Archive for June, 2019

ஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் – நான்காம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —

June 26, 2019

போதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென் கரை மேல்
மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4-1-1-

ஸ்ரீ மாதவன் தான் உறையுமிடம்- ரசிகனானவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
ஸ்ரீ பிராட்டியும் தானுமாக ஸ்ரீ சித்ர கூடத்திலே வர்த்தித்தால் போலே-என்கிறார் முதல் பாசுரத்தில்

சிருஷ்டி சம்ஹாரங்களுக்கு கடவரான ப்ரஹ்மாதிகளுக்கும் அந்தராத்மாவாவாய்ப் புக்கு நின்று
அவ்வவ கார்யங்களை நடத்திக் கொடுத்தும்-ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தை நடத்தியும் போருகையாலே
மூவரும் நிற்கிறான் தானே என்று சொல்லாம்படியாய்-மூர்த்தி சப்தம் ஸ்வரூப வாசியாய் –
அவர்களுக்கும் காரண பூதனாய் பிரதானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகளுக்கும் தனக்கு பிரகாரமாய் புறம்பு ஒருவர் இன்றிக்கே உபய விபூதியும்
தன் நிழலிலே ஒதுங்கும்படி இருக்கையாலே தலைவனானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

தாம்தாம் அதிகாரத்துக்கு பாதகம் உள்ளவர் ஈச்வரோஹம் என்று இருப்பவர்கள்
எங்களுக்கு ஸ்வாமியான நீ எங்கள் பக்கலிலே பிரசாதத்தை பண்ணி அருள வேணும் -என்ன
அவர்கள் உடைய அதிகாரங்களை நடத்திக் கொடுக்கைகாக வந்து நின்று அருளுகிற தேசம்
இப்படி ஒரு கார்யப் பாட்டால் அன்றிக்கே சோலை வாய்ப்புக் கண்டு விடாதே வர்த்திக்கிற தேசம் ஆய்த்து
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

பிரளய ஆபத்திலே திரு வயிற்றிலே வைத்து நோக்கின உபகாரகன் வர்த்திக்கிற தேசம்
சிம்ஹம் வர்த்திக்கும் முழஞ்சு என்னுமா போலே
ஒருவரால் ஜெயிக்க ஒண்ணாத பெரு மிடுக்கை உடையராய் இருக்கிறவர்கள் நெருங்கி வர்த்திக்கிற தேசம்
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

பூமிப் பரப்பை அடைய அமுது செய்து ஸ்ரீ சர்வேஸ்வரனை அபரிச் சேத்யன்-என்று அறியக் கடவ வேதங்களுக்கும்
எட்ட ஒண்ணாத படியான பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம்
அதிமாநுஷ சேஷ்டிதத்தை உடையனாய் ஒரு பவனான ஆலிலையிலே கண் வளர்ந்து அருளுகிற
சர்வா திகன் வர்த்திக்கிற தேசம்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

நாட்டில் நடையாடாத ஸ்ரீ நரசிம்ஹ வேஷத்தை பரிக்ரஹித்து ஹிரண்யன் இடைய முரட்டு உடலிலே
வியாபாரியா நிற்கச் செய்தேயும்-வாடக் கடவதல்லாத கூரிய திரு உகிராலே-ஓன்று செய்தானாய் விடுகை அன்றிக்கே
உதிரம் அளைந்த கையேடு இருந்தானை -பெரியாழ்வார் திருமொழி -4-1-1–என்கிறபடியே
சிறுக்கன் மேலே சீறினவன் பக்கலிலே தனக்கு சீற்றம் மாறாமையாலே பிளந்து பின்னை
அளைந்து இருந்த வ்யாமோஹம்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற
வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

மனோஹாரியான சேஷ்டிதத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்-நன்மை மிக்க அவதி இன்றிக்கே இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே
ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் உடன் ஒரு கோவையாய் நச புன ஆவர்த்தத்தே -என்கிறபடி
ஒருநாளும் பிரியாதே இருக்கப் பெறுவர் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————

கம்பா மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி யவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்
செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
வம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமே—4-2-1-

ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் கேளாத படி வர பலத்தாலே பூண் கட்டி இருக்கிற தலைகளை
ஷத்ரியத்துவத்துக்கு ஏகாந்தமான அம்பாலே அழியச் செய்து
ராஷசர் உடைய ஐஸ்வர்யத்தை நம்முடையான் ஒருவன் கடவனாகப் பெற்றோம் இறே என்று
அந்த ஐஸ்வர்யத்தை அவன் தம்பியான ஸ்ரீ விபீஷணனுக்கு கொடுத்து அருளினவன்
வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-என்கிறார் முதல் பாசுரத்தில்

அந்த நிருத்தத்திலே-வன்மைக் கூத்து என்றும்-மென்மைக் கூத்து என்றும் சில உண்டு -அவற்றை
அடையப் பண்ணின அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் வந்து வர்த்திக்கிற கோயில்
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அவற்றின் உடைய ரஷணமும் தனக்கே பரம் ஆகையாலே அவற்றை மேய்த்து அவற்றின் உடைய ஆபத்தை
போக்கி ரஷிக்கிறவன்-இன்னமும் இப்படி ரஷிக்கைக்கு பாங்கான தேசம் என்று
அவன் உகந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

உள்ளே போய் புக்கு கம்சன் தலை மயிரைப் பிடித்து முகம் கீழ் பட வலித்து திருவடிகளாலே யுதைத்து முடித்தவன்
இன்னும் இப்படிப் பட்ட விரோதி அம்சத்தை போக்குகைக்காக நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

இதர சமாஸ்ரயணம் பண்ணின பாணன் உடைய ஆயிரம் தோளையும் தரித்தவன்
இன்னும் ஆஸ்ரித விரோதிகளை போக்குகைக்கு ஈடாக வந்து வர்த்திக்கிற தேசம்
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

மூவடியை நீர் ஏற்று திருக்கையிலே நீர் விழுந்த அநந்தரம் வளர்ந்து அருளுகிற போது ப்ரஹ்ம பதத்து அளவும் சென்று
அவன் கையிலே திருவடிகள் இருக்க அவன் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும்படி யாகவும்
கங்கை புறப் படும் படியாகவும் திருவடிகளை நிமிர்த்து அருளின ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

அவன் முடிந்து போகச் செய்தேயும் சிறுக்கன் பக்கல் உண்டான வாத்சல்யத்தாலே சீற்றம் மாறாதே
ருதிர வெள்ளத்தை வெண்ணெய் போலே அளந்த ஸ்ரீ நர சிம்ஹம்
எல்லாரும் ஒக்க அஞ்சும் படி வந்து தோற்றின கேசி வாயை கிழித்து தன்னைத் தந்த
மகா உபகாரகன் வந்து வர்த்திக்கிற தேசம் என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

எலும்பானது பூரணமாய் இருக்கும் படியாக – பிஷையை முன்பு அருளின-தேவன் உடைய வலிய சாபம் நீங்க
மகா உதாரனானவன்– வர்த்திக்கிற தேசம்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

தன்னாலே ஸ்ருஷ்டனான சதுர்முகனாலே ஸ்ருஷ்டமான ஜகத் என்று அதன் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக
அவன் விரும்பி வர்த்திக்கிற தேசம்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

அருள் மாரி-ஆஸ்ரிதருக்கு பிரசாதம் பண்ணும் இடத்தில் மேகம் போலே உதாரரான ஸ்ரீ ஆழ்வார்
பண்ணிலே ஆரும்படியாக பாடிய இப்பாடல் இப் பத்தையும் வல்லவர்கள் லோகத்திலே
நிரவதிகமான ஆனந்தத்தை உடையராய்-அநந்தரம் நிரவதிக ப்ரீதி உக்தரான ஸ்ரீ நித்ய சூரிகளோடு
ஒரு கோவையாக பெறுவர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————

பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
வாரணிமுலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப
சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–4-3-1-

லோகத்தில் காட்டிலும் ஐஸ்வர்யம் விஞ்சி இருக்கும் ஆய்த்து அவ் ஊரில் – அது அடைய தோற்றும்படி
தர்ச நீயமான மாடங்களை உடைய திரு நாங்கூரில் நன்றான நடுவுள் ஸ்ரீ செம் பொன் செய் கோயிலின் உள்ளே-
கார் காலத்திலே வர்ஷ உந்முகமாகமாய்க் கொண்டு அழகிய வடிவை உடைத்ததாய் இருப்பதொரு மேகம் போலே
இருககிறவனைக் கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெற்று அசந்நேவ-என்னும் நிலை தீர்ந்து
சந்தமேனம் -என்கிறபடியே உஜ்ஜீவித்து க்ருதார்த்தன் ஆனேன் -என்கிறார் முதல் பாசுரத்தில்

கீழ் திரு மேனி திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுபவித்து-இரண்டாம் பாசுரத்தில்
திவ்ய ஆத்ம ஸ்வரூபம் திவ்ய குண ஸ்வரூபம் அனுபவிக்கிறார்
ஏழு இசையின் சுவை தன்னைச்-சப்த ஸ்வரங்களிலும் உண்டான ரச வஸ்து தான் ஒரு வடிவு கொண்டாப் போலே
நிரதிசய போகய பூதனாய் இருந்துள்ளவனை
பேதியா இன்ப வெள்ளம் -என்ற இடம் ஸ்வரூபத்தின் போக்யதை சொல்லிற்று
இங்கு குண யோகத்தினால் வந்த போக்யதை சொல்லுகிறது

காணவே தாபத் த்ரயம் ஆறும்படி ஸ்ரமஹரமான வடிவை உடையவனை கண்டு அனுபவித்து
நான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன் -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

கீழ்ப் பாட்டில் அந்தராத்மாவை அனுபவித்தவர் நான்காம் பாசுரத்தில்
விபவத்தையும்
அதுக்கடியான வ்யூஹத்தையும் அனுசந்தித்து உகக்கிறார்-
பசுக்களையும் இடையரையும் நோக்குகைக்காக ஸ்ரீ கோவிந்த அபிஷேகம் பண்ணி நின்றாப் போலே
சம்சாரிகள் உடைய ரஷணத்துக்காக முடி சூடி நிற்கிறவனை கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே
என்கிறார் நான்காம் பாசுரத்தில்

விபவத்தில் நெஞ்சு சென்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களைப் பேசி அனுபவிக்கிறார்
பொல்லாத நெஞ்சை உடைய ராஷசர் மிடுக்கைப் போக்கினவனே-என்று
அப்படியே எங்கள் பிரதிபந்தங்களைப் போக்கி ரஷிக்க வேணும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி கைக்கு எட்டிற்று ஓர் அம்பை விட்டவனை
நிரவதிக சம்பத்தை உடைய பிராமணர் உடைய அவர்கள் ஐஸ்வர்யத்துக்கு நிதான பூதையான
ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் கூடக் காணப் பெற்று சாம்சாரிக சகல துரிதங்களும் தீரப் பெற்றேன்
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பருவம் நிரம்பாத அளவிலே ஆய்த்து ஈஸ்வரன் செய்ததைச் செய்தது கம்சனை நிரசித்து -ஆஸ்ரித விரோதி
போகப் பெற்றோம் -என்று ஸ்ரமஹரமான என்ற வடிவோடு நின்றவனை-கண்டார் கண் குளிரும்படியாக
ஓர் அஞ்சன கிரி நின்றாப் போலே நிற்கிறவனை கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

இன்னமும் பாணன் போல்வார் விரோதிகள் வந்து முளைக்கில் செய்வது என் என்று மின் விளங்கா நின்றுள்ள
சிகரத்தை உடைத்தான ஸ்ரீ திருமலையில் நித்ய வாசம் பண்ணுகிற வேதைகசமதி கம்யனாய்
ஸ்வயம் பிரகாசமான ஸ்வரூபத்தை உடையனாய் உள்ளவனை-பாலோடு சக்கரை சேர்த்து பருகுவாரைப் போலே
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துடன் ஸ்ரீ திருவேம்கடமுடையானை சேர்த்து அனுபவிக்கிறார்-எட்டாம் பாசுரத்தில்-

பாலும் சக்கரையும் அனுபவித்து தமக்கு இனித்தாகையாலே எல்லாருக்கும் ரசித்தவன் என்று கொண்டு அருளிச் செய்கிறார்
ஒரு கால் ஸ்ரீ சர்வேஸ்வரன் ரஷகன் -என்று இரா மற்று ஒரு போது-வேறு ஓன்று ரஷகம் -என்று இருக்கை அன்றிக்கே
என்றும் ஒக்க சர்வேஸ்வரனே நமக்கு ரஷகன் -என்று தெளிந்து இருக்கிற பிராமணர்
அழகியதாய் நிரவதிகமான ஆனந்தத்தை உடையவனாய் நிற்கிறவனை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பரப்பை உடைத்தான வெண் கொற்றக் குடைக் கீழே பூமியை அடைய பாகவத சேஷம் ஆக்குகைகாக நிர்வஹித்து
அநந்தரம்-நிரவதிக ப்ரீதி உக்தராய் நித்ய சூரிகளோடு ஒரு கோவையாகப் பெறுவர்
பேரருளாளன் எம்பிரான் -என்று உபக்ரமித்து வானவர் கோனை -என்று உபசம்ஹரிக்கிறார்
தேவ ராஜா பிதாமகர் தனம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
நலமுடையவன் அருளினன் அயர்வறும் அமரர்கள் அதிபதி – கோயில் திருமலை பெருமாள் கோயில்
உய்ந்து ஒழிந்தேன் வாழ்ந்து ஒழிந்தேன் அல்லல் தீர்ந்தேன் -ஒன்பது பாட்டும் ஒரு தட்டு
இந்த பல சுருதி ஒரு தட்டு -ஒன்பதோடு ஒன்றும்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————-

மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும் தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்
நூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம்கமுகின் முது பாளை பகுவாய் நண்டின்
சேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே–4-4-1-

பகவத் சரணாரவிந்த திவ்ய பரிமளம் யாதொரு ஜந்துவின் இடத்தில் உண்டாகிறதோ
அங்கு சூரிகள் பிரசாதமும் குறைவற உண்டாம்–ஸ்வாபதேசம்-
முதலையாலே இடர் பட்ட அளவிலே வந்து உதவிற்று இலன் என்று
எனக்கு நான் கடவேனாய் இடர் பட்டேனோ
ஒருவர் இல்லாதாப் போலே -இடர் படுவதே -என்று ஆனையை ரஷித்த கண்ணர் கிடீர்-
என்கிறார் முதல் பாசுரத்தில்

ஒருத்தரும் விரும்பாத நஞ்சை யுண்டு அறிவு குடி புகுராமையாலே உகந்த பிள்ளை கண்டீர்
மடமகள் வடிவு கொண்ட -என்னாமல் மடமகள் தன் வடிவு கொண்ட -அசாதாரணமான வேஷம்-
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

இடைச்சிகள் சிறு குடில்களின் வாசலிலே படலைத் திருக்கி வைத்துப் போனால்
படலை திறந்து நுழைந்து புக்கு-அன்று கடைந்த வெண்ணெய் செவ்வி அழியாமல் அமுது செய்கைக்காக-
இவனுக்கு நுழைந்து புகுகை யாகை இறே குடிலின் உடைய பெருமை-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

கறுப்பு ஆர்ந்த திண்ணியதான ருஷபங்களை அடர்த்து விவாஹ மங்களத்தை நிர்வஹித்த
கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரீ ருக்மிணி ஸ்ரீ நப்பின்னை இருவர் உடன் சம்ஸ்லேஷித்த படியை அனுசந்திக்கிறார்-
வெளுத்த தந்த பங்க்தியை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார்-
அவன் திருமேனியைப் பார்த்த படியே இருக்கையாலே திருமேனியிலே கறுப்பு கண்ணிலே ஊறின ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் மற்றும் உள்ள முதலிகளுமாக இப்பாட்டில் சொல்லுகிறது என் -என்று
ஸ்ரீ பட்டருக்கு விண்ணப்பம் செய்ய0ஒரு கால் இயலைக் கேளா ராவணன் வார்த்தை காண்-என்று அருளிச் செய்தார்
ஆறாம் பாசுரத்தில்

ஸ்ரீ சர்வேஸ்வரன் செல்லும்படியான யாகம் இறே மங்கலங்கள் சேரத் தட்டு இல்லை இறே
மகா பலி உடையனாய் தான் குறைவாளனாய் இரந்த-என்ன பிள்ளை தான்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பூமியை இடந்து அதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை புல்கி கோட்டிடையிலே நீல மணி அழுத்தினால் போலே
வைத்த செயலாலே என்னை அடிமை கொண்டவன் கிடீர்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஆழியானது மிக்கு இருந்துள்ள ஊழி வெள்ளத்தைப் பண்டு திருமேனியிலே ஏக தேசத்தில் அடக்கின ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர்
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஐந்தும் ஐந்தும் வல்லார்-ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் அபதானங்கள் ஐந்தும் அது கலசாத ஐந்தும்
ஐஹிகத்தில் ஐஸ்வர்யமும் குறைவற புஜித்து ஸ்ரீ பரம பதத்தில் ஸ்ரீ நித்ய சூரிகளோடு
ஒரு கோவையாக விளங்குவர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

————————

தூம்புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னு
காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட வெங்கும்
தேம பொழில் கமழ் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–4-5-1

மலையை ஏந்தி பரிஹரிக்கப் போகாத மழையைக் காத்த என் ஸ்ரீ ஸ்வாமி-என்கிறார் முதல் பாசுரத்தில்

இலங்கையைப் பற்றின ராவண சம்பந்தத்தால் வந்த துக்கம் போம்படியாக பிரதி பஷத்தின் மேலே
கண் பாராதே அம்பை விட்ட ஸ்ரீ ஸ்வாமி-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அவ் ஊரில் உள்ளாருக்கு அத்யயனமும் அனுஷ்டானமும் யாத்ரையாய் இருக்குமா போலே யாய்த்து
அவனுக்கு விரோதி நிரசனம் யாத்ரையாய் இருக்கும் படி-
சேக்கள் உடைய வியாபாரத்தை மணல் கொட்டகம் அழிக்குமா போலே அழித்து ஸ்ரீ நப்பின்னை பிராட்டியார் உடைய
செவ்வியை உடைத்தான தோள்களோடு புணர்ந்த என் ஸ்ரீ ஸ்வாமி-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அவன் விரோதி நிரசனத்தால் அல்லது போது போக்க மாட்டாதாப் போலே யாய்த்து
இவையும் ரச அனுபவத்தால் அல்லது போது போக்க மாட்டாதே இருக்கும் படியும்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஏறிட்டுக் கொடு வந்த துர்மானத்தைப் போக்கி தானான படியே யாக்கி விட்ட படி
அவளுடைய செவியையும் மூக்கையும் வாளாலே அறுத்த என் ஸ்வாமி –
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள ஸ்ரீ திரு நாங்கூர்
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

தனக்குப் போராத ஜன்மங்களிலே வந்து பிறந்து ரஷகன் ஆனவன் தானான நிலையிலே காணலாம் படி
திரு மணிக் கூடத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான்
அவன் அவதரித்து செய்தது எல்லாம் தாங்களே செய்ய வல்லார் ஆய்த்து
அவ் ஊரில் உள்ளார் இருப்பது–என்கிறார்-ஆறாம் பாசுரத்தில்

பரார்தமான பதார்த்தங்களுக்கு நியந்தாவான ஸ்ரீ சர்வேஸ்வரன் இங்கே வந்து வர்த்தியா நின்றான்-என்கிறார்
ஏழாம் பாசுரத்தில்

த்யாஜ்யமாயும் உபாதேயமாயும் பௌதிகமாயும் உள்ள பதார்த்தங்களுக்கு நியந்தா வானவன்
இங்கே வந்து வர்த்தியா நின்றான் என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

நிஷித்த அனுஷ்டானம் -விஹித அனுஷ்டானம்-மோஷம்-மோஷத்துக்கு உபயோகியான ஆத்ம குணங்கள்
அதுக்கு விரோதியான அநாத்ம குணங்கள்-இவற்றுக்கு எல்லாம் நியந்தா வானவன் இங்கே வந்து வர்த்தியா நிற்கிறான்
என்கிறார்-ஒன்பதாம் பாசுரத்தில்-

இத்தை வல்லவர்கள் கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு ஸ்வர்க்கத்தை நிர்வஹித்து அதுக்கு மேலே ஆதித்ய மண்டலத்தின்
நடுவிட்டு ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கமே போய் பரமபதத்திலே சென்று ஸ்வ ஸ்வரூபத்தை பெற்று உஜ்ஜ்வலராவர்
சர்வ நிர்வாஹகன் -சர்வ அபேஷித ப்ரதன் -விரோதி நிரசன சீலன்-விரோதி நிவ்ருத்த பூர்வக பல ப்ரதத்வம்
அதிகாரிகள் பேதம் பற்ற அருளிச் செய்கிறார்-பத்தாம் பாசுரத்தில்-

———————–

தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நாவள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-1-

முள் பாய்ந்தால் அம்மே -என்னுமா போலே-பூர்வ ஜன்ம வாசனையாலே
நாவுக்கு அலங்காரமான திரு நாமத்தைச் சொல்லி
நா வாயில் உண்டே-நமோ நாராயணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -என்னக் கடவது இறே
அதுவும் நாராயணாவோ என்று இறே கூப்பிட்டது-
ஒரோ கால விசேஷங்களிலேயாய்-தீர்த்தம் பிரசாதித்தது என்னாமே நித்ய வாஸம் பண்ணுகிற
உன்னை உகந்தாரை விட மாட்டாதே வர்த்திக்கிற நீயே ரஷகன் ஆக வேணும்
அவன் மாம் ஏகம்-என்ற வார்த்தை இவர் தாமே அருளிச் செய்கிறார்-என்கிறார் முதல் பாசுரத்தில் –

காவலாக இட்டு வைத்த கடல் தானே பாதகம் ஆனவாறே நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு
பூமியை இடந்து எடுத்து
மகாபலி பக்கலிலே ஔதார்யம் என்று ஒரு குணம் கிடைக்கையாலே அவனை அழிக்க மாட்டாதே தன்னை அழித்தான் ஆய்த்து-
கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு தான் இரந்தான் ஆய்த்து மஹாபலியினுடைய மிடுக்கை அழிக்கைகாக
அவ் ஊரில் உள்ளாரில் ஒருவனாய் புகுந்து இருக்கிற நீயே எனக்கு ரஷகனாக வேணும்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ வாமனன் படி யாய்த்து அங்கு உள்ளவை எல்லாம் இருப்பது
அதாவது-தோற்றத்தில் கார்யப்பாடு உண்டாய் இருக்கை-
முளைத்த உடனே பல பர்யந்தமாய் ஸ்ரீ வாமனன் உடன் சாம்யம் இவற்றுக்கு-பழம் -போக்யம் குறைவற்று
போக்தாக்கள் தேட்டமாய்த்து இருப்பது
அசக்தன் சக்தனை அன்றோ அபாஸ்ரயமாகப் பற்றுவது
இப்படி சக்தனான நீயே சந்நிஹிதனான பின்பு நீயே ரஷகனாக வேணும்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஏதத் வ்ரதம் மம-என்கிறபடியே ரஷிக்கைக்கு ஈடாக வீரக் கழலை இட்டு அதுக்கு ஈடாக
சந்நிஹிதனுமாய் இருக்கிற உன்னை ஒழிய எனக்கு சுபாஸ்ரயம் உண்டோ-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஆஸ்ரித சம்ரஷணத்துக்கும் அநாஸ்ரித சம்ஹாரத்துக்கும் உறுப்பாக ஸ்ரீ பிராட்டியோடே
நித்ய சம்ச்லேஷமாய் செல்லா நிற்கும்
கடவுள் என்று பர தேவதை என்ற படியாய் சர்வாதிகனான நீயே சந்நிஹிதனாய் இருக்க நான்
வேறு ஒருவரைத் தேடித் போகவோ-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

மல்லர் முடிந்தார் என்று கேட்ட அநந்தரம் பெரிய சீற்றத்தோடு வந்து தோற்றின
கம்சனை எதிரிட்டு சென்று கொன்று-இது பருவம் நிரம்புவதற்கு முன்பு செய்த கார்யம்
பருவம் நிரம்பிய பின் செய்தகார்யம் துர்யோதநாதிகள் உடன் ஷத்ரியர் என்று பேர் பெற்றவர் அடங்கலும்
முடிந்து போம்படியாக பாரத சமரத்தை நடத்தி பூ பாரத்தைப் போக்கினவனே-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பிதாவினுடைய ராஜ்ஜியம் புத்திரன் பண்ண வேணும் -மர்யாதா பங்கம் பண்ண ஒண்ணாது-என்று
அதுக்காக தூது எழுந்து அருளினான்
ரஷிக்கக் கடவதாக ஏறிட்டுக் கொண்டு அசந்நிஹிதனாய் இருக்கை அன்றிக்கே
ஸ்ரீ திருக் காவளம் பாடியிலே சந்நிஹிதனான நீயே எனக்கு ரஷகனாக வேணும்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

தர்ச நீயமான பூக்களை உடைத்தான பொழிலாலே சூழப் பட்ட இந்த்ரன் ஏற்றின திரு நாங்கூரிலே
ஸ்வர்க்கத்தில் உண்டான வேண்டப்பாடு பூமிக்கும் உண்டாக வேணும் என்று
அக் கட்டளையாலே இந்த்ரனாலே சமைக்கப் பட்டது திரு நாங்கூர் என்று சொல்லக் கடவது
அன்று அப்படி ஸ்ரீ சத்ய பாமை பிராட்டிக்கு உதவினது எல்லாருக்கும் ஒக்க உதவுகைக்காக
ஸ்ரீ திருக் காவளம் பாடியிலே வந்து சந்நிஹிதனான நீயே ரஷகனாக வேணும்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

கார்யாவஸ்தமாயும் காரணாவஸ்தமாயும் போருகிறது ஸ்ரீ ப்ரஹ்மம் ஒன்றுமே என்று
வேதங்களால் பிரதிபாதிக்கப் படுபவனுமாய்
ஸ்ரீ திரு நாங்கூரிலே-சர்வ கந்த -என்கிற வஸ்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் என்று
தோற்றும்படி இருக்கும் ஆய்த்து
இப்படி நிரதிசய போக்யனான நீயே ரஷகனாக வேணும்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

திருக் காவளம் பாடியிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கிருஷ்ணனை
கிருஷ்ண அவதாரம் பர தசையோடு ஒக்கச் சொல்லலாம் படி இறே இங்குத்தை சௌலப்யம்
இப்பத்தையும் வல்லவர்-மோஷத்தை பலமாகச் சொல்லில் அதிகாரிகள் கிடையாது -என்று
அபிமத சாதனம் என்னவே கற்பர்கள்
பின்னை மோஷத்தில் கொடு போய் மூட்டுகிறோம் -என்று-ஐஸ்வர்யத்தை பலமாகச் சொல்லிற்று-பத்தாம் பாசுரத்தில்

——————————-

கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்
திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து
வண்ணா வடியேன் இடரைக் களையாயே –4-7-1-

பய பிரசங்கம் இல்லாத தேசத்திலே இருக்கிற நிருபாதிக பந்துவே புறம்பு புகல் உண்டு என்று
இருக்கில் அன்றோ ஆறி இருக்கலாவது-அநந்ய கதியாய் இருக்கிற என் இடரைக் களையாய் –
இவ்வடிவை அனுபவிக்கையை இழக்கப் போமோ-என்கிறார் முதல் பாசுரத்தில்

ரஷணத்துக்கு வளையம் வைத்து இருக்கிறாயே-விச்சேதியாதே சாவதி அன்றிக்கே இருந்துள்ள
புகழை உடைய பிராமணர் உடைய ஸ்ரீ திரு நாங்கூர்-அவ் ஊரில் உள்ளார் படி உனக்கு வேண்டாவோ –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

மழையில் அகப்பட்ட இடையர் இடருக்கும் என் இடருக்கும் வாசி பார்த்துக் கொள்ளாய்
துரியோதனன் தானும் தன்னுடைய பரிகரமுமாக தம் தாம் வசம் அன்றிக்கே வணங்கினார்கள்
சேஷி முன்பு சேஷ பூதர் அனுகூலிக்கக் கடவோம் அல்லோம் -என்னும் வ்யவஸ்தை
அப்படியே சென்றார் எல்லாரும் வணங்கா நின்ற திரு வெள்ளக் குளத்துள் நின்றாய்
ஸ்வரூப ரூபகுணங்களால் எல்லை காண ஒண்ணாதவனே
இரண்டு தலையும் ஒக்க ஆற்றாமை உண்டாகில் அன்றோ ஆறி இருப்பது-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

செல்ல நின்றதுவும்-வர நின்றதுவும்-ஆகர்ஷமாய் இருக்கைக்கும்
கிட்டினார் குற்றம் காணாக் கண் இட்டு இருக்கும்படி யாலேயும் -ஆனாய் -என்கிறார் நாலாம் பாசுரத்தில்

திருமலையிலே மேவின விளக்கே-தன் ஸ்வரூப ரூப குணங்களுக்கு தானே பிரகாசன் ஆனவனே
நீ எதிர் சூழல் புக்குத் திரியா நின்றால்-இறாயாதே -பார்ஸ்வத்தில் ஆம்படி -பாங்காக வருவேன் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

அவித்யா கர்மா வாசனா ருசி பகவத் அபசாராதிகள் பிராரப்த கர்மம்
இவை துடக்கமான எல்லா இடரும் கெடுமாறு அருளாயே-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஈஸ்வரத்வ பிடாரால் அன்றிக்கே கையிலே கோலைக் கொண்டு ஜாதி உசிதமான வ்ருத்தியைச் செய்தாய் என்று
இடைச் சாதியாக எழுதிக் கொடுத்து இருக்குமத்தாலே என்னை அனன்யார்ஹனாகப் பண்ணினவனே
திரு வெள்ளக் குளத்திலே நிற்கிற பெரியோனே என்னால் பொறுக்க ஒண்ணாத பாபத்தை போக்கி அருளாய்
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பிரஜை அறியாதே இருக்கக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
சம்சாரிகள் அறியாதே இருக்க வத்சலன் ஆனவனே ஆருடைய வஸ்து இங்கன் அலமாக்கிறது-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

பூவிலே பிறந்தவள் பூ அடிக் கொதித்து விரும்பி அணைக்கும் படி மார்வு படைத்தவனே-
பரம பதத்தில் நின்றும் வந்து சம்சாரிகள் பக்கலிலே உறைகையாலே தீப்யமாநனாய் இருக்கிறவனே
சம்சாரத்தில் வர்த்திக்கிறான் ஐயோ ஐயோ என்று அருள் புரியாயே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

வல்லவர்கள் நித்ய சூரிகளோடு ஒரு கோவை ஆவர்கள்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே –4-8-1-

காலும் பாடகமும் பொருந்தின படியை அவன் பாடா இருக்குமவள் அவனூரைப் பாடா நின்றாள்-
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பலரும் தன்னைப் பழிக்க-அவர்களை தனக்கு கூட்டு என்று-அவனூரைப் பாடுவாள் ஆனாள்
ஊரவர் கவ்வை எரு விட்டு -ஏசுவதே பாடுகைக்கு உடல்- என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ கிருஷ்ணன் என்றும் ப்ரஹ்மாதிகள் ஸ்நேஹத்தைப் பண்ணி புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு
ஆஸ்ரயிக்கும் படியாக அவர்கள் மநோ ரதத்தே நிற்கிறவன் என்றும்
ஆனந்தாவஹன் என்றும்–ஜகத் காரண பூதன் என்றும்
ஸ்ரீ நாங்கை யிலே வர்த்திக்கிற தேவ தேவன் என்றும் ஓதி
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பிராட்டி தசை வந்து ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார்
ஒருத்தி வாய் வெருவ-ஒருத்தி கூப்பிட்ட எளிவரவு தீர -ஒரு நாளும் பிரிய வேண்டாதே இருக்கிற
தேசத்திலே இருக்கப் பெறுவார்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில் –

——————-

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே —-4-9-1-

சேஷிக்கு அதிசயத்தை பண்ணி யாய்த்து இவருக்கு ஸ்வரூப சித்தி-
அத்தலைக்கு அதிசயத்தை பண்ணுகையே ஸ்வரூபமாம் படி யாய்த்து ப்ராப்தி இருப்பது –
ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து சந்நிதி பண்ணின ஸ்வாமி-
இவ்வஸ்து உனக்கு சேஷம் -என்னும் இம் முறையை அறிவித்தவனே
இன்று இப்படி ஆறி இருக்கிற நீ-முன் தீம்பு செய்து-சம்பந்த ஞானத்தை எனக்கு பிறப்பிப்பான் என்
சேஷத்வ ஞானத்தை பிறப்பித்து அருளிற்று
அந்த சேஷத்வ அனுரூபமான வ்ருத்தியை என்னைக் கொண்டு அருள வேணும் –
சர்வஞ்ஞன் ஆனவனுக்கும் அறிவிக்க வேண்டும்படி இருக்கிறது காணும்
க்ரம ப்ராப்தி பற்றாத படியான இவருடைய சௌகுமார்யம்-
என் முன்பே நாலடி இட்டு நடந்து காட்டினால்-அக்ரத ப்ரயயௌ ராம -என்கிறபடியே
ஸ்ரீ பிராட்டிக்கு இட்ட விருந்து இட வேணும் காணும் இவருக்கு
இப்படி நடந்தால் போன உயிர் மீளும்-உறாவின பயிரிலே ஒரு பாட்டம் மழை விழுந்தால்
அது ஜீவிக்கச் சொல்ல வேணுமோ –என்கிறார் முதல் பாசுரத்தில்

தர்ச நீயமான ஸ்ரமஹரமான ஸ்ரீ திரு வாலியிலே நித்ய வாஸம் பண்ணி வ்யாமோஹத்தை தெரிவித்தவனே –
கள்வன் கொல் என்னும் படி கைப்பிடித்து வ்யாமோஹத்தை அறிவிப்பித்தவனே
ஸ்ரீ திருவாலி யானைக் கைப்பிடித்து-ஸ்ரீ திரு நறையூர் நம்பியானை உபாய பூதனாகவும் –
திரு இந்தளூரானை சேஷித்வ சம்பந்த ஞானம் அறிவிப்பிதவன்
சம்பந்த ஞானத்தை பிறப்பித்த உனக்கு என்னுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை
கொள்கை யாகிற இம்மாத்ரம் இத்தனையும் செய்கை பெரிய பணியோ –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

புறம்புள்ளார் அழகியதாக ஆசை பட்டான்-ஆசைப் பட்டவனுக்கு அழகிதாக முகம் கொடுத்தார்
இதுவோ தான் சிலர் ஆசைப் பட்டால் பலிக்கும் படி என்று உம்மைப் பழி சொல்லா நின்றார்
அயலாரும் ஏசு கின்றது இதுவே-நான் பேசுகின்றதுவும் இதுவே –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

உமக்கு வருமதில் வேணுமாகில் ஆறி இருக்கிறீர்-எங்களுக்கு வருமதில் உமக்கு ஆறி இருக்கப் போமோ-
நித்ய சூரிகளுக்கு படி விடும் வடிவை
சம்சாரிகளுக்கும் ஒக்க படி விடுகைக்கு அன்றோ ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது
வாசி யற முகம் கொடுக்க வந்து நிற்கிற இடத்தே வாசி வையா நின்றீர்
உம்முடைய உடம்பு உம்மை ஆசைப் பட்டாருக்காக கண்டது என்று இருந்தோம்
அங்கன் அன்றாகில்-அத்தை நீர் கட்டிக் கொண்டு வாழும் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

அநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு ருசி பிறந்த போதே நினைத்த படிகள் எல்லாம்
அனுபவிக்கைக்கு அன்றோ தேவரீர் திரு இந்தளூரிலே வந்து கிட்டி நிற்கிறது –
பூ அலறும் போதை செவ்விபார்த்து பறித்து கொடு வாரா நிற்பாரைப் போலே
ருசி பிறந்த போதே அடிமை கொள்ளுகைக்கு ஈடாக காலம் பார்த்து அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
பரத்வம் நித்ய சூரிகளுக்கு அனுபாவ்யமாய் இருக்கும்
வ்யூஹம் ப்ரஹ்மாதிகள் உடைய கூக்குரல் கேட்கைக்கு ஈடாக இருக்கும்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதாரம் ஸ்ரீ தசரத ஸ்ரீ வசுதேவாதிகள் உடைய பாக்ய பலமாய் இருக்கும்
உகந்து அருளின நிலங்கள் -தங்களுக்கு ஹிதம் இன்னது என்று அறியாதே
சம்சாரம் த்யாஜ்யம் என்று அறியாதே
சர்வேஸ்வரன் பிராப்யன் என்று அறியாதே
இருக்கிற சம்சாரிகளுக்கே முகம் கொடுக்கைகாகவாய் இருக்கும் இறே
குருடருக்கு வைத்த இறையிலியில் விழித்தாருக்கு பிராப்தி இல்லை இறே
பின்னானார் வணங்கும் சோதி -என்னக் கடவது இறே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

அவள் ஏகோந சேஷி யாகையாலே அவன் வரும் வரை காத்து இருக்க வேணும்
உம்மை அரை ஷணமும் காணாவிடில் ஜீவிக்க மாட்டாத அடியேனையும்
அவள் முன்னாகப் பற்றினார்க்கு இத்தனை வாசி உண்டு போலே காணும்
சர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும்-இவருடைய பிரகிருதி மார்த்தவம்
தம்மை ஆசைப் பட்டார் பருவம் அறிந்து முகம் காட்டிற்றிலர் என்னும்அவத்யத்தை பரிஹரிகைக்கு அன்றோ
நீர் ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது-போந்த கார்யத்தை மறக்கிறது என் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

பரார்த்தமான வஸ்துவை உமக்கு என்று இரா நின்றீர் உம்முடைய திருவடிகளை காட்டாமையே ஸ்வபாவமாம்படி யானீர் –
அவ் வபிசந்தியைக் குலைத்து அத்தை அப்படி செய்யப் பெறில்
நான் உபேஷித்தால் தான் இவற்றுக்கு அவ்வருகு போக்குண்டோ
ஆனபின்பு நான் நினைத்த போது கார்யம் செய்கிறோம் -என்று ஆறி இருக்கைக்கு
உம்முடைய பரம பதத்தில் நித்ய சூரிகளோ
மரு பூமியிலே தண்ணீர் போலே உம்மை ஒழிய உண்டு உடுத்துப் போது போக்குகிற இஸ் சம்சாரத்தில்
உம்மால் அல்லது செல்லாத படி இருக்கிற நாங்கள் உஜ்ஜீவீயாமோ-
நீர் அவாக்ய அநாதர என்று இங்கு இருந்தால்-நாங்கள் ஸ்வரூப ஞானத்தால் அதிலே துவக்குண்டு
கண்டு கொண்டு இருக்க மாட்டோமேவாய் திறந்து சொல்லி கார்யம் கொண்டால் தான் உஜ்ஜீவிப்போம் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

இவனுடைய அசாதராண விக்ரஹம் காள மேகம் போலே இருக்கும் என்று சாஸ்த்ரங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே
நீ இப்படி சாஸ்த்ரங்களில் கேட்டுப் போந்த வடிவு தான் இருக்கும்படி இது காண் என்று ஒரு வார்த்தை அருளிச் செய்து
அவ்வடிவைக் காட்ட வேண்டும்
நீர் கொள்ளும் வடிவுகளுக்கு எல்லாம் சாஸ்திரங்கள் இல்லையோ பிரமாணங்களால் கேட்டுப் போக ஒண்ணாது
நம்முடையாருக்கு இவ்வடிவு தான் இது காணும் கோள் என்று காட்ட வேணும் என்று அதுக்காக அன்றோ நீர்
ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

நெஞ்சில் பிரகாசத்தை ஒழியவே நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுக்கும் வடிவை
அங்கு உள்ளாரோபாதி முழுக்க காட்சி கொடுக்கைக்கு அன்றோ இங்கு வந்து நிற்கிறது –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இவற்றை அப்யசித்து-அந்த கர்வத்தாலே யமாதிகள் தலைமேலே அடி இட்டுத் திரியுமவர்கள்
இவற்றை அப்யசிக்கும் அத்தனையே வேண்டுவது
அவர்களுக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஆகவுமாம்-
அந்த ஜன்மத்திலே-அந்த வ்ருத்தத்திலே-அந்த ஞானத்திலே அந்த ஜன்மாதிகளால் வரும் உத்கர்ஷம் வேண்டாதே
ஸ்வத உத்கர்ஷத்தை உடையரான நித்ய சூரிககளால் சிரஸா வஹிக்கப் பெறுவர் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

—————

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென் பால் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-1-

ஆஸ்ரயநீய வஸ்து சந்நிஹிதமான இடம் என்று தோற்றும்படி யாய்த்து அத்தேசத்தில் போக்யதை இருப்பது
எல்லாம் எங்கும் ஒக்க பக்வமாய்த்து அங்கு இருப்பது –
அவன் கோயில் அதுவே என்கையாலே ஆஸ்ரயநீய ஸ்தலம் அதுவே -என்கிறார் முதல் பாசுரத்தில்

மது வனத்தில் புக்க முதலிகள் போலே பெரிய ஆரவாரத்தோடு மது பானத்தைப் பண்ணி
உள்ளுப் புக்க த்ரவ்யம் இருந்த இடத்தே இருக்க ஒட்டாதே ஆலத்தி வையா நிற்கும்
ஸ்வேச்சையிலே பாடா நிற்கும் யாய்த்து –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

பரத சாஸ்தரத்துக்கு வேண்டும் லஷணங்கள் எல்லாம் எழுதிக் கொள்ளலாம் படி
பல வகைப் பட்ட ந்ருத்தங்களைப் பண்ணினவன் வந்து வர்த்திக்கிற தேசம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்கும் படியாக அடுத்து அணியாக ஸ்ரீ திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளின சர்வாதிகன் வந்து சாய்ந்து அருளின கோயில் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஒரு கால் ஆஸ்ரிதன் பக்கல் வாத்சல்யத்தாலே சாரத்தியம் பண்ணி
அதி ரத மகா ரதரான பீஷ்மாதிகள் தேரை விட்டு ஒடும்படியாக துடர்ந்த –செங்கண் மால்
ஆஸ்ரித வாத்சல்யம் அடங்கலும் கண்ணிலே தோற்றும்படி இருப்பானாய்ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவன்
வந்து வர்த்திக்கிற தேசம் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

கையில் வில் பிடித்த பிடியிலே முடிந்து போகிற ராஷசர் அடங்க இவன் கையில் நாம் பட்டுப் போனால் ஆகாதோ –
என்னும்படி தர்ச நீயமான வில்லை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திருக் கோயில்
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

சுத்த ஸ்வாபாவம் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் -என்னுதல்
அன்றிக்கே-சுக்ரன் அத்தேசத்தை உபாசித்தான் என்று ஒரு பிரசித்தி உண்டு அத்தை சொல்லிற்று ஆகவுமாம்
வெள்ளியார் -என்றது அவனை ஆதரித்து சொன்ன படி
அன்றிக்கே –வெள்ளியார் வணங்க –வெள்ளி மலையை உடைய -ருத்ரன் வந்து ஆஸ்ரயிக்க
ஸ்வப்ன லப்த்தம் தனம் யதா -என்கிறபடியே சடக்கென அவன் பாதகத்தைப் போக்கினவன்
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ பிராட்டி போல்வாரை ஏறிட்டுக் கொள்ளக் கடவ மடியிலே துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யனை ஏறிட்டு
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி -என்கிற இடத்துக்கு ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யநான் கேட்டேன் என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர்
பிரதி கூல்யனான ஹிரண்யனை விட்டு ஆசை உடைய என்னை அன்றோ அம்மடியிலே ஏறிட்டுக் கொள்ள அடுப்பது -என்று
தம்மைப் பார்த்து அருளிச் செய்தாராக –
அவனுடைய பரந்த மார்வை கிழித்துப் பொகட்ட ஆஸ்ரித வ்யாமோஹத்துக்கு அவதி இல்லாதவர்
நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

தன் திருவடிகளிலே அசாதாரணராய் இருப்பார் பக்கலிலே கிருபையைப் பண்ணி
இவர்கள் கூக்குரல் கேட்கைக்கு அடுத்து அணித்தாக ஸ்ரீ திருப் பாற் கடல் கோயிலிலே
கண் வளர்ந்து அருளினவன்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பூமியை இடந்து திரு எயிற்றினில் கொண்டு அந்த ஸ்ரமம் ஆறும்படியாக கடல் திரைகளில் குருந் திவலைகள்
துடை குத்தி உறக்கத் ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் ஆய்த்து
ஸ்ரீ திரு வெள்ளியங்குடியிலே சந்நிஹிதன் ஆனான் –
இவற்றை ஆதரித்துக் கொண்டு அப்யசிக்க ஈடான பாக்யாதிகர் கடல் சூழ்ந்த பூமியை தாங்கள் இட்ட வழக்காம்படி ஆளப் பெறுவர் –
பரிந்து பாகவத சேஷம் ஆக்கப் பெறுகையாலே ஐஸ்வர்யத்தை தாம் புருஷார்த்தமாக நினைத்தார்
அத்தாலே இது கற்றாருக்கும் அப்படி கூடல் இது தானே அமையும் என்று இருந்த படியாலே ராஜ்யஸ்ரீ யைப் பெறுவார் என்கிறார்
அன்றிக்கே இது தன்னை சர்வாதிகாரம் ஆக்குகைக்கு சொல்லிற்று ஆகவுமாம் –
ஐஸ்வர்ய காமர் இல்லை யாகில் இத்தை அதிகாரி யார்களே அவர்கள் இழக்க ஒண்ணாது என்னு முகப்பாலே சொல்லுகிறார்
பத்தாம் பாசுரத்தில்

–——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் -நாலாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

June 26, 2019

போதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென் கரை மேல்
மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே-4-1-பிரவேசம் –

தனக்கு அசாதாரணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய பிரதிபந்தகத்தைப் போக்கி –
அரு வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும் அருள் நடந்து
அவர்கள் பக்கலிலே பிரசாதத்தை பண்ணுகைக்காக ஸ்ரீ அரிமேய விண்ணகரிலே சந்நிஹிதன் ஆனான் என்றார் –
அவ்வளவு அன்றிக்கே
பிரயோஜனாந்த பரர்களான ப்ரஹ்மாதிகளுக்கும் -இந்திரனும் இமையவரும் -ஸ்ரீ திருப் பாற் கடலில் போலே
அபிமதங்களைக் கொடுக்கைகாக ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து வர்த்திக்கிற தேசம் ஸ்ரீ திருத் தேவனார் தொகை என்கிறார்-

——————

கம்பா மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி யவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்
செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
வம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமே—4-2-1- பிரவேசம்-

ப்ரஹ்மாதிகளுக்கும் உத்பாதகனுமாய் -(இந்துவார் சடை பாசுரம் -4-2-9–) அவர்கள் தங்கள் தங்களுக்கு அனர்த்தத்தை
சூழ்த்துக் கொள்ளும் அன்று அவற்றைப் போக்கி ரஷிக்கும் ஸ்வ பாவனுமாய் -( வாளையார் பாசுரம் -4-2-8-)
அவர்கள் தாங்கள் அசுரர்கள் உடன் வரும் அன்றும் அவர்களை ஜெயித்து-(ஈசன் தன் பாசுரம்-4-2-9- )
ஜகத்தை ரஷிக்குமவன் – வந்து எழுந்து அருளி இருக்கிற தேசம்
ஸ்ரீ வண் புருஷோத்தம் என்று அத்தேசத்தின் உடைய வைலஷண்யத்தை அனுசந்தித்து அத்தைப் பேசி
அனுபவிக்கிறார்

———————-

பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
வாரணிமுலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப
சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–4-3-1–பிரவேசம்

ஞானானந்த ஸ்வரூபனாய் -பேதியா இன்ப வெள்ளத்தை
நிரதிசய போக்யனாய்-ஏழ் இசையின் சுவை தன்னை – உள்ளத்துள் ஊறிய தேனை
என்றும் ஒக்க உள்ளனாய் இருக்கிற -இறப்பு எதிர் காலக் கழிவும் ஆனானை-ஸ்ரீ சர்வேஸ்வரனை
தன்னை ஆஸ்ரயிக்கும் இடத்தில் புருஷகாரமாம் ஸ்ரீ பிராட்டிமாரோடு கூட வந்து -மலர்மகளோடு மண் மகளும் உடன் நிற்ப –
நித்ய வாசம் பண்ணுகிற ஸ்ரீ செம்பொன் செய் கோயிலின் உள்ளே நான் காணப் பெற்றேன் என்று
தாம் பெற்ற பேற்றை அனுபவித்து இனியர் ஆகிறார்

————————

மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும் தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்
நூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம்கமுகின் முது பாளை பகுவாய் நண்டின்
சேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே–4-4-1- பிரவேசம்

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய்-சர்வ ரஷகனாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
ஸ்ரீ திருத் தெற்றி அம்பலத்திலே-நம்முடைய விரோதியைப் போக்கி நம்மை அடிமை கொள்ளுகைக்காக
வந்து நின்றான் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார் –
என் செங்கண்மால் -என்று பாட்டு தோறும் அருளுகிறார்

———————

தூம்புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னு
காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட வெங்கும்
தேம பொழில் கமழ் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–4-5-1–பிரவேசம்

சர்வ நிர்வாஹகனாய்-ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய்
விரோதியைப் போக்கும் இடத்தில் தானே வந்து அவதரித்து போக்குமவன் ஸ்ரீ திரு மணிக் கூடத்தில் நின்றான் என்று
க்ருதஞ்ஞர் ஆகையாலே -இவை எல்லாம் தமக்கு செய்கைக்கு வந்து இருக்கிறான் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார்-

————————–

தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நாவள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-1- பிரவேசம் –

சுகுமாரராய் இருப்பார் வழி போகப் புக்கால் நீர் கண்ட இடம் எங்கும் மேலே ஏறிட்டுக் கொள்ளுமா போலே
இவரும்
தம்முடைய மார்த்தவத்தாலே அவனை ஒழியச் செல்லாமையாலே சம்சாரத்தில் பொருந்தாமை உடையராய்
இவ்விரோதியைப் போக்கி அவனைப் பெறுகைக்கு உடலாக பலகாலும் பிரபத்தி பண்ணா நிற்பராய்த்து
கடுக பலிப்பதொரு உபாயத்தை பற்ற வேணும் இறே
ஒரு வ்யபிசாரமாதல் -விளம்பமாதல் -இல்லாத சாதனத்தைப் பரிக்ரஹிக்க வேணும் இறே
அதாகிறது
த்வமேவ உபாய பூதோ மேபவ -என்கை இறே
அஹம் அஸ்ம்ய அபராதாநாம் ஆலய அகிஞ்சன -என்கையாலே -தான் உபாயம் அல்லாமை சொல்லிற்று
அகதி -என்கையாலே பிறர் உபாயமாக மாட்டார்கள் என்கிறது
தன்னை முற்படச் சொல்லுவான் என் என்னில்-தன் அனர்த்தத்துக்கு ஹேது தானே இறே
இவ்வளவும் வர சம்சரிகைக்கு கார்யம் பார்த்தான் தானே அன்றோ –
இனி பிறர் தானே அனுக்ரஹம் பண்ணுவாரைப் போலே இருந்து
அனர்த்தத்தை விளைக்கும் அத்தனை அல்லது ரஷகர் ஆக மாட்டார்களே

பித்தோபஹதன் உணர்த்தி உண்டான அளவிலே-நானே என் தலை மயிரைப் பறித்துக் கொள்ளுதல்
கண்ணைக் கலக்கிக் கொள்ளுதல் செய்து-என் விநாசத்தைச் சூழ்த்துக் கொள்ளுவன்
அவ்வளவில் நீ எனக்கு ரஷகன் ஆக வேணும் -என்று தெளிந்து இருப்பான் ஒருவன் கையிலே
தன்னைக் காட்டிக் கொடுக்குமா போலே இருப்பது ஓன்று இறே பிரபத்தி பண்ணுகை யாவது தான்
மத்யம பதத்தாலே தன்னைக் கழித்து இறே பிரபத்தி பண்ணுவது
ஆகையாலே நானும் எனக்கு இல்லை
பிறரும் எனக்கு இல்லை
நீயே ரஷகனாக வேணும் என்று
ஸ்ரீ திருக் காவளம் பாடி நாயனார் திருவடிகளிலே சரணம் புகுகிறராய் இருக்கிறது

கீழ்த் திரு மொழி யோடு இதுக்கு சேர்த்தி என் என்னில்
சரண்யன் ஆனவன் ஸ்ரீ பிராட்டிமாரோடே கூடத் ஸ்ரீ திரு மணிக் கூடத்திலே வர்த்தியா நின்றான் என்றார்
ஸ்ரீ லஷ்மீ பதி இறே ஆஸ்ரயநீயன் ஆனவன்-இங்கே சரணம் புகுகிறார்

———————–

கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்
திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து
வண்ணா வடியேன் இடரைக் களையாயே –4-7-1–பிரவேசம்

காவளம்பாடி மேய கண்ணா களை கண் நீயே -என்று சரணம் புக்க இடத்திலும்
சம்சாரத்திலே சப்தாதி விஷயங்கள் நடையாடுகிற இடத்திலே தம்மை இருக்கக் கண்டார்
ப்ரியஞ்சனம் அபச்யந்தீம் பச்யந்தீம் ராஷசீ கணம்
ஸ்வ கணேன ம்ருகீம் ஹீ நாம் ஸ்வ கணை ராவ்ருதாமிவ -என்னும்படியே
இழக்கிறது நித்ய சூரிகள் உடன் இருக்கிற இருப்பையும்
பெறுகிறது -சப்தாதி விஷயங்களையும்
அவற்றுக்கு பணி செய்து திரிகையுமாய் இரா நின்றது
நீ அசக்தனாய் இருந்து என் அபிமதம் இழக்கிறேன் அன்று
நீ சக்தனாய் இருக்க நான் இழப்பதே -என்ன
உனக்கு அபிமதம் ஏது என்ன –
த்வத் பிராப்தி விரோதியான பிரகிருதி சம்பத்தத்தை அறுத்துத் தர வேணும் என்கிறார்

———————

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே –4-8-1- பிரவேசம் –

திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு-அடியேன் இடரைக் களையாய் -என்று
தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தார்
அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட-அது பற்றாமல்-ப்ராப்தியால் உண்டான த்வரையாலே
தாமான தன்மை போய்-பிரிந்து-பிரிவாற்றாமையாலே நோவு பட்டு-

——————–

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே —-4-9-1-பிரவேசம் –

பெற வேணும் என்னும் அபேஷையிலே கண் அழிவு இல்லாமை சொல்லிற்று இறே -கீழில் திரு மொழியிலே
பார்த்தன் பள்ளி பாடுவாள் -என்று உகந்து அருளின நிலங்களைச் சொல்லி வாய் வெருகைக்கு மேற்பட
இல்லை இறே அபேஷைக்கு
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் என்னும் -என்றும்
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றன சங்கம் -என்றும்-சொல்லுகிற இவை அடைய
இவருக்கு உகந்து அருளின நிலங்களிலே யாய்த்து
ஆகையால்
பரமபதம் கலவிருக்கையாக இருக்க-அவ்விடத்தை விட்டு ஆஸ்ரிதர்க்கு சர்வ அபேஷித ப்ரதன் ஆகைகாக
ஸ்ரீ திருவிந்தளூரிலே வந்து சந்நிஹிதன் ஆனான்
நாம் அங்கே போகப் புகவே நினைத்தவைகள் எல்லாம் பெறலாம் -என்று பெரிய பாரிப்போடே போய்ப் புக்க விடத்து
ஒரு ஸ்ரீ புண்டரீகன் அக்ரூரன் என்றால் போலே சொல்லுகிற இவர்கள் பக்கலில் பண்ணின
விசேஷ கடாஷத்தை தம் பக்கலிலேயும் பண்ணி
திருக் கண்களாலே குளிர நோக்குதல்
அணைத்தல்
வினவுதல்
இவர் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று பாரித்து கொடு புக்க படியே அடிமையில் ஏவுதல் –
பண்டை நாளால் திரு வாய் மொழி போலே
நம்மை ஒருகால் காட்டி நடந்தால்-சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -போன்ற பரிமாற்றங்கள் -செய்யக் கண்டிலர்
அத்தாலே-மிகவும் அவசந்னராய்
ஒரு மின்னிடை மடவார்
காதில் கடிப்பில்
பிராட்டிமார் தசை பிறந்தால் பிரணய கலஹத்தாலே கிலாய்த்துச் சொல்லும்
பாசுரம் அடைய ஆழ்வார் தாமான தன்மையிலே சொல்லலாம் படி யான பாவம் பிறந்து
சந்நிதியும் உண்டாய்
எனக்கு அபேஷையிலும் கண் அழிவு அற்று
பிராப்தனுமாய் இருக்க
என்னை அடிமை கொள்ளாது ஒழிவதே -என்னும் இன்னாப்புடனே சிவட்கு பிறந்து வார்த்தை சொல்லுகிறார்

———————–

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென் பால் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-1- பிரவேசம் –

நினைத்த வகைகள் எல்லாம் பரிமாறப் பெற்றிலோம் என்று இன்னாதானார் கீழ்
நீர் இப்படி இன்னாதாகிறது என் என்ன
நம்மை ஆசைப் பட்டாருக்கு நினைத்த வகைகளில் எல்லாம் பரிமாறலாம் படி
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி யாவதாரங்களைப் பண்ணி முகம் கொடுத்த நாம் அன்றோ ஸ்ரீ திரு வெள்ளி யங்குடியிலே வந்து
சந்நிஹிதர் ஆனோம்-ஆன பின்பு நினைத்த வகைகளில் எல்லாம் பரிமாறத் தட்டு என்ன என்று சமாதானம் பண்ண
சமாஹிதராய் அவனைப் பேசி அனுபவிக்கிறார்
ததேவ கோபாய யத பிரசாதாய்ச ஜாயதே – இறே-ஒரு குண ஆவிஷ்காரத்தை தோற்றுவித்தார் -என்கை –

———————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-நான்காம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

June 26, 2019

போதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென் கரை மேல்
மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4-1-1-

ஸ்ரீ மாதவன் தான் உறையுமிடம்- ரசிகனானவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
ஸ்ரீ பிராட்டியும் தானுமாக ஸ்ரீ சித்ர கூடத்திலே வர்த்தித்தால் போலே-

—————-

யாவரும் யாவையுமாய் எழில் வேதப் பொருள்களுமாய்
மூவருமாய் முதலாய மூர்த்தி யமர்ந்து உறையும் இடம்
மாவரும் திண் படை மன்னை நின்றி கொள்வார் மன்னு நாங்கைத்
தேவரும் சென்று இறைஞ்சு பொழில் திருத் தேவனார் தொகையே–4-1-2-

சிருஷ்டி சம்ஹாரங்களுக்கு கடவரான ப்ரஹ்மாதிகளுக்கும் அந்தராத்மாவாவாய்ப் புக்கு நின்று
அவ்வவ கார்யங்களை நடத்திக் கொடுத்தும்-ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தை நடத்தியும் போருகையாலே
மூவரும் நிற்கிறான் தானே என்று சொல்லாம்படியாய்-மூர்த்தி சப்தம் ஸ்வரூப வாசியாய் –
அவர்களுக்கும் காரண பூதனாய் பிரதானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-

——————–

வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும்
தானாய வெம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம்
ஆனாத பெரும் செல்வத்து அருமறையோர் நாங்கை தன்னுள்
தேனாரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-3-

ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகளுக்கும் தனக்கு பிரகாரமாய் புறம்பு ஒருவர் இன்றிக்கே உபய விபூதியும்
தன் நிழலிலே ஒதுங்கும்படி இருக்கையாலே தலைவனானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம் –

————————–

இந்த்ரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த
சந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்
எந்தை எமக்கு அருள் என்ன நின்று அருளும் இடம் எழில் நாங்கை
சுந்தர நற் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே–4-1-4-

தாம்தாம் அதிகாரத்துக்கு பாதகம் உள்ளவர் ஈச்வரோஹம் என்று இருப்பவர்கள்
எங்களுக்கு ஸ்வாமியான நீ எங்கள் பக்கலிலே பிரசாதத்தை பண்ணி அருள வேணும் -என்ன
அவர்கள் உடைய அதிகாரங்களை நடத்திக் கொடுக்கைகாக வந்து நின்று அருளுகிற தேசம்
இப்படி ஒரு கார்யப் பாட்டால் அன்றிக்கே சோலை வாய்ப்புக் கண்டு விடாதே வர்த்திக்கிற தேசம் ஆய்த்து

——————–

அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் குலவரையும்
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்தகில் கனகம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மண்ணித் தென் கரைமேல்
திண் திறலார் பயில்நாங்கைத் திருத் தேவனார் தொகையே —–4-1-5-

பிரளய ஆபத்திலே திரு வயிற்றிலே வைத்து நோக்கின உபகாரகன் வர்த்திக்கிற தேசம்
சிம்ஹம் வர்த்திக்கும் முழஞ்சு என்னுமா போலே
ஒருவரால் ஜெயிக்க ஒண்ணாத பெரு மிடுக்கை உடையராய் இருக்கிறவர்கள் நெருங்கி வர்த்திக்கிற தேசம்

————————-

ஞாலம் எல்லாம் அமுது செய்து நான்மறையும் தொடராத
பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம்
சாலிவளம் பெருகி வரும் தட மண்ணித் தென் கரை மேல்
சேலுகளும் வயல் நாங்கைத் திருத் தேவனார் தொகையே—–4-1-6-

பூமிப் பரப்பை அடைய அமுது செய்து ஸ்ரீ சர்வேஸ்வரனை அபரிச் சேத்யன்-என்று அறியக் கடவ வேதங்களுக்கும்
எட்ட ஒண்ணாத படியான பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம்
அதிமாநுஷ சேஷ்டிதத்தை உடையனாய் ஒரு பவனான ஆலிலையிலே கண் வளர்ந்து அருளுகிற
சர்வா திகன் வர்த்திக்கிற தேசம்

———————-

ஓடாத வாள் அரியின் உருவாகி இரணியனை
வாடாத வள்ளுகிரால் பிளந்து அளைந்த மாலதிடம்
ஏடேறு பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சேடேறு மலர்ப் பொழில் தழுவு திருத் தேவனார் தொகையே–4-1-7-

நாட்டில் நடையாடாத ஸ்ரீ நரசிம்ஹ வேஷத்தை பரிக்ரஹித்து ஹிரண்யன் இடைய முரட்டு உடலிலே
வியாபாரியா நிற்கச் செய்தேயும்-வாடக் கடவதல்லாத கூரிய திரு உகிராலே-ஓன்று செய்தானாய் விடுகை அன்றிக்கே
உதிரம் அளைந்த கையேடு இருந்தானை -பெரியாழ்வார் திருமொழி -4-1-1–என்கிறபடியே
சிறுக்கன் மேலே சீறினவன் பக்கலிலே தனக்கு சீற்றம் மாறாமையாலே பிளந்து பின்னை
அளைந்து இருந்த வ்யாமோஹம்

——————————–

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-8-

ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற
வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்

———————–

கும்ப மிகுமத யானை பாகனோடும் குலைந்து வீழக்
கொம்பதனைப் பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்தது உறையும் இடம்
வம்பவிழும் செண்பகத்தின் மணம் கமழும் நாங்கை தன்னுள்
செம்பொன் மதிள் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே–4-1-9-

மனோஹாரியான சேஷ்டிதத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்

——————

காரார்ந்த திருமேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம்
சீரார்ந்த பொழில் நாங்கைத் திருத் தேவனார் தொகை மேல்
கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏரார்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே–4-1-10-

இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்-நன்மை மிக்க அவதி இன்றிக்கே இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே
ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் உடன் ஒரு கோவையாய் நச புன ஆவர்த்தத்தே -என்கிறபடி
ஒருநாளும் பிரியாதே இருக்கப் பெறுவர் –

———————

கம்பா மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி யவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்
செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
வம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமே—4-2-1-

ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் கேளாத படி வர பலத்தாலே பூண் கட்டி இருக்கிற தலைகளை
ஷத்ரியத்துவத்துக்கு ஏகாந்தமான அம்பாலே அழியச் செய்து
ராஷசர் உடைய ஐஸ்வர்யத்தை நம்முடையான் ஒருவன் கடவனாகப் பெற்றோம் இறே என்று
அந்த ஐஸ்வர்யத்தை அவன் தம்பியான ஸ்ரீ விபீஷணனுக்கு கொடுத்து அருளினவன்
வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-

————————

பல்லவம் திகழ் பூங்கடம்பு ஏறி அக்காளியன் பணம் அரங்கில்
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர்கோன் உறை கோயில்
நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறங்கம்
வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே———–4-2-2-

பூத்த கடம்பின் மேலே ஏறி காளியன் உடைய
பணங்கள் ஆகிற ரெங்கத்தின் மேலே
அவன் தப்பாதபடியாக நினைவு இன்றிக்கே
இருக்கச் செய்தே வந்து கடுகப் பாய்ந்து

அந்த நிருத்தத்திலே-வன்மைக் கூத்து என்றும்-மென்மைக் கூத்து என்றும் சில உண்டு -அவற்றை
அடையப் பண்ணின அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் வந்து வர்த்திக்கிற கோயில்-

——————–

அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது எல்லாம்
உண்டு கோனிரை மேய்த்தவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில்
கொண்டலார் முழவில் குளிர் வார் பொழில் குல மயில் நடமாட
வண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-3-

அவற்றின் உடைய ரஷணமும் தனக்கே பரம் ஆகையாலே அவற்றை மேய்த்து அவற்றின் உடைய ஆபத்தை
போக்கி ரஷிக்கிறவன்-இன்னமும் இப்படி ரஷிக்கைக்கு பாங்கான தேசம் என்று
அவன் உகந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-

——————

பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாடி புக்கு
ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்
கரும்பினூடு உயர் சாலிகள் விளை தரு கழனியில் மலி வாவி
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-4-

உள்ளே போய் புக்கு கம்சன் தலை மயிரைப் பிடித்து முகம் கீழ் பட வலித்து திருவடிகளாலே யுதைத்து முடித்தவன்
இன்னும் இப்படிப் பட்ட விரோதி அம்சத்தை போக்குகைக்காக நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-

——————

சாடு போய் விழத் தாழ் நிமிர்த்து ஈசன் தன் படை யோடும் கிளையோடும்
ஓட வாணனை யாயிரம் தோள்களும் துணித்தவன் உறை கோயில்
ஆடுவான் கொடி யகல் விசும்பு அணைவிப் போய் பகலவன் ஒளி மறைக்கும்
மாட மாளிகை சூழ் தரு திரு நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-5-

இதர சமாஸ்ரயணம் பண்ணின பாணன் உடைய ஆயிரம் தோளையும் தரித்தவன்
இன்னும் ஆஸ்ரித விரோதிகளை போக்குகைக்கு ஈடாக வந்து வர்த்திக்கிற தேசம்

——————–

அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்
கொங்கை கொங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்
மங்கைமார் முகம் காட்டிடு நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-6-

மூவடியை நீர் ஏற்று திருக்கையிலே நீர் விழுந்த அநந்தரம் வளர்ந்து அருளுகிற போது ப்ரஹ்ம பதத்து அளவும் சென்று
அவன் கையிலே திருவடிகள் இருக்க அவன் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும்படி யாகவும்
கங்கை புறப் படும் படியாகவும் திருவடிகளை நிமிர்த்து அருளின ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்

——————-

உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை
யளையும் வெஞ்சினத் தரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில்
இளைய மங்கையர் இணை அடிச் சிலம்பினோடு எழில் கொள் பந்தடிப்போர் கை
வளையில் நின்றொலி மல்கிய வண் புருடோத்தமமே–4-2-7-

அவன் முடிந்து போகச் செய்தேயும் சிறுக்கன் பக்கல் உண்டான வாத்சல்யத்தாலே சீற்றம் மாறாதே
ருதிர வெள்ளத்தை வெண்ணெய் போலே அளந்த ஸ்ரீ நர சிம்ஹம்
எல்லாரும் ஒக்க அஞ்சும் படி வந்து தோற்றின கேசி வாயை கிழித்து தன்னைத் தந்த
மகா உபகாரகன் வந்து வர்த்திக்கிற தேசம்

———————-

வாளையார் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்றது நீங்க
மூளையார் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில் வண்ணன் உறை கோயில்
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வன் பழம் விழ வெருவிப் போய்
வாளை பாய் தடம் சூழ் தரு நாங்கூர் வண் புருடோத்தமமே—4-2-8-

எலும்பானது பூரணமாய் இருக்கும் படியாக – பிஷையை முன்பு அருளின-தேவன் உடைய வலிய சாபம் நீங்க
மகா உதாரனானவன்– வர்த்திக்கிற தேசம்

—————-

இந்துவார் சடை ஈசனைப் பயந்த நான்முகனைத் தன் எழிலாரும்
உந்தி மா மலர் மீ மிசைப் படைத்தவன் உகந்து இனிது உறை கோயில்
குந்தி வாழையின் கொழும் கனி நுகர்ந்து தன் குருளையைத் தழுவிப் போய்
மந்தி மாம்பணை மேல் வைகு நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-9-

தன்னாலே ஸ்ருஷ்டனான சதுர்முகனாலே ஸ்ருஷ்டமான ஜகத் என்று அதன் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக
அவன் விரும்பி வர்த்திக்கிற தேசம்

—————

மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண் புருடோத்தமத்துள்
அண்ணல் சேவடிக் கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலிமன் அருள் மாரி
பண்ணுளார் தரப் பாடிய பாடல் இப்பத்தும் வல்லார் உலகில்
எண்ணிலாத பேரின்பம் உற்று இமையவரோடும் கூடுவரே–4-2-10-

அருள் மாரி-ஆஸ்ரிதருக்கு பிரசாதம் பண்ணும் இடத்தில் மேகம் போலே உதாரரான ஸ்ரீ ஆழ்வார்
பண்ணிலே ஆரும்படியாக பாடிய இப்பாடல் இப் பத்தையும் வல்லவர்கள் லோகத்திலே
நிரவதிகமான ஆனந்தத்தை உடையராய்-அநந்தரம் நிரவதிக ப்ரீதி உக்தரான ஸ்ரீ நித்ய சூரிகளோடு
ஒரு கோவையாக பெறுவர்

——————

பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
வாரணிமுலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப
சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–4-3-1-

லோகத்தில் காட்டிலும் ஐஸ்வர்யம் விஞ்சி இருக்கும் ஆய்த்து அவ் ஊரில் – அது அடைய தோற்றும்படி
தர்ச நீயமான மாடங்களை உடைய திரு நாங்கூரில் நன்றான நடுவுள் ஸ்ரீ செம் பொன் செய் கோயிலின் உள்ளே-
கார் காலத்திலே வர்ஷ உந்முகமாகமாய்க் கொண்டு அழகிய வடிவை உடைத்ததாய் இருப்பதொரு மேகம் போலே
இருககிறவனைக் கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெற்று அசந்நேவ-என்னும் நிலை தீர்ந்து
சந்தமேனம் -என்கிறபடியே உஜ்ஜீவித்து க்ருதார்த்தன் ஆனேன் -என்கிறார்

——————–

பிறப்பொடு மூப்பு ஓன்று இல்லவன் தன்னைப் பேதியா இன்ப வெள்ளத்தை
இறப்பு எதிர் காலக் கழிவும் ஆனானை ஏழு இசையின் சுவை தன்னைச்
சிறப்புடை மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
மறைப் பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே—4-3-2-

கீழ் திரு மேனி திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுபவித்து
இதில் திவ்ய ஆத்ம ஸ்வரூபம் திவ்ய குண ஸ்வரூபம் அனுபவிக்கிறார்

———————-

திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னைப் பங்கயத்தயன் அவன் அனைய
திட மொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-3-

காணவே தாபத் த்ரயம் ஆறும்படி ஸ்ரமஹரமான வடிவை உடையவனை கண்டு அனுபவித்து
நான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன் -என்கிறார்

———————

வசையறு குறளாய் மாவலி வேள்வியில் மண் அளவிட்டவன் தன்னை
அசைவறும் அமரர் அடி இணை வணங்க வலைகடல் துயின்ற வம்மானைத்
திசை முகனனை யோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
உயர் மணி மகுடம் சூடி நின்றானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே—4-3-4-

கீழ்ப் பாட்டில் அந்தராத்மாவை அனுபவித்தவர் இதில்
விபவத்தையும்
அதுக்கடியான வ்யூஹத்தையும் அனுசந்தித்து உகக்கிறார்

———————–

தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர் தமக்குத்
தாய் மனத்து இரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச் சயமே
தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே —4-3-5-

விபவத்தில் நெஞ்சு சென்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களைப் பேசி அனுபவிக்கிறார்

—————–

மல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானைச்
செல்வ நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அல்லி மா மலராள் தன்னோடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-6-

இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி கைக்கு எட்டிற்று ஓர் அம்பை விட்டவனை
நிரவதிக சம்பத்தை உடைய பிராமணர் உடைய அவர்கள் ஐஸ்வர்யத்துக்கு நிதான பூதையான
ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் கூடக் காணப் பெற்று சாம்சாரிக சகல துரிதங்களும் தீரப் பெற்றேன் –

————————

வெஞ்சினக் களிறும் வில்லோடு மல்லும் வெகுண்டு இருத்து அடர்த்தவன் தன்னைக்
கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானைக் கரு முகில் நிறத்தவனைச்
செஞ்சொல் நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-7-

பருவம் நிரம்பாத அளவிலே ஆய்த்து ஈஸ்வரன் செய்ததைச் செய்தது கம்சனை நிரசித்து -ஆஸ்ரித விரோதி
போகப் பெற்றோம் -என்று ஸ்ரமஹரமான என்ற வடிவோடு நின்றவனை-கண்டார் கண் குளிரும்படியாக
ஓர் அஞ்சன கிரி நின்றாப் போலே நிற்கிறவனை கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே-

—————-

அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை
மின் திகழ் குடுமி வேங்கடமலை மேல் மேவிய நல் வேத விளக்கைத்
தென் திசை திலதம் அனையவர் நாங்கைச் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-8-

இன்னமும் பாணன் போல்வார் விரோதிகள் வந்து முளைக்கில் செய்வது என் என்று மின் விளங்கா நின்றுள்ள
சிகரத்தை உடைத்தான ஸ்ரீ திருமலையில் நித்ய வாசம் பண்ணுகிற வேதைகசமதி கம்யனாய்
ஸ்வயம் பிரகாசமான ஸ்வரூபத்தை உடையனாய் உள்ளவனை-பாலோடு சக்கரை சேர்த்து பருகுவாரைப் போலே
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துடன் ஸ்ரீ திருவேம்கடமுடையானை சேர்த்து அனுபவிக்கிறார்

—————

களம் கனி வண்ணா கண்ணனே என்தன் கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறிய தேனைத்
தெளிந்த நான்மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-9-

பாலும் சக்கரையும் அனுபவித்து
தமக்கு இனித்தாகையாலே எல்லாருக்கும் ரசித்தவன் என்று கொண்டு அருளிச் செய்கிறார்

————

தேனமர் சோலை நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே
வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாள் கலிகன்றி
ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவின்றிக் கற்று வல்லார்கள்
மான வெண் குடைக் கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே–4-3-10-

பரப்பை உடைத்தான வெண் கொற்றக் குடைக் கீழே பூமியை அடைய பாகவத சேஷம் ஆக்குகைகாக நிர்வஹித்து
அநந்தரம்-நிரவதிக ப்ரீதி உக்தராய் நித்ய சூரிகளோடு ஒரு கோவையாகப் பெறுவர்
பேரருளாளன் எம்பிரான் -என்று உபக்ரமித்து வானவர் கோனை -என்று உபசம்ஹரிக்கிறார்
தேவ ராஜா பிதாமகர் தனம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
நலமுடையவன் அருளினன் அயர்வறும் அமரர்கள் அதிபதி – கோயில் திருமலை பெருமாள் கோயில்
உய்ந்து ஒழிந்தேன் வாழ்ந்து ஒழிந்தேன் அல்லல் தீர்ந்தேன் -ஒன்பது பாட்டும் ஒரு தட்டு
இந்த பல சுருதி ஒரு தட்டு -ஒன்பதோடு ஒன்றும்

———————-

மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும் தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்
நூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம்கமுகின் முது பாளை பகுவாய் நண்டின்
சேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே–4-4-1-

பகவத் சரணாரவிந்த திவ்ய பரிமளம் யாதொரு ஜந்துவின் இடத்தில் உண்டாகிறதோ
அங்கு சூரிகள் பிரசாதமும் குறைவற உண்டாம்–ஸ்வாபதேசம்-
முதலையாலே இடர் பட்ட அளவிலே வந்து உதவிற்று இலன் என்று
எனக்கு நான் கடவேனாய் இடர் பட்டேனோ
ஒருவர் இல்லாதாப் போலே -இடர் படுவதே -என்று ஆனையை ரஷித்த கண்ணர் கிடீர்-

——————

பொற்றொடித் தோள் மடமகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கிப்
பெற்றெடுத்த தாய் போல் மடுப்ப யாரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை கண்டீர்
நெற்றோடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறிய வண்டொலியும் நெடும் கணார் தம்
சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-2-

ஒருத்தரும் விரும்பாத நஞ்சை யுண்டு அறிவு குடி புகுராமையாலே உகந்த பிள்ளை கண்டீர்
மடமகள் வடிவு கொண்ட -என்னாமல் மடமகள் தன் வடிவு கொண்ட -அசாதாரணமான வேஷம்

———————–

படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேற்கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்
மடலெடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டா வரு நீர்ப் பொன்னி
திடலெடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே–4-4-3-

இடைச்சிகள் சிறு குடில்களின் வாசலிலே படலைத் திருக்கி வைத்துப் போனால்
படலை திறந்து நுழைந்து புக்கு-அன்று கடைந்த வெண்ணெய் செவ்வி அழியாமல் அமுது செய்கைக்காக-
இவனுக்கு நுழைந்து புகுகை யாகை இறே குடிலின் உடைய பெருமை

———————-

வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடுஞ்சினத்து வன் தாள் ஆர்ந்த
காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கருமுகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்
ஏராரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்
சீராரு மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே–4-4-4-

கறுப்பு ஆர்ந்த திண்ணியதான ருஷபங்களை அடர்த்து விவாஹ மங்களத்தை நிர்வஹித்த
கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர்

———————-

கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை கதிர் முத்த வெண்ணகையாள் கரும் கண் ஆய்ச்சி
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர்
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி யாடவரை மட மொழியார் முகத்திரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே—4-4-5-

ஸ்ரீ ருக்மிணி ஸ்ரீ நப்பின்னை இருவர் உடன் சம்ஸ்லேஷித்த படியை அனுசந்திக்கிறார்-
வெளுத்த தந்த பங்க்தியை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார்-
அவன் திருமேனியைப் பார்த்த படியே இருக்கையாலே திருமேனியிலே கறுப்பு கண்ணிலே ஊறின ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி

———————

தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்து இருப்பான் அரக்கர் தங்கள்
கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர்
மான் போலும் மென்னோக்கில் செய்ய வாயார் மரகதம் போலே மடக்கிளியைக் கை மேல் கொண்டு
தேன் போலும் மென் மழலை பயிற்று நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-6-

ஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் மற்றும் உள்ள முதலிகளுமாக இப்பாட்டில் சொல்லுகிறது என் -என்று
ஸ்ரீ பட்டருக்கு விண்ணப்பம் செய்ய0ஒரு கால் இயலைக் கேளா ராவணன் வார்த்தை காண்-என்று அருளிச் செய்தார்

———————

பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறள் உருவாய் பொருந்தா வாணன்
மங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம் தன்னால்
செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே-4-4-7-

ஸ்ரீ சர்வேஸ்வரன் செல்லும்படியான யாகம் இறே மங்கலங்கள் சேரத் தட்டு இல்லை இறே
மகா பலி உடையனாய் தான் குறைவாளனாய் இரந்த-என்ன பிள்ளை தான்

——————

சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கண கணப்பத் திருவாகாரம்
குலுங்க நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர்
இலங்கிய நான் மறையனைத்தும் அங்கம் ஆறும் ஏழு இசையும் கேள்விகளும் எண் திக்கும் எங்கும்
சிலம்பிய நல் பெரும் செல்வம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-8-

பூமியை இடந்து அதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை புல்கி கோட்டிடையிலே நீல மணி அழுத்தினால் போலே
வைத்த செயலாலே என்னை அடிமை கொண்டவன் கிடீர்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

————–

ஏழு உலகும் தாள்வரையும் எங்குமூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகு மூழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்
ஊழி தொறும் ஊழி தொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நான்மறை யனைத்தும் தாங்கு நாவர்
சேழுயர்ந்த மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலே -4-4-9-

ஆழியானது மிக்கு இருந்துள்ள ஊழி வெள்ளத்தைப் பண்டு திருமேனியிலே ஏக தேசத்தில் அடக்கின ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர்

———————-

சீரணிந்த மணி மாடம் திகழு திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக்
கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீரணிந்து உலகத்து மன்னராகிச் சேண் விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே –4-4-10-

ஐந்தும் ஐந்தும் வல்லார்-ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் அபதானங்கள் ஐந்தும் அது கலசாத ஐந்தும்
ஐஹிகத்தில் ஐஸ்வர்யமும் குறைவற புஜித்து ஸ்ரீ பரம பதத்தில் ஸ்ரீ நித்ய சூரிகளோடு
ஒரு கோவையாக விளங்குவர்

———————–

தூம்புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னு
காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட வெங்கும்
தேம பொழில் கமழ் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–4-5-1-

மலையை ஏந்தி பரிஹரிக்கப் போகாத மழையைக் காத்த என் ஸ்ரீ ஸ்வாமி

————–

கவ்வை வாள் எயிறு வன் பேய்க்கதிர் முலை சுவைத்து இலங்கை
மன்னிய விடும்பை தீரக் கடுங்கணை துரந்த வெந்தை
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த
தெய்வ நீர்க் கமழு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -4-5-2-

இலங்கையைப் பற்றின ராவண சம்பந்தத்தால் வந்த துக்கம் போம்படியாக பிரதி பஷத்தின் மேலே
கண் பாராதே அம்பை விட்ட ஸ்ரீ ஸ்வாமி-

————————

மாத் தொழில் மடங்கச் செற்று மருதிற நடந்தவன் தாள்
சேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணைந்த வெந்தை
நாத் தொழில் மறை வல்லார்கள் நயந்தறம் பயந்த வண்கைத்
தீத் தொழில் பயிலு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-3-

சேக்கள் உடைய வியாபாரத்தை மணல் கொட்டகம் அழிக்குமா போலே அழித்து ஸ்ரீ நப்பின்னை பிராட்டியார் உடைய
செவ்வியை உடைத்தான தோள்களோடு புணர்ந்த என் ஸ்ரீ ஸ்வாமி-
அவ் ஊரில் உள்ளாருக்கு அத்யயனமும் அனுஷ்டானமும் யாத்ரையாய் இருக்குமா போலே யாய்த்து
அவனுக்கு விரோதி நிரசனம் யாத்ரையாய் இருக்கும் படி-

———————-

தாங்கரும் சினத்து வன் தாள் தடக்கை மா மருப்பு வாங்கிப்
பூங்குருந்து ஒசித்துப் புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை
மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத்
தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-4-

அவன் விரோதி நிரசனத்தால் அல்லது போது போக்க மாட்டாதாப் போலே யாய்த்து
இவையும் ரச அனுபவத்தால் அல்லது போது போக்க மாட்டாதே இருக்கும் படியும்

——————–

கருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல்
வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை
பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத
திருமகள் மருவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-5-

ஏறிட்டுக் கொடு வந்த துர்மானத்தைப் போக்கி தானான படியே யாக்கி விட்ட படி
அவளுடைய செவியையும் மூக்கையும் வாளாலே அறுத்த என் ஸ்வாமி –
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள ஸ்ரீ திரு நாங்கூர்-

——————-

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை
ஒண் திறல் தென்னனோடே வடவரசு ஓட்டம் கண்ட
திண் திறலாளர் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-6-

தனக்குப் போராத ஜன்மங்களிலே வந்து பிறந்து ரஷகன் ஆனவன் தானான நிலையிலே காணலாம் படி
திரு மணிக் கூடத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்கிறார்-

——————

குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு
நின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாய வெந்தை
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும்
தென்றல் வந்துலவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–4-5-7-

பரார்தமான பதார்த்தங்களுக்கு நியந்தாவான ஸ்ரீ சர்வேஸ்வரன் இங்கே வந்து வர்த்தியா நின்றான்-என்கிறார்

———————

சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத்தரணி ஓம்பும்
பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களுமாய வெந்தை
பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாயச்
செங்கயல் உகளு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -4-5-8-

த்யாஜ்யமாயும் உபாதேயமாயும் பௌதிகமாயும் உள்ள பதார்த்தங்களுக்கு நியந்தா வானவன்
இங்கே வந்து வர்த்தியா நின்றான் என்கிறார்

——————

பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பமும் தானும்
கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய வெந்தை
மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு
தேவர் வந்து இறைஞ்சு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-9–

நிஷித்த அனுஷ்டானம் -விஹித அனுஷ்டானம்-மோஷம்-மோஷத்துக்கு உபயோகியான ஆத்ம குணங்கள்
அதுக்கு விரோதியான அநாத்ம குணங்கள்-இவற்றுக்கு எல்லாம் நியந்தா வானவன் இங்கே வந்து வர்த்தியா நிற்கிறான்
என்கிறார்-

———————

திங்கள் தோய் மாட நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானை
மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள் வல்லார்
பொங்கு நீருலகம் ஆண்டு பொன்னுலகு ஆண்டு பின்னும்
வெங்கதிர்ப் பருதி வட்டத்தூடு போய் விளங்குவாரே –4-5-10–

இத்தை வல்லவர்கள் கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு ஸ்வர்க்கத்தை நிர்வஹித்து அதுக்கு மேலே ஆதித்ய மண்டலத்தின்
நடுவிட்டு ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கமே போய் பரமபதத்திலே சென்று ஸ்வ ஸ்வரூபத்தை பெற்று உஜ்ஜ்வலராவர்
சர்வ நிர்வாஹகன் -சர்வ அபேஷித ப்ரதன் -விரோதி நிரசன சீலன்-விரோதி நிவ்ருத்த பூர்வக பல ப்ரதத்வம்
அதிகாரிகள் பேதம் பற்ற அருளிச் செய்கிறார்

—————–

தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நாவள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-1-

முதலையாலே இடர்பட்ட யானை தன்னை நோக்கிக் கொள்ளுதல்
அம்முதலை இத்தை நோக்குதல் செய்ததோ
பாதகமானது ரஷகம் ஆக மாட்டாதே
அந்த ஆனையினுடைய ஸ்தானே யாய்த்து நான்
முதலையினுடைய ஸ்தானே யாய்த்து பிறர்

———————–

மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-2-

அவ் ஊரில் உள்ளாருக்கு இந்த்ராதிகள் படி இல்லை யாய்த்து
அவனை இரப்பாளன் ஆக்கி தாங்கள் வயிறு வளரார்கள் ஆய்த்து
மகா ராஜரைப் போலே தங்களை அழிய மாறி நோக்குவர்கள்-

———————

உருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை யுருவ வோட்டிக்
கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர்முடி யரசளித்தாய்
பருத்தெழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகு நாங்கைக்
கருத்தனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-3-

உனக்கு முடி தந்த ப்ரஹ்மாதிகள் உடைய ஐஸ்வர்யம் போல் அன்றிக்கே
ஊற்று மாறாத சம்பத்து உடையவன் சுக்ரீவன் ஆகையாலே காண் அவன் முடி பெற்றது

———————–

முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு
அனையவற்கு இளையவற்கே யரசு அளித்து அருளினானே
சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்பு தேனுகரு நாங்கைக்
கனை கழல் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-4-

ராஜத் துரோகத்தைப் பார்த்தால் சம்பந்தம் உள்ள இடம் எங்கும் அழியச் செய்ய வேண்டி இருக்க
அவன் தம்பிக்கே கொடுத்தான் ஆய்த்து –

—————–

பட வரவுச்சி தன்னில் பாய்ந்து பன்னடங்கள் செய்து
மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே
தடவரை தங்கு மாடத் தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-5-

ஆஸ்ரித சம்ரஷணத்துக்கும் அநாஸ்ரித சம்ஹாரத்துக்கும் உறுப்பாக ஸ்ரீ பிராட்டியோடே
நித்ய சம்ச்லேஷமாய் செல்லா நிற்கும்
கடவுள் என்று பர தேவதை என்ற படியாய் சர்வாதிகனான நீயே சந்நிஹிதனாய் இருக்க நான்
வேறு ஒருவரைத் தேடித் போகவோ–

——————-

மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று
பல்லரசவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய்
நல்லரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய
கல்லரண் காவளந்தண் பாடியே களை கண் நீயே –4-6-6-

இவருடைய உபாயம் ஸூ ரஷிதமாக பெற்றது ஆய்த்து
ஸூ ரஷிதமான உபாயத்தை விட்டு வேறு ஒன்றைத் தேடித் போகவோ-

————————-

மூத்தவருக்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி
மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பு ஒசித்தாய்
பூத்தமர் சோலை யோங்கிப் புனல் பரந்து ஒழுகு நாங்கைக்
காத்தேன் காவளந்தண் பாடியாய் களை கண்நீயே –4-6-7-

ஏதத் விரதம் மம -என்கிறபடியே இத்தை அடைய ரஷிக்கைக்காக காவல் பூண்டு இருக்கிறவனே
ரஷிக்கக் கடவதாக ஏறிட்டுக் கொண்டு அசந்நிஹிதனாய் இருக்கை அன்றிக்கே
ஸ்ரீ திருக் காவளம் பாடியிலே சந்நிஹிதனான நீயே எனக்கு ரஷகனாக வேணும்

———————

ஏவிளம் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று
காவளம் கடிது இறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –4-6-8-

தர்ச நீயமான பூக்களை உடைத்தான பொழிலாலே சூழப் பட்ட இந்த்ரன் ஏற்றின ஸ்ரீ திரு நாங்கூரிலே
ஸ்வர்க்கத்தில் உண்டான வேண்டப்பாடு பூமிக்கும் உண்டாக வேணும் என்று
அக் கட்டளையாலே இந்த்ரனாலே சமைக்கப் பட்டது ஸ்ரீ திரு நாங்கூர் என்று சொல்லக் கடவது
அன்று அப்படி ஸ்ரீ சத்ய பாமை பிராட்டிக்கு உதவினது எல்லாருக்கும் ஒக்க உதவுகைக்காக
ஸ்ரீ திருக் காவளம் பாடியிலே வந்து சந்நிஹிதனான நீயே ரஷகனாக வேணும்

———————–

சந்தமாய்ச் சமயமாகிச் சமய வைம்பூதமாகி
அந்தமா யாதியாகி யருமறை யவையும் ஆனாய்
மந்தமார் பொழில்கள் தோறும் மட மயிலாலு நாங்கைக்
கந்தமார் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-9-

கார்யாவஸ்தமாயும் காரணாவஸ்தமாயும் போருகிறது ஸ்ரீ ப்ரஹ்மம் ஒன்றுமே என்று
வேதங்களால் பிரதிபாதிக்கப் படுபவனுமாய்
ஸ்ரீ திரு நாங்கூரிலே-சர்வ கந்த -என்கிற வஸ்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் என்று
தோற்றும்படி இருக்கும் ஆய்த்து
இப்படி நிரதிசய போக்யனான நீயே ரஷகனாக வேணும்-

———————–

மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழு நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனை கலியன் சொன்ன
பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை அரசராகிக்
கோவிள மன்னர் தாழக் குடை நிழல் பொலிவர் தாமே –4-6-10-

திருக் காவளம் பாடியிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கிருஷ்ணனை
கிருஷ்ண அவதாரம் பர தசையோடு ஒக்கச் சொல்லலாம் படி இறே இங்குத்தை சௌலப்யம்
இப்பத்தையும் வல்லவர்-மோஷத்தை பலமாகச் சொல்லில் அதிகாரிகள் கிடையாது -என்று
அபிமத சாதனம் என்னவே கற்பர்கள்
பின்னை மோஷத்தில் கொடு போய் மூட்டுகிறோம் -என்று-ஐஸ்வர்யத்தை பலமாகச் சொல்லிற்று

———————–

கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்
திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து
வண்ணா வடியேன் இடரைக் களையாயே –4-7-1-

பய பிரசங்கம் இல்லாத தேசத்திலே இருக்கிற நிருபாதிக பந்துவே புறம்பு புகல் உண்டு என்று
இருக்கில் அன்றோ ஆறி இருக்கலாவது-அநந்ய கதியாய் இருக்கிற என் இடரைக் களையாய் –
இவ்வடிவை அனுபவிக்கையை இழக்கப் போமோ-

——————-

கொந்தார் துளவ மலர் கொண்டு அணிவானே
நந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச்
செந்தாமரை நீர்த் திரு வெள்ளக் குளத்துள்
எந்தாய் அடியேன் இடரைக் களையாயே —4-7-2-

ரஷணத்துக்கு வளையம் வைத்து இருக்கிறாயே-விச்சேதியாதே சாவதி அன்றிக்கே இருந்துள்ள
புகழை உடைய பிராமணர் உடைய ஸ்ரீ திரு நாங்கூர்-அவ் ஊரில் உள்ளார் படி உனக்கு வேண்டாவோ –

————————–

குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே
நன்றாய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்
சென்றார் வணங்கும் திரு வெள்ளக் குளத்துள்
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே –4-7-3-

மழையில் அகப்பட்ட இடையர் இடருக்கும் என் இடருக்கும் வாசி பார்த்துக் கொள்ளாய்
துரியோதனன் தானும் தன்னுடைய பரிகரமுமாக தம் தாம் வசம் அன்றிக்கே வணங்கினார்கள்
சேஷி முன்பு சேஷ பூதர் அனுகூலிக்கக் கடவோம் அல்லோம் -என்னும் வ்யவஸ்தை
அப்படியே சென்றார் எல்லாரும் வணங்கா நின்ற திரு வெள்ளக் குளத்துள் நின்றாய்
ஸ்வரூப ரூபகுணங்களால் எல்லை காண ஒண்ணாதவனே
இரண்டு தலையும் ஒக்க ஆற்றாமை உண்டாகில் அன்றோ ஆறி இருப்பது

———————–

கானார் கரி கொம்பு ஒசித்த களிறே
நா நா வகை நல்லவர் மன்னிய நாங்கூர்
தேனார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
ஆனாய் அடியேனுக்கு அருள் புரியாயே—4-7-4-

செல்ல நின்றதுவும்-வர நின்றதுவும்-ஆகர்ஷமாய் இருக்கைக்கும்
கிட்டினார் குற்றம் காணாக் கண் இட்டு இருக்கும்படி யாலேயும் -ஆனாய் -என்கிறார்

———————-

வேடார் திருவேங்கடம் மேய விளக்கே
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்தாய்
பாடா வருவேன் வினையாயின பாற்றே —4-7-5-

திருமலையிலே மேவின விளக்கே-தன் ஸ்வரூப ரூப குணங்களுக்கு தானே பிரகாசன் ஆனவனே
நீ எதிர் சூழல் புக்குத் திரியா நின்றால்-இறாயாதே -பார்ஸ்வத்தில் ஆம்படி -பாங்காக வருவேன் –

————————-

கல்லால் கடலை யணை கட்டி யுகந்தாய்
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வா திரு வெள்ளக் குளத்து உறைவானே
எல்லாவிடரும் கெடுமாறு அருளாயே —4-7-6-

அவித்யா கர்மா வாசனா ருசி பகவத் அபசாராதிகள் பிராரப்த கர்மம்
இவை துடக்கமான எல்லா இடரும் கெடுமாறு அருளாயே

—————————–

கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே
நாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர்
சேலார் வயல் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
மாலே யென வல் வினை தீர்த்து அருளாயே —4-7-7-

ஈஸ்வரத்வ பிடாரால் அன்றிக்கே கையிலே கோலைக் கொண்டு ஜாதி உசிதமான வ்ருத்தியைச் செய்தாய் என்று
இடைச் சாதியாக எழுதிக் கொடுத்து இருக்குமத்தாலே என்னை அனன்யார்ஹனாகப் பண்ணினவனே
திரு வெள்ளக் குளத்திலே நிற்கிற பெரியோனே என்னால் பொறுக்க ஒண்ணாத பாபத்தை போக்கி அருளாய்

———————-

வராக மதாகி யிம்மண்ணை யிடந்தாய்
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
ஆராவமுதே யடியேற்கு அருளாயே –4-7-8-

இடையர் உனது குணங்களில் மண்டி இருக்க-பிராமணர் வேதங்களில் மண்டி இருக்க
நான் சம்சாரத்தில் மக்நன் ஆகி நிற்க-அருளாய் -என்கிறார்

——————-

பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா
நாவார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்த்
தேவா திரு வெள்ளக் குளத்து உறைவானே
ஆவா வடியான் இவன் என்று அருளாயே –4-7-9-

பூவிலே பிறந்தவள் பூ அடிக் கொதித்து விரும்பி அணைக்கும் படி மார்வு படைத்தவனே-
பரம பதத்தில் நின்றும் வந்து சம்சாரிகள் பக்கலிலே உறைகையாலே தீப்யமாநனாய் இருக்கிறவனே
சம்சாரத்தில் வர்த்திக்கிறான் ஐயோ ஐயோ என்று அருள் புரியாயே

———————–

நல்லன்புடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் யென வல்லவர் வானவர் தாமே —-4-7-10-

வல்லவர்கள் நித்ய சூரிகளோடு ஒரு கோவை ஆவர்கள்-

——————-

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே –4-8-1-

———————

கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறு அடர்த்த காளை என்றும்
வஞ்சி மேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயன் என்றும்
செஞ்சொல் ஆளர் நீடு நாங்கைத் தேவ தேவன் என்று ஓதி
பஞ்சி யன்ன மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே —4-8-2-

————————————————-

அண்டர் கோன் என் ஆனை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும் நான் மறைகள் தேடி யோடும் செல்வன் என்றும்
வண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு மாயன் என்று என்று ஓதி
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-3

———————————————————–

கொல்லை யானாள் பரிசு அழிந்தாள் கோல் வளையார் தம் முகப்பே
மல்லை முந்நீர் தட்டிலங்கை கட்டழித்த மாயன் என்றும்
செல்வ மல்கு மறையோர் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பல்வளையாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே–4-8-4-

——————————————————–

அரக்கராவி மாள வன்று ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற
குரக்கரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை
நெருக்கு மாட நீடு நாங்கை நின்மலன் என்று என்று ஓதி
பரக்கு அழிந்தாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே —4-8-5

———————————————————–

ஞாலம் உற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் நானிலம் சூழ்
வேலை யன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பாலின் நல்ல மென் மொழியாள் பார்த்தான் பள்ளி பாடுவாளே —4-8-6-

———————————————————–

நாடி என்தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான் மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடுலவு பொழில் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்
பாடகம் சேர் மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே —4-8-7-

காலும் பாடகமும் பொருந்தின படியை அவன் பாடா இருக்குமவள் அவனூரைப் பாடா நின்றாள்-

——————-

உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் ஒண் சுடரோடு உம்பர் எய்தா
நிலவும் ஆழிப் படையான் என்றும் நேசன் என்றும் தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்
பலரும் ஏச என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே—4-8-8-

பலரும் தன்னைப் பழிக்க-அவர்களை தனக்கு கூட்டு என்று-அவனூரைப் பாடுவாள் ஆனாள்
ஊரவர் கவ்வை எரு விட்டு -ஏசுவதே பாடுகைக்கு உடல்

————————

கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழு உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடு நீடு நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே—4-8-9-

ஸ்ரீ கிருஷ்ணன் என்றும் ப்ரஹ்மாதிகள் ஸ்நேஹத்தைப் பண்ணி புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு
ஆஸ்ரயிக்கும் படியாக அவர்கள் மநோ ரதத்தே நிற்கிறவன் என்றும்
ஆனந்தாவஹன் என்றும்–ஜகத் காரண பூதன் என்றும்
ஸ்ரீ நாங்கை யிலே வர்த்திக்கிற தேவ தேவன் என்றும் ஓதி
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே

————————

பாருள் நல்ல மறையோர் நாங்கைப் பார்த்தன் பள்ளி செங்கண் மாலை
வார்கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே—-4-8-10-

பிராட்டி தசை வந்து ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார்
ஒருத்தி வாய் வெருவ-ஒருத்தி கூப்பிட்ட எளிவரவு தீர -ஒரு நாளும் பிரிய வேண்டாதே இருக்கிற
தேசத்திலே இருக்கப் பெறுவார்

—————————

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே —-4-9-1-

சேஷிக்கு அதிசயத்தை பண்ணி யாய்த்து இவருக்கு ஸ்வரூப சித்தி-
அத்தலைக்கு அதிசயத்தை பண்ணுகையே ஸ்வரூபமாம் படி யாய்த்து ப்ராப்தி இருப்பது –
ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து சந்நிதி பண்ணின ஸ்வாமி-
இவ்வஸ்து உனக்கு சேஷம் -என்னும் இம் முறையை அறிவித்தவனே
இன்று இப்படி ஆறி இருக்கிற நீ-முன் தீம்பு செய்து-சம்பந்த ஞானத்தை எனக்கு பிறப்பிப்பான் என்
சேஷத்வ ஞானத்தை பிறப்பித்து அருளிற்று
அந்த சேஷத்வ அனுரூபமான வ்ருத்தியை என்னைக் கொண்டு அருள வேணும் –
சர்வஞ்ஞன் ஆனவனுக்கும் அறிவிக்க வேண்டும்படி இருக்கிறது காணும்
க்ரம ப்ராப்தி பற்றாத படியான இவருடைய சௌகுமார்யம்-
என் முன்பே நாலடி இட்டு நடந்து காட்டினால்-அக்ரத ப்ரயயௌ ராம -என்கிறபடியே
ஸ்ரீ பிராட்டிக்கு இட்ட விருந்து இட வேணும் காணும் இவருக்கு
இப்படி நடந்தால் போன உயிர் மீளும்-உறாவின பயிரிலே ஒரு பாட்டம் மழை விழுந்தால்
அது ஜீவிக்கச் சொல்ல வேணுமோ –

————–

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே—4-9-2-

தர்ச நீயமான ஸ்ரமஹரமான ஸ்ரீ திரு வாலியிலே நித்ய வாஸம் பண்ணி வ்யாமோஹத்தை தெரிவித்தவனே –
கள்வன் கொல் என்னும் படி கைப்பிடித்து வ்யாமோஹத்தை அறிவிப்பித்தவனே
ஸ்ரீ திருவாலி யானைக் கைப்பிடித்து-ஸ்ரீ திரு நறையூர் நம்பியானை உபாய பூதனாகவும் –
திரு இந்தளூரானை சேஷித்வ சம்பந்த ஞானம் அறிவிப்பிதவன்
சம்பந்த ஞானத்தை பிறப்பித்த உனக்கு என்னுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை
கொள்கை யாகிற இம்மாத்ரம் இத்தனையும் செய்கை பெரிய பணியோ –

———————–

பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கன்னி முடியீர் உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே—-4-9-3-

உகவாதார் சொல்லும் பழியை பரிஹரிகைக்கும்-உகப்பார் நினைத்த வகைகள் எல்லாம் பரிமாறுகைக்கு அன்றோ
திரு இந்தளூரிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறது –

———————-

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காயாய்த்து அடியோர்க்குத்
தேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே —4-9-4-

நமக்கு அவத்யம் வரும் என்று இறே நீர் தாம் இப்படிப் படுகிறது-நாம் அத்தைப் பொறுக்கிறோம் என்ன
உமக்கு பொறுக்க ஒண்ணாததும் ஓன்று உண்டு-எங்களுக்கும் அவத்யம் என்கிறார்
நதே நுரூபே-என்னக் கடவது இறே

————————

தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே
எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே —4-9-5-

அநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு ருசி பிறந்த போதே நினைத்த படிகள் எல்லாம்
அனுபவிக்கைக்கு அன்றோ தேவரீர் திரு இந்தளூரிலே வந்து கிட்டி நிற்கிறது –
பூ அலறும் போதை செவ்விபார்த்து பறித்து கொடு வாரா நிற்பாரைப் போலே
ருசி பிறந்த போதே அடிமை கொள்ளுகைக்கு ஈடாக காலம் பார்த்து அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –
பரத்வம் நித்ய சூரிகளுக்கு அனுபாவ்யமாய் இருக்கும்
வ்யூஹம் ப்ரஹ்மாதிகள் உடைய கூக்குரல் கேட்கைக்கு ஈடாக இருக்கும்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதாரம் ஸ்ரீ தசரத ஸ்ரீ வசுதேவாதிகள் உடைய பாக்ய பலமாய் இருக்கும்
உகந்து அருளின நிலங்கள் -தங்களுக்கு ஹிதம் இன்னது என்று அறியாதே
சம்சாரம் த்யாஜ்யம் என்று அறியாதே
சர்வேஸ்வரன் பிராப்யன் என்று அறியாதே
இருக்கிற சம்சாரிகளுக்கே முகம் கொடுக்கைகாகவாய் இருக்கும் இறே
குருடருக்கு வைத்த இறையிலியில் விழித்தாருக்கு பிராப்தி இல்லை இறே
பின்னானார் வணங்கும் சோதி -என்னக் கடவது இறே

————————–

சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே —4-9-6-

அவள் ஏகோந சேஷி யாகையாலே அவன் வரும் வரை காத்து இருக்க வேணும்
உம்மை அரை ஷணமும் காணாவிடில் ஜீவிக்க மாட்டாத அடியேனையும்
அவள் முன்னாகப் பற்றினார்க்கு இத்தனை வாசி உண்டு போலே காணும்
சர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும்-இவருடைய பிரகிருதி மார்த்தவம்
தம்மை ஆசைப் பட்டார் பருவம் அறிந்து முகம் காட்டிற்றிலர் என்னும்அவத்யத்தை பரிஹரிகைக்கு அன்றோ
நீர் ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது-போந்த கார்யத்தை மறக்கிறது என் –

———————–

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள வெம்மைப் பணி யறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நுந்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே —4-9-7–

நமக்கு ஒரு குற்றம் இல்லையாக வன்றோ-யஸ் சர்வஞ்ஞஸ் சர்வ வித் -இத்யாதி பிரமாணங்கள் சொல்லுகிறது
நம்மை சர்வஞ்ஞன் சர்வ சக்தன் என்று பிரமாணங்கள் சொல்லா நிற்க
நீர் நமக்கு ஞான சக்திகளில் வைகல்யம் சொல்லுகிறது-என் கொண்டு என்னில்
அது ஒரு வ்யக்தியிலே பலிக்கக் கண்டேன் என்கிறார்
பருவம் அறிந்து வந்து முகம் காட்டாமையைக் கொண்டு-சர்வஞ்ஞனை அஞனாக உப பாதித்தார்
தம் தசைக்கு ஈடாக உதவாமையைக் கொண்டு சர்வ சக்தனை அசக்தனாக உபபாதிக்கிறார்-

———————

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே —-4-9-8-

சேதனர் உகந்ததையே நிறமாகக் கொள்ளும் ஸ்வ பாவரான-நம் பக்கல் உம்முடைய அபேஷிதம் பெற்று
போகையிலே குறை உண்டோ –
உம்முடைய அபேஷிதம் தன்னைச் சொல்லீர் என்ன –நீ உகந்தார் உகந்த வடிவுகளைக் கொண்டு வந்து
அவர்களுக்கு காட்டிக் கொடுத்தாயே யாகிலும்-உன்னுடைய இச்சா க்ருஹீதமான அசாதாரண விக்ரஹத்தை
இது காண் இருக்கும் படி -என்று கொடு வந்து எனக்குக் காட்ட வேணும் -என்கிறார் –

————————

எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே —4-9-9-

நெஞ்சில் பிரகாசத்தை ஒழியவே நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுக்கும் வடிவை
அங்கு உள்ளாரோபாதி முழுக்க காட்சி கொடுக்கைக்கு அன்றோ இங்கு வந்து நிற்கிறது –

———————–

ஏரார் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த
சீரார் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து
ஆராரவரே யமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே —4-9-10-

இவற்றை அப்யசித்து-அந்த கர்வத்தாலே யமாதிகள் தலைமேலே அடி இட்டுத் திரியுமவர்கள்
இவற்றை அப்யசிக்கும் அத்தனையே வேண்டுவது
அவர்களுக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஆகவுமாம்-
அந்த ஜன்மத்திலே-அந்த வ்ருத்தத்திலே-அந்த ஞானத்திலே அந்த ஜன்மாதிகளால் வரும் உத்கர்ஷம் வேண்டாதே
ஸ்வத உத்கர்ஷத்தை உடையரான நித்ய சூரிககளால் சிரஸா வஹிக்கப் பெறுவர் –

————————

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென் பால் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-1-

ஆஸ்ரயநீய வஸ்து சந்நிஹிதமான இடம் என்று தோற்றும்படி யாய்த்து அத்தேசத்தில் போக்யதை இருப்பது
எல்லாம் எங்கும் ஒக்க பக்வமாய்த்து அங்கு இருப்பது –

———————

ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டிக்
கார் நிறை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில்
பூ நிரைச் செருந்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரி வண்டு மிண்டித்
தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே —4-10-2-

கார் காலத்திலே நிறைந்த மேகம் போலே இருக்கிற வடிவை உடைய கிருஷ்ணன்
ரஷணத்துக்கு பாங்கான இடம் -என்று திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற கோயில் –

—————-

கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன் அலக்கழித்தவன் தன்
படமிறப் பாய்ந்து பன் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில்
படவரவல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்
அடை புடை தழுவி அண்ட நின்று அதிரும் திருவெள்ளியங்குடி யதுவே —4-10-3-

பரத சாஸ்தரத்துக்கு வேண்டும் லஷணங்கள் எல்லாம் எழுதிக் கொள்ளலாம் படி
பல வகைப் பட்ட ந்ருத்தங்களைப் பண்ணினவன் வந்து வர்த்திக்கிற தேசம் –

———————–

கறவை முன் காத்துக் கஞ்சனைக் காய்ந்த காள மேகத் திரு வுருவன்
பறவை முன் உயர்த்துப் பாற் கடல் துயின்ற பரமனார் பள்ளி கொள் கோயில்
துறை துறை தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென் பால்
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-4-

ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்கும் படியாக அடுத்து அணியாக ஸ்ரீ திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளின சர்வாதிகன் வந்து சாய்ந்து அருளின கோயில் –

———————–

பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து ஒரு கால்
தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண் மால் சென்றுறை கோயில்
ஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச்
சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே —4-10-5-

ஒரு கால் ஆஸ்ரிதன் பக்கல் வாத்சல்யத்தாலே சாரத்தியம் பண்ணி
அதி ரத மகா ரதரான பீஷ்மாதிகள் தேரை விட்டு ஒடும்படியாக துடர்ந்த –செங்கண் மால்
ஆஸ்ரித வாத்சல்யம் அடங்கலும் கண்ணிலே தோற்றும்படி இருப்பானாய்ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவன்
வந்து வர்த்திக்கிற தேசம் –

————————

காற்றிடைப் பூளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன கோயில்
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன வுண்டு மண்டிச்
செற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி யதுவே –4-10-6-

கையில் வில் பிடித்த பிடியிலே முடிந்து போகிற ராஷசர் அடங்க இவன் கையில் நாம் பட்டுப் போனால் ஆகாதோ –
என்னும்படி தர்ச நீயமான வில்லை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திருக் கோயில்-

———————-

ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்குத்
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
அள்ளியம் பொழில் வாய் இருந்து வாழ் குயில்கள் அரி அரி என்று அவை அழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் திருவெள்ளியங்குடி யதுவே–4-10-7-

சுத்த ஸ்வாபாவம் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் -என்னுதல்
அன்றிக்கே-சுக்ரன் அத்தேசத்தை உபாசித்தான் என்று ஒரு பிரசித்தி உண்டு அத்தை சொல்லிற்று ஆகவுமாம்
வெள்ளியார் -என்றது அவனை ஆதரித்து சொன்ன படி
அன்றிக்கே –வெள்ளியார் வணங்க –வெள்ளி மலையை உடைய -ருத்ரன் வந்து ஆஸ்ரயிக்க
ஸ்வப்ன லப்த்தம் தனம் யதா -என்கிறபடியே சடக்கென அவன் பாதகத்தைப் போக்கினவன்

————————-

முடியுடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர் தம் பெருமானை அன்று அரியாய்
மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்
படியிடை மாடத்து அடியிடைத் தூணில் பதித்த பன்மணி களின் ஒளியால்
விடி பகல் இரவு என்று அறிவரிதாய திருவெள்ளியங்குடி யதுவே —4-10-8-

ஸ்ரீ பிராட்டி போல்வாரை ஏறிட்டுக் கொள்ளக் கடவ மடியிலே துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யனை ஏறிட்டு
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி -என்கிற இடத்துக்கு ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யநான் கேட்டேன் என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர்
பிரதி கூல்யனான ஹிரண்யனை விட்டு ஆசை உடைய என்னை அன்றோ அம்மடியிலே ஏறிட்டுக் கொள்ள அடுப்பது -என்று
தம்மைப் பார்த்து அருளிச் செய்தாராக –
அவனுடைய பரந்த மார்வை கிழித்துப் பொகட்ட ஆஸ்ரித வ்யாமோஹத்துக்கு அவதி இல்லாதவர்
நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

——————

குடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த
அடியவர்க்கு அருளி யரவணைத் துயின்ற வாழியான் அமர்ந்து உறை கோயில்
கடியுடைக் கமலம் அடியிடை மலர கரும்போடு பெரும் செந்நெல் அசைய
வடிவுடை அன்னம் பெடையோடு சேரும் வயல் வெள்ளியங்குடி யதுவே —4-10-9-

தன் திருவடிகளிலே அசாதாரணராய் இருப்பார் பக்கலிலே கிருபையைப் பண்ணி
இவர்கள் கூக்குரல் கேட்கைக்கு அடுத்து அணித்தாக ஸ்ரீ திருப் பாற் கடல் கோயிலிலே
கண் வளர்ந்து அருளினவன்-

———————

பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை
வண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இக் குரை கடல் உலகே—4-10-10-

பூமியை இடந்து திரு எயிற்றினில் கொண்டு அந்த ஸ்ரமம் ஆறும்படியாக கடல் திரைகளில் குருந் திவலைகள்
துடை குத்தி உறக்கத் ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் ஆய்த்து
ஸ்ரீ திரு வெள்ளியங்குடியிலே சந்நிஹிதன் ஆனான் –

———————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் – மூன்றாம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —

June 17, 2019

இரும் தண் மாநிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமல நன் மலர்த் தேறல்
அருந்த இன்னிசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே
செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு திருவயிந்திரபுரமே–3-1-1-

ஷட்பத நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ தெய்வ நாயகன் திருவடி தாமரைகளில் தேனைக் குறைவற உண்டு
ஆசையாலே ஸ்ரீ நித்யசூரி பரிஷத் கதனான வாசுதேவ தருவின் பாதமலரில் தேனை புஜிக்க கோலி
சஞ்சரித்து கொண்டு இருப்பார்கள் என்று ஸ்வாபதேசம்-முதல் பாசுரத்தில்-

ஸ்ரீ சர்வேஸ்வர லஷணம் ஆகிறது – ஸ்ரீ திரு ஆழியைக் கையிலே சலியாதே பிடித்தல்-ஸ்ரீ லஷ்மீ பதியாதல்
வேதைக சமிதிகன் ஆதல்-இவை ஆயிற்று இவை மூன்றும் இங்கே உண்டு-
ஸ்ரீ பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே பிரணய கலஹம் மாறாதே செல்லுமா போலே ஆயிற்று
அங்குத்தை திர்யக்குகள் உடைய யாத்ரையும் –
பாடப் பகை தீரும் -எனபது இறே-பேதை நெஞ்சற பாடும் பாட்டால் பகை தீர்ந்ததே –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

காதாசித்கமாக லோகத்துக்கு வந்த பிரளயத்தை பரிஹரித்தாப் போலே அன்றிக்கே
தன்னை நித்ய அனுபவம் பண்ண வேணும் என்று இருப்பார்க்கு-அதுக்கு ஒரு ஷணம் விச்சேதம் வருகையாவது நித்ய பிரளயம் இறே
தனக்கு அசாதாரணமாய் இருப்பார்க்கு தன் படிகளை எல்லாம் இவனுக்கு உள்ளது இவ்வளவு என்று பரிசேதித்து அனுபவிக்கலாம் படி
வெளி இட்டுக் கொண்டு நிற்கிற-ஸ்ரீ தெய்வ நாயகனிடம்-
ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு தன் படிகள் எல்லாம் அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு இருக்குமா போலே
இங்கு உள்ள ஆஸ்ரிதர்க்கும் தன்னை அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு நிற்கிற விடம் –
அகடிகடதங்களை கடிப்பித்தும் அவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமா போலே
விருத்தமான தேசத்தில் அவை இரண்டையும் சம காலத்தில் கிட்டி அனுபவிக்கலாம் தேசம் ஆயிற்று
குறிஞ்சி நிலமான மலை சாரலிலே முல்லை நிலமும் மருத நிலமும் இருந்தது போலே-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்-

பெற்ற தமப்பன் பகையா அவனில் அண்ணிய உறவாய் உதவினவன் தனக்கு தன்னில்-அண்ணிய உறவு இல்லை இறே –
புறம்பு –இப்படி இருக்கிற தானும் -ஆத்மைவ ரிபு ராதமான -என்கிறபடி தனக்குத் தானே பகையாய் தன்னை முடிக்கப் பார்த்த வன்று –
உன்னை உன் கையில் காட்டித் தாரேன் -என்று நோக்குகைக்காக வந்து நிற்கிற விடம் –
வ்யாபாரித்த போது ஹிரண்யன் உடைய ருதிர வெள்ளத்தாலே பார்த்த பார்த்த இடம் எங்கும் சேறு செய்தாற் போலே
கரும்புகள் ஒன்றோடு ஓன்று நெருங்கி பிரவஹித்த சாற்று வெள்ளத்தாலே பூமி எல்லாம் சேறாய்க் கிடக்கும் ஆயிற்று-
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

மகா பலி தானம் பண்ணா நின்றான் என்று கேட்டவாறே அவனுடைய யஞ்ஞவாடத்திலே
தன்னை அர்த்தியாக்கிச் சென்று அவன் கையில் நீர் தன் கையில் விழுந்த அநந்தரம்
அவ்விடம் தன்னிலே நின்றே பூமிப் பரப்பு அடைய அளந்து கொண்டு –
இடையர் பூத்த கொடி போலே இருக்கிற ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக
உபன்னம் தேட்டமான பருவம் ஆயிற்று பதிசம்யோக சுலபம் வய -என்கிறபடியே
ஒரு கொள் கொம்பிலே கூட்டில் கிடக்குமவளாய்- இல்லையாகில் தர்மி லோபம் பிறக்குமவளாய் இருக்கை
இனம் இனமான ருஷபங்களோடே பொருதவன் உடைய ஸ்ரீ ஸ்தானம் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஒக்கத்தை உடைய பெரிய மலைகளையும் பெரிய மதிள்களையும் சுற்றிலே உடைத்தாய்
வண்டுகள் சஞ்சரியா நின்றுள்ள அழகிய பொழிலாலே சூழப்பட்ட ஸ்ரீ திருவயிந்திரபுரமே
முன்பு -ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுக்கு ஸ்ரீ சித்ர கூடத்தையும் ஸ்ரீ தண்ட காரண்யத்தையும் விஸ்மரித்து
வர்திக்கலாம் தேசம் ஆயிற்று-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்-

ஸூ வேல சைலமாய் -அதின் மேலே த்ரி கூடமாய் -அதின் மேலே படைவீடாய் இறே இருப்பது
இப்படி ஒருவரால் அழிக்க ஒண்ணாத படை வீட்டுக்கு நான் ராஜா அல்லனோ என்று அபிமானித்து இருக்கிற
பையலுடைய–தேவதைகள் உடைய வரங்களால் பூண் கட்டி இருக்கிற முடிகள் பத்தும் துகளாம்படி பண்ணின
மிடுக்கனானவான் வர்த்திக்கிற ஸ்தானம் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்வ ரஷணத்தில் அந்வயம் இல்லாத பசுக்களுக்கும் இடையருக்குமாக மலையை எடுத்து மழையை பரிகரித்தான் ஆயிற்று –
இந்த்ரன் வர்ஷிப்பிக்க பிற பாடராய் நோவு பட விட்டால் போலே ஆக ஒண்ணாது என்று ஏற்கவே நோவு படாமே
நோக்குகைக்காக வந்து நித்யவாசம் பண்ணுகிற இடம் ஆயிற்று –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்-

அர்ஜுனனுக்காக தன்னை அழிவுக்கு இட்டு –ரதியைச் சீறினவன் சாரதியை இறே அழியச் செய்வது –
உடம்புக்கு ஈடு இடாதே தன்னை அழிவுக்கு இட்டு நின்றான் ஆயிற்று –
தான் கொண்ட விஜயமும் அர்ஜுனன் தலையிலே கிடக்கும்படி –தன்னைத் தாழ விட்டு வைத்தான் ஆயிற்று –
ஸ்லாக்கியமான தேரிலே கையிலே உழவு கோலைக் கொண்டு நின்ற என் குல நாதன் உடைய ஸ்ரீ ஸ்தானம் –
ஆக தாரகம் தார்யத்துக்கு உள்ளே மறைந்து இருக்கும் தேசம் ஆயிற்று –
தான் வெல்லச் செய்தேயும் -அர்ஜுனன் வென்றான் என்று சொல்லலாம்படி ஸ்ரீ கிருஷ்ணன் அவனுக்கு பரிகரமாய்
அந்தர்பவித்து நிற்குமா போலே தான் விளைவிக்கச் செய்தே -வயல் விளைந்தது -என்று சொல்லலாம்படி யாயிற்று இருப்பது-
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

சர்வ நியந்தாவாய் ஆயிற்று –ஆபத் சகனும் ஆயிற்று-தேவானாம் தனவாநாஞ்ச-என்கிறபடியே
தன்னாலே ஸ்ருஜ்யரான இவர்கள் இரண்டு திறத்தாருக்கும் ஒத்து இருக்கையாலே தம்தாமுடைய அபேஷித சித்திக்காக
தேவர்களும் அசுரர்களும் அடைய சென்று ஆஸ்ரயிகலாம் படி திருவயிந்திரபுரத்தில் நித்ய வாசம் பண்ணி
அத்தாலே பரம பதத்தில் காட்டிலும் உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை எல்லாம் இல்லை இறே பரமபதத்தில்
இவர்களுக்கு அபேஷிதம் விதானம் பண்ணுகையால் வந்த ஏற்றம் உண்டு இறே இங்கு-
பாடிட-பாப அனுபவம் பண்ணுகைக்காக இறே சம்சாரத்தில் பிறக்கிறது அத்தை அனுபவிக்க வந்த இத் தேசத்தில்
இத்தை அதிகரிக்கில் அவை தாம் நமக்கு இருப்பிடம் இல்லை என்று விட்டு ஓடிப் போம் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————

ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-

மாம்சமானது குறைய அசன வசநாதிகளைக் குறைத்து பிராணன்களைப் போகாதபடி அப்பஷண வாயு பஷணங்களாலே
கால் கட்டி சரீரத்தை விட்டுப் போகாத இந்திரியங்கள் ஐந்தும் ஸ்வ ஸ்வ விஷயங்களைப் பெறாமையாலே நொந்து ஈடுபடும் படி
தாங்கள் மேன்மேலும் கிலேசிக்கும்படி தபஸு பண்ண வேண்டா-தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–
என்கிறார் முதல் பாசுரத்தில் –

நெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு பண்ண வேண்டா
ஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர்
வாயாலே ஓதுகிற வேதம் குறைவறுகையாலே வந்த ஸ்வ பாவிக சம்பத்தை உடைய பிராமணர் என்றும்
ஒக்க முறையாலே அனுஷ்டித்த அக்னி வளர வளர புகழ் ஓங்கா நின்று உள்ள ஸ்ரீ தில்லை-
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

திரு அநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே கறுத்துப் பெருத்த கடலிலே உகந்து கண் வளர்ந்து அருளின
ஸ்ரீயபதி ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடே கூட விடாதே சஞ்சரிக்கிற ஸ்ரீ தில்லை –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

பொழில் சூழ்ந்த பூமியை எடுத்தவனுடைய திருவடித் தாமரையை அணைய வேணும் என்னும் விருப்பத்தோடு வர்த்திப்பீர் –
ரத்னங்களைக் கொண்டு பரிகரத்தோடும் பல்லவர் கோன் பணிவதும் செய்து
செம் பொன்னாலும் மணியாலும் செய்த மாடங்கள் சூழா நின்றுள்ள ஸ்ரீ தில்லை-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் நித்யவாசம் பண்ணி
புகழ் மங்கை எங்கும் உஜ்ஜ்வலமாய் வர்த்திப்பதும் செய்து புகழையும் காப்பையும் உடைய
பொழில் சூழ்ந்த ஸ்ரீ தில்லை-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

பிராமணர் உடைய ஹிருதயத்துக்கு ஏற்ற – சிவந்த வாயை உடைத்தான கிளியானது
நல்ல ஸ்வரத்தோடே நாலு வேதத்தையும் பாடா நின்றுள்ள ஸ்ரீ தில்லை-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

முல்லை -உடன் கூடின திருக் குழலை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டி யினுடைய
மிருதுவான திருத் தோளிலே கலந்து அங்குண்டான மச்த்யங்கள் சுழலும்படி
சுழன்று வருகிற கடல் பெற்ற ஸ்ரீ பெரிய பிராட்டி தங்கும் திரு மார்பை உடையவனை
ஹிருதயத்தில் வைத்துக் கொள்ளும் என்பீர்-ஸ்ரீ தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே-
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பெருத்துப் பழையதான ஸ்ரீ கோவர்த்தனத்தை எடுத்து ஆயர் தலைவனாய் பசு மேய்த்து லோகத்தை திரு வயிற்றில் வைத்த
ஆச்சர்ய பூதனுடைய ஆபரண ஒலியை உடைத்தாய் போக்யதை மிக்க திருவடிகளை கூட வேணும் என்னும் குறிப்பு உடையீர்
சாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடியே ஆஸ்ரயிக்க அவர்களுக்கு ஆஸ்ரயணீயனாய் தேஜசை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ப்ரஹ்மாதிகளுக்கும் கிட்ட அரிய ஸ்ரீ பரம பதத்தில் இருக்க வேண்டி இருப்பீர்
மிக்க நீரை உடைய நிவா என்கிற ஆறு முத்தை கொடு வந்து வித்துகிற வயலிலே விக்ருதமான கயல்கள் பாய்ந்து
தாவித் திரிய தர்சநீயமான நீலம் நின்று திகழா நின்றுள்ள ஸ்ரீ தில்லை –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பரம உதாரரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் குறையாத ஓசை உடைத்தாக அருளிச் செய்த ஸ்ரீ திரு மொழி பத்தும் வல்லார்
ப்ருதீவி பிரசுரமான லோகத்தை அளந்த திருவடிகளில் கீழே காலம் எல்லாம் வர்த்திக்கும்படி வாழ்வர் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————–

வாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு
ஆடல் நன் மா வுடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்
கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்
சேடுயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே–3-3-1-

இடையர் உடைய பசு நிரைக்கு அன்று இடர் தீர்க்கைக்காக இந்த்ரன் பிரேரித்த புஷ்கலா வர்த்தகாதி மேகங்கள்
எல்லாம் கூடி வர்ஷித்த பெரு மழையைக் காத்த மநோஹாரி சேஷ்டிதத்தை உடையவன்
என்று எல்லாரும் சொல்ல வருகிறவன்-ஸ்ரீ தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே–என்கிறார் முதல் பாசுரத்தில்

இவன் கேவலம் பிள்ளை அல்லன்-ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபன் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நாயகன்
என்று நாட்டார் உடைய இந்திரியங்களைப் பிணைக்கும் வடிவை உடைய இடைப் பெண்கள் பாடி
செவ்வைப் பூவைத் தூவ வருமவன்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

இவன் வெண்ணெய் உண்டான் என்று இடைப் பெண்கள் கூடி ஏச எட்டுத் திக்கில் உள்ளாறும் திருவடிகளிலே
வணங்கும்படியாக நிர்விகாரமான மருதின் உள்ளிட்டுப் போய்
இடையர்களும் தேவர்களுமாய் ஆயிரம் திரு நாமங்களை சொல்லிக் கொண்டு
தன்னுடைய ஆண் பிள்ளைத் தனத்தை பண்டு பாட வருவான்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

வளையாலே அலங்க்ருதமான கையையும் பீதைகளாய் பார்க்கும் நோக்கையும் உடைய இடைப் பெண்கள் அஞ்சிக் கூப்பிட
கட்டவிழ்ந்து அலர்ந்த தாமரைப் பொய்கையினுடைய ஸ்ரமஹரமான கரையிலே சென்று
இடையர் காண முளைத்த எயிற்றை உடைய பாம்பின் உடைய உச்சியிலே புக்கு நின்று
அது வாடும்படி கூட விளையாடி அமர் செய்து வருமவன்-ஸ்ரீ சித்திர கூடததுள்ளானே-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரீ நப்பின்னை பிராட்டி யிடையாட்டத்துக்காக திரண்டு பெருமையை உடைய ருஷபங்களைக் கொன்று
தன் பருவத்தில் பிள்ளைகளோடே தெருவிலே கூடி விளையாடி வருமவன் ஸ்ரீ சித்திர கூடததுள்ளானே
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

இவன் பண்டு எய்ய இலங்கை அழிந்தது-பசுக்களும் இடையரும் மலங்கும்படியாக வருகிற மழையைக் காக்கைக்காக
அவை உய்யும்படிக்கு ஈடாக பெரிய மலையை எடுத்துக் காத்தான் என்று ஏத்தி பூமியில் உள்ளார் எல்லாரும் ஆஸ்ரயிக்க
தேவா விஷ்டமான மலை போலே ஸ்ரீ பெரிய திருவடி மேலே ஏறி வருமவன்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

தர்சநீயங்களாய் காவிமலர் போலே கறுத்து நெடிய கண்ணை உடைய ஸ்திரீகள்
கை தொழும்படி வீதியிலே வருமவன் தேவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீ தில்லைச் சித்திர கூடத்துள்ளானே-
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

பண்டு ஒருகால் ஹிரண்யனை வெருவும்படி சீறி அவ்விடத்திலேயே அவனுடைய உடம்பை அளைந்து
ஆயிரம் தோள் தோற்ற வ்யாபாரித்த உசிதமாக எரி கான்ற பசுமையை உடைய கண்ணும்
நீண்ட எயிறும் பெரிய வாயும் ஆன ஸ்ரீ சிம்ஹ ரூபத்தை உடையவனாய் வருமவன்
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

காளமேகம் போலே இருக்கும் வடிவையும் கையில் திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் உடையனாய்
பெரிய மிடுக்கை உடைய ப்ரஹ்மாதிகள் சூழ்ந்து சேவிக்க சப்த லோகத்தில் உள்ளாறும் திருவடிகளில் விழுந்து ஏத்த
ஸ்ரீ பிராட்டிமார் மூவரோடும் கூட வருமவன்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

சத்ருக்கள் சரீரமே தனக்கு உறையாக உடைய வேலை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த
அழகிய தமிழான இப்பத்தும் அப்யசித்தவர்கள் பக்கலில் அவர்கள் பண்ணின பாபம் பல அனுபவத்துக்கு சாரா-
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————-

ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக வென மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே—3-4-1-

ஆஸ்ரித அர்த்தமாக தான் இரந்தான்-என்னும் மேன்மையை உடையவன் திருவடிகளை கிட்ட வேண்டி இருப்பீர் –
அபௌருஷேயத்வ நிபந்தனமான கீர்த்தியை உடைய வேதங்கள் உடைய திரள்கள் நாலும் பஞ்ச மகா யஞ்ஞங்களும்
ஆறு அங்கங்களும் ஏழு இசைகளும் தெருவிலே மிக்கு இருந்துள்ள உத்சவத்தால் வந்த அழகும்
இவை எல்லாம் அடைய சிறக்கும்படியான ஸ்ரீ சீராம விண்ணகரை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் முதல் பாசுரத்தில்

ஜகத்துக்கு ஈச்வரர்களாக பிரசித்தர் இருவரும் இறே அவர்கள் இருவரும் உடைய அபிமானத்தை கழித்தான் ஆயிற்று-
ப்ரஹ்ம ருத்ராதிகள் -சேக்கள்-ஈச்வரோஹம் என்று கை ஒழிய ஓட ஸ்ரீ பக்தி உழவன்
நம் பூர்வர்கள் -சங்குகள் -ஸ்வ ஸ்வபாவரைப் பெறுவிக்க
கமலமலர் பாவை முகம் விகசித்து அனுராக அதிசயம் வெள்ளம் இட அதிலே துள்ளா நிற்பர் ஸ்ரீ நித்ய சூரிகள்-
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

களை பறிப்பதாக அடுத்து வயலிலே இழிந்து கண்ணுக்கும் வாய்க்கும் அவற்றோடு உண்டான
சர்வதா சாம்யத்தாலே களை பரியாதே போந்து ஏறுகிற ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே-
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஆளிட்டு செய்தல் -ஆயுதங்களாலே அழியச் செய்தல் செய்கை அன்றிக்கே
ஆஸ்ரித விரோதியை தானே கை தொட்டு திரு உகிராகிற வேலாலே அழியச் செய்து அத்தாலே வந்த சுத்தியை உடையவன்
திருவடிகளைக் கிட்ட வேண்டி இருப்பீர்-ஏக காலத்தில் இருளும் சந்த்ரோதயமும் வெய்யிலும்
ஒக்கக் கண்டு அனுபவிக்கும் படியான தேசம் ஆயிற்று-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து இப்படி ஆஸ்ரித விரோதிகளை
கை தொட்டு போக்குமவன் திருவடிகளைக் கிட்ட வேண்டி இருப்பீர் ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே-
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

விரோதியைப் போக்கி தேவ ஜாதிக்கு குடி இருப்பைப் பண்ணிக் கொடுத்த
ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளை ஆஸ்ரயிக்க வேண்டி இருப்பீர் ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே-
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

சத்ருக்களால் சலிப்பிக்க அரிதான தோளை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனைக் கிட்டி
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க வேண்டி இருப்பீர்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ சத்ய பாமைப் பிராட்டி ஹேதுவாக என்றும் ஒக்க ஸ்வர்க்கத்தில் இருக்கக் கடவதான
வ்ருஷத்தை பூமியிலே கொடு வந்து நிறுத்தினவனுடைய
இத்தால் –அரியன செய்தும் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமவன் -என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடு அநந்ய பரையான ஸ்ரீ பிராட்டியோடு வாசி அற
திருமேனியில் இடம் கொடுத்துக் கொண்டு இருக்கிற ஸ்ரீ சீலவானைப் பெற வேண்டி இருப்பீர்-
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

நாயந்தே தேவரைக் கவி பாட என்று துடங்கி தம்மைக் கவி பாடிக் கொண்டார் என்ன –
அதுவும் நம்மை அன்றோ சொல்லிற்று என்று திரு உள்ளம் ஆனார்
ஸ்ரீ சர்வேஸ்வரனைப் போலே எல்லார்க்கும் தாங்களே ஆஸ்ரயணீயராவார்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும்
என் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னார் உயிரே
அந்தளி ரணியார சோகின் இளந்தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந்தழல் புரியும் திருவாலி யம்மானே–3-5-1-

எனக்கு தாரகனுமாய்-நிரதிசய போக்யனுமான நீ ஸ்ரீ திருவாலியை இருப்பிடமாக உடையையாய் வைத்து
தனக்கு என ஓர் இடம் இல்லாதாரைப் போலே என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தாயே –
அந்யதா அஞ்ஞானமான தேசத்தை இருப்பிடமாக உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து
என் ஹிருதயத்திலே வந்து புகுந்தாயே- –என்கிறார் முதல் பாசுரத்தில்

ஸ்ரீ திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளிற்று இவர் நெஞ்சிலே புகுருகைக்கு விலக்காமைக்கு அவசரம் பெரும் அளவும் யாயிற்று –
விலக்காமை பெற்று – இவர் ஹிருதயத்தில் புகுந்த பின்பு க்ருத்யக்ருத்யனாய் இருந்தான் ஆயிற்று
விபரீத ஜ்ஞானம் ஜனகமான தேசத்தை இருப்பிடமாக உடையையாய் இருந்து வைத்து
என்னுடைய ஹிருதயத்தில் புகுந்து இருந்தாயே –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

மநோ ரதத்தாலே நான் கால ஷேபம் பண்ணாத படியாக என் ஹிருதயத்திலே வந்து புகுந்தது
இஹ லோகத்திலே எனக்கு விலக்காமைக்கு என்று இருந்தேன்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

உன் பக்கலிலே வந்து சதைகரூபமான உன் திருவடிகளிலே எனக்கு மறவாமை யாகிற பேறு உண்டாம்படியாக –
நான் அபேஷிக்க அன்றிக்கே தண்ணீர் பந்தல் வைப்பாரோபாதி நிர்ஹேதுகமாக செய்து அருளினாய் –
தர்ச நீயமான ஸ்ரீ திரு வாலியிலே நிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனே –என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஆஸ்ரிதர்க்கு விஸ்வாசத்தைப் பண்ணிக் கொடுக்குமவன் அன்றோ –
எங்களுடைய நினைவு போலே தப்பிலும் தப்பி பலிக்கிலும் பலிக்கும் படி அன்று இறே உன் நினைவு இருக்கும் படி –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

பரம போக்யமான ஸ்ரீ திரு மந்தரத்தால் பிரதிபாத்யமான வஸ்துவின் பக்கலில் தன்னை சமர்ப்பித்து –
சர்வ கந்த -என்கிற வஸ்து ஆகையாலே – உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான சிவந்த திருவடிகளை
கையாலே தொழுது உஜ்ஜீவிக்க வேணும் என்னும் அத்யவாசாயத்தை உடைய என்னுடைய ஹிருதயத்திலே –
நான் உன்னை அபேஷியாதே இருக்க நீயே வந்து புகுந்த பின்பு இனிப் போகல ஒட்டேன் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

உன்னைப் பெறுக்கைக்கு ஒரு முதல் இல்லாதபடி இருக்கிற எனக்கு ஸூஹ்ருதமானவனே
நீயே வந்து புகுந்த பின்பு உன்னை நான் இனி போகல் ஒட்டேன்
ஸ்ரீ வயலாலி மணாளன் உடைய வியாபாரத்தோடு-அங்கு உண்டான திர்யக்குகள் உடைய வியாபாரத்தோடு
வாசி அற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு அந்நிலத்தில் உள்ள ஆசையாலே –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினாய்
அங்கு நின்றும் ஆஸ்ரிதனுக்காக ஸ்ரீ திருக் கடல் மல்லையிலே கண் வளர்ந்து அருளினாய்
இவ்வோ இடங்கள் உனக்கு வாசஸ்தானமாய இருக்க என் பக்கல் கிருபை பண்ணி வந்து புகுந்தாய் –
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

என்னை வன்னியமறுத்து ஆளுகிறவனே எனக்கு ஸ்வாமி ஆனவனே
மாஸூச -என்று நான் உஜ்ஜீவிக்கும்படி ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இதில் உண்டான ஆதராதி அதிசயத்தாலே விட மாட்டாமை பிரித்து பிரித்து அருளிச் செய்கிறார்-பத்தாம் பாசுரத்தில்

—————————-

தூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே
பூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே–3-6-1-

பொறி வரிய-கடகராய் இருப்பார் உடைய தேக குணத்தோடு-ஆத்ம குணத்தோடு வாசி யற உத்தேச்யமாய் கொண்டது இறே
சிறு வண்டே – இவள் கார்யம் செய்க்கைக்கு முன்பே சிரமம் செய்து இருப்பாரைப் போலே வடிவு சிறித்து இருந்ததாயிற்று –
கார்ய காலத்தில் வந்தவாறே அணுவத்தை ஏறிட்டுக் கொள்ள வேண்டாதபடி இருக்கும் –நீங்கள் என் தசையை அங்கே அறிவிக்க
அவனைப் புறப்பட விடுவார்கள் –
ஸ்திரீ காதுகனாய் இருக்கிறவன் நடுவேயோ நாம் யஜிக்கிறது என்று புறப்பட விடுவார்கள்
அறிவிக்கும் அதுவே வேண்டுவது -என்கிறாள்
என் நிலைமை –பாசுரம் இல்லாததுக்கு என்னால் பாசுரம் இடப்போமோ –
என் வடிவு இருக்கிறபடி கண்டி கோளே-இனி நீங்களே பாசுரம் இட்டு சொல்லும் இத்தனை –
உரையாயே-கொடு வர வேண்டா-அறிவிக்கும் அத்தனை இறே இத்தலைக்கு வேண்டுவது –
கிருபை அவன் பணியே-வாராது ஒழியும் அன்று ரஷகனுக்கு குறையாமே –
நீங்கள் அறிவித்த அநந்தரம் உங்கள் பேச்சுக் கேட்டு தானே வாரா நிற்கும்-என்கிறார் முதல் பாசுரத்தில்-

அறுகால-இரண்டு காலை உடையாரைப் போலே அன்றிக்கே-ஆறு கால் உடையார்க்கு கடுகப் போய் கார்யம் தலைக் கட்டலாம் இறே –
நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம் – என்று சேர்ப்பார் காலே இறே இவர்கள் ஜீவனமாய் நினைத்து இருப்பது –
என் ஜீவனம் கூடு பூரித்து கிடந்தபடி என்றான் -என்கிறாள்
நீ சென்று –முறை கெட்டாகிலும் நீ முற்பட சென்று –அவன் தானே வர பெற இருக்குமதாயிற்று முறை –
பயலை நோயை உரை –வாசா மகோசரம் இறே இவளுடைய வைவர்ண்யம் தான்
வாக்குக்கு அவிஷயமான அவற்றுக்கும் பாசுரம் இட்டு சொல்லவற்றுக் காணும் இவை தான் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஆசை இல்லாத ஜகத்தையும் தான் ஆசைப்படுமவன் -அவற்றை சொன்ன சொல் தன்னளவிலே வந்து
பர்யவசிக்கும்படி நிற்கிற பெரும் பிச்சன் –
அவனுடைய பிரணயித்வத்துக்கு விஷயம் ஆயிற்றிலோம் ஆகிலும் அவனுடைய கிருபைக்கு விஷயம் ஆகாது ஒழிவுதோமா-
அவன் நைராச்யத்தை அறிந்து வந்து சொல் என்றதுக்கு கருத்து யாது என் என்னில் –
நம் தசையை அறிவித்தால் நமக்கு தலை வேணும் -என்றான் ஆகில்
நம் ஆற்றாமை பாராதே யாகிலும் நாம் ஜீவித்துக் கிடக்க வேண்டா -என்றான் ஆகில்-நாம் முடிந்து பிழைக்கும் படி —
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஸ்ரீ திரு ஆய்ப்பாடியிலே சம்பத்தோடே-ஸ்ரீ திரு ஆலியில் சம்பத்தையும் அடைப்பாக்கினால்
பின்னை அவனுக்கு நொந்தாரை ஐயோ என்ன அவசரம் உண்டோ-அறியாமை வாராது ஒழிந்தான் இத்தனை
நீ போய் அவன் அறியும் படி போய் சொல்லு-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

தூதர்க்கு வார்த்தை சொல்லப் புக்கு
அது தான் போய் பாவனா பிரகர்ஷத்தாலே அவன் முன்னே நின்றனவாய் கொண்டு அவன் தனக்கு
வார்த்தை சொல்லி செல்லுகிறது மேலில் பாட்டுக்களில் –
அவனுக்கு பொருளை இட்டு பிரிய வேண்டா-பிரிகிறது பொருளுக்காகவே –
இம்முத்தையும் பொன்னையும் கொள்-என்று பாரித்து காட்டினால் போலே யாயிற்று
கண்ண நீரும் உடம்பில் வைவர்ண்யமும் இருக்கிற படி –
ஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்தி -திரு விருத்தம் -11-என்னக் கடவது இறே-
உம்மை நீர் அறியீரோ –நம்மைப் பிரிந்தார் தரித்து இருக்க மாட்டார்கள் என்று இருக்க வேண்டாவோ –
உன்னைக் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாயோ –
ஒரு தழும்பாகில் அன்றோ உன்னால் மறைக்கல் ஆவது
உன் உடம்பு அடங்கலும் ஆஸ்ரிதர்க்காக கார்யம் செய்ததால் வந்த தழும்பு அன்றோ -என்கிறாள் –
தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்த வா மங்கை –
அழகிய திருக் கையானது ஜ்யாகிண கர்க்கசமாய்க் கிடக்கும்
அழகிய திருக் கையானது ஸ்ரீ சார்ங்கத்தைப் பிடிக்கையால் வந்த தழும்பைச் சுமந்தது –
திருவடிகள் ஆனவை சகடாசுர நிரசனம் பண்ணி அத்தால் வந்த தழும்பைச் சுமந்தது –
அந் நொய்ய கோவர்த்தன கிரியைப் பொகட்டு என் ஆற்றாமையிலே பாதியை சுமக்க வல்லையே
துணையா ளானாகாயே !-என்றது -ஆக வேணும் என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரமஹரமான வடிவைக் காட்டி பஞ்ச லஷம் குடியில் பெண்களை வளை கவர்ந்தவன் என் கையில் வளை பெறா விடில்
உண்டது உருக் காட்டானாய் இரா நின்றான் –சமகாலத்தில் பிறவாதார் வளையும் கொள்ள வேணுமோ
இவனுக்கு ஓர் ஊராக வளை கொண்டதுவும்-உண்டது உருக் காட்டுகிறது இல்லை காணும்
இவள் கையில் வளை சேஷிக்கில்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

மகா பலியாலே அபஹ்ருதமான பூமியை மீட்டு இந்தரனுக்கு கொடுத்த நீர் மையை உடையவனே-
அந் நீர்மைக்கு பிற்பாடானாரும் இழவாமைக்கு ஆக ஆயிற்று திருவாலியிலே வந்து நிற்கிறது
ஸ்ரீ திருப் பாற் கடலில் நின்றும் ஸ்ரீ வாமனனாய் அவதரித்து பூமியை அகப்படுத்திக் கொண்டால் போலே யாயிற்று
ஸ்ரீ திருவாலியிலே வந்து நிற்கிற தன் யௌவனத்தைக் காட்டி இவரை அகப்படுதின படி –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

மன்றிலே குடக் கூத்தாடி தன் அலகை சர்வ ஸ்தானம் பண்ணினவன் பிற்பாடர் இழவாமைக்காக
திருக் குடந்தையிலே சுலபன் ஆனான் என்றவாறே உறக்கம் குடி போயிற்றாய் ஆயிற்று
அவன் பிரத்யாசன்னன் ஆனான் என்றவாறே உறக்கம் குடி போயிற்று ஆயிற்று இவளுக்கு-
உறங்காமைக்கு இரண்டு லஷ்மணர்களைப் போலே யாயிற்று கண்கள் இரண்டும் –
இளைய பெருமாள் பிறந்த முகூர்த்ததில் ஆயிற்று இவள் கண்களும் பிறந்தது –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

——————–

பிராமணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமா போலே
தலைமகளான சமயத்திலும் சேஷத்வ அநுரூப வ்ருத்தியையே ஆசைப்படுகிறாள் இறே
உன்னை ஆஸ்ரயித்த மகா ராஜர் ஆர்த்தி போக்குகைக்காக மராமரங்களை எய்து மழு ஏந்தி கொடுததிலையோ –
அவ் இழவை தீர்க்குகைக்கு அன்றோ திரு மெய்யத்திலே வந்து சாய்ந்து அருளிற்று –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
இப்பாட்டால்
பிராப்ய நிஷ்கர்ஷமும்
ருசி உடையார் படியையும்
சரண்யன் படியையும்
அவனுக்கு ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும் –
இத்தலையில் அபேஷை குறைவற்று இருக்கிறபடியையும் –இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது –
நிலையாளா -என்கையாலே நித்ய கைங்கர்யம் பெறுகையே பிராப்யம் என்னும் இடம் சொல்லுகிறது –
வேண்டாயே யாகிலும் -என்கையாலே உபாய பாவமும் அவன் பக்கலிலே என்னும் இடம் சொல்லுகிறது
என் முலையாள ஒரு நாள் -என்கையாலே ருசி உடையார் படி சொல்லுகிறது
சிலையாளா -என்கையாலே சரண்யதை சொல்லிற்று
மரம் எய்த -என்கையாலே ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும்
இத்தலையில் அபேஷை குறை வற்று இருக்கிறபடியையும்-இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது-

நெடுமாலை –தூது விடவும் வார்த்தை சொல்லவும் மாட்டாதே நிற்கிறான் போலே காணும்
தூது விட மாட்டாத படி யாயிற்று அத்தலை பட்டுக் கிடக்கிறது –
இத்தலை ஊர்த்த்வம் மாசான் நா ஜீவிஷ்யதே -என்றால்-ந ஜீவேயம் -என்னும் அத்தனை இறே அத்தலை –
அவன் சேஷித்வ சூசகமாக திரு ஆழியைப் பிடித்தால் போலே ஆயிற்று
இவர் சேஷத்வ சூசகமாக திரு வேலைப் பிடித்த படி -சேவகனுக்கு வேல் நிரூபகம் என்றது ஆயிற்று –
சர்வேஸ்வரனைப் பிரிந்து தூது விடப் புக்கு-அது தானும் கூட மாட்டாதே படும் வியசனம் பட வேண்டா –
இப்பத்தையும் அப்யசித்தாருக்கு தூது விடுவான் அவன் தான் ஆயிற்று-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

—————–

கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப் போதாவென்று
வெள்ளி வளைக்கை பற்றப் பெற்ற தாயாரை விட்டகன்று
அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ–3-7-1-

இருவரும் இரண்டு முக்தர் ஆயிற்று –மாயா மிருகத்தை பிடித்து தா என்பாரும்-அதைப் பிடிப்பதாக அதன் பின்னே போவாரும் –
லங்கத்வாரத்திலே சென்று நிற்கலாகாதோ என்று நில்லாதே-உத்தேச்ய பூமியிலே புக்கார்களோ அல்லர்களோ
இருவரும் ஒருவருக்கு ஒருவராய் ஆழல் ஆயிற்று-என்கிறார் முதல் பாசுரத்தில்

காணாம்ருதமான அம்மான்பொடியை இட்டு கொண்டு போன படி-
கண்ணால் கேட்டு கேளாதவற்றை வாயாலே கேட்டு -அவனுக்கு முன்னோக்கிப் போக ஒண்ணாதபடி அவன் பின்னே நடந்து
ந சபுன ஆவர்த்ததே என்று புகுந்து-திர்யக்குகளும் கூட மீளாத ஊரிலே புகுவர் கொலோ-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ பட்டர் இப்பாட்டை அருளிச் செய்து-ஒரு ஸ்திரியை விரூபை ஆக்கினவன் உடைய திறம் கேட்கில் அஞ்சுவன் என்கையாலே –
இத்தலைக்கு ஒரு ஹானியாய் தோற்றா நின்றது –இது ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்யக் கூடாது
இது எங்கனே சேரும்படி -என்று ஸ்ரீ ஆச்சானைக் கேட்க
துடிப்பு இருக்க கை வேக வேணுமோ-ஸ்ரீ எம்பெருமானார் தானே அருளிச் செய்து வைத்தார் இறே -என்ன
அருளிச் செய்த படி என்ன -என்று கேட்க –
முன்பு ஒரு புணர்ந்து விட போக்கிலே பிறந்த பிரமாதத்தை கேட்டு அத்தை நினைத்து
இப்பொழுது பயப்படுகிறாள் -என்று அருளிச் செய்தார் –அஞ்சுவன்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்தார் என்று ஆசைப்படுவார்-இடையனை பிறந்தான் என்று ஆசைப் படுவாராய்
ஆசைப்படா நின்றீர் கோள்-எனக்கு இரண்டும் தோற்றுகிறது இல்லை –
மாதவன் தன் துணையா நடந்தாள்-ஆழம் காலை மிதப் பெற்று புத்தி பண்ணினாள்
அளவுடையவர்கள் அகப்பட்ட விஷயம் என்றால்-தனக்கு நிலம் அன்று என்று மீள அறியாதே போனாள்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

அவனுடைய சர்வ அங்க சௌந்தர்யமும்-இவள் உடைய தோள் அழகு ஒன்றுக்கும் போரும் அத்தனை –
இருவரும் கூட ஜல கிரீடை பண்ணி வர்த்திக்கலாம் தேசத்தில் புகுவர் கொலோ-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

நிரதிசய போக்யனுமாய்-சுலபனுமாய்-ரஷகனுமானவன் உடன் கூட-ராவண வதம் பண்ணி மீண்டு எழுந்து அருளுகிற போது
ஸ்ரீ திரு அயோத்யை கோடித்தாற் போலே ஸ்ரீ திரு வாலியையும் கோடிக்கப் பண்ணி புகுகிறார்கள் -என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

இங்கே இருவரைக் கை விட்டால்-அங்கே இருவரைப் பற்ற வேணும் இறே-
ஸ்ரீ பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளாள்–என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

செழும் கோதை-லிலோ உபகரணங்களை விட்டு-அவனைப் பற்றின பின்பு உடம்பிலே பிறந்த பௌஷ்கல்யம்-
தன்னைக் காண்பார்க்கு காட்சிக்கு கொடுக்க இடம் உள்ள தேசத்தில் புகுமோ–என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ ஈஸ்வரனைக் காட்டில் ஸ்ரீ பிராட்டி-அஸி தேஷணை-என்னும் ஏற்றத்தை உடையாள் ஆனாப் போலே
ஸ்ரீ பிராட்டியில் ஏற்றம் இவளுக்கு -காவியங்கண்ணி -என்று இருவரையும் சேர அனுபவிக்கிற கண் இறே
இவளுடைய கண்கள் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இப்பத்தும் சஹ்ருதயமாக கற்க வல்லாருக்கு பரம பதம் நிச்சிதம் –தாயார் தனி வழியே போனாள் என்று பயப்பட வேண்டா –
ஆதி வாஹிக கணத்தோடு தானே வழி காட்டிப் போம்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில் –

——————–

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-1-

சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-என்கிறாராக-என்று ஆழ்வான் பணிக்கும்-
தேவானாம் தானவானாம் ச சாமான்ய மதிதை வதம் -என்கிற சம்பந்த சாமான்யத்தைப் பார்த்து
அசுரர்களுக்கு அருள் செய்கை தவிர்ந்து-அனுகூலராய் அநந்ய சரணரான எங்களுக்கே
பிரசாதத்தைப் பண்ணி அருள வேணும் என்று தேவர்கள் வந்து ஸ்தோத்ராதிகளைப் பண்ணி
ஆஸ்ரயிக்கிற ஸ்தானம்–என்கிறார் முதல் பாசுரத்தில்

அதனுடைய வியசனத்தைப் போக்கின ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய ஸ்தானம்
வினை தீர்க்கையாகிறது -அது நினைத்தபடியே திருவடிகளில் பூவைப் பணிமாறலாம் படி சென்று முகம் காட்டுகை
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு விரோதியான முதலையைப் போக்கி – அத்தாலே ப்ரீதியான ஸ்ரீ பிராட்டி கரத்தைப் போலே
அணைக்க அவளோட்டை வரும் சம்ச்லேஷத்தை பெற்ற ஸ்ரீ எம்பெருமான்
ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே –அப்போது சென்று அனுபவி
பெரிய பிராட்டியாரோட்டை சம்ச்லேஷ சுகத்தை –
தன்னுடைய பிரேமம் உண்டு -ஸ்நேஹம்அத்தோடு கூட அனுபவித்த சர்வேஸ்வரனுடைய ஸ்தானம் ––
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

மாலி சுமாலி தொடக்கமான ராஷசரை அடைய பண்டு இலங்கையிலே வென்ற ஸ்ரீ சர்வேஸ்வரனே
ஸ்ரீ திரு மணி மாட கோயிலிலே வந்து நின்று அருளினான் -நெஞ்சே அங்கே சென்று அனுபவி –
நாலு வேதத்தை உத்தரிப்பாராய் பஞ்ச மகா யஞ்ஞாத்ய அனுஷ்டானங்களில் —
சப்த ரசங்களையும் உள்ளபடியே அறிந்து இருக்கும் பிராமணர்-இப்படிப் பட்ட விலஷணமானவர்கள்
ஆஸ்ரியா நின்றார்கள் என்கிற புகழை உடைத்தாய் இருக்கிற திரு நாங்கூர்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

பிரதி கூல வர்க்கத்தைப் போக்கி இடைப் பெண்களோடு சம்ஸ்லேஷித்தவன்
ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினவன்-நெஞ்சே அத்தேசத்தை ஆஸ்ரயி-
உயர்ந்த சோலையின் தலையிலே மேகங்கள் சஞ்சரிக்க அவற்றைக் கண்டு ஹர்ஷராகக் கொண்டு
சோலையில் வர்த்திக்கிற மயில்கள் ஆனவை ஆடத் துடங்கும் –
இப்படிப் பட்ட ஸ்ரீ திரு நாங்கூரில் ஸ்ரீ மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

கண்ணார் கரும்பின் கழை தின்று வைகிக் கழு நீரில் மூழ்கிச் செழு நீர்த் தடத்து
மண் எனது இள மேதிகள் வைகு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே
இவ்விடத்தை ஸ்ரீ பிள்ளை விழுப்ப அரையரும் ஸ்ரீ ஆப்பானும் கூட அனுசந்தித்து இரண்டு இடத்திலே -வைகி -என்று உண்டாய் இருந்தது
இது செய்யும்படி என் என்று ஸ்ரீ பட்டரை கேட்க – சௌகுமார்யத்தாலே இரண்டு இடத்திலும் கிடந்தது என்று அருளிச் செய்தார்-
பூதனையை அப்போதே பிராணன் போம்படி முலை உண்ட ஸ்ரீ சர்வேஸ்வரன்
ஸ்ரீ திருமணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

காளியனால் வந்த ஆபத்தை போக்கின ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான்
இப்படி சர்வ ரஷணங்களையும் பண்ணும் ஸ்ரீ சர்வேஸ்வரன் வர்த்திக்கிற தேசம்-நெஞ்சே அங்கே சென்று அனுபவி
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேல் -என்னும்படி சிற்றில் சிதைத்தும்
அவர்களோடு உண்டான விளையாட்டோடு கூட – அவர்களுக்கு பிரேம ஆகாரத்தை விளைத்த ஸ்ரீ சர்வேஸ்வரன்
உடைய வாசஸ் ஸ்தானம்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக எருது ஏழு அடர்த்த செயலையும்-திவ்ய ஆயுதங்கள் உடைய சேர்த்தி அழகையும்
சொல்லி தேவர்கள் ஏத்த ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் –
ப்ரஹ்மாதி தேவர்கள் விடாதே ஸ்தோத்ரம் பண்ணுகிற இடம் –நெஞ்சே அங்கே சென்று அனுபவி
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இத் திருமொழிக்கு கற்றாருக்கு பலம் சொல்லுகிறது –அனுகூல பிரதி கூல சீலர் என்று வாசி அன்றிக்கே
லோகமாக தங்கள் காலிலே வந்து விழும்படி மத்தகத்தின் மேல் ஏறி கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய் –
ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்து வந்து பூமிக்கு தாங்களே நிர்வாஹகராய் ஆகாசத்திலே சென்று கிட்டும் படியாக
முத்துக் குடையின் கீழே கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு விரும்பப் படுவர்-நிரதிசய ப்ரீதி உடையார் ஆவார்கள் –
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
ஐஸ்வர்யத்தை புருஷார்த்தமாக சொல்லுவான் என் என்று ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க
ஸ்ரீ ஈச்வரனே ஆகிலும் ஒரு கால் பிறந்து அபிஷேகம் பண்ண அமையும் ஸ்ரீ பாகவத சேஷம் ஆகலாம் ஆகில் என்று காணும்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் இருப்பது -என்று அருளிச் செய்து அருளினார்-

————————-

சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை
நலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான்
நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி
சண்பகங்கள் மண நாறும் வண் பொழிலி னூடே
வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-1-

நல் உயிரான அமிர்தத்தை வாங்கி நம்மை ஆஸ்ரயித்த தேவ ஜாதி கார்யம் தலைக் கட்டப் பெற்றோம் இறே -என்று
அது பெற்றால் அவர்களுக்கு உரும் இன்பத்தை தான் உடையேனாய் –
அவ்வமுருதத்தை புஜித்தாருக்கு இழியக் கண்ட ராகராதிகளை தான் உடையனாய் இருக்கிறவன்-
பெரிய ஹர்ஷத்தோடு நித்ய வாசம் பண்ணுகையாலே ஆஸ்ரிதருக்கு இனிதான தேசம்-என்கிறார் முதல் பாசுரத்தில்

தன்னுடைய ஈஸ்வரத்வத்தை நிலை நிறுத்தினவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-
பூமியில் இதுக்கு இவனே கடவான் இதுக்கு இவனே கடவான் என்னும்படி சமைந்த பிராமணர் நெருங்கி வர்த்திக்கிற தேசம்-
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

அண்டமும் இந்த லோகத்தை சூழப் போந்து அலை எறிகிற அண்ட தீபங்களையும் எல்லாம் அமுது செய்த
திரு வயிற்றை உடையவன் –இப்படி சர்வ நியந்தாவானவன் வர்த்திக்கிற கோயில்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அவள் ஏறிட்டுக் கொண்டு வந்த வடிவைப் போக்கி தானாம்படி பண்ணி விட்டான் ஆயிற்று
அநந்தரம் அவளும் கூப்பிட்டு கொண்டு தலையிலே கையை வைத்து மலையின் மேலேயான இலங்கையிலே
புகும்படி பண்ணின தோள் வலியை உடையவன் நித்ய வாசம் பண்ணுகிற கோயில்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

அன்று இலங்கையை பொடி படுத்திய தோள் மிடுக்கை உடைய ஸ்ரீ பிராட்டிக்கு பண்ணின வியாபாரத்தை
ஆஸ்ரிதர் எல்லாருக்கும் ஒக்கப் பண்ணினது போலே
அவன் பிரீதியோடே வர்த்திக்கிற தேசம் ஆகையாலே கண்டார்க்கு எல்லாம் இனிதாமோபடி இருக்கிற தேசம்
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

விரோதியைப் போக்கப் பெற்றோமே என்று அத்தாலே தீப்தனாய் ஸ்ரீ சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கிற தேசம்
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

வெண்ணெயையும் ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யம் ஆகையாலே திரு உள்ளமானது குளிரும்படியாக அமுது செய்து
அநந்தரம் இந்த லோகத்தை அடைய திரு வயிற்றிலே வைத்து ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்தை பண்ணுகையாலே
இளகிப் பதித்து இருக்கிற-நிரவதிக சம்பத்து மாறாதே செல்லுகிற தேசம் ஸ்ரீ நாங்கூர் வைகுந்த விண்ணகரம்
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கும் ருத்ரனுக்கும் என்னது என்று கூறிட்டு அனுபவிக்கும் படி திரு மேனியைக்
கொடுத்துக் கொண்டு இருக்கிற சீலத்தை உடையவன் –ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு நாதன் ஆனவன்
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

தேவர்களோடே-சனகாதிகளோடே-புஷ்பாத் உபகரணங்களைத் தூவி எங்களுக்கு நாதனான ஸ்ரீ சர்வேஸ்வரனே
எங்கள் பக்கலில் கிருபையை பண்ணி அருள வேணும்-என்னும் ஸ்ரீ சர்வேஸ்வரன் பிரீதி பூர்வகமாக
நித்ய வாசம் பண்ணுகிற தேசம் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஆஸ்ரித அர்த்தமாக ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு இருக்கிற புண்டரீ காஷனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்-தமிழ் தொடை பத்தையும் வல்லார்கள் உபய விபூதியையும் தாங்கள்
இட்ட வழக்காம் படியான பிரபாவத்தை உடையராய்ப் பெறுவர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

—————————–

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-1-

பொறுப்பிக்கும் அவளும்-பொறைக்கு உவாத்தானவளும்-எப்போதும் ஒக்க அருகே இருக்கையாலே
ஆஸ்ரிதர் பக்கல் எப்போதும் அவன் அருளே நடந்து அத்தாலே கொடிய அபராதங்கள் இவ்வோ விடங்கள்
நமக்கு இருப்பிடம் அல்ல என்று விட்டு ஓட –
தேவர்களுக்கும் கூட கால் பொருந்த அரிதாம்படியான இஸ் சம்சார விபூதியிலே அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான
ஸ்ரீ நித்ய சூரிகள் பொருந்தி ஆஸ்ரயிக்கும் படியாக இருக்கிற தேசம் –என்கிறார் முதல் பாசுரத்தில்

அவர்கள் நீ வேண்டா -எங்களுக்கு உப்புச் சாறு அமையும் –என் பெரு விலையனான தன் படி ஒன்றும் பாராதே
தன் தோள் நோவும்படி கடலை நெருக்கிக் கடைந்த அவர்களுக்கு அமிர்தத்தை உபகரித்தவன் –
என் ஆரமுதம் – அவர்கள் அமிர்தம் போல் அன்றிக்கே தம்முடைய அமிர்தம் இருக்கிறபடி-
கொண்டாடிக் கொண்டு வர்த்திக்கிற தேசம்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

பிரளயத்திலே நோவு பட புக வயிற்றிலே வைத்து நோக்கின உபகாரகன் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து –
இடையர்கள் கண்டு பிரீதராம்படி குவலயா பீடத்தின் உடைய கொம்பை முறித்து
அநந்தரம் கம்சனுடைய மயிரைப் பிடித்து தலை கீழாகத் தள்ளி
முதுகிலே அறைந்து அவனை அழியச் செய்த உபகாரகன் உடைய கோயில்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஹிரண்யன் உடைய முரட்டு உடலிலே வைத்தால் வளையக் கடவது அன்றிக்கே கூர்மை மிக்கு இருந்த
திரு உகிராலே இரண்டு கூறாம்படி பிளந்து அவன் பக்கல் இழவு தீரும் படி அவன் மகன் என்று
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே அருளைப் பண்ணினவன் வர்த்திக்கிற தேசம்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

மகா பலியினுடைய யஞ்ஞ வாடத்திலே இவன் -தேவ கார்யம் செய்கிறான் -என்று தோற்றாத படியாக
நாட்டில் வாமனர்கள் திரு உலகு அளந்து அருளின இடம் –என்னும் படியான வாமன வேஷத்தை பரிகரித்து
எனக்கு மூன்றடி வேணும் -என்று அர்த்தித்து ஆகாசத்தையும் அலை எறியா நின்றுள்ள கடலையும் த்வீபங்களையும்
எல்லாம் அனாயாசேன அளந்து கொண்ட உபகாரகன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளுக்காக இலங்கைக்கு நிர்வாஹனாய் இருக்கிறவனுடைய
பத்துத் தலையும் இருபது தோளும் உதிரும்படியாக –
தாளை உடைத்தாய் -நெடிதாய் -திண்ணியதாய் இருக்கிற வில்லை வளைத்த தசரதாத் மகன் -சேய் -பிள்ளை
தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே என்னுமா போலே காணும் இருப்பது –
அயர்வறும் அமரர்கள் அதிபதி வர்த்திக்கிற ஸ்தானம் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

தேனுகன் பூதனை அவர்களை முடித்துப் பொகட்ட அழகில் வந்தால் காமனுக்கும் உத்பாதனாய்
அள்ளல் அல்லாதபடி ஸ்ரமஹரமான திருமேனியை உடையனாய் இருக்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கிற தேசம் ஆயிற்று-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரமஹரமாய் இருக்கிற திருமேனியை உடையவன் பசுக்களை ரஷிக்கைக்காக ஸ்ரீ கோவர்த்தனத்தாலே மழை தடுத்து
மன்றிலே ஆயர் அனுபோவ்யமாம் படி குடக் கூத்தாடினவன் கொண்டாடி வர்த்திக்கிற தேசம்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

அவை நின்ற இடத்திலே சென்று சினத்தை உடைத்தாய் இருக்கிற ருஷபங்கள் ஏழையும் முடியும்படி அடர்த்து
ஸ்ரீ பின்னை பிராட்டி உடைய செவ்வியை உடைத்தாய் இருந்துள்ள தோள் உடன் அணைந்து ஸ்ரீயபதியாய் வர்த்திக்கிற கோயில்-
இத்தை அப்யசிதவர்கள்-இஹலோகத்திலே ஹர்ஷர்கள்
பயிலும் திரு உடையர் எவரேலும் எம்மை ஆளும் பரமரே-என்னும்படி அவர்களுக்கு தலைவராய்
திருவடி திரு அநந்த ஆழ்வான் போல்வார் உடன் ஒரு கோவையாக ஆகப் பெறுவார்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் மூன்றாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

June 17, 2019

இரும் தண் மாநிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமல நன் மலர்த் தேறல்
அருந்த இன்னிசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே
செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு திருவயிந்திரபுரமே–3-1-1–பிரவேசம் –

அவ்வோ நிலங்களுக்கு சிறப்பானவற்றை இட்டுச் சொல்ல கடவர்கள் ஆயிற்று கவிகள் ஆனவர்கள் –
அப்படி அன்றிக்கே
யதாபூதவாதிகளான ஸ்ரீ ஆழ்வார்கள் உகந்து அருளின நிலங்கள் விஷயமாகச் சொல்லுமவற்றில்
நாம் கண்டு காணாதவை கொள்ளும்படி எங்கனே என்றால்
அவர்கள் உடைய பிரேமத்துக்கு அவதி இல்லாமையைக் கொள்ளும் இத்தனை –
தன் புத்திரன் விரூபமாய் இருக்கச் செய்தேயும் அல்லாதவர்கள் உடைய புத்ராதிகளில் காட்டிலும் ரூபவானாய் தோற்றும் இறே
பிரேமத்தால் – அப்படியே இவர்கள் உகப்புக்கு அவதி இல்லாமையாலும்
சொன்ன ஏற்றம் எல்லாம் பொறுக்கும்படி ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயமாக சொல்லுகையாலும்-இப்படி ஆகையில் ஒரு தட்டில்லை –
காரணமான பிரேமத்துக்கு ஒரு அவதி இல்லாமையாலே அதின் கார்யமாய் வருமவை எல்லாம் உண்டாகைக்கு ஒரு குறை இல்லை இறே –
ரஜோ குணபிரசுரனான பல்லவனும் கூட ஸ்ரீ பரமேச்சுவர விண்ணகரிலே ஆஸ்ரயிக்கலாம்படி +சந்நிஹிதனான படியை அனுசந்தித்தார் –

அங்கன் அன்றிக்கே
சத்வ நிஷ்டராய் சர்வ சாஸ்திரம் உசிதமானவர்களை ஸ்ரீ பகவத் சமாராதான புத்த்யா மாறாதே அனுஷ்டிக்கும்
பிராமணர்க்கு உபாஸ்யனாய்க் கொண்டு ஸ்ரீ திருக் கோவலூரிலே வந்து சந்நிஹிதனாபடியை அனுசந்தித்தார் –

தேவர்களுக்கு அந்தர்யாமி என்கிற புத்தி விசேஷத்தைப் பண்ணி அவ்வோ முகங்களாலே ஆஸ்ரயிக்கை அன்றிக்கே
அவன் தன்னையே ஆஸ்ரயிக்கும் அனுகூலர்களுக்காக-லோகத்துக்கு காதாசிதமாக உண்டாகும் பிரளயத்தை போக்கி நோக்குமா போலேயும்
ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு சதா தர்சனம் பண்ணுகைக்கு தன்னைக் கொடுத்து கொண்டு இருக்குமா போலேயும்
அபரிச்சின்னனான தன்னை இவன் இவ்வளவில் உள்ளான் என்று இவர்களுக்கு பரிச்சேதித்து பிரதிபத்தி பண்ணலாம் படி
தனக்கு உள்ளது அடைய இவர்களுக்கு காட்டிக் கொடுத்து கொடு நிற்கிற இடம் ஆகையாலே
அவ்விடத்தை பிராப்யம் என்று புத்தி பண்ணி அத்தை பேசி அனுபவிக்கிறார்.

இத் திரு மொழிக்கு உயிர் பாட்டு –வையம் ஏழும் உண்டு -பாசுரம் என்பர்-
வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு
மெய்யனாகிய தெய்வ நாயகனிடம் மெய்தகு வரைச் சாரல்
மொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய முல்லை யம் கொடி யாட
செய்ய தாமரைச் செழும் பணை திகழ் தரு திருவயிந்திரபுரமே–3-1-3-அடியவர்க்கு மெய்யனான தெய்வ நாயகன்-

——————

ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-பிரவேசம்-

அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வ நாயகன் -என்று ஆஸ்ரிதர்க்கு சுலபனாகைக்கா ஸ்ரீ திருவயிந்திர புரத்திலே
சந்நிஹிதன் ஆனான் என்றார் கீழ் –
அவன் படி இதுவான பின்பு விரோதியான தேஹத்தைக் கழித்து ஸ்ரீ பகவத் பிராப்தி பண்ணி வேண்டி இருப்பார்க்கு
சரீரத்தை ஒறுத்து சாதன அனுஷ்டானம் பண்ண வேண்டா
அவன் உகந்து வர்த்திக்கிற ஸ்ரீ திருச் சித்ர கூடத்தை ஆஸ்ரயியுங்கோள் -என்கிறார் –
மன்னு மழல நுகர்ந்தும் வண் தடத்தின் உட் கிடந்தும் -பெரிய திரு மடல் -என்கிறபடியே
கோடைக் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராயும்-சீதகாலம் தடாகங்களிலே அகமகர்ஷகம் பண்ணியும்
அதிலே பாசி ஏறக் கிடந்தும்-இப்படி சரீரத்தை ஒறுத்து-அப்பஷராயும் வாய்பஷராயும் சால மூல பலாதிகளை புஜித்தும்
தபஸு பண்ணி கிலேசிக்க வேண்டா
பிரளய ஆபத்துக்களில் அபேஷா நிரபேஷனாய் ரஷிக்கும் ஸ்வ பாவனாய் ராவண ஹிரண்யாதிகள் உடன் நலிவு வந்த காலத்தில்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதாரங்களைப் பண்ணி ரஷித்தும் இப்படி சர்வ பிரகாரமாக சர்வ ரஷகனான
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீயபதி ஸ்ரீ திருச் சித்திர கூடத்தில் சந்நிஹிதன் ஆனான்
அத்தேசத்தைச் சென்று சேரவே சகல விரோதிகளும் போய் அவனைப் பெறலாம்
சடக்கென அத தேசத்தில் சென்று சேருங்கோள் என்று பர உபதேசம் பண்ணுகிறார்-

———————–

வாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு
ஆடல் நன் மா வுடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்
கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்
சேடுயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே–3-3-1-பிரவேசம்

ஸ்ரீ கிருஷ்ண அவதாராதிகளில் இழவு தீர ஸ்ரீ திருச் சித்ர கூடத்தில் வந்து சந்நிஹிதனானான் –
எல்லோரும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –

—————–

ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக வென மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே—3-4-1–பிரவேசம் –

நீங்கள் அவனைப் பெறுகைக்கு உறுப்பாக பண்ணும் சாதனா அனுஷ்டானத்தை
அவன் தான் உங்களைப் பெறுகைக்கு உறுப்பாக அவதாராதி முகங்களாலே பண்ணிக் கொடு
இங்கே வந்து நின்றான் -என்றார்
அவன் படி இதுவான பின்பு-அர்த்தித்வம் துடக்கமாக மேல் உள்ளவற்றை எல்லாம் அவன் கையிலே ஏறிட்டு
நீங்கள் அவன் உகந்த ஸ்ரீ சீராம விண்ணகரை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –
இவன் பரம பக்தி பர்யந்தமாகப் பண்ணினாலும்-அதடைய பிரதிகூல்ய நிவ்ருத்தி மாத்ரத்திலே நிற்கும்படி இறே
பேற்றின் உடைய வைலஷண்யத்தைப் பார்த்தால் இருப்பது –

———————

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும்
என் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னார் உயிரே
அந்தளி ரணியார சோகின் இளந்தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந்தழல் புரியும் திருவாலி யம்மானே–3-5-1- -பிரவேசம்

எல்லாரும் தம்தாமுக்கு நன்மை வேண்டி இருக்கில் ஸ்ரீ சர்வேஸ்வரன் பக்கலில் ந்யச்த பரராய் கொண்டு
ஸ்ரீ சீராம விண்ணகரம் ஆஸ்ரயியுங்கோள் -என்றார்
அங்கன் இன்றிக்கே
தம்மளவில் வந்தவாறே ஸ்ரீ திருவாலியை இருப்பிடமாகக் கொண்டு அங்கே எழுந்து அருளி நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
தானே ஸ்வயம் பாரித்துக் கொண்டு வந்து இருக்கிறபடியை அனுசந்தித்து –
பரம ப்ராப்யனாய் இருக்கிற நீ என் பக்கல் அர்த்தித்வம் இன்றிக்கே இருக்கச் செய்தே –என் ஹிருதயத்தில் வந்து புகுந்தாய் –
எனக்கு உன்னை ஒழிய செல்லாமையைப் பிறப்பித்தாய்
உன் வ்யதிரேகத்திலே நான் பிழையாதபடியை பண்ணினாய் –
இங்கனே இருந்த பின்பு இனித் தான் நீ போகில் நான் பிழையேன்-போகல் ஒட்டேன்
உனக்கு எந்தனை தயநீயர் இல்லை
ஆனபின்பு என்னை நித்ய கைங்கர்யத்தை கொண்டு அருள வேணும் -என்று
பிராப்யனான அவன் திருவடிகளில் கைங்கர்யத்தை அபேஷித்து அப்போதே கிடையாமையாலே
அதில் க்ரம பிராப்தி பற்றாமையால் உண்டான தம்முடைய த்வரையை ஆவிஷ்கரித்தாராய் தலைக் கட்டுகிறார்-

——————————-

தூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே
பூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே–3-6-1-பிரவேசம் –

ஸ்ரீ நஞ்சீயர் உடைய நோவிலே ஸ்ரீ பெற்றி அறியப் புகுந்து இங்கு தமக்கு வேண்டி இருக்கிறது என்-என்று கேட்டு
தூ விரிய மலர் உழுக்கிப் பாட்டு கேட்கவும் ஸ்ரீ பெருமாள் எழுந்து அருள பின்னும் முன்னும் சுற்றும் வந்து
திருவடி தொழவும் வேண்டி இரா நின்றேன் -என்று அருளிச் செய்து அருளினார் –
அப்போதே ஸ்ரீ வரம் தரும் பெருமாள் அரையரை அழைத்து விட்டு பாட்டுக் கேட்டு அருளா நிற்க
தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்
மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ
தேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும்
ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே–3-6-4–என்னும் அளவிலே வந்தவாறே
காம சரங்களால் ஏவுண்பதற்கு முன்பே வாராவிட்டால் பட்ட புண் பரிஹரிக்க வாகிலும்-வந்தால் ஆகாதோ
என்று அருளிச் செய்து அருளினார் –

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்றும்
அடியேன் மனத்து இருந்தாய் -என்றும் –
என் மனத்தே புகுந்தது இம்மைக்கு என்று இருந்தேன் -என்றும் மானச அனுபவ மாத்ரமாய் நின்றது கீழ் திருமொழியில் –
மானச அனுபவமானது முதிர்ந்து-அது தான் பிரத்யஷ சாமானகாரமாய் என்று இருக்கை அன்றிக்கே –
பிரத்யஷம் என்றே பிரதிபத்தி பண்ணி-அநந்தரம் பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்து
அது தான் நினைத்த படி அனுபவிக்கக் கிடையாமையாலே ஆற்றாமை கரை புரண்டு ஒரு ஸ்ரீ பிராட்டி தசையை பிராப்தராய்
அவள் பேச்சாலே ஸ்வ தசையை -பேசுகிறார் –

பொன் நெருப்பிலே இட இட அழுக்கற்று தன்னிறம் பெற்று சுத்தமாம் போலே ஸ்ரீ பகவத் விஷயத்தில் அவஹாகிக்க
அபதோஷாநாம் பின்னை ஸ்ரீ பிராட்டிமார் படி உண்டாக கடவதாயிற்று –
சகல ஆத்மாக்களுக்கும் ஸ்ரீ பிராட்டிமார் தசை பிறந்தபடி தான் என் என்னில்
அனந்யார்ஹ சேஷத்வம் என்று ஓன்று உண்டு –அது இரண்டு தலைக்கும் ஒத்து இருக்கும்
கலந்த போது பிரீதி பிறக்கையாலும்-பிரிந்த போது ஆற்றாமை பிறக்கையாலும்-தத் ஏக போகத்தாலும்
அவன் நிர்வாஹகனாக-இத்தலை நிர்வாஹ்யம் ஆகையாலும் ஸ்வ யத்னத்தாலே பேறு என்று இருக்கை இன்றிக்கே
அத் தலையாலே பேறு என்று இருக்கையாலும்ஸ்ரீ பிராட்டிமார் படி உண்டாகத் தட்டில்லை –
சர்வதா சாத்ருச்யம் சொல்லுகிற இடங்களில் வந்தால் தாமரை போலே வந்தால் என்னும் அத்தை
தாமரை தான் என்று தாமரை என்றே வ்யவஹரிக்கும் இறே
ந ச சீதாத் யா ஹீநா நசா ஹமபி-என்று ஒக்கச் சொன்னார் இறே ஸ்ரீ இளைய பெருமாள்-

இவ்வோ வழிகளால் ஸ்ரீ பிராட்டிமார் தசையை பிராப்தராய் அடைய தட்டில்லை
நாயகனோடு இயற்கையிலே கலந்து பிரிந்து-பிரிவாற்றாமை நோவு படுகிறாள் ஒரு ஸ்ரீ பிராட்டி
அவன் வரும் தனையும் பொறுத்து இருக்க மாட்டாமையாலே தூது விடப் பார்த்து அதுக்குத்த பரிகரத்தில்
கால் நடை தந்து போக வல்லார் இல்லாமையாலும்
இனித்தான் சேதன அசேதன விபாகம் அற இரக்க வேண்டும்படியான தசையையும் உடையளாய் இருக்கையாலும்
ஸ்ரீ ராமாவதாரத்துக்கு பின்பு திர்யக்குகள் போன கார்யம் தலைக்காட்டி வரக்கண்ட வாசனையாலும்
கண்ணால் கண்ட பஷிகளை அடைய தூது விட்டு-தூதர்க்கு சொல்லுகிற வார்த்தையாலே தன நெஞ்சு தான்
புண் பட்டு இருக்கிற சமயத்தில்-அவன் தான் சந்நிஹிதனாய்க் கொண்டு வர
அவனுக்கு தன் இழவுகளைச் சொல்லி தலைக் கட்டிற்றாய் செல்லுகிறது-

——————————-

கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப் போதாவென்று
வெள்ளி வளைக்கை பற்றப் பெற்ற தாயாரை விட்டகன்று
அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ–3-7-1- பிரவேசம் –

தூது விட்டு தூதுவருக்கு சொன்ன பாசுரம் நெஞ்சிலே ஊற்று இருந்து அத்தை பாவித்து பாவநா பிரகர்ஷத்தாலே
அவன் தான் முன் நின்றானாகக் கொண்டு அவனுக்கு வார்த்தை சொல்லும்படி பிறந்த தசா விசேஷம்
அவன் திரு உள்ளத்திலே பட்டு – அது பொறுக்க மாட்டாதவன் ஆகையாலே-தானே வந்து முகம் காட்டி -இவளைக் கூட கொண்டு போக –
ஆதி வாஹிகரை வர காட்டிக் கொண்டு போம் சிலரை – ஸ்ரீ பெரிய திருவடியை வரக் காட்டிக் கொண்டு போம் சிலரை –
நயாமி -என்று தானே கொடு போம் சிலரை –அப்படியே தானே வந்து- அத்தவாளத் தலையாலே மறைத்துக் கொண்டு போக-
அந்தரமாக காத்துக் கொடு போந்த ஸ்ரீ திருத் தாயார் வந்து படுக்கையில் இவளைக் காணாமையாலே
போன அவள் படிகளையும்-தனக்கு அவளை ஒழியச் செல்லாமையும் -எதிர்தலை இப்படி பட வேண்டி இருக்கிற
இவள் உடைய வைலஷண்யத்தையும் தன் இழவையும் சொல்லி கூப்பிடுகிறாளாய்ச் செல்லுகிறது –

அவன் இவளைக் கொடு போகையாவது என் – ஸ்வாபதேசத்தில் ஓடுகிறது என் என்னில் –
மானச அனுபவமாய் இருக்கச் செய்தே பாஹ்ய சம்ச்லேஷம் போலே இருக்கப் பண்ணி கொடுத்த தொரு
வைச்யத்தைச் சொன்னபடி இறே
ஸ்த்திதே மனஸி-நின்றவா நில்லா மனதும் ஓர் இடத்திலே நிற்கப் பெற்று
அபசயாத்மகமான சரீரமும் அங்கே இங்கே சிதிலமாகாதே ஒருபடிப்பட்டு
தாதுக்களும் ஓன்று முடங்கி ஓன்று நிமிருகை அன்றிக்கே
சாம்யாவஸ்தையை பஜித்து-இப்படி சரீரத்திலே ஒரு லாகவம் பிறந்து சத்வம் உத்ரிக்தமான சமயத்தில்
ஆரேனும் ஒருவன் ஆகவுமாம் தான் கீழ் சம்சாரியாய் நின்ற நிலையையும்
இத்தைக் கழித்துக் கொள்ளுகைக்கு ஈடாக இருப்பதொரு கைம்முதல் தன் பக்கலில் இன்றிக்கே இருக்கிற படியையும்
அவனைப் பற்றியே கழிக்க வேண்டும்படி இருக்கிற படியையும்-இதில் நின்றும் கரை ஏற்றுக்கைக்கு ஈடான சக்தியும் பிராப்தியும்
அவன் பக்கலிலே உண்டாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து-அவன் பக்கலிலே பர ந்யாசத்தைப் பண்ணுவது
பின்னை பேற்றுக்கு இவ்வளவுமேயோ என்னில்-சரீரத்தை பற்றி இருக்குமவற்றுக்கு ஆத்மா சுக துக்கம் அனுபவம் பண்ணுமா போலே
இவற்றுக்கு வருவது தனதாம்படி விசேஷ சரீரனுமாய்-இவன் தன்னை ஒரு கால் அனுசந்தித்தால்
பின்பு இவ்னைப் போலே மறைக்கக்கு அடியான கர்ம நிபந்தனமான கலக்கம் இன்றிக்கே இருக்குமவன்
ஆகையாலே அவ்வளவே அமையும்

இப்படி ஒரு நாள் அனுசந்தித்தவன்
பிரகிருதி வச்யனாய் -பின்பு தன் தேக யாத்ரையிலே அந்ய பரனாய் திரிந்து பின்பு ஸ்ம்ரிக்கைக்கு கூட யோக்யதை இல்லாதபடி
காஷ்டாபாஷா சந்நிபனாய் கிடக்கும் அன்று இவனைப் போல் ஒரு கால் ஸ்மரித்தால் பின்பு விஸ்வமரிக்குமவன்
அன்றிக்கே நான் ஸ்மரித்த படியே இருப்பன்-

மத்பக்தம்
ஸ்மரிக்கைக்கு யோக்யதை இல்லாத வன்று-ஸ்மரித்திலன் என்று விடும் அத்தனை துராராதனையோ அவன் பற்றிற்று –

அஹம் ஸ்மராமி –
ஐஸ்வர்ய காமனுக்கும் -ஆத்மப்ராப்தி காமனுக்கும் -பக்தி காமனுக்கும் அந்திம ஸ்ம்ருதி உண்டு
இவன் முதலிலே துடங்கி சர்வ பர ந்யாசம் பண்ணினவன் ஆகையாலே இவனுக்காக நான் நினைப்பன் –

நயாமி பரமம் கதம் –
இப்படி நினைத்து நானே கை தொடனாய் வந்து கொடு போவேன்
த்வயம் -எம்பெருமானுடைய சர்வ ஸ்வமும் இறே இவை –
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதத்திலே வர்த்தித்த வைஷ்ணவன் அந்திம சமயத்தில் பட்ட கிலேசத்தைக் கண்டு
ஸ்ரீ பெரிய நம்பிக்கும் ஸ்ரீ எம்பெருமானாருக்கும் நடந்த சம்வாதத்தை நினைப்பது
மத்பக்தம் என்கிற இடமும்-பக்திமானையே சொல்லிற்று ஆனாலோ பிரபன்னனை சொல்லிற்று ஆனாலோ
என்கைக்கு நியாமகர் யார் என்ன-அவனுக்கு அந்திம ஸ்ம்ருதி விதிக்கிற சாஸ்திரம்-

————————-

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-1- -பிரவேசம் –

ஸ்ரீ பகவத் விஷயத்தில் தமக்கு பிறந்த பிராவண்ய அதிசயத்தை பார்ஸ்யர் பேச்சாலே அனுபவித்தார் –
அதாகிறது
மாதா பிதாக்களுக்கு ஆகாதே ஸ்ரீ வயலாலி மணவாளனுக்கேயாய் இருக்கிற இருப்பைத் ஸ்ரீ திருத் தாயார் பேச்சாலே
அனுபவித்தாராய் நின்றார் கீழ் –
இப்படி ஸ்ரீ திருவாலியில் புக்கு அனுபவித்த இடத்திலும் ஆற்றாமையில் தமக்கு பிறந்த பிராவண்யம்
உகந்த விஷயத்தை கண்ணாலே கண்டு ஸ்பர்சாதிகளை அபேஷிக்குமா போலே அனுபவிக்கையில் மூட்ட –
அப்போதே பெறாமையாலே திரு உள்ளம் பதற – திரு உள்ளத்தைக் கொண்டாடி அப்பேறு பெறும் தனையும்
இங்கேயே அனுபவிக்கைக்காக அன்றோ
உகந்து அருளின நிலங்கள் -என்று-பிரயோஜனாந்த பரர்களான தேவர்களுக்கும் தாம்தாம் அபிமதங்கள் அபேஷிக்கலாய்
அவ்வோ காலங்களில் இழந்தார் எல்லாருக்கும் எல்லா இழவுகளையும் தீர்க்கைக்காக
ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் –
அங்கே சென்று அனுபவி என்று திரு உள்ளத்தை அனுசாசிக்கிறார்-

——————

சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை
நலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான்
நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி
சண்பகங்கள் மண நாறும் வண் பொழிலி னூடே
வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-1–பிரவேசம்

அபிமத விஷயத்தை அனுபவிக்கும் இடத்தில் அவயவங்கள் தோறும் விரும்பி அனுபவிக்குமா போலே –
அங்கு உள்ளது எல்லாம் உத்தேச்யமாய் –
ஆபத் சகனாய் –சர்வத்துக்கும் ரஷகனாய் –இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் ரஷணத்துக்கு பாங்கான தேசம்
என்று விரும்பி வர்த்திக்கிற தேசம் ஆகையாலே
அங்குண்டான திர்யக்குகளும் அகப்பட முக்தர் பகவத் அனுபவத்தாலே களிக்குமா போலே
களித்து வர்த்திக்கும் தேசம் ஆனபின்பு நீயும் உத்தேச்யத்தை பிராப்யி என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

—————

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-1- -பிரவேசம்-

ஆஸ்ரித விரோதி சீலனாய் – ஆஸ்ரிதர்களுக்கு ஆபத்திலே வந்து உதவும் ஸ்வ பாவனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
தான் ரஷகனாம் இடத்தில் புருஷாகாரமாய் ஸ்ரீ பிராட்டிமாருடன் கூடி வந்து நிற்கிற படியை அனுசந்தித்து –
ஸ்ரீ நித்ய சூரிகள் –இது ஒரு சீல குண ப்ராசுர்யம் இருந்தபடி என் என்று –இதிலே ஈடுபட்டு ஆஸ்ரயிக்கும் படியாக
ஸ்ரீ அரிமேய விண்ணகரிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான் –
ஆனபின்பு நீயும் அங்கே சென்று அவனை ஆஸ்ரயித்து உன்னுடைய குறைகள் எல்லா வற்றையும்
தீர்த்துக் கொள்ளப் பாராய் -என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

—————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-மூன்றாம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

June 17, 2019

இரும் தண் மாநிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமல நன் மலர்த் தேறல்
அருந்த இன்னிசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே
செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு திருவயிந்திரபுரமே–3-1-1-

ஷட்பத நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ தெய்வ நாயகன் திருவடி தாமரைகளில் தேனைக் குறைவற உண்டு
ஆசையாலே ஸ்ரீ நித்யசூரி பரிஷத் கதனான வாசுதேவ தருவின் பாதமலரில் தேனை புஜிக்க கோலி
சஞ்சரித்து கொண்டு இருப்பார்கள் என்று ஸ்வாபதேசம்

————————–

மின்னும் ஆழி அம் கையவன் செய்யவள் உறை தரு திரு மார்பன்
பன்னு நான்மறைப் பல் பொருளாகிய பரனிடம் வரைச் சாரல்
பின்னும் மாதவிப் பந்தலில் பேடை வரப்பிணியவிழ் கமலத்து
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் தரு திருவயிந்தபுரமே–3-1-2-

ஸ்ரீ சர்வேஸ்வர லஷணம் ஆகிறது – ஸ்ரீ திரு ஆழியைக் கையிலே சலியாதே பிடித்தல்-ஸ்ரீ லஷ்மீ பதியாதல்
வேதைக சமிதிகன் ஆதல்-இவை ஆயிற்று இவை மூன்றும் இங்கே உண்டு-
ஸ்ரீ பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே பிரணய கலஹம் மாறாதே செல்லுமா போலே ஆயிற்று
அங்குத்தை திர்யக்குகள் உடைய யாத்ரையும் –
பாடப் பகை தீரும் -எனபது இறே-பேதை நெஞ்சற பாடும் பாட்டால் பகை தீர்ந்ததே –

—————————–

வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு
மெய்யனாகிய தெய்வ நாயகனிடம் மெய்தகு வரைச் சாரல்
மொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய முல்லை யம் கொடி யாட
செய்ய தாமரைச் செழும் பணை திகழ் தரு திருவயிந்திரபுரமே–3-1-3-

காதாசித்கமாக லோகத்துக்கு வந்த பிரளயத்தை பரிஹரித்தாப் போலே அன்றிக்கே
தன்னை நித்ய அனுபவம் பண்ண வேணும் என்று இருப்பார்க்கு-அதுக்கு ஒரு ஷணம் விச்சேதம் வருகையாவது நித்ய பிரளயம் இறே
தனக்கு அசாதாரணமாய் இருப்பார்க்கு தன் படிகளை எல்லாம் இவனுக்கு உள்ளது இவ்வளவு என்று பரிசேதித்து அனுபவிக்கலாம் படி
வெளி இட்டுக் கொண்டு நிற்கிற-ஸ்ரீ தெய்வ நாயகனிடம்-
ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு தன் படிகள் எல்லாம் அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு இருக்குமா போலே
இங்கு உள்ள ஆஸ்ரிதர்க்கும் தன்னை அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு நிற்கிற விடம் –
அகடிகடதங்களை கடிப்பித்தும் அவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமா போலே
விருத்தமான தேசத்தில் அவை இரண்டையும் சம காலத்தில் கிட்டி அனுபவிக்கலாம் தேசம் ஆயிற்று
குறிஞ்சி நிலமான மலை சாரலிலே முல்லை நிலமும் மருத நிலமும் இருந்தது போலே

———————-

மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல்லவுணன் தன் மார்பகம் இரு பிளவா
கூறு கொண்டு அவன் குல மகற்கு இன்னருள் கொடுத்தவனிடம் மிடைந்து
சாறு கொண்ட மென் கரும்பு இளங்கழை தகை விசும்புற மணி நீழல்
சேறு கொண்ட தண் பழனமது எழில் திகழ திருவயிந்தபுரமே–3-1-4-

பெற்ற தமப்பன் பகையா அவனில் அண்ணிய உறவாய் உதவினவன் தனக்கு தன்னில்-அண்ணிய உறவு இல்லை இறே –
புறம்பு –இப்படி இருக்கிற தானும் -ஆத்மைவ ரிபு ராதமான -என்கிறபடி தனக்குத் தானே பகையாய் தன்னை முடிக்கப் பார்த்த வன்று –
உன்னை உன் கையில் காட்டித் தாரேன் -என்று நோக்குகைக்காக வந்து நிற்கிற விடம் –
வ்யாபாரித்த போது ஹிரண்யன் உடைய ருதிர வெள்ளத்தாலே பார்த்த பார்த்த இடம் எங்கும் சேறு செய்தாற் போலே
கரும்புகள் ஒன்றோடு ஓன்று நெருங்கி பிரவஹித்த சாற்று வெள்ளத்தாலே பூமி எல்லாம் சேறாய்க் கிடக்கும் ஆயிற்று-

————————-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து
ஆயர் பூங்கொடிக்கு இனவிடை பொருதவனிடம் பொன் மலர் திகழ் வேங்கை
கொங்கு செண்பகக் கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்தோடி
தேன் கலந்த தண் பலங்கனி நுகர் தரு திருவயிந்திரபுரமே–3-1-5-

மகா பலி தானம் பண்ணா நின்றான் என்று கேட்டவாறே அவனுடைய யஞ்ஞவாடத்திலே
தன்னை அர்த்தியாக்கிச் சென்று அவன் கையில் நீர் தன் கையில் விழுந்த அநந்தரம்
அவ்விடம் தன்னிலே நின்றே பூமிப் பரப்பு அடைய அளந்து கொண்டு –
இடையர் பூத்த கொடி போலே இருக்கிற ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக
உபன்னம் தேட்டமான பருவம் ஆயிற்று பதிசம்யோக சுலபம் வய -என்கிறபடியே
ஒரு கொள் கொம்பிலே கூட்டில் கிடக்குமவளாய்- இல்லையாகில் தர்மி லோபம் பிறக்குமவளாய் இருக்கை
இனம் இனமான ருஷபங்களோடே பொருதவன் உடைய ஸ்ரீ ஸ்தானம் –

————–

கூனுலாவிய மடந்தை தன் கொடும் சொலின் திறத்து இளங் கொடியோடும்
கானுலாவிய கருமுகில் திரு நிறத்தவன் இடம் கவினாரும்
வானுலாவிய மதி தவழ் மால்வரை மா மதிள் புடை சூழ
தேனுலாவிய செழும் பொழில் தழுவிய திருவயிந்திரபுரமே–3-1-6-

ஒக்கத்தை உடைய பெரிய மலைகளையும் பெரிய மதிள்களையும் சுற்றிலே உடைத்தாய்
வண்டுகள் சஞ்சரியா நின்றுள்ள அழகிய பொழிலாலே சூழப்பட்ட ஸ்ரீ திருவயிந்திரபுரமே
முன்பு -ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுக்கு ஸ்ரீ சித்ர கூடத்தையும் ஸ்ரீ தண்ட காரண்யத்தையும் விஸ்மரித்து
வர்திக்கலாம் தேசம் ஆயிற்று

————-

மின்னின் நுண் இடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை
மன்னன் நீள் முடி பொடி செய்த மைந்தன் இடம் மணி வரை நீழல்
அன்ன மா மலர் அரவிந்தத் தமளியில் பெடையொடும் இனிதமர
செந்நெலார் கவரிக்குலை வீசு தண் திருவயிந்திரபுரமே–3-1-7-

ஸூ வேல சைலமாய் -அதின் மேலே த்ரி கூடமாய் -அதின் மேலே படைவீடாய் இறே இருப்பது
இப்படி ஒருவரால் அழிக்க ஒண்ணாத படை வீட்டுக்கு நான் ராஜா அல்லனோ என்று அபிமானித்து இருக்கிற
பையலுடைய–தேவதைகள் உடைய வரங்களால் பூண் கட்டி இருக்கிற முடிகள் பத்தும் துகளாம்படி பண்ணின
மிடுக்கனானவான் வர்த்திக்கிற ஸ்தானம் –

——————-

விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில் இறுத்த அடல் மழைக்கு
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடமார்
வரை வளம் திகழ மதகரி மருப்பொடு மலைவளர் அகில் உந்தித்
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே–3-1-8-

ஸ்வ ரஷணத்தில் அந்வயம் இல்லாத பசுக்களுக்கும் இடையருக்குமாக மலையை எடுத்து மழையை பரிகரித்தான் ஆயிற்று –
இந்த்ரன் வர்ஷிப்பிக்க பிற பாடராய் நோவு பட விட்டால் போலே ஆக ஒண்ணாது என்று ஏற்கவே நோவு படாமே நோக்குகைக்காக வந்து
நித்யவாசம் பண்ணுகிற இடம் ஆயிற்று –

————————

வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில் விசயனுக்காய் மணித்தேர்
கோல் கொள் கைத்தலத்து எந்தை பெம்மான் இடம் குலவு தண் வரைச் சாரல்
கால் கொள் கண் கொடிக் கை எழக் கமுகு இளம் பாளைகள் கமழ சாரல்
சேலைகள் பாய் தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே–3-1-9-

அர்ஜுனனுக்காக தன்னை அழிவுக்கு இட்டு –ரதியைச் சீறினவன் சாரதியை இறே அழியச் செய்வது –
உடம்புக்கு ஈடு இடாதே தன்னை அழிவுக்கு இட்டு நின்றான் ஆயிற்று –
தான் கொண்ட விஜயமும் அர்ஜுனன் தலையிலே கிடக்கும்படி –தன்னைத் தாழ விட்டு வைத்தான் ஆயிற்று –
ஸ்லாக்கியமான தேரிலே கையிலே உழவு கோலைக் கொண்டு நின்ற என் குல நாதன் உடைய ஸ்ரீ ஸ்தானம் –
ஆக தாரகம் தார்யத்துக்கு உள்ளே மறைந்து இருக்கும் தேசம் ஆயிற்று –
தான் வெல்லச் செய்தேயும் -அர்ஜுனன் வென்றான் என்று சொல்லலாம்படி ஸ்ரீ கிருஷ்ணன் அவனுக்கு பரிகரமாய்
அந்தர்பவித்து நிற்குமா போலே தான் விளைவிக்கச் செய்தே -வயல் விளைந்தது -என்று சொல்லலாம்படி யாயிற்று இருப்பது-

———————-

மூவராகிய ஒருவனை மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே–3-1-10-

சர்வ நியந்தாவாய் ஆயிற்று –ஆபத் சகனும் ஆயிற்று-தேவானாம் தனவாநாஞ்ச-என்கிறபடியே
தன்னாலே ஸ்ருஜ்யரான இவர்கள் இரண்டு திறத்தாருக்கும் ஒத்து இருக்கையாலே தம்தாமுடைய அபேஷித சித்திக்காக
தேவர்களும் அசுரர்களும் அடைய சென்று ஆஸ்ரயிகலாம் படி திருவயிந்திரபுரத்தில் நித்ய வாசம் பண்ணி
அத்தாலே பரம பதத்தில் காட்டிலும் உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை எல்லாம் இல்லை இறே பரமபதத்தில்
இவர்களுக்கு அபேஷிதம் விதானம் பண்ணுகையால் வந்த ஏற்றம் உண்டு இறே இங்கு-
பாடிட-பாப அனுபவம் பண்ணுகைக்காக இறே சம்சாரத்தில் பிறக்கிறது அத்தை அனுபவிக்க வந்த இத் தேசத்தில்
இத்தை அதிகரிக்கில் அவை தாம் நமக்கு இருப்பிடம் இல்லை என்று விட்டு ஓடிப் போம் –

————————

ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-

மாம்சமானது குறைய அசன வசநாதிகளைக் குறைத்து பிராணன்களைப் போகாதபடி அப்பஷண வாயு பஷணங்களாலே
கால் கட்டி சரீரத்தை விட்டுப் போகாத இந்திரியங்கள் ஐந்தும் ஸ்வ ஸ்வ விஷயங்களைப் பெறாமையாலே நொந்து ஈடுபடும் படி
தாங்கள் மேன்மேலும் கிலேசிக்கும்படி தபஸு பண்ண வேண்டா-தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–

——————-

காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-2-

நெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு பண்ண வேண்டா
ஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர்
வாயாலே ஓதுகிற வேதம் குறைவறுகையாலே வந்த ஸ்வ பாவிக சம்பத்தை உடைய பிராமணர் என்றும்
ஒக்க முறையாலே அனுஷ்டித்த அக்னி வளர வளர புகழ் ஓங்கா நின்று உள்ள ஸ்ரீ தில்லை

——————–

வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள் புக்கு அழுந்த
வம்புண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர்
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே—3-2-3-

பொழில் சூழ்ந்த பூமியை எடுத்தவனுடைய திருவடித் தாமரையை அணைய வேணும் என்னும் விருப்பத்தோடு வர்த்திப்பீர் –
ரத்னங்களைக் கொண்டு பரிகரத்தோடும் பல்லவர் கோன் பணிவதும் செய்து
செம் பொன்னாலும் மணியாலும் செய்த மாடங்கள் சூழா நின்றுள்ள ஸ்ரீ தில்லை-

———————

அருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த
பெருமான் திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்ன கிற்பீர்
கருமா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின் அணைப் பள்ளியின் மேல்
திருமால் திரு மங்கையோடாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-4-

திரு அநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே கறுத்துப் பெருத்த கடலிலே உகந்து கண் வளர்ந்து அருளின
ஸ்ரீயபதி ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடே கூட விடாதே சஞ்சரிக்கிற ஸ்ரீ தில்லை –

————————–

கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக் குல மன்னரங்கம் மழுவில் துணிய
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித் தவ மா முனியைத் தமக்காக கிற்பீர்
பூ மங்கை தங்கிப் புல மங்கை மன்னிப் புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர்
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-5-

ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் நித்யவாசம் பண்ணி
புகழ் மங்கை எங்கும் உஜ்ஜ்வலமாய் வர்த்திப்பதும் செய்து புகழையும் காப்பையும் உடைய
பொழில் சூழ்ந்த ஸ்ரீ தில்லை

———————

நெய் வாயழ்லம்பு துரந்து முந்நீர் துணியப் பணி கொண்டு அணி யார்ந்து இலங்கு
மையார் மணி வண்ணன் எண்ணி நுந்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர்
அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான் அருமா மறை யந்தணர் சிந்தை புக
செவ்வாய்க் கிளி நான் மறை பாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-6-

பிராமணர் உடைய ஹிருதயத்துக்கு ஏற்ற – சிவந்த வாயை உடைத்தான கிளியானது
நல்ல ஸ்வரத்தோடே நாலு வேதத்தையும் பாடா நின்றுள்ள ஸ்ரீ தில்லை-

——————–

மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த
தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
கௌவைக் களிற்றின் மருப்பும் பொறுப்பில் கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்
தெய்வப் புனல் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-7-

முல்லை -உடன் கூடின திருக் குழலை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டி யினுடைய
மிருதுவான திருத் தோளிலே கலந்து அங்குண்டான மச்த்யங்கள் சுழலும்படி
சுழன்று வருகிற கடல் பெற்ற ஸ்ரீ பெரிய பிராட்டி தங்கும் திரு மார்பை உடையவனை
ஹிருதயத்தில் வைத்துக் கொள்ளும் என்பீர்-ஸ்ரீ தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–

———————-

மா வாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முதுகுன்று எடுத்து ஆயர் தங்கள்
கோவாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்புடையீர்
மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-8-

பெருத்துப் பழையதான ஸ்ரீ கோவர்த்தனத்தை எடுத்து ஆயர் தலைவனாய் பசு மேய்த்து லோகத்தை திரு வயிற்றில் வைத்த
ஆச்சர்ய பூதனுடைய ஆபரண ஒலியை உடைத்தாய் போக்யதை மிக்க திருவடிகளை கூட வேணும் என்னும் குறிப்பு உடையீர்
சாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடியே ஆஸ்ரயிக்க அவர்களுக்கு ஆஸ்ரயணீயனாய் தேஜசை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்

—————-

செரு நீல வேல் கண் மடவார் திறத்துச் சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்
அரு நீல பாவம் அகலப் புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்
பெரு நீர் நிவா வுந்தி முத்தம் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள
திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-9-

ப்ரஹ்மாதிகளுக்கும் கிட்ட அரிய ஸ்ரீ பரம பதத்தில் இருக்க வேண்டி இருப்பீர்
மிக்க நீரை உடைய நிவா என்கிற ஆறு முத்தை கொடு வந்து வித்துகிற வயலிலே விக்ருதமான கயல்கள் பாய்ந்து
தாவித் திரிய தர்சநீயமான நீலம் நின்று திகழா நின்றுள்ள ஸ்ரீ தில்லை –

———————-

சீரார் பொழில் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடத்துறை செங்கண் மாலுக்கு
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும்
காரார் புயல் கைக் கலிகன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்
பாரார் உலகம் அளந்தான் அடிக் கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே–3-2-10-

பரம உதாரரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் குறையாத ஓசை உடைத்தாக அருளிச் செய்த ஸ்ரீ திரு மொழி பத்தும் வல்லார்
ப்ருதீவி பிரசுரமான லோகத்தை அளந்த திருவடிகளில் கீழே காலம் எல்லாம் வர்த்திக்கும்படி வாழ்வர் –

—————

வாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு
ஆடல் நன் மா வுடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்
கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்
சேடுயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே–3-3-1-

இடையர் உடைய பசு நிரைக்கு அன்று இடர் தீர்க்கைக்காக இந்த்ரன் பிரேரித்த புஷ்கலா வர்த்தகாதி மேகங்கள்
எல்லாம் கூடி வர்ஷித்த பெரு மழையைக் காத்த மநோஹாரி சேஷ்டிதத்தை உடையவன்
என்று எல்லாரும் சொல்ல வருகிறவன்-ஸ்ரீ தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே–

————————

பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை பரிசு இது வென்றால்
மா நிலமா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டுண்
பூ மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி
தே மலர் தூவ வருவான் சித்திர கூடத்து உள்ளானே —3-3-2-

இவன் கேவலம் பிள்ளை அல்லன்-ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபன் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நாயகன்
என்று நாட்டார் உடைய இந்திரியங்களைப் பிணைக்கும் வடிவை உடைய இடைப் பெண்கள் பாடி
செவ்வைப் பூவைத் தூவ வருமவன்

———————

பண்டு இவன் வெண்ணெய் யுண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப
எண் திசையோரும் வணங்க இணை மருதூடு நடந்திட்டு
அண்டரும் வானத்தவரும் ஆயிர நாமங்களோடு
திண் திறல் பாட வருவான் சித்திர கூடத்து உள்ளானே–3-3-3-

இவன் வெண்ணெய் உண்டான் என்று இடைப் பெண்கள் கூடி ஏச எட்டுத் திக்கில் உள்ளாறும் திருவடிகளிலே
வணங்கும்படியாக நிர்விகாரமான மருதின் உள்ளிட்டுப் போய்
இடையர்களும் தேவர்களுமாய் ஆயிரம் திரு நாமங்களை சொல்லிக் கொண்டு
தன்னுடைய ஆண் பிள்ளைத் தனத்தை பண்டு பாட வருவான்-

——————-

வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப
தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட
திளைத்தமர் செய்து வருவான் சித்திர கூடததுள்ளானே–3-3-4-

வளையாலே அலங்க்ருதமான கையையும் பீதைகளாய் பார்க்கும் நோக்கையும் உடைய இடைப் பெண்கள் அஞ்சிக் கூப்பிட
கட்டவிழ்ந்து அலர்ந்த தாமரைப் பொய்கையினுடைய ஸ்ரமஹரமான கரையிலே சென்று
இடையர் காண முளைத்த எயிற்றை உடைய பாம்பின் உடைய உச்சியிலே புக்கு நின்று
அது வாடும்படி கூட விளையாடி அமர் செய்து வருமவன்-ஸ்ரீ சித்திர கூடததுள்ளானே-

——————–

பருவக் கரு முகில் ஒத்து முத்துடை மா கடல் ஒத்து
அருவித் திரள திகழ்கின்ற ஆயிரம் பொன் மலை யொத்து
உருவக் கரும் குழல் ஆய்ச்சி திறத்து இனமால் விடை செற்று
தெருவில் திளைத்து வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-5-

ஸ்ரீ நப்பின்னை பிராட்டி யிடையாட்டத்துக்காக திரண்டு பெருமையை உடைய ருஷபங்களைக் கொன்று
தன் பருவத்தில் பிள்ளைகளோடே தெருவிலே கூடி விளையாடி வருமவன் ஸ்ரீ சித்திர கூடததுள்ளானே

———————

எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான்
உய்யப் பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி
வையத் தெவரும் வணங்க அணங்கு எழு மா மலை போலே
தெய்வப் புள் ஏறி வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-6-

இவன் பண்டு எய்ய இலங்கை அழிந்தது-பசுக்களும் இடையரும் மலங்கும்படியாக வருகிற மழையைக் காக்கைக்காக
அவை உய்யும்படிக்கு ஈடாக பெரிய மலையை எடுத்துக் காத்தான் என்று ஏத்தி பூமியில் உள்ளார் எல்லாரும் ஆஸ்ரயிக்க
தேவா விஷ்டமான மலை போலே ஸ்ரீ பெரிய திருவடி மேலே ஏறி வருமவன்-

——————-

ஆவர் இவை செய்தறியார் அஞ்சன மா மலை போலே
மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய
காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான்
தேவர் வணங்கு தண் தில்லைத் சித்திர கூடத்துள்ளானே–3-3-7-

தர்சநீயங்களாய் காவிமலர் போலே கறுத்து நெடிய கண்ணை உடைய ஸ்திரீகள்
கை தொழும்படி வீதியிலே வருமவன் தேவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீ தில்லைச் சித்திர கூடத்துள்ளானே-

———————-

பொங்கி அமரில் ஒருகால் பொன் பெயரோனை வெருவ
அங்கு அவனாகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்தாட
பைம் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றோடு பேழ் வாய்
சிங்க வுருவின் வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-8-

பண்டு ஒருகால் ஹிரண்யனை வெருவும்படி சீறி அவ்விடத்திலேயே அவனுடைய உடம்பை அளைந்து
ஆயிரம் தோள் தோற்ற வ்யாபாரித்த உசிதமாக எரி கான்ற பசுமையை உடைய கண்ணும்
நீண்ட எயிறும் பெரிய வாயும் ஆன ஸ்ரீ சிம்ஹ ரூபத்தை உடையவனாய் வருமவன்-

—————–

கருமுகில் போல்வது ஓர் மேனி கையன் ஆழியும் சங்கும்
பெரு விறல் வானவர் சூழ ஏழுலகும் தொழுது ஏத்த
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத்
திருமகளோடும் வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-9-

காளமேகம் போலே இருக்கும் வடிவையும் கையில் திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் உடையனாய்
பெரிய மிடுக்கை உடைய ப்ரஹ்மாதிகள் சூழ்ந்து சேவிக்க சப்த லோகத்தில் உள்ளாறும் திருவடிகளில் விழுந்து ஏத்த
ஸ்ரீ பிராட்டிமார் மூவரோடும் கூட வருமவன்-

———————

தேனமர் பூம் பொழில் தில்லைச் சித்திர கூடம் அமர்ந்த
வானவர் தங்கள் பிரானை மங்கையர் கோன் மருவார்
ஊனமர் வேல் கலி கன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்
தானிவை கற்று வல்லார் மேல் சாரா தீ வினை தானே–3-3-10-

சத்ருக்கள் சரீரமே தனக்கு உறையாக உடைய வேலை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த
அழகிய தமிழான இப்பத்தும் அப்யசித்தவர்கள் பக்கலில் அவர்கள் பண்ணின பாபம் பல அனுபவத்துக்கு சாரா-

———————–

ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக வென மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே—3-4-1-

ஆஸ்ரித அர்த்தமாக தான் இரந்தான்-என்னும் மேன்மையை உடையவன் திருவடிகளை கிட்ட வேண்டி இருப்பீர் –
அபௌருஷேயத்வ நிபந்தனமான கீர்த்தியை உடைய வேதங்கள் உடைய திரள்கள் நாலும் பஞ்ச மகா யஞ்ஞங்களும்
ஆறு அங்கங்களும் ஏழு இசைகளும் தெருவிலே மிக்கு இருந்துள்ள உத்சவத்தால் வந்த அழகும்
இவை எல்லாம் அடைய சிறக்கும்படியான ஸ்ரீ சீராம விண்ணகரை ஆஸ்ரயிங்கோள்

—————–

நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை நலமிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன்
ஊன் முகமார் தலையோட்டூண் ஒழித்த எந்தை ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழுசேயோடச்
சூழ் முகமார் வளையளைவாய் உகுத்த முத்தைத் தொல் குறுக்கு சினை என்னச் சூழ்ந்து இயங்க எங்கும்
தேன் முகமார் கமல வயல் சேல் பாய் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-2-

ஜகத்துக்கு ஈச்வரர்களாக பிரசித்தர் இருவரும் இறே அவர்கள் இருவரும் உடைய அபிமானத்தை கழித்தான் ஆயிற்று-
ப்ரஹ்ம ருத்ராதிகள் -சேக்கள்-ஈச்வரோஹம் என்று கை ஒழிய ஓட ஸ்ரீ பக்தி உழவன்
நம் பூர்வர்கள் -சங்குகள் -ஸ்வ ஸ்வபாவரைப் பெறுவிக்க
கமலமலர் பாவை முகம் விகசித்து அனுராக அதிசயம் வெள்ளம் இட அதிலே துள்ளா நிற்பர் ஸ்ரீ நித்ய சூரிகள்-

—————————–

வையணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்ந்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு
மையணைந்தகு வளைகள் தம் கண்கள் என்றும் மலர்க்குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்
செய்யணைந்து களைகளை யாதேறும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-3-

களை பறிப்பதாக அடுத்து வயலிலே இழிந்து கண்ணுக்கும் வாய்க்கும் அவற்றோடு உண்டான
சர்வதா சாம்யத்தாலே களை பரியாதே போந்து ஏறுகிற ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே

——————-

பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னம் பைம்பூண்
நெஞ்சிடந்து குருதி உகிர் வேலாண்ட நின்மலன் தாள் அணை கிற்பீர் நீல மாலைத்
தஞ்சடைய இருள் தழைப்பத் தரளம் ஆங்கே த்ண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்
செஞ்சுடர் வெயில் விரிக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-4-

ஆளிட்டு செய்தல் -ஆயுதங்களாலே அழியச் செய்தல் செய்கை அன்றிக்கே
ஆஸ்ரித விரோதியை தானே கை தொட்டு திரு உகிராகிற வேலாலே அழியச் செய்து அத்தாலே வந்த சுத்தியை உடையவன்
திருவடிகளைக் கிட்ட வேண்டி இருப்பீர்-ஏக காலத்தில் இருளும் சந்த்ரோதயமும் வெய்யிலும்
ஒக்கக் கண்டு அனுபவிக்கும் படியான தேசம் ஆயிற்று

——————-

தெவ்வாய மற மன்னர் குருதி கொண்டு திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்தி செய்து
வெவ்வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர் கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர்
அவ்வாய வாள் நெடும் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்
செவ்வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-5-

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து இப்படி ஆஸ்ரித விரோதிகளை
கை தொட்டு போக்குமவன் திருவடிகளைக் கிட்ட வேண்டி இருப்பீர் ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே

———————

பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாளப் படர் வனத்துக் கவந்தனொடும் படையார் திண் கை
செங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் தாள் அணைகிற்பீர் வெற்புப் போலும்
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி யிடையார் முகக் கமலச் சோதி தன்னால்
திங்கள் முகம் பனி படைக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-6-

விரோதியைப் போக்கி தேவ ஜாதிக்கு குடி இருப்பைப் பண்ணிக் கொடுத்த
ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளை ஆஸ்ரயிக்க வேண்டி இருப்பீர்

——————

பொருவில் வலம்புரி யரக்கன் முடிகள் பத்தும் புற்றுமறிந்தன போலப் புவி மேல் சிந்த
செருவில் வலம்புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த் தெள்கி
மருவி வலம்புரி கைதைக் கழி யூடாடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி
தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே–3-4-7-

சத்ருக்களால் சலிப்பிக்க அரிதான தோளை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனைக் கிட்டி
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க வேண்டி இருப்பீர்-

————————–

பட்டரவேரகல்குல் பவளச் செவ்வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பாலாம் இன் சொல்
மட்டவிழும் குழலிக் காவானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி யணை வீர் அணில்கள் தாவ
நெட்டிலைய கரும் கமுகின் செங்காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத்
தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-8-

ஸ்ரீ சத்ய பாமைப் பிராட்டி ஹேதுவாக என்றும் ஒக்க ஸ்வர்க்கத்தில் இருக்கக் கடவதான
வ்ருஷத்தை பூமியிலே கொடு வந்து நிறுத்தினவனுடைய
இத்தால் –அரியன செய்தும் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமவன் என்கை-

———————–

பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து
கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழி நீர் கூடி
துறை தங்கு கமலத்துயின்று கைதைத் தோடாரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணிச்
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காசிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே——3-4-9-

அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடு அநந்ய பரையான ஸ்ரீ பிராட்டியோடு வாசி அற
திருமேனியில் இடம் கொடுத்துக் கொண்டு இருக்கிற ஸ்ரீ சீலவானைப் பெற வேண்டி இருப்பீர்-

——————————-

செங்கமலத் தயன் அனைய மறையோர் காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை
அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலிநாடன் அருள்மாரி யரட்டமுக்கி யடையார்சீயம்
கொங்குமலர் குழலியர் கோன் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முத்தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலக்குக்கு தலைவர் தாமே–3-4-10-

நாயந்தே தேவரைக் கவி பாட என்று துடங்கி தம்மைக் கவி பாடிக் கொண்டார் என்ன –
அதுவும் நம்மை அன்றோ சொல்லிற்று என்று திரு உள்ளம் ஆனார்
ஸ்ரீ சர்வேஸ்வரனைப் போலே எல்லார்க்கும் தாங்களே ஆஸ்ரயணீயராவார்-

—————————

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும்
என் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னார் உயிரே
அந்தளி ரணியார சோகின் இளந்தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந்தழல் புரியும் திருவாலி யம்மானே–3-5-1-

எனக்கு தாரகனுமாய்-நிரதிசய போக்யனுமான நீ ஸ்ரீ திருவாலியை இருப்பிடமாக உடையையாய் வைத்து
தனக்கு என ஓர் இடம் இல்லாதாரைப் போலே என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தாயே –
அந்யதா அஞ்ஞானமான தேசத்தை இருப்பிடமாக உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து
என் ஹிருதயத்திலே வந்து புகுந்தாயே- –

——————

நீல தடவரை மா மணி நிகழக் கிடந்தது போல் அரவணை
வேலைத் தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய்
சோலைத் தலைக் கணமா மயில் நடமாட மழை முகில் போன்று எழுந்து எங்கும்
ஆலைப் புகை கமழும் அணி யாலி யம்மானே–3-5-2-

ஸ்ரீ திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளிற்று இவர் நெஞ்சிலே புகுருகைக்கு விலக்காமைக்கு அவசரம் பெரும் அளவும் யாயிற்று –
விலக்காமை பெற்று – இவர் ஹிருதயத்தில் புகுந்த பின்பு க்ருத்யக்ருத்யனாய் இருந்தான் ஆயிற்று
விபரீத ஜ்ஞானம் ஜனகமான தேசத்தை இருப்பிடமாக உடையையாய் இருந்து வைத்து
என்னுடைய ஹிருதயத்தில் புகுந்து இருந்தாயே –

———————–

நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி யிராமை
என் மனத்தே புகுந்தது இம்மைக்கு என்று இருந்தேன் எறி நீர் வளம் செறுவில்
செந்நெல் கூழை வரம் பொரீ இ அரிவார் முகத்தெழு வாளை போய் கரும்பு
அந்நல் காடு அணையும் அணி யாலி யம்மானே–3-5-3-

மநோ ரதத்தாலே நான் கால ஷேபம் பண்ணாத படியாக என் ஹிருதயத்திலே வந்து புகுந்தது
இஹ லோகத்திலே எனக்கு விலக்காமைக்கு என்று இருந்தேன்-

——————

மின்னின் மன்னு நுடங்கிடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்
புன்னை மன்னு செருந்தி வண் பொழில்வாய் அகன் பணைகள் கலந்து எங்கும்
அன்னம் மன்னு வயல் அணி யாலி யம்மானே–3-5-4-

உன் பக்கலிலே வந்து சதைகரூபமான உன் திருவடிகளிலே எனக்கு மறவாமை யாகிற பேறு உண்டாம்படியாக –
நான் அபேஷிக்க அன்றிக்கே தண்ணீர் பந்தல் வைப்பாரோபாதி நிர்ஹேதுகமாக செய்து அருளினாய் –
தர்ச நீயமான ஸ்ரீ திரு வாலியிலே நிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனே –

———————–

நீடு பல் மலரிட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம்
வாட நீ நினையேல் மரம் எய்த மா முனிவா
பாடலின் ஒலி சங்கினோசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும்
ஆடலோசை யறா அணி யாலி யம்மானே–3-5-5-

ஆஸ்ரிதர்க்கு விஸ்வாசத்தைப் பண்ணிக் கொடுக்குமவன் அன்றோ –
எங்களுடைய நினைவு போலே தப்பிலும் தப்பி பலிக்கிலும் பலிக்கும் படி அன்று இறே உன் நினைவு இருக்கும் படி –

—————–

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6-

பரம போக்யமான ஸ்ரீ திரு மந்தரத்தால் பிரதிபாத்யமான வஸ்துவின் பக்கலில் தன்னை சமர்ப்பித்து –
சர்வ கந்த -என்கிற வஸ்து ஆகையாலே – உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான சிவந்த திருவடிகளை
கையாலே தொழுது உஜ்ஜீவிக்க வேணும் என்னும் அத்யவாசாயத்தை உடைய என்னுடைய ஹிருதயத்திலே –
நான் உன்னை அபேஷியாதே இருக்க நீயே வந்து புகுந்த பின்பு இனிப் போகல ஒட்டேன் –

——————-

உலவு திரைக் கடல் பள்ளி கொண்டு வந்து உன்னடியேன் மனம் புகுந்த அப்
புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி
அலவன் கண் படுக்கும் அணியாலியம்மானே–3-5-7-

உன்னைப் பெறுக்கைக்கு ஒரு முதல் இல்லாதபடி இருக்கிற எனக்கு ஸூஹ்ருதமானவனே
நீயே வந்து புகுந்த பின்பு உன்னை நான் இனி போகல் ஒட்டேன்
ஸ்ரீ வயலாலி மணாளன் உடைய வியாபாரத்தோடு-அங்கு உண்டான திர்யக்குகள் உடைய வியாபாரத்தோடு
வாசி அற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு அந்நிலத்தில் உள்ள ஆசையாலே –

—————–

சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள் புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ
கொங்கு செண்பக மல்லிகை மலர் புல்கி இன்னிள வண்டு போய் இளம்
தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே–3-5-8-

ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினாய்
அங்கு நின்றும் ஆஸ்ரிதனுக்காக ஸ்ரீ திருக் கடல் மல்லையிலே கண் வளர்ந்து அருளினாய்
இவ்வோ இடங்கள் உனக்கு வாசஸ்தானமாய இருக்க என் பக்கல் கிருபை பண்ணி வந்து புகுந்தாய் –

——————–

ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள்
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
நீதியாகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு
ஆதியாய் இருந்தாய் அணி யாலி யம்மானே–3-5-9-

என்னை வன்னியமறுத்து ஆளுகிறவனே எனக்கு ஸ்வாமி ஆனவனே
மாஸூச -என்று நான் உஜ்ஜீவிக்கும்படி ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –

——————-

புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென்னாலி யிருந்த மாயனை
கல்லின் மன்னு திண தோள் கலியன் ஒலி செய்த
நல்ல இன்னிசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடனே
வல்லராய் யுரைப்பார்க்கு இடமாகும் வானுலகே–3-5-10–

இதில் உண்டான ஆதராதி அதிசயத்தாலே விட மாட்டாமை பிரித்து பிரித்து அருளிச் செய்கிறார்-

————————

தூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே
பூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே–3-6-1-

அதில் ஒரு வண்டைக் குறித்துத் தூது விடுகிறாள் முதல் பாட்டில் –
உனக்கு உன் கார்யம் குறை அற்று இருந்தது-எனக்கு என் கார்யம் குறை பட்டு இருக்கிறபடி -கண்டாயே
எனக்கு குறை தீர்க்கைக்காக வந்திருக்கிற அவனுக்கு அறுவியாயோ- என்கிறாள் –

———————

பிணியவிழும் நறு நீல மலர்கிழியப் பெடையொடும்
அணி மலர் மேல் மது நுகரும் அறுகால சிறு வண்டே
மணி கெழு நீர் மருங்கலரும் வயலாலி மணவாளன்
பணி யறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே–3-6-2-

அறுகால-இரண்டு காலை உடையாரைப் போலே அன்றிக்கே-ஆறு கால் உடையார்க்கு கடுகப் போய் கார்யம் தலைக் கட்டலாம் இறே –
நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம் – என்று சேர்ப்பார் காலே இறே இவர்கள் ஜீவனமாய் நினைத்து இருப்பது –
என் ஜீவனம் கூடு பூரித்து கிடந்தபடி என்றான் -என்கிறாள்
நீ சென்று –முறை கெட்டாகிலும் நீ முற்பட சென்று –அவன் தானே வர பெற இருக்குமதாயிற்று முறை –
பயலை நோயை உரை –வாசா மகோசரம் இறே இவளுடைய வைவர்ண்யம் தான்
வாக்குக்கு அவிஷயமான அவற்றுக்கும் பாசுரம் இட்டு சொல்லவற்றுக் காணும் இவை தான் –

——————–

நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நெடுமால் தன்
தாராய நறும் துளவம் பெருந்தகையேற்கு அருளானே
சீராரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் சூழும்
கூர்வாய சிறு குருகே குறிப்பறிந்து கூறாயே–3-6-3-

ஆசை இல்லாத ஜகத்தையும் தான் ஆசைப்படுமவன் -அவற்றை சொன்ன சொல் தன்னளவிலே வந்து
பர்யவசிக்கும்படி நிற்கிற பெரும் பிச்சன் –
அவனுடைய பிரணயித்வத்துக்கு விஷயம் ஆயிற்றிலோம் ஆகிலும் அவனுடைய கிருபைக்கு விஷயம் ஆகாது ஒழிவுதோமா-
அவன் நைராச்யத்தை அறிந்து வந்து சொல் என்றதுக்கு கருத்து யாது என் என்னில் –
நம் தசையை அறிவித்தால் நமக்கு தலை வேணும் -என்றான் ஆகில்
நம் ஆற்றாமை பாராதே யாகிலும் நாம் ஜீவித்துக் கிடக்க வேண்டா -என்றான் ஆகில்-நாம் முடிந்து பிழைக்கும் படி —

———————-

தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்
மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ
தேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும்
ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே–3-6-4-

ஸ்ரீ திரு ஆய்ப்பாடியிலே சம்பத்தோடே-ஸ்ரீ திரு ஆலியில் சம்பத்தையும் அடைப்பாக்கினால்
பின்னை அவனுக்கு நொந்தாரை ஐயோ என்ன அவசரம் உண்டோ-அறியாமை வாராது ஒழிந்தான் இத்தனை
நீ போய் அவன் அறியும் படி போய் சொல்லு-

—————————-

வாளாய கண் பனிப்ப மென்முலைகள் பொன் அரும்ப
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஒ மண்ணளந்த
தாளாளா ! தண் குடந்தை நகராளா ! வரை எடுத்த
தோளாளா ! என் தனக்கு ஓர் துணையா ளானாகாயே !–3-6-5-

அத்தலை இத்தலையாய்-தன்னைப் பெற வேண்டும் நான் ஆசைப்பட்டு நோவு படா நிற்க –
தான் தன்னைத் தொட்டாரும் அகப்படுத்தினான் என்று சொல்லுங்கோள் என்று தூதர்க்கு வார்த்தை சொல்லப் புக்கு
அது தான் போய் பாவனா பிரகர்ஷத்தாலே அவன் முன்னே நின்றனவாய் கொண்டு அவன் தனக்கு
வார்த்தை சொல்லி செல்லுகிறது மேலில் பாட்டுக்களில் –
ஸ்ரீ ராமாயணத்தின் படி போலே இருக்கிறதாயிற்று இதுவும் –
தூதர்க்கு வார்த்தை சொல்லா நிற்க்ச் செய்தே பாவனா பிரகர்ஷத்தாலே அவன் சந்நிஹிதனாகக் கொண்டு
அங்கு வார்த்தை சொல்லுகிறாள் இறே-ஷம பேதம் மஹீ பதே -என்னுமா போலே–

———————

தாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன்
போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான்
தேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும்
காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ–3-6-6-

ஸ்ரமஹரமான வடிவைக் காட்டி பஞ்ச லஷம் குடியில் பெண்களை வளை கவர்ந்தவன் என் கையில் வளை பெறா விடில்
உண்டது உருக் காட்டானாய் இரா நின்றான் –சமகாலத்தில் பிறவாதார் வளையும் கொள்ள வேணுமோ
இவனுக்கு ஓர் ஊராக வளை கொண்டதுவும்-உண்டது உருக் காட்டுகிறது இல்லை காணும்
இவள் கையில் வளை சேஷிக்கில்

—————

கொண்டு அரவத் திரை யுலவு குரை கடல் மேல் குலவரை போல்
பண்டு அரவின் அணைக் கிடந்தது பாரளந்த பண்பாளா !
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயலாலி மைந்தா !என்
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ!–3-6-7-

மகா பலியாலே அபஹ்ருதமான பூமியை மீட்டு இந்தரனுக்கு கொடுத்த நீர் மையை உடையவனே-
அந் நீர்மைக்கு பிற்பாடானாரும் இழவாமைக்கு ஆக ஆயிற்று திருவாலியிலே வந்து நிற்கிறது
ஸ்ரீ திருப் பாற் கடலில் நின்றும் ஸ்ரீ வாமனனாய் அவதரித்து பூமியை அகப்படுத்திக் கொண்டால் போலே யாயிற்று
ஸ்ரீ திருவாலியிலே வந்து நிற்கிற தன் யௌவனத்தைக் காட்டி இவரை அகப்படுதின படி –

——————–

குயிலாலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடமாடீ !
துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ !
முயலாலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே
வயலாலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே !–3-6-8-

மன்றிலே குடக் கூத்தாடி தன் அலகை சர்வ ஸ்தானம் பண்ணினவன் பிற்பாடர் இழவாமைக்காக
திருக் குடந்தையிலே சுலபன் ஆனான் என்றவாறே உறக்கம் குடி போயிற்றாய் ஆயிற்று
அவன் பிரத்யாசன்னன் ஆனான் என்றவாறே உறக்கம் குடி போயிற்று ஆயிற்று இவளுக்கு-
உறங்காமைக்கு இரண்டு லஷ்மணர்களைப் போலே யாயிற்று கண்கள் இரண்டும் –
இளைய பெருமாள் பிறந்த முகூர்த்ததில் ஆயிற்று இவள் கண்களும் பிறந்தது –

————————-

நிலையாளா ! நின் வணங்க வேண்டாயே யாகிலும் என்
முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே ?
சிலையாளா ! மரம் எய்த திறலாளா ! திரு மெய்ய
மலையாளா ! நீ யாள வளையாள மாட்டோமே–3-6-9-

பிராமணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமா போலே
தலைமகளான சமயத்திலும் சேஷத்வ அநுரூப வ்ருத்தியையே ஆசைப்படுகிறாள் இறே
உன்னை ஆஸ்ரயித்த மகா ராஜர் ஆர்த்தி போக்குகைக்காக மராமரங்களை எய்து மழு ஏந்தி கொடுததிலையோ –
அவ் இழவை தீர்க்குகைக்கு அன்றோ திரு மெய்யத்திலே வந்து சாய்ந்து அருளிற்று –

———————

மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி
நெய்யிலங்கு சுடராழிப் படையானை நெடுமாலை
கையிலங்கு வேல் கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை
ஐயிரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே–3-6-10-

நெடுமாலை –தூது விடவும் வார்த்தை சொல்லவும் மாட்டாதே நிற்கிறான் போலே காணும்
தூது விட மாட்டாத படி யாயிற்று அத்தலை பட்டுக் கிடக்கிறது –
இத்தலை ஊர்த்த்வம் மாசான் நா ஜீவிஷ்யதே -என்றால்-ந ஜீவேயம் -என்னும் அத்தனை இறே அத்தலை –
அவன் சேஷித்வ சூசகமாக திரு ஆழியைப் பிடித்தால் போலே ஆயிற்று
இவர் சேஷத்வ சூசகமாக திரு வேலைப் பிடித்த படி -சேவகனுக்கு வேல் நிரூபகம் என்றது ஆயிற்று –
சர்வேஸ்வரனைப் பிரிந்து தூது விடப் புக்கு-அது தானும் கூட மாட்டாதே படும் வியசனம் பட வேண்டா –
இப்பத்தையும் அப்யசித்தாருக்கு தூது விடுவான் அவன் தான் ஆயிற்று-

———————

கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப் போதாவென்று
வெள்ளி வளைக்கை பற்றப் பெற்ற தாயாரை விட்டகன்று
அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ–3-7-1-

இருவரும் இரண்டு முக்தர் ஆயிற்று –மாயா மிருகத்தை பிடித்து தா என்பாரும்-அதைப் பிடிப்பதாக அதன் பின்னே போவாரும் –
லங்கத்வாரத்திலே சென்று நிற்கலாகாதோ என்று நில்லாதே-உத்தேச்ய பூமியிலே புக்கார்களோ அல்லர்களோ
இருவரும் ஒருவருக்கு ஒருவராய் ஆழல் ஆயிற்று

—————-

பண்டு இவன் ஆயன் நங்காய் ! படிறன் புகுந்து என் மகள் தன்
தொண்டை யஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின்
கெண்டை யொண் கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து
வண்டமர் கானல் மல்கும் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-2-

காணாம்ருதமான அம்மான்பொடியை இட்டு கொண்டு போன படி-
கண்ணால் கேட்டு கேளாதவற்றை வாயாலே கேட்டு -அவனுக்கு முன்னோக்கிப் போக ஒண்ணாதபடி அவன் பின்னே நடந்து
ந சபுன ஆவர்த்ததே என்று புகுந்து-திர்யக்குகளும் கூட மீளாத ஊரிலே புகுவர் கொலோ-

———————–

அஞ்சுவன் வெஞ்சொல் நங்காய் ! அரக்கர் குலப்பாவை தன்னை
வெஞ்சின மூக்கரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே
பஞ்சிய மெல்லடி எம் பணைத் தோளி பரக்கழிந்து
வஞ்சி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-3-

ஸ்ரீ பட்டர் இப்பாட்டை அருளிச் செய்து-ஒரு ஸ்திரியை விரூபை ஆக்கினவன் உடைய திறம் கேட்கில் அஞ்சுவன் என்கையாலே –
இத்தலைக்கு ஒரு ஹானியாய் தோற்றா நின்றது –இது ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்யக் கூடாது
இது எங்கனே சேரும்படி -என்று ஸ்ரீ ஆச்சானைக் கேட்க
துடிப்பு இருக்க கை வேக வேணுமோ-ஸ்ரீ எம்பெருமானார் தானே அருளிச் செய்து வைத்தார் இறே -என்ன
அருளிச் செய்த படி என்ன -என்று கேட்க –
முன்பு ஒரு புணர்ந்து விட போக்கிலே பிறந்த பிரமாதத்தை கேட்டு அத்தை நினைத்து
இப்பொழுது பயப்படுகிறாள் -என்று அருளிச் செய்தார் –

————————-

ஏது அவன் தொல் பிறப்பு ? இளையவன் வளை யூதி மன்னர்
தூதுவனாயவனூர் சொல்லுவீர்காள் ! சொலீர் அறியேன்
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில்
போது வண்டாடு செம்மல் புனலாளி புகுவர் கொலோ ?–3-7-4-

ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்தார் என்று ஆசைப்படுவார்-இடையனை பிறந்தான் என்று ஆசைப் படுவாராய்
ஆசைப்படா நின்றீர் கோள்-எனக்கு இரண்டும் தோற்றுகிறது இல்லை –
மாதவன் தன் துணையா நடந்தாள்-ஆழம் காலை மிதப் பெற்று புத்தி பண்ணினாள்
அளவுடையவர்கள் அகப்பட்ட விஷயம் என்றால்-தனக்கு நிலம் அன்று என்று மீள அறியாதே போனாள்-

———————–

தாய் எனை என்று இரங்காள் தடந்தோளி தனக்கமைந்த
மாயனை மாதவனை மதித்து என்னை யகன்ற இவள்
வேயன தோள் விசிறிப் பெடையன்ன மென நடந்து
போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் கொலோ ?–3-7-5-

அவனுடைய சர்வ அங்க சௌந்தர்யமும்-இவள் உடைய தோள் அழகு ஒன்றுக்கும் போரும் அத்தனை –
இருவரும் கூட ஜல கிரீடை பண்ணி வர்த்திக்கலாம் தேசத்தில் புகுவர் கொலோ-

————-

என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன் துணையாய் என் தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும்
இன் துணைவனோடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ ?–3-7-6-

நிரதிசய போக்யனுமாய்-சுலபனுமாய்-ரஷகனுமானவன் உடன் கூட-ராவண வதம் பண்ணி மீண்டு எழுந்து அருளுகிற போது
ஸ்ரீ திரு அயோத்யை கோடித்தாற் போலே ஸ்ரீ திரு வாலியையும் கோடிக்கப் பண்ணி புகுகிறார்கள் இறே-

————————

அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால்
மின்னியும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள் நடந்து
புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர் கொலோ ?–3-7-7-

இங்கே இருவரைக் கை விட்டால்-அங்கே இருவரைப் பற்ற வேணும் இறே

———————–

முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற
சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற செழும் கோதை தன்னைப்
பெற்றிலேன் முற்றிழையை பிறப்பிலி பின்னே நடந்து
மற்றெல்லாம் கை தொழப் போய் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-8-

செழும் கோதை-லிலோ உபகரணங்களை விட்டு-அவனைப் பற்றின பின்பு உடம்பிலே பிறந்த பௌஷ்கல்யம்-
தன்னைக் காண்பார்க்கு காட்சிக்கு கொடுக்க இடம் உள்ள தேசத்தில் புகுமோ

————————

காவியங்கண்ணி எண்ணில் கடி மா மலர்ப்பாவை யொப்பாள்
பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்
வாவி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-9-

ஸ்ரீ ஈஸ்வரனைக் காட்டில் ஸ்ரீ பிராட்டி-அஸி தேஷணை-என்னும் ஏற்றத்தை உடையாள் ஆனாப் போலே
ஸ்ரீ பிராட்டியில் ஏற்றம் இவளுக்கு -காவியங்கண்ணி -என்று இருவரையும் சேர அனுபவிக்கிற கண் இறே
இவளுடைய கண்கள் –

—————————–

தாய் மனம் நின்று இரங்கத் தனியே நெடுமால் துணையா
போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் என்று
காய்சின வேல் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பத்தும்
மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே–3-7-10-

இப்பத்தும் சஹ்ருதயமாக கற்க வல்லாருக்கு பரம பதம் நிச்சிதம் –தாயார் தனி வழியே போனாள் என்று பயப்பட வேண்டா –
ஆதி வாஹிக கணத்தோடு தானே வழி காட்டிப் போம்-

———————–

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-1-

ப்ரஹ்மாதிகள் எங்கள் அபிமதங்கள் செய்ய வேணும் – என்று பிரார்திக்கிற
ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நெஞ்சே நீயும் சென்று அனுபவி -என்கிறார் –

——————-

முதலைத் தனிமா முரண் தீர அன்று முது நீர்த் தடத்துச் செங்கண் வேழம் உய்ய
விதலைத் தலைச் சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மானிடம் விண்ணனவும்
பதலைக்க போதததொளி மாட நெற்றிப் பவளக் கொழுங்கால பைங்கால் புறவம்
மதலைத் தலை மென்பெடை கூடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே—3-8-2-

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபத்தைப் போக்கினவன் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்ற அருளினான்
நெஞ்சே -உன் துக்கம் எல்லாம் கெட அங்கே சென்று அனுபவி -என்கிறார்

———————

கொலைப் புண் தலைக் குன்ற மொன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர் செய்து கொங்கு ஆர்
இலைப் புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மானிடம் ஆளரியால்
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி
மலைப்பண்ட மண்டத்திரை யுந்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-3-

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு விரோதியான முதலையைப் போக்கி – அத்தாலே ப்ரீதியான ஸ்ரீ பிராட்டி கரத்தைப் போலே
அணைக்க அவளோட்டை வரும் சம்ச்லேஷத்தை பெற்ற ஸ்ரீ எம்பெருமான்
ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே –அப்போது சென்று அனுபவி என்கிறார் –

————————-

சிறையார் உவணப் புள் ஓன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில்
கறையார் நெடு வேல் அரக்கர் மடியக் கடல் சூழ் இலங்கை கடந்தான் இடந்தான்
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி யாறங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்கப் புகழ் எய்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-4-

மாலி சுமாலி தொடக்கமான ராஷசரை அடைய பண்டு இலங்கையிலே வென்ற ஸ்ரீ சர்வேஸ்வரனே
ஸ்ரீ திரு மணி மாட கோயிலிலே வந்து நின்று அருளினான் -நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்-

————-

இழையோடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாடவன் தாள் குருந்தம் ஒசித்துத் தடந்தாமரைப் பொய்கை புக்கான் இடந்தான்
குழை யாட வல்லிக் குலமாட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு
மழை யாடு சோலை மயிலாலு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-5-

பிரதி கூல வர்க்கத்தைப் போக்கி இடைப் பெண்களோடு சம்ஸ்லேஷித்தவன்
ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினவன்-நெஞ்சே அத்தேசத்தை ஆஸ்ரயி-என்கிறார்-

———————–

பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப் பகுவாய்க்கழுதுக்கு இரங்காது அவள் தன்
உண்ணா முலை மற்றவள் ஆவியோடும் உடனே சுவைத்தானிடம் ஓங்கு பைந்தாள்
கண்ணார் கரும்பின் கழை தின்று வைகிக் கழு நீரில் மூழ்கிச் செழு நீர்த் தடத்து
மண் எனது இள மேதிகள் வைகு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-6-

பூதனையை அப்போதே பிராணன் போம்படி முலை உண்ட ஸ்ரீ சர்வேஸ்வரன்
ஸ்ரீ திருமணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்

————————

தளைக் கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடங்கால் அரவம்
இளைக்கத் திளைத்திட்டு அதனுச்சி தன் மேல் அடி வைத்த அம்மானிடம் மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண் நெற்கு எனச் சென்று முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-7-

காளியனால் வந்த ஆபத்தை போக்கின ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான்
நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்-

——————–

துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா
இளையார் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மானிடம் வேல் நெடுங்கண்
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்
வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-8-

ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே பெண்களோடு நிரவதிக சம்ஸ்லேஷத்தைப் பண்ணின ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான்-நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்-

———————

விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா ! விளங்கு சுடர் ஆழி என்னும்
படையோடு சங்கு ஓன்று உடையாய் ! என நின்று இமையோர் பரவும் இடம் பைந்தடத்துப்
பெடையோடு செங்கால அன்னம் துகைப்பத் தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்
மடையோட நின்று மது விம்மு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-9-

ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக எருது ஏழு அடர்த்த செயலையும்-திவ்ய ஆயுதங்கள் உடைய சேர்த்தி அழகையும்
சொல்லி தேவர்கள் ஏத்த ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் –
நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார் –

—————

வண்டார் பொழில் சூழ்ந்து அழகாய நாங்கூர் மணி மாடக் கோயில் நெடுமாலுக்கு என்றும்
தொண்டைய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கண்டார் வணங்கக் களியானை மாதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய்
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ் விரி நீர் உலகாண்டு விரும்புவரே–3-8-10-

இத் திருமொழிக்கு கற்றாருக்கு பலம் சொல்லுகிறது –அனுகூல பிரதி கூல சீலர் என்று வாசி அன்றிக்கே
லோகமாக தங்கள் காலிலே வந்து விழும்படி மத்தகத்தின் மேல் ஏறி கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய் –
ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்து வந்து பூமிக்கு தாங்களே நிர்வாஹகராய் ஆகாசத்திலே சென்று கிட்டும் படியாக
முத்துக் குடையின் கீழே கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு விரும்பப் படுவர்-நிரதிசய ப்ரீதி உடையார் ஆவார்கள் –
ஐஸ்வர்யத்தை புருஷார்த்தமாக சொல்லுவான் என் என்று ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க
ஸ்ரீ ஈச்வரனே ஆகிலும் ஒரு கால் பிறந்து அபிஷேகம் பண்ண அமையும் ஸ்ரீ பாகவத சேஷம் ஆகலாம் ஆகில் என்று காணும்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் இருப்பது -என்று அருளிச் செய்து அருளினார்-

—————-

சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை
நலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான்
நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி
சண்பகங்கள் மண நாறும் வண் பொழிலி னூடே
வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-1-

நல் உயிரான அமிர்தத்தை வாங்கி நம்மை ஆஸ்ரயித்த தேவ ஜாதி கார்யம் தலைக் கட்டப் பெற்றோம் இறே -என்று
அது பெற்றால் அவர்களுக்கு உரும் இன்பத்தை தான் உடையேனாய் –
அவ்வமுருதத்தை புஜித்தாருக்கு இழியக் கண்ட ராகராதிகளை தான் உடையனாய் இருக்கிறவன்-
பெரிய ஹர்ஷத்தோடு நித்ய வாசம் பண்ணுகையாலே ஆஸ்ரிதருக்கு இனிதான தேசம்-

—————-

திண்ணிய தோர் அரி யுருவாய்த் திசை யனைத்தும் நடுங்கத்
தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை
நண்ணி அவன் மார்வகலத்து உகிர் மடுத்த நாதன்
நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
எண்ணில் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும்
ஏழு இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர்
மண்ணில் மிகு மறையவர்கள் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-2-

தன்னுடைய ஈஸ்வரத்வத்தை நிலை நிறுத்தினவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-
பூமியில் இதுக்கு இவனே கடவான் இதுக்கு இவனே கடவான் என்னும்படி சமைந்த பிராமணர் நெருங்கி வர்த்திக்கிற தேசம்-

———————

அண்டமும் இவ் வலை கடலும் அவனிகளும் எல்லாம்
அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும்
முண்ட மது நிறைத்து அவன் கண் சாபமது நீக்கும்
முதல்வனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி
இலைக் கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய
வண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-3-

அண்டமும் இந்த லோகத்தை சூழப் போந்து அலை எறிகிற அண்ட தீபங்களையும் எல்லாம் அமுது செய்த
திரு வயிற்றை உடையவன் –இப்படி சர்வ நியந்தாவானவன் வர்த்திக்கிற கோயில்

————————–

கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி
தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சிலை இலங்கு மணி மாடத்துச்சி மிசைச் சூலம்
செழும் கொண்டல் அடடிரியச் சொரிந்த செழு முத்தம்
மலை இலங்கு மாளிகை மேல் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-4-

அவள் ஏறிட்டுக் கொண்டு வந்த வடிவைப் போக்கி தானாம்படி பண்ணி விட்டான் ஆயிற்று
அநந்தரம் அவளும் கூப்பிட்டு கொண்டு தலையிலே கையை வைத்து மலையின் மேலேயான இலங்கையிலே
புகும்படி பண்ணின தோள் வலியை உடையவன் நித்ய வாசம் பண்ணுகிற கோயில்

—————————-

மின்னணைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை
வேந்தன் முடி யொருபதும் தோள் இருபதும் போய் உதிர
தன்னிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை
செங்கழு நீரொடும் இடைந்து கழனி திகழ்ந்து எங்கும்
மன்னு புகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-5-

அன்று இலங்கையை பொடி படுத்திய தோள் மிடுக்கை உடைய ஸ்ரீ பிராட்டிக்கு பண்ணின வியாபாரத்தை
ஆஸ்ரிதர் எல்லாருக்கும் ஒக்கப் பண்ணினது போலே
அவன் பிரீதியோடே வர்த்திக்கிற தேசம் ஆகையாலே கண்டார்க்கு எல்லாம் இனிதாமோபடி இருக்கிற தேசம்

——————–

பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய
பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு
திண்மை மிகு மருதொடு நற் சகடம் இறுத்து அருளும்
தேவனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
உண்மை மிகு மறையொடு நற் கலைகள் நிறை பொறைகள்
உதவு கொடை என்று இவற்றின் ஒழிவில்லா பெரிய
வண்மை மிகு மறையவர்கள் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-6-

விரோதியைப் போக்கப் பெற்றோமே என்று அத்தாலே தீப்தனாய் ஸ்ரீ சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கிற தேசம்

——————-

விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து
வேல் நெடுங்கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய்
உளங்குளிர அமுது செய்து இவ் வுலகுண்ட காளை
உகந்தினிது நாள் தோறும் மருவி யுறை கோயில்
இளம்படி நற் கமுகு குலைத் தெங்கு கொடிச் செந்நெல்
ஈன் கரும்பு கண் வளரக் கால் தடவும் புனலால்
வளங்கொண்ட பெருஞ் செல்வம் வளரு மணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வண்ங்கு மட நெஞ்சே–3-9-7-

வெண்ணெயையும் ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யம் ஆகையாலே திரு உள்ளமானது குளிரும்படியாக அமுது செய்து
அநந்தரம் இந்த லோகத்தை அடைய திரு வயிற்றிலே வைத்து ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்தை பண்ணுகையாலே
இளகிப் பதித்து இருக்கிற-நிரவதிக சம்பத்து மாறாதே செல்லுகிற தேசம் ஸ்ரீ நாங்கூர் வைகுந்த விண்ணகரம் –

—————

ஆறாத சினத்தின் மிகு நரகனுரம் அழித்த
அடலாழித் தடக்கையன் அலர்மகட்கும் அரற்கும்
கூறாகக் கொடுத்தருளும் திரு யுடம்பன் இமையோர்
குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
மாறாத மலர்க்கமலம் செங்கழுநீர் ததும்பி
மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை யடைப்ப
மாறாத பெருஞ் செல்வம் வளரு மணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-8-

ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கும் ருத்ரனுக்கும் என்னது என்று கூறிட்டு அனுபவிக்கும் படி திரு மேனியைக்
கொடுத்துக் கொண்டு இருக்கிற சீலத்தை உடையவன் –ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு நாதன் ஆனவன்

———————-

வங்கமலி தடங்கடலுள் வானவர்களோடு
மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி
எங்கள் தனி நாயகனே ! எமக்கு அருளாய் என்னும்
ஈசனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
செங்கயலும் வாளைகளும் செந்நெல் இடைக் குதிப்பச்
சேலுகளும் செழும் பணை சூழ் வீதி தொறும் மிடைந்து
மங்குல் மதிய கடு உரிஞ்சி மணி மாட நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-9-

தேவர்களோடே-சனகாதிகளோடே-புஷ்பாத் உபகரணங்களைத் தூவி எங்களுக்கு நாதனான ஸ்ரீ சர்வேஸ்வரனே
எங்கள் பக்கலில் கிருபையை பண்ணி அருள வேணும்-என்னும் ஸ்ரீ சர்வேஸ்வரன் பிரீதி பூர்வகமாக
நித்ய வாசம் பண்ணுகிற தேசம் –

————————

சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும்
தாமரைக் கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில்
வங்கமலி கடலுலகில் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ்
மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய
வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்க மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள்
தரணியோடும் விசும்பாளும் தன்மை பெறுவாரே–3-9-10-

ஆஸ்ரித அர்த்தமாக ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு இருக்கிற புண்டரீ காஷனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்-தமிழ் தொடை பத்தையும் வல்லார்கள் உபய விபூதியையும் தாங்கள்
இட்ட வழக்காம் படியான பிரபாவத்தை உடையராய்ப் பெறுவர்-

—————

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-1-

பொறுப்பிக்கும் அவளும்-பொறைக்கு உவாத்தானவளும்-எப்போதும் ஒக்க அருகே இருக்கையாலே
ஆஸ்ரிதர் பக்கல் எப்போதும் அவன் அருளே நடந்து அத்தாலே கொடிய அபராதங்கள் இவ்வோ விடங்கள்
நமக்கு இருப்பிடம் அல்ல என்று விட்டு ஓட –
தேவர்களுக்கும் கூட கால் பொருந்த அரிதாம்படியான இஸ் சம்சார விபூதியிலே அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான
ஸ்ரீ நித்ய சூரிகள் பொருந்தி ஆஸ்ரயிக்கும் படியாக இருக்கிற தேசம் –

—————–

வென்றி மிகு நரகனுரமது அழிய விசுறும்
விறல் ஆழித் தடக்கையன் விண்ணவர்கட்கு அன்று
குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும்
குரு மணி என்னாரமுதம் குலவி யுறை கோயில்
என்றும் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையோர்
ஏழு இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர்
அன்று உலகம் படைத்தவனை யவர்கள் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-2-

அவர்கள் நீ வேண்டா -எங்களுக்கு உப்புச் சாறு அமையும் –என் பெரு விலையனான தன் படி ஒன்றும் பாராதே
தன் தோள் நோவும்படி கடலை நெருக்கிக் கடைந்த அவர்களுக்கு அமிர்தத்தை உபகரித்தவன் –
என் ஆரமுதம் – அவர்கள் அமிர்தம் போல் அன்றிக்கே தம்முடைய அமிர்தம் இருக்கிறபடி-
கொண்டாடிக் கொண்டு வர்த்திக்கிற தேசம்

—————–

உம்பரும் இவ் ஏழு உலகும் ஏழு கடலும் எல்லாம்
உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வெய்த
கும்பமிகு மதயானை மருப்பொசித்துக் கஞ்சன்
குஞ்சி பிடித்தடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும்
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்டப்
பலங்கனிகள் தேன் காட்ட படவரவேரல்குல்
அம்பனைய கண் மடவார் மகிழ்வெய்து நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-3-

பிரளயத்திலே நோவு பட புக வயிற்றிலே வைத்து நோக்கின உபகாரகன் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து –
இடையர்கள் கண்டு பிரீதராம்படி குவலயா பீடத்தின் உடைய கொம்பை முறித்து
அநந்தரம் கம்சனுடைய மயிரைப் பிடித்து தலை கீழாகத் தள்ளி
முதுகிலே அறைந்து அவனை அழியச் செய்த உபகாரகன் உடைய கோயில்-

——————–

ஓடாத வாளரியின் உருவமது கொண்டு அன்று
உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி
வாடாத வள்ளுகிரால் பிளந்து அவன் தன் மகனுக்கு
அருள் செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர்
சேடேறு மலர்ச் செருந்தி செழுங்கமுகம் பாளை
செண்பகங்கள் மணம் நாறும் வான் பொழிலினூடே
ஆடேறு வயலாலைப் புகை கமழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-4-

ஹிரண்யன் உடைய முரட்டு உடலிலே வைத்தால் வளையக் கடவது அன்றிக்கே கூர்மை மிக்கு இருந்த
திரு உகிராலே இரண்டு கூறாம்படி பிளந்து அவன் பக்கல் இழவு தீரும் படி அவன் மகன் என்று
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே அருளைப் பண்ணினவன் வர்த்திக்கிற தேசம்-

———————-

கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தான வேள்விக்
களவின் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு
அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் எல்லாம்
அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழிலயலே
அண்டமுறு முழ ஒலியும் வண்டினங்கள் ஒலியும்
அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும்
அண்டமுறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 3-10-5-

மகா பலியினுடைய யஞ்ஞ வாடத்திலே இவன் -தேவ கார்யம் செய்கிறான் -என்று தோற்றாத படியாக
நாட்டில் வாமனர்கள் திரு உலகு அளந்து அருளின இடம் –என்னும் படியான வாமன வேஷத்தை பரிகரித்து
எனக்கு மூன்றடி வேணும் -என்று அர்த்தித்து ஆகாசத்தையும் அலை எறியா நின்றுள்ள கடலையும் த்வீபங்களையும்
எல்லாம் அனாயாசேன அளந்து கொண்ட உபகாரகன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்

———————

வாள் நெடுங்கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா இலங்கை
மன்னன் முடி யொருபதும் தோள் இருப்பதும் போய் உதிர
தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன்
தனிச்சரண் வானவர்க்கரசு கருதுமிடம் தடமார்
சேண் இடங்கொள் மலர்க்கமலம் சேல் கயல்கள் வாளை
செந்நெலொடு மடுத்தரிய உதிர்ந்த செழு முத்தம்
வாள் நெடும் கண் கடைசியர்கள் வாரு மணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-6-

ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளுக்காக இலங்கைக்கு நிர்வாஹனாய் இருக்கிறவனுடைய
பத்துத் தலையும் இருபது தோளும் உதிரும்படியாக –
தாளை உடைத்தாய் -நெடிதாய் -திண்ணியதாய் இருக்கிற வில்லை வளைத்த தசரதாத் மகன் -சேய் -பிள்ளை
தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே என்னுமா போலே காணும் இருப்பது –
அயர்வறும் அமரர்கள் அதிபதி வர்த்திக்கிற ஸ்தானம் –

———————-

தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
தேனுகனும் பூதனை தன் ஆர் உயிரும் செகுத்தான்
காமனைத் தான் பயந்த கரு மேனி யுடை யம்மான்
கருதும் இடம் பொருது புனல் துறைதுறை முத்து உந்தி
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து
வேள்வியோடு ஆறங்கம் நவின்று கலை பயின்று அங்கு
ஆ மனத்து மறையவர்கள் பயிலு மணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-7-

தேனுகன் பூதனை அவர்களை முடித்துப் பொகட்ட அழகில் வந்தால் காமனுக்கும் உத்பாதனாய்
அள்ளல் அல்லாதபடி ஸ்ரமஹரமான திருமேனியை உடையனாய் இருக்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கிற தேசம் ஆயிற்று

————————-

கன்றதனால் விளவெறிந்து கனி யுதிர்த்த காளை
காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்
குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன்
குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள்
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர்
தொக்கு ஈண்டித் தொழுதி யொடு மிகப் பயிலும் சோலை
அன்று அலர் வாய் மது வுண்டு அங்கு அளி முரலும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-8-

ஸ்ரமஹரமாய் இருக்கிற திருமேனியை உடையவன் பசுக்களை ரஷிக்கைக்காக ஸ்ரீ கோவர்த்தனத்தாலே மழை தடுத்து
மன்றிலே ஆயர் அனுபோவ்யமாம் படி குடக் கூத்தாடினவன் கொண்டாடி வர்த்திக்கிற தேசம்

——————-

வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு வாய்த்த
தயிர் உண்டு வெண்ணெய் அமுதுண்டு வலி மிக்க
கஞ்சன் உயிரது உண்டு இவ் உலகுண்ட காளை
கருதுமிடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி
மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து
வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் மணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-9-

——————-

சென்று சினவிடை ஏழும் பட அடர்த்துப் பின்னை
செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் கோயில்
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர்
அரி மேய விண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை
கன்றிநெடு வேல் வலவன் மங்கையர் தம் கோமான்
கலிகன்றி யொலி மாலை ஐந்தினோடு மூன்றும்
ஒன்றினோடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து
உத்தமர்கட்கு உத்தமராய் உம்பரும் ஆவர்களே–3-10-10-

அவை நின்ற இடத்திலே சென்று சினத்தை உடைத்தாய் இருக்கிற ருஷபங்கள் ஏழையும் முடியும்படி அடர்த்து
ஸ்ரீ பின்னை பிராட்டி உடைய செவ்வியை உடைத்தாய் இருந்துள்ள தோள் உடன் அணைந்து ஸ்ரீயபதியாய் வர்த்திக்கிற கோயில்-
இத்தை அப்யசிதவர்கள்-இஹலோகத்திலே ஹர்ஷர்கள்
பயிலும் திரு உடையர் எவரேலும் எம்மை ஆளும் பரமரே-என்னும்படி அவர்களுக்கு தலைவராய்
திருவடி திரு அநந்த ஆழ்வான் போல்வார் உடன் ஒரு கோவையாக ஆகப் பெறுவார்-

———————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் – இரண்டாம் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —

June 15, 2019

வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே –வேங்கடம் மேவி மாண் குறளான
வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1-

தன் உடைமையை பெறுகைக்கு தன்னை இரப்பாளன் ஆக்கினவர்க்கு–மகாபலிக்கு கொடுத்து அல்லது நிற்க
ஒண்ணாத படி விநீத வேஷத்தோடே சென்றான் ஆயிற்று –அவன் அடிமை கொள்வதாக வந்து இரந்து நிற்கிற பின்பு
நீயும் அவன் நினைவின் படி போகப் பெறுவதே-என்கிறார் முதல் பாசுரத்தில் –

தண்ணீர் பந்தலை வைத்து நம் அடிமை பெறுகைக்கு தம்மை நமக்குத் தந்து கொடு நிற்கிற
நம்மை அடிமை கொள்வதாக ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிதி பண்ணின பரம -தார்மிகனுக்கு
அடிமைத் தொழில் பூண்டாய் –அவன் திருமலையில் வந்து நிற்கிற நிலையை நீ ஒருபடி சபலம் ஆக்கினாயே-
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு –அடிமைத் தொழில் பூண்டாயே –
அவாப்த சமஸ்த காமனானவனுடைய குறையை ஒருபடி நிரப்பினாயே
ஸ்ரீ திருமலையிலே வந்து புகுந்து இவரை அடிமை கொள்வதற்கு முன்பு
உபய விபூதி யோகத்தால் வந்த ஐஸ்வர்யத்தை ஒன்றாக நினைத்திலன் காணுமவன் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -என்கிறபடியே ஜ்ஞாநிகளைத் தனக்கு ஆத்ம பூதராக உடையவனாய்
இருக்கிறவனுக்கு நீயும் ஆவி ஆனாயோ-என்கிறார் நாலாம் பாசுரத்தில் –

பாவியாது -என்று நீ இப்படி விசாரியாதே துணிவதே என்று என்னைக் கொண்டாட வேண்டின ஹேது என் -என்ன
விசாரிக்க வேண்டும்படி எத்தனை விஷயம் புறம்பே கிடக்கிறது என்கிறார் –
அக் கண்ணில் குளிர்திக்கு இலக்கு ஆவதே –அக் கண் அழகுக்கு ஜிதம் என்று எழுதிக் கொடுத்தார் உடைய
வ்ருத்தியிலே அன்வயித்தாயோ-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில் –

ஸ்ரீ த்ரி பாத் விபூதி-அதிலே உண்டான ஸ்ரீ அநந்த ஸ்ரீ வைநதேயாதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனுக்கு –
அமரருடைய வ்யாபாரத்தை அநாதரித்து நித்ய ஸூரிகள் உடைய யாத்ரைகளிலே அன்வயித்தாயே-
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஆதித்ய அந்தராத்மாவாய் இருக்கும் என்று அனுசந்தித்துப் போகை அன்றிக்கே
கண்ணாலே கண்டு அடிமை செய்து அனுபவிக்கப் பெற்றாயே நீ –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

தன்னோராயிரம் பிள்ளைகளுக்கு தலைவன் ஆனவனுக்கு வரையாதே ரஷகன் ஆனவனுக்கு
அடிமை செய்கையிலே ஒருப்பட்டாயே-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

பலரும் அவனை ஆஸ்ரயித்து பின்னையும் காணப் பெறார்கள் –
ப்ரஹ்மாதிகள் அநந்தரம் தம் தாம் அதிகார அர்த்தமாக ஆஸ்ரயியா நிற்பர்கள் –
நீ இவ்விரண்டு கோடியிலும் இன்றிக்கே அவன் பக்கலிலே அடிமை புக்காயே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ திருமங்கையில் உள்ளாருக்கு பிரதாநரான ஸ்ரீ ஆழ்வார் இன் தமிழாலே அருளிச் செய்த இப்பத்தும்
பாட வல்லார்க்கு பூண்ட வடிமை நித்யமாக செல்லும் தேசத்தை இருப்பிடமாக உடையவர் ஆவர்-
என்கிறார் பத்தாம் பாசுரத்தில் –

————————

காசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானவனூர்—வெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-1-

அறிவுடையார் -ராமோ ராமோ ராம -என்னத்-தன் பக்கல் நசை உடையார்கள் இப்படி ஏச –
இவை இரண்டையும் கேட்டு-திரு வெவ்வுளிலே கண் வளர்ந்தான் ஆயிற்று-என்கிறார் முதல் பாசுரத்தில் –

திரியட்டும் ஸ்ரீ ராமாவதாரம் அனுவர்த்தித்த படி –-அவன் வந்து -சாய்ந்தான்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஏச நின்ற -என்றது அனுவர்த்திக்கிறது-உதித அநுதித ஹோம நிந்தை போலே இருப்பது ஓன்று இறே –
இது புக்க புக்க துறை தோறும் பகவத் விஷயத்தில் கால் தாழ வல்லர் -ஆயிற்று-
பூமியிலே ஏவிக் கார்யம் கொள்ளுவாரைப் பெற்றது-இனி இவ்விடம் விட்டுப் போவோம் அல்லோம்
என்று சாய்ந்தான் ஆயிற்று –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில் –

திரியவும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரமே பின்னாட்டிற்று –சமஸ்த கல்யாண குணாத்மகனாய்ஸ்ரீ வைகுண்டத்தில்
இருந்த இருப்பிலும் இங்கே வந்து அவதரித்து தான் தாழ நின்ற பின்பு ஆயிற்று –பூரணன் ஆயிற்று –
சர்வ வித பந்துவானவனை காணலாவது ஸ்ரீ பரம பதத்திலே என்று அவ்விடத்துக்கு போக பொதி சோறு கட்ட
வேண்டாதே பந்து க்ருத்யம் பண்ணலாம் படி ஸ்ரீ திரு வெவ் வுள்ளிலே வந்து சாய்ந்தான் ஆயிற்று –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

பரிமள பிரசுரமான பர்யந்தத்தை உடைத்தான தேசத்தில் அரியது செய்ய வல்லவன் ஆயிற்று
கண் வளர்ந்து அருளுகிறான் -எழுப்பி கார்யம் கொள்வார் குறையே –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

அசாதாராண திவ்ய விக்ரஹ யுக்தனாய் –இதர விஸஜாதியனாய் இருக்கச் செய்தேயும்
ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாய் நின்று ஸ்ருஷ்ட்யாதிகளை நடத்துகிறான் என்று ஸநகாதிகள்
ஏத்தும் படியாய் இருக்கிறவன் இங்கே சாய்ந்தான் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்-

திரு மேனியில் ஏக தேசத்தில் இருக்கிற ருத்ரன் விஸ்த்ருதமான திருவடிகளை தலையாலே சுமக்கும்படி
நிற்கிறவன் –எங்களுக்கு ஜநகனுமாய்-ஸ்வாமி யுமானவன்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்-

இப்படி தான் அத்விதீயனாய் இருந்தானே யாகிலும் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு இனியவன் –
எனக்கு ஜநகனுமாய் ஸ்வாமியுமானவன் –எவ்வுள் கிடந்தானே-என்கிறார் எட்டாம் பாசுரத்தில் –

நித்ய சம்ச்லேஷத்தாலே கையும் பந்துமாய் -அது தான் பொறாமை சிவந்து ஸூகுமாரமான விரலை உடையவள் –
நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் – குளிர்ந்த தாமரைப் பூவை பிறந்தகமாக உடையவள் –
அப்பூ நெரிஞ்சி முள்ளாய் அடிக் கொதித்து வந்து அகலகில்லேன் -என்று இருக்கும்படி
மார்வு படைத்தவன் –எவ்வுள் கிடந்தானே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இங்கே வந்து சாய்ந்த படியாலே பகவத் குணங்கள் நெஞ்சிலே ஊற்றிருந்து சொல்லி அல்லது நிற்க ஒண்ணாதபடி
அவை ப்ரேரிக்க பாடின மாலை-இது கற்றார் அண்டத்தை ஆளுகை நிச்சயம் –
அவனைப் பற்றியும் இத்தைப் பெறுமத்தனையோ – என்று விரக்தர் ஆனார்கள் ஆகில்
அவர்கள் ஆளுமது பரம பதம் —என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————–

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ செற்றவன் தன்னை–
திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-1-

விரோதி வர்க்கத்தை கிழங்கு எடுக்குமவனாய் –ஈஸ்வர அபிமாநிகளுக்கு இடர் வந்தால் -போக்குமவனாய் –
தனக்கு ஸ்நேஹிதர் ஆனார்க்காகத் தன்னை அழிய மாறுமவனாய் –
போலியான ஸ்நேஹிகளுக்கும் ஏவிற்றுச் -செய்யுமவனானவனை –திரு வல்லிக்கேணியிலே காணப் பெற்றேன்
என்கிறார் முதல் பாசுரத்தில்

வேதத்தை தனக்கு விபூதியாக உடையவன்-அவ்வவருடைய ருசி அநு கூலமாக பல பிரதானம் -பண்ணுமவன் –
கேவலம் ப்ரஹ்ம பாவனையாயே இருக்கும் சநகாதிகளுக்கு நிரதிசய போக்யனாய் உள்ளவனை –
ஸ்ரீ நந்த கோபர்க்கு தன்னுடைய அதி மானுஷ சேஷ்டிதங்களாலே எப்போதும் ஒக்க இனியனானவனை –
தன்னையே ஆஸ்ரயிக்கும் படி ஜகத் காரண பூதனாய் உள்ளவனை –அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனை –
அவர்களுக்கு எல்லாம் புறம்பாய் இருக்கிற என்னை அடிமை கொண்ட -உபகாரகனை –
ஸ்ரீ திரு வல்லிக்கேணிக் கண்டேனே –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

புருஷோத்தமனான தனக்கு சேராத வடிவைக் கொண்டு அம்ருதத்தை அனுகூலரை புஜிக்கும் படி பண்ணினவனை –
ஸ்ரீ திரு வல்லிக்கேணிக் கண்டேனே –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அந்த மழையின் அளவு அல்லாத பெரிய மலையாலே மழையைத் தடுத்து –அப்படியே
சந்த துக்க வர்ஷிணி -என்கிற என்னுடைய சம்சாரம் ஆகிற வர்ஷத்தை பரிகரிக்க வந்தவன்
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ஸ்ரீ யபதியாய் இருக்கையாலே அல்லாதார் எல்லார்க்கும் வலிய துணை யானவன் –
ஆஸ்ரித விஷயத்தில் தாழ நின்ற நிலையாலே தானே துணை என்னும் இடத்தை எனக்கு அறிவித்தவன் –
எனக்கு ஸ்வாமியாய் –என் குலத்துக்கு நாதன் ஆனவன் -திருவல்லிக்கேணிக் கண்டேனே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

வலியார் சிலரை அபாஸ்ரயமாக பற்றினாலும் தானே தாழ நின்று ரஷகனாக வல்லன் என்னும் இடத்தை சொல்லுகிறது-
த்ரௌபதிக்கு பர்த்தாகள் உதவிற்று இலர்-அர்ஜுனனுக்கு இந்த்ரன் உதவிற்று இலன் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஸ்ரீ பரதாழ்வானும் அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் –
இலக்குமனோடு மைதிலியும் தாயும் பிள்ளையுமாய் இருக்கிற சேர்த்தி –பெருமாளைப் பிரியில் தரியாமையால் உண்டான சேர்த்தி-
கண்டு அனுபவித்தார்களோடு –கேட்டார் வாய் கேட்டாரோடு வாசியற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று –
அவர்களோபாதி நானும் தோற்று ஏத்தும்படி -பண்ணினவனை திருவல்லிக்கேணிக் கண்டேனே—என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

வாயில் ஓர் ஆயிர நாமம் –-அவன் அப்போது சொல்லிற்று-நால் இரண்டாகிலும்
பருவத்துக்கு தக்க அளவல்லாதபடி இருக்கையாலே குவாலாகச் -சொல்லுகிறார் –
நால் இரண்டு -ஸ்ரீ திரு அஷ்டாஷரம் ஆகவுமாம்–ஸ்ரீ நாராயண -ஸ்ரீ ஹரி என்றுமாம் -ஸ்ரீ விஷ்ணு ஷட் அஷரி-யாகவும் –
ஹிரண்யன் உடைய முரட்டு வடிவைக் கண்டு பிற் காலியாதே ஸ்ரீ நரசிம்ஹமாய்
அவ்வழியாலே தானே ஆஸ்ரயணீயன் என்னும் இடத்தை வெளி இட்டான் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஆனை நெடு நாள் பட்ட இடர் எல்லாம் போம்படியாக ஸ்ரீ பெரிய திருவடியை மேற் கொண்டு வந்து
ஆனைக்கு இடர் இன்றிக்கே முதலைக்கே இடர் ஆம்படியாக ஸ்ரீ திரு வாழியை ஏவினான் ஆயிற்று –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும்
அப்யசிக்க வல்லார்கள் –நித்ய அனுபவம் பண்ணலாம் படியான ஸ்ரீ நித்ய விபூதியைப் ப்ராபிக்க பெறுவர் .

————————

அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு என்றானுமிரக்க மிலாதவனுக்கு
உறையுமிடமாவது நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-

ஸ்ரீ திரு நறையூரிலே நின்றான்-ஸ்ரீ திருவாலியிலே இருந்தான்-ஸ்ரீ திருக் குடந்தையிலே சாய்ந்தான்-ஸ்ரீ திருக் கோவலூரிலே நடந்தான் –
இடம் மா மலையாவது நீர் மலையே –மலையாய் இருக்கச் செய்தே அல்லாதவை வாஸ ஸ்தானம் ஆகிறது இல்லை இறே –
உகந்து அருளின நிலங்களில் எங்கும் பண்ணக் கடவ விருப்பத்தைப் பண்ணிக் கொடு வந்து சந்நிஹிதனான தேசம் ஸ்ரீ திரு நீர் மலை-
என்கிறார் முதல் பாசுரத்தில்

முன்பு பூ பாரத்தைப் போக்கி நிர்வஹித்துப் -போந்தவன் –சீறி யருளி –அவனுடைய பிரதிஞ்ஞா காலத்தில்
வந்து உதவிற்றிலன் ஆகில் குணங்கள் சாவாதியாம் போலே சர்வாதிகனான தான்
வாமன வேஷத்தைப் பரிகிரஹித்து நிற்கச் செய்தே மஹா பலி பக்கலிலே சென்று இரந்து
திருக் கையிலே நீர் விழுந்தவாறே ஆகாசவகாசம் இடம் அடையும்படி வளர்ந்து அளந்து கொண்டவனுக்கு வாஸ ஸ்தானம்-
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

நில மன்னனுமாய் உலகு -ஆண்டவனுக்கு ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைச் சொல்லுதல்-அன்றிக்கே
பூ பார நிர் ஹரணம் பண்ணின படியைச் சொல்லுகையாலே ஸ்ரீ கிருஷ்ணனைச் சொல்லுதல்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

தான் ஸ்வாமியான முறை தோற்ற இருக்குமாகில் அவர்களோடும் பொருந்த ஒண்ணாது இறே-
அதுக்காக தன்னைத் தாழ விட்டு அவர்களோடு உறவு பண்ணி கலந்து –த்ரௌபதி உடைய
ஸ்த்ரீத்வத்தை பரிஹரித்தவனுக்கு வாஸ ஸ்தானம்–என்கிறார் நாலாம் பாசுரத்தில்

ராவண வதம் பண்ணின அநந்தரம் திருமேனியில் பிறந்த பௌஷ் கல்யம் இருக்கிறபடி –
நீலமானது அமர்ந்து இருக்கிற முகில் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவன் –
அவ் வடிவு அழகாலே என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனுக்கு –மா மலையாவது நீர் மலையே –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ரஷ்யம் அளவுபட்டு ரஷகத்வமே விஞ்சி இருக்கிறவன் –இப்படி தான் சர்வ ரஷகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டவன் –நீரார் பேரான் –நீர் -என்று நீர்மையாய்-அத்தால் ஸ்வாபாவமாய் -அதாகிறது
சேஷித்வமாய்-ஆக ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தவஸ்துவும் தனக்கு பிரகாரமாய் தான் ப்ரகாரியாய் இருக்கையாலே
ஸ்ரீ நாராயணன் என்னும் திரு நாமத்தை உடையவன் –சர்வாதிகனான எம்பெருமானுக்கு ஸ்ரீ நீர் வண்ணன் என்று திரு நாமம் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

நான் எதிரி என்று தோற்றினவனுடைய மார்வை இரண்டு கூறாம்படி பிளந்து பொகட்டவனுக்கு-ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் உடைய
வார்த்தையாலே –முன்பு அவன் பண்ணின பராதி கூல்யத்தை எல்லாம் பொறுக்க வேணும் என்ன பொறுத்துப் போந்தான் –
இனி இவன் இருக்கில் இவனுக்கு அநர்த்தம் என்னும் அளவில் பின்னை அழியச் செய்து விட்டான் ஆயிற்று
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

எங்கள் பக்கலிலே அருளைப் பண்ண வேணும் என்று நெஞ்சு நெகிழ்ந்து ப்ரேமயுக்தராய் கொண்டு
நாள் தோறும் அனுசந்திக்குமவர்கள்-நிச்சம் அருள் செய்யும் அவர்க்கு –மா மலையாவது நீர் மலையே
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

திருவடிகளில் விழுந்து ஆஸ்ரயிப்பார் உடைய பாபங்களை வாசனையோடே நசிப்பிக்கும் –
அவ்வரியத்தையும் செய்யும்-இப்படி இருக்கையாலே அதுவே நமக்கு உஜ்ஜீவிக்கைக்கு ஸ்தானம் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஆஸ்ரயண காலத்திலேயே கர்மங்கள் அடைய விட்டோடிப் போம் – அதுக்கு மேலே
பிராப்தியும் வேண்டி இருக்கில் அதுவும் அவர்க்கு சுலபமாம் –
அன்றிக்கே-பூமிக்கு எல்லாம் தாங்களே நிர்வாஹகராய் ஐஸ்வர்யத்தை அனுபவித்து
பின்னையும் திருவடிகளிலே கூடப் பெறுவர்–என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————–

பாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணை —-கற்பகத்தைக் கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-1-

சர்வ வித ரஷணம் பண்ணுமவன் -சர்வருக்கும் ஸ்ப்ருஹணீ யமாய் –தானே தாரகனுமாய்-பிரபல பிரதிபந்தகங்களை
கேசி வாயைக் கிழித்தாற் போலே அநாசேயேந போக்க வல்லவனை-என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனை –
இடர் பட்டு வரவும் பிற் பாடாகை அன்றிக்கே –இவன் இடர் பட்ட மடுவின் கரையிலே வந்து உதவினாப் போலே
நான் நோவு படுகிற சம்சாரத்திலே -சம காலத்திலேயே –காணப் பெற்றேன் என்கிறார் முதல் பாசுரத்தில்

எனக்கு ஜனகனாய் எனக்கு சென்று ஆஸ்ரயிக்கலாம் படி சீலவானாய் உள்ளவனை – காட்டுத் தீயில் வர்ஷித்தாற் போலே
நோவு படுகிற சம்சாரத்திலே காணப் பெற்றேனே-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஸ்வ ப்ராப்தி உபாயங்களில் பெரு நெறியாய் உள்ளவனை –ஜகத்தை அடைய ரஷிக்க கடவனாய் இருக்கிறவனுடைய
ரஷணத்துக்கு நான் இப்போது விஷய பூதன் ஆனேன் என்கிறார்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஆஸ்ரித ஸ்பர்சமுடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக இருந்த செயலாலே லோகத்தை அடைய எழுதிக் கொண்டவனை –
எல்லார் கண் முகப்பே திருக் குரவை கோத்தவனை-தன்னுடைய ரஷணத்தைக் காட்டி என்னை
அனன்யார்ஹனாக எழுதிக் கொண்டவனை – ரஷகன் என்று அறியப் பெற்றேன் –எனக்கு ஒரு குறை உண்டோ என்கிறார்-
என்கிறார் நாலாம் பாசுரத்தில்

நிலவறையிலே பிரவேசிப்பித்து நலிய வேணும் என்று –பதிபடை கிடந்த மல்லர் முடிந்து போம் படி சீறினவனை-
அந்த க்ருத்ரிமத்தைத் தப்பி என்னை எழுதிக் கொண்டவனை காணப் பெற்றேன் என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

பரப்பை உடைத்தான பூமியைத் திரு எயிற்றாலே கிழியும் படி இடந்தவனை –உடம்பு நோவ வ்யாபரித்த படி சொல்லுகிறது –
பூமி அந்தரிஷ்யாதிகள் போராதபடி யாக வளர்ந்து லோகத்தை அளந்து கொண்டவனை –
எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த நீர்மையாலே என்னை எழுதிக் கொண்டவனை –
அவன் தானே திருவடிகளை கொண்டு வந்த வைத்த அன்று தப்பின நான் இன்று இங்கே காணப் பெற்றேன்
என்கிறார் – ஆறாம் பாசுரத்தில்

அவள் முலை கொடா விடில் தரியாதாளாய் கொடுத்தால் போலே தானும் முலை உண்ணா விடில் தரியாதானாய்
செவ்வியாருக்கு தான் செவ்வியனாய் பரிமாறும்படியும் துஷ்டர்க்குத் தானும் அப்படி இருக்கும் படியும்
காண வேணும் என்று தட்டித் திரிகிற நான் பசித்தவன் ஜீவிக்கப் பெற்ரார் போலே காணப் பெற்றேன் –
சாஸ்தரங்களிலே கேட்டு-ஒரு தேச விசேஷத்தால் சென்றால் காண இருக்கை அன்றிக்கே
விடாய்த்த இந்நிலத்திலே காணப் பெற்றேன்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய சூரிகள் பரிய இருக்கிறவன் இங்கே வந்து சாய்ந்து அருளுவதே –
இது என்ன நீர்மை -என்று எப்போதும் எண்ணப் படுமவன்
படபாமுகாக்னி நிறைந்தால் போலே காண வேணும் என்று
உறாவிப் பட்டினி விட்ட கண்களின் உடைய உறாவுதல் தீர காணப் பெற்றேன் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

சாஸ்த்ரீய ஜ்ஞானத்தாலே தன்னை ப்ராபிக்கைக்கு ஈடான வழியைக் கண்டு வைத்தவனை –
அப்பெரு வழியான சாஸ்திர ஜ்ஞானத்தாலே அன்றிக்கே இக் கண்ணாலே காணப் பெற்றேன் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

சர்வாதிகனான புண்டரீகாஷன் என்று தோற்றும் படி கண் வளர்ந்து அருளினவனை ஆயிற்று கவி பாடிற்று –
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –ப்ராக்தமான கர்மங்களை தாங்களே வாசனையோடு போக்க வல்லார் ஆவார்கள்
பாபங்களை கூடு பூரித்துக் கொள்ளும் இத்தனை போக்கி எலி எலும்பனான இவனால் இது போக்கிக் கொள்ளலாம்
என்றால் -இது கூடுமோ என்னில் –அதில் ஒரு தட்டு இல்லை இது த்ருடம் -என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

—————-

நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு வானவரைப் பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார் மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1-

பிரயோஜனாந்த பரராய் –தன்னை உகவாது இருப்பாருக்கும் கூட அபேஷித சம்விதானம் பண்ணுமவன்-
நம்மை உகப்பாரையும் கிடைக்க வற்றோ என்று அவசர ப்ரதீஷனாய் இங்கே வந்து கிடக்கிற இந்நீர்மையை அனுசந்தியாதே
புறம்பே உண்டு உடுத்து போது போக்குவாரை ஒரு வஸ்துவாக நினைத்து இரோம் என்கிறார்-
கலங்குகை போலே காணும் மஹா மதிகளாவது
அஸ்தாநே பயசங்கை பண்ணுவார்க்கு எல்லாம் பேராய் கொள்ளீர்-மஹா மதிகள் என்று –
நித்ய சூரிகள் நடுவே இருக்கக் கடவ வஸ்து இப்படி சம்சாரத்திலே புகுந்து தரைக் கிடை கிடப்பதே –
இது என்ன நீர்மை இருக்கும்படியே என்று அநவரதம் பாவித்தல் சொல்லுதல் செய்கையாயிற்று சேதனர்க்கு செய்ய அடுப்பது –
இது செய்யாதே இருப்பாரை – அவனிடை ஆட்டம் கொண்டு -கார்யம் அற்று-
கேவல தேக போஷண பரராய் இருப்பாரை –எண்ணப் பெற்றிலோம் என்ற
அனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை –அவஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே
வஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே-அவ்வளவிலும் எண்ணோம் –என்கிறார் முதல் பாசுரத்தில்

முதல் தன்னிலே நம் குற்றம் அவன் திரு உள்ளத்திலே படாத படி பண்ணும் ஸ்ரீ பூமி பிராட்டியாரும் –
அவன் தன் சர்வஞ்ஞத்வத்தாலே நம் குற்றத்தை கண்டானே ஆகிலும் -அவன் தன்னை –
ந கச்சின் ந அபராத் யதி-என்று பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும் அவன் பக்கலிலே கிட்ட இருக்கையாலே
நமக்கு இனி இழக்க வேண்டாதபடி சுலபன் என்று அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை
ஹிருதயத்தில் அனுசந்திக்கும் அவர்கள் என்னை அடிமை கொள்ளுமவர்கள் என்கிறார்-
நமக்கு புருஷகார பூதைகளான நாய்ச்சிமார்கள் அங்கே சேர இருந்தார்கள் என்று அனுசந்தித்தால் பின்னை
நமக்கு கிட்டுகைக்கு ஒரு குறை இல்லை இறே –
மாதா பிதாக்கள் சேர இருந்த இடத்தில் பிரஜைகளுக்கு சென்று கிட்டுகையில் ஒரு அருமை இல்லை
கீழ்ப் பாட்டில் அங்கு நமக்கு எண்ணுகைக்கும் எண்ணாமைக்கும் பிராப்தி இல்லை –-இதுக்கு எல்லாம் கடவார் அவர்கள் என்கிறார் –
அவர்கள் நின்ற நிலைகளிலே பிரமாணம் காட்டாதே நம்மை கார்யம் கொள்ள வுரியார் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

ஒருதலைக் காமமாய் போகாமே இவன் வந்து கிடக்கிறது நமக்காக என்று தாங்களும் நினைக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் –
அவர்கள் ஆளாத போது வேறு சிலருக்கு சேஷ பூதர் அல்லோம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அவன் பிரதி பஷ நிரசன சமர்த்தனாய் இருக்கச் செய்தே ஆநு கூல்யத்தாலே கார்யம் கொள்வானாக நினைத்து வந்து
கிடக்கிறபடியை அனுசந்தித்து ஈடுபடுமவர்கள் என் ஒருவன் அளவன்றிக்கே என் குலத்துக்காக நாதர் ஆவார்கள் என்கிறார்-
இவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார் நமக்காக விறே -என்று
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் – எங்கள் குல தெய்வமே-
குல தைவதம் தத் பாதாராவிந்தம் –என்னும் அளவல்ல எங்களது-என்கிறார் நான்காம் பாசுரத்தில்

குத்ருஷ்டிகள் சொல்லுகிறவற்றை ஆஸ்ரயித்து வர்த்தியாதே –ஆஸ்ரிதர்க்காக திரு வெக்காவில் படுக்கை மாறிக் கிடந்தவனை –
ஓர் ஆஸ்ரிதனுக்காக தரை கிடக்கிற தேசம் –அவன் தனக்கு பரம ப்ராப்யமாக கொண்டு வந்து நிற்கிற தேசத்தை –
கர்த்தவ்யம் என்று தொழா நிற்கச் செய்தே புறம்பே-நெஞ்சு அந்ய பரமாய் இருக்கை அன்றிக்கே
ஆசையின் கார்யம் தொழ வேண்டும் என்று தோற்றும்படி இருக்கை –
திரு கடல் மல்லையைத் தொழுகிறவர்கள் உடைய அவ்வேற்றம் எல்லாம் நமக்கு உடலாக அவர்களை ஸ்நேஹி-
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஸ்ரீ திருக்கடல் மல்லையிலே சுழிக்கும் நெஞ்சு உடையவர்களை மட நெஞ்சே––வலம் கொள் –
நமக்கு அவர்கள் நின்ற நிலை போராதுஅவர்கள் பக்கல் அநுவர்த்தநத்திலே அந்வயிக்க வேணும் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

அந்த ஸ்ரீ திருக்கடல் மல்லையையும் அங்கு கிடக்கிற ஸ்ரீ நாயனாரையும் தேடி இராதே
தொழுவார்கள் உத்தேச்யராய் தொழு
என் தூய் நெஞ்சே –ததீய சேஷத்தளவிலே நிற்கும்படியான சுத்தியை யுடையை யிறே நீ –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

ஸ்ரீ திருக் கடல் மல்லையைத் தொழுகை காதா சித்கமாகை தவிர்ந்து ஸ்வபாவம் ஆம்படியான நெஞ்சை யுடையாரை –
அவர்களுக்கு ஊரைத் தொழுகை யாத்ரையானவோபாதி அவர்கள் தங்களை தொழுகை கிடாய் நெஞ்சே உனக்கு யாத்ரை –
பாகவத சேஷத்வம் நன்று என்று உபதேசிக்கலாம் படி இறே உன் சுத்தி இருக்கிறது -என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

இங்கே வந்து சாய்ந்து அருளின நீர்மையை அனுசந்தித்து தொழும் நெஞ்சு உடையாரை –
அவர்கள் தொழும் விஷயத்தை தேடி இராதே-நெஞ்சே உனக்குத் தொழுகைக்கு விஷயம் அவர்கள் தாங்கள் கிடாய்-
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ரஷிக்கைக்கு – கையில் வேல் பிடித்தால் போலே ஆயிற்று சேஷத்வத்திலும் -பாகவத சேஷத்வத்தில் நின்றபடி –
இத் திருமொழியை அப்யசிக்க வல்லார் –முடியை உடையராய் நாட்டுக்கு அநந்ய பிரதானராய் இருந்துள்ள ஷத்ரியருக்கு
பிரதானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகராய் நித்ய ஸூரிகளோடு சத்ருசராகப் பெறுவர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-1-

முதலிலே ஸ்ரீ பாற் கடலாய் அது தன்னை கோதாக்கி-அம்ருதமாய் –அவ் வம்ருதம் தானே கோதாம்படி
பிறந்தவள் ஆயிற்று –வடிவு அழகாலும் பருவத்தாலும்-பிறப்பாலும் வந்த ஏற்றத்தை உடையாள் ஆனவளும் –
அவள் இருக்கிற இருப்பு தனக்கு பற்றுகைக்கு பற்றாசு என்று பற்றினவளை-
திருமுகம் என்று சமுதாய சோபை இறே அவளுக்கு சொல்லுகிறது –
குவளை யங்கண்ணி –என்று அவயவ சோபையால் உண்டான ஏற்றம் சொல்லுகிறது இவளுக்கு –
அவன் தன்னில் காட்டில் –அஸி தேஷணை-என்று அவள் கண்ணுக்கு உண்டான ஏற்றதோ பாதியும்
போருமாயிற்று அவளில் காட்டில் இவள் கண்ணுக்கு உண்டான ஏற்றம் –
அவள் மார்வை ஆசைப்பட்டாள்
இவள் திருவடிகளை ஆசைப்பட்டாள்
அவன் வாசி அறிந்தார் அவன் மார்வை ஆசைப் படுவார்கள் –
அவளோடு கூடினவன் வாசி அறிந்தார் அவன் திருவடிகளை பற்றும் இத்தனை இறே –
ஸ்ரீ கலங்கா பெரு நகரில் புகப் பெறாதே கை கழியப் போனாரும் பிழைக்கைக்காக ஸ்ரீ திருவிட வெந்தையிலே
வந்து நிற்கிற என் குல நாதன் ஆனவனே-என்கிறார் முதல் பாசுரத்தில்
பின்னானார் வணங்கும் -என்கிறபடியே சொல்லு என்று கிரியை

உண்ணவும் பொறாதே-பட்டினி இடவும் பொறாதே –இருக்கும் ஸூ குமாரரைப் போலே
அதிகமான சம்ச்லேஷம் விச்லேஷம் பொறுக்க மாட்டாத படியான
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் உடைய மார்த்த்வம் இருக்கும் படி -என்று –
இவளுடைய பிரகிருதி அறிந்து கலக்கைக்காக ஸ்ரீ திருவிட வெந்தையில் வந்து எழுந்து அருளி இருக்கிற நீ
உன்னுடைய திரு உள்ளத்தாலே நினைத்து இருக்கிறது என் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

நை வார்த்தைர் ந ச பூஷணை -என்னும்படி பண்ணுகைக்குகோ நீ இங்கே வந்து இருக்கிறது
ஸ்ரீ ராம அவதாரத்தில் இழவு தீர்க்கைக்கு அன்றோ இங்கு வந்து இருக்கிறது-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஏழை-கிடையாதது தூர நின்றால் கிடைக்கும் அதில் போலே சாபலத்தை பண்ணுமவள்
இவளும் தன் சாபலமும் பட்டது படுகிறாள் என்று ஆறி இருக்க ஒண்ணாத படி இருக்கும் மகள் –
இடவெந்தை –உக்தியாலே தன் சாபலம் தோற்ற இருக்கிற இவளைப் போல் அன்றிக்கே
கிரியையாலே சாபலம் தோற்ற இருக்கிற நீ நினைத்து இருக்கிறது என்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

உகவாதார் முன்பே நம்முடையார் நோவுபட விட்டுப் பார்த்திருக்குமது நமக்கு போராது என்று இருக்கக் கடவ நீர்
இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என் –
ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு ஆகில் போரும் என்னவுமாம் –இப்படி கைவிட்டு இருக்குமது உமக்கு போராது-
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

உதவாதவன் உதவாது ஒழிகை அன்றிக்கே உதவும் ஸ்வ பாவனாய் இருந்து வைத்து
நம் தசை இதுவாய் இருக்க உதவாது ஒழிவதே –என்று மோஹிக்கும்-
நம் தசையை உடையாள் ஒருத்திக்கு உதவினவன் அன்றோ என்று அந்த அண்ணிமையை அனுசந்தித்து இனியளாய்-
அணித்தாக உதவினவன் நமக்கு வாராது ஒழிவதே -என்று மயங்கும்
இவளுடைய-வை வர்ண்யமும்-அத்யாவச்யமும்-செல்லாமையும்-வடிவு அழகும் பிறப்பும்
இருந்தபடியாலும் உமக்கு உதவாது ஒழியப் போமோ-
இவளைக் காட்டில் உமக்கு உண்டான வைவர்ண்ய உத்யோதகம் இறே ஸ்ரீ திருவிடவெந்தையில் இருப்பு –
உடம்பு வெளுப்பு அன்றாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க அமையும் இறே –
உம்முடைய வைவர்ண்யம் தோற்ற ஸ்ரீ திருவிடவெந்தையில் எழுந்து அருளி இருக்கிற நீர்
இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளைக் கை பிடிக்கைகாக ஸ்ரீ மிதிலையிலே புறச் சோலையிலே விட்டுக் கொண்டு இருந்தால் போலே
இவளைப் பெறுகைகாக ஸ்ரீ திருவிடவெந்தையில் விட்டுக் கொண்டு இருக்கிற நீர் இவள் விடை யாட்டத்தில் என் நினைந்து இருந்தீர் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

நம் தசை இருந்த படியாலே ஸ்ரீ திரு நீர் மலையிலே போய் புக்கே விடுவோம் போலே இருந்ததீ
யென்று விலக்க நினைக்கிற தாயாரோடு தோழிமாருக்கு சொல்லுமா போலே சொல்லா நின்றாள் –
ராகவோர்ஹதி வைதேஹீம் -என்னும்படியே உனக்கு தகுதியாம்படியாய் இருக்கிற இவளிடை யாட்டத்தில்
நீர் நினைத்து இருக்கிறது என்- என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

தாய் கைவிடுதல் தான் கை விடுதல்-செய்தால்-அதைக் கொண்டு நோக்குகைக்கு ஈடாக
ஸ்ரீ திருவிடவெந்தையில் வந்திருக்கிற நீர் -உம்முடைய திரு உள்ளத்தால் நினைந்து இருக்கிறது என் –
வாலி பக்கலிலே கண்டோம் இறே ப்ராதாக்கள் உதவாதபடி –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே கண்டோம் இறே தமப்பன் உதவாதபடி
தான் தன்னை அனுசந்தித்து அஞ்சின அர்ஜுனனுக்கு
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னக் கண்டோம் இறே அவன் உதவும் படி-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

அறிவு குடி போய் நோவு பட தமக்கு அறிவு கொடுத்த அவதாரங்களை நினைக்கிறார்
அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு தீர்க்கைக்காக ஸ்ரீ திருவிடவெந்தையில்
வந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று –
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –பிராரப்த கர்மாக்களை வாசனையோடு போக்கப் பெறுவார்கள்
தாம் மோஹிப்பது உணர்வதாக திருத் தாயார் கூப்பிடுவதாக வேண்டாதபடி
பகவத் அனுபவமே யாத்ரையான தேசத்திலே புக்கு அனுபவிக்கப் பெறுவார்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

—————————

திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப
முரிதிரை மா கடல் போல் முழங்கி மூ உலகும் முறையால் வணங்க
எரியன கேசரி வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா
அரி உருவாம் இவர் யார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே -2-8-1-

ஒரு சிறுக்கனுக்கு தமப்பன் பகையாக அவனிலும் அணியனாய் உதவி நோக்கினவனைப் போலே
இரா நின்றார் -இவர் யார் தான் என்கிறாள்-அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே
நிச்சயிக்க ஒண்ணாத படி இறே விஷய ஸ்வபாவம் –
ஒரு சிறுக்கனுக்காக உதவின அவ்வளவோ –உனக்கு உதவுகைகாக இங்கே வந்து அவசர ப்ரதீஷனாய்
வந்து நிற்கிறவன் அன்றோ நான் -என்கிறார் முதல் பாசுரத்தில் –

வீரத்தைப் பார்த்தவாறே சத்ருக்களும் யேத்தும்படியாய் இருந்தது –
சீலத்தைப் பார்த்தவாறே அனுகூலர் அடைய யேத்தும்படியாய் இருந்தது –
இவரை இன்னார் என்று நிச்சயிக்க போகிறது இல்லையீ
கழஞ்சு மண் இரந்து வந்தவன் அல்லேன் உன்னை இரந்து வந்தவன் நான்
பிறர்க்காக இரந்தவன் அல்லேன் எனக்காக இரந்தவன் என்கிறார்- இரண்டாம் பாசுரத்தில் –

யுத்த உன்முகமாய் இருக்கிற குவலயாபீடத்தை முடிக்கும்படியாக நிறத்துக்கு பரபாகமான வெண்மையை உடைய
கொம்பை பறித்து இருண்ட மேகம் போலே இருக்கிற இவர் ஆர் தான் என்ன மேல் வார்த்தை –
கம்ச ப்ரேரிதமான குவலையா பீடத்தை நிரசித்து கம்சன் படைவீட்டில் பெண்கள் பயத்தைப் போக்கின அவ்வளவே அல்ல
உன் பயம் தீர்க்கைகாக வந்து நிற்கிறவன் நான் என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்-

அவனுடைய ஆச்ரயமான செயல்கள் எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை-திவ்யாயுதங்களை தரித்து
அருளிச் செய்கிற வார்த்தை அடைய வேதம் போலே இரா நின்றது
முறை கெடாதபடி பரிமாறக் கடவ பரம பதத்தில்-அத்யததபரோதி தோஜ்யோதிர் தீப்யதே
அத்தனை தூரஸ்தன் என்று கை வாங்க வேண்டா-உனக்காக கிட்ட வந்து இருக்கிறவன் காண் என்கிறார் நாலாம் பாசுரத்தில் –

கடல் போலே இழிய ஒண்ணாத படி-அபரிச்சின்னன் என்று இருக்க வேண்டா
உனக்கு நெஞ்சால் பரிச்சேதிக்கலாம்படி வந்து நிற்கிறேன் என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில் –

பெரிய கிளர்த்தியை உடைத்தாய் இருக்கிற கருங்கடல் பூவை காயா செவ்வியிலே அலர்ந்த நீலம்
இவற்றோடு ஒக்க தொடுத்த மேகம்-ஓன்று உபமானமாகப் போராமையாலே-அங்கும் இங்குமாக-கதிர் பொறுக்குகிறார்
சொன்ன உபமானம் தான் உபமேயதுக்கு போராமையாலே-உனக்கு அறியாமைக்கு உடலாக சொல்லா நின்றாய்
நீ அறிகைக்காக வந்து நிற்கிறவன் அன்றோ நான் என்கிறார்-ஆறாம் பாசுரத்தில்

இவ் ஒப்பனை அழகைக் கொண்டு ஸ்ரீ பரமபததில் இருக்கிறேன் என்று கூச வேண்டா
உனக்காக வந்து நிற்கிறவன் நான் என்கிறார்-ஏழாம் பாசுரத்தில் –

வ்யதிரேகத்தில் ஜீவிக்க அரிதாம்படி இரா நின்றார் இவர் ஆர் தான் என்ன-
சொன்னபடி பொல்லாது-ஞாநீத் ஆத்ம மே மதம் -கேட்டு அறியாயோ என்றார் –
உன்னை ஒழிய ஜீவியாதவன் காண் நான் என்கிறார் –எட்டாம் பாசுரத்தில்-

இவர் சொல்லுகிற வார்த்தை தான் பொல்லாது அல்ல இறே
ஆகிலும் அவரையும் நம்மையும் பார்த்தவாறே அஞ்சா நின்றேன்
அப் பெரியவனுக்கு இவ்வாற்றாமை உண்டாகக் கூடுமோ என்று அஞ்சா நின்றேன்
ஒரு வசநம் கொண்டு ஈஸ்வரன் என்று அஞ்ச வேண்டா நீ அஞ்சாமைக்கு உன்னோடு சஜாதீயனாய் வந்து நிற்கிறவன்
அன்றோ நான் என்கிறார்-ஒன்பதாம் பாசுரத்தில்

உருவு வெளிப்பாட்ட்டாலே அனுபவித்து பிறருக்கு இருந்து சொல்ல வேண்டாதே
நித்ய அனுபவம் பண்ணிக் களிக்கலாம் தேசத்திலே புகப் பெறுவர் என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————————–

சொல்லு வன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம் அதுவே-2-9-1-

தாம்தாம் கர்மத்தாலே கிலேசப்படுகிற பிராணிகளை தீம்பிலே கை வளர்ந்த பிரஜையை காலிலும் கழுத்திலும்
விலங்கிட்டு வைக்கும் பித்ராதிகளைப் போலே இவற்றுக்கு ஹித ரூபமாக உபசம்ஹாரத்தை
பண்ணும் ருத்ரனுக்கு அந்தர்யாமியாயும் ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தைப் பண்ணியும் –
பிரஜாபதிக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்துப் போருகிற ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு வாசஸ்தானம் ஆகிறது-
அவன் ஆஸ்ரயிக்கிற ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம்-நல்ல நீர் நலம் சூழ்ந்து அழகியதாய் இருக்கிற ஸ்ரீ கச்சியில் –
ஸ்ரீ திருக்கடல் மலை யாயிற்று படை வீடு-என்கிறார் முதல் பாசுரத்தில்-

ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் ராவண வதம் பண்ணினதோடு-இவன் சத்ரு வதம் பண்ணினதோடு
வாசி அற்று இருக்கிறது ஆயிற்று இவருடைய ஆதரம்-
தான் இல்லை யானாலும் தன்னுடைய வீர ஸ்ரீ நிற்கும்படி வாழ்ந்த பல்லவன் -என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் மதிக்கும் படியான ஆண் பிள்ளைத்தனம் இறே அவரதும் –
கட மா களி யானை வல்லான் -என்றும்
ஆடல் மா வலவன் -என்றும்
மருவலர் தம்முடல் துணிய வாள் வீசும் பரகாலன் -என்றும்
துறை தோறும் தலையாய் இருக்கிற ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் இறே மதிக்கிறார் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்-

சத்ருக்களின் உடைய செறிந்த குழாமானது சிதறி ஓட-முனிந்து சீறி
முன்பு ஒருகால் கையிலே வில் வளைத்தவன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் நாலாம் பாசுரத்தில்

நாக லோகத்தை வென்று சர்ப்பத்தை த்வஜமாக எடுத்தானாக சொல்லக் கடவது –
பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

ஹிரண்யன் உடலுக்கு வளையாத திரு உகிரை ஆயுதமாக உடைய நரசிம்ஹமாய் –
பெரு மிடுக்கனான ஹிரண்யன் உடைய மார்வை யுத்தத்திலே புண் படும்படி -போழ்ந்த புனிதன் இடம் –
பண்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே என்கிறார் ஆறாம் பாசுரத்தில்-

மகாபலி உடைய யஞ்ஞ வாடத்திலே இரப்பிலே தகண் ஏறிய வடிவை உடையவனாய்
முன்பு ஒரு நாளிலே கையிலே நீர் விழுந்த போதே பரப்பை உடைத்தான பூமியைக் கைக் கொண்டு
அளந்தவனுக்கு இடந்தான் ஸ்ரீ பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் ஏழாம் பாசுரத்தில்-

சக்கரவர்த்தி திருமகனாய் பூசல் என்றால் அஞ்சக் கடவ குரங்குகளைப் படையாகக் கொண்டு
நீரிலே ஆழக் கடவ மலையாலே கடலை அடைத்தான் – எனக்கு ஜனகனாய் உபகாரனானவனுக்கு இடம் –
அழகிய மாடங்களாலே சூழப் பட்ட அழகிய பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் எட்டாம் பாசுரத்தில்-

நப்பின்னைப் பிராட்டிக்காக முன்பு ஒருநாள் யுத்தத்திலே உருமு போலேயாய் உருமும் இடி .
நெஞ்சிலே க்ரித்ரிமத்தை உடைத்தான –பெரிய ருஷபங்களை அடர்த்தவனுக்கு இடம் பரமேச்சுர விண்ணகரம்
கடிய வாயை உடைய-கன்றப் பறை கறக்க -என்று திருவரையிலே கோத்துக் கட்டின பறையோபாதியாக
தோற்றுகிறதாயிற்று இவர்க்கு-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பகவத் குணங்கள் நெருங்கத் தொடுத்த செவ்விய தமிழ்த் தொடை வல்லார்
பெரிய பிராட்டியார் உடைய கடாஷத்தாலே லோகத்திலே மகா ரதராய் கடல் சூழ்ந்த பூமியை அடைய ஆண்டு –
உஜ்ஜ்வலர் ஆவார்கள்-இந்த ஐஸ்வர்யம் அடைய மலடாய் போகாமே இவரைப் போலே பாகவத சேஷமாக்கப் பெறுவார்
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

ஆக இத்திரு மொழியால் சர்வேஸ்வரன் விரும்பும் நிலம் ஆகையாலே இத்தேசம் ஆஸ்ரயணீயம் என்றும்
அது தான் சர்வ சமாஸ்ரயணீயம் என்றும் சொல்லிற்று ஆயிற்று –
அதாகிறது
சமதமாத்யுபேதர்க்கு இறே ஆஸ்ரயணீ யத்தில் அதிகாரம் உள்ளது –
அவை இல்லாதவனும் தம் தானாய் ஆஸ்ரயிக்கும் படியான தேசம் இறே-

———————–

மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண் வளர்ந்த ஈசன் தன்னை
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்ய
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே—2-10-1-

ஆபத் சகன் -என்கிறது –
திரு வயிற்றிலே எடுத்து வைத்து பிரளயத்துக்கு அஞ்சவும் அறியாதே ஓர் ஆலின் இலை மேல்
அது தன்னிலும் ஒரு பவனான இளம் தளிரிலே யோக நித்தரை கொண்டு அருளின
ஆதார ஆதேய பாவம் தன் புத்த்ய அதீநமாம் படி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை
ஸ்ரீ திருக் கோவலூரிலே நான் காணப் பெற்றேன் -என்கிறார் முதல் பாசுரத்தில்-

அவனை ஆஸ்ரயித்து நான்மறைகளைக் கொண்டு-ஆத்மேத்யேஸ்து க்ருஹணீயாத் -என்றும்
ஆத்மேதிதிது பகச்சந்தி க்ராஹயந்திச -என்கிறபடியே
அவனை பிரகாரியாகவும் தங்களை பிரகாரமாகவும் காலங்கள் தோறும் ஒருப்படிப்பட அனுசந்திதுச் சொல்லுகிற
அத ப்ராஹ்மியான ஸ்ரீ லஷ்மி மாறாமே செல்லுமாயிற்று -ஸ்ரீ பகவத் உபாசன ரூப சம்பத்-
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்-

கையிலே திரு ஆழியையும் விட அறியாதே-ஆகாச அவகாசத்தை இடம் அடைத்துக் கொண்டு தோற்றி –
ஏவர வெளியடைய-அதினுடைய புண் ஆறும்படியாக திருக் கையாலே ஸ்பரசித்து
திருப் பரியட்டத் தலையாலே ஒற்றிப் பண்ணின சிசிரோ உபசாரங்களை நினைக்கிறது-மூன்றாம் பாசுரத்தில்-

ஸ்வ விஷயத்தில் பிரேமத்தால் கண்ண நீர் அரும்பி -அது தான் கண்ணை விட்டு சோர -பிரேம பரவசராய் இருக்கும்
சேஷ பூதருக்கு நிரதிசய போக்யனானவனை–முதல் ஆழ்வார் விஷயம்
ஆயனே கரும்பு-மதுபான மத்தமாக பாடும் பாட்டைக் கேட்டு -அத்தாலே –நீர் பாய்ந்தாப் போலே இருக்கிற இனிய
கரும்பானது ஒரு கண் தேறி வளரா நிற்கும் ஆயிற்று-என்கிறார் நாலாம் பாசுரத்தில்-

ராவணனோடு கூட அழியச் செய்த ஸ்வாமி தன்னை-உடையவன் இறே ஷேத்ரத்தில் களை பிடுங்குவார்-
ராவண வத அனந்தரத்தில் அத்யயன அனுயாகங்கள் மாறாதாப் போலே யாயிற்று அவன் பட்ட பின்பு ஸ்ரீ திருக் கோவலூரும் –
சோலையிலே புக்கு அணைந்த தென்றலானது அந்நீர் நிலத்திலே திவலைகளையும் சோலையில் பரிமளத்தையும் கொண்டு வந்து
இவ்வோ இடங்களில் அத்யயனம் பண்ணுபவர்கள் உடைய ஸ்ரமம் ஆறும்படி சிசிரோ உபசாரம் பண்ணும் ஆயிற்று
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்-

அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் தனக்கு தாரகமாய் அது பெறாத போது அவன் முடியும் அளவாய் இருக்குமா போலே
அவன் வியாபாரம் தங்களுக்கு பிராணகரமாய் இருக்கும்படியாலே அத்தை தேடா நிற்பார்கள் இறே இவர்கள்
கருங்களிறே போலே-தன்னை உணராதே நின்ற நிலை-பிரதிகூலரான துர்யோநாதிகள் கட்டின கட்டாகில் இறே
அவிழ்த்துக் கொண்டு போக வல்லது-அனுகூலர் கட்டினால் அவிழ்த்துக் கொண்டு போக மாட்டான் இறே-
விஸ்மய நீயமான கலையை வாகனமாக உடையளாய் எட்டுத் தோளை உடைய துர்க்கை அவள் ஆயிற்று அவ் ஊருக்குக் காவல்
பிறந்த அன்று காட்டிக் கொடுத்துப் போனோம் -என்னும் அவ் இழவு தீர அவள் ஊர்ந்து நோக்குகிற தேசம் ஆயிற்று
இதுக்கு முன்பு இங்கனே இருப்பதொரு லாபம் வ்யுத்புத்தி பண்ணி அறியாத நான் ஸூ ரஷிதமான தேசத்திலே காணப் பெற்றேன்-
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

வில் விழவு என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு அழைத்து க்ருத்ர்மத்தாலே நலிய அழைத்த கம்சனை
அவன் நினைவு அவன் தன்னோடே போக்கி அவனுக்கு மிருத்யு ஆனவனை-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

இவனைத் தோழன் ஆகவும் மைத்துனன் ஆகவும்-தூதனாகவும் சாரதியாகவும் உடைய அர்ஜுனன் உடைய தேர்-
ரதியான் ஆகில் வெற்றி தன் தலையிலே கிடக்குமே-அதுக்காக தான் சாரதியாய்
வெற்றியும் அவன் தலையிலே கிடக்கும்படி பண்ணினான் ஆயிற்று-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்-

ஒரு கல்பக தரு பணைத்து பூத்தாப் போலே ஆயிற்று ஸ்ரீ பிராட்டிமார் உடன் திவ்ய ஆயுதத்தை தரித்தால் இருக்கும் படி-
தனிக் கற்பகம் அன்றிக்கே சோலை செய்து இருப்பதொரு கல்பகம் போலே நின்று –
அதாகிறது-சர்வ அபேஷித ப்ரதனாய் இருக்கும் படி –
நாங்கள் எங்கள் உடைய ரஷணத்துக்கு கடவோம் அல்லோம் நீயே கடவாய் -என்று
தன் கை பார்த்து இருக்கும் அவர்கள் பக்கலிலே மிக்க பிரசாதத்தைப் பண்ணும்படியை மநோ ரதிக்குமவனை –
அருள் பண்ணா விட்டால் தான் விடலாமோ – இவன் வடிவைக் கண்டால் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இப்பத்தையும் அப்யசிக்க வல்லவர்கள் –ஐஸ்வர்யாத்துக்காகவும் ஆத்ம பிராப்திக்காகவும்
பகவத் பிராப்திக்காகவும் லோகத்தில் உள்ளார் திரண்டு ஆஸ்ரயிக்க-
ஆஸ்ரயித்த போதே ஆஸ்ரயித்தார் அபேஷிதத்தை கொடுக்கைக்காக எங்கும் புக்கு வியாபித்து
அந்யைரத்ருஷ்டனாய்-நம்மை ஆஸ்ரயிப்பாரோ என்று அவசர பிரதீஷனாய் நிற்கிறவனைக் காணப் பெறுவார்-
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-இரண்டாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

June 15, 2019

வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே –வேங்கடம் மேவி மாண் குறளான
வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1-பிரவேசம் –

அடைந்தேன்-என்றும்
அடியேனை ஆட் கொண்டு அருளே -என்றும்
இனி நான் உன்னை என்றும் -விடேன் என்றும்
கைங்கர்ய லாபத்துக்காக திருவடிகளிலே வந்து சரணம் புக்கு
இக்கைங்கர்யம் தான் நித்யமாக செல்ல வேண்டும் என்னும்படி-அதிலே ப்ரேமம் பிறந்ததாய் -நின்றது
நமக்கு இப்படி இந்த சமாதி தான் பிறக்கைக்கு அடி என் -என்று ஆராய்ந்து -பார்த்தார்
உபகார ஸ்ம்ருதிக்காக –அத்தை ஆராய்ந்தவாறே –
மந ஏவ -என்கிறபடியே
நாட்டார் பாஹ்யராயும் -குத்ருஷ்டிகளாயும் அனர்த்தப் பட்டு போரா நிற்க
நமக்கு கைங்கர்ய லாபத்துக்காக திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகையும்
அது தான் அவிச்சின்னமாக செல்ல வேணும் என்னும் படியான ருசி பிறக்கையும்
இஸ் சம்ருதிக்கு அடி இந் நெஞ்சு இறே என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து
உன்னாலே இஸ் சம்ருத்தி எல்லாம் உண்டாயிற்று என்று திரு உள்ளத்தோடே கூடி இனியர் ஆகிறார் –

————————-

காசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானவனூர்—வெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-1-பிரவேசம்-

ஆஸ்ரித விஷயத்தில் -பிராட்டி திறத்தில் பண்ணும் ஓர் ஆதரத்தைப் பண்ணும் ஸ்வ பாவனாய் –
அவர்கள் காலாலே காட்டுமத்தை -தலையாலே செய்வானாய் –அகடிதங்களை கடிப்பிக்க வல்லனுமாய் –
ப்ரஹ்மாதிகளுக்கு அவிஷயமாம் படி பெரியவனுமாய் –சர்வ பூத ஸூ க்ருத்துமாய் –சர்வ விஸஜாதீயனுமான
ஸ்ரீ சர்வேஸ்வரன்
தனக்கு ஆஸ்ரிதர் பக்கல் உண்டான இனிமையாலே
அவர்கள் சரீரம் சம்பந்தம் அற்று பரம பத்தில் போனால் செய்யும் அடிமையை –
இண்டை யாயின கொண்டு தமக்கு ஏத்தலாம் படி ஸ்ரீ திரு வெவ்வுள்ளிலே வந்து சாய்ந்து அருளின படியை
அனுசந்தித்து இனியர் ஆகிறார்-

—————————-

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ செற்றவன் தன்னை–
திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-1-பிரவேசம்

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் –ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபவனாய் –ஆஸ்ரித சுலபனாய் –
இதர விஸாஜதீயனாய் – இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
இக் குணங்கள் தான் தர்மி அனுவர்த்திறவோபாதி எங்கும் அனுவர்த்திக்குமவை இறே –
இப்படி இருக்கிறவன் மனுஷ்யராய் இருப்பார் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கலாம் படி
வந்து கிடந்த மாத்ரம் அன்றிக்கே
ஒரு திர்யக்குக்கு இப் பூவில் செவ்வி அழியாதபடி திருவடிகளில் பரிமாற வேணும் என்று இடர் பட –
அவ் விடர் தீர்க்கைக்காக-அது இடர் பட்ட மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து விழுந்து
அத்தை ஆற்றி-இன்னமும் இப்படி இடர் படுவார் உண்டோ என்று சாய்ந்து அருளினான் உண்டே -என்கிறார் –

———————-

அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு என்றானுமிரக்க மிலாதவனுக்கு
உறையுமிடமாவது நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-பிரவேசம்

ஸ்ரீ பிராட்டிமாரோடே கூட வந்து-விரோதி நிரசன சீலனாய்-பிரபல விரோதியான பாபங்களை
அநாயேசேந போக்க வல்லவனாய்-சர்வ ஸ்வாமியான-ஸ்ரீ சர்வேஸ்வரன்
உகந்து அருளின நிலங்கள் எங்கும்-பண்ணும் விருப்பத்தை
ஸ்ரீ திரு நீர் மலையிலே பண்ணிக் கொடு வந்து சந்நிஹிதனானான் –
அநவஹிதராய் இருப்பார் வார்த்தையைக் கேட்டு அநர்த்தப் பட்டுப் போகாதே
அவனை ஆஸ்ரயித்து க்ருதார்த்தராய் போங்கோள் என்று பரோபதேச பிரவ்ருத்தர் ஆகிறார்-

——————–

பாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணை —-கற்பகத்தைக் கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-1-பிரவேசம்-

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் –ஆஸ்ரித வத்சலனாய் –ஆஸ்ரித சுலபனாய் –
ஸ்வ ப்ராப்திக்கு உபாயமும் தானேயாய் –இருக்கிற சர்வேஸ்வரனை
திருக் கடல் மல்லையிலே நான் அகப்படக் காணப் பெற்றேன் –
அவன் அரியன் என்று கை வாங்காதே
அவனை ஒழிந்தது அடங்கலும் படு குழி -அவற்றில் புக்கு
அனர்த்தப் பட்டு போகாதே
அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்துப் போக பாருங்கோள் என்கிறார்-

——————————————————

நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார் மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1–பிரவேசம்-

அஹம் அச்ம்ய அபராதா நாம் -என்றும்
சாதே தேச்மின் பிரத்யுஜ்யதாம் – என்று சரணாகதிக்கு லஷணம் சொல்லிற்று
அது தன்னை
வானிலா முறுவலிலும்-தாயே தந்தை யிலும் ஆக அனுசந்தித்தார் –
அது தன்னை
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன் என்றும்
தொண்டனேன் கண்டு கொண்டேன் என்றும்-அது தன்னை அனுபாஷித்தார் –
ஆனுகூலச்ய சங்கல்ப-பிரதிகூலச்ய வர்ஜனம் -என்று-அவனுக்கு சம்பாவிதமாய்
அநந்தரம் வரும் ஸ்வபாவங்களை சொல்லுகிறது –

அவை தமக்கு பிறந்தபடி சொல்லிற்று ஆயிற்று இதில் -கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே-என்று
அவை தான் இரண்டும் லஷணமாக வேண்டிற்று இல்லை
பரஸ்பர விரோதத்தாலே -த்வமே-என்று உபாய நைரபேஷ்யத்தை சொல்லுகையாலும்
இதில் அங்கங்களோடு கூடி இருப்பதாகச் சொல்லுகையாலும் –
ஆகையால் இது லஷணமாய்
இது அவனுக்கு சம்பாவித ஸ்வ பாவமாம் இத்தனை –

பசுர் மனுஷ்ய பஷீ ரே ச வைஷ்ணவ சம்ஸ்ரபா தேனை வதே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் –
என்று பாகவத சமாஸ்ரயணத்தை
ஞானமும் ஞான அனுரூபமான வ்ருத்தமும் ஒழியவேயும்
பகவத் பிராப்திக்கு சாதனமாக சொல்லா நின்றது இறே-

மிருக பஷி யாதிகளையும் கூட எடுக்கிறது இறே
இவை தான் பின்னை இரண்டோ –
பாகவத சமாஸ்ரயணம் ஆவது -பகவத் சமாஸ்ரயண்த்தின் உடைய காஷ்டை அன்றோ -என்னில்
அவ்யவதாநேந பகவத் சமாஸ்ரயணம் பண்ணுகிறோம் என்று இருப்பது ஓன்று –
பாகவத சமாஸ்ரயணத்தாலே பகவத் சமாஸ்ரயணம் பண்ணுமதும் ஓன்று உண்டு
இந்த முக பேதத்தைப் பற்றிச் சொல்லுகிறது –
பாகவத சமாஸ்ரயணம் ஒழிய பகவத் விஷயத்தில் இழியும் துறை இல்லை-

மாறாய -இத்யாதி –
வேறாக வேத்தி இருப்பார் யாகிறார் யார் –
மற்று அவரை சாத்தி இருப்பார் யாகிறார் யார் –
இத்தை ஒரு உதாஹரன நிஷ்டமாகக் காட்டலாமோ வென்னில் –
வேறாக வேத்தி இருப்பார் யாகிறார் -சர்வேஸ்வரனைக் கண்ட அநந்தரம்-தம்மைப் பேணாதே
பகவத் சம்ருத்திக்கு மங்களா சாசனம் பண்ணும் ஸ்ரீ பெரியாழ்வார் போல்வார் –

மற்று அவரை சாத்தி இருப்பார் யாகிறார் –
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -என்று இருக்கும் ஸ்ரீ ஆண்டாள் போல்வார் –
இனி இவர் தாம் பாகவதாராக நினைத்து இருப்பது
உகந்து அருளின நிலங்களிலே நீர்மையிலே ஈடுபட்டு இருக்கும் அவர்களை –
அபாகவதாராக நினைத்து இருப்பது அங்குத்தை வாசி அறியாதவர்களை –

ஆனுகூலச்ய சங்கல்ப -என்கிறது
ஓன்று செய்து தலைக் கட்டிற்றாய் ஓர் அளவில் மீளுமது அல்லாமையாலே
ப்ராப்தி தசையிலும் அனுவர்த்திக்குமது இங்கு ஓர் அளவில் மீளாதிறே-
பராதி கூலச்ய வர்ஜனம் -ப்ராப்தி அளவும் இறே நிற்பது –
ப்ராதிகூல்ய நிவ்ருத்தி பிறந்தால் உண்டாமதாகையாலே-ஆனுகூல்யம் பிற்பட்டது இறே –
அந்த ப்ராதி கூல்ய நிவ்ருத்தி தமக்கு உண்டான படியைச் சொல்லுகிறார் முதல் பாட்டில் –
இது தான் உண்டாகவே அமையும் இறே –
சம்பந்தம் இன்றாக உண்டாக்க வேண்டாவா –
தானே ஏறிட்டுக் கொண்டத்தை தவிரும் இத்தனை வேண்டுவது –

————————

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-1-பிரவேசம்

ததீய சேஷத்வ பர்யந்தமாக பகவத் அனுபவம் பண்ணுகையாலே
தம்முடைய அனந்யார்ஹ சேஷத்வத்தை அனுசந்தித்தாராய் நின்றார் கீழ் –
அனந்யார்ஹ சேஷத்வத்துக்கு லஷணம் சொல்லுகிற இடத்தில்
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை -என்றார் இறே-
தம்முடைய சேஷத்வத்துக்கு எதிர் தலையான அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்த இடத்தில்
அது தமக்கு ரசித்து இருக்கும் படியாலே அவனை அனுசந்திபதாகப் பாரித்தார் –
அப்போதே நினைத்தபடி அனுபவிக்கப் பெற்றிலர் –
அவ் விழவாலே தாமான தன்மை போய்-பிரிவாற்றாமையாலே நோவு படுகிறாள்
ஒரு பிராட்டி தசையைப் ப்ராப்தராய்-அந்நிலை தானும் போய் குலைந்தது
அதாவது தன் ஆற்றாமையை தானே வாய் விட்டு ஆற்றுகை அன்றிக்கே-பிறர் வாயாலே சொல்லுகை இறே –

ஆக நாயகனோடு நினைத்த படிகளை பரிமாறாமையாலே
நம்முடைய ஸ்ரீ கோயில் ஸ்ரீ திருவாய்மொழி படியாலே
ஸ்த்திதி கமன சயநாதிகளிலே ஒரு நிலை இன்றிக்கே
அர்த்தியாய் நோவு படுகிற பெண் பிள்ளை உடைய தசையை அனுசந்தித்த திருத் தாயார்
இவளுக்கு உண்டான செல்லாமையையும் –
அவன் இவ்வளவில் வந்து முகம் காட்டாதே இருக்கிற இருப்பையும் –
இவளுடைய தசைக்கு தன்னால் ஒரு பரிஹாரம் இன்றிக்கே இருக்கிற படியையும்-
அவனை இட்டே பரிஹரித்துக் கொள்ள வேண்டும் படியாய் இருக்கிற இருப்பையும் அனுசந்தித்து
இதுக்கு நேரே நிதான பூதரராய் இருக்கிற அவர் இருக்க வழியே போவாரோ பாதியான நமக்கு இது தெரியுமோ –
ஆனபின்பு அவர் தம்மையே இதுக்கொரு போக்கடி கேட்போம் என்று அத்யவசித்து

ஸ்ரீ திருவிட வெந்தை நாயனார் -திருவடிகளிலே இவளைக் கொடு போய் பொகட்டு
எங்களை காற்கடைக் கொண்டு
உம்முடைய சௌந்தர்ய சீலாதிகளிலே துவக்குண்ட இவள் உம்மை நினைத்தபடி அனுபவிக்கப் பெறாமையாலே –
மிகவும் நோவு படா நின்றாள் –
நீர் இவளுடைய திறத்து செய்ய நினைத்து இருக்கிறது என் என்று கேட்கிற திருத் தாயார் பாசுரத்தாலே
தமக்குப் பிறந்த தசையை பேசுகிறார் ஆயிற்று –

————————-

திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப
முரிதிரை மா கடல் போல் முழங்கி மூ உலகும் முறையால் வணங்க
எரியன கேசரி வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா
அரி உருவாம் இவர் யார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே -2-8-1-பிரவேசம் –

ஹ்ரீரேஷா ஹி மம துலா -என்னவும் மாட்டாதே நிற்கிற இடம் இறே இவ்விடம்
அவன் அப்படி இரானாகில் ஆஸ்ரயணீயன் ஆக மாட்டான் –
தான் யுக்த அயுக்தங்கள் அறியாதே –நிற்பது இருப்பது விழுவது எழுவதாய்க் கொண்டு
மோஹித்துக் கொண்டு கிடந்த தசையை அனுசந்தித்த திருத்தாயார்
அவன் படிகளை சொல்லிக் கூப்பிடக் கேட்டும் -தான் வாய் வெருவியும் அவ்வழி யாலே அல்பம் தெளிவு பிறந்தது –
அவன் குணங்களை நெஞ்சிலே ஊற்றிருந்தது அறிவு கலங்கும் ஆபத்திலே வந்து உதவும் ஸ்வபாவன் என்று
அவன் படிகளை அனுசந்தித்து ஆச்வஸ்தையாய் பின்பு
ஸ்ரீ திரு அட்டபுயகரத்து நாயனாரை அனுசந்தித்து அவரையே பாவித்து அந்த பாவன பிரகர்ஷத்தாலே
ப்ரத்யஷ சாமானகாரமாய் உருவு வெளிப்பாடு போலேயாய்
அவனுக்கு சில வார்த்தைகள் தான் சொல்லுகிறாள் ஆகவும் –
அவர் அதுக்கு சில மறு மாற்றங்கள் சொல்லுகிறார் ஆகவும் –
சிலவற்றைச் சொல்ல இதைக் கேட்ட பந்து வர்க்கம் எல்லாம-நீ பிரமித்தாயோ -சொல்லுகிறது என் எனபது -என்ன
ஸ்ரீ திரு அட்டபுயகரத்து நாயனாரை நான் இங்கனே சில வார்த்தைகளைக் கேட்டேன் –
அவர் எனக்கு சில மறு மாற்றங்கள் அருளிச் செய்தார் என்று
அவ் வார்த்தையை தாய்மார் தோழி மார்களுக்கு சொல்லுகிறாளாய் செல்லுகிறது-

———————

சொல்லு வன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம் அதுவே-2-9-1- –ப்ரேவேசம் –

மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீண் முடி மாலை என்று தொண்டைமான் சக்கரவர்த்தி
ஸ்ரீ திரு அட்டபுயகரத்திலே அனுகூலித்த படியை அனுசந்தித்தார் –
அந்த பிரசங்கத்தாலே பல்லவன் என்பான் ஒருத்தன் ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரத்திலே அதிமாத்ரமான
ஆனு கூல்யங்களைப் பண்ணி ஒரோ ஒன்றை எடுத்தது ஆயிரமாம் படி பண்ணினான் ஆயிற்று
பின்பு சோழன் கண்டு அது தான் பொறுக்க மாட்டாமையாலே அவை தன்னை அமைத்த வித்தனை –
இனித் தான் பகவத் விஷயத்தில் ஓரடி வர நின்றார் தமக்கு உத்தேச்யராக இறே நினைத்து இருப்பது –
அத்தாலே அவன் படிகள் எல்லாம் தமக்கு இனிதாய் இருக்கையாலே அவற்றை அனுபவித்துப் பேசுகிறார் –

———————–

மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண் வளர்ந்த ஈசன் தன்னை
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்ய
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே—2-10-1- பிரவேசம் –

யுத்தே சாப்ய பலாய நம் -என்றும்
ஈஸ்வரபாச-என்றும்-சொல்லும்படி யானவனும் கூட ஆஸ்ரயித்த படியை அனுசந்தித்தார்
ஸ்வ வர்ணத்துக்கும் ஸ்வ ஆஸ்ரமத்துக்கும் உசிதமான கர்மங்களை பாலாபி ஸந்தி ரஹீதமாக
பகவத் சமாராதன புத்யா அனுஷ்டித்து
சமதமாத்யு பேதராய் இருக்கிற ப்ரஹ்மா போல்வாருக்கு ஆஸ்ரயணீயனாய்க் கொண்டு
பிராட்டிமாரும் தானுமாக ஸ்ரீ திருக் கோவலூரிலே வந்து நின்றான்-
அவை ஒன்றும் இல்லாத நான் அவனை அங்கே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார் –

—————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-இரண்டாம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

June 15, 2019

வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து மாதவ
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை
கான வரிடு காரகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குற
ளான வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1-

தன் உடைமையை பெறுகைக்கு தன்னை இரப்பாளன் ஆக்கினவர்க்கு மகாபலிக்கு கொடுத்து அல்லது நிற்க
ஒண்ணாத படி விநீத வேஷத்தோடே சென்றான் ஆயிற்று –
அவன் அடிமை கொள்வதாக வந்து இரந்து நிற்கிற பின்பு நீயும் அவன் நினைவின் படி போகப் பெறுவதே

————————–

உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை
மண் மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என்நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவனாயாக்ற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-2-

தண்ணீர் பந்தலை வைத்து நம் அடிமை பெறுகைக்கு தம்மை நமக்குத் தந்து கொடு நிற்கிற
நம்மை அடிமை கொள்வதாக ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிதி பண்ணின பரம -தார்மிகனுக்கு
அடிமைத் தொழில் பூண்டாய் –அவன் திருமலையில் வந்து நிற்கிற நிலையை நீ ஒருபடி சபலம் ஆக்கினாயே-

————————–

இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக்
கொண்டு போயிடவும் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
வண்டு வாழ் வட வேங்கடமலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-3-

உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு –அடிமைத் தொழில் பூண்டாயே –
அவாப்த சமஸ்த காமனானவனுடைய குறையை ஒருபடி நிரப்பினாயே
ஸ்ரீ திருமலையிலே வந்து புகுந்து இவரை அடிமை கொள்வதற்கு முன்பு
உபய விபூதி யோகத்தால் வந்த ஐஸ்வர்யத்தை ஒன்றாக நினைத்திலன் காணுமவன் –
தந லுப்தன் ஒரு காசு விழுந்த இடத்தில் கை எல்லாம் புழுதியாக தேடும் இறே

———————

பாவியாது செய்தாய் என்னெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை
மேவி யாட் கொண்டு போய் விசும்பேற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்கட மலை யாண்டு வானவர்
ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-4-

ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -என்கிறபடியே ஜ்ஞாநிகளைத் தனக்கு ஆத்ம பூதராக உடையவனாய்
இருக்கிறவனுக்கு நீயும் ஆவி ஆனாயோ-

————————–

பொங்கு போதியும் பிண்டியும் உடைப் புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை
தங்கள் தேவரும் தாங்களுமேயாக என்னெஞ்சம் என்பாய்
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்றருள்
அங்கணாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-5-

பாவியாது -என்று நீ இப்படி விசாரியாதே துணிவதே என்று என்னைக் கொண்டாட வேண்டின ஹேது என் -என்ன
விசாரிக்க வேண்டும்படி எத்தனை விஷயம் புறம்பே கிடக்கிறது என்கிறார் –
அக் கண்ணில் குளிர்திக்கு இலக்கு ஆவதே – அக் கண் அழகுக்கு ஜிதம் என்று எழுதிக் கொடுத்தார் உடைய
வ்ருத்தியிலே அன்வயித்தாயோ

—————-

துவரி யாடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் நந்தி யுண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என்னெஞ்சம் என்பாய்
கவரி மாக் கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-6-

ஸ்ரீ த்ரி பாத் விபூதி-அதிலே உண்டான ஸ்ரீ அநந்த ஸ்ரீ வைநதேயாதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனுக்கு –
அமரருடைய வ்யாபாரத்தை அநாதரித்து நித்ய ஸூரிகள் உடைய யாத்ரைகளிலே அன்வயித்தாயே-

——————-

தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவாரலக்கண் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-7-

ஆதித்ய அந்தராத்மாவாய் இருக்கும் என்று அனுசந்தித்துப் போகை அன்றிக்கே
கண்ணாலே கண்டு அடிமை செய்து அனுபவிக்கப் பெற்றாயே நீ –

———————

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்தே
என்னெஞ்சம் என்பாய் எனக்கு ஓன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொறி வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-8-

தன்னோராயிரம் பிள்ளைகளுக்கு தலைவன் ஆனவனுக்கு-இன வாயர் தலைவன் -என்னக் கடவது இறே
இன்று அடிமைத் தொழில் பூண்டாயே-வரையாதே ரஷகன் ஆனவனுக்கு அடிமை செய்கையிலே ஒருப்பட்டாயே-

——————

கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்னெஞ்சம் என்பாய் துணிந்து கேள்
பாடி யாடிப் பலரும் பணிந்து ஏத்திக் காண்கிலா
ஆடு தாமரை யோனும் ஈசனும் அமரர் கோனும் நின்றேதும் வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-9-

பலரும் அவனை ஆஸ்ரயித்து பின்னையும் காணப் பெறார்கள் –
ப்ரஹ்மாதிகள் அநந்தரம் தம் தாம் அதிகார அர்த்தமாக ஆஸ்ரயியா நிற்பர்கள் –
நீ இவ்விரண்டு கோடியிலும் இன்றிக்கே அவன் பக்கலிலே அடிமை புக்காயே-

——————

மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே—2-1-10-

ஸ்ரீ திருமங்கையில் உள்ளாருக்கு பிரதாநரான ஸ்ரீ ஆழ்வார் இன் தமிழாலே அருளிச் செய்த இப்பத்தும்
பாட வல்லார்க்கு பூண்ட வடிமை நித்யமாக செல்லும் தேசத்தை இருப்பிடமாக உடையவர் ஆவர்-

———————-

காசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானவனூர்
நாசமாக நம்ப வல்ல நம்பெருமான்
வேயினன்ன தோள் மடவார் வெண்ணெய் யுண்டான் இவன் என்று
ஏச நின்ற வெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-1-

பையலுடைய ஊரானது -ஸ்மசாந சத்ருசமாம்படி யாக திரு உள்ளத்திலே கொண்டருளி
அப்படி செய்து தலைக்கட்டுகைக்கு ஈடான வீர ஸ்ரீ யால் பூரணன் ஆனவன் –
ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது செல்லாமையை உடையனாய் –அவர்கள் உடைய வெண்ணெயைக் களவு கண்டு
அமுது செய்து அவர்கள் அத்தைச் சொல்லி ஏசும்படி நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் –
அறிவுடையார் -ராமோ ராமோ ராம -என்னத்-தன் பக்கல் நசை உடையார்கள் இப்படி ஏச –
இவை இரண்டையும் கேட்டு-திரு வெவ்வுளிலே கண் வளர்ந்தான் ஆயிற்று-

————————-

தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன்
பொய்யிலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று
செய்த வெம்போர் தன்னில் அங்கோர் செஞ்சரத்தால் உருள
எய்த வெந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-2-

திரியட்டும் ஸ்ரீ ராமாவதாரம் அனுவர்த்தித்த படி –
ஸ்ரீ பட்டரோ பாதியும் போருமாயிற்று இவருக்கு அவ் வவதாரத்தில் பஷ பாதம் –
ஸ்ரீ சிறியாத்தான் -ஸ்ரீ பட்டர் -ராமாவாதாரத்தில் பஷ பதித்து இருப்பவர் என்று அருளிச் செய்யும் வார்த்தையை கேட்கைக்காக –
ஸ்ரீ பெருமாளுக்கு எல்லா ஏற்றமும் உண்டாகிலும்
ஆஸ்ரித அர்த்தமாக கழுத்திலே ஓலை கட்டித் தூது போன இவ்வேற்றம் இல்லையே -என்ன
-அவர் போகாமை அல்ல -பிறப்பில் குற்றமே -காணும் -என்று அருளிச் செய்தார் –
இஷ்வாகு வம்ச்யர் கழுத்திலே ஓலை கட்டித் தூது போக விடுவாரைக் கிடையாதே –
அவ் வவதாரத்திலே ஸ்ரீ திருவடி அங்கே போவது இங்கே வருவதாய்க் கொண்டு வார்த்தை சொல்லித் திரிந்த ஏற்றத்தைக் கண்டு
நாமும் இப்படி ஆஸ்ரிதர்க்காக தூது போக பெற்றிலோம் -என்று செவி சீ பாய்ந்தது – அதுக்காக விறே பின்னை வந்து அவதரித்து
ஆஸ்ரிதர்க்காக தூது போயிற்று –
ஷத்ரியன் என்று நிஸ்சயிக்கில் தூது போக விடுவார் இல்லை என்று அத்தை மறைத்து இறே -வளர்ந்தது
அபிஷித்த ஷத்ரிய வம்சத்தில் பிறக்கில் தூது போக விடுவாரைக் கிடையாதே —
அவன் வந்து -சாய்ந்தான்-என்கிறார்-

————————

முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூது ஆதி மன்னர்க்காகிப் பெரு நிலத்தார்
இன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே–2-2-3-

ஏச நின்ற -என்றது அனுவர்த்திக்கிறது-உதித அநுதித ஹோம நிந்தை போலே இருப்பது ஓன்று இறே –
இது-புக்க புக்க துறை தோறும் பகவத் விஷயத்தில் கால் தாழ வல்லர் -ஆயிற்று-
பூமியிலே ஏவிக் கார்யம் கொள்ளுவாரைப் பெற்றது-இனி இவ்விடம் விட்டுப் போவோம் அல்லோம்
என்று சாய்ந்தான் ஆயிற்று –

———————-

பந்தணைந்த மெல் விரலாள் பாவை தன் காரணத்தால்
வெந்திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
நந்தன் மைந்தனாக வாகும் நம்பி நம் பெருமான்
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-4-

திரியவும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரமே பின்னாட்டிற்று –சமஸ்த கல்யாண குணாத்மகனாய் ஸ்ரீ வைகுண்டத்தில்
இருந்த இருப்பிலும் இங்கே வந்து அவதரித்து தான் தாழ நின்ற பின்பு ஆயிற்று –பூரணன் ஆயிற்று –
சர்வ வித பந்துவானவனை காணலாவது ஸ்ரீ பரம பதத்திலே என்று அவ்விடத்துக்கு போக பொதி சோறு கட்ட
வேண்டாதே பந்து க்ருத்யம் பண்ணலாம் படி ஸ்ரீ திரு வெவ் வுள்ளிலே வந்து சாய்ந்தான் ஆயிற்று –

——————-

பாலனாகி ஞாலமேழும் உண்டு பண்டாலிலை மேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்
நீல மார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி
ஏல நாறும் பைம் புறவில் எவ்வுள் கிடந்தானே—2-2-5-

பரிமள பிரசுரமான பர்யந்தத்தை உடைத்தான தேசத்தில் அரியது செய்ய வல்லவன் ஆயிற்று
கண் வளர்ந்து அருளுகிறான்-எழுப்பி கார்யம் கொள்வார் குறையே –

———————–

சோத்த நம்பி யென்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்
ஆத்தனம்பி செங்கணம்பி ஆகிலும் தேவர்கெல்லாம்
மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர் தொழு
தேத்தும் நம்பி யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-6-

அசாதாராண திவ்ய விக்ரஹ யுக்தனாய் –
இதர விஸஜாதியனாய் இருக்கச் செய்தேயும்
ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாய் நின்று ஸ்ருஷ்ட்யாதிகளை
நடத்துகிறான் என்று ஸநகாதிகள் ஏத்தும் படியாய் இருக்கிறவன்
இங்கே சாய்ந்தான் -என்றபடி

———————

திங்களப்பு வானெரி காலாகித் திசை முகனார்
தங்களப்பன் சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண்
தொங்கலப்பு நீண் முடியான் சூழ் கழல் சூட நின்ற
எங்களப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-7-

திரு மேனியில் ஏக தேசத்தில் இருக்கிற ருத்ரன் விஸ்த்ருதமான திருவடிகளை தலையாலே சுமக்கும்படி
நிற்கிறவன் –எங்களுக்கு ஜநகனுமாய்-ஸ்வாமி யுமானவன்-

———————

முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர் கோன்
தனியன் சேயன் தான் ஒருவனாகிலும் தன்னடியார்க்கு
இனியன் எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே—–2-2-8-

இப்படி தான் அத்விதீயனாய் இருந்தானே யாகிலும் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு இனியவன் –
எனக்கு ஜநகனுமாய் ஸ்வாமியுமானவன் –-எவ்வுள் கிடந்தானே

———————-

பந்திருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்
வந்திருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன்
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாயமைந்த
இந்த்ரற்கும் தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-9-

நித்ய சம்ச்லேஷத்தாலே கையும் பந்துமாய் -அது தான் பொறாமை சிவந்து ஸூகுமாரமான விரலை உடையவள் –
நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் –குளிர்ந்த தாமரைப் பூவை பிறந்தகமாக உடையவள் –
அப்பூ நெரிஞ்சி முள்ளாய் அடிக் கொதித்து வந்து அகலகில்லேன் -என்று இருக்கும்படி
மார்வு படைத்தவன் –எவ்வுள் கிடந்தானே-

———————-

இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும் வல்லார்
அண்டமாள்வதாணை அன்றேலாள் வர மருலகே—2-2-10-

இங்கே வந்து சாய்ந்த படியாலே பகவத் குணங்கள் நெஞ்சிலே ஊற்றிருந்து சொல்லி அல்லது நிற்க ஒண்ணாதபடி
அவை ப்ரேரிக்க பாடின மாலை-இது கற்றார் அண்டத்தை ஆளுகை நிச்சயம் –
அவனைப் பற்றியும் இத்தைப் பெறுமத்தனையோ – என்று விரக்தர் ஆனார்கள் ஆகில் அவர்கள் ஆளுமது பரம பதம் —

—————————-

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-1-

விரோதி வர்க்கத்தை கிழங்கு எடுக்குமவனாய் –ஈஸ்வர அபிமாநிகளுக்கு இடர் வந்தால் -போக்குமவனாய் –
தனக்கு ஸ்நேஹிதர் ஆனார்க்காகத் தன்னை அழிய மாறுமவனாய் –
போலியான ஸ்நேஹிகளுக்கும் ஏவிற்றுச் -செய்யுமவனானவனை –திரு வல்லிக்கேணியிலே
காணப் பெற்றேன் என்கிறார்-

—————

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை யமுதை யென்னை யாளுடையப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிக்கேணிக் கண்டேனே–2-3-2-

வேதத்தை தனக்கு விபூதியாக உடையவன்-அவ்வவருடைய ருசி அநு கூலமாக பல பிரதானம் -பண்ணுமவன் –
கேவலம் ப்ரஹ்ம பாவனையாயே இருக்கும்
சநகாதிகளுக்கு நிரதிசய போக்யனாய் உள்ளவனை –ஸ்ரீ நந்த கோபர்க்கு தன்னுடைய
அதி மானுஷ சேஷ்டிதங்களாலே
எப்போதும் ஒக்க இனியனானவனை –தன்னையே ஆஸ்ரயிக்கும் படி
ஜகத் காரண பூதனாய் உள்ளவனை –அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனை –
அவர்களுக்கு எல்லாம் புறம்பாய் இருக்கிற என்னை அடிமை கொண்ட -உபகாரகனை –
ஸ்ரீ திரு வல்லிக்கேணிக் கண்டேனே –

————————

வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேயலறி மண் சேர
நஞ்சமர் முலை யூடுயிர் செக வுண்ட நாதனைத் தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்யப் பெண்ணுருவாகி
அஞ்சுவை யமுத மன்றளித்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே-2-3-3-

புருஷோத்தமனான தனக்கு சேராத வடிவைக் கொண்டு
அம்ருதத்தை அனுகூலரை புஜிக்கும் படி பண்ணினவனை –ஸ்ரீ திரு வல்லிக்கேணிக் கண்டேனே –என்கிறார் –

——————-

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடின்வானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே –2-3-4-

அந்த மழையின் அளவு அல்லாத பெரிய மலையாலே மழையைத் தடுத்து –
அப்படியே
சந்த துக்க வர்ஷிணி -என்கிற என்னுடைய சம்சாரம் ஆகிற வர்ஷத்தை பரிகரிக்க வந்தவன்..

———————-

இன் துணைப் பதுமத் தலர்மகள் தனக்குமின்பன் நற் புவி தனக்கிறைவன்
தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றை யோர்க்கெல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-5-

ஸ்ரீ யபதியாய் இருக்கையாலே அல்லாதார் எல்லார்க்கும் வலிய துணை யானவன்
ஆஸ்ரித விஷயத்தில் தாழ நின்ற நிலையாலே தானே துணை என்னும் இடத்தை எனக்கு அறிவித்தவன் –
எனக்கு ஸ்வாமியாய் –என் குலத்துக்கு நாதன் ஆனவன் -திருவல்லிக்கேணிக் கண்டேனே-

——————–

அந்தகன் சிறுவன் அரசர் தமரசற் கிளையவன் அணி யிழையைச் சென்று
எந்தமக்குரிமை செய்யெனத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமில் குழலாள் அலக் கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே -2-3-6-

வலியார் சிலரை அபாஸ்ரயமாக பற்றினாலும் தானே தாழ நின்று ரஷகனாக வல்லன் என்னும் இடத்தை –
சொல்லுகிறது-த்ரௌபதிக்கு பர்த்தாகள் உதவிற்று இலர்-அர்ஜுனனுக்கு இந்த்ரன் உதவிற்று இலன் –

—————-

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7–

ஸ்ரீ பரதாழ்வானும் அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் –
இலக்குமனோடு மைதிலியும் -தாயும் பிள்ளையுமாய் இருக்கிற சேர்த்தி –
பெருமாளைப் பிரியில் தரியாமையால் உண்டான சேர்த்தி-
கண்டு அனுபவித்தார்களோடு – கேட்டார் வாய் கேட்டாரோடு வாசியற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று –
அவர்களோபாதி நானும் தோற்று ஏத்தும்படி -பண்ணினவனை திருவல்லிக்கேணிக் கண்டேனே—

———————-

பள்ளியில் ஓதி வந்த தன சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—-2-3-8-

வாயில் ஓர் ஆயிர நாமம் – அவன் அப்போது சொல்லிற்று
நால் இரண்டாகிலும் பருவத்துக்கு தக்க அளவல்லாதபடி இருக்கையாலே குவாலாகச் -சொல்லுகிறார் –
நால் இரண்டு -ஸ்ரீ திரு அஷ்டாஷரம் ஆகவுமாம்-ஸ்ரீ நாராயண -ஸ்ரீ ஹரி என்றுமாம்-ஸ்ரீ விஷ்ணு ஷட் அஷரி-யாகவும் –
ஹிரண்யன் உடைய முரட்டு வடிவைக் கண்டு பிற் காலியாதே ஸ்ரீ நரசிம்ஹமாய்
அவ்வழியாலே தானே ஆஸ்ரயணீயன் என்னும் இடத்தை வெளி இட்டான் –

—————-

மீனமர் பொய்கை நாண மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கராவதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே-2-3-9-

ஆனை நெடு நாள் பட்ட இடர் எல்லாம் போம்படியாக ஸ்ரீ பெரிய திருவடியை மேற் கொண்டு வந்து
ஆனைக்கு இடர் இன்றிக்கே முதலைக்கே இடர் ஆம்படியாக ஸ்ரீ திரு வாழியை ஏவினான் ஆயிற்று –

——————

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர்கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர் வானுலகே—2-3-10-

ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும்
அப்யசிக்க வல்லார்கள் –நித்ய அனுபவம் பண்ணலாம் படியான ஸ்ரீ நித்ய விபூதியைப் ப்ராபிக்க பெறுவர் .

—————–

அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு
என்றானுமிரக்க மிலாதவனுக்கு உறையுமிடமாவது இரும் பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-

ஸ்ரீ திரு நறையூரிலே நின்றான்-ஸ்ரீ திருவாலியிலே இருந்தான்- ஸ்ரீ திருக் குடந்தையிலே சாய்ந்தான்-ஸ்ரீ திருக் கோவலூரிலே -நடந்தான் –
இடம் மா மலையாவது நீர் மலையே –மலையாய் இருக்கச் செய்தே அல்லாதவை வாஸ ஸ்தானம் ஆகிறது இல்லை இறே –
உகந்து அருளின நிலங்களில் எங்கும் பண்ணக் கடவ விருப்பத்தைப் பண்ணிக் கொடு வந்து சந்நிஹிதனான தேசம் ஸ்ரீ திரு நீர் மலை-

—————–

காண்டா வனமென்பதோர் காடு அமரர்க்கரையனது கண்டவன் நிற்க முனே
மூண்டாரழலுண்ண முநிந்ததுவும் அதுவன்றியும் முன்னுலகம் பொறை தீர்த்து
ஆண்டான் அவுணனவன் மார்பகலம் உகிரால் வகிராக முனிந்து அரியாய்
நீண்டான் குறளாகி நிமிர்ந்தவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-2-

முன்பு பூ பாரத்தைப் போக்கி நிர்வஹித்துப் -போந்தவன் –சீறி யருளி ––அவனுடைய பிரதிஞ்ஞா காலத்தில்
வந்து உதவிற்றிலன் ஆகில் குணங்கள் சாவாதியாம் போலே சர்வாதிகனான தான்
வாமன வேஷத்தைப் பரிகிரஹித்து நிற்கச் செய்தே மஹா பலி பக்கலிலே சென்று இரந்து
திருக் கையிலே நீர் விழுந்தவாறே ஆகாசவகாசம் இடம் அடையும்படி வளர்ந்து அளந்து கொண்டவனுக்கு வாஸ ஸ்தானம்-

——————-

அல மன்னு மடல் சுரி சங்க மெடுத்து அடலாழியி னாலணி யாருருவில்
புல மன்னு வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முனாளடுவாளமரில்
பல மன்னர் படச் சுடராழி யினைப் பகலோன் மறையப் பணி கொண்டணிசேர்
நிலா மன்னனுமாயுலகாண்டவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-3-

நில மன்னனுமாய் உலகு -ஆண்டவனுக்கு-ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைச் சொல்லுதல்
அன்றிக்கே பூ பார நிர் ஹரணம் பண்ணின படியைச் சொல்லுகையாலே ஸ்ரீ கிருஷ்ணனைச் சொல்லுதல்-

———————–

தாங்காத தோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்தவனால் அமரும்
பூம் கோதையர் பொங்கெரி மூழ்க விளைத்தது வன்றியும் வென்றி கொள் வாளமரில்
பாங்காக முனைவரொடு அன்பளவிப் பதிற்றைந்தி ரட்டிப்படை வேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்குகிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-4-

தான் ஸ்வாமியான முறை தோற்ற இருக்குமாகில் அவர்களோடும் பொருந்த ஒண்ணாது இறே-
அதுக்காக தன்னைத் தாழ விட்டு அவர்களோடு உறவு பண்ணி கலந்து –த்ரௌபதி உடைய
ஸ்த்ரீத்வத்தை பரிஹரித்தவனுக்கு வாஸ ஸ்தானம்-

———————

மாலுங்கடலார மலைக் குவடிட்டணை கட்டி வரம்புருவ மதி சேர்
கோல மதிளாய விலங்கை கெடப் படை தொட்டொரு கால மரி லதிர
காலமிது வென்றயன் வாளி யினால் கதிர் நீண்முடி பத்தும் அறுத்தமரும்
நீல முகில் வண்ணம் எமக்கிறைவர்க்கிடம் மா மலையாவது நீர் மலையே—-2-4-5-

ராவண வதம் பண்ணின அநந்தரம் திருமேனியில் பிறந்த பௌஷ் கல்யம் இருக்கிறபடி –
நீலமானது அமர்ந்து இருக்கிற முகில் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவன் –
அவ் வடிவு அழகாலே என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனுக்கு –மா மலையாவது நீர் மலையே –

———————–

பாராருலகும் பனி மால் வரையும் கடலும் சுடருமிவை யுண்டும் எனக்
காரா தென் நின்றவன் எம்பெருமான் அலை நீருலகுக்கரசாகிய அப்
பேரானை முனிந்த முனிக் கரையன் பிறரில்லை நுனக்கெனும் எல்லையினான்
நீரார் பேரான் நெடு மாலவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே –2-4-6-

ரஷ்யம் அளவுபட்டு ரஷகத்வமே விஞ்சி இருக்கிறவன் –இப்படி தான் சர்வ ரஷகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டவன் –நீரார் பேரான் –நீர் -என்று நீர்மையாய் அத்தால் ஸ்வாபாவமாய் -அதாகிறது
சேஷித்வமாய் ஆக ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தவஸ்துவும் தனக்கு பிரகாரமாய் தான் ப்ரகாரியாய் இருக்கையாலே
ஸ்ரீ நாராயணன் என்னும் திரு நாமத்தை உடையவன் –சர்வாதிகனான எம்பெருமானுக்கு ஸ்ரீ நீர் வண்ணன் என்று திரு நாமம் –

———————–

புகரார் உருவாகி முனிந்தவனைப் புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன்
நகராயின பாழ்பட நாமம் எறிந்தது வன்றியும் வென்றி கொள் வாள்அவுணன்
பகராத வனாயிர நாமம் அடிப்பணி யாதவனைப் பணியால் அமரில்
நிகராய வன்னெஞ்சு இடந்தானவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே –2-4-7-

நான் எதிரி என்று தோற்றினவனுடைய மார்வை இரண்டு கூறாம்படி பிளந்து பொகட்டவனுக்கு-ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் உடைய
வார்த்தையாலே முன்பு அவன் பண்ணின பராதி கூல்யத்தை எல்லாம் பொறுக்க வேணும் என்ன பொறுத்துப் போந்தான் –
இனி இவன் இருக்கில் இவனுக்கு அநர்த்தம் என்னும் அளவில் பின்னை அழியச் செய்து விட்டான் ஆயிற்று

—————–

பிச்சச்சிறு பீலி பிடித்துலகில் பிணந்தின் மடவாரவர் போல் அங்ஙனே
அச்சமிலர் நாணிலரா தன்மையால் அவர் செய்கை வெறுத் தணி மா மலர் தூய்
நச்சிந மனாரடையாமை நமக்கருள் செய்யென வுள் குழைந்தார்வமொடு
நிச்சம் நினைவார்க்கு அருள் செய்யுமவற்கிடம் மா மலையாவது நீர் மலையே -2-4-8-

எங்கள் பக்கலிலே அருளைப் பண்ண வேணும் என்று நெஞ்சு நெகிழ்ந்து ப்ரேமயுக்தராய் கொண்டு
நாள் தோறும் அனுசந்திக்குமவர்கள்-நிச்சம் அருள் செய்யும் அவர்க்கு –மா மலையாவது நீர் மலையே

————–

பேசுமளவன்றிது வம்மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்
நாசமது செய்திடுமா தன்மையால் அதுவே நமதுய்விடம் நாண் மலர் மேல்
வாச மணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்து உழல்வார் மதியில்
நீசரவர் சென்று அடையாதவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே—2-4-9-

திருவடிகளில் விழுந்து ஆஸ்ரயிப்பார் உடைய பாபங்களை வாசனையோடே நசிப்பிக்கும் –
அவ்வரியத்தையும் செய்யும்-துர் வ்யாதிரி வந ஸ் யதி-என்கிறபடியே –
இப்படி இருக்கையாலே அதுவே நமக்கு உஜ்ஜீவிக்கைக்கு ஸ்தானம் –

—————————-

நெடுமாலவன் மேவிய நீர் மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில்
கட மா களியானை வல்லான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்க்கு உடனே
விடுமால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிதாயிடும் அன்றி யிலங்கொலி சேர்
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக்குடை மன்னவராய் அடி கூடுவரே–2-4-10-

ஆஸ்ரயண காலத்திலேயே கர்மங்கள் அடைய விட்டோடிப் போம் –
அதுக்கு மேலே பிராப்தியும் வேண்டி இருக்கில் அதுவும் அவர்க்கு சுலபமாம் –
அன்றிக்கே-பூமிக்கு எல்லாம் தாங்களே நிர்வாஹகராய் சந்தரனைப் போலே இருக்கிற
வெண் கொற்றக் குடைக் கீழே இருந்து ஐஸ்வர்யத்தை அனுபவித்து பின்னையும் திருவடிகளிலே கூடப் பெறுவர்

———————-

பாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணைப்
படு கடலில் அமுதத்தைப் பரிவாய் கீண்ட
சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தை யுள்ளே
முளைத்து எழுந்த தீங்கரும்பினை
போரானைக் கொம்பொசித்த போர்ஏற்றினை
புணர் மருதம் இற நடந்த பொற் குன்றினை
காரானை யிடர்கடிந்த கற்பகத்தைக்
கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-1-

சர்வ வித ரஷணம் பண்ணுமவன் -சர்வருக்கும் ஸ்ப்ருஹணீ யமாய் –தானே தாரகனுமாய்-பிரபல பிரதிபந்தகங்களை
கேசி வாயைக் கிழித்தாற் போலே அநாசேயேந போக்க வல்லவனை-என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனை
இடர் பட்டு வரவும் பிற் பாடாகை அன்றிக்கே –இவன் இடர் பட்ட மடுவின் கரையிலே வந்து உதவினாப் போலே
நான் நோவு படுகிற சம்சாரத்திலே -சம காலத்திலேயே –காணப் பெற்றேன் என்கிறார்

—————-

பூண்ட வத்தம் பிறர்க்கடைந்து தொண்டு பட்டுப்
பொய் நூலை மெய் நூல் என்று என்றும் ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின்
எந்தை என் வணங்கப் படுவானை கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்ற வூர் நித்திலத்தைத் தொத்தார் சோலை
காண்டவத்தைக் கன லெரி வாய்ப் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-2-

எனக்கு ஜனகனாய் எனக்கு சென்று ஆஸ்ரயிக்கலாம் படி சீலவானாய் உள்ளவனை –காட்டுத் தீயில் வர்ஷித்தாற் போலே
நோவு படுகிற சம்சாரத்திலே காணப் பெற்றேனே-

———————

உடம்புருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய்
உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்று மேய்த்து
விளையாட வல்லானை வரை மீ கானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கோர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே —-2-5-3-

ஸ்வ ப்ராப்தி உபாயங்களில் பெரு நெறியாய் உள்ளவனை –ஜகத்தை அடைய ரஷிக்க கடவனாய் இருக்கிறவனுடைய
ரஷணத்துக்கு நான் இப்போது விஷய பூதன் ஆனேன் என்கிறார்-

——————

பேய்த்தாயை முலையுண்ட பிள்ளை தன்னைப்
பிணை மருப்பில் கரும் களிற்றைப் பிணை மானோக்கின்
ஆய்த்தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை
அந்தணர் தமமுதத்தைக் குரவை முன்னே
கோத்தானை குடமாடு கூத்தன் தன்னைக்
கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்
காத்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே—2-5-4-

ஆஸ்ரித ஸ்பர்சமுடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக இருந்த செயலாலே லோகத்தை அடைய எழுதிக் கொண்டவனை –
எல்லார் கண் முகப்பே திருக் குரவை கோத்தவனை-
தன்னுடைய ரஷணத்தைக் காட்டி என்னை அனன்யார்ஹனாக எழுதிக் கொண்டவனை –
அவனை ரஷகன் என்று அறியப் பெற்றேன் –எனக்கு ஒரு குறை உண்டோ என்கிறார்-

—————————

பாய்ந்தானைத் திரி சகடம் பாரி வீழப்
பாலகனாய் ஆலிலையில் பள்ளி யின்ப
மேய்ந்தானை இலங்கொளி சேர் மணிக் குன்றன்ன
ஈரிரண்டு மால் வரைத் தோள் அம்மான் தன்னை
தோய்ந்தானை நிலமகள் தோள் தூதிற் சென்று
அப்பொய்யறை வாய்ப்புகப் பெய்த மல்லர் மங்கக்
காய்ந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே—2-5-5-

நிலவறையிலே பிரவேசிப்பித்து நலிய வேணும் என்று –பதிபடை கிடந்த மல்லர் முடிந்து போம் படி சீறினவனை-
அந்த க்ருத்ரிமத்தைத் தப்பி என்னை எழுதிக் கொண்டவனை-காணப் பெற்றேன் என்கிறார் –

—————————-

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக்
கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே
படர்ந்தானை படுமதத்த களிற்றின் கொம்பு
பறித்தானைப் பாரிடத்தை எயிறு கீற
விடந்தானை வளை மருப்பின் ஏனமாகி
இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-

பரப்பை உடைத்தான பூமியைத் திரு எயிற்றாலே கிழியும் படி இடந்தவனை –
உடம்பு நோவ வ்யாபரித்த படி சொல்லுகிறது –
பூமி அந்தரிஷ்யாதிகள் போராதபடி யாக வளர்ந்து லோகத்தை அளந்து கொண்டவனை –
எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த நீர்மையாலே என்னை எழுதிக் கொண்டவனை –
அவன் தானே திருவடிகளை கொண்டு வந்த வைத்த அன்று தப்பின நான் இன்று இங்கே
காணப் பெற்றேன் -என்கிறார் –

———————-

பேணாத வலி யரக்கர் மெலியவன்று
பெரு வரைத் தோளிற நெரித்தன்ற வுணர்கோனை
பூணாகம் பிளவெடுத்த போர் வல்லோனைப்
பொரு கடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை
ஊணாகப் பேய் முலை நஞ்சுண்டான் தன்னை
உள்ளுவார் உள்ளத்தே யுறைகின்றானை
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே-2-5-7-

அவள் முலை கொடா விடில் தரியாதாளாய் கொடுத்தால் போலே தானும் முலை உண்ணா விடில் தரியாதானாய்
செவ்வியாருக்கு தான் செவ்வியனாய் பரிமாறும்படியும் துஷ்டர்க்குத் தானும் அப்படி இருக்கும் படியும்
காண வேணும் என்று தட்டித் திரிகிற நான் பசித்தவன் ஜீவிக்கப் பெற்ரார் போலே காணப் பெற்றேன் –
சாஸ்தரங்களிலே கேட்டு-ஒரு தேச விசேஷத்தால் சென்றால் காண இருக்கை அன்றிக்கே
விடாய்த்த இந்நிலத்திலே காணப் பெற்றேன்-

——————

பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப்
பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை
தண்ணார்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும்
தடவரை மேல் கிடந்தானைப் பணங்கள் மேவி
எண்ணானை எண்ணிறந்த புகழினானை
இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானை கண்ணாரக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-8-

சர்வேஸ்வரன் ஆகிறான் தன்னை ஆஸ்ரயித்தார்க்கு தன்னோடு ஒத்த வரிசையை கொடுப்பன் ஒருவன் என்று
கொண்டு அவனுடைய நீர்மையை சொல்லுகைகாக –அல்லாதார்க்கு உத்கர்ஷத்தை சொல்லா நிற்கும் பிரமாணங்கள்
அவர்கள் தாங்களும் புழுக் குறித்த எழுத்துமா போலே –சிலவற்றைத் தோற்றச் செய்யும் –
அவற்றைக் கண்டு இவர்கள் பக்கலிலேயும் குவால் உண்டு -என்று நாட்டார் பிரமிக்கைக்கு உடலாய் இருக்கும் –
ஆக பிரமாண கதி இருந்தபடியாலும்-சேதனர் மந்த மதிகளாய் இருந்தபடியாலும்
இவற்றின் தாத்பர்யம் அறியாதே-சம்சார சாகரம் -என்று சொல்லுகிற கடலிலே புக்குப் போம் இத்தனை இறே –
அவற்றை அனுசந்தித்துச் சொன்ன இவ் வாழ்வார்கள் ஈரச் சொல் இன்றாகில் – என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார்-
ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய சூரிகள் பரிய இருக்கிறவன் இங்கே வந்து சாய்ந்து அருளுவதே –
இது என்ன நீர்மை -என்று எப்போதும் எண்ணப் படுமவன்
படபாமுகாக்னி நிறைந்தால் போலே காண வேணும் என்று
உறாவிப் பட்டினி விட்ட கண்களின் உடைய உறாவுதல் தீர காணப் பெற்றேன் –
விலஷண சரீரத்தைப் பரிக்ரகித்து-ஒரு தேச விசேஷத்தே போய் காண்கை யாகிறது
ஆரேனும் பசிக்க ஆரேனும் ஜீவித்தாப் போலே இருப்பது ஓன்று இறே
காண வேணும் என்று உறாவின கண்களோடு காணப் பெற்றேன்-

————————–

தொண்டாயார் தாம் பரவும் அடியினானைப்
படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல்
விண்டானை தென்னிலங்கை யரக்கர் வேந்தை
விலங்குண்ண வலங்கை வாய்ச் சரங்கள் ஆண்டு
பண்டாய வேதங்கள் நான்கும்
ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கமாறும்
கண்டானை தொண்டனேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லத்தை தல சயனத்தே-2-5-9-

சாஸ்த்ரீய ஜ்ஞானத்தாலே தன்னை ப்ராபிக்கைக்கு ஈடான வழியைக் கண்டு வைத்தவனை –
அப்பெரு வழியான சாஸ்திர ஜ்ஞானத்தாலே அன்றிக்கே இக் கண்ணாலே காணப் பெற்றேன் –

—————–

பட நாகத்தணைக் கிடந்து அன்று அவுணர் கோவை
பட வெகுண்டு மருதிடை போய்ப் பழன வேலி
தடமார்ந்த கடல் மல்லை தல சயனத்துத்
தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவர் தம்மை
கடமாரும் கருங்களிறு வல்லான்
வெல் போர்க் கலி கன்றி யொலி செய்த வின்பப் பாடல்
திடமாக விவை யைந்தும் ஐந்தும் வல்லார்
தீவினையை முதலறிய வல்லார் தாமே –2-5-10-

சர்வாதிகனான புண்டரீகாஷன் என்று தோற்றும் படி கண் வளர்ந்து அருளினவனை ஆயிற்று கவி பாடிற்று –
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –ப்ராக்தமான கர்மங்களை தாங்களே வாசனையோடு போக்க வல்லார் ஆவார்கள்
பாபங்களை கூடு பூரித்துக் கொள்ளும் இத்தனை போக்கி எலி எலும்பனான இவனால் இது போக்கிக் கொள்ளலாம்
என்றால் -இது கூடுமோ என்னில் – அதில் ஒரு தட்டு இல்லை இது த்ருடம்

———————-

நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார் மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1-

பிரயோஜனாந்த பரராய் –தன்னை உகவாது இருப்பாருக்கும் கூட அபேஷித சம்விதானம் பண்ணுமவன்-
நம்மை உகப்பாரையும் கிடைக்க வற்றோ என்று அவசர ப்ரதீஷனாய் இங்கே வந்து கிடக்கிற இந்நீர்மையை அனுசந்தியாதே
புறம்பே உண்டு உடுத்து போது போக்குவாரை ஒரு வஸ்துவாக நினைத்து இரோம் என்கிறார்-
கலங்குகை போலே காணும் மஹா மதிகளாவது
அஸ்தாநே பயசங்கை பண்ணுவார்க்கு எல்லாம் பேராய் கொள்ளீர்-மஹா மதிகள் என்று –
நித்ய சூரிகள் நடுவே இருக்கக் கடவ வஸ்து இப்படி சம்சாரத்திலே புகுந்து தரைக் கிடை கிடப்பதே –
இது என்ன நீர்மை இருக்கும்படியே என்று அநவரதம் பாவித்தல் சொல்லுதல் செய்கையாயிற்று சேதனர்க்கு செய்ய அடுப்பது –
இது செய்யாதே இருப்பாரை – அவனிடை ஆட்டம் கொண்டு -கார்யம் அற்று-
கேவல தேக போஷண பரராய் இருப்பாரை –எண்ணப் பெற்றிலோம் என்ற
அனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை –அவஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே
வஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே-அவ்வளவிலும் எண்ணோம் என்கிறார் .

———————

பார்வண்ண மட மங்கை பனி நன் மா மலர்க் கிழத்தி
நீர் வண்ணன் மார்வகத்தில் இருக்கையை முன் நினைந்தவனூர்
கார் வண்ண முது நீர்க் கடல் மல்லைத் தல சயனம்
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே–2-6-2-

முதல் தன்னிலே நம் குற்றம் அவன் திரு உள்ளத்திலே படாத படி பண்ணும் ஸ்ரீ பூமி பிராட்டியாரும் –
அவன் தன் சர்வஞ்ஞத்வத்தாலே நம் குற்றத்தை கண்டானே ஆகிலும் -அவன் தன்னை –
ந கச்சின் ந அபராத் யதி-என்று பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும் அவன் பக்கலிலே கிட்ட இருக்கையாலே
நமக்கு இனி இழக்க வேண்டாதபடி சுலபன் என்று அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை
ஹிருதயத்தில் அனுசந்திக்கும் அவர்கள் என்னை அடிமை கொள்ளுமவர்கள் என்கிறார்-
நமக்கு புருஷகார பூதைகளான நாய்ச்சிமார்கள் அங்கே சேர இருந்தார்கள் என்று அனுசந்தித்தால் பின்னை
நமக்கு கிட்டுகைக்கு ஒரு குறை இல்லை இறே –
மாதா பிதாக்கள் சேர இருந்த இடத்தில் பிரஜைகளுக்கு சென்று கிட்டுகையில் ஒரு அருமை இல்லை
கீழ்ப் பாட்டில் அங்கு நமக்கு எண்ணுகைக்கும் எண்ணாமைக்கும் பிராப்தி இல்லை –-இதுக்கு எல்லாம் கடவார் அவர்கள் என்கிறார் –
அவர்கள் நின்ற நிலைகளிலே பிரமாணம் காட்டாதே நம்மை கார்யம் கொள்ள வுரியார் –

————————–

ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான்
வானத்திலவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலம் கொள்ள
கானத்தின் கடல் மல்லைத் தல சயனத்துறை கின்ற
ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே -2-6-3-

ஒருதலைக் காமமாய் போகாமே இவன் வந்து கிடக்கிறது நமக்காக என்று தாங்களும் நினைக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் –
அவர்கள் ஆளாத போது வேறு சிலருக்கு சேஷ பூதர் அல்லோம் –

———————-

விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே -2-6-4-

அவன் பிரதி பஷ நிரசன சமர்த்தனாய் இருக்கச் செய்தே ஆநு கூல்யத்தாலே கார்யம் கொள்வானாக நினைத்து வந்து
கிடக்கிறபடியை அனுசந்தித்து ஈடுபடுமவர்கள் என் ஒருவன் அளவன்றிக்கே என் குலத்துக்காக நாதர் ஆவார்கள் என்கிறார்-
இவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார் நமக்காக விறே -என்று
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் – எங்கள் குல தெய்வமே-
குல தைவதம் தத் பாதாராவிந்தம் –என்னும் அளவல்ல எங்களது-

——————-

பிச்சச் சிறு பீலி சமண் குண்டர் முதலாயோர்
விச்சைக் கிறை யென்னும் அவ் விறையைப் பணியாதே
கச்சிக் கிடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம்
நச்சித் தொழுவாரை நச்சென்றன்நன்னெஞ்சே–2-6-5-

குத்ருஷ்டிகள் சொல்லுகிறவற்றை ஆஸ்ரயித்து வர்த்தியாதே –ஆஸ்ரிதர்க்காக திரு வெக்காவில் படுக்கை மாறிக் கிடந்தவனை –
ஓர் ஆஸ்ரிதனுக்காக தரை கிடக்கிற தேசம் –அவன் தனக்கு பரம ப்ராப்யமாக கொண்டு வந்து நிற்கிற தேசத்தை –
கர்த்தவ்யம் என்று தொழா நிற்கச் செய்தே புறம்பே-நெஞ்சு அந்ய பரமாய் இருக்கை அன்றிக்கே
ஆசையின் கார்யம் தொழ வேண்டும் என்று தோற்றும்படி இருக்கை –
திரு கடல் மல்லையைத் தொழுகிறவர்கள் உடைய அவ்வேற்றம் எல்லாம் நமக்கு உடலாக அவர்களை ஸ்நேஹி-என்கிறார்-

———————

புலன் கொள் நிதிக் குவையோடு புழைக் கைம்மா களிற்றினமும்
நலம் கொள் நவ மணிக் குவையும் சுமந்து எங்கும் நான்றொசிந்து
கலங்களி யங்கும் மல்லைக் கடல் மல்லைத் தல சயனம்
வலங்கொள் மனத்தாரவரை வலங்கொள் என் மட நெஞ்சே–2-6-6-

ஸ்ரீ திருக்கடல் மல்லையிலே சுழிக்கும் நெஞ்சு உடையவர்களை மட நெஞ்சே––வலம் கொள் –
நமக்கு அவர்கள் நின்ற நிலை போராதுஅவர்கள் பக்கல் அநுவர்த்தநத்திலே அந்வயிக்க வேணும் –

——————–

பஞ்சிச் சிறு கூழை உருவாகி மருவாத
வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல் முன் நண்ணாத
கஞ்சைக் கடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம்
நெஞ்சில் தொழு வாரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே-2-6-7-

அந்த ஸ்ரீ திருக்கடல் மல்லையையும் அங்கு கிடக்கிற ஸ்ரீ நாயனாரையும் தேடி இராதே
தொழுவார்கள் உத்தேச்யராய் தொழு
என் தூய் நெஞ்சே –ததீய சேஷத்தளவிலே நிற்கும்படியான சுத்தியை யுடையை யிறே நீ –

———————

செழு நீர் மலர்க்கமலம் திரை யுந்து வன் பகட்டால்
உழு நீர் வயலுழ வருழப்பின் முன் பிழைத்து எழுந்த
கழு நீர் கடி கமழும் கடல் மல்லைத் தல சயனம்
தொழு நீர் மனத்தவரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே –2-6-8-

ஸ்ரீ திருக் கடல் மல்லையைத் தொழுகை காதா சித்கமாகை தவிர்ந்து ஸ்வபாவம் ஆம்படியான நெஞ்சை யுடையாரை –
அவர்களுக்கு ஊரைத் தொழுகை யாத்ரையானவோபாதி அவர்கள் தங்களை தொழுகை கிடாய் நெஞ்சே உனக்கு யாத்ரை –
பாகவத சேஷத்வம் நன்று என்று உபதேசிக்கலாம் படி இறே உன் சுத்தி இருக்கிறது –

—————————-

பிணங்களடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச் சக்கரத்து எம்பெருமானார்க்கிடம் விசும்பில்
கணங்களி யங்கும் மல்லைக் கடல் தல சயனம்
வணங்கும் மனத்தாரவரை வணங்கு என் தன் மட நெஞ்சே-2-6-9-

இங்கே வந்து சாய்ந்து அருளின நீர்மையை அனுசந்தித்து தொழும் நெஞ்சு உடையாரை –
அவர்கள் தொழும் விஷயத்தை தேடி இராதே-நெஞ்சே உனக்குத் தொழுகைக்கு விஷயம் அவர்கள் தாங்கள் கிடாய்-

———————-

கடி கமழு நெடு மறுகில் கடல் மல்லைத் தல சயனத்து
அடிகளடியே நினையும் அடியவர்கள் தம்மடியான்
வடி கொள் நெடு வேல் வலவன்கலிகன்றி யொலி வல்லார்
முடி கொள் நெடுமன்னர் தம் முதல்வர் முதலாவாரே–2-6-10-

ரஷிக்கைக்கு – கையில் வேல் பிடித்தால் போலே ஆயிற்று சேஷத்வத்திலும் -பாகவத சேஷத்வத்தில் நின்றபடி –
இத் திருமொழியை அப்யசிக்க வல்லார் –முடியை உடையராய் நாட்டுக்கு அநந்ய பிரதானராய் இருந்துள்ள ஷத்ரியருக்கு
பிரதானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகராய் நித்ய ஸூரிகளோடு சத்ருசராகப் பெறுவர்-

——————

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-1-

முதலிலே ஸ்ரீ பாற் கடலாய் அது தன்னை கோதாக்கி-அம்ருதமாய் –அவ் வம்ருதம் தானே கோதாம்படி
பிறந்தவள் ஆயிற்று –வடிவு அழகாலும் பருவத்தாலும்-பிறப்பாலும் வந்த ஏற்றத்தை உடையாள் ஆனவளும் –
அவள் இருக்கிற இருப்பு தனக்கு பற்றுகைக்கு பற்றாசு என்று பற்றினவளை-
திருமுகம் என்று சமுதாய சோபை இறே அவளுக்கு சொல்லுகிறது –
குவளை யங்கண்ணி –என்று அவயவ சோபையால் உண்டான ஏற்றம் சொல்லுகிறது இவளுக்கு –
அவன் தன்னில் காட்டில் –அஸி தேஷணை-என்று அவள் கண்ணுக்கு உண்டான ஏற்றதோ பாதியும்
போருமாயிற்று அவளில் காட்டில் இவள் கண்ணுக்கு உண்டான ஏற்றம் –
அவள் மார்வை ஆசைப்பட்டாள்
இவள் திருவடிகளை ஆசைப்பட்டாள்
அவன் வாசி அறிந்தார் அவன் மார்வை ஆசைப் படுவார்கள் –
அவளோடு கூடினவன் வாசி அறிந்தார் அவன் திருவடிகளை பற்றும் இத்தனை இறே –
ஸ்ரீ கலங்கா பெரு நகரில் புகப் பெறாதே கை கழியப் போனாரும் பிழைக்கைக்காக ஸ்ரீ திருவிட வெந்தையிலே
வந்து நிற்கிற என் குல நாதன் ஆனவனே
பின்னானார் வணங்கும் -என்கிறபடியே சொல்லு என்று கிரியை

—————————

துளம்படு முறுவல் தோழியார்க் கருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள்
குளம்படு குவளைக் கண்ணினை எழுதாள் கோல நன் மலர் குழற்கு அணியாள்
வளம்படு முந்நீர் வையம் முன்னளந்த மால் என்னும் மாலின மொழியாள்
இளம்படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-2-

உண்ணவும் பொறாதே-பட்டினி இடவும் பொறாதே –இருக்கும் ஸூ குமாரரைப் போலே
அதிகமான சம்ச்லேஷம் விச்லேஷம் பொறுக்க மாட்டாத படியான
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் உடைய மார்த்த்வம் இருக்கும் படி -என்று –
இவளுடைய பிரகிருதி அறிந்து கலக்கைக்காக ஸ்ரீ திருவிட வெந்தையில் வந்து எழுந்து அருளி இருக்கிற நீ
உன்னுடைய திரு உள்ளத்தாலே நினைத்து இருக்கிறது என் –

———————–

சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தட முலைக்கணியிலும் தழலாம்
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும்
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறை நில்லா என் தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே -2-7-3-

நை வார்த்தைர் ந ச பூஷணை -என்னும்படி பண்ணுகைக்குகோ
நீ இங்கே வந்து இருக்கிறது
ஸ்ரீ ராம அவதாரத்தில் இழவு தீர்க்கைக்கு அன்றோ இங்கு வந்து இருக்கிறது

——————————

ஊழியில் பெரிதால் நாழிகை யென்னும் ஒண் சுடர் துயின்றதால் யென்னும்
ஆழி யும் புலம்பும் அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினில் கொடிதாம்
தோழியோ வென்னும் துணை முலை யரக்கும் சொல்லுமின் என் செய்கேன் யென்னும்
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-4-

ஏழை-கிடையாதது தூர நின்றால் கிடைக்கும் அதில் போலே சாபலத்தை பண்ணுமவள்
இவளும் தன் சாபலமும் பட்டது படுகிறாள் என்று ஆறி இருக்க ஒண்ணாத படி இருக்கும் மகள் –
இடவெந்தை –உக்தியாலே தன் சாபலம் தோற்ற இருக்கிற இவளைப் போல் அன்றிக்கே
கிரியையாலே சாபலம் தோற்ற இருக்கிற நீ நினைத்து இருக்கிறது என்

—————————–

ஓதிலும் உன் பேர் அன்று மற்று ஓதாள் உருகும் நின் திரு வுரு நினைந்து
காதன்மை பெரிது கையற வுடையள் கயல் நெடுங்கண் துயில் மறந்தாள்
பேதையன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-5-

உகவாதார் முன்பே நம்முடையார் நோவுபட விட்டுப் பார்த்திருக்குமது நமக்கு போராது என்று இருக்கக் கடவ நீர்
இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என் –
ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு ஆகில் போரும் என்னவுமாம் –இப்படி கைவிட்டு இருக்குமது உமக்கு போராது-

——————–

தன் குடிக்கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயிலங்கை
வன் குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின்புறும் மயங்கும்
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயத்திருந்த
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-6-

உதவாதவன் உதவாது ஒழிகை அன்றிக்கே உதவும் ஸ்வ பாவனாய் இருந்து வைத்து
நம் தசை இதுவாய் இருக்க உதவாது ஒழிவதே –என்று மோஹிக்கும்-
நம் தசையை உடையாள் ஒருத்திக்கு உதவினவன் அன்றோ
என்று அந்த அண்ணிமையை அனுசந்தித்து இனியளாய்-
அணித்தாக உதவினவன் நமக்கு வாராது ஒழிவதே -என்று மயங்கும்
இவளுடைய வை வர்ண்யமும் அத்யாவச்யமும் செல்லாமையும் வடிவு அழகும் பிறப்பும்
இருந்தபடியாலும் உமக்கு உதவாது ஒழியப் போமோ-
இவளைக் காட்டில் உமக்கு உண்டான வைவர்ண்ய உத்யோதகம் இறே ஸ்ரீ திருவிடவெந்தை யில் இருப்பு –
உடம்பு வெளுப்பு அன்றாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க அமையும் இறே –
உம்முடைய வைவர்ண்யம் தோற்ற ஸ்ரீ திருவிடவெந்தையில் எழுந்து அருளி இருக்கிற நீர்
இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என்-

———————

உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி எனக்கன்பு ஒன்றிலளால்
வளங்கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே யென்று வாய் வெருவும்
களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடே வலம் சேர்ந்திருந்த
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-7-

ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளைக் கை பிடிக்கைகாக ஸ்ரீ மிதிலையிலே புறச் சோலையிலே விட்டுக் கொண்டு இருந்தால் போலே
இவளைப் பெறுகைகாக ஸ்ரீ திருவிடவெந்தையில் விட்டுக் கொண்டு இருக்கிற நீர் இவள் விடை யாட்டத்தில் என் நினைந்து இருந்தீர் –

————————

அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் யென்னும்
புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர் மலைக்கு யென்னும்
குலங்கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-8-

நம் தசை இருந்த படியாலே ஸ்ரீ திரு நீர் மலையிலே போய் புக்கே விடுவோம் போலே இருந்ததீ
யென்று விலக்க நினைக்கிற தாயாரோடு தோழிமாருக்கு சொல்லுமா போலே சொல்லா நின்றாள் –
ராகவோர்ஹதி வைதேஹீம் -என்னும்படியே உனக்கு தகுதியாம்படியாய் இருக்கிற இவளிடை யாட்டத்தில்
நீர் நினைத்து இருக்கிறது என்-

————————–

பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள்
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இவ் வணங்கினுக்குற்ற நோய் அறியேன்
மின் குலா மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு
என் கொலாம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-9-

தாய் கைவிடுதல் தான் கை விடுதல் செய்தால்-அதைக் கொண்டு நோக்குகைக்கு ஈடாக
ஸ்ரீ திருவிடவெந்தையில் வந்திருக்கிற நீர்
உம்முடைய திரு உள்ளத்தால் நினைந்து இருக்கிறது என் –
வாலி பக்கலிலே கண்டோம் இறே ப்ராதாக்கள் உதவாதபடி –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே கண்டோம் இறே தமப்பன் உதவாதபடி
தான் தன்னை அனுசந்தித்து அஞ்சின அர்ஜுனனுக்கு
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னக் கண்டோம் இறே அவன் உதவும் படி

————————

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே-2-7-10-

அறிவு குடி போய் நோவு பட தமக்கு அறிவு கொடுத்த அவதாரங்களை நினைக்கிறார்
அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு தீர்க்கைக்காக ஸ்ரீ திருவிடவெந்தையில்
வந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று –
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –
பிராரப்த கர்மாக்களை வாசனையோடு போக்கப் பெறுவார்கள்-தாம் மோஹிப்பது உணர்வதாக திருத் தாயார்
கூப்பிடுவதாக வேண்டாதபடி பகவத் அனுபவமே யாத்ரையான தேசத்திலே புக்கு அனுபவிக்கப் பெறுவார்கள் –

————————

திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப
முரிதிரை மா கடல் போல் முழங்கி மூ உலகும் முறையால் வணங்க
எரியன கேசரி வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா
அரி உருவாம் இவர் யார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே -2-8-1-

ஒரு சிறுக்கனுக்கு தமப்பன் பகையாக அவனிலும் அணியனாய் உதவி நோக்கினவனைப் போலே
இரா நின்றார் -இவர் யார் தான் என்கிறாள்-
அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே நிச்சயிக்க ஒண்ணாத படி இறே விஷய ஸ்வபாவம் –
ஒரு சிறுக்கனுக்காக உதவின அவ்வளவோ –
உனக்கு உதவுகைகாக இங்கே வந்து அவசர ப்ரதீஷனாய் வந்து நிற்கிறவன் அன்றோ நான் -என்கிறார் –

——————

வெந்திறல் வீரரில் வீரர் ஒப்பார் வேதமுரைத்து இமையோர் வணங்கும்
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர் கொல் தெரிக்க மாட்டேன்
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த
அந்தணர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-2-

வீரத்தைப் பார்த்தவாறே சத்ருக்களும் யேத்தும்படியாய் இருந்தது –
சீலத்தைப் பார்த்தவாறே அனுகூலர் அடைய யேத்தும்படியாய் இருந்தது –
இவரை இன்னார் என்று நிச்சயிக்க போகிறது இல்லையீ
கழஞ்சு மண் இரந்து வந்தவன் அல்லேன் உன்னை இரந்து வந்தவன் நான் என்கிறார்
பிறர்க்காக இரந்தவன் அல்லேன் எனக்காக இரந்தவன் என்கிறார்-

——————-

செம்பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ வெண் மறுப்பொன்று பறித்து இருண்ட
அம்புதம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே—2-8-3-

யுத்த உன்முகமாய் இருக்கிற குவலயாபீடத்தை முடிக்கும்படியாக நிறத்துக்கு பரபாகமான வெண்மையை உடைய
கொம்பை பறித்து இருண்ட மேகம் போலே இருக்கிற இவர் ஆர் தான் என்ன மேல் வார்த்தை –
கம்ச ப்ரேரிதமான குவலையா பீடத்தை நிரசித்து கம்சன் படைவீட்டில் பெண்கள் பயத்தைப் போக்கின அவ்வளவே அல்ல
உன் பயம் தீர்க்கைகாக வந்து நிற்கிறவன் நான் என்கிறார்-

—————————–

மஞ்சுயர் மா மணிக்குன்றம் ஏந்தி மா மழை காத்து ஒரு மாயவானை
அஞ்ச அதன் மருப்பன்று வாங்கும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்
வெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து
அஞ்சுடர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-4-

அவனுடைய ஆச்ரயமான செயல்கள் எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை-திவ்யாயுதங்களை தரித்து
அருளிச் செய்கிற வார்த்தை அடைய வேதம் போலே இரா நின்றது
முறை கெடாதபடி பரிமாறக் கடவ பரம பதத்தில்-அத்யததபரோதி தோஜ்யோதிர் தீப்யதே
அத்தனை தூரஸ்தன் என்று கை வாங்க வேண்டா-உனக்காக கிட்ட வந்து இருக்கிறவன் காண் என்கிறார்-

————————–

கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்து நீண்ட
மலைகளும் மா மணியும் மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற
அலைகடல் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-5-

கடல் போலே இழிய ஒண்ணாத படி-அபரிச்சின்னன் என்று இருக்க வேண்டா
உனக்கு நெஞ்சால் பரிச்சேதிக்கலாம்படி வந்து நிற்கிறேன் என்கிறார்

————————–

எங்கனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறைவும் எல்லாம் தம் மனவாகப் புகுந்து தாமும்
பொங்கு கருங்கடல் பூவை காயா போதவிழ் நீலம் புனைந்த மேகம்
அங்கனம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே-2-8-6-

ஓன்று உபமானமாகப் போராமையாலே-அங்கும் இங்குமாக-கதிர் பொறுக்குகிறார்
பெரிய கிளர்த்தியை உடைத்தாய் இருக்கிற கருங்கடல் பூவை காயா செவ்வியிலே அலர்ந்த நீலம்
இவற்றோடு ஒக்க தொடுத்த மேகம்
சொன்ன உபமானம் தான் உபமேயதுக்கு போராமையாலே-உனக்கு அறியாமைக்கு உடலாக சொல்லா நின்றாய்
நீ அறிகைக்காக வந்து நிற்கிறவன் அன்றோ நான் என்கிறார்-

————————–

முழுசி வண்டாடிய தண் துழாயின் மொய்ம்மலர்க் கண்ணியும் மேனி யஞ்சாந்து
இழுசிய கோலம் இருந்தவாறும் எங்கனம் சொல்லுகேன் ஓவி நல்லார்
எழுதிய தாமரை யன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும்
அழகியதாம் இவரார் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே–2-8-7-

இவ் ஒப்பனை அழகைக் கொண்டு ஸ்ரீ பரமபததில் இருக்கிறேன் என்று கூச வேண்டா
உனக்காக வந்து நிற்கிறவன் நான் என்கிறார்-

——————————

மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில்
காவி யொப்பார் கடலேயும் ஒப்பார் கண்ணும் வடிவும் நெடியராய் என்
ஆவி யொப்பார் இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-8-

வ்யதிரேகத்தில் ஜீவிக்க அரிதாம்படி இரா நின்றார் இவர் ஆர் தான் என்ன-
சொன்னபடி பொல்லாது-ஞாநீத் ஆத்ம மே மதம் -கேட்டு அறியாயோ என்றார் –
உன்னை ஒழிய ஜீவியாதவன் காண் நான் என்கிறார் –

—————————-

தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு
நஞ்சமுடைத்திவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறிய மாட்டேன்
அஞ்சுவன் மற்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-9-

இவர் சொல்லுகிற வார்த்தை தான் பொல்லாது அல்ல இறே
ஆகிலும் அவரையும் நம்மையும் பார்த்தவாறே அஞ்சா நின்றேன்
அப் பெரியவனுக்கு இவ்வாற்றாமை உண்டாகக் கூடுமோ என்று அஞ்சா நின்றேன்
ஒரு வசநம் கொண்டு ஈஸ்வரன் என்று அஞ்ச வேண்டா நீ அஞ்சாமைக்கு உன்னோடு சஜாதீயனாய் வந்து நிற்கிறவன்
அன்றோ நான் என்கிறார்-

————————

மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீள் முடி மாலை வயிரமேகன்
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி தன்னை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன்னிசையால் சொன்ன செஞ்சொல்மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே—2-8-10-

உருவு வெளிப்பாட்ட்டாலே அனுபவித்து பிறருக்கு இருந்து சொல்ல வேண்டாதே
நித்ய அனுபவம் பண்ணிக் களிக்கலாம் தேசத்திலே புகப் பெறுவர் என்கிறார்-

——————

சொல்லு வன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம் அதுவே-2-9-1-

தாம்தாம் கர்மத்தாலே கிலேசப்படுகிற பிராணிகளை தீம்பிலே கை வளர்ந்த பிரஜையை காலிலும் கழுத்திலும்
விலங்கிட்டு வைக்கும் பித்ராதிகளைப் போலே இவற்றுக்கு ஹித ரூபமாக உபசம்ஹாரத்தை
பண்ணும் ருத்ரனுக்கு அந்தர்யாமியாயும் ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தைப் பண்ணியும் –
பிரஜாபதிக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்துப் போருகிற ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு வாசஸ்தானம் ஆகிறது-
அவன் ஆஸ்ரயிக்கிற ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம்-நல்ல நீர் நலம் சூழ்ந்து அழகியதாய் இருக்கிற ஸ்ரீ கச்சியில் –
ஸ்ரீ திருக்கடல் மலை யாயிற்று படை வீடு-என்கிறார்-

———————

கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித்
தார் மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி
தேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திரள் வாட்டிய திண சிலையோன்
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-2-

ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் ராவண வதம் பண்ணினதோடு
இவன் சத்ரு வதம் பண்ணினதோடு
வாசி அற்று இருக்கிறது ஆயிற்று இவருடைய ஆதரம்-

———————

உரந்தரு மெல்லணைப் பள்ளி கொண்டான் ஒரு கால் முன்னம் மா வுருவாய்க் கடலுள்
வரந்தரு மா மணி வண்ணனிடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல் நெடு வாயிலுகச் செருவில் முன நாள்
பரந்தவன் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே-2-9-3-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் மதிக்கும் படியான ஆண் பிள்ளைத்தனம் இறே அவரதும் –
கட மா களி யானை வல்லான் -என்றும்
ஆடல் மா வலவன் -என்றும்
மருவலர் தம்முடல் துணிய வாள் வீசும் பரகாலன் -என்றும்
துறை தோறும் தலையாய் இருக்கிற ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் இறே மதிக்கிறார் –

———————–

அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரோடு வான் எரி கால் முதலா
உண்டவன் எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
விண்டவர் இண்டைக் குழாமுடனே விரைந்தார் இரியச் செருவில் முனிந்து
பண்டு ஒரு கால் வளைத்தான் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே-2-9-4-

சத்ருக்களின் உடைய செறிந்த குழாமானது சிதறி ஓட-முனிந்து சீறி
முன்பு ஒருகால் கையிலே வில் வளைத்தவன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார்

————-

தூம்புடைத் திண் கைவன்தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள்
பூம்புனல் பொய்கை புக்கனவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
தேம் பொழில் குன்றெயில் தென்னவனைத் திசைப்பச் செருமேல் வியந்து அன்று சென்ற
பாம்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-5-

நாக லோகத்தை வென்று சர்ப்பத்தை த்வஜமாக எடுத்தானாக சொல்லக் கடவது –
பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார்-

———————

திண் படைக் கோளரியின் உருவாய்த் திறலோன் அகலம் செருவில் முன நாள்
புண் படப் போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப விடை வெல் கொடி வேற் படை முன் உயர்த்த
பண்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே–2-9-6-

ஹிரண்யன் உடலுக்கு வளையாத திரு உகிரை ஆயுதமாக உடைய நரசிம்ஹமாய் –
பெரு மிடுக்கனான ஹிரண்யன் உடைய மார்வை யுத்தத்திலே புண் படும்படி -போழ்ந்த புனிதன் இடம் –
பண்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே என்கிறார்-

————-

இலகிய நீள் முடி மாவலி தன் பெரு வேள்வியில் மாண் உருவாய் முன நாள்
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
உலகுடை மன்னவன் தென்னவனைக் கன்னி மா மதிள் சூழ் கரு ஊர் வெருவ
பல்படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-7-

மகாபலி உடைய யஞ்ஞ வாடத்திலே இரப்பிலே தகண் ஏறிய வடிவை உடையவனாய்
முன்பு ஒரு நாளிலே கையிலே நீர் விழுந்த போதே பரப்பை உடைத்தான பூமியைக் கைக் கொண்டு
அளந்தவனுக்கு இடந்தான் ஸ்ரீ பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார்-

—————

குடைத்திறல் மன்னவனாய் ஒரு கால் குரங்கைப் படையா மலையால் கடலை
யடைத்தவன் எந்தை பிரானது இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
விடைத் திறல் வில்லவன் நென் மெலியில் வெருவச் செரு வேல் வலங்கைப் பிடித்த
படைத்திறல் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே—2-9-8-

சக்கரவர்த்தி திருமகனாய் பூசல் என்றால் அஞ்சக் கடவ குரங்குகளைப் படையாகக் கொண்டு
நீரிலே ஆழக் கடவ மலையாலே கடலை அடைத்தான் – எனக்கு ஜனகனாய் உபகாரனானவனுக்கு இடம் –
அழகிய மாடங்களாலே சூழப் பட்ட அழகிய பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார்

——————

பிறை யுடை வாணுதல் பின்னை திறத்து ஒரு கால் செருவில் உருமின்
மறை யுடை மால் விடை ஏழு அடர்த்தாற்கு இடம் தான் தடம் சோந்து அழகாய கச்சி
கறை யுடை வாள் மற மன்னர் கெடக் கடல் போல் முழங்கும் குரல் கடுவாய்
பறை யடைப் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே—2-9-9-

நப்பின்னைப் பிராட்டிக்காக முன்பு ஒருநாள் யுத்தத்திலே உருமு போலேயாய் உருமும் இடி .
நெஞ்சிலே க்ரித்ரிமத்தை உடைத்தான –பெரிய ருஷபங்களை அடர்த்தவனுக்கு இடம் பரமேச்சுர விண்ணகரம்
கடிய வாயை உடைய-கன்றப் பறை கறக்க -என்று திருவரையிலே கோத்துக் கட்டின பறையோபாதியாக
தோற்றுகிறதாயிற்று இவர்க்கு-

——————–

பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகர் மேல்
கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம் தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன் அருளால் உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகாண்டு திகழ்வர்களே—2-9-10-

பகவத் குணங்கள் நெருங்கத் தொடுத்த செவ்விய தமிழ்த் தொடை வல்லார்
பெரிய பிராட்டியார் உடைய கடாஷத்தாலே லோகத்திலே மகா ரதராய் கடல் சூழ்ந்த பூமியை அடைய ஆண்டு –
உஜ்ஜ்வலர் ஆவார்கள்-இந்த ஐஸ்வர்யம் அடைய மலடாய் போகாமே இவரைப் போலே பாகவத சேஷமாக்கப் பெறுவார்

ஆக இத்திரு மொழியால் சர்வேஸ்வரன் விரும்பும் நிலம் ஆகையாலே இத்தேசம் ஆஸ்ரயணீயம் என்றும்
அது தான் சர்வ சமாஸ்ரயணீயம் என்றும் சொல்லிற்று ஆயிற்று –
அதாகிறது
சமதமாத்யுபேதர்க்கு இறே ஆஸ்ரயணீ யத்தில் அதிகாரம் உள்ளது –
அவை இல்லாதவனும் தம் தானாய் ஆஸ்ரயிக்கும் படியான தேசம் இறே-

———————

மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண் வளர்ந்த ஈசன் தன்னை
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்ய
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே—2-10-1-

ஆபத் சகன் -என்கிறது –

———————-

கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழப் பணங்கொள் பாம்பில்
சந்தணி மென்முலை மலராள் தரணி மங்கை தாமிருவர் அடி வருடும் தன்மையானை
வந்தனை செய்து இசை ஏழ் ஆறங்கம் ஐந்து வளர் வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்
சிந்தனை செய்து இரு பொழுதும் ஒன்றும் செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10–2-

அவனை ஆஸ்ரயித்து நான்மறைகளைக் கொண்டு-ஆத்மேத்யேஸ்து க்ருஹணீயாத் -என்றும்
ஆத்மேதிதிது பகச்சந்தி க்ராஹயந்திச -என்கிறபடியே
அவனை பிரகாரியாகவும் தங்களை பிரகாரமாகவும் காலங்கள் தோறும் ஒருப்படிப்பட அனுசந்திதுச் சொல்லுகிற
அத ப்ராஹ்மியான ஸ்ரீ லஷ்மி மாறாமே செல்லுமாயிற்று -ஸ்ரீ பகவத் உபாசன ரூப சம்பத்-

————–

கொழுந்தலரும் மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக்கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி
அழுந்திய மா களிற்றுனுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரம்மே வரத்தோன்றி அருள் செய்தானை
எழுந்த மலர்க் கருநீலம் இருந்தில் காட்ட இரும்புன்ன முத்தரும்பிச் செம்பொன் காட்ட
செழுந்தட நீர்க்கமலம் தீவிகை போல் காட்டும் திருக் கோவலூர் அதனுள் கண்டேனே–2-10-3-

கையிலே திரு ஆழியையும் விட அறியாதே-ஆகாச அவகாசத்தை இடம் அடைத்துக் கொண்டு தோற்றி –
ஏவர வெளியடைய-அதினுடைய புண் ஆறும்படியாக திருக் கையாலே ஸ்பரசித்து
திருப் பரியட்டத் தலையாலே ஒற்றிப் பண்ணின சிசிரோ உபசாரங்களை நினைக்கிறது-

—————–

தாங்கரும் போர் மாலி படப்பறவை யூர்ந்து தாரலத்தோர் குறை முடித்த தன்மையானை
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை
கோங்கரும் புசுர புன்னை குரவர் சோலைக் குழா வரி வண்டு இசைபாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-4-

ஸ்வ விஷயத்தில் பிரேமத்தால் கண்ண நீர் அரும்பி -அது தான் கண்ணை விட்டு சோர -பிரேம பரவசராய் இருக்கும்
சேஷ பூதருக்கு நிரதிசய போக்யனானவனை–முதல் ஆழ்வார் விஷயம்
ஆயனே கரும்பு-மதுபான மத்தமாக பாடும் பாட்டைக் கேட்டு -அத்தாலே –நீர் பாய்ந்தாப் போலே இருக்கிற இனிய
கரும்பானது ஒரு கண் தேறி வளரா நிற்கும் ஆயிற்று-

—————

கறை வளர் வேல் கரன் முதலாகக் கவந்தன் வாலி கணை யொன்றினால் மடிய இலங்கை தன்னுள்
பிறை எய்ற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை
மறை வளரப் புகழ் வளர மாடந்தோரும் மண்டபம் ஒண் தொளி யனைத்தும் வாரமோத
சிறை யணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே-2-10-5-

ராவணனோடு கூட அழியச் செய்த ஸ்வாமி தன்னை-உடையவன் இறே ஷேத்ரத்தில் களை பிடுங்குவார்-
ராவண வத அனந்தரத்தில் அத்யயன அனுயாகங்கள் மாறாதாப் போலே யாயிற்று அவன் பட்ட பின்பு ஸ்ரீ திருக் கோவலூரும் –
சோலையிலே புக்கு அணைந்த தென்றலானது அந்நீர் நிலத்திலே திவலைகளையும் சோலையில் பரிமளத்தையும் கொண்டு வந்து
இவ்வோ இடங்களில் அத்யயனம் பண்ணுபவர்கள் உடைய ஸ்ரமம் ஆறும்படி சிசிரோ உபசாரம் பண்ணும் ஆயிற்று-

———————

உறியார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
தறியார்ந்த கருங்களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை
வெறியார்ந்த மலர்மகள் நா மங்கையோடு வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வச்
செறி யார்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-6-

அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் தனக்கு தாரகமாய் அது பெறாத போது அவன் முடியும் அளவாய் இருக்குமா போலே
அவன் வியாபாரம் தங்களுக்கு பிராணகரமாய் இருக்கும்படியாலே அத்தை தேடா நிற்பார்கள் இறே இவர்கள்
கருங்களிறே போலே-தன்னை உணராதே நின்ற நிலை-பிரதிகூலரான துர்யோநாதிகள் கட்டின கட்டாகில் இறே
அவிழ்த்துக் கொண்டு போக வல்லது-அனுகூலர் கட்டினால் அவிழ்த்துக் கொண்டு போக மாட்டான் இறே-
விஸ்மய நீயமான கலையை வாகனமாக உடையளாய் எட்டுத் தோளை உடைய துர்க்கை அவள் ஆயிற்று அவ் ஊருக்குக் காவல்
பிறந்த அன்று காட்டிக் கொடுத்துப் போனோம் -என்னும் அவ் இழவு தீர அவள் ஊர்ந்து நோக்குகிற தேசம் ஆயிற்று
இதுக்கு முன்பு இங்கனே இருப்பதொரு லாபம் வ்யுத்புத்தி பண்ணி அறியாத நான் ஸூ ரஷிதமான தேசத்திலே காணப் பெற்றேன்-

——————

இருங்கைம்மா கரி முனிந்து பரியைக் கீறி இனவிடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து
வரும்சகடம் இற உதைத்து மல்லை யட்டு வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சானானை
கருங்கமுகு பசும்பாளை வெண் முத்து ஈன்று காயெல்லாம் மரகதமாய்ப் பவளம் காட்ட
செருந்தி மிக மொட்டலர்த்தும் தேன் கொள் சோலைத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-6-

வில் விழவு என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு அழைத்து க்ருத்ர்மத்தாலே நலிய அழைத்த கம்சனை
அவன் நினைவு அவன் தன்னோடே போக்கி அவனுக்கு மிருத்யு ஆனவனை-

——————

பாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதி யங்கி பார்த்தன் செல்வத்
தேரேறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை
போரேறொன்று உடையானும் அளகைக் கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல்
சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-8-

இவனைத் தோழன் ஆகவும் மைத்துனன் ஆகவும்-தூதனாகவும் சாரதியாகவும் உடைய அர்ஜுனன் உடைய தேர்-
ரதியான் ஆகில் வெற்றி தன் தலையிலே கிடக்குமே-அதுக்காக தான் சாரதியாய்
வெற்றியும் அவன் தலையிலே கிடக்கும்படி பண்ணினான் ஆயிற்று-

———————

தூவடிவின்பார்மகள் பூ மங்கையோடு சுடராழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற
காவடிவின் கற்பகமே போலே நின்று கலந்தவர்கட்கு அருள் புரியும் கருத்தினானை
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை செம்பொன் செய் திரு வுருவமானான் தன்னை
தீவடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-9-

ஒரு கல்பக தரு பணைத்து பூத்தாப் போலே ஆயிற்று ஸ்ரீ பிராட்டிமார் உடன் திவ்ய ஆயுதத்தை தரித்தால் இருக்கும் படி-
தனிக் கற்பகம் அன்றிக்கே சோலை செய்து இருப்பதொரு கல்பகம் போலே நின்று –
அதாகிறது-சர்வ அபேஷித ப்ரதனாய் இருக்கும் படி –
நாங்கள் எங்கள் உடைய ரஷணத்துக்கு கடவோம் அல்லோம் நீயே கடவாய் -என்று
தன் கை பார்த்து இருக்கும் அவர்கள் பக்கலிலே மிக்க பிரசாதத்தைப் பண்ணும்படியை மநோ ரதிக்குமவனை –
அருள் பண்ணா விட்டால் தான் விடலாமோ – இவன் வடிவைக் கண்டால் –

———————–

வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னை
சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் என்று
வாரணங்கு முலை மடவார் மங்கை வேந்தன் வாள் கலியன் ஒலி யைந்தும் யைந்தும் வல்லார்
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக் கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே–2-10-10-

இப்பத்தையும் அப்யசிக்க வல்லவர்கள் –ஐஸ்வர்யாத்துக்காகவும் ஆத்ம பிராப்திக்காகவும்
பகவத் பிராப்திக்காகவும் லோகத்தில் உள்ளார் திரண்டு ஆஸ்ரயிக்க-
ஆஸ்ரயித்த போதே ஆஸ்ரயித்தார் அபேஷிதத்தை கொடுக்கைக்காக எங்கும் புக்கு வியாபித்து
அந்யைரத்ருஷ்டனாய்-நம்மை ஆஸ்ரயிப்பாரோ என்று அவசர பிரதீஷனாய் நிற்கிறவனைக் காணப் பெறுவார்-

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் -முதல் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —

June 1, 2019

வாடினேன் வாடி-1-1-1–

அநாதி காலம் விஷய ப்ரவணனாய் -பகவத் விஷயத்தில் விமுகனாய் போந்த நான்
விஷயங்கள் தான் சவாதியாய் மீண்ட அளவிலே -சர்வேஸ்வரன் தன் கிருபையாலே
கைக் கொண்டான் என்கிற அர்த்தத்தை -உய்வதோர் பொருளால் -என்கிறத்தாலே சொன்னார் முதல் பாட்டிலே –

காலம் அடங்க வ்யர்தமே புறம்பே போக்கினேன் என்றார் இரண்டாம் பாட்டிலே –

ரஷையே வேண்டி அதுக்கு வ்ருத்தமான துஷ் கருமங்களைப் பண்ணி
விஷய ப்ரவணனாய் -கால த்ரயம் அடங்க நிஷ் பிரயோஜனமாகப் போக்கின நான்
யோக்யனுமாய் பிராப்தனுமான சர்வேஸ்வரனையும் -அவனுக்கு வாசகமான
திரு நாமத்தையும் காணப் பெற்றேன் என்றார் மூன்றாம் பாட்டில் –

துர்மாநியாய் -சோகிக்க கடவ அல்லாத விஷயங்களுக்கு சோகித்து –
விஷய ப்ரவணனாய் -அநாத்ம குணங்களால் குறைவற்ற நான்
அமாநித்வாதி ஆத்ம குண பேதர் பெரும் பேற்றைப் பெற்றேன் என்றார் நாலாம் பாட்டில் –

ஆத்ம அபஹாரத்தைப் பண்ணி பஸ்யதோஹரனாய் -சர்வேஸ்வரன் ஒருவன் உளன்
என்று இருப்பார் உண்டாகில் உக்த்ய ஆபாசங்களாலே இல்லை செய்து போந்த நான்
ஆத்ம சமர்ப்பணம் பண்ணி என்றுமே இது யாத்ரையாய் போருவார் பெரும் பேற்றை
பெற்றேன் என்றார் ஐஞ்சாம் பாட்டில் –

இதுக்கு அர்த்தம் என் -இது இருந்தபடி என் -என்கிற அர்த்தத்தையும் சொல்லி
சம்சாரிகள் எல்லாம் இங்கனே கிலேசப்படா நிற்க -நான் இப்பேற்றைப் பெற்றேன்
என்றார் ஆறாம் பாட்டில் –

அல்லாதார் இழக்கிறார்கள் அவிசேஷஞ்ஞர் ஆகையாலே
என்னோடு சஜாதீயராய் -விசேஷஞ்ஞராய் -கவி பாடித் திரிகிற நீங்கள் இழவாதே
கொள்ளுங்கோள் என்றார் ஏழாம் பாட்டில் –

நீர் சொல்லுகிற அர்த்தத்துக்கு நாங்கள் தேசிகர் ஆக வல்லோமோ -என்ன
கெடுவிகாள் -நான் அன்றோ இவ் விஷயத்துக்கு நிலனாய் உங்களுக்கு கூட உபதேசிக்கிறேன் –
ஆன பின்பு பகவத் விஷயத்துக்கு ஆள் ஆகாதார் இல்லை -என்றார் எட்டாம் பாட்டில்

நீர் திரு நாமத்தைப் போர ஆதரியா நின்றீர் –
இது என்ன பலத்தை தரவற்று -என்ன
திரு நாம பலத்தைச் சொல்லுகிறார் இப் பாட்டில்-

————————

வாலி மா வலத்தொருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று-1-2–

தம் இழவை பரிஹரித்த பிரசங்கத்தாலே மஹா ராஜர் இழவை பரிஹரித்த படியைப் பேசினார் முதல் பாட்டிலே –

மஹா ராஜர் இழவை பரிஹரித்த பின்பு இறே பெருமாள் தம் இழவை பரிஹரித்துக் -கொண்டது
அந்த க்ரமத்திலே ராவண வதம் பண்ணுகிற படியைப் -பேசுகிறார்-இரண்டாம் பாட்டிலே –

ஸ்ரீ பிராட்டிகாக இலங்கையை அழித்த படி சொல்லிற்று கீழில்
ஸ்ரீ நப்பின்னை பிராட்டிகாக ரிஷபங்களை அடர்த படி சொல்லுகிறது-மூன்றாம் பாட்டிலே –

அப்பருவத்தில் பாலகனுக்கு உதவினபடி சொல்லுகிறது –நான்காம் பாட்டிலே

அவ் வவதாரங்களுக்கு அடியாக ஸ்ரீ திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியை அனுசந்திக்கிறார்-ஐந்தாம் பாட்டில்

அப்படி திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளினவன் இங்கே வந்து எழுந்து அருளி இருக்கிற படியை அனுசந்திக்கிறார் –ஆறாம் பாட்டில்

ஆறாம் பாட்டிலே அந்த ஷீராப்தி நாதனே ஹிமாவானில் அர்ச்சாவதாரமாக இருக்கிறான்
என்று அங்கு பிரணாமம் பண்ணினார்கள் என்று அருளிச் செய்து
ஏழாம் பாட்டில் அர்ச்ச்யன் ஆகையாலே அர்ச்சனை பண்ணுகிறார்கள் என்கிறார்-

சர்ப்பங்களோடு ப்ரஹ்மாதிகளோடு வாசி அற எல்லாருக்கும் ஆஸ்ரயணீயமான தேசம் ஆயிற்று
ஆன பின்பு நெஞ்சே நீயும் அத்தை ஆஸ்ரயிக்க பாராய் என்கிறார் –என்கிறார் எட்டாம் பாட்டில்

ஆஸ்ரயணீய வஸ்து சுலபன் ஆகையாலே ஆஸ்ரயிப்பாருக்கு தம் தாமுடைய அநுபவ விநாச்யமான பாபங்களை அனுசந்தித்து
பயப்படவும் வேண்டா-என்கிறார் ஒன்பதாம் பாட்டில்

இப் பாசுரங்களைச் சொன்னவர்களை அச் சொல் வழியே சர்வேஸ்வரன்
அவர்களையே எல்லா போக்யமுமாய் வந்து கிட்டும்-என்கிறார் பத்தாம் பாட்டில்

———————

முற்ற மூத்து கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து–1-3-

அவன் தானும் இது பாங்கான போதே தன்னை ஆஸ்ரயிக்கலாம் படி இங்கே ஸ்ரீ பதரியிலே வந்து சந்நிஹிதன் ஆனான் –
ஆனபின்பு இது அநுகூலமான போதே அவனை ஆஸ்ரயித்து இத்தைக் கழிப்பித்துக் கொள்வோம் என்று பார்த்து
அதிலே ஒருப்படுகிறார்-முதல் பாட்டில்

இந்த கிலேசங்களை தவிர்க்கும் அளவு அன்றிக்கே-நிரதிசய ஆனந்தத்தைப் பெற்று களிக்கலாம் படியான
தேசம் ஆயிற்று –என்கிறார் இரண்டாம் பாட்டில் –

சிலவற்றை சொல்லி மீள வேண்டாதபடி பாங்கான அளவிலே ஆயிரம் திரு நாமங்களையும்
சொல்லி –வணங்குவோம் -என்கிறார் மூன்றாம் பாட்டில்

அரியன செய்து நோக்குபவன் நித்ய வாசம் செய்யும் தேசம் ஆயிற்று-என்கிறார் நாலாம் பாட்டில்

என்றும் ஒக்க அனுபவமே யாத்ரையாக செல்லும் தேசம் –என்கிறார் ஐந்தாம் பாட்டில்

எம்பெருமான் -அவ்வடிவு அழகைக் காட்டி என்னை அடிமை கொண்டவனுடைய –ஸ்ரீ வதரியை
ஆஸ்ரயிப்போம்-என்கிறார் ஆறாம் பாட்டில்

பரிஹரித்த அன்றே சாதனமுமாய் பின்னை பிராப்யனுமானவன் வர்த்திக்கிற –
வதரி வணங்குதுமே –என்கிறார் ஏழாம் பாட்டில்

தன்னை ஆஸ்ரயித்தார்க்கு கொடுத்து ஆதரிகைக்காக மாலை இட்டு இருக்கிற வனதான
ஸ்ரீ வதரியை வணங்குதுமே-என்கிறார் எட்டாம் பாட்டில்

ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே புக்கு அவர்களில் ஒருவராய் ஆஸ்ரயிப்போம் என்கிறார் ஒன்பதாம் பாட்டில்

ஆழ்வார் விடச் சொன்னவற்றை விட்டு இவர் பற்றச் சொன்னவற்றை பற்றுகை இறே
சேதனாராய் இருப்பார்க்கு செய்ய அடுப்பது என்கிறார் பத்தாம் பாட்டில்-

——————————

ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க-
கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-1-

திவ்யமாய் -விலஷணமாய் -செவ்வியை உடைத்தான பூக்களைக் கொண்டு தேவர்கள் ஆஸ்ரயிக்கும் படி
கங்கா தீரத்திலே ஸ்ரீ பதரிகாஸ்ரமத்திலே வந்து சந்நிஹிதன் -ஆனான்-என்கிறார் முதல் பாட்டில்

திருவடிகள் ஸஹ்யம் ஆகையாலே-திருக் காவேரிக்கு ஸஹ்ய பர்வதம் உத்பத்தி ஸ்தானம் ஆனால் போலே
ஆகாசத்திலே யாய்ப் பழையதான கங்கையின் கரை மேல் நித்ய வாசம் செய்து அருளுகிறான் என்கிறார் இரண்டாம் பாட்டில் –

ஜ்ஞான ப்ரசுர த்வாரம் ஆகையாலே அவன் பக்கலில் அன்பை உடையையாய் சிலவற்றை சொல்லி மீள வேண்டாதபடி
பாங்கான அளவிலே ஆயிரம் திரு நாமங்களையும் சொல்லி –முக்தர் சாம கானம் பண்ணுமா போலே
அனுபவத்துக்கு போக்கு விட்டு பாடும் -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில் –

நம் விரோதியைப் போக்கி நித்ய சூரிகள் இருப்பை நமக்கு பண்ணித் தரும் பரம க்ருபாளானவன் சர்வேஸ்வரன்-
நித்ய வாசம் செய்து அருளும் -என்கிறார் -நான்காம் பாசுரத்தில்

சிவந்த பொன்னாலே செய்யப்பட மேருவிலே விளங்கா நின்றுள்ள இடமுடைத்தான சிகரத்தில் நின்றும்
இழிந்த கங்கையின் கரை மேல் ஸ்ரீ வதரி யாஸ்ரமத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில் –

குளிர்ந்த மேகம் போலே இருந்துள்ள வடிவை உடையவனாய் அவ்வடிவைக் கொண்டு
என்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவன் நித்யவாஸம் செய்து அருளும் திவ்ய தேசம்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

எனக்கு தன்னை தந்து அருளின –எனக்கு தந்தை-எனக்கு ஸ்வாமி-என்னை
அனன்யார்ஹன் ஆக்கினான்–என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

விச்வாமித்ரனை- ஷத்ரியனாய் இருக்கச் செய்தேயும் தபோ பலத்தாலே ப்ரஹ்ம ரிஷி ஆனான் இறே –
அவன் பெருமாளையும் இளைய பெருமாளையும் நடத்திக் கொண்டு வந்தது அக்கரையே ஆகையாலே
அத்தை சொல்லிற்று -எட்டாம் பாசுரத்தில்

எங்கும் ஒக்க பரந்து பெரு நீராய் அது அடைய தெளிந்து இருப்பதான கங்கையின் கரை மேல்
ஸ்ரீ வதரி யாச்சிரமத்துள்ளானே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பெரிய கடல் சூழ்ந்த பூமியை ஏகாதபத்ரமாக நடத்தி பின்பு ப்ரஹ்ம பதத்தை நிர்வஹித்து
அநந்தரம் -நித்ய ஸூரிகளோடு ஒரு கோர்வையாக பெறுவர் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில் –

———————-

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்–சாளக்ராமம் அடை நெஞ்சே —1-5–

ஆஸ்ரித விரோதியைப் போக்கி பிற்பட்டாருக்கும் உதவுகைக்காக வந்து வர்த்திக்கிற ஸ்ரீ சாளக்ராமத்தை
ஆஸ்ரயிக்கப் பாராய் -நெஞ்சே -என்கிறார்-முதல் பாசுரத்தில்

ராவணனை நிரசித்தபடியைச் சொல்லிற்று முதல் பாட்டில்
அதுக்கு உறுப்பாக அவனுடைய முதல் நாள் படை எழுச்சி சொல்லுகிறது -இரண்டாம் பாட்டில் –

கண் வளர்ந்து அருளும் போதும் தன்னோடு பொருந்தாத ஆசூர வர்க்கத்துக்கு -அவர்க்கு என்றும் சலம் புரிந்து -என்கிறபடியே
சாத்ரவத்தையை உடையனாய் இருக்குமவன் ஏவம் விதன் ஆனவன் வந்து சந்நிதி பண்ணுகிற
ஜல சம்ருத்தியை உடைத்தாய் தர்ச நீயமாய் இருக்கிற ஸ்ரீ சாளக்கிராமத்தை அடைந்து ஆஸ்ரயிக்கப் பாராய்-என்கிறார் மூன்றாம் பாட்டில் –

அதுக்கும் முன்னே உண்டான ஸ்ரீ ராம வ்ருத்தாந்த்தைச் சொல்லுகிறது –நான்காம் பாசுரத்தில்

அதுக்கு முன்னாக சூர்பணகை நிரசனத்தை அருளிச் செய்கிறார் –ஐந்தாம் பாசுரத்தில் –

அநுகூல ஸ்பர்சம் உடைய த்ரவ்யமும்-பிரதிகூல பிராணனும் ஒக்க தாரகமாக வளர்ந்தவன் அழகாலே வசீகரிக்கும் படியான
வாமன வேஷத்தை உடையனாய் கொண்டு சென்று லோகம் ஏழையும் அளந்து கொண்டு
லோகம் ஏழையும் அளந்து கொண்டு தாவினவன் நித்யவாஸம் செய்து அருளும் சாளக்கிராமம் அடை நெஞ்சே-ஆறாம் பாசுரத்தில்

சத்ருக்களான ஆசூர பிரகிருதிகள் அஞ்சும்படியாக யுத்தத்திலே நரசிம்ஹமாய் அத்விதீயன்-
சந்திர சூர்யாதி களுக்கு அந்தர்யாத்மாதயா புக்கு இவர்கள் தான் என்னலாம் படியாய்
ஆகாசமாய தேஜோ பதார்த்தமாய் வாயு தத்வமாய் கார்ய கோடியில் மலையாய் -கடல் சூழ்ந்த பூமி
அசாதாராண திவ்ய விக்ரஹ உக்தனாய் இருக்கிறவன் நித்யவாஸம் செய்து அருளும் சாளக்கிராமம் அடை நெஞ்சே-ஏழாம் பாசுரத்தில்

ஈஸ்வர அபிமாநியாய்-தன் ஆஞ்ஞை நடத்திப் போந்த இடத்தில் கையும் ஒடுமாய் திரிந்த
துர் மாநியானவனுடைய சாப மோசத்தை பண்ணினவன்-சாளக்கிராமம் அடை நெஞ்சே-என்கிறார் எட்டாம் பாசுரத்தில் –

வழு விழா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய திரளும் –
நித்ய சூரிகளும் – –கேவல ப்ராஹ்மணரும் –தேவரீரே எங்களுக்கு ஆஸ்ரயணீ யனாகவே எங்களுக்கு அருள வேணும்
என்று தனித்தனியே சொல்லா நின்று கொண்டு சேருகிற ஸ்ரீ சாளக்கிராமம்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில் –

நித்ய ஸூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம் அத்தை ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே
தாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த – ஆயிரம் திரு நாமங்களையும்
வாயாலே சொல்லப் பாருங்கோள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில் –

—————-

வாணிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே
நாணினேன் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் –1-6-1-

வாணிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே பேணினேன் –
இது என்னுடைய பூர்வ வ்ருத்தம் இருந்தபடி -என்கிறார் –
விஹிதங்களை அனுஷ்டித்து சம தமாதி ஆத்ம குண பேதராய் இருப்பார் இறே -இதுக்கு அதிகாரிகள் –
அதில் நான் செய்து நின்ற நிலை இது என்கிறார் –முதல் பாசுரத்தில் –

திருவடிகளிலே புக்கு சரணம் புக்கவாறே முன்பு தாம் செய்து போந்த படிகள் அடங்கலும் தோன்றிற்று
அத்தாலே போக்கினேன் பொழுதை வாளா -என்கிறார்
பகவத் விஷயத்தில் அடிக் கழஞ்சு பெற்று செல்லக் கடவ காலத்தை வ்யர்த்தமே போக்கினேன்–என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

போக்கினே பொழுதை வாளா -என்றார்
சிலவற்றை செய்து இறே போது போக்குவது செய்தபடி தான் எங்கனே என்ன அது தன்னை சொல்கிறார்-மூன்றாம் பாசுரத்தில்

அத்தனையோ -இன்னும் ஏதேனும் செய்தது உண்டோ என்ன-இன்னம் செய்ததுக்கு சொல்கிறார் –
ஏதேனும் தோற்றிற்று செய்து திரிந்தார்க்கும் வந்து பற்றலாம்படி
சரண்யனான நீ வந்து சந்நிஹிதன் ஆகையாலே திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –என்கிறார் நான்காம் பாசுரத்தில்

அத்தனையோ-இன்னும் ஏதேனும் உண்டோ -என்ன திரு உள்ளத்துக்கு பொறுக்க ஒண்ணாதவையும் எல்லாம் செய்து போந்தேன் என்கிறார் –
முன்பு எல்லாம் தோன்றின படி செய்து திரிந்து அவற்றுக்கு வரும் பலத்தைக் கேட்டு பயப்பட்டு போக்கடி தேடி
புறம்பு ஒரு புகல் காணாமையாலே தேவரீர் திருவடிகளில் சரணம் புகுந்தேன் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

நமக்கு ஒரு புகல் ஏதோ என்று ஆராய்ந்து திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன் –
நான் நாடிக் கிட்டினேன் ஆக நினைத்து இருந்தேன்
நீ எனக்கு முன்பே நாடி-பூர்வஜனாய் திரு நைமி சாரணி யத்திலே வந்து சந்நி ஹிதனானாய்-என்கிறார்-ஆறாம் பாசுரத்தில்

அடியேன் என்று அஹ்ருத்யமாய்-நான் ஒரு உக்தி மாத்ரமாய் சொல்ல-அத்தை சஹ்ருதயமாக்கிநித்ய ஸூரிகளுக்கே உன்னை
அனுபவிக்க கொடுத்துக் கொண்டு இருக்க கடவ நீ என்னுடைய ஹ்ருதயத்திலே புகுந்து விடாதே இருந்தாய் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

திருக் குறுங்குடியில் ஸ்ரமஹரமான வடிவைக் கொடு வந்து நீ சந்நிஹிதன் ஆகையாலே – நல்ல சந்தஸ் ஸுக்கள் ஆர்ந்துள்ள
இனிய சொற்களாகிய பல மலர்களைக் கொண்டு அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணி திருவடிகளிலே விழுந்து –
அனர்த்தங்களை விளைக்கைக்கு உறுப்பான வற்றியே சொல்லிப் போந்த என் நாவாலே –ஸ்துத்யனான நீ
என்னுடைய ஸ்துதிக்கு விஷய பூதனாய் கொண்டு திரு நைமி சாரணி யத்துள் வந்து சந்நி ஹிதன் ஆனாய் -என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

தம்முடைய வ்ருத்தி இருந்த படியை கீர்த்தித்தார் இறே முன்பே –
இனி நானுடைத்தவம் என்கிறது அவன் தன்னையே –
நான் பண்ணின தபச்சாலே-அவனாலாயே-அவன் திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ பகவத் விஷயத்தில் ஆசை மிகுந்து வருகிற ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த
சப்த சந்தர்பத்தை அர்த்த சஹிதமாக கற்க வல்லவர்கள் –அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தையும் நிர்வஹித்துப்
பின்னை நித்ய ஸூரிகள் பதத்தை பெறுவர்- என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய்—பைம் கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே–1-7-

ஆனையினுடைய மஸ்தகத்தை கிழித்து அதினுடைய கொம்பைப் பறித்து பகவத் பக்தியாலே திருவடிகளிலே இட்டு
ஆஸ்ரயியா நிற்கும் ஆயிற்று சிம்ஹங்கள் ஆனவை பத்திமையால் அடிக்கீழ் இட்டு இறைஞ்சும் –
இவற்றுக்கு ஆனைகளின் மேலே சீற்றம் மாறாதே இருக்கச் செய்தேயும் பகவத் பக்தி ஒருபடிப்பட்டு செல்லும் ஆயிற்று
சீற்றம் விக்ருதியாய் பகவத் பக்தி பிரக்ருதியாய் இருக்குமாயிற்று-என்கிறார் முதல் பாசுரத்தில்

ஸ்ரீ நரசிம்ஹத்தின் உடைய சீற்றத்தோடு -அங்கு உள்ளார் உடைய சீற்றத்தோடு –
அவர்கள் வ்யாபாரத்தோடு -வாசி அற்று இருக்கிறது ஆயிற்று – இவருக்கு-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

தன்னிலே உண்டான நெருப்பாலே தேய்ந்த வேய்களும் வண்டினம் முரலும் சோலையோபாதியாக தோற்றுகிறது ஆயிற்று இவர்க்கு –
அது இது உது என்னலாவன வல்ல -என்னக் கடவது இறே –
பிறருக்கு குற்றமாய் தோற்றுமவையும் உபாதேயமாக தோற்றுகை இறே ஒரு விஷயத்தை உகக்கை யாகிறது –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அத்தேசத்தை சென்று ப்ராபிக்க ஆசைப்படுகிறவர் தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா-என்கிறார் ஆயிற்று –
ஸ்ரீ நரசிம்ஹனுடைய அழகைக் கண்டு கண் எச்சில் படுவார் இல்லை என்னுமத்தைப் பற்ற –
அந்தியம் போதில் அரி யுருவாகி அரியை அழித்தவனை பல்லாண்டு – என்னுமவர்கள் இறே
அநாஸ்ரிதர்க்கு சென்று கிட்ட ஒண்ணாது ஆயிற்று ஹிரண்யன் போல்வாருக்கு சென்று பிரவேசிக்கப் போகாது ஆயிற்று –
என்கிறார் நாலாம் பாசுரத்தில் –

இப்படி இருக்கையாலே ஒருவருக்கும் சென்று காண்கைக்கு அரிதாய் இருக்கும் ஆயிற்று
ஸ்ரீ பரம பதத்தோ பாதி இந் நிலத்துக்கும் நமக்கு பயப்பட வேண்டா என்று ஹ்ருஷ்டர் ஆகிறார்-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

புலி –பெரு வழியிலே சஞ்சரியா நின்றுள்ள ஆனையினுடைய மஸ்தகத்தை பிளந்து அத்தைப் பானம் பண்ணுகைகாக
அவை போகிற பெரு வழியிலே அவற்றைச் சுவடு ஒத்தி நிற்கும் ஆயிற்று –
ஆஸூர பிரக்ருதிகளாய் இருப்பாரை அழியச் செய்கைக்கு ஸ்ரீ நரசிம்ஹம் அடிச்சுவடு ஒத்ததுமா போலே-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

உகவாதார்க்கு கண்ணாலே காணலாம்படி சென்று கிட்டி கண் எச்சில் பட ஒண்ணாத படி இருந்த தேசம் ஆயிற்று என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

சதுர்முகனும் தேவர்களில் தலையான ருத்ரனும் முன்பு ஹிரண்யனுக்கு அஞ்சி மனுஷ்ய வேஷம் கொண்டு திரிந்தவர்கள்
அவன் பட்ட பின்பு தந்தாமுடைய தரம் குலையாதபடி முறையாலே வந்து சேஷித்வ ப்ராப்தியாலே ஸ்தோத்ரம் பண்ண —
அவர்களுக்கு ஸ்துத்யனாய்க் கொண்டு அவ்விடத்திலே இதுக்கு முன்பு அனுபவித்து அறியாத
ஸ்ரீ நரசிம்ஹமாயக் கொண்டு இருக்கிற சர்வேஸ்வரன் உடைய ஸ்தானம் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில் –

எனக்கு பாங்கான நெஞ்சே-நீ எனக்கு பாங்காய் இறே இப் பேறு பெற்றது –நாம் தொழுது உஜ்ஜீவிப்போம்
இது இத் திருமொழியில் பாட்டுக்கு எல்லாம் கிரியா பதம் –
பிரதிகூல நிரசனத்துக்காக இவ்வடிவு கொண்டது போய்-அநு கூலர் பக்கலிலேயும் வந்து பலிக்கும் அளவாயிற்று
என்று அந்த சீற்றத்தை ஆற்றுகைக்காக ஸ்ரீ பெரிய பிராட்டியார் வந்து கட்டிக் கொள்ளும் ஆயிற்று –
இவளை அணைத்தால் இவளைக் கட்டிக் கொள்ள ஆயிரம் தோளும் உண்டாம் ஆயிற்று-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

சிங்க வேள் குன்றம் தனக்கு வாஸஸ்த்தாநமாக உடையவன்-சம்சாரிகளான நம் போல்வாருக்கும் சென்று ஆஸ்ரயிகலாம் படி
இருக்கிற உபகாரகனை அநு பாவ்யமாம் படி பண்ணித் தந்தவர் -ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற
தமிழ் சாஸ்திர உக்தமான படி யைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்—திரு வேம்கடம் அடை நெஞ்சே–1-8-

ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து குருந்தை முறித்தாற் போலே என் விரோதியைப் போக்கி உபகரித்தவன் –
பகாசுரனை வாயை கிழித்து இப்படி விரோதிகளை போக்குகை பழையதாக செய்து போருகிறவர்
வந்து வர்த்திக்கிற ஸ்தானம் –ஸ்ரீ திரு வேம்கடம் அடை நெஞ்சே–என்கிறார் முதல் பாசுரத்தில் –

கொண்ட கொண்ட வடிவம் எல்லாம் இவருக்கு உத்தேச்யமாய் இருக்கும் ஆயிற்று – அவன் கொண்ட வடிவம் ஆகையாலே –
கிருத யுகத்தில் வெளுத்த நிறத்தை உடையவனாய்-கலி யுகத்தில் கறுத்த நிறத்தை உடையவனாய்
த்வாபர யுகத்தில் வந்தவாறே ஸ்யாமமான நிறத்தை உடையவனாய் இருக்கும் என்று இவ்வடிவுகளை அநு சந்தித்து
தெள்ளியார் -உண்டு -அநந்ய பிரயோஜனர் ஆனவர்கள் நாள் தோறும் வணங்குவர்கள் ஆயிற்று –
நித்ய ஸூரிகளைப் போலே நித்ய அனுபவம் பண்ணும் –ஸ்ரீ திரு வேம்கடம் அடை நெஞ்சே-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில் –

ஒரு மலையை எடுத்து பரிஹரித்தவன்-ஒரு மலையிலே நின்று ரஷிக்கப் பார்த்தான்
அவனை ஆஸ்ரயிக்கப் பார் நெஞ்சே என்கிறார்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

குரவை கூத்தை அநு சந்தித்து–அதிலே ஈடுபட்டு யேத்துமவர்கள் உடைய ஹ்ருதயத்தை விடாதே வர்த்திக்குமவன் –
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்காக ஸ்ரீ திருவிடவெந்தையிலே வந்து சந்நிஹிதன் ஆனால்
போலே ஆயிற்று-யேத்துமவர்கள் நெஞ்சை விட்டுப் போக மாட்டாதபடி –என்கிறார் நான்காம் பாசுரத்தில்

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் வ்யாபாரம் ஓவும் தனையும் பார்த்து இருந்து பிற்பாடனான குறை தீரஆஸ்ரிதருக்கு முற்பாடனாக
உதவுகைக்காக வந்து இருக்கும் தேசம் ஆயிற்று –அந்த திவ்ய தேசம் அடை நெஞ்சே –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

திருமந்தரம் சொன்ன சிறுக்கனுக்கு உதவினவன்-திருநாமம் சொன்னார் எல்லார் உடைய
சம்சார துரிதத்தைப் போக்குகைகாக வர்த்திக்கிற திருமலையை அடையப் பாராய்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஜகதாகாரனாய் நின்று தான் கொடுத்த உடம்பைக் கொண்டு தன்னுடைய திரு நாமத்தை சொல்லி
ஆஸ்ரயிக்கலாம் படி நிற்கிறவன் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்-

ஜகதாகாரனாய்–திவ்ய மங்கள விக்ரஹ உக்தனாய்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்-பிராட்டியும் தானுமாய்
பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் –நித்யவாஸம் செய்து அருளும் திருவேம்கடம்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஓர் அதிகாரி சம்பத்தி வேண்டா இறே-பெற்ற தாய் பேர் சொல்லுவாருக்கு –
அப்படியே இடர் வந்த போது-எல்லாரும் ஒக்க சொல்லிக் கொடு-போரக் கடவதான இனிய திருநாமமான
எட்டு எழுத்தையும் சொல்லுமவர்களுக்கு-சத்தா ஹாநி வாராமே அவர்கள் உஜ்ஜீவிக்கும்படி அங்கீகரித்து – பின்னையும் அவர்களுக்கு
விரோதியான சம்சார பந்தத்தை அறுத்துக் கொடுக்கும் உபகாரகன் வர்த்திக்கிற ஸ்தானம்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்-

தரித்து சொல்ல வல்லவர்கள் நிச்சிதமாகவே கடல் சூழ்ந்த பூமிக்கு ரஷகராய் பின்பு
நித்ய விபூதியும் தங்கள் இட்ட வழக்காம் படி ஆகப் பெறுவர்கள் –இதில் சங்கை வேண்டா-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————-

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டு ஒழிந்தேன் திருவேம்கடவா–1-9-

பந்துக்கள் அல்லாதவரை பந்துக்கள் என்று நினைத்து இருந்தேன் –அக் குற்றத்தை பொறுத்து அருள வேணும் -என்று
சரணம் புகுந்தார் முதல் பாட்டில் –

போக்யம் அல்லாதவற்றில் போக்யதா புத்தி பண்ணிப் போந்தேன்-அக் குற்றத்தை பொறுத்து அருள வேணும்
என்று சரணம் புகுகிறார் இரண்டாம் பாட்டில்-

பந்துக்கள் அல்லாதாரை பந்துக்கள் என்றும் போக்யம் அல்லாதார் பக்கலிலே போக்யதா புத்தி பண்ணியும் போந்த அளவேயோ –
தேவர் திரு உள்ளத்துக்கு அசஹ்யமாம் படி பர ஹிம்சையே பண்ணிப் போந்தேன் -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்-

ஏதேனும் ஒரு சாதன அனுஷ்டானம் பண்ணுகிறது உண்டோ என்னில்
பலத்தோடே வ்யாப்தமாய் இருப்பதொரு சாதன அனுஷ்டானம் பண்ணப் பெற்றிலேன்-ஜன்ம பரம்பரைகளிலே அலந்து முசித்தேன் –
இனி ஒரு ஜன்மம் வரும் என்று அஞ்சி ஏங்க வேண்டாதபடியான தாஸ்யத்திலே என்னை மூட்ட வேணும்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்-

அரணாக போரும்படியான திண்ணிய வரைகளாலே சூழப்பட்ட திருமலையை வாஸ ஸ்தானமாக உடைய நிருபாதிக பந்துவானவனே –
அடியேனை –என்னுடைய பாப அநு கூலமாக வன்றிக்கே-உன்னோடு உண்டான நிருபாதிக பாந்தவ அநு ரூபமான
கைங்கர்யத்தில் என்னை மூட்ட வேணும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

கீழே அப்பா என்றார்-இங்கே அண்ணா என்னா நின்றார்-தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் விட்ட
உறவு முறைக்கு எதிர்தட்டான எல்லா உறவு முறையும் எம்பெருமானே என்றாய் இற்றே இவர் இருப்பது –
அடியேனை –வெளிறு கழிந்தால் சம்பந்தம் நித்ய ஸூAரிகளோடு ஒத்து இருக்கும் இறே எனக்கும்
ஆனபின்பு அவர்களைக் கொண்டருளும் அடிமை என்னைக் கொண்டருள வேணும்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்-

அரியே –என்னுடைய பிரதிபந்தகத்தை போக்குகைக்கு ஈடான-பராபி பவந சாமர்த்யத்தை உடையவனே –
பிறர்க்கே உழையாமல்-ப்ராப்த விஷயத்தில் கைங்கர்யத்தை கொண்டு அருள வேணும்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்-

எனக்கு ஆற்றாமை உண்டானால் பிறப்பே யாற்றாமை உடைய உன்னை என் ஸ்வரூப அநு ரூபமான கைங்கர்யத்தை
தர வேணும் என்றுபிரார்த்திக்க வேண்டுகிறது என் –நான் ஆற்றாமை உடையேனாய் -இருந்தேன்
ஆற்றாமை பிறப்பது எப்போதோ என்று பார்த்து நிற்குமவனாய் இருந்தாய் நீ –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

எனக்கு புறம்பு பற்று இல்லை என்றேனே-எனக்கு பற்றான நீ ஸ்ரீ லஷ்மீ பதியாய் இருந்தாயே
ஆனபின்பு என்னுடைய ஸ்வரூப அநு ரூபமான கைங்கர்யத்தை கொண்டருள வேணும் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இவற்றை அப்யசிப்பாருக்கு ஒரு பாபங்களும் வந்து கிட்டாது-பகவத் ப்ராப்திக்கு பிரதிபந்தகங்கள் அடங்க ஓடிப் போம் –
பாவமே செய்து பாவி ஆனேன் -என்று இவரும் சொல்லி-ஈஸ்வரனும் அத்தைப் பொறுத்த பின்பு இவருக்கு பாபம் இல்லையே –
இவருடைய பரிகரமாய்-இவருடைய பிரபந்தத்தை அதிகரிக்கவே-இவர்கள் பாபங்களைப் போக்கும் ஆயிற்று –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————

கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன் திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய அண்ணா வடியேன் இடரைக் களையாயே-1-10-1-

ப்ரஹ்மாதிகள் ஆஸ்ரயிக்கும் ஸ்வ பாவனாய் ஸ்ரீ திருமலையை வாஸ ஸ்தானமாகக் கொண்டு
சந்நிதி பண்ணின நிருபாதிக பந்துவே- இங்குத்தை இருப்பு இடர் என்று என் நெஞ்சில் பட்ட பின்பு
என் கைங்கர்ய விரோதியைப் போக்கி அருள வேணும்-என்கிறார் முதல் பாசுரத்தில்–

கீழில் பாட்டிலும் இரண்டாம் பாட்டிலும் அவனுடைய விரோதி நிரசன சீலதையைச் சொல்லி
என் துக்கத்தைப் போக்கித் தர வேணும் என்கிறார்-
ரஷணத்துக்கு மாலை இட்டு முடி சூடி இருக்கிற நீ இனி என் விரோதியை போக்குகை என்று ஓன்று இல்லை
என் பக்கலில் கிருபையைப் பண்ணி அருள வேணும் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்–

சர்வ ரஷகனாய்-பூமிக்காக நிர்வாஹகனாய் இருந்தபடியைச் சொல்லுகிறது-பரம பதத்தில் காட்டிலும் ஐஸ்வர்யம்
மிக்குப் போலே காணும் ஸ்ரீ திருமலை -இருப்பது-ஆரா அமுதே –இவ்வம்ருதம் ஸ்வர்க்கத்தில் அல்ல போலே காணும் இருப்பது –
அடியேற்கு –இதுவே போக்யம் என்று இருக்கிற என்னை இத்தை அனுபவிப்பித்து அருள வேணும்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஸ்ரீ யசோதை பிராட்டியும் இந்த்ரனும் பெற்ற பேற்றின் அளவில்லாத என்னுடைய கைங்கர்யத்தை
தந்து அருள வேணும்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

இனி இரண்டு பாட்டாலே தமக்கு உபகரிக்க ஒருப்பட்டபடி சொல்லுகிறாராய் –
அதுக்கு உறுப்பாக திருமலையிலே வந்து நின்றபடியை ஐந்தாம் பாசுரத்தில் சொல்லி
அநந்தரம் ஆறாம் பாசுரத்தில் திரு உள்ளத்தில் புகுந்த படியைச் சொல்லுகிறார் –
மிடுக்கை உடைய திரு வநந்த வாழ்வானை படுக்கையாக உடையவனே-
ப்ராப்தி ஒத்து இருந்த பின்பு அவன் பெற்ற பேறு நானும் பெறுவேனாக திரு உள்ளம் பற்ற வேணும்-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

உம்முடைய பக்கல் விலக்காமைக்கு அவசரம் பார்த்து இருக்கிற நாம் உம்மை இரக்க விட்டு வைப்புதுமோ என்று இசைவு பெற்றவாறே
நெஞ்சிலே வந்து புகுந்தான் –என் நெஞ்சிலே வந்து புகுந்து போக மாட்டு கிறிலன்-இவ்வளவும் செய்து பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்
தன் பேறான அருளைப் பண்ணும் தலைமையை உடையவன் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ருஷபங்களை அழியச் செய்து ஸ்ரீ நப்பின்னை பிராட்டியை லபித்து அவளோடு கூட அரவத்தமளியினோடும் -என்கிறபடியே
வந்து இனி ஒருகாலும் பேரான் என்று தோற்றும்படி இருந்தான் ஆயிற்று –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்-

ருஷபங்களை அழியச் செய்து ஸ்ரீ நப்பின்னை பிராட்டியைக் கை பிடித்துக் கொண்டு என்னுடைய ஹ்ருதயத்தில் வந்து
புகுந்த பின்பு இனி இந்த அந்தர் ஹஸ்யத்துக்கு எடுத்துக் கை நீட்டுகை ஒழிய வேறு ஓன்று அறியேன் -என்கிறார் –
இதர நிர பேஷனான அவன் அநந்ய கதியாய் கொண்டு என் பக்கலில் வந்து புகுர ஸா பேஷனான நான்
அவனை விட்டுப் போவேனோ –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ திருமலையிலே வந்து புகுந்து உன்னுடைய ஸ்வாமித்வத்தைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கினவனே –
எனக்காக வந்து நிற்கிற நிலையை விடாய் –ஆனபின்பு நான் உனக்காம் படி பற்றின பற்று விடுவேனோ
இத்தால் -பரபக்தி பர்யந்தமாக பிறந்தது -என்றபடி-அரை ஷணம் அவனை ஒழியச் செல்லாமை உண்டாகை இறே
பரபக்தி -யாவது வ்யதிரேகத்தில் ஜீவியாத படி -ஆனார்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

அங்குத்தை திரு வேடர் எப்போதும் ஏறிட்ட வில்லும் தாங்களுமாய்
உணர்ந்து நோக்குவார்கள் ஆயிற்று –
ஸ்ரீ குஹப் பெருமாள் இரவு எல்லாம் உணர்ந்து நோக்கினாப் போலே – இவற்றை அப்யசிக்க வல்லார்கள்
நித்ய ஸூரிகள் உடைய நித்ய கைங்கர்யமே தங்களுக்கு யாத்ரையாகப் பெறுவார்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்-