Archive for August, 2024

ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் ரஹஸ்ய த்ரய சார அர்த்தங்கள்

August 31, 2024

ரஹஸ்யார்த்த நிர்வாஹங்களில் சார தமமாகக் கொள்ளப்படும் மூன்று விஷயங்கள்
1- சேஷத்வமே ஞான ஆனந்தங்களை விட ஜீவாத்மாவுக்கு அந்தரங்க நிரூபகம்
2-ஸ்வ கத ஸ்வீ காரத்தைக் காட்டிலும் பர கத ஸ்வீ காரமே ஸ்ரேஷ்டம்
3- சேதன லாபம் எம்பெருமானுக்குப் புருஷார்த்தமே ஒழிய எம்பெருமானைப் பெறுவது சேதனனுக்குப் புருஷார்த்தம் அன்று

மற்ற விஷயங்கள் இவற்றுள் அந்தர்பவிக்கும்

அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –8-8-2-
மற்ற இடங்களில் -அடியேன் -என்பது தேஹ விஸிஷ்ட ஆத்மாவைக் குறிக்கும்
அடியேன் சிறிய ஞானத்தன் -1-5-2- என்கிற இடத்தில் ஞானமுடைமை தேஹத்துக்கு அஸம்பாவிதம் என்பதால் இங்கு ஆத்மாவையே சொல்லுமோ என்னில்
காண்பான் அலற்றுவன் என்ற கிரியையுடன் இது அந்வயிக்கிற படியால்
வெறும் ஆத்மா அலற்ற முடியாதாகையாலே தேஹ விஸிஷ்ட ஆத்மாவையே குறிக்கும்
இவ் விடத்தில் மட்டுமே ஆத்மா என்பதும் அடியேன் என்பதும் பர்யாயம் –
அதாவது ஆத்மாவுக்கு சேஷத்வமே அந்தரங்க நிரூபகம் என்பது ஆழ்வாரது திரு உள்ளம்

இந்த மஹா அர்த்தம் ஸ்வாமியுடைய திரு உள்ளத்தில் நன்கு ஊறி இருந்து-

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப–7-16-

৷৷7.16৷৷ஸுக்ருதிநஃ புண்ய கர்மாணோ மாஂ ஷரணம் உபகம்ய மாம் ஏவ பஜந்தே. தே சே ஸுக்ருத தார தம்யேந சதுர்விதாஃ, ஸுக்ருத கரீயஸ் த்வேந ப்ரதிபத்தி வைஷேஷ்யாத் உத்தரோத்தராதிகதமாஃ பவந்தி.–(புண்ய மிகுதி மிகுதியால்-பிரதிபத்தி – விருப்பத்தின் வேறுபாட்டால் -விரும்பியதை அருளுகிறேன் )

ஆர்த்தஃ ப்ரதிஷ்டா ஹீநோ ப்ரஷ்டைஷ்வர்யஃ புநஸ் தத் ப்ராப்தி காமஃ.

அர்தார்தீ அப்ராப் தைஷ்வர்ய தயா ஐஷ்வர்ய காமஃ, தயோஃ முக பேத மாத்ரம், ஐஷ்வர்ய விஷய தயா ஐக்யாத் ஏக ஏவ அதிகாரஃ.(அண்டக் குலத்துக்கு அதிபதி-புதிய ஐஸ்வர்ய காமன் பாசுரம் -அசுரர் இராக்கதர் இண்டைக் குலத்தை எடுத்துக் கலைந்த இருடீகேசன் -இழந்த ஐஸ்வர்யம் மீண்டு பெற பாசுரம் )

ஜிஜ்ஞாஸுஃ ப்ரகரிதி வியுக்தாத்ம ஸ்வரூபாவாப்தீச்சுஃ ஜ்ஞாநம் ஏவ அஸ்ய ஸ்வரூபம் இதி ஜிஜ்ஞாஸுஃ இதி உக்தம்.(ஞான ஸ்வரூபமான ஆத்ம பிராப்தி காமன் )

ஜ்ஞாநீ ச’இதஸ் த்வந்யாஂ ப்ரகரிதிஂ வித்தி மே பராம்’ (கீதா 7.5) இத்யாதிநா அபிஹித பகவச் சேஷதைக ரஸாத்ம ஸ்வரூப வித் ப்ரகரிதி வியுக்த கேவலாத்மநி அபர்யவஸ்யந் பகவந்தஂ ப்ரேப்ஸுஃ பகவந்தம் பரம ப்ராப்யஂ மந்வாநஃ.(ஜ்ஞாநீ-பகவத் ஸ்வரூப ஞானம் உடையவன் )

(அபர்யவஸ்யந்–தேசிகன் -மர நிழலில் தங்கி விட்டுப் போவது -கைவல்யான் நிலை -அக்காரக் கனியை சேவிக்க கால தாமதம்
இங்கேயே தங்கி விடுகிறான் தென்னாச்சார்யா சம்ப்ரதாயம்
8 அத்யாயம் இத்தை மேலே விவரிக்கும்)

৷৷7.16৷৷’சதுர்விதா பஜந்தே’ இத்யத்ர பஜந பர்யவஸிதா ப்ரபத்திர் விதித்ஸிதா; பூர்வ ஷ்லோகே தந்நிஷேதா தத்ர தத்விதாநஸ்யைவோ சிதத்வாதித் யபிப்ராயேண’ஷரணமுபகம்யேத் யுக்தம்’. ஸுகரிதித்வாவிஷேஷே கதமதிகாரி பேத இத்யத்ரோக்தஂ’ஸுகரிததாரதம்யேநேதி’. தாரதம்யஂ விவரிணோதி’ஸுகரிதகரீயஸ்த்வேநேதி’. விஷ்வாஸாதேஃ ஸாதாரணத்வேபி ப்ரபத்தேர்வைஷிஷ்ட்யஂ பலேச்சாபேதாத். ஆர்தஷப்தோத்ரார்தி மூலபூர்வஸ்திதிஷை தில்ய பர இத்யபிப்ராயேணாஹ ’ப்ரதிஷ்டாஹீந’ இதி. ஆர்தஸ்ய ஹி பரபஜநமார்தி நிவரித்த்யர்தமேவேத் யபிப்ராயேணாஹ’ ப்ரஷ்டைஷ்வர்யஃ புநஸ் தத்ப்ராப்திகாம’ இதி. பாடக்ரமாதப்யர்தக்ரமஸ்ய ப்ரபலத்வாஜ் ஜிஜ்ஞாஸோஃ ப்ராகேவார்தார்திந உபாதாநம். ஆர்தாத்தஸ்ய விஷேஷஂ தர்ஷயதி’அப்ராப்தேதி’. அர்தஷப்தோத்ரார்தநீய போக விஷேஷ பரஃ. பல த்வாரா ஹ்யதிகாரி பேதோபிதீயதே; பலஂ சார்தஸ்யார்தார்திநஷ் சைஷ்வர்யமேகமேவ. யதா புநஸ்ததவாந்தர பேதேந பேதக்லரிப்திஃ ததா பேதாந்தரமபி வக்துஂ ஷக்யமித்யத்ராஹ’தயோரிதி’. ப்ரஸித்தேநாவாந்தரபேதேந விஷேஷ வ்யபதேஷ மாத்ரமிதி பாவஃ. ஜிஜ்ஞாஸு ஷப்தேந ஜ்ஞாநார்தி மாத்ரஂ கிஂ ந கரிஹ்யதே. பகவந்தமேவ வா ஜிஜ்ஞாஸுஃ பக்தி ஷ்ரத்தா ரஹிதஃ குதூஹல மாத்ரேண பகவந்தஂ ஜிஜ்ஞாஸமாநோ வா, யதைகதமே த்விததாதயஃ’யூயஂ ஜிஜ்ஞாஸவோ பக்தாஃ’ இதி.’ஆரோக்யஂ பாஸ்கராதிச்சேச் ச்ரியமிச்சேத் துதாஷநாத். ஈஷ்வராஜ் ஜ்ஞாநமந்விச்சேந் மோக்ஷமிச்சேஜ் ஜநார்தநாத்’৷৷[ம.பு.77.49] இத்யுக்தாதிகாரி சதுஷ்டயே சாத்ர ப்ரத்யபிஜ் ஞாயமாநே ஜிஜ்ஞாஸுரபி ஸ ஏவ பவிதுமர்ஹதி; தத்ராஹ’ப்ரகரிதீதி’. பகவந்தஂ ஜிஜ்ஞாஸோ ரந்ததோ பகவாநேவ ப்ராப்யதயாபிமத இதி ந புருஷார்தபேதஃ; தத்பேதாச் சாத்ராதிகாரி பேதஃ ப்ரதிபாத்யதே.’ஆர்தஃ, அர்தார்தீ’ இதி பாஹ்ய புருஷார்தாபிலாஷிணோ நிர்திஷ்டாஃ. பகவதர்தீ ச’ஜ்ஞாநீ’ இதி; ஜீவாத்ம ஸ்வரூபஂ சாதிகாநந்தஸ்வரூபஂ ப்ராப்யஂ சாந்யத்ர ப்ரஸித்தம்; அத்ராபி பரஸ்தாததிகாரி பேதஃ ஸமர்தயிஷ்யதே; அதஃ பரிஷேஷாதாத்மார்திவிஷயோயஂ ஜிஜ்ஞாஸுஷப்த இதி பாவஃ. ஜ்ஞாநார்திவாசகே ஜிஜ்ஞாஸுஷப்தே கதமாத்மார்தித்வஂ வ்யாக்ரியதே? இத்யத்ராஹ ‘ஜ்ஞாநமேவேதி’. ஜ்ஞாநமிஹ ஷுத்தாத்மா நுபவரூபஂ விவக்ஷிதமிதி பாவஃ. ஜ்ஞாநிநோதி கார்யந்தரத் வாநுகுணாந் வக்ஷ்யமாணாந் விஷேஷா நநுஸந்தாய விஷிஷ்ட ஜ்ஞாநத்வஂ தர்ஷயதி’இதஸ்த்வந்யாமி த்யாதிநா’.’கேவலாத்மந்ய பர்யவஸ்யந்நிதி’ நகரஂ ப்ரவிவிக்ஷோரத் வகஸ்ய ச்சாயாதரு மூலஸ்வாபவதாத்மா நுபவவிலம்ப இதி பாவஃ. அத்ர ஜிஜ்ஞாஸோர் வக்தவ்யஂ ஸர்வமஷ்டமே ப்ரபஞ்ச யிஷ்யாமஃ. விஷிஷ்ட ஜ்ஞாந பல பூதஂ புருஷார்தாந்தர பரிக்ரஹமாஹ’பகவந்தஂ ப்ரேப்ஸுரிதி’. தத்ர ஹேதுமாஹ ‘பகந்வதமிதி’. ’பகவந்த மேவேத்யாத்மாநுபவ விலம்பாக்ஷமத்வ மபிப்ரேதம்’.

இங்கு சங்கரர்
ஞானீ –விஷ்ணோஸ் தத்வ வித்
ஸ்வாமியோ
ஜ்ஞாநீ ச’இதஸ் த்வந்யாஂ ப்ரகரிதிஂ வித்தி மே பராம்’ (கீதா 7.5) இத்யாதிநா அபிஹித பகவச் சேஷதைகரஸாத்ம ஸ்வரூப வித் ப்ரகரிதி வியுக்த கேவலாத்மநி அபர்யவஸ்யந் பகவந்தஂ ப்ரேப்ஸுஃ பகவந்தம் பரம ப்ராப்யஂ மந்வாநஃ.(ஜ்ஞாநீ-பகவத் ஸ்வரூப ஞானம் உடையவன் )

இப்படி இந்த ஒரு இடம் மட்டும் இல்லாமல் ஞாநீ என்று வரும் இடங்களில் எல்லாம் ஸ்வாமியுடைய பாஷ்யம் இவ்வாறே அமைந்துள்ளது-ஜீவாத்மாவின் ஞானத்துக்குப் பிரயோஜனம் தன்னுடைய சேஷத்வத்தை அறிவது தான் என்று ஆழ்வாருடைய அருளிச் செயல்களில் அவகாஹநம் இருப்பதாலேயே ஸ்வாமியின் திரு உள்ளம் இவ்வாறு என்பது தெளிவாகத் தெரிகிறது

——-

ஸ்வ கத ஸ்வீகாரம் -மர்க்கட கிசோர நியாயம்
பர கத ஸ்வீ காரம் –மார்ஜார கிசோர நியாயம்

அநந்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஸ:
தஸ்யாஹம் ஸுலப: பார்த நித்யயுக்தஸ்ய யோகிந:–8-14-

    பார்த: ய:-பார்த்தா! எவன்,
    அநந்யசேதா:-பிரிது நினைப்பின்றி,
    நித்யஸ: ஸததம் மாம் ஸ்மரதி-என்னை எப்பொழுதும் நினைக்கிறானோ,
    நித்யயுக்தஸ்ய தஸ்ய யோகிந:-அந்த நித்தியமாக யோகத்தில் இசைந்திருக்கும் யோகிக்கு,
    அஹம் ஸுலப:-நான் எளிதில் அகப்படுவேன்

    ஏவம் ஐஷ்வர்யார்திநஃ கைவல்யார்தி நஷ்ச ஸ்வ ப்ராப்யாநுகுணஃ பகவதுபாஸந ப்ரகார உக்தஃ. –கீழ் இவரைப்பற்றி சொல்லி முடிக்கப் பட்டன )அத ஜ்ஞாநிநோ பகவதுபாஸந ப்ரகாரஂ ப்ராப்தி காரஂ ச ஆஹ — பகவத் லாபார்த்தி பற்றி இப்பொழுது சொல்லப்படுகிறது )

    ৷৷8.14৷৷நித்யஷோ மாம் உத்யோக ப்ரபரிதி ஸததஂ ஸர்வ காலம் அநந்ய சேதாஃ யஃ ஸ்மரதி அத்யர்தஂ மத் ப்ரியத்வேந மத் ஸ்மரித்யா விநா ஆத்ம தாரணம் அலபமாநோ நிரதிஷய ப்ரியாஂ ஸ்மரிதிஂ யஃ கரோதி தஸ்ய நித்ய யுக்தஸ்ய நித்ய யோகஂ காங்க்ஷமாணஸ்ய யோகிநஃ அஹஂ ஸுலபஃ அஹம் ஏவ ப்ராப்யஃ ந மத் பாவ ஐஷ்வர்யாதிகஃ.

    ஸுப்ராபஷ்ச தத் வியோகம் அஸஹமாநஃ அஹம் ஏவ தஂ வரிணே; (விட்டுப் பிரிய சகியாமல் நான் இருப்பதால் நானே வரிப்பதால் )மத் ப்ராப்த் யநு குணோபாஸந விபாகஂ தத் விரோதி நிரஸநம் அத்யர்தஂ மத் ப்ரியத்வாதிகஂ ச அஹம் ஏவ ததாமி இத்யர்தஃ.'(-காதல் அவஸ்தையை வளர்த்து -சிறுச் சிறிது விழித்து -அல்வழக்குகளை சமஸ்தமாகப் போக்கி -ஞானீயை ஞானவானாக ஆக்குகிறேன் )யமேவைஷ வரிணுதே தேந லப்யஃ’ (மு0 3.2.3) இதி ஹி ஷ்ரூயதே வக்ஷ்யதே ச.’தேஷாஂ ஸதத யுக்தாநாஂ பஜதாஂ ப்ரீதி பூர்வகம். ததாமி புத்தி யோகஂ தஂ யேந மாமுபயாந்தி தே৷৷தேஷாமேவாநுகம் பார்த மஹ மஜ்ஞாநஜஂ தமஃ. நாஷயாம் யாத்ம பாவஸ்தோ ஜ்ஞாந தீபேந பாஸ்வதா৷৷’ (கீதா 10.10-11) இதி.

    அதஃ பரம் அத்யாயஷேஷேண -(இதற்க்கு மேல் அத்யாய சேஷத்தில் )ஜ்ஞாநிநஃ கைவல்யார்தி நஷ்ச அபுநராவரித்திம் -(திரும்பி வராத மோக்ஷத்தையும் )ஐஷ்வர்யார்திநஃ புநராவரித்திஂ ச ஆஹ –(திரும்பி வரும் நிலையையும் )

    ৷৷8.14৷৷ஸங்கத்யர்தமநுவததி — ‘ஏவமிதி’. அத்யாயாரம்பகதப்ரஷ்நோத்தரயோஸ்தத்ப்ரஸஞ்ஜகே பூர்வாத்யாயாந்தே சாயஂ க்ரமோ ந விவக்ஷிதஃ அதியஜ்ஞாந்திமப்ரத்யயயோஃ ஸாதாரண்யேந ப்ரதிபாதநே தாத்பர்யாத். இஹ து ப்ரதிநியதார்தோபதேஷரூபத்வாதுத்தரோத்தரஂ உத்கரிஷ்டதாப்ரதர்ஷநாயைஷ்வர்யாக்ஷரயாதாத்ம்யஂ பகவச்சரணார்திநஃ க்ரமேணோக்தமிதி பாவஃ. அத்ர ச’ஏவம்’ இதி நிர்தேஷாத்’ஸ்வப்ராஷ்யாநுகுணஂ’ இதி நிர்தேஷாச்ச ப்ரகரணஸ்யாதிகாரித்ரயவிஷயத்வவ்யவஸ்தாபகஹேதவஃ ப்ரதர்ஷிதாஃ. ததாஹி — ஏவமத்ர கஷ்சிச்சங்க்யேத — நநு’தே ப்ரஹ்ம தத்விதுஃ’ [7.29]’கிஂ தத்ப்ரஹ்ம’ [8.1]’அக்ஷரஂ ப்ரஹ்ம பரமம்’ [8.3] இதி ப்ரஹ்மஷப்தஸ்ய ஸாக்ஷாத்ப்ரஹ்மவிஷயத்வே கோ பாதஃ? தஸ்யைவ ச ஸர்வாத்மத்வாதத்யாத்மஷப்தேநாபி தத்கதஂ ஸர்வஂ க்ரஹீதுமுசிதம்;’பூதபாவோத்பவகரோ விஸர்கஃ’ [8.3] இத்யபி ஜகத்ஸரிஷ்டிக்ரஹணஂ யுக்தஂ தேவதோத்தேஷேந த்ரவ்யத்யாகோ வா; ஸ சாத்ர நிவரித்திலக்ஷணோ யஜ்ஞஃ;’அதிபூதஂ க்ஷரோ பாவஃ’ [8.4] இதி ச அதிபவதீதி வ்யுத்பத்தேஃ ப்ராணிஜாதம். புருஷஷ்ச அதிதைவதமிதி பரப்ரஹ்மாவஸ்தாவிஷேஷஃ ஸமஷ்டிபுருஷாதிர்வா; அதியஜ்ஞஃ ஸர்வயஜ்ஞாபிமாநிநீ விஷ்ண்வாக்யா தேவதா’யஜ்ஞோ வை விஷ்ணுஃ’ [ஷ.ப்ரா.1.3.1] இதி ஷ்ருதேஃ;’அந்தகாலே ச’ [8.5] இத்யாதி ஷ்லோகத்ரயமபி முமுக்ஷோரேவாந்திமப்ரத்யயமதிகரித்யோக்தம்; ப்ரஷ்நப்ரதிவசநஷ்லோகாநாஂ பூர்வாத்யாயே ப்ரஸ்துதாதிகாரித்ரயஜ்ஞாதவ்யோபாதேயபரத்வேப்யுபரிதநாஃஷ்லோகாஃ ப்ரதாநதயா ஸுதுர்லபத்வேந நிர்திஷ்டஜ்ஞாநிபரா யுக்தாஃ அந்யதா’மாமேவ ஸ்மரந்’ [8.5]’மாமேவைஷ்யஸி’ [8.7] இத்யாதேர்பாதாத்; அத ஏவ’ப்ரயாணகாலே ச கதம்’ [8.2]’அந்தகாலே ச மாம்’ [8.5] இதி ஷ்லோகயோரதிகாரித்ரயபரத்வேபி தத்விவரணேத்ர ததைகார்த்யஂ க்ராஹ்யமித்யபி நிரஸ்தம். தத்ராபி சாதிகாரித்ரயபரத்வஂ ந ப்ரதீயதே நசைஷ்வர்யார்திநஃ பரமபுருஷவிஷயாந்திமப்ரத்யயஸாபேக்ஷதாயாஂ ப்ரமாணஂ பஷ்யாமஃ; ஏவமுத்தரேஷ்வபி ஷ்லோகேஷ்வேக ஏவாதிகாரீ தத்வேத்யஂ சைகமேவ புநஃ புநரநூத்ய விஷேஷதோ விஷதீக்ரியதே; நச புநருக்திதோஷஃ அப்யாஸஸ்ய ஜ்ஞாநிப்ராதாந்யலிங்கத்வாத்;’ஸஂஸித்திஂ பரமாஂ கதாஃ’ [8.15]’ஸ யாதி பரமாஂ கதிஂ’ [8.13]’தமாஹுஃ பரமாஂ கதிம்’ [8.21] இத்யமீஷாமைகார்த்யஂ ச ப்ரதீதஂ த்வபரித்யாஜ்யம்; ந ச பரமகந்தவ்யாதிரிக்தா பரமஸஂஸித்திஃ.’தமாஹுஃ பரமாஂ கதிம்’ [8.21] இதி பரோக்ஷநிர்தேஷஷ்ச’புருஷஃ ஸ பரஃ பார்த!’ [8.22] இதிவத்ஸ்யாத்;’பரமஂ புருஷஂ திவ்யஂ’ [8.8]’ஸ தஂ பரஂ புருஷமுபைதி திவ்யஂ’ [8.10]’புருஷஃ ஸ பரஃ பார்த! பக்த்யா லப்யஸ்த்வநந்யயா’ [8.22] இத்யமீஷாஂ பிந்நார்தத்வகல்பநஂ சாயுக்தம்; பரைரபி ச ஸர்வைஃ ப்ராயஷ ஏவமைககண்ட்யேந வ்யாக்யாதம் — இதி. அத்ரைவஂ பரிஹாரக்ரமஃ — ‘அதியஜ்ஞோஹமேவ’ இதிவத்’அஹமேவ ப்ரஹ்ம’ இத்யநுக்தேரத்யாத்மாதிவதத்ர ப்ரஹ்மஷப்தார்தஸ்யாப்யர்தாந்தரத்வஂ தாவத்ப்ரதீதம் நச ப்ரஹ்மஷப்தாதக்ஷரஷப்தஸ்ய பரமாத்மநி ரூட்யதிஷயஃ யேந ததஸ்தத்வ்யாக்யாநஂ ஸ்யாத்.’ஏவஂ ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாஂ பர்யுபாஸதே. யே சாப்யக்ஷரமவ்யக்தம்’ [12.1] இத்யாதிஷு ச பரமாத்மநோந்யதேவோபாஸ்யத்வமக்ஷரஷப்தேந ப்ரதீயதே;’த்வே ரூபே ப்ரஹ்மணஸ்தஸ்ய மூர்தஂ சாமூர்தமேவ ச. க்ஷராக்ஷரஸ்வரூபே தே ஸர்வபூதேஷு ச ஸ்திதே৷৷அக்ஷரஂ தத்பரஂ ப்ரஹ்ம க்ஷரஂ ஸர்வமிதஂ ஜகத்’ [வி.பு.1.22.55;56] இத்யாதிஷு சாக்ஷரபரப்ரஹ்மஷப்தௌ பரிஷுத்தாத்மவிஷயௌ ஷாரீரகபாஷ்யே ஸமர்திதௌ; அதோத்ர’கிஂ தத்ப்ரஹ்ம’ [8.1] இத்யுக்தேஹமேவ ப்ரஹ்மேத்யவ்யாக்யாநாத்ஸ்வேதரவிஷயப்ரஹ்மஷப்தஃ பரமஷப்தவிஷேஷிதாக்ஷரஷப்தாநுகுண்யாச்ச ப்ரகரிதேரீஷ்வராச்சாந்யஸ்மிந்பரிஷுத்தாத்மந்யுபசாராத்வர்ததே; பஷ்சாச்சாயமேவ’அவ்யக்தோக்ஷர இத்யுக்தஃ’ [8.21] இதி வக்ஷ்யதே; ந சாஸௌ ஷ்லோகஃ பரமாத்மபர இதி ஷங்கநீயம்’யே சாப்யக்ஷரமவ்யக்தஂ’ [12.1]’யே த்வக்ஷரமநிர்தேஷ்யஂ’ [12.3]’க்ஷரஷ்சாக்ஷர ஏவ ச’ [15.16] இத்யாதிஷ்விவாத்ராபி அக்ஷரஷப்தஸ்ய பகவத்வ்யதிரிக்தவிஷயத்வப்ரதீதேஃ ஸஂஸித்திஷப்தஷ்ச பரமகதிஷப்தநிர்திஷ்டப்ராப்யவிலக்ஷணாஂ ஸமீசீநாஂ ஸித்திஂ ஸ்வரஸத உபஸர்கஷக்த்யா வ்யநக்தி அதஏவ ஸ்வபாவாதிஷப்தா அதிகாரித்ரயஜ்ஞாதவ்யோபாதேயவஸ்துவிஷேஷபரா உக்தாஃ. ஏவஂ ஸ்வவாக்ய பர்யாலோசநயா பூர்வாத்யாயப்ரகரிதபராமர்ஷேந ச ப்ரஷ்நப்ரதிவசநவாக்யாநாமதிகாரித்ரயவிஷயத்வே ஸித்தே ததநந்தராணாமபி க்ரந்தாநாஂ யதாஸம்பவஂ ஸர்வவிஷயத்வஂ யுக்தம். ப்ரக்ராந்தே சாதிகாரித்ரயே யத்வரித்தத்ரயேணாநூத்யமாநே கைவல்யபகவத்ப்ராப்திகாமயோரநந்தரஂ ஸ்பஷ்டமபிதாநாத்’அப்யாஸ’-[8.8] இத்யாதிகஂ பரிஷேஷாதைஷ்வர்யார்திவிஷயம்; யச்சைஷ்வர்யார்திநாஂ பரமபுருஷவிஷயாந்திமப்ரத்யயஸாபேக்ஷதாயாஂ ப்ரமாணஂ நாஸ்தீதி; ததபி ந ஷ்ரீமத்பாகவதே புராணே த்ருவசரிதே தத்தரிஷ்டேஃ — ‘பக்திஂ ஹரௌ பகவதி ப்ரவஹந்’ இத்யாதிநா. அதோ யதோக்த ஏவார்தஃ. யத்யபி ப்ரஹ்மபுருஷபரகத்யாதிஷப்தைரிஹ ஸர்வத்ர பரமாத்மபஜநதத்ப்ராப்த்யாதிரேவ ப்ரதீயதே; ததாபி தாவதைவாதிகாரிவிஷயத்வஂ வக்துஂ ந யுஜ்யதே பூர்வத்ர ப்ரயாணகாலே ப்ரூமத்யே ப்ராணாவேஷஸ்ய தத்ரைவ பரமாத்மத்யாநஸ்ய ச விஹிதத்வாத் அநந்தரஂ ச ஹரிதி த்யாநஸ்ய மூர்த்நி ப்ராணாவேஷஸ்ய ச தத்கால ஏவ விதாநாத்; ததிதஂ த்வயஂ பரஸ்பரவிருத்தஂ கிஂ காலபேதாத்வ்யவஸ்தாப்யேதாதிகாரிபேதாத்வா?; தத்ர ந தாவத்காலபேதஃ ஷ்ருதஃ; ப்ரத்யுத காலைக்யமேவ ஷ்ரூயதே; அதஃ பரிஷேஷாத்ஸித்தோதிகாரிபேதஃ. கிஞ்ச “ஷதஂ சைகா ச” [சாஂ.உ.8.6.6] இத்யாதிபிர்மூர்தந்யநாட்யா நிஷ்க்ரமணஂ மோக்ஷஹேதுஃ அந்யாபிர்நிஷ்க்ரமணஂ பலாந்தரஹேதுரித்யவகதே ப்ரயாணகாலே ப்ரூமத்யே மூர்த்நி ச ப்ராணாவேஷஸ்யோத்க்ரமணஷேஷதயா தத்தத்தேஷகதநாட்யோத்க்ரமணே ப்ரதீதே ஸித்தஸ்தததிகாரிபேதஃ. பூர்வத்ர சாத்யாயே’சதுர்விதா பஜந்தே மாம்’ [7.16] இத்யாதாவயமதிகாரிபேதஃ ப்ரஸ்துதஃ; ததந்தே ச’ஜராமரணமோக்ஷாய’ [7.29]’ஸாதிபூதாதிதைவஂ மாம்’ [7.30] இதி ஷ்லோகயோர்யச்சப்தாவரித்த்யாதிகாரிபேதப்ரதீதிர்பாஷ்யே ப்ரதிபாதிதா; ஸா சாத்ராபி ஸ்புடா’அணோரணீயாஂஸமநுஸ்மரேத்யஃ’ [8.9]’யஃ ப்ரயாதி த்யஜந் தேஹஂ’ [8.13]’யோ மாஂ ஸ்மரதி நித்யஷஃ’ இதி. ஏததகிலமபிப்ரேத்யோக்தஂ’ஏவமைஷ்வர்யார்திந’ இத்யாதி.

    உக்தஷ்சாஸ்யாதிகாரீ’அநந்யசேதாஃ’ இத்யுச்யத இதி பரோக்தஂ நிராகுர்வந்’அநந்யசேதாஃ’ இதி ஷ்லோகஸ்யார்தமாஹ — ‘அதேதி’.’நித்யஷஃ’ இத்யநேநாத்மாநுபவாதிபலாந்தரவ்யவதாநநைரபேக்ஷ்யஂ விவக்ஷிதமித்யாஹ — ‘உத்யோகப்ரபரிதீதி’. அந்யதா’ஸததம்’ இத்யநேந புநருக்திஃ ஸங்கோசக்லேஷோ வா ஸ்யாதித்யபிப்ராயேணாஹ — ‘ஸததஂ ஸர்வகாலமிதி’. அநந்யசேதஷ்ஷப்தேநாபிப்ரேதஂ ஸ்மரிதேர்பக்திரூபாபந்நத்வஂ தர்ஷயதி — ‘அத்யர்தேதி’. அநந்யசேதஸ்த்வாதேவ ச ஸ்மரணஸ்யாச்சித்ரத்வம். உத்கண்டநேபி ச ஸ்மரதிஃ ப்ரயுஜ்யதே — ‘ப்ராதரௌ ஸ்மரதாஂ வீரௌ’ [வா.ரா.2.13] இத்யாதிஷு.’நித்யயுக்தஸ்ய யோகிநஃ’ இத்யுக்தாநுவாதஃ பலஸ்யாவ்யவஹிதத்வத்யோதநாய. அத்ர அஹஂஷப்தேநேஷ்வரஸ்ய ப்ரத்யகர்தோபிப்ரேதஃ. தேந தத்விஷேஷணபூதாக்ஷராதிபலப்ராப்திவ்யவச்சேதோ விவக்ஷித இத்யபிப்ராயேணாஹ — ‘அஹமேவேதி’. ததேவ விவரிணோதி — ‘ந மத்பாவ’ இதி. பகவத்ப்ராப்தேஃ பலாந்தரேப்யோதிஷயிதபலத்வாத்தத்ப்ராப்தௌ ப்ரயாஸாதிரேகஸம்பாவநாவ்யவச்சேதாய ஸுலபபதமித்யபிப்ராயேணாஹ — ‘ஸுப்ராபஷ்சேதி’. அகரிச்ச்ரேண ப்ராப்ய இத்யர்தஃ.’ஈஷத்துஸ்ஸுஷு கரிச்ச்ராகரிச்ச்ரார்தேஷு கல்’ [அஷ்டா.3.3.126] இத்யநுஷிஷ்யதே. ஆஷ்ரிதவத்ஸலஸ்யேஷ்வரஸ்ய ஸௌலப்யஂ ராகப்ராப்தமித்யாஹ — ‘தத்வியோகமிதி’. உக்தஸ்யாதிவாதமாத்ரத்வஷங்காவ்யுதாஸாய ஷ்ருதிமூலதாமாஹ — ‘யமேவேதி’. அத்ர வரணஷப்தேந கிமுச்யதே? ந தாவச்சேஷத்வஷரீரத்வாத்யாகாரேண ஸ்வீகாரஃ தஸ்ய நித்யஸித்தத்வாத்; ந ச தத்விபரீதஃ விருத்தத்வாதேவ; நச ப்ராப்திப்ரதாநஂ’தேந லப்யஃ’ இத்யநேந பௌநருக்த்யப்ரஸங்காத்; நசாந்யோத்ர ப்ரகாரஃ அஸம்பவாதித்யத்ராஹ — ‘மத்ப்ராப்த்யநுகுணேதி’. விபாகோத்ர த்ருவாநுஸ்மரிதிரூபத்வதர்ஷநஸமாநாதிகாரத்வாதிரூபஃ. தத்விரோதிநோ துஷ்கரிதரஜஸ்தமோராகத்வேஷமோஹாதயஃ.’அத்யர்தமத்ப்ரியத்வஂ’ நிரதிஷயபக்தித்வம். ஆதிஷப்தேந பரமபதபர்யந்தாஸத்திபர்யந்தஂ யந்மத்யேபேக்ஷிதஂ தத்ஸர்வஂ விவக்ஷிதம்.’அஹமேவேதி’ பரமகாருணிகஸ்ய மமைவாயஂ பர இத்யபிப்ராயஃ.’தஸ்யாஹஂ ஸுலபஃ’ இத்யாதேருக்தார்தபரத்வஸ்திரீகரணாயாஸ்யைவார்தஸ்ய வக்ஷ்யமாணஂ விஸ்தரகுதாஹரிதஷ்ருத்யுபபரிஂஹணரூபஂ தர்ஷயதி — ‘வக்ஷ்யதே சேதி’.,

    என்னோடு எப்போதும் கூடி இருக்க வேணும் என்கிற விருப்பம் யுடையவனுக்கு அடையத் தகுந்தவன் நானே யாகிறேன் –
    மிக எளியதாக அடையத் தகுந்தவனுமாகிறேன் -என்கிறான்
    அதாவது
    அவனது பிரிவைப் பொறுக்க மாட்டாதவனாய் -அவனைப் பிரிந்து தரிக்க மாட்டாதவனாய் நானே அவனை வரிக்கிறேன்
    என்னை அடைவதற்கான உபாஸனத்தின் பரிபக்குவ நிலைமையையும்
    அதற்குற்ற இடையூறுகளை நீக்குதலையையும்
    என்னிடத்தில் அதிகமான ப்ரீதி
    முதலியவைகளையும் நானே கொடுக்கிறேன்
    நாயமாத்மா ஸ்ருதி ப்ரஸித்த அர்த்தமும் இதுவே
    மேலே 10-10/10-11 ஸ்லோகங்களின் அர்த்தங்களும் இதுவே

    10. தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம்
    ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே

    ஸததயுக்தாநாம்-எப்போதும் யோகத்தில் இருப்பாராகில்,
    ப்ரீதிபூர்வகம் பஜதாம்-அன்புடன் என்னை வழிபடும்,
    தேஷாம்-அவர்களுக்கு,
    யேந-எந்த உபாயத்தின் மூலம்,
    மாம் உபயாந்தி-என்னை அடைவார்களோ,
    தம் புத்தியோகம் ததாமி-அந்த ஞான வடிவாகிய யோகத்தை அளிக்கிறேன்.

    ৷৷10.10৷৷தேஷாஂ ஸதத யுக்தாநாஂ மயி ஸதத யோகம் ஆஷஂ ஸமாநாநாஂ மாஂ பஜமாநாநாம் அஹஂ தம் ஏவ புத்தி யோகஂ விபாக தஷாபந்நஂ (தரிசன -மானஸ சமானாகாரம் -பர ஞானம் -மநோ விகாரம் )ப்ரீதி பூர்வகம் ததாமி யேந தே மாம் உபயாந்தி.கிஂ ச —

    (ப்ரீதி பூர்வகம் பஜதாம் என்று இல்லாமல் ப்ரீதி பூர்வகம் ததாமி -தான் கொடுப்பதுடன் சேர்த்து –
    பக்தி செய்கிறான் என்றாலே ப்ரீதி பூர்வகம் இருக்க வேண்டுமே –
    வெகு நாள்களாக கிருஷீ பண்ணுபவன் அவன் தானே -நிர்ஹேதுகமாக தனது பேறாக கொடுக்கிறான் என்றவாறு)

    ৷৷10.10৷৷பகவத்குணவிபூதிஜ்ஞாநஸ்ய பக்த்யுத்பத்திவிவரித்திஹேதுத்வமுக்தம்; ததாவிதவிவரித்தபக்தேர்பகவத்ப்ராப்திபூர்வபாவிவிஷததமஸாக்ஷாத்காரரூபாவஸ்தாவிஷேஷஹேதுத்வஂ பகவத்ப்ரஸாதாவாந்தரவ்யாபாரகமுச்யதே’தேஷாமிதி’.’மயி ஸததயோகமாஷஂஸமாநாநாமிதி’. நஹி ஸததஂ ஸமாதாநரூபோ யோகஃ ஷக்யஃ. ஸததஷப்தேந ப்ரதிதிநவிவக்ஷா ச ந ஸ்வாரஸிகீ? ந ச ப்ராப்திரூபஸததயோக இதாநீஂ வரித்தஃ; அத ஆஷஂஸார்தத்வமேவ யுக்தமிதி பாவஃ.’தமேவேதி’ ஆஷஂஸாவிஷயாந்தர்கதமேவேத்யர்தஃ. ஸததயோகாஷஂஸயைவ பஜநே ப்ரீதிரூபத்வஸ்ய பலிதத்வாத்’ப்ரீதிபூர்வகம்’ இத்யஸ்ய பஜநாந்வயே ப்ரயோஜநஂ நாஸ்தி’ததாமி’ இத்யநேநாந்வயே து பஜநாவாந்தரவ்யாபாரகதநரூபேண பரமோதாரத்வாதிபகவத்குணகணப்ரகாஷநேந ச மஹத்ப்ரயோஜநமித்யபிப்ராயேண’ப்ரீதிபூர்வகஂ ததாமீத்யந்வய’ உக்தஃ.’மாமுபயாந்தி’ இத்யத்ராபராமரிஷ்டபதபதார்தைர்மூடைரைக்யாபத்திர்வ்யாக்யாதா.

    ——————

    பகவான் கொடுக்கிற புத்தியோகத்தால் பக்தன் அடையும் நன்மை யாது? விடை வருகிறது :

    11. தேஷாமேவாநுகம்பார்தமஹமஜ்ஞாநஜம் தம:
    நாஸயாம்யாத்மபாவஸ்தோ ஜ்ஞாநதீபேந பாஸ்வதா

    தேஷாம் அநுகம்பார்தம்-அவர்களுக்கு இரங்கி நான்,
    ஆத்மபாவஸ்த:-அவர்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று,
    அஹம் ஏவ-நானே,
    அஜ்ஞாநஜம் தம:-அறியாமையால் உண்டான இருளை,
    பாஸ்வதா-ஒளிமயமான,
    ஜ்ஞாநதீபேந-ஞான வடிவான விளக்கினால்,
    நாஸயாமி-அழிக்கிறேன்.

    ৷৷10.11৷৷தேஷாம் ஏவ அநுக்ரஹார்தம் அஹம் ஆத்ம பாவஸ்தஃ தேஷாஂ மநோ வரித்தௌ விஷய தயா அவஸ்திதோ மதீயாந் கல்யாண குண கணாந் ச ஆவிஷ்குர்வந் மத் விஷய ஜ்ஞாநாக்யேந பாஸ்வதா தீபேந ஜ்ஞாந விரோதி ப்ராசீந கர்ம ரூப அஜ்ஞாந ஜஂ மத் வ்யதிரிக்த விஷய ப்ராவண்ய ரூபஂ பூர்வ அப்யஸ்தஂ தமஃ நாஷயாமி.

    ஏவஂ ஸகலேதர விஸஜாதீயஂ பகவத அஸாதாரணஂ ஷ்ரரிண்வதாஂ நிரதிஷயாநந்த ஜநகஂ கல்யாண குண கண யோகஂ ததைஷ்வர்யவிததிஂ ச ஷ்ருத்வா தத் விஸ்தாரஂ ஷ்ரோது காமஃ அர்ஜுந உவாச —

    ৷৷10.11৷৷உக்தபுத்தியோகோத்பத்திப்ரதிபந்தநிரஸநஂ’தேஷாமேவ’ இதி ஷ்லோகேநோச்யத இத்யபிப்ராயேணாஹ — ‘கிஞ்சேதி’.’அநுகம்பாஷப்தேநாத்ர’ அநிஷ்டநிவரித்திபூர்வகேஷ்டப்ராப்திஹேதுஃ’மதநுக்ரஹாய’ [11.1] இதி வக்ஷ்யமாணப்ரஸாதவிஷேஷோ விவக்ஷிதஃ. ஸஹஜகாருண்யமாத்ரபரத்வேர்தஷப்தஸ்ய வ்யர்தத்வாதித்யபிப்ராயேணோக்தஂ — ‘அநுக்ரஹார்தமிதி’. அத்ர சாஹஂஷப்தேநாநுக்ரஹௌபயிகஜ்ஞாநஷக்திகருணாதிவ்யமங்கலவிக்ரஹாதிவிஷிஷ்டஸ்வரூபஂ விவக்ஷிதம்.’மநோவரித்தாவிதி’ — ஆத்மபாவஷப்தஸ்யாத்ராத்மத்வஸ்வஸ்வபாவாதிபரத்வேதிகப்ரயோஜநஂ நாஸ்தி; மநோவரித்திவிஷயத்வஂ து புத்தியோகஸ்யாத்யந்தோபயுக்தமிதி பாவஃ. வ்யாப்தஸ்யேஷ்வரஸ்ய கீதரிஷீயமபூர்வா ஸ்திதிஃ இத்யத்ரோக்தஂ — ‘விஷயதயேதி’. தீபதயா ரூபிதஸ்ய ஜ்ஞாநஸ்ய பாஸ்வரத்வஂ பரிதஃ ப்ரகாஷநம்? தச்ச ப்ரகாரவிஷேஷப்ரகாஷநஂ பவிதுமர்ஹதி. ததாவிதவிஷதாநுபவாதஜ்ஞாநநிவரித்திஃ? ஷப்தாதிப்ராகரிதகுணப்ராவண்யநிவரித்திஷ்சேத்யபிப்ராயேணாஹ — ‘மதீயாந்கல்யாணகுணகணாஂஷ்சாவிஷ்குர்வந்நிதி’. ஹேதுகார்யபாவேந வ்யபதேஷாதஜ்ஞாநதமஷ்ஷப்தயோரத்ரார்தாந்தரஂ வாச்யம்; கர்மணி ச ஜ்ஞாநவிரோதித்வேநாஜ்ஞாநஷப்தஃ; யதோக்தம் — ‘அவித்யா கர்மஸஂஜ்ஞாந்யா’ [வி.பு.6.61] இதி. கர்மஜந்யஂ பகவத்ஸாக்ஷாத்காரரூபப்ரகாஷப்ரதிபந்தகஂ ச தமோர்தஸ்வபாவாத்விஷயாந்தரப்ராவண்யமேவ. நிரதிஷயபோக்யபகவஜ்ஜ்ஞாநஸ்ய போக்யாந்தரப்ராவண்யநிவர்தகத்வஂ யுக்தஂ?’தவாமரிதஸ்யந்திநி பாதபங்கஜே நிவேஷிதாத்மா கதமந்யதிச்சதி. ஸ்திதேரவிந்தே மகரந்தநிர்பரே மதுவ்ரதோ நேக்ஷுரகஂ ஹி வீக்ஷதே’ [ஸ்தோ.ர.] இத்யாதிந்யாயாத்; ததேததபிப்ரேத்யோக்தஂ’ஜ்ஞாநவிரோதீத்யாதி’. தமஷ்ஷப்தேந தமோவரித்திலக்ஷணாதிபக்ஷோப்யநேந நிரஸ்தஃ. யத்யபி விஷயப்ராவண்யநிவரித்திபூர்வகஂ பஜநஂ? ததாபி,ஸஂஸ்காரஷேஷாதநுவரித்தஂ ஸூக்ஷ்மஂ ப்ராவண்யமிஹ பஜநவிநாஷ்யதயோக்தமிதி நாந்யோந்யாஷ்ரயஃ.

    ———————-

    சூரணை -142-

    இவன் அவனைப் பெற நினைக்கும் போது
    இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –

    இப்படி பிரஸ்துதையான  பிரபத்தியினுடைய அநு உபாயத்வத்தையும் தத் பிரதி கோடியான பர கத ஸ்வீகார உபாயத்வத்தையும் –
    இது தன்னை பார்த்தால் -சூரனை – 54-இத்யாதியாலும் -பிராப்திக்கு உபாயம் அவன் நினைவு -சூரனை -66 -இத்யாதியாலும் –
    கீழ் அருளிச் செய்தபடி அன்றியே -முகாந்தரேண அருளிச் செய்கிறார் மேல் –

    ப்ராப்தா ப்ராப்யன் பாவம் இருவருக்கும் –சம்பந்தம் -/சரியான தலையில் இருக்க வேண்டுமே கார்யகரம் ஆவதற்கு-
    இது முதல் -மேல் -ப்ரஹ்மாவாய் இழந்து போதல் – இடைச்சியாய் பெற்று விடுதல் செய்யும் படியாய் இருக்கும் –242 – சித்த உபாய வைபவம்
    கீழ்ச் சொன்ன பிரபத்தி —பரதந்த்ரனான இவன் ஸ்வதந்த்ரனான அவனை தான் -பலியாய் -ப்ராப்தாவாய் –
    பெற நினைக்கும் பொழுது -அவன் நினைவு கூடாதாகில் –
    ஸ்வரூபத்துக்கு அனுரூபமான இதுவும் அவனை இழக்க ஹேது வாகுமே /
    வேறே முகத்தால் இங்கு அருளிச் செய்கிறார் -அடுத்த நான்கு சூரணைகளால்-
    ஆனந்தமயன் அறிந்தவன் அடைகிறான்–தூ மணி விஷய வாக்கியம்
    அவன் இவனுக்கு ஆனந்தம் கொடுக்கிறான் -நோற்காமலே பெற்ற கோபி -நோற்று ஸ்வர்க்கம் பாசுரம் /
    இயற்கையால் பரதந்த்ரன் நான் ஸ்வீ கரிக்கிறேன் என்ற ஸ்வ தந்த்ர நினைவு வந்தால் சாதனம் ஆகாது -பாதகம் ஆகும்
    பிரபத்தியும் -கீழ் சொன்ன ஏற்றங்கள் இருந்தாலும் உபாயாந்தர கோஷ்ட்டிக்குள் புகும் –
    சரண்ய ஹிருதய அனுசாரியாக இருப்பதும் இல்லாமையும் -வேறு முகமாக இதில் —
    அபராத கோடி கடித அப்ரயுக்த ஷாமணீயத்வாதிகள் -பொறுத்து அருள் -என்று பண்ணின பிரபதிக்கும் கேட்க வேண்டுமே
    அபராத கோடியில் சேராமல் -அவன் திரு உள்ளத்துக்கு சேரும் படி இருக்க வேண்டும் -/
    பிரபத்வ்யன் ஸ்வ தந்த்ரன் தானே உபாயமாகும் / பக்தியும் ஸ்வா தந்தர்ய அபிமானதுடன் பண்ணி உபாயத்வம் வருமே /
    இது– யாதிருச்சிகமாக –அவன் ஸ்வா தந்தர்யம் குறைக்க நாம் யார் —
    ஸ்வரூப அனுரூபமாகவும் உபாயத்வமும் இல்லாமல் இருக்க வேண்டுமே /
    உபாய பிரபத்திக்கு -உபாஸனாதிகளைப் போலே அஹங்கார கர்ப்பம் குற்றம் வரும் போலே அனுரூபமாய் இருக்காதே
    பரத ஆழ்வான்-ஸ்ரீ பாஷ்ய காரர் பிரபத்திகள் –அதிகார விசேஷண பிரபத்தி -பல பிரபத்தி -அனுபாய பிரபத்தி -பர்யாய சப்தங்கள் —
    அதிகாரி விசேஷணமாய் ஸ்வரூப அனுரூபமாய் உபாயத்வம் இல்லாமல் –இருந்தாலும் -பரத பிரபத்தி பலம் கிடைக்காதது –
    ஷாமணியத்வம் -கத்யத்தில் ஸ்ரீ பாஷ்யகாரர் -பொறுத்து கொள்ள பிரார்த்திக்கிறாரே பிரபத்தி பண்ணினத்துக்கும் /
    இருவருக்கும் கேட்டே பொழுதே இல்லையே –
    சரண்ய ஹிருதய அனுசாரியாய் -இல்லாமல் பலம் இல்லை என்பது கண்டால் உபாய பிரபத்திக்கு சொல்ல வேணுமோ –
    ஆகவே அவன் திரு உள்ள நினைவே உபாயம் என்றவாறு -உடைமையை -உடையவன் -ஸ்வாமி தானே அங்கீ கரிக்க வேண்டும் –
    சொத்தை ஸ்வாமி தானே ரஷிப்பாரே/ நாதன் உள்ளவர் தங்கள் ரக்ஷணம் கார்யம் செய்ய மாட்டார்களே /

    அதில் இப்படி ஸ்வரூப அனுரூபமான இத்தை சாதனம் ஆக்கிக் கொண்டு ஸ்வ தந்த்ரனான அவனை இவன் பெறப் பார்க்கும் அன்று –
    அவன் நினைவு கூடாதாகில் -இது விபலிக்கும் என்கிறார் –
    அதாவது –
    உடைமையை உடையவன் சென்று கைக் கொள்ளுமா போலே -ஸ்வாமியான அவன் தானே வந்து அங்கீகரிக்க கண்டு இருக்க
    பரதந்த்ரனான இச் சேதனன் -தான் பலியாய் -தன் ஸ்வீகாரத்திலே ஸ்வதந்த்ரனான அவனைப் பெற நினைக்கும் அளவில் –
    அவன் நினைவு கூடாதாகில் -இப்படி விலக்ஷணையாய் இருக்கிற பிரபத்தியும் தல்லாப சாதனம் ஆகாது என்றபடி –

    —————————————-

    சூரணை-143-

    அவன் இவனை பெற நினைக்கும் போது
    பாதகமும் விலக்கு அன்று —

    இனி அவனே ஸ்வீகரிக்கும் அளவில் உள்ள வாசி சொல்லுகிறார் –

    ஸூவ இச்சையால் -ஸ்வ தந்த்ர ஸ்வாமி / பரதந்த்ர சொத்தை பெற நினைக்கும் பொழுது -அநாதிகாலமாக புத்தி பூர்வகமாக
    அநேக மஹா பாதகங்களும் -அவனை பெறுகைக்கு விலக்கு அன்று -/ பாவங்கள் பாதகங்களை விட சிறியவை /
    லாப கிரியா நிஷ்பத்தி -இச்சாயம் சத்தா நிவாரகர் இல்லா ஸ்வா தந்திரம் –சங்கல்பத்தாலே அடைகிறான் /
    லப்தவ்யம் அடையப்படும் பொருள் சொத்து /
    நரகங்களில் விழப்பண்ணுவதால் பாதகம் -நிலையில் இருந்து நழுவுதலால் பாதகம் -என்றுமாம் –

    அதாவது –
    ஸ்வாமியாய் -ஸ்வதந்த்ரன் ஆனவன் -ஸ்வம்மாய் பரதந்த்ரனாய் இருக்கிற இவனை
    ஸ்வ இச்சையால் பெற நினைக்கும் அளவில் -பாபங்களில் பிரதானமாக எண்ணப்படும்
    பாதகமும் பிரதிபந்தம் ஆக மாட்டாது என்கை-
    இவை இரண்டாலும் ஸ்வ கத ஸ்வீகார அநுபாயத்வமும் –
    பர கத ஸ்வீகார உபாயத்வமும் காட்டப் பட்டது —
    சித பரம் சில்லாபே பிரபத்தி ரபி நோ பதி விபர்யேது நைவாச்ய பிரதி ஷேதாய பாதகம் -என்னக் கடவது இறே–

    —————————————–

    சூரணை -144-

    இவை இரண்டும்
    ஸ்ரீ பரத ஆழ்வான் பக்கலிலும்
    ஸ்ரீ குகப் பெருமாள் பக்கலிலும்
    காணலாம் –

    இப்படி இவை இரண்டும் காணலாம் இடமுண்டோ என்ன –
    அருளிச் செய்கிறார் –

    உறவுள்ள ஸ்ரீ பரத ஆழ்வான் இழக்க / தோஷமே பச்சையாக பெருமாள் உறவு கொண்ட-
    ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி – – ஸ்ரீ குகப் பெருமாள் பெற்றானே/

    ————————————-

    சூரணை -145-

    ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நன்மை தானே தீமை ஆயிற்று –
    ஸ்ரீ குகப் பெருமாளுக்கு தீமை தானே நன்மை ஆயிற்று –

    அவர்கள்  தங்கள் பக்கல் இவை கண்டபடி என்னவென்ன -அருளிச் செய்கிறார் –

    தானே ப்ராப்தாவாக நினைத்த ஸ்ரீ பரத ஆழ்வான் -பிரபதனமான நன்மை தானே -அனைத்துக்கும் பிராயச்சித்தம் இது என்ற நன்மை இருந்தாலும் – –
    பெருமாள் திரு உள்ளம் கன்னி -அவ்வருகே -சித்ர கூடம் விட்டு தண்ட காரண்யம் போகும் படி பண்ணிற்றே
    ஸ்ரீ குகப் பெருமாளுக்கு அஞ்ஞானம் இத்யாதிகள் நன்மையாயிற்றே –
    ராச க்ரீடை -கொண்டாட்டம் -உன் திரு உள்ளம் உகந்து இருந்தால் புண்யம் -ஈஸ்வர ப்ரீதியும் கோபமும் / பாபம் புண்யம் இந்த லக்ஷணமே –
    சிரஸா யாஜிதோ மயா பிராது சிஷ்யஸ்ய தாஸஸ்ய பிரசாதம் கர்த்தும் அர்ஹதி –தானே ப்ராப்தா என்ற மநோ ரதம்–ஆர்த்தி யுடன் –
    இன்றே திரு அபிஷேகம் -ஆர்த்த பிரபத்தி இது -துடிப்பு –முன் நின்றே செய்தான் -ஆர்த்த பிரபத்திக்கு அங்கங்கள் எல்லாம் சரி -பூர்ணம் –
    ராமஸ்ய பாதவ் சிரஸா ஜாக்ர -விதிவத் புன -விதி வழி திருவடிகளில் மேல் தலையை வைத்தான் –
    -தேவ ப்ரபத்தியிவ் வ்யாவர்த்தி அது திருப்த பிரபத்தி -/ஆனாலும் பலம் விளம்பப் பெற்றானே —
    சீக்ர கால சரணாகதி ராவண வதம் -ரூபம் அது –
    தேவ பரத பிரபத்தி விருத்த பலன்கள் –காரண கிரமத்தால் கொடுத்தான் என்று சொல்ல முடியாதே –
    இந்த பிரபத்தி லக்ஷணம் உடனே கொடுத்து இருக்க வேண்டுமே /
    பிரபல பிரதபந்தகங்களும் இல்லை –பரத ஆழ்வான் அகர்ம வஸ்ய அவதாரம் அன்றோ –
    பித்ரு வசனத்தில் பெருமாள் மனம் வைத்து –இவன் பண்ணின ஆர்த்த பிரபத்தியும் –நன்மையாகிய இது தீமையாகப் போனதே
    நியதி சாதனத்வம் உண்டே பிரபத்திக்கு -இருந்தாலும் சாத்தியம் இல்லையே இங்கு –சாஸ்த்ர விசுவாசம் குறையுமே —
    பலம் தள்ளி வந்ததே -உபாயம் ஆகாது என்று சொல்ல வந்தீரே அத்தை சொல்ல முடியாதே என்னில் -இவனது ஆர்த்த பிரபத்தி -அன்றோ /
    திருப்த பிரபத்தி போலே பலன் கிடைத்தது -சர்வஞ்ஞனுக்கும் நித்ய சூரிக்கும் அங்கம் குறை சொல்ல முடியாதே /
    அப்ராமாண்ய பிரசங்கம் இல்லை சாஸ்த்ரங்களுக்கும்/ சரண்ய ஹிருதய அனுசரணமாக இருக்க வேண்டும்
    மதி -இச்சா / கமனம் அநிஷ்டம் -தத் த்வாரா இதுவும் அநிஷ்டம் /
    சரண்யனுக்கு அதீனப்பட்ட பலன் கிடைக்காதே –திரு உள்ளம் – விருப்பம் இல்லையே /
    ஏழை இத்யாதி ஞான ஹீனன் -இத்யாதி தோஷங்கள் / மீனை பிடித்து வெட்டுவது அவனுக்கு ஜீவனம் /
    பெருமாளுக்கு ரக்ஷகமே ஜீவனம் /
    புண்ய பாபங்கள் கடம் படம் போலே இல்லை -இந்த தேசம் இந்த காலம் புண்யம் வேறே மாறலாம் -நியதங்கள் இல்லை /
    அவன் திரு உள்ளத்தைப் பொறுத்தே
    இஷ்டாவஹம் புண்யம் அனிஷ்டவஹம் பாபம் / நன்மையையும் தீமையும் தீமையாகவும் நன்மையாகவும் குறை இல்லை –

    வந்த கார்யம் இன்னது என்பதை சிற்றம் சிறுகாலையில் வைத்தாள் ஆண்டாள் –
    அசமயத்தில் கேட்க்கும் பரத ஆழ்வானைப் போலே அசடு இல்லையே /
    சர்வ லோக சரண்யன் -வேடன் வேடுவிச்சி பக்ஷி குரங்கு ராக்ஷசர் விஷயங்களில் தான் முற்பாடானாய் –
    அவர்கள் இருக்கும் இடத்தில் தானே சென்று அனுக்ரஹிக்க திரு உள்ளம் இருக்க -அனுஷ்டான சேஷம் ஆக்கிக் காட்ட வேண்டும் –
    பித்ரு வாக்ய பரிபாலனம் வியாஜ்யமாக -அனலோசித அசேஷ சரண்யன் என்று லோகத்துக்கு காட்ட வேண்டுமே /
    பரதன் சொல்வதை சுமந்திரன் நிறை வேற்றாமல் -பண்ணாமல் இருக்க -பெருமாள் திரு உள்ளம் அறிந்து -அந்த பரதனோ என்னில் –
    திரு உள்ளம் அறியாதவன் என்று –
    அந்த திரு முகத்தையும் பார்த்த பின்பு தர்பம் தானே பரப்பி -கூட்டிக் கொண்டு போக துடிப்பாலே -ஆர்த்தியால் கலங்கி -திரு முன்பே
    பிராய உபவாசம் வடக்கு பார்த்து பட்டினி இருந்து உயிர் விட இருக்க -விஸ்லேஷ பயத்தால் பெருமாளும் கலங்கி –
    சர்வஞ்ஞான அவனும் ஸூவதந்திரத்தால் —
    செய்த காரியத்தால் -ராஜன் என்று அவள் ஏத்தியதால் அழுதவன் தானே தலையில் ஏறிட்டுக் கொண்டு
    ஸ்வ ரூப விரோதமான ஸூவ பிரவ்ருத்தியில் அன்வயித்து –
    அக்ருத்யம் -செய்யக் கூடாதே–சேஷிக்கு சேஷ பூதனை -எதேஷ்டம் விநியோகம் கொள்ளுகை-சேஷிக்கு உண்டே – –
    ஸ்வரூப அனுரூபம் தானே பிராயோ உபவாசம் -பிரபத்தி போலே
    -அதை நடத்த என் திரு உள்ளம் இல்லையே –இருந்தால் தான் உனக்கு ஸ்வரூப அனுரூபம் /
    எனக்கு தாண்ட முடியாதே – கடல் கரையை தாண்ட முடியாதபடி –
    சரணாகதன் படி நடக்க வேண்டுமே இவனுக்கும் உன்னைப் பார்த்து வரவா என்னைப் பார்த்து போகவா -தர்ம சங்கடம் /
    உபவாசமும் ஷத்ரியனுக்கு ஆகாது என்றும் அபிஷிக்த ராஜாவுக்கும் கூடாதே என்ற பெருமாள் சொன்னது நியாயம் இல்லை
    -இவரே சமுத்திர ராஜன் இடம் செய்தாரே-
    தனது பாதுகையே பட்டாபிஷேகம் -இரண்டு காரணத்தாலும் கூடாதே / சேது பந்தம் -சாகரம் வற்ற தபஸாக –
    பிராய உபவாசம் -பிரதம ஹேதுவாக பண்ணினார் /
    சாமர்த்தியம் உள்ள ஷத்ரியன் பண்ணக் கூடாதே /ஜலக்கடல் முன்னே குணக்கடல் கிடந்ததே /
    மரணமோ தரணமோ இரண்டில் ஓன்று நடக்கும் என்று நிச்சயித்து -/
    சர்வாதிகார பிராயோ உபவாச ரூப பிரபத்தி –யாரும் பண்ணலாம் -ஷத்ரியனும் பண்ணலாம் முடி சூடியவனும் பண்ணலாம் –
    இவரே பண்ணி உள்ளாரே
    சில அதிகார தோஷங்களை தப்பாக சொல்லி அத்தை அக்ருத்ய கரணமாக்கி –பிராயச்சித்தம் பண்ண சொல்ல-பெருமாள் தன்னைத் தொட்டு
    நிஷ்கிருஷ்ட வேஷ பிராயச்சித்தம் பண்ண சொல்லியும் பரத ஆழ்வான் செய்யாமல் -நான் பண்ணினது உபாயம் இல்லை –
    மடல் தூது போன்றவை தானே இவை –
    ப்ராப்ய அந்தர்கதம் தானே -அதனால் பண்ணவில்லை பரதனும் துடிப்பால்— லோக அபவாதம் வரக் கூடாதே
    மந்தாகினி தீர்த்தம் மட்டும் ஆடினான் அதனால் -விசிஷ்ட வேஷம் அனுகுணம் இது லோக அபவாதம் வரக் கூடாதே /

    ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது -விண்ணப்பம் கூட செய்யாமல் இருக்கவும் அங்கீ கரித்தானே -/ அகிஞ்சனன் -அநந்ய கதித்வம் -/
    துக்க தர்சன மாத்ரத்தால் இரக்கம்
    விஷய சபலமும் ஏழை / ஏதலன் – ஸ்வாபாவிக சர்வ ஐந்து சத்ருத்வம் / கீழ் மகன் – அத்யந்த கீழ் ஜென்மமும்
    ஜென்ம ஞான விருத்த குறைகளைக் கண்டு –உத்கர்ஷ விரோதிகளைக் கண்டு -பெருமாள் இரங்கினான்
    நன்மையே தீமையாயிற்று / தோஷமே பற்றாசாக – பசிக்குத் தகுந்த தொரு அன்னம் போலே மேல் விழுந்து அன்றோ அங்கீ கரித்தான் -/
    வாத்சல்யத்துக்கு கிடைத்த அன்னம் -மூக்கு சுழியாமல் செய்தாரே / அபராத ஆலயமாக இருப்பான் ஒருவன் உண்டோ என்று தேடிக் கிடைத்த லாபம் /
    நெஞ்சு உடையாமல் பெற்ற திருப்தி -இது ஒரு விஷயம் தெய்வாதீனத்தாலே கிடைக்கப் பெற்றேன் என்று சாஷாத் தர்மமே சொல்லிக் கொள்ளும் படி –
    இது நிலைக்குமோ –நீசதைக்கு நின் இருள் என் கண் அன்றி புகல் ஒன்றுமே இல்லை -அருளுக்கும் அதே புகல் பயன் இருவருக்குமான பின்பு /
    இனி நான் பழுதே அகலும் படி என் /உமக்கே லாபம் -ராம ராமானுஜர் நிலைகள் / அங்கே ஒரே குகன் இங்கு நாம் அனைவரும் /
    தம்மோடு ஓக்க சமான -ஆத்ம சம சக /பர கத ஸ்வீ கார நிரூபகமே ஸ்ரீ குகப் பெருமாள் மட்டுமே தானே /
    தனக்கு தாரகமாக நினைத்து -ஞானீத் ஆத்மை மே மதம் -அறிவார் உயிரானார் /
    சுக்ரீவன் விபீஷணன் இருவருக்கும் வியாபாரம் -பிரதியுபகாரம் கனீசியாமல் இங்கு மட்டுமே தானே –
    அங்கு எல்லாம் வேறே பிரயோஜனம் இல்லையே –
    மற்ற நதிகளை இவர்களே தாண்டினார்களே
    சீரணிந்த தோழமை கொண்டதும் ஒரு அடையாளம் –குகன் உடன் உம் ராமரை தவிர வேறு யாரால் முடியும் என்றவாறு /
    இங்கு ஒழி–நீ இங்கு இரு –பிரிந்தால் தான் பின்பு சேரும் பொழுது கூடினால் ரசிக்கும் -தேன் உள-நாய் குகன் உளன் சொன்னாலும் /
    வழி அடி கெடாமைக்காக -இங்கு ஒழி -வழி பறிப்ப்பாகிய இவனுடைய ஹீன விருத்தியையும் இப் பாசுரம் சொன்ன ஆழ்வாருடைய வழி
    பறியைப் போலே போக்யமாக கொள்ளுவார் -புத்த விக்ரஹத்தை வைதிகம் ஆக்கி –
    ஒழுங்காக திருந்தி வாழாமல் வழி பறி பண்ணிக் கொண்டு –
    உன் குற்றத்தை பச்சையாக கொண்டதாகவே இருக்க வேண்டுமே –
    படை வீடு கெடாமைக்கு ஒருத்தனை வைத்தோம் காடு கெடாமைக்கு உன்னை வைத்தோம் –
    வழி பறிப்பாகிய வழி அடி -ஜென்ம ஸித்தமான ராஜ்ய பரிபாலனம் உகப்பது போலே உன்
    ஜென்ம ஸித்தமான வழி பறி வேடனுக்கு இது தானே பிரியதமம் எனக்கு /
    பிராணி ஹிம்சை -ஆட்டு -ஹோமத்தில் உண்டே -அதே போலே /சாஸ்த்ர சம்மதம் பெருமாளுக்கு பிடித்தது போலே வழி பறிப்பும் –
    சிங்கி பேர புரத்தில் நான் வைக்க இருந்து கொண்டு -பரதனை நாட்டில் வைத்தது போலே -இந்த கார்யம் செய்து இரு –
    ராமன் இருக்க சொல்லி இருப்பதால் -அவர் திரு உள்ளபடியே இருவரும் /
    தான் போன பின்பு –அயோத்யை-என் வழி அடி அறியான் -காட்டி கொடும் ஆதி வாஹிகர் போலே காட்டவே இவனை வைத்து போந்தார் பெருமாள் /
    காள மேகப் பெருமாள் –ஆப்தன் / குகனும் கரிய திரு மேனி / ராமன் உள்ள இடமே ஸ்ரீ வைகுண்டம் /
    அயோத்யை மதுரை பெற்றும் பேர் இழக்க / காடு கோகுலமும் பூ முடி சூடிற்றே /
    பராத் பர புருஷன் -சாஸ்த்ர மரியாதா லங்கனம் பண்ணலாமா– அந்தராத்மா இவன் தானே அனைவர் இடமும் /
    கணவனோ பிள்ளையோ குரு ஜனங்களோ
    புண்ணியமான படியாலோ அவனுக்கு அபிமதம் என்பது இல்லை / அவனுக்கு அபிமதம் என்பதால் புண்ணியம் /
    அவன் இடம் உள்ளவற்றுக்கு நல்ல குணம் என்ற பெயர் கிட்டும் / ஸ்வ தந்த்ரனான படியால் இதுக்கு குறை இல்லையே –
    ஸ்வாதந்திரத்தால் ஏற்றுக் கொண்ட ஆஸ்ரித பாரதந்தர்யம் அவனுக்கு

    மஹா பாப ரூபமான அது ஜென்ம சித்தம் என்றாலும் அது பெருமாளுக்கு பிரியம் என்பதால் புண்ணியம் ஆகுமே /
    பாபமானது அனுமதிக்கலாமா கேள்விக்கு
    அவருக்கு அபிமதம் ஆனதாலேயே புண்ணியம் ஆகுமே
    அவரை ஒதுக்கி சாஸ்திரம் மட்டும் பார்க்கக் கூடாதே -அதனாலே புண்ய பாப லக்ஷணம் மேலே அருளிச் செய்கிறார் /
    ராஸக்ரீடை -கோபிகள் செய்த அதிக்ரமம் அபிமதமானால் போலே –

    அதாவது –
    பெருமாளை மீட்டுக் கொண்டு வந்து திரு அபிஷேகம் பண்ணுவித்து –
    தன் ஸ்வரூப அநு ரூபமான அடிமையைப் பெற்று வாழுகைக்காக-
    ஏபிச்ச  சசிவைஸ் ஸார்த்தம்-இத்யாதி படியே –
    வழியே பிடித்து மநோ ரதித்து கொண்டு சென்று -பெரிய ஆர்த்தியோடே அவர்
    திருவடிகளில் பிரபத்தி பண்ணிய ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -அவன் பண்ணின பிரபத்தி ஆகிற நன்மை தானே –
    சரண்யரான பெருமாள் திரு உள்ளத்துக்கு அநிஷ்டம் ஆகையாலே தீமையாய் விட்டது –
    ஏழை ஏதலன்-பெரிய திரு மொழி -5 -8 -1- இத்யாதிபடியே பெருமாள்  தாமே வந்து
    அங்கீகரிக்கப்   பெற்ற ஸ்ரீ குகப் பெருமாளுக்கு -தோஷமே பச்சையாக அங்கீகரிக்கையாலே –
    பாதகம் ஆகிற தீமை தானே நன்மையாய் விட்டது என்கை –
    யத் த்வத் ப்ரியம் ததிஹா புண்யம் அபுண்யம் அந்யத்-என்று இறே புண்ய பாப லஷணம்-
    ஆகையால் இவர்கள் பக்கல் காணலாம் என்கை –

    இத்தால் ஸ்வாமி கீதா பாஷ்யத்தில் வடமொழியில் அருளிச் செய்தவற்றையே பின்பு மா முனிகளும் ஸ்ரீ வசன பூஷண வியாக்யானத்தில் அருளிச் செய்துள்ளார் என்பது தெளிவு

    நாம் பற்றும் பற்றன்று
    எம்பெருமான் தானே பற்று வித்து அருளினான்
    அவனுடைய க்ருஷி பலித்தது அத்தனை அன்றோ என்று உள்ளூற அனுசந்திக்கையே ப்ராப்தம்

    —————————————————————–

    இனி மூன்றாம் ஸாரார்த்தம்
    ஈஸ்வரனுக்கு சேதன லாபம் புருஷார்த்தம்
    மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
    மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண:–9-34-

    மந்மநா: பவ-மனத்தை எனக்காக்கி விடு,
    மத்பக்த:-பக்தியை எனக்காக்கு,
    மத்யாஜீ-என்னைத் தொழு,
    மாம் நமஸ்குரு-என்னை வணங்கு,
    ஏவம் ஆத்மாநம் யுக்த்வா-இவ்வாறு மனம், புலன்களுடன் கூடிய உடலை (என்னிடம்) ஈடுபடுத்தி,
    மாம் ஏவ ஏஷ்யஸி-என்னையே அடைவாயாக.

    மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள்.
    இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.

    ৷৷9.34৷৷மந் மநா பவ -மயி ஸர்வேஷ்வரே (சர்வேஸ்வரேஸ்வர-ஸ்வா பாவிக ஸர்வ நியந்தா-நும் தெய்வமாகியும் நின்றான் -நாயகன் அவனே கண்டு கொண்மின் )நிகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாநே
    ஸர்வஜ்ஞே ஸத்ய ஸஂகல்பே (நம் குற்றங்களை அறிந்து போக்கி நம்மை தனது தாளிணைக் கீழ் இருத்த வேண்டியவை-காலம் அறிந்து பஹுஸ்யாம் ப்ரஜாயேய ஆவோம் என்று சங்கல்பித்து )நிகில ஜகதேக காரணே (த்ரிவித காரணமாய் இருப்பதாலேயே இவனையே உபாஸிக்க வேண்டும் -காரணந்து த்யேய -ஒன்றே போதும் இருந்தாலும் மற்றவையும் உனக்கு சொல்வது விஸ்வாஸம் ஏற்படுத்தவே )பரஸ்மிந் ப்ரஹ்மணி (ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்- மிகுநரை இலனே-சத் ப்ரஹ்மம் ஆத்மா ஜோதி போன்ற பொதுச் சப்தங்கள் நாராயணன் இடமே பர்யவசிக்கும் -நாராயணனே பரம் ப்ரஹ்மம் பரம் தத்வம் பர ஜோதி ஆத்மா நாராயண பரம் )புருஷோத்தமே(ஸகல இதர விலக்ஷணன் இவனது பரத்வத்தை எல்லா வேதங்களிலும் உள்ள புருஷ ஸூக்தம் கோஷிக்கும் )

    (இதுவரை ஸ்வரூப விளக்கம் -இனி ரூபம் திவ்ய மங்கள விக்ரஹ குணங்கள் விவரணம்–ஐயப்பாடு அறுத்து ஆதாரம் பெறுக வைக்கும் அழகன் )

    புண்டரீக தல  அமலாய தேக்ஷணே ஸ்வச்ச (குற்றமற்ற )நீல ஜீமூத ஸஂகாஷே ( மின்னும் மா மழை தவழும் மேக முகில் வண்ணன்-ஆஹ்லாத கரம் )யுகபத் உதித திநகர ஸஹஸ்ர ஸதரிஷ தேஜஸி- (நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி ) லாவண்ய (சமுதாய சோபை -வைஷ்ணவ வாமனத்தில் பூர்ணம் லாவண்யம் -சவுந்தர்யம் நாகை அழகியர் அச்சோ ஒருவர் அழகிய வா -பரபாக பர ஸ்ரீ )அம்ருத மஹோததௌ உதார பீவர சதுர் பாஹௌ (நான்கு புருஷார்த்தங்களையும் அளிக்கும் கற்பகக் கா என நற் பெரும் தோள்கள்-மல்லாண்ட திண் தோள்கள் -அலம் புரிந்த நெடும் தடக்கை )

    இனி ஒப்பனை அழகு விவரணம்
    அத் யுஜ்ஜவல பீதாம்பரே (அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே )அமல கிரீட மகர குண்டல ஹார கேயூர கடகாதி பூஷிதே,

    இனி கல்யாண குண விவரணம்

    அபார காருண்ய ஸௌஷீல்ய ஸௌந்தர்ய மாதுர்ய காம்பீர் யௌதார்ய வாத்ஸல்ய ஜலதௌ அநாலோசித விஷேஷ அஷேஷ லோக ஷரண்யே ஸர்வ ஸ்வாமிநி தைல தாராவத் அவிச்சேதேந நிவிஷ்ட மநா பவ.–தத் ஏவ விஷிநஷ்டி — மத் பக்தஃ அத்யர்த மத் ப்ரியத்வேந யுக்தோ மந் மநோ பவ இத்யர்தஃ.புநஃ அபி விஷிநஷ்டி — மத் யாஜீ அநவதிக அதிஷய ப்ரிய மத் அநுபவ காரித மத் யஜந பரோ பவ-.யஜநஂ நாம பரி பூர்ண அஷேஷ வரித்திஃ? ஔபசாரிக ஸாஂஸ்பர்ஷிக அப்யவஹாரிகாதி ஸகல போக ப்ரதாந ரூபோ ஹி யாகஃ.–யதா மதநுபவ ஜநித நிரவதிக அதிஷய ப்ரீதிகாரித மத் யஜந பரோ பவஸி ததா மந்மநா பவ இத் யுக்தஂ பவதி.(இத்தால் சொல்லிற்றாயிற்று) மத் அனுபவ ஜெனித நிரவதிக அதிசய ப்ரீதி காரித கைங்கர்யம் )புநஃ அபி தத் ஏவ விஷிநஷ்டி — மாஂ நமஸ்குரு? அநவதிக அதிஷய ப்ரிய மதநுபவகாரித அத்யர்த ப்ரிய அஷேஷ ஷேஷ வரித்தௌ அபர்யவஸ்யந் மயி அந்தராத்மநி அதி மாத்ர ப்ரஹ்வீ  பாவ வ்யஸாயஂ குரு.–மத் பராயணஃ அஹம் ஏவ பரம் அயநஂ யஸ்ய அஸௌ மத் பராயணஃ? –மயா விநா ஆத்ம தாரண அஸஂபாவநயா மதாஷ்ரய இத்யர்தஃ.–ஏவம் ஆத்மாநஂ யுக்த்வா மத் பராயணஃ த்வம் ஏவம் அநவதிக அதிஷய ப்ரீத்யா மதநுபவ ஸமர்தஂ மநஃ ப்ராப்ய மாம் ஏவ ஏஷ்யஸி. ஆத்ம ஷப்தோ ஹி அத்ர மநோ விஷயஃ.ஏவஂ ரூபேண மநஸா மாஂ த்யாத்வா மாம் அநுபூய மாம் இஷ்டவா மாஂ நமஸ்கரித்ய மத் பராயணோ மாம் ஏவ ப்ராப்ஸ்யஸி இத்யர்தஃ.-

    (இனி இந்த அத்யாய சுருக்கம் அருளிச் செய்கிறான் )தத் ஏவஂ லௌகிகாநி ஷரீர தாரணார்தாநி வைதிகாநி ச நித்ய நைமித்திகாநி கர்மாணி மத் ப்ரீதயே மச் சேஷதைக ரஸோ மயா ஏவ காரித இதி குர்வந் ஸததஂ மத் கீர்தந யஜந நமஸ்காராதிகாந் ப்ரீத்யா குர்வாணோ மந் நியாம்யஂ நிகில ஜகத் மச் சேஷதைக ரஸம் இதி ச அநு ஸஂததாநஃ? அத்யர்த ப்ரிய மத் குண கணஂ ச அநுஸஂதாய அஹரஹஃ (நாள் தோறும் )உக்த லக்ஷணம் இதம் உபாஸநம் உபாததாநோ மாம் ஏவ ப்ராப்ஸ்யஸி.

    ৷৷9.34৷৷’பஜஸ்வ’ [9.33] இத்யுக்தபக்திஸ்வரூபநிஷ்கர்ஷோநந்தரஂ க்ரியத இதி ஸங்கதிஂ தர்ஷயதி — ‘பக்திஸ்வரூபமாஹேதி’. ஸாமாந்யேந ஸர்வாஸு பரவித்யாஸூபாஸ்யதயா ததுபயுக்ததயா ச ப்ரமாணஷதைஃ ப்ரதிபாதிதாஃ ஸ்வரூபரூபகுணாதயோத்ராஸ்மச்சப்தேந விவக்ஷிதா இத்யபிப்ராயேணாஹ — ‘மயீதி’. “தமீஷ்வராணாஂ பரமஂ மஹேஷ்வரஂ” [ஷ்வே.உ.6.7] “ந தஸ்யேஷே கஷ்சந” [தை.நா.1.9] இத்யாதேரர்தமாஹ — ‘ஸர்வேஷ்வரேஷ்வர’ இதி. ந ஹ்யஸமர்தஸேவயா கிஞ்சில்லப்யதே; நச ப்ரஹ்மாண்டாந்தராதேரநீஷ்வரா ப்ரஹ்மேஷாதயோபி மோக்ஷதாநஷக்தா இதி பாவஃ. ‘க்ஷேத்ரஜ்ஞஸ்யேஷ்வரஜ்ஞாநாத்விஷுத்திஃ பரமா மதா’ [யா.ஸ்மரி.3.34] இதி ஹ்யுச்யதே. ஹேயாஸ்பதஸ்ய குணரஹிதஸ்ய ச பஜநீயத்வாபாவாதிதரவ்யாவரித்த்யர்தஂ ஸகுணநிர்குணஷ்ருதீநாஂ விஷயவ்யவஸ்தயோபயலிங்கத்வமாஹ — ‘நிகிலேதி’. ஸமஸ்தாநிஷ்டநிவர்தகத்வாதநந்தபோக்யமயத்வாச்சாயமேவோபாஸ்ய இதி பாவஃ. அநந்தமங்கலகுணோபலக்ஷகதயா த்யேயலக்ஷணஜகத்காரணத்வமோக்ஷப்ரதத்வௌபயிகஂ குணத்வயஂ’ஸர்வஜ்ஞே ஸத்யஸங்கல்ப’ இத்யுக்தம். “யஃ ஸர்வஜ்ஞஃ ஸர்வவித்யஸ்ய ஜ்ஞாநமயஂ தபஃ. தஸ்மாதேதத்ப்ரஹ்ம நாமரூபமந்நஂ ச ஜாயதே” [முஂ.உ.1.9] இதி? “ஸத்யகாமஃ ஸத்யஸங்கல்பஃ” [சாஂ.உ.8.1.5] இதி ச அநிஷ்டநிவரித்த்யாதௌ சாந்யாஜ்ஞாதஂ ஸஹகாரிஸாபேக்ஷத்வஂ ச நாஸ்தீதி பாவஃ. “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” இத்யுபக்ரம்ய “தத்விஜிஜ்ஞாஸஸ்வ” [தை.உ.3.1.1] “காரணஂ து த்யேயஃ” [அ.ஷிகோ.3] இத்யாத்யபிப்ராயேண — ‘நிகிலஜகதேககாரண’ இத்யுக்தம். நிகிலஷப்தேநாவ்யக்தாதேர்ப்ரஹ்மருத்ராதேஷ்ச ஸங்க்ரஹஃ. வ்யோமாதீதநிர்குணவாதாதிநிராகரணஂ? ஸாமாந்யவிஷேஷஷப்தயோரைகரஸ்யஂ சாபிப்ரேத்ய’பரஸ்மிந் ப்ரஹ்மணி புருஷோத்தம’ இத்யுக்தம். அநேந ஸர்வாத்மகத்வஂ ஸர்வவிலக்ஷணத்வஂ சாவிருத்தமுபதர்ஷிதஂ பவதி. நாராயணாநுவாகபுருஷஸூக்தாதிகஂ ச ஸ்மாரிதம். ஏதாவதா விஷிஷ்டஂ ஸ்வரூபமுக்தம்;.

    அத ஸர்வஷாகாதிபடிதபுருஷஸூக்தாதிஸித்தஂ ஷுபாஷ்ரயப்ரகரணப்ரபஞ்சிதஂ ச விக்ரஹதத்குணாதிகமுச்யதே.’தஸ்ய யதா கப்யாஸஂ புண்டரீகமேவமக்ஷிணீ’ [சாஂ.உ.1.6.7] இத்யாத்யுக்தபரத்வசிஹ்நமாஹ — ‘புண்டரீகதலாமலாயதாக்ஷ’ இதி.’ஸ்வச்சேத்யாதிநா’ “நீலதோயதமத்யஸ்தா” [தை.நா.11.12] இத்யாதிகமநுஸஂஹிதம். ஸ்வச்சத்வஂ மணிமுகுரஸலிலகாசாதிவத்வ்யவஹிதப்ரகாஷப்ரதிபிம்பாதியோக்யஃ ப்ரஸாதவிஷேஷஃ.’திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய’ [11.12] இத்யாதி வக்ஷ்யமாணஂ “தமேவ பாந்தம்” [முஂ.உ.2.2.10] இத்யாதிஷ்ருதிஂ சாபிப்ரேத்யோக்தஂ — ‘யுகபதித்யாதி’. ஷ்ருத்யாதிப்ரஸித்தஂ பஹூநாமுதாரத்வமௌர்ஜித்யமபிமதபலப்ரதத்வஂ ச. யத்ர ரூபாந்தரஂ ந விஷிஷ்டஂ? தத்ர வக்துர்வஸுதேவநந்தநஸ்ய ரூபஂ விவக்ஷிதம்; தச்ச ஸர்வாவதாரோபலக்ஷணம். சதுர்புஜத்வஂ பகவதஃ கரிஷ்ணஸ்ய பரரூபஸ்ய ஸாஂஸித்திகம்; த்விபுஜத்வஂ ஸஹஸ்ரபுஜத்வாதிகஂ சாஹார்யமித்யாஷயேநோக்தஂ — ‘சதுர்பாஹாவிதி’. அதவாபி சதுர்புஜத்வஂ — ‘புஜைஷ்சதுர்பிஃ ஸமுபேதமேதத்ரூபஂ விஷிஷ்டஂ திவி ஸஂஸ்திதஂ ச. பூமௌ கதஂ பூஜயதாப்ரமேயஂ ஸதா ஹி தஸ்மிந்நிவஸாமி தேவாஃ!’ இத்யாதிகமிஹ பாவ்யம். திவ்யாம்பரயோகமாஹ — ‘அத்யுஜ்ஜ்வலிதேதி’. மூர்தாதிபாதாந்ததிவ்யாவயவகதஸமஸ்தாபரணவர்கோபலக்ஷணதயா கிரீடாத்யுக்திஃ.’த்யேயஃ ஸதா’ இத்யுபக்ரம்ய’கேயூரவாந் மகரகுண்டலவாந் கிரீடீ’ [ப.உ.பு.ஆ.ஹரி.155] இத்யாதிகமிஹ த்ரஷ்டவ்யம். மகரஷப்தோ மகராகாரகுண்டலபரஃ. தேஜஃப்ராசுர்யஂ ப்ரதிகூலைர்துஷ்ப்ரேக்ஷத்வஂ சாபிப்ரேத்ய’யுகபதித்யாதிகமுக்தம்’.

    ‘லாவண்யேத்யாதிநா’ து தஸ்யைவாநுகூலபோக்யத்வாகர்ஷகத்வாதிகமபிப்ரேதம். சக்ஷுராநந்தஜநகஸ்தேஜோவிஷேஷோ ஹி லாவண்யம். தத இதமுச்யதே — ‘லோசநைரநுஜக்முஸ்தே தமாதரிஷ்டிபதாத்புநஃ. மநோபிரநுஜக்முஷ்ச கரிஷ்ணஂ ப்ரீதிஸமந்விதாஃ৷৷அதரிப்தமநஸாமேவஂ தேஷாஂ கேஷவதர்ஷநே. க்ஷிப்ரமந்தர்ததே ஷௌரிஷ்சக்ஷுஷாஂ ப்ரியதர்ஷநஃ৷৷அமரிதஸ்யேவ நாதரிப்யந் ப்ரேக்ஷமாணா ஜநார்தநம்’ [ம.பா.2.2.26-28]’நஹி தஸ்மாந்மநஃ கஷ்சிச்சக்ஷுஷீ வா நரோத்தமாத். நரஃ ஷக்நோத்யபாக்ரஷ்டுமதிக்ராமதி ராகவே’ [வா.ரா.2.17.13] இதி.’அபாரேத்யாதிநா’ ஸௌலப்யோபயோகிநோமிதாஃ ஸுந்தரத்வாதிமிஷ்ராஃ ஸமாஷ்ரயணீயத்வேத்யந்தாபேக்ஷிதாஃ ஸ்வரூபரூபயோர்குணா உக்தாஃ.’ஸர்வலோகஷரண்யாய’ [வா.ரா.6.17.17]’ஸுதுஷ்டோ வாப்யதுஷ்டோ வா’ [வா.ரா.6.18.5]’விபீஷணோ வா ஸுக்ரீவ! யதி வா ராவணஃ ஸ்வயம்’ [வா.ரா.6.18.34] இத்யாதிகமநுஸந்தாய காருண்யாதிபலிதமாஹ — ‘அநாலோசிதேதி’. ஆஷ்ரிதஸஂரக்ஷணஂ ஸ்வலாபஂ மத்வா ப்ரவர்தத இத்யபிப்ராயேணோக்தஂ — ‘ஸர்வஸ்வாமிநீதி’.’கரிஷ்ணஸ்ய ஹி கரிதே பூதமிதஂ விஷ்வஂ சராசரம்’ [ம.பா.2.38.23] இத்யுக்தம். “நிதித்யாஸிதவ்யஃ” [பரி.உ.2.4.5;4.5.6] “த்யாயத” [முஂ.உ.2.2.6] “த்ருவா ஸ்மரிதிஃ” [சாஂ.உ.7.26.2] “ஆவரித்திரஸகரிதுபதேஷாத்” [ப்ர.ஸூ.4.1.1] இத்யாத்யநுஸந்தாநேந மநஷ்ஷப்தஸ்யாத்ர த்யாநாக்யமநோவரித்திவிஷேஷவிஷயதாமாஹ — ‘தைலதாரேதி’.’மய்யேவ மந ஆதத்ஸ்வ’ [12.8] இத்யுச்யத இதி. அத்ர’மாமேவைஷ்யஸி’ இதி ஸாத்யகதாவதாரணாத்ஸாதநேப்யவதாரணஂ விவக்ஷிதமிதி கம்யதே. தேந சாநந்யமநஸ்த்வாதிகஂ ஸித்தம். ததஷ்ச தைலதாராதிவதவிச்சேதோபி பலித இதி பாவஃ.

    “யமேவைஷ வரிணுதே தேந லப்யஃ” [கடோ.1.2.22] இதி ஷ்ருத்யுபபரிஂஹணதாமபிப்ரேத்யாஹ’ததேவேதி’. பக்தேரபி ஜ்ஞாநவிஷேஷரூபத்வாத்விஷேஷகத்வமுபபத்யத இத்யபிப்ராயேணாஹ’அத்யர்தேதி’. ஸ்வதந்த்ரார்தாந்தரவிதாநஷங்காநிராஸாயாஹ ‘புநரபீதி’. பக்திஸ்வரூபவிஷேஷநிஷ்கர்ஷபரத்வாத்ததஸாதாரணஷாஸ்த்ரவிஷேஷப்ரதிபாதிதபூஜாவிஷேஷபரோயஂ யஜநஷப்த இத்யபிப்ராயேணாஹ — ‘யஜநஂ நாமேதி’. ஷேஷவரித்திஃ கைங்கர்யம். இதஂ ச’பத்ரஂ புஷ்பம்’ [9.26] இத்யாதிநா ப்ரதர்ஷிதஸ்ய பகவச்சாஸ்த்ரப்ரபஞ்சிதஸ்ய ஸங்க்ரஹஷாஸநம். அதோத்ர யஜிர்தர்ஷபூர்ணமாஸாதிவிஷய இதி ந ப்ரமிதவ்யம்.’யஜ தேவபூஜாயாம்’ [தா.பா.1.1027] இத்யேவ ச பட்யதே.’தேவதாமுத்திஷ்ய த்ரவ்யத்யாகோ யாகஃ’ இதி சாஹுஃ. அக்நிஹோத்ராதிவ்யதிரிக்தேஷ்வபி பஞ்சமஹாயஜ்ஞாதிஷு யஜிர்நிரூடஃ. அந்யத்ராபி’கரிஷ்ணோ வாக்யைரிஜ்யதே ஸம்மரிஷாநைஃ’ [ம.பா.13.18.6] இத்யாதயஃ ப்ரயோகாஃ. அதோத்ர பகவச்சாஸ்த்ராதிப்ரபஞ்சிதவிஷயோயஂ யஜிரித்யபிப்ராயேணாஹ — ‘ஔபசாரிகேதி’. ஔபசாரிகாஃ நீராஜநாதயஃ; ஸாஂஸ்பர்ஷிகாஃ ஸ்ரக்சந்தநாதயஃ; ஆதிஷப்தேந ஸாந்தரிஷ்டிகதீபாதிக்ரஹணம்.’மத்யாஜீ’ இத்யநேந பாஹ்யக்ரியாபரேண மந்மநஸ்த்வஂ கதஂ விஷேஷ்யத இத்யத்ராஹ — ‘யதேதி’.

    ‘புநரபீத்யாத்யபி’ பூர்வவத். பூர்வோக்தாததிகரூபத்வஂ தர்ஷயிதும் — ‘அபர்யவஸ்யந்நித்யந்தமுக்தம்’.’அத்யர்தஷப்தேந’ தாஸ்யஸ்ய ஸ்வரூபப்ராப்ததா விவக்ஷிதா.’அதிமாத்ரஷப்தேந’ தஸ்ய நிரதிஷயபோகரூபத்வஂ ஸூசிதம். த்ரிவிதப்ரதிஸங்க்ரஹாய நமதாதுஸ்வரூபநிரூபணேந ப்ரஹ்வீபாவஷப்தஃ.’ப்ரேக்ஷாவதஃ ப்ரவரித்திர்யா ப்ரஹ்வீபாவாத்மிகா பரா. உத்கரிஷ்டஂ பரமுத்திஷ்ய தந்நமஃ பரிகீயதே’ [அஹிர்பு.ஸஂ.52.10] இதி ஹி நமஷ்ஷப்தோ விவரிதஃ. ஜ்ஞாநவிஷேஷகத்வவ்யக்த்யர்தஂ’வ்யவஸாயஷப்தஃ’.’பராயணஃ’ இத்யத்ர பரஷப்தவிஷேஷணஸாமர்த்யாதவதாரணஂ விவக்ஷிதமித்யபிப்ராயேண’அஹமேவேத்யுக்தம்’. பலிதமாஹ — ‘மயா விநேதி’. ஏஷைவ பக்தேஃ பரமா காஷ்டா ப்ராப்தேரவ்யவஹிதபூர்வபாவிநீதி பலாபிலாஷஜ்ஞாபநார்தோ மத்பராயணஷப்த இத்யபிப்ராயஃ. ஏவஂஷப்தாநூதிதமாகாரமாஹ — ‘அநவதிகேத்யாதிநா’.’ஆத்மாநஂ”யுக்த்வா’ இதி பதயோரத்ரோசிதார்தப்ரதர்ஷநஂ’மநஃ ப்ராப்யேதி’. யுஜிரத்ர யோகார்தஃ ஸமாத்யர்தோ வா.’மந்மநா பவ’ இத்யுக்தார்தபரத்வஂ’ஏவமாத்மாநம்’ இத்யநுவாதேந ப்ரதீயத இத்யபிப்ராயேணாஹ — ‘ஆத்மஷப்தோ ஹீதி’. மநஸோத்ர நிர்தேஷோ த்யாநாதிகரணத்வேநேதி ப்ரதர்ஷயந் ஷ்லோகஸ்ய பிண்டிதார்தமாஹ — ‘ஏவஂ ரூபேணேதி’. நிரதிஷயப்ரீதிமதேத்யர்தஃ. த்யாநாதிகஂ மத்பக்த இதி விஷேஷணாத்போகரூபமித்யபிப்ராயேண’மாமநுபூயேத்யுக்தம்’.

    அத ஸுகக்ரஹணாத்யாயப்ரதாநார்தபூதஸாங்கோபாங்கபலஷிரஸ்கபக்திஸ்வரூபஂ ஸங்க்ஷேபேண நிஷ்கரிஷ்ய வதந்நுபஸஂஹரதி — ‘ததேவமிதி’. தத் தஸ்மாதித்யர்தஃ. தவ துஃகபஹுலஸஂஸாரஸாகரபதிதத்வாத்? மம ச பரத்வஸௌலப்யாதியுக்தஸ்ய ஸமஸ்ததுஃகஸாகரோத்தரணஸாஂயாத்ரிகத்வாத்? உபாயஸ்ய சாத்யந்தஸுகரத்வாதிகுணயுக்தத்வாதித்யர்தஃ.’ஏவமிதி’ பூர்வக்ரந்தைருக்தப்ரகாரேணேத்யர்தஃ.’லௌகிகாநீத்யாதி குர்வந்நித்யந்தஂ”யத்கரோஷி’ இத்யாதேரர்தஃ;’மந்நியாம்யமித்யாதிகஂ”மயா ததம்’ [9.4] இத்யாதேரபிப்ரேதகதநம்;’அத்யர்தப்ரியமத்குணகணமிதி”ஸமோஹம்’ [9.29]’பத்ரஂ புஷ்பம்’ [9.26] இத்யாதேரர்தஃ. குணாநுஸந்தாநாத்பக்தேஃ புருஷஸாத்யத்வஂ யுஜ்யத இத்யபிப்ராயேணாஹ — ‘மத்குணகணஂ சாநுஸந்தாயாஹரஹருக்தலக்ஷணமிதமுபாஸநமுபாததாந’ இதி.’இதி மத்வா பஜந்தே மாம்’ [10.8] இத்யாதிகமத்ராநுஸஂஹிதம்.’அஹரஹரித்யாதிகஂ”மந்மநாஃ’ இத்யாதேர்விவக்ஷிதம். ஆப்ரயாணத்வஸித்த்யர்தம்’அஹரஹரித்யாத்யுக்தம்’.’உக்தலக்ஷணமிதி’ — அநந்யப்ரயோஜநநமஸ்காராதிப்ரேரகமதேகதாரகத்வதஷாபர்யந்தநிரதிஷயப்ரீதிரூபமித்யர்தஃ.இதி கவிதார்கிகஸிஂஹஸ்ய ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரஸ்ய ஷ்ரீமத்வேங்கடநாதஸ்ய வேதாந்தாசார்யஸ்ய கரிதிஷு ஷ்ரீமத்கீதாபாஷ்யடீகாயாஂ தாத்பர்யசந்த்ரிகாயாஂ நவமோத்யாயஃ৷৷9৷৷

    ஸ்ரீ பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய
    ஸ்ரீ பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் என்ற ஒன்பதாம் அத்தியாயம்.

    ஆஸ்ரித ஸம் ரஷணம் ஸ்வ லாபம் மத்வா ப்ரவர்த்ததே
    ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே
    ஸ்ரீ பாஷ்யத்தின் முடிவிலும்-அநா வ்ருத்தி ஸப்தாத் -ஸூத்ர பாஷ்யத்திலும்
    ந ச பரம புருஷஸ் ஸத்ய ஸங்கல்ப அத்யர்த்த பிரியம் ஞாநிநம் லப்த்வா கதாசித் ஆவர்த்தயிஷ்யத்
    ஸ்வ தந்த்ரனே யானாலும் ஸத்ய ஸங்கல்பம் உடையவன் அன்றோ
    பேற்றுக்குத் த்வரிக்கையும் நம்மால் விளைவது அல்ல
    நிதானம் தத்ர அபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுண –
    ஜீவாத்மாவுக்கு அசித்வத் பாரதந்தர்யத்துக்கு சைதன்யம் இடையூறு என்பதால் அத்தையும் கல்மஷம் என்கிறது என்றுஆச்சார்யர்கள் நிலைநாட்டி அருளுகிறார்கள்
    வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னின் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
    ஸ மஹாத்மா ஸூ துர்லப –

    ———-————————————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ பராங்குச பரகால மஹாத்ம்யம்–

    August 30, 2024

    ஆனால் அந்த வேதத்துக்கு அங்க உபாங்கங்கள் உண்டானவோ பாதி
    இதுக்கும் அவை உண்டோ என்ன சொல்லுகிறது மேல்-

    வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் )
    அங்க உபாங்கங்கள் போலே
    இந் நாலுக்கும்
    இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும்
    மற்றை எண்மர் நன் மாலைகளும்-
    (இருமை -பெருமை -)

    அதாவது
    ருகாதி வேத சதுஷ்டயத்துக்கும்
    சீஷா வியாகரண நிருக்த சந்த கல்ப ஜோதிஷங்கள் ஆகிற ஆறு அங்கங்களும்
    மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராத் உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே
    (ஆதி -ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் அர்த்த வேதம் தனுர் வேதம் )
    இந்த திராவிட வேத சதுஷ்டயதுக்கும்
    இரும் தமிழ் நூல் புலவன் நங்கை யாளன்–பெரிய திருமொழி -1-7-10- -என்று
    ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற திராவிட வேத சாஸ்த்ரத்தை
    கரை கண்ட ஞான ஆதிக்கத்தை உடையரான திரு மங்கை ஆழ்வார் உடைய
    கலியன் வாயொலி செய்த பனுவல் -பெரிய திருமொழி -1-4-10–என்று சாஸ்திர ரூபங்களான பிரபந்தங்கள் ஆறும்
    மற்றை ஆழ்வார்கள் எண்மர் உடையவும் விலஷணமான பிர பந்தங்களும் என்கை ..

    நன் மாலைகள் என்றது -நய நின்ற நன் மாலை-முதல் திருவந்தாதி -57- -என்று
    முதல் ஆழ்வார் பிரபந்தத்தில் அருளிச் செய்தது எல்லா பிரபந்ததுக்கும் ஒக்கும் என்று நினைத்து ..

    (அங்க உபாங்க சேவை உண்டே -பவித்ர உத்சவம் பொழுது -ஜ்யேஷ்டாபிஷேகம் -அங்கங்கள் உப அங்கங்கள் சேவிக்கிறோம்
    அத்யயன உத்சவம் தமிழர் திரு நாள் -247-பாசுரங்கள் மங்களா சாசனம் திருவரங்கத்துக்குத் தானே – )

    1-பொய் நின்ற ஞானமும்-திருவிருத்தம் -1– –இத்யாதியாலே ஸ்வரூப விரோதியாய்
    வந்தேறி யான தோஷங்களை முதல் அடியிலே பேசினால் போலே
    பிரதமத்திலே -வாடினேன் வாடி–பெரிய திருமொழி -1-1-1- -இத்யாதியாலே ஸ்வ ரூபத்துக்கு
    வந்தேறியான தோஷங்களை கண்டு நொந்து பேசுகையும்
    2-பகவத் ப்ராவண்ய ப்ராசுர்யமும்
    பத்துடை அடியவர்க்கு எளியவன் –எத்திறம் –ப்ராவண்ய ப்ராஸூர்யம் – /
    உருகுமால் நெஞ்சம் கார் ஒக்கும் காட்கரை அப்பன் /முலையோ முழு முற்றும் போந்தில -பால்யாத் ப்ராவண்யம் /
    கணபுரம் கை தொழும் பிள்ளையை -பிறர் சொல்ல கேட்டு கை தொழும் இவள் /
    அருவி சோர் வேங்கடம் நீர் மலை உருகினாள் உள் மெலிந்தாள்
    3-அதில் அர்ச்சாவதாரத்தில் ஊற்றமும்
    செய்ய பரத்துவுமாய் –எய்துபவர்க்கு அர்ச்சாவதார எளிது -அவனாகும் நீள் கடல் வண்ணனே –
    அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ-ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –
    விபவம் பாடப் பிறந்தவர் அர்ச்சையை பாடுவது ஏற்றம் /
    காரார் திருவேங்கடம் காணும் அளவும் போய்–ஆராமம் சூழ் / மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே/
    ஏரார் முயல் வீட்டுக் காக்கை பின் போவதே
    4-கலவியும் பிரிவும் மாறி மாறி வருகையும்
    5-அந்ய உபதேச பேச்சும்
    6-அது தன்னில் ராத்ரி வ்யசனமும்
    7-தூத ப்ரேஷணமும்
    8-அநுகாரம்
    9–மடல் எடுக்கை-மாசறு சோதி பதிகம் –/ஸ்ரீ சிறிய திருமடல் ஸ்ரீ பெரிய திரு மடல் -ஸ்ரீ திரு நறையூர் நம்பி மேல் –
    10/11/12-தோழி தாய் மகள் என்னும் அவஸ்தை த்ர்யாபத்திகளும்-சாழல் பதிகம் அவ்யக்தம் தோழி பதிகம்
    இவள் திறத்து இருவரும் –2-7-/-7-2-திருத்தாயார் பதிகங்கள் /
    திண்ணம் என் இள மான் புகுமூர் திருக்கோளூரே-உண்ணும் சோறு / கள்வன் கொல்-அவனூர் வினவி சென்றாள்/
    கரியான் ஒரு காளை வந்து–அணி யாலி புகுவார் கொலோ -கள்வன் கொல் பிராட்டி திருக்கோலம் இன்றும் சேவை உண்டே /
    பொன்னிவர் மேனி -நாள் வேதம் ஓதும் -அவர் நாகரீகர் செல்வர் பெரியர்-என்னையும் நோக்கி
    அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகிறேன் –அச்சோ ஒருவர் அழகியவா -ஸுந்தர்யம் இங்கு /
    எங்கனே நீ லாவண்யம் அங்கு/இரண்டும் மகள் பாசுரங்கள்
    13-இந்திரிய பய குரோசம் -ஐவர் திசை திசை எற்றி-
    14-ஈஸ்வர ஸ்வாதந்த்ர்ய பயம் ,
    அரவணை மேல் பள்ளி கொள்ளும் முகில் வண்ணனே அறையோ முறையோ ஸ்ரீ திருவிருத்தம் —
    தடுப்பார் இல்லாத நிரங்குச ஸ்வாதந்தர்யம் /
    தெள்ளியீர்-கை வளை கொள்வது தக்கதோ -ஸ்ரீ நீல மேக பெருமாள் -நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்
    15-அசக்ருத் பிரபத்தி கரணம்-ஐந்து தடவை-நோற்ற நாலும்/ உலகுண்ட பெரு வாயா ஸ்ரீ நம்மாழ்வார் / பத்து தடவை இவர்
    ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ திருவேங்கடமுடையான் -ஸ்ரீ அண்ணன் கோயில் -ஸ்ரீ திருவரங்கம் -ஸ்ரீ திரு விண்ணகர்
    திரு நறையூர் இடர் கெடுத்த திருவாளர் –6-9-பாட்டு தோறும் திருப்பாத பிரஸ்தாபம் இங்கும் உலகுண்ட பெரு வாயா போலே
    தேரெழுந்தூர் /திருக்குறுங்குடி மகள் பாவனையில் -9-5-/ 5-9 மானே நோக்கு அங்கு நாயகா பாவம் /
    16-ஆர்த்தியின் உடைய கரை புரட்சிகளும்
    மாலுக்கு ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி அங்கு -ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சி இவர் –
    17-பர துக்க அசஹிஷ்ணுதையாலே பல காலும் ஹிதம் சொல்லுகையும்–தொடக்கமான கட்டளையாலே
    மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே
    ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது ..

    ———–

    நம்மாழ்வார் விஸ்தரித்து அருளியதை திருமங்கை ஆழ்வார் சுருக்கி அருளும் இடங்கள்-

    கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் –தாய்ப் பாசுரமாக நம்மாழ்வார் ஸர்வேஸ்வரனாக அநு கரித்து அருளிச் செய்த பதிகம் –5-6

    திருமங்கை ஆழ்வார் –8-2-6-ஒரே பாசுரத்தில் அநு கரித்து அருளிச் செய்த பாசுரம்
    வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இட வகை கொள்வது யாம் என்று பேசினாள் –
    இதுவும் தாய் பாசுரம்

    ——-

    இதே போல் தூத ப்ரேஷணமும்
    அஞ்சிறைய மடநாராய்
    வைகல் பூங்கழிவாய்
    பொன்னுலகு ஆளீரோ
    எங்கானல் அகம் கழிவாய் -நான்கு பதிகங்களில் முழுவதும் அருளிச் செய்துள்ளார்

    திரு மங்கை ஆழ்வாரோ
    தூவிரிய மலருழக்கி -3-6-பதிகத்தில் தூது விடுவதில் இறங்கி -நான்கு பாசுரங்களே அருளிச் செய்தார்
    இதே போல் -காவார் மடற் பெண்னை -9-4- பதிகத்தில் இரண்டே பாசுரங்களே தூது விடல் அருளிச் செய்தார்

    ——

    சொன்னால் விரோதம் –3-9-பதிகம் முழுவதும் சோறு கூறைக்காக -நர ஸ்துதி பண்ணி ஸ்வரூபம் நாசமடையும் சம்சாரிகளை நோக்கி -நம்மாழ்வார் அருளிச் செய்துள்ளார்

    திரு மங்கை ஆழ்வாரோ
    ஒரே பாசுரத்தால் -1-1-7-கண்டவா தொண்டரைப் பாடும் சொற் பொருள் ஆளீர் -சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின் நற் பொருள் காண்மின் பாடி நீர் உய்ம்மின் -நாராயணா என்னும் நாமம் -என்று அவற்றையே சுருக்கிப் பேசி அருளுகிறார்-

    இதே போல் கொண்ட பெண்டிர் மக்களுற்றார் –9-1-sஆபாச பந்துக்களின் ஹேயத் தன்மைகளை விரித்து அருளிச் செய்துள்ளார் நம்மாழ்வார்
    இவற்றையே-பெரிய திருமொழி-8–9-7-பெற்றாரும் சுற்றமும் என்றிவை பேணேன் நான் மாற்றாரும் பற்றிலேன் -என்று சுருக்கி அருளிச் செய்துள்ளார்

    இதே போல் உயர் திண்ணன் அணைவது ஒன்றும் தேவும் -நான்கு பதிகங்களால் பரத்வத்தை அருளிச் செய்து இருப்பவற்றையே சுருக்கி
    மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி –11-6-ஒரே பதிகத்தால் அருளிச் செய்துள்ளார்

    ———-

    2-நம்மாழ்வார் சுருக்கமாக அருளிச் செய்தவற்றுக்கு திரு மங்கை ஆழ்வார் விஸ்தரித்து அருளிச் செய்தவை
    மாசறு சோதி -5-3 பதிகத்தில் -குதிரியாய் மடலூர்துமே -என்றும்
    யாம் மடலூர்ந்தும் எம் ஆழி யங்கையனைப் பிரானுடைத் தூ மடல் தண்ணம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் என்றும்
    இரண்டு துண்டுகளால் மடலூர்தலைப் பிரஸ்தாபித்தார் –
    இவ்வாறு சுருக்கி அருளிச் செய்தவற்றையே இரண்டு மடல்களாக விஸ்தரித்து அருளிச் செய்துள்ளார்

    ——–

    நாராயண மந்திரத்தின் சிறப்பை
    எண் பெருக்கு அந்நலத்து ஒண்பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -1-2-10- என்றும்
    கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே -10-5-1- என்றும்
    சுருக்கமாக அருளிச் செய்தவற்றையே
    பெரிய திருமொழியில்
    வாடினேன் வாடி -1-1-என்றும்
    கிடந்த நம்பி குடந்தை மேவி -6-10 என்றும்
    இரண்டு பதிகங்களில்
    நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் என்றும்
    நாமம் சொல்லில் நமோ நாராயணமே -என்றும்
    ஒரு கால் சொன்னால் போல் ஒன்பதின் கால் அருளிச் செய்துள்ளார்

    ————-

    தளிர் மதிச் சடையனும் நான் முகக் கடவளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா —ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்
    அகப்படக் கரந்துஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமோ –திருவாசிரியம் -7-
    மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி பதிகம் -11-6–தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும் யாவரையும்
    ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன -நிகமனப் பாசுரம் –


    இன்னமும் எம்பருமான் ஸம்ஸாரி சேதன ஸம் ரக்ஷணார்த்தமாக பல திரு அவதாரங்கள் செய்து அருளும்படியை
    எந்நின்ற யோநியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா -திருவிருத்தம் -1- என்றும்
    மீனாய் ஆமையுமாய் நரசிங்கமுமாய் குறளாய் கானோர் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே -5-1-10-என்றும்
    சுருக்கமாய் அருளிச் செய்தவற்றை
    வானோர் அளவும் முது முந்நீர் –8-8-என்றும்
    நிலையிடம் எங்கும் இன்றி –11-4- என்றும்
    இரண்டு பதிகங்களாலே மிக விஸ்தாரமாக அருளிச் செய்துள்ளார்

    —————-

    நம்மாழ்வாருக்கு அபிநிவேச அதிசயம் வராஹ அவதாரம் என்பதை
    திருவிருத்தத்தின் முடிவிலே -ஏனத்துருவாய் இடந்த ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என்றும்
    திருவாய் மொழியின் முடிவிலும்-கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் -என்றும்
    ஈடுபட்டு அருளிச் செய்தவற்றை ஒட்டியே
    பெரிய திருமொழியின் தொடக்கத்திலேயே -பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே -என்று அருளிச் செய்துள்ளார்

    ———–

    இதே போல் அர்ச்சாவதாரங்களில் திருக் குடந்தை யில் ஈடுபாட்டை
    திருவாய் மொழியின் இறுதியிலும் -குடந்தை யங்கோவலன் குடி குடியார்க்கு தொடர்ந்து எங்கும் ஸ்தோத்திரம் சொல்லினர் -என்று அருளிச் செய்து
    கோயில் திருமலை பெருமாள் கோயில் -எல்லாம் கிடக்க மூவரில் முதலான ஆராவமுத ஆழ்வாரின் மேல் ஈடுபாடு நாலாயிரமும் புனராவதாரம் செய்யப்பட்டு அருளப் போவதை ஸூசிப்பித்து அருளிச் செய்தவாறு
    இந்த அபிநிவேச அதிசயத்தை உணர்ந்தே திருமங்கை ஆழ்வாரும்
    சூழ் புனல் குடந்தையே தொழுது -1-1-2- என்றும்
    சூழ் புனல் குடந்தையே தொழுமின் –1-1-7-என்றும் முதலிலேயே அருளிச் செய்து
    சரம ப்ரபந்தமாகிய திருநெடும் தாண்டகத்திலும் -தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -என்று நிகமித்தும் அருளிச் செய்துள்ளார் –

    மேலும் அடுத்த பாசுரத்திலேயே
    அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை -என்று
    நம்மாழ்வாருக்கு திரு நாட்டில் திருக்குடந்தை நினைவு வருவதற்கு உறுப்பான ஐதிக்யத்தையும் காட்டி அருளுகிறார்
    நாத யாமுனர் போல்வாரை அன்னம் என்னும் -ஆச்சார்ய ஹ்ருதயம் -151-
    அன்னமாயும் முனிவராயுமுள்ள நாதமுனிகளுடன் திருக்குடந்தை நிலத்தேவர்களான ஸ்துதிக்க –
    அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை-என்று நாதனுக்கு நாலாயிரமும் உரைத்தான் வாழியே –என்றபடி
    அரும் தமிழ் மறையை வெளிப்படுத்தி அருளிய நம்மாழ்வார்
    ஆராவமுதாழ்வாருக்கு பதிகம் அருளி சமர்ப்பித்த பின்னர் -தாமும் அவ்வாறு செய்யக் கூடாது என்று திரு உள்ளம் பற்றியே துணுக்குப் பாசுரங்கள் பரவி அருளிச் செய்துள்ளார்

    ———–

    3- இருவரும் சமமாக அருளிச் செய்தவை –

    3-1- ததீய சேஷத்வம்

    பயிலும் சுடர் ஒளி -3-7- நெடுமாற்கு அடிமை -8-10-இரண்டு பதிகங்கள் திருவாய் மொழியில்
    நண்ணாத வாள் அவுணர் -2-6-கண் சோர வெங்குருதி –7-4- இரண்டு பதிகங்கள் பெரிய திருமொழியில் –

    3-2- தலைமகள் எல்லாம் இழந்தவற்றை அருளிச் செய்யும் அருளிச் செயல்கள்

    மாலுக்கு வையம் அளந்த பதிகத்தில் -6-6–இழந்தது சங்கே -இழந்தது மாமை நிறமே -இழந்தது பீடே —இழந்தது கட்டே –என்று திருத்தாயார் பேச்சு
    கரை எடுத்த சுரி சங்கு -பெரிய திருமொழி -8-3- பதிகத்தில் -இழந்ததேன் என் வரி வளையே -இழந்ததேன் என் கன வளையே
    இழந்தேன் என் சரி வளையே –இழந்தேன் என் பெய் வளையே –என்று தன வாயாலே அருளிச் செய்கிறார்

    3-3- திருத்தாயார் என் நினைந்து இருக்கிறாய்

    கங்குலும் பகலும் -7-2- பதிகத்தில் இவள் திறத்து என் செய்கின்றாயே –இவள் திறத்து என் சிந்தித்தாயே –என்று பாசுரம் தோறும் திருத் தாயார் பேச்சு
    திவளும் வெண் மதி போல் திருவிடவெந்தை பதிகத்தில் -2-7- உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் என்று பாசுரம் தோறும் திருத் தாயார் பேச்சு

    ————————————————————————————————

    4- கட்டுவிச்சி பேச்சு

    தீர்ப்பாரை யாமினி -4-6-தேவதாந்திர கட்டுவிச்சி வந்து புகுந்தமை சொல்லிற்று
    சிறிய திரு மடலிலும் திரு நெடும் தாண்டகத்திலும் வைஷ்ணவ கட்டுவிச்சியின் பேச்சு சொல்லிற்று

    ——————————————————————————————-

    5- திருத் தாயாரை விட்டு செல்வது

    உண்ணும் சோறு பதிகம் -6-7-பராங்குச நாயகி திருத் தாயாரை விட்டு தனியாகவே திருக் கோளூர் நோக்கி நடந்தமை சொல்லிற்று
    கள்வன் கொல் பதிகம் -3-7-வயலாலி மணவாளன் வந்து பரகாலை நாயகியை திருத் தாயாரை விட்டு கூட்டிப் போனமை சொல்லிற்று ‘-

    —————–

    ஏவம் பூத பக்தி தசையில் இவர் பெண் பேச்சாக பேசும் இடத்தில் –
    தோழி தாய் மகள் என்று த்ரி விதமாக பேசுகிற இதுக்கு கருத்து என் என்னும் அபேஷையில்
    அத்தை பிரகாசிப்பிகிறார் மேல் —

    சம்பந்த உபாய பலங்களில்
    உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிற
    ப்ரஜ்ஞா அவஸ்தைகளுக்கு
    தோழி தாயார் மகள் என்று பேர் —சூரணை -133-

    (சம்பந்தத்தில் -உணர்த்தி ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு-தோழி என்று பெயர் –
    உபாயத்தில் -துணிவு ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தாயார் என்று பெயர் –
    பலத்தில்- பதற்றம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு மகள் என்று பெயர் )

    (ஞானத்தில் தம் பேச்சு வேதாந்தம் ஞானம் -என்றவாறு-திருமந்திர ஞானம் -பெண் பேச்சு
    சம்பந்த ஞானம் -தோழி -/ உபாய அத்யாவசியம்–தாய் / பேற்றுக்கு த்வரிக்கை மகள்
    பிரஞ்ஞா வேறே ஞானம் வேறே -எப்பொழுதும் உள்ள ஞானத்துக்கு பிரஞ்ஞா அவஸ்தை –
    மூன்றுமே எப்பொழுதும் இருக்கும் -ஓன்று உந்த மூன்று அவஸ்தைகள்
    நமக்கு முக்குணங்களும் இருந்து ஒவ் ஓன்று ஒவ் ஒரு காலத்தில் உயருமா போலே — )

    சம்பந்தத்தில் -உணர்த்தி ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு-தோழி என்று பெயர் –
    அதாவது –
    தோழி ஆவாள்-நாயக நாயகிகளை இணக்கிச் சேர்க்குமவள் ஆகையாலே –
    திரு மந்த்ரத்தில் பிரதம பதத்தால் ஈஸ்வரனோடு ஆத்மாவுக்கு சொல்லப் பட்ட
    அநந்யார்ஹ சேஷத்வாதி சம்பந்த ஞானமே -அவனோடு இந்த ஆத்மா சேருகைக்கு
    ஹேது -சம்பந்தம்-ஆகையால்-அந்த சம்பந்த ஞானம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தோழி என்றும் –
    (ஆதி -காரண கார்ய பாவம் -ரக்ஷக ரஷ்ய பாவம் -சேஷ சேஷி சம்பந்தம் இத்யாதிகள்)

    உபாயத்தில் -துணிவு ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தாயார் என்று பெயர் –
    அதாவது
    தாயார் ஆவாள்-பெற்று வளர்த்த பெண் பிள்ளை ப்ராப்த யவ்வனையாய் நாயக விஷயத்திலே அதி மாத்திர ப்ராவண்யத்தாலே-
    அவன் இருந்த இடம் ஏறப் போக வேணும் என்று பதறும் அளவிலும் – அவன்தானே வரக் கண்டு இருக்கை ஒழிய –
    படி கடந்து புறப்படுகை குல மரியாதைக்கு போராது என்று நிஷேதித்து போருமவள் ஆகையாலே –
    சித்தோ உபாயத்தை பற்றினவர்களுக்கு ப்ராப்தி விளம்ப ஹேது இல்லாமையாலே –
    சீக்கிரமாக ப்ராப்யத்தை பெற வேணும் என்கிற அந்த த்வரையினுடைய உத்பத்தியாதிகளுக்கு பிரதம ஹேதுவாய் –
    அந்த த்வரை பிராப்ய வைலஷண்ய தர்சனத்தாலே -க்ரம பிராப்தி பற்றாமல் முறுகி நடக்கும் அளவில் –
    இது பிரபன்ன குல மரியாதைக்குச் சேராது என்று நிசேஷித்து –
    சேஷியானவன் தானே வந்து விஷயீகரிக்கக் கண்டு இருக்க வேண்டும் என்று -இதின் துடிப்பை அடக்கப் பார்க்கிற
    மத்யம பத பிரதிபாதித -உபாயத்யவசாயம் -ஆகிற -பிரஜ்ஞா அவஸ்தையை தாயார் என்றும்-

    பலத்தில்- பதற்றம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு மகள் என்று பெயர்
    அதாவது
    தலை மகள் ஆவாள் –இயற்கையிலே புணர்ந்து நாயகனின் வைலஷண்யத்தில் ஈடு பட்டு –
    குல மரியாதைகளையும் பாராதே கிட்டி அல்லாது தரியேன் என்னும் பதற்றத்தை உடையவள் ஆகையாலே
    பிரதம மத்யம பதங்களால் அறுதி இடப் பட்ட சேஷியாய்-சரண்யன் ஆனவனுக்கு –
    சரம பத ப்ரோக்தமான -ஸ்வரூப ரூப குண விபூதிகளால் வந்த வைலஷண்யத்தை அனுசந்தித்து –
    தத் அனுபவ விளம்ப அஷமத்வத்தாலே-தத் ஏக உபாயத்வ அத்யாவசத்தையும் அதிக்ரமித்துக்
    கிட்டி அனுபவித்து அல்லது தரிக்க மாட்டாதபடி நடக்கிற பிராப்ய த்வரை ஆகிற பிரஜ்ஞா அவஸ்தைக்கு
    மகள் என்று பேர் இட்டு சொல்வது என்கை —

    ஞான அவஸ்தைகள் என்னாமல் பிரஜ்ஞா அவஸ்தைகள் என்றது
    திரிவித அவஸ்தையும் இவருக்கு சர்வ காலமும் உண்டு என்று தோற்றுகைக்காக–
    பிரஜ்ஞா த்ரைகாலிகீ மதா – என்னக் கடவதிறே–பத த்ர்யார்த்த ஞானமும் திரு உள்ளத்தில்
    எப்போதும் உண்டாய் இறே இருப்பது ..

    ——

    இவ் அவஸ்தைகள் மூன்றும் இவர் பேச்சிலே தோன்றுமோ என்னும் அபேஷையிலே –
    தோழி தாய் மகள் பேச்சான திரு வாய் மொழிகளிலே இவை தெரியும் என்னும் அத்தை
    ஸூக்ரஹமாக வரைந்து அருளிச் செய்கிறார் மேல்–
    (தோழி -கடகர் ஸமாச்ரயணம் -பிரணவார்த்தம் -ஆதாரம் –
    அதுக்குத் தக்க உபாய அத்யாவசியம் -நமஸ் சப்தார்த்தம் -தாய் பாசுரம் –
    ப்ராப்ய த்வரை தலைமகள் பாசுரம் -நாராயணாயா சப்தார்த்தம் )

    சஹி வெறி விலக்கி ஆசை அறுத்து அறத்தொடு நின்ற மூன்றில்
    அனந்யார்ஹத்வமும் —

    வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக் கட்டு இழந்து அகன்று
    சார்வதே வலித்தமை ஸாதனம் ஆமோ என்று
    மாதா அஞ்சி முறைப்பாட்டு முறை இடுகிற ஏழில் அத்யவசாயமும் –

    புத்ரி பலகால் ஆள் விட்டு – ஆற்றாமை சொல்லி -கவராதமை விட்டு
    இரைக்க மடல் எடுத்து – கண் புதைய போக்கற்று- உரு நெஞ்சுள் எழக் கூடு நாள் தேடி
    தாழ்ந்ததுக்கு ஊடி உசாத் துணை அற்று – சூழவும் பகை முகம் செய்ய- தடை நில்லாதே
    புயக்கற்று – மாலையும் – காலையும் பூசல் இடுகிற பதினேழில் த்வரையும் தெரியும் —சூரணை -134-

    சஹி வெறி விலக்கி ஆசை அறுத்து
    அறத்தொடு நின்ற மூன்றில்-(தீர்ப்பாரை யாமினி- துவளில் மா மணி மாடம் – கரு மாணிக்க மலை )
    அனந்யார்ஹத்வம்-சம்பந்த ஞானம் தெரியும்-
    வெறி விலக்கி-
    அதாவது
    எம்பெருமானோடே இயற்கையில் புணர்ந்து பிரிந்து ஆற்றாமையால் –
    மோகங்தையாகக் கிடக்கிற பிராட்டி தசையைக் கண்டு தாய் மார் கலங்கி –
    இவள் நோயையும் அதுக்கு நிதானத்தையும் -பரிகாரத்தையும் அறியாதே –
    பிரதிபன்ன பாஷிணியாய் இருப்பாள் ஒரு கட்டுவிச்சி சொல்லைக் கொண்டு –
    இந்த நோய்க்கு பரிகாரமாகக் கருதி -வெறியாடல் உற –
    இவள் பிரகிருதி அறியும் உயிர்த் தோழி அநந்யார்ஹையான இவளுக்கு அந்ய ஸ்பர்சம் சஹியாது-
    நாம் இதை விலக்காது ஒழியில் -இவளை இழக்க வரும் என்று பார்த்து –
    அப்போது நிரூபித்து அறிந்தாளாக இவள் நோவையும் -அதுக்கு நிதானத்தையும் அவர்களுக்கு சொல்லி –
    தத் உசித பரிகாரங்களையும் விதித்து- அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேல்மின் -என்றும் –
    உணங்கல் கெட கழுதை உதட்டாட்டம் கண்டு என் பயன் -இத்யாதிகளால் வெறியை விலக்கின பாசுரத்தாலே

    (தலைமகள்) பிராப்ய த்வரை தசையில் அவசாதம் அடியாக – உபாயத்வ அத்யவாசம் ( தாயார் )கலங்கி-
    தர்மேன பாபம் அபநுததி -தைத்ரியம் -–
    ( பலத்தில் விருப்பம் இல்லாமல் கர்மங்களை செய்வதனால் பாவத்தைப் போக்கடிக்கிறான் )என்கிறபடியே –
    தர்ம அனுஷ்டானத்திலே துக்க ஹேதுவை போக்கலாம் என்பார் வார்த்தையைக் கொண்டு –
    இவ் அவசாதத்தை பரிஹரிக்கலாமோ என்று தேவதாந்தர்யாமி பரமான கர்ம கபாலங்களிலே பிரவர்திக்கத் தேட –
    அவ்வளவிலே சம்பந்த ஞானம் ஆனது ( தோழியானவள் )இவ் அவசதம் கர்ம பலம் அன்றிக்கே ஆகஸ்மிக பகவத் கடாஷம் பலமாக –
    அசாதாராண விக்ரக விசிஷ்டனாவனை அனுபவிக்கையால் உண்டான பிராவண்யம் கார்யம் ஆகையாலே
    இதுக்கு அது பரிஹாரம் அன்று – அநந்யார்ஹ சேஷத்வதுக்கு விருத்தம் ஆகையால் ஸ்வரூப நாசமுமாம் —
    அந்ய ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த –தீர்ப்பாரை யாமினியும் –

    ஆசை அறுத்து –
    அதாவது
    திரு துலைவில்லி மங்கலத்திலே அதி பிரவணையாய் இருக்கிற பெண் பிள்ளையை
    மீட்கப் பார்க்கிற தாய்மாரைக் குறித்து தோழி யானவள்-
    இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை-என்று நீங்களே அன்றோ
    திரு துலைவில்லி மங்கலத்தில் கொண்டு புக்கு இப் பிராவண்யத்தை விளைத்தீ கோள் –
    இனி பிராப்த விஷய பிரவணையான இவளை உங்களால் மீட்கப் போகாது –
    ஆன பின்பு- இவள் பக்கல் உங்களுக்கு ஆசை அற அமையும் என்ற பாசுரத்தாலே –

    அர்ச்சாவதார சுலபமான விஷயமே உபாயம் ஆகையாலே எப்போதும் இதிலே நோக்காய் இருக்கும் அத்யாவசியம் –
    அவ் விஷய வைலஷண்யத்தை விஷயீகரித்த பிராவண்ய கார்யமான த்வரை
    உபாயத்திலே அன்வயிக்கிறதோ என்னும் அதி சங்கையால் – அத்தை நிவர்ப்பிக்கத் தேட –
    அவ்வளவிலே சம்பந்த ஞானம் சேஷ வஸ்து கதமான இப் பிராவண்யம் சேஷி உகப்புக்கு
    விஷயமாம் அல்லது உபாய கோடியில் அன்யவியாது —
    பிராப்த விஷய வைலஷண்யம் அதீனமாக வந்தது ஆகையாலே நிவர்த்திக்கவும் போகாது —
    இத்தை ஸ்வ நிவர்த்யமாக நினைத்து இருக்கிற ஸ்வாதந்த்ர்யம் அத்யந்த பாரதந்த்ரம் ஆகிற
    ஸ்வரூபத்துக்கு விருத்தம் ஆகையாலே த்யாஜ்யம் என்று ஸ்வ ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த
    துவளில் மா மணியும் —

    அறத்தொடு நின்ற
    அதாவது
    தலைமகள் பருவத்தை கண்ட பந்து ஜனங்கள் ஸ்வயம் வரத்துக்கு ராஜ லோகத்தைத் திரட்டுகைக்காக மண முரசு அறைவிக்க-
    திரு புலியூரிலே நாயனாரோடே இவளுக்கு கலவி உண்டாய்த்து என்னும் இடத்தை
    இவள் வடிவிலும் பேச்சிலும் உண்டான வேறுபாட்டாலே அறிந்த உயிர் தோழி யானவள் –
    இத் த்வனி பெண் பிள்ளை செவியில் படுமாகில்-மானிடவர்க்கு என்று பேச்சு படில் வாழாத தன்மையளாய்
    இருக்கிற இவளைக் கிடையாது — ஏற்க்கவே பரிக்ரஹிக்க வேணும் என்று இவள்
    பந்து ஜனங்களைக் குறித்து இவளுக்கு திருப் புலியூரில் நாயனாரோடே சம்ஸ்லேஷம் ப்ரவ்ருத்தம் ஆயிற்று போலே இரா நின்றது –
    தத் குண சேஷ்டிதங்களையே வாய் புலற்றா நின்றாள் –ஆன பின்பு நீங்கள் செய்கிறது தர்மம் அல்ல என்ன–
    ஆகில் இவளுக்கு தக்க அவயவ சோபை ஆபரண சோபை முதலான நாயக லஷணங்கள் அவனுக்கு உண்டோ என்ன –

    அவை எல்லாம் குறை இல்லை –அவை ஒன்றும் இல்லை யாகிலும் -இவள் அங்கே அநந்யார்ஹை ஆனமைக்கு
    அடையாளம் ஸூ வ்யக்தமாக காணலாம் –ஆன பின்பு இத்தை தவிறுங்கோள் என்று
    மத்யஸ்தையாய் நின்று தர்மம் சொல்லுகிறாளாய்-அந்த மணத்தை விலக்கின பாசுரத்தாலே பிராப்ய த்வரையின் உடைய பரிபாகத்தை
    உபாயத்வ அத்யவசாய தசையில் நின்று தரிசித்த அநந்தரம் -அது பகவத் அநந்யார்ஹை ஆனமை அறியாதே –
    அந்ய விஷயத்துக்கும் அர்ஹமோ என்று நிரூபிக்க –
    அவ்வளவிலே சம்பந்த ஞானம் -இதுக்கு அந்ய சேஷத்வ பிரசங்கமும் ஸ்வரூப நாசகம் –
    சேஷியானவனுடைய போக்யதையாலும் அது தன்னை ஒழியவும் நிருபாதிக சேஷத்வத்தாலும்
    இவ் வஸ்து அவனுக்கு சேஷம் என்று அறுதி இட்ட –
    கரு மாணிக்க மலை-8-9-யுமாகிற தோழிப் பேச்சான
    இம் மூன்று திரு வாய் மொழியிலும் அனந்யார்ஹ சேஷத்வம் தோன்றும் என்கை —

    ஆக இத்தால்
    வெறி விலக்கியும் ,
    ஆசை அறுத்தும் ,
    அறத்தோடு நின்றும் –
    இவ் வஸ்து -அந்ய சேஷமும் அன்று –ஸ்வ சேஷமும் அன்று -பகவத் ஏக சேஷம் என்று சொன்ன
    இம் மூன்று திரு வாய் மொழியும் -சம்பந்த ஜ்ஞான தசையில் பேச்சு என்னும் இடம் சம்பிரதி பன்னம் என்பது ஆயிற்று —

    வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக் கட்டு இழந்து அகன்று சார்வதே வலித்தமை
    ஸாதனம் ஆமோ என்று மாதா அஞ்சி முறைப்பாட்டு முறை இடுகிற ஏழில் அத்யாசசாயமும் –
    அதாவது

    1-வாடி –
    ஆடி ஆடி– -யிலே– வாடி வாடும்-2-4-1– -என்று அடியார்கள் குழாங்களை உடன் கூடப்
    பெறாமையாலே வந்த கிலேசத்தால் ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போல் வாடி–
    ( காசை இழந்ததுக்கும் மேலும் பொன்னை இழந்ததுக்கும் மேலே மணியை இழந்த தசை அன்றோ )

    2-மெலிந்து
    பாலனாய் ஏழ் உலகிலே- கண்ணன் கழல் துழாய் பென் செய் பூண் மென்முலைக்கு என்று மெலியும்-4-2-1-என்று
    கை கழிந்தவற்றை ஆசைப்பட்டு மெலிந்து-
    (என்னுடை கோமளம் என் சொல்லும் என் வசமும் இல்லை நங்கைமீர் -உடல் மெலிய திருவடி மேலே சாத்திய
    திருத்துழாய் கிடைக்காமல் -கை கழிந்தவற்றையும் ஆசைப்பட்டு -முடியானே -3-8-உடன் சங்கதி இதுக்கு –
    இதில் பாசுரம் தோறும் திருவடி பிரஸ்தாபம் –உலகமுண்ட பெரு வாயா போலே இங்கும் உண்டே -)

    3-பித்தேறி –
    மண்ணை இருந்து துழாவி- யிலே -என் பெண் கொடி ஏறிய பித்தே-4-4-1- -என்னும்படி
    சத்ருச பதார்த்தங்களையும் -சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாக நினைத்து கிட்டும் படி பித்தேறி –
    ( ஏறிய பித்துடன் எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் -என்று சொல்லுவாள் -ஞானம் முற்றிய பித்து தானே இது
    தேறியும் தேறாமல் மாயன் திறத்தனள் இவள் )

    4-ஏறப்பேசி
    கடல் ஞாலத்திலே -ஈசன் வந்து ஏறக் கொலோ -5-6-1–என்று ஆற்றமையாலே
    அனுகரிக்கிரமை அறியாதே -ஈஸ்வரன் ஆவேசித்தானோ என்னும் படி அவனாகவே பேசி —
    (திருக்குறுங்குடிக்கும் வானமா மாலைக்கும் தூரம் கடல் ஞாலம் உண்டே -சாடுவாகச் சொல்வர்
    அநுகாரமும் ஆவேசமும் -கீழே தரிப்பும் தளர்வும் போலே )

    5-கட்டு அழிந்து
    மாலுக்கு வையத்திலே –கற்புடை யாட்டி இழந்தது கட்டே-6-6-1- -என்னும்படி
    பகவத் அலாப கிலேசத்தாலே கட்டடங்க இழந்து —
    (துவளில் மா மணி மாடம் ஆசை அறுத்து -அதில் இருந்து தாய் பாசுரம் -மாலுக்கு சென்றதுக்கு அவதாரிகை –
    த்வரை மிக்கு அனுபவ அலாபம்–ஆற்றாமை முறுகி-தோழி தசையும் கலங்கி -சம்பந்த ஞானமும் தரிப்புக்கு உறுப்பாகாமல்
    தளர்ச்சிக்கு உறுப்பாக -உபாய அத்யாவசாயம் இத்தனைக்கும் கலங்காமல் இருந்து –
    மாலுக்கு பாரவஸ்யத்தால் எறாளும் வேண்டாம் என்று உபேக்ஷித்தவை தன்னடையே இழந்தவற்றை அன்றோ அருளிச் செய்கிறார் )

    6-அகன்று –
    உண்ணும் சோற்றிலே–இன்று எனக்கு உதவாது அகன்று-6-7-1- -என்று தன்னைப் பிரிந்து
    கிலேசப் படுகிற இவ் ஆபத்து தசையிலே எனக்கு உதவாதே போனாள் என்னும் படி அகன்று —
    (மூன்றாவது சேர்ந்தால் போலே பிரேம தசை திருவாய்மொழி
    தன் சொத்தை பார்த்து போனவள் என் சொத்தையும் எடுத்து போக வேண்டுமோ –
    கண்ணும் கண்ண நீருமான இவள் திரு முகம் தானே தாயாருக்கு சொத்து
    தன் திருவும் என் திருவும் -திருமாலைத் தேடித் போனாள்-என் திருமகள் சேர் மார்பனே 7-2- )

    7-சார்வதே வலித்தமை
    கங்குலும் பகலிலே -சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையல்-7-2-1–என்னும் படி
    அவனைக் கிட்டி அவன் சந்நிதியில் முடிய வேணும் என்று வியவசிதை ஆனமை
    (வலித்தமை-அத்யாவசியம் -உறுதி உடைமை -சிக்கனவே -அவன் முன்னே முடியும் நிலை -பதினாறாயிரப்படி )
    உபாசகருக்கு பரபக்தி தசையில் உண்டாகும்
    க்லானி கார்ச்யாதிகள் (வாட்டமும் மெலிவும் -துரும்பாக இளைத்து போவது ) போல சாதனத்தில்
    மூதலிடுமோ என்று மாதாவானவள் அஞ்சி – அவன் தன்னையும் வினவ வந்தவர்களையும்
    குறித்து வாடா நின்றாள்- மெலியா நின்றாள் -என்றார் போலே முறைப் பட்டு –
    முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே–திருவிருத்தம் -62- என்று
    ( முகில் வண்ணன் -அரங்கன் -7-2-திருவாய் மொழிக்கும் இந்த திரு விருத்த பாசுரத்துக்கும் சம்பந்தம் உண்டே
    உபாய அத்யாவசியம் ப்ராப்யம் அந்தர்கதம் ஒழிய உபாயாந்தரம் இல்லையே )
    அத்தலையில் கிருபை ஒழிய இவள் பக்கல் உள்ளவை ஒன்றும் ஹேது இல்லை –
    (பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு -இதுவே கிருபை -பக்தி உபாயம் இல்லை -)

    ஆன பின்பு இவளை இப்படி துடிக்க விட்டு இருக்கை உம்முடைய கிருபைக்கும் ரஷகத்வதுக்கும்
    போருமோ என்று கூப்பிடும் ஏழு திரு வாய் மொழிகளிலும் –
    உபாயத்வ அத்யவாசம் தோன்றும் என்கை-
    இத்தால் தாய் பேச்சான ஏழு திரு வாய் மொழியும்
    உபாயத்வ அத்யாவசாய தசையில் பேச்சு என்னும் இடம் ஸ்பஷ்டம் என்ற படி —

    புத்ரி பலகால் ஆள் விட்டு ஆற்றாமை சொல்லி கவராதமை விட்டு
    இரைக்க மடல் எடுத்து -கண் புதைய போக்கற்று உரு நெஞ்சுள் எழக் கூடு நாள் தேடி
    தாழ்த்ததுக்கு ஊடி உசாத் துணை அற்று சூழவும் பகை முகம் செய்ய தடை நில்லாதே
    புயக்கற்று மாலையும் காலையும் பூசல் இடுகிற பதினேழில் த்வரை யும் தெரியும் —
    அதாவது –

    1-2-3-4-புத்ரி பல கால் ஆள் இட்டு
    தலைமகள் ஆனவள்-
    அஞ்சிறை மடநாராய்-1-4-
    வைகல் பூம் கழி-6-1–
    பொன் உலகு ஆளீர்-6-8–
    எம் கானல்-9-7–
    என்கிற நாலு திரு வாய் மொழிகளிலும் க்ரம ப்ராப்தி பற்றாமல் தூது விட்டு —
    ( திருவாய் மொழி முழுவதுக்கும் மூன்று ஸங்க்ரஹம் -அதுக்கு முதல் மூன்று பாசுரங்கள் ஸங்க்ரஹம் –
    அதுக்கு முதல் பாசுரம் ஸங்க்ரஹம் )

    5-ஆற்றாமை சொல்லி –
    வாயும் திரை உகளிலே –2-1-ஆற்றாமை சொல்லி அழுவோமை -என்று சகல பதார்த்தங்களும்
    பகவத் அலாபத்தாலே நோவு படுவதாக கருதி அவற்றை சம துக்கிகளாக கொண்டு அழுது-

    6-கவராதவை விட்டு –
    ஏறாளும் இறையோனில்-4-8– மாறாளன் கவராத மணிமாமை குறைவிலம்-என்று அவன் விரும்பாதவற்றை உபேஷித்து-
    (ஏறாளும் இறையோனில்-4-8 -ஆத்மாத்மீயங்கள் வைராக்யம்
    என்னையும் என் உடைமையையும் சக்கரைப்பொறி ஒற்றிக் கொண்டு-பெரியாழ்வார் –
    மாம் மதியஞ்ச அகிலம் – -தேசிகன்-அனைத்தும் சேஷம் -இது இல்லை என்றால் வேண்டாமே ஆழ்வார்
    லோக யாத்ரை வைராக்யம் கீழே-ஐஸ்வர்ய கைவல்யம் ஒரு நாயகம் )

    7-இரைக்க மடல் எடுத்து –
    மாசறு சோதியிலே-5-3- -நாடும் இரைக்கவே–நாம் மடலூர்த்தும் என்று ஜகத் ஷோபம் பிறக்கும் படி மடலூர்வன் என்று
    (ஹஸ்திகிரி பிரதிவாதி பயங்கரம் அண்ணா-மா முனிகள் சார்பில் அவர் முன்னிலையில் -வேங்கடேச ஸூப்ரபாதம் – ஸ்தோத்ரம் –
    மங்களம் இத்யாதி சமர்ப்பித்து -ஒன்றும் தேவும் பதிக வியாக்யானம் கேட்டு சமஸ்க்ருத பாண்டித்யம் அறிந்து அடி பணிந்தார் –
    உபதேசம் கேட்டு பொலிக பொலிக பொலிக மங்களாசானம் -5-2-)

    8-கண் புதைக்கப் போக்கற்று-
    ஊர் எல்லாம் துஞ்சியிலே -5-4–பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
    முன்னிற்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் -என்றே பிரேம வியாதியும் ,
    ராத்ரியாகிற கல்பமும் கிருத சங்கேதிகளாய் சூழப் பொருகையாலே , போக்கடி அற்று –
    ( கிருஷ்ணை ரஷித்த இருள் அங்கு க்ருஷ்ண த்ருஷ்ண தத்துவத்தை சிஷித்த இருள் இங்கு-
    பேர் அமர் காதல் பின்நின்ற காதல் கழிய மிக்கதொரு காதல் 5-3-/-4-/-5-மொத்தமான நாயகி –
    பின்பு மொத்தமாக தானான தன்மையில் சரணாகதி -நாயகி பாவத்திலும் சரணாகதியும் உண்டே – )

    9-உரு நெஞ்சு உள் எழ
    எங்கனேயோ அன்னைமீர்காள் -திருவாய்மொழியிலே -5-5– -சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு
    என் நெஞ்சுள்ளும் எழும் -என்று தேஜஸ் தரங்கம் மத்யே உன்நேயமான
    அப்ராக்ருத விக்ரகம் பிரிதி அப்ரிதி சமமாம் படி உரு வெளிப்பாடே நெஞ்சில் பிரகாசிக்க –

    10-கூடு நாள் தேடி
    மானேய் நோக்கிலே-5-9- -திரு வல்ல வாழ் உறையும் கோனாரை அடியேன் கூடுவது என்று கொல் ?
    என்று அவனை கூடும் நாளை பிரார்த்தித்து -இப்படி பிரார்தியா நிற்கவும் தாழ்ந்து வந்தவாறே –
    ( அடி பிரஸ்தாபம் ஏழு பாசுரங்கள் இந்த பதிகத்திலும் உண்டே )

    11-தாழ்த்ததுக்கு ஊடி
    மின்னிடை மடவாரிலே-6-2- -போகு நம்பீ -என்று பிரணய ரோஷத்தால் ஊடி
    (தானான தன்மை -ஞானத்தால் சரணாகதியும் பண்ணி -பிரேமத்தால் நாயகி பாவத்தால் தூதும் விட்டு
    சற்றே காலம் தாழ்த்து வந்ததால் பிரணாய ரோஷம் )

    12-உசாத் துணை அற்று
    வெள்ளை சுரி சங்கிலே -7-3–என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் இனி யாரை கொண்டு என் உசாகோ –
    என்று அபஹ்ருத சித்தை ஆகையாலே உசாத் துணையும் இன்றி —

    13-சூழவும் பகைமுகம் செய்ய
    ஏழையர் ஆவியிலே –7-7 –கண்ணன் கோள் இழை வாண் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றவே –
    என்று உரு வெளிப்பாட்டாலே பாதக வர்க்கம் ஒருமுகமாய் நலிய –

    14-தடை நில்லாதே –
    நங்கள் வரி வளையிலே-8-2- -காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லை-
    என்று ஹிதம் சொல்கிற தோழிமார் அன்னைமாரை அதிகிரமித்து –

    15-புயக்கற்று
    இன் உயிர் சேவலிலே–9-5 -இழை நல்ல வாக்கையும் பெய்யவே புயக்கற்றது –
    என்று போலி கண்டு நொந்து முடிகையிலே வ்யவசிதையாய்

    16-17- மாலையும் காலையும் பூசல் இடுகிற-
    ( முழு இரவு வியசனம் ஊரெல்லாம் துஞ்சி–5-4-இப்பொழுது மிகவும் தளர்ந்து அவ்வளவும் தங்க மாட்டாரே )
    மல்லிகை கமழ் தென்றலிலே-9-9- -சந்த்யா காலத்தில் கிருஷ்ணனை பசுக்களின்
    முற் கொழுந்தில் வரக் காணாமல் பாதக பதார்த்தங்களால் நலிவு பட்டு –
    வேய் மரு தோள் இணையிலே-10-3- -பிராத காலத்தில் கிருஷ்ணன் பசு மேய்க்க
    போனானாக அதி சங்கை பண்ணி -அவன் முகத்தை பார்த்து -நீ பசு மேய்க்கப் போனால்
    நலியக் கடவ பாதக பதார்த்தங்கள் -நலியா நின்றது என்று கூப்பிடுகிற

    பதினேழு திரு வாய் மொழிகளிலும் பிராப்யத் த்வரை தோன்றும் என்கை —
    இத்தால் தலைமகள் பேச்சான பதினேழு திரு வாய் மொழிகளும்
    பிராப்ய த்வரை தசையில் பேச்சு என்னும் இடம் வ்யக்தம் என்ற படி —

    திருமங்கை ஆழ்வார் தலைமகள் திருத்தாயார் பதிகங்களும் 27 ஆகும்
    மானமரும் மென்னோக்கி பதிகம் தோழிமார் இருவரும் பரஸ்பரம் ஸம்பாஷிக்கும் முகத்தாலே பரத்வ ஸுலப்யங்களை வெளியிட்டு அருளுகிறார் -அது தோழி பதிகம் அன்று –
    திருத்தாயார் பதிகங்கள் ஒன்பது -அவை
    1-திவளும் வெண் மதி போல்
    2-கள்வன் கொல் நான் அறியேன்
    3-கவள யானை கொம்பு ஒசித்த
    4-வெருவாதாள் வாய் வெறுவி
    5-சிலையிலங்கு பொன்னாழி
    6-தெள்ளியீர் தேவருக்கும் தேவர்
    7-மூவரில் முன் முதல்வன்
    8-புள்ளுருவாகி நள்ளிருள் வந்த
    9-திருநெடும் தாண்டகத்தில் பட்டுடுக்கும் பதிகம்

    தலை மகள் பதிகங்கள் -18
    1- திரிபுரம் மூன்று எரித்தானும்
    2-தூ விரிய மலர் உழக்கி
    3-தந்தை காலில் பெரு விலங்கு
    4-கரையெடுத்த சுரி சங்கம்
    5-விண்ணவர் தங்கள் பெருமான்
    6- தந்தை காலில் விலங்கற
    7-பொன்னிவர் மேனி மரகதத்தின்
    8-தன்னை நைவிக்கிலென்
    9-காவார் மடற் பெண்ணை
    10-தவள விளம்பிறை துள்ளு
    11-காதில் கடிப்பிட்டு
    12-திருத்தாய் செம்போத்தே
    13-குன்றம் ஓன்று எடுத்தேந்தி
    14-குன்றம் எடுத்து மழை தடுத்து
    15-மன்னிலங்கு பாரதத்து
    16-சிறிய திருமடல்
    17-பெரிய திருமடல்
    18- திருநெடும் தாண்டகத்தில் மை வண்ண நறுங்குஞ்சி -பதிகம்
    ஆக இரண்டும் சேர்ந்து -அந்யாபதேச பதிகங்கள் 27 ஆயிற்று
    இவற்றின் ஸா தர்ம்ய வைதர்ம்யங்களைப் பார்ப்போம் –

    திவளும் வெண் மதி போல் பதிகம் கங்குலும் பகலும் போல்
    அவருடைய தாய்ப்பேச்சில் அது முடிவு பதிகம்
    இவருடைய தாய்ப் பேச்சில் இது உபக்ரமம்
    இவள் திறத்து என் செய்கின்றாயே -என்று வினவுதல் அங்கு
    நின் தாள் நயந்திருந்த இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்று வினவுதல் இங்கு
    இவ்வினா பாட்டுத்தோறும் ஒக்கும்

    கள்வன் கொல் யான் அறியேன் -உண்ணும் சோறு பருகும் நீர்
    தாயை விட்டு மகள் பிரிந்து போதல் இரண்டிலும் உண்டு
    திருக்கோளூரை வினவிக்கொண்டு தனியாகப் போனாள் பராங்குச நாயகி
    வயலாலி மணவாளன் கொண்டு போகப் போனாள் பரகால நாயகி

    கவள யானை கொம்பு ஒசித்த –ஆடியாடி அகம் கரைந்து
    இரண்டிலும் இசை பாடிப்பாடி உருகுதல் ஒக்கும்
    என் வள்ளலே கண்ணனே என்னும் என்றாள் பராங்குச ஜனனி
    கவள யானை கொம்பு ஒசித்த கண்ணனே என்கிறாள் பர கால ஜனனி

    வெருவாதாள் வாய் வெருவி திருமொழி –பாலனாய் ஏழுலகு திருவாய் மொழியைப் போலவே
    என் செய்கேன் என்னுடைப் பேதை என் கோமளம் என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர்–என்றாள் பராங்குச ஜனனி
    இதில் -தாய் வாயில் சொற் கேளாள் தன்னாயத் தோள் அணையாள் -என்கிறாள் பர கால ஜனனி

    ——-

    சிலையிலங்கு திருமொழி–கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் திருவாய் மொழியைப் போலவே
    அதில் ஈசன் வந்தேறக் கொலோ –பாட்டுத்தோறும்
    இங்கு -கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ -பாட்டுத் தோறும்

    தெள்ளியீர் தேவர்க்கும் திருமொழியும் கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் திருவாய் மொழியைப் போலவே
    அதில் யானே யானே என்று எம்பெருமானுடைய தாதாத்ம்ய அநுஸந்தானம் பண்ணின படியைத் திருத்தாயார் அருளிச் செய்த படியே
    இதில் -வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று பேசினாள் -என்று தத் தாதாத்ம்ய அநுஸந்தானம் பண்ணின படியைத் திருத் தாயார் அருளிச் செய்கிறாள்

    —-

    மூவரில் முன் முதல்வன் திரு மொழியும் -மண்ணை இருந்து துழாவி திருவாய் மொழியும்
    அதில் பிரான் கிடக்கும் கடல் என்னும்
    இதில் முழங்கார் கடலுள் கிடந்தது
    அதில் எல்லா வுலகு கண்ணன் படைப்பு என்னும்
    இதில் பூவலருமுந்தி தன்னுள் புவனம் படைத்து -என்றும் மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னை –

    புள்ளுருவாகி நள்ளிருள் திருவாய் மொழியிலும் -பட்டுடுக்கும் -திரு நெடும் தாண்டக பதிகத்திலும் பராங்குச ஜனனியின் பேச்சுக்களின் பிரபஞ்ச ப்ரணாளிகள் உய்த்து உணரத் தக்கது
    திரு விருத்தத்தில் -அருளார் திருச்சக்கரத்தால் -என்னும் தாய்ப் பாசுரத்தில் -ஈங்கோர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ -என்ற வார்த்தையே
    புள்ளுருவாகியில் ஒன்பது பழமொழிகளால் விஸ்தரிக்கப்பட்டு அருளிச் செய்கிறார்

    பட்டுடுக்கும் பாசுரத்தில்
    மட்டுவிக்கி மணி வண்டு முரலும் கூந்தல் என்று பர கால நாயகி -வர்ணிக்கப் படுகிறாள்
    நாம ஏகதேச க்ரஹண நியாயத்தாலே மணி வண்டு திருநாமம் ப்ரஸித்தம் ஆகிறது-
    பெரிய திருமொழி-அம்பரமும் பெரு நிலமும் என்று தொடங்கும் திருநறையூர் பதிகத்தில் -6-6-
    வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு -என்று மணி வண்டானது முந்துற செண்பகப் பூவை அநுபவித்து விட்டுப் பிறகு மகிழ மலரிலேயே படுகாடு கிடப்பதாகச் சொல்லப் படுகிறது
    யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதஸ் வகுலா மோத வாஸிதம் –யதிராஜ ஸப்ததி -என்றபடி திருவாய் மொழி அனுபவத்திலேயே ஊன்றி இருப்பதைக் குறித்த படி
    இவர் கடைக்குட்டி ஆழ்வாராகையாலே மற்றைய ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் அனுபவங்களில் -செண்பகத்தின் வாஸம் உண்டு -என்று முதலில் குறிப்பிட்டு பின்பு வகுளத்தின் மலர் மேல் வைகு -என்று திருவாய் மொழி அனுபத்திலேயே கால க்ஷேபம் செய்தமையைச் சொன்னவாறு
    இங்கு மணி வண்டு -என்று தம்மையே அருளிச் செய்து கொள்கிறார்
    இத்தை முன்னமே உணர்ந்து அறிந்த நம்மாழ்வார் திரு விருத்தத்தில்
    வண்டுகளோ வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண் பூ உண்டு களித்து உழல்வீர்க்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய் மண் துகளாடி வைகுந்த மன்னாள் குழல் வாய் விரை போல் விண்டுகன் வாரும் மலருளவோ நும்மியல் இடத்தே -என்று
    வண்டுகளோ வம்மின் என்று திருமங்கை ஆழ்வாரையே விளித்து
    நீர் உகந்து அருளின திருப்பதிகள் தோறும் உழல்கின்றீரே -திருவாய் மொழி போல் பரம போக்யமான பிரபந்தம் கடல் சூழ்ந்த மண்ணுலகம் எங்கேனும் கண்டதுண்டோ -என்ற வினாவுக்கு இவர் விடை இறுத்து அருளுகிறார் —
    ஸ்வாமிந் கண்டதில்லை-ஆனது பற்றியே வகுளத்தின் மலர் மேலே தானே வைகிக் கிடக்கிறேன் -என்று
    இதுவரை திருத்தாயார் பதிகங்களில் விசேஷப் பொருத்தங்களை அனுபவித்ததோம்

    ————–

    மேல் விசேஷப் பொருத்தங்களைப் பார்ப்போம்

    1-தைத்ரிய யஜுர் ப்ராஹ்மண்யத்தில் –கிருத்திகா ப்ரதமம் விசாகே உத்தமம் -என்று இவருடைய திருவவதார திரு நக்ஷத்ரங்களும் விசேஷித்து ஒதப்பட்டுள்ளது
    2-பாஹ்ய குத்ருஷ்டிகளின் செருக்கை அடக்கும் திறமையினால் பரகாலன் என்றும் பராங்குசன் என்றும் திரு நாமங்கள்
    3-அடியார்களை உகப்பிக்கும் திறமையினால் -இன்ப மாரி
    என்றும் அருள் மாரி என்றும் திருநாமங்கள்
    வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே -4-5-10-
    அங்கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்ட முக்கி அடையார் சீயம் -3-4-10
    ஆனந்த வர்ஷுகர்- -இன்ப மாரி
    கருணா வர்ஷுகர்–அருள் மாரி
    4-தன்னொப்பார் இல் அப்பன் -6-3-9-என்ற மங்களா ஸாஸனத்துக்கு ஏற்ப-ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா என்னப்பா -8–1-2-என்று அதற்குச் சேமக் காப்பு சாற்றி அருளினார்
    5-திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே -என்னும் -4-4-8-என்று பகவத் பக்தர்களான அரசர்களை மதித்து அருளிச் செய்ததை அடியொற்றியே
    தென்னன் தொண்டையர் கோன் -மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீண் முடிமாலை வயிர மேகன் -பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய் பல வேந்தர் வணங்கு கழற் பல்லவன்-துளங்கு நீண் முடி அரசர் தங்குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவன் செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில் —
    இருக்கிலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட திருக்குலத்து வளச் சோழன்
    என்று இப்படி பகவத் பக்தரான சில சக்ரவர்திகளைச் சிறப்பித்து அருளிச் செய்கிறார்
    6-கண்ணபிரான் திருவாய்ப்படியில்
    படலடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் களவு காணப் புகும் இடத்தில்
    தன்னிறத்தின் இருட்சியாலும் அவ்விடத்தின் இருட்சியாலும் வெண்ணெய் இருக்கும் இடம் தெரியாமல் தடவா நிற்கையில் யாதிருச்சிகமாகக் கையிலே வெண்ணெய்த் தாழி தட்டின உவப்பினாலே பல்லைத் திறந்து சிரிக்க நேரும் -பூர்ண சந்த்ரனுடைய கிரணம் போலே திரு முத்துக்களின் ஒளி புறப்பட -அந்த ஒளியைக் கை விளக்காகக் கொண்டு வெண்ணெயை வாரி விழுங்குவான்
    நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து வேயகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆனாயர் தாயவனே –3-8-3-
    உறி யார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானே -2-10-6-
    7-தீர்ப்பாரை யாமினி -7-6- தேவதாந்தர கட்டுவிச்சி
    சிறிய திருமடலிலும் திரு நெடும் தாண்டகத்திலும் -பகவத் ப்ரவணை
    8-முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூங்குழல் குறிய கலையோ வரையில்லை நாவோ குழறும் –திருவிருத்தம்
    முள் எயிறு ஏந்தில கூழை முடி கொடா தெள்ளியள் என்பதோர் தேசிலள் என் செய்கேன்
    9-பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை போல் இவரும்
    நண்ணாத வாள் அவுணரிலும் கண் சோர வெங்குருதியிலும் ததீய மஹாத்ம்யம்
    10-ஊரெல்லாம் துஞ்சியிலே தனிமைக்கு வருந்தியது போல் இவரும்
    தந்தை காலில் விலங்கற -திருக் கண்ணபுர பதிகத்தில் வருந்துகிறார்

    11-ஒரு நாயகம் -பதிகம் ஐஸ்வர்யம் அல்பம் அஸ்திரம்
    பாண்டேன் வண்டறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே மாண்டார் என்று வந்தார் அந்தோ -6-2-5- சுருக்கமாக அருளிச் செய்கிறார்
    12-குரவை ஆய்ச்சியாரோடு -கிருஷ்ணாவதாரம் விரித்த பதிகம் போல் இவரும்
    மானமுடைத்து உங்கள் ஆயர் குலம் -திருமொழியில் அருளிச் செய்கிறார்
    13-இன்னுயிர் சேவலில் -என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவுகிலீர் -என்று இன்னாப்புடன் அருளிச் செய்தது
    இவரும் திருத்தாய் செம்போத்திலே வெறுப்பின்றியே அநு நயமாக அருளிச் செய்கிறார்
    14-மின்னிடை மடவார் ஊடல் ரஸம்
    காதில் கடிப்பிட்டில் அதே ரஸம்
    15-உண்ணிலாய ஐவரில் இந்திரியங்களுக்கு ஆற்ற உண்ணாமல் ஓலமிட்டபடியே திருவுக்கும் திருவாகிய திருமொழி
    16-ஆழி எழ -திருவாய் மொழி போல் பல அவதான அனுபவ ரஸம் ஏழை ஏதலனிலும்
    17- கடியன் கொடியன் நெடியமால் –ஆகிலும் கொடிய என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -என்Kkruthamக்ருத தாஸ்யம் இன்றிக்கே ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யத்தை
    வேம்பின் புழு வேம்பு அன்றி யுண்ணாது அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்று நயவேன் -என்று அருளிச் செய்கிறார்
    18-சூட்டு நன் மாலைகள் –பாசுரத்தில் -கண்ணன் வெண்ணெய் தொடு உண்பதற்க்காகவே-திருவாய்ப்பாடியில் திருவாவதரித்தான் என்று அருளிச் செய்தது போல்
    இவரும்-கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற வானாயன் -என்று அருளிச் செய்கிறார்
    19- எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -என்று ஒருகால் சொல்லித் தரைப்பட்டார்
    இவரோ அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டு இருந்தவனே -என்று ஒருகால் சொன்னால் போலே ஒன்பதின் கால் சொல்லித் தரைப்படுகிறார்
    20- பக்தாம்ருதம் –நெஞ்சுக்கு இருள் கடி தீபம் -இரண்டு தனியன் களிலும் அமைந்த ஐந்து விசேஷணங்களும் தேனிலும் இனியவை
    சீரார் சடகோபன் செந் தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெறவும்
    பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த
    மறை யாயிரம் அனைத்தும் தங்கு மனம் பெறவும்
    இராமானுச முனியை வணங்கி வேண்டுதல் ஒக்கும்

    சதுர் முக சமாக்கயாபி சடகோப முனவ் ஸ்திதா -ஸ்வ வாஸா மாத்ரு துஹித்ரு ஸஹி வாஸா ச வர்ணநாத்
    தாஸத்வ தேஹத்வ சேஷத்வங்கள் போலவே ஸ்த்ரீத்வமும் ஸ்வா பாவிகமே -இயற்கையே -வந்தேறி அல்ல
    பதி பத்நி பாவ சம்பந்தம் -ப்ரணவத்தில் உகாரத்தாலே அவதாரண அர்த்த்தாலே அவனுக்கே ஆட்ப்படும் அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லிற்று –
    கண்டார் இகழ் வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள்-போல் இருக்க வேண்டும் அன்றோ
    பின்னை கொல் நில மா மகள் கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள் -6-5-10- தோழி பாசுரம்
    பெரிய திருமொழியில்-காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை ஒப்பாள் -திருத்தாயார் பாசுரம்
    மாறன் இங்கே நாயகனைத் தேடி மலங்கியதும் பத்தி வளம் –

    ————————————————————————

    மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில்
    அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது ..

    ஆக -சீஷாயாம் வர்ண சிஷா பத சமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தஸ்
    சந்தச் சிதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யோதிஷம் ரெங்கநாத ,கல்ப அனுஷ்டான
    முக்தம் ஹ்யுசித கமிதயோர் நியாய மீமாம்ச யோஸ் ஸ்யாத் அர்த்த வ்யக்தி
    புராண ஸ்ம்ருதிஷூ ததனுகாஸ் த்வாம் விசின் வந்தி வேதா -ஸ்ரீ ரெங்கராஜ உத்தர ஸ்தவம்-18- –என்கிற படியே –
    (சிஷை -வேத அங்கங்களில் எழுத்துக்களை உச்சரிக்கும் முறையும்
    வியாகாரணத்தாலும் நிருத்தத்தாலும் பதங்களின் அறிவும்
    சந்தஸ் -என்னும் வேத அங்கத்தில் காயத்ரி போன்ற சந்தஸ்ஸுக்களின் இலக்கணமும்
    ஜ்யோதிஷத்தால் கர்மங்கள் செய்ய வேண்டிய காலமும்
    கல்ப சங்கத்தால் கர்ம அனுஷ்டானங்களையும்
    தர்க்க சாஸ்திரம் மீமாம்சைகளாலும் தெளிவான பொருள்களும்
    புராணங்களாலும் ஸ்ம்ருதிகளாலும் கருத்துக் பொருள்களையும் சொல்லப்படுகின்றன
    இந்த வேத அங்கங்களோடே வேதங்கள் தேவரீரைத் தேடுகின்றன -என்றவாறு )
    அவை அந்த வேத சதுஷ்டயத்துக்கும் உபகார அங்கங்களாய் இருக்குமா போலே
    இவையும் கீழ் சொன்ன படியே இத வேத சதுஷ்டயத்துக்கும் உப அங்கங்களாய் இருக்கும் என்றது ஆய்த்து —

    ———————————–

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் மூலமும் தமிழ் அர்த்தமும் -மூன்றாம் பகுதி –113-148–

    August 19, 2024

    யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
    அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

    ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–

    அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
    நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I
     I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

    சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
    சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

    நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

    பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
    பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
    ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
    தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II
    –ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

    பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
    ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
    ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
    தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
    தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
    அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
    அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
    தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
    ஸ்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
    மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
    ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
    மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
    தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
    ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

    —————-

    113–நிமித்த உபாதாநஸ்து பேதம் வதந்த-வேத பாஹ்ய ஏவஸ்யு–
    ஜன்மாத்யஸ்ய யத–
    ப்ரக்ருதிஸ் ச ப்ரதிஞ்ஞா திருஷ்டாந்த அநு பரோத்யாத்–இத்யாதி
    வேதவித் ப்ரணீத ஸூத்ர விரோதாத்
    சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்
    ப்ரஹ்ம வநம் ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் ததோ த்யாவா ப்ருதிவீ நிஷ்டதஷு-
    ப்ரஹ்மத் யாத்ய திஷ்டத புவநாநி தாரயந்
    சர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத புருஷாததி
    ந தஸ்யேசே கஸ்ஸன் தஸ்ய நாம மஹாத்யச
    நேஹ நாநாஸ்தி கிஞ்சன
    ஸர்வஸ்ய வஸி ஸர்வஸ் யேசாந
    புருஷ ஏவேதம் சர்வம் யத் பூதம் யச்ச பவ்யம்
    உதாம்ருதத் வஸ்யே சாந
    நாந்யப் பந்தா அயநாய வித்யதே –இத்யாதி சர்வ ஸ்ருதி கண விரோதாஸ் ச —

    செய்வோன் செயப்படு பொருள் வேறுபட்டவை எனில் அக் கருத்து வேதத்திற்கும் புறம்பாகும் ஏன் என்றால் -எந்தப் பொருளின் நின்றும் -பரம புருஷனிடம் இருந்து படைப்பு இருப்பு அழிப்பு ஏற்படுகிறதோ -என்றும்
    செயப்படு பொருளும் செய்வோனும் ஆன காரணங்கள் அவனே-ஏன் எனில் முதல் கொண்ட கருத்துடன் மாறுபடாது இருக்க -என்றும்
    குழந்தாய் -ஸத் ஒன்றே முதலில் இருந்தது -மற்றை இரண்டாவது ஏதும் இல்லை என்றும் –
    ப்ரஹ்மமாகிற காட்டில் உள்ள ப்ரஹ்மம் ஆகிற மரத்தால் -இம் மாளிகை -ஆனது நான் மனப் பூர்வமாகச் சொல்லுகிறேன் -இதைப் போலவே ப்ரஹ்மமே உள் நுழைந்து -உயிர்களை ஆள்கிறான் -என்றும்
    காலம் மின்னொளி படைத்த ப்ரஹ்மத்தின் நின்றும்
    உண்டானது என்றும்
    புகழ் மிக்க அவன் யாராலும் ஏவப்படுவது இல்லை -அவனை நீங்கிய பொருள் ஏதும் இல்லாததால் பல பொருட்கள் என்பது இல்லை -என்றும்
    யாவற்றையும் தன் வசத்தில் வைத்திருப்பவன் -யாவற்றிற்கும் தலைவன் என்றும்
    இறந்தகால நிகழ் கால வருங்காலப் பொருyaanumயாவும் இந்தப் புருஷனே என்றும்
    அவனே மோக்ஷத்திற்கு -அம்ருதம் -காரணமாகிறான் -அவனை அறிய வேறு வழியில்லை-என்றும் சொல்லப்பட்டு இருக்கின்றன –

    —————–

    114–இதிஹாச புராணே ஷு ச ஸ்ருஷ்ட்டி ப்ரலய பிரகரணயோர் இத மேவ பர தத்வம் இத்யவகம்யதே-
    யதா மஹா பாரதே
    கேந ஸ்ருஷ்டம் இதம் சர்வம் ஜகத் ஸ்தாவர ஜங்கமம்-பிரலயே ச கமப்யேதி தந்மே ப்ருஹி பிதா மஹ-இதி ப்ருஷ்டா
    நாராயணோ ஜெகன் மூர்த்தி அநந்தாத்மா சநாதன –இத்யாதி ச வதந்
    ருஷய பிதரோ தேவா மஹா பூதாநி தாதவ ஜங்கமாங் ஜங்கமம் சேதம் ஜெகன் நாராயண உத்பவம் -இதி ச

    இதிஹாஸ புராணங்களிலும்
    படைப்பு அழிப்பு செய்பவருக்கு ஒப்பற்ற உயர் நிலை இவ்வாறே நிரூபிக்கப்பட்டு இருக்கிறது
    பாரதத்தில்
    யுதிஷ்ட்ர பீஷ்ம ஸம்வாதத்தில்-எவரால் இவ்வுலகின் நிற்பனவும் நகர்வனவும் படைக்கப்பட்டன -பேர் அழிவில் யாரிடம் ஒடுங்குகின்றன என்பதை எங்களுக்குச் சொல்ல வேண்டும் –
    நாராயணனே உலகை உடலாக உடையவன் -எண்ணற்ற இப் பொருள்களுக்கு ஆத்மா யாராலும் படைக்கப் படாதவன் –
    ரிஷிகள் பித்ருக்கள் தேவர்கள் பஞ்ச பூதங்கள் தாதுக்கள் நிற்பன திரிவன யாவும் நாராயணன் இடமிருந்தே உண்டாயின -என்று சொல்லப் படுகிறது –

    ப்ராஸ்ய -உதீஸ்ய -தஷிணாத்ய–பாஸ்சாத்ய சர்வ சிஷ்டை -சர்வ தர்ம -சர்வ தத்வ -வ்யவஸ்தாயாம் –
    இதமேவ பர்யாப்தம்–இதயவிகீத பரிக்ருஹீதம்-ஸ்ரீ வைஷ்ணவம் ச புராணம்
    ஜெந்மாத் யஸ்ய யத -இதி ஜகத் ஜென்மாதி காரணம் ப்ரஹ்மேத் யவகம் யதே –
    தது ஜென்மாதி காரணம் கிமதி ப்ரஸ்ன பூர்வகம் -விஷ்ணோ சாகாசாதுத் பூதம் -இத்யாதிநா
    ப்ரஹ்ம ஸ்வரூப விசேஷ ப்ரதிபாதந ஏக பரதயா ப்ரவ்ருத்தம் இதி சர்வ சம்மதம் ததாததத்ரைவ
    ப்ரக்ருதிர்யா மயாக்யாதா வ்யக்தா வ்யக்த ஸ்வரூபிணீ
    புருஷஸ் சாப்யுபாவேதவ லீயதே பரமாத்மநி
    பரமாத்மா ச ஸர்வேஷாம் ஆதார பரமேஸ்வர
    விஷ்ணு நாமாச வேதேஷு வேதாந்ததேஷு ஸகீயதே -இதி
    -( என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் தலைக் கட்டி அருளுகிறார் )

    சர்வ வேத வேதாந்ததேஷு சர்வைஸ் சப்தைஸ் பரம காரண தயா அயமேவ கீயதே இத்யர்த்த –

    கிழக்கு வடக்கு தெற்கு மேற்கிலுள்ள சான்றோர்கள் யாவரும் நன்னெறிகளை தத்வங்கள் இவற்றை நிலை நாட்டுகையில் உயர்ந்த மஹான்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்
    பிறப்பிக்கக் காரணமானது எது என்று ஆராய்கையில் உலகின் காரணம் ப்ரஹ்மமே என்று நிறுவி அதுவே போதுமான காரணம் என்று கொள்ளப் பட்டது –
    இவ் வுலகிற்குக் காரணம் எது என்ற கேள்விக்கு விடையிறுக்கும் முகமாக விஷ்ணுவிடமிருந்தே யாவும் உண்டாயின என்று ப்ரஹ்ம ஸ்வரூபத்தை அறுதியிட்டுக் காட்டவே இப் புராணம் தோன்றியது என்பது எல்லாராலும் ஏற்கப்பட்ட ஓன்று
    அவ்வாறே அதைத் தலைக் கட்டுகையில்
    மைத்ரேயா வெளிப்படை உள்ளுறையாயுள்ள எந்த மூலப்பிரக்ருதி என்னால் விளக்கப் பட்டதோ அதுவும் புருஷனும் பரமாத்மாவில் ஒடுங்குகின்றன
    ஒப்பு மிக்கும் அற்ற பரமாத்மாவே எல்லாவற்றையும் தாங்குபவராகவும் ஏவுகின்றவனாகவும் இருக்கிறார் அவரே விஷ்ணு என்று வேத வேதாந்தங்களில் விளக்கப்பட்டு இருக்கிறது

    இதனால் எல்லா வேதாந்தங்களிலும் உள்ள சொற்களின் படி அவனே காரணமாகிறான் என்பது பொருள்-
    யதா சர்வ ஸூஸ்ருதி ஷு கேவல பர ப்ரஹ்ம ஸ்வரூப விசேஷ ப்ரதிபாதநாயைவ ப்ரவ்ருத்தோ நாராயணானுவாக

    ததா இதம் வைஷ்ணவஞ்ச புராணம்
    ஸோஹம் இச்சாமி தர்மஞ்ஞ ஸ்ரோதும் த்வத்தோ யதா ஜகத் பபூவ பூயாஸ் ச யதா மஹா பாக பவிஷ்யஸி
    யந் மாயம் ச ஜகத் ப்ரஹ்மந் யதைஸ் சைத சராசரம் லீநமா ஸீத் யதா யத்ர லயமேஷ்யதி யத்ரச–
    இதி பர ப்ரஹ்ம கிமிதி பிரக்ரமய
    விஷ்ணோ சகாசாதுத் பூதம் ஜதத் தத்ரைவை ச ஸ்திதம் ஸ்திதி சம்ய மகர்த்தாஸை ஜகதோஸ்ய ஜகச் சச

    இவ்வாறே வேதங்கள் அனைத்திலும் பர ப்ரஹ்ம மெய்நிலையை சிறப்பாக நிறுவ வந்த நாராயண அநுவாகத்திலும் விளக்கப் பட்டு இருக்கிறது -ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் -தர்மம் அறிந்தவரே -உலகு முதலில் எவ்வாறு இருந்தது -எவ்வாறு இருக்கப் போகிறது-எதனால் நிறைந்து இருக்கிறது -எவரிடம் இருந்து தோன்றிற்று -எங்கு எவ்விதம் ஒடுங்கி இருந்தது -இனி எவ்விதம் ஒடுங்கும் -என்பதை அந்தணரே உம்மிடமிருந்து அறிய விரும்புகிறேன் -என்று மைத்ரேயரை வினவினார்பர ப்ரஹ்மம் என்பது யார் -எவ்விதம் இருப்பார் -என்ற இந்த வினாக்களுக்கு -விஷ்ணுவிடமிருந்தே உண்டாயிற்று -அவரிடமே லயித்து இருந்தது -அவராலேயே நிறைந்து இருக்கிறது -ஆக்கி அளித்து அழிப்பபவன் விஷ்ணுவே –
    பர பரணாம் பரம பரமாத்மாத்ம ஆத்ம ஸம்ஸ்தித
    ரூப வர்ணாதி நிர்தேச விசேஷண- விவர்ஜித
    அபஷய விநாசாப்யாம் பரிணாமர்த்தி ஜென்மபி வர்ஜித்த சக்யதே வக்தும் ய சதாஸ் தீதி கேவலம்
    சர்வதராசவ் சமஸ்தம் ச வசத்யத்ரேதி வையத ததஸ் ச வாஸூ தேவேதி வித்வத்பி பரிபட்யதே
    தத் ப்ரஹ்ம பரம் நித்யம் அஜம் அஷயம் அவ்யயம் ஏக ஸ்வரூபம் ச சதா ஹேய அபாவாச் ச நிர்மலம்
    ததேவ சர்வமே வைதத் வ்யக்த அவ்யக்த ஸ்வரூபவத் ததா புருஷ ரூபேண கால ரூபேண ச ஸ்திதம்-

    மேலானவர்களுக்கு எல்லாம் மேலானவனான அவனே தனக்கும் மற்றை யோர்க்கும் ஆத்மாவாய் இருப்பவன் -உருவம் நிறம் இவற்றால் சுட்டிக் காட்ட முடியாமல் இருப்பவன் -தேய்வு அழிவு மாறுபாடு வளர்ச்சி பிறப்பு அற்றவன் எப்பொழுதும் இருப்பவன் என்று மட்டுமே சொல்லத் தக்கவன்எல்லாவற்றிலும் இவன் வசிக்கிறான் -இவனிடம் யாவும் வசிக்கின்றன -இதனால் அவன் வாஸூ தேவன் என்று ஞானிகளால் சொல்லப் படுகிறான் -அவனே ப்ரஹ்மம் -மேலானவன் -என்றும் இருப்பவன் -பிறப்பு அழிவு மாறுதல் அற்றவன் -ஒருபடிப்பட்டவன் -எப்பொழுதும் எல்லாத் தீக் குணங்களில் நின்றும் விடுபட்டு மாசற்றவன் -அவனே இந்த கட் புலனாகும் -புலனாகாத பொருள்களாய் இருப்பவன் -அவ்வாறே மெய் நிலை ஆன்ம நிலையிலும் காலம் எனும் நிலையிலும் நிலைத்து இருப்பவன் –
    ச சர்வ பூத ப்ரக்ருதிம் விகாராந் குணாதி தோஷாஞ்ச முநே வ்யதீத
    அதீத சர்வா வரணோ அகிலாத்மா தேநா ஆஸ்ருதம் யத் புவநாந்த ராலே
    ஸமஸ்த கல்யாண குணாத்ம கோசவ் ஸ்வ சக்தி லேசோ த்ருதா பூத வர்க
    இச்சா க்ருஹீதாபி மதோரு தேஹ சம்சாதிதா சேஷ ஜகத்தி தோசவ்

    தேஜோ பல ஐஸ்வர்யா மஹா வபோத ஸ்வ வீர்ய சக்த்யாதி குணைக ராசி
    பர பரானாம் சகலா ந யத்ர க்லேசாதயஸ் சந்தி பராவரேசே
    ச ஈஸ்வரோ வ்யஷ்டி சமஷ்டி ரூப வ்யக்த ஸ்வரூப பராவரேசே
    ச ஈஸ்வரோ வ்யஷ்டி சமஷ்டி ரூப பிரகட ஸ்வரூப சர்வேஸ்வர சர்வ த்ருக் சர்வ வேத்தா ஸமஸ்த சக்தி பரமேஸ்வராக்ய
    சம்ஞாயதே யேந ததஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
    சந்த்ருச்யதே வாப்யதி கம்யதே வாதது ஞானம் அஞ்ஞானம் அதோ அந்ய துக்தம்
    இதி பர ப்ரஹ்ம ஸ்வரூப விசேஷ நிர்ணயாயைவ ப்ரவ்ருத்தம் –
    அக்யாநி சர்வ புராணாநி அந்ய பராணி ஏதத் அவிரோதேந நேயாநி அந்ய பரத்வஞ்ச தத் தத்
    ஆரம்ப பிரகாரை அவகம்யதே சர்வாத்மநா விருத்தாம் ச தாம சத்வாத் அநா தரணீய –

    அவன் உயிர்கள் யாவற்றிற்கும் மூல காரணம் -மூல பிரகிருதியின் த்ரிபான குணங்களைக் கடந்தவன்-அவன் நிலையு உலகிற்கு ஆத்மாவாகிறான் -அவனாலேயே உலகின் பொருள் கள் யாவும் நிறைக்கப் பட்டு இருக்கின்றன –
    அவன் -இந்தப் பரமாத்மா -எல்லா நற் குணங்களையும் இயற்கையாகவே உடையவன் -தனது ஆற்றலின் soruசிறு பகுதியாலேயே உலகைப் படைக்கிறான் -தன் விருப்பப்படியே பல உடல்களை எடுக்கிறான் -உலகிற்கு எப்பொழுதும் நன்மையே செய்பவன் -தேஜஸ் முதலான குணங்களின் குவை -மேலோர் யாவர்க்கும் மேலோன் -அவனிடம் துக்கம் முதலானவை இல்லை

    அந்த ஈசன் காரண காரியமாகவும் பொருள்கள் யாவற்றின் தன்மையையும் -அவற்றின் திறன்களையும் உடையவனாகவும் விளங்கும் பரமேஸ்வரன் ஆகிறான் –
    எந்த அறிவினால் தூய்மை எல்லா வற்றிற்கும் மேம்பட்ட தன்மை -அப்பழுக்கு இன்மை -ஒருபடிப்பட்டு இருத்தல் -ஆகியவை ஒருங்கே பொருந்திய ப்ரஹ்மம் அறியப் படுகிறதோ -அதுவே மெய் ஞானம் -அந்த அறிவினால் பர ப்ரஹ்மம் கட் புலனாகும் பொருட்கள் போல் மனக் கண்ணால் நேராகக் கண்டு அனுபவிக்கப் படுகிறது -மற்றைய அறிவுகள் யாவும் அஞ்ஞானம் எனப்படுகிறது –

    ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் பர ப்ரஹ்மம் இயல்புகளை நன்கு அறுதி யிடுவதற்காகவே இவ்வாறு கூறப்பட்டது
    மற்றைய புராணங்களில் ப்ரஹ்ம நிலையை கூறுமிடத்தும் இவ்வாறே பொருள் கொள்ள வேண்டும்
    அவைகளில் மாறுபாடான பொருள் கிடைக்குமானால் அப் புராணங்கள் பர ப்ரஹ்மத்தை விளக்க வந்தவை யல்ல எனவாகும் –
    இக் கருத்து அவற்றின் துவக்கத்திலேயே நன்கு தெரியும் -இக் கருத்துக்கு முற்றிலும் விரோதமான கருத்தை உடையவை தாமஸ புராணங்கள் என்று தள்ளத் தக்கவையாகும் –

    ————————-

    115–நந்வஸ்மிந்நபி
    ஸ்ருஷ்ட்டி ஸ்தித் யந்த கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் ச சக் ஞாம்யாதி பகவான் ஏக ஏவ ஜநார்த்தந-
    இதி த்ரி மூர்த்தி சாம்யம் பிரதீயதே நைததேவம்
    ஏக ஏவ ஜனார்த்தன -இதி ஜனார்த்தனஸ் யைவ ப்ரஹ்ம சிவாதி க்ருத்ஸ்ன ப்ரபஞ்சதாத்ம்யம் விதீயதே-
    ஜகஸ் ச ச இதி பூர்வ உக்தமேவ விவ்ருணோதி -ஸ்ரஷ்டா ஸ்ருஜதி சாத்மாநம் விஷ்ணு பால்யம் ச பாதிச
    உப ஸ்ம்ஹ் ரியதே சாந்தே ஸம்ஹர்த்தா ச ஸ்வயம் பிரபு
    இதி ஸ்ருஷ்டத்வேந அவஸ்த்திதம் ப்ரஹ்மாணம் ஸ்ருஜ்யம்ச ஸம்ஹர்த்தாராம்–சம்ஹார்யம் ச யுகபந் நிர்திஸ்ய –
    ஸர்வஸ்ய விஷ்ணு தாதாம்ய உபதேசாத்-ஸ்ருஜ்ய ஸம்ஹார்ய பூதாத் வஸ்துந ஸ்ருஷ்ட்ட சம்ஹத்ரோ ஜனார்த்தன
    விபூதி த்வேந விசேஷோ த்ருச்யதே -ஜனார்த்தன விஷ்ணு சப்தயோ பர்யாயத்வேந-
    ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் -இதி விபூதி மத ஏவ ஸ்வ இச்சையா லீலார்த்த விபூதி யந்திர பாவ உச்யதே –

    மும் மூர்த்திகளும் சமம் என்பதற்கு விடை
    இதே புராணத்திலும் அந்த பகவான் ஆக்கல் அளித்தல் அழித்தல் ஆகியவற்றைச் செய்யும் பிரமன் திருமால் சிவன் என்று பெயர்களை அடைகிறான் -என்று கூறப்பட்டு இருந்தாலும் -அவர்கள் யாவரும் ஒருவரேயான ஜனார்த்தனனே -என்று மும் மூர்த்திகள் ஸமத்வம் தோன்றும்படி கூறி இருந்தாலும் அது சரியல்ல -ஜனார்த்தனன் ஒருவனே யாகிறான் -என்று பிரமன் சிவன் ஆகிய உலகுக்கும் -அவனுடைய உடல் -ஜனார்த்தனன் ஆத்மாவாய் இருத்தல் விதிக்கப் படுகிறது –
    உலகு முதல் யாவும் அவனே என்பது முன்பே விளக்கப் பட்டு இருக்கிறது –

    படைத்தல் படைப்பு காத்தல் காக்கப் படுவது -அழித்தல் அழிக்கப் படுவது ஆகியவை அவற்றிற்கு ஆத்மாவாய் இருக்கும் விஷ்ணுவினாலேயே ஆகிறது –

    இதனால் படைப்பு தொழில் செய்யும் பிரமனும் அவன் படைப்பும் அழிப்பவன் அழிக்கப் படுவது யாகிய யாவும் விஷ்ணு ஆத்மாவாய் விளங்குவதாலேயே நடக்கிறது –
    படைக்கப்படும் அழிக்கப்படும் பொருட்கள் அவனுடைய செல்வமாக உடையோன் -பொருள் உடைமையாக ஜனார்த்தனனுடைய சிறப்பு அமைகிறது –
    ஜனார்தனன் என்பது விஷ்ணுவையே ஒரு பொருள் பன்மொழியாகக் காட்டும் விஷ்ணுர் நாராயண கிருஷ்ண வைகுண்ட ஜனார்த்தன -அமர கோசம்
    பிரமன் விஷ்ணு சிவன் இவர்களுக்கு ஆத்மாவாகி இவர்களைத் தன் ஏவலுக்கு உட்பட்ட செல்வமாய் தன் விருப்பப் படியான விளையாட்டிற்கு உறுப்புகளாக்கி தான் மகிழ்கிறான் –

    பிருதிவி ஆபஸ் ததா தேஜஸ் வாயுர் ஆகாச ஏவ ச -சர்வ இந்திரிய அந்தக்கரணம் புருஷாக்யம் ஹி யஜ் ஜகத்
    ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வரூபோ யதோவ்யய
    சர்க்யதேதம் அநந்தரம் ஏவ உச்யதே
    கா தினம் ததோஸ்யைவ பூதஸ்தம் உபகாரகம்
    ச ஏவ ஸ்ருஜ்ய ச ச சர்க்ககர்த்தா ச ஏவ பாத்யத்தி சபால்யதேச
    ப்ரஹ்மத்யவஸ்தா ப்ரசேஷ மூர்த்தி விஷ்ணு வரிஷ்டோ வரதோ வரேண்ய இதி —

    இது பின் வருமாறு விளக்கப் படுகிறது
    நிலம் நீர் ஒளி வளி வெளி புலன்கள் மனம் ஜீவாத்மாவுடன் கூடிய உலகு யாவும் அவனே –
    அவனே எல்லா உயிர்களிலும் உடல் களிலும் இருக்கிறான்-உலகையே உடலாகக் கொண்டு இருப்பினும் மாறுபாடு அற்றவன் -அனைத்து உயிர்களையும் ஆக்கி அளித்து அழித்தல் யாவும் அவன் செயலே
    அவனே படைப்பவன் படைப்பு காப்பவன் காக்கப்படும் பொருள் அழிப்பவன் அழிக்கப் படுவது பிரமன் முதலான பல உருக்களைக் கொண்டு -விளங்குபவன்
    உயர்ந்தோனானான வரம் அளிப்பவன் விஷ்ணுவே –

    அத்ர சாமாநாதி காரண்ய நிரதிஷ்ட ஹேய மிஸ்ர பிரபஞ்ச தாதத்ம்யம் நிரவத்யஸ்ய நிர்விகாரஸ்ய
    ஸமஸ்த கல்யாண குணாகாரஸ்ய-ப்ரஹ்மண கதம் உபபத்யதே ? இத்யா சங்க்யா-
    ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வரூபோ யத அவ்யயய –இதி ஸ்வயமேவ உபபாதயதி–
    ச ஏவ -ஸர்வேச்வரேச்வர -பர ப்ரஹ்ம பூத விஷ்ணுரேவ சர்வம் ஜகத் -இதி ப்ரதிஞ்ஞாய –

    சர்வ பூதாத்மா விஸ்வரூபோ யதோவ்யய –
    இதி ஹேது ருக்த–சர்வ பூதாநாம் அயமாத்மா விஷ்வா சரீரோ -யதோவ்யய -இத்யர்த்த
    வஷ்யதிச–தத் சர்வம் வை ஹரேஸ் தநு -இதி –

    இவ்வாறு -குறையுள்ள ப்ரபஞ்சத்திற்கும் குறையற்ற அவனுக்கும் பொருத்தம் -ஸாமா நாதி கரண்யத்தால் சுட்டிக் காட்டப்பட்ட ப்ரபஞ்சத்துடன் ஒருபடிப்பட்டு இருப்பது மாறுதல் இல்லாத நிறை குறையற்ற குற்றமற்ற நற் குணக் கடலான ப்ரஹ்மத்திற்கு எவ்வாறு பொருந்தும் என்று ஐயுறின் -இவற்றின் ஆத்மாவாக இவன் விளங்குவதால் விகாரம் அடைவதில்லை என்று தானே விளக்குகிறார்ஸர்வ -ஸர்வேஸ்வரனான பர ப்ரஹ்மமான விஷ்ணுவே உலகு முழுதுமாகிறான் என்று தேற்ற ஏகாரத்தால் அறுதிப்படுகிறதுஸர்வ பூத —–அவ்யய என்று காரணம் கூறினார்எல்லாவற்றிற்கும் இவன் ஆத்மாவாய் இருந்து உலகைத் தன் உடலாகக் கொண்டு இருக்கிறான்அதனால் உடல் உலகு மாறுபட்டாலும் அவன் மாறுதல் இல்லாதவன்உலகுகள் யாவும் ஹரிக்கு உடல் என்றும் சொல்லப்பட்டது
    ஏதத் யுக்தம் பவதி –
    அஸ்ய அவ்யயஸ் யாபி பரஸ்ய ப்ரஹ்மண விஷ்ணோ விஸ்வசரீரதயா தாத்ம்யம விருத்தம் இதி –
    ஆத்ம சரீரயோஸ் ச ஸ்வபாவா வ்யவஸ்திதா ஏவ —

    ஏவம் பூதஸ்ய-சர்வேஸ்வரஸ்ய விஷ்ணோ பிரபந்த அந்தர் பூத நியாம்ய கோடி நிவிஷ்ட ப்ரஹ்மாதி தேவ திர்யக் மனுஷ்யே
    தத் தத் ஸமாச்ரயணீயத்வாய ஸ்வ இச்சாவதார பூர்வ யுக்த –
    ததே தத் ப்ரஹ்மாதிநாம் பாவநாந்தரய அந்வயேந கர்ம வஸ்யத்வம்
    பகவத பர ப்ரஹ்ம பூதஸ்ய வாஸூ தேவஸ்ய நிகில ஜகத் உபகாராய ஸ்வ இச்சையா ஸ்வேநைவ ரூபேண
    தேவாதி ஷு அவதார இதி ச ஸ்பஷ்டாம்சே ஸூபாஸ்ரய பிரகரேண ஸூ வ்யக்தம் யுக்தம்
    அஸ்ய தேவாதி ரூபேண அவதாரேஷ் வபி நப்ரா க்ருதோ தேஹ இதி மஹா பாரதே –
    ந பூத சங்க சமஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மந-இதி ப்ரதிபாதிதே –
    ஸ்ருதிஸ் ச
    அஜாயமாநோ பஹுதா விஜாயதே தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் -இதி
    கர்மா வஸ்யாநாம் ப்ரஹ்மாதீனம் நிஸ்ஸதாம் அபி தத் தத் கர்ம அநு குண ப்ரக்ருதி பரிணாம ரூப பூத சங்க சமஸ்தான
    விசேஷ தேவாதி சரீர பிரவேச ரூபம் ஜென்ம அவர்ஜநீயம்
    அயம் து சர்வேஸ்வர ஸத்யஸங்கல்ப பகவான் ஏவம் பூத ஸூயேதர ஜென்ம அகுர் வன்னபி ஸ்வ இச்சையா
    ஸ்வநைவ நிரதிசய கல்யாண குண ரூபேண தேவாதி ஷு ஜகத் உபகாராய பஹுதா ஜாயதே –
    தஸ்யை தஸ்ய ஸூவ இதர ஜென்ம பஹுதா யோநிம் பஹுவி ஜென்ம தீரா தீமதாம் அக்ரேஸரா ஜா நந்தி இத்யர்த்த –

    அவன் உயிராய் விளங்குவதால் அவனை உடலின் மாறுபாடுகள் ஒட்டுவதில்லை -இதனால் ப்ரஹ்மத்திற்கும் உயிர்கள் உடல்களும் உள்ள உயிர் உடல் தொடர்பு விளக்கப் பட்டதாகிறது
    விகாரம் இல்லாதவனாயினும் ஸர்வேஸ்வரன் விஷ்ணு யாவற்றுடனும் உயிர் உடல் தொடர்பு கொண்டு இருப்பதால் பொருட்கள் யாவையும் அவனாகக் கொள்ளுதல் குற்றமன்று
    இப்படிப்பட்ட விஷ்ணுவிற்கு ப்ரபஞ்சத்துடன் சேர்ந்த ஏவப்படும் குழுவில் உள்ள பிரமன் தேவன் விலங்கு மனிதன் போன்றோர் தன்னை வந்து பற்றும் படி தன் விருப்பால் அவதரிக்கிறான் என்பது முன்பே விளக்கப் பட்டுள்ளது
    இது பிரமன் முதலானோர் கர்ம வசப்பட்டு இருத்தல் வாஸூதேவன் உலகில் நன்மை பொருட்டு தன்னிச்சையால் அவதரித்தல் என்பதால் ஸ்ரீ விஸ்ணு புராணத்தில் 6 அம்சத்தில் கபாஸ்ரய ப்ரகரணத்தில் விளக்கிச் சொல்லப்பட்டுளளது
    இவன் தேவன் முதலான உருவெடுத்தாலும் அவன் உலகின் தொடர்பு இன்மையால் மாறுதல் இல்லாதவன் ஆகிறான் –
    பாரதத்தில் இந்த பரமாத்மாவின் உடல் 24 தத்வங்களால் ஆனதல்ல -என்று கூறப்பட்டுள்ளது
    மறைகளிலும் பிறப்பற்ற இவன் சிறப்பாக அவதரிக்கிறான் -அவனுடைய பிறப்பை ஞானிகளின் தலைவர்கள் அறிகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது
    பிரமன் முதலியோர் வினையடியாக தங்கள் விருப்பம் இன்றியே உலகிற்கேற்ற ஏற்ற உடல் மாறுபாடுகளுடன் பிறப்பிக்கப் படுகின்றனர்
    தேவர் முதலான பிறப்புகளில் பிறப்பதை இவர்கள் தடுக்க இயலாதவர்கள் -இவ்வாறு தாழ்ந்த பிறப்புகளை அடையாத -மெய்யான வினைத்திட்பமுடைய ஸர்வேthamathuதனது விருப்பப்படியே தானாகவே எல்லையற்ற நற் குணங்களுடம்பி உலகில் நன்மையின் பொருட்டு பலபடியாகப் பிறக்கிறான்
    அவனுடைய இப் பிறப்புகளை ஞானிகளின் தலைவர்களாய் இருப்பவர்கள் மட்டுமே அறிகிறார்கள் என்பது பொருள் –

    ——————–

    116–ததே தந் நிகில ஜெகன் நிமித்த உபாதான பூதாத்
    ஜந்மாத் யஸ்ய யத–1-1-2-
    ப்ரக்ருதிஸ் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநு பராதாத்-1-4-7–இத்யாதி ஸூத்ரை
    ப்ரதிபாதி தாத் பரஸ்மாத் ப்ரஹ்மண பரம புருஷாத் அந் யஸ்ய கஸ்யசித் பரத்வம்
    பரமதஸ் சேதூந்மாந சம்பந்த பேத வ்யபதேசேப்ய-3-2-30–
    இத்யா சங்க்யா –
    (பர ப்ரஹ்மம் அணை-இரு கரைகளை இணைப்பதால் அளவு பட்டது -இரண்டு கரைகளிலும் வேறுபட்டது
    வேறு ஓன்று உண்டு என்ற சங்கை போக்க )
    சாமாந் யாத் து
    புத்யர்த்த பாதவாத
    ஸ்தான விசேஷாத் ப்ரகாசாதிவத்
    உப பத்தேஸ் ச
    ததாந்ய பிரதிபேதாத்
    அநேந சர்வ கதத்வ மாயாம சப்தாதிப் ய
    இதி ஸூத்ரகார ஸ்வயமேவ நிராகரோதி–

    உலகுகள் யாவற்றிற்கும் அவனே பொருள் காரணமாகவும் -செய்வோனாகவும் இருப்பவன் என்பது
    உலகின் ஆக்கல் அளித்தல் அழித்தல் ஆகிய செய்பவனே செய்பவனே ப்ரஹ்மம் என்று ப்ரஹ்மத்துக்கு லக்ஷணம் கூறி -1-1–2-
    அவனே பொருள் காரணமாகவும் ஆகிறான் என்பது கொள்கையாலும் எடுத்துக் காட்டாலும் விளங்குகிறது என 1-4-7- –132–தெளிவாக விளங்குவதால் அவனுக்கு மேம்பட ஒரு பொருள் இல்லை -என நிறுவுகிறார்

    இக் கருத்துக்கு மாறுபாடாக- பரம் பொருள் ஒரு அணை-இரு கரைகளை இணைப்பதால் அளவுபட்டது -அவ்விரு கரைகளில் நின்றும் வேறுபட்டது வேறு ஓன்று உண்டு –3-2-30- — 344என எழுந்த ஐயத்தை
    1- இவ்வணை இரு புறங்களிலும் உள்ள பொருட்கள் கலந்து விடாமல் காக்கிறது -3-2-30—345
    2-ப்ரஹ்மம் -அளவு பட்டதாகத் தோன்றுவது -அது தன்னைத் த்யாநிப்போருக்கு எளிதாக இருப்பதற்காக –
    சொல் முதலியவற்றை ப்ரஹ்மத்திற்கு கால்கள் என உவமித்து இருப்பது போலே –3-2-31–346
    3- அளவற்ற ப்ரஹ்மம் -பொருளோடு தொடர்பு கொள்ளும் போது அளவுடையது போல் காணப்படுகிறது
    எடுத்துக் காட்டாக -சாளரத்துடன் தொடர்பு கொள்ளும் ஸூர்ய வெளிச்சம் போல் -பானைக்குள் காணப்படும் வெளி போல் -3-2-32-347
    4-எல்லாம் வல்ல பரம் பொருள் தன்னை அடையத் தானே வழியாய் இருத்தலும் பொருத்தமே –3-2-33–348
    5- அதை ஒழிந்த வேறு பொருள் இல்லை –3-2-34–349
    6- இந்தப் ப்ரஹ்மத்தாலேயே உலகுகள் யாவும் நீக்கமற நிறைக்கப் பட்டுள்ளன
    என்று எல்லாம் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் பண்பு கூறப்படுவதால்
    மேற் சொன்ன கருத்துக்கள் மாற்றுக் கருத்துக்களை நீக்குகின்றன என ஸூத்ரம் அருளிச் செய்த வியாசரும் தானே அறுதியிட்டுள்ளார்

    ——————–

    117–மாந வேச சாஸ்த்ரே
    பிராதுரா ஸீத்தமோநுத
    சிச்ருஷு விவிதா பிரஜா
    அப ஏவ ச சர்ஜாதவ் தாஸூ வீர்யமபா ஸ்ருஜத்
    தஸ்மிந் ஜஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா –இதி ப்ரஹ்மணோ ஜென்ம ஸ்ரவணாத்
    ஸ்ரேத்த ஞாத்வமேவ அவகம்யதே ததா ச ஸ்ருஷ்டு -பரம புருஷஸ்ய தத் விஸ்ருஷ்டஸ்ய ச ப்ரஹ்மண-
    அயநப் தஸ்யதா பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருதி
    தத் விஸ்ருஷ்ட ச புருஷ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே-இதி நாம நிர்தேசஸ்
    ஸ–மனு ஸ்ம்ருதி –ஸ்லோகங்கள் -6-/11-

    ததா வைஷ்ணவே புராணே
    ஹிரண்ய கர்ப்பாதீநாம் பாவநாத்ரய அந்வயாத் அ ஸூத்தத்வேந ஸூபாஸ்ரயத்வா
    நஹர்த்வோப பாதநாத் ஷேத்ரஞ்ஞத்வம் நிஸ்ஸீயதே –

    மநு ஸ்ம்ருதியிலும் -ஸ்லோகங்கள் 6-11-
    ப்ரக்ருதியை ஏவுகிறவராக ஸ்வயம்புவானவர் ப்ரகாசித்தார் -பலபடியான உயிர்களைப் படைக்க விரும்பினார்
    நீர் முதலான தத்வங்களைப் படைத்து அவற்றில் உயர்களைச் சேர்த்தார் –
    தானே ப்ரம்மாவைப் படைத்தார் என்று பிரமனின் படைப்பு சொல்லப்படுகிறது
    அந்த சரீரம் என்ற ஜலத்தைப் படைத்து அதில் வசித்தலால் நாராயணன் என நினைக்கப் படுகிறார் -அவரால் படைக்கப் பட்ட அந்த ஆத்மா உலகில் ப்ரம்மா என்ற பெயருடன் நிலவுகிறது -என்ற பெயரும் நுட்பப்படுவதை விவரிக்கிறது

    அவ்வாறே ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்
    ஹிரண்ய கர்ப்பன் -ப்ரம்மா -போன்றவர்கள் முக்குணச் சேர்க்கை உடையவர்களாய் கூறப்பட்டு இருத்தலால் அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிறார்கள்
    ஆகவே அவர்கள் பரிசுத்த ஆத்ம நிலையினர் அல்லர்
    பரிசுத்த ஆன்ம நிலையே தியானத்திற்கு பற்றுக்கோடு ஸூ பாஸ்ரயம் -ஆகிறது -அவர்களும் ஜீவாத்மாக்களே ஆகிறார்கள் –

    —————-

    118–யதபி கைஸ்சித் யுக்தம்
    ஸர்வஸ்ய சப்த ஜாதஸ்ய வித்யர்த்தவாத மந்த்ர ரூபஸ்ய கார்யாபிதா யித்வேநைவ ப்ராமாண்யம் வர்ணனீயம்
    வ்யவஹாராதந் யத்ர சப்தஸ்ய போதகத்வ சக்த்ய வதாரணா சம்பவாத் வ்யவஹாரஸ்ய ச கார்ய புத்தி மூலத்வாத்
    கார்ய ரூப ஏவ சப்தார்த்த அத நபரி நிஷப்ந்நே வஸ்துநி சப்த பிரமாணம் இதி –

    (விதி அர்த்த வாதம் மந்த்ரம் -இவை தேர்ந்த மற்ற ஸ்ருதி வாக்கியங்கள் பிரமாணம் இல்லை என்று
    மீமாம்சகர் -கொள்கையை சொல்லி அடுத்து சித்தாந்தம் –)

    சிலர் கொள்கைப்படி -எல்லா சொற் கூட்டங்களும் -விதி -அர்த்தவாதம் -மந்த்ரம் -என்று ஒரு செயலில் ஈடுபடுத்துவதால் மட்டுமே பொருள் உள்ளவையாய் கொள்ளப்படுகின்றன –
    இவ்வாறு நடைமுறையில் செயலில் ஈடுபடுத்தப்படாத சொற்களுக்குப் பொருள் காட்டும் தன்மை ஏற்படுவதற்கு இல்லை –
    நடைமுறையில் செயலைச் செய்யும் அறிவு -அதனால் விளையும் செயல் -இவற்றின் வழியாகவே சொற்களின் பொருள் கிடைக்கும் -இவ்வாறு காட்டப்பட்ட பொருள்களைத் தவிர்த்த uமற்றவை அறுதி இட்டனவாகக் பிரமாணமாகக் -கொள்ள முடியாது
    ஆகையால் இவ்வாறு செயலில் ஈடுபடுத்த முடியாத ப்ரஹ்மத்தை வேதாந்த சொற்கள் காட்டாது
    அவ்வாறன்றி -சுட்டிக் கட்டப்பட்டு -அல்லது இடுகுறிச் சொற்களால் அறியப்படும் பொருட்கள் -ஸித்த வஸ்துக்கள் -முன்பே அறியப்பட்டவை -அல்லது செயலால் அறியும் தேவை அற்றவை –

    ————

    119—அத்ரோச்யதே
    ப்ரவர்த்தக வாக்ய வ்யவஹாராதேவ சப்தாநாம் அர்த்த போதகத்வ சக்த்யவதாரணம் கர்த்தவ்யம் இதி கிம் இதம் ராஜாஞ்ஞா ?
    சித்த வஸ்துஷு சப்தஸ்ய போதகத்வ சக்தி கிரஹணம் அத்யந்த ஸூகரம்
    ததாஹி
    கேந சித் ஹஸ்த சேஷ்டாதிநா -அபவர்கே தண்ட ஸ்திதா –இதி தேவ தத்தாயா ஞாபயேதி ப்ரேஹித
    கஸ்சித் தது ஞாபநே ப்ரவ்ருத்த -அபவர்கே தண்ட ஸ்திதா-இதி சப்தம் ப்ரயுங்க்தே-மூகவத் ஹஸ்த சேஷ்டா மிமாம்
    ஜாநந் பார்ஸ்வஸ்யோந்ய ப்ரக வ்யுத்பன்னோபி ஏதஸ்யார்த்தஸ்ய போதநாய அபவர்கே தாண்ட ஸ்தித –
    இத்யஸ்ய சப்தஸ்ய பிரயோக தர்சநாத் -அஸ்ய அர்த்தஸ்ய அயம் சப்தோ போதக -இதி ஜாநாதி –
    இதி கிம் அத்ர துஷ்கரம்–

    ஸித்தாந்தம்
    இது இவ்விதம் பதில் அளிக்கப் படுகிறது –
    நடப்பு உரையாடல் மூலமாக மட்டுமே சொற்கள் அனைத்தும் பொருள் உள்ளவைகளாக ஆகின்றன என்பது ஏதாவது அரசு கட்டளையா -ஸித்த வஸ்துக்களை சுட்டிக் காட்டி அறியப்படுதல் மிக இலகுவானது
    அவ்வாறே ஒருவன் வாய் பேசாது கை செய்கையாலேயே வீட்டு மூலையில் தடி வைக்கப்பட்டுள்ளது-என்று கூற
    அவனும் அதை நன்கு புரிந்து கொண்டு தன்னை அனுப்பிய தேவதத்தனிடம் -வீட்டு மூலையில் தடி வைக்கப்பட்டுள்ளது என்று கூறி விளங்க வைத்தல் வழக்கில் இருக்கின்றது
    அவ்வாறே ஊமையும் கைச்சாடையினால் விளங்க வைப்பது போல் ஒருவன் சைகையால் சொல்ல வந்த பொருளை முன்பு அதை அறியாத இரண்டாமவன் புரிந்து கொள்ள முடிகிறது
    அவன் அவ்வாறு அறிவதில் என்ன கெடுதல் ஏற்படுகிறது

    ———————

    120–ததா பால –
    ததோ யம் -அயம் அம்பா -அயம் மாதுல-அயம் மனுஷ்ய -அயம் ம்ருக-சந்திரோதயம் -அயம் ச ஸூர்ய -இதி
    மாதா பித்ரு ப்ரப்ருதிபி சப்தை சரை அங்குல்யா நிர்த்தேசேந-தத்ர தத்ர பஹு ச -ஸிஷித-தைரேவ சப்தை –
    தேஷ் வரத்தேஷு-ஸ்வாத் மனஸ் ச யுத் பத்திம் த்ருஷ்ட்வா தேஷ் வரத்தேஷு தேஷாம் சப்தாநாம் –
    அங்குல்யா நிர்தேச பூர்வக பிரயோக சம்பந்தாந்த்ர பாவாத் சங்கேத யித்ரு புருஷா ஞாநாச்ச போதகத்வ நிபந்தன-
    இதி க்ரமேண நிஸ்ஸித்ய புநர் அபி அஸ்ய சப்தஸ்ய அயமர்த்த-இதி பூர்வ விருத்தை -ஸிஷித சர்வ சப்தாநாம் மர்த்தம்
    அவகம்ய ஸ்வம் அபி சர்வம் வாக்ய ஜாதம் ப்ரயுங்க்தே –
    ஏகமேவ சர்வ பதாநாம் ஸ்வார்த்த அபிதா யத்வம் ஸங்காத விசேஷானாம் ச யதா வஸ்தித சம்சர்க்க விசேஷ போதகத்வம்
    ச ஜாநாதி இதி -கார்யார்த்த ஏவ வ்யுத்பத்தி இத்யாதி நிர்பந்தோ நி நிர்பந்தந —
    அத
    பரி நிஷ்பன்னே வஸ்துநி சப்தஸ்ய போதகத்வ சக்த்ய வதாராநாத் சர்வானி வேதாந்த வாக்யானி
    சகல ஜகத் காரணம் சர்வ கல்யாண குணாகாரம் யுக்த லக்ஷணம் ப்ரஹ்ம போதயந்த்யேவ —

    இது போலவே குழந்தைகளுக்கும் -இது அம்மா -இவர் மாமா -இவர் மனிதர் -இது விலங்கு மான் -இது சந்திரன் இது ஸூர்யன் என்று
    தாய் தந்தையர் கையால் சுட்டிக்காட்டி பலவற்றை அறிவிக்கிறார்கள் -அவ்வாறு பயிற்றுவிக்கப் பட்ட அக் குழந்தை பிற் காலத்தில் இன்ன இன்ன சொற்களுக்கு இன்ன இன்ன பொருட்கள்Mikaமிக எளிதாக அறிந்து கொள்கின்றது
    இவ்வாறு அறிந்து கொள்வதற்கு ஒரு பொருள் அதைச் சுட்டும் சொல் -என்று சொல் பொருள் – தொடர்பின்றி வேறு ஏதும் காரணமாக முடியாது –
    சொல் அறிவிக்கும் இயல்புடையதாயும் பொருள் அறியப்படுதலையும் பெற்றுள்ளது
    இவ்வாறே அக் குழந்தை பல சொற்களை அறிந்து அவற்றைத் தானும் வழக்கில் உபயோகித்தல் என்பது உலகு எங்கும் காணப்படுகிறது
    இவ்வாறே சொற்கள் யாவும் தம் தம் பொருளைத் தொடர்புச் சிறப்பால் அறிவித்து -அவற்றின் கூட்டத்தால் வாக்கியங்களாக விரித்து ஒருவருடைய மனக் கிடக்கையை வெளிப்படுத்துகின்றன என்பதால் செயல் காட்டும் சொற் களால் மட்டுமே பொருள் அறியப்படுகிறது என்பது தவறு -இது கட்டாயமில்லை –
    ஆகவே எல்லா வேதாந்தங்களிலும் உள்ள ப்ரஹ்மத்தைக் குறிக்கும் சொற்கள் ப்ரஹ்மம் உலகின் காரணமாதலையும் குணங்கள் யாவற்றையும் பெற்று இருப்பதையுமே காட்டுகின்றன –

    ————————–

    121—அபி ச கார்யார்த்த ஏவ வ்யுத்பத்தி ரஸ்து வேதாந்த வாக்யாநி உபாஸநா விஷய கார்யாதி க்ருத விசேஷண பூத
    பலதவேந -துக்காசம் பிந்ந தேச விசேஷ ரூப ஸ்வர்க்காதி வத்ராத்ரி சத் ப்ரதிஷ்டாதி வத் அபகோரண சதயாதந
    ஸாத்ய சாதனா பாவவச்ச கார்ய உபயோகி தயைவ சர்வம் போதயந்தி

    ததாஹி
    ப்ரஹ்ம விதாப்நோதி பரம் -இத்யத்ர ப்ரஹ்ம உபாஸந விஷய கார்யாதி க்ருத விசேஷண பூத
    பலத்வேந ப்ரஹ்ம பிராப்தி ஸ்ரூயதே
    ப்ர பிராப்தி காமோ ப்ரஹ்ம வித்யாத் -இதி அத்ர ப்ராப்ய தயா ப்ரதீயமாநம் ப்ரஹ்ம ஸ்வரூபம் தத் விசேஷணம்
    ச சர்வம் கார்ய உபயோக்யதை வசித்தம் பவதி –தத் அந்தர் கதமேவ-ஜகத ஸ்ருஷ்டத்வம்- ஸம்ஹார்த்ருத்வம்–ஆதாரத்வம் –
    அந்தராத்மத்வம் -இத்யாதி யுக்தம் அனுக்தம் ச ஸர்வமிதிந கிஞ்சித் தநுப பந்நம் –

    மேலும் செயல் தொடர்புடைய பொருளை மட்டும் சொற்கள் அறிவுறுத்தும் எனில் -இங்கு ப்ரஹ்மம் என்னும் சொல் -இடையறாத் த்யானமாகிற செயலால் -மோக்ஷமாகிற நம் விருப்பத்தைக் கொடுக்கும் என்று நம்பி – அடையப்படும் இலக்கு என்பது வேதாந்த வாக்யங்களால் தெளிவாகிறது
    துக்கம் கலவாத நாடான ஸ்வர்க்கத்தை -ஜ்யோதிஷ்டோமம் செய்து -அடைவதற்கும் நிலை பெற்று இருப்பதற்கும் ராத்ரி சத்ரம் போன்ற யாகங்கள் செய்ய வேண்டும் –
    அந்தணரை பழித்தோர் நூறு பொற் காசு தண்டம் விதிக்கப்பட வேண்டும் -இல்லை எனில் நரகம் புக்க நேரும் -என்பன போன்ற நெறியும் இலக்கும் ஆகிய செயல் பயன்பாடு தெரிவது போல் இங்கும் காணப்படுவதால் இச் சொற்களும் பொருள் பொதிந்தவை யாகின்றன

    அவ்வாறே இடையறாது த்யானிப்பவன்பலம் -பரம் -அடைகிறான் என்று ப்ரஹ்ம உபாஸநம் -கேட்டல் -பார்த்தல் மனத்தில் நிலை இருத்தல் இடையறாது சிந்தித்தல் -இச்செயல்களில் ஈடுபடும் உபாசகரின் சிறப்பால் அதன் பயனாகிய ப்ரஹ்மத்தை அடைதல் ஏற்படுகிறது
    பலத்தில் விருப்பமுடையவன் ப்ரஹ்மத்தை இடையறாது தியானிக்கக் கடவன் என்று விதிக்கப்பட்டு இருக்கிறது
    இதனால் குணங்களோடு கூடிய ப்ரஹ்மம் மெய் நிலை ஒரு செயலுக்கு இலக்காக அமைந்து இருக்கின்றன
    மேலும் ப்ரஹ்மம் உலகுகளை ஆக்கி அளித்து அழித்து அவற்றைத் தாங்கி யாவற்றிலும் உயிராக உள் நுழைந்து இயக்குதல் போன்ற செயல்களும் செய்வதால் இது சிறிதளவும் தவறு என்று கொள்ள முடியாது –

    —————–

    122–ஏவம் ச சதி மந்த்ர அர்த்தவாத கதா ஹ்ய விருத்தா அபூர்வாஸ் ச சர்வே விதி சேஷ தயைவ சித்தா பவந்தி-
    யதோக்தம் -த்ரமிட பாஷ்யே–ருணம் ஹிவை ஜாயதே -இதி ஸ்ருதே -இத் யுபக்ரம்ய யத்யாப்யவதாந ஸ்துதி பரம் வாக்யம்
    ததாபி நாசதா ஸ்துதி ரூப பத்யதே இதி-
    ஏதத் யுக்தம் பவதி –
    சர்வோ ஹயர்த்த வாத பாக -தேவதாராதன பூத யாகாதே சாங்கஸ்ய ஆராத்ய தேவதாயாஸ் ச அதிருஷ்ட ரூபான்-குணாந் –
    சஹஸ்ரசோ வதந்-கர்மணி ப்ராசஸ்த்ய புத்திம் உத்பாதயதி தேஷாம ஸத்பாவே ப்ரஸாஸ்த்ய புத்திரேவ நஸ்யாத்-
    இதி கர்மணி ப்ரஸாஸ்த்ய புத்யர்த்த குண ஸத்பாவமேவ போதயதி இதி –
    அநயைவதிசா சர்வ மந்த்ரார்த்தவாத கதா ஹ்யார்த்தா சித்தா —

    (ச குண ப்ரஹ்மம் நிர் குண ப்ரஹ்மம் இரண்டு இல்லையே
    சத் வித்யையிலும் ச குண ப்ரஹ்மமே உபாசிக்கப்படுகிறான்
    இதுவே அபி யுக்தர் -வாக்யகாரர் –
    சங்கல்பாதி நிர் குண ப்ரஹ்மம் செய்ய முடியாதே)

    இவ்வாறு இருக்கையில் மந்த்ரம் அர்த்தவாதம் முதலானவை ஒன்றுக்கு ஓன்று முரண் இன்றி இலக்கை அடைவிக்கின்றன -விதி -இலக்கு
    இதற்கு ஏற்ப த்ரமிட பாஷ்யத்திலும் -தமிழர் உரையிலும் -குணம் ஹி வை ஜாயதே -என்று துவங்கி விளங்கும் மந்த்ரம் ஹோமத்திற்கான ஹவிஸ்ஸின் நின்றும் தமது பங்கைப் பிரித்து எடுத்துக் கொள்வதை ஸ்துதிக்கிறது ஸ்துதி என்பது உள்ளதைச் சொல்வது -இல்லாததைச் சொல்வது ஸ்துதி அல்ல –
    அர்த்த வாதப்பகுதிகள் யாவும் தேவதைகளை ஆராதிக்கும் முகமாய் -யாகம் போன்ற செயல்களில் அங்கமாக -ஆராதிக்கப்படும் தேவதைகளின் கட் புலனாகாத பண்புகளை ஆயிரக் கணக்கில் விவரிக்கின்றன –
    அதனால் அந்த யாகம் செய்வது சிறந்தது என்ற எண்ணம் தூண்டப் படுகிறது –
    இவ்வாறு அர்த்த வாதங்கள் இல்லை எனில் செயலின் சிறப்பு புலப்படாது -ஆகவே அவை உள்ள பண்புகளையே தெரிவிக்கின்றன
    அதே போல் எல்லா மந்திரங்களும் அவற்றின் பொருளும் முன்பே அறியப்பட்டவை ஆகின்றன -ஸித்த வாக்யம்
    ஆகவே அவை விதி வாக்யத்திற்குத் துணை செல்லும் –

    ———————–

    123–அபிச கார்ய வாக்யார்த்தவாதிபி
    கிமிதம் கார்யத்வம் நாம -இதி வக்த்தவ்யம்–க்ருதிபாவ பாவிதா க்ருத யுத்தேஸ்யதா ச இதி சேத்
    கிமிதம் க்ருத யுத்தேஸ்யத்வம் –
    யதகதி க்ருத்ய க்ருதி -வர்த்ததே தது க்ருத யுத்தேஸ்யத்வம் –
    இதி சேத் புருஷ வியாபார ரூபாயா க்ருதே கோயம் அதிகாரோ நாம ?
    யத் பிராப்தீச்சயா க்ருதிம் உத்பாதயதி புருஷ -தத் க்ருத யுத்தேஸ்யத்வம் இதி சேத் –
    ஹந்த-தரஹி இஷ்டத்வமேவ க்ருத யுத்தேஸ் யத்வம் –

    ஒரு செயலுக்கு இலக்காக இருப்பதே சொல்லின் பொருள் என்பீராயின் -செயல்படுதல் என்றால் என்ன -என்ற கேள்வி எழும்
    மனத்தில் ஏற்படும் எண்ணம் -அதனடியான முயற்சி -அதன் விளைவான வெளிப்பாடு செயல் என்று பதில் வரும் –
    ஒரு பயனைக் கருதி செயல்படுவது செயல் எனில் கருதிச் செயல்படுவது என்பது யாது -என்ற கேள்வியும் எழும் –
    ஒரு இலக்கை அடைவதற்கு என்னால் செய்யப்படத் தக்கது என்று எது செயல் படுத்தப் படுகிறதோ அது என்பீராயின் அதைச் செய்யத் தகுதி உள்ளோர் யார் -என்ற கேள்வியும் எழும் -அதற்கு விடை
    (எண்ணமுடையோன் என்பதால் அசேதனப் பொருள்களுக்கு எண்ணம் கருத்து ஏற்பட வழியில்லை )
    இச்செயல் என் விருப்பத்தை நிறைவேற்றும் என்று எண்ணமுடைய மனிதனே ஆவான் -அதாவது -ஒன்றை அடைவதில் விருப்பமுடைய மனிதனே அதற்குத் தகுதியுள்ளவன் என ஆகிறது
    அவனது விருப்பமே செயலுக்குப் பலன் என்பதே தீர்ந்த முடிவு -அந்தோ இதை -விருப்பமானதை அடையச் செய்யும் முயற்சியே செயல் -எனச் சொல்லி இருக்கலாமே
    இது அவனுடைய விருப்பம் என்பதைத் தவிர வேறு ஆகாது

    ————–

    124–அதைவம் மனுபே-இஷ்டஸ்யைவ ரூப த்வய -மஸ்தி –இச்சா விஷய தயாஸ்திதி -புருஷப் பிரேரகத்வம் ச –
    தத்ர பிரேரகத்வார க்ருத யுத்தேஸ் யத்வம் இதி -சோயம் ஸ்வ பஷாபி நிவேச காரிதோ வ்ருதாஸ்ரம-
    ததாஹி -இச்சா விஷய தயா ப்ரதீதஸ்ய ஸ்வ ப்ரயத்ந உத்பத்தி மாந்தரேண அசித்தி -பிரேரகத்வம் தாத்தா ஏவ ப்ரவ்ருத்தே –
    இச்சாயம் ஜாதாயாம் -இஷ்டஸ்ய ஸ்வ ப்ரயத்ந உத்பத்தி மந்தரேண அசித்தி -பிரதீயதே சேத் –
    தத சிகீர்ஷா ஜாயதே தத ப்ரவர்த்ததே புருஷ -இதி தத்வ விதாம் ப்ரக்ரியா தஸ்மாத் இஷ்டய க்ருத்யதீநாத்
    மலாபத் வாதிரேகி க்ருத யுத்தேஸ் யத்வம் நாம கிமபி ந த்ருச்யதே –

    விருப்பம் என்பது இரண்டு நிலைகளில் இருக்கிறது -பலனில் விருப்பமும்
    அதற்கான செயலில் ஊக்கமும்
    இதில் பலனில் விருப்பம் முதன்மையானது -அதுவே செயலில் ஊக்கம் அளிக்கிறது
    ஆகவே செயல் பாடு என்பது தன் விருப்பத்தினால் அடையக் கூடியது
    மாறாக செயலில் ஊக்கமே முதன்மை யானது என்று கொள்வீராகில் அது நீங்கள் உங்களுடைய கொள்கையின் பால் கொண்ட பிடிப்பால் மட்டுமே கொள்ள முடியும் –
    அவ்வாறாயின் விரும்புவதின் இச்சையின் இலக்காகத் தோன்றுவதை விருப்பத்தை நம் முயற்சி இன்றி அடைய முடியாது -அதனால் தான் நம் விருப்பங்களை அடைய செயல் புரிகிறோம்
    விரும்புவதில் இருந்து பிறந்த விருப்பத்தை தன் முயற்சியால் அடையமுடியும் என்பது தவறு என்றால் -உலகில் முயற்சியால் விருப்பமும் அதனடியான செயல்பாடும் உள்ளதை மெய்யறிவுடையோர் யாவரும் நன்கு உணர்ந்து இருக்கின்றனர்
    அதனால் ஆத்ம லாபத்திற்காக மற்ற ஒன்றைக் கருதாத -உபாஸனம் முதலான -செயல்கள் என்பது எவ்வாறு காணப்படாமல் இருக்கும் –

    ————

    125–அதோஸ்யதே–இஷ்டாதா ஹேதுஸ் ச புருஷ அநு கூலதா -தத் புருஷ அநு கூலத்வம் க்ருத யுத்தேஸ்யத் -வமிதி —
    நைவம் -புருஷ அநு கூலம் -ஸூகம்-இத் யநரத்த அந்தரம் ததா புருஷ பிரதி கூலம் துக்க பர்யாயம் –
    அத ஸூக வ்யதிரிக்தஸ்ய கஸ்யாபி புருஷ அநு கூலத்வம் ந சம்பவதி –
    நநு ச துக்க நிவ்ருத்தேர் அபி ஸூக வ்யதிரிக்தாயா-புருஷ அநு கூலதா த்ரஷ்டா ?
    நைதத் -ஆத்ம அநு கூலம் ஸூகம் -ஆத்ம பிரதி கூலம் துக்கம் -இதி ஹி ஸூக துக்கயோ-விவேக –
    தத்ர ஆத்ம அனுகூலம் ஸூகம் -இஷ்டம் பவதி -தத் பிரதி கூலம் துக்கம் ச அனிஷ்டம் –
    அத துக்க சம்யோகஸ்ய அஸஹ்யதாய தந் நிவ்ருத்திர் அபி இஷ்டாபவதி -தத ஏவ இஷ்ட தா சாமியாத் அநு கூலதாப்ரம –
    ததாஹி -ப்ரக்ருதி ஸம்ஸ்ருஷ்டஸ்ய ஸம்ஸாரின புருஷஸ்ய அநு கூல சம்யோக பிரதி கூல சம்யோக ஸ்வரூபேணா வஸ்திதி –
    இதி திஸ்ர அவஸ்தா தத் பிரதி கூல சம்பந்த நிவ்ருத்தி அநு கூல சம்பந்த நிவ்ருத்தி ஸ்வரூபேண அவஸ்த்திதி ரேவ–
    தஸ்மாத் -பிரதி கூல சம்யோகே வர்த்தமாநே தந் நிவ்ருத்தி ரூபா ஸ்வரூபேண அவஸ்திதிரபி இஷ்டா பவதி –
    தத்ர இஷ்டதாசாம்ய அநுகூலதா ப்ரம-அத ஸூக ஸ்வரூபத்வ அநு கூல தயா நியோகஸ்ய
    அநு கூல தாம் வதந்தம் பிரமாணிகா பரிஹஸந்தி-

    ஒரு பொருள் தனக்கு விருப்பமாய் இருப்பதற்குக் காரணம் -அது தனக்கு அநுகூலமாய் இருப்பது -அதுவே விருப்பமான செயலுக்கும் காரணமாகிறது –
    அதாவது தனக்கு எது நன்மை அளிக்கிறதோ அது சுகம் என்று கூறத் தடை யில்லை -எது நன்மை அளிக்க வில்லையோ அது துக்கம் -சுகத்தின் நின்றும் வேறுபட்ட யாவும் ஒருவனுக்கு அநுகூலமாக இருக்க முடியாது –
    மாறாக துக்கம் கழிதல் என்பது சுகத்தின் நின்றும் வேறுபட்டதாயினும் நன்மை அளிப்பதாகக் காணப் படுகிறதே எனில் தனக்கு நன்மை அளிப்பது சுகமாகவும் விருப்பமாகவும் இருக்கிறது -மாறாக தீமையை அளிப்பது துக்கமாகவும் விருப்பம் அற்றதாகவும் இருக்கிறது –
    பிந்தையது விருப்பத்திற்கு மாறானது -ஆகையால் அது கழிதல் சுகம் போல் தோன்றுவதால் விருப்பமாகிறது –
    அதனாலேயே துக்கம் ஏற்பட்ட பிறகு அது தங்க முடியாமல் இருத்தலால் அது கழிதல் நன்மை அளிப்பதாகிறது
    அவ்வாறே உலகின் தொடர்பால் பிறவியில் கட்டுண்டவர்களுக்கு சுகம் துக்கம் இரண்டுமற்ற நிலை என மூன்று நிலைகள் உண்டு -இதில் மூன்றாவது நிலையில் ஆத்மா தன்னிலையால் விளங்குகிறது -அதனால் தீமை அளிக்கும் தொடர்பால் துக்கமும் -அது கழிந்தால் தன் இயல்பான நிலைக்குத் திரும்புகிறது -அதனால் தீமை அளிக்கும் தொடர்பு கழிதல் ஆத்மாவின் இயல்பான நிலைக்கு விருப்பமாகிறது –

    ————–

    126–இஷ்டஸ்ய அர்த்த விசேஷஸ்ய நிர்வர்த்தக தயைவ ஹி நியோகஸ்ய நியோகத்தவம் –
    ஸ்திரத்வம் அபூர்வத்வம்ச பிரதீயதே
    ஸ்வர்க்க காமோ யஜதே இத்யத்ர கார்யஸ்ய க்ரியாதிரிக்த்தா ஸ்வர்க்க காம பத சமாபி வ்யாஹாரேண
    ஸ்வர்க்க சாதநத்வ நிஸ்ஸயாதேவ பவதி –

    விருப்பம் என்னும் சொல் அதன் பொருள் சிறப்பால் -விரும்புவோனை -ஒரு செயலில் ஈடுபடுத்தி -ஒரு செயலில் ஈடுபடுத்துவது நியோகத்தவம் -செயலில் விருப்பம் ஏற்படுத்துதல் –
    அது நிறைவு பெற்றவுடன் அதினின்றும் நீங்கி விருப்பத்தைக் கொடுப்பதால் அந்த செயலில் விருப்பம் ஏற்படுகிறது -அதனால் அபூர்வமும் விளைகிறது
    யாகம் செய்வோர் நோக்கம் ஸ்வர்க்கமே ஒழிய அபூர்வமில்லையே
    இசைவித்து அடியேனை உனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் அன்றோ

    ———————-

    127—ந ச வாஸ்யம் -யஜேத-இத்யத்ர பிரதமம்-நியோக -ஸ்வ பிரதான தயைவ பிரதீயதே ஸ்வர்க்க காம பத சமபி வ்யாஹாராத்
    ஸ்வ ஸித்தயே ஸ்வர்க்க சித்த யனுகூல தாச்சி நியோகஸ்ய இதி யஜேத-இதிஹி -தாதவர்த்தஸ்ய புருஷ பிரயத்தன சாத்யதா பிரதீயதே ?
    ஸ்வர்க்க காம பத சமபி வ்யாஹாராதேவ தாத்வர்த்தாதிரேகினோ நியோகத்வம்-ஸ்திரத்வம் -அபூர்வத்வம்-ச இத்யாதி அவகம்யதே –
    தச்ச ஸ்வர்க்க சாதனத்வ ப்ரதீதி நிபந்தம் -சமாபி வ்யாஹ்ருத ஸ்வர்க்க காம பதார்த்த அந்வய யோக்யம்
    ஸ்வர்க்க சாதனமேவ கார்யம் லிங்காதயோபி தததீ இதிஹி லோக வ்யுத்பத்திரபி திரஸ் க்ருதா —
    ஏதத் யுக்தம் பவதி –
    சமபி வ்யாஹ்ருத -பதாந்தர வாஸ்ய அன்வய யோக்யமேவ இதரபத ப்ரதிபாத்யம் இதி அன்விதாபிதாயி பத ஸங்காத ரூப
    வாக்ய ஸ்ரவண சமந்தரமேவ பிரதீயதே தச்ச ஸ்வர்க்க சாதன ரூபம் அத க்ரியாவத் அநன்யார்த்த தாபி விரோதாதேவ பரித்யக்தா இதி
    அத -கங்காயாம் கோஷ-இத்யாதவ் கோஷ பிரதிவாஸ யோக்யார்த்த உபஸ்தான -பரத்வம் கங்கா பதஸ்ய ஆஸ் ரீயதே-
    பிரதமம் கங்கா பதேந கங்கார்த்த ஸ்ம்ருத இதி -கங்கா பதார்த்தஸ்ய உபேயத்வம் ந வாக்யார்த்த அந் வயீ பவதி –
    ஏவமாத்ராபி -யஜேத-இத்யேதா வந் மாத்ர ஸ்ரவனே கார்யம் அநன்யார்த்த ஸ்ம்ருதமிதி வாக்யார்த்த அன்வய ஸமயே
    கார்யஸ்ய அன்யார்த்ததா நாவாதிஷ்டதே-
    கார்யாபிதாயி பத ஸ்ரவண வேலாயாம் பிரதமமம் கார்யம் அநன்யார்த்த ப்ரதீதம் இத்யேததபி ந சங்கச்சதே வ்யுத்பத்தி காலே
    கவா நயநாதி க்ரியாயா துக்க ரூபாயா இஷ்ட விசேஷ சாதன தயைவ கார்யதா ப்ரதீதே–

    ஸ்வர்க்கத்தை விரும்புபவன் யாகத்தைச் செய்யட்டும் என விதிக்கிறது -இதில் முக்கியமான செயல்பாடு யாகம் செய்தல் -நோக்கம் ஸ்வர்க்கம் அடைதல் -ஆனால் செயல்பாடான யாகம் செய்தல் அது முடிந்தவுடன் முடிந்து விடுகிறது -ஆனால் செய்தவன் இறந்த பிறகு தான் அவனுடைய ஸ்வர்க்கம் கிட்டும் -இந்த இடைப்பட்ட காலத்தில் அதைப் பெற்றுத் தரக் காரணமாக இருப்பது -அபூர்வம் என்ற கட் புலனாகாத ஓன்று -இது யாகம் செய்தவனின் நோக்கம் அன்று -எனினும் தானே விளைகிறது -உண்மையில் ஸ்வர்க்கத்தைப் பெற்றுத் தருவதற்குத் தானே சக்தியற்ற யாகமாகிற செயலில் ஈடுபடுத்துகிறது -விதியுடன் சேர்த்தப் பார்க்கையில் அபூர்வம் முக்யமானதன்று -ஆயினும் அதுவே ஸ்வர்க்கத்தைப் பெற்றுத் தருகிறது –
    உதாரணமாக -கங்கையில் இடைச்சேரி என்ற சொல் தொடருக்கு கங்கையின் நீர்ப் பெருக்கைத் தவிர்த்து அதன் கரை என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பதே முறை –
    இதே போல் யாகம் செய்க -என்பது ஸ்வர்க்கத்தை அடைவிப்பதை நேரடியாகக் காட்டும் செயல் என்று கொள்ள முடியாது -அதனால் மட்டும் யாகம் ஸ்வர்க்கம் என்ற சொற்கள் பொருளுடையவையாக ஆகின்றன எனக் கொள்ள முடியாது -ஆனால் ஸ்வர்க்கத்தில் விருப்பமுடையவன் என்ற விருப்பத்தை நிறைவேற்ற அது வழி என்று ஏற்படுகிறது
    அதனால் ஒருவன் செய்ய வேண்டிய காரியத்தையும் அதன் தொடர்புடைய பலனையும் சேர்த்தே தான் உணருகிறான்
    அதனால் செயல் இலக்கை அடையும் வழி மட்டுமே ஆகுமே யன்றி செயல் புரிவதே நோக்கமாகாது
    ஒரு செயலைக் குறிக்கும் வாக்யங்களைக் கேட்டவுடன் செயலை மட்டும் வேறு எதையும் எதிர்பாராது அறிகிறான் என்பது கொள்ளத் தக்கதில்லை
    மேலும் அவ்வாக்கியத்தின் பொருளை அறிகையில் பசு முதலியவற்றைக் கொண்டு வருதல் முதலான செயல்கள் மெய் வருந்திச் செய்ய வேண்டி இருப்பதால் அச் செயல் பாட்டின் முகமாய் ஏதோ ஒரு விருப்பம் நிறைவேறும் செயல் நடை பெறும் என்பதே அறியக் கிடக்கிறது –

    —————-

    128–அத நியோகஸ்ய புருஷ அநு கூலத்வம் சர்வ லோக விருத்தம் -நியோகஸ்ய ஸூக ரூப புருஷ அநு கூலதாம் வதத –
    ஸ்வ அநுபவ விரோதஸ் ச கரீர்யா வ்ருஷ்டி காமோ யஜேதா –இத்யாதி ஷு சித்தேபி நியோக வ்ருஷ்டியாதி சித்தி நிமித்தஸ்ய
    வ்ருஷ்டி வ்யதிரேகேன நியோகஸ்ய அநு கூலதா நாநு பூயதே யத்யபி அஸ்மின் ஜென்மநி வ்ருஷ்ட்யாதி சித்தேர நியம –
    ததாபி அநியமா தேவ நியோக சித்தி அவஸ்ய ஆஸ்ரயணீயா தஸ்மிந் அநு கூலதா பர்யாய ஸூக அநு பூதி ந வித்யதே –
    ஏவம் உக்தரித்யா க்ருதி சாத்யேஷ்டத்வாதிரேகி க்ருத யுத்தேஸ் யத்வம் ந த்ருஸ்யதே–

    பிறகு யாகத்தின் காரணமாய் ஏற்படும் கார்யமான அபூர்வம் செய்தவனுக்கு உறு துணையாகவும் ஸூகமாகவும் இருக்கிறது என்பது உலகு இயற்க்கைக்கு ஒவ்வாது -அவ்வாறு அந்த ஸூகத்தைத் துய்த்தவர் யாருமில்லை -மழை வேண்டுவோர் காரீரி என்ற யாகத்த்ச் செய்க என்று விதிக்கையில் -காரீரம் என்ற மூங்கில் தளிர் வாடினால் காரீய என்னும் யாகம் செய்யத்தக்கது என்றும் கொள்ளப்படும்-யாகம் முடிந்த உடனேயே மழை பொழிந்து விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை -ஏன் எனில் இந்த யாகத்தில் குறை ஏதும் ஏற்பட்டு இருந்தால் செய்தவருடைய பிறவி முழுவதுமே மழை பெய்யாது போகலாம் -அதனால் மீமாம்ஸகர்கள் சொல்லும் அபூர்வம் யாகம் செய்தவனுக்கு சுகமாகவோ அனுகூலமாகவோ இருப்பதில்லை எனத் தெளிவாகிறது –
    ஆகவே-அபூர்வம் -மக்களுக்கு நல்லது -அதனால் யாகம் செய்ய வேண்டும் -என்று மீமாம்ஸகர்கள் சொல்வது நேராது -மாறாக அது -யாகம் -செய்ய முடிந்தது -செய்யும் விருப்பத்தைத் தூண்டுவது என்றவை மட்டுமே கிடைக்கும்

    —————-

    129–க்ருதிம் பிரதி சேஷித்வம் க்ருத யுத்தேஸ் யத்வம் இதி சேத் -கிமிதம் சேஷித்வம் ?-கிம் ச சேஷத்வம் ? இதி வக்தவ்யம்
    கார்ய பிரதி சம்பந்ததீ சேஷ -தத் பிரதி சம்பந்தத்வம் சேஷத்வம் இதி சேத் -ஏதம் தர்ஹி கார்யத்வமேவ சேஷித்வம்
    இத் யுக்தம் பவதி -கார்யத்வமே ஹி விசார்யதே ? பர உத்தேச ப்ரவ்ருத்த க்ருதி வ்யாப்த் யர்ஹத்வம் சேஷத்வம்
    இதி சேத் கோயம் பர உத்தேசோ நாமேதி அயமேவ ஹி விசார்யதே ?
    உத்தேஸ் யத்வம் நாம ஈப்சித சாத்யத்வம் இதி சேத் கிமீப்ஸி தத்வம் ?
    க்ருதி பிரயோஜனத்வம் இதி சேத் புருஷஸ்ய க்ருத்யாரம்ப ப்ரயோஜனமேவ ஹி க்ருதி ப்ரயோஜனவம் ?
    ச ச இச்சா விஷய க்ருத்யதீன ஆத்ம லாப இதி பூர்வ யுக்த ஏவ —

    முயற்சியை ஆள்வது செயல் ஊக்கம் தான் எனில் ஆள்வது -சேஷி -யார் -ஆளப்படுவது -சேஷன் யார் என்ற வினா எழும்
    ஒரு செயலால் எது நிறைவேறுகிறதோ அதுவே அந்தச் செயலுக்கு-சேஷன் -ஆண்டான் சேஷி ஆகிறது என்பீராயின்
    செயல் -அதைச் செய்வோன் -சேஷன் -அச் செயலால் நிறைவேறுகிறது -சேஷி -ஆண்டான் என்பது அதன் பலனை நுகர்ச்சி செய்வோனே யாகும் –
    மற்ற ஒன்றிற்காக செய்யப்படும் இலக்கு-சேஷி -ஆண்டான் -இந்த இலக்கு -அச் செயலால் அடையப் படக் கூடியதாயும் செய்வோனால் செய்யத் தக்கதாயும் இருத்தல் எனில் -ஸ்வர்க்கத்தை விரும்பி யாகம் செய்பவனுக்கு -அவன் செய்யும் யாகத்தினால் ஏற்படும் விளைவு -அபூர்வம் இலக்கல்ல -அதனால் அவனுக்கு மகிழ்ச்சியும் ஏற்படுவதில்லை -ஆகவே அவனை எந்த இலக்கு செயல்படத் தூண்டுகிறதோ-எது அவனால் அடைய முடியுமோ அதுவே ஆள்வோன் சேஷி ஆகவேண்டும் -இது முன்பே விளக்கப் பட்டு இருக்கிறது –

    ————–

    130–அயமேவ ஹி ஸர்வத்ர சேஷ சேஷி பாவ
    பரகத அதிசய ஆதாநே இச்சாயா உபாதேயத்வ மேவ யஸ் ஸ்வரூபம் -ச சேஷ -பர சேஷீ -பல உத்பத்தி இச்சாயா யாகதே–
    தத் பிரயத்தனஸ் யச உபா தேயத்வம் -யுகாதி சித்தி இச்சாயா அந்யத் சர்வம் உபாதேயம்-ஏவம் கர்பதாஸாதீநாம் அபி
    புருஷ விசேஷாதி சாயாதாநேச் சயா உபாதே யத்வமேவ சேதந அசேதநாத்ம கஸ்ய நித்யஸ்ய அநித்யஸ்ய ச ஸர்வஸ்ய வஸ்துந –
    ஸ்வரூபம் இதி சர்வம் ஈஸ்வர சேஷ பூதம் -ஸர்வஸ்ய ச ஈஸ்வர சேஷீதி -ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்ய ஈஸாந
    பதிம் விஸ்வஸ்ய –இத்யாதி யுக்தம்
    க்ருதி ஸாத்யம் பிரதானம் -யத் தத் கார்யம் அபி தீயதே -இதயயமர்த்த -ஸ்ரத்தூதாநேஷ் வேவ சோபதே —

    சேஷன் சேஷி தொடர்பு எல்லாவிடத்திலும் இவ்வாறே காணப்படுகிறது -மற்ற ஒன்றின் மேல் ஏற்படும் விருப்பத்தால் எது -செயல் -செய்யப்படுகிறதோ -அது சேஷம் -மற்ற ஓன்று சேஷி -பலன் கிடைக்கும் என்ற விருப்பத்தால் -யாகம் போன்றவை -அதற்கான முயற்சிகள் கைக் கொள்ளத் தக்கவை -அதனுடன் தொடர்புடைய செயல்களும் கொள்ளத் தக்கவையே -அவ்வாறே பிறப்பாலேயே அடிமையான ஆத்மாக்களை ஆண்டானாகிய இறைவன் தன் மகிழ்ச்சிக்காகவே பெற்றுக் கொள்கிறான் –
    அதே போல் பிறப்பிலேயே அடிமையான அழிவற்ற அழிவுள்ள சேதன அசேதனப் பொருட்கள் ஈஸ்வரனுடைய மகிச்சிக்காகவே அவனால் கைக் கொள்ளப் படுகின்றன –
    இவ்வாறு இருத்தலே அப் பொருள்களின் மெய் நிலை -ஸ்வரூபம் -ஆகவே இவைகள் யாவும் நுகர் பொருள்கள் -சேஷன் -அவன் நுகர்வோன் -சேஷி -எப் பொருள்களையும் தன் வசமுடையவன் -எல்லாவற்றையும் நடத்துவோமன் -உடையவன் -என்றும் -உலகிற்கு ஒரே தலைவன் என்றும் -வேதத்தில் சொல்லப் படுகிறது –
    முயற்சியால் பெறத் தக்க தலையாயது என்பது -அபூர்வம் என்று மீமாம்ஸகர் சொல்வது -அறிவுடையோர் குழுவில் ஏற்கத் தக்கது அல்ல –

    ———————-

    131—அபி ச ஸ்வர்க்க காமோ யஜேத-இத்யாதி ஷு லகார வாஸ்ய கர்த்ரு விசேஷ சமர்ப்பண பரானாம்
    ஸ்வர்க் காமாதி பதாநாம் நியோஜ்ய விசேஷ சமர்ப்பண பரத்வம் சப்த அநு சாசன விருத்தம் கேந அவகம்யதே ?
    ஸாத்ய ஸ்வர்க்க விசிஷ்டஸ்ய ஸ்வர்க்க சாதநே கர்த்ருத்வ அந்வயோ ந கடேத இதி சேத் –
    நியோஜயத்வ அந்வயோபி ந கடதா இதி ஹி ஸ்வர்க்க சாதநத்வ நிஸ்ஸய -ச து ஸாஸ்த்ர சித்தே கர்த்ருத்வ அந்வயே
    ஸ்வர்க்க சாதநத்வ நிஸ்ஸய -க்ரியதே –
    யதா போக்து காமோ தேவதத்த க்ருஹம் கச்சேத் இத் யுக்தே-போஜன காமஸ்ய தேவதத்த க்ருஹ கமநே
    கர்த்ருத்வா ஸ்ரவனா தேவ ப்ராகஜாதமபி போஜன சாதநத்வம் தேவ தத்த க்ருஹ கமநஸ்ய அவகம்யதே –
    ஏவம த்ராபி பவதி -நஹி க்ரியாந்தரம் ப்ரதி கர்த்ரு தயா ஸ்ருதஸ்ய க்ரியாந்தரே கர்த்ருத்வ கல்பநம் யுக்தம் –
    யஜேத-இதி ஹி யாக கர்த்ரு தயா ஸ்ருதஸ்ய புத்தவ கர்த்ருத்வ கல்பனம் நியதம் -புத்தே கர்த்ருத்த மேவ ஹி நியோஜ்யத்வம் ?
    யதோக்தம்
    நியோஜ்ய ச ச கார்யம் ய ஸ்வ கீய த்வேந புத்யதே இதி
    யஷ்ட்டத்வ அநு குணம் தத் போக்த்ருத்வம் இதி சேத் தேவ தத்த பசேத் இதி பாக கர்த்ருதயா ஸ்தருதஸ்ய தேவ தத்தஸ்ய
    பாகார்த்த கமனம் பாக அநு குணமிதி கமநே கர்த்ருத்வ கல்பனம் ந யுஜ்யதே —

    இங்கும் ஸ்வர்க்கத்தை விரும்புபவன் யாகம் செய்யக் கடவன் -என்னும் விதி வாக்கியம் யாகம் செய்பவனைக் குறிக்கிறது
    மீமாம்ஸகர் -இது யாகம் செய்யும் செயலை முன்னிலைப் படுத்துகிறது என்கின்றனர்
    இந்த விதி வாக்யம் எல்லோரையும் யாகம் செய்தலான செயலில் ஈடுபடுத்தவில்லை
    இச் செயலைச் செய்வதற்கு ஸ்வர்க்கத்தின் மீது விருப்பம் என்ற தகுதியை செய்பவனுக்கு விதிக்கிறது
    இவ்வாறு கொள்வதே இலக்கணத்திற்குப் பொருந்தும் அதுவன்றி பொதுவாக ஒருவரை யாகம் செய்யத் தூண்டுகிறது என்னும் வாதம் இதற்கு மாறானது –இதற்கு விடையாக விதி வாக்யம் செய்பவனையே கூறுகிறது –
    அவனுக்குள்ள தகுதி என்பதில் ஐயமில்லை -ஆயின் யாகம் நேராக ஸ்வர்க்கத்தைத் தராதலால் இடைப் பட்டதான அபூர்வத்தையே இலக்கணையாகக் குறிக்கும் -ஸ்வர்க்க விருப்பம் என்பது அபூர்வத்தை அவ்வாறே காட்டும் என்கின்றனர் –
    நேரிடையாக ஸ்வர்க்கத்தைத் தராத இலக்கணப் பிழையான வாக்யத்தைக் கைக் கொண்டு அதுவே விதி என்று சொல்லும் குற்றம் உங்களுக்கு ஏற்படுகிறதே என்றால் அதற்கு விளக்கமாக எப்பொழுது ஸ்வர்க்கம் அடைவதற்காக யாகம் செய்தலில் இறங்கினானோ அப்பொழுதே அச் செயல் அவன் மனத்தில் இந்த யாகம் ஸ்வர்க்கத்தைக் கொடுக்கும் இதை நான் செய்கிறேன் என்ற உணர்வு ஏற்பட்டு விடும் -ஆகவே அந்த உணர்வு தான் செய்வோனாக ஆகிறது என்கின்றனர் -இது தவறு
    செய்பவன் தான் கர்த்தா இதற்கு மாறுபாடு கொள்வது உலகியலுக்கு ஒவ்வாதது -எடுத்துக் காட்டாக தேவதத்தன் சமைக்கிறான் என்று சொல்லும் போது சமையலுக்குத் தொடர்புடைய சாமான்கள் வாங்கி வருவதைச் செய்தாலும் அவனுடைய முக்கியமான பணி சமைத்தலே ஆகும் -ஆகவே சமைத்தல் என்பதையே நாம் செயலாகவும் தேவதத்தனையே செய்வோனாகவும் கொள்ள வேண்டும் –

    உணவை விரும்புவோர் தேவதத்தன் இல்லத்திற்குச் செல்க -என்னும் விதி வாக்கியத்தில் உணவை விரும்புதல் என்னும் சிறப்பு அங்கு செல்ல வேண்டியவர்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது –

    —————

    132—கிஞ்ச லிங்காதி சப்த வாஸ்யம் ஸ்தாயி ரூபம் கிமிதி அபூர்வம் ஆஸ் ரீயதே ?-
    ஸ்வர்க்க காம பத சமபி வ்யாஹார அநு ப பத்தே இதி சேத் கா அத்ர அநுப பத்தி ?
    சிஷாதயிஷித ஸ்வர்க்கோஹி ஸ்வர்க்க காம தஸ்ய ஸ்வர்க்க காமஸ்ய காலாந்தர பாவி ஸ்வர்க்க ஸித்தவ் க்ஷண
    பங்கினீ யாகாதி கிரியா ந சமர்த்த இதி சேத்

    வினை யுருபுகளுடன் சேர்ந்த வினைச் சொற்கள் நிலை பெற்று எவ்வாறு அபூர்வத்தைச் சுட்டிக் காட்டுகின்றன -ஸ்வர்க்கத்தை அடையும் வழியைச் சொல்வதால் எனில் அவ் வழி எது -எவன் ஸ்வர்க்கத்தை விரும்புகிறானோ அவனுக்கு அவன் இறந்த பிறகு கிடைக்கும் ஸ்வர்க்கத்தை கண நேரத்தில் அழிந்து விடும் யாகம் பெற்றுத்தர வல்லதல்ல -அதனால் அபூர்வத்தைக் கற்பிக்கிறோம் என்பீராகில்
    அநாக்ராத வேத வித் அக்ரேசரோ ஐயம் அநுப பந்தி -சர்வை கர்மபி ஆராதித பரமேஸ்வர பகவான் நாராயண
    தத்திஷ்டம் பலம் ததாதி இதி வேத வைத்தோ வதந்தி

    குறைவு படாத வேதத்தால் நிறுவப்பட்ட இடையறாத த்யான வழி எல்லாச் செயல்களுக்கும் ஆராதனைகளுக்கும் இலக்கான பரமேஸ்வரனான பகவான் நாராயணன் அவர்களுடைய விருப்பத்தைக் கொடுக்கிறான் -என்று வேதத்தைக் கரை கண்டவர்கள் அறுதியிடுகிறார்கள்

    யதா ஆஹு வேத வித் அக்ரேஸரா த்ரமிடாச்சார்யாபல சம்பிபந்த் சயா கர்மபிராத்மாநாம் பிப்ரீஷந்தி சப்ரிதோலம் பலாய-இதி ஸாஸ்த்ர மர்யாதா -இதி
    பல சம்பந்தேச்சயா கர்மபி யாக தான ஹோமாதிபி -இந்திராதி தேவதா முகேந தத் தந்தர்யாமி ரூபேண அவஸ்திதம்
    இந்த த்ராதி சப்த வாஸ்யம் பரமாத்மநாம் பகவந்தம் வாஸூ தேவம் ஆரிராதயிஷ்யந்தி –
    ச ஹி கர்மபிராராதிதா -தேஷாம் இஷ்டாநி பலாநி பிரயச்சத்தி இத்யர்த்த –

    அவ்வாறே வேதம் அறிந்தோரில் தலையாய த்ரமிடாச்சார்யார் கூற்றுப்படி ஜீவாத்மா ஒருவன் தான் விரும்பியதைப் பெறும் ஆசையினால் யாகம் தானம் ஹோமம் செய்து இந்திரன் முதலான தேவதைகள் மூலமாக அவர்களின் உள்ளுறைவோனான வாஸூ தேவனை திருப்த்திப்படுத்தி விரும்பிய பலன்களை அடைகிறார்கள் என்பது ஸாஸ்த்ரத்திற்கு ஏற்புடையது –
    அதாவது பலன் தொடர்புடைய செய்கைகள் யாகம் தானம் போன்றவை இந்திரன் முதலிய தேவதைகள் மூலமாக அவைகளுக்கு உள்ளு றைவோனாக விளங்கும் பரமாத்மாவான வாஸூ தேவனை ஆராதிக்கிறார்கள் -அவனும் அவ்வாறு ஆராதிக்கப்பட்டு விரும்பிய பலன்களைக் கொடுக்கிறான் என்று பொருள்

    ததா ச ஸ்ருதி
    இஷ்டா பூர்த்தம் பஹுதா ஜாதம் ஜாயமானம் விஸ்வம் விபர்த்தி புவனஸ்ய நாபி -இதி இஷ்டா பூர்த்தம் –
    இதி சகல ஸ்ருதி ஸ்ம்ருதி சோதித்தம் கர்மா உச்யதே -தது விஸ்வம் விபர்த்தி –
    இந்திர அக்னி வருணாதி சர்வ தேவதா சம்பந்தி தயா பிரதீயமானம் தத் தத் அந்தராத்மா தயா அவஸ்தித
    பரம புருஷ ஸ்வயமேவ விபார்த்தி -ஸ்வயமேவ ஸ்வீ கரோதி-
    புவனஸ்ய நாபி
    ப்ரஹ்ம க்ஷத்ராதி சர்வ வர்ண பூர்ணஸ்ய புவனஸ்ய தாரக
    தைஸ்தை கர்மா பிராராதித–தத் தத்திஷ்ட பல பிரதாநேந புவனானாம் தாரக இதி நாபி இத்யுக்த
    அக்னி வாயு ப்ரப்ருதி தேவதாந்தராத்மதயா தச் தச் சப்தாபி தேய அயமேவேத்யாஹ-
    ததே வாக்நிஸ் தத் வாயுஸ் தத ஸூர்யஸ் தாது சந்த்ரமா -இதி

    அவ்வாறே வேதத்திலும் வேதங்களில் கூறப்பட்ட வினைகளை இந்திரன் அக்னி வருணன் ஆகியோருடன் உயிர் உயில் தொடர்புடன் உறையும் பரம புருஷன் தானே ஏற்றுக் கொள்கிறான்
    அந்தணர் அரசர் முதலிய எல்லா வர்ணங்களும் கொண்ட உலகு அனைத்தையும் தாங்குவோன் அவ்வாறே செயல்களால் ஆராதிக்கப்பட்டு அந்தந்த பலன்களைக் கொடுத்து உலகில் உள்ள அனைவரையும் தாங்குவோன்
    இவனே அக்னி வாயு தேவர்களின் உயிராக உறைந்து அவ்வ்ப் பெயர்களால் ஆராதிக்கப் படுபவன்
    அவனே அக்னி அவனே வாயு அவனே ஸூர்யன் அவனே சந்த்ரன் என்று வேதமும் சொல்லிற்று

    யதோக்தம் பகவதா–ஸ்ரீ கீதையிலும் -7-21–/22-
    யோயோ யாம் யாம் தநும் பக்த ஸ்ரத்தாயா அர்ச்சிதும் இச்சதி
    தஸ்ய தஸ்யா சலாம் ச்ராத்தம் தாமேவ விததாம் யஹம்
    ச தயா ஸ்ரத்தயா யுக்த தஸ்யா ஆராதன மீஹதே
    லபதேச தத காமான் மயைவ விஹிதாந் ஹி தாந்
    யாம் யாம் தநும்
    இந்த்ராதி தேவதா விசேஷம் தத் தத் அந்தர்யாமிதயா அவஸ்திதஸ்ய பகவத-
    தநவ–சரீராணி இத்யர்த்த
    அஹம் ஹி சர்வ யஞ்ஞானாம் போக்தா ச பிரபுரேவ ச இத்யாதி
    பிரபுரேவ ச இதி சர்வ பலாநாம் ப்ரதாதா சேத்யர்த்த –

    ஸ்ரீ கீதையிலும் -என்னுடைய உடலான இந்திரன் முதலான தேவர்களை எந்த பக்தர்கள் முயற்சியுடன் அர்ச்சிக்கிறார்களோ அவர்களுக்கு அவரவர்கள் விரும்பும் பலனை நானே கொடுக்கிறேன் -அந்த தேவதைகளன் மேல் நம்பிக்கையை வளர்க்கிறேன்
    அந்த பக்தன் அந்த நம்பிக்கை யுடன் அந்த தேவதைகளுக்கு ஆராதனம் செய்து தான் விரும்பிய
    பலன்களை என்னால் கொடுக்கப்பட்டு அடைகிறான் -என்று பகவான் சொல்கிறார்
    இதில் இந்திரன் முதலிய தேவர்கள் தனக்கு சரீரம் என்று விளக்கமாகக் கண்ணன் கூறியிருக்கிறான்
    நானே யாகங்களுக்கு எல்லாம் உள்ளுறைபவன் -அநுபவிப்பவன் -பலன் அளிப்பவன்
    இவ்வாறு என்னை சிலர் உள்ளபடி அறியாமல் முக்கிய பலனில் இருந்து நழுவி விடுகிறார்கள்

    யதாச
    யஜ்ஜைஸ் த்வம் இஜ்யஸே நித்யம் சர்வ தேவ மயா ஸ்யுத
    யைஸ்வ தர்ம பரைநார்த்த நரைராராதிதோ பவாந்
    தே தரந்த்யகிலா மேதாம் மாயாமாத்ம வி முக்தயே இதி –ஸ்ரீ விஷ்ணு புராணம்

    அவ்வாறே ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்
    தங்களுக்கு உரிய தர்மத்தைக் கைக் கொண்டு அந் நெறி பிறழாமல் எந்த சிறந்த மனிதர்கள் யாகங்களை தேவதைகளை அச்சுதனால் நிறைக்கப் பட்டவர்களாய் அறிந்து தினமும் ஆராதிக்கிறார்களோ அவர்கள் இந்த உலக வாழ்க்கை எனும் மாயையின் நின்றும் ஆத்ம விடுதலை பெறுகிறார்கள் –

    சேதிஹாச புராணேஷு -சர்வேஷ்வேவ வேதேஷு –
    ஸர்வாணி கர்மாணி சர்வேஸ்வர ஆராதன ரூபாணி தைஸ்தை கர்ம பிராராதித புருஷோத்தம தத்ததிஷ்ட பலம்
    ததாதி இதி தத்ர தத்ர பிரபஞ்சிதம்
    ஏவமேவ ஹி சர்வஞ்ஞம் -சர்வ சக்திக்கு -சர்வேஸ்வரன் -பகவந்தம்-இந்திராதி தேவதாந்தர்யாமி ரூபேண
    யாக தான ஹோமாதி -வேதோதித சர்வ கரமானாம் போக்தாரம் சர்வ பலானாம் பிரதாதாரம் ச சர்வா ஸ்ருதயோ வதந்தி –
    சதுர் ஹோதாரோ யத்ர சம்பதம் கச்சந்தி தேவை இத்யாத்யா
    சதுர் ஹோதார யஜ்ஞா -யத்ர பரமாத்மநி தேவேஷ் வந்தர்யாமிதயா அவஸ்தித -தேவை சம்பந்தம் கச்சந்தி இத்யர்த்த –
    அந்தர்யாமி ரூபேண அவஸ்தி தஸ்ய பரமாத்மாந சரீரதயா அவஸ்திதாநாம் இந்த்ராதிநாம் யுகாதி சம்பந்த இத்யுக்தம் பவதி

    இவ்வாறே இதிஹாஸ புராணங்களிலும் எல்லா வேதங்களிலும்எல்லாச் செயல்களும் ஸர்வேஸ்வரனையே ஆராதிப்பதாக உள்ளன -அந்தந்தச் செயல்களால் ஆராதிக்கப்பட்ட புருஷோத்தமன் அவரவர்களின் விருப்பங்களைக் கொடுக்கிறான் என்று பல இடங்களில் நன்கு விளக்கப் பட்டு இருக்கிறது -அதனாலேயே யாவும் அறிந்தவனும் யாவற்றிக்கும் தலைவனும் பகவானும் இந்த்ரன் முதலிய தேவர்களுக்கு உள்ளுறைவோனாக இருந்து கொண்டுயாகம் தானம் ஹோமங்களான -வேதத்தால் விதிக்கப்பட்ட எல்லாச் செயல்களையும் அனுபவிப்பவனும் எல்லா வற்றிற்கும் பலன் அளிப்பவனுமாக அவனே இருக்கிறான் -என வேதங்கள் கூறுகின்றனநான்கு அங்கங்களை வுடைய யாகங்களின் பலனாக நன்மைகள் தேவரீராலேயே அளிக்கப்படுகின்றனஉள்ளுறைவோனாக விளங்கும் பரமாத்மா அவனது உடலாக விளங்கும் இந்திராதி தேவர்கள் மூலமாக யாகங்களுடன் தொடர்புடையவன் ஆகிறான் என்று கொள்வதால் சிறந்தது
    யதோக்தம் பகவதா –ஸ்ரீ கீதையிலும்
    போக்தாரம் யஜ்ஞ தபஸாம் சர்வலோக மஹேஸ்வரம் இதி தஸ்மாத் அக்னியாதி தேவதாந்தர்யாமி பூத
    பரம புருஷ ஆராதன பூதாநி ஸர்வாணி கர்மாணி ச ஏவ ச அபிலஷித ப்ரதாயி
    இதி கிமத்ர அபூர்வேன வ்யுத்பதி பததூர வர்த்திநா வாச்யதயா அப்யுகதேந கல்பிதேந வா பிரயோஜனம் ?-

    இதை ஒட்டியே கீதையிலும்
    யாகம் தவம் முதலியவற்றால் அடையப்படுபவன் -எல்லா உலகுகளுக்கும் தலைவனான மஹேஸ்வரன் -என்று கூறப்படுகிறது
    ஆகவே அக்னி முதலான தேவர்களின் உள்ளுறைபவனான பரம புருஷனை ஆராதிக்கும் எல்லாச் செயல்களுக்கும் அவனே இலக்காகி பலன் அளிக்கிறான் எனும் போது அபூர்வம் என்ற இலக்கணத்திற்கு ஒட்டாததும் சொல்லால் விளக்க முடியாததுமான ஒன்றைக் கற்பித்துக் கொள்வதால் என்ன பயன் –

    ——————-

    133–ஏவஞ்ச சதி லிங்காதே -கோயமர்த்த -பரிக்ரஹீதோ பவதி ?
    யஜ தேவ பூஜா யாம் -இதி தேவதாராதன பூத யாகாதே -ப்ரக்ருத்யர்தஸ்ய-கர்த்ரு வபாரசாத்யதாம் வ்யுத்பத்தி சித்தாம்
    லிங்காதய அபி தததி இதி ந கிஞ்சித் தநுபபந்நம் -கர்த்ரு வாசிநாம் ப்ரத்யயாநாம் ப்ருக்ருத் யர்த்தஸ்ய
    கர்த்ரு வியாபார சம்பந்த பிரகாரோ ஹி வாஸ்ய ?
    பூத வர்த்தமாநாதிகம் அந்யே வதந்தி லிங்காத யஸ்து கர்த்ரு வியாபார சாத்யதாம் வதந்தி —

    இங்கு தேவர்களை ஆராதிப்பாயாக என்ற வியங்கோள் வினை முற்றால் தேவர்கள் மகிழ்ச்சியடைய யாகம் முதலிய செயல்களைச் செய்வாயாக என்ற கட்டளை இருக்கிறது –
    யஜ -யஜ் அ -யாகம் செய்வாயாக எனப்பொருள் கொடுப்பதால் இது ஒருவரால் செய்யப்பட வேண்டும் என பகுதி விகுதி சேர்க்கையால் செய்வோனையும் செயலையும் இலக்கணைப் பிழையின்றிக் காட்டுகிறது –
    இந்தப் பகுதி செயலையும் விகுதி காலத்தையும் காட்டி இது ஒருவனால் செய்யப்பட வேண்டும் என விதிக்கிறது –

    ————–

    134–அபி ச காமிந -கர்த்தவ்ய தயா கர்மா விதாய கர்மனோ தேவதா ஆராதன ரூபதாம் தத் த்வாரேண பல சித்திம்
    ச தத் தத் கர்மா விதி வாக்ய அன்யேவ வதந்தி –
    வாயவ்யம் ஸ்வேத மால பேதபூதி காம -வாயுர் வை ஷேபிஷ்டா தேவதா -வாயுமேவ ஸ்வேந பாகதேயேநோ பதாவதி
    ச ஏவைநம் பூதிம் கமயதி இத்யதிநி நாத்ரா பல சித்யநுப பத்தி காபி த்ருச்யதே இதி பல சாதனத்வா வகதி ஒளபதாநிகீ-
    இத்யபி ந சங்கச்சதே வித்யபேஷிதம் யாகாதே பல சாதனத்வப் பிரகாரம் வாக்ய சேஷ ஏவ போதாயாதி இத்யர்த்த —

    மேலும் விதி வாக்யங்கள் -விரும்புவோர் விருப்பத்திற்கு ஏற்ப பல தேவதைகளை ஆராதிக்கும் முகமான செயல்களை விதிக்கின்றன
    அவற்றிக்கு அந்த அந்த தேவதைகள் பலன் கொடுப்பர் என்றும் கூறுகின்றன –
    எடுத்துக் காட்டாக -பொருளை வேண்டுவோன் வெள்ளக் குதிரையைப் பலி கொடுத்து ஹோமம் செய்வதாக ஆராதிக்கக் கடவன் -அந்த வாயு மிக வேகமாகச் செல்லுபவன் -அவனைத் தன் ஹவிஸ் உணவால் திருப்திப்படுத்தக் கடவன் -அவனே இவனுக்கு செல்வத்தை அடைவிக்கிறான் -என்று
    இங்கு ஒருவன் விரும்பிய செல்வத்தை இச்செயலின் மூலம் வாயுவே அளிக்கிறான் என்று கொள்வது சாலச் சிறந்தது –
    விதி வாக்கியத்தில் இது வெளிப்படையாகக் காணப்படா விடிலும் அர்த்த வாதத்தில் சொல்லப்பட்டதை உள்ளுறை பொருளாக -அர்த்தா பத்தி நிறுவுவதால் பலனில் எந்த மாறுபாடும் காணப்படவில்லை –

    தஸ்மாத் -ப்ராஹ்மணாய நா பகுரேத் -இத்யத்ர அபகோரண—நிஷேத விதி பர வாக்ய சேஷே ஸ்ரூயமாணம்
    நிஷேத் யஸ்ய அபகோரணஸ்ய சத யாதநா சாதநத்வம் நிஷேத வித்யுபயோகி இதி ஹி ஸ்வீ க்ரியதே ?
    அத்ர புந காமிந கர்த்தவ்ய தயா விஹிதஸ்ய யாகாதே காம்ய ஸ்வர்காதி சாதனத்வ பிரகாரம் வாக்ய சேஷா வகதம்
    அநாத்ருத்ய கிமிதி உபாதேநேந யாகதே பல சாதனத்வம் பரிகல்ப்யதே-
    ஹிரண்ய நிதி மபவரகேநிதாய யாசதே கோத்ரவ்யாதி லுப்த க்ருபணம் ஜனம் இதி ஸ்ரூயதே ததேதத் யுஷ்மாஸூ த்ருச்யதே –

    அவ்வாறே அந்தணனைக் கொல்ல முயற்சிக்காதே -என்று கொல்லும் முயற்சியைத் தடுத்து விதித்து -பிற் பகுதியில் அவ்வாறு தடுக்கப்பட்ட செயலைச் செய்தால் -நூறு சவுக்கடி தண்டமாகக் கிடைக்கும் -என்று அவ்விதியால் அடையப்படும் பலனையும் கூறுகிறது –
    இங்கு தண்டனையாகிற பலனுக்குக் கொல்லும் முயற்சி என்ற செயல் காரணமாகிறது –
    ஆகவே அதைத் தடுத்த விதி தொடர்ந்து வரும் அர்த்த வாதத்தால் தான் பொருளுடைய தாகிறது என்பது வெளிப்படை –
    அது போலவே ஸ்வர்க்கம் முதலிய விருப்பங்களை அடைவதற்காகச் செய்யப்படும் யாகங்களும் பொருள் கொள்வதில் தடையில்லை –
    இவ்வாறு நேரடியாகப் பொருள் கொல்வதைத் தவிர்த்து அபூர்வத்தைக் கற்பித்தல் தங்கப் புதையலை வீட்டில் வைத்திருக்கும் ஒருவன் தெருவில் பிச்சை எடுத்தல் போன்ற கஞ்சத் தனத்தையே காட்டுகிறது –

    சதயாதநா சாதனத்வம் அபி ந அத்ருஷ்டத் வாரேண-சோதிதாந்யநுதிஷ்டத -விகிதம் கர்மா குர்வத–நிந்திதாநி ச குர்வத–
    ஸர்வாணி ஸூகாநி துக்காநி சபரம புருஷ அநு க்ரஹ நிக்ரஹாப்யா மேவ பவந்தி-

    ஏஷ ஹ்யேவாநந்தயாதி
    அத சோ பயங்கதோ பவதி
    அத தஸ்ய பயம் பவதி
    பீஷாஸ்த்மா வாதா பவதே பீஷோ தேதி ஸூர்ய பீஷாஸ்த்மா தக்நி சேந்த்ரஸ் ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம இதி —
    ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரசசநே கார்க்கி –ஸூர்ய சந்த்ரமசவ் வித்ருதவ் திஷ்டத -ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே
    கார்க்கி -தததோ மனுஷ்யா ப்ரஸஸந்தி யஜமானம் தேவா தர்வீம் பிதரோந் வாயத்தா இத்யாத்யேந கவிதா ஸ்ருதய சந்தி –

    விலக்கப்பட்ட செயல்கள் தண்டனை நிந்தனையைப் பெற்றுத் தருவதும் -விதிக்கப்பட்ட செயல்கள் நன்மையை ஏற்படுத்தித் தருதலும் போலே எல்லா இன்ப துன்பங்களும் பரம புருஷனுடைய மகிழ்வு கோபத்தாலேயே ஏற்படுகின்றன
    இப் பரம் பொருள் எல்லோரையும் மகிழ்ச்சி அடைவிக்கிறான் -பிறகு அவனே பயத்தை நீக்குகிறான் – அவனை அடையாதவன் பயத்தை அடைகிறான் -அவனிடத்து உள்ள பயத்தாலேயே காற்று வீசுகிறது -ஸூர்யன் உதிக்கிறான் -தீ ஒளிர்கிறது -இந்திரன் செயல் படுகிறான் -ஐந்தாவதாக யமனும் செயல்படுகிறான் –
    ஹே கர்க்கி இந்த எம்பெருமானின் கட்டளையின் படியே ஸூர்ய ஸந்த்ரர்கள் தாங்கப் படுகிறார்கள் –
    ஹே கர்க்கி அழிவற்ற இந்த எம்பெருமானுடைய ஆணையினாலேயே அந்தந்த மனிதர்கள் யாக காரியங்களில் தேவர்களையும் பித்ருக்களையும் நினைத்து ஹோமம் செய்யும் பாத்திரத்தில் கொடுத்து ஸ்துதிக்கிறார்கள் என்பது போலப் பலவகையான வேத வாக்கியங்கள் இருக்கின்றன –

    யதோக்தம் த்ரமிட பாஷ்யே-
    தஸ்ய ஆஞ்ஞாய தாவதி வாயு -நத்ய -ஸ்ரவந்தி -தேந ச க்ருதஸீமாநோ ஜலாசயா சமதா இவ மேஷ விசர்ப்பிதம் குர்வந்தி-
    இதி தத் ச கல்ப்பநி பந்தநா ஹி இமே லோகா நஸ்ய வந்தே நஸ் புடந்தி-ஸ்வ சாசன அநு வரத்தினம் ஞாத்வா
    காருண்யாத் ச பகவாந் வர்த்தயேத வித்வான் கர்ம தக்ஷ -இதி ச –

    பரம புருஷ யாதாத்ம ஞான பூர்வகம் தத் உபாசாநாதி-விஹித கர்ம அனுஷ்டாயின-தத் ப்ரஸாதாத்
    தத் பிராப்தி பர்யந்தாநி ஸூகாநி அபயம் ச யதாதிகரம் பவந்தி-தத் ஞான பூர்வகம்
    தத் உபாஸநாதி விஹிதம் கர்ம அகுர்வத-நிந்திதாநி ச குர்வத தந் நிக்ரஹாதேவ தத் பிராப்தி பூர்வகா
    பரிமித துக்காநி பயம் ச பவந்தி –

    திரமிடாச்சார்யரும் இதை விளக்கும் முகமாய் -அவனுடைய ஆணையால் வாயு வீசுகிறான் -நதிகள் ஓடுகின்றன -வரம்புக்கு உட்பட்டு நீர் நிலைகள் விளங்கி ஆடுகள் நகர்வது போல் கட்டுக்கு அடங்கி இருக்கின்றன -என்கிறார்
    மேலும் அவனுடைய ஆணையாலேயே -ஸங்கல்பத்தாலேயே -இவ்வுலகங்கள் நழுவுவதில்லை -வெடிப்பதில்லை -தன் கட்டளைகளை மேற் கொள்வோரை அறிந்து அவர்களுக்கு அறியும் தன்மையை கருணை கூர்ந்து aவளர்க்கிறான் -என்றும் கூறுகிறார் –
    மிக்க இறை நிலையை ஞானத்தால் அறிந்து -அவனை இடையறாது தியானித்தல் முதலிய விதிக்கப் பட்ட கர்மங்களைச் செய்வோருக்கு அதன் பலனாக பிறவிச் சூழல் பயத்தை நீக்கி தன்னையே அடைவிப்பது வரையிலும் நன்மைகளை அளிக்கிறான் –
    மாறாக அறியாமையில் உழன்று விதிக்கப் பட்ட செயல்களைச் செய்யாதவருக்கும் நிந்திக்கப்பட்ட செயல்களைச் செய்தவனுக்கும் அவனது தண்டனையாக அவனை அடைய முடியாமையாகிற பயமும் ஏற்படுகிறது –

    யதோக்தம் பகவதா -ஸ்ரீ கீதையிலும் –
    நியதம் குரு கர்மத்வம் கர்மஜ்யாயோ ஹ்ய கர்மண –இத்யாதிநா க்ருத்ஸ்நம் கர்மா ஞான பூர்வகம் அநுஷ் டேயம் விதாய –
    மயி ஸர்வாணி கர்மாணி சந் யஸ்ய -இதி சர்வஸ்ய கர்மண ஸ்வ ஆராதநுதாம் ஆத்மநாம் ஸ்வ நியாம்யதாம் ச ப்ரதிபாத்ய
    யே மே மதமிதம் நித்யம் அநு திஷ்டந்தி மாநவா
    ஸ்ரத்தா வந்தோ அந ஸூயந்தோ நாநு திஷ்டந்தி மே மதம்
    சர்வஞ்ஞான வி மூடாம் ஸ்தாந் வித்தி நாஷ்டாந சேதச —
    இதி ஸ்வ ஞான அநு வர்த்திந ப்ரஸஸ்ய விபரீதாந் விநிந்த்ய -புநரபி ஸ்வ ஞான அநு பாலநம் அகுர்வதாம்
    ஆஸூர ப்ரக்ருத் யந்தர்பாவம் அபிதாய அதமாகதிஸ் ச யுக்தா
    தாநஹம் த்விஷத க்ரூராந் சம்சாரேஷு நராதமாந் ஷிபாம்ய ஜஸ்ரமஸூபாந் மூடா ஜென்மநி ஜென்மநி –
    யாமப்ராப் யைவ கௌந்தேய ததோ யாந்த்ய தமாம் தீம் இதி –
    சர்வ கரமண்யபி சதா குர்வானோ மப்த்யபாஸ்ரய
    மத் பிரசாதாதவாப் நோதி சாஸ்வதம் பதமவ்யயம்
    இதி ச ஸ்வ ஞான அநு வர்த்தி நாம் சாஸ்வதம் பதம் ச யுக்தம் —

    அஸ்ருதா வேதாந்தாநாம் கர்மணி அஸ்ரத்தா மா பூத் -இதி தேவதாதி கரேண திவாதா-க்ருதா கர்மமாத்ரே
    யதா ஸ்ரத்தா ஸ்யாத் இதி சர்வம் ஏக சாஸ்திரம் இதி வேதவித் சித்தாந்த –

    இதற்கு ஏற்ப கீதையிலும்
    செயல்படாது இருத்தலை விட விதிக்கப்பட்ட செயல்களைச் செய்தல் சாலச் சிறந்தது -என்பதால் செயல்கள் யாவும் மனப் பூர்வமாகச் செய்யப்பட வேண்டும் என்று விதித்து
    எல்லாச் செயல்களையும் பலன்களையும் -என்னிடமே அர்ப்பணிப்பாயாக என்றும்
    அவைகள் தன்னால் விதிக்கப் பட்டவை -தனக்கு ஆராதனையானவை என்றும் சொல்லி
    எவர்கள் இந்த என் கொள்கையை தினமும் செயலாற்றுகிறார்களோ அதில் விருப்பமுடையவர்களாய் இருக்கிறார்களோ -அதில் பொறாமையற்று இருக்கிறார்களோ
    அவர்கள்-மூவரும் எல்லாப் புண்ய பாபங்களில் நின்றும் விடுபடுகிறார்கள்
    மாறாக எவர்கள் இவ்வாறு செயல்படுவதில்லையோ விருப்பமின்றி இருக்கிறார்களோ -பொறாமை கொள்கிறார்களோ -அவர்கள் மூவரும் அறிவுகள் யாவும் நீங்கினவர் என்றும்
    அதனால் பலவற்றையும் இழந்தவர்கள் என்றும் -அறிவாயாக
    தனது விதிகளை -கொள்கைகளை கைக் கொள்வோரைக் கொண்டாடி மாறானவர்களை நிந்தித்து அதனால் அவர்களுக்கு அசுரத்தன்மை ஏற்படுவதைக் கூறிக் கீழ் நிலை pஅடைவிபத்தைச் சொல்கிறான்
    என்னை வெறுப்பவர்களாய் கொடியவர்களாய் -மனிதரில் கடைப்பட்டவராய்-நலன்கள் அற்றவராய் உள்ள அவர்களை நான் இடைவிடாது அசுரப்பிறவிகளில் தள்ளுகிறேன்
    குந்தீ புத்ரனே அரக்கப் பிறவி யடைந்த இவர்கள் பிறவிகள் தோறும் என்னைப் பற்றிய மெய்யறிவு அற்று அடுத்தடுத்துத் தாழ்ந்த பிறவிகளையே அடைகிறார்கள்
    எல்லாச் செயல்களையும் என்னிடத்தில் அர்ப்பணித்து எப்போதும் என் அருளாலே குறைவற்ற என்னை நிலையாக அடைகிறான்
    இவ்வாறு தனது ஆணைகளை நிறைவேற்றுவோர்க்கு நிலையான பதத்தை அடைவிக்கிறான்
    வேதம் அறியாதோருக்கு பற்று விடாது இருக்கவே அவ் வாறு மீமாம்சை பூர்வ மீமாம்ஸை தேவதைகளை மிகவும் புகழ்ந்துள்ளது
    அவை பூர்வ உத்தர மீமாம்சைகள் இரண்டும் ஒரே ஸாஸ்த்ரம் என்பது வேதம் அறிந்தோர் கொள்கை –

    —————–

    135–தஸ்யை தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணோ நாராயணஸ்ய -அபரிச்சேத்ய ஞான ஆனந்த அமலத்வ ஸ்வரூபவத் –
    ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜ ப்ரப்ருத்ய -அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண வத் –
    ஸ்வ சங்கல்ப ப்ரவர்த்ய –ஸ்வேதா ஸமஸ்த சிதசித் வஸ்து ஜாதவத்–
    ஸ்வ அபிமத -ஸ்வ அநு ரூப -ஏக ரூப திவ்ய ரூப -ததுசித -நிரதிசய கல்யாண -விவித அநந்த பூஷண –
    ஸ்வ சக்தி சத்ருச -அபரிமித -அனந்த -ஆச்சர்ய -நாநா வித ஆயுத –
    ஸ்வ அபிமத ஸ்வ அநு ரூப விபவ ஐஸ்வர்ய சீலாத்யா அநவதிக மஹிம மஹிஷி –
    ஸ்வ அநு ரூப கல்யாண ஞான கிரியாத்ய அபரிமேய குண ஆனந்த பரிஜன பரிச்சத
    ஸ்வ உசித நிகில போக்ய போக உபகரணாத் அனந்த மஹா விபவ –
    அவாங் மனஸ் கோசர ஸ்வரூப ஸ்வபாவஸ் திவ்யாஸ்தாநாதி நித்யதா நிரவத்யதா கோசாராஸ் ச சஹஸ்ர ச ஸ்ருதய சந்தி

    பர ப்ரஹ்மமான நாராயணனுடைய பண்புகள் செல்வம் முதலியன இங்கு சுருக்கித் தரப்படுகின்றனஅளவற்ற ஞானம் -ஆனந்தம் -தூய்மை உடைமைஞானம் -வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அண்டங்கள் யாவற்றிலும் நடக்கும் நிகழ்ச்சிகள் யாவற்றையும் ஒரு சேர அறிதல்சக்தி -கூடாதவற்றை கூட்டுவிக்கும் திறன்பலம் -ஆக்கி அளித்து அழித்தல் ஆகிய செயல்களை சிறிதும் வருந்தாது விளையாட்டாகச் செய்தல் ஐஸ்வர்யம் -அழியக்கூடிய இவ்வண்டங்களையும் அழிவே யற்ற பரமபதத்தையும் தன் செல்வமாக உடைமைவீர்யம் -யாவற்றினுள்ளும் நீக்கமற நிறைந்து இருந்தாலும் அவற்றின் தீக்குணங்கள் தன்னுடன் ஒட்டாது இருத்தல் தேஜஸ் -தனக்கு ஒரு துணை இன்றி தானே யாவற்றையும் செய்து முடிக்கும் திறன்மற்றையோருக்கு இந்த ஆறு குணங்கள் நிறைந்த பகவத் சப்தம் அடைமொழியாக மரியாதை நிமித்தமாகவே பயன்படுத்தப்படுகிறதுபரப்ருத்ய -ப்ரு -பாழ் -ப்ருத் -நுழைந்துள்ளமூலப் ப்ரக்ருதி என்னும் பாழை நிரப்புபவன் -சேதனப் பொருள்களாகவும் விளங்குவான்இத்தகைய எண்ணற்ற நற் பண்புகள் உடைமைசேதன அசேதன பொருட்கள் யாவற்றையும் படைத்தல்தன் மனத்துக்கு இசைந்து தனக்கு என்றும் துணையாய் இருக்கும் தெய்வத்தன்மை பொருந்திய திவ்ய மங்கள விக்ரஹமும் -அதற்கேற்ற நாநா வித அணிகலன்களும் தன் திறமைக்கு ஏற்ற பலவகையான வியப்பூட்டும் அளவற்ற படைக்கலன்களும் உடைமைதனக்கு என்றும் உடன்பாடாய் எப்பொழுதும் தனக்கு ஒத்த மனம் மொழி மெய்களால் குறைவற்ற பெருமை செல்வம் இவற்றையுடைய தேவிமார்களும்அளவற்ற நற் பண்புகள் ஞாநம் செயல் முதலியவற்றைப் பெற்று தன் விருப்பத்தை மனம் அறிந்து நடத்தும் பணியாளர்களையும் பெற்று இருத்தல்தன் விருப்பங்கள் யாவும் நிறைவேறப் பெற்றவனாயும் அதற்கு ஏற்ப பலவித விளையாட்டிடங்களை உடையவனாய் இருத்தல்மனதிற்கு எட்டாத அமைப்பை யுடைய அழிவு அறியாத குறையேதுமற்ற ஆயிரக் கணக்கான தெய்வத்தன்மை பொருந்திய இருப்பிடங்களை உடையவனாய் இருத்தல்ஆகியவை அவனுடைய சிறப்புக்கள் என வேதங்கள் ஒதுகின்றன –
    வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸப் பரஸ்தாத்
    ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ
    தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவும் மஷிணீ

    அறப் பெரியவனும் பகலவனை ஒத்த நிற ஒளி யுடையவனும் அஞ்ஞானம் சிறுதும் இல்லாதவனுமாக இருந்த புருஷனை அறிகிறேன்-எவன் ஸூர்யனின் உள்ளுறைபவனும் பொன்னிறம் கொண்டவனுமான புருஷனோ அவன் ஸூர்யனால் அலர்த்தப்பட்ட தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனாய் இருக்கிறான்
    ச யே ஏஷ யந்திர் ஹ்ருதய ஆகாச தஸ்மிந் நயம் புருஷோ மநோ மய
    அம்ருதோ ஹிரண்மய
    மநோ மய–இதி மனசைவ விஸூத்தேந க்ருஹ்யதே இத்யர்த்த
    சர்வே நிமேஷா ஜஜிரே

    அந்த விஷ்ணுவின் பரமபதத்தில் நித்யர்கள் இடைவிடாது அவனைக் காண்கிறார்கள்ராஜஸ குணம் நிறைந்த ப்ரக்ருதிக்கு மேல் அவனுடைய இருப்பிடம் விளங்குகிறது -அவனுக்கு அழிவற்ற புதிய உலகெல்லாம் நிறைந்த கட் புலனாகாத உலகுகளுக்கு மேம்பட்ட உருவம் உள்ளதுஎவன் பரம ஆகாஸமான பரமபதத்தில் உள்ளவனை -ஹ்ருதயத்தில் குகையான தஹர ஆகாஸத்தில் விளங்குகிறவனை அறிகிறானோ அவன் பரமாத்மாவை அடைந்து அவனுடைய கல்யாண குணங்களில் திளைக்கிறான் -எதிர் நிகழ் கழிவு ஆகிய முக்காலங்களிலும் உலகுகள் பரமாத்மாவின் உடல் ஆகின்றன -அவன் பரமாகாசமான பரமபதத்தில் வசிக்கிறான்இப்படிப்பட்ட நூற்றுக் கணக்கான வேத வாக்யங்கள் அவனுடைய குணம் உருவம் இருப்பிடம் போன்றவற்றை விளக்குகின்றனஎந்தப் புருஷன் இதயத்தின் தஹர ஆகாசத்தில் உறைகிறானோ அவனே தூய்மையான மனத்தால் அறியப்படுபவன் -அவன் பொன்னிறமானவன் -அழிவற்றவன்இங்கு மநோ மயம் என்பது மிகத் தூய்மையான மனத்தால் மட்டும் அறியப்படக் கூடியவன் என்று பொருள்மின்னொளி படைத்த இப்புருஷன் காலங்கள் யாவற்றையும் பிறப்பிக்கிறான்

    வித்யுத புருஷா ததி–வித்யுத் வர்ணாத் புருஷாதித்யர்த்த
    நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா
    மத்யஸ்த நீல தோயதா வித்யுல்லேகேவ சோயம் தஹர புண்டரீக மத்யஸ்தா ஆகாச வர்த்திநீ வஹ்நி சிகா –
    ஸ்வ அனந்தர்நிஹித நீல தோயதா வித்யுதிவ ஆபாதி இத்யர்த்த —
    மநோ மய
    பிராண சரீர
    பா ரூப சத்ய காம ஸத்ய ஸங்கல்ப ஆகாசாத்மா சர்வ கர்மா சர்வ காம சர்வ கந்த சர்வ ரஸ சர்வம் இதம் அம்யாத்தோ
    அ வாக்ய அநாதா
    மஹா ரஜனம் வாச இத்யாத்யா
    அஸ்யே சாநா ஜகதோ விஷ்ணு பத்னீ
    ஹ்ரீஸ் சதே லஷ்மீஸ் ச பத்ந்யவ்
    தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய –
    ஷயம் அந்த மஸ்ய ரஜஸ பராகே
    யதேகம் அவ்யக்தம் அனந்த ரூபம் விஸ்வம் புராணம் தமஸஸ் பரஸ்தாத்
    யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமந்
    யோ அஸ்யாத் யக்ஷய பரமே வ்யோமந்
    ததேவ பூதம் ததுபவ்யமா இதம் தத் அக்ஷரே பரமே வ்யோமந்
    இத்யாதி ஸ்ருதி சத நிஸ்ஸிதோ அயமர்த்த –

    இதய கமலத்தில் உள்ள தஹர ஆகாசத்தில் விளங்கும் அக்னி ஜ்வாலையுள் நீல நிறமான பரமாத்மா விளங்குவதால் அது நீல மேகத்தைத் தன்னுள் கொண்ட மின்னல் போல் ஒளிர்கிறது
    தூய மனத்தால் மட்டும் அறியத் தக்கவன் -உயிர்களைத் தனக்கு உடலாக உடையவன் -நன்கு ஒளிரும் அமரத் திருமேனி யுடையவன் –
    தடைபடாத விருப்பங்களும் தடையற்ற செயல்பாடுகளும் யுடையவன் -நுண்ணியவன் -தானும் ஒளிர்ந்து மற்றைவற்றையும் ஒளி விடச்செய்யும் ஆகாசத்திற்கும் உள்ளுறைபவன் -உலகங்கள் யாவிலும் நடக்கும் செயல்களை நடத்துவிப்பவன் –
    தானே எல்லா விருப்பங்களுமானவன் –உலகியலின் அழுக்கு கலவாத வாசனைகளையும் சுவைகளையும் யுடையவன் -எல்லாவற்thamathதனது செல்வமாக உடைமையால் பேச்சற்று இருப்பவன் -அவனுடைய அழகிய உருவம் மஞ்சள் வெண்மை இந்திரகோபப் பூச்சி போன்ற செந்நிறம்
    அக்னி ஜ்வாலையின் வண்ணம் தாமரையின் நிறம் போன்ற வண்ணங்கள் பெற்று மின்னலை விஞ்சி ஒளிர்கிறது
    அவனுக்கு உலகின் ஈஸ்வரியான விஷ்ணு பத்னி இருக்கிறாள் -பூமி தேவியும் இலக்குமியும் அவனுக்கு மனைவிகள் ஆகின்றனர்

    —————-

    136–தத் விஷ்ணோ பரமம் பதம் -இதி விஷ்ணோ -பரஸ்ய ப்ரஹ்மண-பரமம் பதம் -சதா பஸ்யந்தி ஸூரய -இதி வசநாத்
    சர்வ கால தர்சனவந்த பரிபூர்ண ஞானா -கேசந சந்தி இதி ஞாயதே -யே ஸூரய –
    தே சதா பஸ்யந்தி -இதி வசன வ்யக்தி யே சதாஸ் யந்தி தே ஸூரய -இதி வா -உபய பக்ஷப் யநேக விதாநம்
    ந சம்பவதி இதி சேத் ந -அபிராப்தத்வாத் ஸர்வஸ்ய சர்வ விசிஷ்டம் பரமம் ஸ்தானம் விதீயதே-
    யதோக்தம் –
    தாது குணாஸ் து விதியேரந் அவி பாகாத் விதாநாத்தே ந சேதந்யேந சிஷ்டா இதி –
    யதா யதாக்நேயோஷ்ட கபால -இத்யாதிக் கர்ம விதேந கர்மனோ குணா நாஞ்ச அப்ராத்வேந ஸ்வே குண விசிஷ்டம் கர்ம விதீயதே-
    ததா அத்ராபி ஸூரிபி சதா த்ருஸ்யத்வேந விஷ்ணோ பர ஸ்தானம் பிராப்தம் ப்ரதிபாதயதி இதி ந கஸ்சித் விரோத —

    தத் விஷ்ணோ பரமம் பதம் -என்பதால் பர ப்ரஹ்மமான விஷ்ணுவின் மேலான இடம்
    சதா பஸ்யந்தி ஸூரய -என்கையால் -எல்லாக் காலங்களிலும் ஸேவித்துக் கொண்டு இருப்பவர்களாய் -குறைவற்ற ஞானமுடையவர்கள் எப்பொழுதும் இருக்கிறார்கள் என்பது பொருளாகிறது-
    எவர்கள் நித்யர்களோ அவர்கள் எப்பொழுதும் சேவிக்கிறார்கள் என்று வாக்கியத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் -இல்லாவிடில் எவர்கள் எப்பொழுதும் சேவிக்கிறார்களோ அவர்கள் நித்யர்கள் என்றும் கொள்ளலாம் –
    இவ்விறுவிதமாக பொருள் கொள்வதிலும் பல பொருட்களை ஒரே வாக்கியம் கூறுவதிலும் அநேக விதானம் என்ற குற்றம் ஏற்படாது -ஏன் எனில்
    எப்பொழுதும் சேவிக்கிறவர்களான நித்யர்களைக் கொண்ட பரமபதம் -என்று நித்யர்கள் சேவித்தலை பரமபதத்துக்கு அடை ஆக்கிக் கொள்ளலாம்
    பூர்வ மீமாம்ஸையிலும் ஒரே வாக்கியத்தில் ஒரு செயலையும் அதன் பல அங்கங்களையும் விவரித்து -அவை வேறு தொடர்புடைய வாக்கியங்களில் காணப்படாது இருந்தால் அதில் ஒன்றை மற்ற ஒன்றிற்கு அடை ஆக்கிக் கொள்ளலாம் -என விதித்து இருக்கிறது
    எடுத்துக்காட்டாக -எட்டு பானை உடைவுகளில் யதாக்கனயோ அஷ்ட கபால மந்திரத்தில் அந்த பாகத் தேவதையான அக்னியை 1-எட்டு கபாலங்களில் -2- hமந்திரத்தோடு வைக்கப்பட்ட புரோடாசத்தை -3- அமாவாஸ்யை பவ்ர்ணமாவாஸ்யைகளில் 4- யாகம் செய்ய வேண்டும் என விதிக்கிறது
    இதனால் பல பொருட்கள் ஒரே வாக்யத்தால் கிடைக்கிறது அவ்வாறே இங்கும் நித்யர்கள் இடைவிடாது நோக்கியவாறு விஷ்ணுவின் மேலான இடத்தைக் காட்டிக் கொடுக்கிறார்கள் என்று ஆவதால் விதிகளுக்கு முரண்படவில்லை –

    —————–

    137–கரண மந்த்ரா க்ரியமானாநுவாதி ந -ஸ்தோத்ர சஸ்த்ர ரூபா -ஜபாதி ஷு வி நியுக்தாஸ் ச ஸ்வார்த்தம்
    சர்வம் யதா வஸ்தித மேவ அபிராப்தம விருத்தம் ப்ராஹ்மணவது போத யந்தி இதிஹி வைதிகா ?
    (பிரகீத மந்த்ர ஸாத்ய குணி நிஷ்ட குணா பிதாநம் -ஸ்தோத்ரம்
    அப்ரகீத மந்த்ர ஸாத்ய குணி நிஷ்ட குணா பிதாநம் -சஸ்திரம்)
    விநி யுக்தார்த்த பிரகாசிநாம் ச தேவதாதி ஷு அபிராப்த விருத்த குணவிரேஷா ப்ரதிபாதனம் விநியோகாநு குணமேவ

    ஒரு செயலைக் கூறும் மந்திரங்கள் அச் செயலை அனுசரித்து -ஸ்தோத்திரம் சத்திரம் -என இருவகைப்படும் ஜபம் போன்றவற்றில் உபயோகிக்கப் பட்டு அவ்வவ்விடத்தில் சொல்லப்பட்டதாயும் மற்ற இடங்களில் சொல்லப்படாததாயும் -தன் pமுழுப்பொருளையும் உள்ளபடி காட்டி தேவையற்றதை விலக்கி தெளிவிப்பதும் சஸ்திரம் என வைதிகர்கள் கொள்கிறார்கள்
    இசையுடன் மந்திரத்தின் தேவதையை வர்ணிப்பது ஸ்தோத்ரம் -இசையின்றி உரைநடையில் கூறுதல் சத்திரம் -யாகங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தேவதைகள் முரண்பாடற்று இருக்கும் பண்புகள் இவற்றை விளக்குதல் -விநியோக விதி -எனப்படுகிறது –

    —————-

    138—நேயம் ஸ்ருதி -முக்த ஜன விஷயா-தேஷாம் சதா தர்சன அநு பத்தே -நாபி முக்த ப்ரவாஹ விஷயா -சதா பஸ்யந்தி இத்யேகைக
    கர்த்ரு விஷய தயா ப்ரதீதே -ஸ்ருதி பங்க பிரசங்காத் மந்த்ரார்த்த வாத கதா ஹ்யர்த்தா -கார்யபரேத்வே அபி சித்த யந்தி இத்யுக்தம் –
    கிம் புந சித்த வஸ்துந்யேவ தாத்பரியே வ்யுத்பத்தி சித்தே இதி சர்வம் உப பந்நம் —

    இந்த ஸ்ருதி முக்தர்களைப் பற்றியதல்ல -ஏன் எனில் அவர்களுக்கு எப்பொழுதும் ஸேவித்தல் ஏற்புடைத்தல்ல -அல்லது எப்பொழுதும் முக்தர்களால் தொடர்ந்து ஸேவிக்கப்பட்டுக் கொண்டிருத்தலும் அல்ல -எப்பொழுதும் பார்க்கிறார்கள் என்பதால் இடையீடின்றி நோக்குகிறார்கள் என்பதற்கு மாறுபடும் மந்த்ரங்கள் அர்த்த வாதங்களில் இருந்து ஒரு செயலுடன் தொடர்புடைய சொற்களையே அறிய முடியும் என்பது முன்னமேயே விளக்கப்பட்டு இருக்கிறது -இயற்கையாகவே அறியப்படும் -ஸித்த வஸ்துக்கள் -பொருள்களைச் செயல் வாக்கியங்கள் முடியாது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ –

    —————-

    139–நநு -சாத்ர–தத் விஷ்ணோ பரமம் பதம் -இதி பர ஸ்வரூபமேவ -பரமபத சப்தேந அபிதீயதே –
    ஸமஸ்த ஹேய ரஹிதம் -விஷ்ண வாக்யம் பரம் பதம் -இத்யாதி ஷு அவ்யதிரேக தர்சநாத்

    இங்கு பர நிலையே -தாழ்ச்சி ஏதுமற்ற விஷ்ணுவாகிய பரநிலை என்று விஷ்ணுவும் பரநிலையும் பிரிவின்றி ஒன்றாகவே படிக்கப்பட்டு இருக்கிறது -என்பீராயின்
    மைவம் –
    ஷயந்தமஸ்ய ரஜஸப் பராகே
    தத் அக்ஷரே பரமே வ்யோமந்
    யோஸ்யாத் யஷ பரமே வ்யோமந்
    யோ வேத நிஹிதம் குஹாயம் பரமே வ்யோமந் –இத்யாதி ஷு பர ஸ்தானஸ்யைவ தர்சநாத்
    விஷ்ணோ பரமம் பதம் -இதி வ்யாதிரேக நிர்த்தேசச் ச -விஷ்ண வாக்யம் பரமம் பதம் -இதி விசேஷணாத்
    அந்யதாபி பரம் பதம் வித்யதே இதி தேநைவ ஞாயதே ததிதம் பர ஸ்தானம் ஸூரிபி -சதா த்ருச்யத்வேந ப்ரதிபாத்யதே –

    அவ்வாறு அல்ல
    ராஜஸ குணம் நிறைந்த உலகிற்கு மேற்பட்ட நிலையில் பரமபதத்தில் உள்ள அவன் -அழிவற்ற பரமாகாசத்தில் அவன் வகிக்கிறான் –
    எவன் இதயக்குகையில் இருக்கும் பரமனை அறிகிறானோ அவன் பரமபதத்தை அடைகிறான் -என்று
    அவன் வசிக்கும் இடம் விளக்கப்பட்டு இருப்பதால் விஷ்ணு பரமபதம் என்ற இரண்டும் தனித்தனியானவை என்று விளங்குகிறது –
    விஷ்ணுவாகிய பரமம் பதம் என்பதால் அவ்வாறு மற்றொரு பரமபதம் இருக்கிறதா எனில் -இல்லை ஏன் எனில் வேறு எங்கணும் நித்யர்களால் பார்க்கப்படுத்தல் இல்லை

    ஏதத் யுக்தம் பவதி –
    க்வசித் பரம் ஸ்தானம் பரம பத சப்தேந ப்ரதிபாத்யதே –
    க்வசித் ப்ரக்ருதி வியுக்தாத்ம ஸ்வரூபம் –
    க்வசித் பகவத் ஸ்வரூபம் -தத் விஷ்ணோ பரம் இதி பர ஸ்தானம் –
    சர்க்க ஸ்தித் யந்த காலேஷு த்ரி தேவம் ஸம்ப்ரவர்த்ததே -குண ப்ரவ்ருஸ்யா பரமம் பதம் தஸ்யா குண மஹத் –
    இத் யத்ர ப்ரக்ருதி வியுக்தாத்ம ஸ்வரூபம் -ஸமஸ்த ஹேய குண ரஹிதம் விஷ்ண வாக்யம் பரமம் பதம் –
    இத் யத்ர பகவத் ஸ்வரூபம் -தரீண்யாப்யேதாநி பரம ப்ராப்யத்வேந பரம பத சப்தேந ப்ரதிபாத யந்தே –

    கதம் த்ரயாணாம் பரம ப்ராப்யத்வ மிதிசேத் -பகவத் ஸ்வரூபம் -பரம ப்ராப்யத்வாதேவ பரமம் பதம் இதர யோரபி –
    பகவத் பிராப்தி கர்பத்வாதேவ பரம பதத்வம் -ஸ்வர்க்கம் பந்த விநிர்முக்த ஆத்ம ஸ்வரூபா வாப்தி –
    பகவத் பிராப்தி கர்ப்ப இதி -த இமே சத்யா -காமா -அந்ருதா பிதாநா இதி பகவதோ குண கணஸ்ய
    திரோதாயகத்வேந அந்ருத சப்தேந ஸ்வ கர்மண ப்ரதிபாதநாத் –

    இதை விளக்குவோம்
    சில இடங்களில் மேம்பட்ட இடம் என்று பரம என்ற சொல்லினால் சொல்லப்படுவதும் -சில இடங்களில் உலகின் நீங்கிய முக்தர்கள் உறையும் இடம் என்றும் சில இடங்களில் இறைவன் உருவம் என்றும் பொருள் படும் அந்த விஷ்ணுவின் பரமபதம் என்ற சிறந்த இடம் -மூன்று குணங்கள் அற்ற பிறப்பு -நிலை -முடிவு விடுபட்ட – ஜீவர்களின் உருவமும் பரமபதம் ஆகும் –
    கடைசியாக எல்லாக் குற்றங்களில் நின்றும் நீங்கிய விஷ்ணுவினுடைய பரமம் பதம் என்னும் விஷ்ணு ஸ்வரூபம் என்று மூன்று வஸ்துக்களாகப் பரமபதம் விவரிக்கப் பட்டுள்ளது
    இப்படி மூன்று படிப்பட்டு இருந்தாலும் இறை உருவம் எல்லாவற்றினும் மேலானது -அடையத் தக்கது -என்பதில் ஐயமில்லை -அந்த பரமபதத்தை அடைகையில் eஜவான் மிகத் தூய்மை யடைந்து தூய்மையான ஆத்ம நிலையை யடைந்து பின்னும் அவனோடு ஒத்த உருவத்தையும் அடைகிறான் –
    ஆகவே இவை மூன்றும் ஒன்றாகவே அமையப்படுகின்றன
    இதுவரை அவனுடைய திருக் கல்யாண குணங்கள் இவனுடைய வினைகளால் மறைக்கப்பட்டு இருந்தன என்று இவனது வினைகள் திரைகளாயின என்று கூறப்படுகிறது

    அந்ருத ரூபா திரேதாநம் ஷேத்ரஞ்ஞ கர்மேதி கதம் அவகம்யதே இதி சேத்
    அவித்யா கர்ம சம்ஞ்ஞா அந்யாத்ரி தீயா சக்திரிஷ்யதி
    யயா ஷேத்ரஞ்ஞ சக்தி சாவேஷ்டிதா ந்ரூப சர்வகா
    சம்சாரதாபாநகிலாந் அவாப்நோத் யதி சந்த தாந்
    தயாதி ரோஹித த்வாச்ச–இத்யாதி ஸ்ரீ விஷ்ணு புராண வஸனாத்
    பர ஸ்தான பிராப்திரபி பகவத் பிராப்திகமைவ இதி ஸூ வியக்தம் –

    வினையால் ஏற்படும் இம் மறைப்பு ஆத்மாவிற்கு எப்படி ஏற்படுகிறது எனில் -வினையின் அடியாகப் பிறந்த அறியாமை மூன்றாவது சக்தியாகிறது -இதனால் பற்பல உடல்களில் உள்ள ஆத்மாக்களின் ஜீவ சக்தி மூடப்பட்டுள்ளது -இதனால் அவ்வுயிர்கள் பிறப்பு சிறப்புகளில் உழல்கின்றன என்ற ஸ்ரீ விஷ்ணு புராண வசனத்தின் படி பரமபதத்தைக் கிட்டிய பின் இத்திரை விலகுகிறது என்று தெளிவாகிறது-

    ஷயந்த மஸ்ய ரஜஸ பராகே இதி ரஜஸ் சப்தேந த்ரி குணாத்மிகா ப்ரக்ருதி ருச்யதே -கேவல்ய ரஜசோநவ ஸ்தநாத் இமாம்
    த்ரி குணாத் மிகாம் ப்ரக்ருதி மதிக்கரம்யா ஸ்திதேஸ்தாநீ ஷயந்தம்-வசந்தம் -இத்யர்த்த –
    அநேந த்ரி குணாத் மகாத் ஷேத்ரஞ்ஞஸ்யா போக்ய போதாத் வஸ்துந -பரஸ்த்தாத் விஷ்ணோ வாச ஸ்தானம் இதி கம்யாதே

    ரஜோ குணத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் அவனுடைய இடம் இருக்கிறது -என்று ரஜோ குணத்தால் முக்குணத் தொடர்பையும் காட்டி -அதை யுடைய பிரக்ருதியையும் காட்டி -இப்படி முக்குணத்தோடு வசிக்கும் ஜீவனைப் போல் அன்றி-அவற்றைக் கடந்து வசிப்பவன் என்று பொருள் படும் -அதனால் அந்த விஷ்ணுவின் இருப்பிடம் முக் குணமுடைய ஜீவனுடைய இருப்பிடத்தைக் காட்டிலும் வேறானது என்பது தெளிவு –
    வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸப் பரஸ்தாத் -இத் யத்ராபி தமஸ் சப்தேந
    சைவ ப்ரக்ருதி உச்யதே கேவலஸ்யத மச -அநவஸ்தாநா தேவ ரஜஸ பராகே ஷயந்தம்-இத்யநேந
    ஏக வாக்யத்வாத்-தமஸ பரஸ்தாத் வசந்தம் ஆதித்ய வர்ணம் புருஷம் அஹம் வேத இதயயமர்த்த அவகம்யதே –

    சத்யம் ஞானம் அநந்தம் பிரம்மா
    யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமந்
    தத் அஸ்ஹர் பரமே வ்யோமந்
    இதி தத் ஸ்தானம் அதிகார ரூபம் பரம வ்யோம சப்தாபிதேயமிதி ச கம்யதே
    அக்ஷரே பரமே வ்யோமந் –
    இத்யஸ்ய ஸ்தானஸ்ய அக்ஷரத்வ ஸ்ரவணாத் ஷர ரூபா -ஆதித்ய மண்டலாதய-ந பரம வ்யோம சப்தாபிதேயா
    யத்ர பூர்வே ஸாத்ய சாந்தி தேவா
    யத்ருஷய பிரதம ஜாயே புராணா
    இத்யாதி ஷு ச தா ஏவ ஸூரய இதி கம்யாதே
    தத் விப்ராசோ வி பந்யவோ ஜாக்ரு வாம்ச சமிந்ததே விஷ்ணோர்யப் பரமம் பதம் –
    இத்யத்ராபி விக்ராஸ மேதாவிந -விபந்யவ -ஸ்துதி ஸீலோ
    ஜாக்ரு வாம் ச -அஸ் கலித ஞானா தா ஏவ அஸ் கலிதா ஞானா தத் விஷ்ணோ பரமம் பதம்
    சதா ஸ்துவந்த ச பந்ததே -இத்யர்த்த –

    ஸூர்ய ஒளி படைத்தவனாயும் தமஸ்ஸுக்கு மேற்பட்டவனாயும் அழிவற்றவனாயும் இருக்கும் அப்புருஷனை நான் அறிகிறேன் -என்னும் இடத்தில்
    தமஸ் என்னும் சொல்லால் பிரகிருதி கூறப்பட்டது ஏன் எனில் தமஸ் மட்டும் தனித்து எங்கும் இருப்பதில்லை
    இந்த வாக்யத்துடன் ரஜஸ்ஸுக்கு மேற்பட்ட இடத்திலுள்ள வசிப்பிடம் என்பதும் ஒரே பொருளாகக் கொள்ளக் கூடியது
    தமஸ்ஸுக்கு மேற்பட்ட இடத்தில் வசிக்கும் கதிரொளி படைத்த புருஷனை நான் அறிகிறேன் என்று பொருள் தெளிவாகிறது –

    விகாரமற்ற தன்னொளி படைத்த அழிவற்ற ப்ரஹ்மம் என்று எவன் அறியப் படுகிறானோ அவன் பரமாகாசத்தில் மறைந்து வசிக்கிறான்
    அழிவற்ற பரமாகாசம் என்று எல்லாம் அவ்வவ்விடங்களில் விகாரமற்ற பரமாகாசம் என்ற பதத்தாலும் குறிக்கப்படுகிறது –
    அழிவற்ற பரமாகாசம் என்பதில் அழிவற்ற என்ற பதம் அடை கொண்டு இருப்பதால் அழியும் தன்மையுள்ள கட் புலனாகும் ஸூர்ய மண்டலம் பரமாகாசம் ஆகாது
    எங்கு முன்னரே தேவர் அடைந்து வணங்குகிறார்களோ எங்கு முன்னரே ஞானிகள் இருக்கிறார்களோ என்பதனால் அவ்விடம் நித்யர்களால் அடையப்படுகிறது எனப் பொருள் அந்த மனத்தால் அறிந்து நிலை பெற்ற அறிவுடைய மேதைகள் இருந்து ஸ்தோத்தரித்துக் கொண்டிருக்கும் தடையற்ற ஞானமுடையவர்கள் கூடியிருக்கும் விஷ்ணுவின் பரமபதம் என்பதாலும் மேற்கண்ட பொருளே குறிக்கப்படுகிறது –
    விப்ராஸ -மேதைகள்
    விபன்ய வ -ஸ்தோத்தரிப்பவர்கள்
    ஜாக்குவாரும் ஸ -தடையற்ற ஞானமுடையவர்கள் –
    இவர்கள் தடையற்ற ஞானமுடையவர்களாய் அந்த விஷ்ணுவின் பரமபதத்தில் இடையறாது ஸ்தோத்தரிக்கிறார்கள் என்பது பொருள் –

    ——————

    140–ஏதேஷாம் பரிஜன ஸ்தானதீநம்
    சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் -இத்யத்ர ஞான பல ஐஸ்வர்யாதி கல்யாண குண கணவத் பர ப்ரஹ்ம ஸ்வரூப அந்தர் பூதத்வாத் –
    சதேவ –ஏகமேவ அத்விதீயம் –இதி பிரம்மா அந்தர் பாவ –அவகம்யதே-
    ஏஷாம் அபி கல்யாண குணைக தேச தத்வாதேவ சதேவ சோம்யே இதமக்ர ஆஸீத் -இத்யத்ர இதம் இதி சப்தஸ்ய
    கர்ம வஸ்யா போக்த்ரு வர்க்க மிஸ்ர- தத் போக்ய பூத விக்ஷயத்வாச்ச- சதா பஸ்யந்தி ஸூரய-
    இதி சதா தர்சித்வேந ச தேஷாம் கர்ம வஸ்யாநந்தர் பாவாத் -அபஹத பாப்மா –இத்யாதி அபி பாஸே இத்யந்தேந
    ஸ்வ லீலோபகரண பூத த்ரிகுணாத்மகா ப்ரக்ருதி பிராகிருத ததஸ்ம்ஸ்ருஷ்ட புருஷ கதம் ஹேயா ஸ்வ பாவம்
    சர்வம் ப்ரதிஷித்ய சத்யகாம -இத்ய நேந ஸ்வ போக்கிய போக உபகரண ஜாதஸ்ய ஸர்வஸ்ய நித்யதா ப்ரதிபாதிதா–

    சத்யா காம யஸ்ய அ சவ்
    சத்ய காம–காம் வந்தே –இதி காமா –தேந பரேண ப்ரஹ்மணா ஸ்வ போக்ய ததுபகரணாதய-ஸ்வாபிமதா -யேகாம் வந்தே –
    தே சத்யா -நித்யா -இத்யர்த்த -அந் யஸ்ய லீலோபகரணஸ் யாபி வஸ்துந
    பிராமண சம்பந்த யோக்யத்வே சத்யபி விகராஸ் பதத்வேநா -அஸ்திரத்வாத் தத் விபரீதம் ஸ்திரத்வம் ஏஷாம் ஸத்ய பதேந உச்யதே
    ஸத்ய சங்கல்ப இதி ஏதேஷு போக்ய தத் உப கரணாது ஷு நித்யேஷு நிரதிசயேஷு ஆனந்தே ஷு சத்ஸ்வபி அபூர்வாணாம்
    அபரிமிதானாம் அர்த்ததானாம் அபி சங்கல்ப மாத்ரேண சித்தம் வததி-
    ஏஷாம் ச போக உபகரணாநாம் லீலா உபகரணாநாம் சேதநாநாம் அசேதநாநாம் ஸ்திராணாம் அஸ்திராணாம்
    சதத் சங்கல்பாதயாத் ஸ்வரூப ஸ்திதி பிரவிருத்தி பேதாதி சர்வம் வததி ஸத்ய சங்கல்ப இதி –

    இப்படிப்பட்ட குடி படைகளுடைய இருப்பிடங்கள் -சந்திரனை ஒத்த முகமுடையவனே -ஸ்வேதகேதுவே -முதலில் ஸத் ஆகவே இருந்தது -என்று ஞானம் பலம் ஐஸ்வர்யம் முதலான குணங்களைக் கொண்ட பர ப்ரஹ்மத்தில் உள் வைக்கப்பட்டு இருந்தது என்னும் பொருள் பட -ஒன்றே இருந்தது -இரண்டாவது இல்லை -என ப்ரஹ்மத்தில் ஒடுங்கி இருந்தது தெரிவிக்கப்பட்டது –
    இங்கும் நற் குணங்கள் அனைத்திற்கும் இருப்பிடமாவது போல் ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் -என்பதில் இதம் கட் புலனாகிற வினைகளுக்கு ஏற்ப பலன் துய்ப்பதான உலகைக் காட்டி அதற்கு எதிர் தட்டாக ஞானிகள் எப்பொழுதும் பார்க்கிறார்கள் என்பது இடைவிடாது நோக்கல் என்பதால் அவர்கள் வினைகட்க்கு ஆட்பட்டவர்கள் அல்ல என்பதையும்
    பாபங்கள் அற்ற தொடங்கி தாகமற்ற ஈறான தனது அலகிலா விளையாட்டிற்கு உறுப்பான முக் குணக் கலவையான உலகின் தாழ்ச்சி சிறிதும் தொடாத நிலையையும் விளக்கி –
    ஸத்ய காம -என்று அவனுடைய துய்ப்பிடம் அதன் உறுப்புக்கள் ஆகியவற்றின் நித்யத்வம் அழிவின்மை சொல்லப்படுகிறது –
    விரும்பும் பொருட்கள் அப்பரம் பொருளின் மகிழ்ச்சிக்கான பொருட்களும் -அதன் உறுப்புகளும் அவனது விருப்பத்திற்கு ஏற்ப அமைந்திருத்தல்
    மேலும் அவை அழிவற்றவை -மாறு பாடு அற்றவை -மற்றவர்களின் விருப்பத்திற்கான பொருள்களின் நிலையாமைக்கு எதிர்த்தட்டாய் இருத்தல் என்பது ஸத்யம் என்னும் பதத்தால் விளக்கப் படுகிறது –

    இப்படிப்பட்ட மனமகிழ் பொருள்களை அழிவற்றையாகவும் -எல்லையற்றவவையாயும் -எண்ணில் அடங்காமலும் இதுவரை இல்லாதவையாகவும் பற்பல பெயருடையதாகவும் தனது எண்ணத்தினாலேயே படைத்துக் கொள்ளும் திறமை கூறப்படுகிறது
    இந்த நுகர் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளுமான சேதன அசேதனப் பொருட்கள் நிலைத்து இருப்பவை அளிப்பவை யாவும் தனது எண்ணத்தினாலேயே படைத்து காத்து அழிக்கும் திறமையால் அழிவற்ற வினைத்திடபம் உடையவன் எனப்படுகிறான் –

    ——————-

    141—இதிஹாச புராணயோ வேத உப ப்ரும்ஹண யோஸ்ச அயமர்த்த உச்யதே
    தவ்து மேதாவினவ் த்ருஷ்ட்வா வேதேஷு பரிநிஷ்டிதவ் வேத உப ப்ரும்ஹணதயா பிரார்ப்பதே
    ஸ்ரீ ராமாயணே
    வ்யக்தமேஷ மஹா யோகி பரமாத்மா சனாதன அநாதிமத்ய நிதந மஹத பரமோ மஹான்
    தமசப் பரமோ தாதா சங்க சக்ர கதா தர -ஸ்ரீ வத்ச வஷாஸ் நித்ய ஸூரி அஜய்ய சாஸ்வதோ த்ருவ-என்றும்

    சரா நாநாவிதாஸ் சாபி தனுராயத விக்ரஹம் -அந்வகச் சந்த காகுத்ஸ்த்தம் சர்வே புருஷ விக்ரஹா –
    விவேச வைஷ்ணவம் தாம ச சரீர சஹானுக –ஸ்ரீ மத் வைஷ்ணவே புராணே –
    சமஸ்தா சக்த்யஸ் சைதா ந்ருப யத் ப்ரதிஷ்டிதா–தத் விஸ்வ ரூபா வை ரூப்யம் ரூபமந் யத்தரேர் மஹத் –
    மூர்த்தம் ப்ரஹ்ம மஹா பாக -சர்வ ப்ரஹ்ம மயோஹரி –
    நித்யைவைஷா ஜெகன் மாதா விஷ்ணோ ஸ்ரீர் அந பாயிநி
    யதா சர்வகதோ விஷ்ணு ததைவேயம் த்விஜோத்தம
    தேவத்வே தேவ தேவோயம் மனுஷ்யத்வே ச மானுஷீ –
    விஷ்ணோ தேஹானு ரூபாம்வை கரோத்யேஷா ஆத்மநஸ் தனும்-
    ஏகாந்தின சதா ப்ரஹ்ம த்யாயிநோ யோகிநோ ஹியே –
    தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யதவை பஸ்யந்தி ஸூரய —
    கலா முஹுர்த்தாதி மயஸ் ச கால -நயத்விபூதே பரிணாம ஹேது

    மஹா பாரதே ச
    திவ்யம் ஸ்தாநம் அஜாம் சா ப்ரமேயம் துர் விஜ்ஜேயம் சாகமைர்கம்ய மாத்யம்
    கச்ச ப்ரபோ ரக்ஷ சாஸ்மாந் ப்ரபந்நான் கல்பே கல்பே ஜாயமான ஸ்வ மூர்த்யா –
    காலஸ் சபசயதே தத்ர ந காலஸ் தத்ர வை பிரபு -இதி –

    இப் பொருள் வேதத்தை விளக்க வந்த -உப ப்ரும்ஹணங்களான -இதிஹாசங்களிலும் புராணங்களிலும் விளக்கப்பட்டுள்ளது
    வேதங்களில் நன்கு தேர்ந்தவர்களான -மேதைகளான -அவ் விருவர் -லவ குசர் -களையும் கண்டு வேதங்களில் உட் கருத்தை விளக்கும் பொருட்டு -ஸ்ரீ ஸீதா ராம சரிதங்களை -விரிவாகப் பாடினார்கள் -பலகாண்டம் -4-6-
    வேதம் மற்றும் உப ப்ரும்ஹணத்தின் ஆரம்பம் என்பது ஸ்ரீ ராமாயணம் –
    இந்த ஸ்ரீ ராமன் பெரிய யோகியாய் -பரம் பொருளாய் -என்றும் இருப்பவராய் -முதல் நடு முடிவு அற்றவராய் -பெரியவை யாவற்றிலும் பெரியவரானவர் –
    மூலப்ரக்ருதியைக் காட்டிலும் மேலானவர் -தாங்குபவர் சங்கு சக்கரம் இவற்றைத் தரித்தவர் – ஸ்ரீ வத்ஸம் என்னும் மறுவையும் இணை பிரியாத மஹா லஷ்மியையும் திரு மார்பில் உடையவர் –
    வெல்ல முடியாதவர் விகாரமற்றவர் நிலையானவர் -யுத்த காண்டம் –114-தனி ஸ்லோகம்
    பலவிதமான அம்புகளும் வில்லும் உருக் கொண்டு
    மஹா புருஷனான ககுத்ஸ்தனை பின் தொடர்ந்தன -உத்தர காண்டம்
    ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் -பத்த முக்த சேதனர்களின் சக்தி -அசேதனப் பொருட்களின் சக்தி வினைப்பயன் ஆகிய சக்திகள் யாவும் எவருடைய திரு மேனியில் நிலை பெற்று இருக்கின்றனவோ அத்திருவுரு மற்றவர்களின் நின்றும் வேறு பட்டதாயும் – உலகியல் தொடர்பு அற்றதாயும் -மிகப் பெரியதாகவும் உள்ளது
    அந்த உருவுடைய ப்ரஹ்ம்ம் எல்லா ஜீவன்களையும் தனது உடலாகக் கொண்டது -என்றென்றும் இருப்பவளும் உலகிற்கு எல்லாம் தாயானவளும் ஆகிய ஸ்ரீ அவனை விட்டு ஒரு பொழுதும் பிரிவதில்லை -அவனைப் போல் எங்கும் வியாபித்து உள்ளாள் -அவன் தேவனாக அவதரித்தால் இவளும் தேவ உடலுடனும் மனிதனாகில் மனித உடலுடனும் அவன் எடுக்கும் அவதாரங்களுக்கு ஏற்ப தானும் அவதரிக்கிறான்
    ஒரே மனமுடையவர்களும் யோகிகளும் இடைவிடாது ப்ரஹ்மத்தைத் த்யானித்துக் கொண்டு அந்த மேலான ஸ்தானத்தில் எப்பொழுதும் அவனையே -கண் அமையாது -நோக்கிக் கொண்டு இருக்கின்றனர்
    கலை முஹூர்த்தம் என்னும் கால அளவைகள் அவனுடைய ஏவலுக்கு உட்பட்டவை
    பரமபதத்தில் அவைகளுக்கு இருப்பு இல்லை -அவை மாறு பாட்டிற்குக் காரணமாகின்றன -அவை இவ்வுலகில் மட்டுமே உண்டு
    மஹா பாரதத்திலும் -இறைத் தன்மை பெற்றதும் மூப்பற்றதும் பிரமாண நூல்களால் அறிதற்கு அரியதுமான அந்த மேலான உலகிற்குச் செல்வீராக -எங்களைக் காப்பதற்குக் கல்பம் தோறும் அவதரிப்பீராக -இவ்வுலகில் பொருட்களை மாறுதல் அடைவிக்கும் -காலத்திற்கு அங்கு பரம பதத்தில் -எந்த சக்தியும் கிடையாது -என்றும் கூறப்பட்டு இருக்கிறது –

    ———————–

    142–பரஸ்ய ப்ரஹ்மணோ ரூபவத்வம் ஸூத்ரகாரச் ச வததி
    அந்தஸ் தத் தர்மோபதே ஸாத்-1-1-21-இதி
    யோ அசாவாதித்ய மண்டலாந்தர் வர்த்தி தப்தகார்த்த -ஸ்வர கிரிவரப்ரப —
    சஹஸ்ராம் ஸூ சத சஹஸ்ர கிரண
    கம்பீராம்ப ஸமுத்பூத -ஸ்ம்ருஷ்ட நாள ரவி கர விகசித புண்டரீக தல -அமலாய தேஷண-
    ஸூப்ரூ லலாட –
    ஸூ நாஸ-
    ஸூஸ்பிதாதர வித்ரும ஸூ ருசிர கோமல கண்ட கம்புக்ரீவ
    சமுந் நதாம் ச விலம்பி ஸூ ரூப திவ்ய கர்ணகி சலய
    பீந விருத்தாயத புஜ சாருதர ஆதாரம்ர கரதலானு ரக்தாங்கு லிபி -அலங்க்ருத –
    தனு மத்யே விசால வக்ஷஸ்தல சமா வி பக்த சர்வாங்க அநிர்தேஸ்ய திவ்ய ரூப சம்ஹ நத-
    ஸ் நிக்த வர்ண-பிரபுத்த புண்டரீக சாரூ சரண யுகள -ஸ்வ அநு ரூப பீதாம்பரதர
    அமல கிரீட குண்டல ஹார கௌஸ்துப கேயூர கடக நூபுரோதர பந்தநாத் யபரிமித ஆச்சர்ய அனந்த திவ்ய பூஷண
    சங்க சக்ர கதா சி சார்ங்க ஸ்ரீ வத்ச வனமாலா அலங்க்ருத அநவதிக அதிசய ஸுவ்ந்தர்யாஹ்ருத
    அசேஷ மாநோ த்ருஷ்ட்டி வ்ருத்தி லாவண்யாம் ருதபூரித அசேஷ சராசர பூத ஜாத
    அத்யத் புதாசிந்த்ய நித்ய யவ்வன -புஷப ஹாஸ ஸூ குமார புண்ய கந்த வாசித அநந்ததி கந்த ரால
    த்ரை லோக்யாக்ரமண ப்ரவ்ருத்த கம்பீர பாவ கருணானுராக மதுர லோசந அவலோகிதாஸ்ரித வர்க்க –
    புருஷவரோ தரீத் ருஸ்யதே —

    ச ச நிகில ஜகத் உதய விபவ லய லீல நிரஸ்த ஸமஸ்த ஹேய ஸமஸ்த கல்யாண குண நிதி –
    ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண பரமாத்மா பரம் ப்ரஹ்ம நாராயண இத்யவகம்யதே
    தத் தர்மோபதேசாத்
    ச ஏஷ ஸர்வேஷாம் லோகாநாம் ஈச-ஸர்வேஷாம் காமாநாம்
    ச ஏஷ சர்வேப்ய பாப் மப்ய உதித-இத்யாதி தர்சநாத்
    தஸ்யை தே குணா ?
    சர்வஸ்யா வசீ சர்வஸ்யேசாந
    அபஹத பாப்மா விஜர–இத்யாதி ஸத்யஸங்கல்ப இத்யந்தம்
    விஸ்வத பரமம் நித்யம் விஸ்வம் நாராயணம் ஹரிம்
    பதிம் விஸ்வஸ்யாத் மேஸ்வரம் -இத்யாதி வாக்யப் பிரதி பாதித–

    பர ப்ரஹ்மத்தின் உருவத்தை ஸூத்ர காரரும் விவரிக்கிறார்
    அந்தஸ் தர்மோபதேஸாத் –1-1-21—ஸூர்யனுக்கு உள்ளே இருப்பவன் -அந்த பரமாத்மாவிற்கே உரிய தன்மைகளைக் கொண்டு இருக்கிறான்
    ஸூர்ய மண்டலத்தில் இருப்பவன் எவன் எனில் -உருக்கி வார்த்த பொன் மலையின் ஒளி படைத்தவன் -நூறாயிரம் ஸூர்ய ஒளி படைத்தவன் -ஆழமான நீர் நிரம்பிய தடாகத்தில் பருத்த தண்டுள்ள -ஸூர்யனால் மலர்விக்கப்பட்ட பெரிய தாமரை மலரின் இதழ் போன்ற தூய்மையான கண்கள் உடையவன் –
    அழகிய புருவமுடைய நெற்றி -கூரிய மூக்கு -புன்னகை புரியும் பவளம் போன்ற இதழ்கள் -அழகிய மென்மையான கன்னங்கள் -சங்கை ஒத்த கழுத்து -உயர்ந்த தோள்கள் வரை தொங்கும் தளிர் போன்ற காதுகள் பருத்து உருண்டு நீண்ட தோள்கள் -மிக அழகிய விரல்களால் அலங்கரிக்கப் பட்ட கைகள் அழகிய இடை பரந்த மார்பு ஒத்த அளவுள்ள அவயவங்கள் -விவரிக்க இயலாத தெய்விக உரு ஒளி சிந்தும் வண்ணம் நன்கு மலர்ந்த தாமரை போன்ற திருவடிகள் -அவனுக்கே பொருந்தும் மஞ்சள் நிறப் பட்டாடை தூய்மையான தலைமுடி -குண்டலம் மாலை தோள்வளை -வளைகள் காற் சதங்கை -ஒட்டியாணம்-அளவிறந்த பற்பல அழகிய அணி கலன்கள்-சங்கு சக்கரம் கதை வாள் கௌஸ்துபம் வனமாலை இவைகளால் அலங்கரிக்கப்பட்டு -உயர்ந்த எழிலுடன் தன் அவயவங்களால் எல்லாருடைய பார்வைகளையும் கொள்ளை கொள்பவன்
    இவ் வெழில் அழகால் நிறைக்கப்பட்டு சேதன அசேதனப் பொருட்களின் மனங்களை நிறைப்பவன் -மிக அற்புதமான மனத்திற்கு எட்டாத அழிவற்ற இளமையுடைய அன்று அலர்ந்த பூவின் மென்மையுடைய -தன் மணத்தால் திசைகள் யாவையும் நிரப்பும் மணமுடையவன் -மூன்று உலகங்களையும் நிறைக்கும் கம்பீரம் உடையவன் -இரக்கம் அன்பு இனிமை நிரம்பிய பார்வைகளால் அடியார் கூட்டத்தைப் பார்ப்பவன் -ஆண் ஏறு -ஸூர்ய மண்டலத்தினு காணப்படுகிறான் –

    அவனே உலகுகளை ஆக்கி அளித்து அழித்துச் செய்யும் விளையாட்டுடையவன் -குற்றங்கள் அற்றவன் -நற் குணங்களின் குவை -மற்றப் பொருட்கள் யாவற்றன் நின்றும் வேறுபட்டவன் -பரமாத்மா பர ப்ரஹ்மம் நாராயணன் -என்று அறுதிப்படுகிறது –

    இப்பண்புகளால் குறிக்கப் படுபவன்-அவனே எல்லா உலகிற்கும் ஈசன் -எல்லா விருப்பங்களையும் அளிப்பவன் -எல்லோருடைய பாபங்களையும் நீக்குபவன் -என்று காட்டப்படுகிறது –

    இப்படிப்பட்ட இயல்புகள் உடையவன் -எல்லோரையும் தன் வசப்படுத்துவோன் -uயாவர்க்கும் ஈசன் -குற்றங்கள் -பாபங்கள் சிறிதும் அற்றவன் -மூப்பின்மை முதல் எண் குணங்கள் -உண்மையான வினைத்திட்பம் உடைமை ஈறான குணங்கள் -உலகுகட்க்கு மேலானவனாய் அழிவற்ற பெரியனான நாராயணன் -ஹரி -உலகுகள் யாவற்றிற்கும் தலைவனாய் அவற்றின் உட் புகுந்து நியமித்து அவற்றைத் தனது உடைமைகளாக உடையவன் என்று படு வாக்யங்களால் சொல்லப்படவோன் நாராயணனே –

    ————-

    143–வாக்ய காராஸ் சைதது ஸூ ஸ்பஷ்டமாஹ-
    ஹிரண்மய புருஷோத்ருச்யதே இதி -ப்ராஞ்ஞ சர்வ அந்தரஸ்யாத் -லோக காமே சோபதேசாத் ததோதயாத் பாப்மநாம் இத்யாதிந —

    வேத ரிஷியும் இதைத் தெளிவாக விளக்குகிறார் -பொன் நிறமான புருஷன் காணப்படுகிறான் -விதி என்னும் சிறந்த ஞானமுடைய இந்த எம்பெருமான் யாவற்றிலும் உள் நிறைந்து இருக்கிறான் -உலகம் அனைத்துக்கும் விருப்பங்களை நிறைவேற்றுகிறான் -அவன் பாபங்கள் அற்றவன் -என்றும் கூறியிருக்கிறார் –
    தஸ்ய ரூபஸ்ய அநித்யதாதி வாக்ய காரேனைவ ப்ரதிஷித்தம்
    ஸ்யாத் ரூபம் க்ருதக மனுக்ரஹார்த்தம் தச்சேதாநாநாம் ஐஸ்வர்யாத்-இதி உபாசிது–
    அநு க்ரஹாரத்தை பரம புருஷஸ்ய ரூப ஸங்க்ரஹ -இதி பூர்வ பக்ஷம் க்ருத்வா -ரூபம் வா அதீந்த்ரிய மந்தகரண ப்ரத்யக்ஷம்
    தந் நிர்தேசாத் -இதி யதா ஞானதயா-பரஸ்ய ப்ரஹ்மண ஸ்வரூப தயா நிர்தேசாத் ஸ்வரூப பூதா குணா –
    ததா இதமபி ரூபம் ஸ்ருத்யா ஸ்வரூபதயா நிர்தேசாத் ஸ்வரூப பூதம் இத்யர்த்தா —

    இப்படிப்பட்ட அவனுடைய உருவம் அழியக்கூடியது என்பதை வேத ரிஷியே -வாக்யகாரரே -மறுத்திருக்கிறார் -அவ் வுருவம் தன்னுடைய உபாஸகர்களை மகிழ்விப்பaதற்காக அவனால் -அந்த எம்பெருமானால் எடுத்துக் கொள்ளப் பட்டது -என்னும் முற் கூற்றிற்கு அவ்வுரு பொறிகளுக்கு எட்டாதது-என்று கூறி -ஞானத்தால் மட்டும் இப்படிப்பட்ட உரு இன்னோரன்ன குணங்கள் என்று அறுதியிட்டு இவ்விதமாகவே மறைகளில் விளக்கப்பட்டு இருக்கிற உருவமுள்ளது என்று பொருள்

    பாஷ்யகாரேண ஏதத் வ்யாக்யாதம்
    அஞ்ஞசைவ விஸ்வ ஸ்ருஜா ரூபம் -தத்து ந சஷுஷா க்ராஹ்யம் -மனசா த்வக் கலுஷேன சாதனாந்தரவதா க்ருஹ்யதே –
    ந சஷுஷா க்ருஹ்யதே -நாபி வாசா மனசாது விஸூத்தேந -இதி ஸ்ருதே-
    நஹி அ ரூபாயா தேவதாயா ரூபம் உபதிஸ்யதே-யதா பூதவாதி ஹி சாஸ்திரம் –
    மஹா ரஜனம் வாச –
    வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம்-ஆதித்ய வர்ணம் தமசப் பரஸ் ஸாத் -இதி ப்ரகாரனாந்தர நிர்தேசாஸ் ச ஸாக்ஷிண-இத்யாதிநா —

    உரையாசிரியரும் இதை விளக்குகிறார்உண்மையான உலகுகளைப் படைக்கும் அவனுடைய உருவம் மாயா ஜாலமல்ல -அது கட் புலனாகாது -நன்கு கற்று உணர்ந்த மனத்தால் மட்டுமே அறியப்படுகிறது -கண்ணால் காண முடியாதது -வாக்கினாலும் அறிய முடியாதது -தூய்மையான மனத்தால் மட்டும் அறியப்படும் -என்று மறையும் கூறுகிறது -இல்லாத தேவதைக்கு ஸாஸ்த்ரம் உருவத்தை விவரிக்கிறது என்பது தவறு -இல்லாத ஒன்றை ஸாஸ்த்ரம் எப்பொழுதும் கூறுவதில்லை -வண்ண ஆடையை அணிந்து இருப்பவன் -ப்ரக்ருதிக்கு மேற்பட்ட ஸூர்யனின் ஒளியுடைய அந்த புருஷனை மஹான்கள் இவ்வாறு அறிகிறார்கள் என்று பலவிடங்களில் அவனுடைய உருவுடைமை அறுதியிடப் பட்டிருப்பதே சாட்சிகள் ஆகும்
    ஹிரண்ய மய –
    இதி ரூப சாமான்யான் சந்த்ர முகவத் -நம யத்ர விகார மாதாய ப்ரயுஜ்யதே -அநாரப் யத்வாதாத் மந-இதி –
    யதா ஞானாதி கல்யாண குண அனந்த்ய நிர்தேசாத் அபரிமித கல்யாண குண விசிஷ்டம் பரம ப்ரஹமேத் யாவகம்யதே –
    ஏவம் -ஆதித்ய வர்ணம் -புருஷம் -இத்யாதி நிர்தேசாத்
    ஸ்வ அபிமத ஸ்வ அநு ரூப கல்யாண தம ரூப -பர ப்ரஹ்ம பூத -புருஷோத்தமோ -நாராயண இதி ஞாயதே –
    ததா அஸ்யேசாந –
    ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ன்யவ்
    சதா பஸ்யந்தி ஸூரய
    தமசப் பரஸ்தாத்
    ஷயந்தம் அஸ்ய ரஜஸப் பராகே —
    இத்யாதிநா பத்னி பரிஜன ஸ்தானாதீநம் நிர்தேசா தேவததை வசந்தீத் யவகம் யதே –
    யதாஹ பாஷ்யகார
    யதா பூதவாதி ஹி சாஸ்திரம்

    தங்க மயமான -என்பதில் மயம் -என்பது தங்கத்தாலானது என்று குறிப்பிடாது -மாறாக மதிமுகம் என்பதிலுள்ளது போல் சிறந்த ஒளி என்பதற்கு உவமிக்கப் பட்டு இருக்கிறது –
    ஞானம் முதலிய நற் குணங்களால் அளவற்றது என்று அறுதியிடப் படுவதால் அளவற்ற நற் குணங்களுடையது பர ப்ரஹ்மம் என்று வேதம் அறிவிக்கிறது -அவ்வாறே ஸூர்யனின் ஒளி -புருஷம் -என்று விளக்கி -அந்த உருவம் பர ப்ரஹ்மம் தனது விருப்பத்திற்கு என்றே கொள்ளப்பட்ட நற் குணங்களே நிறைந்த புருஷோத்தமனான நாராயணனின் உருவம் என்றும்-அவனே ஈசன் இலக்குமியை மனைவியாக உடையவன் -சான்றோர்கள் இவனை இடையறாது பார்க்கிறார்கள்
    தமஸ்ஸுக்கு மேற்பட்டவன் ரஜஸ்ஸுக்கு மேற்பட்ட இடத்தில் வசிப்பவன் என்றெல்லாம் மனைவி பரிவாரங்கள் போன்றவற்றையும் அறுதியிட்டு அவனது உருவுடைமையை உறுதி செய்கின்றன -உரை யாசிரியரும் முன்பு கூறப்பட்ட உருவுடைமையையே ஸாஸ்த்ரம் வலியுறுத்துகிறது -என்றார்

    இதி ஏதத் யுக்தம் பவதி–யதா
    சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -இதி நிர்தேசாத் பரமாத்ம ஸ்வரூபம்-ஸமஸ்த ஹேய ப்ரத்ய நீக –
    அநவதிக அனந்தைக தாநதயா அபரிச்சேதயதயா ச சகல இதர விலக்ஷணம் ததா
    யஸ் சர்வஞ்ஞ சர்வவித்
    பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே
    ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச
    தமேவ பாந்த மதுபாதி சர்வம் தஸ்ய பாஸா சர்வம் இதம் விபாதி –
    இத்யாதி நிர்தேசாத் நிரதிசய அசங்க்யேயாஸ் ச குணா சகல இதர விலக்ஷணா –
    ததா ஆதித்ய வர்ணம் -இத்யாதி நிர்தேசாத்
    ரூப பரிஜன ஸ்தாநாதயஸ் ச சகல இதர விலக்ஷண ஸ்வ அசாதாரணா அநிர்தேஸ்ய ஸ்வரூபம் ரூபஸ்வ பாவா இதி –

    இதை இவ்வாறு விளக்கலாம்
    எப்படி மாறுபாடாற்ற அழிவற்ற ஞானம் ப்ரஹ்மம் என்று அதனுடைய -திவ்யாத்ம ஸ்வரூபத்துடைய -தெய்விக ஆன்ம நிலை எல்லாத் தீய குணங்களுக்கும் எதிர்த் தட்டாய் விளங்குவது போலவே அளவற்ற ஆனந்தமுடைமை அளவின்மை -எல்லா நற் குணங்களும் பொருந்தி மற்றவர்களின் நின்றும் வேறுபட்டு இருத்தல் அவ்வாறே எல்லாம் அறிதல் எல்லாவற்றிக்கும் காரணமாதல் இயல்பாகவே அவனுடைய திறன் ஏனையவைகளுடைய அவற்றினின் நின்றும் மேம்பட்ட அறிவு செயல் இவற்றில் விளங்குகிறது என்று அறுதி இடப் படுகிறதோ அவ்வாறே அவனது தெய்விகத் திருமேனி ஸூர்யன் போன்ற வண்ணம் முதலியவற்றால் மற்றவைகளின் நின்றும் வேறு பட்டு அவனுக்கே உரித்தாய்-இன்னது என்று வரையறுக்க முடியாததாய் இருக்கும் –

    ———–

    144–வேதா பிரமாணம் சேத் வித்யர்த்த வாத மந்த்ர கதம்
    சர்வம் அபூர்வம் அவிருத்தம் அர்த்த ஜாதம் யதா வஸ்திதமேவ போதயந்தி
    ப்ராமாண்யம் ச வேதாநாம்
    ஒவ்த்பத்தி கஸ்தி சப்தஸ்யார்த்தேந சம்பந்த -இத்யுக்தம் ததா
    அக்னி ஜலாதீநாம் ஓவ்ஷ்ண்யாதி சக்தி யோக ஸ்வாபாவிக- யதா ச சஷுராதீநாம் இந்த்ரியானாம் புத்தி விசேஷ
    ஜனன சக்தி ஸ்வாபாவிகி ததா சப்தஸ் யாபி போதகத்வ சக்தி ஸ்வாபாவிகீ –

    ந ச ஹஸ்த சேஷ்டாதிவது சங்கேத மூலம்-சப்தஸ்ய போதகத்வம் இதி வக்தும் சக்யம்
    அநாத்யநுசந்தான விச்சேதேபி சங்கேதயித்ரு புருஷா ஞானாத் யாநி சங்கேத மூலாநி தானி சர்வானி சாஷாத்வா
    பரம் பரயாவா ஞாயந்தே –

    வேதங்கள் பிரமாணம் எனக் கொண்டால் விதி அர்த்தவாதம் மந்த்ரம் இவற்றால் விளக்கப்படும் புதிய பொருள்கள் நாம் கண்களால் காண்பது முதலான உய்த்துணரும் பொருள்களுக்கு மாறுபாடின்றி இருக்குமேயாகில் அவையும் கொள்ளத் தக்கவையேஏன் எனில்வேதங்கள் எப்பொழுதும் உண்மையான பொருள்களைத் விளக்கும் -அது அவ்வாறு இருந்தால் தான் உண்மையாகும் -அப்படியே தீ நீர் முதலியவற்றுக்கு வெப்பம் முதலியவை இயற்கையாக இருப்பது போல் கண் முதலான புலன்களுக்கு இயற்கையாகவே தன்னுடன் தொடர்புடைய பொருட்களுடைய நிலையை அறிவுறுத்தல் இயற்கையாகும்மேலும் கைச்செய்கை குறியீட்டு மூலமும் ஒரு பொருளை விளக்கும் திறன் உள்ளது -அவ்வாறே நெடு நாட்களாக வழக்கில் இருக்கும் சொற்களுக்கும் அதனதன் பொருளைத் தெரிவிக்கும் ஆற்றல் உண்டு
    ந ச தேவ தத்தாதி சப்தவத் கல்பயிதும் யுக்தம் -தேஷு ச சாஷாத் வா பரம்பரயா வா ஸங்கேதோ ஞாயதே –
    கவாதி சப்தாநாம் து அநாத் யநுஸந்தான விச்சேத அபி ஸங்கேதா ஞானாதேவ போதகதவை சக்தி ஸ்வாபாவிகீ —

    அத -அக்னீயாதீநாம் ஓவ்ஷ்னாதி சக்திவத் இந்த்ரியானாம் போதகத்வ சக்தி வச்ச சப்தஸ் யாபி போதகத்வ சக்தி -ஆச்ரயணீயா

    தொடர்ந்து தேவதத்தன் போன்ற பெயரைக் குறிக்கும் சொற்கள் நெடுநாளாக வழி வழியாக ஒரு குறிப்பிட்ட பெயராகவே வழங்கப்பட்டு வருகின்றன -அவ்வாறே பசு முதலிய சொற்கள் வழக்கில் ஒரு குறிப்பிட்ட பொருளையே சுட்டிக் காட்டுகின்றன-அதனால் தீக்கு வெப்பம் புலன்களுக்கு தத்தம் அறிவு போன்று சொற்களுக்கும் பொருளை அறிவித்த்ல் தன்னடையே உண்டு என்றே கொள்ள வேண்டும்
    ந னு ச
    இந்த்ரியவத்-சப்தஸ் யாபி போதகத்வம் ஸ்வா பாவிகம் சம்பந்த கிரஹணம் போதகத்வாய கிமதி அபேக்ஷதே ?
    லிங்க வத் இத்யுச்யதே-
    யதா ஞாத ஸம்பந்த நியம் தூமாதி அக்னியாதி விஞ்ஞான ஜனகம்-
    ததா ஞாத ஸம்பந்த நியம சப்தோபி அர்த்த விசேஷ புத்தி ஜனக –
    ஏவம் தர்ஹி சப்தோபி அர்த்த விசேஷஸ்யா லிங்க மிதி அனுமானமேவ ஸ்யாத் -நைவம் சப்தார்த்தயோ –
    ஸம்பந்த போத்ய போதக பாவ ஏவ தூமாதீநா து சம்பந்தாந்தரமிதி –
    தஸ்ய ஸம்பந்தஸ்ய ஞான த்வாரேண புத்தி ஜனகத்வமிதி விசேஷ
    ஏவம் க்ருஹீத சம்பந்தஸ்ய போதகத்வ தர்ஸனாத் அனாதி யநுசந்தான விச்சேதே பி ஸங்கேதா
    ஞானாத் போதகத்வ சக்தி ரேவேதி நிஸ்ஸீயதே —

    தொடர்ந்து தேவதத்தன் போன்ற பெயரைக் குறிக்கும் சொற்கள் நெடுநாளாக வழி வழியாக ஒரு குறிப்பிட்ட பெயராகவே வழங்கப்பட்டு வருகின்றன -அவ்வாறே பசு முதலிய சொற்கள் வழக்கில் ஒரு குறிப்பிட்ட பொருளையே சுட்டிக் காட்டுகின்றன-
    அதனால் தீக்கு வெப்பம் புலன்களுக்கு தத்தம் அறிவு போன்று சொற்களுக்கும் பொருளை அறிவித்தல் தன்னடையே உண்டு என்றே கொள்ள வேண்டும்

    ———

    145–ஏவம் போதகாநம் -பத சங்காதாநாம் சம்சர்க்க-விசேஷ போதகத்வேந-வாக்ய சப்தாபிதேயநாம் உச்சாரண க்ரமோ
    யத்ர புருஷ புத்தி பூர்வக
    தே பவ்ருஷேயா –சப்தா இத் யுச்யந்தே -யத்ர து உச்சாரண க்ரம பூர்வ பூர்வ உச்சாரண க்ரம ஜெனித ஸம்ஸ்கார பூர்வக
    ஸர்வதா அபவ்ருஷேயா தே ச வேதா இத் யுச்யந்தே-
    ஏததேவ வேதாநாம் அபவ்ருஷே யத்வம் நித்யத்வம் ச யத் பூர்வ பூர்வ உச்சாரண க்ரம ஜெனித ஸம்ஸ்காரேண
    தமேவ க்ரம விசேஷம் ஸ்ம்ருத்வா தேநைவ க்ரமேண உச்சார்யா மாணத்வம் –

    பொருள் கூறல் -சொற்களின் கட்டமைப்பு -பொருள் தொடர்பு -சொல்லப்படும் முறை -இவைகளால் சிறப்புடையது -ஒருவரால் அமைக்கப்படும் வாக்யம் உச்சரிப்பு முறை முன்னோர் வழியாக வழங்கி வருதல் -ஒருவரால் இயற்றப்படாமை -எப்பொழுதும் ஒரு புருஷனால் ஆக்கப்படாது இருத்தல் போன்ற சிறப்புடையவை வேதங்கள் எனப்படுகின்றன –

    இவ்வாறு வேதங்கள் ஒரு மனிதரால் ஆக்கப் படாமையும் -என்றும் நிலையாக இருத்தலும் -முன்னோர் சொன்ன முறை தவறாமல் கேட்டு உச்சரித்தல் -மாறாத சொற் கட்டமைப்பு போன்ற நியமங்களுக்கு உட்பட்டே கற்கப்படுவன
    தேச ஆனு பூர்வ விசேஷேண ஸம்ஸ்திதா அக்ஷர ராசயோ வேதா -ரிக் யஜுஸ் சாம அதர்வ பேத பிந்நா –
    அநந்தாஸ் சாகா வர்தந்தே-தேச வித்யர்த்தவாத மந்த்ர ரூபா வேதா பர ப்ரஹ்ம பூத நாராயண ஸ்வரூபம்
    தத் ஆராதனபிரகாரம் ஆராதிதாத் பல விசேஷம் ச போதயந்தி
    பரம புருஷவத் தத் ஸ்வரூப தத் ஆராதந -தத் பல ஞாபக வேதாக்ய சப்த ஜாதம் நித்யமேவ –
    வேதாநாம் அந்நதத்வாத் துரவகாஹத் வாச்ச பரம புருஷ நியுக்தா பரமர்ஷய கல்பே கல்பே நிகில ஜகத் உபகாரார்த்தம்
    வேதார்த்தம் ஸ்ம்ருத்வா வித்யர்த்தவாத மந்த்ர மூலாநி தர்ம சாஸ்த்ராணி இதிஹாச புராணாநி ச சக்ரு
    லௌகிகாச்ச சப்தா வேதராசே உத்ருத்யைவ தத் தத் அர்த்த விசேஷ நாம தயா
    பூர்வ வத் ப்ரயுக்தா பாரம்பர்யேண ப்ரயுஜ்யந்தே —

    நநுச வைதிகா ஏவ சர்வே வாசகா சப்தாஸ் சேத் -சந்தஸ்யேவம் பாஷாயாமேவம் -இதி லக்ஷண பேத கதம் உப்பத்யதே
    உச்யதே தேஷாமேவ சப்தாநாம் தஸ்யாமேவ ஆநு பூர்வ்யாம் வர்த்தமாநாநாம் ததைவ பிரயோக
    அந் யத்ர ப்ரயுச்யமாநா நாமந்யதேதி நகஸ் சித்தோஷ–

    அவைகள் இச்சிறப்பினால் முதலில் இருந்தபடியே உள்ளன -ருக் யஜுஸ் ஸாம அதர்வண என்ற பிரிவுகளோடு எண்ணிறந்த கிளைகளை உடையவனாய் விளங்குகின்றன -அவைகள் விதி அர்த்தவாதம் மந்திரம் ஆகிய வடிவில் இருக்கின்றன -அவைகள் பரப் ப்ரஹ்மமான நாராயணனின் தெய்விக ஆன்ம நிலை -திவ்ய ஆத்ம ஸ்வரூபம் -தெய்வீகத் திருமேனி -திவ்ய மங்கள விக்ரஹம் -அவற்றை ஆராதிக்கும் முறை அதனால் கிடைக்கும் பலன் இவற்றை அறிவுறுத்துகின்றன –

    பரம புருஷன் -பெருமாள் -அவன் நிலை அவனுடைய ஆராதனம் – அதன் பலன் இவைகளை விளக்கும் வேதச் சொற்களின் கூட்டம் என்றும் அழியாதவை

    வேதங்கள் அளவற்றவையாகவும் ஸுலபமாகப் பொருள் கொள்ள அரியவையாகவும் -பரம புருஷனால் செய்யப்பட்டதாகவும் -ரிஷிகளால் காணப்பட்டதாயும் -கல்பங்கள் தோறும் உலகு அனைத்திற்கும் நலன் கருதி நினைக்கப்பட்டு விதி அர்த்தவாதம் மந்திரம் மூலமாகவும் தர்ம ஸாஸ்ரங்களாயும் இதிஹாஸ புராணங்களாகவும் செய்யப்படுகின்றன

    உலகியல் சொற்கள் வேதச் சொற்களில் இருந்தும் எடுக்கப்பட்டு அதன் பொருள் சிறப்பால் முன்பு போல பரம்பரையாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன –
    அவ்வாறு எனில் சொற்கள் யாவும் வேதச் சொற்களா எனில் -இல்லை -தன் வரிசை ஒழுங்கு மாறாதது வேதம் உலகியல் மொழி அவ்வாறு அல்லாதது என்று வேறு படுத்தப் படுகிறது -ஆனால் சொற்களின் பொருள்களில் சிறிதே வேறுlபாடுள்ளது என்று இலக்கண நூலில் விளக்கப் பட்டுள்ளது -ஆகவே அச் சொற்களும் பொருள் உள்ளவை என்று கொள்வதில் குற்றம் ஏதும் இல்லை –

    ——–

    146–ஏவம் இதிஹாச புராண தர்ம சாஸ்த்ர உப ப்ரும்ஹித சாங்க வேத வேத்ய-பர ப்ரஹ்ம பூத நாராயண –
    நிகில ஹேய ப்ரத்ய நீக -சகல இதர விலக்ஷண –
    அபரிச்சின்ன நாநாந்தைக ஸ்வரூப -ஸ்வாபாவிக அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குணாகர-
    ஸ்வ சங்கல்ப அநுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேத-சிதசித் வஸ்து ஜாத அபரிச்சேத்ய ஸ்வரூப ஸ்வபாவ –
    அனந்த மஹா விபூதி நாநாவித அனந்த சேதந அசேதநாத்மக பிரபஞ்ச லீலோபகரண இதி ப்ரதிபாதிதம்

    புருஷனால் செய்யப்பட்டதாகவும் -ரிஷிகளால் காணப்பட்டதாயும் -கல்பங்கள் தோறும் உலகு அனைத்திற்கும் நலன் கருதி நினைக்கப்பட்டு விதி அர்த்தவாதம் மந்திரம் மூலமாகவும் தர்ம ஸாஸ்ரங்களாயும் இதிஹாஸ புராணங்களாகவும் செய்யப்படுகின்றன

    உலகியல் சொற்கள் வேதச் சொற்களில் இருந்தும் எடுக்கப்பட்டு அதன் பொருள் சிறப்பால் முன்பு போல பரம்பரையாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன –
    அவ்வாறு எனில் சொற்கள் யாவும் வேதச் சொற்களா எனில் -இல்லை -தன் வரிசை ஒழுங்கு மாறாதது வேதம் உலகியல் மொழி அவ்வாறு அல்லாதது என்று வேறு படுத்தப் படுகிறது -ஆனால் சொற்களின் பொருள்களில் சிறிதே வேறுlபாடுள்ளது என்று இலக்கண நூலில் விளக்கப் பட்டுள்ளது -ஆகவே அச் சொற்களும் பொருள் உள்ளவை என்று கொள்வதில் குற்றம் ஏதும் இல்லை –

    சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –
    ஐததாத்ம்யம் இதம் சர்வம்
    தத்வமஸி ஸ்வேத கேதோ
    ஏநமேக வதந்யக்நிம் மாருதோந்யா பிரஜா பதிம்
    இந்திரமேகே பரே ப்ராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம்
    ஜ்யோதிம்ஷி ஸூக்லாநி ச யாநி லோகே த்ரயோ லோகா லோக பாலா த்ரயீ ச
    த்ரயோக்நயஸ் சாஹு தயஸ் ச பஞ்ச சர்வே தேவா தேவகீ புத்ர ஏவ
    த்வம் யஜ்ஞ த்வம் வஷட்கார த்வம் வ ஓங்கார -பரந்தப
    ரிததாமா வஸூ -பூர்வ வஸூநாம் த்வம் பிரஜாபதி –
    ஜகாத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யம் தே வஸூதா தலம்
    அக்னி கோப பிரசாதஸ் தே ஸோம
    ஸ்ரீ வத்ச லக்ஷண
    ஜ்யோதீம் ஷி விஷ்ணு புவநா நி விஷ்ணு வநாநி விஷ்ணு
    கிரயோதிசாஸ் ச நத்ய சமுத்ராஸ் ச ச ஏவ சர்வம் யதஸ்தியந் நாஸ்தி ச விப்ரவர்ய –இத்யாதி
    சாமாநாதி கரண்ய பிரயோகேஷு சர்வை சப்தை -சர்வ சரீர தயா சர்வ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அபிதீயதே இதி ச யுக்தம் –

    இவை யாவும் ப்ரஹ்மத்தால் செய்யப்பட்டவை- இவையாவும் அவனை ஆத்மாவாக உடையது
    நீயும் -ஸ்வேத கேதுவே -அதுவே -சில இடங்களில் வேதத்தில் இவனை அக்னி என்றும் காற்று என்றும் -உயிர்களுக்குத் தலைவன் என்றும்
    இந்திரன் என்றும்
    உயிர் என்றும்
    நிலையான ப்ரஹ்மம் என்றும் கூறுகின்றன –
    உபநிஷத்தில் -இவ்வுலகில் ஒளிரும் மூன்று ஒளிகளும் மூன்று லோக பாலகர்களும் மூன்று வேதங்களும் முத்தீயும் ஐந்து ஆஹுதிகளும் தேவர்கள் அனைவரும் தேவகியின் மகனே
    கூடாரை வெல்லும் நீரே யஜ்ஜம்-வஷட்காரம் ஓங்காரம் யாவும் ஆகிறீர்-உலகின் தலைவர் என்பவர்களான வஸூ க்களில் ருததாமா என்பவர் ஆகிறீர்
    உலகு அனைத்துக்கும் உமக்கு உடல் -இங்கு நிலைத்து இருப்பவை யாவும் உமக்கு அடிமை -உமது சினம் தீ ஆகிறது -மகிழ்ச்சி ஸ்ரீ வத்ஸம் போன்ற மறு மறுவுடைய சந்த்ர ஆகிறது -ஒளிகள் யாவும் உலகுகள் யாவும் வனங்கள் யாவும் மலைகள் யாவும் விஷ்ணுவே நதிகளும் கடலும்-இருப்பவை இல்லாதவை யாவும்விஷ்ணுவே -என அந்தணரின் சிறந்தவரே அறிவீராக –
    இவ்வாறு ஸாமாநாதி கரணத்தால் பொருட்கள் யாவையும் சொற்கள் யாவையும் தனக்கு அடிமைப்பட்ட- பிரிவற்ற உடலாக ப்ரஹ்மம் கொண்டுள்ளது என்பதையே விளக்குகிறது -எனக் கொள்வதே சரியான பொருட்கோளாகும் –

    ஸத்ய ஸங்கல்பம் பரம் ப்ரஹ்ம ஸ்வயமேவ
    பஹு பிரகாரம் ஸ்யாம் –இதி சங்கல்ப்ய அசித் சமஷ்டி ரூப மஹாபூத ஸூஷ்மம் வஸ்து போக்த்ரு வர்க்க ஸமூஹம்
    ச ஸ்வஸ்மிந் ப்ரலீநம் ஸ்வயமேவ விபஜ்ய-தஸ்மாத் பூத ஸூஷ்மாத் வஸ்துந மஹா பூதாநி ஸ்ருஷ்ட்வா தேஷு
    போக்த்ரு வர்க்கமாத்ம தயா பிரவேஸ்ய-தை-சித் அதிஷ்டிதை–மஹா பூதை-அந்யோந்ய ஸம்ஸ்ருஷ்டை –
    க்ருத்ஸ்னம் ஜகத் விதாய-ஸ்வயமபி ஸர்வஸ்ய ஆத்ம தயா பிரவிஸ்ய பரமாத்மத்வேந அவஸ்திதம்
    சர்வ சரீரம் பஹு பிரகாரம் அதிஷ்டதே –
    யதிதம் மஹா பூத ஸூஷ்மம் வஸ்து -ததேவ ப்ரக்ருதி சப்தேந அபிதீயதே -போக்த்ரு வர்க்க ஸமூஹ ஏவ புருஷ சப்தேந உச்யதே
    தவ் ச பிரகிருதி -புருஷவ் பரமாத்ம சரீர தயா பரமாத்ம பிரகார பூதவ் தத் பிரகார -பரமாத்மவை ப்ரக்ருதி புருஷ சப்தாபிதேய
    சோ காம யத பஹுஸ் யாம் பிரஜா யேயேதி –தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநு ப்ராவிசத்–
    தத் அநு பிரவிஸ்ய –சச்ச த்யச்சா பவத்
    நிருக்தஞ்சா நிருக்தஞ்ச நிலயனஞ்ச அநிலயனஞ்ச விஞ்ஞானம் சா விஞ்ஞானம் ச சத்யஞ்சா ந்ருதம் ச சத்யம் அபவது –
    இதி பூர்வ யுக்தம் சர்வம் அநயைவ ஸ்ருத்யா வ்யக்தம் –

    நினைத்தவைகளைச் சாதிக்க வல்ல பர ப்ரஹ்மம் தானே பலவாக ஆகக் கடவேன் என எண்ணி அசேதனப் பொருள்களின் மூலப்பிரக்ருதித் திரளும் சேதனக் கூட்டங்களையம் தன்னிடம் லயித்து இருந்த கட் புலனாகாத நிலையின் நின்றும் பிரித்து -பஞ்ச மஹா பூதங்களையும் ஐந்தொழில் முறையால் கலந்து அதனால் உலகில் காணப்படும் அசேதனப் பொருட்களைப் படைத்து-ஆத்மாவை அவைகளின் வினைக்கு ஏற்ப அவற்றுள் புக விட்டு தானும் அவையவையிலும் உள்ளுயிராகப் புகுந்து நிலைத்து இருப்பதால் இவ்வுலகு அவனுக்கு உடலாகிறது –

    இங்கு மஹா பூதம் என்னும் சொல் மூலப் பிரக்ருதி என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது -புருஷன் அல்லது ஆத்மா -போக்த்ரு வர்க்க ஸமூஹம் -நுகர்வோரின் திரள் என்ற பொருளில் உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது –
    அதனால் ப்ரக்ருதி புருஷர்கள் பரமாத்மாவின் உடலாய் -அவனிடமிருந்து பிரிந்த நிலை அற்றவர்களாய் உள்ளனர்
    என்பதால் பரமாத்மாவும் அச் சொற்களால் காட்டப்படுகிறான் -அவன் படைக்க விரும்பினான் -பல உயிர்களாக ஆனான் – அவன் படைத்தான் அவன் உயிர்களை நுழைப்பித்தான் -தானும் நுழைந்தான் உயிர் உள்ளதாகவும் அல்லாதாகவும் ஆனான் -சுட்டிக் காட்டப் படுவதும் அல்லாததுமாக ஆனான் -தாங்கப்படுவதும் தாங்குவோனாகவும் ஆனான் -அறிவுள்ளதும் அல்லாததுமாக ஆனான் -மாறுபாடு அற்றதாகவும் aமாறுபாடு உடையதாகவும் ஆனான் -தான் மாறுபாடு அடையாது இருந்தான் -என்ற
    மறை வாக்கியங்கள் முன்பு கூறிய அனைத்தையும் அறுதியிடுகின்றன

    ஸோகாமயத -ஸ -அகாம -அதி -அவன் படைக்க விரும்பினான்
    ஸச்ச த்யச்ச அபவது -ஜீவனுள்ளதும் அல்லதுமாக ஆனான்
    ஸத்யம் -விகாரமடையாத ஆத்மா
    அன்ருதம் -ஒரே நிலையற்ற உடல்

    ——–

    147–ப்ரஹ்ம ப்ராப்த் யுபாயஸ் ச
    சாஸ்த்ராதி கத -தத்வ ஞான பூர்வக -ஸ்வ கர்ம அநு க்ரஹீத -பக்தி நிஷ்டா ஸாத்ய
    அநவதிக அதிசய ப்ரிய விசததம ப்ரத்யக்ஷதா பந்ந -அநு த்யான ரூப -பர பக்தி ரேவ இத் யுக்தம் –
    பக்தி சப்தஸ் ச ப்ரீதி விசேஷே வர்த்ததே -ப்ரீதிஸ் ச ஞான விசேஷ ஏவ —

    நநு ச ஸூகம் ப்ரீதி–இத்ய நர்த்தாந்தரம்–ஸூகம் ச ஞான விசேஷ ஸாத்யம் பதார்த்தாந்தரம் இதி லௌகிகா–
    நைவம் யேந ஞான விசேஷேண தத் ஸாத்யம் இத் யுச்யதே -ச ஏவ ஞான விசேஷ ஸூகம் –

    ப்ரஹ்மத்தை அடையும் நெறி –ஸாஸ்த்ரங்களைக் கற்று அதனடியாகப் பிறந்த ஞானத்தால் தன் கடைமைகளைச் சரிவரச் செய்து -பக்தி மேலீட்டால் கிடைக்கும் எல்லையற்ற அன்பினால் மிகத் தெளிந்து நேரேயே காண்பது போன்று மனத்தின் இடையறா நினைவு பரபக்தி எனப்படும்
    பக்தி எனும் சொல் சிறந்த அன்பு -காதல் -என்பதைக் குறிக்கும்-அன்பு என்பது மனத்தின் அறிவின் சிறப்பே

    மாறாக இன்பம் விருப்பம் என்னும் சொற்களை ஒன்றாகக் கொள்ளலாம் -இங்கு இன்பம் என்பது மனத்தின் நிலையால் மட்டும் அறியப்படுவது என்பது உலகியலில் காணலாம் -அப்படிப்பட்ட அறிவினால் ஏற்படுiம் இன்ப நிலையே ஸுகம் –

    ஏதத் யுக்தம் பவதி
    விஷய ஞானாநி ஸூக துக்க மத்யஸ்த சாதாரணாநி தாநி ச விஷயாதீநா விசேஷாணி ததா பவந்தி –
    யேந விஷய விசேஷேண விசேஷிதம் ஞானம் ஸூகஸ்யா –ஜனகம் இத்யபிமதம் –
    தத் விஷய ஞான மேவ ஸூகம் -தத் இதிரேகி பதார்த்தந்தரம் நோப லப்யதே –
    தேநைவ ஸூகித்வ வ்யவஹாரோப பத்தேஸ் ச –

    ஏவம் வித ஸூக ரூப ஞானஸ்யா விசேஷ கத்வம் -ப்ரஹ்ம -வ்யதிரிக்தஸ்ய வஸ்து ந சாதிசயம் அஸ்திரம் –
    சப்ரஹ்மணஸ் து அநவதிக அதிசயம் ஸ்திரம் ச இதி ஆனந்தே ப்ரஹ்ம -இத் யுச்யதே
    விஷயா யத் தத்வத் ஞானஸ்ய ஸூக ரூப தயா ப்ரஹ்ம ஏவ ஸூகம்-

    ததிதமாஹ
    ரஸோவை ச -ரசம் ஹ்யே வாயம் லப்த்வாநந்தீ பவதி -இதி ப்ரஹ்ம ஏவ ஸூகம் இதி ப்ரஹ்ம லப்த்வா ஸூகீ பவதீத் யர்த்த –
    பரம புருஷ ஸ்வேநைவ ஸ்வம் அநவதிக அதிசய ஸூகஸ் சந் -பரஸ்யாபி ஸூகம் பவதி ஸூக ரூபாத்வா விசேஷாத்
    ப்ரஹ்ம யஸ்ய ஞான விஷயோ பவதி ச ஸூகீ பவதி இத்யர்த்த —

    ததேவம் பரஸ்ய ப்ரஹ்மண
    அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குணாகரஸ்ய நிரவத்யஸ்ய அனந்த மஹா விபூதே
    அநவதிக அதிசய ஸுவ்சீல்ய வாத்சல்ய ஸுவ்ந்தர்ய ஜலதே சர்வ சேஷித்வாத் ஆத்மந –
    சேஷத்வாத் பிரதிசம்பந்தி தயா அநு சந்தீயமானம் அநவதிக அதிசய ப்ரீதி விஷயம்
    சத் பரம் ப்ரஹ்ம ஏவ ஏந மாத்மாநம் ப்ராபயதி–இதி –

    இதை விளக்குவோம் -பொருள்களால் கிடைக்கும் அறிவு மகிழ்ச்சி துயரம்
    இரண்டுக்கும் இடைப்பட்டது
    இரண்டும் அற்றது -என்று பிரிக்கப் படுகிறது –
    அது அப்பொருட்களின் நிலையைப் பொறுத்து மனத்தில் ஏற்படும் உணர்வு –
    எந்தப் பொருளால் மனத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறதோ அப்பொருள் மேல் விருப்பமும் பிறக்கிறது -அந்த விருப்பமே இன்பமாகிறது
    இப்படி யல்லாத பொருட்கள் மேல் விருப்பம் ஏற்படுவதில்லை -மேற் கூறியது போன்று மனத்திற்கு கிடைக்கும் இன்பமே ஒருவரை மகிழ்ச்சி யடைந்தவர் எனக் கூறக் காரணமாகிறது –
    இவ்வாறு மகிழ்ச்சி தரும் பொருட்கள் என்று வேறுபடுத்திப் பார்க்கும் அறிவுத் திறத்தால் ப்ரஹ்மத்தைத் தவிர்த்த மற்றப் பொருட்கள் அளவுபட்டதாயும் -நிலையற்றதாயும் இருத்தலால் ப்ரஹ்மம் ஒன்றே எல்லையற்ற இன்பமுடையதாயும் நிலையாயும் இருப்பதால் அதைப் பற்றிய மறை மொழிகளும் -ஆனந்தே ப்ரஹ்மம் என்று முடிக்கின்றன –
    பொருளைப் பொறுத்து மகிழ்ச்சி அமைவதால் ப்ரஹ்மம் ஒன்றே மகிழ்வு தருவது என்பது முடிவு –
    அது எவ்வாறு எனில்
    அவன் -ப்ரஹ்மம் -இனிமையானவர் -இவன் -ஜீவன் -அந்த இனிமையை அறிந்து ஆனந்தம் அடைகிறான் -இதனால் ப்ரஹ்மமே இனிமை என்பதும் -அதை அடைதலே ஆனந்தம் என்றும் பெறப்படுகிறது
    எம்பெருமான் தன்னடையே எல்லையற்ற ஆனந்தமுடையவன் -ஆதலால் பிறர்க்கும் சுவையன் -அவன் அவ்வாறு இருப்பதால் அவனைத் தன் மனத்தால் அறிபவன் நீங்காத ஆனந்தம் அடைகிறான் –
    அந்த ப்ரஹ்மம் -எல்லையற்று நற் குணங்களின் கடலாக இருப்பதாலும் குறைகள் ஏதும் அற்றவனாய் இருப்பதாலும் -அளவற்ற செல்வம் உடையவனாய் இருத்தலாலும் -இவ்வுலகுகள் அனைத்தையும் எல்லையற்ற நீர்மை அன்பு அழகு இவற்றின் கடலாக இருப்பதாலும் எல்லாவற்றையும் அடிமை கொள்வோனாகவும் உயிர்கள் யாவையும் அவனுக்கு தன்னடையே அடிமைகளாய் இருத்தலாலும் உள்ள பரஸ்பரத் தொடர்பினால் அவனே எப்பொழுதும் நினைக்கத் தக்கவன் -அவனே எல்லையற்ற மகிழ்ச்சிக்கும் பொருளானவன் -அந்த பர ப்ரஹ்மத்தையே இந்த ஆத்மா அடைய வேண்டும் -அவனே இவனால் ஜீவாத்மாவால் அடையத் தக்கவன்

    ———–

    148—நநுஸ–அத்யந்த சேஷதைவ ஆத்மந -அநவதிக அதிசயம் ஸூகம் இத் யுக்தம் பவதி -ததே தத் சர்வ லோக விருத்தம் –
    ததாஹி-
    ஸர்வேஷாமேவ சேதநாநாம் ஸ்வா தந்தர்யமேவ இஷ்ட தமம் த்ருச்யதே -பாரதந்தர்யம் துக்கதாம் ஸ்ம்ருதிஸ் ச –
    சர்வம் பரவசம் துக்கம் சர்வாத்மா வசம் ஸூகம் -ததாச- சேவா ஸ்வ வ்ருத்தி -ராக்யாதா தஸ்மாத்தாம் பரிவர்ஜ யேத் -இதி –

    திரு அணுக்கத் தொண்டனாய் இருத்தலே ஆத்மாவிற்கு எல்லையற்ற மகிழ்ச்சி என்பது உலகியலுக்கு மாறுபாடானது -அவ்வாறே உலகிலுள்ள உயிர்கள் யாவற்றுற்கும் அவைகள் ஸூதந்திரமாக இருத்தலே மிக விருப்பமாகக் காணப்படுகிறது பிறருக்கு அடிமைப்பட்டு இருத்தல் மிகத் துயரமாகவே இருக்கிறது -மறைகளிலும் -யாவருக்கும் பிறருக்கு வசப்பட்டு இருத்தல் துயரம் -தனக்கு மட்டுமே வசப்பட்டு இருத்தல் இன்பம் என்றும் பிறருக்கு அடிமை நாய்த் தொழில் ஒத்தது -அதை விலக்க வேண்டும் -என்றும் கூறப்பட்டு இருக்கிறது
    ததிதம்-அநவதிக -தேஹாதிரிக்தாத்ம ஸ்வரூபாநாம் சரீராத்ம அபிமான விஜ்ரும்பிதம் –
    ததாஹி
    சரீரம் ஹி மனுஷ்யத்வாதி ஜாதி குணாஸ்ரய பிண்ட பூதம் ஸ்வ தந்திரம் பிரதீயதே -தஸ்மிந்நேவ –
    அஹம் – இதி ஸம்ஸாரிணாம் ப்ரதீதி -ஆத்ம அபிமாநோ யாத்ருச-தத் அநு குண ஏனைவ புருஷார்த்த ப்ரதீதி –
    ஸிம்ஹ வ்யாக்ர வராஹ மனுஷ்ய யஷ ரக்ஷ பிசாசா தேவ தாநவ ஸ்தீரி பும்ஸ வ்யவஸ்தித ஆத்ம அபிமாநாநாம்
    ஸூகாநி வ்யவஸ்திதாநி தாநிச பரஸ்பர விருத்தாநி தஸ்மாத் ஆத்ம அபிமாந அநு குண
    புருஷார்த்த வியவஸ்த்தயா சர்வம் ஸமாஹிதம் —
    ஆத்ம ஸ்வரூபம் து தேவாதி தேஹ விலக்ஷணம் ஞான ஏக ஆகாரம் -தச்ச பர சேஷதைக ஸ்வரூபம் –
    யதா வஸ்திதாத்ம அபிமாநே தத் அநு குண ஏவ புருஷார்த்த ப்ரதீதி -ஆத்மா ஞான மய அமல-இதி ஸ்ம்ருதே–
    ஞான ஏக ஆகாரதா பிரதிபந்நா –
    பதிம் விஸ்வஸ்ய-இத்யாதி ஸ்ருதி கணை பரமாத்ம சேஷதைக ஆகாரதயா ச ப்ரதிபாதிதா–
    அத ஸிம்ஹ வ்யாக்ராதி சரீர ஆத்ம அபிமானவத் ஸ்வா தந்தர்ய அபிமாநோபி
    கர்ம க்ருத விபரீத ஆத்ம ஞான ரூபோ வேதி தவ்ய —

    உடலினின்றும் வேறுபட்ட உயிரை உணராதவர்கள் -உடலே உயிர் என்று மயங்குவோருக்கே இப்படிப்பட்ட எண்ணம் தோன்றும்
    இக்கருத்தப் படி சுதந்திரம் என்பது மனிதர் முதலிய இனங்களுக்கு உரிய தன்மை போன்ற பண்புகளையும் -சதைப்பிண்டம் ஆகிற உடலையும் -தான் என்று நினைத்தால் -இவ்விதம் நினைப்பவர்கள் அதற்கு ஏற்ப இலக்குகளை அடைய முயல்கின்றனர்
    சிங்கம் புலி பன்றி மனிதர் யக்ஷர் ராக்ஷஸர் பிசாசர் போன்ற வேறுபாடுகளையும் -அதில் ஆண் பெண் போன்ற வேறுபாடுகளையும் -உடையவர்களாய் -அவ்வுடலையே ஆத்மா என்று எண்ணி இருப்பவர்களுடைய இன்பம் அளவுபட்டது
    இதுவும் ஒன்றுக்கு ஓன்று மாறுபட்டதாகவும் இருக்கிறது -அது அந்தவந்த ஆத்மாவின் எண்ணத்திற்கு ஏற்ப அமைகிறது -ஆகவே ஸுகம் துக்கம் என்பவை தானாக ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் உணர்வே –
    ஆத்மாவின் உண்மையான நிலை தேவர்கள் முதலிய உடல்களின் நின்றும் மாறுபட்டது -ஞானமே வடிவெடுத்தது -அது பரன் ஒருவனுக்கே அடிமைப்பட்டது -இம்மெய்யறிவு பெற்றோர் அதற்கு ஏற்ப இலக்கை அடைகிறார்கள் -ஆத்மா குற்ற மற்ற ஞான வடிவானவன் -என்று மறை ஓதுகிறது –
    ஆத்gnaanaஞான வடிவினனாகக் குறிப்பிடும் -உலகின் தனிப்பெரும் தலைவன் போன்ற வேத வாக்கியங்கள் அது பரமாத்மாவின் தொண்டனாக ஆத்மா இருத்தலையும் அறுதியிடுகின்றன
    சிங்கம் புலி முதலிய உடலை ஆத்மா எனக் கொள்ளுவோர் அந்தந்த ஆத்மாவின் வினையடியாக அதற்கு ஒவ்வாத நிலைகளை அடைகிறார்கள் –

    அத -கர்ம க்ருத மேவ பரம புருஷ வ்யதிரிக்த விஷயானாம் ஸூகத்வம் -அத ஏவ தேஷாம் அல்பத்வம்-அஸ்திரத்வம் –
    ச பரம புருஷஸ் யைவ ஸ்வத ஏவ ஸூகத்வம் -அத ததேவ ஸ்திரம் -அநவதிக அதிசயம் ச –
    கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம —
    ஆனந்தோ ப்ரஹ்ம –
    சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –இதி ஸ்ருதே–
    ப்ரஹ்ம வியதிரிக்தஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வஸ்துந ஸ்வரூபேண ஸூகத்வாபாவ –
    கர்ம க்ருதத்வேந ச அஸ்திரத்வம் பாகவதர் பாராசரேண யுக்தம் –

    நரக ஸ்வர்க்க சம்ஜே வை பாப் புண்யே த்விஜோத்தம –
    வஸ்த்வேகமேவ துக்காய ஸூகாயேர்ஷ் யாகமாய ச கோபாய ச யதஸ் தஸ்மாத் வஸ்து வஸ்வாத்பகம் க்ருதா
    ஸூக துக்காத் யேகாந்த ரூபேண வஸ்துனோ வஸ்துத்வம் குத ?
    ததே காந்ததா புண்ய பாபா க்ருதேத்யர்த்த–
    ஏவம் அநேக புருஷ அபேக்ஷயா கஸ்யஸித் துக்கம் பவதி இத் யவஸ்தாம் ப்ரதிபாத்ய ஏகஸ்மின்நபி புருஷே நவ்ய வஸ்தித மித்யாஹ
    ததேவ ப்ரீதயே பூத்வா புந துக்காய ஜாயதே
    ததேவ கோபாய தத் ப்ரஸாதாய ச ஜாயதே
    தஸ்மாத் துக்காத் மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் -ஸூகாத் மகம் –
    இதி ஸூக துக்காத் மகத்வம் ஸர்வஸ்ய வஸ்து ந -கர்ம க்ருதம் ந வஸ்து ஸ்வரூப க்ருதம் -அத கர்ம வசாநே ததவைதி இத் யர்த்த –

    பரம புருஷனைத் தவிர்த்து வினையடியாகக் கிடைக்கும் மற்ற இன்பங்கள் அற்பமானதாகவும் அளவுபட்டதாகவும் இருக்கும்பரம புருஷனோ தன்னடையே இன்பமாவான்-அதுவே அழிவற்றது -எல்லை யற்றதும் ஆகும் -கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -ப்ரஹ்மம் மாறுபாடாற்ற அழிவற்ற ஞானமே ப்ரஹ்மம் -என்றும் வேதம் மொழிகிறதுப்ரஹ்மம் நீங்கிய மற்ற பொருட்கள் யாவும் இயற்கையான இன்பம் அற்றதாயும் -வினைக்கு ஏற்ப நிலை அற்றதாயும் இருக்கும் என்பதைப் பகவான் பராசரரும் சொல்கிறார் -நரகமும் ஸ்வர்க்கமும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப விளைகின்றன -இரு பிறப்பாளரே பொருள் ஒன்றாகவே இருப்பினும் அதுவே சில சமயம் இன்பமாகவும் பிறிதொரு சமயம் துன்பமாகவும் ஆகிறது -அதுவே சிலருக்கு கோபத்திற்கும் காரணமாகிறது -இன்பம் துன்பம் இரண்டும் கலக்காத பொருட்களுக்கு இருப்பு என்பது ஏது-அவை யாவும் தனது புண்ய பாபங்களுக்கு ஏற்பவே அமைகிறதுஅதே போல் சிலருக்கு இன்பமாக இருக்கும் பொருள் சிலருக்குத் துன்பத்திற்கு காரணமாகிறது -மேலும் ஒரே பொருள் ஒருவருக்கே எப்போதும் சுகத்தைத் தருவதில்லை -இதப் பராசரர் கூறுகிறார்எது விருப்பமானது தோன்றுகிறதோ அதே பொருள் பிறகு துயரத்திற்கு காரணமாகிறது -அதுவே கோபத்திற்கும் பிறிதொரு சமயத்தில் மகிழ்ச்சிக்கும் காரணமாகிறது -அதனால் துயரமே தரும் பொருள் என்றோ இன்பமே தரும் பொருள் என்றோ எதுவும் இல்லை -மகிழ்ச்சி அளிப்பதோ துயரம் அளிப்பதோ பொருட்களின் குணம் அன்று -அதை அடைவோரின் வினைகட்க்கு ஏற்ப அமைகிறது -அவரவர் வினைகட்க்கு ஏற்ப பொருள்களில் இம் மாறுபாடு தோன்றுகிறது –
    யத் து –சர்வம் பரவச துக்கம்– இத் யுக்தம்-தத் பரம புருஷ வ்யதிரிக்தாநாம்-பரஸ்பர சேஷ சேஷீ பாவ அபாவாத்
    தவ் வ்யதிரிக்தம் பிரதி சேஷதா–துக்கமேவ இத் யுக்தம்
    சேவா ஸ்வ வ்ருத்தி -ராக்யாதா -இத் யத்ராபி அசேவ்ய சேவா -ஸ்வ விருத்தி ரேவ இத் யுக்தம்
    சஹ்யாஸ் ரமை சதோபாஸ்ய சமஸ்தை ஏக ஏவது -இதி சேர்வை ஆத்ம யாதாம்ய வித்பி ஸேவ்ய புருஷோத்தம ஏக ஏவ —

    அவ்வாறே -பிறருக்கு அடிமையாகிறவருக்குத் துயரம் என்பது பரம புருஷனைத் தவிர்த்த மற்றவைகளுக்குள்ள ஏவுபவன் -ஏவப்படுபவன் தொடர்பு
    அவனைத் தவிர்த்த மற்றோருக்கு அடிமை துக்கமே எனப்படும் -தொண்டு செய்தல் நாய்ப் பிழைப்புக்ச் சமம் -என்பது -தொண்டு கொள்ளத் தகாதவர்களுக்குத் தொண்டு செய்வது என்பது பொருந்தும்
    எல்லா ஆஸ்ரமங்களில் உள்ளவர்களாலும் தொண்டு செய்யத் தக்கவன் அவன் ஒருவனே -என்று கூறியவாறு -ஆத்ம மெய்ப் பொருளை அறிந்த எல்லோராலும் வணங்கத் தக்கவன் அவன் ஒருவனே-

    யதோக்தம் பகவதா –ஸ்ரீ கீதையிலும் -14-26-
    மாம் ச யோ வ்யாபிஸாரேண பக்தி யோகநே சேவதே
    ச குணாந் சமதீத்யைதாந் ப்ரஹ்ம பூயாய கல்பதே–இதி
    இயமேவ பக்தி ரூபா சேவா
    ப்ரஹ்ம விதாப் நோதி பரம்
    தமேவம் வித்வாந் அம்ருத இஹ பவதி
    ப்ரஹ்ம வேத ப்ரஹ்ம ஏவ பவதி –இத்யாதி ஷு வேதநா சப்தேநாபி தீயதே இத் யுக்தம்
    யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய-இதி விசேஷணாத்
    யமேவைஷா வ்ருணுதே-இதி பகவதா வரணீயத்வம் பிரதீயதே வரணீ யஸ்ஸ ப்ரியதம யஸ்ய பகவதி
    அநவதிக அதிசயா ப்ரீதி ஜாயதே ச ஏவ பகவத ப்ரிய தம-தத் யுக்தம் பநவதைவ
    ப்ரியோஹி ஞாநிநோத் யர்த்தம் அஹம் ச ச மம ப்ரிய -7–17-இதி
    தஸ்மாத் பர பக்தி ரூபா பந்நமேவ வேதனம் தத்வத்தோ பகவத் பிராப்தி சாதனம்

    அவ்வாறே-பகவானும் கீதையில் -14-26-பிறர் பிற பலன்கள் இவற்றில் சிறிதும் ஆசையின்றி என்னொருவனையே பக்தி யோகத்தினால் எவன் ஆராதிக்கிறானோ அவன் இம்முக் குணங்களையும் கடந்து ப்ரஹ்மத்துக்கு இணையாக இருக்கும் தன்மையை அடைவிக்கிறேன் -என்கிறார்
    இதுவே பக்தியுடன் கூடிய தொண்டு -ப்ரஹ்மத்தை அறிபவன் பர ப்ரஹ்மத்தை அடைகிறான் -ப்ரஹ்மம் இவ்வாறு உள்ளது என்று அறிபவன் சாகா நிலையடைகிறான் –
    ப்ரஹ்மத்தை அறிபவன் ப்ரஹ்மத்துக்கு ஒப்பாகிறான் – என்ற வாக்கியங்களில் -அறிதல் -ஞானம் -என்ற சொல் பக்தியை விளக்குகிறது –
    எவனை அthereதேர்ந்து எடுக்கிறானோ அவனாலேயே அடையத் தக்கவன்-என்பதால் சிறப்பாக அவனால் வரிக்கப்படுதலைக் கூறி அதுவே சிறந்த இன்பம் -எவனை எல்லையற்ற இன்பமுடைய பகவான் விரும்புகிறானோ அவன் அடைவதே இன்பத்தின் எல்லை
    அதை ஒட்டியே-பகவானும் -கீதையில் -7-17- ஞானிக்கு நான் எல்லையற்ற விருப்பமானவன் -அவ்வாறே அவனும் எனக்கு மிகவும் விருப்பமானவன் -என்பதால் பக்தியே வடுவெடுத்த இடையறாத மனத்தின் நினைவே உண்மையில் இறை மகிழ்ச்சிக்கு உரிய நெறியாகும் –

    யதோக்தம்
    பகவதா த்வை பாயநேந மோக்ஷ தர்மே சர்வ உப நிஷத் வியாக்யான ரூபம்-
    ந சந்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷுஷா பச்யதி கஸ்ஸனநநம்
    பக்த்யா ச த்ருத்யா ச ஸமாஹி தாத்மா ஞான ஸ்வரூபம் பரி பஸ்யதீஹ–இதி
    த்ருத்யா ஸமாஹி தாத்மா பக்த்யா புருஷோத்தமம் பச்யதி -சாஷாத் கருதி ப்ராப்நோதி
    இத் யர்த்த பக்த்யாத் வநந்யயா சக்ய-இத்யநேந ஐகார்த்யாது
    பக்திஸ் ச ஞான விசேஷ ஏவ இதி சர்வம் உப பந்நம்
    சார அசார விவேகஞ்ஞா கரீயாம்சோ விமத்சரா
    பரமாணதந்த்ரா சந்தீதி க்ருதோ வேதார்த்த ஸங்க்ரஹம்

    அதனாலேயே பகவான் வியாஸரும்
    மோக்ஷ தர்மத்தில் -எல்லா உபநிஷதங்கள் பொழிப்புரையாக -அவனுடைய உருவம் கட் புலனாகாதது -யாரும் அவனைக் கண்ணால் கண்டதில்லை -அடக்கமும் மனப் பூர்வமான ஈடுபாடும் நிலையான மனமும் உடையவரால் மட்டுமே அந்த ஞான உரு அறியப்படும் -என்கிறார்
    அடக்கம் -நிலையான மனது -பக்தி இவற்றால் மட்டுமே புருஷோத்தமன் பார்க்கப்படுகிறார் நேராகக் காணப்படுகிறான் -அடையப்படுகிறான் என்பதே பொருள் பக்தியால் அன்றி மற்றவைகளால் அடையப்படுபவன் அல்லன் -என்பதும் இத்துடன் ஒத்த பொருள் கொண்டது
    பக்தி என்பது ப்ரஹ்மத்தைப் பற்றிய சிறப்பான அறிவு -ஞானம் -என்பதே எல்லா விதத்திலும் பொருந்தும்

    இதி பகவத் ஸ்ரீ ராமானுஜ விரசித வேதார்த்த ஸங்க்ரஹ ஸமாப்தம்–

    அகிலப் பொருட்கள் யாவையும் அடிமை கொண்டு ஆள்பவனாம்
    அமலன் நற் குணக் கடலாவான் அனந்தன் மேலே துயில்பவனாம்
    அலர் மேல் மங்கை நாயகனாம் அடியாருக்கு என்றும் எளியவனாம்
    அகிலம் எங்கும் நீக்கமற வசிக்கும் விஷ்ணு துணை நமக்கே –

    அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
    நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I
     I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

    சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
    சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

    நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

    பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
    பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
    ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
    தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II
    –ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

    பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
    ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
    ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
    தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
    தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
    அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
    அசுபஸ் யாஸ்பதமிதி -அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
    தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
    ஸ்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
    மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
    ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
    மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
    தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
    ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

    ——————————————————————————————————————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ ஸ்ருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் மூலமும் தமிழ் அர்த்தமும் -இரண்டாம் பகுதி –72-112-ஸ்வ மத விஸ்தாரம்-

    August 13, 2024

    யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
    அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

    ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–

    அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
    நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I
     I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

    சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
    சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

    நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

    பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
    பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
    ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
    தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

    பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
    ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
    ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
    தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
    தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
    அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
    அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
    தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
    ஸ்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
    மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
    ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
    மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
    தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
    ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

    —————-

    (நிர்விசேஷ அத்வைதம் அவர்கள் நம்மது ச விசேஷ அத்வைதம் -)

    72–ய ப்ருதிவ்யாம் திஷ்டந் ப்ருதிவ்யாந்த ரோயம் பிருதிவி ந வேத யஸ்ய ப்ருதிவீ சரீரம்
    ய ப்ருத்வீன் அந்தரோ யமயதி ஏஷத ஆத்மாந்தர் யாம்ருத –
    ஸூக்ல யஜுர் ப்ரு -கண்வ

    ய ஆத்ம திஷ்டந் ஆத்மநோ யந்த ரோயம் ஆத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம் ய ஆத்மந அந்தரோ யமயதி
    ச த ஆத்மாந்தர் யாம்ருத
    –ஸூக்ல மாந்யந்திந

    (தத்வ அதிகரணம் அடுத்து பர தேவதா அதிகரணம் -பரமை காந்தி ஆவதற்கு தத்வத்துக்கும் மேல் ஸ்வரூபம் ரூபம் இத்யாதிகளை அறிய வேண்டுமே)

    ய -ப்ருத்வீ மந்தரே சஞ்சரன் யஸ்யப் ப்ருத்வீ சரீரம் யாம் ப்ருத்வீ ந வேத இத்யாதி யோஷர மாந்தரே சஞ்சரன்
    யஸ்யாஷரம் சரீரம் யமக்ஷரம் ந வேத யோ ம்ருத் யுமந்தரே சஞ்சரன் யஸ்ய ம்ருத்யு சரீரம் யம் ம்ருத்யுர் ந வேத
    ஏஷ சர்வ பூத அந்தராத்ம அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண –ஸூபாலோபநிஷத்

    த்வா ஸூபர்ணா சாயுஜா சகாயா சமாநம் வ்ருஷம் பரிஷஸ்வ ஜாதி தயோர் அந்ய பிப்பலம்
    ஸ்வா த்வத்ய நஸ்ரந் அநந்யோ அபிசாக ஸீதி
    –முண்டக-3-1-1-

    அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜநாநாம் சர்வாத்மா தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிசது தத் அநு ப்ரவிஸ்ய-
    ஸச் ஸத்யச் சா பவது இத்யாதி ஸத்யந்சாந்ரு தந் சாசத்யம பவது
    –தைத்ரியம்

    அநேந ஜீவேநாத்மநா –இத்யாதி -சாந்தோக்யம்

    ப்ருதக் ஆத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வா ஜூஷ்டஸ் ததஸ் தேந அம்ருதத்வமேதி போக்தா போக்யம் ப்ரேரிதாரம்
    ச மத்வா சர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் ப்ரஹ்ம ஏதத்
    –மந்திரிகோ

    நித்யோ நித்யாநாம் சேதநஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமாந் –கடவல்லி

    பிரதான ஷேத்ரஞ்ஞ பதிர் குணேச(பதி சேஷி -நியாந்தா குணங்கள் தேவையான பொழுது காட்டி )

    ஞாஜெவ் த்வாவ் அஜவ் வீசனீசவ் இத்யாதி ஸ்ருதி சதை –மந்த்ரிகா

    தத் உப ப்ரஹ்மண

    ஜகத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யாம் தேவ ஸூதா தலம்–ஸ்ரீ ராமாயணம் -அதிதி தேவி ஸ்துதி

    யத் கிஞ்சித் ஸ்ருஜ்யதே யேந சத்வாஜா தேநவை த்விஜ தஸ்ய ஸ்ருஜ்யஸ்ய ஸம்பூதவ்
    தத் சர்வம் வை ஹரேஸ்தநு
    –ஸ்ரீ விஷ்ணு புராணம்

    அஹமாத்மா குடா கேச சர்வ பூதாசய ஸ்திதி -ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்த ஸ்ம்ருதிர்
    ஞாநம் அபோஹநம் ச
    –ஸ்ரீ கீதா

    இத்யாதி வேத வித் அக்ரேஸர வால்மீகி–பராசர -த்வைபாயன -வாசோபிஸ் ச
    பரஸ்ய ப்ரஹ்மண ஸர்வஸ்ய ஆத்மத்வா வகமாத்-சித் அசித் ஆத்ம கசிய வஸ்து ந தச் சரீரத்வாவகமாச் ச சரீரஸ்ய ச சரீரிணம்
    பிரதி பிரகார தயைவ பதார்த்ததவாத் சரீர சரீரிணஸ் ச தர்ம பேதே அபிதயோர சங்கராத் சர்வ சரீரம் ப்ரஹ் மேதி
    ப்ரஹ்மணோ வைபவம் ப்ரதிபாதயத்யபி சாமாநாதி கரண்யாதிபுபி முக்ய வ்ருத்தை –
    சர்வ சேதந அசேதன பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அபி தீயதே

    (இப்படி வேதங்களை நன்கு அறிந்த சான்றோர்களில் தலையாயவர்களானparaasaraபராசரர் த்வைபாயனர் -வ்யாஸர் -ஆகியோர்
    பரப்ரஹ்மத்துக்கு எல்லாப் பொருள்களுக்கும் உயிராய் இருக்கும் தன்மையும் சேதன அசேதனப் பொருள்களுக்கு அதன் உடலாய் இருக்கும் தன்மையும்
    உயிரும் உடலும் மாறுபட்ட நிலை நெறிகளை உடையவையாயினும் ஒன்றை விட்டு ஓன்று பிரிக்க முடியாத தொடர்புடைய ப்ரகாரத்துவமும் இருத்தலால்
    ஸாமாநாதி கரணத்தால் திரண்ட பொருளாக ப்ரஹ்மத்து எல்லாப் பொருள்களுக்கு உயிராய் உறையும் தன்மை உணர்த்தப்பட்டது -)

    (அஹம் கச்சாமி -அஹம் ஆத்மாவைக் காட்டாது -தேகத்துடன் சேர்ந்த ஆத்மாவையே காட்டும்)

    (கார்யம் செய்ய சரீரம் சுகம் துக்கம் அனுபவிக்க ஆத்மா -ஞானம் இதுக்குத் தானே -ஆகவே இரண்டும் சேர்ந்ததும் அஹம்
    அனுகூலமாக இருக்கும் பொழுது பேத வியவஹாரமும் -பிரதிகூலமாக இருக்கும் பொழுது அபேத வியவஹாரமும் செய்கிறோம்)

    (சாமானாதி கரண்யம் -ஏகார்த்த ப்ரதிபாதிதம் -விசேஷண விசேஷ்ய கொள்ளாமல் சங்கரர்)

    (பின்ன பிரவ்ருத்தி நிமித்த ஏகஸ்மின் அர்த்தே ப்ரதிபாதிதம் -பர்யாய சப்தங்கள் இல்லாமல் -ஒரே பதார்த்தத்தை வெவ்வேறே பிரகாரம்
    ஸ்யாமோ யுவ தேவதத்தன் -இவனை வியாவ்ருத்திக்க இரண்டு பிரகாரங்கள்)

    சாமா நாதி கரண்யம் ஹி த்வயோ பதயோ பிரகார த்வய முகேந ஏகார்த்தநிஷ் டத்வம்
    தஸ்ய ச ஏதஸ்மிந் பக்ஷே முக்யதா ததாஹி -தது த்வம்-இதி சாமாநாதி கரண்யே –
    தது-இத்யேந ஜகத் காரணம் சர்வ கல்யாண குணாகரம் நிரவத்யம் ப்ரஹ்ம உச்யதே
    த்வம் இதி ச சேதன சாமாநாதி கரண வ்ருத்தேந ஜீவ அந்தர்யாமி ரூபி -தச் சரீரம் ததாத்மதயா அவஸ்திதம்
    தத் பிரகாரம் ப்ரஹ்ம உச்யதே
    இதரேஷு பக்ஷேஷு சாமாநாதி காரண்ய ஹாநி ப்ரஹ்மண ச தோஷதாச ஸ்யாத் –

    ஸாமா நாதி கரணம் என்பது இரண்டு சொற்களால் குறிக்கப்படும் இரு வெவ்வேறு பொருள்கள் ஒன்றை விட்டு ஓன்று பிரிக்க முடியாத தன்மையினால் ஒரே பொருளைக் காட்டுதல் ஆகும்
    வேதச் சொற்களுக்கு இவ்வாறு பொருள் கொள்வதே -அதாவது எல்லா வேத வாக்யங்களும் பொருள் உள்ளவை என்று கொள்வதே -எங்கள் தலையாய கொள்கை
    அப்படியே ததுவம் என்ற வாக்யத்துக்கு ஸாமாநாதி கரணத்தின் படி
    தது -அந்த -என்பதால் எல்லாவற்றுக்கும் முழு முதல் காரணமாயும்
    எல்லையில்லா நன்னலம் உடையோனாகவும்
    குற்றங்கள் சிறிதும் அற்றோனாகவும்
    உள்ள ப்ரஹ்மமே -த்வம் -நீ என்ற சொல்லால் குறிப்பிடப்படும்
    சேதனனுடன் பிரிக்க முடியாத தொடர்புடையதாய் ஜீவாத்மாவின் உள்ளுறைவதாய் -அதை உடலாக உடையதாய் -அதன் ஆத்மாவாக உறையும் ப்ரஹ்மத்தைக் காட்டுகிறது
    மற்றை அத்வைதக் கொள்கைகளில் இரு மெய்ப் பொருள்கள்-ப்ரஹ்மம் தவிர்த்து இன்மையால் ஸாமா நாதி கரணம் வர வாய்ப்பில்லை
    எனவே மற்றைக் கொள்கைகளில் இந்த சாமாநாதி கரண்யம் அழிகிறது
    அதனால் ப்ரஹ்மத்துக்கு குற்றங்களின் தொடர்புடைமை வரும்)

    —————

    73–ஏதத் யுக்தம் பவதி
    ப்ரஹ்ம ஏவ ஏவமவஸ்திதம் -இத்யத்ர -ஏவம் -சப்தார்த்த பூத பிரகார தயைவ விசித்ர சேதன அசேதநாத்மக
    பிரபஞ்சஸ்ய ஸ்தூலஸ்ய ஸூஷ்மஸ்ய சத் பாவ -ததாச பஹுஸ்யாம் ப்ரஜாயேய -இதி அயமர்த்த ஸம்பந்நோ பவதி –
    தஸ்யைவ ஈஸ்வரஸ்ய கார்ய தயா காரண தயா ச சமஸ்தான சமஸ்தி தஸ்ய சமஸ்தான தயா சித் அசித் வஸ்து ஜாதம வஸ்திதமிதி –

    (பஹு -பல மட்டும் அல்ல -பரஸ்பர பின்னமான எல்லாமாகக் கொள்ள வேண்டும் நானே(ப்ரஹ்ம சரீரத்துக்கு -நானே )-ஸமஸ்த பதார்த்தமாக ஆகிறேன்)

    இதை இவ்வாறு விளக்கலாம்
    ப்ரஹ்மமே இவ்வாறு விளங்குகிறது -என்ற வேத வாக்யத்தில் -இவ்வாறு என்ற சொல்லின் கருப்பொருள் புலன்களால் உணரப்படும் உணரப்படாமலும் சேதன அசேதனப் பொருள்களால் பல படியாக நிறைக்கப்பட்டு இருக்கும் ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்துடன் பிரிவற்ற தொடர்புடையதாக இருத்தல் என்பது
    அதனாலேயே -நான் பலவாக ஆவேன் மக்களைப் படைப்பேன் என்ற வாக்யம் பொருளுடையதாக ஆகும் –
    பலபடித்தான உருவ அமைப்புள்ள சேதன அசேதன பொருள்களை தனது உடலாகக் கொண்டு அவை யாவற்றிலும் அந்த ஈஸ்வரனே கட் புலனாகும் கார்யமாகவும் கட் புலனாகாத காரணமாகவும் வஹிக்கிறான்

    ———

    74 —நநு ச -சமஸ்தான ரூபேண ப்ரகாரதயா-ஏவம் -சப்தார்த்தத்வம் ஜாதி குணயோ ரேவ த்ருஷ்டம் –
    ந த்ரவ்யஸ்ய ஸ்வ தந்த்ர ஸித்தியோக் யஸ்ய பதார்த்தஸ்ய ஏவம் சப்தார்த்ததயா ஈஸ்வரஸ்ய பிரகார மாத்ரத்வம யுக்தம்
    இதி சேத்ப உச்யதே த்ரவ்யஸ்யாபி தண்ட குண்டலாதே த்ரவ்யாந்தர பிரகாரத்வம் த்ருஷ்டமேவ —

    அவ்வாறு ஆகாது
    உருவ அமைப்பால் பிரிவற்ற நிலை உடைமையால் இவ்வாறு என்ற சொற் பொருள் கொள்வதானால்
    அதாவது-சேதனம் அசேதனம் ஆகியவை பொருள்களே -அவ்வாறு இருக்க அவை ஒன்றுக்கு ஓன்று பிரிவற்ற நிலையை அடைதல் எவ்வாறு என்பது கேள்வி –
    ஒரு பொருளுக்கு அடையாக அதன் ஜாதியையோ அல்லது குணத்தையோ தான் கொள்ள முடியும்
    மாறாக மற்ற ஒரு பொருளை அதற்க்கு பிரிவற்ற நிலையை உடைய அடையாகக் கொள்ள வியலாது
    இங்கு தனித்து இயங்கும் தன்மையுடைய சேதன அசேதன பொருள்களை ஈஸ்வரன் என்னும் பொருளுக்கு அடையாகக் கொள்ளுதல் பொருந்தாது என்பீராகில்
    சில சமயங்களில் ஒரு பொருளும் மற்ற ஒரு பொருளுக்கு -அதை மற்றதனின்றும் பிரித்துக் காட்டும் அடையாக -தடியை உடையவன் தடிக்காரன் குண்டலம் அணிந்தோன் என்பது போல் வழங்கி வருவதைக் காண்கிறோம்

    ————————-

    75–நநுச தண்டாதே ஸ்வ தந்த்ரஸ்ய த்ரவ்யாந்தர பிரகாரத்வே மத்வர்த்தீய ப்ரத்யயோ த்ருஷ்ட –
    யதா தண்டி குண்டலீ இதி அத கோத்வாதி துல்ய தயா சேதன அசேதநஸ்ய த்ரவ்ய பூதஸ்ய வஸ்துந ஈஸ்வர பிரகார தயா
    சாமாநாதி கரண்யே ந ப்ரதிபாதநம் ந யுச்யதே அத்ரோச்யதே –கவ்ரஸ்வோ மனுஷ்யோ தேவ இதி பூத சங்காதா ரூபாணாம்
    த்ரவ்யாணாமேவ -தேவ தத்தோ மனுஷ்யோ ஜாத புண்ய விசேஷேண யஜ்ஜ தத்தோ கவ்ர் ஜாத பாபேந கர்மணா
    அந்யஸ் சேதந புண்யாதிரேகேண தேவோ ஜாத இத்யாதி தேவாதி சரீராணாம் சேதன பிரகார தயா லோக
    வேதயோ சாமாநாதி கரண்யே ப்ரதிபாதனம் திருஷ்டம்

    அப்படி யல்ல -தடி போன்றவை தாங்கள் ஒரு பொருளாக இருந்து கொண்டே மற்ற ஒரு பொருளுக்கு -மனிதனுக்கு -த்வர்த்தீய ப்ரத்யயத் -vilankuவிளங்க முடியும்
    உதாரணம் -தண்டி குண்டலீ –
    மேலும் பசுத்தன்மை -பேசுவாய் இருத்தல் -போன்றவற்றுக்கு இணையாக சேதன அசேதன பொருள்கள் நிறைந்த ப்ரபஞ்சம் ஈசனுக்கு பிரிவற்ற நிலையில் உள்ளதால் ஸாமா நாதி கரண்யம் பொருந்தாது எனில்
    பசு குதிரை மனிதன் தேவன் போன்ற உருவ அமைப்புக்கள் பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் ஆகின்றன
    தனது நல் வினையின் பயனாக தேவ தத்தன் மனிதனாகப் பிறந்தான் -தன் தீ வினைகளின் விளைவாய் யஜ்ஜ தத்தன் பசுவாய் ஆனான்
    வேறொரு உயிர் மிகுந்த நல்ல வினையின் பயனாய் தேவனாகப் பிறந்தான் என்றெல்லாம் மறை எல்லாம் உலக வழக்குகளில் உள்ளது
    தேவன் முதலான உடல்களில் உயிரின் பிரிவற்ற நிலை உள்ளதையும் காண்கிறோம் -ஸாமாநாதி கரணம்
    இங்கு உடலும் உயிரும் தனித் தனியான பொருள்கள் ஆயினும் ஒன்றுக்கு ஓன்று பிரிவற்ற நிலையுள்ளவை

    (த்ரவ்யம் த்ரயம் சம்யோகம்-யுவா ஸ்யாம தேவ தத்தன் அப்ருதக் சமஸ்தானம்
    குண்டலி தேவதத்தன் ப்ருதக் ஸம்ஸ்தானம்-ஜீவன் அசேதனன் ப்ரஹ்மம் -மூன்றும் த்ரவ்யம் -அப்ருதக் ஆக பிரகாரங்கள் ஆக வேண்டுமே )

    த்வர்த்தீய ப்ரத்யயம் -புவநாநி விஷ்ணு -விஷ்ணு இன்றி தனித்து இயங்காத புவனம்
    மத்வர்த்தீய ப்ரத்யயம் –அப்ருதக் சித்தம் –இனிச் மான் வான் -பிரிவற்ற நிலை -ஸ்ரீ மந் -ஸ்ரீ மதே

    ——————————

    76–அயமர்த்த -ஜாதிர் வா குணோ வா ந தத்ர ஆதரந-கஞ்சன த்ரவ்ய விசேஷம் பிரதி விசேஷண தயைவ
    யஸ்ய சத் பாவ -தஸ்ய தத் அப்ருதக் சித்தே தத் ப்ரகாரதயா தத் சாமாநாதி கரண்யேந ப்ரதிபாதநம் யுக்தம்
    யஸ்ய புந த்ரவ்யஸ்ய ப்ருதக் சித்தஸ்யைவ கதாசித் க்வசித் த்ரவ்யாந்தரப் பிரகாரத்வ மிஷ்யதே
    தத்ர மத்வர்த்தீய ப்ரத்யய -இதி விசேஷ

    இதன் பொருள் –ஒரு பொருளுடன் பிரிவற்ற நிலையில் அடையாக இருப்பதற்கு -ஜாதியோ பொருளோ குணமோ முக்யமாகக் கொள்ளப் பட வேண்டாம்
    எந்த ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் தொடர்பு அதற்கு பிரிவற்ற பண்பை ஏற்குமோ -அவற்றின் பிரித்து இயங்காத தன்மையால் அவ்விரு பொருள்களுக்கும் சாமா நாதி கரணம் உள்ளது என்று கொள்வதே பொருந்தும்
    மீண்டும் எந்த பொருள் சாதாரணமாகத் தனித்தே இயங்கிக் கொண்டு எப்பொழுதாவது மற்ற ஒன்றிற்கு பிரிவற்ற அடையாக ஆகிறதோ அப்பொழுது அதற்கு மத்வர்த்தி ப்ரத்யயம் வர வேண்டும் என்பது சிறப்பு விதி –

    —————

    77–ஏவமேவ ஸ்தாவர ஜங்கமாத்மகஸ்ய ஸர்வஸ்ய வஸ்துந ஈஸ்வர சரீரத்வேந தத் பிரகார தயைவ ஸ்வரூப சத் பாவ இதி
    தத் பிரகாரீ ஈஸ்வர ஏவ தத் தத் சப்தேந அபிதீயதே இதி தத் சாமாநாதி கரண்யேந ப்ரதிபாத நம் யுக்தம்
    ததே தத் பூர்வமேவ நாம ரூப வியாகரண ஸ்ருதி விவரனே பிரபஞ்சிதம் —

    மேற்கூறிய படியே அனைத்து அசையும் அசையாப் பொருள்களும் ஈஸ்வரனுக்கு உடலாய் இருப்பதனால் அப் பிரிவற்ற பண்பினாலேயே அவற்றுக்கு இருப்பு ஏற்படுகிறது என்பதால் அவற்றிற்கு உரிமையானவன் ஈஸ்வரன் தத் என்று குறிப்பிடப் படுகிறான் என்று சாமா நாதி கரணத்தை அறுதியிடல் பொருந்தும்
    இவையாவும் முன்பே நாம ரூப விளக்கத்தில் விரிவாகச் சொல்லப்பட்டன

    ———-

    78–அத ப்ரக்ருதி புருஷ மஹத் அஹங்கார தந் மாத்ர பூதேந்த்ரிய -ததாரப்த-சதுர்தச புவநாத்மக ப்ரஹ்மாண்ட தத் அந்தர்வர்த்தி
    தேவ திரியக் மனுஷ்ய ஸ்தாவராதி சர்வ பிரகார சமஸ்தாந ஸம்ஸ்திதம் கார்யமபி சர்வம் ப்ரஹ்ம ஏவ இதி காரண பூத
    ப்ரஹ்ம விஞ்ஞாநாதேவ சர்வம் விஞ்ஞாதம், பவதீதி ஏக விஞ்ஞானம் உப பந்நதரம்-ததேவம் கார்ய காரண பாவாதி முகேந
    க்ருஸ்த்ரஸ்ய சித் அசித் வஸ்துந பர ப்ரஹ்ம பிரகார தயா ததாத்மகத்வம் யுக்தம் –

    மேலும் ப்ரக்ருதி புருஷன் மஹத் அஹங்காரம் தன் மாத்ரைகள் பஞ்ச பூதங்கள் பதினோரு புலன்கள் -அவைகளான பதினான்கு உலகங்கள் ப்ரஹ்மாண்டங்கள் அவற்றின் உள்ளுறையும் தேவ மனித விலங்கு ஸ்தாவரம் முதலான பலவகை அமைப்புடைய பொருள்களுக்கு -விளைவுகளுக்கு -காரணமாக ப்ரஹ்மம் இருத்தலால் -அந்த ஒன்றை அறிவதன் மூலம் மற்ற யாவையும் அறிந்ததாக ஆகும் என்பதே மிகப் பொருந்தும்
    இவ்வாறு காரண காரியத் தொடர்பால் சேதன அசேதன பொருள்களுக்கு உள்ளுறை ஆத்மாவாய் இருக்கும் தன்மை ப்ரஹ்மத்திற்குச் சொல்லப்பட்டது –

    ————-

    79–நநு ச பரஸ்ய ப்ராஹ்மண ஸ்வரூபேண பரிணாம ஆஸ்பதத்வம்-நிர்விகார நிரவத்ய ஸ்ருதி வ்யாகோப ப்ரசங்கேந நிவாரிதம்-
    ப்ரக்ருதிஸ் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் இதி ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிஞ்ஞா
    ம்ருத் தத் கார்ய த்ருஷ்டாந்தாப்யாம் பரம புருஷஸ்ய ஜகாத் உபாதான காரணத்வம் ச ப்ரதிபாதிதம்
    உபாதான காரணத்வம் ச பரிணாம ஆஸ்பதத்வ மேவ கத மிதமுபபத்யதே அத்ரோஸ்யதே -ச ஜீவஸ்ய பிரபஞ்சஸ்ய
    அவிசேக்ஷண காரணத்வம் யுக்தம் தத்ர ஈஸ்வரஸ்ய ஜீவ ரூப பரிணாமாப் யுபகமே
    நாத்மாஸ்ருதேர் நித்யத்வாச் ச தாப்ய–ப்ரஹ்ம சூத்ரம் -2-3-3-
    இதி விருத்யதே-வைஷம்ய நைர் க்ருண்ய பரிகாரஸ் ச ஜீவாநாமநாதித் வாப்யுகமேன
    தத் கர்ம நிமித்தயா ப்ரதிபாதித -வைஷம்ய நைர்க்ருண்யே ந சா பேஷத்வாத் -2-1 -34—
    ந கர்ம விபாகதிதி சேண்ந அநாதித்வாது ப பத்யதே சாப்யு பலப்யதேச -2-1-35-இதி
    அக்ருதாப்யாகம க்ருத் விபிரணாச பிரசங்கஸ் ச அநித்யத்வே அபிஹித

    மாறாகப் பர ப்ரஹ்மத்திற்கு தன்னிலையில் நின்றும் மாறுபாடு அடைதல் ஒரு பொழுதும் இல்லை என்று சாற்றப்படும் -மாறுதல் அடையாத்தன்மை -குற்றங்கள் அற்ற நிலை போன்ற மறை மொழிகளால் அறுதியிடுதல் எவ்வாறு பொருந்தும் என்பதற்கு
    ப்ரக்ருதிஸ் ச பிரதிக் நாத் ருஷ்டாந்தநு பரோதாத் –ப்ரஹ்ம ஸூத்தரம் -1-4-
    ஒன்றை அறிதலால் எல்லாவற்றையும் அறிந்ததாகும் என மறை மொழியில் மறை மற்றும் அதை விளை பொருளை எடுத்துக் காட்டி பரம புருஷன் உலகின் கருப்பொருளாகும் தன்மை விளக்கம் தரப்படுகிறது
    கருப்பொருள்கள் யாவும் மாறுதலுக்கு உட்பட்டவை என்பதால் இது எவ்வாறு பொருந்தும்
    இதற்கு விடையாக
    இந்த ஜீவன் ப்ரபஞ்சம் இவற்றுடன் ப்ரஹ்மத்துக்குள் பொதுப்படையான காரணம் கூறப்படுகிறது –
    ஈஸ்வரன் ஜீவனாக மாறுகின்றான் எனக் கொண்டால்
    மறை மொழிகளின் படி ஆத்மா உண்டாவது இல்லை -என்றும் உள்ளவன் எனத் தேறுகிறபடியால் –2-3-3-ஈசனுக்கு ஏற்றத்தாழ்வு -அருளின்மை -2-1-34-ஆகியவை ஏற்படாது –
    ஜீவனுடைய பன்னெடுங்கால வினைப்பதொடர்பின் அடியாகப் படைப்பதால் ப்ரஹ்ம ஸூத்ரத்திலும் படைப்புக் காலத்தில் ப்ரஹ்மம் தவிர்த்த வேறில்லை என்பதால் வினையும் ஜீவனும் இல்லை என்று கொள்ள முடியாது
    ஏன் எனில் ஜீவன் ஆரம்பம் அற்றது என்று கூறப்பட்டு இருப்பதால் -ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது என்பதே பொருந்தும் -ஜீவர்கள் நாம ரூபங்கள் இல்லாமல் ப்ரஹ்மத்தோடே ஒன்றி இருந்தனர் -என்பதால்
    ஆரம்பம் இல்லாத அநாதியான ஜீவர்களின் வினைகளும் பன்னெடும் காலமாகவே தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால் பொருந்தும்
    இதுவே வேதத்தாலும் அறுதியிடப்பட்டது
    வினைகள் படைப்புக்கு முன் இல்லை எனக் கொள்ளில் ஜீவர்கள் காரணம் இன்றித் துயர் உறுதலும் செய்யும் தீயச் செயல்கள் பலன் அளிக்காது போலும் ஏற்படும்

    ததா ப்ரக்ருதே ரப்யநாதிதா ஸ்ருதிபி ப்ரதிபாதிதா –
    அஜாமேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் வஹ்நீம் ப்ரஜாம் ஜன யந்தீம் ச ரூபாம் அஜோ ஹ்யேகோ ஜூஷமானே நுசேதே
    ஜஹாத்யேநாம் புக்த போகாம ஜோந்ய இதி ப்ரக்ருதி புருஷயோரஜத்வம் தர்சயதி–

    இப்படியே ப்ரக்ருதியும் ஆரம்பம் அற்றது -அநாதி என்று வேதங்களால் அறுதிப்படுகிறது
    பிறப்பு அற்றதும் -கருப்பு சிவப்பு வெளுப்பு நிறங்கள் கலந்ததுமான ப்ரக்ருதியை பிறப்பற்ற ஒருவன் அனுபவித்துக் கொண்டு அதன் வழி செல்கிறான்
    பிறப்பற்ற மற்ற ஒருவன் அதை அனுபவிப்பதில்லை -என்று ப்ரக்ருதி புருஷர் -ஜீவர்களின் பிறப்பின்மை காட்டப்படுகிறது –

    ——————

    80–அஸ்மாந் மாயி ஸ்ருஜதே விஸ்வமேதத் தஸ்மிந் சாந்யோ மாயயா சந்நிருத்த -மாயம் து ப்ரக்ருதிம் வித்யாந் மாயி நந்து மஹேஸ்வரம்
    இதி ப்ரக்ருதிரேவ ஸ்வரூபேண விகாராஸ்பத மிதிச தர்சயதி-கௌரநாத் யந்தவதி ச ஜநித்ரி பூத பாவிநீ இதிசா

    ப்ரக்ருதியை -மாயாவை -ஏவல் கொள்ளும் பரமாத்மா -மாயி -அந்தப் பிரக்ருதியைக் கொண்டு உலகைப் படைக்கிறான்
    வேறொருவன் -ஜீவாத்மா அதில் அடைபடுகிறான்
    மாயா என்பது பிரக்ருதியாகவும் மாயி என்பது சர்வேஸ்வரனாகவும் அறியப்படுகிறது
    இவ்வாறு பிரக்ருதி தனது நிலை மாறுபாடு அடையக் கூடியதாகக் காணப்படுகிறது
    ஸ்ருஷ்டியின் பசுவான மூலப்ப்ரக்ருதி -சமஷ்டி -ஆரம்பமும் முடிவும் அற்றது -ஸ்ருஷ்டியின் பூதங்களை வ்யஷ்டி உண்டாக்குகிறது என அறியப்படுகிறது


    ஸ்ம்ருதிஸ் ச
    ப்ரக்ருதிம் புருஷஞ்ச ஏவ வித்யாநாதி உபாவபி -பூமிர் ஆபோ அநலோ வாயு கம் -மநோந் புத்தி ரேவச அஹங்கார
    இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிர் அஷ்டதா -அபரேயமிதஸ் த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்திமே பராம் –
    ஜீவ பூதாம் மஹா பாஹோ யாயேதம் தார்யதே ஜகத்
    பிரக்ருதிம் ஸ்வாம் அவஷ்டப்ய விஸ்ருஜாமி புந புந மாயா த்யஷேண ப்ரக்ருதி ஸூயதே ச சராசரம் இத்யாதிகா
    ஏவம் ச ப்ரக்ருதேரபி ஈஸ்வர சரீரவத் ப்ரக்ருதி சப்தோ அபி ததாத்ம பூதஸ்ய ஈஸ்வரஸ்ய தத் பிரகார சமஸ்திதஸ்ய வாசக
    புருஷ சப்தோ அபி தத் ஆத்மக பூதஸ்ய ஈஸ்வரஸ்ய புருஷ பிரகார சமஸ்திதஸ்ய வாசக –
    அத தத் விகாராணமபி தயைவ ஈஸ்வர -ஆத்மா -ததாக வ்யக்தம் விஷ்ணுஸ் ததா அவ்யக்தம் புருஷ கால ஏவச
    ச ஏவ ஷோபகோ ப்ரஹ்மந் ஷோப்யஸ் ச பரமேஸ்வர -இதி அத ப்ரக்ருதி பிரகார சமஸ்திதே பரமாத்மநி பிரகார பூத
    ப்ரக்ருதி அம்சே விகார பிரகார்யம்ஸோ நியாந்தா நிரவத்ய சகல கல்யாண குணாஸ்ரய ஸத்யஸங்கல்ப
    ஏவ ததாச சதி காரண அவஸ்தோபி ச ஏவேதி கார்ய காரணயோர் அநந்யத்வம் சர்வ ஸ்ருதி விரோதஸ் ச பவதி-

    ஸ்ம்ருதியும்
    ப்ரக்ருதி புருஷன் ஆகியவைகள் ஆரம்பம் அற்றவை என அறிந்து கொள்
    நிலம் நீர் நெருப்பு வளி வெளி மனம் புத்தி -மஹான் -அஹங்காரம் பத்து இந்திரியங்கள் ஆகிய எட்டு வகையாகி எனக்கு படைப்பில் துணை நிற்கின்றன
    இவற்றின் நின்றும் வேறுபட்டதான ஜீவன் -அதனால் உலகு தாங்கப்படுகிறது என்று உயர்ந்த தோளாய் அறிவாயாக
    என்னுடைமையான மூலப் பிரக்ருதியை எட்டு வித வேறுபாட்டை அடைவித்து பலவிதமாக உலகை மீண்டும் மீண்டும் படைக்கிறேன் –
    அழியாத வினைத் திட்ப்பமுள்ள என்னால் ப்ரக்ருதியும் -அதிலுள்ள அசையும் அசையாய் பொருள்களும் நிறைக்கப்படுகின்றன என்று சொல்கிறது
    இவ்வாறு மூலப்பிரக்ருதி ஈஸ்வரனின் உடலாய் இருக்கும் பண்பால் ப்ரக்ருதி என்னும் சொல்லும் -அதைக்குறிக்கும் சொற்கள் யாவும் -அதின் உயிர்நிலையான ஈஸ்வரனுடைய பிரிவற்ற நிலையைக் குறிக்கும்
    அவ்வாறே ஆத்மா புருஷன் -என்ற சொல்லும் அதன் உயிர் நிலையாகவும் அதனுடன் பிரிக்க இயலா நிலை யுடையவனாயும் இருக்கும் ஈஸ்வரனையே குறிக்கும்
    அவ்வாறே மஹான் மூலப்ப்ரக்ருதி காலம் ஆத்மா -யாவையும் விஷ்ணுவே -அவரே படைக்க முனபவர் படைப்படுவதும் -அவற்றில் உள்ளுறைபவரும் அவரே
    பரமாத்மாவுக்கு அங்கமான ப்ரக்ருதியில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன
    ப்ரக்ருதியை அங்கமாக வுடைய பரமாத்மாவின் மாறுபாடு ஏற்படுவதில்லை
    இவ்வாறே ஜீவாத்மாவை அங்கமாக உடையனாதலின் அதில் ஏற்படும் குறைபாடுகள் உள்ளிருப்பவனாகவும் அங்கியாகவும் ஏவுவோனாகவும் விளங்கும் குறைபாடற்ற எல்லா நலன்களுக்கும் இருப்பிடமான வழுவாத முனைப்புடைய பரமாத்மாவிற்கு இல்லை
    அங்கி-அங்கங்களை யுடையவன்

    அதனாலேயே கட் புலனாகாத காரண நிலையாவோனும் அதைக் கருப்பொருளாய்க் கொண்டு கட் புலனாகும் காரியப் பொருளான உலகு முதலியவையாக ஆகுபவனும் ஈஸ்வரனே
    இப்படிக் கொள்வதாலேயே காரண காரியப் பொருள்களில் வேறுபாடின்மை மறைக் கொள்கைகளுக்கு உள்ள உடன்பாடு கிடைக்கிறது –

    ——————–

    81–ததேவம் நாம ரூப விபாக அநர்ஹ ஸூஷ்மத சாபந்ந பிரகிருதி புருஷ சரீரம் ப்ரஹ்ம காரணாவஸ்தம் –
    ஜகத ததாபத்திரேவ ச ப்ரலய நாம ரூப விபாக விபக்த ஸ்தூல சிதசித் வஸ்து சரீரம் ப்ரஹ்ம கார்யாவஸ்தம் ப்ராஹ்மண
    ததாவித ஸ்தூல பாவ ஏவ ஸ்ருஷ்ட்டி இத்யுச்யதே –

    கட் புலனாகாத நிலையில் பெயர் உருவ மாறுபாடற்றசேதன அசேதன பொருட்களை தன் உடலாக உடைய ப்ரஹ்மம் காரணம்இவ்வாறு இருக்கும் நிலைக்கே ப்ரளயம் என்று பெயர்இதினின்றும் தோன்றும் கட் புலனாகும் அசேதன பொருட்களை தன் உடலாக உடைய ப்ரஹ்மம் காரியம்இந்தக் கட் புலனாகும் நிலை படைப்பு எனப்படும் –
    யதோக்தம் பகவதா பராசரேண-பிரதான பும்ஸோரஜயோ -காரணம் கார்ய பூதயோ-இதி

    இதை ஒட்டியே பகவான் பராசரரும் -பிறப்பற்ற மூல பிரகிருதி புருஷர்கள்-இவை காரண கார்யங்களாக ஆகின்றன -என்றார்

    தஸ்மாத் ஈஸ்வர பிரகார பூத
    சர்வாவஸ்த ப்ரக்ருதி புருஷ வாஸிந ஸப்தா தத் பிரகார விஸிஷ்ட தயா அவஸ்திதே பரமாத்மநி முக்ய தயா வர்த்தந்தே
    ஜீவாத்மவாஸி தேவ மனுஷ்யாதி சப்தவத் யதா தேவ மனுஷ்யாதி ஸப்தா தேவ மனுஷ்யாதி ப்ரக்ருதி பரிணாம விசேஷணாம்
    ஜீவாத்ம பிரகார தயைவ பதார்த்தத்வாத் பிரகாரிணி ஜீவாத்மநி முக்ய தயா வர்த்தந்தே தஸ்மாத் ஸர்வஸ்ய
    சிதசித் வஸ்துந பரமாத்ம சரீரதயா தத் பிரகாரத்வாத் பரமாத்மநி முக்ய தயா வர்த்தந்தே சர்வே தத் வாசகா ஸப்தா —

    அவை ஈஸ்வரனுடன் பிரிவற்ற நிலை உடையவையாதலால் இவைகளைக் குறிக்கும் சொற்கள் யாவும் இவ்விருப்பினால் பரமாத்மாவையே உள்ளுறை பொருளாகக் காட்டுகின்றன-தேவ மனிதர்களின் பெயரும் உருவமும் அவற்றின் உள்ளுறையும் ஜீவாத்மாவைக் குறிப்பது போலே
    அங்க -அங்கி நிலையினால் எல்லா சேதன அசேதன வஸ்துக்களும் அவற்றின் பெயர் உருவங்களும் ஈஸ்வரனுக்கு உடலாய் இருக்கும் தன்மையால் ஈஸ்வரனையே குறிக்கும் –

    ————-

    82–அயமேவச ஆத்ம சரீர பாவ -ப்ருதக் சித்யநர்ஹ தாராதேய பாவ -நியந்த்ரு நியாமய பாவ -சேஷ சேஷி பாவஸ் ச
    சர்வாத்மநா ஆதார தயா நியந்தரு தயா -சேஷி தயா ச ஆப்நோதீதி -ஆத்மா சர்வாத்மநா ஆதேய தயா நியாம்ய தயா சேஷ தயா ச
    அப்ருதக் சித்த பிரகாரத்வாத்-அப்ருதக் சித்தம் -ஆகார சரீரம் ஏவமேவஹி ஜீவாத்மந-
    ஸ்வ சரீர சம்பந்த ஏவமேவ பரமாத்மந-சர்வ சரீரத்வேந சர்வ சப்த வாச்யத்வம் —

    இதுவே உடல் -உயிர்த் தொடர்பு uஎன்பது -தனித்து இயங்கும் தன்மையற்று மற்ற ஒன்றினால் தாங்கப்படும் நிலையுற்று
    அதனால் இயக்குவோர் நிலையம் தொடர்பும் பெற்று இருப்பது
    எல்லா விதத்தாலும் தாங்குவதாகவும் ஏவுவதாகவும் பணி கொள்வதாகவும் அதின் நின்றும் பிரித்து நிலை யற்றதாகவும் உயிர் உடலுடன் பொருந்தி இருக்கிறது இவ்வாறே பரமாத்மாவும் எல்லாவற்றையும் தனக்கு உடலாகக் கொண்டு இருப்பதால் எல்லாச் சொற்களும் சுட்டிக் காட்டப்படுபவனாகவும் இருக்கிறான்

    சேஷன் -இயக்கப்படுவோன் -தன்னை இயக்குவோனுக்காக மகிழ்வுடன் செயல் புரிவோன்
    சேஷி -சேஷனைத் தன் விருப்பப்படி இயக்குபவன்-

    (சரீராத்ம பாவம்-சர்வாத்மனா ஆப்நோதி -விசேஷ வியாப்தி -தேச கால அவஸ்தா வாசி இல்லாமல் -ஆதாரம் நியாம்யம் சேஷி அப்ருதக் சித்தம் -பிரகாரம்-சர்வ ஸப்த வாஸ்யன் இதனாலேயே-பர்யவசான வ்ருத்தி )

    ——————

    83–ததாஹ ஸ்ருதி கண–சர்வே வேதா யத்பதமாமநந்தி -சர்வே வேதாயத்ரைகம் பவந்தி –(இந்த கட உபநிஷத் ஸ்ருதி -கீதை 2-8 அத்யாயத்திலும் ஸ்லோகம் இவற்றைக் கொண்டே உண்டே )

    (ஆபூர்யமாணம சல ப்ரதிஷ்டம் -ஸமுத்ரமாப ப்ரவிஸந்தி யத்வத்.–
    தத்வத் காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே-ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ—
    ৷৷2.70৷৷

    எப்படி தானே நிறைந்து இருப்பதாய் ஒரே நிலையில் உள்ள கடலை நதி நீர் அடைகின்றனவோ
    அப்படியே சப்தாதி விஷயங்கள் அனைத்தும் இந்திரியங்களை அடக்கிய எவனை அடைகின்றனவோ
    அவனே சாந்தியை அடைகிறான் -சப்தாதி விஷயங்களை விரும்புவான் சாந்தி அடைவது இல்லை)

    (புருஷ ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா.–
    யஸ்ய அந்தஸ் தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்
    —-৷৷8.22৷৷

    நாரங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமே -அயனமே நாராயணன் -சர்வ ஆராதத்வம் தாரகன் –
    எங்கும் வியாபித்து -உள்ளும் புறமும் -ஸர்வ வியாபகத்வம் -ஸர்வ அந்தர்யாத்மா-சரீர ஆத்மா -அந்தர்யாமி -நியமனம்)

    இதி தஸ்ய ஏகஸ்ய வாஸ்யத்வா தேகார்த்த வாஸிநோ பவந்தி-இத் யர்த்த
    ஏகோ தேவா பஹுதா சந்நிவிஷ்ட
    சஹைவ சந்தம் நவிஜாநந்தி தேவா –இத்யாதி
    தேவா இந்திரியாணி தேவ மனுஷ்யாதி நாமாந்தாயா மித்யா ஆத்மத்வேந நிவிஸ்ய -சஹைவ சந்தம் –
    தேஷாம் இந்திரியாணி மந பர்யந்தாணி ந விஜாநந்தி இத்யர்த்த

    (மனஸ் -ஏக ஆஸ்ரயம் அவனுக்கும் இந்திரியங்களுக்கும் -இருந்தாலும் இவை அறிய வில்லையே)

    இப் பொருளையே வேதங்களும் கீழ்க் கண்டவாறு பகர்கின்றன
    எல்லா வேதங்களும் அடையப்படும் இலக்காக எதை திரும்பத் திரும்ப பறைகின்றனவோ-எல்லா வேதங்களும் எந்த ஒருவனிடம் ஓன்று படுகின்றனவோ
    அந்தப் ப்ரஹ்மம் ஒன்றே மெய்ப்பொருளாக விளங்குவதால் சொற்கள் யாவும் ஒரே பொருளை யுடையவை யாகின்றன என்பது பொருள்
    ஒரே தேவன் பலவாக உள்ளுறைகிறான் -அவனை உடலுறையும் அறி புலன்கள் அறிவதில்லை
    இங்கு தேவா என்பது மனத்துடன் சேர்ந்த ஞான இந்திரியங்கள்
    தேவன் மனிதன் முதலிய சேதனப் பொருள்களில் உள்ளுறைவோனாக ஆத்மாவினுள் இருக்கும் அவனை அந்த ஆறு புலன்களும் அறிவதில்லை என்பது பொருள்

    ததா ச பவ்ராணிகாநி வசாம்சி
    நதா ஸ்ம சர்வ வசஸாம் பிரதிஷ்டா யத்ர ஸாஸ்வதீ (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-வாஸ்யேஹி வசச பிரதிஷ்டா காரணம் பூர்வம் வசஸாம் வாஸ்ய முத்தமும் -(ஜிதந்தே )
    வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வித்யா –இத்யாதீ நி ஸர்வாணி ஹி வாஸாம்சி ச சரீராத்ம விஸிஷ்ட -மாந்தர்யாமிணமேவ ஆசஷதே–
    ஹந்த ஹபீமா திஸ் ரோதேவதா அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி இதி ஹி ஸ்ருதி –

    அவ்வாறே புராணம் உரைப்பவர்களும் -எல்லாச் சொற்களுக்கும் பொருளாய் -அதன் மெய்ப்பொருளாய் நிலையாக விளங்குவோனை நாங்கள் வணங்குகிறோம் -என்றார்கள்
    சொற்களின் முடிவு பொருளால் ஆகிறது -செயல்களுக்கு எல்லாம் முதல் காரணமும் -சொற்களுக்கு எல்லாம் பொருள் முடிவும்
    வேதங்கள் யாவற்றாலும் அறியப்படுபவன் யானே என்றவாறு சொற்கள் யாவும் உருவ அமைப்பொடு கூடிய உயிரைக் காட்டி அவ்வாத்மாவில் உள்ளுறையும் பரமாத்மாவைக் காட்டி பொருள் முடிவு பெறுகின்றன
    என்னே தானே நிலம் நீர் தீ இவற்றின் உட் புகுந்து பொருள்களுக்கு பெயர் உருவங்களைக் கொடுக்கிறேன் என்று வேதம் கூறுகிறது-

    ததா ச மாநவம் வச–பிரசாசிதாரம் ஸர்வேஷா மணீயாம் ச மணீயசாம் ருக்மாபம்-ஸ்வப்ந தீ கம்யம் வித்யாத் து புருஷன் பரம்
    அந்த பிரவிஸ்ய-அந்தர்யாமிதயா ஸர்வேஷாம் பிரசாசிதாரம் -நியந்தாரம் அணீயாம் ச ஆத்மாந க்ருத்ஸ்ரஸ்யா சேதநஸ்ய வ்யாபகதயா
    ஸூஷ்ம பூதா தேஷாம் அபி வ்யாபகத்வாத் தேப்யோபி ஸூஷ்ம தர இத்யர்த்த ருக்மாப-ஆதித்ய வர்ண –
    ஸ்வப்ந தீ கம்யம் ஸ்வப்ந கல்ப புத்தி ப்ராப்யம் விசத தம ப்ரத்யக்ஷதாபந்ந அநு த்யாநை கல்ப்ய-இத்யர்த்த –
    ஏநமே கே வதந்த் யக்நிம் மருதோநய ப்ரஜாபதிம் இந்திரமேக பரே ப்ராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம் இதி ஏகே வேதா இத்யர்த்த
    உக்தரீத்யா பரஸ்யைவ ப்ரஹ்மண-சர்வஸ்ய ப்ரசாசித்ருத்வேந சர்வ அந்தராத்மதயா ப்ரவிஸ்ய அவஸ்திதத்தவாத்
    அஞ்ஞாய தயோபி ஸப்தா சாஸ்வத ப்ரஹ்ம சப்தவத் தஸ்யைவ வாசகா பவந்தி இத்யர்த்த –

    பிறகு மனுவின் வாக்யமும்
    பொருள்கள் யாவற்றினுள்ளும் நிலை பெற்று ஆள்பவனாகவும்
    அணு அளவிலான பொருள்களையும் விட அணுவாய் இருப்பவனும்
    பொன்னென ஒளிர்பவனும்
    ஞானம் என்னும் உட் கண்ணால் -நம்மால் -கனவில் காண்பது போல் காணப்படக் கூடியவனுமான
    பரம புருஷன் உள்ளுறைந்து
    எல்லாவற்றையும் ஆள்பவன் -என்று கூறுகிறது –

    பிராணிகளுக்கு உடல் முழுவதும் நீக்கமற உயிர் நிறைந்து இருப்பதால் ஆத்மா அணு அளவினன்
    அவ்வாத்மாவின் உள்ளும் பரம புருஷன் புகுந்து நிறைவதால் சேதன அசேதன பொருட்களை விட அணுவள வினன் என்பது பொருள் –
    கதிர் ஒளி கனவில் மனத்திற்குக் காணப் படுவது போல்
    தெள்ளத் தெளிவாக நேரில் காண்பது போல் த்யானத்தில் காணத் தக்கவன் என்பது பொருள்
    இவனை நெருப்பு என்றும் காற்று என்றும் பிரமன் என்றும் இந்திரன் என்றும் உயிர் மூச்சு என்றும் கூறப்படுபவனான
    நிலையான மேலான ப்ரஹ்மம் என்று வேதங்கள் கூறுகின்றன -என்று பொருள்

    பர ப்ரஹ்மம் எல்லாப் பொருட்களிலும் உள்ளுறைந்து அவற்றை ஆட்சி செய்வதால் தீ முதலிய சொற்கள் அவற்றுள் நிலை பெற்று இருக்கும் ப்ரஹ்மத்தையே குறிக்கும் சொற்களே என்பது இங்கு பொருள்

    ததாச ஸ்ம்ருத் யந்தரம்
    யே யஜந்தி பித்ருந் தேவாந் ப்ராஹ்மணாந் சஹு தாசநாந் சர்வ பூத அந்தராத்மநாம் விஷ்ணுமே வ யஜந்தி தே இதி
    பித்ரு தேவ ப்ராம்ஹண ஹுதாசநாதி ஸப்தா தந் முகேந ததந்தராத்ம பூதஸ்ய விஷ்ணோ ரேவ வாசகா இத்யுக்தம் பவதி —

    அவ்வாறே ஸ்ம்ருதிகளிலும்
    பித்ருக்களை தேவர்களை அக்னியுடன் சேர்ந்த அந்தணர்களைக் குறித்து யாகம் செய்பவர்கள் எல்லாப் பொருட்களுக்கும் உள்ளுறை பவனாகிய விஷ்ணுவையே குறித்து யாகம் செய்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது
    பித்ருக்கள் அந்தணர் அக்னி ஆகிய சொற்கள் தத் தத் முகமாக தமக்கு உள்ளுறைபவனான விஷ்ணுவையே குறிக்கும் சொற்கள் என்பதே சரியான கொள்கை –

    —————————

    84–அத்ரேதம் சர்வ ஸாஸ்த்ர ஹ்ருதயம் -ஜீவாத்மாந ஸ்வயம் அங்குசித அபரிச்சின்ன நிர்மல ஞான ஸ்வரூபா சந்த-
    கர்ம ரூப அவித்யா வேஷ்ட்டிதா-தத் காம அநு ரூப ஞான சங்கோச மாபந்நா ப்ரஹ்மாதி ச தம்ப பர்யந்த விவித விசித்ர
    தேஹேஷு ப்ரவிஷ்டா தத் தத் தேஹோசித லப்த ஞான பிரசரா தத் தத் தேஹாத்ம அபிமாந தத் உசித கர்மாணி குர்வாணா-
    தத் அநு குண ஸூக துக்கோப போக ரூப சம்சார ப்ரவாஹம் பிரதிபத்யந்தே -ஏதேஷாம் சம்சார மோசனம்
    பகவத் பிரபத்தி மந்தரேண நோபபத்யதே இதி –

    (கர்மாவும் அவித்யாவும் பகவத் நிக்ரஹ ரூபமே-வேஷ்ட்டிதா-மூடப்பட்டு)

    ஸாஸ்த்ரங்கள் யாவும் கூறும் மையக் கருத்துப் பொருள் இதுவேயாகும்
    ஜீவாத்மாக்கள் தன்னடையே குறைவற்ற அளவு கடந்த அப்பழுக்கு அற்ற ஞானத்தை யுடையவைகள்
    தன் செயல்களினால் ஏற்பட்ட வினைப் பயனால் அறியாமை சூழப்பட்டு அவ் வினைகளுக்கு ஏற்ப ஞானக் குறைவின் பலனாக
    பிரமன் முதல் புல் ஈறான பலவிதமான உருவமுடைய உடல்களில் நுழைந்து அவ் வமைப்புகளில் விருப்பம் கொண்டு அதற்கேற்ற செயல்களைச் செய்து கொண்டு அதனடியாய் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டு முடிவற்ற பிறவிச் சுழலில் தடுமாறுகிறது
    இப்படிப்பட்ட ஜீவன்களுக்கு பிறவிச் சுழலில் நின்றும் விடுபட பகவானிடம் சரண் அடைவது தவிர வேறு வழி இல்லை –

    ——————-

    85–ததர்த்தம் பிரதம மேஷாம் தேவாதி பேத ரஹித ஞாநைக ஆகார தயா ஸர்வேஷாம் சாம்யம் ப்ரதிபாத்ய –
    தஸ்யாபி ஸ்வ ரூபஸ்ய பகவச் சேஷதைக -ஸ்வரூபைக ரசதயா பகவதாத் மகதாமபி ப்ரதிபாத்ய -பகவத் ஸ்வரூபம்
    ச ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதாந தயா சகல இதர விஸஜாதீயம் -அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண ஆஸ்ரயம் –
    ஸ்வ சங்கல்ப ப்ரவ்ருத்த ஸமஸ்த சித் அசித் வஸ்து ஜாத தயா ஸர்வஸ்ய ஆத்ம பூதம் ப்ரதிபாத்ய
    தத் உபாஸநம் சாங்கம் தத் ப்ராபகம் ப்ரதிபாத யந்தி சாஸ்த்ராணீதி —

    அதன் பொருட்டு -முதற் கண் தேவன் முதலான வேறுபாடுகளுள்ள ஜீவன்கள் அனைத்தும் ஞானத்தளவில் ஒரே படிப்பட்டவையாய் இருத்தலைக் கூறி
    அந்த ஞான உருவிற்கு இறைவனுக்கு அடிமைப்பட்டு இருத்தலே இயல்பான பண்பு என்றும்
    இறைவனையே தன் ஆத்மாவாக உடையவை என்றும் கூறி
    இறைத் தன்மை தீயக் குணங்கள் யாவற்றுக்கும் எதிர்த்தட்டாய் இருத்தலையும் நற் பண்புகள் யாவற்றுக்கும் உறைவிடமாய் இருத்தலையும்
    தன்னை ஒழிந்த மற்றை யாவற்றின் நின்றும் மாறுபட்டு இருத்தலையும்
    உயர்வற உயர் நலமுடையதாய் இருத்தலையும்
    தன் வழுவாத வினைத் திட்பத்தால் சேதன அசேதன பொருட்கள் யாவினுள்ளும் ஆத்மாவாய் விளங்குவதையும் விளக்கி
    அவனைக் குறித்த தியானத்தை அதன் அங்கங்களுடன் செய்தலே அவனை அடையும் நெறி என்பதையே சாஸ்திரங்கள் பகர்கின்றன

    ஸத்ய ஸங்கல்பம் -ஸத்ய காமம் –மாறா விருப்பம் நிறைவேற்றுவதற்கான வினைத் திடபம்

    ———————

    86–யதோக்தம் -நிர்வாணமய ஏவாயமாத்மா ஞாநமய அமல -துக்க அஞ்ஞான மலா தர்மா ப்ரக்ருதேஸ்தே நசாத்மந
    ப்ரக்ருதி சம்சர்க்கக் க்ருத கர்ம மூலத்வாத் ந ஆத்ம ஸ்வரூப ப்ரயுக்தா தர்மா
    இத்யர்த்த ப்ராப்த அப்ராப்த விவேகேந ப்ரக்ருதி ரேவ தர்மா இத்யுக்தம் –

    அவ்வாறே இந்த ஆத்மா வினைகளின் தொடர்பு அற்றவன் -ஆனந்த மயமானவன் -ஞான மயமானவன் தூய்மை யானவன் -துன்பம் அறியாமை ஆகிய கறைகள் உடல் தொடர்பால் மட்டுமே ஏற்படுகின்றன
    இவை ஆத்மாவிற்குக் கிடையாது -உலகின் உடல் தொடர்பால் செய்யப்பட வினை விளைவாகவே இவை ஏற்படுகின்றன -ஆத்மாவின் இயல்பினால் அன்று -என்று பொருளாடும்
    இதற்கு ஏற்படும் விளைவுகள் உலகின் இயல்பு என்பது வெளிப்படை –

    —————————

    87–வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணேகவி ஹஸ்திநி ஸூநி ஸைவ ஸ்வ பாகே ச பண்டித சம தர்சிந –ஸ்ரீ கீதை -5–18-இதி
    தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூப ப்ரக்ருதி ஸம் ஸ்ருஷ்டஸ்ய ஆத்மந ஸ்வரூப விவேசநீ புத்தி ஏஷாம் தே பண்டிதா-
    தத் ப்ரக்ருதி விசேஷ வி யுக்த ஆத்ம யாதாத்ம ஞான வந்த -தத்ர தத்ர அத்யந்த விஷம ஆகாரே வர்த்த மாநம் ஆத்மாநம்
    சமாநா காரம் பஸ்யன்தீதி சம தர்சிந இத்யுக்தம்
    ததிதமாஹ-இஹைவ தைர்ஜித ஸ்வர்க்கோ ஏஷாம் சாம்யே ஸ்திதம் மந நிர்தோஷம் ஹி சமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தேஸ்திதா –
    இதி நிர்தோஷம் தேவாதி ப்ரக்ருதி விசேஷ ரூப சம்சர்க்க தோஷ ரஹிதம் ஸ்வரூபேணா வஸ்திதம் சர்வம் ஆத்ம வஸ்து
    நிர்வாண ரூப ஞான ஏக ஆகாரதயா சமம் இத்யர்த்த —

    கல்வியும் அடக்கமும் நிறைந்த அந்தணன் பசு யானை நாய் அதை தின்னும் சண்டாளன் -இவர்களிடம் -ஆத்மாக்களிடம் -கற்றறிந்தோர் சமமான நோக்குடையவர்களாய் இருப்பார்கள்
    தேவ விலங்கு மனித தாவர உடல்களால் உலகுடன் பிணைக்கப்பட்டு இருக்கும் ஆத்மாக்களை அவ்வுடல்களில் நின்றும் பகுத்து அறியும் இயல்புடையவர்களே பண்டிதர் -கற்றறிந்தோர் -சம நோக்குடையவர் -எனப்படுவர்
    உலகியலின் தாழ்மை நீக்கி ஆத்மாவின் மெய்யியல் யறிந்து பலவகையான ஏற்றத் தாழ்வுகளுடன் கூடியிருக்கும் ஆத்மாக்களை ஓரு படிப்பட்டவர் என்று அறிவோரே சம நோக்குடையவர் எனப்படுவர்

    எந்த ஞானிகள் மனத்தில் ஆத்மாக்கள் யாவும் சமம் என்ற எண்ணம் நிறைந்து இருக்கிறதோ அவர்கள் இவ்வுலகிலேயே துறக்கத்துக்கு ஈடான நிலையை அடைகின்றனர்
    தேவன் முதலான உடல்களில் நின்றும் நீங்கிய ஆத்மா குற்றம் அற்றது
    ஆத்மாக்கள் யாவும் தம் மெய்யுருவில் ஆனந்தத்தையும் ஞானத்தையும் சமமாக யுடையவர்கள் என்பது தெளிவு

    சண்டாளன் -பிறவி செயல் இவற்றால் இழிந்து கொடூரமான செயல்களையே செய்பவன்

    —————-

    88–தஸ்யைவம் பூதஸ்ய ஆத்மந பகவஸ் சேஷதகை ரஸதா தந் நியாம்யதா ததேக ஆதாரதா ச தத் தத் சரீர –
    தத் தநு ப்ரப்ருதிபிஸ் சப்தை-தத் சாமாநாதி கரண்யேந ச ஸ்ருதி ஸ்ம்ருதி இதிகாச புராணாதிஷு
    ப்ரதிபாத்யதே இதி பூர்வமேவ யுக்தம் —

    இந்நிலையை யுடைய ஆத்மா பகவானுக்கு அடிமைப்பட்டு இருப்பவனாகவும் -அவனால் ஏவப்படுபவனாகவும் -அவனையே பற்றுக்கோடாக யுடையவனாயும் இருத்தலால்
    அவ்வுடல் அமைப்புக்கள் அந்த ஸாமா நாதி கரணத்தால் பகவானையே காட்டுகின்றன என்பது
    ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களால் அறுதியிடப்பட்டு இருக்கிறது என்பது முன்பே விளப்பட்டு விட்டது

    ———

    89–தைவிஹ்யேஷா குணமயி மம மாயா துரத்யயா
    மாமேவயே பிரபந்த்யந்தே மாயா மேதாம் தரந்திதே –ஸ்ரீ கீதை -7-14–இதி
    தஸ்யை தஸ்ய ஆத்மந கர்ம க்ருத விசித்ர குண மய ப்ரக்ருதி ஸம் சேர்க்க ரூபாத் சம்சாராத் மோக்ஷ
    பகவத் பிரபத்தி மந்தரேண நோபபத்யதே
    இத்யுக்தம் பவதி நாந்யப் பந்தா அயநாய வித்யதே –இத்யாதிபி ஸ்ருதி பிஸ் ச —

    என்னுடைய அலகிலா விளையாட்டால் விளைந்த -முக் குணம் நிரம்பிய இந்தப் பிரக்ருதி மாயா -கடத்தற்கு அரியது
    எவர்கள் என்னயே சரணம் அடைகிறார்களோ -பிரபத்தி செய்கிறார்களோ -அவர்கள் இந்தப் பிரக்ருதியைக் கடக்கின்றனர்
    செய்த வினைகள் முக்குணத் தொடர்பு அவற்றின் நின்றும் கிட்டும் பல படித்தான பிரகிருதியின் தொடர்பு ஆகிய பிறவிச் சுழலில் இருந்து விடுதலை பகவானைச் சரண் அடைவதால் அன்றி -பிரபத்தி செய்வதால் அன்றி-மற்ற ஒன்றால் கிட்டாது எனக் கூறப்படுகிறது
    மறை மொழியும் பரமாத்மாவை அடைய வேறு வழி கிடையாது எனப் பகர்கிறது-

    ————

    90—மயாததமிதம் சர்வம் ஜகதவ்யக்த மூர்த்திநா
    மத்ஸ்தாநி சர்வ பூதாநி ந சாஹம் தேஷ்வ வஸ்திதா –ஸ்ரீ கீதை
    ந ச மத் ஸ்தாநி பூதாநி பாஷ்யமே யோகம் ஐஸ்வர்யம்
    இதி சர்வ சக்தி யோகாத் ஸ்வ ஐஸ்வர்ய வை சித்ரியமுத்தம்
    ததாஹ-விஷ்டப்யாஹமீதம் க்ருத்ஸனமேகாம் சேந ஸ்திதோ ஜகத் இதி
    அநந்த விசித்ர மஹா ஆச்சர்ய ரூபம் ஜகத் மம அயுதாம் சாம்சேந ஆத்ம தயா பிரவிஸ்ய
    சர்வம் மத் சங்கல்பேந விஷ்டப்ய அநேந ரூபேண அநந்த மஹா விபூதி அபரிமிதோதோர குண சாகர
    நிரதிசய ஆச்சர்ய பூத ஸ்தித அஹம் -இத்யர்த்த –

    கட் புலனாகாத என்னால் வியாபிக்கப் பட்ட இவ்வுலகும் பிராணிகளும் என்னிடத்தில் இருக்கின்றன -என்னால் தாங்கப்படுகின்றன -நான் அவைகளால் தாங்கப்படுவதில்லை –
    மேலும் இயற்கையாகவே வருகின்ற அளவற்ற செல்வமுடைய என்னை இந்தப் பிராணிகள் அறிவதில்லை
    இவ்வாறு ஈஸ்வரனின் எல்லா வல்லமையும் எல்லா ஐஸ்வர்யமும் பெற்றுள்ள ஆச்சர்யமான தன்மை விவரிக்கப் பட்டன
    அவ்வாறு இவ்வுலகு முழுவதையும் என்னுடைய ஒரு சிறு பகுதியாலேயே தாங்குகிறேன்
    முடிவற்ற ஆச்சர்யமான உருவுடைய இவ்வுலகு எனது சக்தியின் பத்தாயிரத்தின் ஒரு பகுதியின் ஒரு சிறு பகுதியாலேயே உயிரின் உயிராய் நிறைக்கப்பட்டு யாவும் எனது வழுவாத வினைத் திட்பத்தினாலே தாங்கப்படுகின்றன
    எல்லை யற்ற ஆச்சர்யமுடைய இவ்வுலகையும் உயிர்களையும் எல்லையற்ற வள்ளன்மை யுடைய நான் செல்வமாகக் கொண்டிருக்கிறேன் என்பது பொருளாகும் –
    ஐஸ்வர்யம் -செல்வம்
    யோகேஸ்வரம் -இயற்கையாகவே செல்வங்களை உடையனாய் இருத்தல் –

    ————

    91–ததிதமாஹ-ஏகத்வே சதி நாநாத்வம் நாநாத்வே சதி ஸைகதா -அசிந்த்யம் ப்ரஹ்மணோ ரூபம் கஸ்தத் வேதிதும் அர்ஹதி –
    இதி பிரசாசி த்ருதவேந ஏக ஏவ சந் விசித்ர சித்சித் வஸ்துஷு அந்தராத்மதயா பிரவிஸ்ய–தத் தத் ரூபேண
    விசித்ர பிரகார விசித்ர கர்ம காரயந் நாநா ரூபதாம் பஜதே-
    ஏவம் ஸ்வ அல்பாம்சேந து ஸர்வாஸ்சர்யமயம் நாநா ரூபம் ஜகத் தத் அந்தராத்மதயா பிரவிஸ்ய
    விஷ்டப்ய நாநாத்வேநா வஸ்திதோபி சந்
    அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண -ஸர்வேச்வரேச்வர பர ப்ரஹ்ம பூத புருஷோத்தம நாராயண
    நிரதிசய ஆச்சர்ய பூத நீல தோய்த்த சங்காச புண்டரீக தல அமலாய தேஷண-சஹஸ்ராம்ஸூ சஹஸ்ர கிரண
    பரம வ்யோம்நி தத் அக்ஷரே பரமே வ்யோமந் -இத்யாதி ஸ்ருதி சித்த ஏக ஏவ அதிஷ்டதே —

    ஒன்றாய் இருந்தும் பலவாகவும் பலவாறு இருந்தும் ஒன்றாகவும் திகழ்வதான சிந்தனைக்கு எட்டாததுமான ப்ரஹ்மத்தின் வடிவை யாரே அறியத்தக்கவர் –
    ஆச்சர்யமான சேதன அசேதன பொருள்களில் உள் நுழைந்து அந்தந்த ஆச்சர்யமான உருவங்களைக் கொண்டு விசித்ரமான செய்கைகளை செய்வித்துத் கொண்டு ஒன்றாகவே இருந்து கொண்டு பலபடி பட்டதாகத் தோன்றும் யாவற்றையும் ஆள்கின்றனனாக -ப்ரஹ்மம் -விளங்குகிறான்-தனது அற்ப ஒரு சிறு பகுதியால் பல ஆச்சர்யங்கள் நிறைந்த பலபடிப் பட்ட உலகை உள்ளுறைந்து தாங்கிக் கொண்டு இருப்பவனாய்
    எல்லையற்ற நற் குணங்களுடையவனாய் -ஈஸ்வரர்கள் யாவருக்கும் ஈஸ்வரனாய் -தேவாதி தேவனாய் பர ப்ரஹ்மமாய் எல்லையற்ற ஆச்சர்யங்கள் யுடையவனாய் அளவற்ற ஒளியுடையோனாய் நீருண்ட மேகம் போன்ற மேனியனாய் தாமரை இதழ் ஒத்த கண்களை உடையவனாய் புருஷோத்தமனான நாராயணன் பரமபதத்தில் ஏகாந்தமாக உளுந்து அருளியிருக்கிறான்
    வேதங்களில் ஆழ்ந்த கருத்தாய் விளங்குபவன் -மறைந்த முழைகளில் இருப்பவன் பரம பதத்தில் இருக்கிறான் –
    அழிவற்ற அவன் பரமபதத்தில் விளங்குகிறான் -இவ்வாறு ஸ்ருதிகளால் தேறிய பொருளாய் விளங்குவோன் ஒருவனே –

    ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்ய கஸ்ய சித் பி வஸ்துந ஏக ஸ்வபாவஸ்ய -ஏக கார்ய சக்தி யுக்தஸ்ய –
    ரூபாந்தரயோக ஸ்வ பாவாந்தர யோக -சக்தி யந்திர யோகஸ் ச நகடதே தஸ்ய ஏதஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண-
    சர்வ வஸ்து விஸாஜாதீய தயா சர்வ ஸ்வாபவத்வம் சர்வ சக்தி யோகஸ் சேதி ஏகஸ்யைவ விசித்ர அநந்த நாநா ரூபதா
    ச புநரபி அநந்த அபரிபித ஆச்சர்ய யோகேந ஏக ரூபதா ச ந விருத்தா இதி வஸ்து மாத்ர சாம்யாத்
    விரோத சிந்தந யுக்தா இத்யர்த்த –

    ப்ரஹ்மம் தவிர்த்த மற்ற எப்பொருளுக்கும் ஒரு படிப் பட்ட பண்பு -ஒரு முகமான செயல் திறன் ஒரே உரு மட்டும் உண்டு -மாறாக மற்றோர் உருமாறு தன்மையும் மாறுபட்ட பண்புகளும் வேறு பட்ட செயல் திறனும் ஏற்படுதல் இல்லை தம்முள் மாறுபட்ட பல படிப்பட்ட பொருள்களின் பண்புடையவனாயும் செயல் திறன் யாவையும் யுடைய ஒன்றாய் எல்லை யற்ற பற்பல ஆச்சர்யமான உருக்கள் உள்ளதாய்
    இப்படிப்பட்ட பண்புகள் அனைத்தையும் தன் எல்லையற்ற ஆச்சார்யமான இருப்பு நிலையால் தன் யோக சக்தியால் ப்ரஹ்மம் பெற்று இருத்தல் மாறுபாடு உடையது அல்ல –
    பொருட்களில் மாறுபாட்டால் மட்டும் ப்ரஹ்மம் மாறுபாடு உடையது எனக் கொள்ளத் தகாது –

    யதோக்தம்
    சக்த்ய சர்வ பாவாநாம் அசிந்ய ஞான கோஸரா யாதோதோ ப்ரஹ்மணஸ் தாஸ்து சர்காத்யா பாவ சக்தய பவந்தி
    தபாதாம் ஸ்ரேஷ்ட பாவ கஸ்ய யதோஷ்ணதா–ஸ்ரீ விஷ்ணு புராணம் –
    இதி -ஏதத் யுக்தம் பவதி -ஸர்வேஷாம் அக்னி ஜலாதீநாம் பாவாநாம் ஏகஸ்மின்நபி பாவே த்ரஷ்டைவ சக்தி தத் விஸாஜாதீய
    பாவாந்தரேபி இதி ந சிந்தயிதும் யுக்தா ஜலாதவ் அத்ருஷ்டாபி தத் விசாஜாதீயே பாவகே பாஸ்வரத்வ உஷ்ணத்வாதி சக்தி
    யாதாருச்யதே ஏவமேவ சர்வ வஸ்து விஸாஜாதீயே ப்ரஹ்மணி சர்வ சாம்யம் நாநு மாதும் யுக்தம்
    இதி அத விசித்ர அநந்த சக்தி யுக்தம் ப்ரஹ்ம இத்யர்த்த ததாஹ
    ஜெகதே தந் மஹா ஆச்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத் மந தேநாஸ்சர்ய வரேணாஹம் பவதா கிருஷ்ண சங்கத்தை இதி –ஸ்ரீ பாகவதம் –

    மேலும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்
    தவசிகளில் சிறந்தவரே -மைத்ரேயரே -தீ நீர் போன்றவற்றில் அவற்றுக்கு என சிறப்பான பண்புகள் இருப்பது போல் நம் மனதிற்கு எட்டாத திறமைகள் யாவும் உடையதாயும் -அவ்வாறே ஆக்கல் அளித்தல் அழித்தல் திறன்களை யுடையதாயும் இருத்தல் ப்ரஹ்மத்திற்கே உரிய பண்பு -என்று கூறப்பட்டு உள்ளது
    தீ நீர் போன்றவற்றிற்கு ஒவ்வொரு சிறப்புத் தன்மைகள் இருக்கின்றன
    ஆயின் அவற்றின் நின்றும் வேறுபட்ட பொருள்களின் பண்புகள் அவற்றில் காணக் கிடைப்பதில்லை
    நீருக்கு அதன் பண்பின் நின்றும் ஒளி விடும் திறன்
    இல்லை -அவ்வாறே ஒளிர்தல் வெப்பமடைதல் எனும் பண்புகளை யுடைய தீயில் நீரின் பண்பு காணப்படுவதில்லை
    ஆயின் ப்ரஹ்மம் ஒன்றில் மட்டும் இது போன்ற எல்லாப் பொருள்களின் பண்புகளும் திறன்களும் காணப்படும்
    அதாவது -விசித்ரமான பண்புகளை யுடையது ப்ரஹ்மம் என்பது விளங்கும்
    அவ்வாறே அக்ரூரரும் நம்பி மூத்த பிரானையும் கிருஷ்ணனையும் கோகுலத்தில் நின்றும் அழைத்துச் செல்லுகையில் -ஸ்ரீ மத் பாகவதம் -பல ஆச்சர்யமான உருக்களுடைய இவ்வுலகு உன் உரு -அந்த ஆச்சர்யமான உன் உருவில் கண்ணா நான் கலந்தேன் -என்றார்

    ————-

    92-ததே தத் நாநாவித அநந்த ஸ்ருதி நிகர -சிஷ்ட பரிக்ருஹீத தத் வ்யாக்யான பரிஸ் ஸ்ரமாத் அவதாரிதம்
    ததாஹி -பிரமாணாந்தரா பரி த்ருஷ்ட -அபரிமித பரிணாம-அநேக தத்வ நியத க்ரம விஸிஷ்டவ்
    ஸ்ருஷ்ட்டி ப்ரலயவ் ப்ராஹ்மண அநேக விதா ஸ்ருதயோ வதந்தி

    அப்படிப்பட்ட இது -ப்ரஹ்மம் -சான்றோர் களால் கைக் கொள்ளப் பட்ட எல்லை யற்ற பலபடிப்பட்ட வேதங்களின் திரள் கருத்தாய் அவர்களுடைய உரை நன்கு ஆராய்ந்து நிறுவப் பெற்றதுஅவ்வாறே வேதங்கள் தவிர்த்த மற்ற மெய்யுரைகளால் அறியப்பட முடியாததாயும் -எல்லையற்ற பரிணாமம் யுடையதாயும் பல தத்வங்களின் ஒழுங்கான விதி முறைகள் நிறைந்ததாயும் உள்ள ஆக்கல் அளித்தல் அழித்தல் தொழில்களைச் செய்யும் ப்ரஹ்மம் பலவிதமாக பல வேதங்களில் சொல்லப்படுகிறது –


    நிரவத்யம் -நிரஞ்சனம் -விஞ்ஞானம் -ஆனந்தம் -நிர்விகாரம் -நிஷ்க்ரியம் -சாந்தம் -நிர்குணம் -இத்யாதிகா
    நிர்குணம் ஞான ஸ்வரூபம் ப்ரஹமேதி காஸ்சந ஸ்ருதயோ அபி ததபி

    குற்றமின்மை –தனித்தன்மை நிறைந்த அறிவுடைமை ஆனந்தமுடைமை மாறுபாடின்மை பிளவு படாமை செயலின்மை அமைதியுடைமை தீய பண்புகள் அற்ற தன்மை ஆகிய தீய குணங்கள் அற்ற அறிவுருவானது ப்ரஹ்மம் என்று சில வேதங்கள் மொழிகின்றன

    நேஹ நாநாஸ்தி கிஞ்சன ம்ருத்யோஸ் ச ம்ருத்யு மாப்நோதி ய இஹ நாநேவ பஸ்யதி
    யத்ரத்வஸ்ய ஸர்வாத்மைவாபூத் தத்கேந கம்பஸ்யேத் தத்கேந கம் விஜாநீயாத்–இத்யாதிகா
    நாநாத்வ நிஷேதவாதிந்ய சாந்தி காஸ்சந ஸ்ருதய

    (நிரவத்யம் –கர்ம சம்பந்தம் அற்றது –நிரஞ்சனம்-கர்ம பல சம்பந்தம் அற்றது-நிஷ்க்ரிய-அதனால் நிர் அயவவம் )

    (ஸாஸ்த்ர ஞானமும் ஞான பலனும் ஷாந்திக்கு ஹேது -கிரியைகளும் கிரியைகளின் பலமும் அஷாந்திக்கு ஹேது)

    பலவாகத் தோன்றும் எதுவும் இல்லை -இதைப் பலவாகக் காண்பவன் அழிவின் நின்று மீண்டும் அழிவையே அடைகிறான்
    இங்கு உள்ள பொரு ட் கள் யாவும் அவனே -அதுவே என்று இருக்கையில் அதை எவ்வாறு பிரித்துப் பார்க்க முடியும் எவ்வாறு பிரித்து உணர -அறிய முடியும் -என்று மறுத்துக் கூறும் பல சொற்களும் சில வேதங்களில் இருக்கின்றன –

    யஸ் சர்வஞ்ஞ சர்வவித் யஸ்ய ஞான மயம் தப ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமாநி க்ருத்வாபி வதந் யதாஸ்தே –
    சர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத் புருஷா ததி-

    எல்லாம் அறிந்தவன் -எல்லாவற்றிற்கும் அறிவானவன் -அறிவையே தவமாக -நெறியாக -உடையவன் -பொருட்கள் யாவற்றிற்கும் பெயர் உருவங்களைக் கொடுப்பவன் -மின்னொளி பெற்ற பரம புருஷனிடம் இருந்து -கால அளவுகள் -நிமிடங்கள் -தோன்றின

    அபஹத பாப்மா விஜரோ வி மிருத்யு விசோகோ விஜிகத்ஸ்ஸோபிபாச சத்யகாம ஸத்யஸங்கல்ப இதி சர்வஸ்மிந்
    ஜகதி ஹேய தயா அவகதம் சர்வம் குணம் ப்ரதிஷித்ய-நிரதிசய கல்யாண குண அநந்த்யாம்
    சர்வஞ்ஞதாம் சர்வ சக்தி யோகம் சர்வ நாம ரூப வியாகரணம் ஸர்வஸ்ய ஆதாரதாம் காஸ்சந ஸ்ருதய ப்ருவதே

    பாபங்கள் அற்றது -கிழத்தன்மை அற்றது அழி வற்று துயர மற்று பசியற்று தாகமற்று நிலை பெற்ற வினைத் திட்பம் யுடையவனாய் -அடைய வேண்டிய தேவைகள் ஏதும் அற்றவனாய்என்றும் உலகின் தீய குணங்களுக்கு எதிர்த்தட்டாய் -நற் குணங்கள் யாவும் நிறைந்தவனாய் -அளவற்ற நற் குணக் கடலாய் -யாவும் நிறைந்தவனாய் -யாவும் அறிந்தவனாய் -எல்லாம் அறிந்தவனாய் எல்லாவற்றிற்கும் பெயர் உருவம் கொடுப்பவனாய் -யாவற்றிற்க்கும் பற்றுக் கோடனாய் என்று சில வேத வாக்யங்கள் கூறுகின்றன –

    சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலாநி-
    ஐததாத் மியமிதம் சர்வம் ஏகஸ்மிந் பஹுதாவிஜாரா இத்யாதிகா
    ப்ரஹ்ம ஸ்ருஷ்டம் ஜகத் நாநாகாரேம் ப்ரதிபாத்ய தத் ஐக்யம் ச ப்ரதிபாத யந்தி காஸ்சந ஸ்ருதய

    இவை யாவும் ப்ரஹ்மமேஅது இவற்றைப் படைத்து அழித்து காத்தலைச் செய்வதால் இவை யாவும் ஆதாரமாக உடையது -இவ்வாறு ப்ரஹ்மத்தால் படைக்கப்பட்ட இவ்வுலகு பலவிதமாக இருக்கிறது போன்றசில வேத மொழிகள் ப்ரஹ்மத்தின் படைப்பின் பல படித்தான் தன்மையைப் பேசி அதனுடன் ப்ரஹ்மம் ஒன்றி இருத்தலைச் சொல்கின்றன

    ப்ருதக் ஆத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வ
    போக்தா போக்யம் பிரேரிதாரம் ச மத்வா
    பிரஜாபதிரகாம யாத பிரஜா ஸ்ருஜயேதி
    பதிம் விஸ்வ ஸ்யாத் மேஸ்வரம் சாஸ்வதம் சிவமச்யுதம்
    தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதாநாம் பரமம் ச தைவதம்
    ஸர்வஸ்ய வசீ சர்வஸ் யேசாந இத்யாதிகா ப்ரஹ்மண சர்வஸ்மாத யந்யத்வம் ஸர்வஸ்ய ஈஸி தத் யத்வம் ஈஸ்வரத்வம்
    ச ப்ரஹ்மண -ஸர்வஸ்ய சேஷதாம் பதித்வம் ச ஈஸ்வரஸ்ய காஸ்சந் ப்ரதிபாத யந்தி
    அந்தப் ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜெநாநாம் சர்வாத்மா -ஏஷத ஆத்மா அந்தர்யாம் அம்ருத
    ஆத்மாவையும் அதைத் தூண்டுவோனையும் தனித் தனியானவை என்று அறிவாயாக –
    துய்ப்பவன் துய்க்கப்படும் பொருள் துய்க்கச் செய்பவன் இருப்பதை அறிவாயாக
    ப்ரஜாபதி ப்ரஜைகளைப் படைக்க விரும்பினான்
    உலகிற்கும் தனக்கும் தனிப் பெரும் தலைவன் -நிலையானவன் -மங்களமானவன் -அண்டினாரை நழுவ விடாதவன் –
    ஈஸ்வரர்கள் என்று கூறப்படுபவர்களின் நின்றும் வேறுபட்ட மஹேஸ்வரன்
    தேவர்கள் எனப்படுவோரிலும் வேறுthevanதேவன்
    எல்லோரையும் தன் வசப்படுத்துவோன்-எல்லாருக்கும் தான் வசப்படாதவன் எல்லோருக்கும் ஆள்பவனாய் இருப்பவன் -எல்லாவற்றையும் தன் செல்வமாக உடைyentruyellaameஎல்லாம்
    ப்ரஹ்மம் எல்லாவற்றிலும் உட் புகுந்து இருத்தலையும்
    எல்லாவற்றுக்கும் தலைவனாக இருத்தலையும்
    இவை யாவற்றையும் தன் செல்வமாக அடைந்து இருத்தலையும் விளக்கி ப்ரஹ்மத்தின் எல்லாவற்றையும் ஆளுதல்
    எல்லாவற்றையும் செல்வமாக உடைமை
    எல்லாவற்றுக்கும் தலைமை
    ஆகிய சிறப்புக்களை சில மறை மொழிகள் பறை சாற்றுகின்றன
    இந்த ஆத்மா எல்லாவற்றிற்கும் நிலை பெற்று இருப்பவன்
    இந்த ஆத்மா உள் இருப்பவன் அமுதமானவன் அழிவற்றவன்

    யஸ்ய ப்ருதிவீ சரீரம் யஸ்ய ஆப சரீரம் யஸ்ய தேஜஸ் சரீரம் இத்யாதி
    யஸ்ய அவ்யக்தம் சரீரம் யஸ்ய அக்ஷரம் சரீரம் யஸ்ய ம்ருத்யு சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம் இதி
    ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்ய ஸர்வஸ்ய வஸ்துந ப்ரஹ்மணஸ் ச சரீராத்ம பாவம் தர்சயந்தி காஸ்சந இதி
    நாநா ரூபாணாம் வாக்யாநாம் அ விரோத முக்யார்த்த பரித்யாகஸ் ச யதா சம்பவதி ததைவ வர்ணனீயம் –

    எவனுக்கு நிலம் உடலோ -எவனுக்கு நீர் உடலோ -எவனுக்கு தீ உடலோ -என்றும்
    எவனுக்கு மூலப் ப்ரக்ருதி -கட் புலனாகாதது -உடலோ -எவனுக்கு ஆத்மா உடலோ -எவனுக்கு அழியும் ம்ருத்யு யமன் -உடலோ -எவனுக்கு உலகு உடலோ -என்று
    ப்ரஹ்மம் தவிர்த்த மற்றை யாவும் அதற்கு உடலாகவும் அது அவற்றுக்கு உயிராகாவும் உறையும் தன்மையை சில வேத வாக்யங்கள் காட்டுகின்றன –
    இவ்வாறு பலவாறு ப்ரஹ்மத்தின் நிலை கூறும் மொழிகளில் ஒன்றுக்கு ஓன்று கருத்து மாறுபடாது -முக்யமான பொருளைக் கை -விடாது எவ்வாறு அதன் நிலை தேறுகிறதோ
    அதை ஆராய்வோம் –

    வர்ணிதம் ச -அதிகார ஸ்ருதய ஸ்வரூப பரிணாம பரிஹாரா தேவ முக்யார்த்தா–நிர்க்குண வாதாஸ் ச பிராகிருத ஹேய குண நிஷேத
    விஷய தயா வ்யவஸ்திதா நாநாத்வ நிஷேத வாதாஸ் ச ஏகஸ்யைவ ப்ரஹ்மண சரீர தயா பிரகார பூதம் சர்வம் சேதன அசேதனம் வஸ்த்விதி
    சர்வஸ்யாத் மதயா சர்வ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அவஸ்திதமிதி ஸூ ரஷிதா-சர்வ விலக்ஷணத்வ பதித்தவ ஈஸ்வரத்வ-கல்யாண குணாகரத்வ –
    ஸத்ய ஸங்கல்பத்வாதி வாக்யம் ததப்யுபகமாதேவ ஸூ ரஷிதாம் ஞான ஆனந்த மாத்ர வாதிச -ச்ரவஸ்மாதந் யஸ்ய சர்வ கல்யாண
    குணாஸ்ரயஸ்ய சர்வேஸ்வரஸ்ய சர்வ சேஷிணே -சர்வ ஆதாரஸ்ய சர்வ உத்பத்தி ஸ்திதி ப்ரலய ஹேது பூதஸ்ய
    நிரவத்யஸ்ய நிர்விகாரஸ்ய சர்வாத்ம பூதஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண ஸ்வரூபநி ரூபக தர்ம -மல ப்ரத்யநீக அநந்த ரூப
    ஞானமேவேதி ஸ்வ பிரகாச தயா ஸ்வரூபமபி ஞானமேவேதி ச ப்ரதிபாதநாத் அநு பாலிதம் ஐக்ய வாதாஸ் ச
    சரீராத்ம பாவேந சாமாநாதி கரண்ய -முக்யார்த்ததோப பாதநாதேவ ஸூஸ்திதா —

    (இரண்டுமே சம ப்ராதான்யம் என்பதால் அபஹத பாப்மாதகாதிகளையும் சொல்லி ஸத்ய காமத்வம் ஸத்ய சங்கல்பத்துவம் ஒரே வாக்கியத்தில் சொல்லிற்று)

    இது இவ்வாறு விவரிக்கப் படுகிறது
    ப்ரஹ்மம் மாறுபாடு அற்றது என்னும் மொழிகளால் அதன் உள்ளுரு -ஆத்ம ஸ்வரூபம் -மாறு படாது இருத்தல் கருப் பொருளாய்க் கொள்ளப் படுகிறது
    குணம் அற்றது என்று வாதிக்கும் மொழிகள் உலகியலின் இழி குணங்கள் சிறிதும் இன்மையைப் பேசுகின்றன
    பலப்படிப் பட்டதாய் இருத்தலை மறுக்கும் வாக்கியங்களில் ஒரே ப்ரஹ்மம் மற்ற சேதன அசேதனப் பொருட்கள் நிலை பெற்று
    அவற்றுள் நுழைந்து வதிதல் ஒத்துக் கொள்ளப் படுகின்றன
    மற்றவற்றின் நின்றும் மாறுபட்டு அவை யாவற்றுக்கும் தலைவனாய் -அவற்றைத் தன் உடைமைகளாய்க் கொண்டு நற் பண்புகளின் கடல் எனத் திகழ்தல் -பிழை படா வினைத் திட்பம் உடைமை போன்ற சொற்களால் அதன் பண்புகள் ஒத்துக் கொள்ளப் படுகின்றன
    ப்ரஹ்மம் மற்ற சேதன அசேதன பொருட்களைக் காட்டிலும் மாறு பட்டது -நற் குணங்கள் யாவற்றுக்கும் இருப்பிடமானது -எப்பொருளையும் தன் உடைமையாய்க் கொண்டது -எதனையும் தன் அடிமை கொள்ள வல்லது – யாவற்றிக்கும் பற்றுக் கோடானது -யாவற்றிற்கும் ஆக்கல் அளித்தல் அழித்தலுக்கு காரணமானது குற்றங்கள் அற்றது -மாறு பாடு அற்றது -எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய் இருப்பது -என்றும்
    தனது அறுதியிடும் பண்பாக மலங்கள் அற்றதும் -ஞான ஆனந்தமே உரு வெடுத்ததாய் -தானே ஒளிர்வதாய் -ஞான மயமாய் இருக்கும் தன்மையைக் கொண்டதாய் ஞான ஆனந்தம் உள்ளது என்றும் -ஞான ஆனந்தம் மட்டுமே ப்ரஹ்மம் என்று அறுதியிடும் சொற்களும் உறுதி செய்கின்றன
    ஐக்ய வாதத்தால் -ஒன்றே உண்டு எனக் கொள்வதால் -உடல் உயிர் தொடர்பால் -ஸாமா நாதி கரணம் -ஆகுபெயர் திரள் பொருளாய் நன்கு விளங்குகிறது

    —————–

    93–ஏவம் ச சதி அபேதா வா போதோ வா வ்யாத்யாத்ம கதாயா வா -வேதாந்த வேத்ய-கோயம் அர்த்த சர்மர்த்திதோ பவதி ?<br>ஸர்வஸ்ய வேத வேத்யத்வாத் சாவம் சமர்த்திதம் -சர்வ சரீரதயா சர்வ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அவஸ்த்திதம் இதி -அபேத சமர்த்தித-<br>ஏகமேவ ப்ரஹ்ம நாநா பூத சித் அசித் வஸ்துப் பிரகாரம் நாநாத் வேந அவஸ்திதம் இதி பேதா பேதவ்<br>அசித் வஸ்து நஸ் ச சித் வஸ்து நஸ் ச ஈஸ்வரஸ்ய ச ஸ்வரூப ஸ்வபாவ வை லஷண்யாத் அசம்காராஸ் ச பேத சமர்த்திதா

    இக் கூற்றுக்களால் ஓரே படித்தாய் இருத்தலா அபேதமா -பல படித்தாய் இருத்தலா பேதமா -இரண்டும் கலந்ததா -எது வேதாந்தத்தால் இங்கு நிறுவப்படுகிறது -என்று கேட்டால்
    இவை யாவும் மறை மொழிகளாதலால் இவை aயாவுமே கொள்ளப் பட வேண்டும் எதுவும் தள்ளப்பட லாகாது –
    எல்லாவற்றையும் உடலாகக் கொண்டு அவற்றின் நின்றும் பிரிவற்ற நிலையில் ப்ரஹ்மம் ஒன்றே உறைகிறது என்பதால் பேதமின்மையும் ஒரே ப்ரஹ்மம் பல உருவங்களுடைய சேதன அசேதன பொருள்களில் பலவகையாக உறைந்து விளங்குகிறது -என்பதால்
    பேதா பேதமும்
    சேதன அசேதன பொருட்களைக் காட்டிலும் வேறுபட்டு அவற்றுக்கு உடமைகாரனாய் விளங்கி அவற்றின் நின்றும் உருவாலும் உயிராலும் வேறுபட்டு இருப்பதால் பேத வாதமும் ஒத்துக் கொள்ளப் படுகிறது

    ———–

    94–நநு ச -தத்வமஸி ஸ்வேத கேதோ -தஸ்யதா தேவ சிரம் -இதி ஐக்ய ஞான மேவ பரம புருஷார்த்த லேசான மோக்ஷ சாதனம்
    இதி கம்யதே நைத தேவம் -ப்ருதகாத்மாநம் பிரேரிதாரம் சமதவா ஜூஷ்டஸ்தஸ்தே நாம்ருதத்வமேதி
    இதி ஆத்மாநம் பிரேரிதாரம் ச அந்தர்யாமிணம் ப்ருதக்மத்வா தத ப்ருதக்த்வ ஞானத்தோதோ தேந பரமாத்மநா ஜூஷ்ட அம்ருதத்வமேதி
    இதி சாஷாத் அம்ருதத்வ பிராப்தி சாதனம் ஆத்மந நியந்துஸ் ச ப்ருதக்பாவ ஜினாமம் இத்யவகம்யதே
    ஐக்ய வாக்ய விரோதாத் ஏதத் ஏதத் அபரமார்த்த ச குண ப்ரஹ்ம பிராப்தி விஷயமிதி அப்யுப கந்தவ்யம்
    இதி சேத் ப்ருதக் ஞானஸ்யைவ சாஷாத் அம்ருதத்வப் பிராப்தி சாதனத்தவ ஸ்ராவணாத் விபரீதம் கஸ்மாத் ந பவதி –

    அவ்வாறு இல்லை -நீயே அதுவாகிறாய் ஸ்வேத கேது -உபாஸிப்பவனுக்கு -அதுவரை hடான் -ஐக்ய ஞானம் அடையும் வரை தான் -கால விளம்பம் -உடலை நீத்தவுடன் ப்ரஹ்மமாகவே ஆகி விடுகிறான் என்று –
    ஒன்றேனும் அறிவே பெறற்கு அரிய பேர் ஆனந்த மோக்ஷத்தை அடைவிக்கும் ஸாதனமாகிறது -என்று கூறுவீர்களாகில் -அத்வைதிகள்-அவ்வாறும் இல்லை –
    ஆத்மாவையும் அதை ஆள்பவனையும் தனித் தனியானவர்கள் என அறிந்து -அவன் அருளுக்கு இலக்காகி -மோக்ஷம் அடைகிறான் -என்று ஆத்மாவின் உள்ளுறைவோனாய் -அதை ஆள்பவன் வேறுபட்டு விளங்குகிறான் என்பதை உணர்ந்து அந்த வேறுபட்ட ஞானத்தாலேயே அந்தப் பரமாத்மாவை அடைகிறான் என்று வெளிப்படையாகக் கூறப்பட்டு இருக்கிறது
    ஆயினும் உலகம் ஒருபடித்தானது என்ற அபேத ஞானத்தாலே மேலான மோக்ஷத்தை அடைகிறான் என்றும்
    அதற்கு மாறாக உலகம் பல படித்தானது என்னும் பேத ஞானத்தாலே தாழ்ந்த குணங்கள் நிறைந்த ப்ரஹ்மத்தை அடைதலாகும் என்பீராகில்
    பேத ஞானத்தால் மோக்ஷத்தை அடைகிறான் என்று வெளிப்படையாகக் கூறப்பட்டு இருப்பதால் -அபேத ஞானத்தால் அவ்வாறு கூறப்படவில்லை -அதற்கு aமாறுபாடான கருத்துக் கொள்வது விபரீதமாகும் ஆகையால் ஐக்ய ஞானத்தால் கிடைப்பது தாழ்ந்த மோக்ஷம் என்று ஏன் கொள்ளக் கூடாது –

    ஏதத் யுக்தம் பவதி -த்வயோ துல்யயோ விரோதே சதி அவிரோதந தயோ விஷய விவேச நீய -இதி கதம விரோத இதி சேத்
    அந்தர்யாமி ரூபேண அவஸ்தித தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண சரீர தயா பிரகாரத்வாத் ஜீவாத்மந-தத் பிரகாரம் ப்ரஹ்ம ஏவ தவம்
    இதி சப்தேந அபி தீயதே ததைவ ஞாதவ்யம் இதி தஸ்ய வாக்யஸ்ய அர்த்த ஏவம் பூதாத் ஜீவாத் ததாத்மதயா அவஸ்தி தஸ்ய
    பரமாத்மநோ நிகில தோஷ ரஹிததயா ஸத்யஸங்கல்பத்வாத் யநவதிக யதிசய அஸங்க்யேய கல்யாண குணாகரத்தவே
    ந ச ய ப்ருதக்பாவ ஸோநுசந்தேய இதி அஸ்ய வாக்யஸ்ய விஷய இத்யயமர்த்த பூர்வமேவ அஸக்ருத் யுக்த –

    இதை விளக்குவோம் -ஒத்த பலமுடைய இரு கருத்துக்கள் ஒன்றுக்கு ஓன்று மாறுபாடாகத் தோன்று மாகில் -அவற்றின் மாறுபாடுகளை விலக்கி -இரு கருத்துக்களுக்கும் ஏற்பப் பொருள் கொள்ளுதலே தகுந்தது –
    மாறு பாடு எங்கே தோன்றுகிறது எனில்
    ஆத்மாவில் உள்ளுறைவோனாக பர ப்ரஹ்மம் இருக்கிறது -அதற்கு உடல் என்னும் நிலையில் அதின் நின்றும் பிரிவற்றதாக ஆத்மா விளங்குகிறது
    இது முறையே -தத் -அது -த்வம் -நீ என்ற சொற்களால் கூறப்படுகிறது-இதை அறிவதே மெய் ஞானம் என்பதே பொருள் -இவ்வாறு பிராணிகளின் உயிர்களுக்கும் அதன் உள்ளுறைவோனாகவும் குற்றங்களுக்கு எதிர்த்தட்டாயும் -மெய்யான வினைத் திட்பம் உடையோனாகவும் -எல்லையற்ற அதிசயமான நற் குணங்களை யுடையோனாகவும் -தனித்தன்மை இங்கு கொள்ளத் தக்கது –
    இதுவே இவ் வாக்கியத்தின் பொருள் -இது முன்பே பலதடவை வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது –

    ———–

    95–போக்தா போக்யம் பிரேரிதாரம் ச மத்வா-இதி போக்ய பூதஸ்ய வஸ்துந அசேதனத்வம் பரார் தத்வம்-சதத விகாராஸ்ப தத்வம் –
    இத்யாதய ஸ்வபாவா போக்து ஜீவாத்மநஸ் ச அமல அபரிச்சின்ன ஞான ஆனந்த ஸ்வ பாவஸ்யைவ அநாதி கர்ம ரூபா வித்யாக்ருத
    நாநாவித ஞான சங்கோச விகாசவ் போக்ய பூதா சித் வஸ்து சம்சர்க்கஸ் ச பரமாத்மா உபாஸநாத் மேஷஸ் ச இத்யாதய
    ஸ்வ பாவா ஏவம் பூத போக்த்ரு போக்யயோ அந்தர்யாமி ரூபேண அவஸ்தாநம் ஸ்வரூபேண
    ச அபரிமித குணவ்க ஆஸ்ரயத்வேந அவஸ்தானம் இதி பரஸ்ய ப்ரும்ஹண த்ரிவிதா வஸ்தாநம் ஞாதவ்யம் இத்யர்த்த —

    துய்ப்பவன்- துய்க்கப்படுவது -இவற்றைத் துய்க்கச் செய்பவன் -என்பதை அறிந்து என்பதால் துய்க்கப்படும் பொருட்கள் அறிவற்றவையாகவும் -பிறருக்கே யாகவும் -எப்பொழுதும் மாறுபாடு அடைந்து கொண்டு இருப்பவை யாகவும் இருத்தலே அவற்றின் பண்புகள் ஆகின்றன –
    துய்ப்பவன் -ஜீவாத்மா -குற்றமற்று அளவற்ற ஞானத்தையும் -ஆனந்தத்தையும் -பண்புகளாய்க் கொண்டவனாய் -துவக்கற்ற வினையின் அடியாகப் பிறந்த -பல படித்தான ஞானச் சுருக்கையும் விரிவையும் உடையோனாய் அசேதன பொருட்களைத் துய்ப்போனாய் பரமாத்மாவை உபாஸித்து வீடு பேறு அடைதலைத் தன் செயல்களாக உடையவனாய் இருக்கிறான்
    இவ்வாறு துய்ப்பவன் -துய்க்கப் படுவதற்கு உள்ளுறைவோனாக இருந்து கொண்டு -தன் மெய்யுருவில் அளவற்ற நற் குணங்களுக்கு இருப்பிடமாய் இருத்தல் ப்ரஹ்மத்தின் பண்பு -இவ்வாறு மூன்று படிப்பட்ட பொருள்கள் அறியத் தக்கவை என்பது பொருள்-

    —————-

    96 —தத்வமஸி -இதி சத் வித்யாயாம் உபாஸ்யம் ப்ரஹ்ம ச குணம் ச குண ப்ரஹ்ம பிராப்திஸ் ச பலம் –
    இத்யபியுக்தை பூர்வாசார்யை வ்யாக்யாதம்

    அது நீயாகிறாய் -தத்வமஸி -என்ற வாக்யத்திற்கு பண்புகளுடன் கூடிய உபாஸனையால் -பண்புகள் நிறைந்த ப்ரஹ்மத்தை இடையறாது தியானித்து உயர்வற உயர் நலம் உடைய ப்ரஹ்மத்தையே அடைதல் என்று முந்தையோர் உரைகளில் விளக்கம் தரப்பட்டு இருக்கிறது –
    யதோக்தம் வாக்யகாரேன-யுக்தம் தத் குணக உபாஸநாத் -இதி வ்யாக்யாதம் ச த்ரமிட ஆச்சார்யேனே வித்ய விகல்பம் வததா-
    யத்யபி சச்சித்தோ ந நிர்புக்ண தைவதம் குண கணம் மனசா அநுதாவேத் தாதாபி அந்தர் குணாமேவ தேவதாம் பஜதே
    இதி தத்ரபி ச குண ஏவதா ப்ராப்யதே -இதி சச்சித்த ஸத்வித்யா நிஷ்ட –
    ந நிர் நிர்புக்ணதைவதம் குண கணம் மனசாநுதா வேத்-
    அபஹத பாப்மத்வாதி கல்யாண குண கணம் தைவதாத் விபக்தம் யத்யபி தஹர வித்யா நிஷ்ட இவ
    சச்சித்தோ நஸ்மரேத் ததாபி அந்தர் குணாமேவ தேவதாம் பஜதே-தேவ ஸ்வரூப அநு பந்தித்வாத்-
    சகல கல்யாண குண கணஸ்ய கேநசித் பரதேவதா அசாதாரண்யேந நிகில ஜகாத் காரணத்வாதிந குணேன உபாஸ்யமாநோபி
    தேவதா வஸ்துந ஸ்வரூப அநு பந்தி சர்வ கல்யாண குண விஸிஷ்ட ஏவ உபாஸ்யதே அத ச குணம் ஏவ ப்ரஹ்ம
    தத்ராபி ப்ராப்யம் இதி ஸத்வித்யா தஹர வித்யயோ விகல்ப இத்யர்த்த –

    இதை ஒட்டியே வாக்யகாரரும் -அந்த குணங்கள் இடையறாது தியானிப்பதே தகுந்தது -எனக் கூறி யுள்ளார் –
    உரையாசிரியர்களான த்ரமிடாச்சார்யரும் இதையே இடையறாத த்யான நெறிகளில் -வித்யைகளில் -மாறுபாடுகள் இல்லை என்கிறார் –
    உபநிஷத்துக்களில் 32 ப்ரஹ்ம வித்யைகள் உண்டு -அவற்றில் ஸத் வித்யையும் தஹர வித்யையும் அடங்கும் –
    ஸத் வித்யையில் ஊற்றமுடையவர்கள் ப்ரஹ்மத்தின் செயல்பாட்டுப் பண்புகளை மனத்தில் கொள்கிறார்கள்
    அவ்வாறே தஹர வித்யையில் ஊற்றமுடையவர்கள்ப்ரஹ்மத்தின் வெளிப்படையான பண்புகளை நினைக்கிறார்கள் –
    ஸத் வித்யையில் ஊற்றமுடையவர்கள் பாபம் சிறிதும் அற்றல் போன்ற நற் குணங்கள் நிறைந்த ப்ரஹ்மத்தை பக்தி செய்கிறார்கள் –
    அவ்வாறே தஹர வித்யையில் ஊற்றமுடையவர்கள் இந்த பண்புகளை நினைக்காமல் ப்ரஹ்மத்தின் உள்ளுறை பண்புகளை ஸ்துதிக்கிறார்கள் –
    தேவனுடைய உள்ளுரு நற் குணங்கள் யாவும் நிறைந்தது என்பதால் அதன் சிறப்புக் குணங்களான உலகின் காரணப் பொருளாய் இருப்பது போன்றவைகளும் உள்ளுருவிற்கு எப்பொழுதும் யுடைய நற் குணங்கள் யாவும் இடையறாது த்யானிக்கப் படுகின்றன –
    ஆகையால் எந்த விதமாக இடையறாத த்யானம் அமைந்தாலும் அதனால் உபாஸிக்கப் படுவதும் அவ்வாறு த்யானிக்கப் படுவதும் அதனால் அவர்கள் இறுதியில் அடைவதும் உயர்வற உயர்நலம் உடைய ப்ரஹ்மத்தையே நெறிகளில் மட்டும் மாறுபாடு உள்ளது என்பதே பொருள் –

    ————-

    97–நநு ச ஸர்வஸ்ய ஐந்தோ பரமாத்மா அந்தர்யாமி தந் நியாம்யம் ச சர்வம் -இத்யுக்தம் –
    ஏவம் ச சதி விதி நிஷேத சாஸ்த்ராணாம் அதிகாரி ந த்ருச்யதே ய ஸ்வ புத்யைவ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸக்த-
    ச ஏவம் குர்யாத் ந குர்யாதிதி விதி நிஷேத யோக்ய ந ஸைஷ த்ருச்யதே -சர்வஸ்மிந் ப்ரவ்ருத்தி ஜாதி
    ஸர்வஸ்ய பிரேரக பரமாத்மா காரயிதா -இதி தஸ்ய சர்வ நியமனம் ப்ரதிபாதிதம் ஸ்ரூயதே ச ஏஷ ஏவ சாதுகர்ம காராயதி
    தம்யமேப்யோ லோகேப்யே உந்நிநீஷதி ஏஷ ஏவ அசாது கர்ம காராயதி தம் யமதோ நிநீஷதி
    இதி சாத்வ சாது கர்ம காரயித்ருத்வாத் நைர் க்ருண்யம் ச –

    பிராணிகள் யாவற்றிலும் உள்ளுறைந்து அவற்றை ஏவல் கொள்கிறான் -என்பதால்
    விதித்தல் தடுத்தல் ஆகிய வற்றைச் செய்பவர் என்று ஒருவரும் காணப்படுவதில்லை
    பரமாத்மா தானே ஒருவரை ஒன்றில் ஈடுபடுத்தலும் விலக்கலும் செய்வதால் சில செயல்களைச் செய்விப்பவதும் செயல்களில் நின்றும் விலக்குதலும் ஆகிய விதித்தல் தடுத்தல் இங்கு காணப்படுவதில்லை ஏன் எனில் யாவற்றையும் செயல் படத் தூண்டுபவன் பரமாத்மாவே யாதலால் யாவும் அவன் செயல் என்று கொள்ளப்படும் –
    வேதத்திலும் இப்படிப்பட்ட நற் கருமங்கள் செய்பவன் உலகில் உயர்த்தப் படுகிறான் -இப்படிப் பட்ட தீய செயல்களைச் செய்பவன் தாழ்த்தப் படுகிறான் என்று கூறப்பட்டுள்ளது -இவ்வாறு ஒருவரை நற் செயல்களும் மற்ற ஒருவரை தீய செயல்களைச் செய்யத் தூண்டுவதால் ஈஸ்வரனுக்கு நடு நிலைமை தவறுதல் ஏற்படும்

    அதிர உச்யதே -ஸர்வேஷாமேவ சேதநாநாம் சிச் சக்தி யோக ப்ரவ்ருத்தி சக்தி யோக -இத்யாதி
    சர்வம் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பரிகரம் சாமாந்யேந சம்பவித்தாய தந் நிர்வஹணாய-தத் ஆதாரோ பூத்வா அந்தப் பிரவிஸ்ய
    அநுமந்த்ரு தயா ச நியமனம் குர்வந் -சேஷித்வேந அவஸ்தித பரமாத்மா ஏததாஹித சக்திஸ் ஸந் ப்ரவ்ருத்தி நிவ்ருத்யாதி
    ஸ்வயமேவ குருதே-ஏவம் குர்வாண மீஷமாண பரமாத்மா உதாசீந ஆஸ்தே அத சர்வம் உபபந்நம் –

    அது அவ்வாறு அல்ல -எல்லாச் சேதனப் பொருள்களுக்கும் உயிர் எனும் ஞானப்பொருள் காணப்படுவதால் அவற்றுக்கு -உடல் புலன்களைக் கொண்டு -ஒரு செயலை செய்வதற்கு திறமை ஏற்படுகிறது –
    ஒரு செயலில் ஈடுபடுவதற்கும் அதினின்று விலகுவதற்கும் ஆன அறிவு ஏற்படுகிறது -இவற்றை அளித்த ஸர்வேஸ்வரன் உள்ளிருந்து கொண்டு ஆத்மா விரும்பிய செயலைச் செய்ய அனுமதி அளித்து தான் நடு நிலையுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறான் –
    இதனால் அவன் அளித்த உடல் புலன்கள் அறிவு இவை பலனுடையவை ஆகின்றன-

    சாத்வ சாது கர்ம காரயித்ருத்வம் து வ்யவஸ்தித விஷயம் ந சர்வ சாதாரணம் –
    யஸ்து பூர்வம் ஸ்வயமேவ அதி மாத்ரம் ஆநு கூல்யே ப்ரவ்ருத்த தம் பிரதி ப்ரீதி -ஸ்வயமேவ பகவான்
    கல்யாண புத்தி யோகதானம் குர்வந் கல்யாணே ப்ரவர்த்தயதி
    ய புந அதி மாத்ரம் பிராதி கூல்யே ப்ரவ்ருத்த தஸ்ய து க்ரூராம் புத்திம் ததந் ஸ்வயமேவ க்ரூரேஷ் வேவ கர்மஸூ பரேரயதி பகவாந்
    நற் செயல்களைப் புரிதல் என்பது எல்லோருக்கும் ஏற்படுவது இல்லை
    எவர் முற் பிறப்பில் ஸாஸ்த்ரங்களில் கூறியபடி-விதிக்கப்பட்டவற்றை பெரும் அளவில் செய்து இருக்கிறாரோ -அவருக்கு நற் புத்தியையும் -நற் செயல்களில் விருப்பத்தையும் ஏற்படுத்துகிறான் –
    அப்படியே எவர் அதிக அளவில் தீயச் செயல்கள் செய்திருக்கிறாரோ அவருக்கு கொடுமையான புத்தியைக் கொடுத்து -தானே கொடுமையான செயல்களிலே ஈடுபடுத்துகிறான் –

    யதோக்தம் பகவதா-தேஷாம் சதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் தாதாமி புத்தி யோகம் தம் யேந மாம் உபயாந்தி தே
    தேஷாமேவாநுகம் பார்த்தம் அஹம் அஞ்ஞானஜம் தமஸ் நாஸாயாம் யாத்ம பாவஸ்தோ ஞான தீபேந பாஸ்வதா
    தா நஹம் த்விஷத க்ரூராந் சம்சாரேஷு நராதமாந் ஷிபாம் யஜஸ்ரம ஸூபாந் ஆஸூரீஷ் வேவ யோநிஷு இதி –

    அவ்வாறே பகவத் கீதையில்
    என்னிடம் எப்பொழுதுமே சேர்ந்து இருக்க விரும்புகிறவர்களுக்கும் பக்தி செலுத்துவோருக்கும் என்னை அடைவதற்கு வழி காட்டியான பரமாத்மா பற்றிய ஞானத்தை -பர ஞானத்தை -விருப்புடன் அளிக்கிறேன்
    அப்படிப்பட்ட பக்தியில் ஒன்றி இருப்பவர்களிடம் என் அருளினாலேயே அவர்கள் மனதுக்கு உகப்பானவனாய் எனது ஞானமாகிற ஒளி விளக்கால் பண்டை வினைகளால் உண்டான அஞ்ஞானமாகிற அந்தகாரத்தை அழிக்கிறேன்
    என்னை வெறுப்பவர்களை கொடியவர்களாய் மாந்தரில் கடையராய் அமங்கலமானவர்களாய் ஆகும்படி தொடர்ந்து பிறப்பு இறப்புகளைக் கொடுத்து அசுரப் பிறவிகளில் தள்ளுகிறேன் என்று தெளிவாகக் கூறப்பட்டு இருக்கிறது

    ———————

    98–சோயம் பரப் ப்ரஹ்ம பூத புருஷோத்தம நிரதிசய புண்ய சஞ்சயஷீண -அசேஷ ஜென்ம உபசித பாபராஸே
    பரம புருஷ சரணாரவிந்த -சரணாகதி ஜெநித ததாபி முக்யஸ்ய -தத் ஆச்சார்ய உபதேச உப ப்ரும்ஹிதா சாஸ்த்ராதி கத
    தத்வ யாதாத்ம்ய அவ போத பூர்வக -அஹர் அஹர் ரூப சீயமாந -சம தம தப ஸுவ்ஸ-ஷம-ஆர்ஜவ -பய அபய ஸ்தாந விவேக தயா –
    அஹிம் சாத்யாத்ம குணா பேதஸ்ய-வர்ணாஸ்ரம உசித பரம புருஷ ஆராதன வேஷ-நித்ய நைமித்திக கர்ம உப சங்ஹ்ருதி –
    நிஷித்த பரிகார நிஷ்டஸ்ய-பரம புருஷ சரணார விந்தை யுகள ந்யஸ்தா
    ஆத்மாத்மீயஸ்ய தத் பக்தி காரிதா நவரதஸ்துதி -ஸ்ம்ருதி -நமஸ் கிருதி யதந கீர்த்தன குண ஸ்ரவண -வசந-த்யான –
    அர்ச்சன பிரணாமாதி ப்ரீதி பரம காருணிக புருஷோத்தம பிரசாத வித்வஸ்தஸ்வாந் தஸ்ய அநந்ய ப்ரயோஜன
    அநவரத நிரதிசயப் பிரிய விசத தம ப்ரத்யக்ஷதா பந்ந அநு த்யான ரூபக்த்யைக லப்ய —

    இப்படிப்பட்ட பர ப்ரஹ்மமான புருஷோத்மன் -எல்லையற்ற நற் செயல்களைச் செய்தவனாய் -பிறப்பினால் வந்த வினைத்தொடர் சிறிதும் அற்றவனாய் -பரம புருஷனுடைய திருவடித் தாமரைகளையே சரணம் அடைந்தவனாய் -அதில் ஊற்றம் உடையோனாய் அதனால் தூண்டப்பட்டு ஓர் நல்லாசிரியனை அடைந்து அவனால் உபதேசிக்கப் பட்ட ஸாஸ்த்ரங்களின் அடியாக மெய்ப் பொருளை உணர்ந்தவனாய் தினம்தோறும் வளர்கின்ற புலன் அடக்கம் -புலன்களை தன் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுதல் -ஸாஸ்த்ரங்களில் கூறப்பட்ட விரதங்களை மேற் கொண்டு மனத் தூய்மை யாதல் -உடல் சொல் செயலால் தூய்மையாய் இருத்தல் -மனம் மொழி மெய்களால் ஒருப்பட்டு இருத்தல் – அஞ்சுவது அஞ்சாமை பகுத்து அறிதல் -இரக்கம் பிறருக்குத் துன்பம் நினையாது இருத்தல் பொறை ஆகிய நற் குணங்கள் கைவரப் பெற்றவனாய் -தனக்கு ஏற்ப வர்ணாஸ்ரம நெறிகளைக் கடைப் பிடிப்பவனாய் பரம புருஷனை ஆராதிப்பவனாய் -நாள் தோறும் மற்றும் சிறப்பான நாட்களிலும் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காகச் செய்பவனாய் -விலக்கப்பட்ட செயல்களின் நின்றும் விலகியவனாய் -பரமபுருஷனுடைய திருவடித் தாமரைகளில் தனது உடல் உயிர்ச் சுமைகள் யாவையும் வைத்தவனாய் -அந்த பக்தி மேலீட்டில் இடைவிடாது ஸ்துதித்தல் -நினைத்தல் -வணங்குதல் -அதற்கான முயற்சிகளைச் செய்தல் -அவன் புகழ் பாடுதல் -அவன் பண்புகளைக் கேட்டல் -அவனைப் பற்றியே பேசல் -இடைவிடாது மனத்திருத்தல் அர்ச்சித்தல் தண்டன் இடுதல் -இவற்றால் மனம் உகந்து ஈசனால் தன் மன இருள் நீங்கியவனாய் -வேறு பலன்களை எதிர் நோக்காது -என்றும் எல்லாவற்றிலும் அன்புடையவனாய் -அவனுடைய திரு உருவை -மிகத் தெளிவாக நேரே காண்பது போன்ற நிலையை பக்தியுடன் கூடிய தியானத்தால் அடைய முடியும்-

    ————–

    99–ததுக்கதம் பரம குருபிஸ் பகவத் யாமுனாச்சார்ய பாதவ் –
    உபய பரிகர்மித ஸ்வாந் தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக லப்ய -இதி ஞான யோக கர்ம யோக
    ஸம்ஸ்க்ருத அந்தக் கரணஸ்ய–இத்யர்த்த –

    அதை ஒட்டியே பரம ஆச்சார்யனும் மதிப்புக்கு உரியவரான யமுனாச்சார்யரும் -கர்ம ஞாந யோகங்களைச் செய்து -அதனால் தூய்மை யடைந்த மனத்துடன் ஒரே நினைவாக -நிலை நிற்கிறவராலேயே எம்பெருமான் அடையத் தக்கவன் -என்று கூறி இருக்கிறார் -ஞான கர்ம யோகங்களால் நன்கு பண் படுத்தப்பட்ட மனம் -என்று பொருள் –
    ததாச ஸ்ருதி —
    வித்யாஞ்ச அவித்யாஞ்ச யஸ் தத்வே தோபயம் ஸஹ அவித்யயா ம்ருத்யும் தீர்த்வா வித்யயா அம்ருதம் அஸ்நுதே –இதி –
    அத்ர அவித்யா சப்தேந வித்ய இதரத் வர்ணாஸ்ரம ஆசாராதி பூர்வோக்தம் கர்ம உச்யதே
    வித்யா சப்தேந பக்தி ரூபாபந்ந த்யானம் உச்யதே —

    அவ்வாறே வேதமும் -ஞானம் கர்மம் இரண்டும் ஒன்று என்று அறிபவர் கர்மத்தினால் பிறவிச் சூழலைக் கடந்து ஞானத்தால் அழிவற்ற நிலை எய்துகிறார் –
    இங்கு அவித்யை என்ற சொல்லால் வித்யையாகிற ஞானத்தின் நின்றும் வேறுபட்ட வர்ணாஸ்ரம தர்மங்களுக்கு ஏற்ற செயல்கள் சுட்டிக் காட்டப் படுகிறது
    வித்யை என்பது பக்தியே உருவெடுத்த ஞானம் என்று சொல்லப்பட்டது –

    யதோக்தம் -இயாஜஸோபி ஸூ பஷந் யஞ்ஞாந் ஞாந வ்யாபாஸ்ரய –
    ப்ரஹ்ம வித்யாம் அதிஷ்டாய தர்த்தும் ம்ருத்யும் அவித்யயா இதி
    தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -நாந்யப் பந்தா அயநாயா வித்யதே
    ய ஏநம் விதுரம்ருதாஸ்தி பவந்தி –
    ப்ரஹ்ம விதாப்நோதி பரம்
    ப்ரஹ்ம வேத ப்ரஹ்மை பவதி -இத்யாதி வேதந சப்தேந த்யானமேவா பிஹிதம்
    நிதித்யாசி தவ்ய-இத்யாதிநா ஐக அர்த்யாத்-ததேவ த்யானம் புநரபி விசிநஷ்டி –
    நாயமாத்மா ப்ரவசனேந லப்ய -நமேதயா ந பஹுநா ஸ்ருதேந யமேவைஷா வ்ருணுதே தேந லப்ய-
    தஸ்யைஷா ஆத்மா விவ்ருணுதே தநும் ஸ்வாம் -இதி பக்தி ரூபா பந்ந அநு த்யாநேநைவ லப்யதே
    ந கேவல வேதேந மாத்ரேண நமேதயா-இதி கேவலஸ்ய நிஷித்தத்வாத் ஏததுக்தம் பவதி –
    யோயாம் முமுஷு வேதாந்த விஹித வேதந ரூப த்யாநாதி நிஷ்ட-யதா தஸ்ய தஸ்மிந் நேவ அநு த்யாநே
    நிரவதிக அதிசயா ப்ரீதி ஜாயதே ததைவ தேந லப்யதே பர புருஷ இதி –

    (தத்வமஸி-மோக்ஷ சாதனா உபதேசம் -அத்வைதிகள் ஞான மாத்திரம் -ஐக்ய ஞான விசேஷம் உண்டான அனந்தரம் மோக்ஷம்
    உபாஸனமே மோக்ஷ சாதனம் -பக்தி ஒன்றிய பக்தி -உடன் சேர்ந்து- துஷ்ட -குண அனுபவம்-பிராட்டி போல பிரிக்க முடியாமல் -)

    யதோக்தம் பகவதா புருஷஸ்ய பரப் பார்த்தா பக்த்யா லப்யஸ் த்வந் அநந்யயா -பக்த்யாத்வ நந்யயா ஸக்ய
    அஹமேத்வம் விதோர்ஜூந ஞானம் த்ருஷ்டும் ச தத்வேந பிரவேஷ்டும் ச பரந்தப பக்த்யாம் மாம் அபி ஜாநாதி

    அதற்கு ஏற்ப தத்வ த்ரய ஞானத்தால் -ப்ரஹ்ம ஞானம் ஏறிடப்பட்டு கடமைகளை ஆற்றுவதாலே அழிவை விலக்கி ஞானம் நிரம்பியவராய் ஸுபமான யாகங்கள் பலவற்றை இறை வழிபாடாக செய்தார்அப் பரமாத்மாவை இவ்வாறு அறிபவன் இவ்வுலகிலேயே மோக்ஷம் அடைந்தவனாகிறான் -பரமாத்மாவை அடைவதற்கு வேறு வழிகள் ஏதும் இல்லை -எவர்கள் இந்தப் பரமாத்மாவை அறிகின்றனரோ அவர்கள் மோக்ஷம் அடைகின்றனர்ப்ரஹ்மத்தை அறிந்தவன் பர உலகை அடைகிறான் -ப்ரஹ்மத்தை அறிந்தவன் அந்தப் ப்ரஹ்மம் போன்றே ஆகிறான் -என்று கூறப் பட்டு இருக்கிறது -வேதனம் என்ற சொல் தியானம் செய்தல் இடைவிடாது நினைத்தல் இவற்றுடன் ஒத்த பொருள் கொண்டதாகிறது -இந்தப் பரமாத்மா நினைவிலே மட்டும் அடையப்படுவது இல்லை -தெளிந்த அறிவினாலும் அடையப்படுவதில்லை -பல கேள்வியிலும் அல்ல -எவனை பரமாத்மா விரும்புகிறானோ அவனாலேயே அடையப்படுகிறான் -அப்படிப்பட்ட ஆத்மாவிற்கு தன் திருமேனியை -இந்தப் பிரபஞ்சத்தை தானே காட்டிக் கொடுக்கிறான் -பக்தியே உருவெடுத்த ஞானத்தால் மட்டும் அடையப்படுகிறான் -வறட்டு தியானத்தால் அடையப்படுபவன் அல்ல -தெளிந்த அறிவினால் அல்ல என்பது அறிவு ஒன்றையே உடைய தியானத்தால் அல்ல -என்று விலக்குகிறது -இது கீழ் வருமாறு விளக்கப்படுகிறது -வீடு பேறு வேண்டி வேதாந்தத்தால் ஏற்பட்டு இருக்கும் தெளிவான ஞானத்தால் அதில் ஊற்றம் உடையவனாய் இருப்போன் அந்த தியானத்திலேயே எல்லையற்ற விருப்பம் கொண்டவனாகி அதனடியாகவே பரம புருஷனை அடைகிறான்அவ்வாறே பகவத் கீதையிலும்பார்த்தனே பரம புருஷனாகிய நான் -மற்றவைகளால் அல்லாது என்னிடமே செலுத்தப்படும் பக்தியால் மட்டுமே அடையத் தக்கவன் -எதிரிகளை வாட்டுபவனே அர்ஜுனா என்னைப் பற்றி மெய்யறிவு கொள்வதற்கும் -என்னைப் பார்ப்பதற்கும் என்னைத் துய்ப்பதற்கும் வேறொரு இடத்தில் அன்றி என்னிடமே செலுத்தப்படும் பக்தியாலே மட்டுமே இயலும் -11-54-
    யாவாந் யஸ் சாஸ்மி தத்வத-ததோ மாம் தத்வதோ ஞாத்வா விசதே ததந்தரம் -இதி ததனந்தரம் மாம் தத ஏவ பக்கத்தே விசாதே
    இத்யர்த்த பக்திர் அபி நிரதிசய ப்ரிய அநந்ய ப்ரயோஜன ஸ்வ இதர வை த்ருஷ்ண்யாவஹ ஞான விசேஷ
    ஏவேதி தத் யுக்த ஏவ தேந பரேண ஆத்மநா வரநீயோ பவதீதி தேந லப்யதே இதி ஸ்ருதி யர்த்த

    உள்ளுருவாலும் பண்புகளாலும் குணங்களாலும் செல்வத்தாலும் நான் எப்படிப்பட்டவன் என்பதை பரம் பொருள் மீதான பக்தியாலே உள்ளபடி அறிந்து பிறகு அந்த பரபக்தியாலேயே என்னை முழுமையாக அடைகிறான் -என்று கூறப்படுகிறது -பிறகு இப்படிப்பட்ட பக்தியாலேயே என்னை நன்கு துய்க்கிறான் -என்பது பொருள்-பக்தி என்பது -எல்லையற்ற விருப்புடன் வேறு பயன் கருதாது மற்றைய விருப்பங்கள் யாவும் நீங்கியதாய் இருப்பது -வைராக்யம் -இதற்கேற்ப ஒழுகுபவர் பரமாத்மாவால் தன்னுடையவன் என்று கருதப்பட்டு அவனாலேயே தன்னிடம் சேர்த்துக் கொள்ளப் படுகிறார் என்பதே மறையின் பொருள்
    ஏவம் வித பயபக்தி ரூப ஞான விசேஷஸ்ய உத்பாதாக -பூர்வ யுக்த அஹர் அஹர் ரூப ஸீயமாந ஞான பூர்வக –
    கர்ம அநு க்ருஹீத பக்தி யோக ஏவ –

    யதோக்தம் பகவதா பராசரேன
    வர்ணாஸ்ரம ஆசாரவதா புருஷேண பர புமாந்
    விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நாணய தத் தோஷகாரக -( ஸ்ரீ விஷ்ணு புராணம் -காண்டிக்ய கேசித்வஜ உபாக்யானம் -)

    இப்படிப் பட்ட ஞானத்தால் தூண்டப்பட்டு முன்பே விளக்கிய தினம் தோறும் வளரும் ஞானத்திற்கு தான் கைக் கொண்ட வர்ணாஸ்ரம தர்மங்கள் வழியாகப் பெற்ற பக்தியாலே ஜீவனிடம் பக்தி யோகம் உண்டாகும்

    அப்படியே பராசரரும் -மனிதர்கள் வர்ணாஸ்ரம தர்மங்கள் செய்வதன் மூலமாக விஷ்ணுவை ஆராதித்தே பரமபுருஷனை அடைய இதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்கிறார் –
    இதி நிகில ஜகத் உத்தாரணாய அவநிதளே அவதீர்ண பர ப்ரஹ்ம பூத புருஷோத்தம ஸ்வயமேவ ஏதத் உக்தவாந்
    ஸ்வ கர்ம நிரதஸ் சித்தம் யதா விந்ததி தச் ச்ருணு -யத ப்ரவ்ருத்தி பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்
    ஸ்வ கர்மணா தமப்யர்ச்ய சித்திம் விந்ததி மாநவ –இதி யதோதித க்ரம பரிணத பக்த்யேக லப்ய ஏவ —

    இவ் வுலகை மேம்படுத்துவதற்காக அவதரித்த பர ப்ரஹ்மமான புருஷோத்தமனே இதைச் சொல்கிறான்
    தன் கடமைகளைச் செய்பவன் எவ்வாறு வீடு பேறு அடைகிறான் என்பதைக் கேட்ப்பாயாக
    எவனிடமிருந்து இப் பொருட்கள் யாவற்றிக்கும் தோற்றம் முதலியவை ஏற்படுகின்றதோ -எவனாலே இவை யாவும் நிறைக்கப்பட்டுள்ளதோ -அவனைத் தனக்குரிய வர்ணாஸ்ரமப்படி -கடைமைப்படி -ஆராதனையைச் செய்து மனிதன் மேலான வீடு பேற்றை அடைகிறான் –
    இவ்வாறு தனக்கு உரிய கடைமைகளை முறையாகச் செய்து அதனால் தூண்டப்பட்ட பக்தியாலேயே பகவான் அடையப் படுகிறான்

    —————-

    100-பகவத் போதாயன -டங்க-த்ரமிட -குஹதேவ-கபர்தி -பாருசிப்ரபிருதி -அவிகீத-சிஷ்ட பரிக்ருஹீத –
    புராதன வேத வேதாந்த வ்யாக்யான ஸூவ்யக் தார்த்த ஸ்ருதி நிகர நிதர்சிதோயம் பந்தா —
    அநேந -சார்வாக -சாக்ய-ஓவ்லூக்ய -அஷபாத -ஷபனிக-கபில -பதஞ்சலி -மத அநு ஸாரினோ
    வேத பாஹ்யா வேதா வலம்பி குத்ருஷ்ட்டி பிஸ் ஸஹ நிரஸ்தா –

    போதாயன பகவான் -டங்கர் -த்ரமிடர் -குஹ தேவர் -கபர்தி -பாருசி -முதலான சிறந்த சான்றோர்களால் கைக் கொள்ளப் பட்ட பழமையான வேத வேதாந்த விரிவுரைகளில் வேதக்கூட்டங்களின் திரண்ட கருத்துக்கள் தெளிவாகக் காட்டப்பட்டு இருக்கின்றனஇதற்கு மாறான -ஸார்வாக -நாஸ்திக – சாக்ய -புத்த -ஓவ்லுக்ய-நியாய தர்க்க வாதிகள் அக்ஷ பாத-வைசேஷிகம் சமண கபில -சாங்க்ய – பதஞ்சலி-யோகம் ஆகியோருடைய கொள்கைகளைப் பின் பற்றுவோர் வேதங்களுக்குப் புறம்பானவர்கள் என்றும்அவைகளுக்கு உட்பட்ட பொருளைத் திரித்து கூறுவோர்கள் என்றும் விலக்கப் படுகின்றனர்
    வேதா வலம்பிநாம் அபி யதா வஸ்தித வஸ்து விபர்யஸ்த த்ருஸாம் பாஹ்ய சாம்யம் மநுநைவ யுக்தம்
    யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய யஸ்ஸ காஸ் ஸ குத்ருஷ்டய
    சர்வஸ்தா நிஷ்பல ப்ரேத்ய தமோந் நிஷ்டா ஹி தா சம்ருதா இதி
    ரஜஸ் தமோப்யாம ஸ்ப்ருஷ்டம் உத்தமம் சத்வமேவ ஏஷாம் ஸ்வாபாவிகோ குண தேஷாமேவ வைதிகீ ருசி –
    வேதார்த்த யாதாத்ம்ய அவபோதஸ் ச இத்யர்த்த –

    வேதங்களை மறுத்தோரும் -அவற்றுக்கு அவப்பொருள் கொள்வோரும் ஒரே படித்தானவர்கள் -என்று மநு கூறுகிறார்
    வேதங்களையும் ஸ்ம்ருதிகளையும் மறுப்போரும் அவப்பொருள் கொள்வோரும் தமோ குணம் நிறைந்தவர்கள் என்றும்
    அவர்களுடைய கருத்துக்கள் உடலை விட்டோடும் உயிருக்கு நற் பலன்களைத் தராதவைகள் என்பதும் பெரியோர்கள் கொள்கை –
    ரஜஸ் தமஸ் இவைகளால் தீண்டப்படாத ஸத்வ குணம் நிறைந்த உத்தமர்களே வேதப் பொருளில் உண்மையான விருப்பம் கொண்டு அதனடியாக அவற்றின் மெய்ப் பொருளை அறிய முடியும் என்பது பொருள்

    யதோக்தம் மாத்ஸ்யே —

    ஸங்கீர்ணா சாத்விகாஸ் ஸைவ ராஜசா தமஸாஸ் தயா இதி கேசித் ப்ரஹ்ம கல்பா ஸங்கீர்ணா –
    கேசித் சத்வ பிராயா -கேசித் ரஜஸ் பிராயா -கேசித் தமஸ் பிராயா -இதி கல்ப விபாக முத்தகா சத்வ ரஜஸ் தமோ மாயாநாம்
    தத்வாநாம் மஹாத்ம்ய வர்ணனஞ்ச தத் தத் கல்ப ப்ரோக்த புராணே ஷு சத்வாதி குண மயேந ப்ரஹ்மணா க்ரியதே இதி ச யுக்தம் –
    யஸ்மின் கல்பேது யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா புரா-தஸ்ய தஸ்ய து மஹாத்ம்யம் தத் ஸ்வரூபேண வர்ணயதே இதி

    அவ்வாறே மத்ஸ்ய புராணத்தில்கலப்படமான ஸாத்விக ராஜஸ தாமஸ குணங்கள் மேலிட்ட படைப்புக் கால அளவுகள் ப்ரஹ்ம கல்பங்கள் உள்ளனபடைப்புக் கால அளவுகளில் சில கலந்த குணமுடையவை -சில aஸ்த்வ குணமுடையவை -சில ரஜஸ்ஸையும் சில தமஸ்ஸையும் கொண்டவைஅவைகளுக்கு ஏற்ப ஸத்வ ரஜ தமோ குணங்கள் நிறைந்த தேவதைகளின் பெருமை விவரிக்கப் படுகிறதுஅந்தந்த கல்பங்களில் தோன்றிய புராணங்களை ஸத்வ முதலான குணங்கள் நிறைந்ததாக ப்ரம்மா செய்தார் என்பது பொருள் -முன்பு எந்த எந்தக் கல்பங்களில் எந்த எந்தப் புராணங்கள் ப்ரம்மாவினால் சொல்லப் பட்டதோ அவைகள் அந்தந்த குண மேலீட்டான தேவதைகளைப் பரக்கப் பேசுகிறது –
    விசேஷ தஸ் ச யுக்தம்
    அக்ரேஸ் சிவஸ்ய மஹாத்ம்யம் தமசேஷு ப்ரகீர்த்யதே
    ரஜஸே ஷு ச மஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மணோ வித்து
    சாத்விகேஷ்வத கல்ப்பேஷு மஹாத்ம்யம் அதிகம் ஹரே
    தேஷ்வேவ யோக சம்சித்தா கமிஷ்யந்தி பராம் கதிம்
    சங்கீர்ணேஷு சரஸ்வத்யா பித்ரூணாஞ்ச நிகத்யதே–இத்யாதி
    ஏதத் யுக்தம் பவதி–ஆதி ஷேத்ரஞ்ஞத்வாத் ப்ரஹ்மண தஸ்யாபி கேஷுசிதஹஸ் ஸூ சத்வம் உத்ரிக்தம் கேஷுசித் ரஜஸ் கேஷுசித் தமஸ்–

    யதோ யுக்தம் பகவதா
    ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வாதிவிதேவே ஷு வா புந
    சத்வம் ப்ரக்ருதி ஜைர் முக்தம் யதேபி ஸ்யாத்ரிபிர் குணை இதி –ஸ்ரீ கீதை
    யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச ச ப்ரஹினோதி தஸ்மை -இதி ஸ்ருதே
    ப்ரஹ்மணோபி ஸ்ருஜ்யத்வேந ஸாஸ்த்ர வஸ்யத் வேந ச ஷேத்ரஞ்ஞத்வம் கம்யதே சத்வ ப்ராயேஷு அஹஸ் ஸூ தததிரோஷூ
    ச யாநி புராணாநி ப்ரஹ்மணா ப்ரோக்தாநி தேஷாம் பரஸ்பர விரோதி சாதி சாத்விகாஹஸ் ப்ரோக்தம் புராணமேவ யதார்த்தம்
    தத் விரோதி அந்யத் அத்யர்த்தம் -இதி புராண நிர்ணயாயைவ இதம் சத்வ நிஷ்டேந ப்ரஹ்மணா அபிஹிதமிதி விஞ்ஞாயதே இதி –

    இதில் சிறப்பாகக் கூறப்படுவதாவது
    அக்நி சிவன் பெருமை தமஸ் கல்பத்திலும்
    ப்ரம்மாவின் புகழ் ராஜஸ கல்பத்திலும்
    ஹரியின் பெருமை ஸத்வ கல்பத்திலும்
    இவை கலந்த இடத்தில் ஸரஸ்வதி பித்ருக்கள் பெருமையும் சொல்லப்படுகின்றன என்று பெரியோர்கள் தெளிந்து அறிவித்து இருக்கிறார்கள் –
    இது மேலும் முதல் ஜீவனான பிரம்மாவிற்கு சில காலங்களில் ஸத்வமும் சில ஸமயம் ரஜஸ்ஸும் சில பொழுது தமஸ்ஸும் தலை தூக்கியும் இருக்கும் -அவற்றுக்கு ஏற்ப புராணம் அமையும்
    அவ்வாறே கீதையிலும்
    பூமியிலும் வானிலும் இருக்கும் பொருள்கள் யாவும் மூலப் பிரக்ருதியின் தொடர்பின்றி விடுபட்டவை அல்ல என்று சொல்லப் பட்டுள்ளது –
    வேதத்திலும் யார் பிரமனை முன்னதாகப் படைத்து அவனுக்கு வேதங்களை ஓதுவித்தாரோ என்று இருப்பதால் பிரமனும் படைக்கப்படும் ஸாஸ்த்ரங்களுக்கு உட்பட்டும் ஜீவாத்மாவாகிறான் –
    ஸத்வ குணம் மேலோங்கிய நாட்களிலும் அதற்கு மாறுபட்ட நாட்களிலும் எந்த எந்தப் புராணங்களை ஓதுகிறானோ அவைகள் முறையே நற் குணங்களையும் அதற்கு முற்றிலும் மாறுபட்ட பண்புகளையும் கொண்டிருக்கும் புராணங்களின் கருத்துக்களில் மாறுபாடு தோன்றுமாயின் ஸத்வ புராணங்களின் பொருளே கொள்ளத் தக்கது என்றும் மற்றவை தள்ளத் தக்கது என்றும் அறுதியிடப் பட்டு இருக்கிறது –

    ———-

    101–சத்வாதிநாம் கார்யஞ்ச ச பகவதைவ யுக்தம்
    சத்வாத் சஞ்ஜாயதே ஞானம் -ரஜசோ லோப ஏவ ச பிரமாதமவ் ஹவ் தாமச பகவதோ ஞான மேவ ச

    ஸத்வம் முதலான குணங்களின் செயல்களை aபகவானே விவரிக்கிறார்ஸத்வத்தினால் -ஆத்ம யாதாத்ம ஞானமும் -ராஜஸத்தினால் பேராசையும் தமஸ்ஸினால் கவனக் குறைவு மயக்கம் அஞ்ஞானம் ஆகியவையும் ஏற்படுகின்றன
    ப்ரவ்ருத்திஞ்ச நிவ்ருத்திஞ்ச கார்ய அகார்யே பய அபயே பந்தம் மோக்ஷம் ச யோ வேத்தி புத்திஸ் சா பார்த்த சாத்விகீ –
    யயா தர்மம் அதர்மஞ்ச கார்யஞ்ச அகார்யமே வச-அயதாவத் பிரஜாநாதி புத்திஸ் சா பார்த்த ராஜஸீ
    அதர்மம் தர்மம் இதியா மந்யதே தமஸா ஆவ்ருதா சார்வார்த்தாந் விபரீதாம்ஸ்
    ச புத்திஸ் சா பார்த்ததாமஸீ இதி–ஸ்ரீ கீதை -18-30-/31-/32—

    ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே–
    பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்திஸ் ஸா பார்த்த ஸாத்த்விகீ–৷৷18.30৷৷

    பார்த்த –குந்தீ புத்ரனே
    ப்ரவ்ருத்திம் ச –இவ் வுலகச் செல்வங்களுக்கு சாதனமான தர்மத்தையும்
    நிவ்ருத்திம் ச –மோக்ஷத்திற்கு சாதனமான தர்மத்தையும்
    கார்யாகார்யே –இந்தக் கர்மங்களில் ஊன்றி நிற்பவர்களுக்குச் செய்யத் தக்கவையும் செய்யத் தகாதவையும்(அடிப்படை தர்ம நெறி -ஆச்சாரம் -கார்யம்-உடல் பலம் வயசு ஆயுசு பொறுத்து கார்யம்)
    பயாபயே–பயத்திற்கும் பயமின்மைக்கும் இடமாய் இருப்பவற்றையும்(பய ஸ்தானம் அபய ஸ்தானம் -எத்தைக் கண்டு அஞ்சுவோமோ அஞ்ச மாட்டாமோ அவற்றைச் சொன்னவாறு-ஸாஸ்த்ரம் பற்றி நடப்பது-அபயம் கொடுக்கும் மீறு நடப்பதும் கோரமானது முன்பே சொன்னானே)
    பந்தம் மோக்ஷம் ச –சம்சாரத்தில் கட்டுப்படுவது அதில் இருந்து விடுபடுவது ஆகியவற்றைப் பற்றிய உண்மையையும்
    யா வேத்தி –எந்த அறிவு அறிகிறதோ
    புத்திஸ் ஸா ஸாத்த்விகீ–அந்த அறிவு ஸத்வ குணத்தால் உண்டானதாகும்

    குந்தீ புத்திரனே -இவ் வுலகச் செல்வங்களுக்கு சாதனமான தர்மத்தையும் மோக்ஷத்திற்கு சாதனமான தர்மத்தையும் –
    இந்த தர்மங்களில் ஊன்றி நிற்பவர்களுக்குச் செய்யத் தக்கவையும் செய்யத் தகாதவையும் பயத்துக்கும் பயமின்மைக்கும்
    இடமாய் இருப்பவற்றையும் சம்சாரத்தில் கட்டுப்படுவது -அதிலிருந்து விடுபடுவது -ஆகியவை பற்றிய உண்மையையும்
    எந்த அறிவு அறிகிறதோ -அந்த அறிவு சத்வ குணத்தால் உண்டானதாகும்

    பயக்ருத் பய நாஸன -அவனை அனுசந்திக்க அபயம்-நம் தோஷம் ஸம்ஸார தோஷம் அனுசந்திக்க பயம் –

    சாத்விக புத்தி -பிரவ்ருத்தி மார்க்கம் இவ்வுலக இன்பம் ஸ்வர்க்கம் வரை -நிவ்ருத்தி மோக்ஷம் விஷயம் –
    பயப்பட- வேண்டாதது -பந்தம் எது மோக்ஷம் -என்ற உறுதியான புத்தி –
    இதனால் சாத்விக ஞானம் -அதனால் சாத்விக கர்மா -அதனால் சாத்விக பலன்

    புத்தி அறிந்து கொள்கிறது தப்பு -நான் அறிந்து கொள்கிறேன் என்றே கொள்ள வேண்டும் -புத்தி உள்ளபடி உண்மையாக்க காட்டிக்கொடுக்கும் –

    —————

    யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச–
    அயதாவத் ப்ரஜாநாதி புத்திஸ் ஸா பார்த்த ராஜஸீ--৷৷18.31৷৷

    பார்த்த–அர்ஜுனா
    யயா -எந்த அறிவால்
    தர்மமதர்மம் ச -தர்மத்தையும் அதர்மத்தையும் –கீழ் சொன்ன ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தர்மங்களைக் கொள்ள வேண்டும் –
    கார்யம் சாகார்யமேவ ச–கார்யத்தையும் செய்யத் தக்கவையும் -செய்யத் தகாதவையும் -அடிப்படை ஆசாரம் பற்றியவை
    அயதாவத் ப்ரஜாநாதி -தவறாக அறிகிறானோ -கீழே யதாவத் ஸ்பஷ்டமாக இல்லை -இங்கு இருப்பதால் அந்த அர்த்தம் தானாகவே கிட்டுமே -உள்ளபடி அறிந்து கொள்ளாமல் இருப்பவன் இங்கு
    புத்திஸ் ஸா ராஜஸீ-அதுவே ராஜஸ புத்தி யாகும்

    குந்தீ புத்திரனே – எந்த அறிவாலே தர்மத்தையும் அதர்மத்தையும் -செய்யத் தக்கத்தையும்-செய்யத் தகாததையும் –
    தவறாக ஒருவன் அறிகிறானோ -அந்த அறிவு ரஜோ குணத்தால் உண்டானது –
    தர்மம் அதர்மம் மயங்கி -ராக்ஷஸ புத்தி -செய்யத் தக்கவை தகாதவை தெரியாமல் மயங்கி –
    புத்தி -உறுதி -தர்ம பூத ஞானம் தான் புத்தி என்பர் –

    தர்மியில் மாறாட்டம் விபரீத ஞானம் தாமசம் -தர்மத்தில் மாறாட்டம் அந்யதா ஞானம் ராக்ஷஸம்

    —————–

    அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸா வ்ருதா–
    ஸர்வார்தாந் விபரீதாம்ஸ்ச புத்திஸ் ஸா பார்த்த தாமஸீ–৷৷18.32৷৷

    பார்த்த -குந்தீ புத்ரனே
    யா -எந்த புத்தி
    தமஸ ஆவ்ருதா–தமஸ்ஸால் -மூடப்பட்டு -ஞான பரப்பைத் தடுக்கப்பட்டு –
    அதர்மம் தர்மமிதி -இது ஓன்று எடுத்துக்காட்டு -அதர்மத்தைத் தர்மம் என்று நினைக்கிறதோ-இருப்பதை இல்லாததாகவும் உயர்ந்த ஒன்றை தாழ்ந்ததாகவும் மாற்றி அறிபவன்-
    ஸர்வார்தாந் –எல்லா அர்த்தங்களையும்
    விபரீதாம்ஸ் ச மந்யதே-நேர் மாறாக அறிகிறதோ
    புத்திஸ் ஸா தாமஸீ-தாமஸ புத்தி எனப்படும்

    குந்தீ புத்திரனே – எந்த அறிவானது தமோ குணத்தால் சூழப் பட்டதாய் – அதர்மத்தை தர்மம் என்று அறிகிறதோ –
    சித்தமாயும் சாத்யமாயும் இருக்கும் எல்லாப் பொருள்களையும் நேர் மாறாக அறிகிறதோ –
    அந்த அறிவு தமோ குணத்தால் உண்டாகும் புத்தியாகும் –
    தாமஸ புத்தி -அதர்மமே தர்மம் என்று உறுதி -கீழே மயக்கம் தான் -இங்கு அதர்மமே தர்மம் -என்று திட புத்தி —
    எத்தனை அழிந்தாலும் மாற்றிக் கொள்ளாத புத்தி -தமோ குணத்தால் சூழ்ந்து -விபரீதமாக –
    சித்தம் சாத்தியம் தப்பாக புரிந்து பூதம் பிரேத குணம் சாத்தியம் என்று கொண்டு -சூழல்

    ஆவ்ருதா இங்கு மட்டும் -அப்பொழுது அப்பொழுது தமஸாலே சூழப்பட்டவனாய் என்றபடி

    மனு -வேதத்தால் சொல்வதை மாற்றி அறியும் புற சமயிகள்-தமோ குணத்தால் சூழப்பட்டவர்கள்

    ————
    சர்வான் புராணார்த்தாந் ப்ரஹ்மணஸ் ச காசாத் அதிகம் யைவ ஸர்வாணி புராணாநி புராண காரா சக்ரு யதோக்தம்
    கதயாமி யதா பூர்வம் தஷாத்யை முநி சத்தமை பிருஷ்ட ப்ரோவாச பகவான் அப்ஜ யோநி பிதாக–இதி ஸ்ரீ விஷ்ணு புராணம்
    அபவ்ருஷேயேஷு வேத வாக்யேஷூ பரஸ்பர விருத்தேஷு கதமிதிசேத் தாத்பர்ய நிஸ்சயாத் அவிரோத பூர்வமேவ யுக்த —

    புராணங்கள் யாவும் பிரம்மனிடம் இருந்தே பெறப்பட்டதாக புராணக்காரர்கள் கூறி இருக்கின்றன
    அதற்கு ஏற்ப ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் தக்ஷர் முதலான முனிவர் தலைவர்கள் தாமரைப்பூவில் உதித்த பிரமனிடம் இருந்து கேட்க்கப்பட்டவைகளை உள்ளபடியே சொன்னார்கள் என்று கூறப்பட்டுள்ளது –
    யாராலும் செய்யப்படாத வேத வாக்கியங்களில் ஒன்றுக்கு ஓன்று tமாறுபட்ட கருத்துக்கள் வருமாகில் அவற்றின் உண்மையான ஆழ் பொருள் அறிந்தால் அம் மாறுபாடு நீங்கும் -என்பது முன்பே சொல்லப்பட்டது-

    ————————-

    102– யதபிசேதம் விருத்தமிவ த்ருஸ்சதே
    ப்ராணம் மனசை ஸஹ கரணை நாதாந்தே பராத்மநி ஸம்ப்ரதிஷ்டாப்ய த்யாயீத ஈஸாநாம் ப்ரத்யாயீத ஏவம் ஸர்வமிதம்–அதர்வண சிகா
    ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ராஸ் தே சர்வே ஸம்ப்ரா ஸூயந்தே ந கரணம்—
    காரணம் து த்யேய–
    சர்வைஸ்வர்ய சம்பன்ன சர்வேஸ்வர சம்பு
    ஆகாச மத்யே த்யேய –அதர்வண சிகா
    யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ் மாந் நாணீயோ ந ஜ்யாயோ ஸ்திகஸ் சித் விருக்ஷ ஏவஸ் தப்தோ திவி திஷ்டத்
    ஏக தேநேதம் பூர்ணம் புருஷேண சர்வம் ததோ யதுத்ர தரம் ததுரூப மநா மயம் ய ஏதத் விதுர ம்ருதாஸ்தே பவந்தி
    அதேதர து ஸ்வ மேவாபி யந்தி சர்வாணன சிரோக்ரீவ சர்வ பூத குஹாஸய சர்வ வ்யாபிச பகவான் தஸ்மாத் சர்வ ததஸ் சிவ –அதர்வ சிகா
    யதா தமஸ் தன்னாதிவா ந ராத்ரி ந சந் ந சாசச் சிவ ஏக கேவல ததஷரம் தத் ஸவிது வரேண்யம்
    பிரஞ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ –ஸ்வேதாசவதரா-
    இத்யாதி -நாராயண பரம் ப்ருஹ்ம இதி ச பூர்வமேவ ப்ரதிபாதிதம் தேநாஸ்ய கதம விரோத —

    ஒன்றுக்கு ஓன்று மாறுபாடான கருத்துக்களைக் கொண்ட வாக்யங்கள் பின் வருமாறு
    1- உயிர் மூச்சை மனம் புலன்களுடன் niruththuநிறுத்தி பரமாத்மாவான ஈசானனை தியானிக்கக் கடவன்
    2-ப்ரம்மா விஷ்ணு ருத்ரன் இந்திரன் ஆகியவர்கள் படைக்கப்படுகிறார்கள் அவர்கள் காரணமாக மாட்டார்கள்
    எது காரணமோ அதுவே த்யானிக்கப்பட வேண்டும்
    செல்வங்கள் யாவும் நிறைந்து எல்லோருக்கும் தலைவனாய் இருக்கும் சம்புவை ஹ்ருத யாகாச நடுவில் தியானிக்க வேண்டும்
    3- எவரைக் காட்டிலும் மேம்பட்டோர் சிறிதும் இல்லையோ எவரைக் காட்டிலும் சிறியவர் பெரியவர் இல்லையோ
    எவர் விண்ணில் உணர்வுகள் இன்றி மரம் போல் இருக்கிறாரோ அவரால் இவ்வுலகு நிறைந்து இருக்கிறது
    அவருக்கு மேம்பட்டோர் யாருமில்லை
    அவர் உருவம் அவயவம் அற்றவர்
    இதை அறிபவர்கள் அழிவது இல்லை -அறியாதவர்கள் துயரம் அடைகிறார்கள் –
    எல்லாப் பிராணிகளின் தலையிலும் கழுத்திலும் ஹிருதயக் குகையிலும் நிறைந்து இருப்பவர்
    எல்லா வற்றிற்கும் கதியானவர் -அவரே சிவன்
    4-எப்பொழுது தமஸ் பகல் இரவு சேதன அசேதனப் பொருள்கள் முதலியவை இல்லையோ அப்பொழுது சிவன் மட்டும் இருந்தான்
    அவனே அழிவற்றவன்
    ஞாயிற்றின் ஒளி யாவும் அறிந்தவன்
    பழமையானவன்
    இதற்கு நாராயணனே பர ப்ரஹ்மம் என்று முன்பே கூறப்பட்டு விளக்கப் பட்டு இருக்கிறது
    அதற்கு இக் கூற்றுக்கள் மாறுபாடானவை அல்ல

    ———–

    103–அத்யல்பமேதத்
    வேதவித் ப்ரவரப்ரோக்த வாக்ய அந்யய உப ப்ரும்ஹிதா வேதாஸ் சாங்கா ஹரிம் பிராஹு ஜகாத் ஜென்மாதி காரணம்
    ஜன்மாத்யஸ்ய யதஸ்
    யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதாநி ஜீவந்தி -யத் பிரயந்த்ய அபி சம்விசந்தி தத் விஞ்ஞாசஸ்வ தத் ப்ரஹ்மா இதி
    ஜகத் ஜென்மாதி காரணம் ப்ரஹமேத்யவ கம்யதே-தச்ச ஜகத் ஸ்ருஷ்ட்டி ப்ரலய ப்ரகரனேஷ் ஏவ அவ கந்தவ்யம்
    ச தேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
    இதி ஜகத் உபாதானதா ஜகந் நிமித்ததா ஜகாத் அந்தர்யாமிதாதி முகேந பரம காரணம் சச் சப்தேந ப்ரதிபாதிதம் –

    இது மிகவும் அற்பமானது
    ஹரியே உலகின் படைப்பு முதலியவற்றிற்குக் காரணம் என்று அங்கங்களோடு கூடிய வேதம் அறுதியிடுவதாக வேதம் அறிந்தோர்களில் தலையாயவர்கள் தங்கள் மொழிகளால் நிறுவியிருக்கின்றனர் –
    இவ்வுலகிற்கு பிறப்பு முதலியவை எம்பெருமான் இடமிருந்தே உண்டாவதால் அந்த ப்ரஹ்மமே காரணம் –
    எவனிடமிருந்து இந்த உயிர்கள் யாவும் உண்டாயினவோ அவ்வாறு உண்டானவை யாரால் வாழ்கின்றனவோ -எவரிடத்தில் அவை ஓடுகின்றனவோ -அதுவே அறியத்தக்கது -அதுவே ப்ரஹ்மம் என அறிவாயாக -என்று
    உலகின் பிறப்பு முதலானவற்றிற்கான
    காரணம் அறுதியிடப்பட்டுள்ளது
    எங்கு உலகின் பிறப்புsoolappattசொல்லப்பட்டு இருக்கிறதோ அங்கிருந்தே ப்ரஹ்மமானது அறியப்பட வேண்டும்
    குழந்தாய் ஸத் ஒன்றே முதலில் இருந்தது
    ஒன்றாகவே பிரிது ஓன்று இல்லால் இருந்தது என்று
    ஜகத்தின் பிறப்புக்கு மூலப்பொருள் செய்வோன் கருவி என உபாதான நிமித்த அதன் உள்ளுறைந்து இயக்கம் ஸஹகாரி -முகமாக எல்லாக் காரணமாகவும் ஸத் ஒன்றே சொல்லப்பட்டு இருக்கிறது –

    அயமேவார்த்த-
    ப்ரஹ்ம வா இதமே கமே வாக்ர ஆஸீத் -இதி சாகாந்தரே ப்ரஹ்ம சப்தேந ப்ரதிபாதித
    அநேந சச் சப்தாபி ஹிதம் ப்ரஹமேத் யவகதம்
    அயமேவார்த்த சாகாந்தரே
    ஆத்மா வா இதமேக ஏவாக்ரா ஆஸீத் -நாந்யத் கிஞ்சந மிஷத்-இதி
    ததா -சத் -ப்ரஹ்ம -சப்தாப்யாம்-ஆத்மைவ அபிஹித -இதயவ கம்யதே-
    ததாச சாகாந்தரே
    ஏகோ ஹவை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மா நேசாந நேமேத்யா வா ப்ருத்வீ -இத்யாதிநா
    சத் ப்ரஹ்ம ஆத்மதி பரம காரண வாஸிபி சப்தை நாராயண ஏவ அபிதீயதே இதி நிஸ் ஸீயதே —

    வேறொரு வேத சாகையில்
    ப்ரஹ்மம் மட்டுமே இங்கு முதலில் இருந்தது -என்று ப்ரஹ்மம் காரணமாக் கூறப்பட்டு இருக்கிறது –
    அதனால் ஸத் என்று கூறப்பட்டது ப்ரஹ்மம் என்றே தெரிகிறது –
    மற்றொரு சாகையில்
    முதலில் ஆத்மா ஓன்று மட்டுமே இருந்தது -மற்ற எதுவும் சிறிதும் இல்லை -என்று கூறப்பட்டு இருக்கிறது –
    ஆகவே ஸத் -ப்ரஹ்மம் -ஆத்மா -என்ற சொற்கள் ஒரே பொருளைக் கொண்டவை எனத் தேறுகிறது –
    அவ்வாறே நாராயணன் ஒருவனே இருந்தான் -பிரம்மாவும் இல்லை ஈசானனும் இல்லை வானமோ பூமியோ இல்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது
    இவைகளால் ஸத் -ப்ரஹ்மம் -ஆத்மா போன்ற முதல் காரணத்தைக் குறிக்கும் சொற்கள் -நாராயணன் -என்று மட்டுமே குறிக்கும் என அறுதியிடப்படுகிறது

    —————-

    104–ய மந்தஸ் சமுத்ரே கவயோ வயந்தி இத்யாரப்ய-நைந மூர்த்வம் நதிர் யஞ்சம் ந மத்யே பறி ஜக்ரபது –
    ந தஸ்யேசே கஸ்சன் தஸ்ய நாம மஹாத் யசஸ்
    ந சந்த்ருசே திஷ்டதி ரூப மஸ்ய ந சஷூஷா பச்யதி கஸ்ச நைநம் -ஹ்ருதா மநீஷா மனசா அபிக்லுப்தோ
    ய ஏனம் விதுரம் ருதாஸ்தி பவந்தி -இதை சர்வ ஸ்மாத் பரத்வம் அசய ப்ரதிபாத்ய -நதஸ் யேசே கஸ்சன-
    இதி தஸ்மாத் பரம் கிமபி ந வித்யதே இதி ச ப்ரதிஷித்ய
    அத்ப்ய ஸம்பூதோ ஹிரண்ய கர்ப இத்யஷ்டவ இதி தேந ஏக வாக்யதாம் கமயதி தச்ச மஹா புருஷ பிரகரணம்-
    ஹரீஸ் சதே லஷ்மீஸ் ச பத்ந்யவ இதி நாராயண எவேதி த்யோதயதி-

    எவன் கடலில் இருப்பதாக ஞானிகள் கூறுகின்றனரோ என்று துவங்கி மேல் பக்கத்திலும்-கீழப் பக்கத்திலும் -இடைப் பக்கத்திலும் அறியப்படாதவன் –
    அவனை யாரும் உள்ளிருந்தோ வெளியிருந்தோ ஏக முடியாது -மிகவும் புகழுடையவன் -அவனுடைய உருவம் கட் புலனாகாதது -அவனை யாரும் கண்களால் காண்பதில்லை -ஞான பக்திகளுடன் கூடியவர் மனத்தால் இருதயத்தில் காணப்படுபவன் -இவனை அறிபவர் சாகா நிலை அடைகின்றனர் -என்று யாவும் அறிபவனை இவ்வாறு விளக்கி
    அவனுக்கு மேற்பட்டவன் யாருமில்லை என்று அவனுக்கு மேற்பட்டு அவனை ஏவக்கூடியவன் ஒருவரும் இல்லை என்பதைக் கூறி –
    அத்ப்ய ஸம் பூததோ ஹிரண்ய கர்ப்ப -என்று தொடங்கும் எட்டு வாக்கியங்கள் முதலில் சொன்னதோடு சேர்த்துப் படிக்கப்பட வேண்டியவை –
    ஒரே கருத்து உடையவை என்பது விளங்கும் –
    அவை பரம் பொருளை காரண மஹா புருஷனைக் குறிப்பவை இதன் தொடர்பில் பூமி தேவி முதலானோரும் லஷ்மியும் உனக்கு மனைவிகள் என்று மிகத் தெளிவாக நாராயணனையே குறிக்கின்றன

    —————-

    105-அயமர்த்த-
    நாராயண அநுவாகே பிரபஞ்சித -சஹஸ்ர சீர்ஷம் தேவம் -இத்யாரப்ய-ச ப்ரஹ்ம ரஸசீவ சேந்த்ர ச அஷரா பரம் ஸ்வராட்
    இதி சர்வ சாகாசூ பரதவ ப்ரதிபாதந பராந் அக்ஷர-சிவ -சம்பு -பர ப்ரஹ்ம பரஞ்சோதி -பரதத்வ -பாராயண -பரமாத்மாதி –
    சர்வ சப்தாந் தத் குண யோகிந நாராயண ஏவ ப்ரயுஜ்ய தத் வ்யதிரிக்தஸ்ய சமஸ்தஸ்ய ததா யத்ததாம் —
    தத் வ்யாப்யதாம் -தத் ஆதாரதாம்-தந் நியாம்யதாம்-தத் சேஷதாம் -ததாத்மகதாம்-ச ப்ரதிபாத்ய ப்ரஹ்ம சிவயோர் அபி
    இந்திராதி சமாந ஆகார தயா தத் விபூதித்வம் ச ப்ரதிபாதிதம்
    இதம் ச வாக்யம் கேவல பாதத்வ ப்ரதிபாதந பரம் அந்யத் கிஞ்சிதபி அத்ர நவிதீயதே-அஸ்மின் வாக்யே ப்ரதிபாதி தஸ்ய
    சர்வஸ்மாத் பரத்வேந அவஸ்திதஸ்ய ப்ரஹ்மண வாக்யாந்த்ரேஷு ப்ரஹ்ம விதாப் நோதி பரம் இத்யாதிஷு உபாஸநாதி விதீயதே —

    இதன் பொருள் நாராயண அநுவாகத்திலே நன்கு விளக்கப்பட்டு இருக்கிறது
    பல தலைகளை யுடையவன் என்று ஆரம்பித்து -அவனே பிரமன் இந்திரன் அழிவற்றவன் பரமாத்மா என்று எல்லா சாகைகளிலும் பரத்வத்தைச் சொல்லிய பிறகு அழிவற்றவன் சிவன் சம்பு பர ப்ரஹ்மம் பர தத்வ பராயண பரமாத்மா போன்ற சொற்களால் அந்தந்த பண்புகளால் நாராயணன் ஒருவனே காட்டப்பட்டு
    அவனை ஒழிந்த மற்றவை rயாவும் அவனாலேயே படைக்கப்பட்டு-அவனாலே நிறைக்கப் பட்டு -அவனையே பற்றுக் கோடாகக் கொண்டு -அவனாலே ஏவப்பட்டு -அவனுக்கு கீழ்ப்பட்டு அவனையே ஆத்மாவாக யுடையதாகக் கூறப்பட்டு -ப்ரம்மா சிவன் முதலியோர் இந்திரனைப் போலவே அவனுடைய செல்வங்களாக கருதப் பட்டுள்ளனர்
    இங்கு எடுக்கப்பட்ட வாக்யம் -நாராயணனின் மற்றப் பண்புகளையோ செல்வங்களையோ கூறாமல் அவனது ஒப்பில்லா உயர்ந்த பரத்வ நிலையை மட்டுமே விதிக்கிறது -இங்கு கூறப்பட்ட அவனுடைய யாவற்றுக்கும் மேம்பட்ட தன்மையை உடையதான ப்ரஹ்மத்தை இடையறாது தியானிப்பதன் மூலம் பரநிலையை அடையலாம் என்று இடையறாத் தியானத்தை விதிக்கிறது –

    ————

    106–அத -ப்ராணம் மனசை ஸஹ கரணை -இத்யாதி வாக்கியம் சர்வ காரணே பரமாத்மநி காரண
    பிராணாதி சர்வம் விகார ஜாதம் உப ஸம்ஹ்ருத்ய -தமேவ பரமாத்மாநாம் ஸர்வஸ்ய ஈஸாநாம் த்யாயீத இதி
    பர ப்ரஹ்ம பூத நாராயணஸ்யை வத்யாநம் விதாதி-

    பிறகு -உயிர் மூச்சையும் புலன் களுடன் கூடிய மனத்தையும் என்ற -வாக்யத்தால் -எல்லாவற்றிற்கும் காரணமான பரமாத்மாவை உயிர் மூச்சு புலன்கள் ஆகிய மாறுபடுபவைகளில் நின்று விலக்கி ஒரு முகப்படுத்தி அந்தப் பரமாத்மாவையே எல்லாவற்றிற்கும் ஈசன் என்று த்யானிக்கப் படவேண்டும் என்று பர ப்ரஹ்மமான நாராயணனையே தியானிக்க விதிக்கிறது-
    பதிம் விஸ்வஸ்ய
    ந தஸ்யேஹ கஸ்சந-இதி தஸ்யைவ சர்வேசாநதா ப்ரதிபாதிதா–அத ஏவ சர்வ ஐஸ்வர்ய சம்பந்ந
    சர்வேஸ்வர சம்பு ஆகாச மத்யே த்யேய -இதி
    நாராயணஸ்யைவ பரம காரணஸ்ய சம்பு சப்த வாஸ்யஸ்ய த்யானம் விதீயதே -கஸ்ச த்யேய -இத்யாரப்ய-காரணம் து த்யேய –
    இதி கார்யஸ்ய அத்யே யதா பூர்வக காரணைக த்யேயதா பரத்வாத் வாக்யஸ்ய –
    தஸ்யைவ நாராயணஸ்ய பரம காரணதா சம்பு சப்த வாச்யதா ச பரம காரண பிரதி பாதனைக பரே நாராயண
    அநு வாக ஏவ பிரதி பந்நா இதி தத் விரோதி அர்த்தாந்தர பரி கல்பனம் காரணஸ்யைவ த்யேயத்வ விதி வாக்யே ந யுஜ்யதே –

    உலகைக் காப்போன்
    அவனுக்கு மேம்பட்டோன் யாரும் இல்லை -என்று அவனுடைய தனிப் பெரும் தலைமை பேசப்படுகிறது
    மேலும் செல்வங்கள் யாவும் நிறைந்தவன்-எல்லாவற்றுக்கும் தலைவன் சம்பு -வானிடை விளங்குவோன் தியானிக்கப்படத் தக்கவன் -வேண்டும் என்று
    நாராயணனையே பரம காரணமாக சம்பு என்னும் சொல்லால் தியானம் செய்ய விதிக்கிறது
    எவன் த்யானிக்கப்பட வேண்டும் எனத் துவங்கி காரணமானவனே த்யானிக்கத் தக்கவன் -என்று காரியப் பொருட்களைத் த்யானிப்பதை விலக்கி காரணப் பொருளையே தியானிக்க வேண்டும் என விதிக்கிறது

    அதனால் நாராயணனுடைய முதல் காரணத் தன்மையினால் சம்பு என்ற சொல்லுக்குப் பொருளாக முதல் காரணத் தன்மையைக் கூறி பிறகு நாராயண அநுவாகத்தில் கூறியதை விளக்கி அதற்கு மாறுபட்ட பொருள்களை விலக்கி காரணமே த்யானிக்கத் தக்கது என்று விதிக்கிறது –

    ——————-

    107–யதபி–ததோ யதுத் தர தரம் -இத்யத்ர புருஷாதந் யஸ்ய பரதர தத்வம் பிரதீயதே -இத்யப்யதாயி -ததபி
    யஸ்மாத் பரந் ந அபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாந் நாணீயோ ந ஜ்யாயோ ஸ்தி கஸ்சித்–இத்யத்ர
    யஸ்மாத் அபரம்-
    யஸ்மாத் அந்யத் கிஞ்சித் அபி பரம் நாஸ்தி கேநாபி பிரகாரேண புருஷ வ்யதிரிக்தஸ்ய பரத்வம் நாஸ்தி -இத்யர்த்த
    அணீயஸ்த்வம் -ஸூஷ்மத்வம்-ஜ்யாயத்வம் -ஸர்வேஸ்வரத்வம் -சர்வ வ்யாபித்வாத் -சர்வேஸ்வரத்வாத்-அஸ்ய
    ஏதத் வ்யதிரிக்தஸ்ய கஸ்யாபி அணீயஸ்த்வம் ஜ்யாயஸ்த்வம் ச நாஸ்தி இத்யர்த்த
    யஸ் மாந் நாணீயோ ந ஜ்யாயோஸ்தி கஸ்சித்-இதி புருஷா தந்யஸ்ய கஸ்யாபி ஜ்யாயஸ்த்வம் நிஷித்தம் இதி –
    தஸ்மாதந் யஸ்ய பரத்வம் ந யுஜ்யதே இதி ப்ரத்யுக்தம் –

    இங்கு அதினின்றும் மேம்பட்டது -என்று பரம புருஷனை விட மேம் பட்ட உயர் நிலை கூறப்படுவது போல் காணப்படுகிறது –
    யஸ்மாத் பரந்நா பர மஸ்தி கிஞ்சித் யஸ்மாந்நாணீயோ ந ஜ்யா யோஸ்தி கஸ்சித் -என்ற மந்திரத்துக்கு கீழ் வருமாறு பொருள் கொள்ள வேண்டும் –
    யஸ்மாத் அபரம் -எதினின்றும் வேறுபட்ட து ஓன்று சிறிது அளவும் பெரியதல்லவோ –
    அதாவது -எவ் வழியிலும் புருஷனை விடப் பெரியது எதுவும் இல்லை என்று பொருள் –
    அணீயஸ் த்வம் –நுண்ணியதாய் இருத்தல்
    ஜ்யாயஸ்த்வம் -எல்லாவற்றிற்கும் தலைமை
    எங்கும் நிறைந்து இருப்பதால் -எல்லாவற்றிற்கும் தலைமையாய் இருப்பதால் அவனின்றும் வேறுபட்ட எதற்கும் நுண்மை முதன்மை ஆகியவை இல்லை என்பது பொருள் –
    யஸ்மாந் நாணீயோ நா ஜ்யோஸ்தி கஸ்சித்-என்று புருக்ஷனைத் தவிர்த்து வேறு எதற்கும் முதன்மையாய் இருத்தல் மறுக்கப் படுகிறது
    இதனால் புருஷனின்றும் வேறுபட்டது எதுவும் இல்லை என்பது வெளிப்படை –

    கஸ்தர் ஹி அஸ்ய வாக்யஸ்ய அர்த்த ?
    அஸ்ய பிரகரணஸ்யோபக்ரமே-தமேவ விதித்வாதி ம்ருத்யு மீதி -நாந்ய பந்தா வித்யதேயநாய -இதி
    புருஷ வேதநஸ்ய அம்ருதத்வ ஹேதுதாம் -தத் வ்யதிரிக்தஸ்ய அபததாம் ச ப்ரதிஞ்ஞாய -யஸ்மாத் பரம் ந அபரமஸ்தி கிஞ்சித் —
    தே நேதம் பூர்ணம் புருஷேண சர்வம் –இத் யேததந்தேந புருஷஸ்ய சர்வ ஸ்மாத் பரத்வம் ப்ரதிபாதிதம்-
    யத புருஷ தத்வமேவ உத்தர தரம் -ததோ யதுத் தரதரம் -புருஷ தத்வம் ததேவ அரூபாம் -அநாமயம்-ய ஏதத் விதுரம்ருதாஸ்தே பவந்தி–
    அதே தர துக்கமே வாபி யந்தி இதி புருஷ வேதநஸ்ய அம்ருதத்வ ஹேதுத்வம் ததிதரஸ்ய ச அபதத்வம்
    ப்ரதிஞ்ஞாதம் ச ஹேதுகமுப ஸம்ஹ்ருதம் -அந்யதா உப க்ரமகத ப்ரதிஞ்ஞாப்யாம் விரூத்யேத

    அப்படி என்றால் இந்த வாக்கியத்தின் பொருள் என்ன –இவ் வாக்கியத்தின் இடத்தையும் தொடர்பையும் ஆராய்வோமானால் துவக்கத்தில்அந்தப் பரம புருஷனையே இடையறாது தியானித்து பிறவிச் சுழல் எனும் கடலைத் தாண்ட வேண்டும் -வேறு வழி ஏதுமில்லை -என்று புருஷனை இடையறாது தியானித்து மோக்ஷம் அடையத் தகுந்த வழி -அதனினும் வேறு வழி ஏதுமில்லை என்று அறுதியிட்டு எவனைவிட மேம்பொருள் ஏதும் இல்லையோ அவனே முழுமையாவான் – எல்லோருக்கும் மேலான புருஷன் என்று புருஷ பரத்வம் கூறியது -அப்படியே அந்த புருஷத்வமே மிக உயர்ந்தது என்று விளக்கி பிறகு அதனினும் சிறந்த புருஷத்வம் வினைகளால் வரும் உருவம் அற்றது -செயலால் வரும் இன்ப துன்பங்கள் அற்றது -என்பதை அறிபவன் மோஷத்தை அடைகிறான் -அறியாதவன் துக்கத்தை அடைகிறான் -என்று புருஷத்வமே மோக்ஷ காரணம் என்றும் மற்றவை தாழ்ந்தவைகள் என்றும் கூறி துவக்கத்தில் கூறிய கருத்து அறுதியிடப் பெறுகிறதுஇதை மாறுபட்டு பொருள் கொண்டால் துவக்கமும் முடிவும் தொடர்பு அற்றவை யாகும் –
    புருஷஸ் யைவ ஸூத்தி குண யோகே சிவ சப் தாபி -தே யத்வம் சாஸ்வதம் சிவமச்யுதம்–இத்யாதிநா
    ஞாதமேவ புருஷ ஏவ சிவ சப்தாபி ஹித-இதி அநந்தரமேவ வததி–மஹாந் ப்ரபுர்வை புருஷ சத்வஸ்யைஷ ப்ரவர்த்தக இதி –

    புருஷனுடைய தூய்மைப் பண்பாக சிவன் என்ற பதம் உபயோகப்படுத்தப் படுகிறது–நிலை பெற்றவன் -தூய்மையானவன் -அடியார்களை நழுவ விடாதவன் -என்பதும் நோக்கத் தக்கது -சிவ என்னும் பதத்தால் புருஷனே கடைசியிலும் கூறப்படுகிறான் -மேலும் அதனால் மஹா புருஷன் ஸத்வ குணத்தை நிதியாக உடையவன் என்று இக்கருத்தையே உறுதி செய்கிறது –

    ———————-

    108–உக்த்தேநைவ ந்யாயேந -ந சந்ந சா சச் சிவ ஏவ கேவல –இத்யர்த்த சர்வம் நேயம்
    கிஞ்ச-
    அம்பஸ்ய பாரே –இத்யனு வாகே -ந தஸ்யேசே கஸ்சந இதி நிரஸ்த சாமாப்யதிக சம்பவாநஸ்ய புருஷஸ்ய –
    அணோர் அணீயாந் -இத்யஸ் மிந்நதுவாகே வேத -ஆந்யந்தா ரூபதயா வேத பீஜ பூத ப்ரணவஸ்ய ப்ரக்ருதி பூத
    அகார வாச்யதயா மஹேச்வரத்வம் ப்ரதிபாத்ய தஹர புண்டரீக மத்யஸ்தாகாச வர்த்திதயா உபாஸ்யத்வம் யுக்தம் –

    இவ்வாறு விளக்கப்பட்ட aநியாயங்களால் ந ஸந்ந சாஸச் சிவ ஏவ கேவல-nஎனும் aவாக்யத்திலுள்ள சிவ என்னும் சொல் சிவனைக் குறிப்பதல்ல என்பது எவரும் அறிந்ததேமேலும் -அம்பஸ்ய பாரே -என்ற அநுவாகத்தில் -அவனுக்கு மேம்பட்டவன் யாருமில்லை -என்று மற்றவர்களை மறுத்து நிறுவப்பட்ட புருஷன் என்பவன் அணுவிலும் அணுவாக இருப்பவன் எனக் கூறப்பட்டு இருக்கிறதுஇந்த அநுவாகத்தில் வேதத்தை ஒதத் தொடங்கும் போதும் முடிக்கும் போதும் ஓம் என்று சொல்லப்பட வேண்டும் -என்று விதித்துஅதன் பகுதியான அ என்னும் எழுத்தால் யாவருக்கும் மேன்மையான தன்மை கூறப்பட்டு அவனை ஹ்ருதயத் தாமரையில் உள்ள தஹர ஆகாசத்தில் இருப்பவனாகத் தியானிக்க விதிக்கிறது –
    அயமர்த்த
    சர்வஸ்ய வேத ஜாதஸ்ய ப்ரக்ருதி பிரணவ யுக்த -ப்ரணவஸ்ய ச ப்ரக்ருதி அகார -பிரணவ விகாரோ வேத ஸ்வ ப்ரக்ருதி பூதே
    பிரணவ லீன -ப்ரணவோபி அகார விகார பூத ஸ்வ பிரகிருதவ்-அகாரே லீன -தஸ்ய பிரணவ ப்ரக்ருதி பூதஸ்ய-
    அகாரஸ்ய-ய பர வாஸ்ய ச ஏவ மஹேஸ்வர இதி சர்வ வாசக ஜாத ப்ரக்ருதி பூத அகார வாஸ்ய சர்வ வாஸ்ய ஜாத
    ப்ரக்ருதி பூத நாராயணோ ய ச மஹேஸ்வர -இத்யர்த்த –

    இதன் பொருளாவது
    எல்லா வேதங்களுக்கும் பிறப்பிடம் ஓம் எனும் ப்ரணவம்
    அந்தப் ப்ரணவத்தின் பகுதி -வேர்ச்சொல் அ காரம் ப்ரணவத்தின் விரிவே வேதம் -ப்ரணவம் அகாரத்தின் விரிவு -அவ்வாறே அவைகள் முடியும் இடமும் லயம் -முறையே ப்ரணவம் அகாரம் ஆகின்றன –
    இந்த அகாரத்தினால் அறுதியிடப் படுபவன் -எனவே அவனே மஹேஸ்வரன்
    இதனால் சொற்கள் யாவற்றுக்கும் வேராக அகாரமும் அவைகளால் சுட்டப்படும் பொருள்கள் யாவற்றுக்கும் வேராக இருக்கும் -நாராயணனே மஹேஸ்வரன் -என்று தேறுகிறது

    யதோக்தம் பகவதோ –
    அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகாத்தை பிரபவ ப்ரலயஸ் ததா மத்தப் பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்சய —
    அக்ஷராணாம் அகாரோஸ்மி-ஸ்ரீ கீதை –

    இக் கருத்தையே கீதையில் பகவான்-நான் இவ்வுலகு அனைத்துக்கும் உத்பத்தி இடமாகவும் முடிவு இடமாகவும் இருக்கிறேன்அர்ஜுனா என்னிலும் வேறுபட்ட எப் பொருளும் என்னை விட மேலானதாக இல்லை என்றும்எழுத்துக்களில் அகாரம் ஆகிறேன் என்றும் திருவாய் மலர்ந்து அருளி இருக்கிறான் –
    இதி அ இதி ப்ரஹ்ம இதி ஸ்ருதே –
    அகாரேவை சர்வ வாக் -இதி ச வாசக ஜாதஸ்ய அகார ப்ரக்ருதித்வம் வாஸ்ய ஜாதஸ்ய ப்ரஹ்ம ப்ரக்ருதித்வம் ச ஸூ ஸ்பஷ்டம்

    அ -என்பது ப்ரஹ்மம் என வேதம் கூறுகிறதுஅகாரத்தின் நின்றும் சொற்கள் யாவும் தோன்றுகின்றனசொற்கள் தோன்றுவதற்கு அ காரணமாக இருப்பது போலே அச் சொற்களின் பொருள்கள் யாவற்றிற்கும் அ காரத்தின் பொருளான ப்ரஹ்மம் என்பது வெள்ளிடை மலை
    அத -ப்ரஹ்மண-அகார வாச்யதா ப்ரதிபாதநாத் அகார வாஸ்யோ நாராயண ஏவ மஹேஸ்வர -இதி சித்தம் –
    தஸ்யைவ -சஹஸ்ர சீர்ஷம் தேவம் -இதி கேவல பரதத்வ விசேஷ ப்ரதிபாதந பரேண-நாராயண அநு வாகேந சர்வ ஸ்மாத் பரத்வம் பிரபஞ்சிதம் –
    அநேந அநந்ய பரேண ப்ரதிபாதிதமேவ பரதத்வம் -அந்ய பரேஷு சர்வேஷு வாக்யேஷு கேநாபி சப்தேந ப்ரதீயமாநம்
    ததேவேதி அவகம்யதே-இதி -ஸாஸ்த்ர த்ருஷ்டயாதூபதேசோ வாமதேவ வைத்த –இதி ஸூத்ரா காரேண நீர்ணீதம்

    பிறகு ப்ரஹ்மத்தை அகாரத்தால் கூறி -அதன் பொருளான நாராயணனே மஹேஸ்வரன் என்பது தன்னடையே கிடைக்கிறது -அவனையே ஆயிரம் தலைகள் உடையவன் -என்று பரத்வத்தை விளக்கிய பிறகு நாராயண அநுவாகத்தில் யாவற்றையும் விஞ்சினவாகக் கூறிஇவ்வாறு தனக்கு உவமை இல்லாதவன் -எனும் நிலையே பரத்வம் என்று நிறுவுகிறதுஇவ்வாறு தனக்கு உவமை மேலானவன் இன்மையைக் கூறி -தன்னிலும் வேறுபட்ட சொற்கள் யாவற்றிற்கும் மேம்பட்டு இருப்பது போல் அவனும் இருக்கிறான் என விளக்குகிறதுமற்றையோர் தனக்கு தனிப் பெரும் முதன்மை கூறிக் கொள்வது -ஸாஸ்த்ரங்கள் நன்கு அறிந்த வாம தேவர் -அவன் தன்னுள்ளும் இருப்பதை அறிந்து அவனே யாவும் செய்வதாகக் கூறிக் கொள்வது போன்றதுஇது ப்ரஹ்ம ஸூத்ரத்தில் நன்கு விளக்கப் பட்டு இருக்கிறது
    ததேதத்க்வ பரம் ப்ரஹ்ம சித் ப்ரஹ்ம சிவாதி சப்தாவகதமிதி கேவல ப்ரஹ்ம சிவயோ ந பரத்வ பிரசங்க –
    அஸ்மின் அநந்ய பரே னுவாகே தயோர் இந்திராதி துல்ய தயா தத் விபூதித்வ ப்ரதிபாதநாத் கசித் ஆகாய பிராணாதி சப்தேந
    பரம் ப்ரஹ்மாபிஹிதம் இதி பூதாகாச பிராணாதே யதா ந பரத்வம் –

    இவன் ஒருவனே பர ப்ரஹ்மமாய் இருக்க பிரம்மா சிவன் போன்ற சொற்களால் குறிக்கப் படுவோருக்கு பர ப்ரஹ்மத்வம் கிடையாது என்பது அதே நூலில்
    வேறொரு இடத்தில் இந்திரன் போன்றோரும் இவ்வாறு கூறிக் கொள்ளுகையால் ஆகாயம் போன்ற சொற்கள் எவ்வாறு உத்பத்திக்குக் காரணமாகச் சொல்லப்பட்டு இருந்தாலும் அவை பர ப்ரஹ்ம்ம் அல்லவோ -அது போன்று இங்கும் சிவனுக்கு பர ப்ரஹ்மத்வம் கிடையாது என்று சொல்லப் படுகிறது –

    ———————-

    109–யத் புநர் இதமா சங்கிதம்-
    அதயதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம -தஹரோஸ்மிந் நந்தராகாச -தஸ்மிந் யதந்தஸ் தந்வேஷ்டவ்யம்
    ததுவாத விஜிஞ்ஞாசித்வயம்-இத்யத்ர ஆகாச சப்தேன ஜகதுபாதாந காரணம் ப்ரதிபாத்ய தத் அந்தரவர்த்திந –
    கஸ்யசித்த தத்வ விசேஷஸ்ய அந்வேஷ்டவ்யதா ப்ரதிபாத்யதே அஸ்ய ஆகாசஸ்ய நாம ரூபயோ நிர்வஹகத்வ ஸ்ரவணாத்
    புருஷ ஸூக்தே புருஷஸ்ய நாம ரூபயோ கர்த்ருத்வ தர்சநாஸ்ச-ஆகாச பர்யாய பூதாத் புருஷாத் அந் யஸ்ய அந் வேஷ்டவ்யதயா
    உபாஸ்யத்வம் பிரதீயதே இதி

    இது மற்ற ஒரு ஐயத்தைத் தோற்றுவிக்கிறதுபர ப்ரஹ்மத்திற்கு இருப்பிடமான இவ் வுடலில் ஹ்ருதயத்திலுள்ள தாமரை மலர் போன்ற இடத்திலுள்ள மிகச் சிறிய வெளியானது தேடி அறியத் தக்கது -அதுவே இடையறாது த்யானிக்கத் தக்கது -என்று உடலிலுள்ள ஆகாயம் குறிப்பிடப் படுகிறது -மேலும் அதனுள் உறைவதாயும் தன்னுடைய தொடர்பால் அதற்குச் சிறப்பளிப்பதாயும் -உலகிற்கு பருப்பொருள் காரணமானதாயும் வேறொன்று குறிக்கப்பிடப் பட்டு அது அந்த ஆகாசத்திற்கு பெயர் உருவம் அளிப்பதாயும் -அதற்கு மேலாண்மை யுடையதாயும் -புருஷ ஸூக்தத்தில் ஓதப்பட்டு இருக்கிறது -அதனால் ஆகாசத்தில் நின்றும் வேறுபட்டு புருஷன் என்ற பெயரும் உருவமுமுடைய ஒருவனே உபாஸிக்கத் தக்கவன் எனக் கொள்ளல் வேண்டும் -என முற் கூற்று கூறப்படுகிறது –
    அநாதிதா வேதாநாம் அதிருஷ்ட ஸாஸ்த்ர விதாம் இதம் சோத்யம் -யத தத்ர ஸ்ருதிரேவ அஸ்ய பரிகார மஹா வாக்யகாரஸ் ச –

    இக் கூற்றை தோற்றம் நிர்ணயிக்க முடியாத மறைகளாலும் ஸாஸ்த்ரங்களாலும் நுணுகி ஆராய்ந்தால் அவைகளில் இருந்தே தக்க விடையளிக்கும் மொழிகள் காணக் கிடைக்கின்றன –

    தஹரோ அஸ்மின் நந்தர் ஆகாச -கிம் தத்ர வித்யதே யத் அந்வேஷ்டவ்யம் யத் வாவ விஜிஞ்ஞாசிதவ்யம் இதி சோதிதே-
    யாவான் வா அயம் ஆகாச தாவநேஷோந்தர் ஹ்ருதய ஆகாச -இத்யாதிநா -அஸ்ய அகார சப்த வாஸ்யஸ்ய -பரம புருஷஸ்ய –
    அநவதிக மஹத்வம் சகல ஜகத் காரணத்தயா -சகல ஜகத் ஆதாரத்வம் ப்ரதிபாத்ய -அஸ்மின் காமா ஸமாஹிதா
    ஏஷ ஆத்மா அபஹதபாப்மா விஜரோ வி மிருத்யு ஸத்யஸங்கல்ப -இதி
    அபஹதபாப்மத்வாதி -ஸத்யஸங்கல்பத்வ பயந்த குண அஷ்டகம் தஸ்மிந் நிஹிதம் இதி பரம புருஷவத்-பரம புருஷ குண அஷ்டகஸ்யாமி
    ப்ருதக் விஜிஞ்ஞாசி தவ்யதா ப்ரதிபாதித யிஷயா தஸ்மிந் யதந்தஸ்ய தன்வேஷ்டவ்யம் இதயுக்தம் இதி ஸ்ருதியைவ சர்வம் பரிஹ்ருதம் —

    ஏதத் யுக்தம் பவதி -கிம் ததத்ர வித்யதே யதந் வேஷ்டயம் இத்யஸ்ய சோத்யஸ்ய -தஸ்மிந் ஸர்வஸ்ய ஜகத ஸ்ரஷ்டத்வம்-ஆதாரத்வம் –
    நியந்த்ருத்வம் -சேஷித்வம் -அபஹத பாப்மாதயோ குணாஸ் ச வித்யந்தே-இதி பரிகார இதி
    தஹரம் என்பது ஹிருதயக் குகை -உள்ளுறை வெளி -அதனால் எது அறியப்படுகிறது -எது அறியத்தக்கது -எது ஆராயப்பட வேண்டியது என ஆராயின் கட் புலனாகும் வெளி எவ்வளவு பரந்ததோ அவ்வளவு இவ்வெளியும் பரந்ததே -என்று பரமபுருஷனுக்கு உரிய அளவற்ற விரிவும் -அவன் உலகிற்கு காரணமாதலும் -யாவற்றிற்கும் பற்றுக்கோடாக இருத்தலும் விளக்கப்பட்டு -இவனிடத்தில் விரும்பத் தக்கவை யாவும் நிறைந்து இருக்கின்றன
    இந்தப் பரமாத்மா பாபம் அற்றவன் -மூப்பற்றவன் -அழிவற்றவன் – துயரமற்றவன் -பசியற்றவன் -தாகமற்றவன் -விருப்பங்கள் யாவும் அடையப் பெற்றவன் -தவறாத வினைத்திட்பம் உடையவன் -என எட்டுப் பண்புகளை உடையவன்
    அவனையும் அவனுடைய இப் பண்புகளையும் தனித் தனியாக தியானிக்க வேண்டும்
    அதுவே தஹராகாசம் என்று பரமாத்மாவையே தஹராகாசம் என்று நிலை நிறுத்துகிறது
    இதன் விளக்கம்
    இதில் என்ன உள்ளது -அது எவ்வாறுள்ளது என்று ஆராய்கையில் அகில உலகினையும் படைத்தல் -அவற்றிற்கு பற்றுக் கோடாதல் -அவற்றை அடக்கி ஆளுதல் -அவற்றைப் பணி கொள்ளுதல் -மேற் கூறிய எட்டுப் பண்புகள் இந்த ஆகாசத்தில் விளங்குகின்றன -என்பது தெளிவு –

    ததாச வாக்யகார வசனம்–தஸ்மிந் யதந்த-இதி காம வ்யபதேச -இதி காம்யந்தே இதி காமா அபஹத பாப்மத் வாதயோ குணா இத்யர்த்த

    அவ்வாறே ப்ரஹ்ம ஸூத்ரத்திலும்தஸ்மிந் யதந்த -என்ற இடத்தில் எல்லோரும் விரும்பும் குணங்களைக் குறிப்பிட்டு இருக்கிறதுஅதாவது பாபமற்று இருத்தல் முதலான எட்டுக் குணங்கள்
    ஏதத் யுக்தம் பவதி -யத் ஏதத் தஹர ஆகாச சப்தாபி தேயம் -நிகில ஜகத் உதய விபவ லய லீலம்-பரம் ப்ரஹ்ம
    தஸ்மிந்யத் அந்தர் நிஹிதம் அநவதிக அதிசயம் அபஹத பாப்மத்வாதி குண அஷ்டகம் தத் உபயமபி அன்வேஷ்டயம் விஜிஞ்ஞாசி தவ்யம் இதி
    யதா ஆஹ-அதய இஹாத்மாந மனு வித்யா வ்ரஜயந்த்யே தாம்சச சத்யாந் காமாம் ஸ்தேஷாம் சர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி -இதி –

    இதை மேலும் விளக்குவோம்
    எது தஹாராகாஸம் எனப் படுகிறதோ அதுவே உலகு யாவையும் படைத்து காத்து அழித்து வினை புரியும் ப்ரஹ்மம்
    அதனுடைய பாபமற்று இருத்தல் முதலான எட்டுக் குணங்கள் ஆகிய இரண்டையும் தேட வேண்டும் -மனத்தில் நிலை நிறுத்த வேண்டும் -எனக் கூறுகிறது
    பிறகு எவர்கள் பரமாத்மாவையும் அவனுடைய இந்த எட்டுக் குணங்களையும் அறிந்து பரமபதம் செல்லத் தகுதியானவர்களோ அவர்களுக்குத் தாங்கள் விரும்பும் உலகுகளுக்குச் செல்லும் திறன் தன்னடையே ஏற்படுகிறது -எனக் கூறுகிறது –

    ——————

    110–ய புந -காரணஸ்யைவ த்யேயதா ப்ரதிபாதந பரே வாக்யே-விஷ்ணோ அநந்ய பரவாக்ய ப்ரதிபாதித பரதத்வ பூதஸ்ய
    கார்ய மத்யே நிவேச ச -ஸ்வ கார்ய பூதத்வ சங்க்யாபூரணம் குர்வத-ஸ்வ லீலயா ஜகத் உபகாராய ஸ்வ இச்சாவதார இத்யவ
    கந்தவ்ய யதா லீலயா தேவ சங்க்யா பூரணம் குர்வத-உபேந்த்ரத்வம் பரஸ்யைவ யதாச ஸூர்ய வம்சோத்பாவ
    ராஜ சங்க்யா பூரணம் குர்வதா -பரஸ்யைவ ப்ரஹ்மணோ தாஸாதி ரூபேண ஸ்வ இச்சாவதார –
    யதா ச ஸோம வம்சங்க்யா பூரணம் குர்வதோ பகவத-பூ பாராவ் தரணாய
    ஸ்வ இச்சயா வஸூ தேவ க்ருஹேவதாரா ஸ்ருஷ்ட்டிப் பிரளய ப்ரகாரனோஷு நாராயண ஏவ
    பரம காரண தயா ப்ரதிபாத்யதே இதி பூர்வமே வோக்தம் —

    மீண்டும் –
    காரணம் ஒன்றே த்யானிக்கத் தக்கது என்று கூறி இருப்பதால் -அந்தக் காரணம் என்பது யாது என ஆராய்ந்தால்-மற்றை தேவதைகளைப் பற்றிக் குறிப்பிடாத நாராயண அநுவாகத்தில் பர தத்வமான காரணம் –
    ஆயினும் அவன் கார்யமான மற்ற தேவதைகளுக்கும் ஏற்றத்தைக் கொடுக்க தன் விருப்பத்தாலேயே கீழ் இழிந்து -அவர்களில் ஒருவராக எண்ணப்படும் படி தன்னைத் தாழ விடுகிறான்
    தன் அந்த எண்ணத்தின் படியே உபேந்த்ரன் போன்ற பிறப்புகளை எடுக்கிறான் -அவ்வாறே தன் இச்சையால் ஸூர்ய வம்ஸத்தில் தாஸரதியாகத் தோன்றுகிறான்
    பூமி பாரம் நீக்க வாஸூ தேவன் வீட்டில் அவதரித்து சந்த்ர வம்சத்தில் வைத்து எண்ணப்படுகிறான்
    படைப்பு பிரளய காலங்களில் பரம காரணமாக நாராயணனாக தன் நிலையில் இருக்கிறான்
    இவ்வாறு கொள்வதால் மட்டுமே வேத வாக்யங்கள் ஓன்று படுகின்றன –

    ——–

    111–யத் புந -அதர்வ சிரஸ் -ருத்ரேண ஸ்வ சர்வ ஐஸ்வர்யம் பிரபஞ்சிதம் தது-
    சோ அந்தராதந்தரம் ப்ராவிசது-இதி பரமாத்ம பிரவேசாதுக்தம் -இதி ஸ்ருதியைவ வ்யக்தம் –
    ஸாஸ்த்ர த்ருஷ்ட்யாதூபதேசா வாம தேவவத் -இதி ஸூத்ர காரேண ஏவமாதீநாம் அர்த்த ப்ரதிபாதித

    மீண்டும் -அதர்வ ஸிரஸ் என்னும் வேதப் பகுதியில் ருத்ரனால் தனது செல்வங்கள் என்று பரக்கத் பேசப் படுபவைகள்நான் அகத்தின் அகத்தையும் நிறைப்பவன் -என்று பரமாத்மாவால் அவன் நிறைக்கப் பட்டு இருத்தலால் வேதக் கருத்துக்களுக்கு இசையும்வாம தேவர் போன்று ஸாஸ்திரம் நன்கு அறிந்தோர் செய்யும் உபதேசம் -என்று இது போன்ற சொற்களுக்கு பொருள் கொள்ள வேண்டும் என்று ப்ரஹ்ம ஸூத்ரத்தில் நிறுவப் பட்டு இருக்கிறது-
    யதோக்தம் ப்ரஹ்லாதேநாபி –
    சர்வ கத்வாதநந் தஸ்ய ச ஏவாஹ மவஸ்திதித–ஏரவாஹ மத்தஸ் சர்வம் மஹம் சர்வம் மயி சர்வம் சநாதநே–இத்யாதி

    அவ்வாறே ப்ரஹ்லாதனும்எப்பொருளிலும் ப்ரஹ்மம் நிறைந்து இருப்பதால் அதாக நான் இருக்கிறேன் -என்னிடம் இருந்தே யாவும் தோன்று கின்றன – நானே யாவுமாய் ஆகிறேன் அழிவற்று இருக்கிறேன் -என்று சொல்கிறார்
    அத்ர சர்வகத்வாத நந்தஸ்ய இதி ஹேதுருத்த ஸ்வ சரீர பூதஸ்ய ஸர்வஸ்ய சிதசித் வஸ்துந ஆத்மத்வேந சர்வகத பரமாத்மா
    இதி சர்வே சப்தா சர்வ சரீரம் பரமாத்மாநாமே அபிதத தீத் யுக்தம் அத காம் இதி சப்த ஸ்வாத்ம பிரகாரிணம் பரமாத்மநமேவ ஆசஷ்டே
    அத இதம் உச்யதே
    ஆத்மேத்யேவ து க்ருஹ்ணீயாத் ஸர்வஸ்ய தன்னிஷ்பதே இத்யாதிநா காம் க்ருஹண உபாஸநம் வாக்ய காரேண –
    கார்யாவஸ்த காரணாவஸ்தாஸ் ச ஸ்தூல ஸூஷ்ம அசித் சித்த வாஸ்து சரீர பரமாத்மைவ இதி -ஸர்வஸ்ய தந்நிஷ் பத்தே -இத்யுக்தம்–
    ஆதமேதி தூப கச்சந்தி க்ராஹயந்நி ச-இதி ஸூத்ரா காரேண ச —

    இதற்குக் காரணம்
    ப்ரஹ்மம் எல்லை யற்று யாவற்றின் உள்ளும் நுழைந்து இருத்தல் என விளக்கப் பட்டு இருக்கிறது –
    ப்ரஹ்மம் சேதன அசேதன பொருட்களை தன் உடலாகக் கொண்டு ஆத்மாவாகக் கொண்டு நிறைந்து இருப்பதால்
    எல்லாச் சொற்களும் யாவற்றையும் உடலாக யுடைய பரமாத்மாவையே குறிக்கும் என்பதே பொருள்
    பிறகு நான் என்ற சொல்லும் தன் ஆத்மாவைக் காட்டி அதைத் தன் உடலாகக் கொண்டு அதனுள் விளங்கும் பரமாத்மாவையே குறிக்கிறது

    பிறகு த்யானிக்கையில் நம் ஆத்மாவிற்குள் பரமாத்மா இருக்கிறான் என்றே தியானிக்க வேண்டும் -என்றும் சொல்லப்படுகிறது -ஏன் என்றால்
    அவனே யாவற்றிற்கும் தோற்றக் காரணமாய் இருக்கிறான் என்றும் விளக்கப் படுகிறது
    அவன் காரண நிலையில் கட் புலனாகாத சேதனத்துக்குள் இருக்கும் அசேதன பொருள்களையும் சேதனங்களையும் கார்ய நிலையில் கட் புலனாகிற சேதனத்துக்குள் இருக்கும் அசேதன பொருள்களையும் தனக்கு உடலாகக் கொண்டு இருப்பதால் அவனிடமிருந்து யாவும் உண்டாகின்றன என்று கொள்வதே முறை
    அவனை ஆத்மா உயிர் -என்றே உபாஸகர்கள் யாவரும் இடையறாது த்யானிக்கிறார்கள் –
    ஸாஸ்த்ரங்களும் அவ்வாறே நமக்குக் காட்டிக் கொடுக்கின்றன என்பதே ப்ரஹ்ம ஸூத்ரகாரரின் கொள்கை –

    ———

    112–மஹா பாரதே ச ப்ரஹ்ம ருத்ர சம்வாதே ப்ரஹ்மா ருத்ரம் ப்ரத்யாஹ-
    தவாந் தராத்மா மம ச யே சாந்யே தேஹி சம்தா–இதி ருத்ரஸ்ய ப்ரஹ்மணஸ் ச-அந்யே ஷாஞ்ச தேஹினாம்
    பரமேஸ்வரோ நாராயண அந்தராத்மதயா வஸ்தித -இதி-
    ததாதத் ரைவ -விஷ்ணுர் ஆத்மா பகவதோ பவஸ்யாமித தேஜச-தஸ்மாத் தனுர்ஜ்யா சம்ஸ்பர்சம் ச விஷேஹே மஹேஸ்வர –
    இதி தத்ரைவை -ஏதவ் த்வவ் விபுதஸ்ரேஷ்டவ் பிரசாத க்ரேதஜவ் ஸ்ம்ருதவ் ததா தர்சித பந்தாநவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார காரகவ் –
    இதி அந்தராத்மதயா அவஸ்தித நாராயண தர்சித பதவ் ப்ரஹ்ம ருத்ரவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார கார்யகரவ்–இத்யர்த்த –

    மஹா பாரதத்தில் -பிரம ருத்ர உரையாடலில் பிரம்மா உனக்கும் எனக்கும் உடல் படைத்த யாவருக்கும் அந்த பர ப்ரஹ்மமே அந்தராத்மா வாகிறான் என்று கூறுகிறார் –
    ருத்ரனுக்கும் பிரம்மாவுக்கும் மற்றைய உடல் படைத்தோர் யாவருக்கும் பரமேஸ்வரனாய் இருப்பவன் நாராயணனே –
    அவனே அந்தராத்மாவாக நிலை பெற்று இருக்கிறான்-என்று இதற்குப் பொருள்

    அதிலேயே மேலும் -அளவற்ற தேஜஸ்ஸை யுடைய பவனுக்கு சிவனுக்கு -விஷ்ணுவே ஆத்மா என்றும்
    தொடர்ந்து -இப்படிப் பட்ட தேவர்களில் சிறந்த ப்ரம்மா சிவன் ஆகியோர் நாராயணன் மகிழ்ச்சியுடனும் கோபத்துடனும் இருக்கையில் முறையே படைக்கப் பட்டார்கள் என்றும்
    அவனால் வழி காட்டப்பட்டு படைத்தலையும் அழித்தலையும் செய்கின்றனர் என்றும் சொல்லப் படுகிறது –

    அந்தராத்மாவில் இருந்து கொண்டு நிலை பெற்ற நாராயணனால் தூண்டப் பட்டே ப்ரம்ம ருத்ரர்கள் படைத்தலையும் அழித்தலையும் செய்கின்றனர் என்பது இதன் பொருள்

    —————————————————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ ஸ்ருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ தாயாருடைய பன்னிரு திருநாமங்கள்-108 திவ்யதேசங்களின் தாயார் பெருமாள்–

    August 13, 2024

    ஸ்ரீ தாயாருடைய பன்னிரு திருநாமங்கள்
    1- ஸ்ரீ -பெரியபிராட்டியார்
    2- அம்ருதோத்பவ -அம்ருதவல்லித் தாயார் சோளிங்கர்
    3-கமலா -கமலாவல்லித் தாயார் உறையூர்
    4-சந்த்ர ஷோபநா -பரிமள வல்லித் தாயார் இந்தளூர்
    5-விஷ்ணு பத்நீ –வஞ்சுள வல்லித் தாயார் -திருநறையூர்
    6-வைஷ்ணவீ -யதுகிரி நாச்சியார்
    7-வரரோஹா -ஸ்ரீ வரமங்கத் தாயார்
    8-ஹரிவல்லபா -கோதா நாச்சியார்
    9-சார்ங்கிணீ -கோமள வல்லித் தாயார்
    10-தேவ தேவிகா –பெரும் தேவித் தாயார்-காஞ்சிபுரம்
    11-ஸ்ரீ மஹா லஷ்மி -பத்மாவதித் தாயார்
    12-லோக ஸூ ந்தரீ –ஸுந்தரவல்லித் தாயார் -திரு நாகை

    108 திவ்யதேசங்களின் தாயார் பெருமாள்–

    1-ஸ்ரீரங்கம்
    (திருவரங்கம்)
    ஸ்ரீரங்க நாச்சியார்
    ஸ்ரீ ரங்கநாதன்
    நம்பெருமாள்
    சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

    2-திருக்கோழி
    (உறையூர், நிசுலாபுரி, உரந்தை)
    ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்
    ஸ்ரீ அழகிய மணவாளன்
    சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

    3-திருக்கரம்பனூர் (உத்தமர் கோவில், கடம்ப க்ஷேத்ரம்)
    ஸ்ரீ பூர்வ தேவி
    ஸ்ரீ புருஷோத்தமன்
    சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

    4-திருவெள்ளறை (வேதகிரி க்ஷேத்ரம்)
    ஸ்ரீ செண்பகவல்லி நாச்சியார்
    ஸ்ரீ புண்டரீகாக்ஷன்
    சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

    5-திருஅன்பில்
    ஸ்ரீ அழகியவல்லி நாச்சியார்
    ஸ்ரீ வடிவழகிய நம்பி
    ஸ்ரீ சுந்தரராஜன்
    சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

    6-திருப்பேர்நகர் ,அப்பக்குடத்தான்
    ஸ்ரீ கமலவல்லி (இந்திரா தேவி)
    அப்பலா ரங்கநாதன்
    சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

    7-திருக்கண்டியூர்
    ஸ்ரீ கமலவல்லி
    ஹர சாப விமோசன பெருமாள்
    கமலநாதன்
    சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

    8 -திருக்கூடலூர்,
    ஆடுதுறை பெருமாள் கோவில்
    ஸ்ரீ பத்மாசனி (புஷ்பவல்லி)
    வையம் காத்த பெருமாள் (ஜகத்ரக்ஷகன்)
    சோழ நாடு,கும்பகோணம்

    9-திரு கவித்தலம் (கபிஸ்தலம்)
    ஸ்ரீ ரமாமணிவல்லி (பொற்றாமரையாள்)
    கஜேந்திர வரதன்
    சோழ நாடு,கும்பகோணம்

    10-திருப்புள்ளம் (பூதங்குடி)
    ஸ்ரீ பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி)
    ஸ்ரீ வல்விலி ராமர்
    சோழ நாடு,கும்பகோணம்

    11-திரு ஆதனூர்
    ஸ்ரீ ரங்கநாயகி
    ஸ்ரீ ஆண்டளக்குமையன்
    சோழ நாடு,கும்பகோணம்

    12-திருகுடந்தை
    (பாஸ்கர க்ஷேத்ரம்)
    ஸ்ரீ கோமளவல்லி (படிதாண்டா பத்தினி)
    ஸ்ரீ சாரங்கபாணி
    சோழ நாடு,கும்பகோணம்

    13-திருவிண்ணகர்,
    ஒப்பிலியப்பன் கோயில்
    ஸ்ரீ பூமிதேவி நாச்சியார்
    ஸ்ரீ ஒப்பிலியப்பன் (ஸ்ரீநிவாசன்)
    சோழ நாடு,கும்பகோணம்

    14-திரு நறையூர்,
    நாச்சியார் கோயில்
    ஸ்ரீ வஞ்சுளவல்லி நாச்சியார்
    திருநறையூர் நம்பி
    சோழ நாடு,கும்பகோணம்

    15-திருச்சேறை
    ஸ்ரீ சாரநாயகி (சார நாச்சியார்)
    ஸ்ரீ சாரநாதன்
    சோழ நாடு,கும்பகோணம்

    16-திரு கண்ணமங்கை
    ஸ்ரீ அபிசேக வல்லி
    பக்த வத்சல பெருமாள்
    சோழ நாடு,கும்பகோணம்

    17-திருக்கண்ணபுரம்(கிருஷ்ணாரண்யா, பஞ்சக்ருஷ்ண, சப்த புண்ணிய க்ஷேதரம்)
    ஸ்ரீ கண்ணபுர நாயகி
    நீல மேகப் பெருமாள்
    சௌரிராஜ பெருமாள்
    சோழ நாடு,நாகப்பட்டினம்

    18-திரு கண்ணங்குடி
    ஸ்ரீ லோகநாயகி (அரவிந்த வல்லி)
    ஸ்ரீ லோகநாதன் (சியாமளமேணிப் பெருமாள்)
    தாமோதர நாராயணன்
    சோழ நாடு,கும்பகோணம்

    19-திரு நாகை,
    நாகப்பட்டினம்
    ஸ்ரீ சௌந்தர்ய வல்லி
    நீலமேகப் பெருமாள்
    சௌந்தர்யராஜன்
    சோழ நாடு,நாகப்பட்டினம்

    20-தஞ்சைமாமணி கோயில்
    ஸ்ரீ செங்கமல வல்லி
    நீலமேகப் பெருமாள்
    சோழ நாடு,தஞ்சாவூர்

    21-திரு நந்திபுர விண்ணகரம்,
    நாதன் கோயில், தக்ஷின ஜகன்னாத்
    ஸ்ரீ செண்பக வல்லி தாயார்
    ஸ்ரீ ஜகந்நாதன் (நாதநாதன், விண்ணகர பெருமாள்)
    சோழ நாடு,கும்பகோணம்

    22-திரு வெள்ளியங்குடி
    ஸ்ரீ மரகத வல்லி
    கோலவல்வில்லி ராமன்
    ஸ்ருங்கார சுந்தரன்
    சோழ நாடு,சீர்காழி

    23-திருவழுந்தூர்
    (தேரழுந்தூர்)
    ஸ்ரீ செங்கமல வல்லி
    தேவாதிராஜன்
    ஆமருவியப்பன்
    சோழ நாடு,மயிலாடுதுறை

    24-திரு சிறுபுலியூர்
    ஸ்ரீ திருமாமகள் நாச்சியார்
    அருள்மாக்கடல் (ஜலசயனப் பெருமாள்)
    க்ருபா சமுத்ரப் பெருமாள்
    சோழ நாடு,மயிலாடுதுறை

    25-திரு தலைச் சங்க நாண்மதியம்(தலைச்சங்காடு)
    ஸ்ரீ தலைச்சங்க நாச்சியார்
    நாண்மதியப் பெருமாள் (வெண்சுடர் பெருமாள்)
    வியோமஜோதிப்பிரான் (வெண்சுடர்பிரான், லோகநாதன்)
    சோழ நாடு,மயிலாடுதுறை

    26-திரு இந்தளூர்
    ஸ்ரீ பரிமள ரங்க நாயகி (சந்திர சாப விமோசன வல்லி, புண்டரிக வல்லி)
    பரிமள ரங்கநாதன் (மருவினிய மைந்தன், சுகந்தவன நாதன்)
    சோழ நாடு,மயிலாடுதுறை

    27-திருக் காவளம்பாடி,
    திரு நாங்கூர்
    ஸ்ரீ மடவரல் மங்கை
    ஸ்ரீ கோபால கிருஷ்ணன் (ராஜ கோபாலன்)
    சோழ நாடு,சீர்காழி

    28-திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம்,சிர்காழி
    ஸ்ரீ லோக நாயகி (மட்டவிழ்குழலி)
    திரு விக்ரமன் (தாடாளன்)
    த்ரிவிக்ரம நாராயணன்
    சோழ நாடு,சீர்காழி

    29-திரு அரிமேய விண்ணகரம்,
    திரு நாங்கூர்
    ஸ்ரீ அம்ருதகட வல்லி
    குடமாடுகூத்தன்
    சதுர்புஜங்களுடன் கோபாலன்
    சோழ நாடு,சீர்காழி

    30-திருவண் புருடோத்தமம்,
    திரு நாங்கூர்
    ஸ்ரீ புருஷோத்தம நாயகி
    ஸ்ரீ புருஷோத்தமன்
    சோழ நாடு,சீர்காழி

    31-திரு செம்பொன்செய் கோயில்,
    திரு நாங்கூர்
    ஸ்ரீ அல்லிமாமலர் நாச்சியார்
    ஸ்ரீ பேரருளாளன்
    ஹேமரங்கர் (செம்பொன்னரங்கர்)
    சோழ நாடு,சீர்காழி

    32-திருமணிமாடக் கோயில்,
    திரு நாங்கூர்
    ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
    ஸ்ரீ நாராயணன் (நந்தாவிளக்கு)
    நாராயணன், அளத்தற்கரியான்
    சோழ நாடு,சீர்காழி

    33-திரு வைகுந்த விண்ணகரம்,
    திரு நாங்கூர்
    ஸ்ரீ வைகுந்த வல்லி
    ஸ்ரீ வைகுந்த நாதன்
    சோழ நாடு,சீர்காழி

    34-திருவாலி மற்றும் திருநகரி
    திருவாலி: ஸ்ரீ அம்ருதகட வல்லி, திருநகரி: ஸ்ரீ அம்ருத வல்லி
    திருவாலி: ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹர் (வயலாளி மணவாளன்), திருநகரி: ஸ்ரீ வேதராஜன்
    திருவாலி: ஸ்ரீ திருவாலி நகராளன், திருநகரி: ஸ்ரீ கல்யாண ரங்கநாதன்
    சோழ நாடு,சீர்காழி

    35-திரு தேவனார் தொகை,
    திரு நாங்கூர்
    ஸ்ரீ கடல் மகள் நாச்சியார், மாதவநாயகி
    தெய்வநாயகன்
    மாதவப் பெருமாள்
    சோழ நாடு,சீர்காழி

    36-திருத்தெற்றி அம்பலம்,
    திரு நாங்கூர்
    ஸ்ரீ செங்கமல வல்லி
    செங்கண் மால் (ரங்கநாதன், ஸ்ரீ லக்ஷ்மிரங்கர்)
    சோழ நாடு,சீர்காழி

    37-திருமணிக்கூடம் ,
    திரு நாங்கூர்
    ஸ்ரீ திருமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி
    வரதராஜப் பெருமாள் (மணிகூட நாயகன்)
    சோழ நாடு,சீர்காழி

    38-அண்ணன் கோயில்(திருவெள்ளக்குளம்), திரு நாங்கூர்
    ஸ்ரீ அலர்மேல்மங்கை, ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார், பத்மாவதி
    ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள்
    சோழ நாடு,சீர்காழி

    39-திரு பார்த்தன் பள்ளி,
    திரு நாங்கூர்
    ஸ்ரீ தாமரை நாயகி
    ஸ்ரீ தாமரையாள் கேள்வன்
    ஸ்ரீ பார்த்தசாரதி
    சோழ நாடு,சீர்காழி

    40-திருச்சித்திரக் கூடம் ,
    சிதம்பரம்
    ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
    கோவிந்தராஜன்
    தேவாதி தேவன் (பார்த்தசாரதி)
    சோழ நாடு, சிதம்பரம்

    41-திரு அஹீந்த்ரபுரம்,
    ஆயிந்தை
    ஸ்ரீ ஹேமாமபுஜ வல்லி தாயார் (வைகுண்ட நாயகி)
    ஸ்ரீ தெய்வநாயகன்
    ஸ்ரீ மூவராகிய ஒருவன், தேவநாதன்
    நடு நாடு,கடலூர்

    42-திருக்கோவலூர்
    ஸ்ரீ பூங்கோவை நாச்சியார்
    த்ரிவிக்ரமன்
    ஆயனார், கோவலன் (கோபாலன்)
    நடு நாடு,கடலூர்

    43-திருக்கச்சி,
    அத்திகிரி (அத்தியூர், காஞ்சிபுரம், சத்யவ்ரத க்ஷேத்ரம்)
    ஸ்ரீ பெருந்தேவி (மகாதேவி) தாயார்
    ஸ்ரீ பேரருளாள வரதராஜன்
    தொண்டை நாடு,காஞ்சிபுரம்

    44-அஷ்டபுயகரம்,
    காஞ்சிபுரம்
    ஸ்ரீ அலர்மேல் மங்கை, பத்மாசனித் தாயார்
    ஆதி கேசவ பெருமாள் (சக்ரதரர், கஜேந்திர வரதன்)
    தொண்டை நாடு,காஞ்சிபுரம்

    45-திருத்தண்கா,
    தூப்புல், காஞ்சிபுரம்
    ஸ்ரீ மரகத வல்லி
    ஸ்ரீ தீபப் பிரகாசன் (விளக்கொளிப் பெருமாள், திவ்யப்ரகாசர்)
    தொண்டை நாடு,காஞ்சிபுரம்

    46-திரு வேளுக்கை,
    காஞ்சிபுரம்
    ஸ்ரீ வேளுக்கை வல்லி (அம்ருதவல்லி)
    அழகியசிங்கர் (ந்ருசிம்ஹர், ஸ்ரீ முகுந்த நாயகன்)
    தொண்டை நாடு,காஞ்சிபுரம்

    47-திரு நீரகம்,
    காஞ்சிபுரம்
    ஸ்ரீ நிலமங்கை வல்லி
    ஸ்ரீ ஜகதீச்வரர்
    தொண்டை நாடு,காஞ்சிபுரம்

    48-திருப் பாடகம்,
    காஞ்சிபுரம்
    ஸ்ரீ ருக்மிணி, சத்ய பாமா
    பாண்டவ தூதர்
    தொண்டை நாடு,காஞ்சிபுரம்

    49-திரு நிலா திங்கள் துண்டம்,காஞ்சிபுரம்
    நேர் ஒருவர் இல்லா வல்லி (நிலாத்திங்கள் துண்ட தாயார்)
    சந்திர சூட பெருமாள் (நிலாத்திங்கள் துண்டத்தான்)
    தொண்டை நாடு,காஞ்சிபுரம்

    50-திரு ஊரகம்,
    காஞ்சிபுரம்
    ஸ்ரீ அமுத வல்லி நாச்சியார் (அம்ருதவல்லி)
    ஸ்ரீ த்ரிவிக்ரமன் (உலகளந்த பெருமாள்)
    தொண்டை நாடு,காஞ்சிபுரம்

    51-திரு வெஃகா,
    காஞ்சிபுரம்
    ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
    ஸ்ரீ யதோக்தகாரி (வேகாசேது, சொன்னவண்ணம் செய்த பெருமாள்)
    தொண்டை நாடு.காஞ்சிபுரம்

    52-திருக் காரகம்,
    காஞ்சிபுரம்
    ஸ்ரீ பத்மாமணி நாச்சியார் (ரமாமணி நாச்சியார்)
    ஸ்ரீ கருணாகர பெருமாள்
    தொண்டை நாடு, காஞ்சிபுரம்

    53-திருக் கார்வானம்,
    காஞ்சிபுரம்
    ஸ்ரீ கமல வல்லி (தாமரையாள்)
    ஸ்ரீ கள்வன்
    தொண்டை நாடு,காஞ்சிபுரம்

    54-திருக் கள்வனூர்,
    காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஞ்சில வல்லி நாச்சியார்
    ஆதி வராஹப் பெருமாள்
    தொண்டை நாடு,காஞ்சிபுரம்

    55-திருப் பவளவண்ணம்,
    காஞ்சிபுரம்
    ஸ்ரீ பவள வல்லி
    ஸ்ரீ பவளவண்ணன்
    தொண்டை நாடு,காஞ்சிபுரம்

    56-திருப் பரமேஸ்வர விண்ணகரம்,காஞ்சிபுரம்
    ஸ்ரீ வைகுண்ட வல்லி
    ஸ்ரீ பரமபதநாதன் (வைகுந்தநாதன்)
    தொண்டை நாடு,காஞ்சிபுரம்

    57-திருப்புட்குழி
    ஸ்ரீ மரகத வல்லி தாயார்
    ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
    ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
    தொண்டை நாடு
    காஞ்சிபுரம்

    58-திரு நின்றவூர்
    (தின்னனூர்)
    ஸ்ரீ சுதா வல்லி (என்னைப் பெற்ற தாயார்)
    ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் (பத்தராவிப் பெருமாள்)
    தொண்டை நாடு
    சென்னை

    59-திரு எவ்வுள்
    (புண்யாவ்ருத, வீக்ஷாரண்ய க்ஷேத்ரம்), திருவள்ளூர்
    ஸ்ரீ கனக வல்லி (வசுமதி)
    வைத்ய வீர ராகவப் பெருமாள்
    தொண்டை நாடு
    சென்னை

    60-திரு அல்லிக் கேணி(திருவல்லிக்கேணி, ப்ரிந்தாரண்ய க்ஷேத்ரம்)
    ஸ்ரீ ருக்மிணித் தாயார்
    ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன்
    ஸ்ரீ பார்த்தசாரதி
    தொண்டை நாடு
    சென்னை

    61-திரு நீர்மலை
    ஸ்ரீ அணிமாமலர் மங்கை
    நீர்வண்ணன் (நீலமுகில்வண்ணன்)
    தொண்டை நாடு
    சென்னை

    62-திரு இட வெந்தை
    ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
    லக்ஷ்மி வராஹப் பெருமாள்
    நித்ய கல்யாணப் பெருமாள்
    தொண்டை நாடு
    சென்னை

    63-திருக் கடல் மல்லை,
    மஹாபலிபுரம்
    ஸ்ரீ நில மங்கை நாயகி
    ஸ்தல சயனப் பெருமாள்
    ஸ்தலசயனதுரைவார் (உலகுய்ய நின்றான்)
    தொண்டை நாடு
    சென்னை

    64-திருக்கடிகை,
    சோளிங்கர்
    ஸ்ரீ அம்ருத வல்லி
    யோக ந்ருஸிம்ஹன்
    அக்காரக்கனி
    தொண்டை நாடு
    சென்னை

    65-திரு அயோத்தி,
    அயோத்யா
    ஸ்ரீ சீதாப் பிராட்டி
    ஸ்ரீ ராமன் (சக்கரவர்த்தித் திருமகன், ரகுநாயகன்)
    வட நாடு
    உத்தர் பிரதேஷ்

    66-திரு நைமிசாரண்யம்
    ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி (ஸ்ரீ புண்டரீகவல்லி)
    ஸ்ரீ ஸ்ரீஹரி (தேவராஜன்)
    வட நாடு
    உத்தர் பிரதேஷ்

    67-திருப் ப்ரிதி (நந்தப் பிரயாக்,
    (ஜோஷி மடம்)
    ஸ்ரீ பரிமள வல்லி நாச்சியார்
    பரம புருஷன்
    வட நாடு
    உத்தராஞ்சல்

    68-திருக் கண்டமென்னும் கடிநகர்(தேவப்ரயாகை)
    ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
    ஸ்ரீ நீலமேக பெருமாள் (ஸ்ரீ புருஷோத்தமன்)
    வட நாடு
    உத்தராஞ்சல்

    69-திரு வதரி ஆசிரமம்
    (பத்ரிநாத்)
    ஸ்ரீ அரவிந்த வல்லி
    ஸ்ரீ பத்ரி நாராயணன்
    வட நாடு
    உத்தராஞ்சல்

    70-திரு சாளக்ராமம்
    (முக்திநாத்)
    ஸ்ரீ ஸ்ரீதேவி நாச்சியார்
    ஸ்ரீ ஸ்ரீ மூர்த்தி
    வட நாடு
    நேபால்

    71-திரு வட மதுரை
    (மதுரா)
    ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார்
    கோவர்தனேசன் (பால க்ருஷ்ணன்)
    வட நாடு
    உத்தர் பிரதேஷ்

    72-திருவாய்ப்பாடி,
    கோகுலம்
    ஸ்ரீ ருக்மிணி மற்றும் சத்ய பாமா
    ஸ்ரீ நவ மோகன கிருஷ்ணன்
    வட நாடு
    உத்தர் பிரதேஷ்

    73-திரு த்வாரகை
    (துவரை, துவராபதி)
    ஸ்ரீ கல்யாண நாச்சியார் (ஸ்ரீ லக்ஷ்மிஸ்ரீ, ருக்மிணி)
    கல்யாண நாராயணன் (த்வாரகாதீசன், த்வாரகாநாத்ஜி)
    வட நாடு
    குஜராத்

    74-திரு சிங்கவேழ்குன்றம்,அஹோபிலம்
    ஸ்ரீ செஞ்சு லக்ஷ்மி (ஸ்ரீ அம்ருத வல்லி)
    ப்ரஹலாதவரதன் (லக்ஷ்மிந்ருசிம்ஹன்)
    வட நாடு
    ஆந்திரம்

    75-திருவேங்கடம்
    (திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம்)
    அலர்மேல் மங்கை (பத்மாவதி)
    ஸ்ரீ திருவேங்கமுடையான் (வெங்கடாசலபதி, பாலாஜி)
    ஸ்ரீநிவாசன் (மலையப்ப சுவாமி, மலைகுனியன் நின்ற பெருமாள்)
    வட நாடு
    ஆந்திரம்

    76-திரு நாவாய்
    ஸ்ரீ மலர் மங்கை நாச்சியார் (சிறுதேவி)
    நாவாய் முகுந்தன் (நாராயணன்)
    மலை நாடு
    கேரளம்

    77-திரு வித்துவக்கோடு(திருவிசிக்கோடு, திருவஞ்சிக்கோடு)
    ஸ்ரீ வித்துவக்கோட்டு வல்லி (பத்மபாணி நாச்சியார்)
    உய்ய வந்த பெருமாள் (அபயப்ரதன்)
    மலை நாடு
    கேரளம்

    78-திருக்காட்கரை
    ஸ்ரீ பெருஞ்செல்வ நாயகி (ஸ்ரீ வாத்சல்ய வல்லி நாச்சியார்)
    காட்கரையப்பன்
    மலை நாடு
    கேரளம்

    79-திரு மூழிக்களம்
    ஸ்ரீ மதுரவேணி நாச்சியார்
    திரு மூழிக்களத்தான் (ஸ்ரீ சூக்தி நாத பெருமாள், அப்பன்)
    மலை நாடு
    கேரளம்

    80-திரு வல்ல வாழ்
    (திருவல்லா, ஸ்ரீ வல்லபா க்ஷேத்ரம்)
    ஸ்ரீ வாத்சல்ய தேவி (ஸ்ரீ செல்வ திருக்கொழுந்து) நாச்சியார்
    ஸ்ரீ கோலப்பிரான் (திருவல்லமார்பன் , ஸ்ரீவல்லபன்)
    மலை நாடு
    கேரளம்

    81-திருக்கடித்தானம்
    ஸ்ரீ கற்பக வல்லி
    ஸ்ரீ அம்ருத (அத்புத) நாராயணன்
    மலை நாடு
    கேரளம்

    82-திருச்செங்குன்றூர்
    (திருசிற்றாறு)
    ஸ்ரீ செங்கமல வல்லி
    இமயவரப்பன்
    மலை நாடு
    கேரளம்

    83-திருப்புலியூர்
    (குட்டநாடு)
    ஸ்ரீ பொற்கொடி நாச்சியார்
    மாயப்பிரான்
    மலை நாடு
    கேரளம்

    84-திருவாறன்விளை
    (ஆறன்முளா)
    ஸ்ரீ பத்மாஸநி நாச்சியார்
    திருக்குறளப்பன் (செஷாசனா )
    மலை நாடு
    கேரளம்

    85-திருவண் வண்டுர்
    ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
    பாம்பணை அப்பன்
    மலை நாடு
    கேரளம்

    86-திருவனந்தபுரம்
    ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி
    அனந்தபத்மநாபன்
    மலை நாடு
    கேரளம்

    87-திரு வட்டாறு
    ஸ்ரீ மரகத வல்லி நாச்சியார்
    ஆதி கேசவ பெருமாள்
    மலை நாடு
    கேரளம்

    88-திருவண்பரிசாரம்
    ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
    ஸ்ரீ திருக்குறளப்பன் (திருவாழ்மார்பன்)
    மலை நாடு,கேரளம்

    89-திருக்குறுங்குடி
    ஸ்ரீ குறுங்குடிவல்லி நாச்சியார்
    சுந்தர பரிபூரணன் (நின்ற நம்பி)
    பாண்டியநாடு,திருநெல்வேலி

    90-திரு சிரீவர மங்கை(வானமாமலை, தோதாத்ரி க்ஷேத்ரம்,திருசிரீவரமங்கள நகர், நாங்குநேரி)
    ஸ்ரீ சிரீவரமங்கை நாச்சியார்
    ஸ்ரீ தோதாத்ரிநாதன் (வானமாமலை)
    ஸ்ரீ தெய்வநாயகன்
    பாண்டியநாடு,திருநெல்வேலி

    91-ஸ்ரீவைகுண்டம்,
    நவதிருப்பதி
    ஸ்ரீ வைகுந்தவல்லி
    ஸ்ரீ வைகுந்தநாதன் (ஸ்ரீ கள்ளபிரான்)
    பாண்டியநாடு,திருநெல்வேலி

    92-திருவரகுணமங்கை,
    நவதிருப்பதி
    ஸ்ரீ வரகுண வல்லி தாயார் (ஸ்ரீ வரகுணமங்கை தாயார்)
    விஜயாசனப் பெருமாள்
    பாண்டியநாடு,திருநெல்வேலி

    93-திருப்புளிங்குடி,
    நவதிருப்பதி
    ஸ்ரீ மலர்மகள் நாச்சியார், ஸ்ரீ புளிங்குடி வல்லி
    ஸ்ரீ காய்சினவேந்தன்
    பாண்டியநாடு,திருநெல்வேலி

    94-திரு தொலைவில்லிமங்கலம்(ரெட்டைத் திருப்பதி), நவதிருப்பதி
    ஸ்ரீ கரும் தடங்கண்ணி நாச்சியார்
    ஸ்ரீ அரவிந்த லோசனன், ஸ்ரீநிவாசன் (தேவப்பிரான்)
    பாண்டியநாடு,திருநெல்வேலி

    95-திருக்குளந்தை (பெருங்குளம்), நவதிருப்பதி
    ஸ்ரீ அலமேலுமங்கை தாயார், ஸ்ரீ குளந்தை வல்லி
    ஸ்ரீ ஸ்ரீநிவாசன்
    ஸ்ரீ மாயக்கூத்தன்
    பாண்டியநாடு,திருநெல்வேலி

    96-திருக்கோளூர், நவதிருப்பதி
    ஸ்ரீ குமுத வல்லி, ஸ்ரீ கோளூர் வல்லி நாச்சியார்
    ஸ்ரீ வைத்த மாநிதி பெருமாள் (நிக்ஷேபவிதன்)
    பாண்டியநாடு,திருநெல்வேலி

    97-திருப்பேரை
    (தென் திருப்பேரை), நவதிருப்பதி
    ஸ்ரீ குழைக்காது வல்லி, ஸ்ரீ திருப்பேரை நாச்சியார்
    ஸ்ரீ மகர நெடும் குழைக்காதன் (ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்)
    பாண்டியநாடு,திருநெல்வேலி

    98-திருக்குருகூர்
    (ஆழ்வார் திருநகரி), நவதிருப்பதி
    ஸ்ரீ ஆதிநாத வல்லி, ஸ்ரீ குருகூர் வல்லி
    ஸ்ரீ ஆதிநாதன் (ஸ்ரீ ஆதிப்பிரான்)
    ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
    பாண்டியநாடு,திருநெல்வேலி

    99-ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீ ஆண்டாள் (ஸ்ரீ கோதா நாச்சியார்)
    ஸ்ரீ வடபத்ரசாயி (ரங்கமன்னார்)
    பாண்டியநாடு,விருதுநகர்

    100-திருதண்கால் (திருதண்காலூர்)
    ஸ்ரீ செங்கமல தாயார் (அன்ன நாயகி, அனந்த நாயகி, அம்ருத நாயகி, ஜாம்பவதி)
    ஸ்ரீ நின்ற நாராயணன்
    பாண்டியநாடு,விருதுநகர்

    101-திருக்கூடல்,
    மதுரை
    ஸ்ரீ மதுர வல்லி (வகுலவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி)
    கூடல் அழகர்
    பாண்டியநாடு,மதுரை

    102-திருமாலிரும் சோலை
    (அழகர் கோயில்)
    ஸ்ரீ சுந்தர வல்லி (ஸ்ரீதேவி)
    திரு மாலிரும் சோலை நம்பி (அழகர், கள்ளழகர், மாலாங்காரர்)
    பாண்டியநாடு,மதுரை

    103-திரு மோகூர்
    ஸ்ரீ மோகூர் வல்லி (மேகவல்லி, மோகன வல்லி)
    ஸ்ரீ காளமேக பெருமாள்
    ஸ்ரீ திருமோகூர் ஆப்தன்
    பாண்டியநாடு,மதுரை

    104-திருக்கோஷ்டியூர் (கோஷ்டி க்ஷேத்ரம்)
    திருமாமகள் நாச்சியார்
    ஸ்ரீ உரகமெல்லணையான்
    ஸ்ரீ சௌம்யநாராயணன்
    பாண்டியநாடு,புதுக்கோட்டை

    105-திருப்புல்லாணி, ராமநாதபுரம்
    ஸ்ரீ கல்யாண வல்லி, ஸ்ரீ பத்மாஸநி த் தாயார்
    ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன் (தெய்வச் சிலையார்)
    பாண்டியநாடு,ராமநாதபுரம்

    106-திருமெய்யம்
    ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்
    ஸ்ரீ சத்ய கிரிநாதன் (ஸ்ரீ சத்யமூர்த்தி)
    ஸ்ரீ மெய்யப்பன்
    பாண்டியநாடு,புதுக்கோட்டை

    107-திருப்பாற்கடல்
    ஸ்ரீ கடல் மகள் நாச்சியார் (ஸ்ரீ பூதேவி)
    ஸ்ரீ க்ஷீராப்தி நாதன்
    விண்ணுலகம்

    108-பரமபதம்
    ஸ்ரீ பெரிய பிராட்டியார்
    ஸ்ரீ பரமபத நாதன்
    விண்ணுலகம்

    —————-—————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் ஸ்லோகங்கள் /ஸ்ரீ வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் அருளிச் செய்த “பகவத் கீதை வெண்பா”/ ஸ்ரீ கீதா ஶ்லோகார்த்த ஸாரம் —–

    August 12, 2024

    ஸ்ரீ: எம்பெருமானாரருளிச் செய்த ஸ்ரீ: ஆளவந்தார் தனியன்

    யத் பதாம்போருஹ த்யாந வித்வஸ்தா ஶேஷ கல்மஷ:
    வஸ்துதா முபயாதோஹம் யாமுநேயம் நமாமிதம்-

    1. கண்ணாநீ பார்த்தர்க்குக் காத்தற் கினிதுரைத்த
    திண்ணார் திறபருளுஞ் சீர்கீதை – யெண்ணாரு
    நன்பொருளை யெங்கட்கு நாதா வருளுதலாற்
    புன்பொருளிற் போகா புலன்.

    2. மாதவன் மாமாது மாறனும்வண் பூதூர்வாழ்
    போதமுனி யுந்தந்தம் பொன்னடிக்ண் – மீதருள
    வுச்சிமேற் கொண்டே யுயர்கீதை மெய்ப்பொருளை
    நச்சிமேற் கொண்டுரைப்பன் னான்.

    3. நாத னருள்புரியு நற்கீ தைன்படியை
    வேதம் வகுத்த வியன்முனிவன் – பூதலத்துப்
    பாரதத்தே காட்டும் பதினெட்டோத் தும்பகர்வன்
    சீர்த்தழைத்த வெண்பாத் தெரிந்து.

    4. வேதப் பொருளை விசயர்க்குத் தேர்மீது
    போதப் புயன்ற புகழ்மாயன் – கீதைப்
    பொருள்விரித்த பூதூர்மன் பொன்னருளால் வந்த
    தெருள்விரிப்ப னந்தமிழாற் றேர்ந்து.

    5. தேயத்தோ ருய்யத் திருமா லருள்கீதை
    நேயத்தோ ரெண்ணெய் நிறைவித்துத் – தூய
    தெருணூல தேபெரிய தீபத்தை நெஞ்சி
    லிருணூற வேற்றுகேன் யான்.

    ——————

    1) ஸ்வதர்ம ஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர:
    நாராயண: பரம் ப்ரஹ்ம கீதாஶாஸ்த்ரே ஸமீரித:

    ஸ்வதர்மஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர: –
    தன் (வர்ணாச்ரம) தர்மரூபமாயிருக்கும் கர்மயோகத்தாலும், ஞானயோகத்தாலும்,
    இதரவிஷயங்களில் பற்றின்மையாலும் உண்டாகும் பக்தியொன்றுக்கே விஷயமாகுமவனாய்
    பரம்ப்ரஹ்ம – பரப்ரஹ்மமான, நாராயண: – நாராயணன்,
    கீதாஶாஸ்த்ரே – கீதையாகிற ஶாஸ்திரத்தில்,
    ஸமீரித: – அறிவிக்கப்பட்டுள்ளான

    6. சுத்தியாற் னெஞ்சிற்றந் தொல்கரும ஞானத்தா
    லத்தியா தொன்றை யறந்துறந்தோர் – பத்தியா
    னண்ணும் பரமனா நாரணனே நற்கீதைக்
    கெண்ணும் பொருளா மிசைந்து.

    தொல் கரும ஞானத்தால் – பழமையான உபாயங்களான கர்ம யோகத்தாலும், ஞான யோகத்தாலும்,
    சுத்தி ஆர் தம் நெஞ்சில் – பரிசுத்தி யடைந்த தம் நெஞ்சில், ஒன்றை அ(ர்)த்தியாது –
    (பகவத் கைங்கர்யம் தவிர) வேறொன்றை விரும்பாது,
    அறத்துறந்தோர் – மிகவும் வைராக்யமுடையவர்கள்,
    பத்தியால் – (முற்கூறிய கர்மஜ்ஞாநவைராக்யங்களாலே உண்டான) பக்தியோகத்தாலே,
    நண்ணும் – அடையும்,
    பரமன் – பரப்ரஹ்மமாகிற, நாரணனே – நாராயணனே,
    நற்கீதைக்கு – மிகச் சிறந்த பகவத் கீதைக்கு,
    இசைந்து – (அறிவாளிகள் அனைவரும்) அங்கீகரித்து,
    எண்ணும் பொருளாம் – நினைக்கும் பொருளாவான்.

    —————————

    பூர்வ ஷட்கம்:

    2) ஜ்ஞாந கர்மாத்மிகே நிஷ்டே யோக லக்ஷ்யே ஸுஸம்ஸ்க்ருதே
    ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே பூர்வஷட்கேந சோதிதே

    ஸுஸம்ஸ்க்ருதே – (சேஷத்வ ஜ்ஞாநம், இதர விஷயங்களில் பற்றின்மை முதலான புத்தி விஶேஷங்களாலே)
    நன்கு அலங்கரிக்கப்பட்ட,
    சம்ஸ்காரம் -பகவத் கைங்கர்ய அர்த்தம் ப்ரீதி அர்த்தம் என்ற எண்ணத்துடன் -த்ரிவித தியாகங்கள் உடன் செய்வதே வைராக்யம்
    அதுவே நன்கு ஸம்ஸ்கரிப்பட்ட யோகம்
    ஜ்ஞாநகர்மாத்மிகே நிஷ்டே – ஞான யோகமும், கர்ம யோகமும்,

    யோகம் -சன்னகனம் -சேகரிப்பது உபாயம் த்யானம் சங்கதி யுக்தி -ஐந்து பொருள்கள்
    இங்கு உபாயம்

    யோக லக்ஷ்யே – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தை அடையும் பொருட்டு்ம்,

    இங்கு யோகம் த்யானம்
    அஷ்டாங்க யோகம் -ஆசனம் பிராணாயாமம் போல்வன இங்கு
    படித்து கற்று நினைத்து ஆள் மனதில் பதிய வேண்டுமே

    ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே – (அதற்குப் பின்) ஆத்மாநுபவத்தை அடையும் பொருட்டும்,
    பூர்வ ஷட்கேந – (கீதையின்) முதல் ஆறு அத்தியாயங்களாலும்,
    சோதிதே – விதிக்கப்பட்டன.

    7. ஞானங் கரும நலஞ்சேர் நிலையதனை
    யான மனயோகத் தாராய்ந்திங் – கூனமறத்
    தன்னா ருயிருணருந் தன்மையினை நற்கீதை
    முன்னாறோத் தோதும் முயன்று.

    ஞானம் கரும நலம் சேர் நிலையதனை – ஞான யோகத்தையும், கர்ம யோகத்தையும்,
    ஆன மன யோகத்து – (அவற்றின் காரியம்) ஆன மானஸ ஸாக்ஷாத்காரத்தின் பொருட்டு,
    ஆராய்ந்து – எண்ணி அநுஷ்டித்து,
    இங்கு – இவ்வுலகிலேயே,
    ஊனம் அற – குறைவில்லாமல்,
    தன் ஆர் உயிர் உணரும் தன்மையினை – தன் ஆத்மாவை அநுபவிக்கும் தன்மையை,
    நற்கீதை – மிகச்சிறந்த கீதையின்,
    முன் ஆறு ஓத்து – முற்பட்ட ஆறு அத்தியாயங்கள்,
    முயன்று ஓதும் – உறுதியுடன் ஓதும்.

    ———

    மத்யம ஷட்கம்:
    3) மத்யமே பகவத் தத்த்வ யாதாத்ம்யாவாப்தி ஸித்தயே
    ஜ்ஞாந கர்மாபி நிர்வர்த்யோ பக்தி யோக:ப்ரகீர்த்தித:

    மத்யமே – நடு ஆறு அத்தியாயங்களில்,
    பகவத் தத்வ யாதாத்ம்ய அவாப்தி ஸித்தயே – பகவானாகிற பரதத்துவத்தின் உண்மையான அநுபவம் உண்டாவதன் பொருட்டு,
    ஜ்ஞாந கர்ம அபிநிர்வர்த்ய: – ஜ்ஞாநத்தோடு கூடிய கர்ம யோகத்தாலே உண்டாகும்,
    பக்தி யோக: – பக்தி யோகம்,
    ப்ரகீர்த்தித: – சொல்லப்படுகிறது.

    பகவத் தத்வம் உள்ள படி அறியவும் பக்தி வேண்டும்
    ஞான தர்சன பிராப்தி மூன்று நிலைகளுக்கும் பக்தி வேண்டுமே
    இதுவே பரபக்தி பரஞானம் பரமபக்தி ஆகும்
    அறிந்தால் தானே அடைய ஆசை வரும்
    ப்ரகீர்த்தித்த -நன்றாக -பக்தன் பெருமை -அங்கங்கள் இவற்றை விவரித்து அருளிச் செய்கிறான் அன்றோ

    8. உள்ளபடி யிறையை யுற்றெய்த முற்றறஞ்சேர்
    தெள்ளறிவில் வந்து திகழ் பத்தி – வெள்ள
    நடையாடும் யோகத்தை நாதனருள் கீதை
    யிடையாறோத் தோது மெடுத்து.

    உள்ளபடி இறையை உற்று எய்த – பகவானை யுள்ளபடி அறிந்து அநுபவிப்பதன் பொருட்டு,
    முற்று அறம் சேர் தெள் அறிவில் வந்து திகழ் – பரிபூர்ணமான கர்ம யோகத்தோடு கூடிய தெளிந்த ஞானத்தால் உண்டாகும்,
    பத்தி வெள்ளம் நடையாடும் யோகத்தை – பக்தி வெள்ளம் பெருகி வரும் பக்தி யோகத்தை,
    நாதன் அருள் கீதை – ஸர்வ ஸ்வாமியான பகவான் அருளும் கீதையின்,
    இடை ஆறு ஓத்து – இடையிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
    எடுத்து ஓதும் – அறியும்படி ஓதும்.

    ———–

    அந்திம ஷட்கம்:
    4) ப்ரதாந புருஷ வ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம்
    கர்ம தீர் பக்தி ரித்யாதி: பூர்வ ஶேஷோந்தி மோதித:

    ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் – ஸுக்ஷ்மமான மூல ப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம்,
    ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும்,
    வ்யக்த-பிரக்ருதியில் தோன்றிய பொருள்கள் –
    கர்ம: – கர்ம யோகமும்,
    தீ: – ஜ்ஞாந யோகமும்,
    பக்தி: – பக்தி யோகமும்,
    இத்யாதி: – இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்)
    பூர்வ ஶேஷ: – முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை,
    அந்திமோதித: – கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.
    விவேசநம்-பகுத்து அறிவு

    த்ரிகம் -பிரித்து
    முதல் த்ரிகத்தால் -13-14-15-அத்யாயங்களால் கீழே சொல்லிவற்றின்-தத்வம்- சேஷம்
    இரண்டாம் த்ரிகத்தால் -16-17-18- அத்யாயங்களாலால் -கீழே சொல்லிவற்றின்-ஹிதம்- சேஷம்

    9. கருமமறி வன்பிவற்றின் கண்ணார் தெளிவில்
    வருஞ்சித் தசிதிறையோன் மாட்சி – யருமையற
    வென்னாதன் றந்த வெழிற்கீதை வேதாந்தப்
    பின்னாறோத் தோதும் பெயர்ந்து.

    கருமம் அறிவு அன்பு இவற்றின் கண் ஆர் தெளிவில் வரும் – கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகிய
    இவற்றினால் வரும் தெளிவினாலே அறியப்படும்,
    சித்து அசித்து இறையோன் மாட்சி – சேதனம், (ஸூக்ஷ்ம,ஸ்தூல ரூபமான) அசேதனம், ஸர்வேச்வரன் ஆகியவற்றின் பெருமையை,
    அருமை அற – சிரமம் இல்லாமல்,
    என் நாதன் தந்த எழில் கீதை வேதாந்த – என் ஸ்வாமியான கண்ணன் அருளிய அழகிய கீதையாகிற உபநிஷத்தின்,
    பின் ஆறு ஓத்து – பின் ஆறு அத்தியாயங்களும்,
    பெயர்ந்து ஓதும் – (முன் சொல்லப்படாத அம்சங்களை) மறுபடியும் ஓதும்.

    10. தானமுடன் றீர்த்தந் தவம்பிரித லைவேள்வி
    யனமுத லாறு மறமிறைவற் – கேநயந்த
    தன்மையாற் றன்னகத்தைச் சங்கமபயன்றுறத்தல்
    கன்மயோ கத்தின் கணக்கு.

    தானமுடன் தீர்த்தம் தவம் புரிதல் ஐ வேள்வி ஆன்முதல் ஆறும் அறம் – தானமளித்தல், தீர்த்தமாடுதல், தவம் செய்தல்,
    பஞ்ச மஹா யஜ்ஞங்களை அநுஷ்டித்தல் முதலான ஸாதனங்கள் கர்மம் எனப்படுகின்றன.
    இறைவற்கே நயந்த தன்மையால் – (இக் கர்மங்களை) ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யமாகவே செய்யும் தன்மையால்,
    சங்கம பயன் துறத்தல் – (இவற்றில்) பற்றையும், பலனையும் விடுவது,
    கன்ம யோகத்தின் கணக்கு – கர்மயோகத்தின் ஸ்வரூபமாகும்.

    11. அற்ற முரைக்கி லதுகேண்மி னம்புயத்தாள்
    கொற்றவனை நெஞ்சிற் குடியிருத்தி – மற்றொன்றை
    யத்தியா தொன்று மவன்பா னலம்புனைதல்
    பத்தியோ கத்தின் படி.

    அற்றம் உரைக்கில் – உண்மையை உரக்கச் சொன்னால்,
    அது கேண்மின் – அதைச் சொல்லுகிறேன் கேளுங்கள்;
    அம்புயத்தாள் கொற்றவனை – லக்ஷ்மீ நாதனை,
    நெஞ்சில் குடி யிருத்தி – நெஞ்சில் அமைத்து,
    மற்றொன்றை அ(ர்)த்தியாது – வேறு பலன்களை விரும்பாமல்,
    ஒன்றும் அவன் பால் – நம்மிடம் பொருந்தும் அவனிடம்,
    நலம் புனைதல் – தியானம், அர்ச்சனம் முதலானவற்றைச் செய்வது,
    பத்தி யோகத்தின் படி – பக்தி யோகத்தின் ஸ்வரூபமாகும்.

    12. புலன் பொறியை நீக்கித்தம் புத்தியினிற் செம்மை
    யலம்புரிவார்க் குற்றவுயிர் மாட்சி – நலம்புனைந்து
    மானயோ கத்திறையை மன்னுநிலை காண்பதே
    ஞானயோ கத்தி னலம்.

    புலன் பொறியை நீக்கி – விஷயங்களில் மேயாதபடி இந்திரியங்களைத் தவிர்த்து,
    தம் புத்தியினில் – தம் நெஞ்சில்,
    செம்மை அலம் புரிவார்க்கு – நேர்மைக் குணத்தை மிகுதியாக உடையவர்களுக்கு,
    உற்ற – தோன்றும்,
    உயிர் மாட்சி நலம் புனைந்து – உயிரின் பெருமையிலே நன்றாக வூன்றி,
    மான யோகத்து – யோக முறைகளினாலே,
    இறையை – (தேஹத்துக்கு) ஈச்வரனான ஜீவனுடைய,
    மன்னு நிலை – நிலைக்கும் நிலையை,
    காண்பதே – அனுபவித்தலே,
    ஞான யோகத்தின் நலம் – ஞான யோகத்தின் ஸ்வரூபமாகும்.

    13. இந்த வகை யமைந்த யோகங்க ளிம்மூன்றுந்
    தந்த மிடையிற் றனித்தனிசே – ரந்தமிலா
    வானந்த வின்பத் தணையநெறி யாகுமே
    மானந் தருமியல்பால் வாய்ந்து.

    ஆய்ந்து மானம் தரும் இயல்வால் – ஆராய்ந்து பார்த்த பிரமாணங்கள் சொல்லுகிறபடி,
    இந்த வகை அமைந்த யோகங்கள் இம் மூன்றும் – இப்படிப்பட்ட தன்மைகளை யுடைய இந்த மூன்று யோகங்களும்,
    தந்தம் இடையே தனித் தனி சேர் – ஒவ்வொரு யோகமும் மற்ற இரு யோகங்களோடு தனித் தனியாகச் சேர்ந்திருப்பதன் மூலம்,
    அந்தம் இலா ஆனந்த இன்பத்து அணைய நெறி ஆகுமே – அந்தமில் பேரின்பத்தை அடைய உபாயங்களாகும்.

    —————————

    1: அர்ஜுன விஷாத யோகம்:

    5) அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியாகுலம்
    பார்த்தம்ப்ரபந்நமுத்திஶ்ய ஶாஸ்த்ராவதரணம்க்ருதம்

    அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியா – தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும்,
    உண்டான தர்மத்தில் அதர்ம புத்தியாலே,
    ஆகுலம் – கலங்கி நிற்பவனாய்,
    ப்ரபந்நம் – சரணமடைந்தவனான,
    பார்த்தம் உத்திஶ்ய – அர்ஜுனனைக் குறித்து,
    ஶாஸ்த்ராவதரணம்க்ருதம் – கீதாசாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.

    காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

    வேண்டிடத்தி லன்றி வெறுத்து நலமிரக்கம்
    பூண்டவற்றைப் பொல்லாப் புலமென்று – மீன்டகன்று
    சுற்றமது நோக்கியே சோகித்த தேர்விச
    னுற்றமயல் சொல்லுமுத லோத்து.

    வேண்டிடத்தில் அன்றி – தகாத இடத்தில்,
    நலம் இரக்கம் பூண்டு – அன்பையையும் கருணையையும் கொண்டு,
    வெறுத்து – (யுத்தம் முதலான ஸ்வதர்மங்களை) வெறுத்து,
    அவற்றை – அந்த ஸ்வதர்மங்களை,
    பொல்லா புலம் என்று – தர்மம் அல்லாதவை என்று கூறி,
    மீண்டு அகன்று – (யுத்தத்திலிருந்து) மீண்டு விலகிப்போய்,
    சுற்றம் அது நோக்கியே – (பற்று வைக்கத் தகாத) அந்த உறவினர்களைப் பார்த்து,
    சோகித்த – வருத்தமுற்ற,
    தேர் விசயன் – தேரிலுள்ள அர்ஜுனன்,
    உற்ற – அடைந்த,
    மயல் – மயக்கத்தை,
    முதல் ஓத்து சொல்லும் – முதல் அத்தியாயம் உரைக்கும்.

    ——–

    2: ஸாங்க்ய யோகம்:

    6) நித்யாத்மாஸங்ககர்மேஹாகோசரா ஸாங்க்யயோகதீ:
    த்விதீயேஸ்திததீலக்ஷாப்ரோக்தா தந்மோஹஶாந்தயே

    நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா – நித்யமான ஆத்ம தத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன
    இவற்றை விஷயமாகக் கொண்டதாய்,
    ஸ்திததீ லக்ஷா – ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,
    ஸாங்க்ய யோகதீ – ஆத்மஜ்ஞானமும், கர்மயோகத்தைப் பற்றிய அறிவும்,
    தந் மோஹ ஶாந்தயே – அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக,
    த்விதீயே – இரண்டாம் அத்தியாயத்தில்,
    ப்ரோக்தா – உபதேசிக்கப்படுகிறது.

    காலியுடன் போம் ஆயன் – பசுக்களின் பின் போகும் இடையனும்,
    மா மாயன் – பேராச்சிரியமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை யுடையவனுமான கண்ணன்,
    விசயன் வெறுப்பு அகற்றக் கோலி – அர்ஜுனனுக்கு (யுத்தத்தினாலுண்டான) வெறுப்பை நீக்க நினைத்து,
    மன் உயிரின் பொன்றாமை முன்னகமா – நிலை நிற்கும் ஆத்மாவின் ஆத்மாவின் அழியாமையை முன்னிட்டுக் கொண்டு,
    உயிர் உடலின் கூற்றிவைகள் – உயிரினுடையவும், உடலினுடையவும் (அழியாமை, அழியும் தன்மை முதலான) இத்தன்மைகளை,
    மேல் இரண்டாம் ஓத்தால் – அடுத்ததான இரண்டாமத்தியாயத் தால், மகிழ்ந்து சொன்னான் – மகிழ்ச்சியுடன் உபதேசித்தான்.

    சாங்க்ய யோகம் -உண்மையான அறிவு -ஆத்மாவை பற்றி
    பற்றுதல் இல்லாத கர்ம யோகம் பண்ண -மோகம் மயக்கம் தீர்க்க -ஞான யோகி
    கலக்க மாட்டாத-ஸ்திரமான புத்தி யுடன் -செய்வதை உபதேசிக்கிறார் –
    ஞான யோகம் அடைய கர்ம யோகம் -ஆத்மாவின் நித்யத்வம் சொல்லி –

    12 -30 ஆத்மா நித்யம் சொல்லி
    31 –கர்ம யோகம் –53 வரை
    53–72 வரை ஞான யோகம் -சொல்கிறான் –
    புருஷார்த்தம் பெருமை முதலில் சொல்லி அப்புறம் உபாயம் —

    முதலத்தியாயமும், இரண்டாமத்தியாயத்தில் பத்து ஶ்லோகங்கள் முடியவும்
    சாஸ்திரம் அவதரித்த சந்தர்ப்பத்தைக் கூறும் அவதாரிகை யாகிறது.

    11-13: ப்ராப்யமான ஆத்மா நித்யமானது; ப்ராப்தி விரோதியான சரீரம் அநித்யமானது.
    14-15: ப்ராப்திக்கு உபாயமான யுத்தம் முதலான கர்மங்களை அநுஷ்டிப்பதால் ஏற்படும் இன்ப துன்பம் முதலானவற்றைப்
    பொறுத்துக் கொள்ளுகிறவனே மோக்ஷமடையலாம்.
    16-25: உத்பத்தி, விநாஶம், பரிணாமம் முதலான தன்மைகள் எல்லாம் தேஹத்தினுடையவையே; ஆத்மாவுக்கு இவை கிடையாது.
    26-28: தேஹத்தைக் காட்டிலும் வேறான ஆத்மா இல்லை என்று நினைத்தாலும், நேர்ந்தே தீர வேண்டிய ஜந்ம மரணங்களைக் குறித்து வருந்த இடமில்லை.
    29: ஆத்ம நித்யத்வ ப்ரஸம்ஸை.
    30: ஆத்ம நித்யத்வம் எல்லா ஆத்மாக்களுக்கும் பொதுவானது.
    31-34: யுத்தம் இம்மை மறுமைகளில் நன்மையை விளைக்கும் தர்மமே யொழிய அதர்மமாகாது.
    35-37: உறவினர் முதலான தகாதவிட அன்பாலே போர் புரியாமலிருப்பது தவறு.
    (இதுவரையில் அஸ்தான ஸ்நேஹ காருண்யமும், தர்மத்தை அதர்மமென மயங்குவதும் போக்கடிக்கப்பட்டது.
    இனி, தர்மவிஷயமான உபதேசம்.)

    38: மோக்ஷமடைய விரும்பும் க்ஷத்ரியன் இன்ப துன்பங்கள் முதலானவற்றில் ஸம புத்தியுடன் போரிட வேண்டும்.
    39-52: பலனில் பற்றற்று, அகர்த்ருத்வாநுஸந்தானத்துடன் (கர்த்ருத்வ, மமதா, பல த்யாகங்கள்) தனக்குரிய கர்மங்களை
    அநுஷ்டிப்பதாகிற கர்ம யோகம் மோக் ஷஸாதனமாகும்; பலனில் பற்றுடன் அனுஷ்டிக்கும் கர்மம் தாழ்ந்தது.
    53: முற்கூறிய கர்ம யோகத்தின் பலம் ஞான யோகம். ஞான யோகத்தின் பலம் யோகம் எனப்படும் ஆத்ம ஸாக்ஷாத்காரம்.
    54-58: ஸ்தித ப்ரஜ்ஞநிலை எனப்படும் ஜ்ஞான யோகத்தின் நான்கு நிலைகளின் விவரணம்.
    59-68: ஞானயோகம் அடைய அரியது. திவ்ய மங்கள விக்ரஹத்தோடு கூடிய பரம புருஷனிடம் நெஞ்சு செலுத்துகிறவனுக்கே
    அது ஸித்திக்கும். அப்படிச் செலுத்தாதவனுக்கு ஸித்திக்காது.
    69-71: ஞான யோகத்தின் பலமான ஆத்ம தர்சனத்தின் பெருமையும், அதை அடையும் மூன்று விதமான அதிகாரிகளும்.
    72: அத்தியாயத்தின் ஸாரார்த்தம்.

    ———

    3: கர்ம யோகம்:

    7) அஸக்த்யா லோக ரக்ஷாயை குணேஷ் வாரோப்ய கர்த்ருதாம்
    ஸர்வேஶ்வரே வாந்யஸ் யோக்தா த்ருதீயே கர்ம கார்யதா

    லோகரக்ஷாயை – (ஜ்ஞாநயோகத்தில் அதிகாரமில்லாத) ஜனங்களைக் காப்பதற்காக,
    குணேஷு – ஸத்வ ரஜஸ் தமோ குணங்களில்,
    கர்த்ருதாம் ஆரோப்ய – தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை அநுஸந்தித்து,
    ஸர்வேஶ்வரே வாந்யஸ்ய – அந்த குணங்கள் முதலான அனைத்துக்கும் ஈஶ்வரனான பகவானிடத்தில்
    அக் கர்த்ருத்வத்தைச் சேர்த்து விட்டு,
    அஸக்த்யா – மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல்,
    கர்ம கார்யதா – கர்மங்களைச் செய்யவேண்டுமென்பது,
    த்ருதீயே உக்தா – மூன்றாமத்தியாயத்தில் கூறப்பட்டது.

    மூன்றாமோத் தாகுமிது முன்னுரைத்த புந்தியினும்
    ஏன்றா வதுகரும மென்பதனா – லான்றமைந்து
    தன்கருமஞ் செய்யுமதே தக்கதென மிக்குரைக்கும்
    வன்கருமந் தீரும் வகை.

    முன் உரைத்த புந்தியினும் –
    முன் அத்தியாயத்தில் கூறப்பட்ட ஞானயோகத்தைக் காட்டிலும்,
    ஏன்று ஆவது கருமம் – (அனைவரும்) ஏற்றுக் கொள்ளத் தக்கதாயிருப்பது கரும யோகமே,
    என்பதனால் – என்னும் காரணத்தினால்,
    ஆன்று அமைந்து – மற்ற பலன்களில் பற்றில்லாமல் இருந்து கொண்டு, கர்த்ருத்வ த்யாகத்தையும் செய்து கொண்டு,
    தன் கருமம் செய்யுமதே – தன்னுடைய வர்ணாச்ரம தர்மங்களைச் செய்வதே,
    வன் கருமம் தீரும் வகை – வலியதான புண்ய பாப ரூபமான கர்மங்களைப் போக்கும் வழிகளுள்,
    தக்கது – (அனைவருக்கும்) தக்கது,
    என – என்று,
    மூன்றாம் ஓத்தாகும் இது – இந்த மூன்றாம் அத்தியாயம்,
    மிக்கு உரைக்கும் – உறுதியுடன் கூறும்.

    1-2 ப்ரவ்ருத்தி மார்க்கமான கர்ம யோகம் ஆத்ம தர்ஶனத்துக்கு நேரே காரணமன்று;
    நிவ்ருத்தி மார்க்கமான ஜ்ஞாந யோகமே அதற்கு நேரே காரணம்.
    இப்படி ஞான யோகமே சிறந்ததாயிருக்க கர்ம யோகத்தில் ஏன் என்னை ஏவுகிறாய் என்று அர்ஜுனன் கேட்கிறான்.
    3-8 எளிதாகச் செய்யத் தக்கதாயிருக்கை, நழுவ இடமில்லாததாயிருக்கை, விட முடியாததாயிருக்கை
    முதலான காரணங்களால் கர்ம யோகம் ஜ்ஞாந யோகத்தைக் காட்டிலும் சிறந்தது.
    9-16 பகவதாரதனமான யஜ்ஞத்திற்கு உறுப்பாகாத கர்மங்களே இவனை ஸம்ஸாரத்தில் கட்டுப்படுத்தும்;
    அதற்கு உறுப்பான கர்மங்கள் புருஷார்த்த ஸாதனமாகுமே யொழிய இவனைக் கட்டுப்படுத்தாது.
    17-19 ஆத்ம தர்ஶனம் கைவரப் பெற்ற முக்தனான கைவல்ய நிஷ்டனே வர்ணாஶ்ரம தர்மங்களைச் செய்யாமலிருக்கலாமாகையால்,
    அப்படி முக்தனல்லாத நீ கர்மயோகத்தை அனுஷ்டித்தே ஆத்ம தர்ஶனத்தைப் பெற வேணும்.
    20 ஜனகர் முதலானோர் கர்ம யோகத்தாலேயே ஆத்ம தர்ஶனத்தைப் பெற்றனர்.
    20-26 சான்றோனாகப் புகழ் பெற்றவன், தான் ஜ்ஞான யோகாதிகாரி யாயினும் அதில் அதில் அதிகாரமில்லாதவர்களை
    ரக்ஷிப்பதற்காகவும், அவர்களைக் கலக்குவதன் மூலம் தனக்குண்டாகும் அநர்த்தத்தைத் தவிர்ப்பதற்காகவும் கர்ம யோகத்தையே அநுஷ்டிக்க வேண்டும்.
    27-30 ‘ஸர்வேஶ்வரனால் தூண்டப்பட்டு, ஸத்வாதி குணங்களுக்கு வசப்பட்டவனாகவே நான் கர்மம் செய்கிறேன்’ என்னும்
    அகர்த்ருத்வாநுஸந்தானத்தோடு கூடவே கர்மங்களைச் செய்ய வேண்டும். இப்படி கர்ம யோகத்தில் ஞானம் கலந்திருக்கையால்,
    ஞான யோகத்தை யிடையிடாமல் அதுவே நேரே ஆத்ம தர்ஶனத்துக்கு உபாயமாகும். ஆகையால் அது ஞான யோகத்தை விடத் தாழ்ந்ததல்ல.
    31-32 கர்ம யோகத்தை அநுஷ்டிப்பாரின் சிறப்பு; அதை அநுஷ்டியாதாரின் தாழ்வு.
    33-43 எத்தகைய சிறந்த ஞாந யோகாதிகாரியையும், அநாதி வாஸநையும் அது காரணமாக வரும்
    காம க்ரோதங்களும் ஜ்ஞாந யோகத்தினின்றும் நழுவச் செய்துவிடும்.
    அநாதி வாஸனை முதலானவற்றுக்கு அடியான பாபங்களைப் போக்கும் கர்மயோகத்தில் ஈடுபடுவதன் மூலமே இவற்றை வெல்ல முடியும்.
    ஆகையால் நழுவுதற்கிடமுள்ளதாய், செயற்கரியதான ஜ்ஞான யோகத்தைக் காட்டிலும், நழுவுதற்கிடமற்றதாய்,
    செயற்கெளியதான கர்ம யோகமே ஜ்ஞாந யோகாதிகாரியோடு, கர்ம யோகாதிகாரியோடு வாசியற அனைவராலும் கைக் கொள்ளத் தக்கது.

    —————

    4: ஜ்ஞான யோகம்:

    8) ப்ரஸங்காத் ஸ்வ ஸ்வபாவோக்தி: கர்மணோ கர்மதாஸ்ய ச
    பேதா:ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் சதுர்த்தாத்யாய உச்யதே

    சதுர்த்தாத்யாயே – நான்காமத்தியாயத்தில்,
    கர்மண: அகர்மதா உச்யதே – (ஞானமடங்கிய) கர்மயோகம் ஞானயோகமாகவேயிருத்தல் சொல்லப்படுகிறது;
    அஸ்ய பேதா: ச (உச்யதே) – கர்மயோகத்தின் (ஸ்வரூபமும்) பிரிவுகளும் சொல்லப்படுகின்றன;
    ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் (உச்யதே) – (கர்மயோகத்தில் அடங்கிய) ஞானபாகத்தின் பெருமையும் கூறப்படுகிறது;
    ப்ரஸங்காத் – (தான் சொல்லுமர்த்தம் ப்ராமாணிகமானது என்று நிரூபிக்கவேண்டிய) ப்ரஸங்கம் ஏற்பட்டபடியாலே,
    ஸ்வஸ்வபாவோக்தி: – (அவதார தசையிலும் மாறாத) தன் தன்மையைப் பற்றிய பேச்சும் (முதலில்) உள்ளது.

    நாரா யணன்கீதை நாலாமோத் திற்றனது
    சீரார் பிறவிச் சிறப்புடனே – யேராரும்
    யோகத் துடன்கரும முற்றியலு மாறுரைக்கு
    மேகப் பலபரிசா வேய்ந்து.

    நாராயணன் – (கண்‍ணனாய் அவதரித்த) நாராயணன்,
    கீதை நாலாமோத்தில் – கீதையின் நாலாம் அத்தியாயத்தில்,
    தனது சீரார் பிறவிச் சிறப்புடனே – பெருமை மிகுந்த தன் அவதாரச் சிறப்போடு கூட,
    ஏராரும் யோகத்துடன் – சிறப்புற்ற ஞானத்தோடு,
    ஏகம் கருமம் – ஒன்றான கருமம்,
    பலபரிசா ஏய்ந்து – பல வகைகளாக இருந்துகொண்டு,
    முற்று இயலும் ஆறு – (ஜ்ஞான யோகத்தை இடையிடாமலே) பரிபூர்ண ஸாதனமாயிருக்கும் வகையை,
    உரைக்கும் – உபதேசிக்கிறான்.

    1-3: கர்மயோகம் ஶுத்தபரம்பராப்ராப்தம்.
    4: அர்ஜுனனின் கேள்வி.
    5-11: அவதார ரஹஸ்யம்.
    12-24: கர்மயோகம்ஜ்ஞாநாகாரமாயிருப்பதை நிரூபிப்பது.
    25-30: கர்மயோக வகைகள்.
    30-32: கர்மயோகிகளுக்கு நித்யநைமித்திக கர்மங்கள் அநுஷ்டிக்க வேண்டியவையே. அவர்களிடையே பலபேதம் கிடையாது.
    33-40: கர்மயோகத்தில் அடங்கியஜ்ஞாநாம்ஶத்தின்ப்ராதாந்யம்.
    41-42: முடிவுரை.

    5 – கர்ம ஸந்யாஸ யோகம்:

    9) கர்மயோகஸ்ய ஸெளகர்யம் ஶைக்ர்யம் காஶ்சந தத்விதா:
    ப்ரஹ்மஜ்ஞாநப்ரகாரஶ்ச பஞ்சமாத்யாய உச்யதே

    கர்மயோகஸ்ய – கர்மயோகத்தினுடைய,
    ஸெளகர்யம் – செயற்கெளிய தன்மையும்,
    ஶைக்ர்யம் – விரைவில் பலனளிக்கும் தன்மையும்,
    காஶ்சந தத்விதா: – அதற்குறுப்பான சில அங்கங்களும்,
    ப்ரஹ்மஜ்ஞாநப்ரகார: ச – ஶுத்தாத்மாக்களைக் ஸமமாகக் காண்கைக்குறுப்பான நிலையும்,
    பஞ்சமாத்யாயே – ஐந்தாமத்தியாயத்தில், உச்யதே – கூறப்படுகிறது.

    அண்ண லருள்கீதை யஞ்சாமோத் துக்கருமந்
    திண்ண முனர்வதனைச் சேர்ந்தமைந்த – வண்ணமது
    சிந்தை தெளியத் தெளிவுற் றுரைக்குமதே
    முந்தை மறைநெறியை மூண்டு.

    அண்ணல் -ஸ்வாமியாகிற கண்ணன்,
    அருள் – அருளிச் செய்த,
    கீதை – கீதாஶாஸ்திரத்தின்,
    அஞ்சாம் ஓத்து – ஐந்தாம் அத்தியாயம்,
    முந்தை மறை நெறியை மூண்டு – பழையதான வேதமார்க்கத்தைப் பின்பற்றி,
    கருமம் – கர்ம யோகம்,
    உணர்வு அதனை திண்ணம் சேர்ந்து அமைந்த வண்ணம் அது – “நான் கர்த்தாவல்லன்” என்னும் அறிவோடு
    உறுதியாகச் சேர்ந்து பொருந்தியிருக்கும் தன்மையை,
    சிந்தை தெளிய – (அர்ஜுனனுடைய) மனம் தெளிவடையும்படியாக, தெளிவுற்று உரைக்குமதே – மிக விளக்கமாகச் சொல்லுவதாகும்.

    1 கர்மஜ்ஞானயோகங்களில் எது சிறந்தது? என்று அர்ஜுனன் கேள்வி.
    2-7 செயற்கெளிமையாலும், விரைவில் பலனளிக்கும் தன்மையாலும் கர்மயோகமே ஜ்ஞான யோகத்தைக் காட்டிலும் சிறந்தது என்று கண்ணனின் பதில்.
    8-11 அகர்த்ருத்வாநுஸந்தானத்தில் ஒரு வகை – இந்த்ரிய ப்ராணன்களில் கர்த்ருத்வத்தை அந்ஸந்திக்கை.
    12 பல த்யாகம் மோக்ஷஹேது.
    13 சரீரத்தில் கர்த்ருத்வத்தை அநுஸந்திக்கை. (அகர்த்வாநுஸந்தாதனத்தில் மற்றொரு வகை.)
    14-15 ஆத்மாவுக்குக் கர்த்ருத்வமின்மை. ப்ரக்ருதி வாஸனையின் கர்த்ருத்வம். (அகர்த்வாநுஸந்தாதனத்தில் மற்றொரு வகை.)
    16 அகர்த்ருதாநுஸந்தானத்தை உள்ளடக்கிய ஆத்மவிஷயஜ்ஞாநத்தின் பெருமை.
    17 ஆத்மாநுபவமாகிற மாடத்திற்கு ஏறும் படிக்கட்டாயிருக்கும் அறிவின் படிகளின் வரிசை.
    1. ஆத்மதர்ஶனம் வேண்டும் என்ற உறுதியுடையவர்கள்
    2. ஆத்மதர்ஶனத்தை குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்கள்.
    3. அதற்காக முயல்பவர்கள்
    4. ஆத்மதர்ஶனமே வாழ்க்கையின் பயனாக நினைப்பவர்கள்.
    இவர்கள் கர்மவாஸனை நீங்கப் பெற்று மேற்கூறியபடி ஆத்மதர்ஶனத்தைப் பெறுவர்.
    18-19 ஆத்மாக்கள் அனைவரும்ஜ்ஞானைகாகாரத்தால் ஸமர் என்னும் அறிவு – ஆத்மஸாக்ஷாத்காரத்தை மறுமையில் விளைப்பது;
    இம்மையிலும் மேலான துக்கநிவ்ருத்தியை அளிப்பது.
    20-25 ஸம தர்ஶந நிலை ஏற்பட உதவும் ஆறு அநுஷ்டாந முறைகள்.
    1. ஆசார்ய உபதேசத்தாலே, ஆத்மாவைப் பற்றியஜ்ஞானத்தைப் பெறுதல்.
    2. சரீரத்தை வேறுபடுத்தி ஆத்மாவை எண்ணி மகிழ்தல்.
    3. இன்பத்தில் மகிழாமலும் துன்பத்தில் வருத்தமுறாமலும்,

    இவை ப்ரக்ருதியின் செயல்களென எண்ணி யிருத்தல்.
    4. மனம்ப்ரக்ருதி விஷயங்களினின்றும் நீங்கப்பெற்று ஆத்மாவை அநுபவித்து மகிழ்தல்.
    5. ப்ரக்ருதியினால் ஏற்படும் இன்பங்கள் நிலையற்றவையாதலால் துன்பத்திலேயே முடிவுறும்.
    6. காமக்ரோதங்களை வென்றால் ஆத்மாநுபவம் இம்மையிலேயே சிறிது ஏற்படும். சரீரத்தை விட்டவுடன் முழுமை பெறும்.
    26 ஆத்ம ஸமதர்ஶனம் கைவந்தோர் அனைத்துயிர்களிடமும் அன்பு பாராட்டி, அவற்றின் உஜ்ஜீவனத்துக்கு பாடுபடுவர்.
    இத்தகைய ஸமதர்ஶனத்தால் ஆத்மாநுபவம் விரைவில் ஏற்படும்.
    27-28 நித்ய நைமித்திக கர்மாநுஷ்டாநம் யோகத்தில் (த்யானத்தில்) நிறைவுறும்.
    29 ஸர்வலோக ஸர்வேஶ்வரன் என்று கண்ணனை அறிந்து அவனுக்கு ஆராதனமாக கர்மயோகத்தை செய்வது எளிது.

    ——————–

    6 – அத்யாத்ம யோகம்:

    10) யோகாப்யாஸ விதிர் யோகீ சதுர்த்தா யோக ஸாதநம்
    யோக ஸித்தி:ஸ்வ யோகஸ்ய பாரம்யம் ஷஷ்ட்ட உச்யதே

    யோகாப்யாஸவிதி: – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தைப் பழகும் முறையும்,
    சதுர்த்தா யோகீ – நாலுவகைப்பட்ட யோகிகளும்,
    யோக ஸாதநம் – (முற்கூறிய) யோகத்திற்கு ஸாதநமாகிய அப்யாஸம், வைராக்யம் முதலானவையும்,
    யோக ஸித்தி: – (தொடங்கிய) யோகம் (இடையில் தடைபட்டாலும் காலக்ரமத்தில்) ஸித்தியடையும் என்பதும்,
    ஸ்வ யோகஸ்ய பாரம்யம் – தன் விஷயமான பக்தியோகத்தின் உயர்வும்,
    ஷஷ்ட்டே – ஆறாமத்தியாயத்தில்,
    உச்யதே – கூறப்படுகிறது.

    அத்த னருள்கீதை யாறாமோத் தாற்கருமத்
    தொத்த தெளிவைத் தெரிந்துரைக்கு
    — — — —
    — — — — (லுப்தம்)

    யோக விதியோகி யோகத்து நாலுவகை
    யோகமது மேலா வுயர்நிலைமை – மேகநிக
    ரண்ண லருள்கீதை யாறாமோத் தின்பொருளாத்
    திண்ண முடிந்ததிது சேர்ந்து.

    யோக விதி – யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தைப் பழகும் முறையும்,
    யோகி யோகத்து நாலு வகை – அதைப் பழகும் யோகியரிலும், அந்த யோகத்திலும் உள்ள நாலு பிரிவும்,
    யோகம் அது – ஸு ப்ரஸித்தமான பக்தி யோகம்,
    மேலா உயர் நிலைமை – எல்லா யோகங்களைக் காட்டிலும் மேலாக உயர்ந்து நிற்கும் நிலையும்,
    இது சேர்ந்து – ஆகிய இவ்வர்த்தங்கள் சேர்ந்து,
    மேகம் நிகர் அண்ணல் அருள் கீதை ஆறாம் ஓத்தின் பொருளா திண்ணம் முடிந்தது – மேகத்தை ஒத்த ஸ்வாமியான
    கண்ணன் அருளிய கீதையின் ஆறாம் அத்தியாயத்தின் பொருளாக அறுதியிடப்பட்டு நிறைவடைந்தது.

    1-6 ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்திற்கு, ஜ்ஞானத்தை உள்ளடக்கிய கர்மயோகமே காரணம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அக்கர்மயோகத்தை விவரித்தல்.
    7-9 யோகாப்யாஸ விதியின் (யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தை பழகும் முறையின்) தொடக்க நிலை.
    10-28 யோகாப்யாஸவிதி விவரணம்.
    10-12 பாஹ்ய உபகரண நியமம்.
    13-14 அந்தரங்க உபகரணங்களான ஶரீர மநஸ்ஸுக்களின் நியமம்.
    15 ஶுபாஶ்ரயமான பகவத் விக்ரஹத்தைச் சிந்திப்பது யோகோபகரணங்களில் முக்யமானது.
    16-17 மற்றும் சில நியமங்கள் – உண்பது, உழைப்பு, தூக்கம் ஆகியவற்றில் அளவுடன் இருத்தல்.
    18 யோகயோக்ய தஶையின் விளக்கம் – ஆத்மாஜ்ஞானத்தின் நன்மையை அறிந்ததால் ஏற்படும் மனவமைதி யோக்யதை.
    20-23 யோகாப்யாஸம் மிகச் சிறந்த புருஷார்த்தம்.
    24-27 யோகாப்யாஸத்திற்கு உறுப்பான மமகார பரித்யாகம் முதலானவை.
    28 ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தின் பலம்.

    29-32 நாலுவகைப்பட்ட யோகிகள்.
    1. எல்லா வுயிரிலும் ஆத்மாவைக் காணுதல்
    2. எல்லாவற்றிலும் பகவானைக் காணுதல்
    3. அந்தர்யாமியைக் காணுதல்
    4. ஸுக துக்கங்களிலிருந்து விடுபடுதல்.

    33-34 யோக ஸாதனமான அப்யாஸம் (ஆத்மசிந்தனம்), வைராக்யம் முதலானவற்றைத் தெளிவாக அறிவதற்காக அர்ஜுனனின் கேள்வி.
    35-36 யோக ஸாதனம் – பகவதாராதனமான அகர்த்ருத்வாநுஸந்தாநத்துடன் கூடிய கர்மாநுஷ்டானத்தாலே மனஶ் ஶுத்தி ஏற்படும். அதன் பிறகு யோகம் ஸித்திக்கும்.
    37-39 யோக மாஹாத்ம்யத்தை அறிவதற்காக ‘யோகப்ரஷ்டனுக்கு போகமோக்ஷங்கள் இரண்டுமே கிடைக்காதோ’ என்று அர்ஜுனனின் கேள்வி.
    40-45 யோகப்ரஷ்டனுக்கு இரண்டுமே காலக்ரமத்தில் கிடைக்கும் என்று கண்ணனின் பதில். (யோகமாஹாத்ம்யம்)
    46 தபஸ்விகள் முதலானோரைக்காட்டிலும் ஜீவாத்மயோகியின் சிறப்பு.
    47 தபஸ்விகள் முதலானோர், ஜீவாத்மயோகி ஆகிய அனைவரைக் காட்டிலும் பரமாத்மோபாஸகனின் சிறப்பு (பக்தியோகமாஹாத்ம்யம்).

    முதல் ஷட்கத்தின் ஸாரம்:
    சோக முயிருணர்வு தொல்கருமச் செய்தியதி
    லாகு மறிவுயர்த்தி யார்வகைகள் – யோகமுயிர்
    காட்சி யிவற்றின் கருத்துமுத லாறோத்தின்
    மாட்சிமை சொல்லும் வகை.

    சோகம் – (அர்ஜுனனுடைய) சோகம்,
    உயிர் உணர்வு – ஜீவாத்மதத்துவத்தைப் பற்றிய அறிவு,
    தொல் கருமச் செய்தி – பழைமையான கர்மயோகாநுஷ்டானம்,
    அதில் ஆகும் அறிவுயர்த்தி – அக்கர்மயோகத்தில் அடங்கிய அறிவின் சிறப்பு.
    (அதில்) ஆர் வகைகள் – அக்கர்மயோகத்தில் உள்ள சில வகைகள்,
    உயிர் காட்சி யோகம் – ஆத்மாவைக் காண்பதாகிற யோகம்,
    இவற்றின் கருத்து – ஆகிய இவ்வாறு அர்த்தங்களின் விளக்கமும்,
    முதல் ஆறு ஓத்தின் – (முறையே) முதல் ஆறு அத்தியாயங்களின்,
    மாட்சிமை சொல்லும் வகை – முக்கியமான அர்த்தங்களைச் சொல்லும் வகையாகும்.

    பூர்வமத்யமஷட்கார்த்த ஸங்கதி:
    முன்னாறு நல்லுணர்வின் முற்றுங் கருமத்தாற்
    றன்னா ருயிருணர்வு தானுரைத்துப் – பின்னார்வத்
    தேறு மனத்தா லிறைவன்பா லன்புசெயல்
    கூறு நடுவாறுங் கூர்ந்து

    முதல் ஆறு – முதல் ஷட்கத்தினால் (ஆறு அத்தியாயங்களால்),
    நல்லுணர்வின் முற்றும் கருமத்தால் – (ஆத்மாவைப் பற்றிய) உண்மையறிவினால் நிறைவடையும் கர்மயோகத்தால்,
    தன் ஆர் உயிர் உணர்வு தான் உரைத்து – தனது அருமையான ஜீவாத்மஸ்வரூபத்தின் ஸாக்ஷாத்காரம் உண்டாவதாகக் கூறி,
    ஆர்வம் தேறு மனத்தால் – அன்பு நிறைந்த நெஞ்சினால்,
    இறைவன் பால் அன்பு செயல் – ஸர்வேஶ்வரனிடம் பக்தி செலுத்துவதாகிற பக்தி யோகத்தை,
    நடு ஆறும் – (கீதையின்) நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்களும், கூர்ந்து கூறும் – விரிவாக விளக்கும்.

    · அங்கம், ப்ராப்தா ஆகிய இரண்டையும் முதல் ஷட்கத்தில் கூறிய பின்
    அங்கி, ப்ராப்யம் ஆகிய இரண்டையும் மத்யமஷட்கத்தில் கூறுகிறது.
    · ஞானாம்ஶத்தை உள்ளடக்கிய கர்மயோகத்தை அங்கமாகக் கொண்டு பக்தியோகம் அங்கியாகிறது.
    · ஜீவாத்மாவான ப்ராப்தாவுக்கு பரமாத்மா பரமப்ராப்யம்.

    —————————–

    7 – விஜ்ஞான யோகம்:
    11) ஸ்வ யாதாத்ம்யம் ப்ரக்ருத்யாஸ்ய திரோதி: ஶரணாகதி:
    பக்த பேத:ப்ரபுத்தஸ்ய ஶ்ரைஷ்ட்யம் ஸப்தம உச்யதே

    ஸப்தமே – ஏழாவது அத்தியாயத்தில்,
    ஸ்வயாதாத்ம்யம் – (உபாஸிக்கப்படும்) பரமபுருஷனான தன்னைப் பற்றிய உண்மைநிலையும்,
    ப்ரக்ருத்யா – மூலப்ரக்ருதியினாலே,
    அஸ்யதிரோதி: – இந்நிலை (ஜீவனுக்கு) மறைக்கப் படுவதும்,
    ஶரணாகதி: – (அம்மறைவைப் போக்கடிக்கும்) ஶரணாகதியும்,
    பக்த பேத: – உபாஸகர்களில் (நாலு) வகையும்,
    ப்ரபுத்தஸ்ய ஶ்ரைஷ்ட்யம் – (அந்நால்வரில்) ஞானியின் சிறப்பும்,
    உச்யதே – கூறப்படுகிறது.

    ஆங்குமுத லேழாமோத் தன்புக் கிலக்காகு
    மோங்குமிறை மாயத் தொழிக்குமப் – பாங்கிற்
    சரண நெறியடைந்தார் தம்பேத ஞானி
    யரணுயர்வு சொல்லு மமைந்து.

    ஆங்கு முதல் – அந்த மத்யமஷட்கத்தில் முதல் அத்தியாயமான,
    ஏழாம் ஓத்து – ஏழாம் அத்தியாயம்,
    அன்புக்கு இலக்காகும் ஓங்கும் இறை – பக்திக்கு விஷயமாகும் தலைசிறந்த ஸர்வேஶ்வரனையும்,
    மாயம் – (அவனை ஜீவனுக்கு மறைக்கும்) ப்ரக்ருதியையும்,
    ஒழிக்கும் அப்பாங்கில் சரண நெறி – (அம்மறைவைப்) போக்கடிக்கும் தன்மையையுடைய ஶரணாகதியையும்,
    அடைந்தார் தம் பேதம் – உபாஸிப்பவர்களின் (நாலு வகையான) உட்பிரிவையும்,
    ஞானி அரண் உயர்வு – (அந்நால்வரில்) ஞானி (எம்பெருமானுக்கே) தாரகனாயிருக்கும் சிறப்புற்றவன் என்பதையும்,
    அமைந்து சொல்லும் – நன்றாகக் கூறும்.

    I 1-12 ஸ்வயாதாத்ம்யம் – பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவு.
    1 உண்மையறிவைக் கூறுவதாக ப்ரதிஜ்ஞை
    2 இவ்வறிவைப் பூர்ணமாகப் பெற்றால், அறியவேண்டியது வேறொன்றுமில்லை.
    3 மோக்ஷ ஸித்தியின் பொருட்டுக் கடைசிவரை முயல்பவன் ஆயிரத்தில் ஒருவன்;
    அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவன் பரமபுருஷனையே ப்ராப்யமாய் அறிபவன்.
    அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவனே அவனை ப்ராபகமாகவும் அறிபவன்.
    4 எட்டு விதமான அசேதன ஸமஷ்டிப் பொருளும் பரம புருஷ பர தந்த்ரமானது.
    5 அசேதந ப்ரக்ருதிக்கு மேற்பட்ட சேதந ஸமஷ்டியும் பரமபுருஷ பரதந்த்ரமானது.
    6 முற்கூறிய சேதநாசேதந ஸமஷ்டிகளைக் காரணமாகக் கொண்ட வ்யஷ்டிப் பொருள்களுக்கும் பரமபுருஷனே காரணமாகவும், ஶேஷியாகவுமிருப்பவன்.
    7 கல்யாண குணங்களால் ஜீவர்களைக் காட்டிலும் மிகவுயர்ந்தவனும் பரமபுருஷனே.
    7 அவனே அனைத்துக்கும் ஶரீரியாகவுமிருப்பவன். இக் காரணங்களால் அவனே இயற்கையான ப்ராப்ய ப்ராபகங்களா யிருப்பவன்.
    8-11 சேதநாசேதநப் பொருள்களில் அவற்றின் ப்ராப்யத்வத்திற்கும், ப்ராபகத்வத்திற்கும் உறுப்பாக உள்ள சிறந்த பெருமைகள் பரமபுருஷாதீனமாய் வருபவையே.
    12 ஸாத்விகர்களுக்கு ப்ராப்ய ப்ராபகங்களாயிருக்கும் முற்கூறியவை போலே,
    ராஜஸ தாமஸர்களுக்கு ப்ராப்யமாகவும், ப்ராபகமாகவுமிருக்கும் பொருள்களின் தன்மைகளும்,
    அவ் வப் பொருள்களும் பரமபுருஷாதீநமே; பரமபுருஷன் அவற்றுக்கு அதீனமானவனல்லன்.

    II 13-14 பரமபுருஷனைப் பற்றிய முற்கூறிய உண்மை யறிவை – அவனுக்கு அதீனமான ப்ரக்ருதியின் ஸம்பந்தம் ஜீவனுக்கு மறைக்கிறது.

    III 14 ஜீவனுக்குள்ள ப்ரக்ருதி ஸம்பந்தம் பரமபுருஷ ஶரணாகதியாலேயே நீங்குகிறது.
    15 மேன்மேலே பாபிஷ்டர்களான நாலுவகைப்பட்ட பாபிகள் பரமபுருஷனை ஶரணமடைவதில்லை.

    IV பக்தபேதம்
    16 மேன்மேலே புண்ணியமிகுதியால் உண்டாகும் ப்ரபத்திச் சிறப்பாலே சிறப்புற்ற நாலு வகை பக்தர்கள் பரம புருஷனை ஶரணமடைகின்றனர்.
    1) ஆர்த்தன், 2) அர்த்தார்த்தீ (இருவரும் சேர்ந்து ஐஶ்வர்யார்த்திகள்), 3) ஜிஜ்ஞாஸூ (கைவல்யார்த்தி), 4) ஜ்ஞாநி (பகவச் சரணார்த்தி)

    V 17-27 ஞானியின் சிறப்பு
    17 மூவரில், ஸாதனதஶையோடு ஸாத்யதஶையோடு வாசியற எப்போதும் எம்பெருமானுடன் சேர்ந்திருப்பவனாகையாலும்,
    எம்பெருமான் ஒருவனிடமே அன்பு பூண்டவனாகையாலும் ஜ்ஞாநியானவன் – ஸாதநதஶையில் மாத்திரம் எம்பெருமானோடு
    சேர்ந்திருப்பவர்களும், ஸ்வஸாத்யமான ஐஶ்வர்ய கைவல்யங்களிலும், அவற்றுக்கு ஸாதனமாக எம்பெருமானிடமும் அன்பு
    பூண்டவர்களுமான ஐஶ்வர்ய கைவல்யார்த்திகளைக் காட்டிலும் சிறப்புற்றவன். எம்பெருமானிடம் பேரன்பு பூண்டவன்;
    எம்பெருமானுக்கு மிகவினியவன்.
    18 மூவருமே பகவான் ஒருவனையே பலப்ரதானமாகப் பற்றியவர்களாகையாலே உதாரர்கள்;
    ஜ்ஞாநியோவெனில், எம்பெருமானையே பரமப்ராப்யமாகவும் பற்றியவனாகையாலே அவனுக்கே ஆத்மாவாய் (தாரகனாய்) இருப்பவன்.
    19 பல ஜன்மங்கள் கழித்து உபாஸகஜ்ஞானிக்குப் பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவை அநுஸந்திப்பதாலே ‘
    அவனே ப்ராப்யனாகவும் ப்ராபகனாகவு மிருப்பவன்’ என்னும் அறிவு ஏற்பட்டு, அவனையே எல்லாமாகப் பற்றுகிறான்.
    இவ்வறிவு ஏற்பட்ட ஜன்மமே இவனுக்குக் கடைசி ஜன்மம். இத்தகைய ஜ்ஞாநி மஹாத்மாவாவான். எம்பெருமானுக்கே கிடைத்தற்கரியவன் இவன்.
    20 ராஜஸ தாமஸ நூல்களில் சொன்ன நியமங்களைப்பற்றி நின்று தாழ்ந்த பலன்களுக்காக மற்ற தெய்வங்களை வழிபடுகிறார்கள் பலர்.
    21 அவர்களுக்கும் தனது ஶரீரமான அந்த தெய்வங்களிடம் பக்திஶ்ரத்தைகளை எம்பெருமானே ஏற்படுத்துகிறான்.
    22 பக்தி ஶ்ரத்தைகளோடு அந்த தெய்வங்களை ஆராதிப்பவர்களுக்கு, அந்த தெய்வங்களுக்கு அந்தர்யாமியான எம்பெருமானே பலனளிக்கிறான்.
    23 புல்லறிவாளர்களான அவர்களுக்குக் கிடைக்கும் பலன் அல்பமாகவும் அஸ்திரமாகவுமே இருக்கிறது. பகவத் பக்தர்கள் அநந்த ஸ்திரபலனையே எளிதில் பெறுகிறார்கள்.
    24 முற்கூறியவர்களிலும் கீழ்ப்பட்ட அறிவிலிகள் பலர் பரமபுருஷனை ஸாமாந்ய ஜீவனாக நினைக்கிறார்கள்.
    25 மனிதவுருக்கொண்டு அவதரித்திருக்கும் ஸர்வேஶ்வரனை இவ்வறிவிலிகள் அறிவதில்லை.
    26 பரமபுருஷனை உள்ளபடியறிபவன் முக்காலத்திலும் ஒருவனுமேயில்லை.
    27 இதற்குக் காரணம் – அநாதிகாலமாக ஜீவர்கள் ப்ரதமப்ரவ்ருத்தியில் ப்ராக்ருத விஷயமான ஜ்ஞாநேச்சாப்ரயத்னங்களையே செய்து
    புண்ய பாப கர்மங்களைக் குவித்து வைத்திருப்பதால், பிறக்கும்போதே ப்ராக்ருத விஷயத்தில் நிற்கையேயாகும்.
    VI முடிவுரை
    28 இவர்களில் புண்யத்தாலே பாபம் சிறிதுசிறிதாக அழியப் பெற்றவர்கள், தத்தம் புண்ணியத்தின் ஏற்றத் தாழ்வுகள் ஏற்ப, ஐஶ்வர்யத்தையோ, கைவல்யத்தையோ,
    பரமபுருஷனையோ பெற விரும்பி உறுதியுடன் பக்திசெய்கிறார்கள். புண்யபாப லக்ஷணம்.
    29 கைவல்யார்த்திக்கு அறியவேண்டிய அர்த்த விஶேஷங்களும், கைவிடவேண்டி யதும் பற்றிய ப்ரஸ்தாவம்.
    30 ஐஶ்வர்யார்த்திக்கு அறியவேண்டும் அர்த்தவிஶேஷங்களும் கைக்கொள்ள வேண்டியவையும், ஐஶ்வர்யகைவல்ய பகவச் சரணார்த்திகளான ப்ரவ்ருத்தி பரர் அனைவர்க்கும்
    பொதுவாக அறிய வேண்டியவையும், கைக்கொள்ள வேண்டியவையும் பற்றிய ப்ரஸ்தாவம்.

    ——————————

    8 – அப்யாஸ யோகம்:

    12) ஐஶ்வர்ய அக்ஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்திணாம்
    வேத்யோபாதேய பாவாநாம் அஷ்டமே பேத உச்யதே

    ஐஶ்வர்ய அக்ஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்திணாம் – (1) ஐஶ்வர்யார்த்தி, (2) ப்ரக்ருதியினின்று நீங்கிய ஆத்மஸ்வரூபத்தை
    அநுபவிக்க விரும்பும் கைவல்யார்த்தி, (3) பகவானுடைய திருவடித்தாமரையைப் பெறவிரும்பும் ஞானி ஆகிய மூவர்க்கும்,
    வேத்யோபாதேயபாவாநாம் – அறியவேண்டும் அர்த்த விஷேஷங்கள், கைக்கொள்ள (அநுஷ்டிக்க) வேண்டியவை ஆகியவற்றின்,
    பேத: – வேறுபாடு,
    அஷ்டமே – எட்டாம் அத்தியாயத்தில்,
    உச்யதே – சொல்லப்படுகிறது.

    போக முயிருண்மை பூமகள்கோனைப்பெறுதற்
    காக முயல்வார்க் கறிவமர – மேகநிறத்
    தெம்மா னருள்கீதை யெட்டாமோத் திற்பொருள்கள்
    செய்ம்மா வகையுரைக்குஞ் சேர்ந்து.

    போகம் – ஐஶ்வர்ய போகங்கள்,
    உயிருண்மை – ப்ரக்ருதியினின்றும் நீங்கிய ஆத்மாநுபவம்,
    பூமகள் கோனை – ஸ்ரீமந்நாராயணன் ஆகிய இம்மூன்று ப்ராப்யங்களில் ஒன்றை,
    பெறுதற்காக – பெறுவதற்காக, முயல்வார்க்கு – முயற்சி செய்பவர்களுக்கு,
    அறிவு அமர வகை – அறியவேண்டியவைகளையும்,
    செய் மா வகை – அநுஷ்டிக்க வேண்டியவைகளையும்,
    மேக நிறத்து எம்மான் அருள்கீதை எட்டாம் ஓத்தில் பொருள்கள் – மேகம் போன்ற நிறத்தையுடைய எம்பெருமானான
    கண்ணன் அருளிய கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் ஶ்லோகங்கள், சேர்ந்து உரைக்கும் – ஒன்றுகூடிச் சொல்லும்.

    1-2 1. கைவல்யார்த்திகள் அறியவேண்டிய ப்ரஹ்ம, அத்யாத்ம, கர்ம என்பவை யாவை?
    2. ஐஶ்வர்யார்த்திகள் அறியவேண்டிய அதிபூதம், அதிதைவம் என்பவை யாவை?
    3. மூவகை அதிகாரிகளும் அறியவேண்டிய அதியஜ்ஞம் என்பது யாது? அதற்கு அதியஜ்ஞத்தன்மை எப்படி வந்தது?
    4. மூவருக்கும் அந்திம ஸ்ம்ருதி எத்தகையது? – என்று அர்ஜுனனின் கேள்விகள்.
    3 முதற் கேள்விக்குக் கண்ணனின் பதில்.
    4 முற்பாதியால் இரண்டாவது கேள்விக்கும், பிற்பாதியால் மூன்றாவது கேள்விக்கும் கண்ணனின் பதில்.
    5 அந்திமஸ்ம்ருதி பற்றிய நாலாவது கேள்விக்குக் கண்ணனின் சுருக்கமான பதில் –
    ‘ஈஶ்வரன் விஷயமான அந்திமஸ்ம்ருதி அவரவர் விரும்பும் வகையில் ஈஶ்வரனோடு ஸாம்யத்தை விளைக்கும்’ என்று.
    6 இது ஈஶ்வரவிஷயத்தில் மட்டுமல்ல. கடைசிக் காலத்தில் எந்த விஷயத்தை மனிதன் நினைத்தாலும் அந் நினைவுதானே
    அடுத்த பிறப்பில் அவ்விஷயம் போன்ற ஒரு நிலையை அவனுக்கு விளைத்து விடும்.
    7 ஆகையால் அர்ஜுனன் எப்போதும் தன்னைப்பற்றிய நினைவையும், அதை விளைக்கும் க்ஷத்ரிய தர்மமான யுத்தத்தையும்
    செய்ய வேண்டும் என்று கண்ணன் நாலாவது கேள்விக்கு விளக்கமான பதில் கூறுகிறான்.
    8-14 அவரவர்க்குரிய அந்திம ஸ்ம்ருதி ஏற்படுவதற்குறுப்பான உபாஸன பேதம்.
    8-10 ஐஶ்வர்யார்த்திக்குரிய உபாஸன முறையும், அதையொட்டி ஏற்படும் அந்திம ஸ்ம்ருதியும்.
    14 ஜ்ஞாநி பகவானை உபாஸிக்கும் முறையும், அடையும் முறையும்.
    15-28 ஜ்ஞாநிக்கும், கைவல்யார்த்திக்கும் இந்த ஸம்ஸாரமண்டலத்திற்குத் திரும்பி வராமையை உடைய அழிவற்ற பலன்.
    ஐஶ்வர்யார்த்திக்குக் கர்மபூமிக்கே திரும்பி வரும் அழிவுள்ள பலன்.
    15 ஜ்ஞாநியடையும் பலனான பகவதநுபவம் நித்யமானது.
    16 தன்னை ப்ராப்யமாயடைந்தவர்களுக்குக் கிடைக்கும் பலன் நித்யமாயிருப்ப தற்கும், ஐஶ்வர்யார்த்தியின் பலன் அநித்யமாயிருப்பதற்கும் காரணம்.
    17-19 ப்ரஹ்மலோகம் ஈறாகவுள்ள உலகங்களுக்கும், அவற்றினுள்ளிருப்பவர் களுக்கும் உத்பத்தி விநாஶங்களின் காலவரம்பு இருக்கையாலே ஐஶ்வர்யம் அநித்யமே.
    20-21 கைவல்யாநுபவத்திற்கும் அழிவு இல்லாமையால் அதிலிருந்து மற்றொரு அநுபவத்தை அடைவதாகிற புநராவ்ருத்தி இல்லை.
    22 கைவல்யத்தை அடைந்தவனுக்கு ப்ரஹ்மாநுபவம் என்றுமே கிடையாதாகை யால், கேவலாத்மாநுபவமாகிற அவனுடைய அநுபவத்தைக் காட்டிலும்,
    பரிபூர்ண ப்ரஹ்மாநுபவமாகிற ஜ்ஞாநியினுடைய அநுபவம் மிகவும் வேறுபட்டது.
    23-24 பரமபுருஷ நிஷ்டனும், ப்ரஹ்மாத்மகமாகத் தன் ஆத்மாவை உபாஸிக்கும் பஞ்சாக்னி வித்யா நிஷ்டனுமான இருவகையான ஜ்ஞாநிகள்
    ப்ரஹ்மத்தை அடைவதற்கு வழியான அர்ச்சிராதிகதியின் விவரணம்.
    25 புண்ணியம் செய்த ஐஶ்வர்யார்த்திகள் ஸ்வர்க்கம் முதலான புண்ணிய லோகங்களுக்குச் செல்லும் வழியான தூமாதிமார்க்கத்தின் விவரணம்.
    26 முற்கூறிய இரண்டு கதிகளும் ஶ்ருதிப்ரஸித்தமானவை. அர்ச்சிராதிகதியால் செல்பவன் திரும்பி வருதலில்லாத
    பகவதநுபவத்தை அடைகிறான். தூமாதிகதியால் செல்பவன் கர்ம பூமிக்கே திரும்பி வருகிறான்.
    27 அர்ச்சிராதிகதி சிந்தனம் தினந்தோறும் ஜ்ஞாநியால் செய்யப்படவேண்டும்.
    28 ஏழு, எட்டு அத்தியாயங்களாகிற இரு அத்தியாயங்களில் சொல்லப்பட்ட -ப்ராப்யமாய், ப்ராபகமாய், ஶேஷியாய், காரணமாய்,
    ஜ்ஞாநிக்கு தாரக போஷக போக்யமாயிருக்கும் கண்ணனின் பெருமையை அறிபவன் எல்லா ஸாதநாநுஷ்டானங்களைச் செய்தவர்கள்
    அடையும் பலனைக் காட்டிலும் சிறந்த பலனை இவ்விபூதியிலேயே பெற்று, மறுமையில் பரமபதத்தையும் அடைகிறான் –
    என்னும் அத்யாய த்வயார்த்த சிந்தன பலஶ்ருதி.

    ———————-

    9 – ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்:

    13) ஸ்வ மாஹாத்ம்யம் மநுஷ்யத்வே பரத்வம் ச மஹாத்மநாம்
    விஶேஷோ நவமே யோகோ பக்தி ரூப:ப்ரகீர்த்தித:

    ஸ்வமாஹாத்ம்யம் – தன்னுடைய பெருமை,
    மநுஷ்யத்வே பரத்வம் – மனிதனாய் அவதரிக்கும்போதும் மேன்மையையுடைத்தாயிருக்கை,
    மஹாத்மநாம் விஶேஷ: -ஜ்ஞாநிகளுக்குள்ள சிறப்பு, (ஆகியவற்றோடு கூடிய),
    பக்திரூப: யோக: ச – பக்தியோகம் எனப்படும் உபாஸனம்,
    நவமே – ஒன்பதாவது அத்தியாயத்தில்,
    ப்ரகீர்த்தித: – நன்றாகச் சொல்லப்பட்டது.

    உன்னப் படும்பர னொண்சீர் மருவுயர்த்தி
    மன்னப் பயில்ஞானி வாசிதான் – றன்னமர்ந்து
    நின்றியலும் பத்தி நிகழ்ந்துரைத்த நற்கீதை
    யொன்றியசீ ரொன்பதா மோத்து.

    உன்னப்படும் – உபாஸிக்கப்படும்,
    பரன் – பரமாத்மாவினுடைய,
    ஒண்சீர் மருவு – ஸெளலப்ய ஸெளசீல்யங்களோடு கூடிய,
    உயர்த்தி – மேன்மையை,
    மன்னப் பயில்ஞானி வாசிதான் – எப்போதும் சிந்திக்கும் ஞானியின் சிறப்போடு,
    தன்னமர்ந்து நின்றியலும் பத்தி – தன்னிடத்தில் பொருந்தி நிலையாக உபாஸிப்பதாகிற பக்தியோகத்தை,
    நற்கீதை சீர் ஒன்றிய ஒன்பதா மோத்து – நல்ல கீதையின் சிறப்புப் பொருந்திய ஒன்பதாம் அத்தியாயம்,
    நிகழ்ந்துரைத்த – நன்கு உரைத்தது.

    1 வேதாந்த ரஹஸ்யமான ஸாதன பக்தியை உபதேசிப்பதாகக் கண்ணன் ப்ரதிஜ்ஞை செய்தல்.
    2 கர்ம ஜ்ஞான யோகங்களைக் காட்டிலும் பக்தி யோகத்துக்குள்ள சிறப்பு.
    3 ஶ்ரத்தை யின்மையால் பக்தி யோகத்தை அநுஷ்டிக்காதவர்கள் மோக்ஷமடையாமல் ஸம்ஸாரத்திலேயே உழல்கின்றனர்.
    4-10 பக்தி யோகமாகிற உபாயத்தால் அடையப்படும் (ப்ராப்யமாகிற) எம்பெருமானின் பெருமை. மனிதனாகப் பிறந்த நிலையிலும் பரத்வம்.
    4,5 பரம புருஷன் மற்ற பொருள்களால் அறியப்படாமல் அவற்றை ஸங்கல்ப மாத்ரத்தாலே தரிப்பவனாய், நியமிப்பவனாய்,
    படைப்பவனாய், அனைத்துக்கும் ஶரீரியாய், ஶேஷியாய் இருப்பவன்.
    6 எல்லாப் பொருள்களின் ஸ்திதிப்ரவ்ருத்திகளும் தனக்கு அதீனமானவை என்பதைக் கண்ணன் த்ருஷ்டாந்தம் காட்டி நிரூபித்தல்.
    7 அவற்றின் உத்பத்தி ப்ரளயங்களும் தன் அதீனமே என்று கூறல்.
    8 ஸமஷ்டி வ்யஷ்டி ரூபமாயுள்ள ஸ்ருஷ்டியின் முறையை விளக்குதல்.
    9 கர்மானுகுணமாக ஸ்ருஷ்டிப்பதால் தனக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் (பக்ஷபாதம், கருணையின்மை) விளையமாட்டா என்று நிரூபித்தல்.
    10 தலைவனான தன்னால் தூண்டப்பட்டே மூலப்ரக்ருதி உலகனைத்தையும் படைக்கிறது எனல்.
    11,12 ஆஸுர ஸ்வபாவமுள்ளவர்கள் முற்கூறிய தன் பெருமையை உணராத அறிவிலிகளாய் அழிந்து போகிறார்கள் என்று கூறல்.
    13 ஸ்வயம் ப்ரயோஜன பக்தி நிஷ்டர்களான மஹாத்மாக்களின் பெருமை.
    14,15 ஸாதந பக்தி நிஷ்டர்களான உபாஸக ஜ்ஞானிகளின் பெருமை.
    16-19 உபாஸனத்துக்குறுப்பாக – ஒருவனான தானே கார்ய நிலையில் இவ்வுலகிலுள்ள பல பொருள்களை ஶரீரமாகக் கொண்டிருப்பதையும்,
    அவற்றின் ஸத்தா ஸ்திதி ப்ரவ்ருத்திகள் தன்னதீனம் என்பதையும் நிரூபித்தல்.
    20,21 ஜ்ஞாநிகளுக்கு நேர் எதிர்த் தட்டானவர்களாய், தாழ்ந்த பலன்களை விரும்பும் அறிவிலிகளின் தன்மைகளை விவரித்தல்.
    22 தன்னை நினைப்பது தவிர வேறொன்றறியாத மஹாத்மாக்களின் யோக க்ஷேமங்களைத் தானே வஹிப்பதாகக் கூறுதல்.
    23 வேதாந்த விதிப்படி மற்ற தேவதைகளுக்கு அந்தர்யாமியாகத் தன்னை அறியாமல் அவர்களிடம் பக்தி செலுத்துகிறவர்களுக்கு அதனாலேயே மோக்ஷம் கிடைப்பதில்லை.
    24 தேவதைகளைக் குறித்த யாகங்கள் பரமபுருஷனுக்கே ஆராதனமாகின்றன என அறிந்தவர்களுக்கு மோக்ஷமும்,
    அப்படி அறியாதவர்களுக்கு அல்பாஸ்திர பலன்களுக்குமே கிடைக்கும்.
    25 முற்கூறியபடி பலனில் வேறுபாடு அவரவர்களின் ஸங்கல்பத்தின் வேறுபாட்டாலே விளைகிறது.
    26 தான் ஆராதனைக்கு மிக எளியவன் என நிரூபித்தல்.
    27 பக்தி யோகத்திற்கு அங்கமான அநுஸந்தானம் (பகவதர்ப்பணம்-ஶேஷத்வானுஸந்தானம்).
    28 அவ்வநுஸந்தானத்தின் பலன் – தன்னை அடைதல்.
    29,30 ஜன்மம், ஆகாரம், ஸ்வபாவம், ஜ்ஞாநம், ஒழுக்கம் ஆகியவற்றால் எத்தனை தாழ்ந்தவனாயினும் ஸ்வயம்ப்ரயோஜன பக்தியைச்
    செய்தானாகில் அவனிடம் கண்ணனின் ஈடுபாடு.
    31 ஒழுக்கத்தில் குறைந்தவனானாலும் பக்தி செய்தால் விரைவில் தர்மாத்மாவாகி நற்பேறு பெறுவான்.
    32,33 முற்பிறப்புக்களில் செய்த பாப மிகுதியாலே தாழ்ந்த பிறவியை எடுத்தவர்களும் தன்னை ஆஶ்ரயிப்பதாலேயே மோக்ஷமடையும்போது,
    உயற்பிறவியினர் தன்னை ஆஶ்ரயித்து மோக்ஷமடைவது நிச்சயம் என்று கூறி அர்ஜுனனை பக்தி செய்யும்படி விதித்தல்.
    34 ஸாதனபக்தியின் தனித்தன்மைகளை விவரித்தல்.

    ——————-

    10 – விபூதி யோகம்:

    14) ஸ்வ கல்யாண குணாநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதாமதி:
    பக்த்யுத் பத்தி விவ்ருத்த் யர்த்தா விஸ்தீர்ணா தஶமோதிதா

    பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,
    ஸ்வ கல்யாணகுண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாணகுணங்களின் அளவின்மை பற்றியும்,
    அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,
    விஸ்தீர்ணா – விரிவாக,
    தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

    அண்ண லுலகி லனைத்துந்தா னாய்நின்ற
    வண்ணம் விரித்துரைத்த வண்மையினைத் – திண்ணமாங்
    கன்புறவே யோங்க வருள்கீதை பத்தாமோத்
    தின்புறவே யோது மெடுத்து.

    1-3 தன்னை தேவாதி தேவனாக அநுஸந்திப்பதால், பக்தி உண்டாவதற்குத் தடையான பாபங்கள் நீங்கி, பக்தியுண்டாகும் என்று கண்ணன் அர்ஜுனனுக்கு நிரூபித்தல்.
    4-8 தனது ஐஶ்வர்யம், கல்யாணகுணங்கள் ஆகியவற்றை அநுஸந்திப்பதால் பக்தி வளரும் என்பதை கண்ணன் அர்ஜுனனுக்கு நிரூபித்தல்.
    9-11 பக்தியின் உச்சநிலையை அடைந்த ஸ்வயம்ப்ரயோஜன பக்திநிஷ்டனின் பெருமையை விளக்குதல்.
    12-18 கண்ணனுடைய கல்யாண குணச் சேர்த்தியையும், செல்வச் சிறப்பையும் சுருக்கமாகக் கேட்ட அர்ஜுனன் அதன் விரிவைக் கேட்க விரும்பி வார்த்தை சொல்லுதல்.
    12-15 கண்ணன் முன் ஶ்லோகங்களில் சுருங்கச் சொன்ன அர்த்தங்களில் தனக்குள்ள நம்பிக்கையையும்,
    அந்த நம்பிக்கையால் அதில் அஸூயை இல்லாமலிருப் பதையும் அர்ஜுனன் காட்டுதல்.
    16-18 விபூதிகளை விரிவாகச் சொல்லவேண்டுமென்று அர்ஜுனன் கண்ணனை வினவுதல்.
    19 கண்ணன் தனது விபூதிகளை ஒவ்வொன்றாக விரிவாக வர்ணிப்பதும், கேட்பதும் இயலாதாகையால் முக்யமானவற்றைச்
    சுருக்கமாக வகைப்படுத்திக் கூறுவதாக ப்ரதிஜ்ஞை செய்தல்.
    20 ஶ்லோகத்தின் முற்பாதியில் – தன்னைத் தன் விபூதியான மற்ற பொருள்களோடு அடுத்துள்ள ஶ்லோகங்களில் ஒரே வேற்றுமையில் படிப்பதற்குக் காரணம் –
    அவை தனக்கு ஶரீரமாகவும் தான் அவற்றுக்கு ஆத்மாவாகவும் இருப்பதே என்று காட்டி, பிற்பாதியாலே – அனைத்தையும் படைத்தளித்தழிப்பவனா யிருக்கை
    முதலான கல்யாண குணங்களே யோகஶப்தத்தால் சொல்லப்படு கின்றன என்றும், அடுத்துள்ள ஶ்லோகங்களாலில் தன்னை
    மற்ற பொருள்களோடு ஒரே வேற்றுமையில் படிப்பதற்கு அவை கார்யப்பொருளாகவும், தான் அவற்றுக்குக் காரணமாகவுமிருப்பது
    மற்றொரு ஹேதுவாகும் என்றும் கண்ணன் காட்டுதல்.
    21-39 பற்பல பொருள்களோடு கண்ணன் தன்னை ஒரே வேற்றுமையில் படித்தல்.
    39 தன்னைப் பற்பல பொருள்களோடு ஒரே வேற்றுமையில் படித்ததற்குத் தான் அனைத்துக்கும் அந்தர்யாமியாயிருப்ப்தே காரணம் என்று நிகமனம் செய்தல்.
    40 தன் விபூதிகளுக்கு எல்லையில்லாமையால் ஓரளவுக்கே அவற்றைச் சொன்னேன் என்று கூறல்.
    41 இது வரையில் சொல்லப்பட்ட விபூதிகள் – சொல்லப்படாதவையும் அவஶ்யம் சொல்லவேண்டியவையுமான மற்றும் பல முக்ய விபூதிகளுக்கு எடுத்துக்காட்டே என்று கூறி
    ப்ரகரணத்தை நிறைவு படுத்தல்.
    42 முக்யமானவை, அமுக்யமானவை என்னும் வாசியில்லாமல் பார்க்கும்போது, எல்லா உலகமும் தன்னுடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதியாலே தரிக்கப்படும் விபூதியே
    என்று கூறி அத்யாயத்தை முடித்தல்.

    —————————

    11 – விஶ்வரூப தர்சனம்:

    15) ஏகாதஶே ஸ்வ யாதாத்ம்ய ஸாக்ஷாத்காரா வலோகநம்
    தத்த முக்தம் விதி ப்ராப்த்யோர் பக்த் யேகோபாயதா ததா

    ஏகாதஶே – பதினோராமத்தியாயத்தில்,
    ஸ்வ யாதாத்ம்ய ஸாக்ஷாத்கார அவலோகநம் – தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண்,
    தத்தம் உக்தம் – (அர்ஜுனனுக்குக் கண்ணனால்) கொடுக்கப்பட்டதெனச் சொல்லப்பட்டது;
    ததா – அவ்வண்ணமே,
    விதி ப்ராப்த்யோ – (பரம்பொருளை) அறிவது, (காண்பது), அடைவது ஆகியவை,
    பக்த்யேகோபாயதா – பக்தியொன்றையே காரணமாகக் கொண்டவை (என்றும்),
    உக்தம் – சொல்லப்பட்டது.

    பார்த்தனுக்கு மாயனருள் கீதைப் பதினொன்றா
    மோத்திவ் வுலகெல்லா முடம்பதனிற் – கோத்தபடி
    காட்டுமது தன்னறிவு கண்டடைத றன்பத்தி
    கூட்டுமதுஞ் சொல்லுங் குறித்து.

    பார்த்தனுக்கு – அர்ஜுனனுக்கு,
    மாயன் அருள் – மாயப் பிரானாகிய கண்ணன் அருளிய,
    கீதை பதினொன்றாம் ஓத்து – கீதையின் பதினொன்றாம் அத்தியாயம்,
    இவ்வுலகெல்லாம் – இவ்வுலகனைத்தையும்,
    உடம்பதனில் – தன் சரீரத்தில்,
    கோத்தபடி காட்டுமது – (கண்ணனின் ஒரு பகுதியாகக்) கோத்துக் கொண்டிருக்கும் படியைக் காட்டுவதாகும்.
    தன் அறிவு கண்டு அடைதல் – தன்னை அறிவதும், காண்பதும், அடைவதுமாகிற பயன்களை,
    தன் பத்தி கூட்டுமதும் – தன் விஷயமான பக்தியோகம் கூட்டி வைப்பதையும்,
    குறித்துச் சொல்லும் – குறிக்கொண்டு கூறும்.

    1-3 அர்ஜுனன் தனது நன்றியையும் ஆஸ்திக்யத்தையும் க்ருஷ்ண பக்தியையும் காட்டுகிறான்.
    4 விஶ்வரூபத்தைக் காட்டும்படி அர்ஜுனனுடைய ப்ரார்த்தனை.
    5-8 திவ்ய சக்ஷுஸ்ஸை அர்ஜுனனுக்கு அளித்துத் தன் விஶ்வ ரூபத்தைக் கண்ண்னன் அவனுக்குக் காட்டுதல்.
    9-13 விஶ்வரூப வர்ணனை.
    14-30 அர்ஜுனன் விஶ்வரூபத்தின் பெருமைகளைக் கூறித் துதித்தல்.
    31 அர்ஜுனனின் கேள்வி – (பயங்கர உருவத்தின் பயன்)
    32-34 கண்ணனின் பதில் – (ஸ்வஸங்கல்ப ஶக்தியின் வீர்யம்)
    35-46 அர்ஜுனனின் துதியும், மன்னிப்பு வேண்டுதலும், பிரார்த்தனையும்.
    47-49 கண்ணனின் அபயப்ரதானம்.
    50 கண்ணன் இயல்வான நான்கு தோள் திருமேனியை எடுத்துக்கொண்டு அர்ஜுனனைத் தேற்றியது.
    51 அவ்வுருவைக் கண்ட அர்ஜுனன் தான் இன்புற்றுத் தன்னிலை பெற்றதைக் கூறுதல்.
    52-55 கண்ணன் அர்ஜுனனுக்கு பக்தியோகத்தின் பெருமையையும் ஶுபாஶ்ரயமாயிருக்கும்
    திருமேனியின் பெருமையையும் பேசுதல்.

    ———————–

    12 – ஸ்ரீ பக்தி யோகம்:

    16) பக்தே:ஶ்ரைஷ்ட்ய முபாயோக்தி ரஶக்தஸ் யாத்ம நிஷ்டதா
    தத் ப்ரகாராஸ்த் வதிப்ரீதிர் பக்தே த்வாதஶ உச்யதே

    பக்தே:ஶ்ரைஷ்ட்யம் – (ஆத்மோபாஸனத்தைக் காட்டிலும்) பகவதுபாஸனமாகிற பக்தியின் சிறப்பும்,
    உபாயோக்தி: – அந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தலும்,
    அஶக்தஸ்ய – பக்தியில் ஶக்தியில்லாதவனுக்கு,
    ஆத்மநிஷ்டதா – ஆத்மோபாஸனமும்,
    தத் ப்ரகாரா: – கர்ம யோகம் முதலானவற்றுக்கு வேண்டியவைகளான குணங்களின் வகைகளும்,
    பக்தே அதிப்ரீதி: து – தன் பக்தனிடம் மிகுந்த ப்ரீதியும்,
    த்வாதஶே – பன்னிரண்டாமத்தியாயத்தில்,
    உச்யதே – கூறப்படுகிறது.

    பத்தி யறிவாற் கடக்கும் பலவகையு
    மத்தி லுகப்பி னதிசயமு – முத்தி தரும்
    பண்பி னருள்கீதை பன்னிரண்டா மோத்துரைக்குந்
    திண்பயிலுந் சொல்லாற் செறிந்து.

    முத்திதரும் பண்பின் அருள் கீதை – வீடு பேற்றைத் தரும் இயல்பால் (கண்ணன்) அருளிய கீதையின்,
    பன்னிரண்டாமோத்து – பன்னிரண்டாவது அத்தியாயம்,
    பத்தி யறிவாற்கு – பக்தியோகத்தை அறிபவனுக்கு,
    அடக்கும் பல வகையும் – கைக் கொள்ள வேண்டிய பல குணங்களும்,
    அத்தில் – அந்த பக்தி யோகத்தில்,
    உகப்பின் அதிசயமும் – (எம்பெருமானுக்குள்ள) அன்பின் மிகுதியும்,
    திண் பயிலும் சொல்லால் செறிந்து உரைக்கும் – உறுதியானதாய் அனைவராலும் அனுஸந்திக்கத் தக்கதான
    சொற்களால் நன்றாகக் கூறும்.

    1 பகவதுபாஸகர்கள், ஆத்மோபாஸகர்கள் என்னுமிருவரில் எவர் தம் பயனை விரைவில் அடைவர்கள்?
    என்னும் அர்ஜுனனின் கேள்வி.
    2 “என்னையே ப்ராப்யமாக நினைத்து உபாஸிப்பவர்கள் ஆத்மோபாஸகர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள்’
    என்னும் கண்ணனின் பதில்.
    3-5 முற்கூறிய ஜ்ஞானியைக் காட்டிலும் கைவல்ய நிஷ்டனின் தாழ்வைக் கண்ணன் விளக்குதல்.
    6-7 தன்னை உபாஸிப்பவர்கள் சிறந்தவர்கள் என்று முற்கூறியதைக் கண்ணன் மிகத் தெளிவாகக் கூறுதல்.
    8 “நீ என்னிடம் பக்தி செய்வாய்” என்று அர்ஜுனனைக் குறித்து விதித்தல்.
    9 “என்னிடம் உறுதியான நெஞ்சைச் செலுத்த இயலவில்லை யாகில் என் கல்யான குணங்களை
    அனுஸந்திப்பதாகிற அப்யாஸ யோகத்தின் மூலம் பக்தியை யடையலாம்” என்று கூறல்.
    10 “அப்யாஸ யோகத்தில் ஶக்தியில்லையாகில் என் விஷயமான கர்மங்களைச் செய்வதில் ஈடுபடுவதால்
    விரைவில் அப்யாஸ யோகத்தைப் பெற்று பக்தியைச் செலுத்தி என்னை அடையலாம்” என்று கூறல்.
    11 “பக்தி யோகத்தில் ஶக்தியில்லாதவன் அதை ஸாதித்துத் தரும் உபாய பரம்பரையில் எல்லை நிலமான
    கர்ம யோகத்தை அநுஷ்டிக்க வேண்டும்” என்று கூறல்.
    12 ஒன்பது, பத்து, பதினொன்று ஶ்லோகங்களை விளக்குதல்.
    13-19 பலனில் விருப்பமற்றுச் செய்யப்படும் கர்மயோகத்தில் ஊன்றி நிற்பவன் கைக் கொள்ள வேண்டிய குணங்களை விவரித்தல்.
    20 பக்திநிஷ்டன் தனக்கு மிகவினியவன் எனக்கூறல்.

    மத்யம ஷட்கத்தின் ஸாரப்பொருள்:
    பத்திவகை யாங்கறிந்து சேரப் பரன்பெருமை
    யெத்தியலு மாய்நித் ததுவடிவி – லொத்தியலக்
    காட்டியது பத்திநலங் கண்ணன் றருகீதை
    மாட்டிடையா றொத்தின் வகை.

    கண்ணன் தரு கீதை மாட்டு – கண்ணன் அருளிச் செய்த கீதையில்,
    இடை ஆறு ஓத்தின் வகை – நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
    எத்தியலுமாய் – கர்ம யோகம் முழுவதையும் அநுஷ்டித்து,
    நித்தது வடிவிலொத்தியல – நித்யமான ஆத்மஸ்வரூபத்தை நேரே காண்பது போன்ற காட்சியைக் கண்டு,
    பத்தி வகை ஆந்கு அறிந்து – பக்தியோகத்தின் தன்மைகளை அதன்பின் அறிந்து,
    பரன் பெருமை சேர – பரம்பொருளின் அனுபவத்தைப் பெறுவதற்காக,
    பத்தி நலம் – பக்தி யோகத்தின் பெருமைகளை, காட்டியது – விளக்கிற்று.

    மூன்று ஷட்கங்களின் ஸாரப் பொருள்:
    கன்ம முயிருணர்வாற் கட்டவரு முன்னாறு
    நன்மையிறை பத்தி நடுவாறு – தன்மையுடன்
    காயமுயி ரீசன் கருமமறி வன்புவகை
    யேயவமைந் தேலுமீ றாறு.

    முன் ஆறு – முதல் ஆறு அத்தியாயங்கள்,
    கட்டவரும் – முயற்சி செய்ய உண்டாகும்,
    கன்மம் உயிருணர்வால் – கர்மஜ்ஞாந யோகங்களால்,
    ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்,
    நடு ஆறு – நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
    நன்மை இறை பத்தி – சிறப்புமிக்க பரமாத்ம பக்தியோகத்தால்,
    ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்.
    ஈறு ஆறு – கடைசியிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
    காயம் உயிர் ஈசன் கருமம் அறிவு அன்பு வகை – உடல், உயிர், ஈச்வரன், கர்ம ஜ்ஞான பக்தி யோகங்கள்,
    தன்மையுடன் – இவற்றின் தன்மைகளோடு,
    ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்.

    ———————

    13 – ஸ்ரீ க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்:

    17) தேஹ ஸ்வரூப மாத்மாப்தி ஹேது ஆத்ம விஶோதநம்
    பந்த ஹேதுர் விவேகஶ் சத்ர யோதஶ உதீர்யதே

    தேஹஸ்வரூபம் – தேஹத்தின் ஸ்வரூபமும்,
    ஆத்மாப்திஹேது: – ஜீவாத்ம ஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயமும்,
    ஆத்மவிஶோதநம் – ஆத்மாவை ஆராய்ந்தறிதலும்,
    பந்தஹேது: – (ஆத்மாவுக்கு அசித்தோடு) தொடர்பு ஏற்படுவதற்குக் காரணமும்,
    விவேக: ச – (ஆத்மாவை அசித்திலிருந்து) பிரித்தநுஸந்திக்கும் முறையும்,
    த்ரயோதஶே – பதிமூன்றாவது அத்தியாயத்தில்,
    உதீர்யதே – சொல்லப் படுகிறது.

    ஈங்கு முதலாகி யேய்ந்தபதின் மூன்றாமோத்
    தாங்குடல மாருயி ராப்புறுத – னீங்குநெறி
    தன்மையுடன் மற்றுந் தகைமைபெறச் சோதித்து
    நன்மையுடன் சொல்லு நயந்து.

    ஈங்கு – இந்த கடைசி ஷட்கத்தில்,
    முதல் ஆகி ஏய்ந்த பதிமூன்றாம் ஓத்து – முதலாவதாகப் பொருந்தியிருக்கும் பதிமூன்றாம் அத்தியாயம்,
    ஆங்கு – இந்த ஸம்ஸாரத்தில்,
    ஆர் உயிர் உடலம் ஆப்பு உறுதல் – ஜீவாத்மாவானது உடலிலே கட்டுப்படுவதையும்,
    நீங்கு நெறி – அதிலிருந்து விடுபட வழியையும்,
    தன்மையுடன் – அந்த தேஹாத்மாக்களின் ஸ்வரூபத்துடன்,
    முற்றும் தகைமை பெற – மற்றுமுள்ள ஸ்வபாவங்களையும்,
    சோதித்து – ஆராய்ந்து,
    நன்மையுடன் நயந்து சொல்லும் – சிறப்பாக விருப்பத்தோடு கூறும்.

    1 ஶரீரமே க்ஷேத்ரம் எனப்படும்; அதை அறியும் ஜீவனே க்ஷேத்ரஜ்ஞன் எனப் படுவான்.
    2 இரண்டுமே ஸர்வேஶ்வரனுக்கு ஶேஷமானவை என அறிவதே உண்மை யறிவு.
    3 இரண்டைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லப் போவதாகப் ப்ரதிஜ்ஞை.
    4 இவ் வறிவு ஸகல ப்ரமாண ஸித்தம்.
    5,6 க்ஷேத்ரத்தைப் பற்றிய உண்மை யறிவைச் சுருங்கக் கூறல்.
    7-11 ஆத்ம ஜ்ஞான ஸாதனமான அமாநித்வம் முதலான இருபது குணங்களைக் கூறுதல்.
    இது க்ஷேத்ரத்தினால் விளையும் கார்யத்தின் விளக்கமுமாகும்.

    அமாநித்வம் அதம்பித்வம் அஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம்
    ஆசார்யோபாஸநம் ஶெளசம்ஸ்தைர்ய மாத்மவிநிக்ரஹ:

    இந்த்ரியார்த்தேஷு வைராக்யமநஹங்கார ஏவ ச
    ஜன்மம்ருத்யுஜராவ்யாதி து:கதோஷாநுதர்ஶநம்

    அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு
    நித்யம் ச ஸமசித்தத்வம் இஷ்டாநிஷ்டோபபத்திஷு

    மயி சாநந்யயோகேன பக்திரவ்யபிசாரிணீ
    விவிக்ததேஶஸேவித்வம் அரதிர் ஜநஸம்ஸதி

    அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்வஜ்ஞாநார்ததர்ஶநம்
    ஏதத்ஜ்ஞாநமிதிப்ரோக்தம் அஜ்ஞாநம் யததோ (அ)ந்யதா

    12-17 க்ஷேத்ரஜ்ஞன் எனப்படும் ஜீவ ஸ்வரூபத்தின் விளக்கம்.
    18 கார்யத்தோடு கூடிய க்ஷேத்ரத்தையும், க்ஷேத்ரஜ்ஞனையும் அறிவதின் பலம்.
    19-22 ஆத்மா ஶரீரத்தில் கட்டுப்பட்டிருப்பதற்குக் காரணம் ஸத்வாதி குணங்களால் உண்டாகும் இன்ப துன்பங்களில் பற்றே யாகும்.
    23 ப்ரக்ருதி புருஷர்களைப் பிரித்தறியும் விவேக ஜ்ஞானத்தின் பலம் பிறவி நீங்குதலே.
    24-25 பிரித்தறியும் விவேகிகளின் பல படிகள்.
    26 தேஹமும் ஆத்மாவும் பிறவியிலிருந்தே அழுந்தக் கட்டப்பட்டிருப்பதால், அவற்றைப் பிரித்தறிவது அரிது.
    27-33 தேஹாத்மாக்களைப் பிரித்தறியும் முறையாகிற விவேகத்தை விளக்குதல்.
    34 க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞர்களைப் பிரித்தறியும் ஞானத்தின் பலம் ஆத்ம ப்ராப்தி எனக்கூறி அத்தியாயத்தை நிறைவுறுத்தல்.

    —————————

    14 – குண த்ரய விபாக யோகம்:

    18) குண பந்தவிதா தேஷாம் கர்த்ருத்வம் தந் நிவர்த்தநம்
    கதி த்ரயஸ்வ மூலத்வம் சதுர்த் தஶ உதீர்யதே

    குணபந்தவிதா – (ஸத்வம் முதலான மூன்று குணங்கள்) ஸம்ஸார பந்தத்துக்குக் காரணமாகும் முறையும்,
    தேஷாம் கர்த்ருத்வம் – அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மையும்,
    தந் நிவர்த்தநம் – அந்த குணங்களை நீக்கும் முறையும்,
    கதி த்ரயஸ்வ மூலத்வம் – (சிறந்த ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத்ப்ராப்தி என்னும்) மூன்று ப்ராப்யங்களும்
    தன்னிடமிருந்தே கிடைக்கின்றன என்பதும்,
    சதுர்த்தஶே – (கீதையின்) பதினாலாமத்தியாயத்தில்,
    உதீர்யதே – சொல்லப்படுகிறது.

    முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பதுவு
    மக்குணங்க ணீங்குவிக்கு மவ்விரகு – மிக்குயர்ந்த
    கீதை பதினாலா மோத்துக் கிளர்ந்துரைக்கும்
    போதத் தியல்பாற் புரிந்து.

    மிக்கு உயர்ந்த கீதை பதினாலாம் ஓத்து – மிகச் சிறந்த கீதையின் பதினாலாம் அத்தியாயம்,
    முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பு அதுவும் – (ஸத்வம் முதலிய) மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்தில்
    (தாமே செயலுக்குக் காரணமாயிருந்து) நன்றாகக் கட்டிவிடுகின்ற முறையும்,
    அக்குணங்கள் நீங்குவிக்கும் அவ்விரகும் – அந்த குணங்களை நீங்கச் செய்யும் முறையையும்,
    போதத்து இயல்பால் – அறிவிக்க வேண்டிய முறையில்,
    புரிந்து – விருப்பத்தோடு,
    கிளர்ந்து உரைக்கும் – உறுதியாகக் கூறும்.

    1-2 இவ்வத்தியாயத்தில் கூறப்படும் அறிவைப் புகழ்தல்.
    3-4 ஜீவனுக்கு ஶரீர ஸம்பந்தம் ஸ்ருஷ்டியின் தொடக்கத்திலும் அதற்குப் பின்பும்
    தன்னாலேயே செய்யப்படுகிறது என்று கண்ணன் உரைத்தல்.
    5 முக்குணங்களே பிறவிகள் தொடர்வதற்குக் காரணம்.
    6-8 ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களின் தனித்தன்மையையும்
    அவை ஜீவனைக் கட்டும் முறையையும் விளக்குதல்.
    9 இக்குணங்கள் ஜீவனைக் கட்டுவதற்குக் காரணங்களில் முக்யமானதைக் காட்டுதல்.
    10 ஒவ்வொரு ஶரீரத்தில் இக்குணங்களில் ஒவ்வொன்று மேலோங்கி யிருப்பதால் அதன் விளைவுகளே
    அந்த உடலில் உண்டாகின்றன எனக் கூறல்.
    11-13 முறையே முக்குணங்களும் மேலோங்கி நிற்பதை அவற்றின் கார்யங் கொண்டு அறியலாம் என்று விளக்குதல்.
    14-15 முக்குணங்களில் ஒவ்வொன்று மேலோங்கி யிருக்கும் போது மரணமடைந்தால் உண்டாகும் பலம்.
    16-18 மிகுதியான ஸத்வ குணம் முதலானவற்றாலே விளையும் பலன்களை விளக்குதல்.
    (இதுவரை குணங்கள் ஜீவனைக் கட்டும் முறை விளக்கப்பட்டது)
    19 குணங்களின் கர்த்ருத்வம் (செயல் புரியும் தன்மை) அவசியம் அறியத்தக்கது.
    20 குணங்களைக் கடந்து நிற்பவன், மரணம், தோற்றம், வான்பிணி, மூப்பு முதலானவை நீங்கப் பெற்று,
    மரணமற்ற தன் ஆத்மாவை அனுபவிக்கிறான்.
    21 குணங்கடந்தவனுடைய உள் வெளி அடையாளங்களைப் பற்றியும், குணங்களைக் கடந்து நிற்பது எப்படி?
    என்பது பற்றியும் அர்ஜுனனின் கேள்வி.
    22-25 அந்தக் கேள்விக்குப் பதிலாக குணங்கடந்தவனின் உள் வெளி அடையாளங்களை விளக்குதல்.
    26 குணங்கடந்த நிலைக்குத் தன்னிடம் செய்யப்படும் ஏகாந்த பக்தியே முக்ய காரணம் என்று விவரித்தல்.
    27 ஐஶ்வர்ய கைவல்ய பகவத்ப்ராப்திகள் தன்னாலேயே விளைபவை என விவரித்தல்.

    ————————–

    15 – ஸ்ரீ புருஷோத்தம யோகம்:

    19) அசிந் மிஶ்ராத் விஶுத்தாச்ச சேதநாத் புருஷோத்தம:
    வ்யாபநாத் பரணாத் ஸ்வாம்யாத் அந்ய: பஞ்சத ஶோதித:

    அசிந்மிஶ்ராத் (சேதநாத்) – அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்த ஜீவனைக் காட்டிலும்,
    விஶுத்தாத் சேதநாத் ச – ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப் பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும்,
    வ்யாபநாத் – (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும்,
    பரணாத் – (அவர்களைத்) தாங்குகையாலும்,
    ஸ்வாம்யாத் – (அவர்களை) உடையவனாயிருக்கையாலும்,
    அந்ய: – வேறுபட்டவனான,
    புருஷோத்தம: – புருஷோத்தமனான ஸ்ரீமந் நாராயணன்,
    பஞ்சதஶோதித: – பதினைந்தாவது அத்தியாயத் தில் சொல்லப்பட்டன.

    மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும்
    மாறு உன்னும் உயிர் வகையில் – உத்தமனா மன்னி அவை
    மீது உள் பரந்து பரித்து இறையாய் மேவினனை
    யோதும் பதினைந்தா மோத்து.

    மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும் – அனாதி காலமாகச் சேர்ந்திருக்கும் அசேதனமான ப்ராக்ருத சரீரத்தோடு
    கூடிய பத்த ஜீவனைக்காட்டிலும்,
    மாறு உன்னும் உயிர் வகையில் – அவ்வசித்தை விட்டு நீங்கியதாக அறியப்படும் முக்தாத்மாவைக் காட்டிலும்,
    உத்தமனா மன்னி – மேற்பட்டவனாக விளங்கி,
    அவை மீது உள் பரந்து – அவ்விரண்டையும் வ்யாபித்து,
    பரித்து – அவற்றைத் தாங்கி,
    இறையாய் – அவற்றை உடையவனாய்,
    மேவினனை – பொருந்தியிருக்கும் புருஷோத்தமனான நாராயணனை,
    பதினைந்தாம் ஓத்து – (கீதையின்) பதினைந்தாம் அத்யாயம்,
    ஓதும் – கூறும்.

    1 ஸம்ஸாரம் ஓர் அரசமரமாக உருவகப்படுத்தப்பட்டு அதை அறிந்தவனே வேதத்தை நன்கறிந்தவன் எனப்படுகிறது.
    2 முற்கூறிய உருவகம் மேலும் நீட்டிக்கப்படுகிறது.
    3 இந்த மரத்திற்கு குணங்களில் பற்றே காரணமென்றும் குணங்கடந்த நிலையாலேயே இது அழிகிறதென்றும்,
    அஜ்ஞானமே இதற்கு ஆதாரமென்றும் ஸம்ஸாரிகளால் அறியப்படுவதில்லை.
    3-4 நல்லறிவால் விளைந்த ‘குணங்களில் பற்றின்மை’யாகிற ஆயுதத்தாலே இம்மரத்தை வெட்டி,
    ப்ராப்யமான ஆத்மா தேடத்தக்கது.
    4 எம்பெருமானை ஶரணமடைவதன் மூலமே பற்றின்மையாகிற ஆயுதத்தைப் பெற்று
    ஸம்ஸாரத்தை வெட்டி வீழ்த்தலாம்.
    5 எம்பெருமானை ஶரணமடைந்தவர்களுக்கு தேஹாத்ம மயக்கம் நீங்குகை, குணங்களில் பற்றை வெல்லுகை,
    ஆத்ம ஜ்ஞானத்தில் எப்போதும் ஈடுபட்டிருக்கை, மற்ற விஷயங்களில் விருப்பம் நீங்கப் பெற்றவர்களாகை,
    இன்ப துன்பங்களாகிற இரட்டைகளிலிருந்து விடுபடுகை முதலானவை அனைத்தும் எளிதாகி
    ஆத்மாநுபவமாகிற பலமும் ஸித்திக்கிறது.
    6 பரிஶுத்தாத்ம ஸ்வரூபத்தின் பெருமை.
    7 எம்பெருமானுடைய செல்வமாயிருக்கும் ஸம்ஸாரி ஜீவன் தான் சேர்த்து வைத்திருக்கும் புண்ய பாப ரூபமான
    விலங்குகளாலே வலியக் கட்டப் பெற்று, தன் ஶரீரமாகிற சிறையிலே அடைபட்டிருக்கிறான்.
    8 அவன் ஒரு ஶரீரத்திலிருந்து மற்றொரு ஶரீரத்தில் புகுவது முதலான துன்பங்களை அனுபவிக்கிறான்.
    9 இந்த்ரியங்களைக் கொண்டு அவன் விஷம் கலந்த தேன் போன்ற ப்ராக்ருத விஷயங்களை அனுபவித்து உழலுகின்றான்.
    10 இத் துன்பங்களை யெல்லாம் அவன் அனுபவிப்பதற்குக் காரணம் ஆத்மாபஹார மாகிற திருட்டே.
    இவன் தன் ஸ்வரூபத்தை அறியாமைக்குக் காரணம் தேஹத்தையே ஆத்மா என்று மயங்குவதே.
    இந்த மயக்கமில்லாமல் அறிவுக் கண்ணை யுடையவர்கள் ஆத்மாவை அறிவே வடிவெடுத்ததாகக் காண்கிறார்கள்.
    11 முன் ஶ்லோகங்களின் விளக்கம்.
    12-14 ஸூர்யன், சந்திரன், அக்னி முதலானவற்றுக்குள்ளதான பொருள்களைப் ப்ரகாஶிக்கச் செய்யும் ஶக்தியும்,
    பூமியின் தாரண ஶக்தியும், சந்திரனின் போஷண ஶக்தியும் ஜாடராக்னியின் ஜீர்ணம் செய்யும் ஶக்தியும்
    இது போல் உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்குமுள்ளதான ஒவ்வொரு கார்யத்தைச் செய்யும் ஶக்திகளும்
    எம்பெருமானுடையவையே. ஆகையால், ப்ராக்ருதப் பொருள்கள் எல்லாம் எம்பெருமானின் செல்வமே.
    15 எல்லாப்பொருள்களையும் எம்பெருமானோடு ஒரே வேற்றுமையில் படிப்பதற்குக் காரணம் அவன்
    அனைவருடைய ஹ்ருதயத்திலும் எழுந்தருளி நியமிப்பதே. வேதங்கள் இவ்வர்த்தத்தைச் சொல்லுகின்றன.
    எல்லா வேத வாக்யங்களாலும் முக்கியமாக அறியப்படுபவனும் அவற்றில் சொல்லப்பட்ட
    கர்மங்களுக்குப் பலம் அளிப்பவனும் எம்பெருமானே.
    16 புருஷோத்தம வித்யையின் தொடக்கம்: க்ஷர புருஷனாகிற ஸம்ஸாரி ஜீவன் அக்ஷர புருஷனாகிற முக்தன்
    என்று ஜீவர்கள் இருவகைப்படுவர்.
    17 அசித், ஸம்ஸாரி ஜீவன், முக்தன் என்னும் மூன்று பொருளையும் வ்யாபித்து, தாங்கி நின்று,
    நியமிக்கும் பரமாத்மாவாகிற உத்தம புருஷன் முற்கூறிய க்ஷராக்ஷர புருஷர்களைக் காட்டிலும் வேறுபட்டவன்.
    18 ஸம்ஸாரி ஜீவனைக் கடந்து நிற்பதாலும் முக்தனைக் காட்டிலும் மேலானவனாயிருப்பதாலும் ஶ்ருதி ஸ்ம்ருதிகளில்
    “புருஷோத்தமன்” என்று பெயர் பெற்றவன் எம்பெருமானே.
    19 இந்தப் புருஷோத்தம வித்யையை அறிந்தவன் எல்லா மோக்ஷோபாயங்களையும் அறிந்தவனாகிறான்.
    பக்தி வகைகள் அனைத்தாலும் பக்தியைச் செய்தவனாகிறான்.
    20 “உன் தகுதியைப் பார்த்து இந்தப் பரமரஹஸ்யமான ஶாஸ்த்ரத்தை உனக்கு உபதேஶித்தேன்.
    இதை அறிந்து அறிய வேண்டியதனைத்தையும் அறிந்தவனாகவும், செய்ய வேண்டியதனைத்தையும்
    செய்தவனாகவும் ஆவாயாக” என்று அர்ஜுனனுக்குக் கண்ணன் உபதேஶித்து அத்தியாயத்தை நிறைவுபடுத்துகிறான்.

    ——————————-

    16 – தேவாசுர ஸம்பத் விபாக யோகம்:

    20) தேவாஸுர விபாகோக்தி பூர்விகா ஶாஸ்த்ர வஶ்யதா
    தத்வாநுஷ்டாந விஜ்ஞாநஸ் தேம்நே ஷோடஶ உச்யதே

    தத்வாநுஷ்டாந விஜ்ஞாநஸ்தேம்நே – (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டாநத்தையும்
    பற்றிய அறிவை உறுதிப்படுத்துவதற்காக,
    தேவாஸுர விபாக உக்திபூர்விகா – (மனிதர்க்குள்) தேவப் பிரிவு, அஸுரப் பிரிவு என்னும் இரு பிரிவுகள் இருப்பதை
    முன்னிட்டுக்கொண்டு,
    ஶாஸ்த்ர வஶ்யதா – (மனிதன்) சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மை,
    ஷோடஶே – (கீதையின்) பதினாறாம் அத்தியாயத்தில்,
    உச்யதே – சொல்லப்படுகிறது.

    தன்மையாற் றேவ ரசுரரெனச் சார்பிறவி
    நன்மைசேர் சாத்திரத்தி னாடுதலும் – தொன்மை
    யுரைக்கங் கறிவுரைப்புக் காட்டுதற்குக் கீதை
    யுரைக்கும் பதினாறா மோத்து.

    கீதை பதினாறாம் ஓத்து – கீதையின் பதினாறாம் அத்தியாயம்,
    அங்கு தொன்மை உரைக்கு – அந்த கீதையில் இதுவரை (அடையத்தக்க) தத்துவத்தைப் பற்றியும்
    அதை (அடைவிக்கும்) உபாயாநுஷ்டானத்தைப் பற்றியும் சொல்லப்பட்ட விஷயங்களின்,
    அறிவு உரைப்பு காட்டுதற்கு – அறிவு உறுதிப்படுவதற்காக,
    தன்மையால் தேவர் அசுரர் என சார்பிறவி – (மனிதர்கள்) தம் இயல்வால் தேவர் அசுரர் என இருவகை
    பிறவிகளாகப் பிரிவுபட்டிருப்பதையும்,
    நன்மை சேர் சாத்திரத்தின் நாடுதலும் – நன்மையை அடைவிக்கும் சாஸ்திரத்திற்கு வசப்பட்டிருக்கும்
    தன்மையையும், உரைக்கும் – விளக்குகிறது.

    1-3 தெய்வப்பிறவி வகுப்பில் சேர்ந்தவனுக்குரிய முக்கியமான குணங்கள்.
    1. பயமின்மை,
    2. மனத்தின் பரிசுத்தி,
    3. (ப்ரக்ருதியினின்றும் நீங்கிய) ஆத்ம ஸ்வரூபத்தைச் சிந்தித்திருத்தல்,
    4. நல்ல வழியில் தேடிய பொருளை நல்லோர்களுக்களித்தல்,
    5. மனத்தை ஶப்தாதி விஷயங்களில் பாயாமல் தடுக்கப் பழகுதல்,
    6. (பலனில் பற்றற்று பகவதாராதனமாகப்) பஞ்ச மஹா யஜ்ஞம் முதலானவற்றை அனுஷ்டித்தல்,
    7. வேதாத்யயனத்தில் ஈடுபடுதல்,
    8. ஏகாதசி உபவாஸம் முதலான தவங்களில் ஈடுபடுதல்,
    9. மனம் மொழி மெய்களால் ஒருபடிப் பட்டிருத்தல்,
    10. எந்த ஜீவராசியையும் துன்புறுத்தாமை,
    11. ஜீவராசிகளுக்கு நன்மையான உண்மையையே உரைத்தல்,
    12. பிறரைத் துன்புறுத்துவதில் மூட்டும் கோபம் இல்லாதவனாயிருக்கை,
    13. தனக்கு நன்மையை விளைக்காத உடைமைகளைக் கை விடுதல்,
    14. (மனம் தவிர்ந்த) இந்த்ரியங்களை ஶப்தாதி விஷயங்களில் பாயாமல் தடுக்கப் பழகுதல்,
    15. (பிறர்க்குத் தீங்கு விளைக்கும்) கோட்சொல்லுதலைத் தவிர்த்தல்,
    16. ஜீவராசிகளின் துன்பங் கண்டு பொறாமலிருத்தல்,
    17. விஷயங்களில் பற்றின்மை,
    18. (நல்லோர்கள் அணுகலாம்படி) மென்மையுடனிருக்கை,
    19. தகாத செயல்களைச் செய்வதில் வெள்கி யிருத்தல்,
    20. அருகிலிருக்கும் அழகிய பொருள்களையும் ஆசைப் படாமை,
    21. (தீயவர்களால்) வெல்ல வொண்ணாமை,
    22. (துன்புறுத்துபவர்களிடமும்) பொறுமை,
    23. (பேராபத்து வந்தாலும்) செய்ய வேண்டியதில் உறுதியாயிருக்கை,
    24. (மநோ வாக் காயங்களில் சாஸ்த்ரங்களில் சொல்லிய) பரிசுத்தி யாகிற அனுஷ்டானத்
    தகுதியை உடையவனாயிருக்கை,
    25. பிறர் நற் செயல்களைத் தடுக்காமை,
    26. தகாத கர்வம் இன்மை ஆகிய இருபத்தாறு குணங்கள்.

    4 அஸுரப் பிறவி வகுப்பில் சேர்ந்தவனுக்குரிய முக்கியமான குணங்கள்:
    1. (தார்மிகன் என்னும்) புகழைப் பெற தர்மத்தை அநுஷ்டிப்பது,
    2. (ஶப்தாதி விஷ்யங்களை அனுபவிப்பதனால் உண்டாகும்) செருக்கு,
    3. அதிகமான கர்வம்,
    4. (பிறரைத் துன்புறுத்தம்) கோபம்,
    5. (நல்லோர்களை வெறுப்படையச் செய்யும்) கடுமை,
    6. தத்வ விஷயத்திலும், செய்யத் தக்கது அல்லது தகாத விஷயத்திலும் அறிவின்மை ஆகிய ஆறு குணங்கள்.

    5 எம்பெருமான் ஆணையைப் பின் செல்வதாகிற தேவர்களுக்குரிய செல்வம் ஸம்ஸார விடுதலைக்கும்,
    எம்பெருமானுடைய ஆணையை மீறுவதாகிற அசுரர்க்குரிய செல்வம் தாழ்ந்த கதிகளை அடைவதற்கும் உறுப்பாகின்றன.
    5* அர்ஜுனன் தேவர்க்குரிய செல்வத்தைப் பெற்றவனே என்று கூறி அவனது வருத்தத்தைப் போக்குதல்.
    6 தேவர்க்குரிய ஆசாரம் கர்மஜ்ஞான பக்தியோகங்களைச் சொல்லும்போது விரிவாகக் கூறப்பட்டது.
    அசுரர்க்குரிய ஆசாரம் மேலே (18-வது ஶ்லோகம் வரை) சொல்லப்படுகிறது.
    7 1) அசுரப்பிறவிகள், ஐஶ்வர்ய ஸாதனமாகவும், மோக் ஷஸாதனமாகவும்
    இருக்கும் வைதிக தர்மத்தை அறியமாட்டார்கள்,
    2) அவர்களிடம் ஶுத்தி இருக்காது,
    3) ஸந்த்யாவந்தனம் முதலான ஆசாரமும் அவர்களிடம் இருக்காது.
    4) உண்மை உரைத்தலும் அவர்களிடம் இருக்காது.

    8 1) அசுரர்கள் உலகம் ப்ரஹ்மாத்மகம், ப்ரஹ்மத்தில் நிலை நிற்பது,
    ப்ரஹ்மத்தால் நியமிக்கப்படுவது என்று சொல்வதில்ல
    2) ஆண், பெண் சேர்க்கையால் உண்டாகாதது எதுவுமில்லையாகையால் உலகனைத்தும்
    காமத்தையே காரணமாகக் கொண்டது என்று கூறுகிறார்கள்.

    9 அசுரர்கள் தேஹத்திலும் வேறுபட்ட ஆத்மாவை அறியாமல் கொடிய செயல்களைச் செய்பவர்களாய்,
    உலகம் அழிவதற்குக் காரணமாகிறார்கள்.
    10 அசுரர்கள் காமத்தை நிறைவேற்ற அநியாய வழியில் தேடப்பெற்ற பொருள்களைக் கொண்டு
    சாஸ்த்ரத்திற்கு முரண்பட்ட விரதங்களைக் கொண்டவர்களாய், டம்பம், துரபிமானம், மதம்
    ஆகியவற்றோடு கூடியவர்களாய்ச் செயல்படுகிறார்கள்.
    11 அசுரர்கள் அளவிடவொண்ணாத கவலைகளை யுடையவர்களாய், காமாநுபவத்தையே
    பரம புருஷார்த்தமாக நினைப்பவர்கள்.
    12 1) அசுரர்கள் நூற்றுக்கணக்கான ஆஶாபாஶங்களால் கட்டப்பட்டவர்கள்.
    2) காமத்திலும், கோபத்திலுமே ஊன்றி நிற்பவர்கள்.
    12. காமாநுபவத்திற்குத் தவறான வழிகளில் பொருளை விரும்பித் தேடுகிறார்கள்.
    13 அசுரர்கள் தங்களுடைய இஷ்டப்ராப்தி தம் திறமையாலேயேயொழிய முன்வினையால் அல்ல என்று மயங்கி, காமாநுபவத்தில் பெற்றதையும், பெறவேண்டியதையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
    *14 அசுரர்கள் ‘ஶத்ரு நிரஶனம்’ முதலான அநிஷ்ட நிவ்ருத்திகளும் தம் திறமையாலேயேயொழிய முன் வினையால் அல்ல என்று மயங்கியிருக்கிறார்கள்.
    14*-15 அசுரர்கள் முற்கூறிய தம் திறமையும், மற்றும் பல திறமைகளும் தமக்கு இயல்பாக உள்ளதேயொழிய, புண்யத்தால் உண்டானதன்று என்று மயங்கியிருக்கிறார்கள்.
    16 அசுரர்கள் பல கவலைகளையும், மயக்கங்களையும், புலனின்பங்களில் ஈடுபாட்டையும் உடையவர்களாயிருக்கையாலே அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.
    17 1) அசுரர்கள் தம்மைத்தாமே பெருமைபேசிக் கொள்பவர்கள்.
    2) பணிவில்லாமல் நிமிர்ந்து நிற்பவர்கள்.
    3) பணத்தினாலும் (கல்வி, குடிப்பிறப்பு ஆகியவற்றால் உண்டான)

    அபிமானத்தாலும் விளையும் கர்வத்தை உடையவர்கள்.
    4) புகழையே பயனாகக் கொண்டு சாஸ்த்ர விதிக்கு முரணாக டம்பத்திற்காக

    யாகம் செய்கிறார்கள்.
    18 அசுரர்கள் அஹங்காரத்தையும், தன் பலத்தையும், கர்வத்தையும் கோபத்தையும் பற்றி நிற்பவர்களாய், அனைத்தையும் செய்விக்கும் பகவானிடத்தில் பொறாமையுடையவர்களாய் யாகம் செய்கிறார்கள்.
    19 பகவானைத்வேஷிப்பவர்களாய், கொடியவர்களாய், மனிதர்களில் கடையானவர்களாய், அமங்களாமானவர்களான அவ்வசுரர்களை எம்பெருமான் பிறவிகளில், அதிலும் ஆஸுரப் பிறவிகளிலேயே தள்ளுகிறான்.
    20 முற்கூறியபடி ஆஸுரப்பிறவிகளடைந்த அசுரர்கள் விபரீதஜ்ஞானம் வளரப் பெற்றவர்களாய், மேன்மேலும் தாழ்ந்த கதிகளையே அடைகிறார்கள்.
    21 ஆஸுரத்தன்மைக்கு நுழைவாயிலாயிருக்கும் காமம், க்ரோதம், லோபம் என்னும் மூன்றையும் நல்லவர்கள் அவசியம் கைவிடவேண்டும்.
    22 இம்மூன்றையும் கைவிடுபவன் தனது நன்மைக்கு முயற்சி செய்து பகவானையே அடைகிறான்.
    23 ஆஸுரத்தன்மைக்கு மூலகாரணமான முற்கூறிய மூன்றைக்காட்டிலும் முக்கியமான காரணம் சாஸ்திர நம்பிக்கையின்மையே; சாஸ்திர விதியைக் கைவிடுபவன் இம்மை மறுமைப் பயன்களையும், மேலான கதியையும் அடையவே மாட்டான்.
    24 ஆகையால், கைக்கொள்ளத்தக்கதையும் தகாததையும் நிர்ணயிப்பதில் சாஸ்த்ரமே (வேதமே) ப்ரமாணம். ஆகையால் வேதத்தில் சொல்லப்பட்ட புருஷோத்தமனாகிற தத்துவத்தையும், அவனை அடைய உபாயமான தர்மத்தையும் கைக்கொள்ள வேண்டும்.

    ——————–

    17 – ஸ்ரீ ஶ்ரத்தா த்ரய விபாக யோகம்:

    21) அஶாஸ்த்ரம்  ஆஸுரம் க்ருத்ஸ்நம் ஶாஸ்த்ரீயம் குணத: ப்ருதக்
    லக்ஷணம் ஶாஸ்த்ர ஸித்தஸ்ய த்ரிதா ஸப்தத ஶோதிதம்

    க்ருத்ஸ்நம் அஶாஸ்த்ரம் – ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
    ஆஸுரம் – அஸுரர்க்குரியது (ஆகையாலே பயனற்றது என்றும்),
    ஶாஸ்த்ரீயம் – சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம்,
    குணத: – (ஸத்வரஜஸ்தமோ) குணங்கள் மூன்றையிட்டு,
    ப்ருதக் – மூன்று விதமாயிருப்பது என்றும்,
    ஶாஸ்த்ர ஸித்தஸ்ய – சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட யாகம் முதலான் கர்மங்களுக்கு,
    த்ரிதா லக்ஷணம் – “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள்
    (தாம் சேர்வதன் மூலம் அவற்றை மற்ற கர்மங்களினின்றும் வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன (என்னும் விஷயமும்),
    ஸப்ததஶோதிதம் – பதினேழாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

    ஆசுரமா மின்மை சாத்திரந்தான் சாத்திரத்திற்
    றேசுடைய கன்மஞ் செறிகுணத்தாற் – பேசு நெறி
    சேர்ந்தேயிம் முக்குணங்கள் செப்புமே மூவகையா
    வோர்ந்தே பதினேழா மோத்து.

    சாத்திரந்தான் இன்மை – சாஸ்திரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
    ஆசுரம் ஆம் – அசுரர்க்குரியதாகும்;
    சாத்திரத்தில் தேசுடைய கன்மம் – சாத்திரத்தில் விதிக்கப்பட்டிருக்கையாகிற சிறப்புடைய கர்மங்கள்,
    செறி குணத்தால் மூவகையா – (தேஹத்தோடு) சேர்ந்திருக்கும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும்
    மூன்று குணங்களை யிட்டு மூவகையாகவும்,
    பேசு நெறி இம்முக்குணங்கள் சேர்ந்தே மூவகையா – (சாஸ்த்ரங்களில் புகழப்படும் ஓம் தத் ஸத் என்னும்)
    இந்த மூன்று பதங்களின் சேர்த்தியினால் (மற்ற கர்மங்களைக் காட்டிலும்) மூன்று வகையில் வேறுபட்டிருப்பதாகவும்,
    பதினேழாம் ஓத்து – பதினேழாம் அத்தியாயம்,
    ஓர்ந்தே செப்புமே – ஆராய்ந்து கூறும்.

    1 ஶாஸ்த்ரவிதி இல்லாமற் போனாலும் ஶ்ரத்தையோடு செய்யப்படும் கர்மங்களைப் பற்றி அர்ஜுனனின் கேள்வி.
    2 ஶாஸ்த்ரங்களை ஒட்டியிருக்கும் ஶ்ரத்தை குணங்களையிட்டு கர்மம் மூவகைப்படுகிறது.
    3 ஶ்ரத்தை எப்படிப்பட்டதோ அதற்குத்தக்க பலனே கிடைக்கும்.
    4 ஸத்விக ராஜஸ தாமஸர்களால் ஆராதிக்கப்படுபவர்கள்.
    5-6 ஶாஸ்த்ர விதிக்கு முரணான கர்மங்கள் பகவதாஜ்ஞையை மீறுவதால் எப் பயனையும் விளைப்பதில்லை
    என்பதோடல்லாமல் அனர்த்தத்தையும் விளைக்கின்றன.
    7 ஸத்வ ரஜஸ் தமோ குணங்களையிட்டு ஆஹாரமும், தவமும், தானமும் மூவகைப்பட்டிருக்கும் என்று கூறுதல்.
    8 ஸாத்விக ஆஹாரத்தின் விளக்கம்.
    9 ராஜஸ ஆஹாரத்தின் விளக்கம்.
    10 தாமஸ ஆஹார விளக்கம்.
    11 ஸாத்விக யாக விளக்கம்.
    12 ராஜஸ யாக விளக்கம்.
    13 தாமஸ யாக விளக்கம்.
    14 உடலால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
    15 வாக்கால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
    16 மனத்தால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
    17 ஸாத்விக தவத்தின் விளக்கம்.
    18 ராஜஸ தவத்தின் விளக்கம்.
    19 தாமஸ தவத்தின் விளக்கம்.
    20 ஸாத்விக தானத்தின் விளக்கம்.
    21 ராஜாஸ தானத்தின் விளக்கம்.
    22 தாமஸ தானத்தின் விளக்கம்.
    23 வைதிக கர்மங்கள் “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று ஶப்தங்களோடு இணைந்திருக்க வேண்டு
    என்னும் வைதிக கர்ம லக்ஷணம்.
    24 மூன்று ஶப்தங்களில் முதலாவதான ப்ரணவம் வைதிக கர்மங்களோடும், வேதங்களொடும்,
    மூவர்ணத்தவர்களோடும் சேர்ந்திருக்கும் முறை.
    25 வைதிக கர்மம் முதலான மூன்றுக்கும், “தத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்தி;
    மோக்ஷ ஸாதனமான கர்மங்களுக்கு “தத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்திருக்கை லக்ஷணம்.
    26 “ஸத்” என்னும் சொல்லின் வழக்குகள் (ப்ரயோகங்கள்).
    27 வைதிக கர்மங்கள் முதலான மூன்றுக்கும் “ஸத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்தி;
    ப்ராக்ருத பல ஸாதனங்களுக்கு “ஸத்” என்னும் ஶப்தத்தோடு சேர்ந்திருக்கை லக்ஷணம்.
    28 ஶாஸ்த்ரத்தை யொட்டிச் செய்யப்படுவதானாலும் ஶ்ரத்தையில்லாமல் செய்யப்படும் கர்மம்
    “அஸத்” என்று சொல்லப்படும். அதனால் எப்பலனும் இல்லை.

    ——————–

    18 -ஸ்ரீ மோக்ஷ உபதேச யோகம்:

    22) ஈஶ்வரே கர்த்ருதா புத்திஸ் ஸத்வ உபாதேயதா அந்திமே
    ஸ்வ கர்ம பரிணாமஶ்ச ஶாஸ்த்ர ஸாரார்த்த உச்யதே

    ஈஶ்வரே கர்த்ருதாபுத்தி: – கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவும்,
    ஸத்வ உபாதேயதா – ஸத்வ குணம் கைக்கொள்ளத் தக்கது என்னும் விஷயமும்,
    ஸ்வ கர்மபரிணாம: – (முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும்) ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதும்,
    ஶாஸ்த்ரஸாரார்த்த ச – இந்த கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்தி ப்ரபத்திகளும்,
    அந்திமே – கீதையின் கடைசியான பதினெட்டாம் அத்தியாயத்தில்,
    உச்யதே – சொல்லப்படுகிறது.

    செய்கருமத் தீசனே கர்த்தாவாச் சிந்திப்பு(ம்)
    மெய்கருதுஞ் சத்துவத்தின் மெய்ப்பாடு – முய்கருமஞ்
    சாருங்க் கதியுமிச் சாரத்தின் சாரமுமுற்
    றோரும் பதினெட்டா மோத்து.

    செய் கருமத்து ஈசனே கர்த்தாவா சிந்திப்பும் – அநுஷ்டிக்கப்படும் கர்மத்திற்கு ஸர்வேஶ்வரனே கர்த்தா என்னும் நினைவையும்,
    மெய் கருதும் சத்துவத்தின் மெய்ப்பாடும் – உண்மையான ஜ்ஞானத்திற்குக் காரணமான ஸத்வகுணம் கைக்கொள்ளத்தக்கது என்பதையும்,
    உய்கருமம் சாரும் கதியும் – முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதையும்,
    இச்சாரத்தின் சாரமும் – ஶாஸ்த்ரங்களின் ஸாரமான இந்த கீதையின் ஸாரம் பக்திப்ரபத்திகளே என்பதையும்,
    பதினெட்டாம் ஓத்து – (கீதையின்) பதினெட்டாம் அத்தியாயம்,
    உற்று ஓரும் – நன்கு ஆராய்ந்துரைக்கும்.

    1 ஸந்யாஸ த்யாகங்கள் ஒன்றா வெவ்வேறா, அவற்றின் ஸ்வரூபம் என்ன என்று அறிவதற்காக அர்ஜுனனின் கேள்வி.
    2, 3 ஸந்யாஸ த்யாகங்களைப் பற்றிய அறிவாளிகளின் கருத்துக்கள்;
    4-6 த்யாகம், ஸந்யாஸம் எனும் இரண்டும் ஒன்றே; கர்மங்களினுடைய ஸ்வரூபத்யாகம் தவறானது. ஸங்கல்பத்தையும் (கர்மம் என்னுடையது என்னும் எண்ணத்தையும்), பலனில் விருப்பத்தையும் விட்டு, கர்மங்கள் அனுஷ்டிக்கப்பட வேண்டியவையே.
    7 கர்மஸ்வருபத்யாகம் தாமஸத்யாகம் (தமோகுணத்தால் விளைவது)
    8 உடலுக்கு வருத்தம் விளையும் என்னும் அச்சத்தால் கர்மத்தை விடுவது ராஜஸத்யாகம். அதற்குப் பலனில்லை.
    9 பலஸங்கங்களை மட்டும் விட்டு நித்யநைமித்திக கர்மங்களை அனுஷ்டிப்பது ஸாத்விகத்யாகமாகும்.
    10 ஸாத்விகத்யாகத்தோடு கூடியவனுடைய ஆத்மகுணங்கள்.
    11,12 கர்மபலத்யாகமே உண்மையான த்யாகமாகும். அத்தகையவனிடம் கர்மத்தின் பலன் ஒட்டாது. (இதுவரை அர்ஜுனனின் கேள்விக்குப் பதில் உரைக்கப்பட்டது.)
    13-15 கர்த்ருத்வத்யாகத்தை ப்ரஸ்தாபித்தல், கர்மங்களுக்கு ஐந்து காரணங்களைக் காட்டுதல், ஐந்தாவது காரணமான பரமாத்மாவே ப்ரதான காரணம் என்று கூறுதல். (பராயத்தாதிகரணம்)
    16,17 கர்த்ருத்வத்யாகத்தை விளக்குதல். (இந்தஶ்லோகம் வரை ‘கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே’ என்னும் அறிவு விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்)
    18 கர்மங்களைப் பற்றிய வேதவிதி -ஜ்ஞாநம், ஜ்ஞேயம், ஜ்ஞாதா என்னும் மூன்றுடன் கூடியது. கர்மத்தின் வகை கரணம், கர்மா, கர்த்தா என்று மூன்று.
    19 ஜ்ஞாநம் (கர்மத்தைப் பற்றிய அறிவு), கர்மம் (செய்யப்படும் கர்மம்), கர்த்தா (கர்மத்தைச் செய்பவன்) ஆகிய ஒவ்வொன்றும் முக்குணங்களையிட்டு மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.
    20 ஸாத்விக ஜ்ஞாநத்தின் விளக்கம்.
    21 ராஜஸ ஜ்ஞாநத்தின் விளக்கம்.
    22 தாமஸ ஜ்ஞாநத்தின் விளக்கம்.
    23 ஸாத்விக கர்மத்தின் விளக்கம்.
    24 ராஜஸ கர்மத்தின் விளக்கம்.
    25 தாமஸ கர்மத்தின் விளக்கம்.
    26 ஸாத்விக கர்த்தாவின் விளக்கம்.
    27 ராஜஸ கர்த்தாவின் விளக்கம்.
    28 தாமஸ கர்த்தாவின் விளக்கம்.
    29 புத்தி, த்ருதி ஆகியவை குணத்தையிட்டு மூவகைப்படும் என்று கூறுதல்.
    30 ஸாத்விக புத்தியின் விளக்கம்.
    31 ராஜஸ புத்தியின் விளக்கம்.
    32 தாமஸ புத்தியின் விளக்கம்.
    33 ஸாத்விக த்ருதியின் விளக்கம்.
    34 ராஜஸ த்ருதியின் விளக்கம்.
    35 தாமஸ த்ருதியின் விளக்கம்.
    36,37 ஸுகம் குணத்தையிட்டு மூவகைப்படுவதை விளக்கத் தொடங்கி ஸாத்விக ஸுகத்தின் விளக்கம்.
    38 ராஜஸ ஸுகத்தின் விளக்கம்.
    39 தாமஸ ஸுகத்தின் விளக்கம்.
    (ஶ்லோக 18 முதல் 39 வரையில் ஸத்வகுணமே கைக்கொள்ளத்தக்கது என்னும் விஷயம் விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்).
    40 பத்த ஜீவர்களில் இந்த முக்குணங்களிலிருந்து விடுபட்டவன் எவனுமில்லை.
    41 நாலு வர்ணத்தவர்களுக்கும் அவரவர் குலத்துக்கேற்றபடி தொழில்களையும், ஜீவனோபாயங்களையும் விளக்கத் தொடங்குதல்.
    42 ப்ராம்மணருக்குரிய செயல்கள்.
    43 க்ஷத்ரியருக்குரிய செயல்கள்.
    44 வைசிய, சூத்ரர்களுக்குரிய செயல்கள்.
    45 அவனவன் வர்ணத்துக்குரிய கர்மங்களில் நிலைநிற்பதால் மோக்ஷத்தையே அடையலாம் என்று விளக்கத் தொடங்குகிறான்.
    46 அந்தந்த வர்ணத்துக்குரிய கர்மம் பரமாத்மாவுக்கு ஆராதனமாகையால் மோக்ஷகாரணமாகும்.
    47 கர்மயோகமே ஜ்ஞானயோகத்தைக் காட்டிலும் சிறந்தது. அதை அநுஷ்டிப்பவன் ஸம்ஸாரத்தை அடையமாட்டான்.
    48 ஜ்ஞானயோகத்தைச் செய்யத் தகுதியுள்ளவனுக்கும் கர்மயோகத்தை அநுஷ்டிப்பதே சிறந்தது.
    49 கர்மயோகத்தை அனுஷ்டிப்பதாலேயே ஜ்ஞாநயோகத்தின் பலனாகிய தியான நிஷ்டையை அடையலாம்.
    50 இந்தத் தியான நிஷ்டையால் ஆத்மதரிசனத்தைப் பெறும் வழியைக் கூறத் தொடங்குதல்.
    51-53 ஆத்ம தரிசனத்தைப் பெறும் வழியைச் சுருக்கமாக விளக்குதல்.
    54 ஆத்ம ஸாக்ஷாத்காரத்தாலே பரமபுருஷன் விஷயத்தில் பரபக்தி விளையும்.
    55 பரபக்தியாலே பரமபுருஷனை உள்ளபடி அறிகையாகிற பரஜ்ஞாநத்தைப் பெற்று, அதற்குப் பின் அந்தப் பரபக்தியின் முற்றிய நிலையான பரமபக்தியாலே முக்தி நிலையில் பரமபுருஷனோடு ஸாயுஜ்யம் பெறுகிறான் ஜீவன்.
    56 காம்யகர்மங்களையும் முற்கூறியபடி மூன்று வகைப்பட்ட பரித்யாகத்தோடு அனுஷ்டித்தால் மோக்ஷபலனை அடையலாம்.
    57 ‘மூவகைப்பட்ட பரித்யாகங்களோடு என்னிடம் நெஞ்சை வைத்து உனக்குரிய யுத்தம் முதலான கர்மங்களைச் செய்வாயாக’ என்று அர்ஜுனனை நியமிக்கிறான்.
    58 ‘முற்கூறியபடி கர்மங்களைச் செய்தால் ஸம்ஸாரத் துன்பங்களைத் தாண்டலாம், செய்யாவிட்டால் ஆத்மநாசத்தையே அடைவாய்’ என்கிறான்.
    59 எப்படியாயினும் நீ போர் புரிவதைத் தவிர்க்க முடியாது என்கிறான்.
    60 நீ போர் புரிய மாட்டேன் என்று உறுதிகொண்டாலும் உன் சரீரம் உன்னைப் போர் புரியும்படி நியமித்துவிடும் என்கிறான்.
    (இதுவரையில் தனக்குரிய கர்மத்தால் மோக்ஷத்தையே அடையலாம் என்னும் விஷயம் விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்.)
    61 எல்லா உயிர்களும் ஸர்வேஶ்வரனான என்னால் ஹ்ருதயத்திலிருந்து பூர்வகர்மங்களை அநுஸரித்து சரீரத்தின் வழியில் செல்லும்படி நியமிக்கப்படு கிறார்கள் என்கிறான்.
    62 அந்தப் பரமாத்மாவான என்னையே எல்லாவகையாலும் சரணமடைவாய். என் அருளாலே எல்லாக்கர்மங்களிலிருந்தும் விடுபட்டுப் பரமபதத்தையும் அடைவாய் என்கிறான்.
    63 நான் இதுவரையில் மோக்ஷஸாதனமாகச் சொன்னவைகளில் உன் தகுதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்றதை நீ கைக்கொள்வாய் என்கிறான்.
    64,65 – 62வது ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட சரணாகதியை உடனே அர்ஜுனன் ஏற்றுக்கொள்ளாமையால் ப்ரவ்ருத்திபரனான அவனுக்கு பக்தியோகத்தை விதிக்கிறான்.
    66 சென்ற ஶ்லோகத்தில் விதிக்கப்பட்ட பக்தியோகத்திற்கு அங்கமாக சரணாகதி சொல்லப்படுகிறது.

    (இதுவரை கீதாபாஷ்யத்தையொட்டி 62வது ஶ்லோகம் முதல் 66வது ஶ்லோகம் வரை சுருக்கம் சொல்லப்பட்டது. கத்யங்களில் எம்பெருமானார் திருவுள்ளம் பற்றியபடி அவற்றின் சுருக்கம் பின்வருமாறு.)

    62. ஸர்வேஶ்வரனை ஜீவன் பற்றும் பற்றாகிற ஸ்வகத ஸ்வீகாரம் விதிக்கப்படுகிறது.
    63. கர்மஜ்ஞானபக்தி யோகங்கள், தான் பற்றும் பற்றில் உபாய புத்தியுடன் ஈஶ்வரனைச் சரணமடைவது ஆகிய இந்த மோக்ஷோபாயங்களில் ஏதாவதொன்றைக் கைக்கொள்வாய் என்கிறான்.
    64,65. அர்ஜுனன் வாளாவிருந்ததைக் கண்டு பக்தியோகமே அவனுக்குத் தக்கது என்று நினைத்து பக்தியோகத்தை அவனுக்கு விதிக்கிறான்.
    66. “ஸர்வஸ்வாமியாய், அனைவரையும் நியமிக்கும் எம்பெருமான் அவனுக்கு அத்யந்த பரதந்த்ரனான என்னிடம் என்னை ரக்ஷித்துக்கொள்ளும் பொறுப்பை விட்டுவிட்டானே’ என்று கலங்கிய அர்ஜுனனுக்கு ‘இந்த எல்லா உபாயங்களிலும் உபாயபுத்தியை வைக்காமல் என்னைச் சரணடைந்தால், நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கிறேன்” என்கிறான்.
    (கீதார்த்த ஸங்க்ரஹத்தில் இதுவே ஶாஸ்த்ரார்த்தம் எனப்பட்டது.)

    67 ‘நீ இவ்வர்த்தத்தை தகுதியில்லாதவர்களுக்கு உபதேசிக்காதே’ என்று கூறுகிறான்.
    68 ‘தகுதியுள்ளவர்களுக்கு இந்த ஶாஸ்த்ரத்தை அவசியம் பொருளுடன் உபதேசிக்க வேண்டும்’ என்றும், ‘அப்படி உபதேசிப்பவனுக்கு மோக்ஷபலனே ஸித்திக்கும்’ என்றும் கூறுகிறான்.
    69 ‘இந்த ஶாஸ்த்ரத்தை வ்யாக்யானம் செய்பவன் என்னிடம் பரமபக்தியை அடைந்து என்னையே அடைவான் என்று கூறியது பொருந்துமோ’ என்னும் ஐயம் எழ, ‘இந்த ஶாஸ்த்ரத்தை பக்தர்களுக்குத் தெரிவிப்பதாலேயே ஒரு மஹாத்மாவான ஜ்ஞாநியின் மனநிலையை பெற்றுவிடும் அந்த உபந்யாஸகனைக் காட்டிலும் எனக்கு இனியது செய்பவனோ இனியவனோ முக்காலத்திலும் வேறொருவன் இல்லையாகையாலே இது பொருந்தியதே” என்று சென்ற ஶ்லோகத்தை விளக்குகிறான்.
    70 “ஓர் ஆசார்யனிடமிருந்து இந்த ஶாஸ்த்ரத்தை அர்த்தத்தோடு கேட்பவன் உபாஸகஜ்ஞானியை ஒத்தவனாகிறான்” என்று கூறுகிறான்.
    71 “இந்த ஶாஸ்த்ரத்தை ஓர் ஆசார்யனிடமிருந்து (மூலத்தைக்) கேட்பதை மட்டும் செய்பவன் என்னிடம் பக்திக்குத் தடையான பாபங்கள் நீங்கப் பெற்று இதன் பொருளையும் உணரலாம்படி பக்தர்களின் கூட்டத்தில் சேரப்பெறுகிறான்” என்கிறான்.
    72 “இந்த ஶாஸ்த்ரத்தை ஒருமுகப்பட்ட மனத்தோடு கேட்டாயா? அறிவின்மையால் உனக்கு விளைந்த மயக்கம் தீர்ந்ததா?” என்று கண்ணன் அர்ஜுனனைக் கேட்கிறான்.
    73 “உன்னருளால் என்னுடைய விபரீதஜ்ஞாநம் அழிந்தது. உண்மையறிவை அடைந்து ஐயம் நீங்கப்பெற்று நிலைநின்றவனானேன். உன் வார்த்தைப்படி போர் புரிகிறேன்” என்று அர்ஜுனன் கூறுகிறான்.
    74-78 ஸஞ்ஜயன் திருதிராஷ்டிரனுக்கு “கண்ணனும் அர்ஜுனனும் இருக்குமிடத்தில்தான் வெற்றி” என்னும் தன்னுடைய அபிப்ராயத்தைக் கூறுகிறான்.
    கீதாஶ்லோகார்த்தச் சுருக்கம் நிறைவுற்றது.

    ———–

    த்ருதீய ஷட்கத்தின் ஸாரப் பொருள்:

    உடலுயிரின் றன்மை யுறுகுணத்தின் பன்மை
    யிடரிலெழி லீசன்ற னேற்றந் திடவசுரர்
    தேவ ரியல்வுகுணஞ் சேர்க்கருமண்ய் சார்ந்தமர்வு
    மாவனபின் னாறோத் தமர்ந்து.

    உடல் உயிரின் தன்மை – உடல் உயிர் ஆகியவற்றின் தன்மைகள்,
    உறு குணத்தின் பன்மை – உடலில் சேர்ந்திருக்கும் குணங்கள் மூன்றாயிருக்கை,
    இடரில் எழில் ஈசன் தன் ஏற்றம் – குற்றமற்ற நன்மைகளையுடைய ஈசனுடைய பெருமைகள்,
    திட அசுரர் தேவர் இயல்வு – (ஒவ்வொரு மனிதனை) உறுதியாகப் பற்றிநிற்கும் அசுரத்தன்மையும் தேவத்தன்மையும்,
    குணம் சேர் கருமம் சார்ந்து அமர்வும் ஆவன – குணத்துக்குத் தக்க கருமமுடைய நாலுவர்ணமும் ஆகியவற்றை,
    பின் ஆறு ஓத்து அமர்ந்து – கடைசியாக ஆறு அத்தியாயங்கள் கொண்ட த்ருதீய ஷட்கம் கூறுகிறது.

    ————-

    இங்கும் 32 ஸ்லோகங்கள் -32 பத்ததி பாதுகா சஹஸ்ரம் -32அதிகாரங்கள் ரஹஸ்ய த்ரயம் –

    இந்த 10 ஸ்லோகங்களால் தேறின கருத்துக்களைத் தொகுத்து அருளிச் செய்கிறான்-

    23) கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம்
    ஜ்ஞாந யோகோ ஜிதஸ்வாந்தை: பரிஶுத்தாத்மநி ஸ்திதி:

    கர்ம யோக: – கர்ம யோகமாவது,
    தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம் – தவம், தீர்த்த யாத்திரை, தானம், யஜ்ஞம் (யாகம்) முதலானவற்றில்
    இடைவிடாது ஈடுபடுதலே யாகும்.-பல பர்யந்தம் ஸேவை தொண்டு கைங்கர்ய ரூபமாகவே -13 வகைகள் கீழேயே பார்த்தோம் –
    ஜ்ஞாந யோக: – ஜ்ஞாந யோகமாவது,
    ஜித ஸ்வாந்தை: – தனது மனத்தை வென்றவர்களால்,
    பரி ஶுத்தாத்மநி ஸ்திதி: – ஶரீரத்தோடு தொடர்பற்ற தம் ஆத்மாவில் (இடைவிடாமல் சிந்திப்பதன் மூலம்) நிலை நிற்றலே யாகும்.

    இந்திரியங்களை மனசில் அடக்கி- -கூர்மம் போல் -ஆத்மா இடமே ஈடுபட்டு -திரும்ப திரும்ப அப்யாஸம் -இதன் ஏற்றமும் தாழ்ந்த அவற்றின் தோஷமும் அறிந்து -முழுவதும் அடங்கினால் தான் ஞான யோகம் கைகூடும் -கரணங்களை முழுவதும் அடக்க இயலாதவனுக்கு கர்ம யோகம் -திசை திருப்பி ஆத்மாவையே அனுபவிக்க வேண்டுமே -பரி ஶுத்தாத்மநி-நிஷ்க்ருஷ்ட ஆத்ம முக்த நிலை

    ————

    24) பக்தியோக: பரைகாந்த ப்ரீத்யா த்யாநாதி ஷூஸ்திதி:
    த்ரயாணாமபி யோகாநாம் த்ரிபி: அந்யோந்ய ஸங்கம:

    பக்தியோக: – பக்தியோகமாவது,
    பரைகாந்த ப்ரீத்யா – பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனிடமே செலுத்தப்பட்ட அன்போடு கூட,
    த்யாநாதிஷூ ஸ்திதி: – தியானித்தல், அர்ச்சனம் செய்தல், வணங்குதல் முதலானவற்றில் நிலைநிற்றலே யாகும்.
    த்ரயாணாமபி யோகாநாம் – கர்மம், ஜ்ஞாநம், பக்தி எனப்படும் மூன்று யோகங்களில்,
    த்ரிபி: அந்யோந்ய ஸங்கம: – ஒவ்வொரு யோகத்திலும் மற்ற இரண்டும் சேர்ந்திருக்கின்றன.

    முக் கரணங்களையும் அவன் இடமே ஈடுபடுத்தி

    த்யாநாதி ஆதி -பிராணாயாமம் அர்ச்சனை நாம சங்கீர்த்தனம்

    மஹநீய விஷய ப்ரீதியே பக்தி
    ஸ்நேஹம் -உயர்ந்தவன் தாழ்ந்தவன் இடம் கொண்ட அன்பு
    தசரதன் ராமன் இடம் உள்ள ஸ்நேஹமும் பக்தியும் எனக்கு உண்டு என்றானே திருவடி
    செயல்படுதல் -கர்ம -அறிவு -ஞானம் -அன்பு -பக்தி –
    த்யானம் அர்ச்சனம் பிரணாமம்-இதி கர்தவ்ய –
    அன்பு கலந்த -அநு த்யானம் -சிந்தனைத் தொடர்ச்சி –
    காதல் அவா வேட்க்கை அன்பு அபி நிவேசம் -ஸூ ஸூகம் கர்தவ்யம் -ஸ்வயம் ப்ரயோஜன பக்தி
    ஷூஸ்திதி-ஆ பிரயாணாதி-பல பர்யந்தம் நிலை நிற்க வேண்டுமே

    த்ரிபி: அந்யோந்ய ஸங்கம: – கர்ம யோகம் செய்ய ஆத்ம பரமாத்ம ஞானமும் உண்டே -வறட்டு த்யானம் இல்லாமல் அன்புடன் செய்ய வேண்டுமே –
    பக்திக்கு செயல்பாடுகள் உண்டே -அந்யோன்யம் ஒன்றுக்கு ஓன்று இருக்குமே –

    தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் -தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஓத்தே -ஸர்வ ரஸ –

    ———–

    25) நித்ய நைமித்திகாநாம் ச பராராதந ரூபிணாம்
    ஆத்ம த்ருஷ்டேஸ்த்ர யோப்யேதே யோக த்வாரேண ஸாதகா:

    பராராதந ரூபிணாம் – பரமபுருஷனுக்கு ஆராதனமாயிருக்கும்,
    நித்ய நைமித்திகாநாம் ச – நித்ய நைமித்திக கர்மங்களுக்கும்,
    (த்ரிபி: ஸங்கம: – மூன்று யோகங்களிலும் சேர்த்தி யுண்டு),
    ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களும்,
    யோக த்வாரேண – (மனம் ஒருமுகப் பட்டிருக்கையாகிற) ஸமாதி நிலையை விளைப்பதன் மூலம்,
    ஆத்ம த்ருஷ்டே – ஆத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு,
    ஸாதகா: – உபாயங்களாகின்றன.

    பக்தி யோகம் ஆத்ம சாஷாத்காரத்துக்கு சாதகம் ஆகுமோ -ஆத்ம தர்சனத்துக்குப் பின்னே தான் –
    பக்தி பிறந்து பரமாத்மா ப்ராப்யம் என்றால் -அது பர பக்தி தசை
    ஆத்ம ஸ்வரூபம் உணர்ந்து சேஷத்வ பாரதந்த்ர ஆகாரம் உணர சாமான்யமான பக்தி வேண்டுமே அத்தைச் சொல்கிறது இங்கு
    நித்ய நைமித்திக கர்மங்கள் -ஸூர்யாதி அந்தர்யாமி யான பர ப்ரஹ்மம் குறித்தே செய்வதாகவே அனுசந்தானம் –
    பரிமித பலம் தானே தேவதாந்த்ரங்கள் தர முடியும் -அல்பம் அஸ்திரம் –
    பரன் திறம் அன்றி மற்று தெய்வம் இல்லையே -சரீர பூதர்களே –
    உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
    ஸாஷாத் ஸப்தமே அவனையே குறிக்கும் -அக்ர நயன அக்னி -பரம ஐஸ்வர்யம் இந்திரன் –

    ஆத்ம சாஷாத்காரம் அடைந்த பின்பே பக்தி யோகம்
    இங்கு ஆரம்ப நிலை பக்தி

    ———

    26)  நிரஸ்த நிகில அஜ்ஞாந: த்ருஷ்ட்வா ஆத்மாநம் பராநுகம்
    ப்ரதிலப்ய பராம் பக்திம் தயா ஏவ ஆப்நோதி தத் பதம்

    நிரஸ்த நிகில அஜ்ஞாந: – (உபாயத்திற்குத் தடையான) எல்லா அஜ்ஞானங்களும் நீங்கப் பெற்றவனாய்,
    பராநுகம் – பரம புருஷனுக்கு அடிமைப் பட்டிருக்கும்,
    ஆத்மாநம் – தன் ஸ்வரூபத்தை,
    த்ருஷ்ட்வா – கண்டு (அதன் விளைவாக),
    பராம் பக்திம் – பர பக்தியை,
    ப்ரதி லப்ய – அடைந்து,
    தயா ஏவ – அந்த மேலான பக்தியாலேயே,
    தத் பதம் – அந்த எம்பெருமானுடைய திருவடிகளை,
    ஆப்நோதி – அடைகிறான்.

    அஞ்ஞானம் விலகி -ஆத்ம தர்சனம் -பர பக்தியாலேயே -அது முதிர்ந்து பர ஞானம் பரம பக்தி நிலை வந்த பின்பே ப்ராப்யம்
    உபாசகனுக்கு பர பக்திக்கும் பர ஞானத்துக்கும் நெடு காலம் விளம்பம் உண்டே –
    பிரபன்னனுக்கு ப்ராப்திக்கு முன்னே ஸித்திக்கும்-அர்ச்சிராதி மார்க்கம் -ஸ்வயம் ப்ரயோஜன பக்தி நிஷ்டனுக்கும் இதே போல் ஆகும் –
    ஆத்மாவை சேஷம் என்றே ஆதரிக்கும் பூ மணம் ரத்னம் ஒளி போல் -அடியேன் உள்ளான் -உடல் உள்ளான் –

    சென்று சென்று பரம் பரமாய் -அன்ன மயம் தொடங்கி மேல் மேல் தாஸ பூத ஸ்வாபாவிக சேஷ பூதனான இவன் -ஞான ஆனந்த மயன் என்று உணர வேண்டும் -சேஷத்வமே அந்தரங்க ஸ்வரூபம்

    ———

    27) பக்தி யோகஸ் ததர்த்தீ சேத் ஸமக்ரைஶ்வர்ய ஸாதக:
    ஆத்மார்த்தீ சேத் த்ர யோப்யேதே தத் கைவல்யஸ்ய ஸாதகா:

    பக்தி யோக: – பக்தி யோகமானது,
    ததர்த்தீ சேத் – மிகச் சிறந்த செல்வத்தை விரும்பினவனாகில்,
    ஸமக்ரைஶ்வர்ய ஸாதக: – மிகச் சிறந்த செல்வத்தை யளிக்கும்.
    ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களுமே,
    ஆத்மார்த்தீ சேத் – ஆத்ம ஸ்வரூபத்தை அநுபவிக்க விரும்பினானாகில்,
    தத் கைவல்யஸ்ய ஸாதகா: – ஆத்ம மாத்ர அநுபவத்தை அளிக்கக் கூடியவை.

    பிரதிபத்தி வைசிஷ்யாத் –யதோ உபாசனம் ததோ பலம் -கதி த்ர்ய மூலத்வாத்-

    மெய்யானாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் பொய்யனாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்

    யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணுவை ஆராதித்து நான்முகன் ப்ராப்யம் அடைகிறான் –

    தன்னையே ஆஹுதியாகக் கொடுத்து ருத்ரன் பதவி பெற்றான்-ப்ரசாதத்தில் இருந்து நான்முகன் கோபத்தில் இருந்து ருத்ரன் –

    கேவலம் -ஐஸ்வர்ய பகவத் அனுபவம் கலசாமல் ஆத்ம அனுபவம் ஒன்றே -ப்ராப்யமாகவே பகவானைப் பற்றினவன்

    ————-

    28) ஐகாந்த்யம் பகவத் யேஷாம் ஸமாநமதி காரிணாம்
    யாவத் ப்ராப்தி பரார்த்தீசேத் தத் ஏவ அத்யந்தம் அஶ்நுதே

    ஏஷாம் அதிகாரிணாம் – இந்த மூன்று வகைப்பட்ட அதிகாரிகளுக்கும்,
    பகவதி – எம்பெருமானிடம்,
    ஐகாந்த்யம் – மற்ற தெய்வங்களைத் தொழாமல் அவன் ஒருவனையே தொழுமவர்களாயிருக்கும் பக்தி,
    ஸமாநம் – பொதுவானது;
    யாவத் ப்ராப்தி – பலனை அடைவதற்குள்,
    பரார்த்தீசேத் – (ஐஶ்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும்) பரம ப்ராப்யமான பரம புருஷனின் திருவடிகளை
    அடைய விரும்பினானாகில்,
    தத் ஏவ – அந்தத் திருவடியையே,
    அத்யந்தம் – எப்போதும்,
    அஶ்நுதே – அடைகிறான்.
    (உபாஸக ஜ்ஞானி பலனை அடையும் வரையில் எம்பெருமானையே விரும்பினானாகில்,
    அவன் திருவடியையே என்றும் அடைகிறான்.)

    யாவத் பிராப்தி -அடைவதற்குள் -ஸூ பாஸ்ரயமான திரு மேனி அவர்கள் மனமும் மாறும் படி வைக்கும் அன்றோ -இங்கு புத்தி மாற வேண்டும்
    அடையும் வரையில் -தியானம் பண்ணினால் தான் பேறு என்றுமாம் -இங்கு புத்தி ஸ்திரமாக இருக்க வேண்டும் –

    ———–

    29) ஜ்ஞாநீ து பரமைகாந்தீ தத் யாதத்த ஆ த்ம ஜீவந:
    தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்கஸ் ததேக தீ:

    பரமைகாந்தீ ஜ்ஞாநீ து – பரமைகாந்தியான ஜ்ஞாநியோவெனில்,
    தத் யாதத்த ஆ த்ம ஜீவந: – எம்பெருமானையே பற்றி நிற்கும் தன் வாழ்வை யுடையவனாய்,
    தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்க: – அந்த எம்பெருமானோடு சேர்ந்தால் இன்பத்தையும்,
    அவனைப் பிரிந்தால் துன்பத்தையும் அடைபவனாய்,
    ததேக தீ: – அவன் ஒருவனிடமே தன் அறிவை வைத்தவனாய் இருப்பவன்.

    து -கீழ் சொன்னவர்களை விட வியாவ்ருத்தி ஸ்வயம் ப்ரயோஜன பக்தன் –

    இதுவரை ஏகாந்திகள் –கடைசி நான்கு ஸ்லோகங்களால் – பரம ஏகாந்தி –மிகவும் ஒருமுகப்பட்ட அதிகாரி -ப்ரபன்னர்கள்-

    தேவதாந்த்ர பரன் -ப்ரயோஜனாந்தர பரன் -ஸூய முயற்சியால் பகவத் லாபார்த்தி-அனைவரிலும் ஸ்ரேஷ்டன்
    வைப்பும் வாழ்வும் அவனே
    தனியேன் வாழ் முதல்
    தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து தாளிணைக் கீழ் வாழ்ச்சி
    ஊனில் உயிரில் உணர்வில் -அவனே –
    தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே
    உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று
    பத்ரு போகத்தை விலைக்கு உறுப்பு ஆக்க மாட்டான் –
    தழுவி முழுசி அணைக்க -முக் கரணங்களாலும் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை
    கடியேன் கொடியன் நெடிய மால் மாயத்தன் –ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவனே என்று கிடக்கும் -தத் ஏக தீ -இங்கு

    ——————-

    30) பகவத் த்யாந யோகோக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை:
    லப்தாத்மா தத் கத ப்ராண மநோ புத்தீந்த்ரிய க்ரிய:

    பகவத் த்யாந யோக உக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை: – எம்பெருமானைத் தியானிப்பது, காண்பது, அவனைப் பற்றிப் பேசுவது,
    அவனை வணங்குவது, துதிப்பது, திரு நாம ஸங்கீர்த்தனம் செய்வது ஆகியவற்றால்,
    லப்தாத்மா தத் கத ப்ராண மநோ புத்தி இந்த்ரிய க்ரிய: – எம்பெருமானிடம் ஈடுபட்ட ப்ராணன், மனம், புத்தி, இந்த்ரியங்கள் ஆகியவற்றின் செயல்களை உடையவன்.-லப்தாத்மா-இவற்றாலேயே தரித்து இருக்கிறான்-

    போற்றி புகழ்ந்து வருவதையே ஸ்துதி கீர்த்தனை இங்கு
    இவை எல்லாம் செய்ததாலேயே சத்தை லப்த ஆத்மா
    முக் கரணங்களும் ஈடுபட்டு -ப்ராண மநோ புத்தீந்த்ரிய க்ரிய:-பஞ்ச பிரயாணங்கள்
    அத்யவசாயம் புத்தி உறுதி -அபிமானம் அஹங்காரம் சித்தம் நினைக்கும் -மனசின் வியாபாரங்கள்
    பஞ்ச பிராணங்கள் –
    சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
    ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ ஸ்மரணம் பாத சேவகம் –இத்யாதி -பிரகலாதன்
    அக்னியில் பிராமணர் களுக்கு -யோகிகளுக்கு ஹ்ருதயத்தில் -ஸர்வத்ர சம தர்சனருக்கு எங்கும் -நம் போல்வாருக்காகவே அர்ச்சை பிரதிமாஸூ அப்ரபுத்தர்
    பாஹ்ய யோ திரிவனே -எண் திசையும் அறிய இயம்புவேன்
    வாசித்தும் எழுதியும் பூசித்தும் போது போக்கினேன் தரித்து இருந்தேன் -திருமழிசை ஆழ்வார்
    ராக பிராப்தம் அன்றோ -ஓன்று ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்புமே -சஷுஸ் ஸ்ரவா -கட்ச்செவி
    காலும் எழா கண்ண நீரும் எழா -ஆடி ஆடி அகம் கரைந்து –

    உயிர் முதலாய் வாழ் முதலாய் மகிழ் முதலாய் கொள்கிறானே -மாயா சிரஸ் -நான் இருக்க பெருமாள் இருக்கிறார் -அறிகிறேன் சத்தயா தாரகம்
    அன்று எனக்கு பட்டினி நாளே -செல்கின்றது என் நெஞ்சமே -மனமும் கண்ணும் ஓடி அங்கு அணைந்ததே

    ——————

    31) நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித:
    உபாயதாம் பரி த்யஜ்ய ந்யஸ்யேத் தேவே து தாமபீ:

    நிஜகர்மாதி – தனது வர்ணாஶ்ரமங்களுக்குரிய கர்மம் தொடக்கமாக,
    பக்த்யந்தம் – பக்தி ஈறாகவுள்ள அனைத்தையும்,
    உபாயதாம் பரித்யஜ்ய – இவை ‘உபாயம்’ என்னும் எண்ணத்தைக் கை விட்டு,
    ப்ரீத்யா ஏவ காரித: – (வகுத்த ஸ்வாமியைப் பற்றியவை என்னும்) அன்பாலே தூண்டப்பட்டவனாய்,
    குர்யாத் – (பரமை காந்தியான ஜ்ஞாநி) செய்யக் கடவன்;
    அபீ: – பயமற்றவனாய்,
    தாம் – அந்த உபாயத்வத்தை,
    தேவே து – எம்பெருமானிடமே,
    ந்யஸ்யேத் – அநுஸந்திக்க வேண்டும்.

    சரம ஸ்லோகார்த்தம்
    ப்ரீதியாலேயே தூண்டப்பட்டு-வர்ணாஸ்ரம கர்மங்களை-பக்தி பர்யந்தம் ஆஜ்ஜா ரூபம் -ஆராதன ரூபம் -சிஷ்டாசாரம் – கைங்கர்ய ரூபம் -கர்மம் பரிணாமம் –
    வகுத்த ஸ்வாமி -ப்ராப்தம் -செய்கிறான் -ஆசையால் -போஜனத்துக்கு ஷுத்து பசி போல் -உபாயமாக இல்லாமல் –பல அனுபவ யோக்யதா ஆ பாதமாகவே செய்கிறான்

    தர்ம ஸ்வரூபம் விட மாட்டான் – பலம் முன்பே விட்டான் உபாய புத்தி விடுகிறான் -பரந்த ரஹஸ்யம் பெரியவாச்சான் பிள்ளை
    கிருபை ஜன்யம் என்கிற புத்தி கூடாதே -கிருபையாலேயே தூண்டப்பட்டு செய்கிறான்
    பல கரண கருவி உபாயம் -பக்தி என்று நினையான் – தூண்டும் அவனே கொடுக்கிறான் -பல ப்ரதனும் அவனே என்று எண்ணுகிறான்

    ————

    அத்தியாயங்களின் ஸாரப் பொருள்:

    1-2.9 உறவினர்களிடம் தகாத அன்பினாலும், கருணையினாலும், தனக்கு தர்மமான யுத்தத்தை அதர்மம் என
    நினைத்துக் கலங்கிச் சரண் அடைந்த அர்ஜுனனைக் குறித்து அவனது மயக்கம் தெளிவடைவதற்காக
    ஸ்ரீ கீதா ஶாஸ்த்ரம் தொடங்கப்பட்டது.

    2 ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவுடையவனாய், கர்ம யோகத்தை அநுஷ்டிப்பவனுக்கு ஸ்திதப்ரஜ்ஞ நிலை எனப்படும்
    ஜ்ஞாந யோகம் ஏற்பட்டு, அது நிறைவடைந்தால் ஆத்மா (மனத்தால்) நேரே காணப் படுகிறது.

    3 ஜ்ஞாந யோகத்தை அநுஷ்டிக்க ஶக்தி யில்லாதவனும், ஶக்தி யிருந்த போதிலும் சான்றோனாகப் புகழ் பெற்றவனும்,
    தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை (செயல் புரியும் தன்மையை) குணங்களிலோ, ஸர்வேஶ்வரனிடமோ சேர்ப்பதாகிற
    கர்த்ருத்வ த்யாகத்தைச் செய்து, மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல் கர்மங்களைச் செய்வதாகிற
    (ஞானத்தோடு கூடிய) கர்ம யோகத்தை அநுஷ்டிப்பதாலேயே ஆத்ம ஸாக்ஷாத்காரத்தை அடையலாம்.

    4 1.அவதார ரஹஸ்யஜ்ஞானம்.
    2. ஞானத்தை உள்ளடக்கிய கர்மயோகம் ஞான யோகமாகவே யுள்ளது.
    3. கர்ம யோக ஸ்வரூபம்.
    4. அதன் வகைகள்.

    5 1.கர்மயோகம் செய்வதற்கு எளியது; ஜ்ஞாநயோகத்தைக் காட்டிலும் விரைவில் ஆத்மஸாக்ஷாத்காரமாகிற பலனை அளிப்பது.
    2. அந்த கர்மயோகத்தின் அங்கங்கள்.
    3. ஶுத்தமான (ஶரீர ஸம்பந்தமற்ற) ஆத்மாக்கள் அனைவரும் ஸமமாயிருப்பவர்கள் என்று காண்பதற்கு உறுப்பான கர்ம யோகியின் நிலை.

    6 1-ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தைப் பழகும் முறை.
    2.ஆத்ம ஸாக்ஷாத்காரம் செய்யும் யோகிகளில் நாலு வகை.
    3. அவ் வாத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு ஸாதனமாயிருக்கும் அப்யாஸம்(சிந்தநம்), வைராக்யம் முதலானவை.
    4. தொடங்கிய யோகம் இடையில் தடைப் பட்டாலும், அடியோடு அழிந்து விடாமல் கால க்ரமத்தில் ஸித்தி யடையும்.
    5. ஸர்வேஶ்வரனை விஷயமாகக் கொண்ட பக்தி யோகம் முற்கூறிய ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற யோகத்தைக் காட்டிலும் சிறப்புற்றது.

    7 -1. பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவு.
    2.அது ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் ஜீவர்களுக்கு மறைக்கப் பட்டுள்ளது.
    3.பரம புருஷனை ஶரணமடைவதால் அம் மறைவு நீங்கும்.
    4.பக்தர்களில் நாலு வகை.
    5.இந் நால்வரில் ஞானியின் சிறப்பு.

    8 -ஐஶ்வர்யத்தை அல்லது கைவல்யத்தை அல்லது பரம புருஷனை அடைய விரும்புகிறவர்கள் அறிய வேண்டியவைகளும்,
    கைக் கொள்ள வேண்டியவைகளும் யாவை என்பதன் விளக்கம்.
    (பரமபுருஷனே ப்ராப்யம், ப்ராபகம், தாரக போஷக போக்யங்கள் முதலான எல்லாமாயிருப்பவன் என்று உணர்ந்த ஞானிக்கு
    உபாயாநுஷ்டாநம் எதையும் எதிர்ப்பாராமல் எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபையாலேயே
    மோக்ஷம் கிடைக்கிறது என்பது 7-8 அத்தியாயங்களின் பரம ஸாரம்.)

    9 (1) எம்பெருமானுடைய பெருமை, (2) மனிதனாயிருக்கும்போதே மேன்மையுடையவனாயிருக்கை,
    (3) ஜ்ஞானிகளுக்குள்ள சிறப்பு, (4) பக்தியோக மெனப்படும் உபாஸனம் ஆகியவை விளக்கப்பட்டது.

    10 ஸாதந பக்தி உண்டாகி வளர்வதற்காக, தனது கல்யாண குணங்கள் அளவற்றவை என்றும்,
    எல்லாப் பொருள்களும் தனக்கு வசப்பட்டவை என்றும் விரிவாக உபதேசிக்கப்பட்டது.

    11 (1) தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண் அர்ஜுனனுக்குக் கண்ணனால் கொடுக்கப்பட்டது.
    (2) பரம்பொருளை அறிவது, காண்பது, அடைவது ஆகியவை பக்தி ஒன்றையே காரணமாகக் கொண்டவை என்று சொல்லப்பட்டது.

    12 (1) ஆத்மாவைப் ப்ராப்யமாக நினைத்து உபாஸிப்பதை காட்டிலும், பகவானை ப்ராப்யமாக நினைத்து உபாஸிக்கிற பக்தியின் சிறப்பு.
    (2) இந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தல்.
    (3) பக்தியில் சக்தியில்லாதவன் ஆத்மாவையே உபாஸிக்க வேண்டும்.
    (4) கர்மயோகம் அனுஷ்டிப்பவர்கள் கைக்கொள்ள வேண்டிய ஆத்மகுணங்கள்.

    13 (1) தேஹத்தின் ஸ்வரூபம், (2) ஜீவாத்மஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயம், (3) ஆத்மாவை ஆராய்ந்து அறிதல்,
    (4) ஆத்மாவுக்கு அசித்தோடு தொடர்பு ஏற்படுவதற்குக் காரணம், (5) ஆத்மாவை அசித்திலிருந்து பிரித்து அனுஸந்திக்கும் முறை.

    14 (1) ஸத்வம் முதலான மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்திற்குக் காரணமாகும் முறை.
    (2) அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மை.
    (3) அந்த குணங்களை நீக்கும் முறை.
    (4) ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத் ப்ராப்தி என்னும் மூன்று பலன்களும் எம்பெருமானிடமிருந்தே கிடைக்கின்றன.

    15 அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்தஜீவனைக் காட்டிலும், ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப்
    பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும், (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும், (அவர்களைத்) தாங்குகையாலும்,
    (அவர்களை) உடையவனாயிருக்கையாலும் வேறுபட்டவன் புருஷோத்தமனான நாராயணன்.

    16 (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டா நத்தையும் பற்றிய அறிவு உறுதிப்படுவதற்காக,
    (மனிதர்களுக்குள்) தேவப்பிரிவு, அஸுரப்பிரிவு என்னும் இருபிரிவுகள் இருப்பதை விளக்கிய பின்
    மனிதன் சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மையை விளக்குதல்.

    17 (1) ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும் அஸுரர்க்குரியது; ஆகையால் பயனற்றது.
    (2) ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம் ஸத்வரஜஸ்தமோ குணங்கள் மூன்றையிட்டு மூன்றுவிதமாய் இருப்பது.
    (3) “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள் ஶாஸ்த்ர விஹித கர்மங்களோடு சேர்வதன் மூலம்
    (அவற்றை மற்ற கர்மங்களினின்று வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன.

    18 (1) கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவு அவசியம்.
    (2) ஸத்வகுணம் கைக் கொள்ளத் தக்கது.
    (3) முற்கூறிய நினைவுடன் அனுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் மோக்ஷமாகும்.
    (4) இந்த ஸ்ரீ கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்தி ப்ரபத்திகள்.

    ————————-

    ஸ்ரீ கீதை பதினெட்டு அத்தியாயங்களின் பரம ஸாரப்பொருள்:

    32) ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதிஸ் தத் பதமாப்நுயாத்
    தத் ப்ரதாநமிதம் ஶாஸ்த்ரமிதி கீதார்த்த ஸங்க்ரஹ:

    ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதி – எம்பெருமானுடைய முக மலர்த்தியையே பயனாகக் கொண்டதாய்,
    எல்லாக் காலத்திலும் செய்யப்படுவதான அடிமையையே விரும்புகின்ற பரமைகாந்தி,
    தத் பதம் – (அவ்வடிமைக்குறுப்பாக) எம்பெருமானுடைய திருவடிகளை,
    ஆப்நுயாத் – அடைவான்;
    இதம் ஶாஸ்த்ரம் – இந்த கீதா ஶாஸ்த்ரம்,
    தத் ப்ரதாநம் – சேதனனைப் பரமை காந்தி யாக்குவதை முக்கியமான குறிக்கோளாகக் கொண்டது.
    இதி – இவ் வண்ணமாக,
    கீதார்த்த ஸங்க்ரஹ: – கீதையின் பொருளை சுருக்கிக் கூறும் ‘கீதார்த்த ஸங்க்ரஹம்’ என்னும் நூல் நிறைவு பெறுகிறது.

    நாஸ்திகனாய் இருப்பவனையும் பரம ஏகாந்தியாக்கும் கீதை என்பதே கீதார்த்த சாரம்
    அவன் ஆனந்தத்துக்காகவே -ஏகாந்தம் -அத்யந்தம் -முக மலர்த்தியே அனைத்து செயல்களையும் செய்கிறான்
    தாஸ்யம் ஏக ஆசை கொண்டவன்
    மஹா க்ரம -செங்கண் சிறு சிறிதே விழித்து மேலே மேலே கூட்டிப் போகிறான்
    வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே
    ஒழிவில் காலம் எல்லாம் வழு விலா அடிமை செய்யப் பெறுவேன் ஆக வேண்டும்
    ஸத்வ நிஷ்ட சம் ப்ரதாயம் -பரம்பரா -திரு உள்ளத்துக்கு ஏற்றது -யோக மஹிமை -முமுஷுக்களுக்கு சிறந்த பொக்கிஷம்
    நாதனுக்கு நாலாயிரம் அளித்து உள்ளம் கையில் நெல்லிக்கனி போல் ஸ்வரூப ரூப விபூதி குணங்களை கண்டு அவற்றை
    மணக்கால் நம்பி மூலம் பெற்ற அர்த்தங்கள் இவையே

    ————–

    ஸ்ரீ எம்பெருமானே ப்ராப்யம் ப்ராபகம் முதலான அனைத்தும் என்னும் உறுதியுடன்,
    அவனிடம் ஸ்வயம் ப்ரயோஜன பக்தி செய்யும் பரமை காந்திக்கு எம்பெருமான் பரம மோக்ஷத்தை நிர் ஹேதுகமாக அருளுகிறான்;
    கர்ம யோகம் முதலான உபாயங்கள் அனைத்தும் இத்தகைய பரமை காந்திகளை உருவாக்கும் வழிகளே.

    ஸ்ரீ கீதை அத்யாய ஸாரார்த்தம் நிறைவுற்றது.

    ——————-

    ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்–

    ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
    வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

    கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
    ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

    சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
    பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
    தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
    வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

    ——————————————————————–

    சிறப்புத் தனியன் –

    கட்டப் பொருள் விரித்த காசினியில் நான் மறையின்
    இட்டப் பொருள் இயம்பும் இன்பொருளைச் சிட்டர் தொழும்
    வேதாந்த தேசிகனை மேவுவார் தங்கள் திருப்
    பாதாம் புயம் அடியேன் பற்று –

    கட்டப்பொருள் -அறிவதற்குக் கடினமான அர்த்தங்களை
    சிட்டர்-பெரியோர்கள் –

    கீதை மொழிந்து அருளும் வேதாந்த தேசிகனார்
    பாதார விந்த மலர் பற்று –

    பற்று -அனைவருக்கும் தஞ்சமாகும்

    —————————————————————

    கருமமும் ஞானமும் கொண்டு எழும் காதலுக்கு ஓர் இலக்கு என்று
    அருமறை யுச்சியுள் ஆதரித்து ஓதும் அரும் பிரஹ்மம்
    திருமகளோடு அரும் திருமால் என்று தான் உரைத்தான்
    தருமம் உகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே –1-

    கருமமும் ஞானமும் கொண்டு -முதல் ஷட்கத்தின் அர்த்தமும்
    எழும் காதலுக்கு ஓர் இலக்கு என்று -இரண்டாம் ஷட்கத்தின் அர்த்தமும்
    அருமறை யுச்சியுள் ஆதரித்து ஓதும் அரும் பிரஹ்மம்-சேதன அசேதனங்களில் வேறுபட்ட ப்ரஹ்மம் -மூன்றாம் ஷட்கத்தின் முற்பகுதியின் அர்த்தம்
    திருமகளோடு அரும் திருமால் என்று தான் உரைத்தான் தருமம் உகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே –மூன்றாம் ஷட்கத்தின் பிற்பகுதியின் அர்த்தம் –

    ——————————————————————

    உகவை யடைந்த யுறவுடையார் பொரலுற்ற வந்நாள்
    தகவுடன் அன்பு கரை புரளத் தருமத்தின் அளவில்
    உளம் மிக அஞ்சி விழுந்து அடி சேர்ந்த விசயனுக்கொர்
    நகையுடன் உண்மை உரைக்க அமைந்தனன் நாரணனே –2–

    ——————————————————————

    உடலம் அழிந்திடும் உள் உயிர் ஓன்று அழியாது எனைப்போல்
    விடுமது பற்று விடாத தடைத்த கிரிசைகளே
    கடுக வுனக்கு உயிர் காட்டும் நினைவு அதனால் உளதாம்
    விடும் மயல் என்று விசயணத் தேற்றினான் வித்தகனே –3-

    இரண்டாம் அத்யாய சாரம் -ஜீவாத்மா நித்யம் – கர்ம பலனை அனுபவிக்க சரீரம் புகுந்து –
    பலனைக் கருதாமல் கர்மங்களில் பற்று வைக்காமல் பகவத் கைங்கர்யமாக பண்ண வேண்டும்-
    இத்தால் சர்வேஸ்வரனுக்கு சரீரமான ஆத்ம ஸ்வரூபத்தை இடைவிடால் சிந்தித்து -ஞான யோகம் –
    தேரில் பாகனாய் நின்ற போதே ஆசார்யனாகவும் நின்று உபதேசித்த அதிசயச் செய்கையை நினைந்து வித்தகன் என்று அருளிச் செய்கிறார் –

    ————————————————————————————

    சங்கம் தவிர்ந்து ஜகம் சதிர் பெற்ற தஞ்சயனே
    பொங்கும் குணங்கள் புணர்ப்பனைத்தும் புக விட்டவற்றுள்
    நம் கண் உரைத்த கிரிசை எலாம் எனவும் நவின்று
    எங்கும் அறிவார்களே என்று நாதன் இயம்பினனே -4-

    3 வது அத்யாய சாரம் –
    சங்கம் தவிர்ந்து–கர்ம பலங்களிலே பற்று விட்டு -பகவான் உடைய மகிழ்ச்சியே வேண்டும் அநந்ய பிரயோஜனராய்
    ஜகம் சதிர் பெற்ற தஞ்சயனே
    பொங்கும் குணங்கள் புணர்ப்பனைத்தும் புக விட்டவற்றுள்-மாறி மாறி வ்ருத்தி அடையும்
    சத்வம் ரஜஸ் தமஸ் குணங்களால் நிகழும் கார்யங்கள் எல்லா வற்றையும் அந்த குணங்களுக்குள் ஏற்றி வைத்து
    நம் கண் உரைத்த கிரிசை எலாம் – உரைத்த கிரிசைகள் -சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்கள் எல்லா வற்றையும்
    ஈஸ்வரனாகிய நம்மிடத்திலே சமர்ப்பிக்க வேண்டும்
    எனவும் நவின்றார் -என்று அனுசந்தித்த பெரியோர்கள்
    எங்கும் அறிவார்களே என்று நாதன் இயம்பினனே -எல்லாவற்றையும் அறிந்தவர்கள் ஆவார் என்று உபதேசித்து அருளினான் –

    ——————————————————————————————

    பிறவாமை தந்திடத் தானே பிறக்கும் பெருமைகளும்
    துறவாக் கிரிசைகள் தூ மதி தன்னால் துலங்குகையும்
    இறவா உயிர் நல் நிலை கண்டிடும் உலகின் நிலையம்
    மறை வாழும் மாயவன் நேயனுக்குக்கன்று அறிவித்தனனே –5-

    நான்காம் அத்யாய சாரம் –
    பிறவாமை தந்திடத் தானே பிறக்கும் பெருமைகளும் -திருவவதார ரகச்யங்களும்
    துறவாக் கிரிசைகள் தூ மதி தன்னால் துலங்குகையும்-விட முடியாத கர்மங்கள் பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றிய ஜ்ஞானத்தை
    தம்முள் அடக்கிக் கொண்டு இருப்பதால் ஜ்ஞான யோகமாக பிரசாத்தித்தலையும்-
    கிரிசைகள் பன்மை -தேவாத ஆராதனம் -இந்த்ரியங்களை அடக்குதல் -ப்ராணா யாமம் -யாகம் தானம் ஹோமம் தவம்
    புண்ய தீர்த்த ஸ்நானம் -புண்ய ஷேத்திர யாத்ரை -வேதம் கற்று கற்பித்தல் போல்வன
    இறவா உயிர் நல் நிலை கண்டிடும் உலகின் நிலையம் -அழிவற்ற ஆத்மாவின் நல்ல ஸ்வ பாவத்தை அறிந்த அதிகாரியின் மேன்மையையும்
    மறை வாழும் மாயவன் நேயனுக்குக்கன்று அறிவித்தனனே-வேதத்தால் போற்றப்படும் ஸ்ரீ கண்ணன்
    தனது நண்பனுக்கு பாரத போர் அன்று உபதேசித்து அருளினான் –

    —————————————————————————-

    கண்டு எளிதாம் கருமம் உயிர் காட்டக் கடுகுதலும்
    மண்டி யதன் படியில் மனம் கொள்ளும் வரிசைகளும்
    கண்டு அறியா உயிரைக் காணலுற்ற நினைவுகளும்
    வண் துவரேசன் இயம்பினன் வாசவன் மைந்தனுக்கே –6-

    ஐந்தாம் அத்யாய சாரம் –
    கண்டு எளிதாம் கருமம் சாஸ்த்ரங்களைக் கொண்டு அறிந்து அனுஷ்டிக்க ஸூ லாபமான கர்ம யோகம்
    ஞான யோகம் போலே கடினம் இல்லையே கர்ம யோகம் -செய்யச் செய்ய ரஜஸ் தமஸ் குணங்கள் நீங்கி ஆசை த்வேஷம் ஒழிந்து மனம் தெளியும்
    மனம் இந்த்ரியங்கள் தம் வசப்பட ஆத்மா சாஷாத்கார ஞானம் உண்டாகும்
    உயிர் காட்டக் கடுகுதலும் –ஆத்மாவைக் காட்டுவதற்கு விரைதலும்
    மண்டி யதன் படியில்-அந்த கர்மயோக பிரகாரன்களிலே ஈடுபட்டு
    மனம் கொள்ளும் வரிசைகளும் -மனத்தில் நினைக்க வேண்டிய பிரகாரங்களும்
    கண்டு அறியா உயிரைக் -நேரில் கண்டு அறிய முடியாத ஜீவாத்மாவின் ஸ்வ ரூபத்தை
    காணலுற்ற நினைவுகளும் -எங்கும் ஞான ஸ்வரூபமாக பார்க்கும் படியான பற்பக்வம் அடைந்த ஞானங்களும்
    வண் துவரேசன் இயம்பினன் -உபதேசித்து அருளினான் –வாசவன் மைந்தனுக்கே -இந்த்ரன் புத்ரனான அர்ஜுனனுக்கு –

    —————————————————————————————

    யோக முயற்சியும் யோகில் சமநிலை நால் வகையும்
    யோகின் உபாயமும் யோகுதனால் வரும் பேறுகளும்
    யோகு தனில் தன் நிறமுடை யோகு தன் முக்கியமும்
    நாகணை யோகி நவின்றனன் முடி வீரனுக்கே –7

    ஆறாம் அத்யாய சாரம் –
    பக்தி யோக விளக்கம் உபதேசித்து அருளினான் –

    ———————————————————————————

    தானின்ற யுண்மையைத் தன் தனி மாயை மறைத்தமையும்
    தானன்றி மாயை தனித் தவிர்ப்பான் விரகு அற்றமையும்
    மேனின்ற பத்தர்கள் நால்வரில் ஞானி தன் மேன்மைகளும்
    தேனின்ற செங்கழலான் தெளிவித்தான் பார்த்தனுக்கே –8-

    ஏழாம் அத்யாய சாரம்
    பத்தர்கள் நால்வரில்-ஆர்த்தான் -அர்த்தார்த்தி- ஜிஜ்ஞாஸூ-ஜ்ஞானி
    மாயை -பிரகிருதி –

    ————————————————————————–

    ஆராத செல்வமும் ஆருயிர் காணும் அரும் பயனும்
    பேராது தன் கழல் கீழ் அமரும் பெரு வாழ்ச்சிகளும்
    சோராது உகந்தவர் தூ மதி கொள்வதும் செய்வனவும்
    தேரா விசயனுக்குத் திரு நாரணன் செப்பினனே –9-

    8 அத்யாய சாரம்
    சோராது உகந்தவர் தூ மதி கொள்வதும் செய்வனவும் -மூவகை அதிகாரிகளும் -ஐஸ்வர்ய-கைவல்ய -பகவல்லாப -அதிகாரிகளும்
    குறைவு படாது பெற வேண்டும் என்று விரும்பிய அதிகாரிகள் பரிசுத்தமான தம் மனத்தால்
    அறிய வேண்டியனவும் -அனுஷ்டிக்க வேண்டியனவும் –

    —————————————————————————-

    தன் மேன்மையும் தன் பிறப்பில் தளராத் தனி நிலையம்
    பன்மேனி நன்னினன்பால் பிரியா வன்பர் ஆசைகளும்
    புன்மேனி விண்ணவர் பால் புரியாத தன் பத்திமையும்
    நன்மேனி நாராணன் நரனுக்கு நவின்றனனே–10-

    9 அத்யாய சாரம் –
    புன்மேனி விண்ணவர் பால் புரியாத தன் பத்திமையும் -அல்பமாய் அழிந்து போவதான
    தேவ யோனி கொண்ட விண்ணவர் தன் பால் செலுத்தாத பக்தி யோகமும் –

    —————————————————————————

    எல்லையிலாத தன் சீலமாம் இன்னமுதக் கடலும்
    எல்லையிலாத விபூதி எலாம் தனதானமையும்
    எல்லையில் பக்திதனை எழுவிக்கத் திருவருளால்
    எல்லையில் ஈசன் இயம்பினான் இந்திரன் மைந்தனுக்கே –11-

    10-அத்யாய சாரம் –

    ———————————————————————————–

    எல்லாம் தனக்கு உருவாய் இலங்கும் வகை தான் உரைத்துச்
    சொல்லால் அறிந்தது சோராமல் கண்டிட வேண்டும் என்ற
    வில்லாளனுக்கு அன்று மெய்க்கண் கொடுத்து இது வேறு உண்டோ
    நல்லார்கள் காண்பர் என்றும் நவின்றான் நங்கள் நாயகனே –12-

    11-அத்யாய சாரம் –
    மெய்க்கண் கொடுத்து இது வேறு உண்டோ -தன் ஸ்வரூபத்தை காண தெய்விக சஷூஸ் அருளி
    -இவ்வாறு தன்னை காண வேறு சாதனம் இல்லையே –

    ——————————————————————————–

    தன் கழலில் பத்தி தாழாததும் அதன் காரணமாம்
    இன் குண சிந்தையும் ஈது அறியார்க்கு அவ்வடிமைகளும்
    தன் கருமங்கள் அறியாதவற்கு இலகு நிலையும்
    தன் கழல் அன்பர்க்கு நல்லவன் சாற்றினன் பார்த்தனுக்கே –13-

    12 அத்யாய சாரம்

    ———————————————————————-

    ஊனின் படியும் உயிரின் பிரிவும் உயிர் பெறுவார்
    ஞானம் பெரு வகையும் ஞானம் ஈன்ற வுயிர்ப்பயனும்
    ஊன் நின்றதற்கு அடியும் உயிர் வேறிடும் உள் விரகும்
    தேனின்ற பாதன் தெளிவித்தனன் சிலைப் பார்த்தனுக்கே –14-

    13 அத்யாய சாரம் –
    ஊனின் படியும் -சரீரத்தினுடைய ஸ்வரூபமும்
    உயிரின் பிரிவும் -ஜீவாத்மா சாராரத்தைப் பிரிந்து நிற்கும் நிலையையும்
    உயிர் வேறிடும் உள் விரகும் -ஆத்மாவை சரீரத்தில் இருந்து வேறுபடக் காண்பதற்கு வேண்டிய மனத்தால் செய்ய வேண்டிய உபாயங்களையும் –

    ——————————————————————————————-

    முக்குணமே உயிர் முற்றவும் கட்டிட மூண்டமையும்
    முக்குணமே யனைத்தும் வினை கொள்ள முயன்றமையும்
    முக்குண மாயை கடத்தலும் முக்கதி தந்து அளிப்பும்
    முக்குணம் அற்ற பிரான் மொழிந்தான் முடியோன் தனக்கே –15-

    14-அத்யாய சாரம்
    முக்கதி தந்து அளிப்பும்-ஐஸ்வர்யம் கைவல்யம் மோஷம் ஆகிய மூன்று கதிகளையும் அருளி ரஷிக்கும் விதமும் –

    ——————————————————————————

    மூ வெட்டினும் மோகம் அடைந்த உயிர்களினும்
    நா வெட்டு எழுத்தோடு நல்வீடு நண்ணின நம்பரினும்
    மேவு எட்டு வன் குண விண்ணோர் களினும் விசயனக்குத்
    தாவிட்டு உலகு அளந்தான் தனை வேறு என்று சாற்றினனே –16-

    15 அத்யாய சாரம் –
    மூ வெட்டினும் -24 தத்வங்கள் ஆகிய பிரக்ருதியைக் காட்டிலும்
    மோகம் அடைந்த உயிர்களினும் -அதில் மோகம் அடைந்து அஜ்ஞானம் பெற்றுள்ள பத்த ஜீவர்களைக் காட்டிலும்
    நா வெட்டு எழுத்தோடு நல்வீடு நண்ணின நம்பரினும் -திரு அஷ்டாஷர அனுசந்தத்தால் சிறந்த மோஷத்தைப் பெற்ற சிறந்த முக்தர்களைக் காட்டிலும்
    மேவு எட்டு வன் குண விண்ணோர் களினும் -அபஹத பாப்மாதி எட்டு வலிய குணங்களை யுடைய நித்யர்களைக் காட்டிலும்
    விசயனக்குத் தாவிட்டு உலகு அளந்தான்
    தனை வேறு என்று சாற்றினனே-தன்னை வேறு பட்டவன் -புருஷோத்தமன் -என்று உபதேசித்து அருளினான் –

    ———————————————————

    ஆணை மாறாதவர் தேவர் அல்லா வழக்கோர் அசுரர்
    கோணை மராத குணச் செல்வா நீ குறிக்கோள் மறையைப்
    பேணிய தத்துவமும் பிணியற்ற கிரிசைகளும்
    காண் இதனால் விசயா வென்று கண்ணன் இயம்பினனே –17-

    16 அத்யாய சாரம்
    கோணை மராத குணச் செல்வா –வக்கிரத் தன்மை கலவாத குணமாகிய செல்வத்தை உடையவனே -இரண்டாவது மா ஸூ ச -அருளினான் –
    பேணிய தத்துவமும் -கொண்டாடப்படும் பரதத்வமும்
    பிணியற்ற கிரிசைகளும் -பலனில் பற்று வைப்பதாகிய தீங்கு இல்லாத கர்மங்களும்
    காண் இதனால் விசயா வென்று -இந்த வேதத்தால் அறிந்து கொள் அர்ஜுனனே என்று உபதேசித்து அருளினான் –

    ————————————————————————-

    மறை பொருந்தாதவை வல் அசுரர்க்கு வகுத்தமையும்
    மறை பொருந்தும் நிலையின் வன் குணப்படி மூவகையும்
    மறை நிலை தன்னை வகுக்கும் குறி மூன்றின் மேன்மையுமம்
    மறை யுமிழ்ந்தான் உரைத்தான் வாசவன் தன் சிறுவனுக்கு –18-

    17 அத்யாய சாரம் –
    மறை நிலை தன்னை வகுக்கும் -வேதத்தில் விதிக்கப்பட்ட கர்ம அனுஷ்டானத்தை -மற்றவற்றின் நின்று வேறுபடுத்திக் காட்டுகின்ற –
    குறி மூன்றின் மேன்மையுமம் –ஓம் -தத் -சத் -என்ற மூன்று லஷணங்களின் உயர்வும் –

    ———————————————————————————-

    சத்துவ வீடுடை நல கருமம் தான் உகந்தமையும்
    சத்துவம் உள்ளது தான் குறிக்கொள் வகை செய்ததுவும்
    சத்துவ நல கிரிசைப் பயனும் சரணாகதியும்
    சத்துவமே தருவான் உரைத்தான் தனிப் பார்த்தனுக்கே –19-

    18 அத்யாய சாரம் –
    கர்த்ருத்வ மமதை இல்லாமல் பலன் சம்பந்தத்தையும் விட்டு -மூன்று வித த்யாகம்-
    பகவத் ஆராதனம் என்றே கருதி வர்ணாஸ்ரம கர்மங்களைச் செய்து -மனம் தெளிந்து -இடைவிடாமல் சிந்தித்து முக்தி அடையலாம் –

    ——————————————————————-

    வன் பற்று அறுக்கும் மருந்து என்று மாயவன் தான் உரைத்த
    இன்பக்கடல் அமுது ஆம் என நின்ற விக்கீதை தனை
    யன்பர்க்குக் உரைப்பவர் கேட்பவர் ஆதரித்து ஓய்ஹுமவர்
    துன்பக் கடலுள் துளங்குகை நீங்கித் துலங்குவரே–20-

    பலன் சொல்லி அருளுகிறார் –

    ——————————————————————————————-

    தீதற்ற நல் குணப் பாற்கடல் தாமரைச் செம்மலர் மேல்
    மாதுற்ற மார்வன் மருவ இன் கீதையின் வண் பொருளைக்
    கோதற்ற நான் மறை மௌலி யின் ஆசிரியன் குறித்தான்
    காதல் துணிவுடையார் கற்கும் வண்ணம் கருத்துடனே –21-

    நான் மறை மௌலி யின் ஆசிரியன்-வேதாந்த சாரியார் -என்றபடி –

    ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை

    1-ஸ்ரவண அதிகாரி முதல் அதிகார பிரதானம் -சோகம் உடையவன் -ப்ரபன்னனை உத்தேசித்து உபதேசம்
    2-தன் மோஹ சாந்தி -சமனம் –
    3-கர்மயோக கர்தவ்யத்வம்
    4-தத் அவாந்தர பேதம்
    5-தத் அந்தர்கத ஞான விபாஸம்
    6-யோக அப்யாஸ விதி
    7-பிரதி புத்த ப்ராதான்யம் -ஞானி மிக சிறந்தவன் – -தேஷாம் ஞானி
    8-த்ரிவித அதிகாரி -வேத்ய உபாதேய த்யாஜ்ய
    9-பக்தி யோகம்
    10-குணம் விபூதி பத்தாவதில்
    11-விஸ்வரூப தர்சன உபாயம் – உபகரணம் அருளுவது -சாஷாத்கார அவலோகநம் தத்தம் -ஆளவந்தார் -திவ்யம் சஷுஸ் ததாமி –
    12–பக்தி ஆரோக்ய க்ரமம் –
    13-விஸூத்த ஷேத்ரஞ்ஞ விஞ்ஞானம் –
    14-த்ரை குண்ய விசோதனம் -ஆகாரம் தபஸ் தானம் தேவதை -ஒவ்வொன்றுக்கும் முக்குண வகைகள்
    15-புருஷோத்தம வைலக்ஷண்யம் –
    16-சாஸ்த்ர வஸ்யத்வம் —
    17-சாஸ்திரீய விவேகநம்
    18-சாரம் உத்தேச்ய –
    இப்படி பிரதான்யங்களை தேசிகர் ஒவ்வொன்றாக அருளிச் செய்கிறார்

    ———————————————————————————————————

    ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ பாரதாதி தனி ஸ்லோகங்கள் வ்யாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்–

    August 2, 2024

    ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
    யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் சதா-

    பரம காருணீகர்
    வியாக்கியான சக்ரவர்த்தி
    ஸ்ரீ அருளிச் செயல்கள் –
    ஸ்ரீ ஸ்தோத்திரங்ககள் -ஸ்தோத்ர ரத்னம் –ஜிதந்தா -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவ தனி ஸ்லோக வியாக்கியானங்கள்
    ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோகங்கள்
    ஸ்ரீ பாரதாதி தனி ஸ்லோக வியாக்கியானங்கள்
    ஸ்ரீ வராஹ சரம ஸ்லோக -ஸ்ரீ விஷ்ணு புராண -ஸ்ரீ ஹரி வம்ச -தனி ஸ்லோக வியாக்கியானங்கள்

    ————–

    1-ஸ்ரீ விஷ்ணு புராணம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ததோ தத்ரு ஸூராயாந்தம் இத்யாதி -5 அம்சம் -13அத்யாயம் -43 ஸ்லோகம் –

    ததோ தத்ரு ஸூராயாந்தம் விகாஸி முக பங்கஜம்
    கோப்யாஸ் த்ரை லோக்ய கோப்தாரம் கிருஷ்ணம் அக்லிஷ்ட சேஷ்டிதம்
    –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5 வது அம்சம் -13-43-

    2-ஸ்ரீ ஹரி வம்சம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் –

    ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத ந -ஸ்ரீ ஹரி வம்சம் -113 அத்யாயம் -62 ஸ்லோகம் –

    3-ஸ்ரீ விஷ்ணு புராணம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -பராசரம் முநிவரம்-1 அம்சம் -1அத்யாயம் -1 ஸ்லோகம் –

    பராசரம் முநிவரம் க்ருத பௌர்வர்ண ஹிகக்ரியம்
    மைத்ரேய பரிபப்ரச்ச ப்ரணி பத்யாபி வாத்ய ச

    4–ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதி-உத்தர சதகம் -19 ஸ்லோகம் —

    ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதிர் உப குருதே ஸேதிஹாசை புராணை
    ந்யாயை  சார்த்தம் தவ தர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக
    ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ
    வேத்யோ வேதைஸ்ச சர்வைர் அஹமிதி பகவன் ஸ்வேன ஸ வியாச கர்த்த -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -உத்தர சதகம் -19 ஸ்லோகம் –

    5-ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் –

    ஸ்திதே மனஸி ஸூஸ்வதே சரீரே சதி யோ நர
    தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம்
    ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
    அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் –

    6-ஸ்ரீ மஹா பாரதம் த்ரௌபதி சரணாகதி ஸ்லோகம் – –

    சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத
    கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் –ஸ்ரீ மஹா பாரதம் -சபா பர்வம் -9- அத்யாயம் -43  –

    —————

    ஸ்ரீ மத் பாகவதம் 10 ஸ்கந்தம் -முழுவதுமே ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் போல் 5 அம்சம் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம்-

    ஸ்ரீ விஷ்ணு புராணம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் —ததோ தத்ரு ஸூராயாந்தம் இத்யாதி -5 அம்சம் -13அத்யாயம் -43 ஸ்லோகம் –

    பொறுக்கப் பொறுக்க அநுபவிப்பதற்காக கலந்து பரிமாறிய பிறகு கோபியரை விட்டுப் பிரிந்து விடுகிறான் கண்ணன்
    கண்ணனைப் பிரிந்த கோபிகள் நெடும் தூரம் தேடி அவனைக் கண்டபடி சொல்லும் ஸ்லோகம் இது

    ததோ தத்ரு ஸூராயாந்தம் விகாஸி முக பங்கஜம்
    கோப்யாஸ் த்ரை லோக்ய கோப்தாரம் கிருஷ்ணம் அக்லிஷ்ட சேஷ்டிதம்
    –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5 வது அம்சம் -13-43-

    தத–கண்ணனைத் தேடிக் காணாமல் திரும்பின பிறகு
    ஆயாந்தம் –வருகின்றவனாய்
    விகாஸி முக பங்கஜம் –மலர்ந்த திரு முகத் தாமரையை யுடையவனாய்
    த்ரை லோக்ய கோப்தாரம் -மூன்று உலகங்களுக்கும் ரக்ஷகனாய்
    அக்லிஷ்ட சேஷ்டிதம் –குற்றமற்ற செயல்களை யுடையவனான
    கிருஷ்ணம் –கண்ணனை
    கோப்யாஸ்-கோபிகள்
    தத்ரு ஸூ–கண்டனர்

    தத –இவ் விடத்தில் கிருஷ்ணன் போனான் என்று நெடும் தூரம் எல்லாம் சென்று
    ப்ரவிஷ்ட காநநம் கிருஷ்ண பதமத்ர ந லஷ்யதே நிவர்த்தத்வம் -5-13-42
    கண்ணன் காட்டில் புகுந்து விட்டான்
    இங்கு அவனுடைய அடிச் சுவட்டைக் காணோமே -என்றும்

    நிவ்ருத்தாஸ் தாஸ் ததோ கோப்யோ நிராஸா கிருஷ்ண தர்ஸந –5-13-42
    கண்ணனைக் காண்பதில் ஆசை யற்றவர்களாக அந்த கோபிகள் திரும்பினார்கள் -என்றும்
    நிராஸை களான கோபீ ஜனங்கள் மீண்ட அநந்தரம்
    இப்படி முடிய நிராஸைகளாய் காணப் பெறாதே விட்டார்களோ என்னில்

    நெடும் தூரம் காணப் பெறாதே உறாவுதல் தீரக் கண்டு கொண்டார்கள

    இவர்கள் கண்டு கொண்டது அவர் இருந்த இடத்திலே சென்றோ என்னில்
    ஆயாந்தம்
    பெண்களை நெடும் போதுண்டு நாம் அலைச்சல் படுத்துகிறது
    அவர்கள் இத்தனை போது என் படுகிறார்களோ என்னும் த்வரை தோற்ற
    கோபீ கபால ஸம்ஸ்லேஷம் அபி கம்ய ஹரேர் புஜவ் புல கோத்கம ஸஸ்யாய ஸ்வேதாம்பு கநதாம் கதவ் –5-13-55-(ஸ்வேதாம்புகணி காஞ்சிதம் -பாடபேதம்)

    (சக்ய பஸ்த்த க்ருஷ்ணஸ்ய முகம் அத்யருணே   ஷணம்
    கஜ யுத்த க்ருதாயாச  ஸ்வேதாம்பு கணி காஞ்சிதம்
    -ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-5-20-என்னும்படியே- )
    ஆயர் சிறுமியரின் கன்னத்தை அணைத்ததினாலே அக் கன்னத்திலுள்ள கூச்செரியும் மயிர்களாகிற பயிர்களுக்கு கண்ணனின் கைகள் வேர்வை நீர் பொழியும் மேகமாயின -என்னும்படியே
    குரு வேர் பரம்பித்த முகமும் -குலைந்த பரியட்டமுமாய்க் கொண்டு வாரா நின்றான்

    வருகிற இடம் தன்னில் முகத்திலே ஒரு விஷாதம் தோற்ற வந்தானோ என்னில்
    விகாஸி முக பங்கஜம்
    இவர்களைக் கண்ட அநந்தரம் -இத்தனை போது உங்களை அம்பலமாகப் பண்ணினோம் (அரங்கத்தில் நாட்டியமாடப் பண்ணினோம் )இறே
    நம்மைத் தேடிக் காண மாட்டிற்றிலை கோள் -இத்தனையே உங்கள் சக்தி -என்று
    தன் வெற்றியும் அவர்களுடைய தோல்வியும் தோற்றும்படி முறுவல் செய்து கொண்டு வந்தானாயிற்று

    இப்படி அவன் வந்த இடத்தில் அவர்கள் செய்தது என்
    தங்களை அவன் பண்ணின தீ யறத்தாலே முகத்தை மாற வைத்து ப்ரணய கலஹம் பண்ணி இருந்தார்களோ -என்னில்

    கோப்யா ப்ரகல்ப வநிதைகள் -ஊடல் கொள்வதற்கு விஷயம் தெரிந்த முதிர்ந்த பெண்கள்- அன்றிக்கே எட்டும் இரண்டும் அறியாத இடைப்பெண்கள் ஆகையாலே

    காசிதா லோக்ய கோவிந்த மாயாந்த மதி ஹர்ஷிதா -க்ருஷ்ண க்ருஷ்ணேதி பஹூ ஸ
    ப்ராஹ நான்யது தீரயத் –
    ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-44–(வருகின்ற கோவிந்தனைக் கண்டு மிக யுகந்து ஒருத்தி கிருஷ்ணா கிருஷ்ணா என்று பலகால் சொன்னாள் வேறு ஒன்றுமே சொல்லவில்லை -)என்றும்

    தஸ்யைவ ரூபம் த்யா யந்தீ-ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-13-46- (அவன் திரு உருவத்தை தியானித்து இருந்தாள் என்றும்)என்றும் –

    நேத்ர ப்ருங்காப்யாம் பௌ தன்முக பங்கஜம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-45- (ஒருத்தி கண்களாகிற வண்டுகளாலே அவனுடைய முகத் தாமரையைப் பருகினாள் என்றும்
    அவன் தூரத்திலே தோற்றும் காட்டில் அறிந்து கொண்டு மேல் விழுந்தார்கள்)-என்றும்

    அதுக்கடி என் என்னில்
    த்ரை லோக்ய கோப்தாரம்
    ரஷ்ய வர்க்கம் கூடு பூரித்துக் கிடக்கிற இத் த்ரை லோக்யத்திலே இந்த நாலு இரண்டு பேரை ரக்ஷித்தால் என் -தவறில் என் -அவனுடைய ரக்ஷகத்வத்துக்குப் பங்கம் வரப் புகுர நின்றதோ
    இனி ஸ்வ தந்த்ரனோடு ப்ரணய ரோஷம் கொண்டாடில் மூட்டவிழ்ந்து விடுமத்தனை
    என்று மேல் விழுந்தார்கள்

    இப்படி ஸ்வ தந்த்ரனாகில் தானிருந்த இடத்தே இவர்கள் அடைய வந்து விழும் படி இருக்க
    இருந்த இடத்தே இராதே வருவது என் என்னில்
    கிருஷ்ணம்
    அவர்களுடைய ஸ்பர்ஸத்தையும் -அவர்களுடைய தாழ்ந்த யுக்திகளையும் ஒழியச் செல்லாமை யுடையவனாகையாலே

    (மஹாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் –சூரணை-179-)

    இப்படித் தங்களை ஒழியச் செல்லாமை யுடையனான பின்பு அவன் தானே வந்து கால் கட்டும் படி இராது ஒழிவான் என் என்னில்
    அக்லிஷ்ட சேஷ்டிதம்
    ஸ்ம்ருதியாலே
    அதாகிறது
    இனிச் சிறிது போது தாழ்க்குமாகில் அடியே தொடங்கி
    பஹு ஸ்யாம் -சாந்தோக்யம் -6-2-3- நான் பலவாகக் கடவேன் என்று ஸங்கல்பித்து ஸ்த்ரீ ஸ்ருஷ்டி பண்ண வேண்டும்படியாய் விடும் இறே
    அப்படிச் செய்யாதே ஓர் அளவிலே மறைந்தானாய் பிசகாதபடி ரஷித்த உபகாரத்துக்காக

    விடாய்த்தவன் விக்கிச் சாகாமல் இருப்பதற்காகச் சிறிது சிறிதாக நீரூற்றுவாரைப் போலே இவன் மறைவதும் இவர்களை சாத்மிக்க சாத்மிக்க–பொறுக்கப் பொறுக்க – தன்னை அனுபவிப்பிக்கையாலே உபகாரமாகவே இருக்கும் என்றபடி

    ——–

    இரண்டாவது வியாக்யானம்

    ததோ தத்ரு ஸூராயாந்தம் விகாஸி முக பங்கஜம்கோப்யாஸ் த்ரை லோக்ய கோப்தாரம் கிருஷ்ணம் அக்லிஷ்ட சேஷ்டிதம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5 வது அம்சம் -13-43-
    தத

    பகவத் விஷயத்தை விஸ்லேஷித்தால் அரை க்ஷணம் செல்லாத படியான விடாய் பிறந்த அநந்தரம்
    பொறுக்கப் பொறுக்க அநுபவிக்கச் செய்ய வேணும் என்று புரிந்தவன்
    இவர்கள் ஸத்தைக்கே மோசம் வரும்படி பார்த்துக் கொண்டு இருக்க மாட்டானே

    தத
    ஸ்வ யத்னத்தாலே அவனைத் தேடிக் காண மாட்டாதே இயங்கி செய்த பின்பு
    தேஹாந்தரே
    தேசாந்தரே
    காலாந்தரே
    காணப் பெற்றதோ என்றால்
    சுமை தள்ளின அநந்தரம் -ரஷா பரத்தை ஸமர்ப்பித்த -அநந்தரம்
    பேற்றிலே தோள் மாறினார்கள்
    கண் படைத்த பிரயோஜனம் பெற்றார்கள்

    (சசால சாபஞ்ச -வெறும் கை வீரன் )

    ததோ தத்ருஸூ
    யஸ்ய ராமம்-ந பஸ்யேத் —-ஸ நிந்தித
    –அயோத்ய -17-11)(என்று இறே காணப் பெறாத போது அவன் நிந்திக்கப்பட்டவனாய் அன்றோ இருப்பது
    ந சந்த்ருஸே திஷ்ட நிரூபமஸ்ய ந சஷுஷா பஸ்யதி கஸ்சநைநம் –தைத்ரியம் -இவன் உருவம் கண்ணால் காண்பதற்கு நில்லாது-எவனும் இவனைக் கண்ணால் கண்டவன் அல்லன் -என்றும்
    ந சஷுஷா க்ருஹ்யதே நாபி வாசா நாந்யைர்தேவை -முண்டகம் -கண்ணாலும் வாக்காலும் மற்ற இந்த்ரியங்களாலும் காணப்படாதவன் என்றும்
    யத் ததத்ரேஸ்யம் அக்ராஹ்யம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-6–என்றும்-அ நிர்தேச்யம் அரூபஞ்ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-66-என்றும்-இப்படிப்பட்டது என்று காட்ட முடியாததுமாயும் உருவம் அற்றதுமுமாய் இருப்பது பர ப்ருஹ்ம ஸ்வரூபம் என்றும் ‘
    கட்கிலி -7-2-3–என்றும்
    நிஷேதிக்கிறது ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு இறே-
    தானே தன்னைக் கண்ணனாகவும் ராமனாகவும் காட்டக் கண்டவர்களுக்கு அல்லவே

    தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் –கட -1-2-23-எவனை இப் பரமாத்மா வரிக்கிறானோ அவனுக்கு இவன் தன் திருமேனியைக் காட்டுகிறான்என்றும்
    மநஸா து விஸூத்தேந
    -விஷ்ணு தர்மோத்தரம் -275-2- பரிசுத்தமான மனத்தினால் காணலாம்- -என்றும்
    யத் பூத யோநிம் பரிபஸ்யந்தி தீரா — -முண்டகம் -ஜகத் காரணமாயுள்ள பரம் பொருளைப் பேர் அறிவாளர்கள் காண்கிறார்கள் என்றும்
    தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய-விஷ்ணுவுடைய அந்த மேலான ஸ்தாநத்தை நித்ய ஸூரிகள் காண்கிறார்கள் -என்றும்
    காண்பன் அவன் கண்களாலே -1–9-9-என்றும்
    அவனாலே அவனைக் காணலாம் போது காணலாம் என்று அந்த வேத ஸாஸ்த்ரங்களே கூறின அன்றோ

    (கண்ணே உன்னைக் காண -அவராகிய கண்ணாலே காணலாம் அன்றோ–காணுமாறு உண்டு எனில் அருளாய்-அனைத்தையும் தேவகிப்பிராட்டிக்குக் காட்டி அருளினான் அன்றோ)

    இப்படிக் காண்கிற இடத்திலே தேஹாவஸா நத்திலே அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேஷத்திலே போயோ என்னில்
    ஆயாந்தம்
    எதிர் சூழல் புக்கு -2-7-6-கிருஷி பண்ணித் திரிகிறவனை
    இங்கே காண இப் பிறப்பே மகிழ்வர் -திருவாய் -8-5-11-என்கிறபடியே அவ் விடத்திலேயே காணப் பெற்றார்கள்

    ஆயாந்தம்
    என்கிற வர்த்தமான நிர்த்தேசம் என் -என்னில்
    யுகபந் மோக்ஷம் உண்டாகில் இறே எதிர் சூழல் மாறுவது
    இஸ் ஸம்ஸாரமாக அவன் கிருபையாக எதிர் சூழல் மாறாது இறே
    ஸம்ஸாரமும் அழியாது -அவன் கிருபையும் அழியாதே இறே
    ஆகவே என்றுமே வந்தவனையென்று இல்லாமல் வருகிறவனை என்றே இருக்கும் அன்றோ
    இப்படிக் கிருஷீ -முயற்சி -செய்வதாலேயே கிருஷ்ணன் என்று பெயர் பெற்றான்

    நம்மைக் கொடு வந்து ஸூலபனாக்கிக் காட்சி கொடுத்தோமாகில்
    இத்தால் வரும் ப்ரீத் யப்ரீதிகள் தங்களுக்கு அன்றோ -என்று
    நிர் விகாரனாய் இருந்தானோ என்னில்
    விகாஸீ முக பங்கஜம்
    மலர்ந்த முகத் தாமரையை யுடையவனை
    விபீஷணனை இலங்கையில் முடி சூட்டிய பின்பே
    விஜ்வர -என்றும்
    பிரமுமோத ஹ -என்றும்
    ஆஸ்ரித கார்யம் தலைக்கட்டினது தன் பேறாக உகந்து
    அவ் வுகப்பு தன் திரு முகத்திலே நிழல் எழும்படி இருந்தான் காண்

    நின்றவர்கள் தான் ஆர்
    திவ்ய ஞாந உபபந் நாஸ்தே -என்றும்
    அஹம் வேத்மி மஹாத்மாநம் ராமம் ஸத்ய பராக்ரமம் -வஸிஷ்டோ அபி மஹா தேஜோ யே சேமே தபஸிஸ்திதா -என்றும்
    வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் -என்றும்
    பேசப்படுகிற வேதங்களாதல்
    வைதிக புருஷர்களாதலோ -என்னில்
    கோப்ய
    கோக்களையும் கவ்யங்களையும் பர தேவதையாக நினைத்து இருக்குமவர்களாயிற்று

    இவர்கள் அதிகாரிகளாக இப்படி ஸூலபனாகைக்கு அடி என் என்னில்
    கோப்ய
    தங்கள் வருத்தத்தாலே அவனைக் காண இருந்து அவனாலே அவனைப் பெறுவது என்று அறுதியிட்டுப் பின்னையும்
    ப்ராப்ய ருசி இருந்தவிடத்தே இருக்க ஒட்டாமையாலே கிருஷ்ண அஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி -5-13-26-நானே கண்ணன் அழகாக நடக்கிறேன் பாருங்கள்-என்றும்
    துஷ்ட காளிய திஷ்ட அத்ர-5-13-27–துஷ்ட காளிய நாகமே நில் நானே கண்ணன் -என்றும்
    அவனுடைய -நடை பேச்சு செயல்கள்-கதி பாஷித சேஷ்டிதங்களைக் கொண்டு கால யாபநம் பண்ணின இதுவே பற்றாஸாக

    கோப்ய தத்ருஸூ
    ஸதா பஸ் யந்தி ஸூரயா
    -என்று இமை கொட்டி விழிப்பதும் கூட பகவத் அநுபவ விரோதி என்று நிமிஷ உன் மேஷங்களைத் தவிர்ந்து நித்ய ஸூரிகள் பெறும் பேற்றை இறே-

    ஆ மருவின நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ –10-3-1- என்கிறபடியே-
    இவன் பசு மேய்க்கப் போந்தான் -ஒரு பகலாகிலும் பிழைக்கும் என்று இருக்கும் இவர்கள் பெறுகிறது

    ப்ராப்ய வஸ்துவைப் பேசும் இடமடைய
    காரணம் து த்யேய -அதர்வ சிகை –காரண வஸ்துவே த்யானிக்கத் தக்கது-என்றும்
    ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேஸாந –ப்ருஹ -6-4-22-எல்லாவற்றையும் வசத்தில் நடத்துமவன் -அனைவருக்கும் ஈஸ்வரன்-என்றும்
    க்ஷயந்த மஸ்ய ரஜஸ பராகே -ரஜஸ் என்னும் பிரக்ருதிக்கு மேலே எழுந்து அருளி இருக்கும் உன்னை ஸ்துதிக்கிறேன்-என்றும்
    வைகுண்ட து பரே லோகே -ஸ்ரீ வைகுண்டம் என்னும் மேலான உலகில் ஸ்ரீ தேவியோடு கூடிய லோக ஸ்வாமி-என்றும்

    திவி திஷ்டத் யேக -என்றும்
    திவ்யோ தேவ ஏகோ நாராயண -எல்லா உயிர்க்கும் ஆத்மாவானவன் அப்ராக்ருத லோகத்தில் இருக்கும் நாராயணன் ஒருவனே -என்றும்
    பேசப்படுகிறவன் கிடீர் இடையருக்கும் இடைச்சிகளுக்கும் இலக்கானவன்

    இங்கே ஸந்நிஹிதன் என்றால் இது வஸ்த்வந்தர ஸூசகமாய்த் தோற்றாதோ -இருவரும் வெவ்வேறு ஆனவர்களாகத் தோற்றாதோ என்னில்
    த்ரை லோக்ய கோப்தாரம்
    இப்படி பரத்வத்தில் எல்லையிலே நிற்கிறவன் கிடீர்
    இவனுடைய பரத்வத்தைப் பார்க்கக் கீழே சொன்ன ஸுலப்யம் கூடாதபடியாய் இருந்ததீ என்ன(ப்ரஹ்மமே கிசோர பாவம் கொண்டு பிறந்தான் அன்றோ)
    கிருஷ்ணம்
    பாரே புராதந கிராம் பார்ஸ்வே சா கோஷ யோஷிதாம் பழ மறையின் அக்கரையில் நிற்கும் வஸ்து ஆய்ச்சிகளின் அண்டையிலே நின்றது -(முந்தானையில் முடிந்து கொள்ளும் படி இருக்கிறானே)என்று வேதங்களுக்கு
    நேதி நேதி –இது இப்படிப்பட்டது அன்று இது இப்படிப்பட்டது அன்று -என்றும்
    யதோ வாஸோ நிவர்த்தந்தே –தைத்ரியம் -எதனிடம் இருந்து வாக்குகள் திரும்புகின்றனவோ என்றும்
    அவிஞ்ஞாதம் விஜாநதாம்–கேந -அளவிட்டு அறிந்தவர்களுக்குப் பரம் பொருள் அறியப்படாதாகிறது -என்றும்
    எட்டாதபடியாய் இருக்கும் இவ் வஸ்துவே
    இடையருக்கும் இடைச்சிகளுக்கும் கால் மேல் கால் ஏறிட இட்டுக் கொள்ளலாம் படியாய் இருக்கும் ப்ராப்ய வஸ்துவுக்கு லக்ஷணம் பரத்வ ஸுலப்யங்கள் இரண்டுமே இறே –

    அத்யந்த துர்லபமான வஸ்து இப்படி ஸூலபமாகக் கூடுமோ என்னில்
    அக்லிஷ்ட சேஷ்டிதம்
    எளிதில் செயல் புரியும் -செயற்கு அரிய செயல்களையும் எளிதில் செய்து முடிப்பவன்
    பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -ஸ்வே -6-8-இவனுடைய சக்தி மேலானதாகவும் பலபடிப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது -என்றும்
    ஸர்வ ஸக்திஸ் து பகவான் –விஷ்வக் ஸேந ஸம்ஹிதை -எல்லா சக்தியும் உடைய பகவான் சக்தி அற்றவன் போலே நடக்கிறான் –என்றும்
    ஏவம் விதமான அகடிதகடநா ஸாமர்த்யத்தை உடையவன் -செயற்கு அரிய செயற்க்கு அரிய செயல்கள் செய்யும் செயல் திறமையை யுடையவன் -என்கிறது

    (பராவரே -உலகில் உள்ள பரர்களை அவரர்களாக்கும் பரத்வம் -பரத்வ ஸுலப்யங்களுக்கு ஸீமா பூமி இவன் அன்றோ)

    ————————

    2-ஸ்ரீ ஹரி வம்சம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் –

    ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத ந -ஸ்ரீ ஹரி வம்சம் -113 அத்யாயம் -62 ஸ்லோகம் –

    ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந
    நாக பர்யங்கமுத் ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –ஸ்ரீ ஹரி வம்சம் -113 அத்யாயம் -62 ஸ்லோகம் –(மதுரையார் மன்னன் –உகந்த திருநாமம்-அயோத்தியை சித்ர கூடம் -ஜடாயு சிறகின் கீழ் -பெருமாளுக்கு மூன்று ஸ்தலங்கள்)

    ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந-ஸ்ரீ தேவியோடு பிரியாதவனாய் -திருப் பாற் கடலிலே பள்ளி கொள்பவனான -இந்த நாராயணன்
    நாக பர்யங்கமுத் ஸ்ருஜ்ய -சேஷ சயனத்தை விட்டு
    ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஸ்ரீ மதுரை நகரம் குறித்து எழுந்து அருளினான் —

    அவதாரிகை –
    பத்ரம்  கர்ணேபி ஸ்ருணு யாம தேவா பத்ரம் பஸ்யேமா ஷபிர்யா ஜத்ரா-அஷாபி பத்ரம் பஸ்யேம யஜத்ரா ஸ்திரைர்  அங்கைஸ் துஷ்டு வாம்ச-தநூபிர் வ்யசேம தேவஹிதம் யதாயு–தை ஆர -1- சாந்தி பாடம் -தேவர்களே பத்திரமான வற்றைக் கேட்க வேணும்-பத்திரமான ஒன்றையே பார்க்க வேண்டும்
    பகவத் விஷயமே நல்லதும் போக்யமும் பாவனமும் -ஞான பக்தி வைராக்யம் மூன்றுமே வேண்டுமே-இவற்றை விவரித்து அருள்கிறார்

    போக்தா போக்கியம் ப்ரேரிதாரம்-ஸ்வே-1-12- என்கிறபடியே
    சேதனனாய் இருப்பான் ஒருத்தனுக்குச் சித்  அசித் ஈஸ்வர தத்வ த்ரய ஜ்ஞானம் யுண்டாக வேணும் –

    அதில் அசித்து –அஜாமேகாம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீம் பிரஜாம் ஜனயந்தீம் சரூபாம் -ஸ்வே -4-5- சிவப்பு வெளுப்பு கறுப்பு என்னும் மூன்று நிறங்களை -குணங்களை -உடையதும் தன்னை ஒத்த பல குழந்தைகளை -மஹான் -அஹங்காரம் பூதங்கள் –முதலானவற்றை உண்டாக்குவதும்
    ஒன்றாய் இருப்பதும் -பிறப்பற்றதுமான ப்ரக்ருதிய–என்கிறபடியே
    பகவத் ஸ்வரூபத்தை மறைக்கைக்கு பஹூ வித வர்ணையான திரஸ்கரிணி போலே இருக்கக் கடவதாய்-
    விபரீத ஜ்ஞான ஜனகமாய் –(பிறக்கிறது இருக்கிறது பரிணமிக்கிறது வளர்கிறது குறைகிறது அழிகிறது என்னும்)ஷட் வித விகாராஸ் பதமாய் -சதத பரிணாமியாய்-சதத ஷணஷரண ஸ்வபாவமாய் -சர்வேஸ்வரனுக்கு லீலா உப கரணமாய்  -(உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கிலா அலகிலா விளையாட்டுக் கருவியாய்)இருக்கும் –

    சித் வஸ்துவைப்   பார்த்தால் தேக இந்த்ரியாதி (ஆதி -மனம் பிராணன் அறிவு)விலஷணமாய்-ஜ்ஞா நானந்த ஸ்வரூபமாய் -ஜ்ஞான குணகமாய்-பகவத் சேஷ பூதமாய் -ஸ்ரீ கௌஸ்துபாதிகளோ பாதி சர்வேஸ்வரனுக்கு ஸ்ப்ருஹணீ யமாய் இருக்கும் –

    ஈஸ்வரனைப் பார்த்தால் இவை இரண்டையும் வியாபித்து இருப்பவனாய்-இவற்றுக்கு ஆதார பூதனாய்-இவை இரண்டையும் சரீரவத் பர தந்த்ரமாக யுடையவனாய் இருக்கும் –

    இப்படி த்யாஜ்யதையாலும் -உபாதேயதையாலும் -ஜ்ஞாதவ்யமான தத்வ த்ரயத்திலே அபியோகம் (ஈடுபாடு)இன்றிக்கே
    பகவத அபசார பாகவத அபசார அசஹ்ய அபசாரங்களிலே கை வளர்ந்து போருகிற சேதனரைப் பார்த்தால்
    பார லௌகிக பல சித்தி ஹேதுவாக –பதிம் விஸ்வஸ்ய -என்கிற லோக உத்தீர்ணனை ஆஸ்ரயியாதே

    லோகாயத மத அநு சாரிகளாயும்
    ஸ்யாதிஸ்தி ஸ்யான் நாஸ்தி -இத்யாதிகளால் ஸ்யா ஸ்திதி -ஸ்யான் நாஸ்தி -ஸ்யா தஸ்தி ச நாஸ்தி ச –ஸ்யா தஸ்தி இதி வக்தவ்யம் ச-ஸ்யா நாஸ்தி இதி வக்தவ்யம் ச –
    ஸ்யா தஸ்தி ச நாஸ்தி தி சேதி வக்தவ்யம் ச -சர்வதா வக்தவ்யம் -என்று சொல்லுகிறபடியே சப்த பங்க வாதிகளாய் -பகவத் ஆஸ்ரயணத்துக்கு அர்ஹராகாதே ஆர்ஹதராயும் 

    கதிமிச்சேஜ் ஜநார்த்தநாத் -ப்ரஹ்மாண்ட புராணம் -என்கிறபடியே சர்வேஸ்வர சமாஸ்ரயணத்தாலே ஸூகதராக ப்ராப்தமாய் இருக்க
    ஸூகத மத -புத்த – மத அநு சாரிகளாயும்
    பகவத் சமாஸ்ரயணத்தாலே சங்க்யா வான்களாக ப்ராப்தமாய் இருக்க – சாங்க்யா வஷ்டம்பம்  பண்ணி -எண்ணிக்கை அற்ற -ஜன்மத்திலே அசங்க்யாதராயும்
    நாராயண பரா வயம் -என்கிறபடியே பகவத் யோகராக ப்ராப்தமாய் இருக்க சகதிமிச்சேஜ் ஜநார்த்தநாத் -ப்ரஹ்மாண்ட புராணம் -என்கிறபடியே சர்வேஸ்வர சமாஸ்ரயணத்தாலே ஸூகதராக ப்ராப்தமாய் இருக்க
    ஸூகத மத -புத்த – மத அநு சாரிகளாயும்
    பகவத் சமாஸ்ரயணத்தாலே சங்க்யா வான்களாக ப்ராப்தமாய் இருக்க – சாங்க்யா வஷ்டம்பம்  பண்ணி -எண்ணிக்கை அற்ற -ஜன்மத்திலே அசங்க்யாதராயும்
    நாராயண பரா வயம் -என்கிறபடியே பகவத் யோகராக ப்ராப்தமாய் இருக்க சம்யக் ஜ்ஞான வியுக்த யோக நிஷ்டராயும்
    பகவத் ஜ்ஞான விசேஷதத் பரராக ப்ராப்தமாய் இருக்க வைசேஷிக மத அநு சாரிகளாயும்
    புண்டரீகாஷ சமாஸ்ரயணத்தாலே மாயா நிஸ்தரணம் பண்ண ப்ராப்தமாய் இருக்க மாயாவாத நிரதராயும்
    ஆக இப்படி இடுகுபடுகிற சேதனரைக் கண்டு ஈஸ்வரன் தயமாநம நாவாய்க் கொண்டு

    மாநம் ப்ரதீபமிவ காருணிகோததாதி -என்று வேதார்த்தத்தை பிரகாசிப்பித்த அளவிலும் ஐஹிக புருஷார்த்தத்தைக் கோரி –(முதல் நிர்வாகம் -இது–மோக்ஷ பலனாக இல்லாமல்)
    பத்ரம்  கர்ணேபி ஸ்ருணு யாம தேவா –தை ஆர -1- சாந்தி பாடம் -தேவர்களே பத்திரமான வற்றைக் கேட்க வேணும்
    ஸ்ருணுயாம்-என்ற போதே சித்தம் அன்றோ -கர்ணேபி-என்ன வேணுமோ –
    பத்ரச் ஸ்ரவணத்தோ பாதி -மங்கலமான வார்த்தைகளை -கரண பாடவமும் விதேயம் என்கைக்காக –கர்ணேபி-என்றது கர்ணை-என்றபடி

    1-தேவா என்கிற தேவ சப்தம் க்ரீட அர்த்தத்திலே யாய் -உங்களுடைய பத்ர ரூபமான விநோதத்தைக் கேட்க வேணும் -2-தேவா பத்ரம் ஸ்ருணுயாம் -விஜிகீஷார்த்தத் திலேயே –
    தேவர்களே விஜிகீஷா (வெல்லுவதில் விருப்பமான)ரூபமான உங்களுடைய நன்மையைக் கேட்க வேணும்
    3- தேவா பத்ரம் ஸ்ருணுயாம் -தீவு வ்யவஹார -வார்த்தை பொருளில் -உங்களுடைய இனியதான வார்த்தையைக் கேட்க வேணும் –
    4-தேவா பத்ரம் ஸ்ருணுயாம்-தீவுத் யுதி ஒளி பொருளில் -உங்களுடைய இழி யுன்டாய்ப் போருகிற வார்த்தையைக் கேட்க வேணும்
    5-தேவா பத்ரம் ஸ்ருணுயாம்-தீவு கதி -உங்களுடைய கதி யுண்டான வார்த்தையைக் கேட்க வேணும் பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம தேவா பத்ரம் பச்யேம -என்று பத்ரச் ஸ்ரவண மாத்ரமே போராது-பத்ர தர்சனமும் பண்ண வேணும்

    பத்ரம் பஸ்யேமா ஷபிர்யா ஜத்ரா-அஷாபி பத்ரம் பஸ்யேம -இங்கே பஸ்யேம என்ற போதே சித்தம் அன்றோ
    அஷபி-என்கைக்கு அடி என் என்னில்  -தர்சனத்தோ பாதி தர்சன கரண பாடவமும் வேணும் என்றபடி
    அன்றிக்கே -கர்ணேபி -அஷேபி -என்று ஸ்வபாவ ஆக்யாந மாக வுமாம் –
    அஷபி -பத்ரம் பச்யேம -ஸ்ரோத்ர இந்த்ரியத்துக்கு இறை இட்டவோபாதி சஷூர் இந்த்ரியத்துக்கும் ஆனந்தம் உண்டாம்படி வி லஷண வஸ்துவைத் தர்சிப்போமாக வேணும்

    யஜத்ரா -யஜநாத் த்ராயந்த இதி யஜத்ரா -என்றாய் யஜன நிமித்தமாக ரஷிக்கிற வர்களே -என்றபடி -அதாவது
    கால காலங்களிலே வர்ஷத்தை உண்டாக்கி அத்தாலே சஸ்ய வ்ருத்தியையும் யுண்டாக்கி
    அதடியாக யஜ்ஞ பதார்த்த சாமக்ரியையும் உண்டாக்கிக் கொடுக்கையாலே யஜத்ரா -என்கிறது இதுவும் தேவ சப்தம் போலே சம்போதனமாய் இருக்கிறது –

    ஸ்திரைர்  அங்கைஸ் துஷ்டுவாம் ச-
    பஸ்ர ஸ்ரவணத்துக்கும் பச்ர தர்சனத்துக்கும் அநு ரூபமாம்படியான ஸ்தோத்ரம் பண்ண வேணும்
    ஸ்தோத்ரம் பண்ணும் பொது ஸ்திரமான அங்கங்களோடு கூட வேணும்
    ஸ்திரைர்  அங்கைஸ் துஷ்டுவாம் ச-
    ஸ்திரமான அங்கங்களோடு உப லஷிதனாய்க் கொண்டு மேலே மேலே ஸ்தோத்ரம் பண்ண வேணும்
    க்ரியா சமபிஹாரே யங்-ஆய்-யங்-லு  கந்தம் ஆகையாலே ஸ்தோத்ரத்தின் யுடைய மிகுதியைக் காட்டுகிறது –

    தநூபிர் வ்யசேம தேவஹிதம் யதாயு -இப்படியே ஸ்தோத்ரம் பண்ணுகைக்குஈடாக தேவ ஹிதமான ஆயுஸ் ஸூ யாதொன்று அத்தை சரீரத்தோடு பிரவேசிப்போமாக வேணும்
    தநூபிர் வ்யசேம தேவ ஹிதம் யதாயு -க்ரிமி கீடாதிகளுடைய ஆயுஸ் சாக ஒண்ணாது
    திர்யக் யோநிகளுடைய ஆயுஸ் சாக ஒணாது
    சதாயுர்வை புருஷ -என்கிற புருஷ ஆயுஸ் சாக ஒண்ணாது
    ஒரு வத்சரம் தினமாகக் கொண்டு தேவர்களுடைய ஆயுஸ்ஸூ யாதொன்று உண்டு அத்தை சரீரத்தோடு பிரவேசிப்போமாக வேணும்
    விசேம என்னாமல்  வ்யசேம -என்று சாந்தசமாகையாலே அடாகமம் பண்ணிக் கிடக்கிறது –

    ஆக -இத்தால் -பத்ரஸ் ஸ்ரவணமும் -பத்ர தர்சனமும் -தத் அநு ரூபமான ஸ்தோத்ரமும் -அதுக்கு ஈடான ஆயுர் தர்க்யமும்பிரதிபாதித்தாயிற்று –

    அங்கன் அன்றியிலே –உதோ தவஸ்மை தன்வம் விசஸ்ரே -என்று கொண்டு ஸ்ருதியினுடைய தாத்பர்யம் அறிந்தவனுக்கு இதினுடைய அர்த்த யோகமான சமயத்திலே பரம புருஷார்த்த அந்வயியாக வேணும் -எங்கனே என்னில் –
    பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம் தேவா
    இங்கு தேவ சப்தம் –தேவமிவாசார்யம் உபாசீத -என்கிறபடியே ஆச்சார்ய சப்தத்துக்கு உப லஷணம்-
    தேவா -என்கிற பாஹூள்யத்தாலே-குருஷூ பஹூ வசனம் -என்கிற ந்யாயம் தோற்றுகிறது-
    ஸ்ரீ பராசர ப்ரஹ்ம ரிஷி பக்கலிலே ஸ்ரீ மைத்ரேய பகவான் கேட்குமா போலே ஆச்சார்யன் பக்கலிலே பரமார்த்தம் கேட்க வேணும் -என்கிறதுக்கும் உப லஷணம் –
    பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம்-பத்ரம்  ஸ்ருணுயாம்-ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்றும்
    கர்ணாப்யாம் பூரி விஸ்ருவம் -என்றும் -யத்கதா சரவணம் ஹரே -என்றும்
    கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றும் கேட்பாரோ
    -திருவாய் -7-5-3-என்றும் சொல்லுகிறபடியே
    பகவத் விஷயத்தைக் கேட்கைக்கு உப லஷணமாய் இருக்கிறது பத்ர சப்தம்

    ஸ்ருணுயாம் என்று பிரார்த்தனா ரூபம் ஆகையாலே அதிகாரியினுடைய பிரார்த்தனா விசிஷ்டத்வமும் உப லஷிதம் –
    இப்படி ஆச்சார்யன் பக்கலிலே பரமார்த்த ஸ்ரவனமும் அநு பாவ்யமான பகவத் விக்ரஹ தர்சனமும் பண்ண வேணும் என்பதுக்கு உப லஷணம் –

    பத்ரம் பஸ்யேம் அஷபிர் யஜத்ரா -என்று –
    இங்கு பத்ர சப்தத்தாலே –சதைக ரூப ரூபாய -என்றும் –ந பூத சங்க  சம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மன -என்றும்
    ரூபௌதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-என்றும்
    தத்ருஸூர் விஸ்மிதாகாரா ராமஸ்ய வன வாசிந –என்றும் சாஷான் மன்மத மன்மத -என்றும்
    பகவத் அனுபவ ரூபம் இறே கண்ணுக்கு இலக்காகுவது

    யஜத்ரா -யஜன நிமித்தமாக ரஷணம் தோற்றுகிறது –
    யோ அஹம் அஸ்மி ச சந் யஜே-என்றும் –ச ஸ்வத்வர உதீரித -என்றும் சொல்லுகிறபடியே
    தாஸ்ய அநு சந்தான அநு ரூபமான ஹவிஸ் பிரதானமும் அத்தாலே வரக் கடவதான ந்யாஸமும்(உயிரை அறவில்லை செய்தனன் தோழி என்பதே இங்கு ஹவிஸ் ஸமர்ப்பணம்)
    ஏவம் பூதமான நியாஸ வித்யா பிரதானத்தால் விபரீத ஜ்ஞானர்க்கும் பிரகடமாம்படி ரஷித்துப் போருகை தோற்றுகையாலே இதுவும்-யஜத்ரா– வும் -ஆச்சார்ய சப்தத்துக்கு உப லஷணமாய்ப் போருகிறது

    ஸ்திரிர் அங்கைஸ் துஷ்டுவாம்சாஸ் தநூபிர் வ்யசேம தேவ ஹிதம் யுதாயு –
    ஸ்ரத்தையா தேவோ தேவத்வம் அஸ்நுதே
    -என்ற ஸ்ரீ யபதிக்கு உள்ள அளவும் பிரதி ஷண விநாசியான தேஹம் போல் அன்றியே
    அப்ராக்ருத விக்ரஹமாய் தோற்றும்படி ஸ்திரமாய் இருக்கிற அங்கங்களோடு கூடி இருக்கிற சரீரத்தோடு
    ஹாவு ஹாவு ஹாவு -ஏதத் சாம காயன் நாஸ்தே -என்று- ஸ்ருதி தாத்பர்ய பர்யாலோசனம் பண்ண மாட்டாத சேதனரை உத்தீர்ணர் ஆக்குகைக்காக –

    தான் அவதீர்ணனான அவ் வவதாரங்களில்
    மத்ஸ்ய அவதாரத்தைப் பார்த்தால் -பஹூ ஜீவனனாய் இருக்கச் செய்தேயும் -அதிக ஆயுஸ் -நீரில் வாழ்ந்து -கரையிலே ஷணம் நேரமும் வாழ முடியாத –
    கூர்ம அவதாரத்தைப் பார்த்தால் -ஜகத்துக்கு ஆதார பூதனாய் இருக்கச் செய்தேயும் ஒரு புறம் சொல்லவே இருக்கும் –
    ஸ்ரீ வராஹ அவதாரத்தைப் பார்த்தால் -ஆச்ரயண சௌகர்யம் தோற்றி இருக்கச் செய்தேயும் கோத்ரொத் பேகம் -கோத்திரக் கலப்பு -மலைகளை பிளத்தல் -பண்ணி இருக்கும்
    ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தைப் பார்த்தால் இதிகாசம் அடியாகப் பற்றுவார்க்க்கு அ நிர்ப் பரணம் -பொறுப்பு இல்லாமை -அகார வாச்யனான பகவானின் பொறுப்பு -தோன்றும் படி இருக்கும்-
    ஸ்ரீ வாமன அவதாரத்தைப் பார்த்தால் தான் சிறியனாய் இருக்கச் செய்தேயும் ஜகத்தை அடையத் தன் அடிக் கீழ் ஆக்கா நிற்கும்
    பரசுராம அவதாரத்தைப் பார்த்தால் ப்ராஹ்மன உத்தமனாய் இருக்கச் செய்தேயும் புண்ய ஜன ஹாநி பண்ணா நிற்கும்
    ஸ்ரீ ராம அவதாரத்தைப் பார்த்தால் த்ருஷ்ட்வா வை தர்ம சாரிண மங்களாநி பிரயுஜ்ஞானா பிரத்ய க்ருஹ்ணன் த்ருட வ்ரதா-ஆரண்ய -1-12- என்றபடி
    புண்ய ஜன சேவை உண்டாய் இருக்கச் செய்தேயும் புண்ய ஜன ஹாநி -அரக்கர்கள் அழிவை -பண்ணா நிற்கும்

    கிருஷ்ண அவதாரத்தைப் பார்த்தால் –ரூபமே தச்ச சதுர் புஜம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-13-என்னும்படி
    அவதார தசையிலும் ஆஸ்ரித சம்ரஷணத்தில் கை வாசி தோற்றி இருக்கும் –
    நான்கு வித புருஷார்த்தங்களையும் அளிப்பவன் இறே

    அர்ஜுன ப்ரப்ருதிகளைக் கண்டால் தன் மேன்மை தோற்றாதபடி  தௌத்ய சாரத்யங்களைப் பண்ணா நிற்கும் –

    ஆழ்வார்களும் ஈடுபடுவதும் இவ் வவதாரத்திலே இறே
    உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் –திருவாய் -1-3-1- என்றும்
    கோவலனாய் வென்னைய் யுண்ட வாயன் -அமலனாதி -10- என்றும்
    திரு மதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே -திருப்பல்லாண்டு -10 என்றும்
    கோவிந்தற்க்கோர் குற்றேவல்  இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய் செய்யும் தவம் தான் என்-நாச் -13-9- -என்றும்
    துவராடை யுடுத்து ஒரு செண்டு சிலுப்பிக் கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டுச் சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர் -பெரிய திருமொழி -10-8-2- என்றும்
    வார் மணல் குன்றில் புலர நின்ற வாசு தேவா உன் வரவு பார்த்தே -பெருமாள் திரு -6-1- என்றும்
    இப் புடைகளிலே ஆழ்வார்களும் இவ் வதாரத்தையே ஆதரித்துக் கொண்டு போந்தார்கள்

    ஏவம் பூதனான கிருஷ்ணனுடைய
    சகல ஜகத் காரணத்வத்தையும்
    சர்வாதிகத்வத்தையும்
    சமுத்திர சாயித்வத்தையும்
    சகல மநுஜ நயன சார்த்த ஜீவாதுவாம்படி  மதுரா புரீ சங்கதத்வத்தையும்
    பிரதிபாதிக்கிறது -இஸ் ஸ்லோகத்தாலே-

    ஆனால் ஜகத் காரணமுமாய் சர்வாதிகமுமானால் அதீந்த்ரியமாய் அன்றோ இருப்பது என்னில்
    1- அவனுடைய சௌலப்யாதிசயம் தோற்றும்படி– ஏஷ -என்கிறார் -(அரையர் தாளம் எறிந்து அடி பட்ட ஸுலப்யம் இன்றும் காணலாமே )
    2- ஏஷ -அனுமாநம் ஆகமம் அர்த்தாபத்தி அநுப லப்தி -யாதிகளான–பிரமாணம் வேண்டாதபடி ப்ரத்யஷ சித்தமாய் நிற்கிற ஆகாரம் தோற்றுகிறது -(தேவ தத்தன் பருத்து பகலில் உண்ணாமல் -என்றால் இரவில் உண்கிறான் என்பதே அர்த்தாபத்தி)(காணுமோ கண்ண புரம் -என்று காட்டினாள் -ப்ரத்யக்ஷம் )

    (பிரான் இருந்தமை காட்டினாள் திருத் தாயார் -இவளோ திவ்ய தேசம் காட்டுகிறாள் -கருவிலே திருவில்லாமல் கண்ணை மூடி செவிக்கும் துர்பாக்கியவாதிகள் -பட்டர் -கண்ணைத் திறந்து பார்க்க வேண்டுமே–கண்டு மேல் அஞ்சலி பண்ண சொல்ல மாட்டாமல் சேஷம் காட்டினாள் )

    (பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் பயில்கின்றாளால் –வர்த்தமானம் நிகழ் காலம் –என்று என்று -முதலில் தெரியும் போல் -பின்பு தெரிந்து கொள்ள முடியாமல் இருக்குமே -அழகைக் காட்டி ஈர்த்து கொள்வானே–பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் போல் )

    (அவதாரங்களில் கிருஷ்ண அவதாரம் ஸ்ரேஷ்டம் போல் கண்ணபுரம் அர்ச்சா ஸ்தலங்களில் ஸ்ரேஷ்டம்-வட மதுரைப் பிறந்தான் 9 பத்து ஆரம்பம்- இறுதியில் கண்ணபுரம் மங்களா சாசனம்)

    எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் –காணுமோ கண்ணபுரம் காட்டினாள் –அங்கு சங்கை இது தெளிவு -இது அன்றோ இதன் ஏற்றம்

    3-ஏஷ-அங்கன் அன்றியே -ஆசன்ந அவதாரதம் ஆகையாலே சொல்லும் எளிமையை காற்றிற்று ஆகவுமாம் –
    4-ஏஷ -அங்கன் அன்றியே –உளன் சுடர் மிகு ஸ்ருதியுள் -திருவாய் -1-1-7- என்று ஸ்ருதி சித்தனாய் இருக்கச் செய்தேயும் மானச விஷயமாகையாலே சொல்லிற்று ஆகவுமாம் –

    இப்படி  சங்குசித வ்ருத்தியாய் இருப்பான் ஒருவனோ என்னில்
    1- நாராயண –
    அந்தர் பஹிஸ் ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித
    –என்று சர்வ வ்யாபகனாய் இருப்பான் ஒருவன் –
    2- நாராயண –
    ரூப குண விபூத்யாதிகள் அடைய ஏக தேசத்திலே ஒதுங்கும்படி ஸ்வரூப மஹத்தையை உடையனாய் இருப்பான் ஒருவன் –
    3- நாராயண
    சகல ஜகத்தும் சம்ஹ்ருதமான சமயத்திலும் தம்முடைய சத் பாவம் தப்பாதபடி இருப்பான் ஒருவன் –
    ஏகோ ஹவை நாராயண ஆசீத்  ந ப்ரஹ்மா நேசாந நேமே த்யாப்ருதிவீ -மஹா உபநிஷத் -என்றும்
    ஆபூத சம்ப்லவே    ப்ராப்தே நஷ்டே ஸ்தாவர ஜங்கமே-ஏகஸ் திஷ்டதி விஸ்வாத்மா ஸ து நாராயண பிரபு –பாரதம் -சாந்தி -210-24- என்றும் சொல்லுகையாலே –
    4- ஆனால் கார்யாம்சம் அடையக் குலைந்து காரணமான தான் ஒருத்தனும் நிற்கும் அத்தனையோ என்னில் –நாராயண – –
    நராஜ் ஜாதாநி தத்த்வாநி
    -பார ஆநு-186-7-என்கிறபடியே தத் உத்பாதகனாய் இருப்பான் ஒருத்தன் –
    5- நாராயண -அங்கன் அன்றியிலே -மேல் ஷீரார்ணவ நிகேதந -என்று சொல்லுகையாலே அப்புக்களைத் தனக்கு இருப்பிடமாக உடையன் -என்றாக வுமாம் –(பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து -கடைத்து -இடந்து உடைத்து)
    தா யதாஸ்யாய நம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத-மனு -1-10-என்கையாலே –
    6- நாராயண -அங்கன் அன்றியே -சகலர்க்கும் அவர்ஜநீயமாம் படி உடலும் உயிரும் போலே அந்தர் பூதமான சம்பந்த விசேஷத்தை உடையனாய் இருப்பான் ஒருத்தன் என்றாக வுமாம் –

    வீடுமின் ஊற்றவும் வீடு செய்து உம் உயிர் வீடு யுடையான்

    ய ஆத்ம திஷ்டந் ஆத்மநோ யந்த ரோயம் ஆத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம் ய ஆத்மந அந்தரோ யமயதி
    ச த ஆத்மாந்தர் யாம்ருத

    ய -ப்ருத்வீ மந்தரே சஞ்சரன் யஸ்யப் ப்ருத்வீ சரீரம் யாம் ப்ருத்வீ ந வேத இத்யாதி யோஷர மாந்தரே சஞ்சரன்
    யஸ்யாஷரம் சரீரம் யமக்ஷரம் ந வேத யோ ம்ருத் யுமந்தரே சஞ்சரன் யஸ்ய ம்ருத்யு சரீரம் யம் ம்ருத்யுர் ந வேத
    ஏஷ சர்வ பூத அந்தராத்ம அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண –ஸூபாலோபநிஷத்

    7- நாராயண -அங்கன் அன்றியே –அந்தர் வ்யாப்தி பஹிர் வ்யாப்தி பேதத்தாலே ஜகத்துக்கு ஆதார பூதனுமாய் நியந்தாவுமாய் இருப்பான் ஒருத்தன் –
    8- நாராயண -மாதா பிதா ப்ராதா –ஸூபால -இத்யாதி பேதத்தாலே சர்வவித பந்துத்வமும்
    ஆஸ்ரயண  உன்முகனான அதிகாரிக்கு அநுரூபமாம் படி வாத்சல்யமும் -ஸ்வாமித்வமும்-சௌசீல்யமும்-சௌலப்யமும்-ஜ்ஞான சக்த்யாதி யோகமும்
    இக் குண விசேஷங்கள் அளவிலே விமுகரையும் ஆ பக்தராக்கும் என்னும் இடம்
    தோற்றுகிறது –

    ஆனால் இதில் தோற்றுகிற காரணத்வம்-ந ஸன் ந சா ஸஸ் சிவ ஏவ கேவல -என்றும் பதிரேகா ஆசீத்-என்றும் சொல்லுகிறபடியே
    ஹிரண்ய கர்ப்ப சிவாதி சாதாரணம் அன்றோ என்னில்
    1-ஸ்ரீ மான் -சர்வாதிகன் -என்கிறது -ஸ்ரீ மான் என்கிற இத்தாலே ஆஸ்ரயணீயதையும் போக்யதையும் தோற்றுகிறது-
    2- ஸ்ரீ மான் -இதில் மதுப்பு நித்ய யோகார்த்தித்திலே யாய் –இத்தால் பூவும் மணமும் போலே அவிநா பாவம் தோற்றுகிறது –
    ஸ்ரீ -எல்லாராலும் ஆஸ்ரயிக்க பட்டு இருப்பாள் ஒருத்தியாய் உத்தர உத்தர தரமான அதிசயங்கள் எல்லாம் தன்னுடைய கடாஷ அதீநமாம் படி இருப்பாள் ஒருத்தியுமாய்
    யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18-என்கிறபடியே ஈஸ்வரனிலும் கால் வாசி ஏற்றம் உடையவளாய் இருப்பாள் ஒருத்தி
    3- ஆனால் இப்படிக்கொத்த இவளால் வந்த அதிசயமோ அத் தலைக்கு என்றால் –ஸ்ரீ மான் -இவளும்
    இறையும் அகலகில்லேன் -என்று அலர்மேல் மங்கை திரு மார்பில் சுவடு அறிந்த பின்பு பிறந்தகமான தாமரையும் நெருஞ்சி முள் என்னும்படி ஸ்ப்ருஹாஸ் பதனாய்
    திருவுக்குத் திருவாகிய செல்வா -என்றும்
    ஸ்ரீய ஸ்ரீ யம்–என்றும் சொல்லுகிறபடியே இவள் தானும் மேல் விழும்படி ஸ்வதஸ் சித்த போக்யதையை உடையவனாய் –
    இவள் தர்மமாய் தான் தர்மியாய் இருப்பான் ஒருத்தன் –
    4- ஸ்ரீ மான் -இச் சேர்த்தியைப் பிரியக் கண்டார் யுண்டாகில் ராவணனும் சூர்பணகையும் பட்டது படுவார்கள்

    ஆக இந்த இரண்டு பதத்தாலும் ஆஸ்ரயண அதிகாரிக்கு அநு சந்தேயமான –சரணத்வமும் -ஸ்ரீ யபதித்வமும் -பிரதிபாதித்தா யிற்று

    இத்தைப் பற்ற இறே ஆழ்வார்களும் –திருவில்லாத தேவரைத் தேறேல்மின்-நான்முகன் -53-என்றும் -திரு நின்ற பக்கம் -நான்முகன் -62-என்றும் பிரதிபாதித்தது -மகிஷ்யந்தரங்கள் உண்டாய் இருக்கச் செய்தேயும் தஸ்ய ச அஸ்யாம் ப்ரதிஷ்டிதம் -என்று இவள்-அளவிலே நெஞ்சுண்டாய்ப் போருவான் ஒருத்தன் –

    அது எங்கே கண்டோம் என்றால் –
    1- ஷீரார்ணவ நிகேதந -இவள் பிறந்தகத்தை விடாதே போதே கண்டது இறே
    2- ஷீரார்ணவ நிகேதந -பாற் கடலில் சாய்ந்த பயோதரம் -நீருண்ட மேகம் -போலே இருப்பான் ஒருத்தன் –
    3- ஷீரார்ணவ நிகேதந -அங்கன் அன்றியே –பெரும் புறக்கடல் -பெரிய திருமொழி -7-10-1-என்றும்
    சமஸ்த கல்யாண குணாம் ருதோதி-ஸ்தோத்ர ரத்னம்  -18- என்றும் சொல்லுகிறபடியே
    கடலிலே கடல் சாய்ந்தால் போலே இருக்கிறவர் என்னவுமாம் –

    (வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
    ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
    க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
    ஸமஸ்த கல்யாண குணாம் ருதோததி:||–ஶ்லோகம் 18 –

    நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
    1) உன் அடியார்களுக்கு வசப் பட்டவன்
    2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
    3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
    4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
    5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரி சுத்தியை உடையவன்
    6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
    7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
    8) இனிமையானவன்
    9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
    10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
    11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
    12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.)


    4- ஷீரார்ணவ நிகேதந -கீழ்ச் சொன்ன நாராயணத்வம் இங்கே புற வெள்ளம் இட்டுக் கிடக்கிறது-

    (பர வ்யூஹ விபவங்கள் –
    திருப்பாவையில் முதலிலும் அடுத்து இரண்டாம் பாசுரத்திலும் மேல் மூன்று பாசுரங்களில் போல்
    இங்கும்)

    ஆனால் வ்யூஹ விசேஷமானால் சனகாதிகளுக்கு ஊக விஷயமாய் -சர்வ ஜன சமாஸ்ரயத்வம் இல்லையோ -என்னில் –
    1-நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
    அநேக சிரஸ் கமான இடத்தை விட்டு -பலர் ஆட்சி செய்யும் இடம் விட்டு -திருவனந்த ஆழ்வான் உடைய பல தலைகளை விட்டு –
    திகழும் மதுரைப் பதிக் கொற்றவன் -நாச் -4-6-என்று ஏக ஆதபத்ரம் நடத்துகிற இடத்தேற வந்தான் –
    2- நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
    ஆசி விஷம் உள்ள இடத்தை விட்டு மதுரோத்தரமான இடத்தேறப் போந்தான் –
    3- நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
    சாகரத்தை விட்டு நாகரனாம்படி வந்து புகுந்தான் –

    கிடை அழகு ஒழிய அநு பாவ்யமான நடை அழகு இல்லையோ என்னில்
    1-ஆகதகனத்து இருந்த களிறு –என்றும் –தறி யாரந்த களிறு -பெரிய திரு -2-10-6- என்றும் சொல்லுகிறபடியே
    கண்டவர்களுடைய நயன சாபல்யம் பசேளிமாமாம் படி-மத்த மாதங்க கல்பனாம்படி பிசகி நடந்தான் –
    2- ஆகத -வருகிற போதே மதுரா விலாஸிநீ சார்த்தத்துக்குத் தன் வடிவழகை தூளி தாநம் பண்ணிக் கொண்டு வந்தான்
    3- ஆகத -தன் நடை அழகாலே சம்சார பதவீம் வ்ரஜன்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-19- என்கிற ஜங்கா லதையைக் குலைத்துக் கொண்டு வந்தான்-

    இப்படி வருகிறது தான் பரம பதத்திலேயோ திருப் பாற் கடலிலேயோ என்னில்(மன்னு வடமதுரை யுகங்கள் தோறும் -வாமனன் -சத்ருக்கனன் முன்பு -துருவன் தபஸ் செய்த திவ்ய தேசம்)
    1- மதுராம் புரீம் -மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரி ஸூபா -என்கிறபடியே அவன் தன்னைப் போலே தேசமும் அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணிக் கொடுக்கிறது மண் வாசியிலே தோற்றும் இறே-
    2- மதுரா புரீம் -தேவாநாம் பூர் அயோத்யா என்கிற தேசம் போலே (தேவர் அல்லால் செல்ல ஒண்ணா)துஷ் ப்ராயையாய் இருக்கை அன்றிக்கே
    சத்ரு மித்ர உதாசீனரான  கோடி த்ரயத்துக்கும் ஆஸ்ரயமான தேசம் இறே
    3– மதுராம் புரீம் ஆகாதோ ஹி- ஹி சப்தம் பிரசித்தியிலேயாய்-மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரைப் பிறந்தான் -திருவாய் -9-1-10-என்கிற பிரசித்தியைக் காட்டுகிறது –
    4-ஷீரார்ணவ நிகேதந நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய  மதுராம் புரீம் -ஆகாதோ ஹி
    ஜட (ஜல)பிரகிருதி சம்சர்க்கத்தை விட்ட பின்பு நாகரிகமான ஆகாரம் நடையிலே தோற்றுகிறது இறே
    5-நாராயண மதுராம் புரீம் -ஆகாதோ ஹி -சர்வ காரண பூதனாய்  தான் -கார்ய ஏக தேசத்திலே ஒதுங்கி வந்தான் –
    6- ஸ்ரீ மான் மதுராம் புரீம் -ஆகாதோ ஹி -ஏக தார வ்ரதனானவன் –ஸூ ப்ரபாதா ச ரஜநீ மதுரா வாச யோஷிதாம் பஸ்யந்த யச்யுத வக்த்ர அப்சம் யாஸாம் நேத்ராளி பங்க்த்ய-ஸ்ரீ விஷ்ணு புராணாம் 5-18-24-என்கிறபடியே
    படை வீடேறிப் பத்ன்யந்தர பரிக்ரஹம் பன்னுவாரைப் போலே வந்தான் –
    7-அங்கன் அன்றியே –அதிசயித லஷ்மி யுடையவன் ஒரு படை வீடு சாபேஷனாய் வந்தான் –

    8-நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய  மதுராம் புரீம் -ஆகாதோ ஹி
    புஜங்க சய்யையை விட்டவன் புஜங்க சமர்த்தம் உள்ள -காமினிகள் நெருக்கம் -உள்ள இடத்திலே வந்தான் –

    ஆக இந்த ஸ்லோகத்தாலே-
    வாக்ய த்வயம் போலே உபாயத்வேனவும் உபேயத்வேனவும் ஆஸ்ரயணீயனாய்
    ஒரு தேச விசேஷத்திலே செல்ல வேண்டாத படி தங்கு பயணமாக வந்து
    அங்கு செல்ல மாட்டாத பங்குகளுக்கு -நொண்டிகளுக்கு
    கங்கா பதநம் போலே ஆஸ்ரிதர் இருந்த தேசத்திலே தான் வந்து
    தன் வடிவு அழகாலும்
    நடை அழகாலும்
    அஜ்ஞரானவர்களையும் வசீகரித்து சரிதார்த்தராம்படி(ஆஸ்ரிதார்த்தராம்படி )பண்ணிற்று ஆயிற்று –

    அங்கன் அன்றியே
    பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால் -பெரிய திரு -8-1-9 என்று ஏதச் சப்தார்த்தையும்
    புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே –பெருமாள் திருமொழி -8-2-என்றும்
    தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே -பெருமாள் திரு -8-10- என்றும் உத்பாதகத்வத்தாலே நாராயண சப்தார்த்தையும்
    அணி யுருவில் திருமாலை -பெரிய திருமொழி -8-9-2- என்று ஸ்ரீ மச் சப்தார்த்தையும்
    கடல் கிடந்த பெருமானை -பெரிய திரு மொழி-8-9-2- என்று ஷீரார்ணவ நிகேதந சப்தார்த்தையும்
    வட வரை நின்றும் வந்து இன்று கண புரம் இட வகை கொள்வது யாம் என்று பேசினாள் -பெரிய திருமொழி -8-2-6- என்று ஆகத சப்தார்த்தையும்
    கண்டவர் தம் மனம் வழங்கும் கண புரம் -பெரிய திருமொழி -8-10-5- என்றும்
    கற்றார் சேர் கண்ண புரம் -பெரிய திருமொழி -8-10-5- என்றும் மதுரா புரீ சப்தார்த்தையும்
    பிரதிபாதிக்கையாலே

    ஆபாத சூடம் கிருஷ்ண புரீ நாயகனான சௌரி ராஜ வைபாவத்தையே பிரதிபாதித்த தாயிற்று

    ——————-

    3-ஸ்ரீ விஷ்ணு புராணம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -பராசரம் முநிவரம்-1 அம்சம் -1அத்யாயம் -1 ஸ்லோகம் –

    அவதாரிகை
    ஸ்ரோதாக்களுக்கு இப் பிரபந்தம் ஆப்த தமம் என்று
    இதிலே புபுத்சை பிறக்கைக்காக
    விலஷணனான ஆச்சார்யன் பக்கலிலே
    புபுத்ஸூவாய்
    அபி ஜாதனான சிஷ்யன் அவசரத்திலே (சரியான காலத்திலேயே என்றபடி)பிரஸ்னம் பண்ணின படியைச் சொல்லுகிறது –

    பராசரம் முநிவரம் க்ருத பௌர்வர்ணஹிக க்ரியம்
    மைத்ரேய பரிபப்ரச்ச ப்ரணி பத்யாபி வாத்ய ச
    –1 அம்சம் -1அத்யாயம் -1 ஸ்லோகம் –

    பராசரம் முநிவரம் க்ருத பௌர்வர்ணஹிக க்ரியம்   –
    முனிவர் தலைவராய் -காலைக் கடன்களை முடித்தவராய் யுள்ள ஸ்ரீ பராசர மகரிஷியை

    மைத்ரேய -ப்ரணிபத் யாபிவாத்ய ச –பரிபப்ரச்ச-
    ஸ்ரீ மைத்திரேயர் என்னும்  ரிஷி வணங்கி -அபிவாதனம் செய்து -நன்றாகக் கேட்டார் –

    1-பராசரம்-
    சஹோவாச வியாச பாராசர்ய
    -தை ஆர -1-9-என்று
    வேதாச்சார்யனான ஸ்ரீ வேத வியாச பகவானுக்கு இவனோட்டை சம்பந்தத்தாலே
    ஆப்தி சொல்ல வேண்டும்படி ஸ்ருதியிலே ஆப்தனாக சித்தனானவனை
    2-பராசரம்-
    வைதிக பஷத்துக்கு சத்ருக்களான பாஹ்ய குத்ருஷ்டிகளை
    பிரமாண தர்க்கங்கள் ஆகிற சரங்களாலே ஹிம்சியா நின்றான் என்றாகவுமாம் –
    அதவா –
    3- பராசரம் –
    ஆந்தர சத்ருக்களான ராக த்வேஷாதிகளை சம தமாதிகளாலே ஹிம்சியா நின்றான் என்றாகவுமாம்-

    முநி வரம் –
    பரமாத்ம விஷயத்தில்  மனன சீலர் ஆனவர்களில் உத்க்ருஷ்டனானவனை
    இத்தால் ஜ்ஞான சம்ருத்தி சொல்லுகிறது –

    1-க்ருத பௌர்வர்ணஹிக க்ரியம்   -என்று
    இவ் உபாசனத்துக்கு அங்கமாக சாஸ்திர சோதிதமாய் ஜ்ஞான பூர்வகமான அனுஷ்டானமும் –
    அனுஷ்டிதமான சமயத்திலே -2-1-க்ருத பௌர்வர்ணஹிக க்ரியம்  -என்கையாலே
    சத்வோத்தர காலத்திலே என்கை –

    இத்தாலே
    வசிஷ்டன் அந்ய பரனாய் இருக்க த்ரி சங்கு சென்று கேட்டால் போலே அன்றிக்கே
    ஆச்சார்யன் அநந்ய பரனாய் இருக்கிற சமயத்திலே கேட்டான் -என்கை –

    பர பஷ பிரதிஷேபம் பண்ணுகிற போது அவசரம் அன்று
    உபாசன காலமும் அவசரம் அன்று
    ததங்கமான அனுஷ்டான சமயமும் அவசரம் அன்று
    ஆகையாலே க்ருத க்ருத்யனாய்த் தன்னுடைய ஜ்ஞானத்துக்கு வீடு தேட்டமான அவசரத்தே கேட்டான் என்கை –

    3-மைத்ரேய –
    யாஜ்ஞ வல்க்ய பகவானை  இடங்களிலே பிரஸ்னம் பண்ணிப் போரும் ப்ரஹ்ம விதுஷியான மைத்ரி ஸூதனாகையாலே –
    அவசரத்திலே பிரஸ்னம் பண்ணுகை தன்னைத் தோன்றி வந்ததன்று –
    தன்னுடைய பிறப்பால் வந்தது -என்கை –

    அன்றியிலே
    கேகய மித்ரயு பிரளய -பாணிநி ஸூத்ரம் -7-3-2- என்றபடி
    இய என்னும் பதம் -நிஷ் பன்னமாகக் கிடக்கிறதாகவுமாம்   –
    மித்ரயு -என்பவரின் பிள்ளை என்றும் கொள்ளலாம்-

    1-பரி பப்ரச்ச-
    ஒரு வார்த்தை சொல்லுகை அபேஷிதமான போது கண்ணுக்கு எட்டாதபடி பின்னே இருக்கவும் கடவது அன்று
    கண் படும்படி பார்ஸ்வத்திலே இருக்கை சிஷ்யனுக்கு பிராப்தம்
    அந்த ஸ்தானத்திலே நின்று கேட்டான் -என்கை –

    (தத் வித்தி ப்ரணி பாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா.—
    உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்த்வ தர்ஸிந
    —৷৷4.34৷৷

    ப்ரணி பாதேந -நன்கு வணங்குவதாலும்
    பரி ப்ரஸ்நேந –சூழ்ந்து நின்று கேட்பதாலும்
    ஸேவயா.—கைங்கர்யத்திலும்
    தத் -அந்த ஆத்ம ஞானத்தை
    வித்தி –ஞானிகளிடம் இருந்து அறிவாயாக
    தத்த்வ தர்ஸிந—ஆத்ம ஸ்வரூபத்தை சாஷாத் கரித்த
    ஜ்ஞாநிநஸ்-ஞானிகள்
    தே -உனக்கு
    ஜ்ஞாநம்–ஆத்மாவைப் பற்றிய அறிவை
    உபதேக்ஷ்யந்தி -வணங்குதல் முதலானவற்றால் உகந்து உபதேசிப்பார்கள் –

    பாதம்-கைகள் கால்கள் தலை ஐந்தும் –
    நி பாதம் -அஹங்காரம் அடங்கி -மனாஸ் புத்தி அபிமானம் மூன்றும் -சாஷ்டாங்க நமஸ்காரம்
    ப்ர நி பாதாம் -ப்ரணிபாத–இது ஸ்வயம் பிரயோஜனம் -என்ற புத்தி

    பரிப்ரஷ்ந-சூழ்ந்து இருந்து கேட்டல் –ஆச்சார மூலம் -சக சிஷ்யர் மூலம் -அனுபவத்தால் -கடாக்ஷத்தால் -புரியும் அளவும் கேட்க -பர்யாப்த்தம் -பரி ப்ரஸ்னம்-பரி சாக்ல்யேந –அனைத்து சங்கைகள் போகும் படி சகலமும்-விஷயங்களை ஆழ்ந்து அறிய அத்தைச் சுற்றி பல கேள்விகளைக் கேட்டு உணர்வதுமாகும்)
    2- பரி பப்ரச்ச –
    நினைத்த அர்த்தத்திலே ஆச்சார்யன் உதாரனாம்படி பாடே அத்தைக் கேட்கை-
    அதாகிறது
    யன் மயம் ச ஜகத் ப்ரஹ்மன்-யதைஸ் ச ஏதச்  சராசரம்
    லீந மாஸீத் யதா யத்ர லயமேஷ்யதி யத்ர ச
    -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-1-5-என்று
    சாமான்யத்தில் பிரஸ்னமாய்
    விஷ்ணோ சகாஸாத் உத் பூதம் -ஜகத் தத்ரைவ ச ஸ்திதம்
    ஸ்திதி சம்யம கர்த்தா அசௌ- ஜகதோ அஸ்ய- ஜகச்ச ஸ-
    ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-1-31-என்று
    விசேஷத்திலே உத்தரமாம்படி கேட்டான் -என்கை –
    3-பரிபப்ரச்ச –
    அன்றியிலே பரி -என்கிறது சாகல்யா வசனமாய்
    ஜ்ஞாதவ்யங்களை யடையக் கேட்டான் என்றாகவுமாம் –

    ப்ரணிபத்ய-
    பதனம் ஆகிறது -சர்வ அவயவங்களும் தரையிலே பொருந்த விழுகை –
    நிபதநமாகிறது -ஆந்தரமான அபிமானமும் பக்னமாய் விழுகை
    ப்ர ணிபதநாமிகிறது -இது தானே விஹிதம் என்று இருக்கை அன்றிக்கே ப்ரீதி பூர்வகமாக இருக்கை –

    அபிவாத்ய –
    ஸ்வ நாமத்தை ஆவிஷ்கரித்துக் கொண்டு பாதோப சங்க்ரஹனம் பண்ணுகை –

    ச —
    ஆச்சார்யன் பக்கல் அனுஷ்டிக்கக் கடவ விநயங்களை சமுச்சயிக்கிறது –

    ———

    பூர்வ அவஸ்தையில் இரங்கும்படி ப்ரணி பத்ய அபி வாத்ய ஸ -ஸ்ரீ விஷ்ணு -1-1-1- என்று அநு வர்த்திக்க வேணும்
    உத்தர அவஸ்தையில் க்ருதஜ்ஞனாகையாலே
    த்வத்தோ ஹி வேதாத்யய நமதீ தமகிலம் – ஸ்ரீ விஷ்ணுபுராணம் -1-1-2-என்றும்
    என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -திருவாய் -2-7-8-என்றும் அனுவர்த்திக்க பிராப்தம்

    ————–

    ஏறிய பித்தினோடு* எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும்,*
    நீறு செவ்வே இடக் காணில்* நெடுமால் அடியார்’ என்று ஓடும்,*
    நாறு துழாய் மலர் காணில்* நாரணன் கண்ணி ஈது என்னும்,*
    தேறியும் தேறாதும் மாயோன்* திறத்தனளே இத் திருவே.

    ஏறிய பித்தினொடு – மிகுந்த மயக்கத்ததோடே கூடியிருக்கச்செய்தே (வேதாந்த வித்துக்கள் சொல்லுமாபோலே)
    எல்லா உலகு – ஸகல லோகங்களும்
    கண்ணன் படைப்பு என்னும் – க்ருஷ்ணனுடைய ஸ்ருஷ்டி என்று கூறுகிறாள்;
    நீறு செவ்வே இட காணில் – பஸ்மத்தை மேல்நோக்கி இடக்கண்டாளாகில்
    நெடுமால் அடியார் என்று ஓடும் – ஸர்வேச்வரனுடைய அடியார் என்று கொண்டு (அவர்களைத் தொடர்ந்து) ஓடுகிறாள்;

    “என் பெண்கொடி யேறிய பித்தே” என்று கீழ்ப்பாட்டில் தலைக் கட்டிற்று.
    உலகில் பித்துக் கொள்ளிகளாயிருக்கு மவர்கள் வாயில் வந்தபடி எதையேனும் தப்புந்தவறுமாய்ப் பேசுவதுண்டே;
    அப்படி இவள் ஏதேனும் பேசுகின்றாளோ என்ன;

    பித்து ஏறின நிலைமையிலும் பகவத் விஷயத்தில் தெளிவு சிறிதும் மாறிற்றில்லை என்கிறாள்.
    பராசர மஹர்ஷி முதலானார் தெளிந்திருந்து என்ன வார்த்தை சொல்லுவார்களோ
    அந்த வார்த்தை இவள் சொல்லுகின்றாள் காண்மின்.

    பராசரம் முநிவரம் க்ருதபெளர்வாஹ்நிகக்ரியம்இ மைததேய்: பரிபப்ரச்ச ப்ரணிபத்யாபிவாத்ய ச” என்கிறபடியே
    வணங்கி வழிபட்டுக் கேள்வி கேட்ட மைத்ரேய பகவானுக்கு, நற்றெளிவு கொண்டிருந்த பராசர பகவான்
    விஷ்ணோஸ் ஸகாசாத் உத்பூதம் ஜகத் தத்ரைவ ச ஸ்திகம்.
    ஸ்திதி ஸம்யமகர்த்தாஸென ஜகதோஸ்ய ஜகச்ச ஸ:
    .” என்று உபதேசித்த
    அரும் பெரும் பொருளை இவள் பித்துக் கொண்டிருக்கிற நிலையிலே அவவீலையாக எடுத்துரைக்கின்றாளாயிற்று.

    நன்கு வேதமோதிய அந்தணன் பித்தேறினாலும் வேத வாக்கியங்களையே சொல்லித் திரியுமா போலே
    இவளும் வாஸநா பலத்தாலே பகவத் விஷயமல்லது பேசாளென்கை
    .

    நீறு செவ்வேயிடக் காணில் நெடுமாலடியாரென்றோடும் = திருமாலடியார்களுக்கு பஸ்மதாரணம் சாஸ்த்ர நிஷித்தம்
    என்னுமிடம் ஆழவாரறியாததன்று;
    அப்படியிருக்க இங்கு அருளிச்செய்வதற்குக் கருத்தென்னென்னில்;
    “த்ரவ்யம் ஏதேனுமாகிலும் ஊர்த்த்வமாக இடக் காணில் நெடுமாலடியாரென்றோடும்.” என்பது ஆறாயிரப்படி யருளிச்செயல்.
    இதனை அடியொற்றியே மற்ற வியாக்கியானங்களு முள்ளன.
    பஸ்மதாரணம் பண்ணினவர்களேயாயினும் அந்த பஸ்மத்தைக் குறுக்கே பூசாதே நெடுக இட்டால்
    ‘ஊர்த்த்வ புண்ட்ர தாரிகளிவர்கள்’ என்று அவ்வளவுக்காக ப்ரதிபத்தி பண்ணுமென்றபடி.

    ————————————

    4–ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் –ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதி-உத்தர சதகம் -19 ஸ்லோகம் —

    அவதாரிகை –
    சர்வேஸ்வரன் அனுமான பிரமாண சித்தன் என்று சொல்லுகிற வாதி பஷ ப்ரதி ஷேபத்தைப் பண்ணிக் கொண்டு
    ச பரிகரமான க்ருத்ஸ்ந வேதமே இவ் விஷயத்தில் பிரமாணம் என்றும்
    பூர்வ உத்தர பாகங்கள் இரண்டிலும் அவனே பிரதிபாத்யன் என்றும் சொல்லி
    இவ் வர்த்தத்தில் ஸ்ரீ கீதோக்தமான பகவத் வசனத்தையும் மூதலிக்கிறார்–

    ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதிர் உப குருதே ஸேதிஹாசை புராணை
    ந்யாயை  சார்த்தம் தவத் அர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக
    ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ
    வேத்யோ வேதைஸ்ச சர்வைர் அஹமிதி பகவன் ஸ்வேன ஸ வியாச கர்த்த -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -உத்தர சதகம் -19 ஸ்லோகம் –

    ஆதௌ -முதலிலே -மற்று ஒரு பிரமாணத்தை எதிர்பாராமல் தானாகவே –
    வேதா -வேதங்களானவை-
    பிரமாணம்-உண்மை அறிவை யுண்டாக்கும் பிரமாணம் ஆகின்றன –
    ஸ்ம்ருதி -மநு முதலானோர் இயற்றிய ஸ்ம்ருதி சமூஹம்
    ஸேதி ஹாசை புராணை-இதிஹாசங்களோடு கூடிய புராணங்களோடும்
    ந்யாயை  சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்ஸா நியாயங்களோடும் கூட
    உப குருதே-வேதங்களுக்கு பொருள் காணும் விஷயத்தில் உதவுகிறது –
    பூர்வ பாக -வேதத்தில் கர்ம காண்டம் என்கிற முற்பகுதி
    தவதர்ச்சா விதி முபரி -தேவரீருடைய திரு வாராதன முறையைச் சொல்லும் வழியில்
    பரிஷீயதே -தலைக் கட்டுகிறது-
    ஊர்த்வோ பாகஸ்-ப்ரஹ்ம காண்டம் எனப்படும் பிற்பகுதி யாகிய உபநிஷத் பாகம்
    த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாப நைஸ்-தேவரீருடைய ஸேஷ்டிதங்கள்-குணங்கள் -செல்வங்கள் ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதாலே –
    த்வத் பதாப்தௌ -தேவரீருடைய திருவடிகளை அடைவதில்
    பரிஷீயதே -தலைக் கட்டுகின்றது –
    பகவன்-எம்பெருமானே
    சர்வை ஸ வேதை -பூர்வ உத்தர பாக ரூபமான எல்லா வேதங்களாலும்
    அஹம் -நானே
    வேத்ய இதி -அறியப் படுபவன் -என்று
    ஸ்வேந -தேவரீர் தாமே
    வியாச கர்த்த -ஸ -அருளிச் செய்தும் வைத்தீர் அன்றோ –

    அதில் முற்பட வேத ப்ராமாண்யம் உண்டாகில் இறே
    இவ் விஷயத்தில் பிரமாணம் ஆவது -என்னில் –
    அது முற்பட முன்னம் ஸூ த்ருட பிரமாணம் -என்கிறார் –

    ஆதௌ –
    பகவத் ஸ்வரூப விபவாராத நாதிகளை அகல இட்டுப் பேசி
    வாக்ய தர்க்கங்களாலே உப பாதிக்கக் கொண்டு
    இது உபபாதித்த படி அழகிது -பிரமாணமாகப் பெற்றிலோம் -என்று இழவு பட வேண்டாதபடி
    க்ருத்ஸ்ந வேதமும் முற்பட ஸூத்ருட பிரமாணம் –என்கிறார் –

    பிரமாணம்-
    சம்யக்கான பிரமிதிக்கு சாதனம் இறே பிரமாணம் ஆவது-
    அசம்யக்த்வ ஹேது- ப்ரம விப்ர லம்பாதி (துயக்கு மயக்கு மறப்பு -இத்யாதி)காரண தோஷமும்-
    நேதம் இத்யாதி- பாதகப்ரத்யமும் இறே  –
    காரண அநபேஷமுமாய் -அது தான் அபௌருஷேயமும் ஆகையாலே
    காரண தோஷ பாதக பிரத்யயங்கள் இல்லை என்று இட்டு பிரமாணமாகக் கடவது –

    இப்படி பிரமாணம் ஆகிறது –
    இப் பிரமாணயத்துக்கு ஆலம்பன வ்யக்திகள் தான் எது -சஷூராதி கரணங்களோ -என்னில் –

    வேதா  –
    காச திமிராதி தோஷ சம்பாவனையும் உடைத்தாய் -அநித்யங்களுமான அவை அன்றியே
    வாசா விரூப நித்யயா-என்றும்
    அநாதி நிதநா ஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா -(v)என்றும் சொல்லுகிறபடியே
    அநாதி நிதந அவிச்சின்ன சம்பிரதாயமாய் –
    நித்ய நிர்த் தோஷமாய்-
    ப்ரம  விபர லம்பாதி தோஷ கந்த ரஹீதமான  வேதங்கள் –

    வேதா –
    வேத்யதி-என்கிற வ்யுத்பத்தியாலே
    ச விபூதிகனான பகவானுக்கு பிரதிபாதக தயா பிரமாணம் ஆகிறது –
    வேதயதி -என்ற இது பிறரை அறிவிக்கை யாவது என்
    யோ புத்த்யதே ஸ பரான் போதயதி -என்று தான் அறிந்தால் பின்பு அல்லவோ பிறரை அறிவிப்பது

    நேதி நேதி -என்றும்
    க இத்தா வேத -(ஆண் அல்லன் பெண் அல்லன் இத்யாதி)என்றும்
    யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும்
    யதோ ந வேத மனஸா சஹை நம நுப்ரவிசந்தி -என்றும் சொல்லுகிறபடியே
    தான் அகப்பட நெஞ்சாலும் கூட அறிய மாட்டிற்று இல்லை என்று சொல்லச் செய்தே
    பிறரை அறிவிக்கும் படி என் என்னில்

    ஒன்றை அறிகை யாவது -வஸ்து இருந்தபடியே அறிகை இறே -இங்கும்
    சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றும்
    ப்ருஹதி ப்ரும்ஹயதி தஸ்மா துச்யதே பரம் ப்ரஹ்ம -என்றும் –
    ஸ்வரூ பேண குணைச்ச யத்ர அநவதிக அதிசயம் -என்றும்
    தவ அநந்த குணஸ் யாபி -என்றும்
    ஆநந்த்யாத் ப்ரதமோ ராசி -என்றும்
    அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண  குண கண -என்றும் சொல்லுகிறபடியே
    வஸ்து ஸ்வரூப குணங்களால் அபரிச்சின்னம் ஆகையாலே-அபரிச்சின்னம்  என்று அறிகை இறே

    அபரிச் சின்னத்தைப்  பரிச்சின்னம் என்று அறிகை யாகிறது நீலத்தைப் பீதம்-மஞ்சள் – என்கிற மாத்ரம் இறே –
    அபரிச்சின்ன வஸ்துவை அபரிச்சின்னம் என்று அறிகையால் ஸ்வ ஜ்ஞானத்துக்கும் பர ஞாபகத்துக்கும் -பிறருக்கு அறிவிக்கும் பொழுதும்-குறை இல்லை –
    வேத புருஷன் தானே –வேதாஹா மேதம் புருஷம் –என்று இவ் வஸ்துவை நான் அறிவேன் -என்றாய்
    அறிந்தபடி என் -என்னில்
    மஹாந்தம் -என்று அபரிச்சின்னன் என்று அறிந்தேன் என்றான் இறே

    வைதிக அக்ரேசரும்-அஹம் வேத்மி மஹாத்மானம் -பால -19-14–என்றும்
    யேஸ வேத விதோ விப்ராயே சாத்யாத்மா விதோ ஜநா -தே வதந்தி மஹாத்மானம் -பார -ஆர -71-123- என்றார்கள் இறே

    இவற்றை உப ப்ரும்ஹித்த பக்தர்களும் –
    அறிந்தன வேதம் அரும் பொருள் நூல்கள் -திருவாய் -9-3-3- என்றாய் -அறிந்தபடி என் என்ன
    அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல் -திருவாய் -9-3-3- என்றார்கள் இறே

    அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
    அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
    அறிந்தனர் எல்லாம்
     அரியை வணங்கி
    அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-

    நிஷேத வாக்யங்கள் தன்னிலும் –
    நேதி நேதி -என்றும் –
    அப்ராப்ய மனஸா சஹ -என்றும்
    மனுஷ்யாநந்தம் தொடங்கி-ப்ரஹ்மா நந்தத்து அளவும் ஒன்றுக்கு ஓன்று மேல் அவதியைப்
    பேசிக் கொடு போந்து மேல் ஓர் அவதி காணாமையாலே
    இவ்வளவு என்கிற இயத்தா ராஹித்யத்தைப் பற்றச் சொன்ன இத்தனை போக்கி –
    நேராக தத் விஜ்ஞானம் இல்லை என்றது
    அன்றே

    இப்படித் தான் அறிந்து பிறரையும் அறிவிக்கிறது தான் ஓன்று இரண்டோ என்னில்
    வேதா –
    ரூசோ யஜூம்ஷி சாமாநி ததைவ அதர்வணாநி ஸ
    -என்கிறபடியே
    ருக் ய்ஜூஸ் சாம அதர்வாத்மகமான சதுர் வித கோடியிலும் அடைப்புண்டு
    அநந்தா வை வேதா -என்கிறபடியே
    காண்வ மாத்யந்தி நாதி பேதத்தாலே அசங்க்யாதமாய் இருக்கும் –

    யே சேமே தபசி ஸ்திதா -என்னுமா போலே
    சாஷிகள் அத்தனையும் சொல்ல பிரமாண தார்ட்யத்துக்கும் உறுப்பு என்று இருக்கிறார் –
    ஏக சந்திக்தே கார்யே வஸ்து நி -என்று ஒருத்தன் உபபாதகன் ஆன போது இறே –
    ஜ்ஞாநாத் அசந்நிக்ருஷ்டே அர்த்தே விஜ்ஞானம் -என்றும்
    அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவத் -என்றும் சொல்லுகிறபடியே
    பிரமாணாந்தர அவிஷயமான பகவத் விஷயத்தில் பிரமிதி ஜனகமாம் போது
    கார்யார்த்தத்தோடு பரி நிஷ்பன்ன வஸ்துவோடு வாசி அற போத ஜன சக்தமான வேதமே யாகக் கடவது-

    (காம் ஆனாய —கார்யார்த்தம் -பசுவைக் கூட்டி வா
    அப்பா இவர் -அம்மா காட்டி அறிவிப்பது -இருக்கும் வஸ்து –பரி நிஷ்பன்ன வஸ்து
    ஸாஸ்த்ர யோநித்வாத் –ஸித்த வஸ்துவையும் வேதவாக்யங்கள் சொல்லும்
    ப்ரஹ்மத்தை ஆராதனை பண்ணு -கார்யார்த்தமும் உண்டே)

    வ்யாப்தியை உப ஜீவிக்கிற அனுமானத்தை இட்டு சாதிக்கும் போது
    வ்யாப்தி சித்தமாய்
    திருஷ்டாந்த   கதமான கர்ம வஸ்யத்வாதிகள் ஈஸ்வரனுக்கு பிரசங்கிப்பதும் செய்யும்

    இவனுக்கு சஜாதீயமாய் இருக்கும் திருஷ்டாந்தம் உண்டாகையில்
    ந தத் சமஸ் ச அப்யாதி கச்ச த்ருச்யதே -என்றும்
    ந த்வத் சமோ அஸ்த் யப்யாதி க குதோ அன்யோ லோகத் த்ரயே  அப்ய பிரதிம ப்ரபாவ -என்றும்
    நாஸ்தி நாராயண சமோ ந பூதோ ந பவிஷ்யதி -என்றும்
    சமாப்யதிக நிஷேதம் பண்ணுகிற பிரமாணங்களுக்கு நைரர்த்தத்யமும் பிரசங்கிக்கும்
    ஆகையால் –இவ் விஷயத்தில் பிரமாணம் ஆம் போது வேதமே யாகக் கடவது
    வேதம் தான் நிர பேஷமாக ப்ரஹ்மணி பிரமாணமாய் இருக்கிற படியால் உக்த தோஷங்கள் வாராது –

    (ஈஷதேர் ந அ சப்தம் –1-1-5-

    பிரதானம் ஜகத்துக்குக் காரணம் என்பதற்கு அனுமானம்
    இந்த ஜகத்து தன்னைத் தவிர வேறே அல்லாமல் தன்னையே உபாதான காரணமாகக் கொண்டது
    காரியமாய் இருப்பதால் குடம் போல் என்பதும்
    இந்த ஜகத்து தன் காரணம் ஒன்றை அறிவதாலேயே முற்றும் அறியப்படுவது -காரியமாய் இருப்பதால்
    ஒரு மண் உருண்டையால் தொடங்கப்பட்ட குடம் போல் என்பதும் ஆகிய இரண்டு அனுமானங்களாலும்
    சாதனமானவை என்பது பூர்வ பக்ஷம் –

    ஈஷதேர் ந அ சப்தம் –
    இதில்
    அ -சப்தம் மட்டும் ப்ரமாணமாகக் கொள்ளாத அனுமான பிராமண கம்யமான பிரதானம்
    ந -ஸத் எனப்படும் ஜகத் காரணம் அன்று
    ஏன் எனில்
    ஈஷதேர்-நான் பலவிதமாக மாறப்போகிறேன் என்று சங்கல்பித்துக் கொண்டார்
    தத் ஈஷதே பஹுஸ்யாம் ப்ரஜாயேய -என்ற சங்கல்பம்
    அசேதனமான ஜகத்துக்குச் சேராதே என்பதால்
    ஸர்வஞ்ஞத்வம் முதலியவற்றுடன் கூடிய ப்ரஹ்மமே ஜகத்தின் காரணமாகும் என்பதாம் –)

    ஆனால் வேதோ அகிலோ தர்ம மூலம் ஸ்ம்ருதி சீலே ச தத் விதாம் -என்றும் –
    ஸ்ருதி ஸ்ம்ருதி சதாசார -என்றும்
    ப்ருதஹ்குபாத்தமாய் -சஹ படிதமான ஸ்ம்ருதி யாதி   க்ருத்யம் என்ன –
    வேதத்தாலே சரிதார்த்தம் ஆகில் ஸ்ம்ருதி யாதிகளுக்கு க்ருத கரத்வாதிகளாலே ஆநர்த்தஸ்யமும் –(அர்த்தம் இல்லாமையும்)
    இவை தான் சமுச்சித்ய பிரமாணம் ஆகிறது ஆகில்
    கேவல வேதத்தின் யுடைய பிரமாண்யத்துக்கு வைகல்யமும் –(ஒட்டாமையும்
    )மூலமான வேதத்தின் யுடைய உப ஜீவ்யத்வ ஹானியும் வாராதோ என்னில் –

    ஸ்ம்ருதி ருபகுருதே ஸேதி ஹாசை புராணை–இத்யாதி –
    தர்மே ப்ரமீயமாணே து வேதேந கரணாத்மாநா -இதி கர்த்தவ்ய தாபகம் மீமாம்ஸா பூர யிஷ்யதி-என்று(-இதி கர்த்தவ்ய தாபகம் மீமாம்ஸா-இப்படி இப்படி என்று காட்டும் மீமாம்ஸை)
    பிரதிபாத்யர்த்தத்தில் பிரமிதி ஜனகமாம் போது-வேதமே கரணமாய் இருக்கச் செய்தே
    பரி நிஷ்பன்னமான கரணத்துக்கு இது கர்த்த்வ்யதா ரூபேண உபகாரகம் ஆகையாலே குறை இல்லை –

    (வேதமும் ப்ரஹ்மமும் நித்யம்
    இப்படி இப்படி என்று அறிய உபகாரம் செய்யும் இவை)

    இதுக்கு உபகாரமாம் இடத்தில் ஸ்ம்ருதிகள் என்ன -இதிஹாச புராணங்கள் என்ன -ந்யாயம் என்ன –
    இவற்றில் அந்ய தமத்தாலே அமையாதோ -இவை எல்லாம் என் என்னில் –

    இவற்றுக்குத் தனித் தனியே க்ருத்ய பேதம் யுண்டாகையாலே புநர் உக்தங்கள் அன்று –
    அதில் ஸ்ம்ருதி களினால் வேதத்தில் பூர்வ பாகார்த்த விசதீகரணமும்
    இதிஹாச புராணங்களினால் உத்தர பாகார்த்த விசதீகரணமும் பண்ணப் படுகிறது –

    (வேதம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலே..
    ஸ்ம்ருதியாலே பூர்வ பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –
    மற்றை இரண்டாலும் உத்தர பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –
    இவை இரண்டிலும் வைத்து கொண்டு இதிஹாசம் பிரபலம் –அத்தாலே அது முற் பட்டது
    –)

    அதில் இதிஹாசம்-சௌலப்ய ஏக பரம் –
    புராணம் -பரத்வ ஏக பரம் –

    நியாயை (பஹு வசன பிரயோகம்)என்று சீஷா கல்ப வியாகரண நிருக்தச் சந்தஸ் ஜ்யோதிஷங்கள் ஆகிற ஷட் அங்கங்கள் என்ன
    மீமாம்சைகள் என்ன இவற்றுக்கும் உப லஷணமாய் இருக்கிறது

    இந்த ஷட் அங்கங்களும் நியாய மீமாம்சைகளும் –
    வாக்யார்த்த விசாரம் என்ன –
    வாக்யாங்கமான பத வர்ண ஸ்வராதி நிர்ணயம் என்ன –
    இவற்றில் விநி யுக்தம் ஆகையாலே உபய பாகத்துக்கும் சாதாரணமாய் இருக்கிறது –

    ஆக இத்தால்
    புராண நியாய மீமாம்ஸா தர்ம சாஸ்திர அங்கமிஸ்ரிதா –வேதா ஸ்தாநாநி  வித்யா நாம் தர்மஸ்ய ச சதுர்தச -(4 வேதம் 6 அங்கம் -புராணம் நியாயம் மீமாம்ஸை தர்ம சாஸ்திரம் -ஆக 14-வேத சதுஷ்ட்யத்துக்கு அங்க உப அங்கங்கள் 14 ஆயுர் வேதம் அர்த்த சாஸ்திரம் தனுர் வேதம் காந்தர்வ வேதம்)என்றும்
    அங்காநி வேதாஸ் சத்வாரோ மீமாம்ஸா நியாய விஸ்தர -புராணம் தர்ம சாஸ்திரம் ச வித்யா ஹ்யதாஸ் சதுர்தச -என்றும்
    சீஷாயாம் வர்ண சிஷா –பத சமதி கமோ வ்யாக்ரியா நிர்வ சோப்யாம்- சந்தஸ் சந்தஸ் சிதௌ ஸ்யாத் -கமயதி சமயம் ஜ்யௌதிஷம் ரங்க நாத
    கல்ப அனுஷ்டானம் உக்தம் -ஹ்புசித கமிதயோர் நியாய மீமாம்சையோ ஸ்யாத்-அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷூ தத் அனுகாஸ் த்வாம் விசின்வந்தி வேதா
    –(18) என்றும் சொல்லுகிறபடியே
    அங்காதி சஹிதமான வேதமே பிரமாணம் என்று சொல்லுகிறது-வேதத்தின் யுடைய ப்ராதான்யத்தையும் இதரங்களினுடைய அப்ரதான்யத்தையும் பற்றி இறே-

    (சீஷாயாம் வர்ண சிஷா பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்
    சந்தஸ் சந்தஸ்திதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யவ்திஷம் ரங்க நாத
    கல்பே அனுஷ்டானம் யுக்தம் ஹி உசிதகமிதயோ நியாய மீமாம்சயோ ஸ்யாத்
    அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதிஷு தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா
    –18-

    ஹே ரங்க நாத

    சீஷாயாம் –சீஷா என்கிற வேத அங்கத்தில்

    வர்ண சிஷா –அக்ஷரங்கள் உச்சாரண க்ரமாதிகள் சிஷை செய்யப்பட்டுள்ளது –

    பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்–வியாகரணம் நிருத்தி என்கிற வேதங்களில் பாதங்களின்
    ப்ரக்ருதி ப்ரத்யய விபாகம் அர்த்த சிஷை முதலானது செய்யப்படுகிறது –

    சந்தஸ் சந்தஸ்திதவ் –சந்தஸ் ஸ்யாத்–சாஸ்திரத்தில் காயத்ரி உஷ்ணிக் அனுஷ்டுப் த்ருஷ்டுப் பிருஹதி பங்க்தி ஜெகதீ
    முதலான சப்த சந்தஸ்ஸூக்கள் சொல்லப்பட்டதாய் இருக்கும்

    கமயதி சமயம் ஜ்யவ்திஷம் -ஜ்யோதிஷ சாஸ்திரமானது வைதிக கர்மங்களின் அனுஷ்டானத்துக்கு உரிய காலத்தை தெரிவிக்கின்றது –

    கல்பே அனுஷ்டானம் யுக்தம் –கல்ப ஸூத்ரத்திலே வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டிய முறைமை சொல்லப் பட்டது

    ஹி உசிதகமிதயோ –வைதிக சித்தாந்தத்துக்கு அநு குணமாக நயிப்பிக்கப் பட்ட

    நியாய மீமாம்சயோ ஸ்யாத்-நியாய மீமாம்சைகளிலும்

    அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷு –புராண ஸ்ம்ருதிகளிலும் அர்த்த விவேசனம் உண்டாகும்

    புராண சப்தம் இதிஹாசங்களுக்கும் உப லக்ஷணம்

    தர்ம சாஸ்திரம் பூர்வ கர்ம பாக உப ப்ரும்ஹமணமாயும்
    இதிஹாச புராணங்கள் உத்தர ப்ரஹ்ம பாக உப ப்ரும்ஹணமாயும் இருக்குமே

    தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா-கீழ் சொன்னவற்றால் அநு சரிக்கப் பட்ட வேதங்கள் தேவரீரை தேடுகின்றன –
    விசாரிக்கின்றன -என்றவாறு

    பேச முயலுமே ஒழிய பேசி முடிக்க வல்லவை அன்றே

    நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் அன்றோ -பெரிய திருமொழி —-

    நாடி என்-தன் உள்ளம் கொண் நாதன் என்றும் நான்மறைகள்
    தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
    சேடு உலவு பொழில் கொள நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி
    பாடகம் சேர் மெல்-அடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே

    ஸீஷா–அக்ஷரங்கள் உச்சரிப்பு போன்றவை
    வ்யாக்ரணம் -இலக்கணம்
    ந்ருக்தி -அர்த்த பிரயோகம்
    சந்தஸ் -காயத்ரீ உஷ்ணிக் அனுஷ்டுப் த்ரிஷ்டுப் ப்ருஹதீ பங்க்தி ஜெகதீ -சப்தம்
    ஜ்யோதிஷம் -அனுஷ்டான கால நிர்ணயம்
    கல்பம் -அனுஷ்டான விதி முறைகள்
    நியாயம் மீமாம்சை புராணங்கள் ஸ்ம்ருதி –இவை போன்ற அங்கங்கள் கூடிய அங்கி யான வேதம்
    உன்னையே தேடியபடி இருக்கும்
    வேதங்கள் உப ப்ரும்ஹணங்களான இதிஹாச புராணங்கள் -நியாய மீமாம்சைகளை அனைத்தும்
    தேவரீரையே விசாரித்து நிஷ்கர்ஷிக்கிறது)

    ஸேதிஹாசை  நியாயைஸ் சார்த்தம் ஸ்ம்ருதிர் உபகுருதே -என்று
    பிபேத் யல்ப ஸ்ருதாத் வேதோ மாமயம் பிரதரிஷ்யதி -இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுப் ப்ரும்ஹயேத்-என்கிறபடியே
    அசங்க்யாதமான க்ருத்ஸ்ந வேதத்தையும் -வேதாந்தத்தையும்  கபளீகரிக்கைக்கு ஈடான
    அளவில்லாத மந்த மதிகள் நம்மை நலியில் செய்வது என் என்று
    பயப்படுகிற வேதங்களுக்கு உப ப்ரும்ஹண முகத்தாலே பய நிவ்ருத்தியைப் பண்ணி உபகரிக்கிறது -என்றாகவுமாம் –

    ஸ்மிருதி சப்தார்த்தம் தான் –
    ஸ்மர்யதே -என்கிற வ்யுத்பத்தியாலே
    ஆச்சார்ய முகத்தில் நின்றும் அதிகதமான வேதார்த்தத்தை  அந்த வாசனையாலே நினைத்து பிரபந்தீ கரிக்கை –

    இதிஹாசம் ஆவது –
    யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை
    -என்கிறபடி
    கூடஸ்தனாய் இருப்பான் ஒரு ஆச்சார்யன் ஒரு சிஷ்யனுக்கு உபதேசித்து
    அவ் வளவிலே தலை சாய்ந்து போகை அன்றியிலே
    இதிஹாசே ஸ்ரூயதே-என்றும்
    தைச் சோக்தம் புருகுத்சாய பூபுஜே நர்மதா தடே -சாரஸ்வதாய தேநாபி மம சாரஸ்வதேந ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-9-என்றும்
    விவஸ்மான் மநவே ப்ராஹ்ம நுரிஷ்வாகவே அப்ரவீத் –ஏவம் பரம் பராப்ராப்தம்  -ஸ்ரீ கீதை -4-1/2- என்றும் சொல்லுகிறபடியே
    அந்த வேதார்த்தத்தை குரு பரம்பரைகளாலே அவிச்சின்ன சம்பிரதாயமாம் படி வர்திப்பிக்கை –

    புராணம் ஆவது –
    புராபி நவ
    -என்றாய்
    அநாதியான வேத சித்தார்த்தத்தை நூதனமாக பிரபந்தீ கரிக்கை –

    ந்யாயம் ஆவது
    பூர்வ பஷ (யுக்திகளாலே )சித்தாந்த யுக்திகளாலே அபார்த்தங்களை ஆராய்ந்து நிஷ் கர்ஷித்துக் கொடுக்கை –

    ஆக இப்படி
    ச அங்கமாயும் ச சிரஸ்கமாயும் உள்ள க்ருத்ஸ்ந வேதமும் ப்ரஹ்ம பிரதிபாதகம் ஆகையாலே
    பிரமாணம் என்றே சொல்லுகிறது –

    அது செய்யும்படி என் –
    அக்நயே பதிக்ருதே புரோடாசம் அஷ்டாகபாலம்  நிர்வபேத்-(அக்ரம் நயதேதி அக்னி)என்றும்
    வாயவ்யம் ஸ்வேதமாலபேத பூதிகாம -என்றும்
    ஐந்தரம் சாரும் நிர்வபேத் பஸூ காம -என்றும் இத்யாதிகளாலே
    அக்னி இந்த்ராதி தேவதாந்தரங்களையும்
    தத் உபசானங்களையும் அன்றோ பிரதி பாதிக்கிறதாகத் தோற்றுகிறது-என்னில் –

    த்வத் அக்ரம் நயதேதி அக்னிர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக —
    அவ் விடத்தில் உன்னையே பிரதிபாதிக்கிறது -என்கிறார் –

    காகஸ்ய கார்ஷ்ண்யாத் சபள பிரசாத -(காக்காய் கறுப்பாக இருப்பதற்கும் -தித்யோதனம் வெளுப்பாக இருப்பதற்க்கும் என்ன சம்பந்தம்)என்று
    அக்னி இந்த்ராதி தேவதா விசேஷங்களை பிரதிபாதியா நிற்க
    நம்மை பிரதிபாதிக்கை யாவது-என் என்னில்

    இஷ்டா பூர்த்தம்  பஹூதா ஜாதம் ஜாயமாநம் விஸ்வம் பிபர்த்தி புவநஸ்ய நாபி -என்றும்
    யத் கரோஷி யத் அஸ்நாஸி யஜ் ஜூஹோஷி ததாஸி யத் -யத் தபஸ் யஸி கௌந்தேய தத் குருஷ்வ மதர்ப்பணம் -ஸ்ரீ கீதை -9-26-என்றும்
    யே யஜந்தி பித்ரூன் தேவான் ப்ராஹ்மணான் ச ஹூதாசநான் -சர்வ பூதாந்த ராத்மானம் விஷ்ணு மேவ யஜந்தி தே -என்றும்
    அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச -ஸ்ரீ கீதை -9-24- என்றும்
    ச ப்ரஹ்மா ச சிவ சேந்திர ஸோ அஷர பரம ஸ்வராட் -என்றும்
    ஏநமேகே வதந்த் யக்நிம் மனு மந்யே பிரஜாபதிம் இந்திர மன்யே பரே பிராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம் -என்றும்
    பிரமாண கணங்கள் உபபாதிக்கிற படியே
    சமாக்யைக்கு பாதகமான ஸ்ருதி லிங்க ப்ரகரணாதியான பிரபல பிரமாணத்தாலே-
    தத் தத் பிரதேச அநுகுணமான  அவயவ சக்தியாலே யாதல்(ஸ்ருதி- லிங்க ப்ரகரணாதியான–ஸ்ருதி -அடையாளம் –வாக்யம் -ப்ரகரணம் ஸ்தான பிரமாணம் –சமாக்யை -பேர் – (ஸ்தான பிரமாணம்-உகாரம் -அவதாரணம்-தண்ணீர் உறிஞ்சும் ஸூர்யன் -சம்சாரக்கடல் வற்றும் பரமாத்மா -ஸாஸ்வதம் ப்ரஹ்மம் போல்வன – )அடுத்த அடுத்த பிரமாணங்கள் துர்பலம்)
    (அந்தர்யாமி பாவத்தால்)அபர்யவசாந வ்ருத்தியாலே யாதல்(அவனே அவனும் அவனும் அவனும்)
    அவ்வவோ சப்தங்கள் தேவருக்கே வாசகம் ஆகையால்
    அவ் வாக்யங்களும் தேவருடைய சமாராதன பிரகாரத்தைச் சொல்லிற்றாகக் கடவது –

    த்வத் அர்ச்சா விதி முபரி
    உம்முடைய ஆராதன விதியிலே –
    யஜ்ஞேன தாநேந தபஸா அநாசகேந -(அநாசகேந-உண்ணாமல் பட்டினி இருந்தும்)என்றும்
    வர்ணாஸ்ரம ஆசாரவதா புருஷேண பர புமான் -விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நான்ய-என்றும் சொல்லுகிற
    தேவருடைய சமாராதநத்தைச் சொல்லுகிறது
    நம்முடைய அர்ச்சனமாகில் சொல்லுகிறது –

    (அசேஷ ஜகக தித்த அநு சாசன ஸ்ருதி நிகர ஸிரஸி ஸமதிகதோ யமர்த்த
    ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக வர்ணாஸ்ரம தர்ம இதி கர்தவ்யதாக
    பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி அத்யர்த்தப் பிரிய -தத் பிராப்தி பல
    -ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம்-1-

    (அசேஷ ஜககதித்த அநு சாசன -தத்வம் சித்தம் -ஹிதம் புருஷார்த்தம் ஸாத்யம் -சாஸனமே பிரதானம்
    ஸ்ருதி நிகர -சமுதாயம் -ஸிரஸி -வேதாந்தம்
    ஸமதிகதோ யமர்த்த -நன்கு அறியப்படும்
    ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக -ஸர்வ காரணம் ஸமஸ்த இதர விலக்ஷணன் இத்யாதி –
    ஞான ஸ்வரூபன் சேஷ பூதன்- அணு -இத்யாதி -இவை முன்னிட்டு
    வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாக–இவற்றை அங்கமாக -த்ரிவித த்யாகத்துடன் ஆராதன ரூபமாக செய்து-இதி கர்தவ்யதா -அங்கமாக –
    பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி-பக்தி யோக உபாசனத்துக்கு இவையே அங்கங்கள் -மத் யாஜி மாம் நமஸ்க்ரு
    அத்யர்த்தப் பிரிய -அளவு கடந்த வாக்குக்கு அப்பால் பட்ட பிரியம்
    தத் பிராப்தி பல-பகவத் பிராப்தி)

    நம்முடைய ஸ்வரூப விஷயமாகச் சொல்லத் தட்டு என் -என்னில்
    அர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக —
    நேராக சப்தாதி விஷயங்களிலே ப்ரவணரான சம்சாரி சேதனரை-(போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து) இதோ விமுகராக்கி- நல் வழியே போக்குகைக்கு
    தானே பண்ணுகையாலே அதிலே உப ஷீண மாயாயிற்று பூர்வ பாகம் இருப்பது
    ஆகையாலே ஸ்வரூப பிரதி பாதனத்துக்கு அவசரம் இல்லை யாயிற்று –

    ஏதேனுமாக சம்சாரிகளுடைய ஹித ப்ரவ்ருத்தி யாகில்
    இதுக்கு க்ருத்யம்-
    ப்ராப்ய ஸ்வரூபத்தையும் –
    ப்ராப்தி பிராபக ஸ்வரூபத்தையும் –
    ப்ராப்த்ரு ஸ்வரூபத்தையும் –
    விரோதி ஸ்வரூபத்தையும்
    பல ஸ்வரூபத்தையும்

    முதல் தன்னிலே அறிவிக்கத் தட்டென்-என்னில் அது ஒண்ணாது –

    (ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஸ்ச ப்ரத்யகாத்மந:
    ப்ராப்தி உபாயம் பலம் ப்ராப்தே: ததா ப்ராதிவிரோதிச
    வதந்தி ஸகலா வேதா: ஸேதிஹாஸ புராணகா:
    முநயச்ச மஹாத்மாநோ வேதவேதார்த்த வேதிந:

    மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
    தக்க நெறியும் தடையாகித் — தொக்கியலும்
    ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
    யாழின் இசை வேதத்தியல்.)

    முதல் பழுவிலே தவறி ஏழாம் பழுவிலே அடி வைக்கப் போகாது இறே
    ஸ்தன்ய பாநாதிகளிலே பரக்க வாசனை பண்ணிப் போருகிறவனை சடக்கென -அவை ஹேயம் இப்போதே
    அனர்த்தகரமான சரீரத்தை  விட்டு மோஷத்தைப் பெரு-என்று சொன்னால்
    அப சர்ப்பேத் அசௌ கதா மோக்ஷ ப்ரஸ்தாவ கந்தத-ஸ்ரீ பாஷ்யம் -என்கிறபடியே
    இவன் முகம் கெட்டுக் கழியும் ஆகையாலே

    (தனம் குழையிடக் காது பெருக்குவாரைப் போலே
    மாச உபவாஸிக்குப் போஜன புறப்பூச்சு போலே)

    அவன் உகந்த சம்சாரி பலங்களிலே இழிந்து
    அவனுக்குப் போக விரோதியான சத்ருக்களை போக்குகைக்கு ஸ்யேன விதியை உபதேசித்து
    அது பலித்து -அந்த வாக்யத்திலே விஸ்வாசம் பிறந்தவாறே
    போக உபகரணமான திவ்ய சம்பத்திக்கு உடலாக வ்ருஷ்டைர்த்தமாகக் காரீரியை விதித்து
    அது பலித்து -தத் விதாயக வாக்யத்திலே விஸ்வாசம் பிறந்தவாறே
    ஐஹிக ஸூகத்தைக் காட்டிலும் ஆமுஷ்மிக ஸூகம் நன்று என்கைக்காக ஸ்வர்க்க சாதனமான ஜ்யோதிஷ்டோமாதிகளை விதித்து -அது பலித்து
    தத் உபபாத வாக்யங்களிலே விஸ்வாசம் பிறந்து -இவ்வளவும் புகுர நின்று வ்யுத்பன்ன பத பதார்த்தனாய் விவேகியான அவனுக்கு
    (விவேகியான அவனுக்கு-தேஹ ஆத்ம விவேகம் ஸ்வர்க்கம் விரும்பிய இவனுக்குத் தானே ஏற்பட்டது)

    அந்தவதே வாஸ்ய தத் பவதி -என்றும்
    ந ஹ்யத்ருவை ப்ராப்யதே -என்றும் –
    ப்லவாஹ் யேதே அத்ருடா யஜ்ஞ ரூபா -(ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம்)என்றும்
    பரீஷ்ய லோகன் கர்மசிதான் ப்ராஹ்மாணோ நிர்வேதமாயாத் -என்றும்
    ஸ்வர்க்கே அபி பாத பீதஸ்ய ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி -என்றும்
    ஆப்ரஹம புவநாந் லோகோ  புநரா வர்த்தி ந -என்றும்
    ஏதேவை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மன -என்றும் உபதேசித்து –

    இந்த பிரமாண கண அனுசந்தானம் பண்ணி நிர்விண்ணன் ஆனவனுக்கு
    மோஷ சாஸ்த்ரத்திலே அதிகாரம் ஆகையாலே மெள்ள இவனை இதிலே மூட்டுகைக்காக
    முற்படக் கர்ம பாகமே உத்தேஸ்யமாகக் கடவது –

    அழகியது –பூர்வ பாகமானது இவனுடைய சத் கர்மத்துக்கு உரிய
    நித்ய நைமித்திக காம்ய ரூபமான விஹித கர்மங்களை உபதேசித்ததாகில்
    உத்தர பாகத்துக்கு க்ருத்யம்   என்
    என்னில்

    ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரிஜ் ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ-
    கஷாய பக்தி கர்மாணி ஜ்ஞானம் து பரமா கதி
    -என்றும்
    கஷாயே கர்மபி பக்வே ததோ ஜ்ஞானம் ப்ரவர்த்ததே -என்றும்
    அவித்யயா மருத்யும்-என்றும்
    தபோ ஜ்ஞான சமாதிபி நராணாம் ஷீண  பாபாநாம் கிருஷ்ணே  பக்தி பிரஜாயதே
    -என்றும் சொல்லுகிறபடியே
    பூர்வ பாக உதிதமான கர்ம அனுஷ்டானத்தாலே ம்ருதிதக ஷயனானவனுக்கு
    பகவத் ப்ராப்தி சாத நதயா அனந்தர பிராப்தமான
    ப்ரஹ்ம ஸ்வரூப குண விபவ சேஷ்டாதி ஜ்ஞாபநம் பண்ணுவிக்கிறது

    இக் கர்மம் தன்னை-அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -(கர்ம அனுஷ்டானத்துக்குப் பிறகு கர்ம அனுஷ்டானம் பண்ணினாலேயே)என்றும்
    வ்ருத்தாத் கர்மாதி கமாதநந்தரம் ததேவ ஹீதோர் ப்ரஹ்ம ஜ்ஞாதவ்யம் இத் யுக்தம் பவதி -என்றும்
    அபியுக்தர்கள் பேசினார்கள் இறே-

    (ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
    ஆத்மாநுபூதி சித்த் யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே
    — ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –2-

    ஸுஸம்ஸ்க்ருதே – (சேஷத்வ ஜ்ஞாநம், இதர விஷயங்களில் பற்றின்மை முதலான புத்தி விஶேஷங்களாலே)
    நன்கு அலங்கரிக்கப்பட்ட,
    ஜ்ஞாந கர்மாத்மிகே நிஷ்டே – ஞான யோகமும், கர்ம யோகமும்,
    யோக லக்ஷ்யே – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தை அடையும் பொருட்டு்ம்,
    ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே – (அதற்குப் பின்) ஆத்மாநுபவத்தை அடையும் பொருட்டும்,
    பூர்வ ஷட்கேந – (கீதையின்) முதல் ஆறு அத்தியாயங்களாலும்,
    சோதிதே – விதிக்கப்பட்டன.)

    ஸ்வ கல்யாண குண அனந்த்ய க்ருத்ஸ்ன ஸ்வா தீன தாமதி
    பக்த் யுத்பத்தி விவ்ருத்த் யர்த்தா விஸ்தீர்ணா தஸமோதிதா
    –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -14-

    பக்த் யுத்பத்தி விவ்ருத்த் யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,
    ஸ்வ கல்யாண குண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாண குணங்களின் அளவின்மை பற்றியும்,
    அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,
    விஸ்தீர்ணா – விரிவாக,
    தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.-கேட்க கேட்க பக்தி பிறக்கும் -பிறந்த பக்தி வளரும் )

    ஊர்த்வோ பாக –
    ஸ்ருதி சிரஸி விதீப்தே
    (ப்ரஹ்மணீ ஸ்ரீ நிவாஸே)-என்கிறபடியே
    சத்வாரமாக பகவத் ப்ரதி பாதநம் பண்ணுகிற பூர்வ பாகத்தில் காட்டில்
    அவ்யஹித பகவத் ப்ரதிபாதநம் பண்ணுகையாலே
    இவ் வாசத்தியைப் பற்ற எல்லாத்துக்கும் மேலான பாகம் -என்கிறார் –

    இப் பாகத்தில் பிரதிபாதிக்கிற அர்த்தம் தான் ஏது என்னில் –
    த்வதீஹா குண விபவ பரிஜ்ஞாபநை –
    ஈத்ருசமான அர்த்தங்கள் -என்கிறார் –

    த்வதீஹா குண விபவ பரிஜ்ஞாபநை —
    ஒருவனை ஒருவன் பேசுகையாவது-அவனுடைய தொழில்களையும் -குணங்களையும் -பெருமைகளையும் பேசுகை இறே
    ஆகையாலே இங்கும் -திவ்ய அபதானங்களையும் -கல்யாண குணங்களையும் -உபய விபூதி யோகத்தையும் பேசுகிறது –

    த்வதீஹா –
    ஜகத் ரஷண உபயோகியாக
    பஹூஸ்யாம் -என்கிற சங்கல்ப வியாபாரம் தொடக்கமான
    அந்தப் ப்ரவேச நியமன வியாபாரங்களையும்
    ஹிரண்ய ராவண சிசுபாலாதி வத-தௌத்ய சாரத் யாதிகளான
    பரத்வ ஸூசகமாயும்
    சௌலப்ய ஸூசகமாயும் இருக்கிற திவ்ய அபதானங்களையும்
    சொல்லுகிறது –

    சேஷ்டா தஸ்ய அப்ரேமேயஸ்ய வ்யாபின் யவ்யாஹதாத்மிகா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-72-என்றும்
    க்ரீடா ஹரேரிதம் சர்வம் ஷரமித் யுபாதார்யதாம் -பார -சாந்தி -205-58- என்றும்
    க்ரீடா ஜகத் பதேஸ் தஸ்ய சந்தத சம் ப்ரவர்த்ததே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-22-18- என்றும்
    ரிஷிகள் பேசா நின்றார்கள் இறே –

    இப்படி அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிற இவன் இவ் வ்யாபார பரம்பரைகளைப் பண்ணுகைக்கு அடியென் -என்னில்
    குண
    குணங்கள் -இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே என்கிறது –
    யஸ் சர்வஜ்ஞ சர்வவித் -(ஸ்வரூபங்களையும் ஸ்வ பாவங்களையும் அறிந்தவன்)முண்டக -2-2-7-இத்யாதிகளின் படியே
    ஸ்ருஷ்ட் யுப யோகியான சர்வஜ்ஞத் வாதிகள் என்ன
    ஸ்வரூப கதமான ஜ்ஞானந்தாதிகள் என்ன
    விக்ரஹ கதமான சௌந்தர்ய சௌகுமார்யாதிகள்  என்ன
    பரத்வ ஸூசகமான சௌர்யாதிகள் என்ன –
    சௌலப்ய ஸூ சகமான சௌசீல்யாதிகள் என்ன
    ஆக இந்த நிரவதிக குணங்களைப் பேசுகிறது –

    இப்படி அபரிமித சேஷ்டிதனுமாய்-
    அபரிமித குண கணனுமான இவனுக்குத் தனக்கு வ்யாவ்ருத்தமாய் இருப்பதொரு
    இருப்பிடமாதல் –
    ஒரு போகமாதல்
    பரிகரமாதல் இல்லையோ -என்னில்

    விபவ –
    சர்வஸ்ய வசீ சர்வசஸ் ஈஸான
    -என்றும்
    பதிம் விஸ்வஸ்ய -என்றும்
    பிரதான ஷேத்ரஜ்ஞ பதிர் குணேச -என்றும்
    ஹிரண்மயே பரே லோகே விரஜம் ப்ரஹ்ம நிஷ்கலம் -என்றும்
    ஷரம் பிரதானம் அம்ருதாஷரம் ஹர ஷராத்மாநாம் ஈசதே தேவ ஏக –என்றும்
    திவி திஷ்டத் ஏக-என்றும்
    தே நேதம் பூர்ணம் புருஷேண சர்வம் -என்றும்
    திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்றும் சொல்லுகிறபடியே
    நித்ய விபூதி என்ன
    லீலோபகரணமான போக பூமி என்ன
    ஆக
    உபய விபூதியையும் உடையன் –என்கிறது-

    குண சேஷ்டாதிகளும் பகவத் கதமாகில் இவ் வேதம் செய்கிறது என் என்னில் –
    பரி ஜ்ஞாபநை-நன்கு அறிவிப்பதன் மூலம் –
    அவற்றை உள்ளபடி அறிவிக்கிறது –

    பரி -என்று பர ரீஷா பூர்வக ஜ்ஞாப நமாய்-
    யுக்தி தர்க்கங்களோடு கூட நிஸ் சந்தேஹமாக அறிவிப்பிக்கிறது -என்றாகவுமாம் –
    அன்றியிலே
    பரிஜ்ஞாபநம் ஆகிறது –
    விடு ஏடு எடுத்துப் பார்த்தல் –
    ஸ்வ புத்தியாலே அர்த்த நிரீஷணம் பண்ணுதல் செய்கை அன்றிக்கே
    ஆச்சார்யார்த்தி வித்யா விதிதா சாதிஷ்டம் ப்ராபத் -என்று
    ஆச்சார்ய உபதேச முகத்தாலே கஹனமான ஸ்வ அர்த்தங்களை அறிவிப்பிக்கிறது என்றாகவுமாம்

    இவை அறிவிக்கிற  இத்தால் பிரயோஜனம் என் என்னில்
    த்வத் பதாப்தௌ-
    ஷேத்ரஜ்ஞஸ்ய ஈஸ்வரஜ் ஞாநாத்  விசுத்தி பரமா மதா-என்றும்
    ப்ரஹ்ம விதாப்நோதி பரம் -என்றும் சொல்லுகிறபடியே
    இந்த ஜ்ஞானம் கைம் முதலாக பரம ப்ராப்யனானவன் திருவடிகளைப் பெறுகை-

    ஜ்ஞானத்தாலே பகவல் லாபம் என்கையில் பிரமாணம் என் -என்னில் –
    தஸ்ய தீரா பரி ஜாநந்தி யோநிம் மரீசிநாம் பதமிச்சந்தி -என்றும் –
    விஷ்ணோ கர்மாணி பஸ்யத -என்றும் –
    தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி -என்றும் –
    ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத-த்யக்த்வா தேஹம் புநர் ஜன்ம நைதி மாமேதி – என்றும் –
    பகவத் பத ஜ்ஞானத்தாலே பகவத் ப்ராப்தி -என்றும்
    ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குதச்சந-என்றும்
    ஆத்மா நாம் அநுவித்ய வ்ரஜந்த்யே தாம்ச்ச சத்யான் காமான் தேஷாம் சர்வேஷூ லோகேஷூ காம சரோ பவதி -என்றும்
    இக் குண ஜ்ஞானத்தாலே பகவத் பிராப்தி என்றும்-

    யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் ஸோ அஸ்நுதே சர்வான் காமான் -என்றும்
    சர்வஸ்ய   வஸிநம் தேவம் சர்வஸ் யாயதநம் ஹரிம் -ராஜா நாம் சர்வ பூதாநாம் தம் ஜ்ஞாத்வா விமுச்யதே -என்றும்
    ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்றும்
    உபய விபூதி யோக ஜ்ஞானத்தாலே பகவத் ப்ராப்தி என்றும்
    ஸ்ருதி ஸ்ம்ருதிகள் தானே சொல்லுகையாலே

    இந்த ஈஹா குண விபவ ஜ்ஞானத்தாலே தத் பத ப்ராப்திக்குக் குறை இல்லை –

    அத்ரேஸ்யமக் ராஹ்யம் -என்றும்
    ந சஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா நான்யைர் தேவை -என்றும்
    நமோ நமோ வாங் மனசாதி பூமயே -என்றும் சொல்லுகிறபடியே
    சூத்ரா உபகர்ணர்களான எங்களுக்கு வாங் மனசாகோசர வைபவனாய் இருக்கிற உன்னைப் பெறும் போது-
    மனசா து வி ஸூ ததே ந -என்றும்
    ஹ்ருதா மநிஷா  மநசாபி க்லுப்த-என்றும் –
    பக்த்யா த்வ நன்யயா சகா -என்றும்சொல்லுகிறபடியே
    ச விபூதிகனான தேவருடைய ஜ்ஞானம் ஒழிய வேறு கைம்முதல் உண்டோ –

    த்வதாப்தௌ -என்னாதே –
    த்வத் பதாப்தௌ -என்கிறது
    விசேஷித்து ஸ்வரூப அநு குணமாகத் திருவடிகளே ப்ராப்யம் -என்கைக்காக –
    ஆத்யாத்மிகாதி தாப த்ரயத்தாலே தப்தரானவர்களுக்கு
    தத் விஷ்ணோ பரமம் பதம் -என்று பரமபத பிராப்தியைச் சொல்லிற்றாக வுமாம்

    ஆக
    இப்படியால் -ஊர்த்வ பாகமானது
    த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ பரிஷீயதே -என்று சொல்லிற்று ஆகிறது

    ஈஹா குண விபவ பரி ஜ்ஞாபநை -என்கிற இடத்தில்
    உபாசனம் கண்டிலோமே -என்னில்
    உபாசனம் ஆகிறது
    த்வத் ஈஹா குண விபவங்களின் உடைய அவிச்சின்ன அநு சந்தானம் ஆகையாலே
    அத்தை அறிந்த போதே உபாசனமும் சொல்லிற்றே விட்டது –

    ஆக -இத்தால்-
    ந தாஸ்ம சர்வ வசசாம் பிரதிஷ்டா யத்ர சாஸ்வதீ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-14-23- -என்றும் –
    வேதே ராமாயனே புண்யே பாராதே பரதர்ஷப -ஆதௌ மத்யே ததாந்தே ச விஷ்ணு சர்வத்ர கீயதே -என்றும்
    விஷ்ணு நாம ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-40- என்றும் சொல்லுகிறபடியே
    சகல வேத வேதாந்தங்களில் அவனே பிரதிபாத்யன் -என்று சொல்லிற்று –

    இவ்வர்த்தத்தை –
    வேதைஸ்ச சர்வைர் அஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை-15-15-
    என்று திருத் தேர் தட்டிலே சர்வ லோக சாஷிகமாகச் சொன்னவனை இட்டே இசைவிக்கிறார் –வேத்யோ வேதைர்ச சர்வைர் அஹ மிதி பகவன் ஸ்வேந ச வ்யாசகர்த்த –

    (ஏவகாரம் மூன்று இடத்திலும் கொண்டால் அனைத்து அர்த்தங்களும் ஸித்தமாகுமே
    அஹம் ஏவ -என்னையே சொல்லும்
    வேதைஸ் ஏவ -வேதங்களே சொல்லும்
    வேத்ய ஏவ ச -என்னை சொல்லி அன்று நிற்காதே)

    சர்வைர் வேதை
    அதீயமானமாயும் -விப்ர கீர்ணமாயும் உள்ள க்ருத்ஸ்ந வேதத்துக்கும் அவனே பிரதிபாத்யன் -என்கிறார்

    அஹமிதி –
    சர்வ அந்தர்யாமியாய் –
    சர்வ சமாராத்யனாய்
    சர்வ பல ப்ரதானவன்
    -என்கிறார்

    ப்ராஹ்மணோ யஜேத-என்றும்
    ஷத்ரியே யஜேத -என்றும்
    ஷத்ரியாதி சப்தங்கள் தஜ் ஜாதி விசிஷ்ட  பிண்ட த்வாரா ஆத்ம பர்யந்தம் ஆகிறாப் போலே
    அக்னி இந்த்ராதி சப்தங்களும் தத் அதிஷ்டான ஜீவ த்வாரா அநு பிரவேசத்தாலே நம்மளவிலே பர்வசிக்கக் கடவது
    -என்கிறார்

    வேத்ய
    வாசக சப்தமானது வாஸ்யமான அர்த்த பர்யவசாயியாய் அல்லது நில்லாமையாலே
    வசசாம் வாச்யமுத்தமம் -என்றும்
    அர்த்தோ விஷ்ணு -என்றும்-சொல்லப்படுகிற
    நாமே க்ருத்ஸ்ந வேத பிரதிபாத்யன் என்று பகவத் வசனம்

    பகவன்
    ஜ்ஞானாதி குணங்களால் பரி பூரணன் ஆகையாலே
    போக்கடி சொல்லுகையும் உனக்கே பரம்
    -என்கிறார்

    ஸ்வேந ச  வ்யாஸ கர்த்த
    மத்யஸ்தரான வைதிகர் சொன்ன அளவேயோ
    எதிரி முன்பே நீ தானே சொல்லிற்று இல்லையோ
    -என்கிறார்

    ————-

    ஆதவ் வேதா பிரமாணம் ஸ்ம்ருதி உப குருதே ச இதிஹாஸை புராணை
    ந்யாயை சார்த்தம் த்வத் அர்ச்சா விதம் உபரி பரி ஷீயதே பூர்வ பாக
    ஊர்த்வ பாக த்வத் ஈஹா குண விபவ பரி ஞாபநை த்வத் பத ஆப்தவ்
    வேத்ய வேதை ச சர்வை அஹம் இதி பகவந் ஸ்வேந ச வ்யாஸ கர்த்த
    –19-

    ஆதௌ -முதலிலே -மற்று ஒரு பிரமாணத்தை எதிர்பாராமல் தானாகவே –

    வேதா -வேதங்களானவை-

    பிரமாணம்-உண்மை அறிவை யுண்டாக்கும் பிரமாணம் ஆகின்றன –

    ஸ்ம்ருதி -மநு முதலானோர் இயற்றிய ஸ்ம்ருதி சமூஹம்

    ஸ இதிஹாசை புராணை-இதிஹாசங்களோடு கூடிய புராணங்க ளோடும்

    ந்யாயை  சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்ஸா நியாயங்களோடும் கூட

    உப குருதே-வேதங்களுக்கு பொருள் காணும் விஷயத்தில் உதவுகிறது –

    பூர்வ பாக -வேதத்தில் கர்ம காண்டம் என்கிற முற்பகுதி

    த்வத் அர்ச்சா விதி முபரி -தேவரீருடைய திரு வாராதன முறையைச் சொல்லும் வழியில்

    பரிஷீயதே -தலைக் கட்டுகிறது-

    ஊர்த்வோ பாகஸ்-ப்ரஹ்ம காண்டம் எனப்படும் பிற்பகுதி யாகிய உபநிஷத் பாகம்

    த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாப நைஸ்-தேவரீருடைய ஸேஷ்டிதங்கள்-குணங்கள் -செல்வங்கள்
    ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதாலே –

    த்வத் பதாப்தௌ -தேவரீருடைய திருவடிகளை அடைவதில்

    பரிஷீயதே -தலைக் கட்டுகின்றது –

    பகவன்-எம்பெருமானே

    சர்வை ஸ வேதை -பூர்வ உத்தர பாக ரூபமான எல்லா வேதங்களாலும்
    அஹம் -நானே
    வேத்ய இதி -அறியப் படுபவன் -என்று
    ஸ்வேந -தேவரீர் தாமே
    வியாச கர்த்த -ஸ -அருளிச் செய்தும் வைத்தீர் அன்றோ –

    ஹே பகவந்
    ஆதவ் வேதா-வேதங்கள் முதலிலே வேறு ஒரு பிரமாணத்தை அபேஷியாமல் ஸ்வயமாகவே
    பிரமாணம்-பிரமாணம் ஆகின்றதே

    ஸ்ம்ருதி –மந் வாதி ஸ்ம்ருதி யானது –
    மனு அத்ரி விஷ்ணு ஹாரீதர் யாஜ்ஜ்வல்க்யர் போன்ற மஹரிஷிகளால் இயற்றப்பட்ட தர்ம சாஸ்திரங்கள் –
    ச இதிஹாஸை புராணை-இதிஹாசங்களோடு புராணங்களோடும்
    ந்யாயை சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்சைகளோடே

    உப குருதேத்வத்-அந்த வேதங்களுக்கு அர்த்த விவரணம் பண்ணுகை யாகிற உபகாரத்தை
    பண்ணுகை யாகிற உபகாரத்தை செய்கின்றன

    அந்த வேதத்தில்
    பூர்வ பாக-பூர்வ பாகமான கர்ம காண்டம்
    அர்ச்சா விதம் உபரி -தேவரீருடைய திருவாராதனம் பண்ணும் முறையைச் சொல்லும் வகையாலே
    வாயு இந்திரன் வருணன் அக்னி இவர்கள் யாவரும் ப்ரஹ்ம சரீர பூதர்களே
    பரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது

    ஊர்த்வ பாக –ப்ரஹ்ம காண்டம் ஆகிற உபநிஷத் பாகமோ என்னில்
    த்வத் ஈஹா குண விபவ பரிஞாபநை–தேவரீருடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் ஆகியவற்றைத்
    தெளிய விளங்க தெரிவிப்பதனால்

    த்வத் பத ஆப்தவ்-தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில்
    பரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது

    வேதைஸ் ச சர்வை-கர்ம ப்ரஹ்ம காண்ட ரூபமான சகல வேதங்களும்
    வேத்ய அஹம் இதி–நானே அறியக் கூடுவேன் என்று
    ஸ்வேந ச வ்யாஸ கர்த்த–தேவரீர் தாமே சோதி வாய் திறந்து அருளிச் செய்ததும் உண்டுஜ் அன்றோ –

    வேதங்கள் மூல பிரமாணம்–வேறு ஒன்றை அபேஷியாமல் ஸ்வத பிரமாணம் —
    அதுகளுக்கு இதிஹாச புராண நியாய மீமாம்சைகளோடு கூடி ஸ்ம்ருதி உபகாரிகை ஆகிறது –

    கர்ம ப்ரதிபாதிதமான பூர்வ பாகம்- ஸ்ம்ருதி விசேஷ பூர்வ மீமாம்சைகளோடே ஆராதன வீதியில் பர்யவசிக்கும்

    உத்தர பாகமான உபநிஷத் இதிஹாச புராண ப்ரஹ்ம மீமாம்சைகளோடே கூடி ஸ்வரூப ரூப குண சேஷ்டிதைகளைத்
    தெரியப்படுத்தி தேவரீர் திருவடிகளில் சேர்க்கையில் பக்தியில் பர்யவசிக்கிறது-

    இவ்வர்த்தத்தை தேவரீரே ஸ்ரீ கீதையில் வெளியிட்டு அருளினீர்-

    ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ
    மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹநம் ச
    வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ
    வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்
    –15-15-

    ஸர்வஸ்ய ஹ்ருதி அஹம் ஸந்நிவிஷ்ட:-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
    ச மத்த:-மேலும் என்னிடம் இருந்து தான்,
    ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச-நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன,
    ஸர்வை: வேதை: ச வேத்ய: அஹம் ஏவ – எல்லா வேதங்களிலும் அறியப்படும் பொருள் நான்,
    வேதாந்த க்ருத் வேத வித் ச அஹம் ஏவ-வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

    ———-

    ரஹஸ்ய சிகாமணி -தேசிகர்
    கௌசிக புராணம் பராசர பட்டர்
    நான் கண்டு கொண்ட நல்லதுவே -நம்மாழ்வார்-அப் பொழுதைக்கு இப் பொழுதே சொல்லி வைத்தேன் -பெரியாழ்வார்–பூமா தேவி கேட்டு -திருப்பாவையில் அருளிச் செய்தாள்-

    ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் –

    அவதாரிகை –
    அனுபாவ்ய வஸ்து  லாபத்துக்கு நிரபாய உபாயமான
    1-ஆஸ்ரயண காலத்தையும் –
    2-ஆஸ்ரயண அதிகாரியையும்
    3-ஆஸ்ரயண பிரகாரத்தையும்
    4-ஆஸ்ரயணீய வ்யக்தி விசேஷத்தையும்
    5-ஆஸ்ரயண பலத்தையும் -சொல்லுகிறது இந்த ஸ்லோக த்வயம் –

    ஸ்திதே மனஸி ஸூஸ்வதே சரீரே சதி யோ நர
    தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம்

    ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
    அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் –

    ஸ்திதே மனஸி-மனம் கலக்கம் இன்றி நிலை நிற்கையில்(புத்தியும் உறுதியாக இருக்க வேண்டுமே -)
    ஸூஸ்வதே சரீரே சதி -உடம்பு நோயற்று நன்று இருக்கையில்
    தாது சாம்யே ஸ்திதே-சதி -வாதம் பித்தம் ஸ்லேஷ்மம்(கபம்) என்னும் மூன்று தாதுக்களும் ஓரளவாய் இருக்கையில்
    யோ நர -எந்த மனிதன்
    விஸ்வ ரூபஞ்ச  அஜம்-உலகை உடம்பாக உடையவனும் -பிறப்பு முதலான விகாரங்கள் இல்லாதவனுமான
    மாம்  ஸ்மர்த்தா -என்னை நினைக்கிறானோ(பூத காலம் -பக்தி தைலதாராவதி அவிச்சின்னமாகச் செல்ல வேண்டுமே)
    தத் -பிற் காலத்தில்
    காஷ்ட பாஷாண சந்நிபம்-கட்டையோடும் கல்லோடும் ஒத்தவனாய்  –(அந்திம ஸ்ம்ருதி செய்ய யோக்யதை இல்லாத போது)
    ம்ரியமாணம்-மரணம் அடையா நிற்கிற
    தம் மத் பக்தம்-அந்த என் பக்தனை
    அஹம் ஸ்மராமி  -நான் நினைக்கிறேன்
    நயாமி பரமாம் கதிம் -உயர்ந்த பதவியை அழைத்துச் செல்கிறேன் –

    ஸ்திதே மனஸி ஸூஸ்வதே சரீரே சதி தாது சாம்யே ஸ்திதே-என்று -ஆஸ்ரயண காலத்தை -சொல்லுகிறது

    யோ நர -என்று -ஆஸ்ரயண அதிகாரியைச் சொல்லுகிறது

    ஸ்மர்த்தா -என்று -ஆஸ்ரயண பிரகாரத்தைச் சொல்லுகிறது –

    விஸ்வ ரூபஞ்ச மா மஜம்-என்று -ஆஸ்ரயணீய வ்யக்தி விசேஷத்தைச் சொல்லுகிறது

    ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்-
    அஹம் ஸ்மராமி மத்பக்தம்  நயாமி பரமாம் கதிம்
    -என்று -ஆஸ்ரயண பலத்தைச் சொல்லுகிறது –

    ——-

    ஸ்திதே மனஸி-மனஸி ஸ்திதே -மனம் நிலை நிற்கையில் –
    மனஸ்ஸானது எது –
    அதுக்கு அவ ஸ்தானம்   ஆவது எது என்னில் –

    மனஸ் ஆனது
    அநாதி கால பாப  வாசனை யாகிற மஹா வாதத்தாலே -புயல் காற்றாலே -ப்ரேரிதமாய்-
    தனக்கு ஆவாஸ பூமியான ஹிருதய குகையிலே ஷண காலம் தங்கப் பெறாதே
    கண்ட விஷயங்களிலே மண்டி (த் திரியும் தத்துவமே மனஸ்)–

    அது நிலை நிற்கையாவது-
    திறந்து கிடக்கும் வாசல் தோறும் புகுந்து புறப்படும் நாய் போலே
    நினைத்த இடம் எல்லாம் புக்குத் திரியாமல்  நிர் விஷயமாகை –

    ஆக
    இதில் மனஸ்ஸினுடைய விஷய அதீனமான
    அந்ய பரத்தை தவிர்ந்தபடி சொல்லுகிறது-

    (விஷாயாந்தங்களில் ஆபிமுக்யம் இல்லாத தசை இரண்டாவது -இந்த தசையிலேயே ஆஸ்ரயணம் பண்ண யோக்யதை வந்து விடுமே
    ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே–விலக்காமையே வேண்டியது
    பகவத் விஷயங்களில் ஆபிமுக்யம் உண்டானதாய் -அடுத்த தசை)

    அநந்தரம்
    சரீர ஆலஸ்ய நிபந்தனமான -(சோம்பல் தூக்கம்)வியாதி காரணமாக –
    மனஸ்ஸினுடைய அந்ய  பரதா சாந்திக்கு ஹேது  சொல்லுகிறது –

    ஸூஸ்வதே சரீரே சதி -சரீரே ஸூஸ்வஸதே சதி -சரீரம் நல்ல ஆரோக்யத்துடன் இருக்கையில் -என்று
    சரீரம் ஸ்வஸ்தமாய் அழகிதான அளவிலே  வ்யாதீநாம் ஆகரமாய் இறே சரீரம் இருப்பது
    அந்த வியாதிகளில் ஓன்று தலை  எடுத்ததாகில்
    தஜ் (வியாதி)ஜநிதமான துக்க அநு பாவத்திலே உப ஷீணம் ஆகையாலே
    பகவத் விஷயத்துக்கு யோக்யம் ஆக மாட்டாது இறே நெஞ்சு
    ஆகையாலே சரீர ஆலஸ்ய நிவ்ருத்தி மனஸ் ஸ்வாஸ் யத்துக்கு ஹேது

    அந்த சரீர ஆலஸ்ய நிவ்ருத்திக்கு ஹேது சொல்லுகிறது –
    தாது சாமே ஸ்திதே
    -என்று

    தாதுக்கள் ஆவன –
    வாத பித்த ஸ்லேஷ்மங்கள்
    -அந்த தாதுக்களுக்கு சாம்யம் உண்டாகையாவது –
    ஒன்றுக்கு ஓன்று ந்யூந அதிரேகம் அற்று ஒத்திருக்கை –

    (கபம் முதல் 33 வருஷம்
    பித்தம் 34-66
    வாதம் அப்புறம்)

    அந்த தாதுக்களினுடைய ந்யூநாதி ரேகங்கள் வியாதி ஹேது
    மூன்றினுடைய ப்ரகொபம் மரணம் இறே

    ஆகையால் அந்த வியாதி ஹேதுக்கள் தன்னில் ஒத்தவாறே
    அவற்றினுடைய நிம்நோன்னதத்தாலே வரும் வியாதி உண்டாகாது –
    வியாதி உண்டாகாமையாலே சரீரம் ஸ்வஸ்தமாம்
    சரீர ஸ்வாஸ்த்யத்தாலே மனஸ் ஸ்வாஸ்த்யம் பிறக்கும் –
    பின்பு மனஸ்ஸூ ஸ்மரண ஷமமாம் –

    ஆக
    கீழ் இத்தனையாலும் ஸ்மரண ஏகாந்தமான கால விசேஷத்தைச்  சொல்லிற்று –

    ———

    அநந்தரம்-
    ஸ்மரணாதி  காரியைச் சொல்லுகிறது –
    யோ நர -என்று

    நர சப்தம் -மநுஷ்ய வாஸீ
    இதிலே தேவதைகளையும் உப லஷிக்கிறது

    இத்தால்
    பகவத் சமாஸ்ரயணத்துக்குக் கரண பாடவமே அபேஷிதம் என்றதாயிற்று
    வஷ்யமாணமான ஸ்மரணத்துக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் (
    ஆதி ஆத்ம குணங்கள்)அப்ரயோஜகங்கள் –
    ஏதேனும் ஜன்மம் ஆகவுமாம்-
    வ்ருத்த மாகவுமாம் —
    கரண பாடவமும்
    ருசியுமே வேண்டுவது-

    ஸ்மர்த்தா
    ஸ்மரணம் ஆவது ஒரு ஜ்ஞான விசேஷம் –(நினைவில் நெடியோன் -எண்ணிலும் வருமே)

    மேல் –
    விஸ்வ ரூபம் -என்று சேஷித்வத்தையும்
    நயாமி -என்று உபாயத்வத்தையும்
    பரமாம் கதிம் -என்று உபேயத்வத்தையும் சொல்லுகையாலே
    இம் மூன்றும் இந்த ஸ்மரணத்துக்கு விஷயமாகக் கடவது

    ஆக இத்தால் ஆஸ்ரயண பிரகாரம் சொல்லிற்று ஆயிற்று –

    ———-

    அநந்தரம்
    ஆஸ்ரயணீய வஸ்துவைச் சொல்லுகிறது -விஸ்வ ரூபம் -என்கிற பதம் –
    விஸ்வத்தையும் தனக்கு ரூபமாக உடையவன் விஸ்வ ரூபி யாகிறான்

    இவன் விஸ்வ சரீரியாய் இருக்குமாகில்-உபய கதமான தோஷமும் ஸ்பர்சியாதோ(அசித்துக்கு ஸ்வரூப ஸ்வ பாவ தோஷங்களும் சித்துக்கு ஸ்வ பாவ தோஷமும் உண்டே)-என்னச் சொல்லுகிறது -அஜம்-(பிறப்பிலி)
    ஜனன மரணாதி ஸூந்யம்-

    இந்த ஜனனம் சரீர தர்மமான ஷட் பாவ (அஸ்தி ஜாயதே இத்யாதிகள்)விகாரங்களுக்கும்
    ஆத்ம தர்மமான அஜ்ஞான துக்காதி களுக்கும் உப லஷணம்-
    (ஆதி காம க்ரோதி போல்வன)

    ச-(உம்மைத் தொகை)
    இச் சேதனனுடைய ஹிதாஹித ஜ்ஞான விசேஷத்தையும்
    ஜ்ஞான அநு குணமாக கார்யம் தலைக் கட்டுகைக்கு ஈடான சக்தியையும் தயையும் கணிசிக்கிறது –

    மாம் –
    என்னை என்றபடி

    அசாதாரண விக்ரஹத்தை அஸ்ம தாதிகள் கண்ணுக்கு விஷயமாக்கிக் கொண்டு (ஸகல மனுஷ நயன விஷய தாங்கனாம் படி)நிற்கிற சௌலப்யத்தையும்
    மானமிலாப் பன்றி (
    பரஞ்சுடர் உடம்பாய் இருந்தும் அழுக்குப் பதிந்த உடம்பாக அவதரித்து)என்று அத்யந்த நிஹீனமான வராஹ ஜன்மத்திலே
    அத்யாபி நிவிஷ்டனாம்படியான சௌசீல்யாதி அதிசயத்தையும் மூதலித்துக் காட்டின படி –

    ———

    அநந்தரம் -தத -இத்யாதி ஸ்லோகத்தாலே –
    ஆஸ்ரயித்தவனுக்கு ஈஸ்வரன் உண்டாக்கும் பிரயோஜன விசேஷத்தைச் சொல்லுகிறது

    தத -பின்பு என்றபடி –
    இத்தால் ஸ்ம்ருதி யினுடைய நைரந்தர்யத்தைக் (
    ஸதா அநு ஸ்மரணம் நிரந்தரமாக இருக்கும் தன்மையை)கழிக்கிறது-

    தம் –
    ஸ்மர்த்தா -என்கிறபடியே –
    என்னையே உபாய உபேயமாக அத்யவசித்த அதிகாரியை –

    இவனுக்கு பலம் கொடுப்பது எப்போதோ என்னில் -ம்ரியமாணம் –
    மரண உன்முகமான சமயத்திலே

    து சப்தம் -சாதகனில் காட்டில் இவ் வதிகாரிக்கு வஷ்யமாணமான விசேஷத்தை த்யோதிப்பிக்கிறது

    அந்த விசேஷம் என் என்னில்
    காஷ்ட பாஷான சந்நிபம் –
    ஜ்ஞான சம்சர்க்க ஸூ ந்யமான காஷ்ட பாஷாணங்களோடு ஒத்து இருக்க அமையும் –

    சாஸ்திரம் அந்திம ஸ்ம்ருதி கொண்டு உஜ்ஜீவிக்க வேணும் என்று சொல்லா நிற்க
    அந்திம ஸ்ம்ருதி ஒழிய உஜ்ஜீவிப்பிக்கக் கடவன் என்கை  சாஸ்திர விருத்தம் அன்றோ என்னில்
    –அதுவும் அப்படியே –
    இந்த அம்சம் என்னது (உபாஸகனுக்கு அது பிரபன்னனுக்கு இது)-என்கிறார் –அஹம் ஸ்மராமி -என்று
    அபேஷித ஸ்மரணத்துக்குக் கர்த்தா நானே
    க்ருஷ்யம்சம் கர்ஷகனுக்கு அன்றோ

    (நினைவு தானே அபேக்ஷிதம்
    நான் நினைக்கிறேன்
    நானே அந்தராத்மா
    அவன் நினைவும் என் நினைவாலே தானே
    பலமும் என்னது
    ப்ராப்தாவும் பிராபகமும் பிராப்திக்கு உகப்பானும் நானே)

    ஸ்மர்த்தா –
    இவன் ஒரு கால் ஸ்மரித்தான் ஆகில் -அநவரத பாவனை பண்ணக் கடவன்-

    நீ இப்படி மேல் விழுந்து நினைக்கைக்கு இவன் பக்கல் தன்னேற்றம் என் என்னில் -மத்பக்தம் –(மத் காயாக -நம் பாடுவான் என்பதே அவனுக்கும் நிரூபகம்)
    எனக்கு நல்லவன் அன்றோ
    மத் பக்தம் -என்று ப்ரபன்ன அதிகாரியைச் சொல்லுகிறது –

    ஆக என் பக்கலிலே அநந்ய பிரயோஜன பக்தியை உடையவன் ஆகையாலே
    அவன் காஷ்ட பாஷாண சந்நிபனே யாகிலும் நான் ஸ்மரிப்பன்-

    இங்குச் சொல்லுகிற ஸ்மரணம் ஆவது –
    இவன் தன் கார்யத்தில் கை வாங்கி நம் பக்கலிலே தன் சர்வ பாரங்களையும் சந்யசித்தான்
    ஆன பின்பு இவன் கார்யம் அடைய நமக்கே பரம்
    இவன் இன்னம் ஒரு கால் உத் க்ராந்தி க்லேசம் அனுபவித்தல்
    யமன் முகத்திலே விழித்தல் -கர்ப்ப குஹையிலே கிடத்தல் -செய்யாதே
    இவன் நித்ய கைங்கர்யம் பண்ணி நித்ய ஆனந்தியாக வேணும் என்கிற சங்கல்பம் –

    நயாமி பரமாம் கதிம் -என்றது –
    பரம ப்ராப்ய பிரகாரத்தைச் சொல்லுகிறது –

    பரமாம் கதிம் நயாமி –
    பரமையான கதியைக் கொண்டு ஸ்வீகரிப்பிக்கக் கடவன்

    கதியாவது –
    கம்யத் இதி கதி -என்கிற வ்யுத்பத்தியிலேயாய் -ப்ராப்யத்தைச் சொல்லுகிறது

    அதில் -பரம கதி யாவது –
    அதுக்கு அவ் வருகு இல்லாத ப்ராப்யம் –
    அதாவது -பரம புருஷார்த்த லஷண மோஷம் –

    நாட்டில் புருஷார்த்தமாக வேண்டுவது –
    தர்மார்த்த காம மோஷம் -இவை புருஷார்த்தமாகக் காட்டாமையாலே அத்தை வ்யாவர்த்தித்து –
    ஸ்வயம் புருஷார்த்தமாய் -ஸ்வ ரசமாய் -நிரதிசயமான பகவத் கைங்கர்யமான பரம ப்ராப்யத்தைச் சொல்லுகிறது –

    (எம்மா வீட்டுத் திறமும் செப்போம் –நின் செம் மா பாத பற்பு சென்னியில் -அடியார் குழாங்களுடன் கூடி ஒழிவில் காலம் எல்லாம் எல்லாம் வழுவிலா அடிமை செய்யப் பாரித்து -ருசியே வேண்டுவது)

    நயாமி –
    அந்தப் ப்ராப்யத்தைப் ப்ராபிக்கும் இடத்தில்-
    ஆதி வாஹிகர்கள் கையிலே காட்டிக் கொடேன் –
    அத்த வாளத் தலையாலே முட்டாக்கு இட்டு நானே கொண்டு போகக் கடவேன் –
    லங்கா ஜன பதத்தில் இருந்த பிராட்டியைப் புஷ்பத்தின் மேலே தானே எடுத்து வைத்துக் கொண்டு
    போனால் போலே காணும் இவ் வாத்மாவைக் கொண்டு போம்படியும் –

    (தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
    காளமேகத்தை கதியாக்கி – மீளுதலாம்
    ஏதமிலா விண்ணுலகில் ஏக எண்ணும் மாறன் என
    கேதம் உள்ளதெல்லாம் கெடும்–91-)

    —————————————

    திரௌபதி பிரபத்தி ஸித்தாஞ்சனம்

    புருஷகார பலம் இல்லையாதலால் சிலர் இது பலிக்க வில்லை என்பர்
    இங்கு திரௌபதிக்கு –ஞாதம் மயா வசிஷ்டேந புரா கீதம் -என்று வசிஷ்டரின் ஸ்மரணம் உள்ளதாகையாலும்
    மேல்
    கஜேந்திர ஸரணாகதி போன்ற இடங்களில் பல ஸித்தியைக் கொண்டு அர்த்த பலத்தாலே புருஷகார புரஸ் ஸரணத்தைக் கற்பித்துக் கொள்வது போல் இங்கும் கற்பித்துக் கொள்ளலாம்

    இனி திரௌபதிக்குக் கிடைத்த பலன்கள் யாவை -எப்போது கிடைத்தன
    ரக்ஷமாம்–ரஷிக்கையாவது -விரோதியைப் போக்குகையும் அபேக்ஷித்ங்களைக் கொடுக்கையும்
    இவளுக்கு வஸ்த்ர வர்த்தகமும் ஸத்ரு சம்ஹாரமும் அபேக்ஷிதங்கள்

    திருநாம சங்கீர்த்தனமும் ப்ரபத்தியின் ஒரு சிறு அம்சமான கோவிந்த நாமமே புடவையைச் சுரந்து விட்டது
    மற்றப் பலன்கள் பின்னர் பெற்றாள்

    ஸபா பர்வத்தில் சரணாகதி கட்டத்தில் –சங்க சக்ர கதா பாணே ஸரணாகதி ஸ்லோகத்தைச் சொன்ன பின்பு
    ஹா கிருஷ்ண த்வாரகா வாஸின் க்வாஸி யாதவ நந்தந
    இமாம் அவஸ்தாம் ஸம் ப்ராப்தாம் அநாதாம் கிம்
    உபேக்ஷஸே கோவிந்த த்வாரகா வாஸின் கிருஷ்ண கோபீ ஜன ப்ரிய
    கவ்ரவை பரிபூதாம் மாம் கிம் நா ஜாநாஸி கேஸவ
    ஹே நாத ஹே ரமாநாத வ்ரஜ நாதார்த்தி நாஸந
    கவ்ரவர்ணவ மக்நாம் மாமுத்தரஸ்வ ஜநார்தந
    கிருஷ்ண மஹா யோகின் விஸ்வாத்மன் விஸ்வ பாவந
    ப்ரபந்நாம் கோவிந்த குருமத்யே அவ ஸீததீம்
    –90–44–47-என்று பல கால் அனுசந்தித்து உபாயத்வ புத்தியை விடாமல் இருந்தாள் அன்றோ
    உபாயாந்தர ஸம் சர்க்கத்தாலேயே பலன் விளம்பித்து பெற்றாள்

    மேலும் நைவ மே பதயஸ் சந்தி ந புத்ரா ந ச பாந்தவா ந ப்ராதரோ ந ச பிதா நைவ த்வம் மது ஸூதந மாம் விப்ரக்ருதாம் ஷுத்ரைர் உபேஷ் த்வம் வி சோகவத்
    ந ச மே ஸாம்யதே துக்கம் யத் ப்ராஹ ஸத் ததா
    –ஆரண்ய –12-128-129-என்றும்
    உபாயாந்தர ஸம் சர்க்கம் இவளுக்கு ஏற்பட்டது என்பது தெளிவு

    உபாய அபாய ஸம் யோகே நிஷ்டயா ஹீயதே அநயா
    அபாய ஸம் ப்லவே ஸத்யஸ் ப்ராயச்சித்தம் ஸமாஸரேத்
    ப்ராயச்சித்திரியம் ஸா அத்ர யத் புநஸ் சரணம் வ்ரஜேத்
    உபாயாநாம் உபாயத்வ ஸ்வீகாரேப்யேவ மேவ ஹி
    –லஷ்மீ தந்த்ரம் –17-92-93-94-என்று
    உபாயாந்தரமாவது விஹிதத்தை அனுஷ்டியாமையும் நிஷித்தத்தை அனுஷ்டிக்கையும்
    மற்ற உபாயங்களில் உபாய புத்தி வைத்தால் பிராயச்சித்தமாக மீண்டும் ஸரணாகதி செய்ய வேண்டும் –ஹே ரமா நாத -என்றும் உள்ளதாகையாலும் புருஷகார புர ஸ்மரணம் உண்டு என்றே கொள்ளலாம்-மாதவனை -மார்க்கண்டேயர் -பிராட்டி உடன் கூடிய அவனைப் பற்றச் சொல்லி உபதேசம் -இதற்காகவே சத்யபாமையையும் கூட்டிச் சென்றான்-
    மார்க்கண்டேயர் உபதேசப்படி
    ஏவம் யுக்தாச்ச பார்த்தா யமவ் ச புருஷர்ஷபவ்
    திரௌபத்யா சஹிதா ஸர்வே நமஸ் ஸக்ருர் ஜநார்த்தனம்-
    மீண்டும் ஸரணாகதி செய்து பலன்களைப் பெற்றாள் என்பது தெளிவு-

    ——-

    6-ஸ்ரீ மஹா பாரதம் த்ரௌபதி சரணாகதி ஸ்லோகம் – -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் –

    அவதாரிகை
    ஸ்ரீ ராமாயணத்தாலும்
    ஸ்ரீ மஹா பாரதத்தாலும்
    ஸ்ரீ விஷ்ணு புராணத்தாலும்

    பிராட்டியினுடையவும்-தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர -39-30-என்றும்
    த்ரௌபதி யினுடையவும்–
    சிந்தயந்தி யினுடையவும் –

    தத் பிராப்தி மஹா துக்க விலீ நாசேஷ பாதகா -தச் சித்த விமலாஹ்லாத ஷீண புண்ய சயா ததா
    சிந்தயந்தீ ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம்-நிருச்ச்வசதயா முக்திம் கதான்யா கோப கன்யகா-
    ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-21/22-என்றும்
    அத்யாவசாயத்தைப் பிரதி பாதிக்கையாலே இறே இவை பிரபல பிரமாணம் ஆயிற்று

    (பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்
    திரௌபதி ஸ்வ லஜ்ஜையை விட்டாள்
    இவர்களுக்கு விளம்ப பேறு
    சிந்தயந்தி அனைத்தையும் துறந்து உடனேயே பேற்றைப் பெற்றாள்)

    இதில் மஹா பாரத உக்தமான த்ரௌபதியினுடைய சரணாகதி நிஷ்டையை வெளியிடுகிறது இஸ் ஸ்லோகம்
    அதாவது
    சர்வேஸ்வரன் ரஷிக்கைக்கு பரிகரமான அத்யவசாயத்தைச் சொல்லிற்று ஆயிற்று –

    அப்படியே இறே-
    ஜ்ஞாதம் மயா வசிஷ்டே ந புராகீதம் மஹாத்ம நா
    மஹாத்யாபதி சம் ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவான் ஹரி
    -பார -சபா -90-42-என்றதும்

    இவ் வத்யவசாயத்தைக் கொண்டு
    பொய்ச் சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் -பெரியாழ்வார் -2-1-1- என்றபடி
    சபா மத்யத்திலே துச்சாசன க்ருஷ்டயாய் –
    அதினாலே பரிபூதையான தான் –
    அரஷகரான பர்த்தாக்கள் முதலானவர்களை ரஷகராக கூப்பிட்ட இழவு தீர
    சர்வ ரஷகன் ஆனவன் தன்னை ரஷகனாகத் துணிந்து
    அவனுடைய ரஷகத்வ உபயோகியான குணங்களைச் சொல்லி சரணம் புகுகிறாள் –

    மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி
    பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்
    பத்தூர் பெறாது அன்று பாரதம் கைசெய்த
    அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-1-

    என் நான் செய்கேன் -ஸூவ ரக்ஷணத்தில் கைவைக்காதவள்
    யாரே களை கண் -இதரர் ரக்ஷணத்தில் கைவைக்காதவள்
    என்னை என் செய்கின்றாய் -இவன் ரக்ஷணத்தில் விஸ்வாஸம் மிகு விளம்பம் பொறுக்காதவள்-சங்கு ஏத்தும் கை -தொழுவிக்கும் கை -முப்படை -சங்க சக்கர கத பாணி

    ———–

    இந்த்ரப்ரஸ்தத்தில் கண்ணன் இல்லை-சால்வனுடன் யுத்தம் செய்து கொண்டு இருக்கும் நேரத்தில் சரணாகதி
    இருந்தாலும் நேராக விளிச்சொற்களால் சரணாகதி
    த்வயம் ஸமாசமாக ஆறு பதங்களாகவும் பிரித்து அஷ்ட பதங்களாகவும் கொள்ளலாமே
    ஸ்ரீ மானே நாராயணனே -தவ -அத்தியாஹரம் செய்து கொண்டு -உன் திருவடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே போல் -எதுவரை ராமச்சந்த்ரனுடைய திருவடிகளில் தலையால் தரிக்காமல் நான் உளனாக மாட்டேன் -பரதன்
    லஷ்மணன் -நேராகவே பார்த்து அஹம் ஸர்வம் கரிஷ்யாமி
    இங்கு கண்ணன் நேராக இல்லாவிட்டாலும் திரௌபதி விளிச்சொற்களாக அமைத்து சரணம் செய்கிறாள்
    ஆபத்தில் நினைக்கச் சொல்லி வசிஷ்டர் உபதேசப்படியே நினைவில் மட்டும் இல்லாமல் மஹா விஸ்வாஸத்துடன் கூப்பாடு செய்து சரணம் -சரணம் அடைந்த அடியேனை ரக்ஷிப்பாய் என்ற பிரார்த்தனையுடன் அமைந்த ஸ்லோகம் -ரக்ஷணம் அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் சேர்ந்தே இருக்க வேண்டும் –

    ஸபா பர்வத்தில் சரணாகதி கட்டத்தில் –சங்க சக்ர கதா பாணே ஸரணாகதி ஸ்லோகத்தைச் சொன்ன பின்பு
    ஹா கிருஷ்ண த்வாரகா வாஸின் க்வாஸி யாதவ நந்தந
    இமாம் அவஸ்தாம் ஸம் ப்ராப்தாம் அநாதாம் கிம்
    உபேக்ஷஸே கோவிந்த த்வாரகா வாஸின் கிருஷ்ண கோபீ ஜன ப்ரிய
    கவ்ரவை பரிபூதாம் மாம் கிம் நா ஜாநாஸி கேஸவ
    ஹே நாத ஹே ரமாநாத வ்ரஜ நாதார்த்தி நாஸந
    கவ்ரவர்ணவ மக்நாம் மாமுத்தரஸ்வ ஜநார்தந
    கிருஷ்ண மஹா யோகின் விஸ்வாத்மன் விஸ்வ பாவந
    ப்ரபந்நாம் கோவிந்த குருமத்யே அவ ஸீததீம்
    –90–44–47-அவன் திருவடிகளைத் தவிர் வேறே எதுவுமே உபாயமாகாதே
    வாக்ய பிரபாவம் போல் அன்றி வாசக பிரபாவம் என்றும் அவன் தூரஸ்தனானாலும் இது கிட்டி நின்று உதவும் என்றும் திரௌபதிக்கு ஆபத்தில் புடவை சுரந்தது இது-திருநாம வைபவம் அன்றோ -என்றும்- இருப்பதால்
    ஸர்வ தர்ம பரித்யாஜ்யத்தில் திரு நாம சங்கீர்தனமும் அடங்கும்
    உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ-

    புடவை சுரப்பது மட்டும் இவளது பிரார்த்தனை இல்லையே -மற்றவை கண்ணன் தானே அருளினான்
    இவன் செய்தன அனைத்துமே இவள் கூந்தல் முடித்து இவள் மங்கள ஸூத்ரம் தரிக்க வைப்பதற்கே
    ருணம் பிரவர்த்த -திரு உள்ளம் பின்னும் புண்பட்டே சென்றான் அவன் –
    ராஜன் கூப்பிட்டதால் புண்பட்ட பரதனின் அநிஷ்ட நிவ்ருத்தியை உடனே திருப்பாதுகைகள் மூலம் அருளி பின்னர் 14 வருடங்கள் சென்ற பின்பே சேர்ந்து ஆலிங்கனம் செய்து அருளி பிராப்தி செய்தால் போல் uஇவளுக்கும் விளம்பி பலன்களை அருளினான்

    உபாய அபாய ஸம் யோகே நிஷ்டயா ஹீயதே அநயா
    அபாய ஸம் ப்லவே ஸத்யஸ் ப்ராயச்சித்தம் ஸமாஸரேத்
    ப்ராயச்சித்திரியம் ஸா அத்ர யத் புநஸ் சரணம் வ்ரஜேத்
    உபாயாநாம் உபாயத்வ ஸ்வீகாரேப்யேவ மேவ ஹி
    –லஷ்மீ தந்த்ரம் –17-92-93-94-என்று
    உபாயாந்தரமாவது விஹிதத்தை அனுஷ்டியாமையும் நிஷித்தத்தை அனுஷ்டிக்கையும்
    மற்ற உபாயங்களில் உபாய புத்தி வைத்தால் பிராயச்சித்தமாக மீண்டும் ஸரணாகதி செய்ய வேண்டும் –
    மார்க்கண்டேயர் உபதேசப்படி
    ஏவம் யுக்தாச்ச பார்த்தா யமவ் ச புருஷர்ஷபவ்
    திரௌபத்யா சஹிதா ஸர்வே நமஸ் ஸக்ருர் ஜநார்த்தனம்-
    மீண்டும் ஸரணாகதி செய்யது பலன்களைப் பெற்றாள் என்பது தெளிவு-)

    ———

    த்ரௌபதி சரணாகதி ஸ்லோகம் –

    சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத
    கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் –ஸ்ரீ மஹா பாரதம் -சபா பர்வம் -9- அத்யாயம் -43  –

    சங்க சக்ர கதா பாணே  –
    கைப்படை யில்லாதனையோ நான் கை கூப்பிற்று –(ஒன்றுக்கு மூன்று திவ்ய ஆயுதங்களைக் கைப்பற்றினவனை அன்றோ நான் கூப்பிட்டது)

    த்வாரகா நிலய-
    ஓர் இருப்பிடம் இல்லாதானையோ நான் நேர்ந்தது –

    அச்யுத
    தன்னை அடைந்தாரை நழுவ விடுமவனையோ நான் அடைந்தது –
    ந ச்யவந்தே யஸ்மாத் இத் யச்யுத –

    கோவிந்த
    தன் ஆஸ்ரதரை நோவு பட  விட்டிருக்குமவனையோ நான் ஆஸ்ரயதித்தது-
    காவ விந்தந்த்யேனம்-கா விந்ததி –

    புண்டரீகாஷ-
    கண்ணில்லாதவனையோ நான் காலைக் காட்டிற்று –
    1-கண் 2-இரக்கம் –(தயா வாத்சல்யாதி குணங்களை கோட் சொல்லித்தரும் செந்தாமரைக் கண்ணன் அன்றோ)

    ரஷமாம் –
    ருசி இல்லாதேயோ நான் சரணம் புகுந்தது –

    சரணா கதாம் –
    ஆகையாலே பல சித்தியில் கண்ணழிவு வர ஹேது இல்லை என்று துணிகிறாள் –

    1-சங்க சக்ர கதா பாணே –
    நீ ஆயுத பாணியாய் இருக்க -நான் அம்பரத்தைப் பறி கொடுத்தேன் –

    2-சங்க சக்ர கதா பாணே —
    சுவர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை
    -திரு எழு கூற்றிருக்கை -என்கிறபடியே –
    நீ சதா பஞ்சாயுதங்களைத் தரித்து இருக்கிறது சரணாகத  ரஷணத்துக்கு அன்றோ –

    சகல ஆபன் நிவ்ருத்திக்கும் ஹேது உன் கை தானே –
    ஸூதர்சனம் சிந்தித்த மாத்ரமாஸூ -தஸ்யாக்ர ஹஸ்தம் ஸ்வயம் ஆருரோஹா
    -பார -பீஷ்ம -59-58-என்று

    (கை கழலா நேமியான் –கருதும் இடம் பொருதும் கை நின்ற சக்கரத்தான்)

    நீ கை வந்த சக்கரத்தென் கண்ணனாய் -திருவாய் -5-4-8- இருக்க
    காப்பாரார் இவ்விடத்து -திருவாய் -5-4-6/7-என்று
    நான் கை விரிப்பது என் –

    நான் கை விட்டு இருக்க நீ கைக் கொண்டு இருப்பதற்கு பிரயோஜனம் வேண்டாவோ
    பஞ்சாயுதங்களையும் தரிக்கிறது பரிபவத்தில் நொந்தாரை ரஷிக்க அன்றோ

    (தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
    மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
    கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
    தை வந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே.–5-4-8-

    பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
    முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
    மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
    இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ் விடத்தே?–5-4-6-

    காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
    சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
    தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
    தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என் செய்கேனோ?–5-4-7-)

    3- சங்க சக்ர கதா பாணே –
    நான் கை விட்ட படியே -அவன் படை தொட்டான்
    அங்கனம் தொட்ட படி இறே

    மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்-தொழும் காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே -திருவாய் -3-1-9-

    அப்படியே கூராராழி  வெண் சங்கேந்தி -திருவாய் -6-9-1-வந்தருளி தனக்கு முகம் காட்ட வேணும் என்று கருத்து

    (மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
    தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
    மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
    தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-

    நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
    சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
    கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
    வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-)

    பின்பு இவளுக்காக இறே –
    ச பாஞ்ச ஜன்ய அச்யுத வக்த்ரவாயுநா ப்ருசம் ஸூபூர்ண உதர நிஸ் ஸ்ருத த்வநி ஜகத் ஸமாதான வியத் திகீஸ்வரம் ப்ரகம்பயாமாஸ யுகாத்யயே யதா -பாரத த்ரோ -73-58-அச்சுதனுடைய திருமுக வாயுவினால் மிகவும் நிறைந்த உட்புரத்தின் நின்றும் வெளிப்படும் ஒலியையுடைய அந்தப் பாஞ்ச ஜன்யம் பாதாளம் ஆகாயம் திக் பாலர்கள் ஆகிய எல்லாவற்றையும் ஊழிக் காலத்தில் போலே நடுக்கமுறச் செய்தது-என்றும்

    ச கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்-ஸ்ரீ கீதை -1-19-என்றும்

    கழல் மன்னர் கலங்கச் சங்கம்  வாய் வைத்ததும் -பெரிய திரு -6-7-8- என்றும்

    ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப -பெரியாழ்வார் -4-1-8- என்று  செய்து அருளியதும்

    கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இருநிலத்து அவித்ததும் -திருவாய் -3-2-3-என்றபடி-(இவள் விரும்பிய ஸரணாகதி பலன்களை கண்ணன் அளித்து அருளினான்)

    (பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக்
    கந்தார் களிற்றுக் கழல் மன்னர்  கலங்கச் சங்கம் வாய் வைத்தான்
    செந்தாமரை மேல் அயனோடு சிவனும்  அனைய பெருமையோர்
    நந்தா  வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே  –6-7-8-

    நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே
    நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன்
    ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையை
    பாழி லுருளப் படை பொருதவன் பக்கமே கண்டாருளர்–4-1-8-

    கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
    யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
    பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
    சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-)

    4- சங்க சக்ர கதா பாணே-
    அருளார்  திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கோர் பெண்பால்
    பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ தெருளோம் அரவணையீர்
    -திரு விருத்தம் -33-

    5- சங்க சக்ர கதா பாணே –
    துளிக்கின்ற வான் இந்நிலம் சுடராழி சங்கேந்தி அளிக்கின்ற மாயப்பிரான்
    -திருவாய் -2-3-10- என்றபடி
    இருக்கிற உனக்கு அபலையை ரஷிக்கை பணியோ-
    நான் அழகுக்கு இட்ட வலை போல் ஆயிற்றே நீ இட்ட பத்திரம் –

    (களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
    ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
    துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
    அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-)

    இனி அவன் நிலை கலங்கி வரும்படி அவன் நிலையைச் சொல்லிக் கூப்பிடுகிறாள்

    1-த்வாரகா நிலயாச்யுத-
    நீ -வண்டுவராபதி மன்னாய் –
    திருவாய் -5-3-6-
    நழுவுதல் இன்றிக்கே நாட்டாளாய் நிற்க
    நான் பிடித்தார்க்கு எல்லாம் பெண்டிர் ஆகவோ –

    (அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
    என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
    முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
    மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-)

    (உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
    நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
    மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
    மன்னனை ஏத்துமின்!
    ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10-மா முனிகள் மன்னார்குடி திவ்ய தேசத்துக்குச் சமர்ப்பித்த பாசுரம்)

    2-த்வாரகா நிலயாச்யுத-
    பரமபத நிலையனையோ நான் கூப்பிடுகிறது
    சாது பரித்ராணம் பண்ண வந்த இடத்தே யன்றோ

    அயர்வறும் அமரர்களுக்கு முகம் கொடுத்த இடம் அன்றே நான் அர்த்தித்தது
    அபலைகளுக்கு முகம் கொடுத்த இடம் அன்றோ –

    பல்லாயிரம் பெறும் தேவிமாரோடு பௌவம் எறி துவரை எல்லாரும் சூழச் சிங்கா சனத்திலே -பெரியாழ்வார் -4-1-6- என்கிறபடியே தேவிமார்களை நழுவ விடாமல் இருக்கையாலேயே அச்யுதனாய் திருத் துவாரகையில் இருப்பவனை அன்றோ கூப்பிடுகிறேன் –

    (பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
    வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல் 
    பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை  
    எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 -1-6 –பல்லாயிரம்-ஷோடச ஸ்த்ரீ -பதினாறாயிரம் )

    ஏகஸ்மி னநேவ கோவிந்த காலே தாஸாம் மஹா முனே
    ஜக்ராஹ விதிவத்  பாணீன் ப்ருதக் கேஹீஷூ தர்மத –
    ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-31-17-

    ஆஸ்ரிதையான ஒருத்தியை உபேஷித்தால் அபிமதர்களானவர்கள் பலர் முகம் உமக்குப் போக வேண்டாவோ –( ப்ருதக் கேஹீஷூ-தனித் தனியாக வீடுகள் -தனித் தனியாக திவ்ய மங்கள விக்ரஹம் -க்ருஹஸ்த தர்மம் கடைப் பிடித்த வ்ருத்தாந்தம்)

    3- த்வாரகா நிலயாச்யுத –
    நீயும் என்னைப் போலே நிலை இழந்து இருக்கிறாயோ –
    அவர் ஒரு நிலை நின்றது என்பரேல்-
    திரை பொரு கடல்சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
    அரசினை யவிய அரசினை யருளும் அரி புருடோத்தமன்
    -பெரியாழ்வார் -4-7-8-என்கிறபடியே
    அரசினை யவிய அரசினை அருளும் ஆழியான் ஆயிற்றே –(இதில் இருந்து திரௌபதி யானவள் தனது ஸரணாகதிக்குப் பலனாக –அரசினை யவிய அரசினை அருளும் ஆழியான்-ஸத்ரு ஸம்ஹாரத்தையும் ராஜ்ய ப்ராப்தியையும் விரும்பினாள் என்று புலப்படுகிறது)

    (திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
    அரசனை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
    நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு இட்டு இரண்டு
    கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – -4-7-8 –)

    4-த்வாரகா நிலயாச்யுத
    ஆராய்ச்சியைத் தவிர்ந்த அதர்மமான சபை போல் ஆயிற்றே உன் தர்ம சபையும்

    5- அச்யுத –
    என்று அவனை அல்லாதாரை என்றும் தன்னை நழுவாமல் நோக்கும்படியான பெயரைச் சொல்லுகிறாள்
    அச்சுதன் இறே அடியவர் வினை கெடுப்பான்
    அச்யுதாஹம் தவாஸ்மீதி ஸைவ ஸம்ஸார பேஷஜம் –என்கிறபடியே (அச்யுதனே நான் உனக்கு அடியேனாகிறேன் என்பதே ஸம்ஸார நோய்க்கு மருத்தாகும்)-என்கிறாள்

    மித்ர பாவத்திலே -ந த்யஜேயம்-யுத்த -18-3- என்கிற நீ
    சரணாகதியான என்னை சத்ருக்கள் நலியும்படி காட்டிக் கொடுத்து இருப்பதே –

    அவசன்னையாய் அநாதையாய் இருக்கிற என்னை நெகிழுகையே ப்ராப்தமோ
    நீயும் உன் ஸ்வ பாவத்தில் நெகிழில் அன்றோ என்னுடை நெகிழ வேண்டுவது-
    என்னுடைய வஸ்திரம் இடுப்பை விட்டு நெகிழ்வது அவன் ஸ்வ பாவம் நெகிழ்ந்தால் தானே
    என்னுடை நெகிழ்ந்தோ உன் பேர் உண்டாவது
    -(கைவிட்டால் அச்சுதன் பேர் நிலைக்காதே
    நாராயணன் பேர் நிலைக்க வேண்டாமோ என்றால் போல் இங்கும்)

    (அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
    அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
    வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
    வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-)

    (நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
    நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
    மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
    மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-)

    6-சங்க சக்ர கதா பாணே த்வாரகா  நிலயாச்யுத –
    தமசா பரமோ தாதா சங்க சக்ர கதாதர
    -யுத்த -114-15-என்றாள் ஒருத்தி -மண்டோதரி —
    இவளும் இப்படியே பேசுகிறாள்

    (அவள் வைகுண்ட நிலையா என்றாள்
    இவள் துவாரகா நிலையா என்கிறாள்
    ஏஷ நாராயண ஸ்ரீ மான் –ஆகாதோ மதுராம் புரம் தானே)

    ஜாதோ அஸி தேவ தேவேச சங்க சக்ர கதாதர -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-1- என்னக் கடவது இறே –

    பிராகார சர்வ வ்ருஷ்ணீ நாம் -பார -சபா -36-12-என்று இருக்கும் நீ
    இவர்களுக்கு கடலை அரண் செய்து கொடுத்து சத்ருக்கள் கையில் காட்டிக் கொடாமல்
    காக்கும் இயல்வினனாய் இருக்கிற உனக்கு சத்ருக்கள் கையிலே அகப்படுவது என் -செய்வது என்-

    பின்பு –ரதம் ஸ்தாபாய மே அச்யுத –ஸ்ரீ கீதை -1-21- என்னும்படி இறே இவளுக்காக சாரதியாய் வ்யவஸ்திதன் ஆனதும்
    நீ கை கழலா நேமியானாய் இருக்க
    என் மொய் குழல்கள் இரண்டும் விழும்படி யாவதே என்று
    பொற் சக்கரத் தரியினை யச்சுதனைப் பற்றுகிறாள் –

    (மோக்ஷ ப்ராப்திக்குத் தான் ஸக்ருத் பிரபத்தி
    இவள் அபேஷிதம் அரசை அவித்து அரசை அருளுவதே-கோவிந்த நாம சங்கீர்த்தனமே உபாயம் என்று தப்பாக இருந்து பின்பு-பிராயச்சித்தமாக மீண்டும் சரணாகதி செய்கிறாள்)

    (இது வரை பரத்வம் -ஆஸ்ரித கார்யம் செய்ய வேண்டியவை
    மேல் ஆஸ்ரித ஸுகர்ய ஆபாத குணங்கள் -ஸுலப்யாதிகள்)

    1-கோவிந்த-
    அச்யுதன் என்று சொன்ன பின்பும் உதவக் காணாமையாலே அடுத்த படியாக அவனை அரை குலையத் தலை குலைய வருந்தியோடி வரச் செய்வதாய்
    இந்த்ரனாலே கோவிந்த பட்டாபிஷேகம் செய்யப் பெற்ற அவனுக்கு
    முடி சூடின பேரான கோவிந்த நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டு முறையிடுகிறாள்
    கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசி நாம் –
    ருணம் பிரவ்ருத்தமிவ மே ஹ்ருதயான் நாப சர்ப்பத்தி –
    பார -உத் -47-39-என்று
    அவன் திரு உள்ளம் புண்படும்படி உயர் நிலையிலே ஒன்றைச் சொல்லிற்று –

    (உயர் நிலையிலே-ருணம் –ருணம் வ்ருத்தமிவ –ருணம் பிர வ்ருத்தமிவ)

    2- கோவிந்த –
    நீ கோவித்த அபிஷேகம் பண்ணி கோப்தாவாய் இருக்க
    இவ்விடம் அராஜகமாய் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி இருப்பது என் –
    இவளுக்கு புடவை சுரக்கும் திரு நாமம் இருக்கும் படி

    3- கோவிந்த –
    நீ ஆஸ்ரித ரஷணத்தில் தீஷித்து இருக்க
    க்ருஷ்ணாஸ்ரய—கிருஷ்ண பல—பார த்ரோண
    -183-24-என்று இருக்கிற என்னை
    கிருபை பண்ணாது ஒழிவது என்

    நாராயணா என்று உன் சிறு பெயரையோ நான் சொல்லிற்று(அறியாத பிள்ளைகளோம் அன்பினால் –சங்கு சக்ர கதா பாணி இங்கு-சிறு பேர் அழைத்தனம் –சீறி அருளாதே-பிரமாத -ப்ரணய -அஜானாம் மூன்று காரணங்கள் அர்ஜுனனும் விஸ்வ ரூபம் கண்டதும்)
    நாமைதத் தவ கோவிந்த நாம த்வத் தஸ் சதாதிகம் -என்று
    உன்னிலும் அதிகமான உன் பேரை அன்றோ நான் சொல்லிற்று

    சக்ருத் சம்ருதோ அபி கோவிந்த ந்ருணாம் ஜன்ம சதை க்ருதம்-பாப ராசிம் தஹத் யாஸூ தூலராசி மிவ அநல -என்று
    சகல ப்ரவ்ருத்தி பண்ண வற்றானது உன் திரு நாமம் அன்றோ –

    4- கோவிந்த –(கோ –மயிர்முடி குழல்)
    நான் குழல் பேணாமல் இருக்க –
    நீ குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக் கோவிந்தன் -பெரியாழ்வார் -3-6-11-என்றபடி
    கோவிந்தனாய் மயிர் பேணி இருப்பதென் –

    (குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில்
    குழல் முழஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித்து எழுந்த அமுதப் புனல் தன்னை
    குழல் முழவம் விளம்பும் புதுவைக் கோன் விட்டு சித்தன் விரித்த தமிழ் வல்லார்
    குழலை வென்ற குளிர் வாயினராகி சாதி கோட்டியில் கொள்ளப் படுவாரே -3-6-11 – –)

    5- கோவிந்த
    நீ முடி சூடிவித்திருக்க நான் –
    சாஹம் கேசக்ரகம் ப்ராப்தா த்வயி ஜீவத்யபி பிரபோ -பார உத் 81-24-என்னும்படி யாவது என்
    என்று சொல்லி –
    கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து -நாச் -8-3- என்றபடி
    குண ஜ்ஞானத்தாலே நிர்ப் பரை யானாள்-
    பின்பு இறே மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்ததும்

    (இதில் இருந்து திரௌபதி இந்தக் கோவிந்த நாமத்தைக் கூறும் பொழுது உபாய புத்தியைக் கைக் கொள்ள வில்லை என்று புலப்படுகிறது-முன்பு கோவிந்த நாமம் புடவை சுரக்கும் என்று நினைத்தவள்
    இப்பொழுது ஆவி காத்து இருக்கவே -ஆற்றாமைப் போக்கவே திரு நாம சங்கீர்தனம்
    முழுவதும் உபாய புத்தி வைக்க வில்லை
    அபலை போல் சந்தேகத்தில் அலை பாய்ந்து இருக்கிறாள்)

    ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
    எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
    குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
    அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-

    மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி
    உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட உயிர் ஆளன் உறையும் கோயில்
    பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும்
    சித்தர்களும் தொழுது இறைஞ்சி திசை விளக்காய் நின்ற திருவரங்கமே – 4-9 -6-

    6- கோவிந்த –
    ஜகத் ஹிதிதார்த்தமாக -வந்து அவதரித்தவன் அல்லையோ –

    7- த்வாரகா நிலய கோவிந்த –
    துவாராபதிக் காவலன் கன்று மேய்த்து விளையாடும் கோவலனை -நாச் -4-8-கூறுகிறாள்

    (ஆவலன்புடையார் தம் மனத்தன்றி
    மேவலன் விரை சூழ் துவராபதிக்
    காவலன் கன்று மேய்த்து விளையாடும்
    கோவலன் வரில் கூடிடு கூடலே–2-8-)

    8- கோவிந்த –
    கோவிந்தன் -பசு மேய்த்தவன் -என்றபடி
    கோமளவான் கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும் -திருவாய் -4-4-5-
    நீ பசு மேய்க்கக் கற்ற வத்தனை யல்லவோ
    பரிபவத்தில் ரஷிப்பது உனக்குப் பணியாய் இருப்பது என்

    (கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
    போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
    ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
    கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–4-4-5-)

    9- கோவிந்த –
    என்னுடைய ரஷணத்துக்கு மலை எடுக்க வேணுமோ
    கண்ணாலே நோக்க அமையாதோ
    கோவிந்தம் கோபதிம் தேவம் சந்ததம் சரணம் வ்ரஜ -என்கிறது
    இவள் அனுஷ்டானத்தை பின் செல்லும்படியாய் இறே இருப்பது

    விதயச்ச வைதிகா த்வதீய கம்பீர மநோநு சாரிண-ஸ்தோத்ர ரத் -20-

    (த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
    ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
    பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
    த்வதீய கம்பீர மநோநுஸாரிண:
    ||ஶ்லோகம் 20 –

    ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது
    ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
    வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.)

    1- புண்டரீகாஷ-
    பாஞ்சால்யா பத்மா பத்ராஷ்யா –
    நான் கமலக் கண் முத்தம் சோரா இருக்க
    கிமர்த்தம் நேத்ராப்யாம் –சுந்தர 33-4-என்கிறபடியே
    உன் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காது ஒழிவது என்

    (பண்டை நாளாலே நின் திரு வருளும்
    பங்கயத்தாள் திருவருளும்
    கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
    குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
    தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
    தாமரைக் கண்களால் நோக்காய்

    தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
    திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-)

    2- புண்டரீகாஷ-
    என்னுடைய ஆபத்துக்கு
    அவலோக நாத –நே ந போயோ பாலயாச்யுத -ஸ்ரீ விஷ்ணு பிராணம் -1-20-16-
    நம் அன்றோ அபேஷிதம்-

    3- கோவிந்த புண்டரீகாஷ
    க்ருஷ்ணம் கமல பத்ராஷம்
    -என்னக் கடவது இறே-
    சம்ப்ரமைஸ் துஷ்ய கோவிந்த ஏதன்ன பரமம் தனம் -அந்யதா
    ஹி விசேஷணே கஸ்த்வா மர்ச்சிதும் அர்ஹதி
    -பார -உத் -91-44(பரபரப்பே தனம்-கோவிந்த)
    என்ற அனந்தரம்
    பீஷ்ம த்ரோண அதிக்ரம்யா மாஞ்சைவ மது ஸூ தன –கிமர்த்தம் புண்டரீகாஷ புக்தம் வ்ருஷள போஜனம் -என்றான் துரியோதனன் இறே –(புண்டரீகாஷ)

    4-புண்டரீகாஷ
    நான் கண் கலங்கி இருக்க- நீ கண் வளர்த்தியோடே இருப்பது என்-

    5-புண்டரீகாஷ –
    நீ கண் யுடையவனாய் இருக்க -நான் கண்டார் கண் பார்வைக்கு இலக்காய்க் கண் கலங்குவது என் –

    6- புண்டரீகாஷ –
    நான் கண் சிவந்து இருக்க
    நீ உன் முகத்தன கண்கள் அல்லவே(வாய்) -நாச் -2-5-இருப்பது என்

    (வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
    தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
    உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
    கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –-2-5-)

    7-புண்டரீகாஷ –
    அவன் கண் செம்பளித்து இருந்தான்
    பின்பு கண்ணாலே அலர விழித்ததும் இவளைக் குளிர நோக்கிற்றும் –
    க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா ப்ருது லோசன –
    மோஷயித்வா தநும் ப்ராப்த கிருஷ்ண ஸ்வஸ்தா நமுத்தமம்
    -பார மௌசல-9-34-இத்யாதி
    அனுகூல ரஷணத்துக்கும் பிரதிகூல நிரசனத்துக்கும் (மண்ணின் பாரம் நீக்கவும் பேற்றை அளிக்கவும்)பரிகரம் ஒன்றே யாயிற்று –

    8- புண்டரீகாஷ –
    தாமரைக் கண்ணாவோ தனியேன் தனியாளாவோ -திருவாய் -7-6-1- என்கிறாள்

    (பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
    பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
    தாமரைக் கண்ணாவோ! தனியேன் தனி ஆளாவோ!
    தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-)

    (பிரபத்தி ஸூர்யன் –
    திருநாம சங்கீர்த்தனம்–உபாயாந்தரம் -மேகம் மூட
    மீண்டும் பிரபத்தி)

    9-புண்டரீகாஷ -அச்யுத –
    தாமரைக் கண்ணா அச்யுதா -என்கிறாள்

    10- அச்யுத புண்டரீகாஷ –
    வீவிலின்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் வீவில் சீரன் மலர்க் கண்ணன் -திருவாய் -4-5-3–என்கிறாள் –(கடாஷித்து நழுவ விடாமல் அருளுபவர்)

    (வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
    வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
    வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்;
    வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-)

    11- புண்டரீகாஷா –
    கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ-
    சாந்தோக்யம் -1-7- என்கிற
    சுருதி அர்த்தம் இவளுக்குக் கையாளாய் இருக்கும் படி  –

    12-புண்டரீகாஷ-
    ஜிதந்தே புண்டரீகாஷ -ஜிதந்தே
    -என்று
    இவள் முக்த அனுபாவ்யமான கண்களிலே ஜிதையாய் இருக்கும்படி

    தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
    சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
    ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
    பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே –35-

    13-புண்டரீகாஷ –
    ச  ஏஷ ப்ருது தீர்க்காஷா சம்பந்தி தே ஜனார்த்தன
    -பார -வன -192-51-என்று
    இவள் பேசினபடி கேட்டுக் கொண்டு இருக்குமே –
    வழி பறிக்கும் தசையிலே தாய் முகத்திலே விழிக்க ஆசைப்படுவாரைப் போலே
    தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணனைக் காண வாயிற்று இவள் ஆசைப்படுகிறது

    14-சங்க சக்ர கதா பாணே புண்டரீகாஷ –
    சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண்ணன் என்றே தளரும் -திருவாய் -7-2-1- என்கிறாள் –

    கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
    கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
    ‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
    தாமரைக் கண்’ என்றே தளரும்;
    ‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
    இரு நிலம் கை துழா இருக்கும்;
    செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
    இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

    15- புண்டரீகாஷ சங்க சக்ர கதா பாணே-
    பங்கயக் கண்ணன் என்கோ —சங்கு சக்கரத்தான் என்கோ
    -திருவாய்  -3-4-3-என்கிறாள்

    (பங்கயக் கண்ணன் என்கோ!
    பவளச் செவ் வாயன் என்கோ!
    அங் கதிர் அடியன் என்கோ!
    அஞ்சன வண்ணன் என்கோ!
    செங் கதிர் முடியன் என்கோ!
    திரு மறு மார்பன் என்கோ!
    சங்கு சக்கரத்தன் என்கோ
    சாதி மாணிக்கத்தையே!–3-4-3-)

    16-புண்டரீகாஷ –
    பாஹி மாம் புண்டரீகாஷ ந ஜாநே சரணம் பரம்
    -ஜிதந்தே -8-என்கிறாள்

    (அஹம் பீதோ அஸ்மி தேவேஸ ஸம்ஸாரே அஸ்மின் பயாவஹே
    பாஹி மாம் புண்டரீகாஷ ! ந ஜாநே ஸரணம் பரம்
    —8-

    புண்டரீகாஷ ! –
    உன்னுடைய ஆகர்ஷகமான திருக் கண்களால் என்னைக் குளிர நோக்கி அருள வேணும் –
    நான் என்னுடைய பய நிவ்ருத்திக்கு யத்னம் பண்ணும் அன்றோ நேர்த்தி உள்ளது –
    தேவர் செய்து அருளும் இடத்தில் அநாயாசம் அன்றோ –
    கீழ்ச் சொன்ன ஆஸ்ரயணீயமான வாத்சல்யாதிகளும்
    பல சித்திக்கு உடலான ஜ்ஞான சக்த்யாதிகளும் வேணுமோ என்னை ரஷிக்கைக்கு –
    முதல் -ஜிதந்தே புண்டரீ காஷ -என்று எனக்கு புறம்பு உள்ள அந்ய பரதையை தவிர்த்தால் போலே
    பயத்தையும் போக்கி ரஷித்து அருள வேணும் –)

    ரஷமாம் —
    1-ரஷ அபேஷை யுடைய என்னை –
    2- அநாதையான என்னை –
    3-அபலையான என்னை –
    4-ஆஸ்ரிதையான -பலமற்ற -என்னை
    4-அநந்ய சரணையான என்னை

    ரஷமாம் –
    ரஷிக்கை யாவது
    விரோதியைப் போக்குகையும் –
    அபேஷிதங்களைக் கொடுக்கையும் –

    அலமன்னு மடல்  சுரி சங்கம் எடுத்து அடலாழியினால் அணியாருருவின்
    புலமன்னு வடம்புனை கொங்கையினாள் பொறை தீர முனாள் அடுவாள் அமரில்
    பல மன்னர் படச் சுடர் ஆழியினைப் பகலோன் மறையப் பணி கொண்டு அணி சேர்
    நிலா மன்னனுமாய் உலகாண்டவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே
    –பெரிய திரு -2-4-3-

    1-சரணாகதாம்-
    சரணம் அடைந்த இவளுக்காக இறே-பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்ததும் –
    இவளுக்கு வஸ்த்ர வர்த்தநமும்
    சத்ரு சம்ஹாரமும் அபேஷிதம்

    ரஷாபேஷாம் ப்ரதீஷதே -என்று
    தொழுது மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னுமிது மிகையாதலின் -திருவாய் மொழி-9-3-9-என்றபடி –
    அத்தலைக்கு மிகையாய் இறே இருப்பதும்

    (தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
    எழுது மென்னுமிது மிகை யாதலில்
    பழுதில் தொல் புகழ்ப்
     பாம்பணைப் பள்ளியாய்
    தழுவுமாறு அறியேன் உன தாள்களே–9-3-9-–)

    2-சரணாகதாம் –
    சத்ருவாகிலும் விட ஒண்ணாதே ரஷிக்க வேண்டும்படியான சரணாகதி தர்மத்தை அனுஷ்டித்தேன்

    தஸ்மாதபி வைத்தியம் பிரபன்னம் ந பிரதிப்ரயச்சந்தி -என்றும்

    சரணாகத அரி ப்ரானான் பரித்யஜ்ய ரஷிதவ்ய -யுத்த -18-28-என்றும் சொல்லக் கடவது இறே

    காதுகனான வேடன் விஷயத்திலே திர்யக்கான பட்ஷி தன்னை அழிய மாறி ரஷித்தபடி கண்டால் –
    சரணாகத வத்சலனான -சுந்தர -21-21-நீ
    சரணாகதையான என் விஷயத்தில் என்ன செய்ய வேண்டும்
    இவன் இப்படியே நாதிஸ் வஸ்த மநா -என்று இழவோடே எழுந்து அருளிற்றும்

    3-சரணாகதாம் –
    ஆண் பிறந்தார்க்கு எல்லாம் அடைக்கலமாய் இருக்க பெண் பிறந்தார் அடைக்கலம் புகுந்தால்
    அஞ்சேல் என்னாது இருப்பது என்-
    மாஸூசா -என்று ஒரு வார்த்தை அன்றோ அருளிச் செய்ய வேண்டுவது –(உனக்கு ஒரு சொல் எனக்கு வாழ்வு)

    சங்க  சக்ர கதா பாணே –சரணாகதாம் –
    1-நீ ரஷண பரிகரங்களை யுடையனாவது –
    2-ஆசன்னன் ஆவது –
    3-ஆஸ்ரிதரை நழுவ விடாதவனாவது –
    4-ஆஸ்ரித ரஷணத்திலே தீஷித்து இருக்குமவனது
    5-கண் யுடையவனாவது
    6-நான் ரஷக அபேஷை யுடையவளாய் சரணம் புகுவது
    ஆகையாலே ரஷிக்கக் குறை என் –

    (நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
    செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
    உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
    எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

    நம்பியை-என் சொல்லி மறப்பேனோ
    தென் குறுங்குடி நின்றவனை -என் சொல்லி மறப்பேனோ
    அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தியை-என் சொல்லி மறப்பேனோ
    உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை என் சொல்லி மறப்பேனோ
    எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ)

    சங்க சக்ர கதா பாணே -என்கையாலே –
    ஜ்ஞான சக்த்யாதி யோகத்தைச் (ஆஸ்ரித கார்ய ஆபாத குணங்கள்)சொல்லி

    த்வாரகா நிலய அச்யுத கோவிந்த புண்டரீகாஷ -என்கையாலே
    வாத்சல்ய சௌசீல்ய சௌலப்யாதி குணங்களைச் (ஆஸ்ரித ஸுவ்கர்ய ஆபாத குணங்கள்)சொல்லி

    ரஷமாம் -என்கையாலே
    அகிஞ்சன அதிகாரி என்னும் இடம் சொல்லி

    சரணாகதம் -என்கையாலே
    உபாய அத்யவசாயம் சொல்லித் தலைக் கட்டுகிறது –

    இத்தால்
    லஜ்ஜா புரஸ் ஸரமாக இதர உபாய த்யாகம் சொல்லி
    சித்த உபாய ஸ்வீகாரம் பண்ணுகை அதிகாரி க்ருத்யம்-
    என்றது ஆயிற்று –

    —————————————————————————————–

    ஹா கிருஷ்ண த்வாரகா வாஸின் க்வாசி யாதவ நந்தன
    இமாமவஸ்தாம் சம் ப்ராப்தாம  நாதாம் கிம் உபேஷஸே
    கோவிந்த த்வாரகா வாஸின் கிருஷ்ண கோபீ ஜன ப்ரிய
    கௌரவை பரி பூதாம் மாம் கிம் ந ஜாநாசி கேசவ
    ஹே நாத  ஹே ரமா நாத வ்ரஜ நாதார்த்தி நாசன
    கௌரவார்ணவ மக்நாம்  மஹா யோகின் விச்வாத்மன் விஸ்வ பாவன
    பிரபன்னான் பாஹி கோவிந்த குரு மத்யே அவசீததீம்
    -பார -சபா -90-44/45/46/47-

    மனக் குறை வெளியிட்டு பற்பல திரு நாமங்களை அனுசந்திக்கிறாள் –

    வன வாசத்தின் போது ஸ்ரீ கண்ணபிரான் பாண்டவர்களைப் பார்க்க இரண்டு தடவை வருகிறான் –
    அதில் முதல் தடவை வந்த போது
    நைவ மே பதய சந்தி நபுத்ரா ந பாந்தவா  ந ப்ராதரோ ந ச பிதா நைவ த்வம் மது சூ தன —
    யே மாம் விப்ரக்ருதாம் ஷூத்ரைரு பேஷத்வம் விசோகவத்-ந ச மே சாம்யதே துக்கம் கர்ணோ யத்  ப்ராஹசத் ததா
    -பார -ஆர -12-128/129–
    யாரும் இல்லை -சரணாகதி பலன் கிட்ட வில்லை என்கிறாள்

    உபாய அபாய சம்யோக நிஷ்டயா ஹீயதே அனயா-அபாய சம்ப்லவே சத்ய ப்ராயச்சித்திம் சமாசரேத்-
    ப்ராயச்சித்திரியம் சாஸ்திர யத் புன சரணம் வ்ரஜேத்-உபாயாநாம் உபாயத்வ சவீ காரேப் ஏவ மேவ ஹி-
    ஸ்ரீ லஷ்மி தந்த -17-92/93/94-

    மீண்டும் சத்தியபாமை பிராட்டி யோடு எழுந்து அருளி –
    மார்கண்டேய பகவானையும் தர்ம உபதேசம் -செய்யத் தூண்ட -அவரும்

    சர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ
    கச்ச த்வமேநம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா
    -பார ஆர -192-56–என்ன

    ஏவமுக்தாச்ச  தே பார்த்தா யமௌ ச பிருஷர்ஷபௌ-
    த்ரௌபத்யா சாஹிதா சர்வே நமச்சக்ருர் ஜனார்த்தனம்
    -பார -ஆர -192-57- என்று சரணம் அடைய

    ச சைதான் புருஷவ்யாக்ர சாம்நா பரம வல்குநா
    சாந்த வயாமாச மாநார்ஹோ மன்யமாநோ யதா விதி –
    பார -ஆர -192-58-என்று

    திரு நாம சங்கீர்தனத்தால் தடை பட்ட சரணாகதி பிராயச் சித்தம் செய்யப் பட்டதும்  தடை நீங்க –
    சாஸ்திர விதியை நினைத்து சமாதானம் அடைந்தான்
    இத்தையே பெரியவாச்சான் பிள்ளை பல கால் பின்பு பின்பு என்று அருளிச் செய்கிறார்-

    இவளுக்கு புடவை சுரந்தது திரு நாமம் இறே-

    நம் பேர் தன் கார்யம் செய்தது இத்தனை போக்கி
    நாம் இவளுக்கு ஒன்றும் செய்திலோம் இறே -என்று இருந்தான் -ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள்-

    முமுஷூப்படி -அவன் தூரஸ்தன்  ஆனாலும் இது கிட்டி நின்று உதவும்
    ஸ்ரீ வசன பூஷணம் -திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் -த்ரௌபதி  வஸ்த்ரார்த்தமாக பிரபத்தி பண்ணுகையாலே -மா முனிகள்
    உபாய புத்தி யுடன்  திரு நாம சங்கீர்த்தனம் கூடாது இறே
    ஸ்ரீ கண்ணபிரான் விளம்பித்து மீதி பலன்களை அளித்தது ஸ்ரீ கீதா சாஸ்திர அவதரணம்  முதலியவற்றைக் கருதியே
    திரௌபதிக்கு வந்து கழிந்த உபாயாந்தர சம்பந்தம் ஏற்பட்டது என்றே கொள்ள வேண்டும் –

    திரு நாமம் சொல்லுவதும் பிரபத்தியும் ஒன்றாக பூர்வர்கள் கருத வில்லை
    பெரிய திருவந்தாதி -53 வ்யாக்யானத்தில் –
    தன் பேர் சொன்னவளுக்கு திரு உள்ளத்திலே தனிசு பற்றது இருக்குமா போலே -என்று
    பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார் –

    கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸி நம் -பார -உத் -47-39-
    த்ரௌபதி சரணம் செய்ததுக்கும் புடவை சுரந்ததுக்கும் இடையில் உள்ள சில கணங்களிலே
    ஆபத்தால் கலங்கி அவனிலும் விஞ்சிய கோவிந்த நாமமாவது நம் மானத்தைக் காப்பாற்றாதா என்னும் நினைவுடன் –
    உபாய புத்தியால் -உச்சரித்து விட்டாள்
    இதுவே எம்பெருமான் திரு உள்ளத்தில் புண் பட காரணம்
    இந்த உபாயாந்தர   சம்சர்க்கம் பரம ஆபத்தினால் விளைந்தது ஒன்றே –
    அதனால் தோஷமாக கொள்ள வில்லை-

    வாச்ய பிரபாவம் போல் அன்று வாசக பிரபாவம் -உத்க்ருஷ்டம் சொல்ல வந்தது
    புஷ்ப பிரபாவம் போல் அன்று பரிமள பிரபாவம்
    பிஷக்கின் பிரபாவம் போல் அன்று பேஷஜத்தின் பிரபாவம் போலே –

    குளிர்ந்து சேர்த்து ஏலமிட்ட தண்ணீரை விடாயர்க்கு வார்க்காதே நிரபேஷர்க்கு வார்க்குமா போலே
    புண்டரீகாஷா -இக் கடாஷம் கொண்டு நித்ய ஸூரிகளை நோக்க இருக்கிறாயா -என்று எல்லாம் சொன்னாளே –
    பின்பே  கலங்கினாள்-
    நாராயண சப்தார்த்தத்தில் ஏக தேசத்துக்கு கோவிந்த சப்தார்த்தத்துக்கு -செய்த படி கண்டால்
    இதன் பிரபாவம் கிம்புநர் ந்யாய சித்தம் இறே -மா முனிகள் திரு மந்திர பிரபாபம் சாதிக்கிறார்

    ——————————————————————————————————————————————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ சீதா ராம ஜெயம் .-
    ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .