Archive for the ‘பெரியவாச்சான் பிள்ளை’ Category

ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் தங்களோபாதி பிரகிருதி மான்களாகநினைத்து இருக்கும் புல்லிமை இன்றிக்கேயாய் யற்று இருப்பது-

October 24, 2025

வார்த்தை -275-
நம் மனிச்சர் ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் தங்களோபாதி பிரகிருதி மான்களாக
நினைத்து இருக்கும் புல்லிமை இன்றிக்கேயாய் யற்று இருப்பது –
திரு உடை மன்னர் -திருவாய்மொழி -4-4-8-
செழு மா மணிகள் -திருவாய்மொழி -5-8-9-
நிலத்தேவர் -திருவாய்மொழி -7-10-10-
தெள்ளியார் -நாச்சியார் திருமொழி -4-1-
பெருமக்கள் -திருவாய்மொழி -3-7-5-
பெரும் தவத்தார் -திரு நெடும் தாண்டகம் -24-
உரு உடையார் இளையார் -நாச்சியார் திருமொழி -1-6-
சிறு மா மனிசர் -திருவாய்மொழி -8-10-3-
எம்பிரான் தன் சின்னங்கள் அவர் இவர் -பெரியாழ்வார் திருமொழி -4-4-9-
எம் குல நாதரான ஆழ்வார்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இப்படி திரு நாமம்
சாத்துகையாலே கேவலம் தன்னோடு ஒக்க மனுஷ்யன் என்று நினைத்து இருக்ககை அபசாரம்

(ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த- -ஸ்ரீ மாணிக்க மாலை-நல்லடிக் காலத்தில்  நம்மாச்சார்யர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களை தங்களோ பாதி பிரக்ருதிமான்களாக நினைத்து இருக்கும் புல்லிமை இன்றிக்கே யாயிற்று இருப்பது –
திருவுடை மன்னர் –
செழு மா மணிகள் –
நிலத் தேவர் –
தெள்ளியார் –
பெரு மக்கள் –
பெரும் தவத்தர் –
உருவுடையார்  இளையார் 
ஒத்து வல்லார் –
தக்கார் மிக்கார் –
வேதம் வல்லார் –
வேத விமலர் –
சிறு மா மனிசர் –
எம்பிரான் தன் சின்னங்கள் -என்று
நம் குல நாதரான ஸ்ரீ ஆழ்வார்கள்- ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இப்படி திரு நாமம் சாற்றுகையாலே
கேவலம்  தன்னோடு ஒக்க ஒரு மனுஷ்யர் என்று- ஸ்ரீ வைஷ்ணவர்களை நினைத்து இருக்கை -ஸ்ரீ பாகவத அபசாரம் –

ஸ்ரீ பகவத் அபசாரம் பண்ணுகையாவது – ஸ்ரீ எம்பெருமானுடைய நல் சீவனான ஸ்ரீ வைஷ்ணவர்கள் திறத்துப் பண்ணும் அபசாரம் –

ஸ்ரீ பாகவத அபசாரம் பண்ணுகை யாவது -ஸ்ரீ வைஷ்ணவர்கள் யுடைய உயிர் நிலையான ஸ்ரீ எம்பெருமான் திறத்துப் பண்ணும் அபசாரம் –

ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷம்  ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷத்தைப் பிறப்பிக்கும் –

ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷ பர்யந்தம் அல்லது இராது-

அபாகவத ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பாகவத விஸ்லேஷத்தையும் பிறப்பித்து -ஸ்ரீ பகவத் விஸ்லேஷத்தையும் பிறப்பித்து -இவனையும் முடித்து விடும் –

ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷத்தையும் பிறப்பித்து -அபாகவத விஸ்லேஷத்தையும் பிறப்பித்து
இவனையும் எடுத்துக் கரை மரம் சேர்த்து விடும் –

இவ் வெல்லை மயக்கு ஸ்ரீ ஆசார்யன் கண் வட்டத்திலே வர்த்திக்குமவனுக்கு வாராது –
ஸ்ரீ ஆசார்யன் கண் வட்டம் விட்டால் -நித்ய சம்சாரியாய்ப் போம் இத்தனை –
ஸ்ரீ ஆசார்யனாவான் ஓட்டை ஓடத்தோடே ஒழுகல் ஓடமாய் தன்னைக் கொண்டு முழுகுமவன் அன்று –
தன்னைக் கரை ஏற்ற வல்லனாய் -தன்னை  அடைந்தாரையும் கரை ஏற்ற வல்லனான ஜ்ஞானாதி பரிபூர்ணனாய் இருப்பான் ஒருவன் –
ஸ்ரீ ஆசார்யனுடைய ஜ்ஞானம் வேண்டா -சிஷ்யனுக்கு விக்ரஹமே அமையும்
கருட த்யானத்துக்கு விஷம் தீருமா போலே ஸ்ரீ ஆசார்யனை த்யாநிக்கவே சம்சாரம் ஆகிற விஷம் தீர்த்துக் கொள்ளலாம் என்று அருளிச் செய்வார்கள் –
குரோர வஜ்ஞாயா ம்ருத்யு மந்த்ராவஜ்ஞா  தரித்ரதா  குரு மந்த்ர பரித்யாகீ ரௌரவம் நரகம் வ்ரஜேத் -என்றும் யுண்டு-)

————–

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8-

குறைவற்ற ஐஸ்வர்யத்தை உடைய ராஜாக்களை காணில் ஸ்ரீ யபதியைக் காணப் பெற்றேன் என்னும்-குறைவற்ற ஐஸ்வர்யம் உடையான் ஸ்ரீ யபதி இறே-பெரிய முதலியார் ஒரு ராஜாவைக் கண்டு அவன் பின்னே தொடர்ந்து போனார் என்னவும்-ஒரு சாமந்தன் தலையிலே அடியிட்டு ஆனையிலே ஏறுகிற போதுஅத்தைக்கு கண்டு மோஹித்தார் என்னவும் கடவது இறே-இராஜா தன் சேனையோடே கங்கை கொண்ட சோழபுரத்து ஏறப் போகச்செய்தே,பெரிய முதலியார் மன்னனார் திருவடிகளிலே சேவித்திருக்கச் செய்தே, பெண் பிள்ளை வந்து,‘நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்ணுமாய் வந்து புகுந்தார்கள்,’ என்றவாறே,‘பெருமாளும் இளைய பெருமாளும் பிராட்டியும் ஐந்திர வியாகரண பண்டிதனும்’ என்று புத்தி பண்ணிப் பின் தொடர்ந்து போய்,முன்னே போகின்றவர்கள் ‘போகின்றார்கள், போகின்றார்கள்’ என்னக் கேட்டுக் கீழை வாசலிலே சென்றவாறே,‘இப்படிப் போகின்றவர்களைக் கண்டீர்களோ?’ என்று வாசலில் அவர்களைப் பார்த்துக் கேட்க,அவர்கள் ‘கண்டிலோம்’ என்ன, அதுவே காரணமாகத் திரு நாட்டிற்கு எழுந்தருளினார் அன்றோ?-காணும் அளவும் போனாரே-

—————-

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9-

ஆராமுத ஆழ்வார் ஆதல் -திரு மழிசைப் பிரான் போல்வார் ஆதல் -புருஷ ரத்தினங்கள் சேருமூர் யாயிற்று

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-நித்ய ஸூ ரிகளைப் போலே மநோ வாக் காயங்களினால் பூ ஸூ ராரான முமுஷுக்கள் திரள் திரளாக வந்து ஆஸ்ரயிப்பார்கள்-கார்ய காரண விசாரம் -சிந்தித்தல் மனசின் கார்யம் போலே-மனம் மொழி மெய் -மூன்றாலும் செய்யும் கார்யங்களை சொன்னவாறு-

தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–4-1-

தெள்ளியார் – அவர்களும் சிலரே –அலாபத்தோடே இருந்து கூடல் இழையாதே-லாபத்தோடு இருந்து -போது போக்குகிற வர்களும் சிலரே –பிரியில் சர்வதா கூடல் இழைக்க வேணும் என்று அறிந்து-பிரியாதே நித்ய அனுபவம் பண்ணும் அத்தனை -அளவுடையவர்கள் ஆயத்து (கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-)

பலர் –த்ரிபாத் விபூதியாக அனுபவத்தோடு காலம் செல்லுகிறது இறே-இங்கு தான் ஒருத்தியுமாய் -கூடல் இழையா நின்றாள்-இங்கு வ்ருத்த கீரத்த நத்துக்கும் ஆளில்லை –
அங்கு வ்ருத்த கீர்த்தனம் பண்ண வேண்டா –பெற்ற அனுபவத்தை பேசிப் போது போக்காமல் நித்தியமாய் அனுபவம் செல்லுமே-கைந்தொழும்-நித்ய அஞ்சலி புடா -என்கிறபடியே தொழுகையே யாத்ரையாய் இருக்குமவர்கள்

பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5-

பெருமக்கள்–நித்தியசூரிகள்; ‘பெரியோர்’ என்றபடி. ‘பேராளன் பேர் ஓதும் பெரியோர்’ என்பது அன்றோ மறைமொழி?–‘மஹாத்துமாக்களோ என்றால்’ என்றும், ‘என்னையே அடைகின்றவன் மஹாத்மா ஆவான்; அவன் கிடைப்பது அரிது,’என்றும்,‘இவர்கள் நல்ல மஹாத்மாக்கள்,’ என்றும் வருவன இறைவன் வார்த்தை அலவோ? சமுசாரத்திலே முமுக்ஷீவாய் எதிர்முகம் பண்ணின மாத்திரத்திலே சொல்லுகிறபடி இதுவானால்,நித்தியசூரிகளை இப்படிச் சொல்லக் கேட்க வேண்டா அன்றே?
உள்ளவர் –‘பரம்பொருள் இலன் என்று அறிந்தானாகில் இவனும் இல்லாதவன் ஆகிறான்,’ என்பது, ஒரு நாள் வரையிலே ‘பரம் பொருள் உளன் என்று அறிந்தானாகில் இவனும் உள்ளவன் ஆகிறான்,’ என்பதாகாதே, என்றும் ஒக்க உள்ளவர்கள் என்பார், ‘உள்ளவர்’ என்கிறார்.-அசந்நேவ-சந்தமேவ ஆகாமல் நித்யர்கள்–‘சொரூபமான அடிமை ஞானம் அழியாமையாலே உள்ளவர்கள் என்கிறார்,’ என்றபடி.-நிரூபகம் இல்லையானால் நிரூபிக்கப்படும் பொருள் இல்லையாம் அன்றே?ஆக, ‘அடிமையாயிருக்கும் தன்மைக்கு ஒரு நாளும் குறைவு வாராதவர்கள்’ என்றபடி.

இரு கையில் சங்கிவை நில்லா வெல்லே பாவம்
இலங்கொலி நீர்ப் பெரும் பௌவம் மண்டியுண்ட
பெரு வயிற்ற கரு முகிலே யொப்பர் வண்ணம்
பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி
உலகுண்ட பெரு வாயர் இங்கே வந்து என்
பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து
புனலரங்க மூரென்று போயினாரே –24–

பெரும் தவத்தர் இத்யாதி –ஒருவர் இருவராய் சென்று கிட்டுகிறாரோ –அம்ருதத்தை அமரர்கள் சூழ நின்று காக்குமா போலே காண்-என்னைப் பிரிந்த சமனந்தரம் பரிகரம் வந்து சூழ்ந்து கொண்ட படி இது காண் -என்கிறாள் –
பக்த்தைர் பாகவதைஸ் ஸஹ-என்றும்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் -என்கிறபடியே
நித்ய ஸூரிகளை சொல்கிறது –பகவத் பிரேமத்தால் அதிசயித்தவர்கள் –-வணக்குடை தவ நெறி -என்று பக்தியை தபஸ் சப்தத்தால் சொல்லக் கடவது இறே –-தங்களுடைய சேஷத்வத்தையும்-அவனுடைய ஸ்வாமித்வத்தையும் உணர்ந்து இருக்குமவர்கள் பரிவராய்க் கொண்டு ஒருவர் கிட்ட ஒண்ணாத படி எங்கும் ஒக்க சூழ்ந்து நிற்கையாலும் கிட்டப் போய்த்தில்லை –

உருவுடையார் இளையார்கள் நல்லார் ஒத்து வல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காம தேவா
கருவுடை முகில் வண்ணன் காயா வண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத்
திருவுடை முகத்தினில் திருக் கண்களால் திருந்தவே நோக்க எனக்கு அருள் கண்டாய் -1-6-

வடிவுடையாராய் –யுவாக்களாய் –வ்ருத்தவான்களாய்-காம ஸூத்ரம் கண்ணழிவு அற கைவந்து இருப்பாராய்-இருக்கிறவர்களை முன்னாகக் கொண்டு-நாள் தோறும் அவன் வருகிற வழியிலே எதிர் கொண்டு-பெரிய திரு நாளிலே கலங்காதே தெளிந்து இருந்து –
உன்னை ஆஸ்ரயிக்கும் படி அன்றோ எனக்கு உண்டான த்வரை –

உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே-8-10-3-

ப்ரபாவங்களைப் பார்த்தால் -பரிச்சேதிக்கப் போகாதே -வடிவைப் பார்த்தால் நம்மோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை -சர்வேஸ்வரன் மனுஷ்ய சஜாதீயனாய் முகம் கொடுத்து கொண்டு இருக்குமா போலே யாயிற்று இவர்களும் -சிறுமை பெருமை யாகிற விருத்த தர்ம த்வய சமாவேசம் ஏக வ்யக்தியில் கூடுமோ -என்று பட்டர் ஆழ்வானைக் கேட்க -நம்மோடு ஓக்க அன்ன பானாதிகள் தாரகம் என்னலாய்-பகவத் விஷயத்தில் அவகாஹனம் பார்த்தால் -நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள் என்னலாம் படி இருக்கிற -ஆண்டான் -அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த பெருமாளார்-இவர்கள் காண் சிறு மா மனுசர் ஆகிறார் -என்று பணித்தான் -என்னை அடிமை கொண்டவர்கள் –என் கண் வட்டத்திலே சஞ்சரியா நிற்க-இவருடைய கண்ணி நுண் சிறு தாம்பு இருக்கிறபடி– ஸ்ரீ மதுர கவிகட்கும் அடி இது அன்றோ – பொய் நின்ற ஞானம் தொடங்கி-முனியே நான்முகனே -என்ற திருவாய் மொழி முடிய இவரைத் தொடர்ந்து பின் பற்றிய இடத்து-ஆழ்வார் தமக்கு பிரயோஜனமாக சொன்ன பயிலும் சுடர் ஒளி – நெடுமாற்கு அடிமை- என்னும் திருவாய் மொழி களையே தமக்கு தஞ்சமாக பற்றினார்-

கொம்பினார் பொழில் வாய் குயில் இனம் கோவிந்தன்  குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று  ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4- 9-

ப்ரீதிக்கு போக்கு விட்டு சொல்லுவார்களைக் கண்டக்கால் -கண் படைத்த பிரயோஜனம் பெறலாம்-ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே (பெருமாள் திருமொழி )-என்னக் கடவது இறே-எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று –சின்னம் என்று -அவனுடைய அடையாளம் –இவர்களைக் கண்டக்கால் -அவன் -சாத்விக சேவ்யன்-என்று தோன்றும் –அவநீத ப்ர்த்யவர்க்கன் (விநிதம் இல்லாதவ் பூத கணங்கள் )என்று இறே அவனை (ருத்ரனை )கழித்தது –கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய் -என்று அவற்றோடு வாராத போது -போகாய் -என்று இறே இவர் இருப்பது-என் ஆவி சேர் அம்மானுக்கு அந்தாம வாண் முடி சங்காழி நூலாரமுள-என்னக் கடவது -இறே-ஆசைகள் தீர்வேனே–ஆசைகள் -என்று-காண -என்றும் –கிட்ட -என்றும் –கூட இருக்க என்றும் இறே இவர்களுடைய ஆசைகள்-அவனைக் காண வேணும் -என்கிற ஆசைகள் தீரும் உகந்து அருளின நிலங்களை அனுபவித்தால் அடியார்கள் குழாங்ளை உடன் கூடுவது என்று கொலோ -என்கிற இழவுகள் தீரும் இங்கே-ஸ்ரீ வைஷ்ணவ திரள்களைக் கண்டால்-கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் (திரு விருத்தம் )-என்கிறபடியே கண்டவாறே ஆசைகள் தீரும் இறே
ஈஸ்வரனைக் கண்டால் ஆசைகள் தீராது இவர்களைக் கண்டால் ஆசை தீரும்கடிவார் தண் அம் துளி கண்ணன் (2-3-9 )-இத்யாதி-அடியேன் வாய் மடுத்து பருகிக் களித்தேனே -என்று பூர்ண அனுபவம் பண்ணின பின்பு இறே-அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -என்று பிரார்த்தித்து-தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே (3-6-10 )-என்று ஆசைகள் தீர்ந்தது-பயிலும் சுடர் ஒளி யிலே (3-7 ) இறே-திரு நாவாய் அவையுள் புகலாவதோர் நாள் ( 9-8 )-என்று அத் திரள் இறே உத்தேச்யம்-ஒண விழவில் ஒலி அதிர  பேணி வரு வேம்கடவா என்னுள்ளம் புகுந்தாய் (நான் முகன் )-என்று
அவன் வரும் இடத்தில் அவர்களும் மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு கூட வந்து புகுவார்கள் –

தக்கார் மிக்கார்களை சஞ்சலம் செய்யும் சலவரை
தெக்கா நெறியே  போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
எக் காலமும் சென்று சேவித்து இருக்கும் அடியரை
அக் கான் நெறியை மாற்றும் தண் மால் இரும் சோலையே – 4-2- 3-

தக்கார் –ஈஸ்வரனோடு கிருபை ஒத்து இருக்கும் அவர்கள்-ஈஸ்வரனுக்கு தகுதியானவர்கள்
அதாவது-நினைவு ஒன்றாய் இருக்கை-சர்வாத்மாக்களும் உஜ்ஜீவிக்க வேணும் -என்கிற கிருபை ஒத்து இருக்கை –மிக்கார்களை –அவனைப் போலே ஸ்வதந்த்ரராய் –
அபராதங்களைக் கண்டவாறே –ஷிபாமி ந ஷமாமி என்கை அன்றிக்கே-எப்போதும் ஒக்க அனுக்ரஹ சீலராய் இருக்கையாலே – அவனிலும் காட்டிலும் அதிகராய் இருக்கும் அவர்களை-ஆகையால் இறே இவர்களை பற்றும் இடத்தில் புருஷகார நிரபேஷமாக பற்றலாய் இருக்கிறது –

அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள்குலைக் கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம்கண்டு என்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7-

அவனுடைய ஆச்சர்ய குண சேஷ்டிதங்களுக்கு தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆஸ்ரயிங்கோள் –வேதம் வல்லார் என்கிறது –நாராயண பரா வேதா -வேதைச்ச சர்வைரஹ மேவ வேத்ய-என்று சகல வேத தாத்பர்யமும் கைப்பட்டவர்கள் என்கை –சகல தேவதைகளும் பகவத் பரதந்த்ரம் ஆகையால் அவற்றுக்குத் தனித்து உயிர் இல்லை என்று இருக்குமவர்கள் வேதம் வல்லவர்கள்-(பரன் திறம் அன்று பல்லுலகீர் தேவம் ஒன்றும் இல்லையே )
‘தேவதைகள் தோறும் தனித்தனியே காரியம் உண்டு’ என்று இராமல்,
‘எல்லாச் சொற்களும் ஒரே பொருளைச் சொல்லுவது’ என்று இருக்குமவர்களைப் பற்றப் பாருங்கோள் என்கிறாள்’ என்றபடி.

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து
,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8-

சர்வேஸ்வரனே-ப்ராப்யமும் ப்ராபகமும்-என்கிற வேத தாத்பர்யம் கைப் பட்டவர்களை புருஷகாரமாகக் கொண்டு-வேறாக வேத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம், என்கிறபடியே அவர்கள் தாங்களே ஆஸ்ரயணீயர்–சஜாதீய பாவத்தால் அத்தனை ருசி விசுவாசங்கள் வாராதாகில் அவர்களை புருஷகாரமாக வாகிலும் கொள்ளப் பாருங்கோள்-வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை –பிதாமஹம் நாதமுனிம் வி லோக்ய ப்ரஸீத-இங்கு இருக்கும் நாள்களுக்குப் புருஷகாரமாக முமுக்ஷூக்கள் உளர்; அங்குதானே நித்தியசூரிகள் உளரே அன்றோ? ‘அந்த அமாநவன் முத்தர்களைப் பரம்பொருளிடம் சேர்ப்பிக்கின்றான்,’ என்கிறபடியே, அவர்கள் கொடுபுக்கு இருத்தலே அன்றோ அவ்வோலக்கத்தில் இருப்பது?

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே
உன்னை யானே –2-9-8-

பகவத் ப்ரேமத்தால் அதிசயித்தவர்கள்-வேதத்திலே நிர்மலராக ப்ரஸித்தர் ஆனவர்கள் –யத்ர ருஷய பிரதமஜா யே புராணா-நித்ய அனுபவம் பண்ணும்-அவர்களுக்கு சர்வ வித போக்யமும் தானே என்னும் இடத்துக்கு உப லக்ஷணம் –அக்காராம் போலேயும் கனி போலேயும் இருக்கை –அக்காராம் வ்ருஷ ஸ்தானே யாய் -அது கோட் புக்கு பலித்தால் போலே இருக்கை -அவர்களுக்கு நிரதிசய போக்யனான உன்னை எனக்கு காட்டினவனே

—————————————————————————–———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ ஸகல பிரமாண தாத்பர்யம்

March 5, 2024

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய  நமோ யாமுன ஸுனவே
யத் கடாஷை லக்ஷ்யானாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா–ஸ்ரீ
பெரியவாச்சான் பிள்ளையின் தனியன்

யாமுனரின் திருக்குமாரரும், யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ அந்தப் பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

திருநக்ஷத்ரம்: ஆவணி ரோகிணி
அவதார ஸ்தலம்: சங்கநல்லூர் (சேங்கனூர்)
ஆசார்யன்: நம்பிள்ளை
சிஷ்யர்கள்:  நாயனாரச்சான்  பிள்ளை, வாதிகேசரிஅழகிய மணவாள ஜீயர், பரகால  தாசர் முதலியவர்கள்

நம்பிள்ளையின் சிஷ்யரான பெரியவாச்சான் பிள்ளை ஆவணி ரோகிணியில்
யாமுனாசார்யருக்கும் நாச்சியாரம்மனுக்கும் திருக்குமாராராய், சோழநாட்டில் (தஞ்சாவூர் பக்கம்)உள்ள திருவெள்ளியங்குடி என்னும் திவ்யதேசத்திற்கு அருகில் உள்ள சங்கநல்லூர் என்னும் ஊரில் கிபி 1167ல் அவதரித்தார்.

ஆவணி ரோகிணியில் அவதரித்ததால், இவர் கண்ணனின் அம்சமாகவே கருதப்பட்டார். அதனாலேயே, இவருக்கு கிருஷ்ணர் என்னும் திருநாமத்தை பெற்றார்.

மெய்ம்மை சொல்லின் வெண்சங்கம் ஒன்று ஏந்திய
கண்ணா நின்தனக்குக் குறிப்பாகில்,
கற்கலாம் கவியின் பொருள்தானே
“[ திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திருக்கண்ணமங்கை 7-10-10 ]

என்று திருமங்கையாழ்வார் திருக்கண்ணமங்கைக் கண்ணன் தம் திருமொழியின் அர்த்தங்களை அறிந்துகொள்ள வேண்டும்மென்று ஆசைப்படுவதை அறிந்து “நீ என்னிடமிருந்து கவியின் பெருளைக் கற்றுக் கொள்ளலாம்” என்று கூறியதை கேட்ட கண்ணனும் அவசியம்கற்றுக்கொள்கிறேன் என்று அவதார ரஹஸ்யத்தை கூறினார். “உமது அவதாரத் திருநட்சத்திரத்தில் கார்த்திகையில் கார்த்திகை நாளிலேயே உமது திருநாமமான ’திருக்கலிகன்றி தாஸர்’என்ற திருநாமத்துடன் இந்த சோழநாட்டில் அவதரிக்கப் போகிறீர். அப்போது அதே சோழநாட்டில் என் அவதார திருநட்சத்திரமான ஆவணி ரோஹிணியில் கண்ணன் என்னும் பெயருடன் அவதரித்து உம்மை ஆசார்யனாகக் கொண்டுஅருளிச் செயல்களின் பெருள்களையும் உம்மிடமிருந்தே கற்றறிந்து இவ்வுலகுக்கு வெளிப்படுத்துவேன்” என்று அருளிச் செய்தான். அதன்படியே கலிகன்றியாகிய திருமங்கையாழ்வார் திருக்கலிகன்றிதாஸராகிய நம்பிள்ளையாகவும், கண்ணன் பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதரித்தனர் என்று பெரியார் கூறுவர்.

பெரியவாச்சான் பிள்ளைக்கு “பரம காருணிகர்” மற்றும் “அபார கருணாம்ருத சாகரர்” என்ற இரண்டு உயர்ந்த பெயர்களை வைணவ உலகம் சூட்டியது மகிழ்ந்தது. திருவரங்கநாதன் “அபயப்ரதராஜர்” என்னும் பட்டத்தை இவருக்கு அருளிச்செய்தான். இராமாயண அர்த்த விசேஷங்களை எடுத்துரைத்ததால், “இராமாயணப் பெருக்கர்” என்றும் இவருக்கு ஒரு பெயர்உண்டு.

பெரியவச்சான் பிள்ளை 95 வயது வாழ்ந்து, கிபி 1262ல் ஆசாரியன் திருவடிகளை அடைந்தார். பெரியவாச்சான் பிள்ளைக்குக் குமாரர் (மகன்) இல்லை; ஆகவே, இவர் தனது சகோதரியின் மகனான “நாயனாச்சான் பிள்ளை” என்பவரை ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டு, தான் நம்பிள்ளையிடமிருந்து பெற்ற உபதேசங்களை அவருக்கு அருளிச்செய்தார்.

பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால்
அரிய அருளிச்செயல் பொருளை ஆரியர்கட்கிப்போது
அருளிச்செயலாய்த் தறிந்து.

அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை வார்த்தை மாலை என்ற க்ரந்த்தத்தின் மூலமும் நம் பூர்வாசார்யர்களின்  க்ரந்தங்களின் மூலமும் அறிந்து கொள்ளலாம். அவைகளில் சில கீழே:

  1. “நாம் எல்லோரும் “எம்பெருமானின் கிருபைக்குப் பாத்திரர்களா அல்லது அவருடைய லீலைக்குப் பாத்திரர்களா?” என்று ஒருவர் கேட்க,
    அதற்கு பெரியவாச்சான் பிள்ளை “அகப்பட்டோம் என்றிருந்தால் க்ருபைக்கு விஷயம் உடன்பட்டோம் என்றிருந்தால் லீலைக்கு விஷயம் [நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் பிடிபட்டு உழல்கிறோமே என்று நினைத்தால் நாம் எம்பெருமானின் க்ருபைக்குப் பாத்திரர்கள். ஆனால் நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக எண்ணினால் அப்போது நாம் எம்பெருமானின் லீலைக்குப் பாத்திரர்களாகிறோம்]” என்கிறார்.
  2. இன்னொருவர் கேட்கிறார் “பாரதந்த்ரியம் என்றால் என்ன” என்று. பெரியவாச்சான் பிள்ளையின் பதில் “எம்பெருமானின் சக்தியில் முழுமையாகச் சார்ந்து இருப்பது, உபாயாந்தரங்களை முழுவதுமாக விட்டு விடுவது (சுய முயற்சியும் சேர்த்து), எப்பொழுதும் பகவத் கைங்கர்ய மோக்ஷத்திற்காகவே ஏங்குவது. இவையே பாரதந்த்ரியம்”.
  3. மற்றொருவர்  கேட்கிறார்.  “உபாயம் என்றால் என்ன?  நாம் நம்முடைய எல்லாவிதமான பற்றுதல்களையும் விடுவதா அல்லது அவனைப் பிடித்துக் கொள்வதா”. பெரியவாச்சான் பிள்ளையின் பதில “இரண்டுமே உபாயம் அல்ல. எம்பெருமானே நாம் விடுவதற்கும் பிடித்துக் கொள்வதற்கும் ஏதுவாகிறான். அவனே உபாயம்”.
  4. ஒரு சமயம் பெரியவாச்சான் பிள்ளையின் பந்துக்களில் ஒருவர் அவரிடம் ” நான் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் அநாதி காலம் இந்த சம்சார சாகரத்தில் உழன்று கொண்டுச் கர்மங்களை சேர்த்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கு எம்பெருமான் எப்படி மோக்ஷம் அளிப்பான்”. அதற்கு அவர் பதிலுரைக்கிறார “நாம் எல்லோரும் எம்பெருமானின் சொத்து, அவன் நம்மை எப்பொழுது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறானோ அப்போது நம் கர்மாக்களை எதுவும் பார்க்காமல் நம்மை சேர்த்துக் கொள்வான்” என்று கூறினார்.
  5. ஒரு ஸ்ரீவைஷ்ணவன் இன்னொரு ஸ்ரீவைஷ்ணவனிடம் குறை காணும் பொழுது, பெரியவாச்சான் பிள்ளை “எமன் தன்னுடைய வேலையாட்களிடம் ஸ்ரீவைஷ்ணவர்கள் குறையைப் பார்க்காது அவர்களிடமிருந்து தள்ளியே  இருக்கச் சொல்கிறார். பிராட்டியும் சொல்கிறாள் ‘ந கஸ்ச்சின் ந அபராத்யாதி‘ – பிறரிடம் குற்றம் காணாதீர்கள். எம்பெருமான் ‘என்னுடைய பக்தர்கள் குற்றம் செய்தாலும் அதுவும் நன்மைக்கே’ என்கிறான். ஆழ்வார் பெருமானின் பக்தர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொண்டாட வேண்டும் என்கிறார். இவர்கள் எல்லோரும் பக்தர்களைக் கொண்டாடும் பொழுது, பக்தர்களை நிந்திக்கவும் ஒருவர் வேண்டுமே, அதை நீரே செய்யக் கடவது” என்கிறார்.
  6. ஒரு முறை பாகவதர்களின் பெருமைகளை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது  வேறு ஒருவர் எம்பெருமான் விஷயமாகப் பேச உடனே பெரியவாச்சான் பிள்ளை விசேஷ விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது  எதற்கு சாமான்ய விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று கூறினாராம்.
  7. ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அருளிச்செயலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

தீதறு நம்பிள்ளை பதம் சென்னிவைப்போன் வாழியே
திருமலையில் மால் பதத்தை சிறந்து பெற்றான் வாழியே
ஆதரவாய் தனிச்லோகி தான் அருளினான் வாழியே
ஆழ்வார்கள் சொற்பொருளை அறிந்துரைப்போன் வாழியே
ஒதுபுகழ் சங்கநல்லூர் உகந்துபெற்றான் வாழியே
உரோகிணி நாள் ஆவணியில் உதித்த பிரான் வாழியே
ஏதமில் எண் மூவாயிரம் இயம்புமவன் வாழியே
எழில் பெரியவாச்சான் பிள்ளை இணையடிகள் வாழியே.”
-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வாழித் திருநாமம் :

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த திவ்ய கிரந்தங்கள்

  1. அபய ப்ரதான வியாக்கியானம்
  2. அனுசந்தான ரஹஸ்யம்
  3. ஸ்தோத்திர ரத்ந வ்யாக்யானம்
  4. உபகார ரத்னம்
  5. கத்ய த்ரய வ்யாக்யானம்
  6. கலியன் அருள்பாடு
  7. சகல ப்ரமான தாத்பரியம்
  8. சரம ரகசியம்
  9. தனி ஸ்வோகி வ்யாக்யானம்
  10. திரிமத சித்தாந்த சார சங்கிரகம்
  11. நவரத்னமாலை
  12. நிகமனப் படி
  13. பரந்த படி
  14. பரந்த ரகசிய விவரணம்
  15. பாசுரப்படி இராமாயணம்
  16. மாணிக்கமாலை

இந்த விரிவுரை நூல்களுடன் பிரபந்த ரகசியம் என்னும் தனி நூலும் இவர் எழுதியுள்ளார். 1. ரகஸ்யத்ரய விவரணம் 2. திருப்பல்லாண்டு வ்யாக்யாநம் 3. பெரியாழ்வார் திருமொழி வ்யாக்யாநம் 4. திருப்பாவை மூவாரயிரப்படி வ்யாக்யாநம் 5. நாச்சியார் திருமொழி வ்யாக்யாநம் 6. பெருமாள் திருமொழி வ்யாக்யாநம் 7. திருசந்தவிருத்தம் வ்யாக்யாநம் 8. திருமாலை வ்யாக்யாநம் 9. திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யாநம் 10. அமலனாதிபிரான் வ்யாக்யாநம் 11. கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யாநம் 12. பெரியதிருமொழி வ்யாக்யாநம் 13. திருக்குறுந்தாண்டகம் வ்யாக்யாநம் 14. திருநெடுந்தாண்டம் வ்யாக்யாநம் 15. முதல் திருவந்தாதி வ்யாக்யாநம் 16. இரண்டாந்திருவந்தாதி வ்யாக்யாநம் 17. மூன்றாந்திருவந்தாதி வ்யாக்யாநம் 18. நான்முகன் திருவந்தாதி வ்யாக்யாநம் 19. திருவிருத்தம் வ்யாக்யாநம் 20. திருவாசிரியம் வ்யாக்யாநம் 21. பெரிய திருவந்தாதி வ்யாக்யாநம் 22. திருவெழுகூற்றிருக்கை வ்யாக்யாநம் 23. சிறிய. திருமடல் வ்யாக்யாநம் 24. பெரிய திருமடல் வ்யாக்யாநம் 25. திருவாய்மொழி இருபத்துநாலாயிரப்படி வ்யாக்யாநம் 26. பரந்த ரஹஸ்ய விவரணம் 27. மாணிக்கமாலை 28. நவரத்னமாலை 29. ஸகல ப்ரமாண தாத்பர்யம் 30. உபகார ரத்னம் 31. கத்யத்ரய வ்யாக்யானம் 32. ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம் 33. சதுச்லோகி வ்யாக்யானம் 34. சரம ரஹஸ்யம் 35. அநுஸந்தான ரஹஸ்யம் 36. நிகமனப்படி 37. ஸ்ரீ ராமாயண தனிஸ்லோகி 38. பாரதாதி தனி ஸ்லோகம் 39. அபய ப்ரதான சாரம் 40. ரகஸ்ய தீபிகை 41. பரந்தபடி 42. திரிமத சித்தாந்த சார சங்கிரகம் 43. கலியனருள்பாடு 44. திவ்யப்பரபந்த பாசுரப்படி ராமாயணம் பெரியவாச்சான் பிள்ளை 60 க்ரந்தங்கள் செய்துள்ளதாக அறியப்படுகிறது.

————-

ஸ்ரீ யபதியாய்
விஷ்ணு வாஸூதேவ நாராயணாதி ஸப்த வாஸ்யனான
ப்ரஹ்மம் ஒன்றுமே முமுஷுவுக்கு ஜ்ஞாதவ்யம் என்று
ஸகல ப்ராமண தாத்பர்யம்

(ப்ரமாணம் -நல்ல அறிவுக்கு வழி –ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்கள் அருளிச் செயல்கள் போல்வன-தமேவம் வித்வான் அம்ருதம் இஹ பவதி ந அந்நிய பந்தா-பிராட்டி ஸ்வரூப நிரூபக தர்மம் -திருவில்லாததேவரை தேறேன் மின்

ப்ரஹ்மம் தான் பெரியவனாய் தன்னை ஆஸ்ரயித்த அனைவரையும் பெரியவனாக்கும்
அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா
||-)

அந்த ப்ரஹ்மம் தான் விசேஷணம் என்றும் விசேஷ்யம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
விசேஷணம் ஆகிறது விசேஷ்யத்தோடே பிரிந்து இராத தர்மம் –
விசேஷ்யம் ஆகிறது ஸ்வ விசேக்ஷணத்தோடே பிரித்து இராத தர்மம்

(விசேஷணம் -சார்ந்து இருக்குமது -பூவைச் சார்ந்த மணம் –ரத்னத்தைச் சார்ந்த ஒளி -தர்மம் குணம் -குணியை- தர்மியைச் சார்ந்து இருக்கும்-விசேஷணங்கள் வ்யாவர்த்தி அர்த்தம்-வேறுபடுத்திக் காட்டும்-சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் -ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் -ஸமஸ்த குண -ஞான ஸக்த்யாதி -விஸிஷ்ட ப்ரஹ்மம் -திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்ட ப்ரஹ்மம்-ஸர்வ வியாபகம் ஸர்வாந்தர்யாமி)

(ஸரீராத்மா பாவம் நமது அசாதாரண தர்மம்–யஸ்ய சேதனஸ்ய யத்த்ரவ்யம் ஸர்வாத்மனா ஸ்வார்தே நியந்தும் தாரயிதம் ச ஷக்யம் தத் .அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷ சாயினேI நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று-சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்-நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்)

(யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் -(எந்த சேதனனுக்கு எந்த ஒரு த்ரவ்யம்-அசைத்து சரீரமாகத்தானே இருக்கும் அதுக்கு சரீரம் இல்லையே )
சர்வாத்மநா (எப்பொழுதுமே-அனைத்துப் படிகளாலும் )ஸ்வார்த்தே (தன் பொருட்டே )தாரயிதும் (தாங்கப்பட்டும் )நியந்தும் ச (நியமிக்கப்பட்டுமுள்ள ) சக்யம் சேஷதைக ஸ்வரூபஞ்ச தாது தஸ்ய சரீரம்உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் –சேஷத்வம்– பரகத அதிசய ஆதான இச்சயா உபாதேயத்வம் ஏவ யஸ்ய ஸ்வரூபம் –-உடையவனுக்கு பெருமை செய்யவே அனைத்து ப்ரவ்ருத்திகளும் கொண்டதுசர்வம் கலு இதம் ப்ரஹ்மம் -தத் ஜலான் –(தத் ஜ -தத் ல -தத் ஆன் )சாந்த உபாஸீத -ஸாமாநாதி கரண்யம்-நீராய் நிலனாய் இத்யாதி அனைத்தும் சரீரம் ப்ரஹ்மம் ஜகத் -மட்குடம் –விசேஷணம்- விசேஷ்யம்)

விசேஷணமும் போக உபகரணம் என்றும்
லீலா உபகரணம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
போகமாகிறது
இஷ்ட பல அநு பாவம்
லீலையாகிறது காலாந்தரத்திலே ஒரு பலம் அன்றிக்கே தாத் காலிக ரஸ ஹேதுவான வியாபாரம்

(கர்த்தா உபகரணங்களைக் கொண்டு கர்மாவைச் செய்கிறான்
குயவன் சக்கரம் கொண்டு மண் குடம் பண்ணுகிறான்
ப்ரஹ்மமே ப்ரஹ்மத்தைக் கொண்டு ப்ரஹ்மத்தை அனுபவிக்கிறான் -போக ஸ்ரீ நிவாஸன் -பேரர் உண்டே திருமலையில்-
இதற்கு லோக த்ருஷ்டாந்தம் சொல்ல முடியாதே)

போக உபகரணமும் சேதனம் என்றும் அசேதனன் என்றும் த்விவிதம்
சேதனமாகிறது ஞான ஆஸ்ரய வஸ்து
அசேதனம் ஆகிறது ஞான சூந்ய வஸ்து

அதில் சேதன ஜாதி நித்ய வர்க்கம் என்றும் முக்த வர்க்கம் என்றும் த்வி விதம்
நித்ய வர்க்கமாகிறது ஒரு நாளும் ஸம்ஸாரத்தை ஸ்பர்ஸியாதே பகவந் நித்ய கைங்கர்ய நிரத ரஸராய் இருந்துள்ள அநந்த வைநதேய விஷ்வக் ஸேநாதி ஸூரி (வர்க்கம்)சங்கம்
-(அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தமே இல்லாதவர்-ஸ்ரீ வத்ஸ சிஹ்னர் கூரத்தாழ்வான் -இவர்களையும் கீழே அனுப்பி கார்யம் கொள்ளுவான்)
முக்த வர்க்கமாகிறது (
நிர்ஹேதுகமான)பகவத் கிருபையால் அநாதியான அசித் சம்பந்தத்தில் நின்றும் விடப்பட்டு நித்ய வர்க்கத்தோடே கலந்து அது முதலாக யாவதாத்மபாவி (நித்தியமாக)பகவத் கைங்கர்ய பரராய் இருக்குமவர்கள் –

அசேதனம் ஆகிறது ஸூத்த ஸத்வாத்மகமாய் தன்னோடே சம்பந்தித்த சேதனர்க்கு ஸ்வரூப ப்ரகாசகமாய் –நித்யமாய்- ஸ்வயம் ப்ரகாசகமாய் -கர்ம நிரபேஷமான பகவத் இச்சையாலே திவ்ய விக்ரஹங்களாய் -திவ்ய ஆபரணங்களாய் -திவ்ய ஜன பதங்களாய் அபரிச்சின்னமாய் நித்யருக்கும் முக்தருக்கும் பகவானுக்கும் கைங்கர்ய போக பரிகரமாய் இருக்கும்

(உபய விபூதி நாயகன் உத்தம புருஷன் திரு வயிற்றில் மூன்று மடிப்புக்கள்- த்ரிவித சேதன அசேதன –கீழ் போக -நித்ய விபூதி பார்த்தோம் -மேல் லீலா விபூதி பார்க்கப் போகிறோம்)

இனி லீலா உபகரணமும் சேதனம் என்றும் அசேதனம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
அதிலே சேதன ஜாதியும் -சம்சாரிகளை யென்றும் முமுஷுக்கள் என்றும் த்வி விதம்
ஸம்ஸாரிகள் ஆகிறார் அநாதியான அசித் ஸம் ஸம்பந்தத்தாலே திரோஹிதங்களான ஸ்வரூப ஸ்வ பாவங்களை உடையராய்
அது அடியாக அந்யதா ஞான விபரீத ஞானங்களை யுடையராய் -(
அந்யதா ஞான-குணமே மாறாடுவது -வெளுத்த சங்கத்தை மஞ்சளாகப் பார்ப்பது -சேஷத்வம் அடிமைத்தனம்-குணம் பார்க்காமல் ஸ்வ தந்திரம் என்று நினைக்க-விபரீத ஞானங்களை –பொருளையே மாறாடிப் பார்ப்பது யுடையராய் -தேஹமே ஆத்மா என்று பிரமித்து)
தத் கார்யங்களான ராக த்வேஷாதி (விருப்பு வெறுப்பு முதலாக)ஜன்யங்களான புண்ய பாப ரூப நாநா வித கர்மங்களை யுடையராய் அது மூலமாக தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர் வித நாநா சரீரங்களிலே நிரந்தரமாக ப்ரவேசியா நின்று கொண்டு அந்த சரீரங்களிலும் சரீர அனுபந்திகளிலும் அஹங்கார மமகாரங்களாலே வருகிற துக்கங்களில் ஸூக புத்தி பண்ணா நின்று கொண்டு விஷய ப்ரவணராய் தாப த்ரய தஹ்மானராய் நிரந்தர துக்க சாகர நிமக்நராய் இருக்குமவர்கள்

(காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதிச் சய்யாஸனம் வாஹநம்
வேதாத்மா விஹகேச்வரோ யவனிகா மாயா ஜகன்மோஹிநீ
ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண:
ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம்“

ஹே ஸ்ரீ பகவதி! ஸ்ரீ மஹாலக்ஷ்மி! உன்னை நாம் எப்படிச் சொல்லுவோம்!
உனக்குக் கணவன் புருஷர்களில் சிறந்த ஸ்ரீ நாராயணன்;
ஸர்ப்பங்களில் சிறந்த ஸ்ரீ ஆதிசேஷனோ படுக்கை, ஆசனம்;
வேத ஸ்வரூபியான ஸ்ரீ கருடாழ்வான் வாஹனம்;
உலகத்தை மோஹிக்கும் மாயை உன்னை அறியவொட்டாமல் தடுக்கும் திரை;
தேவர்கள் குழு உனக்கு கைங்கர்யம் செய்பவர்கள்;
உனக்குப் பெயரோ ஸ்ரீ என்று எல்லாச் சொல்லுக்கும் மேன்மையைத் தெரிவித்துக் கொண்டு முன் நிற்பது.
இப்படி இவ்வளவு மஹிமை உள்ள உன்னை எவ்வாறு சொல்லுவது, புகழ்வது?)

முமுஷுக்களும் (ஸம்ஸாரம் விடுபட ஆசை கொண்டவர்)ஆத்ம பிராப்தி காமர் என்றும் பகவத் பிராப்தி காமர் என்றும் த்வி விதரராய் இருப்பார்கள்ஆத்ம பிராப்தி காமர் ஆகிறார் (கேவலர்)-ராஜ பதம் அளவாக யுடைத்தான ஐஹிக ஐஸ்வர்யமும் பிரம பதம் பர்யந்தம் உள்ள ஆமுஷ்மிக ஐஸ்வர்யமும் அல்பம் அஸ்திரம் ஆகையால் விவேகித்து -ஆத்மா ப்ரக்ருதே பரனாய் -நித்யனாய் -ஞான ஆனந்த ஸ்வரூபனாய் இருக்கையாலே ஆத்ம போகமே புருஷார்த்தம் என்று தத் ப்ராப்திக்கு யத்னம் பண்ணுமவர்கள் -இவர்கள் தத் அதிகமான பகவத் பிராப்தி ஸூகத்தை விமர்சியாதவர்கள்

பகவத் பிராப்தி காமர் ஆகிறார் -ப்ரக்ருதே பரனாய் -நித்யனாய் -நிர்மலனாய் -ஞான ஆனந்த மயனாய் -அபரிச்சின்னமான குணகனுமாய் -பகவத் அநந்யார்ஹ சேஷமாகையாலே -அநந்ய போக்யமான ஆத்மாவுக்கு ஸ்வ அனுபவம் அணுவாய் -ஸ்வ தந்திரமுமாகையாலே -ஸ்வரூப விருத்தம் என்று விஷம் போலே அநாதரித்து –
நித்தியமாய் -நிர்மலமாய் -அபரிச்சின்ன ஞான ஆனந்த மயமான ஸ்வரூபத்தை யுடையனாய் -ஸர்வ சேஷியாய் -ஸர்வ சரண்யனாய் -ஸர்வ ப்ராப்யனான -ஸ்ரீ யபதியுடைய திருடிகளிலே நித்ய கைங்கர்யத்தைப் பரம புருஷார்த்தமாக நிச்சயித்து -ஒரு தேச விசேஷத்திலும் தேஹ விசேஷத்திலும் அன்றியே சித்திப்பதாகையாலே தத் ப்ராப்திக்கு விரோதியான தேச சம்பந்தமும் தேஹ சம்பந்தமும் விட வேணும் என்று ஆசைப்படுமவர்கள்

இவர்களும் உபாஸக நிஷ்டர் என்றும் ந்யாஸ நிஷ்டர் என்றும் த்வி விதம்
உபாஸக நிஷ்டர் ஆகிறார் -பல சங்க பரித்யாக பூர்வகமாக -யஜ்ஞ தாநாதி கர்மங்களை அனுஷ்ட்டிக்க விபரீத ஞான ஹேதுவான ரஜஸ் தமஸ்ஸுக்கள் நன்றாக நசித்து -யதா ஞான ஹேதுவான ஸத்வம் பிரகாசித்து -அதனாலே பகவத் ஞானம் யுண்டாய்
அது ஸாஷாத் கார ஸமானமாய் -அந வரத பாவனை யுண்டாய் -பக்தி ரூபா பன்னமாய்
ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களிலே ஸூக துக்கனாகப் பண்ணுவதாய்-
ஸாஸ்திரங்களிலே மோக்ஷ சாதன தயா விஹிதையான பக்தியை உபாயமாக அவலம்பித்தவர்கள்

(வேதந – ஸ்மரண – த்யான -உபாஸன–அன்பு கலந்த பக்தி -அறிந்து -உபாயம் -சமீபத்தில் அழைத்துச் செல்லும்-நம் யத்னம் -சாதன உபாயம் -ஸாத்ய உபாய நிஷ்டை -ஞான தர்சன பிராப்தி தசைகள் -பர பக்தி பர ஞான பரம பக்தி –

மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷

என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக –
அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி உடையவனாக ஆவாயாக
அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக -யஜ தேவ பூஜா
என்னை வணங்குவாயாக
என்னையே மேலான ஆஸ்ரயமாகக் கொண்டவனாய் இவ் வண்ணமாக
நெஞ்சைப் பழக்குவதன் மூலம் என்னையே அடைவாயாக-


ஸ்வா தந்திரம் லேசமும் இல்லாமல் பாரதந்த்ரம் கொண்டு – -அவனைப் பற்றுவதே சரணாகதி பிரபத்தி ந்யாஸம் -ப்ரஹ்மமே ந்யாஸம் -ஸித்த உபாயம்
சரணம் இதி ஆகதி -நீயே உபாயம் என்று வந்து விடுவதால் -நம்புவதே சரணாகதி -ஸித்த உபாய நிஷ்டை -அவனே உபாயம் என்கிற மஹா விஸ்வாஸம் -)

ந்யாஸ நிஷ்டராகிறார் -உபாஸனமும் அநேக ஜன்ம ஸாத்யமாகையாலே துஷ் கரம் என்றும் -தேச கால அதிகாரி ப்ரப்ருத் யனேக நியம அபேக்ஷமாகையாலே ஸ அபாயம் என்றும்
ப்ராரப்த கர்மாவஸாந பலமாகையாலே ஸ விளம்பம் என்றும்
அசேதனமாகையாலே அஸமர்த்தம் என்றும்
ஸ்வ யத்ன ஸாத்யமாகையாலே ஸ்வரூப விருத்தம் என்றும்
பின்னையும் சொல்லப்படுகிற உபாய ஆபாசங்கள் எல்லாவற்றையும் ஸ அங்கமாகவும் ஸ வாஸநமாகவும் விட்டு

அந்த உபாயங்கள் போல் அன்றிக்கே
நிவ்ருத்தி சாத்யமாகையாலும்
ஸக்ருத் அநுஷ்டேயமாகையாலும்
ஸூ கரமாயும்
ஒரு நியமமும் வேண்டி இராமையாலே நிர் அபாயமாயும்
தேஹ அவஸாந பலிதமாகையாலே சீக்ர பல ப்ரதமாயும்
பரம சேதனமாகையாலே பல ப்ரதாநத்தில் ஸ்வயம் ஸமர்த்தமாயும்
நிருபாதிகமாகையாலே ஸ்வரூப அநு ரூபமான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளையே விலக்ஷண உபாயமாக நிச்சயித்து
அதிலே ந்யஸ்த பரராய் இருக்குமவர்கள்

இந்த ந்யாஸ நிஷ்டரும் ஸ்வயம் ந்யஸ்த பரர் என்றும் பர ந்யஸ்த பிறர் என்றும் த்வி விதம்
ஸ்வயம் ந்யஸ்த பரராகிறார் -ஸதாச்சார்ய கிருபையாலே லப்த ஞானராய் ஸ்வ தோஷத்தை அனுசந்தித்து ஹித பரனான ஸர்வேஸ்வரன் ஸ்ரீ பாதத்தைத் தாங்களே ஆஸ்ரயிக்க அஞ்சி -ஸர்வேஸ்வரனுக்குப் பத்நியாய் -வல்லபையாய் -ஸர்வ ஆத்மாக்களுக்கு ஸ்வாமிநியாய் -மாதாவாய் -அவனோடே நித்ய ஸம் யுக்தையான பிராட்டி பிரஸாதத்தாலே பயம் கெட்டு
வாத்சல்யாதி ஸமஸ்த கல்யாண குண கண விஸிஷ்டனான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளைத் தம்முடைய அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் உபாயமாக ஆஸ்ரயிக்குமவர்கள்

பர ந்யஸ்த பரராகிறார் -தங்களுக்காக ஆசார்யனாலே அனுஷ்ட்டிக்கப்பட்ட ஏதாத்ருஸ ந்யாஸத்தை யுடையவர்கள்
இவரும் ஸ நிபந்தன பர ந்யஸ்த பரர் என்றும் நிர் நிபந்தன பர
ந்யஸ்த பரர் என்றும் த்வி விதமாய் இருப்பார்கள்

ஸ நிபந்தன பர ந்யஸ்த பரராகிறார் -தம்முடைய அநு வர்த்தநாதிகளாலே மந்த்ர பிரதனனான ஆச்சார்யனாலே அனுஷ்ட்டிக்கப்பட்ட பர ந்யாஸத்தை யுடையவர்கள்

நிர் நிபந்தன பர ந்யஸ்த பரராகிறார் -தனக்கு ப்ராப்தமான புருஷார்த்தத்தினுடைய யுக்த வை லக்ஷண்யத்தை அனுசந்தித்து அது இவர்களுக்கு இல்லாத மாத்திரம் அன்றிக்கே இவர்கள் படுகிற துர்க் கதியைக் காணப் பொறாத கேவல கிருபையாலே ப்ரீதனான ஆச்சார்யனாலே அனுஷ்ட்டிக்கப்பட்ட பர ந்யாஸத்தை யுடையவர்கள்

இவர்களில்
ஸம்ஸாரிகள் ஈஸ்வரனுடைய சிக்ஷைக்கு விஷயமானவர்கள்
கேவலர் -உபேக்ஷைக்கு விஷயமானவர்கள்
உபாஸகர் அனுக்ரஹத்துக்கு விஷயமானவர்கள்
ப்ரபன்னர் கிருபைக்கு விஷயமானவர்கள்

(அருள் தயா அனுக்ரஹம் கிருபை அனுகம்பா -பர்யாய பதங்கள்
அனு க்ரஹம் பின் தொடர்வது அனு பத பிரயோகம் -யாத்திரை அனு யாத்ரை -யாகம் அநுயாகம்
அனு க்ராஹதம் -பண்ணினதால் பலன் -பக்தி செய்வதால் அருள் -சோபாதிகம் -உபாதி இருக்க வேண்டுமே
கிருபா -நிருபாதிகம் -அளவுக்கு உட்படாமல் -)

ப்ரபன்னர் எல்லாருக்கும் தேஹ அவசானத்திலே பலமே ஒக்கும்
உத்தர உத்தர அதிகாரிகள் பாக்யாதிகாரிகள்
இவர்கள் ஆர்த்த அதிகாரிகள் என்றும் த்ருப்த அதிகாரிகள் என்றும் த்வி விதம்
ஆர்த்த அதிகாரிகள் ஆகிறார் -பகவத் பிராப்திக்கு விரோதியான வர்த்தமான சரீரத்தில் ஸ்திதியும் அக்னி ஜ்வாலா பஞ்சரத்தில் (
கூண்டுக்குள்)இருப்புப் போலே அத்யந்த துஸ் ஸஹமாய்த் தோற்றித் தந் நிவ்ருத்திக்குத் த்வரிக்குமவர்கள்

(இனி இனி இருப்பதின் கால் -திரு விருத்தத்தில் 3 தடவையும் திருவாய் மொழியில் 17 தடவையும் கூப்பிடடாலும் இங்கேயே வைத்தான்
இனி என்றதும் உற்றேன் உகந்து பணி செய்து உனது பாதம் பெற்றேன் என்று ஆக்காமல்
பிரபந்தம் தலைக் கட்ட -நச்சுப் பொய்கை ஆகாதற்காக -ஆர்த்தி பெருக்க -வீடு திருத்த -இங்கே வைத்தான்-த்யாஜ்ய தேகத்தில் பிராவண்யம் மிக்கு இத்துடன் கூட்டிச் செல்லப் பார்த்தான் -அவனுக்கும் மங்க ஒட்டு உன் மா மாயை உபதேசித்தார் அன்றோ)


த்ருப்தராகிறார் -பகவத் பிராப்திக்கு விரோதியான தேஹாந்தர ஸம்பந்தமும் ஸ்வர்க்க நரகாதி பிரவேசத்தில் விரக்தியும் பீதியும் யுண்டாய் தந் நிவ்ருத்திக்கு பகவானை ஆஸ்ரயித்து வர்த்தமான சரீர வியோகத்துக்கு த்வரியாதவர்கள்

இவரும் ஸ்வ தேஹ ஸம்பந்த த்ருப்தர் என்றும் ஸ்வ தேஹீ ஸம்பந்த த்ருப்தர் என்றும் த்வி விதரராய் இருப்பார்கள்
ஸ்வ தேஹ ஸம்பந்த த்ருப்தர் ஆகிறார் –சரீர அவசானத்திலே போகம் எத்தனையேனும் விலக்ஷணமானாலும் ருசி வாசனைகளாலே இத்தை விட்டு விட த்வரியாதவர்கள்

ஸ்வ தேஹீ ஸம்பந்த த்ருப்தர் ஆகிறார் -தனக்கும் அவனுக்கும் உண்டான நிருபாதிக சரீர சரீரி ஸம்பந்தத்தை அனுசந்தித்து அவனுடைய கார்யம் என்று த்வரியாதே ஐஹிக போக தாஸ்யத்திலே மண்டி இருக்குமவர்கள்

ஆர்த்தராகிறார் -பகவத் பிராப்திக்கு விரோதியான வர்த்தமான சரீரத்தில் ஸ்திதியும் அக்னி ஜ்வாலா பஞ்சரத்தில் இருப்புப் போலே அத்யந்த துஸ் ஸஹமாய்த் தோன்றி தந் நிவ்ருத்திக்கு த்வரிக்குமவர்கள்
இவரும் பிரதி கூல போக ர்த்தர் என்றும் அநு கூல போக ர்த்தர் என்றும் த்வி விதம்

பிரதி கூல போக ர்த்தர் ஆகிறார் -ப்ரத்யக்ஷ ஸித்தமான தாப த்ரய துக்கம் அதி துஸ் ஸஹமாய்த் தோன்றி அதுக்கு ஹேதுவான தேக சம்பந்தத்தையும் தேச சம்பந்தத்தையும் தேசிகருடைய ஸஹ வாஸத்தையும் பொறாதே ஸாஸ்த்ர த்ருஷ்டிகளாலும் ஆச்சார்யர்களுடைய வசனங்களாலும் அறியப்படுமதாய் -அந்த துக்க கந்தமும் இன்றிக்கே நிரதிசயமான பகவத் பிராப்தி ரூப ஸூகத்திற்கு த்வரைப் படுமவர்கள்

அநு கூல போக ர்த்தர் ஆகிறார் -நிரந்தரமான த்வய அநு சந்தானத்தாலே தனக்கு ப்ராப்யமான பரம பதத்தில் நித்ய வாசத்தினுடைய வைலக்ஷண்யம் விசதமாக பிரகாஸிக்க அது இல்லாத க்ஷண காலமும் கல்ப ஸஹஸ்ரமாய்த் தோன்றும்படி (ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ)ஆர்த்தராய் -ஏதத் ப்ராப்திக்கு த்வரிக்கின்றவர்கள் –

இந்த ப்ரபந்ந விஷயமான உபாய க்ருத்யம் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்தியும் என்று த்வி விதமாய் இருக்கும்(அநிஷ்டமும் இஷ்டமும் அதிகாரிகளுக்குத் தக்க வேறு வேறாகவே இருக்கும்)
அநிஷ்டம் தான் பூர்வாகம் என்றும் உத்தராகம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
அகமாகிறது புண்ய பாப ரூபமான கர்மம் –
ஸ்வர்க்காதி சாதனமாக புண்யமும் பாபம் போலே பேற்றுக்கு பிரதிபந்தகமாகையாலே அகம் எனப்பட்டது

இதிலே பூர்வாகம் ஆகிறது -ஆஸ்ரயணத்துக்கு முன்பு அநாதி காலம் பண்ணப் பட்ட கர்மம் –
இதுவும் ஸஞ்சிதம் என்றும் ப்ராரப்தம் என்றும் த்வி விதமாய் இருக்கும்

ஸஞ்சிதமாகிறது -பல ப்ரதானத்துக்கு உத் யோகியாமல் இருக்கிறது
ப்ராரப்தமாகிறது -பல பிரதானத்துக்கு உத் யோகிக்கிறது

ப்ராரப்தமும் வர்த்தமான சரீராரப்தம் என்றும் சரீராந்தராரப்தம் என்றும் த்வி விதம்

உத்தராகமாகிறது –ஆஸ்ரயணக்கு அநந்தரம் தேஹ அவசான பர்யந்தம் வாஸநா பலத்தாலே செய்யப்பட கர்மம்
இதுவும் ஞான க்ருதம் என்றும் அஞ்ஞான க்ருதம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
இதுவும் ஸ அநுதாபம் என்றும் நிரநுதாபம் என்றும் ஓர் ஒன்றே த்வி விதமாய் இருக்கும்

இப்படிப்பட்ட பேதங்களை யுடைத்தான அநிஷ்டத்தை இவன் இடத்திலே ப்ரீதி அதிசயத்தாலே உபாய பூதனான ஈஸ்வரன் போக்கும்படி எவ்வாறு என்னில்

(ஸஞ்சித பிராரப்த ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -நானும் வேண்டா நீயும் வேண்டா -தன்னடையே போகும்)

(போய பிழையும் புகுதருவான் நின்றனவும்-மாரீசனை ஒட்டி ஸூ பாஹுவை முடித்தால் போல்-ஏழு வர்க்க பாபங்கள் -ஸஞ்சித கர்மா மூட்டை பெரியது –
பக்தி உபாசகனுக்கும் ப்ரபன்னனுக்கும் முடிக்கும் முறை -அநுகூல பிரதிகூல இடம்
சரீராராப்த ஆரப்த கர்மம் -தீயில் இட்ட பஞ்சு போல் அழித்தே விடுகிறான் -பக்தனுக்கு இது இல்லை
மூன்றாவது வர்த்தமான சரீர ஆரப்த கர்மாவை ப்ரபன்னனுக்கு தேக அவசா னத்திலே அதற்குள்ள அனுபவம் கொடுத்து தீர்க்க வேண்டும்
ஆகவே ஸரணாகதி செய்த உடன் ஸுகமீ என்று சொல்ல முடியாது -மோக்ஷம் நிச்சயம்-அஜ் ஞான க்ருத பாபம் அப்படியே காணாக் கண் இட்டு இருப்பான்-

சிந்தையந்திக்கு அப்போதே -வேணுகானம் கேட்டு ஆனந்தம் புண்யங்களைப் போக்கி -கண்ணனைப் பார்க்கப் போகாமல் துக்கப்பட்டு பாபங்களை போக்கி அப்போதே பேறு -அவள் ஆர்த்த ப்ரபந்தனை
நம்மாழ்வார் தீர்க்க சிந்தையந்தி)


வர்த்தமான சரீரார்ப்பத்தை ஒழித்து பூர்வாகத்தில் புண்ய அம்சத்தை இவனை ஸ்நேஹித்தவர்களை அநு பவிப்பிக்கும் –
பாப அம்சத்தை த்வேஷித்தவர்களை அநு பவிப்பிக்கும் –
ஸரீராரப்தத்தை ஸரீரத்தோடே போக்கும்
இவனுக்கு எப்போதும் அநு கூல போகார்த்தி யுண்டாம்
அந்த ஆர்த்தி ரூபமான மஹா துக்கத்தினாலும் தத் ஹேதுவான அநுபவ ஆஹ்லாத ரூபமான மஹா ஸூகத்தினாலும் சரீர அநுபாவ்யத்தை எல்லாம் அப்போதே போக்கும்
உத்தராகத்தில் அஞ்ஞான க்ருதமும் அவனுடைய வாத்சல்யத்தினாலே திரு உள்ளத்துக்கு விஷயம் இன்றிக்கே போம்
ஸ அநுதாபமான ஞான க்ருதமும் அவனுடைய க்ஷமைக்கு விஷயமாம்
அது பகவத் விஷயமானால் பகவத் விஷயமான அநு தாபத்தாலே போம்
பாகவத விஷயமானால் பாகவத விஷயத்தில் அநு தாபத்தாலே போம் –
நிரநுதாப ஞான க்ருதமும் சரீர அநு பாவ்யம் போலே அனுபவித்துப் போக்குவன்

ஸாமான்ய நிஷித்த அநுஷ்டானமும் பகவந் நிக்ரஹ ஹேதுவாகையாலும் சிஷ்ட ஐந கர்ஹிதமாகையாலும் க்ரூரம்
பகவத் விஷயமான அநுதாப சூன்யமும் க்ரூர தரம்
பாகவத விஷயமான அநுதாப சூன்யமும் க்ரூர தமம்
ஆகையாலே ப்ரபந்நன் பகவத் பாகவத் ப்ரஸாதத்துக்கு ஒழிய க்ஷமைக்கு விஷயமாகை அநுரூபம் அல்லாமையாலே ஸாவதாநத்தோடே நடக்க வேணும்
ஆகையாலே ஞான க்ருதமான் ஸ அநு காமமும் உதிக்கைக்கு அவகாசம் இல்லாமையாலே அநுதாப சூந்யமும் தூரதோ நிரஸ்தம்
ஆனாலும் ஈத்ருஸ கடிந ப்ரக்ருதிகள் உண்டாகுவாரோ என்று ஸாஸ்த்ரம் சொல்லிற்று ஆயிற்று

இப்படி ஸர்வமான கர்மங்களும் நிவர்த்யங்கள் யாகையாலே தத் கார்யமான தேஹ ஸம்பந்தம் இல்லை
தேஹ ஸம்பந்தம் இல்லாமையாலே தத் கார்யமான அவித்யை இல்லை
இம் மூன்றும் இல்லாமையாலே தத் தத் வாஸநா ருசிகள் இல்லை
ஆகையாலே ப்ரபன்னனுக்கு சரீர அவசானத்திலே தேச கால அதிகாரி நியமங்களும் உத்தர க்ரியைகளும் உபாயம் அன்று
ஆனாலும் உத்தர க்ரியைகளும் ஆந்ரு ஸம்ஸ்யத்தாலும் பகவத் ப்ரீதி ஜனகங்கள் ஆகையாலும் செய்யப்படும் அத்தனை

இனி இஷ்ட பிராப்தியும் ஐஹிகம் என்றும் ஆமுஷ்மிகம் என்றும் த்வி விதம்
ஐஹிகம் பகவத் கைங்கர்யம் என்றும் பாகவத கைங்கர்யம் என்றும் த்வி விதம்
கைங்கர்யமாவது -இஷ்டம் செய்கை (
கிம் கரோ -என்ன பண்ண வேண்டும் என்று எதிர்பார்த்து கேட்டு செய்ய வேண்டுமே)-அது தான்
ஸாமான்ய விஹித அநுஷ்டானமும் (
வர்ணாஸ்ரம தர்ம அநுஷ்டானம்)பகவத் ஸந்தோஷமாகையாலே கைங்கர்யம் என்னக் கடவது இறே
பகவானுக்கு இஷ்டம் ஸாஸ்த்ர முகத்தாலே அறிய வேணும்
பாகவதருக்கு இஷ்டம் அவர்கள் நினைவிலே அறிய வேணும் –

ஆக கைங்கர்யமும் மாநஸம் என்றும் காயிகம் என்றும் த்வி விதம்
மாநஸ மாகிறது -அந்நிய பரமாகாமல் தத் பரமாக்குகை (
கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் -தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை நாம் கொள் சிறப்பே)-அதுவும் செய்த உபகாரத்தை ஸ்மரிக்கையும் -செய்யக் கடவ உபகாரத்தை அபேக்ஷிக்கையும் என்று த்வி விதம்
இதில் ஈஸ்வரன் செய்த உபகாரமாகிறது -ஸதாசார்யனை ஆஸ்ரயிப்பிக்கையும் -தத் அர்த்தமான அதிகாரி ஸம்பத்தும்
ஆமுஷ்மிகமான கைங்கர்யமும் இதுவே
அந்தக் கைங்கர்யமும் வாசிகம் என்றும் காயிகம் என்றும் த்வி விதம்
வாஸிகமாகிறது -ஸ்துதி -திருநாம ஸங்கீர்த்த நாதிகள்(
வாசிகமான அங்கு கைங்கர்யம் செய்தான் மொய் மாம் பொழில் -பதிகம்)
காயிகமாகிறது -ஸம்மார்ஜமான மாலா
பந்தநாதிகள்

பாகவத கைங்கர்யமும் ஆசார்ய கைங்கர்யம் என்றும் தத் துல்யரான பாகவத கைங்கர்யமும் என்றும் த்வி விதம்

ஆசார்யரும் மந்த்ர ப்ரதர் என்றும் -மந்த்ர ரத்ன பிரதாரி யென்றும் த்வி விதம்
இவர்கள் பக்கல் செய்யும் பிரதிபத்த ஸமமாய் இருக்கும்
பகவானுடைய திருவடிகள் இரண்டிலும் வைஷம்யம் உண்டாகில் இறே ஆசார்ய விஷயத்தில் வைஷம்யம் உண்டாவது

(மந்த்ரத்திலும் மந்த்ர ப்ரதிபாத்ய வஸ்துவிலும் மந்த்ர ப்ரதான ஆச்சார்யன் பக்கலிலும் ப்ரேமம் கணக்கா உண்டாக வேணுமே -பெரிய திருமொழி முதல் நான்கு பதிகமும் இத்தைக் காணலாம்
மந்த்ரம் கொடுத்த திருநறையூர் நம்பி மந்த்ரார்த்தம் கொடுத்தக திருக்கண்ணபுரத்துக்கும் 100 பாசுரங்கள் மங்களா சாசனம்
ஸ்ரீ ரெங்கம் மட்டுமே 50 பாசுரம் -வேறே யாருக்கும் இல்லையே)


இப்படிப்பட்ட ஆசார்யர்கள் செய்த உபகாரமாகிறது -அநாதி காலம் விமுகனான சேதனனை பகவத் விஷயத்தில் அபி முகனாகச் செய்கையும் -மந்த்ரார்த்த முகத்தாலே அஞ்ஞானத்தை நிரஸித்து ஞானத்தை யுண்டாக்கி தத் அநு ரூபமான வ்ருத்தியிலே நியமித்து ததீய அந்தர் பவாத்தை உண்டாக்குகையும் -கைங்கர்யம் கொள்ளுகையும்
தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
நண்ணா ரவர்கள் திரு நாடு —————60-

ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
னான குருவை அடைந்தக்கால் -மா நிலத்தீர்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் ————61-

உய்ய நினைவு யுண்டாகில் உம குருக்கள் தம் பதத்தே
வையும் அன்பு தன்னை இந்த மா நிலத்தீர் -மெய்யுரைக்கேன்
பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம்
கையிலங்கு நெல்லிக் கனி ————-62-

ஆசார்யன் செய் உபகாரமானவது
தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் -தேசாந்
தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் ——–63-

தன்னாரியனுக்குத் தானடிமை செய்தவன்
இந்நாடு தன்னில் இருக்கும் நாள் -அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி யாசாரியனைப்
பிரிந்து இருப்பார் ஆர் மனமே பேசு ———-64-

இனி பாகவதர் செய்த உபகாரமாவது -குண லேசமும் இன்றிக்கே தோஷங்களினாலே பூர்ணனான தன்னை ஆசார்ய ஸம்பந்தத்தையே பார்த்து ஸ்வரூப அநு ரூபமான போகத்திலே கூட்டிக் கொண்டு கைங்கர்யத்துக்கு விஷயமாக்குகை

(-அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் ஆஸ்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்.-திருவேங்கடமுடையான் அனந்தாழ்வானுக்கு சமர்ப்பித்த தனியன்)

இனி லீலோ உபகரணமான அசேதனமும் ப்ரக்ருதி என்றும் காலம் என்றும் த்வி விதம்
ப்ரக்ருதி யாகிறது -ஸத்வ ரஜஸ் தமோ குணாத்மகமாய் நித்யமாய்- தன்னோடே சம்பந்தித்த சேதனருக்கு தத் தத் கர்ம அநு குணமான தேஹ இந்த்ரியாதி ரூபமாய் -அநேக விகாரங்களை யுடைத்தானதாய் -ஸப்தாதி விஷய ப்ராவண்யத்தையும் பகவத் விஷய வைமுக்யத்தையும் பிறப்பிக்குமதாய் இருக்கும் அசித் விசேஷம்

காலமாகிறது -நித்தியமாய் -நிமேஷ காஷ்டாதி ரூபமான பஹு விகாரங்களை யுடைத்தாய் சேதனருடைய கர்மத்துக்கும் தத் அநு குண ரூபமான போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும்

இனி லீலா பரிகரமும் போக பரிகாரமுமான சேதன அசேதன வர்க்கம் -ஸ்வ விஸேஷ்யமான ப்ரஹ்மத்துக்கு வ்யாப்யமாய் –தார்யமாய் -நியாம்யமாய் -சரீரமாய்- சேக்ஷமாய் இருக்கும்

இனி விசேஷ்யமும் அகில ஹேய ப்ரத்ய நீகமாய்- கல்யாணை கதாநமாய் -ஸதைக ரஸமாய் -விபுவாய்- நித்யமாய் -ஞான ஆனந்தங்களை ஸ்வரூபமாக யுடையதுமாய் -ஞான ஸக்த்யாதி அநந்த குண கண பூஷிதமாய் -ஸ்வ விசேஷணமான ஸகல சேதன அசேதனங்களுக்கும் வ்யாபகமாய் -தாரகமாய் -நியாமகமாய் -ஸரீரியாய் -சேஷியாய் -விலக்ஷண விக்ரஹ யுக்தமாய்- லஷ்மீ பூமி நீளா ஸமேதமாய் -நித்ய முக்தர் அநு பாவ்யமாய் -ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்த்தாவாய் -ஸர்வ லோக சரண்யமாய் -ஸகல பல ப்ரதமாய் -ப்ரஹ்ம ருத்ராதி தேவதைகளுக்கும்- ஸநக ஸநந்தாதி யோகிகளுக்கும் -அவாங் மநஸகோசரமாய் -ஸ்ருத் ஏக ஸமதி கம்யமாய் -ஸமாஸ்ரித ஏக ஸூலபமாய் -தத் உஜ்ஜீவந ஏக ப்ரயோஜனமாய் -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதார ரூபங்களை யுடைத்தாய் இருக்கும்

இப்படிப்பட்ட ஸமஸ்த விசேஷண விஸிஷ்டமான ப்ரஹ்மம் ஒன்றையும் அறிந்த அதிகாரி வேறு ஒன்றையும் அறிய வேண்டாத க்ருதக்ருத்யன்
இந்த அதிகாரியே ஞானாதிகரரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் நித்ய முக்தர்களுக்கும் ஆசார்யனுக்கும் பிராட்டிக்கும் ஸ்ரீ யபதிக்கும் அத்யந்த பிரிய தமன்

ஸ்ரீ ஸகல பிரமாண தாத்பர்யம் முற்றிற்று

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ சவுரி ராஜ வைபவம்

March 3, 2024

மூலவர்: ஸ்ரீநீலமேகப்பெருமாள்
உற்சவர்: ஸ்ரீசவுரிராஜப்பெருமாள்
தாயார்: ஸ்ரீகண்ணபுரநாயகி
தீர்த்தம்: நித்யபுஷ்கரிணி
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் போன்ற
ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப்பட்ட பெருமாள்.

இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன்
கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே
.-ஸ்ரீநம்மாழ்வார்

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் உத்பலாவதக விமானம் எனப்படுகிறது.

முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர்.
சாப்பாடு, தூக்கம் என எதனையும் பொருட்படுத்தாமல் பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால்
அவர்கள் நெற்கதிர்கள் போன்று மிகவும் மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர்.
மகாவிஷ்ணுவிடம் “அஷ்டாட்ஷர மந்திரம்’ கற்றிருந்த உபரிசிரவசு எனும் மன்னன் ஒருசமயம் தன் படையுடன்
இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது.
எனவே, இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்த வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர்.
முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார்.
மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.
எனவே, இறுதியாக மன்னன் தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான்.
அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது.
இதைக்கண்ட மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான்.
விஷ்ணு அவனை மன்னித்து நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார்.
அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.
பின், மன்னன் விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினான்.

‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது. அஷ்டாச்சர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம்.
இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் இந்த பெருமாள் தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது.
மற்ற தலங்களில் அபய காட்சியோடு பெருமாள் இருப்பார்.
இங்குள்ள பெருமாள் தானம் வாங்கிக் கொள்தல் போல காட்சியில் இருப்பார்.
இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதல் போல ஐதீகம்.

இத்தலத்தில் பெருமாள் சக்கரம் பிரயோகச் சக்கரம் வதம் பண்ணுவதாய் உள்ளது.
சவுரிராஜப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது.

திருமங்கை ஆழ்வார் 100 பாசுரம் இத்தலம் குறித்து பாடியுள்ளார்.
குலசேகர ஆழ்வார் சவுரிராஜப் பெருமாளை இராமனாக நினைத்துக் கொண்டு தாலேலோ
(ராத்திரி தூங்க வைக்கப் பாடும் பாசுரம்)பாடிய திவ்ய தேசம் திருக்கண்ணபுரம் மட்டுமே.
நம்மாழ்வார் 11 பாசுரம் பாடியுள்ளார்.

கருட தண்டக மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்.

பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்று
திருக்கண்ணபுரம் , திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர் என்று
இந்த ஐந்தும் கிருஷ்ணன் வாழ்ந்து உறைந்த இடம்

இத்தலத்தில் உள்ள உற்சவர் “சவுரிராஜப் பெருமாள்’ என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார்.
அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும்.
“சவுரி’ என்ற சொல்லுக்கு “முடி’ என்றும், “அழகு’ என்றும் பொருள்கள் உண்டு.

கோயிலின் பெருமைகள் ;

1.ஸ்ரீமந் நாராயணன் எல்லா அக்ஷரங்களிலும் இந்தக்ஷேத்திரத்தில் ஸாந்நித்யம் செய்கிறபடியால்
இந்த ஸ்தலம் “ஸ்ரீமத்ஷ்டாக்ஷர மஹா மந்தரஸித்தி க்ஷேத்திரம்” என்று பெயர் பெற்றது.

2. திருமங்கையாழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்யப்பட்ட ஸ்தலம்.

3. ரங்கபட்டர் என்கிற அர்ச்சகர் சோழ அரசனுக்கு . பெருமாளுக்கு கேசம் வளர்ந்ததை காட்டுவதாக வாக்களித்ததைக்
காப்பாற்ற, பெருமாள் தன் திருமுடியில் திருக்குழல் கற்றையை வளர்த்துக் கேசத்தைக் காட்டியருளியதால்
செளரிராஜன் என்று அழைக்கப்பட்டார்.

4. விபீஷண ஆழ்வாருக்கு, ஸ்ரீ ரங்கநாதர் அருளியபடி அமாவாசை தினத்தன்று
பகவான் நடை அழகை காட்டியருளிய ஸ்தலம்.

5.பெருமாள் தன் சக்ராயுத்தால் விகடாக்ஷன் என்ற துஷ்டாசுரனை நிக்ரஹம் செய்தார்.
மஹரிஷிகளின் பிரார்த்தனைப்படி சக்ரப்பிரயோகம் செய்த கோலத்தில். மூலவர் காட்சி அளிக்கிறார்.

6. முனையதரையர் என்ற மஹாபக்திமான் தம்முடைய மனைவி சமைத்த பொங்கலை அர்த்தஜாமத்திற்குப் பிறகு
கோயிலுக்குள் போக முடியாமல் மானஸீகமாக பக்தியுடன் ஸமர்ப்பித்தார்.பகவான் அதை ஏற்றுக் கொண்டார்.
மூடிய கோயிலில் மணி ஓசை கேட்டு பட்டர்கள் பார்த்த போது மூலஸ்தானத்தில் வெண்பொங்கல் வாசனை நிரம்பி இருந்தது.
அது முதல் அர்த்தஜாமப் பொங்கல் நிவேதனத்திற்கு “முனியோதரம் பொங்கல்” என்ற பெயர்.
தினந்தோறும் வெண்ணெய் உருக்கி, பொங்கல் செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்வது விசேஷம் .

திருக்கண்ணபுரத்தின் சிறப்புப் பிரசாதம் ’முனையதரன் பொங்கல்’. இந்த சிறப்புப்பொங்கலுக்கு தனி வரலாறு உண்டு.
சோழ மண்டலச் சதகம் எனும் நூலின் 42 வது பாடலில் இவ்வரலாறு கூறப்படுகின்றது. பாடல்:

புனையும் குழலாள் பரிந்தளித்த பொங்கல் அமுதும் பொறிக்கறியும்
அனைய சவுரிராசருக்கே ஆம் என்று அழுத்தும் ஆதரவின்
முனையதரையன் பொங்கல் என்று முகுந்தற்கு ஏறமுது கீர்த்தி
வளையும் பெருமை எப்போதும் வழங்கும் சோழ மண்டலமே

மங்களாசாஸனம்: பாசுரங்கள்
பெரியாழ்வார் – 71
ஆண்டாள் – 535
குலசேகராழ்வார் – 719- 729
திருமங்கையாழ்வார் _ 1648-1747- 2067- 2078- 2673 (72)
நம்மாழ்வார் – 3656-3666
மொத்தம் 128 பாசுரங்கள்.

திருநெற்றியில் தழும்பு
உற்சவ மூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்திற்கு மேல் சிறு தழும்பும் இன்றும் காணலாம்.
முன் காலத்தில் அந்நியர் திருமதில்களை இடித்து வந்தபோது திருக்கண்ணபுரத்து அரையர், மனம் புழுங்கி,
“பெருமானே பொருவரை முன்போர் தொலைத்த பொன்னழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ’ என்று
கையிலிருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானது புருவத்தில் பட்டது.
“தழும்பிருந்த பூங்கோரையாள் வெருவப் பொன்பெயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல்’ என்ற
பாசுரத்தில் போல இத்தழும்பை இன்றும் காட்டித் தமக்கு அடியாரிடம் கொண்ட பரிவைப் பெருமான் விளங்குகின்றார்

காளமேகப்புலவரும் கண்ணபுரம் பெருமாளும்
வைணவக்குடும்பத்தில் பிறந்த காளமேகம் சைவராக மாறிவிட்டாரே என்று கண்ணபுரம் பெருமாளுக்கு கோபம் ஏற்பட்டதாம்.
மழைநாளில் கண்ணபுரம் பெருமாள் கோயிலில் மழைக்காக புலவர் ஒதுங்க, கோயில் கதவுகளை மூடிப்
பெருமாள் உள்ளே விடவில்லை.உடனே காளமேகப்புலவர் கவிதை ஒன்று இயற்றி,
பெருமாளை நோக்கிப் பாட கோயில் கதவுகள் திறந்தனவாம்.

கண்ணபுரமருவே கடவுனினும் நீயதிகம்
உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள் – முன்னமே
உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமாம்
என் பிறப்போ எண்ணத் தொலையாது

————————

புண்டரீக விசாலாக்ஷம் சரத் சந்த்ர நிபா நநம்
நீலாத்ரி இவ த்ருஷ்டந்தம் நீல மேகம் அஹம் பஜே

புண்டரீக விசாலாக்ஷம் -தாமரை போன்ற திருக்கண்கள் -அகன்ற பருத்த நீண்ட
சரத் சந்த்ர நிபாநநம் –சரத் காலச் சந்த்ரன் நிர்மலம் தெளிந்த அழகிய அம்ருத தாரை சொட்டும்
கோவர்த்தனம் -சரத் பூர்ணிமா கொண்டாடுவார்கள் -த்வாரகையிலும் பல லக்ஷம் பேர் வருவார்களே –
அதே போல் திருமுக மண்டலம் –
நீலாத்ரி இவ த்ருஷ்டந்தம் கருவரை போல் நின்றானை
நீல மேகம் -நைல்யம்-சமஸ்க்ருதத்தில் – கறுமை -கான்சத்யாமாம் கார் முகில் கார் வானம்
அஹம் பஜே -அடியேன் வணங்குகிறேன்

16 குணங்கள் இதில் உண்டே -நான்கு விசேஷணங்களிலும் உண்டே
ஷோடஸ கலா பரிபூர்ணன்

புண்டரீகாக்ஷ விசாலாக்ஷம்
தாமரைக்கண்ணன் –
1-பராத்பரன்

மனிசர்க்குத் தேவர் போலே தேவருக்கும் தேவாவோ
கப்யாஸம் புண்டரீக மேவ அக்ஷிணீ -சாந்தோக்யம்
க புண்டரீக நயன புருஷோத்தம
ஸ்ரீ யபதி -கண்ணபுர நாயகி கேள்வன் -சர்வாதிகன்
இணைக் கூற்றங்களோ அறியேன்
தூது செய் கண்கள்

2-ஸுந்தர்யம்
கரியவாகி –பேதைமை செய்தனவே
அதீர்க்கம் –ஸூ ந்தர பஹு ஸ்தவம்
தாமரை ஒப்புமை சொல்ல முடியாதே
பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணாம்
கண்டவர் தம் மனம் கமழும் கண்ணபுரத்தம்மானே

3-ஸுலப்யம்
தூது செய் கண்கள் ஓன்று பேசி -முதல் தொடர்பு
கடாக்ஷித்து வஸ்துவாக்கி -குளிரக் கடாக்ஷித்து –
ஸம்பாஷணம் –வீக்ஷணனே -பராசர பட்டர்

4- வாத்சல்யம்
செவ்வரியோடி -ஐஸ்வர்யத்தாலும் சிவந்து – -வாத்சல்யம் அடியாகவும் சிவந்து —
ஸூத்த ஸத்வ குணத்தால் -குற்றங்களையே குணமாகக் கொண்டு –
காட்டவே கண்டார் திருப்பாணாழ்வார்

5-பாவந கரத்வம் –தோஷங்களைப் போக்கி -பூதராக்கின நெடு நோக்கு –
காம க்ரோதம் அஹங்கார மமகாரங்கள் -கர்மங்கள் அனைத்தையும் போக்கி
செங்கண் சிறுச் சிறிதே –எங்கள் மேல் சாபம் களைந்து

சரத் சந்த்ர நிபாநநம்
மாசற்ற பூர்ண சந்திரன் போல் அழகிய முகம்
அபூத உவமை
6-ஆஹ்லாத கரத்வம்
தாபத் த்ரயங்கள் போகும்படி –
ஆத்யாத்மிக-ஆதி தைவிக -ஆதி பவ்திக

7-ப்ரீதி கரத்வம்
சந்த்ர காந்த –அத்தீவை ப்ரிய தர்சனம் –பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணாம்

8- நிர்ஹேதுக விஷயீ காரத்வம்
ஸூர்யன் இவ ஞானம் -ப்ரயத்னம் -ஸூர்ய துல்ய யாதாத்ம்ய ஞானம் -ரிஷிகள் -உபாசகர்கள்
முளைத்து எழுந்த திங்கள் தானாய் -மயர்வற மதிநலம் அருளி –
அக்லிஷ்ட்ட அத்புத அசிந்த்ய ஞான வைராக்ய ராஸயே ம் -நாதனுக்கு ஆழ்வார் அருள –

நீலாத்ரி இவ
ஊற்றம் உடையாய் பெரியாய்
மலை இலங்கு தோள் நான்காய்
கருவரை போல் நின்றானே
9-தைர்யம் -ஹிமவான் இவ
அடியார் ரக்ஷண தீக்ஷிதம்
சுக்ரீவன் -விபீஷணன்
பிராட்டி இளைய பெருமாள் எனது உயிர் விட்டாலும் தீஷிதம் விடேன் -பெருமாள் -சத்ய ப்ரதிஜ்ஜை -ஸ்திர ப்ரதிஞ்ஞன்

10-ரக்ஷகத்வம்
காக்கும் இயல்பினன் கண்ணன்
கோவர்த்தனமே ரக்ஷிக்கும் காட்டிய வ்ருத்தாந்தம்

11-ஜகத் காரணத்வம்
த்ரிவித காரணம்
நதிகளுக்கு உத்பத்தி ஸ்தானம் -சாக்யாத்ரி -காரணம்
ஆறு பெருகும் ஸ்தானம்
உபாதான நிமித்த ஸஹ காரி ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் -ஆறுக்கும் காரணம்

த்ருஷ்டந்தம்
நிலையார நின்றானே
ஆதி அம் சோதி உருவை அங்கே வைத்து நின்ற வண்ணம் நிற்கவே
12-அபேக்ஷ நிரபேஷத்வம்
கருட வாஹனனும் நிற்க
ஒன்றும் தேவும் –நின்ற ஆதிப்பிரான் நிற்க -மற்றது தெய்வம் நாடுதிரே
64 சதுர்யுகங்களாக நின்று அருளி இங்கு

13-ஸூஹ்ருதத்வம்
இரா மடமூற்றுவாரைப் போலே
என் ஊரைச் சொன்னாய் -பேரைச் சொன்னாய்
சோம்பாது -திருத்திப் பணி கொள்ளவே அனைத்து வியாபாரங்களும் –
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று அவசர ப்ரதீஷிதனாய் நிற்கிறான்

நீலமேகம் கரு முகில்
14- வள்ளல் தன்மை
வஸிஸிஷ்டர் சண்டாள விபாகம் அற –
கார் வானம் நின்ற கண்ணபுரத்து அம்மானைக் கண்டார் கொலோ
மின்னு மா மழை தவழும் மேக ஒண்ணா
மழை முகிலே ஒக்கும்

15-பர கத ஸ்வீ காரம்
மலை இருக்கும் இடம் நாம் செல்ல வேண்டும்
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட
வந்து உனது அடியேன் உளம் புகுந்தாய் புகுந்த பின் சிந்தனைக்கு இனியாய்

16-சரண்ய முகுந்தத்வம்
மிக சேஷனே -மேகம் -எங்கும் தெளிக்கும் சாமர்த்தியம்
ஸகல பல ப்ரதத்வம்
மலையிலே படிந்து உள்ள சீதள காள மேகம் -பட்டர்

———————-

உத்பலாவதகே திவ்யே புஷ்பக்ரேஷணம்
சவுரி ராஜம் அஹம் வந்தே ஸதா ஸர்வாங்க ஸூந்தரம்

விமானம் –உத்பலா வதகம் என்ற பெயருடனும் திவ்யமாகவும் உள்ள விமானம்
மாம்ஸ -பலம் ஆசை விட்டு -உபேக்ஷித்து
ஆத்மாவில் நோக்கு தேகத்தில் ஆசை இல்லாமல்
ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆகிறார்
ஆத்மாவை நிழலிலே வைத்து தேகத்தை பேணாமல் வெய்யிலில் வைத்தவர்
கைங்கர்யத்துக்கு வேண்டிய அளவு -தர்ம சாதனம் சரீரம் –

வாடினேன் வாடி -இத்யாதி
ஆத்ம ஞானம் வந்து -அனைத்தும் அவனது சரீரம் -உணர்ந்து
இதுவே உத்பல –
மோக்ஷமே பரம புருஷார்த்தம் -அத்தை அருளவே இதன் கீழே நிற்கிறார்
உத்பலரானவர்களுக்கு அருளவே –
விக்ரமாதித்யன் ஸிம்ஹாஸனம் போல்
கோயிலுக்குள்ளே இருந்து சேவிக்க முடியாது
வெளிப்பிரகாரத்தில் உள்ள திருமங்கை ஆழ்வார் சந்நிதியில் இருந்து ஸேவை யாகும்படி
சிற்பக்கலை அர்த்தம் அறிந்து செய்தது
காரியத்தால் வந்த பண்புப்பெயர் இது

திவ்யமான விமானம்
மோக்ஷ பூமி திவ்ய பூமி -அப்ராக்ருதம் -ப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்பால்
ஸூத்த ஸத்வ மயம் –

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பு
மூன்றும் இங்கு உண்டே
அஞ்ஞானம் -அனுஷ்டானம் தப்பாக்கும் -அதன் காரணமாக தூய்மையான ஆத்மாவுக்கு அழுக்கு உடம்பு கிடைக்குமே –
அர்த்த பஞ்சக ஞானம் வேண்டுமே

புஷ்பம் -ஈஷணம் கண் அழகும் குழல் அழகும் சேர்ந்து
மீனுக்கு எங்கும் தண்ணீர் போல் எங்கு சேவித்தாலும் ஸூந்தரம்
நீல மகத்துக்கு உள்ளே ஒளி பிழம்பு போல்
ஸுவ்ரி ராஜன் -குழல் அழகர் –
அருகிலேயே திரு நாகை அழகியார் -சவுந்தர ராஜன்
அழகும் அரசும் சேர்ந்தால் -ஆசையுடன் கைங்கர்யம் ராக பிராப்தம் –

வணங்குதல் -வாசக -காயிக -மாநஸம் –
வணங்கா முடி -உள்ளம் அடங்காமல் அஹங்காரம் கொண்டவன் –

பொய் நின்ற ஞானம் -பாசுரம் அர்த்த பஞ்சகமும் உண்டே
இனி யாம் உறாமை அடியேன் செய்யும் விண்ணப்பம் இதர விஷய சங்கம் அற்று —
வாசிக கைங்கர்ய பிரார்த்தனை -உபேய ஸ்வரூபம்
அடியேன் -ஜீவாத்ம-ஸ்வ ஸ்வரூபம்
இமையோர் தலைவா -பர ஸ்வரூபம்

உத்பல வதகம்-விரோதி ஸ்வரூபம்
அஹம் -ஸ்வ ஸ்வரூபம்
ஸுரி ராஜம் -பர ஸ்வரூபம்
வந்தே -சரணம் வரிக்கச் செய்யும் -புஷ்கர ஈஷணம் -உபாயம்
ஸர்வாங்க ஸூந்தரம் -பல்லாண்டு பாடுவதே -கைங்கர்யம் -புருஷார்த்தம்
பொய் நின்ற ஞானம் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -விரோதி ஸ்வரூபம்
அருளாய் -ப்ராபக -உபாய ஸ்வரூபம்
பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு தானே –

ஸுரி ராஜம் அஹம் வந்தே
திருவல்ல வாழ் கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் –
ஆசை யுடையோருக்கு எல்லாம் ஆரியர்கள் கூறும் –வரம்பு அறுத்து –

வந்தே -வணங்கத் தகுதி
உத்பலா –அஹம் -வைராக்யம் யுடைய அடியேன் –
புஷ்கர ஈஷணம் -அஹம் -தாமரைக் கண்ணுக்கு இலக்கண அடியேன்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடரே
உன் அருளுக்கும் அதுவே புகல்-இனி அகலும் பொருள் என் -பயன் இருவோருக்குமான பின்பு -அமுதனார் –
இரக்கத்துத் தகுதியான அடியேன்
ஸுரி ராஜம் அஹம் -ஸ்வாமி சொத்து அறிந்த அடியேன்
ஸதா வந்தே அஹம் -ஸ்வரூப ஞானம் விடாமல் எப்போதும் இருக்கும் அடியேன்
ஸர்வாங்க ஸூந்தரம் அஹம் –போக்யம் –காட்டிலே எரிந்த நிலைக்கு ஆகாமல் -அனுபவிக்க -எப்போதும் ஏங்கும் அடியேன்

வந்தே பதம் தோறும் -சேர்த்து
ஜிதந்தே போற்றி பல்லாண்டு வந்தே பர்யாயம்
புஷ்கர ஈஷணம் வந்தே -தாமரைக் கண் கடாக்ஷம் உபாயம்
நம -ந ம -ச கண்ட வாகவும் -அகண்ட வாகவும் -வணங்குகிறேன் -நான் எனக்கு அல்லேன்
உனது கடாக்ஷம் உபாயம் -விஷ்ணோர் கடாக்ஷம் பெற்றால் தானே கார்ய கரம் ஆகும் -சகண்ட நமஸ் ஸூ
ஸுரி ராஜம் வந்தே -ஸ்வாமி -அரசே வணக்கம் அகண்ட நமஸ்ஸூ
அஹம் வந்தே -ஸ்வரூப ஞானம் வந்து பல்லாண்டு பாடுதல் இங்கு அர்த்தம் -அவனுக்கே அற்றுத் தீர்ந்து -சேஷத்வம் பாரதந்தர்யம் அறிந்து –
ஸதா வந்தே -சூழ்ந்து இருந்து -இங்கும் அங்கும் -வினைச் சொல் இல்லாத பல்லாண்டு பாசுரம் -போல் -இருக்க வேண்டுமே –
திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
ஸதா ஸர்வாங்க ஸூ ந்தரம் வந்தே -எல்லா இடங்களிலும் அழகு
சங்கு சக்கரம்
திருப் பிராட்டியார்
திரு அபிஷேகம்
திரு ஆபரணம்
ததீய சேஷத்வம் -அடியார்களுக்கு பரதந்த்ரம் சேஷத்வம் அறிந்து -பல்லாண்டு
அடியோமோடும் நின்னோடும் -பாசுரார்த்தம் உணர வேண்டுமே –
அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடும் பல்லாண்டு –

——————————————————–

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே
-8-10-3-

தாய் எட்டு அடி பாய்ந்தால் குழந்தை 16 அடி பாடுமே
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
அநன்யார்ஹ சேஷத்வ அநந்ய சரண்யத்வ அநந்ய போக்யத்வங்கள்
யாதாத்மயமே ததீய பர்யந்தம் –
திருமந்த்ரார்த்தமும் இந்த த்யான ஸ்லோகம் சொல்லுமே
அறிவு உணர்வு உணர்த்தி -அநந்யார்ஹ சேஷத்வம்-ஸுரி -ராஜா என்றாலே சேஷி -ஓங்கார பிரணவம் அர்த்தம்
திட அத்யவசாயம் -உத்பல வதகே திவ்யே விமானே -அருகில் ஸந்நிஹிதன் -அநந்ய சரண்யத்வம்
பேற்றுக்கு த்வரிக்க–ஸதா -ஸர்வாங்க ஸூந்தரம் -இனிமை அழகு இனிமை -அநந்ய போக்யத்வம்

———–

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே
–10-6-1-

மந்த்ர ரத்னத்தில் மத்யமபத நிஷ்டர்கள்
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
இருவருக்கும் நிரூபகமாய் இருக்கிற படி
இவர் அருள் பெறுவார் அடியார் தம் அடியார்
அவன் ஆழியான்
இருவருக்கும் நிரூபகம் ததீயரே

———–

திவ்ய விமானே -இரங்கி வந்து ஸுசீல்யம்
புஷ்கார ஈஷனே -வாத்சல்யம் -செவ்வரியோடே
சவுரி ராஜா ஸ்வாமித்வம்
ஸதா சர்வாங்க ஸூ ந்தரம் –ஸுலப்யம் –
கொற்றப் புள் ஏறி –ஸகல மனுஷ நயன விஷய தாங்கம்

பற்றின பின்பு
ஞாப்தி பக்தி இருக்க முக்தி தருவான் ஆவான்
ஆஸ்ரித கார்ய ஆபாத கல்யாண குணங்கள்
1-சர்வஞ்ஞத்வம்
2-ஸர்வ சக்தித்வம்
3-பிராப்தி
4-பூர்த்தி
நான்கும் வேண்டுமே

திவ்யே விமானே –நம்முடையவர் -பிராப்தி உண்டே -64 சதுர்யுகமாக நமக்காக உள்ளானே
புஷ்கர ஈஷணம் -ஸர்வஞ்ஞத்வம்-கண் என்றாலே ஞானம்
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
சவுரி ராஜா -சர்வ சக்தித்வம்
கோதில மணி வண்ணன் வேண்டிற்று எல்லாம் தருவான்
ஸதா சர்வாங்க ஸூந்தரம் -பூர்த்தி

————

கன்று மேய்த்து -அதனாலேயே இனிது உகந்து -அதனாலேயே காளாய் -நித்ய யுவா –
திவத்திலும் -பசு நிரை மேய்ப்பு உவத்தி –
பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்னும் –

இங்கு பழுத்த பழமே சவுரி ராஜப்பெருமாள் –
திருவாய்ப்பாடி திருப் பிருந்தாவனம் பழுத்த கனி கண்ணன் போல் –

——-

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1-

செருவரை முன்னா சறுத்த சிலையன்றோ கைத்தலத்து என்கின்றாளால்
பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால்
ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா வென்னப்பா வென்கின்றாளால்
கருவரை போல் நின்றானைக் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-2-

துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3-

தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-4-

அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும் என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின்றாளால்
கடிக்கமலம் கள்ளுகுக்கும்கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-5-

பேராயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்
ஏரார் கன மகரக் குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால்
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்
காரார் வயல்மருவும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-6-

செவ்வரத்த உடை ஆடை யதன் மேலோர் சிவ்ளிகைக் கச்சென்கின்றாளால்
அவ்வரத்த வடியிணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால்
கைவளர்க்கும் அழலாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-7-

கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-8-

வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-9-

மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
காவளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10-

ஸுரிக்கொண்டைக்கு ராஜா -முன்னிலும் பின் அழகு பெருமாள்
புஷ்கார ஈஷணம் -ஸுரி ராஜம் -அவயவ சோபை சவுந்தர்யம்
ஸர்வாங்க ஸூந்தரம் – சமுதாய சோபை லாவண்யம்
அரசன் என்று -வந்தே-வணங்குவது – வேறே வகை ஸ்வரூப க்ருத தாஸ்யம் -ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம்
அழகுக்கு -வந்தே-வணங்குவது குண க்ருத தாஸ்யம் -இதுவே நிலைக்கும்

——

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

——–

ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -நமக்கு வேண்டும்
ஆஸ்ரயண ஸுபாதக ஆபாதக கல்யாண குணங்கள்
ஆஸ்ரிய கார்ய ஆபாதக கல்யாண குணங்கள்
இரண்டு வகைகளும் அவனுக்கு உண்டே

அகலகில்லேன் இறையும் என்று* அலர்மேல் மங்கை உறை மார்பா,*
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!* என்னை ஆள்வானே,*
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,*
புகல் ஒன்று இல்லா அடியேன்* உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.

நிகர் இல் புகழாய் –வாத்சல்யம்
உலகம் மூன்று உடையாய்! -ஸ்வாமித்வம்
என்னை ஆள்வானே,–ஸுஸீல்யம் -ஸ்ரீ ரெங்க நாத மம நாத
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,* -ஸுலப்யம்

வைத்த அஞ்சல் என்ற கையும் –இத்யாதி
குற்றம் கண்டு வெறுவாமைக்கு வாத்சல்யம்
கார்யம் செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம்
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு ஸுசீல்யம்
கண்டு பற்றுகைக்கு ஸுலப்யம்
விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுக்கைக்கு ஞான சக்திகள் –முமுஷுப்படி –138-

திருக்கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்களும்
வைத்து அஞ்சல் என்ற கையும்
கவித்த முடியும்
மிகவும் முறுவலும்
ஆஸன பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்குத் தஞ்சம் —

கையும் உழவு கோலும் பிடித்த சிறுவாய்க்கயிறும் ஸேனா தூளி தூ சரிதமான திருக்குழலும்
தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற சாரத்ய வேஷத்தை மாம் என்று காட்டுகிறான்

இவற்றுக்கு எல்லாம் அடி
திருக் கண்ண புர நாயகித் தாயார்
பரத்வ ஸுலப்ய இரண்டுக்கும் இவள் ஸம்பந்தமே ஹேது

————-

7 அடுக்குகளைக் கொண்டது சவுரிராஜப் பெருமாள் கோயிலின் ராஜ கோபுரம். கருவறை மூலவர் ‘நீலமேகப் பெருமாள் ‘ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். தாயார் ‘கண்ணபுர நாயகி‘ தனிச் சந்நிதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றாள்.

(திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், திருக்கவித்தலம் மற்றும் திருக்கோவலூர் ஆகிய ஐந்து தலங்களும் பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரங்கள் என்றே போற்றப்படுகின்றன.)

க்ஷேத்ரம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என ஏழும் இங்கு சேர்ந்திருப்பது மிகவும் அரிதானது.

அரக்கர் தொல்லையிலிருந்து தங்களைக் காத்தருளுமாறு வேண்டிக் கொண்ட முனிவர்களுக்காக பெருமாள் தன் சக்ராயுதத்தைப் பிரயோகித்து’வீகடாக்ஷன்’ என்ற அசுரனை அழித்த தலம் என்பதால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் வலக்கரத்தை நீட்டி சக்ராயுதத்தை வீசுவதுபோல் காட்சி தருவது மற்றொரு விசேஷம்.

15 கிமீ தூரத்திலுள்ள திருமலைராயன்பட்டினக் கடற்கரையில் மாசி மாத பௌர்ணமி தினத்தில் பெருமாளைத் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்து தீர்த்தவாரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசிமாதத்தில் பிரம்மோதற்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மாதப் பிறப்பு, ஏகாதசி மாதத்தில் இரண்டு நாட்களில் திருமஞ்சனமும் உற்சவர் புறப்பாடும் உண்டு. இத்தலத்து அமாவாசை உற்சவம் குறிப்பிடத்தக்க ஒன்று. விபீஷணனுக்கு பெருமாள் தன் நடை அழகைக் காட்டி அருள் செய்தது ஒரு அமாவாசை நாளில் என்பதை நினைவுகூரும் விதத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் திருமஞ்சனம் செய்து சவுரிமுடி அணிவித்து உற்சவர் புறப்பாடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. வேண்டியது அனைத்தையும் நிறைவேற்றி வைப்பார் இத்தல பெருமாள்.

—————

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந
நாக பர்யங்கமுத் ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –ஸ்ரீ ஹரி வம்சம் -113 அத்யாயம் -62 ஸ்லோகம் –

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத ந-ஸ்ரீ தேவியோடு பிரியாதவனாய் -திருப் பாற் கடலிலே பள்ளி கொள்பவனான -இந்த நாராயணன்
நாக பர்யங்கமுத் ஸ்ருஜ்ய -சேஷ சயனத்தை விட்டு
ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஸ்ரீ மதுரை நகரம் குறித்து எழுந்து அருளினான் —

அவதாரிகை
போக்தா போக்கியம் ப்ரேரிதாரம்-ஸ்வே-1-12- என்கிறபடியே
சேதனனாய் இருப்பான் ஒருத்தனுக்குச் சித்  அசித் ஈஸ்வர தத்வ த்ரய ஜ்ஞானம் யுண்டாக வேணும் –

அதில் அசித்து –அஜாமேகாம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீம் பிரஜாம் ஜனயந்தீம் சரூபாம் -ஸ்வே -4-5- என்கிறபடியே
பகவத் ஸ்வரூபத்தை மறைக்கைக்கு பஹூ வித வர்ணையான திரச்கரிணி போலே இருக்கக் கடவதாய்-
விபரீத ஜ்ஞான ஜனகமாய் -ஷட் வித விகாராஸ் பதமாய் -சதத பரிணாமியாய்-சதத ஷணஷாண ஸ்வபாவமாய் -சர்வேஸ்வரனுக்கு லீலா உப கரணமாய்  இருக்கும் –

சித் வஸ்துவைப்   பார்த்தால் தேக இந்த்ரியாதி வி லஷணமாய்-ஜ்ஞா நானந்த ஸ்வரூபமாய் -ஜ்ஞான குணகமாய்-பகவத் சேஷ பூதமாய் -ஸ்ரீ கௌஸ்துபாதிகளோ பாதி சர்வேஸ்வரனுக்கு ஸ்ப்ருஹணீ யமாய் இருக்கும் –

ஈஸ்வரனைப் பார்த்தால் இவை இரண்டையும் வியாபித்து இருப்பவனாய்-இவற்றுக்கு ஆதார பூதனாய்-இவை இரண்டையும் சரீரவத் பரதந்த்ரமாக யுடையவனாய் இருக்கும் –

இப்படி த்யாஜ்யதையாலும் -உபாதேயதையாலும் -ஜ்ஞாதவ்யமான தத்வ த்ரயத்திலே அபியோகம் இன்றிக்கே
பகவத அபசார பாகவத அபசார அசஹ்ய அபசாரங்களிலே கை வளர்ந்து போருகிற சேதனரைப் பார்த்தால்
பார லௌகிக பல சித்தி ஹேதுவாக –பதிம் விச்வச்ய -என்கிற லோக உத்தீர்ணனை ஆஸ்ரயியாதே லோகாயத மத அநு சாரிகளையும்
ஸ்யாதிஸ்தி ஸ்யான் நாஸ்தி -இத்யாதிகளால் ஸ்யா ஸ்திதி -ஸ்யான் நாஸ்தி -ஸ்யா தஸ்தி ச நாஸ்தி ச –ஸ்யா தச்தீதி வக்தவ்யம்-ஸ்யா நாஸ்தீதி வக்தவ்யம் –
ஸ்யா தஸ்தி ச நாஸ்தி தி சேதி வக்தவ்யம் -சர்வதா வக்தவ்யம் -என்று சொல்லுகிறபடியே சப்த பங்க வாதிகளாய் -பகவத் ஆஸ்ரயணத்துக்கு அர்ஹராகாதே ஆர்ஹதராயும்  -கதிமிச்சே ஜ்ஜநார்த்தநாத் -ப்ரஹ்மாண்ட புராணம் -என்கிறபடியே சர்வேஸ்வர சமாஸ்ரயணத்தாலே ஸூ கதராக ப்ராப்தமாய் இருக்க
ஸூ கதமத -புத்த – மத அநு சாரிகளாயும்
பகவத் சமாஸ்ரயணத்தாலே சங்க்யா வான்களாக ப்ராப்தமாய் இருக்க – சாங்க்யா வஷ்டம்பம்  பண்ணி -எண்ணிக்கை அற்ற -ஜன்மத்திலே அசங்க்யாதராயும்
நாராயன பரா வயம் -என்கிறபடியே பகவத் யோகராக ப்ராப்தமாய் இருக்க சமயக் ஜ்ஞான வியுக்த யோக நிஷ்டராயும்
பகவத் ஜ்ஞான விசேஷதத் பரராக ப்ராப்தமாய் இருக்க வைசேஷிக மத அநு சாரிகளாயும்
புண்டரீகாஷா சமாஸ்ரயணத்தாலே மாயா நிஸ்தரணம் பண்ண ப்ராப்தமாய் இருக்க மாயாவாத நிரதராயும்
ஆக இப்படி இடுகுபடுகிற சேதனரைக் கண்டு ஈஸ்வரன் தயமாநம நாவாய்க் கொண்டு
மாநம் ப்ரதீபமிவ காருணிகோததாதி -என்று வேதார்த்தத்தை பிரகாசிப்பித்த அளவிலும் ஐஹிக புருஷார்த்தத்தைக் கோரி –
பத்ரம்  கர்ணேபி ஸ்ருணு யாம தேவா –தை ஆர -1- சாந்தி பாடம் -தேவர்களே பத்திரமான வற்றைக் கேட்க வேணும்
ஸ்ருணுயாம்-என்ற போதே சித்தம் அன்றோ -கர்ணேபி-என்ன வேணுமோ –
பத்ரச் ஸ்ரவணத்தோ பாதி -மங்கலமான வார்த்தைகளை -கரண பாடவமும் விதேயம் என்கைக்காக –கர்ணேபி-என்றது கர்ணை-என்றபடி
1-தேவா என்கிற தேவ சப்தம் க்ரீட அர்த்தத்திலே யாய் -உங்களுடைய பத்ர ரூபமான விநோதத்தைக் கேட்க வேணும் -2-தேவா பத்ரம் ஸ்ருணுயாம் -விஜிகீஷார்த்தத் திலேயே –
தேவர்களே விஜிகீஷா ரூபமான உங்களுடைய நன்மையைக் கேட்க வேணும்
3- தேவா பத்ரம் ஸ்ருணுயாம் -தீவு வ்யவஹார -வார்த்தை பொருளில் -உங்களுடைய இனியதான வார்த்தையைக் கேட்க வேணும் –
4-தேவா பத்ரம் ஸ்ருணுயாம்-தீவுத் யுதி ஒளி பொருளில் -உங்களுடைய இழி யுன்டாய்ப் போருகிற வார்த்தையைக் கேட்க வேணும்
5-தேவா பத்ரம் ஸ்ருணுயாம்-தீவு கதி -உங்களுடைய கதி யுண்டான வார்த்தையைக் கேட்க வேணும் பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம தேவா பத்ரம் பச்யேம -என்று பத்ரச் ஸ்ரவண மாத்ரமே போராது-பத்ர தர்சனமும் பண்ண வேணும்
பத்ரம் பச்யேமா ஷபிர்யா ஜத்ரா-ஆஷாபி பத்ரம் பச்யேம -இங்கே பச்யேம என்ற போதே சித்தம் அன்றோ
அஷபி-என்கைக்கு அடி என் என்னில்  -தர்சனத்தோ பாதி தர்சன கரண பாடவமும் வேணும் என்றபடி
அன்றிக்கே -கர்ணேபி -அஷேபி -என்று ஸ்வ பாவாக்யாந மாக வுமாம் –
அஷபி -பத்ரம் பச்யேம -ஸ்ரோத்ர இந்த்ரியத்துக்கு இறை இட்டவோபாதி சஷூர் இந்த்ரியத்துக்கும் ஆனந்தம் உண்டாம்படி வி லஷண வஸ்துவைத் தர்சிப்போமாக வேணும்
யஜத்ரா -யஜநாத் த்ராயந்த இதி யஜத்ரா -என்றாய் யஜன நிமித்தமாக ரஷிக்கிற வர்களே -என்றபடி -அதாவது
கால காலங்களிலே வர்ஷத்தை உண்டாக்கி அத்தாலே சஸ்ய வ்ருத்தியையும் யுண்டாக்கி
அதடியாக யஜ்ஞ பதார்த்த சாமக்ரியையும் உண்டாக்கிக் கொடுக்கையாலே யஜத்ரா -என்கிறது இதுவும் தேவ சப்தம் போலே சம்போதனமாய் இருக்கிறது –
ஸ்திரை  ரங்கைஸ் துஷ்டு வாம்ச-
பச்ர ஸ்ரவணத்துக்கும் பச்ர தர்சனத்துக்கும் அநு ரூபமாம்படியான ஸ்தோத்ரம் பண்ண வேணும்
ஸ்தோத்ரம் பண்ணும் பொது ஸ்திரமான அங்கங்களோடு கூட வேணும்
ஸ்திரை  ரங்கைஸ் துஷ்டு வாம்ச-
ஸ்திரமான அங்கங்களோடு உப லஷிதனாய்க் கொண்டு மேலே மேலே ஸ்தோத்ரம் பண்ண வேணும்
க்ரியாசமபிஹாரே யங்-ஆய்-யங்-லு  கந்தம் ஆகையாலே ச்தோத்ரத்தின் யுடைய மிகுதியைக் காட்டுகிறது –
தநூபிர் வ்யசேம தேவஹிதம் யதாயு -இப்படியே ஸ்தோத்ரம் பண்ணுகைக்குஈடாக தேவ ஹிதமான ஆயுஸ் ஸூ யாதொன்று அத்தை சரீரத்தோடு பிரவேசிப்போமாக வேணும்
தநூபிர் வ்யசேம தேவ ஹிதம் யதாயு -க்ரிமி கீடாதிகளுடைய ஆயுஸ் சாக ஒண்ணாது
திர்யக் யோநிகளுடைய ஆயுஸ் சாக ஒணாது
சதாயுர்வை புருஷ -என்கிற புருஷ ஆயுஸ் சாக ஒண்ணாது
ஒரு வத்சரம் தினமாகக் கொண்டு தேவர்களுடைய ஆயுஸ் ஸூ யாதொன்று உண்டு அத்தை சரீரத்தோடு பிரவேசிப்போமாக வேணும்
விசேம என்னாமல்  வ்ய சேம -என்று சாந்தசமாகையாலே அடாகமம் பண்ணிக் கிடக்கிறது –
ஆக -இத்தால் -பத்ரச் ஸ்ரவனமும் -பத்ர தர்சனமும் -தத் அநு ரூபமான ச்தோத்ரமும் -அதுக்கு ஈடான ஆயுர்தர்க்யமும்
பிரதிபாதித்தாயிற்று -அங்கன் அன்றியிலே -உதோ தவஸ்மை தன்வம் விசஸ்ரே -என்று கொண்டு ஸ்ருதியினுடைய தாத்பர்யம் அறிந்தவனுக்கு தினுடைய அர்த்த யோகமான சமயத்திலே பரம புருஷார்த்த அந்வயியாக வேணும் -எங்கனே என்னில் –
பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம் தேவா –
இங்கு தேவ சப்தம் -தேவமிவாசார்யம் உபாசீத -என்கிறபடியே ஆச்சார்யா சப்தத்துக்கு உப லஷணம்-
தேவா -என்கிற பாஹூள்யத்தாலே-குருஷூ பஹூ வசனம் -என்கிற ந்யாயம் தோற்றுகிறது-
ஸ்ரீ பராசர ப்ரஹ்ம ரிஷி பக்கலிலே ஸ்ரீ மைத்ரேய பகவான் கேட்குமா போலே ஆச்சார்யன் பக்கலிலே பரமார்த்தம் கேட்க வேணும் -என்கிறதுக்கும் உப லஷணம் –
பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம்-பத்ரம்  ஸ்ருணுயாம்-ச்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்றும்
கர்ணாப்யாம் பூரி விஸ்ருவம் -என்றும் -யத்கதா சரவணம் ஹரே -என்றும்
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றும் கேட்பாரோ -திருவாய் -7-5-3-என்று சொல்லுகிறபடியே
பகவத் விஷயத்தைக் கேட்கைக்கு உப லஷணமாய் இருக்கிறது பத்ர சப்தம்
ஸ்ருணுயாம் என்று பிரார்த்தனா ரூபம் ஆகையாலே அதிகாரியினுடைய பிரார்த்தனா விசிஷ்டத்வமும் உப லஷிதம் –
இப்படி ஆச்சார்யன் பக்கலிலே பரமார்த்த ஸ்ரவனமும் அநு பாவ்யமான பகவத் விக்ரஹ தர்சனமும் பண்ண வேணும் என்பதுக்கு உப லஷணம் -பத்ரம் பச்யேம் அஷபிர் யஜத்ரா -என்று –
இங்கு பத்ர சப்தத்தாலே -சதைக ரூப ரூபாய -என்றும் -ந பூத சங்க  சம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மன -என்றும்
ரூபௌதார்ய குனைபும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-என்றும்
தத்ரு ஸூர் விச்மிதாகாரா ராமஸ்ய வன வாசி ந -என்றும் சாஷான் மன்மத மன்மத -என்றும்
பகவத் அனுபவ ரூபம் இ றே கண்ணுக்கு இலக்காகுவது
யஜத்ரா -யஜன நிமித்தமாக ரஷணம் தோற்றுகிறது –
யோ அஹம் அஸ்மி ச சந்யஜே-என்றும் -ச ச்வத்வர உதீரித -என்றும் சொல்லுகிறபடியே
தாஸ்ய அநு சந்தான அநு ரூபமான ஹவி பிரதானமும் அத்தாலே வரக் கடவதான ந்யாசமும்
ஏவம் பூதமான நியாச வித்யா பிரதானத்தால் விபரீத ஜ்ஞானர்க்கும் பிரகடமாம்படி ரஷித்துப் போருகை தோற்றுகையாலே இதுவும் ஆச்சார்யா சப்தத்துக்கு உப லஷணமாய்ப் போருகிறது
ஸ்திரி ரங்கைஸ் துஷ்டுவாம்சாஸ் தநூபிர் வ்ய சேம தேவ ஹிதம் யுதாயு –
ச்ரத்தையா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்ற ஸ்ரீ யபதிக்கு உள்ள அளவும் பிரதி ஷண வி நாசியான தேஹம் போல் அன்றியே
அப்ராக்ருத விக்ரஹமாய் தோற்றும்படி ஸ்திரமாய் இருக்கிற அங்கங்களோடு கூடி இருக்கிற சரீரத்தோடு
ஹா வுஹா வுஹா வு -ஏதத் சாம காயன் நாஸ்தே -என்று-

ஸ்ருதி தாத்பர்ய பர்யாலோசனம் பண்ண மாட்டாத சேதனரை உத்தீர்ணர் ஆக்குகைக்காக தான் அவதீர்ணனான அவ்வவ தாரங்களில்
மத்ஸ்ய அவதாரத்தைப் பார்த்தால் -பஹூ ஜீவனனாய் இருக்கச் செய்தேயும் -அதிக ஆயுஸ் -நீரில் வாழ்ந்து -கரையிலே ஷணம் நேரமும் வாழ முடியாத –
கூர்ம அவதாரத்தைப் பார்த்தால் -ஜகத்துக்கு ஆதார பூதனாய் இருக்கச் செய்தேயும் ஒருபுறம் சொல்லவே இருக்கும் –
ஸ்ரீ வராஹ அவதாரத்தைப் பார்த்தால் -ஆச்ரயண சௌகர்யம் தோற்றி இருக்கச் செய்தேயும் கோத்ரொத் பேகம் -கோத்திரக் கலப்பு -மலைகளை பிளத்தல் -பண்ணி இருக்கும்
ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தைப் பார்த்தால் இதிகாசம் அடியாகப் பற்றுவார்க்க்கு அநிர்ப்பரணம் -பொறுப்பு இல்லாமை -அகார வாச்யனான பகவானின் பொறுப்பு -தோன்றும் படி இருக்கும்
ஸ்ரீ வாமன அவதாரத்தைப் பார்த்தால் தான் சிறியனாய் இருக்கச் செய்தேயும் ஜகத்தை அடையத் தன அடிக்கீழ் ஆக்கா நிற்கும்
பரசுராம அவதாரத்தைப் பார்த்தால் ப்ராஹ்மன உத்தமனாய் இருக்கச் செய்தேயும் புண்ய ஜன ஹாநி பண்ணா நிற்கும்
ஸ்ரீ ராம அவதாரத்தைப் பார்த்தால் த்ருஷ்ட்வா வை தர்ம சாரிண மங்களாநி பிரயுஜ்ஞானா பிரத்யக்ருஹ்ணன் த்ருடவ்ரதா-ஆரண்ய -1-12- என்றபடி
புண்ய ஜன சேவை உண்டாய் இருக்கச் செய்தேயும் புண்ய ஜன ஹாநி -அரக்கர்கள் அழிவை -பண்ணா நிற்கும்
கிருஷ்ண அவதாரத்தைப் பார்த்தால் -ரூபமே தச்ச சதுர புஜம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-13-என்னும்படி
அவதார தசையிலும் ஆ ஸ்ரீ த சம்ரஷனத்தில் கை வாசி தோற்றி இருக்கும் –
நான்கு வித புருஷார்த்தங்களையும் அளிப்பவன் இ றே
அர்ஜுன ப்ரப்ருதிகளைக் கண்டால் தன் மேன்மை தோற்றாதபடி  தௌத்ய சாரத்யங்களைப் பண்ணா நிற்கும் –
ஆழ்வார்களும் ஈடுபடுவதும் இவ்வவதாரத்திலே இ றே
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் -திருவாய் -1-3-1- என்றும்
கோவலனாய் வென்னைய் யுண்ட வாயன் -அமலனாதி -10- என்றும்
திரு மதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே -திருப்பல்லாண்டு -10 என்றும்
கோவிந்தற்க்கோர் குற்றேவல்  இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய் செய்யும் தவம் தான் என்-நாச் -13-9- -என்றும்
துவராடை யுடுத்து ஒரு செண்டு சிலுப்பிக் கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டுச் சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர் -பெரிய திருமொழி -10-8-2- என்றும்
வார் மணல் குன்றில் புலர நின்ற வாசுதேவா உன் வரவு பார்த்தே -பெருமாள் திரு -6-1- என்றும்
இப்புடைகளிலே ஆழ்வார்களும் இவ்வதாரத்தையே ஆதரித்துக் கொண்டு போந்தார்கள்
ஏவம் பூதனான கிருஷ்ணனுடைய
சகல ஜகத் காரணத்வத்தையும்
சர்வாதிகத்வத்தையும்
சமுத்திர சாயித்வத்தையும்
சகல மநுஜ நயன சார்த்த ஜீவாதுவாம்படி  மதுரா புரீ சங்கதத்வத்தையும்
பிரதிபாதிக்கிறது -இஸ் ஸ்லோகத்தாலே-

——–

ஆனால் ஜகத் காரணமுமாய் சர்வாதிகமுமானால் அதீந்த்ரியமாய் அன்றோ இருப்பது என்னில்
1- அவனுடைய சௌலப்யாதிசயம் தோற்றும்படி– ஏஷ -என்கிறார் -(அரையர் தாளம் எறிந்து அடி பட்ட ஸுலப்யம் இன்றும் காணலாமே )
2- ஏஷ -அனுமாநம் ஆகமம் அர்த்தாபத்தி அநுப லப்தி -யாதிகளான–பிரமாணம் வேண்டாதபடி ப்ரத்யஷ சித்தமாய் நிற்கிற ஆகாரம் தோற்றுகிறது -(தேவ தத்தன் பருத்து பகலில் உண்ணாமல் -என்றால் இரவில் உண்கிறான் என்பதே அர்த்தாபத்தி)(காணுமோ கண்ண புரம் -என்று காட்டினாள் -ப்ரத்யக்ஷம் )

(பிரான் இருந்தமை காட்டினாள் திருத் தாயார் –இவளோ திவ்ய தேசம் காட்டுகிறாள் -கருவிலே திருவில்லாமல் கண்ணை மூடி செவிக்கும் துர்பாக்கியவாதிகள் -பட்டர் -கண்ணைத் திறந்து பார்க்க வேண்டுமே–கண்டு மேல் அஞ்சலி பண்ண சொல்ல மாட்டாமல் சேஷம் காட்டினாள் )

(பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் பயில்கின்றாளால் –வர்த்தமானம் நிகழ் காலம் –என்று என்று -முதலில் தெரியும் போல் -பின்பு தெரிந்து கொள்ள முடியாமல் இருக்குமே -அழகைக் காட்டி ஈர்த்து கொள்வானே–பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் போல் )

(அவதாரங்களில் கிருஷ்ண அவதாரம் ஸ்ரேஷ்டம் போல் கண்ணபுரம் அர்ச்சா ஸ்தலங்களில் ஸ்ரேஷ்டம்-வட மதுரைப் பிறந்தான் 9 பத்து ஆரம்பம்- இறுதியில் கண்ணபுரம் மங்களா சாசனம்)

எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் –காணுமோ கண்ணபுரம் காட்டினாள் –அங்கு சங்கை இது தெளிவு -இது அன்றோ இதன் ஏற்றம்

3-ஏஷ-அங்கன் அன்றியே -ஆசன்நாவதாரதம் ஆகையாலே சொல்லும் எளிமையை காற்றிற்று ஆகவுமாம் –
4-ஏஷ -அங்கன் அன்றியே –உளன் சுடர் மிகு ஸ்ருதியுள் -திருவாய் -1-1-7- என்று ஸ்ருதி சித்தனாய் இருக்கச் செய்தேயும் மானச விஷயமாகையாலே சொல்லிற்று ஆகவுமாம் –

அணியனாகும் தன் தாள் அடைந்ததற்கு எல்லாம்
சேயன் அணியன் -ஏஷ
-அருகில் பரம ஸூ லபனாய் ரத்யக்ஷமாக ஸேவை சாதிக்கிறான் அன்றோ-பார்க்கலாம் -பெருமையைப் பேசி முடிக்க முடியாது

————

எளிமைக்கும் பெருமைக்கும் எல்லை நிலம் இவனே
ஏஷ -சொல்லி -மேல் நாராயண -உத்பாதகத்வேந -நாராயணன்

புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே -பெருமாள் திருமொழி -8-2-என்றும்
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே -பெருமாள் திரு -8-10- என்றும்

இப்படி  சங்குசித வ்ருத்தியாய் இருப்பான் ஒருவனோ என்னில்
1- நாராயண –
அந்தர் பஹிஸ் ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித –என்று சர்வ வ்யாபகனாய் இருப்பான் ஒருவன் –

(அந்தர் பஹிஸ் ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித
ஸ்தித -இருக்கிறான்
தத் சர்வம் வ்யாப்ய-அனைத்தும் வியாபித்து இருக்கிறான்
அந்தர் பஹிஸ் ச -உள்ளும் புகுந்து நியமிக்கிறார்
இரண்டு ஸமாஸங்கள் உண்டே–தத் புருஷ -பஹு வ்ரீஹீ ஸமாஸம்-நாரங்களுக்கு இருப்பிடம் -ஸமஸ்த இதர வஸ்துக்களுக்கும் இருப்பிடம் -நாரங்களுக்குள் இருப்பவன்–அக்னி -அக்ரே நயதி-முன் கூட்டிச் செல்பவன்-சிவ -மங்களம் அளிப்பவன் -போல் யாருக்கும் சொல்லலாம் -அது போல் நாராயண -சொல்ல முடியாதே -அசாதாரண திரு நாமம் அன்றோ-பாணினி ஸூத்ரம் -அப்பய தீக்ஷிதர் -வரத ஹஸ்தம் இல்லாமல் வரதராஜர் பேர் அருளாளன் -அபய முத்ரை -தஸ்ய யதாம் கப்யாஸம் ஏவம் அக்ஷிணி -இரண்டு கண்கள் -புண்டரீகாக்ஷன் –சிவனுக்கும் -முக்கண்ணனுக்கும் சொல்வார் -ஒருமை இருமை பன்மை -அஷி அஷிணி அஸீணீ -ஓன்று மலராத கண் இரண்டு மலர்ந்த கண்கள் -என்று அர்த்தம் சொல்வார் -அவராலும் நாராயண -அர்த்தம் -ணத்வம் பாதித்தே என்பர்-உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-ஆத்மா அணு -இவனோ விபு -ஸர்வ அந்தர்யாமி -கறந்த பாலுள் நெய்யே போல்–எங்கும் உளன் கண்ணன்-ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஜ்ஞாநம் அபோஹநம் ச இதி ஸ்ம்ருதேஸ் ச-)
2- நாராயண –
ரூப குண விபூத்யாதிகள் அடைய ஏக தேசத்திலே ஒதுங்கும்படி ஸ்வரூப மஹத்தையை உடையனாய் இருப்பான் ஒருவன் –
3- நாராயண –
சகல ஜகத்தும் சம்ஹ்ருதமான சமயத்திலும் தம்முடைய சத் பாவம் தப்பாதபடி இருப்பான் ஒருவன் –
ஏகோ ஹவை நாராயண ஆசீந் த  ப்ரஹ்மா நேசாந நேமே த்யாப்ருதி வீ -மஹா உபநிஷத் -என்றும்
ஆபூத சம்ப்லவே    ப்ராப்தே நஷ்டே ஸ்தாவர ஜங்கமே-ஏகஸ் திஷ்டதி விசவாத்மா ஸ து நாராயண பிரபு -பாரதம் -சாந்தி -210-24- என்றும் சொல்லுகையாலே –
4- ஆனால் கார்யாம்சம் அடையக் குலைந்து காரணமான தான் ஒருத்தனும் நிற்கும் அத்தனையோ என்னில் -நாராயண – –
நராஜ் ஜாதா நி தத்த்வா நி -பார ஆநு-186-7-என்கிறபடியே தத் உத்பாதகனாய் இருப்பான் ஒருத்தன் –
5- நாராயண -அங்கன் அன்றியிலே -மேல் ஷீரார்ணவ நிகேத ந -என்று சொல்லுகையாலே அப்புக்களைத் தனக்கு இருப்பிடமாக உடையன் -என்றாக வுமாம் –
தா யதாஸ் யாய நம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத-மனு -1-10-என்கையாலே –மனத்துள்ளான் மா கடல் நீர் உள்ளான்
6- நாராயண -அங்கன் அன்றியே -சகலர்க்கும் அவர் ஜநீயமாம் படி உடலும் உயிரும் போலே அந்தர்பூதமான சம்பந்த விசேஷத்தை உடையனாய் இருப்பான் ஒருத்தன் என்றாக வுமாம் –
7- நாராயண -அங்கன் அன்றியே -அந்தர் வ்யாப்தி பஹிர் வ்யாப்தி பேதத்தாலே ஜகத்துக்கு ஆதார பூதனுமாய் நியந்தாவுமாய் இருப்பான் ஒருத்தன் –
8- நாராயண –மாதா பிதா ப்ராதா –ஸூபால -இத்யாதி பேதத்தாலே சர்வவித பந்துத்வமும்
ஆச்ரயண  உன்முகனான அதிகாரிக்கு அநுரூபமாம் படி வாத்சல்யமும் -ஸ்வாமித்வமும்-சௌசீல்யமும்-சௌலப்யமும்-ஜ்ஞான சக்த்யாதி யோகமும்
இக் குண விசேஷங்கள் அளவிலே விமுகரையும் ஆ பக்தராக்கும் என்னும் இடம்
தோற்றுகிறது –

கோன் வஸ்மி குணவான் –16 கல்யாண குணங்களுக்கும் ஒரே இருப்பிடம் பெருமாள் -அமலன் ஆதி பிரான் -அனைத்துக்கும் ஸீமா பூமி இவனே-

அகில காரணன் அத்புத காரணம் நிஷ் காரணன் -ஆதி மூலமே –நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-

————————-

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே!
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-

ஆனால் இதில் தோற்றுகிற காரணத்வம்-ந ஸன் ந சாச்ச்சிவ ஏவ கேவல -என்றும் பதிரேகா ஆ சீத்-என்றும் சொல்லுகிறபடியே
ஹிரண்ய கர்ப்ப சிவாதி சாதாரணம் அன்றோ என்னில்
1-ஸ்ரீ மான் -சர்வாதிகன் -என்கிறது -ஸ்ரீ மான் என்கிற இத்தாலே ஆஸ்ரய ணீ யதையும் போக்யதையும் தோற்றுகிறது-

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லி யம்பாவை சொல்லு  நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே
–2-7-1-அவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும்–மூன்று உம்மைத்தொகை
2- ஸ்ரீ மான் -இதில் மதுப்பு நித்ய யோகார்த்தித்திலே யாய் -இத்தால் பூவும் மணமும் போலே அவி நா பாவம் தோற்றுகிறது –
ஸ்ரீ -எல்லாராலும் ஆஸ்ரயிக்க பட்டு இருப்பாள் ஒருத்தியாய் உத்தர உத்தர தரமான அதிசயங்கள் எல்லாம் தன்னுடைய கடாஷ அதீநமாம் படி இருப்பாள் ஒருத்தியுமாய்
யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18-என்கிறபடியே ஈஸ்வரனிலும் கால் வாசி ஏற்றம் உடையவளாய் இருப்பாள் ஒருத்தி-சுவையன் திருவின் மணாளன்
3- ஆனால் இப்படிக்கொத்த இவளால் வந்த அதிசயமோ அத்தலைக்கு என்றால் -ஸ்ரீ மான் -இவளும்
இறையும் அகலகில்லேன் -என்று அலர் மேல் மங்கை திரு மார்பில் சுவடு அறிந்த பின்பு பிறந்தகமான தாமரையும் நெருஞ்சி முள் என்னும்படி ஸ்ப்ருஹாஸ் பதனாய்
திருவுக்குத் திருவாகிய செல்வா -என்றும்
ஸ்ரீய ஸ்ரீ யம் என்றும் சொல்லுகிறபடியே இவள் தானும் மேல் விழும்படி ஸ்வதஸ் சித்த போக்யதையை உடையவனாய் – இவள் தர்மமாய் தான் தர்மியாய் இருப்பான் ஒருத்தன்

(பிக்ஷை உசிதமான வாமன அவதாரத்திலும் கூட திரு மார்பை விட்டுப் பிரியாதவள் -மான் தோல் – -அந்தப்புரத்துக்கு திரை-இவள் கடாக்ஷம் மா பலிக்கு லேசம் விழுந்தாலும் கார்யகரம் ஆகாதி)
4- ஸ்ரீ மான் –இச் சேர்த்தியைப் பிரியக் கண்டார் யுண்டாகில் ராவணனும் சூர்பணகையும் பட்டது படுவார்கள்

தேவியைப் பிரிந்தனை -வாலி

நித்யை வைஷா ஜெகன் மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயிநீ
யதா சர்வ கதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம
–ஸ்ரீ விஷ்ணு புராணம் –

ஸ்ரீ சப்தம் -ஸ்ரீயதே -ச்ரயதே –ஸ்ருணோதி-ஸ்ராவயதி -ஸ்ருணாதி -ஸ்ரீணாதி-என்று ஆறு படியாக -ஸ்ருணோதி ஸ்ராவயதி -என்கிற வ்யுத்பத்திகளில்
சாபராதரான அடியோங்களை சர்வேஸ்வரன் திருவடிகளில் காட்டிக் கொடுத்து அருள வேணும் என்று
இப் புடைகளிலே ஆஸ்ரிதருடைய ஆர்த்த த்வனியைக் கேட்டு சர்வேஸ்வரனுக்கு விண்ணப்பம் செய்து
இவர்களுடைய ஆர்த்தியை சமிப்பிக்கும் 

வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே-

ஆக இந்த இரண்டு பதத்தாலும் ஆஸ்ரயண அதிகாரிக்கு அநு சந்தேயமான –சரணத்வமும் -ஸ்ரீ யபதித்வமும் -பிரதிபாதித்தா யிற்று
இத்தைப் பற்ற இறே ஆழ்வார்களும் –திருவில்லாத தேவரைத் தேறேல்மின்-நான்முகன் -53-என்றும் திரு நின்ற பக்கம் -நான்முகன் -62-என்றும் பிரதிபாதித்தது -மகிஷ்யந்தரங்கள் உண்டாய் இருக்கச் செய்தேயும் தஸ்ய ச அஸ்யாம் ப்ரதிஷ்டிதம் -என்று இவள்-அளவிலே நெஞ்சுண்டாய்ப் போருவான் ஒருத்தன் –

அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும் என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின்றாளால்
கடிக்கமலம் கள்ளுகுக்கும்கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ
–8-1-5-

தருமான மழை முகிலைப் பிரியாது தன்னடைந்தார்
வருமானம் தவிர்க்கும் மணியை யணி யுருவில்
திருமாலை யம்மானை யமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை –
அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே
–8-9-2-திருமாலை -மத்ய மணி நியாயம்

தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன்
மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ
– 8-4–

————

அது எங்கே கண்டோம் என்றால் –
1- ஷீரார்ணவ நிகேதந -இவள் பிறந்தகத்தை விடாதே போதே கண்டது இறே

பிள்ளை வேட்டகத்தை ஆசைப்படும் பெண் புக்ககத்தை ஆசைப்படும்

ஜநந பவந ப்ரீத்யா துக்த அர்ணவம் பஹு மந்யஸே
ஜநநி தயித ப்ரேம்ணா புஷ்ணாஸி தத் பரமம் பதம்
உததி பரம வ்யோம்நோ: விஸ்ம்ருத்ய மாத்ருச ரக்ஷண
க்ஷமம் இதி தியா பூய: ஸ்ரீரங்கதாமநி மோதஸே–ஸ்ரீ குண ரத்ன கோஸம்56–

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! நீ பிறந்த இடம் என்ற காரணத்தினால் திருப்பாற்கடலை மிகவும் மதிக்கிறாய்.
நீ புகுந்த இடம் என்ற காரணத்தினாலும், உனது கணவன் மீது உள்ள காதல் என்னும் காரணத்தினாலும்,
அனைவரும் துதிக்கும் பரமபதத்தை மிகவும் விரும்புகின்றாய்.
ஆனால் இரண்டையும் நீ இப்போது நீ மறந்துவிட்டாய் போலும்!
அதனால்தான் உனது பிள்ளைகளான எங்களைப் பாதுகாப்பதற்கு, உனக்கு ஏற்ற இடம் என்று மனதில் கொண்டு,
நாங்கள் உள்ள ஸ்ரீரங்கத்தில் என்றும் மகிழ்வுடன் அமர்ந்தாய் போலும் 


2- ஷீரார்ணவ நிகேதந -பாற் கடலில் சாய்ந்த பயோதரம் -நீருண்ட மேகம் -போலே இருப்பான் ஒருத்தன் –

அவனே மேகம்-அவள் மின்னல் -திரு ஆபரணங்கள் வானவில் -கிருபை நம் மேல் தெளிக்கட்டும் –

நிவாஸா இத்யாதி -சென்றால் குடையாம் -திருவனந்த ஆழ்வான் -விமானமும் சலனமும் கறுப்பாக -இருப்பதன் காரணம் -இவன் சயனிப்பதால் -நிழல் யீட்டால் –
நீருண்ட கார் மேகம் கருத்து இருப்பது போல்-கருணை வெள்ளம் வற்றாதே -சுற்றுப்புறம் எங்கும் கறுப்பாக்குமே திருமேனி தேஜஸ்
அந்த கறுப்பு நம்மை ரக்ஷிக்கட்டும்

மேக வண்ணன் முகில் வண்ணன் -கறுத்த வர்ணம் மட்டும் அல்ல ஸ்வ பாவமும் சாத்ருசம் –
நாம் உள்ள இடம் வந்து பொழியும் –
வந்து அருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்து
திருக் கமல பாதம் வந்து –உறையூர் அளவும் நீண்டு -திருப்பாணாழ்வார் கண்ணின் உள்ளே புகுந்ததே
எதிர் சூழல் புக்கு திரிந்து கைக் கொள்வான்

வந்தார் போல் வராதவன் -வராதவன் போல் வருவான்
கிருபை பொழிய மனதை தயார் படுத்திக்க கொள்ள வேண்டுமே
ஏரி வெட்டி தேக்கிக் கொள்ளுவது போல் -மாரி யார் பெய்விப்பார் –

ஜல ஸ்தல விபாகம் இன்றி அநா லோசித விசேஷ அகில -கொட்டுவான்-

மேகம் போல் இவனையும் தூது விடலாம்
இதில் இருந்து அவதாரங்களைச் செய்து மீண்டும் இங்கே வந்து சயனித்துக் கொள்ளுவான்

1- மேகம் பெய்ய வேண்டும் இடம் வரை சென்று பொழியும்
எம்பெருமானும் -வந்து அருளி என்நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து –
-மண் மீது உழல்வாய் -கிருபா ரசம் பொழிய -வாழ உலகினில் பெய்திடுவான் –

2-மேகம் மின்னுள்ள காலம் நீர் நிரம்பி இருக்கும் -இவள் சந்நிதியாலே காகம் தலைப் பெற்றது -அது இல்லாமையாலே ராவணன் முடிந்தான்
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும் செய்கை –

3- மேகம் தான் மொண்ட இடத்திலும் பெய்யும் வசிஷ்டாதிகளுக்கும் பெருமாள் உபதேசித்த்காது பிரசித்தம்

4- மேகம் பெய்யப் பெறாத காலத்திலே வறக்கும்
கோவிந்தேதி யதாக்ரந்தம் கிருஷ்ணா மாம் தூர வாஸினம் ருணம் பிரவர்த்தமிவ மே ஹ்ருதயாத் நாபசர்ப்பதி-

5-மேகம் இன்ன பொது பெய்யும் என்று அறுதி இட ஒண்ணாது -வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே -திரௌபதிக்கு ஆபத்திலே முகம் காட்டாது ஒழிந்தான் அபேஷா நிரபெஷமாக தாவி அன்று உலகமெல்லாம் தலைவிளாக் கொண்டான்

6-வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது அல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று -வளைப்புக்காக கார்யம் செய்பவன் அல்லன் -பெண்ணுலாம் சடையினானும்
பிரமனும் காண்பான் எண்ணிலா ஊழி ஊநிழி தவம் செய்தார் வெள்கி நிற்க விண்ணுளார் வியப்ப ன்று ஆணைக்கு அன்று அருளை ஈந்தவன்

7-மேகம் ஜல ஸ்தல விபாகம் இன்றி பெய்யும் -அநா லோசித விசேஷ அசேஷ லோக சரண்யன் -வசிசிஷ்டர் சண்டாளன் வாசி இல்லாமல் அனுக்ரஹ சீலன்
வேடன் வேடுவிச்சி பஷி குரங்கு சராசரம் இடைச்சி இடையர் தயிர் தாலி கூனி மாலாகாரர் பிணவிருந்து வேண்டி அடிசில் இட்டவர்
அவன் மகன் அவன் தம்பி ஆனை அரவம் மறையாளன் பெற்ற மைந்தன் -நிர்விசெஷமாக அனைவருக்கும் அருளை பொழிபவன் –

8-மேகம் கர்ஜித்துப் போகும் ஆடம்பரம் இன்றியும் பொழியும் -குசேலருக்கு அருள் மலை பொழிந்தான் –

9–விராட பார்வை கால ஷேபம் கேட்க மேகம் வந்து நிற்கும் -பகவத் விஷய கால ஷேபத்துக்கு இவனும் வந்து நிற்பான் –
மா முனிகள் கால ஷேப கோஷ்டியில் ஸ்ரீ சைல தயா பாத்ரம் தனியன் சாதித்துன் கொண்டு வந்தானே –

10-மேகம் சுக்திகளில் பெய்து முத்தாகும் -அடியாருக்கு இன்பமாரியாகிய எம்பெருமான் உடைய கடாஷ தாரையும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்
இடத்தே ப்ரவஹித்து மிக்க பயன் விளைத்து முத்தன்ன அருளிச் செயல்களையும் ஸ்ரீ வசன பூஷணாதிகளையும் பயக்கும்

11-மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம் -இத்யாதிப் படியே தூது விடப் பெரும் -இவனும் இன்னார் தூதன் என நின்றான் என்றும்
கோதை வேல் ஐவர் க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் -என்ற பாண்டவ தூதன் என்று அழியாப் பெயர் பெற்றான்

12-மழை பெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும் -எருக்கிலை போல்வன வீழ்ந்து ஒழியும்-இவனும் பரித்ராணாயா சாது நாம்
விநாசாய ச துஷ்க்ருதாம் -என்று சோதி வாய் திறந்து அருளினானே-கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் -தாயார் மகிழ ஒன்னார் தளர –

13-மேகமானது -எத்தனையோ வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் வேறு புகல் இல்லாமல் –
எம்பெருமானும் -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்றிலேன் -என்று சாதக வ்ருத்திகளான அனன்ய கதிகளால் ப்ரதீஷிக்கப் பட்டிருப்பன் –

14-மேகமானது விருப்பம் இல்லா விடிலும் கண்ணீர் விட்டாலும் வாளா நிற்கும்-ஸ்ரீ பரத ஆழ்வான் -ஏபிச் ச சசிவைஸ் சார்த்தம் சிரஸா யாசிதோ மயா-ப்ராதுச் சிஷ்யஸ்ய
தாஸஸ்ய பிரசாதம் கர்த்துமர்ஹசி-என்று பலருடன் கண்ணநீர் சித்ரகூடத்தில் விட்டாலும்
ச காமம் அநவாப்யைவ-என்னும்படி மநோ ரதம் நிறைவேறப் பெறாமல் மீண்டு போம்படி ஆயிற்று-

15-மேகம் கடலில் படிந்து அங்கு நின்றும் எழுந்து தோன்றி வர்ஷித்து விட்டு மீண்டும் கடலில் புகும் -எம்பெருமானும் அவதார கந்தமான திருப் பாற் கடலிலே படிந்து
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -என்றபடி
ஸ்ரீ ராம கிருஷ்ணாதி திருவவதாரங்களில் கிருபா ரசத்தை பொழிந்து மீண்டும் அங்கே புகுவான்
பின் துரக்கும் காற்று இழிந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய் வன் திரைக்கண் வந்து அணைந்த வாய்மைத்தே -பெரிய திருவந்தாதி

16-மேகம் தான் தோன்றின வாறே மயில்களை சிறகு விரித்து ஆடப் பண்ணும் -கார் முகில் போல் வண்ணன் கண்ணன் எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துல்லாதார் தம்மால் கருமம் என் சொல்லீர்-என்றபடியே தத் பஷ பாதிகளை எழுந்தும் பறந்தும் துள்ளப் பண்ணும் –


3- ஷீரார்ணவ நிகேத ந -அங்கன் அன்றியே -பெரும் புறக்கடல் -பெரிய திருமொழி -7-10-1-என்றும்
சமஸ்த கல்யாண குணாம் ருதோதி-ஸ்தோத்ர ரத்னம்  -18- என்றும் சொல்லுகிறபடியே
கடலிலே கடல் சாய்ந்தால் போலே இருக்கிறவர் என்னவுமாம் –
4- ஷீரார்ணவ நிகேதந -கீழ்ச் சொன்ன நாராயணத்வம் இங்கே புற வெள்ளம் இட்டுக் கிடக்கிறது-

கருணைக் கடல் குண ப்ரவாஹம் –லோசன அம்ருத-ஆமோத -திரு மணத் தூண்கள்

கடல் கிடந்த பெருமானை -பெரிய திரு மொழி-8-9-2- என்று ஷீரார்ணவ நிகேதந சப்தார்த்தையும்
அடைந்து –தீர்த்தவாரி
கிடந்து
அடைத்து -பெருமாள்

கூப்பீடு கேட்க்கும் இடம்
மந்த்ர ஆலோசனை செய்யும் இடம்-நம் போல்வார் கூப்பீடு கேட்கவே இங்கே நித்யவாஸம் செய்து அருள்கிறான்

கொங்கு மலி கருங்குவளை கண்ணாகத் தெண் கயங்கள்
செங்கமல முகமலர்த்தும் திருக் கண்ண புரத் துறையும்
வங்கமலி தடங்கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே
—8-3-8-

ஆர்த்தருடைய கூக்குரல் கேட்டு கடுக வந்து ரஷிக்க ஷீராப்தி நாதனாக  கண் வளர்ந்து அருளுபவன் இவனே
திரு நாபி கமலம் கொண்டு சிருஷ்டித்து காத்து அருளும் பெருமான் நம்மைக் கை விடான் என்று
நம்பி ஆசை வைத்து பலனாக வளையல்கள் இழந்தேன்-

வெள்ளை நீர் வெள்ளத்து அளைந்த அரவணை மேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே யுன் தமர்க்கு என்றும் நமன் தமர்
கள்ளர் போல் கண்ண புரத்துறை யம்மானே
–8-10-7-

திருப் பாற் கடலில் கூக்குரல் -கூப்பீடு இடத்தில் யோகு செய்து அருளுபவனே
யமபடர்கள் பாகவதர்களை கிட்ட மாட்டார்கள் என்று மட்டும் இல்லை
அவர்கள் கள்ளர் போலே மறைந்து ஒளிந்து கிடக்கும் படியாய் அன்றோ உனது பிரபாவம்
சித்ரகுத்தன் எழுத்தால்  தென் புலக்கொன் பொறி ஒற்றி வைத்த இலச்சினை மாற்றி தூதுவரோடு ஒளித்தார்-பெரியாழ்வார் –

—————

ஆனால் வ்யூஹ விசேஷமானால் சனகாதிகளுக்கு ஊக விஷயமாய் -சர்வ ஜன சமாஸ்ரயத்வம் இல்லையோ -என்னில் –
1-நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
அநேக சிரஸ் கமான இடத்தை விட்டு -பலர் ஆட்சி செய்யும் இடம் விட்டு -திருவனந்த ஆழ்வான் உடைய பல தலைகளை விட்டு –
திகழும் மதுரைப் பதிக் கொற்றவன் -நாச் -4-6-என்று ஏகாதபத்ரம் நடத்துகிற இடத்தேற வந்தான் –
2- நாக பர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
ஆசி விஷம் உள்ள இடத்தை விட்டு மதுரோத்தரமான இடத்தேறப் போந்தான் –
3- நாக பர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
சாகரத்தை விட்டு நாகரனாம்படி வந்து புகுந்தான் –

ஜலத்தை விட்டு ஸ்தலத்துக்கு ஸ்திரமாக நாகரீகனாக இருக்கவே இங்கு வந்து ஸேவை சாதிக்கிறான்

————–

கிடை அழகு ஒழிய அநு பாவ்யமான நடை அழகு இல்லையோ என்னில்
1-ஆகத-கனத்து இருந்த களிறு -என்றும் -தறி யாரந்த களிறு -பெரிய திரு -2-10-6- என்றும் சொல்லுகிறபடியே
கண்டவர்களுடைய நயன சாபல்யம் பசேளிமாமாம் படி
-மத்த மாதங்க கல்பனாம்படி பிசகி நடந்தான் –

முன்னலோர் வெள்ளிப் பெருமலைக்குட்டன் மொடுமொடு விரைந்தோட*
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவது போல்*
பன்னியுலகம் பரவியோவாப் புகழ்ப்பலதேவனென்னும்*

தன் நம்பியோடப்பின் கூடச் செல்வான் தளர்நடைநடவானோ.


2- ஆகத -வருகிற போதே மதுரா விலாஸி நீ சார்த்தத்துக்குத் தன் வடிவழகை தூளிதாநம் பண்ணிக் கொண்டு வந்தான்
3- ஆகத -தன் நடை அழகாலே சம்சார பதவீம் வ்ரஜன்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-19- என்கிற ஜங்கா லதையைக் குலைத்துக் கொண்டு வந்தான்-

காளை புகுதக் கனாக் கண்டேன் -மேனாணிப்பு தோற்ற வருவான்-வானுளோர் அறியலாகாதவன் ஸகல மனுஷ நயன தாங்கனாய் -நடந்து
வடவரை நின்றும் வந்தின்று கண புரம்
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்
மடவரல் மாதர் என் பேதை யிவர்க்கிவள்
கடவதென் கண் துயில் இன்று இவர் கொள்ளவே
-8-2-6-அனுகாரத்தாலே அருளும் பாசுரம்
இவருக்கு இதுவும் அர்ச்சையிலே நடக்குமே
வடக்குத் திருமலையில் இருந்து கீழை வீடுக்கு வந்து நித்ய சந்நிதி பண்ணிய சௌரி ராஜ பெருமாள் நானே-மிக சிறுமி -அழகி -இவளை இவன் இப்பாடு படுத்துவது தகுமோ -திருத் தாயார் அநு பாஷித்து பின் அருளுகிறாள்

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–

——————-

1- மதுராம் புரீம் -மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரி ஸூபாஎன்கிறபடியே அவன் தன்னைப் போலே தேசமும் அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணிக் கொடுக்கிறது மண் வாசியிலே தோற்றும் இறே-

அவனுக்கும் -அடியார் உடன் கூடி இருத்தல் இஷ்ட பிராப்தி -அதற்காகவே வந்தான் -ப்ரயோஜனாந்த பரர்கள் போல் அன்றியே ஆயர் வடமதுரை சிறுமியர்
2- மதுரா புரீம் -தேவா நாம் பூரயோத்யா என்கிற தேசம் போலே துஷ்ப்ராயையாய் இருக்கை அன்றிக்கே
சத்ரு மித்ர உதாசீனரான  கோடி த்ரயத்துக்கும் ஆச்ரயமான தேசம்
இறே-அயோத்யை -முற்றுகை இடவோ தகர்க்கவோ முடியாதே
அங்கு இல்லாமல் இங்கு வந்தது சகலருக்கும் கலந்து பரிமாறலாம் படி அன்றோ இருக்கும்
3- மதுராம் புரீம் ஆகாதோ ஹி- ஹி சப்தம் பிரசித்தியிலேயாய்-மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரைப் பிறந்தான் -திருவாய் -9-1-10-என்கிற பிரசித்தியைக் காட்டுகிறது -ஏவ காரமே இங்கு ஹி
4-ஷீரார்ணவ நிகேதந நாக பர்யங்கமுத்ஸ் ருஜ்ய  மதுராம் புரீம் -ஆகாதோ ஹி -ஜட
(ஜல) பிரகிருதி சம்சர்க்கத்தை விட்ட பின்பு நாகரிகமான ஆகாரம் நடையிலே தோற்றுகிறது இறே

5-நாராயண மதுராம் புரீம் -ஆகாதோ ஹி -சர்வ காரண பூதனாய்  தான் கார்ய ஏக தேசத்திலே ஒதுங்கி வந்தான் –

ஆயர் குலத்தினுள் தோன்றும் அணி விளக்கு-வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு
விட்டில் பூச்சுக்கள் போல் விழுந்து மாள்வார்கள்-மிச்சம் வைக்காமல் முடிக்கும் ஏற்றம் கண்ணனுக்கே

நெடுமால் -தேவகிப்பிராட்டிக்கு அனைத்து பால்ய லீலைகளையும் காட்டி அருளி –

6- ஸ்ரீ மான் மதுராம் புரீம் -ஆகாதோ ஹி -ஏக தார வ்ரதனானவன் -ஸூப்ரபாதா ச ரஜநீ மதுரா வாச யோஷிதாம் பச்யந்த யச்யுத வக்த்ராப்சம் யாஸாம் நேத்ராளி பங்க்த்ய-ஸ்ரீ விஷ்ணு புராணாம் 5-18-24-என்கிறபடியே
படை வீடேறிப் பத்ன்யந்தர பரிக்ரஹம் பண்ணுவாரைப் போலே வந்தான் –
-16108 பெண்களுக்கு நல்ல விடியல் ஆவதற்காகவே-கண்ணன் திருக் கண் தாமரையில் மதுவைப் பருகும் வண்டுகள் போல் மதுரைப்பெண்கள்-அயோத்தியார் கோன் பெரும் தேவி கேட்டருளாய் -ஏக தாரா விரதன் அன்றோ -பெருமாளுடைய பெருமைக்குத் தக்க -அவனுக்கு பெருமை அருளும் தேவி -அங்கு

பிரசாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் -தன்யோஹம் அர்ச்சயிஷ்யாம் ஈத்யாஹா மால்ய உபஜீவன-ஆகதவ் உபாகதவ் -கேஹம் உபாகதவ் –மம கேஹம் உபாகதவ் -என்று பிரித்து ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து இந்த ஸ்லோகம் படியே திருப்பாற்கடலில் சயனித்து இங்கு வந்தான் அன்றோ

கூனி தனது ப்ரேமமே சந்தனமாகக் கொடுக்கவேல் விழி கயல் விழி அடையாளங்கள் சந்தனம் மல்கிய திருமார்பில் அழியாமல் மல்லரைப் பொருத சதுரன் அன்றோ
7-அங்கன் அன்றியே -அதிசயித லஷ்மி யுடையவன் ஒரு படை வீடு சாபேஷனாய் வந்தான் –
ஸ்ரீ மான் -பெண்ணமுது வந்து திருமார்பில் அமர்ந்த பின்பு குடியும் குடுத்தனமும் வேண்டி இங்கு வந்தான்

8-நாக பர்யங்கமுத்ஸ் ருஜ்ய  மதுராம் புரீம் -ஆகாதோ ஹி –
புஜங்க சய்யையை விட்டவன் புஜங்க சமர்த்தம் உள்ள -காமினிகள் நெருக்கம் -உள்ள இடத்திலே வந்தான் –

திருமேனி அழகை தூளி தர்சனம் பண்ணி -தந்தை காலில் பெரு விலங்கு அறும் படி ஸம்ஸாரம் தளை அறுக்க தான் நடந்து
—————

ஆக இந்த ஸ்லோகத்தாலே-
வாக்ய த்வயம் போலே உபாயத்வேநவும் உபேயத்வநவும் ஆஸ்ரயணீயனாய்
ஒரு தேச விசேஷத்திலே செல்ல வேண்டாத படி தங்கு பயணமாக வந்து
அங்கு செல்ல மாட்டாத பங்குகளுக்கு -நொண்டிகளுக்கு
கங்கா பதநம் போலே ஆ ஸ்ரீ தர் இருந்த தேசத்திலே தான் வந்து
தன் வடிவு அழகாலும்
நடை அழகாலும்
அஜ்ஞரானவர்களையும் வசீகரித்துச் சரிதார்த்தராம்படி பண்ணிற்று ஆயிற்று –
அங்கன் அன்றியே

பண்டு இவரைக் கண்டு அறிவது யெவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால் -பெரிய திரு -8-1-9 என்று ஏதச் சப்தார்த்தையும்
புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே -பெருமாள் திருமொழி -8-2-என்றும்
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே -பெருமாள் திரு -8-10- என்றும் உத்பாதகத்வத்தாலே நாராயண சப்தார்த்தையும் –
அணி யுருவில் திருமாலை -பெரிய திருமொழி -8-9-2- என்று ஸ்ரீ மச் சப்தார்த்தையும்
கடல் கிடந்த பெருமானை -பெரிய திரு மொழி-8-9-2- என்று ஷீரார்ணவ நிகேதந சப்தார்த்தையும்
வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது -பெரிய திருமொழி -8-2-6- என்று ஆகத சப்தார்த்தையும்
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரம் -பெரிய திருமொழி -8-10-5- என்றும்
கற்றார் சேர் கண்ணபுரம் -பெரிய திருமொழி -8-10-5- என்றும்

உண்ணும் நாள் இல்லை உறக்கமும்-தான் இல்லை
பெண்மையும் சால நிறைந்திலள் பேதை-தான்
கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் கார்க் கடல்
வண்ணர்மேல் எண்ணம் இவட்கு இது என்கொலோ
?-8-2-4-

கண்ணனூர் கண்ணபுரம் தொழும் காரிகை
பெண்மை என் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்
வெண்ணெய் உண்டு ஆப்புண்டு வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியுமே
–8-2-5-

இதுவே தாரகமாய் வந்தான் –
கண்ணன் தாரகம் போக்யம் போஷகம் நம்மாழ்வார்
இவரோ கண்ணனூர் தாயகம் போக்யம் போஷகம் –
இதனால் தான் —சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே
–4-9-6- என்பர்

பிண்டியார் மண்டை ஏந்தி*  பிறர்மனை திரிதந்துஉண்ணும்- 
உண்டியான்*  சாபம் தீர்த்த  ஒருவன்ஊர்,*  உலகம் ஏத்தும்-
கண்டியூர் அரங்கம் மெய்யம்*  கச்சிபேர் மல்லை என்று- 
மண்டினார்,*  உய்யல் அல்லால்*  மற்றையார்க்கு உய்யல்ஆமே?-

தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே
எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே
 -4-9-5-அர்ச்சை திவ்ய தேசங்களிலேயே -மண்டி இவர் ஒருவரே 47 திவ்ய தேசங்களுக்கு மங்களா சாசனம்-இவரைப் பாடுவித்த முக்கோட்டை திருக்கண்ணபுரம்

அங்கு போல் சில காலம் இருந்து தன்னுடை சோதிக்கு எழுந்து அருளியது போல் அல்லவே 64 சதுர் யுகமாக இங்கு அன்றோ நித்ய வாஸம்
கற்றார் சேரும் கண்ணபுரம் கம்சாதிகள் அல்லவே
தொன்மையூர் திருவரங்கம் -இது புதிதாக வந்து விரும்பி நித்ய வாஸம் செய்து அருளிகிறான்

கண்ணன் ஊர் கண்ணபுரம்–மதுரா புரீ சப்தார்த்தையும்
பிரதிபாதிக்கையாலே ஆபாத சூடம் கிருஷ்ண புரீ நாயகனான சௌரி ராஜ வைபாவத்தையே பிரதிபாதித்த தாயிற்று –

————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .-ஸ்ரீ ருக்மிணி சத்ய பாமா சமேத கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கண்ணபுர நாயகி சமேத ஸ்ரீ சௌரி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமாலை (என்னும் திவ்ய ப்ரபந்தம்) அறியாதார், ஸ்ரீ திருமாலையே (ஸ்ரீ யபதியை ) அறியாதார்—30-34–

August 22, 2023

இருபத்தி ஐந்து முதல் முப்பதினான்கு வரை பத்து பாசுரங்கள் –
இவ்வளவு நன்மைகள் பெருமாள் செய்தும், ஆழ்வார், தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்றும்,
எல்லா கெட்ட குணங்களும் உள்ளனவே என்றும் சொல்லி, பெருமாளிடம் இருந்து விலகப் பார்க்கிறார்.

ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற  பகுதி

25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற
இந்த நான்காவது பகுதியில், 25 முதல் 29 வரை, ஆழ்வார் தன்னிடம் எந்த நன்மையையும் இல்லை அல்லது
எந்த நல்ல குணமும் இல்லை என்று சொல்லியதை பார்த்தோம்,

இனி வரும் ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது
எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்க்கலாம்,

இந்த வகையில், தன்னிடம், மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீய குணம் உள்ளதாக சொல்லும்,
அடுத்த பாடலை இங்கே காண்போம்,

———

எம்பெருமான் ஆழ்வாரிடம், மேலே சொன்ன ஐந்து பாடல்களில் எந்தவிதமான நல்ல குணங்களும் இல்லை
என்று சொன்னதை ஏற்றுக்கொண்டு, ஒருவிதமான நன்மையையும் இல்லாதை போல்,
ஒருவித தீமைகளும் இல்லாது இருந்தால் அது போதும், அதைக் கொண்டே ஆழ்வார் விரும்பும் வீடு
போன்ற பேறு கொடுப்போம் என்று சொல்ல, அதற்கு ஆழ்வார், ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் சொன்னது போல்,
தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை, எல்லாவித தீமைகளும் தன்னிடம் குடி கொண்டு இருக்கின்றன என்கிறார்.

நம்மாழ்வார், திருவாய்மொழியில் (3.3.4) நிறையொன்றும் இல்லேன், என்று சொன்னதை,
தொண்டரடிபொடியாழ்வார், 25வது பாடல் முதல் 29வது பாடல் வரை, தன்னுடைய நன்மை இல்லாமையை சொல்கிறார்.
அதே பாடலில் நீசனேன் என்று சொன்னதை, தொண்டரடிபொடியாழ்வார்,
30வது பாடல் முதல், 34வது பாடல் வரை தாழ்வுகள் அனைத்திற்கும் கொள்கலமாய், இருப்பதாக விவரிக்கிறார்.

பாசுரம் 30
மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோர் இன்சொல் இல்லை,
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா,
புனத்துழாய் மாலை யானே பொன்னி சூழ் திருவரங்கா,
எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே. (30)

திருத்துழாயை மாலையாக அணிந்துள்ளவனே, காவிரியாலே சூழப்பட்ட ஸ்ரீரங்கத்தில் இருந்து அருளுபவனே,
அடியேனை அடிமையாகக் கொண்ட ஸ்வாமியானவனே, என் மனதில் தெளிவு கொஞ்சமும் இல்லை,
ஒரு நற்சொல்லும் வாயில் இருந்து வருவதில்லை, கோபத்தினால் பகைமையுடன் பார்த்து,
மிக கொடுமையான வார்த்தைகளை சொல்பவன், இப்படி துர்குணங்கள் கொண்ட எனக்கு என்ன கதி,
எம்பெருமான் தான் அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. இனி சிறிது விளக்கத்துடன் கீழே காண்போம்.

மனத்திலோர் தூய்மை யில்லை
காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் என்ற பல துர்குணங்களில்
ஏதாவது ஒன்றில் கொஞ்சம் குறைத்தாலாவது கொஞ்சம் சுத்தி ஏற்படும் என்று ஆழ்வார் சொல்கிறார்.
மனதை சுத்தமாக வைத்திருப்பதை பேற்றுக்கு உதவியாக உள்ளதை ஆழ்வார் சொல்கிறார்.
பரமாத்மா, கண்களாலும் வாக்காலும், அறியப்பட முடியாதவன் என்றும்,
விவேகம் முதலியவற்றால் சுத்தி அடைந்த மனத்தினால் மட்டுமே அறியப் படுகிறான்
(மனஸா து விசுத்தேந) என்ற வாக்கியதாலும்,
“எவர்கள் ஞான ஸ்வரூபமான ஆத்மாவை அறிந்தவர்களாயும், விவேகம் முதலியவற்றால் சுத்தி அடைந்த
மனதை உடையவர்களையும் உள்ளனரோ, அவர்கள், உலகம் எல்லாவற்றையும் ஞானமயமானது என்றும்
அது எம்பெருமானின் உடலாகவும் உள்ளதை அறிந்து கொள்கிறார்கள்” என்ற விஷ்ணு புராண (1-4-41) ஸ்லோகத்தாலும்,
மனத்தூய்மை, பரமாத்மா ஞானமாகிற பேறுக்கு உபாயமாக சொல்கிறார்கள்.

அந்த தூய்மை தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார்.
அந்த தூய்மை இல்லாதால், மனதுக்கு தோஷங்களான,
காமம், குரோதம், லோபம்(பேராசை), பயம், துவேஷம், மோகம், மதம், மாத்சர்யம் என்பவை
எதாவது ஒருவிதத்தில் எப்போதும் குடிகொண்டு உள்ளன என்றும் அதனால்,
ஒரு போதும் மனம் தூய்மை ஆக இருப்பதிலை என்று ஆழ்வார் சொல்வது தெரிய வரும்.

வாயிலோர் இன்சொல் இல்லை
மனது முழுமையாக கெட்டுப் போயிருந்தாலும், வாயினால் சில நல்ல அல்லது பிரியமான சொற்களை சொல்வதுண்டா
என்று எம்பெருமான் வினவ, தான், அப்படியும் இல்லை, மறந்தும் ஒரு நல்ல வார்த்தை வாயினில் இருந்து வருவதில்லை,
என்று ஆழ்வார் தன்னை பற்றி கூறுகிறார். இன்சொல் இல்லை என்றது, தான் யாரையும் குளிர விசாரித்தது கிடையாது,
தன்னை விசாரித்தவரையும் இனிய மறுமொழி கூறி குளிர்வித்தது கிடையாது என்கிறார்.
பெரிய திருமொழியில், திருமங்கையாழ்வார் சொல்லிய
நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன், ” என்ற 1.6.5 நைமிசாரண்ய பாடலை இங்கு நினைவு கூறலாம்.

மேற்சொன்ன இரண்டு தொடர்களாலும், தனக்கு நிறைவு ஒன்றும் இல்லை என்று,
இதற்கு முன் சொன்ன ஐந்து பாடல்களில் சொன்ன கருத்தை சுருக்கமாக சொல்கிறார்.

சினத்தினால் செற்றம் நோக்கித்
மனத்தூய்மையும் இன்சொல்லும் இல்லாவிட்டாலும், இவரிடம் இருந்து ஒதுங்கி பிழைக்கலாம் என்று
தப்பி செல்ல முயல்பவர்களையும் தப்ப முடியாதபடி, இவர் வலியச் சென்று அவர்களுக்கு தீமை செய்ய முயல்வதாக ஆழ்வார் சொல்கிறார்.
முதலில் நெஞ்சில் உள்ள கோபத்தையெல்லாம் காட்டி விரோத பாவத்துடன் அவர்களை எரிப்பது போல்,
அதாவது, எதிரியானவன் சுருண்டு விழும்படி பார்ப்பேன் என்கிறார். சினம் என்றாலும் செற்றம் என்றாலும்
கோபம் என்ற ஒரே அர்த்தத்தையே தருவதால், ஆழ்வார் மிகவும் கோபமுடன் பார்ப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒருவன் நல்ல ஆடையை உடுத்திக்கொண்டு, நல்லவனாக இருந்தால், அவனுடைய அந்த மேன்மையைப் பொறுக்க மாட்டாமல்,
காரணம் ஒன்றும் இல்லாமல், தான் அவர்களை பழித்துக் கூறும் சொற்களுக்கும் ஒரு அளவே இல்லை.

தீவிளி விளிவன் வாளா
ஆழ்வார் சொல்வதாவது, அவரை பார்த்தால் இப்படி கோபப் பார்வையுடன் எப்போதும் இருப்பாரா என்றால் இல்லை;
வாய் திறந்து பேச தொடங்கினால் கேட்பவர்களுக்கு நெருப்பை வாரி கொட்டி, பூண்டோடு அழியும்படி இருக்கும் வார்த்தைகள் என்கிறார்.
இப்படி சொல்கிற வார்த்தைகளால் ஏதாவது பயன் உண்டா என்றால் இல்லை;
இப்படி பார்ப்பதும், சொல்வதுமே பயனாக கருதி செய்வதாக ஆழ்வார் சொல்கிறார்.
இதன் கருத்து, சத்வ குணம் மிக்க நல்லவர்கள், பிறர் பயன் பெறுவதையே தங்கள் பயனாக எண்ணிக் கொள்வது போல்,
பிறர் துன்பப்படுவதையே தனக்கு பயனாக நினைத்து இருப்பதாக ஆழ்வார் சொல்வதாக பொருள்.

புனத்துழாய் மாலை யானே
“நீர் இவ்வளவு தீமை உடையவரானால் தன்னை நிர்பந்திப்பதில் எந்த பயனும் இல்லை ” என்று எம்பெருமான் திருவுள்ளமாக,
அதற்கு ஆழ்வார், “அடியவர்களின் தாழ்வுகளை பார்த்து, அகல முடியாதபடி, அவர்கள் நம்மிடம் வேண்டுவதை ஒன்றையே
அவர்களிடம் எதிர்பார்த்து, அவர்களை பாதுகாப்போம்” என்று பாதுகாப்பதிலேயே குறிக்கோளாக உறுதியாக கொண்டு,
அதற்கேற்ப, திருத்துழாய் மாலை அணிந்து இருப்பவர் அன்றோ தேவரீர், நீர் ஸ்வாமியாக இருப்பதையும் இனிமையாக
இருப்பதையும் கண்டபின், உம்மை விட்டு அகலமுடியுமோ ?’ என்று விடையளிக்கிறார்.
புனம் என்பது துளசி விளையும் செழிப்பான நிலத்தை குறிக்கிறது. இங்கு எம்பெருமானின் திருமார்பில்
அதேபோல் இருக்கும் திருத்துழாய் மாலையை உடையவனே என்று சொல்கிறார்.

பொன்னி சூழ் திருவரங்கா
பாதுகாப்பவனாக இருந்தாலும், அருகில் இல்லாமல் இருந்தால், பயன் இல்லை;
ஆனால் எம்பெருமான், தனக்கு மிக அருகில் திருவுள்ளம் கொண்டு இருப்பதாக சொல்கிறார்.
எந்த அளவு தாழ்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களையும் ஆட்கொள்வதுபோல் ஆச்சரியமாக திருவரங்கத்தில்
எழுந்து அருளி உள்ள எம்பெருமானே என்கிறார்.
தங்களை போன்றவர்கள் கரும பலனை அனுபவிப்பதற்கு எம்பெருமான் ஏன் தனிமாலை அணிந்து கொண்டு
இருப்பானேன் என்று வினவுவது போல் உள்ளது.

பொன்னிசூழ் என்று சொன்னது,
திருத்துழாய் மாலைக்கு மாலை சூடினாற்போல் திருக்காவேரியால் சூழப்பட்டு இருப்பது என்கிறார்.

எனக்கு இனி கதி என் சொல்லாய்
எனக்கு என்று சொன்னது,
இது வரை சொல்லப்பட்ட அத்தனை தாழ்வுகள் நிறைந்திருக்கும் தன்னை சொல்லிக்கொள்கிறார்.
இனி என்று சொல்வது,
தன்னுடைய தாழ்வுகளை சொல்லிக்கொண்டு, தன்னை பாதுகாத்துக் கொள்ள முயலாமல்,
தன்னை பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பை எம்பெருமானிடம் ஒப்படைத்த பின்பு என்று கொள்ளவேண்டும்.
கதி என் சொல்லாய் என்று சொல்வது,
உய்ய வழி சொல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.
உஜ்ஜிவிக்க முடியாதபடி தீமைகளை எல்லாம் சம்பாதித்துக் கொண்டு,
தான் உஜ்ஜிவிக்க தேவரீர் வழி சொல்ல வேண்டும் என்று வழக்காடுவது போல் உள்ளது.
ஆனால் ஆழ்வார் வழக்காடவில்லை.

என்னை ஆளுடைய கோவே
எம்பெருமான் வகுத்த (பொருத்தமான) ஸ்வாமியாக இருப்பதால், ஆழ்வார் வழக்காடவில்லை.
“நீர் உஜ்ஜிவிக்க வழி கேட்டவுடன் தான் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் என்ன ” என்று எம்பெருமான் திருவுள்ளமாக,
அதற்கு ஆழ்வார் “தான் அடிமையாய் இருப்பதும், எம்பெருமான் ஸ்வாமியாக இருப்பதும்
எப்போதும் நிலையாக இருக்கும் ஒன்று அன்றோ, ஆகையால் தன்னை காப்பதற்கு அவனை தவிர
வேறு யார் தகுதி பெற்றவர் இருக்கிறார், தன்னுடைய ஆத்மா தாழ்வுற்று போனால்
அதனால் வரும் குறையும் எம்பெருமானையே சேருமே ” என்று கவலை தோன்ற ஆழ்வார் இந்த பாடலை முடிக்கிறார்.

—–

“மோக்ஷத்தின் பொருட்டு சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட உபாயங்கள் ஒன்றும் தங்களிடம் இல்லை என்று கூறுகிறீர்கள்;
அது இல்லாவிட்டாலும் ஸ்வர்க்கத்தை பெறுவதற்காகவோ, பிறரை ஏமாற்றி பணம் பறிக்கவோ, வேதத்தில் சொல்லப்பட்ட யாகங்கள் ஏதாவது செய்து இருந்தால்,
அவற்றில் உம்முடைய நினைப்பை மாற்றி, படிப்படியாக மோக்ஷம் கிடைக்கும்படி செய்கிறேன்” என்று எம்பெருமானின் திருவுள்ளமாக,
ஆழ்வார், அவை ஒன்றும் இல்லை, தங்களை அடைவதற்காக தாங்கள் கொடுத்த இந்த பிறப்பை, உலக விஷயங்களில் மண்டி,
அனைவரிடம் வெறுப்பையே காட்டி, அழிவதற்காகவே இந்த பிறவி தந்ததாக இருக்கின்றன தன்னுடைய நடத்தை என்று மறுமொழி கொடுப்பதுபோல் உள்ள பாசுரம்.
பிறர் பெருமை பொறாதவன் என்று முன் பாட்டில் சொன்ன ஆழ்வார் அவ்வளவோடு நில்லாமல்,
உலக விஷயங்களில் ஈடுபட்டு உறவினர்களுக்கும் ஆகாதவன் ஆகிவிட்டதாக சொல்கிறார்.

தவத்துளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன்,
உவர்த்த நீர் போல உந்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்,
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசன் ஆனேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே (31)

அரங்கமா நகருளானே, தவங்களை மேற்கொள்பவர்களின் கூட்டத்தில் அடியேன் இல்லை,
ததியாராதனத்தின் பொருட்டு பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் அடியேன் இல்லை,
அடியேனுடைய சொந்த பந்தங்களுக்கு உப்புத் தண்ணீர் போல ஒரு பயனும் இல்லாதவன் ஆனேன்;
சிவந்த அதரங்களை உடைய பெண்களுக்கும் சம்பந்தங்கள் அறுந்து போகும்படி, கள்வனாக ஆனேன்;
இப்படிப்பட்ட எனக்கு இந்த பிறவியை வீணாகவே தந்து அருளினாய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இங்கு வீணாகவே பிறவி தந்துவிட்டாய் என்று ஆழ்வார் எம்பெருமானை குறை கூறவில்லை,
ஆனால் தன்னுடைய நைசானுசந்தானத்தை சொல்லி வருத்தத்தை தெரிவித்து எம்பெருமானை விட்டு விலக வேண்டுமோ என்ற அச்சத்தில் பாடுவதாக கொள்ளலாம்.
அடுத்த சில பாடல்களில், ஆழ்வார் தாம் எம்பெருமானை விட்டு விலக தன்னை தயார் செய்யும் தருணத்தில், எம்பெருமான் ஆழ்வாருக்கு நம்பிக்கை அளித்து-தன்னுடன் வருவதற்கு ஏற்பாடு செய்வார் என்பதை பின்பு பார்க்கலாம்.

இதே போல் பின்னாளில் நம்முடைய ஆச்சார்யரான ராமானுஜர், அப்போது வைணவ குருவாக இருந்த ஆளவந்தாரின்
அருள்பார்வை கிடைப்பதற்கு முன்னால் தன்னுடைய பிறவியை, ஒரு அவத்தமாக, மரம் போல் இருந்ததாக சொல்கிறார்.
இதை திருவாய்மொழியில், (7.9.3) ஆம் முதல்வன் இவனென்று தன் தேற்றி, என் நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி,
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன, என் வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ? என்று சொல்லி
எம்பெருமானை என்றாவது மறப்பேனோ என்று நம்மாழ்வார் சொன்னது போல்,
ஆளவந்தாரை மறப்பேனோ என்று ராமானுஜர் சொல்கிறார்.

தவத்துளார் தம்மில் அல்லேன்
தவம் என்பது சரீரத்தை வருத்தி செய்யும் காரியம் ஆகும். மோக்ஷத்திற்காக தவம் புரிபவர்கள் உண்டு,
மற்ற உலக விஷயங்களுக்காக தவம் செய்பவர்களும் உண்டு.
ஞானிகள் பிரம்மத்தை அல்லது பரமாத்மாவை வேத அத்யயனத்தினாலும், யாகங்களாலும், தானத்தினாலும், தவங்களாலும் அறிய விரும்புகிறார்கள் என்று-ப்ருஹ தாரண்ய உபநிஷத் (6.4.22) சொல்வதில் இருந்து வேதாந்தங்கள், தவத்தை ஒரு மோக்ஷ சாதனமாக உரைத்தது.
‘தவத்தோர் தம்மில்’ என்று சொல்லாமல், தவத்துளார் தம்மில் என்று சொன்னதற்கு மேல் சொன்ன,
வேதம், யாகம், தானம் மற்றும் தவங்கள் என்று எல்லாவற்றையும் சேர்த்து சொன்னதாக கொள்ளலாம்.
அதே போல், தவத்துளார் தம்மில் என்றுசொன்னதில், இன்ன பயனை குறித்து தவம் புரிவோர், மோக்ஷத்தை குறித்து தவம் புரிவோர்,
ஸ்வர்கத்தை குறித்து தவம் புரிவோர், தவத்தை தொடங்கி முடிக்காதவர், அதற்காக பிராயசித்தம் செய்ய வேண்டிய அரைகுறை தவம் செய்தவர்கள் என்று
எவருடனும் சேராதவானாக இருந்தேன் என்று ஆழ்வார் தன்னைப்பற்றி கூறுகிறார்.

தனம் படைத்தாரில் அல்லேன்
தனம் நல்ல விஷயங்களில் செலவிடப்பட்டால் அத்தகைய பணம் படைத்திருப்பதையும் ஒரு மோக்ஷ சாதனமாக கொள்ளலாம்.
அது மேலே சொன்ன ப்ருஹதாரண்ய உபநிஷத்தில் (6.4.22) தனமும் ஒரு மோக்ஷ சாதனமாக சொல்லப்பட்டு உள்ளது.
தனம், சாத்வீக தானம் ராஜச தானம் தாமச தானம் என்ற மூன்று வகையான தானங்கள் செய்ய பயன்படுகிறது.
கண்ணன் பகவத் கீதையில் (18.5) சொல்வது போல், யாகம், தானம், தவம் முதலிய கர்மங்கள் விடத்தக்கவை அல்ல,
கடைபிடிக்க வேண்டியவைகள், ஏன் என்றால் அவை அவர்களை பரிசுத்த படுத்தும். கொடுத்தல் கடமையென்று கருதி,
கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும் நோக்கிச் செய்யப்படும் தானத்தையே சாத்வீக தானம் என்பர். ( கீதை 17.20).
கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், அமங்களமான பொருட்கள், கிலேசத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜச தானம் என்பர் (17.21).
தகாத இடத்தில், தகாத காலத்தில், ( தோஷமுள்ள தேச காலத்தில்), தகாதவர்களுக்குச் செய்யப்படுவதும், கவுரவமில்லாமல்
அவமதிப்புடன், இகழ்ச்சியுடன் செய்யப்படுவதுமாகிய தானம் தாமச தானம் (17.22) என்பர்.
இப்படி, தவமும், சாத்வீக தானமும் செய்யா விட்டாலும், கொடையாளி எனும் பெயர் பெறுவதற்காக
ராஜஸ, தாமச தானங்கள் செய்தவர்கள் கூட்டத்தில் உள்ளாரோ என்று பார்த்தால் அதுவும் இல்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.
தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை விரட்டக்கூடாது என்பது விரதம்.
இதற்காக எந்த வழியிலும் அன்னத்தை சம்பாதிக்க வேண்டியது என்பதற்கு தைத்ரிய, ப்ருஹதாரண்ய உபநிஷத் (10.1)ல் சொன்னபடி
நல்ல விஷயங்களில் செலவிடுவதாக இருந்தால், அல்லாத வழியிலும் சம்பாதிக்கலாம் என்பது இங்கே உள்ள மேற்கோள்.
திருமங்கையாழ்வார் முதலியோர் இந்த அர்த்தத்தை அனுஷ்டிக்கவும் செய்தார்கள்.
இப்படி, பகவத், பாகவத விஷயங்களில் செலவிடுவதற்கும் பணம் படைத்தவர் கூட்டத்தில் தான் சேரவில்லை என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் இங்கு கூறுகிறார்.
இதனையே தொண்டரடி பொடியாழ்வார் தான் இதற்கு முன் தீயவழிகளில் கூட பணம் சம்பாதித்து இருக்கலாம்,
அதில் ஒரு பகுதியாவது பாகவத தாதியாராதனத்திற்காக செலவிட்டு இருந்தால், தானும் திருமங்கையாழ்வாரை போல்
வீடு பெற்று இருப்பேன் என்று விளக்கம் கொடுப்பதும் உண்டு.

உவர்த்த நீர் போல உந்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்
இப்படி தவம், தனம் பெற்றவர்கள் என்ற கூட்டத்தில் இல்லை என்றால், உறவினர்களுக்காவது இனியவர்களாக இருந்தீரா என்று
ஆழ்வாரிடம் கேட்பதாக நினைத்து, அதற்கும் மறுத்து பதில் சொல்லும் வரிகள் இவை.
உப்பு தண்ணீரை முகத்தில் அடித்துக் கொண்டால் அது கண் விழிக்க முடியாதபடி கரிப்பது போல், தன்னை நேருக்கு நேர் பார்க்கமுடியாதபடி
குற்றமே உருவானவனாக உறவினர்களிடத்தில் வாழ்ந்து வருவதாக ஆழ்வார் கூறுகிறார்.
உறவினன் என்றால் இனியதையோ நல்லவைகளையோ செய்பவனாக இருக்க வேண்டும் என்றும்,
தான் தீமைகளையே திட்டமிட்டு செய்து தனக்கும் சேர்த்து தீமைகளையே செய்ததால், ஒருவனுக்கும் உறவினனாக இருக்கும் தகுதியை பெறவில்லை என்கிறார்.
அதாவது உறவினர்களுக்கு உப்புநீர் போல் ஒன்றுமல்லாதவனாக ஆனேன் என்று கருத்து.

துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசன் ஆனேன்
உறவினர்களுக்கு ஆகாதவர் ஆயின், தம் நெஞ்சுக்கினிய பெண்களுக்கு வேண்டியவர்கள் ஆயிருப்பீரே என்றால் அதுவும் இல்லை என்று இந்த பதத்தால் சொல்கிறார்.
துவர்த்த செவ்வாயினார் என்றதால், உள்ளத்தில் இருக்கும் தீய குணங்களை மறைத்து, கோவைக் கனி போன்ற உதட்டு அழகை காட்டி மற்றவரை வசப்படுத்திக் கொள்வார்கள் என்கிறார்.
இவனும் அவர்கள் நெஞ்சில் உள்ள குற்றங்களை அறிய மாட்டான், தம்மிடம் உண்மையான அன்பு இல்லை என்பதையும் அறியாமல்
அவர்களிடத்தில் சிக்கி கொள்வான். அதனால் பெற்றோர்களிடமும் மற்ற உறவினர்களிடமும் உள்ள உறவை அறுப்பார்கள் என்கிறார்.
துவக்கற என்று சொன்னதால்,
எல்லா உறவுகளையும் விட்டுவிட்டு, தான் பற்றிய எல்லா பெண்களோடும் உள்ள உறவுகளையும் அறுந்து போகும்படி என்பது ஒரு விளக்கம்.
அவர்களிடத்தில் தான் கள்ளத்தனத்தோடு நடந்து கொண்டதால் அவர்களாலும் நிராகரிக்கப் பட்டேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
அவர்களுக்கும் தீங்கு செய்ததால், அவர்களும் பிரிந்தால் போதும் என்று நினைக்கும்படி தான் நடந்துகொண்டதாக ஆழ்வார் கூறுவதாகவும் கொள்ளலாம்.
துரிசன் என்றால் கள்ளன் என்று பொருள்.

செவ்வாயினார்க்கே என்பதில் உள்ள ஏகாரதிற்கு
உரையாசிரியர் கூறும் விளக்கம் ரசிக்கத் தக்கது. ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் 19.4, தான் ராவணனுடைய தம்பி என்றும், அவனாலும் அவமதிக்கப்பட்டவன் என்றும்,
எல்லா ஜீவராசிகளும் சரணம் அடைய தகுந்த தங்களிடம் சரணம் அடைந்தேன் என்று விபீஷணன் கூறும் வார்த்தைகளில்
விபீஷணன் தான் தாழ்வுக்கு எல்லை நிலமாக ஆகிவிட்டதை கூறியதைப் போல்,
ஆழ்வாரும், தண்மைக்கே எல்லை நிலமான பெண்களுக்கும் ஆகாதவனாகி, அவர்களாலும் துரத்தப் பட்டவன் தான் என்று கூறுவதும் உண்டு.
இங்கு, திருமங்கையாழ்வாரின் திருநறையூர் பதிகத்தின் பாடலை (பெரியதிருமொழி 6.4.1) நினைவு கொள்ளலாம்.
கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்,
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்,
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியுமாயினான்,
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே” என்று சொல்லி,
கிளரொளி இளமை கெடுவதன் முன் திருநறையூர் சென்று எம்பெருமானை தொழுங்கள் என்று சொல்கிறார்.
பண்ணின் மொழியார் பைய நடமின் என்று திருமங்கை ஆழ்வார் சொல்வதும்,
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசன் ஆனேன் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்வதும் ஒன்றே.

அவத்தமே பிறவி தந்தாய்
இப்படி ஆனபின்பு தாங்கள் எனக்கு அளித்த இந்த பிறவி வீணானதே என்று சொல்கிறார்.
தம்முடைய கர்மங்களால் வந்த இந்த தாழ்வினை எம்பெருமான் தந்ததாக சொல்லலாமோ என்று கேட்டுக்கொண்டு,
கர்மம் என்பது என்ன என்பதையும் தன்னுடைய ஸ்வரூபம் என்ன என்பதையும் அறிந்தவர் ஆகையால் இப்படி சொல்கிறார்.
இவருக்கு வரும் எல்லா கர்மங்களின் பலன்களையும் கருணை மிக்க எம்பெருமான் பொறுத்தேன் என்று சொன்னால் போகக்கூடியவை இந்த கர்மங்கள் என்கிறார்.
பகவத் கீதையில் கண்ணன் கூறியது (10.10) போல், என்னுடன் எப்போதும் கூடி இருக்க விரும்புபவர்களுக்கும், என்னை பஜனை செய்பவர்களுக்கும்
என்னை அடைவதற்கான சாதனமான புத்தி யோகத்தை பேரன்புடன் கொடுக்கிறேன் என்கிறபடி,
இந்த அடியவனுக்கு எம்பெருமான் நல்லறிவை கொடுத்து நல்வழி நடத்த வேண்டும் என்று அவர் நினைத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது.
இதை எல்லாம் உணர்ந்தவர் ஆகையால் வீணான பிறவியை தந்து விட்டாயே என்று எம்பெருமானை பார்த்து ஆழ்வார் கூறுகிறார்.
குழந்தை கிணற்றில் விழுவதை தாய் பார்த்துக் கொண்டு இருந்தால், அவளே குழந்தையை கிணற்றில் தள்ளினாள்
என்று சொல்லலாம் அன்றோ, அது போலவே ஆழ்வார் இங்கு சொல்கிறார்.

அரங்கமா நகருளானே
சாஸ்திரங்களிலாலே திருத்த முடியாதபடி கர்மங்கள் தூண்டிய வழியே சென்று மற்ற விஷயங்களில் ஆழ்ந்து விடுபவர்களை
தன்னுடைய அழகையும் குணத்தையும் காட்டி திருத்துவதற்காக திருவரங்கத்தில் சயனித்து இருப்பது.
அது தன் விஷயத்தில் பலிக்காமல் போய் விட்டதே என்று ஆழ்வார் கூறுவதாக கருத்து.

உள்ளுறை பொருள்
எம்பெருமானை அடைவதற்காக தான் ஒரு காரியமும் செய்யவில்லை:
கையில் காசு உள்ளவனாக இருந்திருந்தால் ஆகிஞ்சந்யத்தில் குறை உடையவனாக ஆகி இருப்பேன் என்றும்,
தான் அப்படி இல்லை என்றும், ஆகிஞ்சநர்களில் தலைவனாக இருந்தேன் என்றும் கூறுகிறார்.
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் என்ற பந்துகளுடன் சேர்ந்து இருந்தால், ‘
தாய் தந்தையும் இவரே இனி ஆவாரே” என்னும் நிலை வாய்ந்த பிறகு ஆழ்வாரை கைப்பற்றுவோம் என்று எம்பெருமான் காத்து இருக்கலாம்,
ஆனால் அதுவும் இல்லை ; ஏன் என்றால், ஆழ்வார் உறவுகளும், தன்னை விட்டொழிந்தனர் என்கிறார்.
அதே போல் மகளிரும் தன்னைத் துரத்திவிட்டனர் என்று சொல்லி, இனி எம்பெருமானுடைய விஷயம் இடையூறின்றி தன் உள் புகுரலாம் என்று ஆழ்வார் சொல்கிறார்.
இப்படி தான் எம்பெருமான் விஷயத்திற்கு உசிதமாக இருந்தும் எம்பெருமான் தன்னை சேர்த்துக் கொள்ளா விட்டால்,
தன்னை வீணே படைத்தான் என்று சொல்லி பாடலை முடிக்கிறார்.

——–

தான், தவங்களை மேற்கொள்பவர்களின் கூட்டத்தில் இல்லை, அடியவர்களுக்கு ததியாராதனம் செய்வதற்காக பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, சொந்த பந்தங்களுக்கு உப்புத் தண்ணீர் போல ஒரு பயனும் இல்லாதவனாகவும், கூடி இருந்த பெண்களுக்கும் சம்பந்தங்கள் அற்று போகும்படி, கள்வனாகவும் ஆனதாக ஆழ்வார் சொல்கிறார். -அதனால் இந்த பிறவி வீணானதாக வருந்துவது 31வது பாடலில் சொல்லப்பட்டது.

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கந் தன்னுள்
கார்த் திரள் அனய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்க னேனே--32-

வண்டுகள் சப்தம் செய்துகொண்டு, அலைந்து கொண்டு இருக்கும், சோலைகளாலே ஆபரணம் போன்று, அழகு கொண்டு உள்ள திருவரங்கத்தில், கோவிலிலே கண்வளர்ந்து இருக்கும், கார்மேகத்தை ஒத்திருக்கும், திருமேனியை உடைய கண்ணனே, உன்னை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனிதரில் கள்வனாய், பிடித்தவற்றை விட முடியாத மூடனாக, என்னிடம் இல்லாத யோக்கியதை மனதில் கொள்ளாமல் இங்கு வந்து நின்றேன், என்னே என் மூடத்தனம் என்று ஆழ்வார் தன்னை பற்றி கூறிக்கொள்ளும் பாசுரம்.

“‘எம்மிடம் ஈடுபடாத சம்சாரிகளுக்கும் வேண்டாதவர் ஆகிவிட்ட ஆழ்வார் எப்படி தன்னிடம் வந்தார்” என்று திருவுள்ளமாக, ஆழ்வார், ”தோன்றியபடி எல்லாம் காரியம் செய்யும் மூடனான, தாம் செய்யும் காரியத்திற்கு ஒரு காரணத்தை ஆராய முடியுமா என்றும், ஒரு மூர்க்கத்தனத்துடனே வந்தேன்” என்று ஒரு சுவாரஸ்யமான முன்னுரையை இந்த பாடலுக்கு உரையாசிரியர் வைக்கிறார்..

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை

திருவரங்கம் சோலைகளில் மதுவினை குடிக்க வந்த வண்டுகள், மதுவை பருகுவதற்கு பேரார்வத்துடன் வந்ததனால், ஒரு அளவு தெரியாமல், கழுத்து வரையில் குடித்து, அதனால் ஒரு இடத்தில இருக்க முடியாமல் அங்கும் இங்கும் அலைந்து சப்தம் செய்து கொண்டு உள்ளன.

இதனை பரமபதத்தில் உள்ள முக்தர்கள் எம்பெருமானை தரிசித்த ஆனந்தத்தில் சாம கானம் இசைத்து பாடுவதற்கு ஒப்பிடுவதால் திருவரங்கத்தில் இனிமை சொல்லப்பட்டது. ஆழ்வார் பரமபதம் வேண்டி இந்த பாசுரம் பாடுகிறார், ஆனால் வண்டுகள் மதுவினை குடித்ததால் உண்டான ஆனந்தத்தை வெளிப்படுத்துகின்றன.

ராமாயணம் சுந்தர காண்ட த்தில் (61.14) ல் கூறியபடி, சீதாதேவியை கண்ட ஆனந்தத்தில் வானரங்கள் சுக்ரீவனின் மதுவனத்தை அழித்து, அட்டகாசம் செய்து, கும்மாளம் செய்ததை போல் இந்த வண்டுகளும் அனுபவிக்கின்றன என்கிறார்.

இதே போல், பெரியாழ்வார் கிருஷ்ணன் பிறந்ததற்கு கோகுலத்தில் அனைவரும் தங்கள் தலைவரான நந்தகோபர்க்குப் பிள்ளை பிறந்ததாகக் கேள்விப்பட்டு
அளவற்ற ஆனந்தம் அடைந்து தாம் செய்வது என்ன என்று தெரியாமல், சிலர் ஓடினார்கள், சிலர் சேற்றிலே வழுக்கி விழுந்தார்கள்,
சிலர் உரக்க குரல் கொடுத்து கொண்டு இருந்தார்கள், சிலர் குழந்தையைத் தேடினார்கள், சிலர் பாடினார்கள், சிலர் பறையடிக்க சிலர் அதுக்குத் தகுந்தாற்போல் கூத்தாடினார்கள்;
இப்படி கோகுலத்தில் உள்ள அனைவரும் கோலாகலமாக இருந்தார்கள். கிருஷ்ணன் பிறந்ததால் திருவாய்ப்பாடியில் மாற்றம் அடையாதவர் யாரும் இல்லை என்பதை
பெரியாழ்வார் கீழ் கொடுத்துள்ள பாடலில் சொல்வது போல் திருவரங்கத்து வண்டுகளும் அனுபவிக்கின்றன என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்கிறார்.

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்,
நாடுவார், நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடு வார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே. (பெரியாழ்வார் திருமொழி, 1.2.2)

மதுவினை குடிக்க வந்த வண்டுகள், மதுவின் மிகுதியாலே பிரளயத்தில்  அகப்பட்டுக் கொண்டு அலைந்த மார்க்கண்டேய மகரிஷி போலவும் ஆற்று வெள்ளத்தில் அகப்பட்ட சோலைகள் போலவும் உள்ளன என்பது கருத்து.

அணி திருவரங்கம் தன்னுள்-மனைவிக்கு ஆபரணம் போல் திருவரங்கம் உள்ளது என்கிறார்.
இராமாயணம் சுந்தர காண்டத்தில் (16.26) கூறியதுபோல், ஒரு பெண்ணிற்கு அவளுடைய கணவனே மிகச் சிறந்த ஆபரணம் ஆகும்,
எல்லா ஆபரணங்களால் பூஜிக்க தகுந்தவரான இந்த சீதா பிராட்டி, நாதனை விட்டு பிரிந்த காரணத்தால்
பிரகாசிக்கவில்லை என்பது இந்த ஸ்லோகத்தின் அர்த்தம்.
எம்பெருமான், திருவரங்கத்திற்கு வந்து பள்ளிகொள்ளாத போது இந்த உலகம்
தாலி கட்டிகொள்ளாத பெண் போல் உள்ளது என்பது உரை ஆசிரியரின் வார்த்தைகள்.

சோலை அணி திருவரங்கம் என்று சென்ற பதத்துடன் கூடி, சோலைகளை ஆபரணமாக கொண்ட பெரியகோவில் என்றும் பொருள் கொள்ளலாம்.

அணி திருவரங்கம் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னது போல்,
பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாளும், அணி புதுவை பட்டர் பிரான் கோதை சொன்ன என்று ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி பாடியுள்ளார்.
பெரியாழ்வாரும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் எம்பெருமானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்தவர்களே.

கார்த் திரள் அனைய மேனி–திருவரங்கத்து எம்பெருமானின் சயன சேவை, இந்த சோலைகளில் உள்ள தேன் வெள்ளத்தை கண்டு கடல் என்று மயங்கி மேகங்கள், மதுவினை கழுத்து வரையில் பருகி, அதனால் வெளிச்செல்ல முடியாமல், திருவரங்கத்து விமானத்திற்குள் புகுந்து சாய்ந்து கிடக்கின்றவோ என்று சொல்லும்படி இருக்கிறது.

வடிவத்தில் கருமை நிறுத்தினாலும், குளிர்ச்சியாலும், கைமாறு கருதாமல் பிறருக்கு உதவும் தன்மையாலும் தனக்கென்று ஒன்று வைத்துக்கொள்ளாமல் எல்லாவற்றையும் பிறருக்கு வழங்குகையாலும் மேகத்தை ஓரளவிற்கு எம்பெருமானின் வடிவுக்கு உபமானமாக சொல்லும்படி உள்ளது என்று உரையாசிரியர் விவரிக்கிறார்.

நம்மாழ்வாரும் திருவாய்மொழி (8.5.8) ல், ‘ தொக்க மேகப் பல்குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான்” என்று மேகங்களை கண்டவுடன் எம்பெருமான் நினைவுக்கு வருவதை அருளி செய்ததை இங்கே நினைவில் கொள்ளலாம்.

கண்ணனே

மேகத்தை காட்டிலும் எம்பெருமான் உயர்ந்தவர் என்று சொல்கிறது. பெரியபெருமாள் மேகத்தை போல் வெகு தூரத்தில் இருந்து கொண்டு நீரை கொடுத்து உதவுவது என்று இல்லாமல், மிக தாழ்ந்தவர்களோடு ஒன்றாகப் பிறந்து, அருகில் இருந்து தன்னையே கொடுத்து உதவி செய்பவர் கண்ணன்.

பெரியபெருமாளை காணும்போது, ”யசோதை சேமித்து வைத்த வெண்ணையை திருடி உண்டு பட்டி மேயும் காரேறு போலே திரிந்து வளர்ந்த மதிப்பெல்லாம் தோன்றும்” என்று நம் ஆச்சார்யர்கள் கூறுவார்கள்.

ஆகையால் பெரியபெருமாளை கண்ணனாகவே கொள்ளவேண்டும்.

திருப்பாணாழ்வாரும் தன்னுடைய அமலனாதிபிரானில், (10) ” கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணை உண்ட வாயன்…. அணியரங்கன் ” என்று கூறுவதையும் இங்கே நினைவில் கொள்ளலாம்.

உன்னைக் காணும் மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா

எம்பெருமானை பெறுவதற்கு, அவன் கீதையில் உபதேசம் செய்த மார்க்கங்களான, கர்மயோகம், அதனால் விளையும் ஞான யோகம், இந்த இரண்டினாலும் உண்டாகும் பக்தியோகம் ஆகியவற்றையும், அவதார ரகசிய ஞானம், புருஷோத்தம வித்தை முதலியவைகளையும், மற்றும் கீதை அல்லாமல் மற்ற சாஸ்திரங்களில் மோக்ஷ சாதனங்கள் என்று சொல்லப்பட்டு இருக்கும் திருநாம சங்கீர்த்தனம், புண்ணிய க்ஷேத்திர வாசம் என்று ஜீவாத்மாவின் ருசிக்கு தகுந்தபடி சொல்லியிருக்கும் எண்ணற்ற மோக்ஷ உபாயங்களில் ஒன்றைக்கூட பயிற்சி செய்யாததோடு, அறியவும் இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார்.

மனிசரில்

ஆழ்வார், பகுத்தறிவு இல்லாத விலங்குகளாக பிறந்தோ, மோக்ஷ உபாய சாதனங்களைப் பற்றி அறியாமல் போனோம், பகுத்தறிவு உள்ள மனிதராய் பிறந்து அன்றோ அவைகளை பற்றி அறியாமல் இழந்தோம் என்று வருந்துகிறார்.

துரிசனாய்

தன்னோடு மற்றவர்களை ஒப்பிட்டால் அவர்கள் நித்யஸூரிகள் போல் உயர்ந்தவர்கள் என்று சொல்லும்படி அவர்களும் தன்னை கள்வன் என்று கைவிடும்படி உள்ளவர் என்று ஆழ்வார் சொல்கிறார். விலங்காக பிறந்திருந்தால் தகுதி இல்லை என்று ஒதுங்கி விடலாம் என்றும் மனிதனாக பிறந்திருந்தும் அதனால் கிடைக்க கூடிய பலனை இழக்கும் பாவியானேன் என்று வருந்துகிறார்.

மனிதனாக பிறந்து, ஊமையாகவோ செவிடாகவோ இல்லாமல் இருந்தும் இந்த சம்சாரத்தில் இருந்து விலகாதவன் ப்ரஹ்மஹத்தி தோஷத்தை உடையவனே ஆவான் என்பது இங்கு சொல்லப்படும் ஒரு மேற்கோள். இதனால் மனிதரோடும் விலங்குகளோடும் சேராத வஞ்சகனான பிறவி ஆகிவிட்டேன் என்கிறார்.

மூர்க்கனேன் வந்து நின்றேன்

இப்படி இருக்க ஏன் என்னிடம் வந்து நின்றீர் என்பது எம்பெருமான் திருவுள்ளமாக, தன் தாழ்வை அறியாத அறிவிலி ஆனதால் வந்து நின்றேன் என்றும், எம்பெருமானின் மேன்மையை அறிந்து இருந்தாலும் எம்பெருமானை அணுகுவது முறையன்று என்று ஒதுங்கி இருந்திருக்கலாம், அறிவிலி ஆனதால் வந்து நின்றேன் என்கிறார்.

இங்கு நம்மாழ்வாரின் திருவாய்மொழி வளவேழுலகின் முதலாய் வானோர் இறை அருவினையேன் (1.5.1) மேற்கோள் சொல்லப்படுகிறது.

நம்மாழ்வார் “வளவேழுலகின் முதலாய வானோரிறை” என்பதனால் சாமானியரால் எடுத்துரைக்க தகாத பெருமையுடைய எம்பெருமான் என்றும், “அருவினையேன்” என்றதனால் பகவத் விஷயத்தில் சிறிதும் சொல்ல தகுதி இல்லாமல் இருக்கின்ற தமது தாழ்வினையும் சொல்கிறார்.

ஊரில் உள்ளவர்கள் குடிப்பதற்காக உள்ள ஊற்றினில் விஷத்தை கலப்பார் போலே நல்லவர்கள் அனுபவிக்க வேண்டிய பகவத் விஷயத்தை அணுகினேன் என்கிறார்.

கண்ணன் என்றதால் அவனுக்கு ஆகாதவர் யாரும் இல்லை என்றதால், அதையே பற்றாகக் கொண்டு தான் அணுகியதால், அதனால் ஏற்படும் தீமைகளை அறியாமல் அணுகினேன் என்கிறார். தான் மூர்க்கனாக இருந்தாலும் பெரியபெருமான் கண்ணனாக காட்சி அளிப்பதால் வந்து நின்றேன் என்று உரைக்கிறார்.

மூர்க்கனேன் மூர்க்கனேனே

மூர்க்கனேன் என்று இரண்டு முறை கூறியதால், இந்த அறிவின்மை உலகில் வேறு எங்கும் காண முடியாது என்கிறார். தாம் அணுகியதால் பெரிய பெருமாளுக்கு உண்டாகும் தீங்கை பற்றி ஒரு முறையும், தன்னுடைய தாழ்வை பற்றி ஒரு முறையும் கூறியதாகவும் வைத்துக் கொள்ளலாம்.

————-

தம்முடைய தாழ்வுகளை வாயாறச்சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி, எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அதனை மட்டுமே எதிர்பார்த்து கொண்டு அவன் முன் வந்ததாக ஆழ்வார் கூறும் பாடல்.

சென்ற எட்டு பாடல்களால் தன்னிடம் நன்மைகள் எதுவும் இல்லை; தீமைகளுக்கும் குறைவில்லை; இங்குள்ளவர்களுக்கு ஆகாதவன் ஆனேன் என்றும், மூர்க்கனேன் வந்து நின்றேன் என்று சொன்ன ஆழ்வாரிடம் எம்பெருமான், அந்த வார்த்தைகள் ஆழ்வாரின் இதயத்தில் இருந்து உண்மையாக வருகிறதா என்று திருவுள்ளமாக, ஆழ்வார் அதுவும் பொய் என்கிறார். அப்படி ஒரு உபாயமும் இல்லையாகில் தான் எப்படி அருள்வது என்று திருவுள்ளமாக, ஆழ்வார் எம்பெருமான் திருவடிகளின் சம்பந்தமும் கிருபையையும் மட்டுமே எதிர்பார்ப்பதாக கூறுகிறார்.

மெய் எல்லாம் போக விட்டு விரிகுழலாரில் பட்டு, பொய்யெல்லாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன், ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால், பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே–33-

மனம், மொழி, உடல் என்கிற மூன்றினாலும், உண்மையாய் இருக்க வேண்டியவராய் இருக்க முடியாமல் போனாலும் ஏதாவது ஒன்றிலாவது உண்மையானவனாக இருந்திருக்கலாம். ஆனால்; அப்படிப்பட்ட நிலைமையும் தனக்கு இல்லை; உலக விஷயங்களில் உள்ள ஆசையினால் பொய் தவிர வேறு எதுவும் இல்லாதவனாக இருக்கின்றேன். ஆயினும் எம்பெருமானின் திருவருள் இருக்குமானால், தனக்கு ஒரு குறையும் இல்லை என்கிற விசுவாசம் ஒன்று மட்டும் தன்னிடத்தில் உள்ளதால் அந்த ஆசையினால் வெட்கமும்  அச்சமும் கொண்டு அவர் முன்பு வந்து நின்றேன் என்கிறார்.

மெய் எல்லாம் போக விட்டு

மெய் என்பது உயிர்களுக்கு நன்மை விளைவிப்பதாக, உள்ளதை உள்ளபடியே பேசும் என்று அர்த்தம் ஆகும்.

முன் பாடல்களில், (25 – 29) தம்மிடம் இல்லை என்று ஆழ்வார் சொன்ன எல்லா நன்மைகளுக்கும் மூலம் சத்யம் என்ற மெய் ஒன்றே ஆகும்.

ஸத்ய மூலமிதம் சர்வம் லோக; ஸத்யே ப்ரதிஷ்டித : நாஹம் மித்யா ப்ரவஷ்யாமி ஸத்யமேவ வதாம்யஹம் : (கைசிக மஹாத்மியம் -, 32) என்றதன் படி, இந்த உலகம் உண்டானது சத்தியத்தினால், இந்த உலகம், சத்தியத்திலேயே நிலைநிற்கிறது. நம்பாடுவான், தான் எப்போதும் உண்மையே பேசுபவன், எம்பெருமானிடம் ஈடுபட்டவர்கள் எப்போதும் பொய் சொல்வதில்லை என்று சொல்வது இங்கே மேற்கோளாக காட்டப்படுகிறது.

உண்மை (மெய் ) பலவகை பட்டது; மனதில் நினைப்பது உண்மையாக இருக்க வேண்டும்; அதே போல் அதை சொல்வதும் உண்மையாக இருக்க வேண்டும். முடிவில் அது செயலிலும் உண்மையாக இருப்பது மட்டுமே மெய். இதில் ஏதாவது ஒன்று மாறுபட்டோ, அல்லது இவைகளை பலவிதமாக பலரிடம் சொல்வதிலோ செய்வதிலோ வெளிப்படுவது என்பது, முழுமையான உண்மை இல்லை. அதனால் தான் ஆழ்வார் மெய் எல்லாம் என்கிறார்.

ஆழ்வார், தான் மட்டும் மெய்யாக இல்லாமல், தன்னை சுற்றி இருப்பவர்களும், தான் இருக்கும் நாடு முழுவதிலும் மெய்யர்கள் இல்லாதவர்களாக பார்த்துக் கொண்டதை ‘போக விட்டு‘ என்பதன் மூலம் சொல்கிறார். அனைத்தும் அறிந்த எம்பெருமானிடம் , உண்மையே பேசித் தீர வேண்டும்; இருந்தும் அவர் முன்பும் பொய் பேசினேன் என்று ஆழ்வார் வருந்துகிறார்.

விரிகுழலாரில் பட்டு

இப்படி உண்மையை அடியோடு கைவிடுவதற்கு என்ன காரணம் என்பதற்கு, ஆழ்வார் ‘விரி குழலாரில் பட்டு‘ என்று பிற பெண்களுடன் பழகியதை குறிப்பிடுகிறார். எப்படி எம்பெருமானை நேசிப்பவர்களுக்கு பொய் சிறிதும் ஆகாதோ, அதே போல் விரிகுழலாருடன் கூடி மகிழ்பவர்களுக்கு உண்மை ஆகாது என்பது கருத்து.

இங்கு திருவாய்மொழி (5.10.2) மேற்கோள் சொல்லப்படுகிறது. ‘அது இது உது என்னல் ஆவன அல்ல, என்னை உன் செய்கை நைவிக்கும்’ என்று நம்மாழ்வார் சொல்வது எம்பெருமான் விஷயத்தில் எந்த செயலை நினைத்தாலும் அடியவர்கள் அவைகளில் நன்றாக ஈடுபடுவது போல், விரிகுழலாரில் ஆழ்ந்தவர்கள் அவர்கள் விஷயத்தில் முழுவதுமாக ஈடுபடுவார்கள் என்று உரையாசிரியர் சொல்கிறார்.

பட்டு‘ என்பது, மீளமுடியாதபடி வலையில் அகப்பட்டு என்பதாகும். ஆச்சார்ய உபதேசத்தாலே எம்பெருமானின் திருமேனி அழகை நேரில் காண நிற்கும் போதும், நெஞ்சம் அந்த பெண்களை நினைக்கும்படி அன்றோ அவர்கள் வலையில் இவன் அகப்பட்டு இருப்பது என்கிறார்.

பொய்யெல்லாம் பொதிந்து கொண்ட

மெய்யை எப்படி அடியோடு விட்டது போல், பொய்யை ஒன்று விடாமல் முழுவதுமாக சேர்த்துக் கொண்டேன் என்கிறார். எம்பெருமானோடு கொண்ட தொடர்பு, பொய் பேசுபவர்களையும் உண்மை பேச வைப்பது போல், பிற பெண்களின் தொடர்பு, உண்மை பேசுபவர்களைக்கூட பொய் பேச வைக்கும் என்கிறார்.

உண்மை போலவே, பொய்யும் பலவகை படுவதால், அதையும் எல்லாம் என்று குறிப்பிடுகிறார். பொய் என்று சொல்லக்கூடிய எல்லாவற்றையும் தன்னுடன் வைத்து கொண்டார் என்கிறார்.

பொதிந்து கொண்ட என்பதற்கு, எல்லா பொய்களும் எங்கும் தப்பி போகாமல் தன்னுடன் சேர்த்து வைத்து கொண்டேன் என்று சொல்வதாகும். உலகத்தவர் யாராவது எப்போதாவது தங்கள் பெண்டிரிடம் பொய் செல்ல வேண்டுமானால் ஆழ்வாரிடம் வந்து கேட்டு பெற்று செல்ல வேண்டும், ஏனெனில், பொய் என்பதனை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துவிட்டார் போல் சொல்லப்படுகிறது. கோட்டையின் எட்டு திக்குகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தி உள்ளே உள்ளவர்கள் வெளியே போகாதபடி வைத்து இருப்பது போல், பொய்கள் ஒன்றும் இவரைவிட்டு போகாமல் பார்த்துக்கொண்டு உள்ளதாக சொல்கிறார்.

போட்கனேன் வந்து நின்றேன்

மெய் பேசுபவர்கள் மட்டும் தான் எம்பெருமானை அணுக முடியும் ஆகையால், தன்னுடைய தாழ்வை மட்டும் எடுத்துக்கொண்டால் அவனை அணுக முடியாது என்றும் வேறு போக்கிடம் இல்லாததால் எம்பெருமான் முன் வந்து நின்றேன் என்று பாடுகிறார். எம்பெருமானை அடையவேண்டிய சாதனங்களை செய்தவர்கள் அவன் வாசல் முன், வேலை செய்தவன் கூலி பெறுவதற்கு நிற்பது போல், தானும் வந்து இருப்பதை ‘நின்றேன்‘ என்கிறார். போட்கனேன் என்றால் கதியற்ற நிலை, போக்கிடம் இல்லாமல் வந்து நின்றதாக ஆழ்வார் உரைக்கிறார்.

ஐயனே அரங்கனே

ஐயனே என்பதற்கு இயற்கையிலேயே எம்பெருமானிடம் தனக்கு உள்ள உறவினை பற்றி ஆழ்வார் கூறுகிறார். வெளி இந்திரியங்களையும் உள்ளிந்திரியங்களையும் அடக்கியவர் மட்டுமே அடையக்கூடிய பரமபத்திற்கு வர ஆசை கொள்வது ஏன், விரிகுழலாரிடமே செல்ல வேண்டியது தானே என்றதற்கு ஆழ்வார், தன்னால் அழித்துக்கொள்ள முடியாத இயற்கையிலேயே உண்டானதான உறவு எம்பெருமானிடம் உள்ளதால் வந்ததாக சொல்கிறார். தாய் தந்தையர்களிடம் பல தீங்குகளை செய்தவர்கள், பிறர் அறியாமல் பின்பக்கம் வழியாக வந்து அவர்களிடம் உதவி பெறுவதுபோல் வந்ததாக கூறுகிறார்.

‘இயற்கையிலே உறவினன் என்பதை எப்படி கண்டு பிடித்தீர்கள், ஸாஸ்திரத்தை படித்தா, அல்லது ஆச்சார்யர்களின் உபதேசத்தின்படியாக இங்கு வந்தீர்’ என்பதற்கு, அரங்கனே என்ற பதத்தால், சம்சாரிகள் உஜ்ஜிவிக்க வேண்டும் என்பதையே பெரும் பயனாக கொண்டு திருவரங்கத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானிடம் வந்ததாக கூறுகிறார். பரமபதத்தின் உயர்வினையும் கருத்தில் கொள்ளாமல், தம்மை வெறுப்பார்கள் இருக்கும் இடமாக இருந்தாலும், தான் வெறுப்பவர்கள் யாரும் இல்லாத காரணத்தாலும், இங்குள்ள அனைவரையும் பரம்பத்திற்கு அழைத்து செல்லும் வரை இங்கிருந்து செல்லமாட்டேன் என்று உறுதி செய்து கொண்டு வந்துள்ளதாலும், எம்பெருமான் சயன திருக்கோலம் கொண்டுள்ளதாக சொல்கிறார்.

உன் அருள் என்னும் ஆசை தன்னால்

எம்பெருமானின் கருணையை பெறுவதற்காக வந்து நின்றேன் என்று ஆழ்வார் கூறுகிறார். எம்பெருமானின் கருணை, தாம் அழியும்படியான அளவிற்கு தங்களுக்கு தீங்கை விளைவித்துக் கொண்டவர்களும் அவனின் கருணை வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அல்லவோ உள்ளது என்று ஆழ்வார் கூறுகிறார். அப்படி சொல்வதற்கு காரணம், இராமபிரான் காகாசுரனிடம் காட்டிய கருணை. ப்ரம்மாஸ்திரத்தினால் இராமன் காகாசுரனை அழிக்க முற்பட்ட நிலையிலும், அவன் இராமபிரானின் திருவடிகளில் விழலாம் போல் அல்லவோ இராமனின் கருணை இருக்கிறது. இராமாயணம், சுந்தர காண்டம், 38.34ல் சொல்வது, சரணம் அடைந்தவனும், பூமியில் விழுந்தவனுமான காகாசுரனை, கொல்ல தகுதியான இருந்தபோதிலும், சரணம் அடைய தக்கவனான இராம பிரான் தன் அருளாலே காப்பாற்றினான்.

பொய்யனேன் வந்து நின்றேன்

தம்மிடம் நன்மைகள் எதுவும் இல்லை, தீமைகளும் ஒன்று விடாமல் உண்டு என்று அறிந்து, எம்பெருமானிடம் உள்ள உறவையும் அறிந்து ஆழ்வார் வந்துள்ளதை ஆமோதித்து அது போன்ற அதிகாரிகளையே தாம் எதிர்பார்த்து இருப்பதாக சொல்லி, ஆழ்வார் இப்படித்தான் வந்தாரா என்று எம்பெருமான் வினவ, ஆழ்வார், ஆராய்ந்து பார்க்கையில் அது உண்மை இல்லை, பொய்யாகவே இருந்தது என்கிறார். இயற்கையாகவே எல்லாவற்றையும் அறிந்த எம்பெருமானிடம் தான் மெய் என்று ஏதாவது ஒன்று சொல்ல முடியுமா என்று கேட்கிறார்.

பொய்யனேன் என்று சொன்னது, தீமைகளில் தன்னிடம் இல்லாது எதுவும் இல்லை என்பது ஆகும். எம்பெருமான் முன், தமக்கு புகலிடம் இல்லை, அவனை தவிர வேறு போக்கிடம் இல்லை, அவனே தனக்கு உபாயம் என்று செய்வது சரணாகதி ஆகும். இது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு உள்ளது; இதை அவன் முன் செய்வதால் பயன் உண்டு என்று சொன்னதால் தானும் செய்ததாக சொல்கிறார். உண்மையாகவே தன் தாழ்வினை மனதில் கொண்டு சொல்லவில்லை என்ற கருத்து.

பொய்யனேன் பொய்யனேனே

பொய்யனேனே என்று சொன்னது, இயற்கையிலேயே எல்லாவற்றையும் அறிந்திருக்கும் எம்பெருமானே மெய் என்று மயங்கும்படி பொய் சொன்னதாக சொல்கிறார். முன்பு சொன்ன பாசுரங்களில்,

ஆதரம் பெருக வைத்த அழகன் (16),
கண்ணினை களிக்குமாரே (17),
பனியரும்பு உதிருமாலோ (18),
உடல் எனக்கு உருகுமாலோ (19) என்று எல்லாம் சொன்ன வார்த்தைகளை பொய் மாலைகள் என்று இங்கே குறிப்பிட்டு, பொய்யனேன் பொய்யனேனே என்று சொல்கிறார்.

மெய்யே சொல்லி பிழைக்க வேண்டிய எம்பெருமான் முன் எத்தனை பொய்கள் சொன்னேன் என்று சொல்லி ஆழ்வார் இந்த பாசுரத்தை முடிக்கிறார்.

————

உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஓன்றில்லா, கள்ளத்தே நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டேன், உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே.-34

ஆழ்வார் இந்தப் பாடலில், ஆத்மாவை தன்னுடையதாக எண்ணிக் கொள்ளும் கள்ளவனாகிய தான், அவனுக்கு அடிமை செய்பவன் போலத் தோன்றி கைங்கர்ய வேஷங்களைப் போட்டுக்கொண்டு திரிந்த போதிலும், எம்பெருமான் ஒவ்வொருடைய நெஞ்சத்தில் இருந்து கொண்டு எல்லாருடைய நினைவுகளையும் அறிகின்றான் என்ற அவனது குணத்தை, புகழும்போது, தன்னுடைய கள்ளவேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே தன் விலா எலும்பு நோகும்படி சிரித்துக் கொண்டதாக சொல்கிறார்.

  • நாம் எங்கும் தேடி ஓட வேண்டாதபடி, நம் இதயத்திலுள்ளே எப்போதும் நெருக்கமாக இருக்கும் எம்பெருமான் என்கிறார்.
  • நெஞ்சத்தின் உள்ளே, எப்பொழுதும் வசிக்கின்ற, எங்கும் வெளியே செல்லாத, எல்லாவற்றையும் அறிந்த எம்பெருமான் என்கிறார்.
  • சிந்திப்பதற்கு உறுப்பான, அறிவு சிறிதும் இல்லாதவன் என்று ஆழ்வார் தன்னை பற்றி கூறுகிறார்.
  • “ஆழ்வார் பரம பாகவதன், பரமபக்தன்” என்று அனைவரும் புகழும்படியாகவும் “தொடையொத்த துவளமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப் பொடி” (திருப்பள்ளியெழுச்சி, 10) என்று கைங்கர்ய வேஷங்களைப் போட்டுக் கொண்டு திரிந்ததாக சொல்கிறார்.
  • எல்லை கடந்து சிரித்துக் கொண்டதாக சொல்கிறார்.

கள்வனாகிய தான், எம்பெருமானுக்கு தொண்டு செய்பவனாக, தொண்டு செய்வதற்கு வேண்டிய வேஷங்களை போட்டு கொண்டு இருப்பதை, சிந்திப்பவர்களின் சிந்தனைகளை எல்லாம், கூடவே இருந்து அறிந்துகொள்ளும் எம்பெருமான் தெரிந்து கொண்டு இருப்பான் என்று ஆழ்வார் தெரிந்து கொண்டு, அதனால், தனக்குள்ளே, வெட்கம் அடைந்து, எம்பெருமானை விட்டு விலகிச் சென்றதாக நினைத்துக் கொண்டு தன்னுடைய விலா பக்கத்துக்கு எலும்பு உடைந்து விழும்படி ஆழ்வார் சிரித்தார் என்பது பாடலின் பதவுரை.

அறிவு வெளிப்படும் வழியான மனதிலே, எப்போதும் வாழ்கின்றவனாய், அதனால் நம்முடைய குற்றங்களை நேரே எல்லாவற்றையும் அறிபவனான (சர்வக்ஞனான) இவனை, பொய்யனாக தான் அணுகி, இவனுக்கும் தோஷத்தை விளைவித்து, என்ன காரியம் செய்து விட்டேன் என்று வெட்கமடைந்து, இருட்டும், சூரியனின் தேஜஸும் ஒன்றாக இருக்க முடியாது என்று முடிவு செய்து, இப்படி எம்பெருமானுக்கு குற்றம் விளைவிப்பதை காட்டிலும், நம்முடைய குற்றங்களை அறிந்து கொள்வதற்கு அறிவில்லாமல் இருக்கிற சம்சாரிகளோடு கூடியிருந்து அழிந்து போவதே நல்லது என்று நினைத்து பெரியபெருமாள் திருவடிகளில் உள்ள ஆசையை விட்டு அகல நினைக்கிறார். இங்கு ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த வளவேழ் உலகின் (5.1) பதிகத்தை நினைவில் கொண்டால், ஸ்வாமியும் எம்பெருமானின் பெருமையும் தன்னுடைய தாழிச்சியையும் சொல்லிக்கொண்டு அவனை விட்டு அகல பார்த்ததையும் ஒரு வித ஒப்புமையாக கொள்ளலாம்.

உள்ளத்தே உறையும் மாலை

எண்ணங்களின் ஊற்று வாயாக உள்ள நெஞ்சத்தில் வாழ்பவன் என்பதை உள்ளத்தே என்று ஆழ்வார் கூறுகிறார். வெளியிலே உள்ளவன் கண்ணால் கண்டதை தவிர வேறு ஒன்றையும் அறிய மாட்டான் என்றும், உள்ளத்திலே இருப்பதனால் இவனை ஏமாற்ற முடியாது என்று கருத்து. உறையும் என்பதால் எப்போதும் வசிப்பவன் என்று பொருள். அவன் எங்காவது, எப்போதாவது வெளியே போய்விட்டு வந்தால், அந்த சமயத்தில், சரியான வழியாகவோ (சாஸ்திரப்படி நடப்பது), அல்லது நம் இஷ்டப்படி (மூளை சொன்னபடி) நடக்கலாம், எப்போதும் வசிப்பதால் இவனை ஏமாற்ற முடியாது என்று கருத்து. மாலை என்பதால் எல்லோரையும் விட பெரியவன் என்று பொருள் கொள்ளலாம். அதனால் இவனை ஏமாற்ற முடியாது.

ஜீவாத்மா இந்த உடலின் உள்ளே இருந்த போதும், அதனால் இந்த உடலினுள்ளே இருப்பவற்றை எல்லாம் அறியாது. ஆகாயம் எல்லா இடத்தில வியாபித்து இருந்தாலும் அதனால் எல்லாவற்றையும் நியமிக்க முடியாது. ஆனால் இவன் எல்லாவற்றையும் அறிந்தவனாய், அனைத்தையும் நியமிப்பவனாய் பெரியவனாக இருப்பதால் இவனை ஏமாற்றுவது என்பது அடியோடு முடியாது என்று கருத்து.

பெரியாழ்வார் திருமொழியில் (5.4.11) பெரியாழ்வார் “விட்டுசித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலனை” என்று அருளிச் செய்தார்.

ஸ்வாமி நம்மாழ்வார் திருவாய்மொழியில் (10.6.1) “என் நெஞ்சத்துள் இருந்து இருந்தமிழ் நூல் இவை மொழிந்து” என்று கூறுகிறார். இவரே திருவாய்மொழி (7.9.3) ல், “என் நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி, தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன, என் வாய் முதல் அப்பனை ” என்று எம்பெருமான், ஆழ்வாரின் நாவின் மூலமாக அவருள் புகுந்ததை சொல்கிறார். “பேரே உறைகின்ற பிரான், இன்று வந்து பேரேன் என் நெஞ்சு நெறையப் புகுந்தான்” (திருவாய்மொழி 10-8-2)  என்றும் திருப்பேர்நகர் பதிகத்தில் சொல்கிறார். இதேபோல், திருவட்டாறு பதிகத்தில் (திருவாய்மொழி 10.6.1), “மெய் நின்று கமழ் துளவ விரையேறு திருமுடியன், கை நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல், மைந்நின்ற வரை போலும் திருவுருவ வாட்டாற்றாற்கு, எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழ்வதுவே?” அருளிச்செய்த பாடலையும் சொல்லலாம். ஆழ்வார் திருமேனியில் நின்ற எம்பெருமான் என்று ஒரு அர்த்தம்; எம்பெருமான் திருமேனியில் அணிந்திருந்த திருத்துழாய் மாலையின் மணம் அவர் திருமேனியில் இருந்து அவரது திருமுடிக்கு மேலே சென்றதாக இன்னொரு பொருள். ஆழ்வார், “என்ன நன்மை செய்தேன் என்று என் நெஞ்சில் புகுந்து, ஏதோ பெறாப் பேறு பெற்றார் போலே விளங்குகிறான்! ” என்று மகிழ்கிறார்.

எம்பெருமான் நம்மாழ்வாரின் வாக்கிலும் உடம்பிலும் அவருக்கு நல்லது செய்வதற்காக அவருள்ளே வசிக்கிறார் என்று பராசர பட்டர் என்னும் ஆசார்யன் தெரிவிக்கிறார்.

திருமங்கையாழ்வார் “வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை, எந்தாய் போய் அறியாய்” என்று பெரிய திருமொழி திருக்கண்ணபுரம் சௌரிப்பெருமாள் பதிகத்தில், (8.9.5) திருக்குடந்தை பெருமானை பற்றி சொல்வதை நினைவில் கொள்ளலாம்.

உள்ளுவான் உணர்வு ஓன்றில்லா

நமக்குள்ளே அந்தர்யாமியாக வாழ்கிறான் என்று சிந்திப்பதற்கு உறுப்பான அறிவு இல்லை என்று கருத்து. பரமாத்மாவான அவனை பற்றி அறிவு இல்லாததோடு ஜீவாத்மாவாகிற தன்னைப்பற்றிய அறிவும் இல்லை, தன்னை பற்றி அறிந்தால் மட்டுமே தன்னை உடையவனாக அவனை பற்றிய அறிவு வரும் என்பது கருத்து. ஒன்றில்லா என்பதற்கு விளக்கம் சொல்கையில்,

  • ஜீவாத்மாவான தன்னை பற்றிய அறிவு இல்லை
  • அறியவேண்டிய பரமாத்மாவை பற்றிய அறிவு இல்லை
  • இந்த உடல், தாழ்ந்தது, தற்காலிகமானது, ஜீவாத்மாவை விட வேறு பட்டது, பரமாத்மாவிற்கு தொண்டு செய்வதற்காகவே ஜீவன் ஏற்பட்டது என்ற தன்மைகளை பற்றிய அறிவு இல்லை–என்று சொல்கிறார்.

அந்தர்யாமி என்பதும், அந்தராத்மா என்பது இரண்டு வேறு வேறு விஷயங்கள். அந்தராத்மா என்பது ஒவ்வொரு ஜீவாத்மாவிற்குள்ளே இருக்கும் பரமாத்மாவின் ஐந்து நிலைகளில் ஒன்று. அந்தர்யாமி என்பது அந்த ஜீவாத்மாவின் உள்ளே இருக்கும் அந்தராத்மாவின் / பரமாத்மாவின் நியமிக்கும் (நியந்த்ருத்வம்) தன்மை அல்லது குணம். வேறு விதத்தில் சொல்வதென்றால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது ஜீவாத்மா. ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா. ஒவ்வொருவருடைய ஹ்ருதயத்திலும் கட்டைவிரல் அளவுள்ள இதயக்கமலத்தில் மஹாலக்ஷ்மியுடன் கூடிய எம்பெருமான் முழுவதுமாக வியாபித்து கம்பீரமாக வீற்றிருக்கிறார் என்று சாஸ்திரம் கூறுகிறது. (எம்பெருமான் அந்தராத்மாவாக கட்டைவிரல் அளவிற்கு இருக்கிறார் என்று சொல்வது தவறு. எம்பெருமான் தன்னை சுருக்கி கொண்டு இருக்கும் தன்மை இன்னொரு நிலையான அர்ச்சைக்கு மட்டுமே பொருந்தும் என்பது நம் முன்னவர்கள் கருத்து.)

கள்ளத்தே நான்

அறிவற்றவன் என்று உலகத்தார் அறியமுடியாதபடி வெளி வேஷங்களால் தன்னை மறைத்து கள்ளன் ஆனதாக ஆழ்வார் சொல்கிறார். அறிவு இல்லாதவர்களிடம் தன்னிடம் தன்னுடைய அந்தராத்மா அறிய தீய குணங்கள் ஒன்றும் கிடையாது என்று சொல்லி ஏமாற்றுவாராம். அறிவாளிகளிடம் தன்னிடம், தன் அந்தராத்மா அறிய ஒரு நல்ல குணமும் கிடையாது என்று சொல்லி நைசாந்துசந்தானம் வேஷம் தரித்து, அவர்களும் இவருக்கு ஆத்மாவை பற்றிய அறிவும், பரமாத்மாவைப் பற்றிய அறிவும் அவசியம் இருக்கும் என்று நினைக்கும்படி செய்து அவர்களையும் ஏமாற்றுவாராம்.

பிறப்பில் இருந்தே தீய குணங்களுக்கு கொள்கலமாக இருந்ததாகவும், அவை ஒன்றும் தமக்கு இல்லை என்று மற்றவர்களை நம்ப செய்ததாகவும், அதுவும் எம்பெருமான் சாட்சியாக இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் போதே இந்த கள்ளத்தனங்களை செய்ததாக சொல்கிறார். கள்ளத்தனங்களை செய்த போதும், இப்போது அப்படி இல்லை என்று காட்டிக்கொள்ளும் இந்த சமயத்திலும், எம்பெருமான் கூடவே சாட்சியாக இருந்தார் என்றும் உரையாசிரியர் விளக்குகிறார்.

நானும் தொண்டாய்

ராமாயணத்தில் பகவத் சம்பந்தம் இல்லாதவனை குறித்து வால்மீகி தன்னை தானே நிந்தித்து கொள்வதை இங்கே உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.

யஶ்ச ராமஂ ந பஶ்யேத்து யஂ ச ராமோ ந பஶ்யதி, நிந்தித ஸ்ஸர்வல்லோகேஷு ஸ்வாத்மாப்யேநஂ விகர்ஹதே“. இராமாயணம் அயோத்யா காண்டம் (17-14)

‘யார் ராமனைப் பார்க்கவில்லையோ அல்லது ராமனைக் காணவில்லையோ, அவர் மூன்று உலகங்களிலும் உள்ள அனைத்து மனிதர்களாலும் குற்றம் சாட்டப்படுவார். தன்னை தானே கூட இகழ்ந்து கொள்வான்.” என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.

இங்கு ஆழ்வார், ஆத்ம குணங்கள் நிரம்பியவர்கள் செய்ய வேண்டிய தொண்டுகளை ஒரு நன்மையும் இல்லாத தானும் செய்ய வந்ததாக சொல்லி, நல்லவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை செய்ய வந்ததால் தன்னை தானே இகழ்ந்து கொள்கிறார்.

தொண்டுக்கே கோலம் பூண்டு

எம்பெருமான் விஷயத்தில் கள்ளத்தனம் செய்வதோடு மட்டும் இல்லாமல், சத்வ குணங்களை கொண்ட நல்லவர்களும் தன்னை கொண்டாடும்படி வேஷங்களையும், பெயர்களையும் வைத்துக்கொண்டு உள்ளதாக ஆழ்வார் கூறுகிறார். தன் உடம்பு முழுவதும் 12 திருமண் இட்டுக்கொண்டும் பஞ்ச ஆயுதங்களை தரித்துக்கொண்டும் மற்றவர்களை ஏமாற்றியதாக சொல்கிறார்.

ஆழ்வார் பஞ்ச ஆயுதங்களையும் தரித்து கொண்டதாக சொல்கின்ற உரைநூல் ஆசிரியர் காலத்திலோ அல்லது அதற்கு முற்பட்ட காலங்களிலோ பஞ்சசம்ஸ்கார நிகழ்வின் போது ஐந்து ஆயுதங்களையும் தரிக்கும் வழக்கம் இருந்து இருக்கலாம், அது தற்பொழுது சங்கு சக்கரங்களை தரிப்பதோடு உள்ளது.

கோலம் பூண்டு என்று சொல்வதால், கோலம் மட்டும் பூண்டு கொண்டு, அடிமைத்தனம் (கைங்கர்யம்) எதுவும் செய்யாமல் என்றும் கொள்ளலாம். ஆத்ம குணம் நிறைந்தவர்கள் செய்ய வேண்டிய அடிமைத்தனங்களை செய்யாமல் இருந்தேன் என்பதை “தொண்டுக்கே” என்ற ஏகாரத்தின் மூலம் சொல்கிறார்.

மனப்பூர்வமாக இல்லாமல், வெளி வேஷத்திற்காக அச்சுதாஅமரர் ஏரேஆயர் தம் கொழுந்தே (திருமாலை 2), என்று எம்பெருமான் பெயர்களை சொல்லியும், இச்சுவை தவிர, யான் … அச்சுவை பெறினும் வேண்டேன் (2) என்று அவன் இனிமையை பேசியதாகவும், நாவிலிட்டுழி தருகின்றோம்நமன் தமர் தலைகள் மீது (1) என்று பிறர் மயங்கும்படி எமன் முதலியோர் தலையில் கால் வைக்கின்றேன் என்றும், தன்னை ஒரு பெரிய மனிதனாக நினைத்துக்கொண்டு பிறருக்கு உபதேசம் செய்கிறேன் என்றும் இப்படி எத்தனை பிதற்றினேன் என்றும் ஆழ்வார் கூறுகிறார்.

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று

எண்ணங்கள், ஊற்று போல் புறப்படும் நெஞ்சத்தில் எழுந்தருளி இருப்பதால் நினைப்பவர்கள் நினைப்பதையெல்லாம் கூடவே இருந்து அறிகிறான் என்பதை தான் உணர்ந்ததாக சொல்கிறார்.

சகுந்தலை, துஷ்யந்தனைப் பார்த்து சொன்ன வார்த்தைகளை இங்கே உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார். “துஷ்யந்த மஹாராஜனே, நான் ஒருவனே இருக்கிறேன் என்று நீ எண்ணுகிறாய், இதயத்தில், நித்யவாசம் செய்கின்ற ஆதிபுருஷனான பகவானை நீ அறியவில்லை, எவரொருவர் பாப கர்மங்களை அறிபவரோ, அவர் அருகிலேயே, நீ பாபத்தைச் செய்கிறாய்” என்று சகுந்தலை கூறிய வார்த்தைகள் இங்கே கவனிக்க தக்கவை. எல்லாம் அறிந்தவன் ஆன, எல்லாவற்றையும் நியமிக்கின்றவன் ஆன, எம்பெருமான் நெஞ்சினில் இருக்கும்போதே, யாருக்கும் தகாத காரியங்களைச் செய்ததாக ஆழ்வார் கூறுகிறார்.

வெள்கிப் போய்

தன்னுடைய கள்ளத்தனத்தையும், அவன் எல்லாம் அறிபவன் என்பதையும், அவன் நெஞ்சினில் எப்பொழுதும் இருப்பவன் என்பதையும் நினைத்தவுடன் ஆழ்வார் வெட்கம் அடைகிறார். இப்படி வெட்கம் அடைந்து, தலை குனிந்து எம்பெருமான் முன் நிற்கமுடியாமல், அவரை விட்டு விலகி போனார். மற்ற விஷயங்களில் வெட்கம் அடைந்தால், அது இல்லாத இடமாக பார்த்து விலகி போவது போல், எம்பெருமான் இல்லாத இடம் இல்லை என்பதை சிந்திக்க மறந்து, பெரியபெருமாள் இல்லாத இடமாக, ஆழ்வார் தேடி போவதாக சொல்கிறார்.

என்னுள்ளே நான்

சம்சாரிகள் சுத்தமாக வெட்கம் அற்றவர்கள் ஆகையால், அவர்கள் விலவறச் சிரிக்கும் விஷயத்தில் ஆழ்வாரோடு சேர மாட்டார்கள்; பெரிய பெருமாளை விட்டு ஆழ்வார் விலகி விட்டதாக நினைத்தாலும், முன்னே இருந்தால் கூட ஆழ்வாரை பார்த்து சிரிப்பது என்பது எம்பெருமானுக்கு இஷ்டம் இல்லாத ஒன்று, ஆகையால், பெரியபெருமாளும் ஆழ்வாருடன் இந்த விஷயத்தில் சேர மாட்டார்; இதனால், ஆழ்வார் மட்டும் தனக்கு தானே சிரித்து கொள்ள வேண்டி உள்ளது. தாம் சிரிக்க தக்கவன் என்பதை உணர்ந்து, கூட சிரிப்பவர் யாரும் இல்லாமையால், இவ்விஷயத்தில், இவரே இவர்க்கு துணை ஆனார் என்று உரை ஆசிரியர் கூறுகிறார்.

விலவறச் சிரித்திட்டேனே

விலா எலும்புகள் முறியும் படி சிரித்தேன் என்று ஆழ்வார் கூறுகிறார். தாம் செய்த காரியம், சிரிக்கத்தக்க காரியங்களின் எல்லையில் நிற்பதால், தன் சிரிப்புக்கும் எல்லை இல்லை என்று சொல்கிறார். தீக்குளிக்க நினைப்பவர்கள், முதலில் வெற்றலை போட்டுகொண்டு தீக்குளிக்கலாம் என்று நினைப்பது போல், பெரிய பெருமாளை விட்டு அகன்று அழியலாம் என்று நினைப்பதுவும் ஒன்றே என்று எண்ணி சிரிக்கிறார்.

பரத பெருமான், இராமபிரானை தேடி, அந்த பரத்துவாச முனிவர் சொன்ன ஆசிரமத்தை அடைந்தேனோ என்று சத்ருக்னனிடம் மகிழ்ச்சியுடனும் ஒளிரும் முகத்துடனும் சொல்கிறார்.

கச்சந்நேவ மஹாபாஹுர்த்யுதிமாந்பரத ஸ்ததா.ஷத்ருக்நஂ ப்ரவீத்தரிஷ்டஸ்தாநமாத்யாஂஷ்ச ஸர்வஷஃ৷৷

மந்யே ப்ராப்தாஃ ஸ்ம தஂ தேஷஂ பரத்வாஜோ யமப்ரவீத். நாதிதூரே ஹி மந்யேஹஂ நதீஂ மந்தாகிநீமிதஃ (இராமாயணம், அயோத்தியா காண்டம் 2.99.8 மற்றும் 9)

சரம ஸ்லோகம் கேட்பதற்கு முன்னால், அர்ச்சுனன், கிருஷ்ணனிடம் அதனை அடைய வழிகளை கேட்டு அறிந்து, அவை அரியனவை என்று சோகத்துடன் இருந்தான். கிருஷ்ணனிடம் மீண்டும் கேட்டால் அவன் அதற்கும் அவன் ஒரு பரிகாரம் சொல்வான், அவனை அதன் மூலம் அடையலாம் என்ற எண்ணத்தில் அங்கேயே இருந்தான். அதே போல், அர்ச்சுனன் சோகத்துடன் இவ்விஷயத்தை விட்டு அகன்று விடுவானோ என்று எம்பெருமான் சரம ஸ்லோகம் அருளி செய்கிறார்.

அதே போல் ஸ்வாமி நம்மாழ்வார் (திருவாய்மொழி 1.1.3)ல், “அந் நலனுடை ஓருவனை நணுகினம் நாமே” என்று சொல்வதும் “எம்பெருமானை நீசரில் நீசரான நாமோ நணுகினோம்!” என்ற பொருளில் வரும்.

பரதனும், அர்ச்சுனனும் நம்மாழ்வாரும் எம்பெருமானை நெருங்கும் போது, இங்கே தொண்டரடிப்பொடி ஆழ்வார், இவ்விஷயத்தில் இனி பெரியபெருமாளை அணுக கூடாது என்று ஆசையற்று நீங்க பார்க்கிறார். ஆகையால், வெற்றிலை தின்று, பூச்சூடி, தீக்குளிப்பவர்களை போலே சிரித்துக்கொண்டே எம்பெருமானை விட்டு அகலப் பார்க்கிறார்.

இந்த பாடலுடன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன்னிடம் நல்ல குணங்கள் ஒன்றும் இல்லை, கெட்ட குணங்கள் அத்தனையும் உண்டு என்று சொல்லும் நைச்சானுசந்தானம் என்ற நான்காவது பகுதி நிறைவடைகிறது. இனிஅடுத்து வரும் பகுதி, ஆழ்வார் அருளி செய்த திருமாலையின் மிக முக்கிய பகுதிக்கு நம்மை அழைத்து செல்லும்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி -வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் அமுதம் —

June 4, 2023

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா

———-

ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த தனியன் –

முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
வந்தித்து வாயார வாழ்த்திச் -சந்த
முருகூரும் சோலை சூழ் மொய் பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு –குருகூர் நம் மாறன் (பாட பேதம் -நம்மாழ்வார் என்றபடி )

(தனியனில் பெரிய திருவந்தாதி பற்றி நேராக இல்லையே
முயற்றி பதம் கொண்டே இப்படி -காலக்ஷேபத்தில் சாதித்ததை ஓராண் வழியாக உபதேசித்து அருளிச் செய்வார்கள் )

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே-என்ற பாசுர ஸ்ரீ ஸூக்திகளே –
முந்துற்ற நெஞ்சே -முயற்றி தரித்து -என்று முன் பின்னாக இருக்கிறது

(நெஞ்சைப் பார்த்து நினைக்கச் சொல்லாமல் கூறச் சொல்கிறார்
எங்கள் குலசேகரன் என்றே கூறு அங்கும் –
எல்லாக் கரணங்களும் மற்றவற்றின் செயல்களையே ஆசைப்படும்-

முந்துற்ற நெஞ்சே-
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் ஸ்ரீ எம்பெருமான் விஷயத்தில் முன்புற்றது போலே
ஸ்ரீ எம்பெருமானாரது திரு உள்ளம் ஸ்ரீ ஆழ்வார் விஷயத்தில் முன்புற்றதே ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரைப் போலவே –

என்னெஞ்சென்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி — நாண் மலர்ப் பாத மடைந்ததுவே–ஸ்ரீ திருவாய் மொழி-8-2-10-

என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்––ஸ்ரீ திருவாய் மொழி-7-3-4-

என் நெஞ்சினார் தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -–-ஸ்ரீ பெரிய திருவந்தாதி-7-

காருருவம் காண்டோரும் நெஞ்சோடும் கண்ணனார் பேருரு என்று எம்மைப் பிரிந்து -ஸ்ரீ பெரிய திருவந்தாதி-–49-

தம்முடைய பின்னே திரிந்து உழலும் சிந்தனையார் –ஸ்ரீ பெரிய திருவந்தாதி–50-

என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி –-ஸ்ரீ திரு விருத்தம்-30-

முயற்றி தரித்து –
ஆழ்வார் அருளிச் செய்த இந்த பிரபந்தத்தை தரித்துக் கொண்டு என்றுமாம்

மகிழ் மாலை திரு மார்பையும்
ஞான முத்ரா முத்ரிதமான திருக் கை மலரையும்
பத்மாசன உபவிஷ்டமான பத யுகங்களை கண்டு தொழுது
அநந்தரம் வாயார வாழ்த்தி

குரு பதாம்புஜம் த்யாயேத் -குருர் நாம சதா ஜபேத் -குரு சேவாம் சதா குர்யாத்- ச அம்ருதத்வாய கல்பதே-ப்ரபஞ்ச சாரம் –

ஆச்சார்யர் திருவடி தியானித்து –
ஆச்சார்ய திரு நாம சங்கீர்த்தனமும்
ஆச்சார்ய கைங்கர்யமும் செய்து முமுஷுத்வம் பெறுவோம்

ஆழ்வார் ப்ரபந்தத்துக்கு முன்னே
அவர் அபிமானம் அநு சந்தேயம் என்றதாயிற்று –

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்ற ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரைப் போலே
பிரத்யஷே குருவ ஸ்துதியா –என்று வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டுமே –

இனி அவ்வளவிலே நில்லாதே அவர் திருநாமத்தை இங்கே வந்து சொல்லுதல்
அவர் ஸந்நிதியில் சொல்லுதல் -என்னும்படியைச் சொல்லுகிறது

பா மன்னு மாறன் அடி பணிந்த- பராங்குச பாத பக்தரான -ஆழ்வாராலேயே சாஷாத்கரித்து
அருளப் பட்ட எம்பெருமானாரே –வளர்த்த இதத் தாயான
பூதூரில் வந்து உதித்த புண்ணியனான
இதற்கும் பெருமாள் திருமொழிக்கும் தனியன் சாதித்து அருளி உள்ளார் –
தங்கும் மனம் நீ எனக்குத் தா -இவர் இடமே பிரார்த்தித்துப் பெற வேண்டுமே )

————-

ஓம் நம -திரு விருத்தம்
நாராயணாயா -திரு வாசிரியம்
சரம ஸ்லோகம் -பெரிய திருவந்தாதி -திருவடிகளே மாம் ஏகம் -நெறி காட்டி நீக்குதியோ கண்ணனாலேயே மனத் துக்கம் மாய்த்தேன்
த்வயம் -திருவாய்மொழி -சார ஸங்க்ரஹம் தீர்க்க சரணாகதி-

ஆழ்வார்-திருவிருத்தத்தில்-பொய் நின்ற ஞானமும் -தொடங்கி சம்சார நிவ்ருத்தியை அபேஷித்தார்-

இமையோர் தலைவா என்று சொல்லத் தெரிந்தாலும் அனுபவிக்க யோக்யதை இல்லாமல்
கொண்டாட்டமும் குத்தலுமாக
எனக்குத் தலைவனாக வேண்டாமா
என்றார் திரு விருத்தத்தில்

உறாமை யோடே உற்றேன் என்று சொல்ல மாட்டாமல் கர்மங்களைத் தொலைத்தாலும் கிருபையால் இங்கே வைத்தார்
ஆற்றாமையால் சொல்லியவையே நடுவில் உள்ள பாட்டுக்கள்

பிரபந்தங்கள் தலைக்கட்டவும் –
நாடு நச்சுப் பொய்கை யாகாமைக்கும் –
ஆர்த்தி விளைவிக்கவும் –வீடு திருத்தி கூட்டிப் போகைக்கும் –
தம் பிள்ளையைப் பட்டினி இட விட்டு அதிதிகளுக்கு உணவிடுவது போலேவும்-
அப்பொழுதே இவர் விண்ணப்பம் செய்தபடி அருள வில்லை

மேலும் பல பிரபந்தங்களை இவர் மூலம் உலகோர் பெற்று உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-
குணாநுபவம் இங்கேயே பண்ணுவிக்க-அதனாலே களிப்புற்று
அந்த ஹர்ஷம் உள் அடங்காமல் புற வெள்ளமிட்டு-திருவாசிரிய பிரபந்தம் வெளி இட்டு அருளினார்-

அந்த அனுபவம்-அந்த பகவத் விஷயத்துக்கு தகுதியாக ஆசை கரை புரண்டு-
பெருகிச் செல்லுகிறபடியை-பேசி அருளுகிறார் இந்த பிரபந்தத்தில்

பரத ஆழ்வானை-ராஜன் -அழைத்ததும் பெற்ற வருத்தம் போலே -திரு விருத்தம் –

சித்ரகூடம் சென்று பெருமாளை திரும்பிக் கூட்டி வர பாரித்த நிலை திருவாசிரியம்

நந்தி கிராமத்தில் இருந்து கொண்டு 14 வருஷம் தனது ஆசையை வளர்த்துக் கொண்ட நிலை
இந்த பெரிய திருவந்தாதி

திரு விருத்தம் -பர பக்தி
திருவாசிரியம் -பரஞானம்
பெரிய திருவந்தாதி -பரம பக்தி
திருவாய் மொழி -பிராப்தி -என்றுமாம்

முண்டக உபநிஷத் —87-பகுதி என்பர் -அதர்வண வேத சாம்யம் பெரிய திருவந்தாதி

சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே -திருவாய் மொழி 8-10-3-
அது போலே சொல்லின்பம் பொருளின்பம் இவற்றால் சீரியதாக இருப்பதால் ஸ்ரீ பெரிய திருவந்தாதி

பெரியவர் -ஆழ்வார் அருளிச் செய்த ஆழமான அர்த்தங்களை சொல்லும் பெரிய திருவந்தாதி

இன்ப மாரி இவர்-பண்டை நான் மறை -கண்டு இவர் வாயனவாறே சர்வ உஜ்ஜீவனம் ஆனதே
அருள் மாரி அங்கமான கலியன்

மஹதோ மஹீயான் -இப்படி ஆழ்வார் தம்முடைய பெருமையைப் பேசிக் கொண்ட பிரபந்தம் என்பதால்
ஸ்ரீ பெரிய திருவந்தாதி -என்னவுமாம் –

விஷய கௌரவரத்தால் இது பெரிய திருவந்தாதி –

என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று -4-இதுவும் பெரிய திருவந்தாதிக்குப் பெயர் காரணமாகும்

சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட -அன்று அங்குப்
பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
காருருவன் தான் நிமிர்த்த கால்–21-(பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
இதுவும் பெரிய திருவந்தாதி பெயர் வரும்படி அருளிச் செய்த பாசுரம்
ஓங்கி உலகம் அளந்த திரிவிக்ரமன் திருவடியை நெஞ்சிலே அடக்கிக் கொண்டேனே என்கிறார் )

உகந்து அருளின நிலங்களை எல்லாம் விட்டு உம்முடைய நெஞ்சில் அன்றோ
நித்ய வாஸம் செய்கிறோம் என்ன-

அது கேட்டுத் தேறி
ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக அருளிச் செய்கிறார் இதில்

பலவாறும் தாஸஸ்த்வம் அருளிச் செய்வதாலும் இது பெரிய திருவந்தாதி –

ஸ்வரூப ஞானம் பெற்று குணக் கடலுள் அழுந்தி குள்ளக் குளிர நீராட கடாக்ஷ லேசத்தாலே
அருளுவான் என்றதை எடுத்துக் காட்டியதால் பெரிய திருவந்தாதி-

முயற்றி சுமந்து (1)என்று தொடங்கி உத்ஸாகத்துடன் –
நின்ற நிலையிலே மொய் கழலே ஏத்த முயல்–(87) என்று தலைக் கட்டுகையாலே
விஷய அனுரூபமாக அபி நிவேசம் பெருகுகிற படி சொல்கிறது
(ஆனால் அபி நிவேசம் வளர்ந்து முடிந்தது என்று சொல்ல முடியாதே-)

இங்கே இந்திரியங்களுக்கு விஷயம் இல்லாத அவனது பெருமையை முழுவதும் பேச முடியாதே –
முயற்சியே வேண்டுவதே
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரும் –குருகூர் நம்பி முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –என்றாரே )

எண்பத்தேழு நேரிசை வெண்பாக்களைக் கொண்ட திவ்ய பிரபந்தம்

————-

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப் புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

நயப்புடைய
அன்பு பொருந்திய-இது நாவுக்கும் சொல்லுக்கும் அந்வயம்-ஆசை கொண்ட நாவினால்-
அன்பு கொண்ட சொற்களால்

என்னால் தன்னைப் பதவிய வின்கவி பாடிய(7-9-10)-என்னுமா போலே
கவிக்கு நயப்புடைமை யாவது
நாயகனுக்கு முன்பு இல்லாத நீர்மை இக் கவியாலே யுண்டாகை

நாவீன்
நீயும் வேண்டா என்கிறார்
உத்பத்திக்கு நீயும் வேண்டா நானும் வேண்டா-மநோ பூர்வ வாக் உத்தரம் அல்லவோ என்னில்
பக்தனுக்கு ந ஸாஸ்த்ரம் நைவ க்ரம
நெஞ்சிலே யூன்றி அனுபவிக்கைக்கு நீ யுண்டாக அமையும்-என்னால் தன்னைத் தானே பாடிக் கொண்டான்-

நற் பூவைப் பூ
பூவைப் பூ த்ருஷ்டாந்தம் ஆகாதே ஆகவே நல் பூவைப் பூ என்று விசேஷண விசிஷ்ட பூவைப் பூ

சேர்த்தி யழகு பொருந்திய இனிய சொற்களிலே பகவத் குணங்களை அமைத்துப் பாடும்படி நெஞ்சே!
நீ அநுகூலிக்க வேணுமென்றதாயிற்று.

——————

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் -இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீ வினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை —2-

அவனுக்கு அதிசயத்தைப் பண்ண என்று இழிந்த தாம்
தம் சொல்லாலே நிறம் கெடும்படிப் பண்ணுகிறோம் என்று மீளுகிறார் –

கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து,
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே” (திருவாய்மொழி 3-1-7) என்னுமா போலே
அறிவிற் சிறந்த அரன் முதலானோர் புகழ்ந்தாலுங்கூட
அது பகவத் குணங்களுக்கு இகழ்ச்சியாய் தலைக் கட்டா நிற்க,
எமது ஊத்தை வாய் கொண்டு பேசுவது என்னாகும்!

அந்வயத்தில் காட்டில் வ்யதிரேகத்தாலே சொன்னால்
அர்த்தத்துக்கு ஒரு ஸ்தைர்யம் உண்டு என்று சொன்னார்

எங்கள் மால்–இகழப் போகாத படி தம்முடைய பக்கலிலே வ்யாமுக்தனாய்-செங்கண் மால் -எங்கள் மால்

உண்ணும் சோற்றை எதிர் பார்த்து இருந்த பசியன் சோறு தடுமாறிப் போனால்
கண்கள் சிவந்து கோபம் கொண்டதும்அந்த நிலைமையை கண்ட ஆழ்வார்
எங்கள் மால் செங்கண் மால் என்று விளிக்கிறார் –

இகழ்வோம் மதிப்போம் = ‘மதிப்போம் இகழ்வோம்’ என மாற்றி அந்வயித்துக் கொள்வது.
இதன் கருத்தாவது- வாய் விட்டுப் புகழ்வதென்கிற விஷயம் அப்படி கிடக்கட்டும்;
தேவரீரை நாயினேன் நெஞ்சால் நினைப்பதாவது தகுதியோ என்று பார்த்தால், அதற்கும் யோக்யதை யில்லை;
நெஞ்சால் நினைப்பதுதானும் இகழ்ந்தவாறாகும் என்றபடி.

எங்கள் மால் கண்டாய் இவை-வை லக்ஷண்யத்தைக் கண்டு இழிவது-அயோக்யன் என்று அகல்வது
இவை எங்களுடைய பிராந்திகள் இறே

தேவரீரைப் புகழ்வோமென்றால் என்னுடைய அந்தராத்மா சீறுகிறது;
புகழாதிருப்போமென்றால் தேவரீர் சீறுகிறது;
இந்தப் பாவத்திற்கு என்ன பண்ணுவேன்; இது பெரிய தீவினையாயிரா நின்றதே!

————–

இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என் —3-

இறையவனே-பரிக்ரஹவும் த்யஜிக்கவும் இது தன்னரசு நாடோ

நீயே பற்றுவித்து விடுவிக்கிறவனாய் இருக்க–நம்மால் செய்யத் தக்கவை ஒன்றுமே இல்லையே –

ஸ்வ தந்த்ரன் நீ பரதந்த்ரன் நான் அன்றோ
தேக யாத்திரை கர்மாதீனம் ஆத்ம யாத்திரை கிருபாதீனம்
நல்லதோ கெட்டதோ எல்லாமே நீ செய்விக்கச் செய்கிறேன் என்கிறார்

என் வாய் முதல் அப்பன் -என்றபடி-என் வாக்குகளுக்கு பிரவர்த்தகன் நீ —
ஆகையால்-புகழ்வதோ இகழ்வதோ உன் கார்யம் தான்-என்னால் செயற்பாலது என்
அன்பு செய்கிறது ஒழிய வேறு ஒன்றும் இல்லை -என்றபடி-

—————

என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று -4-

என்ன-–என்னுடையவனான-கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப் பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று
தன் வடிவை எனக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணி
ஸூலபனாய்
அளவிறந்த சீலத்தை யுடைய ஸர்வேஸ்வரனுக்கு அதிசயத்தைப் பண்ணப் பெற்று இருக்கிற
என்னில் காட்டில் மிக்க புகழை யுடையார் யார் –

ஆள் பெற்று என்றது – ஆளாகப் பெற்றது காரணமாக என்றபடி.
எம் பெருமானை நெஞ்சால் நினைத்தாலும் கெடுதியாமென்ற கொண்டிருந்த கொள்கை நீங்கி
அப்பெருமான் விஷயத்திலேயே இன்று என்னெஞ்சு ஆழ்ந்து அவகாஹிக்கப் பெற்றதனால் நான் மஹாபாக்ய சாலியானேன் என்றாயிற்று.

ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகையும்,
பண்ணின பிறகு அநுதாபங் காட்டுதலுமாகிற இரண்டும் அவிருத்தமென்று கொள்வது போல இதனையுங் கொள்க.

(மத்தத் பரம் நாஸ்தி கண்ணன் கீதையில்-இதுவும் பெரிய திருவந்தாதிக்குப் பெயர் காரணமாகும் )

—————–

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையர் ஆவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5–

அயோக்கியன் என்ற என்னை அகலாதபடி பண்ணுகை- அகன்ற என்னுடைய விரோதத்தைத் தவிர்த்த படி
பூதனையால் வந்த இடரை நீக்கினால் போலே இறே –

அயோக்யன் என்று அகன்று
அசந்நேவ ஸ பவதி -என்று முடியப் புக்க என்னை
சத்தை யுண்டாக்கினாய் -என்கிறார் –

பெற்ற தாய் போலே-பிரியமானதையே செய்பவனும் நீயே –
நைச்ய பாவம் மாற்றி பிரவர்த்திப்பிக்கும் படி செய்து அருளிற்றே-

மற்றும் ஆசார்யரும் நீயே
உன்னை புகழாமல் இருந்தால் என் சத்தையே போய் விடும்
அது போகாதபடி காப்பாற்றி அருளின உபகாரகர்

மூன்றாமடியின் முதலிலுள்ள மாய என்பது ஸம்போதநம் (விளி);
உன்னுடைய ஆச்சரிய சேஷ்டிதத்தை என்ன சொல்லுவேனப்பா! என்று கருத்து.
புகழ்வோம் பழிப்போம்” என்ற கொண்டிருந்த எண்ணத்தைத் தவிர்த்து
என்னில் மிகு புகழார் யாவரே” என்னும்படி பண்ணினவிது என்ன ஆச்சரியம்! என்கிறார்

கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாயும் தந்தையும் நீயே
அன்னையாய் அத்தனாய் -ஆச்சார்ய பரம்
உத்க்ருஷ்ட ஜென்மம் ஞானப் பிறவி
அன்னை குடி நீர் அருந்தி -ஆர்த்தி பிரபந்த பாசுரம் -நமக்காக தாமே சரணாகதி ஸ்வாமி

————-

ஸ்வாதந்திரியத்தைக் காட்டிக் கைவிடப்பார்க்கிறாயோ?
அல்லது, திருவருளைக் காட்டி அழகிய திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து விஷயீகரிக்கப் பார்க்கிறயோ?
எப்படி நீ செய்தாலும் அப்படிக்கு என்னைப் போன்ற ஸம்ஸாரிகள் உடன்படி வேண்டியவர்களே யன்றி உன்னை நியமிக்க வல்லார் ஆருமில்லை;
ஆனாலும் ‘இன்னது செய்ய நினைத்திருக்கிறேன்’ என்பதைச் சோதி வாய் திறந்து சொல்லிவிட்டால் நெஞ்சுக்கு ஆறுதலாயிருக்கும்- என்கிறார்.

நெறி காட்டி நீக்குதியோ நின் பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என் படோம் யாம் —6-

கீதா ஸங்க்ரஹ பாசுரம் இது
எங்கள் கையிலிலேயே எங்களைக் காட்டிக் கொடுத்தால் அதோ கதி
தன்னால் வரும் நன்மை விலைப்பால் போல் தீமையோபாதி விலக்காய் இருக்கும்
அவனால் வரும் நன்மையே முலைப்பால் ஆகும்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் –களை கண் மற்று இலேன் )

பகவத் கீதையில் சரம ஸ்லோகத்துக்குக் கீழே விஸ்தாரமாகச் சொல்லப் பட்டுள்ள கர்ம ஜ்ஞாநாதி ஸாதநாந்தரங்களை இங்கு நெறி யென்கிறது.

என் செய்வான் எண்ணினாய்
மந் மநா பவ -(9-34/-18-65 )என்னப் பார்த்தாயோ
மாம் ஏகம் சரணம் வ்ரஜ (18-68)–என்னப் பார்த்தாயோ

அஜ்ஞனான அடியேன் நெறிகாட்டி நீக்குவதற்கு உரியவனல்லேன்;
கருமாமுறிமேனி காட்டுவதற்கே உரியேன்- என்று எம்பெருமான் திருவுள்ளத்தில் படும்படி சொல்கிறாரென்க.

யானையைக் குளிப்பாட்டி வைத்தாலும் நொடிப் பொழுதில் தும்பு தூசிகளையே வாரி மேற்கொள்ளுமாபோகே,
நீ செய்யும் நன்மையையும் கெடுத்துக் கொண்டு தீமையையே ஏறிட்டுக் கொண்டவனாவேன்- என்கிறார் என்னவுமாம்.

————–

நெஞ்சுக்கு மாத்திரம் ஸேவை ஸாதித்தபடியே யொழிய, கட் கண்ணால் காணும்படியாகவும்
கைகளாலே அணைத்துக் களிக்கும்படியாகவும் ஸேவை ஸாதிக்கப் பெறவில்லை.
அப்படிப் பெறாததனாலே தமக்குண்டான கஷ்டத்தைக் கூறுகின்றாரிதில்.

யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த
அம்மா நின் பாதத்தருகு –7-

1-பூ மேய செம் மாதை நின் மார்வில் சேர்வித்து என்ற ஸ்ரீ லஷ்மீ பதித்வமும்
2-பாரிடந்த-அதி மானுஷ சேஷ்டித்வமும்
3-அம்மா-என்ற சர்வேஸ்வரத்வமும்
மூன்றுமே பிற்காலிக்கைக்கும் ஹேது-மேல் விழுகைக்கும் இவை தான் ஹேதுக்கள்

என்னை சேர்த்து கார்யம் செய் என்ற சொல்லிய எனது சொல்லை லஷ்யம் செய்யாமல் 
தான் மாதரம் அந்தரங்க அணுக்கராக திரு வடிகளில் சேர்ந்து விட்டது –

நல்ல பேறு  பெற்றதே-தாம் மட்டும் இருள் தரும் மா ஞாலத்திலே உழல
அவர் திரு உள்ளம் பாதார விந்தத்திலே அழுந்தி விட்டதே –

—————-

நீர் கைக்கு எட்டாதே இருக்கச் செய்தே கை புகுந்தால் போலே இரா நின்றன –
இதுக்கு அடி சொல்லீர் என்கிறார்

அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் -பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு–8-

அருகும் சுவடும்
1–நெருக்கமும் அதனால் பெற்ற இனிமையும்
2-அடைவதும் அதுக்கு உபாயமும் என்றுமாம்

சுவடுந் தெரிவுணரோம் — சுவடாவது அடையாளம்; உன்னுடைய ஸேவை கிடைக்கக் கூடுமென்று நினைப்பதற்குரிய
அடையாளமு மொன்றும் கண்டிலேன். என்னிடத்தில் ஏதாவது யோக்யதையிருந்தால் அந்த யோக்யதை நிமித்தமாக
உன் ஸேவை கிடைக்கக் கூடுமென்று நினைக்க வழியுண்டு; அப்படிப்பட்ட யோக்யதை ஒன்றும் என் பக்கம் இல்லாமையாலே
அந்த நினைவுக்கு ப்ரஸக்தியில்லை யென்கை. சுவடு என்பதற்கு போக்யதை என்கிற பொருளுங்கொள்ளலாம்.

நும்மை நுமக்கு
நும்மை -அருகும் சுவடும் தெரிவுணரோம்
நுமக்கு அன்பே பெருகும் மிக
இது என் பேசீர்
இது ஜீயர் பிள்ளை திரு நறையூர் அரையர் பக்கல் கேட்டதாகப்
பிள்ளை அருளிச் செய்தார்

நெறி காட்டி அருகும் சுவடும் போலே இதுவும் நிருத்தரம் என்று கவிழ்ந்து நிற்க-ஆச்சார்ய ஹ்ருதயம் -228
அதாவது-
நெறிகாட்டி நீக்குதியோ -பெரிய திருவந்தாதி-6 -என்கிற பாட்டிலும் –
அருகும் சுவடும் தெரி உணரோம்–பெரிய திருவந்தாதி-8- –என்கிற பாட்டிலும்
உபாயாந்தரத்தை காட்டி அகற்றப் பார்க்கிறாயோ –
பழையதாக அஜ்ஞனாய்ப் போருகிற என்னை என் செய்வதாக நினைத்தாய் –
இத்தை அருளிச் செய்ய வேணும் என்றும் –
உம்முடைய அருகு வருதல்- உம்முடைய சுவடு அறிதல்-செய்யாது இருக்க -உம்மளவிலே ஸ்நேஹம் ஆனது அற மிக்கு வாரா நின்றது –

————-

பல் பன்னிரண்டும் காட்டினாலும் பிரயோஜனம் இல்லை என்கிறது –
(என்று என்று -என்கிற மீமிசையால் பல் பன்னிரண்டு -என்கிறது )

நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென் மாலார்
தமக்கு அவர் தாம் சார்வரியரானால் -எமக்கினி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே
யாதானும் சிந்தித்து இரு –9-

எமக்கினி யாதானும் ஆகிடு காண் நெஞ்சே
இனி நமக்கு பேறு இழவு இரண்டும் ஒக்கும்
பசித்த போது கிடையாத சோறு என் செய்ய
விஸ்லேஷத்தில் உஜ்ஜீவிப்போமாகில் அன்றோ ஆறி இருக்கலாவது –

அவர் நம்மை வேண்டா என்றத்தை நினைத்து இருக்க அமையும் –
நம்முடைய சத்தைக்கு அவர் சத்தை இறே காரணம் –

அவனுடைய அநுக்ரஹம் போலே அவனுடைய நிக்ரஹமும் நமக்கு அநுஸந்தேயமே.
நம்மைப் பற்றி எம்பெருமான் திருவுள்ளத்தில் பட்டிருக்கு வேண்டுமெத்தனையே அபேக்ஷிதம்.

நல்ல அப்பிராயமோ கெட்ட அபிப்ராயமோ உண்டாகும் போது
நம்மை ஒரு வ்யக்தியாக நினைத்தன்றோ உண்டாக வேண்டும்;
அந்த நினைவு தானே நமக்கும் போதுமானது என்கை.

அவர் – நெறிகாட்டி நீக்கினாலும் நீக்கட்டும்,- கருமாமுறிமேனி காட்டினாலும் காட்டட்டும்; நீ அவர் விஷயமாகவே எதையாவது சிந்தித்திரு.

————-

இதுக்கு மூன்று படி அருளிச் செய்வர் (நம்பிள்ளை காலக்ஷேபத்தில் )
1-விலக்ஷண அதிகாரம் காண்
2-மதிப்பர்க்கே கிடைக்கும் அத்தனை அல்லது எளியர்க்குக் கிடையாது காண்
3-தன்னையே பிரயோஜனம் என்று இருப்பார்க்குக் கிடையாது காண்
உபாயாந்தர பரிக்ரஹணம் பண்ணினார்க்கும் அத்தனை காண்
தன்னையே உபாயமாகப் பற்றினார்க்குக் கிடையாது காண் என்றுமாம்

(இரண்டு அயோக்ய அனுசந்தானம் –மூன்றாவது வெறுப்பு )

இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோ
டொரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திரு மாற்கு
யாமார் வணக்கமார் ஏ பாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்–10-

ஏ பாவம்–1-அநாதி காலம் விஷயாந்தர ப்ராவண்யராய் இருந்த பாபம் என்றும்
2-அயோக்கியன் விலகிய பாவம் என்றும்
3-பாஹ்ய சம்ச்லேஷம் கிட்டாத பாவம் என்றுமாம் –

நாமா மிகவுடையோம் நாழ்–நாழ்-குற்றம்.-நறு வட்டாணித் தனமாய் (நிரர்த்தமான வாக் ஸாமர்த்யம்)
ஸ்ரீ யபதி என்றால் நம் ஸ்வரூபத்தைப் பார்த்து அகல இறே அடுப்பது
ஸ்வரூபத்தைப் பாராதே கிட்டிற்று நம் அளவில் இல்லாமை இறே

நாம் அயோக்யர் என்று கை வாங்கி இருப்பதே நல்லது-என்று நைச்யானுசந்தானம் செய்து-
ஜன்மத்தாலும் ஆசாரத்தாலும் தேவர்கள் அன்றோ துதிக்க அர்ஹ்யர்
ஒரு குணமுமே அன்றி குற்றமே வடிவாக உள்ள நாம்-எம்பெருமானை வணங்குவதற்கு எவ்வளவு என்பதற்கும்- நம்முடைய வணக்கம் என்பதற்கும் இங்கே என்னே விஷயம் இருக்கிறது-எதற்காக வீணாக நாக்கை  நீட்டி இருக்கிறாய் – என்கிறார் நெஞ்சை பார்த்து-

பிரயோஜனாந்திர பரர்களுக்கே கார்யம் செய்யக் கடவோம் என்று
சங்கல்பித்து கொண்டு இருக்கிற அந்த பெரியவருக்கு
நம்முடைய அநந்ய பிரயோஜனத்வம் தோஷமாக அன்றோ திரு உள்ளத்தில் பட்டுக் கிடக்கிறது-நமக்கு அவனுடைய அனுக்ரஹம் கிடைக்குமோ-என்று இன்னாப்பாகச் சொல்லுகிறார்

எண்மர் பதினொருவ ஈரறுவரோரிவர்” என்று முதல் திருவந்தாதியில் பொய்கையார் அருளிச்செய்த முப்பத்து மூன்று
தேவர்களையே இவரும் சப்த பேதத்தாலே அருளிச் செய்கிறார்.

ஆண்டாளும் “முப்பத்து மூவரமரர்க்கு முன் சென்று” என்றருளினாள் இறே.

————

அயோக்யன் என்று அகன்ற நம்மை வென்று சேர விட்டுக் கொள்ள
என்னை வென்று சேர விட்ட உனக்கு
ராவணனை வென்றதுவும் ஒரு பணியோ -என்கிறார் –

நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை
வாழா வகை வலிதல் நின் வலியே -ஆழாத
பாரு நீ வானு நீ காலு நீ தீயு நீ
நீரும் நீயாய் நின்ற நீ—11-

அயோக்யன் என்று அகலுமவர்கள்
பிராட்டியைப் பிரித்த ராவணனோடு ஒப்பார்கள்
பிராட்டியைப் போலவே ஒவ்வொரு ஜீவனையும் விரும்பும் அவன் அன்றோ
கிம் கார்யம் சீதையா மம என்னுமவன்
கடிமா மலர்ப் பாவையோடே சாம்ய ஷட்கம் உண்டே

உனக்கு
உனக்கே அசாதாரணமாய்
உன்னால் அல்லது செல்லாதவர்களைச் சேர விடுகை பணியோ

என்னுடைய உறுதியைப் போக்கினது வலியே யன்றி அவனது உயிரைப் போக்கினது வலியல்ல காண் என்கை.

———

கிட்டினவாறே போன நாளைக்குக் கரைகிறார்

அயோக்யா நுசந்தானம் பண்ணாமல்-
எம்பெருமான் நம்மைத் தேடித் திரிவானாக-நாம் விமுகராய் பின் வாங்கலாமா-
அவன் திருவடிகளை வாழ்த்துவதே பிராப்யம் -காண் -என்கிறார்

நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போ என்று சொல்லி என் போ நெஞ்சே -நீ என்றும்
காழ்ந்து உபதேசம் தரினும் கைக் கொள்ளாய் கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-

அவன் ஆபி முக்யம் பண்ணி நிற்க
நாம் வைமுக்யம் பண்ணலாகாது காண்
அவன் திருவடிகளுக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகை நியாயம்
(அவனுடைய ஸுலப்யம் பரத்வம் அனைத்துக்கும் பல்லாண்டு பாடுவதே கர்தவ்யம் )

———-

அகல ஒட்டாயாகில்
கிட்டி அனுபவிக்கும் படி பண்ணு என்கிறார் –(உன் மேனி சாயை காட்டு -என்கிறார் -)

இறைவனே! உன் வடிவழகை அடியேனுடைய கண்களுக்குக் காட்டியருள வேணும்’ என்று பிரார்த்திக்கின்றார் இதில்.

வழக்கொடு மாறு கொள் அன்று அடியார் வேண்ட
இழக்கவும் காண்டும் இறைவ -இழப்புண்டே
எம்மாட் கொண்டாகிலும் யான் வேண்ட என் கண்கள்
தம்மாற் காட்டுன் மேனிச்சாய்–13-

ஸ்வா பாவிக ஸ்வாமித்வம் உன்னது அன்றோ

என்னுடைய யுக்தி மாத்ரத்தையே பரிபூர்ண கைங்கர்யமாகக் கொண்டு -உன் மேனிச் சாயை நிறத்தை-யான் வேண்ட என் கண்கள் தம்மால் காட்டு -கண்கள் தனக்கு காட்டு -என்றபடி

நான் இப்போது அபேக்ஷிக்கிறேனன்றோ; இவ்வளவையே கொண்டு காரியம் செய்யலாமே என் வாயால் உன்னை இறைவ! என்று சொன்னேனே;

நான் அடியவனோ அல்லேனோவென்று உனக்கு ஸந்தேஹமிருக்குமானால்
நீயே என்னை அடியவனாக்கிக் கொண்டாவது காரியம் செய்ய வேணும் என்கை.

————

காட்ட வேணும் என்றார் கீழ்
ஆரை என் கண்களாலே காண்கிறது என்று அகன்றும்
திரியட்டும் தம்முடைய அயோக்யதையைச் சொல்லுகிறார்
பழையபடியே நைச்சியம் சிந்தித்து-பூதனை கிட்டினவோ பாதி யிறே நான் கிட்டுகை -என்கிறார் –

சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
தேம் பூண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்
பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி–14-

ஸாஸ்த்ர வஸ்யமான உன்னைப் பார்த்தால்-அறிவு கெட்டு ஈஸ்வரனை அழித்தாள் அவள் –
நீ சாஸ்த்ர வஸ்யமாய் இருக்கச் செய்தேயும் விஷயங்களிலே ஆத்மாவை மூட்டி
நசிப்பிக்கையாலே உனக்கு சமள் அன்று என்றபடி

பொல்லாது என்று அறிந்து இருக்கச் செய்தேயும்
பாம்பின் வாயிலே கை நீட்டுமா போலே நாம் அவனைக் கிட்டுகை அவத்யம் என்று அறிந்து இருக்கச் செய்தேயும்
கிட்டுகிற உனக்கு பூதனை சமளோ -என்றபடி –

“பூதனை மனிச்சியாய் வஞ்சித்தாளன்றே; பேயாகையாலே வஞ்சித்தாளத்தனையாயிறே;
உன்னைப் பார்த்தால் பூதனை நித்யஸூரிகளோடொக்குமிறே.”

————-

(நெஞ்சே )-உன்னுடைய பூர்வ வ்ருத்தத்தை நினைத்தால் அகல வேணும்
அவனுடைய பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்தால் கிட்டலாம் என்கிறது –
(நம்மை நினைக்க ஆபத்து -அவனை நினைக்க சம்பத்து அன்றோ )

கீழ்ப் பாட்டுக்கு எதிர்த் தடையாயிருக்கும் இப்பாட்டு; ‘
ஹேயரான நாம் பகவானை அநுபவிக்கப் பார்ப்பது பொல்லாங்கு’ என்றார் கீழ்ப் பாட்டில்;
இப் பாட்டிலோ வென்னில்;
எம்பெருமானுடைய குணங்களைப் பேசுவதனால் நமது பாவங்களெல்லாம் தொலையுமாகையால் அது செய்யலாம்;
அவனுடைய பெருமைக்கு யாதொரு குறையும் விளைய மாட்டாது என்கிறார்.

கங்கையில் நீராடினால்-நாயின் பாபங்கள் தீரும் ஒழிய-கங்கையின் பெருமையில் ஒன்றுமே குறையாதே

பார்த்தோர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
பேர்த்து ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை –ஆர்த்தோதம்
தம் மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய
செம் மேனிக் கண் வளர்வார் சீர்–15-

கடலானது ஆர்த்துக் கொண்டு தம்முடைய சிவந்த திருவடிகளை வருட
அவசர பிரதீஷனாய்க் கண் வளருகிறவருடைய குணங்களை
(ஆஸ்ரிதர் கிடைப்பாரா என்று எதிர் பார்த்து கண் வளர்கிறான் அன்றோ
சிவந்த கண் -எதிர்பார்த்துக் கொண்டே இருப்பதால் அநாதி காலம்
ஐஸ்வர்யம் வாத்சல்யம் ப்ரேமம் -கண் பூத்துப் போம் படி கிடக்கிறான் )

தம்முடைய தாழ்ச்சியை நோக்குமிடத்து அயோக்யதாநுஸந்தானம் பண்ணி அகலப் பார்ப்பதும்,
அவனுடைய விலக்ஷணமாய் போக்யமான திருக் குணங்களை நோக்குமிடத்து
‘நம் வாயாலும் இக் குணங்களைச் சிறிது பேசி ஆநந்திப்போம்’ என்று ஒருப்படுவதும்
ஆக இவ்விரண்டும் மாறி மாறி வருமென்றும் இவை ஒன்றோடொன்று விருத்தமல்ல-

————–

அவஸர ப்ரதீஷனாய் இருக்கிற அளவேயோ
இத்தைப் பெறுகைக்கு அர்த்தியாய் அன்றோ நிற்கிறது என்கிறார் –
(நீல நிறத்தோடு நெடும் தகை வந்து அங்கு ஓர் ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான் -கம்பர்
அதிதி கஸ்யபர் –இந்திரனுக்காகவே பெற்றார்கள் -விஜய முஹூர்த்தம் திருவோண நக்ஷத்ரம்
இந்திரனுக்காக -ராஜ்யம் மீட்டுக் கொடுக்கவே பயோ விரதம் பண்ணி பெற்றாள் )

சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-

ஸ்ரீ வஸூ தேவர் அநந்த வ்ரதம் அனுஷ்ட்டித்துப் பெற்றால் போலே யாதல் பிறந்தாலாகாதோ

(அநந்த வ்ரதம் -சாடு-பல விரதங்கள் என்றும் அநந்த விரதம் என்று ஒன்றின் பெயர்
ராம ரத்னம் கோபால ரத்னம் வாமன ரத்னம் )

அனுகூலர் தேடின வெண்ணெயும் பிரதிகூலருடைய உயிரும் மாள வளர்ந்தால் போலே யாதல் வளர்ந்தால் ஆகாதோ

பேராளா –கார்யம் செய்வதற்கு முன்னே எத் திறம் என்கிறார்
உன்னுடைமையில் உனக்கு கிடக்கிற ஓரத்துக்கு -பக்ஷ பாதத்துக்கு -எல்லை காண்கிறீலோமீ

உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் சொல்லாமல்
முன்னமே எத்திறம் சொல்லி ஏங்கி இருந்து எளிவே என்றாரே
அதே போல் இங்கும் பேராளா என்று முன்னம் அருளிச் செய்கிறார்

பேராளா –
1-மஹாநுபாவனான பெருமானே -பெருமை பொருந்தியவனே–
2–பல திரு நாமங்களை உடையவனே -என்றுமாம்

உனக்கே உடைமையாய் இரா நின்ற பூமியை
நீ பெற வேண்டி பிச்சை பெற்றது எங்கனே

உனக்கு திரு நாமங்கள் பலவாக இருக்க-
இந்த பெரிய வாமனன் மிகப் பெரிய குள்ளன் திரு நாமம் வைத்துக் கொள்ள வேணுமோ –

வேதத்தில் இந்த பவித்திரமான
சரித்திரத்தைப் பற்றின பேச்சு வருவதற்காகவே நீ வாமனனானாய் போலும்

—————–

அவன் கிட்டப் புக்கால் இவர்கள் பண்ணும் வை முக்யம்
அவன் நெஞ்சில் படாது என்கிறது

(அநந்ய ப்ரயோஜனர் -அவன் முகம் காட்டாவிடிலும் வாய் திறவார்
நித்ய முக்தர்கள் எத்தனை பேர் கிட்டினார்கள் என்று கேட்க வாய் திறவாமல்
அவன் அழகையே பார்த்து சதா பஸ்யந்தி பார்த்து இருப்பர்
அடியார்களை வேண்டும் என்று அவதரித்து கிடைக்கா விட்டாலும் உகந்தே இருப்பார்
இப்படி மூன்று நிர்வாகங்கள் )

சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் -சூழ்ந்து எங்கும்
வாள் வரைகள் போலரக்கன் வன் தலைகள் தாமிடிய
தாள் வரை வில்லேந்தினார் தாம்–17-

எதிர் சூழல் புக்கு (2-7) என்னும்படியே-இவர்களை சூழ்ந்து
அடியார் வேணும் என்று அபேக்ஷித்தால் இவர்கள் தோன்றா விட்டாலும்
இவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோம் இறே என்று வாழ்ந்து இருப்பதும் செய்வர் –

இவர்கள் உபேக்ஷித்தார் என்று பிராட்டிக்கு வாய் திறவார்

அடியாரானவர்கள் புத்தி பண்ணி உபாஸித்தாலும் தோன்றிற்று இலராகில்
சேஷ பூதன் சேஷி செய்தபடி கண்டு இருக்கும் அத்தனை அன்றோ -என்று வெறார்கள்

பகவத் குண ஹானி சொல்லுமவர்களுக்கும் வாய் திறவார்

ராமாவதாரமாய்த் தோன்றுமவர் நமக்குத் தோன்றிற்று இலர் என்று வெறார்கள் –

ஸ்ரீ வசன பூஷனத்தில் மூன்றாம் பிரகரணத்தில்
பிராட்டி ராஷசிகள் குற்றம் பெருமாளுக்கும் திருவடிக்கும் அறிவியாதது போலே
தனக்கு பிறர் செய்யும் குற்றங்களை-பகவத் பாகவத் விஷயங்களில் அறிவிக்கக் கடவன் அல்லன் -என்று அருளிச் செய்த பின்
அறிவிக்க உரியவன் அகப்பட வாய் திறவாதே-சர்வஜஞன் விஷயங்களுக்கும் மறைக்கும் என்னா நின்றது இறே –
என்று அருளிச் செய்தது இப் பாசுரத்தைக் கொண்டேயாம்

அவர்கள் வைமுக்கியம் பண்ணினார்கள் என்று-அவர்கள் குற்றத்தை பிராட்டிமார்க்கும் தனி இருப்பிலே அருளிச் செய்யார்
என்கிற-சூழ்ந்து அடியார் -என்கிற பாட்டிலே
சேதனர் செய்த குற்றங்களை தன் திரு உள்ளத்தில் உகந்தவர்களுடன் அறிவிக்கைக்கு
பிராப்தனான சர்வேஸ்வரனும் உட்பட-தன் திருப் பவளம் திறந்து அருளிச் செய்யாதே
தான் அருளிச் செய்யாது ஒழிந்தாலும் அறிய வல்ல சர்வஜ்ஞன் விஷயங்களுக்கும் மறைக்கும் என்று சொல்லா நின்றது இறே-மா முனிகள் வியாக்யானம்-

————–

உகந்தும் உகவாதும் ஸம்ஸாரிகள் பண்ணும் பரிபவத்தைக் கண்டு
தன் ரக்ஷணத்திலே நெகிழ நில்லான் என்கிறது

(அன்போடு கட்டினாலும் வெறுப்புடன்-த்வேஷத்தால் கட்டினாலும்
என்னையே தானே கட்டினார்கள் என்றும்-எனக்கே தான் விஷப்பால் கொடுத்தாள் என்றும் – உகக்குமவன்
சிசுபாலன் என்னையே தானே வைதான் என்று உகந்தால் போல்
உடையவன் உடைமையை விட மாட்டானே )

தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளக
பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் -சோம்பாது இப்
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல்லுருவை யார் அறிவார் சொல்லு–18–

யசோதைப் பிராட்டி தாம்பாலே கட்டினாலும்
அவர்கள் கட்டின கட்டு அபிமத விஷயத்தில் ஸம்ஸ்லேஷ சிஹ்னம் போலே இறே

காரணத்வ ப்ரயுக்தமான குடல் துடைக்கை யுடையவனே
பழையதான உன்னுடைய வடிவை வேறு சிலர் அறியப் போமோ
நீயே சொல்லு

சேதனர் மேலே நப்பாசை கொண்டு சிருஷ்டித்து அருளுகிறான்-
சம்சாரிகள் நன்மையே நாடி இருக்கிற உன்னுடைய ஸ்வ பாவம் யாராலும் நிலை காண ஒண்ணாது

—————

கீழ் பருவம் நிறம்புவதற்கு முன்பு செய்தபடி சொல்லிற்று
வளர்ந்த பின்பு செய்த படி சொல்லுகிறது
(60 நக்ஷத்ரம் மேல் தான் கீதோபதேசம் )

சொல்லில் குறை யில்லை சூதறியா நெஞ்சமே
எல்லிப் பகல் என்னாது எப்போதும் –தொல்லைக் கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
காத்தானைக் காண்டும் நீ காண் –19-

சூதறியா நெஞ்சமே–விடுவித்துப் பற்றுவிக்கும் அவனே உபாயம்
எவற்றை விட்டோம் எவற்றைப் பற்றினோம் என்று அறியாத நெஞ்சமே

அந்த பஞ்சபாண்டவர்களைப் போல நாமும் அப்பெருமான் மீது அன்பு வைத்து அவனை ஸேவிக்க வேணுமென்று மெய்யே ஆசைப்பட்டால்
“மெய்யர்க்கே மெய்யனாகும்” அவன் ஸேவை ஸாதித்தே தீருவன்; அவனை ஸேவிப்பதற்கு இதுவே உபாயம்.

சொல்லில் குறையில்லை-பகவத் குணங்களைப் பேசத் தொடங்கினால் அவற்றுக்கு ஓய்வே இல்லை; எவ்வளவு பேசினாலும் குறைவுபடாமல்
மேன் மேலும் பெருகுகின்ற குணங்கள் அவனுக்கு எல்லை யில்லாமலிருப்பதால் நாம் சொல்லி முடிக்கும் படியானவையல்ல
பகவத் குணங்கள் என்று கொள்ளலாம்.

பரமபுருஷனுடைய குணங்களை அயோக்யரான நாம் பேசினால் அவற்றுக்குக் குறைவு நேரிடுமென்பதில்லை என்றும் கொள்ளலாம்.

அவனுடைய குணங்களை நாம் சொல்லத் தொடங்கினோமாகில் நம்முடைய குறைகளெல்லாம் நீங்கிவிடும் என்பதாகவுங் கொள்ளலாம்.

அந்தக் குணங்கள் எல்லையற்றவை யாதலால் அவற்றைக் கரை காண்பதில் குறை யுண்டு என்பதாகக் கொள்ளுதல் சிறக்கும்.

காண்டும் நீ காண்-காண்போம் என்று காணப் புக்கது உள்ள படியே காணலாம் காண் –

எல்லிப்பகலென்னா தெப்போதும் என்பதை காத்தானை என்றவிடத்திலும் அந்வயிக்கலாம்,
காண் என்றவிடத்திலும் அந்வயிக்கலாம்.

————–

நான் -காண் -என்று சொன்னால் தன்னை அறிந்து நாண வேண்டாவோ என்கிறார்
சர்வ விஷயமாக அவன் தீண்டுகையாலே இதுவும் லஜ்ஜியாமல் தீண்டிற்று என்றபடி

(வள வேழ் உலகு படி விலக வேண்டாமோ நெஞ்சுக்கு லஜ்ஜை இல்லையே -என்றும்
அவனே மேல் விழுந்து நம்மைப் பற்றி திருவடிகளை நம் தலையில் வைக்க வந்த போது
நீயோ சென்று தீண்டுவது என்று ஸ்வகத ஸ்வீகாரம் உண்டோ என்றுமாம்

காணப் புகில் அறிவு கைக் கொண்ட நன்னெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில் -மாணி
யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
திருவாகம் தீண்டிற்றுச் சென்று–20-

மாணி யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
இத்தைத் தீண்டுகைக்கு அவன் ப்ரவர்த்தித்த படி
அவன் செய்த வியாபாரம் ஆகையால்
இதுவும் கூசாமல் தீண்டிற்று என்னவுமாம்

(சர்வ விஷயமாக அவன் ப்ரவர்த்தித்த படி-
ஒருவரைப் பிடிக்க ஊரையே வளைத்த படி )

திருவாகம் தீண்டிற்றுச் சென்று-தன்னை அறிந்தால் விலக்ஷணமான வடிவைச் சென்று தீண்டக் கடவதோ –

(தன்னை -என்று
தாழ்ந்து இருக்கும் தன்னை என்றும்
பர கத ஸ்வீ காரம் பண்ணும் அவனை என்றுமாம்)

நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே” என்றாற் போலே ஆழ்வார்கள் அருளிச் செய்வதும் காலக்ஷே பார்த்தமாகவே யொழிய வேறில்லை.
அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம்.-இந்த ஸம்ஸாரத்தில் நாம் உள்ள வரையில் பகவத் குணாநுபவம் பண்ணிப் போது போக்க வேண்டியது அவசியமாதலால்
அதற்காகப் பாசுரங்கள் பேசுவை அயுக்தமல்ல.

பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-இடுக்குண்ட என்றதைப் பற்ற அவதாரிகை அருளிச் செய்கிறார்
இதுவும் பெரிய திருவந்தாதி பெயர் வரும்படி அருளிச் செய்த பாசுரம்-என்னைப் பிடிக்கவே ஊராக வளைத்தான்-
ஓங்கி உலகம் அளந்த திரிவிக்ரமன் திருவடியை நெஞ்சிலே அடக்கிக் கொண்டேனே என்கிறார் )

அன்று விஸ்தார இடங்களிலே சுகமாக வளர்ந்து விளங்கின அத் திருவடிகள்
இன்று இவ்விடத்திலே இந்த சிறிய நெஞ்சினால் இடுக்கப் பட்டன

சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட -அன்று அங்குப்
பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
காருருவன் தான் நிமிர்த்த கால்–21-

யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா”
(எம்பெருமானோடு கூடியிருக்கை ஸ்வர்க்கம்; அவனை விட்டுப் பிரிந்திருக்கை நரகம்) என்றபடி
நான் தன்னை விட்டுப் பிரிந்திருக்கக்கூடாதென்று திருவுள்ளம் பற்றித் தனது திருவடிகளை என்னெஞ்சினுள் அமைத்தான்-

————–

நம்முடைய பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள் கால் பொதும் படி-
(வெடிக்கும் படி -முள்ளுத் தைக்கையுமாம் )
தடுமாறிக் கூப்பிட்டுத் திரியும் அத்தனை இறே இன நாள் என்கிறார்

(மாலார் தானே குடி புகுந்தார் -பர கத ஸ்வீ காரம்
நாம் அடைய முற்பட்டால் வலிய வினைகளை போக்கியே அடைய வேண்டும்
அவர் நம்மை அடைய வந்ததுமே இவை தன்னடையே போகுமே )

காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள்
மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -மேலால்
தருக்கும் இடம் பாட்டினொடும் வல் வினையார் தாம் வீற்று
இருக்குமிடம் காணாது இளைத்து –22-

மாலார் குடி புகுந்தார் என் மனத்தே” என்று வ்யத்தமாக அருளிச் செய்து,
இன்று வரையில் என்னுடைய நெஞ்சினுள் துக்கங்களும் பாவங்களும் நித்யவாஸம் பண்ணிக் கொண்டு செங்கோல் செலுத்திக் கிடந்தன;
இப்போது ,இவற்றுக்கு இங்கு இடம் கிடையாமையாலே ‘எங்கே போய்க் குடியிருக்கலா’மென்று
அவை அலைந்து திரிந்து வருந்துகின்றன என்று அருளிச் செய்கிறார்.

மாலார் குடி புகுந்தார்-
திருமால் வந்து சேர்ந்து விட்டார்
அடியவர்கள் இடம் வ்யாமோஹம் கொண்ட எம்பெருமான்-இன்று என் நெஞ்சிலே குடி புகுந்தார்-
இருள் மூடி கிடந்த இடத்திலே பிரகாசம் வந்து சேர்ந்தால் போலே –

இந்நிலத்திலே கால் பாவுவதற்கு எங்கும் இடம் நேராமையாலே,
கத்துவராம் = ‘ஐயோ! எங்கள் குடியிருப்புப் போயிற்றே!’ என்று வாய்விட்டுக் கதறுகின்றனவாம்.

———-

இதில் வியதிரேகத்தில் அருளிச் செய்து
அடுத்த பாட்டில் அவன் ரக்ஷிக்காமல் விடமாட்டான் என்று
அந்வய முகத்தால் அருளிச் செய்து த்ருடீ கரிக்கிறார்-

அவன் நம்மை ரக்ஷிக்கும் போதோடு ரக்ஷியாத போதோடு வாசியற அவனையே நாம் ஸகல வித பந்துவுமாகக் கருதி
விஸ்வஸித்திருக்க வேணும்- என்கிற சாஸ்த்ரார்த்தத்தைத் திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிற முகத்தாலே
அஸ்மதாதிகளுக்குத் தெரிவிக்கிறார் இதில்.

இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன் தமர்கள் பற்றி -இளைப்பெய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான் –23-

ஸர்வ ரக்ஷகனானவன்
ரக்ஷகன் ரக்ஷணத்திலே நெகிழ நின்றான் என்று அரஷகரைப் பற்ற ஒண்ணாதே
களைவாய் துன்பம் களையாது ஒழி வாய் களைகண் மற்று இலேன் -என்னும்படியே

உனக்கு ஸ்ருஷ்டிக்க வேண்டுமோ –
அவதரிக்க வேண்டுமோ –
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -என்றும்
பொருள் என்று இவ்வுலகம் படைத்தான் -என்றும் –
சம்பவாமி யுகே யுகே என்றும் –
ஒருவனைப் பிடிக்க ஊரை வளையுமா போலே –
அகில ஜகத் ஸ்வாமி யாயிற்று -அஸ்மத் ஸ்வாமி யாகைக்கு யன்றோ

எக்காலத்திலும் அவனே எவ்வுயிர்க்கும் தாய் தந்தை’ என்கிற அத்யவஸாயம் குலையாதிருந்தால்
நீ தளர்வடையாமலிருக்கலாம்; அந்த அந்யவஸாயம் குலைந்தால் தளர்வடையாய்;

———–

அந்வய
வ்யதிரேகங்கள்
இரண்டாலும் அவனே ரக்ஷகன் என்கிறது
இளைக்கில் என்றது வ்யதிரேகம்
மீண்டு அமைக்க -என்று அந்வயம்

தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஓன்று இல்லாதான்
தானே பிறர்கட்கும் தற்தோற்றல் -தானே
இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டு அமைப்பான் ஆனால்
அளக்கிற்பார் பாரின் மேலார்–24-

பூமியில் அவனைப் பரிச்சேதிக்க வல்லார் உண்டோ
(அவனது உபகார பரம்பரைகள் ரக்ஷகத்வ பாரிப்பு அளவிட்டுச் சொல்ல ஒண்ணாதே )

தானே தனிந்தோன்றல் என்பதற்கு எம்பெருமான் தன்னுடைய விருப்பமிருந்தால் மாத்திரம்
பக்தர்களுக்கு ஸேவை ஸாதிப்பவனே யொழிய,
வேறொரு காரணங் கொண்டு ஸேவை ஸாதிப்பவனல்லன்-தன்னருளால் தானே தோன்றுதலை யுடையவன்

————-

பூமியில் உள்ளாரை எல்லாம் நம்மாலே திருத்தப் போமோ
நாம் முன்னம் பகவத் விஷயத்திலே அவகாஹிக்கப் பெற்றோம் இறே -என்று ஹ்ருஷ்டராகிறார்
வழி பறிக்கும் இடத்தே தப்பிப் போனவன் கிழிச் சீரையை அவிழ்த்துப் பார்த்து
இது தப்பப் பெற்றோமே -என்று உகப்பாரைப் போலே –

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —25-

சீரார் மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர் இனத் தலைவன் கண்ணனால் யான்
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய் வைத்துத் தன்னை இதர சஜாதீயனாக்கி
ஸூலபனான கிருஷ்ணனாலே
பகவத் சம்பந்தம் ஆகிற ஐஸ்வர்யத்தை யுடைத்தான மனஸ்ஸிலே
தலையிலே கிடக்கிற ஸம்ஸார துக்கத்தை மாற்றினேன்
எல்லாரையும் நம்மாலே திருத்தப் போமோ என்கிறார்

துன்பங்களுக்கே நிலமான இவ்விபூதியில் நானோருவனாகிலும் இன்பம் பெற நேர்ந்ததே யென்று ஆநந்திக்கின்றேனென்றாராயிற்று.

———

மாற்றினேன் என்று கர்த்ருத்வம் தோற்றச் சொன்னார்
அந்த கர்த்ருத்வமாவது
அவன் மேல் விழ – என்னுடைய விலக்காமையே -என்கிறார் –

(கர்த்தா சாஸ்திரார்த்வாத் -ஸாஸ்த்ரம் கர்த்தாவுக்கு தானே உபதேசிக்க வேண்டும் –
நீ கர்த்தா இல்லை கீதையில் உபதேசம்
இதில் கர்த்தா என்றாலே தடுக்காமல் இருந்ததே என்கிறார்
பரத்வ சவுந்தர்ய ஸுலப்யம் மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் -பெரியவாச்சான் பிள்ளை பரம காருணீகர் )

யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26-

அவன் அநுக்ரஹிக்கத் திருவுள்ளம் பற்றி மேல்விழுந்து வந்தபோது நான்
இறாய்த்துப் பின்வாங்காமல் அவனுடைய அநுக்ரஹத்துக்கு அநுமதி பண்ணியிருந்தேனென்கை.

இசைந்து ஒழிந்தோம் -என்கிற இத்தாலே –
தம் தலையிலே குறை யற்றது
அருள் என்னும் தண்டால் -என்கையாலே
பெறுவதும் அவன் பிரஸாதத்தாலே என்னும் இடம் சொல்லிற்று
இனி அவர்க்கு அநுபவத்திலே இறே அந்வயம்
ஆகையாலே அநுபவிக்கிறார்

—————-

(முன்பு இருந்த குறை -இசையாமல் இருந்தது
நெஞ்சு இசைந்து ஒழிந்த பின்பு
அருள் என்னும் தண்டாலே பிரதிபந்தகங்கள் போன பின்பு
நானும் வேண்டாம் நீயும் வேண்டா -தன்னடையே போகும் அன்றோ
ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி பின்பு அனுபவம் தன்னடையே வரும் அன்றோ )

அடியால் படி கடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27-

அவ் விரண்டு ஸந்தோஷங்களுள் எந்த ஸந்தோஷம் இப்போது உன் நெஞ்சில் ஓடுகிறதென்பதை அறிகிறோமில்லை.
காரணம் அறியோம் -ஸூ கமாக அனுபவிக்கிறோம் அவனது கிருபை அடியாகவே-

த்வம் மே என்றால் அஹம் மே என்கிற இந் நிலத்திலே “யானுமென்னஞ்சுமிசைந்தொழிந்தோம்” என்று
அழகாக ஒரு பாசுரம் செவிப்படுவது அற்புதமே!” என்று கொண்டு பரமாநந்தப்பட்டான்!
அதனை ஞானக் கண்ணாலே கண்டறிந்த ஆழ்வார், எம்பெருமானே! இப்போது உனது திருவுள்ளத்தில் ஓடுகிற ஆநந்தம் பண்டு
உலகளந்த காலத்து உண்டான ஆநந்தத்தோடு ஒக்குமோ? அன்றி அவ் வானந்தத்தினும் மேற்பட்டதோ? என வினவுகின்றார் போலும்.

ஒரு திருவடியே மேலுலகங்களையும் அளந்ததென்பது உண்மையே; அந்தத் திருவடியோடு கூடத் திருமுடியும் ஓங்கி வளர்ந்தபடியாலும்,
எல்லாச் செயலையும் திருவடிக்கே சொன்னால் கண்ணெச்சிலாகுமென்று ஒரு செயலைத் திருவடியிலேறிட்டுச் சொல்லுவோமென்று
ஆழ்வார் திருவுள்ளம் பற்றினபடியாலும் முடியால் லிசும்பளந்த என்றவிதில் அநுபபத்தி ஒன்றுமில்லை யென்றுணர்க.

உலகளந்த காலத்தில் திருவடியும் திருமுடியும் முத்து மயமாயிருந்த படியால் அவயவங்கள் கண்ணுக்குத் தோன்றாமல் முத்துக்களே தோற்றின

—————

திரு உலகு அளந்து அருளின வடிவை அநுஸந்திக்கையாலே அவனைக் காண ஆசைப் பட்டு
அது கிடையாமையாலே வெறுத்தவர்
அவன் பக்கல் குறை யுண்டோ
நம்முடைய குறை இறே என்று திருப்தராகிறார்

(திருப்தி சொல்லுகையாலே வெறுப்பு அர்த்தாத் வந்தது
நெஞ்சு என்னும் உள் கண்ணாலே உணர்ந்தால் இன்றும் காணலாம்
அது இல்லாமையாலே காணப் போகாது-ஆகையாலே அவன் பக்கல் குறை யுண்டோ
நம்மது அன்றோ குறை என்று திருப்தராகிறார் -என்றபடி )

(பர பக்தி பர ஞானம் பர பக்தி -ஞானம் தர்சனம் பிராப்தி -அறிவு காண்கை அடைகை
உள் கண்ணால் -தர்சன சமனாத்கார சாஷாத் காரம்
பரம பக்தி வந்தால் மோக்ஷம்
சூழ் விசும்பு பர ஞானம்
முனியே நான் முகனே-பரம பக்தி
இன்னும் வர வில்லை
அடுத்த பாசுரத்தில் பர பக்தி வந்தமையை அருளிச் செய்கிறார் )

அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் -என்றேனும்
கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து –28-

யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்று சொன்னாராகில்
உள் கண் காணாது ஒழிகை யாவது என் என்னில்
பரம பக்தி பிறந்து அவ்வஸ்துவை ஒழியச் செல்லாமை யாதொரு போது பிறக்கும்
அப்போது காணும் நம் கண்
அவ் வஸ்துவை ஒழியச் செல்லும் இன்று காணப் போகாது என்கிறது-

அகக்கண் திறந்து திவ்யாத்ம ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கப் பெற்றோமாகில் பின்பு புறக்கண்ணாலே
திவ்ய மங்கள விக்ரஹத்தை ஸேவிக்கப் பெறுவோம் என்பதே இப் பாட்டின் கருத்தாகக் கொள்ளத் தக்கது.-

—————

எல்லார்க்கும் இவ் வவஸ்தை பிறக்கை அரிது
எனக்கு இவ் வவஸ்தை பிறந்தது என்கிறார் –
எனக்கு எளியன் என்கையாலே எனக்கு இவ் வவஸ்தை என்கிறது –
எளியர் ஸ்நேஹிகள் –
(இதில் பரபக்தி-அவஸ்தை -தசை – வந்தமையை ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் )

ஆழ்வார்க்கு நாம் எளிமைப்பட்டு நம்மை அவர்க்குக் காட்டிக் கொடுக்க வேண்டாவோ” என்று திருவுள்ளங் கொண்ட எம்பெருமான்
தன்னுடைய ஸௌலப்ய குணத்தை ஆழ்வார் நெஞ்சிலே பிரகாசப்படுத்த, அதனை அநுபவித்துப் பேசுகிறாரிதில்.

உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே
இணரும் துழாய் அலங்கல் எந்தை -உணரத்
தனக்கு எளியர் எவ் வளவர் அவ் வளவர் ஆனால்
எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு –29-

இணரும்-சர்வாதிகன் ஆகையாலே இவன் தோளில் இட்டது அரும்பியா நிற்கும்–இணர்தல்-கொத்து கொத்தாக அலர்தல் –

தனக்கு நல்லவர்கள் நினைத்த அளவிலே யமைக்கும் ஆகையாலே
என் ஸ்வாமி எனக்கு எளியன்

தாழ்ந்தவர்களைச் சொல்வதான எளியர் என்ற சொல் இங்கு தாத்பர்ய வ்ருத்தியால் சேஷ பூதர்களைச் சொல்லுகிறது.

என்னுடைய அன்புக்குத் தக்க வளவு எனக்கு அவன் எளியனாகத் தடையில்லை என்றாராயிற்று.

—————-

அவன் அருமையும் பெருமையும் கிடக்க கிடீர்
நம்மை நலிந்து போந்த பகவத் பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்களுக்கு
நம்முடைய பக்கல் இருப்பிடம் இல்லை என்கிறார் –

இங்கு இல்லை பண்டு போல் வீற்று இருத்தல் என்னுடைய
செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் -அங்கே
மடி யடக்கி நிற்பதனில் வல் வினையார் தாம் ஈண்டு
அடி எடுப்பதன்றோ அழகு–30-

அங்கே மடி யடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு அடி எடுப்பதன்றோ அழகு
அங்கே ஒரு மூலையிலே ஒதுங்கித் திரிந்தாலோ என்னில்
முதன்மை செய்த வூரிலே புடைவையை ஒதுக்கிக் கொடு திரிவதில்
அங்கு நின்றும் சடக்கெனக் கால் வாங்குகை யன்றோ அழகு– மடி -முந்தானை –

இங்கே என்று இல்லாமல் அங்கே என்றிருப்பதே அழகியது- ஆழ்வாருடைய நெஞ்சுக்கும் பாவங்களுக்கும் இப்போது நெடுந்தூரம் உள்ளமை உணர்க.

மீண்டு என்றும் ஈண்டு என்றும் பதம் பிரிக்கலாம்.
ஈண்டு என்பதற்கு சீக்கிரமாக என்றும் பொருள் கொள்ளலாம்-

—————

ஸர்வேஸ்வரனைக் கொண்டே விரோதியையும் போக்கி
அங்குத்தைக்குக் கைங்கர்யம் பண்ணும்படியும் ஆனோம் என்கிறார் –

(சென்றால் குடையாம் இத்யாதி -நிழலும் அடி தாறுமானாலே கைங்கர்யம் தானே )

அழகும் அறிவோமாய் வல் வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடி தாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடங்கடலை மேயார் தமக்கு–31-(வல் வினையும் தீர்ப்பான் -பாட பேதம் )

தன்னை -மன்றிலே -நாற்சந்தியிலே –ஸர்வ ஸ்வ தாநம் பண்ணிக் குடமாடின வேர்ப்புப் போகத்
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற இவனுக்குச் சாயை போலவும் ஆனோம்

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யா கதோ மதுராம் புரிம் -என்றபடி-திருப்பாற் கடலிலே இருந்து எழுந்து அருளி-
ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவவதரித்து-குடக்கூத்தாடி-அந்த விடாய் தீர மீண்டும் அங்கே போய் சயனித்து அருளி-இளைப்பாறுகின்ற பெருமானுக்கு நிழலும் அடிதாறும் ஆனோம்

இளைய பெருமாள் படை வீட்டிலும்-காட்டிலும் ஓக்க அடிமை செய்தால் போலே
கிருஷ்ண அவதாரத்திலும்
திருப்பாற் கடலில் கண் வளர்ந்து அருளுகிற இடத்திலும் ஓக்க அடிமை செய்யும் படி யானோம் –

நிழலானோம்’ என்று முதலில் சொன்னார்; அதில் த்ருப்தி பிறக்கவில்லை;
உலகத்திலே நிழலானது வ்யக்தியை விட்டுத் தனிப்படவும் காணப்படும்.
அப்படியல்லாமல் வ்யக்தியோடு உடன்பட்டே காணக்கூடியது பாதரேகையாகையால் “அடிதாறுமானோம்” என்று பின்னே சொன்னார்.
தாறு என்று அளவுக்கும் ரேகை (கோடு)க்கும் பேராகையாலே, பாதத்தளவான பாதுகையென்றும் பாத ரேகையென்றும் பொருள்-

ஸம்ப்ரதாயத்திலே எம்பாரைச் சொல்லும்போது ‘எம்பெருமானாருடைய திருவடி நிழல்’ என்றும்,
ஸ்ரீவானமா மலைச் சீயரைச் சொல்லும் போது ‘ஸ்ரீமணவாளமாமுனிகளுடைய திருவடி ரேகை’ என்றும்,
முதலியாண்டானைச் சொல்லும் போது ‘எம்பெருமானாருடைய பாதுகை’ என்றும் அவர்களுடைய தனியன்களில்
அநுஸந்திக்கப்பட்டு வருமாறு காண்க.
(“ராமாநுஜ பதச் சாயா” “ரம்ய ஜாமாத்ருநோகிந்தர் பாத ரேகா மயம்” “பாதுகே யதிராஜஸ்ய” இத்யாதிகள் தனியன்கள்.)

————

தாம் அடிமை செய்ய நிச்சயிக்க
நெஞ்சு ப்ரக்ருதி சம்பந்தத்தை உணர்ந்து பிற்காலியா நின்றது என்கிறார் –ஆழ்வாருக்கு இது தானே தீ வினை-

தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கென்று
தாம் செய்யும் தீ வினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
யாம் செய்வது இவ் விடத்து இங்கி யாது–32-

தாமோதரனார்–ஜக ஏக  சேஷியாக இருக்க இட்டுப் பிறந்த எம்பெருமானே சேஷத்வத்தில் ஆசை கொள்ளுவதாக இருக்க–சேஷத்வதுக்கு இட்டுப் பிறந்த என் நெஞ்சானது இதன் ரசம் அறியாதே பிற்காலிக்கிறதே

யாம் செய்வது இவ்விடத்து இங்கி யாது–தீந ஸ்வரப் பாசுரம்-
நம்முடைமையான நெஞ்சுக்கு ஆவோமோ-நம்மை யுடையவர்க்கு ஆவோமோ

தமக்கடிமை வேண்டுவோர்-எம்பெருமானுக்கு ஸ்வாமித்வம் அஸா தாரணமாயிருக்கச் செய்தேயும் சேஷத்வத்திலே அவனுக்கு ஆசை-அநுகூலையான தாயார்க்கு அடி யுண்பது கட்டுண்பதான விடத்திலே கண்டோம்”

பரம புருஷன் தனது பரத்துவத்தை மறைத்து ஸௌலப்ப குணத்தை எவ்வளவுதான் காட்டினாலும்,
*பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்பு முடையவர்களுக்கு ஸ்வ தோஷமே அடிக்கடி நெஞ்சில்பட்டுக்
கூச்சமுண்டாகுமென்பது இதனால் காட்டப்படுகின்ற தென்றுணர்க.

————-

அறிவுடைத்தாகில் அவனைப் பற்ற வேண்டாவோ என்கிறது –

ஞானம் ஆநந்தம் என்கிற இரண்டு தன்மைகள் இதற்கு உள்ளபோதே இது பகவத் விஷயத்தைப் பற்றினதாகவே ஆகா நிற்க.
அந்தோ ‘அந்த பகவானை அணுகமாட்டேனென்று ஓடுகிறதே! இஃது என்ன பேதைமை! என்கிறார்.

ஸ்வ அனுபவ ரூபத்தால் சாஸ்திர அர்த்தங்களை வெளியிட்டு அருளுகிறார்-

யாதானும் நேர்ந்து யாதானும் ஓன்று அறியில் தன் உகக்கில் என் கொலோ
யாதானும் நேர்ந்து அணுகா வாறு தான் -யாதானும்
தேறுமா செய்யா வசுரர்களை நேமியால்
பாறு பாறாக்கினான் பால்–33-

ஒன்றை அறியவே தன்னை அறியப்படுமவனாய்
ஒன்றை யுகக்கவே தன்னை யுகக்கப் படுமவனாய்
விரோதி நிரஸனத்தைப் பண்ணுமவனாய்
இருக்கிறவன் பக்கலிலே-யாதானும் நேர்ந்து அணுகா வாறு என் கொலோ-

நைச்சியங் கொண்டாடிப் பிற்காலிக்க நேரிடுங் காலத்து எம்பெருமானுடைய அபார சக்தியை அநுஸந்தித்துத் தேறுதலடைந்து அணுக முயல வேண்டும் என்று உணர்த்துவது போலும் இப்பாட்டு.

———–

ஏதேனும் நேர்ந்தாகிலும் அவனையே பற்ற வேணும் என்றார்
ஆகில் அவனைக் கிட்ட ஒண்ணாது என்கிறார் –

(முதலில் விஷயாந்தர ப்ராவண்யம் அடியாக விலகி
அடுத்து நைச்யம் பாவித்து விலகி
அடுத்து உள்ளம் சிதிலமாகி -தளர்ந்து -அனுபவிக்க முடியாமல் தளும்புகிறார்
நீலாழிச் சோதியாய் -நின் சார்ந்து நின்று -ஸுந்தர்யம்
ஆதியாய் நின் சார்ந்து நின்று -பிராப்தி
தொல் வினை எம் பால் கடியும் நீதியாய் நின் சார்ந்து நின்று -விரோதி நிரஸனம்
கால் கர்ம இந்திரியம் ஐந்தும்
கண் ஞான இந்திரியம் ஐந்தும்
நெஞ்சு -மனஸ் )

நைச்சியங்கொண்டாடி அகலப் பார்ப்பது தகாது, எப்படியாவது அவனை அணுகப் பார்ப்பதே நன்று என்று
கீழ்ப்பாட்டில் அருளிச்செய்த ஆழ்வார் தாம் அணுகி அநுபவிக்க இழிந்தார்;
திருப்பாற் கடலிலே திருமால் பள்ளி கொள்ளுந் திறத்தை அநுபவிக்கத் தொடங்கும் போதே தாம் விகாரப்படும்படியைப் பேசுகிறார் இதில்.

பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -நீலாழிச்
சோதியாய் ஆதியாய் தொல் வினை எம் பால் கடியும்
நீதியாய் நின் சார்ந்து நின்று —34-

நீலாழிச் சோதியாய் பாலாழி நீ கிடக்கும்
ஒரு வெள்ளைக் கடலிலே-ஒரு கருங்கடல் சாய்ந்தால் போலே இருக்கிறபடி

ஆதியாய்-வடிவு அழகேயாய் பிராப்தி இன்றிக்கே இருக்கிறதோ
இதுக்குக் காரணமானவனே

கேட்டவுடனே விகாரமடைந்தொழிந்தேன். காதால் கேட்டதற்கே இவ்வளவானால் கண்ணால் காணப்பெற்றால் என்படுவேனோ அறியேன் என்றாராயிற்று.

தொல்வினை எம்பாற்கடியும் நீதியாய!” என்பதற்கு- உபகாரகனுமானவனே
என்னுடைய விரோதியை என் பக்கலில் நின்றும் போக்குகையே
ஸ்வ பாவமாக யுடையவனே-என்றும்–நைச்சியம் கொண்டாடிப் பிற்காலிக்கையாகிற
பழைய பாவத்தைப் போக்கடிக்கு மியல்வினனே! என்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

—————

இவன் செவி தாழ்த்தால் அவன் படும்படி சொல்லுகிறது–

(கேட்டேயும் -இசைந்து வந்த ஒன்றுக்கே அவன் செய்யும் அதி ப்ரவ்ருத்திகளை
இங்கு அருளிச் செய்கிறார் )

கேட்டேயும்” என்று எம்பெருமான் விஷயமான சரிதைகளைக் கேட்பதில்
தமக்கு முயற்சி உண்டானமையைக் கூறினாரே; அவ்வளவிலே எம்பெருமான்
“இவ்வாழ்வாருடைய காதலை மேன்மேலும் வளரச் செய்ய வேணும்” என்று திருவுள்ளம் பற்றி
இவருடைய நெஞ்சிலே படுகாடு கிடக்கத் தொடங்கி விட்டான்; அதைப் பேசுகிறாரிதில்

நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும்
ஒன்றுமோ வாற்றான் என் நெஞ்சு அகலான் -அன்று அம் கை
வன் புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்
அன்புடையன் அன்றே அவன்–35-

எல்லாம் என்னைப் பெருகைக்காகவே–எல்லாம் செய்தும்-ஒன்றுமே செய்யாதானாய் இருக்கும்

நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் என்னும் தொழில்களை ஓயாமல் செய்து கொண்டு என்னெஞ்சை விட்டுப் போகிறானில்லை.
ஆனால், பக்தர் திறத்தில் எம்பெருமான் இவ்வளவு அன்பு கொண்டிருக்கிறானென்பது புதிதான ஒரு ஆச்சரிய விஷயமல்ல.
பண்டே ப்ரஹ்லாதாழ்வான் பக்கலில் அன்பு பூண்டு அரியன செய்து காட்டிய பெருமானுக்கு இவை ஒரு வியப்போ?
அன்பின் மிகுதியினால் இத்தனையும் செய்கிறான் என்றாயிற்று.

ஒன்றுமோவற்றான் = ஓவு அற்றான் எனப்பிரித்து, ஓய்வதை ஸஹிக்கமாட்டான் (அதாவது = ஓயமாட்டான்.) என்று பொருள் கொள்ளலாம்.
அன்றி, ஓ ஆற்றான் எனப் பிரித்து,ஓ என்பதை ஆச்சரியக் குறிப்பிடைச் சொல்லாகக் கொண்டு, ஆற்றான் – ஆறி யிருக்க மாட்டான்
(இன்னமும் ஏதேதோ செய்ய வேணுமென்று பாரித்திராநின்றான்) என்று முரைக்கலாம்.

பிதா பகையாக அவனில் அண்ணிய உறவாய் வந்து உதவினவன் அவனோ அன்புடையோன்
அயோக்யன் என்று அகலுகிற நாமோ அன்புடையோன்
அன்புடையன் அன்றே அவன்–அவனே மிக்க அன்புடையவன் என்றவாறு
யாதானும் பற்றி நீங்கும் நாம் அன்புடையோன் அல்லோம் –

——————-

அவன் இப்படி இருக்க (35 பாசுர சுருக்கம் )-அவன் பக்கலிலே ஸம்சயத்தைப் ப்ரவேசிப்பித்துக்
கை வாங்குகை கார்யம் அன்று என்கிறது

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்று இராதே -அவனாம்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலுமாம் —36-

ஆஸ்ரித பாரதந்தர்யமே அவனுக்கு ஸ்வரூபம் என்று தெளிந்து
ஸூலபனான கிருஷ்ணனுக்கே அற்றால்

அவனே எவனேலுமாம்
யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருச்சைவ ஜனார்தன -என்னும்படியே
இவனுக்கு எல்லாப்படியும் ரக்ஷகனாம்

ஸ என்றும் தத் என்றும் சொல்லப்பட்டுள்ள தெய்வம் கண்ணபிரானே என்று தெளிந்து அவனைப் பற்றினால்,
அப்பெருமானே தேவதாந்தரங்கள் அளிக்கும் பலன்களையும் வேண்டுவார்க்கு அளித்திடுவான்

அவன் அவனேயாகையாவது என்ன வென்றால், எம்பெருமானுடைய ஸ்வரூபமே ஸௌலப்யம் என்று தெரிவித்தபடி.
எம்பெருமான் நம்மால் உணரப்படும்போதே ஸௌலப்ய குணவிசிஷ்டனாகவே உணரப்படுவான்.

——–

இப்படி இருக்கை புறம்பு உள்ளார்க்கு அரிது-நமக்கு உண்டாயிற்றே -என்கிறார்-பகவத் அனுக்ரஹத்தாலே பெறப்பெற்றோமே என்று ஹ்ருஷ்டராகிறார்-

எம்பெருமானது இன்னருளாலே நமக்கு உண்டாகப் பெற்றோம்;
ஆகையாலே இனி ஒருகாலும் நைச்சியம் பாவித்துப் பின்வாங்கப் பாராதே
அப்பெருமானுடைய போக்யதையிலும் சீலத்திலும் ஈடுபட்டு அவனை வாழ்த்துவதே தகும் என்கிற
அத்யவஸாயத்தைத் திண்ணியதாகக் கொள்” என்று உபதேசிக்கிறார்.

ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யது வுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மது கரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை —37-

நாமே யதுவுடையோம்-நாம் நல்ல அறிவுடையோம்
(ஆறு எனக்கு நின் பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய் )

மாலாரை என்றதனால் ஆஸ்ரிதர் திறத்திலே வ்யாமோஹங் கொண்டிருக்கையாகிற சீல குணம் சொல்லுகிறது.

அன்பினால் மங்களாசாஸநம் பண்ணுகையாகிற ஒரு காரியத்தையே சிக்கனப் பிடித்துக் கொள் என்று தம் திருவுள்ளத்திற்கு உபதேசித்தாராயிற்று.

————

தாம் வாழ்த்தச் சொல்ல-நெஞ்சு இறாய்க்க-அத்தை தப்பச் செய்தோம்-என்கிறார்-

அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே
இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத் திறங்கள்
ஏசியே யாயினும் ஈன் துழாய் மாயனையே
பேசியே போக்காய் பிழை –38-

ஸ்நேஹித்துச் செய்தவற்றை ஸ்நேஹம் இல்லாத நாம் பேசினால் அவனுக்கு ஏச்சாகாதோ என்னில்
ஏச்சாகிலும் அவனைப் பேசாதே இருக்கும் இடமே தப்பு

ஏசுகை -ஸ்நேஹம் இன்றிக்கே சொல்லுகை –பரிஹாச உக்தியாகச் சொல்லியாவது-

தேனே இன்னமுதே –கூத்துக்களை சொல்ல-பொய்யே கைம்மை சொல்லி –மெய்யே பெற்று ஒழிந்தேன் –

ஏசிப் பேசியேயாகிலும் பிழைகளைப் போக்கிக் கொள்ளுகிறாயில்லை என்றும், பிழைகளைப் போக்கிக்கொள் என்றும் உரைக்கலாம்.

———–

பேச என்று புக்கவாறே-போக்யமாய் நெஞ்சுக்குப் பொருந்தினவாறே
நாம் பார்த்த இடம் தப்பச் செய்தோமோ -நெஞ்சே -என்கிறார் –
தப்பச் செய்யவில்லையே-நன்றாகவே செய்தோம் என்கிறார் –

இங்கே இருந்து குணம் பாடுவதே புருஷார்த்தம்
வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று கொடுப்பது பிரானே

பகவத் கீர்த்தனமே பண்ணும்படி கீழ்ப்பாட்டில் நெஞ்சுக்கு உபதேசித்தார்.
“பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்குமழுக்ருடம்பும், இந்நின்ற நீர்மை யினியாமுறாமை” (திருவிருத்தம் -1) என்று
முதலடியிலே விண்ணப்பம் செய்தபடி இந்நிலம் அடித் கொதித்துப் பரமபரத்திலே விரைந்து சென்று
அங்கே நித்ய கைங்கரியம் பண்ண வேண்டியது ப்ராப்தமாயிருக்க அது செய்யத் தேடாமல் இங்கே இருந்து கொண்டு
அவனது திருக் குணங்களைப் பேசிக்கொண்டிருப்பது எதுக்கு? என்று திருவுள்ளத்தில் பட்டதாக, அதனை அநுவாதம் செய்கிறார் இப்பாட்டில் –

பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை -அழைத்து ஒரு கால்
போய் யுபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே
வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –39—

பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே!” என்கிறார்; பிழைக்க என்றது- பிழை செய்ய என்றபடி.
‘நாம் தப்பாகச் செய்கிறோமோ’ என்று சொல்லுகிற ஸ்வரவகையில் ‘இது தப்பு அல்ல, என்றும் ‘இது தப்பவு ஆகலாம்’ என்றும் தோற்றுமாறிருக்கும்.

ஜ்ஞானம் பிறந்த பின்பு அடிமைக்கு அனுகூலம் அல்லாத சம்சார சம்பந்தம் விட்டு நீங்குவது எப்போதோ-என்று இந்நிலம் அடிக் கொதித்து
அனுகூலமான பரம பதத்திலே சென்று பரிபூர்ணமாக அனுபவித்து அடிமை செய்து வாழ்வோம் என்று அங்கே போகப் பாரியாமல்
இங்கே குணானுபவ மாத்ரத்திலே திருப்தி பிறந்து இருக்கை யாவது
பகவத் விஷயத்திலே கண் அழிவு அற்ற ருசி இல்லாமை இறே-என்று தாத்பர்யம் –

ஒருகால் போய் = நாம் எவ்வளவு கதறினாலும் எம்பெருமான் திருவுள்ளமிரங்கின காலத்திலன்றிப் பரமபதம் செல்ல
முடியாதாகையாலே அவனுக்குத் திருவுள்ளாமனதொரு காலத்திலே அங்குச் சென்று என்றபடி.

—————–

எம்பெருமானுடைய திவ்ய சரிதங்களைச் சொல்லிப் புகழ்வதில் ஆழ்வார் தமக்குண்டான ருசியின்
மிகுதியை வெளியிடுகிறாரிப்பாட்டில்.

வாய்ப்போ இது ஒப்ப மற்றில்லை வா நெஞ்சே
போய்ப் போய் வெந்நரகில் பூவியேல்-தீப்பால
பேய்த்தாய் உயிர் கலாய் பாலுண்டு அவள் உயிரை
மாய்த்தானை வாழ்த்தே வலி –40-

அயோக்யன் என்று அகலுகை யாகிற கொடிய நரகத்தில் புகுவியாதே கொள்-நைச்யம் பாவித்து அகலுகையும் கொடிய நரகம்

வாழ்த்துகை நமக்கு மிடுக்கு-என்றும்-வாழ்த்துகையிலே துணி என்றும்-மாய்த்தவனை வலிதாக (நன்றாக) வாழ்த்து என்றுமாம்

யஸ் த்வய ஸஹ ஸ்வாக்கோ நிரயோ யஸ் திவ்யா விநா” என்று எம்பெருமானோடு கூடியிருப்பது சுவர்க்கம்.
அவனைப் பிரிந்திருப்பது நரகம் என்று இளையபெருமாள் (ஸ்ரீராமாயணத்தில்) கூறினது இங்கு உபலக்ஷணமாகக் கொள்ளத்தக்கது.
எம்பெருமானை ஏத்துகை சுவர்க்கம்; ஏத்தாதிருக்கை நரகம் என்கைக்கும் உபலக்ஷணம்.
“நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க. நரகமே சுவர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி”

———–

பூதநா ப்ரசங்கத்தாலே
மல்லரை நிரஸித்த படி சொல்லுகிறது –

(பூதனா சம்ஹாரம் தொடங்கி மல்லரை மாட்டியது பர்யந்தம் உண்டே
1-பூமி பலகாலம் -சாக்ஷியாக நிற்கும்
2-சத்தை பெற்றது -அவன் அன்று அழித்ததால்
3-பரம சுகுமாரமான திருக்கையால் செய்தானே -இனிமையில் ஆழங்கால் பட்டு மாய்ந்து போகாமல் உள்ளார்கள் -ஈடுபட்டு அழியாதே நிற்கும் என்னுதல்–என்று மூன்று நிர்வாகங்கள்)

வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர்
வலிய முடி யிடிய வாங்கி -வலிய நின்
பொன்னாழிக் கையால் புடைதிடுதி கீளாதே
பல் நாளும் நிற்குமிப்பார்–41-

அந்த மல்லர்களை நீ புடைத்திடவே (நீயும் பிழைத்து) இவ்வுலகமும் நிலை பெற்று நிற்கிறது

———–

ஸர்வேஸ்வரனே ஆஸ்ரயமாக வேண்டாவோ -என்கிறது –கீழே பூமி நிலை பெற்றது கண்ணனால்
அது மாத்ரமோ-இவன் ஒருவனே புகல் -சர்வ வித பிரகாரங்களில் ரக்ஷகன் இவனே-

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன் படைத்தான் என்பரால் -பாரிடம்
ஆவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகவாலவை–42-

உண்டு உமிழ்ந்த தொழில்கள் வேறே ஒரு வியக்திக்கு ஆகா-ஜகத்தில் இச் சேதனர் வேறே ஒருவனுக்கு சேஷம் ஆவான்-ஆகான்

எல்லா பொருள்களும்-ப்ரஹ்மத்தை-ஆதாரமாகவும்-ரஷகமாகவும்-சேஷியாகவும்-
தாரகமாகவும் -கொண்டவை-

————

பிரபல பிரதிபந்தகங்களைப் போக்குமவனைப் பற்றாதார்க்கு வரும்
மநோ துக்கங்களைப் போக்க ஒண்ணாது

அவயம் என நினைந்து வந்த சுரர் பாலே
நவையை நளிர்விப்பான் தன்னை -கவையில்
மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தார்க்கு உண்டோ
மனத் துயரை மாய்க்கும் வகை–43-அவையம் -அந்தாதிக்கு சேர பாட பேதம் -அப்போது இடைப் போலி-

ஈஸ்வரனைப் பற்றுவோமோ
அயோக்யன் என்று அகலுவோமோ
அகலாது ஒழிவோமோ
என்று இரண்டும் இன்றிக்கே இருக்கிற மனஸ்ஸிலே இவனை உயர வைத்து
மங்களா ஸாஸனம் பண்ணார்த்தாருக்கும் உண்டோ-மனத் துயரை மாய்க்கும் வகை-

கவை என்று இரண்டு பட்டிருக்கைக்குப் பெயர்–கவை யில்லாமையாவது ஒருபடிப் பட்டிருக்கை;

எம்பெருமானையே உபாயமாகவும் உயோகமாகவும் துணிந்திருக்கையைச் சொன்னபடி.
பரமைகாந்திகளாய்க் கொண்டு அவனை வாழ்த்தாதவர்களுக்கு மனத்துன்பங்களை நீக்கிக்கொள்ள வழியில்லை யென்தாயிற்று.

————-

இதுக்கு பட்டர் ஒருபடியும்
பிள்ளை திரு நறையூர் அரையரும் ஒரு படியும்
அருளிச் செய்வர்

(பண்டைய கர்மங்களின் பலனே வாழ்த்தாது இருக்கிறோம் என்றும்
பாடாததே-வாழ்த்தாதே இருப்பதே பாபம் என்றும்
வாழ்த்தாது இருப்பார் இது வன்றே மேலைத் தாம் செய்யும் வினை -முற்கால கர்ம பலன் என்றும்
வாழ்த்தாது இருந்தால் மேல் உள்ள காலங்களில் கர்மங்களை சேர்ப்போம் என்றும்
இதனாலே பாபம் –பட்டர்
பாபத்தாலே இது -அரையர்
என்றும் இரண்டு நிர்வாகங்கள் )

வகை சேர்ந்த நல் நெஞ்சம் நாவுடைய வாயும்
மிக வாய்ந்து வீழா வெனிலும்-மிக வாய்ந்து
மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பார் இது வன்றே
மேலைத் தாம் செய்த வினை–44-

இதுவன்றே மேலைத் தாம் செய்த வினை
இது வன்றோ சம்சாரம் நித்யமாக இவர்கள் பண்ணின பாபம்-பராசர பட்டர் நிர்வாகம்-

இது வன்றோ பண்ணின பாபத்த்தின் பலம் என்று பிள்ளை திரு நறையூர் அரையர் நிர்வாகம்

———-

நீர் இதில் செய்தது என் என்னில்
பிரிந்தால் வரும் அநர்த்தத்தை நினைத்து அவன் திருவடிகளை ஏத்தினேன்-என்கிறார்

(ஆழ்வாருக்கு -வினை என்றாலே பகவத் விஸ்லேஷம் தானே
தினை ஆம் சிறிது அளவும்-அதி அல்ப காலமும் )

வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி
தினையாம் சிறிது அளவும் செல்ல -நினையாது
வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும்
நாயகத்தான் பொன்னடிகள் நான் –45-(வெம்மையையே -பாட பேதம் )

ஞானி நித்ய யுக்தர் -கூடவே இருக்கும் அபி நிவேசம் கொண்டவர்கள் தானே

மாறி மாறி பல பிறவிகள் எடுத்து இருந்தாலும்-
இனி மேல் பிறவாமைக்கு வழி தேடிக் கொண்டேன் என்கிறார் –

அவனைப் பிரிந்து ஒருநொடிப்பொழுதும் தரித்திருக்க மாட்டாமையினாலே,
வானோர் தொழுதிறைஞ்சும் பெருமை வாய்ந்த அப்பெருமானுடைய பொன்னடிகளை நான் வாய்கொண்டு துதித்துப் போருகின்றேன் என்றாராயிற்று.

கீழே தேஹ யாத்ரை செல்லும்படி சொல்லிற்று
இதில் ப்ராப்ய பிராப்பகங்கள் அவனே என்று நினைத்து இரு என்கிறார் –

(கீழே பொன் அடிகள் -உபாயமாகவும் ப்ராப்யமாகவும் இருக்குமே-ஸூ ஷ்மமாகக் கோடி காட்டினார்
இத்தை வியக்தமாக இதில்
வெந் நரகில்–கொடிய ஸம்ஸாரத்திலே- சேராமல் காப்பதற்கு நீ கதியாம்-உபாயமாகவும்
செங் கண் மால் -நீங்காத-மா கதி-பரம ப்ராப்யம்
மீளுதலாம் ஏதமிலா விண்ணுலகில் ஏகம் எண்ணும் மாறன் -தாள தாமரை பாதிக நூற்று அந்தாதி பாசுரம் )
இரண்டும் கதி
மா கதி சிறப்பு -ப்ராப்யமாகவே கொள்ள வேண்டுமே-பிராட்டி கடாக்ஷ பலனாகவே இது சித்திக்கும் அன்றோ

(நாலாயிர சுருக்கமே இதுவே தானே
அவனாலே அவனை அடையுங்கோள் -இதுவே ஆழ்வார்கள் உபதேசம் நமக்கு
ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே)

நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும்
தேங்கோத நீருருவம் செங் கண் மால் -நீங்காத
மா கதியாம் வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதியாம் நெஞ்சே நினை –46-

இத்தால்
ப்ராப்ய ப்ராபகங்களும் அவனே என்னும் இடமும்
ப்ராப்தாவுக்கு பிரதிபத்தி மாத்ரமே என்னும் இடமும்
ப்ரபன்னனுக்கு இரு காலும் -மற்று ஒன்றும்- சொல்ல வேண்டுவது இல்லை என்னும் இடமும் சொல்லுகிறது

நினை என்கையாலே
பிரதிபத்தியும் –
அது தான் (அந்த நினைவும் )ஒரு கால் என்னும் இடமும் தோற்றுகிறது

கதி என்ற வடசொல் வ்யுத்பத்தி பேதத்தால்
கமநஸாதநம் என்கிற பொருளையும்
கந்தவ்ய ஸ்தலம் (அடைய வேண்டுமிடம்) என்கிற பொருளையும் தரக் கடவது.

—————

நீர் நம்மை ப்ராப்யமாகும் ப்ராபகமாகவும்
நம்மை ஏத்துகையே தேஹ யாத்ரையாகவுமாக இரா நின்றீர்
இதுக்கு விபரீதமாய் இருப்பான் என் சம்சாரம்-என்ன
உன் கடாக்ஷம் இல்லாதபடி இருக்கை குற்றமோ என்கிறார் –

(நாம் கேட்பதாகவும் பெருமாளே வெறுப்பில் கேட்பதாகவும் கொண்டு
உனது கடாக்ஷம் என் அளவிலே இன்று பலித்ததே
இன்றாக நாளையாக -என்றாவது பலிக்குமே )

நினைத்து இறைஞ்சி மானிடவர் ஓன்று இரப்பர் என்றே
நினைத்திடவும் வேண்டா நீ நேரே -நினைத்து இறைஞ்ச
எவ்வளவர் எவ்விடத்தோர் மாலே அது தானும்
எவ்வளவும் உண்டோ எமக்கு –47-

உன் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு ப்ரயோஜனாந்தரத்திலே முதலடி இட வேண்டா
உன் கடாக்ஷம் இல்லாதார் இப்படிச் செய்தார் என்று உனக்கு வெறுக்க ஒண்ணுமோ

இத்தால்-உன்னுடைய நிர்ஹேதுக கடாஷத்துக்கு இலக்காகும்படி அதிகாரம் இருந்தால் கடைத்தேறலாம் -என்றபடி-

எவ்வளவரெவ்விடத்தோர் என்றதில், “எவ்விடத்தோர்” என்று முன்னே அந்வயித்து எவ்வளவர்’ என்று பின்னே அந்வயிருக்கவேணும்-

இவ்விருள்தருமான ஞாலத்திலே பிறந்து வைத்து உன்னை உள்ளபடி
நினைத்திறைஞ்ச எப்படி முடியும்? என்றார் முதலில்

இவ்விருள் தருமாஞாலத்திலே பிறந்து வைத்தாலும் உன்னுடைய நிர்ஹேதுக கிருபைக்கு இலக்காகும்படியான அதிகாரமாவது இருந்தால் கடைந்தேறலாம்;

நேரே நினைத்திறைஞ்ச எவ்வளவரெவ்விடத்தோர்” என்று இகழ்ந்துரைக்க
வேண்டும்படியான நிலைமை அடியேனுக்கு இதுவரையிலுமில்லை,
இனி மேலுமுண்டாகப்போகிறதில்லை என்றபடி.

———

எமக்கு பிரபல பிரதிபந்தகம் போக்குமவனை உபாயமாக நெஞ்சிலே கொண்டு
அவனால் பெறுவதும் பரம பதம் என்று நினைத்து இருந்தோம்
இது அன்றோ இருக்கும் படி என்கிறார் –

எமக்கி யாம் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை
அமைத்து இருந்தோம் அஃது அன்றே யாம் ஆறு அமைப் பொலிந்த
மென் தோளி காரணமா வெம்கோடு ஏறு ஏழுடனே
கொன்றானையே மனத்துக் கொண்டு –48-

அசாதாரணையாய் வேய் போலே விளங்கி மிருதுவான தோளை யுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக-வெவ்விய கோட்டை யுடைய எருதுகள் ஏழையும் உடனே செற்றவனையே நெஞ்சிலே கொண்டு-இவ் வனுபவத்தில் காட்டில் பரம பதம் வேண்டா என்று இருந்தோம்

வீட்டை அமைத்திருந்தோம் என்பதற்கு,
பரமபதம் பெறப் பாரித்திருக்கின்றோம் என்றும்
வேண்டாமென்றிருந்தோம்’ என்றும் பொருள் உண்டே

அச்சுவை பெறினும் வேண்டேன்–பாவோ நான்யத்ர கச்சதி-எம்மா வீட்டுத் திறமும் செப்பம்-
நப்பின்னை மணந்த கண்ணனை -உன்னைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றினைக் காணா -என்கிறார்

———-

அவனே ப்ராபகன் –என்று அறுதி இட்டாருக்கு
சரீர அவசானத்து அளவும் இருக்கும் படி சொல்லுகிறது

இருக்கும் நாளில் உகந்து அருளினை நிலங்களில் குண அனுபவமே போது போக்காகக் கொள்ள வேண்டும்-பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்

கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத் தான் -கண்ட நாள்
காருருவம் காண்டோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார்
பேருருவம் என்று எம்மைப் பிரிந்து –49-

இவை சிற்று உருவம்-அவன் பேர் உருவம்

இங்கே இருந்து குணாநுபவம் செய்து கொண்டு இருந்தாலும்
திவ்ய மங்கள விக்ரஹம் சேவிக்க ஆசை உண்டாகுமே
அத்தால் அலமாப்பு அடைகிற படியை அருளிச் செய்கிறார் –

மற்றுத்தான் என்றது- எம் பெருமான் திருநிறத்திற்குப் போலியாகக் கூடிய
கருநெய்தற்பூ குயில், மயில், கருவிளை, களங்கனி முதலிய பலவற்றைச் சொன்னபடி.

இப்பொருள்களைக் காணும்போதெல்லராம் கண்ணபிரானுடைய திருவுருவையே ஸாக்ஷாத்தாகக் கண்டதாக நினைத்து-என்னுடைய நெஞ்சு என்னைப் பிரித்து அவ்வப்பொருள்களினருகே ஓடுகின்றது

ஒரு நாளிரண்டுநாள் இப்படி பார்த்துவிட்டு ‘இது ப்ரமம்’ என்று பிறகு வெறுமனிருப்பதில்லை;
காருருவங்களைக் காண்கிற போதெல்லாம் இந்த ப்ரமம் உண்டாகியே தீரும்

———–

உபமானங்களைக் கண்டு உபமேயம் என்று இருக்கும்படியான எம்மை
இவர் நோக்காது ஒழிவதே -என்று வெறுக்கிறார்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும்-திருவாய் -2-7-6- -என்னும்படியை எண்ணுகிறிலர்

அவன் கொடுத்த சரீரம் கொண்டு ருசி பிறந்த பின்பு
இவனைத் -இறைத்-தாழ்த்ததும் குற்றமாய்த் தோன்றா நின்றது
தான் பரிக்ரஹித்த சரீரம் தோறும் அவஸர ப்ரதீஷனாயத்
தம் பக்கல் முகம் பெறாதே திரிந்தது தோற்றுகிறது இல்லை
இத் தலையில் அபேக்ஷை பிறந்தால் அவனுக்கு வாராதே இருக்கை முறை அன்று போலே காணும்
பிரஜை எல்லாத் தீம்பும் செய்ததே யாகிலும் பசித்த போது சோறு இட்டிலள் யாகில்
தாய்க்குக் குற்றமாகக் கடவது இறே

(நச்சுப் பொய்கை ஆகாமல்- நாடு திருத்த- பிரபந்தம் தலைக்கட்ட- ஆழ்வாரை வைத்தான் அன்றோ
ஆஸ்ரிதர் இடம் எளியவன் என்பதையே பார்த்தேன்
கேசியை நிரசித்த வண்மையைப் பார்க்க வில்லையே )

பிரிந்து ஓன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒரு கால்
ஆவா வென இரங்கார் அந்தோ வலிதே கொல்
மா வாய் பிளந்தார் மனம்–50-

ஆஸ்ரிதர்கட்காகக் கேசி வதம் முதலிய அரிய பெரிய செயல்களைச் செய்து பரம காருணிகள் என்று பேர் பெற்றிருப்பவன்-என் விஷயத்திலே கல் நெஞ்சனாவதே! என்று வெறுக்கிறார்.

“உயர்வற வுயர் நலமுடையவன்” என்று ஸமஸ்த கல்யாண குண பரிபூர்ணனாகத் தம் வாயாலே சொல்லத் தக்க எம்பெருமானை
‘இரக்கமற்றவன்’ என்று உறுதியாகச் சொல்லக் கூசி,
“அந்தோ! வலிதே கொல்?” என்று சங்கிப்பது போலக் கூறினபடி.

—————

(கீழே வலிய மனம் கொண்டவன் என்று வெறுத்து அருளிச் செய்தார் அன்றோ
அநேக காலம் ஆபி முக்யம் காட்டி விலகி நின்ற நாம் அவன் முயற்சியால் அத்வேஷம் லேசம் பிறந்து
பசித்த குழந்தைக்கு சோறு இடும் தாய் போல்
ருசி வந்த உடனே அனுக்ரஹித்து மேலே மேலே வளர்த்து உபகரிப்பவன் அன்றோ
ஸ்ரீ வித்துவக்கோடு அம்மானையே பார்த்து இருக்க அருளிச் செய்த ஸ்ரீ குலசேகரப் பெருமாள் போல் இந்த பாசுரம் )

சேஷ பூதன் சேஷி செய்த படி கண்டு இருக்கும் அத்தனை அல்லது
வெறுத்துத் தப்பச் செய்தோம்–என்கிறார்

மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை
சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து -புனமேய
தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண் துழாம் சீரார்கு மாண்பு –51-

வண் துழாம் சீர் என்கையாலே
சேஷி செய்தபடி கண்டிருக்கை ஒழிய வெறுக்கக் கூடாது என்கிறது

மாண்பு -அழகு -முறை என்றாய் பிராப்தம் என்றபடி –

வண்துழாம்சீரார்க்கு மாண்பு– பரமவிலிக்ஷணரான-ஆத்மகுணங்கள் நிரம்பப் பெற்ற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீர்மை;-துழாம் என்றது- துழாவும் என்றபடி; துழாவுகை- பரம்புகை; விசாலமாயிருத்தலைச் சொன்னபடி;
அழகிய விசாலமான நற்குணங்களமைந்த பாகவதர்களுக்கு என்கை.
இங்ஙனன்றி ‘எம்பெருமானுடைய மனம் கல்லோ’ என்று சொல்லுதல் தகுதியன்று;
கல்லாகவே யிருந்தாலும் அவனுடைய திருவடிகளே தஞ்சமென்றிருத்தலே ஸ்வரூபம் என்றாராயிற்று.

—————

(ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மாண்பு எது என்று பொதுவாக கீழே சொல்லி
இதில் தமக்கு திரிவிக்ரமன் கண்ணன் ஒருவரையே சேர்ந்து
பெற்ற அனுபவத்தை வெளியிட்டு அருளுகிறார்
உலகமாகத் தொட்ட அவதாரத்தையும் ஊராகத் தொட்ட அவதாரத்தையும் தாழ நின்ற ஸ்பர்சித்தவன் அன்றோ
எண்ணக் கண்ட விரல்களால் உண்ணக் கண்ட தனது ஊத்தை வாய்க்கு கவளம் போடுகிறார்களே -பெரியாழ்வார்
வாய் அவனைத்தவிர வாழ்த்தாது போல் இங்கும் )

பொதுவிலே சொன்னேன்
அது தான் எனக்கு உண்டாயிற்று -என்கிறார் –

மாண் பாவித்து அந் நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான் நம்
கண் அவா மற்று ஓன்று காணுறா சீர் பரவாது
உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று –52–

தாய் வேஷத்தைக் கொண்டு இவனுக்கு முலை கொடா விடில் தரியேன் -என்று
அவள் முலை கொடுத்தால் போலே
இவனும் உண்ணா விடில் தரியேன் என்று தாரமாகவே யுண்டான்-

அவனுடைய கல்யாண குணங்களைச் சொல்லாதே வாக்கு
வேறே ஒன்றை உண்ண உறாது –சோறு திண்பதிலும் வாய்க்கு விருப்பமில்லை- என்றாராயிற்று.

———-

(செங்கண் மாலே -கலங்கிய உனக்கு தெளிந்த அடியேன் சொல்ல வேண்டுமே –
இப்படிப்பட்ட உன்னை நினைந்து பரம ஆனந்தம் கொண்ட நாம் வேறே ஒன்றைப் பார்ப்பேனோ -நினைப்பேனோ )

என்னுடைய இந்திரியங்களும் உன்னை அனுபவிக்கும் படி யாயிற்று -என்ன
அவ்வளவேயோ –
இன்னும் சில யுண்டு காணும் உமக்குச் செய்யக் கடவது என்ன
எனக்குச் செய்யாதது உண்டோ -என்கிறார் –

இந்த குணாநுபவத்திற்காட்டிலும் ஸ்ரீவைகுண்டமென்பது போக்யமோ? பிரானே!’ என்கிறார்.

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-

குண அனுபவ யோக்கியமான இந்த ஜென்மத்தில் காட்டில் பரம பதம் ஸ்லாக்யம் என்கைக்குக் காரணம்-பரமபதம் யுக்தி சாரமாய் இருப்பதே என்று யதா ஸ்ருத பங்க்தி தாத்பர்யம்

இனி இனி என்று கதறும் ஆழ்வார் இப்படி அருளிச் செய்வது-ஒருவகையான சமத்காரச் சொல்லாகும்-இடம் எதுவாயினும் பகவத் குணாநுபவம் ஒன்றே முக்கியம் என்றதாயிற்று-

————–

உம்முடைய பிரதிபந்தகம் செய்தது என் -என்ன
நானும் அறிகிறிலேன் -என்கிறார் –

முள்ளைக் கொண்டே முள்ளைக் களைவது போல எம்பெருமான் பிரதிபந்தகங்களைத் தொலைப்பதில் மிக்க நிபுணன் என்று
காட்டுதற்காகக் கன்றினால் விளவெறிந்த கதையை இங்கு அருளிச் செய்கின்றார்;

வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54-

பிரபல பிரதிபந்தகங்களைப் போக்குமவர் திருவடிகளிலே பணிந்தோம்
நம்மோடே நெடு நாள் பழகிப் போந்த வலிய துயரை அருகும் கண்டிலோம்
இவர் எங்கே புக்கு முடித்தார்-ஐயோ ஐயோ என்கிறார்

—————

(பிரதிபந்தகங்கள் போன பின்பு பலம் அனுபவிப்பதே கர்தவ்யம்
அவனே வந்து காட்டக் கண்டு விலக்காமல் அனுபவிக்கலாம் )

மருங்கோத மோதும் மணி நாகணையார்
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே
எமக்கு அவரைக் காணலாம் எப் பொழுதும் உள்ளால்
மனக் கவலை தீர்ப்பார் வரவு –55-

ஒருவர்க்கும் தமது முயற்சி கொண்டு அணுக முடியாதவனாயினும்–என்னுள்ளத்துள்ளே உறைகின்றவனைக் காண எனக்கு அருமையுண்டோ? என்கிறாராயிற்று-

—————

(உபாயம் அனுஷ்டிப்பவன் அவன் தானே நம்மை பெற்று
மகிழ்ந்து நம்மையும் மகிழ்விக்க
அனுபவமே நமது கர்தவ்யம்
தானும் அறியாதே ஸாஸ்திரமும் சம்மதியாதே
தானே அறிந்த ஸூஹ்ருத விசேஷம் வியாஜ்யமாக அருளுபவர் அன்றோ )

எல்லாருக்கும் அருகும் செல்ல அரியவன்
உமக்கு எளியனான படி என் -என்ன
நானும் அறியேன் -என்கிறார் –

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—

நினைத்த போது தாமே வந்து கிட்டுமவர்–இப்படி ஆச்சர்ய பூதரானவர் காட்டும் உபாயம்

‘பகவத்க்ருபை எனக்கு எந்தக் காரணத்தாலே வந்தாலென்ன?
ஆநந்தம் அளவற்றிராநின்றது காண்மின்’ என்கிறார்.

————-

பிரதி பந்தகங்கள் நிறைந்த இடமே என்று நெஞ்சு தளும்ப சமாதானம் படுத்துகிறார் இதில்–

வழித் தங்கு வல் வினையை மாற்றானோ நெஞ்சே
தழீ இக் கொண்டு பேராவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றி புலால் வெள்ளம் தானுகள
வாழ்வடங்க மார்விடந்த மால் –57-

ஆஸ்ரிதனான ஒரு ப்ரஹ்லாதனுக்குப் பக்ஷபாதியாயிருந்து
அவனுடைய ப்ரபல ப்ரதிபந்தகமாயிருந்த இரணியனைக் களைந்தொழித்தவனன்றோ அவன்;

அப்படிப்பட்டவன் நம்முடைய ப்ராப்தி ப்ரதிபந்தங்களைத் தொலைத்தருளானோ?
தொலைத்தே யருள்வன்;
நீ ஏன் வீணாகக் கவலைப்படுகிறாய் நெஞ்சே!; கவலையை விட்டொழிந்து தைரியமாய் இரு- என்றாராயிற்று.

————-

இனி உன்னுடைய அனுபவத்துக்கு அவிச்சேதமே வேண்டுவது -என்கிறார்
(திவி வா புவி வா மமஸ்து வாஸோ நரகே வா நரகாந்தக பிரகாமம்
அவதீரிதா சாரதார விந்தவ் சரணவ் தே மரணே அபி சிந்தயாமி –முகுந்த மாலை ஸ்லோகமும் இதே போல் உண்டே
இங்கேயே பரமபதத்தில் உள்ளார் போல் மறப்பின்னை ஆகிற பெரும் செல்வம் வேண்டும் என்கிறார் சமத்காரமாக )

மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-

ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாகப் பரம பதத்திலே உன் திருவடிகளிலே அடிமை செய்கை யன்று எனக்கு தனம்
பரமபதத்தில் நீ இருக்கும் இருப்பை மறவாமை
பரமபதத்திலே போனால் அல்லது மறவாமை இல்லாமையாலே பரம பதமும் வேண்டினாராய்ப் பலித்தது

ப்ரக்ருதி ஸம்பந்தம் உடையார்க்கு வருமது நமக்கும் வாராதோ என்று பயப்படுகிறார்
ஊரடைய வெந்து கொண்டு வாரா நின்றால்
நம் அகம் ஒன்றும் பிழைக்கும் -என்று பயம் கெட்டு இருப்பார் உண்டோ –

பரமபதம் சென்று அங்கே நித்ய கைங்கரியம்பண்ணவேணுமென்கிற அளவற்ற ஆசையும்
மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்ததில் வருத்தமும் வெறுப்பும் ஆழ்வார்க்குப் பூர்த்தியாக இருக்கச் செய்தேயும்
இப் பாட்டில் இப்படி அருளிச்செய்வது ஒருவகைச் சமத்காரமே யென்க.

——————

(நித்யம் மறவாமை -என்று பிரார்த்தித்த மாத்திரத்தாலே -தத் அபிஷந்தி விராத மாத்ராத் –
பரமபத பிராப்தியும் -அதுக்கடியான கர்ம நிவ்ருத்திகளும் உண்டே
அத்தை இங்கே அருளிச் செய்கிறார்
அனுகூல்ய சங்கல்பம் மாத்திரத்தாலே பேறு அன்றோ
நமனும் உதகலனும் பேச கேட்கவே நரகமே ஸ்வர்க்கமாகுமே )

கீழே சில பாட்டுக்களாலே ஆச்சரியமாக பகவத்குணாநுபவஞ் செய்து வந்த ஆழ்வார்க்கு
இந்த ஸம்ஸார நிலத்திற்குரிய துன்பங்களின் ஸம்பந்தம் தோன்றத் தொடங்கிற்று;
தொடங்கவே, திருவுள்ளம் நொந்து பேசுகிறார்-;

மாடே வரப் பெறுவாராம் என்றே வல் வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார் -ஊடே போய்
பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து –59-

கீழ்ப்பாட்டில் மாடு என்பதற்கு செல்வம் என்று பொருள்;
இப்பாட்டில் அப்பதமே பக்கமென்ற பொருளில் வந்தது.
(“மாடு பொன்பக்கம் செல்வம்” என்பது நிகண்டு.)
வரப்பெறுவராமென்றே? என்ற சொல் நயத்தினால்,
இனி அவ் வாசைக்கு இடமில்லை;
வல்வினைகட்கு இனி நம்மிடத்தில் தங்க முடியாது- என்பது விளக்கப்பட்டதாம்.

(ஈஸ்வரனை ஒளிந்தவர் ரக்ஷகர் அல்ல என்று ப்ரபன்ன பரித்ராணத்தில் சொன்னோம்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்
கண்ணில்லை மற்ற ஓர் கண்ணே )

பேர்ந்து ஓன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன் துழாய் மாயனையே என்னெஞ்சே-பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லை காண் மற்றோர் இறை–60–

ஸம்ஸார ஸம்பந்தம் அறுமைக்கு எங்குப் புக்காலும் அவனை ஒழிய ஆஸ்ரயணீய தத்வம் இல்லை
அவனை அநு வர்த்தி-ஸ்வ தந்த்ரமாய்க் கெடிலும் கெடு –

——————-

லோக யாத்ரையை-ஆகாசத்தைப் பார்க்கையே லோக யாத்ரை – அனுசந்திக்கப் புக்காலும்
அவனை முன்னாக அல்லது காண மாட்டாமை சொல்லுகிறது

சிறியாச்சான் –
சப்தாதி விஷயங்களில் நின்றும் நாம் மீள மாட்டாதால் போலே
ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் நின்றும் மீள மாட்டார்கள் –என்று
நம் பிள்ளைக்குப் பணித்தான்

ப்ரஹ்மாதிகளுக்குப் பரம பதத்தில் இருக்கும் இருப்பு அனுபவிக்க நிலம் அன்று
உகந்து அருளின இடங்களிலே அனுபவிக்கும் அத்தனை

(நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள் -காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்
எங்கு இருந்தாலும் உத்பலா விமானம் பார்ப்பாள் பரகால நாயகி
நாமோ அங்கே இருந்தாலும் உத்பலா விமானம் தெரியாது )

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந் நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61-

எம்பெருமான் முன்பு உலகளந்தருளின காலத்திலே மேலுலகத்திலுள்ளறாரெல்லாருங்கூடி அப்பெருமானது திருவடியின் மேல்
புஷ்பங்களைத் தூவினார்களன்றோ; அந்தப்பூகஙகள் போன்றுள்ளன இந்த நக்ஷத்திரங்கள் என்று உத்பரேக்ஷித்தபடி.
நக்ஷத்திரங்கள் சிறமுல்லைப்பூக்கள் போலேயிருத்தலாலும், விஷ்ணு பதமென்னப்படுகிற ஆகாசத்திலே நிரம்பியிருக்கையாலும்,
ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே எப்போதும் உலகளந்த வரலாறு ஊன்றிக் கிடக்கையாலும் இங்ஙனே உத்ப்ரேக்ஷிக்கலாயிற்று.

————-

(த்ரிவிக்ரம அனுபவம் பின்னாட்டுகிறது இதிலும் )

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான் குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-

திரு வுலகு அளந்து தேவர்களுடைய துக்கத்தைப் போக்கினால் போலே
நம்முடைய ஸம்ஸாரத்துக்கு பரமான ஒவ்ஷதம்

—————

அவதாரம் முடித்து ஷீராப்தி அடைந்தது போல்
மேகம் திரும்ப வந்தது போல் என்றால் லிங்க குறை வரும்
படி -சொல் அத்யாஹாரம் தருவிக்க வேண்டிய குறையும் உண்டே
ராமனின் தன்மைக்கு மேகத்தின் தன்மை உவமானம் தன்மை படி
பரன் -வாய்மைத்து அஃறிணை கூடாதே வாய்மையன் வசனம் மாறாடிக்கொள்ள வேண்டுமே
மேகம் அவன் மீண்டால் போல் என்று நம்பிள்ளை நிர்வாகம் )

முன்னோர்கள் இப்பாட்டை இரண்டு மூன்று வகையாக அந்வயிக்கப் பார்த்தார்கள்;
தசரத சக்ரவர்த்திக்குத் திருமகனாகத் திருவவதரித்துக் தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்தடிந்து
அவதார காரியங்களைச் செவ்வனே தலைக்கட்டிக் கொண்டு மறுபடியும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்தானென்கிற  விஷயத்திற்கு ஓர் உபமானம் கூறுகின்றார் இப்பாட்டில்.
இதில் பின்னடிகளை உபமேய வாக்கியமாகவும் முன்னடிகளை உபமாக வாக்கியமாகவும் வைத்து வியாக்கியானித்தல் ஒருவகை; –
(அதாவது=) “அன்று திருச்செய்யநேமியான் தீயரக்கிமூக்கம் பரச்செவியுமீர்ந்தபரன்” என்றவளவும் உபமேய வாக்கியம்;
“பின்தூரக்குங் காற்றிழந்த ‘சூழ்கொண்டல் பேர்ந்தும் போய் வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்து”என்றவளவும் உபமான வாக்கியம்.
இதன் கருத்து யாதெனில்;- ஆழியங்கையனான பெருமான் சூர்ப்பணகாபங்கம் முதலான காரியங்களைச் செய்து முடித்து
மீண்டும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்ததானது எப்படியிருக்கின்றதென்றால்;
கடலில் மேகமானது காற்றுத் தள்ளத்தள்ள மேலே நடந்துகொண்டே சென்று, அந்தக் காற்று எங்கே ஓய்ந்து விடுகிறதோ
அங்கிருந்து (மேகம்) மேலே செல்லமுடியாமல் அந்தக்கடலிலேயே வந்து விழுந்திடுமே; அதுபோலேயிராநின்றது என்றபடி.
இக் கருத்து செவ்வனே கிடைக்கும்படியான சொல்தொடைகள் மூலத்தில் உளவோ என்று ஆராயவேண்டும்.
பாட்டின் முடிவிலுள்ள பான் என்பதை உபமேயமாகக் கொண்டால் இரண்டாமடியிலுள்ள வாய்மைத்து என்ற குறிப்புவினைமுற்றை
‘வாய்மையன்’ என மாற்றிக்கொள்ள வேண்டும். ‘வாய்மைத்து’ என்றிருப்பது பரன் என்ற உயர் திணைக்குச் சேராதிறே.
ஆகையாலே இப்படி யோஜித்து வியாக்கியானிப்பதில் குறையுண்டென்று மற்றொரு வகையான யோஜித்து வியாக்கியானிக்கப் பார்த்தார்கள்;
(அதாவது-) பாட்டின் முடிவிலுள்ள பரன் என்றபதத்தோடு ‘படி’ என்கிற ஒரு பதத்தை வருவித்துக் கூட்டிக்கொண்டு
“பரன்படியானது- வாய்மைத்து’ என்று அந்வயித்தால் திணை மாறாட்டம் செய்ய அவசியமில்லையே என்று பார்த்தார்கள்.
ஆனாலும் இந்த யோஜநையில் – மூலத்திலில்லாத “படி” என்கிறவொரு சொல்லை வருவித்துக் கூட்டிக்கொள்ளுதலாகிற
அத்யாஹாரமென்பதம் ஒரு குறைதானே என்று குறையுற்றிருந்தனர்;
இவ்விரண்டு குறைகட்கும் இடமில்லாதபடி நஞ்ஜீயர் ஸந்நிதியிலே நம்பிள்ளை விண்ணப்பம் செய்த போஜநை மூலத்தில் ஸ்வரஸமாக ஏற்படுகிறபடியே, “பின்துரக்கும் காற்றிழந்த சூல் கொண்டல்” என்பதே உபமேயம்.
கொண்டல் உபமேயம்-பிரகிருதி மண்டலத்தில் இருப்பதால் இங்கே கண் வைத்தாலும் பகவத் விஷய சம்பந்தம் இட்டே பார்க்கிறார்-
அவதார தூண்டுதல் -வேண்டித் தேவர்கள் இரக்க வந்து பிறந்ததும்-துஷ்ட நிக்ரஹம் இஷ்ட பரிபாலனம் தர்ம சம்ஸ்தாபனம்-
பிரார்த்தனை ஈடேறா நிற்க-தள்ளிக் கொண்டு வந்த காற்றை இழந்த காளமேகம் போலே-சூல் கொண்ட மேகம் -பூர்ண கர்ப்பமுடைய மேகம்-
இப்படி மேகத்தை உபமேயமாக நிறுத்தியே வியாக்யானம் செய்து அருளினார்

பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய்
வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று
திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும்
பருச் செவியும் ஈர்ந்த பரன்–63-

நம்பிள்ளை காட்டியருளின இந்த யோஜநையில் மூலம் ஒழுங்காக அந்வயிக்கப்பெறுவது தவிர, மேகத்தை உபமேயமாக நிறுத்தி
யுரைத்தலாகிற ஸவாரஸ்யாதிசயம் போற்றத்தக்கது. ஆழ்வார்க்கு லோக யாத்திரையும் பகவதநுபவத்திலே அந்வயிக்கிறதென்கைக்குப் பாங்கு.

—————–

உயர் திண் அணை ஓன்று -நான்கும் பரத்வ ஸ்வரூபம் –
பரத்வே பரத்வம் -தொடங்கி அர்ச்சா பரத்வம் ஈறாக எல்லா திசையிலும் –
மோக்ஷ பிரதத்வம் இருப்பதாலும் பரத்வம்
இதில் விபவ பரத்வம்
இங்கேயே பரத்வ ஸுலப்யாதிகள் அனுபவிக்கலாய் இருக்க பரமபதமும் வேண்டுமோ என்றபடி
மரா மரம் ஏழும் எய்த முதல்வாவோ மரம் இரண்டின் போன முதல்வாவோ -அங்கும் ராமகிருஷ்ண அவதார பரத்வம்
ஜடாயு மோக்ஷம் போன்ற சில இடங்களில் ராமனின் பரத்வம்
வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுள்ளே
அப்பூச்சி காட்டி -பரத்வம் வியக்தம் கிருஷ்ண அவதாரத்தில் )

பரனாம் அவனாதல் பாவிப்பராகில்
உரனால் ஒரு மூன்று போதும் மரம் ஏழு அன்று
எய்தானைப் புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
கை தான் தொழாவே கலந்து–64-

மனஸ்ஸாலே மூன்று போது அவன் பரன் என்று அனுசந்திப்பராகில்
ஆஸ்ரித விரோதி நிரஸனம் பண்ணினவனையே
அபிமானிகளான தேவர்களுடைய கையும் கலந்து தொழும் இறே
அபிமானத்தாலே தங்களோடு ஸஜாதீயனாக புத்தி பண்ணி அநர்த்தப் படுகிறார்கள் இறே

பாவிப்பாராகில் -என்கையாலே
அனுசந்தித்தால் தொழுவர்கள்
அநுஸந்தியாமையாலே தொழார்கள் என்றபடி –

மநுஷ்யாவதாரம் பண்ணின எம்பெருமான் திறத்திலும் பரத்வ புத்தியை யார் வஹிக்கின்றார்களோ அவர்களை அமரர்கள் கையெடுத்துக் கும்பிடுவார்கள்’

————

(துவாதச திருநாமங்கள் வரிசையிலே இப்பாசுரம் -கேசவன் நாராயணன் மாதவன்
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு-பல்லாண்டு பாட -ஆள்செய்ய -கைங்கர்யம் செய்ய தூண்டுகிறார் )

எம்பெருமான் விஷயத்திலே நல்ல பாசுரங்களை இடைவிடாது பேசிக்கொண்டேயிரு என்கிறார் இப்பாட்டில்.

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–65-

அபரிச்சின்னனாய் -(தொல் மாலை)
பிரசஸ்த கேசனாய் -(கேசவனை)
ஆஸ்ரித வத்ஸலனாய் -(நாரணனை) இருந்த
ஸ்ரீ யபதியை -(மாதவனை)
பரிமளம் மாறாத மாலையை எப்போதும் சூட்டும்படி தன்னைத் தாழ்த்துத் தரும் –

ஸ்ரீ ஸூக்தி –சொல் மாலை –மற்ற மாலைகளில் நின்றும் வ்யாவ்ருத்தமாக அன்றோ இருப்பது –

பூமாலையைத் தலைமேலணிந்து மகிழ்வது போல, இப்படிப்பட்ட அருளிச்செயல்களையும்
எம்பெருமான் தலைதுலுக்கிக்கொண்டாடுவன் என்பது தோன்ற ‘சூட்டு’ எனப்பட்டது.

உலகில் மாதர்கட்குப் பூமாலையினால் அழகு உண்டாவது போலே
எம்பெருமானுக்கு அருளிச் செயல்களினால் அழகு உண்டாகுமென்க.

————

(விரோதியைப் போக்குபவன் அன்றோ அவன் –
விரோதிகள் இருக்கவே பாடாமல் கைங்கர்யம் செய்யாமல் இழந்தோம்
அதுக்கும் மேல் இனியவர் போக்யன்
அதுக்கும் மேலே வகுத்த ஸ்வாமி -ப்ராப்யன்
ஆக இங்கும் நாம் கைங்கர்யம் செய்தே ஆக வேண்டும் என்பதுக்கு மூன்று காரணங்கள் )

(ராமன் -திருவாழி -சேருமோ என்னில் -பரத்வம் காட்டாதவன்
தேவேந்திரன் ஐராவதம் இருக்க ரிஷிகள் இடம் போகாதவன்
ஆத்மாநாம் மானுஷம் மன்யே தசாரதாத்மஜம் என்பவன் அன்றோ என்னில்
அது இயற்க்கை-எந்த ஆயுதமும் ஸூதர்சன அம்சம் தானே )

சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-

இது சிலருக்குச் சொல்லுமது அன்று-நெஞ்சே –இத்தைப் புத்தி பண்ணு

பகவத் விஷயமொன்றே நமக்கு உணரத் தக்கது-“சொன்னேன் அது” என்றது அர்த்த கௌரவர் தோற்ற-

——————

(அங்கு அது நன்று என்று அறிந்து -வானவர் நாடு தானே அது –
அமரர் நித்ய ஸூரிகள் நாடு தருவது மிகவும் எளிதே – –
உமக்குப் பெரு வீடு தந்தோம் என்பான் மகிழ்ந்து –
அத்தை விட்டு
கீழே இரண்டு பாசுரங்களில் சொல்மாலை சூட்ட பல ஹேதுக்களை அருளிச் செய்து
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவர் ஆகையால் அவர் துறையிலே இழிகிறார்
மங்களா சாசனத்தில் ஆழ்கிறார்
நின் புகழில் வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று கொடுக்கும் வான் )

அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-

அவனுக்கு அது தருகையில் குறை இல்லை
நம்முடைய ஆபி முக்யம் அரிது
ஆசைப்பட்டு போகை அரிது
காணானதை ஆசைப் பட்டாலும் தரும் என்றபடி

அது என்கையாலே
அதுக்குப் பிரதி கோடியாய் இது ஸம்ஸாரம்

ஸூலபனானவனுடைய திருவடிகளைக் கற்றாகிலும் வாழ்த்தப் பார்
அவன் உபய விபூதியும் தந்தாலும்
நீ அத்தை விட்டு அவனை மங்களா ஸாஸனம் பண்ணிப்
போது போக்குவதையே கல் என்றபடி –

———–

கீழ் அவனுடைய திருவடிகளை வாழ்த்துகை ஒழிய
போக மோக்ஷங்களை வேண்டா என்னும்படி தம்முடைய ஐக்யம் சொல்லுகிறது

(ஐக்யம் -உள்ளத்தில் கலந்தான் என்றபடி
அனைவர் உள்ளமும் இப்படி இருந்தாலும் உணர வேண்டுமே
அவனும் உபய விபூதியும் வேண்டாம்
உமது திரு உள்ளமே வேண்டும் என்கிறான்
பிரதான பாசுரம் இதுவே-இது ஸித்தித்துவிட்டால் பரமபதம் முதலியவற்றில் வாஸம் செய்வதில் ஆதரம் மட்டமாய் விடுமென்றும்
பெரியவராக இது அன்றோ ஹேது
அவன் தம்மிடம் வந்து மன்னி பொருந்தி -தீர்த்தம் ப்ரசாதியாமல் -இருக்கையாலே
அவனுக்கும் நமக்கும் உண்டான ஐக்யம் இப் பாட்டில் சொல்லுகிறது என்றபடி )

கீழ் மூன்று பாசுரங்களிலும் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு ஹிதம் உபதேசித்தார்.
அந்த உபதேசத்திற்கு நெஞ்சு உடன்பட்டிருந்த தன் பலன் உடனே கைபுகுந்தபடியை
இது முதல் மூன்று பாசுரங்களாலே பேசுகிறார்.

ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவரும் இரவில் பள்ளி கொள்ளும் போது இப் பாசுரத்தைப்
பலகால் அநுஸந்திக்க வேணுமென்பது பெரியோர்களின் உபதேசம்.

கல்லும் கனை கடலும் வைகுந்த வானோடும் புல்லென்று ஒழிந்தன கொல்-
என்கிற ஈரச் சொல் பாவியேனுடைய நம்முடைய வாயிலும் நுழைந்து புறப்பட பெறுவதே
ஆழ்வார்கள் அனுபவம் எங்கே நம்முடைய அனுபவம் எங்கே-ஏதோ பாக்ய விசேஷத்தால் நாமும் சொல்லப் பெற்றோமே-
இரவில் பள்ளி கொள்ளும் பொழுது ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுசந்திக்க வேண்டிய பாசுரம்

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–68-

வெல்ல நெடியான்
கடக்க நெடியான்
இனி நெடியான் இல்லை என்னும்படி நெடியவன்

வெல்ல
ஜெயிக்க எண்ணுதல் –
மிகவும் என்னுதல்

நிறம் கரியான்
குணங்கள் இல்லை என்னிலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவன்

உள் புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்தகம்
அடியேனுடைய ஹ்ருதயத்தினுள்ளே நீங்குவானாய் இருக்கிறிலன்
புறம் படி இவனைக் கிடையாது என்னும்படி இரா நின்றான்-மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்தவம் கூடு பூரிக்கும்

—————–

இவன் பண்ணின ஐக்யாந்தத்தாலே
சரீர ஆரம்பத்துக்கு அடியான பாபமும் போயிற்று என்கிறார்

(யதோ வாசோ நிவர்த்தந்தே -அவனது சீர்க் கடலையுமே அடக்கினேன் –
அவனே புகுந்து அனுபவிப்பிக்கிறானே )

எம்பெருமான் -மிகவும் அபிநிவேசத்தைப் பண்ணிக் கலந்து ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருப்பதால்-உண்டான ஹர்ஷத்தால் மார்பு தட்டி பேசி அருளுகிறார் இதில்–

அகம் சிவந்த கண்ணினராய் வல்வினை யாராவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திரு மால்
சீர்க் கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து –69-

மிகும் திரு மால் சீர்க் கடலை யுள் பொதிந்த
குணா நாமா கரோ மஹான் -என்று
அபரிச்சின்ன விஷயத்தைப் பரிச்சின்னம் ஆக்கினேன்

மிகும் திருமால் –மிகச் சிறிய என்னுள்ளே வந்திருக்கச் செய்தேயும் விசாலமான விடங்களிற்போல உடல் பூரிக்கின்ற திருமால்

———————

(ரக்ஷித்தாலும் விட்டாலும் உன்னை விடேன் -என்று அநந்யார்ஹத்வம் அருளிச் செய்கிறார் இதில்
வித்துவக்கோடு அம்மான் பதிகம் போல்
எதிரிகளை அதற்கும் -தரிசன மாத்திரத்தாலே அழியச் செய்யும் திரு அபிஷேகம் –
கண்ட மாத்திரத்திலே இவனே தேவ தேவன் -மூன்று முடிக்கு உரிய பேர் அரசு –
அழகால் ஈர்க்கும் –
ராஜாதி ராஜன் ஸர்வேஷாம் என்பதைக் காட்டும் –
ஸ்வாதந்த்ர அபிமானிகளை அழிக்கும் )

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதே யினி–70-

தர்சநீயமாய்-ஆதி ராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகத்தை யுடையவனை
இவ் வழகுக்கு வாசகமான அநேகம் திரு நாமங்களை யுடையவனை

ஸ்வரூப ப்ரதிபாத்யமான திரு நாமங்களை விட ரூப
அழகுக்கு ப்ரதிபாத்யமான திரு நாமங்கள் ஆழ்வாருக்கு உகந்தது

—————

(மாதா பிதா -என்றாலே காரணத்வம் பலிக்குமே
அடியேனுக்கு மட்டும் அன்றி ஸமஸ்த பிரபஞ்சத்துக்கும் த்ரிவித காரணமும் இவனே அன்றோ
பரத்வம் முதல் பத்து -இதுக்கு வேண்டிய மூன்றும்
காரணத்வம் இரண்டாம் பத்து –வியாபகத்வம் மூன்றாம் -நியந்த்ருத்வம் நாலாம் பத்து
நின்ற காரணம் பிரளயத்தில் இவன் ஒருவனே
தனி காரணம் ஒப்பில்லாத த்ரிவித காரணம்
அகில ஜகத் ஸ்வாமி -அஸ்மின் ஸ்வாமி
ஸ்ரீ ரெங்க நாத -மம நாத
என்று பரத்வமும் நீர்மையும் போல் இப்பாசுரம் )

ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அகப்பட உடம்பு கொடுத்தான் என்கிற நீர்மையைச் சொல்லிற்று ஆகவுமாம்
அவர்களுக்கு சத்தா ஹேதுவானான் என்கிற ஐஸ்வர்யத்தைச் சொல்லுகிறது என்றுமாம் –

பிரமனும் சிவனுங்கூட உன்னைப் பற்றி ஸ்தைப் பெற்றார்களென்னா நிற்க உன் பெருமை என்னாலே பேச முடியுமோவென்கிறார்.

இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
தனி நின்ற சார்விலா மூர்த்தி -பனி நீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின்னுந்தி முதல்–71-

பதிம் விஸ்வஸ்ய–விஸ்வத்துக்குப் பதியாயும்
ஆத்மேஸ்வரம்–தானே தனக்கு ஈஸ்வரனாயும் –
தனி நின்றும் சார்வு இல்லாமலும் –நான் மற்றொரு தெய்வத்தைச் சாராத மூர்த்தி
இது தானே மறையை தமிழாக அருளிச் செய்தது

நின்னுந்தி முதல்-நின் உந்தியிலே பிறந்து உலகுக்கெல்லாம் முதற்காரணமாயிருப்பவன்

————-

கீழில் பாட்டிலே
எல்லாருக்கும் ஆஸ்ரயணீயன் -என்று சொல்லிற்று
இதிலே
வேறு ஸமாஸ்ரயணீயராய் இருப்பாராம் சிலரும் உண்டாய் இருக்க
இவனே ஆஸ்ரயணீயன் என்று சொல்லும் படி எங்கனே என்ன
அல்லாதாருடைய மதங்களை உபஸ்த்தாபித்து தூஷித்து ஸ்வ ஸித்தாந்தத்தை அருளிச் செய்கிறார்

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –72-

மத்யே விரிஞ்ச கிரிஸம்–நீர்மையைக் காட்டி அருளவே இந்த அவதாரம் -பரத்வத்தை வருந்தியும் மறைக்க முடியாதே –

ஸ்ரீமந் நாராயணனொருவனே பரதத்துவமென்பது தோன்ற முதல்வா! என விளிக்கின்றார்

ஸகலதாபங்களும் ஆறும்படியான திருமேனி கொண்ட தெய்வமே பரதத்துவம் என்பது விளங்க நிகரிலகுகாருருவா! என்றும் விளிக்கின்றார்.

——————-

இவனே ஆஸ்ரயணீயன் என்று அறுதியிட்டால்
பின்னை அனுபவமே இறே உள்ளது

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண் தோறும் -பாவியேன்
மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று –73-

பூக்கின்ற’ என்ற விசேக்ஷணம்-எல்லாவற்றிலும் அந்வயம்

காண் தோறும் ” என்னுமளவே போதுமாயிருக்க, “என்றும் காண் தோறும்” என்றதென்னென்னில்;-ஓ! நாம் ப்ரமித்தோம்; இவை வெறும் புஷ்பங்களே யொழிய எம்பெருமானது திருவுருவமல்ல” என்று தெளிந்து கொண்டாலும்,
அடுத்த க்ஷணத்தில் இது மறந்து போய், பழைய ப்ரமமே அநுவர்த்திக்கும்;
இப்படியே ப்ரமிப்பதும் தெளிவதும், ப்ரமிப்பதும் தெளிவதுமாய் நித்தியம் செல்லுமென்பது தோன்றும்.

பிரான் உருவே என்று அறிவுடைய நெஞ்சு பூரிக்கை அன்றிக்கே –மெய் மிகவே பூரிக்கும்-உடம்பும் அகப் படப் பூரியா நின்றது

இங்கு ஆவி என்ற சொல்லால் நெஞ்சு-நெஞ்சும் உடம்பும் பூரிக்கிறதே என்கிறார்-

———-

சரீர பரிக்ரஹம் பண்ணி
ருசி பிறந்த பின்பு
அபேக்ஷித்தது
காலம் எல்லாம் இரந்தாராய்த் தோற்றுகிற படி
(ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ அன்றோ )

என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி –-74-

உபகாரம் அறியாத பசுக்களுக்கும் உதவுமவர் கிடீர் நமக்கு உதவாது ஒழிகிறார்

அவருக்கு நீர்மை இல்லை என்னப் போகாது இறே
மேடான இடத்தைப் புடையென்று சொல்வதுண்டாகையாலே-அவர் நீர்மை ஏறிப் பாயாததோர் இடம் தேடி எங்கே கிடந்தோம்-(புடை என்று குஹையாய்-அவன் கடாக்ஷ குஹையிலே கிடந்தோம் என்றபடி

—————

(நம் பெரியவர் என்று பிராட்டியும் அவனும் அபிமானிக்கும் படி அன்றோ-நமது ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
என்னை நினைத்து தவிக்க வைத்தேனே என்று அவன் சமாதானம் செய்ய
சமாதானம் அடைந்து ஹ்ருஷ்டராய் நான் பெரியன் என்று லோக ப்ரஸித்தம்
நீ பெரியை என்பதனை யார் அறிவார் –
என்னுள்ளம் புகுந்து அன்றோ நீ சத்தை பெறுகிறாய்
என்று தாமே சொல்லிக் கொள்ளும் படி பண்ணி அருளுகிறார் )

உமக்கு என்றும் உதவிலோமாக நீர் சொல்லுவான் என்
உருக் காட்டிற்று இல்லையே என்று வெறுக்கும் படி உம்மைப் பண்ணினோமே -என்ன
அத்தை அனுசந்தித்து
என்னோடே ஒப்பார் உண்டோ என்கிறார்

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு–75-

ஸ்ரீ ருக்மிணி தேவி புவந ஸூந்தர காதின் வழியே புகுந்து உள்ளே புகுந்தாய் என்றாள் அன்றோ

விஸ்வம் பர பரா -ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் -சமக்யா பந்ததி -ஆழ்வாரை இப் பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார்

யான் பெரியன் –தனி வாக்யமாகவும்
நீ பெரியை என்பதனை யார் அறிவார் –என்பதனை தனி வாக்யமாகவும்-கொண்டு உரைக்கப் பட்டது

இங்ஙனன்றியே இரண்டையும் சேர்த்து ஏக வாக்கியமாகவே –
‘நான் பெரியவனோ நீ பெரியவனோ, இதைப் பிறரால் அறியப் போகாது; நீ தான் ஆராய்ந்து அறிய வேணும்’ என்கை.

—————-

ஸ்ரவண ஞான அனந்தர பாவியான மனனத்தைச் சொல்லுகிறது –

உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப் படலம்
விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால் உள்ள
உலகளவும் யானும் உளனாவன் என் கொலோ
உலகளந்த மூர்த்தி உரை –76-

உன்னை அனுசந்திக்கில் ஸ்த்தூலமான தேகம் போலே அமூர்த்தமான ஹ்ருதயம் தடியா நின்றது

உள்ள உலகளவும் யானும் உளனாவன் என்கொலோ
வியாபக தத்வம் இரண்டு ஆகிறது போலே
வியாபகத்வம் இரண்டு ஸ்வரூபமம் ஞானமும் -அவனைப் போலவே ஆனதே -ஸ்வரூப வியாப்தி அவனது- ஞான வியாப்தி இவரது

உலகத்தையெல்லாம் பூரிக்க வல்லதாம்படி உடல் தடிக்குமளவு ஆநந்தத்தை அடைந்திடுவேனன்றோ என்றவாறு.

—————–

அறியாதே நன்று என்று பிரமித்து
வேறே சிலர் உற்றார் என்று இருக்கும் அத்தனை இறே
விமர்த்த ஸஹரான-(பாதக ஸஹர் )- பந்துக்கள் வேறே உண்டோ என்கிறது –

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பெல்லாம்
நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றி யாகும் துணை–77-

“பிரானே! நீ தவிர வேறுயாரும் எனக்க உறவினரல்லர்;
ஸகலவித பந்துவும் எனக்கு நீயே காண்” என்கிறார்.

சாஸ்த்ரங்களில் எம்பெருமான் அடியார்களை நோக்கிப் பிரதிஜ்ஞைபண்ணி எந்தெந்தத் துணையாகத்தான் ஆவதாக அருளிச் செய்திருக்கிறானோ அவற்றை யெல்லாம் கருதி “உரைப்பெல்லாம்” என்கிறார்.

————-

முதல் ஆழ்வார்கள் அயோனிஜர் -மூன்று திருவந்தாதிகள்
நான்முகன் திருவந்தாதி
பெரிய திருவந்தாதி
இந்த ஐந்தும் அர்த்த பஞ்சகம் -பரத்வாதி பஞ்சகம் சொல்ல வந்தவை என்றும் கொள்ளலாமே )

கீழ் உற்றார் இல்லை என்றது
உற்றார் உண்டாகிலும்
ஸம்ஸாரம் இனிதாகிலும்
உன் அனுபவத்தை ஒழியப் புறம்பு உண்டோ -என்கிறார் –

துணை நாள் பெருங்கிளையும் தொல் குலமும் சுற்றத்
திணை நாளும் இன்புடைத்தா மேலும் -கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக வுண்–78-

நல் நெஞ்சே-ஸோபாதிக பந்துக்களுக்கும்-நிருபாதிக பந்துக்களுக்கும் வாசி யறியும் எம்பெருமானைப் பற்று என்று-சொல்லப் பாங்கான நெஞ்சு -என்னவுமாம்

கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை–ஓவாத ஊணாக வுண்
என்றும் ஆஸ்ரிதர் கார்யம் மாறாதே செய்து போருமவருடைய கல்யாண குணங்களை-விச்சேதம் இல்லாத போகமாக புஜி

ஸோத்ரைவ ஹநச்த ஹநுமாந் பரமாம் விமுக்திம் புத்த்யாவதய சரிதம் தவ ஸேவதேஸௌ.” என்று அதிமாநுஸ்தவத்திலே
ஆழ்வானருளிச் செய்தபடி சிறிய திருவடி இன்றைக்கும் ஸ்ரீராம குணாநுபவமே போதுபோக்காக இருப்பதுபோல் ஆழ்வார்தாமும் ஆசைப்படுகிறாராய்த்து.

ஓவாத– ஒரு க்ஷண காலமும் விட்டு நீங்காத ஊண்– உணவு “பாதேயம் புண்டரீகாக்ஷ நாமஸங்கீர்த்தநாம்ருத” இத்யாதிகளை நினைப்பது.

——————

உண்ணாட்டுத் தேசன்றே ஊழ் வினையை யஞ்சுமே
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-மண்ணாட்டில்
ஆராகி என் இழிலிற்று ஆனாலும் ஆழி யங்கைப்
பேராயற்கு ஆளாம் பிறப்பு –79-

தேவத்மும் நிந்தை யானவனுக்கு-ஒளி வரும் ஜனிகள் போலே-ப்ரஹ்ம ஜன்மமும்
இழுக்கு என்பார்க்கு பண்டை நாளில் பிறவி உள் நாட்டு தேசு இறே–ஆச்சார்ய ஹிருதயம்-81-

பரம பதத்தில் பகவத் கைங்கர்ய அனுகுணமாக பரிக்ரஹிக்கும் தேஹத்தோபாதி
சேஷ வஸ்துவான ஆத்மாவுக்கு இதுவும் தேஜஸ் கரம் என்று கருத்து
ச ஏக பவதி இத்யாதி போல் அங்கு கைங்கர்யத்துக்கு எடுத்துக் கொள்ளும் பிறப்புக்களில் ஒன்றே இதுவும்

பகவத் அனுபவ யோக்கியமான ஜென்மமே வேண்டுவது
இதுக்குப் புறம்பான ஜென்ம வ்ருத்தங்கள் அப்ரயோஜகங்கள்

அணைய ஊர புனைய-அடியும் பொடியும் பட -பர்வத பவனங்களிலே-ஏதேனுமாக ஜனிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை
பெரு மக்களும் பெரியோரும் பரிக்ரஹித்து பிரார்த்திப்பார்கள் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி

—————

(கீழே ஐஸ்வர்யாதிகள் வேண்டாம்
இதில் கைவல்யமும் ஜரா மரண மோக்ஷம் (ஸ்ரீ கீதை -7 )கிடைத்தாலும் பொருட்டாக எண்ண மாட்டேன்-அவனை மறந்து ஒரு க்ஷணமும் தரியேன் என்கிறார் )

பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் -மறப்பெல்லாம்
ஏதமே என்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்–80-

ஜராமரணமோக்ஷாய மாமாச்ரித்ய யதந்தி யே” என்று பகவத்கீதையில் (7-39) சொல்லியிருப்பதை அடியொற்றி,“பிறப்பிறப்பு மூப்புப் பிணி துறந்து” எனப்பட்டது. இறக்கவும்– மிகவும்; அளவில்லாமல் என்கை).

————-

(குண அனுபவ யோக்யதை பகல் -அயோக்யதை இரவு
குண அனுபவம் ஒழியாமல் இருக்கும் படி பண்ணி அருளினான்
அஹோராத்ர புஷ் கரணி -பகல் இரா இல்லாதது உண்டே )

எம்பெருமான் அனுக்ரஹம் அல்லும் பகலும் தம் மேல் விழுந்த படியை-அனுசந்தித்து ஹிருஷ்டர் ஆகிறார் –உபேஷிக்காமல் நிர்ஹேதுக கிருபையால் செய்து அருளுவதை தெரிவிக்கிறார்–

பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுது மாள்வர்-தகவாத்
தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
செழும் பரவை மேயார் தெரிந்து–81

பகல் போது போக்குவது ஓன்று
இரா வைகும் போது போக்குவது ஓன்று என்று பாராதே
எல்லாப் போதும் ஒரு போகியாகத்
தம்முடைய குணங்களாலே
எடுப்பும் சாய்ப்புமாக யுத்தம் பண்ணி இரண்டு போதும் ஆள்வர்

(மோஹன அஸ்திரம்- மயங்கி தூங்க வைத்து -அவன் இடம் ஈடுபாடு
ஜ்ரும்பனாஸ்திரம் -சிற்றம் சிறு காலை எழுந்து மற்றவர்களை எழுப்புகிறாள் )

அம்பு பட்ட புண்ணுக்கு மருந்து உண்டு
குணத்தால் ஈடுபட்ட புண்ணுக்கு மருந்து இல்லை இறே

————–

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால்-
விவேக உணர்ச்சி-சிறிதும் இல்லாமையினாலே-
1-உணர்வு இன்மையால்
2-உணர்வு ஓன்று இன்மையால்
3-தெரிந்து உணர்வு இன்மையால்
என்று மூன்று படியாக யோஜிக்க வேணும்
தேகாத்மா விவேகம் இல்லாமை -உணர்வு இன்மை
சேஷ வஸ்து ஆத்மா என்று அறியாமை -உணர்வு ஓன்று இன்மை
பாகவத சேஷத்வம் அறியாமை -தெரிந்த உணர்வு இன்மை

அது பத்து-இது எட்டு-என்னும் ஞானம் இத்தனை அல்லது
பகவத் விஷயத்தை ஆராயும் ஞானம் ஒன்றும் இல்லாமையால்
தத் ஞானம் அஞ்ஞானம் அதோந்ய துக்தம்
வித்யாந்யா சில்பநை புணம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்னும் ஞானம் யுண்டாகையால்

பெருமாள் மாய மானை எய்து மீண்டு எழுந்து அருளுகிற போது
அடிக் கொதித்து நடக்க மாட்டாமை தளிர்களை முறித்திட்டு அதின் மேலே எழுந்து அருளினார் -என்று-ஒருவன் கவி பாடவும்
எம்பெருமானார் கேட்டு அருளி
மாறி இடுகிற திருவடிகளிலே என் தலையை வைக்கப் பெற்றிலேன் -என்று அருளிச் செய்தார்

———–

அயர்ப்பாய் அயயர்ப்பாய் நெஞ்சமே சொன்னேன்
உயப்போம் நெறி யிதுவே கண்டாய் -செயற்பால
வல்லவே செய்கிறுதி நெஞ்சமே யஞ்சினேன்
மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து –83-

அயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகல வேண்டா-பயப்படாமல் வாழ்த்து என்றபடி –

நம்முடைய தோஷங்களை போக்குவதற்கு மங்களா சாஸனமே ஒரு வழி என்றவாறு

———-

(மனஸ்ஸூ ஒத்துழைத்தால் தானே கைகளைக் கூப்புவோம் –
தலையைத் தாழ்த்துவோம் -திருவடிகளில் பூ புனைவோம் -வாயால் ஏத்துவோம்
ஆகவே இவற்றை அதுக்கே உபகரணமாகக் கொண்டு அருளிச் செய்கிறார்
ஆழ்வாருக்கு சத்தையே இவைகள்
நமக்கும் இப்படியே இருக்க வேண்டும் என்று நெஞ்சை வியாஜ்யமாகக் கொண்டு உபதேசிக்கிறார் )

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–84-

அவனை வாழ்த்தி அவன் திருவடிகளிலே பூக்களைப் புனைந்து
உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே
(தமது கைகளை திருக்கைகள் என்று வெறுப்பால் அருளிச் செய்கிறார் )

பாழ்த்த விதி என்று
தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம்
பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்

இத்தால்- மனமொழிமெய்களென்னும் மூன்று காணங்களும் பகவத் விஷயத்தில் ஊன்றிக் காரியம் செய்யப்பெறாவிடில்
தாம் தரித்திருக்க முடியாமையைப் பேசினாராகிறார்.

————-

பகவத் விஷயத்திலே எடுப்பும் சாய்ப்புமாய் இன்னாதாகா இன்னாதாகா நிற்கச் செய்தே
லோக யாத்திரையை அனுசந்தித்து -மேகத்திலே கண் வைக்கை –
அங்கும் அதுவேயாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –

(ஓடிக் கொண்டே தபஸ்ஸூ பண்ணிட்றே
நின்றாலே நமக்கு த்யானம் வரவில்லையே
என்ன மாயம்
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்டி அங்கும் எடுப்பும் சாய்ப்புமாகவே உள்ளதே
இவன் ஒருவனே இன்னம் கார் வண்ணன் –
வெளுக்காமல் இருக்கவே தபஸ்ஸூ பண்ணுகிறதோ)

தங்கா முயற்றிய வாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத் தவம் செய்திட்டன கொல் -பொங்கோதத்
தண்ணம் பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய
கண்ணன் பால் நல் திறம் கொள் கார்–85-

என் கண்ணனுடைய விலக்ஷண நிறத்தைக் கொள்ளுகிற மேகங்கள்
எவ்விடத்தே புக்கு என்ன தபஸ்ஸூ பண்ணிற்றினவோ

———–

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

கார் கலந்த மேனியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ ராமாயணம்
கை கலந்த வாழியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ பாகவதம்
பார் கலந்த வல் வயிற்றான் சீர் கலந்த சொல் –இதிஹாசங்கள் புராணங்கள்
பாம்பணையான் -சீர் கலந்த சொல் -அருளிச் செயல்கள்
சீர் கலந்த சொல்–திரு நாமங்கள் என்றுமாம்

கார் கலந்த மேனியான் சீர்கலந்தசொல்–இராமபிரானைச் சொல்லும்போது** =மேகச்யாமம் மஹாபாஹும்” என்று முன்னே
நீலமேகவடிவுடைபவ னென்கையாலே, கார் கலந்த மேனியானென்று இராமபிரானைச் சொல்லிற்றாய்,
அவனுடைய சீர்கலந்த சொல்- ஸ்ரீராமாயணம் என்றபடி.

(கைலந்தவாழியான் சீர்கலந்த சொல்.) ***- ஜாதோஸி தேவதேவேச சங்கசக்ரகநாதா!” என்று கண்ணபிரான் திருவவதரிக்கும்போது
கையும் திவ்யாயுதமுமாக திருவவதரித்தனனாதலால் கைகலந்தவாழியனென்று கண்ணபிரானைச் சொல்லிற்றாய்,
அவனுடைய சீர்கலந்த சொல்- ஸ்ரீபாசுவதம், ஸ்ரீமஹாபாரதம், ஹரிவம்சம் முதலியனவென்க.

(பார்கலந்தவல்லவயிற்றான் சீர் கலந்த சொல்.) பிரளயகாலத்திலே எம்பெருமான் உலகங்களையெல்லாம் திருவயிற்றினுள்ளே
வைத்துக் காத்தருளினபடியைப் பேசுகிற புராணங்கள்.

(பாம்பணையான் சீர் கலந்த சொல்.) பாம்பணையான் என்று அரவணைமேற் பள்ளிகொள்ளும் அணியரங்கநாதனைச் சொல்லுகிறது;
அவனுடைய சீர்கலந்த சொல்- திருவாய்மொழி; “வான் திகழுஞ் சோலைமதிளரங்கர் வான்புகழ்லோன்ற தமிழ் மறைகாளியதரமும்”
(திருவாய் மொழியின் தனியன்) என்கிறபடியே திருவாய்மொழியாயிரமும் ஸ்ரீரங்கநாதன் விஷயமென்று
நம் ஆசாரியர்கள் அருளிச் செய்கையாலே பாம்பனையான் சீர்கலந்த சொல்- திருவாய் மொழியாம்;

ஆக, ஸ்ரீராமாயண பாரதாதி இதிஹாஸங்களைக் கொண்டும் ஸ்ரீவிஷ்ணுபுராணம் முதலிய புராணங்களைக் கொண்டும்,
திருவாய்மொழி முதலிய அருளிச் செயல்களைக் கொண்டும் பாவத்தைப் போக்கிக் கொள்ளார்களாகில் போகட்டும்;
போதைப் போக்குவதற்கு இவையொழிய வேறொன்றும் ஸாதநமல்ல என்றாராயிற்று.

————-

லோகத்தாரைக் கொண்டு கார்யம் இல்லை இறே
நீ
முன்னம் எப்போதும் இத்தையே சொல் -என்று
நெஞ்சுக்கு உபதேசிக்கிறார் –

(பயனன் றாகிலும் பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-

ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லையோ என்னில் –
க்ருத்ஸ்நாம் வாப்ருதிவீம் தத்யான்ன தத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே-
பஞ்சாசத் கோடி விச்தீர்ணையான பூமியும் சத்ருசமம் அல்ல என்று இறே சாஸ்திரம் –
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது அங்கும் இங்கும் -என்கிறபடி முமுஷு திசையிலும் முக்தி திசையிலும்
இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
உபகாரம் அதுக்கு பிரத்யுபகாரம் தேடுகையிலே மூட்டும் -உபகார கௌரவம் -பிரத்யுபகாரம் இல்லாதபடி பண்ணும் –
அதுக்கு சத்ருச பிரத்யுபகாரமாக வேணும் –
அது உண்டாகில் இறே இவன் பண்ணலாவது-இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
இவன் திருத்தித் தருகையாலே ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு ஆத்ம சமப்பர்ணம் பண்ணலாம் –
இவன் தானே திருத்தினவற்றை இவனுக்குச் கொடுக்கை சத்ருசம் அன்றே –
ஸ்ரீ ஆச்சார்யர் திருத்தி ஸ்ரீ பகவான் இடம் கொடுக்கையாலே ஆத்மா ஆச்சார்யர் சொத்து ஆகி விட்டதே –
அதனாலே அத்தை ஸ்ரீ பகவானுக்கு சமர்ப்பிக்கலாம் -ஸ்ரீ ஆச்சார்யருக்கு முடியாதே என்றபடி )

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-

ஈதே சொல்
கீழே சீர் கலந்த சொல் -என்பதாகவுமாம்
அல்லது சொல்ல முயல் -என்ற இப்பாசுரம் சொல்லவே அமையும்

திவ்யாயுதங்களை எப்போதும் தரித்திரா நிற்கும் பெருமானுடைய
பரமபோக்கியமான திருவடிகளை ஏந்துவதற்கு உத்ஸாஹப்பட்டுக் கொண்டிருப்பதே
உனக்கு எப்போதும் காரியமாகக் கடவதென்று நெஞ்சுக்குரைத்துத் தலைகட்டினாராயிற்று.

எப்போதும்’ என்பதை நான்காமடியிலே கூட்டி உரைக்கவுமாம் ‘எப்போதும் ஏத்த முயல்’ என்று

மொய்கழலே ஏத்து” என்னாதே “ஏத்த முயல்” என்கையாலே, பகவத் விஷயத்தை ஏத்திக் கரை காண்பதென்பது இல்லை,
ஏத்தவேணும் ஏத்தவேணும் என்கிற உத்யோக நிலைமையை எப்போதுமிருக்கும் என்பது காட்டப்பட்டதாம்

கீழ்ப் பிரபந்தமாகிய திருவாசிரியத்திற் போலவே இப்பிரபந்தத்திலும்
தம் திருநாமிட்டுக் கவிபாடுதல், பிரபந்தாத்யயநத்திற்குப் பலன் சொல்லுதல் முதலியவற்றை விட்டருளினர்; நிர்ப்பந்தமில்லாமையாலே.

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கேசவாதி திரு நாமங்களின் மஹிமை —

April 29, 2023

ஸ்ரீ தாயாருடைய பன்னிரு திருநாமங்கள்
1- ஸ்ரீ -பெரியபிராட்டியார்
2- அம்ருதோத்பவ -அம்ருதவல்லித் தாயார் சோளிங்கர்
3-கமலா -கமலாவல்லித் தாயார் உறையூர்
4-சந்த்ர ஷோபநா -பரிமள வல்லித் தாயார் இந்தளூர்
5-விஷ்ணு பத்நீ –வஞ்சுள வல்லித் தாயார் -திருநறையூர்
6-வைஷ்ணவீ -யதுகிரி நாச்சியார்
7-வரரோஹா -ஸ்ரீ வரமங்கத் தாயார்
8-ஹரிவல்லபா -கோதா நாச்சியார்
9-சார்ங்கிணீ -கோமள வல்லித் தாயார்
10-தேவ தேவிகா –பெரும் தேவித் தாயார்-காஞ்சிபுரம்
11-ஸ்ரீ மஹா லஷ்மி -பத்மாவதித் தாயார்
12-லோக ஸூ ந்தரீ –ஸுந்தரவல்லித் தாயார் -திரு நாகை

————–

ஸ்ரீ பன்னிரு திருநாமப் பாடல்கள்

 ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி:2.3.1-13

 ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய்மொழி: 2.7.1-13

———–

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி 2-3 -ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

(பன்னிரு திரு நாமப் பதிகம் இது
இதே போல் கேசவன் தமர் –2-7-திருவாய் மொழியும்
கலியனும் )

அவதாரிகை –
கீழில் திருமொழியில் –
இவனுடைய பால்ய அனுகுணமாக முலை உண்கையை மறந்து கிடந்து
உறங்குகிறவனை எழுப்பி -முலை உண்ண வேண்டும்  என்று அபேஷித்து-
அவன் இறாய்த்து இருந்த அளவிலும் விடாதே -பஹுமுகமாக நிர்பந்தித்து –
யசோதை பிராட்டி முலை ஊட்டின பிரகாரத்தை –
அவளுடைய ப்ராப்தியையும் ( மாத்ரு பாவநா ) சிநேகத்தையும் உடையராய் கொண்டு –
தத் காலம் போலே அவனைக் குறித்து பேசி அனுபவித்து இனியரானார் –

அவள் அவனுக்கு
1-காது குத்தி –
2-காது பெருக்கி –
3-காது பணிகளும் இட்டு அனுபவிக்க ஆசைப்பட்டு –
காது குத்துகையாகிற உத்சவத்துக்கு -ஊரில் பெண்களை எல்லாம் அழைத்து விட்டு –
வந்தவர்களை சம்பாவிகைக்கு ஈடான பதார்த்தங்களும் சம்பாதித்து வைத்து –
அவனை-காது குத்த -என்று அழைக்க

அவன் -நோம் -என்று அஞ்சி -மாட்டேன் -என்னச் செய்தேயும் –
(இது நோவு அறிகிற பருவம்
கீழே முலை உண்ணாமல் உறங்கினான் )
அவன் அஞ்சாதபடியான வசனங்களைச் சொல்லியும் –
அவனுக்கு அபிமதமான பதார்த்தங்களை காட்டியும் உடன் படுத்திக் கொண்டு –
காது பெருக்கின பிரகாரத்தை –
தாமும் அவளைப் போலே அனுபவிக்க ஆசைப்பட்டு –
தத் அவஸ்த ஆபந்னராய் கொண்டு –
தத் காலம் போலே அவனைக் குறித்து
அப் பாசுரங்களைப் பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிறார் இத் திருமொழியில் –

——————————–

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரும்  இல்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் – 2-3 1- –

பதவுரை

பாடு உடைய–பெருமையை உடைய-ஸூவ ஜன ரக்ஷண பரிவை உடைய –
நின் தந்தையும்–உன் தகப்பனும்
போய்–(வெளியே) போய்
தாழ்த்தான்–(திரும்பி வருவதற்குத்) தாமஸித்தான்;
பொரு திறல்–போர் செய்யுந் திறமை யுள்ள
கஞ்சன்-கம்ஸனோ
கடியன்–(உன் விஷயத்தில்) மிகவும் க்ரூரனாயிராநின்றான்;
கடல்–கடல் போன்ற (ச்ரமஹரமான)
வண்ணா–வடிவை யுடையவனே!
உன்னை–உன்னை
காப்பாரும்–பாதுகாப்பவரான வேறொருவரும்
இல்லை–(இங்கு இப்போது) இல்லை;
(நீயோவென்றால்)
தனியே போய்–அஸஹாயனாய்ப் போய்
எங்கும்–கண்ட விடங்களிலும்
திரிதி–திரியா நன்றாய்;
பேய்–பூதனையினுடைய
முலை பால்–முலைப்பாலை
உண்ட–உட்கொண்ட
பித்தனே–மதி மயக்கமுள்ளவனே!
கேசவ-கேசவனே!
நம்பி–பூர்ணனானவனே!
உன்னை காது குத்த–உன் காதுகளைக் குத்துவதற்காக
ஆய் பாலர்–இடைச்சியர்களாகிய
பெண்டுகள் எல்லாரும்–எல்லாப் பெண்களும்
வந்தார்–வந்திரா நின்றார்கள்;
நான்–நானும்
அடைக்காய்–(அவர்களுக்கு ஸம்பாவிக்க வேண்டிய) வெற்றிலை பாக்குகளை
திருத்தி வைத்தேன்–ஆய்ந்து வைத்திருக்கிறேன்.

போய் இத்யாதி –
பாடுடைய நின் தந்தையும் -போய் -தாழ்த்தான் -புத்திர  ரஷணத்திலும் ஸுவ ஜன ரஷணத்திலும் –
இடமுடைய நெஞ்சை உடையனான -உன்னுடைய பிதாவும் -பசுக் கடையிலே சென்று வருகிறேன் –
வரும் அளவும் நீ பிள்ளையை ரஷித்துக் கொள் -என்று போய் வரவு தாழ்த்தான் –

அன்றிக்கே –
போய் -என்ற இது –
மிகுதிக்கு வாசகமாய் -(போய்ப்பாடு-மிகுதியான பாடு -ரக்ஷணம் )
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணத்தில் மிகவும் அளவு உடையனாய் –
கூர்  வேல் கொடும் தொழிலன் -என்கிறபடியே நீ பிறந்த அன்றே தொடங்கி-
வேலைப் புகர் எழ கடைந்து பிடித்து -தொட்டில் கீழே ஒரு எறும்பு ஊரிலும் –
சிம்ஹத்தின் மேலே சீறுமா போலே சீறி -உன்னை நோக்கிக் கொண்டு திரியும்
பிதாவானவனும் கார்யார்தமாக போன இடத்தே விளம்பித்தான் என்னவுமாம் –

பொரு திறல் கஞ்சன் கடியன் –
பொருகையில்  மிடுக்கை உடையனான கம்சன் -உன்னளவில் மிகவும்
க்ரூரன்-உன்னை நலிகைக்கு இடம் பார்த்து திரிகிறவன் ஆகையால் –
ஆரை வரவிடும் -எது செய்விக்கும் -என்று தெரியாது –

காப்பாரும் இல்லை –
அதுக்கு மேலே விரகு அறிந்து -ரஷிக்க வல்லாரும் இங்கு இல்லை –
ரஷகரான அவர் வந்திலர் –
நானோ அபலை -வேறோர் பரிவர் காண வில்லை -யார்தான் ரஷிப்பார்

கடல் வண்ணா உன்னை –
தன்னேராயிரம் பிள்ளைகள்-என்கிறபடியே -இவ்வூரிலே திரிகிற அநேகம்
பிள்ளைகளுக்கு உள்ளே நானும் ஒருவனாய் திரியா நின்றால்
என்னை  அவர்கள் அறிய புகா நின்றார்களோ என்றால்-
என்னை அவர்கள் அறியப் புகா நின்றார்களோ என்று – நீ நினைக்க வேண்டா –
கடல் போலே ஸ்ரமஹரமாய் இருக்கிற உன் வடிவழகே உன்னை காட்டிக் கொடாதோ –
இப்படி இருக்கிற உன்னை உணர்ந்து ரஷிப்பாரும் இல்லை -என்னுதல்-

ஒரு விரோதிகளே இல்லை ஆயினும் -அஸ்த்தானே பய சங்கை  பண்ணி
மங்களா சாசனம் பண்ண வேண்டும்படியான அழகு உடைய உன்னை –
விரோதி பூயிஷ்டமான இவ்விடத்தில் பரிவராய் ரஷிப்பார் யாருமில்லை என்னுதல் –

தனியே போய் எங்கும் திரிதி –
பிள்ளைகள் தன்னோடு திரிகிறாய் என்னவும் ஒண்ணாதபடி –
அவர்களையும் விட்டு தனியே போய் எங்கும் சஞ்சரியா நின்றாய்
அவர்கள் தன்னோடு கூடப் போனால் தான் பிரயோஜனம் என்-

பேய்ப் பால் முலை உண்ட பித்தனே –
பேயானவள் தாய் வடிவை கொண்டு வர -அவளைத் தாயாகவே நினைத்து –
அவள் முலைப்பாலை இருந்துண்ட  பிராந்தன் நீ அல்லையோ –
ஆகையால் -மாயா ரூபிகளான அசுரர்கள் ஒக்க வடிவுடைய
பிள்ளைகளோடு ஒத்த வடிவைக் கொடு வந்து கலசி நின்றாலும் -அவர்களை பிள்ளைகளோ பாதி
தோழன் மாறாக நினைப்பான் ஒருவன் இறே நீ என்கை

கேசவ நம்பீ –
இப்படி நீ என் செய்ய பயப்படுகிறது -நான் கேசவ நம்பி அன்றோ -என் கையிலே
கேசி பட்டது அறியாயோ என்று -தன் ஸௌர்ய பூர்த்தியை காட்ட –
அத்தை (அந்த பயத்தை ) அவ்வளவிலே விட்டு –
தான் உபக்ரமித்த கார்யத்தில் புரிந்து –

நானே அன்று காண்-
உன்னைக் காது குத்துவதாக ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்கள்-
வந்தவர்களை சம்பாவிகைக்கு ஈடான அடைக்காய் முதலானவையும் நான் திருத்தி வைத்தேன் –
ஆன பின்பு நீ காது குத்தும்படி வர வேணும் -என்கிறாள் –

——————————————

வண்ணப் பவள மருங்கினில் சாத்தி மலர் பாத கிண் கிணி ஆர்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே -திரியை எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகு உடைய கனகக் கடிப்பும் இவையா -2 3-2 – –

பதவுரை

நண்ணி தொழுமவர்–கிட்டி வணங்குகின்றவர்களுடைய
சிந்தை–மநஸ்ஸில் நின்றும்
பிரியாத–விட்டு நீங்காத
நாராயணா–நாராயணனே!
(நீ)
வண்ணம்–(மிக்க செந்) நிறத்தையுடைய
பவளம்–பவழ வடத்தை
மருங்கினில்–திருவரையிலே
சாத்தி–சாத்திக் கொண்டு
மலர்–தாமரை மலர் போன்ற
பாதம்–பாதங்களிலணிந்த
கிண் கிணி–சதங்கை
ஆர்ப்ப–ஒலிக்கும்படி
இங்கே வாராய்
(உன் மேல் அன்பில்லாதவர்களுக்கு)
எண்ணற்கு அரிய பிரானே–நினைப்பதற்கு அருமையான ஸ்வாமியே!
திரியை–நூல் திரியை
எரியாமே–எரிச்சலுண்டாகாதபடி
காதுக்கு-(உன்) காதுகளுக்கு
இடுவன்–இடுவேன்;
(அப்படித் திரியை யிட்டுக் காது பெருக்கினால் பின்பு நீ அணிய வேண்டியவையான)
கண்ணுக்கு நின்றும் அழகு உடைய–கண்களுக்கு மிகவும் அழகை யுடைய (தர்ச நீயமான)
கனகம் கடிப்பும்–பொற் கடிப்பும்
இவை–இவையாகும்;
ஆ–ஆச்சர்யம்.

வண்ணம் இத்யாதி –
ஆகரத்தில் பிறக்கையாலே நிறம் உடைத்தாய் இருந்துள்ள -பவளத்தினுடைய வடத்தை –
அது தனக்கும் அழகு கொடுக்க வற்றான திரு வரையில் சாத்தி –

மலர் இத்யாதி –
தாமரைப் பூ போலே இருக்கிற திருவடிகளில் சதங்கைகளானவை த்வநிக்க-

திரு வரையும் பவள வடமுமான சேர்த்தி அழகு தோற்றும்படியாகவும் –
திருவடிகளில் சாத்தின சதங்கை த்வநிக்கும் படியாகவும்
வர வேண்டும் என்று கருத்து –

நண்ணி இத்யாதி –
அஹங்காராதிகளாலே உன்னை அகன்று திரிகை அன்றிக்கே –
தத் ராஹித்யத்தாலே உன்னைக் கிட்டி –
ஸ்வ சேஷத்வ அனுரூபமாக தொழுகையே யாத்ரையாக இருக்கும் அவர்களுடைய நெஞ்சை –
நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும் (பெரிய திருவந்தாதி )-என்கிறபடியே
இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாகக் கை கொண்டு
ஷண காலமும் விட்டுப் பிரியாதே வர்த்திக்கும் –
நாராயணனே நான் அழைக்கிற இவ் விடத்தே வராய் –

எண்ணற்கு அரிய பிரானே –
உன் பக்கல் சிநேகம் இல்லாதவர்க்கு -நினைக்கைகும்  கூட அரியனாய்
இருக்கும் உபகாரனானவனே-

1-ஆஸ்ரிதருக்கு சுலபனாய் இருக்கையும் –
2-அநாஸ்ரிதர்க்கு துர்லபனாய் இருக்கையும் –
3-மங்களா சாசன பரராய் இருப்பார்க்கு தம் பேறாய் இறே இருப்பது –

நீ என்னை அழைக்கிறது -திரியை என் காது எரிய இடுக்கைக்கு அன்றோ என்ன –

திரியை எரியாமே காதுக்கு இடுவன் –
திரியை உன் காதுகளுக்கு எரிச்சல் வாராதபடி
அனுகூலமாக இடுவன் –

கண்ணுக்கு இத்யாதி –
திரி ஏற்றி காது பெருக்கினால் -உனக்கு இடுதலாக சமைத்த –
கண்ணுக்கு மிகவும் அழகை உடைத்தாய் இருக்கிற -பொற் கடிப்புகளான இவையும்
இருக்கிறபடி பாராய் –
அழகும் என்ற இடத்தில் -ச சப்தம் அவ்யயம் –

நன்றும் அழகும் உடைய என்றும் –
கனகப் கடிப்பு என்றும் -சொன்ன இவை இரண்டாலும் –
பணித் திருத்தமும்
உபாதான வைலக்ஷண்யமும் சொல்லுகிறது –

———————————————————–

வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன்
உய்ய இவ்வாயர்  குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே
மையின்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் 2- 3-3 –

பதவுரை

உய்ய–(நாங்களெல்லாம்) உஜ்ஜீவிக்கும்படி
இ ஆயர் குலத்தினில் தோன்றிய–இந்த இடையர் குலத்திலே வந்து பிறந்த
ஒண் சுடர்–மிக்க ஒளியையுடைய
ஆயர் கொழுந்தே–இடையர்களின் கொழுந்து போன்றவனே!
வையம் எல்லாம் பெறும்–இந்த வுலகங்களை யெல்லாம் (தனக்கு) விலையாகக் கொள்ளக் கூடிய
வார் கடல் வாழும் மகரம் குழை–பெரிய கடலிலே வாழ்கின்ற சுறா மீனின் வடிவமையச் செய்யப்பட்ட மகரக் குழையை
கொண்டு வைத்தேன்–(உன் காது பெருகியிடும்படி) கொண்டு வந்திருக்கிறேன்;
(உன் காதுக்குத் தினவு உண்டாகாமலிருக்கும் பொருட்டு)
வெய்யவே–வெம்மை யுடனிருக்கும் படி
காதில் திரியை இடுவன்-(உன்) காதிலே திரியை இடுவேன்;
வேண்டியது எல்லாம்–நீ விரும்பிய பொருள்களை யெல்லாம்
(பாஷ்ய அபூவம் -கூட அபூவம்-அப்பம் -மாஷா அபூவம் அப்பம் வடை)
தருவன்–கொடுப்பேன்;
மா தவனே–ஸ்ரீ யபதியே!
இன ஆய்ச்சியர் உள்ளத்து–மடமைப் பருவமுடைய இடைப் பெண்கள் மநஸ்ஸிலே
மையன்மை செய்து-வ்யாமோஹத்தைச் செய்து கொண்டு
இங்கே வாராய்:-.

வையம் இத்யாதி –
பொற் கடிப்பு அளவே அல்ல -காது பெருக்கினால் இடும்படியாக பூமி எல்லாம்
பெறும்  பெரு விலையனான-நீண்ட கடலிலே வர்த்திக்கும் பெரிய மகரம் போலே இருக்கிற காதுப்
பணி கொண்டு வைத்தேன்  -என்ன –

நீ இது சொல்லுகிறது -இப்போது என் காதுக்கு திரி இடுகைகாக
அன்றோ -திரி இட்ட போதே காது தினவு தின்று வரும் -எனக்கு வேண்டா என்ன –

வெய்யவே காதில் திரியை இடுவன் –
தினவு-கண்டூதி சமிக்கும்படி –
வெச்சாப்போடே-அல்பமான உஷ்ணத்தை யோடு -காதுகளில் திரியை இடுவன் என்ற
இடத்திலும் -அவன் இசையாமையாலே -இசைகைக்காக –

நீ வேண்டியது எல்லாம் தருவன் –
நீ விரும்பி இருக்கும் அபூப  பலாதிகள் எல்லாம் தருவேன் என்ன-
அவ் வளவிலும் அவன் வாராமையாலே –

உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே –
இருந்ததே குடியாக குடி (இருந்ததே ஹேதுவாக )உஜ்ஜீவிக்கும்படி இவ்விடைக் குலத்தில் வந்து பிறந்து –
அது தானே உனக்கு மிகவும் தேஜஸ்சாம்படி இருப்பானாய்-
வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே –
இடையருக்கு ஒரு வியசனம் வரில் -முந்துற உன் முகம் வாடும்படி -அவர்களுக்கு தலைவன் ஆனவனே –

மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே
ஒரு பருவத்தின் இடைப் பெண்களை உன்னுடைய ஸுந்த்ர்யாதிகளாலே மதி மயங்கும்படி பண்ணி –
அவர்களுடைய நெஞ்சுக்கு சர்வ காலமும் -விஷயமாம்படி இருப்பானாய் –

மாதவனே
உன்னுடைய நெஞ்சத்து இறை (அபஹரித்து )கொள்ளும் பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே –

இங்கு வாராய் என்று
ஸ்துதி பூர்வகமாக அழைக்கிறாள் –

——————————————————–

வண நன்றுடைய வைரக் கடிப்பு இட்டு வார் காது தாழப் பெருக்கி
குண நன்றுடைய இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலாப் பழம் தந்து
சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் நான் சோத்தம்பிரான் இங்கே வாராய் -2 3-4 – –

பதவுரை

இக் கோபாலர் பிள்ளைகள்– இந்த இடைப் பிள்ளைகள்
வார் காது-(தமது) நீண்ட காதை
தாழ பெருக்கி–(தோளளவுந்) தொங்கும்படி பெருக்கி
வணம் நின்று உடைய–நல்ல நிறத்தை மிகுதியாகவுடைய
வயிரம் கடிப்பு–வயிரக் கற்கள் அழுத்திச் செய்த கடிப்பை
இட்டு–அணிந்து கொண்டு
(இப்படி தமது தாய்மார் சொல்லியபடி செய்து)
நன்று குணம் உடையர்–ஸத் குணசாலிகளாயிரா நின்றார்கள்;
கோவிந்தா–கோவிந்தனே!
நீ–நீயோ வென்றால்
சொல்லு–(தாயாகிய என்னுடைய) சொல்லை
கொள்ளாய்–கேட்கிறாயில்லை;
(இப்படி யிராமல் எனது சொல்லைக் கேட்டு)
இணை–ஒன்றோடொன்றொத்து
நன்று அழகிய–மிகவு மழகியனவா யிருக்கிற
இ கடிப்பு–இக் கடிப்பை
இட்டால்–அணிந்து கொண்டால்
நான்–நான்
இனிய பலாப்பழம் தந்து–தித்திப்பான பலாப் பழங்கள் கொடுத்து
சுணம் நின்று அணி முலை–சுணங்கையுடைய மிகவுமழகிய முலையையும்
உண்ண–(நீ) பருகும்படி
தருவன்–கொடுப்பேன்;
பிரான்–ஸ்வாமியே!
சோத்தம்–(உனக்கு) ஸ்தோத்ரம்;
இங்கே வாராய்.

வணம் இத்யாதி –
இப்படி ஸ்துத்திக் கொண்டு அழைத்த இடத்திலும் வாராமையாலே -இது தன்னை
சொன்னாகிலும் வருமோ என்று –
இந்த இடை பிள்ளைகள் ஆனவர்கள் -நல்ல நிறத்தை உடைத்தான வயிரக் கடிப்பிட்டு –
ஒழுகு நீண்ட காதானது தோள் அழவும் தாழும் படி பெருக்கி –
தாய்மார் முதலானோர் சொல்லிற்று செய்து மிகவும் குணம் உடையராய் இருக்கிற படி பாராய் –
நீயும் இப்படி இருக்க வேண்டாவோ

கோவிந்தா -நீ சொல்லுக் கேளாய் –
ஸுலப்யதுக்கு  கோவிந்தன் என்று பேர் இட்டு கொண்டு இருக்கிற நீ –
என் சொல்லு  கைக் கொள்ளுகிறாய் இல்லை என்ன –

உன் சொல்லு கேட்டு நான் கடிப்பு இடுவித்துக் கொண்டால் எனக்கு என்ன தருவாய் என்ன –

இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் –
ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் -மிகவும்
அழகியதாய் இருக்கிற இந்த கடிப்பை இட்டால்-

இனிய பலாப் பழம் தந்து –
உனக்கு இனிதான பலாப் பழம் தந்து –

சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் –
நான்-சுணங்கை உடைத்தாய் –
நன்றாய் அழகியதான -முலையை நீ அமுது செய்யும்படி தருவன் நான் என்ன –
சுணங்கு -முலை போல் தோன்றும் நிறம்
நன்றாகை-மிருதுவாக இருக்கை
(சன்னிவேச வை லக்ஷண்யம் )

சோத்தம்பிரான் இங்கே வாராய் –
இப்படி சொன்ன அளவிலும் வாராமையாலே
பிரானே உன்னைக் கும்பிடுகிறேன் -இங்கே வாராய் என்று இரந்து அழைக்கிறாள்

சோத்தம் -என்கிற இது –
அஞ்சலி பண்ணும் அவர்கள் அதுக்கு அனுகூலமாக தாழ்ச்சி தோற்ற
சொல்லுவதொரு சப்த விசேஷம் –

————————————————

சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரோடு நீ போய்
கோத்து குரவை பிணைந்து இங்கு வந்தால் குணம் கொண்டு இடிவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன  அப்பம் தருவன் பிரானே திரி இட ஓட்டில்
வேய்த் தடம் தோளார் விரும்பு கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் -2 3-5 –

பதவுரை

பிரான்–தலைவனே!
சோத்தம்–உனக்கு ஓரஞ்ஜலி
என்று–என்று சொல்லி
இரந்தாலும்–(வர வேணுமென்று) கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும்
கொள்ளாய்–(நீ என் சொல்லைக்) கேட்டு வருகிறதில்லை;
நம்பீ–பூர்ணனே!-க்ருத்ரிம செயல்களால் பூர்ணன் –
நீ–நீ
சுரி குழலாரொடு–சுருண்ட கூந்தலை யுடைய பெண்களோடு
போய்–(ஏகாந்த ஸ்தலத்திலே) போய்
கோத்து–கை கோத்து
குரவை பிணைந்து–குரவைக் கூத்தாடி
இங்கு வந்தால் ;–(பின்) இங்கே வந்தால்
(நீ அப்படி செய்ததை)
குணம் கொண்டிடுவனோ–(உனக்குத்) தகுதியானதாக (நான்) கொள்வனோ?
பிரானே–உபகாரகனே!
திரி இட ஒட்டில்–திரியை (உன்காதிலே) இடலாம்படி நீ யிசைந்தால்
பேர்த்தும்–மறுபடியும் மறுபடியும்
பெரியன அப்பம்–பெரிய பெரிய அப்பங்களை
தருவன்–கொடுப்பேன்;
வேய் தட தோளார்–மூங்கில் போன்ற பெரிய தோள்களை யுடைய மகளிர்
விரும்பு–விரும்புகைக்கு உரிய
கரு குழல் விட்டுவே–கரு நிறமான கூந்தலை யுடைய விஷ்ணுவே!
(நீ இங்கே வாராய்).

சோத்தம் இத்யாதி –
சோத்தம்பிரான் இங்கே வாராய் -என்ற இடத்திலும் -அவன் வாராமையாலே –
பிரானே உன்னைத் தொழுகிறேன் என்று -இரந்தாலும் –
என் சொல்லைக் கை கொண்டு -நீ வருகிறாய் இல்லை என்றவாறே –

நீ அழைக்க நான் வந்த இடத்தில் குணம் கொள்ளாமல் –
நேற்று என்னை அடித்தவள் அன்றோ நீ -என்ன –

அதுவோ –
சுரி குழலாரோடு நீ போய்  கோத்து குரவை பிணைந்து இங்கே வந்தால் -குணம் கொண்டாடுவனோ நம்பீ –
ஆளற்ற இடத்தில் நீ போய் -சுருண்ட குழலை உடையராய் இருக்கும் பெண்களோடு கை கோத்து –
குரவை பிணைந்து ஆடி இங்கே வந்தால் பொடியாதே குணவான் என்று உன்னைக் கொள்வனோ நம்பீ
என்று இவள் சொன்னவாறே-

நிருத்தரனாய் நிறக –

அவ்வளவிலே கையில் திரியை எடுத்து -இத்தை இடும்படி வாராய் -என்ன –

அவன் -இது இட ஒட்டேன் -என்ன

பிரானே திரி இட ஓட்டில் பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் –
எனக்கு எல்லாப் படியாலும் உபகாரன் ஆனவனே –
திரி இத்தனையும் இட ஒட்டுதியாகில் -நீ சிறிது சிறிது என்று பொகடப் பொகட நீ விரும்பும்படி
பெரியனவான அப்பங்களை தருவேன் என்ற இடத்திலும் -அவன் வாராமையாலே –

வேய் இத்யாதி –
பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் செவ்வைக்கும் மூங்கில் போலேயாய் –
பெருத்து இருந்துள்ள தோளை உடையரான பெண்கள் விரும்பும்படியாய் –
இருண்டு நீண்ட திருக் குழலை உடையனான

விஷ்ணுவே -நீ இங்கே வாராய் என்று –
அவன் வைலக்ஷண்யத்தை சொல்லி –
புகழ்ந்து கொண்டு அழைக்கிறாள் –

—————————————————-

விஷ்ணுவை மது சூதனன் என்கிறாள் இதில் –

விண்ணெல்லாம்  கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டேன் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று அறிந்தேன்
புண் ஏதும் இல்லை உன் காது மறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார் முகிலே கடல்வண்ணா காவலனே முலை உணாயே – 2-3 6- –

பதவுரை

விண் எல்லாம் கேட்க–மேலுலகங்கள் முழுவதும் கேட்கும்படி
அழுதிட்டாய்–அழுதாய்;
(நீ அப்படி அழுகையில்)
நான்–(தாயாகிய) நான்
விரும்பி–ஆதரங்கொண்டு
உன் வாயில்–உன் வாயிலே
அதனை–(நீ மண் உண்ட) அதை
நோக்கி–பார்க்கும் போது
(அவ் வாயில்)
மண் எல்லாம் கண்டு–லோகங்களை யெல்லாம் பார்த்து
என் மனத்துள்ளே அஞ்சி–என் மநஸ்ஸினுள்ளே பயப்பட்டு
மதுசூதனே என்று–‘இவன் மதுஸூதனே யாவ’னென்று
அறிந்தேன்–தெரிந்து கொண்டேன்;
(உன்னுடைய காதிலே)
புண் ஏதும் இல்லை–புண் ஒன்றுமில்லை;
உன் காது மறியும்–(கடிப்பிடும் போது) உன் காது சிறிது மடங்கும்;
(அதை மாத்திரம்)
இறை போது–க்ஷண காலம்
பொறுத்து இரு–பொறுத்துக் கொண்டிரு;
நம்பி–பூர்ணனே!
கண்ணா–கண்ணனே!
கார் முகிலே–காளமேகம் போன்றவனே!
கடல் வண்ணா–கடல் போன்ற திரு நிறத்தவனே!
காவலனே–ரக்ஷண வியாபாரத்தில் வல்லவனே!
என் முலை உணாய்.

விண் இத்யாதி –
மண் தின்றாய் -என்று அடித்தவாறே –
ஆ -என்ன –
ஆகாசப் பரப்பு அடங்கலும்
கேட்க்கும்படி அழுத உன்னுடைய வாயில் –
மண் உண்ட சுவடு உண்டாகில் பார்ப்போம் -என்று
விரும்பி அத்தை நான்  பார்த்த அளவில் –

முன்பு போலே வாய் வழியே பூமி எல்லாம் உள்ளே இருக்கிறபடியை கண்டு –
நம்முடைய பிள்ளை என்று இவனை நலிந்தோமே -என்று
என் மனசிலே பயப்பட்டு –
இவன் நம்முடைய பிள்ளை அல்லன் –
சர்வேஸ்வரன் என்று அறிந்தேன் – என்றவாறே –

அஹம் வோ பாந்தவ ஜாத-என்னும் அவனாகையாலே –
இவள் அந்யனாக்கி வார்த்தை சொன்னது சகியாமையாலே அத்தை மறப்பித்து –
தன் பிள்ளை -என்று
இவள் அணைத்துக் கொள்ளும்படி வந்து கிட்டி நிற்க –

அவ்வளவிலே இவள் –
காதுக்கு கடிப்பு இடுவதாக உத்யோகிக்க –
என்னுடைய காது புண் -எனக்கு அது வேண்டா -என்று அவன் சொல்ல –

புண் ஏதும் இத்யாதி –
புண் ஒன்றும் இல்லை -உன்னுடைய காது தண்டு புரளும் –
சற்றுப் போது பொறுத்து இரு நம்பீ என்ன –

அவன் பொறுத்த படியால் ப்ரீதையாய்
கண்ணா –
எனக்கு சுலபன் ஆனவனே

என் கார் முகிலே –
ஜல ஸ்தல விபாகம் பாராமல் -உபகரிக்கும் காள மேகம் போலே
எனக்கு உன்னை உபகரித்தவனே

கடல் வண்ணா –
எனக்கு அனுபாவ்யமான கடல் போன்ற நிறத்தை உடையவனே

காவலனே –
எனக்கு ரஷகன் ஆனவனே –
என்று ஸ்தோத்ரம் பண்ணி
முலை உண்ண  வேணும் என்று அபேஷிக்கிறாள்

———————————————-

முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு
மலையை எடுத்து மகிழ்ந்து கன்  மாரி காத்துப்  பசு நிரை மேய்ததாய்
சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திரு ஆயர்பாடிப் பிரானே
தலை நிலா போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே – 2-3 7- –

பதவுரை

முலை–‘முலையையும்
ஏதும்–(மற்றுமுள்ள பக்ஷணாதிகள்) எதையும்
வேண்டேன்–(நான்) விரும்ப மாட்டேன்’
என்று ஓடி–என்று சொல்லி ஓடிப் போய்
நின் காதில் கடிப்பை–(நான்) உன் காதிலிட்ட காதணியை
பறித்து எறிந்திட்டு–பிடுங்கி யெறிந்து விட்டு
மலையை–கோவர்த்தன மலையை
எடுத்து–(குடையாக) எடுத்துத் தூக்கி
மகிழ்ந்து–திருவுள்ளமுகந்து
கல் மாரி–கல் வர்ஷத்தில் நின்றும்
காத்து–(இடையர் முதலானாரை) ரக்ஷித்து
பசு நிரை–பசுக்களின் திரளை
மேய்த்தாய்–மேய்த்தவனே!
ஒன்று சிலை–ஒப்பற்றதொரு ருத்ர தநுஸ்ஸை
முறித்தாய்–(பிராட்டியை மணம் புரிய) முறித்தவனே!
திரிவிக்கிரமா–த்ரிவிக்ரமனே!
திரு ஆயர்பாடி–திரு வாய்ப்பாடிக்கு
பிரானே–உபகாரகனே!
தலை நிலா போதே–தலை நிற்காமலிருக்கிற இளங்குழந்தைப் பருவத்திலேயே
உன் காதை பெருக்காது–உன் காதை(த் திரியிட்டு)ப் பெருக்காமல்
விட்டிட்டேன்–விட்டு வைத்தேன்;
(அப்படி விட்டு வைத்தது)
குற்றமே அன்றே–என்னுடைய அபராதமன்றோ?

முலை இத்யாதி –
இப்படி ஸ்தோத்ரம் பண்ணி முலை உண்ண சொன்னவாறே –
முலை உண்பானாக தொடங்கின அளவிலே –
கடிப்பை எடுத்து காதிலே இட –
அத்தாலே சீறி –
முலை ஏதும் வேண்டேன்  என்று ஓடி –
நீ தருகிற முலையும்-மற்றும் உண்டான அபூபாதிகளும் -வேண்டேன் என்று –
எனக்கு பிடி படாது கை கழிய ஓடி –
நான் பின் தொடர்ந்த அளவில் எனக்கு தரிப்பாக –

நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு –
உன் காதில் இட்ட கடிப்புகளை க்ரோதம் தோற்ற பிடுங்கி –
என் முன்னே எறிந்து பொகட்டு-

அவ்வளவிலே இந்திரன் பசிக் கோபத்தாலே வர்ஷிப்பிக்க –
அதில் ரஷ்ய வர்க்கம் நோவு படாதபடி -மலையை எடுத்து -முன்பு ரஷகம் என்று சொன்ன
கோவர்த்தன கிரி தன்னையே குடையாக எடுத்து –

மகிழ்ந்து –
மலையை சுமந்து கொடு நிற்கிற அளவில் -சற்றும் இளைப்பு இன்றிக்கே –
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணம்  பண்ணப் பெற்றோம் -என்று உகந்து –

கன் மாரி காத்து –
அந்த கல் வர்ஷத்தில் ஒரு பசு மேலே  ஆதல் -ஒரு இடையன் மேலே ஆதல் –
ஒரு துளி விழாதபடி ரஷித்து-

பசு நிரை மேய்ததாய் –
இன வாநிரை பாடி அங்கே ஒடுங்க-( திருவாய் -7-4-) -என்கிறபடியே –
மலை பசு மேய்க்கிற இடம் தன்னில்
சென்று ஏங்கும் ஒக்க கவிகையாலே -பசுக்களை இடையர் மேய்க்கும்படி பண்ணினவனே-

சிலை ஓன்று இறுத்தாய் –
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளுக்கு சுல்கமாக விட்டதாய் -ஒருவரால் பேர்க்க எடுக்க
ஒண்ணாதபடி -அத்வீதியமாய் இருந்துள்ள -ரவ்த்ரமான வில்லை இறுத்தவனே
(வில் விழா –அந்த வில் -ஓன்று -அத்விதீயம் இல்லையே ஆகையால் இங்கு இந்த வியாக்யானம் )

திரிவிக்ரமா –
இந்திரன் இழந்த ராஜ்யத்தை மீட்டுக் கொடுக்கைக்காக -எல்லை நடப்பாரைப் போலே
திருவடிகளால் -சர்வ லோகத்தையும் அளந்தவனே –

திரு ஆயர்பாடிப் பிரானே –
திரு ஆய்ப்பாடியில் உள்ள ஜனங்களுக்கு சர்வ பிரகாரத்தாலும்
உபகாரன் ஆனவனே –
(குடை பிடித்த ஒன்றை கீழே சொல்லி –
இங்கு மற்ற ஸர்வ பிரகார ரக்ஷணம் )

இப்படி எல்லாருக்கும் உபகாரன் ஆன-நீ –
என்னுடைய அபேஷிதமும் செய்ய வேணும்  காண் என்று –
முன்பு பறித்து எறிந்த கடிப்புகளை இடுவதாக உத்யோகிக்க –
அவன் அதுக்கு இசையாது ஒழிய –

தலை நிலா இத்யாதி –
தலை செவ்வே நில்லாத இளம் பருவத்திலே உன்னுடைய காதுகளைப்
பெருக்காதே -விட்டு இட்டு வைத்த என்னுடைய குற்றம் அன்றோ –
உன்னை வெறுக்கிறது என் என்று தன் செய்தி தாழ்வை சொல்லி நோவு படுகிறாள் –

——————————————–

என் குற்றமே என்று சொலவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டி இற்றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்–
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி இட்டு சொல்லுகேன் மெய்யே -2 3-8 – –

பதவுரை-

(நான் இப்போது உன் சொல்லைக் கோளமலிருப்பது)
என் குற்றமே என்று–‘என்னுடைய குற்றமே யாகும்’ என்று
சொல்லவும் வேண்டா காண்–நீ சொல்லுதலும் வேண்டியதில்லை காண்:
(ஏனெனில்;)
நான் மண் உண்டேன் ஆக–நான் மண் ணுண்டதாகச் சொல்லி
என்னை–(மண் திண்ணாத) என்னை
பிடித்தும்–பிடித்துக் கொண்டும்
அன்பு உற்று–அன்பை ஏறிட்டுக் கொண்டு (அன்புடையவன் போல)
நோக்கி–(என் வாயைப்) பார்த்து
அடித்தும்–(என்னை) அடித்தும்
அனைவர்க்கும்–எல்லார்க்கும்
காட்டிற்றிலையே–காட்டின தில்லையோ?
(என்று கண்ணன் சொல்ல அதற்கு யசோதை)
வல் புற்று அரவின்–வலிய புற்றில் வஸிக்கின்ற பாம்புக்கு
பகை–விரோதியான கருடனை
கொடி–கொடியாக வுடைய
வாமந நம்பி–வாமந மூ­ர்த்தியே!
(இப்படி நீ ஒன்று சொல்ல நானொன்று சொல்வதாகப் போது போக்கிக் கொண்டிருந்தால்)
உன் காதுகள் தூரும்–உன்னுடைய (குத்தின) காதுகள் தூர்ந்து விடும்;
(உன்னை யடுத்தவர்கள்)
உற்றன–அடைந்தனவான
துன்பு எல்லாம்–துன்பங்களை யெல்லாம்
தீர்ப்பாய்–போக்குமவனே!
பிரானே–உபகாரகனே!
திரி இட்டு–(உன் காதில்) திரியை யிட்டு
மெய்யே சொல்லுகேன்–(உன்னை யடிக்க மாட்டேனென்று நீ நம்பும் படியான) சபதத்தைச் சொல்லுவேன்
(என்கிறாள். )

செல்லுகேன் -என்ற பாடம் ஆன போது –
உன் காதில் திரியை இட்டு விட்டு மெய்யே
கடக்கப் போய் விடுகிறேன் -என்று பொருளாகக் கடவது

என் குற்றம் இத்யாதி –
நீ உன் குற்றம் சொல்லி வெறுக்கிறது -நான் உன் சொல்லிற்று செய்திலன் என்று –
என் குற்றத்தை நினைத்தன்றோ -என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் -என்ன –
உன் குற்றம் இல்லையோ -என்ன –

உன்னை நான் என் செய்தேன் -என்ன –

என்னை நான் மண் உண்டேனாக –
மண் உண்ணாத என்னை
நான் மண் உண்டேனாக நினைத்து –

அன்புற்று நோக்கி –
ஸ்நேஹிதிகளைப் போலே -என்னுடைய வாயிலும் கையிலும் மண் சுவடு உண்டோ என்று பார்த்து –

அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்று இலையோ –
சுவடு கண்டாரைப் போலே என்னை பிடித்தும் –
அவ்வளவும் அன்றிக்கே –
அடித்தும் –
பாரிகோள் இவன் மண் தின்னும்படி -என்று எல்லோர்க்கும்
காட்டிற்று இலையோ -என்ன

கஸ்மா ன்ம்ருத மதாந் தாத்மன் பவான் பஷிதவான் ரஹ
வதந்தி தாவ காஹ்யேத குமாராஸ்தே அக்ரஜோப்யயம் நாஹம் பஷித வா நம்ப
ஸர்வேம் இத்யாபி ஸம் ஸிந யதி ஸத்ய கிரஸ் தர்ஹி சமஷம் பஸ்யமே முகம் -என்றது அனுசந்தேயம்

வன் புற்று அரவின் பகைக் கொடி வாமன நம்பீ
வலிய புற்றிலே  பாதக பீதியாலே கிடக்கும் பாம்புக்கு -பகையான கருடனை த்வஜமாக உடையவனை –
கொடும் கோளால் நிலம் கொண்ட வாமனான முதலியானவனே-

இத்தால்
திரு வனந்த ஆழ்வானை படுக்கையாக கொண்டு –
பெரிய திருவடியை த்வஜமாக கொண்டு இருப்பான் ஒருவன் என்கையாலே –
லோகத்திலே ஒன்றுக்கு ஓன்று சேராதாய் உள்ளவற்றை சேர்த்து நடத்த வல்லனுமாய்-
(வெல்லும் வ்ருத்த விபூதி நாயகன் அன்றோ இவன் )
க்ரூரமாக செய்தவற்றை ந்யாயமாக்கவும் வல்லவன் அன்றோ -என்கை

உன் காதுகள் தூரும்-
இப்படி நீ ஓன்று சொல்ல –
நான் ஓன்று சொல்லிப் போது போக்கி இருந்தால்
உன்னுடைய காதுகள் தூரும் காண் –

துன்புற்றவன எல்லாம் தீர்ப்பாய் பிரானே –
ஆஸ்ரிதரனாவர்கள் துக்கப்படும் அவை எல்லாம்
போக்கும் உபகாரகன்  ஆனவனே -என்ன –

நீ என்னை ஸ்தோத்ரம் பண்ண வேண்டா –
இனி முன் போல் பிடிக்குதல் அடிக்குதல்  செய்யேன் -என்று மெய்யாக ஒரு வார்த்தை சொல்லு –
நான் திரி இடுகைக்கு இசையும்படி என்ன –

திரி இட்டுச் சொல்லுகேன் மெய்யே –
திரியை இட்டு விட்டவாறே பின்னை மெய்யே சொல்லக் கடவேன் -என்கிறாள் –

————————————————–

மெய்யென்று சொல்லுவார் சொல்லைக்  கருதி தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக் காணவே கட்டிற்று இலையே
செய்தன சொல்லி சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும்
கையில் திரியை இடு கிடாய் இந்நின்ற காரிகையார் சிரியாமே -2 3-9 – –

பதவுரை

சொல்லுவார் சொல்லை–சொன்னார் சொன்ன பேச்சுக்களை யெல்லாம்
மெய் என்று கருதி–(நீ) மெய்யென்றெண்ணி
வெண்ணெயை–வெண்ணெயை
தொடுப்பு உண்டாய்–களவு கண்டு உண்டாய்
என்று–என்று (என் மீது பழி சுமத்தி)
கையை பிடித்து–(என்) கையைப் பிடித்து
காண்–(பலரும்) கண்டு பரிஹஸிக்கும்படி
கரை உரலோடு–விளிம்பிலே வேலை செய்திருக்கிற உரலில்
என்னை–(ஒன்றும் திருடாத) என்னை
கட்டிற்றிலையே–நீ கட்ட வில்லையா?
(என்று கண்ணன் யசோதை மேல் குற்றஞ்சாட்டிச் சிரித்து நிற்க)
(அதற்கு யசோதை சொல்லுகிறாள்):
சிரிதரா–ஸ்ரீதரனே!
செய்தன–(நான் முன்பு) செய்தவற்றை
சொல்லி–சொல்லிக் கொண்டு
சிரித்து–புன் சிரிப்புச் செய்து
அங்கு–அங்கே (தூரத்தில்)
இருக்கில்–(பொழுது போக்கிக் கொண்டு) இருந்தால்
உன் காது–உன் காதுகள்
தூரும்–தூர்ந்து விடும்;
இ நின்ற காரிகையார் சிரியாமே–(உன் முன்னே) நிற்கிற இந்தப் பெண்கள் சிரியாதபடி
கையில் திரியை–(என்) கையிலுள்ள திரியை
இடுகிடாய்–இட்டுக் கொள்வாயாக.

மெய் இத்யாதி –
திரி இட்டு சொல்லுகேன்  மெய் -என்றவாறே –

உன் வார்த்தை விஸ்வசிக்க போகாது –
சொன்னார் சொன்ன வார்த்தை கேட்டு -என்னை சிஷிப்பாள் ஒருத்தி
அன்றோ -என்ன –

நான் அப்படி செய்தது உண்டோ -என்ன –

மெய்யென்று சொல்லுவார் சொல்லை  கருதி –
இவன் வெண்ணெய் களவு கண்டான் -என்று சொல்லுவார் சொல்லும் வார்த்தையை மெய்யென்று புத்தி பண்ணி –
தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று -வெண்ணெயை களவிலே ஜீவித்தாய் என்று-தொடுப்பு -களவு

கையை பிடித்து இத்யாதி –
என் கையை பிடித்துக் கொண்டு -பாரமான கரை உரலோடே-எல்லாரும்
காணும் படி என்னை கட்டிற்று இலையோ என்று சொல்லி மந்த ஸ்மிதம் செய்து இருக்க –
கரை உரலாவது -விளிம்பு சுற்றணையான  உரல்

செய்தன இத்யாதி-
இப்படி நான் செய்த குற்றங்களை சொல்லி -ஸ்மிதம் பண்ணிக் கொண்டு
என் பக்கல் வாராதே போது போக்கி -நீ அங்கே இருக்கில்

ஸ்ரீதரனே-உன் காது தூரும் காண் –
அவர்களுக்கு ஆகவாகிலும் வா என்ன –

அவ்வளவிலும் அவன் வாராமையாலே –

கையில் திரியை இத்யாதி –
நீ விரும்ப தக்க அழகை உடையார் -உன் பக்கல் ப்ராவண்யத்தால் –
உன்னை விட்டு போக மாட்டாமல் சந்நிஹிதைகளாய் நிற்கிற இப் பெண்கள் ஆனவர்கள்-
கூழைக் காது சுணைக் காது – என்றால் போலே சொல்லி சிரியாதபடி
உன் காது பெருக்கும்படி என் கையில் திரியை இடு கிடாய் என்கிறாள்

——————————————————-

காரிகையாருக்கும் உனக்கும் இழுக்கு உற்று என் காதுகள் வீங்கி எரியில்
தாரியாது ஆகில்  தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே
சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கி திரியவும் காண்டி
ஏர்விடை செற்று இளம் கன்று எறிந்திட்ட விருடீகேசா என் தன் கண்ணே -2-3 -10- –

பதவுரை

காதுகள்–(என்னுடைய) காதுகள்
வீங்கி–வீங்கிப் போய்
எரியில்–எரிச்சலெடுத்தால்,
காரிகையார்க்கும்–(பரிஹஸிக்கிற,) பெண்களுக்கும்
உனக்கும்–(என் காதில் திரியிற் நிற்கிற) உனக்கும்
உற்ற(து)–நேரிட்டதான
இழுக்கு–சேதம்
என்–ஏதேனுமுண்டோ?
(என்று கண்ணன் சொல்ல, யசோதை சொல்லுகிறாள்)
(நீ இன்னும் இளம் பருவத்தில் இருந்த போது)
தாரியாது ஆகில்–‘(திரியை இடுவது) பொறாமற்போனால்
தலை நொந்திடும் என்று–(குழந்தைக்குத்) தலை நோய் உண்டாய் விடுமே’ என்று நினைத்து
விட்டிட்டேன்–(முன்னமே காது குத்தாமல்) இருந்து விட்டேன்
அன்பினால் அப்படி விட்டிருந்தது)
குற்றமே அன்றே–(என்னுடைய) குற்றமேயாமல்லவா?
ஏர் விடை–அழகிய ரிஷபத்தின் வடிவு கொண்டு வந்த அரிஷ்டாஸுரனை
செற்று–அழித்து
இள கன்று–சிறிய கன்றின் வடிவான் வந்த வத்ஸாஸுரனை
எறிந்திட்ட–(குணிலாகக் கொண்டு விளா மரத்தின் மேல்) வீசிய
இருடீகேசர்–ஹ்ருஷீகேசனே’
என்றன் கண்ணே–எனக்குக் கண் போன்றவனே’
சேரியில்–இவ் விடைச் சேரியில்
பிள்ளைகள் எல்லாரும்–எல்லாப் பிள்ளைகளும்
காது பெருக்கி–காதைப் பெருக்கிக் கொண்டு
திரியவும்–திரியா நிற்பதையும்
காண்டி–நீ காணா நின்றாயன்றோ’

காரிகையார் இத்யாதி –
கையிலே திரியை இடு கிடாய் -என்றவாறே –

சிரிக்கிற காரிகையார்க்கும் -திரி இட வந்து நிற்கும் உனக்கும் -ஏதேனும் சேதம் உண்டோ –
என்னுடைய காதுகள்;வீங்கி எரியுமாகில் -என்று அவன் சொல்லி -கைக்கு எட்டாதபடி நிற்க –

தாரியாதாகில் இத்யாதி –
இளம் பருவத்திலே காதை பெருக்கலாய் இருக்க –
திரி முதலானவற்றை இடுகிறது பொறாதாகில்-
உன் தலையிலே நோக்காடு உண்டாம் என்று -அப்போது செய்யாமல்
விட்டு வைத்த என்னுடைய குற்றமே அன்றோ -என்ன –
தன்னை வெறுத்து -பின்னையும் விடாதே

(லோகத்தில் இளம் பிள்ளைகளுக்கு
காது குத்தினால் சிலருக்கு நோம்
சிலருக்கு குத்தா விடில் நோம் -அரும்பதம் )

சேரி இத்யாதி –
இவ்வூரில் உன் திறத்தின் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கி திரியவும் காணா
நின்றாய் இறே என்றவாறே –
அவன் அனுமதி தோற்ற நிற்க –

ஏர் விடை இத்யாதி –
வம்பு அவிழ் கானத்து மால் விடை -என்கிறபடியே -காட்டுக்குள்ளே உன்னை நலிவதாக எதிர்ந்து வந்த –
அரிஷ்ட நேமியாகிற ரிஷபத்தை நிரசித்து –
கன்றுகள் மேய்கிற இடத்தில் – இளம் கன்றான வடிவை கொண்டு வந்து -ஓர் அசுரன் நிற்க -அந்த கன்றை எடுத்து
விளவாய் நின்ற அசுரன் மேலே எறிந்து -இரண்டு தலையும் -முடித்து –
அவற்றின் கையிலே அகப்படாதே –
உன்னை நோக்கித் தந்தவனாய்-உன்னைக் கண்டவர்களுடைய சர்வ இந்திரியங்களையும் உன் வசமாக்கிக்
கொள்ளுகையாலே ஹிருஷீகேசன் என்னும் திரு நாமத்தை உடையவனாய் –
எனக்கு திருஷ்டி பூதனானவனே என்று உகந்து சொல்லுகிறாள் –
(கண்ணாவான் மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் அவனே
இவருக்கு எல்லா அவஸ்தையிலும் கண்ணாவான் அவனே காணும் )

—————————————

கண்ணைக் குளிரக் கலந்து எங்கு நோக்கிக் கடி கமழ் பூம் குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்று நோவாமே காதுக்கு இடுவன்
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பத்ம நாபா இங்கே வாராய் -2 3-11 – –

பதவுரை

குளிர–மனங்குளிரும்படி
கண்ணை-(உன்) கண்ணை
(இடைப் பெண்களுடைய கண்களோடு)
கலந்து–சேர்த்து,
எங்கும்–(அவர்களுடைய) வடிவம் முழுவதும்
நோக்கி–பார்த்து,
கடி கமழ்–வாஸனை வீசுகின்ற
பூ–புஷ்பங்களணிந்த
குழலார்கள்–கூந்தலை யுடைய அப்பெண்களினுடைய
எண்ணத்துள்–மநஸ்ஸினுள்ளே
என்றும் இருந்து–எப்போது மிருந்து கொண்டு
தித்திக்கும்–ரஸிக்கின்ற
பெருமானே–பெருமையை யுடையவனே1
எங்கள் அமுதே–எங்களுக்கு அமுருதம் போன்றவனே’
உண்ண– தின்பதற்கு
கனிகள்–(நாவல் முதலிய) பழங்களை
தருவன்–கொடுப்பேன்
கடிப்பு–காதணியை
ஒன்றும் நோவாமே–சிறிதும் நோவாதபடி
காதுக்கு–(உன்னுடைய) காதிலே
இடுவன்–இடுவேன்
சகடம்–(அஸுராவிஷ்டமாகா) சகடத்தை
பண்ணை கிழிய உதைத்திட்ட–கட்டுக் குலையும்படி உதைத்தருளின
பத்மநாபா–பத்மநாபனே’
இங்கே வாராய் –

கண்ணை இத்யாதி –
இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் அவன் ஆகையாலே –
கண்ணைக் குளிரக் கலந்து –
உன்னுடைய கண்ணை அவர்களுடைய கண்களோடு குளிரக் கலந்து –
இத்தால் -கண் கலவியை சொன்னபடி –

எங்கும் நோக்கி –
அவர்கள் வடிவை சமுதாயேன பார்த்து

கடி கமழ் பூம் குழலார்கள் –
பரிமள பிரசுரமான பூக்களாலே அலங்ருதமாய் இருந்துள்ள குழலை உடையவர்களுடைய –

எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பிரானே –
நெஞ்சுக்கு உள்ளே சர்வ காலமும் இருந்து -ரசிக்கும் பெரியோனே –

அன்றிக்கே –
கண்ணை -என்கிற இடத்தில் –
ஐகாரத்தை அவ்யயமாக்கி –
கடி கமழ் பூம் குழலானவர்கள் தங்கள் கண் குளிரும்படியாக
உன்னுடைய அவயவ சோபையை கலக்கக் கொண்டு
எங்கும் ஒக்க பார்த்து –
உன்னுடைய கலவியின் பிரகாரங்களை எண்ண-
அவர்களுடைய அபிமத அனுரூபமான எண்ணம் கடவாமல் -அதுக்குள்ளே என்றும் ஒக்க இருந்து –
அவர்களுக்கு நிரதிசய போக்கினாய் நிற்கும் பெருமையை உடையவனே -என்னவுமாம் –

எங்கள் அமுதே –
எங்களுடைய நிரதிசய போக்யனுமாய் -சத்தா தாரகனுமாய் இருக்கிறவனே –
உனக்கு அபிமதைகளான அவர்களுக்கும் –
பரிவரான  எங்களுக்கும் உகப்பாம்படி –
உன் காது பெருக்குகைக்கு வா -என்ன-

நான் வருகிறேன் -நீ எனக்கு என்னம் தருவாய் என்ன –

உண்ணக்  கனிகள் தருவன் –
நீ விரும்பி அமுது செய்யும் படி உனக்கு பழங்கள் தருவேன் -என்ன

ஆனாலும் கடிப்பு இடப் புகுந்தால் காது நோவுமே என்ன –

கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன் –
சற்றும் நோவு வாராதபடி உன் காதுகளுக்கு கடிப்பு
இடுவேன் என்றவாறே

உடன் பட்டமை தோற்றா நிற்க –

பண்ணை இத்யாதி –
கண் வளர்ந்து அருளுகிற தனி இடத்திலே -காவல் வைத்த
சகடம் அசூர விசிஷ்டமாய் உன்னை நலிய வர -அத்தை கோப்பு குலைய உதைத்துப்
பொகட்டு ஜகத்துக்கு வேர்ப் பற்றான உன்னை நோக்கித் தந்தவன் அல்லையோ –

இங்கனே வாராய்
என்று புகழ்ந்து கொண்டு அழைக்கிறாள் –

———————————————————–

வா என்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்கு உற்றேன் காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளை
சாவப் பாலுண்டு சகடு இறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் -2 3-12 – –

பதவுரை
(கண்ணன் யசோதையைப் பார்த்து)
வா என்று சொல்லி-‘(நான் காதில் திரியிட இங்கே) வருவாயாக‘ என்று சொல்லி
என் கையை பிடித்து–என் கையைப் பிடித்துக் கொண்டு
காதில்–காதிலே
நோவ–நோம்படி
கடிப்பை–காதணியை
இங்கு–இப்போது
வலியவே–பலாத்காரமாக
தரிக்கில்–இட்டால்
உனக்கு–உனக்கு
இழுக்கு உற்ற(து) என்–சேதமுண்டானதென்ன?
காதுகள்–(என்) காதுகள்
நொந்திடும்–நோவெடுக்கும்
கில்லேன்–(அதைப் பொறுக்க வல்ல) வல்லமை யுடையேனல்லேன்
(என்று மறுத்துச் சொல்ல – யசோதை சொல்லுகிறாள்-)
நம்பீ–பூர்ணனே’
நாவல் பழம்–(உனக்கு இஷ்டமான) நாவற்பழங்களை
கொண்டு வைத்தேன்–கொண்டு வைத்திருக்கிறேன்
இவை–இவற்றை
காணாய்–பார்ப்பாயாக
முன்–முன்பு
வஞ்சம் மகள்–வஞ்சனை யுள்ள பூதனையானவள்
சாவ–மாளும்படி
பால்–(அவளது) முலைப் பாலை
உண்டு,–பாநம் பண்ணி,
சகடு–சகடாஸுரன்
இற–முறியும்படி
பாய்ந்திட்ட–(கால்களைத்) தூக்கி யுதைத்த
தாமோதரா’ இங்கே வாராய் –

வா இத்யாதி –
பத்ம நாபா இங்கே வாராய் என்றவாறே –

வா என்று சொல்லி என் கையைப் பிடித்து –
என்னை வா என்று சொல்லி அழைத்து –
நான் வரக் கொள்ள –
என் கையை உறைக்கப் பிடித்துக் கொண்டு –

வலியவே காதில் கடிப்பை நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்கு உற்றேன் –
பலாத்காரேன என் காதில் – கடிப்பை நோம்படி திரிகி இடுவுதியாகில்
உனக்கு இங்கு சேதம் ஆவது உண்டோ –
என் காதுகள் நோம் காண்-வர மாட்டேன் என்ன –

நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ –
இவன் வருகைக்காக -நீ உகக்கும் நாவற் பழம் கொண்டு வைத்தேன் –
இவற்றை பாராய் நம்பீ -என்று காட்ட –
அத்தைக் கண்டவாறே -வருவாரைப் போலே நிற்க –

முன் இத்யாதி –
முன்பு தன் வடிவை மறைத்து -தாய் வடிவு கொண்டு -வஞ்சகையாய் வந்த பேய்ச்சியை
சாம் படியாக முலைப் பாலை உண்டு –
நலிவதாக மேலிட்டு வந்த சகடத்தை முறிய உதைத்து பொகட்டு –
அவ் விரோதிகள் கையில் அகப்படாமல் -உன்னை நோக்கித் தந்தவனாய் –

அந்த சக்திமானாய் இருக்கச் செய்தே –
அசக்தரைப் போலே என் கையிலே பிடி உண்டு –
நான் கட்டின கயற்றின் தழும்பு உன் வயற்றிலே கிடைக்கையாலே தாமோதரன் என்று பேராம்படி
என் கையாலே கட்டுண்டு நின்ற நீர்மையை உடையவன் அன்றோ –

இங்கே வாராய் என்று
உகந்து அழைக்கிறாள் –

——————————————

அச்யுத அனந்த கோவிந்த -இவற்றுக்கு இந்த பாசுரம்

அவதாரிகை –
நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

வார் காது தாழப் பெருக்கி அமைத்து மகரக் குழை இட வேண்டிச்
சீரால் அசோதை  திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – 2-3 13- –

பதவுரை

அசோதை–யசேதையானவள்
வார்–(ஸ்வபாவமாகவே) நீண்டிருக்கிற
காது–காதுகளை
தாழ–தொங்கும்படி
பெருக்கி–வளர்த்து
அமைத்து–ஓரளவிலே நிற்கும்படி செய்து
மகரம் குழை இட வேண்டி–மகர குண்டங்களை இட விரும்பி
திருமாலை–ஸ்ரீய பதியான கண்ணனை
சீரால் சொன்ன–சிறப்புக் குறையாதபடி அழைத்த
சொல்–சொற்கள்
சிந்தையுள்–(தம்முடைய) மநஸ்ஸிலே
நின்று–நிலையாகப் பொருந்தி
திகழ–விளங்க,
(அச் சொற்களை),
பார் ஆர் தொல் புகழான்–பூமியில் நிரம்பிய பழமையான-அச்யுத அனந்த கோவிந்த -இவற்றுக்கு இந்த பாசுரம் – யசஸ்ஸை யுடையவரும்
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
மன்னன்–நிர்வாஹகருமான’ பெரியாழ்வார்
பன்னிரு நாமத்தால் சொன்ன–த்வாதச நாமங்களோடுஞ் சேர்த்துச் சொல்லி யழைத்த
ஆராத–(ஓத ஓத) த்ருப்தி பிறவாத
அந்தாதி–அந்தாதித் தொடையினாலாகிய
பன்னிரண்டும்–பன்னிரண்டு பாட்டுக்களையும்
வல்லார்–ஓத வல்லவர்கள்
அச்சுதனுக்கு–எம்பெருமானுக்கு
அடியார்–அடிமை செய்யப் பெறுவர்-அந்தரங்க கிங்கராவார் –

வார் இத்யாதி –
ஸ்வபாவமே ஒழுகு நீண்ட காது வேண்டும் அளவும்  தாழப் பெருக்கி –
மட்டிலே அமைத்து -மகரக் குழை சாத்த வேண்டும் என்று ஆசைப் பட்டு-

சீரால் இத்யாதி –
சீர்மை குன்றாதபடி யசோதை பிராட்டி –
ஸ்ரீ யபதியானவனைக் குறித்து சொன்ன சொலவுகளானவை

சிந்தையுள் நின்று திகழ –
தம்முடைய திரு உள்ளத்தின் உள்ளே சர்வ காலமும் நின்று விளங்க –

பார் இத்யாதி –
பூமியில் உள்ளாருடைய ஹ்ருதயங்கள் நிறையும்படி –
பழையதான புகழை உடையராய் –
திருப் புதுவைக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார்

பன்னிரு நாமம் இத்யாதி –
வைஷ்ணவ சிஹ்னமான திரு த்வாதச நாமங்களோடே அருளிச் செய்ததாய் –
அத ஏவ
அனுபவிதாக்களுக்கு ஒரு காலும் திருப்தி பிறவாதே –
மேன் மேலும் அபேஷிக்கும்படி-நிரதிசய போக்யமாய் இருக்கிற –
அந்தாதியான இவை பன்னிரண்டு பாட்டையும் –
சாபிப்ராயமாக வல்லவர்கள்

அச்சுதனுக்கு அடியாரே –
ஆஸ்ரிதரை ஒருகாலும் நழுவ விடாத ஸ்வபாவன் ஆனவனுக்கு
அநவரத கிஞ்சித்கார பரராகப் பெறுவர்-

————————————————–

கேசவன் தமர் பிரவேசம் –

ஆடியாடியிலே -வாடி வாடும் -என்கையாலே ஒரு நீர்ச் சாவியாய் வாடினபடி சொல்லிற்று –
அந்த ஒரு நீர்ச் சாவியானது தீர காரார் கருமுகில் கலந்து வர்ஷித்த படி சொல்லிற்று –அந்தாமத்து அன்பில் –
அப்படி வர்ஷித்த படியாலே –ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்-என்று வெள்ளமிட்டு பெருகின படி சொல்லிற்று வைகுந்தா மணி வண்ணனில்
எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் மா சரிது பெற்று -என்கையாலே அவ்வெள்ளம் இரு கரையும் புரண்ட படி சொல்லுகிறது கேசவன் தமரில்-

இவர் ஆடியாடியில் பட்ட ஆர்த்தி தீர வந்து கலந்த படி சொல்லிற்று அந்தாமத் தன்பு
அக்கலவியால் பிறந்த ப்ரீதி அவனதானபடி சொல்லிற்று -வைகுண்ட மணி வண்ணன் –
அந்த ப்ரீதி தான் ஆழ்வார் ஒருவர் அளவிலும் அன்றிக்கே நம்மோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும்
வெள்ளமிட்டுப் பெருகின படியைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில் -(வைகுந்த மணி வண்ணா -அதி சங்கை போக்கி -இதில் -எமர் கீழ் மேல் ஏழு பிறப்பும் –அதி சங்கா நிவர்த்தகம் அங்கு-இங்கு -ஆழ்வார் சம்பந்திகள் அளவும் –
உன்னை நான் பிடித்தேன் சிக்கனவே -உன்னை எங்கனம் – விடுவேனோ -முடிவில் இதுவே லஷ்யம் அங்கு –உபக்ரமம் அப்பியாசம் உப சம்ஹாரம் –
இங்கு -முதல் – எமர் கேசவன் தமர் ஆனார்கள் –மேவும் தன்மையன் -ஆக்கினான் -பகவத் வ்யாமோஹ பரம் இங்கு)

சர்வேஸ்வரன் ஆழ்வாரோடு வந்து சம்ச்லேஷித்து அத்தாலே பிறந்த ப்ரீதி தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே தம்மோடு
பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் பெருகின படியை –மா சதிர் இது பெற்று -கண்டு -இது இவன் என் பக்கல்
பண்ணின பஷபாத அதிசயம் இறே-என்று இனியராய் தம்மை விஷயீகரிக்கைக்கு ஈடான குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து
அவற்றுக்கு வாசகமான திருத் த்வாதச நாமத்தாலே அவனைப் பேசி அனுபவிக்கிறார்
சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீகரித்தால்-அது பின்னை அவன் அளவிலே நில்லாது இறே –

மரணாந்தாநி வைராணி -ருஷிகள் குடியிருப்பை அழித்து -மைதிலியைப் பிரித்து நம் உயிர் நிலையிலே நலிந்தால் போலே
ஸ்ரீ ஜடாயு மகாராஜரை நலிந்து -இவை எல்லாம் செய்ய மாட்டானே இனி இவன்
நிர்வ்ருத்தம் ந பிரயோஜனம் –இவன் ஜீவிக்கிற நாளிலே நாம் செய்யும் நன்மை இவன் விலக்காது ஒழிவது காண் என்று இருந்தோம்
-அது அந்நாளிலே பெற்றிலோம் -நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம் இறே
க்ரியாதாம் அஸ்ய சம்ஸ்கார -இவன் நான் செய்யும் நன்மை விலக்காதனான அளவு பிறந்த இன்றும் இழக்க வேணுமோ -வேண்டுவன செய்யப் பாரும்
மமாப்யேஷ யதா தவ —யுத்த -114-99–நீர் இறாய்த்து இருந்தீர் ஆகில் குடல் துடக்குடையாரிலே ஒருவன் செய்யும் அத்தனை அன்றோ (புதல்வரால் பொலிந்தார் உந்தை -என்று அன்றோ ஸ்ரீ விபீஷணனை பார்த்து பெருமாள் வார்த்தை -குடல் துடக்கு -சாமான்ய சம்பந்தம் -)
நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய நீர் பின்னைக் கடக்க நில்லீர்-என்றார் இறே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் ஓரம் ராவணன் அளவும் சென்றது இறே

மகாரஜர்க்கு சத்ரு என்று வாலியை நிரசித்து வைத்து மகா ராஜர் கண்ண நீர் பொறுக்க மாட்டாதே
-சஞ்ஜாத பாஷ்ப -கிஷ்கிந்தா -23-24-என்று தாமும் கண்ண நீர் விழ விட்டார் இறே
தர்மே மனச்ச தே பத்ர –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-27-ஸ்ரீ மாலா காரர் பக்கலிலே விஷயீ காரம் அவர் சந்தானத்து அளவும் சென்றது இறே (போகங்கள் இங்கும் ஸ்வர்க்கத்திலும் -திவ்ய லோகம் அடைவாய் -தர்மத்தில் உன் உள்ளம் நிற்கும் -சந்ததிகளுக்கு தீர்க்க ஆயுள் -ஸ்வர்க்கம் கிட்டும் -ஸூர்யன் இருக்கும் வரை இவை இவை நடக்கும் -என்று ப்ரஹ்மாதிகள் போலே அன்றோ ப்ரீதியால் கண்ணன் மாலா காரருக்கு அருளினான்  )
ஸ்ரீ கண்டா கர்ணன் பக்கல் பண்ணின விஷயீ காரம் அவன் தம்பி யளவும் சென்று -நீ அவனுக்கு நல்லையாகில் அவன்
முன்னாகப் போ -என்று அருளிச் செய்தான் இறே-(ஸ்வர்க்கமும் அடைந்து இந்திரன் போலே அனுபவித்து -சாயுஜ்யம் அடைவாய் -இவன் தம்பிக்கு இவன் போவதற்கு முன் நீயும் அடைவாய் )
குபேரன் கண்டா கர்ணனுக்கு திரு அஷ்டாஷர மந்த்ரமும் த்வாதச அஷர மந்தரத்தையும் உபதேசித்து த்வாரகை சென்று
ஸ்ரீ கிருஷ்ணனை ஆஸ்ரயிக்க உபதேசித்தார் –

எம்பார் இத் திருவாய் மொழியை அருளிச் செய்யப் புக்கால் -ஸ்ரீ வைஷ்ணவன் ஆனேன் என்கிறார் என்பாராம்
வைஷ்ணத்வ சிஹ்னம் இறே திரு த்வாதச திரு நாமம் –
ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும் -எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும்- இரண்டாயிற்று நெடுமாற்கு அடிமை –
அதில் எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத் திருவாய் மொழி –

————————————————————–

அவதாரிகை –

சம்பந்தி சம்பந்திகள் பக்கலிலும் எம்பெருமான் அபிநிவிஷ்டனான படியைக் கண்டு
இது எல்லாம் என் பக்கல் உண்டான விஷயீகார அதிசயம் இறே -என்று ஹ்ருஷ்டராகிறார் –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

நாராயணனாலே – நிரதிசய வாத்சல்யத்தால் –எமர் எல்லாம் கேசவன் தமர் -அவன் தமர் இவர் எமரானால் தான் –ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ -வாழ்வு என் என்று கொண்டாடுகிறார்
ஏழு ஏழு -நம் அளவும் வர மீண்டும் மீண்டும் இத்தையே அனுசந்தானம் செய்ய வேண்டுமே-

கேசவன் தமர்
1-பிரசஸ்த கேசனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் -என்னுதல் –
2-விரோதி நிரசன சீலதையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
3-தஸ்மாத் கேசவ நாமவான் -என்கிறபடியே சர்வ நிர்வாஹனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
சர்வேஸ்வரன் உடையார் -என்றாயிற்று -ஆழ்வார் இவர்களை விரும்புகிறது-(1-ஸ்வரூபம் -ப்ரஹ்மாதிகளுக்கும் -நியாந்தா/ 2-ரூபம் -ஸுரி பெருமாள் -பிரசஸ்த கேச பாசம் உள்ளவன் / 3-குணம் -கிலேச நாசன் -கேசவா என்ன கெடும் இடராய எல்லாம் கெடுமே /4-சேஷ்டிதங்கள் கேசி ஹந்தா –நான்கையும் சொல்லும் கேசவ திரு நாமம் )
எமர் -என்று ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது
இத்தால் ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது அவன் விஷயீகரிக்கைக்க் என்றபடி
கேசவன் தமர்
அவனுடைய அவயவ சௌந்த்ர்யத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
எமர் கீழ் மேல் ஏழேழு இறப்பும் கேசவன் தமரானார்கள் –
ஏகாஹம் அபி கௌந்தேய பூமிஸ் தமுதகம் குரு குலம் தாரயதே தாத சப்த சப்த ச சப்த ச –என்கிறபடியே தச பூர்வான் தசாபரான் ஆத்மா நஞ்ச —
மாசரிது பெற்று
1-விதி சூழ்ந்ததால் என்கிற ஆகஸ்மிக பகவத் கிருபை யாதல்
2-மாதவன் என்றதே கொண்டு என்கிற உக்தி மாத்ரத்தை யாதல்
3-தம் பெற்ற பேற்றை தம்மோடு சம்பந்தம் உடையாரும் பெறும்படியான பேற்றை பெற்று என்னுதல்
மா சரிது பெற்று
பெரும் சரிதுபெற்று -தடக்கை சதுரனைப் பெற்று என்றபடி
தந்தலையால் வந்ததாகில் இறே சாவதியாய் இருப்பது
இது பெற்று
காணக் காண அவன் சிரசா வஹிக்கிறபடி
நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
நம்மோடு சம்பந்தமுடையாரையும் அவன் இப்படி விஷயீ கரிக்கிறது நம்முடைய சம்பத்து இறே
நம்முடைய வாழ்வு –
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்து
வாய்க்கின்றவா –
ஊற்று மாறாதே மேன்மேல் என பெருகி வருகிறபடி —ஏழ் படி கால் என்றது தான் ஓர் அளவு இல்லை –இன்று நம் அளவும் வரச் செல்லுகிறது இறே –
இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது ஹேது என் என்னில்
ஈசன்-
வகுத்த ஸ்வாமி யாகையாலே
என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் –
கண் அழகாலே என்னை அனந்யார்ஹன் ஆக்கி தன வடிவழகை என்னை அனுபவிப்பித்தவன்
விண்ணோர் நாயகன் எம்பிரான் எம்மான் –
நித்ய ஸூ ரிகளைத் தோற்ப்பிக்குமா போலே -என்னை அவ்வடிவு அழகைக் காட்டித் தோற்ப்பித்து-என்னை அவ்வடிவு அழகை அனுபவிப்பித்த உபகாரகன் –
நாராயணனாலே –
தன் மேன்மையைப் பாரதே உகவாதாரையும் விட மாட்டாதபடி வத்சலனாய் உள்ளவனாலே சமிதை பாதி சாவித்திரி பாதியாக
வன்றிக்கே-அவனுடைய நிர்ஹேதுக கிருபையாலே –
திருக் கண்கள் அழகையும் திருமேனி அழகையும் -இரண்டையும் -காட்டி அருளியது காருண்யத்தாலே -என்றபடி
நாராயணனாலே -எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் -கேசவன் தமரானார்கள் -மா சரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா-(உபாயமாக நாராயணனை பற்றி )
நாராயணனாலே என்ற இடம் –மாசதிரினுடைய உபபாதனம் -நாராயணன் ஆகிற பெரும் பேற்றைப் பெற்று கேசவன் அடியார்கள் ஆனார்கள் என்றவாறு -(நாராயணனாலே -முதல் வேற்றுமை ஆக்கி ஆகிய – வாத்சல்யம் -மா சதிர் – கிருபை -ஆகிய பேறு)

1-ஸர்வாதிஸ் –கேசவன் தமர் இத்யாதி -க இதி ப்ரஹ்மணோ நாம -இத்யாதிகள் படியே ஸர்வ காரணமாய்

நாச்சியாரும்
நாராயணன் மூர்த்தி கேசவன்
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை -மாதவனான பின்பு கேசவனானான்
கேசவன் நம்பியைக் கால் பிடிப்பான்
கள்ள மாதவா கேசவா

—————————————————————————————

அவதாரிகை –

நாராயணனாலே என்று நாராயண சப்தம் பிரஸ்துதம் ஆயிற்றே -அதுக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக சப்தத்தை உபாதானம் பண்ணுகிறார்

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-

கீழ் யுக்தமான –நாராயண -அர்த்தம் சொல்லி –ஸூ விஷய பக்ஷபாதத்தை அருளிச் செய்கிறார் –
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–நாரணன் -திரு நாமம் சொல்லி –எண் பெருக்கு அந்நலத்து ஒண் புகழ் ஈறிலா -வண் புகழ் நாரணன் -திண் கழல் சேரே -கீழே
வேதமயன்-அந்த நாரணன் சப்தத்தையே வேதங்கள் பிரதானமாக பிரதிபாதிக்கப்படும் —ப்ரஹ்மம் ஆத்மா சத் பொதுவான சொற்கள் –நாராயணனையே குறிக்கும் –
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை-த்ரிவித காரணமும் இவனே –
காரணம் -கிரியா ஹேது -தண்டம் சக்கரம் – கிரியை -சுழலுதல் –கருமம் -குடம் –அந்தர்யாமி -நிர்வாககன்-என்றபடி –
சீரணங்கு அமரர்-குணத்தால் உயர்ந்த திவ்யர் —ஸ்ரீ லஷ்மி -சீரணங்கு என்றுமாம் –
பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று-தேவர் முனிவர் மனுஷ்யர் -யாவரும் தொழுது ஏத்தும் படி
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே-எனக்கு பிரகாசித்த -ஸமஸ்த விபூதி நாதன் இவற்றை காட்டி பிரகாசிப்பித்து அருளிய உபகாரம் –
அமலன் ஆதி பிரான் -தானே அமலன் ஆதி என்று காட்டி அருளிய உபகாரகன் போலே
என்னை அநந்யார்ஹன் ஆக்கி அருளிய சேஷி -ஸ்ரீ யபதி-என்றவாறு –
கேசவன் நாராயணன் மாதவன் -ஸ்ரீ யபதி –மாதவன் பேர் சொல்வதே ஒத்தின் சுருக்கு –
வங்க கடல் கடைந்த –மாதவனை கேசவனை –நாராயணனே முதல் பாசுரம் -கேசவன் மூர்த்தி சொல்லி-அவனே -திருமாலே -கோதோ உபநிஷத்

நாரணன் –இதுக்கு அர்த்தம் என் என்னில்
முழு வேழ் உலகுக்கும் நாதன்
சர்வ ஸ்வாமி-
இவ்வர்த்தத்தில் பிரமாணம் என் என்னில்
வேதமயன்
நாராயண பரம் ப்ரஹ்ம இத்யாதிகளால் சர்வ ஸ்வாமி என்று ஓதப்படுகிறவன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன்
தன் விபூதியில் காரணமாயும் -கார்யமாயும் -உதகா ஹரணம் ஆகிற பலமாயும் வரக் கடவதான இவற்றுக்கு நியந்தாவாய் உள்ளான் –
க்ரியா சாதனம் -அதடியாக வரும் க்ரியை -தத் சாத்தியமான கார்யம் -இவற்றுக்கு நிர்வாஹகனாய் இருக்கும் என்றுமாம்-(காரணம் -மண் / கார்யம் -குடம் / கிரியை -தண்ணீர் கொண்டு வரும் பலன் -போலவே-பஞ்ச பூதங்கள் /அண்டாதிகள் /ஆத்மாக்கள் பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் பலனுக்காக- -)
காரணம்-செயல்பாடு -பலன் -என்றுமாம் (விசிஷ்ட ப்ரஹ்மம் -மூன்றுக்கும் -நிமித்த உபாதான சஹகாரி -ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டா ப்ரஹ்மம் -மண் மாறும் -/ சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் -நிமித்த -குயவன் / ஸ்தூல விசிஷ்ட சித் அசித் ப்ரஹ்மம் பலன் -ஞான சக்தாதி கல்யாண குண- விசிஷ்ட ப்ரஹ்மம் சஹகாரி-அபின்ன நிமித்த காரணம் ப்ரஹ்மம் –சதேவ சோம்ய- -ஏக மேவ அத்விதீயம் /)
எந்தை
எனக்கு ஜனகன் ஆனவன்
சீரணங்கு
ஸ்ரீ யான அணங்கு -என்று தெய்வப் பெண் என்றபடி -பெரிய பிராட்டியார்
அன்றியே
சீரணங்கு அமரர்
நித்ய ஸூரிகளுக்கு விசேஷணம் ஆகவுமாம்
சேஷத்வ அனுரூபமான ஆத்மா குணங்களை தரியா நிற்பாராய்-அப்ராக்ருத ஸ்வபாவரான நித்ய ஸூரிகள்
பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று வாரணத்தை மருப்பொசித்த பிரான்
இவ்வருகு உண்டான சம்சாரிகள் -இப்படி சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே எல்லாரும் எழுத்து வாங்கி ஏத்தும் படி நின்று-(அங்குலி விச்சேதம் -ஏகலைவன் போலே -அக்ஷரம் எழுதுவது-உதிரத்தில் பதித்து -குழந்தைக்கு பெயர் -தாஸ்யம் சதுஷ்ட்யம் என்பர் )
குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்த உபகாரகன் –ந சமம் யுத்த மித்யாஹூ-என்னும்படியாக
என் மாதவனே —
நான் தோற்ற துறை
மாதவனான நாராயணன் எந்தை
ஸ்ரீ மன் நாராயணன் எனக்கு ஸ்வாமி என்கிறார்-

————————————————————————————————-

அவதாரிகை –

கீழே –மா சதிரிது பெற்று -என்றார் -இந் நன்மைக்கு அடி என் என்ன -நினைவு இன்றிக்கே இருக்க அந்தபுர வாசிகள் சொல்லும்
வார்த்தையைச் சொன்னேன் -என்கிறார் –ஜாமாதா-தயிதஸ்தவேதி -பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம் பச்யேம –என்றார் இ றே பட்டர் -(என் திருமகள் –சேர் மார்வன் –என்றபடி -அந்தப்புர வாசிகள் –ஸ்ரீ வைஷ்ணவ வார்த்தை அன்றோ –நாராயணன் -கேசவன்- உபாசகர்களும் சொல்வார்களே)

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-

மாதவன் என்றதே கொண்டு –அஹ்ருதய யுக்தி
என்னை –வாசி அறியாத என்னை
இனி -உக்திக்கு அனந்தரம்
இப்பால் பட்டது-மேல் உள்ள காலங்கள் எல்லாம்
யா தவங்களும் சேர்கொடேன்-அவித்யாதிகள் சேரக் கூடாது என்று சங்கல்பித்து
என்று என்னுள் புகுந்திருந்து-என் நெஞ்சுக்குள் புகுந்து -அநன்ய பேரனாக இருந்து
தீதவம் கெடுக்கும் -தீது புத்தி பூர்வகமாக -தெரியாமல் இரண்டையும் கெடுத்து
அமுதம் செந்தாமரை கட்குன்றம்-ஸ்திரமான அழகான வடிவு
கோதவமிலன் -குற்றம் இல்லாத
கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே-கருப்புக்கட்டி –கோதும் அவமும் -இல்லாத –அபூத உவமை -ஜாலம் சேர்த்தால் தானே சக்கரை உண்டாகும் -ஜல வாசனை வருமே -வஸ்து அந்தர சம்சாரக்கம் -பாக தோஷம் –உண்டாகும் –ஈஸ்வரனுக்கு கோது அவன் -உபகார ஹேது ஸகத்வத்வமும் -அபேஷா நிரபேஷமாக செய்யும் –அவம்-ஸூ பிரயோஜன அர்த்தத்வமும் -சொத்தை ஸ்வாமி பெறுவது போலே /என் அமுதம் கறுப்புக் கட்டி கண்ணனே -தானே –

மாதவன் என்றதே கொண்டு
நான் மாதவன் என்ற உக்தி மாதரத்தைக் கொண்டு
இத்தையே திரு உள்ளத்திலே குவாலாகக் கொண்டு
என்னை-அல்லாத திரு நாமங்களுக்கும் இதுக்கும் வாசி அறிவதே என்று இத்
அல்லாத திரு நாமங்களுக்கும் இதுக்கும் வாசி அறியாத என்னை
இனி
முன்பு கழிந்த காலம் கழிந்தே விட்டது இறே
மேல் அத்யல்ப காலமாய்த் தோன்றா நின்றதாயிற்று ஈஸ்வரனுக்கு
பழுதே பல காலும் போயின என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனன் இருக்கும் இருப்பைத் தான் என் பக்கலிலே இரா நின்றான்
புத்த்வா காலம் அதீ தஞ்ச முமோஹ-என்று இரா நின்றான் ஆயிற்று
இப்பால் பட்டது
அணைக்கு கிழக்குப் பட்ட நீரோ பாதி இறே போன காலம்
இனி மேல் உள்ள காலமாகிலும்
யா தவங்களும் சேர் கொடேன் என்று
உன்னை யாதொரு தபஸ்ஸிலும் புக்கு கிலேசிக்க விடேன் என்று
அம்மி துணையாக ஆறு இழிகை இறே இவனை விட்டு உபாயாந்தரத்தைப் பற்றுகை
அவங்கள் –1-நரக ஹேதுவான அவித்யாதிகள்-
2-புறம்பே சில பிரயோஜனங்களைக் கொண்டு போக விடுதல் -3–அயோக்யன் என்று அகல விடுதல்-
4–உபாயாந்தர பரிக்ரஹம் பண்ண விடுதல் செய்யேன் என்று
என்று
ஏதத் வ்ரதம் மம-என்கிறபடியே சங்கல்பித்து
என்னுள் புகுந்திருந்து
இப்படி சங்கல்பித்து நெடுங்கை நீட்டாக இருக்கை அன்றிக்கே
என் ஹிருதயத்திலே வந்து புகுந்து
புகுந்தாலும் போக்கு வரத்து உண்டாமாகில் வாலி போன வழியை அடைத்து மகா ராஜர் குறும்பு செய்தால் போலேயாம் என்று
இருந்து-ஸ்தாவர பிரதிஷ்டையாக இருந்து
புகுந்திருந்து
இவரை வர நிறுத்த ஒண்ணாதே இவருக்குமாக தான் புகுந்து இருந்தான் அத்தனை
புகுந்து செய்த கிருஷி ஏது என்னில்
தீதவம் கெடுக்கும்
தீ தாவது -பொய் நின்ற ஞானத்துக்கு முன்பு புத்தி பூர்வகமாகப் பண்ணிப் போந்த பாபம்
அவமாவது ஞானம் பிறந்த பின்பு ப்ராமாதிகமாகப் பண்ணினவை
இரண்டாலுமாக பகவத் பிராப்தி பிரதிபந்தக கர்மங்களைச் சொல்லுகிறது
அன்றிக்கே
கோக் நே சைவ ஸூ ராபே ச சோரே பக்ன வரதே ததா -நிஷ்க்ருதிர் விஹிதா சத்பி க்ருதக்னே நாஸ்தி நிஷ்க்ருதி- என்கிறபடியே
நிஷ்க்ருதி உள்ள பாபங்களையும் இல்லாத பாபங்களையும் சொல்லிற்று ஆகவுமாம்
இவற்றைக் கெடுப்பது கஷாய பானத்தை பண்ணுவித்தோ என்னில்
அமுதம்
தன்னுடைய போக்யதையை அனுபவிப்பித்தாயிற்று
செந்தாமரை கட்குன்றம்
ரச நேந்த்ரியத்துக்கே யன்றிக்கே கண்ணுக்கும் போக்யமாய் இருக்கை
குன்றம்
இத்தலையில் தீதும் அவமும் போக்கினனாய் இருக்கை அன்றிக்கே தனக்கு உண்டாய் கழிந்தது என்று தோற்றும்படி
வடிவில் பிறந்த ஔஜ்வல்யம்
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்று இருக்குமவன் இறே

கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –
கோதாவது-த்ரவ்யாந்தர சம்சர்க்கத்தாலே வருமது
அவமாவது பாகத்தாலே வருமது
த்ர்ஷ்டாந்திகத்தில் கோதும் அவமும் ஆகிறது ஆன்ரு சம்சயத்துக்கு ஆதல் -இவனுக்கு உபகாரமாகவாதல் விஷயீகரிக்கை
தனக்கு புறம்பாய் இருப்பதொரு போக்ய வஸ்து இல்லாதபடி தான் போக்யனாய் இருக்கும்
எம்மான்
நான் வேறு ஓன்று போக்யம் என்று இராதபடி என்னைத் தோற்ப்பித்தவன்
என் கோவிந்தனே
‘கிருஷ்ணாவதாரமும் தமக்கு என்று இருக்கிறார்
ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோ -பெரியாழ்வார் திருமொழி -1-7-1-இறே

—————————————————————————————-

அவதாரிகை –

என்னோடு பரம்பரயா சம்பந்தம் உடையாரையும் கூட என்னைப் போலே யாக்கினான் ஒருவனுடைய
சாமர்த்தியம் இருக்கும் படியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-

ஸூ சம்பந்த குல சம்பந்தி பர்யந்தமாக செய்ய வல்ல சாமர்த்யன்
கோ விந்தன் -கோ ஸம்ருத்தி
குடக்கூத்தன் -தனம் விஞ்சி ப்ராஹ்மணர் -யாகாதிகள் போலே ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக
கோவலன்-ஐஸ்வர்யம் சேஷ்டிதம் அனுகூலமான ஜென்மம்
என்று என்றே குனித்து–தனி தனி கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் -ஒன்றுக்கும் ஒரு சஹஸ்ர நாமம் -சொல்லி –
பரத்வ -ஸ்ரீ யபதி ஸுலப்யம் -சொல்லி கூத்தாடி
தேவும் தன்னையும் -பரத்வத்தையும் தானான நீர்மையையும்
பாடியாடத் திருத்தி-நித்யர்களில் ஒரு கோவையாக்கி
என்னைக் கொண்டு என்-பாவம் தன்னையும் பாறக் கைத்து -பிரதிபந்தகங்களை ஒட்டி
எமர் ஏழேழு பிறப்பும்-மேவும் தன்மையம் ஆக்கினான் -தன்னை பிராபிக்கும் தன்மை
வல்லன் எம்பிரான் விட்டுவே –நினைத்ததை செய்யும் வல்லவன் -சர்வ வ்யாபி -ஒருவரை பிடிக்க ஊரை வளைப்பாரை போலே

கோவிந்தன் –
ஸ்ரீ வைகுண்டத்தில் இல்லாததொரு சம்பத்து இறே இது –
கோ சம்ருத்தியால் உண்டான ஐஸ்வர்யம் உள்ளது இங்கேயே இறே -(வாக்மி ஸ்ரீ மான் -பூமி -பசுக்கள் -பெருமாள் வராஹ கிருஷ்ணன் மூவருக்கும் கோவிந்தன் சப்தார்த்தம் உண்டே )
குடக்கூத்தன் –
ப்ராஹ்மணர் ஐஸ்வர்யம் விஞ்சினால் யாகங்கள் பண்ணுமா போலே இடையர் ஐஸ்வர்யம் மிகுத்தால் செருக்குப் போக்கு விடுவது ஒன்றாயிற்று –
குடக்கூத்தாவது –அவாக்ய அநாதர-என்று இருக்கக் கடவ வஸ்து தைர்ய பங்கம் பிறந்து செருக்குக்குத் தலைச் சாவி வெட்டி ஆடினபடி இறே
கோவலன்
இவற்றுக்கு அடியான பிறப்புடையவன்-பிறந்து படைத்த ஐஸ்வர்யம் இறே இது
என்று என்றே குனித்து
இக் குணங்களை மாறாதே சொல்லா நின்று கொண்டு -உடம்பு இருந்த இடத்தில் இராதே ஆடி –
அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்தால் இவருக்கு பேசாது இருக்க ஒண்ணாது இறே –
தேவும் தன்னையும்
தேவும் -என்கிறது – ஐஸ்வர்யத்தை –தன்னை -என்கிறது- ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை -அது இ றே தானான தன்மை
ஆத்மானம் நாதி வர்த்தேதா -என்றான் இ றே -வசிஷ்டர் –ஆத்மபூதம் பரதம் நாதி வர்த்தேதா-என்கிறான் என்று சிலர் சொல்லுவார்கள் –
பட்டர் -நீரான தன்மை யாகிறது ஆஸ்ரித பரதந்த்ரனாகை-உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து நீரான
தன்மையை இழவாதே கொள்ளும் என்கிறார் -என்றார்
உன் தன்மையை இழக்காதே பரதன் சொல் படி கேட்க வசிஷ்டர் பெருமாள் இடம் சொன்ன வார்த்தை –
பாடியாடத் திருத்தி –
என்று என்றே குனித்து என்கிற இடத்துக்கும் –பாடியாட -என்கிற இடத்துக்கும் வாசி என்-என்னில்
கீழ் சௌலப்ய பரம்-
இங்கு ஐஸ்வர்யமும் சௌலப்யமும் இரண்டும் உண்டு
விஷய பேதத்தால் சொல்லவுமாம்
அன்றிக்கே என்று- என்றே- என்கிற இடம் அஹ்ருதயமான உக்தி மாத்ரமாய் –குனிக்கையாவது – உத்தியோகத்து அளவாய்
இங்கு-பாடியாட -சஹ்ருதயமாகப் பாடுவது ஆடுவதான படியாய்
என்று என்றே குனித்துப் பாடுவது ஆடுவதாம்படி -என்றாதல் –
திருத்தி –
தரிசு கிடந்த தரையைச் செய்காலாம் படி திருத்துவாரைப் போலே நித்ய ஸூரிகள் யாத்ரையே -யாத்ரையாம் படி திருத்தி –
என்னைக் கொண்டு -என் பாவம் தன்னையும் பாறக் கைத்து
என்னைக் கைக் கொண்டு -ஓர் உபாய அனுஷ்டானத்தை பண்ணுவித்து என்னில் -இப்போது இவர்க்கு அபசித்தாந்தமாம் —
பகவத் பிரசாதத்தாலே பெற்றார்க்கும் சொல்லுமதுக்கும் சேராது
ஆனால் என் சொல்லுகிறது என்னில் -சேற்றில் விழுந்த மாணிக்கத்தை எடுத்து கழுவி விநியோகம் கொள்ளுமா போலே என்னை
சுவீகரித்து என்னால் போக்கிக் கொள்ள ஒண்ணாத பாபங்களையும் உருமாய்ந்து போம்படி ஒட்டி-
எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன்
இது தான் என் ஒருவன் அளவன்றிக்கே என்னோடு சம்பந்தம் உடையார் ஏழேழு பிறப்பும் தன்னைக் கிட்டுகையே
ஸ்வபாவமாக யுடையோம்பாம்படி பண்ணினான் –
எம்பிரான் விட்டுவே –
எனக்கு உபகாரகனான சர்வேஸ்வரன் –
நினைத்த கார்யம் செய்து தலைக் கட்ட வல்லவன்
சர்வ சக்தி மாட்டாதது உண்டோ –வ்யாப்தியும் தமக்காக –என்று இருக்கிறார் –

———————————————————————————-

அவதாரிகை –

திருமாலை யாண்டானோடே எம்பெருமானார் திருவாய் மொழி கேட்டருளுகிற நாளில் பாட்டுக்கள் தோறும் சில வார்த்தைகள் அருளிச் செய்து-(தம்மையும் தம் உடையராயும் விஷயீ கரித்த- அவனை கொண்டாடுகிறார் -முதல் நிர்வாகம் -திருமாலை ஆண்டான் )
இது அர்த்தமானாலோ -என்றால் -இது விஸ்வாமித்ரர் சிருஷ்டி -ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டறியேன் -என்று பணிக்குமாம் ஆண்டான்
ஆண்டான் இப்பாட்டுக்கு விச்வாமித்ர சிருஷ்டி வேண்டாவாய் இருந்ததீ-என்ன -இப்பாட்டால் தன் அவயவ சௌந்தர்யத்தாலே
என்னைத் தனக்கு ஆக்கினான் -என்கிறார் -என்று அருளிச் செய்து அருளினாராம்
அதுவும் கிடக்க பட்டர் அருளிச் செய்வது ஓன்று உண்டு –ஆழ்வாரையும் ஆழ்வார் பரிகரத்தையும்-விஷயீ கரித்து அத்தாலே
திருமேனியிலே பிறந்த ஔஜ்வல்யத்தை சொல்லுகிறது -என்று
விசோதிதஜட ஸ்நாதசசித்ர மால்யாநுலேபன மகார்ஹவஸநோ ராமஸ் தஸ்தௌ தத்ர ஸ்ரீ யா ஜ்வலன் –யுத்த -131-15-என்று
பெருமாள் பிராட்டி உடன் பட்டாபிஷேக திருக் கோலத்துடன் நின்றாப் போலே என்றவாறு –

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-

ச பரிகரமாக அங்கீ கரித்ததால் வந்த உஜ்வலம்
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விஷ்ணு -உடைய -முதல் திரு நாமம் –பாட்டுகளில் மரியாதை குலைய கூடாதே -உகரம் குற்றியலாக கொள்வது
இலங்கு -விளங்கும் -என்றவாறு
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு-விகசிதம் -விளங்கா நிற்கும் -அழகிய வடிவு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி-அம் சாரியை -மதி சீர் சங்கு -/ மலையே திரு உடம்பு -தாமரையே பாதம் -சாமானாதி கரண்யம்-/ உபமானமே உபமேயம் -பொருந்திய படியால் –
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
மதகு திறந்தால் போலே விட்டு விளங்கா நின்றுள்ள -சிவந்த ஒளியை உடைத்தான தாமரை போலே யாயிற்று
நாம் தோற்று விழும் திருவடிகள் –தம்மை அணைத்த கை –குளிர நோக்கின திருக் கண்கள்
இவை உபமேயத்துக்கு உபமானம் நேராகப் போராமையாலே அது தன்னையே சிஷித்துச் சொல்கிறார்
அன்றிக்கே –விட்டுவுக்கு இலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் -என்று அந்வயம்-
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
சோபயன் தண்ட காரண்யம் -என்னுமா போலே இரா நின்றது வடிவு அழகு
தம்மை அணைத்த போதைக் குளிர்ந்த வடிவு இருந்தபடி –
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு
விட்டிலங்குகிற பிரகாசத்தை உடைய சந்தரனைப் போலே யாயிற்று ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்
சீர் சங்கு –
பகவத் பிரத்யாசத்தியாலே வந்த ஐஸ்வர்யம் –உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே –
பிரசாதத்தைச் சூடி கைப்புடையிலே கிடப்பாரைப் போலே அவன் வாயாலே ஊட்ட உண்டு -வடிவை பாராத் திருக்கையிலே சாயும் அத்தனை
சீர் சங்கு
உன் செல்வம் சால அழகியது -என்னும்படி வாயது கையதான ஐஸ்வர்யம் இறே –
சக்கரம் பரிதி –
கண்டதில் மின்னிற்று ஒன்றை உபமானமாகச் சொல்லும் அத்தனை இறே -ஆதித்யனைப் போலே அன்றே திரு வாழி வாழ்வான் இருப்பது (பத்ம பர்வத சந்த்ர -உபமானம்–கீழே விசேஷித்து சொல்லி இங்கு -விசேஷணம் சொன்னாலும் திருச் சக்கரத்துக்கு நிகர் ஆகாதே -ஆக சொல்லாமல் -கண்டத்தில் மின்னும் ஒன்றை சொல்லி விட்டார் அத்தனை )
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –
இவை இத்தனையும் தன் புகராலே முட்டாக்கு இடுமாயிற்று திரு அபிஷேகம் –
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவன் ஆனவனுக்கு –(மது சூதனன் தனக்கு என்றும் –மது சூதனனான விஷ்ணுவுக்கு என்று இரண்டு அன்வயம் )
விட்டுவுக்கு இலங்கு இத்யாதி -என்று முதலாக அந்வயம் –

——————————————————————————————–

அவதாரிகை –

தன் பக்கல் நான் பிரவணன் ஆகைக்கு எம்பெருமான் வருந்திற்று எல்லாம் தன் கிருபையாலே -என்கிறார் –

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-

கிருபா பாரவஸ்யம் -உஜ்வல்யம் -உபகாரம் -விட்டு வல்லன் -இவற்றுக்கு ஹேது -கிருபை தானே
மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
மது கைடபர் –ஹய சிரஸ் / கண்ணன் -/ உபாயாந்தர ப்ராப்யாந்த்ர சம்பந்தம் இல்லாமல்
நம் பிரதிபந்தகங்களை போக்கி என்றபடி -/அஹங்காராதிகள்–/ காரியமே அற்று –
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
ஸ்தோத்ர பாடல்களால் சூழ்ந்து -கல்ப கல்ப காலம் -பாடுவது -கல்ப கல்ப காலமும் நாம் ஒரு கால் பாட -அவன் அனுக்ரஹம் பண்ண
அவன் குணக் கூட்டங்களை சூழ்ந்து -ஸ்வயம் பிரயோஜனமாக -நின்று பாடி ஆட -பிறப்புக்கள் தோறும் -கல்ப கல்பம் -பல் நெடும் காலமாக -திருத்த முயலுவான் -அபிமுகனாக ஈடாக
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
சூழ்ச்சி -திட்டம் வைத்து என்னை பிடிக்க -தன் சொத்தை தான் பெற -எனக்கே -அசாதாரனமான விசேஷம் -பிரதம கடாக்ஷம் தொடங்கி பர பக்தி பர்யந்தமாக –
அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம் என்று உணரும் படி –அருள்கள் –
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே
கிருபை தடுக்க ஒண்ணாத்தாதே -அதுவே விதி -/ஏலு கிற பொருந்துகிற –எனக்கு தகுதியான -தாழ்ந்த நீசனுக்கு தக்கபடி என்றபடி –கிருபை -என்னை சூழ்ந்து -திரிவிக்ரமனையும் சூழ்ந்து -என்றபடியே -என் அளவுக்கு தன்னை தாழ்த்துக் கொண்டு கிருபை செய்து அருளினான் என்றபடி-

மது சூதனை யன்றி மற்றிலேன் என்று –
விரோதி நிரசன ஸ்வபாவன் ஆனவனை ஒழிய வேறு சிலரைத் தஞ்சமாக வுடையேன் அல்லேன் என்றாயாயிற்று இவர் இருப்பது (வேதங்களை மீட்ட மதுசூதனன் -கொழுப்பு -ரஜஸ் தமஸ்- கோடரி போலே உலகத்துக்கு -இருவர் -தானவர்களில் கொடியவர் -ஹயக்ரீவர் முகத்தில் வந்து –மது சூதனை )
சத்வம் தலை எடுத்த போது ஒரு கால் இவ்வார்த்தை சொல்லுமது நமக்கும் உள்ளது ஓன்று இறே -இவர்க்கு வாசி என் என்னில்
எத்தாலும் கருமமின்றி –
அந்த உக்திக்குச் சேர்ந்த அனுஷ்டானம் உண்டாய் இருக்கும்
ப்ராப்ய ஆபாசங்களிலும் பிராபக ஆபாசங்களிலும் நெகிழ்ந்து -அவனை ஒழிந்த எல்லா வற்றாலும் ஒரு பிரயோஜனம் இன்றிக்கே இருப்பர்

துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட -நின்றூழி யூழி தொறும்
1-ஸ்தோத்ராத்மகமான பாடல் -என்னுதல்
2-ஸ்துதிய குணங்களை விளாக்குலை கொள்ளும்படியான பாடல்கள் என்னுதல்
கல்பம் தோறும் கல்பம் தோறும் துதி சூழ்ந்த பாடல்களைக் கொண்டு பாடுவது ஆடுவதாம் படி பண்ணினான் –
நின்று
தேஹி மே-ததாமி தே- என்று பிரயோஜனங்களைப் பற்றி அகலுகை யன்றிக்கே இருக்கை-
இப்படி அவன் பண்ணுகைக்கு ஹேது என் -என்னச் சொல்கிறார் –
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய -விதி சூழ்ந்ததால்
விதி சூழ்ந்ததால் -எதிர் சூழல் புக்கு –
ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் அவன் போம் வரம்புக்கு எதிர் வரம்பே வருமா போலே -இவர் பிறந்த ஜன்மங்கள் தோறும்
தானும் எதிரே பிறந்து வந்தான் யாயிற்று
இவர் கர்மம் அடியாக பிறக்க -அவன் அனுக்ரஹத்தால் பிறந்து வந்த இத்தனை –சூழல் என்று அவதாரத்தைச் சொல்லக் கடவது இறே –
எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய -விதி சூழ்ந்ததால் -என்கிறார்
விதி என்கிறது பகவத் கிருபையை -பகவத் கிருபையை விதி என்பான் என் என்னில் -அவனுக்குத் தப்ப ஒண்ணாத தாகையாலே
நாம் நினைத்தவை தலைக் கட்ட வொட்டாத
கர்மம் போலே ஈஸ்வரன் நினைத்த கார்யங்களும் க்ருபா பரதந்த்ரனாய்த் தலைக் கட்ட மாட்டான்
வதார்ஹம் அபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-
காகுத்ஸ்த-தங்களிலும் கிருபையே விஞ்சி ரஷித்துக் கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்
வதார்ஹமான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் கண்னழிவு பண்ணுமவர் இறே
எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே-
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்து -மூன்று அடியாலே த்ரைலோக்யத்தையும் திருவடிகளின்
கீழே இட்டுக் கொண்டு எல்லாரோடும் பொருந்தின -குள்ளர்களை திரிவிக்ரமன் என்று சொல்லும் படியான குறள் மாணாய் போலே-
சௌலப்யம் தானே பரத்வம் என்னும் படி என்னை விஷயீ கரிக்கைக்கு-(எனக்கே -இரண்டு தடவை /ஸ்வாமி -எனக்கே அசாதாரணமான / உபகாரம் -பண்ண ஒரு தடவை / கிருபையால் அருள்கள் செய்ய எனக்கே / எனக்கு என்ன கிருபையும் உபகாரமும் என்றபடி -)
ஒரு விதி சூழ்ந்தது -அம்மான் திருவிக்ரமனை என்னை அருள்கள் செய்ய -எனக்கு என்னவே ஒரு விதி சூழ்ந்தது

——

அவதாரிகை –

உன்னுடைய குண அனுசந்தான பூர்வகமாக ஸ்துதி பிரணாமங்களைப் பண்ணிக் கொண்டு உன்னை அனுபவிக்கும்
இதுவே பிரயோஜனமாய் இருக்கும் மனஸை எனக்குத் தந்தாய் -என்கிறார் –

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-

பிரயோஜனம் முதலில் சொல்லி -உபாயமான வாமனன் பின்பு சொல்லுமே –
திருவிக்ரமன் திருக்கண்களை -எப்படி சேவித்தார் ஆழ்வார் –
ஸூவ அனுபவ யோக்யமான சர்வ உத்தரமான மனசைத் தந்து அருளினான் –என்கிறார் –
திரிவிக்ரமன் -அனன்யார்ஹன் ஆக்கினான் உலகத்தை
செந்தாமரைக் கண் -ஆழ்வாரை வெல்ல இந்த உபகரணம் -ஜிதந்தே புண்டரீகாஷ-தாமரை கண்ணனை விண்ணோர் பரவும்
எம்மான் -அடிமை ஆக்கிக் கொண்டவன்
என் செங்கனி வாய் உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன்-உருவம் -நிறம் –பொலிந்த-ஸ்படிகம் போலே
-திருப் பற்கள் -ஸ்மிதம் -மந்த -திரு முத்து நிறத்தை
என்று என்று-தனித் தனியே —உள்ளி-சேஷ்டிதம் கண் அழகு முறுவலையும் நெஞ்சாலே அனுபவித்து
பரவிப் பணிந்து -உள்ளடங்காமையாலே அக்ரமாக பரவி -பணிந்து -ப்ரீதி ப்ரேரிதனாய் கொண்டு திருவடிகளில் விழுந்து
பல்லூழி யூழி நின் பாத பங்கயமே -பல காலம் -கல்பங்கள் -பிராப்தனான உன்னுடைய போக்யமான திருவடிகளில்
மருவித் தொழும் மனமே தந்தாய்-அனன்ய பிரயோஜனமான அடிமை ஆக்கி அருளிய -சக்தன் –

திரிவிக்ரமன் –
மூன்று அடிகளாலே சகல லோகங்களையும் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன் –ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியன் –
செந்தாமரைக் கண் எம்மான் –
நோக்காலே என்னைத் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன்-
காலும் கண்ணும் -சம்பந்தம் -திருமழிசை ஆழ்வார் -கட்டை விரலிலே கண் -பக்தி சாரர்
என் செங்கனி வாய் -உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன்
இவர் ஜிதம்-என்ற பின்பு அவன் ஸ்மிதம் பண்ணின படி -என்னை அனந்யார்ஹன் ஆக்குகையாலே சிவந்த கனிந்த
திரு வதரத்தின் உருவிலே -அழகிலே -நிறத்திலே
பொலிந்த பரபாகத்தாலே சம்ருத்தமாய் பரிசுத்தமான ஸ்படிகம் போலே இருக்கிற திரு முத்து நிரையினுடைய நிறத்தை யுடையவன்
முத்துப் பல் வரிசை –
என்று என்று உள்ளி –
இதர விஷயங்களினுடைய ஸ்மிதத்தில் உண்டான ஸ்ம்ருதி- அகவாய் கண்டவாறே விட்டு அல்லது நிற்க ஒண்ணாததாய் இருக்கும் இறே-(விஷயாந்தரங்கள் விஷயத்தில் அகவாய் -உள்ளே உள்ள ஜலம் இத்யாதி நினைவில் வர ஸ்மிதம் விடுவோமே என்றவாறு  )
அக வாய் —இதர உள் விஷயம் என்றும் பகவத் ஸ்மிதம் என்றும் –சாடு -இது -பகவத் ஸ்மிதம்-மாறாதே அனுசந்திக்கலாம் இறே
அழகு ஆறு திரு அபிஷேகத்தில் இருந்து விழ –ஸ்மிதம் -அழகு சேர -ஹார அழகு பிராட்டி அழகு சேர
மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட –
-இடை சிறுத்துததால் சுழல் -திரு நாபி சரஸ் -ஆனதே –
பரவிப் பணிந்த
அக்ரமாகக் கூப்பிட்டு -நிர்மமனாய்த் திருவடிகளில் விழுந்து
இப் பேறு தான் ஒரு நாள் உண்டாய் மற்றை நாள் மறுக்கை யன்றிக்கே
பல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் –
1–கல்பம் தோறும் கல்பம் தோறும் பரம போக்யமான உன் திருவடிகளையே அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனசைத் தந்தாய் –
2–விஷயாந்தரங்கள் அஸ்தரம் ஆகையாலும் அபோக்கியம் ஆகையாலும் ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை யாகையாலே
மனஸ்ஸூ -சஞ்சலம் ஹி மன –ஸ்ரீ கீதை -6-34-என்று சஞ்சலமாய் இறே இருப்பது
அப்படி இன்றியே நித்யமுமாய் நிரதிசய போக்யமுமாய் இருக்கையாலே –மருவித் தொழும் மனசைத் தந்தாய் -என்றுமாம்
3–பழைய நெஞ்சைத் திருத்தின அளவன்றிக்கே கருவுகலத்தில் ஒரு நெஞ்சைத் தந்தாய் —திவ்யம் ததாமி தே -ஸ்ரீ கீதை -11-8-போலே –
பழைய நெஞ்சு -இது என்று பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாத படி இரா நின்றது
என் வாமனனே –வல்லை காண்
கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்கு ஒன்றேயோ பரிகரம்-
ஆழ்வாரைக் கொண்டார் -மனசைக் கொடுத்தார் -ஔதாரன் பட்டம் கொடுத்தார் -உலகைக் கொண்டார் -தருவதும் பரிப்பதும்- ஒரே உபகரணத்தாலே
வாமன வேஷத்தைக் காட்டி என் நெஞ்சைத் திருத்தித் தந்தாய்
அவ்வழகாலே மகா பலி என்னது என்று இருந்த பூமியை அபகரித்தாய்
வல்லை காண் -என்று உகக்கிறார் –

———————————————————————————————

அவதாரிகை –

எம்பெருமான் தம் திறத்தில் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாமல் தடுமாறுகிறார் –

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

வாமனன் -குள்ளன் மட்டும் இல்லையே —ஸூகம் நயதி -திரு மேனி காந்தியால் சேவித்தவர்கள் மகிழ்வார்
பொல்லாங்கை நீக்கி -அனுபவத்துக்கு உறுப்பு அல்லாத -இதற்கு பிரத்யுபகாரம் உண்டோ
என் மரகத வண்ணன்-வடிவு அழகு –தாமரைக் கண்ணினன்-போக்தாவை குளிர நோக்கும்
காமனைப் பயந்தாய் -உத்பாதகன் ஆனவன் –சாஷாத் மன்மத மன்மதன்
என்று என்று உன் கழல் பாடியே பணிந்து தூ மனத்தனனாய் -பிரயோஜ நாந்தரங்களில் போகாமல்
பிறவித் துழதி நீங்க என்னைத் தீ மனம் கெடுத்தாய் -விஷயாந்தரங்களில் போகும் தீமையை கெடுத்து அருளி
உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே-பூரணன் -அவாப்த சமஸ்த காமன் -ஸ்ரீ யபதி என்ன செய்வேன் –

வாமனன் –
வடிவு அழகைச் சொல்லுதல் -என்னுதல்
நன்மைகளைத் தருமவன் என்னுதல் -இனிய அனுபவங்களைக் கொடுப்பவன் –
என் மரகத வண்ணன் –
ஸ்ரமஹரமான வடிவு அழகை என்னை அனுபவிப்பித்தவன்
தாமரைக் கண்ணினன்-
வடிவு அழகே அன்றிக்கே அகவாயில் தண்ணளிக்கு பிரகாசகமான திருக் கண்களை உடையவன்
காமனைப் பயந்தாய் –
வடிவு அழகாலே நாட்டை வெருட்டித் திரிகின்ற காமனுக்கு உத்பாதகன் ஆனவனே
அனுசந்தானாத்தாலே ஒரு வைசத்யம் பிறந்தவாறே முன்னிலை போலே தோற்றும் -அப்படியும் சொல்லிக் கூப்பிடுவார்
அதுக்கு மேலே சில பரிமாற்றங்களை ஆசைப்பட்டு அது கிடையாமையாலே படர்க்கையாகவும் சொல்லிக் கூப்பிடுவார்-
அப்பாஞ்ச ஜன்யமே -முன்னிலையாக இருந்து படர்க்கையாக அங்கும் –
இவை இரண்டுக்கும் அடி அபிநிவேசம்
என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
இத் திரு நாமங்களை இப்படி வாயாலே மாறாதே சொல்லா நிற்கத் திருவடிகளிலே விழுந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான நெஞ்சு இன்றிக்கே மோஷத்துக்கே ஏகாந்தமான நெஞ்சை உடையனாய்
பரி சுத்த அந்தக்கரணனாய்-அதின் பலமாய் வருமதே ஜன்மம் போமது
பிறவித் துழுதி உண்டு —தூர் -துக்கம் -அது நீங்கும் படியாக
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும்
உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய்
நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் –
தேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் -ஸ்ரீ கீதை -10-10-
தேஷா மேவா நுகம் பார்த்தம் அஹம் அஜ்ஞ்ஞானாஜம் தம நாசயாமி ஆத்ம பாவஸ்ய -ஸ்ரீ கீதை -10-11-போலே
உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே —
பண்ணின உபகாரத்தின் கனத்தாலே பிரத்யுபகாரம் பண்ணி யல்லது தரிக்க மாட்டு கிறிலேன்-அதுக்கு விரகு காண் கிறிலேன்
நான் ஒரு உபகாரம் கொள்ளாது ஒழிதல்-நீ குறைவாளன் ஆதல் செய்யப் பெற்றிலேன் –சிரீதரனே-புஷ்கலனாய் இருக்கிற
உனக்கு நான் எத்தைச் செய்வேன்

—————————————————————————————–

அவதாரிகை –

ஆடியாடியில் பிறந்த வ்யசனம் எல்லாம் நான் மறந்து மிகவும் பிரீதனாம் படி பண்ணி இந்த்ரியங்களைத் தான் இட்ட வழக்காக்கினான் என்கிறார் –
பக்தி பூர்வகமாக உன்னை அனுபவியா நிற்கச் செய்தே –பிரதி பந்தகங்களும் நீங்கி— நிரதிசய ஹர்ஷமும் பிறக்கும்படி
உன்னை என்னுள்ளே வைத்தாய் என்று ப்ரீதர் ஆகிறார் என்னுமாம் –

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –-2-7-9-

விஸ்லேஷ துக்கும் தீரும் படி என் நெஞ்சுக்குள் புகுந்து நான் ஹ்ருஷ்டராம் படி அனுபவிப்பித்தான் -தூ மனத்தில் தோற்றும் -பக்திக்கு விஷயமாம் படி –
அழுக்கு நீக்கி -நல்ல நெஞ்சு -அதற்கு விஷயம் -மூன்று பாசுரங்கள்
சிரீ இதரன்-ஸ்ரீ பீடன் – செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து -எங்கும் நாடி நாடி கண்கள் நீர் மல்கிகுவளை ஒண் கண்ண நீர் கொண்டாள்
வெவ்வுயிர்த்து உயிர்த்து –மரீ இய தீ வினை -ஆடியாடியில் உள்ள விசனம்
மாள இன்பம் வளர-2-4 தீ வினை /2-5 கலந்த இன்பம் -அந்தாமத்து அன்பு வளர – வைகல் வைகல் இரீஇ
உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே-விதேயமான நெஞ்சில் -இருத்தி –பைந்தாமரைக் கண்ணன் எங்கும் பக்க நோக்கு அறியாமல்
பக்தி பாரவச்யத்தால் வந்த ஆழ்வார் துடிப்பை -விகாரம் –தீ வினை-பிராப்தி பிரதிபந்தக நிவ்ருத்தி -பூர்வகமாக —இன்பம்  வளர – -அனுபவ ஆனந்தம்-வளரும் படி செய்து அருளினான் –

சிரீ இதரன் –
பெரிய பிராடியாரைத் திரு மார்விலே உடையவன்
செய்ய தாமரைக் கண்ணன்
நீர் பாய்ந்த பயிர் செவ்வி பெற்று இருக்குமா போலே -அவள் திரு மார்விலே இருக்கையாலே குளிர்ந்த கண் அழகை உடையவன்
வஷஸ் ஸ்தலேந ஸ்ரீ யமுத்வஹன் விபு விஸ்தாரி பத்மோத் பல பத்ர லோசந –ஸ்ரீ விஷ்ணு தர்மம் என்கிறபடியே
என்று என்று
இப்படி மாறாதே சொல்லி
இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –
இவர் பக்தி பரவசர் ஆகையாலே இவருடைய தேக யாத்ரை இருக்கும் படி என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி
அன்றிக்கே –பட்டர்
இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள-என்கிற இடத்தளவும்
ஆடியாடியிலே இவர்க்கு ஓடின தசையாய்
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை-என்கிற இது அந்தாமத்து அன்பு -தொடங்கி- கேசவன் தமர் அளவும்
வர உண்டான பரிதியைச் சொல்லுகிறது -என்று
இராப்பகல் வாய் வெரீ இ -என்கிறது –இவள் இராப்பகல் வாய் வெரீ இ -என்றத்தை
அலமந்து -என்கிறது- எங்கும் நாடி நாடி- என்றத்தை
கண்கள் நீர் மல்கி -என்கிறது –தன் குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் -என்றத்தை
வெவ்வுயிர்த்து உயிர்த்து-என்கிறது –உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் -என்றத்தை
மரீ இய தீ வினை மாள
ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே ஆனை இடர் பட்டால் போலே –ஆடியாடியில் ஆற்றாமை
இவருக்கு இப்படி பொருந்தின விஸ்லேஷ வ்யசனம் ஆரும்படியாக
இன்பம் வளர
அந்தாமத்து அன்பு தொடங்கப் பிறந்த ப்ரீதி
வைகல் வைகல்
கழிகிற காலம் தோறும்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை
உன்னை என்னுள்ளே இருத்தி வைத்தனை
யென்னிருடீ கேசனே –
எனக்குப் பரிகரமாய் விரோதித்த இந்த்ரியங்களும் உன் பக்கலிலே படையற்றன
பரம சேஷியைக் கண்டார் த்வார சேஷிகள் அளவில் நில்லார்கள் இறே -இந்த்ரியங்கள் என்னது — ஈசன் நீ —

———————————————————————————-

அவதாரிகை –

நமக்கு உபகாரகன் ஆனவனை நீ ஒரு காலும் விடாதே கண்டாய் -என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-

சர்வ பிரகார உபகாரன் -விடாமையில் உண்டான அபேஷையை வெளியிடுகிறார்
இருடீகேசன் -தச இந்த்ரிய ஆனனன்-மானச இந்த்ரியத்தை நியமித்து
எம்பிரான் -உபகாரகன்
இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் -எனக்கு செய்தது இதுவும் என்கிறார் -முருடான ராவணனை
லோக கண்டகன் கொடூரமான-ராஷச குலத்துக்கு பலமான ராவணன்
எம்மான் -என்னை அனுபவிப்பித்த ஸ்வாமி
அமரர் பெம்மான் என்று என்று -பலபடியாக அனுசந்தித்து
தெருடியாகில் நெஞ்சே வணங்கு -அறிவுடையை -தெளிவு -ஆகில் -வணங்கும் படி
திண்ணம் அறி அறிந்து -புத்தி பண்ணி -உறுதியாக -சிக்கென
மருடி யேலும் விடேல் கண்டாய் -அயோக்யா அனுசந்தானம் கலக்கம் வந்தாலும் -இதுவே மருள் –
நம்பி பற்ப நாபனையே–குண பூர்ணனான -காரண பூதன் -இம் மஹா உபகாரகனை -விட்டு விடாதே

இருடீகேசன் எம்பிரான் –
தன்னை அறிகைக்கு பரிகரமாக தந்த இந்த்ரியங்களைக் கொண்டு சப்தாதி விஷயங்களை விரும்பி நான் அனர்த்தப்படாமே
தன்னையே அறிகைக்கு பரிகரமாம்படி பண்ணி உபகரித்த மகா உபகாரகன் –நாடாத மலர் நாடி –வைக்கவே வைக்கின்றது-
இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் –
இவருடைய இந்த்ரிய வசதியைத் தவிர்த்த படி -இலங்கையில் ராஷச ஜாதியில் விபீஷணாதிகளை வைத்து முருடரான
ராவணாதிகளை நிரசித்தால் போலே யாயிற்று
எம்மான் அமரர் பெம்மான்
இந்த்ரியங்களுடைய இதர விஷய பிராவண்யத்தை தவிர்த்த மாத்ரம் அன்றிக்கே நித்ய ஸூரிகளுக்கு தன்னை அனுபவிக்கக்
கொடுக்குமா போலே -எனக்குத் தன்னை அனுபவிக்கத் தந்தவன் –
என்று என்று
இப்படிச் சொல்லா நின்று கொண்டு
தெருடியாகில் நெஞ்சே வணங்கு
தெருளுதியாகில் -ஜ்ஞான பிரகாச த்வாராமிகில் –நெஞ்சே வணங்கு -ஜ்ஞான இந்த்ரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான
ஏற்றம் உனக்கு உண்டாகில் உபகாரகன் ஆனவன் திருவடிகளிலே விழப் பார் –
விபரீத ஆகாரதையை போக்கின படி -மனசுக்கு ஞானம் உண்டோ -வெளி புறப்பட வழி- மனஸ் சஹகாரத்தா
ஞான இந்த்ரியங்கள் வேலை என்பதால் –
யோகிநாம் -தச இந்த்ரியங்கள் -கோரம் மநோ ராஜநீசரண் -ராஷசர் போலே –விவேக சரம் -ராம பானம் போலே -யோக மார்க்கம் –
தேகாத்ம விவேகம் -அந்ய சேஷத்வ -விவேகம் -ஸ்வ ஸ்வா தந்த்ர்யா விவேகம் -ஆகிய சரம் என்றவாறு
திண்ணம் அறி
இத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாகப் புத்தி பண்ணு –
வார்த்தை பதின் கலம்-வழியில் ஓர் எண் கலம் -தெரு முலையில் அறு கலம் –
கொடுத்தது முக்கலம் -ஆள் கலம் போக்கி பதர் கலம் போக்கி கிடைத்தது ஒரு கலம் -சபை வார்த்தை –
அறிந்து
அறிகை தானே போரும் பிரயோஜனம் -அதுக்கு மேலே
மருடி யேலும் விடேல் கண்டாய்
உனக்கு ஒரு பிச்சு உண்டு இறே-அவன் வைலஷண்யத்தைப் பாரா வருவது –
நாம் இவ்விஷயத்தை தூஷிக்கையாவது என்-என்று அயோக்ய அனுசந்தானத்தாலே அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -அத்தைத் தவிரப்பார் கிடாய்
நம்பி பற்ப நாபனையே —
கெடுவாய் இவ்விஷயத்தை விட்டு புறம்பே போய் மண்ணை முக்கவோ
மண்ணை அளந்தவனும் அவன் -உண்டவனும் அவன் உமிழ்ந்தவனும் அவன் –ஜகமே நியத பிரகார சரீரம் –
1-அவன் குண பூர்த்தி இருந்த படி கண்டாயே —நம்பி
2-வடிவு அழகு இருந்தபடி கண்டாயே —பத்ம நாபனையே –கொப்பூழில் ஏழு கமலப் பூ அழகர்
3-முன்பு நமக்கு உபகரித்த படி கண்டாயே–நம்பி-பத்ம நாபனையே –இருடீகேசன்

——————————————————————————————–

அவதாரிகை –

பற்பநாபன்-அத்யந்த விலஷணனாய் இருந்து வைத்து –தாமோதரனே-அத்யந்த ஸூலபனாய்
எந்தை-என்னை அடிமை கொண்டவன் –எற்பரன்-என்னை யல்லது அறியானானான் என்கிறார் –

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11-

சர்வ பிரகாரன் ஆனான் என்கிறார் -போக்கிடம் இல்லை என்று நெஞ்சு இங்கேயே இருக்கப் பண்ணினானே
பற்பநாபன்-ஜகத் உத்பத்தி ஹேதுவான திரு நாபி கமலம் உடையவன்
உயர்வற உயரும் பெரும் திறலோன் -உத்பன்ன ஜகத்தை ரஷிக்க பெரும் சக்தன்
எற்பரன் -இந்த மேன்மை யுடனே சிலபனாக என் பரமாகவே உள்ளான் -நானே இலக்காக உள்ளானே
என்னை யாக்கிக் கொண்டு -என்னை அங்கீ கரித்து
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -ஏவகாரம் -அசாதாராண -சம்பந்த சம்பந்திகள் நமக்கும் உண்டே
என்னமுதம் -பரம போக்கியம்
கார் முகில் போலும்-தரம் பார்க்காமல் உபகரிக்கும்
வேங்கட நல் வெற்பன் -யோக்ய ஸ்தலமான -வெண்நீல மேகங்கள் விரித்தால் போல் –
விசும்போர் பிரான் -ஆஸ்ரித பவ்யத்தை உடையவன்
எந்தை எனது ஸ்வாமி
தாமோதரனே-ஆஸ்ரிதர் கட்டும் படி
எனக்கே தன்னைத் தந்த -1-அர்த்தியை உண்டாக்கியும் -2–அவனைத் தானே ச்வீகரிக்கையும் -3–அபேஷிதத்தை கொடுக்காமல் தன்னையே கொடுக்கையும் –
4-தானே போக்யமாகவும் இருப்பதால் கற்பக வியாவ்ருத்தி உண்டே இவனுக்கு

பற்பநாபன் –
சகல ஜகத் உத்பத்தி காரணமான திரு நாபி கமலத்தை உடையவன்
உயர்வற உயரும் பெரும் திறலோன் –
பேசப் புக்கால் பரிச்சேதித்துப் பேச ஒண்ணாத படியான சௌர்ய வீர்யாதி குண ப்ரதையை உடையவன்
திறல் -பர அபிபுவன சாமர்த்தியம் –அல்லாத குணங்களுக்கும் உப லஷணம் இது –
காரணத்வ பிரயுக்தமான மேன்மை அது -பர அபிபவன சாமர்த்தியம் தொடக்கமான குணங்கள் அவை –
இப்படி இருக்கிறவன்
எற்பரன் –
மதேக சித்தன்
என்னையாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
ஔதார்யத்தில் பிரசித்தமாய் இருப்பது கல்பகம் இறே -அதில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –என்னையாக்கிக் கொண்டு
1-அர்த்திகளை உண்டாக்கிக் கொடுக்கும் அது இல்லை இறே அதுக்கு
எனக்கே –
2-ஒருவனுக்கே குறைவறக் கொடுக்குமது இல்லை இறே அதுக்கு
தன்னைத் தந்த –
3-சில பிரயோஜனன்களை கொடுக்குமல்லது-தன்னைக் கொடுக்குமது இல்லை இறே அதுக்கு
என்னமுதம் –
4-தான் போக்யமாய் இருக்குமது இல்லை இறே அதுக்கு –
எனக்கு நிரதிசய போக்யமானவன் –
ஒரே சரம் ஒரே சொல் -சக்ருத்-துர் நாபிபாஷதே
கார் முகில் போலும் வேங்கட நல் வெற்பன் –
இந்த ஔதார்யத்துக்கு அடி திருமலையின் சம்பந்தம்-
சஹ்யம் பற்றின ஔதார்யம் இறே -பிரவாஹம் நீர் வீழ்ச்சி என்றவாறே –
சஹ்யாத்ரி -காவேரி -போலே -ஔதார்யத்துக்கு சங்கோசம் இல்லை –
கொடுத்தத்தை நினையாதே கொடுக்கும் மேகம் போன்ற ஸ்வபாவத்தை உடைய திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையவன்
சமன் கொள் வீடு தரும் சமன் குன்றமே –
விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே —
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் இருந்து வைத்து -ஆஸ்ரிதரான இடையருக்கும் இடைச்சிகளுக்கும் கட்டவும் அடிக்கவுமாம் படி
வந்து அவதரித்து அச்செயலாலே அடிமை கொண்டவன் -பிரதம விபூஷணம் -உதர பந்தனம் –
விசும்போர் பிரானாய்–எந்தையே –என் அமுதம் ஆனவன் -என் பரன் -என்று அந்வயம்-
உபாயத்வம் –ஆக்கிக் கொண்டு -/அமுதம் -உபேயத்வம் /பரத்வம் /சௌலப்யம் /சௌர்யம் வீர்யம் பராக்கிரமம்
அனைத்தும் சொல்லி –தன்னை ஒழிய போகாதவன் –
தாயார் -குழந்தை பிதற்றலை கேட்டு சயனித்து -நாபியில் –நாஹம் -அறிய வில்லையே சொல்லி பிதற்றி -ஸ்ரீ பத்ம நாப ஸ்ரீ யே -தேசிகன்

——————————————————————————–

அவதாரிகை –

எற்பரன் என்கிறபடியே என்னளவில் அவன் செய்தால் போல்-நிர்ஹேதுக அனுக்ரஹம்- செய்வார்க்கு அவனைக் காணலாம் அல்லது
ஸ்வ யத்னத்தாலே அறிவோம் என்பார்க்கு அறியப் போகாது என்கிறார்

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே —2-7-12-

அதிசயித ஞானாதிகருக்கும் தன்னளவில் செய்த உபகாரம் அறியார்
தாமோதரனைத் -ஆமோ தரமறிய-இப்படி என்றால் நாராயணனை அறிய முடியுமோ-ஆஸ்ரித பரதந்த்ரன்
தனி முதல்வனை -நிமித்த -உபாதான காரணம் -சமஸ்த ஜகத் ஏக காரணத்வன்
ஞாலம் உண்டவனை -பிரளயத்தில்
ஆமோ தரமறிய ஒருவர்க்கு -தங்களை தவிர வேறு யாராலும் முடியாதே -ஆகாது –
என்றே தொழுமவர்கள்-
தாமோதரன் உருவாகிய –சிவற்கும் திசை முகற்கும்-சரீரம் தானே -இவர்கள் இப்படி சொல்லி தொழுகிறார்கள் –
பிரகாரதயா சேஷம் -பிரியாமல் சார்ந்து
கடுகிலே கடலை மடுத்தால் போலே -என்னிடம்
ஆமோ தரமறிய -இவர்களா தெரிந்து கொள்வார்கள் -இவர்கள் அந்த பரத்வன் தாமோதரன் என்பார் -என்னிடம் கலந்தது அறியாதார்களே
தாமோதரனாக வந்து என்னளவு வந்தது அறியாதவர்கள் -என்றவாறு
எம்மானை என்னாழி வணனையே -சமுத்திர வர்ணன் -கடுகிலே கடலை மடுத்தால் போலே –(குண ஆர்ணவம் -என்னுள் வைத்த உபகாரகம்- தாமோதரத்வம் பரத்வம் என்னலாம் படி அன்றோ )-இந்த சௌலப்யம் யாரே அறிவார் –
விசேஷ உபகாரம் அறிவது அரிது -யசோதை கையால் கட்டுப்பட்டதை அறிந்தாலும்

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்கென்றே யாயிற்று ப்ரஹ்மாதிகள் சொல்லுவது
தாமோதரனை –
அவன் ஆஸ்ரித பரதந்த்ரனாய் நிற்கிற நிலையை அறியப் போமோ
தனி முதல்வன் –
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் என்கிறபடியே த்ரிவித காரணமும்
தானேயாய் இருக்கிற இருப்பை அறியப் போமோ
ஞாலம் உண்டவனை –
உண்டாக்கி விடுகை யன்றிக்கே ஆபத் சகனாய் நிற்கும் நிலையை அறியப் போமோ –
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரமறிய-
ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்னா நிற்பார்கள்-தாங்கள் எல்லாம் அறிந்தார்களாக நினைத்து தொழுமவர்கள்
யஸ்ய மதம் அமதம் -யஸ்ய அமதம் தஸ்ய மதம் -அப்பால் பட்டவன் என்றே சொல்ல முடியும் –
ஆமோ தரம் அறிய ஒருவற்கு என்றே தொழும்வராய் -தாமோதரன் உருவாகிய சர்வேஸ்வரனுக்கு சரீரவத் விதேயரான
சிவர்க்கும் திசை முகர்க்கும் தரமறிய யாமோ
அல்லாதாரில் காட்டில் தாங்கள் அறிந்தார்களாக அபிமானித்து இருக்கிறவர்களாலே தான் அறியப்போமோ –
ஆரைத் தான் என்னில்
எம்மானை என்னாழி வணனையே —
குளப்படியில் கடலை மடுத்தால் போலே தான் குண ஆர்ணவமாய் இருக்கிற இருப்பை எனக்கு அறிவித்தவனை –
இப்படி அவன் தானே காட்டக் கண்ட நான் கண்டால் போலே காண்பார்க்கு காணலாம் அத்தனை அல்லது –
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போமோ –
தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள் தாமோதரன் உருவாகிய
சிவற்கும் திசை முகற்கும் எம்மானை என்னாழி வணனையே தரமறிய ஆமோ –என்று அந்வயம் –

————————————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றவர்களை இத் திருவாய் மொழி தானே எம்பெருமான் திருவடிகளைச் சேர்த்து விடும் -என்கிறார் –

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூர்ச் சடகோபன்  
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-

பகவத் பிராப்தியே பலம்
வண்ண மா மணிச் சோதியை -நிறம் -பெரு விலையனான -நீல மணி -தேஜஸ் -ஜோதி மணி உருவம் -விக்ரகம் என்றுமாம்
அமரர் தலைமகனை -நித்ய ஸூ ரிகளும் அழகை பரிச்சேதிக்க ஒண்ணாத படி
கண்ணனை –ஆஸ்ரிதரை -தானே அனுபவிப்பிக்கும் -சௌலப்யம்
நெடுமாலைத் -வ்யாமோஹம்
தென் குருகூர்ச் சடகோபன்  -அழகிய –நிர்வாஹகர்
பண்ணிய -செய்த -பகர்ந்த -பண்ணில் அமைத்து அருளிச் செய்த
தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும் -சர்வாதிகாரம் -திராவிட சந்தர்பம் கூட்டு –
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு -பண்ணிலே வர்த்திக்கும் திரு த்வாதச திரு நாமம்
அண்ணல் தாள் அணைவிக்குமே-கேசவன் தமராக்கும் -சர்வேஸ்வரன் திருவடிகளை பிராபிக்கும் –

வண்ண மா மணிச் சோதியை –
அழகிய நிறத்தை உடைத்தாய் -பெரு விலையனான ரத்னம் போலே இருக்கிற விக்ரகத்தை உடையவனை –
வண்ணம் -நிறம்
மா மணி -மா கறுப்பு -கறுத்த மணி போலே -நீல ரத்னம் போன்ற வடிவில் தேஜஸ்சை உடையவன் -என்றுமாம் –
இவ் வழகைக் கொள்ளை கொள்ளும் போக்தாக்களைச் சொல்லுகிறது –அமரர் தலைமகனை –
ஒரு நாடாக அனுபவியா நின்றாலும் தன் அழகைப் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கிறவனை
கண்ணனை
அவர்களே அனுபவித்துப் போகாமே -இங்கு உள்ளாரும் அனுபவிக்கும் படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை
நெடுமாலைத்
ஒருவனை விஷயீ கரித்தால்-அவன் அளவில் தலைக் கட்டாத வ்யாமோஹத்தை உடையவனை –
தென் குருகூர்ச் சடகோபன்  பண்ணிய –தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும் -பண்ணில்
வேதம் போலே பிறப்பிலி யன்று -அபௌருஷேயம்-என்னும் அதிலும் வீறு உண்டாய் இருக்கிறதாயிற்று-வக்த்ரு விசேஷத்தாலே
சடாரி -ஸ்ரீ ஸூ க்தி -அகில ஹேய -ஞான அனுதயம் -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் -கர்மா வாசனா ருசி போக்கி
-சகல ஹேய நிரசன பூர்வகம் -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் வார்த்தை அன்றோ
பகவத் பிரசாத லப்த பரி பூர்ண ஞான வைபவம் அகில சேதன உஜ்ஜீவன ஆசை கொண்ட ஆழ்வார் –
பிரத்யஷ சமாநாகார பரிவாஹ-வேதத்துக்கு இதுவும் அடியாய் இருக்கும் -சாஷி – உயர்ந்த பிரமாணம் ஆகுமே –வக்த்ரு விசேஷம்
இவை பண்ணிலே யாயிற்று நடந்தது
பன்னிரு நாமப் பாட்டு-
வைஷ்ணத்வ சிஹ்னமான திரு நாமங்களை வைத்துப் பாடினவை –
இவை செய்வது என் என்னில்
அண்ணல் தாள் அணைவிக்குமே–
சர்வேஸ்வரன் திருவடிகளிலே சேர்த்து விடும்
இத் திருவாய் மொழி யோட்டை சம்பந்தம் தானே கேசவன் தமர் ஆக்கி விடும் –

முதல் பாட்டில் தம்மோடு சம்பந்தி சம்பந்திகளும் எல்லாரும் தம்மைப் போலே விஷயீ க்ருதரானார்கள் -என்றார்
இரண்டாம் பாட்டில் அதுக்கு அடி நாராயணன் ஆகையாலே என்றும் அந் நாராயண சப்தார்த்தத்தையும் அருளிச் செய்தார் –
மூன்றாம் பாட்டில் இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது சொன்னார் –
நாலாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படி பண்ணினான் என்றார்
அஞ்சாம் பாட்டில் இப்படி தன்னை அனுபவித்ததனாலே அவன் வடிவில் வந்த புகரைச் சொன்னார்
ஆறாம் பாட்டில் இப்படி என்னை விஷயீ கரிக்கைக்கு அடி நிர்ஹேதுக கிருபை என்றார்
ஏழாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படியான நெஞ்சைத் தந்தான் என்றார்
எட்டாம் பாட்டில் தந்த அளவன்றிக்கே விரோதியான நெஞ்சையும் போக்கினான் என்றார்
ஒன்பதாம் பாட்டில் தன்னுடைய கல்யாண குணங்களையே நான் அனுபவிக்கும் படி என் ஹிருதயத்திலே புகுந்தான் -என்றார்
பத்தாம் பாட்டில் அனுபவ விரோதியான இந்த்ரியங்களையும் தன் வழி யாக்கிக் கொண்டான் என்றார்
பதினோராம் பாட்டில் ஏவம் பூதனானவன் என்னை அல்லாது அறியானானான் என்றார்
பன்னிரண்டாம் பாட்டில் என்னைப் போலே காண்பார்க்கு காணலாம் அது ஒழிய ஸ்வ யத்னத்தால் அறியப் போகாது என்றார் –
நிகமத்தில் பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தே கேசவ அபிமத தாம பஜந்த ஹந்த
யே மாமகா இதி வதன் நதி ஸப்தமம் ச
தஸ்ய ஸ்வரூப குண சேஷ்டித வாசி நாம
பூதன் விஷட் க முகரோ முமுதே முதீந்த்ர–17-

ஹந்த —என்ன ஆச்சர்யம்
யே மாமகாகா இதி வதன் —திருதராஷ்ட்ரன் மாமகாகா கூட உள்ளோர் அனைவரையும் தொலையப் பண்ணிற்று —
இவரது மாமகாகா இவர் சம்பந்த சம்பந்திகள் அனைவரையும் உஜ்ஜீவித்தது
அதி சப்தமம் -சக —ஏழாவது பதிகம் -21 தலைமறை என்றுமாம்

——————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

ஸர்வாதிஸ் ஸர்வ நாதஸ் த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் ஸுவ ஆஸ்ரிரார்த்தி
விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ விமத நிரசனஸ் ஸுவ அங்க்ரி சத்  பக்தி தாயீ
விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – ஸுவ விபவ ரஸதஸ் ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய
ஸ்வார்த்தேஹோ பந்த மோக்தா ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே –2-7-

1-ஸர்வாதிஸ் –கேசவன் தமர் இத்யாதி -க இதி ப்ரஹ்மணோ நாம -இத்யாதிகள் படியே ஸர்வ காரணமாய்

2-ஸர்வ நாதஸ் —நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–ஸர்வ ஸ்வாமியுமாய்

3-த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் –மாதவன் என்றதே கொண்டு–பெரிய பிராட்டிக்கு வல்லபனுமாய் –

4-ஸுவ ஆஸ்ரிரார்த்தி–எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான்—
பஹு வாக ஆஸ்ரிதர் உண்டாக வேணும் என்று பிரார்த்திக்குமவனாய் –

5-விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ —விட்டிலங்கு கருஞ்சுடர் இத்யாதி –நிரவதிக தேஜோ ரூபனுமாய்

6-விமத நிரசனஸ் —மது சூதனை யன்றி மற்றிலேன்—விரோதி நிராசனனுமாய் –

7-ஸுவ அங்க்ரி சத்  பக்தி தாயீ —நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய்—தன் திருவடிகளிலே அநந்ய ப்ரயோஜனையான பக்தியை ஆஸ்ரிதற்குக் கொடுக்குமவனாய் –

8–விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – -வாமனன் என் மரகத வண்ணன்—மஹா பலி யாலே அபஹ்ருதமான வாமன யுடையவனுமாய் –

9–ஸுவ விபவ ரஸதஸ் –சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்–
தன்னுடைய ஸ்ரீ யபதிவத்தையும்-புண்டரீகாக்ஷதை-போன்ற ஐஸ்வர்யத்தை ஸர்வ காலமும் சொல்லி அலற்றும்படி பண்ணுமவனாய் –

10–ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய—இருடீகேசம் எம்பிரான் இத்யாதி –ஹ்ருஷீகேசன் ஆகையால் மனசை
தன் திருவடிகளில் நின்றும் பேராதபடி நிர்வஹிக்க வல்லவனுமாய் –

11–ஸ்வார்த்தேஹோ –எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்–
ஸ்வார்த்தமாகச் சேதனரை அர்த்திகள் ஆக்கித் தன்னை அனுபவிக்கக் கொடுக்குமவனை

12-பந்த மோக்தா—-தாமோதரனைத் தனி முதல்வனை–தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே பந்த கதருக்கு
மோக்ஷ ஹேதுவான தாமோதரத்வத்தை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமான் –
நியாய சாஸ்திரம் வெட்கி காட்டில் ஒழியும் படி பண்ணினார்
எதோ உபாசனம் ததோ பலம் -பொய்த்ததே
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றியவன் -கர்மங்கள் விலங்கு பட்டன படும்

ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே -ஆஸ்ரிதருடைய சம்பந்த சம்பந்திகளுக்கும் ரக்ஷகன் என்று –
கேசவன் தமர் -என்கிற துவாதச நாம காதையிலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

——————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 17-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை——–——17-

———————————————————————–
அவதாரிகை –

இதில்
கீழ் மேல் உண்டானவர்கள் எல்லாரும்
தம்முடைய சம்பந்தத்தாலே
பகவத் தாஸ்ய லாபத்தை லபித்தார்கள் என்று
ஹ்ருஷ்டராய்ப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்
தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும்
சுவறி விடுகை அன்றிக்கே
தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற
விரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே
பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –
மமாப்யேஷ யதாதவ -என்னும்படி
ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய்
தம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான
அவன் குண சேஷ்டிதங்களை
திருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற
கேசவன் தமரில் -அர்த்தத்தை
கேசவனால் எந்தமார்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

———————————————————————————

வியாக்யானம்–

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும் தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த –
எம்பிரான் எம்மான் நாராயணனாலே-
எமர் -கீழ் மேல் ஏழ் பிறப்பும் –
கேசவன் தமர் -ஆனார்கள்
மாசரிது பெற்று –
அத்தாலே –நம்முடைய வாழ்வு வாய்க்கின்ற வா –
என்றத்தை நினைக்கிறது –

கேசவனால் எந்தமர்கள் –
ஜகத் காரண பூதனாய்
விரோதி நிரசனம் பண்ணுமவனாய் –
பிரசஸ்த கேசவனான
அவனாலே

மதீயர் தேசு அடைந்தார் என்று
தேஜஸ் சைப் பிராபித்தார்கள் என்று –
கேசவன் தமராகை இறே இவர்களுக்கு தேஜஸ்
தாஸ்யம் இறே ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாவது –
அத்தை தம்மோட்டை சம்பந்தத்தாலே
கீழ் மேல் உண்டான சம்பந்தி பரம்பரையில் உள்ளவர்கள் எல்லாரும்
லபித்தார்கள் என்று
அந்த யுபகார கௌரவத்தாலே
அவன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய்
வைஷ்ணத்வ சிஹ்னமாய்
கேசவன்
நாரணன்
மாதவன்
கோவிந்தன்
விட்டு
மது சூதனன்
திரி விக்ரமன்
வாமனன்
சிரீதரன்
இருடீகேசன்
பற்ப நாபன்
தாமோதரன் –
என்கிற திரு த்வாதச திரு நாமங்களை பேசி அனுபவித்து
ஹ்ருஷ்டராய்
அத்தை இப்படி நன்றாக அருளிச் செய்த –
சிறப்பு -நன்று –

வீசு புகழ் மாறன்-
சம்பந்த சம்பந்திகள் அளவும்
வைஷ்ணத்வம் ஏறிப் பாயும் படியான
வைபவத்தால்
வந்த பிரசுரமான யசஸ்சை உடைய
ஆழ்வார் உடைய-

மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று –
புஷ்பம் போன்ற திருவடிகளே
நித்தியமான ஆத்மாக்களுக்கு எல்லாம்
உஜ்ஜீவிக்கைக்கு
உசித உபாயம் என்று –

நெஞ்சே அணை-
அவர்களிலே ஒருவனாய்
அம்சம் பெறும்படியான எனக்கு உபகரணமாய்
சௌமனச்யம் உள்ள மனசே
பிரஸூன சமமான திருவடிகளை நீயும் சமாஸ்ரயணம் பண்ணு–

நாராயணனாலே -என்று –
அவனுடைய ச்வீகாரமே நிரபேஷ உபாயம் என்றதின்
அனுவாதமான
கேசவனால் என்கிற இப்பதத்திலே -தத் விவரணமாக
மாதவன் என்றதே கொண்டு -என்றும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் மேவும் தன் மயமாக்கினான் -என்றும்
என்னைக் கொண்டு -என்றும்
தன் பேறு ஆனமைக்கு –விட்டிலங்கு செஞ்சோதி -என்றும்
அம்மான் திரிவிக்ரமனை எனக்கே அருள் செய்ய –எனக்கு என்ன –விதி சூழ்ந்தது –என்றும்
தொழும் மனமே தந்தாய் -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
உன்னை என்னுள் வைத்தேன் என் இருடீகேசனே -என்றும்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்றும்
தாமோதரனை -என்றும்
அருளிச் செய்த சந்தைகளும் அனுசந்தேயங்கள்-

——————————————————————————————

1) கேசவா – நீண்ட கேசத்தை உடையவன்; கேசி என்ற அரக்கனை வென்றவன்.
2) மாதவா – திருமகள் மணாளன்
3) நாராயணா – உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்
4) கோவிந்த-பூமியைப் பிரளயத்திலிருந்து காத்தவன்; பசுக்களை மேய்த்தவன்
5) விஷ்ணு – அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்
6) மதுஸுந-இந்திரியங்களை ஈர்ப்பவன்; மது என்னும் அரக்கனை வென்றவன்
7) திரிவிக்ரமா – மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்
8) வாமனா – குள்ளமான உருவம் உடையவன்
9) ஸ்ரீதரா – ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்
10) ருஷீகேசா – தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்
11) பத்மநாபா – நாபியில் தாமரையை உடையவன்
12) தாமோதரா-கயிற்றால் கட்டப்பட்ட தழும்பு கொண்ட வயிறு உடையவன்.

இப்பன்னிரு திரு நாமஙகளை “வைகுந்தவாசன்வாமனாவதாரன்கிருஷ்ணாவதாரன் நாமங்கள்” என மூன்று வகையாக பிரிக்கலாம்.

 வைகுந்தவாசன்: நாராயணா, விஷ்ணு.
 வாமனாவதாரன்: திரிவிக்ரமா, வாமனா.
 கிருஷ்ணாவதாரன்: கேசவா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, ஸ்ரீதரா, ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.

———–

|| ஸ்ரீ த்வாதச நாம பஞ்ஜரம் ||

புரஸ்தாத் கேசவ: பாது சக்ரீ ஜாம்பூநதப்ரபு: |
பஸ்சாந் நாரயண: சங்கீ நீலஜீமூத ஸந்நிப: || 1 ||

இந்தீவர தளஸ்யாமோ மாதவோர்த்வம் சுதாதர: |
கோவிந்தோ தக்ஷிணே பார்ச்வே-
-தந்வீ சந்த்ரப்ரபோ மஹாந் || 2 ||

உத்தரே ஹலப்ருத் விஷ்ணு: பத்பகிஞ்ஜல்க ஸந்நிப: |
ஆக்நேயாம் அரவிந்தாபோ முஸலீ மதுஸூதன: || 3 ||

த்ரிவிக்ரம: கட்கபாணிர் நிர்ருத்யாம் ஜ்வலநப்ரப: |
வாயவ்யாம் வாமநோ வஜ்ரீ தருணாதித்ய தீப்திமாந் || 4

ஜசாந்யாம் புண்டரீகாப: ஸ்ரீதர: பட்டஸாயத: |
வித்யுத்ப்ரபோ ஹ்ருஷீகேசோ– ஹ்யவாச்யாம் திசிமுத்கரீ || 5 ||

ஹ்ருத்பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ரார்க்க ஸமப்ரப:|
ஸர்வாயுத: ஸர்வசக்தி: ஸர்வக்ஞ: ஸர்வதோமுக: || 6 ||

இந்த்ரகோபக ஸங்காச: பாசஹஸ்தோ ऽபராஜித: |
ஸ பாஹ்யாப்யந்தரம் தேஹம்-
– வ்யாப்ய தாமோதரஸ்தித: || 7 ||

ஏவம் ஸர்வத்ர மச்சித்ரம் .நாம த்வாதசபஞ்ஜரம் |
ப்ரவிஷ்டோऽஹம் ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாசந: || 8 ||

பயந்நாஸ்தி கதாசந ஓம் நம இதி |

|| ஸ்ரீ த்வாதச நாம பஞ்ஜரம் ஸம்பூர்ணம் ||

——————-

புரஸ்தாத் கேசவ பாது , சக்ரீ ஜாம்பு நாத பிரபா, பச்சன் நாராயண சங்கீ நீலா ஜீமூத சன்னிபா. 1 

கிழக்கே முகமாய், உருகிய தங்கச் சக்கரத்தை ஏந்திய கேசவனால் நான் காக்கப்படுகிறேன், மேற்கில் நான் நாராயணனால் காக்கப்படுவேன்.
சங்கு வைத்திருப்பவர், செழுமையான நீலமேகத்தை ஒத்தவர்.

இந்தீவர தல ஷ்யாமோ மாதவோ ஊர்த்வா கதாதர,
கோவிந்தோ, தக்ஷிணே பார்ஸ்வே தந்வீ சந்த்ர ப்ரபோ மஹான். 2

உச்சியில் இருந்து, நீல அல்லி நிறமும் சூலாயுதமும் கொண்ட மாதவனால் என்னைக் காக்கட்டும்,
தெற்கில் சந்திரனின் குளிர்ந்த பிரகாசத்தை உடையவனும் அம்பு ஏந்தியவனுமான கோவிந்தனால் என்னைக் காக்கட்டும்.

உத்தரே ஹல ப்ருத் விஷ்ணு, பத்ம கிஞ்சல்க சன்னிபா,
அக்நேயம் அரவிந்தபோ முசலீ மதுசூதனா. 3

வடக்கே என்னை விஷ்ணு பகவான் காக்கட்டும்.
தாமரை இழையின் நிறமுடையவனும், கலப்பையை வைத்திருப்பவனும்,
தென்கிழக்கில், தாமரையைப் போன்றவனும், பூச்சியை ஏந்தியவனுமான மதுவைக் கொன்றவனே என்னைக் காக்கட்டும்.

த்ரிவிக்ரம கட்க பாணி, நிர்யாத்யம் ஜ்வலனா பிரபா,
வாயவ்யம் வாமனோ வஜ்ரி தருணாதித்ய தீப்திமான். 4

தென் மேற்கில் திரிவிக்ரமனால் என்னைக் காக்கட்டும்.
வாளை ஏந்தி நெருப்பு போல் பிரகாசிப்பவன்,
வடமேற்கில் வாமனனால் காக்கப்படுபவன்,
இடியை ஏந்தி இளம் சூரியனைப் போல் பிரகாசிப்பவன்.

ஜசாந்யாம் புண்டரீகாப: ஸ்ரீதர: பட்டஸாயத: |
வித்யுத்ப்ரபோ ஹ்ருஷீகேசோ– ஹ்யவாச்யாம் திசிமுத்கரீ || 5 ||

வடகிழக்கில் தாமரையின் நிறமும் ஈட்டியும் ஏந்திய ஸ்ரீதரால் என்னைக் காக்கட்டும்,

கீழே இருந்து மின்னலைப் போலவும் சுத்தியலைப் பிடித்தவனுமான ஹிருஷிகேசனால் என்னைக் காக்கட்டும் .

ஹ்ருத் பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ர அர்க ஸம ப்ரபா, ஸர்வாயுத ஸர்வ சக்தி ஸர்வஜ்ஞ ஸர்வதோ முக. 

கோடி சூரியன்களின் பிரகாசத்துடன், என் இதயத்தை ஆக்கிரமித்து, அனைத்து ஆயுதங்களுடனும், அனைத்து சக்திகளுடனும், அனைத்தையும் அறிந்தவராகவும், பத்மநாபா பகவான், எல்லாத் திசைகளிலும் முகங்களுடன் என்னை எப்போதும் காக்கும்.

இந்த்ர கோப ஸங்காஸ பாஸ ஹஸ்தோ அபராஜித,
ஸ பாஹாய அந்தரம் தேஹம் வ்யாப்ய தாமோதர ஸ்திதா. 7

எனக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் தாமோதரன்,
நீலத் தேனீயின் நிறத்தை உடையவனும்,
கைகளில் கயிறுகளை உடையவனும்,
வெல்ல முடியாதவனுமான தாமோதரன் என்னை எப்போதும் காக்கட்டும்.

ஏவம் ஸர்வத்ர மச் சித்ரம் நாம த்வாதச பஞ்சரம்,
ப்ரவிஷ்டோஹம் ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாச்சன. 8

இவ்வாறு உடைக்க முடியாத கூண்டுக்குள் நுழைந்து,
எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் பன்னிரண்டு பெயர்களில்,
நான் எப்போதும் எல்லா இடங்களிலும் பாதுகாக்கப்படுகிறேன்,

பயம் நாஸ்தி கதாசன ஓம் நம இதி.
எந்த நேரத்திலும் பயப்பட வேண்டாம்.

எந்த நேரத்திலும் பயம் இல்லை.

——————–

துவாதச புண்டரம் :

[ஶ்ரீசூர்ணம் (தாயார்) – திருமண் (பெருமாள்) – ஸ்தாநம் – நிறம்]

கேசவன் 
தோள்களாம் நாலிலும் ஆள்கின்ற சக்கரம் !
நீள்திரு மார்பில் மலர்மகள்சேர் — வேள்வித்தீ 
பொன்னன்! அடியார் திரு நெற்றிக் கேசவன் !
அன்னை சிரிதேவி யாம்!
நாரணன் 
சங்குதங்கு நாற்கரம்! சேமநல் வீடுசேர்
மங்கலத் தாளினன்! தேவியும் — பொங்கலைவாய் 
தோன்றினாள்! வான்நீல வண்ணத்தெம் அண்ணல்மால்
ஒன்றுமிடம் பத்தர்(மேல்) வயிறு!
மாதவன் 
கருநீலம் தோய்நிறமும் நீள்புயம் நான்கில்
பெருவலத்த நாந்தகமும் தாங்கிப் — பொருந்தும்
அமலன்அங் கைமா தவன்தன் தேவி
கமலையும் சேரிடம் மார்பு!
கோவிந்தன் 
 
குளிர்முத்தின் வெண்ணிறமும் கோலவில் நான்கும்
மிளிர்முன் கழுத்தின் அமர்ந்து — அளிபொறை
அன்னை அவள்பெயரும் தண்மதியின் மிக்கொளியாள் !
முன்னை வினைமுடிப்பர் சேர்ந்து.
விஷ்ணு 
 
தாமரைத் தாதன்ன பொன்னிறத் தோள்கள்
சுமக்கும் கலப்பைஓர் நான்கும் — நமக்கு
வயிற்றின் வலப்புரம்சேர் விட்டுவவன் மாது
துயக்கறுக்கும் தோன்றக் கிடந்து.
மதுசூதனன் 
உலக்கை ஒருநான்கும் தாமரையின் மென்நிறமும்
மாலாய் உலகாளும் மாயோன் — வலப்புயது 
செவ்விக்கு செவ்விசேர் வைட்டணவி மாதொடும்
தவ்வை அவள்வௌவல் மாய்த்து.
திரிவிக்ரமன் 
 
அனலோன் அணிநிறமும் கைசுரிகை நான்கும்
தனதாகி, வேட்டும் வரம்ஈட்டும் — கோனவன்தோள்
மாட்டுயர்  வஞ்சிக் கொடியென் ஏறினாளைத்
தீட்டும் கழுத்தின் வலத்து .
வாமனன் 
அருக்கன் அழல்நிறமும் கைநான்கு தாங்கு
உருப்பொலிந்த வஜ்ரமும் எம்மின் – பெருவுதரம் 
சேர்இடபால் ஆங்கு அரியவன் தேவியும்
பேர்ந்திடாது மேவும் மகிழ்ந்து.
ஸ்ரீதரன் 
 
வெண்டா மரைமென் நிறமும் பட்டயமும்
கொண்டானை  கைநின்ற சார்ங்கம்சேர் —  தண்டா 
மரைதா யவளும் திகழுமிடம் நம்தோள்
மறைநூல் இடது புரம்.
ஹிருஷீகேசன்
மின்னின் நிறவண்ணன் மற்கரம் கைபூண்டு
மன்னுபுகழ் மால்தேவ தேவிசேர் — மன்னன்
திகழ்விடம் நம்மின் கழுத்திட மாக;
புகழது எந்தை குடிக்கு.
பத்மநாபன் 
பகலவன் பொன்நிறமும் தன்பெரும் தேவி 
அகல்மார்வத் தோடும் அவன்கை — திகழ்வதாம்
ஐம்படை சேரத் துலங்குவான் பின்முதுகு 
தம்மிடமாய் போற்றும் வகைத்து .
தாமோதரன் 
உதயபானு போல்நிறமும் காணுலுகில் பேரழகி 
யாத மலர்மகள் மங்கல — நாதனும்
பாசம்கை   பற்றி  இசைவிடம் பின்கழுத்து,
வாசன்வாய் பேசும் புகழ்ந்து.

——————————————-

ஸ்ரீ பன்னிரு நாமம் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

இந்த திவ்ய பிரபந்தமும் பேர் அருளாளன் விஷயமே –ஸ்ரீ கேசவாதி திரு நாமங்களை சொல்லி பன்னிரு திருமண் காப்புகளில்
அவ்வவ் வெம்பெருமான்களை ஆவாஹனம் செய்ய வேண்டும் -இந்த பிரபந்தத்தில் அவ்வெம்பெருமான்களின் திருமேனி நிறம் –
அவர்கள் அணிந்து இருக்கும் திவ்ய ஆயுதங்கள் -அவர்கள் தலைவராய் வீற்று இருக்கும் திசை –
நம் சரீரத்தில் புண்ட்ர ரூபமாய் அவர்கள் வகிக்கும் பாகம் ஆகியவற்றை ஸ்ரீ தேசிகன் வெளியிட்டு அருளுகிறார் –

———————————

பன்னிரு நாமம் திருவத்தியூர்ப் பரன் பாதம் என்று
நன்னிற நாமம் படை திக்கு இவை யாவையும் நாம் அறியத்
தென்னம் தமிழ்த் தொடைச் சீரார் கலித்துறை யோதி ஈந்தான்
மின்னிரு நூலார் வேங்கட நாதன் நம் தேசிகன் —சிறப்புத் தனியன் –

மின்னிரு நூலார் வேங்கட நாதன் நம் தேசிகன் —பிரகாசம் பொருந்திய திரு யஞ்ஜோபவீதம் அமைந்த திரு தூப்பூல் திருவேங்கடமுடையான் ஆகிய நம் தேசிகர்
பன்னிரு நாமம் திருவத்தியூர்ப் பரன் பாதம் என்று -பன்னிரண்டு ஊர்த்வ புண்டரங்களும் பெருமை பொருந்திய ஸ்ரீ ஹஸ்திகிரி நாதனான
பேர் அருளாளனுடைய திருவடி வடிவம் கொண்டன என்று நினைத்து
நன்னிற நாமம் படை திக்கு இவை யாவையும் நாம் அறியத் -அந்த புறங்களின் தேவதையாகிய எம்பெருமானுடைய
சிறந்த நிறம் திரு நாமம் திவ்ய ஆயுதம் வசிக்கும் திசை ஆகிய அனைத்தையும் நாம் அறியும் படி
தென்னம் தமிழ்த் தொடைச் சீரார் கலித்துறை யோதி ஈந்தான்-தெற்கே வழங்கும் அழகிய தமிழினால் ஆகிய பாட்டுக்களுக்குள் சிறப்புப் பொருந்திய
கட்டளை கலித் துறை என்னும் பாவினத்தால் அருளிச் செய்து நாம் அனுசந்திக்கத் தந்து அருளினார் –

——————————-

கார் கொண்ட மேனியன் பாதாம் புயத்தைக் கருத்திருத்தி
ஏர் கொண்ட கீர்த்தி இராமானுசன் தன் இணை அடி சேர்
சீர் கொண்ட தூப்பூல் திருவெண்காடாரியன் சீர் மொழியை
யார் கொண்டு போற்றிடினும் அம்மாள் பாதத்தை அடைவிக்குமே —சிறப்புத் தனியன் –

கார் கொண்ட மேனியன் பாதாம் புயத்தைக் கருத்திருத்தி –மேகத்தை ஒத்த திருமேனியையுடைய பேர் அருளானுடைய
திருவடித் தாமரையை மனத்தில் உறுதியாகத் தியானித்து
ஏர் கொண்ட கீர்த்தி இராமானுசன் தன் இணை அடி சேர் –அழகிய புகழையுடைய ஸ்ரீ பாஷ்யகாரருடைய இரண்டு திருவடித் தாமரைகளை சேர்ந்த
சீர் கொண்ட தூப்பூல் திருவேங்கடாரியன் சீர் மொழியை-பெருமை பெற்ற ஸ்ரீ தூப்பூல் திருவேங்கடமுடையானுடைய சிறந்த ஸ்ரீ ஸூக்தீயை
யார் கொண்டு போற்றிடினும் அம்மாள் பாதத்தை அடைவிக்குமே —மனத்தில் கொண்டு யார் ஸ்துதித்தாலும்
அவ்வெம்பெருமானுடைய திருவடிகளை அந்த ஸ்ரீ ஸூக்திகளே பெறுவிக்கும் –

—————————————————–

கேசவனாய் நின்று கீழைத் திசையிலும் நெற்றியிலும்
தேசுடை ஆழிகள் நான்குடன் செம் பசும் பொன் மலை போல்
வாசி மிகுத்து என்னை மங்காமல் காக்கும் மறையதனால்
ஆசை மிகுத்த யயன் மக வேதியில் அற்புதனே –1- ஸ்ரீ கேசவன் -பொன் நிறம் -நான்கு திருச் சக்ராயுதங்கள்- கிழக்கு -புண்டர ஸ்தானம் நெற்றி –

மறையதனால் ஆசை மிகுத்த யயன் மக வேதியில் அற்புதனே –வேதாந்தார்த்த நிச்சயத்தால் பேர் அருளானனே பரன் என்று தேறி
அவனிடம் அன்பு மிகுதியாகப் பெற்ற ப்ரஹ்மாவினுடைய யாக வேதியிலே திரு அவதரித்த அதிசய சேஷ்டிதங்களை யுடைய பேர் அருளாளன்
கேசவனாய் நின்று கீழைத் திசையிலும் நெற்றியிலும் -கேசவன் என்னும் திரு நாமத்தை யுடையனாய் கிழக்குத் திசையிலும் பாகவதர்கள் நெற்றியிலும்
தேசுடை ஆழிகள் நான்குடன் செம் பசும் பொன் மலை போல்
வாசி மிகுத்து என்னை மங்காமல் காக்கும்–பிரகாசமுள்ள திருச் சக்ராயுதங்கள் நான்குடன் சிவந்த மாற்று உயர்ந்த பொன்னினால் அமைந்த
மலை போல் நிலை பெற்று சிறப்பு மிகுந்து என்னைக் கெட்டுப் போகாமல் ரஷித்து அருளுகிறார் –

————————————–

நாரணனாய் நல் வலம் புரி நாலும் உகந்து எடுத்தும்
ஊர் அணி மேகம் எனவே உதரமும் மேற்கும் நின்றும்
ஆரண நூல் தந்து அருளால் அடைக்கலம் கொண்டு அருளும்
வாரண வெற்பின் மழை முகில் போல் நின்ற மாயவனே–2-ஸ்ரீ நாராயணன் -நீல நிறம் -நான்கு திவ்ய சங்காயுதங்கள் -மேற்கு -புண்ட்ர ஸ்தானம் வயிறு –

நாரணனாய் நல் வலம் பூரி நாளும் உகந்து எடுத்தும்
ஊர் அணி மேகம் எனவே உதரமும் மேற்கும் நின்றும்
ஆரண நூல் தந்து அருளால் அடைக்கலம் கொண்டு அருளும்
வாரண வெற்பின் மழை முகில் போல் நின்ற மாயவனே–நாராயணன் –ஸ்ரீ ஹஸ்த கிரியிலே குளிர்ந்த மேகம் போலே நிற்கின்ற அதிசய சேஷ்டிதங்களையுடைய பேர் அருளாளன்
நாரணனாய் நல் வலம் புரி நாலும் உகந்து எடுத்தும் -நாராயணனாய் இருந்து சிறந்த வலம் புரிச் சங்கங்கள் நான்கையும் மகிழ்ந்து திரு க் கையில் ஏந்தியும்
ஊர் அணி மேகம் எனவே உதரமும் மேற்கும் நின்றும் -நிலத்தில் சஞ்சரிக்கும் அழகிய மேகம் என்னும்படியாகவும் வயிற்றிலும் மேற்குத் திசையிலும் நின்றும்
ஆரண நூல் தந்து அருளால் அடைக்கலம் கொண்டு அருளும் -வேதமாகிய சாஸ்திரத்தைப் பிரவர்த்திப்பித்து கிருபையால்
அடியேனை ரஷிக்கப் பட வேண்டிய வஸ்துவாக ஏற்றுக் கொண்டு அருள்கிறான் –

————————————————————-

மாதவ நாமமும் வான் கதை நான்கும் மணி நிறமும்
ஓதும் முறைப் படி ஏந்தி யுரத்திலும் மேலும் அல்கிப்
போதலர் மாதுடன் புந்தியில் அன்பால் புகுந்து அளிக்கும்
தூதனும் நாதனுமாய தொல் அத்தி கிரிச் சுடரே –3-ஸ்ரீ மாதவன் –இந்த்ர நீல நிறம் -நான்கு திவ்ய கதைகள் –ஊர்த்வ திசை -புண்ட்ர ஸ்தானம் -மார்பு —

தூதனும் நாதனுமாய தொல் அத்தி கிரிச் சுடரே -பாண்டவர்களுக்குத் தூதனாயும் அனைவருக்கும் ஸ்வாமியாயும் உள்ள அநாதியான
ஸ்ரீ ஹஸ்திகிரியில் உள்ள தேஜஸ்ஸாகிய பேர் அருளாளன்
மாதவ நாமமும் வான் கதை நான்கும் மணி நிறமும் -மாதவன் என்கிற திரு நாமத்தையும் -வலிய திவ்ய கதை நான்கையும் -இந்த்ர நீல ரத்னத்தின் நிறத்தையும்
ஓதும் முறைப் படி ஏந்தி யுரத்திலும் மேலும் அல்கிப் -சாஸ்திரங்களில் கூறும் முறைப்படி தரித்து -மார்பிலும் மேல் நோக்கும் திசையிலும் இருந்து
போதலர் மாதுடன் புந்தியில் அன்பால் புகுந்து அளிக்கும் -அடியேன் இடம் அன்பினால் என் மனசில் தாமரை மலரில் விளங்கும் பிராட்டியுடன் பிரவேசித்து ரஷித்து அருள்கிறான் –

——————————————-

கோவிந்தன் என்றும் குளிர் மதியாகிக் கொடியவரை
ஏவும் தனுக்களுடன் தெற்கிலும் உட் கழுத்திலும் நின்று
மேவும் திருவருளால் வினை தீர்த்து எனை யாண்டு யருளும்
பூவன் தொழ வத்தி மா மலை மேல் நின்ற புண்ணியனே -4-ஸ்ரீ கோவிந்தன் –சந்த்ரநிறம் -நான்கு திவ்ய வில்கள்௦புன்ற ஸ்தானம் உட் கழுத்து –

பூவன் தொழ வத்தி மா மலை மேல் நின்ற புண்ணியனே –கமலத்தில் அவதரித்த ப்ரஹ்மா சேவித்து அனுபவிக்கும் படி
ஸ்ரீ ஹஸ்த மஹா கிரியின் மேல் நிலை பெற்று நின்றவனுமான புண்ய ஸ்வரூபனான பேர் அருளாளன்
கோவிந்தன் என்றும் குளிர் மதியாகிக் கொடியவரை -கோவிந்தனாகவும் நிறத்தில் எப்பொழுதும் குளிர்ந்த சந்த்ரனாகவும் இருந்து துஷ்டர்களை
ஏவும் தனுக்களுடன் தெற்கிலும் உட் கழுத்திலும் நின்று -போக்குகின்ற நான்கு திவ்ய விற்களுடன் தெற்குத் திசையிலும் கழுத்தின் உட் புறத்திலும் நிலை பெற்று நின்று
மேவும் திருவருளால் வினை தீர்த்து எனை யாண்டு யருளும்–பொருந்திய சிறந்த கருணையால் பாபங்களை போக்கி அடியேனை அடிமையும் கொண்டு அருள்கிறான் –

———————————————————-

விட்டு வல வயிற்றின் கண் வடக்கும் விடாது நின்று
மட்டவிழ்த் தாமரைத் தாது நிறம் கொண்ட மேனியனாய்த்
தொட்ட கலப்பைகள் ஈர் இரண்டாலும் துயர் அறுக்கும்
கட்டு எழில் சோலைக் கரிகிரி மேல் நின்ற கற்பகமே -5-
ஸ்ரீ விஷ்ணு -தாமரைத் தாதுவின் பொன்நிறம்–நான்கு திவ்ய கலப்பைகள் -வடக்கு திசை -புண்ட்ர ஸ்தானம் -வயிற்றின் வலப் புறம் –

கட்டு எழில் சோலைக் கரிகிரி மேல் நின்ற கற்பகமே -மிக்க அழகுள்ள சோலைகள் சூழ்ந்த ஸ்ரீ ஹஸ்தி கிரியின்
மேலே எழுந்து அருளி யுள்ள கல்பவ்ருக்ஷம் போன்ற பேர் அருளாளன்
விட்டு வல வயிற்றின் கண் வடக்கும் விடாது நின்று –விஷ்ணுவாக இருந்து வயிற்றின் வலப் புறத்திலும் வடதிசையிலும்நீங்காது தங்கி
மட்டவிழ்த் தாமரைத் தாது நிறம் கொண்ட மேனியனாய்த் -தேன் ஒழுகுகின்ற தாமரையின் மகரந்தத்தை நிறத்தைக் கொண்ட திருமேனியுடையனாய்
தொட்ட கலப்பைகள் ஈர் இரண்டாலும் துயர் அறுக்கும் –கையில் ஏந்திய கலப்பைகள் நான்கினாலும் அடியேன் துன்பத்தை போக்கி அருள்கிறான் –

——————————————————————-

மதுசூதனன் என் வலப் புயம் தென் கிழக்கு என்று இவற்றில்
பதியாய் இருந்து பொன் மாது யுறை பங்கய வண்ணனுமாய்
முது மா வினைகள் அறுக்கும் முயலங்கள் ஈர் இரண்டால்
மதுவார் இளம் பொழில் வாரண வெற்பின் மழை முகிலே -6-
ஸ்ரீ மது ஸூ தனன் -தாமரை நிறம் –நான்கு திவ்ய உலக்கைகள் –தென் கிழக்கு –புண்ட்ர ஸ்தானம் –வலது புஜம் —

மதுவார் இளம் பொழில் வாரண வெற்பின் மழை முகிலே –தேன் நிறைந்த இளம் சோலை சூழ்ந்த ஸ்ரீ ஹஸ்திகிரியில்
எழுந்து அருளியுள்ள வர்ஷா கால மேகம் போன்ற பேர் அருளாளன்
மதுசூதனன் என் வலப் புயம் தென் கிழக்கு என்று இவற்றில் -மது ஸூ தனனாக இருந்து எனது வலது புஜமும் தேன் கிழக்கும் ஆகிய இந்த ஸ்தானங்களில்
பதியாய் இருந்து பொன் மாது யுறை பங்கய வண்ணனுமாய் -ஸ்திரமாய் இருந்து ஸ்ரீ லஷ்மீ பிராட்டி நித்ய வாசம் செய்கின்ற தாமரையின் நிறம் யுடையவனாய்
முது மா வினைகள் அறுக்கும் முயலங்கள் ஈர் இரண்டால் -திவ்ய உலக்கைகள் நான்கினால் என்னுடைய அநாதியான பெரிய கர்மங்களை ஒழித்து அருள்கிறான் –

————————————————

திரிவிக்ரமன் திகழ் தீ நிறத்தன் தெளிவுடை வாள்
உருவிக் கரங்களில் ஈரிரண்டு ஏந்தி வலக் கழுத்தும்
செரு விக்கிரமத்து அரக்கர் திக்கும் சிறந்து ஆளும் இறை
மருவிக் கரிகிரி மேல் வரம் தந்திடும் மன்னவனே -7-
ஸ்ரீ திரிவிக்ரமன் –அக்னி நிறம் -நான்கு திவ்ய வாள் –தென் மேற்கு திசை -புண்ட்ர ஸ்தானம் –கழுத்தின் வலப்புறம் –

மருவிக் கரிகிரி மேல் வரம் தந்திடும் மன்னவன் இறை –ஸ்ரீ ஹஸ்திகிரியின் மீது பொருந்தி வேண்டிய வரத்தைக் கொடுத்து அருள்கின்ற சக்கரவர்தியாகிய பேர் அருளாளன்
திரிவிக்ரமன் திகழ் தீ நிறத்தன் தெளிவுடை வாள்-உருவிக் கரங்களில் ஈரிரண்டு ஏந்தி -ஸ்ரீ திரிவிக்ரமனாய் இருந்து ஜ்வலிக்கின்ற அக்னி போன்ற நிறம் உடையவனாய் –
திருக் கைகளிலே பிரகாசம் பொருந்திய திரு வாள்கள் நான்கையும் உருவித் தாங்கி
வலக் கழுத்தும் -செரு விக்கிரமத்து அரக்கர் திக்கும் சிறந்து ஆளும் -கழுத்தின் வலப் புறத்திலும் போரில் வலிமையைக் காட்டுகின்ற
ராக்ஷஸர்களுடைய திசையாகிய நைருதி-தென் மேற்கு திக்கிலும் சிறந்து நின்று ரஷித்து அருள்கிறான் –

—————————————

வாமனன் என் தன் வாமோதரமும் வாயுவின் திசையும்
தாமம் அடைந்து தருண அருக்கன் நிறத்தனுமாய்ச்
சேம மரக்கலம் செம் பாவி ஈர் இரண்டால் திகழும்
நா மங்கை மேவிய நான்முகன் வேதியில் நம் பரனே -8-
ஸ்ரீ வாமனன் –நான்கு திவ்ய வஜ்ரம் –வட மேற்கு திசை –புண்ட்ர ஸ்தானம் -வயிற்றின் இடது புறம் –

நா மங்கை மேவிய நான்முகன் வேதியில் நம் பரனே –சரஸ்வதி உடன் பொருந்திய ப்ரஹ்மாவின் யாக வேதியில் திரு அவதரித்த நம் சர்வேஸ்வரனான பேர் அருளாளன்
வாமனன் என் தன் வாமோதரமும் வாயுவின் திசையும் –வாமனனாய் என் இட வயிற்றையும் வாயுவின் திசையான வட மேற்கையும்
தாமம் அடைந்து தருண அருக்கன் நிறத்தனுமாய்ச் –ஸ்தானமாகக் கொண்டு உதித்த ஸூர்யன் யுடைய நிறமுடையவனாய்
சேம மரக்கலம் செம் பாவி ஈர் இரண்டால் திகழும் –அடியார்களை சம்சார சமுத்திரத்தில் இருந்து கரை சேர்த்து க்ஷேமத்தைக் கொடுக்கும்
ஓடமாக இருந்து சிவந்த திவ்ய வஜ்ராயுதம் நான்கினோடு பிரகாசித்து அருள்கிறான் –

———————————-

சீரார் சிரீதரனாய்ச் சிவன் திக்கும் இடப் புயமும்
ஏரார் இடம் கொண்டு இலங்கு வெண் தாமரை மேனியனாய்ப்
பாராய பட்டயம் ஈர் இரண்டாலும் பயம் அறுக்கும்
ஆரா வமுது அத்தி மா மலை மேல் நின்ற அச்சுதனே-9-
ஸ்ரீ தரன் –வெண் தாமரை நிறம் –நான்கு திவ்ய பட்டாக் கத்தி -வட கிழக்கு திசை –புண்ட்ர ஸ்தானம் -இடது புஜம் –

ஆரா வமுது அத்தி மா மலை மேல் நின்ற அச்சுதனே—எவ்வளவு அனுபவித்தாலும் தெவிட்டாத அமுதமாய் உள்ளவனும்
ஸ்ரீ ஹஸ்தி மஹா கிரியின் மேல் நிலை பெற்றவனும் அடியவர்களைக் காய் விடாதவனுமான பேர் அருளாளன்
சீரார் சிரீதரனாய்ச் சிவன் திக்கும் இடப் புயமும் –சிறப்பு நிறைந்த ஸ்ரீ தரனாய் சிவனுடைய திசையாகிய வட கிழக்கையும் இடது புஜத்தையும்
ஏரார் இடம் கொண்டு இலங்கு வெண் தாமரை மேனியனாய்ப் -அழகு பொருந்திய ஸ்தானமாகக் கொண்டு பிரகாசிக்கின்ற வெண்மையான தாமரையின் நிறமுடையவனாய்
பாராய பட்டயம் ஈர் இரண்டாலும் பயம் அறுக்கும் -பருத்த பட்டயம் என்னும் ஒருவகையான திவ்ய வாள்கள் நான்கினாலும் என் பயத்தைப் போக்கி அருள்கிறான் –

———————————————

என்னிடிகேஷன் என் இறை கீழ் இடக் கழுத்து என்று இவற்றில்
நல் நிலை மின் உருவாய் நாலு முற்கரம் கொண்டு அளிக்கும்
பொன் அகில் சேர்ந்து அலைக்கும் புனல் வேகை வட கரையில்
தென்னன் உகந்து தொழும் தேனை வேதியர் தெய்வம் ஒன்றே -10-
ஸ்ரீ ஹ்ருஷீ கேசன் –மின்னல் நிறம் -நான்கு திவ்ய சம்மட்டி –கீழ்ப் பாகம் –புண்ட்ர ஸ்தானம் –கழுத்தின் இடப் புறம் —

பொன் அகில் சேர்ந்து அலைக்கும் புனல் வேகை வட கரையில் -பொன்னையும் அகில் கட்டையையும் கொண்டு
அலை மோதுகின்ற ஜலத்தை யுடைய வேகவதி நதியின் வடகரையில்
தென்னன் உகந்து தொழும் தேனை வேதியர் தெய்வம் ஒன்றே -புண்ய ராஜன் மகிழ்ந்து வணங்குகின்ற தேனம் பாக்கத்தில் உள்ள
வைதிகப் பெரியோர்களின் ஒரே தெய்வமாகிய பேர் அருளாளன்
பெருமாள் கோயிலுக்கு மிகச் சமீபத்தில் தேனம் பாக்கம் என்னும் ஸ்ரீ கிராமம் –இத்தை ஸ்ரீ காஞ்சீ புரத்து ஒரு வீதியாகவும் கொள்ளலாம் –
அங்கு ஸ்ரீ பாஞ்ச ராத்ர சாஸ்திரங்களில் கரைகண்ட பரம பாகவதர்கள் எழுந்து அருளி இருந்து பேர் அருளாளனை குல தெய்வமாகக் கொண்டு
வழுவாது திரு வாராதானம் செய்து வந்தனர்
அவர்களுடைய ஆத்மகுணங்களைக் கண்ட ஆஸ்திக சிகாமணியான பாண்டிய ராஜன் ஒருவன் அவர்களுக்கு ஸம்மானம் அளித்து
அவர்களை வணங்கி வந்தான் என்னும் வரலாறு கர்ண பரம்பரையாக அறியக் கிடக்கின்றது –
மேலும் பெருமாள் கோயில் பாண்டிய நாட்டில் அடங்கியதாகச் சில காலம் இருந்ததாகவும் அப்பொழுது பாண்டிய ராஜன் பேர் அருளாளன் யுடைய அருளாலே
பெருமை பெற்று வாழ்ந்து வந்தது பற்றியும் அவ்வரசன் பேர் அருளாளனைத் தொழுது வந்ததாகவும் சிலா சாசனம் உளது என்றும் சிலர் பணிப்பர்
என்னிடிகேஷன் என் இறை கீழ் இடக் கழுத்து என்று இவற்றில் -ஹிருஷீகேசன் என்னும் என் ஸ்வாமியாய் இருந்து கீழ்ப் பாகமும் கழுத்தின் இடப் புறமும்
ஆகிய இந்த இடங்களில்
நல் நிலை மின் உருவாய் நாலு முற்கரம் கொண்டு அளிக்கும் -நன்கு நிலை பெற்ற மின்னைப் போன்ற நிறமுடையவனாய் இருந்து
நான்கு திவ்ய சம்மட்டிகளை திவ்ய ஆயுதமாகக் கொண்டு ரஷித்து அருள்கிறான் –

————————————————

எம் பற்பநாபனும் என் பின்மனம் பற்றி மன்னி நின்று
வெம் பொன் கதிரவன் ஆயிரம் மேவிய மெய் உருவாய்
அம் பொன் கரங்களில் ஐம் படை கொண்டு அஞ்சல் என்று அளிக்கும்
செம் பொன் திரு மதிள் சூழ் சிந்துரா சலச் சேவகனே -11-
ஸ்ரீ பத்ம நாபன் –ஸூர்யன் நிறம் –திவ்ய சக்கரம் சங்கு வாள் வில் தண்டு என்னும் பஞ்ச திவ்ய ஆயுதங்கள் -ஸ்தானம் -மனாஸ் -புண்ட்ர ஸ்தானம் -பின்புறம்

செம் பொன் திரு மதிள் சூழ் சிந்துரா சலச் சேவகனே –சிவந்த பொன்னாலாகிய அழகிய மதிள் சூழ்ந்த ஸ்ரீ ஹதிகிரியில் உள்ள மஹா வீரனான பேர் அருளாளன்
எம் பற்பநாபனும் என் பின்மனம் பற்றி மன்னி நின்று -எம்முடைய பத்ம நாபனுமாகி என்னுடைய பின் பாகத்தையும் மனசையும் பற்றிக் கொண்டு ஸ்திரமாய் நின்று
வெம் பொன் கதிரவன் ஆயிரம் மேவிய மெய் உருவாய் -உஷ்ணமான சிவந்த ஆயிரம் ஸூர்யனோடு ஒப்பான திரு மேனி நிறமுடையவனாய்
அம் பொன் கரங்களில் ஐம் படை கொண்டு அஞ்சல் என்று அளிக்கும் -அழகிய சிவந்த திருக்கைகளில்
திவ்ய பஞ்ச ஆயுதங்களைத் தரித்து அஞ்சாதே என்று கூறி ரஷித்து அருள்கிறான் –

——————————

தாமோதரன் என் தன் தாமங்கள் நாலு கரங்களில் கொண்டு
ஆமோ தரம் என ஆக்கத்தின் உட் புறம் பிற் கழுத்தும்
தாம் ஓர் இளம் கதிரோன் என என் உள் இருள் அறுக்கும்
மா மோகம் மாற்றும் மதிள் அத்தியூரில் மரகதமே-12-
ஸ்ரீ தாமோதரன் –உதிக்கின்ற ஸூர்யன் நிறம் -நான்கு திவ்ய பாசங்கள் -சரீரத்தின் உட் புறமும் வெளிப் புறமும் –புண்ட்ர ஸ்தானம் –கழுத்தின் பின் புறம்

மா மோகம் மாற்றும் மதிள் அத்தியூரில் மரகதமே–பெரிய அஞ்ஞானத்தைப் போக்குகின்ற திரு மதிள்கள் சூழ்ந்த
ஸ்ரீ ஹஸ்திகிரியில் உள்ள மரகத ரத்னம் போன்ற பேர் அருளாளன்
தாமோதரன் என் தன் தாமங்கள் நாலு கரங்களில் கொண்டு -என் தாமோதரனாகி நான்கு திவ்ய பாசங்களை திருக் கைகளிலே ஏந்திக் கொண்டு
ஆமோ தரம் என ஆக்கத்தின் உட் புறம் பிற் கழுத்தும் -இந்தப் பெருமை மற்றவருக்கு உண்டோ என்னும் படி சரீரத்தின் உள்ளேயும் வெளியிலும் கழுத்தின் பின் புறத்தும் நின்று
தாம் ஓர் இளம் கதிரோன் என என் உள் இருள் அறுக்கும் -தான் ஓர் உதிக்கின்ற ஸூர்யன் என்னும்படி நிறமுடையவனாய் இருந்து
எனது மனத்துள் இருக்கும் அஞ்ஞானம் ஆகிய இருளை போக்கி அருள்கிறான் –

————————————–

கத்தித் திரியும் கலைகளை வெல்லும் கருத்தில் வைத்துப்
பத்திக்கு உரு துணை பன்னிரு நாமம் பயில்பவர்க்கு
முக்திக்கு மூலம் எனவே மொழிந்த இம்மூன்றும் நான்கும்
தித்திக்கும் எங்கள் திருவத்தி யூரரைச் சேர்பவர்க்கே -13-

கத்தித் திரியும் கலைகளை வெல்லும் கருத்தில் வைத்துப் -சாரம் இல்லாமல் ஆடம்பரத்தோடு கத்திக் கொண்டே திரிகின்ற
பயன் அற்ற வித்யைகளை வாதத்தில் ஜெயிக்க கூடிய உறுதியை யுடைய மனசில்
பத்திக்கு உரு துணை பன்னிரு நாமம் பயில்பவர்க்கு –பக்திக்குத் தக்க சாதனமான கேசவாதி பன்னிரண்டு திரு நாமங்களையும் ஊன்றி அனுசந்தித்து பரிச்சயம் செய்பவர்க்கு
முக்திக்கு மூலம் எனவே மொழிந்த இம்மூன்றும் நான்கும் -மோக்ஷம் அளிக்க காரணமாகும் என்னும்படி அருளிச் செய்த இந்த பன்னிரண்டு பாசுரங்களும்
தித்திக்கும் எங்கள் திருவத்தி யூரரைச் சேர்பவர்க்கே -எங்கள் பேர் அருளாளரை ஆஸ்ரயித்த பாகவதர்களுக்கே பரம போக்யமாய் இன்பம் கொடுப்பனவாகும் –

—————-

அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….கிரேசி மோகன்
—————————————————————————————————————

“கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய ,வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”…..ஆக பெருமாளின் 12 திவ்ய நாமங்கள்….கிரேசி மோகன்….

கேசவன்
——————

“களமுற பார்த்தனின் கலவர வேர்த்தலைக்  கழுவிடு தீர்த்தமாம் கீதையதால்
உளமுரம் கூட்டினை ஒருரதம் ஓட்டினை பலமுற காட்டினை பாதையதை
பொலபொல என்றுதி காலையை முந்திடும் பரவசக் கோதையின் பாசுரத்தால்
அலைகடல் விட்டுயர் பட்டரின் பெட்டையை கட்டிடக் கேட்டிடும் ”கேசவனே”….(1)
ஹரிஹரி கோகுலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

நாராயணன்
————————–
“சரிய பிதாம்பரம் நழுவ கதாயுதம் பிளிறும் கஜேந்திரன் குரல் கேட்டு
பறவைசு தாகரம் விரையவ னாந்திரம் எறிய சுதர்சனம் விரல்விட்டு
துரிதநி வாரண முனிகள் தபோவனம் பறையும் கதாம்ருத காரணனே
முரளி மனோகர கமல பதாம் புய அனந்த”நாராயண” பூரணனே”….(2)
ஹரிஹரி கோகுல பாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

மாதவன்
——————

“அவையென இவையென அளவிடல் தவறென கவிமணி மலையணில் கூட்டியதை
புவிதனில் ஏழையை பிள்ளையை வேழனை மகிழ்வுறச் செய்ததைக் காட்டினையே
தவியுற ஆய்க்குடி தளிர்விரல் தூக்கிட குளிர்மழை காத்தனை யாதவனே
கவிகளின் காப்புக் கடவுள்முன் தோப்புக் கரணம் செய் காக்கும் ”மாதவனே”….(3)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

கோவிந்தன்
————————

“அலமுவை கட்டினை அதிகடன் பட்டனை அடைத்திடத் தொட்டனை ஏழுமலை
பலரிட உண்டியில் சிலறையை ஒண்டியாய் புகல்ஜர கண்டியில் வாழயிலை
துளசியை மென்றிட குறையிலை என்றிடும் நிலைதர நின்றிடும் ”கோவிந்தா”
அலைகடல் சேடனில் அணிமகள் கூடலில் வளர்துயி லாடிடும் வைகுந்தா”….(4)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

விஷ்ணு
—————-

“செதிளதில் ஆரணம் முதுகினில் மேருவும்முகநுனி தாரணி கொண்டவனே
சதையுறி உந்தியில் பதபலி புந்தியில்விதவித பந்தியில் உண்டவனே
விதையுழு ராமனும் மழுமுனி ராமனும் தொழுரகு ராமனும் பாகவதக்
கதைசொலும் க்ருஷ்ணனும் பலபல ஸ்ருஷ்டியும் சதைவுயிர் ”விஷ்ணுவின்” சாகசமே”….(5)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

திரிவிக்ரமன்
—————————-

“அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம் உணர்குரு சுக்கிரர் கட்டளையை
பலியிட அக்கணம் குறள்”திரி விக்ரம” வடிவினில் திக்கது தொட்டனனே
புலனுரு வாமனம் பழகிட நீமனம் பெருகுவை ஆணவ கந்தையிலே
சலணரு ணேசரின் சிசுரம ணேசரை சரணடை கோவண சந்நிதியில்”….(6)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

வாமனன்
——————

“சிறைவசு தேவகி கருவச மாகிட இரவினில் ஏகினன் கோகுலமே
கறவைகள் மேய்த்தனன் கம்சனை சாய்த்தனன் தீர்த்தனன் ஆயரின் வ்யாகுலமே
மறைதிரு மச்சமும் அரைதனில் கச்சமும் குடுமியின் உச்சமும் பூமணமாய்
குறளுரு வாயொரு குடைபுயம் சாய்வுற களபலி சேய்வளர் ”வாமனனே” ….(7)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

சீதரன்
————

“இலைமரு தாணியின் மணமுறை மேனியள் திருமகள் பூணிடும் ”சீதரனே”
அலைகலை மங்கையர் அடிதொழும் சுந்தரி மலைசிவ சங்கரி சோதரனே
அலைகடல் சங்கொடு நந்தகி ஆழியும் சிலைபரு தண்டமும் கண்டவுடன்
விலையென ஏறிடும் வெவ்வினை ஆறிடும் விடுமெமை வேறிடம் சேருமதே”….(8)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

ரிஷிகேசன்
——————–
“அசுரநி சாசரர் அதரும நீசர்கள் அழியச ராசரம் வந்தவனை
தசவித வேஷனை முனிமன வாசனை தவ”ரிஷி கேசனை” வந்தனம்செய்
தசமுகன் சாகவும் குசலவர் ஏகவும் ரகுபதி ராகவ ரூபமெடு
தசரத மைந்தனை குகனோடு ஐந்தென தரணியில் உய்ந்தவன் தாபமுறு”….(9)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

பதுமநாபன்
————————
“கரனுடன் தூஷணை வனஉழை வேஷனை தசமுக பூஷனை இம்சைதரும்
இரணிய ராட்ஷசன் இணையிரண் யாட்ஷகன் துரியனின் சூழ்ச்சியை ,கம்சனையும்
குறைசிசு பாலனை மதுகைட பாணனை வதம்புரி மாலனை நம்பிடுவாய்
பிரமனுய் நாபனை புவியுமிழ் நாபனை ’’பதுமம்கொள் நாபனை’’ கும்பிடுவாய்”….(10)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

தாமோதரன்
————————-

“கரமொடு களவாய் பிடிபட உனதாய் உரலிட இழு”தா மோதரனே”
மரமதை சாய்த்தனை மருதிடை வாய்த்தவர் மறுவுல கேத்திடும் ஆதரவே
புரிவிஷ மத்தினில் முடிவில்ந லத்தினை வெளியுற வைத்திடும் யவ்வனனே
சரியென தப்பென அறியும்ம னத்தினை அரிகழல் வைத்தறு வெவ்வினையே”….(11)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

மதுசூதனன்
———————

“மகளிர்உ டுப்பினை மறைவிளோ ளித்தனை பிறகுஅ ளித்திடும் திட்டமொடு
துகிலுரி துட்டனை தளர்வுற கொட்டினை துருபதைக் எட்டிட பட்டதனை
புகுவிட பூதனை விடவுடல் வேதனை முலையுறி மா”மது சூதனனே”
புகுகருங் காளியுன் பிறவியைக் கோளிட வ்ரஜநிலம் ஏளிய சோதரனே….(12)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே…

———————-

திருவாய்மொழி நாராயணனுக்கே

பரமாத்மாவுக்கு ஆயிரம் ஆயிரம் நாமங்கள் இருப்பினும், (விஷ்ணு சஹஸ்ரநாமம்), துவாதச நாமங்கள் என்று பன்னிரண்டு நாமங்கள் இருப்பினும், (கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேச, பத்மநாப மற்றும் தாமோதர), வியாபக நாமங்களாக (வியாபகம் என்றால், விரிந்து பரந்து எங்கும் இருப்பது). மூன்று (விஷ்ணு, வாசுதேவ, நாராயண) சொல்லப்பட்டாலும், ஆழ்வார் நாராயணன் என்ற நாமத்தையே திருவாய்மொழியில் அறுதி இட்டு சொல்லி உள்ளார்.

வனமாலீ  கதீ  சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஸ்ரீமான் நாராயணோ  விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.” என்ற ஆதிசங்கரரின் ஸ்லோகம் இங்கே குறிப்பிடலாம். இங்கு ஆதிசங்கரர் விஷ்ணுவின் வியாபக நாமங்களான நாராயண, விஷ்ணு மற்றும்  வாசுதேவ என்ற மூன்றையும் குறிப்பிட்டு உள்ளார்.  ‘வனமாலி என்ற மாலையை அணிந்து கௌமோதகி என்னும் கதை, பாஞ்சசன்னியம் என்னும் சங்கு, சுதர்சன என்னும் சக்கரம், சார்ங்கம் என்னும் வில், நந்தகம் என்னும் வாள் ஆகியவற்றுடன் விளங்கும் நாராயண, விஷ்ணு, வாசுதேவன் என்ற நாமங்களைக் கொண்ட திருமால் என்னைக் காக்க வேண்டும்’ என்பது இதன் பொருள்.

கண்ணன், இராமன், நரசிம்மன், த்ரிவிக்ரமன் மற்றும் வராகன் போன்ற அவதார நாமங்களை ஆழ்வார் திருவாய்மொழியின் பல இடங்களில் உபயோகித்து இருந்தாலும், ‘நாராயணன்’ என்ற நாமமே பரமாத்மாவின் முக்கியமான விஷேச குணநலன்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் நாமம் ஆகும். அதனால்தான், நாராயண  நாம அர்த்தத்தை, நாம், நம் ஆச்சார்யனிடம் கேட்டு தெரிந்து .கொள்ள வேண்டும்.

முதலில் நாராயணன்

திருவாய்மொழியின், முதல், இடை, முடிவு எல்லாம் பரமாத்மாவான நாராயணனையே சொல்லும்.

முதல் திருவாய்மொழியிலே ‘உயர்வற உயர்நல முடையவன்’ என்று தொடங்கி, நாராயணனே பரம்பொருள் என்பதற்காக ‘நாராயண‘ சப்தத்தின் பொருளை முதல் பதிகத்திலேயே அருளிச் செய்தார்.   ‘நாராயணன்’ என்பதின் பொருள், தனக்கு நிகரோ, மேம்பட்டவர்களோ இல்லாதவன், எல்லா நல்ல குணங்களும் கொண்டவன், எல்லா உலகங்களுக்கும் தன்னிகரில்லாத தலைவன் என்பதாகும்.  ‘வண்புகழ் நாரணன்’  (1.2.10) என்று இரண்டாம் பதிகத்தில் தொடங்கி, பின் ‘செல்வ நாரணன்’(1.10.8), ‘நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன்’(2.7.2), ‘திருநாரணன்’ தாள் காலம் (4.1.1) என்று ஆழ்வார் திருவாய்மொழி முதல் சில பத்துகளில் நாராயணன் பெயரைக் கூறி உள்ளார்.

இடையில் நாராயணன்

திருவாய்மொழி திருமந்திரத்தின் அர்த்தத்தை சொல்கின்றன என்று நம்  ஆச்சார்யர்கள் சொல்வார்கள். திருவாய்மொழியின் இடையில் வருகின்ற ஆறாம் பத்து (6.10) திருமந்திரத்தின் முதல் பதமான “ஓம்” என்பதனையும், மற்றும் ஏழாம் பத்தில் உள்ள பதிகங்கள் 7.1 இரண்டாம் பதமான “நம” என்பதனையும் மற்றும் 7.2 மூன்றாம் பதமான நாராயணாய என்பதனையும்   குறிக்கும்.

கங்குலும் பகலும் (7.2) என்ற பதிகத்தில் உள்ள ஒவ்வொரு பாடலின் மூலம், ஆழ்வார் தான் திருவாய்மொழியில், பத்து பத்துக்களால் என்ன சொல்லவந்தோம் என்பதை தேறிய பொருளாக தெரிவிப்பதாலும், முன்பு சொன்னதுபோல், திருவாய்மொழி நாரயணனுக்கே என்பதாலும்,  திருவாய்மொழி இடையிலும் நாராயணனே உள்ளதாக கூறப்படுகிறது.

இறுதியில் நாராயணன்

‘காராயின காள நன்மேனியன் நாராயணன்’ (9.3.1), ‘திண்ணம் நாரணம்,’ (10.5.1) ‘வாழ் புகழ் நாரணம் (10.9.1) என்று திருவாய்மொழி இறுதியிலும் நாரணனையே கூறி ஆழ்வார் முடிக்கிறார்.

மேலே சொல்லியவை ஒரு சில உதாரணங்களே, இருப்பினும், ஆழ்வார் திருவாய்மொழி முழுவதும் நாராயணனைக் கொண்டே சுவாசித்து உள்ளார்.

——————

த்வாதஸ ஊர்த்வ புண்ட்ரங்களுக்கும்‌ இப் பன்‌னிரண்டு திரு நாமங்களும் ௮நுஸந்திக்கப்படுகின்‌றன,
புருஷோத்தமனுடைய அம்ஸ சாரத்தைப்‌ பெற்ற த்வாதச ஆதித்யர்களுக்கும்‌ இப் பன்னிரு நாமங்களே கூட்டப்‌ பெற்றிருக்கின்‌றன.
எம்பெருமானுக்குப்‌ பரம்‌, வியூஹம்‌, விபவம்‌, அந்தர்யாமி, அர்ச்சை என்று. ஐந்து ௮வஸ்கைகள்‌ உள்ளனவென்பது
ஸகல ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ் புராண பாஞ்சராத்ர ஸரஸ்த்ரங்களில்‌ கோஷிக்கப்படுகின்றது.
இவ்வைந்து அவஸ்தைகளும்‌ இப் பன்னிரு நாமங்களிலும்‌ அநுஸந்திக்கப்‌ படுகின்‌ றன.
மாலரி கேசவன்‌ நாரணன்‌ மாதவன்‌ கோவிந்தன்‌ வைகுந்தன்‌” என்று நம்மாழ்வார்‌ அருளிச்‌ செய்கையாலே “
கேசவன்‌ நாராயணன்‌, மாதவன்‌ கோவிந்‌தன்‌ ” என்னுமிந்த நான்கு திருநாமங்களும்‌
ஸ்ரீவைகுண்ட நாதனாய் எழுந்தருளியிருக்கும்‌ பராவஸ்தையைக்‌ குறிக்கின்‌றன வென்‌பது விளங்குகிறது,

“விஷ்ணு” எனும்‌ அடுத்த திரு நாமம்‌ அநிருத்த நாரரயணனாகிய வியூஹத்தைக் குறிப்பதன்‌ மூலம்‌
மற்ற வியூஹங்களையும்‌ உணர்த்துகிறது.
மது ஸூதன்ன்‌’ என்பதும்‌ அந்த வியூஹ மூர்த்தியின்‌ சேஷ்டிதத்தைச்‌ சொல்லுகிறது.
“திரிவிக்ரமன்‌. வாமனன்‌. தாமோதரன்‌ என்னும்‌ திரு நாமங்கள்‌ விபவாவதாரங்களைச்‌ சொல்லுகின்‌றன.
ஸ்ரீதரன்‌” என்னும்‌ திருநாமம்‌ அவ் விபவ அவதாரங்களிலும்‌ பகவான்‌ பிராட்டியுடனேயே
அவதரிக்‌ கிறானென்று காட்டுகிறது.
“ஹ்ருஷீகேசன்‌’ என்னும்‌ திரு நாமம்‌ அந்தர்யாமியாய்‌ நின்று இந்திரியங்களை நியமிக்கும்‌ இருப்பை உரைக்கிறது.
‘ஸ்ரீதரன்‌” , எல்லாத்‌ திரு நாமங்களும்‌ திருமலை முதலிய திவ்ய ஷேத்ரங்களில்‌ எழுந்து யிருக்கும்‌
ஸ்ரீநிவாஸன்‌ முதலிய அர்ச்சா மூர்த்திகளையும்‌ உணர்த்துகின்‌ றன.
“பத்மாபன்‌’ என்று இவ் வவதாரங்‌களுக்கெல்லாம்‌ மூல அவதாரமான க்ஷீராப்தி நாதனைப்‌ பேசுகிறது. ,
ஆக, இப்படி ஐந்து அவஸ்தைகளும்‌ இந் நாமங்களில்‌ அநுபவிக்கப்படுகின்‌றன.

————

இனி இத் திருநாமங்களின்‌ அர்த்‌ தங்களைச்‌ சிந்திப்போம்‌.
(கேசவன்‌ )
ககாரத்தினால்‌ சொல்லப்‌ படும்‌ பிரமனையும்‌,
“ஈசன்‌? என்று பெயர்‌ பெற்ற சிவனையும்‌ உண்டாக்கினவன்‌,
“க இதி ப்‌,ரஹ்மணோ நாம ஈஸ்வர அஹம் ஸர்வ தே,ஹிநாம்‌ | .
ஆவாம்‌ தவாங்கே, ஸம்பூதெள தஸ்மாத்‌ கேஸவ நாமவார்‌ ||”
[‘க:’ என்று ப்ரஹ்மாவுக்குப் பெயர்‌;
தேஹத்தில்‌ அபிமான முள்ள எல்லாருக்கும்‌ நான்‌ ஈசன்‌;
ப்ரஹ்ம ருத்ரர்களாகிய நாங்கள்‌ இருவரும்‌ உன்னுடைய சரீரத்தனின்‌றும்‌ பிறந்‌தோம்‌;
ஆகையால்‌ நீ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனாயிருக்கிறாய்‌.
என்‌று ஹரிவம்சத்தில்‌ பேச நின்ற சிவனாலும்‌ பேசப்பட்டது.
-‘நாராயணாத்‌, ப்‌,ரஹ்மா ஜாயதே। நாராயணாத்‌, ருத்ரோ ஜாயதே|”
நாராயணனிடமிருந்து பிரமன்‌ பிறக்கிறான்‌:
நாராயணனிடமிருந்து ருத்திரன்‌ உண்டாகிறான்‌.
என்பது முதலான வேதவாக்கியங்களையும்‌.
மற்ற ப்ரமாணங்களையும்‌,
“தெய்வ நான்முகக்கொழுமுளை ஈன்று முக்கணீசனொடு தேவு பல (–முதலிய ஆழ்வார்‌ அருளிச்செயல்களையும்‌
இவ்விடத்தில்‌ அநுஸந்திப்பது.
(கேசவன்‌ )
பிரமனையும்‌ சிவனையும்‌ தன் வசத்தில்‌ வைத்திருப்‌பவன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
‘நாராயணாத்‌ ப்ரஜா யந்தே।| நாராயணாத்‌ ப்ரவர்த்தந்தே | நாராயணே ப்ரலீயந்தே।’்‌
பிரமன்‌ முதலிய எல்லாரும்‌ நாராயணனிடமீருந்து உண்டாகிறார்கள்‌:
நாராயணனால்‌ வாழ்கிறார்கள்‌:
நாராயணனிடமே லயமடைரார்கள்‌. என்று சொல்லிற்று

சுடர்மிகு சுருதியும்‌,
“கள்வா! எம்மையும்‌ ஏழுலகும்‌ நின்‌ உள்ளே தோற்றிய இறைவ! என்று
வெள்ளேறன்‌ நான்முகன்‌ இந்திரன்‌ வானவர்‌ புள்ளூர்தி கழல்‌ பணிந்(து) ஏத்துவரே.”’ _என்‌றும்‌,
“நெற்றியுள்‌ நின்றென்னையாளும்‌ நிறைமலர்ப் பாதங்கள்‌ சூடி
கற்றைத்‌ துழாய்‌ முடிக் கோலக்‌ கண்ணபிரானைத்‌ தொழுவார்‌
ஒற்றைப் பிறையணிந்தானும்‌ நான்முகனும்‌ இந்திரனும்‌” என்றும்‌ ஆழ்வார்‌ அருளிச் செய்தார்‌.
“விண்ணோர் தலைவா கேசவா” என்று நம்மாழ்வார்‌ இத் திரு நாமத்துக்குப்‌ பொருள்ள உரைத்தார்‌,
“கேசவா புருடோத்தமா” என்றார்‌ பெரியாழ்‌வாரும்‌.
உத்க்ருஷ்ட புருஷர்களான ப்ரஹ்ம ருத்ரர்களைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌ என்றபடி.
(கேசவன்‌ )
சோதி மயமான ஸூர்யன்‌ முதலியவைகளின்‌ கரணங்கள்‌ கேச ஸப்தத்தினால்‌ சொல்லப்படுகின்‌ றன,
அவைகளைத்‌ தன்‌ வசக்தில்‌ கொண்டிருக்கையால்‌ கேசவன்‌ எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.

“அம்ரவோ யே ப்ரகரமாந்தே மம தே கேமுஸம்ஜ்ஞிதா: |
ஸர்வஜ்ஞா: கேஸவம்‌ தஸ்மாந்‌ மம ஹார்த்‌,விஜஸத்தமா:।’”
உலகில்‌ பிரகாசிக்கும்‌ என்‌னுடைய கிரணங்கள்‌ கேசமெனப்‌படுகின்‌ றன.
ஆகையால்‌ எல்லாமறிந்த ப்ராஹ்மண ஸ்ரேஷ்‌டர்கள்‌ என்னைக்‌ கேசவனென்‌று சொல்லுகிறார்கள்‌.
என்று மஹாபாரதத்தில்‌ சொல்லப்பட்டது .
கோவிந்த நாம வியாக்கி யானத்தில்‌ எடுக்கப்பட்டவையான ” தத்ர ஸூர்யோ பாதி” முதலிய ப்ரமாணங்களை இங்கும்‌ அநுஸந்திப்பது.

“திருவடியை நாரணனைக்‌ கேசவனைப்‌ பரஞ்சுடரை ‘ என்று ஆழ்வார்‌ இவ் வர்த்தத்தை உணர்த்தினர்‌.
(கேசவன்‌ )
“கேயாாத்‌, வோ அந்யதரஸ்யாம்‌” பூ மநிந்த; ப,வந்தி மதுபளத,ய: ‘ என்கிற வியாகரண விதிகளின் படி
கேயாப்தத்தின்மேல்‌ வ:’ என்னும்‌ ப்ரத்யயம்‌ வந்து “ப்ரஸஸ்த கேஸ வான்‌’
( புகழ்ப் பெற்ற கேசங்களை உடையவன் ) என்னும்‌ பொருளைத் தருகிறது.
அதாவது: “ய ஏஷ அந்த ராதித்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருங்யதே ஹிரண்ய ஸ்ம்ருர்‌ ஹிரண்ய கேஸ ;”
ஸூர்யனுக்கு நடுவில்‌ யாவனொரு ஸுவர்ண மயனான புருஷன்‌ விளங்குகிறானோ,
அவன்‌ ஸூவர்ணம்‌ போன்று அழகான மீசையையும்‌.கேசங்களையும்‌ உடையவன்‌.
என்று வேதத்தாலும்‌ புகழப் பெற்ற மயிர் முடிகளை உடைய வன்‌ என்று பொருள்‌.
“கொள்கின்ற கோளிருளைச்‌ சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின்‌
உள்கொண்ட நீல நன்னூல்‌ தழைகொல்‌? அன்று
மாயன்குழல்‌ விள்கின்‌ற பூ்ம் தண் துழாய்‌ விரைகால்
வந்தென்னுயிரைக்‌ கொள்கின்றவாறறியீர்‌ அன்னைமீர்‌ கழறா நிற்றீரே.” என்றும்‌.
“முன்னமுகத்தணியார்‌ மொய்குழல்கள்‌ ‘ என்றும்‌,
“சுருண்‌ டிருண்ட குழல்‌ தாழ்ந்த முகத்தான்‌” என்றும்‌ –
மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ”’ என்றும்‌,
“குழலழகர்‌” என்றும்‌ ஆழ்வார்கள்‌ இக் கேச லெளந்தர்யத்தை அநுடவித்தார்கள்‌.
(கேசவன்‌ )
இத்தால்‌ சிக்குத்தலையரான இதர தெய்வங்களிற்‌ காட்டிலும்‌ வ்யாவ்ருத்தி சொல்லப்படுகிறது.”
“பிங்கள ஜடோ தே,வ:’ என்றும்‌,
“ஒருருவம்‌ பொன்னுருவம்‌ ஒன்று செந்தீ ” என்றும்‌ சொல்லுகிற
ப்ரஹ்ம ருத்ரர்கள்‌ மயிர் போலே யன்‌ றிக்கே,
* நீல குஞ்சத மூர்த்‌ த,ஜம்‌ *,
* குழலிருண்டு சுருண்டு ‘ என்கிறபடியே
கண்டவர்‌கள்‌ கண்களிலே அஞ்ஜனமெழுதினாற் போலே ஸ்யாமளமா யிருக்கை”என்‌று
மை வண்ண நறுங்குஞ்சி வியாக்க்யானத்தில்‌ கலி த்‌வம்ஸநாசார்யர்‌ அருளிச் செய்தது
இங்கு அநுஸந்திக்கத்‌ தக்கது.

“நரகே பஸ்யமாநஸ்து யமேந பரிபாவஷித: |
கிம்‌ த்வயா நார்ச்சிதோ தே,வ: கேஸவ: க்லேஸ நாஸந : ||”
நரகத்தில்‌ வேதனையை அனுபவிக்கும்‌ ஒரு மனிதன்‌
“அடே! உன்னால்‌ கிலேசங்களை யெல்லாம்‌ போக்கும்‌ சேசவன்‌ ஏன்‌ அர்ச்சிக்கப்படவில்லை?” என்‌று
யமனால்‌ கேட்கப் பட்டான்‌. –என்று புராணம்‌ சொல்லிற்று.
கேஸவ: க்லேஸமநாமரந: ‘ என்றதின்‌ தாத்பர்யத்தை.
“தாப த்ரயாதுரரோடு விரஹதாபதுரரோடு வாசியற ஸர்வருக்கும்‌ ஸ்ரமஹரமாம்படி
காண்‌ திருக்குழலின்‌ பரிமளம்‌ மிகுந்தபடி;
*கேமரவ: க்லேஸ நாஸநா சமா:”? என்னக் கடவதிறே ;.
த்ருஷ்டி மாத்ர ப்ரியமாயிருக்கை யன்‌றிக்கே நெஞ்சில்‌ ஸ்ரமமெல்லாம்‌ போம்படி காண்‌
திருக்குழலின்‌ பரிமளம்‌ மிகுந்து இருக்கும்படி ” என்று
பரம காருணிகரான பெரிய வாச்சான் பிள்ளை மை வண்ண ஈறழங்குஞ்சி வியாக்க்யானத்தில்‌ அருளிச் செய்தார்‌.

(கேசவன்‌ )
கேசி என்னாம்‌ அஸுரனைக்‌ கொன்‌ற க்ருஷ்ணன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
“யஸ்மாத்‌ த்வயைவ துஷ்டாத்மா ஹத; கேஸவ ஐநார்த்தந ; |
தஸ்மாத்‌ கேஸவ நாமா தவம்‌ லோகே க்ஹவாதிம்‌ கமிஷ்யஸி।”’
ஜனார்த்தனனே! ( உன்னைக்‌ கொல்ல வேணுமென்னும்‌ ) கெட்ட எண்ணத்துடன்‌ வந்த கேசி
உன்னாலேயே கொல்லப்‌ பட்டானாகையால்‌ நீ உலகில்‌ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்‌தால்‌ கீர்த்தி பெறுவாய்‌.
என்று நாரதரால்‌ ஸ்ரீவிஷ்ணு புரரணத்தில்‌ இப்பொருள்‌ பேசப்பட்டது.
கேஸவம்‌ கேஸி ஹந்தாரம்‌” என்றும்‌ மற்றோரிடத்தில்‌ இவ்வர்த்தம்‌ சொல்லப்பட்ட து. –
கேஸவ: கேஸி ஹந்தா ”’ என்று இப் பொருள்‌ ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திலும்‌ ஆதரிக்கப்பட்டது
“கண்ணன்‌ கேசவன்‌” என்றும்‌, `
” நாராயணன்‌ மூர்த்தி கேசவன்‌” என்றும்‌
ஆழ்வார்களாலும்‌ இவ் வர்த்தம்‌ அறு ஸந்திக்கப்பட்டது.
இப்படிப்‌ பொருள் கொள்ளும் போது எம்பெருமானுடைய விரோதி , நிரஸன ஸீலத்வம்‌ தோற்றுகிறது.

கண்ணன்‌ கேசவன்‌ நம்பி’ :
கேசவ நம்பீ உன்னைக்‌ காது குத்த”
“கேசவ நம்பியைக்‌ கால் பிடிப்பாள்‌ என்னுமிப்‌ பேறு எனக்கு அருள் கண்டாய்‌” என்று
இத் திருநாமத்தின்‌ குண பூர்த்தியை அனுஸந்தித்தார்கள்‌.
“கேஸவ ; க்லேஸ நாஸநா -மஹா லோகே த்‌வை ரூப்யேண ஸ்திதெள ஸ்தித: |
மதுராக்‌,யே மஹாஷேத்ரே வாராணஸ்யாமபி த்‌விஜ ॥”’
விப்ரரே! கிலேசங்களைப் போக்கடிக்கும்‌ குழலழகையுடைய பெருமான்‌.
மதுரை என்னும்‌ மஹா ஷேத்திரத்திலும்‌
வாராணஸி எனப்படும்‌ காசியிலும்‌
பூமியில்‌ கோயில் கொண்‌ டெழுந்தருளியிருக்கிறான்‌..] என்னும்‌ ப்ரமாணத்தைக் காட்டி.
பட்டர்‌ இத் திருநாமத்தை அர்ச்சாவதார பரமாக வியாக்கியானம்‌ செய்தருளினார்‌.
இப்படிப்‌ பர விபவ அர்ச்சாவதாரங்‌களைக் குறிக்கக்‌ கூடியதே யாகிலும்‌
கேசவன்‌ நாரணன்‌ சீமாதவன்‌ கோவிந்தன்‌ வைகுந்தன்‌?’ என்று நம்மாழ்வார்‌ அருளிச் செய்கையால்‌.
இத் திருநாமத்துக்குப்‌ பராவஸ்தை யைக் குறிக்கும்‌ பொருளே இங்கு முக்கியார்த்தமாகக்‌ கடவது.

——————

கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தினால்‌ பிரம ருத்திரர்‌ களுக்கும்‌ உத்பாதகன்‌ என்‌ று உரைக்கப்பட்ட து.
இப்படிப்‌ பட்டவன்‌ யார்‌ என்னும்‌,கேள்வி எழ.
‘நாராயணன்‌’ என்று வேதாந்த ஸித்தமான அஸாதாரணமான திருநாமத்தைப்‌ படிக்கிறது.

இத் திருநாமத்தை வேதங்களும்‌. இதிஹாஸ புராணங்களும்‌ ஆழ்வார்களும்‌ மிகவும்‌ ஆதரித்துப் போந்‌ தார்களென்பது ஸுப்ரஸித்தம்‌.
இதிலுள்ள ணகாரமான து வேறெந்த தெய்வத்திற்கும்‌ இத் திரு நாமம்‌ பொருந்தா தென்பதைக்‌ காட்டுகிறது.
இத் திருநாமத்தின்‌ அர்த்தங்‌களோ ஆயிரம்‌ நாவுடடைத்த ஆதிசேஷனாலும்‌ அளவிட்டுச்‌ சொல்லமுடியாதவை.
நாராயணனுடைய பெருமையை அறிந்தாலும்‌ அறியலாம்‌;
நாராயண நாமத்தினுடைய அர்த்த, வைபவத்தை எவராலும்‌ அறியமுடியாது.
பரம காருணிகர்களும்‌ ஸர்வஜ்ஞ ஸார்வ பெனமர்களுமான நம்‌ ஆழ்வார்களும்‌ ஆசாரியர்களும்‌
இத் திருநாமத்தின்‌ பொருளைப்‌ பலவிடங்களில்‌ பேசியிருக்கிறார்கள்‌.
அந்த ஸ்ரீஸக்திகளைத்‌ துணையாகக் கொண்டு நாமும்‌ இத் திரு நாமத்தின்‌ பொருட்‌ பெருமையை
இயன்‌ற வரையில்‌ அநுபவிக்க முற்படுவோம்‌.

“ ரிங்‌-க்ஷயே ”’ என்று தாதுவாகையாலே. ‘ர’ என்னும்‌ எழுத்து க்ஷயித்துப்போகும்‌ பதரர்த்தங்களைக்‌ குறிக்கிறது. ந’ என்னும்‌ எழுத்து அதை நிஷேதி,க்கிறது. ஆக, நர: என்று நித்யமாய்‌ விளங்கும்‌ வஸ்துவைக்‌ குறிக்கிறது. *“நராணாம்‌ ஸமூஹ: நார: என்‌ கிறபடியே “- நர என்‌னும்‌ பதம்‌ இப்படிப்பட்ட நித்யவஸ்‌துக்களின்‌ ஸமூஹத்தைக்‌ குறிக்கிறது. ‘நாரா:’ என்னும்‌ பன்மையால்‌ அப்படிப்பட்ட நித்ய வஸ்‌துக்களின்‌ ஸமூஹங்கள்‌ பல உள என்று உணர்த்தப்‌ படுகிறது. இப்படிப்பட்ட இந்த நித்ய வஸ்‌ துக்களின்‌ ஸமூஹங்கள்‌ எவை என்‌பதைப்‌ பரமகாருணிகரான பெரிய வாச்சான்பிள்ளை ** அவையாவன: ஜஞாநமக் த்யா தி, திவ்‌, யாத்ம குணங்களும்‌, குண ப்ரகாஸ்கமான திவ்யமங்கள விக்ரஹங்களும்‌. விக்ரஹ குணமான ஸெளந்தர்யாதிகளும்‌. அந்த ஸெளந்தர்யாதிகளோபாதி பூத்தாப்போலே சாத்தின கிரீடமகுடாதி திவ்யா பரணங்களும்‌, அவ்வா பரணங்களோடு விகல்பிக்கலாம்படியான சங்க,சக்ராதி திவ்யாயுதங்களும்‌, இத்தனையும்‌ காட்டிலெரித்த நிலாவாகாதபடி அருகே யிருந்து அனுபவிக்கிற லக்ஷ்மீ ப்ரப்ருதி மஹிஷீ வர்க்கங்களும்‌, அச் சேர்‌த்தியிலே அடிமை செய்கிற அநந்‌த கருட விஷ்வக்ஸேந ப்ரமுகரான ஸூரி ஸங்க,மும்‌, அவர்களோபாதி போய்‌ அடிமை செய்கிற ( அவர்களுக்கு அடிமை செய்கைக்குப்‌ பரிகரமான சத்ர சாமராதி,பரிச்‌ச- அவ்வடிமைக்கு வர்த்த,கமாய்‌ பஞ்சோபனிஷந் மயமான  குண த்ரயாத்மிகையான மூலப்‌ரக்ருதியும்‌, புருஷ சமஷ்டியும்‌, அஹோ ராத்ராதி விபாக யுக்தமான காலதத்வமும்‌. ப்ரவாஹ ரூபேண நித்யமான மஹதாதிகளும்‌. தத் கார்யமான அண்டங்‌களும்‌. அண்டாரந்தர்வர்த்திகளான சதுர் வித பூதங்களும் .

பஞ்சோபனிஷஹ மயமாகையாலே பரமபதமும்‌ மஹாத்மகமாயிருக்கும்‌; குணத்ரய த்யிகையாகையாலே மூலப்ரக்ருதியும்‌ ஸமூஹுத்மகையாயிருக்கும்‌ அஹோராத்‌ ராதி,விபாகங்கள்‌ காலமும்‌ ஸமூஹாத்மகமாயிருக்கும்‌” என்று பரந்த ரஹஸ்யத்தில்‌ பரகக அருளிச்செய்தார்‌.

அடுத்தபடியாகவுள்ள அயந சப்தம்‌ பல பொருள்களை உடையது. அவைகளில்‌ இருப்பிடம்‌ ‘ என்பதும்‌ ஒன்று.  அயநம்‌ யஸ்ய ஸூ;-—நாராயண:” [நித்ய பதரர்த்த ஸமூஹங்களாகிற நாரங்கள்‌ எவனுக்கு இருப்பிடமோ. அவன்‌ நாராயணன்‌ ] என்று நாராயண சப்தத்துக்கு ஒரு பொருள்‌ ஏற்படுகிறது. இத்தால்‌ இவன்‌ எல்லாப்‌ பதார்த்தங்‌களையும்‌ : உடல்‌ மிசை உயிரெனக்கரந்தெங்கும்‌ பரந்துளன்‌ ‘. என்று சொல்லப்பட்டதாகிறது.

“சேதநாசேதநம்‌ ஸர்வம்‌ விஷ்ணோர்‌ யத்‌, வ்யதிரிச்யதே |
நாரம்‌ தத,யநஞ்சேத,ம்‌ யஸ்ய நாராயணஸ்து ஸ: ॥”
விஷ்ணுவைக் காட்டிலும் வேறுபட்டதான எல்லாச்‌ சேதநா சேதனங்களும்‌ நார சப்தத்தால்‌ சொல்லப்படுகின்‌றன.
அது எவனுக்கு இருப்பிடமாயுள்ளதோ அப்பரமாத்மா நாராயணன் எனப்படுகிறான்‌.–என்று இவ்வர்த்தத்தை சாஸ்திரம்‌ சொல்லிற்று.
இந்த பஹுவ்ரீஹி ஸமாஸப்‌ பொருளில்‌ அந்தர் வ்யாப்தியும்‌, அடுத்தபடியாகச்‌ சொல்லப்படும்‌
தச்புருஷ ஸமாஸப்‌ பொருளில்‌ பஹிர் வ்யாப்தியு
உணர்த்‌தப் படுகின்றன என்று ஆசார்யர்கள்‌ அருளிச் செய்வர்‌.

“யச்ச கிஞ்சித்‌ ஜக,த்யஸ்மிர்‌ த்‌,ருங்யதே ங்ரூயதே$பி வா |
அந்தர்‌ ப,ஹிம்ச தத்‌ ஸர்வம்‌, வ்யாப்ய நாராயண: ஸ்தி,த: |” [
இவ்வுலகில்‌ காண்பனவும்‌. கேட்பனவுமான எல்லா வஸ்துக்‌ களிலும்‌ உள்ளும்‌ புறமும்‌ நாராயணன்‌ வியாபித்து நிற்கிறான்‌–என்று பண்டை மறையிலும்‌,
“ஆக்கையுள்ளும்‌ ஆவியுள்ளும்‌ அல்ல புறத்தினுள்ளும்‌ நீக்கமின்றி எங்கும்‌ நின்றாய்‌! ‘ என்று தமிழ்‌ வேதத்திலும்‌
இவ்வர்த்தம்‌ சொல்லப்பட்ட.து.
இப்பொருளில்‌ எம்பெருமானுடைய ஸர்வவ்யாபகத்வம்‌ சொல்லப்படுகிறது.
“நாராணாம்‌ அயநம்‌ ய: ஸ:”
நித்யபதளர்த்த, ஸமூஹங்க ளாகிற நாரங்களுக்கு எவனொருவன்‌ இருப்பிடமாயிருக்‌கிறானோ
அவன்‌ நாராயணன்‌ – என்ற தத்புருஜ ஸமாஸத்தின்‌ படியும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
இத்தால்‌ எல்லா வஸ்துக்‌ களையும்‌ நாராயணன்‌ தரிக்கிறான்‌ என்று சொல்லப்படுகிறது, ^”
நாராணாமயநத்வாச்ச நாராயண இதி ஸ்ம்ருத: ” [63-62]
நார சப்தத்தனால்‌ சொல்லப்படும்‌ நித்யவஸ்‌துஸமுஹங்‌ களுக்கு இருப்பிடமாயிருப்பதால்‌ நரராபணனெனப்படு கிறான்‌-
என்று இவ்வர்த்தம்‌ பாரதம்‌ உத்யோக பர்வத்தில்‌ உரைக்கப்பட்ட து.

நார சப்சத்துக்கு மற்றொரு வகையாகவும்‌ பொருளுரைப்பதுண்டு.
நார:’ என்று ஸ்வரூபத்திலும்‌ ஸ்வபாவத்திலும்‌ சிறிதும்‌ விகாரம் அற்றவனான பரமபுருஷன்‌ சொல்லப்படுகிறான்‌.
*நராத்‌ ஜாதாநி ‘ என்கிறப்டியே புருஷோத்தமனிடமிருந்‌து உண்டானவை நாரங்க ளெனப்படுகின்‌றன.
அவைகளை இருப்பிடமாக உடைத்தா யிருக்கையா லும்‌, அவைகளுக்கு இருப்பிடமாயிருக்கை யாலும்‌
நாராயணனெனப்படுகிறான்‌ என்று
முன் போலவே இருவகையாகவும்‌ பொருள்‌. ““நராஜ்ஜாதாநி தத்த்வாதி நாராணீதி ததோ விது, |
தாந்யேவ சாயநம்‌ தஸ்ய தேந நாராயண: ஸ்ம்ருத: |!”
நரனாகிற எம்பெருமானிடமிருந்து உண்டானவைகளை நாரங்களென்‌ று அறிகின்றார்கள்‌.
அவைகளையே இருப்பிடமா யுடையவனாயிருப்பதால்‌ அவன் நாராயணனெனப்படுகிறான்‌–
என்று இவ்வர்த்தம்‌ ஹரி வம்சத்திலும்‌ சொல்லப்பட்டது,
இவ்வர்‌த்தத்தை “யாவையும்‌ யாவரும்‌ தானாம்‌ அமைவுடை நாரணன்‌” என்று நம்மாழ்வார்‌ அருளி செய்தார்‌.

° நார பதத்தில்‌ சொல்லப்பட்ட அநந்தமான வஸ்த்துக்களில்‌ சிலவற்றைச்‌ சிற்சில விடங்களில் எடுத்து ஆழ்வார்கள்‌ நாராயண சப்தத்துக்கு வியாக்யானம்‌ செய்து அருளி இருக்‌கிறார்கள்‌.
நார சப்த்த்‌துக்கு அநந்த கல்யாண குணங்களையும்‌ பொருளாகக் கொண்டு
“: ஈறில வண்‌ புகழ்‌ நாரணன்‌ ” என்‌றும்‌
` வாழ் புகழ்‌ நாரணன்‌” என்றும்‌ நம்மாழ்வாரும்‌.
நல முடை நாரணன்‌ என்று பெரியாழ்வாரும்‌,
நலந்திகழ்‌ நாரணன்‌” என்று குலசேகராழ்வாரும்‌ செய்தருளினார்கள்‌.

நார சப்தத்‌.துக்கு திவ்ய மங்கள விக்ரஹத்‌தையும்‌ அதன்‌ குணங்களையும்‌ பொருளாகக்‌ கொண்டு.
“ காராயின காளநன்‌ மேனியினன்‌ நாராயணன்‌ ” என்று . நம்மாழ்வாரும்‌.
“‘ கார்மேனிச்‌ செங்கண்‌ கதிர்மதியம்போல்‌ முகத்தான்‌ நாராயணனே ” என்றும்‌,
` நாற்றத்துழாய்‌ முடி நாராயணன்‌” என்றும்‌ ஆண்டாளும்‌ அருளிச் செய்தனர்‌.

திவ்யா பரணங்களை நார சப்தத்‌தக்குப்‌ பொருளாகக் கொண்டு
“உடையார்ந்த வாடையன்‌ கண்டிகையன்‌ உடைநாணினன்‌
புடையார்‌ பொன்னூலினன்‌ பொன்முடியன்‌ மற்றும்‌
பல்கலன்‌ நடையாவுடைத்‌ திருநாரணன்‌” என்று நம்மாழ்வார்‌ அருளினார்‌.
“லக்ஷ்மீ ப்ரப்‌ருதி மஹிஷீ வர்க்கங்களும்‌” என்று ஆச்சான் பிள்ளையால்‌ அருளிச் செய்யப்பட்
பிராட்டிமார்‌ களை நார சப்தத்‌துக்குப்‌ பொருளாகக்கொண்டு “
செல்வ நாரணன்‌ என்‌று நம்மாழ்வார்‌ அருளிச் செய்தார்‌.
விண்ணோர்‌ நாயகன்‌ நாராயணன்‌ ” என்று வேதம்‌ தமிழ் செய்த மாறன்‌
நார சப்தத்துக்கு நித்ய முக்தர்களைப்‌ பொருளாக அருளிச்‌ செய்தார்‌.

நாரசப்தத்துக்குச்‌ சேதனர்களைப்‌ பொருளாகக்‌ கொண்டு “`
எண் பெருக்கந்நலத் தொண் பொருள்‌ ஈறில வண்புகழ்‌ நாரணன்‌ ” என்றும்‌,
“’ எம்பிரான்‌ எம்மான்‌ நாராயணன்‌ ” என்றும்‌ சடகோபனும்‌, =
`” நம்மை யுடையவன்‌ நாராயணன்‌ ” என்றும்‌.
“’ என்னை நலங்கொண்ட நாரணற்கு?” என்றும்‌ ஆண்டாளும்‌
நாராயணன்‌ என்னை யாளி ” என்று திருமழிசைப் பிரானும்‌ அருளிச்செய்தனர்‌.

நாரசப்தத்துக்கு உபயவிபூ,தியையும்‌ பொருளாகக்கொண்டு
“நாரணன்‌ முழுவேழுலகுக்கும்‌ நாதன்‌ “என்று நம்மா ழ்வாரும்‌.
” நாயகன்‌ நாரணன்‌” என்று பெரியாழ்வாரும்‌ அருளிச் செய்தனர்‌. .

( நாராயணன்‌ )
நரனாகிற பெருமானால்‌ படைக்கப்பட்ட ஜலத்தை நார சப்தத்திற்குப்‌ பொருளாகக்‌ கொண்டு
அதை இருப்பிடமாகக்‌ கொண்டவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌,
“ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை ஈரஸிவ: |
தா யத,ஸ்யாயந௩ம்‌ பூர்வம்‌ தேந நாராயண: ஸ்ம்ருத: |”
நரனாகிற ஸர்வேஸ்வரனால்‌ படைக்கப்பட்ட ஜலம்‌ “நாரம்‌ ‘ எனப்படுகிறது.
அது ஆதி காலத்தில்‌ இவனுக்கு இருப்பிடமாயிருக்கையால்‌ இவன் நாராயணனெனப்படுகிறான்‌. ] என்று
மநுஸ்ம்ருதியிலும்‌, விஷ்ணுபுராணத்திலம்‌ உரைக்கப்‌ பட்டது.
இவ்வர்த்தம்‌ “” நடுக்கடலுள்‌ துயின்‌ற நரராயணனே!”’ என்று ஆழ்வராரலும்‌.
“ ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந; ‘”
இவனே பாற்கடலில்‌ பள்ளி கொண்ட ஸ்ரீமந்நாராயணன்‌
என்று புராணத்திலும்‌ பேசப்பட்டது.

“ஸ்ருஷ்ட்வா நாரம்‌ தோயமந்த:ஸ்தி,தோஹம்‌ =, யேரு ஸ்யாந்மே நாம நாராயணேதி”’ [நார சப்தத்தனால்‌ சொல்லப்படும்‌ ஜலத்தை ஸ்ருஷ்டி செய்து அகனுள் நான்‌ வசித்தபடியால்‌ எனக்கு நாராயண னென்னும்‌ நாமம்‌ ஏற்பட்டது. ] என்று ஸ்ரீவராஹ புராணத்‌ தில்‌ பகவானாலும்‌ இவ்வர்த்தம்‌ ஆதரிக்கப்பட்டது.

(நாரா யணன்‌) நாரசப்தத்திற்கு இப்ரக்ருதி மண்டலத்திலுள்ள சேதனாசேதனங்களைப்‌ பொருளாகக்‌ கொண்டு. ப்ரளய காலத்தில்‌ அவைகளுக்குச்‌ சேருமிடமாயுள்ளவன்‌ என்றும்‌ பொருள்கொள்ளலாம்‌. = “” ஞாலமுற்றுமுண்டாலிலைத்‌ துயில்‌ நாராயணனுக்கு ” என்று பெரியாழ்வாரும்‌, ** ஞாலமுற்றும்‌ உண்டுமிழ்ந்த நாராயணனே! ” என்றும்‌. “ஞாலமுண்டாய்‌! ஞானமூர்த்தி! நாராயணா!” என்றும்‌ நம்மாழ்வாரும்‌ இவ்‌ வர்த்தத்தை அநுஸந்தித்தருளினார்கள்‌. இத்தால்‌ ஸர்வ ஸம்ஹர்த்ருத்வமும்‌ சொல்லப்பட்ட தாயிற்று.

(நாராயணன்‌) * நர’ சப்தத்தினால்‌ அழிவற்ற ஸ்வரூபத்தையுடைய ஆத்மா சொல்லப்படுகிறது ; நாரசப்தம்‌ ஆத்ம ஸமூஹுத்தைச்‌ சொல்லுகிறது. அயநசப்தம்‌ : இண்‌ க,தெள ‘ : அய-க,தெள ‘ என்னும்‌ தாதுக்கள்‌ ஒன்‌ றிலிருந்து உண்டானதாகையாலே போய்ச்சேருமிடமாகிற ப்ராப்யத்தையும்‌, போய்ச் சேரும்‌ வழியான உபாயத்தையும்‌ குறிக்கும்‌

ஆக “நாராயணன்‌ ‘. என்று சேதன வர்க்கத்‌திற்கு
மோக்ஷப்ராப்யமாகவும்‌,
மோக்ஷ  உபாயமாகவும்‌ இருப்பவன்‌ என்று பொருள்‌படு கிறது.
இவ்வர்த்தம்‌ “நாரஸ் த்விதி ஸர்வ பும்ஸாம்‌ ஸமூஹ: பரிகீர்த்தித:
க,திராலம்ப;ம்‌ தஸ்ய தேக நாராயண: ஸ்ம்ருத: || ”
நாரமென்‌று சேதனருடைய ஸமூஹம்‌ சொல்லப்‌ படுகிறது.
அச்சேதன சமூகத்துக்கு உபாயமும் உபேயமுமாயும் இருப்பதால்‌ நாராயணனென் று சொல்லப்படுகிறான்‌. ] என்றும்‌.
“நரரோ நராணாம்‌ ஸங்கா தஸ்‌ தஸ்யாஹமயநம்‌ க,தி:।
தேநாஸ்மி முநிபிர்‌ நித்யம்‌ நாராயண இத்ரித: || ”
நரர்களின்‌ கூட்டம்‌ நாரமெனப்படுகிறது.
அதற்கு நான்‌ ப்ராப்யமாகவும்‌. ப்ராபகமாகவும்‌ இருக்கிறேனாகையால்‌ முனிவர்களால்‌
எப்போதும்‌ நான்‌ நாராயணன்‌ என்று சொல்லப்படுகிறேன்‌.] என்றும்‌ ।
“ ஜீவாநாம்‌ ஸமூஹ: ப்ரோச்யதே புததை,! |
தேஷாமயநபூ,தத்வாந்‌ நாராயண இஹோச்யதே |
தஸ்மாந் நாராயணம்‌ பந்தும்‌ மாதரம்‌ பிதரம்‌ குரும்‌ |
நிவாஸம்‌ சரணம்‌ சாஹார்‌ வேத,வேதராந்த பாரகத : |
நார சப்தத்தனால்‌ ஜீவ ஸமூஹம்‌ பெரியோர்களால்‌ சொல்லப்‌ படுகிறது.
அவர்களுக்கு ப்ராப்ய ப்ராபகங்களாகிற அயன மாயிருப்பதால்‌ நாராயணன்‌ என இங்கு சொல்லப்படுகிறான்‌ .
ஆகையால்‌ நாராயணனை
பந்து வாகவும்‌.
தாயாகவும்‌.
தந்தை யாகவும்‌.
ஆச்சார்யனாகவும்
இருப்பிடமாகவும்
வேத வேதார்தங்களைக்‌ கரை கண்டவர்கள்‌ சொல்லு கிறார்கள்‌–
என்றும்‌ சாஸ்திரங்களில்‌ இவ்வர்த்தம்‌ வெகு விரிவாக உபதேசிக்கப்பட்டது.

“ நாராயணனே நமக்கே பறை தருவான்‌ ” என்‌று ஆண்டாளும்‌,
‘வீடாக்கும்‌ மெய்ப்‌ பொருள் தான்‌……நாராயணன்‌ ” என்றும்‌,
நாராயணன்‌ என்னை யாளி நரகத்தில்‌ சேராமல்‌ காக்கும்‌ திருமால்‌ தன்‌ ”’ என்‌றும்‌ திருமழிசைப்‌ பிரானும்‌
இவ் வர்‌த்தத்தை நாராயண சப்தத்தக்குப்‌ பொருளாக அநுஸந்தித்தார்கள்‌.
“நாரணம்‌ கதிர்‌ நாராயண:”’
நாராயணனே மோக்ஷத்தில்‌ அடையப்‌ படுமவனும்‌, அடைவதற்கு வழியுமாவான்‌.
என்று வேதமும்‌ இவ்வர்ததத்தை உத்கோஷித்தது. (நாராயணன்‌)
° நர: என்று அழிவற்றவனான எம்பெருமானையும்‌ குறிக்கும்‌ என்று முன்னரே சொல்லப்பட்ட து.
“ ஜந்ஹார்‌ நாராயணோ நர: ” என்று அவனுடைய நாமமாக வும்‌ படிக்கப்பட்ட து.
`” நரஸ்யே இமே- நாரா: ” (சேர்ந்தவர்கள்‌ நாரங்கள்‌] என்கிற வ்யுத்பத்தியின்‌ படி
“ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்‌ [ஞானி எனக்கும்‌ ஆத்மாவாயிருப்பவனென்று என்‌ ஸித்தாந்தம்‌]
என்று எம்பெருமானாலேயே அபிமானிக்கப்பட்ட அவனடியார்களைச்‌ சொல்லுகிறது.
“நாரா அயநம்‌ யஸ்ய ஸ; ” என்று தன்னடியார்களையே தனக்குப்‌ பரம ப்ராப்யமாகக்‌ கொண்‌டு இருக்குமவன்‌ என்‌று பொருள்‌ படுகிறது. –
‘ நச்சுவார்‌ முன்‌ நிற்கும்‌ நாராயணன்‌ “என்றும்‌.
நண்ணித் தொழுமவர்‌ சிந்தை பிரியாத நாராயணா!” என்றும்‌ பெரியாழ்வாரும்‌;
* அற்புதன்‌ நாராயணன்‌ …நிற்பது மேவி இருப்பதென்‌ நெஞ்சகம்‌ ” என்று நம்மாழ்வாரும்‌
இவ்வர்த்தத்தை ஆதரித்தார்கள்‌.
“நானுன்னை யன்‌றியிலேன்‌ கண்டாய்‌ நாரணனே! ” என்று:
மோக்ஷ உபாயத்வம்‌.
ஸர்வ வ்யாபகத்வம்‌,
ஸர்வ தரரகத்வம்‌ முதலிய குணங்களை
நாராயண சப்தார்த்தமாக அநுஸந்தித்தருளிய திருமழிசையாழ்வார்‌.
நீ என்னை யன்றி இலை’” என்று பக்தரைத் தாரகத்வமாகிற இவ்வர்த்தத்தை அருளிச்செய்தார்‌,

“நண்ணித்‌ தொழுமவர்‌ சிந்தை பிரியாத நாராயணா” என்னுமிடத்துக்கு வியாக்கயானம்‌ செய்தருளிய
பரம ரஸிகரான திருவாய்மொழிப்பிள்ளை
“* இவருடைய நாராயண சப்தார்த்‌ தம்‌ இப்படிப் போலே காணும்‌ இருப்பது ” என்று அருளிச்‌ செய்தார்‌
( நாராயணன்‌ )
நரர்கள்‌ என்று ஒருவிதமான குறைவு மற்றவர்களான ஸ்ரீவைஷணவர்களைச்‌ சொல்லுகிறது.
நாரம்‌ என்று நரர்களாகிற அந்த ஸ்ரீவைஷ்ணவர்களுடைய வாஸ ஸ்தானத்தைச்‌ சொல்லுகிறது.
ஸ்ரீவைஷ்ணவர்களுடைய வாஸஸ்தானத்தையே தனக்கு இருப்பிடமாகக்‌ கொண்டு எழுந்தருளியிருக்கையாலே *
நாராயணன்‌ ‘ எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
“திருக்கோட்டியூர்‌ மன்னு நாரணன்‌ ” என்றும்‌,
“ தென்திரை சூழ் திருப்பேர்க்‌ கிடந்த திரு நாரணா!” என்றும்‌ பெரியாழ்வார்‌ இவ்வர்த்தத்தை உணர்த்தினார்‌.

“ நர ஸம்பந்தி,நோ நாரா நர: ஸ புருஷோத்தம: |
நயத்யலெவிஜ்ஞா௩ம்‌ நாமாயத்யகிலம்‌ தம: ॥
ந ரிஷ்யதி ச ஸர்வத்ர நரஸ்தஸ்மாத்‌ |
நரஸம்ப,ந்திரு: ஸர்வே சேதநா சேதநாத்மகா: ||
நபிதவ்யதயா நாரா தரார்யபோஷ்யதயா ததர |
நியாம்யத்வே ஸ்ருஜ்யத்வ ப்ரவேமுபரணைஸ்‌ ததா ॥
அயதே நிதிலாக்‌ நாராந்‌ வ்யாப்நோதி க்ரியயா ததா |
நாராம்சாப்யாயநம்‌ தஸ்ய தைஸ்தத்‌,பாவநிரூபணாத்‌ ॥
நாராணாமயநம்‌ வாஸஸ்‌ தே ச தஸ்யாயநம்‌ ஸதா |
பரமா ச க,திஸ்தேஷாம்‌ நாராணாமாத்மநாம்‌ ஸதா |
ஆபோ நாரா இதி ப்ரோக்தாஸ்தா அப்யயமஸ்ய ச ।
அதோ நாராயணோ நாம ஹேதுபிர்‌ தர்மமித: பர: ॥ ”’
நரனுடன்‌ ஸம்பந்தம் பெற்றவைகள்‌ நாரங்கள்‌.
புருஷோத்‌ தமனே நரன் எனப்படுகிறான்‌.
தன்னைப் பற்றிய எல்லா அறிவையும்‌ அடைவிக்கிறான் ஆகையா லும்‌,
எல்லா இருளையும்‌ போக்கடிக்கறானாகையா லும்‌.
எங்கும்‌ விகாரமற்றவனாயிருப்ப தாலும்‌,
ஸர்வேஸ்வரனான அப்பரமபுருஷன்‌ நரனெனட்படுகிறான்‌.
நரனாகிய அப்பெருமானுடன்‌ ஸம்பந்தம்‌ பெற்றிருக்கும்‌ எல்லாச்‌ சேதநாசேதநங்களும்‌,அவனால்‌
ஆளப்படுகையா லும்‌,
தரிக்கப்படுகையாலும்‌.
போஷிக்கப்படுகையா லும்‌,
நியமிக்‌ கப்படுகையா லும்‌,
ஸ்ருஷ்டிக்கப்படுவதா லும்‌.
வியாபிக்கப்‌ படுவதாலும்‌.
தாங்கப்படுகையா லும்‌
நாரங்களாகின்‌ றன.
எல்லா நாரங்களையும்‌ (ஸ்வரூபத்தால்‌) அடைவதாலும்‌,
முற்கூறிய செய்கைகளால்‌ வியாபிப்பதாலும்‌.
அவைகளை யிட்டே அவனை நிரூபிக்க வேண்டியிருக்கையாலும்‌
நாரங்கள்‌ அப்புருஷோத்தமனுக்கு அயநமாகின்‌ றன.
இவன்‌ நாரங்‌ களுக்கு இருப்பிடமாயிருக்கிறான்‌:
அவைகளும்‌ எப்போதும்‌ இவனுக்கு இருப்பிடமாயுள்ளன.
நார ஸமூஹங்களான ஆத்மாக்களுக்கு மேலான ப்ராப்யமாகவும்‌, ப்ராபகமாகவும்‌, இவன்‌ விளங்குகிறான்‌.

ஜலமும்‌ நார சப்தத்தால்‌ சொல்லப்‌ படுகிறது.
அதுவும்‌ இவனுக்கு இருப்பிடமாயிருக்கிறது,
ஆகையால்‌, இக் காரணங்களால்‌ நாராயணன்‌ என்னும்‌ திருநாமம்‌ மேலானதென்று காட்டப்படட்டது.
என்று அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில்‌, ( 52-50,…65 )
நரன்‌, நாரம்‌, நாராயணன்‌ என்னும்‌ பதங்கள்‌ வெகு விரிவாக விவரிக்கப்பட்ட தும்‌ இவ்விடத்தில்‌ அநுஸந்திக்கத்தக்கது.
“நாராயணன்‌ ‘ என்று ஸர்வேஸ்வரன்‌ உபய விபூ,தி நிர்வாகஹனாய்‌ ஸ்ரீவைகுண்ட்த்தில்‌ எழுந்தருளியிருக்கும்‌ இருப்பைச்‌ சொல்லிற்று.

———————-

அப்படியிருக்குமவன்‌ ப்ரஹ்மசாரி நாராயணனல்ல, ஸ்ரீமந் நாராயணனே என்னுமத்தைச்‌ சொல்லுகிறது
மாதவன்‌ ‘ என்னும்‌ திருநாமம்‌.
சிவ புராணத்திலும்‌. “வைகுண்டே, து பரே லோகே மியா ஸார்த்த,ம்‌ |
ஆஸ்தே விஷ்ணுர் சந்த்யாத்மா ப,க்தைர்‌ பாக,வதை: ஸஹ”
வைகுண்டமென்னும்‌ மேலான உலகத்தில்‌, உலகிற்கெல்‌லாம்‌ ஸ்வாமியும்‌, எண்ண முடியாத
ஸ்வரூபத்தை யுடையவனுமான பகவான்‌ விஷ்ணு, ஸ்ரீதேவியுடன்‌ கூடியவன்‌,
குண நிஷ்டர்களான பக்தர்களுடனும்‌, கைங்கர்ய நிஷ்டர்‌களான பாகவதர்‌களுடனும்‌ எழுந்தருளியிருக்கிறான்‌–என்று சொல்லப்பட்ட தன்றோ.
(மாதவன்‌)
(மா’ என்னும்‌ பதம்‌ ஸ்ரீதேவியைச்‌ சொல்லுகிறது.
தவ:’என்னும் சொல்‌ “நாதன்‌” என்னும்‌ “பொருளை யுடையது.
“மாயா: தவ: மாதவ: ‘ என்கிறபடியே. மாதவன்‌ என்னும்‌ திருநாமம்‌ லக்ஷ்மீ நாதன்‌’ என்னும்‌ அர்த்தத்தை உடையது.
“மானேய்‌ நோக்கி ம்டவாளை மார்பில்‌ கொண்டாய்‌ மாதவா! ”என்‌று
நம்மாழ்வார்‌ இப் பொருளை மாதவ சப்தரர்த்தமாக அருளிச் செய்தார்‌.
இத் திருநாமம்‌ பகவான்‌ பரம பதத்தில்‌ பெரிய பிராட்டியாருடன்‌ எழுந்தருளி யிருப்பதைக்‌ குறிக்கிறது என்பர் .
,“ வானுடை மாதவா ” என்று பெரியாழ்வாரும்‌, –
மா மாயன்‌ மாதவன்‌ வைகுந்தன்‌ ” என்றும்‌,
மன்னிய மாதவனோடு வைகுந்தம்‌ புக்கிருப்பாரே ” என்றும்‌ ஆண்டாளும்‌, :
கேசவன்‌ நாரணன்‌ மாதவன்‌ கோவிந்தன்‌ வைகுந்தன்‌” என்றும்‌,
“ வடிவுடை மாதவன்‌ வைகுந்தம்‌ ” என்றும்‌ நம்மாழ்வாரும்‌ அருளிச் செய்தனர்‌.
பெரிய பிராட்டியார்‌ எல்லா தசைகளிலும்‌ எம்பெருமானை விட்டுப் பிரியாமலிருப்பவராகையாலே.
எம்‌ பெருமானையும்‌ இப் பிராட்டியை யிட்டு நிரூபிக்க வேண்டு மென்று இத் திருநாமம்‌ உணர்த்துகிறது.

“ ஹ்ரீஸ்ச தே’ லக்ஷ்மீஸ் ச பத்ந் யெள ” என்று வேதமும்‌ பரம புருஷனைப்‌ பிராட்டியை யிட்டு நிரூபித்தது.
“ஸர்வேஷாமேவ லோகாநாம்‌ பிதா மாதா ச மாதவ: | க,ச்ச,த்‌,வமேநம்‌ நாரணம்‌ மாரண்யம்‌ புருஷர்ஷபா : |”
பருஷ ஸ்ரேஷ்டர்களே! எல்லா வுலகுக்கும்‌ லக்ஷ்மீநாதனே தாயாகவும்‌. தந்தையாகவும்‌ விளங்குகிறான்‌; (
ஆகையால்‌) இந்த மாதவனை சரணமடையுங்கள்‌.] என்று
புருஷகார பூதகையான பிராட்டிபுடன்‌ கூடிய நாராயணனே நமக்கு உபாயமாகவும்‌, ஸ்வாமியாகவும்‌ ஆகிறான்‌ என்று பாரதத்தில்‌ பேசப் பட்டது.

“ கடிவார்‌ தீய வினைகள்‌ கொடியாருமள வைக்கண்‌
கொடியா அடுபுள்‌ உயர்த்த வடிவார்‌ மாதவனாரே ” என்று
ஆழ்வாரும்‌ மாதவனே உபாயமாகிறானென்‌று உணர்த்தினார்‌.
“ மாதவன்‌ பூதங்கள்‌ ” என்றும்‌.
`” மாதவனோடு வைகுந்தம்‌ புக்கருப்பாரே ” என்றும்‌
மாதவனே ஸர்வ ஸேஷியாகவும்‌. மோக்ஷ ப்ராப்யனாகவும்‌ ஆகிறானென்று அருளிச்செய்தார்‌கள்‌.
ஸர்வேஸ்வரன்‌ ஜகத் காரணமாம் போ தும்‌. பிராட்டிக்கு ப்ரேரகத்வ ருபமான அந்வயம்‌ உண்டென்பதை
ஆளவந்தார்‌, ஆழ்வான்‌. பட்டர்‌ முதலானோர்‌ தம்‌ ஸ்தோத்ரங்களில்‌ அருளிச்‌ செய்தனர்‌.
பெரியவாச்சான்பிள்ளையும்‌, அவருடைய திருக்‌ குமாரரான நாயனாராச்சான் பிள்ளையும்‌ அருளிச் செய்தது:
ச்லோஹ வியாக்கியானங்களிலும்‌ இவ்விஷயம்‌ விவரிக்கப்‌ பட்ட து
எம்பெருமான்‌ சேதனர்களுடைய ஹ்ருதய கமலத்தில்‌ பிராட்டியுடன்‌ கூடியவனாகவே எழுந்தருளியிருக்றொனென்‌பது
“ஸர்வ பூ,தஹ்ருத,ப்ஜஸ்த; “என்று ப்ராஹ்ம புராணத்திலும்‌,
“மார்வ மென்பதோர்‌ கோயிலமைத்து மாதவனென்‌னும்‌ தெய்வத்தை நாட்டி ” என்று பெரியாழ்வாராலும்‌
பேசப்‌ பட்ட ச, வ்யூஹ விபவார்ச்சாவதாரங்களிலும்‌ இவளுடன்‌ கூடியவனாகவே எம்பெருமான்‌
விளங்குகிறானென்பது ஸகல ப்ரமாண ஸித்தம்‌.

(மாதவன்‌) ” என்று
புருஷஹோத்தமனை அடைவதற்கு ஸாதனமான பர வித்யை சொல்லப் படுவதாகவும்‌
அந்த வித்யைக்கு ப்ரவர்த்தகனாகையால்‌ இவன்‌ மாதவ னெனப்‌ படுகரொனென்‌ றும்‌ கொள்ளலாம்‌.
“மா வித்யா ச ஹரே: ப்ரோக்தா தஸ்யா ஈமோ யதோ பவாந |
தஸ்மாந் மாதவ நாமாஸி த,வ: ஸ்வாமீதி மாப்‌,தி,த: | “` ‘
என்று ஹரியை ப்ரதிபாதிக்கும்‌ வித்யை சொல்லப்‌ படுகிறது.
அதற்கு ஸ்வாமியாயிருப்பதால்‌ நீர்‌ மாதவ னென்று சொல்லப்படுகதிறீர்‌.
* தவன்‌ ‘ என்றும்‌ ஸ்வாமியென்‌ னும்‌ பொருளையுடையது. -என்று இவ் வர்த்தம்‌ ஹரி வம்ஸத்தில்‌ ஆதரிக்கப் பட்டது.

“மளநாத்‌ த்‌யாகாச் ச யோகாச்ச வித்‌,தி, பாரத மாதவம்‌ ”’
பரதகுலத்‌துதித்தவனே! மெளநத்தினாலும்‌. தியானத்தி னலும்‌. யோகத்தினாலும்‌ மாதவனென்று அறிவாயாக. |
என்று வியாஸர்‌ சொல்லியபடியும்‌ மாதவநாமத்திற்குப்‌ பொருள்‌, கொள்ளலாம்‌.
“மது,வித்வா 5வபே த்‌,யத்வாத்‌,வா”
மது வித்யையினால்‌ அறியப்படுமவனகையாலே மாதவ னெனப்படுகிறான்‌ -என்றும்‌ சங்கரர்‌ பொருளுரைத்தார்‌. “
மது,குலே ஜாதத்வாந்‌ மாத,வ: ”
மது குலத்தில்‌ பிறந்தவ னாகையாலே மாதவனாகிறான்‌ ] என்றும்‌ பொருள்கொண்டனர்‌.
“மா லக்ஷமீ: தீ, ஸரஸ்வதீ தே அவதீதி மாத,வ:”
என்று லக்ஷ்மியும்‌. “தீ; ‘ என்று ஸரஸ்வதியும்‌ சொல்லப்‌ படுகின்‌றனர்‌.
அவர்களை ரக்ஷிக்கிறானாகையால்‌ மாதவனா கிறான்‌-என்றும்‌ சங்கரர்‌ பொருள்‌ கொண்டார்‌.
இப்படிப்‌ பல பொருள்களை உடையதாயிருந்த போதிலும்‌, எல்லா ஆழ்வார்களாலும்‌ .ஆதரிக்கப்பட்டதான
லக்ஷ்மீநாதன்‌ என்‌னும்‌ பொருளே இவ்விடத்திற்குப்‌ பொருளாகக் கடவது.

—————-

இப்படி
அச்யுதனாகவும்‌,
கோவிந்தனாகவும்‌,
கேசவனாகவும்‌,
நாராயணனென்‌னும்‌ அஸாதாரணமான திருநாமத்தை உடையவனாகவும்‌,
பிராட்டியுடன்‌ கூடியவனாகவும்‌
எழுந்‌தருளியிருக்கிறவன்‌ ஸர்வேஸ்வரன்‌ என்று இது வரையில்‌ கூறப்பட்டது.

—————

இப்படிப்பட்ட பெருமைகளை யுடையவனாக இவன்‌ எழுந்தருளியிருக்கிறான்‌ என்‌னுமிடத்துக்கு
ப்ரமாண மென்ன? என்ற ப்ரஸ்னம்‌ பிறக்க,
வேத வாக்கியங்களே இவ் விஷயத்தில்‌ ப்ரமாணம்‌ என்று சொல்லுறது
கோவிந்தன்‌ என்னும்‌ திருநாமம்‌,
கோ சப்,தத்தினால்‌ வேத வாக்கியங்‌களைச்‌ சொல்லுகிறதாகையால்‌
வேதத்தால்‌ ப்ரதிபாதிக்கப்‌ படுமவன்‌ என்று கோவிந்த நாமத்திற்குப்‌ டொருள் ஏற்படுகிறது.
இவன்‌ அடியவர்களை நழுவவிடாத அச்யுத என்னுமதுக்கு ப்ரமாணம்‌
* மமாங்வதம்‌ மபிவமச்யுதம்‌ நாரா யணம்‌ ” என்னும்‌ நாராயணா நுவாகம்‌.
த்ரிவித,பரிச்சேத , மற்றவனாகவும்‌, அளவற்ற ரூப குண விபங்களையுடையவனாகவுமுள்ள
அநந்தன்‌ என்பதற்கு
ˆ” ஸத்யம்‌ ஜ்ஞாநம் அநந்‌தம்‌ ப்‌,ரஹ்ம”
“யதே,கமவ்யக்தமநந்தரூபம்‌” –
அநந்தமவ்யயம்‌ கவிம்‌ ஸமுத்‌,ரேந்தம்‌”
முதலான தைத்திர்ய உப நிஷத்‌ வாக்யங்களும்‌.
‘*அநந்தணங்சாத்மா விஸ்வ ரூபோ ஹ்யகர்த்தா” என்னும்‌
வேதாமவதர வாக்கியமும்‌ ப்ரமாணமாகின்‌றன.
இப் பரம புருஷனே பல அவதாரங்களெடுதக்து. தாழ்ந்தோ ருடன்‌ ஒரு நீராகக்‌ கலந்து பரிமாறும்‌ கோவிந்தனாகிறான்‌ என்பதற்கு ப்ரமாணம்‌ —
அஜாயமாநோ பஹுதா விஜா- யதே| தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌’”
பிறப்பில்லாத புருஷோத்தமன்‌ பலபடியாகப்‌ பிறக்கிறான்‌.
புத்திமான்‌களில்‌ சிறந்தவர்களே அவனுடைய பிறப்பின்‌ ரஹஸ்யத்தை அறிதிறார்கள்‌.
“யுவா ஸாுவாஸா: பரிவீத ஆகரத்‌ | ஸ உ ஸ்ரேயோாந்‌ பவதி ஜாயமாந ! தம்‌ தீ,ராஸ: கவய உந்நயந்தி |”
யெளவனத்தை உடையவனாகவும்‌, அழகிய பீதாம்பரத்தை தரித்தவனாகவும்‌. (நித்ய ஸூரிகளால்‌) கூறப்‌ பட்டவனாகவும்‌ அப்பரமபுருஷன்‌ தோன்‌றினான்‌.
அவன்‌ பிறந்த பின்பே மேன்மையை அடைகிறான்‌. அவனை ஞானிகளான கவிகள்‌ அறிகிறார்கள்‌.

“பிதா புத்ரேண பித்ருமாக்‌ யோநியோநெள ஈந வேத,விந்மநுதே தம்‌ ப்‌ருஹந்தம்‌ ‘
ஸர்வலோக பிதாவான புருஷோத்தமன்‌, ஒவ்வொரு அவதாரத்திலும்‌ தன்னால்‌ பிறப்பிக்கப்பட்ட
ஒருவனைப்‌ பிதாவாகக் கொண்டு பிறக்கிறான்‌.
வேதத்தை அறியாதவன்‌ அவனுடைய பெருமையை அறியமாட்டான்‌-முதலியவை.
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்மும்‌ உத்பாதகனாய்‌, புகழப்பட்ட கேசத்தை உடையவனாயுள்ள கேசவன்‌ இவனே என்பதை
“நாராயணாத்‌ ப்ரஹ்மா ஜாயதே | நாராயணாத்‌ ருத்‌;ரோ ஜாயதே?
நாராயணன் இடமிருந்து பிரமன்‌ பிறக்‌கிறான்‌. நாராயணனிடமிருந்து உருத்திரன்‌ உண்டாகிறான்‌.
‘ஹிரண்யகேஸ ரு:”
ஸுவர்ணம்‌’ போன்‌று அழகிய திருக் குழல்‌ கற்றைகளை உடையவன்‌] முகலிய வேதா வாக்கியங்கள்‌ உத் கோஷித்தன.
இவன்‌ நாராயண முகேந எழுந்தருளியிருக்கும்‌ இருப்பும்‌, =
`” விஸ்வம்‌ நாராயணம்‌ ” என்று தொடங்கி
“ நரராயண பரம் ப்‌,ரஹ்ம தத்வம்‌ நாராயண: பர: | நாராயண பரோ ஜ்யோதிர் ஆத்மா நாராயண: பர:।
யச்ச கிஞ்சிஜ் ஜக,த்‌ யஸ்மிந்‌ த்‌ருஸ்ய்தே ஸ்ரூயதே5பி வா। அந்தர்‌ பஹிஸ் ச தத்‌ சர்வம்‌ வ்யரப்ய நாராயண: ஸ்தி,த: ॥ ”
என்று நாராயண அனுவாகத்திலும்‌,
“ ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்‌ ” முதலிய வாக்கியங்களால்‌ மஹோபநிஷத்திலும்‌.
“ சாக்ஷாங்ச த்ரஷ்ட. வ்யஞ்ச நாராயண:।ஸ்ரோத்ரஞ்ச ஸ்மரோதவ்யஞ்ச நாராயண:” என்று தொடங்கி, —
ஸ்ருங்ச ப்ரதி,மமஸ் ச ஸர்வம்‌ ஈாராயண:”‘ என்று ஸுபாலோபனிஷத்திலும்‌.
“ஏஷ ஸர்வ பூதாந்த- ராத்மா…….. ஏகோ நாராயண: ” என்று அந்தர்யாமி ப்ரஹ்மணத்திலும்‌.
மற்றுமுள்ள நாராயண உபனிஷத்‌ முதலியவைகளிலும்‌ கோஷிக்கப்பட்டன.
இப்படிப்பட்ட பெருமையையுடைய இப்பெருமான்‌ பிராட்டியுடன்‌ கூடவே எழுந்தருளியிருக்கிறான்‌ என்பது, ^°
ஹ்ரீஸ் ச தே லக்ஷ்மீஸ் ச பத்ந்யெள ”
உனக்கு ஸ்ரீ பூமிதேவிகள்‌ பத்னிகள்‌.
“’ அஸ்யேமாநா ஜக,தோ விஷ்ணுபத்ந்யா ”
இப் பிராட்டி இந்த ஐகத்தக்கு ஈங்வரியாகவும்‌, விஷ்ணு வுக்குப்‌ பத்தினியாகவும்‌ இருக்கிறாள்‌.
“ஸ்ரத்‌,த,யா தேவோ தேவத்வம் அஸ் நுதே’”
ஸ்ரீ என்னும் சப்தத்தினால்‌ சொல்லப்படும்‌ பிராட்டியினா லேயே ஈஸ்வரன்‌ ஈஸ்வரத் தன்மையை அடைகிறான்‌.
“ஆநீதவாதம்‌ ஸ்வத,யா ததே,கம்‌?’
ஒன்றுமில்‌லாத ப்ரளய காலத்தில்‌ ஸ்வதா சப்தத்தினால்‌ சொல்லப்படும்‌ பிராட்டியுடன்‌ கூடிய பகவான்‌ ஒருவனே இருந்தான்
முதலிய ஸ்ருதி வாக்கியங்களில்‌ கோஷிக்கப்டட்டது.

அச்யுதா என்றும் .“அநந்தன்‌’ என்றும் புருஷோத்தமனுடைய பரத்வம்‌ பேசப்பட்டது.
“அப்படிப்பட்ட பெருமையை உடையவனை அதி நிஹீனரான நம்மால்‌ அணுக முடியுமோ என்று அடியவர்‌ அஞ்சாமைக்காக.
*இடக் கையும்‌ வலக் கையுமறியாத ஆயர்களோடும்‌. பகுத்தறிவற்ற பசுக்களோடும்‌ ஒரு நீராகக் கலந்து
பரிமாறுமவன்‌’ என்னும்‌ பொருளை யுடைய கோவிந்த நாமம்‌ சொல்லப் படுகிறது.
“அச்சுதா! அமரரேறே!’ என்று அச்யுக அநந்த சப்தார்த்தங்களை அநுஸந்தித்த தொண்டரடிப் பொடியாழ்வாரும்‌.
“ஆயர்தம்‌ கொழுந்கதே!” என்று அடுத்தபடியாக கோவிந்த சப்தார்த்‌ தத்தை அருளிச்செய்தாரன்றோ.
(கோவிந்தன்‌ )
“ காவ: விந்த,தி ” [ பசுக்களை அடைகிறான்‌ ] என்ற வ்யுத்பத்தி யின்படியே,
நித்ய ஸூரிகளின்‌ நாதனாயிருக்குமிருப்பில்‌ பொருந்தாமல்‌ அறிவற்றவைகளான பசுக்களை
அடைவதற்‌காக கிருஷ்ணனாய்‌ வந்து திருவவதரித்தவன்‌.,

“அஹம்‌ கிலேந்த்‌,ரோ தேவாநாம்‌ த்வம்‌ க,வாமிந்த்தாம்‌ க,த:।
கோவிந்த, இதி லோகாஸ்த்வாம்‌ ஸ்தோஷ்யந்தி பு,வி ஸமாமவதம்‌ ||.”
நான்‌ தேவர்களுக்கெல்லாம்‌ இந்திரனாயிருக்கிறேன்‌.
நீ பசுக்களுக்கு இர்திரனாயிராக்கும்‌ தன்மையைத்‌ தானாகவே அடைந்தாய்‌.
ஆகையால்‌ இவ்வுலகில்‌ கோவிந்தன்‌ என்று எல்லாரும்‌ எப்போதும்‌ உன்னைத்‌ துதிப்பார்கள்‌–
என்று ஹரி வம்‌சத்தில்‌ கோவர்த்தன தாரியான
ஸ்ரீ கிருஷ்ணனைக் குறித்து தேவேந்திரன்‌ துதித்தானன்றோ.
கோ விந்தேத்தி என்றபடியே பசுக்களுக்குப்‌ புகலிடம்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
“சட்டித் தயிரும்‌ தடாவினில்‌ வெண்ணெயும் உண்‌ பட்டிக்கன்றே!” என்றும்‌
“பட்டி மேய்ந்தோர்‌ காரேறு பல. தேவற்கோர்‌ கீழ்க்கன்றாய்‌ ” என்றும்‌
அருளிச் செய்யும்படி. யன்‌றோ இவன்‌ பசுக்களுடன்‌ புரையறக் கலக்கும்படி.
இந்த மஹா குணத்தை நினைத்து ஆழ்வார்கள்‌ அடிக்கடி வாய் வெருவுவர்கள்‌.
“கோவிந்தன்‌ குணம் பாடி ஆவி காத்திருப்பேனே” என்று ஆண்டாள்‌ இக் குணத்தையே தனக்கு ப்ராண பாரமாகக்‌ கொண்டிருந்தாள்‌.
“கற்றினம்‌ மேய்க்கிலும்‌ மேய்க்கப் பெற்றான்‌ காடுவாழ்‌ சாதியும்‌ ஆகப்பெற்றான்‌
பற்றி யுரலிடை ஆப்புமுண்டான்‌ பாவிகாள்‌! உங்களுக்கேச்சுக்கொலோ”-என்றும்‌,
“இக் கொம்மை முலைகள்‌ இடர்‌தீரக்‌ கோவிந்தற்கு ஓர்குற்றேவல்‌ இம்மைப்பிறவி செய்யாதே
இனிப்‌ போய்ச்செய்யும்‌ தவம் தான் என்‌” என்‌ றும்‌,
“கொங்கைத்‌ தலமிவை நோக்கிக்‌ காணீர்‌ கோவிந்தனுக்கல்லால்‌ வாயில்‌ போகா” என்றும்‌.
சொல்லும்படி யன்‌றோ
கோதைப் பிராட்டிக்குக்‌ கோவிந்கனிடமுள்ள காதல்‌.
“கூட்டிலிருந்‌ து கிளியெப்போ தும்‌ கோவிந்தா! கோவிந்தா! என்றழைக்கும்‌ ” என்று
இவளுடைய கிளியும்‌ இத் திரு நாமத்தை யன்றோ வாய் புலத்துவது.
நம்மாழ்வாரும்‌ “கோவிந்தன்‌ குடக்கூத்தன்‌ கோவலன்‌ என்றென்றே குனித்து” என்று
தமக்கு இத் திரு நாமத்திலுள்ள ஈடுபாட்டை வெளிப்‌ படுத்தினார்‌.

““கோவிந்தே,தி யதரக்ரந்த,த்‌ க்ருஷ்ணா மாம்‌ தூ,ரவாஸிநம்‌ |
ருணம்‌ ப்ரவ்ருத்‌,த,மிவ மே ஹ்ருத,யாந்நாபஸர்ப்பதி ॥’*
வெகு தூரத்திலிருந்த என்னை“கோவிந்தா”என்‌ று த்ரெளடதி கூப்பிட்டதானது விருத்தியடைந்த
கடன் போல்‌ என்‌ மநஸ்ஸிலிருந்து அகலுகிறதில்லை.
என்று. அச்யுதாதி நாமங்‌ களையும்‌ அவள்‌ உச்சரித்தருந்த போதிலும்‌
பகவானுடைய திருவுள்ளத்தைப்‌ புண்படுத்திற்று இத் திருநாமமே யன்றே.
இத் திருநாமத்தன்‌ பெருமையைப்‌ பன்னியுரைக்குங்கால்‌ பாரதமாம்‌.
(கோவிந்தன்‌ )
கோ ஸப்‌தம்‌ பூமியையும்‌ குறிக்கு மாகையால்‌
*கோம்‌ விந்த,தி ? என்று பூமியை ஜலத்தில்‌ நின்றும்‌ குத்தியெடுத்த வராஹ மூர்த்தியைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
‘மஹா வராஹோ கோவிந்த,: “என்று ஸ்ரீஸஹஸ்ரநாமத்திலும்‌ இவ்வர்த்தம்‌ ஆதரிக்கப்பட்டது .
“நஷ்டாம்‌ வை தரணீம்‌ பூர்வமவிந்த;ம்‌ வை கு,ஹாசு,தாம்‌ |
கேவிந்த, இதி தேநாஹம்‌ தே,வைர்‌ வாக்‌,பிரபிஷடுத: | ‘
பாதாளத்தில்‌ ஓளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை முன்‌ னொரு காலத்தில்‌ நான்‌ தேடி யடைந்கதேனாகையால்‌.
தேவர்‌களால்‌ கோவிந்தன் என்‌று ஸ்தோத்ரம்‌ செய்யப் பெற்றேன்‌.
என்று பாரதத்தில்‌ மோஷ தர்மத்தில்‌ பகவானாலேயே சொல்லப்பட்டது.
இத்தால்‌ ஆபத்துக் காலத்தில்‌. ரக்ஷ்ய வஸ்தவின்‌ அபேஷையை எதிர்பாராமலே மேல் விழுந்து.
தன்‌ பெருமைக்குப் பொருந்தாத உருவத்தையும்‌ கொண்டு ரக்ஷிக்கும்‌ பெருங்குணம்‌ பேசப்படுகிறது.
“உத்‌,த்‌,ருதா5ஸி வராஹேண க்ருஷ்ணேந ஸாதபளஹுநா `பூமிப்பிராட்டியே! நூறு கைகளை உடையவனும்‌, அநந்த ஸ்வரூபிய்மான வராஹ மூர்ச்தியால்‌
எடுக்கப்பட்டவளாய்‌ இருக்கிறாய்‌. என்று பண்டை மறையிலும்‌,
“ஈனச்‌ சொல்லாயினுமாக எறிதிரை வையம்‌ முற்றும்‌
ஏனத்துருவாய்‌ இடந்தபிரான்‌ இருங்கற்பகம்‌ சேர்‌
வானத்தவர்க்கும்‌ அல்லா தவர்க்கும்‌ மற்றெல்லாயவர்க்கும்‌
ஞானப்பிரானையல்லால்‌ இல்லை நான் கண்ட நல்லதுவே’
“நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்பக்‌
கோலவராகமொன்றாய்‌ நிலம்‌ கோட்டிடைக்‌ கொண்ட எந்தாய்‌!” —என்‌றும்‌,
° பாசிதூர்த்துக்‌ கிடந்த பார்மகட்குப்‌ பண்டொருநாள்‌
மாசுடம்பில்‌ நீர்வாரா மானமிலாப்‌ பன்‌ றியாம்‌
தேசுடைய தேவர்‌ திருவரங்கச்‌ செல்வனார்‌
பேசியிருப்பனகள்‌ பேர்க்கவும்‌ பேராவே” _ என்‌றும்‌
தமிழ்‌ மறைகளிலும்‌ இப்பெருமானின்‌ பெருமைகள்‌ பேசுப்‌ பட்டனவன்‌றோ.

“’கெளரேவைஷா தத;ா வாணீ தாம்‌ ச யத்‌, விந்த,தே ப,வார்‌ |
கேோவிந்தஸ்து ததோ தே,வ முகிபி,: கத்‌,யதே ப,வாந்‌
கோ சப்தமான து :’கெள:’ என்று சொல்லப்படுகிறது.
வார்த்தை களையெல்லாம்‌ நீரே அடைவதால்‌ நீர்‌ கோவிந்தனென்று முனிவர்களால்‌ சொல்லப்படுகிறீர்‌.
என்கிற நிர்வசன த்தின்‌ படியே ஸர்வமாப்‌,த,வாச்யன்‌ என்றும்‌ இத் திருநாமத்துக்குப்‌ பொருள் கொள்ளலாம்‌.
“சொல்லினால்‌ தொடர்ச்சி நீ சொலப்‌ படும்‌ பொருளும்‌ நீ” என்று திருமழிசையாழ்வார்‌ இல்வர்த்‌தத்தை அறுஸந்தித்தார்‌.
(கோவிந்தன்‌ )
கோசப்தம்‌ வேத வாக்கியங்களைக்‌ குறிப்பதாகக் கொண்டு வேதத்தினால்‌ சொல்‌லப்படுமவன்‌ என்றும்‌
பொருள்கொள்ளலாம்‌.
அச்சம்‌… ஏற்றுவான்‌ அச்சுதன்‌ அநந்த கீர்ந்தி ஆதியந்தமில்லவன்‌
நச்சராவணைக்‌ கிடந்த நாதன்‌ ” என்று
அச்சுதன்‌. அந்தன்‌ என்னும்‌ திருநாமங்களுக்கு அர்த்தம்‌ செய்த திருமழிசை யாழ்வார்‌ -‘
வேத கதனே ”’ என்று கோவிந்த சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்‌.
(கோவிந்தன்‌ )
எந்த தேவதையைக்‌ குறித்து ஸ்தோத்ரம்‌ செய்தாலும்‌ அவை இவனையே அடைவதால்‌
கோவிந்தன்‌ எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
“ நும்‌இன்‌ கவிகொண்டு நும்‌நும்‌ இட்டாதெய்வமேத்தினால்‌
செம்மின்‌ சுடர்முடி என்‌ திருமாலுக்குச்‌ சேருமே என்றார்‌ நம்மாழ்வார்‌.
(கோவிந்தன்‌)
கோ சப்தம்‌ ஒளியைக் குறிப்பதால்‌ பரஞ்சோதியாய் இருப்பவன் என்‌றும்‌ பொருள்‌ கொள்ள லாம்‌.
நம்மாழ்வாரும்‌ “பரஞ்சோதி நீ பரமாய்‌ நின்னிகழ்ந்து பின் மற்றோர்‌
பரஞ்சோதியின்‌ மையின்‌ படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம்‌ படைத்த எம்‌
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே ” என்று
இப் பொருளை அதுஸந்தித் தருளினார்‌.
“நாராயண பரோ ஜ்யோதி:” என்றும்‌.
** பரம்‌ ஜ்யோதி ருப ஸம்பத்‌,ய ” என்றும்‌.
ˆ” ஆதித்ய வர்ணம்‌ ” என்றும்‌,
“ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரஜ தாரகம்‌ நேமா வித்யுதோ பந்தி குதோ 5யமக்‌,நி: |
தமேவ பாந்தமநுபாதி ஸர்வம்‌ தஸ்ய பாஸா ஸர்வமித,ம்‌ ॥”
அப் பரம புருஷனுக்கு முன்‌ ஸூர்யனும்‌ பிரகாசிப்பதில்லை;
சந்திரனும்‌, நக்ஷத்திரங்களும்‌. இந்த மின்‌னல்களும்‌ பிரகாசிக்‌கிறதில்லை.
அக்னியைப்‌ பற்றிச்‌ சொல்லவும்‌ வேண்டுமோ?
ஒளிவிடும்‌ அவனை அநுஸந்தித்தே எல்லாம்‌ ஓளிவிடுகின்‌ றன.
அவனுடைய ஒளியாலேயே இவையெல்லாம்‌ பிரகாசிக்கின்‌றன.என்றும்‌ வேதங்களிலும்‌
“ ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய ப,வேத்‌, யுகவது,த்தி,தா |
யதி, ஸத்‌,ருமீ ஸா ஸ்யாத்‌, பாஸஸ்‌ தஸ்ய மஹாத்மந:।॥”
ஆகாயத்தில்‌, ஒரே ஸமயத்தில்‌ ஆயிரம்‌ ஸூர்யர்களுடைய ஒளி தோன்றிற்றாகில்‌. அவ்வொளி
அந்த மஹாபுருஷனுடைய ஒளிக்கு ஒப்பாகலாம்‌. என்று கீதையிலும்‌ ஒதப்‌ பட்ட தன்றோ.

அந்த கோவிந்தநாமதீதால்‌ ஸெளலப்யகு,ணப்ரகாபகமான கிருஷ்ணாவதாரம்‌ அநுபவிக்கப்பட்டது. இங்கு வேத, ப்ரதிபா தீயத்வமாெெ பரத்வம்‌ பேசப்படுகிறது. ஆகையால்‌ புநருக்தியில்லை,

—————

ஆக, கேசவன்‌ முதலான நான்கு திருநாமங்களால்‌ பரத்வம்‌ பேசப்பட்டது.
இனி விஷ்ணு என்னும்‌ திரு நாமத்தினால்‌ நான்காவது வியூஹமான அநிருத்த மூர்த்தி சொல்லப்படுகிறார்‌.
இவ் விடத்தில்‌ “வ்யூஹமாவ து:-ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹ!ரார்த்தஹமாகவும்‌.
ஸம்ஸாரி ஸம்ரக்ஷணார்த்த, மாகவும்‌,
உபாஸக அனுக்ரஹ மர்த்தமாகவும்‌.
ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்‌த ருபேண நிற்கும்‌ நிலை.
பரத்வத்தில்‌ ஜ்ஞாநாதிகளாறும்‌ பூர்ணமாயிருக்கும்‌.
வ்யூஹத்தில்‌-முற்று இரட்டை குணங்கள் ப்ரகடமாயிருக்கும்‌,
அதில்‌ ஸங்கர்ஷணர்‌ ஜ்ஞாந பலங்கள்‌ இரண்டோடும்‌ கூடி
ஜீவ தத்வத்கை அதிஷ்டி,த்து,
அத்தை ப்ரக்ருதியில்‌ நின்றும்‌ பிரிக்கும் அவஸ்தையையும் பஜித்து,
ஸரஸ்த்ர ப்ரவர்த்தன பண்ணக் கடவராயிருப்பர்‌.
பிரத்யும்நர்‌ ஐஸ்வர்ய வீர்யங்களோடும் கூடி
மநஸ் தத்வத்தை அதிஷ்டி,த்து.
தர்ம உபதேசத்தையும்‌.
மநுஷ்யாதி தொடக்கமான வர்க்க, ஸ்ருஷ்டியையும்‌ பண்ணக் கடவராயிருப்பர்‌.
அநிருத்தர்‌; சக்தி தேஜஸ்ஸுக்கள்‌ இரண்டோடும் கூடி
ரஷணத்துக்கும்‌,
தத்வ ஜ்ஞாந ப்ரதானத்துக்கும்‌
கால ஸ்ருஷ்டிக்கும்‌, கடவராயிருப்பர்‌. ” என்று
பிள்ளைலோகா சார்யர்‌ தத்வ த்ரய த்தில்‌ அருளிச் செய்துள்ள ஸ்ரீஸூக்திகள்‌ அநு ஸந்திக்கத்தக்கவை,
விஷ்ணு சப்தத்தால்‌ சொல்லப்படுகிறவர்‌ அநிருத்தரே என்று நிர்ணயிப்பது எப்படியெனில்‌:
“த்ரிபாதூர்த்‌,வ உதைதத்‌ புருஷ: பாதேர ஸ்யேஹாப,வாத்‌ புந;!
ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸா முகா அபி, |”
பரமபதத்திலுள்ள பரமபுருஷன்‌ மூன்‌று உருவங்களை உடையவராய் ஸங்கல்பித்தார்‌.
பரமபத நாதனுடைய ஒரு அவதாரமான அநிருத்தர்‌ மறுபடியும்‌ இங்கு அவதரித்தார்‌.
அதன் பிறகு ஸர்வ விதமான சேதனர்களையும்‌ ரஷிப்பதற்காக இவ் வுலகையெல்லாம்‌ (
அவதாரம்‌ செய்தவன்‌ மூலம்‌) வியாபித்தார்‌.] என்று புருஷ ஸூக்தத்தில்‌ அநிருத்தரைக் குறித்து விஷ்ணுசப்தார்த்தம்‌ அநுஸந்திக்கப்பட்டது.
மேலும்‌, அநிருத்தரே ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு . இடையில்‌ பத்ம நாபராகிய விஷ்ணுவாக அவதரித்தார்‌ என்று சாஸ்த்ரங்கள்‌ சொல்லுகையாலும்‌.
கார்ய வாசி சப்தம்‌ காரணமாகச் சொல்லுமாகையாலும்‌, “பத்மநாபர்‌’ என்று ப்ரதமாவதாரமான விஷஸ்ணுவைத்‌ தனியே இங்கு எடுக்கையாலும்‌
இங்கு விஷ்ணுசப்தம்‌ அநிருத்த நாராயணனைச்‌ சொல்லக்கடவது.
மற்ற வியூஹங்களுமிருக்க இங்கு அநிருத்தரை எடுத்த துக்குக்‌ கருத்தென்னெனில்‌:
“பத்மநாபாதி,கா: ஸர்வே வைப,வீயாஸ்‌ ததைவ ச |
ஷட்த்ரிம்மமத்ஸங்க்‌,யாஸங்க்‌,யா தா: ப்ராத,ந்யே கணேங்வர |!
ஷட்த்ரிம்ப்த்‌,பே,த,பி,ந்காஸ்தே பத்‌மநாபாதி,கா: ஸுரா: |
ஸமுத்பந்நா தீ,பாத்‌, 8,பா இவேங்வரா: |”
விஷ்வக்ஸேநரே! பத்மநாபன்‌ முதலிய முக்கியமான விபவா வதாரங்கள்‌ முப்பத்தாறாகும்‌.
இப்படி பத்மநாபன்‌ முதலிய முப்பத்தாறு விபவமூர்த்திகளும்‌. விளக்கிலிருந்து உண்டான
விளக்குகள்போல்‌ அநிருத்த மூர்த்தியிடமிருந்து அவதரித்‌ தார்கள்‌. என்று விஷ்வக்ஸேந ஸம்‌ ஹிதையில்‌ சொல்லிய படியே,
பின்‌ சொல்லப் போகும்‌ பத்மநாபன்‌ , திரிவிக்கிரமன்‌ , வாமனன்‌. தாமோதரன்‌ என்னும்‌ மூர்த்திகளுக்கு மூல மூர்த்தி
அநிருத்தரேயாகையால்‌ அவரை இங்கு எடுக்கிறது. நிற்க;
விஷ்ணு பதத்தின்‌ பொருளை இனி விவரிட்மோம்‌.
“ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ” என்று அவதாரத்தினால்‌ வியாபித்திருப்பதை ,
விஷ்ணு சப்தார்த்தமாகப்‌ புருஷ ஸூக்தத்‌தில்‌ பேசப்பட்டது,
“வ்யாப்ய ஸர்வாநிமாக்‌ லோகாந்‌ ஸ்தி,த: ஸர்வத்ர கேமுவ:
ததமச விஷ்ணுநாமாஸி விமோர்‌ தளாதோ: ப்ரவேமுநாத்‌ |!”
கேசவனாகிற தேவரீர்‌ இந்த எல்லா உலகங்களையும்‌ எங்கும்‌ வியாபித்து நிற்கிறீர்‌;
ஆகையால்‌ விஷ்ணுவென்னும்‌ திரு நாமத்தை யுடையவராய்‌ விளங்குகிறீர்‌ ‘
விம’ என்னும்‌ தாது ப்ரவேசித்தல்‌ என்னும்‌ பொருளை யுடைத்தாயிருப்பதால்‌. என்று
ஸ்ரீவராஹபுராணத்தில்‌ சொல்லப்பட்டபடியே எங்‌கும்‌ தன்‌ ஸ்வரூபத்தால்‌ வியாபித்து நிற்பவன்‌ விஷ்ணு வென்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
“யஸ்மாத்‌, விஷ்டமித,ம்‌ விஸ்வம்‌ தஸ்ய முக்த்யா மஹாத்மர: |
தஸ்மாத்‌ ஸ ப்ரோச்யதே விஷ்ணுர்‌ விமேர்‌ த,௱தோ: ப்ரவேமாநாத்‌ ||”
மஹாத்மாவான அப் பரம புருஷனுடைய சக்தியினால்‌ இவ்‌ வுலகமெல்லாம்‌ வியாபிக்கப்பட்டிருப்பதால்‌
அவன்‌ விஷ்ணு வெனப்படுகீறான்‌;
விம ‘ என்னும்‌ தாது வியாபித்தலைச்‌ சொல்லுவதால்‌–என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்‌, ஆதித்ய புராணத்திலும்‌ சொல்லியபடியே
சக்தியினால்‌ எல்லா வஸ்துக்களையும்‌ வியாபித்திருப்பவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
“வ்யாப்ய மே ரோத,ஸீ பார்த்த, காந்திஏப்யதி,கா ஸ்தி,தா |
ஸம்ஸாரவேமுநாத்‌ பார்த்த,! விஷ்ணுரித்யபி,ஸம்ஜ்ஞித: ॥
பார்த்தனே! என்னுடைய மிகவதிகமான ஒளியானது ஆகாயம்‌ முழுவதும்‌ வியாபித்து நிற்கிறது.
இப்படி இவ்‌ வுலகம்‌ முழுவதும்‌ வியாபித்து நிற்பதால்‌ நான்‌ விஷ்ணு வென்று சொல்லப்படுகிறேன்‌.–என்று மஹாபாரதத்தில்‌ சொல்லியபடியே ஸர்வ வ்யாபினியான விக்‌ரஹ காந்தியை உடையவன்‌ என்றும்‌ விண்ணுசப்தத்துக்குப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.

* யதள ஸர்வக,தோ விஷ்ணு: ”
விஷ்ணு வானவர்‌ எப்படி ஸர்வ வியாபியாயிருக்கிறோரோ….] என்று ஸ்ரீவிஷ்ணு புராணத்தில்‌ சொல்லியபடியே
விக்ரஹத்தாலே எங்கும்‌ வியாபித்து நிற்பவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
இவ் வர்‌த்தங்களெல்லாம்‌
” ‘ விஷ்ணுர்‌ விக்ரமணாத்‌ தேவ: “‘ என்று பாரதம்‌ உத்யோக பர்வத்தில்‌ உணர்த்தப்‌பட்டது.

இப்படி இவன்‌ எல்லாவற்றையும்‌ வியாபித்து விளங்குவதால்‌ எல்லாம்‌ இவனே என்று சொல்லலாம்படி யிருக்கறானென்‌பதை
“ஜ்யோதீம்ஷி விஷ்ணுர்‌ பு,வநாநி விஷ்ணுர்‌ வநாநி விஷ்ணுர்‌ கி,ரயோ தி,மமமச |
ஈத்‌,ய: ஸமுத்‌,ராமங்ச ஸ ஏவ ஸர்வம்‌ யத,ஸ்தி யந்காஸ்தி விப்ரவர்ய ॥”’
விப்ரஸ்ரேஷ்டரே! ஜ்யோதிஸ்ஸுக்களும்‌ விஸ்ணுவே;
புவனங்களும்‌ விஷ்ணுவே;
வனங்களும்‌ விஷ்ணுவே:
மலைகளும்‌. திக்குகளும்‌, நதிகளும்‌. ஸழுத்ரங்களும்‌, “ இருக்கிறது என்று
எப்போதும்‌ சொல்லப்படும்‌ ஜீவ தத்வமும்‌.
இல்லை என்னும்‌ வ்யவஹாரத்துக்கு விஷயமான அசிச்தத்வமும்‌ ஆகிய எல்லாம்‌
அந்த பகவான்‌ விஷ்ணுவே. என்று ஸ்ரீ விஷ்ணு புராணம்‌ உத்கோஷித்தது.
“ ஆஸ்ய ஜாநந்தோ நாம சித்‌,விவக்தந மஹஸ்தே விஷ்ணோ ஸுமதிம்‌ பஜாமறஹே ”
விஷ்ணுவே! உன்னுடைய திருநாமத்தை அறியும்‌ நாங்கள்‌. உன்னுடையது போன்‌ற தேஜஸ்ஸையும்‌
தெளிவான ஞானத்தையும்‌ அடைகிறோம்‌. என்று ருக்வேதத்திலும்
தத்‌, விஷ்ணோ: பரமம்‌ பத, என்றும்‌.
`” விஷ்ணோர்‌ யத்‌’பரமம்‌ பத,ம்‌” என்றும்‌,
“ மம ம்நோ விஷ்ணுருருக்ரம: ” என்றும்‌,
பரமே மத்‌,வஉத்ஸ.:”’
வீஷ்ணுவினுடைய மேலான திருவடியிலிருந்து அம்ருத தரைகள்‌ பொழிகின்‌றன.– என்றும்‌,
மற்றும்‌ பல பலவேத வாக்கியங்களிலும் இத் திரு நாமம்‌ மிகவும்‌ ஆதரிக்கப்பட்டது .
“தஸ்மாத்‌, விராட் ,ஜாயத”
அந்த அநிருத்‌த நாராயணனிட யிருந்து பிரமன்‌ உண்டானான்‌. ] என்றும்
ஐகந் நாதோ ப்‌,ரஹ்மாணமஸ்ருஜத்‌ புக: ।”’
நான்காவது மூர்த்தியான பிரமனை ஸ்ருஷ்டித்தார்‌–என்றும்
ஸம்ஹிதையிலும்‌ சொல்லப்பட்டடடியே
பிரமனைப்‌ பிறப்பித்தவரான அநிருத்த மூர்த்தி விஷ்ணு சப்தத்தால்‌ சொல்லப்பட்டார்‌,

————-

அடுத்த படியாக, அப் பிரமனைப்‌ பிறப்பிக்குமளவே யன்று.
அவனுக்குத்‌ துன்பம்‌ வந்த போது அதைப் போக்‌ கடிப்பவனும்‌ இவனே என்று உணர்த்துகிறது
மதுஸூதன்‌” என்னும்‌ திருநாமம்‌.

கேசவன்‌ என்று தொடங்கி கோவிந்தன் என்பது வரை பரத்வம்‌ பேசப்பட்டது.
விஷ்ணுவென்று வியூஹம்‌ உணர்த்தப்பட்டது.
மதுஸூதனன்‌ என்னும்‌ இத் திருநாமம்‌ தொடங்கி விபவாவதாரம்‌ விவரிக்கப்படுகிறது. .

*’ யோ வித,த,தி பூர்வம்‌ யோ வை வேதராம்ங்ச ப்ரஹிணோதி தஸ்மை ˆ”
எவனொருவன்‌ பிரமனை முதலில்‌ பிறப்பித்து, அவனுக்கு வேதங்களை உபதேசிக்‌கிறானோ என்று
வேதத்தில்‌ சொல்லியபடியே ஸர்வேஸ்வரன்‌ வேதங்களை ப்ரஹ்மாவுக்கு உபதேசித்தருளினான்‌.
நான்கு சிசு ரூபமாயிருந்த அந்த நான்கு வேதங்களையும்‌, மது.கைடபன்‌ என்னும்‌ இரு அஸூரர்கள்‌
பிரமனிட மிருந்து பறித்துக் கொண்டு போய்‌, ரஸா தலத்தில்‌ ஒளித்து வைத்தனர்‌.
வேதங்களை இழந்த அப் பிரமனும்‌, “ கண்ணிழந்‌ தேன்‌. தனமிழந்தேன்‌ ‘ என்‌று கேசவனை நோக்கிக்‌ கதறினான்‌.
இக் கூக்குரலைக் கேட்ட கருணா வள்ளலான அப்பெருமானும்‌ ஹயக்ரீவாவதாரம்‌ செய்து
மது கைடபர்களை ஸம்ஹரித்துப்‌ பிரமனுக்கு வேதங்களை மீட்டுக்கொடுத்தான்‌
இப்படி ப்ரதம ஜனான (முதலில்‌ பிறந்தவனான ) பிரமனுக்குச்‌ செய்த உபகாரமாகையாலே
இது அவதாரங்களுள்‌ முதலில்‌ அநு ஸந்திக்கப்படுகிறது.
( மதுஸூதனன்‌ )
மதுவென்னும்‌ அஸாரனைக்‌ கொன்‌ றவன்‌.
“கர்ணமிங்ரோத்‌,ப,வம்‌ சாபி , மஹாஸுரம்‌ |
ப்‌ரஹ்மணோபசிதிம்‌ குர்வங்‌ ஜக, புருஷோத்தம: |
தஸ்ய தாத இத்யாஹு: |”
பகவானுடைய காதிலிருந்து உண்டான மதுவென்னும்‌ பெரிய அஸுரனை பிரமனுக்கு நன்மை செய்வதற்காகப்‌ புருஷோத்தமன்‌ கொன்றான்‌.
குழந்தாய்‌! அவனைக்‌ கொன்றதாலேயே., தேவர்கள்‌. அஸூரர்கள்‌, மனிதர்கள்‌. ரிஷிகள்‌ ஆகிய யாவரும்‌ ஐநார்‌தனனை மதுஸதனனென்று சொல்லு கிறார்கள்‌.] என்று மஹாபாரதத்தில்‌ இந்த நாமத்தின்‌ பொருள்‌ உரைக்கப்பட்டது .
“த,த்‌ருமாதேரவிந்த,ஸ்தழம்‌ ப்‌,ரஹ்மாணமமிதப்ரப,ம்‌ |
ஸ்ருஐஜந்தம்‌ ப்ரத,மம்‌ வேத,ாம்ம்சதுரங்சாருவிக்ரமெள |
ததோ விக்‌,ரஹிணஸ்தாம்ஸ்‌ த த்ருஷ்ட்வா தாவஸுரோத்தமெள |
வேதஞ்ஜக்‌,ருஹதூ ராஜம்‌ ப்‌,ரஹ்மண: பங்யதஸ்‌ ததா ॥
அத, தெள தளநவங்ரேஷ்டெள க்‌,ருஹீத்வா தாந்‌ ஸ௩ராதநார்‌ |
ரஸாம்‌ விவிமதுஸ்‌ தூர்ணமுத,பூர்ணே மஹோத,தெ,ள ||
ததோ ஹ்ருதேஷு வேதே.ஷஃ ப்‌,ரஹ்மா கங்மலமாவியத்‌ |
ததோ வச௩மீமா௩ம்‌ ப்ராஹ வேதைர்‌ விநாக்ருத: ॥
ப்‌,ரஹ்மா:-வேத;ா மே பரமம்‌ சக்ஷார்‌ வேதா மே பரமம்‌ தம்‌।
வேதா மே பரமம்‌ வேத; மே ப்‌,ரஹ்ம சோத்தமம்‌ |
மம வேதரா ஹ்ருதா: ஸர்வே தளாவாப்‌,யாம்‌ ப,லாதி,த: |
அந்த,காரா இமே லோகா ஜாதா வேதைள்‌ விவர்ஜிதா: ||
வேதே, ஹ்ருதே5ஹம்‌ கம்‌ குர்யாம்‌ லோகாந்‌ வை ஸ்ரஷ்டுமுத்‌,யத: |
அஹோ பத மஹத்‌, து, க்சும்‌ வேத;ாமமாஜம்‌ மம |
ப்ராப்தம்‌ துநோதி ஹ்ருதயம்‌ தீவ்ரரேர காமயஸ்த்வயம்‌ |
கோ ஹி மோகார்ணவே மக்‌,நம்‌ மாமிஹாத்‌,ய ஸமுத்‌.த,ரேத்‌।
இத்யேவம்‌ ப,௱ாவுமாணஸ்ய ப்‌,ரஹ்மணோ ந்ருபஸத்தம |
ஹரிஸ்தோத்ரார்த்தமுத்‌;,பூ,தா புத்‌,திர்‌ புத்திமதாம்‌ வர॥
ததோ ஐகெள பரம்‌ ஜப்யம்‌ ப்ராஞ்ஜலி: ப்ரக்‌,ரஹம்‌ ப்ரபு,:॥| ஏதஸ்மிந்நந்தரே ராஜ்‌ தேவேர ஹயமபிரோத,ர:। ஐக்‌,ராஹ வேதளநகலொந்‌ ரஸாதலக,தாந்‌ ஹரி: ॥
ப்ராதாச்ச ப்ரஹ்மணே ராஜர்‌ தத: ஸ்வாம்‌ ப்ரக்ருதிம்‌ யயெள ॥
ததஸ்தயோர்‌ வதே,நா மரு வேதாபஹரணேந ச |
போ காபநயநம்‌ சக்ரே ப்‌, ஹ்மண: புருஷோத்தம: || ””
மது கைடடன்‌ என்னும்‌ அஸுரர்கள்‌ அளவற்ற ஒளியை யுடையவனும்‌. தாமரைமலரில்‌ வீற்றிருப்பவனும்‌,
அழகிய உருவையுடைய நான்கு வேதங்களையும்‌ முதன்முதலில்‌ ஸ்ருஷ்டிப்பவனுமான பிரமனைப்‌ பார்த்தனர்‌
சரீரத்துடன்‌ கூடிய அவ் வேதங்களைக் கண்ட அந்த அஸூரர்கள்‌ பிரமன்‌ கண்டு கொண்டிருக்கும் போதே அவைகளை எடுத்துக்‌ கொண்டனர்‌.
பிறகு அவ் வஸூர ஸ்ரேஷ்டர்கள்‌ பழமை யான அவ்வேதங்களை எடுத்துக் கொண்டு.
நீர் நிறைந்த கடலினுள்ளிருக்கும்‌ ரஸாதலத்தினுள்‌ விரைவில்‌ நுழைந்‌தனர்‌.
இப்படி வேதங்கள்‌ கவரப்பட்டபின்‌ பிரமனைத்‌ துக்கம்‌ பீடித்தது.
அதன் பின்‌ வேதங்களை இழந்த நான்முகன்‌ ஈஸ்வரனைக்‌ குறித்துப்‌ பின்வருமாறு உரைத்தனன்‌ -—
“வேதங்களே எனக்கு மேலான கண்‌; வேதங்களே எனக்கு மேலான தனம்‌. வேதங்களே எனக்கு மேலான ஓளி.
எனக்குப்‌ பெருமையைக்‌ கொடுப்பவைகளில்‌ வேதங்களே சிறந்தவை.
அஸூரர்களுடைய பலத்தினால்‌ என்னுடைய வேதங்களெல்லாம்‌ இங்கிருந்து பறிக்கப்பட்டன.
வேத மற்றவையான இவ்வுலகங்கள்‌ இருள்‌ சூழ்ந்தவையாயின.
லோகங்களை ஸ்ருஷ்டிக்க முற்பட்ட யான்‌ வேதமில்லாமல்‌ என்ன செய்வேன்‌ ?
வேதங்கள்‌ நசித்ததினால்‌ எனக்குப்‌ பெருந்துன்பம்‌ ` வந்தடைந்துவிட்டது..
தீவிர சோகமான இந்த வியாதி : என்‌ மனத்தைத்‌ துன்புறுத்துகிறது.
இத்‌ துன்‌பக்கடலில்‌ முழுகும்‌ என்னை யார்தான்‌ | கரையேற்ற முடியும்‌ ?”
என்று இம்மாதிரியாக ப்ரஹ்மா பேசிக்கொண்டி ருக்கும்போது
‘ ஹரியை ஸ்தோத்ரம்‌ செய்யவேண்டுமென்‌ னும்‌ புத்தி அவருக்கு உண்டாயிற்று.
அதன் பிறகு ப நின்று, மிகச்‌ சிறந்த இந்த ஸ்தோத்ரத்தைப்‌ பாடினார்‌………
இதற்கிடையில்‌ பகவான்‌ ஹரி குதிரை போன்ற முகத்தையுடைய ஹயக்ரீவராய்‌ அவதரித்து, .
ரஸாதலத்திலிருந்த எல்லா வேதங்களை யும்‌ எடுத்துக்கொணர்ந்து பிரமனிடம்‌ கொடுத்தருளினார்‌.
அதன்பின்‌ பிரமன்‌ தன்‌ இயற்கை நிலையை அடைந்தனன்‌.
இப்படி அந்த அஸூரர்களைக்‌ கொன்றும்‌. வேதங்களை மீட்டுக்கொணர்ந்தும்‌
ப்ரஹ்மாவினுடைய சோகத்தைப்‌ புருஷோத்தமன்‌ போக்கடித்தான்‌.] என்று
மஹாபாரதத்‌ தில்‌ இந்த விருத்தாந்தம்‌ விவரிக்கப்பட்ட து.

“ மத,மிவ ம்து,கைடபூஸ்ய ரூப்யதரர்ப்பம்‌ |
ஸ்புடமிவ பரிபூ,ய. களர்வகுள்வோ: இமுபமிமீமஹி ரங்சு,குஞ்ஜரோர்வோ: || ”
மது `கைடபர்களுடைய கொழுப்பைக்‌ குலைத்தது போல்‌, வாழைத் தண்டு, கதையின்‌ வெளிப்புறமான கரப,ப்ரதேசம்‌;
யானைத்‌ துதிக்கை ஆகிய இவைகளின்‌ அழகுச் செருக்கையும்‌ அடக்கி, –
அந்த கர்வத்தினால்‌ பருத்து விளங்குகிற ஸ்ரீரங்க நாதனுடைய திருத்துடைகளுக்கு எப்பொருளை
உபமான மாகச்‌ சொல்லுவோம்‌] என்று பட்டர்‌ ஸ்ரீரங்கராஜஸ்த வத்திலும்‌. ‘
“யிஷ்டதுஷ்டமதுகைடப,8டெள ”
மது கைட்பர்களாகிய துஷ்டப் புழுக்களைப்‌ பிசைந்து கொன்றவை களான இத் திருத்துடைகள்‌] என்று
ஆழ்வான்‌ ஸூந்தர பாஹுஸ்தவத்திலும்‌ அருளிச்செய்தபடியே
மது கைடபர்‌ கள்‌ பகவானால்‌ தொடையினால்‌ இறுக்கிக்‌ கொல்லப்பட்டனர்‌ என்பது பிரஸித்தம்‌.

” காய்ந்திருளை மாற்றிக்‌ கதிரிலகு மாமணிகள்‌
ஏய்ந்த பணக்குதிர்மேல்‌ வெவ்வுயிர்ப்ப-—
வாய்ந்த மதுகைடபரும்‌ வயிறுருகி மாண்டார்‌
அதுகேடவர்க்திறுதியாங்கு ” [மூன்‌ திருவ 68] என்று
எம்பெருமானுடைய . திவ்ய வாஸத்தாலேயே மதுகைடபர்கள்‌ மாண்டனர்‌ என்று
பேயாழ்வார்‌ அருளிச்செய்தார்‌,

அன்‌ றிக்கே.
எம்பெருமான்‌. ஆயாஸம்‌ சிறிதுமின்‌ றி அவர்‌களை முடித்தபடியைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
இந்த மது கைடபர்கள்‌ பிரமனுடைய கர்மாநுபவத்தின்‌ பொருட்டு எம்பெருமானாலேயே ஸ்ருஷ்டிக்கப்பட்டனர்‌.
ரஜஸ்‌ தமோ குணங்களே வடிவெடுத்தவர்கள்‌ இவர்களென்‌ று பாஞ்சராத்ர சாஸ்திரத்தில்‌ சொல்லப்பட்ட து.
பிறக்கும்‌ போதே எங்களை நீ கொல்லுவாயாக ” என்று யாரைக்‌ குறித்துத்‌ தாங்கள்‌ சொல்லுகிறார்களோ
அவர்களாலேயே சாவு நேர வேண்டுமென்ற வரத்தைப்‌ பெற்றனர்‌.
வேதங்‌ களுடன்‌ கூடிய ப்ரஹ்மாவைக் கண்டு வேதங்களைக்‌ கவர்ந்து ரஸாதலத்தில்‌ ஜநித்தனர்‌. .
பிரமனால்‌ ஸ்தோத்ரம்‌: செய்யப்‌ பட்ட பகவான்‌ ஹயக்ரீவாவதாரம்‌ செய்து ஓர்‌ இனிய இசையைப்‌ பாட. அவ்வொலியைக் கேட்ட அவ்வஸுரர்கள்‌
வேதத்தை வைத்து விட்டு ஒலி வரும்‌ வழியில்‌ சென்றனர்‌.
பகவான்‌ மற்றொரு வழியாகச் சென்‌று வேதங்களை மீட்டுப்‌ பிரமனிடம்‌ கொடுத்தருளினான்‌.
வேதங்களைக்‌ காணாத அவ்‌ வஸுரர்கள்‌ பாற்கடலில்‌ பையத் துயின்ற பரமனைக் கண்டு
அவனுடன்‌ நெடுங்காலம்‌ போர் செய்தனர்‌.
பல பல காலம்‌ போர் செய்தும்‌ சோர்வடையாத திருமாலைக் கண்டு மனமுவந்து.
“ நீ வேண்டும்‌ வரத்தைக்‌ கேள்‌” என்றார்கள்‌ அவ்‌ வஸுரர்கள்‌.
* உங்களை நான்‌ கொல்லவேணும்‌ ” என்னும்‌ வரத்தை மாயாவியான அம்மாதவன்‌ தன்னால் படைக்கப்‌ பட்‌.டவர்களான அவர்களிடம்‌ வேண்டினான்‌.
அவர்களும்‌ ௮தற்கு இசைந்தவளவில்‌, “ உங்களுக்கு வேண்டிய ஒரு வரத்தைக்‌ கொள்ளுங்கள்‌” என்‌ று பரம புருஷன்‌ உரைத்தான்‌,
* ஒருவரும்‌ சாகாத இடத்தில்‌ நாங்கள்‌ சாக வேண்டும்‌” என்று அவர்கள்‌ வரம்‌ வேண்டினார்கள்‌.
புருஷோத்தமனும்‌ திருத்‌ தொடைகளால்‌ அவர்களை இறுக்கிக்கொன்றான்‌ என்று
இம்‌ மாதிரியாக சாஸ்‌த்ரங்கள்‌ இவ்விருத்தாந்தை விவரிக்கின்‌ றன.
*மது,ஸூத,னன்‌’ என்னுமித் திருநாமத்தில்‌ மதுவைச்‌ சொன்‌ னது ,கைடபனுக்கும்‌ உபலக்ஷணம்‌.
* கைடபாரி ‘ என்றும்‌ எம்பெருமானுக்கு ஒரு திருநாமம்‌ வழங்கி வருகிறது.

இனி, மதுஸூதனன்‌ என்னுமித்திருநாமத்திற்குள்ள மற்றும்‌ சில பொருள்களை விவரிப்போம்‌.
(மதுஸுதனன்‌)
மது,” என்று “ பிப்பலம்‌ ஸ்வாது,” என்றபடியே இனிமையான போக்யப்‌ பொருள்களான அசேதன தத்வத்தையும்‌.
ஆநந்த,ஸ்வரூபியும்‌, பகவானுக்கு ஸ்ரீகெளஸ்துபம்போல்‌ இனியவனுமான சேதன தத்வத்தையும்‌ சொல்லுகிறது.
‘ஸூதனன்‌” என்னும்‌ பதம்‌ தன்‌ வசத்திற்கு அழைத்துச்‌ செல்பவன்‌ என்னும்‌ பொருளை உடையது.
ஆக, ஸர்வ தத்வங்களையும்‌ அழைத்துச்‌ செல்பவன்‌ மதுஸூதனன்‌ என்றதாயிற்று.
“ ஸர்வ தத்வநயநாச்சைவ மதுஹா மதுஸூதந: ”
எல்லாத்‌ தத்துவங்களையும்‌ அழைத்துச்‌ செல்வதாலும்‌ பகவான்‌ மதுஸூதனனாகிறான்‌.
என்று சாஸ்திரம்‌ இப்பொருளை ஆதரித்தது,
* மது, ஸூத,னன்‌ ‘ என்பது ஸகல தத்வங்களாகிற குதிரைகளைத்‌ தூண்டுபவன்‌ என்றும்‌ பொருள்படும்‌. “
மதுரிந்த்‌,ரியநாமா ஸ ததோ மதுநிஷூதந: ”’ [
மது,’ என்று இனியவைகளான இந்திரியங்கள்‌ சொல்லப்‌ படுகின்‌ றன.
அவைகளை அடக்குமவனாகையாலே இப் பெரு மான்‌ மதுஸூதனனாகிறான்‌.என்றும்‌
மதுஸூதந சப்தார்த்‌ தம்‌ விவரிக்கப்பட்ட து.

ஆக, இப்பொருள்களால்‌ விரோதி நிரஸன ஸீலன்‌ மதுஸூதனன்‌ என்றதாயிற்று.
“ கொடு யேனிடர்‌ முற்றவும்‌ மாய்த்தவம்மான்‌ மதுஸூதவம்மான்‌”என்று இவ்வர்‌ததத்தை ஆழ்வார்‌ அருளிச்செய்தார்‌.
இந்த விரோதி, நிரஸனலத்வமாகிற பெருங்குணத்துக்குத் தோற்று
“ மது ஸூதனென்னம்மான்‌ தானும்‌ யானுமெல்லாம்‌ தன்னுள்ளே கலந்தொழிந்தோம்‌
தேனும்‌ பாலும்‌ நெய்யும்‌ கன்னலும்‌ அமுதுமொத்தே ‘* என்றும்‌,
வள்ளலே ! மதுஸூதனா ! “” என்றும்‌.
“ மதுஸூதனை யன்றி மற்றிலேன்‌ ” என்றும்‌. °
வைத்த மா நிதியாம்‌ மதுஸூதனையே அலற்றி” என்றும்‌, நம்மாழ்வார்‌ தம்மை எழுதிக் கொடுத்தார்‌

————
மதுஸூதனன்‌ என்று. பிரமனுக்குச்‌ செய்த உபகாரத்‌தைப்‌ பேசிற்று,

அடுத்தபடியாக, திரிவிக்கிரமன்‌ என்று
இவ் வுலகுக்கெல்லாம்‌ அபேஷா நிரபேக்ஷமாகத்‌ தன்னைக்‌ கொடுத்தபடியைப்‌ பேசுகிறது.
மஹாபலி என்பானோர்‌ அஸுரன்‌ தன்னுடைய பராக்ரமத்தாலே இந்திரனை யுள்‌ளிட்ட மூவுலகையும்‌ ஜயித்துத்‌ தன்‌ வசப்படுத்திக்கொண்‌டான்‌.
இந்திரன்‌ முதலிய தேவர்கள்‌ எம்பெருமானிடம்‌ சென்று முறையிட. அப்பெருமானும்‌
காஸ்யபருக்கும்‌ அதிதிக்‌கும்‌ புத்திரனான வாமனனாய்ப்‌ பிறந்து மஹாபலி யாகம்‌ செய்கையில்‌
அவனிடம்‌ மூவடி மண்ணை யாசித்துப் பெற்று, திரிவிக்ரமனாக வளர்ந்து,
ஈரடியால்‌ உலகங்களையெல்லாம்‌ அளந்து, மூன்றாவதடியை மாவலியின்‌ தலையில்‌ வைத்து,
பாதாள லோகத்தில்‌ அவனுக்கும்‌ பெருமையை உண்டாக்கி வைத்தான்‌ என்னும்‌ விருத்தாந்தம்‌
ஸர்வ லோக ப்ரஸித்தமானது.
இப்படி, ப்ரயோஜநாந்தர பரனான இந்திரனோடு, அவனுக்கு விரோதியான மஹாபலியோடு வாசியற-ஸர்வரையும்‌ ரக்ஷித்‌த அவதாரமாகையாலும்‌, ,
உறங்குகிற ப்ரஜையைத்‌ தடவிக் கொண்டு கிடக்கும்‌ தாயைப்போலே,
உலகங்களையெல்லா।ம்‌ தன்‌ திருவடிகளாலே அபேக்ஷா நிரபேஷமாகத்‌ தடவிக் கொடுத்த பெருமையை உடையதாகையா லும்‌.
பரத்வமும்‌, ஸெளலப்‌யமும்‌ ஒருங்கே ஒளிவிடுகின்ற மேன்மையை உடைத்தாயிீருக்கையா லும்‌,
அடியார்க்காகத்‌ தன்னை அழிய மாறியும்‌ அளிக்கும்‌ அருங்‌ குணத்தை அறிவிப்பதாகையாலும்‌.
வேதங்களோடு. இதிஹாஸ புராணங்களோடு. ஆழ்வார்களோடு வாசி யற எல்லாரும்‌ இவ்வவதாரத்திலே ஈடுபடாநிற்பர்கள்‌. .
“ இதம்‌ விஷ்ணுர்‌ விசக்ரமே ”
“ த்ரீணி பத; விசக்ரமே ” –
“ விசக்ரமே ப்ருதி,வீமேஷ ஏதாம்‌ கத்ராய விஷ்ணு: ” .
மூவடி மண்ணைப்பெறுவதற்காக இந்த உலகையெல்லாம்‌ அளந்தான் விஷ்ணு]:
“த்ரிர்‌ தே,வ: ப்ருதி,வீமிதி ப்ரவிஷ்ணு: ”’ “
ம்‌ நோ விஷ்ணுருருக்ரம:
பெரிய அடிவைப்புகளை யுடைய விஷ்ணு வானவன் நமக்கு மங்களத்தைத் தருவானாக,
“ விஷ்ணுக்ரா ந்தே. வஸுந்த,ரே ”
விஷ்ணுவினால்‌ அளக்கப்‌ பட்ட பூ தேவீயே] என்று பல பல விடங்களில்‌ பண்டை மறை வாய்‌ வெருவிற்று.
“கண்டாயே நெஞ்சே! கருமங்கள்‌ வாய்க்கின்றோர்‌
எண்தானுமின்‌றியே வந்தியலுமாறு
உண்டான்‌ உலகேழும்‌ ஓர்‌ மூவடி கொண்டானைக்‌
கண்டு கொண்டனை நீயுமே ” என்றும்‌.
“அடியை மூன்‌றை யிரந்தவாறும்‌ அங்கே நின்றாழ்கடலும்‌
மண்ணும் விண்ணும்‌ முடிய ஈரடியால்‌ முடித்துக் கொண்ட முக்கியமும்‌
நொடியுமாறவை கேட்குந்தோறுமென்‌ நெஞ்சம்‌ நின்றனக்கே கரைந்துகும்‌
கொடிய வல்வினையேனுன்னை என்றுகொல்‌ கூடுவதே ?”” என்றும்‌.
“பாயோரடி வைத்த தன்‌ கீழ்ப்‌ பரவை நிலமெல்லாம்‌
தாயோரடியால்‌ எல்லா வுலகும்‌ தடவந்த மாயோன்‌
உன்னைக்‌ காண்பான்‌ வருந்தி எனை நாளும்‌ .
தீயோடுடன்‌ சேர்‌ மெழுகாயுலகில்‌ திரிவேனோ ?” என்றும்‌,
“ உலகமெல்லாம்‌ தாவிய வம்மானை எங்கினித்‌ தலைப் பெய்‌வனே ? ” என்றும்‌,
`” தாவி வையம்‌ கொண்ட எந்தாய்‌! ” என்றும்‌,
“பாமரு மூவுலகுமளந்த பற்ப பாதாவோ !’”’ என்றும்‌
நம்மாழ்வார்‌ பிராட.டிமார்‌ தொட்டாலும்‌ சிவக்கும்‌ திருவடி களைக் கொண்டு காடுமோடெல்லாமளந்த
இந் நீர்மையிலே உருகா நிற்பர்‌,
என்னிது மாயம் — வண்ணமே கொண்டளவாய்‌ என்ற மன்னு நமுசியை வானிற் சுழற்றிய மின்னுமுடியனே !” என்றும்‌,
^” ஒருப்படுத்‌ திடுமின்‌ இவளை உலகளந்தானிடைக்கே ”’ என்‌றும்‌, பெரியாழ்‌வாரும்‌,
“ ஓங்கி உலகளந்த உத்தமன்‌ ” என்றும்‌.
“ தேச முன்னளந்தவன்‌ திரிவிக்கரமன்‌ திருக்கைகளால்‌ என்னைத்‌ தீண்டும்‌ வண்ணம்‌ ” என்றும்‌
பொல்லாக்‌ குறளுருவாய்ப்‌ பொற்கையில்‌ நீரேற்று
எல்லாவுலகும்‌ அளந்‌து கொண்ட எம்‌ பெருமான்‌ ‘* என்றும்‌, “
மாணியுருவாயுலகளந்த மாயனைக்‌ காணில்‌ தலைமறியும்‌ ‘” என்றும்‌ ஆழ்வார்‌ திருமகளாரும்‌
இவ்வவதாரத்திலே ஈடுபட்டனர்‌.
“ஏக: ப்ராஸீஸரத்‌ பாதமேக: ப்ராச்க்ஷளந்முத |
அபரோப்யதரந்மூர்த்‌ கா கோதிகஸ்தேஷு க,ண்யதாம்‌ ॥ ””
ஒருவன்‌ திருவடியை நீட்டினான்‌;
(பிரமனாகிய) மற்றொரு வன்‌ மிகவுகந்து அத்திருவடியை விளக்கினான்‌.
(சிவனாகிய) வேறு ஓருவனும்‌ களிப்புடன்‌ அந்நீரைத்‌ தலையிலே தரித்தான்‌.
இவர்களில்‌ எவன்‌ பெரியவன்‌ என்பதை நினைத்‌துப் பாருங்‌கள்‌- என்கிறபடியே
பரம் பொருள்‌ யாரென்பதை நிலை நாட்டித் தருவதன்றோ இவ்வவதாரம்‌.
( திரிவிக்ரமன்‌ )
த்ரயோ விக்ரமாஸ்‌ த்ரிஷா லோகேஷ க்ராந்தா: யஸ்ய ஸ:”’
[மூவுலகங்களையும்‌ அளந்த மூன்று அடிவைப்புகளை உடைய வன்‌ | என்றும்‌. –
த்ரயோ லோகா: க்ராந்தா யே ?’
மூன்று உலகங்களும்‌ எவனால்‌ கடக்கப்பட்டனவோ ௮வன்‌ ] என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. –
த்ரீணி பத; விசக்ரமே ‘* என்றது வேதம்‌.
“ த்ரிரித்யேவம்‌ த்ரயேோ லோகா: கீர்த்திதா முநிஸத்தமை: |
க்ரமஸே தாம்ஸ்த்ரித, ஸர்வாந்‌ த்ரிக்ரமோ$ஸி ஜநார்த்தந।”
(*மூவுலகங்களும்‌ முனிவர்களால்‌ சொல்லப்‌ படுகின்‌ றன. ஓ ஜநார்த்தனனே! அவையெல்லாவற்றையும்‌ மூன்‌ றடிகளால்‌ தாவியபடியால்‌ நீ திரிவிக்கரமன் ஆனாய் ]
என்று ஹரி வம்‌ஸத்தில்‌ சொல்லப்பட்ட து.
“பாஜதேறைகேர விக்ராந்தா ஸர்வேயம்‌ பூர்‌ நரேங்வர।
அந்தரிக்ஷம்‌ த்‌,விதீயேக த்‌,யெளஸ்‌ த்ருத்யேந ஸத்தம |
”’இவ்வுலகம்‌ ஒரு அடி வைப்பினால்‌ அளக்கப்பட்டது.
இரண்‌ டாவது அடிவைப்பினால்‌ அந்தரிஷமும்‌
மூன்றாவதடியால்‌ தேவலோகங்களும்‌ அளக்கப்பட்டன.] என்று
நாரஸிம்ஹ புராணத்திலும்‌ சொல்லப்பட்ட து.
முதலடியினால்‌ ழுலகங்க ளெல்லாவற்றையும்‌.
இரண்டாவதடியினால்‌ மேலுலகங்க ளெல்லாவற்றையும்‌,
மூன்றாவதடியினால்‌ மஹாபலியின்‌ ஸிரஸ்ஸையும்‌ அளந்தவன்‌ என்றும்‌ கொள்ளலாம்‌.
“த்ரிரித்யேவம்‌ த்ரயோ வேதா: கீர்த்திதா முநிஸத்தமை: |
க்ரமஸே தாம்ஸ்தத,ா ஸர்வாரந்‌ த்ரிவிக்ரம இதி ஸ்ம்ருத: ॥”’
த்ரி’ என்னும்‌ பதத்தினால்‌ மூன்‌று வேதங்களும்‌ முனிவர்‌ களால்‌ சொல்லப்படுகின்‌றன.
அவை யெல்லாவற்றையும்‌ வியாபித்திருப்பதால்‌ திரிவிக்கரமனெனப்படுகிறாய்‌. | என்று
சொல்லப்பட்டபடியும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.

வேதங்களால்‌ மிகவும்‌ ஆதரிக்கப்பட்டதாகையாலும்‌,
பரத்வத்தையும்‌. ஸெளலப்யத்தையும்‌ ஒருங்கே காட்டுவ தாகையாலும்‌.
எல்லார்‌ தலையிலும்‌ ஓக்கத்‌ திருவடியை வைத்த பெருங்குணத்தைப்‌ பேசுவதாகையாலும்‌
திரிவிக்ரமாவதாரம்‌ முதலில்‌ அதுபவிக்கப்பட்டது.

————-

அடுத்த படியாக இத் திரிவிக்ரம மூர்த்திக்கும்‌ காரண பூதமான வாமன மூர்த்தியின்‌ பெருமை பேசப்படுகிறது,
“த்ரஷ்ட்ரூக்‌ ஸ்வகாந்த்யா வாமாநி ஸுகரி நயதி’
காண்ப வர்களைத்‌ தன்‌ ஓளியால்‌ ஸுகமுள்ளவர்களாகச்‌ செய்கிறான்‌ என்று வாமன சப்தத்துக்குப்‌ பொருள்‌. “
ஸர்வாணி வாமாநி நயதி “ˆ [எல்லாரையும்‌ ஸுகமுடையவர்களாகச்‌ செய்கிறான்‌.] என்‌ று
சாந்தோக்ய உபனிஷத்‌ இவ்வர்த்தத்தை ஆதரித்தது,
“ கொள்ள மாளா இன்பவெள்ளம்‌ கோதில தந்திடும்‌ என்‌ வள்ளலேயோ!
வையங்கெண்ட வாமனாவோ!” என்று வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனும்‌ வாமன சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்‌.
“ வாமஸ்‌ ஸுந்தர மூர்த்யோ:” என்கிற படியே
மிகுந்த வடிவழகையுடையவன்‌ என்‌ றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
இவ்விரண்டு பொருள்களாலும்‌ அவன்‌ அலௌகிக ஆகர்ஜஹகமான வடிவழகையுடையவன்‌ என்ற தாயிற்று.
கடலைக்‌ குளப்படியிலே அடக்கினாப்போலே, உலகளந்த திரிவிக்ரம மூர்‌த்தியின்‌ ஸெளந்தர்யமெல்லாம்‌
இச் சிறிய உருவில்‌ வெள்ளமிடுமாகையாலே இப்பெருமானின்‌ அழகு பேச வொண்ணாததாயிருக்கும்‌.
அவாங்மநஸ கோசரமான இவ்வழகிலே வேதமும்‌. புராணங்களும்‌. ஆழ்வார்‌களும்‌ ஆழங்காற்படுவர்கள்‌.
“ ஸர்வாணி வாமாமி நயதி ”’ என்றது வேதம்‌,
ஃஸ வாமநேர தி,வ்யமாரீரத்‌ ருக்‌ ”
திவ்யமான சரீரத்தையுடையவன்‌ வாமனன்‌.என்று புராணம்‌ பேசிற்று.
“மரயக் கூத்தா! வாமனா! வினையேன்‌ கண்ணா! கண்‌ கை கால்‌
தூய செய்ய மலர்களா சோதிச்செவ்வாய்‌ முகிழதா
சாயல்‌ சாமத்திருமேனி தண்பாசடையா தாமரைநீள்‌
வாசத்தடம்போல்‌ வருவானே! ஒருநாள்‌ காண வாராயே?’ என்றும்‌,
“ஒருமாணிக் குறளாகி நிமிர்ந்த அக் கரு மாணிக்‌கம்‌” என்றும்‌,
°” வாமனன்‌ என்‌ மரதக வண்ணன்‌ தாமரைக்‌ கண்ணினன்‌ காமனைப் பயந்தாய்‌ !” என்றும்‌
“ மாண் குறள்‌ கோல வடிவு காட்டி ” என்றும்‌.
“ குரை கழல்கள்‌ நீட்டி மண்கொண்ட கோல வாமனா” என்றும்‌ நம்மாழ்வாரும்‌,
“சத்திரமேந்தித்‌ தனியொரு மாணியாய்‌ உத்தரவேதியில்‌ நின்ற ஒருவனை
கத்திரியர் காணக்‌ காணி முற்றும்‌ கொண்ட பத்திராகாரன்‌ ”’ என்றும்‌,
“காமர்‌ தாதை கருதலர்‌ சிங்கம்‌ காணவினிய கருங்குழல்‌ குட்டன்‌ வாமனன்‌
“ கொண்ட கோலக்‌ குறளுரு ” என்று: ஆண்டாளும்‌
வேதம்‌ புகழ்ந்த இவ்வடிவழகிலே மயங்கினார்கள்‌.’
(வாமனன்‌ )
இப்படி வடிவழகாலே பிறரை உகப்பிப்பதோடன்‌றியில்‌ குணங்களாலும்‌ பிறரை ஆநந்திப்பிப்பவன்‌ என்றும்‌ பொருள்‌. கொள்ளலாம்‌.
“மிக்க பெரும்புகழ்‌ மாவலி வேள்வியில்‌ தக்கதிதன்றென்று தானம்‌ விலக்கிய சுக்கிரன்‌ கண்ணைத்‌ துரும்பால்‌ செறிய சக்கரக்கையனே!” _என்றும்‌,
“ மதியினால்‌ குறுள்மாணாய்‌ உலரகு அளந்த கள்வற்கு” என்றும்‌,
“வாட்டமில்‌ புகழ்‌ வாமனனை” என்‌றும்‌,
** வன்மாவைய மளந்க எம்‌ வாமனா!” என்றும்‌,
“ஞாலங்கொள்வான்‌ குறளாகிய்‌ வஞ்சனே!” என்றும்‌.
“கொள்வன்‌ நான்‌ மாவலி மூவடி தா என்ற கள்வனே!” ‘என்றும்‌
அந்ய ப்ரயோஜனர்களுக்காகவும்‌ தன்னை அழியமாறி அளிக்கும்‌ அருங்குணத்தில்‌ ஆழ்வார்கள்‌ ஆழங்காற்ப்ட்டார்கள்‌
(வாமனன்‌)
“ வடிவழகைச்சொல்லுகிறதென்‌ னுதல்‌;
நன்மை களைத்‌ தருமவனென்னுதல்‌ ” என்று நம்பிள்ளை ஈட்டில்‌ (2-27-6) அருளிச்செய்தபடியே,
வாம சப்தத்தாலே ஸுக,ப்ரத, மான்‌:
வஸ்துக்களைச் சொல்லி வாமனன்‌ ‘ என்று அவைகளைத்‌ தருமவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.

“மருவித்‌ தொழும்‌ ‘மனமே தந்தாய் வல்லை காண என் வாமனனே என்று இவ் வர் த்தத்தை அருளிச்செய்தார்‌.
(வாமனன்‌)
ஆதியத்யத்தை இழந்த இந்திரனுக்கு அதை அளித்தும்‌.
மஹாபலிக்குப்‌ பாதாளத்திலே நிலையான ஸாம்‌ ராஜ்யத்தைக்‌ கொடுத்தும்‌,
உலகிலுள்ள: எல்லாச் சேதனர்‌கள்‌ தலையிலும்‌ தன்‌ திருவடிகளை வைத்தும்‌, –
இப்படி எல்லாருக்கும்‌ ஸுகத்தைத்‌ தந்தவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
* வாமனன்‌ ‘ என்னும்‌ திருநாமத்துக்குச்‌ சிறிய உருவை உடையவன்‌ என்றும்‌ பொருளுண்டு என்பது பிரஸித்தம்‌.
இதையே எல்லா ஆழ்வார்களும்‌ குறளுரு என்று அருளிச்செய்தனர்‌.
(வாமனன்‌) .
‘ மத்யே வாமந மாஸீநம்‌ விங்வே தே,வா உபாஸதே ‘
ஸர்வ சேதனர்களின்‌ ஹ்ருதயத்திலும்‌ வீற்றிருக்கும்‌ வாமனனை ( எல்லா தேவர்‌ களும்‌ உபாஸிக்கிறார்கள்‌.]
என்று வேதத்தில்‌ சொல்லிய படியே ஹ்ருதய கமலத்தில்‌ அங்குஷ்ட மாத்ரனாயெழுந்தருளி யிருக்கும்‌
பெருமான்‌ வாமன சப்தத்தால்‌ சொல்லப்படுவ தாகவும்‌ கொள்ளலாம்‌.
“வாமனன்‌ நிற்பது மேவியிருப்ப என்று ஆழ்வார்‌ இவ் வர்த்தத்தை என்‌ நெஞ்சகம்‌ என்று உணர்த்தினார்‌.

—————-

ஆக: இப்படி வாமனாவதாரத்தைச்‌ சொன்னபின்‌ இப்படி ப்ரஹ்மசாரியாய்‌ அவதரித்த அவதாரத்திலும்‌
பிராட்டியை விட்டுப்‌ பிரியாமல்‌ மார்பிலே தரித்திருப்பவன்‌ என்று உரைக்கிறது
* ஸ்ரீ தரன் . என்னும்‌ திருநாமம்‌.
“ வாமனனே மாதவா ˆ” என்று ஆழ்வாரும்‌ இவ்வர்த்தத்தை அருளிச்செய்கார்‌.
“க்ருஷ்ணாஜிநேக ஸம்வ்ருண்வம்‌ வதூ,ம்‌ வக்ஷ:ஸ்த,லாலயாம்‌”
திருமார்பிலே கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும்‌ பிராட்டியை க்ருஷ்ணாஜினத்தினால்‌ மறைத்‌துக்‌ கொண்டு வந்தான்‌
என்கிற படியே. மஹாபலியின்‌ யாக சாலைக்கு எழுந்தருளிய போதும்‌. திருமார்பிலிருந்த பிராட்டியை
மான்‌ தோலினால்‌ மறைத்துக்கொண்டு வந்தான்‌ வாமனன்‌ என்று ப்ரஸித்தமிறே.
“ஏவம்‌ ஜகத்ஸ்வாம்‌ தேவதே,வோ ஜரார்தந: |
அவதாரம்‌ கரோத்யேஷா தத்ர ஸ்ரீஸ்தத்ஸஹாயிக |! .
ராக,வத்வே ப,வத்‌ ஸீதா ருக்மிணீ க்ருஷ்ணஜந்மநி |
அர்யேஷு சாவதாரேஷு விஷ்ணோரேஷா.அநபாயிநீ ॥
தேவத்வே தே,வதே,ஹயம்‌ மறுஷ்யத்வே ச மாநுஷீ |
விஷ்ணோர்‌ தே,ஹா நுரூபாம்‌ வை கரோத்யேஷாத் மநஸ்த நும்‌।।”
தேவ தேவனாயே பகவான்‌ அவதாரம்‌ செய்யும்போது, இந்த ஸ்ரீதேவியும்‌ அவனுக்குத்‌ துணையாகத்‌ தோன்று கிறாள்‌.
எம்பெருமான்‌ ராகவனாய்‌ அவதரித்த போது இவள்‌ ஸீதை யானாள்‌.
அவன்‌ கிருஷ்ணனாய்ப்‌. பிறந்தபோது இவள்‌ ருக்மிணியானாள்‌.
மற்ற அவதாரங்களிலும்‌ இவள்‌ விஷ்ணுவை விட்டுப்‌ பிரியாதவளாயிருக்கிறாள்‌.
அவன்‌ தேவனாகும் போது தேவ தேஹத்தைக்‌ கொண்டவளாயும்‌
மனிதனாகப் பிறக்கும்‌ போது மனித வுருவம்‌ கொண்டவளாயும்‌,
இப்படி விஷ்ணு வினுடைய தேஹத்திற்குப்‌ பொருந்தியதாகத்‌ தன்னுடைய
திவ்ய மங்கள விக்ரஹத்தைச்‌ செய்து கொள்ளுகிறா பிராட்டி.என்று
விஷ்ணு புராணத்தில்‌ உரைக்கப்பட்டது இங்கு உணரத்தக்கது.
“தாம்‌ ரத்நமிவ அர்ச்சிஷம்‌ புஷ்பமிவ ஸூரபிம்‌ இந்துரிவ சந்த்‌ ரிகாம்‌ அம்ருதமிவ ஸ்வாதுதாம்‌
ஒளத்பத்திகேந ஸம்பந்தே,ந தரரதீதி ஸ்ரீதர :।
“ஹி ஹாது மியம்‌ மக்யா கீர்த்திராத்மவதோ யத; இதி॥”’ ரத்னம்‌ ஒளியை தரிப்பது போலவும்‌,பூ மணத்தை தரிப்பது போலவும்‌ சந்திரன்‌ தன்‌ ஒளியை தரிப்பது போலவும்‌,
அம்ருதம்‌ இனிமையை தரிப்பது போலவும்‌, அந்த ஸ்ரீதேவியை இயற்கையான ஸம்பந்தத்தினால்‌
தரிக்கிறனாகையால்‌ ஸ்ரீதரனாகிறான்‌.
“மனத்தை ஜயித்தவர்களைக்‌ கீர்த்தி வீட்டுப்‌ பிரிய வொண்ணாமல்‌ விளங்குவது போல்‌
இப் பிராட்டியும்‌ ` இப் பெருமானை விட்டுப்‌ பிரியவல்லளல்லள்‌ ” என்று சொல்லப்பட்ட து.
என்‌ று ஆசார்யாக்‌ரேஸரரான பராசர பட்டர்‌. வியாக்க்யானம்‌ செய்தருளினார்‌.
(ஸ்ரீதரன்‌)
‘ ஸ்ரீ்‌ என்று பெரிய பிராட்டியார்‌ சொல்லப்படுகிறார்‌.
அவரைத் தரிப்பவனாகையால்‌ புருஷோத்தமனும்‌ ஸ்ரீதரன்‌ எனப்படுகிறான்‌.
பகவானுக்கு நாராயண நாமம்‌ அஸாதாரணமாய்‌ விளங்குவது போல்‌
பிராட்டிக்கும்‌ ‘ ஸ்ரீ: ‘ என்னும்‌ இத்திரு நாமம்‌ அஸாதராரணமாயிருக்கிறது.
“ ஸ்ரீரித்யேவ ச நாமதே பகதி ப்ரூம: கதம்‌ த்வாம்‌ வயம்‌ ‘”
பெரியபிராட்டியே! உமக்கு *ஸ்ரீ:’ என்பது திருநாமம்‌. உம்‌ டெருமையை ஈாங்கள்‌ எப்படிச்‌ சொல்லுவோம்‌]
என்றாரன்றோே ஆள வந்தார்‌.

நாராயண நாமத்தைப்போல்‌ இத் திருநாமமும்‌ பல பொருள்‌களை உடையது.
அவைகளை இனி விவரிப்போம்‌.
” மிங்‌-ஸேவாயாம்‌ ” என்கிற தாதுவிலிருந்து இந்த ஸ்ரீப்தம்‌ உண்டான்தாகக்கொண்டால்‌.
* (அகில சேதனர்‌ களாலும்‌ ) ஆஸ்ரயிக்கப்படுகிறாள்‌ ”’ என்றும்‌ “
(எம்பெருமானை) ஆஸ்ரயித்திருக்கிறாள்‌ ” என்‌றும்‌ இரு பொருள்கள்‌ ஏற்படும்‌.
°” ய்ரூ-விஸ்தாரே ” என்னும்‌ தாதுவிலிருந்து ஸ்ரீப்ப்தம்‌ தோன்‌ றியதாகக்‌ கொண்டால்‌,
“(அடியார்களுடைய குணங்‌களை) விருத்‌தி யடையச் செய்கிறாள்‌ ” என்றும்‌,
“(தன்‌ குணங்களாலும்‌ விக்‌,ரஹங்களா லும்‌ உலகை யெல்லாம்‌)வியாபித்திருக்‌ கிறாள்‌” என்றும்‌ பொருள்படும்‌;
“’ங்ரு-ஹிம்ஸாயாம்‌” என்கிற தாதவிலே ஸ்ரீ சப்தம்‌ நிஷ்பந்கமாகிறதென்‌ றுகொண்டால்‌, ”
” (அடியார்களுடைய தோஷங்களையெல்லாம்‌) போக்கடிப்ப வள்‌ ” என்று ஸ்ரீசப்தத்துக்குப்‌ பொருளாகும்‌
“ஸ்ரு- ங்ரவணே ” என்கிற தாதுவிலிருந்து ஸ்ரீசப்தம்‌ உண்டாகிற தென்‌ று கொண்டால்‌
^ (அடியார்களுடைய முறையீடுகளைக்‌) கேட்டவள்‌ ^ என்றும்‌,
^” அவைகளை எம்பெருமானைக்‌ கேட்பிப்பவள்‌ ” என்றும்‌ பொருள்படும்‌.
இப்‌ பொருள்களெல்லாம்‌
“” மருணாதி நிகிலாந்‌ தேஷாம்‌ ங்ரூணாதி = குணைர்‌ ஜகத்‌ |
ஸ்ரீயதே சாகிலேர்‌ நித்யம்‌ ஸ்ரயதே ச பரம்‌ ரீயமாணாஞ்ச ம்ருண்வதீம்‌ ங்ருணதீமபி ||”
சேதனர்களுடடய எல்லாப்‌ பாவங்களையும்‌ போக்கடிக்கிறாள்‌ ;
உலகம்‌ முழுவதையும்‌ குணங்களால்‌ வியா பிக்கிறாள்‌;
எல்லாச்‌ சேதனர்களாலும்‌ எப்போதும்‌ ஆஸ்ரயிக்கப்படுகிறாள்‌
பரம ப்ராப்யமான பரம புருஷனை ஸர்வ காலமும்‌ ஆஸ்ர யித்திருக்றொள்‌;
(௭ம்பெருமானை) ஆஸ்ரயித்திருப்பவளா கவும்‌, (மற்றவர்களால்‌) ஆஸ்ரயிக்கப்படுபவளாகவும்‌.
(சேதனர்‌ களின்‌ குறைகளைக்‌) கேட்பவளாகவும்‌,- எம்பெருமானை அக்குறைகளைக்‌ கேட்பிப்பவளாகவும்‌
இவளை அறிகிறார்கள்‌ – என்று பாஞ்சராத்ர சாஸ்த்ரத்தில்‌ பேசப்பட்டன,
“ அதில சேதனர்க்கும்‌ ஆஸ்ரயணீயையாய்‌. தான்‌ அவனை ஆஸ்ரயித்து லப்‌,த.ஸ்வரூடையாய்‌,
ஆஸ்ரித குணங்களை விஸ்தரிப்பித்து, ஆஸ்ரித யோக்திகளை வளர்த்து ,
இவர்களை அங்கீகரிக்கைக் கனுகுணமான வாகாரங்களை அவனுக்கு காட்டி அருளுதல்
முதலான ஆகாரங்கள்‌
புருஷகார பூதையான பிராட்டிக்கு அவஸ்ய அபேஷிதங்களாகையாலே, .
இந்த நிருக்திகளெல்லா த்தையும்‌. ஸ்ரீயப்தத்துக்கு அர்‌ த்தமாகஆசார்யர்கள்‌ அனு சந்திப்பார்கள் ” என்று
(அழகியமணவாளப்பெருமாள்‌) நாயனாராச்சான்‌ பிள்ளை சதுஸ் லோக வியாக்கியானத்திலே அருளிச் செய்தார்‌.
இவருடைய திருத் தமப்பனாரான பெரியவாச்சான்‌ பிள்ளை பிராட்டி இச் சேதனனுடைய குறைகளைக்‌ கேட்கும்‌ ப்ரகாரத்‌ தையும்‌,
எம்பெருமானைக்‌ கேட்பிக்கும்‌ ப்ரகாரத்தையும்‌, பரந்த ரஹஸ்யத்திலே அத்யத்புதமாக அருளிச்‌ செய்தார்‌.
ஸ்ரீஸூக்திகள்‌ பின்வருமாறு: —
“ ஸ்ருணாதி’ என்‌ று கேட்குமென்கையாலே சேநரோடுண்டான பந்த கார்யத்தைச்‌ சொல்லுகிறது.
*ஸ்ராவயதி ‘ என்‌ று கேட்பீயாநிற்கும்‌ என்‌கையாலே ஈஸ்வர னோடுண்டான பந்த கார்யத்தைச்‌ சொல்லுகிறது.
அதாவது:- “புறம்பு பொருத்தமடை.ய அற்று. ஈஸ்வரனுக்கு ஆளாகாதபடி பூர்வாபராதத்துக்கு அஞ்சின எனக்கு
நிருபாதிக ஜனனியான தேவரீர்‌ திருவடிகளொழுியப்‌ புகலில்லை;
இனி நான்‌ ஈஸ்வரனுடைய இரக்கத்துக்கு இரையாய்‌ ரக்ஷித்தல்‌, அவனுக்கு , ஸ்வாதந்தர்ய பாத்ரமாய்‌
நாசத்தோடே தலைக்கட்டுதலொழிய இளைப்பாறுகைக்கு இடமில்லா தபடி அநந்ய க,தி; இனி அடியேனுக்கு ஹிதமின்னதென்று அறிந்து
ரக்ஷித்தருளுகை தேவரீருக்கே பரம்‌’ என்று இவன்‌ சொன்ன வார்த்தையைக்‌ கேட்கையும்‌;
அதுக்கு மேலே வெந்நீருக்குக்‌ குளிர் நீர்போலே, நிரங்குச ஸ்வாதர்த்ர்யத்தாலே ` அமி,த: பாவகோபமம்‌” என்‌கிறபடியே
அநபி,ப,வநீயனான ஈஸ்வரனைச்‌ தன்னுடைய போக்யதா தியயத்தாலே பதமாக்கி:
நாயன்தே! இச் சேதனனை அங்கீகரித்தருளீர்‌ ‘ என்னும்‌; :
ஆவதென்‌? ^ ஸ்ருதி: ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா ‘ என்‌று நம்முடைய ஆஜ்ஞா ரூபமான ஸாஸ்த்ர மர்யாதையை அதிலங்கி,த்து
நம்‌ நெஞ்சு புண்படும்படி தீரக் கழிய அபராதம்‌ பண்ணிப் போந்தவனல்‌ லனோ ?
இவனை யங்கீகரிக்கையாவதென்‌ ? ‘ எள்னும்‌ ஈஸ்வரன்‌ *
அவனுடைய பூர்வாபரா தங்களை உம்முடைய பொறைக்கு இல்க்காக்‌கி ரக்ஷித்கருளீர்‌ ‘ என்னும்‌ பிராட்டி; ‘
பொறையை நோக்குகைக்காக ஸாஸ்‌த்ர மர்யாதையைக்‌ குட நீர்வழியவோ?” என்னும்‌ ஈஸ்வரன்‌; ”
சாஸ்த்ரமர்யாதையை நோக்குகைக்காக உம்முடைய ஸ்வபாவிகமான க்ஷமா தத்வத்தைக்‌ குடநீர்‌ வழியவோ?’ என்னும்‌ பிராட்டி; :
ஷமையை நோக்கில்‌, சாஸ்த்ர மர்யாதை குலையும்‌;
சாஸ்த்ர மர்யாகையை, நோக்கினால்‌ க்ஷமா தத்வம்‌ குலையும்‌;
இரண்டும்‌ குலையாதொழிய வேண்டும்‌; செய்யவடுப்பதென்‌?’ என்னும்‌ ஈஸ்வரன்‌; “
கிங்கர்த்தவ்யதாகுலனாயிருந்தால்‌ அத்தனையே; அவை இரண்டும்‌ குலையாதபடி வழி சொல்லுகிறேன்‌ :
அப்படியே செய்தருளீர்‌ ‘ என்னும்‌ பிராட்டி; :
இரண்டும்‌ குலையாமல்‌ இச் சேதனனை நோக்க வழியுண்டாமாகில்‌ நமக்குப்‌ பொல்‌ லாதோ?
சொல்லிக் காண்‌! ‘ என்னும்‌ ஈஸ்வரன்‌; :
ஆனால்‌. சாஸ்தர மர்யாதையை விமுகர்‌ விஷயமாக்குவது:
உம்முடைய ஷமையை அபிமுகன் விஷயமாக்குவது;
இரண்டும்‌ ஜீவித்த தாயறும்‌ ` என்னும்‌ விஷயவிபாக;ம்‌ பண்ணிக் கொடுக்கும்‌ பிராட்டி;
அத்தைக்‌ கேட்டு : அழகிய விபாக;ம்‌!’ என்று இச்சேதனனை அங்கீகரித்தருளும்‌ ஈஸ்வரன்‌;
ஆக, இப்படி ஸாபராத,ஜந்துவை ஈஸ்வரன்‌ அங்கீகரித்தருளும்படியான வார்த்தைகளைக்‌ கேட்பித்தருளுகையும்‌.
” இப்படிப்‌ பிராட்டியால்‌ புருஷ காரம்‌ செய்யப்பெற்ற சேதனனையே ‘ ஸர்வேஸ்வரன்‌ அங்கிகரிக்கிறான்‌ என்பதை
“என்னைத்‌ தீ மனம்‌ கெடுத்தாய்‌ உனக்கென்‌ செய்கேன்‌? என்‌ சிரீதரனே!” ` என்று ஆழ்வாரும்‌ அருளிச் செய்தார்-

“மாதவன்‌ ‘ என்று
எம்பெருமான்‌ வைகுண்டத்தில்‌ பிராட்டியுடன்‌ எழுந்தருளியிருக்கும்‌ இருப்பைச்‌ சொல்‌லிற்று.
‘ஸ்ரீ தரன்‌’ என்று
அவதாரம்‌ செய்யும் போதும்‌ அவளைத் தரித்திருககிறான் என்கிறது.
ஆகையால்‌ புநருக்‌தி தோஷம் இல்லை..

த்வயத்தில் போல் உபாயத்வ உபேயாத்வ இரண்டு ஆகாரங்களும் உண்டு என்று காட்டவே இந்த இரண்டு திரு நாமங்களும்

“—————

இப்படிப்‌ பராவஸ்தையையும்‌,
வியூஹ விபவாவதாரங்‌ களையும்‌ அநுபவித்த பிறகு,
* ஹ்ருஷீ கேஸன்‌ ‘ என்று
ஸர்வேஸ்வரன்‌ மனுஷ்யர்களுடைய ஹ்ருதயத்தில்‌ அந்தர்‌ யாமியாய்‌ நின்று இந்திரியங்களை நியமித்துக் கொண்டு
வீற்றிருக்கும்‌ இருப்பு அநுபவிக்கப்படுகிறது.

ஸ்ரீதரன்‌ என்ற திருநாமத்திற்குப்பின்‌ படிக்கையாலே
இந்த அந்தர்‌யாம்யவஸ்தையிலும்‌ எம்பெருமான்‌ பிராட்டியுடன்‌ கூடியவனாகவே
எழுந்‌தருளி யிருக்கிறான் என்பது தோற்றுகிறது.

“ஹ்ருஷீ காணீந்த்‌ரியாண்யாஹுஸ்‌ தேஷாமீமோ யதோ பூவாந்‌ |
ஹ்ருஷீகேமுஸ்‌ ததோ விஷ்ணு: க்‌யாதோ தேவேஷு கேஸவ: ॥’
ஹ்ருஷீகங்களென்று இந்திரியங்களைச்‌ சொல்‌லுகிறார்கள்‌;
அவ்விந்திரியங்களை நியமிப்பவராயிருப்பதால்‌. விஷ்ணு கேசவன்‌ என்னும்‌ திருநாமங்களையுடைய நீர்‌
தேவர்களுள்‌ * ஹ்ருஷீகேசன்‌ எனப்படுகுகிறீர்‌.
என்று ஹரிவம்‌சத்தில்‌ ஹ்ருஷீகேச சப்தார்‌த்தம்‌ சொல்லப்பட்ட து.
( ஹ்ருஷீ கேசன்‌ )
ஹ்ருஷீகேச சப்தத்தினால்‌ பத்து இந்திரியங்களாகிய தலைகளைக்‌ கொண்ட மனஸ்ஸாகிற ராவணன்‌: சொல்லப்படுகிறது,
அந்த ராவணனை தன்னைப் பற்றின அறிவாகிய அம்பை ஏவிக்‌ கொல்லுமவனாகையாலே
இப்பெருமான்‌ ஹ்ருஷீகேசனெனப்படுகிறான்‌.
“தஸ ,இந்த்‌,ரியாஙகம்‌ கேரம்‌ யோ மநோரஜநீசரம்‌ |
விவேகமாரஜாலேந மமம்‌ நயதி யோகிநாம்‌ | ”’
யோகிகளுடைப பத்து இந்திரியங்களாகிய தலைகளையுடைய மனஸ்ஸாகிற பயங்கர ராஷஸனை.
தன்னைப் பற்றிய அறிவாகிய அம்புக் கூட்டங்களால்‌ அடக்குகிறான்‌- என்று சொல்லப்பட்ட தன்றோ.
“இருடீகேசன்‌ எம்பிரான்‌ இலங்கை யரக்கர் குலம்‌ முருடுதீர்த்த பிரான்‌ எம்மான்‌” _என்‌று
நம்மாழ்வார்‌ இவ்வர்த்தத்தை உணர்த்தினார்‌. “
அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை இண்‌ டக்குலத்தை எடுத்துக்‌ களைந்த இருடீகேசன் தனக்கு ‘
என்று பெரியாழ்வாரும்‌ இதைப்‌ பாசுரமிட்டருளினார்‌.
*இருடீகேசன்‌ என்னும்‌ இத் திரு நாமத்தினாலும்‌ விரோதி நிரஸந ஸீலத்வம்‌ சொல்லப்படுகிறது.
“ ஏர்விடை செற்றிளங்கன்றெறிந்திட்ட இருடீகேசா”என்‌ று பெரியாழ்வார்‌ இக்குணத்தைப்‌ பேசினார்‌.
(ஹ்ருஷீகேசன்‌)
தன்னைக்‌ கண்டவர்களுடைய இர்திரியங்‌களை வசப்படுத்துமவன்‌.
ரூப ஒவ்தார்ய குணை: பும்ஸாம்‌ த்‌,ருஷ்டி சித்த அபஹாரிணம்‌ “”
தன்னுடைய ரூபம்‌, வண்மை, குணங்கள்‌ முதலியவற்றால்‌ ஆண் பிள்ளைகளுடைய கண்ணையும்‌. மனத்தையும்‌
அபஹரிக்குமவன்‌- என்று சொல்லப்‌ பட்டதன்றோ. ‘
முடியானே ” என்னும்‌ திருவாய்மொழியில்‌ நம்மாழ்வார்‌ :-:
நெடியானே! என்று கிடக்கும்‌ என்‌ நெஞ்சமே” என்றும்‌, ‘*
வஞ்சனே! என்னுமெப்போதுமென்‌ வாசகமே ‘” என்‌ றும்‌. “
தாயவனே! என்று தடவும்‌ என்‌ கைகளே ” என்றும்‌.
“உன்னை மெய் கொள்ளக்‌ காண விரும்புமென்‌ கண்களே ” என்றும்‌. :
‘பண் கொண்ட புள்ளின்‌ சிறகொலி பாவித்துத்‌
திண் கொள்ள ஒர்க்கும்‌ கடந்தென்‌ செவிகளே ” என்றும்‌
தம்முடைய இர்திரியங்கள்‌ ஒவ்வொன்றும்‌ எல்லா இந்திரியங்களின்‌ அ.நுபவத்தையும்‌ ஆசைப்பட்டு
எம்பெரு மானை அநுபவிக்க மேல்விழுந்தன என்று அருளிச்செய்த ரன்றோ.
” நாக்கு நின்னை யல்லாலறியாது ” ,
“கண்டு நானுன்னை உகக்க ”
“ வேறொருவரோடென்‌ மனம்‌ பற்றாது ^”
“என்னப்பா என்னிருடீகேசா ” என்று
தம்முடைய இந்திரி யங்களெல்லாம்‌ எம்பெருமான்‌ பக்கல்‌ ஈடுபட்டபடியைப்‌ பெரியாழ்வாரும்‌ பேசியருளினார்‌.
தன்னுடைய அவயவ சோபை யாலும்‌. ஆபரண சோபையா லும்‌ பிறருடைய இந்திரியங்களை வசப்படுத்துகிறான்‌ -என்று பெரியாழ்வாரும்‌
“மின்னுக் கொடியும்‌ ஓர் வெண் திங்களும்‌ சூழ்‌ பரிவேடமுமாய்‌
பின்னல்‌ துலங்குமரசிலையும்‌ பீதகச்சிற்றுடையொடும்‌
மின்னில்‌ பொலிந்ததோர்‌ கார்முகில்போலக்‌ கழுத்தினில்‌ காறையொடும்‌
தன்னில்‌ பொலிந்த இருடீகேசன்‌ தளர்நடை’ நடவானோ ”” என்று அருளிச்செய்தார்‌,
“இருடீகேசன்‌ வலிசெய்ய முத்தன்ன வெண்முறுவல்‌
செய்ய வாயும்‌ முலையும்‌ அழகழிந்தேன்‌ யான்‌” என்று ஆண்டாளும்‌
தன்னுடைய இர்திரியங்‌களெல்லாம்‌ இருடீ கேசனிட்ட வழக்காயிருக்கின்‌றன என்று அருளிச்செய்தாள்‌.
இப்படி எம்பெருமான்‌ ஹ்ருதய கமலத்திலே திவ்ய மங்கள விக்ரஹத்‌துடன்‌ அந்தர்யாமியாய்‌
எழுந்கருளியிருக்‌ கிறான்‌ என்னுமிடத்தை
“ வெள்ளைச்‌ சுரிசங்கொடாழியேந்தித்‌ தாமரைக்கண்ணனென்‌ நெஞ்சினூடே
புள்ளைக்கடாகின்‌ற வாற்றைக்‌ காணீர்‌ என் சொல்லிச் சொல்லுகேன்‌ அன்னைமீர்காள்‌? “என்றும்
“கல்லும்‌ கனை கடலும்‌ வைகுந்த வானாடும்‌
புல்லென்றொழிந்தன கொல்‌ ஏ பாவம்‌!-—வெல்ல
நெடியான்‌ நிறம்‌. கரியான்‌ உள் புகுந்து நீங்கான்‌
அடியேனதுள்ளத்தகம்‌ ?’ _— என்றும்‌ நம்மாழ்வாரும்‌.
“நிற்பதும்‌ ஒர்‌ வெற்பகத்‌(து) இருப்பதுவும் விண்‌ கிடப்பதும்‌
நற்பெரும்‌ திரைக்கடலுள்‌ நானிலாத முன்னெலாம்‌
அற்புதன்‌ அநந்த சயனன்‌ ஆதிபூதன்‌ மாதவன்‌
இருப்பதும்‌ கிடப்பதும்‌ என்‌ நெஞ்சுள்ளே ”’ என்று திருமழிசைப்பிரானும்‌,
“வடதடமும்‌ வைகுந்தமும்‌ மதிள்‌ துவராபதியும்‌ இடவசைகள்‌ இகழ்ந்திட்டென்பால்‌ இடவகை கொண்டனையே” என்றும்‌,
“அநந்தன் பாலும்‌ கருடன் பாலும்‌ ஐது நொய்தாக வைத்தென்‌ மனந்தன்னுள்ளே வந்து வைகி
வாழச் செய்தாய்‌ எம்பிரான்‌!” என்றும்‌ பெரியாழ்வாரும்‌ அருளிச்செய்தார்‌.
வேதமும்‌ “நீல தோயத மத்‌ யஸ்த; வித்யுல்லேகே,வ பாஸ்வரா” முதலான விடங்களில்‌ இவ்விஷயத்தைச்‌ சொல்லிற்று.
“ லாபஸ்தேஷாம்‌ ஜயஸ்தேஷாம்‌ குதஸ்தேஷாம்‌ பராபவ: |
யேஷாமிந்த,வரஸ்யாமோ ஹ்ருத,யே ஸுப்ரதிஷ்டி,த: ॥ ””
எவர்சளுடைய ஹ்ருதயத்தில்‌ காயாம் பூ வண்ணனான பெருமான்‌ நன்கு பொருந்தி யிருக்கிறானோ,
அவர்களுக்கே லாபமும்‌ ஜயமும்‌ உண்டாம்‌;
அவர்களை அவமானம்‌ அணுகாதே என்று ருஷி களும்‌ இவ்விஷயத்தைச்‌ சொன்னார்கள்‌
“நஞ்சீயர்‌ கோயிலுக்கு எழுந்தருளா நிற்க வழியிலே பிள்ளானைக் கண்டு.
‘ஈஸ்வரனுக்கு ஸ்வரூப வ்யாப் தியேயோ, விக்ரஹ வ்யாப்தியும்‌ உண்டோ?’ என்று. பிள்ளானைக்‌ கேட்க.
பாஷ்யகாரர்‌ தோற்ற அருளிச் செய்து கொண்டு போந்தது ஸ்வரூப வ்யாப்திய।யிருக்கும்‌;
ஆகிலும்‌, எம்பார்‌ ஒருநாள்‌. உபாஸக அநுக்ரஹ ஸஹார்த்தமாக ஆஸ்ரிதருடைய நெஞ்சிலே
விக்ரஹத்தோடே வ்யாபித்திருக்கும்‌? என்று அருளிச்செய்யக்கேட்டேன்‌? என்று பணித்தான்‌ ‘
என்று ஈட்டில்‌ எடுக்கப்பட்ட ஐதிஹ்யமும்‌. இவ்விடத்தில்‌. அனுஸந்திக்கத் தக்கது.
பிள்ளைலோகாசார்யரும்‌ “அந்தர்யாமித்வமாவது: அந்த:ப்ரவிஸ்ய நியந்‌தா வாயிருக்கை.
ஸ்வர்க்காதி ப்ரவேசாதி, ஸர்வாவஸ்தைகளிலும்‌, ஸகல சேதநர்க்கும்‌ துணையாய்‌. அவர்களை விடாதே, நிற்கிற நிலைக்கு மேலே
ஸூ பாஸ்ரயமான திருமேனியோடே ‘கூடிக்கொண்டு அவர்‌ களுக்கு த்‌யேயனாகைக்காகவும்‌,
அவர்களை ரக்ஷிக்கைக்காகவும்‌ -அந்தர் பூதனாய் கொண்டு ஹ்ருதய கமலத்‌திலே எழுந்தருளி யிருக்கும்‌ இருப்பு.” என்று
தத்வ த்ரயத்தில்‌ அருளிச்‌ செய்தார்‌.
(ஹ்ருஷீகேசன்‌)
` ஹ்ருஷ்‌ ” என்னும்‌ தாது அனந்தத்‌தைக் குறிக்கும்‌.
௧” என்னும்‌ பதம்‌ ‘ஸுகம்‌’ என்னும்‌ பொருளையுடையது.
கம்‌ ப்ரஹ்ம ‘ என்ற வேதவாக்யம்‌ காண்க,
ஸம்‌ என்னும்‌ பதம்‌ ஐஸ்வர்யத்தை உடையவன்‌ என்று பொருள்படுகிறது.
ஆக, ஹ்ருஷீகேசன்‌ ‘ என்னும்‌ திருநாமத்தால்‌, ஹர்ஷத்தையும்‌, ஸெளக்யத்தையும்‌, ஐச்வர்‌ யத்தையும்‌
உடையவன்‌ என்று சொல்லப்பட்டதரகிறது,
“ ஹர்ஷாத்‌ ஸெளக்‌,யாத்‌ ஸுகைஹ்வர்யாத்‌ ஹ்ருஷீகேமத்வமங்நுதே ‘
ஹர்ஷத்தையும்‌. ஸெளக்யத்தையும்‌, ஸுகமான ஐஸ்வர்யத்‌ தையும்‌ உடைத்தாயிருக்கையால்‌
ஹ்ருஷீகேசனாயிருக்கும்‌ தன்மையை அடைகிறாய்‌.
என்று இவ்வர்த்தம்‌ புராணங்‌களில்‌ பேசப்பட்டது.
“ஸூர்யாசந்த்‌,ரமஸோ: மரபி, கேரமஸம்ஜ்ஞிதை:।
பேளதயந்‌ ஸ்வாபயம்ங்சைவ ஜக,து,த்திஷ்ட,தே ப்ருத,க்‌॥
பேதநாத்‌ ஸ்வாபநாச்சைவ ஜக,தோ ஹர்ஷணம்‌ பவேத்‌ ।
அக்‌நீஷோமக்ருதைரேவம்‌ கர்மபி,: பாண்டு,நந்தந ॥
ஹ்ருஷ்கேஸ மோ ஹமீமமா நேர வரதே, லோகபாவந: ||
கேசங்கள்‌ எனப்படும்‌ ஸூர்ய சந்திர கிரணங்களால்‌ நான்‌ உலகிலுள்ளவர்களை யெல்வாம்‌ எழுப்பிக் கொண்டும்‌
தூங்கச்‌ செய்து கொண்டும்‌ வீளங்குகிறேன்‌. இப்படி எழுப்புவதி னாலும்‌, தூங்கச்செய்வதா லும்‌
உலகிற்கு ஹர்ஷம்‌ உண்டாகும்‌. பாண்டவ !
ஸூர்ய சந்திரர்களைக் கொண்டு செய்யப்படும்‌ -இக்கருமங்களால்‌, ஈஸ்வரனும்‌. வரமளிப்பவனும்‌,
லோக பாவனனுமான நான்‌ ஹ்ருஷீ கேசன்‌ எனப்படுகிறேன்‌. என்று மோக்ஷதர்மத்தில்‌
ஹ்ருஷீகேச சப்தத்தின்‌ மற்றொரு பொருள்‌ விவரிக்கப்பட்டது.
* ஸூர்யரங்மிர்‌ ஹரிகேஸ : புரஸ்தாத்‌ ”
ஸுூர்ய கிரணமானது பகவான்‌ ஹரியீன்‌ கேச மெனப்படுகிற. து] என்று வேதமும்‌ இவ்வர்த்தத்தை உணர்த்திற்று.
” கேஸ ‘ சப்தத்தினால்‌ எம்பெருமானுடைய திருக்குழல்கற்‌றை சொல்லப்படுவதாகக்கொண்டு.
கண்டவர்களுக்கு ஹர்ஷத்‌ தைக்கொடுக்கும்‌ மயிர்முடியை உடையவன்‌ என்றும்‌ ஹ்ருஷீ கேச சப்தத்திற்குப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
கேசவன்‌ என்னும்‌ திருநாமத்திற்கும்‌, இப்படி ஒரு பொருள்‌ உரைக்கப்‌ பட்டது.
அங்கு அநுஸந்‌ திக்கப்பட்ட ப்ரமாணங்களை இங்கும்‌ படிப்பது.
இப்படிப்‌ பலபொருள்களை உடையதேயானாலும்‌. *அந்தர்யாயியாய்‌ இந்திரியங்களை நியமித்திக் கொண்டு எழுந்‌தருளியிருக்குமவன்‌ ‘ என்னும்‌ பொருளே இங்கு முக்ய மாகக் கடவது.

————–

இம் மாதிரியாக விபவ மூர்த்திகளையும்‌.
அந்தர்யாம் யவதாரத்தையும்‌ அதுபவித்த பிறகு.
இம்மூர்‌த்திகளுக்கெல்லாம்‌ மூலாவதாரமாய்‌ விளங்குபவனும்‌,
பத்மநாபன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனுமான க்ஷீராப்தி நாதனை அனு ஸந்திக்கிறது
பத்மநாபன்‌ என்னும்‌ திருநாமம்‌.
இங்கு சில விஷயங்களை அறியவேண்டும்‌.
அநிருத்த நாராயணனே பிரமனைப்‌ பிறப்பித்தவனென்றும்‌.
எல்லா அவதாரங்‌களுக்கும்‌ மூலமூர்த்தி யென்றும்‌ சொல்லும்‌ ப்ரமாணங்கள்‌ முன்பே காட்டப்பட்டன.
பத்ம நாபன்‌ என்‌ னும்‌ பெயரிலிருந்து ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு நடுவில்‌ படிக்கப்படும்‌
இவ் விஷ்ணு மூர்த்தியே பிரமனைப்‌ படைத்தவரென்று தோற்றுகிறது.
“ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷரார்ணவ நிகேதந 😐
நாக பர்யங்கமுத்ஸ்ருஜ் ஹ்யாகதோ மதுராம்‌ புரீம்‌॥’
என்‌று திருப் பாற் கடலில்‌ துயிலும்‌ பெருமானே கிருஷ்ணன்‌ முதலிய அவதார மூர்த்திகளுக்கு
மூல பூதர்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது.
இவை எப்படிப்‌ பொருந்தும்‌ எனில்‌:
அநிருத்தனிடமிருந்து ஷீராப்தி நாதன்‌ தோன்‌றுகிறான்‌ என்றும்‌
அவரிடமிருந்து மற்ற அவதாரங்கள்‌ எற்படுகின்‌றன என்றும்‌ கொண்டால்‌
அவதார மூர்த்திகளுக்கு அநிருத்தரையும்‌.
திருப்பாற்கடல்‌ நாதனையும்‌ மூல மூர்த்‌தியாகச்‌ சொல்லலாம்‌.
“ பத்ம நாபாதிகா: ஸர்வே….அநிருத்‌,தாத்‌ ஸமுத்பந்நா பாத்‌, இவேஸ்வரா:” என்று
முன்‌ எடுக்கப்பட்ட ப்ரமாணத்தோடும்‌ இது பொருந்தும்‌.
மஹா ப்ரளயத்தில்‌ .அநிருத்தரும்‌.
நைமித்திக ப்ரளயத்தில்‌ க்ஷீராப்தி நாதனும்‌ பிரமனைப்‌ பிறப்பிப்பதாகக்‌ கொள்ளலாம்‌.
அன்‌றிக்கே
தர்ம்யைக்யத்தாலே இருவரையும்‌ ப்ரஹ்மோத்பா தகர்களாகக்‌ கூறுவதாகவும்‌ கூறலாம்‌,
புருஷ ஸூக்தத்திலும்‌, *பாதேள5ஸ்ய” என்று அநிருத்தரை எடுத்து. :
இஹாபவாத்புக:” [இங்கு மறுபடியும்‌ அவதரித்தார்‌] என்று அவருடைய அவதார பூ,தரான ஷீராப்‌தி நாதனைச்‌ சொல்லுவதாகவும்‌,
“ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌’ என்று அவருடைய அவதார வ்யாப்தியைச்‌ சொல்லுவதாகவும்‌,
* தஸ்மாத்‌ விராட,ஜாயத’ என்று
அந்த ஷீராப்தி நாதனிடமிருந்தே பிரமன்‌ பிறந்தான்‌ என்று சொல்லுவதாகவும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும்‌ பத்மநாபே அமரப்‌ரபு,:’ என்று
வ்யூஹத்தில்‌ நான்காவதான அநிருத்தரைக் குறித்தும்‌,
பத்மநாப; ப்ரஜாபதி: ‘ என்று முதல்‌ அவதாரமான விஷ்ணுவைக் குறித்தும்‌
பத்மநாப சப்தம்‌ ப்ரயோகிக்கப்‌ பட்டிருப்பதையும்‌,
பத்மநாப: ப்ரஜாபதி: ‘ , என்‌ற விடத்தில் பாஷ்யத்தில்‌
நைமித்திக ஸ்ருஷ்டி ப்ரளய விஷயம்‌ சைதத்‌ த்‌ஸஏஷ்டவ்யம்‌ ”
இந்த ப்ரஹ்ம ஸ்ருஷ்டி நைமித்திக ஸ்ருஷ்டி ப்ரளய விஷயமானதென்று கருதப்படவேண்டும்‌ |
என்‌று பட்டர்‌ அருளிச் செய்ததையும்‌ இங்கு அதுஸந்திப்பது.

இனி இப்பத்மநாப சப்தார்த்தை விவரிப்டோம்‌.
(பத்மநாபன்‌) =
“” ஸர்வ ஜகத் காரணம்‌ யஸ்ய ஸ:””
எல்லா ஜகத்துக்கும்‌ காரணமான “பத்மத்தை . நாபியில்‌ உடையவன்‌ எவனோ அவன்‌.
என்று சங்கர பாஷ்யத்தில்‌. பொருளுரைக்கப்பட்டது . ”
பாமரு மூவுலகும்‌ படைத்த பற்பநாபாவோ!” என்று ஆழ்வாரும்‌. –
* ஊழிமுதல்வன்‌…….. பாழியந்தோளுடைய பற்பநாபன்‌ ” என்று ஆண்டாளும்‌
பத்மநாப சப்தத்திற்கு அர்த்தம்‌ பண்ணினார்கள்‌.
“ தாதோத்‌ தார: ஸம்விமரதி பஞ்சவர்‌ஷமாதாநி து ”
(பத்ம ஸம்பவனான ) பிரமன்‌ (தாமரைக் கொடியில்‌ ) மேல்‌ நோக்கியவனாய்‌ ஐநூறு வருஷங்கள்‌ நுழைந்கான்‌.-என்றும்‌
“ தர்த்துர்‌ நாப்‌,யாம்‌ புஷ்கரம்‌ ப்ராதுர்பவதி”
ஸர்வ லோகத்தை தரிப்பவனான நாராயணனுடைய நாபியில்‌ தாமரை உண்டாயிற்று.] என்றும்‌,
^ அஜஸ்ய நாபாவத்‌,யேகமர்ப்பிதம்‌ ”
பிறப்பிலி யான பெருமானின்‌ நாபியில்‌ ஒரு ( தாமரை ) தோற்றுவிக்கப்பட்டது.] என்‌றும்‌,
‘யந் நாபி பத்மநாப,வந்மஹாத்மா ப்ரஜாதிபர்‌ விஸ்வஸ்ருட்‌, விஸ்வரூப:”
உலகை உருவ மாகச்‌ கொண்டவனும்‌, உலகை ஸ்ருஷ்டிப்பவனுமான பிரமன்‌
எவருடைய நாபீகமலத்திலிருந்து தோன்‌நினானோ ….] என்றும்
மஹா உப நிஷத்திலும்‌, “ ப்ரஹ்ம வை ப்‌,ரஹ்மாணம்‌ புஷ்கரே$ஸ்ருஜத்‌”
ப்ரஹ்மம்‌ பிரமனைத்‌ தாமரையில்‌ தோற்று வித்தது என்றும்
அதர்வண வேதத்திலும்‌, “ ஸ ப்ரஜாபதி ரேக: புஷ்கரபர்ணே ஸம்ப,வத்‌””
அந்தப்‌ பிரமன்‌ ஒருவனே (எம்பெருமானுடைய திருநாபீ) கமலத்தில்‌ தோன்‌ நினான்‌– என்றும்‌
பல வாக்கியங்களால்‌ வேதத்திலும்‌
“யத்‌ தத்‌ பத்மமபூத்‌ பூர்வம்‌ தத்ர ப்‌ரஹ்மா வ்யஜாயத |
` ப ரஹ்மணங்சாபி ஸம்பூ,த: இத்யவதரர்யதாம்‌ |
ஸரிவாத்‌ ஸ்கந்தஸ்‌ ஸ்ம்பபபூவ ஏதத்‌ ஸ்ருஷ்டி சதுஷ்டயம்‌ (|
(பகவானுடைய’ உந்தியிலிருந்‌து) யாதொரு தாமரை முன்‌ உண்டாயிற்றோே அதில்‌ பிரமன்‌ பிறந்தான்‌,
பிரமனிட மிருந்தே-சிவன்‌ பிறந்தானென்று அறியத்தக்கது.
சிவனிட மிருந்து ஸ்கந்தன்‌ உண்டானான்‌.
இது (முதலில்‌ ஏற்பட்ட) நாலு ஸ்ருஷ்டி] என்று மஹாபாரதத்திலும்‌
“கதாசித்‌ தஸ்ய ஸாுப்தஸ்ய நாப்‌,யாம்‌ காமாத,ஜாயத |
திவ்யமஷ்டதனம்‌ பூரி பங்கஜம்‌ பார்த்தி,வம்‌ மஹத்‌ ॥
யஸ்ய ஹேமம திவ்யா கர்ணிகா மேருருச்யதே |”
அப் பெருமான்‌ ஒரு ஸமயம்‌ யோக நித்திரை செய்து கொண்டிருக்கும் போது. அவனுடைய ஸங்கல்பத்தினால்‌
அவனுடைய திருநாபியில்‌, எட்டு தளத்தையுடையதும்‌, ப்ருதிவி ஸம்பந்த முள்ளதும்‌, மிகப்டெரியதும்‌ அழகியதுமான தாமரை உண்டாயிற்று.
அதனுடைய ஸுவர்ண மயமான அழகிய கர்ணிகை மேருமலையாயிற்று என்று சொல்லப்‌படுகிற து. என்று
பாத்ம புராணத்திலும்‌ சொல்லட்பட்ட து.
“’நாவியுள்‌ நற்கமல நான்முகனுக்‌ கொருகால்‌ தம்மனையானவனே!” என்று பெரியாழ்வாரும்‌.
நாட்டைப் படையென்றயன்‌ முதலாத்‌ தந்த நளிர்‌ மாமலருந்தி
வீட்டைப்‌ பண்ணி விளையாடும்‌ விமலன்‌ தன்னைக் கண்டீரே ” என்று ஆண்டாளும்‌
தாமரை மேல்‌ அயனவனைப்‌ படைத்தவனே!” என்று குலசேகராழ்வாரும்‌,
“போது தங்கு நான்முகன்‌ மகன்‌ அவன்‌ மகன்‌ சொலில்‌
மாது தங்கு கூறன்‌ ஏறதூர்தி என்று
வேதநூல்‌ ஓதுகின்‌றதுண்மை அல்லதில்லை
மற்றுரைக்கிலே ” -—என்று திருமழிசைப்பிரானும்‌.
** அயனைப்‌ படைத்ததோர்‌ எழில்‌ உந்தி ” என்று திருப்பாணாழ்வாரும்‌.
‘ அங்கமலத்தயன்‌ ” என்றும்‌. “்‌
ஒருவனை உந்திபூமேல்‌ ஓங்குவித்து” என்றும்‌, திருமங்கைமன்னனும்‌.
“செய்ய மறையான்‌ நின்‌ உந்தியான்‌” என்‌ றும்‌,
“நான்முகற்குப்‌ பூமேல்‌ பகரமறை பயந்த பண்பன்‌ ` என்றும்‌ பொய்கைப்பிரானும்‌. —
இரும் தண்‌ கமலத்‌ திரு மலரினுள்ளே திருந்து திசைமுகனைத்‌ தந்தாய்‌” என்று பூதத்‌ தாழ்வாரும்‌.
“அலரெடுத்த உந்தியான்‌”என்‌ று பேயாழ்வாரும்‌,
“’ ஒரு தானாகித்‌ தெய்வ நான்முகக்‌ கொழுமுளை ஈன்று
முக்‌ கணீசனொடு தேவு பல நுதலி மூவுலகம்‌ விளைத்த
உந்தி மாயக்கடவுள்‌ மாமுதலடியே”’ என்று நம்மாழ்வாரும்‌
எம்‌ பெருமான்‌ ஸர்வ ஜகத் காரணமான பத்மத்தை நாபியிலே கொண்டு விளங்குவதை அநுபவித்தார்கள்‌.

“’அஜநிஷ்ட ச கஸ்ய நாபே,:”
எவனுடைய உந்தியிலிருந்து இவ்வுலகம்‌ உண்டாயிற்று] என்றார்‌ ஆளவந்தாரும்‌.
“த்ரயோ தேவாஸ்‌ துல்யாஸ்‌ த்ரிதயமிதமத்‌,வைதமதி,கம்‌ த்ரிகாத,ஸ்மாத்‌ தத்த்வம்‌ பரமிதி விதர்க்காந்‌ விகடயர்‌ |
நாபீ பத்‌,மோ ப்‌ரூபங்கீ,பரவதி,தி ஸித்‌,த,ாந்தயதி ந: |”
மும்மூர்த்திகளும்‌ ஸமர்‌’ மூவரும்‌ ஒன்றே “மூன்றைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டது பரதத்வம்‌ ‘ என்னும்‌
விதண்டா வாதங்களைப்‌ போக்கடிப்பதாய்‌,
பிரம ருத்திரர்களுக்கு முதற்கிழங்கரயிருப்பதுமான பெரியபெருமாளுடைய திருநாபிக்கமலமான து
அவனையொழிந்த மற்றவையெல்லாம்‌ அவனுடைய புருவ நெரிப்புக்கு வசப்பட்டவை என்று நமக்கு முடிவுகட்டித்‌ தருகின்‌ றது.
என்று பட்டர்‌ அருளிச்‌ செய்தபடியே பரத்வ நிர்த்தாரணம்‌ செய்துதரும்‌ திருநாமமன்றோ இது.
(பத்மநாபன்‌)
” பத்மமிவ நாபி: யஸ்ய ஸ:””
தாமரை போன்‌ற உந்தியை உடையவன்‌ | என்‌ றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
“ ஹ்ருத்பத்மஸ்ய நாபெள மத்‌,யே ப்ரகாமாமாஈத்வாத்‌ வா பத்மநாப;””’
ஹ்ருதய கமலத்தின்‌ ஈடுவில்‌ பிரகாசிப்பதால்‌ பத்மநாபனாகிறான்‌.. என்றும்‌ சங்கரர்‌ பொருள் கெண்டார்‌.
இப்படி ஸகலாவதார மூல மூர்த்தியான பத்மநாபாவதாரம்‌ அநுபவிக்கப்பட்டது.

————–

அடுத்தபடியாக அப்‌ பெருமானுடைய முக்யாவதாரமாகிய க்ருஷணாவதாரம்‌ தாமோதர நாமம்‌ அநுபவிக்கப்படுகிறது.
“பத்மநாபன்‌ என்னும்‌ திருநாமத்தினால்‌ அவதாரத்திலும்‌ பரத்வம்‌ பொலிய நிற்பவனென்று காட்டப்பட்டது.
தாமோதரன்‌’ என்று ஓரிடைச்சிக்குக்‌ கட்டவும்‌ அடிக்கவுமாம்படி நின்ற ஸெளலப்‌, யத்தின்‌ எல்லை நிலத்திலே ஈடுபடுகிறது.
* தாம” என்று விந்‌-16 கயிற்றுக்குப்‌ பெயராகையால்‌ கயிற்றை வயிற்றிலுடையவன்‌ என்று
தாமோதர நாமத்திற்குப்‌ பொருளாகிறது.
“ தயோர்‌ மத்‌,யக,தம்‌ பத்த,ம்‌ த௱ம்நா கடம்‌ தயோத;ரே |
ததங்ச தமோத,ரதாம்‌ ஸ யயெள தாமப,ந்த நாத்‌ |!”
அந்த யசோதையால்‌ வயிற்றில்‌ கயிற்றினாலே கட்டப்‌ பட்டவனாய்‌ அம்மரங்களினிடையில்‌ சென்றான்‌.
கயிற்றால்‌ கட்டப்பட்டதால்‌ தாமோதரனாயிருக்கும்‌ தன்மையை அடைந்தான்‌ என்று சாஸ்த்ரம்‌ சொல்லிற்று,
“தாம்கா சைவோத;ரே பத்‌,த்‌,வா ப்ரத்யப,த்‌,நாதுலூகலே”
கயிற்றால்‌ வயிற்றில்‌ கட்டி உரலில்‌ பிடித்துக்‌ கட்டினாள்‌-என்று விஷ்ணு புராணத்திலும்‌ இத்திருநாமம்‌ விவரிக்கப்‌ பட்டது.
ஸர்வ ஸ்மாத் பரன்‌ ஓரிடைச்சியின்‌ கையிலே கட்டுண்டு கிடந்ததைக்கண்டு
“‘எத்திறம்‌! உரலினொடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே” என்று நம்மாழ்வார்‌ ஆறு மாதம்‌ மோஹித்துக்‌ கிடந்தார்
“கண்ணிநுண்‌ சிறுத்தாம்பி னால்‌ கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்‌’” என்று மதுரகவிகளும்‌.
“கண்ணிக்‌ குறுங்கயிற்றால்‌ கட்டுண்டான்‌ காணேடீ ” என்று திருமங்கையாழ்வாரும்‌
இந்நீர்மையிலே ஈடுபட்டனர்‌.
“தாமாநி பந்தி யஸ்யோத,ராந்தரே | தேர தமோத,ரோ ; ஸ்ரீதரஸ்து ஸமாங்ரித:
தாம சப்தத்தினால்‌ சொல்லப்படும்‌ லோகத்திலுள்ள நாம ரூபங்களெல்லாம்‌ ( பிரளயகாலத்தில்‌ )
அவனுடைய வயிற்றினுள்‌ விளங்குகிறபடியால்‌ ஸ்ரீதரன்‌ தாமோதரனாகிறான்‌.
என்று புராணத்தில்‌ சொல்லியபடியும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
“‘ தாமோதரனைத்‌ தனி முதல்வனை ஞால முண்டவனை ” என்று நம்மாழ்வார்‌ இவ்வர்த்தத்தை உணர்த்‌தினார்‌.
“தமாதி, ஸாதநேந உதாரா உத்க்ருஷ்டா மதிர்யா தயா இதி தமோதர ;,:’
தமம்‌ முதலிய ஸாதனங்‌களால்‌ உதாரமாய்‌ ( உயர்ந்ததாய்‌ ) விளங்கும்‌ புத்தி தமோதரா ‘ எனப்படும்‌.
அந்த புத்தியால்‌ அறியப்படு மவன்‌ தாமோதரன்‌ . என்றும்‌ சங்கரர்‌ பொருள் உரைத்தார்‌.
“தாமாத்‌, தமோதரம்‌ விது;
தாமோதரனை தாமத்தினால்‌ அறிகிறார்கள்‌ என்ற பகவத் வசனம்‌ இவ்வர்த்தத்துக்கு ப்ரமாணம்‌.
“ தேலாநாம்‌ ஸூகமும் ஸித்வாத்‌ த;மாத்‌, தமோதரம்‌ விது; “` தேவர்களுக்கு ஸுகமானவற்றை உபதேசிப்பதாலும்‌.
கயிற்றினால்‌ கட்டப்பட்டகாலும்‌ தாமோதரனென்று அறிகிறார்கள்‌.
என்ற ப்ரமாண த்தின்‌ படியும்‌ பொருள்‌ சொள்ளலாம்‌.

ஆக. இப்பன்னிரு நாமங்களின்‌ பொருளும்‌ விவரிக்கப்‌ பட்டதாயிற்று.
வாஸுதேவன்‌ முதலான நான்கு வியூஹ மூர்த்திகளினின்றும்‌
மூன்று மூன்று மூர்த்திகளாகத்‌ தோன்‌றிய கேசவாதி மூர்த்யந்தரங்களுள்ளதாகவும்‌,
இவர்‌கள்‌ நெற்றி முகலிய அவயவங்களில்‌ நின்‌று கொண்டு சரிரத்தை ரக்ஷிக்கறார்களென்றும்‌.
தியானிப்பவர்களுடைய தாபங்களைப்‌ போக்கடிக்கிறார்களென்றும்‌
பாஞ்சராத்ர சாஸ்த்ரத்‌தில்‌ ப்ரதிபாதிக்கப்பட்டது.
இக் கேசவாதி நாமங்‌ கள்‌ அவர்களைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌.

———————————–

தொடரடைவுகள் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம்
(http://tamilconcordance.in) தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை

————

கேசவ (2)
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4
கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4

கேசவநம்பீ (1)
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/3

கேசவற்கு (1)
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1

கேசவன் (10)
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – நாலாயி:13/2
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ – நாலாயி:381/3
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1
கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3

கேசவன்-தன் (1)
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/1,2

கேசவனே (2)
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3

கேசவனை (6)
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/1,2
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் – நாலாயி:2181/3
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை – நாலாயி:2649/3
கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1
திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை – நாலாயி:3329/1

கேசவனோடு (1)
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3

கேசவா (10)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3
கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/3,4
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/1,2
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1

கேசனே (1)
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4

————-

நாராயணமே (9)
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1538/4
நடந்தானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1539/4
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1540/4
நல்லானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1541/4
நடையா உண்ண கண்டான் நாமம் நமோ_நாராயணமே – நாலாயி:1542/4
நானும் சொன்னேன் நமரும் உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1543/4
நன்று காண்-மின் தொண்டீர் சொன்னேன் நமோ_நாராயணமே – நாலாயி:1544/4
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ_நாராயணமே – நாலாயி:1545/4
நங்கள் வினைகள் தவிர உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1546/4

நாராயணன் (12)
நலிவான் உற கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை – நாலாயி:271/2
நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை – நாலாயி:298/3
நாயக பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி – நாலாயி:480/6
நாற்ற துழாய் முடி நாராயணன் நம்மால் – நாலாயி:483/3
நம்மை உடையவன் நாராயணன் நம்பி – நாலாயி:563/2
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் – நாலாயி:2382/1
நற்பொருள் தான் நாராயணன் – நாலாயி:2394/4
நாராயணன் என்னை ஆளி நரகத்து – நாலாயி:2395/1
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே – நாலாயி:3337/2
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே – நாலாயி:3438/4
அற்புதன் நாராயணன் அரி வாமனன் – நாலாயி:3735/1
நாராயணன் நங்கள் பிரான் அவனே – நாலாயி:3803/4

நாராயணன்-தன்னை (1)
நச்சுவார் முன் நிற்கும் நாராயணன்-தன்னை
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன – நாலாயி:107/1,2

நாராயணனாலே (1)
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே – நாலாயி:3075/4

நாராயணனுக்கு (1)
ஞாலம் முற்றும் உண்டு ஆலிலை துயில் நாராயணனுக்கு இவள் – நாலாயி:296/1

நாராயணனே (4)
நாராயணனே நமக்கே பறை தருவான் – நாலாயி:474/7
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர் – நாலாயி:1315/2
நாகம் ஏறி நடு கடலுள் துயின்ற நாராயணனே உன் – நாலாயி:3255/3
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே என்றுஎன்று – நாலாயி:3258/2

நாராயணனை (2)
இன்று நாராயணனை வர கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் – நாலாயி:554/4
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி – நாலாயி:3948/1

நாராயணா (17)
நல் வகையால் நமோ_நாராயணா என்று நாமம் பல பரவி – நாலாயி:11/3
நச்சு முலை உண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ – நாலாயி:51/4
நண்ணி தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் – நாலாயி:140/2
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை – நாலாயி:514/1
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:948/4
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:949/4
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:950/4
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:951/4
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:952/4
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:953/4
நல் பொருள் காண்-மின் பாடி நீர் உய்-மின் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:954/4
நல் துணை ஆக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:955/4
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:956/4
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் – நாலாயி:957/4
நாமம் பல சொல்லி நாராயணா என்று – நாலாயி:2289/1
நாராயணா ஓ மணி_வண்ணா நாக_அணையாய் – நாலாயி:2694/4
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா என்றுஎன்று – நாலாயி:3297/2

நாராயணாய (3)
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ_நாராயணாய என்று – நாலாயி:4/3
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ_நாராயணாய என்று – நாலாயி:12/3
நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ_நாராயணாய என்பாரே – நாலாயி:555/4

—————

மாதவ (1)
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் – நாலாயி:2171/1

மாதவம் (1)
கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு – நாலாயி:931/3

மாதவர் (1)
மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் – நாலாயி:925/3

மாதவன் (20)
மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி – நாலாயி:373/3
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை – நாலாயி:442/2
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று – நாலாயி:482/7
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி_வண்ணன் மணி முடி மைந்தன் – நாலாயி:545/1
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் – நாலாயி:557/3
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை – நாலாயி:617/1
மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல் – நாலாயி:641/1
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே – நாலாயி:816/3,4
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் – நாலாயி:1211/3
மாதவன் தான் உறையும் இடம் வயல் நாங்கை வரி வண்டு – நாலாயி:1248/3
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன்
தார் மன்னு தாசரதி ஆய தட மார்வன் – நாலாயி:1684/1,2
வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர் – நாலாயி:2220/3
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/3
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில் – நாலாயி:2856/2
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது – நாலாயி:3077/1
வண்டு ஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3353/3
மாதவன் என்று என்று – நாலாயி:3941/1
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே – நாலாயி:3982/4
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் – நாலாயி:3983/1
வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே – நாலாயி:3986/4

மாதவன்-தன் (3)
மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய் மாதவன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:162/4
மருப்பு ஒசித்த மாதவன்-தன் வாய் சுவையும் நாற்றமும் – நாலாயி:567/3
மது வாயில் கொண்டால் போல் மாதவன்-தன் வாய் அமுதம் – நாலாயி:575/2

மாதவன்-பால் (1)
மாதவன்-பால் சடகோபன் – நாலாயி:2964/1

மாதவனாரே (1)
வடிவு ஆர் மாதவனாரே – நாலாயி:2963/4

மாதவனே (9)
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் – நாலாயி:141/4
மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமல சுனை வேங்கடவா – நாலாயி:1036/2,3
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால் – நாலாயி:1395/2
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – நாலாயி:1611/2
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2219/3
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2225/3
மண் மிசை யோனிகள்-தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம் – நாலாயி:2831/1,2
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே – நாலாயி:3076/4
வாயான் மாதவனே – நாலாயி:3940/4

மாதவனை (9)
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் – நாலாயி:432/1
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை – நாலாயி:503/1
மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள் – நாலாயி:1212/2
மரு தார் தொல் புகழ் மாதவனை வர – நாலாயி:1942/3
மட்டு ஆர் பூம் குழல் மாதவனை வர – நாலாயி:1945/3
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் – நாலாயி:2387/3
மாது ஆய மாலவனை மாதவனை யாதானும் – நாலாயி:2446/2
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு – நாலாயி:2649/3,4
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் – நாலாயி:3933/1

மாதவனோடு (1)
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கு இருப்பாரே – நாலாயி:533/4

மாதவா (8)
வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம் – நாலாயி:138/1
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:384/3
வாக்கு தூய்மை இலாமையினாலே மாதவா உன்னை வாய்க்கொள்ள மாட்டேன் – நாலாயி:433/1
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4
மான் ஏய் நோக்கி மடவாளை மார்பில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா – நாலாயி:2947/1,2
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா – நாலாயி:2948/2,3
மாய்த்த ஆய மாயனே வாமனனே மாதவா
பூ தண் மாலை கொண்டு உன்னை போதால் வணங்கேனேலும் நின் – நாலாயி:3256/2,3
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும் – நாலாயி:3911/1

————

கோவிந்தற்கு (1)
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல் – நாலாயி:635/1

கோவிந்தன் (20)
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ – நாலாயி:54/3
குட்டன் வந்து என்னை புறம்புல்குவான் கோவிந்தன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:108/4
குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு – நாலாயி:254/2
குட வயிறுபட வாய் கடைகூட கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:276/2
இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:277/2
குறு வெயர் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:282/2
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் – நாலாயி:367/3
கொம்பின் ஆர் பொழில்வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர் – நாலாயி:368/1
கொத்து அலர் பூம் கணை தொடுத்துக்கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி – நாலாயி:506/3
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் – நாலாயி:557/3
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி – நாலாயி:579/3
குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ மிறை செய்து எம்மை – நாலாயி:603/3
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/3
கோவிந்தன் குட கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து – நாலாயி:3078/1
எறியும் தண் காற்றை தழுவி என்னுடை கோவிந்தன் என்னும் – நாலாயி:3266/2
கோமள வான் கன்றை புல்கி கோவிந்தன் மேய்த்தன என்னும் – நாலாயி:3268/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கொள்-மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை – நாலாயி:3732/1,2
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் – நாலாயி:3826/3
குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான் – நாலாயி:3952/1

கோவிந்தன்-தன் (2)
குழற்கு அணியாக குழல்வாராய் அக்காக்காய் கோவிந்தன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:167/4
கொண்டு இவை பாடி குனிக்க வல்லார் கோவிந்தன்-தன் அடியார்கள் ஆகி – நாலாயி:212/3

கோவிந்தன்-தனக்கு (1)
குடி அடியார் இவர் கோவிந்தன்-தனக்கு என்று – நாலாயி:3986/1

கோவிந்தனாம் (1)
கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தனாம் எனா ஓடும் – நாலாயி:3269/1

கோவிந்தனாரே (2)
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே – நாலாயி:3907/4
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும் – நாலாயி:3908/1

கோவிந்தனுக்கு (1)
கொங்கை தலம் இவை நோக்கி காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா – நாலாயி:620/3

கோவிந்தனுடைய (1)
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில் – நாலாயி:285/1

கோவிந்தனே (1)
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே – நாலாயி:3077/4

கோவிந்தனை (5)
புற்று அரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்று இனம் மேய்த்து வர கண்டு உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம் – நாலாயி:253/1,2
செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே – நாலாயி:281/4
கோவலர் கோவிந்தனை குறமாதர்கள் பண் குறிஞ்சி – நாலாயி:352/3
கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்-கொலோ – நாலாயி:1828/4
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை – நாலாயி:3662/1

கோவிந்தனோடு (2)
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில கோவிந்தனோடு இவளை – நாலாயி:288/3
கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌத்துவம் உடை கோவிந்தனோடு
கூடியாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே – நாலாயி:378/3,4

கோவிந்தா (15)
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை உணாயே – நாலாயி:134/4
குணம் நன்று உடையர் இ கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லு கொள்ளாய் – நாலாயி:142/2
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:384/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன்தன்னை – நாலாயி:500/1
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு – நாலாயி:501/4
இற்றை பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு – நாலாயி:502/5,6
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக்கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மை – நாலாயி:522/2,3
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
குழகனே என்தன் கோமள பிள்ளாய் கோவிந்தா என் குடங்கையில் மன்னி – நாலாயி:714/1
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/2,3
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே – நாலாயி:3123/4
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின் – நாலாயி:3916/1

கோவியர் (1)
பூ_மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி – நாலாயி:1169/3

கோவினார் (1)
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல்_வண்ணா – நாலாயி:1005/2

கோவினை (5)
ஆட்கொள்ள தோன்றிய ஆயர்-தம் கோவினை
நாள் கமழ் பூம் பொழில் வில்லிபுத்தூர் பட்டன் – நாலாயி:85/1,2
கோவினை நாவுற வழுத்தி என்தன் கைகள் கொய் மலர் தூய் என்று-கொலோ கூப்பும் நாளே – நாலாயி:650/4
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தை தலை கோவினை குடம் ஆடிய கூத்தனை – நாலாயி:1570/3
அண்டர்-தம்_கோவினை இன்று அணுகும்-கொல் என் ஆய் இழையே – நாலாயி:1830/4
கோவினை குடந்தை மேய குரு மணி திரளை இன்ப – நாலாயி:2037/2

கோவே (22)
அஞ்சினேன் காண் அமரர்_கோவே ஆயர் கூட்டத்து அளவன்றாலோ – நாலாயி:131/3
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே – நாலாயி:136/4
குடங்கள் எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால்செய்ய வல்ல என் மைந்தா – நாலாயி:188/1,2
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்திப்பூ சூட்ட வாராய் – நாலாயி:188/4
கும்ப களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே – நாலாயி:199/2
குடத்தை எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டை பணித்தருளாயே – நாலாயி:529/3,4
கல் அணை மேல் கண் துயில கற்றனையோ காகுத்தா கரிய கோவே – நாலாயி:732/4
வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே – நாலாயி:739/4
எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே – நாலாயி:901/4
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே
நால் ஆகிய வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1314/1,2
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர்-தம்_கோவே என்று – நாலாயி:1578/2
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1618/4
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1619/4
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1620/4
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1621/4
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1622/4
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1623/4
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1624/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே – நாலாயி:1625/4
ஆடு ஏறு மலர் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1626/4
சுற்ற குழாத்து இளம் கோவே தோன்றிய தொல் புகழாளா – நாலாயி:1886/2
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே – நாலாயி:3863/4

கோவை (14)
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர்-தம் அமுதத்தினை – நாலாயி:473/3
கோவை மணாட்டி நீ உன் கொழும் கனி கொண்டு எம்மை – நாலாயி:599/1
ஆய் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை குரவை முன்னே – நாலாயி:1091/2
கோவை தமிழால் கலியன் சொன்ன – நாலாயி:1367/3
சொன்ன இன் தமிழ் நல் மணி கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார் – நாலாயி:1617/3
இனம் மேவு வரி வளை கை ஏந்தும் கோவை ஏய் வாய மரகதம் போல் கிளியின் இன் சொல் – நாலாயி:1622/3
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலிகன்றி ஒலிசெய்த இன்ப பாடல் – நாலாயி:1627/2,3
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை
அல்லல் செய்து வெம் சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான் – நாலாயி:1700/1,2
கோவை இன் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார் தட மா மலர் மிசை – நாலாயி:1846/1
கோவை வாயாள்-பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கை – நாலாயி:3253/1
கோவை வீய சிலை குனித்தாய் குல நல் யானை மருப்பு ஒசித்தாய் – நாலாயி:3253/2
குவளை தடம் கண்ணும் கோவை செ வாயும் பயந்தனள் – நாலாயி:3290/2
கோவை வாய் துடிப்ப மழை கண்ணொடு என் செய்யும்-கொலோ – நாலாயி:3519/4
மது மண மல்லிகை மந்த கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து – நாலாயி:3876/3

——–

விட்டுசித்தர் (2)
வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை – நாலாயி:606/3
மெய்ம்மை பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர் – நாலாயி:616/2

விட்டுசித்தன் (30)
வில்லாண்டான்-தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் – நாலாயி:12/2
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இ – நாலாயி:22/3
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை – நாலாயி:63/3
வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார் – நாலாயி:96/3
வேய் தடம் தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து – நாலாயி:117/2
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த – நாலாயி:127/2
வேத பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை – நாலாயி:201/3
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் – நாலாயி:212/2
செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டுசித்தன் சொல் – நாலாயி:253/3
வண்ணம் வண்டு அமர் பொழில் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:263/3
குழல் முழவம் விளம்பும் புதுவை_கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார் – நாலாயி:285/3
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன – நாலாயி:296/3
செந்தமிழ் தென் புதுவை விட்டுசித்தன் சொல் – நாலாயி:317/3
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல் – நாலாயி:348/3
மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே – நாலாயி:359/4
கோது இல் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல் – நாலாயி:370/3
பத்தராய் இறந்தார் பெறும் பேற்றை பாழி தோள் விட்டுசித்தன் புத்தூர்_கோன் – நாலாயி:380/2
வீர் அணி தொல் புகழ் விட்டுசித்தன் விரித்த சொல் – நாலாயி:390/2
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்_கோன் விட்டுசித்தன் விருப்புற்று – நாலாயி:401/2
திருவரங்க தமிழ் மாலை விட்டுசித்தன் விரித்தன கொண்டு – நாலாயி:411/3
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார் – நாலாயி:422/3
வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:432/3
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் – நாலாயி:442/3
பரவுகின்றான் விட்டுசித்தன் பட்டினம் காவல் பொருட்டே – நாலாயி:452/4
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவை_கோன் விட்டுசித்தன்
ஒன்றினோடி ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே – நாலாயி:462/3,4
வேயர்-தங்கள் குலத்து உதித்த விட்டுசித்தன் மனத்தே – நாலாயி:473/1
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:513/3
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:626/3
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை – நாலாயி:636/2
விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல் – நாலாயி:646/2

விட்டுசித்தன்-தன் (1)
வேத வாய் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன்-தன்
கோதை வாய் தமிழ் வல்லவர் குறைவு இன்றி வைகுந்தம் சேர்வரே – நாலாயி:523/3,4

விட்டுவே (2)
வேய் தடம் தோளார் விரும்பும் கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் – நாலாயி:143/4
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே – நாலாயி:3078/4

———–

மதுசூத (2)
மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடி மேல் – நாலாயி:3538/1
மாய்த்த அம்மான் மதுசூத அம்மான் உறை – நாலாயி:3731/2

மதுசூதற்கு (1)
மாவை வல் வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி – நாலாயி:3534/3

மதுசூதன் (8)
மழை வந்து எழு நாள் பெய்து மா தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை – நாலாயி:265/2
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னை – நாலாயி:561/3
மன் ஆகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் – நாலாயி:571/3
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற – நாலாயி:1393/3
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் – நாலாயி:1684/1
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டு அவன்-கண் பாசத்தால் நைவாயே – நாலாயி:3013/3,4
வான் உளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3031/2
மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3930/3

மதுசூதன்-தன்னை (1)
மன கேதம் சாரா மதுசூதன்-தன்னை
தனக்கே தான் தஞ்சமா கொள்ளில் எனக்கே தான் – நாலாயி:2442/1,2

மதுசூதனன் (5)
மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயில் குழலின் ஓசை செவியை பற்றி வாங்க – நாலாயி:279/2
மன்னவன் மதுசூதனன் என்பார் வானகத்து மன்றாடிகள் தாமே – நாலாயி:377/4
வண்டு உண் துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன் – நாலாயி:2526/3
வள பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல்வினையேன் – நாலாயி:2536/3
விட்டு இலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே – நாலாயி:3079/4

மதுசூதனன்-தன்னை (1)
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் – நாலாயி:442/2,3

மதுசூதனனே (2)
வருக என்று உன் மகன்-தன்னை கூவாய் வாழ ஒட்டான் மதுசூதனனே – நாலாயி:204/4
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மதுசூதனனே – நாலாயி:3563/4

மதுசூதனனை (2)
வங்கம் விட்டு உலவும் கடல் பள்ளி மாயனை மதுசூதனனை மார்பில் – நாலாயி:376/3
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் – நாலாயி:432/1

மதுசூதனா (2)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
வள்ளலே மதுசூதனா என் மரகத_மலையே உனை நினைந்து – நாலாயி:3067/1

மதுசூதனே (2)
மண் எல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன் – நாலாயி:144/2
மல்லா குடம் ஆடீ மதுசூதனே உலகில் – நாலாயி:1476/3

மதுசூதனை (2)
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி – நாலாயி:3080/1
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை – நாலாயி:3662/1

மதுசூதனையே (1)
வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி – நாலாயி:3527/1

மதுசூதா (5)
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறு அட்ட பிரானே – நாலாயி:440/1,2
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – நாலாயி:1611/2
மணியே மணி மாணிக்கமே மதுசூதா
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதீ – நாலாயி:2029/3,4
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/3
மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய் – நாலாயி:3638/1

————–

திரிவிக்கிரமன் (5)
தெண் புழுதி ஆடி திரிவிக்கிரமன் சிறு புகர்பட வியர்த்து – நாலாயி:94/2
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னை தீண்டும் வண்ணம் – நாலாயி:510/3
வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன்
தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1832/2,3
திரிவிக்கிரமன் செந்தாமரை கண் எம்மான் என் செம் கனி வாய் – நாலாயி:3081/1
தெய்வ_நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடி இணை மிசை – நாலாயி:3417/1

திரிவிக்கிரமனையே (1)
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே – நாலாயி:3080/4

திரிவிக்கிரமா (1)
சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திரு ஆயர்பாடி பிரானே – நாலாயி:145/3

———-

வாமன் (3)
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே – நாலாயி:2202/2,3
பேர் வாமன் ஆகா-கால் பேராளா மார்பு ஆர – நாலாயி:2600/2
பேர் வாமன் ஆகிய காலத்து மூ அடி மண் – நாலாயி:2693/1

வாமன (2)
வன் புற்று அரவின் பகை கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும் – நாலாயி:146/3
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே – நாலாயி:203/1

வாமனன் (13)
மண் பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:112/4
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை – நாலாயி:442/2
வாட்டம் இன்றி மகிழ்ந்து உறை வாமனன்
ஓட்டரா வந்து என் கை பற்றி தன்னொடும் – நாலாயி:535/2,3
அறிந்துஅறிந்து வாமனன் அடி இணை வணங்கினால் – நாலாயி:825/1
வாமனன் அடி இணை மருவுவரே – நாலாயி:1457/4
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் – நாலாயி:1684/1
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண் மிசையே – நாலாயி:2830/4
வாமனன் என் மரகத_வண்ணன் தாமரை_கண்ணினன் – நாலாயி:3082/1
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் – நாலாயி:3202/2
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் – நாலாயி:3264/1
அற்புதன் நாராயணன் அரி வாமனன்
நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம் – நாலாயி:3735/1,2
பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து என்தன் – நாலாயி:3737/3
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே – நாலாயி:3910/4

வாமனனாய் (2)
வாய் மொழிந்து வாமனனாய் மாவலி-பால் மூவடி மண் – நாலாயி:2299/1
கோட்டு அங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் கண்டுமே – நாலாயி:3610/4

வாமனனார் (1)
மச்சு அணி மாட மதில் அரங்கர் வாமனனார்
பச்சை பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற – நாலாயி:610/1,2
வாமனனே (4)
மருவி தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே – நாலாயி:3081/4
மாய்த்த ஆய மாயனே வாமனனே மாதவா – நாலாயி:3256/2
மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய் – நாலாயி:3638/1
மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய் – நாலாயி:3643/1

வாமனனை (2)
வாமனனை மறி கடல் சூழ் வயல் ஆலி வள நாடன் – நாலாயி:1677/2
வாட்டம் இல் புகழ் வாமனனை இசை – நாலாயி:3052/1

வாமனா (4)
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனம் ஆய வாமனா – நாலாயி:788/4
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின் – நாலாயி:3133/1
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா
குரை கழல் கைகூப்புவார்கள் கூட நின்ற மாயனே – நாலாயி:3259/1,2
மாய கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால் – நாலாயி:3715/1

வாமனாவோ (1)
வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்றுஎன்று – நாலாயி:3298/2

—————

சீதனையே (1)
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – நாலாயி:2556/4
சிதை_மணாளனை (1)
சீற்றமிலாதானை பாடி பற சீதை_மணாளனை பாடி பற – நாலாயி:310/4

சீதை_மணாளா (1)
சிற்றாயர் சிங்கமே சீதை_மணாளா சிறுக்குட்ட செங்கண்மாலே – நாலாயி:248/2
மாதவன் (1)
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
சீரன் (1)
வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3277/2
சீராமா (2)
சிற்றவை-தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ – நாலாயி:724/4
சிலை வலவா சேவகனே சீராமா தாலேலோ – நாலாயி:726/4
சீராளா (1)
சீராளா செந்தாமரை கண்ணா தண் துழாய் – நாலாயி:1897/3

சீரான் (2)
சீரான் திருவேங்கடம் – நாலாயி:2157/4
உரு ஆகிக்கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான்
திரு ஆகம் தீண்டிற்று சென்று – நாலாயி:2604/3,4

சீரானை (3)
சீரானை எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை – நாலாயி:1088/2
கிடந்தானை கேடு இல் சீரானை முன் கஞ்சை – நாலாயி:2315/3
சீரானை செம் கண் நெடியானை தேன் துழாய் – நாலாயி:2708/4

————–

இருடீகேசன் (6)
தன்னில் பொலிந்த இருடீகேசன் தளர் நடை நடவானோ – நாலாயி:88/4
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே – நாலாயி:233/4
இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே – நாலாயி:375/4
எ திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய – நாலாயி:550/1
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே என்று – நாலாயி:622/2
இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம் – நாலாயி:3084/1

இருடீகேசன்-தனக்கு (1)
இண்ட குலத்தை எடுத்து களைந்த இருடீகேசன்-தனக்கு
தொண்ட குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி – நாலாயி:5/2,3

இருடீகேசனுக்கு (1)
ஏதம் இன்றி உரைப்பவர்கள் இருடீகேசனுக்கு ஆளரே – நாலாயி:370/4

இருடீகேசனே (1)
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே – நாலாயி:3083/4

இருடீகேசா (3)
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா முலை உணாயே – நாலாயி:133/4
ஏர் விடைசெற்று இளம் கன்று எறிந்திட்ட இருடீகேசா என்தன் கண்ணே – நாலாயி:148/4
என் அப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – நாலாயி:467/4

————-

நாபனுக்கு (1)
செங்கமல_நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே – நாலாயி:1675/4

நாபி (1)
பின்னை தன் நாபி வலயத்து பேர் ஒளி சேர் – நாலாயி:2715/3

நாபியான் (1)
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ் பிறப்பும் – நாலாயி:2250/3
பற்பநாபன் (4)
பாடிப்பாடி வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன் – நாலாயி:137/2
பாழியம் தோள் உடை பற்பநாபன் கையில் – நாலாயி:477/4
பால் நிற கடல் கிடந்த பற்பநாபன் அல்லையே – நாலாயி:774/4
பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன் – நாலாயி:3085/1

பற்பநாபனையே (1)
மருடியேலும் விடேல் கண்டாய் நம்பி பற்பநாபனையே – நாலாயி:3084/4

பற்பநாபனோடும் (1)
பாஞ்சசன்னியத்தை பற்பநாபனோடும்
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை – நாலாயி:576/1,2

பற்பநாபா (3)
பட்டி கன்றே கொட்டாய் சப்பாணி பற்பநாபா கொட்டாய் சப்பாணி – நாலாயி:79/4
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய் – நாலாயி:149/4
பா மரு மூ_உலகும் படைத்த பற்பநாபா ஓ – நாலாயி:3616/1

பற்பபாதன் (1)
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே – நாலாயி:783/4

பற்பபாதா (1)
பா மரு மூ_உலகும் அளந்த பற்பபாதா ஓ – நாலாயி:3616/2

———

தாம்பால் (4)
பழம் தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான் – நாலாயி:26/3
பதரப்படாமே பழம் தாம்பால் ஆர்த்த – நாலாயி:31/3
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால்
சோப்பூண்டு துள்ளி துடிக்கத்துடிக்க அன்று – நாலாயி:122/2,3
தாம்பால் ஆப்புண்டாலும் அ தழும்பு தான் இளக – நாலாயி:2602/1

தாம்பினால் (2)
கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டு உண்ண – நாலாயி:937/1
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம் மோதர கையால் ஆர்க்க தழும்பு இருந்த – நாலாயி:1890/2,3

தாம்பு (1)
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செ வாயும் – நாலாயி:715/2

தாம்புகளால் (1)
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடை கலந்தானை எம்மானை என் சொல்லி புலம்புவனே – நாலாயி:2563/3,4

தாம்பே (1)
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு – நாலாயி:2103/4
தாமோதரற்கு (1)
தமரும் பிறரும் அறிய தாமோதரற்கு என்று சாற்றி – நாலாயி:299/2

தாமோதரன் (6)
தடம் கை விரல் ஐந்தும் மலர வைத்து தாமோதரன் தாங்கு தட வரைதான் – நாலாயி:270/2
தன் பேரிட்டுக்கொண்டு தரணி-தன்னில் தாமோதரன் தாங்கு தட வரைதான் – நாலாயி:272/2
சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் – நாலாயி:570/1
வண்டு உண் துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண் நேர் அன்ன ஒள் நுதலே – நாலாயி:2526/3,4
தாமோதரன் உரு ஆகிய சிவற்கும் திசைமுகற்கும் – நாலாயி:3086/3
சார்வே தவநெறிக்கு தாமோதரன் தாள்கள் – நாலாயி:3924/1

தாமோதரன்-தன் (1)
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய் தாமோதரன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:169/4

தாமோதரனாய் (1)
தானாய் பின்னும் இராமனாய் தாமோதரனாய் கற்கியும் – நாலாயி:1727/2

தாமோதரனார் (1)
தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமைசெய் என்றால் செய்யாது எமக்கு என்று – நாலாயி:2616/1,2

தாமோதரனே (1)
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே – நாலாயி:3085/4

தாமோதரனை (3)
குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் – நாலாயி:242/1
தாயை குடல்_விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவி தொழுது – நாலாயி:478/4,5
தாமோதரனை தனிமுதல்வனை ஞாலம் உண்டவனை – நாலாயி:3086/1

தாமோதரா (8)
சாவ பால் உண்டு சகடு இற பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் – நாலாயி:150/4
தாய் சொல்லு கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே – நாலாயி:209/4
சூடி வருகின்ற தாமோதரா கற்று தூளி காண் உன் உடம்பு – நாலாயி:246/2
சாடு இற பாய்ந்த தலைவா தாமோதரா என்று – நாலாயி:386/3
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா – நாலாயி:463/2
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே – நாலாயி:699/4
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரை_கண்ணனே சப்பாணி – நாலாயி:1890/4
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்றுஎன்று – நாலாயி:3299/2

———–

(துவாதச திருநாமங்கள் வரிசையிலே இப்பாசுரம் -கேசவன் நாராயணன் மாதவன்
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு-பல்லாண்டு பாட -ஆள்செய்ய -கைங்கர்யம் செய்ய தூண்டுகிறார் )

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–பெரிய திருவந்தாதி-65-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீராமருக்கு சங்கத் தமிழ் மாலை – ஸ்ரீபாவைப்படி ஸ்ரீராமாயணம்— ஸ்ரீசுஜாதா தேசிகன் அவர்கள் தொகுத்து அருளியது

April 9, 2023

ஸ்ரீ பால காண்டம்

1. உத்தமன் யார் என்று நாரதரை வால்மீகி கேட்க
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
உதவ
தேவாதி தேவன் சீர் மல்கும்
அயோத்தியில்
கதிர் மதியமாக
பாரோர் புகழ அவதரித்தான்.
( கதிரவன் குலத்தில் ; நிலவின் குணத்துடன் )

2. தசரதனிடம்
’யாம் வந்த காரியம் –
தவத்தவரை காக்க
ஆற்றப் படைத்த மகன்
ராமனை கொடு என்று விஸ்வாமித்திரர் கேட்க,
தசரதன் அவன்
பூவைப் பூ வண்ணா
என்று மறுக்க
வசிஷ்டர்
இளம் சிங்கம்
ராமரை அனுப்புங்கள் என்று கூற,
ராமனை அனுப்பி வைத்தான் தசரதன்.
3. பொற்றாமரை அடி
கல்லில் பட அகலிகையின் மேல்
சாபம் இழிந்தது.
4. திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற் போல்
ராமன்   சீதையை நோக்க —
செங்கண் சிறுச் சிறிதே …
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலை
நோக்கினாள்.

5. ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல,
வில் அரைவில் ஆக, ஜனகரின் புதல்வி சீதை ராமருக்கு
செல்வ பெண்டாட்டி
ஆனாள்.
———-
ஸ்ரீ அயோத்தியா காண்டம்
6. தசரதன் ராமனுக்கு இளவரசு பட்டத்தை பரிசுரைக்க,
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழத் துயிலணை மேல் இருந்த
தசரதனிடம்
ஒருத்தி ஓர் இரவில்
இரண்டு வரம்
வேண்டுவன கேட்க,
உன்மகன் தான் என்று கேள்விப்பட்டு
ஒருத்தி
வாய் நெகிழ்ந்து துடிக்கத்
தாயைக் குடல் விளக்கம் செய்த
காகுத்தன்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி,
சீதையுடன்
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் என்று கானகம் செல்ல,
உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
என்று லக்ஷ்மணன் முன் சென்றான்.

7.கறவைகள் பின் செல்லும் கன்றுகள் போல்,
நாடெல்லாம்
பின் சென்றது.

8.’பேய்ப் பெண்ணே!’
என்று அந்த ஒருத்தியைப் பரதன் வசை பாடி, காட்டுக்குச் சென்று ’அண்ணா !
வல்லீர்கள் நீங்களே !துன்பதுக்கு காரணம்
நானே தான் ஆயிடுக என்று
எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால்
தத்துவம் அன்று என்று கூறி, 
ஆற்றாது வந்து அடி பணிந்து  நிற்க,
செம்பொற் கழலடியை சம்மானமாக’
கொடுத்தனுப்பினார் ராமர்.

9.கள்ளம் தவிர்ந்து
ராமன்
உள்ளம் புகுந்த
குகனை
‘உம்பியும் நீயும்’
என்று சொந்தம் கொண்டாட,
கூடி இருந்து குளிர்ந்தான்.

10.பாதுகா ராணியைக்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே என்று சீரிய சிங்காசனத்தில்
அமர்த்தினான் பரதன்.
———-
ஸ்ரீ  ஆரண்ய காண்டம்
11. என்றென்றுன் சேவகமே
என்று இருக்கும்
முனிவர்களும் யோகிகளையும்
ராக்ஷசர்களிடமிருந்து
ஆழி போல் மின்னி சீறி அருளினான்.

12. பேய்முலை நஞ்சுண்டு
நற்செல்வன் தங்காய் போல்
வந்த சூர்ப்பணகையின் அகந்தை
அபிமானத்தைப் பங்கமாக்கினார்.

13. போதரிக் கண்ணினாய் (மான் போன்ற கண் உடையவள் )
மாயமானை வேண்டுமெனக் கேட்க, மான்பின் எம்பெருமான் ஓட,
வல்லை உன் கட்டுரைகள்
கேட்ட இளைய பெருமான்
மாற்றமும் தாராமல், வாசல் திறவாதார்
என்று சொல்லி விட்டு சென்றவுடன், சீதையைப்
பொல்லா அரக்கன்
அபகரித்தான்.

14. புள்ளரையன்
ஜடாயுவைப் பார்த்த ராமர்
ஆவாவென்று
அழுது, பின்
ஆராய்ந்து எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்று
மோட்சத்தை நல்கினான்.

15. சபரி ராமரைப் பார்த்து
உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
என்று
முழங்கை வழி வாரக்
கொடுத்த நற் பழங்களை ராமர் சுவைத்த பின் ,
‘உனக்கே நாம் ஆட் செய்வோம்’
என்று அவள் ஆசாரியன் திருவடியை அடைந்தாள்.
————–
கிஷ்கிந்தா காண்டம்
16. ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்த
ராமரைப் பார்த்த அனுமார்
கோது கலம் அடைந்து உய்யுமாறு எண்ணி தன் நேய நிலைக் கதவத்தை திறந்து
அதில் ராமரைப் பிரதிஷ்டை செய்தார்.
17. சீதை
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிக்கக்
கீழே விழுந்த
காசும் பிறப்பும்
சுக்ரீவன் காண்பிக்க ராமர் மனதில் சீதை
பரந்தன காண் ( இடமெங்கும் பரவி யிருந்தது )
என்றென்றும் உன் சேவகமே
என்றார் ராமர்.

18. வாலியை ஒரே அம்பினால் அடிக்க அது
சார்ங்க முதைத்த சரமழை போல்
வீழ்த்தியது.

19. இனித் தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
என்று சுக்ரீவனை எழுப்பி,
தென் இலங்கைக் கோமானைச் செற்ற
அரி என்ற பேரரவத்துடன்
வானரங்கள் கைங்கரியம் செய்ய வந்தது.

20. பாலன்ன வண்ணத்து
கணை யாழியை ராமர் அனுமானிடம் கொடுக்க சீதையைத் தேட நிமிர்ந்து
முழங்கிப் புறப்பட்டார்.
————–
ஸ்ரீ சுந்தர காண்டம்

21. ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
என்பதைப் போல அனுமார் கடலைத் தாண்டினார்.

22. ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே
தசரதன்
மருமகளே ! திருவே
என்று சீதையைக் கண்ட நாள் அனுமாருக்கு
‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாக’ இருந்தது.

23. ஆழி போல் மின்னிய
கணை யாழியைப் பெற்றுக்கொண்ட சீதை
‘மார்கழி நீராட மகிழ்ந்தேலோர்’
என்பது போல மகிழ்ந்தாள்.

24. ராவணன் அனுமார் வாலை தீயினால்
குடல் விளக்கம் செய்த போது,
இஷ்வாகு குலத்தின்
அணி விளக்கான
சீதையின் அருளால் தீ அனுமானுக்கு குளிர்ந்து, இலங்கையைத் தூசாக்கியது.

25. மாமாயன் மாதவன் வைகுந்தனை
இப்போதே எம்மை காக்க வரச் சொல்லு என்று
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே என்று
எதையும் கொடுக்காமல்,
கிங்கிணி வாய்ச் செய்த
தாமரைப் பூப் போன்ற சூடாமணியைக் கொடுத்து அனுப்ப, அனுமார்
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
என்பது போலப் பறந்து, ராமனிடம் சமர்ப்பிக்க
வருத்தமும் தீர்ந்து நாடு புகழும் பரிசாக
அனுமனைக் கட்டித் தழுவிக் கொண்டார்.
—————-
ஸ்ரீ யுத்த காண்டம்
26. கடல் வழி விடாமல் தடுக்க உலகினில் ராமர்
தோற்றமாய் நின்ற சடர் போல
காட்சி அளிக்க, கடலரசன்
அறியாத பிள்ளைகளோம்
அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
என்று சரணாகதி செய்ய, பாலம் கட்டப் பட்டது.

27. பொல்லா அரக்கனை
துறந்து,
ஆற்றாது வந்து உன்னை அடி பணிந்த
என்ற விபீஷணனனை
‘குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது’
என்பது போல
உன் தன்னோடு உற்றோமே யாவோம்
என்று அபயம் அளித்தார் ராமர்.

28. கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனை
கன்று குணிலா எறிந்தாய் என்பது போல வீழ்த்தி,
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலனாக
இந்திரஜித்தை வீழ்த்தி,
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்து,
மண்டோதரிக்கு
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையனாகக் காட்சி யளித்தார்.

29. வங்கக்கடல் கடைந்து
பாலம் கட்டி ராவணனை வீழ்த்த
யாம் வந்த காரியத்தை முடித்த ராமரை,
உக்கமும் தட்டொளியும் தந்து
தன் மணாளனை மீண்டும் கைபிடித்த சீதையுடன்
சீதாராம பட்டாபிஷேகம் அயோத்தியில்
நீங்காத செல்வம் நிறைந்து நடை பெற்றது.

30. மனத்துக்கு இனியானை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தால்,
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்யும் பேறு பெற்று
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்.
—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்–ஸ்ரீ அயோத்தியா காண்டம் .

April 8, 2023

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||–தனியன்

ஸ்ரீ யாமுனரின் திருக் குமாரரும்,
யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ
அந்த ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

ஸ்ரீ அயோத்தியா காண்டம்

கொங்கைவன் கூனி சொற்கொண்டு

கொடிய கைகேயி வரம் வேண்ட

கொடியவள் வாய்க் கடிய சொற் கேட்டு

மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாது ஒழிய
குலக்குமரா ! காடுறையப் போ என்று விடை கொடுப்ப

இரு நிலத்தை வேண்டாது

ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து

மைவாய களிறொழிந்து  மா ஓழிந்து தேர் ஒழிந்து

கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து

அங்கங்கள் அழகு மாறி

மான் அமரும் மெல் நோக்கி  வைதேகி இன் துணையா

இளங்கோவும்

வாளும்  வில்லும் கொண்டு பின் செல்லக்

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் நடந்து போய்ப்

பக்தியுடைக் குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து

வனம் போய்ப் புக்கு

காயோடு நீடு கனி உண்டு

வியன் கானம் மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயின்று

சித்திர கூடத்து இருப்ப,

தயரதன் தான்

நின் மகன் மேல் பழி விளைத்திட்டு

என்னையும் நீள் வானில் போக்க

என் பெற்றாய் கைகேசீ!

நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் என்று வான் ஏறத்

தேன் அமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து

ஆனை புரவி தேரோடு காலாள் அணி கொண்ட சேனை

சுமந்திரன் வசிட்டருடன் பரத நம்பி பணியத்

தம்பிக்கு மரவடியை வான் பணையம் வைத்துக் குவலயமும்

துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்

எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்துத்

திருவுடை திசைக் கருமம் திருந்தப் போய்த்

தண்ட காரண்யம் புகுந்து

————-

கொங்கை வன் கூனி சொற் கொண்டு

கொங்கை வன் கூனி சொற் கொண்டு குவலயத்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கருளி வன் கானிடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் –2-1-8-

கொங்கை வன் கூனி சொற் கொண்டு –
குப்ஜைக்கு கொங்கை போலே இறே முதுகிலே வலிய கூன் இருப்பது
இவளுடைய யுடம்பில் வக்கிரம் போலே காணும் இவளுடைய அறிவும்

இவளுடைய வசனத்தைக் கொண்டு -மாத்ரு பித்ரு வசன பரிபாலனம் செய்யப் போனார் என்கை ஒழிந்து
குப்ஜா வசனம் செய்யவோ போய்த்து என்னில்
கூன் தொழுததை கடிய சொல்லும் யுண்டாயிற்று
அந்தக் கடிய சொல்லைக் கேட்டு இறே சக்கரவர்த்தி அனுமதி செய்தது
எல்லாத்துக்கும் ஹேது இவள் ஆகையாலே இவள் சொல் கொண்டு போனார் என்னலாம் இறே -பீஜாங்குர  நியாயத்தாலே-

————-

கொடிய கைகேயி வரம் வேண்ட

கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓரடையாளம்–3-10-3-

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
கைகேயி யானவள் குப்ஜையாலே கலக்கப் பட்ட மனஸ்ஸை யுடையளாய்
எனக்குப் பண்டே தருவதாக அறுதியிட்ட வரம் இப்போது தர வேணும் என்று –
அது தன்னை -இன்னது இன்னது -என்று வியக்தமாகச் சொல்ல

———

கொடியவள் வாய் கடிய சொற் கேட்டு

கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு 
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தானூர்
தேன் தொடுத்த மலர் சோலை  திருவரங்கம் என்பதுவே -4- 8-4 –

கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
இவளுடைய கொடிய வார்த்தையை கேட்டவளுடைய கடிய சொற்களைக் கேட்டு

அவள் இவன் முகம் பாராது இறே துர் யுக்திகளை சொல்லிற்று –
இவள் ரமயதீதி ராம -என்கிறவருடைய முகத்தைப் பார்த்து இறே சொல்லிற்று
இவள் அவளிலும் கடியவள் இறே
அவளுக்கும் தாஸி இவள் இறே

கூன் தொழுத்தை சிதகுரைப்ப –
கூனியாகிற அடியாட்டி ஆனவள் –
திரு அபிஷேக மகோத்சவத்துக்கு அழிவான துருக்திகளை சொல்ல –

அதாவது –
ஜ்ஞாதி தாசீ யதோ ஜாத கைகேயாச்து  சஹோஷிதா –
பிரசாதம் சந்த்ர சங்காஸம்   ஆருரோஹா யதார்ச்சயா -என்கிறபடியே
ஜ்ஞாதி தாசியான இவள் யதார்ச்சிகமாக மாளிகை தளத்தின் மேலே ஏறிப் பார்த்தவாறே –

பெருமாளுடைய திரு அபிஷேகத்துக்கு
திருப் படை வீடு எல்லாம் கோடித்து கிடக்கிற படியையும் –
ப்ருந்தம் ப்ருந்தம் அயோத்யாயாம் -என்கிறபடியே
திரள் திரளாக வந்து கிடக்கிற ஜன சம்ருதத்தையும் –
மங்கள வாத்திய கோஷங்களையும்
கண்டு சஹிக்க மாட்டாதே தளத்தின் நின்றும் இறங்கி வந்து

கைகேயியை பர்த்சித்து -உன்  மாற்றாட்டி மகன் அபிஷேகம் செய்ய தேடுகிறான்
உன் மகன் அவனுக்கு  இனி இழி தொழில் செய்து இருக்கும் அத்தனை இறே
இத்தைப் பார்த்து கொண்டு நீ இருக்கிறது ஏது
அவனுடைய அபிஷேகத்தை குலைத்து உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கும்படி
ராஜாவோடே சொல்லு –

அதுக்கு உபாயம் –
முன்பே உனக்கு தந்து இருப்பது இரண்டு வரம் உண்டே
அவை இரண்டையும் உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை காடேற போக விடுகையும் -என்று வேண்டிக் கொள்

சத்ய தர்ம பரரான ராஜாவால்  செய்யாது ஒழியப் போகாது காண் -என்று
திரு அபிஷேகத்துக்கு விக்நமான
துருக்திகளை சொன்னாள் இறே

கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு –
இப்படி குப்ஜை  சொன்ன வார்த்தையாலே கலங்கி
பின்பு ராஜா உடனே
முன்பு சொன்ன இரண்டு வரமும் எனக்கு இப்போது தர வேணும் -அதாவது –
என் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை பதினாலு சம்வத்சரம் வனவாச அர்த்தமாக போக விடுகையும் -என்ன –

இத்தை கேட்டு ராஜா அதுக்கு இசையாமை தோற்ற இருக்க –

அறுபதினாயிரம் சம்வத்சரம் சத்ய தர்மத்தை தப்பாமல் நடத்தி போந்தவன்
இப்போது சத்தியத்தை அதிகிரமிக்கிறான்
சகல தேவதைகளுக்கும் இத்தை – அறிவியுங்கோள்-என்று இவள் கூப்பிட்ட வாறே –

அவன் -செயல் அற்றுப் போய் – செய்வதற்கு அனுமதி பண்ண
அவ்வளவிலே அவள் சுமந்த்ரனை போக விட்டு பெருமாளை அழைத்து விட

அவர் எழுந்து அருளி வந்து -சக்கரவர்த்தி கலங்கிக் கிடக்கிற படியை கண்டு
இதுக்கு அடி என் -என்று இவளைக் கேட்க –

இச் செய்திகளை எல்லாம் சொல்லி –
உம்மை காடேற போக விடுவதாக அழைத்து விட்டார்
உம்மை கண்ட வாறே சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் இத்தனை –

உங்கள் ஐயர் சத்ய தர்மத்தை நோக்கவும்
நீர் அவருக்கு பிரியம் செய்யவும்
வேண்டி இருந்தீர் ஆகில் -அவர் நினைவு நான் சொல்லுகிறேன் –
நீர் கடுகக் காடேறிப் போம் -என்று சொன்ன
கொடுமையை உடையளான கைகேயி வாயில் இந்த வெட்டிய சொல்லை கேட்டு

—————-

மலக்கியமா மனத்தினனாய் மன்னவனும் மறாது ஒழிய
குலக்குமரா ! காடுறையப் போ என்று விடை கொடுப்ப

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும் ஓர் அடையாளம் –3-10-3-

மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
அவன் இசையாது ஒழிய
அறுபதினாயிரம் ஸம்வத்ஸரம் ஸத்ய ப்ரதிஞ்ஞனாய்ப் போந்த நீ இன்று
அஸத்ய ப்ரதிஞ்ஞனானாயோ -என்றால் போலே
சிலவற்றைச் சொல்லி விமுகையான வளவே அன்றிக்கே அபரி ஹார்யமான கோபத்தாலே
மலக்கப்பட்ட மனஸ்ஸை யுடையவனாய்

தர்ம சம்மூட சேதஸ்-(மனஸ்) வானால்
யஸ் ஸ்ரேயஸ் யான் நிஸ்சிதம் ப்ரூஹி -என்னவும் ஒருவரும் இன்றிக்கே
(அங்கு கீதாச்சார்யர் பேசி கலக்கம் போக்கினார் இங்கு ராமாச்சார்யன் பேச மாட்டானே )
நியாய நிஷ்டூரத்தை நியாயமாக நினைத்து மலங்கி
அந்த மலக்கத்திலே பெரிய விசாரத்தை யுடையவனாய்
நெடும் காலம் தர்ம தாரதம்யமும் -அதர்ம தாரதம்யமும் -தர்மாதர்ம தாரதம்யமும் எல்லாம் ஆராய்ந்து போந்து
போந்த நெஞ்சில் பரப்பு எல்லாம் கலக்கத்துக்கு உடலாய்
இவள் வார்த்தையும் மறுக்க மாட்டாது இருப்பதே –

பிள்ளாய்
ஸாஸ்த்ர முகத்தாலும் -ஆச்சார்ய வசனத்தாலும் -பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனமான தெளிவு பிறந்தவர்கள்
நித்ய ஸம்ஸாரிகளாய்த் தெளிவிக்க அரிதானவர்களையும்
தங்களோட்டை தர்சன ஸ்பர்சன சம்பாஷண ஸஹ வாசாதிகளாலே
மிகவும் தெளிவிக்கிறாப் போலே

ப்ரத்யக்ஷமான பர ஸம்ருத்த் யஸஹ ப்ரயோஜனராய்
ஐம்புலன் கருதும் கருத்துளே பிறரைக் கேள்வி கொள்ளாமே திருத்திக் கொண்டவர்கள்
தாங்கள் கலங்குகிற அளவு அன்றிக்கே
தங்களுடைய தர்சன ஸ்பர்சன ஸம் பாஷாணாதி களாலே
கலங்காதவர்களையும் கலக்க வல்லவர்களாய்

கலங்கினவர்கள் அனுதாப பூர்வகமாகத் தெளிந்தார்களே ஆகிலும்
கலக்கினவர்கள் சரீர அவசானத்து அளவும்
தெளிய மாட்டார்கள் என்று தோன்றா நின்றது இறே –

குலக் குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
மறுக்க மாட்டாமையாலே ராஜாவானவன் சோகித்துக் கிடக்க —
அவ்வளவிலே
ரகு குல திலகரான பெருமாள் காலம் தாழ்த்தது என்று அந்தப்புரக் கட்டிலிலே புகுந்து
ஐயர் எங்கே -என்ன

உம்மை வன வாஸ ப்ராப்தராம் படி சொல்ல மாட்டாமையாலே எனக்கு முன்னே வர பிரதானம் செய்தவர்
அது எனக்குப் பலிக்கிற காலத்திலே சோகித்துக் கிடக்கிறார் -என்ன

எனக்கு அவர் வேணுமோ
நீர் அருளிச் செய்ததே போராதோ
ஐயரை எழுப்பிக் கண்டு போகலாமோ என்ன

அவரை நான் எழுப்பி சோகம் தீர்த்துக் கொள்ளுகிறேன்
நீர் இக் குலத்தை நோக்க ப்ராப்தருமாய் (குலக் குமரா)
எங்களுக்குப் பிள்ளை என்று இருந்தீராகில்
எங்கள் வசன பரிபாலனம் செய்ய வேணும் காணும்
அவர் விடை தந்தார்
நான் போ என்கிறேன் -என்று நினைத்து
வன வாச ப்ராப்தியில் சீக்கிரமாகப் போகையிலே ஒருப் படீர்-என்ன

——

இரு நிலத்தை வேண்டாது

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

இரு நிலத்தை வேண்டாதே –
உம்மைப் பிரியில் முடிவோம் -என்று வளைப்புக் கிடக்கிற நகர ஜனங்களை எல்லாம் ஒளித்து-
அவர்களைக் கை விட்டு

——-

ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து

கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தானூர்
தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே -4- 8-4 –

ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய  
ஏக புத்ரையான நான் உம்மை பிரிந்து இருக்க மாட்டேன் -கூடப் போரும் இத்தனை –
என்று பின் தொடர்ந்த பெற்ற தாயாரான கௌசல்யை யாரையும்
ஸ்தாவரங்களோடு ஜங்கமங்களோடு வாசி அற
தன் குணங்களில் ஈடுபட்டு
பிரியில் தரிக்க மாட்டாத படி இருக்கிற இராச்சியத்தையும் கை விட்டு

ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்–ஐயரைத் தேற்றிப் பொகிடீர் -என்ன

நான் அவரை சோக நிவ்ருத்தி பண்ணிக் கொள்கிறேன்
புத்தி பேதிக்கிலும் நீர்
இப்போதே போம் என்ற சொல்லைக் கேட்பதாம்

லோக ரக்ஷணார்த்தமாகவும்
தன்னுடைய ஸ்நேஹ கார்யமாகவும்
பெற்று எடுத்தவள் வார்த்தை கேளாமல் –
விஸ்லேஷ அஸஹ மாநத்தாலே வாடின சராசரங்களை ஒழியக்

———–

மைவாய களிறொழிந்து  மா ஓழிந்து தேர் ஒழிந்து

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

வென்றி மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து-மா ஒழிந்து
வென்றியை விளைப்பதாய்-அஞ்சன கிரி போலே
பெரிய வடிவை உடைத்தாய் இருக்கிற ஆனை என்ன -தேர் என்ன -குதிரை என்ன -இவற்றை ஒழிந்து

———

கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து அங்கங்கள் அழகு மாறி

பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே! வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-

பூம் துகில் சேர் அல்குல் காமர் எழில் விழல் உடுத்து
அறுபதினாயிரம் ஆண்டு தேடின திருப் பரியட்டங்களில் நல்லவை எல்லாம் சாத்தக் கடவ திருவரையிலே –
கண்டார் விரும்பும் படி விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி

கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஸ்வா பாவிகமான அழகு ஒழியத் திரு ஆபரணங்கள் சாத்தாமையாலே அத்தாலே வரும் அழகு இன்றியே

———-

மான் அமரும் மெல் நோக்கி  வைதேகி இன் துணையா

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான்   காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே —-11-5-1-

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா –கானமரும் கல் லதர் போய்க் காடுறைந்தான்   –
ஒண்  டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப (திருவாய் )-என்கிறபடியே –
தனக்கும் அவளுக்கும் யோக்யமான நிலத்திலே –
நிரதிசய ஆநந்த யுக்தனாய் இருக்கக் கடவ வவன் –
அங்கு நின்றும் போந்து –
அவதரித்து –
திரு அயோத்யையும் அவ்விடத்தோபாதி காற்கடைக் கொண்டு  –
தங்களுக்கு அயோக்யமான காட்டிலே –
மானோடு ஒத்து இருப்பதாய் -மிருதுவான நோக்கை உடைய
விதேக ராஜன் புத்ரியை தனக்கு இனிய துணையாக
காட்டிலே
முளைத்தால் போலே இருக்கிற கல் வழியே போய் –
இவ் வெய்யில் வெம்மைக்கும்
பாலை நிலத்தின் வெம்மைக்கும்
பரிஹாரமான நீரும் நிழலும் எல்லாம்
இவளேயாய்ப் போனார் –

(காடுறைய வைதேஹி இன் துணையாகப் போவான் என் என்ன
அவளும் அவனது ரக்ஷணத்தை ஸ்தூணா நிஹனநம் நியாயத்தால் திருடி கரிக்கிறாளே

பின்பு -பாபா நாம் -என்கிற பிராட்டி
காட்டிலே வர்த்திக்கிற நாளிலே ஆயுதம் வேண்டா
நீர் சா யுதராய் திரியப் புக்கவாறே நிழல் மரமாய்த் தோற்றுவீர்-
ஆர்த்தராய் சரண்யன் தேட்டமாய் திரிகிறவர்கள் உம்மை -நிழல் மரம் -என்று ஒதுங்குவார்கள் –
சரணாகதரை கை விடாமை உமக்கு ஸ்வ பாவமாய் இருக்கும் ஆகையாலே ராஷசரை அழியச் செய்வீர்
அது தான் சத்தைக்கு கைம் முதலாக நினைத்து இருக்கும் உம்முடைய சத்தையும் அழியும் படி தலைக் கட்ட அடுக்கும் –
ஆன பின்பு காட்டில் வர்த்திக்கும் நாள் இத்தனையும் ஆயுதத்தைப் பொகட்டு
கண்டார் இரங்கும்படி தாபஸ வேஷத்தோடு திரிய அமையாதோ -என்று
அவள் பிரஜைகள் உடைய ரஷணத்தில்  நிற்கிறவர்
(ஊற்றத்தின் எல்லையில் இருப்பதை அறியவே சீதாபிராட்டி வார்த்தை )

அப்யஹம் த்வாம் வா –
அசாதாரணராய்
தங்களோடு அனந்யராய்
இருப்பாரை வைத்தோ -தந்தாமை விடுவார் விடுவது –
உண்டாம் அன்று ஒக்க உண்டாய்
இல்லையாம் அன்று ஒக்க இல்லையாம்படி அன்றோ இருப்பது –

(சீதா உன்னையே விட்டாலும் அதுக்கும் மேலே -லஷ்மணன் -அவனையும் விட்டாலும் —
தன்னையே -விட்டாலும் ப்ரதிஜ்ஜை விட மாட்டேன் -சொன்ன சொல்லையே தம் தம்மை -என்கிறார் -)

நது-
நான் தொடங்கின வற்றில் தவிர மாட்டாதது ஈது ஒன்றுமே
அது தன்னில் சாயுதராய் ஸ்வ ரஷணத்தில் அயோக்யதை உடையராய் இருக்கை அன்றிக்கே
நம்மைப் பார்த்து இருக்கும் பிராமணரை ரஷிக்கிறோம் என்று சொல்லி வைத்து தவிர மாட்டோம் –

———–

இளங்கோவும்

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக
நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு

எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே ?–
கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் –
என்னாயனே நான் என் செய்கேன் –

———-

வாளும்  வில்லும் கொண்டு பின் செல்லக்

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-அப்படி ஆனாலும் நந்தகம் ஸ்ரீ சார்ங்கம் -கொண்டு –
இளைய பெருமாளை போலே மற்று வேறு ஒருவர் இல்லை -உன் பெருமைக்கு இரண்டாவது ஆள் கூடாதோ
அடியேனுக்கு அருள் செய்து கூவிப் பணி கொள்ள வேண்டும்

வாளும் வில்லும் கொண்டு-
எதற்கு பஞ்சாயுதங்கள் -பரம ஸ்வாமி கொண்டாட்டம் வாங்கிக் கொள்ளவோ –
இளைய பெருமாளைப் போலே ஒருவர் பின்னே கொடு சென்றால் ஆகாதோ-

ஆளுமாளார் -சுமப்பார் தாம்– பின் செல்வார் மற்றில்லை -என்கிறது
பரிவரான நீர் அவற்றுக்கு அன்றோ -என்று தம்மை ஏவுகைக்காக

—————

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் நடந்து போய்ப்

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —-1-5-1-

காட்டின் கொடுமையை சொல்ல யானை சிங்கம் புலி சொல்லாமல் –கலையும் -என்றது மாயமான் –
பிராட்டி பட்டது எல்லாம் மூல காரணம் என்பதால்
அன்றிக்கே மாரீசன் உபகாரனே அன்றி அபகாரகன் அல்லன்
கூச்சல் போடாமல் இருந்தால் சிறை புகுந்து தேவர் கார்யம் செய்ய முடியாதே
கானம் கடந்து போய் -காட்டில் இருந்து வேறு காடு -தே வநேன வனம் கத்வா-வால்மீகி

———–

பக்தி யுடைக் குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து வனம் போய்ப் புக்கு

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–

கங்கையின் துறை தன்னை பத்தி உடை குகன் கடத்த
தம்பிமாரைக் காட்டில் ஸ்நேஹத்தை உடையனாய் -பிரியில் தரியாத படி ஸ்ரீ பெருமாள் நியமிக்கையாலே நின்றவனுமாய்
ஸ்ரீ பரத ஆழ்வானையும் கூட அசிர்க்கும் படியான ஸ்ரீ குஹப் பெருமான் கங்கையைக் கடத்த

வனம் போய் புக்கு-
மனுஷ்ய சஞ்சாரம் இன்றியே துஷ்ட ம்ருஹங்களேயான காட்டிலே போய்ப் புக்கு –

———–

காயோடு நீடு கனி உண்டு

காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-2-

பருவம் இளைதான காய்களையும்
வெய்யிலிலும் காற்றிலும் உலர்ந்து பசையற்ற கனிகளையும் புஜித்து வீசின வெட்டிய காற்றைப் பருகி
நெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு பண்ண வேண்டா
ஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர்
(வைப்பவர்கள் இல்லை -வைக்க நினைத்தாலே போதும் அவன் உள்ளே புக தான்
காத்துக் கொண்டு இருக்கிறானே விலக்காமையே வேண்டுவது )

————

வியன் கானம் மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயின்று

கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன் குலமதலாய்! குனி வில்லேந்தும்
மல்லணைந்த வரை தோளா! வல் வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல்லணை மேல் முன் துயின்றாய் இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயில கற்றனையோ? காகுத்தா! கரிய கோவே! —–9-3–

வியன் கான மரத்தின் நீழல்-
காட்டில் வர்த்திப்பார் தாங்களும் வெருவும்படி-காட்டிலே -இலை இல்லாத மரத்தின் நிழலின் கீழே

கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?
பாறைகளை யணையாகக் கண் வளரும் படி கற்றீரோ

காகுத்தா! கரிய கோவே!-
இச் செயல்கள் உம்முடைய குடிப் பிறப்புக்கும் சேராது -உம்முடைய வடிவு அழகுக்கும் சேராது –

————-

சித்திர கூடத்து இருப்ப,

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
வண்டுகள் மாறாத பொழிலை யுடைத்தான
திருச் சித்ர கூட பர்வதத்திலே ஏகாந்த போகம் அனுபவிக்கிற காலத்திலே

———–

தயரதன் தான்

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக
ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை

————–

நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய் கைகேசீ!

பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே– 9-8-

நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
உன்னை அல்லது வேறு ஒருவரை தாய் என்று இராத ஸ்ரீ பெருமாளையும் ஸ்ரீ இளைய பெருமாளையும்
வனத்திலே போக விட்டு

என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய்? கைகேசி!
இச் செயல்கள் எல்லாம் செய்து நீ பெற்ற பிரயோஜனம் என்

இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே–
சம்சார ஸூகம் ஆகிறது -புத்ரர்களோடும் பர்த்தாவோடும் கூடி இருக்கை யாய்த்து –
உனக்கு புத்ரரான ஸ்ரீ பெருமாளைக் காட்டிலே போக்கி என்னையும் ஸ்வர்க்கத்திலே
போக்குகையாலே சம்சார ஸூகம் அழகியதாக அனுபவிக்கக் கடவை இறே –

———————

நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் என்று வான் ஏறத்

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும் சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–

கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து
நான் போகச் சொன்னேன் -என்னுமத்தையே கொண்டு ஒருவர்க்கும் சஞ்சரிக்க அரிதான காட்டை விரும்பி –
திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற ஊரை நீ கை விட்டாய் என்று நானும் ஸ்ரீ திரு அயோதயையைத் துறந்து

நானும் வானகமே மிக விரும்பி போகின்றேன்-
நீ இல்லாத நகரி இறே -அத்தாலே ஸ்வர்க்கமே யாகிலும் நீ இல்லாத ஊரை விட்டுப் போகின்றேன்

மனு குலத்தார் தங்கள் கோவே! –
மநு குலோத்பவனானவனே-

———–

தேன் அமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
வண்டுகள் மாறாத பொழிலை யுடைத்தான
திருச் சித்ர கூட பர்வதத்திலே ஏகாந்த போகம் அனுபவிக்கிற காலத்திலே

————

ஆனை புரவி தேரோடு காலாள் அணி கொண்ட சேனை

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமர்ந்து
நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே–6-5-3-

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்-
ராவணனுடைய படை எழுச்சியை
அந்த க்ரமத்திலே  பேசுகிறார் –
மலைகள் நடந்தால் போலே யானைகளைப் புறப்பட விட்டு
அநந்தரம் –
குதிரைகளை விட்டு
அநந்தரம்
தேர்களாலே அலங்கரித்து –
இவை அத்தனைக்கும் காவலாக காலாளைப் புறப்பட விட்டு
இப்படிப் பட்ட சேனா சமூஹத்தை துகைத்து கழித்து
இலங்கையை அழியச் செய்த
தசரதாத் மஜன் வர்த்திக்கிற ஊர் –
(ஒரு வில்லால் செற்றவன்-தாசாரதி பெயரே உகக்கும் பெருமாள் – )

———–

சுமந்திரன் வசிட்டருடன் பரத நம்பி பணியத்

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம்
மீண்டு எழுந்து அருள வேணும் என்று
பாரதந்தர்யத்தாலே பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து
பிரபத்தி செய்ததும் ஓர் அடையாளம் —

———-

தம்பிக்கு மரவடியை வான் பணையம் வைத்துக்

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய  திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய்-
கைகேயி -ராஜன் -என்று ஸ்வா தந்த்ர்யத்தை ஆரோபித்து வார்த்தை சொன்ன போதே பிடித்து
தத் கத சித்தனாய் இருந்து –
ஸ்ரீ சக்கரவர்த்திக்கு சாஸ்த்ரார்தங்களை பண்ணி விட்ட அநந்தரம்
தன்னை அபிஷேகம் செய்வதாக உத்யோகித்து கொண்டு இருந்த ராஜ லோகத்தில் உள்ளாறும் –
பௌரஜான பதந்க்களுமாய் உள்ள சபா மத்யத்திலே வந்து –

தன்னுடைய ஆற்றாமை தோற்ற
பிரலாபித்து புரோஹிதனான வசிஷ்ட பகவானையும் கர்கித்து
ஸ்ரீ பெருமாளுக்கு சேஷ பூதனான நான் -முடி சூடி ராஜ்யம் பண்ணுகைக்கு  அர்ஹன்  அல்லேன் –
என்னும் இடத்தை அறிவித்து –

பின்பு எல்லாரையும் கூட்டிக் கொண்டு –
ஸ்ரீ திருச் சித்ர கூடத்தில் வந்து தன்னுடைய ஆர்த்தி தோற்ற திருவடிகளில் விழுந்து சரணம் புகுந்து –
தான் விண்ணப்பம் செய்தது மாறாமல் செய்கைக்கு ஈடான ப்ராப்திகளை எல்லாம் புரஸ்கரித்து-
தேவரீர் மீண்டு எழுந்து அருளி திரு அபிஷேகம் பண்ணி அருள வேணும் -என்று
கண்ணும் கண்ணீருமாய் கொண்டு பிரார்த்தித்த தம்பியான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு –

பிள்ளாய் நீ  நம்மை நிர்பந்திக்க கடவை அல்ல –
உன்னை ஸ்வதந்த்ரனாக்கி வார்த்தை சொன்னார் எதிரே
உன் ஸ்வரூப அனுரூபமான பாரதந்த்ர்யத்தை பெற்று நீ போ–
நான் பதினாலு சம்வத்சரமும் கழிந்தால் ஒழிய மீளுவது இல்லை –
என்று ஒருபடிப்பட அருளிச் செய்கையாலே –

திரு உள்ளக் கருத்து இது –
ஆன பின்பு நாம் இனி நிர்பந்திக்க கடவோம் அல்லோம் -என்று மனசு மீண்டு
அடியேனுடைய ஸ்வா தந்த்ர்யா நிவ்ருத்திக்கும் –
தேவரீர் மீண்டு எழுந்து அருளி விடுவீர் என்னும் விச்வாசத்துக்கும்
ஹேதுவானது தான் ஏது-என்ன

இரண்டுக்குமாக இத்தைக் கொண்டு போ -என்று திருவடி நிலைகளைக் கொடுத்து
பாதுகேசாஸ்ய ராஜ்யாய ந்யாசம் தத்வா புன புன நிவர்த்தயா மாச ததோ பரதம் பரதாக்ரஜ  -என்கிறபடியே
இத்தை பலகாலும் அருளிச் செய்து –
ஸ்ரீ பரத ஆழ்வானை உகப்பித்து -மீள விட்டு -எழுந்து அருளுகையாலே –
மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய் -என்கிறார் –

பணயம் ஆவது –
விஸ்வாச ஹேதுவாய் உள்ளது

வான் பணையம் -என்கையாலே
மகா விஸ்வாச ஹேதுவாய் உள்ளது என்னும் இடம் தோற்றுகிறது

வான் -என்று
வலியதால் –
பெருமை யாதல் –

——–

குவலயமும் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கு அருளி 

கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத்
துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வான் கானடை
அம் கண்ணன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2 1-8 –

குவலய துங்க கரியும் –
பூமியில் யானைகள் எல்லாவற்றிலும் -விஞ்சின சத்ருஜ்ஜயன் முதலான யானைகளும் –
பரியும் -அப்படியே லோக விலஷனமான குதிரைகளும் –
இராச்சியமும் -அகண்டகமான ராஜ்யமும்
எங்கும் -இஷ்வாகூணா மியம் பூமி  ஸ்சைல வன காநனா-என்கிறபடியே
எழுந்து அருளுகிற காடு தானும் –
பரதற்கு அருளி
கைகேயி வர அனுகுணமாக சக்ரவர்த்தி வசனத்தின் படியே ஸ்ரீ பரதாழ்வானுக்கு கொடுத்து –

—————

விடை கொடுத்துத்

———

திருவுடை திசைக் கருமம் திருந்தப்

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய  திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-

செரு உடைய திசைக் கருமம் திருத்தி –
செரு -என்று யுத்தம்
செரு உடைய திசை-என்று தஷிண திக்கை சொல்லுகிறது
இத் திக்கிலே இறே ராவணாதி ராஷசர் எல்லாம் கூடிக் கொண்டு இருந்தது

இந்த திசைக் கருமம் திருத்துகை யாவது
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு (திருவாய் -7-5 )-என்கிறபடியே
தன்னுடைய அபிமான அந்தர்பூதமான நாட்டை நலிந்து திரிகிற ராஷசர் ஆனவர்களை
இருந்த இருந்த இடங்களிலே தேடிச் சென்று கொன்று -(சென்று கொன்ற வீரனார் )
ஜனஸ்தானத்தில் இருந்த ராஷசரை முதலற முடித்த விசேஷத்தைக் கேட்டு –

ராவணன் வந்து –
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எழுந்து அருளி இருக்கச் செய்தே  –
ஸ்ரீ பிராட்டியை பிடித்துக் கொண்டு போக –
அது நிமித்தமாக

கரிஷ்யே மைதிலீ ஹேதோர் அபிசாசம ராஷசம் -என்று சங்கல்பித்து –
அவர்களை தேடித் திரியச் செய்தே –
ராஜ்ய தாரங்களை இழந்து ஜூரம் (சுரம் -ருஷ்ய சிங்க மலை என்றுமாம் )அடைந்து கிடந்த
ஸ்ரீ மகாராஜரைக் கண்டு -அவரோடு உறவு கொண்டு –
அவருக்கு சத்ருவான வாலியை நிரசித்து –
அவரை ராஜ்ய தாரங்களோடு கூட்டி –

பின்பு அவரையும் அவரது பரிகிரகத்தையும் துணையாகக் கொண்டு
கடலை அணை செய்து –
மறுகரை அதனாலே ஏறி (பெருமாள் திருமொழி )-என்கிறபடியே
அவ் வழியாலே இலங்கையிலே போய் புக்கு
எரி நடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு -என்கிறபடியே
இலங்கை பாழ் ஆம் படி ராவணனுடைய பரிகரமான ராஷசரை அடையக் கொன்று
பின்பு ராவணன் தன்னையும் முடித்து –
இலங்கைக்கு ராஜாவாக ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அபிஷேகம் பண்ணுவிக்கை

——–

போய்த் தண்ட காரண்யம் புகுந்து

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ பேயாழ்வாரும் ஸ்ரீ திருமழிசைப் பிரானும் பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள்-அன்யாப தேச–திருத்தாயார் பாசுரம் —

April 7, 2023

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -69-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இத் திருவந்தாதிகள் எல்லா வற்றுக்குமாக
இப்பாட்டை அன்யாப தேசமாக
நிர்வஹித்துப் போருவது ஓன்று உண்டு –

அதாகிறது
ஆழ்வாரான அவஸ்தை   போய்
பகவத்  விஷயத்திலே அபி நிவிஷ்டை யானாள் ஒரு  பிராட்டி
அவஸ்தையைப் பஜித்து
அவளுடைய பாசுரத்தையும்
செயல்களையும்
திருத் தாயார் சொல்லுகிறாள்  –

—————————————————————————————

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

பதவுரை

வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்லநினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத்துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத் தோள்களை யுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப் பெற்ற
நீள் கடல்–பரிந்த திருப்பாற் கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.

—————————————————————————————

வியாக்யானம் –

வெற்பு என்று வேங்கடம் பாடும் –
பாடுகை
சூடுகை
குளிக்கை
முதலான
லோக  யாத்ரையும்
இவளுக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும் –

ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் புக்கால் ஆகிலும்
திருமலையைப் பாடா நிற்கும்
திருமலையை ஒழிய
வேறு ஒரு மலை அறியாள் –

வியன் துழாய் கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் –
ஏதேனும் ஒன்றைச் சூட நினைத்தாள் ஆகில் –
திருத் துழாயைத்
தன் குழலிலே வையா நிற்கும் –

வியன் துழாய் –
விஸ்மயமான திருத் துழாயை-

கற்பு என்று சூடும் –
இக்குடிக்கும் மர்யாதையாய்ப் போருவது ஒன்று என்று –
பாதி வ்ரத்ய தர்மம் -என்னவுமாம் –

சூடும் கருங்குழல் மேல் –
நாறு பூச் சூட அறியாள்
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் – திருப்பல்லாண்டு -9-
என்னும்படியே
திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்-

மற்பொன்ற நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான் பூண்ட நாள் எல்லாம் புகும் —-
இனி ஓர் இடத்தே   நீராட வென்று   நினைத்தாள் ஆகில்
மல்ல ஜாதியாகப் பொடி படும்படி
வளர்ந்த திருத் தோள்களை யுடைய  சர்வேஸ்வரன்
சாய்ந்து அருளின
பரப்பை உடைத்தான
கடலிலே நீராடுகைக்காக
விடிந்த விடிவுகள் தோறும் புகா நிற்கும் –

மற்பொன்ற நீண்ட தோள்-
விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோள் –

மால் கிடந்த –
வ்யாமுக்தனானவன் கிடந்த –

நீள் கடல் நீராடுவான் –
திருப்பாற் கடல் ஒழிய
வேறு ஒன்றில் குளித்தால்
விடாய் கெடாது -என்று இரா நின்றாள் –

அன்றிக்கே –
பிரகரணத்தில் கீழும் மேலும்
அந்யாப தேசம் இன்றிக்கே இருக்க
இப்பாட்டு ஒன்றும் இப்படி கொள்ளுகிறது என் -என்று
பரோபதேசமாக நிர்வஹிப்பார்கள் –

அப்போது
அம்மலை அம்மலை என்று வாயாலே ஒரு மலையை வாயாலே சொல்லப்
பார்த்தி கோளாகில் -திருமலையைப் பாடும் கோள்-

ஒரு பூச்சூட நினைத்தி கோள் ஆகில்
அவன் உகக்கும் திருத் துழாயைச் சூடும் கோள் –

ஒன்றிலே இழிந்து ஸ்நானம் பண்ணப் பார்த்தி கோள் ஆகில்
ப்ராத ஸ்நானம் பண்ணப் பார்த்தி கோள் ஆகில்

அவன் சாய்ந்த கடலிலே நாடோறும்
அவகாஹிக்கப் பாரும் கோள் –

இத்தால்
அவனோடு ஸ்பர்சம் உள்ள தீர்த்தங்கள் எல்லா வற்றுக்கும் உபலஷணம்-

மற்பொன்ற நீண்ட தோள்-
கொன்று வளர்ந்த தோள் –

பூண்ட நாள் எல்லாம்-
விடிந்த விடிவுகள் எல்லாம்

பாடும் –
பாடுங்கோள்-

சூடும் –
சூடுங்கோள்-

புகும் –
புகுங்கோள்-

—————————————————

ஆழ்வாரான அவஸ்தை போய் ஒரு பிராட்டி அவஸ்தியைப் பஜித்து
அவளுடைய தசையை தாயார் சொல்லுகிறாள் –

இப்படிப் பட்ட திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து
தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் –
அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –

(முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60–பிரஸ்தாபம் வந்தாலே -திருவேங்கடம் என்று கற்கும் வாசகம் )

(முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள்  என்பதோர்   தேசிலள்  என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கண புரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-)

(பாடும் -சூடும் -நீராடுவான்- புகும் -மூன்று வினைச் சொற்கள்
திருத் துழாய் சூடிக் கொள்ள பாசுரம் –
குலசேகரப் பெருமாள் குஹ்யதே -திருவரங்கம் போல் இவள் திருவேங்கடம் தினம் தினம்-பூண்ட நாள் எல்லாம் புகும்)

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

பதவுரை

வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்ல நினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,-
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத் துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத் தோள்களை யுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப் பெற்ற
நீள் கடல்–பரந்த திருப்பாற் கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்-
லோக யாத்திரையும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயே
திருமலையை ஒழிய வேறு ஒரு மலையையும் அறியாள்-

(நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க   வினி  யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-)

கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் —
காட்டுப் பூ சூடாள்-
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்-என்கிறபடியே
விஸ்மயமான திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்–

(திருத் துழாய் ஒன்றே இவனைக் காட்டும் பூ)

(வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நன்றோயிது தெய்வத் தண்ணந்துழாய்
தாராயினும், தழையாயினும் தன் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே-திரு விருத்தம் )

கற்பு என்று பாதி வ்ரத்யம் –

(அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-)

மற்பொன்ற-நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் —
விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோளை யுடையனாய் –
வியாமுக்தனானவன் கிடந்த நீள் கடலிலே
விடிந்த நாள் எல்லாம் புகா நின்றாள்-
திருப் பாற் கடல் ஒழிய வேறு ஒன்றில் குளித்தால் விடாய் கெடாது என்று இருக்கிறாள்

இப் பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாபதேசம் இன்றிக்கே இருக்க
இப்பாட்டு ஒன்றும்
இப்படிக் கொள்ளுகிறது என் என்றும் நிர்வஹிப்பர்கள்-

(சூடும் பாடும் நீராடும் -வினை முற்றுச் சொற்கள்-நம்மைப் பார்த்து சொல்வதாக -தாமான தன்மை)

அம்மலை இம்மலை என்று ஒன்றைச் சொல்லக் கடவி கோள் இறே –
ஆன பின்பு திருமலையைப் பாடுங்கோள்-

ஒரு பூவைச் சூடக் கடவி கோள் இறே –
ஆன பின்பு வகுத்தவன் உகக்கும் திருத் துழாயைச் சூடுங்கோள்

பிராதஸ் ஸ்நானம் பண்ணக் கடவி கோள் இறே –
ஆன பின்பு விரோதி நிரசன சீலனானவன் கிடந்த திருப் பாற் கடலிலே முழுகுங்கோள்–

(மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -எங்கு சயனித்து இருந்தாலும் பாற் கடல் போலவே கொள்ளலாம்)

பாடோமே எந்தை பெருமானைப் பாடி நின்று
ஆடாமே ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து
சூடாமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம்
கூடாமோ கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே —ஸ்ரீ பெரிய திருமொழி-11-3-8-

——————————————————

திருமலையைப் பெற்று மற்று ஒன்றுக்கு உரியேன் ஆகாதே க்ருதார்த்தன் ஆனேன் –
நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார் –

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்-40-

பதவுரை

வெற்பு என்று–பலமலைகளையும் சொல்லி வருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘
என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
காண் – முன்னிலையசை

யாத்ருச்சிகமாகத் திருமலை என்னும் காட்டில்
ப்ரீதி பூர்வகமாகத் திருமலையை அனுசந்தித்தேனாய்க்
க்ருதக்ருத்யனாய்ப் பிறருக்கும் மோஷ பிரதனானேன்

இப்பேற்றை நின்று அனுசந்திப்பதும் செய்யா நின்றேன் –

பரோபதேசம் தவிர்ந்து சாஸ்ரைக சமதி கம்யனாய்-
ஸ்ரீ யபதி யுடைய  திருவடிகள் ஆகிற
வலையிலே அகப்பட்டு மற்று ஒன்றுக்கு உரித்தாய்த்திலேன் நான் –
நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார்-

—————————————————————

செய்த கார்யமோ மிகச் சிறியது
பெற்ற பலனோ மிகப் பெரியது என்கிறார் இதில்

(திருமாலிருஞ்சோலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
சாஸ்திரமும் அறியாதே பிறரும் அறியாதே நாமும் அறியாமல் ஈஸ்வர சங்கல்பம் –
ஸூஹ்ருத தேவர் -வேறே யாரும் இல்லையே
திருமலை கூட சொல்லாமல் வெறும் வெற்பு மட்டுமே சொன்னேன்
மலை என்றாலே திருமலையைத் தான் குறிக்கும்
வரவாறு ஓன்றும் இல்லை- வாழ்வு இனிதால் -விதி வாய்க்கின்றது காப்பார் யார்
நூல் வலையும் கால் வலையும் -பிரசித்த உபன்யாச தலைப்பு )

அப்பிள்ளை உரை -அவதாரிகை –
திருமலையை யாதிருச்சிகமாக சொன்ன மாத்திரத்தாலே க்ருதக்ருத்யனாய் விட்டது
ஸ்ரீயபதியின் திருவடிகளில் மற்ற ஒன்றுக்கு ஆளாகாதபடி அகப்பட்டேன்
என் நெஞ்சே நீயும் அவனை அனுபவி
(காண் -என்றதன் அர்த்தம் இதில் ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் -)

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால் வலையில் பட்டிருந்தேன் காண்-40–

பதவுரை

வெற்பு என்று–பல மலைகளையும் சொல்லி வருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘
என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
பட்டிருந்த-பட்டு இருந்த பிரித்தே அர்த்தம்
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
பட்டிருந்த-பட்டு இருந்த பிரித்தே அர்த்தம்
காண் – முன்னிலையசை

மலை என்று சொல்லும் போது திருமலையைப் பாடா நின்றேன்
அதனால் மோக்ஷத்தை யுண்டாக்கிக் கொண்டு இரா நின்றேன்
ஸ்திரமாக இருந்து பலம் பெற்ற படியை தியானியா நின்றேன்
அத்யயனம் செய்யப்பட ஸாஸ்த்ரம் ஆகிற வலையில் -அகப்பட்ட -ப்ரதிபாதிக்கப் பட்ட –
ஸ்ரீ தேவியின் வல்லபனான ஸர்வேஸ்வரனுடைய திருவடிகள் ஆகிற வலையில் அகப்பட்டுக் கொண்டேன் பாருங்கோள் –

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் –
விசேஷித்து ஓன்று செய்தது இல்லை –
அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி
இத்தைச் சொல்ல -திருமலை -ஆயிற்று –

வீடாக்கி நிற்கின்றேன் –
அநேக யத்னத்தால் பெரும் மோஷத்தை-
இச் சொல்லாலே உண்டாக்கிக் கொண்டு
நின்று ஒழிந்தேன்

நின்று நினைக்கின்றேன் –
எது சொல்லிற்று
எது பற்றிற்று என்று-
விசாரியா நின்றேன்

கற்கின்ற நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டிருந்தேன் காண்
ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிக்கப் படுகிற-
பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன்
திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன்

(யாதிருச்சிகமாக கொல்லி மலை குடமலை இமயமலை போலே
மலைத் தொடர்கள் பேர்களை சொல்லுமா போல்
என்னை அறியாமல் திருவேங்கட மலை என்றும் சொல்லி வைத்தேன்
பெற்ற பலமோ பரம புருஷார்த்தமாக இருந்ததே -)

(மாதவன் பேர் சொல்லுவதே வேதத்தின் சுருக்கு
யந் ந தேவா ந முனயோ ந ச அஹம் ந ச சங்கர
ஜா நந்தி பரமே சஸ்யே தத் விஷ்ணோ பரமம் பரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மந
ஸ்வயைவ ப்ரபயா டாஜன் துஷ் ப்ரேஷம் தேவதா ந வைவ –பாரதம்
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் -பெரிய திருவந்தாதி –59-
இந்த ஆச்சர்யம் நினைத்து ஸ்தப்த்தனானேன் -நிலை நின்றேன்
நூல் வலை -வேத ஸாஸ்த்ர வலை -அதில் சிக்கிய எம்பெருமானும் பிராட்டியும்
வேதைஸ் ச ஸர்வைர அஹம் ஏவ வேத்ய –15-15-வேத ப்ரதிபாத்யன்
அவனைச் சொன்ன இடங்கள் எல்லாம் பிராட்டியையும் சொல்லிற்று ஆகவுமாம் அன்றோ –
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிரிதில்லை
பூவின் மேல் மாது வாழ் மார்பினாய்
நான் முந்தி நான் முந்தி என்று ரக்ஷிக்கும் மிதுனம் அன்றோ –
அந்தரங்க விசேஷணம் ஸ்வரூப நிரூபக தர்மம்
எங்கு அவனைச் சொன்னாலும் அஹம் ஏவ வேத்ய -என்றாலும் -அப்ருத்க் ஸித்த -அவளையும் குறிக்கும்
அஹந்தாவே அவள்
ஸ்ரீ யபதி -விஷ்ணு பத்னி -இருவருக்கும் ஒவ்வொருவரை வைத்து திரு நாமங்கள் –
சாதனமாக இருந்தால் சிக்க மாட்டேன்
சிக்கி வைத்தவனும் அவனே -)

அப்பிள்ளை உரை
அல்லாத மலைகளை சொல்லுகிறோ பாதி
சாமான்யேன பொதுவாக -பிரபாவம் அறியாமல் -இதுவும் ஒரு மலை என்று
கோல் விழுக்காட்டாலே
வெற்பு -சொன்னாலும் -பாட்டாக ஆக்கிக் கொண்டான்
மோக்ஷமே தருமவன்
ப்ரீதிக்குப் போக்கு வீடாக -பாடினேன் -ஆகக் கொண்டான் அவன்
என்னளவு அன்றிக்கே -என்னுடன் சேர்ந்தார்க்கும் பெரு வருத்தத்துடன் பெறக் கடவ
மோக்ஷத்தை உண்டாக்கிக் கொண்டு -நிச்சயமாக -உறுதியாக க்ருதக்ருத்யனாகா நின்றேன்
வீடாக்கி நிற்கின்றேன் -வீடாக்கினேன் என்று சொல்லாமல்
எது சொல்லிற்று எது பற்றிற்று
சாதன லாகவத்தையும்
சாத்ய கௌரவம்
ஒரு படிப் பட அனுசந்தித்து -சிந்தித்து
வித்தனாகா நின்றேன்
(சஞ்சலம் ஹி மனஸ்ஸூ -இருக்க இதுவும் ஒரு ஆச்சர்யம் தானே )
ச கிரமமாக ஓதப்படுகிற -கற்கின்ற வேத சாஸ்த்ரத்தால்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவி சால்யமாக
கல் வெட்டு போல்
விஷ்ணு பத்னி என்கிற அலர்மேல் மங்கைக்கு வல்லபனான
திரு வேங்கடமுடையான் அடிக்கீழ் அமர்ந்து புகுந்து –அடியார் வாழ்மின் -திருவடியில் வாழ்ச்சி –
என்று அருள் கொடுக்கும்
திருவடிகளாகிற வலையில் அகப்பட்டு -மற்ற ஒன்றுக்கு உரித்தாக்காமல்
நல் தரிக்கப் பெற்றேன் —
நெஞ்சே நீயும் அவனைக் கண்டு அனுபவிக்கப் பார் -என்கிறார்
முடிப்பான் சொன்ன ஆயிரம்
கிடைக்கும் உறுதி அறிந்தால் போதுமே
விஷ்ணு பத்னிக்கு பார்த்தா என்றே அடையாளம்
அஸ்ய ஈஸா நா ஜகத் விஷ்ணு பத்னி
ஒவ்வொருவரும் மற்ற ஒருவருக்கு நிரூபகம்

—————————————————————

வெற்பென்று வேங்கடம்‌ பாடும்‌ வியன் துழாய்‌
கற்பென்று சூடும்‌ கருங் குழல் மேல்‌ – மற்பொன்ற
நீண்ட தோள்‌ மால் கிடந்த நீள் கடல்‌ நீராடுவான்‌
பூண்ட நாள்‌ எல்லாம்‌ புகும்‌. (ஸ்ரீ பேயாழ்வார்‌ -மூ. தி, 69) வியன் துழாய்‌ – வியக்கத்தக்க துளசி;

மற்பொன்ற – மல்‌ பொன்ற, மல்லர்கள்‌ அழியும்படியான;
மால்‌ – திருமால்‌;
நீள் கடல்‌ -திருப்பாற்கடல்‌.

ஆழ்வார்‌ ஒரு தலைவி நிலையை அடைந்து பாடுவது முதலிய செயல்களை அவளது திருத்தாயார்‌ கூறுவதாக இச்செய்யுள்‌ அமைந்துள்ளது.
இது தாய்ப்பாசுரம்‌ என்பர்‌.
என்‌ மகளானவள்‌ ஏதேனும்‌ ஒரு மலையைப்‌ பற்றிய பேச்சு நேர்ந்தாலும்‌, திருவேங்கட மலையைப்‌ பற்றிப்‌ பாடுகிறாள்‌.
தனது கற்புக்குத்‌ தகுந்ததென்று வியக்கத்தக்க துளசியைத்‌ தனது கருங்கூந்தலில்‌ சூடிக் கொள்கிறாள்‌.
மல்லர்கள்‌ அழியும்படியான நீண்ட தோள்களை யுடைய திருமால்‌ பள்ளி கொண்டுள்ள பரந்த திருப்பாற்கடலிலே
நீராடுவதற்காக விடிந்த விடிவுகள்‌ தோறும்‌ புறப்படுகின்றாள்‌.
இப் பாசரத்தில்‌
‘கற்பென்று” பாதி வ்ரத்யத்தையும்‌,
கருங்குழல்‌” என்று பெண்ணின்‌ கூந்தலையும்‌ கூறுவதால்‌,

‘என்‌ மகள்‌’ என்று ஒரு பெண்ணை எழுவாயாகக்‌ கொள்ள வேண்டும்‌.
மற்பொன்ற: மல்லர்களை யழித்த;
கடலில்‌ புகுந்து மதுகைடபர்‌ என்னும்‌ அசுரர்களைக்‌ கொன்றதையும்‌,
கிருஷ்ணாவதாரத்தில்‌ சாணூரன்‌, முஷ்டிகன்‌ என்கிற மல்லர்களை அழித்ததையும்‌ கூறுகிறார்‌.
பூண்ட நாள்‌ எல்லாம்‌: பூண்ட – பூட்டிய) சூரியனுடைய தேரிலே குதிரையைப்‌ பூட்டிய நாள்‌ எல்லாம்‌’ என்கிறபடியே,
“விடிந்த விடிவுகள்‌ தோறும்‌’ என்று பொருள் பட்டது.
எம்பெருமானை அனுபவித்தல்‌ பல வகைப்பட்டிருக்கும்‌:
அவனுடைய திரு நாமங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌,
திருக் கல்யாண குணங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌,
திவ்ய சேஷ்டிதங்களை (அவதாரச்‌ செயல்களைச்‌) சொல்லி அனுபவித்தல்‌,
வடிவழகை வருணித்து அனுபவித்தல்‌,
அவனுகந்தருளிய திவ்ய தேசங்களின்‌ வளங்களைப்‌ பேசி அனுபவித்தல்‌,
௮ங்கே அபிமானமுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களின்‌ பெருமையைப்‌ பேசி அனுபவித்தல்‌
என்று இப்படிப்‌ பலவகைப்பட்டிருக்கும்‌ பகவதனுபவம்‌.
இவ் வகைகளில்‌ பரம விலக்ஷ்ணமான மற்றொரு வகையுமுண்டு:
அதாவது –
தாமான தன்மையை (ஆண்மையை/ விட்டுப்‌ பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக்கொண்டு
வேற்று வாயாலே பேசி அனுபவித்தல்‌ (இது அந்யாபதேசம்‌ எனப்படும்‌).
இப்படி அனுபவிக்கும்‌ இடத்தில்‌ தாய்ப் பாசுரம்‌, தோழிப் பாசுரம்‌, மகள்‌ பாசுரம்‌ என்று மூன்று வகுப்புகளுண்டு.
இவை நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்களது அருளிச்செயல்களில்‌ (பாட்டுகளில்‌) விசேஷமாக வரும்‌.
முதலாழ்வார்களின்‌ திருவந்தாதிகளில்‌ ஸ்திரீ பாவனையினாற்‌ பேசும்‌ பாசுரம்‌ வருவதில்லை.

ஸ்ருங்கார ரஸத்தின்‌ ஸம்பந்தம்‌ சிறிதுமின்றியே கேவலம்‌ சுத்த பக்தி ரஸமாகவே பாசுரங்கள்‌ அருளி செய்தவர்கள்‌ முதலாழ்வார்கள்‌.
ஆயினும்‌ இப் பாசுரம்‌ ஒன்று தாய் வார்த்தையாகச்‌ செல்லுகிறது.
பேயாழ்வாராகிய பெண் பிள்ளையின்‌ நிலைமையை அவளைப்‌ பெற்று வளர்த்த திருத்தாயார்‌ பேசுவதாக அமைக்கப்பட்ட பாசுரம்‌ இது.
“என்னுடைய மகளானவள்‌” என்ற எழுவாய்‌ இதில்‌ இல்லையாதலால்‌ கற்பித்துக் கொள்ள வேண்டும்‌.
இப்பிரபந்தத்தில்‌ அந்யாபதேசப்‌ பாசுரம்‌ வேறொன்றும்‌ இல்லாதிருக்க இஃ்தொன்றை மாத்திரம்‌
இங்ஙனே தாய்ப் பாசுரமாகக்‌ கொள்ளுதல்‌ சிறவாதென்றும்‌,
“என்‌ மகள்‌” என்ற எழுவாய்‌ இல்லாமையாலும்‌
இவ் வர்த்தம்‌ உசிதமன்று என்றும்‌ சிலர்‌ நினைக்கக்‌ கூடுமாதலால்‌
இப் பாசுரத்திற்கு வேறு வகையான நிர்வாஹமும்‌ பூர்வர்கள்‌ அருளிச்‌ செய்துள்ளனர்‌.
எங்ஙனே எனில்‌:
”பாடும்‌, சூடும்‌, புகும்‌! என்ற வினை முற்றுக்களை முன்னிலையில்‌ வந்தனவாகக்‌ கொண்டு,
**உலகத்தவர்களே! நீங்கள்‌ ஏதாவதொரு மலையைப்‌ பாடவேண்டில்‌ திருவேங்கடமலையைப்‌ பாடுங்கள்‌;
ஏதேனும்‌ ஒரு மலரைக்‌ குழலில்‌ சூடவேண்டில்‌ திருத்துழாய்‌ மலரைச்‌ சூடிக்கொள்வதே
சேஷத்வத்திற்கு உரியதென்று கொண்டு அதனைச்‌ சூடுங்கள்‌;
நீராடுவதற்குத்‌ திருப்பாற்கடலிலே சென்று புகுங்கள்‌” என்பதாக.
இங்கே பெரியவாச்சான்‌ பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி காண்மின்‌:
‘*இப்பிரகரணத்தில்‌ (பிரபந்தத்தில்‌) கீமும்‌ மேலும்‌ அந்யாபதேசமின்றிக்கே யிருக்க
இப்பாட்டொன்றும்‌ இப்படிக்‌ கொள்ளுகிறதென்னென்று நிர்வஹிப்பர்கள்‌…
திருமலையைப்‌ பாடுங்கோள்‌… திருத்துழாயைச்‌ சூடுங்கோள்‌…
விரோதி நிரஸத சீலனானவன்‌ கிடந்த திருப்பாற்கடலிலே முழுகுங்கோள்‌” என்று.
திருவேங்கடத்தின்‌ புகழைப் பாடியும்‌, துளசியைப்‌ போற்றிச்‌ சூடியும்‌ வந்தால்‌,
நாம்‌ திருப்பாற்கடலிலே நித்யம்‌ நீராடலாம்‌; நிச்சயம்‌ வைகுந்தம்‌ புகுவோம்‌ என்பது குறிப்பு …

——————————–

வெற்பென்று வேங்கடம்‌ பாடினேன்‌ வீடாக்கி
நிற்கின்றேன்‌ நின்று நினைக்கின்றேன்‌ – கற்கின்ற
நூல்வலையில்‌. பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்‌
கால்வலையில்‌ பட்டிருந்தேன்‌ காண்‌ (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா. தி, 40),

வீடு – மோட்சம்‌;
நூல் வலை – வேதங்களாகிய வலை;
நூலாட்டி – வேதமாகிய நூலில்‌ போற்றப்படும்‌ லட்சுமி;
கேள்வனார்‌ – கணவர்‌, இங்கே திருமால்‌.

மலைகளின்‌ பெயர்களைச்‌ சொல்லி வருகையில்‌, தற்செயலாக வேங்கடமலை என்றேன்‌;
இதன்‌ பலனாகவே மோட்சம்‌ நிச்சயம்‌ என்றுணர்ந்து நிற்கின்றேன்‌…
“*நாம்‌ சொன்ன சிறிய சொல்லுக்குப்‌ பெரிய பேறு கிடைத்த பாக்கியம்‌ எத்தகையது!” என்று
நினைத்து, வியந்து, மலைத்துப்‌ போனேன்‌!
ஓதப்படுகின்ற வேத சாஸ்திரங்களாகிய வலையில்‌ அகப்பட்டிருக்கும்‌ லக்ஷ்மீநாதனின்‌
திருவடிகளாகிய வலையில்‌ அகப்பட்டு நிலைத்து நிற்கின்றேன்‌.
“மலை’ என்று வருகிற பெயர்களை யெல்லாம்‌ அடுக்காகச்‌ சொல்லுவோம்‌ என்று விநோதமாக முயற்சி செய்து
‘பசு மலை, குருவி மலை’ என்று பலவற்றையும்‌ சொல்லி வருகிற அடைவிலே,
என்னையும்‌ அறியாமல்‌ ‘திருவேங்கடமலை’ என்று என்‌ வாயில்‌ வந்துவிட்டது
இவ் வளவையே கொண்டு எம்பெருமான்‌ என்னைத்‌ திருவேங்கடம்‌ பாடினவனாகக்‌
கணக்கு செய்து கொண்டான்‌ என்பது இதன்‌ கருத்து.
நின்று நினைக்கின்றேன்‌: நாம்‌ புத்தி பூர்வமாக ஒரு நல்ல சொல்லும்‌ சொல்லாது இருக்கவும்‌,
எம்பெருமான்‌ தானே மடிமாங்காயிட்டு
இதனையே அநுஸந்தித்து ஈடுபட்டு நின்றேன்‌ என்கை.
கால்வலையிற்‌ பட்டிருந்தேன்‌? மூன்றாமடியில்‌ சாஸ்திரங்களை எம்பெருமானுக்கு வலையாகவும்‌,
ஈற்றடியில்‌ அவ்வெம்பெருமான்‌ திருவடிகளைத்‌ தமக்கு வலையாகவும்‌ அருளிச்‌ செய்தார்‌.
எம்பெருமானை சாஸ்திரங்களிலிருந்து எப்படிப்‌ பிரிக்க முடியாதோ அப்படியே என்னை
அப்பெருமான்‌ திருவடிகளிலிருந்து பிரிக்கமுடியாது என்றவாறு.

எம்பெருமான்‌ ஒரு வலையில்‌ அகப்பட்டான்‌, –
நானொரு வலையில்‌ அகப்பட்டேன்‌ என்று சமத்காரமாகச்‌ சொல்லுகிறபடி.
வேதங்களையும்‌, ஸ்ம்ருதி இதிகாச புராணங்களையும்‌ சம்பிரதாயமாக ஓதும்‌ முறையைப்‌ பின்பற்றி
ஆராய்ந்தபோது, எம்பெருமானும்‌, பெரிய பிராட்டியும்‌ (லட்சுமியும்‌) இருவரும்‌ நமக்குத்‌ தெய்வம்‌ என்ற தெளிவு உண்டாயிற்று…
சரணாகதரைக்‌ காப்பதாகக்‌ கூறி ௮வன்‌ அதுபடி நடக்கவில்லையாகில்‌ நூலாட்டி (லட்சுமி)
அந்நூல்களே * எதற்கென்று கேள்வனை (ஸ்ரீநிவாஸனைக்‌) கேட்பாள்‌.
ஏதோ வெற்பொன்றைப்‌ பாட நினைத்த போதும்‌ அவனது வேங்கடத்தைப்‌ பாடும்படியாயிற்று,
அதனால்‌ அதை எனக்கு வீடாக்கினான்‌.
அதே மோட்சத் தானம்‌.
இப்படி எனக்கு வாய்த்ததற்கு யானே வியந்து அசையாது நின்று என்ன வாத்ஸல்யமென விசாரியா நின்றேன்‌ (ஆராய்ந்தேன்‌).
இனி நிலைத்து நின்று இடையூறின்றி வேங்கடத்தையே தியானிக்கவும்‌ வாய்த்தது என்றபடி.
இங்கே பாடுதல்‌, நிற்றல்‌, நினைத்தல்‌ என்று வாக்கு, காயம்‌, மனோ ரூப முக்கரணங்களின்‌
வியாபாரங்கள்‌ (செய்கைகள்‌) மொழியப்‌ பெற்றன.

———————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள் -நான்முகன் மடியில் குழவியாய் ராவணன் தலைகளை எண்ணிக் காட்டிய வ்ருத்தாந்தம் —

April 7, 2023

பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு-
நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான்-
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய் தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு —முதல்  திருவந்தாதி–45-

(ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —மூன்றாம் திருவந்தாதி –77-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் திருவந்தாதி -44-

——————————

அவதாரிகை –

இப்படி இருக்கிறவனுடைய நீர்மை
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும்
நிலம் அன்று கிடீர்
என்கிறார் –

—————————-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு —45-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய
மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆஸ்ரயித்த
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நீர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

————————————————————————

வியாக்யானம் –

ஆமே யமரர்க்கு அறிய –
ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனை அறிந்ததாகப் போமோ
இவர்களால் அறியப் போகாமைக்கு
மேன்மையோடு நீர்மையோடு வாசி இல்லை –

வது நிற்க –
அதுக்கு மேலே –

நாமே யறிகிற்போம் –
அதிசய ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளும் மதி கெட்டுக் கிடக்க
நாமே அவனை அறியப் புகுகிறோம்

அங்கன் அன்றிக்கே
அது கிடக்க
நாம் ஆகில் அவனை அறிவுதோம் -என்றுமாம் –
அவன் தானே காட்டக் கண்ட நமக்குக் காண வரிதோ –

நன்னெஞ்சே –
அவர்களுக்குக் காண ஒண்ணாமைக்கு அடி-தம் தம் நெஞ்சு தம்தாமுக்கு விதேயம் அல்லாமை –
விதேயமாகப் பெற்ற எனக்கு ஒரு குறைவுண்டோ –

பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை   –
அவர்கள் அறியாமைக்கு அடி சொல்லுகிறது

சர்வேஸ்வரன் உடைய திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையனாய்த்
தபஸ் ஸாலே பெரியனாய் உள்ள ப்ரஹ்மாவின் காலில்
விழுந்த ராவணானவன்
இவன் பக்கலிலே தனக்கு வேண்டின வரம் எல்லாம் கொள்ளா நிற்க
அவ்வளவிலே ஒரு பாலகனாய் கொண்டு
அந்த ப்ரஹ்மாவின் மடியிலே இருந்து
கெடுவாய் உனக்கு இது கார்யம் அன்று கிடாய் -என்னும் இடத்தைத்
தன் திருவடிகளாலே கீறிக் காட்டி
அந்தர்த்தானம் பண்ணினான் ஆய்த்து-

இவன் அறுப்புண்ணப் புகுகிற தலைகள்
இவற்றைப் பூண் கட்டிக்  கொடுப்புதியாகில் உனக்கு
குடி இருப்பும் இழவு கிடாய் -என்னும்
இவற்றை தெரிவித்தான் ஆய்த்து –

பாதமத்தால் எண்ணினான் பண்பு –
எனக்கு போக்யமான திருவடிகளைக் கொண்டு கிடீர் கீறிக் காட்டிற்று

தனக்கும் கூட ஹிதம் அறியாதே
சூழ்த்துக் கொள்ளப் புக்கவனோ
சர்வேஸ்வரன் உடைய குணங்களை அறியப் புகுகிறான் –

————————————————————

(சாகா வரம் கொடுக்கும் சமயத்தில் இவன் குழந்தை ரூபத்தால் தலைகளைத் தொட்டுக் காட்டி அருளி
மூன்றாம் திருவந்தாதி -நான்முகன் திருவந்தாதி பாசுரங்கள் இதே போல் உண்டே)

இது அவன் காட்டக் கண்ட வருக்கு ஒழிய அல்லாதாருக்கு அறியப் போகாது -என்கிறார் –

இப்படி இருக்கிற அவன் நீர்மை ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் –

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு –45-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆஸ்ரயித்த(தப ஆலோசனை-ஸ்ருஷ்டிக்குத் தக்க ஞானம் கொண்டவன் )
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;(நாய மாத்ம ஸ்ருதி )
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

ஆமே யமரர்க்கு அறிய –எத்தனையேனும் அதிசயித ஞானரான தேவர்களுக்கும் அறியப் போகாது என்கிறார்
வது நிற்க-நாமே யறிகிற்போம் –அவ் விடையாட்டம் நிற்க -நமக்கு அறிய தட்டு என் –
நன்னெஞ்சே -அவன் காட்டக் கண்ட நெஞ்சே (இதனாலே நல் விசேஷணம் )

பூமேய-மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை-பாதமத்தால் எண்ணினான் பண்பு –
ப்ரஹ்மாவின் மடியில் ஒரு சிறு பிள்ளையாய் கண் வளருவாரைப் போலே கிடந்தது -இவனுக்கு வரம் கொடுக்க வேண்டா
இது அநர்த்தமாம் -என்று ராவணன் தலைகளை தன் திருவடிகளாலே எண்ணினவனுடைய நீர்மையை அமரர்க்கு அறியவாமே -என்கிறது –

(அடிச்சியாம் –உன் கோலப்பாதம் தலை மிசை அணியாய் -10-3–என்றும் கதா புன என்றும் பிரார்த்திக்க பெறாமல் இவன் பெற்றானே)

இத்தால் ப்ரஹ்மாவினுடைய அறிவு கேடு சொல்லுகிறது -ஆமே -அபிமானிகளான ப்ரஹ்மாதிகளுக்கும் எளியனாம் –
தாள் பணிந்த வாளரக்கன்-புதுத் தண்டன் கண்டு இறுமாந்து விளைவது அறியாதே வரம் கொடுத்த படி —

(ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —மூன்றாம் திருவந்தாதி –77-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் திருவந்தாதி -44-

தப ஆலோசநே
யஸ்ய ஞான மயம் தபஸ் -தபஸ் என்று அறிவையே சொன்னபடி

அடிச்சியாம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா நின் கோலப்பாதம் -10-3-6- என்று நாங்கள் ஆசைப்பட்டுப் பிரார்த்திப்பதை
ஓர் அரக்கன் தலையிலே வைப்பதே -)

——————————————————–

இப்படி இருக்கிற அவன் நீர்மை ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் –

என் நினைவிலே நடக்கும் நல்ல நெஞ்சே -திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக யுடையனாய் ஜகத் ஸ்ருஷ்டிக்கு
உபகரணமான தபஸ் சப்த வாசியான ஞானத்தை யுடையனான ப்ரஹ்மாவினுடைய கால் கீழே தலை மடுத்து
எனக்கு வரம் வேணும் என்று ஆஸ்ரயித்த சாயுதனான (ஆயுதம் கொண்ட )ராவணனுடைய ஒக்கத்தை யுடைத்தான தலைகளை
புதுக் கும்பீடு கண்டு இறுமாந்து -மேல் விளைவது அறியாமல் அந்த ப்ரஹ்மா அவனுக்கு வேண்டிய வரங்களை கொடுப்பதாக ஒருப்படுகிற அளவிலே

ஒரு பாலகனாய்க் கொண்டு அவன் மடியிலே வந்து ஆவிர்பவித்து அவைகள் அறுப்புண்ணப் போகும் தலைகள் என்னும் இடத்தை
எனக்கு நிரதிசய போக்யமான அந்த திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டி அந்த ப்ரஹ்மாவின் அனர்த்தத்தை பரிஹரித்த
சர்வேஸ்வரனுடைய குணங்களை -தங்கள் ஹிதம் அறியாமல் அனர்த்தத்தை சூழ்த்துக் கொள்ளக் கடவ
ப்ரஹ்மாதி தேவர்களுக்கு அறியப் போமோ –

அது கிடக் கிடாய் -அவன் அருளாலே தெளியக் காண வல்ல நாமே அறிக்கைக்கு சக்தர் ஆகா நின்றோம் –
பேர் அளவுடைய ப்ரஹ்மாதிகள் மதி கெட்டு நிலம் துழவா நிற்க நாமே அவனை அறிய புகா நின்றோம் -என்றுமாம் -(நைச்ய அனுசந்தானம் -அவனுக்கே தெரியாத பொழுது நாம் எங்கனம் அறிவோம் என்றவாறு )

—————————————————–

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

பதவுரை

ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித்தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.

—————————————————————————————-

வியாக்யானம் –

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன்-
சர்வேஸ்வரனாலே ஒதுவிக்கப் பட்டு
அழகிதாக ஆராய்ந்து
தரித்து
வேத வேதாந்த நிரூபணம் பண்ண வல்ல
சதுர்முகனுடைய –

நன் குறங்கில்-
நன்றான மடியிலே –
வாய்ந்த குழவியாய் –
நேர்பட்ட முக்த சிசூவானவனாய்
அழகிய பிள்ளையாய் –
ராவணன் தன வரம் பெறுகைக்காக
ப்ரஹ்மாவின் பக்கலிலே வந்து தண்டன் இட்டுக் கிடக்க
அவனும் தனக்கு
ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமையாலே
புதுக் கும்பீட்டைக் கண்டு இறுமாந்து
தங்கள் அநர்த்தம் அறியாதே
சொன்னது எல்லாம் கொடுக்கப் போக –
ப்ரஹ்மாவின் பக்கலிலே வந்து இவனாலே நோவு பட்டாலும்
நம்முடைய பாடே  இறே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து
அப்போது
சர்வேஸ்வரன் இவன் மடியிலே ஒரு பிள்ளையாய் வந்திருந்து
இவனுக்கு வரங்களை கனக்கக் கொடுப்புதியாகில்
நாடு குடி கிடவாது
உனக்கும் குடி இருப்பு அரிதாம்
ஆனபின்பு அவன் வத்யன் கிடாய் -என்னும் இடம் தோற்ற
அவனுடைய தலைகளைத் தன் திருவடிகளாலே கீறி
எண்ணிக் காட்டித் தான் அந்தர்த்தானம் பண்ணினான் –

வாளரக்கன் –
சாயுதனான ராஷசனுடைய –

ஏய்ந்த  முடிப்போது-
அறுக்கைக்குத் தகுதியான தலைகளிலே
மாலைகள் இட்டு வா வென்று –

மூன்று ஏழு என்று எண்ணினான் –
தன் மௌக்த்யம் தோற்ற எண்ணின படி யாய்த்து –

மூன்று ஏழு –
ஏழும் மூன்றும் என்னாதே  –

ஆர்ந்த அடிப்போது நங்கட்கு அரண்  –
அவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகள் ஆகிற
செவ்விப் பூ நமக்கு ரஷை-
அவனுடைய அபேஷிதம் செய்ய வற்றான திருவடிப்பூ
ஆகிஞ்சன்யராய்
அநந்ய பிரயோஜனரான
நமக்கும் அரண் –

ஆர்ந்த அடிப் பூ –
போக்யதையால் பரிபூரணமான
திருவடிகள் ஆகிற பூ –

———–

கீழ் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது-
இதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது –

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –

(காமம் ஆஸ்ரய துஷ்பூரம் நடைவேற முடியாத தப்பான காரியத்துக்காக தவம் செய்வார் ராவண ஹிரண்யாதிகள்
விளையப் போகும் அநர்த்தம் அறியாமல் வரங்களை தேவர்கள் அளிப்பார்கள்-இன்புறும் இவ் விளையாட்டுடையவன் -)

(சமுத்திர ராஜன் -மீறக்கூடாது என்று நீரே ஸ்ருஷ்ட்டி செய்தபின் எவ்வாறு வழி விடுவேன்
நளன் தபஸ் பண்ணி வரம் நொண்டி சாக்கு வைத்து அணை கட்டி
அனைத்துக்கும் ஸம் ஐயம் செய்து அன்றோ நீர் நிர்வஹிக்கிறீர்)

(கோலம் போல் ராமாயணம் பாரதம் -புள்ளி வைத்து கோலம் -கோலம் முடிந்ததும் புள்ளிகள் தெரியாதே
அனைத்துக்கும் தாத்பர்யங்கள் ஆச்சார்யர்கள் காட்டி அருளுகிறார்
உன்னுடைய விக்ரமம் ஒழியாமல் எல்லாம் நீயே காட்டிக் கொடுக்கிறாய் ஆழ்வாராதிகளுக்கு)

(ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்)
பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||–ஶ்லோகம் 13 –

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?)

(ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு -ஸ்ரீ முதல் திருவந்தாதி- –45-)

(கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் அந்தாதி -44-)

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

பதவுரை

ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித் தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன் —
சர்வேஸ்வரனாலே ஓதுவிக்கப் பட்டு வேதார்த்த நிரூபணம் பண்ண வல்ல ப்ரஹ்மாவினுடைய குறங்கிலே–

(யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தஸ்மை )

ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமை யாலே புதுக் கும்பிடைக் கண்டு இறுமாந்து
தாங்கள் அநர்த்தம் அறியாதே ராவணனுக்குத் தேடிற்று எல்லாம் கொடுக்கப் புக –

இவனால் நோவு பட்டாலும் நம்முடைய பாடே இறே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து –

வாய்ந்த குழவியாய்–
அழகிய பிள்ளையாய்

வாளரக்கன்-
சாயுதனான ராக்ஷஸன் யுடைய

ஏய்ந்த-முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த-அடிப்போது நங்கட்கு அரண்  —
ராக்ஷஸனுடைய தலைகளை முஃயத்தாலே-மூன்று ஏழு என்று எண்ணினவனுடைய
அபேக்ஷித்தத்தைச் செய்யவற்றாய் போக்யமான திருவடிகள் நமக்கு ரக்ஷை –

(ஆச்சார்யர்கள் திருவடி ஸ்தானம் -உபதேஸிக்கப் பண்ணுகிறான் நம்மையும் திருத்திப் பணி கொள்ளவே
அவர்கள் ஆதி பணிந்து உஜ்ஜீவனம் அடையலாம்-திருவடிகளே அவனுக்கும் ரக்ஷகம் )

——————————————————————-

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –

அர்த்த ஸஹிதமாக ஆராய்ந்து அதிகரிக்கப் பட்ட பெறுதற்கு அரிய வேதத்தைத் தனக்கு நிரூபகமாக யுடையனான
சதுர்முகனுடைய அழகிய மடியிலே நேர் பட்ட முக்த சிஸூவாய்க் கொண்டு சாயுதனான ராவணனுடைய
அறுப்புண்கைக்குத் தகுதியான மாலை கட்டின தலைகளைத் தன் முஃத்யம் தோற்ற மூன்றும் ஏழும் என்று
அறுப்புண்கைக்கு யோக்யம் என்னும் இடம் தோற்றத் திருவடிகளால் எண்ணிக் காட்டி ப்ரஹ்மாவை ரஷித்தவனுடைய
போக்யத்தையால் பரி பூர்ணமான திருவடிகள் ஆகிற செவ்விப் பூக்கள் –அகிஞ்சனராய் அநந்ய பிரயோஜனரான நமக்கு ரக்ஷை –

(மாறுசெய்த வாள்அரக்கன்*  நாள்உலப்ப அன்றுஇலங்கை* 
நீறுசெய்து சென்று கொன்று*  வென்றி கொண்ட வீரனார்,*
வேறுசெய்து தம்முள் என்னை*  வைத்திடாமையால்,*  நமன்- 
கூறுசெய்து கொண்டுஇறந்த*  குற்றம் எண்ண வல்லனே.  -வாள் அரக்கன் -சந்த்ரஹாசம் வாள் சிவன் கொடுக்க -பிரமன் கொடுக்கும் நாள் )

—————————————————————————————————

ப்ரஹ்மாதிகள் தங்களுக்கு ஹிதம் அறியாத போது அறிவித்து-
பிரதிகூல நிரசன சீலனானவன் நிற்கிற
திருமலையிலே கரண பாடவம் யுள்ள போதே
எல்லாரும் போங்கள் என்கிறார் –

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

பதவுரை

குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டி விட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்துபோம்–ஆசை கொண்டு செல்லுங்கோள்

கொண்டு -இத்யாதி –
ப்ரஹ்மா தன்னை ஆஸ்ரயித்த ராவணனுக்கு வரம் கொடுக்க புக்கவாறே-
எடுத்து மடியிலே வைத்த பிள்ளை வடிவாய்-
இவன் -வத்யன்-வரம் கொடுக்கலாகாது என்று தோன்றும்படி
அவன் தலைகளைத் திருவடிகளாலே அவனுக்குத் தெரியாதபடி
விளையாடுவாரைப் போலே வத்யமாய்ப் போம் என்று பண்டே எண்ணிப் பின்பு
போன ஆஸ்ரிதருக்கு ஹித காமனான குமரன் நிற்கிற திருச் சோலைகளை யுடைத்தான திரு மலையிலே
கால் கடியார் எல்லாரும் விரைந்து போங்கோள்  என்கிறார் –

————————————————————————–

(குமரருள்ளீர்-பாலர் ஆகையாலே கால் நடை தருமே –
கால் நடை ஆடும் போதே ஆஸ்ரயித்து போருங்கோள்-)

அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-
ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற திருமலையிலே-
படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

(குமரர் உள்ளீர் பாசுரம் -அப்பொழுது தான் கரணங்கள் நன்றாக இருக்கும்
சீமாலிகன் -மல்லிகை மா மலர் கொண்டு ஆர்த்ததும் -இதுவும் –
போகத்தில் வழுவாத ஆழ்வார்கள் மட்டும் கண்டு அருளிச் செய்தவை
புராணங்களில் இல்லை )

அப்பிள்ளை உரை அவதாரிகை
அறிவுடையாரும் மேல் வரும் அநர்த்தம் அறிந்து பரிகரிக்க மாட்டாமல் கலங்கி
(தபஸ்ஸூ பண்ணினான் என்று வரம் கொடுத்து )
அநர்த்தம் வந்து கலங்கிய அப்படிப்பட்ட தசையிலும் ஹிதைஷியாய் ரஷிக்கும் சர்வேஸ்வரன் –
திரு வேங்கடத்தானை -கரணங்கள் நல்ல தசையில் இருக்கும் போதே
சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

பதவுரை

குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டி விட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்து போம்–ஆசை கொண்டு செல்லுங்கோள்-
புரிந்து — ஆஸ்ரயித்து
(விஷய ஞானம் உள்ளாரை வரச் சொல்வார் )

ப்ரஹ்மாவினால் எடுத்துக் கொண்டு மடியில் வைத்துக் கொள்ளப் பட்ட சிறு பிள்ளையாய்
தண்ட்யனான ராவணாசூரனுடைய தலைகளை முன்பு
திருவடிகளால் எண்ணி
அந்தர் தானமான நித்ய யுவாவான ஸர்வேஸ்வரன் எழுந்து அருளி இருக்கிற
தோப்புக்களை யுடைய திருமலையை நல்ல வயஸ்ஸை யுடையவர்களே ஆஸ்ரயித்துப் போருங்கோள் –

எடுத்து மடியில் வைக்கும் பிள்ளையாய்-
தண்ட்யனான ராஷசன் தலை பத்தும் அறுக்கப்படும் என்று-
திருவடிகளாலே கீறிக் காட்டி
அந்தர்த் தானம் பண்ணின முக்தன் நிற்கும்-திருமலைக்கே
கால்நடை யாடும் போதே
ஆஸ்ரயித்துப் போருங்கோள்-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு -ஸ்ரீ முதல் திருவந்தாதி- –45-

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —–ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி –77-

(குமரர் உள்ளீர்
பால்யேந திஷ்டா சேத் -ப்ரஹ்ம ஞானி குழந்தையைப் போல் இருக்கக் கடவன்
பரமாத்ம ஞானி குழந்தை யுள்ளம் படைத்தராய் இருப்பார் )

அப்பிள்ளை உரை
ப்ரஹ்மா தன்னை ஆஸ்ரயித்த ராவணனுக்கு வரம் கொடுக்கும் தசையில்
(மா மதலைப்பெருமாள் திருச்சேறை )
எடுத்து மடியில் வைத்துக் கொள்ளும்படி முக்த சிசுவாக வடிவைக் கொண்டு
அநீதியை செய்து போகும்-கை வளருகையாலே –
சித்ரவதம் பண்ணி தண்டிக்க யோக்யனான ராவணன்
இவை அறுபடப் போகும் தலைகளை ஒரு நாளிலே
அவனுக்கும் தெரியாதபடி திருவடிகளால் கீறி எண்ணிக் காட்டி
ஆஸ்ரித விஷயத்தில் ஹித காமனான முக்தன்
(திருமலை அப்பனுக்கு பிள்ளைத்தனம்
குழந்தையாக சேவித்துக் காட்டி அருளி-தப்பே தெரியாத படி அனுக்ரஹம் –
ஸர்வஞ்ஞனுக்கு ஒன்றும் தெரியாமல் இருக்க குழந்தை தானே )
அவன் வர்த்திக்கும் திருச் சோலைகள் நிறைந்த திருமலைக்கே
படு கரணராய் -மனமும் ஒன்றி- இளமை குன்றாத நிலையிலேயே
அபிமுகராய்க் கொண்டு சடக்கென வந்து ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –