ஸம்பந்தமற்றது ஆகையால்‌ அதற்கு கர்மாதீநமான ஸுக துக்கங்கள்‌ கிடையாது. அ பாணி பாத…… இத்யாதி வேத வாக்கியங்கள்‌ அவனுக்கு உடல்‌ இல்லை. இந்திரியங்கள்‌ இல்லை என்கின்றன. ஆக ப்ரஹ்மத்துக்கு சரீரம்‌ இல்லை என்று தேறிற்று, இப்படியானால்‌ உலகத்துக்கும்‌ ப்ரஹ்மத்துக்கும்‌ சரீராத்ம பாவ ஸம்பந்தத்தை எவ்விதம்‌ கூற முடியும்‌? என்பது பூர்வபக்ஷம்‌-

இதற்குப்‌ பதில்‌ கூறுகிறது அடுத்த ஸூத்ரம்‌. (ஸூ) நது த்ருஷ்டாந்த பாவாத்‌–ந -ப்ரஹ்மத்துக்கு அஜ்ஞானத்வாதிகள்‌ ப்ரஸங்கிக்காது. ஆகையால்‌ தேதாந்தங்‌ களுக்கு அஸாமஞ்ஜஸ்யமுமில்லை. *து! சப்தம்‌, அஜ்ஞானத்வாதி ப்ரஸங்கம்‌ அஸம்பாவிதம்‌ என்று காட்டுகிறது. ஒரே வஸ்துவுக்கு இரண்டு நிலை இருந்தால்‌ குண தோஷ வ்யவஸ்‌தைக்கு உதாஹரணம்‌ உள்ளது. சேதநாசேதநங்கள்‌ ப்ரஹ்மத்துக்கு சரீரம்‌. ஸங்கோச விகாஸங்கள்‌ விசேஷணங்‌களுக்கே தவிர விசேஷ்யமான பர ப்ரஹ்மத்துக்கன்று- சரீரத்தில்‌ , உள்ள தோஷங்கள்‌ ஆத்மாவில்‌ வாராது. ஆத்மாவில்‌ உள்ள குணங்களும்‌ சரீரத்தில்‌ வாராது. ஜீவன்‌, தேவனாயும்‌ மனிதனாயும்‌ பலவாறு பிறக்கிறான்‌ என்றால்‌ அந்தப் பிறவி சரீரத்துக்கே தவிர ஆத்மாவுககு இல்லையே. *பாலனாக இருக்கிறான்‌, யுவாவாக இருக்கிறான்‌ ” என்றவிடத்‌திலும்‌, பால்ய, யெளவநாதிகள்‌ சரீரத்துக்கே தவிர ஆத்மாவுக்கு இல்லை யன்றோ(ஸுூக்ஷ்ம சேதநா சேதந விசிஷ்ட ப்ரஹ்மம்‌ காரணம்‌. ஸ்தூல சேதநா சேதந விசிஷ்ட ப்ரஹ்மம்‌ கார்யம்‌ என்பது தான்‌ விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ஸாரம்‌) உலகம்‌, சரீரம்‌, ப்ரஹ்மம்‌, ஆத்மா என்பதை வேதாந்தங்கள்‌ பரக்கப்‌ பேசுகின்றன. ய: ப்ருதிவ்யாம்‌ திஷ்டந்‌…… ஆத்மநி திஷ்டந்‌ முதலான வேத வாக்யங்கள்‌ கவனத்துக்கு உரியன. கர்ம பலனை அனுபவிக்க ஏற்பட்டது சரீரம்‌ என்பது ஸங்கதமாகாது பூமி முதலியவற்றை பகவானுக்குச்‌ சரீரமாக வேதங்கள்‌ கூறுகின்றன. அவை பகவானுடைய கர்மபலாநுபவத்துககாக ஏற்பட்டன வல்லவே, பகவானுக்கு கர்மமே கிடையாதே. ஈச்வரன்‌, தன்‌ ஸங்கல்பத்தால்‌ ஏற்கும்‌ திருமேனியும்‌, கர்ம ஸம்பந்தம்‌ தொலைந்த முக்தர்கள்‌ ஏற்கும்‌ சரீரங்களும்‌ கர்ம பல போகார்த்தம்‌ ஏற்பட்டன வல்லவே, பஞ்சவ்ருத்தி ப்ராணாதீந தாரணம்‌ என்பதும்‌ ஸங்கதமாகாது. மரம்‌ முதலியவற்றில்‌ பஞ்சவ்ருத்தி ப்ராணன்‌ இல்லையே, இவ் விதமே மேலும்‌ பல தோஷங்கள்‌ கண்டு கொள்வது-மனித சரீரத்தின்‌ அமைப்பு ஒரு மாதிரியானது. இவர்களிலேயே ஆண்‌ சரீரத்தின்‌ அமைப்பு வேறு, பெண்‌ சரீரத்தின்‌ அமைப்பு வேறு, யானை சரீரம்‌ வேறு மாதிரி யானது. மரம்‌, செடி, கொடிகள்‌ இவை கூட, பகவானுக்குச்‌ சரீரம்‌ என்று வேதம்‌ கூறுகின்றது. இவை யாவற்றுக்கும்‌ பொருந்தக் கூடிய பொதுவான லக்ஷணம்‌–யஸ்ய சேதந ஸ்ய யத்‌ த்ரவ்யம்‌ ஸர்வாத்மநா ஸ்வார்த்தே நியந்தும்‌ தாரயிதும்‌ ச சக்யம்‌ தச் சேஷதைக ஸ்வரூபம்‌ ச தத்‌ தஸ்ய சரீரம்‌ ‘ என்பதே, எந்த சேதநனால்‌ ( அறிவுள்ளவனால்‌) எந்த த்ரவ்யம்‌. தன்‌ ப்ரயோஜனத்துக்காக செயல் படுத்தப்‌ பெறுவதற்கும்‌, தாங்குவதற்கும்‌ தகுதி பெற்று அவனுக்கு சேஷமாகவே உள்ளதோ அது அவனுக்கு சரீரம்‌, நம்‌ சரீரத்தை நாம்‌ நம்‌ பயனுக்காகவே செயல்படுத்துகிறோம்‌, தாங்குகிறோம்‌. நம்‌ சரீரம்‌ நமக்கு சேஷமாகவே உள்ளது. இதே போல்‌ சராசரமான ப்ரபஞ்சத்தை பகவான்‌ செயல்படுத்துகிறான்‌ . தாங்குகிறான்‌. இவற்றைத்‌ தன்‌ ப்ரயோஜனத்துக்காகவே செய்கிறான்‌. எல்லாம்‌ எப்‌பொழுதம்‌ அவனுக்கு சேஷமாகவே உள்ளன. ஆகையால்‌ உலகம்‌ சரீரம்‌, பகவான்‌ ஆத்மா என்ற ஸித்தாந்தத்துககு எவ் வித கொத்தையும்‌ ஸம்‌பவிக்காது. சில ஸமயம்‌ நம்‌ சரீரத்தை நாம்‌ செயல்படுதத முடியாமல்‌ போவது ரோகம்‌ முதலிய ப்ரதிபந்தங்களால்‌. பகவானுக்குச்‌ சரீரம்‌ இல்லை எனறு கூறும்‌ ப்ரமாணங்களுக்கு கர்மத்தால்‌ ஏற்படும்‌ சரீரம்‌ இல்லை எனறு கூறுவதிலேயே நோக்கு–

(ஸூ) ஸ்வ பக்ஷ தோஷாச்ச-ப்ரஹ்ம காரண வாதம்‌ தோஷமற்றது என்பதால்‌ மாத்திரம்‌ இது ஏற்கத் தக்கது-என்பதில்லை. ப்ரதான காரண வாதத்தில்‌ அனேகம்‌ தோஷங்கள்‌ நிறைந்திருப்பதாலும்‌ அதை விட்டு இதுவே ஏற்கத்தக்கது. ப்ரதாநம்‌ ஜகத் காரணம்‌ என்ற பக்ஷத்தில்‌, உலகமே செயல்படாத நிலை ஸம்பவிக்கும்‌. புருஷன்‌ நிர்விகாரன்‌. ஜ்ஞாந மாத்ர ஸ்வரூபன்‌. ப்ருக்ருதி ஸாந்நி த்யத்தால்‌ ப்ரக்ருதி தர்மங்களை தன்னிடமுள்ளதாகப் ப்ரமிக்கிறான்‌. இதன்‌ மூலம்‌ உலகம்‌ செயல்படுகிறது ” என்பது தான்‌ ஸாங்க்யமதம்‌. புருஷனுக்கு ப்ரக்ருதியின்‌ ஸாந் நித்யம்‌ என்பது என்ன என்பதைச்‌ சற்று ஆராய்வோம்‌. அது. ப்ரக்ருதியின்‌ ஸத்‌ பாவமேயா? அல்லது ப்ரக்ருதிபில்‌ ஏற்படும்‌ விகாரமா அல்லது புருஷனிடமுள்ள ஏதாவது விகாரமா? மூன்றாம் பக்ஷம்‌ அஸங்கதம்‌. புருஷனுக்கு விகாரத்தை அங்கீகரியாததால்‌. இரண்டாம்‌ பக்ஷமும்‌ ஸங்கதமன்று. அது அத்யாஸகார்யமாக ஏற்கப் பட்டிருக்கிறதே தவிர, அத்யாஸ (ப்ரம) காரணமாக வன்று, முதல்பக்ஷமும்‌ ஸங்கதமன்று. ப்ரக்ருதியின்‌ இருப்பே ஸாந்நித்யம்‌ என்றால்‌ முக்தனுக்கும்‌ அத்யாஸம்‌ ஸம்பவிக்க ப்ரஸங்கிக்கும்‌.
(ஸூ) தர்க்கா ப்ரதிஷ்டாநாபி.-கேவல யுக்தி நிலைத்து நிற்காதாகையாலும்‌ ப்ரதான காரண வாதம்‌ ஏற்கத் தக்க தன்று, வேத ப்ரமாணகமாகவும்‌, தர்க்காநுகுணமாகவும்‌ இருக்கும்‌ ப்ரஹ்ம காரணவாதமே ஏற்கத் தக்கது. பெளத்தர்‌, ஜைனர்‌, ஸாங்க்யர்‌ முதலானோர்‌ கூறும்‌ தர்க்கங்கள்‌ பரஸ்பரம்‌ விருத்தங்களாக இருப்பதால்‌ கேவல தர்க்கம்‌ நிலைக்காது என்பது நன்கு புலப்படுகிறது.

ஸூ) அந்யதாநுமேயம்‌ இதி சேத்‌ ஏவமபி அநிர்மோக்ஷ ப்ரஸங்க:** பெளத்தர்‌ முதலானோர்‌ இப்பொழுது கூறும்‌ யுக்திகளை யெல்லாம்‌ தூஷித்து தோஷங்கள்‌ எதுவுமே ஸம்பவிக்காதபடி ப்ரதான காரண வாதத்தை அனுமிக்‌கிறோம்‌ ** என்று கூறுவதும்‌ யுக்தமன்று. உன்னை விட தர்க்க குசலனான மேதாவி தேசாந்தர காலாந்தரங்களில்‌ ஸம்பவிக்க லாமாகையால்‌ அவனுடைய அத்யாஸ்சர்யமான யுக்திகளால்‌ உன் யுக்திகள்‌ நிர்மூலமாக்கப்படும்‌. ஆகையால்‌ கேவல தர்க்கம்‌ நிலைத்து நிற்காது என்ற தோஷத்திலிருந்து விடுதலை பெற முடியாது-இந்திரியங்களுக்குக்‌ கோசரமல்லாத விஷயத்தில்‌ வேதமாகிற ஸாஸ்திரத்தையே ப்ரமாணமாகக்‌ கொள்ள வேண்டும்‌. வேதார்த்தங்களைத்‌ தெளிவதற்குத்‌ தர்க்கத்தைப்‌ பயன் படுத்திக்‌ கொள்ள வேண்டும்–

சிஷ்டாபரிக்ரஹாதிகரணம்‌-(ஸூ ) ஏதேந சிஷ்டாபரிக்ரஹா அபி வ்யாக்யாதா:–ப்ரதாந காரணதாவாதியான ஸாங்க்யன்‌ ஒருவனுடைய தர்க்கம்‌ நிலைத்து நிற்காததாய்‌ அதனால்‌ வேதார்த்தத்தை அசைக்க முடியாது எனறாலும்‌, பரமாணு காரணதாவாதிகளான பலருடைய தர்க்கங்களால்‌ அதாவது பரமாணுவே ஜகத் காரணம் என்று ஸ்தாபிக்கக்‌ கூடிய யுக்திகளால்‌ ப்ரஹ்ம காரணதா வாதத்தை அசைத்து விடலாமே என்‌ ற ஆக்ஷேபத்தை நிராகரணம்‌ செய்வதற்காகவே இந்த அதிகரணம்‌ அமைந்தது –
ஏதேந -ஸாங்க்யமத- நிராஸநத்துக்கு ஹேதுவான; கேவல யுக்தி நிலைத்து நிற்காது என்ற தோஷத்தாலேயே, சிஷ்டாபரிக்ரஹா அபி. ஸிஷ்ட – அவசிஷ்டங்களான – அதாவது மற்றுமுள்ள , : அபரிக்ரஹா: : வேதேந அபரிக்ருஹீதா: – வேதங்களால்‌ ஏற்கப்படாத, அதாவது-வேதார்த்த விருத்தமாகப்‌ பொருள் கூறும்‌ அல்லது வேதத்தை ப்ரமாணமாக ஏற்காத ஸித்தாந்தங்கள்‌ என்றும்‌ கூறலாம்‌. ந பரிக்ருஹ்யதே வைதிகை; இத்ய பரிக்ரஹ- வைதிகர்கள்‌ ஏற்காத என்கிறது ஸ்ரீ சாரீரக சாஸ்த்ரார்த்த தீபிகை. சிஷ்டர்கள்‌ ஏற்காத என்று பொருள்‌ கூறுவது உசிதமனறு, அப்பொழுது ஸாங்க்யமதம்‌ சிஷ்டர்களால்‌ ஏற்கப்‌ பெற்றது என்று தேறும்‌. அது ஸங்கதமன்று. வ்யாக்யாதா; .நிரஸ்தங்கள்‌ என்று விளக்கப் பெற்றன. ஸம்வாதாத்‌ அக்ஷபாத க்ஷபணக கணபுக் பிக்ஷு பக்ஷேஷ் வணூகாம்‌ விச்வம் தத்‌ தேதுகம் ஸ்யாத்‌ இதி ம்ருது மதிபி: ஸ்வாவராஹ க்ரமோக்தி: | அந்யோந்ய வ்யாஹகார்த்த ஸ்தபுடிதகுஹ நா யுக்தி தோஷாபநுத்யை பாதித்ரய்யந்த ஸூர்ய: ப்ரதிமததி மிரஸ்தோம ருஷிம்பரி: ந:। என்ற அதிகரண ஸாராவளி ஸ்லோகம்‌, இந்த அதிகரணத்தின்‌ பூர்வ பக்ஷ ஸித்தாந் தங்களை மிகத்‌ தெளிவாகக்‌ காட்டுகிறது. . அஷபாதர்‌-கெளதமர்‌, அவரைச்‌ சார்ந்தவர்கள்‌ நையாயிகர்கள்‌, ஷபணர்கள்‌– ஜைனர்‌. கணபுக்‌-கணாதர்‌. பிக்ஷு-ருத்ரன்‌. இவர்களுடைய ஸித்தாந்தத்தில்‌ பரமாணுவையே ஜகத் காரணமாகக்‌ கூறுகிறபடியால்‌ உலகத்துக்குப்‌ பரமாணுத்வ காரணமாக இருக்கட்டுமே என்று மந்த மதிகள்‌ எதிர்க்கின்றனர்‌, நாய்களுக்கு பரஸ்பரம்‌ த்வேஷம்‌ இருந்தாலும்‌ காட்டுப்‌ பன்றியைக்‌ கண்டால்‌ எல்லாம்‌ ஒன்று சேர்ந்து அதன் மேல்‌ பாயும்‌. அதே போல்‌ இவர்களுககுள்‌ ஆயிரக்கணக்கான அபிப்ராய பேதம்‌ இருந்தாலும்‌ வேதாந்தி மேல்‌ பாயும் போது ஒன்று சேர்ந்து விடுகின்றனர்‌. பரஸ்பரம்‌ விருத்தமான அர்த்தங்களால்‌ மேடு பள்ளமான வஞ்சக யுக்தி யாகிற ராத்திரியை, இதர மதங்களாகிற இருளின ஸமூஹத்தை நிர்மூலமாக்கக் கூடிய வேதாந்த ஸூர்யன்‌ நிரஸிக்‌கக்‌ கூடியதாக விளங்குகிறது. எல்லா இடங்களிலும்‌ நிபிடமாகப்‌ பரவியிருக்கும்‌ இருட்டை, ஸூர்யன்‌ ஒருவனே அழிப்பது போல்‌ எல்லா விபரீத மதங்களையும்‌ வேதாந்த ஸித்தாந்தம்‌ அழித்து விடும என்று கருத்து.
இவர்களுக்குள்‌, பரமாணு ஸ்வரூப விஷயத்தில்‌ பல ப்ரகாரமான அபிப்ராய பேத முண்டு. சிலர்‌ சூன்யாத்மகம்‌ என்றனர்‌, சிலர்‌ அசூன்யாத்மகம்‌ என்கின்றனர்‌. சிலர்‌ ஜ்ஞாநாத்மகம்‌ என்கின்றனர்‌. சிலர்‌ அர்த்தாத்மகம்‌ என்றனர்‌. சிலர்‌ க்ஷணிகம்‌ என்‌கின்றனர்‌. சிலர்‌ நித்யம்‌ என்கின்றனர்‌. இவ் விதமே இவர்களுக்குள்‌ மேலும்‌ பல அபிப்பிராய பேதங்கள்‌ உள்ளன.

போக்த்ராபத்த்பகிகரணம்‌ (ஸூ) **போக்த்ராபத்தே: அவிபாகஸ் சேத்‌ ஸ்யால்லோகவத்‌ ‘*உலகம்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌. ‘ சரீரத்திலுள்ள தோஷங்கள்‌ ஆத்மாவுக்கு வராதது போல்‌ உலகிலுள்ள தோஷம்‌ பகவானித்தில ஒட்டாது என்று கீழ் கூறப் பெற்றது. சரீரத்தில்‌ உள்ள தோஷம்‌ ஜீவநிடத்தில்‌ ஒட்டாம்ல்‌ இருந்தாலும்‌ சரீர ஸம்பந்த ப்ரயுக்த ஊன ஸங்கடங்களை ஜீவன்‌ அநுபவிக்கிறானே. அதே போல்‌ பகவானுக்கும்‌ சரீர ஸம்பந்த ப்ரயுக்தமான தோஷங்கள்‌ வரத் தானே செய்யும்‌ என்ற ஸாங்க்யனுடைய சங்கைகளை நிரஸனம் செய்வதற்காக இந்த அதிகரணம்‌ அமைந்திருக்கிறது–

போக்திரிர்பத்தே:–ஸுக துக்க போக்திருத்வாபத்ரித்‌,-சரீர சம்பங்தத்தால்‌. ஸம்பவிக்கும்‌ ஸுக துக்காநுபவத்தக்கு ஆஸ்ரயிமாக வேண்டுமாகையால்‌, அவிபாகஸ்சேத்‌- ஜீவ பரமாத்மாக்களுக்கு ஸ்வபாவத்தில்‌ வேற்றுமை இன்மை ப்ரஸங்கிக்கும்‌. இது வரை ஆஷேப ப்ரகாரம்‌. “ஸ்யால் லோகவத்‌”” என்பது, ஸமாதானத்தைத்‌ தெரிவிக்கிறது-ஸுக துக்காநுபவத்துக்குக்‌ கர்மம்‌ காரணமே தவிர சரீர ஸம்பந்தமன்று என்பது **ஸம்போக ப்ராப்தி ரிதிசேந் ந வைசேஷ்யாத்‌ *” என்று ஸூத்ரத்தில்‌ தீர்மானிக்கப்‌ பெற்றிருக்கிறதே. அப்படி யிருக்க இந்த ஆக்ஷேபத்துக்கு அவகாசமே இல்லையே என்பது ஸங்கதமன்‌று-உபாஸநா நுக்ரா ஹார்த்தம்‌ ஸர்‌வேச்வரன்‌ உபாஸசகனுடைய ஹ்ருதயத்தில்‌ இருக்கிறான்‌. அவனுடைய சரீரத்தில்‌ இவன்‌ இருப்பதைக்‌ கொண்டு அவனுக்கு வரும்‌ ஸங்கடங்களெள்லாம்‌ இவனுக்கும்‌ வாட்டுமே என்று கூறுவது ஸங்கதமாகாது. ஸங்கடங்‌களுக்குக்‌ காரணம்‌ கர்மம்‌ என்பது அங்கே நிரூபிக்கப் பெற்றது. இப்பொழுது எழுந்துள்ள ஆக்ஷேபம்‌ என்ன வென்றால்‌ ? ஜீவனைப் போல்‌ பகவானும்‌ அந்தந்த சரீரத்துக்கு ஸ்வாமி யாகையால்‌ ஜீவனுக்கு வரும்‌ ஸங்கடங்கள்‌ இவனுக்கும்‌ வரட்டுமே என்பது தான்‌. ஒருவன்‌ மற்றவன்‌ வீட்டுக்கு ஏதோ கார்யத்தை உத்தேசித்துச்‌ சென்று அந்த வீட்டு யஜமானனுடன்‌ பேசிக் கொண்டிருந்தான்‌. அப்பொழுது அந்த வீட்டின்‌ ஸொந்தக் காரனுக்கு அந்த வீடு நிமித்தமாக சில ஸங்கடங்கள்‌ ஏற்பட்டன. அந்த ஸங்கடங்கள்‌ உடையவனுக்கு ஏற்படுமே தவிர, வேறு கார்யத்துக்காக. அங்கு தங்கி யிருப்பவனுக்கும்‌ ஏற்படாது. அதே போல்‌ பகவான்‌, சரீரத்தில்‌ தங்கி யிருப்பதால்‌ மாத்திரம்‌ சரீர ஸ்வாமியான ஜீவனைப்‌ போல்‌ அவனுக்கு சங்கடங்கள்‌ ஏற்படா என்பது தான்‌ கீழே கூறப் பெற்றது. இப்பொழுது செய்யப் பெறும்‌ ஆக்ஷேபம்‌ என்ன வென்றால்‌ ஜீவனைப் போல்‌ ‘பகவானும்‌ சரீரங்களுக்கு ஸ்வாமி யாகையால்‌ இவனுக்கும்‌ எல்லா ஸங்கடங்களும்‌ ஸம்பவிக்குமே-அப்பொழுது இருவருக்கும்‌ ஸ்வபாவத்தில்‌ வேற்றுமை யின்றிப்‌ போய் விடுமே என்பது தான்‌–ஸ்யாத்‌–ஜீவ யீச்வரர்களின்‌ ஸ்வபாவத்துக்கு விபாகம்‌ வேற்றுமை, நிலைத்தே நிற்கும்‌. ஜீவனுக்கு ஏற்படும்‌ ஸங்கடங்களுக்கெல்லாம்‌ கர்மம் தான்‌ காரணம்‌, சரீர ஸம்பந்த மாத்ரமன்‌று. சரீர ஸம்பந்தமுள்ள நித்ய முக்தர்களுக்கு துக்கானுபவம்‌ இல்லையே! சரீரம்‌ இருக்கிற வரை ஸங்கடங்கள்‌ ‘இருக்கும்‌ என்ற உபநிஷத்‌ வாக்யத்துக்கு கர்மத்‌தால்‌ ஏற்பட்ட சரீரத்தின்‌ ஸம்பந்தம்‌ உள்ள வரை என்று தான்‌ பொருள்‌. ஈச்வரனுக்குக்‌ கர்ம ஸம்பந்தம்‌ இல்லையே-அரசன்‌, மக்கள்‌ இவர்கள்‌ அனைவருமே சரீர ஸம்பந்த முள்ளவர்கள் தாம்‌. ஆனால்‌ அரசனின்‌ உத்தரவை மீறுகிற ப்ரஜைகள் தானே தண்டிக்கப் பெறுகின்றனர்‌. சரீர ஸம்பந்தம்‌ உள்ளவன்‌ என்பதால்‌ அரசனும்‌ தண்டிக்கப் பெறுகிறானா . அவனுடைய சாஸநம்‌ ப்ரஜைகளுக்கே தவிர அவனுக்கன்றே-பயங்கரமாயும்‌ அநர்த்தத்தை “விளைவிக்கக்‌ கூடியதாயும்‌, பாம்புகள்‌ கிரம்பியதாயும்‌ இருக்கும்‌ காட்டில்‌ வஸிக்கும்‌ அரசன்‌, எல்லா சங்கடங்களையும்‌ விலக்கும்‌ பரிகரங்களால்‌ ஸங்கடமே இல்லாமல்‌ எல்லா போகங்களையும்‌ அனுபவிப்பது போல்‌ ஸர்வேச்வரனும்‌, தன்னுடைய தடங்கலற்ற ஸங்கல்பத்தால்‌, எவ் வித தோஷமும்‌ கிட்டாதவனாய்‌ எல்லா உலகங்களையும் , ரஷிக்கிறான்‌. யாருமே அனுபவிக்க முடியாத போகங்களையும்‌ அனுபவிக்கிறான்‌.

ஆரம்பணாதி கரணம்‌-(ஸூ) ததாந்யத்வம்‌ ஆரம்பண சப்தாதிப்ய-* அஸ்தீதி சேந் ந ப்ரதிஷேத மாத்ரத்‌வாத்‌ ** இத்யாதி ஸூத்‌ரங்களில்‌, காரணமாகிற ப்ரஹ்மத்துக்கும்‌ கார்யமாகிற ஜகத்துக்கும்‌ வேற்றுமை யின்மையை ஏற்று *ப்ரஹ்மம்‌ ஜகத்‌ காரணம்‌ ‘ என்பது விளக்கப் பெற்றது. காரணமும்‌ கார்யமும அபிந்நமாக இருக்க முடியாது என்ற ஆஷேபத்தையும்‌, அதற்கு ஸமாதானத்தைபும்‌ இந்த அதிகரணத்தில்‌ காணலாம்‌. கார்ய காரணங்களுக்கு ஸா லக்ஷண்ய நியமம்‌ சொல்லுகிற ஸாங்க்யனை ந விலக்ஷணத்வாதி கரணத்தில்‌ – நிரஸித்தார்‌. – கார்ய காரணங்களுக்கு ஸ்வரூப பேதம்‌ சொல்லும்‌ வைசேஷிகனை நிரஸிக்கிறார்‌ இதில்‌.

காரண கார்யங்கள்‌ அபின்னங்களாக இருக்க முடியாது என்‌று கருதுகின்றனர்‌ காணாதர்கள்‌ என்ற வைசேஷிகர்கள்‌. அதற்கு அவர்கள்‌ கூறும்‌ காரணங்கள்‌ பற்பல. அவற்றில்‌ சிலவற்றின்‌ விவரம்‌
1- புத்தி பேதம்– ம்ருத் பிண்டத்தைப்‌ பார்த்தால்‌ ஏற்படும்‌ புத்தி வேறு. அதாவது இது ம்ருத்‌ பிண்டம்‌ என்பது, பானையைப்‌ பார்த்தால்‌ எற்படும்‌ புத்தியோ இது பானை என்பது, கார்ய காரணங்கள்‌ ஒன்றாக இருந்தால்‌ இம் மாதிரிபான விலக்ஷணமான எண்ணம்‌ உண்டாக ப்ரஸக்தி இல்லையே. –
2-சப்த பேதம்‌–நூல்களைப்‌ பார்த்து யாராவது வஸ்த்ரம்‌ என்கின்றனரா ? அல்லது வஸ்த்ரத்தைப்‌ பாரர்ததுத் தான்‌ இது, நூல்கள்‌ என்கின்றனரா?
3-கார்ய பேதம்‌–ம்ருத் பிண்டத்தால்‌ தண்ணீரைக்‌ கொணடு வர முடியுமா? பானையால் தான்‌ சுவற்றைக்‌ கட்ட முடியுமா ?
4-கால பேதம்‌–கார்யம்‌ உண்டாவதற்கு நியமேன முனனே இருப்பது காரணம்‌. பிறகு உண்டாவது கார்யம்‌,
5-ஆகார பேதம்‌--பிண்டமாக இருப்பது காரணம்‌, வயிறு பெருத்துக்‌ கழுத்து சிறுத்து அமைந்திருப்பது கார்யம்‌–பானை.
(6)மண்‌ இருக்கும் போதே பானை அழிந்து விட்டது என்கிறோம்‌. காரண கார்யங்கள்‌ அபின்னங்களாக இருக்குமானால்‌ இந்த வ்யவஹாரம்‌ எப்படி ஸங்கத மாகும்‌.
7-ஸங்க்யா பேதமும்‌ காணப் பெறுகிறது. நூல்கள்‌ பல. வஸ்திரமோ ஒன்று.
8-மண்ணும்‌ பானையும்‌ அபிந்ந மென்றால்‌ ஏற்கெனவே பானை இருக்கிற படியால்‌, குயவன்‌, தடி, சக்கரம்‌ முதலியவற்றுக்கு அபேக்ஷதையே இல்லாமல்‌ போய் விடுமே? உங்கள்‌ ஸிததாந்‌ தத்தில்‌ மண் தானே பானை, அது தான்‌ ஏற்கனவே இருக்கிறதே? ஆகையல்‌ காரணம்‌ வேறு, கார்யம்‌ வேறு என்பது தான் யுக்தம்‌ என்பது தான்‌ வைசேஷிகர்களின்‌ பூர்வ பக்ஷம்‌-

ததநந்யத்வம்‌……என்பது ஸித்தாந்த ஸூத்ரம்‌-இங்கு ஜகத; ‘ என்ற பதத்தை அத்யாஹாரம்‌ செய்து கொள்ள வேண்டும்‌. ஜகத:–கார்யமான ஜகத்துக்கு ததந்யத்வம்‌–காரணமான ப்ரஹ்‌மத்தை விட ஸ்வரூப பேத மின்மை. ஆரம்பண சப்தாதிப்ய:—அநந்யத்வத்தை விளக்கக் கூடிய ” வாசாரம்பணம்‌ விகாரோ நாமதேயம்‌ ம்ருத்திகேத்வேவ ஸத்யம்‌ ” இத்யாதி வாக்யங்களால்‌ அறியப் பெறுகிறது என்பது ஸூத்ரார்த்தம்‌–

ஆரம்பண சப்த: ஆதி: யேஷாம்‌ வாக்யாநாம்‌, தாநி ஆரம்பண சப்தாதீநி. தேப்ய; வாசாரம்பணம்‌ விகாரோ நாம தேயம்‌ ம்ருத்தி கேத்யேவ ஸத்யம்‌ ஸதேவம்ஸாம்யே தமக்ர ஆஸீத்‌ இத்யாதி வாக்யங்கள்‌ இங்கு விவஷிதிதங்கள் –
சாந்தோக்யத்தில்‌ ஸத் வித்யா- ப்ரகரணத்தில்‌; கார்ய காரணங்களாகிற ஜகத்‌ ப்ரஹ்மங்களுக்கு ஐக்யத்தை ப்ரதிஜ்ஞை செய்து அதை உபபாதிப்பதற்காகப்‌ பல த்ருஷ்டாந் தங்களைக்‌ கூறி மண் –பானை முதலிய காரண கார்யங்களுக்கு ஜக்யம்‌ விளக்கப் பெற்றிருக்‌கிறது. விகார;--கடத்வாத் யவஸ்தா, பானையாயும்‌ சாலாயும்‌ உருவாகும்‌ , பற்பல அமைப்பும்‌. நாம தேயம்‌–பானை சால்‌ முதலிய பெயர்களும்‌, வாசா–பானை, சால்‌ என்ற. வ்யவஹாரத்துக்காகவும்‌ அதாவது சப்த ப்ரயோகத்துக்காகவும்‌, தண்ணீர்‌ கொண்டு வருவது முதலிய கார்யங்களுக்காகவும்‌, இங்கு வாக்‌ சப்தம்‌ அஜஹல் லக்ஷணையால்‌ வ்யவஹாரம்‌ கார்யம்‌ இரண்டையும்‌ குறிக்கிறது. வாசா எனற பதம்‌ த்ரூதீயைந வசநாந்தம்‌. இந்த த்ருதீயைக்கு ஹேதுத்வம்‌ அர்த்தம்‌ “ஹே துத்வம்‌ ப்ரபோஜந விதயா, ஆரம்பணம்‌–ஆரப்‌ யதே–ஆலப்யதே– ஸ்ப்ருச்பதே இதி ஆரம்பணம்‌–

முன்‌ வாக்யத்திலுள்ள * ம்ருத் பிண்டேந * என்பதை இங்கு சேர்த்துப்‌ பொருள்‌ கொள்ள வேண்டும்‌. ம்ருத் பிண்டமானது, இது பானை, இது சால்‌ முதலிய வ்யவஹாரம்‌ ஸித்திப்பதற்காகவும்‌, தண்ணீர்‌ கொண்டு வருதல்‌ முதலிய ‘ கார்யம்‌ நடப்பதற்காகவும்‌, பானை, சால்‌ இவற்றுக்கு உரிய அமைப்பையும்‌ பெயரையும்‌ பெறுகிறது என்பது தான்‌ தீர்ந்த பொருள்‌. ம்ருததிகேதயேவ ஸத்யம்‌. முன்‌ வாக்யத்திலிருந்து ம்ருண் மயம்‌ ‘ என்பதை இங்கு அனுஷங்கித்துக்‌ கொள்ள வேண்டும்‌. ம்ருண்‌ மயம்‌ கட சராவாதி, ம்ருத்திகேத்‌ யேவ–ம்ருத த்ரவ்ப மிதவேவ. ஸத்யம்‌–ப்ராமாணிகம்‌. ப்ரத்யபிஜ்ஞா ப்ரமாண ஸிததம்‌ எனறபடி. பானையைப்‌ பார்க்கும் போது மண்ணின ப்ரத்யயிஜ்ஞை வருவதால்‌ மண் தான்‌ பானையாக அமைந்துள்ளது என்பது தெளிவு.

மண் பிண்டம்‌, பற்பல அமைப்புக்களைப்‌ பெறுகிறது. அந்த அமைப்புகளை அது பெறுவதற்காகத் தான தடி, சக்கரம்‌, குயவன்‌ முதலிய காரக வ்யாபாரஙகள்‌, ம்ருத்‌ பிணடம்‌ பெறும்‌ அமைப்புக்களுக் கேற்ப புத்தி சப்தாதி பேதங்கள்‌ அமைகின்றன. காரணாவஸ்தையில்‌ அது ம்ருத பிண்டம்‌ எனப் பெறுகிறது: அதுவே உடல்‌ பெருத்து, கழுத்து சிறுத்து ஒரு அமைப்பைப்‌ பெறும் போது பானை எனப் பெறுகிறது. இம் மாதிரியே மேலும காண வேண்டும்‌. ம்ருத் பிண்டமும்‌ கடசராவாதி கார்யஙகளும்‌ ஏக த்ரவ்யமே. , அவற்றுக்கு ஸ்வரூப பேதமில்லை, இவ் விதமே ஜகத் ப்ரஹ்மங்களுக்கும்‌ அநந்யத்வம்‌ ஸித்தம்‌. ்‌ அத்வைதிகள்‌, –‘வாசாரம்பணம்‌ ” என்பதை ஒரே பதமாக அதாவது ஸமஸ்த பதமாகக் கொண்டு வாகாலம்பநம்‌ அதாவது வ்யாவஹாரிகம்‌ என்று பொருள்‌ கூறுகின்றனர்‌. அது தவறு. அப் போது ஸூத்ரம்‌ “ததநந்யத்வம்‌ வாசாரம் பண ‘சப்தாதிப்ய:’” என்று அமைந்திருக்க வேண்டும்‌. ஆரம்பண சப்தாதிப்ய: என்று அமைந்திருப்பதால்‌ ‘ வாசா ” என்பது தனிப் பதம்‌ என்பது நன்கு புலனாகிறது.”
ஸ்ரீ பாஷ்யகாரர்‌ இந்த ஆரம்பணாதிகரணத்தில்‌, கார்ய காரணங்களுக்கு பேதத்தைச்‌ ‘ சொல்லும்‌ காணாத மதத்தை முதலில்‌ விவரித்தருளினார்‌.
காணாகமத கண்டகமாக சாங்கர ஸித்தாந்தத்தை விவரித்தார்‌. சாங்கர மத கண்டநமாக ஜீவாஜ்ஞாந வாதிகளின்‌ மதத்தை உபபாதித்தார்‌, “மறுபடியும்‌, ஜீவாஜ்ஞாந வாதி மத கண்டகமாக சாங்கரர்கள்‌ கூறி யிருப்பதை விவரித்தார்‌-இந்த அதிகரணத்தில்‌ ப்ரதான பூர்வ பஷியான காணாதன்‌ சாங்கர மதத்தைக்‌ கண்டிப்பதை விவரித்துக்‌ காணதமதத்தை தாம்‌ கண்டித்தருளினார் –

ஒரே வஸ்துவுக்குப்‌ பல அவஸ்தைகள்‌ உள்ள இடங்களிலும்‌ , புத்தி, சப்தாதி பேதங்கள்‌ காண்கின்றன. நம்‌ சரீரத்துக்கு பால்யம்‌, யெளவநம்‌, வார்த்தக்யம்‌ முதலிய பல அவஸ்தைகள்‌ வருகின்றன. வஸ்து ஒன்று தான்‌. அவஸ்தைகள்‌ பல. பாலனைப்‌ பார்த்து இவன்‌ யுவா என்று நினைப்பதில்லை. அவன் விஷயமாக யுவா என்ற சப்தத்தைப்‌ ப்ரோகிப்பதுமில்லை. இதே மாதிரி யுவாவையும்‌ பாலன்‌ என்பதில்லை., வஸ்துக்கள்‌ வெவ்வேறாக இருந்தாலும அங்கும்‌ மண்‌, கட்டை, ஸ்வர்ணம்‌ என்ற புத்தி சப்தாதி பேதங்கள்‌ காண்கின்றன. இப்படி இரண்டு விதமான நிலை இருக்கும் போது, மண்‌, பானை இத்யாதி கார்ய காரண பாவஸ்தலத்தில்‌ புத்தி சப்தாதி பேதங்களுக்கு அவஸ்தா பேதமே நிபந்தகம்‌ என்று எப்படி உறுதி செய்ய முடியும்‌ ? என்ற கேள்விகருப்‌ பதில்‌ கூறுகிறது அடுத்த ஸூத்ரம்‌-
(ஸூ) பாவே சோபலப்தே-காரணமாகிற ஸ்வர்ணம்‌, கார்யமாகிற வளை, குண்டலம்‌ முதலிய பற்பல அவஸ்தைகளைப்‌ பெற்றுள்ள நிலையிலும்‌ இவை ஸ்வர்ணம்‌ என்பது ப்ரயத்க்ஷமாக விளங்குகிறதே.
வஸ்து பேதமுள்ள இடத்தில்‌ மண்ணில்‌ தங்கமோ, தங்கத்தில்‌ மண்ணோ தெரிகிறதா – ஆகையால்‌ மண்‌–பானை முதலிய கார்ய காரண பாவ ஸ்தலத்தில்‌ அமைப்பில்‌ உள்ள மாறுபாட்டை அனுஸரித்தே புத்தி சப்தாதி பேதங்கள்‌ என்பது தெளிவு. இந்த ஸூத்திரத்திலுள்ள *ச” காரம்‌, அபேதத்தில்‌ பாதக மின்மையையும்‌, பேதத்தில்‌ பாதகத்தையும்‌ ஸமுச்சயிக்கிறது முன்‌ ஸூத்திரத்தில்‌. கூறின காரணத்தை இது ஸமுச்சயிக்க வில்லை, இந்த ஸூத்ரமும்‌ அடுத்த ஸூத்ரமும்‌ ம்ருதாதி த்ருஷ்டாந்த மாத்ர விஷயம்‌. “

(ஸூ) ஸத்த்வாச்சாபரஸ்ய அபரஸ்ய–கார்யஸ்ய, ஸத்த்வாச்ச–காரணே ஸத்த்வாச்ச காரணாத்‌ கார்யஸ்யா நந் யத்வம்‌. கார்யம்‌ காரணத்தில்‌ இருக்கிற படியாலும்‌ கார்ய காரணங்களுக்கு அபேதமே ஏற்கத் தக்கது என்று பொருள்‌. இங்கு இப்பொழுது காணப் பெறும்‌ பானை முதலியவை ‘ நேற்று மண்ணாகவே அதாவது ம்ருத் பி்ண்டமாகவே இருந்தன என்று உலகில்‌ கூறுகின்றனர்‌: வேதமும்‌; ‘“ஸதேவ ஸோம்‌யேதமக்ர ஆஸீத்‌ ‘–இந்த ஸ்தூல சேதநாசேதந விஸிஷ்டமான ப்ரஹ்மம்‌ ஸ்ருஷ்டிக்கு முன்‌ அதாவது ப்ரயள காலத்தில்‌ ஸூஷ்ம சேதநா சேதந விசிஷ்ட ப்ரஹ்‌மமாகவே இருந்தது என்று கூறுகிறது. ஆகையால்‌ நேற்று இருந்த’ வஸ்து தான்‌, இன்று வேறு .அவஸ்தையைப்‌ பெற்றள்ளதே தவிர இது வேறு த்ரவ்யமன்று ‘ என்பது ப்ரதயக்ஷத்தாலும்‌ வ்யவஹாரத்தாலும்‌ ஸித்திக்கிறது-முன்‌ ஸூத்ரத்தில்‌ கூறினது ‘ஸோயம்‌’ என்ற ப்ரத்யபிஜ்ஞை. அதாவது அது இது என்பது. பானையில்‌ மண்‌ தோற்றுகிறபடியால்‌ அந்த மண் தான்‌ இந்த பானை என்பது. இந்த ஸூத்ரத்தில்‌ கூறப் பெறுவது. அபிஜ்ஞை–இது அது என்பது. அதாவது இந்த பானை நேற்று மண்ணாகவே இருந்தது என்பது முன்‌ ஸூத்திரத்தில்‌ கூறப் பெற்றது. கார்ய காரணங்களில்‌ ஏற்படும்‌ இவை ஒரே த்ரவ்பமே என்ற புத்தி இந்த ஸூத்திரத்தில்‌ கூறப்‌ பெறுவதோ ஒரே த்ரவ்யம்‌ என்ற வ்யவஹாரம்‌ என்றும்‌ வ்யத்யாஸம்‌ கொள்ளலாம் –

ஸூ )… அஸத் வ்யபதேசாந் நேதி சேம் ந தர்மாந்தரேண லாக்ய சேஷாந் யுந்தே: சப்தாந்தராச்ச -வைதிக, லெளகிக வ்யவஹாரங்களால்‌ காரணத்தில்‌ கார்யம்‌ இருக்கிற தென்பது புலனாகிறது என்பது அஸங்கதம்‌ என்கிறான்‌ பூர்வபஷி , அஸத் வ்பபதேசாத்‌–‘ அஸதே வேத மக்ர ஆஸீத்‌! முதலான பல வாக்யங்கள்‌, இந்த உலகம்‌ ப்ரளய காலததில்‌ இல்லை என்று கூறுகின்றன. ஆகையால்‌ இந்த வ்பபதேசத்தை ஆராய்ந்தால்‌ காரணததில்‌ கார்யமில்லை என்று தானே ஸித்திக்கிறது என்பது பூர்வ பக்ஷம்‌. இது அஸங்கதம்‌. தர்மாந்தரேண–இந்த உலகம்‌ ‘முன்பு ஸர்வாத்மநா இல்லை என்பது அந்த வாக்யத்‌துக்குப்‌ பொருளன்று, இந்த நிலையில்‌ இல்லை என்பது தான்‌ பொருள்‌. இப்பொழுது ஸ்தூலமாக இருக்கும்‌ ப்ரபஞ்சம்‌ அப்பொழுது ஸூக்ஷ்மமாக இருந்தது என்று கருத்து, தர்மாந்தரம்‌, ஸெளக்ஷ்ம்யம்‌, அதாவது நாமரூப விபாக ராஹித்யம்‌-இவ் விதம்‌ சொல்வதற்கு கமnaம்‌–வாக்யநசேஷம்‌, யுக்தி, சப்தாந்தரம்‌. வாக்ய சேஷம்‌— இதம்‌ வா அக்ரே நைவ கிஞ்சகாஸீத்‌”’ என்ற இடத்தில்‌, ‘ததஸதேவ ஸந் மநோ குருத ஸ்யாமிதி’” என்பது, இந்த உலகம்‌ முன்பு அஸத்தாக இருந்தது. அந்த அஸத்‌தே நான்‌ ஸத்தாக ஆகப் போகிறேன்‌ என்று ஸங்கல்பித்தது என்று உள்ளது. ஸர்வாத்மநா எதுவுமே இல்லை என்றால்‌ ஸங்கல்பித்தது என்பது எப்படி ஸங்கதமாகும்‌, எது ஸங்கல்‌பித்தது என்ற கேள்விக்குப்‌ பதில்‌ கூற வேண்டுமே. ஆகையால்‌ ப்ரளய காலததிலும்‌ இது: இருந்தது. ஆனால்‌ இந்த நிலையில்‌ இல்லை என்றே பொருள்‌ கொள்வது உசிதம்‌.

யுக்தே: ஸத்வம்‌- அஸத்வம்‌ இரண்டும்‌ வஸ்து தர்மங்கள்‌. பானை நேற்று இல்லை என்றால்‌ அது ம்ருத் பிண்டமாக இருந்தது என்றே பொருள்‌, அதாவது, பானை உண்டாவதற்கு முன்‌ அதற்குள்ள அஸத்வமாவது ம்ருத் பிண்டத்வா வஸ்தையே. இன்று பானை உண்டாயிற்று என்றால்‌ மண்‌, பிண்டத்வா வஸ்தையை விட்டு வயிறு பெருத்து கழுத்து சிறுத்ததான’ கடத்வாவஸ்தையைப்‌ பெற்றது என்று பொருள்‌. பானை நஷ்டமாகி விட்டது-அதாவது உடைந்து விட்டது என்றால்‌ கடத்வாவஸ்தையை விட்டு கபாலத்வாவஸ்தையைப்‌ பெற்றது என்றே பொருள்‌. ஆகையால்‌ வஸ்துவுககு ஸர்வாத்மநா துச்சத்வம்‌ உண்டு என்பது யுக்திக்கும்‌ பொருந்தாது, ப்ரத்யக்ஷந்துக்கும்‌ விருத்தம்‌-சப்தாந் தராத்‌. சப்தாந்தரம்‌–இதம்வா அக்ரே நைவ கிஞ்சநாஸீத் ‘ இத்யாதி காரண வாக்யங்களுக்குத்‌ துல்யமான *’ஸதேவ ஸோம்ய இதமக்ரே ஆஸீத்‌” இத்யாதி வாக்யங்கள்‌. இந்த வாக்யங்கள்‌ உலகம்‌ ப்ரளய காலத்தில்‌ இருந்தது என்று கூறுகிறது. இதற்கு என்ன பொருள்‌ கூறுவது? ஆகையால்‌ இரண்டு வகையான வாக்யங்களுக்கும்‌ வி3ராதமில்லாமல்‌ பொருள்‌ கூற வேண்டும்‌. , ஸத்‌ என்பதற்கு, ப்ரளயத்தில்‌ உள்ளது என்று ப்ரமாண ஸித்தம்‌ என்று பொருள்‌, அஸத்‌ என்பதற்கு, ஸ்ருஷ்டி காலத்தில்‌ இருப்பது போல்‌ ஸ்தூலமாக–நாம ரூப விபாகவத்தாக இல்லாமல்‌, ஸூஷ்மமாக–நாம ரூப விபாக ரஹிதமாக இருந்தது என்று பொருள்‌. இவ்விதம்‌ பொருள்‌ கொண்டால்‌ எந்த வாக்யததுக்கும்‌ விரோதம்‌ வாராது. ”தத்தேதம்‌ தர்ஹ்ய வ்யாக்ருத மாஸீத்‌ தந் நாம ரூபாப்யாம்‌ வ்யாக்ரியதே’. என்ற வேத வாக்யம்‌ இதை உறுதி செய்கிறது-கார்யம்‌ காரணத்தை விட வேறுபடாதது என்பதற்கு, இரண்டு நிதர்சனங்கள்‌, மேல்‌ இரண்டு ஸூத்ரங்களால்‌ காட்டப் பெறுகின்றன –

(ஸூ) பட்வச்ச -சேணியனால்‌ தறியில்‌ நெய்யப் பெற்ற நூல்கள்‌ விலஷணமான ஸும்பந்தத்தைப்‌ பெற்று வஸ்த்ரம்‌ என்ற அமைப்பையும்‌ பேரையும்‌ பெறுகின்றன. இதே போல்‌, ப்ரஹ்மமும்‌-நாம ரூப விபாகத்தைப்‌ பெற்று கார்ய பாவத்தை அடைகிறது. இது லெளகிக த்ருஷ்டாந்தம்‌. பல் வஸ்துக்கள்‌ சேர்ந்து ஒரு வஸ்துவாக ஆவதற்கு த்ருஷ்டாந்தமாகவும்‌ கொள்ளலாம்‌.-(ஸூ) யதா ச ப்ராணாதி-ஒரே வாயுவே, சரீரத்தில்‌ ஒவ்வோரிடத்தில்‌ அமைந்து ப்ராணம்‌, அபாநம்‌, வியாநம்‌, உதாநம்‌, ஸமாநம்‌ என்ற நாம ரூபங்களைப்‌ பெறுவது போல்‌ ஒரே ப்ரஹ்மமே அதாவது ஸூக்ஷ்ம சேதநா சேதந விசிஷ்ட ப்ரஹ்மமே பல ப்ரகாரமான நாம ரூபங்களைப்‌ பெறகிறது என்று கருத்து. இது வைதிக த்ருஷ்டாந்தம்‌. ‘ப்ராணோ பாநோவ்யான உதாந : ஸமாநோ ; இத் யேதத்‌ ஸர்வம்‌ ப்ராண ஏவ” என்கிறது உபநிஷத்‌. ஒன்று பலவாக அமைவதற்கு த்ருஷ்டாந்தமாகவும்‌ இதைக்‌ கொள்ளலாம் –

இதர வ்யபதேசாதி கரணம்‌ –கார்யமான ப்ரபஞ்சத்துக்கும்‌ காரணமான ப்ரஹ்‌மத்துக்கும்‌ பேதமில்லை யென்றால்‌, கார்யமான ப்ரபஞ்சத்திலுள்ள தோஷங்களெல்லாம்‌ காரணமான ப்ரஹ்மத்தில்‌ ஸம்பவிக்க வேண்டி வரும்‌, ஸர்‌ஜ்ஞானாயும்-ஸத்ய ஸங்கல்பனாகவும்‌ இருக்கும்‌ பரமாத்மா ப்ரபஞ்சமே தான்தான என்பதை உணர்ந் திருக்க வேணடும்‌, இவ்விதம்‌ உணர்ந்த பகவான்‌ தனக்கு நன்மையை உண்டு பண்ணாமலும்‌ தீமையை உண்டு பண்ணுகிறவனாகவும்‌ இருப்பானா ? என்று ஆக்ஷேபித்து அதற்குப்‌ பரிஹாரம்‌ கூறுகிறது இந்த அதிகரணம்‌ . பகவானுக்கு உபாதாந காரணத்வம்‌ ஸம்பவிக்காது எனற ஆக்ஷேபத்தை நிராகரித்தது முன்‌ அதிகரணம்‌, இந்த அதிகரணம்‌, பகவானுக்கு நிமித்த காரணத்வம்‌ ஸம்பவிக்காது என்ற ஆஷேபத்தை நிராகரிக்கிறது,
(ஸூ) இதர வ்யபதேசாத் ஹிதா கரணாதி தோஷ ப்ரஸக்தி: இது பூர்வபஷ ஸூத்ரம்‌,-இதர வய்பதேசாத்‌–ப்ரஹ்‌மண: ஜீவத்வ வ்யபதேசாத்‌. ஹிதா கரணாதி தோஷ ப்ரஸக்தி-ஹிதத்தை உண்டு பணணாமை, அஹிதத்தை உண்டு பண்ணுதல்‌ என்ற இரண்டு தோஷங்கள்‌ சம்பவிக்கும்‌ என்பது ஸூத்ரத்தின்‌ பொருள்‌. * தத்வமஸி ‘ முதலான வாக்யம்‌ ப்ரஹ்மத்தையே ஜீவனாக வ்யபதேசிக்கிறது. ஜீவனோ பற்பல ஸங்கடங்களுக்கு இருப்பிடமாக இருக்கிறான்‌ என்பது ப்ரத்யக்ஷ ஸித்தம்‌. தானே ஜீவன்‌ என்பதை அறிந்த ஸர்வஜ்ஞனான பரமாத்மா ஸர்வ சக்தனாக இருந்தும்‌, தனக்கு நன்மையை உண்டு பண்ணாமலும்‌ தீமையை உண்டு பண்ணு வனாகவும்‌ எப்படி இருக்க முடியும்‌, இப்படி யானால்‌ அவன்‌ ப்ராந்தனாகா மாட்டானா 1 ஆகையால்‌ ப்ரஹ்மத்துக்கு ஜகத் காரணத்வம்‌ கூடாது என்பது பூரவ பக்ஷம்‌ ,

இதற்கு ஸமாதாநம்‌ கூறுகிறது அடுத்த ஸூத்ரம்‌. (ஸூ) அதிகம் து பேத நிர்தேசாத்‌. .ஈ இங்குள்ள *து’ சப்தம்‌ பூர்வ பக்ஷத்தை விலக்குகிறது. அதிகம்‌–ஆத்யாத்மிகாதி தாப த்ரயங்களைப்‌ பெறக் கூடியவனான ஜீவனை விட பகவான்‌ வேறு பட்டவன் , பேத நிர்தேசாத்‌ ஸகாரணம்‌ கரணாதிபாதிப:…பகவான்‌ அனைவருக்கும்‌ காரணம்‌. கரணாதிபனான ஜீவனுக்கும்‌ அவன்‌ அதிபன்‌, ‘ப்ருதகாத்மாகம்‌ ப்ரேரிதாரம் ச மத்வா…”” “பகவானையும்‌ ஜீவனையும்‌ வெவ்வேறு தத்வங்களாகக்‌ கருத வேண்டும்‌. ஜ்ஞாஜ்ஜெள த்வெள அஜெள ஈசநீசவ் –ஜீவாத்மா பரமாத்மா இருவர்களுமே பிறப்பற்றவர்கள் தாம்‌. ஆனால்‌ அவர்‌களில்‌ ஒருவன்‌ (ஜீவன்‌) அல்பஜ்ஞன்‌… .மற்றவன்‌ ஈச்வரன்‌ -ஸர்வஜ்ஞன்‌. இதே போல்‌ ஜீவன்‌ அஸமர்த்தன்‌, பகவான்‌ ஸமாத்தன்‌. இதயாதி வாக்யங்கள்‌ ஜீவன்‌ வேறு பரமாத்மா வேறு எனபதை ஸ்‌பஷ்டமாகத்‌ தெளிலிக்கிறது. ஐக்யம்‌–அதாவது பகவானே ஜீவன்‌, என்பது சரீராத்ம பாவ ஸம்பந்த நிபந்தநம்‌ என்பது * அவஸ்தி தே ரிதி காசக்ருதஸ்வ : ! என்ற ஸூத்ரத்தில்‌ நிரூபிக்கப்‌ பெற்றது.

(ஸூ) அச்மாதிவச்சததநுபபத்தி:கல்‌, கட்டை முதலியவற்றுக்கும்‌ ப்ரஹ்‌ம ஸ்வரூபத்துக்கும்‌ அபேதம்‌ எவ்விதம்‌ பொருந்தாதோ அவ்விதமே ஜீவனுக்கும்‌ ப்ரஹ்‌மத்துக்குங்‌ கூட அபேதம்‌, அஸம்பாவிதம்‌ என்பது -ஸூத்ரார்த்தம்‌. அச்ம–கல்‌. ஆதி சப்தம்‌ கட்டை முதலியவற்றைக்‌ குறிக்‌கிறது. அசேதநங்களும்‌ அத்யந்தம்‌ ஹேய மானவையும்‌ ஸதா மாறிக் கொண்டே இருப்பவையுமான கல்‌, கட்டை முதலியவற்றுக்கும்‌, எப்பொழுதுமே விகார மற்றவனும, எவ்வித தோஷ மற்றவனும்‌, மங்கள ஸ்வரூபனும்‌ ஜ்ஞாநாநந்த ஸ்வரூபனுமான பரமாத்மாவுக்கும்‌ ஸர்வம்‌ கல்விதம்‌ ப்ரஹ்ம எல்லாமே ப்ரஹ்மம் தான்‌ என்கிற வாக்யத்தைக் கொண்டு அபேதத்தைக்‌ கூற முடியுமா? அது எவ்விதம்‌ அஸம்பாவிதமோ அவ்விதமே தான்‌, ஜீவ பரமாத்மா க்களுக்கு ” அபேதமும்‌ அஸம்பாவிதம்‌. ஜீவன்‌ எல்லாவித துக்கங்களையும்‌ பெறத்‌ தகுதி பெற்றவன்‌ . அல்பஜ்ஞன்‌, மினுமினுப்‌ பூச்சிக்கு ஸமமானவன்‌. பகவானோ தோஷமே இல்லாதவன்‌. ஸதா ஸர்வஜ்ஞன்‌, ஸமஸ்த கல்யாண குணாத் மகன்‌. இவ் விருவர்களுக்கும்‌ ஐக்யம்‌ எவ்விதம்‌ ஸங்கதமாகும்‌-

உப ஸம்ஹார தர்சநாதிகரணம்‌ –ப்ரஹ்மம்‌, ஸத்ய ஸங்கல்பத்வாதி குண விசிஷ்டமாகையால்‌ ஜீவனை விட வேறு பட்டது என்பது முன்‌ அதிகரணத்தில்‌ நிரூ9ிக்கப் பெற்றது ப்ரஹ்மம்‌ ஜகத் ஸ்ருஷட்யாதிகளைச்‌ செய்வதற்கு அதன்‌ ஸங்கல்ப மாத்திரமே பரிகரம்‌ அதாவது துணை என்பது அநுபபந்நம்‌ என்ற ஆக்ஷேபத்தை இந்த அதிகரணம்‌ நிராகரிக்கிறது-(ஸூ ) உப ஸம்ஹார தர்சனாத்‌ கேதி சேத் ந ஷிரவத்ஹி. உப ஸம்ஹார தர்சனாத்‌–ஸஹ காரி காரண ஸம்பாதக தர்சனாத்‌ ந –ஸஹ காரி காரணங்களற்ற ப்ரஹ்மத்துக்கு ஜகத் காரணத்வம்‌,. . அநுபபந்நம்‌ குயவன்‌ முதலானோர்‌ பானை முதலியவற்றைப்‌ படைக்கும் போது, சக்ரம்‌, தடி முதலியவற்றின்‌ துணை தேவைப் படுகிறது என்பது ப்ரத்யக்ஷ ஸித்தம்‌, இதே போல்‌ பகவானுக்கும்‌ உலகைப்‌ படைப்பதற்கு ஹை காரிகளின்‌ அபேக்ஷை ஏற்படாதா ? **ஸதேவ ஸோம்யேதமக்ர ஆஸீத்‌ ‘” என்ற வாக்‌யங்கள்‌, ஸ்ருஷ்டிக்கு முன்‌ அதாவது ப்ரளய காலத்தில்‌ பகவான்‌ ஒருவன் தான்‌ இருந்தான்‌ என்று கூறுகிறது, இதனால்‌ ஸஹ காரிகள்‌ இல்லை என்று தேறுகிறது. ஆகையால்‌ ஸஹ காரிகளற்ற ப்ரஹ்மத்துக்கு ஜகத் காரணத்வம்‌ ஸம்பவிக்காது-அஸமர்த்தர்களான குயவர்‌ முதலானோர்க்கு, சக்ரம்‌, தடி, முதலியவற்றின்‌ தேவை ஆவச்யக மானாலும்‌ ஸர்வ சக்தனான பகவானுக்கு ஸஹ காரிகளின்‌ அபேக்ஷை ஆவச்யகமா ? என்பது உசிதமாகாது. அஸமர்த்தர்கள்‌, ஸஹ காரிகள்‌ இருந்தாலும்‌ கார்யங்கனைப்‌ படைக்க முடியாது. ஸமர்த்தர்கள்‌, ஸஹ காரிகள்‌ இருந்தால்‌ கார்யத்தை நிறை வேற்றுவார்கள்‌. இவ்வளவு தான்‌ வ்யத்யாஸம்‌: சமைக்கத்‌ தெரிந்தவன்‌, அரிசி, புளி முதலிய ஸாமக்ரிகள்‌ இருந்தால்‌ சமைப்பான்‌, சமைக்கத்‌ தெரியாதவன்‌, ஸாமக்ரி இருந்தாலும்‌ சமைக்க மாட்டான்‌. இவ்வளவு தான்‌ வ்யத்யாஸமே தவிர சமைக்கத் தெரியும்‌ என்பதற்காக ஸாமக்ரிகளைக்‌ கொடுக்காமலே சமைக்கச்‌ சொல்ல முடியுமா ? இதே போல்‌, ஜகத் ஸ்ருஷட்யாதிகளைச்‌ செய்வதற்குச்‌ சக்தமான ப்ரஹ்மமும்‌ துணை யில்லாத படியால்‌ ஜகத்தைப் படைக்க முடியாது என்பது பூர்வ பக்ஷம்‌, இதிசேத்‌ ந –இவ்விதம்‌ கூறுவது அநுபபந்நம்‌, க்ஷீரவத் ஹி–ஹி ‘ என்பது ப்ரஸித்தியைத்‌ தெரிவிக்கிறது இதனால்‌, ஆக்ஷேபம்‌ அதி துர்பலம்‌ என்பது ஸூசிதமாகிறது. பால்‌ எவ்வித ஸஹ காரியையும்‌ அபேஷிக்காமல்‌ தானே தயிராகப்‌ பரிணமிப்பது போல்‌ பகவானும்‌ தன்‌ ஸங்கல்ப மாத்ரத்‌தால்‌ உலகமாகப்‌ பரிணமிக்கலாம்‌. பாலில்‌ சற்று மோரைச்‌ சேர்ப்பது அது சீக்கிரம்‌ தோய்வதற்காகவும்‌ நல்ல சுவையைப்‌ பெறுவதற்காகவும்‌ தான்‌. அதில்‌ மோரைச்‌ சேர்க்‌காமல்‌ போனாலும்‌ அது மாறுபாட்டை அடைகிறது என்பது ப்ரத்யஷ ஸித்தம்‌, பயோம்‌ புவச் சேத் தத்ராபி என்ற ஸூத்ரம்‌ பாலின்‌ பரிணாமத்துக்கு பகவான்‌ காரணம்‌ என்று கூறுகிறது. இங்கு, த்ரஷ்ட பரிகராபேக்ஷை அதாவது மோர்‌ முதலியவற்றின்‌ தேவை இல்லை என்று கூறப் பெறுகிறது.

(ஸூ )தேவாதிவதபிலோகே–தேவர்கள்‌ முதலானோர்‌ தங்கள்‌ தங்கள்‌ உலகங்களில்‌ தங்களுக்கு அபேக்ஷிதங்களை , தங்கள்‌ சங்கல்ப மாத்ரத்தால்‌ படைத்துக் கொள்வது போல்‌ ஸத்ய ஸங்கல்பனான பகவானும்‌ தன் சங்கல்ப மாத்ரத்தால்‌ உலகத்தைப்‌ படைக்கலாம்‌, தேவர் களுக்கு அவ்வித சக்தி உண்டு என்பது வேதத்தால்‌ தெரிகிறது. அதே போல்‌ ஸங்கல்ப மாத்ரத்தால்‌ உலகத்‌தைப்‌ படைக்கக் கூடிய சக்தி பகவானுக்கும்‌ உண்டு என்பதும்‌ வேதத்தாலேயே தெரிகிறது. இதைத் தெரிவிப்பதற்காகவே தேவாதி த்ருஷ்டாந்தம்.

“‘ ஷீராயஸ் காசந்தலூதா த்ரிதச முலிமுகாந் வீக்ஷ்ப தோஷ்டவ்யமஸ்மிந் ஸங்கல்பாதேவ ஜீவோ நூததி கிரு: விஸ்வ ருபஸ் ததேச: ” என்ற அதிகரண சாராவளி ஸ்லோகம்‌ இங்கு அனுசந்தேயம்-
பால் தானே பரிணமிக்கிறது அவஸ்காந்தம்‌, தானே இரும்பை இழுக்கிறது. ஊர்ணாநபி-சிலந்திப்பூச்சி தானே வலை கட்டுகிறது, தேவர்கள்‌ ஸங்கல்ப மாத்ரத்தால்‌ தங்களுக்குத் தேவையானவற்றைப் படைக்கிறார்கள்-விச்வாமித்ராதிகள் ஸங்கல்ப மாத்ரத்தால்‌ தங்களுக்குத்‌ தேவையான வற்றைப்‌ படைக்கின்றனர்‌. இவற்றில்‌ சிலவற்றைப்‌ ப்ரத்யக்ஷமாக அறிகிறோம்‌. சிலவற்றை வேதம்‌, இதிஹாஸ புராணாதிகள்‌ இவற்றின்‌ மூலம்‌ அறிகிறோம்‌. ஜீவன்‌, தன்‌ கை கால்‌ முதலியவற்றை தன்‌ விருப்படி நீட்டு வதும்‌ முடக்குவதும்‌ செய்வது போல்‌ பகவானும்‌, தன்‌ சரீரமான சேதநா சேதனங்களை இஷ்டப்படி. சுருங்கவும்‌, மலரவும்‌ செய்கிறான் –

க்ருத்ஸ்ந ப்ரஸக்த் யதிகரணம்‌–பாலை உதாஹரணமாகக்‌ காட்டி ப்ரஹ்மம்‌ ஸஹகாரி நிரபேஷமாக ஐகத்தைப்‌ படைக்கலாம்‌ என்று முன்‌ அதிகரணத்தில்‌ கூறப்பெற்றது. பாலை ப்ரஹ்மத்துக்கு உதாஹரணமாக ஆக்க முடியாது என்ற ஆக்ஷேபத்தை விலக்குவதற்காக அமைந்தது இந்த அதிகரணம்‌–(ஸூ) க்ருத்ஸ்ந ப்ரஸக்தி: நிரவயவத்வ சப்த கோபோவா–இது பூர்வ பக்ஷ ஸூத்ரம்‌. ப்ரஹ்மண: என்பது ப்ரகரண ஸித்தம்‌: ப்ரஹ்மம்‌ உலகமாக பரிணமிக்கிற தென்றால்‌ ப்ரஹ்ம ஸ்வரூபம்‌ லவலேசம் கூட சேஷமின்றி எல்லாமே கார்யமாக வேண்டி வரும்‌. அப்பொது நித்யவிபூதி வ்யாபித்வம்‌ ப்ரஹ்மத்துக்கு இல்லா தொழியும்‌. ப்ரஹ்மத்தினுடைய ஒரு பகுதி தான்‌ உலகமாக மாறுகிறதென்றால்‌ பாலுக்குப்‌ போல்‌ ப்ரஹ்மத்துக்கு அவயவம்‌ உண்டென்று அங்கீகரித்ததாக ஆகும்‌. இது ப்ரஹ்மத்‌துக்கு அவயவமில்லை என்ற ச்ருதிக்கு விருத்தம்‌ (நிஷ்கலம்‌ நிஷ்க்ரியம்‌ சாந்தம்‌ என்கிறது ச்ருதி. நிஷ்கலம்‌ என்பதற்கு அவயவமற்றது என்று பொருள்‌. * ஏகமேவாத்விதீயம்‌’ : என்ற இடத்திலுள்ள ஏக சப்தத்துக்கு அவயவத்தால்‌ ஏற்படும்‌ விபாகத்தையும்‌ அதாவது பேதத்தையும்‌ ஸஹிக்காது என்று பொருள்‌) என்பது பூர்வ பக்ஷம்‌.

(ஸூ) ச்ருதேஸ்து சப்த மூலத்வாத்‌-இந்த ஸூத்ரத்திலுள்ள *து’ என்பது, பூர்வ பக்ஷம்‌ அஸங்கதம்‌ என்கிறது. ப்ரஹ்மம்‌ நிரவயவம்‌ என்று வேதம்‌ கூறுகிறது. அதே வேதம் தான்‌, ப்ரஸ்மம்‌ பலவாறாக பரிணமிக்‌கிறது என்றும்‌ கூறுகிறது. ப்ரஹ்மத்தை வேதம்‌ தவிர மற்ற ப்ரமாணங்களால்‌ அறிய முடியாது, வேதத்தைக்‌ கொண்டே அறிய வேண்டிய வஸ்துவை வேதம்‌ எப்படி கூறுகிறதோ அப்படியே அங்கீரிக்க வேண்டும்‌. வேதமோ ப்ரஹ்மத்தை அவயவமற்றது என்றும்‌ கூறுகிறது. பலவாறு பரிணமிக்கிறது என்றும்‌ கூறுகிறது. எது பரிணமிக்கிறதோ அது அவயவமுள்ளதாக இருக்க வேண்டும்‌ என்ற வ்யாப்தி, வேதத்தைக்‌ கொண்டே அறிய வேண்டிய விஷயத்தில்‌ ப்ரவருத்திக்காது (ஸூ ) ஆத்மநி சைவம்‌ விசித்ராச்ச ஹி–லோகத்தில்‌ காண்பதை மாத்திரம்‌ கொண்டு ப்ரஹ்மத்தில்‌ சில தர்மங்களை ஆரோபித்தால்‌, பானை முதலியவற்றில்‌ காண்கிற ஜடத்வம்‌ அசேதந த்வம்‌ முதலியவை ஜீவாத்மாக்களிடத்திலும்‌ இருக்கட்டுமே என்று கூறலாம்‌. பானையின்‌ தன்மை வேறு ஆத்மாக்களின்‌ தன்மை வேறு. ஒவ்வொரு வஸ்துவின்‌ தன்மையும்‌ விசித்ரமானது. ஆகையால்‌ பானை முதலியவற்றில்‌ உள்ள சில தர்மங்கள்‌ அவற்றை விட விலஷணமான ‘ஆத்மாக்க ளிடத்தில்‌ வாராது என்றால்‌ அதே போல் தான்‌ ஸர்வ விலஷணமான ப்ரஹ்மத்தினிடத்தில்‌ உலகில்‌ காணும்‌ நியதி பொருந்தாது. விஷ்ணு புராணம்‌ இதை விளக்கி யுள்ளது. நெருப்‌ புக்கு உள்ள ஒளஷ்ண்யம்‌ இயற்கையாக ஜலத்துக்குக்‌ கிடையாது. ஜலத்துககு உள்ள சைத்யமும்‌ அக்னிக்கு இல்லை, ஆகையால்‌. ஸர்வ விலக்ஷண மாய்‌, ஸர்வ சக்தி யுக்தமான ப்ரஹ்மத்தினிடத்தில்‌, உலக ரீதியில்‌ விருத்தமாகத்‌ தோன்றுகிற அம்சங்கள்‌ பொருந்தி யிருக்கலாம்‌–(ஸூ ) ஸ்வ பக்ஷ தோஷாச்ச–ப்ரதாநம்‌ ஜகத் காரணம்‌ என்ற ஸாங்க்ய பக்ஷத்தில் தான்‌ கீழே கூறிய தோஷங்க ளெல்லாம்‌ ப்ரஸங்கிக்கும்‌, மேலும்‌ பல தோஷங்களும்‌ ஸம்பவிக்கும்‌-ப்ரதாநம்‌ நிரவயவம்‌ என்றும்‌, அது மஹதாதி தத்வங்களாக பரிணமிக்கிறது என்றும்‌ ஸாங்க்யன்‌ கூறுகிறான்‌. ப்ரதாநம்‌, லோகத்தில்‌ காண்கின்ற அதாவது லெளகிகமான வஸ்துக்களை விட விலஷணமானதன்‌று, ஆகையால்‌ லோகத்தில்‌ காண்கின்ற வியாப்தி, ப்ரதானத்தில்‌ நியமேந ப்ரஸங்கிக்கும்‌. பலவாறு பரிணமிக்கும்‌ வஸ்து ஸாவயவமாகவே உள்ளது என்பது லோக ஸித்தம்‌. லோக மர்யாதைக்கு உட்பட்டதான ப்ரதானத்தில்‌ இந்த நியமத்தை விலக்குவாரில்லை. ஆகையால்‌ ப்ரதாநம்‌ நிரவயவம்‌ என்‌று கூறிக் கொண்டே அது பலவாறாகப்‌ பரிணமிக்கிறது என்பது அஸங்கதம்‌.

(ஸூ ) ஸர்வோபேதா ச தத் தர்சனாத்‌--ப்ரஹ்மம்‌, ஸகலேதர விலஷணமாய்‌ இருப்பதால் மாத்ரம்‌ ஸர்வ சக்தி யுக்தம்‌ என்று கூறவில்லை. (‘பராஸ்ய சக்தி; விவிதை வச்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியாச ” இத்யாதிகளான அனேக ச்ருதிகள்‌ ப்ரஹ்மம்‌ ஸத்ய ஸங்கல்பம்‌, ஸர்வஜ்ஞம்‌, என்றெல்லாம்‌ கூறுகிற படியாலும்‌ அது ஸர்வ யுக்தம்‌ என்று ஸ்பஷ்டமாகிறது. தர்சயதீதி தர்சநம்‌– ச்ருதி:–(ஸூ) விகரணத்வாத்‌ நேதி சேத்‌ ததுக்தம்‌–* ந தஸ்ய கார்யம்‌ கரணம் ச வித்யதே ‘* என்கிற ச்ருதி கார்யம்‌...சரீரம்‌, கரணம்‌ இந்திரியாதி. பகவானுக்கு சரீரம்‌ முதலியன இல்லை என்றபடி, சரீரமுள்ள குலாலன்‌ முதலானோரே பானைகளைப்‌ படைக்கக்‌ காண்கிறோம்‌. பகவானுக்கோ சரீரமில்லை. சரீர மில்லாத பகவான்‌ எப்படி உலகைப்‌ படைக்க முடியும்‌ என்பது பூர்வபக்ஷம்‌. இதற்கு ஸமாதாநம்‌ ஏற்கெனவே கூறப் பெற்றது என்கிறது *ததுக்தம்‌’ என்கிற வாக்யம்‌. ”ச்ருதேஸ்து சப்த மூலத்வாத்‌” ”விசித்ராஸ்சஹி” இத்யாதி ஸூத்ரங்களில்‌, ஸர்வவிலஷண மாய்‌ ஸர்வசக்தி யுக்தமான பிரஹ்மத்தின்‌ விஷயத்தில்‌, உலக ரீதியைப்‌ புகுத்தக் கூடாது என்பது தெளிவிக்கப் பெற்றிருக்கிறது –

ப்ரயோஜநவத்வாதிரணம்‌ (ஸூ) ந ப்ரயோஜந வத்வாத்‌. இது பூர்வபஷ ஸூத்ரம்‌. பரமாத்மா, விசித்ர சக்தி யுக்தனாகையால்‌, ஸ்ருஷ்டிக்கு முன்‌, துணை ஏதுமின்றி அவன்‌ ஒருவனே இருந்தால்‌ கூட அவன்‌ உலகைப்‌ படைக்கத்‌ திறமை வாய்ந்தவனாக இருக்கலாம்‌. ஆனாலும்‌ புத்திசாலியான ஒருவன்‌ ஒரு வ்யாபாரம் செய்தால்‌ அதற்கு ஏதாவது பயன்‌ இருக்க வேண்டும்‌. தனக்காகவும்‌ செய்யலாம்‌, பிறருக்‌காகவும்‌ செய்யலாம்‌. பகவான்‌ அவாப்த ஸமஸ்த காமன்‌ அதாவது ஏற்கெனவே எல்லாம்‌ நிரம்பியவன்‌, இந்த ஸ்ருஷ்ட்யாதிகளால்‌, முன்பு இல்லாத பலனைப்‌ பெறுகிறான்‌ என்றால்‌ அவாப்த ஸமஸ்த காமத்வம்‌ . நிலைக்காது பிறருக்காகச்‌ செய்கிறான்‌ என்றால்‌ கருணை யுள்ளவன்‌ பிறருக்குச்‌ செய்யும்‌ வ்யாபாரம்‌ அவர்களுக்கு நன்மையையே பயப்பதாக இருக்கும்‌, இங்கு பகவானுடைய படைப்பு முதலிய செயலால்‌ ஜீவர்களுக்கு ஏற்படும்‌ கர்ப வாஸம்‌, பிறவி, முதுமை, மரணம்‌ முதலிய கஷ்டங்களுக்கு அளவே இல்லை, ஆகையால்‌ ஸ்ருஷ்ட்யாதிகளால்‌ பகவானுக்கு எவ்வித பயனும்‌ இல்லை யாகையால்‌ ஜகத் காரணத்வம்‌ ஸம்பவிக்காது என்பது பூர்வ பக்ஷம்‌,

ஸூ) லோக வத்து லீலா கைவல்யம்‌-இங்கு *து’ சப்தம்‌ சங்கையை விலக்குகிறது, லீலா கைவல்யம்‌-கேவல லீலை, ப்ரயோஜநம்‌. இங்கு கேவல சப்தம்‌ ப்ரயோஜநாந்தரத்தை விலக்குகிறது. லோகவத்‌, பரிபூர்ணனான அரசன்‌ எல்லாம்‌ நிரம்பி யிருந்தும்‌ த்யூதம்‌ முதலிய பற்பல விளையாட்டுக்‌களில்‌ இழிவது லோக ப்ரஸித்தம்‌, அரசனுடைய இந்த வ்யாபாரங்களுக்கு லீலை தான்‌ பலன்‌. இதே போல்‌, பரிபூர்ணணான பகவானும்‌ கேவலம்‌ லீலைக்காக ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளைச்‌ செய்யலாம்‌-அரசனுக்கு த்யூதாதிகளால்‌, முன்பில்லாத, விலஷணமான ஆனந்தம்‌ உண்டாகிறது என்பது கண்கூடு -இதே போல்‌ பகவானுக்கும்‌ ஸ்ருஷ்ட்யாதிகளால்‌ முன்பில்லாத விலக்ஷண ஆனந்தம்‌ உண்டாகிறது என்று தானே கொள்ள வேண்டும்‌ ? இப்படியானால்‌ . அவாப்த ஸமஸ்த காமத்வம்‌ ஸித்திக்காதே என்று சங்கிக்க வேண்டாம்‌. “*அபிமத ஸமயே ஸித்திதஸ்த்வாப்தகாம:” என்ற அதிகரண ஸாராவளி இதற்கு விடை கூறுகிறது; அவாப்த ஸமஸ்த காமன்‌ என்பதற்கு ஏற்கெனவே எல்லாம்‌ பெற்றவன்‌ என்று பொருளல்ல, நினைத்த போது பெறுகிறவன்‌ என்றே பொருள்‌. பகவான்‌ ஸத்ய ஸங்கல்பனானபடியால்‌ தான்‌ விரும்பியதை நினைத்த போது பெறுகிறான்‌ என்றபடி-பகவான்‌ ஸர்வ சக்தனாகையால்‌ ஜகத்தைத்‌ துணை யேதுமின்றியே படைக்கலாம்‌, ஆனால்‌ ஸர்வஸமனான பகவானால்‌ படைக்கப் பெறுபவர்கள்‌ ஒரே மாதிரி இல்லையே. உடலில்‌ வ்யத்யாசம்‌, ஜாதியில்‌ வ்யத்யாஸம்‌, அறிவில்‌ வ்யத்யாஸம்‌, ஸுகத்தில்‌ வ்யத்யாசம்‌. இம் மாதிரி மேடு பள்ளமான உலகை படைக்கிறான்‌ என்றால்‌ அவன்‌ பக்ஷபாதியாக மாட்டானா? மேலும்‌, ஸஹிக்க முடியாத பற்பல கஷ்டங்களை உண்டு பண்ணும்‌ பகவான்‌ தயை யற்றவனாக மாட்டானா? என்ற ஆக்ஷேபத்தையும்‌ அதற்கான ஸமாதாநத்தையும்‌ அடுத்த ஸூத்ரத்தில்‌ காணலாம்‌-(ஸூ) வைஷம்ய கைர் க்ருண்யே ந ஸாபேக்ஷத்வாத்‌ ததா ஹி தர்சயதி–பக்ஷ பாதம்‌, தயை யின்மை என்ற தோஷங்கள்‌ பகவானிடம்‌ ஸம்பந்தப்படா, ஸாபே க்ஷத்வாத்‌. ஜீவர்களுடைய கர்மாவை அநுஸரித்தே பகவான்‌ அவர்களுக்கு சரீராதிகளையும்‌, ஸுக துக்காதிகளையும்‌ உண்டு பண்ணுகிறபடியால்‌ ஜீவர்களுக்குள்‌ ஏற்படும் வயத்யாஸத்‌ துக்கு அவர்களுடைய கர்மம் தான்‌ ப்ரதான காரணம்‌, உபநிஷத்‌ முதலியவை இதை நமக்குத்‌ தெளிவிக்கின்‌றன -விதை முளைப்பதற்கு பூமியும்‌ ஜலமும்‌ காரணங்கள் தாம்‌. ஆனால்‌ ஒரிடத்தில்‌ பாகல்‌ செடியும்‌, மற்றோரிடத்தில்‌ பலாச் செடியும்‌ முளைப்பதற்கு பூமியும்‌, ஜலமுமா ப்ரதான காரணங்கள்‌. அந்தந்த விதை தானே. இதே போல்‌ பகவான்‌ பூமி, ஜலம்‌ இவற்றின்‌ ஸ்தானத்தில்‌ இருக்கிறான்‌. நம்‌ கர்மா, விதை ஸ்தானத்தில்‌ இருக்கிறது-(ஸூ) நகர்மாவிபாகாதிதி சேத்‌ ந , அநாதித்வாத்‌ உபபத்யதே சாப் யுபலப்யதே ச ”–ஸ்ருஷ்டிக்கு முன்‌ அதாவது ப்ரளய காலத்தில்‌ பகவான்‌ ஒருவன் தான்‌ இருந்தான்‌ என்று ச்ருதிகள்‌ கூறுகின்றனவே, அப்போது ஜீவர்கள்‌ இல்லை என்றல்லவா ஏற்படுகிறது. ஜீவர்களே இல்லாத போது கர்மாவுக்கு ப்ரஸக்தி ஏது? ஆகையால்‌ பகவான்‌, முதன்‌ முதலில்‌ ஜீவர்களைப்‌ பல வ்யத்யாஸ முள்ளவர்களாகப்‌ படைப்பதற்கு கர்மாவைக்‌ காரணமாகக்‌ கூற முடியாது, அவனுடைய ஸ்வாததந்த்ர்யத்தைத் தான்‌ காரணமாகக்‌ கூற வேண்டும்‌. அப்படி யானால்‌ அவனுக்குப்‌ பக்ஷபாதித்வம்‌ முதலிய தோஷங்கள்‌ ஸம்பவிக்கத் தான்‌ ஸம்பவிக்கும்‌ என்பது பூர்வ பக்ஷம்‌. இது தவறு. ஜீவர்கள்‌ அநாதி யானவர்கள்‌, அவர்களுடைய கர்ம ப்ரவாஹமும்‌ அநாதி ப்ரளய காலத்திலும்‌ ஜீவர்களும்‌, அவர்களுடைய கர்மாக்களும்‌ இருக்கிற படியால்‌ அவரவர்‌ கர்மாவை அநுஸரித்து பகவான்‌ படைப்பு முதலியவற்றைச்‌ செய்கையால்‌ பக்ஷ பாதம்‌ முதலிய தோஷங்களுக்கு ப்ரஸக்தியே இல்லை-ஜீவர்களும்‌ ப்ரளய காலத்தில்‌ இருந்தனர்‌ என்றால்‌ பகவான்‌ ஒருவன் தான்‌ அப்பொழுது இருந்தான்‌ என்ற வாக்யங்களுக்கு விரோதம்‌ வாராதா? என்ற சங்கையை விலக்குகிறது ‘*உபபத்யதே ச’” என்ற வாக்யம்‌, ப்ரளய காலத்தில்‌ ஜீவர்கள்‌ நாம ரூபங்கள் அற்றவர்களாகவும்‌, பரமாத்மாவுக்கு சரீரம்‌ என்று கூடத் தனித்து வ்யவஹரிக்க முடியாத ஸூக்ஷ்ம தசையைப்‌ பெற்றவர்களாகவும்‌ இருப்பதால்‌ பகவான்‌ ஒருவன் தான்‌ என்று ச்ருதி கூறுகிறது. இப்பொழுது உள்ள நிலையில்‌ அப்பொழுது ஜீவர்கள்‌ இல்லை என்றபடி. உபலப்யதே ச, ஜீவர்கள்‌ நித்யமானவர்கள்‌, அவர்களுக்கு ஆதியும்‌ அந்தமும்‌ கிடையாது என்பதை உபநிஷத்தே கூறுகிறது. *ஜ்ஞாஜ்ஜஞெள த்வெள அஜெள ஈசநீசெள ” (பரமாத்மா ஜீவாத்மா இவர்கள்‌ இருவருமே பிறப்பற்றவர்கள் தாம்‌. ஆனால்‌ அவர்களில்‌ பரமாத்மா ஸர்வஜ்ஞன்‌, ஸமர்த்தன்‌. ஜீவாத்மா, அல்பஜ்ஞன்‌ அஸமர்த்தன்‌.) நித்யோ நித்யாநாம்‌ என்ற வாக்யம்‌, நித்யாநாம்‌ பஹூநாம்‌ சேதநா நாம்‌ மத்யேய: ஏக: நித்ய: பரம சேதந:'” என்கிறது. ஆகையால்‌ பரமாத்மாவைப் போல்‌ ஜீவர்களும்‌ நித்யர்கள்‌ என்பது ஸித்தம்‌.-(ஸூ) ஸர்வ தர்மோபபத்தேஸ் ச–ஸாங்க்யர்‌ ப்ரதாநம்‌ காரணம்‌ என்கின்றனர்‌. வைசேஷிகாதிகள்‌ பாமாணு காரணம்‌ என்கின்றனர்‌. ப்ரதாநம்‌ முதலியவற்றுக்கு ஸர்வாத்மநா அஸம்பாவிதங்களாயும்‌, காரணமாக ஆவதற்கு ஆவச்யகமுமான எல்லா குணங்களும்‌ பகவானிடத்திலேயே நிறைந்திருக்கிற படியால்‌ அவனே ஜகத் காரணம்‌ என்பது ஸ்தாபிக்கப் பெற்றது
ஸ்ம்ருதி பாதம்‌ முற்றும்‌–

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ௨. வே. வித்வான்‌ திருக்கள்ளம்‌ நரஸிம்ஹ ராகவாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய முதல் அத்யாயம் – நான்காம் பாத ஸாரம்- ஸ்ரீ உ.வே. வித்வான்‌ நாவல்பாக்கம்‌ ஸ்ரீ ராமானுஜ தாதாசார்ய ஸ்வாமிகள் –

September 25, 2026

இந்த பாதத்திற்கு முக்திய மூன்றாம்‌ பாதத்தில்‌ ஜீவன்‌, மூல ப்ரக்ருதி, இவைகளைக்‌ குறிக்கும்‌ ஸ்பஷ்டமான அடையாளங்களைக் காட்டும்‌ உபநிஷத்‌ வாக்கியங்கள்‌ பரமாத்‌மாவையே கூறுகின்றன என நிரூபிக்கப் பட்டது. இனி நான்காவது பாதத்தில்‌ ஸாங்கியர்‌ முதலியவர்களுடைய ஸித்தாந்தத்தை அனுஸரிப்பது போல்‌ காணப்படும்‌ அதாவது ஜீவன்‌ ப்ரக்ருதி இவைகளின்‌ மிகவும்‌ ஸ்பஷ்டமான அடையாளங்கள்‌ காணப்படும்‌ உபநிஷத்‌ வாக்யங்கள்‌ பரமாத்மாவைக்‌ குறிக்கின்றன என்பதாக நிரூபிக்கப்படுகிறது. கீழ்‌ மூன்று பாதங்களால்‌ ப்ரஹ்மத்திற்கு ஜகத் காரணத்வம்‌ உண்டு என்பதை ஸ்தாபித்து, இனி நான்காவது பாதத்தில்‌ ப்ரஹ்மத்தைக் காட்டிலும்‌ வேறுபட்ட ப்ரதானம்‌ ஜீவன்‌ இவர்களுக்கு ஜகத் காரணத்வமில்லை என்று ஸ்தாபிக்கிறார்‌ என்று ஸ்ருத ப்ரகாசிகாசிரியர்‌ பணிப்பர்‌-இந்த பாதத்தில்‌ எட்டு அதிகரணங்கள்‌ உள்ளன. அவற்றுள்‌ முதல்‌ ஆறு அதிகரணங்களால்‌ ஸாங்கியர்களுடைய ஆக்ஷேபத்தையும்‌, அடுத்த இரண்டு அதிகரணங்‌களால்‌ யோக ஸித்தாந்திகளின்‌ ஆக்ஷேபத்தையும்‌ பரிஹரிக்கிறார்‌. ஆக முதல்‌ ஆறு அதிகரணங்கள்‌ ஒரு பேடிகையாகவும்‌ பிந்திய இரண்டு அதிகரணங்கள்‌ ஒரு பேடிகையாகவும்‌ கொள்ள வேண்டும்‌, சிலர்‌ கடைசி எட்டாவது அதிகரணம்‌, நான்கு பாதங்களால்‌ ப்ரதிபாதிக்கப்பட்ட அர்த்தங்களை நிகமனம்‌ செய்கிறது என்று கருதுகின்றனர்‌–

அவற்றுள்‌ உட்பிரிவுகள்‌ வருமாறு–முதல்‌ இரண்டு அதிகரணங்களால்‌ ஜகத்‌ காரணமாகக்‌ கபில மஹர்ஷி கருதும்‌ ப்ரக்ருதியை நிராகரிக்கிறார்‌. மூன்றாவது அதிகரணத்தால்‌ கபிலர்‌ கூறிய தத்துவங்களின்‌ எண்ணிக்கை இருபத்து நான்கு என்பது நிராகரிக்‌ கப்படுகின்றது. நான்காவது அதிகரணத்தில்‌ ஸ்ருதியுள்‌ உள்ள * அவ்யாக்ருதம்‌ * என்னும்‌ சொல்‌ ப்ரக்ருதி சரீரகமான பரப்ரஹ்மத்தைக்‌ குறிப்பிடுவதாக ஸ்தாபிக்கப்படுகிறது. ஜந்தாவது அதிகரணத்தில்‌ ஸம்ஸாரி ஜீவன்‌ ஜகத் காரணமாகிய பரதத்வமன்று என நிருபிக்கப்படுகிறது, ஆறாவது அதிகரணத்தில்‌ முக்த ஜீவன்‌ பரதத்துவமன்‌று என ஸ்தாபிக்‌கப் படுகிறது. அடுத்த ஏழு எட்டு இரண்டு அதிகரணங்களில்‌ யோக தர்சனத்தில்‌ கூறியபடி நிமித்த காரண மாத்ரமாகிய ஈஸ்வரன்‌ பரதத்வமன்றெனக்‌ கூறப்படுகிறது. இவ்வாறு பிரித்து நான்காவது பாதத்தில்‌ ஸ்தாபிக்கப்படும்‌ விஷயங்களை உணர வேண்டும்‌, இனி ஒவ்வொரு அதிகரணத்தின்‌ பூர்வபக்ஷ ஸித்தாந்தங்களை விரிவாகக்‌ காண்போம் –

1-ஆநுமானிகாதிகரணம் -கடவல்லியில் -இந்திரியங்களைக் காட்டிலும்‌ விஷயங்கள்‌ சிறந்தன. விஷயங்களைக்‌ காட்டிலும்‌ மனது சிறந்தது. மனதைக் காட்டிலும்‌ புத்தி சிறந்தது. புத்தியைக் காட்டிஐல்‌ ஆத்மாவாகிய மஹத் தத்வம்‌ சிறந்தது. அதைக் காட்டிலும்‌ அவ்யக்தம்‌ சிறந்தது. அதைக் காட்டிலும்‌ புருஷன்‌ சிறந்தவன்‌. புருஷனைக் காட்டிலும்‌ வேறு சிறந்த வஸ்து கிடையாது எனப்‌ பொருள்‌, இங்கு : அவ்யக்தம்‌ ‘ என்கிற சொல்‌ கபில தந்த்ரத்தில்‌ ப்ரஸித்தமான ப்ரதானத்தைக்‌ குறிக்கின்றதா இல்லையா என்று ஸந்தேஹம்‌; இதற்குப்‌ பரிஹாரமளிக்கும்‌ வகையில்‌ பூர்வபஷி கருதுவதாவது—அவ்யக்தம்‌, மஹான்‌, புருஷன்‌ முதலிய சொற்கள்‌ ஸாங்கிய தர்சனத்தில்‌ வழங்கப்படுவன, அதே சொற்களை இந்த மந்த்ரங்களில்‌ உபயோகித்துள்ள படியால்‌ – இங்கு ஸாங்க்ய ஸித்தாந்தமே கூறப்படுவதாக ஏற்படுகிறபடியால்‌, அவ்யக்தம்‌ என்கிற சொல்‌ ப்ரதாநத்தையே குறிப்பிடுகிறது. ஆகவே அவர்கள்‌ கூறுவது போல்‌ ப்ரதானம்‌ ஜகத் காரணம்‌ என்பதில்‌ வேதத்திற்கு நோக்கு. மேலும்‌ இருபத்து நான்கு அசேதந தத்வங்களையும்‌ இருபத்தைந்தாவதாகப்‌ புருஷனையும்‌ ஒப்புக்‌ கொண்டு புருஷனைக் காட்டிலும்‌ வேறு தத்‌துவம்‌ கிடையாதென ஸாங்கியர்களின்‌ கொள்கை. அந்தக் கொள்கை மேலே காட்டிய வாக்கியங்களில்‌ ப்ரதி பலிப்பதாலும்‌ ஸாங்கியர்களின்‌ ஸித்தாந்தமே இந்த வாக்கியங்களில்‌ விவக்ஷிதம்‌ எனப்‌ பூர்வ பக்ஷம்‌.–

ஸித்தாந்தமாவது–இங்கு அவ்யக்த சப்தத்தால்‌ ப்ரதானம்‌ கூறப்படவில்லை-தேராக உருவகப் படுத்தப்பட்ட சரீரமே கூறப்படுகிறது. ஏனெனில்‌, இந்த வாக்கியங்‌களுக்கு முன்பு உள்ள வாக்கியங்களில்‌ ஆத்மாவைத்‌ தேரின்‌ ஸ்வாமியாகவும்‌ சரீரத்தைத்‌ தேராகவும்‌ புத்தியைத்‌ தேரோட்டியாகவும்‌ மனஸ்ஸைக்‌ கடிவாளமாகவும்‌ இந்த்ரியங்களைக்‌ குதிரைகளாகவும்‌ விஷயங்களைக்‌ குதிரைகள்‌ செல்லும்‌ மார்க்கமாகவும்‌ உருவகம்‌ செய்து இந்தத்‌ தேர்‌ முதலியவைகள்‌ எவனுடைய வசமாக இருக்கின்றனவோ அவனே ஸம்ஸாரக் கடலுக்கு அப்பாற்பட்ட வைஷ்ணவ ஸ்தானத்தை அடைகிறான்‌ எனக்‌ கூறப்பட்டது. தேர்‌ முதலியவைகளாக உருவகப் படுத்தப்பட்ட சரீரம்‌ முதலியவைகளுள்‌ முக்கியமாக வசீகரிக்கப்பட வேண்டியவைகளை மந்திரங்கள்‌ கூறுகின்றன
குதிரைகளாகக்‌ கூறப்பட்ட இந்திரியங்களைக் காட்டிலும்‌ மார்கங்களாகக்‌ கூறப்பட்ட விஷயங்கள்‌ வசிகரிக்கப்பட வேண்டியவைகளுள்‌ முக்கியமானவை, ஏனெனில்‌, இந்திரியங்கள்‌ வசப்பட்டிருந்தாலும்‌ விஷயங்கள்‌ ஸமீபத்திலிருந்தால்‌ அவைகளில்‌ செல்லும்‌ இந்திரியங்களை அடக்குவது கடினமாகையால்‌. விஷயங்களைக் காட்டிலும்‌ வசீகரிக்கப்பட வேண்டியவைகளுள்‌ மனது முக்கியமானது. ஏனெனில்‌ விஷயங்கள்‌ சமீபத்தில்‌ இரா விட்டாலும்‌ அவ் விஷயங்களை ஆலோசிக்கும்‌ மனதைக்‌ கட்டுப்படுத்துவது சிரம மாகையால்‌. மனதைக் காட்டிலும்‌ இதை நான்‌ செய்ய வேண்டு மென்கிற அத்யவஸாயம்‌ முக்கியமானது, அதைக் காட்டிலும்‌ காரியங்களைச்‌ செய்கிற படியால்‌ ஆத்மா முக்கியமானவன்‌. ஆத்மாவைக் காட்டிலும்‌ புருஷார்த்தங்களை அடைவதற்கு உபாயத்தை அநுஷ்டிப்பதற்கு ஸாதனமான சரீரம்‌ முக்கியமானது. அதைக் காட்டிலும்‌ ஸர்வாந்தர்யாமியாகிய பரமாத்மா முக்கியமானவன்‌. எல்லாம்‌ அவனுடைய அதீநமாக இருப்பதால்‌. ஆகவே எம்பெருமானைச்‌ சரணாகதியாகிய உபாயத்தால்‌ நம்‌ வசமாக்கிக் கொண்டால்‌ மற்றவை யெல்லாம்‌ நம்‌ வசமாகி விடும்‌ என மேற்காட்டிய வாக்கியங்களின்‌ உட் கருத்து, ஆக முன்பு தேர்‌ முதலியவைகளாக உருவகப் படுத்தப்பட்ட இந்திரியம்‌ முதலிய வஸ்துக்களை அந்தந்த சப்தங்களால்‌ கூறுமிடத்து சரீரம்‌ என்கிற சொல்லுக்குப்‌ பதிலாக அவ்யக்தம்‌ என்கிற சொல்லை உபயோகப் படுத்திய வேத புருஷனுக்கு ஸாங்கியர்களுடைய கொள்கையில்‌ நோக்கில்லை, வசீகரிக்கப் பட வேண்டிய பொருள்களைக்‌ கூறுவதிலேயே நோக்கு. அவ்யக்தம்‌ என்னும்‌ ப்ரக்ருதி தத்துவம்‌ சரீரமாகப்‌ பரிணமிக்கிற படியால்‌ அந்த சொல்லால்‌ சரீரம்‌ குறிப்பிடப் படுகிறது. ஸாங்கியர்கள்‌ கருதும்‌ ப்ரக்ரியை இங்கு விவஷிதமாக இருந்தால்‌ மோக்ஷத்தை அடைவதற்காக அவ்யக்தத்தை நன்றாக அறிய வேண்டும்‌ எனக்‌ கூறுதல்‌ வேண்டும்‌. ஏனெனில்‌ ப்ரக்ருதி ஸ்தூல ப்ரபஞ்சம்‌ புருஷன்‌ இவற்றின்‌ ஸ்வரூபத்தை நன்கு அறிபவர்களுக்கே மோக்ஷம்‌ என்று அவர்கள்‌ ஸித்தாந்தமாகையால்‌. மேலும்‌ இந்த கடவல்லீ ப்ரகரணத்தில்‌ பரமாத்மா, அவனை உபாஸித்தல்‌, உபாஸகனான ஜீவன்‌ இவற்றின்‌ தத்துவம்‌ நன்றாக அறியப்பட வேண்டும்‌ என்று கூறப்படுகிறது. ஆகவே ஸாங்கியர்கள்‌ கூறும்‌ ப்ரக்ருதி முதலியவைகளுக்கு இங்கு ப்ரஸக்தி யில்லை–

2-சமஸாதிகரணம்‌ -ஸ்வேதாஸ்வதர உபநிஷத்தில் –ஸத்வம்‌ ரஜஸ்‌ தமஸ்‌ ஆகிய முக் குணங்களை யுடைய பிறவி யில்லாத ஒருவள் தனக்கு ஸமாந ரூபமான அநேக ப்ரஜைகளை ஸ்ருஷ்டிக்‌கிறாள் – பிறவி யில்லாத ஒருவன்‌ ப்ரீதியடன்‌ அவளோடு இணங்கியுள்ளான்‌. பிறவி யில்லாத மற்றொருவன்‌ அனுபவித்த பின்‌ அவளை விட்டு விடுகிறான்‌ என்று. இங்கு அஜா என்கிற சொல்‌ ஸாங்கியர்கள்‌ கூறும்‌ ஸ்வதந்திரமான ப்ரக்ருதியைக்‌ குறிப்பிடுகிறதா அல்லது பாமாத்மா தீனமான ப்ரக்ருதியைக்‌ குறிப்பிடுகிறதா என்று ஸந்தேகம் வர, பூர்வ கதியானவன்‌–ஸம்ஸாரிகளால்‌ ப்ரீதியுடன்‌ அனுபவிக்கப் படுவதாயும்‌ முக்தாத்மாக்களால்‌ விடப் படுவதாயும்‌ ஸ்வதந்த்ரமாக அநேக ப்ரஜைகளை ஸ்ருஷ்டிப்பதாகவும்‌ – கூறப்படும்‌ வஸ்து ஸாங்கியர்கள்‌ கூறும்‌ மூல ப்ரக்ருதியே, ஆகவே அதுவே ஜகத் காரணம்‌ என்று ஆக்ஷேபம்‌ செய்கிறான்‌.

அதற்கு ஸித்தாந்தி கூறும்‌ ஸமாதானம்‌ வருமாறு–இங்கு பிறவி யில்லாத வஸ்து என்று மாத்திரமே ஏற்படுகிறது. அது ஸ்வதந்திரமான ப்ரக்ருதியே என்பதற்கு அடையாளம்‌ ஒன்றுமில்லை. வேறு ஸ்ருதி வாக்கியங்களில்‌ ப்ரக்ருதி யானது பரமாத்மாவை ஆத்மாவாக உடையது என ஓதப் படுவதால்‌ ஈண்டும்‌ அஜா என்கிற சொல்‌ பரமாத்மாத்மகமான ப்ரக்ருதியையே குறிப்பிடுகிறது. ஆகவே பரமாத்மாவினால்‌ ஏவப்பட்ட ப்ரக்ருதி ஜகத்தை ஸ்ருஷ்டிக்கிறது என்பதே மேலே காட்டிய வாக்கியத்திற்கும்‌ பொருளாகும் –

3-ஸங்க்யோப ஸங்க்ரஹாதி கரணம்‌-ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் ஓதப்படும் மந்திரத்தில் –ஐந்து ஐந்து ஜனங்களுடைய கூட்டமும்‌ ஆகாசமும்‌ எவனை ஆஸ்ரயித்து நிலைத்துள்ளதோ அந்த ஆத்மாவை ப்ரஹ்மமாக அறிபவன்‌ முக்தனாகிறான்‌ என்கிறது , இங்கு ஐயைந்து என்று கூறியபடிபால்‌ இருபத்தைந்து வஸ்துக்கள்‌ கருதப்படுகின்றன. இதனால்‌ ஸாங்கியர்களின்‌ கொள்கை த்வனிக்கிறது. இருபத்து நான்கு அசேதந தத்துவங்களையும்‌ இருபத்தைந்தாவதாக ஆத்மாவையும்‌ அவர்கள்‌ ஒப்புக் கொள்கின்றபடியால்‌- இந்த இருபத்தைந்து வஸ்துக்களும்‌ ஆத்மாவாகிய்‌ புருஷனை -ஆஸ்ரயித்துள்ளன, இதனால்‌ ஆத்மா தனக்குத்‌ தானே ஆஸ்ரயம்‌, வேறு ஆஸ்ரயமில்லை என்பதும்‌ பெறப்படுகின்றது. ஆகவே உபநிஷத்துக்கு ஸாங்கியர்கள்‌ கூறும்‌ இருபத்தைந்து தத்துவங்களைக்‌ கூறுவதில் தான்‌ தாத்பர்யம்‌ என்று பூர்வ பக்ஷம்

ஸித்தாந்தம்‌-– ஐயைந்து இருபத்தைந்து தத்துவங்‌ களைச்‌ சொல்லி அவற்றைக் காட்டிலும்‌ வேறாக ஒன்றைச் சொல்லி மேலும் ஒரு சொல்லால் அதிகப்படியாக இரண்டு தத்துவங்கள்‌ கூறப் பட்டிருப்பதால்‌ இருபத்தேழு தத்வங்கள்‌ தேறுமே யல்லது ஸாங்கியர்கள்‌ கொள்கைப்படி இருபத்தைத்துக்கு இங்கு ப்ரஸக்தி யில்லை. மேலும்‌ இங்கு ஐந்து ஜனங்களுடைய ஸமூஹம்‌ என்கிற அர்த்தத்தில்‌ பும்லிங்க சப்தம்‌ இல்லாமல் ஸ்த்ரீ லிங்கமே சரியானது- ஆகவே பஞ்சஜனம்‌ என்‌கிற பெயரை யுடையவர்கள்‌ சிலர்‌, அவர்‌ ஐவர்‌. அவர்‌ யாவர்‌ எனில்‌, முன் பின்‌ வாக்கியங்களைப்‌ பரிசீலிக்கு மிடத்து ஐந்து ஞானேந்திரியங்கள்‌ எனத்‌ தீர்மானிக்கப் படுகிறது. ஆக ஐந்து ‘ஞாந இந்‌திரியங்களும்‌ ஆகாசமும்‌ எந்த ப்ரஹ்மத்தை ஆஸ்ரயித்துள்ளனவோ அந்த ப்ரஹ்மத்தை அறிபவன்‌ முக்தியைப்‌ பெறுவான்‌ என்பது தான்‌ பொருள்‌. மேலும்‌ ஐந்து ஞானேந்திரியங்கள்‌ ஐந்து கர்மேந்திரியங்கள்‌ ஐந்து பூதங்கள்‌ ஐந்து ப்ராணன்கள்‌ என்பதாக ஐந்து ஸமூஹங்களாக நான்கினையே சாங்கியர்கள் அங்கீ கரிக்கின்றனர் -ஐந்தாவதாக ஒரு கூட்டம்‌ அவர்கள்‌ மதத்தில்‌ ஒப்புக் கொள்ளப்பட வில்லை. ஆகவே ஐயைந்து இருபத்தைந்து என்கிற பொருளில்‌ வேத புருஷனுக்கு நோக்கில்லை. ஆன பின்பு மேற் கூறிய படியே பொருள்‌ கொள்ள வேணும்‌. ஸாங்கியர்களின்‌ ஸித்தாந்தம்‌ இங்கு விவஷிதமன்‌று –

4-காரணத்வாதிகரணம்‌–ப்ரக்ருதி ஜகத் காரணம்‌ என்கிற மதத்தைத் தழுவி மறுபடி பூர்வ பக்ஷம் வர அதற்கு ஸமாதானமாக இந்த அதிகரணம்‌ அமைந்துள்ளது. வேதாந்த வாக்கியங்களில்‌ ஜகத்‌ காரணமாகிய வஸ்து ஒருவிதமாக ஓதப்படவில்லை. சில சில இடங்களில் வெவ்வேறு சொற்களால் ஜகத் காரணமான வஸ்து அழைக்கப்படுகிறது. ஆகவே சந்தேகம்‌ ஏற்படுகிறது. பரமாத்மா தான்‌ ஜகத்காரணம்‌ என்று எப்படி அறுதியிட முடியும்‌. அதற்கு மாறாக ஸ்பஷ்ட மாக ப்ரக்ருதியைக்‌ சூறிப்பிடுவதால்‌ அதுவே ஜகத் காரணமாகலாம்‌-ப்ரக்ருதியின்‌ ஸ்தூலமான அவஸ்தையையும்‌ அதன்‌ ஸூக்ஷ்மமான அவஸ்தையையும்‌ சொல்லி அதன் கார்யமான வஸ்துக்களில்‌ காரணமாகிய ப்ரக்ருதி வ்யாபித்திருக்கும்‌ தன்மையையும்‌ பெரியதாக இருக்கும்‌ தன்மையையும்‌ காட்டுகிறது. ஆகையால்‌ ப்ரதானமே ஜகத் காரணம்‌ என்று அறுதி யிடலாம்‌. ஸாங்க்ய ஸ்ம்ருதி க்ரந்தமும்‌ அதற்கு அநுகூலமாக உள்ளது. அசேதந மாகிய ஜகத்துக்கு ௮சேதன மாகிய ப்ரக்ருதி காரணமானால்‌, யுக்தியும்‌ அநுகூலமாக அமைகிறது என்பதாகப்‌ பூர்வ பக்ஷம்‌-எல்லாவற்றையும்‌ அறியும்‌ சேதந மாகிய ப்ரஹ்மத்தைக்‌ குறிப்பிட்டு அதையே நாம ரூப விபாகமிராமையால்‌ அதுக்குத்தக்க சொல்லால்‌ குறிப்பிட்டு அதுவே ஜகத்துக்குக்‌ காரணம்‌ என்பதில் தான்‌ ஸ்ருதிக்குத்‌ தாத்பரியம்‌. இரா விட்டால்‌ அசேதனமான ப்ரக்ருதிக்கு ஸர்வ கர்த்ருத்வம்‌ எங்ஙனே பொருந்தும்‌. ஆகவே இங்குள்ள சொல் எப்படி ஸ்வரூப நித்யத்வத்தால்‌ ப்ரஹ்மத்தைக்‌ குறிக்கிறதோ அதே போல்‌ சொல்லும்‌ மற்ற ஒன்றும் ப்ரஹ்மத்தையே குறிப்பிடுகிறது- நாம ரூப விபாகமற்ற ப்ரபஞ்சத்தை – சரீரமாக உடையது என்று அதன்‌ பொருள்‌-மற்றச் சொல்லுக்கும்‌ அதுவே பொருள்‌. ஆகவே ப்ரஹ்மமே ஜகத் காரணம்‌ எனத்‌ தீர்மானிக்கலாம்‌ என்று ஸித்தாந்தம்‌-

5-ஐகத்வாசித்வாதிகரணம்‌--ப்ருஹதாரண்யத்தில்‌ பாலாகி அஜாத சத்ரு இவர்களுடைய ஸம்பாஷணையில்‌ அஜாத சத்ரு-என்கிற காசி ராஜன்‌ பாலாகி என்பவரைப்‌ பார்த்து உனக்கு நான்‌ ப்ரஹ்மத்‌தைப்‌ பற்றிக்‌ கூறுகின்றேன்‌ என்று ஆரம்பித்து, பரத்யக்ஷமாகக்‌ காணப்படும்‌ புத்திரன்‌ முதலியவர்களுக்கு எவன்‌ ஸ்ருஷ்டி கர்த்தவோ அவர்களை ஸ்ருஷ்டிப்பதற்குக்‌ காரணமான புண்ய பாபங்களாகிய கர்மத்தை எவன்‌ உடையவனோ அவனே மோக்ஷத்தை விரும்புகிறவர்‌களால்‌ அறிய வேண்டியவன்‌ என்று ஓதப்படுகிறது-. இங்கு கர்ம ‘என்கிற சொல்‌ லோகத்திலும் வேதத்திலும்‌ புண்ய பாபங்களைக்‌ குறிப்பதாக ப்ரஸித்தி உள்ளபடியால்‌ அவைகளையே குறிப்‌பிடுகிறது. அவற்றை உடையவன்‌ ஜீவாத்மாவே. ஆகையால்‌ அவன்‌ தான் செய்த புண்ய பாபங்களை அனுபவிப்பதற்காக ஜகத்தானது ஸ்ருஷ்டிக்கப்படுவதால்‌ ஜீவாத்மாவே ஜகத்‌துக்குக்‌ காரணம்‌. அவனுடைய ஸ்வரூபமே மோக்ஷத்திற்காக அறிய வேண்டும்‌ என்பதாகப்‌ பூர்வ பக்ஷம்‌-

இந்த வாக்கியம்‌ பாலாகியினால்‌ முன்னமே அறியப்படாத ப்ரஹ்ம தத்வத்தை அறிவிப்பதற்காகத்‌ தோன்றிய படியால்‌, புத்திரன்‌ முதலிய புருஷர்களோ அவர்களை – ஸ்ருஷ்டிக்கும்‌ புருஷனோ பாலாகிக்கு முன்னமே தெரியுமாகையால்‌ அந்த புருஷனைச்‌ சொல்லுவதில்‌ மேற் காட்டிய வாக்யத்துக்கு நோக்கில்லை. ஆன பின்பு ஸர்வ ஜகத்துக்கும்‌ காரண பூதனான ஜீவாத்மாவைக்‌ காட்டிலும்‌ வேறுபட்ட பரமாத்மாவைச்‌ சொல்வதில் தான்‌ ஸ்ருதிக்குத்‌ தாத்பர்யம்‌. அதற்குச் சேர மேலே காட்டிய வாக்யத்திற்குப்‌ பொருள்‌ கொள்ள வேண்டும்‌. காணப்படும்‌ புருஷர்களுக்கு எவன்‌ ஸ்ருஷ்டி கர்தாவோ, பல பேசி என்‌? : காணப்படும்‌ எல்லா ப்ரபஞ்சமும்‌ எவனுடைய ஸ்ருஷ்டிக்கு விஷயமோ அவனே அறியத்‌ தகுந்தவன்‌ என்பதே அந்த பொருள்‌. இங்கு * கர்ம’ என்கிற சொல்‌ புண்ய பாபங்களைக்‌ குறிக்க வில்லை. செய்யப்படுகிறது அதாவது ஸ்ருஷ்டிக்கப்படுமது என்கிற பொருளைக்‌ குறிக்கிறது. ஆகையால்‌ புண்ய பாபங்களை உடையவன்‌ என்று பெறப் படாது. எல்லா ஜகத்தும்‌ எவனுடைய ஸ்ருஷ்டிக்கு விஷயமோ அவன்‌, அதாவது ஸர்வ ஜகத்துக்கும்‌ காரண பூதன்‌ என்றே பெறப்படும்‌. அப்படிப் பட்டவன்‌ ஜீவாத்மாவைக காட்டிலும்‌ வேறுபட்ட பரமாத்மாவே. அவனே மோக்ஷத்திற்காக அறியத் தகுந்தவன்‌ என்பது ஸித்தாந்தம் –

6-வாக்யாந்வயாதிகரணம்‌-ப்ருஹதாரண்யக உபநிஷத்தில்‌ மைத்ரேயி என்பவளுக்கு மோக்ஷ ஸாதனமான ஞானத்துக்கு விஷயமாக ஆத்மா குறிப்பிடப் பட்டுள்ளது. ஸ்ருதிவாக்யப்படி . கணவன்‌ மனைவிக்கு ப்ரீதி விஷயமாகும் போது பர்த்தாவின்‌ இச்சையை நிறை வேற்றுவதற்‌காக ப்ரீதி விஷயனாவதில்லை. தன்னுடைய காமத்தை நிறை வேற்றுவதற்காகவே பத்னீ பர்த்தாவிடம்‌ ப்ரீதியைச்‌ செலுத்துகிறாள்‌. இது போல்‌ எல்லாரும்‌ அவரவருக்கு ப்ரீதி விஷயமாகும் போது அவரவரின இச்சை பூர்த்தி யாவதற்காகவே ப்ரீதி பாத்ரமாகின்றனர்‌. தனக்காகவே உலகில்‌ எல்லாம்‌ ப்ரீதி விஷயமாகிற படியால்‌ தன்‌ ஆத்ம ஸ்வரூபத்தையே த்யானம்‌ பண்ண வேண்டும்‌ என்பது ஸ்ருதி வாக்யத்தின்‌ பொருள்‌. இங்கு த்யானத்துக்கு விஷயமாகக்‌ குறிப்பிடப்பட்ட ஆத்மா ஜீவனா அல்லது ஸர்வேஸ்வரனா என்று ஸந்தேஹம்‌. பர்த்தா முதலிய ப்ரிய வஸ்‌துக்களின்‌ ஸம்பந்தம்‌ ஆத்மாவுக்குக்‌ கூறப்பட்டுள்ள படியால்‌ ஜீவாத்மாவே இங்கு விவஷிதன்‌. ப்ரக்ருதி வியுக்தனாக ஜீவாத்மாவை த்யானம்‌ செய்தால்‌ மோக்ஷம்‌ ஸித்திக்கும்‌ என்று ஸாங்க்யர்கள்‌ கூறுவதால்‌ ஜீவாத்ம ஸ்வரூப தியானத்துக்கு மோக்ஷ ஸாதனத்வம்‌ உபபந்நமே. ஆகவே வேதாந்த வாக்யங்கள்‌ ஸாங்க்‌யர்கள்‌ ஒப்புக் கொண்ட புருஷனையே கூறுகின்றன. அந்த புருஷனுடைய சேர்க்கையினால்‌ ப்ரக்ருதி ஜகத்தை ஸ்ருஷ்டிக்கிறது என்று பூர்வபஷம் –

இங்கே ஸித்தாந்தமாவது :–இந்த ப்ரகரணத்தின்‌ ஆரம்பத்தில்‌ யாக்ஞவல்க்யரிடம்‌ மைத்ரேயியானவள்‌ மோக்ஷத்திற்கு உபாயம்‌ எது என்று கேட்க அதற்கு உபாயமாக ஆத்ம தியானத்தை உபதேசிக்கிறார்‌. அந்த ஆத்மா ஜீவனாக இருக்க முடியாது. ஏனெனில்‌ வேத வாக்யங்கள்‌ பரமாத்மாவை தியானம் செய்வதே மோஷ உபாயம்‌ என்று கூறுகின்‌றனவாகையால்‌ ஜீவாத்ம ஸ்வரூப த்யானத்துக்கு மோக்ஷ ஸாதநத்வம்‌ கூடாதிறே. மேலும்‌ இந்த ப்ரகரணத்தில்‌ எல்லா ஜகத்துக்கும்‌ காரணமாக ஆத்மாவைக்‌ கூறுகிறபடியால்‌ நிர்விசேஷம்‌ என்று ஸாங்க்யர்கள ஒப்புக் கொண்ட ஆத்மாவுக்கு ஜகத் காரணத்வமாகிய விசேஷம்‌ அனுபபன்னம்‌, ஆகவே இந்த ஸ்ருதிக்கு வேறு விதமாகப்‌ பொருள் கொள்ள வேணும்‌-இந்த சொல்லுக்கு ஸங்கல்பம்‌ என்று பொருள்‌. பர்த்தாவானவன்‌ *நான்‌ என்‌ பத்னிக்குப்‌ பிரியனாகக் கடவேன்‌ * என்று ஸங்கல்பிக்கிறான்‌. அந்த ஸங்கல்பத்தை நிறை வேற்றுவதற்காக பத்னி பர்த்தாவிடம்‌ ப்ரீதி வைக்கிறாள்‌ என்பது கிடையாது. பர்த்தாவுக்கு அவ்வாறு ஸங்கல்பம்‌ இருந்தாலும்‌ பத்னிக்கு பர்த்தாவிடம்‌ ப்ரீதி யின்மையையும்‌ நாம்‌ உலகில்‌ காண்கிறபடியால்‌. ஆகவே ஸத்ய ஸங்கல்ப ஞான ஸர்வேஸ்வரன்‌ “இவளுக்கு இவன்‌ ப்ரியனாகக் கடவன்‌’ என்று ஸங்கல்பிக்கிறான்‌. அவனுடைய ஸங்கல்பத்தை நிறைவேற்றுவதற்காகவே பத்னியானவள்‌ பர்த்தாவிடம்‌ ப்ரீதி வைக்‌கிறாள்‌. ஆகவே ஸத்ய ஸங்கல்பனான பரமாத்மாவையே த்யானம்‌ செய்ய வேண்டும்‌ என்று பொருள்‌. இங்கு ஆத்மா என்கிற சொல்‌ ஜீவாத்மாவுக்கு அந்தர்யாமியாகிய (தனக்கு அந்தர்‌ யாமியாகிய) பரமாத்மாவைக்‌ குறிப்பிடுகிறது என காசக்ருத்ஸ்ன மஹர்ஷி கருதுகிறார்‌. அதுவே வியாஸருடைய ஸித்தாந்தம்‌ என்று ஸ்ரீபாஷ்யாதி க்ரந்தங்களில்‌ பரக்கப்‌ பேசப்பட்‌ டுள்ளது.

7–ப்ரக்ருத்யதிகரணம்‌–இந்த அதிகரணத்தில்‌ ஸேஸ்வர ஸாங்க்யன்‌ பூர்வபக்ஷீ. அவன்‌ கருத்து–உலகில்‌ எந்த காரிய த்ரவ்யம்‌ உண்டானாலும்‌ அதற்கு உபாதான காரணம்‌ என்றும்‌ நிமித்த காரணம்‌ என்றும்‌ இரு வகைக்‌ காரணங்கள்‌ உண்டு. மண்ணினால்‌ செய்யப்படும்‌ குடம்‌ முதலியவை களுக்கு மண்‌ உபாதாந காரணம்‌. குயவன்‌ நிமித்த காரணம்‌. வேறு உருவத்தில்‌ பரிண மிக்கும்‌ காரணம்‌ உபாதான காரணம்‌ பரிணமிக்கும் படியாகச்‌ செய்பவன்‌ நிமித்த காரணம்‌, உபாதான காரணம்‌ வேறு நிமித்த காரணம்‌ வேறு. ஆகவே ஜகத்துக்கு உபாதான காரணமும்‌ நிமித்த காரணமும்‌ ப்ரஹ்மமே என்கிற வேதாந்திகள்‌ பக்ஷம்‌ யுக்திக்குச் சேராது, ஜகத்துக்கு உபாதான காரணம்‌ ப்ரக்ருதி அது ஜகத்தாகப்‌ பரிணமிக்கிறபடியால்‌. நிமித்த காரணம்‌ ஈஸ்வரன்‌, அவனால்‌ ஏவப்பட்ட ப்ரக்ருதி ஜகத்தாகப்‌ பரிணமிக்கிறபடியால்‌–வேத வாக்யமும்‌ ஈச்வரனால்‌ ஏவப்பட்ட ப்ரக்ருதியே ஜகத்தை உண்டு பண்ணுகிறது என்று கூறலாம் படி யுள்ளது –

இதற்கு ஸித்தாந்தி கூறும்‌ பதில்‌, சாந்தோக்ய உபநிஷத்தில்‌ ப்ரஹ்மம்‌ அறியப்‌ பட்டால்‌ எல்லாம்‌ அறியப் படுகிறது என்று கூறி, எப்படி. மண்‌ அறியப் பட்டால்‌ அதன்‌ விகாரமாகிய குடம்‌ முதலியன அறியப் படுகின்றனவோ என்று உதாஹரணம்‌ காட்டப் பட்டுள்ளது. . இதனால்‌ ப்ரஹ்மம்‌ உபாதான காரணம்‌ என்று அறியப் படுகிறது. ப்ரஹ்மம்‌ நிமித்த காரண மாத்ரம்‌ என்று கொண்டால்‌ நிமித்த காரணமாகிய குயவன்‌ அறியப்பட்டால்‌ குடம்‌ முதலியன அறியப்படாமையால்‌ ஜகத்தும்‌ அறியப்பட மாட்டாது. ஆக ப்ரஹ்மம்‌ அறியப்பட்டால்‌ ஜகத்தும்‌ அறியப்படும்‌ என்கிற ப்ரதிக்ஜை அநுபபன்னமாகி விடும்‌. உபாதான காரணமாகிய மண்‌ அறியப்பட்டால்‌ அதன்‌ விகாரமாகிய குடம்‌ முதலியவைகள்‌ மண்‌ என அறியப் படுகிறபடியால்‌ உபாதான காரண ஞானத்தால்‌ அதன் காரியமும்‌ அறியப்‌ படும்‌ என்பது உபபந்ந மாகையால்‌ ப்ரஹ்மத்தை உபாதான காரணமாகவும்‌ ஒப்புக் கொள்ள வேணும்‌. ஆகவே எங்காவது ஸ்ருதியில்‌ ப்ரக்ருதி ஜகத்தை ஸ்ருஷ்டிப்பதாகக்‌ கூறியிருந்தால்‌ அங்கும்‌ ப்ரக்ருதியை சரீரமாக உடைய ப்ரஹ்மமே ஸ்ருஷ்டிக்கிறதென்று கொள்ள வேணும் –

8-ஸர்வ வ்யாக்யாநாதிகரணம்‌--இதற்கு முன்புள்ள அதிகரணம்‌ வரையில்‌ முதல்‌ அத்யாயத்திலுள்ள நான்கு பாதங்களில்‌ கூறப்பட்ட நியாய விசேஷங்களைக் கொண்டு, கீழ்‌ அதிகரணங்களில்‌ உதாஹரிக்‌காத ஜகத் காரண ப்ரதிபாதக வாக்யங்களுக்கும்‌ சேதனாசேதனங்களைக் காட்டிலும்‌ வேறுபட்ட பரமாத்மாவைக்‌ கூறுவதிலேயே தாத்பர்யம்‌ என்று அறுதியிட வேண்டும்‌ என்பதாக இந்த அதிகரணத்துக்கு ஸ்ரீபாஷ்யத்தில்‌ அருளிய பொருள்‌. பூர்வாதிகரணங்களில்‌ உதாஹரிக்காத வாக்கியங்கள்‌ எவை? சேதனாசேதன ப்ரதிபாதக வாக்யங்கள்‌ எனில்‌, அவைகளுக்குத்‌ தாத்பர்யத்தை பூர்வ நிர்ணீத ந்யாயங்களால்‌ கண்டு கொள்ளலாம்‌ ஆகையால்‌ அதற்காக இநத அதிகரணம்‌ தேவையில்லை. ஆகவே தேவதாந்தர வாசகங்களான ஹிரண்ய கர்ப்பன்‌, சிவன்‌ முதலிய சப்தங்களை நிர்தேசித்து ஜகத் காரண வஸ்துவைக்‌ கூறும்‌ வாக்யங்களே கீழ்‌ அதிகரணங்களில்‌ உதாஹரிக்காத வாக்யங்கள்‌. அவைகளுக்கும்‌ நாராயணன்‌ ஜகத் காரண புருஷன்‌ என்பதில்‌ நோக்கு, இவ் விஷயமே இந்த அதிகரணத்தில்‌ விவஷிதம்‌ என்பதாக ஸ்ருத ப்ரகாசிகையிலும்‌ அதிகரண ஸாராவளியிலும்‌ கூறப்படுகிறது.

இங்கு ஒரு கேள்வி பிறக்கின்றது.-அதாவது கீழ்‌ அதிகரணங்களில்‌ உதாஹரிக்கப்‌ பட்ட வாக்யங்கள்‌ ஸர்வ விலக்ஷணமான நாராயணனைக்‌ கூறுகின்றன என்று யுக்திகளால்‌ நிர்ணயம்‌ செய்திருந்தால்‌ அல்லவா அதே யுக்திகளால்‌ சிவன்‌ முதலிய தேவதாந்தர வாசக சப்தங்களை உடைய வாக்யங்களும்‌ நாராயணனையே கூறுகின்றன என்று அதிதேசம்‌ பண்ணலாம்‌. கீழ்‌ அதிகரணங்களில்‌ உபநிஷத் வாக்யங்கள்‌ சேதனாசேதன விலக்ஷண ப்ரஹ்ம பரங்கள்‌ என்றிம்மாத்திரம்‌ அல்லவா நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது . ஆகவே அதிதேசம்‌ எப்படிப்‌ பொருந்தும்‌ என்று. இந்த விடத்தில்‌ ஸ்ருத ப்ரகாசிகையை அவசியம்‌ எல்லோரும்‌ ஸேவிக்க வேணடும்‌. அங்கு ஸுதர்சனப் ட்டருடைய நிரூபணம்‌ வெகு நன்றாக அமைந்துள்ளது. அதாவது கீழ்‌ முதல்‌அத்யாயம்‌ நான்கு பாதங்களில்‌ உள்ள ஒவ்வொரு அதிகரணத்திற்கும்‌ அவைகளின்‌ விஷய வாக்யங்களுக்கும்‌ நாராயணன்‌ ஜகத்‌ காரணம்‌ என்பதிலேயே தாத்பரியம்‌ என்று யுக்தி ப்ரமாணங்களுடன்‌ நிரூபித்து அந்த ந்யாயத்தால்‌ சிவாதி பரமாகத்‌ தோன்றும்‌ வாக்யங்களுக்கும்‌ நாராயணனைக்‌ கூறுவதில் தான்‌ தாத்பர்யம்‌ என்பதைத்‌ தெரிவிப்பதற்காக இந்த அதிகரணம்‌ தோன்றியது என நிருபித்‌துள்ளார்‌-

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ.வே. வித்வான்‌ நாவல்பாக்கம்‌ ஸ்ரீ ராமானுஜ தாதாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்