Archive for the ‘Narasimhar’ Category

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் (ஸ்ரீ ந்ருஸிம்ஹ புராணத்தில் உள்ளது)

January 18, 2024

ஸ்ரீ மார்க்கண்டேய உவாச-

1        ஏவம் யுத்தமபூத் கோரம் ரௌத்ரம் தைத்யபலைஸ் ஸஹ |

ந்ருஸிமஸ்யாங்க ஸம்பூதைர் நாரஸிம்ஹை ரநேகஶ ||

 

2        தைத்யகோட்யோ ஹதாஸ் தத்ர கேசித் பீதா: பலாயிதா: |

தம் த்ருஷ்ட்வாதீவ ஸங்க்ருத்தோ ஹிரண்யகஶிபுஸ்ஸ்வயம் ||

 

3        பூதபூர்வை ரம்யுத்யுர் மே இதி ப்ரஹ்ம வரோத்தத: |

வவர்ஷ ஶரவர்ஷேண நாரஸிம்ஹம் ப்ருஶம் பலீ ||

 

4        த்வந்த்வ யுத்த மபூதுக்ரம் திவ்ய வர்ஷ ஸஹஸ்ரகம் |

தைத்யேந்த்ர ஸாஹஸம் த்ருஷ்ட்வா தேவாஶ் கேந்த்ர புரோகமா: ||

 

5        ஶ்ரேய: கஸ்ய பவேதத்ர இதி சிந்தாபரா பவந் |

ததா க்ருத்தோ ந்ருஸிம்ஹஸ்து தைத்யேந்த்ர ப்ரஹிதான்யபி||

 

6        விஷ்ணுசக்ரம் மஹாசக்ரம் காலசக்ரம் ச வைஷ்ணவம் |

ரௌத்ரம் பாஶுபதம் ப்ராஹ்மம் கௌபேரம் குலிஶாஸநம் ||

 

7        ஆக்நேயம் வாருணம் ஸௌம்யம் மோஹநம் ஸௌர பார்வதம் |

பார்கவாதி பஹூந்யஸ்த்ரா ண்யக்ஷபயத கோபந: ||

 

8       ஸந்த்யாகாலே ஸபாத்வாரே ஸ்வாங்கே நிக்ஷிப்ய பைரவ: |

தத: கட்கதரம் தைத்யம் ஜக்ராஹ நரகேஸரீ ||

 

9        ஹிரண்ய கஶிபோர் வக்ஷோ விதார்யாதீவ ரோஷித: |

உத்த்ருத்ய சாந்த்ரமாலாஶச நகைர் வஜ்ரஸமப்ரபை: ||

 

10       மேநே க்ருதார்த்தமாத்மாநம் ஸர்வத: பர்யவைக்ஷத |

ஹர்ஷிதா தேவதாஸ் ஸர்வா: புஷ்பவ்ருஷ்டி மவாகிரந் ||

 

11       தேவதுந்துபயோ நேது: விமலாஶ்ச திஶோபவந் |

நரஸிம்ஹ மதீவோக்ரம் விகீர்ணவதநம் ப்ருஶம் ||

 

12       லேலிஹாநம் ச கர்ஜந்தம் காலாநல ஸமப்ரபம் |

அதிரௌத்ரம் மஹாகாயம் மஹாதம்ஷ்ட்ரம் மஹாருதம் ||

 

13       மஹாஸிம்ஹம் மஹாரூபம் த்ருஷ்ட்வா ஸம்க்ஷுபிதம் ஜகத் |

ஸர்வ தேவகணைஸ் ஸார்த்தம் தத்ராகத்ய பிதாமஹ: ||

 

14       ஆகந்துகைர் பூதபூர்வை: வர்த்தமாநை ரநுத்தமை: |

குணைர் நாம ஸஹஸ்ரேண துஷ்டாவ ஶ்ருதிஸம்மதை: ||

 

ஓம் நம: ஸ்ரீமத் திவ்யலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய ப்ரஹ்மா ருஷி: அநுஷ்டுப் சந்த: ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹோ தேவதா, பரமாத்மா பீஜம், லக்ஷ்மீர் மாயா ஶக்தி: ஜீவோ பீஜம், புத்திஶ் ஶக்தி: உதாநவாயுர் பீஜம், ஸரஸ்வதீ ஶக்தி: வ்யஞ்ஜநாநி பீஜாநி, ஸ்வரா: ஶக்தய: |

 

ஓம், க்ஷ்ரௌம், ஹ்ரீம் இதி பீஜாநி, ஓம் ஸ்ரீம் அம் ஆம் இதி ஶக்தய: விகீர்ண நக தம்ஷ்ட்ராயுதாயேதி கீலகம், அகாராதீதி போதகம்.

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ப்ரஸாத ஸித்யர்த்தே ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ரநாம மந்த்ர ஜபே விநியோக: ||

 

ப்ரஹ்மோவாச—

 

ஓம் ஸ்ரீலக்ஷ்மீ ந்ருஸிம்ஹாய நம: – அங்குஷ்டாப்யாம் நம:

ஓம் வஜ்ரநகாய நம: தர்ஜனீப்யாம் நம:

ஓம் மஹாருத்ராய நம: — மத்யமாப்யாம் நம:

ஓம் ஸர்வதோமுகாய நம: — அநாமிகாப்யாம் நம:

ஓம் விகடாஸ்யாய நம: – கநிஷ்டிகாப்யாம் நம:

ஓம் வீராய நம: – கரதல கரப்ருஷ்டாப்யாம் நம:

 

ஓம் ஸ்ரீலக்ஷ்மீ ந்ருஸிம்ஹாய நம: – ஹ்ருதயாய நம:

ஓம் வஜ்ரநகாய நம: ஶிரஸே ஸ்வாஹா

ஓம் மஹாருத்ராய நம: — ஶிகாயை வஷட்

ஓம் ஸர்வதோமுகாய நம: — கவசாய ஹும்

ஓம் விகடாஸ்யாய நம: – நேத்ராப்யாம் வௌஷட்

ஓம் வீராய நம: – அஸ்த்ராய பட் – ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: – இதி திக்பந்த:

 

ஓம் ஐந்த்ரீம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

ஓம் ஆக்நேயீம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

ஓம் யாம்யாம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

ஓம் நைர்ருதீம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

ஓம் வாருணீம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

ஓம் வாயவீம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

ஓம் கௌபேரீம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

ஓம் ஐஶாநீம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

ஓம் ஊர்த்வாம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

ஓம் அதஸ்தாம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

ஓம் ஆந்தரிக்ஷ்யாம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

 

த்யாநம்

ஸத்யஜ்ஞாந ஸுகஸ்வரூப மமலம் க்ஷீராப்திமத்யே ஸ்த்திதம் |

ஸ்வாங்காரூட ரமா ப்ரஸந்ந வதநம் பூஷா ஸஹஸ்ரோஜ்ஜ்வலம் ||

 

த்ர்யக்ஷம் சக்ரபிநாக ஸாபயகராந் பிப்ராண மர்க்கச்சவிம் |

சத்ரீபூத பணீந்த்ர மிந்துதவளம் லக்ஷ்மீ ந்ருஸிம்ஹம் பஜே ||

 

உபாஸ்மஹே ந்ருஸிம்ஹாக்யம் ப்ரஹ்ம வேதாந்த கோசரம் |

பூயோ லாலித ஸம்ஸார ச்சேதஹேதும் ஜகத்குரும் ||

 

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ஷ்ரௌம்

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ நாமஸஹஸ்ர ப்ராரம்ப:

 

1        ஓம் நமோ நாரஸிம்ஹாய வஜ்ரதம்ஷ்ட்ராய வஜ்ரிணே |

வஜ்ரதேஹாய வஜ்ராய நமோ வஜ்ர நகாய ச ||

 

2        வாஸுதேவாய வந்த்யாய வரதாய வராத்மநே |

வரதாபய ஹஸ்தாய வராய வரரூபிணே ||

 

3        வரேண்யம் வரிஷ்டாய ஸ்ரீவராய நமோ நம: |

ப்ரஹ்லாத வரதாயைவ ப்ரத்யக்ஷ வரதாய ச ||

 

4        பராத்பர பரேஶாய பவித்ராய பிநாகிநே |

பாவநாய ப்ரஸந்நாய பாஶிநே பாபஹாரிணே ||

 

5        புருஷ்டுதாய புண்யாய புருஹூதாய தே நம: |

தத்புருஷாய தத்த்யாய புராண புருஷாய ச ||

 

6        புரோதஸே பூர்வஜாய புஷ்கராக்ஷாய தே நம: |

புஷ்பஹாஸாய ஹாஸாய மஹாஹாஸாய ஶார்ங்கிணே ||

 

7        ஸிம்ஹாய ஸிம்ஹராஜாய ஜகத்வஶ்யாய தே நம: |

அட்ட ஹாஸாய ரோஷாய ஜலவாஸாய தே நம: ||

 

8        பூதாவாஸாய பாஸாய ஸ்ரீநிவாஸாய கட்கிநே |

கட்கஜிஹ்வாய ஸிம்ஹாய கட்கவாஸாய தே நம: ||

 

9        நமோ மூலாதிவாஸாய தர்மவாஸாய தந்விநே |

தநஞ்ஜயாய  தந்யாய நமோ ம்ருத்யுஞ்ஜயாய ச ||

 

10       ஶுபஞ்ஜயாய ஸூத்ராய நமஶ் ஶத்ருஞ்ஜயாய ச |

நிரஞ்ஜநாய நீராய நிர்குணாய குணாய ச ||

 

11       நிஷ்ப்ரபஞ்சாய நிர்வணாய பதாய நிபிடாய ச |

நிராலம்பாய நீலாய நிஷ்கலாய கலாய ச ||

 

12       நிமேஷாய நிபந்தாய நிமேஷ கமநாய ச |

நிர்த்வந்த்யாய நிராஶாய நிஶ்சயாய நிஜாய ச ||

 

13       நிர்மலாய நிபந்தாய நிர்மோஹாய நிராக்ருதே |

நமோ நித்யாய ஸத்யாய ஸத்காம நிரதாய ச ||

 

14       ஸத்யத்வஜாய முஞ்ஜாய முஞ்ஜகேஶாய கேஶிநே |

ஹரீஶாய ச ஶேஷாய குடாகேஶாய வை நம: ||

 

15       ஸுகேஶாயோர்த்வ கேஶாய கேஶி ஸம்ஹாரகாய ச |

ஜலேஶாய ச ஶேஷாய குடாகேஶாய வை நம: ||

 

16       குஶேஶயாய கூலாய கேஶவாய நமோ நம: |

ஸூக்திகர்ணாய ஸூக்தாய ரக்தஜிஹ்வாய ராகிணே ||

 

17       தீப்தரூபாய தீப்தாய ப்ரதீப்தாய ப்ரலோபிநே |

ப்ரச்சந்நாய ப்ரபோதாய ப்ரபவே விபவே நம: ||

 

18       ப்ரபஞ்ஜநாய பாந்தாய ப்ரமாயாப்ரமிதாய ச |

ப்ரகாஶாய ப்ரதாபாய ப்ரஜ்வலாயோஜ்ஜ்வலாய ச ||

 

19       ஜ்வாலாமாலா ஸ்வரூபாய ஜ்வலஜ்ஜிஹ்வாய ஜ்வாலிநே |

மஹோஜ்வலாய காலாய காலமூர்த்தி தராய ச ||

 

20       காலாந்தகாய கல்பாய கலநாய க்ருதே நம: |

காலசக்ராய சக்ராய வஷட்சக்ராய சக்ரிணே ||
21       அக்ரூராய க்ருதாந்தாய விக்ரமாய க்ரமாய ச ||

க்ருத்திநே க்ருத்திவாஸாய க்ருதக்நாய க்ருதாத்மநே ||

 

22       ஸங்க்ரமாய ச க்ருத்தாய க்ராந்த லோகத்ரயாய ச |

அரூபாய ஸரூபாய ஹரயே பரமாத்மநே ||

 

23       அஜேயா யாதிதேவாய அக்ஷயாய க்ஷயாய ச |

அகோராய ஸுகோராய கோர கோரதராய ச ||

 

24       நமோ(அ)ஸ்த்வகோர வீர்யாய லஸத்கோராய தே நம: |

கோராத்யக்ஷாய தக்ஷாய தக்ஷிணார்யாய ஶம்பவே ||

 

25       அமோகாய குணௌகாய அநகாயாக ஹாரிணே |

மேகநாதாய நாதாய துப்யம் மேகாத்மநே நம: ||

 

26       மேகவாஹநரூபாய மேகஶ்யாமாய மாலிநே |

வ்யாள யஜ்ஞோபவீதாய வ்யாக்ரதேஹாய வை நம: ||

 

27       வ்யாக்ரபாதாய ச வ்யாக்ர கர்மிணே வ்யாபகாய ச |

விகடாஸ்யாய வீராய விஷ்டர ஶ்ரவஸே நம: ||

 

28       விகீர்ண நகதம்ஷ்ட்ராய நகதம்ஷ்ட்ராயுதாய ச |

விஷ்வக்ஸேநாய ஸேநாய விஹ்வலாய பலாய ச ||

 

29       விரூபாக்ஷாய வீராய விஶேஷாக்ஷாய ஸாக்ஷிணே |

வீதஶோகாய வீஸ்தீர்ண வதநாய நமோ நம: ||

30       விதாநாய விதேயாய விஜயாய ஜயாய ச |

விபுதாய விபாவாய நமோ விஶ்வம்பராய ச ||

 

31       வீதராகாய விப்ராய விடங்க நயநாய ச: |

விபுலாய விநீதாய விஶ்வயோநே நமோ நம: ||

 

32       சிதம்பராய வித்தாய விஶ்ருதாய வியோநயே |

விஹ்வலாய விகல்பாய கல்பாதீதாய ஶில்பிநே ||

 

33       கல்பநாய ஸ்வரூபாய மணிதல்பாய வை நம: |

தடித்ப்ரபாய தார்யாய தருணாய தரஸ்விநே ||

 

34       தபநாய தரக்ஷாய தாபத்ரய ஹராய ச |

தாரகாய தமோக்நாய தத்வாய ச தபஸ்விநே ||

 

35       தக்ஷகாய தநுத்ராய தடிதே தரலாய ச |

ஶதரூபாய ஶாந்தாய ஶததாராய தே நம: ||

 

36       ஶதபத்ராய தார்க்ஷ்யாய ஸ்திதயே ஶதமூர்த்தயே |

ஶதக்ரது ஸ்வரூபாய ஶாஶ்வதாய ஶதாத்மநே ||

 

37       நமஸ் ஸஹஸ்ரஶிரஸே ஸஹஸ்ரவதநாய ச |

ஸஹஸ்ராக்ஷாய தேவாய திஶஶ்ரோத்ராய தே நம: ||

 

38       நமஸ் ஸஹஸ்ரஜிஹ்வாய மஹாஜிஹ்வாய தே நம: |

ஸஹஸ்ர நாமதேயாய ஸஹஸ்ராக்ஷிதராய ச ||

 

39       ஸஹஸ்ரபாஹவே துப்யம் ஸஹஸ்ரசரணாய ச |

ஸஹஸ்ரார்க்க ப்ரகாஶாய ஸஹஸ்ராயுத தாரிணே ||

 

40       நம: ஸ்தூலாய ஸூக்ஷ்மாய ஸுஸூக்ஷ்மாய நமோ நம: |

ஸுக்ஷுண்யாய ஸுபிக்ஷாய ஸுராத்யக்ஷாய ஶௌரிணே ||

 

41       தர்மாத்யக்ஷாய தர்மாய லோகாத்யக்ஷாய வை நம: |

ப்ரஜாத்யக்ஷாய ஶிக்ஷாய விபக்ஷக்ஷய மூர்த்தயே ||

 

42       காலாத்யக்ஷாய தீக்ஷ்ணாய மூலாத்யக்ஷாய தே நம:

அதோக்ஷஜாய மித்ராய ஸுமித்ர வருணாய ச ||

43       ஶத்ருக்நாய ஹ்யவிக்நாய விக்நகோடி ஹராய ச |

ரக்ஷோக்நாய தமோக்நாய பூதக்நாய நமோ நம: ||

 

44       பூதபாலாய பூதாய பூதாவாஸாய பூதிநே |

பூதவேதாள காதாய பூதாதிபதயே நம: ||

 

45       பூதக்ரஹ விநாஶாய பூதஸம்யமிநே நம: |

மஹாபூதாய ப்ருகவே ஸர்வபூதாத்மநே நம: ||

 

46       ஸர்வாரிஷ்ட விநாஶாய ஸர்வஸம்பத் கராய ச: |

ஸர்வாதாராய ஶர்வாய ஸர்வார்த்தி ஹரயே நம: ||

 

47       ஸர்வது:க ப்ரஶாந்தாய ஸர்வ ஸௌபாக்யதாயிநே |

ஸர்வஜ்ஞாயா ப்யநந்தாய ஸர்வஶக்தி தராய ச: ||

 

48       ஸர்வைஶ்வைர்ய ப்ரதாத்ரே ச ஸர்வகார்ய விதாயிநே |

ஸர்வஜ்வர விநாஶாய ஸர்வ ரோகாபஹாரிணே ||

 

49       ஸர்வாபிசார ஹந்த்ரே ச ஸர்வைஶ்வைர்ய விதாயிநே |

பிங்காக்ஷாயைக ஶ்ருங்காய த்விஶ்ருங்காய மரீசயே ||

 

50       பஹுஶ்ருங்காய லிங்காய மஹாஶ்ருங்காய தே நம: |

மாங்கள்யாய மநோஜ்ஞாய மந்தவ்யாய மஹாத்மநே ||

 

51       மஹாதேவாய தேவாய மாதுலுங்க தராய ச |

மஹாமாயா ப்ரஸுதாய ப்ரஸ்துதாய ச மாயிநே ||

 

52       அநந்தாநந்தரூபாய மாயிநே ஜலஶாயிநே |

மஹோதராய மந்தாய மததாய மதாய ச  ||

 

53       மதுகைடப ஹந்த்ரே ச மாதவாய முராரயே |

மஹாவீர்யாய தைர்யாய சித்ரவீர்யாய தே நம: ||

 

54       சித்ரகூர்மாய சித்ராய நமஸ்தே சித்ரபாநவே |

மாயாதீதாய மாயாய மஹாவீராய தே நம: ||

 

55       மஹாதேஜாய பீஜாய தேஜோதாம்நே ச பீஜிநே |

தேஜோமய ந்ருஸிம்ஹாய நமஸ்தே சித்ரபாநவே ||

 

56       மஹாதம்ஷ்ட்ராய துஷ்டாய நம: புஷ்டிகராய ச |

ஶிபிவிஷ்டாய ஹ்ருஷ்டாய புஷ்டாய பரமேஷ்டிநே ||

 

57       விஶிஷ்டாய ச ஶிஷ்டாய கரிஷ்டா யேஷ்ட தாயிநே |

நமோ ஜ்யேஷ்டாய ஶ்ரேஷ்டாய துஷ்டாமித தேஜஸே ||

 

58       அஷ்டாங்க ந்யஸ்த ரூபாய ஸர்வதுஷ்டாந்தகாய ச |

வைகுண்டாய விகுண்டாய கேஶிகண்டாய தே நம: ||

 

59       கண்டீரவாய லுண்டாய நிஶ்ஶடாய ஹடாய ச |

ஸர்வோத்ரிக்தாய ருத்ராய ருக்யஜுஸ் ஸாமகாய ச ||

 

60       ருதுத்வஜாய வஜ்ராய மந்த்ர ராஜாய மந்த்ரிணே |

த்ரிநேத்ராய த்ரிவர்காய த்ரிதாம்நே ச த்ரிஶூலிநே ||

 

61       த்ரிகாலஜ்ஞாந ரூபாய த்ரிதேஹாய த்ரிதாத்மநே |

நமஸ் த்ரிமூர்த்தி வித்யாய த்ரிதத்வஜ்ஞாநிநே நம: ||

 

62       அக்ஷோப்யாயா நிருத்தாய ஹ்யப்ரமேயாய பாநவே |

அம்ருதாய ஹ்யநந்தாய ஹ்யமிதாயா மிதௌஜஸே ||

 

63       அபம்ருத்யு விநாஶாய ஹ்யபஸ்மார விகாதிநே |

அந்நதாயாந்ந ரூபாய ஹ்யந்நாயாந்ந புஜே நம: ||

 

64       நாத்யாய நிரவத்யாய வேத்யாயாத்புத கர்மணே |

ஸத்யோஜாதாய ஸங்காய வைத்யுதாய நமோ நம: ||

 

65       அத்வாதீதாய ஸத்வாய வாகதீதாய வாக்மிநே |

வாகீஸ்வராய கோபாய கோஹிதாய ஹவாம்பதே ||

 

66       கந்தர்வாய கபீராய கர்ஜிதாயோர்ஜிதாய ச |

பர்ஜந்யாய ப்ரபுத்தாய ப்ரதாநபுருஷாய ச ||

 

67       பத்மாபாய ஸுநாபாய பத்மநாபாய மாநிநே |

பத்ம நேத்ராய பத்மாய பத்மாயா: பதயே நம: ||

68       பத்மோதராய பூதாய பத்ம கல்போத்பவாய ச |

னமோ ஹ்ருத்பத்மவாஸாய பூபத்மோத்தரணாய ச ||

 

69       ஶப்தப்ரஹ்ம ஶ்வரூபாய ப்ரஹ்மரூப தராய ச |
ப்ரஹ்மணே ப்ரஹ்மரூபாய பத்மநேத்ராய வை நம: ||

 

70       ப்ரஹ்மதாய ப்ராஹ்மணாய ப்ரஹ்மப்ரஹ்மாத்மநே நம: |

ஸுப்ரஹ்மண்யாய தேவாய ப்ரஹ்மண்யாய த்ரிவேதிநே ||

 

71       பரப்ரஹ்மஸ்வரூபாய பஞ்ச ப்ரஹ்மாத்மநே நம:

நமஸ்தே ப்ரஹ்மஶிரஸே ததாஶ்வஶிரஸே நம: ||

 

72       அதர்வஶிரஸே நித்யம் அஶநிப்ரமிதய ச |

நமஸ்தே தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய லோலாய ல்லிதாய ச: ||

 

73       லாவண்யாய லவித்ராய நமஸ்தே பாஸ்கராய ச |

லக்ஷணஜ்ஞாய லக்ஷாய லக்ஷணாய நமோ நம: ||

 

74       லஸத்தீப்தாய லிப்தாய விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே |

வ்ருஷ்ணிமூலாய க்ருஷ்ணாய ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம: ||

 

75       பஶ்யாமி த்வாம் மஹாஸிம்ஹம் ஹாரிணம் வநமாலிநம் |

கிரீடிநம் குண்டலிநம் ஸர்வாங்கம் ஸர்வதோமுகம் ||

 

76       ஸர்வத: பாணிபாதோரம் ஸர்வதோ(அ)க்ஷி ஶிரோமுகம் |

ஸர்வேஶ்வரம் ஸதா துஷ்டம் ஸமர்த்தம் ஸமரப்ரியம் ||

 

77       பஹுயோஜந விஸ்தீர்ணம் பஹுயோஜந மாயதம் |

பஹுயோஜந ஹஸ்தாங்க்ரிம்  பஹுயோஜந நாஸிகம் ||

 

78       மஹாரூபம் மஹாவக்த்ரம் மஹாதம்ஷ்ட்ரம் மஹாபுஜம் |

மஹாநாதம் மஹாரௌத்ரம் மஹாகாயம் மஹாபலம் ||

 

79       ஆநாபேர் ப்ரஹ்மணோ ரூபம் ஆகளாத் வைஷ்ணவம் ததா |

ஆஶீர்ஷாத் ருத்ரமீஶாநம் ததக்ரே ஸர்வதஶ் ஶிவம் ||

80       நமோஸ்து நாராயண நாரஸிம்ஹ

நமோஸ்து நாராயண வீரஸிம்ஹ |

நமோஸ்து நாராயண க்ரூரஸிம்ஹ

நமோஸ்து நாராயண திவ்யஸிம்ஹ ||

 

81       நமோஸ்து நாராயண வ்யாக்ரஸிம்ஹ

நமோஸ்து நாராயண புச்சஸிம்ஹ |

நமோஸ்து நாராயண பூர்ணஸிம்ஹ

நமோஸ்து நாராயண ரௌத்ரஸிம்ஹ ||

 

82       நமோ நமோ பீஷண பத்ரஸிம்ஹ

நமோ நமோ விஹ்வல நேத்ரஸிம்ஹ |

நமோ நமோ ப்ரும்ஹித பூதஸிம்ஹ

நமோ நமோ நிர்மல சித்ரஸிம்ஹ ||

 

83       நமோ நமோ நிர்ஜித காலஸிம்ஹ

நமோ நம: கல்பித கல்பஸிம்ஹ |

நமோ நம: காமத காமஸிம்ஹ

நமோ நம்ஸ்தே புவநைக ஸிம்ஹ ||

 

84       த்யாவா ப்ருதிவ்யோ ரிதமந்த்ரம் ஹி

வ்யாப்தம் த்வயைகேந திஶஶ்ச ஸர்வா: |

த்ருஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம்

லோகத்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மந் ||

 

85       அமீ ஹி த்வா ஸுரஸங்கா விஶந்தி

கேசித் பீதா: ப்ராஞ்ஜலயோ க்ருணந்தி |

ஸ்வஸ்தீத்யுக்த்வா முநயஸ் ஸித்தஸங்கா :

ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி: புஷ்கலாபி: ||

 

 

86       ருத்ராதித்யோ வசவோ யே ச ஸாத்யா:

விஶ்வே தேவா மருதஶ்சோஷ்மபாஶ்ச |

கந்தர்வ யக்ஷாஸுர ஸித்தஸங்கா:

வீக்ஷந்தி த்வாம் விஸ்மிதாஶ் சைவ ஸர்வே ||

87       லேலிஹ்யஸே க்ரஸமாநஸ் ஸமந்தாத்

லோகாந் ஸமக்ராந் வதநைர் ஜ்வலத்பி: |

தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம்

பாஸஸ் தவோக்ரா: ப்ரதிபந்தி விஷ்ணோ ||

 

88       பவிஷ்ணுஸ் த்வம் ஸஹிஷ்ணுஸ் த்வம் ப்ராஜிஷ்ணுர் ஜிஷ்ணுரேவ ச

ப்ருத்வீ த்மந்தரிக்ஷஸ்த்வம் பர்வதாரண்ய மேவ ச ||

 

89       கலா காஷ்டா விலிப்தஸ் த்வம் முஹூர்த்த ப்ரஹராதிகம் |

அஹோராத்ரம் த்ரிஸந்த்யா ச பக்ஷமாஸர்த்து வத்ஸரா: ||

 

90       யுகாதிர் யுகபேதஸ் த்வம் ஸம்யுகோ யுகஸந்தய: |

நித்யம் நைமித்திகம் தைநம் மஹாப்ரளயமேவ ச : ||

 

91       கரணம் காரணம் கர்த்தா பர்த்தா ஹர்த்தா த்வமீஶ்வர : |

ஸத்கர்த்தா ஸத்க்ருதிர் கோப்தா ஸச்சிதாநந்த விக்ரஹ: ||

 

92       ப்ராணஸ்த்வம் ப்ராணிநாம் ப்ரத்யகாத்மா த்வம் ஸர்வ தேஹிநாம் |

ஸுஜ்யோதிஸ் த்வம் பரம்ஜ்யோதி ராத்மஜ்யோதிஸ் ஸநாதந: ||

 

93       ஜ்யோதிர்லோக ஸ்வரூபஸ்த்வம் ஜ்யோதிர் ஜ்ஞோ ஜ்யோதிஷாம்பதி:

ஸ்வாஹாகார: ஸ்வதாகாரோ வஷட்கார : க்ருபாகர: ||

 

94       ஹந்தகாரோ நிராகாரோ வேகாகாரஶ்ச ஶங்கர: |

அகராதி ஹகாரந்த: ஓங்காரோ லோககாரக: ||

 

95       ஏகாத்மா த்வமநேகாத்மா சதுராத்மா சதுர்புஜ: |

சதுர்மூர்த்திஶ் சதுர்தம்ஷ்ட்ர: சதுர்வேத மயோத்தம: ||

 

96       லோகப்ரியோ லோககுரு: லோகேஶோ லோகநாயக: |

லோகஸாக்ஷீ லோகபதி: லோகாத்மா லோகவிலோசந: ||

 

97       லோகாதாரோ ப்ருஹல்லோகா லோகாலோகமயோ விபு: |

லோக கர்த்தா விஶ்வகர்த்தா க்ருதாவர்த்த: க்ருதாகம: ||

 

98       அநாதிஸ் த்வமநந்தஸ்த்வம் அபூதோ பூதவிக்ரஹ: |

ஸ்துதி: ஸ்துத்ய: ஸ்தவப்ரீத: ஸ்தோதோ நேதா நியாமக: ||

 

99       த்வம் கதிஸ் த்வம் மதிர் மஹ்யம் பிதா மாதா குருஸ் ஸகா: |

ஸுஹ்ருதஶ்சாத்ம ரூபஸ்த்வம் த்வாம் விநா நாஸ்தி மே கதி: ||

 

100      நமஸ்தே மந்த்ரரூபாய ஹ்யஸ்த்ர ரூபாய தே நம: |

பஹுரூபாய ரூபாய பஞ்சரூப தராய ச ||

 

101      பத்ரரூபாய ரூடாய யோகரூபாய யோகிநே |

ஸமரூபாய யோகாய யோகபீட ஸ்திதாய ச ||

 

102      யோக கம்யாய ஸௌம்யாய த்யாநகம்யாய த்யாயிநே |

த்யேய கம்யாய தாம்நே ச தாமாதிபதயே நம: ||

 

103      தராதராய தர்மாய தாரணாபிரதா ச |

நமோ தாத்ரே ச ஸந்தாத்ரே விதாத்ரே ச தராய ச ||

 

104      தாமோதராய தாந்தாய தாநவாந்தகராய ச |

நமஸ் ஸம்ஸார வைத்யாய பேஷஜாய நமோ நம: ||

 

105      ஸீரத்வஜாய ஶீதாய வாதாயாப்ரமிதாய ச |

ஸாரஸ்வதாய ஸம்ஸார நாஶநாயாக்ஷ மாலிநே ||

 

106      அஸிதர்ம தராயைவ ஷட்கர்ம நிரதாய ச |

விகர்மாய ஸுகர்மாய பரகர்ம விதாயிநே ||

 

107      ஸுகர்மணே மந்மதாய நமோ வர்மாய வர்மிணே |

கரிசர்ம வஸாநாய கராள வதநாய ச ||

 

108      கவயே பத்ம கர்ப்பாய பூதகர்ப்ப க்ருணாநிதே |

ப்ரஹ்மகர்ப்பாய கர்ப்பாய ப்ருஹத்கர்ப்பாய தூர்ஜடே ||

 

109      நமஸ்தே விஶ்வகர்ப்பாய ஸ்ரீகர்ப்பாய ஜிதாரயே |

நமோ ஹிரண்யகர்ப்பாய ஹிரண்ய கவசாய ச ||

110      ஹிரண்யவர்ண தேஹாய ஹிரண்யாக்ஷ விநாஶிநே |

ஹிரண்ய கஶிபோர் ஹந்த்ரே ஹிரண்ய நயநாய ச ||

 

111      ஹிரண்ய ரேதஸே துப்யம் ஹிரண்ய வதநாய ச |

நமோ ஹிரண்யஶ்ருங்காய நி:ஶ்ருங்காய ச ஶ்ருங்கிணே ||

 

112      பைரவாய ஸுகேஶாய பீஷணாயாந்த்ர மாலிநே |

சண்டாய ருண்டமாலாய நமோ தண்டதராய ச ||

 

113      அகண்ட தத்வரூபாய கமண்டலு தராய ச|

நமஸ்தே கண்டஸிம்ஹாய  ஸத்யஸிம்ஹாய தே நம: ||

 

114      நமஸ்தே ஶ்வேதஸிம்ஹாய பீதஸிம்ஹாய தே நம: |

நீலஸிம்ஹாய நீலாய ரக்தஸிம்ஹாய தே நம:

 

115      நமோ ஹாரித்ர ஸிம்ஹாய தூம்ரஸிம்ஹாய தே நம: |

மூலஸிம்ஹாய மூலாய ப்ருஹத் ஸிம்ஹாய தே நம: ||

 

116      பாதாளஸ்தித ஸிம்ஹாய நம: பர்வதவாஸிநே |

நமோ ஜலஸ்தஸிம்ஹாய ஹ்யந்தரிக்ஷஸ்திதாய ச ||

 

117      காலாக்நி ருத்ரஸிம்ஹாய சண்டஸிம்ஹாய தே நம: |

அநந்தஸிம்ஹ ஸிம்ஹாய ஹ்யநந்தகதயே நம: ||

 

118      நமோ விசித்ரஸிம்ஹாய பஹுஸிம்ஹ ஸ்வரூபிணே |

அபயங்கர ஸிம்ஹாய நரஸிம்ஹாய தே நம: ||

 

119      நமோஸ்து ஸிம்ஹராஜாய நரஸிம்ஹாய தே நம: |

ஸப்தாப்தி மேகலாயைவ  ஸத்யஸத்ய ஸ்வரூபிணே ||

 

120      ஸப்தலோகாந்தரஸ்தாய ஸப்தஸ்வர மயாய ச |

ஸப்தார்ச்சீ ரூபதம்ஷ்ட்ராய ஸப்தாஶ்வ ரதரூபிணே ||

 

121      ஸப்தவாயு ஸ்வரூபாய ஸப்தச்சந்தோமயாய ச|

ஸ்வச்சாய ஸ்வச்சரூபாய ஸ்வச்சந்தாய ச தே நம: ||

122      ஸ்ரீவத்ஸாய ஸுவேதாய ஶ்ருதயே ஶ்ருதிமூர்த்தயே |

ஶுசிஶ்ரவாய ஶூராய ஸுப்ரபாய ஸுதந்விநே ||

 

123      ஶுப்ராய ஸுரநாதாய ஸுப்ரபாய ஶுபாய ச |

ஸுதர்ஶநாய ஸூக்ஷ்மாய நிருக்தாய நமோ நம: ||

 

124      ஸுப்ரபாய ஸ்வபாவாய பவாய விபவாய ச |

ஸுஶாகாய வீஶாகாய ஸுமுகாய முகாய ச ||

 

125      ஸுநகாய ஸுதம்ஷ்ட்ராய ஸுரதாய ஸுதாய ச |

ஸாங்க்யாய ஸுரமுக்யாய ப்ரக்யாதாய ப்ரபாய ச ||

 

126      நம: கட்வாங்க ஹஸ்தாய கேடமுத்கர பாணயே |

ககேந்த்ராய ம்ருகேந்த்ராய நகேந்த்ராய த்ருடாய ச ||

 

127      நாக கேயூரஹாராய நாகேந்த்ராயாக மர்திநே |

நதீவாஸாய நக்நாய நாநாரூபதராய ச ||

 

128      நகேஶ்வராய நாகாய நமிதாய நராய ச |

நாகாந்தக ரதாயைவ நர நாராயணாய ச||

 

129      நமோ மத்யஸ்வரூபாய கச்சபாய நமோ நம: |

நமோ யஜ்ஞவராஹாய நரஸிம்ஹாய தே நம: ||

 

130      விக்ரமாக்ராந்த லோகாய வாமநாய மஹௌஜஸே |

நமோ பார்கவ ராமாய ராவணாந்த கராய ச ||

 

131      நமஸ்தே பலராமாய கம்ஸ ப்ரத்வம்ஸ காரிணே |

புத்தாய புத்தரூபாய தீக்ஷ்ணரூபாய கல்கிநே ||

 

132      ஆத்ரேயாயாக்நி நேத்ராய கபிலாய த்விஜாய ச |

க்ஷேத்ராய பஶுபாலாய பஶுவக்த்ராய தே நம: ||

 

133      க்ருஹஸ்தாய வநஸ்தாய யதயே ப்ரஹ்மசாரிணே |

ஸ்வர்காபவர்க தாத்ரே ச தத்போக்த்ரே ச முமுக்ஷவே ||

134      ஸாலக்ராம நிவாஸாய க்ஷீராப்தி ஶயநாய ச |

ஸ்ரீஶைலாத்ரி நிவாஸாய ஶிலாவாஸாய தே நம: ||

 

135      யோகி ஹ்ருத்பத்மவாஸாய மஹாஹாஸாய தே நம: |
குஹாவாஸாய குஹ்யாய குப்தாய குரவே நம: ||

 

136      நமோ மூலாதிவாஸாய நீலவஸ்த்ர தராய ச |

பீதவஸ்த்ராய ஶஸ்த்ராய ரக்தவஸ்த்ர தராய ச ||

 

137      ரக்தமாலா விபூஷாய ரக்த கந்தா நுலேபிநே |

துரந்தராய தூர்த்தாய துர்தராய தராய ச ||

 

138      துர்மதாய துரந்தாய துர்தராய நமோ நம: |

துர்நிரீக்ஷாய நிஷ்டாய துர்தர்ஶாய த்ருமாய ச ||

 

139      துர்பேதாய துராஶாய துர்லபாய நமோ நம: |

த்ருப்தாய த்ருப்தவக்த்ராய ஹ்யத்ருப்த நயநாய ச ||

 

140      உந்மத்தாய ப்ரமத்தாய நமோ தைத்யாரயே நம: |

ரஸஜ்ஞாய ரஸேஶாய ஹ்யரக்த ரஸநாய ச  ||

 

141      பத்யாய பரிதோஷாய ரத்யாய ரஸிகாய ச |

ஊர்த்வ கேஶோர்த்வ ருபாய நமஸ்தே சோர்த்வ ரேதஸே ||

 

142      ஊர்த்வஸிம்ஹாய ஸிம்ஹாய நமஸ்தே சோர்த்வ பாஹவே |

பரப்ரத்வம் ஸகாயைவ ஶங்கசக்ரதராய ச ||

 

143      கதாபத்ம தராயைவ பஞ்சபாண தராய ச |

காமேஶ்வராய காமாய காமபாலாய காமிநே ||

 

144      நம: காம விஹாராய காமரூபதராய ச |

ஸோமஸூர்யாக்நி நேத்ராய ஸோமபாய நமோ நம: ||

 

145      நமஸ் ஸோமாய வாமாய வாமதேவாய தே நம: |

ஸாமஸ்வநாய ஸௌம்யாய பக்திகம்யாய தே நம: ||

146      கூஷ்மாண்ட கணநாதாய ஸர்வ ஶ்ரேயஸ்கராய ச |

பீஷ்மாய பீஷதாயைவ பீமவிக்ரமணாய ச ||

 

147      ம்ருக க்ரீவாய ஜீவாய ஜிதாயாஜித காரிணே |

ஜடிநே ஜாமதக்ந்யாய நமஸ்தே ஜாதவேதஸே ||

 

148      ஜபாகுஸும வர்ணாய ஜப்யாய ஜபிதாய ச |

ஜராயுஜா யாண்டஜாய ஸ்வேதஜா யோத்பிஜாய ச ||

 

149      ஜநார்தநாய ராமாய ஜாஹ்நவீ ஜநகாய ச |

ஜராஜந்மாதி தூராய ப்ரத்யும்நாய ப்ரமோதிநே ||

 

150      ஜிஹ்வா ரௌத்ராய ருத்ராய வீரபத்ராய தே நம: |

சித்ருபாய ஸமுத்ராய கத்ருத்ராய ப்ரசேதஸே ||

 

151      இந்த்ரியா யேந்த்ரியஜ்ஞாய நமோஸ்த்விந்த்ராநுஜாய ச |

அதீந்த்ரியாய ஸாராய இந்திராபதயே நம: ||

 

152      ஈஶாநாய ச ஈட்யாய ஈஶிதாய இநாய ச |

வ்யோமாத்மநே ச வ்யோம்நே ச நமஸ்தே வ்யோமகேஶிநே ||

 

153      வ்யோமதராய ச வ்யோம வக்த்ராயாஸுர காதிநே : |

நமஸ்தே வ்யோமதம்ஷ்ட்ராய வ்யோமவாஸாய தே நம: ||

 

154      ஸுகுமாராய ராமாய ஸுபாசாராய வை நம: |

விஶ்வாய விஶ்வரூபாய நமோ விஶ்வாத்மகாய ச ||

 

155      ஜ்ஞாநாத்மகாய ஜ்ஞாநாய விஶ்வேஶாய பரமாத்மநே |

ஏகாத்மநே நமஸ்துப்யம் நமஸ்தே த்வாதஶாத்மநே ||

 

156      சதுர்விம்ஶதிரூபாய பஞ்சவிம்ஶதி மூர்த்தயே |

ஷட்விம்ஶகாத்மநே நித்யம் ஸப்தவிம்ஸதி காத்மநே ||

 

157      தர்மார்த்த காமமோக்ஷாய விரக்தாய நமோ நம: |

பாவஶுத்தாய ஸித்தாய ஸாத்யாய ஶரபாய ச ||

158      ப்ரபோதாய ஸுபோதாய நமோ புத்திப்ரியாய ச |

ஸ்நிக்தாய ச விதக்தாய முக்தாய முநயே நம: ||

 

159      ப்ரியம்வதாய ஶ்ரவ்யாய ஸ்ருக்ஸ்ருவாய ஶ்ரிதாய ச |

க்ருஹேஶாய மஹேஶாய ப்ரஹ்மேஶாய நமோ நம: ||

 

160      ஸ்ரீதராய ஸுதீர்த்தாய ஹயக்ரீவாய தே நம: |

உக்ராய சோக்ரவேகாய சோக்ரகர்மரதாய ச ||

 

161      உக்ரநேத்ராய வ்யக்ராய ஸமக்ர குணஶாலி நே |

பாலக்ரஹ விநாஶாய பிஶாசக்ரஹ காதிநே ||

 

162      துஷ்டக்ரஹ நிஹந்த்ரே ச நிக்ரஹா நுக்ரஹாய ச |

வ்ருஷத்வஜாய வ்ருஷ்ண்யாய வ்ருஷாய வ்ருஷபாய ச ||

 

163      உக்ரஶ்ரவாய ஶாந்தாய நம: ஶ்ருதிதராய ச |

நமஸ்தே தேவதேவேஶ நமஸ்தே மதுஸூதந ||

 

164      நமஸ்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே துரிதக்ஷய |

நமஸ்தே கருணாஸிந்தோ நமஸ்தே ஸமிதிஞ்ஜய ||

 

165      நமஸ்தே நரஸிம்ஹாய நமஸ்தே கருடத்வஜ |

யஜ்ஞநேத்ர நமஸ்தேஸ்து காலத்வஜ ஜயத்வஜ ||

 

166      அக்நிநேத்ர நமஸ்தேஸ்து நமஸ்தே ஹ்யமயப்ரிய |

மஹாநேத்ர நமஸ்தேஸ்து நமஸ்தே பக்தவத்ஸல ||

 

167      தர்மநேத்ர நமஸ்தேஸ்து நமஸ்தே கருணாகர |

புண்யநேத்ர நமஸ்தேஸ்து நமஸ்தே(அ)பீஷ்ட தாயக ||

 

168      நமோ நமஸ்தே ஜயஸிம்ஹரூப நமோ நமஸ்தே நரஸிம்ஹரூப |

நமோ நமஸ்தே ரணஸிம்ஹரூப நமோ நமஸ்தே நரஸிம்ஹரூப ||

 

169      உத்த்ருத்ய கர்விதம் தைத்யம் நிஹத்யாஜௌ ஸுரத்விஷம் |

தேவகார்யம் மஹத் க்ருத்வா கர்ஜஸே ஸ்வாத்மதேஜஸா ||

170      அதிருத்ர மிதம் ரூபம் துஸ்ஸஹம் துரதிக்ரமம் |

த்ருஷ்ட்வா து ஸங்கிதஸ்ஸர்வா: தேவதாஸ்த்வாமுபாகதா ||

 

171      ஏதாந் பஶ்ய மஹேஶாநம் ப்ரஹ்மாணம் மாம் ஶசீபதிம் |

திக்பாலாந் த்வாதஶாதித்யாந் ருத்ரா நுரக ராக்ஷஸாந் ||

 

172      ஸர்வாந் ருஷிகணாந் ஸப்த மாத்ரூர் கௌரீம் ஸரஸ்வதீம் |

லக்ஷ்மீம் நதீஶ்ச தீர்த்தாநி ரதிம் பூதகணாநபி ||

 

173      ப்ரஸித த்வம் மஹாஸிம்ஹ உக்ரபாவமிமம் த்யஜ |

ப்ரக்ருதிஸ்தோ பவ த்வம் ஹி ஶாந்திபாவம் ச தாரய ||

 

174      இத்யுக்த்வா தண்டவத்பூமௌ பபாத ஸ பிதாமஹ: |

ப்ரஸித த்வம் ப்ரஸீத த்வம் ப்ரஸீத த்வம் புந: புந: ||

 

மார்க்கண்டேய உவாச –

175      த்ருஷ்ட்வா து தேவதாஸ் ஸர்வா : ஶ்ருத்வா தாம் ப்ரஹ்மணோ கிரம்

ஸ்தோத்ரேணாபி ச ஸம்ருஷ்ட: ஸௌம்யபாவ மதாரயத் ||

 

176      அப்ரவீந் நாரஸிம்ஹஸ்து வீக்ஷ்ய ஸர்வாந் ஸுரோத்தமாந் |

ஸந்த்ரஸ்தாந் பயஸம்விக்நாந் ஶரணம் ஸமுபாகதாந் ||

 

ஸ்ரீ ந்ருஸிம்ஹ உவாச –

177      போ போ தேவவராஸ் ஸர்வே பிதாமஹ புரோகமா: |

ஶ்ருணுத்வம் மம வாக்யம் ச பவந்து விகதஜ்வரா: ||

 

178      யத்ஹிதம் பவதாம் நூநம் தத் கரிஷ்யாமி ஸாம்ப்ரதம் |

ஏவம் நாமஸஹஸ்ரம் மே த்ரிஸந்த்யம் ய: படேத் ஸுதீ: ||

 

179      ஶ்ருணோதி வா ஶ்ராவயதி பூஜாந்தே பக்திஸம்யுத : |

ஸர்வாந் காமாநவாப்நோதி ஜீவச்ச ஶரதாம் ஶதம் ||

 

180      யோ நாமபிர் ந்ருஸிம்ஹாத்யை: அர்ச்சயேத் க்ரமஶோ மம |

ஸர்வதீர்த்தேஷு யத் புண்யம் ஸர்வதீர்த்தேஷு யத்பலம் ||

 

181      ஸர்வபூஜாஸு யத்ப்ரோக்தம் தத் ஸர்வம் லபதே பலம் |

ஜாதிஸ்மரத்வம் லபதே ப்ரஹ்மஜ்ஞாநம் ஸநாதநம் ||

 

182      ஸர்வபாப விநிர்முக்த: தத்விஷ்ணோ பரமம் பதம் |

மந்நாம கவசம் பத்வா விசரேத் விகதஜ்வர: ||

 

183      பூத வேதாள கூஶ்மாண்ட பிஶாச ப்ரஹ்மராக்ஷஸா : |

ஶாகிநீ டாகிநீ ஜ்யேஷ்டா நீலீ பாலக்ரஹாதிகா : ||

 

184      துஷ்டக்ரஹாஶ்ச நஶ்யந்தி யக்ஷராக்ஷஸ பந்நகா: |

யே ச ஸந்த்யாக்ரஹாஸ் ஸர்வே சாண்டாளக்ரஹ ஸம்ஜ்ஞகா: ||

 

185      நிஶாசர க்ரஹாஸ் ஸர்வே ப்ரணஶ்யந்தி ச தூரத : |

குக்ஷிரோகம் ச ஹ்ருத்ரோகம் ஶூலாபஸ்மார மேவ ச ||

 

186      ஐகாஹிகம் த்வயாஹிகம் ச சாதுர்த்திக மத ஜ்வரம் |

ஆதயோ வ்யாதயஸ் ஸர்வே ரோகா ரோகாதிதேவதா : ||

 

187      ஶீக்ரம் நஶ்யந்தி தே ஸர்வே ந்ருஸிம்ஹ ஸ்மரணாத் ஸுரா : |

ராஜாநோ தாஸதாம் யாந்தி ஶத்ரவோ யாந்தி மித்ரதாம் ||

 

188      ஜலாநி ஸ்தலதாம் யாந்தி வஹ்நயோ யாந்தி ஶீததாம் |

விஷாண்யம்ருததாம் யாந்தி ந்ருஸிம்ஹஸ்மரணாத் ஸுரா : ||

 

189      ராஜ்யகாமோ லபேத் ராஜ்யம் தநகாமோ லபேத் தநம் |

வித்யாகாமோ லபேத் வித்யாம் பத்தோ முச்யேத பந்தநாத் ||

 

190      வ்யாள வ்யாக்ர பயம் நாஸ்தி சோர ஸர்ப்பாதிகம் ததா |

அநுகூலா பவேத் பார்யா லோகைஶ்ச ப்ரதிபூஜ்யதே ||

 

191      ஸுபுத்ரம் தநதாந்யம் ச பவந்தி விகதஜ்வரா: |

ஏதத் ஸர்வம் ஸமாப்நோதி ந்ருஸிம்ஹஸ்ய ப்ரஸாதத: ||

 

192      ஜலஸந்தரணே சைவ பர்வதாரண்யமேவ ச |

வநே(அ)பி விசரந் மர்த்யோ துர்க்கமே விஷமே பதி ||

193      கலிப்ரவேஶநே சாபி நாரஸிம்ஹம் ந விஸ்மரேத் |

ப்ரஹ்மக்நஶ்ச பஶுக்நஶ்ச ப்ரூணஹா குருதல்பக: ||

 

194      முச்யதே ஸர்வபாபேப்ய: க்ருதக்ந: ஸ்த்ரீவிகாதக: |

வேதாநாம் தூஷகஶ்சாபி மாதாபித்ரு விநிந்தக: ||
195      அஸத்யஸ்து ததா யஜ்ஞ நிந்தகோ லோக நிந்தக: |

ஸ்ம்ருத்வா ஸக்ருந் ந்ருஸிம்ஹம்து முச்யதே ஸர்வகில்பிஷை: ||

 

196      பஹுநாத்ர கிமுக்தேந ஸ்ம்ருத்வா மாம் ஶுத்தமாநஸ: |

யத்ர யத்ர சரேந் மர்த்யோ ந்ருஸிம்ஹஸ் தத்ர ரக்ஷதி ||

 

197      கச்சந் திஷ்டந் ஸ்வபுந் புஞ்ஜந் ஜாக்ரந்நபி ஹஸந்நபி |

ந்ருஸிம்ஹேதி ந்ருஸிம்ஹேதி ந்ருஸிம்ஹேதி ஸதா ஸ்மரந் ||

 

198      புமாந் ந லிப்யதே பாபை: புக்திம் முக்திம் ச விந்ததி |

நாரீ ஸுபகதாமேதி ஸௌபாக்யம் ச ஸுரூபதாம் ||

 

199      பர்த்து: ப்ரியத்வம் லபதே ச வைதவ்யம் ச விந்ததி |

ந ஸபத்நீம் ச ஜன்மாந்தே ஸம்யஜ்ஜ்ஞாநீ பவேத் த்விஜ: ||

 

200      பூமிப்ரதக்ஷிணாத் மர்த்யோ யத் பலம் லபதே(அ)சிராத் |

தத் பலம் லபதே நாரஸிம்ஹ மூர்த்தி ப்ரதக்ஷிணாத் ||

 

மார்க்கண்டேய உவாச –

201      இத்யுக்த்வா தேவதேவஶோ லக்ஷ்மீமாலிங்க்ய லீலயா |

ப்ரஹ்லாதஸ்யாபிஷேகம் து ப்ரஹ்மணே சோபதிஷ்டவாந் ||

 

202      ஸ்ரீஶைலஸ்ய ப்ரதேஶே து லோகாநாம் ச ஹிதாய வை |

ஸ்வரூபம் ஸ்தாபயாமாஸ ப்ரக்ருதிஸ்தோ(அ)பவத் ததா ||

 

203      ப்ரஹ்மாபி தைத்யாராஜாநம் ப்ரஹ்லாத மப்யசேஷயத் |

தைவதைஸ் ஸஹ ஸுப்ரீதோ ஹ்யாத்மலோகம் யயௌ ஸ்வயம் ||

 

204      ஹிரண்யகஶிபோர் பீத்யா ப்ரபலாய ஶசீபதி: |

ஸ்வர்கராஜ்ய பரிப்ரஷ்டோ யுகாநா மேகவிம்ஶதி: ||

 

205      ந்ருஸிம்ஹேந ஹதே தைத்யே ஸ்வர்கலோக மவாப ஸ: |
திக்பாலாஶ்ச ஸுஸம்ப்ராப்தா: ஸ்வஸ்வஸ்தாந மநுத்தமம் ||

 

206      தர்மே மதிஸ் ஸமஸ்தாநாம் ப்ரஜாநா மபவத் ததா |

ஏவம் நாமஸஹஸ்ரம் மே ப்ரஹ்மணா நிர்மிதம் புரா ||

 

207      புத்ராநத்யாபயாமாஸ ஸநகாதீந் மஹாமதி: |

ஊசுஸ்தே ச ததஸ் ஸர்வலோகாநாம் ஹிதகாம்யயா ||

 

208      தேவதா ருஷயஸ் ஸித்தா யக்ஷவித்யாதரோரகா: |

கந்தர்வாஶ்ச மநுஷ்யாஶ்ச இஹாமுத்ர பலைஷிண: ||

 

209      யஸ்ய ஸ்தோத்ரஸ்ய பாடாத்தி விஶுத்த மநஸோ(அ)பவந் |

ஸநத்குமாரஸ் ஸம்ப்ராப்தோ பரத்வாஜோ மஹாமதி: ||

 

210      தஸ்மாதாங்கிரஸ: ப்ராப்த: தஸ்மாத் ப்ராப்தோ மஹாக்ரது: |

ஜைகீஷவ்யாய ஸப்ராஹ ஸோ(அ)ப்ரவீத் ச்யவநாய ச: ||

 

211      தஸ்மா உவாச ஶாண்டில்யோ கர்காய ப்ராஹ வை முநி: | க்ரதுஞ்ஜயாய ஸ ப்ராஹ ஜதுகர்ண்யாய ஸம்யமீ ||

 

212      விஷ்ணுவ்ருத்தாய ஸ ப்ராஹ ஸோ(அ)பி போதாயநாய ச |

க்ரமாத் ஸ விஷ்ணவே ப்ராஹ ஸ ப்ராஹோத்தாம குக்ஷயே ||

 

213      ஸிம்ஹதேஜாஶ்ச தஸ்மாச்ச ஸ்ரீப்ரியாய ததௌ ச ஸ: |

உபதிஷ்டோஸ்மி தேநாஹ மிதம் நாமஸஹஸ்ரகம் ||

 

214      தத்ப்ரஸாதா தம்ருத்யுர் மே யஸ்மாத் கஸ்மாத் பயம் நஹி : |

மயா ச கதிதம் நாரஸிம்ஹ ஸ்தோத்ர மிதம் தவ ||

 

215      த்வம் ஹி நித்யம் ஶுசிர் பூத்வா தமாராதய ஶாஶ்வதம் |

ஸர்வபூதாஶ்ரயம் தேவம் ந்ருஸிம்ஹம் பக்தவத்ஸலம் ||

 

216      பூஜயித்வா ஸ்தவம் ஜப்த்வா ஹுத்வா நிஶ்சலமாநஸ: |

ப்ராப்ஸ்யஸே மஹதீம் ஸித்திம் ஸர்வாந் காமாந் வரோத்தமாந் ||

 

217      அயமேவ பரோ தர்மஸ் த்விதமேவ பரம் தப: |

இதமேவ பரம் ஜ்ஞாநம் இதமேவ மஹத் வ்ரதம் ||

 

218      அயமேவ ஸதாசாரஸ் த்வயமேவ ஸதா மக: |

இதமேவ த்ரயோ வேதா: ஸச்சாஸ்த்ராண்யாகமாநி ச ||

 

219      ந்ருஸிம்ஹ மந்த்ராதந்யச்ச வைதிகம் ந து வித்யதே |

யதிஹாஸ்தி ததந்யத்ர யந்நேஹாஸ்தி ந தத் க்வசித் ||

 

220      கதிதம் தே ந்ருஸிம்ஹஸ்ய சரிதம் பாப நாஶநம் |

ஸர்வமந்த்ரமயம் தாப த்ரயோபஶமநம் பரம் ||

 

221      ஸர்வார்த்த ஸாதநம் திவ்யம் கிம் பூயஶ் ஶ்ரோது மிச்சஸி |

 

இதி ஸ்ரீ ந்ருஸிம்ஹபுராணே ந்ருஸிம்ஹர்ப்ராதுர்பாவே

ஸர்வார்த்தஸாதநம் திவ்யம் ஸ்ரீமத் திவ்யலக்ஷ்மீ

ந்ருஸிம்ஹ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

நாளை என்பது ஸ்ரீ நரசிம்மனிடம் இல்லை–முத்துக்கள் முப்பது–எஸ்.கோகுலாச்சாரி

May 6, 2023

பகவான் ஸ்ரீமந் நாராயணன் பிறப்பில்லாத பெருமான். ஆயினும் அவன் பிறவிகளை எடுக்கின்றான். அதை அவதாரங்கள் என்று சொல்வார்கள். அவதாரங்கள் என்றால், மேலிருந்து கீழே இறங்கி வருதல் என்று பொருள். வேதம், பகவானின் அவதார வைபவத்தை “அஜாயமாநோ பஹூதா விஜாயதே” என்ற அழகான தொடரால் குறிப்பிடுகிறது.

இப்படி எடுத்த அவதாரங்கள் ஒன்றல்ல இரண்டல்ல; பற்பல அவதாரங்கள். அவற்றை ஆவேச அவதாரங்கள் என்றும், அம்ச அவதாரங்கள் என்றும், பூரண அவதாரங்கள் என்றும் பலபடியாகப் பிரிக்கிறார்கள். ஸ்ரீவிஷ்ணு புராணமும் பாகவதமும் இன்னும் பல நூல்களும் பகவான் நாராயணனின் அவதாரங்களைப் பேசுகின்றன. அந்த அவதாரங்கள் பலவாக இருந்தாலும் தசாவதாரங்களை மிகச் சிறப்பாகச் சொல்லுகின்றனர்.

1. ஏன் அவதாரம் எடுக்கிறான்?

பொதுவாக பகவான் அவதாரம் ஏன் எடுக்கின்றான் என்பதற்கான காரணத்தை ஸ்ரீ கீதையிலே சொல்லுகின்றான். தர்மத்தை அழியாது காப்பாற்றுவதற்காகவும் சாதுக்கள் நலியும்போது அவர்களைக் காக்கவும் துஷ்டர்களுடைய செயல் எல்லை மீறும் போது அவர்களைக் கட்டுப்படுத்தவும் அழிக்கவும் பகவான் நேரடியாக யுகங்கள் தோறும் அவதாரம் செய்கின்றான் என்பதை ஸ்ரீ கண்ணன் ஸ்ரீ பகவத்கீதையிலே அருளுகின்றார். இந்த அவதார வரிசையை ஆழ்வார்களும் பலவாறு கொண்டாடுகிறார்கள். வைகுந்தத்திலே தன்னுடைய இருப்பை வைத்துவிட்டு இந்த உலகத்தின் இருள் நீக்க ஒரு ஒளியாக தோன்றுகின்றான் என்று நம்மாழ்வார் அவதார விசேஷத்தைக் கொண்டாடுகின்றார்.

2. சிறந்த அவதாரம் நரசிம்ம அவதாரம்

இந்த அவதாரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. அதில் மிகச்சிறந்த அவதாரம் சித்திரை மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பகவான் எடுத்த ஸ்ரீ நரசிம்ம அவதாரம். ஒரு கண நேரத்தில் அவதாரம் எடுத்து, அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டு தன்னுடைய சோதிக்கு எழுந்தருளியவன். பொதுவாக தன்னுடைய பக்தனான பிரகலாதனைக் காப்பாற்றுவதற்காக நரசிம்ம அவதாரத்தை பகவான் எடுத்தார் என்று கூறுவர். அதற்காக மட்டுமே பகவான் அவதாரம் எடுக்கவில்லை. பிரகலாதனை மறைவாக நின்று காப்பாற்றி அருளிய இறைவன், நிறைவு நிலையிலும்கூட அவனைக் காப்பாற்றி இருக்கலாம். அவனுக்கு மிகவும் தொல்லையைத் தந்த இரணியனைக் கூட சங்கல்பத்தினால் அழித்து தர்மத்தை நிலைநாட்டி இருக்கலாம். ஆனால், பிரகலாதனுடைய வாக்கைக் காப்பாற்றுவதற்காக பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்தான்.

3. திட்டமிடாத அவதாரம்

பொதுவாக பகவான் அவதாரம் எடுக்கின்றபொழுது பாற்கடலில் யோகநிலையில் யோசிப்பான். ஒரு அவதாரத்தை எப்படி எடுத்து, எப்படி நிறைவு செய்வது என்பதைக் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வான். நரசிம்ம அவதாரம் தவிர மற்ற அவதாரங்கள் அப்படி எடுக்கப்பட்ட அவதாரங்கள். உதாரணமாக, மச்ச அவதாரம் எடுத்த பொழுது சத்திய விரதன் என்கிற அரசனிடத்திலே ஊழிக்கால முடிவிலே உலகமெல்லாம் நீரில் மூழ்கி இருக்கின்ற பொழுது, தான் ஒரு பெரிய மீனாக வருவேன்; அதிலே நீ ஏறிக்கொள்ள வேண்டும்; என்றெல்லாம் அவதார ரகசியத்தைக் குறித்து முன்கூட்டியே சொல்லிவிடுகின்றான். கூர்ம அவதாரத்தில், தான் ஒரு ஆமையாக வடிவம் எடுத்து பாற்கடலை கடைவதற்கு உதவுவேன் என்கின்றான்.

4. தீர்மானித்தது யார்? இரணியனா? பிரகலாதனா?

எல்லா அவதாரங்களும் ஏதோ ஒரு மனிதரின் பிரார்த்தனையாலோ, ஒரு பக்தனின் பிரார்த்தனையாலோ எடுக்கப்பட்ட அவதாரங்கள். நரசிம்ம அவதாரத்தில் இப் படிப்பட்ட முன் திட்டங்கள் எதுவும் இல்லை. யாருக்கு பிள்ளையாக, எந்த இடத்தில் பிறக்கப்போகிறோம் என்பதைக் குறித்து பகவான் திட்டமிடவில்லை. எங்கே பிறக்கப் போகிறோம், எதில் பிறக்கப் போகிறோம், எத்தனை நாழிகை தன்னுடைய அவதாரம் இருக்கப்போகிறது என்பதைக் குறித்தும் பகவான் சிந்திக்கவில்லை. உண்மையில் நரசிம்ம அவதாரத்தைக் குறித்து தீர்மானித்தவன் பிரகலாதன் அல்ல.

இரணியன்தான். அவன்தான், “உன்னுடைய பகவான் ஹரி இந்த தூணில் இருக்கிறானா?” என்று, எந்த இடத்தில் இருந்து பகவான் தோன்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கிறான்.” ஆம்; இருக்கிறான்” என்று பிரகலாதன் சொல்ல, அவனுடைய சத்திய வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே தூணையே தன்னுடைய தாயாகக் கொண்டு, பகவான் அவதரிக்கிறான். எனவே மற்ற அவதாரங்களைவிட நரசிம்ம அவதாரம் சிறப்புடையது.

5. மனிதனும் மிருகமும்

பொதுவாகவே தசாவதாரங்களின் சிறப்பு பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்ற ஒரு கருத்து உண்டு. பகவான் முதலில் எடுத்த அவதாரம் மச்ச அவதாரம். முதலில் உலக உயிர்கள் நீரில் இருந்துதான் தோன்றின என்பது அறிவியல் கோட்பாட்டின் அடிப்படை. தண்ணீரில் வாழுகின்ற மீனாக அவதாரம் செய்த பகவான், அடுத்த அவதாரத்தில் நீரிலும் நிலத்திலும் வாழ்கின்ற ஆமையாக அவதரித்தான்.

அதற்குப் பிறகு, நிலத்தில் வாழ்கின்ற வராகமாக அவதாரம் செய்தான். இந்த மூன்று அவதாரங்களும், விலங்கின் நிலையிலேயே செய்யப்பட்ட அவதாரங்கள். அடுத்த பரிணாமமான மனித வடிவம் எடுப்பதற்கு முன், மனிதனும் விலங்கும் கொண்ட ஒரு அவதாரமாக எடுத்த அவதாரம்தான் நரசிங்க அவதாரம். நரன் என்றால் மனிதன். சிங்கம் என்றால் விலங்குகளின் அரசன். இந்த இரண்டும் கலந்த கலவையாக எடுக்கப்பட்ட அவதாரம்தான் நரசிம்ம அவதார்.

6. ஆண்டாள் வர்ணித்த நரசிம்ம மூர்த்தி

ஆண்டாள் நாச்சியார், கண்ணனை, நரசிம்ம அவதாரம் போல வரவேண்டும் என்று ஒரு பாசுரத்திலே அருளிச் செய்கின்றாள். மலைக்குகையிலே தூங்குகின்ற சிம்மம், எழுந்து, தீவிழி விழித்து, பிடரி மயிர்களை எல்லாம் சிலிர்த்துக்கொண்டு, உடம்பை முறுக்கிக் கொண்டு, கர்ஜனை செய்து, வருவது போல கம்பீரமாக நடந்து வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றாள். நரசிம்ம அவதாரத்தை முழுவதும் மனதில் வைத்துக் கொண்டு ஆண்டாள் இந்தப் பாசுரத்தை அருளிச் செய்திருக்கிறாள்.

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோவில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கானத்திலிருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளாலோர் எம்பாவாய்.

7. எங்கும் இருப்பவன்

விஷ்ணு சகஸ்ரநாமத்தின் முதல் நாமம் பகவான் ஹரியைக் குறிப்பிடுகிறது. அந்த ஹரி நரஹரி என்று ஆச்சாரியார்கள் விளக்கம் அளிக்கின்றார்கள். காரணம் விஷ்ணு என்றால் எங்கும் பரந்து இருக்கின்றவன். எல்லா இடங்களிலும் கரந்து உறைபவன். அவன் தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான்; வானிலும் இருப்பான்; மண்ணிலும் இருப்பான். இந்த நிலை தான் ‘‘சர்வம் விஷ்ணு மயம் ஜகத்’’ என்கின்ற தொடருக்கு பொருளாக அமையும். அதைத்தான் தினசரி சங்கல்பத்திலே நாம் சொல்லுகின்றோம். அப்பொழுதே நரசிம்மனை பிரார்த்தித்து விடுகின்றோம். இதை நம்மாழ்வார்,

கரவிசும் பெருவளி நீர் நிலம் இவை மிசை
படர்பொருள் முழுவதுமாய் அவை அவை தொறும்
உடல்மிசை உயிரென கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே–என்று பாடினார்.

8. வேத வாக்கியம் சொல்லும் நரசிம்மன்

‘‘அஜோபி ஸந்நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபி ஸந்’’ என்கிறது வேதம். அவன் பிறந்து விட்டதால் உண்டானவன் இல்லை. அதைப் போலவே அவன் மறைந்து விட்டதால் இல்லாதவன் இல்லை. ஈஸ்வரன் ஒருக்காலும் ஜீவனாகிவிட முடியாது. ஈஸ் வரன் அவதரித்தாலும் ஈஸ்வரன்தான். மச்ச, கூர்ம, வராக முதலிய எந்த அவதாரமும் ஒரு தாய் வயிற்றில் தோன்றியதல்ல, நரசிம்மாவதாரமும் அப்படி தோன்றியது அல்ல. அதனாலேயே `பஹுதா விஜாயதே’ என்று வேதம் கூறியது. அவன் தன்னுடைய கருணையினாலே திவ்ய மங்கள விக்கிரகத்தை எடுத்துக்கொள்ளுகின்றான்.

சாந்தோக்கியம் ‘‘ஆத்மா தேவானாம் ஜனிதா பிரஜானாம் ஹிரண்ய தம்ஷ்ட்ரோ பபசோ அனசூரி:’’ என்று அவரை வர்ணிக்கிறது. படைத்தவரும் தேவர்களுக்கு ஆத்மாவாகவும் உள்ள அந்த சர்வேஸ்வரன் பளபளப்பான கோரைப்பற்கள் உள்ளவராகவும் எல்லாவற்றையும் உண்பவராகவும் காணப்பட்டார் என்று நரசிம்ம அவதாரத்தை விளக்குகிறது. நரசிம்ம காயத்ரி மந்திரம் அவருடைய கூர்மையான நகங்களையும் வஜ்ரம் போன்ற கோரைப் பற்களையும் மிகச் சிறப்பாக சொல்லுகின்றது.

வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி தன்னோ நரசிம்ம பிரஜோதயாத் என்று தைத்திரிய நாராயண வல்லி நரசிம்மரை விவரிக்கிறது. அதர்வ வேதத்தைச் சேர்ந்த ந்ருஸிம்ம பூர்வ தாபனீய உபநிஷத் மனித வடிவும் சிங்க வடிவும் கொண்ட நரசிம்மனை சத்தியமாகவும் பரப்பிரம்மமாகவும் விவரிக்கிறது.

9. ஏன் இரண்யன் பெருமாளிடம் கோபம் கொண்டான்?

இரண்யாட்ஷன், இரண்யகசிபு என்று இரண்டு அசுரர்கள் இருந்தனர். அவர்களுள் இரண்யாட்ஷன் வராக மூர்த்தியால் வதம் செய்யப்பட்டான். அதனால் விஷ்ணுவிடம் துவேஷம் அடைந்த இரண்யகசிபு பிரம்ம தேவனைக் குறித்து கடுமையான தவம் செய்து, தனக்கு எந்த விதத்திலும் மரணம் வரக்கூடாது என்று வரம் வாங்கினான். தனக்கு கீழே மரணம் நேரக்கூடாது. மேலே மரணம் நேரக்கூடாது. பகலிலும் மரணம் நேரக் கூடாது. இரவிலும் மரணம் வரக்கூடாது. உள்ளும் மரணம் கூடாது. வெளியிலும் மரணம் கூடாது. உயிருள்ள பொருளாலும் மரணம் கூடாது.

உயிரற்ற பொருளாலும் மரணம் கூடாது. மனிதர்களால் மரணம் கூடாது. விலங்குகளால் மரணம் கூடாது. தேவர்களால் மனிதர்களால் மரணம் கூடாது. நோயால் மரணம் கூடாது. என்று ஒரு மரணம் எப்படி எல்லாம் நிகழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறதோ, அப்படி எந்த வகையிலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்பதோடு, தன்னுடைய சக்தியையும் ஆயுளையும் அதிகப்படுத்திக் கொள்ளும் வரங்களைப் பெற்றான்.

ஆனால் எத்தனை புத்திசாலித்தனமாக வரம் வாங்கினாலும்கூட, அந்த புத்திசாலித்தனம் யாரால் கொடுக்கப்பட்டதோ, அவர் அதைவிட புத்தி சாலித்தனமாக அதை கையாளுவார் என்பதைக் காட்டுவதுதான் நரசிம்ம அவதாரத்தின் செய்தி. இரண்யகசிபுவின் மனைவியின் பெயர் கயாது. பிள்ளையின் பெயர் பிரகலாதன். விஷ்ணுவிடம் திடமான சிந்தனையோடு பக்தி செலுத்தினான் என்பதை யஜூர் வேத அஷ்டகம், பிரஹலாதோ ஹவை காயாயவ: என்று சொல்லுகின்றது.

10. திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கம்

இரண்யகசிபுவுக்கு பிரகலாதனைத் தவிர, கிலாதன், அனுகிலாதன், சமகிலாதன் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர். இதிலே பிள்ளை என்று போற்றப்படுவதாக இருந்தவன் பிரகலாதன். பள்ளியில் படித்து வந்தவுடன், “நீ படித்தது என்ன?” என்று தந்தையான இரண்யன் கேட்கின்ற பொழுது, ‘‘எதைத் தெரிந்தால் எல்லாம் தெரிந்ததாக ஆகுமோ, அதைத் தெரிந்து கொண்டேன்’’ என்று பிரகலாதன் பதில் சொல்கிறான். ‘‘என்னுடைய பெயரைத் தெரிந்து கொண்டாயா?’’ என்று கேட்கிறான்.

“இன்று இருந்து நாளை சாகும் உன்னுடைய பெயரைத் தெரிந்து, இந்த ஆத்மாவுக்கு என்ன லாபம் கிடைக்கும்? நான் சொல்வது சர்வ உலகத்தையும் படைத்து, காத்து, அழிக்கக்கூடிய பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனைத் தெரிந்து கொண்டேன்” என்று சொன்னவுடன் கோபம் ஏற்படுகின்றது. தன்னுடைய பிள்ளை என்றும் கருதாமல் அழிக்க நினைக்கின்றான். அழிக்க நினைத்த அவனே அழிந்து போனான் என்பதை திருவல்லிக்கேணி பாசுரத்திலே திருமங்கையாழ்வார் மிக அற்புதமாக விளக்குகின்றார்.

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணி கண்டேனே

இன்றைக்கும் திருவல்லிக்கேணி திவ்ய தேசத்திலே தெள்ளிய சிங்கம் என்கிற திருநாமத்தோடு நாம் பெருமாளை தரிசனம் செய்யலாம். தெள்ளிய சிங்கம் என்பது தெளிசிங்கமாகி அவருடைய பெயரிலேயே தெளிசிங்கர் வீதி திருவல்லிக்கேணியில் இருக்கிறது.

11. ஆயுஷ் ஹோம மந்திரத்தில் நரசிம்மன்

ஆயுஷ் ஹோமம், ஆயுள் அபிவிருத்தி அடையச் செய்யப்படுகின்ற ஹோமம் ஆகும். இதற்காக ஆயுஷ் சூக்தம் ஓதப்படுகிறது. ஆயுஷ் ஹோம மந்திரம் பல மந்திரங்களைக் கொண்டது. அதிலே பகவான் “நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும், மிருத்யுவின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். அகால மரணம் ஏற்படாமல் இருக்க வேண்டும்” என்ற பிரார்த்தனைகள் வருகிறது.

அதிலே பகவானைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது, ஸுவர்ண ரம்பக் கிருஹம் அர்சயம் என்கிற வாக்கியம் வருகிறது. அதாவது தங்கத்தினாலான வாழைமரம் போல உள்ள தூண் யாருக்கு பிறந்த வீடாக மாறியதோ, அங்கே தோன்றியவன் என்று கூறுகிறது. இப்படி தங்கத் தூணில் இருந்து பிறந்தவன் நரசிம்மன் என்பதால் இந்த மந்திரத்தினுடைய அதிதேவதையாக நரசிம்மன் இருக்கிறார் என்று பெரியவர்கள் கூறுகின்றார்கள்.

12. பக்தர்களுக்குப் பிரியமான உருவம்

நரசிம்மன் பயங்கரமான ரூபத்தை எடுத்து இரண்யனை வதம் செய்தார். ஆனால், இந்த ரூபம் பக்தர்களுக்கு பிரியமானதாக இருக்கிறது. அழகானதாக இருக்கிறது. அதனால்தான் ஆழ்வார்கள் இந்த ரூபத்தைவர்ணிக்கின்றபொழுது அழகியான்தானே அரிவுருவம் தானே என்று வர்ணிக்கிறார்கள். தீயவர்களுக்கு பயங்கரமானதாகத் தெரிகின்ற ரூபம், பக்தர்களுக்கும், சரணாகதர்களுக்கும் ஆச்சரியமான, ஆனந்தமான உருவமாக இருக்கிறது.

ஒருமுறை பட்டர், நரசிம்ம அவதாரத்தைப் பற்றி விளக்கம் சொல்லுகின்ற பொழுது, பயங்கரமான ரூபம் பார்த்து குழந்தை பிரகலாதன் பயப்படவில்லையா? நரசிம்மரின் கோபம் பிரகலாதன் முதலியவர்களை தாக்கவில்லையா என்கின்ற கேள்வி எழுந்த பொழுது பட்டர் அற்புதமாகச் சொன்னார். “சிங்கமானது தன்னுடைய குட்டிக்கு பால் கொடுத்துக் கொண்டே எதிரில் உள்ள மிருகங்களை வேட்டையாடுவது போல” தன்னுடைய பக்தனான பிரகலாதனை அரவணைத்துக்கொண்டு எதிரியான இரண்யனை வதம் செய்தார்.

13. யாருக்கு முதல் பூஜை?

பொதுவாக நாம் பெருமாளுக்குப் பூஜை செய்ய வேண்டும். எந்த உணவை உட்கொள்வதாக இருந்தாலும், பெருமாளுக்கு சமர்ப்பித்துவிட்டு உட்கொள்ள வேண்டும். சமர்ப்பணம் செய்துவிட்டால் சாதாரண சாதம்கூட பிரசாதமாக மாறிவிடும். நாம் பெருமாளுக்கு படைக்கிறோம், பெருமாளே அவதாரம் எடுத்து வந்தால் அவரும் பூஜை செய்ய வேண்டுமே, அவர் யாருக்கு படைப்பார்? ராம அவதாரத்திலே ராமன் தினசரி பூஜை செய்வார். அவர் பெருமாள். ஆனால் அவர் பூஜை செய்த பெருமாள் என்பதால் பெரிய பெருமாள் என்று வழங்கப்படுகிறார்.

திருவரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமாளுக்கு பெரிய பெருமாள் என்று திருநாமம். அந்த பள்ளிகொண்ட பெருமாளே திருமலையில் ஸ்ரீனிவாச பெருமாளாக அவதாரம் செய்தார். அவருக்கு பத்மாவதி தாயாரோடு திருமண வைபவம் நடக்கிறது. வந்த தேவர்களுக்காக திருமண விருந்து தயாராகிறது. இந்த பிரசாதத்தை யாருக்கு படைப்பது என்கின்ற கேள்வி எழுகிறது.

சாட்சாத் பெரிய பெருமாளாகிய ஸ்ரீனிவாச பெருமாளுக்கு படைக்கலாமா? ஸ்ரீனிவாசப் பெருமாள் இதை நரசிம்மப் பெருமாளுக்கு படைத்துவிட்டு மற்றவர்களுக்கு பரிமாற வேண்டும் என்று சொல்லுகின்றார். பெரிய பெருமாளே தன்னுடைய ஆராதனை பெருமாளாகக் கருதிய பெருமாள் நரசிம்மன் என்பதால் வைணவத்தில் அவரை பெரிய பெரிய பெருமாள் என்று சொல்லும் வழக்கம் உண்டு.

14. முதல் பக்தன் பிரஹலாதன்

ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸ (அ)ம்பரீஷ சுக சௌநக பீஷ்ம தால்ப்யான்
ருக்மாங்கத (அ)ர்ஜுந வஸிஷ்ட விபீஷணாதீன்
புண்யான் இமான் பரம பாகவதான் ஸ்மராமி

சிறந்த பக்தர்கள் வரிசையிலே பிரகலாதனுக்கு முதல் இடம் உண்டு. “முதலில் பாகவதனை நினை; பிறகு பகவானே நினை” என்கிற மரபு உண்டு. நரசிம்மப் பெருமாள் ‘‘நீ என்ன வரத்தைக் கேட்கிறாய். கேள் தருகிறேன்’’ என்று, மடியில் குழந்தை பிரகலாதனை அமர்த்திக்கொண்டு கேட்க, வைராக்கியமிக்க சின்னஞ் சிறுவனான பிரகலாதன், ‘‘எனக்கு வேறு என்ன வேண்டும்? எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை ஒரு கணமும் மறவாத வரத்தை நீ அருள வேண்டும்’’ என்றான். இந்த வரத்தில் ஒரு நுட்பம் இருக்கிறது. பிரகிருதி மாயையால், இறைவனுடைய அருள் வெள்ளம் பாய்ந்தால் ஒழிய, இறைவனை நினைப்பது கூட சிரமம் தான். இதைத்தான் “அவன் அருளால் அவன் தாள் வணங்கி” என்று சொன்னார்கள்.

15. தந்தைக்கு நல்ல கதி வேண்டும்

பிரகலாதன் இறைவனை மறக்காத வரத்தைக் கேட்டவுடன், நரசிம்ம பெருமாள் அவனை உச்சி முகர்ந்து, ‘‘உனக்கு சர்வ மங்கலங்களும் உண்டாகட்டும். ஒரு மன்வந்திர காலம் இந்த பூவுலகில் ஆட்சிசெய்து பிறகு என்னை வந்து அடைவாயாக’’ என்றார். அதோடு அவன் இரண்டாவதாக ஒருவரத்தைக் கேட்டான். “தன்னைப் படைத்த பெருமானிடமே மோதி, பகவத் அபச்சாரமும், பாகவத அபச்சாரமும் ஒருங்கே செய்த தன்னுடைய தந்தை ஹிரண்யன் நல்ல கதி அடைய வேண்டும். அவரை மன்னிக்க வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தான். அதையும் நரசிம்ம பெருமாள் கனிவோடு ஏற்றுக்கொண்டார். அதற்குப் பிறகு பிரகலாதனுக்கு பட்டாபிஷேகம் செய்துவைத்தார்.

16. லட்சுமி நரசிம்ம கராவலம்பம்

ஆதிசங்கரர் நரசிம்மரைக் குறித்து இயற்றிய “லட்சுமி நரசிம்ம கராவலம்பம்’’ என்னும் ஸ்தோத்ரம் புகழ்பெற்றது.

ஸ்ரீ மத் பயோநித நிகேதன சக்ரபாணே,
போகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தே,
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத,
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்.

இந்த முதல் நான்கு வரி ஸ்லோகத்தைச் சொன்னால் போதும். எந்த வியாதிகளும், துர் மரணங்களும், தரித்திரமும் ஒருவரை அடையவே அடையாது. மனதில் எந்த கவலையும், அச்சமும் வராது. எந்த கொடிய விஷங்களும், கிரக தோஷங்களும் அவனை அணுகாது.

17. போட்டியில் ஜெயித்த நரசிம்மர்

திருமாலின் அவதாரங்களுக்குள் போட்டி நடந்ததாம் 1). மத்ஸ்ய, 2). கூர்ம, 3). வராஹ, 4). நரசிம்ம, 5). வாமன, 6). பரசுராம, 7). ஸ்ரீராம, 8) பலராம, 9). கிருஷ்ண, 10). கல்கி அவதாரங்களை, வரவழைத்தார்! முதல் சுற்றில். மத்ஸ்ய, கூர்ம, வராஹ அவதாரங்களும் முறையே. மீன், ஆமை, பன்றி ஆகிய மிருகங்களின் வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது! எனக் கூறி நிராகரித்து விட்டாராம் ஆழ்வார்.

நரசிம்மருக்குத் தலை சிங்கம்போல இருந்தாலும், உடல் மனித வடிவில் இருந்ததால் அவரை நிராகரிக்கவில்லை! “மகாபலியிடம் சிறிய பாதத்தைக் காட்டி மூவடி நிலம் கேட்டுவிட்டுப் பெரிய பாதத்தால் மூவுலகையும் அளந்தவர்!’’ என்ற குறை வாமன மூர்த்தியிடம் இருந்ததாம். பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும், கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால், அதுவும் குறையாயிற்று.

18. நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை

பலராமன், கண்ணன் இருவரும் “ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர்தான் பங்கேற்கலாம் என்று சொல்ல’’ தம்பிக்காகப் பல ராமன் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால், “நீங்கள் அவதரித்தபின் போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி அவரையும் நிரா கரித்துவிட்டார்! திருமழிசையாழ்வார். இறுதியாக, நரசிம்மர், ராமர், கிருஷ்ணர் கலந்து கொண்டார்கள். மூவரையும் பரீட்சித்து நரசிம்மர்தான் அழகு! என்று தீர்ப்பளித்தாராம் ஆழ்வார்.

ராமர் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான மனிதனாக வாழ்ந்து காட்டினார். கண்ணன் அனைவரையும் மயக்கிய அழகர் என்பதிலும் சந்தேகமில்லை! ஆனாலும் ஆபத்தில் ஓடோடி வந்து காப்பாற்றி யதுதானே அழகு. பிரகலாதனுக்காகத் தூணைப் பிளந்து வந்து காத்த பெருமாள் நரசிம்மர்; எனவே அவரே அழகு!” என்று தீர்ப்பளித்தார் திருமழிசையாழ்வார்.

‘‘அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் – குழவியாய்த்
தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிரளிக்கும் வித்து’’

19. பரிபாடலில் நரசிம்ம அவதாரம்

சங்க இலக்கியங்களில் ஸ்ரீநரசிம்ம அவதாரத்தைக் குறித்த குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. நான்காம் பரிபாடலில், கடுவன் இளவயினார், நரசிம்ம அவதாரத்தின் தோற்றத்தைக் குறித்து விவரிக்கிறார். ‘‘சிவந்த கண்ணையுடையோனே! பிரகலாதன் நின்னைப் புகழ, அது பொறாத இரணியனுடைய மார்பினைப் பிளந்த நகத்தினை உடையை.’’ என்று நரசிம்மரின் நகத்தைப் புகழ்கிறார். சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் “மடங்கலாய் மாறட்டாய்” என்று பாடுகிறார் இளங்கோவடிகள்.

மடங்கல் என்பது சிங்கம். மாறு என்பது பகைவனாகிய இரணியனைக் குறிக்கும். அட்டாய் என்பது அவரை அழித்ததைக் குறிக்கும். சிங்க உருவம் எடுத்து, தன்னிடத்திலே மாறுபட்ட இரணியனை வென்றான் என்பது இப்பாடலின் கருத்து. ஒரே வரியிலேயே நரசிம்ம அவதாரத்தின் பெருமையை இளங் கோவடிகள் இப்பாடலில் சொல்லி இருக்கின்றார்.

20. கம்பன் இராமாயணத்தை அங்கீகரித்த அழகிய சிங்கர்

கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு நரசிம்மப் பெருமாளின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. அவர் தன்னுடைய கம்பராமாயணத்தை அரங்கேற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். கடைசியில் அவர் திருவரங்கத்தில் தாயார் சந்நதி முன் உள்ள மண்டபத்தில் புலவர்களைக் கூட்டி கம்பராமாயணத்தை அரங்கேற்றினார். அந்த நாற்கால் மண்டபத்துக்கு இடது புறம் நரசிம்மருடைய சந்நதி இருக்கிறது. அது சற்று மேடான பகுதியில் இருப்பதால் அவருக்கு மேட்டு அழகிய சிங்கர் என்கிற திருநாமம். கம்பராமாயணத்தில் இரணியன் வதைப் படலத்தில் நரசிம்மரின் தோற்றத்தை கம்பர் உணர்ச்சிகரமாக வர்ணித்த பொழுது, மேட்டழகிய சிங்கர் சிரக்கம்பம் செய்து அங்கீகரித்தார் என்பது வரலாறு.

21. இரணிய வதைப் படலம்

நரசிம்ம அவதாரத்தைக் குறித்து வேதங் களில் சொல்லப்பட்டிருந்தாலும் அதனை மிக அற்புதமாகப் பாடியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர். கம்பர் இராமனின் கதையைப் பாடுகின்ற பொழுது, இடையில் ஸ்ரீமன் நாராயணனின் பெருமையைக் கூறுவதற்கான மிகச் சரியான இடம் கிடைக்காமல், விபீஷணனின் மூலம், நரசிம்ம அவதாரத்தின் பெருமையைக் கூறினார். அதற்கென்றே இரணியன் வதை படலம் என்கின்ற பகுதியை இயற்றினார். அதை படித்தால் போதும். நரசிம்ம அவதார மகிமையை பூரணமாகத் தெரிந்து கொள்ளலாம்.

22. வைணவத் தத்துவப் பெட்டகமே நரசிம்ம அவதாரம்

ஸ்ரீமன் நாராயணனின் திருநாமங்களின் பெருமையைக் குறித்தும், பிரகலாதாழ்வானின் வைராக்கியமான பக்தியைக் குறித்தும் கம்பர் இரணிய வதைப்படலத்தில் மிகப் பரவசமாகப் பாடியிருப்பார். கிட்டத்தட்ட 175 பாடல்களிலே நரசிம்ம வைபவத்தை அவர் பாடி இருக்கிறார். பிரஹலாதன் வாய்மொழி மூலமாக எம்பெருமானின் பெருமைகளைப் பேசும் ஒவ்வொரு பாடலும் பாராயணம் செய்யும் தகுதி படைத்த தோத்திரப் பாடல்களாகும்.

எத்தனைக் கஷ்டங்கள் இருந்தாலும், தீர்க்க முடியாத சிக்கல்கள் வந்தாலும், விளக்கேற்றி வைத்து, இந்த இரணியன் வதைப்படலத்தை ஈடுபாட்டோடு படித்தால் நிச்சயமாக நரசிம்மப் பெருமாளுடைய பூரண அருள் கிடைத்து, அந்த சிக்கல்கள் விலகும். காரணம் வேதத்துக்கு நிகரான மந்திரச் சொற்கள் எல்லாம் பெய்து கம்பன் பாடி இருக்கிறார்.

23. அவனைத் தவிர வேறு யார் நாமமும் சொல்லமாட்டேன்

பிரஹலாதன் சொல்கின்றான்.‘‘நான் நாராயணனின் நாமத்தைத் தவிர வேறு எந்த நாமத்தையும் சொல்ல மாட்டேன். காரணம், அதுவே வேதத்தின் முடிவான இறைவனுடைய திருநாமம்.

வேதத்தானும், நல் வேள்வியினானும், மெய் உணர்ந்த
போதத்தானும், அப் புறத்துள எப் பொருளானும்,
சாதிப்பார் பெறும் பெரும் பதம் தலைக்கொண்டு சமைந்தேன்;
ஓதிக் கேட்பது பரம்பொருள் இன்னம் ஒன்று உளதோ?
நான் சொல்லுகின்ற நாமத்தைவிட சிறந்த நாமம் ஒன்று இல்லை என்கின்றான்.
எனக்கும் நான்முகத்து ஒருவற்கும், யாரினும் உயர்ந்த
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனித் தலைவன்
மனக்கு வந்தனன்; வந்தன, யாவையும்; மறையோய்!

உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல்’’ என உரைத்தான். தன் தந்தையிடம் “வேதம் படித்த தந்தையே, இந்த நாமம் உனக்கும் உரியது” என்று சொல்லும் நயம் கவனிக்க வேண்டும்.

24. நாராயண மந்த்ரம்

நரசிம்ம அவதாரத்தின் பெருமையைச் சொல்லுகின்ற பொழுது எட்டெழுத்து மந்திரத்தின் பெருமையை கம்பன் பிரகலாதன் வாய் வார்த்தையாக காட்டுகின்ற நயம் அற்புதமானது.

காமம் யாவையும் தருவதும், அப் பதம் கடந்தால்,
சேம வீடு உறச் செய்வதும், செந் தழல் முகந்த
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும், ஒருவன்
நாமம்; அன்னது கேள்: நமோ நாராயணாய!

25. அதிர்ஷ்ட பலமாக நின்று காத்தவன் நரசிம்மன்

இரணியன் பிரகலாதன்மீது கோபம் கொண்டு பற்பல இடையூறுகளைச் செய்கின்றான். அத்தனை இடையூறுகளில் இருந்தும் பிரகலாதன் தப்பிக்கின்றான். இரணியன் செய்த அத்தனை கொடுமையிலிருந்தும் அதிர்ஷ்ட பலமாக நின்று (மறைமுகமாக) காத்தவன் நரசிம்மன். கடைசியில் இரணியன் சினம் எல்லை மீறிப் போகிறது. தன் பிள்ளை உயிரை எடுக்க முடியாத கவலை பெற்ற தந்தைக்கு வருகிறது. இரணியன் சொல்கின்றான். ‘‘எத்தனையோ செய்தும் உன் உயிரை என்னுடைய படைகளால் பறிக்க முடியவில்லை. தப்பிக்கும் விதத்தை தெரிந்திருக்கிறாய். இனி நானே உன்னுடைய உயிரைப் பறிக்கப் போகிறேன்” என்று சொன்னவுடன், பிரகலாதன் சொல்லுகின்ற பதில் அற்புதமானது.

வந்தானை வணங்கி, ‘‘என் மன் உயிர்தான்
எந்தாய்! கொள எண்ணினையேல், இதுதான்
உம் தாரியது அன்று; உலகு யாவும் உடன்
தந்தார் கொள நின்றது தான்’’ எனலும்,

“தந்தையே என்னுடைய உயிர் உன்னுடைய வசத்தில் உள்ளதன்று. அது எம்பெருமானுடைய வசத்தில் உள்ளது. அவன் நினைத்தால் அன்றி, உன்னாலோ உன்னைச் சேர்ந்தவர்களோ என்னைக் கொல்ல முடியாது. என்ற அற்புதமான தத்துவத்தை அந்த இடத்திலே காட்டுகின்றான்.

26. எங்கும் நிறைந்தவன்

நிறைவாக அவன் ஒரு கேள்வி கேட்கின்றான். “நீ சொல்லுகின்ற கடவுள் இந்தத் தூணில் இருக்கிறானா?” பிரகலாதன் பதில் சொல்லுகின்றான். அந்தப் பதில் அற்புதமானது. வேத கருத்துக்களின் சாரமானது. “இந்த தூணில் மட்டுமல்ல. எல்லா இடங்களிலும் அவன் நிறைந்திருக்கிறான். அதனால்தான் அவனை விஷ்ணு என்று சொல்லுகின்றோம்”

‘‘சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மை
காணுதி விரைவின்’’ என்றான்; ‘‘நன்று’’ எனக் கனகன் நக்கான்.

27. காட்டவில்லையானால் உன்னைக் கொல்வேன்

“அப்படியானால் இந்தத் தூணில் நீ காட்டுகின்ற இறைவன் இல்லை என்று சொன்னால் உன்னுடைய உயிரை எடுப்பேன். உன் உடம்பிலிருந்து வரும் குருதியைக் குடிப்பேன். உன் உடலையும் தின்பேன்” ஆணவம் அதிகமாகின்ற பொழுது பேசும் பேச்சு எத்தனை விபரீதமாகும் என்பதை கம்பன் காட்டும் இடம் இது.

உம்பர்க்கும் உனக்கும் ஒத்து, இவ் உலகு எங்கும் பரந்துளானை,
கம்பத்தின் வழியே காண, காட்டுதி; காட்டிடாயேல்,
கும்பத் திண் கரியைக் கோள் மாக் கொன்றென,நின்னைக் கொன்று, உன்
செம்பு ஒத்த குருதி தேக்கி, உடலையும் தின்பென்’’–என்றான்.

28. கடவுள் நம்பிக்கையின் ஆழம்

அப்பொழுது பிரகலாதன் சொல்லுகின்ற பதில் அதிஅற்புதமானது. “என்னுடைய உயிர் உன்னால் கொல்லப்படும் அளவிற்கு அத்தனை எளிமையானதா? உன்னையும் என்னையும் படைத்த பரம்பொருளான திருமால், நீ தொட்ட தொட்ட இடங்களில் எல்லாம் இருப்பான். அப்படி அவன் தோன்றவில்லை எனில், என்னுடைய நம்பிக்கை போய் விட்டது. நீ என்ன என் உயிரை எடுப்பது? என் உயிரை நானே மாய்த்துக் கொள்வேன்.

என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று; யான்
முன் சொன்னவன் தொட்ட தொட்ட இடம்தொறும் தோன்றான் ஆயின்,
என் உயிர் யானே மாய்ப்பல்; பின்னும் வாழ்வு உகப்பல் என்னின்,
அன்னவற்கு அடியேன் அல்லேன்’’ என்றனன், அறிவின் மிக்கான்

29. ஆஹா என்று சிரித்தது செங்கட் சீயம்

இரணியன் இகழ்ச்சியாக சிரித்து தன்னுடைய முறம் போன்ற கைகளினாலே தானே கட்டிய பொற்றூணை ஓங்கி அறைந்தான்.

அளந்திட்ட தூணைஅவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டுவாளுகிர்ச் சிங்க உருவாய்
உளந்தொட்டுஇரணியன் ஒண்மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி

இரணியன் சந்தேகத்தைத் தீர்க்கும் படியாக அவனே கட்டிய தூணில் ஆவிர்பவித்தான். தூணில் எப்படி தோன்றினார் என்பதை கம்பன் வர்ணிப்பது போல வேறு எங்கும் நாம் பார்க்க முடியாது.

நசை திறந்து இலங்கப் பொங்கி, ‘‘நன்று, நன்று!” என்ன நக்கு,
விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன, ஓர் தூணின், வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும்,
திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, செங் கண் சீயம்.

30. பிரஹலாதன் மகிழ்ச்சி

பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை
வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்?
கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்.

நரசிம்மரைப் பார்த்ததும் பிரகலாதனுடைய மகிழ்ச்சி எப்படி இருந்தது என்பதை கம்பனைத் தவிர வேறு யாரும் காட்டவில்லை. நரசிம்மபெருமாளின் சிரிப்பொலியைக் கேட்டு மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடினான். பொலபொலவென்று கண்ணீர் விட்டு அழுதான். இறைவனின் பல்வேறு விதமான நாமங்களைப் பாடி ஆரவாரம் செய்தான். தன்னுடைய சிவந்த கைகளை தலையில் வைத்து தொழுதான். ஆடினான். பாடினான். கீழே விழுந்து வணங்கினான். துள்ளிக் குதித்து ஓடினான். என்று கம்பன் பிரகலாதனுடைய அந்த உற்சாகத்தை அற்புதமாக காட்டுகின்றார்.

இந்த மகிழ்ச்சியும் ஆனந்தமும் நமக்கும் வரவேண்டும். வரும். பிரகலாதனை நினைத்து நாமும் அவனை சரணாகதி செய்வோம். நரசிம்ம ஜெயந்தி (4.5.2023) அன்று காலையில் அவனைப்பற்றிய பல்வேறு நாமங்களைக் கூறி, துளசி மாலையால் அலங்கரித்து, நெய் தீபம் ஏற்றி வைத்து, பானகமோ பாலோ இருந்தாலும்கூட போதும், நிவேதனம் செய்து, அவனுடைய காயத்ரி மந்திரங்களை ஜெபித்து, நரசிம்ம ஜெயந்தியைக் கொண்டாடுவோம்.

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு புராணம் -முதல் -அம்சம் -17-20-அத்யாயங்கள் – பிரகலாதன் சரிதம்-ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 24–ஸ்ரீ ப்ரஹ்லாத சரிதம் — தசகம் 25-ஸ்ரீ நரசிம்ம அவதாரம்-

January 25, 2023

ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஸ்லோகம் -4-

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

————-

ஸ்ரீ விஷ்ணு புராணம் -முதல் -அம்சம் -17-20-அத்யாயங்கள் –
17-பிரகலாதன் சரிதம்-
18. அசுரப் புரோகிதர்களைக் காத்தல்!–
19. பிரகலாதனின் பிரார்த்தனை-
20. நரசிம்மர் பிரத்தியக்ஷமாதல்–

ஹ்லாதன்- ஒரு பிள்ளை பிரஹலாதன் -நல்ல ஆனந்தம் உடையவன் -மேல் இரண்டு பிள்ளைகள்
ஸூக ப்ரஹ்மம் -விரிவாக பேரன் சொல்வதை தாத்தா பராசரர் இங்கு சுருக்கமாக சொல்வார்

கர்ப்ப ஸ்ரீ மான் -நாராயணனே அனுக்ரஹம் இங்கு -பாகவதத்தில் நாரதர் அனுக்ரஹம்

சாமான்ய தர்மம் -தந்தை அளவில் பிள்ளை மதித்தான் -விசேஷ தர்மம் பகவத் பக்தியில் ஆழ்ந்தவன் –

பரதன் தாய் சொன்ன சாமான்ய தர்மம் விரோதம் -விசேஷ தர்மம் கைக்கொண்டு பாதுகை பெற்றான் -இதே போல் செல்வ விபீடணன் –

கடோ நாஸ்தி நியாயம் -உளன் அலன் எனிலும் உளன் தானே

அறியும் செந்தீயைத் தழுவி*  ‘அச்சுதன்’ என்னும் மெய்வேவாள்,* 
எறியும் தண் காற்றைத் தழுவி*  ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்,*
வெறி கொள் துழாய் மலர் நாறும்*  வினையுடையாட்டியேன் பெற்ற* 
செறி வளை முன்கைச் சிறுமான்*  செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?   
முக்கூர் அழகிய சிம்கார் -ராஜகோபாலாச்சாரியார் பூர்வ ஆஸ்ரம பெயர் -ராஜ கோபுரம் காட்டியவர்
நரசிம்ஹர் ரசிப்பார் திடமான விசுவாசம் -கையில் உள்ள அக்னி கொண்டு பீடி பற்ற வைக்கக் கெட்டவன் இடம்
ஸூர்யன் அஸ்தமிக்காமல் இருக்க அம்மாவைக் கூப்பிடு -கற்பைக் கொண்டாடும் வார்த்தை
கையில் அக்னி உள்ளது இதே போல்
மத்த சர்வம் யத்ர சர்வம் யதஸ்ஸ சர்வம் -சர்வம் ஸம்ஸரய ச –அஹம் சர்வம் மயி சர்வம் -ஆழ்வார் போல் அநுகாரம்
அஹம் ப்ரஹ்மாஸ்மி -சொம்பு தண்ணீர் கொண்டு வந்து சொம்பு கொண்டு வந்தேன் சொல்லாமல்
தண்ணீர் வேறே சொம்பு வேறே தான்
உள்ளே இருப்பதையே சொன்னவாறே இது
கட்டுண்ட போதும் பெருமாளை ஸ்துதிக்கிறான் 19 அத்தியாயத்தில்
உன்னுடைய தர்சனம் தந்து அருள்
நாராயணனாக சேவை -பீதாம்பரம் தரித்து
வரனாக வந்துள்ளேன்
கேள் -என்றான்
நாத யோகி ஸஹஸ்ரேஷு அச்யுத பக்தி மாறாமல் இருக்க வேண்டும் -எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உற்றோமே ஆக வேண்டும்
விவேகம் இல்லாதவர் அல்பமானவற்றில் வைக்கும் பற்றை உதாரணமாகச் சொன்னான்
உலகியல் ஆசைக்காக பகவானை தியாகம் செய்த சம்சாரிகள் பெரிய தியாகி -ராமகிருஷ்ணர்
தூணைப் பிளந்தது எல்லாம் விஷ்ணு புராணத்தில் இருளை
அப்பா பண்ணிய தப்பை மன்னித்துக்கொள்
மன்னித்தோம் என்றான்
அவரும் பக்தராக வேண்டும் -ஸ்தோத்ரமும் பண்ண வேண்டும் -பூஜையும் பண்ண வேண்டும்
சரி என்றான் –
கல்ப பேதத்தால் இந்த பேதம்
அடுத்த நாள் போனதும் வாடா குழந்தை -ஆசீர்வாதம் செய்து
தம் பிதா-சேர்ந்து பூஜை கைங்கர்யம் செய்தானாம்
திடீர் தூனைப் பிளந்து நரசிம்மர் தோன்றி -அழித்து -பட்டாபிஷேகம் செய்ததாக முடித்தார்
நல்லவனை எதனால் அழிக்க வேண்டும்
இவ்வளவு பாபம் செய்தவன் திருந்தி பக்தி எப்படி
எல்லீரும் வீடு பெற்றால் இடம் இல்லை
ராம நாமம் சொல்லவே புண்ணியம் வேண்டுமே
ஹிரண்யகசிபாக அவதரித்து முன்பு காட்டினான்
கீழ் வாழ்த்தி ஆசீர்வாதம் நாராயணன்
இதுவே ரஹஸ்யம்
பின்பு பட்டாபிஷேகம் பண்ணி வைத்தான்
1-நான் அஹங்காரம் கூடாது
2-குலத்தால் வேறுபாடு பார்க்காத பகவான்
3-உறுதி நம்பிக்கை முக்கியம் பக்தனுக்கு
4-பகவான் எது செய்தாலும் நன்மைக்கே என்ற எண்ணம் வேண்டும்
5- பக்தனுக்காக எதையும் செய்வான்
கேட்டவர் பலன் -ஹிரண்யன் போல் பாபங்களை போக்கி அருளுவான் -ஒருமுறை
கோ தானம் செய்த பலன் -குறிப்பிட்ட அம்மாவாசை போன்ற நாள்களில் கேட்ப்பாருக்கு –
அனைத்து நாள்களிலும் கேட்ப்பார்களுக்கு கூட இருந்து ரஷிப்பான்

———-

1–17-பிரகலாதன் சரிதம்

ஸ்ரீ பராசர உவாச –

மைத்ரேய ஸ்ரூயதாம் சமயக் சரிதம் தஸ்ய தீமத
ப்ரஹ்லா தஸ்ய சதோதார சரி தஸ்ய மஹாத்மன–1-17-1-

ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் சரித்ரத்தை த்யான பூர்வமாகக் கேட்ப்பாயாக –

பிரஹ்லாத உவாச
அநாதி மத்ய அந்தம் அஜம் அவ்ருத்தி சாயம் அச்யுதம்
ப்ரணதோ அ சமயந்த சந்தாமம் சர்வ காரண காரணம் –1-17-15-இதுவே சார விஷயம் என்று உறுதியாச் சொன்னான்

பிரஹ்லாத உவாச –
சாஸ்தா விஷ்ணுர் அசேஷச்ய ஜகதோ யோ ஹ்ருதி ஸ்திதி
தம்ருதே பரமாத்மானம் தாத க கேன சாஸ்யதே–1-17-20-சாஸீதா -உள்ளேத்தே உறையும் மால் -லஷ்மீ நாத ஸமாரம்பாம்

ப்ரஹ்லாத உவாச
ந சப்த கோசரம் யஸ்ய யோகித்யேயம் பரம் பதம்
யதோ யாச்ச ஸ்வயம் விச்வம்ச விஷ்ணு பரமேஸ்வர –1-17-22-

வாய் வார்த்தையாலும் சொல்ல முடியாத ஸ்ரீ வைகுண்டம் -உலகு அவன் இடமே வந்தது -உள்ளே உயிராக உள்ளான் -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
யதோ யாச்ச ஸ்வயம் விச்வம்ச விஷ்ணு -இத்தை விடாமல் விஷ்ணு புராணம் காட்டிக் கொண்டே இருக்கும்

பிரஹ்லாத உவாச
ந கேவலம் தாத மம பிரஜானாம் ஸ ப்ரஹ்ம பூதோ பவதச்ச விஷ்ணோ
ததா விதாதா பரமேஸ் வரச்ச ப்ரசீத கோபம் குருஷே கிமர்த்தம் —1-17-24-

ப்ரஹ்லாத உவாச –
ந கேவலம் மத ஹ்ருதயம் ஸ விஷ்ணுர் ஆக்ரம்ய லோகான் அகிலான் அவஸ்தித
ஸ மாம் த்வாதீம்ச்ச பித்தாஸ் சமஸ்தான் சமஸ்த சேஷ்டாஸூ யு நகதி சர்வ –1-17-26-

ப்ரஹ்லாத உவாச
யத பிரதான புருஷௌ யதஸ் சைதஸ் சராசரம்
காரணம் சகலச்ய அஸ்ய ஸ நோ விஷ்ணு ப்ரசீதது –1-17-30-

பிரஹ்லாத உவாச –
விஷ்ணு சஸ்த்ரேஷூ யுஷ்மா ஸூ மயி ஸ அசௌ வ்யவஸ்தித
தைத்யாஸ் தென் சத்யேன மாக்ர நந்த்வா யுதானி மே–1-17-33-

பிராஹ்லாத உவாச
பயம் பயா நாம் அபஹாரிணி ஸ்திதே மநஸய நந்தே மம திஷ்டதி
ய ஸ்மின் ச்ம்ருதே ஜன்ம ஜரா அந்தகாதி பயானி சர்வாணி அபயாந்தி ததா -1-17-36-

ப்ரஹ்லாத உவாச –
தந்தா கஜா நாம் குலிசாக்ர நிஷ்டுரா சீர்ணா யதேதே ந பலம் மமைதத்
மஹா விபத்தாப விநாசனோ அயம் ஜனார்த்தனா நு ஸ்மரண அநுபாவ –1-17-44-

ப்ரஹ்லாத உவாச –
தாதைஷா வஹ்னி பவநேரி தோ அபி ந மாம் தஹ்யத்ர சமந்தோ அஹம்
பஸ்யாமி பதமாஸ் தரணாஸ் த்ருதாநி ஸீதாநி சர்வாணி திசாம்முகா நி –1-17-47-

சுக்ராச்சார்யர் புதல்வர்கள் -சண்டாமர்க்கர்கள்-அவர்களுக்கும் உபதேசிக்கிறான் ப்ரஹ்லாத ஆழ்வான்

ப்ரஹ்லாத உவாச –
அத்யந்தஸ் திமிதான்கானாம் வ்யாயாமேன ஸூ கைஷிணாம்
பிராந்தி ஜ்ஞானா வ்ருதாஷாணாம் து கமேவ ஸூ காயதே -1-17-61-

க்வ சரீரம் அசேஷாணாம் ச்லேஷ்மாதீனாம் மகாசய
க்வ காந்தி சோபா சௌந்த்ர்ய ரமணீ யாதயோ குணா -1-17-62-

மாம்ஸா ஸ்ருக்பூய விண் மூத்ர ஸ் நாயு மஜ்ஜா அஸ்தி சம்ஹதௌ
தேஹே சித்ப்ரீதி மான் மூடோ பவிதா நரகே அப்யசௌ–1-17-63-

அக்னே சீதேன தோயஸ்ய த்ருஷா பக் தஸ்ய ஸ ஷூதா
க்ரியதே ஸூ க கர்த்ருத்வம் தத் விலோ மஸ்ய சேதரை -1-17-64-

கரோதி ஹை தைத்ய ஸூ தா யாவன் மாதரம் பரிக்ரஹம்
தாவன் மாதரம் எவாசய துக்கம் சேதசி யச்சதி –1-17-65-

யாவத குருதே ஜந்து சம்பந்தான் மனச பிரியான்
தாவந்தோ அய நிகச்யந்தே ஹ்ருதயதே சோக சங்கவ –1-17-66-

யத் யத் க்ருஹே தன மனஸி யத்ர தத்ர அவதிஷ்டதி
நாசதாஹ உபகரணம் தஸ்ய தத்ர ஏவ திஷ்டதி –1-17-67-

ஜன்மன் யத்ர மஹத் துக்கம் ம்ரிய மாணச்ய சாபி தத்
யாத நா ஸூ யமஸ் யோக்ரம் கர்ப்ப சங்கர மணேஷூ ஸ -1-17-68-

கர்ப்பேஷூ ஸூ கலேசோ அபி பவத்பிர் அநு மீயதே
யதி தத் கத்யதாம் ஏவம் சர்வ துக்க மயம் ஜகத் –1-17-69-

தமேவம் அது துக்க நாம் ஆஸ்பதே அதர பவார்ணவே
பவதாம் கத்யதே சத்யம் விஷ்ணுர் ஏக பராயண –1-17-70-

மாஜா நீத வயம் பாலா தேஹி தேஹே ஷூ சாஸ்வத
ஜரா யௌவன ஜன்மாத்யா தர்மா தேஹச்ய ந ஆத்மன –1-17-71-

பால்யே க்ரீடன கா சக்தா யௌவனே விஷயோன்முகா
அஜ்ஞா நயந்த் யசக்த்யா ஸ வார்த்தகம் சமுபஸ்திதம் -1-17-75-இத்தையே ஆதி சங்கரர் பஜ கோவிந்தத்தில் அருளிச் செய்கிறார்

பாலஸ் தாவத் க்ரீடா சக்த:
தருணஸ் தாவத் தருணீ சக்த:
வ்ருத்தஸ் தாவத் சிந்தா சக்த:
பரே ப்ரஹ்மணி கோபி ந சக்த:

சிறு வயதிலோ விளையாட்டுச் செயல்களிலேயே ஒவ்வொருவரும் மூழ்கிப் போகின்றனர். பருவ வயதிலோ இனக் கவர்ச்சியிலேயே மனமெல்லாம் இருக்கிறது. முதுமைக் காலத்திலோ எத்தனையோ கவலைகள். ஐயோ! பரம் பொருளைப் பற்றி எண்ண ஒருவருக்கும் தமது வாழ்க்கையில் நேரமே இல்லையே?-கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

வேத நூல் பிராயம் நூறு —-பேதை பாலன் அது ஆகும் தொண்டரடிப்பொடி ஆழ்வார்-

100 வயசுக்கு வேடிக்கையாக சொல்லும் கதை –
குரங்கு20 வரை -காளை20-40 உழைத்து -மனுஷ்ய புத்தி -40-60–மேல் நாய் போல் காவல் இருந்து 80 வரை -மேல் வௌவ்வால் -கண் தெரியாமல் எங்கேயே ஒதுங்கி போய் –

தஸ்மாத் பால்யே விவேக ஆத்மா யதேதே ஸ்ரேயசே சதா
பால்ய யௌவன வ்ருத்தாத்யைர் தேஹ பாவரைஸம்யுத –1-17-76-

ததே தத்வோ மயாக்யாதம் யதி ஜாநீத நாந்ருதம்
ததஸ் மதபரீதயே விஷ்ணு ஸ்மர்யதாம் பந்த முக்தித –1-17-77-

ப்ரயாச ஸ்மரேண கோ அஸ்ய ச்ம்ருதோ யச்சதி சோபனம்
பாபஷ யச்ச பவதி ஸ்மரதாம் தமஹர் நிசம் –1-17-78—ஸ்மரேண–சிற்ற வேண்டாம் சிந்திப்பே அமையும் –

சர்வ பூதஸ் திதே தஸ்மின் மதிர் மைத்ரீ திவா நிசம்
பவதாம் ஜாயதாமேவம் சர்வ க்லேசான் ப்ரஹாச்யதே–1-17-79-

தாபத்ர யேண் அபிஹதம் யதேதத் அகிலம் ஜகத்
ததா சோச்யேஷூ பூதேஷு த்வேஷம் ப்ராஜ்ஞா கரோதி க –1-17-80-

அத பத்ராணி பூதானி ஹீன சக்திர் அஹம் பரம்
முதம் ததாபி குர்வீத ஹா நிர் த்வேஷபலம் யத -1-17-81-

பக்த வைராணி பூதானி த்வேஷம் குர்வந்தி சேத்ததி
ஸூ சோஸ் யான்யதி மோஹேன வ்யாப்திநீதி மநீஷிணாம்–1-17-82-

விஸ்தார சர்வ பூதஸ்ய விஷ்ணோ சர்வம் இதம் ஜகத்
த்ரஷ்டவ்யம் ஆத்மவத் தஸ்மாத் அபேதேன விசஷணை –1-17-84-

அஸார சம்சார விவர்த்தநேஷூ மா மா யாத தோஷம் பிரசபம் ப்ரவீமி
சர்வத்ர தைத்யாஸ் சமதாமுபேத சமத்தவம் ஆராதனம் அச்யுதச்ய –1-17-90-

தஸ்மின் பிரசன்னே கிமிஹாச்த்ய லப்யம் தர்ம அர்த்த காமைர் அலம் அல்ப காஸ்தே
சமாஸ்ரிதாத் ப்ரஹ்ம ரோர் அனந்தான் நி சம்சயம் ப்ராப்ச்யாத வை மஹத் பலம் –1-17-91-

——————

18. அசுரப் புரோகிதர்களைக் காத்தல்!–

பராசர உவாச
தச்யைதாம் தாநவாஸ் சேஷ்டாம் த்ருஷ்ட்வா தைத்ய பதேர் பயாத்
ஆசசரக்யு ஸ சோவாச ஸூ தா நா ஹூய சத்வர –1-18-1-

ப்ரஹ்லாத உவாச
சம்பத் ஐஸ்வர்ய மஹாத்ம்ய ஜ்ஞான சந்ததி கர்மாணாம்
விமுக்தேஸ் சைகதோ லப்யம் மூலம் ஆராதனம் ஹரே –1-18-26-விமுக்தி மோக்ஷ பர்யந்தம் அளிப்பான்

பஹூ நாத்ர கிமுக்தேன ஸ ஏவ ஜகத பதி
ஸ கர்த்தா ஸ விகர்த்தா ஸ சம்ஹர்த்தா ஸ ஹ்ருதி ஸ்திதே -1-18-27

ஸ போக்தா போஜ்யமப்யேவம் ஸ ஏவ ஜகத் ஈஸ்வர
பவத்பிர் ஏதத் ஷந்தவ்யம் பால்யாதுக்தம் து யன்மயா — 1-18-28-

க கேன ஹன்யதே ஜந்துர் ஜந்து க கேன ரஷ்யதே
ஹந்தி ரஷதி சைவாத்மா ஹ்யசத்சாது சமாசரன்–1-18-31-

கரமண ஜாயதே சர்வம் கர்மைவ கதி சாதனம்
தஸ்மாத் சர்வ பிரயத்னேந சாது கர்ம சமாசரேத்–1-18-32-

யத்ர அநபாயி பகவான் ஹ்ருத் யாஸ்தே ஹரிர் ஈஸ்வர
பங்கோ பவதி வஜ்ரச்ய தத்ர சூலச்ய கா கதா –1-18-36-

பிரஹ்லாத உவாச –
சர்வ வ்யாபின் ஜகத்ரூப ஜகத் ஸ்ரஷ்ட ஜனார்த்தன
பாஹி விப்ரான்இமான் அஸ்மா ஹூ சஹான்மந்திர பாவகாத் –1-18-39-

யதா சர்வேஷூ பூதேஷு சர்வவ்யாபி ஜகத் குரு
விஷ்ணுர் ஏவ ததா சர்வே ஜீவந்த்வேன புரோஹிதா –1-18-41-

யே ஹந்து பாகதா தப்யம் யைர்விஷம் யைர் ஹூ தாசன
யைர் திக் கஜைர் அஹம் ஷூண்ணோ தஷ்ட சர்பைச்ச யைரபி –1-18-42-

தேஷ்வஹம் மித்ர பாவேன சம பாபோ அஸ்மி ந க்வசித்
யதா தேனாத்ய சத்யேன ஜீவந்த்வவ ஸூ ரயா ஜகா –1-18-43-

ஸ்ரீ பராசர உவாச
இத்யுக்த்வா தம் ததோ கதவா யதாவ்ருத்தம் புரோஹிதா
தைத்ய ராஜாயா சகலம் ஆச்சக்யுர் மஹா முனே –1-18-46–

வித்யா கர்வம் இல்லாமல் -பாலகன் -அறியாமையால் சொன்னேன் -தப்பாக இருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என்றான் விநயத்துடன் –

———————————–

19. பிரகலாதனின் பிரார்த்தனை

ஸ்ரீ பராசர உவாச
ஹிரண்யகசிபு ஸ்ருத்வா தாம் க்ருத்யாம் விததீக்ருதாம்
ஆ ஹூய புத்ரம் பப்ரச்ச பிரபாவஸ் யாச்ய காரணாத்–1-19-1-

ந மந்த்ராதி கருத்தும் தாத ந ஸ நை சர்கிகோ மம
பிரபாவ ஏஷ சாமான் யோ யஸ்ய அச்யுதோ ஹ்ருதி –1-19-4-உள்ளத்தில் உறையும் மாலால் பெற்ற சக்தி

அன்யேஷாம் யோ பாபானி சிந்தயத்ய ஆத்மா நோ யதா
தஸ்ய பாப கமஸ் தாத ஹேத்வ பாவான் ந வித்யதே –1-19-5-

கர்மணா மநஸா வாசா பரபீடாம் கரோதி ய
தத் பீஜம் ஜன்ம பலதி ப்ரபூதம் தஸ்ய ஸ அஸூபம் –1-19-6-

சோ அஹம் ந பாபம் இச்சாமி ந கரோமி வதாமி வா
சிந்தயன் சர்வ பூதஸ்தம் ஆத்மன்யபி ஸ கேசவம் -1-19-7-முக்கரணங்களால் பாபம் செய்யாமல் பெற்ற பலன்

சரீரம் மானசம் துக்கம் தைவதம் பூதபவம் ததா
சர்வத்ர ஸூ பசித் தஸ்ய தஸ்ய மே ஜாயதே குத – 1-19-8-

ஏவம் சர்வேஷூ பூதேஷு பக்திர் அவ்யபிசாரிணீ
கர்தவ்யா பண்டிதைர் ஜஞாத்வா சர்வ பூத மயம் ஹரிம் –1-19-9-நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்று ஸர்வ பூத ஹிதம் வேண்டுமே

மம உபதிஷ்டம் சகலம் குருணா ந அதர சம்சய
க்ருஹீந்த்து மயா கிந்து ந சததேன்மதம் மம –1-19-34–

சாம சோபப்ப்ரதானம் ஸ பேத தண்டென ததா பரௌ
உபாயா கதிதா சர்வே மித்ராதீநாம் ச சாதேநே -1-19-35-

நானேவாஹம் ந பஸ்யாமி மித்ராதீம்ஸ் தாத மா கருத
சாத்யாபாவே மஹா பாஹோ சாதனை கிம் பிரயோஜனம் -1-19-36-

சர்வ பூதாத்மகே தாத ஜகன்னாதே ஜகனமயே
பரமாத்மனி கோவிந்தே மித்ர அமித்ர காத குத -1-19-37-

த்வய் யஸ்தி பகவான் விஷ்ணுர் மயி ச அன்யத்ர ச அஸ்தி ச
யதஸ் ததோயம் மித்ரம் மே சத்ருச்சேதி ப்ருதக் குத -1-19-38-வேறுபாடு இல்லையே

ததேபிர் அலமத்யர்த்தம் துஷ்டாரம் போத்தி விஸ்தரை
அவித்யா அந்தர் கதைர் யதன க்ர்த்தவ்யஸ் தாத சோபனே –1-19-39 –

வித்யா புத்திர் அவித்யாயாம் அஜ்ஞா நாத் தாத ஜாயதே
பாலோக் நிம் கிம் ந கத்யோதம் அ ஸூர ஈஸ்வர மந்யதே –1-19-40-

தத் கர்ம யன்ன பந்தாய சா வித்யா யா விமுக்தயே
ஆயாசாயாபரம் கர்ம வித்யான்யா சில்ப நை புணம் –1-19-41-

ததேதத் அவகம்யாஹம் அஸாரம் சாரமுத்தமம்
நிசாமய மஹாபாகா ப்ரநிபத்திய ப்ரவீமி தே–1-19-42-

ந சிந்த்யதி கோ ராஜ்யம் கோ தனம் நாபி வாஞ்சதி
ததாபி பாவயமே வைததுபயம் ப்ராப்யதே நரை –1-19-43-

சர்வ ஏக மஹாபாக்க மஹத்தவம் பிரதி சோத்யமா
ததாபி பும்ஸாம் பாக்யாநி நோத்யமா பூதி ஹேதவ–1-19-44–

ஜடா நாம விவேகானாம் அ ஸூ ராணாம்பி பிரபோ
பாக்ய போஜ்யாநி ராஜ்யாநி சந்தய நீதி மதாமாபி –1-19-45

தஸ்மாத் எதேத புண்யேஷூ ய இச்சேன் மஹதீம் ஸ்ரியம்
யதிதவ்யம் சமத்வே ச நிர்வாண ம்பி சேச்சதா–1-19-46-

தேவா மனுஷ்யா பசாவ பஷி வருஷ சரீஸ்ரூப
ரூபம் ஏதத் அனந்தசய விஷ்ணோர் பின்னம் இவ ஸ்திதம் –1-19-47-

ஏதத் விஜா நதா சர்வம் ஜகத் ஸ்தாவர ஜங்கமம்
த்ரஷ்டவ்யம் ஆத்மவத் விஷ்ணுர் எதோ அயம் விஸ்வ ரூப தருக –1-19-48-

ஏவம் ஜ்ஞாதே ச பகவான் அநாதி பரமேஸ்வர
ப்ரசீததி அச்யுதஸ் தஸ்மின் பிரசன்னே க்லேச சங்க்ஷய –1-19-49-

———-

20. நரசிம்மர் பிரத்தியக்ஷமாதல்

———

17. பிரகலாதன் சரிதம்

பரமஞானியும் உதார சரிதராயும் விளங்கும் பிரகலாதரின் பிரபாவத்தை பராசர முனிவர் சொல்லலானார். பூர்வத்திலே மிகவும் பராக்கிரமமுடையவனும் அதிதியின் மகனுமான இரணியகசிபு என்ற ஓர் அரக்கன் இருந்தான். அந்த அரக்கன் கோரமான தவங்களினால் பிரம்மாவை மகிழச்செய்து, தனக்குத்தேவர்களாலோ, மிருகங்களாலோ மரணம் விளையக்கூடாது என்பது போன்ற அநேகவரங்களைப் பெற்றான். அதனால் அவன் கர்வம் மிகுந்து, மூன்று உலகங்களையும் தீனப்படுத்திக் கொண்டான். இந்திரன், வருணன், ஆதித்தன், வாயு, அக்கினி, சந்திரன், யமன் முதலியோரது அதிகாரங்களைத் தனது கைவசப்படுத்திக் கொண்டான். வேள்விகளில் அவர்களுக்குரிய அவிர்ப்பாகங்களையும் தானே கைக்கொண்டான் மூன்று உலகங்களையும் சாதிதேச்காரமாய் ஆண்டு வந்தான். அப்போது இந்திரன் முதலிய தேவர்கள் அவனுக்குப் பயந்து சுவர்க்கலோகத்தை விட்டு, மானிட வேடம் பூண்டு பூவுலகில் சஞ்சரித்தார்கள். இந்தவிதமாக இரணியகசிபு மூன்று உலகங்களையும் ஏகச்சக்கிராதிபதியாக மிகவும் அகங்காரத்தோடு ஆண்டு வந்தான். கந்தர்வர்கள் கீதம் பாட, சித்தசாரணர் மிருதங்கம் முதலிய வாத்தியங்களை, வாசிக்க தேவலோகத்து அப்சர மங்கையர் நடனமாட, ஸ்படிக மயமும் அப்ரகசிலா மயமுமான அதிவுன்னதமான அழகிய உப்பரிகையில் இரணியகசிபு மிகவும் மகிழ்ச்சியோடு, மதுபானம் அருந்திய வண்ணம், மனதுக்கிச்சையான சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தான். அவன் அனைவருக்கும் தானே தலைவன் தானே எல்லாம் தானே சர்வ வல்லமை பொருந்திய ஈசுவரன் என்று அகப்பாவம் கொண்டு தன்னைத் தவிர வேறு எதையும் வணங்கக்கூடாதென்றும் கட்டளை பிறப்பித்திருந்தான். அவனுக்குப் பிரகலாதன் என்று ஒரு குமாரன் இருந்தான். அவன் பாலியத்தில் உபாத்தியாயரின் வீட்டிலிருந்து, பாலர் படிக்கவேண்டிய படிப்பைப் படித்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள் பிரகலாதன் தன் ஆசிரியரோடு, தன் தந்தையிடம் வந்து, வணங்கி நின்றான்; அப்போது மிகவும் தேஜஸோடு விளங்கும் தன் குமாரனை அசுர மன்னன் இரணியகசிபு வாரியணைத்துக் கொண்டு மனம் மகிழ்ந்து, குழந்தாய்! உன் குருநாதர் இத்தனை நாட்களாய் அதிக முயற்சியுடன் உனக்குச் சொல்லிக் கொடுத்த விஷயங்களின் சாராம்சத்தைச் சொல் பார்க்கலாம் என்றான். உடனே பிரகலாதன் பக்திச்சிரத்தையோடு, என் மனதில் இருக்கும் சாராம்சத்தைக் கூறுகிறேன் கேளுங்கள். ஆதிமத்தியாந்தரகிதனும் அஜனுமாகி விருத்தியும் க்ஷயமும் இல்லாமல், சர்வபூத அந்தராத்மாவாய் சிருஷ்டியாதிகளுக்கு காரணங்களான யாவற்றுக்குமே காரணமாய், எப்பொழுதுமே ஆனந்தசொரூபமாய் விளங்குகிற ஸ்ரீவிஷ்ணுவான அச்சுதனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! என்றான். குமாரனின் அந்த வார்த்தையைக் கேட்டதும் இரணியகசிபுவுக்குக் கோபம் மூண்டது. அவன் கண்கள் சிவந்தன, உதடுகள் துடிதுடித்தன. அவன் பயங்கரமான ரூபமடைந்து தன் புத்திரனின் குருவைப் பார்த்து, ஏ தர்ப்புத்தியுள்ளவனே! நிசாரமும் சத்துரு பட்ச துதியுமான இந்த சுலோகத்தை என் பாலகனுக்குச் சொல்லிக் கொடுத்த, என்னை அவமானஞ் செய்யலாமா? என்று கேட்டான். அதனால் ஆசிரியர் பயந்து நடுங்கி இரணியகசிபை நோக்கி, தைத்ய ஈசுவரா! கோபிக்க வேண்டாம். உமது குமாரன் நான் உபதேசித்த விதமாகப் படிக்கவில்லை! என்றார். உடனே இரணியகசிபு தன் பாலகனை நோக்கி, பிரகலாதா! உன் உபாத்தியாயர் இப்படி உனக்கு உபதேசிக்கவில்லை என்று சொல்கிறாரே, இப்படி யார் உனக்குப் போதித்தார்கள்? என்று சினத்துடன் கேட்டான். பிரகலாதனோ புன்முறுவலுடன் தன் தந்தையைப் பார்த்து ஐயா எவன் சர்வ பூதங்களின் இதயத்திலே இருக்கிறானோ, அந்த ஸ்ரீவிஷ்ணுவே சகல ஜனங்களுக்கும் புத்தியைக் கற்பிப்பவன் பரமாத்வான அந்தத் தேவனையன்றி வேறு யார் கற்பிப்பவன் இருக்கிறான்? என்றான்.

இரணியனுக்குக் கோபம் முற்றியது. அவன் தன் சின்னஞ்சிறு பாலகனான பிரகலாதனைக் கடிந்து நோக்கி, துர்புத்தியுள்ளவனே! உலகத்திற்கே ஈசுவரனான என் கண் முன்னாலேயே பயமின்றி நின்று வேறு எவனையோ அடிக்கடி பயமில்லாமல் துதிக்கிறாயே, அந்த விஷ்ணு என்பவன் யார்? என்று கேட்டான். எவனுடைய பரமார்த்த ஸ்வரூபம் இன்னதன்மையதென்று சொல்லக்கூடாமல் யோகீந்திரர்களுக்கும் தியான கம்மியமாக இருக்குமோ, எவனால் உலகமெல்லாம் உண்டாயிற்றோ எவன் விஸ்வமயனாக இருக்கிறனோ அந்தப் பரமேஸ்வரனே ஸ்ரீவிஷ்ணு என்று அறிவீராக! என்றான் பிரகலாதன். அதை எதிர்க்கும் விதமாக இரணியகசிபு துள்ளிச் சினந்து, மூடனே! யோகீஸ்வரனாக நான் இருக்கப் பரமேசுவரன் என்ற பெயர் வேறு ஒருவனுக்கும் உண்டோ? நீ நாசமடையப் போவதால் தான் என் முன்னாலேயே துணிந்து நின்று பலவிதமாக அன்னியனைத் துதிக்கிறாய்? என்று குமுறினான். பிரகலாதனோ அமைதியாக, தைத்யேசுவரனே! பரப்ரம்ம பூதனான ஸ்ரீவிஷ்ணுவே எனக்கும் உமக்கும் சகல பிரஜைகளுக்கும் நிலைப்படுத்துவோனும் சிருஷ்டிப்பவனுமாக இருக்கிறான். ஆகையால் நீங்கள் ஏன் கோபிக்கிறீர்கள்? கோபத்தை விட்டுச் சாந்தமாக இருங்கள் என்றான். அதை இரணியகசிபால் பொறுக்கமுடியவில்லை. துர்புத்தியுடைய இந்தச் சிறுவனின், இதயத்தில் எவனோ ஒரு பாபகர்மமுடையவன் பிரவேசித்து மோகத்தையுண்டாக்கியிருக்கிறான். அதனால்தான் இவன் இப்படிப்பட்ட கெட்ட வார்த்தைகளைப் பலவாறாகச் சொல்கிறான்! என்று உறுமினான். சர்வலோக வியாபகனான அந்த ஸ்ரீமகாவிஷ்ணு என் இதயத்தில் மட்டுமல்ல; சகல உலகங்களிலும் வியாபித்திருக்கிறார். அதனால் என்னையும், உம்மையும் மற்றுமுள்ள சகலரையும் அந்த விஷ்ணுவே அந்தந்தக் காரியங்களில் பிரவேசிக்கச் செய்கிறார் என்றான் பிரகலாதன். அவன் சின்னஞ்சிறு பையன் என்றே; தன் புத்திரன் என்றோ பாராமல் இரணியன் மிகவும் குரோதம் கொண்டு; தன் அருகில் இருந்த அசுரர்களை அழைத்து துராத்மாவான இந்த மூடனைக் குருவின் வீட்டிற்குக் கொண்டு போய் நன்றாகத் தண்டிக்கச் சொல்லுங்கள்! ஒரு துராத்மா இவனுக்குப் பகைவனை துதிக்கும்படிப் போதித்திருக்கிறேன்! என்று கட்டளையிட்டான். அதன் பிரகாரம் அசுரர்கள் பிரகலாதனைக் குருவின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கேயே அவனைத் தள்ளிவிட்டுப் போனார்கள். அங்கே பிரகலாதன் தன் குருவுக்குப் பணிவிடைகள் புரிந்து; கல்வி பயின்று வந்தான்.

சிறிது காலஞ்சென்ற பிறகு இரணியன் தனது மகனை அழைப்பித்து; மகனே பிரகலாதா! ஏதேனும் ஒரு சுலோகத்தைச் சொல்! என்றான். அதனால் பிரகலாதன் தன் தந்தையை நோக்கி, எவனிடத்திலிருந்து மூலப்பிரகிருதியும் சமஷ்டி ரூபமான ÷க்ஷத்ரக்ஞனும் உண்டானார்களோ; எவனிடத்திலிருந்து சராசரத்மகமான சகல பிரபஞ்சமும் ஜனித்தனவோ; அப்படிப்பட்ட சர்வதாரனப் பூதனான ஸ்ரீவிஷ்ணுதேவன் நமக்குப் பிரத்யட்சமாகக் கடவன்! என்றான். அதைக்கேட்டதும் இரணியன் அளவிலாத கோபங்கொண்டு அங்கிருந்த அசுரரை நோக்கி; இந்தத் துராத்மாவைச் சித்திரவதை செய்து கொல்லுங்கள்! இவன் பிழைத்திருப்பதால் யாதொரு பயனுமில்லை. இவன் தன் சார்புடைய இனத்தவருக்குத் தீங்கு செய்யத் தலைப்பட்டதால் இக்குலத்துக்கு நெருப்பு போல இருக்கிறான் என்று கட்டளை பிறப்பித்தான். உடனே அசுரர்கள் அநேகர் கூடி, பலவிதமான ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, பிரகலாதனைத் தாக்கி வதைக்க முயன்றார்கள். அப்பொழுது பிரகலாதன் புன்முறுவலுடன், அசுரர்களே உங்களிடமும் என்னிடமும் உங்களுடைய ஆயுதங்களிலுங்கூட ஸ்ரீமந்நாராயணனே பரிபூரணமாய் நிறைந்திருக்கிறான் என்பது சத்தியம்! இந்தச் சத்தியத்தினாலே உங்கள் ஆயுதங்கள் என்மீது பாயாதிருக்கட்டும்! என்று சொன்னான். அப்படி அவன் சொல்லியுங்கூட அசுரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தடி, கத்தி, சூலசக்கரம் முதலிய ஆயுதங்களால் பிரகலாதனை வதைக்கலானார்கள். ஆயினும் பிரகலாதன் அவற்றால் சிறிதும் வேதனையடையாமல் விசேஷ காந்தியுடனே பிரகாசித்தான். அப்போது அவனது தந்தை இரணியன் அவனைப் பார்த்து, அடா துர்புத்தியுடையவனே! இனியேனும் எனது பகைவனைத் துதி செய்யாமல் இருந்தால் உனக்கு அபயங்கொடுக்கிறேன். அதிக மூடத்தன்மையை அடையாமல் சன்மார்க்கனாக இரு என்று புத்தி புகட்ட முயன்றான். அதை பிரகலாதன் ஏற்றுக்கொள்ளாமல், பிதாவே! எவனைச் சிந்திதகதவுடன் பிறப்பு, இறப்பு, மூப்பு முதலிய சமஸ்த பயங்களும் ஓடிப்போகுமோ, அத்தகைய பயங்களையெல்லாம் போக்கடிக்கும் அனந்தனான ஸ்ரீமகாவிஷ்ணு, எனது இதயத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும்போது எனக்குப் பயம் என்பது ஏது? என்று நிமிர்ந்து நின்றான்.

அதைப் பார்த்து இரணியன் அளவிலாத ஆங்காரம் கொண்டு மகா நாகங்களை அழைத்து, ஓ கொடிய பாம்புகளே! மிகவும் துர்புத்தியும் துர்நடத்தையுமுள்ள இந்தப் பையனை விஷச்சுவாலைகள் மிக்க உங்கள் பற்களால் கடித்து இப்போதே இவனை நாசமடையச் செய்யுங்கள்! என்று கட்டளையிட்டான்; உடனே தக்ஷகன் முதலான கொடிய பாம்புகளெல்லாம் உக்கிரமான விஷங்களைக் கக்கிக் கொண்டு பிரகலாதனின் சகல அவயவங்களிலும் கடித்தன. ஆனால் அந்தப் பாலகனோ ஸ்ரீவிஷ்ணுவிடம் தன் சிந்தை முழுவதையும் நிலைநிறுத்தியிருந்ததால் ஆனந்தப் பரவசமாகி அக்கொடிய பாம்புகள் தனது அறியாமல் இருந்தான். பிறகு விஷசர்ப்பங்களெல்லாம் தோல்வியடைந்து இரணியனிடம் சென்று அரசே எங்களுடைய பற்கள் ஒடிந்துவிட்டன. முடியிலிருக்கும் இரத்தினங்கள் வெடித்தன. படங்களிலே மகத்தான தூபம் ஒன்று உண்டாயிற்று. இதயம் நடுங்கியது. இவையெல்லாமல் அந்தப் பாலகனின் தேகத்தில் சிறிதும் சேதம் உண்டாகவில்லை. ஆகையால் எங்களிடத்தில் நீங்கள் கோபிக்காமல், இந்தக் காரியத்தை ஒழித்து வேறு ஒரு காரியத்தைக் கட்டளையிடுங்கள்! என்று கெஞ்சி விழுந்தன. இரணியன் அப்போதும் குரோதம் அடங்காமல் திக் கஜங்களைக் கூப்பிட்டு, ஓ! திசை யானைகளே! உங்களுடைய தந்தங்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கி மிகக் கெட்டியாகவும் உக்கிரமாயும் விளங்குகின்றன. அத்தந்தங்களினால்; அந்தத் துராத்மாவான பிரகலாதன் மீது பாய்ந்து, அவனைக் கொன்றொழியுங்கள். அரணியில் பிறந்த அக்கினியே அந்த அரணியை தகிப்பதுபோல தைத்திய குலத்தில் பிறந்த இந்த அதமன் தன் குலத்தையே நாசஞ்செய்பவனாக இருக்கிறான்! என்றான். உடனே திக்கஜங்கள் பிரகலாதனை பூமியிலே வீழ்த்தி பருவத சிகரங்களைப் போன்ற தங்களுடைய தந்தங்களை பிரகலாதன் மீது பாயவைத்து இடித்தன. அப்படி அவை பாயும் போது; கோவிந்த சரணாவிந்தங்களையே பிரகலாதன் தியானித்துக் கொண்டிருந்தானாகையால் அந்தப் பாலகனது மார்பிலே யானைகளின் தந்தங்கள் பட்டதும்; அவை முறிந்து பொடிப்பொடியாய்ப் போயின.

அப்போது பாலகன் பிரகலாதன் தன் தந்தை இரணியனைப் பார்த்து; தந்தையே! வைரத்தைவிட உறுதியான திசையானைகளின் தந்தங்கள் என் மீது பட்டுப் பொடிப்பொடியானது என்னுடைய பலத்தால் அல்ல. பாபங்களையெல்லாம் நாசஞ்செய்யவல்ல ஸ்ரீஜனார்த்தனருடைய ஸ்மரண மகிமையினால் தான் என்பதை நினைப்பீராக! என்று சொன்னான். அதைக்கேட்டதும் இரணியன் அதிக ஆத்திரமடைந்து திக்கஜங்களை அப்பால் விரட்டிவிட்டுத் தன் அசுரர்களை நோக்கி, தைத்தியர்களே! பாபகர்மனான இந்தப் பாலகனைக் கொன்றொழிக்காமல் விடக்கூடாது. காலாக்கினிக்கு ஈடான மஹா அக்கினியை வளர்த்து அதிலே இவனைப் போட்டு எரியுங்கள் என்று சொல்லிவிட்டு; வாயுதேவனான காற்றைக் கூப்பிட்டு மாருதனே! அந்தப் பெரு நெருப்பை உனது காற்றால் ஜ்வலிக்கச் செய்! என்று கட்டளையிட்டான். அசுரர்களோ மலைபோல் விறகுகளைக் குவித்து; அந்தக் குவியலுக்குள் பாலகனான பிரகலாதன் மறையும்படி அவற்றினுள்ளே அமுக்கி மூடிவைத்து, நெருப்பை மூட்டிக் கொளுத்தினார்கள். அப்போது பிரகலாதன் தன் தந்தையை நோக்கி, பிதாவே! பிராண்ட மாருதத்தால் ஜ்வலிக்கப்பட்டும்; இந்த அக்கினி சிறிதளவுகூட என்னைத் தகிக்கவில்லை. மேலும் நான் கிடக்கும் இந்த நெருப்பு மயமான விறகுக் குவியலோ, பத்துத் திசைகளிலும் நல்ல தாமரை மலர்களை நிறைவித்து அதிகக் குளிர்ச்சியாகச் செய்யப்பட்டவை போலிருப்பதையே நான் உணர்கிறேன்! என்று சிரித்தான்.

இது இப்படியிருக்கும்போது, இரணியனுக்குப் புரோகிதர்களும், சுக்கிரனுடைய குமாரர்களுமான சண்டாமர்க்கர் என்பவர்கள் இரண்யனை நல்வார்த்தைகளால் துதித்து; அசுர ஈஸ்வரனே உமக்கு விரோதிகளான தேவர்கள் மீது உமது கோபத்தைச் செலுத்த வேண்டுமே தவிர உமது சொந்த மகனான இந்தப் பாலகனிடம் உமது கோபத்தையெல்லாம் செலுத்துவது முறையல்ல! இவன் இனிமேலும் சத்துருபட்ச ஸ்துதி செய்யாமல் இருக்கும்படி நாங்கள் இவனுக்குக் கற்பிக்கிறோம்! பாலியப்பருவம் சகல துர்க்குணங்களுக்கும் இருப்பிடமானபடியால் பாலகனான இந்தக் குமாரனிடத்தில் கோபிக்க வேண்டாம். நாங்கள் போதிப்பதாலும் இவன் ஹரிபக்தியை விடாமல் இருப்பானாயின் இவனை வதைப்பதற்கான துர்ச்செயல்களை நாங்களே செய்கிறோம்! என்று வேண்டிக்கொண்டார்கள். அதனால் இரணியன் சிறிது மனமிளகித் தன்னுடைய அசுரர்களை ஏவி மகாக்கினியின் மத்தியில் போட்டிருந்த பிரகலாதனை வெளியே இழுத்துவரச் செய்தான். மறுபடியும் குருகுலத்துக்கே போகும்படி பிரகலாதனுக்கு இரணியன் கட்டளையிட்டான். அதன்பிறகு, குருகுலத்தில் பிரகலாதன் வசித்துக் கொண்டிருந்தான். அங்கே அவனுடைய குருவானவர் பாடம் போதிக்காத சமயங்களில் பிரகலாதன் தன்னோடு படிக்கும் தைத்ரிய பாலர்களான அசுரச் சிறுவர்களைக் கூப்பிட்டு உட்காரவைத்துக் கொண்டு அவர்களுக்கு விஷ்ணு பக்தியையும், உண்மையான ஞானமார்க்கத்தையும் உபதேசித்து வரலானான். ஓ தைத்திய பாலர்களே! பரமார்த்தமான விஷயத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன் கேளுங்கள். என் வசனங்களைப் பொய்யாக என்ன வேண்டாம். ஏனென்றால் நான் பொருள்மீது ஆசை வைத்து இதை உங்களுக்கு உபதேசிக்க வந்தவனல்ல. ஆகையால் நான் சொல்வதை நம்பிக் கேளுங்கள். மனிதன் பிறந்தவுடன் பாலியமும், யவனமும், அதற்குப் பிறகு தடுக்கமுடியாத கிழத்தன்மையும் வந்து, கடைசியில் மிருத்யுவான மரணத்திற்கே வசமாவான். தைத்ய பாலர்களே! மனிதர்களிடம் இவையெல்லாம் உண்டாவதை நீங்களும் நானும் கண்ணெதிரில் கண்டிருக்கிறோம். இதுமட்டுமல்ல. மரணமடைந்தவனுக்கு மீண்டும் பிறவியுண்டாவதும் மெய்யேயாகும். இதற்கு சுருதி ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களே பிரமாணங்களாம்! அவற்றை நீங்களும் கற்றறிந்திருக்கிறீர்கள். இந்தத் தேகம் பிறப்பதற்குக் காரணம், பூர்வ ஜன்மத்தில் செய்த பாவ புண்ணியங்களோடு கூடிய ஸ்திரமான ஆன்மாவேயல்லாமல் வேறு காரணம் அகப்படாமையால் சுக்கில சுரோணிதங்களுக்கு ஆளாவதான ஆன்மாவே முக்கிய காரணம். ஆகையால் மனிதனுக்கு கர்ப்பவாசம் முதல் சரீரம் விழும் வரையிலும், சர்வ அவஸ்தையிலும் துக்கம் ஒன்று தான் நிச்சயம்! அன்னபானாதிகளாலே பசியும் தாகமும் தீருவதும், அந்தந்த உபாயங்களாலே சீத உஷ்ணாதி உபத்திரவங்கள் விலகுவதையுங் கொண்டு அதையே சுகம் என்று நினைப்பது உண்மையில் அவிவேகமே ஆகும்!

அது எப்படியெனில், அன்னபானாதிகளைச் சம்பாதிப்பதற்காகச் செய்யும் பிரயாசையினால் உண்டாகும் துக்கங்கள் சொல்லத்தரமல்ல. இந்த அன்னாதிகளால் அஜீர்ணமாகும்போது எத்தனை துக்க ஹேதுவாகின்றன? இதற்கு உதாரணம் கேளுங்கள், வாத தோஷங்களால் மரத்திருக்கிற அங்கங்களையுடைவர்களுக்கும், வதைப்பதாலேயே தேகசுகத்தை விரும்புகிறவர்களுக்கும், அவர்களுடைய உடம்பைக் குத்துவதும், கசக்குவதும், பிசைவதும், மிதிப்பதும், அடிப்பதுமே சுகமாகத் தோன்றுகின்றன; காமமோகிகளாக இருப்பவர்களுக்கோ ஊடலும் கூடலும் காமினீ சரண தாடனமுமே சுகமாகத் தோன்றும் இப்படியாகத் துக்க ஏதுக்களில் சுகப்பிராந்தி உண்டாயிருப்பதைக் காண்பீர்கள். இதுபோலவே, மாமிச சிலேஷ்ம, மலமூத்திராதி மயமான உடலில் சவுந்தர்ய, சவுகுமார்ய, சவுரப்பிய காந்தி முதலான குணங்கள் உண்டென்று நினைப்பதும் வெறும் மனப்பிராந்தியே தவிர வேறல்ல. ரத்தமாமிச, சிலேஷ்ம மலமூத்திர மச்சஸ்நாயு அஸ்திகளின் சமூகமாக இருக்கும் தேகத்தின் மீது பிரியம் வைப்பவன் நரகத்திலேயும் பிரியம் வைக்கலாம். குளிரினால் நெருப்பும், தாகத்தினால் தண்ணீரும், பசியினால் அன்னமும் சுகமாகத் தோன்றுகின்றன. குளிரும் தாகமும் பசியும் இல்லாதபோது அக்கினியும் தண்ணீரும் அன்னமும் துக்க ஏதுக்களாகவே இருக்கும். பிள்ளைகளே! மனிதன் எவ்வளவு தனதானிய ரத்னாதிகளைக் கிரகித்துக் கொள்கிறானோ அவ்வளவையும் துக்கம் என்று நினைக்க வேண்டும். மனிதனின் மனத்துக்குப் பிரியமான புத்திர, மித்திர களத்திராதி சம்பந்தங்கள் எத்தனை சம்பாதிக்கிறானோ அத்தனையும் இதயத்தில் தைத்த ஆணிகளைப் போலவே இருக்கும்! மனிதன் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவனுடைய இதயத்தில் இருக்கிற தனதானிய ரத்னாதிகளை நாசமும், அக்கினியுபாதையும் கோரபயமுமில்லாமல் ஸ்திரமாய்ப் பாதித்துக்கொண்டேயுள்ளன. வீட்டில் கள்வர் பயமில்லாமல் இருந்தாலும், இருதயத்தில் பொருள்களிடத்துள்ள ஆசையால், அவை உண்டாகிக்கொண்டே இருக்கின்றன. மேலும் பிறக்கும்போது அனுபவிக்கிற துக்கத்தைப் போலவே மரணத்திலும் துக்கம் உண்டாகிறது. பிறகு, யமவாதனையிலும் மகாதுக்கமே உண்டாகும். கர்ப்பவாசத்தில் கொஞ்சமேனும் சுகம் இருக்குமா என்று நீங்களே சொல்லுங்கள். எனவே எங்குமே சுகமில்லை ஆகையால் ஜகம் எங்கும் துக்கமயமாகவே இருக்கிறது.

இப்படியாகச் சகல துக்கங்களுக்கும் இருப்பிடமான சம்சார சாகரத்தை ஸ்ரீமந்நாராயணன் ஒருவனே கடக்கச் செய்பவன் உங்களுக்கு நான் உண்மையையே சொல்கிறேன். நாம் பால்யரானதால் விரகதி மார்க்கத்திற்குத் தகுதியற்றவர்கள் என்று நினைக்கவேண்டாம். பால்ய, யௌவன ஜரா, மரணாதி அவஸ்தைகள் உடலுக்கேயன்றி ஆத்மாவுக்கு இல்லை. உடலில் ஆன்மாதான் ஜனன மரணாதி ரகிதனாய், சாஸ்வதனாக இருக்கிறான். உலகத்தில் மனிதன், தன்னுடைய பாலப்பருவம் கடந்த பிறகு யவ்வன வயதிலே ஆன்மாவுக்கு இதஞ்செய்து கொள்கிறேன் என்றும், யவ்வனத்தை அடைந்தபோது வயோதிகத்திலே உயர்ந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறேன் என்றும் நினைப்பான். பிறகு வயது முதிர்ந்து, மூப்புவந்து இந்திரியங்கள் பலவீனப்பட்டுப் போகும் போது, இனிமேல் என்ன செய்வேன்? திடமாக இருந்தபோதே ஆத்தும இதஞ்செய்துகொள்ளாமல் மூடனாகப் போனேனே! என்று கவலைப்படுவான். இதுவுமல்லாமல் துராசார மோகங்கொண்டு, ஒருநாளும் உயர்வான மார்க்கத்துக்கு உரியவனாக மாட்டான். எப்படியென்றால், பலவித கிரீடா விளையாடல் விசேஷங்களால் பாலியத்தையும், சந்தன குசுமவனிதையர்களின் பரவசத்தினாலே வாலிபத்தையும், அசக்தியினாலேயே வயோதிகத்தையும் போக்கிக் கொண்டு, அஞ்ஞானிகள் தங்கள் வாழ்நாளை வீணாக்கிக் கொள்கிறார்கள். ஆகையால் கங்கை நதியின் அருகிலிருந்தும் வண்ணான் தனக்குத் தாகமெடுத்தவுடன் தண்ணீரைக் குடிக்காமல், இந்தத் துணியைத் துவைத்தாகட்டும் இந்த ஆடையைத் துவைத்தாகட்டும் என்ற காலத்தைப் போக்குவதைப் போலவும், செம்படவன் இந்த மீனைப் பிடித்தாகட்டும் என்று பொழுதைப் போக்குவதைப் போலவும், எதிர்காலத்தை நினைத்து தற்காலப் பருவத்தைப் போக்கக்கூடாது. பாலிய, யவ்வன, ஜரா மரணாதி அவஸ்தைகள் உடலுக்கு உண்டே தவிர ஆன்மாவுக்கு இல்லை என்று நினைத்து விவேகமுடையவர்களாய், நீங்கள் உஜ்ஜீவிக்கும்படியான முயற்சிகளைச் செய்யுங்கள். இதுவே விரக்திமார்க்கம்! இது அசத்தியம் என்று நினைக்காதீர்கள் எப்போதும் சம்சார பந்த நிவாரணியான ஸ்ரீமந்நாராயணனையே நினையுங்கள். அந்த எம்பெருமானை நினைப்பதில் என்ன கஷ்டம் இருக்கிறது? அந்தத் திருப்பெயரை ஸ்மரித்தவுடனேயே சகல பாபங்களும் நாசமாய் சகல சுபங்களும் உண்டாகும். ஆகையால் அந்த மகாவிஷ்ணுவையே நினைத்து மகாத்துமாக்கள் உஜ்ஜீவிப்பார்கள். சர்வபூதந்தர் பாமியான நாராயணனிடத்தில் உங்களுக்கு நட்புணர்வு உண்டாகட்டும்! அவனது லீலா சாதனங்களான சேதனங்களிடத்தில் சினேகஞ்செய்யுங்கள். அதனால் மோகம் முதலிய சகல கிலேசங்களும் விலகும் ஆத்தியாத்து மாகாதி, தாபத்ரயத்தினால் ஜகம் யாவும் துன்பப்படுபவை. ஆகையால் மிகவும் பரிதாபப்பட வேண்டிய பிராணிகளிடத்தில் எவன்தான் துவேஷத்தை வைப்பான்? ஒருவேளை செல்வம், கல்வி, பலம் முதலியவற்றில் தன்னைவிட சகல ஜீவர்களும் சகல பிராணிகளும் செழிப்பாக இருப்பதாகவும், தான் ஒருவனே அப்படியில்லாமல் சக்தியீனனாக இருப்பதாகவும் மனிதன் நினைத்தானானால் அப்போதும் துவேஷம் பாராட்டாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். துவேஷஞ் செய்வதால் ஹானியே ஏற்படும் ஆகையால்; மயித்திரி; கருணை; முதிதை; உபேஷை என்ற மனத்தெளிவின் காரணங்களை மந்திமாதிகாரிகளின் மதத்தை அனுசரித்து உங்களுக்குச் சொன்னேன். மந்திமாதிகாரிகள் என்போர் உலகத்தைப் பகவானின் சொரூபமாக நினைக்காமல் வேறாக நினைக்கிற சாங்கியராவர். இனி உத்தமாதிகாரிகளின் கருத்தைக் கூறுகிறேன் கேளுங்கள்.

சகல பிரபஞ்சமும் சர்வாத்மாவான ஸ்ரீமந்நாராயணருடைய சொரூபம் என்று நினைத்து, ஞானமுள்ளவர்கள் சகல பூதங்களையும் உன்னைப்போலவே அபேதமாக நினைக்கவேண்டும். ஆகையால், நானும் நீங்களும் அசுர சுபாவத்தை விட்டுவிட்டு, பெரும் ஆனந்தத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்வோமாக. சூரியன், சந்திரன், வருணன், இந்திரன், வாயு, அக்கினி முதலானவர்களாலே ஒருபேறுமில்லை. இதற்கு என்ன செய்வது என்றால், தேவ, அசுர; யக்ஷ;ராக்ஷச, கின்னர பன்னகாதிகளாலும் மனுஷ்ய; பசு; பக்ஷி; மிருகங்களாலும் அதிகாரம்; ஜ்வரம், குன்மம், முதலிய மகாரோகங்களாலும் ராக, துவேஷ, லோப, மோக மதமாச்சாரியங்களாலும் எது நாசஞ்செய்யப்படாததோ அப்படிப்பட்ட பரமானந்தத்தைப் பெறுவதற்கு ஸ்ரீகேசவனது திருவடிகளில் இதயத்தை நிலைநிறுத்த வேண்டும். இதனால் சுகமடையலாம். ஆகையால் அசாரமான சம்சார மார்க்கத்தில் உண்டாகும் தேவ மனுஷ்யாதி சரீரங்களுக்கு உரிய ஸ்வர்க்க போகங்களுக்கு ஆசைப்பட வேண்டாம். உங்களுக்கு நான் வலுவில் வந்து நன்மையானவற்றையே சொல்கிறேன். சர்வபூதங்களிடத்திலும் சமத்துவ புத்தியுடன் இருங்கள். சர்வபூத சமத்துவந்தான் அச்சுதனுக்குச் செய்யும் ஆராதனையாகும். சர்வ நாதனான விஷ்ணுபெருமான் பிரசன்னமானானேயாகில் துர்லபமான பொருள்கள் என்னதான் இருக்கமுடியும்? ஆனாலும் தர்மார்த்த கர்மங்களைப் பிரார்த்திப்பது நல்லதன்று. அவை அற்பங்கள்! அவைகளினால் பயன் என்ன? மோட்சத்தையும் விரும்பவேண்டாம். ஏனென்றால் நன்றாய்ப் பழுத்த மாமரத்தின் அருகே சென்றவனுக்கு தற்செயலாய்ப் பழங்கிடைப்பது போல பரப்பிரமமான அனந்தன் என்ற மகாகல்ப விருட்சத்தை அணுகியவனுக்கு மோக்ஷõனந்தம் என்கிற பலன் தற்செயலாகவே கிடைத்துவிடும், இதில் சந்தேகமில்லை என்று பாலகன் பிரகலாதன் கூறினான்.

————

18. அசுரப் புரோகிதர்களைக் காத்தல்!

பிரகலாதனின் உபதேசங்களைக் கேட்டதும் அசுரகுமாரர்கள் மிகவும் யோசித்துவிட்டு, இரணியனின் கட்டாயத்துக்குப் பயந்து, பிரகலாதன் சொன்னவற்றையெல்லாம் அந்த அசுரேஸ்வரனிடம் கூறிவிட்டார்கள். அதனால் இரணியன் அதிகக் கோபமும் அகங்காரமும் கொண்டு தன் சமையற்காரனைக் கூப்பிட்டு, பரிசாரகர்களே! மந்தபுத்தி படைத்தவன் தான் என் குமாரன் பிரகலாதன் அவன் கெட்டதுமல்லாமல், மற்றவருக்கும் துன்மார்க்கமான உபதேசங்களைச் சொல்லி, அவர்களையும் கெடுத்துக் கொண்டிருக்கிறான். ஆகையால் பிரகலாதனைத் தாமதமின்றி அழித்தொழிக்க வேண்டும். அவனறியாத வண்ணம் அவனுடைய ஆகாரங்களிலெல்லாம் ஆலகாலம் என்ற கொடிய விஷத்தைக் கலந்து அவனுக்குக் கொடுங்கள். இந்தக் காரியத்தில் சந்தேகம் வேண்டாம்! என்று கட்டளையிட்டான். பரிசாரகர்களும் அப்படியே விஷங்கலந்த அன்னத்தை பிரகலாதனுக்கு கொடுத்தார்கள். அதையறிந்த பிரகலாதன், தன் மனதில் யாதொரு மாறுபாடும் இல்லாமல், அனந்தன் என்ற திவ்யநாமதே யத்தினால் அந்த அன்னங்களையெல்லாம் வாங்கி மகிழ்ச்சியுடன் அமுது செய்தான். ஸ்ரீஅனந்தனின் நாமத்தை உச்சரணை செய்த பெருமையால் அன்னத்தில் கலந்துள்ள விஷமெல்லாம் தன் வீரியத்தை இழந்து பிரகலாதனின் ரத்தத்திலேயே ஜீரணமாகிவிட்டது. அந்த மகாவிஷம் பிரகலாதனுக்கு ஜீரணமானதைப் பார்த்ததும் சமையற்காரர்கள் மகாபயம் பிடித்தவர்களாய் இரணியனிடம் ஓடி நடந்தவற்றைக் கூறினார்கள். அதனால் இரணியன் இன்னும் கோபங்கொண்டு, புரோகிதர்களான சண்டாமர்க்கர்களைக் கூப்பிட்டு, புரோகிதர்களே, விரைவில் அந்த துன்மார்க்கப்பையலைக் கட்டியிழுத்துச் சென்று உங்கள் மந்திர பலத்தால் பயங்கரமான கிருத்தியை உண்டாக்கி, அவனை அழித்து விடுங்கள் என்று கட்டளையிட்டான். புரோகிதர்களான பிராமணர்கள் அசுரேஸ்வரனின் ஆக்ஞையை ஏற்று பிரகலாதனை அணுகினார்கள். வணக்கமாக நின்று கொண்டிருக்கும் பிரகலாதனைப் பார்த்து, சிறுவனே! திரிலோக விக்கியாததமான பிரமகுலத்தில் உதித்து, இரணியனின் மகனான உனக்கு எந்தத் தேவதைகளால் என்ன ஆகவேண்டும்? விஷ்ணுவான அந்த அனந்தனாலே தான் உனக்கு என்ன பயன்? உன் பிதாவான இரணியகசிபோ சகல உலகங்களுக்கும் அதிபதியாக இருப்பதால் நீயும் அப்படியே அதிபதியாக இருக்கலாம். ஆகையால் சத்துருபட்ச ஸ்தோத்திரத்தை விட்டுவிடுவாயாக: சகல உலகங்களுக்கும் உன் தந்தையே பூஜிக்கத்தக்கவராகவும் பரமகுருவாகவும் இருக்கிறார். ஆகையால் இப்போது நீ அவரது கட்டளையை ஏற்று நடப்பதே நியாயம்! என்று புத்திமதி கூறினார்கள்.

மகாத்மாக்களே! நீங்கள் சொல்வது மெய்தான். மூன்று உலகங்களிலும் பிரமபுத்திரனான மரீசியின் வமிசம் மேலானது தான். என் தந்தை மேன்மையானவர், தேஜோ பல பராக்கிரமங்களையுடையவர் என்பதும் உண்மைதான். அவரே பரமகுரு என்பதும் நியாயமே! அத்தகைய என் தந்தைக்கு நான் சிறிதாவது அபராதம் செய்யவில்லை. அப்படியிருக்கும்போது, அனந்தனாலே பயன் என்ன என்று நீங்கள் சொன்னீர்களே, அந்த வசனம் ஒன்றுதான் பொருள் அற்றது! என்றான் பிரகலாதன். பிறகு மரியாதைக்காக ஒன்றும் சொல்லாமல், புன்னகையுடன் பிரகலாதன் அவர்களைப் பார்த்து, புரோகிதர்களே! விஷ்ணுவான அந்த அனந்தனால் என்ன பயன் என்ற உங்களது வாக்கியம் நேர்த்தியாக இருக்கிறது. அனந்தனாலே காரியம் என்னவென்று நீங்கள் கேட்டது மிகவும் நன்றாக இருக்கிறது. நான் சொல்லுகிறேனே என்று மனதில் கிலேசங்கொள்ள வேண்டாம். அனந்தனாலே உண்டாகும் பயனை நான் சொல்கிறேன் கேளுங்கள். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்று சொல்லப்படும் நால்வகை புருஷார்த்தங்களும் எவனால் உண்டாகுமோ, அந்த அனந்தனாலே பிரயோசனமென்ன என்று நீங்கள் சொல்வதை நான் எப்படி அங்கீகரிப்பேன்? மரீசி முதலியவர்கள் அனந்தனை ஆராதித்தே, அவனது கிருபையினாலே தாம் விரும்பியதையெல்லாம் பெற்றார்கள். தத்துவ ஞானிகளான பரமாத்மாக்கள் ஞானநிஷ்டையினாலே அந்த பரமாத்மாவை ஆராதித்து, சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைந்தார்கள். சம்பத்து ஐசுவரியம், பெருமை, சந்தானபலம் ஆகிய நல்ல காரியத்துக்கும் மோட்சத்துக்கும் ஒன்றாலேயே பெறத்தக்க காரணம் எதுவென்றால் அது ஸ்ரீஹரியினுடைய ஆராதனையேயாகும். இப்படித் தருமார்த்த காம மோட்சங்கள் எவனிடமிருந்து பெறப்படுமோ, அப்படிப்பட்ட அனந்தனாலே என்ன பயன் என்று நீங்கள் கேட்டீர்கள்? பிராமணர்களே! இதுவென்ன நியாயம்? மேலும் நான் பல வார்த்தைகளைச் சொல்லி பயன் என்ன? நீங்களோ எனது ஆசிரியர்கள். ஆகையால் சந்தேகமின்றி நல்லதாயினும் பொல்லாததாயினும் என்னிடம் சொல்லுங்கள். இதனால் சிறப்பிராது அற்ப விவேகம் தான் இருக்கும். இனி என்னுடைய முடிவான சித்தாந்தத்தைக் கூறுகிறேன். கர்த்தாவும், வளர்ப்பவனும், சங்கரிப்பவனும் உலகநாதனும் எல்லோருடைய இதயத்திலிருப்பவனும், யாவற்றையும் அனுபவிப்பவனும், அனுபவிக்கப்படுபவனும் அந்த ஸ்ரீமந்நாராயணனே யல்லாமல் வேறு ஒருவனுமல்ல; பாலியனான நான் இப்படிச் சொல்வதைக் கேட்டுப் பொறுத்தருள வேண்டும்! என்று பிரகலாதன் கூறினான்.

பாலகனே! இனிமேல் நீ இப்படிச் சத்துருபக்ஷ ஸ்தோத்திரமான வார்த்தைகளைச் சொல்லமாட்டாய் என்று எண்ணித்தான், நெருப்பின் மத்தியிலே தகிக்கப்பட்டிருந்த உன்னை வெளியே இழுக்கச் செய்தோம். மூடனாகையால் அதையே நீ மறுபடியும் பேசுகிறாய். இனியும் உன் பிடிவாத்தை விடாமல் இருப்பாயானால், கிருத்தியை உண்டாக்கி ஒரு கணத்தில் உன்னை நாசமாக்குவோம்! என்றார்கள் புரோகிதர்கள். பிராமணர்களே! ஒருவனால் ஒருவன் ரட்சிக்கப்படுவதுமில்லை அழிக்கப்படுவதுமில்லை. அவனவன் தனது சதாகாரத்தினாலேயே தன்னைத் தற்காத்துக் கொள்கிறான். நற்செயல்களால், சகல பயன்களும் நற்கதியும் உண்டாகின்றன. ஆகையால் எப்போதும் நல்லவற்றையே செய்யவேண்டும்! என்றான் பிரகலாதன். அசுரப் புரோகிதர்கள் கோபம் அடைந்து மந்திரங்களை உச்சாடனம் செய்து, மிகவும் பயங்கர முகத்துடன் தீச்சுவாலை வீசும்படியான ஒரு கிருத்தியை உண்டாக்கி அதைப் பிரகலாதன் மீது ஏவினார்கள். அது பூமிநடுங்க தன் பாதங்களை எடுத்து வைத்து மிகவும் கோபத்துடன் தனது சூலத்தினாலே, பிரகலாதனின் மார்பைத் தாக்கியது. அந்தச் சூலம் பிரகலாதனின் மார்பிலே பட்டவுடனேயே சடசடவென ஒடிந்து தரையில் விழுந்து பொடிப்பொடியாயிற்று! பகவானும் ஜகதீஸ்வரனுமான ஸ்ரீஹரி எங்கே பிரியாமல் இருப்பானோ, அங்கே வஜ்ராயுதமானாலும் பொடியாய்ப் போகும் என்றால் சூலத்தின் கதியை பற்றிச் சொல்லவா வேண்டும்? இவ்விதமாக அந்த கிருத்தியையினால் ஒன்றும் செய்யமுடியாமற் போகவே, அது தன்னைக் குற்றமில்லாத இடத்திற்கு ஏவிய புரோகிதர்கள் மீதே திரும்பி விழுந்து அவர்களைத் தகிக்கத் துவங்கியது. அதனால் தவிக்கிற ஆசிரியர்களைக் கண்டதும் பிரகலாதன் மிகவும் பரிவு கொண்டு அவர்களை ரக்ஷிக்கும் பொருட்டு, ஸ்ரீகிருஷ்ணா! ஸ்ரீஅனந்தா! இவர்களைக் காப்பாயாக! என்று சொல்லிக் கொண்டே அவர்களிடம் ஓடிச்சென்று, சுவாமியைத் துதிக்கலானான்.

ஓ சர்வ வியாபகனே! ஜகத்ரூபனே! ஜகத்கர்த்தாவே! ஜனார்த்தனனே! கடினமான மந்திர அக்னியால் தகிக்கப்படும் இந்தப் பூசுரர்களைக் காப்பாயாக. சர்வ பூதங்களிடத்திலும் ஜகத் குருவான ஸ்ரீவிஷ்ணுவே வியாபித்திருக்கிறார் என்பது சத்தியமானால் இந்தப் புரோகிதர்கள் பிழைப்பார்களாக. ஸ்ரீவிஷ்ணு யாவரிடத்திலும் பிரியமாய் இருப்பவன் என்று நான் நினைத்து, சத்துரு பக்ஷத்திலும் துவேஷமில்லாமல் நான் இருப்பேனேயானால், இந்தப் பிராமணர்கள் பிழைக்கவேண்டும். என்னைச் சங்கரிக்க வந்த க்ஷத்திரிய அசுரர்களிடமும் எனக்கு விஷம் இட்ட சமையற்காரர்களிடமும், அக்கினியை மூட்டிய தானவர்களிடமும் தந்தங்களாலே என்னைப் பிடித்துப் பிடித்துக் குத்திய திக்கு கஜங்களிடத்திலும்; விஷங்கக்கி என்னைக் கடித்த பாம்புகளிடமும் என் சிநேகிதர்களிடமும் நான் சமமான புத்தியுடையவனாக இருந்து, எங்கும் ஒரு தீங்கும் நினைக்காமல் இருந்தேன் என்றால் அந்தச் சத்தியத்தினாலேயே இந்த அசுரப்புரோகிதர்கள் பிழைத்து சுகமாக இருக்கவேண்டும்! என்று பிரகலாதன் பிரார்த்தித்தான். அதனால் அப்புரோகிதர்களின் வேதனை ஒழிந்தது. அவர்கள் மகிழ்ச்சியுடன், பிரகலாதாழ்வானைப் பார்த்து, குழந்தாய்! நீ தீர்க்காயுளுடன் எதிரற்ற வீரிய பலபராக்கிரமங்களும், புத்திர பவுத்திர தனாதி ஐசுவரியங்களும் பெற்றுச் சுகமாக இருப்பாயாக! என்று ஆசிர்வதித்துவிட்டு, இரணியனிடம் சென்று நடந்தவற்றைக் கூறினார்கள்.

————

19. பிரகலாதனின் பிரார்த்தனை

இரணியன் தன் புரோகிதர்கள் உண்டாக்கிய கிருத்தியை வீணானதைக் கேட்டுத் திகைத்தான். பிறகு அவன் தன் புத்தரனை அழைத்து, பிரகலாதா! உன் பிரபாவம் அதியற்புதமாக இருக்கிறதே! இதற்குக் காரணம் என்ன? இது மந்திரத்தால் உண்டானதா! இயல்பாகவே உள்ளதா? தெரியச் சொல்! என்றான். பிரகலாதன் தன் தந்தையின் பாதங்களைத் தொட்டு வணங்கி விட்டு, ஐயனே! எனக்கு இந்தப் பிரபாவம் மந்திர தந்திரங்களால் உண்டானதல்ல! இயற்கையாகவே உள்ள சுபாவமுல்ல எவனெவன் இதயத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு நிலையாகப் பிரகாசிப்பானோ, அவனவனுக்கெல்லாம் இத்தகைய பிரபாவம் உண்டு! யார் ஒருவன் தனக்குக் கேடு நினையாததைப் போலப் பிறருக்கும் கேடு நினைக்காமல் இருப்பானோ அப்படிப்பட்டவனுக்குப் பாவத்தின் காரியமாகிய பாவம் உண்டாவதில்லை. எவன் மனோவாக்குக் காயங்களினால் யாருக்கும் துரோகஞ்செய்யாமல் இருக்கிறேன். இப்படி நல்ல சிந்தையுள்ளவனான எனக்கு ஆத்தியாத் மிகம், ஆதி தெய்வீகம், ஆதி பவுதிகம் என்ற மூலகைத் துக்கமும் எப்படி உண்டாகும்? ஆகையால், விவேகமுள்ளவர்கள் ஸ்ரீஹரியே சர்வாத்துமகனாக இருக்கிறான் என்று நினைத்து, சகல பூதங்களிடமும் சர்வதேச, சர்வ காலங்களிலும் இடைவிடாமல் அன்பு செலுத்த வேண்டும்! என்று பிரகலாதன் சொன்னான். இரணியன் இன்னும் குரோதத்தால் பொங்கி, அங்கிருந்த அசுரகிங்கரர்களைக் கூவியழைத்து இந்த துஷ்டப்பையனான பிரகலாதனை இழுத்துகக் கொண்டு போய் நூறு யோசனை உயரமுள்ள உப்பரிகையின் மேலே இருந்து, கீழே தள்ளுங்கள். அந்த மலையின் மேல் விழுந்து இவனது உடம்பெல்லாம் சின்னாபின்னமடைந்து சிதையட்டும்! என்று கட்டளையிட்டான். அதன் பிரகாரம் கிங்கரர்களும் பிரகலாதனை இழுத்துப்போய் மிகவும் உயரத்திலிருந்து கீழே தள்ளினார்கள். ஆனால் பிரகலாதன் தனது இதயகமலத்தில் புண்டரிதாஷனான ஸ்ரீமந்நாராயணனையே நினைத்துக் கொண்டிருந்ததால் பூமிதேவி வெளிப்பட்டு சர்வபூத ரட்சகனின் பக்தனான பிரகலாதனை தன் கைகளால் ஏந்திக் கொண்டாள்.

அப்படிக் கீழே விழுந்தும் தனது அங்கத்தில் கிஞ்சித்தும் சேதமில்லாமல் சுகமாய் எழுந்துவந்த தன் மகனைப் பார்த்து, இரணியன் மனம் பொறாமல் மகாமாயவியான சம்பராசுரனைக் கூவி அழைத்து, அசுர உத்தமனே! துன்மார்க்கனான இந்தப் பையனைச் சாகடிக்க நான் எத்தனை உபாயம் செய்தும் இவன் சாகாமலே தப்பிவிடுகிறான்! ஆகையால் உமது மாயா சக்தியினால் இந்தத் துராத்மாவைச் சங்கரிக்க வேண்டும்! என்றான்.

அதற்கு சம்பராசுரன் இணங்கி, அசுரேஸ்வரா! எனது மாயாபலத்தைப் பாரும்! சஹஸ்ரகோடி மாயைகளைச் செய்து இந்த பிரகலாதனை நானே சாகடிக்கிறேன்! என்று சொல்லி விட்டு பிரகலாதன் மீது பலவகையான மாயைகளைப் பிரயோகித்தான். ஆனால் பிரகலாதனோ அந்த அசுரன் மீதும் வெறுப்படையாமல் ஸ்ரீமதுசூதனான விஷ்ணுவையே நினைத்துக் கொண்டிருந்தான். அப்போது ஸ்ரீமந்நாராயணனின் நியமனத்தால் அநேகமாயிரம் ஜ்வாலைகளோடு கூடிய திருவாழி புறப்பட்டு, பிரகலாதனை ரட்சிப்பதற்காக அதிவேகமாக வந்து, சம்பராசுரனின் மாயைகளையெல்லாம் தகித்துச் சாம்பலாக்கியது. பிறகு, இரணியன் இன்னும் பிடிவாதமான குரோதம் கொண்டு சம்சோஷகன் என்ற வாயுவைப் பார்த்து, சீக்கிரமாக இந்தத் துஷ்டனை நாசஞ்செய்வாயாக! என்று கட்டளையிட்டான். அந்த வாயு அசுரனும் அதிகுளிர்ச்சியும் அதிஉஷ்ணமும் கொண்டு, பிரகலாதனின் திருமேனியினுள்ளே பிரவேசித்தான். ஆனால் பிரகலாதன் தன் இருதயத்திலே ஸ்ரீமந்நாராயணனைத் தரித்திருந்தபடியால், அங்கு குடிகொண்டிருக்கும் ஸ்ரீமதுசூதனன் ரட்சகமூர்த்தியாய் எழும்பி, அந்தச் சம்சோஷகனை விழுங்கி ஒரே கணத்தில் நாசஞ்செய்தருளினார். அதைக்கண்ட இரணியன் பிரமித்தான். இதுபோல சம்பரனால் ஏவப்பட்ட மாயைகளும் சம்சோஷக வாயுவும் நாசமடைந்ததையறிந்த பிரகலாதன் மீண்டும், குருகுலத்துக்குச் சென்று அங்கே படித்துக் கொண்டிருந்தான். குருகுலத்தில் அவனுடைய ஆசாரியர், அவனுக்குத் தினந்தினம் சுக்கிர நீதியை உபதேசித்து வந்தார். சிலகாலம் சென்ற பிறகு அவர் தம்மிடம் பிரகலாதன் நீதி சாஸ்திரத்தை கற்றறிந்து விட்டதாக நினைத்து, அவனையும் அழைத்துக் கொண்டு, இரணியனிடம் சென்றார். அவர் இரணியனை நோக்கி, அசுரேந்திரனே! உனது புத்திரன் சுக்கிர நீதியை நன்றாகப் பயின்று சகல விஷயங்களிலும் சமர்த்தனாகி விட்டான்! என்றார். இரணியன் சிறிது மனச்சமாதானமடைந்து பிரகலாதனைப் பார்த்து, மகனே! அரசனானவன், நண்பர்களிடமும் பகைவரிடமும், நடுவரிடத்திலும், விருத்தி, சாமியம், க்ஷயம் என்பவை நேரிடும் சமயங்களிலும் எப்படியிருக்க வேண்டும்? புத்திசொல்லும் மந்திரிகளிடமும் காரியசகாயரான அமாத்தியரிடமும் பாகியர் என்னும் வரிவாங்கிச் சேர்க்கும் அதிகாரிகளிடமும், ஆப்பியந்தார் என்று சொல்லப்படும் அந்தப்புர அதிகாரிகளிடமும், தன்னுடைய குடிமக்களிடமும், தன்னால் ஜெயிக்கப்பட்டுத் தன்னிடம் சேவகம் செய்யும் பகைவரிடமும் மன்னன் என்போன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சந்தி, விக்கிரகம் முதலியவற்றில் எங்கே எதையெதைச் செய்ய வேண்டும்? தனக்குள்ளே இருந்து மர்மங்களை அறிந்து, பிறகு பிறராலே பேதப்படுத்திக் கொண்டு போக உடன்பட்டிருக்கும். தன் ஜனங்கள் விரோதமாகாமல் இருக்க அரசன் என்ன செய்ய வேண்டும்? சைலதுர்க்கம், வனதுர்க்கம், ஜலதுர்க்கம் முதலிய துர்க்கங்களை எப்படி அமைப்பது? அசாத்தியர்களால் வனத்தில் வாசஞ்செய்யும் மிலேச்சர்களை வசப்படுத்தும் உபாயம் யாது? திருடர் முதலிய துஷ்டர்களை நிக்ரஹிக்கும் விதம் என்ன? இவற்றையும் சாமதான பேதாதி உபாயங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் நீதி சாஸ்திரத்திலே நீ கற்றிருப்பவைகளையும் சொல்வாயாக உன் மனதில் இருக்கும் கருத்தை நான் அறிய விரும்புகிறேன் என்றான்.

தந்தையே! ஆசாரியர் எனக்குச் சகல சாஸ்திரங்களையும் உபதேசித்தார்; நானும் படித்தேன். ஆயினும் இவையெல்லாம் எனக்கு அர்த்தமற்றதாகவும், அசாரமாகவுமே தோன்றுகின்றன. மித்திராதிகளை வசப்படுத்த, சாம தான பேத தண்டங்களைச் செய்யும்படி நீதி சாஸ்திரத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. ஐயனே கோபிக்க வேண்டாம்! ஜகத்திலே சத்துரு மித்திரர்களை நான் காணவில்லை. ஆகையால் சாமதானாதி உபாயங்கள் வீணானவையே! சாத்தியம் இல்லாதபோது வெறும் சாதனத்தால் பயன் என்ன? சகல பூதங்களையும் சரீரமாகக் கொண்டு, ஜகத் ஸ்வரூபமாகவும் ஜகந்நாதனாகவும் கோவிந்தனே எழுந்தருளியிருக்கும்போது, இந்த ஜகத்தில் சத்துரு மித்துரு என்ற பேச்சுக்கு இடம் ஏது? ஸ்ரீவிஷ்ணுபகவான் உம்மிடமும் என்னிடமும் மற்றுமுள்ள சகல ஜகத்திலேயும் பரிபூரணமாக நிறைந்திருக்கிறாராகையால் சத்துரு மித்திரன் என்ற பேதம் எப்படி உண்டாகும்? இகலோக போகசாதனங்களாய் வீணான சொற்கள் விரிந்து, அவித்தைக்கு உட்பட்டிருக்கும் நீதி சாஸ்திரங்களால் என்ன பயன்? ஐயனே! பந்தங்கள் நீங்கும்படியான பிரமவித்தைப் பயிற்சிக்கே முயற்சி செய்ய வேண்டும். மின்மினிப் பூச்சியைப் பார்த்து அக்கினி என்று பாலகன் பிரமிப்பது போல் சிலர் அஞ்ஞானத்தால் அவித்தையை வித்தையென்று நினைக்கிறார்கள். எது சம்சார பந்தத்துக்குக் காரணமாகாதோ அப்படிப்பட்ட கருமமே கருமமாகும்! எது மோக்ஷத்துக் காரணமாகுமோ அப்படிப்பட்ட வித்தையே வித்தையாகும். மற்ற கருமங்கள் யாவுமே வீணான ஆயாசத்தை யுண்டாக்குமேயொழிய வேறாகாது. ஆகையால், நீதி சாஸ்திரத்தால் வரும் ராஜ்யாதி பயன்களைத் துச்சமாக நினைத்து, உத்தமமான விஷயத்தைச் சொல்கிறேன். பூமியில் ராஜ்ய அபேட்சையில்லாதவனும் தன அபேட்சையில்லாதவனும் உண்டோம். ஆயினும் பூர்வ புண்யவசத்தால் கிடைக்கத் தக்கதே கிடைக்குமேயல்லாது. நினைத்தது கிடைக்காது. கோபாக்கியமுடைய என் தந்தையே! ஜகத்தில் யாவரும் தமக்கு ஐசுவரியம் உண்டாக வேண்டும் என்று முயற்சி செய்கின்றனர். ஆயினும் அது ஜன்மாந்திர பாக்கிய வசத்தாலன்றி முயற்சியால் உண்டாகாது.

விவேகமில்லாதவர்களக்கும் முயற்சி செய்யாதவருக்கும் நீதி சாஸ்திர மறியாதவருக்கும் அதிர்ஷ்டவசத்தால் ராஜ்யாதிகள் உண்டாகின்றன. ஆகையால் ஐசுவரியத்தை விரும்புவோரும் புண்ணியத்தையே செய்ய முயலவேண்டும். தேவ மனுஷ்ய, மிருக பட்சி விருட்ச ரூபமுடைய பிரபஞ்சம் யாவும் ஸ்ரீஅனந்தனுடைய ஸ்வரூபமாக இருக்கின்றன. ஆனால் அஞ்ஞானிகளுக்கு அவை வேறு போலத் தோன்றுகின்றன. ஸ்ரீவிஷ்ணு பகவான் விசுவதா ரூபதரன். ஆகையால் தாவர சங்கமாதமகமான பிரபஞ்சத்துக்கு எல்லாம் அந்தர்யாமியாக இருக்கிறான் என்று நினைத்து விவேதியாக இருப்பவன் சகல பூதங்களையும் ஆத்மசமானமாகப் பாவித்திருக்க வேண்டும். இந்த ஞானம் எவனுக்கு இருக்கிறதோ அவனிடத்திலே அனாதியாயும் ஷட்குண ஐசுவரிய சம்பன்னான அந்தப் புருஷோத்தமன் பிரசன்னமாவான். அவன் பிரசன்னனானால், சகல விதமான கிலேசங்களும் விலகிப் போய்விடும்! என்றான். பிரகலாதன் அதைக்கேட்ட இரணியன், சகிக்கமாட்டாமல் கோபத்துடன் தன் சிங்காதனத்திலிருந்து எழுந்து, தன் குமாரனின் மார்பிலே உதைத்து கையோடு கையை அறைந்து, அருகிலிருந்த அசுரர்களைப் பார்த்து, ஓ விப்ரசித்து! ராகுவே! ஓ பலனே! இந்தப் பயலை நாகபாசங்களினால் கட்டியிழுத்து, சமுத்திரத்திலே தூக்கிப் போடுங்கள் தாமதம் செய்ய வேண்டாம். இல்லையெனில் தைத்தியதானவ சமூகங்கள், மூடனான இந்தப் பாவியின் வழியில் சென்று கெட்டுப் போய்விடும். என்ன சொல்லியும் இவன் மாறவில்லை. இவனை நான் சொன்னபடிச் செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். தைத்யர்கள் அவனது கட்டளையை ஏற்று, பிரகலாதனை நாகபாசங்களாற் கட்டிக்கடலில் போட்டார்கள்.

பிரகலாதன் அதில் விழுந்து அசைந்ததும் கடல்நீர் எல்லை கடந்து, ஜகமெங்கும் வியாபித்தது. இவ்விதம் கடல்நீர் பொங்கிப்பூமியில் வியாபிப்பதைக் கண்ட இரணியன் தைத்யர்களை அழைத்து சமுத்திரத்தில் மூழ்கியிருக்கும் அந்தத் துஷ்டன் மீது மலைகளை நெருக்கமாக அடுக்குங்கள்! அந்தப் பையன் பிழைப்பதால் யாதொரு பயனும் இல்லை. ஆகையால் ஜலராசியின் நடுவில், மலைகளால் நாலாபுறமும் அமுக்கப்பட்டுக் கொண்டே பல ஆண்டுகள் இருந்தானாகில் அவன் உயிரை விட்டுவிடுவான்! என்றான். பிறகு தைத்ய தானவர்கள் உயர்ந்த மலைகளைப் பறித்துக் கொண்டுவந்து பிரகலாதன் மீது போட்டு, அவனைச் சுற்றிலும் ஆயிரம் யோசனைக்கு மலைகளை அடுக்கினார்கள். இவ்விதம் பிரகலாதாழ்வான் சமுத்திர மத்தியில், அத்தனைத் தொல்லைகளிலும் ஏகாக்கிர சித்தனாய் அச்சுதனையே துதிக்கலானான்! புண்டரிகாக்ஷனே! உனக்கு எனது வணக்கம், புருஷோத்தமனே உனக்குத் தெண்டனிடுகிறேன். சர்வலோக ஸ்வரூபனே! உனக்கு நமஸ்காரம்! உக்கிரமான சக்கர ஆயுதமுடையவனே உனக்குத் தெண்டனிடுகிறேன். பிரமண்ணியம் என்று சொல்லப்பட்ட தவம் வேதம் முதலியவைகளுக்குத் தேவனாகவும், கோக்களுக்கும், பிராமணருக்கும் இதனாகவும், ஜகத்துக்கெல்லாம் ரக்ஷகனாயும், ஸ்ரீகிருஷ்ணன் என்றும், கோவிந்தன் என்னும் திருநாமமுடைய உனக்கு மேலும் மேலும் தண்டனிடுகிறேன். பிரமரூபமாகி உலகங்களைப் படைத்துக் கொண்டும், தனது சொரூபமாகி ரட்சித்துக் கொண்டும், கல்பாந்தத்திலே ருத்திர ரூபமாகிச் சங்கரித்துக் கொண்டும், திரமூர்த்தியாக விளங்கும் உனக்குத் தெண்டனிடுகிறேன்! ஓ அச்சுதனே! தேவ அசுர கந்த வசித்த கின்னர சாத்திய பன்னக யக்ஷ ராக்ஷச பைசாச மனுஷிய பட்க்ஷ ஸ்தாவர பிபீவிகாதிகளும், பிரித்வி அப்பு, தேயு வாயு ஆகாயங்களுக்கும் சப்த ஸ்பரிச ரச கந்தங்களும், மனோ புத்தி சித்த அகங்காரங்களும், காலமும் அதன் குணங்களும் இவற்றின் பரமார்த்தமான ஆன்மாவும் இவையெல்லாம் நீயே! வித்தை அவித்தை சத்தியம், அசத்தியம் பிரவிர்த்தி, நிவர்த்தி ரோதோக்த்த சர்வகர்மங்களும் நீயே! விஷ்ணுபகவானே! சமஸ்த கர்மபோகத்தை அனுபவிப்பவனும் சர்வகர்ம பயன்களும் நீயே! ஓ மகாப்பிரபுவே! உன்னிடமும் இதரரிடமும் சேஷ பூதங்களான சகல உலகங்களிலே நீ வியாபித்திருப்பதும், உபதான நிமித்தகாரண ரூபமான ஐசுவரியும் அனந்த ஞானசக்தியும் உனது கல்யாண குணங்களைக் குறிக்கின்றன. பரமயோகிகள் உன்னைத் தியானிக்கின்றனர். யாகசீலர் உன்னைக் குறித்து யாகஞ்செய்கின்றனர். நீயே பிதுர் ரூபமும் தேவ ரூபமும் கொண்டு, ஹவ்ய கவ்யங்களைப் புசிக்கிறாய்! ஓ அச்சுதா! மகத்தகங்காரம் முதலான சூட்கமங்களும் பிரித்வி முதலிய பூதங்களும் அவற்றினுள்ளே அதிசூட்சுமமான ஆத்ம தத்துவமாகிய இந்தச் சூட்சும பிரபஞ்சமெல்லாம் எங்கேயிருக்கிறதோ, எங்கே உண்டாகிறதோ, அது சொரூப குணங்களிலே பெருத்த உனது மகாரூபமாக இருக்கிறது! சூக்ஷ்மம் முதலான யாதொரு சிறப்புமில்லாமல், சிந்திப்பதற்கும் அரியதாய் யாதொரு ரூபம் உண்டோ அதுவே உன்னுடைய பரமாத்ம சொரூபம்! இத்தகைய புருஷோத்தமனான உனக்குத் தெண்டமிடுகிறேன். சர்வாத்மகனே! சகல பூதங்களிலும் சத்வாதி குணங்களைப் பற்றியதாய் யாதொரு பிரகிருத சக்தி இருக்கிறதோ, ஜீவ ஸ்வரூபமான அந்தச் சக்தியை நான் வணங்குகிறேன்; வாக்குக்கும் மனதுக்கும் எது எட்டாததோ, யாதொரு விசேஷத்தினாலும் எது விசேஷப்படுத்தக் கூடாததோ, ஞானிகளுடைய ஞானத்தால் எது நிரூபிக்கப்படக்கூடியதோ அத்தகைய முந்தாத்தும ஸ்வரூபமாக இருக்கிற உனது மேன்மையான சக்திக்குத் தெண்டனிடுகிறேன்!

எவனுக்கு வேறானது ஒன்று இல்லையோ, எவன் எல்லாவற்றுக்கும் வேறாக இருக்கிறானோ, அத்தகைய பகவானான ஸ்ரீவாசுதேவனுக்குத் தெண்டனிடுகிறேன்! கர்மாதீனமான நாம ரூபங்கள் இல்லாமல் விலக்ஷணனாய் இருப்பதாக மட்டும் எவன் காரணப்படுவானோ அத்தகைய மகாத்மாவுக்கு எனது நமஸ்காரம்! சங்கர்ஷணாதி வியூகரூபியானவனுக்கு நமஸ்காரம்! தேவதைகளும் எவனுடைய பராத்பரமான ரூபத்தைக் காணமுடியாமல், மச்சகூர்மாதி அவதார ரூபங்களையே அர்ச்சனை செய்வார்களோ, அந்தப் பரமாத்மாவுக்கு வந்தனம்! எவன் ருத்திராதி சகல பூதங்களுக்கும் அந்தர்மியாகி சுபாசுபங்களை கண்டு கொண்டிருப்பானோ, அந்தச் சர்வசாட்சியும் பரமேஸ்வரனுமான ஸ்ரீவிஷ்ணுதேவருக்குத் தெண்டனிடுகிறேன்! காணப்படும் இந்தச் சகமெல்லாம் எவனோடு பேதமின்றி இருக்கிறதோ அந்த விஷ்ணுவுக்கு வந்தனஞ் செய்கிறேன்! யாவற்றுக்கும் ஆதியான அந்த ஸ்ரீஹரி எனக்குப் பிரசன்னனாகக் கடவன் அட்சரம் என்ற பெயருடையவனாக இருக்கும். எவனிடம் பிரபஞ்சமெல்லாம் நூலில் வஸ்திரம் கலந்திருந்திருப்பது போலக் கலந்தும், நூலில் மணிகள் சேர்க்கப்பட்டிருப்பது போலச் சேர்க்கப்பட்டும் இருக்கிறதோ, அந்தத் தியானசம்யனான அச்சுதன் என்னிடம் தோன்றக்கடவன்! சர்வ ஸ்வாமியாய் சர்வ சேஷயாய் இருக்கிற அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவுக்குத் தெண்டமிடுகிறேன்! எவனிடம் சகலமும் படைப்புக் காலத்தில் உண்டாகுமோ, எவன் சகல சரீரனாகவும், சகல ஆதாரமாகவும் இருக்கிறானோ, அந்த சுவாமிக்குப் பலமுறைகள் தெண்டனிடுகிறேன். யாவுமே எம்பெருமானது விபூதியாய், அவனைப் பற்றியே நிற்பதும் இயல்வதுமாய் சற்றேனும் சுதந்திரமில்லாமல் இருப்பதைப் பற்றியே எம்பெருமானை யாவும் என்றும் அவனன்றி வேறொன்றுமில்லை என்றும் அவனுள்ளேயே சொருகித் தன்னையும் அனுசந்தித்தபடியாகும். இதுவே விசிஷ்õத்துவைதம். ஸ்ரீஅனந்தன் எங்கும் ஆன்மாவாய், அகமும், புறமும் வியாபித்து ஞானானந்தமயனாய் நிறைந்திருப்பதால், நானும் அவனாகவே இருக்கிறேன். ஆகையால் என்னிடத்திலிருந்தே யாவும் உண்டாயிற்று. நானே யாவுமாக இருக்கிறேன். எப்போதும் இருக்கிற என்னிடத்திலே எல்லாம் இருக்கின்றன. நானே அவ்யயனாயும், நித்தியனாயும் வேறொரு ஆதாரமின்றி தன்னிலேயே தானாக இருக்கும் பரமாத்மாவாக இருக்கிறேன். நான் படைக்கும் முன்பு பிரமம் என்ற பெயரையுடையவனாக இருந்தேன். அப்படியே பிரளய காலத்திலும் எல்லாம் உள்ளே ஒடுங்கும்படியான பரமபுருஷனாக இருப்பேன்! என்று பிரகலாதன் தியானித்துக் கொண்டிருந்தான்.

—————

20. நரசிம்மர் பிரத்தியக்ஷமாதல்

சர்வ காரணனும் சர்வாத்மகனுமான ஸ்ரீவிஷ்ணுதேவன் தன்னையே சரீரமாகக் கொண்டு
உள்ளும்புறமும் வியாபித்துப் பூரணமயமாக இருப்பதால் விஷ்ணுமயமாகத் தன்னையே பிரகலாதன் நினைத்து,
விஷ்ணுவல்லாத பொருள் எதையுமே காணாமையால், திரிகுணாத்மகமாய் அனாதிப் பிரகிருதி வாசனாமலினமாய்,
மற்றக் காலத்திலே தோன்றுகின்ற ஆன்ம ஸ்வரூபத்தை மறந்தான்.
தான் அவ்யயனும் நித்தியனுமான பரமாத்மாவுக்குச் சரீர பூதராய், தன்மயர்ணனை நினைத்தான்.
இவ்விதமான யோகாப்பியாசப் பிரபாவத்தால் கிரமக் கிரமமாகச் சகல சருமங்களிலிருந்தும் விடுபட்டவனாய்
அந்தியந்த பரிசுத்தனான பிரகலாதனின் அந்தக்கரணத்திலே ஞானமயனும் அச்சுதனுமான பகவான் ஸ்ரீவிஷ்ணுவே பிரகாசித்தருளினான்.

யோகப் பிரபாவத்தினாலேயே பிரகலாதன் விஷ்ணு மயமானதால், அந்தப் பாலகனின் உடல் கட்டியிருந்த
நாகபாச பந்தங்கள் அனைத்துமே கணத்தில் சின்னாபின்னமாகச் சிதறுண்டு விழுந்தன.
பிறகு சமுத்திரமானது கரைகளை மூழ்த்தியது. அப்போது, பிரகலாதன் தன்மீது போடப்பட்டிருந்த மலைகளையெல்லாம்
விலக்கித் தள்ளிக்கொண்டு, சமுத்திரத்தை விட்டு வெளியில் வந்து, ஆகாயங்கவிந்த உலகத்தைப் பார்த்தும் லவுகித் திருஷ்டியினால்,
தான் பிரகலாதன் என்றும் இரணியனின் மகன் என்றும் நாமசாதிபாதி விசேஷண சமேதனாக மறுபடியும் தன்னை நினைத்தான்.
புத்திசாலியான அந்த அசுர சிகரமணி ஏகாக்கிர சித்தமுடன், மனோவாக்குக் காயங்களைச் சுவாதீனமாக்கிக் கொண்டு,
வியாகுலத்தை விட்டு, அநாதிப் புரு÷ஷாத்தமனான அச்சுதனை மீண்டும் துதித்தருளினான்.

பரமார்த்த பிரயோஜனமானவனே! ஸ்தூல சூட்சுமரூபனே வியக்தமாயும் அவ்வியக்தமாயும் இருப்பவனே!
பஞ்சேந்திரியாதிக் கலைகளையெல்லாம் கடந்தவனே! சகலேசுவரனே! நிரஞ்சனனே குணங்களைத் தோற்றுவித்தவனே!
குணங்களுக்கு ஆதாரமானவனே! பிராகிருத குணம் இல்லாதவனே! சகல சற்குணங்களையும் கொண்டவனே!
மூர்த்தமும் அமூர்த்தமும் ஆனவனே! மஹாமூர்த்தியான விசுவரூபமும், சூத்ம மூர்த்தியான வியூக ரூபமும்,
வெளிப்படையாகத் தோன்றும் விபவ ரூபமும் அப்படி தோன்றாத, பரஸ்வரூபம் உடையவனே!
சத்துரு சங்கார காலங்களில் குரூரமாகவும் சுபாவத்தில் சாந்தமாகவும் விளங்கும் உருவமுடையவனே!
ஞான மயனாயும் அஞ்ஞான மயனாயும் இருப்பவனே! நன்மையாய் இருப்பவனே! உண்மையும் இன்மையும் கற்பிப்பவனே!
நித்திய அநித்திய பிரபஞ்ச ஆத்மகனே! பிரபஞ்சங்களுக்கம் மேற்பட்டவனே! நிருமலர் ஆஸ்ரயிக்கப்பெற்றவனே!
அச்சுதனே! உனக்குத் தண்டனிடுகிறேன். ஏகா! அநேகா வாசுதேவா! ஆதிகாரண! உனக்கு வணக்கம்!
எவன் ஸ்தூல ரூபத்தால் தோன்றுபவனும், எவன் சூட்சும ரூபத்தால் தோன்றாதவனுமாக இருக்கிறானோ,
எவன் சகல பூதங்களையும் சரீரமாகக் கொண்டு, யாவற்றிலும் தானே விலக்ஷணமாக இருக்கிறானோ,
இந்த உலகம் யாவும் விஷம சிருஷ்டி காரணமாகாத எவனிடமிருந்து உண்டாயிற்றே அந்தப் புரு÷ஷாத்தமனுக்குத் தெண்டனிடுகிறேன்
என்று பலவாய்த் தோத்திரஞ்செய்த பிரகலாதனிடம்

ஸ்ரீஹரி பகவான் பிரசன்னனாய்ப் பீதாம்பராதி திவ்ய லக்ஷணங்களோடு அவனுக்குப் பிரத்யட்சமாய் சேவை சாதித்தான்.
அப்போது அந்தப் பரம பாகவதனான பிரகலாதன் பயபக்தியுடன் எம்பெருமானைத் சேவித்து மகிழ்ச்சியினால்
நாத்தடுமாற ஸ்ரீவிஷ்ணுவுக்குத் தெண்டமிடுகிறேன்! என்று பலமுறைகள் சொல்லிப் பிரார்த்தித்தான்.

சுவாமீ! சரணாகதி செய்தோரின் துக்கத்தைப் போக்கடிப்பவரே! ஸ்ரீகேசவா! அடியேனிடத்தில் பிரசன்னமாகி
இந்தப் படியே எக்காலமும் பிரத்யக்ஷமாய்ச் சேவை தந்து ரட்சித்து அருள்செய்ய வேண்டும்! என்று பிரகலாதன் வேண்டினான்.

அப்போது விஷ்ணுபகவான் அப்பாலகனைப் பார்த்து பிரகலாதா!
நீ இதர பயன்களை இச்சிக்காமல் என்னிடத்திலேயே பரமமான ஏகாந்த பக்தியைச் செய்தபடியால், உனக்குப் பிரசன்னமானேன்.
உனக்கு இஷ்டமான வரங்களை வேண்டிக்கொள் என்று அருளிச்செய்தார்.

சுவாமி! அடியேன் தேவ, திரியக், மனுஷ்யாதி ஜன்மங்களிலே எந்த ஜன்மத்தை எடுத்தாலும்
அந்த ஜன்மங்களில் எல்லாம் உன்னிடம் இடையறாத பக்தியுடையவனாக இருக்க வேண்டும்.
மேலும் விவேகமில்லாத ஜனங்களுக்கு நல்ல சந்தன வனிதாதி போக்கிய வஸ்துக்களில் எத்தகைய ஆசையுண்டாகுமோ
அத்தகைய பிரீதிச் சிறப்பானது, உன்னை ஸ்மரிக்கின்ற அடியேனுடைய மனத்தினின்றும் நீங்காமல் இருக்க வேண்டும்!
என்று பிரகலாதன் வேண்டிக் கொள்ளவே

எம்பெருமான் அந்தப் பக்த சிகாமணியைக் கடாட்சித்து, பிரகலாதா! முன்னமே என்னிடம் பிரியாத பக்தி உனக்கு உண்டாயிருக்கிறது.
இன்னமும் அப்படியே அது அபிவிருத்தியாகும். அதிருக்கட்டும் இப்பொழுது உனக்கு வேண்டிய வரங்களைக் கேட்பாயாக! என்று
அனுக்கிரகம் செய்ய, பிரகலாதாழ்வான் பிரார்த்திக்கலானான்.

எம்பெருமானே! உன்னைத் துதிக்கும் அடியேனிடத்தில் மாச்சரியம் பாராட்டியதால், அசஹ்யமான அபசாரம் பண்ணினவரானாலும்
இரணியன் என்னுடைய தகப்பனார் என்பதால் அவரைப் பாவமில்லாதவராகும்படி அனுக்கிரகஞ்செய்ய வேண்டும்!
மேலும் ஆயுதங்களால் அடிக்க வைத்தும், நெருப்பிலே போட்டும், சர்ப்பங்களைக் கொண்டு கடிக்கச் செய்தும்
போஜனத்திலே விஷத்தைக் கலந்தும், நாக சர்ப்பங்களைக் கட்டி சமுத்திரத்திலே போடுவித்தும்,
பர்வதங்களால் துவைத்தும் இவ்வாறு மற்றும் பலவிதங்களான தொல்லைகளைச் செய்து உன் பக்தனான அடியேனை
அழிக்கப் பார்த்த என் தகப்பனுக்குச் சம்பவித்திருக்கின்ற அளவற்ற மகாபாவங்கள் உனது கடாட்சத்தினாலேயே நாசமாக வேண்டும்.
இதுதான் அடியேன் வேண்டும் வரமாகும்! என்றான் பிரகலாதன்.

உடனே மதுசூதனன் புன்முறுவலுடன் பிரகலாதா! என் அனுக்கிரகத்தால் நீ கேட்டவாறே ஆகும்.
சந்தேகமில்லை இன்னமும் உனக்கு வேண்டிய வரங்களைக் கேட்பாயாக! என்றான்.

புரு÷ஷாத்தமனே, உனது திருவடித் தாமரைகளிலே பிரியாத பக்தி உண்டாகும்படி அனுக்கிரகித்தால், அடியேன் கிருதார்த்தனானேன்.
சகல ஜகத்காரண பூதனான உன்னிடத்தில் எவனுக்கு அசஞ்சலமான பக்திச் சிறப்புண்டாகுமோ அவனுக்கு
சர்வ உத்தமமான மோட்சமும் உண்டல்லவா? அப்படியிருக்க, அவனுக்குத் தர்மார்த்த காமங்களால் ஆகவேண்டுவது என்ன? என்றான் பிரகலாதன்.

குழந்தாய்! உன் இதயம் என்னிடம் பக்தியுடன் எப்படிச் சஞ்சலமற்று இருக்கிறதோ, அப்படியே எனது அனுக்கிரகத்தால்
பரமமான மோக்ஷõனந்தத்தையும் பெறுவாயாக! என்று ஸ்ரீபகவான் அருளிச் செய்து
பிரகலாதன் பார்த்துக் கொண்டிருக்கும் போதோ, அந்தர்த்தானமானார்.

பிரகலாதன் மீண்டும் நகரத்துக்கு வந்து தன் தந்தையை வணங்கி நின்றான்.
இரணியன் தன் பாலகனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டு, உச்சிமோந்து, கண்களில் கண்ணீர் ததும்ப,
அடா குழந்தாய்! நீ பிழைத்து வந்தாயா? என்று அன்போடும் ஆசையோடும் கொஞ்சினான்.

பரமதார்மீகனான பிரகலாதனும், தன் தகப்பனுக்கும் ஆசாரியாருக்கும் பணிவிடை செய்துகொண்டு சுகமாக இருந்தான்.
சிறிது காலத்திற்குப் பிறகு, இரணியன் முன்பு நேர்ந்த பிரம்மசாபவசத்தால் பகவானிடம் துவேஷம் முற்றி,
மறுபடியும் தன் மகனான பிரகலாதனைக் கொல்ல முயன்றபோது, ஸ்ரீஹரிபகவான், அந்த அசுரனைச் சங்கரிக்க தீர்மானித்தார்.

தேவராலோ, மனிதராலோ, மிருகங்களாலோ தனக்கு மரணம் விளையக்கூடாது என்று இரண்யன் முன்பு
வரம் பெற்றிருந்தானாகையால், மனிதனாகவும் இல்லாமல், மிருகமாகவும் இல்லாமல் நரசிம்ம உருவமெடுத்த
இரண்யனைக் கொல்ல வேண்டுமென்று விஷ்ணு கருதினார். இரண்யன் கோபத்துடன் தன் மகன் பிரகலாதனை நோக்கி,
உன் ஆண்டவன் இந்தத் தூணிலும் இருப்பானோ! என்று ஒரு தூணைச் சுட்டிக்காட்டி ஏளனமாகச் சிரித்து
அந்தத் தூணை எட்டி உதைத்தான். உடனே ஹரிபகவான் நரசிம்மரூபியாக அவ்வரக்கன் சுட்டிக் காட்டிய தூணிலிருந்து தோன்றி
அவ்வசுர வேந்தனைச் சங்கரித்து அருளினார். பிறகு பரம பாகவதனான பிரகலாதன், தைத்ய ராஜ்யத்தில் முடிசூட்டிக்கொண்டு,
அந்த ராஜ்ய போகத்தினால் பிராரப்த கர்மங்களைக் கழித்து புத்திர பவுத்திராதிகளைப் பெற்று
பிராரப்த கர்ம அனுபவமாகிற அதிகாரங்கழிந்தவுடன், இரண்டையும் விட்டு மோக்ஷத்தையடைந்தான்.

மைத்ரேயரே! பரமபக்தனான பிரகலாதனின் மகிமையை வணக்கமாகச் சொன்னேன்.
எவன் மகாத்மாவான பிரகலாதனின் சரிதத்தை ஒருமித்த மனத்துடன் கேட்பானோ, அவனுக்கு அப்போதே
சகல பாவங்களும் தீர்ந்து போகும். பிரகலாதனின் சரிதத்தைப் படிப்பவர்களும் கேட்பவர்களும்,
அகோராத்திர கிருதங்களான பாவங்கள் நீங்கப்பெறுவர். இதில் ஐயமில்லை. எவன் இந்தச் சரிதத்தைப் படிக்கிறானோ,
அவன் பவுர்ணமியிலும், துவாதசியிலும், அஷ்டமியிலும் புனிதமான தோத்திரத்திலே சூரிய கிரகண புண்ணிய காலத்தில்
சுவர்ண சிருங்கம் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்ட உபயதோமுகியான பசுக்களை சற்பாத்திரத்திலே
பூரண மயமான தக்ஷணைகளோடு தானஞ்செய்த பயனையடைவான். உபயதோமுகி என்பது இருபுறத்தும் முகத்தையுடையது.
கன்றையீன்று கொண்டிருக்கும்போதே, பசுவைத் தானம் செய்வது. எவன் ஒருவன் பக்தியுடன்
இந்தப் பிரகலாதாழ்வானின் திருக்கதையைக் கேட்கிறானோ, அவனை ஸ்ரீமந்நாராயணன் பிரகலாதனைக் காத்தது போலவே,
சகல ஆபத்தையும் விலக்கிச் சர்வகாலமும் ரட்சித்து அருள்வான்.

————————————————————————————

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 24–ஸ்ரீ ப்ரஹ்லாத சரிதம் —

 

ஸ்ரீ மத் பாகவதம் ஸ்கந்தம் -7-ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அம்சம் சொல்லும்

ஹிரண்யாஷே போத்ரி ப்ரவர வபுஷா தேவ பவதா
ஹதே சோக க்ரோத க்லபி தத்ருதிரே தஸ்ய ஸஹஜ
ஹிரண்ய ப்ராரம்ப கசிபுர மராராதி ஸதசி
ப்ரதிஜ்ஞம் ஆதேந தவ கில வாதார்தம் மது ரிபோ –1-

மது என்ற அசுரனைக் கொன்றவனே -தாங்கள் ஸ்ரீ வராஹ அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனைக்
கொன்றதால் கோபமடைந்த அவனுடைய சகோதரன்
ஹிரண்யகசிபு அசுரர்களின் சபையில் தங்களைக் கொல்வதாக சபதம் செய்தான்

போத்ரி-மானமில்லா பன்றி -அளவு உவமானம் இல்லா -மஹா வராஹா ஸ்புட பத்ம லோசனா –அபிமானம் இல்லா
சோக க்ரோ-சோகமும் கோபமும் கூடிய

ரத்தம் கொண்டே தர்ப்பணம் பண்ணுவேன் என்று சொன்னதை தமது வாயால் சொல்ல மாட்டாரே
தான் தீங்கு நினைந்த கம்சன் போல்

——————

விதா தாரம் கோரம் ச கலு தபஸித்வா நசிரத
புர ஸாஷாத் குர்வன் ஸூர நர ம்ருகாத்யைர் அநிதனம்
வரம் லப்தவா த்ருப்தோ ஜகதிஹ பவன் நாயக மிதம்
பரி ஷுந்தன் நிந்த்ராத ஹரத திவம் த்வாம கணயன்–2-

அவன் கடுமையான தவம் புரிந்து ப்ரம்ம தேவனைத் தன் முன் தோன்ற வைத்து பல வரன்கள் பெற்றான் –
தேவர்களாலும் மனிதர்களாலும் மிருகங்களாலும் மரணம் இல்லாத வரத்தைப் பெற்றான்
அதனால் கொழுப்பு அடைந்து தங்களைத் தலைவராக உடைய இந்த உலகத்தை அழித்துக் கொண்டு
இந்த்ர லோகத்தைக் கைப் பற்றினான்

————–

நிஹந்தும் த்வாம் பூயஸ் தவ பதம வாப் தஸ்ய ச ரிபோர்
பஹிர் த்ருஷ்டே ரந்தர் ததித ஹ்ருதயே ஸூஷ்ம வபுஷா
நதந் துச்சைஸ் தத்ராப் யகில புவநாந்தே ச ம்ருகயன்
பியா யாதம் மத்வா ச கலு ஜித காசீ நிவ வ்ருதே –3-

தங்களைக் கொல்வதற்காக -கார்ய -ஸ்ரீ வைகுண்ட லோகத்தை அடைந்தான் -தாங்கள் ஸூஷ்ம ரூபத்தில்
அவன் மனத்தில் உள்ளே மறைந்தீர்கள்-ஹ்ருதயே ஸூஷ்ம வபுஷா-இங்கு மட்டும் தானே தேட மாட்டான் -மறைந்து இருந்தால் தானே நரஸிம்ஹ அவதாரம் மஹிமை நாம் அறிய முடியும் –
அகில உலகங்களிலும் தங்களைத் தேடினான் -தாங்கள் பயந்து ஓடிப் போனதாக நினைத்து
உரக்க சப்தம் செய்து கொண்டு வெற்றி பெற்றதாகவே எண்ணி கர்வத்துடன் திரும்பினான்

————-

ததோ அஸ்ய ப்ரஹ்லாத ஸம ஜனி ஸூதோ கர்ப வசதவ்
முநேர் வீணா பாணேர் அதிகத பவத் பக்தி மஹிமா
ச வை ஜாத்யா தைத்ய ஸி ஸூரபி சமேத்ய த்வயி ரதம்
கதஸ் த்வத் பக்தாநாம் வரத பரம உதாஹரணதாம் –4-

அவனுக்கு ப்ரஹ்லாதன் என்ற மகன் பிறந்தான் -அவன் கர்ப்பத்தில் இருக்கும் போதே ஸ்ரீ நாரத முனிவர் இடம்
இருந்து தங்களுடைய மகிமையை உபதேசமாகப் பெற்றான்
பிறப்பால் அசுரனாய் இருந்தாலும் தங்கள் இடம் மிகுந்த பக்தி கொண்டு இருந்தான்
தங்கள் பக்தர்களுக்கு எல்லாம் சிறந்த உதாரணமாய் இருந்தான்

கயாது தாயின் கர்ப்ப ஸ்ரீ மான் கருவிலே திருவுடையால் -நல்ல ஆனந்தம் உடையவன் பெயரிலே ப்ர ஆஹ்லாதன் -ஆச்சார்ய அனுக்ரஹம்

சீமந்தம்-வேத மந்த்ரம் வீணையில் வாசிக்க வேண்டும் வேதம் சொல்லும்

ஆனை காத்து ஓர் ஆனை கொன்று அதன்றி ஆயர் பிள்ளையாய்
ஆனை மேய்த்தி ஆ நெய் உண்டியன்று குன்றம்  ஒன்றினால்
ஆனை காத்து மை யரிக்கண் மாதரார் திறத்து முன்
ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –40-பிரகலாதனை ரக்ஷித்து ஹிரண்யனை நிரஸித்து

ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக வ்யாஸாம் அம்பரீஷா –புண்யாம் பரம பாகவதர்
ப்ரஹ்லாத வரத நரசிம்மன் -இவனை வைத்த்தே நிரூபகம்

————–

ஸூராரீணாம் ஹாஸ்யம் தவ சரண தாஸ்யம் நிஜ ஸூதே
ச த்ருஷ்ட்வா துஷ்டாத்மா குருபி ரஸி ஸிஷச் சிரமமும்
குரு ப்ரோக்தம் ஸாசாவிதம் இதம் அபத்ராய த்ருடமி
த்யபா குர்வன் சர்வம் தவ சரண பக்த்யைவ வவ்ருதே –5-

தனது பிள்ளை தங்கள் இடம் பக்தி கொண்டு இருப்பதால் ஹிரண்ய கசிபு அசுரர்களின் கேலிக்கு ஆளானான் –
அதனால் அவன் ஆசிரியர்களை அவனுக்கு உபதேசிக்கச் சொன்னான்
அவர்கள் உபதேசித்த ராஜ நீதி முதலியவை பிறப்பு இறப்புக்களுக்கு காரணமாய் இருப்பதால்
அவற்றை விட்டு தங்கள் இடமே ப்ரஹ்லாதன் பக்தி செலுத்தி வந்தான் –

பக்த்யைவ வவ்ருதே–பக்தி நாளுக்கு நாள் வளர என்றும் பக்தியாலேயே வளர்ந்தான் -பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தனம்

————-

அதீ தேஷு ஸ்ரேஷ்டம் கிமிதி பரி ப்ருஷ்டே அத தனயே
பவத் பக்திம் வர்யாமபி கததி பர்யா குல த்ருதி
குருப்யோ ரோஷித்வா ஸஹஜம் அதிரஸ்யேத் யபி விதன்
வதோ பாயா நஸ்மின் வ்யத நுத பவத் பாத சரணே –6-

நீ படித்த பாடங்களில் சிறந்தது எது என்று ஹிரண்ய கசிபு கேட்க ப்ரஹ்லாதன் தங்கள் இடம் கொண்டுள்ள
பக்தியே சிறந்தது என்று கூறினான்
அதனால் ஹிரண்ய கசிபு ஆசிரியர்களைக் கோபித்துக் கொண்டான் -அவர்கள் இந்த பக்தி இவனுக்கு
முன் ஜென்மத்திலேயே உண்டானது என்று சொன்னார்கள்
அதனால் தங்கள் பக்தர்களில் சிறந்தவனாக இவனை கொல்ல திட்டங்கள் செய்தான் –

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோர் ஸ்மரணம் பாத சேவகம் -இங்கு அடியார் அடியாராக தொண்டு –
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸஹ்யம் ஆத்ம நிவேதனம்-நவ வித பக்தி
செவியின் வழி புகுந்து என்னுள்ளாய் -நான் பெரியன் –நீ பெரியை என்பதனை யார் அறிவார்-

———–

ச ஸூலை ராவித்த ஸூபஹு ம் அதிதோ திக் கஜை கணர்
மஹா சர்பைர் தஷ்டோ அப் யநஸந கராஹார விதூத
கிரீந்த்ர வஷிப்தோ அப்ய ஹ ஹ பரமாத்மந்நயி விபோ
த்வயி ந்யஸ்தாத் மத்வாத் கிமபி ந நிபீடா மபஜத –7–

எங்கும் நிறைந்தவனே -சூலத்தால் குத்தப் பட்டும் -யானைகளால் மிதிக்கப் பட்டும் -பாம்புகளால் கடிக்கப் பட்டும் –
பட்டினி போடப் பட்டும் -விஷம் கொடுக்கப் பட்டும் ப்ரஹ்லாதன் துன்புறுத்தப் பட்டான்
தங்கள் இடம் மனத்தை வைத்ததால் எவற்றாலும் ப்ரஹ்லாதன் துன்பம் பட வில்லை ஆச்சர்யம் –

————

தத சங்காவிஷ்ட ச புனரதி துஷ்டோ அஸ்ய ஜனகோ
குரூக்த்யா தத் கேஹே கில வருண பாஸை ஸ் தமருணத்
குரோஸ் சா சாந்நித்யே ச புனர் அநுகான் தைத்ய தனயான்
பவத் பக்தேஸ் தத் தவம் பரமம் அபி விஞ்ஞானம் அஸிஷத் –8-

கவலை அடைந்த கொடியவனான ஹிரண்ய கசிபு ஆசிரியர்கள் வீட்டில் ப்ரஹ்லாதனை வருண பாசத்தால்
கட்டி அடைத்து வைத்தான்
ஆசிரியர்கள் இல்லாத போது ப்ரஹ்லாதன் அசுரக் குழந்தைகளுக்கு தங்கள் பக்தியைப் பற்றியும்
பக்தியின் தத்வத்தைப் பற்றியும் உபதேசித்தார் –

சண்டன் மர்த்தன் -சுக்ராச்சாரியார் பிள்ளைகள் -வருண பாசத்தால் தூணில் கட்டி உபதேசம் செய்தார்களாம்

————-

பிதா ஸ்ருண்வன் பால ப்ரகரம் அகிலம் த்வத் ஸ்துதி பரம்
ருஷாந்த ப்ராஹை நம் குல ஹதக கஸ்தே பலமிதி
பலம் மே வைகுண்டஸ் தவ ச ஜகதாம் சாபி ச பலம்
ச ஏவ த்ரை லோக்யம் சகலமிதி தீரோ அயம கதீத் –9-

எல்லா அசுரக் குழந்தைகளும் தங்களையே ஸ்துதிப்பதைக் கேட்ட ஹிரண்ய கசிபு கோபத்துடன் ப்ரஹ்லாதன் இடம்
உனக்கு எவன் உதவி செய்கிறான் என்று கேட்டான்-குல ஹதக-கோடாலிக்காம்பு போல் குலத்தை அழிக்கப் பார்க்கிறாய் –
ப்ரஹ்லாதனும் தைரியமாக -அந்த ஸ்ரீ மன் நாராயணனே எனக்கும் தங்களுக்கும் உலகங்களுக்கு எல்லாம் துணை
மூ உலகங்களும் அவனே என்றான் –

வைகுண்ட-தடைகளைப் போக்குமவன் என்பதால் இந்த பத பிரயோகம்

தீரோ -தீரன் -வீரத்துடனும் புத்தியுடனும் சொல்பவன் தீ ஞானம்

உளன் அலன் எனில் என்றாலும் உளன் -ஆழ்வார்-சாணிலும் உளன் நீ சொல்லும் சொல்லிலும் உளன் -கம்பர்

சாணினும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன் ; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன் ; இத் தன்மை
காணுதி விரைவின்” என்றான்; “நன்று” எனக் கனகன் சொன்னான்.

————-

அரே க்வா சவ் க்வா சவ் சகல ஜகதாத்மா ஹரிரிதி
ப்ரபிந்தே ஸ்ம ஸ்தம்பம் சலித கரவாலோ திதி ஸூத
அத பஸ்ஸாத் விஷ்ணோ ந ஹி வதி துமீ ஸோ அஸ்மி ஸஹஸா
க்ருபாத் மந் விச்வாத் மந் பவன புர வாஸிந் ம்ருடய மாம் –10-

அடே ப்ரஹ்லாதா சகல உலகங்களும் அவனே என்று உன்னால் சொல்லப்படும் அந்த நாராயணன்
எங்கே என்று வாளை வீசிக் கொண்டு அங்கு இருந்த ஒரு தூணை அடித்தான்
எங்கும் நிறைந்த ஸ்ரீ மன் நாராயணா அதன் பின் நடந்தவற்றை எனக்குச் சொல்ல சக்தி இல்லை
கருணா மூர்த்தியே -சகல உலகமாய் இருக்கும் குருவாயூரப்பா அடியேனை குணப்படுத்தி அருள வேண்டும் –

அளந்து இட்ட தூணை*  அவன் தட்ட* ஆங்கே- 
வளர்ந்திட்டு*  வாள் உகிர்ச் சிங்க உருவாய்*
உளந் தொட்டு இரணியன்*  ஒண்மார்வு அகலம்* 
பிளந்திட்ட கைகளால் சப்பாணி*  
பேய் முலை உண்டானே! சப்பாணி.

———————–——————————————

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 25-ஸ்ரீ நரசிம்ம அவதாரம்-

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 25–ஸ்ரீ நரசிம்ம அவதாரம்

ஸூகர்ணி மீட்டர் கீழ் -ஸூக பிரகலாதன் சரித்திரம்
இது சார்த்தூல விக்ரீதம் மீட்டர் புலி பாய்ச்சல்

ஸ்தம்பே₄ க₄ட்டயதோ ஹிரண்யகஶிபோ: கர்ணௌ ஸமாசூர்ணயந்ந
ஆகூ₄ர்ணஜ் ஜக₃த₃ண்ட₃குண்ட₃குஹரோ கோ₄ரஸ்தவாபூ₄த்₃ரவ: |
ஶ்ருத்வா யம் கில தை₃த்யராஜ ஹ்ருத₃யே பூர்வம் கதா₃ப்யஶ்ருதம்
கம்ப: கஶ்சந ஸம்பபாத சலிதோ(அ)ப்யம்போ₄ஜபூ₄ர்விஷ்டராத் || 1||

ஹிரண்யகசிபு தூணை அடித்தான். உடனே, காதுகளைக் கிழிக்கும் பயங்கரமான சத்தம் கேட்டது.
அந்த சத்தம், அண்டங்களை நடுங்கச் செய்வதாயிருந்தது. இதுவரை எவராலும் கேட்கப்படாத சத்தமாக இருந்தது.
அந்த சத்தத்தைக் கேட்ட ஹிரண்யகசிபுவின் உள்ளம் நடுங்கியது. பிரும்மதேவன் கூட நடுங்கினாராமே? என்று பட்டத்ரி கேட்க
குருவாயூரப்பான் “ஆம்” என்று தலையை ஆட்டி அங்கீகரித்தாராம்.

———–

தை₃த்யே தி₃க்ஷு விஸ்ருஷ்டசக்ஷுஷி மஹாஸம்ரம்பி₄ணி ஸ்தம்ப₄த:
ஸம்பூ₄தம் ந ம்ருகா₃த்மகம் ந மநுஜாகாரம் வபுஸ்தே விபோ₄ |
கிம் கிம் பீ₄ஷண மேதத₃த்₃பு₄தமிதி வ்யுத்₃ப்₄ராந்தசித்தே(அ)ஸுரே
விஸ்பூ₂ர்ஜ்ஜத்₃த₄வ லோக்₃ர ரோம விகஸத்₃வர்ஷ்மா ஸமாஜ்ரும்ப₄தா₂: || 2||

எங்கும் நிறைந்தவரே! அந்த அசுரன், எல்லா திசைகளையும் கண்களால் பரபரப்புடன் நோக்கினான்.
அப்போது, தூணிலிருந்து, மிருக வடிவமும் அல்லாத, மனித வடிவும் அல்லாத உருவத்துடன் தாங்கள் தோன்றினீர்கள்.
இது என்ன என்று அசுரன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பிரகாசிக்கின்ற பிடரியுடன்,
சிங்க உருவத்துடன் தாங்கள் பெரிதாக வளர்ந்தீர்கள்.

பீஷணம் அத்புதம் -சேராச் சேர்க்கை -சக்கரை போட்ட பால் -அழகியான் தானே அரி யுருவன் தானே

அழகிய சிங்கர் -இவன் மட்டுமே –
மத்ஸ்ய கூர்ம வராஹா -வாமனன் -பரசுராமன் -ரோஷ ராமர் ராமன் -பல ராமன் -கண்ணன் -கல்கி
ஸூந்தர ராமன் -திருவடி உடன் இருப்பதால்
மோஹன கண்ணன்-ஆபத்துக்கு உதவ -நாளை என்பது நரசிம்மருக்கு இல்லையே
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை ஆராய முடியாதே

எங்கும் உளன் கண்ணன் என்ற*  மகனைக் காய்ந்து,* 
இங்கு இல்லையால் என்று*  இரணியன் தூண் புடைப்ப,*
அங்கு அப்பொழுதே*  அவன் வீயத் தோன்றிய,*  என் 
சிங்கப் பிரான் பெருமை*  ஆராயும் சீர்மைத்தே? 

————–

தப்த ஸ்வர்ண ஸவர்ண கூ₄ர்ணத₃திரூக்ஷாக்ஷம் ஸடா கேஸர-
ப்ரோத்கம் பப்ரநிகும்பி₃தாம்ப₃ரமஹோ ஜீயாத் தவேத₃ம் வபு: |
வ்யாத்த வ்யாப்த மஹாத₃ரீ ஸக₂முக₂ம் க₂ட்₃கோ₃க்₃ர வல்க₃ந்மஹா-
ஜிஹ்வா நிர்க₃ம த்₃ருஶ்யமாந ஸுமஹா த₃ம்ஷ்ட்ரா யுகோ₃ட்₃டா₃மரம் || 3||

சுழலும் தங்கள் கண்கள், உருக்கிய தங்கத்தைப் போல ஜொலித்தன. பிடரி மயிர்கள், விரிந்து ஆகாயத்தை மறைத்தன.
வாய் குகையைப் போன்றிருந்தன. வாளைப்போல் கூர்மையாக சுழன்றுகொண்டு இருந்த நாக்கு வெளியே வரும்போது,
மிகப்பெரிய கோரைப்பற்கள் இருபுறமும் தெரிந்தன. பயங்கரமான உருவம் கொண்ட,
தங்களுடைய இந்த நரசிம்ம அவதாரம் சிறந்து விளங்கட்டும்.

—————

உத்ஸர்பத்₃வ லிப₄ங்க₃பீ₄ஷண ஹநு ஹ்ரஸ்வஸ்த₂வீயஸ்தர-
க்₃ரீவம் பீவரதோ₃ஶ்ஶதோத்₃க₃தநக₂ க்ரூராம்ஶுதூ₃ரோல்ப₃ணம் |
வ்யோமோல் லங்கி₄ க₄நாக₄நோபமக₄நப்ரத்₄வாந நிர்தா₄வித-
ஸ்பர்தா₄லு ப்ரகரம் நமாமி ப₄வதஸ்தந் நாரஸிம்ஹம் வபு: || 4||

குட்டையான கழுத்துடன், கர்ஜிக்கும்போது மடிந்த கன்னத்து சதைகளால் தங்கள் உருவம் பயங்கரமானதாய் இருந்தது.
நூற்றுக் கணக்கான கைகளில் இருந்து கூர்மையான நகங்கள் வெளிவந்தது. மிக பயங்கரமான இடி முழக்கம் போன்ற
சிம்ம நாதக் குரல், பகைவர்களை ஓடச் செய்தது. இப்படிப்பட்ட நரசிம்ம உருவத்தை நமஸ்கரிக்கிறேன்.

————-

நூநம் விஷ்ணுரயம் நிஹந்ம்யமுமிதி ப்₄ராம்யத்₃க₃தா₃பீ₄ஷணம்
தை₃த்யேந்த்₃ரம் ஸமுபாத்₃ரவந்தமத்₄ரு₂ தோ₃ர்ப்₄யாம் ப்ருது₂ப்₄யாமமும் |
வீரோ நிர்க₃லிதோ(அ)த₂ க₂ட்₃க₃ப₂லகௌ க்₃ருஹ்ணந் விசித்ரஶ்ரமாந்
வ்யாவ்ருண்வந் புநராபபாத பு₄வநக்₃ராஸோத்₃யதம் த்வாமஹோ || 5||

“இவன் நிச்சயம் நாராயணன், இவனைக் கொல்கிறேன்” என்று ஹிரண்யகசிபு, தன் கதையைச் சுழற்றிக் கொண்டு,
தங்கள் அருகே வந்தான். தங்கள் பருத்த கரங்களால் அவனைப் பிடித்தீர்கள். அவன், தங்கள் பிடியிலிருந்து நழுவி,
தன் வாளால், உலகங்களை விழுங்கும் உக்கிரத்தோடு இருந்த தங்களைத் தாக்க முயன்றான். ஆச்சர்யம்!

————

ப்₄ராம்யந்தம் தி₃தி ஜாத₄மம் புநரபி ப்ரோத்₃க்₃ருஹ்ய தோ₃ர்ப்₄யாம் ஜவாத்
த்₃வாரே(அ)தோ₂ருயுகே₃ நிபாத்ய நக₂ராந் வ்யுத்கா₂ய வக்ஷோபு₄வி |
நிர்பி₄ந்த₃ந்நதி₄க₃ர்ப₄நிர்ப₄ரக₃லத்₃ரக்தாம்பு₃  ப₃த்₃தோ₄த்ஸவம்
பாயம் பாயமுதை₃ரயோ ப₃ஹு ஜக₃த் ஸம்ஹாரி ஸிம்ஹாரவாந் || 6||

மறுபடியும் கரங்களால் அவனைப் பிடித்து, வாசற்படியில், உம்முடைய தொடைகளில் படுக்க வைத்து,
கூரிய நகங்களால் அவன் மார்பைக் கிழித்தீர்கள். பெருகிய ரத்தத்தைக் குடித்து சிம்ம நாதம் செய்தீர்கள்.

கொண்ட சீற்றம் ஓன்று உண்டு -பக்த அபசாரம் பொறுக்காதவன்
ஆழ் துயர் செய்து அசுரரை அழித்தவன் -ஹிம்சை -ஸிம்ஹம் -இவர் போல் வடிவு என்பதால் காட்டு ராஜாவுக்கும் ஸிம்ஹம்
அனுக்ரஹம் செய்தார் -வெந்நரகம் போகாமல் இங்கேயே அனுபவிக்கப்பண்ணியதால்

————

த்யக்த்வா தம் ஹதமாஶு ரக்தலஹரீஸிக்தோந்நமத்₃வர்ஷ்மணி
ப்ரத்யுத்பத்ய ஸமஸ்த தை₃த்ய படலீம் சாகா₂த்₃யமாநே த்வயி |
ப்₄ராம்யத்₃பூ₄மி விகம்பிதாம்பு₃தி₄குலம் வ்யாலோலஶைலோத்கரம்
ப்ரோத்ஸர்பத்க₂சரம் சராசரமஹோ து₃:ஸ்தா₂மவஸ்தா₂ம் த₃தௌ₄ || 7||

கொன்ற அவனை விட்டுவிட்டு, எழுந்து நடந்து மற்ற அசுரர்களை விழுங்கத் தொடங்கினீர்கள்.
அப்போது, அனைத்து உலகங்களும் சுழன்றன. சமுத்திரங்கள் கலங்கின. மலைகள் அசைந்தன.
நட்சத்திரங்கள் சிதறின. அனைத்தும் நிலை குலைந்து விட்டது!

—————

தாவந்மாம்ஸவபாகராலவபுஷம் கோ₄ராந்த்ரமாலாத₄ரம்
த்வாம் மத்₄யே ஸப₄மித்₃த₄கோபமுஷிதம் து₃ர்வார கு₃ர்வாரவம் |
அப்₄யேதும் ந ஶஶாக கோபி பு₄வநே தூ₃ரே ஸ்தி₂தா பீ₄ரவ:
ஸர்வே ஶர்வ விரிஞ்ச வாஸவ முகா₂: ப்ரத்யேகமஸ்தோஷத || 8||

ஹிரண்யகசிபுவின் மாமிசத்தையும், குடலையும் மாலையாய் அணிந்து கொண்டு, இடி முழக்கம் போல்
கர்ஜித்துக் கொண்டு இருந்த தங்களை நெருங்க அனைவரும் அஞ்சினர்.
சிவன், பிரம்மன், இந்திரன் முதலியோர் வெகு தூரத்தில் இருந்து தங்களைத் துதித்தனர்.

ஸிம்ஹாஸனம் இருந்து -ஹிரண்யன் இருந்த negative vibration மாற்றி -இவன் அமர்ந்ததாலேயே அதுக்கு இந்த பெயர்

———–

பூ₄யோ(அ)ப்யக்ஷதரோஷதா₄ம்நி ப₄வதி ப்₃ரஹ்மாஜ்ஞயா பா₃லகே
ப்ரஹ்லாதே₃ பத₃யோர் நமத்யபப₄யே காருண்ய பா₄ராகுல: |
ஶாந்தஸ்த்வம் கரமஸ்ய மூர்த்₄நி ஸமதா₄: ஸ்தோத்ரைரதோ₂த்₃கா₃யத-
ஸ்தஸ்யாகாமதி₄யோ(அ)பி தேநித₂ வரம் லோகாய சாநுக்₃ரஹம் || 9||

அப்போதும் தங்களுடைய கோபம் அடங்க வில்லை. பிரம்மன், குழந்தையான பிரஹ்லாதனிடம் தங்களை
வணங்கும்படி கூறினார். பயமற்ற பிரஹ்லாதனும் தங்களை நெருங்கி நமஸ்கரித்தான்.
தாங்களும் சீற்றம் தணிந்து பிரஹ்லாதனுடைய தலை மேல் கையை வைத்து ஆசீர்வதித்தீர்கள்.
அவனும் தங்களை ஸ்தோத்திரங்களால் துதிக்க, அவனுக்கு அவன் விரும்

பக்தி நிலைத்து இருக்கவே அனுக்ரஹம் -இருக்கும் விஷயம் கேட்க்க கூடாதே -தந்தையை மன்னித்து விடு -முன்பே செய்தேனே
வரம் கெடுக்காமல் இருக்கும் நிலையை அருளு

———

ஏவம் நாடித ரௌத்₃ர சேஷ்டித விபோ₄ ஶ்ரீதாபநீயாபி₄த₄-
ஶ்ருத்யந்தஸ்ஃபுடகீ₃தஸர்வமஹிமந்நத்யந்தஶுத்₃தா₄க்ருதே |
தத்தாத்₃ருங்நிகி₂லோத்தரம் புநரஹோ கஸ்த்வாம் பரோ லங்க₄யேத்
ப்ரஹ்லாத₃ப்ரிய ஹே மருத் புரபதே ஸர்வாமயாத் பாஹி மாம் || 10||

இவ்வாறு ஒரு பயங்கரமான லீலையை நடித்தீர்கள். ஸ்ரீ நரசிம்மதாபனீயம் என்ற உபநிஷத்தில் பாடப்பட்டவரும்,
எல்லா மகிமைகளை உடையவரும், பரிசுத்தமான ரூபத்தை உடையவரும், பிரஹ்லாதனிடத்தில் பிரியம் வைத்தவருமான
குருவாயூரப்பா! எல்லா ரோகங்களில் இருந்தும் என்னைக் காக்க வேண்டும்.
“பிரஹ்லாத ப்ரிய” என்று பட்டத்ரி அழைத்ததும், பகவான் தலையை அசைக்காது இருந்தார்.
பட்டத்ரி வருந்தினார். அப்போது, “ நான் பிரஹ்லாதனிடத்தில் மட்டுமல்ல, பக்தர்கள் அனைவரிடமும் அன்பு வைத்தவன்”
என்று அசரீரி கேட்டது என்று பெரியோர்கள் சொல்வார்கள்

அங்கண் ஞாலமஞ்ச வங்கோ ராளரியாய் * அவுணன்
பொங்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் *
பைங்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் * அடிக்கீழ்ச்
செங்கணாளி யிட்டறைஞ்சும் சிங்கவேள் குன்றமே.

———————–——————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீபாடலாத்ரி_நரசிம்ம பெருமாள் ஸ்துதி–ஸ்ரீ நரசிம்ம அஷர மாலை–

January 21, 2023

ஸ்ரீபாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ஸ்துதி ஸ்லோகம்

ஜிதந்தே_மஹா ஸ்தம்ப_ஸம்பூத_விஷ்ணோ!
ஜிதந்தே_ஜகத் ரக்ஷணார்தாவார
ஜிதந்தே_ ஹரே_பாடலாத்ரௌ_நிவாஸின்
ஜிதந்தே_ ந்ருஸிம்ஹ_ப்ரஸீத_ப்ரஸீத
நமஸ்தே_ஜகந்நாத_விஷ்ணோ_முராரே
நமஸ்தே_ந்ருஸிம்ம_அச்யுதாநந்த_தேவ
நமஸ்தே_க்ருபாலோ_சக்ரபாணே
நமஸ்தம்ப_ஸம்பூத_திவ்யாவதார
பரப்ரஹ்மரூபம்_ப்ரபுத்தாட்டஹாஸம்
கரப்ரௌல_சக்ரம்ஹரப்ரஹ்மஸேவ்யம்
ப்ரஸந்நம்_த்ரிநேத்ரம்_ஹரிம்பாடலாத்ரௌ
சான்மேக_காத்ரம்_ந்ருஸிம்ஹம்_பஜாம்
கிரி ஜந்ருஹரிமீசம்_கர்விதாராதிவஜ்ரம்
பரம புருஷமாத்யம்_பாடலாத்ரௌ_ப்ரஸன்னம்
அபய_வரத_ஹஸ்தம்_சங்க சக்ரே ததாநம்சரண_மிஹபஜாம்_சாச்வதம்
நாரஸிம்ஹம்_ஸ்ரீந்ருஸிம்ஹ_மஹா ஸிம்ஹ_திவ்யசிம்ஹ!
கிரிஸம்பவ_தேவேச_ரக்ஷமாம்_சரணா கதம்

ஸ்ரீ_நரசிம்மர்_காயத்ரி
ஓம்_வஜ்ர_நகாய_வித்மஹே !!!
தீக்ஷ்ண_தம்ஷ்ட்ராய_தீமஹி !!!
தந்நோ_நரசிம்ஹப்_ப்ரசோதயாத் !!!

ஸ்ரீபாடலாத்ரி_நரசிம்மர்_திருவடிகளே__சரணம்
————–

லஷ்மி நரஸிம்ஹ சரணம் ப்ராத்யே🌹
🌹ஸ்ரீ நரசிம்ம அஷர மாலை 🌹🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹
🔥ஜய ஜய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜய ஹரி லக்ஷ்மீ நரசிம்ஹ
அனாத ரக்ஷக நரசிம்ஹ
ஆபத் பாந்தவ நரசிம்ஹ.🌹
🔥இஷ்டார்த்த ப்ரத நரசிம்ஹ
ஈஷ்பரேஷ நரசிம்ஹ
உக்ர ஸ்வரூப நரசிம்ஹ
ஊர்த்வா பாஹூ நரசிம்ஹ.🌹
🔥எல்லா ரூப நரசிம்ஹ
ஐஸ்வர்ய ப்ரத நரசிம்ஹ
ஓங்கார ரூப நரசிம்ஹ
ஔஷத நாம நரசிம்ஹ.🌹
🔥அம்பர வாஸ நரசிம்ஹ
காம ஜனக நரசிம்ஹ
கிரீட தாரி நரசிம்ஹ
ககபதி வாஸன நரசிம்ஹ.🌹
🔥கதா தரனே நரசிம்ஹ
கர்ப்ப நிர்ப்பேதந நரசிம்ஹ
கிரிதர வாஸ நரசிம்ஹ
கௌதம பூஜித நரசிம்ஹ.🌹
🔥கடிகாசல ஸ்ரீ நரசிம்ஹ
சதுர் புஜனே நரசிம்ஹ
சதுரா யுத்தர நரசிம்ஹ
ஜ்யோதி ஸ்வரூப நரசிம்ஹ.🌹
🔥தந்தே தாயியு நரசிம்ஹ
த்ரிநேத்ர தாரி நரசிம்ஹ
தநுஜா மர்த்தன நரசிம்ஹ
தீனநாத நரசிம்ஹ.🌹
🔥துக்க நிவாரக நரசிம்ஹ
தேவாதி தேவ நரசிம்ஹ
ஜ்ஞான ப்ரதனே நரசிம்ஹ
நர கிரி ரூப நரசிம்ஹ.🌹
🔥நர நாராயண நரசிம்ஹ
நித்யானந்த நரசிம்ஹ
நரம்றாக ரூப நரசிம்ஹ
நாம கிரீஷ நரசிம்ஹ.🌹
🔥பங்கஜானன நரசிம்ஹ
பாண்டுரங்க நரசிம்ஹ
ப்ரஹ்லாத வரத நரசிம்ஹ
பிநாக தாரி நரசிம்ஹ.🌹
🔥புராண புருஷ நரசிம்ஹ
பவ பய ஹரண நரசிம்ஹ
பக்த ஜன ப்ரிய நரசிம்ஹ
பக்தோத்தார நரசிம்ஹ.🌹
🔥பக்தானுக்ரஹ நரசிம்ஹ
பக்த ரக்ஷக நரசிம்ஹ
முநி ஜன ஸேவித நரசிம்ஹ
ம்ருக ரூப தாரி நரசிம்ஹ.🌹
🔥யக்ஞ புருஷ நரசிம்ஹ
ரங்கநாத நரசிம்ஹ
லக்ஷ்மீ ரமணா நரசிம்ஹ
வங்கி புரிஷ நரசிம்ஹ.🌹
🔥சாந்த மூர்த்தி நரசிம்ஹ
ஷட்வர்க தாரி நரசிம்ஹ
சர்வ மங்கள நரசிம்ஹ
சித்தி புருஷ நரசிம்ஹ.🌹
🔥சங்கடஹர நரசிம்ஹ
சாளிக்ராம நரசிம்ஹ
ஹரி நாராயண நரசிம்ஹ
க்ஷேம காரி நரசிம்ஹ.🌹
🔥ஜெய ஜெய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜெய சுப மங்கள நரசிம்ஹ
ஜய ஜய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜய ஹரி லக்ஷ்மீ நரசிம்ஹ..🌹🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹
🌹ஸ்ரீ லஷ்மி நரசிம்மயே நமஹ 🌹
————

ஸ்ரீஅனுமன் ஸ்துதி

வீதாகில விஷயேச்சசம் ஜாதானந்தா
ஸ்ரூபுல கமத்யச்சம் ஸீதா பதித தூதாத்யம்
வாதாத் மஜ மத்ய பாவயே ஹ்ருதயம்
அனைத்து விஷயங்களும் அறிந்தவரே பக்தனின் ஆனந்த கண்ணீர் கண்டு உணர்ச்சி வசப்படுபவரே தூய மனம் படைத்தவரே ராமதூதர்களில் முதல்வரே தியானிக்கத் தக்கவரே வாயுகுமாரரே ஆஞ்சநேயரே உம்மை மனதில் இருததி தியானிக்கிறேன்.
—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மி நரஸிம்ஹ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ ராம ரஷா ஸ்தோத்ரம்–ஸ்ரீ தில்லை விளாகம் ராமர்–ஸ்ரீ சிம்மாசலம் ஸ்ரீ லக்ஷ்மி வராஹ நரசிம்ஹ பெருமாள்–ஸ்ரீ மங்களகிரி பானக நரஸிம்ஹர் —

January 15, 2023

ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம்

ஓம் அஸ்ய ஶ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரமன்த்ரஸ்ய
பு³த⁴கௌஶிக ருஷி:
ஶ்ரீ ஸீதாராம சன்த்³ரோதே³வதா
அனுஷ்டுப் ச²ன்த:³
ஸீதா ஶக்தி:
ஶ்ரீமத்³ ஹனுமான் கீலகம்
ஶ்ரீராமசன்த்³ர ப்ரீத்யர்தே² ராமரக்ஷா ஸ்தோத்ரஜபே வினியோக:³ ॥

த்⁴யானம்
த்⁴யாயேதா³ஜானுபா³ஹும் த்⁴ருதஶர த⁴னுஷம் ப³த்³த⁴ பத்³மாஸனஸ்த²ம்
பீதம் வாஸோவஸானம் நவகமல த³ல்த³ஸ்பர்தி² நேத்ரம் ப்ரஸன்னம் ।
வாமாங்காரூட⁴ ஸீதாமுக² கமலமிலல்லோசனம் நீரதா³ப⁴ம்
நானாலங்கார தீ³ப்தம் த³த⁴தமுரு ஜடாமண்ட³லம் ராமசன்த்³ரம் ॥

(மஞ்சள் ஆடை உடுத்தி வில்லும் அம்பும் தாங்கி பத்மாசனத்தில் கருணை பொங்கும் கடாக்ஷங்களுடன்
அடர்ந்து படர்ந்த விரிந்த கூந்தலுடன் ஆஜானுபாஹுவாய் வீற்று இருந்து அருளும் பெருமாளையும்
இடது பக்கத்தில் மேகவண்ண திவ்ய மங்கள விகிரகத்துடன் தெய்விக அணிகலன் பூஷிதமாய்
தாமரை திருமுகத்துடன் இருந்து அருளும்
பிராட்டியையும் நமஸ்கரிக்கிறேன்)

ஸ்தோத்ரம்
சரிதம் ரகு⁴னாத²ஸ்ய ஶதகோடி ப்ரவிஸ்தரம் ।
ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக நாஶனம் ॥ 1 ॥

(பெருமாள் சரித்திரத்தையும் அழகையும் விவரிக்க நூறு கோடி வார்த்தைகளாலும் இயலாது
விஸ்தாரமாக ஸத்ய லோகத்தில் ஸ்ரீ ராமாயணம் உண்டே
இங்கு அவற்றுள் ஒரு பதம் -ஒரு எழுத்தே அனைத்து சம்சார பாபங்களையும் ஒழிக்கும் அன்றோ)

த்⁴யாத்வா நீலோத்பல ஶ்யாமம் ராமம் ராஜீவலோசனம் ।
ஜானகீ லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மண்டி³தம் ॥ 2 ॥

ஸாஸிதூண த⁴னுர்பா³ண பாணிம் நக்தம் சரான்தகம் ।
ஸ்வலீலயா ஜக³த்த்ராது மாவிர்பூ⁴தமஜம் விபு⁴ம் ॥ 3 ॥

ராமரக்ஷாம் படே²த்ப்ராஜ்ஞ: பாபக்⁴னீம் ஸர்வகாமதா³ம் ।
ஶிரோ மே ராக⁴வ: பாது பா²லம் (பா⁴லம்) த³ஶரதா²த்மஜ: ॥ 4 ॥

(நீலோத் பலம் -நீல நிற அல்லிப்பூ நிறத்தவன்-புண்டரீகாக்ஷன் -திரு அபிஷேகம் சாத்தி அருளி –
திருக்கரங்களில் கத்தி வில் அம்பு ஏந்தி அருளி துஷ்ட நிரசனத்துக்காக திரு அவதாரம் செய்து அருளி
லோக ரக்ஷணம் செய்து அருளும் கருணா மூர்த்தியான பெருமாளையும் சீதாப்பிராட்டியார் இலக்குமணன் உடன் இருக்கும் சேர்த்தியை
த்யானம் செய்து இந்த ஸ்ரீ ராம ரஷா ஸ்தோத்ரம் பாராயணம் செய்து
ஸர்வ அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி சித்திகளைப் பெறுவோம்
பெருமாள் -சக்ரவர்த்தி திருமகன் -தலையையும் நெற்றியையும் காக்கட்டும்)

கௌஸல்யேயோ த்³ருஶௌபாது விஶ்வாமித்ரப்ரிய: ஶ்ருதீ ।
க்⁴ராணம் பாது மக²த்ராதா முக²ம் ஸௌமித்ரிவத்ஸல: ॥ 5 ॥

(கௌசல்யை குமரன் கண்களைக் காக்கட்டும் –
விச்வாமித்ர ரிஷி பிரியமான சிஷ்யன் காதுகளைக் காக்கட்டும்
யஜ்ஜ்ங்களை ரக்ஷிக்கும் பெருமாள் மூக்கினைக் காக்கட்டும்
சுமித்ரா தேவி குமாரனை நேசிக்கும் பெருமாள் முகத்தைக் காக்கட்டும்)

ஜிஹ்வாம் வித்³யானிதி⁴: பாது கண்ட²ம் ப⁴ரதவன்தி³த: ।
ஸ்கன்தௌ⁴ தி³வ்யாயுத:⁴ பாது பு⁴ஜௌ ப⁴க்³னேஶகார்முக: ॥ 6 ॥

(அறிவின் புதையல் என் நாக்கினையும்
பரதாழ்வானால் ஆஸ்ரயிக்கப்படும் பெருமாள் தொண்டையினையும்
தெய்வீக திவ்ய ஆயுதங்களைத் தாங்கியவர் தோள்களையும்
சிவ தனுஸ்ஸை உடைத்தவர் கரங்களையும் காக்கட்டும்)

கரௌ ஸீதாபதி: பாது ஹ்ருத³யம் ஜாமத³க்³ன்யஜித் ।
மத்⁴யம் பாது க²ரத்⁴வம்ஸீ நாபி⁴ம் ஜாம்ப³வதா³ஶ்ரய: ॥ 7 ॥

(சீதா தேவியின் பதி என் கைகளையும்
பரசுராமரை வெற்றி கொண்டவர் என் ஹ்ருதயத்தையும்
கரணை நிரசித்தவர் என் மத்ய பாகத்தையும்
ஜாம்பவானுக்குப் புகலிடம் அளித்த பெருமாள் என் தொப்புள் கொடியையும் காக்கட்டும்)

ஸுக்³ரீவேஶ: கடிம் பாது ஸக்தி²னீ ஹனுமத்-ப்ரபு⁴: ।
ஊரூ ரகூ⁴த்தம: பாது ரக்ஷ:குல வினாஶக்ருத் ॥ 8 ॥

(சுக்ரீவனின் தலைவன் என் இடுப்பையும்
திருவடி ஹ்ருதய வாஸம் செய்து அருளும் பெருமாள் என் சக்தினியையும் -அதாவது -வலது முழங்காலுக்கு மேல் உள்ள பகுதியையும்
ரகு வம்ச சிறந்த அரசர் இடது முழங்காலுக்கு மேல் உள்ள பகுதியையும் காக்கட்டும்)

ஜானுனீ ஸேதுக்ருத்-பாது ஜங்கே⁴ த³ஶமுகா²ன்தக: ।
பாதௌ³ விபீ⁴ஷணஶ்ரீத:³ பாது ராமோகி²லம் வபு: ॥ 9 ॥

(சேது காட்டியவர் என் முழங்கால்களையும்
ராவணனை அழித்தவர் தொடைகளையும்
செல்வ விபீஷணனுக்கு அனைத்தையும் அளித்தவர் என் பாதங்களையும் மற்றும் உடம்பையும் காக்கட்டும்)

ஏதாம் ராமப³லோபேதாம் ரக்ஷாம் ய: ஸுக்ருதீ படே²த் ।
ஸ சிராயு: ஸுகீ² புத்ரீ விஜயீ வினயீ ப⁴வேத் ॥ 10 ॥

(சாத்விகர்கள் இந்த ஸ்ரீ ராம ரஷா ஸ்தோத்ரத்தை நித்தியமாக பாராயணம் செய்வர்-சாத்விக கொண்ட பெண்டிர் மக்களுடன்
அவர்கள் விநயத்துடன் இங்கும் லீலா விபூதியை ஆண்டும் அங்குச் சென்றும் நித்ய கைங்கர்யசெல்வம் பெறுவர் )

பாதால்த-³பூ⁴தல-வ்யோம-சாரிண-ஶ்சத்³ம-சாரிண: ।
ந த்³ரஷ்டுமபி ஶக்தாஸ்தே ரக்ஷிதம் ராமனாமபி⁴: ॥ 11 ॥

(இத்தைப் பாராயணம் செய்பவர் மூ உலக அதிபதியான இந்திரனும் நிமிர்ந்து பார்க்க முடியாது
புண்ணிய சக்தி வாய்ந்த மந்த்ரம் இது)

ராமேதி ராமப⁴த்³ரேதி ராமசன்த்³ரேதி வா ஸ்மரன் ।
நரோ ந லிப்யதே பாபைர்பு⁴க்திம் முக்திம் ச வின்த³தி ॥ 12 ॥

(ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனம் செய்பவர்களை பாப்பம் தீண்டாது
இங்கும் மகிழ்வுடன் வாழ்ந்து அங்கும் பரம புருஷார்த்த கைங்கர்யம் பெறுவர்)

ஜகஜ³்ஜைத்ரைக மன்த்ரேண ராமனாம்னாபி⁴ ரக்ஷிதம் ।
ய: கண்டே² தா⁴ரயேத்தஸ்ய கரஸ்தா²: ஸர்வஸித்³த⁴ய: ॥ 13 ॥

(இத்தை மனப்பாடமாக வைத்து பாராயணம் செய்பவர்கள் அனைத்து வெற்றிகளையும் அடைவார்கள்
ஸமஸ்த அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக ஸமஸ்த இஷ்ட பிராப்தியும் பெறுவர்)

வஜ்ரபஞ்ஜர நாமேத³ம் யோ ராமகவசம் ஸ்மரேத் ।
அவ்யாஹதாஜ்ஞ: ஸர்வத்ர லப⁴தே ஜயமங்க³ல்த³ம் ॥ 14 ॥

(இந்திர வஜ்ராயுதத்துக்கும் மேலான இந்த வஜ்ரா ராம கவசம் அனைத்து அபீஷ்டங்களையும் அருளும்
ஸகல வித புண்யமும் ஐயமும் அடைவிக்கும்(

ஆதி³ஷ்டவான்-யதா² ஸ்வப்னே ராமரக்ஷாமிமாம் ஹர: ।
ததா² லிகி²தவான்-ப்ராத: ப்ரபு³த்³தௌ⁴ பு³த⁴கௌஶிக: ॥ 15 ॥

(பவித்ரமான இந்த கவசம் சிவபெருமானால் புத கௌசிக முனிவருக்கு கனவில் உபதேசிக்கப்பட்டு
உரைத்த படியே அவரால் ஈடுபடுத்தப்பட்ட ஸ்லோகம்)

ஆராம: கல்பவ்ருக்ஷாணாம் விராம: ஸகலாபதா³ம் ।
அபி⁴ராம-ஸ்த்ரிலோகானாம் ராம: ஶ்ரீமான் ஸ ந: ப்ரபு⁴: ॥ 16 ॥

(நம்மையும் பொருளாக்கி தன்னையே தந்து அருளும் கற்பகம் ராமபிரான்
ஈடில்லா அழகன் -ஒப்பில்லா அப்பன் -ஸர்வ சேஷீ)

தருணௌ ரூபஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாப³லௌ ।
புண்ட³ரீக விஶாலாக்ஷௌ சீரக்ருஷ்ணாஜினாம்ப³ரௌ ॥ 17 ॥

ப²லமூலாஶினௌ தா³ன்தௌ தாபஸௌ ப்³ரஹ்மசாரிணௌ ।
புத்ரௌ த³ஶரத²ஸ்யைதௌ ப்⁴ராதரௌ ராமலக்ஷ்மணௌ ॥ 18 ॥

ஶரண்யௌ ஸர்வஸத்த்வானாம் ஶ்ரேஷ்டௌ² ஸர்வத⁴னுஷ்மதாம் ।
ரக்ஷ:குல நிஹன்தாரௌ த்ராயேதாம் நோ ரகூ⁴த்தமௌ ॥ 19 ॥

(பெருமாள் அலகுக்குத் தோற்று சூர்ப்பணகை ஸ்தோத்ரம் -)

(வாலிப பருவம் -அழகியான் தானே -புண்டரீகாக்ஷன் -மான் தோல் மரவுரி தரித்தவர்
காய்கனி புஜிப்பவர் -ப்ரஹ்மசாரியம் அனுஷ்டிப்பவர் -அனைவருக்கும் ஒரே புகலிடம்
அசுரர் குலங்களை வெட்டிக்களைந்தவர்
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் -இவர்கள் நம்மை ரக்ஷிக்கட்டும்)

ஆத்த ஸஜ்ய த⁴னுஷா விஷுஸ்ப்ருஶா வக்ஷயாஶுக³ நிஷங்க³ ஸங்கி³னௌ ।
ரக்ஷணாய மம ராமலக்ஷணாவக்³ரத: பதி² ஸதை³வ க³ச்ச²தாம் ॥ 2௦ ॥

(அமோக வில் -அம்புறாத் துணியில் எடுக்க எடுக்க குறைவற்ற பாணங்களால் நிரம்பியே இருக்கும்
இருவரும் நம் முன்னால் இருந்து ரக்ஷித்து அருளட்டும்(

ஸன்னத்³த:⁴ கவசீ க²ட்³கீ³ சாபபா³ணத⁴ரோ யுவா ।
க³ச்ச²ன் மனோரதா²ன்னஶ்ச (மனோரதோ²ஸ்மாகம்) ராம: பாது ஸ லக்ஷ்மண: ॥ 21 ॥

ராமோ தா³ஶரதி² ஶ்ஶூரோ லக்ஷ்மணானுசரோ ப³லீ ।
காகுத்ஸ: புருஷ: பூர்ண: கௌஸல்யேயோ ரகூ⁴த்தம: ॥ 22 ॥

9எப்போதும் தயார் நிலையில் இருந்து -கவசம் அணிந்து திருக்கைகளிலே கத்தி வில் அம்பு ஏந்தி
நமக்கு முன்னால் இருந்து அனைத்து அபீஷ்டங்களையும் அளித்து ரக்ஷிக்கட்டும்)

வேதா³ன்தவேத்³யோ யஜ்ஞேஶ: புராண புருஷோத்தம: ।
ஜானகீவல்லப:⁴ ஶ்ரீமானப்ரமேய பராக்ரம: ॥ 23 ॥

இத்யேதானி ஜபேன்னித்யம் மத்³ப⁴க்த: ஶ்ரத்³த⁴யான்வித: ।
அஶ்வமேதா⁴தி⁴கம் புண்யம் ஸம்ப்ராப்னோதி ந ஸம்ஶய: ॥ 24 ॥

(ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனம் அஸ்வமேத யாகத்தை விட பன்மடங்கு ஸ்ரேஷ்டம்-இதில் எவ்வித சங்கையும் வேண்டாம் )

ராமம் தூ³ர்வாத³ல்த³ ஶ்யாமம் பத்³மாக்ஷம் பீதவாஸஸம் ।
ஸ்துவன்தி நாபி⁴-ர்தி³வ்யை-ர்னதே ஸம்ஸாரிணோ நரா: ॥ 25 ॥

(இவ்வுலக பந்த விடுதலையும் அடைவிக்கும்(

ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகு⁴வரம் ஸீதாபதிம் ஸுன்த³ரம்
காகுத்ஸ்த²ம் கருணார்ணவம் கு³ணனிதி⁴ம் விப்ரப்ரியம் தா⁴ர்மிகம் ।
ராஜேன்த்³ரம் ஸத்யஸன்த⁴ம் த³ஶரத²தனயம் ஶ்யாமலம் ஶான்தமூர்திம்
வன்தே³ லோகாபி⁴ராமம் ரகு⁴குல திலகம் ராக⁴வம் ராவணாரிம் ॥ 26 ॥

ராமாய ராமப⁴த்³ராய ராமசன்த்³ராய வேத⁴ஸே ।
ரகு⁴னாதா²ய நாதா²ய ஸீதாயா: பதயே நம: ॥ 27 ॥

ஶ்ரீராம ராம ரகு⁴னந்த³ன ராம ராம
ஶ்ரீராம ராம ப⁴ரதாக்³ரஜ ராம ராம ।
ஶ்ரீராம ராம ரணகர்கஶ ராம ராம
ஶ்ரீராம ராம ஶரணம் ப⁴வ ராம ராம ॥ 28 ॥

ஶ்ரீராம சன்த்³ர சரணௌ மனஸா ஸ்மராமி
ஶ்ரீராம சன்த்³ர சரணௌ வசஸா க்³ருஹ்ணாமி ।
ஶ்ரீராம சன்த்³ர சரணௌ ஶிரஸா நமாமி
ஶ்ரீராம சன்த்³ர சரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 29 ॥

மாதா ராமோ மத்-பிதா ராமசன்த்³ர:
ஸ்வாமீ ராமோ மத்-ஸகா² ராமசன்த்³ர: ।
ஸர்வஸ்வம் மே ராமசன்த்³ரோ த³யால்து³:
நான்யம் ஜானே நைவ ஜானே ந ஜானே ॥ 3௦ ॥

த³க்ஷிணே லக்ஷ்மணோ யஸ்ய வாமே ச (து) ஜனகாத்மஜா ।
புரதோ மாருதிர்யஸ்ய தம் வன்தே³ ரகு⁴னந்த³னம் ॥ 31 ॥

லோகாபி⁴ராமம் ரணரங்க³தீ⁴ரம்
ராஜீவனேத்ரம் ரகு⁴வம்ஶனாத²ம் ।
காருண்யரூபம் கருணாகரம் தம்
ஶ்ரீராமசன்த்³ரம் ஶரண்யம் ப்ரபத்³யே ॥ 32 ॥

மனோஜவம் மாருத துல்ய வேக³ம்
ஜிதேன்த்³ரியம் பு³த்³தி⁴மதாம் வரிஷ்டம் ।
வாதாத்மஜம் வானரயூத² முக்²யம்
ஶ்ரீராமதூ³தம் ஶரணம் ப்ரபத்³யே ॥ 33 ॥

கூஜன்தம் ராமராமேதி மது⁴ரம் மது⁴ராக்ஷரம் ।
ஆருஹ்யகவிதா ஶாகா²ம் வன்தே³ வால்மீகி கோகிலம் ॥ 34 ॥

ஆபதா³மபஹர்தாரம் தா³தாரம் ஸர்வஸம்பதா³ம் ।
லோகாபி⁴ராமம் ஶ்ரீராமம் பூ⁴யோபூ⁴யோ நமாம்யஹம் ॥ 35 ॥

ப⁴ர்ஜனம் ப⁴வபீ³ஜானாமர்ஜனம் ஸுக²ஸம்பதா³ம் ।
தர்ஜனம் யமதூ³தானாம் ராம ராமேதி க³ர்ஜனம் ॥ 36 ॥

ராமோ ராஜமணி: ஸதா³ விஜயதே ராமம் ரமேஶம் பஜ⁴ே
ராமேணாபி⁴ஹதா நிஶாசரசமூ ராமாய தஸ்மை நம: ।
ராமான்னாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தா³ஸோஸ்ம்யஹம்
ராமே சித்தலய: ஸதா³ ப⁴வது மே போ⁴ ராம மாமுத்³த⁴ர ॥ 37 ॥

ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ।
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம நாம வரானநே ॥ 38 ॥

இதி ஶ்ரீபு³த⁴கௌஶிகமுனி விரசிதம் ஶ்ரீராம ரக்ஷாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।

———-

ஶ்ரீராம ஜயராம ஜயஜயராம ।

திருவாரூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டையிலிருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் அமைந்துள்ளது தில்லைவிளாகம் திருத்தலம். இங்கே அமைந்துள்ள கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் தெய்வீகப் பொலிவுடன் திகழும் இராம விக்ரகம் – மிகவும் பிரசித்தம். தில்லைச் சிதம்பரத்தில் நடராஜரோடு சேர்ந்து கோவிந்தராஜருக்கும் சன்னிதி இருப்பதுபோல, இங்கு நடராஜருக்கு சந்நிதி உண்டு. இத்தலத்திற்கு “ஆதி தில்லை” என்றும் பெயருண்டு.

“ராம சரம்” என்னும் அம்பினை ஒரு கையில் ஏந்தியவாறு, ஜானகி அன்னையுடனும், தம்பி இலக்குவனுடனும் நின்ற கோலத்தில் மட்டுமே விளங்குவதால் “தில்லை சித்ரகூடம்” என இத்தலம் வழங்கப்படும்.

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை
எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற் றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே.

என்று பத்தாம் திருமொழியில், குலசேகர ஆழ்வார் பாடும் “தில்லை சித்ரகூடம்” இவ்விடம்தான் என்பது தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் கூற்று.

“எம்பார்” கோவிந்த தாசர், இராமனுஜருடைய “திருவடி நிழல்”(இராமனுஜ கோவிந்த தாசர்)  எனப்பெயர் பெற்றவர். “சிம்மாசலம் வராக நரசிம்மர் பாமாலை”, “மங்களகிரி பானக நரசிம்மர் பாமாலை”ஆகிய பாடற்தொகுதிகளை இயற்றியுள்ளார். சோழ நாட்டுத் திருத்தலங்களை பெரிதும் பாடியிருக்கும் இவரது பாடல்களில், தில்லை விளாகம் இராமபிரானப் பாடும் பாடலொன்றை இங்கே பார்க்கலாம்.

இராகம்: தன்யாசி
தாளம்: ரூபகம்

பல்லவி
தில்லை விளாகம் ராமனைக் கண்டால்
இல்லை யென்றாகும் நம் வினைகளே

அனுபல்லவி
தொல்லை நோய்களைத் தொலைக்கும் வில்லினை
அல்லும் பகலும் தரித்த நம் தலைவனை

சரணம்
சோழ நாட்டிலே சோற்றுக் கலைவதா
தாழ வந்த நம் ராமனை மறப்பதா
ஏழை என்றாலும் உள்ள ஜீவனில்லையோ
நாழியும் மறவா நம் நாதனில்லையோ
(மத்யம காலம்)
கோவிந்த நாமனை காவிரி நாடனை
சேவிக்க வேணும் ஜானகி ராமனை

பத்தாம் திருமொழியில், குலசேகர ஆழ்வார் பாடும் “தில்லை சித்ரகூடம்” இவ்விடம்தான் என்பது தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் கூற்று

சிம்மாசலம் ஸ்ரீ லக்ஷ்மி வராஹ நரசிம்ஹ பெருமாள்

இந்த கோயில் விசாகப்பட்டினத்திற்கு அருகில் கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப் பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது.

மலையடிவாரத்திலிருந்து மேலே செல்வதற்கு வண்டியில் இருபது நிமிடம் பிடிக்கிறது. படியில் ஏறிச் செல்ல விரும்புவோர் 1000 படிகள் எற வேண்டும்.
விஷ்ணு பக்தனான தன் மகன் பிரகலாதனைக் கொல்ல இரண்யகசிபு எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவை பயனற்றுப்போன நிலையில், பிரகலாதனைக் கடலில் வீச ஆணையிட்டான்.ஆனால், அவ்வாறு வீசும்போது விஷ்ணு அந்த மலைமீது இறங்கி பிரகலாதனைக் காத்தார்.
அதுதான் சிம்மாத்ரி (இன்றைய சிம்மாச்சலம்). முனிவர்கள் பக்தர்களின் வேண்டுகோளின்படி வராக நரசிம்மராக அங்கேயே குடிகொண்டார்.

வராஹ நரசிம்மரின் கட்டளைப்படி இன்றுவரை சந்தன மேனியுடனே நரசிம்மர் காட்சியளிக்கிறார். வைகாசி மாதம் வளர் பிறையில் மூன்றாம் நாள் சந்தன பூச்சு விலக்கப்பட்டு நரசிம்மரின் உண்மை தரிசனம் காட்டப்படுகிறது.

மற்ற நாட்களில் சந்தனகாப்பிட்ட தரிசனம் தான்.

சந்தனகாப்பு என்றால் எவ்வளவு தெரியுமா?
வைகாச சுக்ல த்ருதீயை, வைகாச பவுர்ணமி, ஜ்யேஷ்ட பவுர்ணமி, ஆஷாட பவுர்ணமி என்று வருஷத்தின் நான்கு தடவைகள், சுமார் 500 கிலோ சந்தனம் சாத்துகிறார்கள்.

எல்லா நாட்களும் சந்தனகாப்புடன் காட்சியளிக்கிறார் இந்த வராஹ நரசிம்மர்  என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ராமானுஜர் ஸ்ரீ கூர்மத்தில் வைணவத்தை நிலைநாட்டியபின், தெற்கே அடுத்த தலமான சிம்மாசலமான இம்மலையை அடைந்தார்.

விசாகப்பட்டினத்திற்கு பதினைந்து மைல் தூரத்தில் இருக்கும் மலைக் கோயில் இது.
இங்கு கோயில் கொண்டிருக்கும் வராக நரசிம்மர், பின்னாளில் ஹிரண்யகசிபுவை வதைத்தபின் இங்கு பிரஹலாதன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வராக முகத்துடன் மனித உடலோடு, சிங்கத்தின் வால்கொண்டு, வராக நரசிம்மனாக காட்சி அளிக்கிறார்.

பிரஹலாதன் பெருமாள் காத்தருளிய அந்த இடத்தில் நரசிம்மருக்கு கோயிலைக் கட்டிய இடமே சிம்மாசலம்.

பெருமாளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

அருகிலேயே சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள்.

வெளியே வந்து காங்கதாரா அருவி, எங்கிருந்து வருவதென்று தெரியவில்லை.

ஐந்து இடங்களில் சிறிய முகத்துவாரம் வழியாக வருவதை தலையில் தெளித்துக்கொள்ளலாம்.

சனக, சனந்தன, சனாத, சனத்குமாரர்களுக்கும், தேவர்கள், நாரதர், ரிஷிகளுக்கும், இவர்  தரிசனமளித்ததாக தலபுராணம் கூறுகிறது.

இங்குள்ள நரசிம்ம தீர்த்தம், கங்காதாரா தீர்த்தம் எனும் இரு அருவிகளிலும் நீராடி வராஹநரசிம்மரை வணங்க தீரா நோய்கள் தீர்ந்து பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.

உடல் வளமும் உள்ள வளமும் பெற இந்த வராஹ லட்சுமிநரசிம்மர் பேரருள்  புரிகிறார்.

————-
ஸ்ரீ மங்களகிரி பானக நரஸிம்ஹர்
மங்களகிரி என்றால் மங்களகரமான மலை என்று பொருள். மங்கள+கிரி=மங்களகிரி.
இந்தியாவில் உள்ள பல பெருந்தலங்களில் இதுவும் ஓன்று.
ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்வதால் இந்த மலை மங்களகரமான மலை எனப் பெயர் பெற்றது.
மங்களகிரியில் மொத்தம் மூன்று நரசிம்ம சுவாமி கோயில்கள் உள்ளன.
ஒன்று, மலையில் அமைந்துள்ள பானக நரசிம்மர் சுவாமி கோயில்.
இரண்டு, மலை அடிவாரத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்.
மூன்றாவது, மலை உச்சியில் உள்ள கண்டல நரசிம்ம சுவாமி ஆகும்.
இந்த மலை யானை வடிவில் அமைந்துள்ளது.
எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இம்மலை யானை வடிவிலேயே காண்பது இதன் தனிச் சிறப்பாகும்.
இம்மலை உருவான கதை மிகவும் சுவாரசியமானது. பழங்காலத்தில் பாரியாத்ரா என்ற ஒரு அரசன் இருந்தான்.
அவனது மகன் ஹரஸ்வ ஸ்ருங்கி பல புனித இடங்களுக்கும் சென்று தவம் புரிந்து கடைசியில் புனிதத் தலமான மங்களகிரியை வந்தடைந்தான்.
அங்கு மூன்று ஆண்டு காலம் கடுமையான தவம் புரிந்தான்.
அப்பொழுது அனைத்து தேவர்களும் தோன்றி அவனிடம் அங்கேயே தொடர்ந்து தவம் புரியுமாறு கூறினர்.
அவனும் ஸ்ரீமகாவிஷ்ணுவை நினைத்து தியானம் செய்தான்.
அப்பொழுது அவனது தந்தையான பாரியாத்ரா தன் மகனை தன்னோடு அழைத்துச் செல்ல வந்தான்.
ஆனால், ஹரஸ்வ ஸ்ருங்கியோ யானை வடிவம் பெற்ற மலையாக மாறி பகவான் ஸ்ரீமகா விஷ்ணுவின் இருப்பிடமாக உருவெடுத்தான்.
திருமால் நரசிம்ம வடிவில் அங்கு எழுந்தருளினார். அங்குள்ள மக்கள் அந்த இறைவனை பானக நரசிம்ம சுவாமி என்று அழைத்தனர்.
மகாவிஷ்ணு ஒரிசா மாநிலத்தின் பூரி க்ஷேத்திரத்தில் ஜகந்நாதராக நின்று உணவருந்திவிட்டு,
ஆந்திர மாநிலத்து சிம்மாசலத்தில் உடலை சந்தனக் குழம்பில் குளிர வைத்துக்கொண்டு,
மங்களகிரியில் பானகம் அருந்தி,
திருப்பதியில் ஆட்சி செய்துகொண்டு,
ஸ்ரீரங்கத்தில் சயனித்திருந்து ஜகத்கல்யாண மூர்த்தியாகத் திகழ்வதாகப் புராணங்கள் கூறுகிறது.
திருமால் இரண்யனை வதம் செய்து தன் பக்தன் பிரகலாதனைக் காக்க தூணில் தோன்றிய கணநேர அவதாரம் நரசிம்ம அவதாரம்.
சிம்ம முக நரசிம்மர் அருட்பாலிக்கும் கோயில்கள் பல உண்டு.
அவற்றில் ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவிலிருந்து குண்டூர் செல்லும் சாலையில் 26 கி.மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும்
மங்களகிரி என்ற புனிதத் தலத்திலுள்ள மலைக் குகைக்கோயில் தனிச்சிறப்பு வாய்ந்தது.
சங்கு சக்கரத்தை இரு கைகளில் ஏந்தி, வாய் திறந்த முகம் மட்டும், தானாகத் தோன்றிய ஸ்வம்வ்யக்த அதாவது
தானே தோன்றிய மூர்த்தமாக அமைந்து, பக்தர்கள் நிவேதனம் செய்யும் பானகத்தில் பாதியை மட்டும் அருந்தி
அருட்பாலிக்கும் பானக நரசிம்மர் கோயில் அது.

பாரதத்திலுள்ள மலைகளில் மஹேந்திரம், மலையம், ஸஹ்யம், சுக்திமான், ருக்‌ஷம், விந்தியம், பாரியாத்ரம் என்பவை
ஸப்த  குல பர்வதங்கள் என விஷ்ணு புராணம் கூறுகிறது.
ஸர்வ சுகஸ்வ ரூபிணியான மகாலட்சுமி அமிர்தத்தை மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து தவக்கோலத்தில்
நின்றதன் காரணமாக, பாரியாத்ர பர்வதத்திற்கு மங்களகிரி என்ற பெயர் வந்தது.
ஹஸ்திகிரி, தர்மாத்ரி, கோத்தாத்ரி, முக்தியாத்ரி என்பவை அதன் ஏனைய பெயர்கள் என புராணங்கள் கூறுகின்றன.
வேத புராணத்தில் இத்தலத்திற்கு சபலதா என்ற பெயரும் உள்ளதாக சொல்லியிருக்கிறது.
இந்த மலைப் பிராந்தியத்தில் மேய்ந்து வந்த பசு ஒன்று தினமும் மாலையில் பாலின்றி திரும்புவதைக் கண்ட
பசுவின் சொந்தக்காரன் அதைக் கண்காணித்தபோது, ஒருநாள் மாலை வேளையில் நிழல் உருவம் ஒன்று
பசுவின் பாலை அருந்திவிட்டு குகையொன்றில் சென்று மறைவதைக் கண்டான்.
அன்றைய இரவு அவனது கனவில் மகாலட்சுமி சமேதராய் நரசிம்மர் தோன்றி,
மொமூச்சி என்ற கொடிய அரக்கனுக்காகத் தாம் அந்தக் குகையினுள் மறைந்திருப்பதாகக் கூறினார்.
மறுநாள் பசுவின் சொந்தக்காரன் அந்தக் குகை துவாரத்தில் தனது பசுவின் பாலை ஊற்ற,
அதில் பாதி பிரசாதமாக வெளியே வழிந்ததை அவன் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றான்.
இந்தச் சம்பவத்தை அவன் அந்தப் பிராந்தியத்தை ஆண்டு வந்த திரிலோக விஜயன் என்ற அரசனிடம் கூற,
அரசன் நரசிம்மருக்கு குகை மீது கோயில் கட்டியதாக பானக நரசிம்ம தலத்தின் புராணம் கூறுகிறது.
கொடிய அரக்கனான மொமூச்சி கொட்டைப் பாக்கில் பொருந்திய ஊசி முனைமீது ஒற்றைக்கால் கட்டை விரலில்
சூரியனை நோக்கி நின்று கொண்டு கைகூப்பி பிரம்மனைக் குறித்து தவம் செய்தபொழுது,
அந்த தவவலிமையில் ஈரேழு புவனங்களும் ஆடின.
இதையடுத்து அன்ன வாகனத்தின் மீது அமர்ந்து நொமூச்சிக்கு காட்சி தந்த பிரம்மன்,
எந்த மானிடனாலோ அல்லது ஆயுதத்தினாலோ தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என்று அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தருளினார்.
இதைத் தொடர்ந்து தேவர்களைத் துன்புறுத்தி வந்த நொமூச்சியிடமிருந்து தம்மைக் காக்கத் தேவர்கள் திருமாலிடம் முறையிட,
திருமாலும், நரசிம்மராக மங்களகிரி குகைக்குள் தங்கியிருந்தது, மொமூச்சியை எதிர்நோக்கி நின்றார்.
அச்சமயம் இந்திரன் விடுத்த சக்ராயுதத்தை நரசிம்மர் தனது நகங்களில் ஏற்றுக்கொண்டு
குகையருகில் மொமூச்சியை சம்ஹாரம் செய்தருளினார் என ஈசன் உமையவளுக்குக் கூறியதாக,
பிரம்ம வைவர்த்த புராணத்தின் பவானி சங்கர கீதை கூறுகிறது.
இதன் காரணமாகவோ என்னவோ, இத்தல நரசிம்மரது நகங்கள் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகக் கருதப்படுகின்றன.
தொடர்ந்து குகையில் தங்கிய நரசிம்மரது உக்ரம் தணியாமல் தகிக்க,
பிரம்மன், நாரத மகரிஷி மற்றும் இந்திராதி தேவர்கள் அவரை தோத்திரங்களால் துதிக்க,
நரசிம்மர், ஆகாய கங்கையில் நீராடி, தேவர்களை அமிர்தத்தை எடுத்து வரச்சொல்லி அருந்திவிட்டு,
அதில் பாதி அமிர்தத்தைப் பிரம்மாதி தேவர்களுக்குப் பிரசாதமாக அளித்தார்.
அச்சமயம் அவரது உக்ரம் தணியத் தொடங்கியதாம்.
அவ்வாறு கிருதயுகத்தில் அமிர்தத்தை அருந்திய உக்ர நரசிம்மர்
திரேதாயுகத்தில் பசு நெய்யையும், துவாபர யுகத்தில் பசுவின் பாலையும்,
நிகழும் கலியுகத்தில் பானகத்தையும் அருந்தி சாந்தமாக நின்று அருட்பாலிப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு திருமால் பானக நரசிம்மராக வீற்றிருக்கும் குகைக்கோயில் மங்களகிரியிலுள்ள மலை மீது சுமார் 800 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
அகன்ற நானூறு படிகளின் வழியாக சிரமமின்றி ஏறி, பானக நரசிம்மர் கோயில் சந்நதியை அடையலாம்.
மலையடிவாரத்தில் கோயில் கொண்டிருக்கும் பிரமராம்பிகை சமேத மல்லேஸ்வரரையும்,
தொடர்ந்து அருகில் கருடாழ்வாரையும் தரிசித்து விட்டு பக்தர்கள் மலை ஏறத் தொடங்குகின்றனர்.
சுமார் 50 படிகள் ஏறியபின் மேற்கு நோக்கி நின்று அருள்புரியும் வேங்கடேஸ்வர ஸ்வாமியைத் தரிசிக்கிறோம்.
ஒரு சமயம் சர்வசுந்தரி என்ற அப்ஸரஸ் பெண் இட்ட சாபத்தினால் நாரத மகரிஷி பால் விருட்சமாக மாறி நின்றார்.
புத்திரப்பேறு கிடைக்காத பெண்கள் ருதுஸ்நானம் முடிந்த தினம் அப்பால் விருட்சத்தைச் சுற்றி வந்து பழங்களை விநியோகம் செய்ய,
அவர்களுக்குப் புத்திரகடாட்சம் ஏற்படும் என்ற நம்பிக்கை இங்குள்ள மக்களிடையே நிலவுகிறது.
வேங்கடேஸ்வர ஸ்வாமி சந்நதியருகே வளர்ந்த பால் சொட்டு செடியை பிற்காலத்தில்
மலையடிவாரத்திலுள்ள கருடாழ்வார் சந்நதியருகில் நட்டதாகக் கூறப்படுகிறது.
வேங்கடேஸ்வரரைத் தரிசித்து, தொடர்ந்து படி ஏறிச் சென்றால் துவஜஸ்தம்பம் அருகே நெய் தீபம் ஏற்றச் சொல்கிறார்கள்.
இந்த விளக்கில் முன்னூற்று அறுபத்தைந்து திரிகள் இருப்பதாகவும்,
ஒரு தீபம் ஏற்றினால் ஒர் ஆண்டு தீபம் ஏற்றிய பலன் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். தீபம் ஏற்றும் இடம் தூய்மையாக இருக்கிறது.
இதே இடத்தில்தான் பானகச் சீட்டை விலை கொடுத்து வாங்க வேண்டும்.
அர்த்த மண்டபத்துடன் உள்ளே தீப ஒளி மட்டும் வீசும் இருள் சூழ்ந்த குகை சந்நதியை அடைகிறோம்.
இக்குகை கருவறைச் சுவரில் அமைந்த பெரிய பிறை ஒன்றில் மேற்கு திசை நோக்கி பானக நரசிம்மர்,
சங்கு – சக்கரத்தை இரு கைகளில் ஏந்தி, பல் வரிசைகள் வெளியே தெரியும். சிம்ம முகவாய்
அகன்று திறந்த வண்ணம் முகத்துடன் மட்டும் ஸ்வயம் வ்யக்த மூர்த்தமாகக் காட்சி தருகிறார்.
இந்தப் பானக நரசிம்மருக்கு பிரத்யேக உருவம் கொண்ட விக்ரகம் எதுவும் கிடையாது.
ஆனால் 15 செ.மீ. அகலம் உடைய வாய்ப்பகுதி மட்டும் உண்டு. கடவுளின் இந்த வாய்ப்பகுதியானது வெங்கலத் தகட்டினால் சுற்றி மூடப்பட்டிருக்கும்.
இந்தக் கோயில் உச்சி காலம் வரையே திறந்து வைக்கப்படும். ஏனென்றால் இரவில் தேவதைகள் வந்து பூஜை செய்வதாக ஐதீகம்.
அங்குள்ள அந்த நரசிம்ம சுவாமியின் வாயில் பானகம் எனப்படும் வெல்லம் கரைத்த நீர் தீர்த்தமாக விடப்படும்.
அப்படி விடும் பொழுது இறைவன் அதை நிஜமாகவே பருகுவது போல் “மடக் மடக்” என பருகும் சத்தம் கேட்கும்.
சற்று நேரம் கழித்து அந்த சத்தம் நின்று விடும். அப்படி அந்த சத்தம் நின்றதும் மிச்சம் உள்ள பானகம் அப்படியே வாய்வழியாக வெளியேறிவிடும்.
இது ஒரு நாள், இரு நாள் நடைபெறும் அதிசயம் அல்ல.
தினந்தோறும் எப்பொழுதெல்லாம் பக்தர்கள் நரசிம்மருக்கு பானகத்தை படைக்கின்றனரோ
அப்பொழுதெல்லாம் இந்த அதிசயம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
இப்படி இறைவன் வாயிலிருந்து வெளிவரும் பானகத்தை முக்கிய பிரசாதத் தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.
கருவறைக்கு வெளியே மகாமண்டபத்தில் கோயில் சிப்பந்திகள் பானக நிவேதனம் செய்ய விரும்பும் பக்தர்கள் சார்பில்
அவ்வப்போது பானகத்தைக் கரைத்து செம்பிலோ, சிறிய அல்லது பெரிய குடத்திலோ நிரப்பி சந்நதிக்கு எடுத்து வருகின்றனர்.
பானக அளவுக்குத் தக்கபடி இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சந்நதியிலுள்ள வைஷ்ணவ பட்டர் பெரிய வலம்புரி சங்கினால் திறந்த வாய்க்குள் ஊற்ற,
இப்புனித பானகம் உள்ளே சென்று மறைந்து விடுகிறது.
பானக பாத்திரத்தின் கொள்ளளவு எதுவாக இருந்தாலும், நிவேதனத்துக்கு எடுத்துச் செல்லும் பானகத்தில் பாதியளவு மட்டுமே வாய்க்குள் செல்கிறது. தொடர்ந்து ஊற்றப்படும் பானகம் வெளியே வழிந்துவிட, அவ்வாறு மீறும் பானகத்தை அந்த பக்தருக்குப் பிரசாதமாகக் கொடுத்து விடுகின்றனர்.
பானகமே பிரதான பிரசாதம். இதனால் இந்த கடவுளுக்கு பானக நரசிம்மர் என்று பெயர் வந்தது.
அவ்வாறு புனித பானகம் தயார் செய்யும் இடத்தில் நீருடன் கலந்த வெல்லத் துண்டுகள் கீழே சிதறிக் கிடந்த போதிலும், அங்கு ஈக்கள் மொய்க்காதது இத்தலத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும்.
இந்தப் பானகத்தைத் தயாரிப்பதற்கு இம்மலைக் கோயிலின் கிழக்கேயுள்ள கல்யாணஸரஸ் என்ற சுனையிலுள்ள நீரே உபயோகிக்கப்படுகிறது.
தேவர்கள் கட்டியதாகக் கருதப்படும் இச்சுனையில் சகல புண்ணிய தீர்த்தங்களும் கலந்துள்ளனவாம்.
மோட்சகாரகராக நின்றருள் புரியும் பானக நரசிம்மரைத் தரிசித்து பானக பிரசாதத்தை அருந்தி விட்டு,
இக்கோயிலின் அருகேயுள்ள ஐம்பது படிக்கட்டுகளில் ஏறி தாயார் ராஜ்ய லட்சுமி சந்நதியை அடையலாம்
வைரக்கண் மலர்களும் வைர பிறை சந்திரன் பொட்டும், நெற்றியில் துலங்க,
மகாலட்சுமி ராஜ்யலட்சுமி என்ற திருப்பெயருடன் கைகளில் பத்மமும், வரத அபய முத்திரைகளுடனும் ஸ்வயம் வ்யக்த மூர்த்தமாக காட்சி தருகிறாள்.
அஷ்ட ஐஸ்வர்ய ப்ரதாயினியான மகாலட்சுமி இங்கு ஞான பிரதாயினியாக விளங்குவதால்,
ராஜ்யலட்சுமியை ஆந்திர மக்கள் மாறு கொண்ட லெக்ஷ்மம்மா என்று பரிவுடன் அழைக்கின்றனர்.
ராஜ்யலட்சுமி சந்நதிக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் இத்தலத்தின் க்ஷேத்ரபாலராக விளங்கும் ஆஞ்சநேயர்
நின்ற கோலத்தில் கல்லில் செதுக்கப்பட்டு வண்ணச் சிறப்புமாகக் காட்சி தருகிறார்.
ராமபிரான் ராவண யுத்தம் முடிந்து திரும்பும் வழியில் அனுமனை இத்தலத்தில் க்ஷேத்ரபாலராகத் தங்கி இருக்கும்படி அருளாசி கூறினாராம்.
ராஜ்யலட்சுமி சந்நதிக்குக் கிழக்கே ஒரு சிறு சந்நதியில் வல்லபாசார்யார் மூர்த்தத்துடன் தியான பீடம் அமைந்துள்ளது.
ராஜ்யலட்சுமி சமேத நரசிம்மரைப் பூஜித்து வந்த வல்லபாசாரியார், இங்குள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து தியானித்து ஞானஒளி பெற்று
ராஜஸ்தான், காஷ்மீர், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய வடமாநிலங்களில்
இந்துமத தர்ம சித்தாந்தங்களைப் பிரசாரம் செய்து அருந்தொண்டு புரிந்தார்.
இதையடுத்து அத்தியான பீடம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ராஜ்யலட்சுமி சந்நதியின் மேற்குபுறமாக சிறு கோயிலில், அழகான சிறிய பள்ளிகொண்ட ரங்கநாதரது மூர்த்தம் சந்நதி கொண்டுள்ளார்.
இச்சந்நதியில் நித்யபூஜை நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
இச்சந்நதிகளைத் தாண்டி, மலைமீது கண்டால்ராயன் கூண்டு என்ற குகை அறையில் தீபம் ஒன்று உள்ளது.
இத்தீபத்தில், கன்றை ஈன்ற பசு அல்லது எருமை சுரக்கும் முதல் மாத பாலிலிருந்து எடுத்த நெய்யை ஊற்றி எரிய விடுபவர்களது
கால்நடைக்கு பால் அதிகம் சுரக்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவுகிறது.
இத்தீப ஒளியை ஏற்றி தரிசிப்பவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் கண்டங்களும், கஷ்டங்களும் தீரும் எனக் கருதப்படுகிறது.
குசிகுமாரன் என்ற பெண் பித்தன் தான் நெருங்கிய வேசிகள் நரசிம்மரிடம் அதிக பக்தி கொண்டிருந்தது
தனக்கு இடையூறாக இருந்ததைக் கண்டு, கோபம் கொண்டு நரசிம்மரை நிந்தனை செய்தான்.
அன்றிரவு அவனது கனவில் நரசிம்மர் தோன்றி அவனுக்கு அருள் கூர்ந்ததையடுத்து,
மறுநாள் தீபத்தை ஏற்றி ஞானஒளி பெற்றான் என்பது ஒரு கதை.
மங்களகிரி மலையடிவாரத்தில் அமைந்த பெரிய கோயிலில் மகாவிஷ்ணு லட்சுமி நரசிம்மராக சந்நதி கொண்டுள்ளார்.
ராஜா வாஸிரெட்டி வேங்கடாத்ரி நாயுடு என்ற செல்வந்த பிரபு கட்டிய பதினொன்று அடுக்குகளைக் கொண்டு
குறுகலாக, உயரமாக அமைந்த ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால்,
நான்கு சக்கரங்கள் பூட்டிய ரதம் போன்றமைந்த சிறிய சந்நதியில் கருடாழ்வாரைத் தரிசிக்கலாம்.
உள்ளே கருவறையில் நரசிம்ம ரூபமாக மகாவிஷ்ணு மகாலட்சுமியை மடித்த தன் இடது, தொடை மீது அமர்த்தி அணைத்துக்கொண்டு,
இரு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தி வரத அபய முத்திரைகள் தாங்கிய வலது கரத்துடன்,
நூற்றெட்டு சாளக்கிராமங்களாலான மாலை அணிந்து, வலதுகாலைத் தொங்க விட்டு லட்சுமி நரசிம்மராகக் காட்சி தருகிறார்.
ஆதிசங்கரர் கயிலாயத்திலிருந்து கொண்டுவந்த மந்திர சாஸ்திர ஆதார நூல்களில்
பிரபஞ்சஸாரம், மந்த்ர மஹார்ணவம், மந்திரமஹோததி ஆகியவை பிரசித்தி பெற்றவை.
பிரபஞ்சஸாரத்தில் மகாவிஷ்ணு நரசிம்மருஷி என்றே குறிப்பிடப்பட்டுள்ளார்.
கூரநாராயண ஜீயர் இயற்றிய சுதர்சன சதகத்தில் நரசிம்மரது உருவ லட்சணங்களின் வர்ணனையில்,
ஜ்வாலாகேசமும் த்ரிநேத்ரமும் (முக்கண்கள்) பிரதான அம்சமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
லட்சுமி நரசிம்மரது மூன்றாவது கண் அவர் நெற்றியில் துலங்கும் சிவப்பு திருமண்ணின் கீழ் மறைந்திருப்பதாக ஐதீகம்.
லட்சுமி நரசிம்மர் மூர்த்தத்தின் அருகே வைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஆதிபுருஷரான வைகானஸ மகரிஷி மூர்த்தமாக அமர்ந்துள்ளார்.
தவிர லட்சுமி நரசிம்மர், நரசிம்மர், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரது பஞ்ச லோக மூர்த்தங்கள் இச்சந்நதியிலுள்ளன.
இக் கோயிலில் பெரிய தட்சிணாவர்த்த வலம்புரிசங்கு ஒன்று உள்ளது.
முந்நாளைய திருவாங்கூர் சமஸ்தான மன்னர் வஞ்சிமார்த்தாண்ட வர்மா காணிக்கையாகக் கொடுத்த
இச்சங்கில் ஓங்கார நாதம் கேட்பதாகக் கூறப்படுகிறது. விழாக்காலங்களில் இச்சங்கு உபயோகிக்கப்படுகிறது.
லட்சுமி நரசிம்மரின் கருவறைக்கு வெளியே மகாமண்டபத்திலுள்ள ஒரு சிறு அறையில்
பன்னிரெண்டு ஆழ்வார்களின் சிலாமூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன.
சந்நதிக்கு வெளியே கோயில் வடக்குப் பிராகாரத்தில் அமைந்த அழகிய சிறு கோயிலில், வைரக் கண் மலர்களும்,
கரங்களில் பத்மம் ஏந்தி, வரத அபயக் கரங்களுடன் பத்மாஸன கோலத்தில் கம்பீரமாக வீற்றிருந்து ராஜ்யலட்சுமி அருட்பாலிக்கிறாள்.
இக்கோயிலில் விநாயகர், கோதண்டராமர், கோதண்டராமர், வாஸவி, கன்னிகா பரமேஸ்வரி, லட்சுமி சமேத ஸத்ய நாராயண சுவாமி ஆகியோரது சிறிய சந்நதிகளும் உள்ளன.
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் இக்கோயிலில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்து பூஜித்ததாகக் கூறப்படுகிறது.
தர்மரது கனவில் நரசிம்மர் தோன்றி தன்னைப் பிரதிஷ்டை செய்து ஆலய நிர்மாணம் செய்யும்படி அருளாசி கூறியதாகப் பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.
கடந்த எட்டாவது நூற்றாண்டில் ஆதிசங்கரர் மங்களகிரிக்கு விஜயம் செய்தார்.
மண்டனமிச்ரரின் மனைவியும் கலைமகளின் அம்சமுமான அவரது மனைவி உபயபாரதி விடுத்த கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒரு மாத அவகாசம் கேட்டு, காம சாஸ்திரத்து நுணுக்கங்களை அறிய, இறந்த அபமருகராஜன் என்ற மன்னனது பூத உடலில் பரகாய பிரவேசம் செய்தார் ஆதிசங்கரர்.
இதை அறிந்த அரசனது ஆட்கள், சீடர்கள் மறைத்து வைத்திருந்த ஆதிசங்கரரது பூத உடலைத் தேடிக் கண்டுபிடித்து நெருப்பு வைத்து விட்டனர்.
இது தெரிய வந்த ஆதிசங்கரர் அரசனது உடலினின்று நீங்கி தனது உடலில் பிரவேசித்தபொழுது, அவரது உடலின் கைப்பாகம் தீயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
தன் கைகளில் ஏற்பட்ட ரண உபாதையை நீக்கி தன்னைக் கைதூக்கி விடும்படி இத்தலத்தில் லட்சுமி நரசிம்மரைத் துதித்து, லட்சுமிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பாடினார் என்று கூறப்படுகிறது.
கடந்த பதின்மூன்றாம் நூற்றாண்டில் சைதன்ய மகாப்பிரபுவும்,
பின்னர் ராமானுஜர், மத்வாசாரியார் ஆகிய பெரியோர்கள் மங்களகிரி நரசிம்மரைத் தரிசித்துச் சென்றுள்ளனர்.
போருக்குச் செல்லுமுன் நரசிம்மரைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்ட விஜயநகர சக்ரவர்த்தி கிருஷ்ணதேவராயர்
கடந்த பதினான்காம் நூற்றாண்டில் கொண்டபள்ளி பிராந்தியத்தை வென்றுவிட்டு, அதற்கு காணிக்கையாக நிலமும், பொன்னும் இக்கோயிலுக்கு அளித்தார்.
மங்களகிரி நரசிம்மர் கோயிலில் வைகானஸ சம்பிரதாயமே அனுஷ்டிக்கப்படுகிறது.
பங்குனி மாத பௌர்ணமியன்று நரசிம்ம ஜெயந்தி உற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெறுகிறது.
ஆவணி பௌர்ணமியில் வைகானஸ உற்சவமும்,
மாசி மாதம் பீஷ்ம ஏகாதசியையொட்டி பிரம்மோற்சவம், தெப்போற்சவம்,
நவராத்திரி, கார்த்திகை பௌர்ணமி ஆகிய நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
மங்களகிரி கல்யாணஸரஸ் சுனையில் நீராடுவதும், இத்தலத்தில் ஒருநாள் ஜபதபங்கள் செய்வதும் ஜீவன் முக்திக்கு வழிகோலும் என்றும்,
பிரம்மஹத்தி தோஷம் நீங்கக்கூடும் என்றும் பவானி சங்கரகீதை கூறுகிறது.
இதையொட்டி மங்களகிரி ஒரு மோட்ச தலமாக இருந்து, முக்திகிரி என்ற பெயரைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகே உள்ள குண்டூரிலிருந்து13 கி.மீ. தூரத்தில் மங்களகிரி உள்ளது.

——————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ சீதா பிராட்டி சமேத சக்ரவர்த்தி திருமகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பானக லஷ்மீ நரஸிம்ஹர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸிம்ஹாஸல லஷ்மீ வராஹ நரஸிம்ஹ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ந்ருஸிம்ஹ த்வாதச நாம ஸ்தோத்ரம்–ருண விமோசன ஸ்தோத்ரம்

December 23, 2022
ஸ்ரீ ந்ருஸிம்ஹ த்வாதச நாம ஸ்தோத்ரம்
ப்ரதமஸ்து  மஹோஜ்வாலோ
த்விதீயஸ் தூக்ரகேஸரீ
த்ருதீய : க்ருஷ்ண பிங்காக்ஷ :
சதுர்த்தஸ்து  விதாரண :
பஞ்சாஸ்ய :  பஞ்சமைஸ் சைவ
ஷஷ்ட : கஸிபுமர்தந  :
ஸப்தமோ  தைத்யஹந்தாச
அஷ்டமோ தீநவல்லப :
நவம : ப்ரஹ்லாதவரதோ
தசமோ நந்தஹஸ்தக :
ஏகாதச மஹாரௌத்ரோ
த்வாதஸ : கருணாநிதி :
த்வாதஸைதாநி  நாமாநி
ந்ருஸிம்ஹஸ்ய  மஹாத்மந :

ருண விமோசன ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம்

த்⁴யானம்

வாகீ³ஸா யஸ்ய வத³னே லக்ஷ்மீர்யஸ்ய ச வக்ஷஸி |
யஸ்யாஸ்தே ஹ்ருத³யே ஸம்வித் தம் ந்ருஸிம்ஹமஹம் ப⁴ஜே ||

ஸ்தோத்ரம்

தே³வதா கார்யஸித்³த்⁴யர்த²ம் ஸபா⁴ஸ்தம்ப⁴ ஸமுத்³ப⁴வம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 1 ||

லக்ஷ்ம்யாலிங்கி³த வாமாங்க³ம் ப⁴க்தானாம் வரதா³யகம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 2 ||

ஆந்த்ரமாலாத⁴ரம் ஶங்க²சக்ராப்³ஜாயுத⁴ தா⁴ரிணம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 3 ||

ஸ்மரணாத் ஸர்வபாபக்⁴னம் கத்³ரூஜவிஷநாஶனம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 4 ||

ஸிம்ஹநாதே³ன மஹதா தி³க்³த³ந்தி* ப⁴யநாஶனம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 5 ||

ப்ரஹ்லாத³வரத³ம் ஶ்ரீஶம் தை³த்யேஶ்வரவிதா³ரிணம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 6 ||

க்ரூரக்³ரஹை꞉ பீடி³தானாம் ப⁴க்தாநாமப⁴யப்ரத³ம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 7 ||

வேத³வேதா³ந்தயஜ்ஞேஶம் ப்³ரஹ்மருத்³ராதி³வந்தி³தம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 8 ||

ய இத³ம் பட²தே நித்யம் ருணமோசன ஸஞ்ஜ்ஞிதம் |
அந்ருணே ஜாயதே ஸத்யோ த⁴னம் ஶீக்⁴ரமவாப்னுயாத் || 9 ||

இதி ருண விமோசன ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

———–

தே³வதா கார்யஸித்³த்⁴யர்த²ம் ஸபா⁴ஸ்தம்ப⁴ ஸமுத்³ப⁴வம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 1 ||

தே³வதா கார்யஸித்³த்⁴யர்த²ம் -ப்ரயோஜனாந்தர பரர்களுக்காக
ஸபா⁴ஸ்தம்ப⁴ ஸமுத்³ப⁴வம் |-தூணில் இருந்து அரண்மனையில் சம்பவித்தது அருளின
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்-மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருணம் உக்தயே–அடியேனுடைய ருணம் -கடன் -பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

லக்ஷ்ம்யாலிங்கி³த வாமாங்க³ம் ப⁴க்தானாம் வரதா³யகம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 2 ||

லக்ஷ்ம்யாலிங்கி³த வாமாங்க³ம் -பிராட்டியார் இடது பக்கம் ஆலிங்கனம் செய்து அருளுகிறார்
ப⁴க்தானாம் வரதா³யகம் |–ஆஸ்ரியர்களுடைய அபேக்ஷித்ங்களை நிறைவேற்றி அருளுகிறீர்
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்-மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே -அடியேனுடைய ருணம் -கடன் -பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

——–

ஆந்த்ரமாலாத⁴ரம் ஶங்க²சக்ராப்³ஜாயுத⁴ தா⁴ரிணம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 3 ||

ஆந்த்ரமாலாத⁴ரம் -ஹிரண்யணாதிகள் மார்பகங்களையே மாலையாகத் தரித்தவனே
ஶங்க²சக்ராப்³ஜாயுத⁴ தா⁴ரிணம் –திருக்கரங்களில் சங்கு சக்கரம் தாமரை மற்றைய திவ்ய ஆயுதங்களைத் தரித்தவனே
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்-மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே-பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

———–

ஸ்மரணாத் ஸர்வபாபக்⁴னம் கத்³ரூஜவிஷநாஶனம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 4 ||

ஸ்மரணாத் ஸர்வபாபக்⁴னம் -ஸங்கல்ப லேச மாத்ரத்திலே ஸமஸ்த பாபங்களையும் போக்கி அருளுபவனே
கத்³ரூஜவிஷநாஶனம் -ஸமஸ்த நாக விஷங்களுக்கும் விஷமானவனே
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்–மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே –பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

————————–

ஸிம்ஹநாதே³ன மஹதா தி³க்³த³ந்தி* ப⁴யநாஶனம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 5 ||

ஸிம்ஹநாதே³ன -உமது ஸிம்ஹ கர்ஜனை நாதத்தாலேயே
மஹதா தி³க்³த³ந்தி* ப⁴யநாஶனம் –திக் கஜங்களின் பயங்களைப் போக்கி அருளுபவனே
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்–மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே -பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

———

ப்ரஹ்லாத³வரத³ம் ஶ்ரீஶம் தை³த்யேஶ்வரவிதா³ரிணம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 6 ||

ப்ரஹ்லாத³வரத³ம் -ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு அன்பனாகவே
ஶ்ரீஶம் -மாலோல நரஸிம்ஹ மூர்த்தியே
தை³த்யேஶ்வரவிதா³ரிணம் -அஸூர நிரசன சீலனே
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்-மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே -பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

————–

க்ரூரக்³ரஹை꞉ பீடி³தானாம் ப⁴க்தாநாமப⁴யப்ரத³ம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 7 ||

க்ரூரக்³ரஹை꞉ பீடி³தானாம் -க்ரூர நவக்ரஹங்களின் பிபியில் இருந்து
ப⁴க்தாநாமப⁴யப்ரத³ம் -பக்தர்களை ரக்ஷித்து அபய பிரதம் அளிப்பவனே
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்–மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே –பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

———–

வேத³வேதா³ந்தயஜ்ஞேஶம் ப்³ரஹ்மருத்³ராதி³வந்தி³தம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 8 ||

வேத³வேதா³ந்தயஜ்ஞேஶம் -வேத வேதாந்த யாகங்கள் அனைத்துக்கும் பிரபுவே
ப்³ரஹ்மருத்³ராதி³வந்தி³தம்-ப்ரஹ்ம ருத்ராதிகளால் ஆஸ்ரயிக்கப்படுபவனே
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்-மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே –பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

————-

ய இத³ம் பட²தே நித்யம் ருணமோசன ஸஞ்ஜ்ஞிதம் |
அந்ருணே ஜாயதே ஸத்யோ த⁴னம் ஶீக்⁴ரமவாப்னுயாத் || 9 ||

ருணமோசன ஸஞ்ஜ்ஞிதம் -பிரதிபந்தங்கள் அனைத்தும் போகப் பெற
ய இத³ம் பட²தே நித்யம் -இந்த ஸ்தோத்ரத்தை நித்யம் செய்பவர்களுக்கு
அந்ருணே ஜாயதே -அவை அனைத்தும் போகப் பெற்று
ஸத்யோ த⁴னம் ஶீக்⁴ரமவாப்னுயாத்-ஸத்ய செல்வம் ஸீக்ரமாகப் பெற்று ஜீவனமும் உஜ்ஜீவனமும் பெறுவார்

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் – ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்–

November 24, 2022

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அத்வைத கொள்கையை இந்த  பாரத தேசமெங்கும்  நிலை நிறுத்தினார். பற்பல இடங்களில் பரவி கிடந்த நமது சனாதன தர்மத்தை அவர் ஆறு மதங்களாக தொகுத்து வழிமுறைப்படுத்தினார். இந்த சனாதன தர்மத்திற்கு மேலும் வலுவூட்டும் வகையில் பல துதிகளையும் இயற்றினார். அவற்றுள், பலராலும் தினந்தோறும் பாராயணம் செய்யப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற துதி “ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம்” ஆகும்.

முதலில் இந்த துதியின் பெயர் காரணத்தை அறிவோம். வடமொழியில் ‘கரம்’ என்றால் ‘கை’ என்று பொருள் (இன்று நடைமுறைத் தமிழிலும் இச்சொல் கை என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது). ‘அவலம்ப’ என்றால் ‘ஆதாரம்’ அல்லது ‘தாங்குதல்’ என்று பொருள். ‘கராவலம்பம்’ என்றால் ‘நம்மைக் கை கொடுத்துத் தாங்குதல்’ அல்லது ‘நமக்குக் கை கொடுத்து உதவுதல்’ என்று பொருள் கொள்ளலாம்.

இந்த துதியில் ஆதிசங்கரர், இந்த சம்சாரத்தில் விளையும் துன்பங்களை எடுத்துக் கூறி, பகவான் ‘ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மரை’ இந்த சம்சாரத் தளையிலிருந்து காப்பாற்ற தனக்குக் கை கொடுத்து உதவும்படி வேண்டுகிறார். இதன்  மூலம், ஆதி சங்கரர் நமக்கெல்லாம் பிரதிநிதியாக பகவானிடம் வேண்டிக் கொள்கிறார்.

துதி பிறந்த வரலாறு:
இந்த துதி பிறந்ததற்கு காரணமாக ஆதிசங்கரரின் வாழ்விலிருந்து இரு வேறு நிகழ்ச்சிகள் பெரியோர்களால் வழங்கப்படுகின்றன. இவை இரண்டையும் சுருக்கமாகப் பார்ப்போம்.

1. மண்டன மிஸ்ரருடன் வாதிட்டது, பின்னர் கூடு விட்டுக் கூடு பாய்ந்தது:
அத்வைத கொள்கையை நிலை நிறுத்தும் பொருட்டு, ஆதிசங்கரர் பலருடன் (மற்ற கொள்கைகளை பின்பற்றுவோருடன்) வாதம் புரிந்து அவர்களை வென்றார். அவற்றுள் தலையானவர் பிற்காலத்தில் ‘சுரேஷ்வராச்சார்யார்’ என்று பெயர் பெற்று விளங்கிய மண்டன மிஸ்ரர் ஆவார். இவர் பூர்வ மீமாம்சை என்ற கொள்கையைச் சார்ந்திருந்தார்.

ஆதிசங்கரர் இவருடன் அத்வைதமே சிறந்த கொள்கை என்று வாதிட வந்தார். இந்த வாதத்தின் பொழுது, மண்டன மிஸ்ரரின் மனைவியான உபயபாரதி நடுவராக இருந்தார்.

நன்கு கற்றுத் தேர்ந்திருந்ததோடு அல்லாமல், ஆதிசங்கரர் மற்றும் தமது கணவர் வாதிடும் பொழுது அதற்கு நடுவராக இருந்தும், பின்னர் ஆதிசங்கரருடனேயே வாதிடும் அளவிற்கு நமது சனாதன தர்மத்தின் பெண்கள் அன்று விளங்கினர். ஏதோ, நமது மதத்தில் பெண்களுக்கு உரிமைகள் இல்லை,அவர்களை அடுப்படியில் வைத்து அடிமைப் படுத்த வேண்டும் என்று மனு ஸ்மிருதி கூறுவதாகப் பிதற்றுபவர்கள் இதை இருமுறை படிக்கட்டும். 

வாதத்தில் மண்டன மிஸ்ரர் தோல்வி  அடைந்தார். அன்றைய பழக்கத்தின் படி அவர் ஆதிசங்கரரைத் தமது குருவாக ஏற்று துறவறம் பூண வேண்டும். தனது கணவன் துறவறம் ஏற்பதை தாங்க வொண்ணாத உபயபாரதி, ‘கணவனும் மனைவியும் இணை பிரியாதவர்கள். ஒருவரை மட்டும் வாதத்தில் வெல்வது ஏற்க முடியாது. எனவே, தன்னையும் வாதத்தில் வெல்ல வேண்டும்’ என்று ஆதி சங்கரரிடம் கூறினாள்.

இதை ஏற்ற சங்கரர், உபயபாரதியுடன் வாதம் புரிந்தார். ஆதிசங்கரரை மறை ஞானத்தில் வெல்ல முடியாது என்று உணர்ந்த உபயபாரதி அவரிடம் கணவன்-மனைவி சேர்ந்து வாழும் இல் வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளைக் கேட்க, துறவியான அவரால் அதற்கு பதில் உரைக்க இயலவில்லை (அனைத்தையும் அறிந்த அவருக்கு இதற்கான பதில் தெரிந்திருப்பினும், தமது துறவறத்திற்கு களங்கம் வரும் என்பதால் நேரடியாக பதில் உரைப்பதைத் தவிர்த்தார் என்றே நாம் பொருள் கொள்ள வேண்டும்).

இதற்கு பதில் கூறுவதற்கு தமக்கு ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ஆதிசங்கரர், தான் இல் வாழ்க்கையை மேற்கொண்ட ஒரு மனிதனின் உடலுக்குள் புகுந்து இதை அறிவதே சிறந்ததாகும் என்று தீர்மானித்தார். அவ்வாறே, வேட்டைக்கு வந்து அங்கு உயிர் நீத்த ஒரு அரசனின் உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்து உட்புகுந்தார். தமது சீடர்களிடம், தனது உடலைப் பாதுகாக்குமாறு கூறிவிட்டு அரசனின் அரண்மனைக்குச் சென்றார்.

அந்த அரசனோ ஒரு கொடுங்கோலன்;  அவனது ஆட்சியில் மழையின்றி, வளமின்றி அவன் நாடு தவித்தது (திருக்குறள் 559: முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்). ஆதிசங்கரர் அந்த நாட்டில் கால் வைத்ததுமே, மழைப் பொழியத் துவங்கியது, வளம் பெருகியது. இந்த மாற்றங்களையும், தம்முடன் பழகுவதில் உள்ள மாற்றங்களையும் உணர்ந்த அந்நாட்டின் அரசி ஐயம் கொண்டாள்.

தமது அமைச்சருடன் ஆலோசித்த அவள், வந்திருப்பது தன் கணவன் அல்ல, வேறு ஏதோவொரு சிறந்த ஆன்மா; இவர் தமது  நாட்டை விட்டு நீங்கினால் மீண்டும் பஞ்சமும்,  துன்பமும் ஏற்படுமென்று அஞ்சினாள். எனவே, மந்திரியும், அரசியும் ஆதி சங்கரரை அரசனின் உடலிலேயே இருக்க வைப்பதற்கு திட்டம் தீட்டினர். அனைத்துப் படை வீரர்களையும் அழைத்து, நாட்டில் ஏதோவொரு துறவியின் உடல் இருந்தால், அதை உடனே எரித்துவிடுமாறு  கூறினர்.

அதன்படி, வீரர்களும் ஆதிச ங்கரரின் உடலுக்குத் தீ வைத்தனர். இதையறிந்த ஆதிசங்கரர் உடனே அரசனின் உடலை விடுத்து தன்னுடலுக்குள் புகுந்தார். ஆனால், அதற்குள் தீயானது அவரது கைகளை எரித்து விட்டது. தமக்கு ‘கரங்கள்’ (கைகள்) கொடுத்தருள, ஆதிசங்கரர் பகவான் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரிடம் வேண்டிய துதியே இந்த ‘கராவலம்ப ஸ்தோத்திரம்’ என்பது முதல் வரலாறு.

இந்த துதியின் முடிவில் கைகள் கிடைக்கப் பெற்ற ஆதிசங்கரர் உபயபாரதியிடம் வாதம் செய்ய  சென்றார். இனி தன்னால் அவரை வாதத்தில் வெல்ல முடியாது என்று உணர்ந்த உபயபாரதி வாதம் புரியாமலேயே தன் கணவர் துறவறம் பூண அனுமதி அளித்தார். அந்த உபய பாரதியே, சிருங்கேரி சாரதா பீடத்தில் இருக்கும் ஸ்ரீ சாரதாம்பிகை என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

2. காபாலிகன் நரபலி கொடுக்க முனைந்தது:
ஒருமுறை, ஆதிசங்கரர் அஹோபிலத்தை அடுத்த (சில இடங்களில் ஸ்ரீசைலத்தை அடுத்த) காட்டில் தவம் புரிந்து வந்தார். அவரது உயரிய லட்சணங்களைக் கண்ட ஒரு காபாலிகன் அவரைக் காளிக்கு நர பலி கொடுக்க முடிவு செய்தான் (வீரத்தில் சிறந்த அரசர்களையோ அல்லது துறவில் சிறந்தவர்களையோ நர பலி கொடுத்தால் சிறந்த பலன்கள் கிடைக்குமென்பது அவர்களது நம்பிக்கை).

அவரை தன்னால் கொண்டு செல்ல இயலாது என்று உணர்ந்த அவன், அந்த வேண்டுதலை அவரிடமே கூறினான். தன்னால் பிறருக்கு நன்மை விளையுமென்பதால் ஆதிசங்கரர் அதற்கு சம்மதித்தார்.

தனது பக்தன் துன்பப்படுவதை பொறுக்காத நரசிம்மர் ஆதி சங்கரரின் சீடர்களில் ஒருவரான பத்ம பாதருக்குள் (இவரை சனந்தனர் என்றும் அழைப்பார்கள்) ஆவேசித்து, அந்த காபாலிகனைக் கொன்று சங்கரரைக் காத்தார்.

அவ்வாறு தன்னைக் காத்த நரசிம்மரை போற்றி ஆதிசங்கரர் இயற்றியதே இந்த கராவலம்ப ஸ்தோத்திரம் என்பது  இரண்டாவது வரலாறு.

வரலாறு எவ்வாறு இருப்பினும், பகவானின் குணங்களைப் போற்றியும், இந்த சம்சாரத் தளையிலிருந்து விடுதலை வேண்டியும் ஆதிசங்கரர் இயற்றிய இந்த அரிய துதி

————–
ஸ்ரீமத் பயோநிதி நிகேதன சக்ர பாணே 
போகீந்த்ர போக மணி ரஞ்சித புண்ய மூர்த்தே |
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத 
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || (1)
ஸ்ரீமத் – செல்வம் நிறைந்த, பயோநிதி – பாற்கடலில், நிகேதன –இருக்கின்ற, சக்ரபாணே – (சுதர்சனம் என்னும்) சக்கரத்தை கையில் ஏந்தியவரே, போகீந்த்ர – அரவங்களின் அரசன், போக மணி – (அரவங்களின் தலையில் இருக்கும்) நாக மணி, ரஞ்சித – ஒளியினால் ஒளியூட்டப்பட்ட, புண்ய மூர்த்தே – நற்கருமமே வடிவானவரே, யோகீச – யோகங்களுக்குத் (யோகிகளுக்கு) தலைவரே, சாஸ்வத – என்றென்றும் நிலைநின்று இருப்பவரே, பவாப்தி – பிறப்பு, இறப்பு என்னும் இந்த பிறவிப் பெருங் கடலை, போத – கடக்க உதவும் தோணி போன்றவரே, லக்ஷ்மி நரசிம்ம – திருமாமகள் துணைவரே நரசிம்மரே, மம – எனக்கு, தேஹி –அருளுங்கள், கராவலம்பம் – கைக் கொடுத்து.
செல்வங்கள் சேர் பாற்கடலில் இருப்பவரே, கையில் சுதர்சனம் என்னும் சக்கரப் படையை தாங்கி யுள்ளவரே, அரவங்களின் அரசனான ஆதிசேடன் தலையிலிருக்கும் நாக மணி உமிழும் ஒளியினால் ஒளியூட்டப்படுபவரே, நற்கருமமே  வடிவானவரே, யோகங்களுக்கும், யோகிகளுக்கும் தலைவரே, என்றென்றும் நிலை நின்று பிறப்பு, இறப்பு என்னும் இந்த பிறவிப் பெருங்கடலை கடக்க உதவும் தோணி போன்றவரே, திருமாமகள் தன்னோடு பிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக் கொடுத்து அருளுங்கள்!!!
இங்குள்ள (இந்த சம்சாரத்தில் உள்ள) செல்வங்கள் நிலையற்றவை; அங்குள்ள செல்வங்களுடன் ஒப்பிடுகையில் இவை வெறும் தூசுக்கு நிகரானவை. எனவே, செல்வம் சேர் பாற்கடலில் இருப்பவரே என்று அழைக்கிறார்.
பகவான் சக்கரம் (சுதர்சனம்), சங்கு (பாஞ்சசன்யம்), கதை (கௌமோதகம்), வாள் (நந்தகம்) மற்றும் வில் (சார்ங்கம்) ஆகிய ஐந்து ஆயுதங்களை ஏந்தியிருக்கிறார். அவர் நமது எதிரிகளை விரைந்து வந்து ஒட்டிவிடுவார் என்பதால் சக்கரம் ஏந்தியவரே என்று அழைக்கிறார் (இங்கு சக்கரம் மற்ற நான்கு ஆயுதங்களுக்கும் பிரதிநிதியாகும். சக்கரம் என்று சொல்லும் பொழுது ஐந்து ஆயுதங்களையும் சேர்த்துக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்).
நாம் அறியாமை என்னும் இருளால் சூழப்பட்டிருக்கிறோம். அவரோ, அரவின் மணியில் ஒளி வீசுகிறார். நமது அறியாமை இருளை அகற்றும் ஒளியாகவும் உள்ளார்.
நாம் நல்ல, மற்றும் தீய கருமங்களினால் தீண்டப்பட்டிருக்கிறோம். இவற்றின் வாயிலாகத் தான் நமக்கு இந்த பிறவியே ஏற்படுகிறது. அவரோ, நற்கருமமே வடிவானவர். நமது கர்ம பலன்களை அடியோடு அறுத்து நம்மைக் காப்பார்.
கர்ம, ஞான, பக்தி மற்றும் சரணாகதி ஆகிய வழிமுறைகளைக்  (யோகங்களைக்) கடைப்பிடிப்பதன் மூலம் நாம் அவரை அடைய முடியும். ஏனெனில், அவர் அனைத்து யோகங்களுக்கும், அதை முறையாகக் கடைப்பிடிக்கும் யோகிகளுக்கும் (அவர்களை) ஆணை யிட்டு வழி நடத்தும் தலைவராக உள்ளார்.
இத்தகைய நற்குணங்கள் நிறைந்த நரசிம்மப் பெருமான், என்றோ ஒரு குறிப்பிட்ட காலத்தில் தானே அவதரித்தார். அவர் எவ்வாறு இன்று நம்மைக் காப்பார்? என்ற ஐயம் எழுந்து விடாமல் இருக்க, ‘என்றென்றும் நிலை நின்று இருப்பவர்’ என்று குறிப்பிடுகிறார்.
தொடக்கமே காண முடியாத அனாதி காலமாய் சேர்த்து வைத்திருக்கும் கர்மங்களின் படி நாம் மீண்டும் மீண்டும் இந்த பிறவிப்பெருங்கடலில் பிறக்கிறோம் (இறக்கிறோம்). இந்த தொடர்ச்சியிலிருந்து பகவான் ஒரு தோணியாய் வந்து நம்மைக் கரையேற்றுகிறார்.
அத்தகைய பெருமானை நாம் நேரடியாக சென்று வேண்டுவதை விட, கருணையே வடிவான திருமகளை முன்னிட்டு வேண்டினால், வேண்டுவது கிடைப்பது திண்ணம். பெருமான் கருணையற்றவர் அல்லர். எனினும், கணக்கற்ற பிறவிகள் தோறும் நாம் அவர் கூறியதை கேட்காமல் கர்ம வினைகளால் உந்தப்பட்டு பல பாவங்களை சேர்த்திருக்கிறோம். எவ்வாறு தவறிழைத்த ஒரு குழந்தை தன் தாயை முன்னிட்டுக் கொண்டு தந்தையிடம் மன்னிப்பு கேட்குமோ, அவ்வாறே நாமும் திருமகளை முன்னிட்டுக் கொண்டு இறைவனை அடிபணிவதே சிறந்தது. எனவே, நரசிம்மரை மட்டும் வேண்டாது, திருமகளையும் சேர்த்து ‘லக்ஷ்மி நரசிம்மரின்‘ அடி பணிகிறார்  ஆதி சங்கரர்.
இந்த முதல் துதியிலேயே, ஆதிசங்கரர்  தான் வேண்டுவது தனது உடலில் உள்ள கையை அல்ல; மாறாக, இந்த பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுதலையையே என்பதை தெளிவாகக் கூறுகிறார்.
இந்த துதி முழுவதும், நம் கர்ம வினை காரணமாக பிறக்கும் இந்த சம்சாரத்தை கொடிய மிருகங்கள் நிறைந்த காடாகவும், கொடிய நச்சு மரமாகவும், நஞ்சினை உமிழும் அரவாகவும், நெருப்பாகவும், நீர்ச் சுழல்கள் நிறைந்த கடலாகவும் உருவகப்படுத்தி  இதில் உள்ள துன்பங்களை நமக்கு சுட்டிக் காட்டுகிறார்.
————–

ஸ்ரீ ந்ருஸிம்ஹ அவதார பரமான அருளிச் செயல்கள்—

July 15, 2020

I .ஸ்ரீ பெரியாழ்வார் (முதலாயிரம் )

1.எந்தை தந்தை தந்தை ( திருப்பல்லாண்டு -6)
2.பிறங்கிய பேய்ச்சி 1—-3—-5
3.கோளரியின் 1—-6—-2
3.அன்னமும் 1—-6—-11
4. அளந்திட்ட தூணை 1—-7—-9
5.குடங்கள் எடுத்து 2—-7—-7
6.முன் நரசிங்கமதாகி 3—-6—-5
7.கதிராயிரம் 4—-1—-1
8.பூதமைந்தொடு 4—-4—-6
9.கொம்பினார் பொழில் 4—-4—-9
10.வல்லெயிற்று 4—-8—-8

11.உரம் பற்றி இரணியனை 4—-9—-8
12.தேவுடைய மீனமாய் 4—-9—-9
13.நம்பனே 5—-1—-9
14.மங்கிய வல்வினை 5—-2—-4

II ஸ்ரீ ஆண்டாள் —திருப்பாவை

15.முப்பத்து மூவர்- 20
16.மாரி மலை முழைஞ்சில் 23
17.கூடாரை வெல்லும் 27

நாச்சியார் திருமொழி

18. நாளை வதுவை மணம் 1—-6—-2
19.வரிசிலை 1—-6—-9
20. வான் கொண்டு 1—-8—-5

III திருமழிசை ஆழ்வார் –திருச்சந்தவிருத்தம்

21.வால் நிறத்தோர் சீயமாய் 23
22.கங்கை நீர் பயந்த 24
23.வரத்தினில் 25
24. கரண்ட மாடு 62
25.விள்விலாத 102

IV திருப்பாணாழ்வார்

26.பரியனாகி வந்த 8

V திருமங்கை ஆழ்வார்–பெரிய திருமொழி

27.மருங்கொள் ஆளரி 1—-2—-4
28.மான் முனிந்து 1—-4—-8
29.ஏனோர் அஞ்ச 1—-5—-7
30 முதல் 39அங்கண்ஞாலம் முதலாக –10 1—-7—-1 to
1—7—10
40. எண் திசைகளும் 1—-8—-6
41.தெரியேன் பாலகனாய் 1—-9—-7
42.தூணாய் அதனூடு 1—-10—-5
43.பள்ளியில் ஓதி வந்த 2—-3—-8
44.காண்டாவனம் 2—-4—-2
45.தாங்காத தொராளரி 2—-4—-4
46.புகராருருவாகி 2—-4—-7
47.உடம்புருவில் 2—-5—-3
48.பேணாத வலி அரக்கர் 2—-5—-7
49.பெண்ணாகி இன்னமுதம் 2—-5—-8
50.பட நாகத்தணை 2—-5—-10

51. அன்னமும் மீனும் 2—-7—-10
52. திரிபுரம் 2—-8—-1
53. மாறுகொண்டு 3—-1—-4
54.பொங்கி அமரில் 3—-3—-8
55.பஞ்சிய மெல்லடி 3—-4—-4
56.சலங்கொண்ட 3—-9—-1
57. திண்ணியதோர் 3—-9—-2
58. ஓடாத வாளரியின் 3—-10—-4
59.உருவாகி 4—-1—-7
60.உளைய ஒண் திறல் 4—-2—-7

61. கெண்டையும் குறளும் 4—5—-6
62.முடியுடை அமரர்க்கு 4—10—8
63.வெய்யனாய் 5—-3—-3
64.ஏன மீனாமையோடு 5—-4—-8
65.வளர்ந்தவனை 5—-6—-4
66.எங்கனே உய்வர் 5—-7—-5
67.வக்கரன் வாய் 5—-9—-5
68. முனையார் சீயமாகி 6—-5—-2
69.பைங்கண் ஆளரி 6—-6—-4
70. அன்றுலகம்
6—-6—-5

71. ஓடா அரியாய்
6—-8—-4
72.அத்தா ! அரியே ! 7—-1—-8
73. ஓடா ஆளரியின் 7—-2—-2
74.ஆங்கு வெந்நகரத்து 7—-3—-5
75.அடியேன்
7—-3—-9
76.வந்திக்கும் 7—-4—-5
77.சிங்கமதாய்
7—-6—-1
78.விண்டான் 7—-7—-5
79.சினமேவும் 7—-8—-5
80. பன்றியாய் 7—-8—-10

81. மடலெடுத்த 8—-3—-6
82. நீர் மலிகின்றது 8—-4—-4
83. ஆமையாகி அரியாகி 8—-6—-5
84. உளைந்த அரியும் 8—-8—-4
85. மீனோடு ஆமை 8—-8—-10
86. மிக்கானை
8—-9—-4
87. மாணாகி வையம் 8—-10—-8
88. பரிய இரணியது 9—-4—-4
89.சிங்கமதாய் அவுணன் 9—-9—-4
90. துளக்கமில் சுடரை 10—-1—-4

91. உளைந்திட்டெழுந்த 10—-6—-3
92. தளர்ந்திட்டு 10—-6—-4
93. பொருந்தலன் 10—-9—-8
94. அங்கோர் ஆளரியாய் 11—-1—-5
95. தளையவிழ் கோதை 11—-4—-4
96.கூடா இரணியனை 11—-7—-4

திருக்குறுந்தாண்டகம்
97. காற்றினைப் புலனைத் தீயை 2

சிறிய திருமடல்
98. —- போரார் நெடுவேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு
சீரார் திருமார்பின் மேல் கட்டி செங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆராவெழுந்தான் அரியுருவாய்———

பெரிய திருமடல்
99.—–ஆயிரக்கண்
மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும்
தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவனை
பின்னோர் அரியுருவமாகி எரி விழித்து
கொல் நவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே —வல்லாளன்
மன்னும் மணிக்குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி —அவனுடைய
பொன் அகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த
மின் இலங்கும் ஆழிப்படைத் தடக்கை வீரனை ———–

———தன்னைப் பிறர் அறியாத்தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அருமறையை ———-

——கொல் நவிலும் ஆழிப்படையானை ,கோட்டியூர்
அன்ன உருவில் அரியை , திருமெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை ,இந்தளூர் அந்தணனை
மன்னும் மதிட்கச்சி வேளுக்கைஆளரியை ——–

VI .பொய்கை ஆழ்வார் இயற்பா–முதல் திருவந்தாதி

100. அடியும்பட கடப்ப 17
101.தழும்பிருந்த 23
102 புரியொரு 31
103. முரணவலி 36
104. எளிதில் இரண்டையும் 51
105. ஏற்றான் 74
106. வரத்தால் வலி நினைந்து 90
107. வயிறழல 93

VII .பூதத்தாழ்வார் –இரண்டாம் திருவந்தாதி

108.கொண்டதுலகம் 18
109. மாலையரியுருவன் 47
110. வரங்கருதி 84
111.உற்று வணங்கி 94
112.என் நெஞ்சமேயான் 95

VIII .பேயாழ்வார் —மூன்றாம் திருவந்தாதி

113.இவையவன் கோவில் 31
114. கோவலனாய் 42
115. அங்கற்கிடரின்றி 65
116. புகுந்திலங்கும் 95

IX . திருமழிசை ஆழ்வார் –நான்முகன் திருவந்தாதி

117. தொகுத்தவரத்தனாய் 5
118. மாறாய தானவனை 18
119. இவையா ! பிலவாய் 21
120. அழகியான் தானே 22

ஸ்ரீ நம்மாழ்வார் —-திருவிருத்தம்

121.மட நெஞ்சமென்னும் 46

பெரிய திருவந்தாதி

122. நின்றுமிருந்தும் 35
123. வழித்தங்கு வல்வினையை 57

திருவாய்மொழி

124. ஆடியாடி அகம் கரைந்து 2—-4—-1
125.உன்னைச் சிந்தை செய்து 2—-6—-6
126.எங்குமுளன் கண்ணன் 2—-8—-9
127. தோற்றக் கேடவையில் 3—-6—-6
128. கிளரொளியால் 4—-8—-7
129. ஆனானாளுடையான் 5—-1—-10
130. சூழ் கண்டாய் 5—-8—-6

131. அரியேறே 5—-8—-7
132. என் செய்கின்றாய் 7—-2—-2
133. வட்கிலன் 7—-2—-3
134.சிந்திக்கும் 7—-2—-5
135. போழ்து மெலிந்த 7—-4—-6
136.செல்லவுணர்ந்தவர் 7—-5—-8
137. புக்க அரியுருவாய் 7—-6—-11
138. ஆம்வண்ணம் 7—-8—-11
139. கூடுங்கொல் ? 7—-10—-3
140. எடுத்த பேராளன் 8—-1—-3

141. மாலரி கேசவன் 8—-2—-7
142. அற்புதன் 8—-6—-10
143. அறிந்தன 9—-3—-3
144. ஆகம்சேர் 9—-3—-7
145. உறுவது 9—-4—-4
146.அரியாய 9—-4—-5
147. உகந்தே உன்னை 9—4—-7
148. மல்லிகை 9—-9—-1
149. அன்பனாகும் 9—10—-6
150. என் நெஞ்சத்துள்ளிருந்து 10—-6—-4

151. பிரியாது ஆட்செய 10—-6—-10

திருவரங்கத்தமுதனார் அருளிய இராமானுச நூற்றந்தாதி

152. மடங்கல் 103
——————————————————————-

ஸ்வாமி தேசிகன் தான் அருளிய ப்ரபந்தத்தில் (தேசிக ப்ரபந்தம் )
திருவஹீந்த்ரபுரம் அடியவர்க்கு மெய்யன் விஷயமாக
மும்மணிக்கோவையில் 4வது பாசுரத்தில்( மழையில் எழுந்த
மொக்குள் போல் வையம் என்கிற பாசுரம் )
மீனோடாமை கேழல் கோளரியாய் —–என்று துதிக்கிறார்.

பின்னும், நவமணிமாலை 2ம் பாசுரத்தில் ( மகரம் வளரு மளவில்
பௌவ மடைய வுற்ற லைத்தனை என்கிற பாசுரம் )
வலிகொள் அவுணன் உடல் பிளந்து மதலை மெய்க்குதித்தனை —
என்று போற்றுகிறார்

இவ்விதமாக, ஆழ்வார்கள், ஆசார்யன் அனுபவித்துத் துதித்ததை
அறிந்து, உணர்ந்து ,அனுபவித்தோம்

அடியேனின் மந்த மத்தியில் தோன்றியதையும் இங்கு
எழுதியுள்ளேன் —பிழை பொறுத்து, குணம் கொள்வீராக !

ஸ்ரீ ந்ருஸிம்ஹம்
—————————–

1. அருமைப் புதல்வனை அழிக்க நினைத்து
அவனது சொல்லால் ஆத்திரம் அடைந்து
அன்று ஒருநாள் மாலைத் துணைத் தட்ட,
அடுத்த கணமே கம்பம் பிளந்தது !

2. அண்டம் அதிர்ந்தது; அமரர்கள் அஞ்சினர் ;
எண்திசை அழிந்தது;பிரளயம் நேர்ந்தது;
நான்முகன் நலிந்தான்; அவன் மகன் மெலிந்தான்
அறுமுகன் பயந்தான்;அனைத்தும் வீழ்ந்தது.

3.சிங்கத்தின் பிடரிகள் சிதறிப் பறந்தன ;
சீறியது கண்ணும்; பற்களும் நெறிந்தன ;
அட்டகாசத்தின் ஆரம்ப நிலைதான்,
கிட்ட நெருங்கத் தேவரும் பயந்தனர் !

4. கரங்கள் பிறந்தன ;வளர்ந்தன எங்கும்,
விரல்களின் நகங்கள் ,வீறிட்டுப் பாய்ந்தன !
இரணியன் மார்பைக் கீறிக் கிழித்தன !
தரணியெங்கும் குருதியின் ஓட்டம் !

5. நரசிங்கம்! நாரணன் கருணை அவதாரம் !
பிரகலாதனுக்காகப் பிறந்த அவதாரம் !
பிரதோஷ வேளையிலே பூசிக்க அவதாரம் !
சரபத்தை முடித்திட்ட சீரிய அவதாரம் !

6. நரசிங்கா ! ஆளரியே ! நாயேன் அடிபணிந்தேன்
கருணைக் கண்கொண்டு காத்திடுவாய் அடியேனை
உருவாய், உருவுக்கும் உருவாய் வந்தவனே !
பிரகலாத வத்ஸலனே ! பஜிக்கின்றேன் உன் நாமம் !

7. உன் நாமம் தனைக் கேட்க உன்மத்தமாகிடுவர் !
உன் நாமம் தியானிக்க உச்சநிலை பெற்றிடுவர் !
உன் நாமம் உச்சரிக்க உயர்நிலை அடைந்திடுவர் !
உன் நாமம் உயர்வாகும், உத்தமுமே அதுவாகும் !

8. சிங்கப் பெருமானே ! சீறினும் நீ அருள்வாயே !
எங்கும் உள்ளவனே ! இதயத்தில் இருப்பவனே !
பொங்கும் பக்தியினால், போற்றுகிறேன் பொற்பாதம் ,
ஏங்கும் அடியேன் நான்; இனிப் பிறவி யான்வேண்டேன் .

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ -நம்முடை நம்பெருமாள் -திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்தோத்ர மஞ்சரி —

July 15, 2020

ஸ்ரீ ந்ருஸிம்ஹ பஞ்சாம்ருத ஸ்தோத்ரம் –ஸ்ரீ சக்கரவர்த்தித் திருமகன்

அஹோ பிலம் நாராஸிம்ஹம் கத்வாராம : ப்ரதாபவான் |
நமஸ்க்ருத்வா ஸ்ரீ ந்ருஸிம்ஹம் அஸ்தௌஷீத் கமலாபதிம் ||

1. கோவிந்த கேசவ ஜநார்த்தன வாஸுதேவ விச்வேச விச்வ மதுஸுதந விச்வ ரூப |
ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம புஷ்கராக்ஷ நாராயணாச்யுத ந்ருஸிம்ஹ நமோ நமஸ்தே ||

2. தேவாஸ் ஸமஸ்தா : கலுயோகிமுக்யா : கந்தர்வ வித்யாதர கின்னராஸ்ச |
யத்பாதமூலம் ஸததம் நமந்தி தம்நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி ||

3. வேதாந் ஸமஸ்தாந் கலுசாஸ்த்ர கர்ப்பாந் வித்யாபலேகீர்திமதீஞ்ச லக்ஷ்மீம் |
யஸ்ய ப்ரஸாதாத் ஸததம் லபந்தே தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி ||

4. ப்ரும்மா சிவஸ்தவம் புருஷோத்தமஸ்ச நாராயணாஸௌ மருதாம் பதிஸ்ச |
சந்த்ரார்க்கவாய்வக்னி மருத்கணாஸ்ச த்வமேவ தம்த்வாம் ஸததம் நதோஸ்மி ||

5. ஸ்வப்நேபி நித்யம் ஜகதாம் த்ரயாணாம் ஸ்ரஷ்டா ச ஹந்தா விபுரப்ரமேய : |
த்ரா தாத்வ மேகஸ்த்ரிவிதோவிபந்ந : தம் த்வாம் ந்ருஸிம்ஹம் ஸததம் நதோஸ்மி ||

இதிஸ்துவா ரகுச்ரேஷ்ட பூஜயாமாஸ தம் விபும் |
புஷ்ப வ்ருஷ்டி :பபாதாசு தஸ்ய தேவஸ்ய மூர்த்தனி ||
ஸாதுஸாத்விததம் ப்ரோசு : தேவாரிஷி கணைஸ்ஸ ஹ |” தேவா ஊசு :
ராகவேணக்ருதம் ஸ்தோத்ரம் பஞ்சாம்ருதமனுத்தமம் |
படந்தியேத்விஜ வரா : தேஷாம் ஸ்வர்கஸ்து சாச்வத : ||

————

யஸ்யாபவத் பக்தஜநார்த்தி ஹந்து பித்ருத்வமந்யேஷ்வவிசார்ய தூர்ணம் |
ஸ்தம்பேவதார ஸ்தமநந்யலப்யம் லக்ஷ்மீந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே ||

அஹோபிலே காருடசைல மத்யே க்ருபாவசாத் கல்பித ஸந்நிதானம் |
லக்ஷ்ம்யா ஸமாலிங்கித வாமபாகம் லக்ஷ்மீந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே ||

வ்யாஸ பகவான், ”ஸத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம் ”
தன்னுடைய பக்தர்களின் வார்த்தையை, ஸத்யமாக்க ஸ்தம்பத்தில் தோன்றிய அவதாரம்;

என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று; யான் முன்
சொன்னவன் தொட்ட தொட்ட இடம்தொறும் தோன்றான் ஆயின்
என் உயிர் யானே மாய்ப்பல் ; பின்னும் வாழ்வு உகப்பல் என்னின்
அன்னவர்க்கு அடியேன் அல்லேன் ” என்றனன் அறிவின் மிக்கான் –இரணியன் வதைப்படலம் (126)

நசை திறந்து இலங்கப்பொங்கி , ”நன்று, நன்று” என்ன நக்கு ,
விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன ,ஓர் தூணின் , வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான் ;எற்றலோடும் ,
திசை திறந்து ,அண்டம் கீறச் சிரித்தது ,செங் கண் சீயம் (127)

நான்முகனும் காணாச் சேயவன் சிரித்தலோடும், —-நான்முகனாலேகூடக் காண இயலாத செய்யாளுறை மார்பன் இப்படிச் சிரித்ததும்,
ப்ரஹ்லாதன், ஆடினான், அழுதான், பாடி அரற்றினான், சிரத்தில் செங்கை சூடினான், தொழுதான், ஓடி, உலகு எலாம் துகைத்தான் துள்ளி—

பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது சீயம்; பின்னை
வளர்ந்தது, திசைகள் எட்டும்;பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப்புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பர்
கிளர்ந்தது ககன முட்டை கிழிந்தது,கீழும் மேலும்

———

அரே க்வாஸௌ ஸகல ஜகதாத்மா ஹரிரிதி
ப்ரபிந்தேஸ்ம ஸ்தம்பம் சலிதகரவலோ திதி ஸுத :
அத : பஸ்சாத் விஷ்ணோ ந ஹி வதிது மீஸோஸ்மி ஸஹஸா
க்ருபாத்மன் ! விஸ்வாத்மன் பவனபுர வாஸின் ! ம்ருட யமாம்–ஸ்ரீ நாராயண பட்டத்ரி , நாராயணீயத்தில்-

———–

ப்ரஹ்லாதஸ்ய வ்யஸநமிதம் தைத்ய வர்கஸ்ய தம்பம்
ஸ்தம்பம் வக்ஷஸ்தலமபி ரிபோ : யோக பத்யேன பேத்தும் |
பத்தச்ரத்தம் புருஷ வபுஷா மிச்ரிதே விச்வ த்ருஷ்டே
தம்ஷ்ட்ரா ரோசிர் விசித புவனே ரம்ஹஸா ஸிம்ஹ வேஷே ||–காளிதாசன்–போஜ சம்பூ

பகவான் , ந்ருஸிம்ஹனாக அவதரித்து, ஒரே க்ஷணத்தில், ப்ரஹ்லாதனின் கவலை,அசுரர்களின் ஆணவப் போக்கு,
அக்ரமங்கள், தூண் ஹிரண்யனின் மார்பு ஆக , இந்த நான்கையும் பிளந்தார் உலகம் உய்ந்தது
இப்படி மகா உக்ரமான அவதாரமாக இருந்தாலும் ,பக்தியுடன் பூஜிப்பவர்களின் மனக் கவலை தீர்த்து, விரோதிகளை விரட்டி,
அனுக்ரஹம செய்யும் உத்தமமான அவதாரம்.

————

முக்கூர் லக்ஷ்மிந்ருஸிம்ஹாசார்யர்—–(வைகுண்ட வாஸி )

1.யோகி த்யேயம் ஸதா நந்தம் பக்தாநாம் அபயங்கரம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||

2. ஸர்க–ஸ்திதி –விநாசாநாம் கர்த்தா கர்த்ருபதி : ஸ்வயம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||

3. நமாஸகம் தயாபூர்ணம் ஸர்வலோக -நமஸ்க்ருதம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||

4. ப்ரஹ்லாத —வரதம் ச்ரேஷ்டம் கருடாத்ரி –நிவாஸிநம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||

5. வேதாந்த கருணா நித்யம் ஸேவ்ய மாநம் பரம் சுபம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||

6. ஸ்ரீ ரங்கயோகி க்ருபயா ப்ரோக்தம் ஸ்தோத்ரமிதம் சுபம் |
ய : படேத் ச்ரத்தயா நித்யம் ஸர்வபாபை : ப்ரமுச்யதே ||

1-அஷ்டாங்க ஸித்தி பெற்றவர்கள் தினமும் த்யானிக்கும் மூர்த்தி ;எப்போதும் பரமானந்த ஸ்வரூபி ;பக்தர்களின் பயத்தைப்
போக்குபவன்; தாமரைக் கண்ணன்;சமஸ்த பாபங்களையும் சம்ஹரிப்பவன் ; வேண்டும் வரங்களை அளிப்பவன்; இப்படிப்பட்ட
ஸ்ரீ மாலோலனைப் பற்றுகிறேன்

2.ஜென்மத்தை அழிப்பவன்;ஜீவன்கள் உஜ்ஜீவிக்க பரம கருணையுடன் முத்தொழிலையும் செய்யும் பிரான்; தாமரைக் கண்ணன்;
எல்லாப் பாபங்களையும் போக்குபவன்;வேண்டிய வரம் தருபவன்;இப்படிப்பட்ட ஸ்ரீ மாலோலனையே அடைகிறேன்.

3. லக்ஷ்மிலோலன்; காருண்ய நிதி;எல்லா உலகத்தாரும் ஸேவிக்கும் ஏற்றம் உடையவன்; தாமரைக் கண்ணன்; பாபங்கள் அனைத்தையும்
போக்குபவன்; வேண்டிய வரம் அனைத்தையும் தருபவன்; ஸ்ரீ மாலோலனையே தஞ்சம் என்று கருதி, அவனையே சரணம் அடைகிறேன்.

4. பக்தனான ப்ரஹ்லாதனைக் காத்தவன்; ஒப்பாரும் மிக்காரும் இல்லா மேன்மையாளன்; கருடகிரி வாஸி ; தாமரைக் கண்ணன்;
சிங்கமுக ஸ்வரூபி ; கோரிய வரம் அளிக்கும் ஸ்ரீ மாலோலனைச் சரணம் அடைகிறேன்;

5. 44ம் பட்ட அழகிய சிங்கரால் தினமும் ஆராதிக்கப் பெற்றவன்; மிக மேலானவன்; பங்கயக் கண்ணன்;பாபங்களைப் பொசுக்குபவன்;
வேண்டியதெல்லாம் அருளும் ஸ்ரீ மாலோலனையே தஞ்சமெனப் பற்றுகிறேன்

6. 42ம் பட்டம் ஸ்ரீ இஞ்சிமேட்டு அழகியசிங்கர் கிருபையால், அடியேனால் சொல்லப்பட்ட மங்களத்தை அருளும் இந்த ஸ்தோத்ரத்தைத்
தினமும் சொல்பவர்கள் எல்லாவிதமான பாபங்களிலிருந்தும் விடுபட்டு ஸ்ரீ மாலோலன் கிருபையைப் பெறுவார்கள்

———————-

ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தர புராணத்தில் உள்ளது

21.தம்ஷ்ட்ரா –கராளம் ஸுரபீதிநாசகம் க்ருதம் வபுர் –ந்ருஸிம்ஹ –ரூபிணா |
த்ராதும் ஜகத் யேந ஸ ஸர்வதா ப்ரபு : மமாஸ்து மாங்கள்யவிவ்ருத்தயே ஹரி : ||

தேவர்களின் பயத்தைப் போக்கவல்லதும், கோரைப் பற்களால் பயத்தை உண்டாக்குவதுமான நரங்கலந்த சிங்கத்
திருவுருவை ,உலகைக் காப்பாற்ற யார் தரித்தாரோ ” ஸ்ரீ ஹரி ”எனக்கு மங்களங்களைப் பெருகச் செய்வாராக

22.தைத்யேந்த்ர–வக்ஷஸ் ஸ்தல —தார –தாருணை :கரேருஹைர் ய :க்ரகசாநு காரிபி : |
சிச்சேத லோகஸ்ய பயாநி ஸோச்யுதோ மமாஸ்து மாங்கள்ய–விவ்ருத்தயே ஹரி : ||

இரணியன் மார்பைக் கிழித்ததும் ரம்பம் போன்றதுமான நகங்களால் ,உலகின் பயத்தைப் போக்கிய ஹரி
எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

23.தந்தாந்த –தீப்தத்யுதி -நிர்மலாதி ய :சகார ஸர்வாணி திசாம் முகாநி |
நிநாத –வித்ராஸித –தாநவோ ஹ்யஸௌ மமாஸ்து மாங்கள்ய –விவ்ருத்தயே ஹரி : ||

பற்களின் ப்ரகாசத்தால் திசை முடிவிலும் காந்தியைப் பரப்புகிறவரும், ஸிம்ஹநாதத்தால் அஸுரர்களை
நடுங்கச் செய்பவருமான ஸ்ரீ ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக –

24. யந்நாம -ஸகீர்த்தநதோ மஹா பயாத் விமோக்ஷ -மாப்நோதி ந ஸம்சயம் நர : |
ஸ ஸர்வ-லோகார்த்தி –ஹரோ ந்ருகேஸரீ மமாஸ்து மாங்கள்ய– விவ்ருத்தயே ஹரி : ||

தன்னுடைய நாமத்தைச் சொல்பவரின் பெரும் பயத்தைப் போக்கி க்ருபை செய்பவரும்,உலகங்களின் கஷ்டத்தைப்
போக்குபவரான ஸ்ரீ ந்ருஸிம்ஹன் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக-

25. ஸடா –கராள ப்ரமணாநிலாஹதா : ஸ்புடந்தி யஸ்யாம்புதராஸ் ஸமந்தத : |
ஸ திவ்யசிம்ஹ :ஸ்புரிதா-நலேக்ஷணோ மமாஸ்து மாங்கள்ய– விவ்ருத்தயே ஹரி : ||

பிடரிக் கேசங்கள் அலைந்து மேகக்கூட்டங்களை நாலாபுறமும் சிதறும்படி செய்பவரும் நெருப்புக் கனல் ஜ்வலிக்கும்
நேத்ரங்களை உடையவருமான ஸ்ரீ ந்ருஸிம்ஹன் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக-

26. யதீக்ஷண –ஜ்யோதிஷி ரச்மி -மண்டலம் ப்ரலீந -மீஷந் ந ரராஜ பாஸ்வத : |
குத :ச சாங்கஸ்ய ஸ திவ்யரூப -த்ருக் மமாஸ்து மாங்கள்ய– விவ்ருத்தயே ஹரி : ||

எவருடைய திருக்கண்களின் தீக்ஷ்யண்யத்தில் ஸுர்யனின் ஒளிக்கதிர்கள் மங்குமோ,சந்திரனின் ப்ரகாசத்தைப் பற்றிச்
சொல்லவே வேண்டாமோ அந்த திவ்ய ரூபமான ஸ்ரீ ந்ருஸிம்ஹன் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக—

27. அசேஷ –தேவேச –நரேச்வரேச் வரை : ஸதா ஸ்துதம் யச்சரிதம் மஹாத்புதம் |
ஸ ஸர்வ–லோகார்த்தி -ஹரோ மஹாஹரி : மமாஸ்து மாங்கள்ய– விவ்ருத்தயே ஹரி : ||

எந்த ஸ்ரீ ந்ருஸிம்ஹனுடைய மகோன்னத சரித்ரத்தை தேவர்களும், உலகத்தோரும் புகழ்ந்து கொண்டாடுகிறார்களோ
உலகங்களின் துக்கத்தையும் பாவங்களையும் அழிக்கவல்ல அந்த ஸ்ரீ ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

28. த்ரவந்தி தைத்யா : ப்ரணமந்தி தேவதா : நச்யந்தி ரக்ஷாம்ஸி அபயாந்தி சாரய
யத் கீர்த்தநாத் ஸோத்புத –ரூப கேஸரீ எந்த ந்ருஸிம் மமாஸ்து மாங்கள்ய– விவ்ருத்தயே ஹரி : ||

யாருடைய திருநாமத்தைச் சொன்னவுடனே அசுரர்கள் ஓடுகிறார்களோ ,தேவர்கள் நமஸ்கரிக்கிறார்களோ, அரக்கர்கள் அழிவார்களோ,
எதிரிகள் திரும்பி ஒடுவார்களோ அந்த ஸ்ரீ ந்ருஸிம்ஹன் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

————

44ம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் ஸ்ரீ மாலோலன் விஷயமாக, பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்,

1-மாலோலம் ப்ரணிபத்யாஹம் ஸ்வர்ண ஸ்ரீந்ருஹரிம்ததா |
மங்களாத்ரி ரமாஸிம்ஹம் க்ருஷ்ணம் நர்த்தன கோவிதம் ||
2. ஸ்ரீ ரங்கநாதம் ஹஸ்தீசம் லக்ஷ்மீபூமி ஸமன்விதம் |
சேஷாசலேசம் ஸ்ரீவாஸம் யாதவாத்ரி ரமாஸகம் ||
3. ஸ்ரீ பூ ஸுரபி ரங்கேசம் ஸ்ரீவராஹௌ ஹயாநநம் |
பூமாதி கேசவம் சக்ரம் கோதாம் வடதளேசயம் ||
4. ஸஸீதாலக்ஷ்மணம் ராமம் அபர்யாப்தாம்ருதம் ஹரிம் |
ஸ்ரீ மூர்த்தி : ஸ்ரீ சடாரீ ச ஸேநேசம் சடமாதிநம் ||
5. பரகாலம் யதீந்த்ரம் ச வேதசூடா குரூத்தமம் |
ஆதிவண் சடகோபாதீந் யதிவர்யாந் பஜே நிஸம் ||
6. பஞ்சாம்ருதமிதம் புண்யம் ய : படேத் ஸததம்முதா |
ரமா நர ஹரிஸ்தஸ்ய தத்யாதீப்ஸிதமாதராத் ||

————-

ஸ்ரீ ஸுதர்சன கவசத்தில்—-
ஓம் அஸ்ய ஸ்ரீ ஸுதர்சன கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
அஹிர்புத்ந்யே பகவான் ரிஷி :
அநுஷ்டுப் சந்த :
ஸ்ரீ ஸுதர்சன ஸ்ரீ மஹா ந்ருஸிம்ஹோ தேவதா
சஹஸ்ரார இதி பீஜம்
ஸுதர்சன மிதி சக்தி :
சக்ரமிதி கீலகம்
மம ஸர்வ ரக்ஷார்த்தே
ஸ்ரீ ஸுதர்சன புருஷ ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரீத்யர்த்தே
ஜபே விநியோக:
என்று சொல்கிறோம்—–ஸ்ரீ ஸுதர்சனரைச் சொல்லும்போதெல்லாம் ஸ்ரீ ந்ருஸிம்ஹனையும் சொல்கிறோம்

———-

ஸ்ரீ ந்ருஸிம்ஹ புராணத்தில் , நவ க்ரஹங்களில் ஒருவரான சுக்ரன் சொன்ன ஸ்தோத்ரம் உள்ளது-

ஸ்ரீ சுக்ர உவாச :–

1. நமாமிதேவம் விச்வேசம் வாமனம் விஷ்ணுரூபிணம் |
பலி தர்ப்பஹரம் சாந்தம் சாச்வதம் புருஷோத்தமம் ||

2.தீரம் சோரம் மஹாதேவம் சங்கசக்ர கதாதரம் |
விஸுத்தம் ஞான ஸம்பன்னம் நமாமி ஹரிம் அச்யுதம் ||

3.ஸர்வசக்தி மயம் தேவம் ஸர்வகம் ஸர்வபாவனம் |
அநாதிமஜரம் நித்யம் நமாமி கருடத்வஜம் ||

4.ஸுராஸுரைர் பக்திமத்பி : ஸ்துதோ நாராயண : ஸதா |
பூஜிதம் சஹ்ருஷீகேசம் தம் நமாமி ஜகத்குரும் ||

5.ஹ்ருதி ஸங்கல்ப யத்ரூபம் த்யாயந்தி யதய :ஸதா |
ஜ்யோதிரூபம் அனௌபம்யம் நரஸிம்ஹம் நமாம்யஹம் ||

6. நஜாநந்தி பரம் ரூபம் ப்ரம்மாத்யா தேவதாகணா |
யஸ்யாவதார ரூபாணி ஸமர்ஸந்தி நமாமிதம் ||

7. ஏதஸ் ஸமஸ்தம் யேதாதௌ ஸ்ருஷ்டம் துஷ்டவதாத் புன : |
த்ராதம் யத்ர ஜகல்லீனம் தம் நமாமி ஜனார்த்தனம் ||

8பக்தைர் ரப்யர்ச்சிதோ யஸ்துநித்யம்பக்தப்ரியோஹிய : |
தம் தேவம் அமலம் திவ்யம் ப்ரணமாமி ஜகத்பதிம் ||

9. துர்லபம் சாபி பக்தாநாம் ய : ப்ரயச்சதி தோஷித : |
தம் ஸர்வசாக்ஷிணம் விஷ்ணும் ப்ரணமாமி சநாதனம் ||

ஸ்ரீ மார்க்கண்டேய உவாச :-

இதிஸ்துதோ ஜகந்நாத புரா சுக்ரேண பார்த்திவ |
ப்ராதுர்பூவ தஸ்யாக்ரே சங்கசக்ரகதாதர : ||

11. உவாச சுக்ரமேகாக்ஷம் தேவோ நாராயண :ஸ்ததா |
கிமர்த்தம் ஜாஹ்நவிதீரே ஸ்துதோஹம் தத்ப்ரவீஹிமே ||

சுக்ர உவாச :–

12.தேவதேவம் பூர்வமபவாதோ மஹாந்க்ருத : |
தத்தோஷஸ்யாபநுத்யர்த்தம் ஸ்துதவானஸ்மி ஸம்ப்ரதம் ||

ஸ்ரீ பகவானுவாச :–

13. மமாபராதாந் நயனம் நஷ்டமேகம் தவாதுனா |
ஸந்துஷ்டோஸ்மிதத : சுக்ர ஸ்தோத்ரேண நேனதேமுநே ||

14. இத்யுகத்வா தேவதேவேசஸ்தம் முநிம் ப்ரஹஸந்நிவ |
பாஞ்சஜன்னேய தத்சக்ஷீ :பஸ்பர்ச ச ஜனார்த்தன ||

15. ஸ்பிருஷ்ட மாத்ரேது சங்கேன தேவதேவேன சார்ங்கிணா |
பபூவ நிர்மலம் சக்ஷு :பூர்வந்நிருபஸத்தம || |

16ஏவம் தத்வாமுனே சக்ஷு பூஜிதஸ்தேன மாதவ : |
ஜகாமாதர்ஸனம் ஸத்ய: சுக்ரோபி ஸ்வாச்ரமம் யயௌ ||

17. இத்யேத துக்தம் முநிநா மஹாத்மனா ப்ராப்தம் புரா தேவவர ப்ரஸாதாத் |
சுக்ரேண கிம்தே கதயாமி ராஜந் புநஸ்ச மாம் பிருச்ச மனோரதாந்த : ||

—————————

அபாமார்ஜன ஸ்தோத்ரம்

சஞ்சத் சந்த்ரார்த தம்ஷ்ட்ரம் ஸ்புர துருரதநம் வித்யுதுத்யோத ஜிஹ்வம்
கர்ஜத் பர்ஜந்ய நாதம் ஸ்புரித ரவி ருசிம் சக்ஷு ரக்ஷுத்ர ரௌத்ரம் |
த்ரஸ்தாஸா ஹஸ்தியூதம் ஜ்வல தநல ஸடா கேஸரோத்பாஸமாநம்
ரக்ஷோ ரக்தாபிஷிக்தம் ப்ரஹரதி துரிதம் த்யாயதாம் நாரஸிம்ஹம் ||

————–

ஸ்ரீ கூரத்தாழ்வான், அதிமாநுஷ ஸ்த்வம்

க்ரீடாவிதே :பரிகர :தவ யா து மாயா ஸா மோஹிநீ ந கதமஸ்யது ஹந்த ஜந்தோ : |
ஸஹ ! மர்த்யஸிம்ஹவபுஷ :தவ தேஜஸோ ம்சே சம்பு :பவன் ஹி சரப :சலபோ பபூ

ஸ்ரீ கூரத்தாழ்வான், ஸுந்தர பாஹுஸ்தவத்தில் கூறுகிறார் :–

ந வாயு பஸ்பந்தே ,யயது ரதவாஸ்தம் சசிரவீ திசோநச்யந் ,விச்வாப்யசலத் அசலா ஸாசலகுலா |
நபச்ச ப்ரச்ச்யோதி ,க்வதிதமபி பாதோ நரஹரௌ த்வயி ஸ்தம்ப்பே சும்ப்பத் வபுஷி ஸதி ஹே ஸுந்தர புஜ : ||

அராளம் பாதாளம் த்ரிதசநிலய :ப்ராபி தலய : தரித்ரீ நிர்தூதா ,யயுரபி திச :காமபி தசாம் |
அஜ்ரும்பிஷ்டாம் போதி :குமுகுமிதி கூர்ணத் ஸுரரிபோ :விபந்தாநே வக்ஷ :த்வயி நரஹரௌ ஸுந்தரபுஜ ! ||

நகக்ரகசக ப்ரதி க்ரதித தைத்ய வக்ஷஸ்ஸ்த்தலீ ஸமுத் தருதிரச் சடாச்சுரித பிம்பிதம் ஸ்வம் வபு : |
விலோக்ய ருஷித :புந : ப்ரதி ம்ருகேந்திர சங்காவசாத் ய ஏஷ நர கேஸரீ ஸ இஹ த்ருச்யதே ஸுந்தர : ||

——————-

தைத்திரீய உபநிஷத்தில் நாராயண வல்லியில் உள்ள ந்ருஸிம்ஹ மந்த்ரமாவது

ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி ஸத்யோ ஜாதாய வை நம :பவே பவே நாதிபவே பஜஸ்வமாம் பவோத்பவாய நம :
வாமதேவாய நமோ ஜ்யேஷ்டாய நமோ ருத்ராய நம :காலாய நம :கலவிகரணாய நமோ பலவிகரணாய
நமோ பலாய நமோ பலப்ரமதனாய நமஸ் ஸர்வ பூத தமனாய நமோ மனோன்மனாய நம :
அகோரேப்யோ அதகோரேப்யோ கோரகோர தரேப்யஸ் ஸர்வதஸ் ஸர்வ ஸர்வேப்யோ நமஸ்தே அஸ்து ருத்ரரூபேப்ய :

——–

108 திவ்ய தேசங்களில், வடநாட்டு திவ்யதேசங்களில் பெருமை பெற்ற திவ்ய தேசம் அஹோபிலம்—-
சிங்கத்தின் குகை– 9 சிங்கங்களின் குகை-ஒன்பது ந்ருஸிம்ஹ மூர்த்திகள் —-
அஹோபில ந்ருஸிம்ஹன்
வராஹ ந்ருஸிம்ஹன்
மாலோல ந்ருஸிம்ஹன்
யோகானந்த ந்ருஸிம்ஹன்
பாவன ந்ருஸிம்ஹன்
காரஞ்ச ந்ருஸிம்ஹன்
சக்ரவட ந்ருஸிம்ஹன்
பார்க்கவ ந்ருஸிம்ஹன்
ஜ்வாலா ந்ருஸிம்ஹன்

———-

ஸ்ரீ ந்ருஸிம்ஹ த்வாதசநாம ஸ்தோத்ரம்

ப்ரதமஸ்து மஹோஜ்வாலோ
த்விதீயஸ் தூக்ரகேஸரீ
த்ருதீய : க்ருஷ்ண பிங்காக்ஷ :
சதுர்த்தஸ்து விதாரண :
பஞ்சாஸ்ய : பஞ்சமைஸ் சைவ
ஷஷ்ட : கஸிபுமர்தந :
ஸப்தமோ தைத்யஹந்தாச
அஷ்டமோ தீநவல்லப :
நவம : ப்ரஹ்லாதவரதோ
தசமோ நந்தஹஸ்தக :
ஏகாதச மஹாரௌத்ரோ
த்வாதஸ : கருணாநிதி :

த்வாதஸைதாநி நாமாநி ந்ருஸிம்ஹஸ்ய மஹாத்மந :

———-

ஓம் நமோ நாரஸிம்ஹாய வஜ்ரதம்ஷ்ட்ராய வஜ்ரிணே | வஜ்ரதேஹாய வஜ்ராய நமோ வஜ்ரநகாயச ||

காலாந்தகாய கல்பாய கலநாய க்ருதே நம : | காலசக்ராய சக்ராய வஷட்சக்ராய சக்ரிணே ||

ஸஹஸ்ர பாஹவே துப்யம் ஸஹஸ்ரசரணாய ச | ஸஹஸ்ரார்க்க ப்ரகாஸாய ஸஹஸ்ராயுத தாரிணே ||

சத்ருக்னாய ஹ்யவிக்நாய விக்நகோடி ஹராய ச | ரக்ஷோக்நாய தமோக்நாய பூதக்நாய நமோ நம : ||

பூதபாலாய பூதாய பூதாவாஸாய பூதிநே | பூதவேதாள காதாய பூதாதிபதயே நம : ||

பூதக்ரஹ விநாஸாய பூதஸம்யமிதே நம : | மகாபூதாய ப்ருகவே ஸர்வபூதாத்மநே நம : ||

ஸர்வைஸ்வர்ய ப்ரதாத்ரே ச ஸர்வ கார்ய விதாயிநே | ஸர்வஜ்ஞாயா ப்யநந்தாய ஸர்வ ஸக்தி தராய ச ||

ஸர்வாபிசார ஹந்த்ரே ச ஸர்வைஸ்வர்ய விதாயிநே | பிங்காக்ஷாயைக ஸ்ருங்காய த்விஸ்ருங்காய மரீசயே ||

அபம்ருத்யு விநாஸாய ஹ்யபஸ்மார விகாதிநே அந்நதாயாந்ந ரூபாய ஹ்யந்நாயாந்த புஜே நம : ||

அமீ ஹி த்வா ஸுர ஸங்கா விஸந்தி கேசித் பீதா : ப்ராஞ்ஜலயோ க்ருணந்தி |
ஸ்வஸ்தீத்யுக்த்வா முநயஸ் ஸித்த ஸங்கா : ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி : புஷ்கலாபி : ||

ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா : விஸ்வே தேவா மருதஸ்சோஷ்மபாஸ்ச |
கந்தர்வ யக்ஷாஸுர ஸித்த ஸங்கா : வீக்ஷந்தி த்வாம் விஸ்மிதாஸ் சைவ ஸர்வே ||

லேலிஹ்யஸே க்ரஸமாநஸ் ஸமந்தாத் லோகாந் ஸமக்ராந் வதநைர் ஜ்வலத்பி : |
தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம் பாஸஸ் தவோக்ரா : ப்ரதபந்தி விஷ்ணோ ||

ஸுஜ்யோதிஸ்வம் பரம்ஜ்யோதி :ஆத்மஜ்யோதி :ஸநாதந : |
ஜ்யோதிர் லோகஸ்வரூபஸ் த்வம் ஜ்யோதிர்ஜ்ஞோ ஜ்யோதிஷாம் பதி : ||

கவயே பத்ம கர்ப்பாய பூதகர்ப்ப க்ருணாநிதே | ப்ரஹ்மகர்பாய கர்ப்பாய ப்ருஹத் கர்ப்பாய தூர்ஜடே ||

உன்மத்தாய ப்ரமத்தாய நமோ தைத்யாரயேநம : | ரஸஜ்ஞாய ரஸேஸாய ஹ்யரக்த ரஸநாய ச ||

நாக கேயூரஹாராய நாகேந்த்ராயாக மர்திநே | நதீவாஸாய நக்நாய நாநாரூபதராய ச ||

கதாபத்ம தராயைவ பஞ்சபாண தராய ச |காமேஸ்வராய காமாய காமபாலாய காமிநே ||

நம : காமவிஹாராய காமரூப தராய ச |ஸோமஸுர்யாக்நி நேத்ராய ஸோமபாய நமோ நம : ||

தர்ம நேத்ர நமஸ்தேஸ்து நமஸ்தே கருணாகர | புண்ய நேத்ர நமஸ்தேஸ்து நமஸ்தேபீஷ்ட தாயக ||

நமோ நமஸ்தே ஜயஸிம்ஹரூப நமோ நமஸ்தே நரஸிம்ஹ ரூப |
நமோ நமஸ்தே ரண ஸிம்ஹ ரூப நமோ நமஸ்தே நரஸிம்ஹ ரூப ||

—————-

வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ,ஆர்த்தார்த்தி நிர்வாபணாத்
ஔதார்யாத் அகஸோஷ்ணாத், அகணித ச்ரேய ப்ராணாத் |
ஸேவ்ய : ஸ்ரீபதிரேக ஏவ ஜகதாம் ஏதேச ஷட்ஸாக்ஷிண :
ப்ரஹ்லாதச்ச விபீஷணச்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ : ||

யா ப்ரீதிர்ரவிவேகாநாம் விஷயேஷ்வ நபாயிநோ |
த்வா மநுஸ்மரதஸ்ஸா மே ஹ்ருதயாந் மா ப ஸர்பது ||

நதோஸ்ம்யநந்தா ய துரந்த சக்தயே விசித்ர வீர்யாய பவித்ர கர்மணே |
விஸ்வஸ்ய ஸர்கஸ்திதிஸம்யமாந் குணை :ஸ்வலீலயா ஸந்ததே அவ்யயாத்மநே ||

அளவில்லாதனவும் , வெல்ல முடியாதனவும்திறமையும் பலமும் உடையவனும் , இவ்வுலகத்தில் படைத்தல் காத்தல் அழித்தல் –
கார்யங்களை விளையாட்டாகச் செய்பவனும் மாறுதல் அற்றவனுமான பரமாத்மாவை வணங்குகிறேன்

தத்தே மஹத்தம ! நம ; ஸ்துதிகர்ம பூஜா கர்ம ஸ்ம்ருதிச் சரணயோ : ச்ரவணம் கதாயாம் |
ஸம்ஸேவயா த்வயி விதேதி ஷடங்கயா து பக்திஞ்ஜந : பரமஹம்ஸ கதௌ லபேத ||

ஸ்ரீ பகவாநு வாச —

வத்ஸ ப்ரஹ்லாத பத்ரம்தே ப்ரீதோஹம்தே ஸுரோத்தம |
வரம் வ்ருணீஷ்வா பிமதம் காமபூரோஸ்ம்யஹம்ந்ருணா ||ம

ஏவம் ப்ரலோப்யமாநோபி வரைர்லோக ப்ரலோபனை |
ஏகாந்தித்வாத் பகவதி நைச்சத்தாநஸு ரோத்தம : ||

————-

ப்ரஹ்லாத —-
ஸ்ரீ கோவிந்த முகுந்த கேஸவ ஸிவ ஸ்ரீ வல்லப ஸ்ரீ நிதே
ஸ்ரீ வைகுண்ட ஸுகண்ட குண்டிதகல ஸ்வாமின்
அகுண்டோதய ஸுத்தத்யேய விதூததூர்த தவள ஸ்ரீ மாதவாதோக்ஷஜ
ஸ்ரத்தாபத்த விதேஹி நஸ்த்வயி தியம் தீராம் தரித்ரீதர

அச்யுத குணாச்யுத கலேஸ ஸகலேஸ ஸ்ரீதர தராதர விபுத்த ஜனபுத்த |
ஆவரண வாரண விநீல கனநீல ஸ்ரீகர குணாகர ஸுபத்ர பலபத்ர ||
கர்ண ஸுக வர்ணன ஸுகார்ணவ முராரே ஸுவர்ண ருசிராம்பர ஸுபர்ணரத விஷ்ணோ |
அர்ண வநிகேதன பவார்ணவபயம் நோ ஜீர்ணய லஸத்குணகணார்ணவ நமஸ்தே ||

———-

ப்ரத்யாதிஷ்ட புராதன ப்ரஹரண க்ராம : க்ஷணம் பாணிஜை
அவ்யாத் த்ரீணி ஜகந்த்ய குண்ட மஹிமா வைகுண்ட கண்டீரவ : |
யத் ப்ராதுர்பவநா தவந்த்ய ஜடரா யாதிருச்சிகா த்வேதஸாம்
யாகாசித்ஸஹஸா மஹாஸுர க்ருஹஸ் தூணாபிதாமஹ்யபூத் ||

ஸ்தூணா —தூண் அதாவது கம்பம்
அவந்த்ய —மலடு இல்லாத
ஜடரா—-வயிற்றைப் பெற்று
வேதஸாம் பிதாமஹீ அபூத்—-ப்ரும்மாக்களுக்குத் தகப்பனைப் பெற்ற தாயாக ஆயிற்று—
( இந்த மணி வயிற்றால் ந்ருஸிம்ஹனைப் பெற்ற தூணும் மோக்ஷம் அடைந்ததோ ! )

——————

ஸ்ரீ மத் பாகவதம் –ஸ்கந்தம்-7-ஸ்லோகங்கள்- 19-22

mimamsa manasya samutthito ‘grato
nrsimha-rupas tad alam bhayanakam
pratapta-camikara-canda-locanam
sphurat sata-kesara-jrmbhitananam
karala-damstram karavala-cancalaksuranta-
jihvam bhrukuti-mukholbanam
stabdhordhva-karnam giri-kandaradbhutavyattasya-
nasam hanu-bheda-bhisanam
divi-sprsat kayam adirgha-pivaragrivoru-
vaksah-sthalam alpa-madhyamam
candramsu-gaurais churitam tanuruhair
visvag bhujanika-satam nakhayudham
durasadam sarva-nijetarayudhapraveka-
vidravita-daitya-danavam

Hiranyakasipu studied the form of the Lord, trying to decide who the
form of Nrsimhadeva standing before him was. The Lord’s form was
extremely fearsome because of His angry eyes, which resembled molten
gold; His shining mane, which expanded the dimensions of His fearful
face; His deadly teeth; and His razor-sharp tongue, which moved about
like a dueling sword. His ears were erect and motionless, and His
nostrils and gaping mouth appeared like caves of a mountain. His jaws
parted fearfully, and His entire body touched the sky. His neck was very
short and thick, His chest broad, His waist thin, and the hairs on His
body as white as the rays of the moon. His arms, which resembled flanks
of soldiers, spread in all directions as He killed the demons, rogues and
atheists with His conchshell, disc, club, lotus and other natural
weapons.

(ஸ்ரீ மத் பாகவதம் -7-ஸ்கந்தம்-19-22- வர்ணனை ஸூ கர் -நரஸிம்ஹ ரூபம்
மீமாம்சமானசய சமுதிதோ கிராதோ நரஸிம்ஹ ரூபஸ் தத் அலம் பயங்கம்-ப்ரதாப்த-சமிகர சண்ட லோசனம்-
ஸ்புரத் சதகேசர ஜ்ரும்பிதநனம்-கரள தம்ஸ்த்ரம்-கராவல கஞ்சலஸுரந்த ஜிஹ்வம் ப்ருகுதி முகோல்பணம்-
ஸ்தப்தோர்த்வ கர்ணம் -கிரி கந்தரத்புத வ்யதஸ்ய நாஸம் ஹனு பேத பிஷணம் த்வி ஸ்ப்ர்சத் கயம்
அதிர்ஹ பிவர கிரிவோரு வஷஸ்தலம் -அல்ப மத்யம் சந்திராம்சு கௌரைஸ் சுரிதம் தனுருஹைர் விஸ்வக் புஜங்கிக-
சதம் நகாயுதம் துரஸ்தம் சர்வ நிஜேதர யுத ப்ரவேக வித்ரவித-தைத்ய தனவம்-

ஹிரண்யன் -ஸ்ரீ நரஸிம்ஹ ரூபம் கண்டான் -பயங்கர ரூபம் -உருகும் தங்கம் போன்ற கண்கள் -ஒளி வீசும் பயங்கர முகம் –
பயங்கர பற்கள் -ஒளி வீசும் வாள் போன்ற நாக்கு -நீண்ட அசையாத காதுகள் -குகை போன்ற மூக்குத் த்வாரங்கள் –
பயங்கரமாக அசையும் தாடைகள் -ஆகாசம் வரை வளர்ந்த திரு மேனி -குறுகிய அடர்ந்த கழுத்து -அகன்ற மார்பகம் –
குறுகிய இடை -சந்த்ர கிரணங்கள் போலே வெளுத்த ரோமங்கள் -திவ்ய ஆயுதங்கள் கொண்டு நிரசித்த அசுரர் ராக்ஷசர்
கூட்டங்கள் போலே திரு உகிராலே நிரசிக்க வல்ல திரு உருவம் )

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ -நம்முடை நம்பெருமாள் -திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நரஸிம்ஹ பரமான ஆறு சுவைகள் அனுபவம் – –

June 6, 2020

ஸ்ரீ அஹோபில நவ நரஸிம்ஹர் சேவை–
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ஸ்ரீ நரஸிம்ஹ பரமான திரு நாமங்கள்-
ஸ்ரீ நரஸிம்ஹ அஷ்டோத்ரம் –
ஸ்ரீ நரஸிம்ஹ அஷ்டகம் —
ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்-
ஸ்ரீ பெரிய திரு மொழி ஸ்ரீ சிங்க வேள் குன்ற அனுபவம் –
ஸ்ரீ நரஸிம்ஹ மூர்த்தி கீர்த்திப் பயி ரெழுந்து விளைந்திடும் சிந்தை ஸ்ரீ ராமானுசன்
ஸ்ரீ நரஸிம்ஹ பரமான ஆறு சுவைகள் அனுபவம் – தேனும் பாலும் கன்னலும் அமுதுமான அனுபவம் —

ஸ்ரீ நவ நரசிம்மர் –ஒன்பது என்றும் புதிது புதிதாக அனுபவம் என்றும் உண்டே

அம்ருத்யு -யோகானந்த நரசிம்மர்
அஹோபில க்ஷேத்ரம் -காருட சைலம்–தாரஷ்யாத்ரி -ஸூ பர்ணாத்ரி–வேதாத்ரி -மேற்கு பகுதியில் சேவை –
ம்ருத்யு ம்ருத்யு -பதம் -மந்த்ர ராஜ கடைசி -இந்த திரு நாமம்
முதல் பாசுரம் இந்த நரசிம்மர் மங்களா சாசனம் –

சர்வ த்ருஷே நம-அடுத்த திரு நாமம் சர்வ த்ருக் -சர்வதோ முகம் -யுகபத்-அறியும் ஞானவான் – சர்வம் ஸர்வத்ர சர்வ இந்திரிய –
அஹோ விலம்–பலம் -குகைக்குள் பலத்துடன் -ஆஸ்ரித சம்ரக்ஷணம் –

ஓம் ஸிம்ஹாய நம -அடுத்து
பவ நாசினி -புண்ய தீர்த்தம் -பிறவி அறுக்கும் -திரு புளிய மரத்தின் அடியில் இருந்து பெருகும் தீர்த்தம்
அஹோபில நரசிம்மர்–மாலோலன் -மேல் சேவை -ஸ்வயம்பு -மூர்த்தி –எட்டாம் பாசுரம்
வீர-இரண்டாம் பதம் – -சாளக்ராம மூர்த்தி செஞ்சுல வல்லி-
அருகில் சின்ன குகையில் நான்முகனும் ருத்ரனும் -உண்டே –
திரு மங்கை ஆழ்வார் இத்தையும் நா தளும்ப நான்முகனும் ஈசனும் ஏத்த என்கிறார்
ஆறாம் பட்டம் ஜீயர் உள்ளே ஒரு இடத்தில் ஆராதனம் இன்றும் செய்வதாக ஐதிக்யம்-தடுப்பு வலை வைத்துள்ளார்கள் இங்கு
எம்பெருமானார் தனி சந்நிதியும் உண்டு இங்கு

ஓம் சந்தாத்ரே நம –203-ஆஸ்ரிதர்களை சேர்த்துக் கொள்பவர் —சந்தாதா -பார்க்கவ நரசிம்மர்–கீழேயே சேவை –
அடர்ந்த வனப்பு மிக்க வனப்பகுதி -சாந்த ஸ்வரூபம் -அக்ஷய தீர்த்தம் அருகில் உண்டு -வசிஷ்டர் தவம் செய்த இடம் –
இங்கு இருந்து தான் அஹோபிலம் முழுவதும் தீர்த்தம் விநியோகம் -அக்ஷயமான மோக்ஷம் அருளும் தீர்த்தம்
நான்காம் பாசுரம் -மங்களா சாசனம் -தெய்வம் அல்லால் செல்லா ஒண்ணாத –
தசாவதாரம் பிரபையில் சேவை-

அடுத்த சந்திமாந் -204–ஆஸ்ரிதரை கை விடாதவன் – மாலோலன் அன்றோ -அருகில் மடியிலே பிராட்டியும் உண்டே –
கிருபா வசாத் சந்நிஹிதானாம்-சஞ்சாரம் செய்து இன்றும் உலோகருக்கு கிருபை
மா லோல லஷ்மி நரசிம்மன்-அல்லி மாதர் புல்க நின்ற -அழகியான் தானே அரி உருவம் தானே
நல்லை நெஞ்சே நம்முடை நம் பெருமாள்-கீழே தன்னிடம் வந்த ஆஸ்ரிதர் -இங்கு இவனே சஞ்சரித்து ஆஸ்ரிதர்கள் இடம் சேர்கிறான்-
கனக தீர்த்தம் அருகில்
பத்ரன் -பதம் இதுக்கு -மந்த்ர ராஜ ஸ்லோகத்தில் –
ராம பத்ரன் -பல பத்ரன் -அங்கு எல்லாம் விசேஷித்து -இங்கு மட்டுமே பத்ரன் என்றாலே மாலோலன்

ஸ்திராய நம -205-குற்றங்களினாலும் மாற்ற முடியாத திண்மை
ஏய்ந்த–பாசுரம் -வராஹ- க்ரோடா நரசிம்மன் -சிம்ஹாசலம் போலே -பவ நாசினி கரை வழியாக சென்று –
உடைந்த கற்கள் பாறைகள் வழியாக -சிறு ஸீரிய மூர்த்தி முதல் ஸ்லோகம் -உக்ரம் பதம் இவனுக்கு -உத்புல்ல விசாலாக்ஷம்–
பெரு மலர் புண்டரிக கண் நம் மேல் ஒருங்க விடுவான் -மானமிலா பன்றியாம்
மஹா வராஹ -ஸ்புட பத்ர விசாலாக்ஷன்-

நம்மையும் நிலைத்து நிற்கச் செய்து அருளுபவர்

அஜாய நம -206-முனைத்த சீற்றம் -பாசுரம் -தூணில் இருந்து தோன்றியதால் -பாவன நரஸிம்ஹர்-சேவிப்பது சிரமம் —
செல்ல ஒண்ணாத சிங்க வேள் குன்றம்
செஞ்சு ஜாதி வேடுவர் -கூட்டம் கூட்டமாக சேவை -ஸ்தம்பே அவதாரணம் —
பரத்வாஜர் மகரிஷி -ப்ரஹ்மஹத்தி பாவம் போக்க இங்கே -தாபம் –
மஹா விஷ்ணும் -பதம் இவனுக்கு

துர் மர்ஷணாய நம -207-ஜ்வாலா நரசிம்மன்
ஐந்தாம் பாசுரம் -இவனுக்கு -பாவ நாசினி அருவியாகக் கொட்டும் இடம்
சாளக்ராம திரு மேனி இவர் –பொன்னன் உருகி விழுந்தான் இவனது கோப ஜ்வாலையால் –
பரந்தப-பரர்களை தபிக்கச் செய்பவன் ஜ்வலந்தம் -இவனுக்கு

ஓம் சாஸ்த்ரே நம -208-விரோதிகளை நன்றாக சிஷித்தவர்–சாஸ்தா -காரஞ்ச நரசிம்மன் -மேல் அஹோபிலம் அருகில் –
காரஞ்ச வ்ருக்ஷம் அருகில் -கையில் சார்ங்கம் பிடித்து -ராகவ சிம்மம் –
பெரியாழ்வார் -கண்டார் உளர் -நாண் ஏற்றி உள்ள வில் கொண்டு இரணியனை பிளந்தான் என்று அருளிச் செய்கிறார்
அலைத்த பேழ் வாய் -இரண்டாம் பாசுரம்-செஞ்சுல வல்லி -தாயார் வேடர் குலம் -அதனாலே வில் பிடித்து வசீகரம் பண்ண –
பீஷணம் –பயங்கரமானவன் -மந்த்ர ராஜ பதம் இவனுக்கு
முக்கண்களையும் சேவிக்கலாம் இவனுக்கு -காம க்ரோதங்கள் -ரோகங்கள் தீர்ப்பவன் -பீஷணன் –
சிலைக்கை வேடர்கள் ஆரவாரம் -ஆனந்த அதிசயம் -ஆஞ்சநேயர் இங்கு சேவை -விலக்ஷணம்-நரசிம்ம ராகவன் –
ஸூந்தரன்–அழகியான் தானே அரி உருவம் தானே –
மாரீசன் சுக்ரீவன் ராமனை நரசிம்ம ராகவன் -கிள்ளிக் களைந்த-வ்ருத்தாந்தம் தானே அங்குலய அக்ர-என்று அருளிச் செய்கிறான்

ஓம் விஸ்ருதாத்மநே நம – 209 –சத்ரவட நரசிம்மன் -குடை சத்ரம்–கிழக்கு நோக்கி திரு மகம் -ஆல மர நிழல்
மந்தஸ்மிதம் காட்டி சேவை
சரித்திரங்கள் வியந்து கேட்க்கும் படியான –என் சிங்க பிரான் பெருமை ஆராய முடியுமோ-
சாஷாத் ம்ருத்யு ம்ருத்யு -இவனே -ஆஸ்ரித ரக்ஷணம் -தனக்குத்தான் சரித்திரம் வியப்பு –
சங்கீர்த்தன சாஸ்திரம் வர இவனை உபாசனம் –
ஹாஹா ஹூ ஹூ -கந்தர்வர்கள் -வ்ருத்தாந்தம் -இன்னிசையால் பாடி மகிழ்வித்து தவம் செய்தார்கள் –
அன்னமாச்சார்யார் இங்கே பல கீர்த்தனைகள் -ஸ்தோத்ரம்
கீழ் அஹோபில க்ஷேத்ரம் அருகில் சேவை

ஸூராரிக்நே நாம–210- உக்ர ஸ்தம்பம் -ஆவிர்பவித்த ஸ்தம்பம்
நமது கம்பம் போக்கடிக்க ஸ்கம்பத்தில் ஆவிர்பாவம் -ஸ்கம்பமாகவே இங்கே சேவை -அனைத்து திரு நாமங்களும் இவனுக்கு

யோக நரசிம்மர் -பிரகலாதனுக்கு யோகம் அருளி -ஆடி ஆடி –நாடி நாடி நரசிங்கா –

செஞ்சுல வல்லி தாயார் குகை பாவன நரசிம்மர் சந்நிதி அருகில்

அஹோபில மட மூலவர் நரசிம்மர் -உத்சவர் சக்ரவர்த்தி திரு மகன் சீதா பிராட்டி இளைய பெருமாள் -திருவடி –
பெரிய பெரிய பெருமாள் -மூலவர் பெருமாள் உத்சவர் -ராம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம் -உண்டே –

————

ஒன்பது நரசிம்மர்களின் விவரங்கள்-
அஹோபிலம் என்றாலே மேல் அஹோபிலம், அதாவது மலை மேல் இருக்கும் இடத்தைக் குறிப்பதாகும்.
ஏனெனில், அங்குதான், நரசிம்மர் அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை வதம் செய்தது.
எகுவ / மேல் / பெரிய அஹோபிலம் மற்றும் திகுவ / கீழ் / சிறிய அஹோபிலம் என்று பிரித்துக் காட்டப் படுகிறது.
திகுவ-கீழ் அஹோபிலத்தில் மூன்று நரசிம்மர் கோவில்கள் உள்ளன.
ஒரு கமஸ்கிருத சுலோகத்தில், ஒன்பது நரசிம்மர்கள் குறிக்கப்படுகிறார்கள்:

“ஜுவாலா அஹோபில மலோல க்ரோத கரஞ்ச பார்கவ
யோகனந்த க்ஷத்ரவத பாவன நவ மூர்த்தயாஹ”

எண் நரசிம்மர் தன்மை நரசிம்மர் பெயர் கிரகத்துடன் தொடர்பு படுத்துவது
1 ஜுவாலா ஜ்வாலா நரசிம்மர் செவ்வாய்
2 அஹோபில அஹோபில நரசிம்மர் குரு
3 மலோல மாலோல நரசிம்மர் வெள்ளி
4 க்ரோத வராஹ (குரோத) நரசிம்மர் ராகு
5 கரஞ்ச கரஞ்ச நரசிம்மர் திங்கள்
6 பார்கவ பார்கவ நரசிம்மர் சூரியன்
7 யோகனந்த யோகானந்த நரசிம்மர் சனி
8 க்ஷத்ரவத சக்ரவட நரசிம்மர் கேது
9 பாவன பாவன நரசிம்மர் புதன்
என்று வரிசைப்படுத்துகிறார்கள்.
ஆனால், நரசிம்மரின் “அனுஸ்டுப் மந்திரம்” விஷ்ணுவே ஒன்பது விதமான நரசிம்மர்களாக தோன்றி காட்சியளித்தார் என்றுள்ளது
தலவரலாற்றின்படி இந்த இடம் கருடகிரி [கருடாச்சலம், கருடசைலம்] என்று அழைக்கப்படுகிறது.
கருடருக்கு காட்சி கொடுக்கவே ஒன்பது இடங்களில் பெருமாள் நரசிம்மராக தோற்றம் அளித்தாராம்.
மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட “உக்கிர ஸ்தம்பம்’ (தூண்) உள்ளது.
திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம
வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருட பகவான் அவற்றைப் பூஜித்து வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.
இங்கே ஹிரணியனைக் கொன்ற பின் பிரகலாதனுக்கு வரம்கொடுக்கும் தோற்றத்தில் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார்.
இன்னொரு கதையின்படி இப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் செஞ்சுக்கள்.
அவர்களின் குலத்தில் மகாலட்சுமி செஞ்சுலட்சுமியாக வந்து பிறந்தார்.
அவரை நரசிம்மர் விரும்பி திருமணம் செய்து கொண்டார்.
எனவே செஞ்சுபழங்குடியினர் வழிபட்ட / வழிபட்டுவரும் நரசிம்மர் கோயில்களாக இவை இருக்கின்றன.

———-

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ஸ்ரீ நரஸிம்ஹ பரமான திரு நாமங்கள்-200-210 திரு நாமங்கள் -11–திரு நாமங்கள்

200-அம்ருத்யு
ம்ருத்யு வின் விரோதி -பிரகலாதனை மிருத்யு விடம் இருந்து ரஷித்து அருளி
நமன் சூழ் நரகத்து நம்மை நணுகாமல் காப்பான் -மூன்றாம் திரு -98-
நரசிம்ஹ அவதாரத்தில் ம்ருத்யுவுக்கும் ம்ருத்யுவானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அழிவோ அதற்குக் காரணமோ இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர்
அழிவில்லாதவர்-அழிவைத் தராதவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————-

201- சர்வ த்ருக் –
யாவரையும் பார்ப்பவன் -நியமிப்பவன்
இவையா எரி வட்டக் கண்கள் -நான் முகன் -21
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப -பிரமாணங்கள் பார்த்து அருளிய நம் ராமானுசன்
நண்பர் பகைவர் நடுநிலையாளர் ஆகியோரை அவரவர்க்கு உரிய முறையில் நடத்துதல் பொருட்டு
உள்ளபடி பார்த்து அறிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிராணிகளின் புண்ய பாவங்கள் எல்லாவற்றையும் இயற்கையான அறிவினால் எப்போதும் பார்ப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
எல்லாவற்றையும் உள்ளபடி பார்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

202- சிம்ஹ
சிங்கப் பிரான்
இமையோர் பெருமான் அரி பொங்கக் காட்டும் அழகன் -நான் முகன் -21
அழகியான் தானே அரி யுருவன் தானே -நான் முகன் திரு -22
அசோதை இளம் சிங்கம்
மீண்டும் வரும் -489-தண்டிப்பவன்
மஹா நரசிம்ஹ ஸ்வரூபி -ஸ்ரீ பராசர பட்டர் –
நினைத்த மாத்திரத்தில் பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –
அருளைப் பொழிபவர் -சம்ஹரிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

203-சந்தாதா –
பக்தர்களை தன்னிடம் சேர்த்து கொள்பவன்
யானையின் மஸ்தகத்தை பிளக்கும் சிங்கம் – குட்டிக்கு பால் கொடுக்கும்
பிரகலாதன் முதலிய பக்தர்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –
ஸ்ரீ ராமாவதாரத்தில் அஹல்யையை கௌதமரோடு சேர்த்து வைத்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிராணிகளை வினைப் பயங்களுடன் சேர்ப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
பிரஜைகளை நன்றாகத் தரிப்பவர் -போஷிப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

204-சந்திமான் –
சந்தி சேர்க்கை நித்யமாக பண்ணுபவன் -மான் -மதுப் -நித்ய யோகம் -ஸ்ரீ மான் போலே
ஆஸ்ரிதர் தவறு செய்தாலும் என் அடியார் –செய்தாரேல் நன்று செய்தார் -என்பவன்
அவர்களுக்குத் தமது சேர்க்கை எக்காலமும் நீங்காமல் இருக்கச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வினைப்பயன்களை அனுபவிப்பவரும் தாமாகவே இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
ஸூக்ரீவன் விபீஷணன் -முதலியவர்களுடன் உடன்பட்டவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

205-ஸ்திர –
நிலையாய் நிற்பவன் -சலனம் அற்றவன்
நிலை பேரான் என் நெஞ்சத்து எம்பெருமான் எப்பொழுதும் -10-6-6-
நாம் பெற்ற நன்மையையும் அருள் நீர்மை தந்த அருள் -இரண்டாம் திரு -58-
அருளுகையே இயல்பாக உடையவன் –
கூடியிருக்கையில் அபசாரங்கள் செய்தாலும் அன்பு மாறாமல் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எப்போதும் ஒரே தன்மையுடன் மாறுபாடு இல்லாமல் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
எப்பொழுதும் நிலையாக உள்ளவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

206-அஜ –
பிறப்பிலி -ஸ்தம்பம் -நம் போல் பிறவாதவன் –
அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க யுவே -பெரியாழ்வார் -1-6-9
இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப் பிரான் -2-8-9-
அஜன் -யாவரையும் வெற்றி கொள்பவன் அகார வாச்யன் 96/514-
தூணில் தோன்றியதால் பிறரைப் போல் பிறவாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வ்யாபிப்பவர் -நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –
பிறப்பில்லாதவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

207-துர்மர்ஷண-
எதிரிகளால் தாங்க முடியாத தேஜஸ் -ஹிரண்யன் பொன் உருகுமா போலே உருக்கிய தேஜஸ்
இவையா பிலவாய் இவையா எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு -நான் திரு -21
பொன் பெயரோன் ஆகத்தை கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு
குடல் மாலை சீரார் திரு மார்பின் மேல் கட்டி ஆரா வெழுந்தான் அரி யுருவாய் -சிறிய திருமடல்
செம் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் -9-10-6-
பகைவர்களால் தாங்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ரதாங்க சங்க தாதாரம் ப்ருஹ்ம மூர்த்திம் ஸூ பீஷணம் –த்யான ஸ்லோகம்
அசுரர்களால் அடக்குவதற்கு முடியாதவர் –ஸ்ரீ சங்கரர் –
எதிர்க்க முடியாதவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

208-சாஸ்தா –
சாசனம் பண்ணுமவன்
ஒரு மூ யுலகாளி -9-8-9-
சிம்ஹ கர்ஜனையால் சிஷிப்பவன் -இகலிடத்து அசுரர்கள் கூற்றம் -9-2-2-
இப்படி விரோதிகளை நன்கு தண்டித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
நிநாத வித்ராசித தானவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –கர்ஜனை மூலம் அசுரர்களை நடுங்க வைப்பவன்
த்ரவந்தி தைத்யா -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -திரு நாமத்தை உச்சரித்த உடன் அசுரர்கள் ஓடிச் செல்கின்றனர்
வேதம் முதலியவற்றால் கட்டளையிட்டு நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகிற்குக் கட்டளை இடுபவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

209-விஸ்ருதாத்மா –
வியந்து கேட்கப்படும் சரித்ரம்
என் சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே -2-8-9-
யாவராலும் வியந்து கேட்க்கத் தக்க ஸ்ரீ நரசிம்ஹ திருவவதார சரித்ரத்தை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அசேஷ தேவேச நரேஸ்வர ஈஸ்வரை -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -திவ்ய சரிதம் அனைவராலும் கேட்கப்படும்
வேதத்தில் விசேஷமாகக் கூறப்பட்ட சத்யம் ஞானம் முதலிய லஷணம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –
புகழ் பெற்ற ஸ்வரூபம் யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

210- ஸூராரிஹா –
தேவர்கள் எதிரிகளை முடிப்பவன்
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே -8-1-4-
ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க யுருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்ட கையன் -பெரியாழ்வார் -1-6-9-
தேவர்களுக்கு விரோதியான ஹிரண்யன் மார்பைப் பிளந்து கொன்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சத் சத்த்வ கரஜ ஸ்ரேணி தீப்தேந உபய பாணிநா சமயச்சத யதா சம்யக் பயாநாம் ச அபயம் பரம் -த்யான ஸ்லோகம் –
திரு நகங்களின் தேஜஸ்ஸாலே சம்சார பயத்தை போக்கி அபயம் அளிக்கிறார்
தேவர்களுக்கு விரோதிகளை அழிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
தேவர்களின் பகைவர்களான அசுரர்களை அழிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———————

ஸ்ரீ நரஸிம்ஹ அஷ்டோத்ரம் —

1. ஓம் நர சிம்காய நம
2. ஓம் மகா சிம்காய நம
3. ஓம் திவ்ய சிம்காய நம
4. ஓம் மகா பலாய நம
5. ஓம் உக்ர சிம்காய நம
6. ஓம் மகாதேவாய நம
7. ஓம் சம்பாஜெய நம
8. ஓம் உக்ர லோகன்யாய நம
9. ஓம் ரதுராய நம
10. ஓம் சர்வ புதியாய நம
11. ஓம் ஸ்ரீமான்யாய நம
12. ஓம் யோக நந்தய நம
13. ஓம் திருவிக்ர மயா நம
14. ஓம் ஹாரினி நம
15. ஓம் ஹோலகலயா நம
16. ஓம் ஹாக்ரினி நம
17. ஓம் விஜயாய நம
18. ஓம் ஜெய வர்தநய நம
19. ஓம் பஞ்ச நாய நம
20. ஓம் பரமகய நம
21. ஓம் அகோரய நம
22. ஓம் கோர விக்ராய நம
23. ஓம் ஜிவாலன்முகாய நம
24. ஓம் ஜிவாலா மலின் நம
25. ஓம் மகா ஜிவாலாய நம
26. ஓம் மகா பிரபாஹய நம
27. ஓம் நித்திய லக்சய நம
28. ஓம் சகஸ்சர கசாய நம
29. ஓம் துர்றிகாசாய நம
30. ஓம் பர்தவானாய நம
31. ஓம் மகா தமாஸ்திரேய நம
32. ஓம் யத பரஞ்ஜனய நம
33. ஓம் சண்ட கோபினே நம
34. ஓம் சதா சிவாய நம
35. ஓம் இரணிய கசிபு தேவ மிசைன் நம
36. ஓம் திவ்விய தானவ பஜனய நம
37. ஓம் கன பகராய நம
38. ஓம் மகா பத்ராய நம
39. ஓம் பல பத்ராய நம
40. ஓம் சூபத்ராய நம
41. ஓம் கராலிய நம
42. ஓம் விக்ராயை நம
43. ஓம் விகர்த்ரே நம
44. ஓம் சர்வ கத்துருகாய நம
45. ஓம் சிசுமராய நம
46. ஓம் திரி லோக தர்த மனே நம
47. ஓம் ஜய்சிய நம
48. ஓம் சரவேஸ்ராய நம
49. ஓம் விபாய நம
50. ஓம் பரகம் பனாய நம
51. ஓம் திவ்யாய நம
52. ஓம் அகம்பாய நம
53. ஓம் கவின் நம
54. ஓம் மகா தேவியே நம
55. ஓம் அகோஜெய நம
56. ஓம் அக்சேரயா நம
57. ஓம் வனமலின் நம
58. ஓம் வரப ரதேய நம
59. ஓம் விஸ்வம்பராய நம
60. ஓம் அதோத்யா நம
61. ஓம் பராப ராய நம
62. ஓம் ஸ்ரீ விஷ்ணவ நம
63. ஓம் புருசோத்தமயா நம
64. ஓம் அங்கோஸ்ரா நம
65. ஓம் பக்தாதி வத்சலாய நம
66. ஓம் நாகஸ்ராய நம
67. ஓம் சூரிய ஜோதினி நம
68. ஓம் சூரிஷ்வராய நம
69. ஓம் சகஸ்ர பகுய நம
70. ஓம் சர்வ நய நம
71. ஓம் சர்வ சித்தி புத்தாய நம
72. ஓம் வஜ்ர தம்ஸ்திரய நம
73. ஓம் வஜ்ர நகய நம
74. ஓம் மகா நந்தய நம
75. ஓம் பரம் தபய நம
76. ஓம் சர்வ மந்திரிக நம
77. ஓம் சர்வ யந்திர வித்ரமய நம
78. ஓம் சர்வ தந்திர மகாய நம
79. ஓம் அக்தாய நம
80. ஓம் சர்வ தய நம
81. ஓம் பக்த வத்சல நம
82. ஓம் வைசாக சுக்ல புத்யாய நம
83. ஓம் சர நகத நம
84. ஓம் உத்ர கீர்த்தினி நம
85. ஓம் புண்ய மய நம
86. ஓம் மகாத் மய நம
87. ஓம் கந்தர விக்ர மய நம
88. ஓம் வித்ரயாய நம
89. ஓம் பரபுஜ்யாய நம
90. ஓம் பகாவான்ய நம
91. ஓம் பரமேஸ்வராய நம
92. ஓம் ஸ்ரீவத் சம்ஹய நம
93. ஓம் ஜெத்யாமினி நம
94. ஓம் ஜெகன் மயாய நம
95. ஓம் ஜெகத்பலய நம
96. ஓம் ஜெகனாதய நம
97. ஓம் தேவி ரூபா பார்வதியாய நம
98. ஓம் மகா ஹகாய நம
99. ஓம் பரமத் மய நம
100. ஓம் பரம் ஜோதினி நம
101. ஓம் நிர்கனய நம
102. ஓம் நர்கேஷ் ஸ்ரீனி நம
103. ஓம் பரதத்வய நம
104. ஓம் பரம் தமய நம
105. ஓம் ஷா சித் ஆனந்த விக்ரகய நம
106. ஓம் லட்சு-மி நரசிம் கய நம
107. ஓம் சர்வ மய நம
108. ஓம் த்ரய நம

———

ஸ்ரீ நரஸிம்ஹ அஷ்டகம் –

ஸூந்தர ஜாமாத்ரு முனே ப்ரபத்யே சரணாம் புஜம்
சம்சாரார்ணவ சம்மக்ன ஜந்து சந்தார போதகம் –

பிறவிக் கடலுள் நின்று துளங்கும் பிராணிகளைக் கரை மரம் சேர்ப்பதற்கு உரிய தோணி போன்றதான
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள சீயர் உடைய திருவடித் தாமரைகளை தஞ்சமாக பற்றுகிறேன் என்றவாறே –

ஸ்ரீ பெருமாள் கோயில் கரிகிரியின் கீழ்க் காட்சி தந்து அருளா நிற்கும் ஸ்ரீ அழகிய சிங்கர் விஷயம் என்றும்
ஸ்ரீ திரு வல்லிக் கேணி ஸ்ரீ தெள்ளிய சிங்கர் விஷயமாகவும் பணித்து அருளிய ஸ்லோகம் –

———————————————————————————————————————————————

ஸ்ரீமத் அகலங்க பரிபூர்ண சசி கோடி
ஸ்ரீதர மநோஹர ஸ்டா படல காந்த
பாலய க்ருபா ஆலய பவ அம்புதி நிமக்நம்
தைத்ய வரகால நரசிம்ஹ நரசிம்ஹ—————1-

ஸ்ரீமத் அகலங்க பரிபூர்ண சசி கோடி -ஸ்ரீதர மநோஹர ஸ்டா படல காந்த–அழகியவாயும்-களங்கம் அற்றவையுமாயும் உள்ள-
பல வாயிரம் பௌர்னமி சந்திரர்களின் சோபையைத் தாங்குகின்ற மநோ ஹரமான உளை மயிர் திரள்களினால் –
சடாபடலம் -உளை மயிர்க் கற்றைகளாலே அழகியவரே —அழகியான் தானே அரி யுருவன் தானே –
பாலய க்ருபா ஆலய பவ அம்புதி நிமக்நம் தைத்ய வரகால நரசிம்ஹ நரசிம்ஹ ––கருணைக்கு இருப்பிடமானவரே
ஆசூர வர்க்கங்களுக்கு யமன் போன்ற அழகிய சிங்கப் பெருமாளே –
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ் புக நின்ற செங்கண்மால் -திருவாய் மொழி -3-6-6-
தைத்யவர் -இரணியன் போன்ற ஆசூர பிரக்ருதிகள்
காலன் -மிருத்யு
சம்சாரக் கடலில் வீழ்ந்த அடியேனை ரஷித்து அருள வேணும் –
நரசிம்ஹ நரசிம்ஹ -இரட்டிடித்துச் சொல்லுகிறது ஆதார அதிசயத்தினால் –

பிறவிக் கடலுள் நின்று துளங்கும் அடியேனுக்கு தேவரீர் உடைய திருவருள் அல்லது வேறு புகல் இல்லை என்றார் -ஆயிற்று-

———————————————————————————————————————————————————————————————-

பாத கமல அவந்த பாதகி ஜநா நாம்
பாதக தவா நல பதத்ரிவரகேதோ
பாவந பராயண பவார்த்தி ஹரயா மாம்
பாஹி க்ருபயைவ நரசிம்ஹ நரசிம்ஹ–2

பாத கமல அவந்த பாதகி ஜநா நாம் – தனது திருவடித் தாமரைகளில் வணங்கின பாபிஷ்ட ஜனங்களின் உடைய பாபங்களுக்கு
பாதக தவா நல –காட்டுத் தீ போன்றவனே
பதத்ரிவரகேதோ –பஷி ராஜனான பெரிய திருவடியைக் கொடியாக யுடையவனே –
பாவந பராயண –தன்னைச் சிந்திப்பார்க்கு பரகதியாய் யுள்ளவனே -உபாயமும் உபேயமுமாக இருப்பவனே
பவார்த்தி ஹரயா மாம் -பாஹி க்ருபயைவ – சம்சாரத் துன்பங்களைப் போக்க வல்ல உனது கருணையினாலேயே
அடியேனைக் காத்தருள வேணும்-போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
க்ருபயைவ -என்பதால்-ஏவ காரத்தால் என் பக்கலில் ஒரு கைம்முதல் எதிர் பார்க்கலாகாது என்கிறது –
நரசிம்ஹ நரசிம்ஹ–அழகிய சிங்கப் பெருமானே-

——————————————————————————————————————————————————————-

துங்க நக பங்க்தி தளிதா ஸூ ரவரா ஸ் ருக்
பங்க நவ குங்கும விபங்கில ம்ஹோர
பண்டித நிதான கமலாலய நமஸ் தே
பங்கஜ நிஷண்ண நரசிம்ஹ நரசிம்ஹ——3-

துங்க நக பங்க்தி தளிதா ஸூ ரவரா ஸ் ருக் பங்க நவ குங்கும விபங்கில ம்ஹோர –-நீண்ட திரு வுகிற் வரிசைகளினால்
பிளக்கப் பட்டவனான ஹிரண்யாசூரனுடைய உதிரக் குழம்பாகிற புதுமை மாறாத கும்குமச் சாறு தன்னால் வ்யாப்தமாய் இருக்கிற
அகன்ற திரு மார்பை யுடையவரே –

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் அவுணன் போன்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் -என்றும் –

போரார் நெடு வேலோன் பொன் பெயரோன் ஆகத்தை
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு குடல் மாலை
சீரார் திரு மார்பின் மேல் கட்டிச் செங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா வெழுந்தான் அரி யுருவாய் -என்றும் சொல்லுகிறபடியே

பண்டித நிதான-அறிஞர்கட்கு நிதி போன்றவரே-வைத்த மா நிதி இறே
நிதியானது உள்ளே பத்தி கிடந்தது ஒரு கால விசேஷத்திலே பாக்யவாங்களுக்கு வெளிப்படுமா போலே –
கமலாலய – பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமானவரே –-கமலை கேழ்வனே-
நரசிங்க வுருக் கொண்ட போது மூவுலகும் அஞ்சிக் கலங்கிப் போகும்படியான சீற்றம் உண்டானது கண்டு
அதனைத் தணிக்க ஸ்ரீ மகா லஷ்மி வந்து குடி கொள்ள ஸ்ரீ லஷ்மி நருசிம்ஹன் ஆன்மை இங்கு நினைக்கத் தக்கது
பங்கஜ நிஷண்ண – ஆசன பத்மத்திலே எழுந்து அருளி இருப்பவரே –-தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமான் -என்றபடி –
நரசிம்ஹ நரசிம்ஹா –நமஸ் தே உமக்கு வணக்கமாகுக –

————————————————————————————————————————————————————————–

மௌலிஷூ விபூஷண மிவாமரவராணாம்
யோகி ஹ்ருதயேஷூ ச சிரஸ் ஸூ நிகமா நாம்
ராஜ தரவிந்த ருசிரம் பதயுகம் தே
தேஹி மம மூர்த்நி நரசிம்ஹ நரசிம்ஹ—————–4-

மௌலிஷூ விபூஷண மிவாமரவராணாம்- அமரவராணாம் மௌலிஷூ விபூஷண –சிறந்த தேவர்களின் முடிகளின் மீதும்
அமரர்கள் சென்னிப் பூ இறே
யோகி ஹ்ருதயேஷூ – யோகிகளின் உள்ளத்திலும் –
ச சிரஸ் ஸூ நிகமா நாம் – வேதாந்தங்களிலும் – வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கு
மௌலிஷூ விபூஷண–சிறந்த தொரு பூஷணம் போன்று விளங்குகின்ற –
விபூஷணம் எனபது சப்தம் எந்த பதங்கள் எல்லாவற்றிலும் அந்வயிக்கக் கடவது
ராஜ தரவிந்த ருசிரம் பதயுகம் தே தேஹி மம மூர்த்நி – தாமரை போல் அழகிய தேவரீருடைய திருவடி இணையை
என் சென்னி மீது வைத்து அருள வேணும் –

கோல மாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -என்றும்
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் யாழி யம் கண்ணா வுன் கோலப் பாதம் -என்றும்

நரசிம்ஹ நரசிம்ஹ-

——————————————————————————————————————————————————————

வாரிஜ விலோசன மதநதி மதசாயம்
க்லேச விவ சீக்ருத சமஸ்த கரணாயாம்
ஏஹி ரமயா சஹ சரண்ய விஹகா நாம்
நாதமதி ருஹ்ய நரசிம்ஹ நரசிம்ஹ———————5-

வாரிஜ விலோசன – செந்தாமரைக் கண்ணரே –
கிண் கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே-செங்கண் சிறுத் சிறிதே எம்மேல் விழித்து அருள வேணும்
சரண்ய-அடியேன் போல்வார்க்குத் தஞ்சமானவரே –
மதநதி மதசாயம் –என்னுடைய சரம அவஸ்தையிலே
க்லேச விவ சீக்ருத சமஸ்த கரணாயாம் – சமஸ்த கரணங்களையும் -செவி வாய் -கண் -முதலான –
க்லேசத்துக்கு வசப்படுதுமதான அந்த சரம அவஸ்தையிலே –

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -என்றும்

மேல் எழுந்ததோர் வாயுக் கிளர்ந்து மேல் மிடற்றினை யுள் எழ வாங்கி
காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக் கண் உறக்கமதாவது -என்றும்

வாய் ஒரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர்க் குழிக் கண்கள் மிழற்றத்
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலற்ற -என்றும் –

காஷ்ட பாஷான சந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் -என்றும்

ஏஹி ரமயா சஹ விஹகா நாம் நாதமதி ருஹ்ய –ரமயா சஹ விஹகாநாம் நாதம் அதிருஹ்ய ஏஹி
பிராட்டியோடு கூடப் பெரிய திருவடி மேல் ஏறிக் கொண்டு அடியேன் பால் வந்து அருள வேணும் –

பறவை ஏறு பரம் புருடனாய்ப் பிராட்டியோடும் கூட எழுந்தருளி பாவியேனைக் கை கொண்டு அருள வேணும்
என்று பிரார்த்திக்கிறார் ஆயிற்று

நரசிம்ஹ நரசிம்ஹ-

————————————————————————————————————————————————————————-

ஹாடக கிரீட வரஹார வநமாலா
தார ரசநா மகர குண்டல ம ணீந்த்ரை
பூஷிதம சேஷ நிலயம் தவ வபுர் மே
சேதசி சகாஸ்து நரசிம்ஹ நரசிம்ஹ–6-

ஹாடக கிரீட –பொன்மயமான சிறந்த மகுடம் என்ன
வரஹார வநமாலா –வைஜயந்தி என்னும் வனமாலை என்ன
தார ரசநா –முத்து மயமான அரை நாண் என்ன –
தாரம் -என்று முத்துக்குப் பெயர்-நஷத்ரவடம் என்கிற திரு ஆபரணத்தை சொல்லிற்றாகவுமாம்
மகர குண்டல ம ணீந்த்ரை – திரு மகரக் குழைகள் என்ன –
மணீந்த்ரை –ரத்னா வாசகமான இந்த சப்தம் லஷண்யா ரத்ன பிரசுர பூஷண வாசகம் ஆகலாம் –
பூஷிதம – ஆகிய இத் திரு ஆபரணங்களினால் அலங்கரிக்கப் பட்டதும் –

செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ ஆழிகளும் கிண் கிணியும்
அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல வைம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியுமான
திரு வாபரணங்கள் அணிந்த திரு மேனியே தமது திரு உள்ளத்தில் திகழ வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று –

அசேஷ நிலயம் –எங்கும் வ்யாபித்ததுமான-அசேஷத்தையும் நிலையமாக வுடைத்தான -என்கை
நிலய சப்தம் நித்ய பும்லிங்கம் ஆகையாலே இங்கு பஹூரீவ்ஹியாகக் கடவது

தவ வபுர்- தேவரீர் உடைய திரு மேனி
மே சேதசி சகாஸ்து –என் நெஞ்சின் உள்ளே விளங்க வேணும்
நரசிம்ஹ நரசிம்ஹ ––அழகிய சிங்கப் பெருமாளே-

———————————————————————————————————————————————————————————–

இந்து ரவி பாவக விலோசன ரமாயா
மந்திர மஹா புஜ லசத்வர ரதாங்க
ஸூந்தர சிராய ரமதாம் த்வயி மநோ மே
நந்திதித ஸூரேச நரசிம்ஹ நரசிம்ஹ—7-

இந்து ரவி பாவக விலோசன –சந்தரன் சூர்யன் அக்னி இவர்களை திருக் கண்ணாக யுடையவரே –
தீப் பொறி பறக்கும் நெற்றிக்கண் உண்டே -அதனால் அக்னியை சேர்த்து அருளுகிறார்
ரமாயா மந்திர – பெரிய பிராட்டியாருக்கு திருக் கோயிலாக இருப்பவரே –
அந்த நெற்றிக் கண்ணை அவிப்பதற்காக பிராட்டி வந்து திரு மேனியில் வீற்று இருந்த படியாலே ரமாயா மந்திர -என்றார் –
மஹா புஜ லசத்வர ரதாங்க–தடக்கையிலே விளங்கும் சிறந்த திரு ஆழி ஆழ்வானை யுடையவரே –
மஹா புஜ லசத் தரரதாங்க -என்றும் பாட பேதம்
தரம் -என்று சங்குக்குப் பெயர் ஆதலால்-சங்கு சக்கரம் இரண்டையும் சேரச் சொன்னபடி ஆகவுமாம்
ஸூந்தர – அழகு பொலிந்தவரே-
சிராய ரமதாம் த்வயி மநோ மே–அடியேனுடைய மனமானது தேவரீர் இடத்தில் நெடும்காலம் உகப்பு கொண்டு இருக்க வேணும்
நந்திதித ஸூரேச –அமரர் கோன் துயர் தீர்த்தவரே –
நரசிம்ஹ நரசிம்ஹ-

———————————————————————————————————————————————————–

மாதவ முகுந்த மது ஸூதன முராரே
வாமன நருசிம்ஹ சரணம் பவ நதா நாம்
காமத கருணின் நிகில காரண நயேயம்
காலமமரேச நரசிம்ஹ நரசிம்ஹ——8-

மாதவ –திருமாலே –
முகுந்த –முக்தி அளிக்கும் பெருமானே –
மது ஸூதன –மது கைடபர்களை மாய்த்தவனே
முராரே –நரகா ஸூர வதத்தில் -முரனைக் கொன்றவனே
வாமன-குறள் கோலப் பெருமானே
நருசிம்ஹ –நரம் கலந்த சிங்கமே –
சரணம் பவ நதா நாம் –அடி பணிந்தவர்களுக்குத் தஞ்சமாவாய் –
காமத–அபேஷிதங்களை எல்லாம் அளிப்பவனே –
கருணின் –தயாளுவே –
நிகில காரண –சகல காரண பூதனே
காலம் நயேயம் –யமனையும் அடக்கி யாளக் கடவேன் –
பொருள் சிறவாது
உன்னை வாழ்த்தியே வாழ் நாளைப் போக்கக் கடவேன் –
அமரேச –அமரர் பெருமானே
நரசிம்ஹ நரசிம்ஹ –இங்கனே உன் திரு நாமங்களை வாயார வாழ்த்திக் கொண்டே
என் வாழ் நாளைப் போக்கக் கடவேன்

க்ரோசன் மதுமதன நாராயண ஹரே முராரே கோவிந்தேதி அனிசமப நேஷ்யாமி திவசான் -ஸ்ரீ பட்டர்

——————————————————————————————————————————————————–

அஷ்டகமிதம் சகல பாதக பயக்தம்
காம தம சேஷ துரி தாம யரி புக்நம்
ய படதி சந்ததம சேஷ நிலயம் தே
கச்சதி பதம் ஸ நரசிம்ஹ நரசிம்ஹ–9-

அஷ்டகமிதம் –எட்டு ஸ்லோகங்களினால் அமைந்த இந்த ஸ்தோத்ரத்தை –
சகல பாதக பயக்தம் –சகல பாபங்களையும் சகல பயன்களையும் போக்கடிப்பதும்
பாதகம் -மஹா பாதகங்களை -குறிக்கும்
காம தம –சகல அபேஷிதங்களையும் அளிப்பதும்
சேஷ துரி தாம யரி புக்நம் –சகல விதமான பாபங்களையும் பிணிகளையும் பகைவர்களையும் நிரசிப்பதுமான –
துரிதம் -உபபாதகங்களை
ய படதி சந்ததம சேஷ நிலயம் தே கச்சதி பதம் ஸ –யாவன் ஒருவன் கற்கின்றானோ
அவ்வதிகாரி அனைவருக்கும் ப்ராப்யமான தேவரீர் உடைய திவ்ய ஸ்தானத்தை அடைந்திடுவான்
நரசிம்ஹ நரசிம்ஹ –

இதனால் இந்த ஸ்தோத்ரம் கற்றாருக்கு பலன்சொல்லித் தலைக் கட்டுகிறார்
அநிஷ்ட நிவாரணம்-இஷ்ட ப்ராபணம் ஆகிற இரண்டுக்கும் கடவதான இந்த ஸ்தோத்ரத்தை
நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வர் என்று பேறு கூறித் தலைக் கட்டினார் ஆயிற்று

ஸ்ரீ தெள்ளிய சிங்க பெருமாள் அக்காராக் கனி திருவடிகளே சரணம்

———-

ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் —

வருத்தோத் புல்ல விசாலாக்ஷம் விபக்ஷ க்ஷய தீஷிதம்
நிதாத்ரஸ்தா விச்வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம் யஹம் –

சர்வை ரவத்யதாம் பிராப்தம் சபலவ்கம் திதே ஸூ தம்
நகாக்ரை ஸகலீ யஸ்தம் வீரம் நமாம் யஹம் –

பாதாவஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரி விஷ்டபம்
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம் மஹா விஷ்ணும் நமாம் யஹம் –

ஜ்யோதீம்ஷ்யர்க்கேந்து நக்ஷத்ர ஜ்வல நாதீன் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம் யஹம் –

ஸர்வேந்த்ரியை ரபி விநா சர்வம் ஸர்வத்ர ஸர்வதா
ஜா நாதி யோ நமாம் யாத்யம் தமஹம் சர்வதோமுகம் —

நரவத் ஸிம்ஹ வஸ்சைவ ரூபம் யஸ்ய மஹாத்மன
மஹாஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் நரஸிம்ஹம் நமாம் யஹம் –

யன்நாம ஸ்மரணாத் பீதா பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத் யாஸ்ச ப்ரணயஸ் யந்தி பீஷணம் தம் நமாம்யஹம் –

ஸர்வோபி யம் ஸமாச்ரித்ய சாகலாம் பத்ரமஸ்நுதே
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்டோ யஸ்தம் பத்ரம் நமாம் யஹம் –

சாஷாத் ஸ்வ காலே சம்பிராப்தம் ம்ருத்யும் சத்ரு குணா நபி
பக்தா நாம் நாசயேத் யஸ்து ம்ருத்யு ம்ருத்யும் நமாம் யஹம் –

நமஸ்காராத் மஹம் யஸ்மை விதாயாத்ம நிவேதனம்
த்யக்த துக்கோ கிலான் காமான் அஸ்நுதே தம் நமாம் யஹம் –

தாஸ பூதா ஸ்வத சர்வே ஹயாத்மாந பரமாத்மன
அதோ ஹமபி தே தாஸ இதி மத்வா நமாம் யஹம் –

சங்க ரேணாதராத் ப்ரோக்தம் பதா நாம் தத்வமுத்தமம்
த்ரி சந்த்யம் யா படேத் தஸ்ய ஸ்ரீர்வித்யாயுஸ்ச வர்த்ததே

————–

ஸ்ரீ பெரிய திரு மொழி ஸ்ரீ சிங்க வேள் குன்ற அனுபவம்– 1-7-அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய்–

அந்த ஸ்ரீ நரசிம்ஹ அவதாரம் பிற்பட்டார்க்குப் பயன்படாமல் போயிற்றே என்று வயிறு எரிய வேண்டாதபடி
நாம் ஸ்ரீ சிங்க வேள் குன்றம் என்னும் விலஷணமான திவ்ய தேசத்திலே நித்ய சந்நிதியும் பண்ணி வைத்து இருக்கிறோமே –
ஆஸ்ரிதர் விஷயத்தில் நாம் இப்படி பரிந்து கார்யம் செய்வோம் என்பது உமக்குத் தெரியாதோ –
ஏன் நீர் வருந்துகின்றீர் என்று அருளிச் செய்ய-
ஸ்ரீ ஆழ்வாரும் பரம சந்தோஷம் அடைந்து -அந்த ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தையும்
திவ்ய தேசத்தையும் அனுபவித்து இனியராகிறார் –

கீழ்த் திருமொழியில் ஒன்பதாம் பாட்டில் -தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே -என்று பெரிய பிராட்டியாரை முன்னிட்டு
சரணாகதி செய்தது போலே
இத் திரு மொழியிலும் ஒன்பதாம் பாட்டில் அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன்-என்று
ஸ்ரீ லஷ்மி சம்பந்தத்தை முன்னிட்டே அனுபவிக்கிறார் –

இத் திருமொழியில் எட்டாம் பாட்டு வரையில் ஒவ் வொரு பாட்டிலும் முன்னடிகளில் ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தையும்
பின்னடிகளில் ஸ்ரீ சிங்க வேள் குன்றத்தின் நிலைமையும் வர்ணிக்கப் படுகின்றன –

இத்திருப்பதியின் திரு நாமம் ஸ்ரீ அஹோபிலம் -என வழங்கப் படும் -இது வட நாட்டுத் திருப்பதிகளில் ஓன்று
ஸ்ரீ சிங்க வேள் குன்றம் -என்றும் ஸ்ரீ சிங்க வேழ் குன்றம் -என்றும் இதனை வழங்குவர்
வேள் -யாவராலும் விரும்பப் படும் கட்டழகு உடையரான பெருமாள் எழுந்து அருளிய -ஸ்ரீ திருமலை – என்று –
ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தி எழுந்து அருளி இருக்கின்ற ஏழு குன்றங்களை யுடைய திவ்ய தேசம் என்றுமாம் –
இத்தலம் சிங்கம் புலி முதலிய பயங்கரமான விலங்குகள் சஞ்சரிக்கப் பட்ட
கல்லும் புதரும் முள்ளும் முரடுமான கொடிய அரணியமாக இருப்பது இத் திரு மொழியால் நன்கு விளங்கும்
இப்படிப்பட்ட பயங்கரமான துஷ்ட மிருகங்களும் கொடிய வேடர் முதலானவர்களும் அத்தலத்தின் கண் இருப்பதும்
மங்களா சாசன பரரான நம் ஆழ்வார்களுக்கு ஒருவகையான ஆனந்தத்துக்கு ஹேது வாகின்றது போலும் –
எல்லாரும் எளிதாக வந்து அணுகக் கூடிய தேசமாய் இருந்தால் ஆசூர பிரக்ருதிகளும் பலர் வந்து
ஸ்ரீ எம்பெருமானுக்கு ஏதாவது தீங்கு இழைக்கக் கூடுமோ என்கிற அச்சத்துக்கு அவகாசம் இல்லாமல்
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா -என்னும்படி கஹநமாய் இருப்பது மங்களா சாசன
ருசி யுடையாருக்கு மகிழ்ச்சியே இறே-

—————————————————————

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்காவாகம் வள்ளு கிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம் கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே–1-7-1-

பக்த சிரோமணியான ப்ரஹ்லாதனுக்கு நேர்ந்த துன்பங்களை சஹிக்க முடியாமையினாலே
ஸ்ரீ எம்பெருமான் அளவற்ற சீற்றம் கொண்டு பயங்கரமான ஒரு திருவுருவத்தை ஏறிட்டுக் கொண்டான் –
அந்தச் சீற்றம் ப்ரஹ்லாத விரோதியான இரணியன் அளவிலே மாத்ரமே யுண்டானாலும்
அளவு மீறி இருந்தததனால்
உலகங்கட்கு எல்லாம் உப சம்ஹாரம் விளைந்திடுமோ
என்று அனைவரும் அஞ்சி நடுங்கும்படி இருந்தது பற்றி
அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய்-என்கிறார் –
வியாக்யான ஸ்ரீ ஸூக்தி-நரசிம்ஹம் ஆயிற்று ஜகத் ரஷணத்துக்காக இறே -அங்கனே இருக்கச் செய்தேயும்
விளைவது அறியாமையினாலே ஜகத்தாக நடுங்கிற்று ஆயிற்று –
இது எவ்வளவாய்த் தலைக் கட்டுகிறதோ என்று இருந்ததாயிற்று
இனி அங்கண் ஞாலம் அஞ்ச-என்பதற்கு இரணியனுடைய ஒப்பற்ற தோள் வலியைக் கண்டு
உலகம் எல்லாம் அஞ்சிக் கிடந்த காலத்திலே என்றும் பொருள் உரைப்பார் –
அங்கு -என்றது -எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து -இங்கு யில்லையா என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் -என்கிறபடியே
இரணியன் எந்த இடத்தில் எம்பெருமான் இல்லை என்று தட்டினானோ அந்த இடத்திலேயே -என்றபடி
அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க யுருவாய் -என்றார் ஸ்ரீ பெரியாழ்வாரும் –

அவுணன் பொங்க -அசுரர்கட்கு அவுணன் என்று பெயர் -இங்கு ஹிரண்யாசுரனைச் சொல்லுகிறது
இவன் அன்று வரையில் தனக்கு எதிரியாக தன் முன்னே வந்து தோற்றின ஒருவரையும் கண்டு அறியாமல்
அன்று தான் புதிதாக ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தியாகிய எதிரியைக் கண்டபடியால் கண்ட காட்சியிலே கொதிப்பு அடைந்தானாம் –
அப்படி அவன் கொதிப்படைந்த அளவிலே அவனது ஆகத்தை மார்வை –
தீஷணமான திரு நகங்களாலே கிழித்து எறிந்தனன் ஸ்ரீ எம்பெருமான் –
பொங்க என்பதுக்கு ஆகத்தை அடை மொழியாக்கி அவுணன் யுடைய அகன்ற மார்பை என்றும் உரைப்பர் –

போழ்ந்த புனிதன் –
புனிதன் என்றால் பரிசுத்தன் என்றபடி
இரணியனது மார்பைப் பிளந்ததால் என்ன பரிசுத்தி யுண்டாயிற்று -என்று கேட்கக் கூடும்
ஜகத்தை சிருஷ்டித்தல் முதலிய தொழில்களில் பிரமன் முதலானவர்களைக் ஏவிக் கார்யம் நடத்தி விடுவது போலே
பிரஹ்லாதனை ரஷிப்பதிலும் ஒரு தேவதையை ஏவி விடாமல் தானே நேராக வந்து தோன்றி
கை தொட்டு கார்யம் செய்வதமையே இங்கே பரிசுத்தி எனக் கொள்க –
இப்படி பரிசுத்தனான ஸ்ரீ எம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம் ஏது என்றால்-
அது எப்படிப் பட்டது என்னில்- சிங்கம் யானை முதலிய பிரபல் ஜந்துக்கள் திரியும் இடம் அது என்பதைக் காட்டுகிறார் பின்னடிகளில் –
பகவானுடைய சந்நிதான மகிமையினால் அவ்விடத்து மிருகங்களும் பகவத் பக்தி மிக்கு இருக்கின்றன என்கிறார் –
சிங்கங்கள் யானைகளைக் கொன்று அவற்றின் தந்தங்களைப் பிடுங்கிக் கொண்டு வந்து
பெருமான் திருவடிகளில் சமர்பித்து வணங்கு கின்றனவாம் –
புருஷோ பவதி ததன்னாஸ் தஸ்ய தேவதா –எந்த எந்த உயிர்கட்கு எது எது ஆஹாரமோ-அந்த அந்த உயிர்கள்
அந்த ஆஹாரத்தைக் கொண்டு தம் தேவதைகளை ஆதாரிக்கும் –
என்கிற சாஸ்திரம் ஆதலால் யானைகளின் அவயவங்களை ஆகாரமாக யுடைய சிங்கங்களும்
யானைத் தந்தங்களைக் கொண்டு பகவத் ஆராதனம் நடத்துகின்றன -என்க
ஆளி -என்று சிங்கத்துக்கும் யாளிக்கும் பெயர் -இங்கே சிங்கத்தைச் சொல்லுகிறார்

செங்கண்-வியாக்யான ஸ்ரீ ஸூக்தி -இவற்றுக்கு ஆனைகளின் மேலே சீற்றம் மாறாதே இருக்கச் செய்தேயும்
பகவத் பக்தி ஒருபடிப் பட்டுச் செல்லும் ஆயிற்று –
சீற்றம் விக்ருதியாய் -பகவத் பக்தி ப்ரக்ருதியாய் இருக்கும் ஆயிற்று –

——————————————————-

அலைத்த பேழ்வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூர் உகிராளன் இடம்
மலைத்த செல் சாத்தெறிந்த பூசல் வன் துடிவாய் கடுப்ப
சிலைக்கை வேடர் தெழிப் பறாத சிங்க வேள் குன்றமே—1-7-2-

அலைத்த பேழ்வாய் –
சீற்றத்தாலே கடைவாய் யுடனே நாக்கை ஏற்றிக் கொள்ளுகிற பெரிய வாயை யுடைய ஸ்ரீ நரசிம்க மூர்த்தியாய்த் தோன்றி
பரஹிம்சையாகப் போது போக்கின இரணியனுடைய மார்பைப் பிளந்த ஸ்ரீ பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம் ஸ்ரீ சிங்க வேழ் குன்றம்
அவ்விடத்தின் நிலைமையைப் பேசுகிறார் பின்னடிகளில் -தீர்த்த யாத்ரையாகப் பலர் அங்கே செல்லுகின்றாராம் –
அவர்களை அவ்விடத்து வேடர்கள் வந்து தகைந்து சண்டை செய்வார்கள் -பரஸ்பரம் பெரும் சண்டை நடக்கும்
அந்த சண்டையிலே வேடர்கள் பறை ஓசையும் வில் ஓசையும் இடைவிடாது இருந்து கொண்டே இருக்கும் –
இதுவே அத்தலத்தின் நிலைமை என்கிறார் -உள்ளதை உள்ளபபடி சொல்ல வேண்டும் இறே

மலைத்த செல் சாத்து –
மலைத்தலாவது ஆக்கிரமித்தல் –வேடர்களால் ஆக்கிரமிக்கப் பட்ட -என்றாவது
வேடர்களை எதிர் இட்டு ஆக்ரமித்த என்றாவது பொருள் கொள்ளலாம்
வேடர்கள் வந்து பொருகிற போது தாங்கள் வெறுமனிரார்கள் இறே –
தாங்களும் பிரதியுத்தம் செய்வார்களே இறே -அதைச் சொல்லுகிறது என்னலாம் –
செல் சாத்து –
வடமொழியில் சார்த்தம் -சமூஹம் போலே இங்கே சாத்து -யாத்ரை செய்பவர்களின் கூட்டம்
பூசல் யுத்தம் பெரிய கோஷம்
வேடர்களால் ஆக்கிரமிக்கப் பட்ட வழிப் போக்கர்கள் போடும் கூச்சல் பெரிய பறை அடிப்பது போலே ஒலிக்கின்றது -என்றும்
வேடர்கள் வழிப் போக்கர்களை மறித்து செய்கிற சண்டையிலே வேடர்கள் யுடைய பறைகள்
கர்ண கடூரமாக ஒலிக்கின்றன என்றும் கருத்து –

—————————————————

ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
ஓய்ந்த மாவுமுடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால்
தேய்ந்த வேயுமல்ல தில்லாச் சிங்க வேள் குன்றமே–1-7-3-

ஏய்ந்த பேழ் வாய் –
வடிவின் பெருமைக்குத் தகுதியாக பெரிய வாயையும் -ஒளி -பொருந்திய -அல்லது வாள் போன்ற கோரப் பற்களையும் யுடைய
ஸ்ரீ நரசிம்ஹமாய்த் தோன்றி இரணியன் யுடைய மாமிசம் செறிந்த மார்பைப் பிளந்த ஸ்ரீ பெருமான் உடையும் இடம் ஸ்ரீ சிங்க வேள் குன்றம் –

நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஜ்ஞை நடமாட பொறிகொள் சிறை வண்டிசை பாடும் -என்றும்
வண்டினம் முரலும் சோலை மயில் இனம் ஆலும் சோலை கொண்டல் மீதணவும் சோலை குயில் இனம் கூவும் சோலை -என்றும்
வருணிக்கத் தக்க நிலைமையோ அவ்விடத்து என்றால் -இல்லை –
அந்த சந்நிவேசம் வேறு வகையானது என்கிறார் –
ஆனை குதிரை சிங்கம் புலி முதலிய மிருகங்கள் இங்கும் அங்கும் ஓடி அலைந்து ஓய்ந்து நிற்கக் காணலாம் –
உடைந்து நிற்கும் கற்பாறைகளைக் காணலாம்
இன்னமும் சில காண வேண்டுமானால் -மூங்கில்கள் நெருப்புப் பற்றி எரிந்து குறைக் கொள்ளியாய் இருக்குமவற்றை விசேஷமாகக் காணலாம்
இவை ஒழிய வேறு ஒன்றையும் காண்பதற்கு இல்லையாம் அங்கு
இவை எல்லாம் இவ் வாழ்வாருக்கு வண்டினம் முரலும் சோலை போலே தோன்றுகின்றன என்பர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –
அது இது உது என்னலாவன வல்ல என்னை யுன் செய்கை நைவிக்கும் என்றபடி
ஸ்ரீ எம்பெருமானுடைய சரித்ரம் எதுவாய் இருந்தாலும் எல்லாம் ஸ்ரீ ஆழ்வார்கள் உடைய நெஞ்சைக் கவர்வது போலே
அப்பெருமான் உகந்து அருளின நிலங்களில் உள்ளவைகளும் எதுவாய் இருந்தாலும்
அவ்விடத்தவை என்கிற காரணத்தால் எல்லாம் இவர்க்கு உத்தேச்யம் எனபது அறியத் தக்கது
பிறருக்கு குற்றமாய்த் தோற்றுமவையும் உபாதேயமாகத் தோற்றுகை இறே ஒரு விஷயத்தை உகக்கை இறே -வியாக்யான ஸ்ரீ ஸூக்தி –
ஓய்ந்த மாவும் –
நிலத்தின் வெப்பத்தினால் பட்டுப் போன மா மரங்களும் என்னவுமாம் –

————————————————————

எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் எதலனின் இன்னுயிரை
வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
கவ்வு நாயும் கழுகும் உச்சிப் போதொடு கால் சுழன்று
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே—1-7-4-

கையும் வேலுமாய் இருக்கும் இருப்பைக் கண்ட காட்சியிலே எல்லாரையும் துக்கப் படுத்த வல்லனான
இரணியனுடைய உயிரைக் கவர்ந்து அவனது மார்பைப் பிளந்து அருளின ஸ்ரீ பெருமான் உறையும் இடமாவது ஸ்ரீ சிங்க வேழ் குன்றம் —
வேற்று மனிசரைக் கண்ட போதே வந்து துடைகளிலே கவ்விக் கடிக்கிற நாய்களும்
அப்படிக் கடிக்கப்பட்டு மாண்டு ஒழிந்த பிணங்களை கவ்வுகின்ற கழுகுகளும் ஆங்கு மிகுதியாகக் காணப்படுமாம் –
செடி மரம் ஒன்றும் இல்லாமையினாலே நிழல் என்பதும் காணவே முடியாது –
உச்சி வேளையிலே எப்படிப் பட்ட வெய்யில் காயுமோ -அதுவே எப்போதும் காய்கின்றது –
சுழல் காற்றுக்கள் சுழன்றபடி இரா நின்றன -இப்படி இருக்கையினாலே சாமான்யரான மனிசர் அங்குச் சென்று கிட்டுதல் அரிது –
மிக்க சக்தி வாய்ந்த தேவதைகளே அங்குச் செல்வதற்கு உரியர் -இங்கனே கஹனமான தலமாயிற்று இது –

எவ்வும் -எவ்வம் இரண்டு பாட பேதம் –
பொன் பெயரோன் -ஹிரண்யம் வட சொல் பொன் என்ற பொருள் -ஹிரண்யா ஸூரன் என்றபடி
யேதலன் -சத்ரு
சர்வ பூத ஸூக்ருதான ஸ்ரீ எம்பெருமானுக்கு இவன் நேரே சத்ரு அல்லன் ஆகிலும் –
பகவத் சிரோமணியான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு சத்ருவான முறைமையினாலே பகவானுக்கும் சத்ரு ஆயினான் –
ஆஸ்ரிதர்கள் விரோதிகளைத் தனது விரோதிகளாக நினைத்துப் பேசுமவன் இறே ஸ்ரீ எம்பெருமான் –
ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்து இன்னுயிரை வவ்வினான் -என்று
மார்வைப் பிளந்தது முன்னமும் உயிரைக் கவர்ந்தது அதன் பின்புமாகச் சொல்ல வேண்டி இருக்க இங்கு மாறாடிச் சொன்னது –
இரணியன் ஸ்ரீ நரசிங்க மூர்த்தியைக் கண்ட ஷணத்திலே செத்த பிணமாக ஆய்விட்டான் -என்ற கருத்தைக் காட்டுதற்கு -என்க-
கவ்வு நாயும் கழுகும் உச்சிப் போதொடு கால் சுழன்று -என்பதற்கு இரண்டு பொருள்
உச்சிப் போது என்று ஸூர்யனைச் சொல்லி நாய்களும் கழுகுகளும் கூட தரையின் வெப்பம் பொறுக்க மாட்டாமல் திண்டாடும்
ஸூர்யனே அவ்விடத்தில் வந்தாலும் அவனுக்கும் இதே கதி –
தன்னுடைய தாபத்தை தானே பொறுக்க மாட்டாமல் அவனும் கால் தடுமாறி பரிதபிப்பன் -என்ற வாறுமாம் –
இங்கே சென்று சேவிக்க விருப்பம் யுடைய ஸ்ரீ ஆழ்வார் -தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாது -என்று
அருமை தோன்ற அருளிச் செய்யலாமோ என்னில்
ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தியின் அழகைக் கண்டு அசூயைப் படுவதற்கும் அவனுக்கு ஏதேனும் அவத்யத்தை விளப்பதற்கும்
உறுப்பாக ஆசூரப் பிரக்ருதிகள் அங்குச் செல்ல முடியாது –
ஸ்ரீ எம்பெருமானுடைய சம்ருத்தியைக் கண்டு உகந்து பல்லாண்டு பாட வல்ல
ஸ்ரீ ஆழ்வார் போல்வாருக்குத் தான் அவ்விடம் அணுகக் கூடியது என்ற கருத்து தோன்ற அருளிச் செய்கிறார் –

——————————————————————–

மென்ற பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
பொன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்
நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய
சென்று காண்டற்கரிய கோயில் சிங்க வேள் குன்றமே–1-7-5-

சீற்றத்தாலே பல்லோடு நாக்கைச் செலுத்தி மென்று கொண்டே இருக்கிற பெரிய வாயையும்
ஒளி விடுகிற எயிற்றையும் மிடுக்கையும் யுடைய ஸ்ரீ நரசிம்ஹமாய்த் தோன்றி
இரணியன் உயிர் மாளும்படியாக அவனது மார்பைப் பிளந்த ஸ்ரீ பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம் ஸ்ரீ சிங்க வேழ் குன்றம் –
அஃது எப்படிப் பட்டது -மாறாமல் நின்று எரிகிற அக்னியைச் சுழல் காற்றானது முகந்து கொண்டு
ஆகாயம் எங்கும் பரவி வீசி எறிகையாலே சென்று காண்பதற்கு அருமைப்படும் ஸ்ரீ கோயில் –

அவுணன் பொன்ற வாகம் -இரண்டு வகை பொருள்
ஸ்ரீ நரசிம்ஹத்தைக் கண்டவுடனே இரணியன் பொன்ற -முடிந்து போக -முடிந்த பிறகு அந்தப் பிணத்தைக் கிழித்து போட்டான் என்னலாம்
இது அதிசய உக்தி -அன்றி அவுணன் பொன்றும்படி-முடியும்படியாக -அவனது உடலைக் கிழித்தான் என்னவுமாம் –
சூறை-சூறாவளிக் காற்று -அக்காற்று செந்தீயை மொண்டு கொண்டு ஆகாயத்திலே ஓடுகின்றதாம் –
நீள் விசும்பூடு எரிய-பாட பேதம் -ஆகாயத்தில் போய் ஜ்வலிக்க -என்றபடி –
சென்று காண்டற்கு அரிய கோயில் -வியாக்யான ஸ்ரீ ஸூக்தி –
இப்படி இருக்கையாலே ஒருவருக்கும் சென்று காண்கைக்கு அரிதாய் இருக்குமாயிற்று –
பரமபதம் போலே இந்நிலத்துக்கும் நாம் பயப்பட வேண்டா என்று ஹ்ருஷ்டராகிறார் –

——————————————————————

எரிந்த பைங்கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடி தெவ்வுரு வென்று
இரிந்து வானோர் கலங்கியோடே இருந்த வம்மானதிடம்
நெரிந்த வேயின் முழை யுள் நின்று நீண் எரி வா யுழுவை
திரிந்த வானைச் சுவடு பார்க்கும் சிங்க வேள் குன்றமே–1-7-6–

உழுவை -புலிகள் ஆனவை –
சீற்றத்தாலே அக்நி ஜ்வாலை போலே ஜ்வலிக்கிற சிவந்த கண்களையும் ஒளி விடா நின்ற பெரிய வாயையும்
கோரப் பற்களையும் கண்டு -அப்பப்ப இது என்ன உரு -என்று பயப்பட்டு தேவர்கள் அங்கும் இங்கும்
கால் தடுமாறி சிதறி ஒடும்படியாக
ஸ்ரீ நரசிங்க உரு கொண்டு எம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம் ஸ்ரீ சிங்க வேழ் குன்றம் –
அஃது எப்படிப்பட்ட இடம் என்னில் -மூங்கில் புதர்களின் நின்றும் புலிகள் பெரு வழியில் வந்து சேர்ந்து
இங்கு யானைகள் நடமாடின அடையாளம் யுண்டோ -என்று பார்க்கின்றனவாம் –
யானைகளை அடித்துத் தின்பதற்காக அவை உலாவின இடங்களை தேடித் திரிகின்ற புலிகள் நிறைந்ததாம் அத்தலம் –

——————————————————————-

முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூ வுலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச வாளரியாய் இருந்த வம்மானிதிடம்
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில்லுடை வேடருமாய்
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே—-1-7-7-

ஸ்ரீ நரசிங்க மூர்த்தி இரணியன் மீது கொண்ட கோபம் அளவற்று இருந்ததனால் அந்த கோப அக்நி
மேல் யுலகம் அளவும் போய்ப் பரவி எங்கும் தஹிக்கப் புகவே சர்வ லோக சம்ஹாரம் பிறந்து விட்டது என்று
மூ வுலகத்தில் உள்ளோரும் அஞ்சி நடுங்கும்படியாய் இருந்ததாம் –
அப்படிப்பட்ட ஸ்ரீ உக்ர நரசிம்கன் எழுந்தி அருளி இருக்கும் இடம் ஸ்ரீ சிங்க வேழ் குன்றம் – அவ்விடம் எப்படிப் பட்டது –

எரிகிற போது யுண்டான வேடு வெடு என்கிற ஓசையை யுடைத்தான நெருப்பும் –
அந்த நெருப்பிலே வைக்கோல் போர் போலே வேவுகின்ற கல்லுகளும் –
இவற்றில் காட்டில் கொடியவர்களான கையும் வில்லுமாய்த் திரிகின்ற வேடர்களும்
அங்கு நிறைந்து இருப்பதினாலே ஒரு நொடிப் பொழுதும் சென்று கிட்ட முடியாத தலமாம் அது –
உகவாதார்க்கு கண்ணாலே காணலாம் படி சென்று கிட்டி கண் எச்சில் பட ஒண்ணாத படி இருந்த தேசம் ஆயிற்று –
தினைத்தனையும் -தினை தான்யம் -ஸ்வல்ப காலம் என்றபடி
எட்டனைப் போது -எள் தான்யத்தை எடுத்துக் காட்டினது போலே –

——————————————————————

நாத் தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால்
ஏத்த அங்கு ஓர் ஆளரியாய் இருந்த வம்மானதிடம்
காய்த்த வாகை நெற்றொலிப்பக் கல்லதர் வேய்ங்கழை போய்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்க வேள் குன்றமே–1-7-8-

நான்முகக் கடவுளாகிய பிரமனும் சிவனும் முறை வழுவாது துதிக்கும் படியாக விலஷணமான நரசிங்க உருக் கொண்டு
ஸ்ரீ எம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம் ஸ்ரீ சிங்க வேழ் குன்றம் –
அஃது எப்படிப் பட்டது
காய்கள் காய்த்துத் தொங்கப் பெற்ற வாகை மரங்களின் நெற்றுக்களானவை காற்று அடித்து கலகல என்று ஒலிக்கின்றனவாம் சில இடங்களில் –
மற்றும் சில இடங்களிலோ என்னில் -ஆகாசத்து அளவும் ஓங்கி வளர்கின்ற மூங்கில்கள் ஒன்றோடு ஓன்று உராய்ந்து
நெருப்பு பற்றி எரிந்து விண்ணுலகத்த்தையும் சிவக்கடிக்கின்றனவாம்
நாத்தழும்ப -என்றதானால் இடை விடாது அநவரதம் துதிக்கின்றமை தோற்றும்
முறையால் ஏத்த -என்பதற்கு -மாறி மாறி துதிக்க -என்றும் பொருள் கொள்ளலாம் –
ஒரு சந்தை நான்முகனும் மற்று ஒரு சந்தை சிவனுமாக இப்படி மாறி மாறி ஏத்து கின்றமையைச் சொன்னபடி
நெற்று -உலர்ந்த பழம் –
அதர் -வழி
வேய் + கழை = வேய்ங்ழை-

———————————————————————–

நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்
நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர் வாய்ச்
சில்லி சில் லென்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே—1-7-9-

கீழ்ப் பாட்டுக்களில் -தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா -என்றும்
சென்று காண்டற்கு அரிய கோயில் -என்றும்
தினைத்தனையும் செல்ல ஒண்ணா -என்றும்
இந்த ஸ்ரீ திவ்ய தேசத்தின் அருமை சொல்லி வந்தாரே –
அந்த அருமை ஆசூரப் பிரக்ருதிகளான பகவத் விரோதிகளுக்கே ஒழிய -உகந்து இருக்கும் அடியவர்களுக்கு அன்றே –
அதனை இப்பாட்டில் வெளியிடுகிறார் –

ஸ்ரீ பெரிய பிராட்டியாரை முன்னிட்டுக் கொண்டு நாம் அஞ்சாமல் ஸ்ரீ சிங்க வேள் குன்றத்தில் சென்று தொழுவோம் நெஞ்சமே -என்கிறார் –
அல்லி மாதரான ஸ்ரீ பிராட்டியோடு அணைந்து இருப்பதனாலே ஸ்ரீ நரசிங்க மூர்த்தியின் கோப அக்நிக்கு நான் அஞ்ச வேண்டியது இல்லை என்றும்
அவன் தான் நம்முடைய ஸ்ரீ நம் பெருமான் ஆகையாலே அந்நிலத்தின் கொடுமைக்கும் அஞ்ச வேண்டியது இல்லை என்றும் குறிப்பிட்ட படி –
ஸ்ரீ நம்பெருமான் -என்றாலே போதுமே இருக்க- நம்முடைய ஸ்ரீ நம் பெருமான் -என்றது-
அடியார் திறத்தில் அவன் மிகவும் விதேயனாய் இருக்கும் படியைக் காட்டும் –
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன்-என்ற சொல் நயத்தால் -ஸ்ரீ பிராட்டியை அணைக்கும் போது ஸ்ரீ எம்பெருமானுக்கு
சந்தோஷ மிகுதியினால் தழுவுதற்கு உறுப்பான தோள்கள் சஹச்ர முகமாக வளர்கின்றமை விளங்கும் –
இவள் அணைத்தால் இவளைக் கட்டிக் கொள்ள ஆயிரம் தோள் யுண்டாம் ஆயிற்று -என்பர் ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளையும் –
தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறாத் தோள்களை ஆரத் தழுவி
என்னுயிரை அறவிலை செய்தனன் -ஸ்ரீ திருவாய் -8-1-10-
என்னும்படியானால் பிராட்டியின் சேர்த்தியினால் யுண்டாக கூடிய உடல் பூரிப்பு சொல்லவும் வேணுமோ

நெல்லி மல்கி -இத்யாதி –
நெல்லி மரங்கள் ஆனவை கல்லிடைகளிலே முளைத்து வளர்ந்து கல்லிடைகளிலே வேர் ஒடுகையாலே
அந்த வேர்கள் பருத்து பாறைகளைப் பேர்க்கின்றனவாம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளையும் -நெல்லி மரங்கள் வேர் ஓடிக் கற்களை யுடையப் பண்ணும் -என்றே அருளிச் செய்கிறார் –
இங்கே சிலர் சொல்லும் பொருளாவது -நெல்லி மரங்களின் நின்று இற்று விழுகின்ற நெல்லிக் காய்கள் பாறைகளின் மேல்
விழுந்து கற்களை உடைக்கின்றன என்பதாம்
அப்போது நெல்லி என்றது ஆகுபெயரால் நெல்லிக் காய்களைச் சொல்ல வேண்டும்
புல்லிலை யார்த்து -மூங்கில்களின் ஓசையை சொல்லிற்று ஆகவுமாம்
பனை ஓலைகளின் ஓசையைச் சொல்லிற்று ஆகவுமாம் -ஆர்த்தல் -ஒலித்தல்
சில்லி சில்லி என்று சொல் அறாத –
வடமொழியில் சுவர்க் கோழிக்கு -ஜில்லிகா -என்று பெயர் -அச் சொல்லே சில்லி -என்று கிடக்கிறது –
நல்லை நெஞ்சே -நல்ல நெஞ்சே -பாட பேதங்கள்

————————————————————–

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே—-1-7-10-

வீர லஷ்மி விளங்கும் கண்களை யுடைய சிங்கங்கள் ஆனவை யானைக்கோடு முதலியவற்றைக் கொண்டு
சமர்ப்பித்து வணங்கும் படியான ஸ்ரீ சிங்க வேழ் குன்றத்திலே எழுந்து அருளி இருக்கின்ற எம்பெருமான் விஷயமாக
ஸ்ரீ திருமங்கை மன்னன் அருளிச் செய்த சொல் மாலையை ஓத வல்லவர்கள் தீங்கு இன்றி
வாழ்வார்கள் என்று -இத் திருமொழி கற்றார்க்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்-

செங்கணாளி யிட்டிறைஞ்சும்-
நவம் சவமிதம் புண்யம் வேதபாரகமச்யுத –யஜ்ஞசீலம் மஹா ப்ராஜ்ஞம் ப்ராஹ்மணம் சிவ முத்தமம் –
என்ற கண்டாகர்ணன் வசனம் நினைக்கத் தகும்
அவன் தனக்கு யுண்டான பிணங்களை ஸ்ரீ எம்பெருமானுக்கு நிவேதனம் செய்து யுண்டால் போலே சிங்கங்களும் செய்கிறபடி –

————

ஸ்ரீ நரஸிம்ஹ மூர்த்தி கீர்த்திப் பயி ரெழுந்து விளைந்திடும் சிந்தை ஸ்ரீ ராமானுசன் –

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய் வினை நோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி – 103

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –
முனைத்த சீற்றம் விண் சுடப்போய்-ஸ்ரீ பெரிய திரு மொழி – 1-7 7- – என்கிற படியே அநு கூலரான
தேவர்களும் உட்பட வெருவி நின்று பரிதபிக்கும்படி -அத்யந்த அபிவிருத்தமாய் அதி க்ரூரமான-ஸ்ரீ நரசிம்ஹமாய் –
சிறுக்கன் மேலே அவன் முழுகின வன்று –
வயிறழல வாளுருவி வந்தான் -என்கிறபடியே சாயுதனாய்க் கொண்டு எதிர்ந்த ஹிரன்யாசுரனுடைய மிடியற வளர்ந்த
ஸ்வர்ண வர்ணமான சரீரத்தை
அஞ்ச வெயிறி லகவாய் மடித்ததென்-ஸ்ரீ முதல் திருவந்தாதி – 93- என்கிறபடியே
மொறாந்த முகத்தையும் நா மடிக் கொண்ட உதட்டையும் -குத்த முறுக்கின கையையும் கண்டு –
விளைந்த பய அக்நியாலே பரிதப்தமாய் பதம் செய்தவாறே –
வாடின கோரையை கிழித்தால் போலே அநாயாசேன கிழித்து பொகட்டவனுடைய திவ்ய கீர்த்தி யாகிய பயிர்
உயர் நிலத்தில் -உள் நிலத்தில் – பயிர் ஓங்கி வளருமா போலே யெழுந்து சபலமாம் படியான
திரு உள்ளத்தை உடையராய் இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார்

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீP .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-