Archive for the ‘ராமானுஜ நூற்றந்தாதி’ Category

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–99-108–

December 9, 2021

நம்மை நம் வசத்தே விடுமே -மனமே நையல் -என்று மனத்தை தேற்றினார் -கீழ் .
நம் வசத்தில் விட மாட்டார் என்னும் நம்பிக்கை குலையாமல் இருக்க வேண்டாமா –
பாஹ்யர்களும் குத்ருஷ்டிகளும் நிறைந்த இவ் உலகத்திலே அவர்களது சேர்க்கையாலே
அது குலைந்து விடில் என் செய்வது என்று -தம் மனம் தளர –
எம்பெருமானார் அவதரித்த பின்பு அவர்கள் அழிந்து ஒழிந்தனர் -தளரற்க-என்கிறார் .

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன்
சொற் கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
பொற் கற்பகம் எம்மிராமானுச முனி போந்த பின்னே – – 99- –

மாண்டனர் நீணிலத்தே —-பொற் கற்பகம் போந்த பின்னே —
நீணிலத்தே போந்த பின் -என்று இயைக்க –

விண் உலகில் அசையாது இருந்த கற்பகம் கண்ணனால் நீணிலதிற்கு வந்தது
அது வந்தது கருதிய காதலிக்காக –
விண்ணவரான எம்பெருமானாராம் கற்பகம் விண்ணனூரில் உள்ள கண்ணனால் இன் நீணிலத்தே வந்தது
இது வந்தது உயிர் இனம் மறையின் உண்மைப் பொருளை பெற்று உய்வதற்காக
கற்பகம் வந்து நீணிலத்திலே நல்ல பொருளை தருகிறது .

————-

இங்கனம் தேற்றப் பெற்ற நெஞ்சு -எம்பெருமானார் திருவடிகளிலே இன்பம் நுகர விழைந்து மேல் விழ-
அதனது இயல்பினை -எம்பெருமானாருக்கு விண்ணப்பம் செய்து
தேவரீர் வேறு ஒன்றினைக் காட்டி மயக்காது ஒழிய வேணும்-என்கிறார் .

போந்ததென் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில் ஒண் சீ
ராம் தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமானுச இதுவன்றி யொன்றும்
மாந்தகில்லாது இனிமற்றொன்று காட்டி மயக்கிடலே – – 100- –

உணவுள்ள நல்ல இடத்தில் வந்து சேர்ந்தமையின்-தம் நெஞ்சை -பொன் வண்டு -என்று
கொண்டாடுகிறார் .பொற் கற்பகம் பூத்த அடிப்போதில் வந்து சேருவதும் பொன் வண்டாய் இருப்பது
மிகவும் பொருந்துகிறது அன்றோ –
ஷட் பதமான ஆறு பதங்களைக் கொண்ட -த்வய மந்த்ரத்தை த்யானம் பண்ணிப் பண்ணி நெஞ்சும் ஷட்பதம்
ஆறு கால் உடைய -வண்டு ஆயிற்று –லஷ்மியினுடைய மீன் போன்ற கண்ணை த்யானம் பண்ணிப் பண்ணி
பகவான் தானே மீன் ஆனது போலே என்று ரசமாக பணிப்பர் பிள்ளை லோகம் ஜீயர் –

தெளி தேனுக்கு மாற்றாக காட்டும்மற்று ஓன்று மது ஸூதநனின்
தேனே மலரும் திருப்பாதம் -என்பது அமுதனார் உட் கருத்து .
அந்த குண அனுபவத்திலேயே மேலும் மேலும் திளைத்துக் கொண்டு இருக்குமாறு எம்பெருமானார்
தான் அருள் புரிய வேண்டும் என்று அவரிடம் அதனைப் பிரார்த்தித்தார் ஆயிற்று –

நம் ஆழ்வார் -எம்பெருமானை –சிற்றின்பம் பல நீ காட்டிப் படுப்பாயோ -திரு வாய் மொழி -6 9-9 —என்கிறார்
இவர் எம்பெருமானாரை மற்று ஓன்று காட்டி மயக்கிடல் என்கிறார் –எம்பெருமான் காட்டும் சிற்றின்பம் பல
எம்பெருமானார் காட்டுவதோ பேரின்பமான எம்பெருமான் என்னும் மற்று ஓன்று –
இதனால் தமது சரம பர்வ நிஷ்டையை வெளி இட்டு அருளினார் ஆயிற்று-

அனந்யார்க்க சேஷத்வம் -எம்பெருமானாருக்கு அன்றி மற்று ஒருவருக்கு உரியர் ஆகாமை –
அநந்ய சரணத்வம் -எம்பெருமானார் அன்றி வேறு உபாயம் இன்மை
அநந்ய போக்யத்வம் -எம்பெருமானாரே நீ யன்றி வேர் ஒருவரையும் அனுபவிக்கத்தக்கவராக கொள்ளாமை
என்னும் ஆகார த்ரயமும் தன் பால் அமைந்து உள்ளமையை
இங்கு அமுதனார் காட்டும் அழகு ரசித்து அனுபவிக்கத் தக்கதாய் உள்ளது

———–

இங்கனம் எம்பெருமானார் உடைய போக்யதையிலே நெஞ்சு படிந்ததும் -முன்பு தாம் அவர் திறத்து பண்ணின –
பாவனர் -தூய்மை படுத்துமவர் -என்னும் பாவனை குற்றமாகப் பட –
எம்பெருமானாரை நோக்கி தேவரீரது போக்யதையிலே ஈடுபட்டு இருப்பவர்களுக்கு-நான் -பாவனர் -என்னும்
பாவனையுடன் பேசினது குற்றமாக தோன்றும் என்று –நல்லவர்கள் சொல்லுவார்கள் என்கிறார்

மயக்கு மிருவினை வில்லியிற் பூண்டு மதி மயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய வென்னைத் துயரகற்றி
உயக்கொண்டு நல்கு மிராமானுச என்ற துன்னை வுன்னி
நயக்கு மவர்க்கி திழுக்கென்பர் நல்லவ ரென்று நைந்தே – – 101- – –

தூயவன் தீதில் இராமானுசன் மாயும் என்னாவியை வந்து எடுத்தான் – 42- என்றும்
புன்மையினேன் இடைத் தான் புகுந்து தீர்த்தான் இருவினை -52 – என்றும்
பலகால் எம்பெருமானாருடைய பாவனத்வத்தை இவர் தானே அனுசந்தித்தையும் நினைவு கூர்ந்து
அவை அனைத்தையும் சேரப் பிடித்து –என்றது இது -என்கிறார்

அமுதம் போலே இனியர் என்றே அனுபவிப்பது நன்று-
சாணிச்சாறு போலே பாவனர் என்று அனுபவிப்பது ஏதமே என்பது -நயக்குமவர்கள் கருத்தாகும்-

————

இங்கனம் தூய்மைப் படுத்துபவர் என்பது கூடப் பொறுக்க ஒணாத படியான-இனிமை வாய்ந்த எம்பெருமானார் திறத்து –
தம் உட் கரணமும் -புறக் கரணங்களும் எவ்வித பாகுபாடும் இன்றி -தாமே மிகவும் ஈடுபட்டு இருப்பதைச் சொல்லி –
இப்பரந்த உலகினிலே அனைவரும் இருக்க -தேவரீருடைய வள்ளல் தனம்
என் மீது வளருவதற்கு ஹேது என்ன -என்று எம்பெருமானாரிடமே வினவுகிறார் .

நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102- –

திரு நாமம் எவர் சொன்னாலும் இனிக்கும் -இதற்க்கு மேல் உறவு முறையும் அமைந்து விட்டாலோ
கேட்க வேண்டியது இல்லை -இவ்வினிமையோடு அவ்வினிமையும் சேர்ந்து பேரின்பம் பல்கா நிற்கும் அன்றோ
இதனால் எம்பெருமானார் இடத்தில் தமக்கு உள்ள ஆர்வ மிகுதியை காட்டினார் ஆயிற்று –

ஞானம் கொடுக்கும் ஆசார்யன் நிரந்தர உறவு . ஆத்ம ஹிதமளிக்கும் ஆசார்யன் தந்தை போன்றவர்
இந்த உறவைக் குறிப்பிட்டு அமுதனார் எம் அய்யன் என்று அழைத்துப் பெருமைப் படுகிறார்.
கண் கருதிடும் காண-கண் காண எண்ணாமல், கண் கருதிடும் காண-
ரசிகரான தம்மைப் போலே தனியாகத் தம் கருவிகளும் ஆர்வமுடையனவாம்படி எம்பெருமானார்-விஷயத்தில் உட் புக்கபடி இது –
உன்னை மெய் கொள்ளக் காணக் கருதும் என்கண்ணே -திரு வாய் மொழி – 3-8 4-

———

எம்பெருமானார் தம் வண்மையினால் உமக்கு மட்டும் கரணங்கள் அனைத்தும்
தாமே தம்மிடம் ஈடுப்படும்படியாக உபகரித்தது எவ் வழியாலே என்பாருக்கு
என் கருமத்தை நீக்கி உபகரித்து அருளினார் -என்கிறார் .

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய்வினைநோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – – 103 –

நரசிம்ஹப் பெருமாளுடைய இந்தக்கீர்திகள் -எம்பெருமானார் திரு உள்ளம் ஆகிற நன்செய்யுள் பயிராகி –
ஓங்கி வளர்ந்து விளைகின்றனவாம்-அவர் நெஞ்சுப் பெறும் செய்யுள் பேணப்படும் கீர்த்திப் பயிர்கள்
பெரியனவாய் யெழுந்து விளைந்து விடுகின்றன –
சிங்கப் பிரானுடைய குண அனுசந்தானத்தின்-விளைவு தான் எனக்கு அளித்த நல் ஞானம் என்பது அமுதனார் கருத்து .

அடியாருக்கு ஆபத்து வரும்கால் ஓடி வந்து காப்பதும், உள்ளும் புறமும் எங்கும் வியாபித்து நிற்பதும்,
அடியாருக்கு தீங்கிழைத்தால் சொல்லொணா சினம் கொள்வதும்… இப்படி வளர்ந்த வெம் கோபம் –
கீர்த்திப் பயிரை விளைந்திடச் செய்தார் -என்க .-மடங்கலானதும் ஒரு கீர்த்தி
சரணா கதற்கு தஞ்சமான தனமாக அனுசந்தித்த சீற்றம் -என் மெய் வினை நோயாம் இரணியனை களைவதற்கும் பயன்படுவதாயிற்று –
இங்கனம் அடியார்களைக் காக்கும் திறம் -பரத்வம் -முதலிய பிறவும்
சரண்யனுக்கு வேண்டிய குணங்களாய் அனுசந்திக்கப்பட்டு அச்சம் இன்றி நிறைவுடன் தெள்ளிய அறிவினராய்
வாழும்படி பலித்து -அவரைச் சார்ந்த எனக்கும் நல் ஞானமாய் பயன்படுகின்றன

—————-

உபதேசித்த ஞானமே இப்படி ரசிக்கும்படி இருப்பின் -நேரே கண்ணனைக் காட்டிக் கொடுத்து விட்டால் எங்கனம் நீர் ரசிப்பீரோ –
என்று எம்பெருமானாருக்கு கருத்தாகக் கொண்டு –
கண்ணனை நன்றாக காட்டித் தந்தாலும் -தேவரீர் திரு மேனியில் விளங்கும் குணங்களை ஒழிய நான் வேண்டேன் –
இந்நிலையினுக்கு ஏற்றவாறு அருள் புரிந்தால் –சம்சாரத்திலும் பரம பதத்திலும் கால் பாவி நிற்பன் –
இன்றேல் தரித்து இருக்க வல்லேன் அல்லேன் -என்கிறார் .

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

எங்கும் உள்ள வ்யாபகனான கண்ணனை கையில் கனியைப் போலே உள்ளங்கையில்
அடக்கி அனுபவிக்கக் கொடுத்தாலும் நான் வேண்டேன் -என்கிறார்
வானுயர் இன்பமே எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -திருவாய் மொழி -என்னும் நம் ஆழ்வார்

தனக்கு புருஷார்த்தம் எம்பெருமானாரின் திருமேனி அழகே என்று அறிவிக்கிறார் அமுதனார்.
இராமானுசரின் மெய்யில் பிறங்கிய சீரை தான் கணண்ணை விட விரும்புவர் என்று தெரிவிக்கிறார் அமுதனார்
அவரது வண்மை இன்றித் தாம் உய்வதற்கு வேறு வழி இல்லாமையினாலே
அதனையே அமுதனார் மீண்டும் மீண்டும் அனுசந்திக்கிறார் .
இவ்வருள் செய்வதற்கு – தன்பால் தகுதி எதுவும் இல்லை –
தம் வண்மை கொண்டே இவ்வருள் புரிதல் வேண்டும் -என்பது கருத்து

———-

எல்லாரும் தோஷம் நிறைந்த சம்சாரத்தை அருவருத்து -பரம பத்திலே போய் இருக்க ஆசைப்படா நிற்பர் –
நீரோ -சம்சாரத்தையும் பரம பதத்தையும் ஓன்று போலேபேசா நின்றீர் -எங்கு இருப்பினும் சரியே என்றீர் .
நீர் போய் இருக்க ஆசைப்படும் இடம் தான் எது -அதனை சொல்லீர் -என்ன –அது தன்னை அருளிச் செய்கிறார் –

செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 –

மாயன் திருவடிக் கீழ் விழுமவர் வேதியர்-
எம்பெருமானாரை தொழுமவர் நல் வேதியர் என்றது ஆயிற்று –
மாயன் திருவடிக் கீழ் வேதியர் விழுந்து இருப்பார் .
விழும் திருவடிகளை உடைய மாயனோ கண் துயில்பவன் .
எம்பெருமானார்பாதத்தை தொழுது பணி புரிபவராய் இருப்பர் நல் வேதியர் .
தொழப்படும் எம்பெருமானாரோ -காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -திரு விருத்தம் – 98-
என்றபடி கண் துயிலாதவர் –
எம்பெருமானாரை தொழுவது -சூழ்வது –
முதலியன செய்து எப்பொழுதும் அனுபவித்து கொண்டே இருக்கும் பெருமை வாய்ந்த பெரியோர்கள் –
அவ் அனுபவத்தால் உண்டான களிப்பு -உள் அடங்காது -இருந்த படியே இருக்க ஒண்ணாது
கிளர்ந்து எழுந்து ஆரவாரங்களைப் பண்ணிக் கொண்டு -பிரதம பர்வத்தில் -கும்பிடு நட்ட மிட்டாடி –
திருவாய் மொழி – 3-5 3- என்றபடி –கூத்தாடுகின்ற இடம் –
அவர்களது அந்நிலைக்கு அடிமை பட்டு விட்டவனாகிய-எனக்கு வாழும் இடம் ஆகும் -என்கிறார் .
அடியார்கள் குழாம் களுடன் அனுபவித்தற்கு வைகுந்தத்தில் வாழ -ஏனையோர் விரும்புவது போலே –
தொழும் பெரியோருடன் எம்பெருமானாரை அனுபவிப்பதற்கு அவர் எழுந்து அருளி உள்ள இடமே-
எனக்கு பேறான மோஷ பூமி -என்றது ஆயிற்று

————-

இப்படித் தம்பால் எல்லை கடந்த ஈடுபாட்டினை கண்ட எம்பெருமானார் அமுதனாருடைய திரு உள்ளத்தை
மிகவும் விரும்பி யருள -அதனை நோக்கி – அக மகிழ்ந்து அருளிச் செய்கிறார் .

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர் -அவை தன்னொடும் வந்
திருப்பிடம் மாய னிராமானுசன் மனத்தின்றவன் வந்
திருப்பிடம் என் தனி தயத்துள்ளே தனக்கின்புறவே – – 106- –

அவை தன்னொடும் வந்து இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து
அர்ச்சிராதி வழியே வந்து உடலம் நீங்கினவர்க்கு அடிமை செய்ய பாங்கான இடம் என்று வைகுந்தத்தையும் –
போவான் வழி கொண்டு – -சிகரம் -வந்தடைந்த நீணிலத்தில் உள்ளார்கட்கும்
அடிமைத் தொழில் பூண்பதற்கு பாங்கான இடம் என்று திரு வேங்கடத்தையும்
போவான் வழிக் கொள்வதற்கும் -சிகரத்தில் ஏறுவதற்கும் -திறன் அற்றார்க்கும் விடாய்த்த உடனே
உடலோடு அடிமை செய்வதற்கு பாங்கான இடம் என்று திரு மால் இரும் சோலை மலையையும்
தனக்கு கோயில்களாக கொண்டது போலே –
மாயன் –எம்பெருமானார் இதயத்தையும் தனக்கு கோயிலாக கொண்டான்

இவ்விடம் ஒரே காலத்தில் பல்லாயிரம் பேர்கள் ஆட்பட்டு அடிமை புரிவதற்கு -பாங்காக அமையும் என்பது மாயனது அவா –
ஆயின் ஏனைய இடங்கள் போன்றது அன்று எம்பெருமானார் உடைய இதயம்
வேங்கடத்தை இடமாக கொண்ட போது -த்யக்த்வா வைகுண்டம் உத்தமம் -சீரிய வைகுண்டத்தை விட்டு –என்றபடி
வைகுண்டத்தை துறந்தான் –இங்கனமே திரு மால் இரும் சோலை யை இடமாக கொள்ளும் போது
ஏனைய இரண்டினையும் விட வேண்டியதாயிற்று .இம் மூன்று இடங்களிலுமே இருப்பவன்
மாயன் ஒருவனே -ஆயின் இடங்கள் வெவ்வேறு பட்டன .அவ்வவ இடங்களிலே வாசம் பண்ணினதன் பயன்
இவர் இதயத்தில் வாசம் பண்ண வேண்டியதாயிற்று
அங்கனம் வாசம் பண்ண வரும் போது –தான் கோயில் கொண்டு இருந்த மூன்று இடங்களையும் கூடவே கொணர்ந்து
இங்கே குடி புகுந்தானாம் அம் மாயன் –
ஏனைய இடங்கள் அவன் இருப்பதற்கே போதுமானவை – மற்ற இடங்களைக் கொணர்ந்தால் இடம் போதாது –
எம்பெருமானாரிதயமோ இன்னும் எத்தனை இடங்களோடு வந்தாலும் இடம் கொடுக்கும் .அவ்வளவு விசாலமானது –
இது போன்ற இதயம் இருப்பிடம் என்னாது -இதயத்து இருப்பிடம் -என்ற அழகு பாரீர் –

கையில் கணி என்ன கண்ணனைக் காட்டித் தரினும் என்று 104m பாசுரத்தில் ,
கண்ணன் கையில் கனிஎ ன்ன கிடைத்தாலும் வேண்டாம்-இராமனுசர் மெய்யில் பிறங்கிய சீரே வேண்டும் என்று உறுதி பூண்டார் அமுதனார்.
செழுந்திரைப் பாற்கடல் என்னும் அடுத்த பாசுரத்தில் இராமானுசர் அடியார் இருக்கும் இடமே தனக்கு இருப்பிடம் இடம் என்றார்
கீழ் இரண்டு பாட்டுக்களாலே எம்பெருமானார் திரு மேனி குணங்களின் அனுபவம் இன்றேல்
ப்ராப்யமான வைகுந்தம் சேரினும் கால் பாவி நிற்க மாட்டேன் என்றும் –
எம்பெருமானாரைத் தொழும் பெரியவர் களிக் கூத்தாடும் இடமே தனக்கு பிராப்யமான இடம்
என்றும் சர்வேஸ்வரனோடு ஒட்டு அறுத்து பேசினவர் –
இங்கே பிராப்யமான இடத்தோடு மாயனையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு
எம்பெருமானார்-தன் இதயத்துக்கு உள்ளே எழுந்து அருளி இருப்பதாக அருளிச் செய்து இருப்பது கவனத்திற்கு உரியது

ஆசார்ய சம்பந்த்தினுடைய மகிமை – இவர் கால் பாவ மாட்டேன் என்று ஒதுக்கின இடமும் –
ஆசார்யனோடும்-அவன் உகந்த ஈச்வரனோடும் தானாகவே இவரை நாடி வருகிறது –
ஆசார்யன் உகந்த இடமும் -அவன் உகந்த எம்பெருமானும் ஆசார்யன் முக மலர்ச்சிக்காக
நெஞ்சார ஆதரிக்கத் தக்க எய்தி விடுவதை இது புலப் படுத்து கிறது .
இதனால் ஆசார்யனைப் பற்றுகை -பகவானை பற்றுவதினின்றும் வேறு பட்டது அன்று –
பேற்றினை எளிதில் தர வல்லது எனபது தெளிவாகின்றது –

இங்கே -ஈஸ்வரனை பற்றுகை கையைப் பிடித்து கார்யம்கொள்ளுமோபாதி
ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோபாதி –-47 – யென்னும்
ஸ்ரீ வசன பூஷணமும் அதன் வியாக்யானமும் சேவிக்கத் தக்கன

———–

தன்னுடைய மேன்மையைப் பாராது -எனது தண்ணிய இதயத்து உள்ளே இன்பமாய்
இடம் கொண்டு இருக்க வேண்டுமானால் -எம்பெருமானாருக்கு என் மீது எவ்வளவு வ்யாமோஹம்
இருக்க வேண்டும் என்று -அவரது வ்யாமோஹத்திலும் சீல குணத்திலும் தாம் ஈடுபட்டமை தோற்ற –
அவரை விளித்து –
தாம் ஒரு விண்ணப்பம் செய்யப் போவதாகச் சொல்லி –
எத்தகைய துன்பம் நேரும் காலத்திலும் தேவரீர் தொண்டர்கட்கு அன்புடன் நான்
ஆட்படும்படி யாக அருள் புரிய வேண்டும் என்று தமக்கு வேண்டியதை விண்ணப்பம் செய்கிறார் .

இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107-

என்னை யாக்கி அங்கு ஆட்படுத்து –
அன்புடையவனாய் இருக்கும்படியும் செய்ய வேணும் –
ஆட்செய்யும்படியாகவும் பண்ண வேணும்
இரண்டும் வேண்டிப் பெற வேண்டிய புருஷார்த்தங்கள் ஆகும் எனக்கு -என்பது கருத்து

புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கும் போது மட்டும் எம்பெருமான் திரு முகத்தை நோக்கி
முன்னிலையில் கூறாது –தனக்கேயாக -என்றது –
முகத்தை நோக்கில் புருஷார்த்தத்தில் கொண்ட துணிவு அவ் அழகினால் குலைவுறும்
என்று கவிழ்ந்து இருந்தமையினால் என்று ரசமாக பணிப்பர் ஆச்சார்யர்கள் –

ஆண்டாள் அங்கன் அன்றிப் புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கும் போது அதனில் ஊன்றி
நிற்பவள் ஆதலின் -புருஷார்த்தத்தில் தான் கொண்ட துணிவு குலைவுறுமோ என்னும்
அச்சம் ஏற்பட வழி இல்லாமையால் -கோவிந்தன் முகத்தை நோக்கி –
உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்று நிஷ்கர்ஷம் செய்து அருளினாள் –

அமுதனாரோ -பிரதம பர்வத்தில் ஆண்டாள் நிஷ்கர்ஷித்தது போல சரம பர்வத்தில் எம்பெருமானார்-திரு முகத்தை நோக்கி –
உன் தொண்டர்கட்கே ஆட்படுத்து -என்று நிஷ்கர்ஷிக்கிறார் .
தொண்டர்கட்கே அன்பும் -ஆட்படுதலும் உபயோகப் படுவனவாய் அமைய வேண்டும் .
தொண்டர்கட்கும் பிறர்க்குமாக ஒண்ணாது
தொண்டர் கட்கே யாக வேணும்
தொண்டர்கட்கும் எனக்குமாக ஒண்ணாது
தொண்டர்கட்கே யாக வேணும் என்பது அமுதனார் செய்யும் புருஷார்த்த நிஷ்கர்ஷமாகும் .

————

இந்தப் பிரபந்தத்தைப் பூர்த்தி செய்பவராய்த்-தொடங்கும் போது -இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்று
தாம் அருளிச் செய்த பேறு–தமக்கு ஆத்மா உள்ள அளவும் கைப்படவும் –
அப் பேற்றினைப் பெறும் வேட்கை வடிவமான பக்தி தழைக்கவும் -விரும்பி-அவ் விரண்டும் தமக்கு கை கூடுவதற்காக –
ஸ்ரீ தேவி யாதலின் -அனைவராலும் ஆச்ரயிக்கப் படுவாளாய் -அதனுக்கு ஏற்ப –
தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி – 100-என்றபடி
உயரினம் அனைத்துக்கும் சார்வாகிச் செல்வம் அளிப்பவளான-பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம் என்று
அமுதனார் தம் நெஞ்சை நோக்கிக் கூறுகிறார் .

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

நெஞ்சே சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்று தொடங்கினவர்
நெஞ்சே நம் தலை மிசை அடிப்பூ மன்ன -என்று முடிக்கிறார்

முதல் பாசுரத்தில் தொடங்கிய வண்ணமே -இந்த பாசுரத்திலும் முடித்து இருக்கும் அழகுகண்டு களிக்கத் தக்கது .-
பூ மன்னு மாது தொடக்கத்தில் வருகிறாள் –
பங்கய மா மலர் பாவை முடிவிலே வருகிறாள் .
அங்கே மார்பிலே போருந்தினவல் வருகிறாள்
இங்கே அணி யாகத்திலே மன்னுமவள் வருகிறாள் .
அங்கே மன்னி வாழ சரணாரவிந்தம் வருகிறது –
இங்கே மன்ன அடிப்பூ முடியிலே அடியிட வருகிறது –
இரண்டு இடங்களிலும் நெஞ்சு பாங்காய் அமைகிறது .

இராமானுசன் சரணாரவிந்தம் -நம் தலை மிசை மன்ன -மலர் சூடி மங்கள வாழ்க்கை பெற்று -நிரந்தரமாக
வீற்று இருப்பதற்கு -மங்கள வடிவினளான மலர் மகளை போற்றிடுவோம் என்பது இந்தப் பிரபந்தத்தின் திரண்ட பொருளாகும்-

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–89-98–

December 9, 2021

போற்ற முற்பட்டவர் -தகுதி யற்ற நான் புகழின்-தேவரீர் புகழ் மாசூணாதோ என்று தவிர்ந்து புகழின்
ஏற்றத்தை நிலை நிறுத்தலே நல்லது என்று தீர்மானித்தாலும் -என் மனம் தாங்குகிறது இல்லை .
போற்றியே யாக வேண்டி இருக்கிறது –
தேவரீர் நினைப்பு இவ் விஷயத்தில் எத் தகையதோ -என்று பயமாய் இருக்கிறது -என்று
தம் நிலையை எம்பெருமானார் இடத்தில் விண்ணப்பம் செய்கிறார் .

போற்றரும் சீலத்து இராமானுச நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேலது தாழ்வது தீரில் உன் சீர் தனக்கோர்
எற்றமென்றே கொண்டிருக்கிலும் என் மனம் ஏத்தி யன்றி
ஆற்ற கில்லாது இதற்கென்னினைவா என்றிட்டஞ்சுவனே – – -89 – –

என் கருவி மனம் -என் வசத்தில் இல்லை –
கருவியின் வசத்திலேயே நான் உள்ளேன் என்கிறார் -இதற்கு என் நினைவாய் –அஞ்சுவனே

பெரி யாழ்வார் வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்-
நாக்கு நின்னை யல்லால் லறியாது நனதஞ்சுவன் என் வசமன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் யேலும்
என் நாவினுக்கு ஆற்றேன் — 5-1 1- – என்று அருளிச் செய்தது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது –

———–

எம்பெருமானார் கடாஷத்தாலே அச்சம் தீர பெற்ற அமுதனார் –மூன்று கரணங்களுள் ஏதேனும் ஓன்று கொண்டு –
எம்பெருமானார் திறத்தில் அநு கூலமான-செயலில் ஈடுபட்டு உய்யலாமே -அங்கன் உய்யாமல்
மாந்தர் பிறந்து படும் துன்பத்தில்-அழுந்து கிறார்களே -என்று பிறருக்காக வருந்துகிறார் .

நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந்நீணிலத்தே
எனையாள வந்த விராமானுசனை இருங்கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே – – 90-

எம்பெருமானார் அருளுக்கு இலக்காகி பண்டைய அந்நிலை தவிர்ந்து-அவர் குணங்களை அனுபவிக்க வல்லனாய்
அவ் வனுபவத்தை இந்நூல் வடிவத்தில்-அடிவத்து தரும்படி பண்ணினதை நினைந்து -எனை ஆள –என்கிறார்

நினைத்தலும் புனைதலும் எம்பெருமானார் திறத்து செய்ய வேண்டியவைகளாகவும்
பூம் தொடையல் வளைதல் -எம்பெருமானாரை கவி பாடும் பெரியவர் திறத்து செய்ய
வேண்டியதாகவும் அமுதனார் அருளிச் செய்வது குறிக் கொள்ளத் தக்கது .
உத்தாரகரான ஆசார்யர் எம்பெருமானார் ஒருவரே ஆதலின் பிறவியை நீக்குவதற்காக
அவரே நினைக்க தக்கவர் ஆகிறார்

புனையும் பெரியவரை மட்டும் கூறி நினையும் பெரியவரை குறிப்பிடாதது கவனித்தற்கு உரியது .
நினைத்தால்- பிறர் அறியாது தனித்து செய்யப் படுவதாதலின் நினையும் பெரியவரை-அறிதல் அரிதே –
புனையும் பெரியவரையோ அவர்கள் இரும் கவியே காட்டும் ஆதலின்
அவர் தாள்களில்-பூம் தொடையல் வளைவது யாவர்க்கும் எளிதாகி விடுகிறது .
இங்கு நினைத்தல்- புனைதல்- வனைதல்கள் -முறையே
மனம் வாக்கு காயம் என்று மூன்று-கரணங்களின் செயல்களாக கூறப்பட்டு உள்ளன

——–

இன்னும் பிறப்பில் வருந்தும் மாந்தர் உய்வதற்காக எம்பெருமானார்
கைக் கொண்ட முயற்சியை-நினைவு கூர்ந்து அவரைக் கொண்டாடுகிறார் ..

மருள் சுரந்தாகம வாதியர் கூறும் அவப் பொருளாம்
இருள் சுரந் தெய்தவுலகிருள் நீங்கத் தான் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 —

தமோ குணம் அடியாக சொன்ன அவப் பொருள்-தூய சத்தவ குணம் அடியாக சொன்ன
நற் பொருளாக மாற்றப் பட்டது –
நல் ஆகமமான பாஞ்ச ராத்ரத்தின் படி -முடிய இடர் இலா வழியே -களி நடை நடந்து –
அரங்கனை வழி பட்டு -அந்தமிலா ஆனந்த கடலில் ஆழ முழுகுங்கள் என்று-
பாஞ்ச ராத்ர வழியில் உலகினை நடத்தும் கருத்துடன் அரங்கனை -எல்லா-உயிர் கட்கும் நாதன் -என்கிறார்
வைகுண்டத்தின் கண் உள்ள பரவாசுதேவனான-நாராயணன் அரங்கனே -எனபது எம்பெருமானார் கொள்கை .
வடிவுடை வானோர் தலைவனே – 7- 2- 10-

மிக்க புண்ணியன் இராமானுசன்-இருள் நீங்கப் பொருள் சுரந்தான் –

அரங்கனாம் -பெரிய பெருமாளும் -நீட்டிய திருக் கரத்தாலே -தன் திருவடிகளையே
உபாயமாகப் பற்றும்படி காட்டிய வண்ணமாய் பள்ளி கொண்டு இருப்பதனால் –
பாஞ்ச ராத்ரப் பொருளை விளக்கும் நிலையில் இருப்பதைப் பொறுத்து அரங்கனைப் குறிப்பட்ட தாகவுமாம்-

—————

தாமறியத் தம்மிடம் ஒரு ஹேதும் இல்லாத போது – தம்மை ஏற்று அருளுகைக்கும் –
பின்னர் கண் என்னும் வெளிக் கரணத்திற்கும் -நெஞ்சு என்னும் உட் கரணத்திற்கும் விஷயமாய் –
நிலை நின்று எழுந்து அருளி இருப்பதைக் கண்டு -மிக்க ஈடுபாட்டுடன் -இதனுக்கும் காரணம் -இன்னது
என்று அருளிச் செய்ய வேணும் என்று -எம்பெருமானார் இடமே கேட்கிறார் .

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் அடி போற்றி செய்யும்
நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் செம்மை நூற் புலவர்க்
கெண்ணரும் கீர்த்தி இராமானுச ! இன்று நீ புகுந்ததென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே – – 92–

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வினிதால் -பெரிய திருவந்தாதி – 56-
என் கண்ணுள்ளும் -உலகியல் இன்பத்தில் நாட்டம் கொண்ட எண் கண்ணுக்கும் என் நெஞ்சுக்கும்-
தன்னை விஷயமாகக் காட்டி அருளுவதே -என்கிறார் .
கமலக் கண்ணன் என்கண்ணின் உளான் -திருவாய் மொழி – 1-9 8- –
மாயன் என் நெஞ்சின் உள்ளான் -திருவாய் மொழி -1 9-5 – – என்னும் நம் ஆழ்வார் அனுபவம்
அமுதனாருக்கு-எம்பெருமானார் விஷயத்தில் கிடைக்கிறது –
திருமாலே கட்டுரையே -திருவாய் மொழி – 3-1 1- – என்பது போலே இதனையும் கொள்க –
நிர் ஹேதுகமான தேவரீர் கிருபை தவிர வேறு காரணம் இல்லை -என்பது கருத்து .

—————

அவர் செய்யும் அவை யாவையும் -கருணை யன்றி வேறொரு-காரணம் அற்றவைகளாய் அல்லவோ -உள்ளன -என்கிறார் .

கட்டப் பொருளை மறைப் பொருளென்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரானல்லனே என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி
வெட்டிக் களைந்த இராமானுசன் என்னும் மெய்த்தவனே – – -93 –

தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி –
ஸ்வா தந்த்ரியத்தால் அவனது அருளும் ஒரு கால் ஒளி மங்கி மழுங்கியும் போகக் கூடும்
எம்பெருமானார் உடைய அருளோ -அங்கனம் ஒரு காலும் ஒளி மங்கி மழுங்காத சாணை பிடித்த-வாளாய் –
அதனை ஒழித்துக் கட்டியே தீரும் -அது தோன்ற –தன் அருள் என்னும் ஒள் வாள் –என்றார் .
உருவி -என்றமையால் -அவ்வாள் இதுகாறும் வெளிப்படாமல் உறையில் இடப் பட்டமை தெரிகிறது –
சமயம் வரும்போது -அது வெளிப்படுகிறது -அமுதனாரை ஆட் கொள்ளும் சமயம் வரும் அளவும்-அதனை வெளிக் காட்டாது –
மறைத்துக் கொண்டு இருக்கிற எம்பெருமானார் உடைய சங்கல்பம்-என்கிற உறையில் இருந்து உருவப் பட்டது –
அருள் என்னும் ஒள் வாள் -என்க .

நம் ஆழ்வார் பெரிய திருவந்தாதியில் – 26-யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்-
கானும் மலையும் புகக் கடி வாள் -தானோர்-இருளன்ன மா மேனி எமமிறையார் தந்த-அருளென்னும் தண்டால் அடித்து -என்று
எம்பெருமான் தந்த அருளைத் தண்டாகக் கொண்டு வல் வினையை அடித்துத் துரத்துவதாக கூறினார் .
திரு மங்கை மன்னன் பெரிய திரு மொழியில் – 6-2 – 4- –
நீ பணித்த அருள் என்னும் ஒள் வாளுருவி எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர -என்று
எம்பெருமான் பணித்த அருளை ஒள் வாளாக கொண்டு ஐம்புலன்களின் இடர் தீர எறிந்ததாக-கூறுகிறார்

நம் ஆழ்வார் வாள் ஏந்தாது அந்தணர் போல் சாந்தமாய் இருப்பவர் ஆதலின்-அவருக்கு அருள் தண்டாக கிடைத்தது
திரு மங்கை மன்னனோ ஷத்ரிய வீரர் போன்று-மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் — 3-9 10- –
ஆகையாலே அவருக்கு அருள் வாளாக கிடைத்தது .

அவர்கள் இருவரும் முறையே அடிப்பவர்களையும் எறிபவர்களாயும் தாமே யாயினர் .
அமுதனார்க்கோ அங்கன் அன்றி எம்பெருமானாரே தம் அருள் என்னும் வாள் கொண்டு
பெருவினையை வெட்டிக் களையும் படியான பெருமை கிடைத்தது –
நம் கூடஸ்தர் நமக்கு வைத்து இருக்கும் சொத்து சரணாகதி –அதுவே நமக்கு உஜ்ஜீவனம்

————–

எம்பெருமானார் -தம்மைச் சார்ந்தார்க்கு தவம் தொடங்கி திவம் முடிய அளிப்பரே யாயினும்–
நான் அவருடைய குணங்களை ஒழிய வேறு ஒன்றையும் விரும்பி அனுபவியேன்-என்கிறார் –

தவந்தரும் செல்வம் தகவும் தரும் சரியா பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாம மென்னும்
திவந்தரும் தீதிலிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் கட்கு
உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- –

ஆச்சர்யணைக்கு கைங்கர்யம் பண்ணும் ருசி விளைவிப்பது செலவும் தகவும் தரும் என்னும் பதம்
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சி என்று ஆழ்வார் தாமும் எம்பெருமனிடமே கேட்டது போல் ,
இங்கு எம்பெருமானார் தாமே அளிப்பதாகக் இந்த பாசுரம்

ஸ்ரீ மான் ஆகிய எம்பெருமானார் நம் ஆழ்வாருடைய அழகிய இணைத் தாமரை யடியாக விளங்குகிறார் –
பகவானைப் பற்றிய நம் ஆழ்வார் -தம் வினைகள் கமலப் பாதம் காண்டலும் விண்டே ஒழிந்தன -என்றார் .
நம் ஆழ்வாரைப் பற்றிய மதுர கவிகள் -பண்டை வல் வினை பாற்றி யாருளினான் -கண்ணி நுண் – 7- என்றார் .
விண்டிடில் மீண்டும் உருப்படியாதலும் கூடும் .பாறு ஆக்கி விட்டாலோ தீ வினைகள்
மீண்டும் தலை தூக்க வழி இல்லை .ஆசார்ய அபிமானத்தின் வீறுடைமை இது.
மதுர கவிகளை அடி ஒற்றி –பாற்றித் தரும் -என்கிறார் அமுதனாரும்-

யான் அவன் சீர் அன்றி ஒன்றும் அருந்தேன் –
எம்பெருமானார் தரும் அவையான தவத்தில் இருந்து -திவம் உட்பட -யாதொன்றையும்
மன மகிழ்வுடன் விரும்பி அனுபவிக்க மாட்டேன் –அவருடைய கல்யாண குணங்களையே
மன மகிழ்வுடன் விரும்பி அனுபவிப்பேன் -என்றதாயிற்று -அவைகள் வலுவிலே என் மடியில்
கட்டப்படில் தவிர்க்க ஒண்ணாது -நானாக மனம் மகிழ்ந்து விரும்பி அவற்றுள் ஒன்றினையும்
விரும்பி அருந்தேன் -என்கிறார் .
எம்பெருமானார் கல்யாண குணங்கள் அவ்வளவு இனிக்கின்றன அமுதனார்க்கு –
நம் ஆழ்வார் செங்கண் மாலை நோக்கி –நின் புகழில் வைக்கும் தம் சிந்தையிலும்
மற்றினிதோ நீ யவர்க்கு வைகுந்தம் என்றருளும் வான் -பெரிய திருவந்தாதி – 53- என்று-
அவன் தரும் வைகுந்தத்தினும் அவன் குணங்கள் இனிப்பதாக கூறுவதை இங்கே நினைவு கூர்க-

—————-

இவர் இவ் உலகத்தவர் அல்லர் -சம்சார சம்பந்தம் அறவே அற்று இருக்கும் நித்ய ஸூரிகளில் ஒருவர் –
வீடளித்து பிறரை உய்விப்பதற்க்காகவே அவதாரம் செய்தவராய் இருத்தல் வேண்டும் என்று
தீர்மானித்து அவதரித்து செய்யும் அவற்றை அனுசந்திக்கிறார் –-இந்தப் பாசுரத்திலே –

உண்ணின்று உயிர் களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப்பன் எம்மிராமானுசன்
மண்ணின் தலத் துதித்துய் மறை நாலும் வளர்த்தனனே – – -95 – –

குன்றாத வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து உயிர் களுக்காக இங்கே வந்து அவதரிக்கிறார்
ஸூர்யனுக்கும் கிழக்குத் திசையில் உதிக்கும் போது அத்திசைக்கும் எங்கனம் யாதொரு தொடர்பும் உண்மையில் இல்லையோ –
அங்கனம் இம் மண்ணின் தலத்திற்கும்-அவருக்கும் யாதொரு தொடர்பும் உண்மையில் இல்லை என்றது ஆயிற்று
மண்ணின் தலத்து உதித்த -என்றதில்-மண்ணின் தோஷம் தட்டாத ஆற்றல் உடைமையும் –
உய் மறை நாளும் வளர்த்தனன் –-என்றதில் வளர்க்க வல்ல அறிவுடைமையும் தோன்றுமே
கீதையினைப் பரிஷ்கரித்து அதன் பொருளை எல்லாருக்கும் தெரியும்படி செய்ய
கீதா பாஷ்யம் -அருளிச் செய்வதற்கு என்றே எம்பெருமானார் பாரினில் அவதரிக்க வேண்டியதாயிற்று-
இப்படி எல்லாம் வல்ல பரனிலும் சீரிய முறையிலேயே அவதரித்து வேதார்த்த ஞானத்தை பரப்பி
உயிர் களை எல்லாம் உய்வித்து அருளுவதே –

————

நான் பிரபத்தி நிஷ்டன் அல்லேன்
எம்பெருமானாரைச் சேர்ந்தவர்களுடைய அபிமானத்திலே நிஷ்டை உடையேன் நான் என்கிறார் .

வளரும் பிணி கொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை யூன்
தளருமளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு
உளரெம் மிறைவன் இராமானுசன் தன்னை வுற்றவரே – – 96- –

மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத்தறியாது .
மிக்க நல்வினை –பிரபத்தி
வினை -கர்ம யோகமும் ஞான யோகமும்
நல் வினை -பக்தி யோகம்
தரித்தும் -விழுந்தும் துணை இன்றி -தனியே திரிகின்றவனான எனக்கு
விழாமல் காப்பதற்கு துணையாக இராமானுசன் தன்னை உற்றவர்கள் உள்ளார்கள் -என்கிறார்
இதனால் குழியைக் கடத்தும் கூரத் ஆழ்வானை அண்டை கொண்டு -அவரது அபிமானத்திலே
நிஷ்டை கொண்டு உள்ளமையை குறிப்பிட்டார் ஆயிற்று –
தேவு மற்று அறியேன் என்று எம்பெருமானாரைப் பற்றிய உற்றவர் அபிமானமே
சம்சாரக் குழியில் விழாது என்னைக் காக்க வல்லது -என்பது இப்பாசுரத்தின் கருத்து-

————

அவர் தம்மை உற்றவர் அபிமானத்திலே நிஷ்டை ஏற்படும் படியான விருப்பம் – எவ்வாறு உமக்கு வந்தது
என்பாரை நோக்கி அதுவும் எம்பெருமானார் கிருபையினாலே வந்தது -என்கிறார் –

தன்னை வுற்றாட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை வுற்றாட் செய்ய என்னை வுற்றானின்று தன் தகவால்
தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே – – -97 –

முதல் வாக்யத்தால் எம்பெருமானார் தம்மை ஆழ்வான் திருவடிகளில் ஆஸ்ரயிப்பித்ததும்
இரண்டாம் வாக்யத்தால் -இறாய்க்காமல் ஆசார்யன் ஆணைக்கு ஆட் பட்டு ஆழ்வான் தமக்கு
ஆசார்யனாகி -அவ் எம்பெருமானாராலே கொண்டாடப் பட்டதும் -குறிப்பால் உணர்த்தப் படுகின்றன
ஆழ்வான் எம்பெருமானார் விஷயமாக கவி பாடக்
கட்டளை இட்டாரே யன்றி தன் விஷயமாக கவி பாட சற்றும் இசைய வில்லை –
மொழியைக் கடக்கும் என்று ஓரிரு இடங்களில் ஆங்கங்கே கவி பட முடிந்தது அவ்வளவே
மணவாள மா முனிகள் கொண்டு கூட்டி ஒரே வாக்யமாக உரை அருளிச் செய்து உள்ளார்-

———-

எம்பெருமானார் சரணம் -என்றவரை திரிந்து உழலும்படி விட்டுக் கொடுக்க மாட்டார்
பேறு கிடையாதோ என்று வருந்த வேண்டாம் -என்கிறார் .

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென்றால் மனமே நையல் மேவுதற்கே – – -98 – –

நம் இராமானுசன் -நம்மை கை தூக்கி விட வேணும் என்பதற்காகவே அவதரித்த எம்பெருமானார் .
வீடளிப்பான் மண்ணின் தலத்து உதித்தவர் -என்றபடி –
மோஷத்திற்கு மட்டும் ஹேதுவானவர் -பந்தத்துக்கு உள்ளாகும்படி நம்மை நம் வசத்தே விடுவாரோ -என்பது கருத்து

ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே பிரசங்கம் –பயம் அபயம் -இரண்டும்-மாறி மாறி நடப்பது –
தான் உள்ளது -என்னும் ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தியும் –
பரதந்திர ச்வரூபனாய் மோஷ ஏக ஹேதுவான ஆசார்யனை உபாயமாக பற்றில் இப் பிரசங்கம்-இல்லை –
சதத நிர்ப் பரனாய் இருக்கலாம் என்று கருத்து -என்னும் மணவாள மா முனிகள்-வியாக்யானமும் அறியத் தக்கன .

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–79-88–

December 9, 2021

உலகில் உள்ளோர் உய்வு பெற வேணும் என்னும் ஆசை இருந்தும் -அருமந்த ஜ்ஞானத்தை-உபதேசித்து
உஜ்ஜீவிப்பிக்க காத்திருக்கும் எம்பெருமானாரைத் தெய்வமாக பற்றி –-அவ அருமந்த ஜ்ஞானத்தை பெற கிலாது இழந்து –
வேறு தெய்வத்தை தேடி அலைந்து-உழல்கிறார்களே என்று வருந்திப் பேசுகிறார் -இப்பாசுரத்தில் .

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கி யாதென்று லர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்லோர் நல்லறி விழந்தே – – 79- –

தேகாத்ம அபிமானத்தையும் -ஸ்வா தந்த்ர்யா அபிமானத்தையும் –அந்ய சேஷத்வ அபிமானத்தையும் -ஒட்டி என்றபடி
இவ் அபிமானங்களை தம் உபதேசத்தால் ஒட்டி இந்த பூதலத்தே மெய்யைப் புரக்கிறார் எம்பெருமானார் -என்க .
மெய் என்பது -பிறப்பு இறப்புகள் இன்றி -என்றும் ஒருபடி பட்டு -மாறுபாடு அற்று -விளங்கும்
ஆத்மா தத்துவத்தை –மெய் போலே என்றும் குலையாமல் இருத்தலின் -ஆத்மா ஸ்வரூபத்திற்கு மெய் எனபது
ஆகு பெயர் ஆயிற்று

ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே -திருவாய்மொழி -4 10-1 – – என்றார் நம் ஆழ்வார் .
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கியாதென்று
உழலுகிறீரே என்கிறார் அமுதனார் .
உடல் கொடுக்கும் -படைக்கும் -அவனே தெய்வம் என்றார் நம் ஆழ்வார் .
நல் அறிவு கொடுக்கும் ஆத்மா ரஷணம் பண்ணுமவனே தெய்வம் என்கிறார் அமுதனார்

————

எம்பெருமானாரைத் தெய்வமாகப் பற்றும் அளவில் நின்றேன் அல்லேன் –
அவரையே தெய்வமாகப் பற்றி இருப்பாரைத் தமக்கு உரிய தெய்வமாக கருதிக் கொண்டு இருக்கும் அவர்களுக்கே
ஒழிவில் காலம் எல்லாம் வழுவிலா அடிமை செய்யும் நிலை வாய்க்கப் பெற்றேன் என்கிறார் இதனில் .

நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர் அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே – -80 – –

வீட்டின்பத்தையும் சம்சார பந்தத்தையும் -தருவது நாராயண சதுரஷரீ .
வீட்டின்பமொன்றினையே தர வல்லது ராமானுஜ சதுரஷரி –இதனால் இது சாதுர்யம் வாய்ந்தது

நம் ஆழ்வார் -திருமால் திருப்பேர் வல்லாரடிக் கண்ணி சூடிய மாறன் -திரு விருத்தம் – 100- என்று தம்மை
சொல்லிக் கொள்கிறார் .இவரோ இராமானுசன் திரு நாமம் நம்ப வல்லாரை மறவாதவர்க்கு
அடிமை செய்பவன் நான் -என்று மேலும் ஒரு படி விஞ்சி தம்மை சொல்லிக் கொள்கிறார்

நம் ஆழ்வார் ஒழிவில் காலம் எல்லாம் ….அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று
பகவத் விஷயத்தில் கூறியதை –இவர் இராமானுசர் அடியார் திறத்து கூறுகிறார் –

——

இசைவில்லாமல் இருந்த தமக்கு -எம்பெருமானார் அருளாலே -ருசி உண்டாகியதை நினைத்து அவர் புரிந்த உபகாரத்தை –
நேரே அவரை நோக்கி – விண்ணப்பித்து -தேவரீர் கருனைக்கு ஒப்பு இல்லை -என்கிறார்

சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – – 81- –

அடியார்க்கு ஆட்படுதலும் –பேர்வின்றி அரங்கன் தாளிணைகளைப் பெறுதலும் –
இன்று எனக்கு பாகவத சேஷத்வத்திலே விருப்பம் உண்டாம்படி திருப்பத்தை ஏற்படுத்தின-
எம்பெருமானார் திருவருளால் கிடைத்த பேறுகள்-என்கிறார் .
பாகவதர்க்கே உரிமைப் பட்டது ஆத்மா -என்று எம்பெருமானார் உண்டு பண்ணின உணர்வு-
அடியாராகிய ஆழ்வானுக்கு அரங்கனால் ஆட்படுத்தப் பட்டு –
அரங்கன் தாளிணைகளை-பேர்வில்லாமல்-பெறும்படி செய்வதனால் -உரம் பெற்று நின்றது -என்க .
பாகவத சேஷத்வத்தை உணர்த்தி -அருளினதாக கூறாது –
அவ் உணர்வில் நிற்பார் பேர்வின்றி பெரும் அரங்கன் தாளிணைகளை பெறுவித்ததாக-கூறுவதனால்
அவ் உணர்வு உரம் பெற்று மிளிருவது காண்க –

பாகவத சேஷத்வத்தின் பயனாக அரங்கன் செய்ய தாளிணைகள் பெறுவித்ததாக கூறாமல்
நேரே பாகவத சேஷத்வத்தையே பெறுவித்ததாக உரை கூறலுமாம் –

———–

இன்று பெறுத்தும் என்று கீழ்க் கூறிய பேற்றினுக்கு உடலாகத் தமக்கு பண்ணின உபதேசத்தை
நினைவு கூர்ந்து -ஈடுபாட்டுடன் எம்பெருமானார் என்ன தார்மிகரோ-என்கிறார் –

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது வெந்தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற வென்னை ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் என்ன புண்ணியனோ !
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –

தெரிவுற்ற கீர்த்தி –
இன்னாருக்கு தெரிவுற்ற என்னாமையாலே -பூமி எங்கும் உள்ள பண்டிதர் பாமரர் என்கிற
வேறுபாடு இன்றி -எல்லோருக்கும் தெரிந்த கீர்த்தி -என்க –திக்குற்ற கீர்த்தி – 26- என்றார் கீழும்

இராமானுசன் என்னும் சீர் முகில்
சீர் முகில் -என்னும் இராமானுசன் -என்று மாறுக
சீர் -இங்கே வள்ளன்மை குணம்
வள்ளன்மை உடைய முகிலாக சொல்லப் படுபவர் இராமானுசன் -என்க
குணம் திகழ் கொண்டல் – 60- என்று கீழும் முகிலாக எம்பெருமானார் கூறப் பட்டுள்ளமை காண்க .
சீரிய முகில் -சீர் முகில் -சீர் -அழகாகவுமாம் –

—————

பொருவற்ற கேள்வி -என்று உமது கேள்வி அறிவை சிறப்பிப்பான் என் – ஏனையோரும் கேள்வி அறிவு பெற்றிலரோ என்ன –
ஏனையோர் கேள்வி அறிவு பிரதம பர்வத்தை பற்றியதாதலின் -பகவானிடம் பிரபத்தி பண்ணி பரம பதத்தை அடைவராய்-நின்றனர் அவர் –
நானோ சரம பர்வத்தின் எல்லை நிலையான ஆசார்யராகிய தேவரீரைப் பற்றிய கேள்வி அறிவு உடையவனாக ஆக்கப்பட்டமையின் –
அவர் கூட்டத்தில் சேராது -தேவரீர் திருவடிகளையே பரம பதமாய் கொண்டு –
அதனை தேவரீர் வள்ளன்மையால் பெறுமவனாய் உள்ளேன் –இது என் கேள்வி யறிவினுடைய பொருவற்றமை -என்கிறார்

சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன் உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமானுச ! இது கண்டு கொள்ளே – – 83-

எம்பெருமானாருடைய வண்மை கார் கொண்டது -அதாவது மேகத்தை வென்றது –
சிலருக்கு சில காலத்திலே மழை பொழிவது கார்
எல்லாருக்கும் எல்லாகாலத்திலும் பயன் படுவது வண்மை-ஆதலின் காரை வென்றது வண்மை
இது கண்டு கொள்
தேவரீர் வழங்க நான் பெற்றமை -வழங்கின தேவரீருக்கு தெரியாதோ –
ஏற்ற என் வாயாலே சொல்லிக் கேட்க வேணுமா என்கிறார் .
நான் கேள்வியினால் பிரபத்தி செய்து பகவானை அடைவார்கள் கூட்டத்தில் சேர்ந்திலேன்-
பொருவற்ற கேள்வியினால் ஆசார்யனுடைய அபிமானத்திற்கு பாத்ரமாகி எம்பெருமானார்-திருவடிகளையே
பெரும் பேறாக பெறுமவன் ஆனேன் –என்பது கருத்து .

———–

எம்பெருமானார் வள்ளன்மையாலே இனிமேல் பெற வேண்டியவை
ஒரு புறம் இருக்க -இதற்கு முன்பு பெற்றவை தாம் -ஒரு கணக்கில் அடங்குமோ –என்கிறார் .

கண்டு கொண்டேன் எம் இராமானுசன் தன்னை காண்டலுமே
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்
றுண்டு கொண்டேன் இன்னுமுற்றனவோ தில் உலப்பில்லையே – -84 – –

காண்டலுமே –தொண்டர் பொற்றாளில்-
கண்ட மாத்திரத்திலே -அவர் அளவோடு நில்லாது அவர்க்கு ஆட்பட்டாருடைய
அழகிய திருவடிகளில் அடிமைப் பட்டு விட்டேன் -என்கிறார் .
அவன் சீர் —உண்டு கொண்டேன்
சீர் -குணம் அது வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து கடலாய் தோற்றுகிறது –
விடாய் தீர அக்குணக் கடலையே வாய் மடுத்து உண்டு கொண்டேன் என்கிறார்
இன்னம் -உலப்பு இல்லையே
இனி மேலும் நான் பெற்றவைகளை சொல்லிக் கொண்டே போனால் ஒரு முடிவே இல்லை -என்கிறார் .

———-

எம்பெருமானாரை தொழும் பெரியோர்கள் திருவடிகளைத் தவிர
என் ஆத்மாவுக்கு வேறு ஒரு பற்று இல்லை -என்கிறார் .

ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என வறியாது உழல்கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த விராமானுசனைத் தொழும் பெரியோர்
பாத மல்லால் என்தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே – – 85- –

நாதன் என்னும் அறிவை -ஊட்டி -அறியாமை தீர்த்து -அருளினார் எம்பெருமானார் -என்க –
நாம் அனைவரும் நமது ஆத்மாவான இறைவனுக்கே சேஷப் பட்டவர்கள் ஆகிறோம் -என்னும் உபதேசத்தினால்
அறிவை ஊட்டி எம்பெருமானார் பேதைமை தீர்த்து அருளினார்
இராமானுசனைத் தொழுவார் -என்பதே அவர்கள் பெயர் .
தொழுகையே அவர்களுக்கு நிரூபகம் -இத்தகைய பெருமை வாய்ந்தவர்கள் என்றபடி –
ஆழ்வான் -ஆண்டான் போல்வார்கள் பாதம் அல்லால் –பற்று இல்லை –
என் தன் ஆர் உயிர்க்கு பாதமே பற்றுக் கோடு-பிறிது ஒன்றும் இல்லை -என்கிறார் .

———-

எம்பெருமானார் இடம் ஈடுபடும் உள்ளம் படைத்தவர் எவராயினும் -அவர் மேல் உள்ள காலம் எல்லாம் –
என்னை ஆள்வதற்கு உரிய பெரியவர் ஆவார் -என்கிறார் –

பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்றோடி நையேன் இனி ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் யவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே – – 86-

பெரியவர் ஆளுவதோ என்றும் அடிமை இன்பம் ஒன்றையே தருவதாய் இருத்தலின் ஒருபடிப் பட்டு இருக்கும்
எம்பெருமானாரைப் பற்றிய பெரியவர் -நாம் பையல் எனக் கொண்டு -தாமாகவே முன் போல் உழன்று ஓடி நைய விடாது ஆள்கின்றனர் .
என்னே என் நிலை அடியோடு மாறின படி -என்கிறார் .
அற்ப மனிசரைப் பற்றி அவரை உற்றாரஎன உழன்று ஓடி நைந்தேன் –இது நானாக தேடிக் கொண்ட கேடு
இன்று பெரியவர் என்னை அபிமானித்து அங்கன் நைய விடாது ஆள்கின்றனர் .
இது ஹேது எதுவும் இன்றி எனக்கு கிடைத்த பேரும் பேறு -என்ற வியந்து பேசுகிறார் .

————

ஸ்ரீ எம்பெருமானார் -உபதேசித்த ஞானம் வாய்க்காதவர்களுக்குத் தான் கலியினால் கேடு உண்டாகும் என்கிறார்

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணம் கட்கு
உரிய சொல்லென்றும் உடையவன் என்று என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி யிராமானுசன் மறை தேர்ந்து உலகில்
புரியு நன் ஞானம் பொருந்தாதவரைப் பொரும் கலியே – – 87- –

ஸ்ரீ எம்பெருமானார் இடம் அமைந்த மேன்மைக் குணங்களும் .
பேதையர் பேசும் போது அவர்களுடைய அறியாமை இயலாமை களின் அளவிற்கு ஏற்ப
ஸ்ரீ எம்பெருமானார் இடம் அமைந்த எளிமை குணங்களும் பொருளாகின்றன .
இங்கு -பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே வடிவு -21-என்னும் ஸ்ரீ பேய் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியும் –
செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் -ஸ்ரீ திருவாய் மொழி -5 -8-4- – –என்னும்
ஸ்ரீ ஸூக்தியும் ஒப்பு நோக்கத் தக்கன
பாம்பின் கால் பாம்புக்கு தெரியும் -என்னும் முறையிலே உணர்வின் மிக்கோரே
தெரிந்து கொள்ள வல்லவர் -என்க
(ஆதி சேஷன் மகிமையை விஷ்வக்சேனர் உணர்வார் -எம்பெருமானார் மஹிமையை நம்மாழ்வார் அறிவார் என்றவாறு )

எம்பெருமானார் என்னும் ஆசார்யன் ஆகிற துறையிலே -சத்துவ குணம் தலையெடுத்து -ஞானஸ்தானம் செய்தவர்கள்
மிகத் தூயராய் இருப்பதனால் -கலி அவர்களை நலிய இயலாது ..
அசுத்தி சிறிதேனும் காணப்படில் அன்றோ -கலியினால் ஆக்ரமிக்க முடியும் –

அந்த நல் ஞானத்தில் சேர்ந்து இருப்பவர்களைக் கலி நலியாதாதலின் அவர்கள் கோஷ்டியில் சேர்ந்த எனக்கு –
ஸ்ரீ இராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவராயினும் -அவர் எம்மை ஆளும் பரமர் -என்னும் துணிபு
கலியினால் குலைவு பெறாது –என்பது கருத்து —

——–

எம்பெருமானார் ஆகிற சிம்மம்-குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளைத் தொலைப்பதற்காக
இவ் உலகில் வந்ததாக உருவகம் செய்து -அவரது அவதாரத்தை
ஸ்தோத்ரம் பண்ணுவேன் -என்கிறார் –

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்
ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன் மறைவாதியராம்
புலி மிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே – – 88- –

கலைப் பெருமாள்-என்கிறார் .
வட மொழி மறையின் அங்கங்களை –கலை -என்னும் சொல்லாலே வழங்கி உள்ளார் திரு மங்கை ஆழ்வார் –
பன்னு கலை நூல் வேதப் பொருள் எல்லாம் -பெரிய திருமொழி -7 8-2-

ஒலி மிக்க பாடல் -மிகுந்த ஒலியை உடைய பாடல் -என்றபடி -ஒலி -ஓசை
துள்ளலோசை முதலியவை இவருடைய பாடலில் மிகுந்து இருப்பதைக் காணலாம் .
ஒலி கெழு பாடல் -11 4-10 –

இவ்வாறு மறை வாதியரைவெல்லும் வலி -கலை பெருமான் பாடல்களினால் மிகுந்ததாம் .
எம்பெருமானாருக்கு –ஆரண சாரம் அல்லவோ அப்பாடல்கள்-அடையார் சீயம் –பெரிய திரு மொழி – 3-4 10- –
பாடல் வலி மிக்க சீயமாக்கிற்று

ஒலி மிக்க பாடலை உண்டு : இந்த கலியனின் பாடலே இவருக்குத் தாரகம் என்றபடி
மாறன் கலை உணவாகப் பெற்றோம் என்று மாமுனிகள் சொவது போல் , எம்பெருமானாருக்கு இது தாரகம் என்றபடி

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–69-78–

December 9, 2021

எம்பெருமானார் உடைய பேருதவி நினைவிற்கு வர –
இறைவன் செய்த உதவியினும் சீரியதாய் -அது தோன்றலின் -அவ்வுதவியில் ஈடுபட்டுப் பேசுகிறார் –

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69- –

தானது தந்து –என்னையே
தன் சரணங்களைத் தானே தந்திலன் அரங்கன்
அவ்வரங்கன் திருவடிகளைத் தாமே -என் வேண்டுகோள் இல்லாமலே -தந்து அருளினார் எம்பெருமானார் .
அரங்கன் சரணம் எம்பெருமானாருக்கு சொந்தம் போலும் –

தாமாகவே எம்பெருமானார் அரங்கன் சரணங்களை எனக்குத் தந்ததற்கு காரணம் தந்தையானமையே என்கிறார் .
இராமானுசன் எந்தையே –தான் அது தந்து என்று இயைக்க –தந்தை தானாக தனயற்கு தனம் அளிப்பது போலே –
எந்தை இராமானுசன் அரங்கன் சரணமாம் தனத்தை தானே தந்தார் -என்க
அரங்கர் செய்ய தாளினையோடு ஆர்த்தான் -என்று முன்னரே இவ் விஷயம் கூறப்பட்டு இருப்பதும் காண்க .
ஞானப் பிறப்புக்கு மூல காரணமாய் இருந்தமை பற்றி –எம்பெருமானார் எந்தை-எனப்படுகிறார் .

எம்பெருமானார் தந்தவைகளோ -அரங்கனுடைய திவ்ய சரணங்களாம்.
சம்சாரத்தில் இருந்து கரை ஏறுவதற்கு உறுப்பான திவ்ய சரணங்களே
ப்ராப்யமும் ப்ராபகமுமாம் என்னும் திண் மதி எம்பெருமானார் தந்தது -என்றது ஆயிற்று

எடுத்தனன் -என்கையாலே ஆழமான சம்சாரக் கடலிலே விழுந்து கரை ஏற இயலாது தவித்தமை தெரிகிறது .-
என்னை –
அரங்கனும் இரங்காத நிலையில் உள்ள பாபியான என்னை –
ஆச்சார்ய சம்பந்தம் இதுகாறும் இல்லாமையின் அரங்கன் சரண் பெற்றிலர் அமுதனார் .
இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் பொருந்தாதவர்களுக்கு நன்மை செய்ய மாட்டார் அன்றோ
அரங்கனாம் பெரும் தேவர் .இன்று இராமானுசன் சம்பந்தம் வாய்த்ததும்
அரங்கன் சரண் பெற்று மேன்மை உற்றார் அமுதனார் -என்க –

———–

மேலும் விடாது -அருளல் வேண்டும் -என்று தம் கோரிக்கையை திரு முகத்தைப் பார்த்து விண்ணப்பிக்கிறார் .

என்னையும் பார்த்து என்னியல்வையும் பார்த்து எண்ணில் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே யுன் பெரும் கருணை
தன்னை என் பார்ப்பர் இராமானுசா வுன்னைச் சார்ந்தவரே – 70 –

தமாசார்யான ஆழ்வான் நைச்ய அனுசந்தானம் செய்ததை தாமும் பின்பற்றி –
அமுதனார்-இங்கனம் அருளிச் செய்கிறார்
என்னையும் எண் இயல்வையும் பார்த்து -என்னாது
தனித் தனியே பார்த்து -என்றது -ஒவ் ஒன்றே அருள் செய்வதற்கு போதுமானது -என்று
தோற்றற்கு-என்க
அரங்கன் தராதையும் தந்து சம்சாரப் படு குழியில் இருந்து பெரும் பாவியான என்னை
எடுத்தலின் எம்பெருமானாரது கருணை பெரும் கருணை யாயிற்று-
முன் பாசுரத்தில் ஞானப் பிறப்பிற்கு ஹேதுவான தந்தையைக் கூறப் பட்டார் எம்பெருமானார் .
இந்தப் பாசுரத்தில் அவர் -பெற்றவனை வளர்க்கும் வளர்ப்புத் தகப்பனாராகக் கருதப்படுகிறார்

————-

இவர் விண்ணப்பத்தை எம்பெருமானார் இசைந்து ஏற்று அருளி -விசேஷ கடாஷத்தாலே –
இவருடைய ஞானத்தை தம் திறத்தில் ஊன்றி நிற்குமாறு தெளிவுறுத்தி விட
தமக்கு கிடைத்தவைகளைக் கூறி க்ருதார்த்தர் ஆகிறார்-

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும் தகையே !–71-

தாளிணையில் சார்ந்த -என்னாது –தாளிணைக் கீழ்ச் சார்ந்தது -என்றமையின் –
நிழலும் அடிதாறும் போலே விட்டுப் பிரியாது பொருந்தி விட்டது -என்றது ஆயிற்று –
நீ செய்வினை யதனால் என்னும் ஹேதுவை ஒவ் ஓர் இடத்திலும் கூட்டிக் கொள்ள வேண்டும் .
நித்யம் யதீந்திர தவ திவ்ய வபுஸ் ஸ்ம்ருதவ் மே சக்தம் மனோபவது
வாக்குண கீர்த்தநேசவ் க்ருத்யஞ்ச தாஸ்ய கரனேது கரத்வயச்ய -என்று பிரார்த்தனை பண்ணுகிறார் .
அந்நிலை அமுதனார் தமக்கு எம்பெருமானார் கடாஷத்தால் பலித்து விட்டதாக அருளிச் செய்கிறார்.

எம்பெருமானுடைய கமல மலர்ப்பாதத்தை கண்டதும் ஆழ்வாருடைய வினைகள் விண்டு ஒழிந்தன .
மதுர கவி ஆழ்வாருடைய பண்டை வல்வினையை நம்மாழ்வார் கண்டு கொண்டு பாற்றி அருளினார்
அமுதனார் முன் செய்வினை எம்பெருமானார் செய்து அருளிய அத்தகைய
விசேஷ கடாஷத்தால் தானே பேர்ந்து ஒழிந்தது

செய்வினையதனால் -எனபது ஸ்ரீ ரெங்கநாதன் இடம் எம்பெருமானார் செய்த சரணா கதியை
கூறுவதாக பொருள் கொண்டு -அவர் செய்த சரணா கத்தியினால் தன்வினை பேர்ந்தது என்று
அமுதனார் அருளிச் செய்வதாக வியாக்யானம் செய்கின்றனர் சிலர் .
சிந்தை தாள் இணைக் கீழ் சார்ந்தமை முதலியவற்றுக்கு –அது –சரணாகதி காரணம் ஆகாமையாலும் –
அவதாரிகையில் விசேஷ கடாஷத்தாலே இவருடைய கரணங்கள் எல்லாம் ஸ்வ விஷயத்தில் ஊன்றி இருக்கும்படி
பண்ணி அருளினதாக கூறி இருப்பதாலும் -அந்த வியாக்யானம் ஆராயத் தக்கதாகும் –

வண்மையாவது, பெறுகிறவர் தகுதி பாராமல், கொடுக்கிற விஷயத்தின் சீர்மை கருதாமல் , கொடுப்பது.
இப்படி கொடுத்தது எம்பெருமானார் பதினெட்டு முறை நடந்து சரம ச்லோகார்த்தம் கேட்டு
அதை ஆசையுடையோர்க்கெல்லாம் வழங்கியது வண்மைத் தன்மை என்று முழங்குகிறார்
ஸ்ரீ நல்லான் சக்கரவர்த்தி ராமகிருஷ்ண ஐயங்கார்

எம்பெருமானார் வண்மையினால் என் மீது விசேஷ கடாஷம் செலுத்த –என் கரணங்கள் அவர் பால் ஈடுபட்டன .
வினைகள் தொலைந்தன –இனி எனக்கு என்ன குறை -என்று
தாம் கிருதார்த்தர் ஆனமையை இப்பாசுரத்தால் பேசினார் ஆயிற்று .

————-

எம்பெருமானாருடைய வள்ளன்மையால் தாம் பெற்ற பேறுகளை கூறினார் கீழே .
அவ்வள்ளன்மை மிக்கு மேலும் அவர் தமக்கு செய்து அருளிய பேருதவியை நினைவு கூர்ந்து-அதனிலே ஈடுபடுகிறார் .

கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறை நெறி தன்னை என்றுன்னி வுள்ளம்
நெய்த்த வன் போடிருந்தேத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே -72- –

மிக்க வண்மை செய்து வைத்தனன்
இருந்து ஏத்துதல்-இடைவிடாமல் துதித்து கொண்டு இருத்தல்
புகழோர் உடனே வைத்தல்-குணம் நிரம்பினவர் கூட்டத்திலே என்னையும் குணம்
நிரம்பினவன் ஒருவன் என்று ஒக்க எண்ணலாம் படி சேர வைத்தல் .
இனி தீய குணம் உடையோரிடை இது காரும் கூடி இருந்த என்னை-அடியாரோடு இருந்தமை -என்றபடி
நிறை புகழோர் ஆன ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே இருக்கும்படி பண்ணினார் -என்னவுமாம் .

கீழ்ப் பாசுரத்தில் கூறப்பட்ட பேறுகள் அனைத்துக்கும் நிறை புகழோர் உடனே
வைத்தல் அடித்தளமாய் முக்கியமாதல் பற்றி இதனைத் தனிந்து நினைவு
கூர்ந்து மிக்க வண்மையினால் இங்கன் உபகரித்து அருளுவதே ! என்று ஈடுபடுகிறார் .

—————

தம்முடைய வள்ளன்மை முதலியவற்றால் இவ் உலகத்தவர் கட்குத் தாமே ரஷகராய் –
உண்மையான ஞானத்தை உபதேசித்து அருளும் எம்பெருமானாரை ரஷகராக அனுசந்திக்கும் பலம் ஒழிய
எனக்கு வேறு ஒரு தரித்து இருக்கும் நிலை இல்லை என்கிறார் –

வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும்
தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை வுன்னும்
திண்மை யல்லால் எனக்கில்லை மற்றோர் நிலை நேர்ந்திடிலே – – 73- –

உண்மை ஞானத்தை -உபதேசிப்பதனால் சம்சார தாபத்தை தீர்த்தலாலும்-
பகவானுடைய குணங்களை துய்க்க செய்து ஆனந்தப் படுத்தலாலும் –
எம்பெருமானார் இடம் சந்தரன் இடத்தில் போன்ற குளிர்ச்சி உள்ளது என்க .-
சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தன்மை எம்பெருமானிடம் உள்ளதே யாயினும்
அவன் பால் உள்ள ஸ்வா தந்த்ரியத்தின் வெப்பத்தினால் அத் தண்மை தாக்கு உறுவதும் உண்டு
எம்பெருமானார் இடமும் ஸ்வா தந்த்ரிய வெப்பம் அடியோடு இல்லாமையின் தண்மை என்றும் குன்றாது –
தனிப்பட்டதாய் அமைந்தது -என்க –

ஸ்ரீ பராசார பட்டர்-ஔ தார்ய காருணி கதாஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ – என்று
வண்மை கருணை அடியார்கள் இடம் வாத்சல்யம் முதலிய குணங்கள் -என்று லோக மாதாவான-
ஸ்ரீ ரெங்க நாச்சியார் இடம் இம் மூன்று குணங்களை முக்கியமாக அனுசந்த்திது இருப்பது போலே –
அமுதனாரும் இம் மூன்று முக்கிய குணங்களை எம்பெருமானார் இடம் அனுசந்திக்கிறார் –

மாதகவால் சரணானார்
1-வண்மையினால் தானே சரணானார்
2-தண்மை யினால் உண்மை நன் ஞானம் உரைத்தார் -என்னலுமாம் –
உண்மை ஞானம் உள்ளதை உள்ளவாறே உணர்த்துவதால் தாபத்தை தீர்ப்பதாகவும்
நல் ஞானம் எம்பெருமான் குணங்களை பற்றியதாய் இருத்தலின் ஆனந்தத்தை விளைவிப்பதாயும் உள்ளது ..
மதி போன்ற தண்மை யினால் உரைக்கும் ஞானமும் மதி புரைவது ஆயிற்று .

———

எம்பெருமானார் உரைத்த உண்மை நல் ஞானத்திற்குப் பகைவரான புறச் சமயத்தவரையும் –
அகச் சமயத்தவரான குத்ருஷ்டிகளையும் -களைந்து எறியும் விஷயத்தில் சர்வேஸ்வரனைப்
பார்க்கிலும் அவ் எம்பெருமானார் எளிதினில் காட்டி யருளும் திறமையை பாராட்டி அதனில் ஈடுபடுகிறார் .

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டலனைய வண்மை
ஏரார் குணத் தெம்மி ராமானுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே – -74-

1-மாயவன் மறையின் திறம் தேராதவர்களை புத்தியினால் வெல்லலாகாது- கைப்பிடித்த படையினால் வெல்லுகிறான் ..
எம்மிராமானுசனோ மறையில் பொருந்தாத அன்னாரைத் தம் யுக்தியினாலேயே வென்று விடுகிறார் ..
2-மாயவன் குறைக்கிறான் -குறைப்பது மீண்டும் தளிர்ப்பதும் உண்டு
இராவணன் தலை அற்றற்று வீழ மீண்டும் முளைத்தன அன்றோ –
எம்மிராமானுசனோ –சிதைக்கிறார் -சிதைத்தது மீண்டும் தளிர்க்க வழியே இல்லை
3-மாயவன் வேறு ஒரு பொருளான ஆழி கொண்டு குறைக்கிறான்
எம்மிராமானுசனோ தம் சிந்தனா சக்தியாலே சிதைக்கிறார் .
4-மாயவன் குறைப்பது என்றும் உள்ள கூராழி என்னும் ஒரே கருவி கொண்டே
எம்மிராமானுசன் சிதைப்பதோ அவ்வப்போது புதிது புதிதாய்த் தோற்றும் சிந்தை கொண்டே –
அப்போதொரு சிந்தை செய்தே –
ப்ரஜ்ஞா நவ நவோன் மேஷ சாலி நீ பிரதிபாமாதா -புதிது புதிதாக தோன்றி விளங்கும் அறிவு
பிரதிபை -என்று கொள்ளப்படுகிறது -என்றபடி இங்கே கூறப்படும் சிந்தையை பிரதிபை என்று உணர்க

————–

பகவான் தான் அழகு அனைத்தையும் புலப்படுத்திக் கொண்டு கண் எதிரே வந்து -உன்னை விடேன் என்று இருந்தாலும் –
தேவரீர் குணங்களே வந்து போட்டி இட்டு நாலா புறங்களிலும் சூழ்ந்து மொய்த்துக் கொண்டு
என்னை நிலை குலைந்து ஈடுபடும்படி செய்யும் -என்கிறார் .

செய்த்தலைச் சங்கம் செழு முத்த மீனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி நம் கண் முகப்பே
மெய்த்தலைத் துன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்தலைக்கும் வந்து இராமானுசா ! வென்னை முற்று நின்றே – – 75-

கையில் ஆழியும் -என்னாது கைத்தலத்து ஆழியும் -என்றது கையின் பரப்புடைமை தோற்றற்கு -என்க –
நம் கண் முகப்பே –
திருவரங்கர் கூரார் ஆழி வெண் சங்கேந்தி வந்து தன் சௌந்தர்யம் முதலிய குணங்களில்
ஈடுபடுத்த முற்படினும் தாம் நிலை பேராது நிற்றலுக்கு ஸ்வாமியை சாஷியாக சேர்த்து கூறும்
நோக்கம் உடையவராய் -என் கண் முகப்பே -என்னாது –நம் கண் முகப்பே -என்கிறார் –
எம்பெருமானார் முக்கோல் ஏந்திய கைத்தலத்து அழகே என்னை ஈடுபடச் செய்கிறது .
சஸ்த்ரம் பிடித்த அரங்கர் கையில் எனக்கு ஈடுபாடு இல்லை .
சாஸ்திரம் பிடித்த எம்பெருமானார் கையில் தான் எனக்கு ஈடுபாடு .

தன் வடிவைக் காட்டி ஈடுபடுத்த முற்படுவது இயல்பு -ஆதலின் அவன் அங்கனம் முற்படினும்
என் ஆசார்ய நிஷ்டையை குலைக்க ஒண்ணாது என்கிறார் இப்பாசுரத்தில் .
தேவ பிரான் தன் கரிய கோலத் திரு உருவை மதுர கவியாருக்கு தானே மேல் விழுந்து காட்டினான் அன்றோ மதுர கவியார் கண்டார்
அமுதனாரோ விடேன் என்று தம் அழகைக் காட்டி திருவரங்கர் நிலை நிற்பினும்
கண் எடுத்தும் பாராது எம்பெருமானார் குணங்களிலேயே தாம் ஈடுபட்ட நிலை குலையாமல் இருப்பதாக பேசுகிறார் .

நம்மாழ்வார் தாமும் , கருட வாஹணன் வந்தாலும் அவனுக்கு ஒரு கும்பீடு போட்டு விட்டு இங்கேயே இருப்பேன்
என்று திவ்ய தேசமே தஞ்சம் என்று சொல்வதாக இருப்பதாக பேசுகிறார்-

கூடும் கொல் வைகலும்* கோவிந்தனை மதுசூதனை கோளரியை,*
ஆடும் பறவைமிசைக் கண்டு* கைதொழுது அன்றி அவன் உறையும்,*
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி* ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்,*
நீடு பொழில் திருவாறன்விளை தொழ* வாய்க்கும்கொல் நிச்சலுமே!

————–

ஆசார்யர் ஆகிய தேவரீரை அன்றிக் கண் எடுத்தும் பாரேன் என்றார் கீழ் –
இதனை உகந்த எம்பெருமானார் இவருக்கு எதனை அளிப்போம் என்னும் கருத்து தோன்ற எழுந்து அருளி இருப்பதை கண்டு –
தமக்கு வேண்டும் பேற்றினை இன்னது என்று முடிவு கட்டிக் கோருகிறார் –

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –

திரு மலையின் கீர்த்தி என்றும் ஒருப்பட்டு இருத்தலின் –நின்ற கீர்த்தி -என்கிறார் .
வண் கீர்த்தி
வேறு பயனைக் கோராதவர்க்கு பகவத் ஆபிமுக்க்யம் தொடங்கி-கைங்கர்யம் ஈறாக -தர வல்லது திரு மலையின் கீர்த்தனமே
பொற் குன்றம்
பொன் போலே சீறியதும் -விரும்பத் தக்கதுமாய் இருத்தலின் -பொற் குன்றம் -என்றார் .எம்பெருமான் பொன் மலை -என்றார்
குலசேகரப் பெருமாளும் -பெருமாள் திரு மொழி –4 10-

வேம்கடப் பொற் குன்றத்தில் நிறைந்த வண் கீர்த்தி வாய்ந்த நின்ற திருக் கோலமும் –
வைகுண்ட நாட்டில் செம் தாமரைக் கண் பிரான் காட்டிய இருந்த திருக் கோலமும் –
பாற்கடலில் -கிடததோர் கிடக்கை -என்று கொண்டாடும் சயனத் திருக் கோலமும்
இம் மூன்று இடங்களிலும் எம்பெருமானைத் தன மீது கொண்ட ஆதி சேஷனாய் இருத்தலின் எம்பெருமானாருக்கு பேரின்பம் தருகின்றன

பரம ப்ராப்யமான இடம் ஆதல் பற்றி வேம்கடப் பொற் குன்றம் முன்னரும் –
ப்ராப்யமான இடம் ஆதல் பற்றி வைகுண்ட நாடு அதனை எடுத்தும் –
ஆர்த்தி தீர ஆஸ்ரயிக்கும் இடமாதல் பற்றி திருப்பாற்கடல் அதன் பின்னரும் முறைப்படுத்தப் பட்டன

ஏனைவ குருணா யஸ்ய நயாச வித்யா ப்ரதீயதே தஸ்ய வைகுண்ட துக்தாப்த்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச -என்று
எந்த ஆசார்யனாலேயே எவனுக்கு சரணாகதி விதியை அளிக்கப்படுகிறதோ
அவனுக்கு அந்த ஆசார்யனே வைகுண்டமும் பாற்கடலும் த்வாரகையும் -எல்லாம் ஆவான் –

வில்லார் மணி கொழிக்கும் வேம்கடப் பொற் குன்ற முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளா மிருளோடே மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த அவர் -என்னும் ஞான சாரப் பாசுரமும் அனுசந்திக்கத் தகன

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின் செம்மா பாத பற்புத் தலை சேர்க்க வேணும் அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -என்று
நம் ஆழ்வாரும் எம்பெருமானைப் பிரார்த்தித்தது போலே அமுதனார் எம்பெருமானைப் பிரார்த்திக்கிறார்

————-

கோரிய படி திருவருளை ஈந்து அருள -அவைகளைப் பெற்று க்ருதார்த்தராய் -அவர் செய்த உபகாரங்களை அனுசந்தித்து –
இவை எல்லாம் செய்த பின்பு இனிச் செய்யப் போவது ஏதோ -என்கிறார் .

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் இப்படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே – 77 –

வண்மை இராமானுசற்கு என்கருத்து இனியே –வள்ளலாகிய எம்பெருமானார் இவ்வளவு உபகரித்ததோடு அமையாமல்
மேலும் உதவுதற்கு முற்படுகிறார் -இவ்வளவுக்கு மேலும் உதவுதற்கு என்ன தான் இருக்கிறதோ – என்றபடி –
என்னை முற்றுமுயிர் உண்டு …இன்னம் போவேனோ கொலோ என் கொல் அம்மான் திருவருளே -திருவாய் மொழி – 10-7 3- –
என்னும் நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் –
நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக் குறிப்பே –பெரியாழ்வார் திரு மொழி 5-4 1-
என்னும் பெரியாழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் இங்கு ஒப்பு நோக்குக .

————-

இப்படி என்னைத் திருத்தி -தேவரீருக்கு உகந்த விஷயமான திரு மகள் கேள்வனுக்கு உறுப்பாக்கின பின்பு-
வேறு ஒரு பொய்ப் பொருளை என் நெஞ்சில் பொருந்துமாறு செய்ய இயலாது -என்கிறார் .

கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என்னெஞ்சினில்
பொருத்தப்படாது எம்மிராமானுச! மற்றோர் பொய்ப் பொருளே – – 78- –

ஆளுமாளார் -என்கிறவனுடைய-தனிமையை தவிர்க்கைக்காக யாயிற்று பாஷ்ய காரரும் இவரும் உபதேசிப்பது -ஸ்ரீ வசன பூஷணம் – 255-

மெய்ப் பொருள் -ஜீவாத்மா திரு மகளுக்கும் அவள் கேள்வனுக்குமே உரியதாய் இருத்தல் –

பொய்ப் பொருளான ஜீவாத்மா பரப்ரம ஐக்யமடைதல் –
அது தனக்கு உரிய ஸ்வ தந்திரப் பொருளாய் இருத்தல் –
பிரரான தேவர்களுக்கு உரியதாய் இருத்தல் -போல்வன-மற்று ஓர் பொய்ப் பொருள்-

எம் குருவான ராமானுசன் உபதேசித்த சேஷத்வமே மெய்ப் பொருள் –
அவர் உபதேசிக்காத ஒவ் ஒரு பொருளும் பொய்ப் பொருள் -என்றபடி

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–59-68–

December 9, 2021

இக் கலி காலத்தில்–எம்பெருமானார் அவ் விருளைப் போக்காவிடில் –ஆத்மாவுக்கு ஆத்மாவான சேஷி ஈச்வரனே –
என்று எவரும் நிரூபித்து அறிந்து இருக்க மாட்டார்கள்-என்கிறார் .

கடளவாய திசை எட்டினுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத்து இராமானுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் உயிரை
யுடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை யுற்று உணர்ந்தே – -59-

சிறையிலே நள் இருள் கண் -ஞானத்தின் ஒளி உருவான கண்ணன் என்னும்
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு வந்தது -வெளிச்சம் அற்ற நில உலகில்
கலி இருள் மிடை தரு காலத்தில் -பிரபன்ன குலத்தினில் யதிராஜர் என்னும் குன்றில் இட்ட-விளக்கு வந்து ஜ்வலித்தது .
நான்மறை -என்றும் இருப்பினும் -அம் மறையின் சுடர் ஒளி -கொண்டு இருளைத்
துறக்கும் திறமை எம்பெருமானார் ஒருவருக்கே உள்ளது-

உடலுக்கு ஆத்மா போலே உலகிற்கு ஈஸ்வரன் சேஷி யாகிறான்
பயன் உறுவது சேஷி என்றும் பயன் உறுத்துவது சேஷம் என்றும் உணர்க .
ஈஸ்வரனுக்கு உயிர்கள் சேஷமாய் இருத்தலின் -அவன் உகப்பாய் நோக்கி
பணி புரிதலே புருஷார்த்தம் ஆயிற்று -என்க .இவை எல்லாம் எம்பெருமானார்
இருளைத் துரந்து காட்ட நாம் கண்டவை –

——–

ஸ்வாமியின் ஞான வைபவத்தை அறிவித்த பின்பு –பக்தி வைபவத்தையும் அருளிச் செய்கிறார்
பகவான் இடத்திலும் -பாகவதர்கள் இடத்திலும் –
அவ் இருவர் பெருமையும் பேச வந்த திருவாய் மொழி இடத்திலும் -அவருக்கு உண்டான
ப்ரேமம் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும்
உள்ளது உள்ளபடியே என்பார் மெய் ஞானியர் .என்கிறார் .
இனி திருவாய் மொழியைப் பற்றி எடுத்துப் பேசுவதால் -திரு வாய் மொழியின் பொருளை-அதாவது
மிக்க இறை நிலையும்-என்றபடி அர்த்த பஞ்சகத்தை -உணர்ந்த மெய் ஞானியர் -என்னலுமாம் –
அணி அரங்கன் திரு முற்றத்தார் -அடியார் தங்கள்-இன்பமிகு பெரும் குழுவு கண்டு யானும்-
இசைந்துடனே என்று கொலோ இருக்கும் நாளே –என்று குலசேகர பெருமாளும்
அவனடியார் நனிமா கலவியின்பம் நாளும் வாய்க்க நங்கட்கே -என்று நம் ஆழ்வாரும்
இந்நிலையினை பெரும் பேறாக பெற அவாவுவது காண்-

எங்கு எங்கு எல்லாம் ரகுநாதனுடைய கீர்த்தனம் நிகழ்கின்றதோ அங்கு அங்கு எல்லாம்
மத்தகதிடை கைகளைக் கூப்பி கண்ணும் கண்ணீருமாய் ஆஞ்சநேயன் ஈடுபட்டு நிற்பது போல்
திருவாய் மொழியின் இன்னிசை மன்னும் இடம் எல்லாம் எம்பெருமானார் புக்கு நிற்கிறார்
நுகர்ச்சி உறுமோ மூ உலகின் வீடு பேறு-திருவாய் மொழி -8 10 9- –

மலராள் புணர்ந்த பொன் மார்பன் ஆதலின் இந்நில உலகின் குற்றம் தோற்றாது-திருப்பதிகளிலே-
வாத்சல்யத்துடன் அவன் பொருந்தி எழுந்து அருளி இருக்கிறான்
பொருந்தும் பதி -எனவே
பொருந்தாத பதியும் உண்டு என்று தோற்றுகிறது-அந்த பொருந்தா பதியே .-பரம பதம் என்க
திருமங்கை ஆழ்வாரைப் போலே –தான் உகந்த திருப்பதிகள் தொறும் மண்டி அனுபவிக்க புக்கு நிற்பவர்-எம்பெருமானார் -என்க-

நிற்றல்-ஈடுபட்டு மெய் மறந்து நின்றால்
இனி இவற்றில் புகாத போது கால் பாவி நிற்க மாட்டாது -புகுந்து பின்னர் தரித்து கால் பாவி நிற்கிறார் -என்னலுமாம் .
இதனால் எம்பெருமானாருடைய பக்தி வளம் விளக்கப் பட்டதாயிற்று .
குணம்-அறிவு முதலிய ஆத்ம குணம்
கொண்டல்-வள்ளன்மையால் வந்த ஆகு பெயர் .
மேகம் போலே ஆத்ம குணங்களை அனைவருக்கும் வழங்கும் வள்ளல் -என்றபடி .
இனி நிற்கும் -என்பதை பெயர் எச்சமாக கொள்ளும் போது புக்கு நிற்கும் குணம் எனபது பக்தி ஆகிறது-

பிரமாதாக்களும் -பிரமாணத்தை கொண்டு அறிபவர்கள்-பிரமாணமும் –
ப்ரமேயங்களும் -பிரமாணத்தால் அறியப்படும் அவைகளும் –
பேசப்பட்டு -அவற்றில் எம்பெருமானாருக்கு உள்ள பக்தி வளம் கூறப்பட்டது –

————-

ஸ்வாமியுடைய குண வைபவம் இருக்குபடியை அருளிச் செய்கிறார் –

கொழுந்து விட்டோடிப் படரும் வெங்கோள் வினையால் நிரயத்
தழுந்தி யிட்டேனை வந்தாட் கொண்ட பின்னும் அரு முனிவர்
தொழும் தவத்தோன் எம் இராமானுசன் தன புகழ் சுடர்மிக்கு
எழுந்தது அத்தால் நல்லதிசயம் கண்ட திரு நிலமே – 61- –

அவர் இருக்கும் இடம் தேடி நான் போக வில்லை –அழுந்தினவன் எங்கனம் போக இயலும் –
அவரே விண்ணின் தலை நின்று மண்ணின் தலத்துக்கு-என்னை ஆட் கொள்ள வந்தார்

நிரயத்து அழுந்திய இடத்தே வந்தமையால்-வாத்சல்யம் தோற்றுகிறது .-
வேண்டுகோள் இன்றி தன் பேறாக வந்தமையால் ஸ்வாமித்வம் தோற்றுகிறது –
ஆட் கொண்டமையால்-சௌசீல்யமும்
தாமே நேரில் வந்தமையால்-சௌலப்யமும் -புலனாகின்றன .
நிரயத்து அழுந்தி உழலுவதை அறிந்து வந்தமையால்-ஞானமும் –
எடுத்து ஆட் கொண்டமையால்-சக்தியும் –
அரு முனிவர் தொழும் தவத்தோன் -என்றமையால் பூர்த்தியும்
எம் இராமானுசன் -என்றமையால்-பிராப்தியும் -சம்பந்தமும் –வெளி இடப்பட்டு களிப்ப்ட்டுவது காண்க .

தன் புகழ் சுடர் மிக்கு எழுந்தது –
நிரயத்து அழுந்தி யிட்டேனை ஆட் கொண்ட பின்னும் புகழ் சுடர் மிக்கு எழுந்தது -என்று இயைக்க –
என்னளவோடு போதும் என்று திருப்தி பெறாமல் என்னை ஆட் கொண்டமையால் சுடர் மிகுந்த குணம்
என் போன்றவர்களை மேலும் தேடிக் கிளர்ந்து எழுந்தது -என்றபடி –
புகழ் சுடர் மிக்கு எழுந்தது
அது கொழுந்து விட்டு ஓடிப் படரும்-புகழ் சுடர் மிக்கு எழுந்தமையால் இந்நிலத்திற்கு சிறப்பு உண்டாயிற்று-

————

கர்ம சம்பந்தம் அறப் பெறுகையால் வந்த கிருதார்த்தத்தை -பயன் அடைந்தமையை –அருளிச் செய்கிறார் –

இருந்தேன் இருவினை பாசம் கழற்றி இன்றி யானிறையும்
வருந்தேன் இனி எம் இராமானுசன் மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலைவுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெரும் தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – -62 –

எம்பெருமானார் சம்பந்தம் வாய்ந்த பெரியோர் தம் கழல்-பிடித்த பின் பேற்றுக்கு செய்ய வேண்டியது யாது ஒன்றும் இல்லாதாயிற்று –
அவை இருவினை கழலுவதற்கு-திண்ணியவைகளான பரி பூர்ண உபாயமாம்
பேறு தப்பாது என்று ஐயம் அற துணிந்து -தெளிந்து நிற்றல் க்ருதக்ருத்யத்வம்
யான் இன்று பாசம் கழற்றி இருந்தேன் -இனி இறையும் வருந்தேன்

பெரும் தேவர் -நித்ய ஸூரிகள்
பெரும் தேவர் குழாம்கள் பிதற்றும் பிரான் பரன்-திருவாய் மொழி -9 3-4 – –
இனி பெரும் தேவர் என்பதற்கு பெரிய பெருமாள் என்று பொருள் கொண்டு உரைத்தலுமாம் .
இயல்பான ஆசார்ய தன்மை வாய்ந்த எம்பெருமானார் சம்பந்தம் இல்லாவிடில் –
அடிகளில் விழுந்து கெஞ்சிப் பல் இளித்தாலும் அரங்கன் சிறிதும் அருள் புரிந்து -நன்மை ஒன்றும் செய்ய மாட்டான் -என்க –

அத்தகைய பெரிய பெருமாளைப் பரவும் பெரியோர் என்பது –
மொழியைக் கடக்கும் பெரும் புகழ் படைத்த கூரத் ஆழ்வானை-ராமானுச சம்பந்தம் இல்லாதவர்களுக்கு ஒன்றும் நன்மை செய்யாத
ஸ்வபாவத்திலே தோற்று பெரிய பெருமானை கூரத் ஆழ்வான் பரவுகின்றார் என்க
அவர் திருவடியை ஆஸ்ரயித்து-என்றபடி–

———–

அநிஷ்டமான கர்ம சம்பந்தம் கழிந்தபடி சொன்னார் கீழ் –
இஷ்டமான கைங்கர்யத்துக்கு அபேஷிதமான தேவரீர் திருவடிகளில்
ப்ராவண்ய அதிசயத்தை தேவரீர் தாமே தந்து அருள வேணும் -என்கிறார் .

பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்திப்
படியைத் தொடரும் இராமானுசா மிக்க பண்டிதனே – 63- –

களிற்றினுக்கு காதல் அழகார்ந்த பிடியைக் கண்டதும் உண்டாகியது .
அடியேனுக்கு பேரன்பு -நற்குணம் வாய்ந்த நின் திருமேனியை தேவரீர் காட்டித் தர –அதனை நான்-கண்டதும்
உண்டாகும்படி செய்து அருள வேண்டும் -என்று எம்பெருமானாரையே பிரார்த்திக்கிறார் –

போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு – .என்னும் பாசுரத்தில் –
தமது நெஞ்சை அனுபவிக்கும் வண்டாகவும்-அடியை அனுபவிக்கப்படும் தாமரை மலராகவும் –
அதன் கண் உள்ள-குளிர்ச்சி மென்மை மணங்களை பிறங்கிய சீராகிய தேனாகவும் –
அதனை உண்டு அம்மலரிலே-நிரந்தரமாக அமர்ந்திட அவ்வண்டு வந்து அடைந்தது என்று பலித்தமை வருணிக்க பட்டுள்ளமையும் –
இப்பாட்டில் வந்துள்ள களிற்றினுக்கு போலே எவ்வகையிலும் பேராத பேரன்பு பலித்தமை-
கையில் கனி என்ன –என்னும் பாசுரத்தில் -உன் தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் -என்று
விளக்க பட்டு உள்ளமையும் கவனிக்க தக்கது –

ஞாலத்தவரை விடாது பின் தொடரும் பரம காருணிகர் -எம்பெருமானார் -என்க
அவ் ஒண் பொருள் கொண்டு அவர்பின் படரும் குணன் -36 – என்று கீழே கூறியதை இங்கே நினைவு கூர்க
படியைத் தொடரும் விஷயத்திலே அறிவுடைமையாவது அவரவர் தகுதிக்கு ஏற்ப –
தம்மை அமைத்துக் கொண்டு -நெஞ்சில் படும்படி உபதேசித்து -அறிவூட்டுகை –
அது மிக்கு இருத்தலாவது அவ்வுபதேசம் பலித்து ஆளாக்கி விஷயீ கரித்தல் என்க –
எம் இராமானுசன் அவ் எழில் மறையில் சேராதவரை சிதைப்பது அப்போது ஒரு சிந்தை செய்தே -74 -என்று மேலே -இவர் கூறுவதும் காண்க –

————

புற மதத்தவரும் குத்ருஷ்டிகளும் ஆகிய வாதியரைப் பார்த்து இராமானுச முனி யாகிய யானை
உங்களை நாடிக் கொண்டு பூமியிலே வந்து எதிர்ந்தது –உங்கள் வாழ்வு இனிப் போயிற்று என்கிறார்

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே
மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே – – 64- –

திரு வாய் மொழி என்னாது –மாறன் பசும் தமிழ் -என்றார்-அவருடைய நான்கு திவ்ய பிரபந்தங்களையும் நெஞ்சில் கொண்டு
என் நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவைமொழிந்து -திருவாய் மொழி -10 6-4 – -என்று
நம் ஆழ்வாரே தம் நூல்களை இரும் தமிழ் நூல் –
குறு முனிவன் முத்தமிழும் என் குறளும் நங்கை சிறு முனிவன் வாய் மொழியின் சேய் – என்றது காண்க –

பண்ணார் பாடலினால் திரு மால் இரும் சோலை யான் ஆனந்தம் அதிகமாகி அவ் ஆனந்தத்துக்கு
போக்கு வீடாக -தென்னா தென்னா -என்று ஆலாபனம் செய்து பாடா நிற்பானாயின்
எம்பெருமானார்க்கு இத்தகைய பண்ணார் பாடலினால் ஆனந்தம் விளைய கேட்க வேண்டுமா –

ஆனந்த பாஷ்பத்தை யானையின் மத நீராக உருவகம் செய்கிறார் .
முந்தைய பாசுரத்தில் பிடி போன்றவராக எம்பெருமானாரை வருணனை செய்தார் –
ஸ்ரீ வைஷ்ணவர் என்னும் களிறு விட்டுப் பிரியலாகாது பின் தொடரத் தக்க தன்மை உடமை பற்றி –
இந்தப் பாசுரத்திலே
மதக் களிறாக அவ் வெம்பெருமானாரையே உருவகம் செய்கிறார் .வாதியரை எளிதில் சிதைக்கும் வலுவுடமை பற்றி
வாதியரை நாடித் துகைத்து சிதைக்கும் வலுவுடமை வாய்ந்து இருப்பினும்
இவ் வேழம் வைணவருக்கு அடங்கி வசப்பட்டே உள்ளது என்பது தோன்ற –எங்கள் வேழம் -என்றார் .
எங்கள் என்பது திருவாய் மொழியை அறியக் கற்று வல்லரான வைஷ்ணவர்களை

இராமானுச முனி யாகிற வேழம் -முனிகிற வேழம் முனி வேழம் என்று வினைத் தொகை யாக்கி இராமானுசனாகிற முனி வேழம் –
முனிவர் .. வேழம் என்று இரு பண்புகளும் கொண்ட இராமானுசன் என்றபடி இரு பெயரேட்டுப் பண்புத் தொகை.
இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் -17 – என்றும் இவ் ஆச்ரியரே கீழ்க் கூறி இருக்க –
ஏனைய பொருள்களைப் பற்றி வரும் கனிவும் முனிவும் தள்ளத் தக்கனவே அன்றி
பகவத் அனுபவத்தை பற்றி -குறிப்பாக மாறன் பசும் தமிழால்-வரும் பகவத் அனுபவத்தை பற்றி வரும் கனிவும் –
அப் பசும் தமிழ் இன்பத்துக்கு இடையூறாக நிற்கும் வாதியர் திறத்து முனிவும் -மிகவும் வேண்டற் பாலன வாதலின்
எம்பெருமானார் இடம் கனிவும் முனிவும் காட்டியது மிகவும் பொருந்தும் -என்க –

இராமானுச முனி வேழத்துக்கு மதமூட்டும் மருந்தாயிற்று மாறன் பசும் தமிழ்
திருவாய் மொழி மதமும் வேதக் கொழும் தண்டம் சேர்ந்து விட்டன –
வாதியர்கள் வாழ இனி வழி இல்லை -என்கிறார் .
உபய வேதாந்தங்களையும் தன்னகத்தே கொண்ட எம்பெருமானார் அவைகளைக் கொண்டே வாதியரை
வாழ்வு அறச் செய்கிறார் -என்பது கருத்து –

அருள் என்னும் தண்டால் அடித்து பெரிய திருவந்தாதி – 26-
வேதக் கொழும் தண்டம் என்பதனால் எம்பெருமானார் திருக் கரத்திலே ஏந்தின த்ரி தண்டத்தை-அமுதனார் கருதுகிறார்
மூன்று வேதங்களும் முக்கோல்கள் ஆயின -என்பது அவர் கருத்து –
திருவாய் மொழியை ஆழ்ந்து அனுபவித்து-அதனால் வேதப் பொருளை தெளிந்து –
தெளிந்த அப் பொருளுக்கு முரண்பட்டுக் கூறும் வாதியரை அந்த வேத வாக்யங்களைக் கொண்டு-
வாழ்வு அறச் செய்தார் எம்பெருமானார்

———-

வாதியர் வாழ்வு அற-எம்பெருமானார் உதவிய ஞானத்தாலே விளைந்த
நன்மைகளை கண்டு-களிப்புடன் அவற்றைக் கூறுகிறார் .

வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழற்றது குற்றமெல்லாம் பத்திதா குணத்தினர்க் கந்
நாழற்றது நம்மிராமானுசன் தந்த ஞானத்திலே – – 65-

என்றும் மறையவர் தம் தாழ்வு அற்றது –
என்றும் அற்றது என்று இயைக்க
களை எடுத்தவாறே பயிர் தலை நிமிர்ந்து ஓங்கி வளருவது போலே
துர்வாதம் தொலையவே வைதிகர் தலை நிமிர்ந்து ஓங்கி வளர்ந்தனர் -என்க –

தவம் தாரணி பெற்றது –
தவம் -பாக்கியம்
தாரணி தவம் பெற்றது என்று கூட்டுக
துர்வாதம் தொலைந்து வைதிகர் தலை நிமிர்ந்து –தீர்த்த கரராமின் திரிந்து -இரண்டாம் திருவந்தாதி -16 –என்றபடி
பூமி எங்கும் திரிதலாலே அவர்கள் திருவடி சம்பந்தம் பெறுதலின் பூமி பாக்கியம் பெற்றது என்றபடி .
ஏத்துவார் திரிதலால் தவமுடைத்து இத் தரணி தானே-பெருமாள் திரு மொழி -10- 5-
தத்துவ நூல் கூழ் அற்றது
கூழ் -சந்தேகம்
நூலில் சந்தேகம் தீர்ந்தது -என்றபடி
குற்றமெல்லாம் –அந்நாழ்அற்றது-
இராமானுசன் தந்தஞானத்திலான நலன்கள் எத்திறத்தன என்று வியக்கிறார் .

———-

எம்பெருமானார் தந்த ஞானத்தின் வைபவம் கூறப்பட்டது -கீழ்ப் பாசுரத்திலே .
மோஷத்தை அவர் கொடுத்து அருளும் வைபவத்தை அருளிச் செய்கிறார் இப்பாசுரத்திலே

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த விராமானுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன் தகவென்னும் சரண் கொடுத்தே -66 –

திரு மா மகளோடு கூடிய அருளாளன் -நாணாளும் நின்னினைந்து நைவேற்கு –பெரிய திரு மொழி -3 6-5-
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ
திருவாய் மொழி -6 9-3- – – – என்றபடியும் நைந்து தளர்பவர்களுக்கு வானம் கொடுக்கிறான்
அந்தோ அருளானான மாதவன் நாடொறும் நைய விடுகிறான் தன் பக்தர்களை .
வல் வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசனை
மகா பாபியான என் மனத்தில் உள்ள தோஷத்தை போக்கினவரே என்று அமுதனார் இங்கு கூறியது
எத்தகையோருக்கும் தோஷத்தை நீக்கி -வானத்தைக் கொடுக்கும் வல்லமை எம்பெருமானாருக்கு உண்டு
என்று தோற்றுகைக்காக -தன்னை விடப் பாபம் அதிகமாக செய்தவர் வேறு எவருமே இருக்க மாட்டார்கள்-
எம்பெருமானாரை அடைகிறவர்கள் இன்னார் இனையார் என்று இல்லை .
ஏற்றத் தாழ்வு இன்றி எல்லோருக்கும் அந்த வானத்தை கொடுத்து விடுகிறார்-

எய்தின அனுகூலர்க்கு கொடுப்பதால்-சர்வ முக்தி பிரசங்கத்திற்கு இடம் இல்லை
எம்பெருமானார் ஒருவரே தம்மை எய்தினர்க்கு நைதலில்லாமல் அத்தானம் கொடுக்கிறார் .
இதனால் உத்தரகாசார்யர் எம்பெருமானார் என்பதை உணர்த்தினார் -ஆயிற்று

———–

எம்பெருமானார் -தமது உபதேசத்தாலே நம் இந்திரியங்களைக் கட்டுப் படுத்தி-இவ் ஆத்ம வர்க்கத்தை ரஷித்து
இலர் ஆகில் வேறு எவர் காப்பாற்றுவார் என்று தாமே-நினைந்து ஈடு பட்டுப் பேசுகிறார் .

சரண மடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரண மடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரண மிவை வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார் உயிர்க்கே – 67- –

வைத்த கரணம் -என்று நேர் முகமாகவும்
உமக்கு அன்று -என்று எதிர்மறையாகவும்
கரணங்கள் மாயவனுக்கே உரியவை என்பதை எம்பெருமானார் வலியுறுத்து கிறார் -என்க –
நாடாத மலர் நாடி -நாடொறும் நாரணன்தன் வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வைக்கின்று –திருவாய் மொழி –1 4-9 –
சரணாகதி -ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான சரணா கதி -யைக் கொண்டமையின் –தருமன் முதலியோர் வாழ்ந்தனர்
தம் நலனுக்காக தம் கரணங்களை உபயோகப் படுத்தி -நூற்றுவர் மாய்ந்தனர் -என்று உதாரணம் காட்டி
உபதேசித்து எம்பெருமானார் உயிர்கட்கு அரண் அமைத்தார் -என்க

———-

இந்நிலத்திலே என்னுடைய ஆத்மாவும் மனமும் எம்பெருமானாரைப் பற்றினவர்களுடைய
குணங்களிலே நோக்குடன் சென்று ஈடுபட்டு விட்டது
ஆகவே எனக்குச் சமமானவர் எவருமே-இல்லை என்று களிப்புடன் கூறுகிறார் .

ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –

தக்க ஐவர் தமக்காய்-
அன்று ஈர் ஐம்பதின்மர் தாள் சாயப்புக்க நல் தேர்த் தனிப் பாகா -திரு வாய் மொழி -8 5-8 – –
என்று நம் ஆழ்வார் ஐவர்க்கு கையாளாய் கண்ணன் தேர்ப்பாகன் ஆனதாக அருளிச் செய்து-இருப்பது இங்கே அறியத் தக்கது .
அக்நி தேவனால் அர்ஜுனனுக்குகொடுக்கப் பட்ட தேர் ஆதலின் -தெய்வத் தேர் -என்கிறார்
தெய்வம்-தேவ சம்பந்தம் பெற்றது -வடசொல் –
இனி
தேவனான கண்ணன் திருவடி சம்பந்தம் பெற்ற பீடுடைமை பற்றி -தெய்வத் தேர் -என்றார்-

மறக்க ஒண்ணாதபடி தெரியச் செம்மைப் பொருளை எம்பெருமானார்
உரைத்து இருப்பதனால் மீண்டும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படுவதற்கு வழியே இல்லை-

சீரினில் –ஆவியும் சிந்தையுமே –
சீர் -நற்குணங்கள்
பணிந்து -விடில் முடியும் படியான மிக்க ஈடுபாடு கொண்டது
ஆவி -ஆத்மா
சிந்தை -மனம்
பணிந்தன என்று பன்மையில் கூறாது ஒருமையில் கூறினார் .
ஒன்றை ஓன்று எதிர்பாராது -தனித் தனியே ஈடுபட்டமை தோற்றற்கு-
ஆவியும் பணிந்தது -சிந்தையும் பணிந்தது-என்று தனித் தனியே கூட்டி உரைக்க –
சென்றது என்பதோடு அமையாமல் சென்று பணிந்தது -என்றமையால்
சீரினை விட்டு பிரிய இயலாமை தோற்றுகிறது –

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–49-58–

December 9, 2021

எம்பெருமானார் அவதரித்து அருளின பின்பு உலகிற்கு உண்டான நன்மைகளை கூறி இனியராகிறார்
எம்பெருமானாருக்கு பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ஈடுபாடு கூறப்பட்டது .-

ஆனது செம்மை யற நெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி இறந்தது வெங்கலி பூம் கமலத்
தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்
தானத்தில் மன்னும் இராமானுசன் இத்தலத்து உதித்தே -49 –

பூம் கமலத் தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல்
திருவரங்கத்தில் தாமரை மலர்கள் தேன் சொரியும்–
வயல்கள் தண்ணீரினால் அல்ல—இந்த தாமரை மலர்கள் தேனினால் செழிப்பாகும் .
அது போல், இராமானுசரும் பெரிய பெருமாள் திருவடியை தனக்குத் தாரகமாகக் கொண்டு தரிக்கிறார்.

கழல் சென்னி வைத்து -என்கிறார்
அரசர்க்கு தம் முடி போல் இவருக்கு தென்னரங்கர் திருவடிகள் நினைத்த போது சூடலாம் படி சொந்தமாயின போலும் –
உடையவர் -யதிராஜர் -அடி சூடும் அரசர் ஆனார்
பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் -பெரியாழ்வார் திரு மொழி -5 4-7 – -என்றபடி –
பெரி யாழ்வார் சென்னியில் இறைவன் முயன்று திருவடியைப் பொறித்த-அருமை எம்பெருமானார் திறத்து இல்லை –
தானே எடுத்து வைத்துக் கொண்டது –நீள் கழல் சென்னி பொருமே -திருவாய் மொழி – 1-9 11- -என்றபடி
இவர் சென்னியின் வைத்துக் கொள்ளும்படி போலும்– கழல் நீட்டி யரங்கன் துயில்வது –

உதித்து ஆனது செம்மை அற நெறி –
ஸூரியன் உதித்து அன்றோ வழி செம்மையாய் துலங்குவது –
இராமானுச திவாகரன் உதித்து அற நெறி செம்மை யாயிற்று -என்க-

இத்தலத்து தானதில் மன்னும்-
இந்தளத்தில்-கும்மிட்டியில் -செந்தாமரை போலே இருள் தருமா ஞாலத்தில்
தென்னரங்கன் கழலில் மன்னி இருப்பது-

————

எம்பெருமானாருக்கு பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ஈடுபாடு முன் பாசுரத்தில்-கூறப்பட்டது .
இங்கு தமக்கு உத்தேச்யமான எம்பெருமானார் திருவடிகளின் ஸ்வபாவத்தை அனுசந்தித்து ஈடுபாடுகிறார்

உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்றலர் நெஞ்சம் அஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த வென் புன் கவிப் பாவினம் பூண்டன பாவு தொல் சீர்
எதித்தலை நாதன் இராமானுசன் தன் இணை யடியே – – 50-

உதிப்பன -என்று போக்யதையும்
நடப்பன -என்று ரஷகத்வமும்
பூண்டன -என்று குணம் உடைமையும் தோற்றுகின்றன-

திருமங்கை ஆழ்வாரும் தானே , நின்ற மாமருது இற்றிற்று-என்றும்
வானவர் கை தொழும் இணைத் தமரையடி என்றும் கலியன் கண்ணனின் திருவடியால் இருவர வீழ்ந்தது அருளிச் செய்தார்.
எம்பெருமானாரின் இணையடியோ பலரை அஞ்சும்படி பண்ணியது .

பாவு தொல் சீர் கண்ணா என்பரம் சுடரே -திருவாய் மொழி – 3-2 7- -என்றார் நம் ஆழ்வார் பிரதம பர்வதத்தை –
இவர் சரம பர்வதத்தை -பாவு தொல் சீர் எதித் தலை நாதன் -என்கிறார்.
எம்பெருமானார் சீர் சத்ரு கோஷ்டியிலும் பிரசித்தமாய் இருத்தல் பற்றி -பாவு தொல் சீர் -எனப்பட்டது.
உலகம் அளந்த -தென்னரங்கன் -பொன்னடியிலே ஈடுபட்டார் எம்பெருமானார் .
இவ்வமுதனார் அவ்வெம்பெருமானார் இணை யடிகளில் ஈடுபட்டுப் பேசுகிறார் .
அச்சுதனுடைய இரண்டு திருவடித் தாமரைகள் ஆகிற பொன்னில் -வ்யா மோஹம் உடைய-
எம்பெருமானார் திருவடிகளை ஆழ்வான் ஆஸ்ரயித்தால் போன்று இருக்கிறது இது

————

என்னை அடிமை கொள்வதற்காகவே எம்பெருமானார் அவதாரம் செய்து அருளினார் –என்கிறார்

அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்காய் அன்று பாரதப்போர்
முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்திப்
படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே –51 –

ஐவர்கட்காய் -என்றதனால் -ஐவர்கள் கையாளாய் தன்னை நினைத்துக் கண்ணன் இழி தொழில் செய்தமை தோற்றுகிறது –
நாடுடை மன்னர்க்குத் தூது செல்னம்பிக்கு -என்றதும் காண்க –
ராஜ்யமுடையார் பாண்டவர்களே -நாம் அவர்களுக்கு ஏவல் செய்து நிற்கிறோம் என்று ஆயிற்று
அவன்-நினைத்து இருப்பது -என்பது அவ்விடத்திய- 6-8 3- – – ஈடு
பாண்டவர்கள் தங்களைக் கண்ணன் அடிமைகளாக-நினைத்து இருக்க –
இவன் அவர்களுக்குத் தன்னை யடிமையாகக் காணும் நினைத்து இருப்பது –
நம் ஆழ்வாரும் -குரு நாடுடை ஐவர்கட்காய் ஆடிய மா நெடும் தேர்ப்படை நீர் எழச் செற்ற பிரான் -திருவாய் மொழி – 6-8 3-
ஆயுதம் எடாமைக்கு அனுமதி பண்ணுகையாலே தேர்க் காலாலே சேனையைத் துகள் ஆக்கினான் -என்பது ஆங்கு உள்ள ஈட்டு ஸ்ரீ ஸூக்தி

தேர் விடும் கோனை
தேர் விடும் -என்பதால் சௌலப்யமும்
கோனை -என்பதால் பரத்வமும் புலன் ஆகின்றன
முழுது உணர்ந்த –இராமானுசன்
ஐவர்கட்காய் என்று ஆஸ்ரித பஷ பாதமும்
தேர் விடும் -என்று ஆஸ்ரித பாரதந்திரியமும்
முடிய விடும் என்று விரோதி நிரசன சாமர்த்தியமும்
முழுதும் -என்பதனால்-உணர்த்தப்படுகின்றன –

———–

ஒருவராலும் ஆள முடியாத என்னை ஆண்டதுபோலே -இன்னும் பல
பொருந்தாவற்றையும் பொருந்த விடும் திறமை -எம்பெருமானார் இடம் உண்டு என்கிறார் .

பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப் பார் முழுதும்
போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேன் இடைத்தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் மிராமானுசன் செய்யும் அற்புதமே –52-

புன்மையினேன் இடை –ஆர்த்தான்
இப்படியில் பிறந்து -தன்னை ஆண்ட விதத்தை அருளிச் செய்கிறார் –
நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் புன்மையாக கருதிய தன்னை –
அன்னையாய் அத்தனாய் நம் ஆழ்வார் ஆண்ட தன்மையை மதுர கவிகளும் அருளிச் செய்தார் –
தம்மிடம் புன்மையே மிக்கு இருத்தலின் -அதனையே தமக்கு நிரூபகமாக –புன்மையினேன் -என்கிறார்.

புன்மையினேன் இடைப் புகுந்து -என்றமையால்-வாத்சல்யம் -தோற்றுதலின் -அன்னையாய் ஆண்டமை கூறப்பட்டதாயிற்று -.
இரு வினை தீர்த்தமையின் அத்தனாய் ஆண்டமை-கூறப்பட்டதாயிற்று
தான் புகுந்து -என்றமையின் –நிர்ஹேதுகத்வம் -காண்பிக்க பட்டதாயிற்று –
சாதன அனுஷ்டானம் இன்றி புகுந்தமை கூறப் பட்டதாயிற்று –
புன்மையினேன் இடைத்தான் புகுந்து என்று -புன்மை இல்லாது புகுந்தமைக்கு ஹேது வேறு இல்லை-
என்பது தோன்ற அருளிச் செய்ததனால் -புன்மையாகக் கருதுவராதலின் என்னை யாண்டிடும் தன்மையான் –
என்ற பொருள் காண்பிக்க பட்டதாயிற்று –
புகுந்து என்ற சொல் நயத்தாலே -எம்பெருமானாரையும் வர ஒட்டாது-தடுக்க வல்ல புன்மையின் திண்மை தோற்றுகிறது –

ஈஸ்வரன் சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து-மாயப் பற்று அறுத்து –தீர்ந்து
தன் பால் மனம் வைக்கத் திருத்தி-தன் அடியார்க்காக வீடு திருத்துவான் –
எம்பெருமானாரோ -இவ்வமுதனாரை புன்மையினர் ஆதலின் அரங்கன் செய்ய தாள் இணையோடு ஆர்த்து வைத்தார் .

————-

சகல சேதன அசேதனங்களும் சர்வேஸ்வரனுக்கே சேஷம் என்கிற விலஷணமான
அர்த்தத்தை ஸ்தாபித்து அருளினார் -என்கிறார் –

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை இந் நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –

என்னை ஆள வந்த கற்பகம்-கற்பகத்தின் நின்றும் வேறுபாடு -தோற்ற ஆட் கொள்கையும் –
இரப்பாளர் இருக்குமிடம் தேடி வருகையும் -எம்பெருமானார் ஆகிய கற்பகத்துக்கு கூறப்பட்டன –
வந்த கற்பகம் –பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீ ரங்கத்திற்கு எம்பெருமானார் வந்தது
தம்மை ஆளுவதற்காகவே-என்று கருதுகிறார் -அமுதனார் –
என்னை-இரக்கவும் அறியாத என்னை -என்னை யாக்கி எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்னும்
நம் ஆழ்வார் திரு வாய் மொழியை-இங்கு நினைவு கூர்க-
வந்த கற்பகம் –சக்கரவர்த்தி திருமகன் -சமேத்யப்ரதி நன்த்யச -இரப்பாளர் இடம் வந்தும் கொண்டாடியும் -என்றபடி –
இரப்பாளர் இடம் வந்து கொடுப்பது போலே எம்பெருமானாரும் இரப்பாளனாகிய என்னிடம் வந்து-தன்னையே வழங்கினார்

பற் பல்லுயிர் பரனது என்கையாலே
ஜீவான்மாவிற்க்கும் பரமான்விற்கும் உள்ள பேதமும் –
ஜீவான்மாக்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் உள்ள பேதமும்
காட்டப்படுகின்றன –
பல்லுலகு என்கையாலே –
அவ் வான்மாக்கள் இருக்கும் இடமாகிய பிரக்ருதியின் பரிணாமமான அசித்து என்னும் பொருள் கூறப்பட்டது –
பரன் என்கையாலே ஈஸ்வர தத்வம் காட்டப்பட்டது –
ஆக
சித்து -அசித்து -ஈஸ்வரன் -என்கிற தத்வ த்ரயமும்
பரனது -என்னும் இடத்து அது என்றதால் நம்முடைய மதத்திற்கே உரிய
சரீர ஆத்ம பாவ ரூபமான சம்பந்தமும் கட்டப்பட்டன ஆயின
பரனது எனும் நற் பொருள்-பிரதான பிரதி தந்த்ராரத்தம்

—————

நற்பொருள் நாட்டிய தன்மை கண்டு -புற மதங்களும் -வேதங்களும் -திருவாய்மொழியும்-
அடைந்த நிலைகளை -இதில் அருளிச் செய்கிறார்

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54- –

எம்பெருமானார் இயல்வு கண்டதும்-வேதம் களிப்புற்றது .வண் தமிழ் மறை வாழ்வுற்றது

————–

நாரணனைக் காட்டிய வேதம் களிப்புரும்படி யாகச் செய்த எம்பெருமானார் உடைய வள்ளன்மையில்-ஈடுபட்டு –
அவரை ஆஸ்ரயித்து இருக்கும் குடி எங்களை ஆள்வதற்கு உரிய குடி –என்கிறார்

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத் தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே – -55 –

கண்ண புரத்தம்மானைக் கண்டவர் தன மனம் வழங்குவர்
தென்னரங்கன் கண்டவர் சிந்தை கவருவார்-

தங்கள் சிந்தை கவரும் தென்னரங்கன் உடைய தொண்டர்கள் அவ்வரங்கனை விட்டு எம்பெருமானாரைக் குலாவுகின்றனர் –
அரங்கனை விட அவர்கள் சிந்தையை எம்பெருமானார் கவர்ந்து விடுகிறார் -அவர்களை அவர் அப்படி ஆனந்தப்படுத்துகிறார் .
அவர்கள் தொண்டு பட்ட அரங்கனே வேதாந்த விழுப் பொருள் என்று ஸ்ரீ பாஷ்யத்தாலே நிரூபித்து வேதம் களிப்புரும்படி செய்யவே
வைதிகர்களான அத் தொண்டர்கள் இவ் எம்பெருமானாரைக் குலாவத் தொடங்கி விடுகின்றனர் –

பார்த்தருளும் என்றமையால்-எம்பெருமானாருக்கு அதில் அருமை இன்மை தோற்றுகிறது .
அறு சமயங்கள் பதைப் பட பார்த்தார் முன்பு –வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தார் இங்கு –
இங்கனம் செய்தது வேறு பயன் கருதி யன்று –
நீர் நிலம் என்கிற வேறு பாடு இன்றி மேகம் மழை பொழிவது போலே எல்லாருக்கும்
அநந்ய ப்ரயோஜனராய் உபகரித்தமை தோற்ற –கொண்டல்– என்றார் –

அவர் சம்பந்தம் வாய்ந்த அனைவருமே நம்மை யாள்பவர் என்னும் எண்ணம் கொண்ட
எங்களுக்கு ஆட் கொள்வதற்கு உரிய குலமாகும் –

———–

எம்பெருமானாரை பற்றின பின்பு -மற்று ஒரு விஷயத்தை -என் மனம் பற்றி நினையாது –
என் வாக்கு உரையாது -என்கிறார் –

கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -56-

புனிதன் -தூய்மை அற்றவர்களையும் -தன் சம்பந்தத்தால் தூயர் ஆக்க வல்ல தூய்மை படைத்தவர் -என்க .
புவனம் எங்கும் ஆகிய கீர்த்தி –
இப் பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு -என்று கீழ்க் கூறியதை இங்கு நினைக்க

வகுத்த எம்பெருமானார் திறத்தே விளைந்த ஈடுபாட்டுடன் திகழ்வது கண்டு -பேருவகை கொண்டு
உறவு பாராட்டி –என் வாக்கு -என் மனம் -என்று அவற்றை தனித் தனியே கொண்டாடுகிறார் –
புறம்புள்ள விஷயத்தில் தமக்கு ஏற்பட்ட வெறுப்பு தோற்ற -மற்று ஒன்றை -என்கிறார்

தென்னரங்கன் தொண்டர்கள் அரங்கனை விட்டு எம்பெருமானாரைக் குலாவுவது போலே
என் வாக்கு எம்பெருமானாரை விட்டு மற்று ஒன்றை -தென்னரங்கனை -உரையாது
என் மனம் மற்று ஒன்றை நினையாது -என்னலுமாம்

————-

இன் நானிலத்தில் எம்பெருமானாரை நான் பெற்ற பின்பு நன்மை தீமைகளைப் பகுத்து அறியாது
கண்டதொன்றை விரும்பும் பேதைமை ஒன்றும் அறியேன் -என்கிறார் –

மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கா
ளுற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமானுசனை யின் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதமையே -57-

திருவரங்கத்தில் அரங்கனுக்கு ஆளுறுகை தவிர்ந்து பரம பதத்தில் பர வாசுதேவனுக்கு ஆளுறுகை நேரினும் –
அதனையும் மதிக்கிலர் என்னும் கருத்தில் –மற்றொரு பேறு மதியாது –
வான் இளவரசு வைகுந்தக் குட்டன் தானே அவன் –
அரங்கனோ புவனியும் விண்ணுலகும் ஆதும் சோராமல் ஆள்கின்றவன்-

சரணா கதியை எங்கும் -என்றும் -நிலை நிறுத்தின
பெருதவிக்குத் தோற்று நல் தவத்தவர்கள் எம்பெருமானாரைப் போற்றுகின்றனர் –

பேதமையை பற்றி எதுவுமே அறிந்து கொள்ள முடியாத படி அடியோடு அது ஒழிந்தமையின்
இனி அது தலை காட்டவே முடியாது என்பது கருத்து –
தன் இயல்பினை விஷய வைலஷண்யம் மாற்றியது போலே இருள் தரும் மா ஞாலத்தின்
இயல்பையும் மாற்றி விட்டது-

————

கீழே தம் பேதைமை தீர்ந்தமை கூறினார் –
இங்கே வேதப் பொருள் கூறுவதில் வரும் பேதைமை தீர்ந்தமையைக் கூறுகிறார்
புறச் சமயங்களை களைந்த ஸ்வபாவம் கீழ்ப் பல கால் ஈடுபாட்டுடன் கூறப்பட்டது
குத்ருஷ்டி மதம் களைந்தபடி இங்கே ஈடுபாட்டுடன் அனுசந்திக்கப் படுகிறது

பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா வுயிரும் அக்தென்று உயிர்கள் மெய் விட்டு
ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58- –

வேதத்தின் பொருளை அவர்கள் சொல்ல வில்லை –
தாங்கள் சொல்வதை அவர்கள் வேதப் பொருளாக ஆக்குகின்றனர் –

ஸ்ரீ பாஷ்யத்தில் –
அந்தி கதபத வாக்ய ஸ்வரூப ததர்த்த யாதாத்ம்ய பிரத்யஷாதி சகல பிரமாண
ததிகர்த்தவ்யதாரூப சமீசீ நந்யாய மார்க்காணாம்-என்று
சொல்-வாக்யங்களின் ஸ்வரூபம் பொருளின் உண்மைக் கருத்து ப்ரத்யஷம் முதலிய பிரமாணங்கள் உணர்த்துவது –
அதற்கு உறுப்பான நேரிய யுக்தி வழிகள் இவற்றை அறியாதவர்கள் -என்று
மகாசித்தாந்தத் தொடக்கத்தில் அருளி உள்ளதை அடி ஒற்றி –பேதையர்-என்கிறார்

நிர் விசேஷ பிரம்மமே சத்யம் -மற்றவை அனைத்தும் பொய் -என்னும்-அத்வைத மதமே
வேதம் ஓதும் வைதிக மதம் என்கிற நிரூபணம் தவறு என்று தெளிவுறுத்தப் பட்டது
ஜீவான்மக்களுள் பேதமும் –பிரம்மத்திற்கும் ஜீவான்மக்களுக்கும் பேதமும்-உணர்த்தப் படுகின்றன
அவர்கள் செய்த மோஷ நிர்ணயத்தையும் மிக மிக எளிதில் வென்று விடுகிறார் ஸ்ரீ பாஷ்ய காரர்

சரீரம் ஆத்ம என்னும் தொடர்பு பற்றி-அறியும் ஜீவனும் -அறியப்படும் பிரம்மமும் ஒன்றாக
கூறப்படுகின்றனவே அன்றி -ஸ்வரூப ஐக்கியம் அங்கே கூறப் படவில்லை-என்பது உணரத் தக்கது .

உயிர்கள் மெய் விட்டு ஆதிப்பிரனோடு ஒன்று-உடலை ; மெய் என்கிறார் அமுதனார்.
உலகம் மாயை என்று இதை மெய் என்று சொல்லிட்டு இந்த உடலின் மாயையை உணர்த்துகிறார்
‘அஸ்மாத் சரீராத் சமுத்தாய ‘ இந்த் உடலினின்று விடுபட்டதாக கொள்ளாமல் ,
இந்த உடல் மாயை என்று உணருவதே இவர்கள் புருஷார்த்தம் சரி,
உடல் மாயை என்ற உன்னத நிலையை அடைந்த பின் இந்த ஆத்மா தன்னை பிரமனோடு ஒன்றாக உணர்கிறது
ப்ர்ஹமவித் பிரஹ்மைவ பவதி -ப்ர்ஹமத்தை உணர்பவன் ப்ர்ஹமம் ஆகிறான் .

அல்லல் எல்லாம் இராமானுசன் வெல்வதற்கு ஹேது மெய் மதிக் கடலாய் இருத்தலாம் –
அவ்விருளை துரந்திலரேல்-நாராயணனே உயிரை உடையவன் -என்று உற்று உணர்ந்தவர் அறிவார் இல்லை
என்று அடுத்த பாசுரத்தில் பேசுவதால் -உலகம் உய்யும் நோக்குடனே வாதில் வென்றமை தெளிவு .
மெய் மதிக் கடல் இப்படி வாதில் வென்று அருளுவதே -என்று அமுதனார் ஈடுபடுகிறார்-

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–39-48–

December 9, 2021

மறு மாற்றம் காணாமையாலே-அத்தை விட்டு -அவர் செய்த உபகாரங்களை -அனுசந்தித்து -ப்ரீதியாலே –
தம் திரு உள்ளத்தைப் பார்த்து –எம்பெருமானார் செய்யும் ரஷைகள் வேறு சிலர் செய்யும் அளவோ -என்கிறார்-39-

தமக்கு செய்த உபகாரங்களை அருளிச் செய்தார் கீழ் –உலகிற்க்குச் செய்த உபகாரத்தை அனுசந்தித்து ஈடுபடுகிறார் –40-

மண்ணகத்தில்-கோயில் கொண்ட-ஆதாரம் பெருக வைத்த- அர்ச்சாவதார எம்பெருமானுக்கே ஆமது காமம் என்று உபதேசித்து அருளியதையும் -41-

திருமகள் கேள்வன்-பல அவதாரங்கள் புரிந்து அவனே அர்ச்சையாக கண்ணிற்கு இலக்காகி நிற்பினும் கண் எடுத்துப் பார்க்க மாட்டாத
உலகத்தவர் அனைவரும் –எம்பெருமானார் காலத்தில் மெய்யறிவு பிறந்து அவ்விறைவனை சார்ந்தவர்கள் ஆனார்கள் என்கிறார் – 42-

விஷய ப்ரவணனாய் நசித்துப் போகிற என்னைத் தமது பரம கிருபையால் எம்பெருமானார் வந்து எடுத்து அருளினார் என்று
தமது பண்டைய இழி நிலையையும் இன்று எய்திய பேற்றின் சீர்மையையும் பார்த்துப் பெருமைப்பட்டுப் பேசுகிறார் –
இதனாலே மாதவனே கண்ணுற நிற்கிலும் காண கில்லார் நாரணற்கு ஆனதற்கு தாமே சாஷி என்றார் ஆயிற்று –43-

சம்சார மக்னரான உங்களுக்கு-கரை கண்ட நான் -உபதேசிக்கிறேன் – ராமானுஜ என்கிற சதுரஷரி மந்த்ரத்தைச் சொன்னாலே
உங்களுக்கு சகல சுபங்களும் தன்னடையே-வந்து சேரும் என்கிறார் –44-

இப்படி இவர் உபதேசித்தும் படியில் உள்ளோரில் ஒருவரும் இவர் வார்த்தையின்படி –
இராமானுச நாமத்தை சொல்ல முற்படாமையாலே -அவர்கள் தன்மையை நினைந்து வருந்திப் பேசுகிறார் –45-

தம் திருவடிகளையே உபாயமும் உபேயமுமாக நம்பும்படி செய்த எம்பெருமானார் உடைய உபகாரத்தை அனுசந்தித்து
அவரை நோக்கித் தேவரீர் செய்து அருளின உபகாரம் பேசும் திறத்தது அன்று -என்கிறார் 46-

உலகத்தாருக்கு தத்வ உபதேசம் செய்து பகவத் சமாஸ்ரயண-ருசியை ஜநிப்பிக்குமவர்
தம்மளவிலே விசேஷமாக விஷயீகரித்ததை அனுசந்தித்து-இப்படிப் பட்ட எனக்கு நிகர் யாரும் இல்லை -என்கிறார் –47-

நீசனாம் தன்மைக்குத் தேவரீர் அருள் அன்றி வேறு புகல் இல்லை –
அவ்வருளுக்கும் இந்நீசத் தண்மை யன்றி வேறு புகல் இல்லை-
ஆக இனி நாம் வீணாக என் அகலப் போகிறோம் -என்கிறார் –48-

————————

பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்றுளார் தரமோ
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன்னீறிலபெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -39 –

தென்னரங்கர் தமக்காமோ தேவியர் கட்காமோ
சேனையர் கோன் முதலான ஸூரியர் கட்காமோ
மன்னிய சீர் மாறன் அருள் மாறி தமக்காமோ
மற்றுள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்
எதிராசா உனக்கன்றி யான் ஒருவர்க்கு ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்னையும் உண்டாக்கி
ஒளி வீசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே -ஆர்த்தி பிரபந்தம் – 26-

தன் ஈறில் பெரும் புகழே தெருளும் தெருள் தந்து
புகழ்-புகழப் படும் குணம் -அது ஈறில்லாதது-அழிவின்றி நித்தியமாய் உள்ளது -எண்ணற்றதுமாம்
தன் புகழ்-
எம்பெருமானாருக்கு அசாதாரணம் ஆனது-இறைவனது குணம் அருள் போலே மறு பாடு அற்றது
பெரும் புகழ்-
புகழுக்கு பெருமை யாவது அனுபவிக்கும் குணத்தை விட்டு வேறு ஒரு குணத்தையோ
அன்றி வேறு ஒருவனாம் இறைவன் இடத்தில் உள்ள குணத்தையோ அனுபவிக்கப் போக ஒட்டாமை –

புகழே -ஏ பிரிநிலைக் கண் வந்தது
துயர் மாற்றிய புகழ் அன்றி வேறு ஒரு புகழ் தெரியாத வண்ணம் அப் புகழையே என் அறிவுக்கு புலன் ஆக்கினர் என்றதாயிற்று –
நம் ஆழ்வார் சர்வேஸ்வரன் என்னுள்ளே புகுந்து பெறாப் பேறு பெற்றானாய்-கால் வாங்க மாட்டாதே ரத்ன பர்வதம் போலே நின்ற
இம் மகா குணத்தை யல்லது மற்றுள்ள புகழை ஒரு புகழாக மதியேன் என்னும் கருத்துடன் –
என்னுள் திகழும் மணிக்குன்ற மொன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே -திருவாய் மொழி -8 7-5

————–

சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – –

சேம நல் வீடு
சேமமான வீடு -என்கிறார் .-யோக நல் வீடு என்றால் கிடைக்காதது பெற்றதாகும் –சேம நல் வீடு என்பதால் ஆத்மாவுக்கு எடுத்தது இது தான் –
அக்கரையில் அழுந்தி இக்கரை என்பர்களே-ஆஜகாம -ஸ்ரீ விபீஷணன் தன்னிடம் பெருமாள் இடம் வந்தான் என்றாரே வால்மீகியும் –
கைவல்யத்தின் நின்றும் வேறுபாடு தோற்ற நல் வீடு என்றார்-

மண் மிசையே-கண்ணனுக்கே யாமது காமம்
அவன் இன்புறக் காண்பது அன்றி தனக்கு வேறு புருஷார்த்தம் இல்லை என்று கருதி செலுத்தும் காமமே புருஷார்த்தம் என்றது ஆயிற்று –
இங்கு காமம் என்பது கண்ணைக் கலந்து களிப்புறுத்தும் நிலைமையேயாம்
அதாவது சம்ச்லேஷ சுகமே -கூடலின்பமே-என்றபடி –
மண்ணகத்தில்-கோயில் கொண்ட அர்ச்சாவதார எம்பெருமானுக்கே ஆமது காமம்
ஆதாரம் பெருக வைத்த -அர்ச்சை வடிவனான கண்ணனதே

1-வேண்டுதலை எதிர்பாராது தானே வலியக் கொடுக்கையும் –
2-சீரியதைக் கொடுக்கையும் –
3-வரையாதே கொடுக்கையும் –
4-தன் பேறாக உவந்து கொடுக்கையும் -வாமனனுக்கும் எம்பெருமானாருக்கும் ஒத்த ஸ்வபாவன்களாம் –

குறிப்பாக மாவலி யிடமிருந்து-விரகினால்-சாமர்த்தியத்தால்- வாமனன் தன் விபூதியை -உலகினை-வாங்கியது போலே –
எம்பெருமானாரும் என்னிடம் இருந்து – விரகினால் தன் விபூதிமான் ஆகிய அரங்கனை வாங்கிக் கொண்ட ஒப்புமை இங்குக் கருதத் தக்கது –
வாங்கின விபூதியை உரியது இந்திரற்கு இது என்று -இந்திரனிடம் ஒப்படைத்தான் -வாமனன் .-
வாங்கின விபூதிமானை உரியன் ஸ்ரீ வைஷ்ணவர்க்கு என்று ஸ்ரீ வைஷ்ணவர் இடம் ஒப்படைத்தார்
எம்பெருமானார் -ஒப்டைத்ததும் அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களை நோக்கி -இக் கண்ணனுக்கே ஆமது காமம்
அனைவரும் –நம்பெருமாள்-நம் பெருமாள்-என்று காமுரும்படி உபதேசித்து அருளினார் எம்பெருமானார்
வாமனன் சீலன் -கூரத் தாழ்வான் என்றபடி –
இவ்வின்ப வெள்ளத்தை விட்டு-நல் வீடு பெறினும் தெள்ளியோர் குறிப்பு கொள்வது எண்ணுமோ-என்கிறார் பராங்குசர்

———–

மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-

மண் மிசை நெடும் காலம் கண்ணுற நிற்றலின் மாதவனது எல்லை இல்லாத சௌசீல்ய குணம்-புலன் ஆகின்றது –
இங்கு ஆழ்வான் அருளிச் செய்த –
சீல க ஏஷ தவ ஹந்த தயைகசிந்தோ ஷூத்ரே ப்ருதக் ஜநபதே ஜகதண்ட மத்யே
ஷோதீய சோபிஹி ஜனச்ய க்ருதே க்ருதீத்வ மத்ராவதீர்யா நனு லோசன கொசரோ பூ –அதி மானுஷ ஸ்தவம் -10 – என்று
அருளே நிறைந்த கடலே -நீ செய்ய வேண்டியவை அனைத்தும் செய்து முடித்து இருந்தும் –
உலக அண்டத்திற்கு இடையே சிறிதான பாமர மக்கள் குடி இருக்கும் இடத்தில்
மிகவும் அற்பர்களாகிய மக்களுக்காக இங்கே அவதரித்து கண்களுக்கு புலன் ஆயினை அன்றோ-
உனது சௌசீல்யம் குணத்தை என் என்பது -என்ற ஸ்லோகம் அனுசந்திக்க தக்கது-

இறைவன் பிராட்டி யோடே அவதரிக்கிறான் -என்பது தோன்ற –மாதவன் பிறந்து -என்றார்.
ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி
அன்யேஷ சாவதாறேஷூ விஷ்ணு ரெஸா நபாயிநீ -விஷ்ணு புராண ஸ்லோகம்-என்று
இறைவன் ராமனான போது -சீதை யானாள்-கிருஷ்ணனாய் பிறந்த போது ருக்மிணி யானாள் –
மற்றைய அவதாரங்களிலும் விஷ்ணுவை விடு கிலள்-

மண் மிசை பிறந்து -என்றமையால் வாத்சல்யம் தோன்றுகிறது-வாத்சல்யமாவது குற்றத்தையும் நற்றமாகக் கொள்ளுதல்
எங்கள் மாதவன்-என்றமையால் ஸ்வாமித்வம் தோற்றுகிறது-ஸ்வாமித்வமாவது உடைமைக்கு உரியனாய் இருத்தல்
நிற்கிலும் -என்பதால் சௌசீல்யம் தோற்றுகிறது –0சௌசீல்யம் ஆவது மிகத் தாழ்வு உடையரோடு வேறுபாடு இன்றி பழகுதல்
கண்ணுற -என்றமையால் சௌலப்யம் தோற்றுகிறது-சௌலப்யம் ஆவது கண்ணுக்கு புலனாய் தோற்றுதல்-

மாதவன் அவதாரத்தை –பிறந்து -என்றார்-சம்சாரிகள் போலப் பயன் பெறாமையின் –
அண்ணல் அவதாரத்தை தோன்றி என்றார் பயன் பெற்றமை பற்றி –
நாரணற்கு ஆயினர் –
பொருள் அனைத்தையும் உட் புக்கு நியமிப்பது பற்றி-நாராயணன் -என்று திரு நாமம் அமைந்தது –
நாராயணன் என்பது நாரணன் என்று மருவி நின்றது .
உட் புக்கு நியமிப்பது ஆத்மா ..அங்கன் நியமிக்கப் படுவது உடல் –
உடல் ஆத்மாவுக்கு போல -பரமாத்மாவுக்குப் பொருள் அனைத்தும் உபயோகப்பட்டு சிறப்பு உறுதல் இயல்பு.
வ்யாபகத்வத்தை உணர்த்தும் சொல். வியாபக மந்திரங்களிலே ப்ரதானம் இந்த நாராயன மந்திரம்

பிராட்டியும் பெருமாளும் சேர்ந்து இருவரும் பல கால் பிறந்தும் பயனில்லை
எம்பெருமானார் தனியே ஒரு கால் தோன்றிய அப்பொழுதே பயன் மிக்கது .
மாதவனால் கையால் ஆகாது விடப் பட்டவர்களை எல்லாம் எம்பெருமானார் கை கொடுத்து-எடுத்துக் காத்து விட்டார் -என்றது ஆயிற்று .

————

ஆயிழையார் கொங்கை தங்கு மக்காத லளற்ற ழுந்தி
மாயும் என்னாவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா வுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே -42 – –

மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று
மாயும் ஆவி என்கையாலே -சாகும் தருவாயிலே வந்து எடுத்தமை தோற்றுகிறது —
என் ஆவியை இராமானுசன் வந்து எடுத்தான் என்று கூறுதலின் தனது செயல் அறுதியைக் காட்டுகிறார் –
சற்று முன்பு வந்து எடுப்பினும் இவர் தடுப்பார் போலும் –
காமாதி தோஷ மாத்ம பதாச் ரிதா நாம் -யதிராஜ விம்சதி

கூபத்தில் வீழும் குழலி யுடன் குதித்தல்
வாபத்தை நீக்கும் அந்த அன்னை போல் -பாபத்தால்
யான் பிறப்பே னேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை உய்ப்பதா -என்று-மணவாள மா முனியும் ஆர்த்தி பிரபந்தத்திலே- அருளி இருப்பது அனுசந்திதற்கு உரியது
இதனாலே மாதவனே கண்ணுற நிற்கிலும் காண கில்லார் நாரணற்கு ஆனதற்கு தாமே சாஷி என்றார் ஆயிற்று –

எல்லா உயிர் கட்கும் நாதன் மா மலராள் நாயகன் – -நாதனாய்-சேஷியாய்-இருக்கும் தன்மை ஸ்ரீ யபதிக்கே
ஸ்ரீயபதியாய் -சேஷியாய் இருப்பானை நம்மால் காண இயலுமோ -என்னும் ஐயம் அறுப்பது –அரங்கனை-
என்று மேலும் செய்யும் உபதேசம்

தீதில் இராமானுசன் தொல் அருள் சுரந்தே –
தீது உபதேசத்துக்கு அனுவர்த்தனத்தை எதிர்பார்த்தல்-
எனது அனுவர்த்தனத்தை எதிர் பாராமல் தாம் பரம கிருபா மாத்ர பிரசன்னாசார்யராய் -உபதேசித்து-அருளினார் -என்றபடி –
இனி க்யாதி லாப பூஜைகளை எதிர்பாராமை யால் தீதிலர் என்னவுமாம் .
தொல் அருள் –
இயல்பான அருள்-நிர்ஹேதுதுக கிருபை என்றபடி-
தொல் அருள் சுரந்து வந்து இன்று எடுத்தான் -என்று கூட்டி முடிக்க –

————-

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே – 43-

உணர்வு -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்றபடி
பரம் பொருளை அதன் எல்லை நிலமான அடியார் அளவும் உள்ளவாறு அறிதல் –

சொலப் புகில் வாயமுதம் பரக்கும்
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாகிய திரு மால் திரு நாமம் –பெரிய திரு மொழி – 6-10 6- –
என்று நாராயணா நாமம் தனக்கு அமுதமுமாய் இருப்பதாகத் திரு மங்கை ஆழ்வார் அருளிச் செய்தார் –
நாராயணா நாமம் சொல்ல சொல்ல அமுதமாக இருக்கிறது .
முக்தியை மாத்ரம் அன்றி சம்சாரத்தையும் பெருக்குவதாயும் உள்ளது

தென் குருகூர் நம்பி என்னக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -என்று நம் ஆழ்வார் திரு நாமம்
சொன்னால் அமுது தன் நாவில் ஊருவதாக மதுர கவி ஆழ்வார் அருளிச் செய்தார் .
மதுர கவிகளுக்கு அமுதூரும்படி அமைந்த சடகோப நாமமோ -அவர் நாவுக்கே -சொன்ன பிறகே –
அமுதூருவதாய் அமைந்தது
நம் ஆழ்வார் திரு நாமம் ஒரு கால் சொன்னால் போதும் நாவிலே அமுதம் ஊறிக் கொண்டே இருக்கிறது .

ராமானுச நாமமோ சொல்லத் தொடங்கின உடனேயே அமுதனாருக்கு வாயிலே அமுதம் பரக்கிறது –
உய்வித்தலானும் இனிமையானும் திரு நாமம் அமுதமாக சொல்லப்படுகிறது-
ராமானுஜ நாமமோ சம்சாரத்துக்கு துணை புரியாது –முக்தியே தர வல்லதாய் –
படியில் உள்ளோர் அனைவருக்கும் சொல்லப் புக்கவாறே அமுதம்
பரக்கும்படி செய்ய வல்லதாய் வீறு பெற்று விளங்குகிறது

நாராயண நாமம் ஆயின் வினைகள் மீண்டும் தலை காட்டவும் கூடும் –
மாடே வரப்பெறுவராம் என்றே வல் வினையார்
காடானு மாதானும் கைக்கொள்ளார் -ஊடே போய்ப்
பேரோதும் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து -பெரிய திருவந்தாதி – 59– – என்று நம் ஆழ்வார் வல்வினையார் பேர்ந்து போகாது
பக்கத்தில் இருப்பதாக அருளிச் செய்வது காண்க

இராமானுச நாமம் சொல்லப் புக்கவாறே அஞ்சி பற்றற ஓடுகின்றன
இரு வினைகள் பற்று அற-வாசனையும் இல்லாது முழுதும் ஒழிந்து விட்ட படியால் இனி மீளாவே

மூன்று திரு நாமங்களும் சதுரஷரி –நான்கு எழுத்துக்கள்-கொண்டவையே –
நாராயண -சடகோப ராமானுஜ -என்பவை அத்திரு நாமங்கள்
இங்கனம் வீறு பெற்று விளங்குவது பற்றியே
ஆழ்வான் -ந சேத் ராமானுஜ அத்யஷர சதுரா சதுரஷரீ காம வஸ்த்தாம் ப்ரபத்யன்னே ஜந்தவோ ஹந்த மாத்ருசா
என்று சாதுர்யம் வாய்ந்த இந்த ராமானுஜ சதுரஷரீ இல்லை எனின் –
என் போன்ற பிராணிகள் என்ன நிலையை அடைவர் -என்றார்.

படியில் உள்ளீர் –
திரு நாமத்தைச் சொல்ல எல்லாரும் அதிகாரிகள் என்பது இவ்விளியினால் விளங்குகிறது –
இருள் தரும் மா ஞாலத்தில் -உள்ளவர்களுக்கு தெள்ளியோர் கைக் கொள்ளும் விஷயத்தை
உபதேசிக்கிறேன் -என்றபடி –

———-

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர்
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே – -44 –

தாய் மொழி யாதலானும் ஆழ்வார்கள் ஈரத் தமிழ் ஆதலானும் -நான்கு ஸ்ருதிகளுக்கு முன்னர் மூன்று தமிழ்கள் கூறப்பட்டன –
செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி -என்று வட சொல்லுக்குமுத்திச் செந்திறத்த தமிழைத்
திரு மங்கை ஆழ்வார் அமைத்து அருளி இருப்பது இங்கு அறியற்பாலது –
தம் பாழி யாகையாலே தமிழை முதலில் கூறினார் என்பது அவ்விடத்திய வியாக்யானம்-

இயல் தமிழ் -இயல்பாய் அமைந்த தமிழ்
இசைத் தமிழ் -குறிஞ்சி காந்தாரம் முதலிய பண் அமைந்த தமிழ் .
இயலும் இசையும் விரவிய தமிழ் -நாடகத் தமிழ் –
இசைத் தமிழ் -பண்ணார் பாடல் எனப்பட்ட திருவாய் மொழி -பெரிய திருமொழி முதலியன
இயல் தமிழ் -பொய்கையார் அந்தாதி முதலியன
நாடகத் தமிழ் -உரையாடல் வடிவமாய் அமைந்த திருப்பாவை முதலியன –

சொல்லார் ஒரு தமிழ் என்று கூட்டித் -திருவாய் மொழியும்
ஒரு மூன்று -என்று மற்றை மூவாயிரமும் சொல்லப்படுகின்றன –

இனி நம் ஆழ்வார் அருளிச் செய்த திரு விருத்தம் திரு வாசிரியம் பெரிய திருவந்தாதி என்னும்
திவ்ய பிரபந்தங்கள் சொல்லப் படுகின்றன என்னலுமாம்-என்று பிள்ளை லோகம் ஜீயர் உரைப்பர் –

மேலே ஸ்ருதிகள் நான்கும் என்று வட மொழி வேதம் நான்கும் கூறப் படுவதற்கு ஏற்ப
தென் மொழி வேதம் நான்கும் கூறப் படுவது பொருந்தி உள்ளது என்பது அவர் கருத்து போலும் .

சொல்லார் தமிழ் -என்பது –சொல் சீர்த் தொடை யாயிரம் -திரு வாய் மொழி – 1-2 11- –
சடகோப வாங்மயம் -என்னும் திருவாய் மொழியை நினைவுறுத்துகிறது .
இரும் தமிழ் நூலிவை மொழிந்து -திருவாய் மொழி -10 -6 4- – என்றபடி
இரும் தமிழ் நூல் ஆதலின் -திருவாய் மொழி -தமிழ் -என்றே வழங்கப் பட்டது .

எது பேறு என்று காமிப்பரே
நம்பித் திரு நாமம் கற்றலாம் புருஷார்த்தத்தை விட்டு –புருஷார்த்தம் எது என்று
தேடி அலையா நிற்கிறார்களே -இவர்கள் அறிவீனம் இருந்த படி என்

—————

பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே – 45- –

தேறும் அவர்க்கும் எனக்கும் –எனவே-தேறாத எனக்கும் என்பது பெற்றோம்
உனைத் தந்த செம்மை சொல்லால் கூறும் பரம் அன்று
தேறினவர்க்கும்-தேறாதவர்க்கும் ஒருபடிப் பட -தன்னையே கொடுக்கும் நேர்மை-செம்மை –
தன்னையே சேர்ந்தது ஒன்றைக் கொடுத்து விடுகை அன்றிக்கே
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என்றபடி தேவரீர் தம்மையே கொடுத்து அருளினீர் – –
எம்பெருமான் போலே ஆத்ம சமர்ப்பணத்தை எதிர்பாராது தேவரீர் தம்மையே அடியோங்களுக்கு ஆக்கி யருளுவதே-
உபகாரம் செய்த திருவடிக்கு பெருமாள் தன்னையே கொடுத்து அருளினார் –
தரம் பாராதே உபகாரம் செய்யாதவர்களுக்கும் தம்மைக் கொடுத்த-இச் செயலை என் என்று சொல்லுவது -என்கிறார்.

நெஞ்சால் நினைந்து குமிழ் நீர் உண்ணலாமே யன்றிச் சொல்லால் கூறும் பரமன்று என்கிறார் .
நம் ஆழ்வார் பிரதம பர்வதத்தையே உபாயமும் உபேயமுமாக தெளிந்து தன் நெஞ்சை நோக்கி
நான் கூறும் கூற்றாவ தித் தன்னையே நாணாளும்
தேங்காத நீருருவன் செங்கண்மால் -நீங்காத
மா கதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதியா நெஞ்சே நினை – -என்கிறார்
அத்தகைய தெளிவு வாய்ந்த தனக்கு உபாயமாகத் தெய்வ நாயகன் தன் பாதத்தை தந்த
உபகாரத்தைக் கூறி அதற்குக் கைம்மாறு காணாது தடுமாறுகிறார் .

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் உனக்கோர் கைம்
மாறு நான் ஓன்று இலேன் எனதாவியும் உனதே -திருவாய்மொழி – 5-7 10- – என்பது காண்க –.

அமுதனாரோ அங்கனம் கூறவும் மாட்டாது தடுமாறுகிறார் .

————

கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே -46- –

ஆறு சமயமும் = சாக்ய, உலுர்க்ய, அக்ஷபாத, க்ஷபண. கபில, பதஞ்சலி மதங்கள் எனப்படுகிற ஆறும் பாஹ்யஸமயங்களாம்;
சாக்யர்-பௌத்தர்; உலுர்க்யர்-சார்வாகர்; அக்ஷபாதரென்று கௌதமரைச் சொல்லி நையாயிக வைசேகூஷிகர்களை நினைக்கிறது.
க்ஷபணர்-ஜைநர். ஆறுசமயங்களுக்கு விளம்பும் என்று அடைமொழி கொடுத்தது-
அர்த்தமில்லாத வெறும். சொற்களையே பிதற்றுகிறவர்களென்று காட்டினபடி.

குவலயத்தே பணித்த -எனக் கூட்டினால் இருள் தரும் மா ஞாலத்திலே
வெளிச் சிறப்பு தோற்ற அருளிச் செய்த -என்றபடி –
இனி குவலயத்தே உணர்ந்தோனை-எனக் கூட்டினால் இந்த லோகத்திலே உணர்ந்தவர்
இவர் ஒருவரே என அருமைப்பாடு தோன்றுகிறது-
திசை யனைத்தும் ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே-
இங்கனம் சமயங்கள் ஆறும் குலைய மாறன் உணர்ந்தமை -தேறும்படி என் மனம்-புகுந்தமை என்னும்
குணங்கள் திக்குகள் அனைத்திலும் பரவின –
அத்தகைய நற்குணம்-வாய்ந்த எம்பெருமானாரை இவ் உபகாரத்துக்கு தோற்று வணங்கினோம்

————-

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்
தரம் செப்பும் அண்ணல் இராமானுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை உள்ளே
நிறைந்து ஒப்பற விருந்தான் எனக்காரும் நிகர் இல்லையே – 47- –

இரவும் பகலும் விடாது
அல்லு நன்பகலும் இடைவீடு இன்றி நல்கி என்னை விடான் நம்பி நம்பியே -திருவாய்மொழி 1-10 8- – –
என்கிற படியே இடைவிடாதபடி எழுந்து அருளி இருந்தார் .என் சிந்தை உள்ளே நிறைந்து ஒப்பற இருந்தான் –
ஆசாபாசங்களுக்கு உறைவிடமான என் சிந்தைக்கு உள்ளே இருந்தார் –

அமுதனாரை வசப்படுத்துவது தவிர எம்பெருமானார் திரு வவதாரதிற்குப் பேறு வேறில்லை என்பது கருத்து .
நிறைந்து இருந்தான்–
பகவத் விஷயத்துக்கும் இடம் இன்றித் தானே சிந்தையுள் நிறைந்து இருந்தான் -என்னலுமாம்
விஷயாந்தரங்களுக்கு அவகாசம் இல்லாதபடி
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –திருவாய் மொழி – 10-8 1- – என்று
நம் ஆழ்வார் கூறியது போலே அமுதனாரும் கூறினார் .
நம் ஆழ்வார் நெஞ்சில் விஷயாந்தரங்களுக்கு இடம் இல்லை .
அமுதனார் நெஞ்சில் பகவத் விஷயத்துக்கும் இடம் இல்லை –

———–

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – -48 —

நிகரின்றி நின்றது என் நீசதை என்கிறார் –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் 3-3 4- – என்றார் நம் ஆழ்வார்
நீசதை நீங்கி சிலர் நல்லவர் ஆதலும் உண்டு -என் நீசதை அங்கனம் நீங்காது நிலை நிற்பது
தோன்ற -நின்ற என் நீசதை-என்றார் –
நிகர் அற்றமையில் -என் நீசதைக்கும் தேவரீர் அருளுக்கும் ஒற்றுமை உண்டு .
ஆகவே அவை நிலைத்து ஏன் இணைந்து இருக்க மாட்டா -என்கிறார் –

ததஹம் த்வத்ருதே ந நாதவான் மத்ருதே த்வம் தய நீய வாந்தச-விதி நிர்மித மேத்தா தான்யம்
பகவன் பாலய மாஸம ஜீஹப -என்று-பகவானே உம்மைத் தவிர நான் வேறு நாதன் அற்றவனாய் இருக்கிறேன்-
நீரும் என்னைத்தவிர இரக்கப்படத் தகுந்தவன் இல்லாதவனாய் இருக்கிறீர்-
தற்செயலாக அமைந்த இந்த தொடர்பினை காத்து அருள வேண்டும்விட்டு விடாதீர் -என்று ஆள வந்தாரும் காட்டி யருளினார்

யதிராஜ விம்சதியில் -வாசா மகோசர மகா குண தேசகாக்ர்யா கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரம்
ஏஷோ ஹமேவ ந புனர் ஜகதீச்ருசஸ் தத் ராமாநுஜார்ய கருணை வது மத் கதிச்தே -என்று-
மொழியைக் கடக்கும் பெரும்புகளை உடையரான ஆசார்யர்களில் சிறந்த கூரத் ஆழ்வான்-கூறிய
எல்லா நீசதைக்கும் உறைவிடமாய் இருப்பவன் இந்த நான் ஒருவனே
உலகத்தில் இத்தகைய ஒருவனைக் காண முடியாது
ஆகையால் எம்பெருமானரே தேவரீர் உடைய வீறு பெற்ற கருணையே எனக்கு கதி -என்று
அருளிச் செய்து இருப்பது இங்கு அனுசந்திக்கதக்கதாகும்-

வேதாந்த தேசிகன்
மயி திஷ்ட்டதி துஷ்க்ருதாம் பிரதானே மித தோஷா நிதரான் விசின்வதீத்வம்
அபராத கணைர பூர்ண குஷி கமலா காந்த தயே கதம் பவித்ரீ –என்று
பாபம் செய்தவர்களுக்குள் எண்ணற்ற பாபங்கள் செய்ததனா பிரதானனாகிய நன் இருக்க –
என்னைப் புறக்கணித்து -அளவுக்கு உட்பட்ட பாபம் செய்தவர்களை தேடிக் கொண்டு இருக்கும் நீ
பாபத் திரள்களினால் வயிறு நிரம்பாமல் கமலியின் காதலனுடைய அருள் அணங்கே –
எப்படி யாகப் போகிறாயோ -என்றும் –
அஹம் அஸ்ம்ய அபராத சக்ரவர்த்தீ கருணே த்வம்ச குனேஷூ சார்வ பௌமீ
விதுஷீ ஸ்த்திதி மீத்ருசீம் ஸ்வயம்மாம் வருஷ சைலேஸ்வர பாத சாத்குரு-என்று
நான் பாபம் செய்தவர்களுள் சக்கரவர்த்தியாய் மேம்பட்டவன்
கருணையே -நீயும் குணங்களுள் தலை சிறந்தவள் .
இத்தகைய நம் நிலையை உணர்ந்து தானாகவே என்னை திரு வேம்கடமுடையான்
திருவடிக்கு உரியனாக்குவாயாக -என்று தயா சதகத்திலே -29 30- – இக்கருத்தினையே தழுவி அருளி இருப்பது

பயனிருவோக்கும் ஆன பின்னே –
தேவரீருக்கு பயன் குண லாபம்-அடியேனுக்கு பயன் ஸ்வரூப லாபம்

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–29-38–

December 9, 2021

கீழ் எம்பெருமானார் ஸ்ரீ கிருஷ்ண அனுபவத்தில் ஆழ்ந்து
கார் போலே தம்மை ஆட்க்கொண்டு அருளியதை
எட்டு பாசுரங்களால் அருளிச் செய்தார் –

இனி ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ண தத்துவமான ஆழ்வார் -அவரது அருளிச் செயல்களில் ஈடுபட்ட
ஸ்ரீ உடையவர் தமக்குச் செய்து அருளிய உபகார பரம்பரைகளைப் பட்டியல் இடுகிறார் –

ஸ்ரீ பாஷ்ய ஸூத்ரங்களை இது கொண்டு ஒருங்க விட்டு அருளியதையும் –
ஸ்ரீ பாஷ்யம் அருள ஸம்ப்ராயத்துக்கு ஸ்ரீ ஆளவந்தார் ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அதற்காகவே
சரண் அடைந்த ஸ்ரீ தேவப்பெருமாள் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளராய் இருந்தமையும் –

எம்பெருமானாரைச் சேரும் அவர்க்கு செறு கலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்தமையும் –
அவர்க்கு ஆத்ம குணங்கள் தாமாகவே வந்து சேரும் என்பதையும் –

ஆத்ம குணங்களை உண்டாக்குவதற்கு-இவருக்கு ஏற்ப்பட்டு உள்ள சகாய பலமும்-

உலகை ரஷித்த படியால் எம்பெருமானார் குணங்கள்-பிரகாசிக்க வில்லை –
தன் வினை யனைத்தையும் விலக்கிய பின்னரே அவை பிரகாசித்தன -என்பதையும் –

பிரகிருதி சம்பந்தத்தாலே இன்னமும் வினைகள் தம்மை அடர்க்க வழி இல்லை என்பதையும் –

நாமும் ஆஸ்ரயிக்கும் படி எம்பெருமானார் ஸ்வபாவத்தை அருளிச் செய்தும் –

நான் அறிந்து பற்றினேன் அல்லேன் –அவர் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்களே -உத்தேச்யர் என்றும் இருக்குமவர்கள் –
என்னையும் அங்குத்தைக்கு சேஷம் ஆக்கினார்கள்-என்பதையும் –

அவரை நோக்கி இன்று என்னைப்-பொருள் ஆக்குவதற்கும் முன்பு என்னைப் புறத்து இட்டதற்கும்
என்ன ஹேது என்று வினவுகிறார் –38-என்பதையும் –

————

கூட்டும் விதி என்று கூடும் கொலோ தென் குருகைப் பிரான்
பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என்னாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே -29 –

கூட்டும் விதி –
என்றேனும் பேற்றினைச் சேர்விப்பதான விதி –
இவர் தமக்கு பேற்றுக்கு அடியான பாக்யமாக நினைத்து இருப்பது -எம்பெருமானார் உடைய கிருபையையே –
விதி -இங்கே எம்பெருமானார் கிருபையையே -என்க –
தம்மாலும் எம்பெருமானாராலுமே விலக்க இயலாமையின் கிருபையை விதி என்றார் –
கூட்டும் விதி -என்பதனால்-அதன் விளைவு தவிர்க்க ஒண்ணாதது என்பது புலனாகிறது
நம் ஆழ்வாரும் -விதி வாய்க்கின்று காப்பார் யார் -திருவாய் மொழி -5 1-1 – -என்று தவிர்க்க இயலாமையை –
ஐயோ கண்ண பிரான் அறையோ இனிப் போனாலே -என்று விளக்கி காட்டி-இருப்பது இங்கு உணரத் தக்கது

தன் பத்தி என்னும் வீடு -என்றார் –
பிறர் கன்னம் இட ஒண்ணாமை இவ்வீட்டுக்கு தனி சிறப்பு
பிறர்-பிரமாணமான வேதத்தை தூஷிப்பவர்களும் பிரமேயான இறைவனைத் தூஷிப்பவர்களும் –

புகழ் மெய் உணர்ந்தோர் ஈட்டங்கள் தன்னை –
அதனை வளர்த்த தாய் இராமானுசன்
அதன் விளையாட்டு எல்லாம் கண்டிடப் பெற்ற பெருமையால் வந்தது அவரது புகழ்-
கண்ணன் குழந்தையாய் இருந்தும் அதி மானுஷமாக விளையாடினது போல திருவாய் மொழியும்
எளிய செம் தமிழாய் அமைந்தும் வட மொழியில் அமைந்து தெளிவு படாத மறைகளை தெளிவு படுத்தியும் –
வேத வியாசர் இயற்றிய பிரம ஸூத்தரதிற்கு உண்மைப் பொருளை உணர்த்தியும் –
கட்புலனாகாத இறைவனை காணுமாறு முன்னே கொணர்ந்து நிறுத்தியும் –
அதி வேதமான -வேதத்தை விஞ்சின -விளையாட்டுக்கள் புரிவதை எல்லாம் கண்டிடப் பெற்றமையால்
அசோதை போல் எம்பெருமானார் புகழ் படைத்தவர் -என்க –

என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே –கூட்டும் விதி என்று கூடும் கொலோ
மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண்பயனாவதே -பெருமாள் திருமொழி – – 2-1 –என்றார் குலசேகரப் பெருமாள்-
எம்பெருமானார் காலத்திலே அவர் பக்கலிலே அமுதனார் இருப்பவர் ஆதலின்
காண்கையில் அன்று இவர்க்கு தேட்டம்-கண்டதும் களிப்பினால் கண்கள்
மலர்ந்து இன்புறுதல் இவருக்கு தேட்டம் -இன்புறுதலுக்கு அடியான அன்புடைமை
எம்பெருமானார் அருளாலே தமக்கு வாய்க்க வேணும் -என்கிறார் –
உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே -என்று
மேலும் இவர் பிரார்த்திப்பது காண்க –பரம புருஷார்த்தமான இது அர்த்தித்துத் தானே பெற வேண்டும் –

————–

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்ணிறந்த
துன்பம் தரு நிரயம் பழ சூழில் என் தொல் உலகில்
மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே – -30 –

இன்பம் தரு பெரு வீடு
அத்வைதிகளின் உடைய மோஷத்தை -விலக்குவதற்காக -இன்பம் தரு-என்று பெரு வீட்டினை –விசேடித்தத்தார்

தொல் உலகு -என்பதனால் -உலகு அநாதி என்று உணர்த்தப்படுகிறது –
பிரகிருதி தத்துவத்தின் மாறுபாடாக ஆவதும் -அழிவதுமாய் -தொடர்ந்து படைக்கப்பட்டு
பிரவாஹம் போலே வருகின்ற இவ் உலகிலே -என்றபடி –
இதனால் மாறுபடும் இயல்பினதாய் -இறைவனுக்கு உரிய அசித் தத்துவம் கூறப்பட்டது –

மன் பல் உயிர் -என்பதனால் -சித் தத்துவம் கூறப்படுகிறது-
மன் -என்பதனால்–உயிரினுடைய ஸ்வரூபம் நித்யம் -என்று கூறப்படுகிறது –
பல் உயிர்கள் என்பதனால்-சித் எனப்படும் ஜீவாத்மாக்கள் ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டு –பலவாய் இருத்தல்-புலப்படுத்தப் படுகிறது –
உயிர்கள் என்னும் பன்மையினாலே -அவை ஒன்றுக்கு ஓன்று வேறு பட்டமை-புலப்ப்படுமாயினும் –
பல -என்று மிகை பட கூறியது -ஆன்ம தத்துவம் உண்மையில் ஒன்றே -தேகங்கள் வேறு பட்டு இருப்பது பற்றி
அவற்றில் உள்ள ஆன்ம தத்துவம் வேறு பட்டதாக காணப்படுகிறது -என்கிற -ஏகாத்ம வாதிகளின்-கொள்கையை உதறித் தள்ளுகிறது –

இறைவன் -சேஷி -அதாவது யாவற்றையும் தான் விருப்பபடி பயன் படுத்தக் கொள்ளும்
உரிமை வாய்ந்தவன் -இதனால் ஈஸ்வர தத்வம் பேசப்பட்டது
ஆக தத்வ த்ரயமும் பேசப்பட்டது –இவைகளில் அசித்தும் சித்தும் உரிமைப்பட்டன -மாயன்-உரியவன் –
மாயன்-ஆச்சர்ய படத் தக்க குணம் செய்கை இவைகளை உடையவன் –

உயிர் அனைத்துக்கும் சர்வேஸ்வரன் சேஷி என்பதையே ஸ்ரீ பாஷ்யம் சாரமாக உணர்த்துகிறது-என்பர் ஸ்ரீ பாஷ்யம் வல்லோர் –
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க மிவாபரம்
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்ப்புடம் ஈஷ்யதே -என்று
எவ்விடத்தில் பரப்ரமம் தெளிவாய் சேஷி-சேஷனை உடையவன்-உரியவன்-ஆக காணப்படுகிறதோ –
அந்த இரண்டாவது ஸ்ரீ ரங்க விமானம் போன்ற பிரணவ ஆகாரமான ஸ்ரீ பாஷ்யத்தை வந்தனை செய்கிறேன் –

அகில புவன -என்று முதலில் அ காரத்தில் தொடங்கியும் –
இடையில் மூன்றாம் அத்யாயத்தில் -மூன்றாம் பாதத்தில் -உக்தம் -என்னும் சொல்லில் உ காரியத்தை அமைத்தும்
கடையில் சமஞ்ஜசம் என்று ம காரத்தில் முடித்தும் -ஸ்ரீ பாஷ்ய காரர் தம் நூல் பிரணவ அர்த்தத்தை உட கொண்டது
என்பதை ஸூ சகமாக காட்டி இருப்பது இங்கு அறிய தக்கது –

நரகம் ஆகிய-சம்சாரம் இந்த ஞானத்துக்கு விரோதி ஆகையாலே இங்கு இருக்க அஞ்சுகின்றேன் –
பரம பதத்துக்கு கொண்டு போக-வேணும் என்று இறைவனை இரக்கிறார் –நம் ஆழ்வார்

யானும் நீ தானே ஆவதோ மெய்யே-அரு நரகு-அவையும் நீ -ஆனால்
வான் உயர் இன்பம் எய்தில் என் -மற்றை-நரகமே எய்தில் என் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும்-அஞ்சுவன் நரகம் நான் அடைதல்
வான் உயர் இன்பம்மன்னி வீற்று இருந்தாய்-அருளு நின் தாள்களை எனக்கே -8 1-9 – – எனபது அவர் அருளிய பாசுரம் –

அவருடைய உறுதிப்பாட்டினும் அமுதனாருடைய உறுதிப்பாடு அதிசயிக்கத் தக்கதாக உள்ளது –

இவர் பேரனான பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் திருவரங்கக் கலம்பகத்திலே –
நான் அந்த வைகுந்த நாடு எய்தி வாழில் என் ஞாலத்து அன்றி
ஈனந்த வாத நிரயத்து வீழில் என் யான் அடைந்தேன்
கோனந்தன் மைந்தனை நான்முகன் தந்தையைக் கோயிலச்சு
தானந்தனை எனக்காரா வமுதை அரங்கனையே -என்றுபாடிய பாடலை இதனோடு ஒப்பிடுக –

—————

ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-

தேனோங்கு நீழற் றிருவேம்கடம் என்றும்
வானோங்கு சோலை மலை என்றும் -தானோங்கு
தென்னரங்க மென்றும் திரு வத்தி யூரென்றும்
சொன்னவர்க்கும் உண்டோ துயர் -பாரதம் பாடிய பெறும் தேவனார் –

வரம் தரு மா மணி வண்ணன் -அருளாளப் பெருமாள்-இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி -பெரிய திரு மொழி -2 9-3 –

பிரமதேவன் பூஜித்த இடம் ஆதலின் காஞ்சி -என்று பேர் ஏற்பட்டது –
அப்பேரை விட விலங்கு இனங்களாகிய யானைகள் பூசித்த இடம் ஆதலின்
தேவப் பிரான் உடைய-எளிமையை விளக்குவதாக அமைந்த அத்தியூர் என்னும் பேரே சிறந்தது
என்னும் கருத்துடன் அப்பேரினையே-கையாண்டார்

மேலும் ஊரகம் பாடகம் முதலிய பல திருப்பதிகளைத் தன்னகத்தே கொண்ட நகருக்கு
காஞ்சி -என்பது பொதுப் பெயராக-வழங்கப்படுகிறது –
அத்தியூர் -என்பதோ -தேவப்பெருமாள் நித்ய வாசம் செய்யும் பகுதிக்கே சிறப்பு பெயராய்
அமைந்து உள்ளது -ஆதல் பற்றியும் அப்பெயரினையே கையாண்டார் –

கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன்
அவன் தாள் இணைக் கீழ் புகும் காதலன் -திரு வாய் மொழி – 3-9 8– -என்றபடி
கழல் இணையின் கீழே பூண்ட அன்பை ஆளுகின்றார்-

பூண்ட அன்பு –
பூட்கை யாவது -வலிமை –வலிமை வாய்ந்த அன்பாவது விலகாது அடிக்கீழ் நிலை பெற்று இருத்தல்-
பிணிப்புண்ட சிநேகம் -என்று உரைப்பர் பெரிய ஜீயர் –
திருவாளன் என்பது போலே அன்பாளன் என்கிறார் –
திருவரங்கத்தில் எழுந்து அருளி இருக்கும் போதும் தேவப் பெருமாளையே
திரு வாராதனப் பெருமாளாகக் கொண்டு தென்னத்தி யூரர் கழல் இணைக் கீழ் பூண்ட
அன்பாளராய் அன்றோ எம்பெருமானார் இருந்தார் –

இனி காண் தகு தோள் அண்ணல் என்பதை
எம்பெருமானாருக்கு அடை ஆக்கலுமாம்-
இதனால் திரு மேனி குணமும்
அன்பாளன் என்பதனால்
ஆத்ம குணமும் அனுசந்திக்கப் படுகின்றன –

பற்பம் எனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனம் ஆகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும்
முப்புரி நூலொடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா அழகும்
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக்கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடியமுடியும்,கனக நற்சிகைமுடியும்
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே.

இராமானுசனைப் பொருந்தினமே
பொருந்திவிட்டோம்-இனிப் பிரிந்திடற்கு வழி இல்லை
மேவினேன் அவன் பொன்னடி -கண் நுண் சிறு தாம்பு – 2- என்றபடி
இம்மையிலும் மறுமையிலும் பிரிவிலாது பொறுந்தி விட்டோம் என்றது ஆயிற்று –

————–

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே – 32-

தனமாய தானே கை கூடும் -முதல் திருவந்தாதி -43 -என்றார் பொய்கையாரும் –
இவ் ஆத்ம குணங்கள் தேட வேண்டியவைகள் அல்ல –எம்பெருமானாரைச் சேரும் அவர்க்கு தாமாகவே வந்து சேரும் என்கிறார் –
தேஜ துர்ஜனை அனபிபவநீய த்வம்-என்று
தேஜசாவது தீயோரால் அடர்க்கபடாமை என்னும் கீதா பாஷ்யமும் – 16-3 –

ஏனைய அவதாரங்கள் -தேவர் இரக்க வந்தவை –
எம்பெருமானார் ஆகிய ஆச்சார்ய அவதாரமோ -இரப்பார் இல்லாமலே தானே வந்தது –
ஞானக் கை தந்து மேலே எடுப்பவர் ஏனைய ஆசார்யர்கள் –
மக்நான் உத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்திர பாணி நா –
அழுந்தினவர்களை சாஸ்திரக்-கையினால் தூக்கி விடுகிறார் -என்று கூறப்படுவதும் காண்க –
எம்பெருமானார் ஆகிற ஆசார்யரோ தம் அரிய தவத்தின் வலுவினால் ஞாலத்தாரை எடுத்து-மீண்டும் விழாது -காத்து அருளுகிறார் –
அத்தகைய அரிய தவம் அவரது –
இங்கு தவம் என்பது-தவங்களுள் சிறந்தது சரணாகதி -என்று சிறந்த தவமாக-ஓதப்படுகின்ற சரணாகதியே
எம்பெருமானார் செய்த சரணாகதியின் பயனாக அவர் தொடர்பை எவ்வகையாலேனும் பெற்ற-
ஞாலத்தவர் -உய்வு பெற்று விடுகிறார்கள்-இவ் வரிய உண்மை அமுதனாரால் இங்கு உணர்த்தப் படுகிறது –

வந்தெடுத்தளித்த அருந்தவன்- க்ருபா மாத்திர ஆசார்யனரான எம்பெருமானார் இன்னருளால் யாவரையும் உய்வித்தது அறிந்ததே .
பல்லுயிர்க்கும் வீடளிப்பான் எம்மிராமானுசன் மண்ணின் தலத்துதித்து என்று பின் வரும் பாசுரமும் காணலாம்.
இப்படி காரேய் கருணை இராமானுசனைப் பொருந்திய பின் நமக்கு வரும் மேன்மையை சொல்லி யருள்கிறார் அமுதனார்

———–

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் கை யாழி என்னும்
படையோடு நாந்தகமும் படர் தாண்டும் ஒண் சார்ங்கமும் வில்லும்
படையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமானுச முனியாயின விந் நிலத்தே -33 –

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன்
அழிக்கும் ஆயுதங்கள் – அளிப்பனவாயின என்பது -எல்லாம் பிராட்டி சந்நிதியால் வரும் மற்றம் தான் இது

இராமானுச முனி இடையே யாயின –
இராமானுச முனிவன் -உலகினை காப்பதையே எப்போதும் மனனம் செய்து -கொண்டு இருப்பவர் –
அவரது காக்கும் நினைவுக்கு ஏற்ப துணை புரிதலே இராமானுச முனி பக்கலிலே-ஆயினமை-என்க-

இனி இடையே -என்பதற்கு -நடுவே -என்று பொருள் கொண்டு –
இந்நிலத்தே இடையே இராமானுச முனி யாக ஆயின – -வந்து அவதரித்தன-
கலியை நீக்க வல்ல இராமனுசராக எம்பெருமானின் திவ்யாயுதங்கள் வந்தவதரித்தன-

ஒரே திரு மேனியில் ஐந்து ஆயுத புருஷர்களும்-ஆத்மாவாகவே இருப்பது இசையாமையாலே –
அவ் ஐவருடையவும் ஆவேச அவதாரமாகவே-எம்பெருமானாரைக் கொள்வது மணவாள மா முனிகளின் திரு உள்ளம் –
இங்கனம் கொண்டால்-ஆதி சேஷனுடைய சாஷாத் அவதாரமாகவும் –
பஞ்ச ஆயுத ஆழ்வார்கள் முதலியவர்களின்- ஆவேச அவதாரமாகவும் கொள்வதில் யாதொரு முரண்பாடும் இல்லை –

———-

நிலத்தை செறுத்து உண்ணும் நீசக் கலியை நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை என் பெய் வினைதென்
புலத்தில் பொறித்த வப்புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பெறுத்தது இராமானுசன் தன நயப் புகழே -34 –

இறைவனாலும் காக்க முடியாத படி அன்றோ கலி செறுகிறது
இத்தகைய கலியின் பலத்தை செறுத்து அதை ஒடுக்கினால் இராமானுசன் புகழ் எவ்வளவு பிறந்கியதாக வேண்டும் –

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசைபாடி ஆடி உழி தரக் கண்டோம் -திரு வாய் மொழி -5 2-1 – – என்று
நம் ஆழ்வாரும் இவரால் கலி கெடுவதை அருளிச் செய்தார் –

பகவன் நாமத்தை அண்டை கொண்டவர்க்கே கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து
நமன் தமர் தலைகள் மீது நாவல் இட்டு உழி தர முடியுமானால் இராமானுசனை
அண்டை கொண்டவர்க்கு கேட்க வேணுமா –
இவ்வாறு கலியின் மிடுக்கை ஒடுக்கியதால் இராமானுசன் புகழ் பிறந்கியது இல்லையாம்-
ஏன் எனில் அவருக்கு இது ஒரு பெரிய காரியம் அன்றாம் –
பின்னையோ எனின் –
என் பெய் வினை பொறுத்தது –
இவரால் வினைகள் ஒவ் ஒன்றாக செய்யப்படுவன அல்ல – ஒரு பொழுதில் பல வினைகள் பெய்யப் படுகின்றனவாம் –
புத்தகச் சும்மை
யம லோகத்தில் சுமை சுமையாக புத்தகத்தில்-எழுதப் பட்ட என் வினைகளைப் பொசுக்கியதாலேயே
அது பெருமை பெற்று விளங்குகிறது-எனபது அமுதனார் கருத்து

———-

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன்னரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -35 –

நயவேன் ஒரு தெய்வம்
எம்பெருமானாரே தெய்வம் என்பர்-கண்ணனைக் காட்டித் தரினும் வேண்டேன் என்று இருப்பார் –
இத்தகைய நிலை வடுக நம்பிக்கும் வாய்த்து இருந்தது –
அந்நிலையை மணவாள மா முனிகள்-
உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா மன்னு புகழ் சேர் வடுக நம்பி -தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா எந்நாளும் உன் தனக்கே ஆட் கொள் உகந்து -என்று வேண்டுகிறார் –

சில மானிடத்தை
மானிடரை என்று உயர் தினையால் கூறுதற்கும் அருஹதை அற்றவர் என்று கருதி -சில மானிடத்தை –என்று அஃறிணையால் கூறுகிறார் –
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -திருவாய் மொழி – 3-9 9- -என்றார் நம் ஆழ்வாரும் –
அசேதனங்களை சொல்லும் படியிலே சொல்லுகிறார்

கவி போற்றி செய்யேன் –
கவியால் போற்றி செய்யேன் -கவிகள் சொல்லித் துதியேன்-என்றபடி –
இனி கவி செய்யேன்–போற்றி செய்யேன்-என்னவுமாம் –
கவி செய்கையாவது -அவர்களை கவி பாடுகை
போற்றுகை யாவது -அல்லாத சொற்களால் புகழுகை –

இத்துறவி வேந்தற்கு வியாமோகம் பொன்னரங்கத்திலே
உலகில் அனைத்தையும் த்ருணமாக அற்பமாக –
இவர் மதிப்பது அச்யுதனுடைய பொன்னடிகளிலே-உள்ள வ்யாமோகத்தாலே என்கிறார் ஆழ்வான் –
அச்யுத பதாம் புஜ யுக்மருக்ம வ்யாமோஹத –என்பது அவரது திரு வாக்கு –
பொன்னரங்கத்தில் மயல் பெருகுகிறது என்கிறார் அவர் சிஷ்யரான அமுதனார் –

இனி திருவரங்கம் என்னும் பொருளில் பொன்னரங்கம் என்றார் ஆகவுமம் –
பொன் -திரு அவளுடைய அரங்கம் -நாட்டியம் ஆடும் இடம் என்னும் பொருளில் பொன்னரங்கம் என்றார் என்க-
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே -நாச்சியார் திரு மொழி -11 9- – என்னும் இடத்தில்-
பெரியவாச்சான் பிள்ளை -அவ்வூரின் பேரும் பெரிய பிராடியாருக்கு ந்ருத்த ஸ்த்தானம் -என்று-
வியாக்யானம் அருளி செய்து இருப்பது இங்கு அறியத் தக்கது –

அரங்கமே எனபது இவள் தனக்கு ஆசையே -பெரிய திருமொழி -8 2-7 – – என்னும் திரு மங்கை மன்னன் ஸ்ரீ ஸூக்தி
வ்யாக்யானத்தில் -நகச்சின்னா பராத்யதி -என்னும் பெண்ணரசி இறே-என்று
பெரியவாச்சான் பிள்ளை-அருளிச் செய்து இருப்பது அறிதற்கு உரியது –

இறைவன் திருநாமங்கள் பல இருக்க பொன்னரங்கம் என்னும் ஊரின் பேரிலே எம்பெருமானாருக்கு-மயல் பெருக காரணம் –
தம் ஆசார்யராகிய ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் உகந்த திருப்பேராய்-இருத்தலே என்பர் பெரியோர் –
இவ்விஷயம்பெரிய ஜீயரால் பெரியாழ்வார் திருமொழி -4 4-1 – – வ்யாக்யானத்தில் ஓர் ஐதிஹ்யம் மூலம் நன்கு விளக்கப் பட்டு உள்ளது –
ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் சரம காலத்தில்-உடையவர் எழுந்து அருளி –
இப்போது திரு உள்ளத்தில் அனுசந்தானம் எது -என்று கேட்க –
பகவன் நாமங்களாய் இருப்பன அநேகம் திரு நாமங்கள் உண்டாய் இருக்க –
திருவரங்கம்-என்கிற நாலைந்து திரு அஷரமும் கோப்பு உண்ட படியே -என்று நினைத்து இருந்தேன் காணும் -என்று அருளிச் செய்ய –
அத்தை ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் விரும்பின திரு நாமம் என்று உடையவர் விரும்பி இருப்பர் –

நயவேன் பிறர் பொருளை நல்லேன் கீழாரோடு
உய்வேன் உயர்ந்தவரோ டல்லால்-வியவேன்
திருமாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் நம்மேல் வினை –பொய்கை யாழ்வார் – 35- -என்ற பாசுரத்தொடு இதனை ஒப்பிடுக –

1-பிறர் பொருளை விரும்பேன்-
2-கீழாரோடு சேரேன் –
3–மேலார்கள் உடனேயே பழகுவேன் –
4–திருமாலின் அரிய சீர்மை கண்டு வியக்க மாட்டேன் –
5-திருமாலை அல்லது வேறு தெய்வத்தை ஏத்த மாட்டேன் -நம் மேல் வினை எவ்வாறு வரும்

————–

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

பின்னும் காசினியோர் இடரின் கண் வீழ்ந்திட -என்கையாலே –
முன்னும் அவர்கள் இடரின் கண்-வீழ்ந்து கிடந்தமை புலனாகிறது –
ஆக -அர்ஜுனனை வியாஜமாக கொண்டு உலகிற்கு ஆருயிர் நாதன்-கீதை அருளினான் -என்றது ஆயிற்று –
எல்லாம் அறிந்த இறைவனும் -விலஷனமான வேதங்களை ஆராய்ந்து –கண்டு அளித்தான் -என்பது தோன்ற –
கண்டளிப்ப-என்கிறார் –
நெறி யுள்ளி யுரைத்த கணக்கறு நலத்தனன் -என்றார் நம் ஆழ்வாரும்

விஸ்வரூபம் சேவித்த பிறகு அர்ஜுனன் பழைய படி-கையும் சக்கரமும் ஆக உன்னைக் காண விரும்புகிறேன் என்கையாலே –
அடல் கொண்ட நேமியனாக-சேவை தந்து கண்ணன் கீதை உபதேசித்தான் என்று தெரிகிறது –

கையிலே ஆயுதம் பிடிப்பவன் வேதர்த்தத்தை உபதேசித்தால் அது எங்கனம் பயப்படும் -என்று-
ரசமான பொருளும் இங்கே தோன்றுவதை சுவைத்து இன்புருக –

ஆருயிர் நாதன் என்று பாடம் –
இந்த உயிர் ஆன்மா அவனுக்கு வசப்பட்டது. என்னும் இயல்பான பொருள் கண்டு அளித்தது புலப்படும்.

சர்வேஸ்வரன் கண்டு அளித்த பின்னரும் -இடரின் கண் காசினியோர் வீழ்ந்தனரே -இது என்ன விந்தை -என்கிறார் –
தானும் அவ் ஒண் பொருள் கொண்டு –
கீதை சொன ஆருயிர் நாதன் -அர்ஜுனன் சோகத்தை பார்த்து அந்த வாசத்தில் கீதை யருளினான்-
கீதா பாஷ்யம் அருளிய எம்பெருமானார் காசினியோர் இடரைக் கண்டு அவ் ஒண் பொருளையே விளக்கி –யருளினார் –
சர்வ சக்தனும் முயன்றும் காசினியோர்க்கு பயன்படாமல் போயிற்று –
எம்பெருமானார் தம் பரம கிருபையினால் அவ் விஷயத்திலே முயன்று -வெற்றி காண முற்படுகிறார் –

———

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-

படியிலே கீர்த்தி கொண்ட இராமாயணம் என்று கூட்டி -மற்ற முனிவர்கள் இயற்றிய-இராமாயணங்களை விட
பிரசித்தி பெற்ற ஸ்ரீ வால்மீகி இராமாயணத்தை கூறிற்றாகவுமாம் –
வால்மீகி முனிவருடைய ஸ்ரீ ராம பக்தி உள் அடங்காது வெளிப்பட்டமை பற்றி -பக்தி வெள்ளம் –என்றார் ஆகவுமாம்-

வால்மீகி கிரி சம்பூதா ராம சாகரகாமி நீ
புனாதி புவனம் புண்யா இராமாயண மகா நதீ–என்று
வால்மீகி என்னும் மலையில் தோன்றி இராமபிரான் என்னும் கடலை நோக்கி செல்லும்
இராமாயணம் என்னும் புண்ணிய நதி உலகத்தை சுத்தம் ஆக்குகிறது -என்று
வெள்ளமாக-இராமயணத்தை முன்னோர் உருவகம் செய்து உள்ளமை காண்க –

வெள்ளம் -கடலுமாம் –வெள்ளத்தின் உள்ளானும் – 99- என்று பொய்கை ஆழ்வாரால் கடல்-வெள்ளமாக சொல்லப்பட்டமை காண்க –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்வ கல்லோல சங்குலம்-காண்டாக்ராஹா மகாமீனம் வந்தே இராமாயண ஆர்ணவம் -என்று
ஸ்லோகங்களின் சாரத்தினால் நிறைந்ததும்-சர்க்கம் என்கிற அலைகள் நெருன்கினதும்
காண்டம் ஆகிற முதலையாம் பெரு மீன்கள் உடையதுமான இராமயணமாம் கடலினை வந்திக்கிறேன் -என்று
இராமாயணம் கடலாக உருவகம் செய்யப்பட்டு உள்ளமையும் காண்க –

எம்பெருமானாரின் நெஞ்சம் பள்ளமடையாதலால். இந்த பக்தி வெள்ளம் சென்று இராமனச்ர் மனதில் குடி கொண்டது.
அவரும் இராமனின் குணங்களில் ஆழங்கால் பட்டு அதை தன நெஞ்சில் கொண்டு
நம் சம்பிரதாயத்தில் இதன் ஊடே ஆழ்ந்திருந்தது தெரிந்ததே.

ப்ரேமேயத்துக்கு கல் அரணாய் அமைந்த கோயிலே போதும் –
பிரமாணத்துக்கோ அறிவார்ந்த எம்பெருமானாரே அரணாக அமைய வேண்டி இருக்கிறது –
பிரமாணம் அல்லது பிரமேயம் சித்தி யாமையாலே பிரபல பிரமாணமான இராமாயணத்துக்கு
கல் அரணாம் கோயிலாக எம்பெருமானாரே அமைகிறார் -.ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தம்

ய பிபன்சத்தம் ராம சரிதாம் ருத சாகரம் அத்ருப்தச்தம் முனிம் வந்தே ப்ராசெதசம கல்மஷம் -என்று
எவர் எப்பொழுதும் ராம சரித்ரம் ஆகிய அமுதக்கடலை குடித்தும் -போதும் என்று திருப்திஅடையாது இருக்கிறாரோ –
குற்றம் அற்ற அந்த வால்மீகியை வணங்குகிறேன் -என்றபடி வால்மீகி போலே
எம்பெருமானாரும் பக்தி அமுதக் கடலை குடித்து தெவிட்டாதவர்-என்க –

இனி கோயில் இராமானுசன் என்பதற்கு
கோயிலில் -ஸ்ரீ ரங்கத்தில் -வாழும் இராமானுசன் என்று-பொருள் ஆகவுமாம் –
இதனால் அயோத்தியில் வாழ்ந்த இராமானுசனை -இளைய பெருமாளை -விலக்குகிறது
கோயில் அண்ணன் -என்று ஆண்டாள் அருளிச் செய்ததற்கு இது பொருந்தி இருப்பது காண்க –

அடி கண்டு கொண்டு உகந்து
இவ் ஆத்மா வஸ்துவும் எம்பெருமானார்க்கு சேஷப் பட்டது அன்றோ -என்று இதனுடைய
அடியாகிய சேஷத்வத்தை தர்சித்து அந்த சம்பந்தமே ஹேதுவாக விரும்பி அங்கீகரித்து -என்றபடி-

என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினர் –
உம்மை-எச்ச உம்மை-என்னையும் தங்களைப் போலே அவர்க்கு ஆள் ஆக்கினர் என்றபடி –

——-

ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை யின்றவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா விராமானுச நின்னருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – 38-

ஆக்கி-என்கிறார் -திருத்தி -என்கின்றிலர்-அவர்க்கே புதிய பொருளாகத் தோற்றுகிறது-
இப்பொழுது-அருள் புரிதற்கும் முன்பு அருள் புரியாததற்கும் ஒரு காரணம் புரிய வில்லையே –
இது நுண் பொருளாய் இரா நின்றது -நீரே அருளிச் செய்ய வேண்டும் என்கிறார் –

இன்று என்னைப் பொருள் ஆக்கித் தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான் -திரு வாய் மொழி10-8 9- – என்று-
நம் ஆழ்வார் அருளி இருப்பது இங்கு அனுசந்திக்கத் தக்கது–

பொருள் ஆக்கித் தன்னை என்னுள் வைத்தான்-என்றாலே -ஆக்கி யடிமை நிலைப்பித்தது தானே
ஆசாரிய ஹ்ருதயத்தில் இரண்டாவது ப்ரகரணத்ததில் (102)
“இடகிலேன் நோன்பறிவிலேன் கிற்பன் கீழ்நாள்களென்கையாலே ஸாதநத்ரய் பூர்வாப்யாஸஜ மல்ல” என்று தொடங்கி (113)
“வரலாற்றில்லை வெறிதே யென்றறுதியிட்டபின் வாழ்முதலென்கிற ஸூக்ருத மொழியக் கற்பிபக்கலாவதில்லை” என்கிற சூர்ணை
நானகாம ப்ரகரணத்தில் (228) “இன்று அஹேதுகமாக ஆதாரித்த நீ அநாத்யாநாதரஹேது சொல்லென்று மடியைப் பிடிக்க ……
இதுவும் நிருத்தர மென்று கவிழ்ந்து நிற்க”

அருள் புரிந்தாலும் அத்வேஷமும் இசைவும் இருக்க வேணுமே ?அதற்கும் இந்த அருள் தானே மூலம்.

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–22-28–

December 9, 2021

எம்பெருமானார் ஸ்ரீ கிருஷ்ண அனுபவத்தில் ஆழ்ந்து
கார் போலே தம்மை ஆட்க்கொண்டு அருளியதை மேல்
எட்டு பாசுரங்களால் அருளிச் செய்கிறார் –

வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –என்று உபக்ரமித்து
வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –என்று நைச்யம் பாவித்து
இன்று கண்டு உயர்ந்தேன்– இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –என்று தேறி
நீ என்னை யுத்த பின் உன் சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 –என்று
போக்யதையில் ஆழங்கால் பட்டு
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர் அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –என்று
ததீய சேஷத்வ நிஷ்டையில் ஆழ்ந்து
வெள்ளைச் சுடர் விடுமுன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று தள்ளுற்று இரங்கும் இராமானுச என் தனி நெஞ்சமே -27-என்று
மீண்டும் நைச்யம் தலையெடுத்துப் பேசி
பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 – என்று ஹ்ருஷ்டமாய் அருளிச் செய்கிறார் –

———–

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

கீழ் கூறிய ஆழ்வார் -நாத முனிகள் -ஆளவந்தார் -இவர்கள் பர தேவதையாக வழி பட்ட கண்ணன் இடத்தில் –
அவருக்கு உள்ள ஈடுபாடு பேசப்படுகிறது –இந்த பாசுரத்தில் –

அமுதனார் -இங்கே முதுகிட்டு -போற்றிட -என்னும் சொல் அமைப்பாலே
முதுகிட்டமையால் பிரபாவத்தை அறிந்து -போற்றினதை உய்த்து உணர வைத்தார் –
போற்றிட வாணன் பிழை பொறுத்த -என்றமையின் போற்றின முக் கண்ணனுக்காக வாணன் பிழை
பொறுத்தமை தோற்றுகிறது
மூ வுலகும் பூத்தவனே என்று போற்றிட –
இந்த மூ வுலகு எனபது -பூ லோகம் -ஸ்வர்க்க லோகம்-பாதாள லோகம் என்னும் மூ வுலகைக் குறிப்பிட வில்லை –
எல்லா வுலகும் கண்ணன் படைப்பு ஆதலின் -ஆனவே அணைத்து உலகங்களையும் அடக்குவதற்காக –
கிருதகம்-அகிருதகம் -கிருதகா கிருதகம் –என்னும் மூ வகைப்பட்ட வுலகம் என்று கொள்ள வேணும் –
இந்த அண்டத்தையே -என்றதாயிற்று –
மூ வுலகும் பூத்தவனே -பொறுத்து அருள்க -எனபது சொல் எச்சம் -பிறப்பித்தவன் நீ -பிறந்தவர்கள் நாங்கள் –

தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே
அனுபவித்தோ அல்லது பிராயச்சித்தம் செய்தோ தீர்க்க வேண்டிய அபராதங்களையும் பகைவர் திறத்தும்
போக்கியும் போக்கி அவர்களை தூயராக்கிய தூய்மையை கருதி -தீர்த்தன் -என்கிறார் –
ஆபத்துக் காலத்திலேயே உதவிய கண்ணனது தூய்மையினை ஏத்தும் எம்பெருமானாரோ
எனக்கு ஆபத்து காலத்தில் உதவுவதற்காக சேமித்து வைத்த செல்வம் என்றார் ஆயிற்று –

———-

வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத வுறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –

வைப்பாய –இராமானுசனை –
மது சூதனையே ஆழ்வார் வைத்த மா நிதியாக கொள்வது போலே –
நல்லன்பர் எம்பெருமானாரையே வைப்பாய வான் பொருளாக கொள்கின்றனர் என்க —
எனக்கு எய்ப்பினில் வைப்பினை -பெரிய திரு மொழி – 7-10 4- – -என்றபடி
மற்ற நிதி , வைப்பு, எல்லாம் பயன் படுத்த பயன் படுத்தக் குறைந்து போகும்.
எம்பெருமானார் என்னும் நிதி அள்ள அள்ளக் குறையாது .

நல்லன்பர்
என்னைப் போல வஞ்ச நெஞ்சர் அல்லர் இவ்வன்பர் -குற்றம் அற்றவர் -என்றபடி –
இனி நல்லதான அன்பை உடையவர் என்னலுமாம் –
அன்புக்கு நன்மையாவது -வேறு பயன் ஒன்றும் கருதாமை

மனத்தகத்தே வைக்கும் –
அருமை தெரிந்து அன்பு பூண்டவர் ஆதலின் -சீரிய பொருளை செப்பிலே வைப்பது போலே
உள்ளே வைத்து பேணுகின்றனர் -என்க

எப்போதும் வைக்கும் –
அல்லும் பகலும் என்றபடி-
எக்காலத்திலும் வெளியே வைக்கத் தக்க பொருள் அன்றே இது –
எப்போதும் -அகிஞ்சனராகிய நம்மைக் காப்பவர் எம்பெருமானாரே என்று
ப்ரீதி உடன் இடைவிடாது நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்-எனபது கருத்து –

வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவன் –
வஞ்சிப்பது பிறரை மாத்ரம் அன்று -எம்பெருமானாரையே வஞ்சிக்க வல்லது என் நெஞ்சு என்கிறார் –
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் -திருவாய் மொழி – 5-1 3- –

————–

மொய்த்த வெம் தீ வினையால் பல்லுடல் தோறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முன நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன்
பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவிய
கைத்த மெய் ஞானத்து இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –

விஷயங்களுக்கே இடம் கொடுத்து –
வஞ்சகனாகவே இருந்தேன் -அந்நிலையிலே எம்பெருமானாரை வைப்பாய வான் பொருளாக
வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவதாக நடித்தேன் -நெஞ்சில் வைத்ததும் -வாழ்த்தியதும் –
பொய்யே யாயினும் எம்பெருமானார் தன் வண்மையினால் தன்னை உள்ளபடி காட்டி
இந்நிலையை உண்மை நிலை யாக்கி விட்டார் -அவர் காட்டக் கண்ட நான் இப்பொழுது உயர்ந்தவனாகி
விட்டேன் -என்கிறார் அமுதனார் இப்பாசுரத்தில் –
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி மெய்யே பெற்று ஒழிந்தேன் -திருவாய் மொழி – 5-1 1- –

அடை மொழி இட்டு காரனைய இராமானுசனை என்றோ கூறாது -இராமானுசன் என்னும் கார் தன்னையே -என்று
மேக மாகவே வருணிப்பது இவ் உபகாரத்தின் முக்கிய தன்மையை அமுதனார் கருத்தில் கொண்டு உள்ளார்
என்று நமக்கு புலப்படுகிறது –வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய் – 27- என்று மேலே இதனை
வெளிப்படையாக இவரே கூறுவதும் காண்க –

ஈஸ்வர விபூதியில் ஒருவனை ஹிம்சித்தாரை சொல்லுகிற பாபங்களுக்கு அவதி இல்லை -ஈஸ்வரனையும் –
ஈஸ்வர விபூதியையும் -அஞ்ஞா நாசியாலே -அறியாமை என்னும் வாளாலே -அழிக்கப் பார்க்கிறவர்கள் இறே-
புலை சமயம்-நீச சமயம்
நீச சமயங்கள் மாண்டன –என்பர் மேலும் –

வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் தன்னை வாழ்த்துபவனாக நடிக்கும் என்னை -உள்ளபடி தன்னைக் காட்டி
மெய்யே நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்தும்படி -உபகரித்ததில் வியப்பு ஒன்றும் இல்லை
என்னும் கருத்துடன் புலைச் சமயங்கள் நிலத்து அவிய கைத்த மெய்ஞ் ஞானத்தராக அமுதனார் அவரைக் கூறினார் என்க

———–

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுத்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – –

நின் அருளின் தன்மை-
இராமானுசா என்று விளித்து கூறி-நின் -என்று மேலும் -கூறுவதால் அருள் உடைய அவரது சிறப்பு தோற்றும் –
இறைவனது அருளின் தன்மை அறிவு எளிதாயினும் எம்பெருமானாரது அருளின் தன்மை அறிவு அரிதே –என்றபடி –
இறைவனது அருள் ஸ்வா தந்த்ரியத்தால் தடை படுவதற்கு உரியது –
எம்பெருமானார் அருளோ -தடை ஏதும் இன்றி என்றும் பெருகும் தன்மையது -என்க –
தானாக வந்து என் அல்லல்களை தீர்த்து தன் பேறாக என்னை ஏற்று அருளினார்-

வந்து நீ என்னை உற்ற பின் -என்னும் இடத்தில்
வந்தமையால்-சௌலப்யமும்
அல்லல் உள்ள இடத்தில் வந்தமையால்-வாத்சல்யமும்
என்னை உற்றமையால்-சௌசீல்யமும்-
தன் பேறாக ஹேது எதுவும் இன்றி -என்னை உற்றமையால்-ஸ்வாமித்வமும்
கருணை இராமானுசா -என்றமையால் வருவதற்கு ஹேதுவான கிருபையும் –
எம்பெருமானார் இடம் உள்ளமை தோற்றுகிறது –

உன் சீரே –அடியேற்கு இன்று தித்திக்கும் –
உன் சீர் –இறைவனுடைய சீர்கள் அல்ல –
உயிர்க்கு உயிராய் -ஆத்மாவுக்கு உயிராய் –தாரகமாய் -ஜீவனமாய்
இதனால் தாரகமும் போஷகமும் சீரே என்றது ஆயிற்று
தித்திக்கும் என்கையாலே போக்யமும் அதுவே என்றது ஆயிற்று –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -என்றார் நம் ஆழ்வார் –
அமுதனார் அவை எல்லாம் எம்பெருமானார் குணங்களே என்கிறார் –

அடியேற்கு
இயல்பான அடிமை இன்பம் உணரப் பெற்ற எனக்கு –
இனி சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு- என்கையாலே
கீழ் கூறிய சௌலப்யாதி குணங்களுக்கு தோற்று -அடிமை யானதும் தோற்றுகிறது –
இன்று –
எங்கோ என்றோ போய் சரீர சம்பந்தம் நீங்கின பிறகு பெரும் பகவத் குணா அனுபவம் அன்று –
இங்கேயே இப்பொழுதே இவ் உடலோடேயே ஆசார்ய குணம் அனுபவம் ஆகிற பெரும் பேறு
வாய்க்க பெற்றேன் என்று களிக்கிறார் –

————-

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –

மெய்க் குற்றம்
ஆளவந்தார் போன்ற முன்னவர் சொன்ன நைச்ய அனுசந்தானம் போன்றது -அன்று –
மெய்யாகவே உள்ள குற்றம்
சரீர சம்பந்தத்தால் வரும் அஹங்கார மமகாரங்கள் ஆகிற குற்றம் என்னலுமாம் –
அப்பொழுது வினையாம்-என்பதற்கு
வினையினால் உண்டான -என்று பொருள் கொள்ள வேண்டும் –
என்னால் செய்யப்பட்ட கர்மங்களினால் ஆகிய தேக சம்பந்தத்தால் உண்டான அஹங்காராதி தோஷத்தை
என்றது ஆயிற்று –

விளங்கிய மேகத்தை
சேதன லாபம் ஈச்வாரனுக்கு என்னுமா போலே , அமுதனார் கிடைக்கப் பெற்று எம்பெருமானார் உகந்தார்.
இதைத்தான் விளங்கிய மேகம் என்று எம்பெருமானரைக் குறிக்கிறார் அமுதனார்

மேவும் நல்லோர் –என்னை ஆட் கொள்ளுமே –
மேவுதல்-நிழல் போலே விட்டுப் பிரியாது இருத்தல்-
எம்பெருமானாரை மேவுகையே நலம்
அத்தகைய நலம் வாய்ந்தவர் நல்லோர்
அந் நலத்தினால் அவர் பால் இருந்த குறை -அறிவினாலோ பிறப்பினாலோ -நடத்தையினாலோ-
ஏற்ப்பட்டு இருபினும் அதுவும் நலமாகவே ஆக்கப்பட்டு -என்னை ஆட் கொண்டு விடுகிறது -என்கிறார் –

வாத்சல்யத்தால் நம்மை அறிவுறுத்தி -அவ் வழிப் படுத்துவதற்காகவே –
அந் நல்லோர் அறிவு பிறப்பு நடத்தைகளில் இழிவான தன்மைகளை தங்கள் இடம் ஏறிட்டு கொண்டு நம்மை அணைந்து உள்ளனர் –
ஈஸ்வரன் தானே தன் இச்சையால் தாழ விட்டுக் கொள்வது போலே –
இவர்களும் தம்மைத் தாழ விட்டுக் கொண்டு உள்ளனரே அன்றி -கர்மத்தால் இன் நிலைக்கு உட்பட்டவர்கள் அல்லர்
என்று அமுதனார் கருதுவதால்-
ஈஸ்வரனுடைய எளிமையினுக்கு அடியார்கள் ஆட்படுவது போலே –
இவர்கள் உடைய எளிமையினுக்கும் அவர் ஆட்படுகின்றார் -என்க
வம்ச பூமிகளை உத்தரிக்க கீழ் குலம் புக்க வராஹா கபாலரைப் போலே –
இவரும் நமக்நரை-உயர்த்த தாழ இழிந்தார் –சூரணை -84 – என்று ஆச்சார்ய ஹ்ருதயத்தில் கூறியபடி

இராமானுசனை மேவும் நல்லோர் -அஹங்காரத்துக்கு ஹேது ஆதலின் –
உயர் குடிப்பிறப்பும் – அறிவுடைமையும் -ஒழுக்கம் உடைமையும் -தள்ளத்தக்கன –
அஹங்காரத்துக்கு இடம் தராத இழி குலப் பிறப்பும் -அறிவின்மையும் -ஒழுக்கம் இன்மையுமே அமையும் என்று கருதுகின்றனர்

அவ் இயலவே -ஏகாரத்தை அக்குற்றமே அப்பிறப்பே என மற்றை இரண்டுடன் கூட்டுக –
இதனால் ஒவ் ஒன்றே ஆள் கொள்ளுவது புலனாம் –

———-

கொள்ளக் குறைவற்று இலங்கிக் கொழுந்து விட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடுமுன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று
தள்ளுற்று இரங்கும் இராமானுச என் தனி நெஞ்சமே -27-

இராமானுசன் என்னும் கார் -தன் வள்ளன்மையால் -தன்னைக் காட்டி நான் கண்டு -உயரும்படி செய்தது என்றார் கீழ்-
இங்கே காட்டியதோடு அமையாமல் -நெஞ்சத்திலே தன்னை நிரந்தரமாக நிலை நாட்டியதன் மூலம் –
அவ் வள்ளல் தன்மை கொழுந்து விட்டு ஓங்கினமை புலன் ஆகிறது -என்கிறார் –

வெள்ளை சுடர் –இழுக்கு இது என்று –
என் சிறுமையையும் -தன் பெருமையையும் -ஒப்பிட்டு பாராதே உட் புகுந்தது அவருக்கு இழுக்காய் முடியுமே
என்று பயப்படுகிறார் -தான் மிக உயர்வது பற்றி அமுதனார் மகிழ் உற வில்லை –
எம்பெருமானார் பெருமைக்கு மாசு நேர்ந்து விடல் ஆகாதே என்று கலங்குகிறார் –

தள்ளுற்று இரங்கும் தனி நெஞ்சமே –
அச்சத்தால் தள்ளாடிய நெஞ்சம் துணையாக -தேற்றுவார் இன்றி தத்தளிக்கிறது என்கிறார் –
இனி -எம்பெருமானார் தாமே வந்து வல் வினையை லஷ்யம் செய்யாது புகுந்த
நெஞ்சம் வேறு ஓன்று இன்மையின் –தனி நெஞ்சம் -என்றார் ஆகவுமம் –
இனி தமக்கு வரும் சீர்மைக்கு மகிழாது -பிறருக்கு நேரும் இழுக்குக்காக தள்ளாடும் நெஞ்சம்-
மற்று ஓன்று இன்மையின் –தனி நெஞ்சம்-என்றார் ஆகவுமாம்

————–

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 –

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன்
சொல் அளவில் கறை கண்டு கை விடாதே -நெஞ்சில் பொல்லாங்கு சோதித்து அறிந்த பின்னரே –
காய்ந்து கை விடுகிறான் கண்ணன்-
கைக் கொள்ளும் இடத்து -கழுத்துக்கு மேலும் அமையும் –
கை விடும் இடத்தில் அகவாயில் உண்டு என்று-என்று அறிந்தால் அல்லது கை விடான்-
தீங்கு நினைந்த -கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்-நெருப்பு அன்ன நின்ற நெடுமாலே – என்றாள்
ஆண்டாள் திருப்பாவை யிலே –
உன்னைச் சிந்தனையால் இகழ்ந்த இரணியனது அகல் மார்பம் கீண்ட என் முன்னைக் கோளரியே –
திரு வாய் மொழி – 2-6 6- –என்றார் நம் ஆழ்வாரும் –

கஞ்சனைக் காய்ந்த -என்றமையின்
சீறின-மாத்திரத்தில் ஆயுதம் இன்றி தானே எதிரியை அழித்தமை தோற்றுகிறது -சக்கரவர்த்தி திருமகன் போலே
ஆளிட்டு -அனுமனைக் கொண்டு –தென்னிலங்கையை தீக்கு இரையாக ஊட்டுதல் –
வாளியினால் மாளச் செய்தல் இல்லாமல் -தானே நெருப்பாக கஞ்சன் வயிற்றில் பற்றி நின்றும் –
குஞ்சி பிடித்து இழுத்து -மஞ்சத்தில் இருந்து -அக்கஞ்சனை கீழே தள்ளி -அவன் மேலே தானே விழுந்தும்-
வதம் செய்தமையால் –கண்ணன் தூயன் ஆனான் –என்னும் கருத்துடன் –காய்ந்த நிமலன்-என்றதாகவும் கொள்ளலாம்

பொன்னன் பைம் பூண் நெஞ்சிடந்து குருதியுக உகிர் வேலாண்ட நின்மலன் –பெரிய திருமொழி -3 4-4- –
என்னும் திரு மங்கை மன்னன் ஸ்ரீ ஸூக்தியையும் –
ஆளிட்டு செய்தல்–ஆயுதத்தால் அழிய செய்தல்-செய்கை அன்றிக்கே -ஆஸ்ரித விரோதியை தானே கை தொட்டு திரு உகிராகிற
வேலாலே அழிய செய்து -அத்தாலே வந்த சுத்தியை -உடையவன்-என்று அதன் வியாக்யானமும் அனுசந்திக்க தக்கன –

நிமலன் -என்பதால்-ஹேய பிரத்யநீகத்வமும் -குற்றம் ஒழிக்கும் பெற்றிமையும் –
காதலன்-என்பதால்-நல் குணம் உடைமையும் பேசப்படுகின்றன –

பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் –
பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே -திரு வாய் மொழி 10-4 3- – -என்றபடி..
திருவடிகளைக் கண்டு தலை மேல் புனைதற்கு காமுறாது கண்ணன் திறத்து பர தந்திரனான -உரியனான –தன்னை –
ஆத்மா ஸ்வரூபத்தை -ஸ்வ தந்திரனாக -தனக்கே உரியனாக -கொள்வது வஞ்சம் ஆயிற்று –
இதுவே ஆத்ம அபஹாரம் எனப்படும்
தன்னை உணர்ந்து ஆட் செய்தற்கு இசைபவரே எம்பெருமானாரைக் கிட்டுதற்கு அருகதை உடையவர் –என்பது கருத்து –

புகழ் அன்றி பரவ கில்லாது –
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி –
அமுதனாரோ குழந்தை மழலை மொழியிலே அடைவின்றிக் குழறுவது போலே அன்பு ததும்ப
எம்பெருமானார் புகழையே-என் வாய் புகழ்ந்து யேத்துமே -அன்றி -மற்று ஒன்றான –
பின்னை தன் காதலன் புகழையும்-பரவ கொள்ளாது -என்கிறார் –
இதனால் தனது சரம பர்வ நிஷ்டை வெளி இட்டபடி –

அவர் பாதம் அன்றிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணாது –
அவர் புகழ் அன்றி அவன் புகழ் பரவ கில்லாத நிலை எய்தப் பெற்றேன்-
என்னே எனக்கு இன்று கிடைத்த வாழ்வு -என்று வியக்கிறார் –
பிரதம பர்வமும் அறியாத நான்-எதிர்பாராது சரம பர்வத்தின் எல்லை நிலம் எய்தப் பெற்றது-
வியக்க தக்கது என்பது கருத்து –

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து-8-21–

December 9, 2021

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செம்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே
யிருத்தும் பரமன் இராமானுசன் எம் இறையவனே -8 –

பூதத் தாழ்வார் தம் விளக்குக்கு திரியாக சிந்தையை உருவகம் செய்தது போலே
பொய்கை ஆழ்வார் திரியாக எதையும் உருவகம் செய்ய வில்லை –

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடர் ஆழி நீங்குகவே யென்று -1-

அமுதனார் மறைக் குருத்தின் பொருளையும் செம் தமிழையும் ஒன்றாய் திரியாகத் திரித்து –
அவ் விளக்குக்குத் திரியை உபயோகப் படுத்தினதாக நயம் படக் கூறுகிறார் –

இருளைப் போக்கும் குருவாதலின்-எம்பெருமானாரை-பரமன் -என்கிறார் –
குருரேவ பரம் பிரம -குருவே பரம் பொருள் -என்றபடி -எம்பெருமானாரே பரமனாயினார் -என்க –
எம் இறைவன் –
தம்மைப் போன்ற சரம பர்வ நிஷ்டர்களையும் சேர்த்து -எங்களுக்கு இறையவன் -என்கிறார் –

மறை என்பது மறைத்துச் சொல்லும் வேதம். அதாவது வேதத்தின் தாத்பர்யம் நேராக
தெளிவாக இல்லாமல் மறைத்துச் சொல்லப்படுவதனால் இது மறை என்று சொல்லப்படுகிறது .
மறையின் குருத்து என்பது மறையின் சாரம் -அதாவது உபநிடதங்கள் .
இந்த உபநிடதங்கள் எம்பெருமானைப் பற்றி , அவன் கல்யாண குணங்கள் பற்றி தெரிவிக்கின்றன.
செந்தமிழ் பாடுவார் என்றும், பாலேய் தமிழர் என்றும், முதலாழ்வார்களை செந்தமிழ் பாடுவார் என்றிறே நாம் சொல்கிறோம்.

மரத்தில் குருத்து போலே -வேத மரத்தில் உண்டான -குருத்து முக்கியப் பகுதியான வேதாந்தம் -என்க –
வேதத்தின் பிரிவுகள் உலகில் -சாகை -கிளை களாகப் பேசப் படுதலின் வேதம் மரமாக உருவகம்-செய்யப் படுகிறது –
மகாதோ வேத வ்ருஷஸ்ய மூல பூதஸ் சநாதன-ஸ்கந்த பூதா ருகா த்யாஸ் தே சாகாபூதாஸ் ததாபரே -கீதை -15 1- – என்று
கிருத யுக வேதம்-பிரிவு படாத ஒரே வேதம் ஆதலின் பெரிய மரமாகவும் -கிருத யுக தர்மத்தை கூறும்
பகுதி மூலமாகவும் -அதாவது -வேராகவும்-ருக் முதலானவை அடித் தண்டாகவும் –
மற்றவை கிளைகளாகவும் -கூறப் படுவதும் இங்கு நினைவுறத் தக்கது –

வடமொழி வேதத்தின் பொருள் வேறு மொழியினால்
பேசப்படுகிறது என்று தோற்றாமல்-முதல் திருவந்தாதி -என்னும் செம்தமிழ் வடிவமாகவே
வேதம் அமைந்து இருக்கிறது என்று தோன்றுகிறது என்னவுமாம் –

கீதையில் – 10-11 கூறுகிறான் –அஹம் அஞ்ஞானம் தம நாசயாம் யாத்மா பாவஸ்த்த-ஞாநதீபேன- பாஸ்வதா -என்பது கீதை
எம்பெருமானார் பொய்கை ஆழ்வார் ஏற்றின திவ்ய ப்ரபந்தம் என்னும் பிரகாசிக்கும் விளக்கை
அணையாதபடி தன் அகத்தே வைத்து -மற்றவர்க்கும் அந்நிலையை உண்டாக்கி இருளைக் கடிகிறார்-
இத்தைக் கொண்டே ஸூத்ரங்களை ஒருங்க விட்டார் ஸ்ரீ பாஷ்யகாரர்

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின் குருத்தின் பொருளையும்
செம்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத் திரித்து அன்று எரித்த திரு விளக்கு காட்டும் பொருள்கள் சில–

அன்று அது அடைத்து உடைத்துக் கண் படுத்த வாழி இது நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் ——-2-
நெறி வாசல் தானேயாய் நின்றானை-4-
உலகளந்த மூர்த்தி யுருவே முதல் –14-
பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச் செற்றார் படி கடந்த செங்கண் மால்-20-
செய்ய மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த இறையான் நின்னாகத் திறை ——–28-
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர் –37—
பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு –45-
அரியா யிருந்தான் திருநாமம் எண்——-51–
நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-
நேரே கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ணனடிக் கமலம் தன்னை யயன் ——56-
நன்மாலை கொண்டு நமோ நாரணா வென்னும் சொன்மாலை கற்றேன் தொழுது ——57-
ஏழுலகத் தாயினவு மெண்டிசையும் போயினவும் சூழரவப் பொன் கணையான் தோள் ——-62-
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறு என் என் மேல் வினை —–64–
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –67-
ஆலன்று வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-
என்றும் விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய் அடலாழி கொண்டான் மாட்டன்பு —–71–
மூப்புன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி ———–75-
பழுதொன்றும் வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திருவேங்கடம் -76-
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றால் கெடுமா மிடர் ———77-
மா மேனி மாயவனுக்கு அல்லாது மாவரோ ஆள் -80-
வேங்கடமே லோரு நாள் மானமாய வெய்தான் வரை -82-
வராகத் தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை அடிக்களவு போந்த படி –84-
பொன்னடியே சூடுவேற்கு என்னாகில் என்னே எனக்கு –88-
ஏனத் துருவா யுலகிடந்த ஊழியான் பாதம் மருவதார்க்கு உண்டாமோ வான் —-91-
ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு -92-
மாயவனை யல்லால் இறையேனும் ஏத்தாது என் நா -94-
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் -99-
ஓரடியில் தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை -100-

—————

இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழோதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே – 9-

காணும் இதயம் -காணும் கண் எனபது போலக் காண்பதற்குக் கருவியான இதயம் என்றபடி –
இதயத்து இருள் -இதயத்தின் உள்ள பொருளைப் பற்றிய அறியாமை என்றபடி —
ஏற்றினது நிறை விளக்கு ஆதலின் இருள் மீள வழி இல்லை -என்பார் –கெட -என்றார்
ஞானம் என்னும் நிறை விளக்கு ஏற்றிய –
நிறை விளக்கு என்பதற்கு ஏற்ப ஞானம் -அதாவது பர ஞானம் -என்று கொள்க –
பர ஞானம் ஆவது -காணாத ஏக்கம் தீரக் கண்டு இன்புறும் வேட்கை முதிர்ச்சியால் ஏற்படும் சாஷாத் காரம் –
நிறை விளக்கு நேரே பொருள்களை தெளியக் காட்டுவது போலப் பர ஞானமும் –ஜீவ பரமான்ம தத்துவங்களை
நேரே தெளியக் காட்டுகின்றது என்க-

ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் -என்னும் பூதத்தாழ்வார் திரு வாக்கை -ஞானம் என்னும் நிறை
விளக்கு ஏற்றிய -என்று அமுதனார் பொருளோடு அச் சொல்லாலே பொன்னே போல் போற்றிக் கையாளுகிறார் –
சுடர் விளக்கு -என்பதை –நிறை விளக்கு -என்கிறார் –

திருவடி–
பெரியோர்களைத் திருவடிகள் என்று மதிப்பு தோன்றக் கூருவது மரபு –
வட மொழியிலும் தந்தையை -தாத பாதா-என்றும்
குருவை-ஆசார்ய பாதர் -என்றும் வழங்குவது உண்டு –
திரு மங்கை ஆழ்வார் -உம் தம் அடிகள் முனிவர் – என்று யசோதை கண்ணனைப் பார்த்து
பேசும் பொது தந்தையாகிய நந்த கோபரை -அடிகள் -என்று குறிப்பிடுவதாக காட்டி உள்ளார் –
உங்கள் முதலியார் சீறுவர் கிடீர் – என்பது அத் திருமொழிக்கு பெரிய வாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –
நம் ஆழ்வார் -மலர் மகள் விரும்பும் நமரும் பெறலடிகள் -என்று எம்பெருமானை குறிப்பிடுகிறார் –
அடிகள்-ஸ்வாமிகள் என்பது வியாக்யானம் –
உயர்வு பன்மையில் வரும் இச் சொல் ஒருமையிலும் வருவது உண்டு –
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -என்று நம் ஆழ்வாரும்
திருவடி தன் நாமம் மறந்தும் – என்று திரு மழிசைப் பிரானும் -ஒருமையில் வழங்கியது போல்-அமுதனாரும் -பூதத் திருவடி -என்கிறார்
ஆழ்வார் என்பதும் அடிகள் என்பதும் ஒரே பொருள் கொண்டவை என்பது அமுதனார் கருத்து –

கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து இசை பாடி யாடி யூழி தரக் கண்டோம் –என்றும்
மாதவன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே -என்றும்
இவ்வாறே திருவாய் மொழியிலும் வழங்கி உள்ளமை காணத் தக்கது –
இம்முறையில் சஞ்சாரம் செய்து கொண்டு இருந்தமையின் பூதம் என்னும் பெயர் ஆழ்வாருக்கு வழங்கல் ஆயிற்று

பண்டிப் பெரும் பதியை யாக்கிப் பழி பாவம்–கொண்டு இங்கு வாழ்வாரைக் கூறாதே -எண் திசையும்
பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள்-தீர்த்தகர ராமின் திரிந்து -என்பது இவரது உபதேசம் –

திரிந்து தீர்த்த கரர் ஆமின் -திரிவதனால் உங்கள் பாத தூளி பட்டுப் புனிதம் ஆகும்படி செய்யுங்கள் -என்பது கருத்து –
நாதனை நரசிங்கனை நவின்று எத்துவார்கள் உழக்கிய பாத தூளி படுதலால் இவ் உலகம் பாக்கியம் செய்ததே -என்று
பெரியாழ்வார் திரு மொழி – 4-4 6– என்பதும் காண்க –
இந்த உபதேசப் பாசுரத்தில் -பேர்த்தகரம் நான்குடையான் பேரோதித் திரிந்து தீர்த்த கரர் ஆமின் -என்னும்
சொல் தொடர் மிகவும் சுவை உடைத்து –
திசை அளப்பான் எண் திசையும் பேர்த்தகரம் நான்குடையான் திரு மேனி சம்பந்தத்தால் உலகம் தூயதா கிலது –
அதனை அவன் பேரோதித் திரிந்து அவனினும் பெரியோர்களாகிய நீங்கள் உங்கள் பாத தூளியினால்
புனிதம் ஆக்குங்கள் -என்று பாகவதர்களின் சிறப்பை உணர்த்திச் சுவை தருவதுதைத் துய்த்து இன்புறுக –

நல்லோர் மறையினைக் காத்து மன்ன வைப்பவர்
அந்த வேதத்தை காத்ததோடு அமையாமல் -நிலை நிற்கவும் செய்கிறார்கள் -என்றபடி –
இவ் இருள் தரும் மா ஞாலத்தில் இது செயற்கு அறிய செயல் என்பது தோன்ற -இந்த மண்ணகத்தே -என்றார் –
முழுமை வாய்ந்த ஆசார்யர் எம்பெருமானாரே –
ஆதலின் அவரே வேதத்தின் உள் பொருள் –
அவரைப் பற்றி நிற்றலே வேத மார்க்கம் என்றும்
மற்றவர்களை அங்கனம் பற்றி நிற்க செய்தாலே வேத மார்க்கத்தை பிரதிஷ்ட்டாபனம் செய்தல் -நிலை நிறுத்துதல் –
என்றும் சம்ப்ரதாயம் வல்லோர் கருதுகின்றனர் –
ஆகையால் ஸ்ரீ மத் வேத மார்க்க பிரதிஷ்டாப நாசாரியர் என்று எம்பெருமானார் சம்பந்தம் உடைய
ஆசார்ர்யர்களை இன்றும் உலகில் வழங்கி வருகிறார்கள் –
இதனையே அமுதனார் -நல்லோர் மறையினைக் காத்து மன்ன வைப்பவர் -என்பதனால்
அருளி செய்கிறார் என்பது உணரத் தக்கது-

இதயத்து இருள் கெட என்று ஆழ்வார் சாதித்தது சில காண்போம்.
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்தேன் நான்-1-
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை யாரோத வல்லார் அறிந்து-5-
ஏத்திய நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால் கா அடியேன் பட்ட கடை—-10-
வனதிடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று——16-
தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின் பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே அரு நரகம் சேர்வது அரிது—————–21–
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடும் மனம்—-27-
நமக்கென்றும் மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் ஓத்து————-38-
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39-
அறம் தாங்கும் மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் உள்ளு ——-44-
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–
நிற்பென்று உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து இளம் கோயில் கை விடேல் என்று –54-
பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்–65-
கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-
யானே இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன் பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-
அருகிருந்த தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர் வான் கலந்த வண்ணன் வரை-75-
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-
நரம் கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே அங்கண் மா ஞாலத்து அமுது–84-
அமுதன்ன சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட நன்மாலை ஏத்தி நவின்று –85-
அன்று கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் திருக் கோட்டி எந்தை திறம் -87-
உலகு ஏத்தும் ஆழியான் அத்தி ஊரான் -95-
அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-
மேலாய் விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன் அளவன்றால் யானுடைய வன்பு –100-

——————-

மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – 10-

மன்னிய பேரிருள் மாண்ட பின் –
பேராத திண்மை வாய்ந்த இந்தப் பெரிய இருள் -பொய்கையாரும் பூதத்தாரும் ஏற்றிய விளக்கின் ஒளியால் பேர்ந்து ஒழிந்தது –
பேரிருள் முன்பு பண்புத் தொகையாய்ப் பெருமை-வாய்ந்து இருந்தது-
இப்பொழுது அந்தப் பேரிருள் வினைத் தொகையாய் பேர்கின்ற இருளாய் மாண்டது –
இவ்விருளுக்கு ஆதி இல்லை -அந்தம் உண்டு -மன்னிய இருள் ஆதி இல்லாதது -பேர்கின்ற இருள் அந்தம் உள்ளது –
இருளை மாண்டதாகக் கூறவே மீண்டு வாராது அடியோடு ஒழிந்தமை பெற்றாம்-

கண்ணன் இடையன் -இவனும் இடை கழியில் சேவை சாதித்து -இடையன் –
இடைப்பட்டவன் -நெருக்கு உகந்த படியால் இடையன் –

பொன்னடி போற்றும் –
உலகமளந்த பொன்னடியில் ஈடுபாடு மட்டுப்பட்டு –தமிழ்த் தலைவன் பொன்னடியில் மிகவும் ஈடுபட்டுப் போற்றுகிறார் எம்பெருமானார் –
அச்சுதன் பதாம் புஜமாம் பொன் மீது வ்யாமோஹம் கொண்டு மற்றவைகளை தருணமாக
மதிக்கும் எம்பெருமானார் -தமிழ்த் தலைவன் பொன்னடியைப் போற்றுகிறார் –
இப்போது மா மலராளோடு கூடி ஆயனாய் எளிமை பட்ட பரம் பொருளைக் காட்டித் தந்த
பரம உபகாரம் அங்கனம் போற்றும்படி செய்கிறது –
மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற பொன் அம் கழலே தொழுமின் -மூன்றாம் திருவந்தாதி -89 –
என்று உபதேசிக்கிறார் பேய் ஆழ்வார்
அங்கனம் உபதேசித்து எம்பெருமானைக் காட்டும் தமிழ்த் தலைவன் பொன்னடிகளைப் போற்றுகிறார் எம்பெருமானார்

அன்பு பூண்டவர்
ஞான பக்தி வைராக்யங்களை ஆன்ம தத்துவத்துக்கு அணிகளாக வருணிக்கும் மரபு பற்றி-அன்பு பூண்டவர் -என்றார் –
இனி அன்பு பூண்டவர் -என்றது அன்பிலே பூட்சியை உடையவர்கள்-அதிலே ஊன்றி இருக்குமவர்கள்
என்னலுமாம் -என்று மணவாள மா முனிகள் உரைத்து இருப்பதும் இங்கு அறியத் தக்கது –

அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை யல்லால்-அரசாக எண்ணேன் மற்றரசு தானே -என்று
குலசேகர பெருமாள் அருளியதும் இங்கு அறியத் தக்கது –
பரதனும் குலசேகரப் பெருமாளும் சூடிய அடிமுடி -பகவான் திறத்து அவர்கட்க்கு உள்ள பாரதந்திரிய
செல்வத்தை புலப்படுத்தும் –
நீள் முடியாய் – பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யம் அவர்கள் கைப் பட்டு இருப்பதைக்-காட்டுகிறது –
அமுதனார் காட்டும் அவர்கள் சென்னியில் சூடிய அடி முடியோ –
பகவானைக் காட்டித் தரும் ஆசார்யனான எம்பெருமானார் அளவோடு நில்லாது –
அவர்க்கு அன்பு பூண்டவர் திறத்தும் அவர்கட்கு உள்ள பார தந்திரிய செல்வதை புலப்படுத்தும்
துளங்கு நீள் முடியாய் -பாகவத கைங்கர்யத்தின் முடிவு எல்லையாய் -பரம புருஷார்த்தமான
ஆசார்ய பக்த கைங்கர்ய சாம்ராஜ்யமே -அவர்கள் கைப் பட்டு இருப்பதைக் காட்டுகிறது

பகவத் பாரதந்த்ரியம் -செல்வம்
பாகவத பாரதந்த்ரியம் -ஆச்சார்ய பாரதந்த்ரியம் -பெரும் செல்வம் –
ஆச்சார்ய பக்த பாரதந்திரியம் மிகப் பெரும் செல்வம் –என்றது ஆயிற்று –
ஏனைய திரு உடையார் போல் அல்லாது-இனி மேலும் பெற வேண்டிய செல்வம்
இல்லாமையின் இந்நிலையிலேயே நிலை நிற்றல் பற்றி என்றும் சீரியர் -என்கிறார்-

———–

சீரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த
பாரியிலும் புகழ்ப் பாண் பெருமாள் சரணாம் பதுமத்
தாரியல் சென்னி யிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
காரிய வண்மை என்னால் சொல்ல ஒண்ணாது இக்கடலிடத்தே – 11- –

சீரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த
அமலனாதி பிரான் -என்கிற முதல் பாசுரத்திலே –
ஆதி -என்று காரணமான பரமாத்ம ஸ்வரூபமும்
விண்ணவர் கோன் -என்பதனால் நித்ய ஸூரிகள் சேவிக்கும் பர ரூபமும் –
வேம்கடவன் -என்பதனாலும் -அரங்கத்தம்மான் -என்பதனாலும் அர்ச்சாரூபமும் –
அமலன் நிமலன் -முதலிய சொற்களினால் ஹேய ப்ரத்ய நீகத்வம் -மாசு நீக்கித் தூய்மை படுத்துதல் -முதலிய குணங்களும்
கமல பாதம் -என்பதனால் திரு மேனிக்கு உண்டான அழகும் மென்மை குளிர்ச்சி முதலிய குணங்களும்
நீதி வானவன் -என்பதனால் -பரம பதமாகிய நித்ய விபூதி செல்வமும்
அடியார்க்கு என்னை ஆள் படுத்த -என்பதனால் லீலா விபூதி என்னும் இவ் உலக செல்வமும்-
சேரச் சொல்லப் பட்டு உள்ளமை காண்க –

பாண் பெருமாள்
ஆழ்வார்கள் பதின்மருள் குலசேகரரும் பாணருமே -பெருமாள் -என்று நூல்களில் வழங்கப் படுகின்றனர்
குலசேகரர்-அருளி செய்த திருமொழி -பெருமாள் திருமொழி -என்று வழங்கப் படுவது காண்க
இங்கே அமுதனார் -பாண் பெருமாள்-என்று வழங்குகிறார் திருப் பாண் ஆழ்வாரை –
இவரை அடி ஒற்றி இவர் குலத்தவரான ஐயங்கார் திருவரங்கத் தந்தாதியில் -அருள் பாண் பெருமாள் -என்கிறார் –
வேதாந்த தேசிகன் முனி வாஹன போகத்தில் -கண்ணனையே கண்டு உரைத்தக கடிய காதல் பாண் பெருமாள் -என்று
அருளி இருப்பதும் அறியத் தக்கது

பாணனார் திண்ண மிருக்க இனி இவள் நாணுமோ -பெரிய திரு மொழி – 8-2 2- – என்னும்
திரு மங்கை மன்னன் திரு வாக்கும்
இங்கு பாணனார் ஆகிறார் சேதனருக்கு ஸ்வா தத்ரியத்தால் வந்த மறத்தைப் போக்கி –
சேஷத்வ ஞானத்தை உணர்த்தி சேர விடும் ஆசார்யன் இறே -பாணனார் -என்கிறாள் காணும் இவள் –
என்பது வியாக்யான ஸ்ரீ ஸூக்தி –
வேதாந்த தேசிகன் -அமலன் -என்கிறது மல பிரதிபடன் -என்றபடி -இத்தால் மோஷ ப்ரதத்வம் சொல்லிற்று ஆயிற்று –
என்று முனி வாஹன போகத்திலே அருளி செய்துள்ளமை காண்க

இராமானுசன் தன்னை சார்ந்தவர் தம் காரிய வண்மை –
அரங்கத் தம்மான் தன்னைக் காட்ட பட்டதனால் கண்டு வாழ்ந்தார் பாணர் –
பாணர் அடி முதல் முடி வரை தாம் கண்டதை பாட்டினால் காட்ட -எம்பெருமானார் கண்டு
பிறருக்கும் அரங்கத் தம்மானுடைய அவ் அரும் கட்சியை அப் பாட்டினாலேயே காட்டிக் கொடுத்தார் –
அரங்கனை தமக்கு காட்டிய பாணர் சரணங்களை தலை மேல் புனைந்தார் எம்பெருமானார் –
அத்தகைய எம்பெருமானார் பாணர் பாட்டினாலேயே அரங்கனை காட்டித் தருதலின் -ஆசார்யராகிய அவரையே
தமக்கு சார்வாக கொண்டனர் சில சால்புடையோர் –
அவர்கள் அங்கனம் கொண்டதோடு ஆச்சார்யா அபிமான நிஷ்டையில் வழுவாது -ஒழுகி நிலை நிற்றல்
அமுதனாருக்கு மிக்க வியப்பும் நயப்பும் தருகிறது –

இக்கடல் இடத்தே இராமானுசன் தன்னை சார்ந்தவர்
பகவானை பற்றுவதற்கு கூட இசைவார் இல்லாத இவ் உலகிலே அதனுடைய
எல்லை நிலத்தளவும் வந்து எம்பெருமானாரைப் பற்றி நிற்கும் பெற்றிமை வாய்ந்தவர்கள் என்றது ஆயிற்று –

காரியல் வண்மை -என்றுமொரு பாடம் உண்டு
அப்பொழுது காரினுடைய இயல்பை உடைத்தான வள்ளன்மை என்று பொருள் படும் .அதாவது
மேகம் நீர் நிலம் என்ற வேறுபாடு இன்றி மழை பொழிவது போலே எம்பெருமானாரை சார்ந்தவர்களும்
வேண்டுபவர் வேண்டாதவர் என்ற வேறு பாடு இன்றி எம்பெருமானார் திவ்ய குணங்களை பொழியும் வள்ளன்மை -என்றபடி –

——–

இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது
அடங்கும் இதயத்து இராமானுசன் அம் பொன் பாதம் என்னும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத்
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே —12-

இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் –
இடம் என்று பொதுப்பட சொல்லுகையாலே இவ் உலகினையும் சரி -விண் உலகினையும் சரி –
இவர் கீர்த்தி எல்லா இடங்களையும் தன்னுள் கொண்டமை புலனாகிறது
மகா விஷ்ணு போன்றது பக்தரான திரு மழிசை பிரான் கீர்த்தியும்
விஷ்ணு வ்யாபிப்பான் -இவர் கீர்த்தியும் எங்கும் உளதாய் இருக்கிறது

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே உன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை -நான் முகன்திருவந்தாதி – 5-

இவருடைய மதியைத் -துய்ய மதி -என்று மணவாள மாமுனிகள் போற்றிப்-புகழுகிறார் உபதேச ரத்ன மாலையிலே –

இடம் கொண்ட கீர்த்தி -விரிவடைந்த கீர்த்தி எனினுமாம்
இவர் சொன்னபடி எம்பெருமான் தான் இருக்கும் இடத்தைக் கொண்டமையால் வந்த கீர்த்தி என்னலுமாம் –
மணி வண்ணா நீ கிடக்க வேண்டும் பைந்நாகப் பாய் படுத்துக்கொள் -என்று
இவர் சொன்ன படி-திரு வெக்காவில் எம்பெருமான் மீண்டும் இடம் கொண்டு -சொன்ன வண்ணம் செய்த பெருமாள்-என்று
பேர் பெற்று விளங்கும் ஐதிஹ்யம் காண்க –

இனி எம்பெருமான் தான் கோயில் கொண்டு உள்ள ஊரகம் பாடகம் திரு வெக்கா என்னும்-தளங்களை விட்டு –
இவர் திரு உள்ளத்திலே இடம் கொண்டமையால் வந்த கீர்த்தியை சொல்லலுமாம் –
நின்றதும் -இருந்ததும் -கிடந்ததும் -என் நெஞ்சுளே -திருச் சந்த விருத்தம் -64 -என்றது காண்க

இனி இடம் கொண்ட கீர்த்தியை –
மழிசைக்கு அடை ஆக்கலுமாம் –
உலகும் மழிசை யும் புகழ்க் கோலால் தூக்க உலகு தன்னை வைத்தெடுத்த பக்கத்தினும்
மழிசையை வைத்து எடுத்த பக்கமே வலிதான புகழ் உடைமை திரு மழிசைக்கு கூறப்பட்டதாகிறது –
உலகின் மகிமைகளை எல்லாம் தன்னுள் கொண்டது திரு மழிசை -என்க-
மஹீசார ஷேத்ரம் மழிசை எனப்படுகிறது –

இணை அடிப் போது அடங்கும் இதயம் –
ஒரு சிறிய மலரிலே இரண்டு பெரிய மலர்கள் அடங்குகின்றன –
இதய மலர் சிறிது –இணை அடிப் போதுகள் பெரியன-
அழகிய இரண்டு திருவடிகளையும் இதயத்திலே வைத்து த்யானம் செய்கிறார் எம்பெருமானார் -என்றபடி .

அம் பொன் பாதம் –
தங்கப் பாத்தரத்தை எவர் தீண்டினும் மாசு படாது –
எம்பெருமானார் பாதத்தை எவர் பற்றினாலும் குற்றம் அன்று –
சர்வ சமாஸ்ரயநீயம்-என்ற படி

இறைஞ்சும் திரு -இறைஞ்சுதலே திரு என்க-
எம்பெருமானாரை இறைஞ்சுதலே செல்வம் என்றது ஆயிற்று –
எம்பெருமானை இறைஞ்சுதலும் செல்வமே யாயினும் -கஜாந்தம் ஐஸ்வர்யம் -என்று-
யானையைக் கட்டித் தீனி போடுவதை இறுதியாகக் கொண்டது ஐஸ்வர்யம் -என்பது போலே-
ஆசார்யன் அளவும் இறைஞ்சுதல் சென்றால் தான் செல்வம் ஆகும் -என்க –

முனிவர் –
எம்பெருமானாரையே இடை விடாது மனனம் பண்ணும் இயல்பினர் –
எம்பெருமானார் இதயத்திலே மழிசைக்கு இறைவன் இணை அடிப் போதுகளையே
த்யானிப்பது போலே – இத் திருவாளர்கள் இராமானுசன் அம் பொன் பாதத்தையே நினைந்த-வண்ணம் இருக்கின்றனர் -என்க –

திருமழிசைப்பிரான் மறந்தும் புறம் தொழா மாந்தர் என்று எம்பெருமான் விஷயத்தில் சாதித்தார்.
இவர் எம்பெருமானார் மிசை பற்றுள்ளவர் விஷயத்தில் மறந்தும் புறம் தொழேன் என்கிறது இங்கு
திருமுனிவர்க்கு அன்றி என்று சொற்களால் புலப்படுவது குறிப்பிடத்தக்கது

————-

செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் செம் தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீர் ரங்கத்
தய்யன் கழல்க்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறு எனக்கே – 13-

செய்யும் மறைத் தமிழ் மாலையும் –
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் இருவகை மாலைகளை அரங்கத்து ஐயனுக்கு சமர்ப்பிக்கின்றார் –
ஒருவகை -திரு துழாய் மாலை
மற்று ஒரு வகை -தமிழ் மாலை
ஆண்டாளும் அரங்கனுக்கு பா மாலையும் பூ மாலையும் சமர்பித்து உள்ளாள்-
ஆயின் அப்பூ மாலை அவளால் தொடுக்கப் பட்டது அன்று -சூடி சமர்பிக்கப் பட்டது தான்
திருத் துழாய் மாலையோ தொண்டர் அடி பொடி ஆழ்வார் தம் கையினாலேயே தொடுத்தது –ஆதலின் –
செய்யும் துளப மாலை -என்றார் –

ஆழ்வார் தாம் தொண்டர் ஆனமைக்கு ஏற்ப கழலில் அணிவித்ததும்
அவர் பத்தி கண்டு மயங்கிக் கிடக்கிறான் போலும் ஐயன் அரங்கத்திலே -இனி ஆழ்வார் இடம் உள்ள மதிப்பினால்
மாற்றாது அங்கனமே கழலில் அணிந்து இருந்தான் ஆகவுமாம்-
இனி கழலில் அணிந்தது உப லஷணமாய்-தோள் இணை மேலும் -திருவாய் மொழி -1 9-7 – -என்ற
பாசுரப்படி அந்த அந்த-அவயவங்களிலே புனைந்தான் ஆகலுமாம் –

கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்த்
தொண்டர் இட்ட பூம் துளவின் வாசமே
வண்டு கொண்டு வந்தூதுமாகிலே -பெரிய திருமொழி -11 1-9 – –

இங்கு மிக்க சீர்த் தொண்டர் எனபது -தமக்கு ஒரு பயன் கருதாது -பரிவுடன் அரங்கனை பரிந்து-காப்பவரைக் குறிக்கிறது –
பூம் துளவு அவர் இட்டதாயின் வருந்த வேண்டியது இல்லை –
பிரிந்து வருந்தும் தலைவிக்கு தான் இன்பம் காண வில்லையே என்பதனால் அன்று ஏக்கம் –
தான் பிரிந்த நிலையில் தலைவனை அருகில் இருந்து பாதுகாப்பார் யாரும் இல்லையே
என்பதனால் ஆயது அது –மிக்க சீர் தொண்டர் பக்கத்தில் இருப்பது தெரிந்தால் அவ் ஏக்கம் நீங்குகிறது என்க-
அத்தகைய மிக்க சீர் தொண்டர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரே

பசும் துளவ மாலை
துழாய் வாடும் -இவ் ஆழ்வார் கைப் படினோ-புதுக் கணிக்கிறது திருத் துழாய் -அதற்க்கு காரணம்
அரங்கனுக்கு அணி செய்ய திருத் துழாய் வடிவத்தில் நித்ய ஸூரியே வந்து இருப்பதால் –
தனக்கு தொண்டு பட்ட ஆழ்வார் உடைய திருக் கரம் பட்டதும் புத்துணர்ச்சி ஏற்பட்டு புதுக் கணிப்பு உண்டாகிறது –
அது பசுமை நிறத்தாலே வெளிப்படுகிறது -அது தோன்ற -பசும் துளவ மாலை -என்கிறார் –

அரங்கனுக்கு இவர் துளவ மாலை அணிவித்தாலும் இவர் செய்வது அரங்கன் தொண்டு அன்று -துளவத் தொண்டே –
அதாவது திருத் துழாய் ஆழ்வாருக்கு புரியும் தொண்டே எனபது அறிய தக்கது –
துளவத் தொண்டரே -இவர் -துளவத் தொண்டாய் -என்று இவர் கூறிக் கொள்வது காண்க –
திருத் துழாய் ஆழ்வாருக்கு புரியும் தொண்டு அவருக்கு ஆள் பட்ட தொண்டர் அனைவருக்கும்
புரியும் தொண்டாய் தலைக் கட்டும்

செம் தமிழில் பெய்யும் மறைத் தமிழ் மாலை
மறையின் குருத்தின் பொருளையும் செம் தமிழையும் ஒன்றாக திரித்தி பாடினார் -பொய்கை ஆழ்வார் –
நான் மறை செம் பொருளை செம் தமிழால் அளித்தார் பாண் பெருமாள்-
இவரோ மற்று ஒரு பாஷையாய் இராது தமிழாகவே ஆகி விட்ட வேதம் என்னும்படியான
தமிழ் மாலையை தொடுத்து அளிக்கிறார் –

பேராத சீர் அரங்கத்து ஐயன் –
பேராத -நீங்காத
சீர் -கல்யாண குணங்கள்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப் பிரான் -என்றார் நம் ஆழ்வாரும்
இனி சீர் ரங்கம் என்பதை ஸ்ரீ ரங்கமாக கொண்டு -அத் திரு வரங்கத்துக்கு -பேராத – என்பதை
அடை மொழி யாக்கலுமாம் -பேராத -நகராத
திரு அயோத்யையில் இருந்து ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஸ்ரீ ரங்க விமானத்தை எழுந்து அருளப் பண்ணிக்
கொண்டு போகும் பொழுது இங்கு காவேரிக் கரையிலிருந்து விபீடணற்கு பெறாமல் இருந்தது பிரசித்தம் –
இனி சத்ய லோகத்தில் இருந்தும் -அயோத்திக்கும் -அங்கு இருந்து விபீடணன் மூலம் காவிரி ஆற்று இடை க்கும்
பேர்ந்து வந்தது போலே -இங்கு இருந்து வேறு ஓர் இடத்துக்கு எக்காலத்தும் பெறாமல் இருத்தல்
பற்றி –பேராத சீர்ரங்கம் -என்றார் ஆகவுமாம்-

அவனும் சீர் அரங்கம் விட்டுப்பேராமல் இருக்க
தானும் சீர் அரங்கம் விட்டுப் பேராமல் மங்களா சாசனம் செய்தார் அன்றோ

தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அருளியதையே முன் பின்னாக மாற்றி
அரங்கத்து ஐயன் – என்று அருளி செய்கிறார் அமுதனார்

பரன்
சேஷித்வத்தின் எல்லை நிலையில் இருந்து தனக்கு மேற்பட்டவர் இல்லாமையாலே
எம்பெருமானை –பரன் -என்பது போலே -சேஷத்வத்தின் எல்லையில் இருந்து தனக்கு
மேம்பட்டவர் இல்லாமையாலே தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை -பரன் -என்கிறார் –

பரன் தாள் அன்றி ஆதரியா மெய்யன்
ஆழ்வார் தொடர்களுடைய அடிப் பொடியை ஆதரித்து அதனையே தனக்கு
நிரூபகமாக கொண்டார் -எம்பெருமானார் அடிப் பொடியின் அடியை அன்றி -ஆதரியாதவர் ஆனார் –
பரனாக ஆழ்வாரையே கொண்டமையின் –அவன் தாள் அன்றி
பரன் என்று பேர் கொண்ட எம்பெருமான் தாள்களையும் ஆதரியார் -என்னுமாம் –
ஆழ்வார்கள் அனைவரும் ஒரே சமஷ்டியாய் -ஒரே தரத்தினராய் இருத்தலின் – அவர்கள் திருவடிகளையும் –
அவர்கள் தந்த ஞானத்தால் உய்ந்த அவர்களுடைய சீடரான நாதமுனி முதலிய ஆசார்யர்கள் உடைய திருவடிகளையும்
எம்பெருமானார் ஆதரிப்பது இதற்கு முரண் படாது -என்க –

மெய்யன்
பரன் தாள் அன்றி ஆதரியாதது போலே மெய்யை அன்றி ஆதரியாதவர் எம்பெருமானார் -என்க –
பொய்யை சுரக்கும் பொருளை துரந்து மெய்யைப் புரக்கும் இராமானுசன் -79 என்பர் மேலும் –

சரணே கதி வேறு எனக்கு –
வேறு கதி -தனி சிறப்புற்ற பேறு
எம்பெருமானுடைய திருவடி -பேறு
ஆச்சார்யராம் எம்பெருமானாருடைய திருவடியோ-சிறப்பு வாய்ந்த வேறு பேறு -என்று உணர்க –
திருத் துழாய் ஆழ்வாருக்கு ப்ராப்யம் அரங்கத்து ஐயன் திருவடி –
அணிவிப்பவரான ஆழ்வாருக்கு பிராப்யம் திரு துழாய் ஆழ்வாருக்கு அடிமை புரிவதால் உகக்கும் தொண்டர்கள் அடி
எம்பெருமானாருக்கு ப்ராப்யம் பரரான ஆழ்வாருடைய திருவடி
அமுதனார்க்கு ப்ராப்யம் ஆசார்யரான எம்பெருமானார் திருவடி-என்றது ஆயிற்று-

திருமாலை அறியாதார் திருமாலை அறியார் என்று வழங்குவது காண்கிறோம்.
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணைப் பணியும் என்றும்,
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம், என்றும்
அடைதற்கு உரியவன் அரங்கனே என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லி ,
அய்யனே அரங்கனே உன் அருள் என்று அவன் அருளே உபயம் என்று நிச்சயித்து ,
வாழும் சோம்பர் என்று அவன் அருளையே நோக்கி இருப்பது ஆத்ம ஸ்வருபம் என்று நிர்ணயித்து ,
அதற்க்கு மேலில் பாட்டுக்களில் எல்லை நிலமான ததீய சேஷத்வதைச் சொல்லி அருளிய செந்தமிழ் அன்றோ இவரது .
தமது சொற்களை மலராகவும் நூலை மாலையாகவும் கொண்டாரிறே இவர் .
பெய்யும மறைத் தமிழ் மாலை –செய்யும் சங்கத் தமிழ் மாலை என்னுமா போலே

————–

கதிக்குப் பதறி வெம்கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்க தவம் செய்யும் கொள்கை ஆற்றேன் கொல்லி காவகன் சொல்
பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமானுசனைச் சொர்விலனே -14 –

கலை சொல் பதிக்கும் கவி என்று கூட்டுக
சாஸ்திர சொற்களை அமைத்து திரு மொழி அருளி செய்து உள்ளாராம் குலசேகர பெருமாள் –
திருக் கண்ண புரத்தில் உள்ளவர் பேசும் வார்த்தைகளிலே சாஸ்திரங்கள் இலங்கும் என்கிறார்
திருமங்கை ஆழ்வார் –கலை இலங்கு மொழி யாளர் -8 1-1 – -என்பது அவர் திரு மொழி
கட்புலன் ஆகாதவைகளான பகவானுடைய ஸ்வரூப ரூப குண விபவங்களை சாஸ்திரங்கள் நமக்கு தெரிவிப்பது போலே –
அவர்கள் பேசும் வார்த்தைகளும் நமக்கு அவற்றை உணர்த்து வனவாய் இருத்தலின் –
கலை இலங்கு மொழி யாளர் –என்றார் ஆழ்வார் –
அங்கனமே குலசேகர பெருமாள் திவ்ய பிரபந்தத்திலும் சொற்கள் சாஸ்திரம் போலே அவற்றை அறியுமாறு செய்தலின்
கலை சொல் என்று வருணிக்கிறார் அமுதனார்

இடம் அறிந்து ரத்னங்களை பதிப்பது போலத் தக்கவாறு பெருமாள் திரு மொழியில் சொற்கள் பதிக்கப் பட்டு உள்ளன
பதிக்கும் என்பதால்
சொல்லை ரத்னமாகவும் -கவியை ஆரமாகவும் -உருவகம் செய்தமை போதரும் –ஏக தேச உருவகம்
ஹாரத்தில் ரத்னங்கள் போலத் தமிழ் மாலையில் சொற்கள் பதிக்கப் பட்டு உள்ளன –

கலைச் சொல் என்று கொண்டு கூட்டாது இருந்தபடியே கலை என்பதைக் கவிக்கு அடையாக்கிப் பொருள் கூறலுமாம் –
கலையாகிய கவி என்று இரு பெயரொட்டுப் பண்புத் தொகை-சாஸ்த்ரமான பெருமாள் திரு மொழி -என்றபடி –
இதனால் கொல்லி காவலன் தனது அனுபவம் உள் அடங்காது -வெளிப்படும் தன சொற்களை ரத்னங்களைப் பதித்து
வைத்தால் போன்று அழகு பட இணையக் கொத்து வைத்த சாஸ்திர ரூபமான கவி -என்றதாயிற்று –

வன்பெரு வானகம் உய்ய , அமரருய்ய ,மண்ணுய்ய ,மண்ணுலகில் மனிசருய்ய ,
துன்பமிகு துயர்கல அயர்வொன்றில்லாச் சுகம் வளர –அன்பொடு தென் திசை நோக்கிப் பள்ளி கொள்ளும்
வ்யூஹ நிலையின் திருக் குணமான சொஹார்தத்தை இங்கு சொல்கிறது
இருளிரிய சுடர்மணிகள் என்றும், இனிதாக திருக்கண்கள் வளர்கின்ற –என்றும் அவனுடைய ரூபத்தை சாதித்தருள்கிறார்.
அடுத்த திருமொழியில் தேட்டறும் திரள் என்று ததீய சேஷத்வத்தை பரக்கப் பேசுகிறார்.
அரசாக எண்ணேன் மற்றரசுதானே என்று அனந்யார்ஹ சேஷதவத்தை அறிவிக்கிறார்.
மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும் இவ்வையம் என்று இந்த உலகதிதின் நிலையில்லாத் தன்மையை குறிப்பிடுகிறார்
இவ்வான்மாவுக்கு எம்பெருமானுக்கும் நமக்கும் இருக்கும் சம்பந்தம் பல த்ருஷ்டாந்தங்கள் வாயிலாக கொடுதருள்கிறார்.
தருதுயரம் என்னும் திருமொழ்யில் . இதில் தலைவன், தாய், மருதத்துவன் என்று பல உறவுகள் கொண்டு நிரூபித்தருள்கிறார் இவ்வாழ்வார்.
அவனைத் தவிர வேறொன்றும் வேண்டாம் என்று ‘நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே ‘என்பதைக் காணலாம்.
இதற்க்கு எல்லாம் திலதமாய் , எம்பெருமான் ஈசன் திருமலையில் ஏதேனும் ஆக இருக்கும் நிலையை பாரிக்கிறார்
எம்பெருமான் சம்பந்தமே பேறு என்று இருப்பவர்கள்
‘படியாய்க் கிடந்து உன் பவள வாய்க்காண்பேனே ‘ என்று கைங்கர்யததில் களை அறுக்கிறார்

பாடும் பெரியவர் –
பெருமாள் திருமொழியை அனுசந்திக்கும் போது-கவி இன்பத்துடன் அது தரும் இறை உணர்வின் இன்பமும் சேர்ந்து
பேரின்பக் கடலில் திளைத்துப் பாடத் தொடங்குகிறார்கள் ரசிகர்கள் –
அவர்களைப் பாடும் பெரியவர் -என்கிறார் அமுதனார் –
இனி -இன்னிசையில் மேவிச் சொல்லிய இன் தமிழ் — 6-10 – என்றபடி
இன்னிசை மேவியதாலின் பாடுகின்றனர் என்னலுமாம் –
பாடுவதே பெருமை என்க –

பாதங்களே துதிக்கும் பரமன்
குலசேகரப் பெருமாள் அடியிலும் இடையிலும் முடிவிலும் முறையே
பொன்னி வருடும் அடியையும்-1-11
முடி மேல் மாலடியையும் –7 11- –
அரசு அமர்ந்தான் அடியையும் – 10-7 -சொல்லி
நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவதையே முதலிலும் இறுதியிலும் பலனாக அமைத்து துதிக்கிறார் –

அடித் துதியான கலை கவியாம் சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர்க்கு தொண்டர் தொண்டரான
எம்பெருமானாரோ
அவர்கள் பாதங்களையே துதிக்கிறார் –
அதனால் தொண்டர்கள் திறத்துக் கொண்ட ஈடுபாட்டில் தமக்கு மேற் பட்டார் எவருமே இல்லாத நிலையை
எய்தினமையின் எம்பெருமானாரை பரமன் -என்கிறார் – பரமன் -தனக்கு மேற் பட்டவர் இல்லாதவன்

————–

சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும்
பாராதவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே -15 –

அழகை மட்டும் கண்டு அவனது ரஷிக்கும் ஆற்றலைக் காணாமையின் அச்சத்தில் ஆழ்ந்தவர் எழுந்து இலர் –
பான்மை -இயல்பு
இறைவனாலும் போக்க ஒண்ணாதபடி அன்பினால் விளைந்த-அச்சம் ஆழ்வாரது இயல்பு
விஷ்ணு பிரவணர்-ஈடுபட்டவர் ஆழ்வார் -விஷ்ணு சித்த பிரவணர் எம்பெருமானார் –
எனக்கு என்ன தாழ்வு இனியே
இனி-சேராமை உறுதிப் பட்ட பின்பு
சாரா மனிசரை சேர்ந்தால் அன்றோ தாழ்வு வாரா நிற்கும்
சாரும் மகான்களை சாராதவரை சேராமையாலே எனக்கு தாழ்வு வர வழி இல்லை அன்றோ –
அதுவே நான் பெற்ற பேறு என்கிறார் –

————-

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –

மறை தாழ்ந்து தலம் முழுதும் கலியே ஆள்கின்ற நாள்
கலி புருஷன் தலம் முழுவதும் தன் ஆட்சியை பரப்பி நிலை நாட்டிக் கொண்டு விட்டான் -இதனைக் காட்டுகிறது –
மறை தாழ்ந்து தலம் முழுதும் கலியே ஆள்கின்ற நாள்-என்னும் சொற்தொடர் –
மழை பெய்து நெல் விளைந்தது என்னும் இடத்து போலே –
தாழ்ந்து ஆள்கின்ற நாள் –
என்னும் இடத்துத் தாழ்ந்ததனால் ஆள்கின்ற நாள் -என்று பொருள் படுத்தல் காண்க
கலியே –
ஏகாரம் பிரிநிலை கண் வந்தது -மறை ஆட்சி முழுதும் மறைந்தது -கலி ஆட்சி காலூன்றி நின்றது –
இருளும் ஒளியும் சேர்ந்து இருக்க இயலாது அன்றோ –

அளித்தால் ஆவது –
கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று திருவாய்மொழி -5 2-1 – – கலியை கெடுத்து உய்யும் வழியை புலப்படுத்தும்
மறையை தாழ்வுற்ற நிலையிலிருந்து மேம்பட உயர்த்தி அது காட்டும் வீட்டு நெறிக்கண் செலுத்துதல்-
வீடளிப்பான் மண்ணின் தலத்து உதித்து உய்மறை நாலும் வளர்த்த -96 – என்று மேலே இவரே கூறுவதும் காண்க –

காண்மின் –
இது அனுபவத்திலே கண்ட உண்மை அன்றோ -நான் உபதேசித்து தெரிந்து கொள்ள
வேண்டும்படி யாவோ இருக்கிறது என்கிறார் –
எனவே நீங்கள் ஒவ் ஒருவரும் -எனக்கு என்ன தாழ்வு இனி -என்னும்படி என்னைப் போலே
அடியார் அளவும் பெருகும் வண்ணம் எம்பெருமானார் இடம் ஈடுபடுவதே அடுப்பது என்னும்
கருத்தும் தோற்றுகிறது-இது குறிப்பு எச்சம் –

அரங்கர் -என்று பன்மையில்
முக்தி அடைந்தவர்கள் தங்கள் இன்பத்துக்கு போக்கு வீடாக எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்யப்
பல வடிவங்கள் கொள்வது போலே -அரங்கனும் ஆண்டாள் மீது உள்ள காதல் மிகுதியால்
ஸ்ரீ ரங்கத்தில் உள்ள வடிவோடு அமையாது அவளது அவதார ஸ்தலமான ஸ்ரீ வில்லிபுத்தூரிலும்
வட பெரும் கோயில் உடையான் வடிவம் கொண்டு காத்துக் கிடத்தலின் அரங்கர் -என்று பன்மையில் கூறினார்
தலையரங்கம் -இரண்டாம் திருவந்தாதி – 79- -என்றபடி திருவரங்கமே தலைமையகமாகவும்
ஏனைய திவ்ய தேசங்கள் கிளை யகங்களாகவும்-அரங்கனே எல்லா இடங்களிலும் எழுந்து அருளி இருந்து
அருள் புரிவதாகவும் கூறப்படும் சம்ப்ரதாயமும் இங்கு உணரத் தக்கது –

இயல்பாய் அமைந்த கூந்தல் மணத்துக்கு மேலே -நாடாத மலர் -திருவாய் மொழி – 1-4 9- –எனப்படும்
ஆத்ம புஷ்பத்தின் உடைய ஆசார்ய பாரதத்ரியம் என்னும் மணமும் கூடவே ஆண்டாள் சூடிய மாலை
நிகரற்ற நறு மணம் கமழுவது ஆயிற்று
இங்கனம் செழும் குழல் மேல் மாலைத் தொடை தென்னரங்கற்கு ஈயும் மதிப்பு உடையவள் ஆனாள் ஆண்டாள் –
இதனையே -தன்னுடைய திருக் குழலிலே சூடி வாசிதமாக்கி கொடுத்த வைபவத்தை உடையவள் -என்று
இவ்விடத்திலே உரையை அருளி செய்தார் பெரிய ஜீயர்
ஆண்டாள் பேர் அவாவுடன் சூடிக் கொடுத்த மாலையை தலையாலே தாங்குகிறான் அரங்கன் –
தலையாய மணத்தை தலையாலே தானே தாங்க வேணும்

மௌலி சூழ்கின்ற மாலை
முற்றப் புவனம் எல்லாம் உண்ட முகில் வண்ணன்
கற்றத் துழாய் சேர் கழல் அன்றி -மற்று ஒன்றை
இச்சியா அன்பர் தனக்கு எங்கனே செய்திடினும்
உச்சியால் ஏற்கும் உகந்து -ஞான சாரம் – 8- –
என்கிறபடி பயன் கருதாத பரமைகாந்திகள் செய்வது அனைத்தையும் உச்சியால் ஏற்கும் அவன்
காதலியான காரிகை சூடிக் கொடுத்ததை தலையாலே தாங்கக் கேட்க வேணுமோ –
சூடிக் கொடுத்த மாலையை திரு முடியிலே ஒரு புறத்திலே மட்டும் தாங்கினால் போதாதாம் -திருப்தி இல்லை
ஆசை தீர முடி எங்கும் படும்படி சூழ்கின்றதாக அந்த மாலையை தாங்க வேண்டுமாம் –
அது தோன்ற-மௌலி சூழ்கின்ற மாலை-என்றார்
சூடிக் கொடுத்தவள் -எனபது பாடிக் கொடுத்தவள் என்பதற்கும் உப லஷணம்-
இன்னிசையால் பாடிக் கொடுத்தால் நற்பா மாலை பூ மாலை சூடிக் கொடுத்தாள்-என்னும் பிரசித்தி காண்க –
பூ மாலையை மௌலி யில் சூடுகின்றான்-பா மாலையை தலையில் வைத்து கொண்டாடி இன்ப வெள்ளத்தில் ஆழகின்றான் –

வேதம் காட்டும் தூய அற நெறி –
நாராயணனே நமக்கேபறை தருவான் – என்னும் தொடக்கத்திலேயே அவருக்குத் துலங்கி விட்டது –
அத் தூய நெறி நாராயணனே – அந் நெறி நமக்காக ஏற்பட்டது -நாம் அந் நெறியிலே நடக்க வேண்டும் –
புண்ணியம் யாம் உடையோம்- மற்றை நம் காமங்கள் மாற்று- குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது-
அந் நெறி பறையிலே- கைங்கர்யம் என்னும் பேற்றிலே – நம்மைக் கொண்டு போய்ச் சேர்க்கும் –
அந் நெறியிலே நடப்பதாவது-நாராயணன் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றி நிற்கை -இதுவே தூய நெறி
எம்பெருமானார் -உபநிஷத்துக்களில் தெளிவற்ற நிலையில் சொல்லப்படும் பொருள்கள் தெள்ளத் தெளிய
திருப்பாவை யாகிய கோதோ உபநிஷத்தில் சொல்லப் பட்டு இருப்பது கண்டு விசேஷித்து
அதனில் மிக்க ஈடுபாடு கொண்டார் –
சந்நியாசிகள் உபநிஷத்தை அனுசந்திக்க வேண்டும் என்னும் முறைக்கு ஏற்ப எம்பெருமானார் அனுசந்திக்கும்
உபநிஷத்தாய் அமைந்தது -திருப்பாவை –அதனால்-திருப்பாவை ஜீயர் -என்ற பிரசித்தி அவருக்கு ஏற்பட்டது

தொல் அருளால் வாழ்கின்ற
ஆண்டாள் தொல் அருளே எம்பெருமானார் வாழ்வுக்கு எல்லாம் அடித்தளமாய் அமைந்தமை பற்றித் –
தொல் அருளால் வாழ்கின்ற -என்றார் –
இராமானுசன் என்னும் மா முனி –மா முனி என்னும் இராமானுசன் என்று மாற்றுக –
இராமானுசனே இந் நூலில் எங்கும் அடை கொளி யாய் இருத்தலில் இங்கும் அங்கனமே கொண்டு
முநி ஸ்ரேஷ்டரான எம்பெருமானார் -என்று உரை அருளினார் மணவாள மா முனிகள் –
வாழ்கின்ற வள்ளல் என்று இராமானுசன் தனக்குக் கிடைத்ததை இவ்வுலகிற்கும் ,
யாவருக்கும் வழங்கி அருளியதை கண்டோமே. ‘இன்னருளால் ‘ ‘ஆசை உடையோருக்கு ‘என்று
மாமுனிகள் தானும் அருளிச் செய்தாரிறே
மாமுனியே : முனி ஸ்ரேஷ்டர் என்று மாமுனிகள் இதற்கு அழகாக உரை இட்டருளியது நோக்க வேணும்

———–

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வெந்து எய்தினரே -17 –

கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும் தனியானை
வெஞ்சினக் களிற்றை -பெரிய திருமொழி – 7-10 8-
முத்தின் திரள் கோவையை -பத்தராவியை -நித்திலத்தொத்தினை –யரும்பினை யலரை -யடியேன் மனத்தாசையை
அமுதம் பொதியும் சுவைக் கரும்பினை -கனியை-சென்று நாடி -கண்ண மங்கையுள் கொண்டு கொண்டேனே

திருமங்கை ஆழ்வாரும்-தனி யானையைப் பாடுகிறார் -அதனைப் பரிசிலாகப் பெறுவது இவர்க்கும் நோக்கமாகும் –
இந்த யானையை கொடுப்பார் வேறு எவரும் இலர் -தன்னையே தான் தருவது இது –
தன்னைத் தந்த கற்பகம் -என்னும் நம் ஆழ்வார் திரு வாக்கும் காண்க
கண மங்கை கற்பகத்தை -எனபது திரு மங்கை ஆழ்வார் அருளிய பெரிய திரு மடல் –

கலை பரவும் பீடு படைத்த அவ் எம்பெருமான் திரு மங்கை ஆழ்வார் உடைய
ஈடு இல்லாத தண் தமிழ்க் கவியைக் கண்டு வியக்கிறான்
நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே -என்கிறார் ஆழ்வார்
இங்கனம் செருக்குற்ற சர்வேஸ்வரனையும் கற்பிக்கலாம் படியான கவிதை எனபது தோன்ற –
தனியானைத் தண் தமிழ் செய்த – என்கிறார் –

தண் தமிழ்
ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் என்னும் இவை அனைத்தும் இறைவன் காட்ட –
தம் கண்டபடியே
கற்பவர் மனத்தில் பதியும் படியும் -உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் அவனுக்கு போலி யாயும் –
பிரியாது இணைந்த பிரகாரமாயும் இருப்பதை உணரும் படியும் -அவனது இனிமையை நுகரும்படியும் செய்து –
சம்சார தாபத்தை அறவே போக்கி குளிர வைப்பதாய் இருத்தல் பற்றி –தண் தமிழ் -என்கிறார் –

எய்தினர் முனியார் மனம் கனியார்
நீலன் பத்தராவிப் பெருமாளையே கண்களார அளவும் நின்று -கண்ண மங்கையுள் காண வேண்டும்படியான
காதல் விஞ்சியவராய் -காணாது பிரிந்து இருப்பதையே துன்பமாகவும் -கண்டு கொண்டு கிட்டி இருப்பதையே
இன்பமாகவும் கொண்டு இருத்தலின் -ப்ராக்ருதமான -தேக சம்பந்தத்தால் ஆன-முனிவும் கனிவும் அற்றவர் ஆனார் –
எம்பெருமானாரும் அந்நீலன் தண் தமிழ் இன்பத்திலேயே மூழ்கி -அவருக்கு இனியராய் -அத்தகையரானார்-
அவரைப் பற்றினவர்களும் தண் தமிழ் இன்பத்தைக் காட்டின நீலனுக்கு இனிய ஆசார்யன் திறத்து உரிமைப் பட்டு
இருத்தலாம் பேரின்பத்திலே திளைத்து -அத்தகையார் ஆனார் -என்க-
எய்தினர் முனியார் மனம் கனியார் -என்று கூட்டிப் பொருள் கூறுக

———–

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –

இப்பாசுரம் ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரை பற்றியதாலின் அவர் அருளி செய்த
அரு மறையின் பொருள் ஆயிரம் இன் தமிழ்ப் பாடினான் -என்பதை அடி ஓற்றின படி

தெரிய சொன்ன ஆயிரம்
மறைந்த மறைகளை மீட்பதற்காகவே இறைவன் அவதாரம் செய்தான் ஹயக்ரீவனாக –
உபநிடந்தங்களின் கருத்துக்களை எல்லாம் இனிதாகத் திரட்டி கீதை என்னும் அமுதத்தை
ஊட்டுவதற்காகவே அவ இறைவன் அவதரித்தான் கண்ணனாக –
உய்யும் வழி தெளியாது பவக்காட்டிலே வழி திகைத்து அலமந்த மாந்தர்க்கு வழி காட்டுவதற்காகவே
காட்டின் இடையே ஆநிரை காக்கும் ஆயனாக ஆயினான் எம்பெருமான் என்பர் –
ஒரு ஆறு ஒருவன் புகாவாறு உருமாறும் ஆயவர் -பெரிய திருவந்தாதி – 56- என்றார் நம் ஆழ்வார் .
தவறான வழியில் போய் தடுமாறாத படி நல் வழி -கீதையின் மூலம் -காட்டுவதற்காகவே ஆயன்
உருவகமாக மாறினான்
கீதை அருளி செய்வதற்காகவே கண்ணன் அவதரித்தது போலே -நம் ஆழ்வார் ஆயிரம் இன் தமிழான
திருவாய்மொழி அருளி செய்வதற்காகவே அவதரித்தார் –
கண்ணன் வட மொழியிலே கீதை தந்தான் –
நம் ஆழ்வார் இன் தமிழிலே திருவாய்மொழி தந்தார் –
கீதை அர்ஜுனனையும் மயங்கச் செய்தது –
திருவாய்மொழி அனைவர்க்கும் தெரியச் சொன்ன ஆயிரம்
எம்பெருமானின் பரத்வம் , காரணத்வம், வ்யாபகத்வம் , கல்யானகுணங்கள்,ஆர்த்தி ஹரத்வம் என்று
பல திவ்ய குணங்களை நமக்கு பத்துக்கள் தோறும் ஈந்து அருளினார் இவர்.

சிந்தை யுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் –
நம் ஆழ்வார் பெரியன் -மதுர கவி ஆழ்வார் பெரியார் -பெரியனைப் பெரியராலே தான் தன்னுள்ளே-வைக்க முடியும் –
புவியும் -லீலா விபூதியும் -இருவிசும்பும் -நித்ய விபூதியும் -தன்னகத்தே கொண்டவன் –பெரியோனாகிய மாயன் –
அவன் செவியின் வழியே புகுந்து நம் ஆழ்வார் உள்ளத்திலே நின்றான் –
அதனால் பெரியோனையும் உள்ளடக்கிய பெரியரானார் நம் ஆழ்வார் –
அத்தகைய நம் ஆழ்வாரையும் சிந்தை உள்ளே பெய்தற்கு இசைந்து இருக்கிறது
மதுர கவி ஆழ்வாருக்கு உள்ள பெருமை –ஆதலின் அவரைப் பெரியவர் என்றே குறிப்பிடுகிறார் –
இறைவனை தம் உள்ளத்திலே வைத்துக் கொள்ளுதல் முதல் நிலையாகும் –
அது எல்லா ஆழ்வார்களுக்கும் பொதுவானது –
ஆசார்யனை தம் உள்ளத்தில் வைத்துக் கொள்ளுதல் இறுதி நிலையாகும் –
அது ஏனையோருக்கு அன்றி மதுர கவி ஆழ்வாருக்கே அமைந்தது ஒன்றாகும் –
இது பற்றியே -பத்துப் பேரையும் -பத்து ஆழ்வார்களையும் – சிரித்து இருப்பார் ஒருவர் -என்றார் இவரை ஸ்ரீ வசன பூஷண காரர் –

இனி பெரியவர் என்று பொது சொல்லால் குறிப்பிடிதலின் -தம் நெஞ்சினால் நம் ஆழ்வாரை அன்றி
வேறு ஒன்றும் அறியாத -பெரியவர்கள் எல்லோரையும் சொல்லலுமாம் –
சீர்-ஞானம் முதலிய குணங்கள்
இனி ஆச்சார்ய நிஷ்டை யாகிய சிறப்பை கூறலுமாம்
உயிர்கள் எல்லாம் உய்வதற்கு உதவும்
எல்லோரையும் உய்விப்பதற்காக மதுரகவி ஆழ்வாருடைய குணங்களை அல்லது அவரது ஆசார்ய நிஷ்டையை
தாம்-மாறனடி உய்ந்து காட்டியும் -உபதேசத்தால் கேட்பவர்களும் கைக் கொள்ளலாம் படி வழங்கியும்
உபகரித்து அருளினார் எம்பெருமானார்

உயிர்கள் எல்லாம் உய்வதற்கு உதவும்
ஆசார்ய நிஷ்டைக்கு அதிகார நியமம் இல்லை ஆதலால் உயிர்கள் எல்லாம் என்று திருவாக்கு .
தேக சமபந்த துறையில் அதிகார நியமம் இருக்கலாம் . ஆத்ம சம்பந்த விஷயத்தில் இல்லை என்றபடி
சுவாமி வேதாந்த தேசிகனும்
” துன்புற்ற மதுரகவி தோன்றக் காட்டும் தொல் வழியே நல்வழிகள் துணிவார்கட்கே’என்று
குருபரம்பரா சாரத்தில் அருளியது காணலாம்
மணவாள மா முனிகள்-
மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம் -ஆர்த்தி பிரபந்தம் -55 – என்று
இவ் ஆசார்ய நிஷ்டையில் நிலைத்து நிற்பதும் -எம்பெருமானார் உய்வதற்கு உதவியதன் பயனே என்று அறிக –

தாமாகவே உற்று துணையாகி நம்மிடையே எம் முயற்சியும் இல்லாத நிலையிலும்
தமது இயல்பான அருளாலே நாம் உய்வதற்கு உதவுதலின் –
எம்பெருமானார் உறு துணை யாயினார் என்னலுமாம் -உறுகின்ற துணை உறு துணை –
பெரிய ஜீயர் உரையில் ‘என் உறு துணையே ‘ என்று இருப்பதால்
அப்படி பாடம் இருக்கலாம் என்று சுவாமி நல்லான் சக்கரவர்த்தி ராமகிருஷ்ண ஐயங்கார் திருவுள்ளம்

———-

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-

இதுகாறும் எம்பெருமானாருக்கு ஆழ்வார்கள் இடத்திலும் அவர்களுடைய திவ்ய பிரபந்தங்களிலும்
உள்ள ஈடுபாடு கூறப் பட்டது –
முதல் ஆழ்வார்கள் முதலில் வரிசையாகப் பேசப் பட்டு உள்ளனர் –
தாம் இருக்கும் இடத்தில் வந்து இறைவனால் காட்ஷி கொடுக்கப் பட்டவர்கள் பேசப்பட்டனர் முன்னர் –
அர்ச்சை நிலையில் தாம் இருக்கும் இடத்துக்கு வருவிக்கப்பட்டு காட்சி கொடுக்கப் பட்டவரான
திருப் பாண் ஆழ்வார் பேசப்பட்டார் பின்னர்
சொன்ன வண்ணம் செய்த பெருமாளாய் -அர்ச்சை நிலையில் காட்சி கொடுக்கப் பட்டவர் பாணற்கு அடுத்து பேசப்படுகிறார் –
திருப் பாண் ஆழ்வார் –
அர்ச்சை எம்பெருமான் சொன்ன வண்ணம் செய்து ஆட்செய்தவன் மூலம் உகப்பித்த மழிசைக்கு இறைவனை அடுத்து
அழகைக் காட்டி ஆதரம் பெருக வைத்து அர்ச்சை எம்பெருமானாம் அரங்கனால் ஆட்கொள்ளப்பட்ட
துளவத் தொண்டரைப் பேசுவது -முறை தானே -ஆட்செய்தான் அங்கே -ஆட்கொண்டான் இங்கே –
பிறகு அவ்வரங்கனை -கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே -என்னும்
வேட்கை மீதூர்ந்த குலசேகரப் பெருமாள் பேசப்படுகிறார்
பின்னர் பெரி யாழ்வார் பேசப்படுகிறார்
அரங்கன் அழகைக் கண்டு ஆதரம் பெருகி ஆட் செய்தவருக்கு பிறகு
வீரம் கேட்டு வீணே பயப்பட்டு விரைந்து படையுடன் ஆட்செய்யப் புறப்பட்டவரை பேசுவது பொருத்தம் அன்றோ –
பொங்கும் பரிவாலே அவன் அறிவாற்றல் ஒன்றும் பாராது -அவனைத் தான் காப்பாற்ற போவதாக மயங்கி
படை எடுத்து -புறப்பட்ட குலசேகர பெருமாளுக்கு பின்னர் –
சர்வேஸ்வரன் உடைய அழகு மென்மைகளையே பார்த்து தொல்லை மாலை ஒன்றும் பாராது மயங்கிப்
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையரைப் பேசுவது தகும் அன்றோ –
பெரியாழ்வாரை சார்ந்து இருப்பவளான ஆண்டாளை அவரை அடுத்துப் பேசினார் –

நம் ஆழ்வார் இடமும் திரு மங்கை ஆழ்வார் இடம் உள்ள ஈடுபாடு
தொடக்கத்திலேயே முதல் இரண்டு பாசுரங்களினால் பேசப் பட்டு இருந்தாலும் –
அவர்களுடைய ப்ராதான்யம் கருதி –
இறுதியில் நாத முனியை பேசத் தொடங்கும் முன் அவர்களைப் பற்றி பேசினார் –
அவர்களிலும் திரு மங்கை ஆழ்வாரைப் பற்றி ஒரு பாசுரமும் –
நம் ஆழ்வாரைப் பற்றி இரண்டு பாசுரங்களும் அருளி செய்தார் –
நம் ஆழ்வாருக்கு உள்ள மிக முக்கிய தன்மையை நோக்கி அவரை இறுதியிலே பேசினார் –
அவ்விரு பாசுரங்களில் முறையே –
நம் ஆழ்வாரை அன்றி வேறு ஓன்று அறியாத மதுர கவி ஆழ்வார் உடைய வீறுடைமையும் –
பரபக்தி முதலியவற்றின் அடைவிலே அருளி செய்த திருவாய் மொழியினுடைய சீர்மையையும் அருளி செய்து முடித்தார் –

ஏனைய செல்வம் போலே அளவுக்கு உட்படாது வாரி வாரி வழங்கத் துய்க்கத் துய்க்கத் குறைவு படாதது
இத் திருவாய்மொழியாம் செல்வம் என்பது தோன்ற –பெரும் செல்வம்-என்கிறார் –
ஏனைய செல்வம் -அறனீனும் இன்பமுமீனும் -இச் செல்வமோ வீட்டு இன்பத்தையும் தருதலின் அதனினும்
மிக்கது என்பது தோன்ற –உறு பெரும் செல்வம் -என்றார்-
அறியக் கற்று -வல்லார் வைட்ணவர்-என்றபடி -ஞான ஜென்மத்தை தந்து -வைஷ்ணவராக மதிக்கப்பட செய்து -உயர்
குலத்தாரையும் -அறிவுடையாரையும் -அவர் பால் சென்று அருளை-பாகவத அனுக்ரகத்தை-நாடி நிற்கச் செய்தலின்
உறு பெரும் செல்வமாகப் போற்றப் படுகின்றது

உயர் குரு
இங்கு கூறப் படும் குருவோ -சம்சார நிவர்தகமான பெரிய திரு மந்த்ரத்தை உபதேசித்தவன்
வெறி தரு பூ மகள் நாதனும்
திரு மகள் கேள்வன் -நமக்குப் பிராட்டி புருஷகாரமாய் இருத்தலின் உபாயமாய்ப் பேறு
தருவான் ஆகிறான் -பிராட்டியோடு கூடி இருந்து நாம் செய்யும் கைங்கர்யத்தை ஏற்பதனால் ப்ராப்யனாகவும்
பெறும் பேறாகவும் -ஆகிறான்
திருவாய் மொழியும் -இவை பத்தும் வீடே – 1-1 11- – என்ற படி வீடு அளிப்பதாலின் உபாயமாகவும் –
கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே –10 6-11 – -என்றபடி வீட்டில் உள்ளாறும்
கேட்டு இன்புறும்படி இருத்தலின் ப்ராப்யமாகவும் ஆதலின் -பூ மகள் நாதன் -ஆயிற்று –

———–

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20 –

திருவாய் ஈரத் தமிழ்
மனத்தால் மட்டும் நினையாமல் , மனதிலிருக்கும் எண்ணம் , எண்ணோட்டம் ,
வாய் வழியாக வழிந்து திருவாய்மொழியாக வெளி வந்தாதால் திருவாய்மொழி
வாய் வெருவின மொழி வாய் மொழி -என்க –
இவள் இராப்பகல் வாய் வெருவி-திரு வாய் மொழி -2 4 5- – – என்னும் இடத்தில்
ஈட்டில் –அவதானம் பண்ணி சொல்லுகிறது ஒன்றும் இல்லை -வாசனையே உபாத்யாயராக சொல்லுகிற இத்தனை –

ஈரத் தமிழ்
சம்சாரிகள் வெப்பத்தை தணிக்கும் ஈரமான தமிழ் ஆதலால் ஈரத் தமிழ்
மேலும் அமுதம் போல் இனித்து ஈரமான தமிழ்

இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் –
மதுர கவி ஆழ்வாருக்கு இனியவர் -அவர் பரம்பரையில் வந்தவரும் –
நாத முனிகளுக்கு கண்ணி நுண் சிறு தாம்பை உபதேசித்தவருமான பராங்குச நம்பி–
அவர் சீர் -அருள் மிக்கு உபதேசித்து அருளின வள்ளன்மை ,ஞான பக்திகள் ,இசை உணர்வு -முதலியன
இசை உணர்ந்தோர்க்கு இனியவர் –சீர் பயின்றதாக கூறுவதால் -இன்னிசை பாடித் திரியும் அவர்
பரம்பரையினரான பராங்குச நம்பி -இசையோடு கண்ணி நுண் சிறு தாம்பை உபதேசித்ததாக தெரிகிறது –

நெஞ்சால் வாரிப் பருகும் –
சம காலத்தவர் ஆயின் -கண்ணால் அள்ளிப் பருகி இருப்பார் –
எம்பெருமானார் பிற் காலத்தவர் ஆதலின் நெஞ்சால் நினைந்து நினைந்து அவரை அள்ளிப் பருகுகிறார் -என்றபடி –
பருகுதல் கூறவே -நாத முனிகள் நீராய் உருகினமை பெறப்படும் –
இனியவர் தம் சீரைப் பயின்று நீராய் உருகினார் -நாதமுனிகள்-
அத்தகைய நீரைப் பருகி விடாய் தீர்த்து இன்புறுகிறார் எம்பெருமானார் –
நாத முனிகளை ஆர்வத்துடன் நெஞ்சால் நினைந்து இனிது அனுபவிக்கிறார் எம்பெருமானார் -என்பது கருத்து –

என் தன் மா நிதி –
ஏனைய நிதிகள் போலே அழிவுறாத புதையல் எம்பெருமானார் –
ஆழ்வான் உதவிய ஞானக் கண்ணால் அப் புதையலைக் கண்டு எடுத்து ஆண்டு அனுபவிக்கும் தனது பாக்கியம்
தோற்ற –என் தன் மா நிதி -என்கிறார் –

———-

நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- –

தூய் நெறி சேர் எதிகட் கிறைவன் –
இவ்வடை மொழி யமுனைத் துறைவற்கும் இசையும் -இராமனுசற்கும் இசையும் –நெறி-ஒழுக்கம் -உபாயமுமாம்
ஒழுக்கம் –ஆவது அனுஷ்டானம் -அது சாத்விக த்யாகத்துடன் -பகவான் என்னைக் கொண்டு தன் பணியை
தன் உகப்புக்காக செய்து கொள்கிறான் என்றும் நினைப்புடன் -அனுஷ்டிக்கப் படுதலின் தூயதாயிற்று -என்க –
இனி அஹங்காரக் கலப்பினால் மாசுற்ற மற்ற உபாயங்களை விட்டுத் தூயதான சித்த உபாயத்தின்
எல்லை நிலமான ஆசார்யனையே உபாயமாக கொள்ளலின் தூய் நெறி என்றார் ஆகவுமாம் –
ஆளவந்தார் நாத முநிகளையே உபாயமாகவும்-
எம்பெருமானார் ஆளவந்தாரையே உபாயமாகவும் -கொண்டு உள்ளமையின் தூய் நெறி சேர்ந்தவர்கள் ஆயினர் என்க –

இனி யமுனைத் துறைவர் இணை யடி -என்பது ஆளவந்தார் திருவடியான பெரிய நம்பியை
குறிப்பால் உணர்த்துகிறது என்றும் கூறுவர்-இவ் விஷயம் லஷ்மீ நாத -பத்ய வ்யாக்யானத்தில் ஸ்பஷ்டம் –

யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்று உடைய இராமானுசன் ஆகையாலே
ஆளவந்தாருக்கு சரணத்வயம் என்னலாம்படியான பெரிய நம்பியும் ஸூசிதர்
இளையாழ்வாரை விஷயீ கரித்த அனந்தரத்திலே-
இளையாழ்வீர் பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யத்துக்கு எழுந்து அருளும் போது-
மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய் வானோர் வாழ எழுந்து அருளினாப் போலே
மேலை வானோர் வாழ இவரும் தமக்கு அடியேனான அடியேனை அப்படியும் யுமக்கு வைத்து
திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் -என்று அவர் அருளிச் செய்தார்

என்னைக் காத்தனன் –
என்னைக் காக்கும் பொறுப்பைத் தாமே எம்பெருமானார் ஏற்றுக் கொண்டு நிறைவேற்றி விட்ட படியால்
நான் என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அலைந்து துவள வேண்டியது இல்லை-என்றது ஆயிற்று –

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .