Archive for October, 2012

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 29, 2012

 இரக்க  மனத்தொடு எரிஅணை
அரக்கும் மெழுகும்ஒக் கும்இவள்;
இரக்கம் எழீர்;இதற்கு என்செய்கேன்,
அரக்கன் இலங்கைசெற் றீருக்கே?

    பொ – ரை : இவள் இரக்கம் பொருந்திய மனத்தால் நெருப்பினைச் சேர்ந்த அரக்கினையும் மெழுகினையும் ஒப்பாள்; நீர் இரக்கம் உடையீர் ஆகின்றிலீர்; இது நிமித்தமாக, இரவாணனுடைய இலங்கையை அழித்த உமக்கு எதனைச் செய்வேன்?

    வி – கு : ‘அரக்கன் இலங்கை செற்றீருக்கு’ என்ற தொடர், ‘உம்மைப் பிரிந்து வருந்தின பிராட்டியின்பொருட்டு இலங்கையை அழித்து அவள் துன்பத்தினை நீக்கினீர்; பிரிந்து வருந்துகிற இவளுடைய துன்பத்தை நீக்குதற்கு இப்பொழுது இரக்கமும் கொள்கின்றிலீர்’ என்ற கருத்தை உட்கொண்டது. மனத்தொடு – ஒடு உருபு, கருவிப் பொருளில் வந்தது. அணை அரக்கு – வினைத்தொகை. எழீர் – எதிர்மறை முற்று. செற்றீர் – பெயர்.

ஈடு :  மூன்றாம்பாட்டு. ‘இன்று இச்செயல் செய்யக்கடவதாக நினைத்த நீர், அன்று, 1‘உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடு அறுத்த’ லாகிய அச்செயலை எதற்காகச் செய்தீர்?’ என்கிறாள்.

இரக்க மனத்தொடு இவள் – இரங்கின நெஞ்சையுடைய இவள். இரக்கம் – நெஞ்சில் நெகிழ்ச்சி. 2அன்றி, ஈடுபாடு என்றும், ஈரிப்பு என்றும் பொருள் கூறலுமாம். எரி அணை அரக்கும் மெழுகும் ஒக்கும் – எரியை அணைந்த அரக்கும் மெழுகும் போலே உருகா நின்றாள். அரக்கும் மெழுகும் என்னும் இவற்றை நெஞ்சுக்கு ஒன்றும், இவள்தனக்கு ஒன்றுமாகக் கொண்டு பொருள் கூறுவர் பிள்ளை திருநறையூர் அரையர். நெஞ்சும் இவள்தனக்குக் 3கையடைப்பு ஆகையாலே இவள்தனக்கே இரண்டையும் அடை ஆக்கி அருளிச் செய்வர் பட்டர். 4‘சக்தியில் விஷ்ணுவைப் போன்றவர்; பார்க்கத் தகும் தன்மையில் சந்திரனைப் போன்றவர்’ என்கிறபடியே, பல பொருள்களையும் இவளுடைய படிக்கித் திருஷ்டாந்தமாகக் கூறக் கூடியவாறு இவள்தன் நிலை இருக்கிறது என்றபடி. 5அரக்கும் மெழுகும், நெருப்பிற்குள் புகில் கரிந்து போம்; கடக்க இருக்கில் வலிக்கும்; அதனைச் சார்ந்து நின்றுழி உருகும்; அது போன்று,4முடிந்து பிழைக்கவும் பெறாமல், தரித்திருக்கவும் பெறாமல், நோவு படும்படி செய்கின்றீரே!’ என்பாள், ‘எரிஅணை அரக்கும் மெழுகும்’ என்கிறாள். இவள் நிலை இது.

இரக்கம் எழீர் -‘நீரும் இவளைப் போன்று உருகவேண்டும் என்று வளைக்கிறோமோ? நொந்தார் பக்கல் செய்யும் அருளும் செய்கிலீர். இரக்க மனத்தையுடையள் ஆகாநின்றாள் இவள்; நீர் இரக்கம் எழுகின்றிலீர்; நீர் இரங்காவிட்டால் உம்முடைய நெஞ்சைப் போன்று இருப்பது ஒரு நெஞ்சை இவளுக்குக் கொடுத்தல் ஆகாதோ!’ என்கிறாள். இதற்கு என்செய்கேன் – உம்முடைய இரக்கம் ஒழிய ஏதேனும் வேறு உபாயத்தால் பெறத்தக்கதோ இப்பேறு? இனி, உம்மை இரங்கும்படி செய்யவோ? அன்றி, இவளை இரங்காமற் செய்யவோ? யாது  செய்வேன்?’ என்பாள், ‘என் செய்கேன்?’என்கிறாள் எனலுமாம். அரக்கன் இலங்கை செற்றீருக்கு -‘ஒரு காதலிக்கு உதவினவன் நமக்கு உதவானோ?’ என்று ஈடுபடாநின்றான். 1புழுக்குறித்தது எழுத்தானாற்போலே ஒன்று வாய்த்ததைக் கொண்டு 2‘அது அந்யார்த்தம்’ என்று இராமல் நோவுபடாநின்றாள்’ என்கிறாள். ‘உமக்கு இரக்கம் இன்றியே ஒழிந்தால், 3இவள் இரங்குவது ஒரு செயலைச் செய்து வைக்க வேண்டுமோ?’ என்பது உட்கோள்.

கடல்வழி விடநிசி சரர்பொடி படிரு கண்சீறி
வடகயி லையில்எழு விடைதழு வியதும றந்தாரோ
அடல்அரவு அமளியில் அறிதுயில் அமரும்அ ரங்கேசர்
இடர்கெட வருகிலர் முருகலர் துளவும்இ ரங்காரே.”

(திருவரங்கக்கலம்பகம)

என்ற அருமைப்பாசுரம் இவ்வியாக்கியானத்தோடு படித்து இன்புறத் தகும்.

அந்யார்த்தம் – வேறொன்றற்காகச் செய்யப்பட்டது; அல்லது, பிறருக்காகச்
செய்யப்பட்டது, இவ்விடத்து,

‘உன்னைமீட் பான்பொருட்டு உவரி தூர்த்துஒளிர்
மின்னைமீட் டுறுபடை யரக்கர் வேரறப்
பின்னைமீட் டுறுபகை கடந்திலேன்; பிழை
என்னைமீட் பான்பொருட்டு இலங்கை எய்தினேன்’

(கம்பரா. மீட். 63)

‘சீதையைக் குறித்த தேயோ தேவரைத் தீமை செய்த
பேதையைக் கொல்வன் என்று பேணிய விரதப் பெற்றி
வேதியர் அபய மென்றார்க்கு அன்றுநான் விரித்துச் சொன்ன
காதையைக் குறித்து நின்ற அவ்வுரை கடக்க லாமோ?’

(கம்பரா. விபீட. 118

அன்று உண்ணாது உறங்காது ஒலி கடலை -ஊடருத்து செய்தது எதற்கு
இரக்கம்  மனத்தோடு -எரி அணை -அரக்கும் மெழுகும்  போலே
இரக்கம் -நெஞ்சில் நெகிழ்ச்சி ஆதல் -ஈடுபாடு /ஈர்க்கப்பட்டு
கார்பண்யம் -அங்கம் -தீன தசை
பிள்ளை திரு நறையூர் அரையர் -அரக்கும் மெழுகும் -நெஞ்சு சரீரம் ஓன்று நிர்வாகம்
நெஞ்சு இவளுக்கு அடங்கின வஸ்து இரண்டும் இவளே பட்டர் நிர்வாகம்
அரக்கு கொஞ்சம் தாமசித்து உருகும் வெவ்வேற நிலை இவளுக்கு
விஷ்ணு நா  சதுசோ வீரே ஸ்லோகம் -பார்வைக்கு  சந்தரன் -கால அக்னி நெருப்பு- பொறுமை பூமி போல் -ராமன்
அக்னிக்கு உள்ளே புகில் கருகியும்
முடிந்து பிழைக்கும் பெறாமல் தரித்து நிற்கவும் முடியாமல்
உருக்கிகிரீரே -இரக்கம் இல்லை நீருமுருக வேண்டாம்
நொந்தார் பக்கல்  கிருபை பண்ணா வில்லையே
நீர் இரங்கா விட்டால் உம்மை போல் கடின நெஞ்சையே கொடுத்து இருக்கலாமா
உம் இரக்கம் ஒன்றே சாதனம் -இதற்க்கு யான் என் செய்கேன்
உபாயான்தரம் கொண்டு அடைய முடியாத வஸ்து நீர்
உம்மை இரக்க பண்ணவோ இவளை இறங்காமல் பண்ணவோ
உமக்கு இரக்கம் ஓன்று இல்லை என்றால் இவளுக்கு இரக்கம் செய்ய- இலங்கை அழித்தீர்
திண்ணைக்கு தேள் கொட்ட தீர்த்த நெறி போல்
ஓன்று வாய்த்தது கொண்டு -அது அன்யார்த்தம் -பிறர்க்கு செய்த செயல் நினைக்காமல் நோவு பட
-புழு குறித்தது எழுத்து ஆம் போலே –
உமக்கு இவள் தோற்று உருகுகிறாள் –

 

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 29, 2012

வாணுதல்இம் மடவரல் உம்மைக்
காணும்ஆசையுள் நைகின் றாள்;விறல்
வாணன்ஆயிரம் தோள்துணித் தீர்!உம்மைக்
காண, நீர்இரக் கம்இலீரே.

 

    பொ – ரை : வெற்றி பொருந்திய வாணாசுரனுடைய ஆயிரம் தோள்களையும் துணித்தவரே! ஒளி பொருந்திய நெற்றியினை உடையளாய் மேன்மேலும் வளர்கின்ற மடப்பத்தினை உடையளாய் உள்ள இப்பெண், உம்மைக் காண வேண்டும் என்னுள் ஆசையுள் அகப்பட்டு வருந்துகிறாள்; உம்மைக் காணுமாறு நீர் இரங்குகின்றீர் இலீர்.

    வி-கு : நைதல் – வருந்துதல் ‘வாணன் ஆயிரம் தோள் துணித்தீர்!’ என்ற விளி வாணனுடைய ஆயிரம் தோள்களையும் துணித்து உஷையோடு அநிருத்தனைச் சேர்த்து வைத்தீர்; இப்பொழுது இப்பெண்ணின் திறத்து இரங்காது இருப்பது என்னோ!’ என்ற கருத்தை உட்கொண்டது.

    ஈடு : இரண்டாம் பாட்டு. ‘நம்மைக் காணுதற்குத் தடையாக உள்ள விரோதிகள் பல உங்களிடத்தில் இருந்துகொண்டு இருக்க, நடுவே வாடும் இத்தனையேயோ வேண்டுவது?’ என்ன ‘வாணனுடைய தோள்கள் ஆயிரத்திலும், இவள் விரோதி பிரபலமோ?’ என்கிறாள்.

வாணுதல் இம்மடவரல் நைகின்றாள் நீர் இரக்கம் இலீர் இவ்வவயவ சோபை போகத்திற்குக் காரணமாதல் அன்றி நைகைக்கு உறுப்பாவதே! ஐனக மஹாராஜன் பிராட்டியினுடைய பேரழிகினை நினைந்து, 1‘இச்சீதை’ என்று சுட்டிக் கூறியது போன்று, பெற்ற தாயாகிய இவளும் பெண்ணின் பேரழகினை நினைந்து ‘இம்மடவரல்’ என்கிறாள். ‘பெற்ற எனக்கு 2ஆகர்ஷகத்திற்குக் காரணமான இது, கைப்பிடித்த உமக்கு உபேஷைக்குக் காரணம் ஆவதே!’ என்பாள், ‘நீர் இரக்கம் இலீர்’என்கிறாள். மடவரல் – மடப்பம் வந்திருக்கை; அதாவது, மென்மையையுடையவள் ஆகுகை. பிரிந்து கலக்கப் பொறாத சௌகுமார்யத்தையுடையவள் என்றபடி. ஆக, பிராட்டி நிலையைக் கண்ட திருவடியைப் போலே இருக்கிறது காணும், இப்பெண்பிள்ளை நிலையைக்கண்ட திருத்தாயார்க்கு; 1‘இவளைப் பிரிந்து சமாதானம் பண்ணியிருந்த பெருமாள் சால அரிதாகச் செய்தார், இவளைப் பிரிந்து  தேகத்தைத் தரித்திருந்தார் என்பது யாது ஒன்று, அதனைச் சாலஅரிதாகச் செய்தார்;2யானை ஏறவும் குதிரை ஏறவும் நாடு ஆளவும் கற்றாரித்தனை; பிரணய தாரையில் புதியது உண்டிலர்,’ என்பது திருவடி வார்த்தை. மால்ய வானில் பெருமாள் இருந்த போது கார் காலத்திலே பட்ட பாட்டைக் கண்டு, ‘வசிஷ்ட சிஷ்யன், ஒரு பெண் நிமித்தமாக இப்படிப் படுவதே!’ என்று பழித்துச் சிரித்திருந்தான் விரக்தன் ஆகையாலே; இப்போது ‘இவளைப் பிரிந்து தேகத்தைத் தரித்துக் கொண்டிருப்பதே!’ என்கிறான் விசேஷஜ்ஞன் ஆகையாலே. ‘இது ஏதேனும் 3இரவல் உடம்போ சுமந்து கொண்டு இருக்கைக்கு? இன்பத்திற்கு நிலைக்களம் அன்றோ? துக்கத்துக்கு நிலைக்களமோ இது? பிரிந்தால் கிரமத்திலே கூடுகிறோம் என்று தரித்திருக்க வல்லள் அல்லளே?’ என்கிறாள் என்றபடி.

உம்மை – இவள்படியன்றோ உமக்கு உபதேசிக்க வேண்டுவது; உம்மை நீர் அறியாமை இல்லையே; ‘நம்மைப் பிரிந்தார்கள் பிழையார்கள்’ என்று இருக்க வேண்டாவோ?’ வாணுதல் இம்மடவரல் உம்மை – 4‘சக்கரவர்த்தி திருமகனுக்குத் தகுந்த சீலம், வயது, ஒழுக்கம், ஒத்த குலம், இராஜ இலக்கணம் இவற்றையுடையளாய் இருக்கிற பிராட்டிக்கு, பெருமாள் தகுந்தவர்; கறுத்த கண்களை உடையளான இப்பிராட்டியும் பெருமாளுக்குத் தகுந்தவர்’ என்னும் படி காணும் இருக்கிறது. உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் – ‘விஷயத்திற்குத் தகுதியாக அன்றோ ஆசையும் இருப்பது? உம்மை அணைய ஆசைப்பட்டாளோ? காட்சியிலேயும் அருமைப்படுத்து வீரோ?’ என்பாள், ‘காணும் ஆசை’ என்கிறாள். 1‘ஆசை என்னும் கடல்’ என்கிறபடியே,’ ஆசையாகிய கடலிலே அழுந்தாநின்றாள்’ என்பாள், ‘ஆசையுள்’ என்கிறாள். நைகின்றாள்’ என்பதில், 4இவளைத் தரிப்பிக்க வேண்டா; அடியில் நிலையிலே நிறுத்த அமையும்’ என்ற தொனிப்பொருள் தோன்றும். இதனால், ‘வாடுகை தான் தேட்டமாம்படி ஆயிற்று என்கிறாள்’ என்றயடி..

விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் -‘நையும் இது வேயோ வேண்டுவது, தடைகள் கிடக்க?’ என்றோ நீர் சொல்லுகிறீர்? வாணனுடைய தோள்களாகிய வனத்தைக் காட்டிலும் பரப்பு உண்டோ இவளுடைய விரோதி வர்க்கம்? உஷையோடு அநிருத்தனைச் சேர்த்தவர் அன்றோ நீர்? பேரனுமாய் ஆணுமாகிலோ உதவலாவது? உம்மோடு கலந்த அபலைக்கு உதவல் ஆகாதோ?’ என்பது தொனிப் பொருள். உம்மைக்காண – உம்மை இவள் காண்கைக்கு ஈடாக.2கருமுகை மாலை தேடுவார் சூடுவதற்காகவே தேடுவது; சும்மாட்டைக் கொள்ள அன்று. அது போன்று, உம்மை ஆசைப்படுவார் படுவது, காட்சிக்காக ஆயிற்று; 3‘அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண’ என்றார் திருமழிசைப்பிரான். 4‘காரார் திருமேனி காணுமளவும் போய்’ என்றார் திருமங்கைமன்னன். 5‘கண்களால் காண வருங்கொல்?’ என்று இவர்தாமே பின்னரும் அருளிச் செய்வர். நீர் இரக்கம் இலீர் –6‘தன் சரீரத்தின்மேல் தங்கி இருந்த காட்டு ஈக்களையும் கொசுக்களையும் பாம்புகளையும் ஓட்டமாட்டார்’ என்கிறபடியே, பிராட்டியைப் பிரிந்த துன்பத்தால், மற்றைப் பிராணி களால் உண்டாகும் துன்பத்தையும் அறியாதிருந்த நீர், இப்பொழுது நோவுபடுகை தவிர்ந்தால், சாமான்யமான இரக்கமும் போகவேண்டுமோ? ‘ஆயின், நீரே இரங்கல் வேண்டும்; நீர் இரங்கும்படி செய்யத் தக்க சாதனம் இவளிடத்து இன்று என்று கூறுவது போன்று, ‘நீர் இரக்கமிலீர்’ என்று கூறுவது எற்றிற்கு? ‘நைகின்றாள்’ என்று திருத்தாயார் கூறியது, இறைவன் இரக்கத்திற்குச் சாதனம் ஆகாதோ?’ எனின், ‘இவள் நைவு பேற்றுக்கு உபாயமன்று; அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்,’ என்று காணும் திருத்தாயார் இருக்கிறது. ‘ஆயின், இவள் நைவிற்குப் பலன் தான் யாதோ?’ எனின், ‘இவள் நைவு அவன் இரக்கத்துக்ப் பரிகரம், அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்; 1‘இப்பரம்பொருள், மனத்தாலும் நிதித்தியாசனத்தாலும் மிகுந்த கேள்வியாலும் அடையத்தக்கவன் அல்லன்; இறைவன் எவனை வரிக்கின்றானோ, அவனால் அடையத் தக்கவன்,’ என்கிறபடியே, தானே காட்டாக காணும் இத்தனையே.

விரோதி கடக்க செய்தே -வாணன் பாஹு பலத்திலும் இவள் விரோதி அதிகமோ

உம்மை காணும் ஆசையில் உருகுகிறாள்
விறல் வாணன் -வலிமை மிக்க
இரக்கம் இருந்தால் தான் காண முடியும் –
வாள் நுதல் அவயவ சோபை போக ஹெதுக்கு இன்றி நெய்வதற்கு  காரணம் ஆனதே –
பெற்ற எனக்கு ஆதர ஹேது கை பிடித்த உனக்கு அனாதர ஹேது ஆனதே
கன்யா ரசம் வேத்தி சாமாதா -ந பிதா மாதா -கிரந்தம் ரசம் வ்யாக்யாதா  ந கர்த்த
இயம் சீதா -இவள் ஆதாரத்துடன் காட்ட–மம சுதா –பத்ரம் தே -மங்களா சாசனம்  சக தர்ம சரிதவ
வடிவாய் நின் வல மார்பினில் வாழும் – மங்கையும் பல்லாண்டு -மிதினச்ய தர்ஷ்டி கழிக்கிறார் –
இம் மட வரல் மடப்பம் -மென்மை -உடையவள்
பிரிந்து கலக்க முடியாத மார்த்வம் -துஷ்கரம் க்ருதவான் -திருவடி வார்த்தை –
மால்யவான் நான்கு மாதம் அநிர்த்த சதர்தம்– ராமர் கடித்ததும் ஊர்ந்ததும் அறியாமல் —
பிராட்டி பார்த்ததும் -தாரயதி ஆத்மனோ தேகம் -சோகத்தால் எரிந்து போய் இருக்க வேண்டாமோ –
அப்படிப் பட்ட மடவரல் வாள் நுதல் -பிரிந்து சமாதானம் சால அரிது பெருமாள் -பிரபு -சப்தம் –
ஆனை குதிரை ஏறவும் கற்றவர் அரசு ஆள அறிந்தவர் அழகை அனுபவிக்க பிரணய தாரை அறியாதவர்
வசிஷ்டர் சிஷ்யன் ஸ்திரீ நிமித்தம் துக்கப் படுகிறான் சிரித்து இருந்தான் திருவடி -விசேஷ ஞானம் இப்பொழுது அப்படி விரக்தி மட்டும்
தாரயதி தேகம் சொல்லாமல் ஆத்மனாக தேகம் தன்னுடைய சரீரம்
இரவல் உடம்போ சுமந்து கொள்ள -சக்ரவர்த்திக்கு அந்த நிபந்தம் இல்லை -அவனுக்கு சொந்தம் தானே
யானே நீ என் உடைமையும் நீ– பரமாத்மா உடைமை தான் -சரீரம்
அறியாத தசை -யானே என்தன் தனதே என்று இருந்தோம் –
மாயும் வகை அறியேன் -பிராட்டி பர தந்த்ர்யா பட்டு -தேக தாரணம் -செய்ய முடியாதே
போகாதயனம் சரீரம் துக்கம் அனுபவிக்க இல்லையே உலக நியதி -பிரிந்தால் க்ரமத்தில் கூடுவோம் என்று தரித்து இருக்காத மென்மை
உம்மை -நீர் அறிவீரே-நீர் எப்படி நீர் அறிவீரே -கண்ணாடி புறத்தில் கண்டது இல்லையா
உம்மை பிரிந்தவர் என்ன பாடு -படுவார் -பிரிந்தால் பிழைக்க மாட்டார் அறிவீரே
உமக்கு பொருத்தமான– துல்ய சீல  வயோ வ்ருத்தம்- துலய அபி ஜன லஷனம் -ராகவா வைதேகி அர்கதி
அஸி தேஷினா -கண் அழகு ஒரு தட்டு -ராமன் எல்லா அழகும் தட்டு -வாள் நுதல் இம் மடவரல் நெற்றி ஒன்றே உமக்கு –
அப்படி பட்டவளை பிரிந்து
உம்மை காணும் ஆசையில் -அணைய ஆசை  இல்லை -காட்சியிலும் அருமை படுத்துவீரோ
நைகின்றாள் தரிப்பிக்க வேண்டா பழைய நிலை அடி யில் நின்ற நிலையில் நிறுத்த கூடாதோ –
கடலில் முழுகி -ஆசையுள் நைகின்றாள்
கீழே வாடி இங்கே நைகின்றாள் -வட்டமே தேவலை -வட்டமே தேட்டம்
நையும் இதுவேயோ வேண்டுவது பிரதி பந்தகம் கிடக்க -அவன்வார்த்தை என்று நினைத்து மேலே
பாணன் பாஹு வனத்தை விட பெரியதா இவள் விரோதி –
உஷா அநிருத்ர கடகர் அன்றோ நீர்

 

பேரனுமாய் ஆணுமானால் தான் உதவுவீரோ
பெண் உம்மை சேர ஆசைப் படுகிறாள்
உம்மை காண -இவ்வச்துவை ஆசைப்படுவது காட்சிக்காக -அழைப்பன் திரு வேங்கடத்தான் காண
காரார் திருவேங்கடம் காண -கண்களால் காண வாரீர்
பார்ப்பதே -இவனை கொண்டு கார்யம் கொள்ளாமல்
கரு முகை மாலை சூடாமல் சும்மாடு போலே
இரக்கமே இல்லையே -நீர் -இரக்க பட வேண்டியவர்
நீர் நோவு பட்டீர் சீதை பிராட்டி பிரிந்து –
நோவு வேண்டாம் சாமான்ய இரக்கம் காட்ட கூடாது
இவள் நைவு பேற்றுக்கு உபாயம் இல்லை அவன் இரக்கமே சாதனம் -தாயார் அறிந்து வார்த்தை –
நைவு எதற்கு இரக்கத்துக்கு பரிகரம்– வ்யாஜோ உபாயம் தேசிகன் –
வனத்திடரை ஏரியாம் பாசுரம்  -தகுதியாக ஆக்கி கொள்ளுவது போல்
ஸுவாம் தரும் -அவன் விரும்பவனுக்கு காட்ஷி பிரயதம ஏவ -பிரிய தமனாக இருக்க வேண்டும்
நாய மாத்மா சுருதி வாக்கியம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

முமுஷுபடி சுருக்கம் -த்வய பிரகரணம் –ஸ்ரீ M.A.V.ஸ்வாமிகள் ….

October 27, 2012

ஸ்ரீய பதி அருளிய ரகஸ்ய த்ரயம் -சாரதமம்

முமுஷுக்கு அறிய வேண்டியவை இம் மூன்றும்
தனி த்வய ரகசியம் -சப்தம் கொண்டே -அனுசன்ர்ஹெயம் சர்வ காலத்திலும்
யாவத்ரு சரீர பாவம் அர்த்தானுசந்தேனம்
ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் –
அதிகாரி லஷனம் 10 சொலிகிறார் –
புறம்புண்டான பற்றுக்களை வாசனையோடு விடுகையும்
எம்பெருமானையே தஞ்சம் என்று பற்றுகையும்
பேறு தப்பாது  என்று thininthu இருக்கையும்
பேற்றுக்கு த்வரிக்கையும்
இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களிலே பிரவனனாய் குணா அனுபவ கைங்கர்யன்களே பொழுது போக்காகையும்
இப்படி இருக்கும் -கீழ் அருளிய ஐந்தையும் -ஸ்ரீ வைஷ்ணவர் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கையும்
உண்டாக அரிதாக இருப்பது இது ஓன்று மா முனிகள் –
திருமந்த்ரத்திலும் த்வயத்திலும் நியதனாகையும்
ஆச்சார்யா ப்ரேமம் கனத்து இருக்கையும்
ஆசார்யன் பக்கலிலும் எம்பெருமான் பக்கலிலும் க்ருதக்ஜனாய்ப் போருகையும்
ஜ்ஞானமும் விரக்தியும் சாந்தியும் உடையனாய் இருக்கும் பரம சாத்விகநோடே சஹாவாசம் பண்ணுகையும்
வைஷ்ணவ அதி காரிக்கு அவசய அபெஷிதம்
இந்த அதிகாரிக்கு ரகஸ்ய திருயமும் அனுசந்தேயம் –
எலா பிரமாண ங்களிலும் தேகத்தாலே பேறு என்கிறது
திரு மந்தரத்தில் ஆத்மாவாலே பேறு என்கிறது
சரம ஸ்லோகத்தில் ஈச்வரனாலே பேறு என்கிறது
த்வயத்தில் பெரிய ப்ராட்டியாறாலே பேறு என்கிறது
இவள் புருஷகாரம் ஆனால் அல்லது ஈஸ்வரன் கார்யம் செய்யான்
த்வயத்துக்கு அதிகாரி -ஆகிஞ்சன்யமும் -அநந்ய கதித்வமும் -கதி -கம்யம் -போய் சேரும் இடம் உபேயம்
சரணாகதி லஷணம் -இவை வேண்டுமே -பலிப்ப –
சக்ரவர்த்தி திருமகனுக்கு இல்லை பலிக்கவில்லை –
மந்திர ரத்னம் -அனுசந்தான -அதரம் மா முனிகள் -சந்தத  ச்ப்ருத அதரம் –
அர்த்தம் ஓட மயிர் கூச்சு எரிந்து -எறும்பி அப்பா –
அத்ர த்வயம் -கத்யத்தில் -அனுசந்தானம் –
மந்திர ராஜா திரு மந்த்ரம் –
ராஜாவும் விரும்புவது ரத்தினம் –
இதில் முற் கூற்றால் பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன் திருவடிகளை உபாயமாக பற்றுகிறது .
பிற் கூற்றால் அச் சேர்த்தியில் அடிமையை இரக்கிறது
ஸ்ரீ
மது பிரத்யயம் -saffix
நாராயண
சரணவ் -சங்கு சக்கரம்-ஓசையில் வாசயுண்டு -தமிழில் -ச் அப்புறம் வந்தால் சுடும் சேவல் -சப்தம் வேற -பச்சை கச்சை -வேற
சரணம் -சமஸ்க்ருதம் வேற எழுத்து -திருவடிகள்- அடைக்கலம் -உபாயம் –
ப்ரபத்யே –
ஸ்ரீ சப்தார்தம்
ஸ்ரீ  யதே ஸ்ரயதே
ச்ருணோதி ச்ராவயதி கேட்டு கேட்பிக்கும்
ஸ்ருனாதி போக்கி போக்கடிக்க செய்கிறாள்
ஆஸ்ரயிக்க படுகிறாள் -தானும் ஆஸ்ரயிக்கிறாள்
எல்லார்க்கும் இவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இவள் தனக்கும்
அவனைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்கும்
இப்போது இவளை சொல்கிறது புருஷகாரமாக
நீரிலே நெருப்பு கிளருமா போலே -குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தால் சீற்றம் பிறந்தால்
பொறுப்பது இவளுக்காக
படவா அக்னி உண்டே நீரிலே கூட
அவன் இடம் சீற்றம் பிறக்க பிரசித்தி இல்லை –
இவள் தாயாய் -இவர்கள் கிலேசம் பொறுக்க மாட்டாதே
அவனுக்கு பத்னயாய் இனிய விஷயமாய் இருக்கையாலே
கண் அளவு அற்ற புருஷகாரம்
இத்ததலையில் வத்சல்யத்தாலும் அத்தலையில் வாலப்யத்தாலும்இவள் புருஷகாரம் ஆகிறாள்  -தேசிகன் -ரகஸ்ய ரத்னாவளி –
கிருபை பாரதந்த்ரம் அனந்யாரகத்வம் மூன்றும் ஸ்ரீ வசன பூஷனத்தில் பார்த்தோம்
திருவடியை பொருப்பிக்குமவள் தன சொல் வழி வருமவனை பொருப்பிக்க சொல்ல  வேண்டா விறே
ராஷசிகள் பொருப்பித்ததுபிரசித்தம் –
மது பின் அர்த்தம்
இருவர் சேர்த்தியும் நித்யம் என்கிறது
நித்ய யோகே மதுப் –
இவளோடு கூடியே வஸ்துவினுடைய உண்மை –
ஸ்வரூப நிரூபக தர்மம் இவள் அவனுக்கு
ஞானம் ஆனந்தம் போலே
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தையும் சேதனனுடைய அபராதத்தையும் கண்டு அகல மாட்டாள்
இரண்டுமே நித்யம்
சேதனனுக்கு இவை இரண்டையும் நினைத்து அஞ்ச வேண்டாம்
இத்தால் ஆஸ்ரயிக்கைக்கு ருசியே வேண்டுவது -காலம் பார்க்க வேண்டா என்கிறது
விரக்தி கிட்டிய ஷணமே பற்றலாம் –
ஒவ்ஷத சேவை பண்ணினவன் பாம்பின் வாயில் கை வைக்கலாமே
இவள் சந்நிதியாலே காகம் தலை பெற்றது
அது இல்லாமையாலே இராவணன் முடிந்தான்
சன்யாசம் சமாஸ்ரயண்யம்  இரண்டுக்கும் காலம் பார்க்க கூடாது .
ருசி -எண்ணம் ஒன்றே வேண்டுவது –
ராவணன் -அருளாலே திருத்த பிராட்டி கிட்டே இல்லையே -யுத்த களத்தில் –
ஸ்வரூபம் விட்டு பிரிந்த பிரிவு இல்லை -அவதாரத்தில் -நமக்கு காட்ட
நாராயண சப்தார்த்தம்
புருஷகார பலத்தாலே ஸ்வா  தந்த்ர்யம் தலை சாய்ந்தால் தலை எடுக்கும்
குணங்களை சொல்கிறது நாராயண பதம்
தொடக்கம் கைங்கர்யம் தீர்த்த காரர் -காஞ்சி
இரண்டும் வேற
ஆஸ்ரயைக்க சௌகர்யமான  ஆபாதாக குணங்கள் -ஆறு
வாத்சல்யமும் ச்வாமித்வமும் சௌசீல்யம் சௌலப்யம் ஞானம் சக்தி
குற்றம் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம்
கார்யம் செய்யும் என்று திநிகைக்கு ஸ்வாமித்வம்
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீல்யம்
கண்டு பற்றுகைக்கு சௌலப்யம்
விரோதியை போக்கி தன்னை கொடுக்கைக்கு ஞான சக்திகள் –
உறை மார்பா ஸ்ரீ
அகலகில்லீன் இறையும்சரணவ் – மது
நிகரில் புகழாய் வாத்சல்யம்
உலகம் மூன்று உடையாய் ஸ்வாமித்வம்
என்னை ஆள்வானே சௌசீல்யம்
திருவேம்கடத்தான் சௌலப்யம்
அமரர் முனிக் கணங்கள் பற்றும் ஞான சக்தி
அடிக்கீழ் சரணவ்
பிரபத்யே -அமர்ந்து புகுந்தேன்
இல்லாத சப்தம்  புகழ் ஒன்றும் இல்லா அடியேன் பற்றுகிறேன்சொல் அதை குறிக்கும்
இங்கு சொன்ன சௌலப்யம் -எல்லை நிலம் அர்ச்சாவதாரம்
அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்
கண்ணாலே காணலாம் படி இருக்கும் அர்ச்சாவதாரம் .
இவையெல்லாம் நமக்கு நம் பெருமாள் பக்கல் காணலாம்
திருக்கையில் பிடித்த திவ்ய ஆயுதங்கள்
ஞானம்  திரு சங்கு  ஆழ்வான் சக்தி  திரு சக்கரம் ஆழ்வான் –
ஞான சக்தி பிரகாசமாய் எடுத்து பிடித்த திவ்ய ஆயுதங்கள் கட்டியம்
வைத்து அஞ்சல் என்ற கையும்
கவித்த முடியும்
முகமும் முறுவலும்
ஆசன பத்மத்திலே அழுந்தின திருவடிகளும்
ரஷகத்வ போக்யத்வங்கள் இரண்டும் திரு மேனியிலே தோற்றும்
கண்டவாற்றால்
சரணவ் இணைத் தாமரை அடிகள்
சேர்த்தி அழகையும் –உபாய பூர்த்தியையும்–இரண்டையும் சொல்லுகிறது
ஏக வசனமும் இன்றி பகு வசனமும் இன்றி துவி வசனம் இருமை -அத்வதீயம் –
பிராட்டி உபாயம்    கொண்டால் நான்கு திருவடிகள் -ஆகுமே -நாராயண சரணவ் -இதனால் உபாயத்வ பூர்த்தி –
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -அடியேன் செய்யும் விண்ணப்பம்
பிரதி நிதியாக இவரே சொல்லி
யாம் -ஒருமை -பெருமையாய பூஜாயாம் பகு வசனம் ஆச்சார்யா பாதாக -பகவத் பாதாள்
பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாது
திண் கழலாய் இருக்கும்
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் துறை -பிரஜை முலையில் வாய் வைக்குமா போலே
இத்தால் -திவ்ய மங்கள விக்ரகம் முழுவதையும் சொல்லி –
பிராட்டிக்கு இருப்பிடமாய்
குண பிரகாசகமுமாய்
சிசுபாலனையும்
அகப்படத் திருத்திச் சேர்த்து கொள்ளும் திரு மேனியை நினைக்கிறது
திரு நாமம் போலே திருவடி கார்யம் கொள்ளும் –
சரணம்
தப்பாத உபாயமாக
இஷ்ட ப்ராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும்
இத்தால் பிராப்யம் தானே பிராபகம் என்கிறது –
தெருவில் செழு முத்தம் -கொடுத்து அரிசி வாங்கி போவார் -திரு நாங்கூர்
இங்கு இரண்டும்
லோக விபரீதமாகவே இங்கு இருப்பது
புல்லை காட்டி புல்லை இடுவாரைப் போலே
கீழ் சொன்ன மூன்றும் -ஸ்ரீ  மத நாராயண -சரணவ் -பிராப்யம் இறே
போக்யமான பாலையே மருந்தாக கொள்வது போல்
இவன் செயல் அறுதியாலே உபாயம் ஆக்குகிறான் இத்தனை
சரணவ் சரணம் என்கையாலே உபாயம் தான் வ்யாவ்ருத்தமான உபாயம் என்கிறது
பெருமாள் கை காட்டுகிறார் கதை
தங்கத்தால் செய்த பெருமாளால் ஜீவனம்
உபாயாந்தரமான வ்யாவ்ருத்தம்
பிரபத்யே -பற்றுகிறேன்
வாசிகமகவும் காயிகமாகவும் பற்றினாலும் பேற்றுக்கு இழவு இல்லை
ஜ்ஞானான் மோஷம் -என்கையாலே மானசமாகக் கடவது
கத்யர்தா புத்யர்த்தா
உபாயம் அவனாகையாலும் இவை நேரே உபாயம் அல்லாமையாலும்
இம் மூன்றும் வேணும் என்கிற நிர்ப்பந்தம் இல்லை .
கண்டா கர்ணன் தம்பிக்கு மோஷம் -எனக்கு விரோதி -உன்னை அறியாதவன் –
எனக்கு பிரிதி உண்டு தம்பி -மோஷம் கொடுத்தானே அவனுக்கும் –
மோஷத்துக்கு அவன் கிருபை ஒன்றே சாதனம் –
இவை சாதனம் அன்று என்ற நினைவால் சொல்ல வேண்டும்
இனிமைக்காக்க சொல்கிறோம்
வர்த்தமான நிர்த்தேசம் -சத்வம் தலை எடுத்து அஞ்சின பொது அனுசந்திக்கைக்காக
நின் அடி இணை அடைந்தேன் –சொல்லாமல் வர்த்தமானம் -பிரகிருதி -இருந்து கலங்கி –
உபாயாந்தரங்களில் நெஞ்சு செல்லாமைக்கும் கால ஷேபத்துக்கும் இனிமையாலே
விட ஒன்னாமையாலும் நடக்கும்
பேற்றுக்கு பல காலும் வேணும் என்று நினைக்கில் உபாயம்   நழுவும்
முந்திய பிரபத்தியை அனுசந்திக்கை தான் –
இவன் இது அர்திக்க வேணுமோ –
சர்வஜ்ஞ்ஞன் நினைவு அறிவானே
பாசுரம் கேட்டவாறே திரு உள்ளம் உகக்கும்
குழந்தை பசி சொல்லி அன்னை மகிழ்வது போல்
த்வயம் சதா ஏவம்-இப்பொழுது போல் நித்யம் அனுசந்தானம்  -அர்த்தாதுடன் -நியமனம் –

மா முனிகள்- பூர்வ உத்தர தினசரி -எறும்பி அப்பா -முதலி ஆண்டான் திரு வம்சம் -சக்கரவர்த்தி திருமகன்  காட்டு கொடுத்து –
போகினாம் சார்வ பவ்மன் ஆதி சேஷன் தானே -அடைக்கலம் நமக்கு எல்லாம் –
மயி பிரவசி -ஆயாந்தாம் த்ர்ஷடும் -பெரிய பெருமாளை சேவிக்க வர -கோயில் அண்ணன் வான மா மலை ஜீயர் பிடிந்துகொண்டு
அதரம் ஸ்ப்ருக்கி ரதாம் – அர்த்த துடன் -த்வயம் -திரு மேனி புல்லரிக்க-
பிரபத்யே -வர்த்தமானம் -நினைவு கொள்வது -பலன் சொல்லும் மேல் –
பிரபதிக்கு பல நியமம் இல்லை -வச்த்த்ரம் பிராணன் கைங்கர்யம் ராம ப்ராப்தி ராஜ்ஜியம் –
கண்டதுக்கும் பண்ண கூடாது –பகவத் கைங்கர்யம் ஒன்றுக்கே -அடைய வேண்டிய பலம் ஒன்றே –
சேர்த்தியில் எல்லா வித கைங்கர்யம் –
பூர்வ வாக்கியம் சொல்ல கேட்டு சந்தோசம் -ஆனாலும் துணுக  துணுக  அல்ப பலன் கேட்க்க கூடாதே
இவன் சொல்லும் மாசுச வார்த்தை உத்தர வாக்கியம் -பரந்த படியில் இப்படி காட்டுவார் –
மணியே முத்தே மாணிக்கமே -செம்படவன் -வியாபாரி ராஜா மூவரும் -மூன்று வித பலன்
அல்ப விலை உரிய விலை அனுபவம் –
அஷ்ட சித்தி ரிஷிகள் -மோஷம் -கூட வியாபாரி போல் உரிய -சுயம் போக்கியம் ஆழ்வார் போல் -ராஜா
உத்தர கண்டார்த்தம்
உத்தர வாக்யத்தாலே ப்ராப்யம் சொல்லுகிறது
ப்ராப்யாந்தரத்துக்கு அன்று எங்கை –
உபாயாந்தரங்களை விட்டு -சரம உபாயத்தை பற்றினால் போல் -உபேயாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை
விட்டு எல்லையான ப்ராப்யத்தை அர்த்திக்கிறது
இவன் தான் ஆர்த்திக்க வேணுமோ -சர்வஜ்ஞ்ஞன் இவன் நினைவு அறியானோ என்னில்
இவன் பாசுரம் கேட்டவாறே திரு உள்ளம் உகக்கும்
ஸ்ரீ மதே -பெரிய பிராட்டி யாரோடு கூடி இருந்து உள்ளவனுக்கு –
அவன் உபாயம் ஆகும் இடத்தில் தான் புருஷகாரமாய் இருக்கும் அதே ஆனந்தம் ஜீவாத்மாவுக்கும் உண்டு
அவனுக்கு செய்வதால் வந்த ஆனந்தமும் இவன் பெறுகிறான்
ஜகத் வியாபார கார்யம் இல்லை -சாம்யம் கொடுத்தாலும் -ஜகத் வியாபார வர்சம் பிரம சூத்திரம் –
நாராயணன் ஒருவனுக்கே -பிராட்டி நித்ய சூரி -போல்
அவன் ப்ராப்யனாகும் இடத்தில் தான் ப்ராப்யையுமாய் கைங்கர்ய வர்த்தகையுமாய் இருக்கும் –
இரண்டு வித -ஆகாரம் பிராட்டிக்கு -இங்கே -ஒன்றை பத்தாக பெருக்கி காட்டும் -கைங்கர வர்த்தகி
மேலும் மேலும் செய்யும் படியும் செய்பவள் –
இதிலே திரு மந்த்ரத்தில் சொன்ன ப்ராப்யத்தை விசதமாக அனுசந்திக்கிறது –
அங்கெ நாராயணனுக்கே அடிமை பிராட்டி  சம்பந்தம் ஸ்பஷ்டம் இல்லை -அங்கெ
சரம ஸ்லோகத்தில் மாம் ஏகம் சரணம் வ்ரஜ  -என்னை ஒருவனையே பற்று –
மா பிரட்டி -ஏகம் தன்னை -இப்படி இழுத்தும் சொல்லலாம், வலிந்து பொருள் அங்கெ
குறை தீர த்வயம் இரண்டு இடத்தில் பிராட்டி -சம்பந்தம் -த்வயத்தால் பிராட்டி என்கிறது -ஸ்பஷ்டமாக -காட்டும் –
இளைய பெருமாளைப் போலே இருவருமான சேர்த்தியில் அடிமை செய்கையே முறை –
பிரித்து நிலை இல்லை -சூர்பணகை-ராவணன் -பிராட்டி முன் இட்டு எம்பெருமானை பற்ற வேண்டும் விபீஷணன் போல் –
அடிமை தான் சித்திப்பதும் ரசிப்பதும் அச் சேர்த்தியில் –
பிரதி சம்பந்தி -கைங்கர்யம் கொள்பவர் இருவரும்
சரணம் பண்ணும் போது பிரதி சம்பந்தி அவன் ஒருவன் மட்டும்-அங்கே பிராட்டி புருஷகாரம்
நாராயணாய -சர்வ சேஷியாய் உள்ளவனுக்கு
இதிலே திரு மேனியும் குணங்களையும் சொல்லும்
செஷித்வத்திலே நோக்கு
ப்ராப்த விஷயத்தில் கைங்கர்யம் இறே  ரசிப்பது –
விருப்பத்துடன் -அபிமத விஷயத்தில் இருக்கும் இருப்பு சுகமாக இருப்பது நாட்டார் அறிவாரே –
காலில் படும் மலர் போல் நான் இருக்க கூடாதா -நாயகன் -ஆள வந்தார் வார்த்தை நன்றாக இருக்கிறது வகுத்த விஷயத்தில் இல்லையே –
இந்த சதுர்த்தி கைங்கர்யத்தை பிரகாசிப்பிக்கிறது
கைங்கர்யம் தான் நித்யம்
நித்யமாக  பிரார்த்தித்தே பெற வேணும் -சேஷிக்கு அதிசயத்தை விளைக்கை -பெருமை  மகிழ்ச்சி அதிசயம்
சேஷிக்கு அதிசயத்தை விளைக்கை -சேஷ பூதனுக்கு ஸ்வரூப லாபமும் பிராப்யமும்
அதிசயம் முன்பு இல்லாத மகிழ்ச்சி இவன் வர வில்லையே குறை இருக்கும் –
தேர் இழுக்கும் திருஷ்டாந்தம் -ஸ்வரூப லாபம் ஸ்வரூபம் சேஷிக்கு அதிசயம் விளைக்கை
நம -கைங்கர்யத்தில் களை அறுக்கிறது
களை யாவது -தனக்கு என்ன பண்ணுமது
இதிலே அவித்யாதிகளும் கழி உண்ணும் -அவித்யை கர்மம் பிரகிருதி சம்பந்தம் –
படியாய் கிடந்தது பவள வாய் காண்பேனே
உனக்கே நாம் ஆட் செய்வோம் என்னும்படியே ஆக வேணும் -உனக்காகவே-உன் ஆனந்தம் ஒன்றுக்கு தான்
மற்றை  நம் காமங்கள் மாற்று -பிராப்ய விரோதி –
சௌந்தர்யம் அந்தராயம் -கீழ் சொன்ன கைங்கர்யமும் அப்படியே -தன் ஆனந்தம் என்ற எண்ணம் இடையூறு
அழகே தடை தானே கைங்கர்யம் பார்த்து நம் ஆனந்தம் என்று நினைப்போம் –
சுமித்ரை -இளைய பெருமாள் இடம் -உத்தம மாதா -ஸ்ரஷ்டத்வம் வன வாசா -புத்திர பிராத கச்சதி –
நடந்து செல்லும் பொழுது ஆபத்து விளைககாதே -கண் வைக்காதே -திரு மேனி காவலுக்கு போக –
நடை அழகில் மயங்கி வந்த கார்யம் மறந்து போகாமல் இருக்க வேண்டும் –
கைங்கர்ய பிரார்த்தனை போல் -இப்பதத்தில் பிரார்த்தனையும் என்றும் உண்டு
அந்தராயம் தடை பிரதி பந்தகம் –
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு -என்னா நின்றாது இறே
பெரும் தேவர் குழாம் கள் பிதற்றும் பிரான் -எங்களுக்கு உண்டாகும் ஆனந்தம் தடுக்க நீ தான் போக்கி கொடுக்க வேண்டும் –
அஹம் அன்னம் -நான் உன்னால் உண்ணப்படுகிற அன்னம் -அவனுக்கு சொத்து -தொலைந்து போன வஸ்து கிடைக்க பெற்ற
ஆனந்தம் அவனுக்கு தான்-அசித் வது பாரதந்த்ர்யம்
போக தசையில் அழிக்கும் பொழுது நோக்க வேண்டும் -இட்ட வழக்கு பாரதந்த்ர்யம்
கட்டி பொன் போல் சேஷத்வம் பணிப் பொன் போல் பாரதந்த்ர்யம்
உருக்கின பொன் பணிப் பொன் -தன்னுடைய பணிக்கு ஏற்ற உருக்கு பதம் -எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்
அறிவு இருக்கிறதே -சைத்யன்யம் -கொடுத்து அந்த கார்யம் செய்ய கூடாது தடுக்கலாமா
எதிர் விழி கொடுக்க -பதில் ஆனந்தம் -பட தான் சைதன்யம் -அவன் ஆனந்தம் மேலும் கூட்டி –வளர்க்க இவனு ஆனந்த பட வேண்டும் –

படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே -கண்டு ஆனந்தம் -அதை கண்டு அவன் மேல் ஆனந்தம் –
பதில் ஆனந்தம் -மற்றை நம் காமங்கள் நீக்கு இல்லை மாற்று –
ஆசை வைப்பது தப்பு இல்லை மாற்ற வேண்டும்
கண் அழகு பிள்ளை உறங்கா வல்லி தாசர் -பிராப்ய விஷயத்துக்கு மாற்றி –
ஆமது கண்ணனுக்கே காமம் –
மருந்து -அடக்கும் கிளப்பும் -பசிக்கு மருந்து -பிரவ்ருத்தி -உண்டாக்க அடக்கவும் உண்டே
உன்னுடைய அனுபவத்தால்-சாத்மிக்கும் மருந்து –
இத்தையே நித்யம் சொல்லிக் கொண்டு நித்ய சூரிகள் –
தனி த்வயம் -ஆசார்யர்கள் -அனுஷ்டானங்கள் காட்டி –
பாதிரி குடி வேடன் வீட்டில் பட்டர்-வார்த்தை -மிருகம் முயல் குட்டி அடித்தேன்
தாய் தொடர்ந்து வர -வாசல் வரை -தண்டன் இட்டு கிடந்தது -இரக்கம் வந்து விட்டேன் –
மாம் ஏகம் சரணம் ஞானம் முயலுக்கு இல்லை -செயல்களே -ஆசார்யம் –
பரம சேதனன் செய்வானே -நாம் சென்று புக்கவாறே -துணுக என்று -கௌ ரவம் கொடுத்தானே

 

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 26, 2012

நான்காந்திருவாய்மொழி – ‘ஆடியாடி’

முன்னுரை

    ஈடு : மேல் திருவாய் மொழியிலே, ‘பருகிக் களித்தேனே’ என்று ஆனந்தித்தவாய், ‘அதுதன்னைப் பாகவதர்களோடே உசாவித் தரிக்க வேண்டும்’ என்று பாரித்து, அதற்கு இவ்வுலகத்தில் ஆள் இல்லாமையாலே, நித்தியவிபூதியிலே நித்தியசூரிகள் திரளிலே போய்ப்புக்கு ஒருவருக்கு ஒருவர் அறிவித்துக்கொண்டு அனுபவிக்கக் கோலி, நினைத்த போதே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே மிகவும் துன்புற்றவராய், தம்முடைய நிலையைத் தம்மவர்களான ஸ்ரீவைஷணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிறபடியை 1அந்யாபதேசத்தாலே பேசுகிறார்.

2‘அம் சிறைய மட நாராய்’ என்ற திருவாய் மொழியில் தூது விட 3க்ஷமர் ஆனார்; 4‘வாயுந் திரையுகளும்’ என்ற திருவாய்மொழியில், கண்ணாற்கண்ட பொருள்களடையப் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றவாகக் கொண்டு அவற்றுக்குமாக நோவுபட க்ஷமர் ஆனார்; அவ்வளவு அன்றிக்கே, ஆற்றாமை கரை புரண்டு, தாமான தன்மை அழிந்து ஒரு பிராட்டி தசையை அடைந்தவராய், அது தன்னிலும் தம் தசையைத் தாம் வாய்விட்டுப் பேசமாட்டாமல் பக்கலில் உள்ளவர்கள் அறிவிக்க வேண்டும்படியாய், இருத்தல் நடத்தல் படுத்தல். முதலியவைகளில் ஒரு நியதியின்றி மகிழ்ச்சி அற்றவராய் நோவுபட, இப்பெண்பிள்ளை நிலையினை நினைந்த திருத் தாயார் இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்து, ஆசைப்பட்ட அடியார்களுடைய துன்பங்களையெல்லாம் போக்கக் கடவ நீர், உம்மை ஆசைப்பட்ட இவள் நோவுபடப் பார்த்திருப்பதே!’ என்று, எல்லா வகையாலும் அவனைக் கொண்டே பரிகரித்துக் கொள்ளும் குடியாகையாலே, அவன் திருவடிகளிலே போகட்டு

1‘இவள் இடையாட்டத்தில் நீர் செய்ய நினைத்திருப்பது யாது?’ என்று கேட்கிற பாசுரத்திலே தம்முடைய நிலையினை அருளிச் செய்கிறார்.

‘ஆயின், மேற்கூறிய இரண்டு திருவாய்மொழிகளிற் போந்த பிரிவுத்துன்பங்களைக் காட்டிலும் இத்திருவாய்மொழியில் பிரிவுத் துன்பம் மிகுந்து இருப்பதற்குக் காரணம் யாது?’ எனின், 2காசினை இழந்தவனுக்கும் பொன்னினை இழந்தவனுக்கும் இரத்தினத்தை இழந்தவனுக்கும் இழந்ததனால் உளதாய துன்பம் ஒத்ததாக இராது வேறுபடுவது போன்று, அங்கும் இங்கும் பிரிவுத் துன்பம் ஒன்றாயினும், துன்பத்தில் வேற்றுமை உண்டு என்க. ‘எவ்வாறு?’ எனின், அவதாரத்தில் 3‘பெருநிலம் கடந்த நல்லடிப் போதை’ அனுபவிக்க ஆசைப்பட்டுக் கிடையாமையாலே வந்த ஆற்றாமை ‘அஞ்சிறைய மடநாரை’யில், 4‘நம்பியைத் தென்குறுங்குடி நின்ற’ என்ற அர்ச்சாவதாரத்தில் அனுபவிக்க ஆசைப்பட்டுக் கிடையாமையால் வந்த ஆற்றாமை ‘வாயுந் திரையுக’ளில்; இங்கு, அவ்விறைவனுக்கும் உயிரான நித்தியசூரிகளை அனுபவிக்க ஆசைப்பட்டுக் கிடையாமையால் வந்த ஆற்றாமை ஆகையால், அவற்றைக் காட்டிலும் இதற்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும்.

‘நன்று; நித்தியசூரிகள் திரளிலே சென்று சேர்ந்து அனுபவிக்கப் பெறாமையால் நோவுபடுகின்றாராயின், பின்னே, அவர்கள் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடாமல், 5‘நரசிங்கா’ என்பது போன்ற இறைவன் திருப்பெயர்களைச் சொல்லிக் கூப்பிடுவது எற்றிற்கு?’ எனின், எங்கேனும் ஒரு காட்டில் இரத்தினங்கள் பறியுண்டால், நாட்டிலே அரசன் வாசலிலே சென்று அவ்வரசன் பெயரினைச் சொல்லிக் கூப்பிடுவது போன்று, நித்தியசூரிகள் திரளிலே தாம் சென்று சேர்வதற்கும் காரணமாக இருப்பவன் இறைவனே ஆகையாலே, அவ்விறைவனுடைய திருப்பெயரினைச் சொல்லிக் கூப்பிடுகிறார்.

இனி, 1பகவானுடைய பிரிவிலே உட்புக நின்றால் அன்றோ பாகவத விஸ்லேஷந்தான் தெரிவது?2’இலக்குமணா! மகாத்துவமாவான பரதனோடும், வீரனான சத்துருக்கனனோடும், உன்னோடும் எப்பொழுது சேர்வேன்?’ என்கிறார் பெருமாள். இங்கு, ஸ்ரீபரதாழ்வானோடும் சத்துருக்கனாழ்வானோடும் கூடப்பெறாத 3கிழிக்குறையாலே, கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய்த் தோன்றவில்லை பெருமாளுக்கு; 4‘ஸ்ரீராபிரான், குகனைச் சேர்ந்தார்; அதனால், இலக்குமணனோடும் பிராட்டியோடும் சேர்ந்தவரானார்’ என்கிறார் வால்மீகி. இங்கு, கூடப்போன இளையபெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய்த் தோன்றியது, 5ஸ்ரீகுகப்பெருமாளோடு கூடின பின்பு அன்றோ? இப்படியே அன்றோ இறைவன் தனக்கும் 6அந்வய வியதிரேகங்கள் இருக்கும்படி. ஆக, அடியார்களுடைய சேர்க்கையை ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த இழவு, பெற்ற பகவானுடைய சேர்க்கையையும் இழந்து அடியே பிடித்துப் பிரார்த்திக்க வேண்டும் படியாய் வந்து விழுந்தது எனக் கோடலுமாம். இனி, ‘வாயுந் திரைகளில் துன்பம் வந்து கலந்து கலவி முற்றுவதற்கு முன்னே வந்த பிரிவாகையாலும் ஆற்ற ஒண்ணாது; ஆதலால், வருந்துகிறார் எனலுமாம்

2. ‘காசு’ என்றது, அவதாரங்களை. ‘பொன்’ என்றது, அர்ச்சாவகாரத்தை. ‘இரத்தினம்’
என்றது, அடியார்களை. ‘காசினை மணியை’ ‘செம்பொனே திகழும் திருமூர்த்தியை,’
‘செழுமாமணிகள் சேரும்’ என வருவன கொண்டு தெளிதல் தகும்.’

அந்வய வியதிரேகங்கள்’ என்பதற்குப் பொருள்: – ‘எது இருந்தால் எது இருக்குமோ,
எது இன்றேல் எது இராதோ’ என்பது. ‘யத்சத்வே யத் சத்வம்; யதபாவே யதபாவ:’
என்பது வடமொழி வாக்கியம். இங்கு, ஸ்ரீராமபிரானுக்கு ஸ்ரீ குகப்பெருமாளுடைய
சேர்க்கை உண்டானதனால் இளையபெருமாளோடும் பிராட்டியோடும் சேர்ந்த
சேர்க்கையையும் அவர் உள்ளவரானார். ஸ்ரீ பரதாழ்வான சத்துருக்கனாழ்வான்
இவர்களுடைய சேர்க்கை இல்லாததனால், இளையபெருமாளுடைய சேர்க்கை இருந்தும்
அவர் இல்லாதவரானார் என்க.

ஆடிஆடி அகம்க ரைந்து, இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல் கி,எங்கும்
நாடிநாடி, நரசிங் காஎன்று
வாடி வாடும்இவ் வாள்நுதலே.

    பொ – ரை : ஒளி பொருந்திய நெற்றியினையுடைய இவள், நின்ற இடத்தில் நில்லாமல் பல இடங்களிலும் உலாவி, மனமும் கரைந்து, இசையோடு பல காலம் பாடிக்கொண்டு, கண்களில் நீர் நிறையப் பெற்று எல்லா இடங்களிலும் தேடித்தேடி, ‘நரசிங்கனே!’ என்று மிகவும் வாடாநின்றாள்.

    வி-கு : ‘வாணுதல், ஆடிக் கரைந்து பாடி மல்கி நாடி நரசிங்கா என்று வாடி வாடும்’ என்க. வாணுதல் – அன்மொழித்தொகை. ‘நரசிங்கா என்று வாடும்’ என்றது, ‘பிரஹ்லாதன் விரும்பிய காலத்தில் நரசிங்கமாய் வந்து தோன்றி, அவனுக்கு உதவியைச் செய்த பெருமான் எனக்கு உதவுகின்றிலனே!’ என்று இப்பெண் வருந்துகிறாள் என்று கருத்தை உட்கொண்டு நின்றது.

இத்திருவாய்மொழி முச்சீரடி நான்காய் வருதலின் வஞ்சி விருத்தம் என்பர்.

    ஈடு : முதற்பாட்டு. 1‘ஆபத்தே செப்பேடாக அடியானான பிரஹ்லாதன் சூளுறவு செய்த அக்கணத்திலே வந்து உதவும் தன்மையானானவனைச் சொல்லிக் கூப்பிடாநின்றாள்’ என்கிறாள்.

ஆடி – இருத்தல் நடத்தல் கிடத்தல் முதலியவைகளில் ஒரு நியதி இன்றிப் பிரிவுத் துன்பத்தால் படுகிற பாடு திருத்தாயார்க்கு மனத்தைக் கவர்வதாக இருத்தலின், ‘ஆடி’ என்கிறாள்.

ஸ்ரீகௌசல்யையார் பெருமாளைப் பிரிந்து துடிக்கிற துடிப்பை 1‘ஸ்ரீராமன், தாயை நர்த்தனஞ் செய்கின்றவளைப் போன்று பார்த்தான்’ என்கிறார் ஸ்ரீவால்மீகி பகவான். ஆதலால், வடிவழகியார் செய்யும் வியாபாரங்கள் எல்லாம் கண்ணுக்கு இனியவாகவே இருக்கும். அன்றியும் பிராட்டி, பிரிந்து அழகு அழிந்திருக்கிற சமயத்திலேதான் 2‘மங்கள சொரூபியாய் இருந்தாள்’ என்று ஸ்ரீவால்மீகி கூறுகிறார். ஆதலால், அழகியார், என்றும் வடிவழகியாரேயாவர்.

ஆடி-முதலில் ‘ஆடி’ என்றதற்கு அவ்வருகே ஒரு நிலை. இரண்டாம் ஆடி முதலில் ‘ஆடி’ என்றதனோடு அமையாது, இருகால் மட்டு ‘ஆடி’ என்கிறாள்; துன்பத்தின் மிகுதியைத் 3தாளங் கொண்டு அறியுமித்தனை. முதலிலே சஞ்சாரம் அரிதாய் இருக்கவும் ஆற்றாமையால் தூண்டப்பட்டுச் சஞ்சரிக்கிறாள்; ‘என்? முடிந்தாலோ?’ எனின், 4குணாதிக விஷயம் ஆகையாலே முடிந்து பிழைக்கவும் ஒட்டாது; 5‘ஸ்ரீ பரதாழ்வான் இன்னம் ஒருகால் அவ்வாராம பிரானுடைய முகத்தில் விழ்க்கலாமாகில், அருமந்த பிராணனைப் பாழே போக்குகிறது என்?’ என்று இராச்சியத்தையும் தொட்டுக் கொண்டு கிடந்தான் அன்றோ? அகம் கரைந்து -‘மனம் என்னும் பொருள் நீராய் உருகிப்போயிற்று’ என்கிறாள். ஆற்றாமை தூண்டச் சஞ்சரித்தவள், சஞ்சாரம் அடி அற்று இருக்கின்றாள் என்பாள், ‘அகம் கரைந்து’ என்கிறாள். ‘ஆயின், மனம் கரைந்ததை இவள் அறிந்தவாறு யாங்ஙனம்?’ எனின், இவள் வியாபாரம் கண்ணுக்கு இலக்கானாற்போலே, அகவாயும் இவள் நெஞ்சுக்கு இலக்காய் இருக்கிறபடி. இசை பாடிப் பாடி – ‘மனம் முன்னர் நினைக்க, பின்னர் வார்த்தை உண்டாகும்’ என்கிற நியதி இல்லை; ஆற்றாமையாலே கூப்பிடுகிற கூப்பீடுதான் பாட்டாய்த் தலைக்கட்டுகிறதிததனை. ‘ஆயின், கூப்பீட்டைப் பாட்டு என்னலாமோ?’ எனின், ஆற்றாமை

யாலே துடித்த துடிப்பு ஆடல் ஆனாற்போலே, 1‘பண்ணை வென்ற இன்சொல் மங்கை’ ஆதலின், ஆற்றாமையாலே கூப்பிட்ட கூப்பீடு பாட்டாய் விழாநின்றது. 2‘அழகானவளும் மதுரமான வார்த்தையுடையவளும்’ என்கிறார் ஸ்ரீவால்மீகி. ‘பாடிப்பாடி’என்ற அடுக்கு, முதல் கூப்பீடுபோல அன்றி, இரண்டாம் கூப்பீடு தளர்ந்ததிருத்தலையும் தெரிவிக்கும்.

கண்ணீர் மல்கி – உருகிய மனம் இசையாய்ப் பெருகி, மிக்கது கண்ணநீராய்ப் பெருகுகிறபடி. 3நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ணீரே அன்றோ? மங்குதல் – மிகுதல். 4‘தாமரை இதழ்களினின்றும் விசேடமாகப் பாய்கிற தண்ணீர் போன்று, ஆனந்தக்கண்ணீர் பெருகும் படியான கண்களில் துக்கக் கண்ணீர் எதற்காகப் பெருகுகிறது?’ என்றார் ஸ்ரீவால்மீகி. இங்கு ‘ஆனந்தக் கண்ணீருக்குத் தகுதியான கண்களிலே சோகக் கண்ணீர் பெருகிறது 5யார் குடி வேர் அற?’ என்று பட்டர் அருளிச்செய்வர். 6‘யாரைச் சேதநராகக் கொண்டு?’என்று திருக்குருகைப்பிரான் பிள்ளான்பணிப்பர். 7‘பாவியேன், யான் வந்த இவ்வரவு, உடைய பெருமாள் வரவாய்க் காணப் பெற்றது இல்லையே!’ என்று இரங்குகிறான் திருவடி.

எங்கும் நாடி நாடி – தன் ஆபத்தே செப்பேடாக, வருதற்கு உரித்து அல்லாத திக்குகளையும் பார்க்கிறாள். நினைவின்றியே

இருக்கச் செய்தேயும், வாராத் திருநாமம் செவிப்பட்டவாறே 1‘விலங்கப் பார்ப்பது, மேலே பார்ப்பது, கீழே பார்ப்பது ஆனாள்’ என்றார் ஸ்ரீவால்மீகி. ‘ஆயின், வருவதற்கு உரித்து அல்லாத திக்கிலும் தேடுவான் என்?’ என்னில், சம்பாவனை இல்லாத திக்கிலும் வந்து தோற்றுமவன் ஆகையாலே, தேடுகிறாள். ‘ஆயின், பரத்துவம் முதலிய நிலைகளை விட்டு, இவர் அவதாரத்தையே பேசுவான் என்?’ எனில், 2‘பத்துடை அடியவர்க்குப் பின்பு அவதாரத்துக்கு அவ்வருகு இவர் போகமாட்டார். இனி, ‘எங்கும் நாடி நாடி’ என்பதற்கு, தன் கொய்சகம் உட்படப் பாராநின்றாள்’ என்று பட்டர் அருளிச்செய்வர். ‘அதற்குக் கருத்து என்?’ என்னில், 3‘கண்ணன் என் ஒக்கலையானே’ என்கிறபடியே, அவன் இருந்த இடமாகையாலே. நரசிங்கா என்று வாடி வாடும் – பிரஹ்லாதனைப் போலே, ஒரு 4தம்பம் இல்லாதபடி இருக்கையாலே கொம்பை இழந்த தளிர் போலே வாடும். ‘முதல் வாட்டம் – தளிர்’ என்று கூறத் தக்கவாறு இருக்கிறது, அடுத்த கணத்தில் வாட்டம் என்பாள், ‘வாடி வாடும்’ என்கிறாள்.

5‘என்னிடமிருந்து எல்லாப் பொருள்களும் உண்டாகின்றன; எல்லாம் என்னிடத்தில் லயம் அடைகின்றன; எல்லாப் பொருள்

களும் நானாகவே இருக்கிறேன்’ என்னும் தெளிவுடையவனுக்குத் தோன்றினவன், கலங்கின 1அபலைக்குத் தோன்றானோ!’ என்று வாடுகிறாள் என்கிறாள் என்றபடி. ‘நரசிங்கா என்று வாடும்’ என்ற தொடரில், ‘தமப்பன் பகையானாலோ உதவுவது?’ நீர் பகையானால் உதவலாகாதோ? ஞான நிஷ்டர்க்கோ உதவலாவது? பக்தி நிஷ்டர்க்கு உதவலாகாதோ? ஆண்களுக்கோ உதவலாவது? ஆண்களுக்கோ உதவலாவது? பெண்களுக்கு உதவலாகாதோ?2சேராத வடிவு சேர்த்து உதவிலோ உதவலாவது? இருந்தபடியே உதவலாவார்க்கு உதவலாகாதோ? 3ஓர் அதிகாரி நியதி, ஒரு கால நியதி, ஒரு அங்க நியதி என்கிற நிர்பந்தம் வேண்டுமோ இவளுக்கு? இவளுடைய ரக்ஷணத்திற்கு4ஏதேனும் முகம்பண்ண வேண்டுமா?’ என்ற தொனிப் பொருளும் தோன்றும். 5‘தர்மி லோபம் பிறந்தது இல்லை,’ என்பாள், ‘வாடும்’ என நிகழ்காலத்தாற் கூறுகிறாள். ‘வரும்’ என்னும் நசையாலே முடியப் பெறுகின்றிலன் என்பதாம்.

இவ்வாணுதலே – ஒளியுடன் கூடின நுதலையுடைய இவள். ‘இவ்வழகுக்கு இலக்கானார் படுமதனை இவள் படுவதே!’ என்பாள், ‘வாடும் இவ்வாணுதல்’ என்கிறாள். ‘இவள் முடிந்தால் 6‘பிரமன் முன் காலத்தில் இருந்தபடியே படைத்தான்’ என்பது போன்று, உம்முடைய மேன்மையாலே ‘இன்னம் இப்படிப்பட்டது ஒரு வடிவத்தை உண்டாக்கலாம்’ என்று இருக்கிறீரோ?’ என்பது திருத்தாயாருடைய உடகோள். ‘நன்று; இந்நிலையில்  இவளை ‘வாணுதல்’ என்னக் கூடுமோ?’ என்னில், 7‘ஊனில் வாழுயிரில்’ கலவியால் உண்டான புகர் இன்னம் அழிந்தது இல்லை ஆதலின், கூறுகிறாள். அம்பு பட்டு முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே அறியலாமாதலின், குணாதிக விஷய விரஹத்தாலே வந்த இழவு என்னுமிடம்  முகத்தின் எழிலிலே தெரியாநின்றது என்றபடி.

‘என்னுயிர் நின்னாற் கோறற் கெளியதுஒன்று அன்று; யான்முன்
சொன்னவன் தொட்ட தொட்ட இடந்தொறும் தோன்றானாயின்
என்னுயிர் யானே மாய்ப்பல்; பின்னும்வாழ்வு உகப்ப லென்னின்
அன்னவற்சூ அடியே னல்லேன்!’ என்றனன், அறிவின் மிக்கான்.

என்ற செய்யுளால் (கம்பரா. இரணியன் வதை. 126) அவன் சூளுறவு அறிதலாகும்.

விலக்ஷண விஷயத்தைப் பிரிந்தால் முடிகையும் அரிது, ஜீவிக்கையும் அரிது;
வைலஷண்யம் ஜீவிக்கவொட்டாது, நசை முடியவொட்டாது’ என்பது இருபத்து நாலாயிரம்.

ஸ்ரீராமா. சுந். 31 : 119. இச்சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச் செய்த பொருள்
மேலும் வருமாறு: ‘கீழே பார்த்ததற்குக் கருத்து என்?’ என்னில், பூமியைப் பிளந்து
கொண்டு புறப்பட்டு ஒருவன் திருநாமம் சொல்லச் சம்பாவனையுண்டாகில், அல்லாத
திக்கிலும் உள்ளது என்று பார்த்தாள்; அன்றிக்கே, ‘மாஸோபவாசிகள், ‘சோறு’
என்றவாறே அலமாக்குமா போலே பார்த்தாள்,’ என்னுதல்; அங்ஙனன்றிக்கே, ‘சிம்சுபா
விருக்ஷத்தை எங்கும் ஒக்கப் பார்த்தாள்’ என்னுதல். யூம சிந்த்ய புத்தம் ததர்ஸ் – அவன்
வடிவு காண்பதற்கு முன்னே அகவாயையாயிற்றுப் பரிசோதித்தது; ‘இந்நிலத்திலே புகுந்து
இடங்கொண்டு நாம் இருந்த இடந்துருவி நிலை குத்த வல்ல நெஞ்சையுடைய
வனன்றோ?’ என்று. பிங்காதிபதேரமாத்யம் – ‘இவன் ஸ்வதந்த்ரல்லன்; இராஜ கார்யம்
இவன் கையிலே உண்டு’ என்று அறிந்தாள். வாதாத்மஜம் – பெருமாளுக்குப்
பிராணஹேதுவான பிராட்டிக்குப் பிராணனைக் கொடுக்கையாலே ‘இவன் சர்வர்க்கும்
பிராணஹேதுவானு வாயுபுத்திரன்’ என்று தோன்ற இருந்தான். சூர்யமிவோதயஸ்த்தம் –
இலங்கையிலும் கிழக்கு வெளுக்க அடியிட்டது. பெருமாளாகிற ஆதித்திய உதயத்துக்கு
அருணோதயம் என்னலாம்படி இருந்தான்; ஆகையிறே, இலங்கை நாலுமதிளுக்கு நடுவு
‘ஹரி ஹரி’ என்கிறபடியே இருக்கிறது.’

அடியார் குழாம் உடன் கூடுவது என்றுகொலோ

பாகவத சம்ச்லேஷம் ஆசை பட்டார் –
கிடைக்காதது துக்கம் -அதிகரித்து மோகித்து -தாயார் பாசுரம் -வெளி இடுவதாக -இந்த திருவாய் மொழி
ஸ்ரீ வைஷ்ணவர் ச்வாபதேசம் –
துக்கம் அதிகரிக்க -பெண் நிலை இயற்க்கை -அம் சிறைய /வாயும் திரை உகளும் /ஆடி ஆடி
ப்ரீதியில் கூட நாயகி ஒரே இடத்தில் பின்பு வரும்
முதலில் தரித்து தூது விட்டார் -குறைந்த துக்கம் /அடுத்து கட்டி அழ -மற்றைவையும் துக்கம் நினைப்பு உண்டே -இங்கே
தன்னால் பேச முடியாமல் தாயார் பாசுரம் –
ஆசைப்பட்ட விஷயம் அல்பம் -துக்கம் அல்பம் -ஒரு நிரூபணம்
பத்துடை அடியவர்க்கு -பெரு நிலம் கடந்த நல் அடி போது தழுவ ஆசைப்பட்டார் முதலில் -விபவம் -காசி இழவு போல்
அடுத்து -நம்பியை எப்படி மறப்பேன் -அர்ச்சை ஆசை -பொன் இழவு போல்
இங்கு அடியார் குழாம் உடன் கூட ஆசைப்பட -மணி இழவு போல் –இது தான் உயர்ந்தது –
காசு இழவு /பொன் இழவு /மணி இழவு -போல் மூன்றும்
பருகிக் களித்தேன் ஹ்ர்ஷ்டராய் -அது தன்னை பாகவதர் கூட உசாவி தரிக்க பாரித்து
அதுக்கு -சப்தாதி விஷய ப்ரவனர் சம்சாரிகள் இல்லை
அங்கெ போய் அத திரளில் போகி புக்கு -கொண்டாட ஆசைப் பட்டவர்
ஸ்ரீ வைஷ்ணவர் அவன் இடம் சொல்வது போல் தாயார் பாசுரம்
தூது விட ஷமர் ஆனார் முதலில் -மற்றவருக்கும் நோவு பட சக்தி
இங்கே ஆற்றாமை கரை புரண்டு -தாமான தசஈழந்து தம் திசையைத்தான் பேசாமல் அருகில் உள்ளார் பேசும்
ஸ்தி கமனம் சயனம் நியதி இன்றி -நோவு பட

அரத்தியாய் நோவு பட -ரதி கூடி இருத்தல்
அரதி-கங்குலும் பகலும்
உம்மை ஆசைப்பட இவள் நோவு பட
அவதாரம் -ஆர்த்தாரானார் ஆர்த்தி போக்கி -துக்கம் பரிகரித்து செய்து அருளினீர்
எல்லா இடத்திலும் அவனை இட்டே பரிகரிக்க -கங்குலும் பகலும் -என் செய்கின்றாயே –
கூரத் ஆழ்வான் விவாக ப்ராப்தம் ஐ தீகம்-அவன் பிரக்ருதிக்கு -கரைவார்யார் –
பிள்ளைகள் விகாப பிராப்தி ஆனார் என்று சொல்லா நின்றார்கள் -என்று விண்ணப்பிக்க
பெரிய நம்பி வம்சத்தார் பெண் சேர்த்தார் பெரிய பெருமாள்
அவனை இட்டே பரிகரிக்கும் குடி -அவன் திருவடியில் பொகட்டு
இவள் இடை யாட்டம் என்ன செய்ய நினைக்கிறீர் -தாயார் வார்த்தையால் தன் நிலையை வெளி டுகிறார் –
பெரு நிலம் கடந்த நல் அடி போது -விபவ ஆசை -ஆற்றாமை அம் சிறை மட நரை
நம்பியை தென் குரும்குடி -தாமே கட்டி அழ சக்தி இருந்ததே –
இதில் -அடியார் குழாம் -அவன் தனக்கும் பிராண பூதர் நித்ய சூரிகள் இழவு -ஆற்றாமை அதிகம் –
ஆடி ஆடி பகவத் விஷயம் தானே பாகவத் விச்லேஷம் நிர்ணயம் செய்யலாமா -சங்கை –
இதையும் ஏற்படுத்திக் கொடுப்பவனு அவன் தானே –
அவர்களை சொல்லி கூப்பிடாமல் அவனைநினைத்து
நாடி நாடி நரசிங்கா என்கிறாள்
ரத்னம் பரி உண்டாலும் காட்டில் -நாட்டில் ராஜா இடம் தான் கதறுவார்கள்
ராஜாதி ராஜா சர்வேஸ்வரன் –
பகவத் விச்லேஷத்தில் உள் புக பாகவத விச்லேஷம் படும் -உற்றமும் உன் அடியார்க்கு அடிமை –
ஒன்றை விட்டு ஓன்று பிரியாமல் -ஸ்ரீ ராமாயணம் -எடுத்து காட்டுகிறார்
பெருமாள் வார்த்தை -ஆரண்ய காண்டம் -16 சர்க்கம் -பஞ்சவடியில் கோதாவரி நதி கரையில் லஷ்மணன் நோக்கி
கதா பாரதென மகாந்த்ம்யம் எப்பொழுது சேர போகிறேன் சத்ருனன்
உன்னுடன் எப்பொழுது சேர போகிறேன் -அவர்கள் சேர்த்தி இன்றி இதுவும் சேர்த்தியில் கணக்கு இல்லை
கூடிற்றாதாக தோற்ற வில்லை பெருமாளுக்கு –
கிளி குறையாலே -வைக்கோல் பிரமசாரிகதை நினைவு கூற
மனுஷ்யன் பேராசை -தபஸ் -ஐஸ்வர்யம் கேட்டு -எட்டு ஜாடி
பாதி தான் ஒன்றில் இருக்க -நிறைக்க பார்க்க -பிராணன் போனது அனுபவிக்க பிராப்தி இல்லை –
இல்லாதது தான் குறை
வச்த்ரை -பொற் கிளி போலே –
பகவத் அனுபவம் இருந்தாலும் பாகவத அனுபவம் இல்லா விடில் குறை வ்யதிரேக்கம்
அன்வயம் அடுத்து குகன் உடன் கூடி -லஷ்மணன் சீதை உடன் கூடினார் பெருமாள் –
கூடிற்றே தோற்றிற்று- குகன் கூட சேர்ந்த பின்பு –
அடியவர் கூட சேர்த்தி தான் அவனுக்கும் -தேட்டம்
ஆழ்வாருக்கும் ததீயர் சேர்த்தி ஆசைப் பட்டு பேர் இழப்பு
-பெற்ற பகவத் சம்ச்லேஷமும் இழந்து -பாகவத சம்ச்லேஷம் கிடைக்காததால்
இரண்டு உதாஹரணம் காட்டி –
இழந்து -அடியே பிடித்து பிரார்த்திக்க வேண்டும்படியாய் வந்து விழுந்தது
வாயும் -துக்கம் தீர முன்பு -சம்ச்லேஷம் கை நழுவி –

ஆபத்தே செப்பாடாக -அவனை கூப்பிடா நின்றாள்
ஆசரித்தான் பிரதிக்ஜை நிறைவேற்ற -அந்த காலத்திலேயே -தோன்றி உதவும் ஸ்வா பன்
அவனுக்கு உபக்சாரம் செய்தவன் எனக்கு உதவாமல் இருக்கிறாயே -தனக்கு விளையாமல்
பெண் பிள்ளை துக்கம் படுபவதை திருத் தாயார் பேச்சு –
ஆடி ஆடி அகம் கரைந்து -இசை பாடி கரைந்து இசையாக
எங்கும் நாடி நாடி -தேடி
நரசிங்கா என்று -என்னுடைய வாணுதல் வாள் நுதல் ஒளி உடைய நெற்றி
நியதி இன்றி -இவள் படும் துக்கம் கண்டு தாயார் சந்தோஷம்-
ஸ்திதி கமனம் சயனம் -விச்லேஷத்தால் படும் பாடு -துக்கம் -ஆகர்ஷிகமாக துக்கம் இருக்குமா
ஸ்ரீ கௌ சல்யர்  படும் துக்கம் -ராம ராமேதி -கண்ணில் நீர் பெருக –
நிருத்யந்தி -மிவம் இவ -மாதரம் நாட்டியம் ஆடும் பெண் போல் -மாதரம் இருக்க –
அது போல் வடிவு அழகியார் செய்யும் வியாபாரங்கள் அழகு
சுபாம் பிரிந்து அழகு அழிந்து இருந்த இடத்தில்
சுந்தர காண்டம் சுபாம் நிமித்தானி திருவடி -தற்கொலை பண்ண போகும் பொழுதும்
ஆடி ஆடி -முதல் ஆடி -இரண்டு ஆடி -அவ்வருகே ஒரு நிலை
ஆற்றாமை -சஞ்சரிக்க சக்தி இல்லாவிடிலும் ஆற்றாமை துரத்த
கிடைக்காமல் விழுவது
குணாதிசயம் முடிந்து போகவும் முடியாமல்
வஸ்து கிடைத்தால் -அதிகமான பெறலாகும் ஆனால் முடிப்பான் பிழைப்பான் என்னில்
பரதன் 14 வருஷம் பிரிந்து கஷ்டம் பட்டு பிராணனை வைத்து கொண்டு
அருமந்த பிராணனை ராஜ்யத்தை தொட்டு கிடந்தான் இறே
முதல் ஆடி -இருகால் மடு ஆடி தாளம் கொண்டு அறியும் இத்தனை-
ஆடி ஆடி -அரையர் சேவை -திடீர் எழுந்து முதலில் –அப்புறம் விழ –
முன்புற ஆடி என்றால் இரண்டாம் ஆடி– சென்ற காலம்  அளவை பரி சேதிக்க   தாளம்
ஒரு தாளம் ஏறி இருக்கும் –கால பிரமாணம் உண்டே –

தோடி ராக வித்வான் -அனுபவித்து ஆலாபனை-கல்யாணி நன்றாக இருந்தது என்றாராம் –
அகம் கரைந்து சஞ்சாரம் செல்லா நிற்க –
அகவாயும் நெஞ்சுக்கு இலக்கானதாம் தாயாருக்கு
இவள் வியாபாரம் தாயார்கண்ணுக்கு இலக்கானது போல் –
மனச தத்வம்நீராய் உருகி போக -மனசா பூர்வாக -வாக் உத்தரம் யசுர் வேத சம்கிதை
சண்டை -பிரம்மா-மனச முதல் சொல்ல வாக்கு கோபம் சபிக்க -ஆராதனம் இல்லை –
பிரம்மா ஆகுதி மனசால் -இந்திரா ச்வாவா  சொல்லி மனசால் நினைத்து ஆகுதி இன்றும்
ஆற்றாமையால் கூப்பாடுதான் சங்கீதம் -கூப்பீடு பாட்டாய் தலை கட்டித்தாம்
பண்ணை வென்ற இன்சொல் மங்கை திரு சந்த விருத்தம்
மதுரா மதுராலாபா -இனிமையாகபெசும் சீதை பிராட்டி
ஆற்றாமையால் துடித்து துடிப்பு ஆட்டம் போல்
முதல் கூப்பிடு போல் இன்றி தளர்ந்து பாடி பாடி
உருகின மனச தத்வம் இசையாக பிரவகித்து கொஞ்சம் கண் வழியாக வர கண்ணீர் மல்கி
நெஞ்சு ஒழிய பாயும் கண்ணீர் இறே —
கிம் அர்த்தம் தவ நேத்ராப்யாம் –கண்ணீர் பெருக சீதை பிராட்டி கண்டு திருவடி –
தாமரை இல்லை தண்ணீர் போல் -உம கானில் கண்ணீர் பெருக என்ன காரணம்
கிமர்த்தம் -ஆனந்த கண்ணீர்  வர வேண்டிய -யார் குடி வேர் அற பட்டர் நிர்வாகம் -ராவணன் குலமா –
கிம் அர்த்தம் -உன் கண்ணுக்கு இதுயோக்யமோ –
கூடி இருந்து ஆனந்த கண்ணீர் கொள்ள வேண்டிய பராங்குச
யாரை சேதனராக கொண்டு பிள்ளான் பணிக்கும்
இதை பார்க்க பெருமாள் கிட்டே இல்லையே -இந்த அழகை பார்க்க –
தாமரை இலையில் முத்து உருண்டு போனது போல் அழகை வர்ணித்ததால் அதுக்கும் சேர்த்து பிள்ளான் நிர்வாகம்
பாவியேன் -இந்த அழகை பார்க்க பெருமாள் இல்லையே –காட்டில் எரியும் நிலா போல –
எங்கும் நாடி நாடி
ஆபத்து காரணம் -வருகிறானா பார்க்கிறாள் -எங்கும் -சீதை பார்த்தாள்
திருவடி ராம சரித்ரம் சொல்ல ஆரம்பித்ததும் -திரும்பி -நினைவு இன்றி இருக்க செய்தவாறே ராம நாமம் செவிப்பட்டவாறே –
திர்யக் உஊர்த்வம் மேலும்  கீழும் -எங்கும்பார்த்தது போல் – பூமியை பிளந்து கொண்டு -பிரசக்தி இல்லை
அது போல் எங்கும் பிரசக்தி இல்லை
ராவணன் பவன் ராம நாமம்
சோறு எங்கே அலமாக்கும் போல் பரபரப்புடன்
சிம்சுபா வர்ஷம் முழுவதும் பார்த்து
அகவாய் -ஹிருதயம் பார்த்து -இந்நிலம் புகுந்து –இடம் கண்டு பிடித்து
நாம் இருந்த இடம் துருவி நிலை குத்த வல்ல அசித்ய புத்திம்
பிந்காதி பதே அமாத்யம் -ராஜ கார்யம் கையில் உண்டு ஏவி தூது வந்தவன்
வாதாத்மஜம் பெருமாளுக்கு பிராண ஹேது பிராட்டிக்கு பிராணன் கொடுக்க
சூர்யம் இவ உதயச்தம் இலங்கையிலும் கிழக்கு வெளுக்க அடி இட்டது
அருணோ யத்தம்-திருவடி வந்தது  பெருமாள் வர சூர்யோதயம்
இலங்கையில் கூட ஹரி ஹரி  சொல்ல -இரண்டு -போது விடிந்தது -தெரிந்தது –
எங்கும் நாடி நாடி -சம்பாவனை இல்லா இடத்தில் வந்து தொன்றுமவன்
நரசிங்கம் –
பத்துடை அடியவர்க்கு பின்பு அவதாரம் அவ்வரகு போக மாட்டாரே
எங்கும் நாடி தன் கொய்சவமும் பிரித்து பட்டர் நிர்வாகம்
கண்ணன் என் ஒக்கலையான் -வஸ்த்ரம் உதறி  பார்த்து
நரசிங்கா -வாடும் -ஸ்தம்பம் இல்லா விடில் வாடும்
பிரகலாதன் போல் ஸ்தம்பம் இல்லாவிடில் வாடும்
கொடி தான் இவள் -உதவ மாட்டாயா
பிரகலாதன் தெளிவி மத்த சர்வம் அஹம் சர்வம்
இவளோ கலங்கி -அபலைக்கு தோற்ற மாட்டானா
தகப்பன் பகை ஆனால் உதவ -நீரே பகையே என்றால் உதவ மாட்டாயோ
ஞான நிஷ்டருக்கு உதவ பக்தி நிஷ்டர்க்கு மாட்டாயா
ஆண்களுக்கு உதவி பெண்ணான இவளுக்கு
சேராத வடிவு சேர்த்து உதவி இருந்த படியே வந்தால் போதுமே
அதிகாரி கால அங்கம் நியதி
ரஷனதுக்கு புது முகம் பண்ண வேண்டுமா
கொம்பை இழந்த தளிர் போலே வாடும்
முதல் வாட்டம் தளிர் போல் அனந்தரம் தர்மி லோபம்
அழியும் இல்லை வரும் என்கிற ஆசையால் முடிக்க பெற வில்லை
வாள் நுதல் அழகுக்கு இலக்கானார் அவன் பட வேண்டியதை இவள் பட
இவள் போல் இன்னும் ஒரு உக்தி உண்டாக்க முடியாதே சர்வ சக்தன்

 

தாதா யதா பூர்வம் சிருஷ்டி -முன்பு போல் –
ஊனில் வாள் கல்வியால் வந்த புகர் இன்னும் அழியாமல் தேஜஸ்
அப்படியே இருக்க
அம்பு பட்டு முடிந்தரையும் நீரில் பட்டு முடிந்தாரையும் நெற்றி புகர்
குணாதிக விஷய இழவு முகத்தில் எழில் கொண்டு அறியலாமே

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-3-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 25, 2012

குழாங்கொள் பேர்அரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென்குருகூர்ச் சடகோபன் தெரிந்துஉரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவைபத்தும் உடன்பாடிக்
குழாங்களாய் அடியீர்! உடன் கூடிநின்று ஆடுமினே.

    பொ- ரை : ‘இராக்கதர்களைக் கூட்டம் கூட்டமாக உடையவனும் எல்லாவற்றாலும் பெருமை பெற்றவனும் ஆன இராவணனுடைய குலமானது முற்றும் அழியுமாறு சீற்றங்கொண்ட இறைவன் விஷயமாக, ஸ்ரீவைஷ்ணவர்கள் கூட்டம் கூட்டமாய்த் தங்கியிருக்கிற அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் ஆராய்ந்து அருளிச் செய்த பத்து நூறுகளையுடைய ஆயிரம் பாசுரங்களில், இப்பத்துப் பாசுரங்களையும் அடியவர்களே பொருள் உணர்ச்சியோடே அன்பிற்குப் போக்கு வீடாக வாய் விட்டுப் பாடிக் கூட்டங்கூட்டமாகச் சேர்ந்து நின்று அனுபவியுங்கள்,’ என்றவாறு.

    வி – கு : ‘அடியீர்! குழாங்களாய், இவை பத்தையும் உடன் பாடி உடன் கூடி நின்று ஆடுநின்,’ எனக்கூட்டுக. வீய – வினையெச்சம்; ‘வீ’ என்பது பகுதி; ‘சாக’ என்பது பொருள். முனிந்தவன் -வினையாலணையும் பெயர்.

    ஈடு : முடிவில், ‘இத்திருவாய்மொழியை ‘உனக்கேநாம் ஆட் செய்வோம்’ என்று இருக்கும் அடியவர்கள், 1என்னைப் போன்று தனித்திராமல் திரளாக அனுபவியுங்கள்,’ என்கிறார்.

    குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை – 2’சீதா பிராட்டியின் பொருட்டு, பாணங்களால் இவ்வுலகத்தில் பிசாச சாதி அற்றதாயும், இராக்கத சாதி அற்றதாயும் செய்வேன்’ என்கிற படியே, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களும் உறவினர்களுமான இவர்களாலே குழாங்கொண்டு வரத்தின் வலிமை தோள் வலிமை என்பனவற்றால் தழைத்து வேர் ஊன்றின இராக்கதனுடைய சாதியினைக் கிழங்கு எடுத்த சக்கரவர்த்தி திருமகனை.

    குழாம் கொள் தென்குருகூர்ச் சடகோபன் – அடியார்கள் கூட்டத்தைக் கொண்ட அழகிய திருக்குருகூரில் அவதரித்தஸ்ரீசடகோபர். ஜனஸ்தானம் அடியறுப்பு உண்ட பின்பு தண்ட காரண்யத்தில் முனிவர்கள் குடி ஏறியது போன்று,‘வாயும் திரையுகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான நிலையினின்றும் தப்பிய ஆழ்வாரைக் காணவேண்டும் என்னும் பேரவாவோடு ஸ்ரீவைஷ்ணவர்கள் அடையத் திரண்டு வந்து சேர்ந்தார்களாதலின், ‘குழாங்கொள் தென்குருகூர்’ என்கிறார். 1‘நல்லார் நவில் குருகூர்’ அன்றோ? சத்துகள் இருந்த இருந்த இடங்களிலே வாய் புலற்றும்படியான தேசமானால், அத்தேசத்திலுள்ளார் திரளச்சொல்லவேண்டா அன்றோ? தெரிந்து உரைத்த குழாம் கொள்ஆயிரத்துள் – உள்ளபடி அநுசந்தித்துச் சொன்ன பத்துப்பாட்டு ஒரு திருவாய் மொழியாய், பத்துத் திருவாய்மொழி ஒரு பத்தாய், இப்படிப் பத்துப் பத்தான ஆயிரம். திரண்ட ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஜீவனமாக இவை இருத்தலின், ‘குழாம் கொள் ஆயிரம்’ என்கிறார். ‘ஆயின் திருவாய்மொழி ஜீவனம் ஆகுமோ?’ எனின்,2‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன், அண்டத்து அமரர் பெருமான் அடியேனே’ என்பது இவருடைய திருவாக்கு. இவை பத்தும் உடன் பாடி – இவை பத்தையும் பொருள் உணர்ச்சி நிறைந்த கருத்தோடு பாடி. குழாங்களாய் -என்னைப் போன்று பருகிக் களித்தேனே’ என்று கூறி, குழாம் தேட இராதே, முற்படவே திரளாக இழியப் பாருங்கள். அடியீர் உடன் கூடி நின்று ஆடுமின் – அவன் பக்கலிலே 3நிக்ஷிப்தபரராய் இருக்கிற நீங்கள் 4நால்வர் இருவர் இங்கிருக்குமெ 5நான்கு நாளும் தள்ளத் தக்க அர்த்த காமங்களைப் பற்றிச் ‘சீறு, பாறு’ என்னாதே, நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுமளவும் ஒரு மிடறாய் அனுபவிக்கப் பாருங்கள்.

 

 

முதற்பாட்டில், திருவுள்ளத்தைக் கொண்டாடினார்; இரண்டாம் பாட்டில், அதனையும் இசைவித்த இறைவனைக் கொண்டாடினார்; மூன்றாம் பாட்டில், தம் நெஞ்சிற்பட்டதோர் உபகாரத்தைக் கூறினார்; நான்காம் பாட்டில், அவ்வுபகாரத்திற்குக் கைம்மாறாக ஆத்தும சமர்ப்பணம் பண்ணி அது தனக்கு வருந்தினார்; ஐந்தாம் பாட்டில், ‘எனக்குப் பிரதம சுகருதமும் நீயேயான பின்பு உன் திருவடிகளைக் கிட்டினேனேயன்றோ?’ என்றார்: ஆறாம் பாட்டில், ‘இன்றோ கிட்டிற்று? தேவரீர் எனக்கு விசேடமான திருவருள் பண்ணின அன்றே பெற்றேனே அல்லேனோ?’ என்றார்; ஆறாம் பாட்டில், ‘இன்றோ கிட்டிற்று? தேவரீர் எனக்கு விசேடமான திருவருள் பண்ணின அன்றே பெற்றேனே அல்லேனோ?’ என்றார்; ஏழாம் பாட்டில் இனிமையை நினைத்து ‘உன்னைப் பிரியில் தரியேன்’ என்றார்; எட்டாம் பாட்டில், யிப்படி எல்லையற்ற இனியனானவனை எளியது ஒரு வரிகாலே அடையப் பெற்றேன்’ என்றார். இனி, ‘பல காலம் கூடிச் செய்து பெறக் கூடிய தவத்தின் பலத்தை அவனைப் பின் சென்று மிக எளிதில் அடைந்தேன் என்கிறார்’ எனலுமாம். ஒன்பதாம் பாட்டில், ‘என்னுடைய எல்லாத் துக்கங்களும் போகும்படி அனுபவித்துக் களிப்பார் திரளிலே போய்ப் புகப்பெறுவது எப்போதோ?’ என்றார்; முடிவில்,’ இத்திருவாய்மொழியைக் கருத்தோடு கூடிக் கற்று, நான்கு நாளும் நால்வர் இருவர் உள்ளார் கூடியிருந்து அனுபவிக்கப்பாருங்கோள்,’ என்றார்.

 

 

அனுகூலர் கிடையாமையாலே ‘நால்வர் இருவர்’ என்கிறார்; நம்பிள்ளை நஞ்சீயரைப்

பார்த்து, ‘இதர உபாயங்களுக்கு அனுஷ்டாதாக்கள் பலராய் இருக்க, இதற்கு
அநுஷ்டாதாக்கள் மிகச் சிலராய் இருத்தற்குக் காரணம் யாது?’ என்று கேட்க, ‘உலகத்தில்
இருந்ததே குடியாக அனைவரும் சமுசாரிகளாக இருக்க, அதில் நாலிரண்டுபேர் உத்தம
ஆஸ்ரமிகளானால் சமுசாரிகளுக்கு ஒரு உத்கர்ஷமும் சந்யாசிகளுக்கு ஒரு அபகர்ஷமுமெ
உண்டோ? சுவர்க்க அனுபவத்துக்கு ஜ்யோதிஷ்டோமமெ முதலிய யாகங்களைச்
சாதனமாகச் சாஸ்திரங்கள் விதிக்கின்றன; ஓர் ஊரில் ஒரவனன்றோ யாகம் செய்தான்
என்று கேள்விப்படுகிறோம்? ஆதலால், இதற்கோ உமக்கு ஆள் பற்றப் போகிறது?’
என்று நம்பிள்ளைக்கு நஞ்சீயர் அருளிச் செய்த விடை இங்கு நினைவு கூர்க.

நிகமத்தில் பகவத் ஏக போதராய் இருப்பார்
என்னைப் போலே தனிப்படாதே திரளாக அனுபவிப்பார் –
குழாம் கொள் பேர் அரக்கன் -அவனும் கோஷ்டியாக தான்
ஆழ்வார் திரு நகரியிலும் கோஷ்டி
ஆயிரம் இதுவும் குழாம்
கோஷ்டி யாக கூடு அனுபவிக்க
வர புஜ பலம் ஜாதியாக கிழங்கு எடுத்த சக்கரவர்த்தி திரு மகன் –
ராஷசன் இல்லாமல் செய்தான் -குலமே நாசம்
விபீஷணன் ராஷசன் இல்லை அஸ்மாகம் -ராஷசாம் பலாபலம் கேட்டார்
தண்ட காரன்யம்குடி ரிஷி எரிந்து போல்
ஊனில் வாழ் வானில் திரை உகளும் ஆழ்வாரை துக்கம் போன
நல்லாவர் நவில்குருகொர்ர்சத்துக்கள் வாய் புலத்தும்
இருந்த இடங்களில் -வாய் புலத்தும்
நல்லவர் சொல்ல கூடிய என்றால் நல்லார் இருப்பார் சொல்ல வேண்டுமே
வந்தவர்களுக்குததீயாராதனை தொண்டர்க்கு அமுது உண்ண
இவை பத்தும் -பத்து பத்தான ஆயிரம்-குழாம் கொண்ட ஆயிரம் –
திரண்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குஜீவனம் கூறு கூறாக அருளி
உடன் பாடி-அர்த்தத்துடன் பாடி
குழாம் உடன் கூத்தாட –
குழாம் தேட இராதே -முற்படவே திரளாகவே இழியப்பாரும்
அடியீர் உடன் நின்று ஆடுமினோ
நால்வர் இருவர்  -அர்த்த காமம் பாராதே -சீறு பாரு இருக்காமல்
ஒரு மிடராய்-ஒற்றுமையாக இருந்து -பரம பதம் அனுபவிக்க பாரும் கோள்  நியமனம் -பலம் இல்லை
பாட்டு தோறும் சொல்லிய அர்த்தம் அருளி -இங்கு இருக்கும் நாலு நாளும் அனுபவிக்க பாரும் கோள் என்கிறார்

 

திருவாய்மொழி நூற்றாந்தாதி  

        ஊனம்அற வேவந்து உள்கலந்த மால்இனிமை
யானது அனுபவித்தற்கு ஆம்துணையா -வானில்
அடியார் குழாம்கூட ஆசையுற்ற மாறன்
அடியா ருடன்நெஞ்சே! ஆடு.

திண்ணன்வீடு பிராசன்கிகம்
இனிமை அனுபவிக்க துணை வானில் அடியார் குழாமுடன் கூட ஆசை கொண்டார்
ஊனமஅறவே   இன்றி ஏக த்ரவ்யம் போல்களந்த இனிமை
மாறன் அடியார் உடன் நெஞ்சே ஆடு என்கிறார்
திரு தாயார் பாசுரமாக அடுத்த திருவாய்மொழி –

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-3-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 25, 2012

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணிமூப்பு இறப்புஅற்று
ஒளிகொண்ட 2சோதியமாய் உடன்கூடுவது என்றுகொலோ
துளிக்கின்ற வான்இந்நிலம் சுடர்ஆழி சங்குஏந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே.

    பொ – ரை : நினைத்த பொருள் கிடைக்கப் பெற்றமையால் உளதாகும் களிப்பும், அது கிடைக்கப்பெறாமையால் உளதாகும் துன்பமும் நீங்கி, இவை இரண்டற்கும் அடியான பிறப்பும், பிறப்புள்ள இடத்தே சென்று புகுகின்ற நோயும், வேறு ஒன்றால் நீக்க ஒண்ணாத முதுமையும்.இறப்பும் நீங்கி, பேரொளி மயமான திருமேனியினை உடையோமாய், மழையினைப் பெய்கிற ஆகாயத்தையும், பூமியையும், ஒளியுடன் கூடிய ஆழியினையும் சங்கினையும் ஏந்திக் காத்தருளுகின்ற ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் கொண்ட இறைவனைச் சார்ந்த நித்திய சூரிகளுடைய கூட்டத்தை ஒரு நீராம்படி உடன்பட்டுக் கூடுவது என்றோ?

  வி – கு : ‘வாசனையும் இந்நிலத்தையும், ஆழி சங்கு ஏந்தி அளிக்கின்ற பிரான் அடியார்கள் ருழாங்களை, அற்று அற்றுச் சோதியமாகி உடன் கூடுவது என்றுகொலோ’ எனக் கூட்டுக. ‘களிப்புக் கவர்ச்சிகளும் பிறப்புப் பிணி மூப்பு இறப்புகளும் முதலாயின இன்றி உயிர் நிரதிசய இன்பத்ததாய்’ நிற்றலின், வீட்டினைப் ‘பேரா இயற்கை’ என்னும் விசேடவுரை இத்திருருப்பாசுரத்தைக் கொண்டு எழுந்ததாகும் (திருக்குறள். 370). சோதியம் – தனித்தன்மைப் பன்மை. ‘கொல், ஓ’ என்பன அசை நிலைகள்.

    ஈடு : பத்தாம் பாட்டு. ‘களித்தேனே’ என்றவர், மீண்டும், ‘இவ்வுலகமக்களோடு பொருந்தியிருத்தல் நீங்கி, இவ்வனுபவத்திற்குத் தேசிகரான நித்திய சூரிகள் திரளில் போய்ப் புகுவது எப்போதோ?’ என்கிறார்.

  களிப்பும் – சிற்றின்ப நுகர்ச்சியாலாய களிப்பும், கவர்வும் – ஆசைப்பட்டு அவை பெறாத போது வரும் துன்பமும், அற்று- நீங்கி, பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று –1இவை இரண்டற்கும் அடியான பிறப்பும், அது புக்க இடத்தே புகக் கூடிய நோயும், பின்னர் வருகின்ற முதுமையும், ‘இவற்றோடேயாகிலும் இருந்தால் ஆகாதோ?’ என்றுநினைத்திருக்கும் போதே வருகின்ற இறப்பும் ஆகிய இவ்வனைத்தும் நீங்கி. ஒளிக்கொண்ட சோதியமாய் – இராசசம் தாமசம் கலந்த இச்சரீரத்தைப் போன்றது அன்றியே, சுத்த சத்துவ மயமாய் எல்லையற்ற ஒளியுருவமான சரீரத்தையுடையோமாய். உடன் கூடுவது என்றுகொலோ –2‘நான், எனக்கது’-என்று அகல வேண்டாத இவ்வுடம்பை உடையார் திரளிலே போய்ப் புக்கு நெருக்குப் பெறுவது என்றோ!.   துளிக்கின்ற வான் இந்நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி அளிக்கின்ற மாயப் பிரான் – மழையினைப் பெய்கின்ற ஆகாயம், அதனால் விளையக் கூடிய இந்தப் பூமி இவற்றைக் 1கடற்கரை வெளியில் நோக்கியது போன்று, திவ்ய ஆயுதங்களைத் தரித்து நோக்குகிற ஆச்சரியத்தையுடையவன். பரமபதத்தில் ஆபரணங்களாகக் காட்சி அளிக்கிற இவை இங்கு ஆயுதங்களாகக் காட்சி அளிப்பன ஆதலின், அளித்தற்குச் சுடர் ஆழியினையும் சங்கையும் கருவிகளாக ஒதினார்.

   அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ – ‘இவ்வாறு காக்கின்ற அக்காத்தல தொழிலுக்குத் தோற்றிருப்பராய், அவ்விறைவனைப் போன்றே அடையத் தக்கவருமாய், இறைவனுடைய நற்குணங்களுக்குத் தேசிகராய் இருப்பாருமாய், தம் அனுபவங்களை ஒருவர்க்கொருவர் உணர்த்திக்கொண்டு கலந்து பழகுவதற்குத் துணையாக இருக்கின்றவர்களுமாய் உள்ள நித்திய சூரிகளுடைய குழாங்களைச் சென்று சேர்வது எப்போதோ!’ என்கிறார். 2‘கலியர் கல அரிசிச் சோறு உண்ண வேண்டும்’ என்று நினைக்குமாறு போன்று, இவரும் ‘அத்திரளில் போய்ப்புகப்பெறுவது என்றோ!’ என்கிறார். ஆற்றாமையின் மிகுதி இங்ஙனம் கூறச்செய்கின்றது.      

பாண்டி நாட்டினின்றும் ஸ்ரீ வைஷ்ணவர் சிலர் வந்து நம்பிள்ளையைக் கண்டு வணங்கித்
‘தேவரீர், எங்களுக்குத் தஞ்சமாக இருப்பது ஒரு வார்த்தையருளிச்செய்யவேண்டும்,’
என்று விண்ணப்பம் செய்ய, பிள்ளையும் ‘கடற்கரை வெளியை நினைத்திருமின்’ என்று
அருளினார். அவர்களும் ‘மணற்குன்றையும் காவற்காட்டையும் நினைத்திருக்கவோ?’
என்று விண்ணப்பம் செய்ய, பிள்ளையும் புன்முறுவல் செய்து அருளிச்செய்தபடி:
‘சக்ரவர்த்தி திருமகன் கடற்கரையில் படைவீடு செய்திருக்கும் போது ஸ்ரீவானரவீரர்கள்
இராகவார்த்தே பராக்ராந்தராய்த் தங்களை உபேக்ஷித்துப் பெருமாளையே
நோக்கிக்கொண்டு கிடக்க, இவர்கள் கண்ணுறங்குந்தனையும் தான் உறங்கி, இவர்கள்
கண்ணுறங்கினவாறே அம்பறாத் தூணியை முதுகிலே கட்டித் திருக்கையிலே பிடித்த
சார்ங்கமும் திருச்சரமுமாய் இராமுற்றும் நோக்கின சக்கரவர்த்தி திருமகனுடைய
திருவடிகளே தஞ்சமென்று இருமின்,’ என்று அருளினார். ஆகையால், ஸ்வ ரக்ஷண
சிந்தையற்று நியதனாகவே சர்வ ரக்ஷகன் கைக்கொண்டு ரஷிக்கும் என்றபடி’ என்ற
நம்பிள்ளையில் இத்திருவாக்கு ஈண்டு ஒப்பு நோக்குக.

இந்த திருவாய் மொழிக்கி -நிதான பாசுரம் இது 
மீண்டும் சம்சாரிகள் உடன் இன்றி அடியார்கள் குழாமுடன் கூடுவது என்று கொலோ –
களிப்பு சந்தொஷம்கவரவு துக்கம் 
பிறப்பு பிணி மூப்பு இறப்பு போய் 
ஒளிக் கொண்ட சோதியமாய் -அடியார் உடன் கூடுவது 
யார் அடியார் -எம்பெருமான் 
துளிக்கிற்ற 
வான் -சங்கு சக்கரம் கொண்டு காக்கும் –
சம்சாரம் -இதர விஷய அனுபவம்பெற்று இன்பம்கிடையாத போது துக்கம் 
பிறவி உடன் பிறந்தே கொள்ளும் வியாதி -சரி மூப்பு –
இவை அனைத்தும் தொழிந்து 
ரஜஸ் தமஸ் கலந்த இந்த சரீரம் 
அப்ராக்ருத சரீரம் 
யான் எனக்கு என்று இருக்கும் இங்கு போல் இன்றி 
அத் திரளிலே -வைஷ்ணவ சகவாசம் அஹங்காரம் இன்றி -அங்கெ –
துளிக்கின்ற வான் -வர்ஷிக்கும் ச்வாபவம் உடைய ஆகாசம் 
இந்நிலம் பூமி அனைத்தும் காக்கும் 
கடற்கரை வெளியிலே நோக்கினது போல் –
வானரங்களை -பெருமாள் –
இரவில் கண்  அவை அசர-தான் விழித்து கையும் வில்லுமாக -சுற்றி –
சுக்ரீவேச -கூடி  காத்தான் -அர்த்தம் இல்லை -சுக்ரீவன் கூடிய படையை ரஷித்தான்-பெருமாள் 
சுடர் ஆழி சங்கு ஏந்தி -அடியவர்களை ரஷிக்க 
சதா பஞ்சாயுதம்  விப்ரத் -விளம்பம் பட்டர் -சித்தமாக -பிரயோக சக்கரம் வேற நம் பெருமாள் 
ஆபரணமாய் கிடக்கும் அங்கெ இங்கே திவ்ய ஆயுதமாய் 
அடியார் -ரஷனத்தில் தோற்று இருப்பாரே 
அவனை போல் பிராப்யர் 
பகவத் குணம் தேசிகர் 
போதயந்த பரஸ்பரம் -துஷ்யந்தி ரமந்தி -கேட்டும் சொல்லியும் 
ஸ்ரோதா பக்தா -இரண்டு ஆனாந்தம் 
உடன் கூடுவது ==கலியர் கல அரிசி சோறு -தேடுவது போல் -தேடுகிறார் –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-3-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 25, 2012

கடிவார்தண் ணந்துழாய்க் கண்ணன்விண் ணவர்பெருமான்
        படிவானம் இறந்த பரமன் பவித்திரன்சீர்ச்
        செடியார் நோய்கள்கெடப் படிந்து குடைந்துஆடி
        அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே.

    பொ – ரை : வாசனை மிகுந்துள்ள குளிர்ந்த அழகிய திருத்துழாயினை அணிந்த கண்ணபிரானும், நித்தியசூரிகட்குத் தலைவனும், பரமபதத்திலும் தன் திருமேனிக்கு ஒப்பான பொருள் இல்லாதபடி இருக்கிற மேலானவனும், பரிசுத்தத்தைக் கொடுக்குமவனும் ஆன இறைவனுடைய நற்குணங்களில், தூறு மண்டிக் கிடக்கிற நோய்கள் எல்லாம் கெடும்படியாகப் படிந்து குடைந்து ஆடி வாய்மடுத்துப் பருகி அடியேன் களித்தேன்.

    வி-கு : கடி – வாசனை. வார்தல் -ஒழுகுதல்; அதாவது, மிகுதல். படி – திருமேனி. ‘படிமை’ என்னும் சொல்லின் விகாரம். வானம் – பரமபதம். இறத்தல் – கடத்தல். செடி – தூறு. ‘பவித்திரன் சீரிலே அடியேன் நோய்கள் கெடும்படியாகப் படிந்து குடைந்து ஆடி அச்சீரை வாய்மடுத்துப் பருகிக் களித்தேன்,’ என முடிக்க. ‘சீரை வாய்மடுத்துப் பருகி’ என்கிறார்; ‘உண்டற்கு உரிய அல்லாப் பொருளை, உண்டன போலக் கூறலும் மரபே’ என்பது விதி.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘இவ்வுயிரானது முற்றறிவினனான இறைவனுடைய நற்குணங்களை அவ்விறைவனோடு அனுபவிக்கின்றது’ என்கிறபடியே, தம்முடைய எல்லாத் துக்கங்களும் போகும்படி ‘இறைவனை அனுபவிக்கப்பெற்றேன்’ என்று மகிழ்கிறார்.

    கடி வார் தண் அம் துழாய்க் கண்ணன் – வாசனை மிகுந்துள்ள திருத்துழாய் மாலையினையுடைய கிருஷ்ணன். இனி, ‘கடி வார்’ என்பதற்குத் ‘தேன் ஒழுகுகின்ற’ என்று பொருள் கூறலுமாம். விண்ணவர் பெருமான் – இவ்வொப்பனை அழகாலே எழுதிக் கொள்வது 2அனந்தன் வைநதேயன் முதலிய நித்தியசூரிகளை யாதலின் ‘துழாய்க் கண்ணன்’ என்றதனை அடுத்து, ‘விண்ணவர் பெருமான்’ என்கிறார். படி வானம் இறந்த பரமன் – எல்லா வகையாலும் தன்னை ஒத்திருக்கிற பரமபதத்திலுள்ள நித்தியசூரிகளும் தன் தன்மைக்கு ஒப்பாகாதபடி இருக்கிற பரமன். படி – தன்மை. வானம் இடவாகு பெயர். இனி, ‘தன் திருமேனிக்கு மேகமும் ஒப்பாகாதபடி இருக்கிற பரமன்’ எனலுமாம். படி – திருமேனி. வானம் மேகம்.  பவித்திரன்- இவ்வடிவழகைச் சமுசாரிகளும் அனுபவிக்கைக்குத் தக்கவராம்படி செய்யும் சுத்தியையுடையவன்.

    சீர் – அவனுடைய கல்யாண குணங்களை. செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே – அடி காண ஒண்ணாதபடி தூறுமண்டிக் கிடக்கிற தீய வினைகளெல்லாம் போகும்படி வந்து கிட்டி, நான்கு மூலைகளிலும் புக்கு உட்புகுந்து, வேறு ஒருவர்க்கும் உரியன் அல்லாத யான் முழுமிடறு செய்து அனுபவதித்து, 1யமன் முதலியோர் தலைகளிலும் அடியிட்டுக் களிக்கப் பெற்றேன். சிற்றின்பம் துக்கமே ஆயது போன்று, பகவத் குணானுபவம் களிப்பே ஆதலின், ‘களித்தேனே’ எனத் தேற்றேகாரம் கொடுத்து ஓதுகிறார். படிதல் – கிட்டுதல். குடைதல். எங்கும் புகுதல். ஆடுதல் – உட்புகுதல். வாய்மடுத்துப் பருகுதல் – பெருவிடாயோடே அனுபவித்தல்.    

 

சர்வேஸ்வரனை அனுபவிக்க பெற்றேன் –

 

பிரம்ம னான சக சர்வான் காமான் அச்துதே –

 

அவன் கூட -ஆசை யோடு -அவன் குணங்கள் அவனுக்கே ஆசை –

 

சகல துரிதங்களும் போம் படி 

 

கடி வாசனை மிக்கு -கண்ணன் -திருவாய் மொழி -முழுவதும் 

 

படி ஒப்பு வானம் -நித்ய சூரிகள் -கூட ஒப்பு இல்லை பவித்ரன் சீர் காமா -கல்யாண 

 

செடியார் நோய்கள் கெட 

 

படிந்து குடைந்து ஆடி வாய் மடுத்து 

 

தேன் பெருகும் திரு துழாய் –

 

விண்ணவர்பெருமான் -அனுபவிக்க நித்ய சூரிகள் 

 

படிக்கு ஒப்பு இன்றி -சாம்யா பத்தி பரமம் சாம்யம் உபாதி இருந்தாளுமொப்பு இன்றி 

 

படி திரு மேனி வானம்மேகம் கூட ஒப்பு இல்லை 

 

பவித்ரனை -சம்சாரிகளும் அனுபவிக்கும் படி சுத்தி 

 

சீர் கல்யாண குணங்கள் 

 

அவற்றை -அடிகாண ஒண்ணாத படி தூறு மண்டி கிடிகிற சாம்சார துக்கம் செடியார் நோய்கள் 

 

படிந்து -நாலு மூளையும் புக்கும் 

 

குடித்து ஆடி -வாய் மடுத்து அவஹாகித்து -ஆனந் யார்கண் முழு மிடறு செய்து அனுபவித்து 

 

யமாதிகள் தலை மேல் அடி இட்டு 

 

படிந்து -கிட்டி 

 

அடியேன் வாய் மடுத்து விடாயன் போலே 

 

களிப்பே ஆக இது 

 

இதரம் துக்கமே போலே .-

 

இரண்டிலும் ஏகாரம் 

    

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-3-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 25, 2012

குறிக்கொள் ஞானங்க ளால்எனை ஊழிசெய் தவமும்
கிறிக்கொண்டு இப்பிறப் பேசில நாளில்எய் தினன்யான்
உறிக்கொண்ட வெண்ணெய்பால் ஒளித்துண்ணும் அம்மானபின்
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர்கடிந்தே.

    பொ – ரை : உறியிலே சேமித்து வைத்த வெண்ணெயினையும் பாலினையும் மறைந்திருந்து புசித்த இறைவனுக்குப் பின்னே அவன் சென்ற வழியே சென்று திரிகின்ற நெஞ்சை உடையேனாய்ப் பிறவயினது துன்பத்தைக் கடிந்தேன்; ஆதலால், இயமம் நியமம் முதலிய எண்வகை உறுப்புகளை மேற்கொண்டு செய்வதனால் உளவாய ஞானங்களால் பல காலங்களாக ஈட்டப்படுவதான பரபத்தியை இறைவனுடைய திருவருளாகிய நல்ல உபாயத்தைக் கொண்டு இப் பிறப்பிலேயே சில நாள்களில் யான் அடைந்தேன்.

    வி – கு : ‘நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித்துயர் கடிந்தேன்; ஆதலால், தவத்தின் பலத்தை இப்பிறப்பே சில நாளில் எய்தினன்’ என்று கூட்டுக. கடிந்து – முற்று. “கழிந்தது பொழிந்தென வான் கண் மாறினும், தொல்லது விளைந்தென நிலம் வளங் கரப்பினும்’ (புறம். 203) என்புழிப் போன்று ஈண்டு, கடிந்து என்பதும் ‘கடிந்தேன்’ என்னும் பொருட்டாய் நின்றது, இனி, இதனை எச்சமாக்கி, ‘கடிந்து எய்தினன்’ என முடித்தலுமாம். ஈண்டுத் தவம் என்றது, தவத்தாற் பெறும் பேற்றினை; தவத்தாலாய பயனைத் தவம் என்றார். ‘குறி’ என்றது, இயமம் நியமம் முதலிய எட்டினை; குறித்துக்கொள்ளப்படுதலின் அவற்றைக் ‘குறி’ என்றார். குறித்தல் – கருதுதல். ‘எனை’ என்பது, ‘எத்தனை’ என்ற சொல்லின் மரூஉ. கிறி – உபாயம்.

ஈடு : எட்டாம் பாட்டு. 1‘என்னைக் குறிக்கொள்ளே’ என்றவாறே, அவன் குளிரக் கடா க்ஷித்தான்; அதனால் எல்லாத் துன்பங்களும் போய் அவனை அனுபவிக்கிறார்.

 

    குறிக்கொள் ஞானங்களால் –2இயமம் நியமம் முதலியவற்றிலே கருத்து ஊன்றியவர்களாய்க் கொண்டு சம்பாதிக்கவேண்டும் ஞான விசேஷங்களாலே. அவையாவன: 3கேட்டல் மனனம் உபாசனம்முதலிய நிலை விசேடங்கள். எனை ஊழி செய்தவமும் – பல கல்பங்கள் கூடிக் கேட்டலாய் மனனமாய்ப் பாவனையாய் இங்ஙனம் வரக்கூடிய தான தவத்தின் பயனை. கிறிக்கொண்டு -ஒரு முயற்சியும் இன்றியே இருப்பது ஒரு விரகைப் பெற்று. அதாவது, ‘அவன் தன்னையே கொண்டு’ என்றபடி. ‘ஆயின், ‘கிறி’ என்றால், இறைவனைக் காட்டுமோ?’ எனின்,4‘பெருங்கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே’ என்ற இடத்தில் இறைவனைக் ‘கிறியான்’ என்று ஓதியிருத்தல் காண்க. ‘இதுதான் எத்தனை பிறவிகள் கூடி?’ என்னில், இப்பிறப்பே – இந்தப் பிறிவியிலேயே. ‘இப்பிறவியின் வாழ்நாள்முழுதும் கூடியோ?’ என்னில், சில நாளில் – சில நாள்களிலே ‘அழகிது! நீர் அப்பேற்றினைப் பெறப் போகின்றவராய்

நிற்கின்றீரோ?’ என்ன, எய்தினன் – அடைந்தேன். யான் – இப் பேற்றுக்கு ஒரு முயற்சியும் செய்யாத நான்.

 

    உறிக்கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் – உறிகளிலே சேமித்துக் கள்ளக்கயிறு உருவி வைத்த வெண்ணெயையும் பாலையும் ‘தெய்வம் கொண்டதோ!’ என்னும்படி மறைந்து அமுது செய்த அச்செயலாலே நாட்டை1 எழுதிக்கொண்டவனுடைய. பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய் -‘இறைவன் எவ்வெவ் வழியில் செல்லுகின்றான்? இவ்வுயிரும் அவ்வவ்வழியெல்லாம் கூடவே செல்லுகிறது’ என்கிறபடியே,2 அவன் பின்னே நெறிப்பட்ட நெஞ்சையுடையனாய். இதனால், ‘தவம் எய்தினன்’ என்கிற பலத்தைச் சொல்லுகிறாராதல். ‘பின் நெறி’ என்பது, ‘பிரபத்தியை’ எனலுமாம். பின் நெறி – 3பின்னே சொன்னவழி என்றபடி.

 

    பிறவித் துயர் கடிந்து – பலத்தைக் கூறுகின்ற சரமச் சுலோகத்தில் ‘எல்லாப் பாவங்களினின்றும் உன்னை விடுவிக்கின்றேன்’ என்று தடையின் நீக்கமும் கூறப்பட்டிருத்தலின், இப்பாசுரத்திலும் பலத்தைக் கூறிப் ‘பிறவித்துயர் கடிந்து’ என்று தடையின் நீக்கத்தையும் அருளிச்செய்கிறார். இனி, ‘உறிக்கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின் நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித்துயர் கடிந்து’ என்றதனால், பாரதப் போரில் அருச்சுனனுக்குச் சோக நிலையினை உண்டாக்கி, பின்னர் அன்றோ உபாயத்தை உபதேசித்தது? இவர், வெண்ணெய் களவு காணப்போன இடத்தில் அடி ஒற்றிக் கொண்டு சென்று, அவன் புக்க வீட்டிலே தாமும் புக்கு, 4அவன் வெளி வாராமல் படலைத் திருகி வைத்து, உபாய நெறியினைக் கேட்டு அறிந்து, பின் பிறவித்துயர் கடிந்தார் என்ற தொனிப்பொருளும் தோன்றும். 

 

 இமயம் நியமம் முதலியவை எண்வகை யோக உறுப்புகள் எனப்படும். அவை, 
‘ஆதனம், இயமம், நியமம், பிராணா யாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி’
என்பன. இவற்றுள், இயமம் – கொல்லாமை, வாய்மை முதலியன. நியமம் – தத்துவ நூல்
ஆராய்ச்சி, தெய்வ வழிபாடு முதலியன. ஆதனம் – இருப்பு அது ஸ்வஸ்திகம் முதலாக
எண்வகைப்படும். பிராணாயாமம் – பிராணவாயுவை ரேசக பூரக கும்பகஞ்செய்தல்; இது
‘உயிர் நிலை, வளி நிலை’ எனப்படும். பிரத்தியாகாரம் – மன ஒருக்கம்; இது ‘தொகை
நிலை’ எனவும் படும். அது உபாதியை நீக்கி உள் நோக்கல். தாரணை – கண்டம்,
இதயம், நெற்றி, கபாலம், நாபி இவற்றுள் ஒன்றில் எப்பொழுதும் சிந்தையை வைத்தல்;
இது, ‘பொறைநிலை’ எனவும்படும். சமாதி – இந்திரியம் முதலிய தத்துவங்களின்
சேஷ்டைகளுக்கு ஏதுவாகிய உடம்பினுள் நின்று அவற்றோடு கூடினும் அவற்றில்
பற்றின்றி இருக்கும் ஆத்துமாவாகிய தன்னைத்தான் காண்டல்.

குளிர கடாஷித்தான் இதை கேட்டதும் -ப்ரீதராய் பேசுகிறார் 

விஸ்லேஷ சங்கை போலே நான் உபகரித்தேன் –
நீர் என்னயுன விச்லேஷத்துக்கு பிரசங்கமுண்டா 
அல்ப காலத்தில் இந்த ஜன்மத்தில் அயத்னம் இன்றி மிக்க புருஷார்த்தம் 
நிர்கேதுக கிருபை 
குறிக்கோள் ஞானம் -கிரிக் கொண்டு சில நாழி எய்தினேன் 
இப்பிறப்பே இன்றே இப்பழுதே 
ஆச்சார்யா ஹிருதயம் இந்த பாசுரம் காட்டுவர் 
உறிக் கொண்ட வென்னே பால் ஒளித்து உண்ணும் அம்மான் 
அவன் பின் போகும் நெஞ்சு கொண்டு பிறவி துயர் போக்கி கொண்டேன் 
குறிக் கொள் யம நியமம் -அஷ்ட -பக்தி யோக அங்கம் -இவை -த்யானம் சமாதி இடைவிடாமல் –
காமக்ரோதம் விட முடியாமல் -அவகிதராய் கவனம் கொண்டு சம்பாதிக்கும் பகவான் 
வேதனம் அறிவது த்யானம் நினைக்க உபாசனம் பிரீத்தி பூர்வகமாக 
ச்ரோதவ்ய மந்தவ்ய நிதிதாசவ்ய 
எனை ஊழி -அநேக கல்பம் காலம் கூடி சரவணம் -தப பலனை 
கிறி கொண்டு யத்னம் ஓன்று இன்றி கிறி அவனைக் காட்டுமோ 
பெரும் கிறியானை அல்லால் திரு விருத்தம் 
அல்பகாலத்தில் -எய்தினன் -அடைந்து விட்டேன் இறந்த  காலம் 
அடைய போக விஷயம் தபங்கள் மூலம் -அடைந்து விட்டேன் அவனை கொண்டே –
மாம் பழ கதை -கை மேல் பலன் -பிள்ளையார் பெற்றார் திருஷ்டாந்தம் –
கிரிக் கொண்டு இப்பிறப்பே சில நாளிலே பிராபித்தேன் 
யான் -இப் பேற்றுக்கு யத்னம் இன்றி 
தவம் எய்தினம் எதை -கிறி கொண்டு உபாயம் -உபேயம் உபாயம் 
அம்மான் பின் நெறிக் கொண்ட நெஞ்சன் –
உறி கொண்ட வெண்ணெய் பால் -கள்ளகயிறு உருவி வைத்த வெண்ணெய்- 
சம்சார முடிச்சு அறுக்க அறிந்தவன் –
வெண்ணெய் பால் -தெய்வம் கொண்டதோ என்னும்படி மறைத்து களவு கொண்ட அச் செயல் 
முடிச்சு அப்படியே இருக்கு —
உளம் கொண்ட விளம் கனி போல் உள் மெலிய புகுந்து நலம் கொண்ட நாரணர் –ஆண்டாள் பாசுரம் 
-யானை ஓட்டை உடைக்காமல் ரசம் உண்ணுமா போல் உண்டானே 
அச் செயலாலே உலகத்தை எழுதிக் கொண்டவன் 
பின்னே நெறிப்பட நெஞ்சு –
ஐ ஸ்வர்யா வாசனை இன்றி -அவன் ஒழித்தாலும் இவர் அறிவாரே அதனால் பின்னேபோக 
ஆத்மா திருடி -நான் தான் பெரிய கள்வன்  
வெண்ணெய் களவு காண புக்க இடத்தில் சரம ஸ்லோகம் கேட்டாராம் 
அர்ஜுனன் தேர் தட்டில் கேட்டது போல் 
ரசொக்தியாக தாதி பாண்டன் போல் பிறவி துயர் அப்படி போக்கிக் கொண்டான் 
அம்மான் பின் -அடி மேல் அடி வைத்து -பெரிய கள்ளன் இந்த சின்ன கள்ள கண்ணன் பின் போய் –

 குளிர கடாஷித்தான் இதை கேட்டதும் -ப்ரீதராய் பேசுகிறார் 

விஸ்லேஷ சங்கை போலே நான் உபகரித்தேன் –
நீர் என்னயுன விச்லேஷத்துக்கு பிரசங்கமுண்டா 
அல்ப காலத்தில் இந்த ஜன்மத்தில் அயத்னம் இன்றி மிக்க புருஷார்த்தம் 
நிர்கேதுக கிருபை 
குறிக்கோள் ஞானம் -கிரிக் கொண்டு சில நாழி எய்தினேன் 
இப்பிறப்பே இன்றே இப்பழுதே 
ஆச்சார்யா ஹிருதயம் இந்த பாசுரம் காட்டுவர் 
உறிக் கொண்ட வென்னே பால் ஒளித்து உண்ணும் அம்மான் 
அவன் பின் போகும் நெஞ்சு கொண்டு பிறவி துயர் போக்கி கொண்டேன் 
குறிக் கொள் யம நியமம் -அஷ்ட -பக்தி யோக அங்கம் -இவை -த்யானம் சமாதி இடைவிடாமல் –
காமக்ரோதம் விட முடியாமல் -அவகிதராய் கவனம் கொண்டு சம்பாதிக்கும் பகவான் 
வேதனம் அறிவது த்யானம் நினைக்க உபாசனம் பிரீத்தி பூர்வகமாக 
ச்ரோதவ்ய மந்தவ்ய நிதிதாசவ்ய 
எனை ஊழி -அநேக கல்பம் காலம் கூடி சரவணம் -தப பலனை 
கிறி கொண்டு யத்னம் ஓன்று இன்றி கிறி அவனைக் காட்டுமோ 
பெரும் கிறியானை அல்லால் திரு விருத்தம் 
அல்பகாலத்தில் -எய்தினன் -அடைந்து விட்டேன் இறந்த  காலம் 
அடைய போக விஷயம் தபங்கள் மூலம் -அடைந்து விட்டேன் அவனை கொண்டே –
மாம் பழ கதை -கை மேல் பலன் -பிள்ளையார் பெற்றார் திருஷ்டாந்தம் –
கிரிக் கொண்டு இப்பிறப்பே சில நாளிலே பிராபித்தேன் 
யான் -இப் பேற்றுக்கு யத்னம் இன்றி 
தவம் எய்தினம் எதை -கிறி கொண்டு உபாயம் -உபேயம் உபாயம் 
அம்மான் பின் நெறிக் கொண்ட நெஞ்சன் –
உறி கொண்ட வெண்ணெய் பால் -கள்ளகயிறு உருவி வைத்த வெண்ணெய்- 
சம்சார முடிச்சு அறுக்க அறிந்தவன் –
வெண்ணெய் பால் -தெய்வம் கொண்டதோ என்னும்படி மறைத்து களவு கொண்ட அச் செயல் 
முடிச்சு அப்படியே இருக்கு —
உளம் கொண்ட விளம் கனி போல் உள் மெலிய புகுந்து நலம் கொண்ட நாரணர் –ஆண்டாள் பாசுரம் 
-யானை ஓட்டை உடைக்காமல் ரசம் உண்ணுமா போல் உண்டானே 
அச் செயலாலே உலகத்தை எழுதிக் கொண்டவன் 
பின்னே நெறிப்பட நெஞ்சு –
ஐ ஸ்வர்யா வாசனை இன்றி -அவன் ஒழித்தாலும் இவர் அறிவாரே அதனால் பின்னேபோக 
ஆத்மா திருடி -நான் தான் பெரிய கள்வன்  
வெண்ணெய் களவு காண புக்க இடத்தில் சரம ஸ்லோகம் கேட்டாராம் 
அர்ஜுனன் தேர் தட்டில் கேட்டது போல் 
ரசொக்தியாக தாதி பாண்டன் போல் பிறவி துயர் அப்படி போக்கிக் கொண்டான் 
அம்மான் பின் -அடி மேல் அடி வைத்து -பெரிய கள்ளன் இந்த சின்ன கள்ள கண்ணன் பின் போய் –

 

அர்ஜுனனுக்கு  சொல்ல -கண்ணன் சொல்லி மொஹித்து நிற்கிறார் 
அந்த ரகஸ்யத்தை பின் சென்ற நெஞ்சன் 
அம்மான் உடைய பின் நெறி -பிரபத்தி பின்னே சொல்லிய நெறி பிரபத்தி -கொண்ட நெஞ்சினாய் பிறவித் துயர் 
பலத்தை சொல்லி விரோதி கழிந்ததும் 
பாரத சமரத்தில் அர்ஜுனனுக்கு ஒரு நிலை ஏற்படுத்தி பின்னே நெறி உபதேசித்தான் 
இவர் வெண்ணெய் களவு காண புக்கு -அடி ஒற்றி கொண்டு 
அவன் புகுந்த கிரகத்திலே படகை திருத்து வைத்து கையும் களவு –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி –
இப் பிறப்பில் சில நாளில் நான் எய்தினேன் 
ரசமான பாசுரம் 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-3-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 25, 2012

முன்னல் யாழ்பயில் நூல்நரம் பின்முதிர் கவையே!
பன்ன லார்பயி லும்பர னே!பவித் திரனே!
கன்ன லே!அமு தே!கார் முகிலே!என் கண்ணா!
நின்ன லால்இலேன் காண்;என்னை நீகுறிக் கொள்ளே.

    பொ – ரை : பழையதாய்ச் சிறந்ததாய் யாழ் விஷயமாகக் கற்கப் படுவதாய் உள்ள யாழ் நூல்களிற் பேசப்படுகின்ற இலக்கணத்தையுடைய நரம்பிலே பிரிந்த முதிர்ந்த சுவை போன்று இனியன் ஆனவனே! சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற நித்தியசூரிகள் அனுபவித்தாலும் முடிவு பெறாத இன்பமயமானவனே! பரிசுத்தத்தையுடையவனே! கரும்பின் ரசம் போன்றவனே! அமுதம் போன்றவனே! கார்முகில் போன்றவனே! என் கண்ணா! உன்னை அல்லாமல் வேறு ஒரு கதியினை யுடையேன் அல்லேன்; ஆதலால், என்னை நீ நினைத்தல் வேண்டும்.

    வி – கு : பன்னலார் – ஒரு சொல். ‘பன் நல்லார்’ எனப் பிரித்தலுமாம். பவித்திரம் – தூய்மை; அதனையுடையவன் பவித்திரன், கன்னல் – கரும்பு, அஃது ஆகுபெயராய் அதன் சாற்றின் கட்டிக்கு ஆயிற்று.

    ஈடு : ஏழாம் பாட்டு. இப்படி, 1தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் நினைத்தார்; இவ்விஷயத்தினுடைய இனிமையையும் அநு சந்தித்தார்; அநுசந்தித்து, ‘இது இருந்தபடி கண்டோமுக்குத் தொங்காது போலே இருந்தது’ என்று ஐயங்கொண்டு, ‘தேவர் என்னைக் கைவிடில் நான் உளேன் ஆகேன்; என்னைக் கைவிடாது ஒழியவேண்டும்,’ என்கின்றார்.

    முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர்சுவையே – சாஸ்திரத்தினுடைய பழமையதாய், அதுதான் சிறந்ததாய், யாழ் விஷயமாகக்கற்கப்படுவதாய் உள்ள நூல் உண்டு – சாஸ்திரம்; அந்நூலிற்கூறிய முறைப்படியே நரம்பிலே தடவப்பட்டு, அதிலே பிறந்த பண்பட்ட ரசத்தினைப் போன்ற இனிமையினை உடையவனே! மிடற்றினின்றும் பிறக்கும் இசையானது காலத்திற்கும் செயலுக்கும் ஏற்றவாறு விகாரங்களை அடையுமாதலின், மிடற்று ஒசையினைக் கூறாது, ‘நரம்பின் முதிர் சுவையே’ என்கிறார். இனி, ‘முன்னல்’ என்பதனை ஒரு மொழியாகக் கொண்டு, அதற்கு ‘நினைத்தல்’ என்று பொருள் கூறி ‘நினைத்தலாவது, யாழோசையின் இனிமையாலே ‘அது அது’ என்று வாய் புலற்றும்படி இருத்தல்’ என்று கூறலுமாம். இனி, ‘முன்னல்’ என்பதனை, முனல் என்ற சொல்லின் விகாரமாகவும், அந்த முனல் என்பதனை ‘முரல்’ என்ற சொல்லின் விகாரமாகவும் கொண்டு, முரல் என்பதற்கு ‘ஒலித்தல்’ என்று பொருள் கூறி, ஒலிக்கின்ற யாழ் என உரைப்பாரும் உளர்.

    இவ்வாறு இனிமை குறைவற்று இருந்தால் அவ்வினிமையினை நுகர்கின்றவர்கள் வேண்டும் அன்றே? அவர்களை அருளிச்செய்கிறார் மேல்: பன்னலார் பயிலும் பரனே- 1‘தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்’ என்கிறபடியே, தாம பலராய் இறைவனுடைய நற்குணங்கட்குத் தேசிகராய் இருக்கின்ற நித்தியசூரிகளால் அனுபவிக்கப்படுகின்றவனே! அயர்வு அறும் அமரர்கள் விடாது என்றும் நுகர்ந்தாலும் அதுகாறும் நுகர்ந்த பகுதி அளவுபட்டு, மேல் நுகரவேண்டிய பகுதிகளே மிக்கு இருப்பவன் ஆதலின், ‘பரனே’ என்கிறார். பவித்திரனே – பிறப்பிலே உழன்று திரிக்கின்றவர்களும், நித்திய சூரிகளைப் போன்று உன்னை அனுபவித்திற்குத் தக்கவர் ஆகும்படி அவர்கட்கும் சுத்தியைப் பிறப்பிக்குமவனே! இனி, ‘பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே’ என்பதனை ஒரே தொடராகக் கொண்டு, பன்னலார், -முமுக்ஷூக்கள்; ‘அவர்கள் எப்பொழுதும் அனுபவித்தாலும் தொலையாத இனிமையினையுடையையாய், அவர்கட்கும் உன்னை அனுபவித்தற்குத் தடையாக உள்ளனவற்றைப் போக்கும் சுத்தி யோகத்தையுடையவனே!’ என்று உரைத்தலும் ஆம்.

கார்முகிலே – வள்ளன்மையினைப் பற்றிக் ‘கார்முகிலே’ என்கிறார். என் கண்ணா – தன்னைக் கொடுத்தபடி. நின் அலால் இலேன் காண் – உன்னை ஒழிய அரைக்கணம் பிழைக்க மாட்டேன். இனி, இதற்கு, ‘உன்னை ஒழிய வேறு ரக்ஷகரை உடையேன் அல்லேன்’ என்று பொருள் கூறலுமாம். என்னை நீ குறிக்கொள் – உன்னை ஒழிந்த அன்று அறிவு அற்ற பொருளாகக் கிடக்கும் என்னை, இவ்வயிருக்குத் தாரகனாய் இருக்கிற நீ பார்த்தருள வேண்டும்; திருவுள்ளம் பற்றல் வேண்டும்’ எனலுமாம்.    கன்னலே – எனக்கு எல்லை அற்ற இனியன் ஆனவனே! அமுதே –2சாவாமல் என்னை உய்வித்துக்கொண்டு போகின்றவனே!

கை விடில் முடிவேன் -உளன் அல்லன்  ஆவேன் -என்கிறார் உடனே –

முதல் முன்னமே அடைந்தது -நித்தியமாக அவன் உடனே இருப்பதை தெரிவித்து

பெற்ற பேறு பெரியது –போக்யத்வம் வேறே –இது தம்மிடம் தங்குமோ சங்கை பிறந்தது –
அகலகில்லேன் இறையும் -பிராட்டி சொல்வது போல் -விஷய வை லஷண்யம் படுத்தும் பாடு ஆயத்து –
நீர் விட்டு போக கூடாது -போனால் தரித்து இருக்க மாட்டோம் –
தொங்காது போலிருந்தது அதி சங்கை பண்ணி
கை விடில் உளேன் ஆவேன் -யாழ் பயில் நூல் யாழினிசை வேதத்து இயல் சாம வேதம் சாஸ்திரம்
நரம்பின் -சப்த சுவை போல் இருப்பவனே -கான ஸ்வரூபி
பன்னலார் நித்யர் பயிலும் பரனே
பவித்ரன்
கன்னல் கருப்பஞ்சாறு –
நின் அலால்  இலேன் கான் என்னை குறிக்கோள்
முன்னல் ஒற்றைப் போக்கி -முன்னல் முனால் ஆக்கி -முறல் -முறலுதல் இசைத்தல் வண்டு முறலுகிறது
உன்னல் நினைத்தால் இனிமையால் அது அது என்று வாய் புலத்தல்
முன் பழமை நல் அதுவும் நன்றாய் -உயர்ந்த சாஸ்திரம் நூல்
யாழ் விஷயமாக அப்யசிக்கும் –
வியாகரண சித்தாந்தம் சுரத்தோடு  சொல்வார்கள் -அர்த்தம் சுரத்தோடு மாறுமே –
இந்திர சத்ரு வார்த்தைதா -யாகம் -இந்த்ரனை ஹிம்சிக்க -அவனால் கொல்லப்படுபவன் -இரண்டு அர்த்தம் –
த்ர்ஷ்டாந்தம் காட்டுவார்கள் சுரத்தின் முக்கியம்
பண் பட்ட ரசம் போல் போக்கியம் –
மிடத்தை சொல்லாது ஒழிந்தது -மிடறு தொண்டை -கர்மா அனுகுணமாக  போது செய்யுமது உண்டே
யாழ் -இந்த வாசி இல்லையே -குறை கிடையாது
போக்யதை நிறைய இருக்க போக்தாக்கள் வேண்டுமே
பன்னலார் -தெளியார் பலர் கை தோலும் தேவனார்
தாங்கள் பலராய் –கல்யாண குணம் அனுபவிக்கும் தேசிகர் -வல்லவர் நித்ய முக்தர்
பயிலும் -மீண்டும் மீம்டும் -சதா அனுபவம் செய்யா நின்றாலும் பரண்
அனுபூவிக்கும் வஸ்து -தான் பெரியது -அனுபவித்தது கை அளவு அனுபவிக்காதது கடல் அளவு
அனுபாவி அம்சம் பெருத்து
பவித்ரன் நித்ய சம்சாரிகளுக்கும்நித்ய சூரி போல் ஆக்கும் -சுத்தமாக ஆக்கி -அனுபவிக்க யோக்யதை கொடுப்பவன் –
அந்ய பரத்தை போக்கி உன் பக்கலி பிரவணர் ஆக்கி
சூதனாய் -கள்வன் -சூது –தெரிந்து பச்யதோ ஹரத்வம் -களவு -தெரியாமல் கொண்டு போவது –
ஆத்மா அபகாரமேபெரிய களவு -இது தூர்த்த சகவாசம் -ஆக்கி –
மாதரர் கயல் கண் வலையில் விழுந்து –கோயிலுக்கு போக =-அவளுக்கு அங்கு வேலை
போதரே என்று சொல்லி புந்தியில்
தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகனார் -சௌந்தர்யம் காட்டி ஈர்த்தான் –
அந்ய பரத்தை போக்கி தன பக்கலில் கொள்ளும் பவித்ரன் –
முமுஷுக்களை -பன்னலார் -எப்போது அனுபவித்தாலும் -அனுபவ விரோதி போக்கும் சுத்தி
நித்ய முக்த பக்தர் அனைவரும்
கண்ணாலே அமுதே சாவாமல் ஜீவிப்பித்து கொண்டு தரிக்க காரணம் பிரியாமல்
கார் முகில் -தன்னையே கொடுக்கும்
என் கண்ணா -இதை தொட்டு கொண்ட -தன்னை கொடுத்த படி
இவ்வளவும் இவரது சங்கா ஹேது -காரணம் இந்த தன்மைகள்
உன்னை ஒழிய அரை சகானாம்ஜீவிக்க மாட்டேன்
உன்னை தவிர வேறு ரஷகர் இல்லை
நீ கை விட்டால் வேறு யார் -துயி ரஷாதி-ரஷைய்சக்கி அன்யதி  தேசிகன் – வேறு யார் –
என்னை திரு உள்ளம் பற்ற வேண்டும் -உன்னை விட்டு பிரிந்தால் அசித் போல் இருக்கும் என்னை
நீ தாரகமாக
என்னை நீ என்றுமாம் –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-3-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 24, 2012

சேர்ந்தார் தீவினைகட்கு அருநஞ்சைத் திண்மதியைத்
தீர்ந்தார் தம்மனத்துப் பிரியாது அவர்உயிரைச்
சோர்ந்தே புகல்கொடாச் சுடரை அரக்கியைமூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன்முன்னமே.

    பொரை : ‘தன்னை அடைத்தவர்களுடைய தீவினைகட்குக் கொடிய விஷமாய் இருப்பவனும், அவ்வடியவர்கட்குத் தன்னாலும் அசைக்க ஒண்ணாத அறிவினைக் கொடுக்குமவனும், தன்னை ஒழியச் செல்லாதவர்களுடைய மனத்தினின்றும் பிரியாமல் அங்கே தங்கியிருந்து அவர்களுடைய உயிரைச் சிற்றின்பங்களால் சோர்ந்து போகும்படி விடாத ஒளியுருவை உடையவனும், சூர்ப்பணகையினுடைய மூக்கினை அறுத்தவனும் ஆன உன்னை, உனக்கு அடியவனான நான் இவ்வுயிர் உள்ள அன்றே அடைந்தேன் அன்றோ?’ என்கிறார்.

    வி – கு : தீர்ந்தாய் – எல்லாப் பொருள்களின் ஆசையினின்றும் நீங்கினவர்கள்; அதாவது, அவ்விறைவனை ஒழியச் செல்லாதவர்கள் என்றபடி. தீர்த்தல்- விடுதல். ‘தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டாகும்’ என்பது தொல்காப்பியம். ( சொல். 318 ), சோர்தல் – ஐம்புலன்களால் தளர்ச்சியினை அடைதல், அல்லது, இறைவனை விட்டுப் பிரிந்து தளர்தல் எனலுமாம். ‘ஈர்ந்தாயை’ என்பது உருபு ஏற்ற முன்னிலைப்

பெயர் முன்னமே என்பதிலுள்ள ஏகாரத்தை ‘அடைந்தேன்’ என்பதனுடனும் கூட்டுக. இவ்வேகாரம், தேற்றத்தின் கண் வந்தது.

    ஈடு : ஆறாம் பாட்டு. ‘இனி நுன பாதம் சேர்ந்தேனே’ என்றார். மேல் திருப்பாசுரத்தில்; ‘இனி என்று தான் விசேடிக்கு வேண்டுமோ? ‘பொய்ந்நின்ற ஞானத்திலே’ நீ விசேஷ கடாக்ஷம் பண்ணின போதே கிட்டிற்றிலேனோ?’ என்கிறார் இப்பாசுரத்தில், அன்றி, சொரூபத்தை அநுசந்தித்தவாறே, நிலை நின்ற சொரூபம் இயல்பாகவே அமைந்துள்ளதான சேஷத்துவமேயாய், நடுவுள்ளது வந்தேறியாய்த் தோன்றுகையாலே அருளிச்செய்கிறார் எனலுமாம்.

    சேர்ந்தார் – 1‘இரண்டு துண்டுகளாக வெட்டுப்படக்கடவேன்; அப்படி வெட்டுப்பட்ட போதிலும் ஒருவனுக்கு வணங்கமாட்டேன்’ என்னும் நிர்ப்பந்தம் இல்லாதவர்கள்; ‘இவர்களைச் ‘சேர்ந்தார்’ என்கிறது என்?’ எனில், அநாதி காலம் பிறவிகளால் உழன்று திரிந்த ஆத்துமா சர்வேஸ்வரனைக் கிட்டுகையாவது கெடு மரக்கலம் கரை சேர்ந்தது போன்று இருத்தலின், ‘சேர்ந்தார்’ என்கிறார்; இவர்கள் 2இக்கரை ஏறினவர்கள் அன்றோ? தீவினைகட்கு அரு நஞ்சை – இவர்கள் பேற்றினை அடைவதற்குத் தடையாக உள்ள கர்மங்கட்குக் 3காற்ற ஒண்ணாத நஞ்சானவனை. திண்மதியை – முன்பே சேர்ந்திருக்குமவர்கட்குத் திண்ணியதான மதியைக் கொடுக்குமவனை, அதாவது, 4அம்பரீடன் தவம் செய்துகொண்டிருக்க, சர்வேஸ்வரன் இந்திரன் வேடத்தைத் தரித்துக்கொண்டு சென்று, 5‘உனக்கு வேண்டியவற்றை வேண்டிக்கொள்’ என்ன,

‘நான் உன்னை ஆராதிக்குமவன் அல்லேன்காண்; என்னைச் சமாதி பங்கம் பண்ணாதே போகவல்லையே! உன்னைக் கும்பிடுகிறேன்’ என்றான். ஆக, இறைவன் தானே அழிக்கப் பார்க்கும் அன்றும் அழிக்க ஒண்ணாதபடியான திண்ணிய மதியைக் கொடுக்குமவன் என்பதாம்.

    தீர்ந்தார்தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச் சோர்ந்தே புகல் கொடாச் சுடரை 1‘ஸ்ரீராமரே! உம்மால் நீக்கப்பட்ட பிராட்டி உயிர் வாழாள்; நானும் உயிர் வாழேன்: ஒருவாறு பிழைத்தோமானால், தண்ணீரினின்றும் மேலே எடுக்கப்பட்ட மீன் போன்று, ஒரு கணநேரமே பிழைத்திருப்போம்’ என்கிறபடியே, தன்னைப் பிரிய மாட்டாதே இருக்குமவர்கள் நெஞ்சை விட்டுப் போகமாட்டாதே, அவர்கள் உயிர், தன்னைப் பிரிந்து நீர்ப்பண்டமாக மங்கிப் போகக் கொடாதே, அது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்ற இருக்குமவனை. இனி, தீர்ந்தார் -உபாயத்தில் துணிவுடையார்; அவர்கள் ஆகிறார் –2பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்குமவர்கள்; அவர்கள் தன்னைப் பிரிந்து நோவு படாதபடி அவர்கள் நெஞ்சிலே இருக்குமவன் என்று கூறலுமாம். அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை – பிராட்டியினுடைய சேர்க்கைக்குத் தடையாக நின்ற சூர்ப்பணகையைப் போக்கியது போன்று, அவர்களுடைய விரோதிகளைப் போக்கும்படியும். ‘ஆயின், மூக்கை அறுத்தவன் ஸ்ரீராமனோ?’ எனில், ஆம்; கையாலே அறுக்க வேண்டுமே? 3‘ஸ்ரீராமபிரானுக்கு இலக்குமணன் வலத்தோள்’ எனப் புகலும் ஸ்ரீராமாயணம்.

    அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே – ‘அநாதி காலம் இழந்த இழவை மறக்கும்படி வந்து கலக்கையாலே, இன்றோ பெற்றது? இவ்வாத்துமா உள்ள அன்றே பெற்றேன் அல்லேனோ?’ என்கிறார். இனி, முன்னர்க் கலவியிலே களித்த தேற்றம் போய் ‘வாயுந் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியில் கலங்கிப் பிரிவேயாகிச் சென்றது போன்று, இங்குக் கலவியின் மிகுதியாலே அத்தை மறந்து, ‘முன்னே பெற்றேன் அல்லேனோ?’ என்கிறார். எனலுமாம். முதன்முன்னம் – பழையதாக என்றபடி.

2. ‘அக்கரை என்னும் அனத்தக் கடலுள் அழுந்திஉன் பேரருளால்
இக்கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்சல் என்று கைகவியாய்’

  என்பது பெரியாழ்வார் திருமொழி.

  “புன்பிறப்பாம்
எக்கரை நீக்கிப் படித்தாரை அந்த இருவிரசைக்கு
அக்கரை சேர்க்கும் மணவாள தாசன் அருங்கவியே”

1. ஸ்ரீராமா. அயோத். 31 : 5.

  ‘நீருள எனின்உள் மீனும் நீலமும்
பாருள எனின்உள யாவும்; பார்ப்புறின்
நாருள தனுவுளாய்! நானும் சீதையும்
யாருளர் எனின்உளேம்? அருளு வாய்’ என்றான்.

  என்ற கம்பராமாயணச் செய்யுள் ஈண்டு நினைவிற்கு வருகின்றது.

இனி என்று விசெஷிக்க வேண்டுமோ –
அன்றே கிட்டி விட்டேன்
ஸ்வரூபத்தை அனுசந்ததவாறே -நடு உள்ள -ப்ரமம் -போக –
இயற்க்கை தான் வெளிப்படும் இல்லாதது வராது -ரத்னம் தீட்ட -தாட்ட
சேற்றில் விழுந்து -கழுவி -மறைந்து நின்ற ஒளி பிரகாசிக்கும்
ஆத்மாவுக்கு சேஷத்வம் ஸ்வா பாவிகம் கர்மம் வந்தேறி
நடுவு உள்ள சம்சாரம் ப்ரமம் போல்வன –
சேர்ந்தார் -உன்னை அடைந்தவர் -தீ வினை போக்கும் நஞ்சு
திண் மதி உறுதியான புத்தி கொடுப்பவன்
பிரியாமல் எழுந்து அருளி -கை விடாமல் இருக்கிறன்
சூர்பணகை விரோதி போக்கி
ந நமேயம் -நிர்பந்தம் இல்லாதவன் -சேர்ந்தார் -இந்த நினைவு இல்லாமல் இருந்தால் போல்
மரக்கலம் கரை சேர்ந்தால் போல் அநாதி காலம் சம்சரித்துபோன ஆத்மா
இக்கரை ஏறி இளைத்து இருந்தேனே -சம்சாரம் அக்கரை
அக்கரை இன்றி போய் கொண்டு இருக்கிறோம்
தீய பாபங்களுக்கு -பிரதி பந்தக கர்மங்களுக்கு -ஆற்ற ஒண்ணாத –
திண் -முன்பே சேர்ந்து இருக்கிறவர்களுக்கு -அவனே கலக்கினாலும்
சர்வேஸ்வரன் இந்திர  வேஷம் கொண்டு அம்பரீஷன் தபசு
ஐராவதம் யானை கருடனை மாற்றி உன்னை கும்பிடுகிறேன் -சர்வேஸ்வரனை மட்டும் சேவிப்பேன்
தவ பத்தொயம் அஞ்சலி -உன்னை ஆராதிக்கிறான் இல்லை சமாதி பங்கம் பண்ணாதே உறுதி குலைக்காதே
தானே அளிக்க பார்த்தாலும் அளிக்க ஒண்ணாத திண் மதி
தீர்ந்தார் -பிரிந்தால் தீர்ந்தே போவோம்
ஜலான் மத்ஸ்யம் போல்
பிரிய மாட்டாதே இருக்கும்
அவர்கள் உயர் தனை பிரிந்து -த்ரவ்ய பூதமாய் உருகி போகாமல்
சுடர் அது தன பேறு வடிவிலே தோற்றும்
தீர்ந்தார் அற்று தீர்ந்தவர்
அவனே உபாயம் உபேயம்-இரண்டாவது அர்த்தம்
விரோதி போக்கி -அரக்கி மூக்கு நீக்கி -ஈர்ந்தாய் – இளைய பெருமாள் -கையாலீருக்க வேண்டுமே
ராமஸ்ய தஷன பாஹு -அதனால் தான் –
பிரயோஜக கர்த்தா யார்சொல்லி செய்தான் என்றும்
தொண்டை மன்னன் சொல்லி திரு வல்லி கேணி
சேஷ பூதன் அடியேன் அடைந்தேன்முதல்
ஆத்மா உள்ள வன்றே பெற்றேன் என்றுமாம்
இன்று தான் பெற்றார் பேறு முன்பே பெற்றது போல் ஆனந்தம்
அநாதி காலம் இழவு மறக்கும் படி பெற்றேன்
வாயும் -திரை -சாந்தமிக போகம்-மானச சம்ச்லேஷித்த அனுபவம் -கதற –
இங்கே கலவியின் மிகுதியால் அது மறந்து போனதாம் –
இரண்டும் மாறி மாறி வருமே –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.