Archive for the ‘திருமங்கை ஆழ்வார்’ Category

திருமங்கை ஆழ்வாரின் மடிபிடி ரகஸ்யம்

November 14, 2025

வார்த்தை -340-
பாகவத சேஷத்வ விதுரமான பகவத் சேஷத்வமும் -தேகாத்ம அபிமானம் போலே
பொல்லாது என்று முதலி யாண்டான் –

திருமங்கை ஆழ்வாருக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றம் சொல்லுகிறது –
இது இவரின் மடிபிடி ரகஸ்யம் என்பார்கள் –

நம்பி தன் நல்ல மா மலர் சேவடி சென்னியில் சூடியும் தொழுதும் எழுந்தாடியும் -பெரிய திருமொழி -7-3-10-

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து  ஆடியும்
  தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே -7-3-10-

இதழ் விண்டு அலருகிற பூவை உடைத்தான பொழிலாலே சூழப் பட்ட திரு மங்கையில் உள்ளார்க்கு பிரதானராய் உள்ள ஆழ்வார்  –வாள் கலியன் ––பகவத் பிராப்திக்கு பிரபத்தி போலே யாய்த்து பிரதி பஷ நிரசனத்துக்கு கையிலே வாள் –திருவாலி நாடன் —இதுவே போருமாய்த்து ஏற்றம் –நன்னறையூர் நின்ற நம்பி தன் –திரு நறையூரிலே வந்து நிற்கையாலே கல்யாண குண பூர்ணன் ஆனாவன்  –நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச் சூடியும்-நிரதிசய போக்யமாய்-குணாகுணம் நிரூபணம் பண்ணாத திருவடிகளை திரு முடிக்கு வளையமாக வைத்தும்  –தொழுதும் எழுந்து  ஆடியும் –நம புரஸ்தாத் அத ப்ருஷ்ட –முன்னும் பின்னும் எல்லாப் பக்கமும் தொழுத அர்ஜுனன் – என்கிறபடியே தொழுதும்
தொழப் பெற்ற ஹர்ஷத்தாலே இச் சரீரம் இருந்த இடத்தே இராதே ஆடியும் –

பாசுரத்தை கேட்டு இவர் கால் வாசி அறிந்தவராய் இருந்தார் என்று -ஆழ்வீர்
திருச்சேறையிலே வாரீர் -உம்முடைய அபேஷிதத்தை தலைக் கட்டித் தருகிறோம் -என்ன –
இவர் திருச் சேறையிலே எழுந்து அருள –
இவ் வாழ்வார் உடைய அசைந்த வளையத்திலே புனுகை வழிய வார்த்தால் போலே –

மா மதலைப் பிரான் -தம்முடைய திருவடிகளை கொண்டு வந்து வைக்கப் புக –
அத்தை புறம்கையாலே தட்டி –
உன் பொது நின்ற பொன்னம் கழலோ -மூன்றாம் திருவந்தாதி -88-என் தலை மேல் இருப்பது
உன் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -பெரிய திருமொழி -7-4-1–என்ன

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண்  துழாய் மார்வன் –பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின்
முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

சமசயிக்க ஒண்ணாத படி ஆதி ராஜ்ய ஸூ சகமான திருத் துழாயை யுடையவனுடைய
திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்-நீங்கள் பண்ணின பாபம் வ்யக்த்யந்தரத்துக்கு ஆகாத படி நசிக்கும்-சாமான்யம் அதி தெய்வதம்-உறுதியாக பற்ற வேண்டுமே-சர்வ லோக சரண்யாய ராகவாய -யுத்தம் -17-15-என்றான் இறே ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-சர்வாத்மாக்களுக்கும் சம்பந்தம் ஒத்து இருப்பதாய் ஸ்ப்ருஹணீயமாய் அழகிதான திருவடிகளை தொழப் பாருங்கோள் –

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட  மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள்  அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான்  தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-

திருத் துழாய் போலேயும் ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும் உம்முடைய ஸ்பர்சம் நமக்கு இனிதாய் இரா நின்றது – உம்முடைய தலையைக் கொடு வாரும் நம்முடைய காலை வைக்க என்ன-இங்கு உமக்கு ஒழியாது-வகுத்தவர்கள் காலுக்கு இடம் போரும் இத்தனை

அத்தைக் கேட்டு லஜ்ஜா விஷ்டனாய் -உமக்கு அந்தர்யாமியாய் இருந்தோமே -என்ன –

எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே -பெரிய திருமொழி -7-4-2-என்ன –

அம் புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-

நித்ய வசந்தமாய் ஸ்ரமஹரமான பொழிலை உடைத்தாய் இருக்கிற திருச் சேறையிலே
ஸ்பர்தையாலே ( போட்டியாலே )ஆகாசத்தைத் தள்ளுகிறாப் போலே இருக்கிற கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனுடைய திருவடிகளைத் தொழுவார் –எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே –நிதித்யாசி தவ்ய-என்கிற விஷயத்துக்கு இடம் காண்கிறிலேன் 

ஆகிலும் அர்ச்சாவதாரமாய் ஸு லபனாய் இருந்தோமே என்ன –

கடல் மல்லைத் தல சயநத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர்
எங்கள் குல தெய்வமே -பெரிய திருமொழி -2-6-4-என்ன –

அவர்கள் எங்கே உளர் என்ன –

போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -பெரிய திருமொழி-7-4-3- என்று
அவர்கள் ஸ்வரூபத்தை சொல்ல –

விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே -2-6-4

கொண்டாடும் நெஞ்சுடையார்-இவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார்
நமக்காக விறே -என்று-நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் –(திருமழிசை ஆழ்வாரே கொண்டாடும் நெஞ்சுடையார்
அவரே என் குல தெய்வம்
)-அவர் எங்கள் குல தெய்வமே–குல தைவதம் தத் பாதாராவிந்தம் -ஆளவந்தார்-என்னும் அளவல்ல எங்களது–ததீய பாதாரவிந்தம்–சரம பர்வ நிஷ்டை

மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத் தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே –7-4-3-

தாதோடே வண்டுகள் ஆனவை மது பானம் பண்ணி அறையா நின்றுள்ள திருச் சேறையிலே எழுந்து அருளி இருக்கிறவன் திருவடிகளை ஏத்தி –புஷ்பங்களோடு கூட ஜலத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிற பாக்யாதிகரே –-சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஆஸ்ரயிக்கிற நித்ய ஸூரிகளில் சம்ருத்தர் ஆகிறார் – அங்கே இருந்து ஆஸ்ரயிக்கிறவர்கள் இங்கே இருந்தபடியே   ஆஸ்ரயிக்கிறவர்களோடே ஒவ்வார் இறே  

கண்கள் ஆரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -பெரிய திருமொழி -7-10-9-என்கிறபடியே
கண்ணுக்கு இரை இடுகைக்கும் நெஞ்சுக்கு அனுசந்தானமாக இரை இடுகைக்கும் நாம் வேணுமே -என்ன –

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய்  நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-9-

வேதத்தை எங்கும் ஒக்க அதிகரித்து இருப்பார்க்கு தன்னை ஒழிய பதார்த்த தர்சனம் பண்ண ஒண்ணாத படி அவர்களுக்கு -திருஷ்டி பூதனாய் உள்ளவனை -காணப் பெறாமையால் உறாவின கண்களின் உறாவுதல் தீரும்படி -நின்று கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –

வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு இது
காணீர் என்னெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -பெரிய திருமொழி -7-4-6-என்ன

பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை  எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6-

வண் சேறை எம்பெருமான் அடியாரைக் கண்ட மாத்ரத்திலே –இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே  –கண்டி கோளே என்னுடைய நெஞ்சும் கண் இணையும் களிக்கிற படி-ஆன பின்பு அத்யவசிக்கையில் ஒரு குறை உண்டோ  –

ஆகில் சர்வ கந்தஸ் சர்வ ரச -என்கிறபடியே உமக்கு ரசாயன சேவைக்கு நாம் வேண்டுமே -என்ன –

எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பாருக்கு என்னுள்ளம்
தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே -பெரிய திருமொழி -7-4-5-என்ன –

வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வருக்கு அல்லால்
சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை  எம்பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு  என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5-

சந்தனப் பூ மலரை உடைத்தான சோலையை உடைத்தாய் ஸ்ரமஹரமாய் இருக்கிற
திருச்  சேறையிலே நாயனார் உடைய திருவடிகளை நாள் தோறும் போக ரூபமாக அனுசந்திப்பாருக்கு –என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –என்னுடைய ஹிருதயமானது தேனூறி எப்பொழுதும் இனிதாக நின்றது இது வெருமனேயோ –

ஆகில் உமக்கு உபாய உபேயத்துக்கு நாம் வேணுமே என்ன –

உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும் –
உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும் –
இருந்த நாளுக்கு உசாத் துணை யாகையாலும் –
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்ன –

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொரு காலும் பிரிகிலேனே  -7-4-4-

ரஷணத்துக்குப் பாங்கான கலவிருக்கையை உடையவன் –உபரிதன லோகங்களை நடத்தும் சர்வாதிகன் –பேரோதும் பெரியோரை –வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு –( ஓதும் நிகழ் காலம் ) அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –யொருகாலும் பிரிகிலேனே  —ஷண காலமும் பிரிய காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன் –

ஆகில் அடியிலே நமக்கு தாசர் என்று புகுந்தீரே -என்ன –

மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான்
உற்றதும் உன் அடியாருக்கு அடிமை -பெரிய திருமொழி -8-10-3-என்ன –

மற்றுமோர் தெய்வம்   உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே —8-10-3-

தேவதாந்தர ஸ்பர்சம் உடையாரோடு எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை –உற்றதும் உன் அடியார்க்கு அடிமை மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும் கற்று நான் – அவர்களை விட்டு உன் அளவில் நின்றவனும் அல்லேன் –இவ்வனுஷ்டானம் தான் நீர் எங்கே யார் சொல்ல பரிஹரித்தீர் -என்ன நீ சொன்ன முதல் வார்த்தைக்கு அர்த்தமாக
நான் நினைத்து இருப்பது இது -என்கிறார் –(நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் தானே முதல் வார்த்தை திரு மந்த்ரம் என்றது ஆயிற்று )-இது பின்னை அநேக அர்த்தங்களை சொல்லுமே –ஜீவ ஸ்வரூபத்தைச் சொல்லும் –நம்முடைய ஸ்வரூபத்தை சொல்லும் –ஜீவ வஸ்துக்களுக்கும்  நமக்கும் உண்டான சம்பந்தத்தை சொல்லும் –ப்ராப்தி பலமான கைங்கர்யதளவும் வந்திருக்குமே -என்ன-அது அநேக அர்த்தங்களைச் சொல்லிற்றே யாகிலும் அதில் எங்குமாக நான் அறுதி இட்டு இருக்கும் அர்த்தம்-அனந்யார்ஹ சேஷத்வம் – அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாய் அல்லது இராது –சேஷத்வம் -அநந்யார்ஹத்வம் -பாகவத சேஷத்வம் -ஆய -உகாரார்த்தம்–நமஸ்ஸூ -கீழே பார்த்தோம் –பகவத் சேஷத்வத்தின் எல்லை நிலம் -அவனது அவயவ பூதங்கள்-மற்று எல்லாம் பேசிலும் -திரு மந்த்ரார்த்தங்கள் பல உண்டே –முதல் வார்த்தைக்கு -பல அர்த்தங்கள் உண்டே -உன் அடியார்க்கு அடிமை என்று அறிந்தேன்-நான் கண்டு கொண்டேன் நாராயணா -உபக்ரமம்-பிராப்தி -சேஷ சேஷி பாவ சம்பந்த நிபந்தன முறை -உறவின் முறை –எங்குமாக அறுதி இட்டு இருக்கும் அர்த்தம் -என்றது -அநந்யார்ஹத்வம் -உனது அடியார்க்கு அடிமை –ததீய சேஷத்வ பர்யந்தமாகப் போனால் தான் பகவத் அநந்யார்ஹத்வம் சித்திக்கும் –அவன் திரு உள்ளம் உகக்கும் படி நடக்க வேண்டுமே –அவன் திரு உள்ளம் உகப்பே பிரயோஜனம்-ஞாதவ்ய தயா -அறிய வேண்டியதாக அறிந்து ஜீவ ஸ்வரூபம் ஆஸ்ரய தயா ஞாதவ்யம் -மகாரம் மனா ஞானி மனா அவ போதனை பகவத் ஸ்வரூபம் விஷய தயா -ஜேயம் தத் விஷய கைங்கர்யம் -சேஷத்வ கார்யம் -சேஷத்வ பலம் –கீழே இவ்வளவும் சொன்னதுக்கு தாத்பர்யம் -சேஷத்வம் சித்திக்க -பாகவத சேஷத்வ பர்யந்தமும் பாகவத பர்யந்த கைங்கர்யம் வரை போனால் தான் நிலை நிற்கும் –ஆகையால் உன் அடிமை ஆகை ஆயிற்று என்பதே உனது அடியார்க்கு அடிமை என்பது சித்திக்கும் )

பிரபன்னன் உடைய லஷணம் ஆகிறது –ஸ்ரீயபதியே -உபாய உபேயங்கள் என்று இருக்கையும்-தேவதாந்தர ஸ்பர்சமும்-தாமஸ புருஷர்களோடு சம்சர்க்கமும் இன்றிக்கே இருக்கையும் – பாகவதரை ஒழிய செல்லாமை யுண்டாய் இருக்கையும் –தர்மியை அனுபந்தித்து இருக்கும் தர்மங்களை நேரே வ்யவஹரித்தது இல்லையே யாகிலும்
தர்மியைச் சொன்ன போதே தர்மங்களை எல்லாம் சொல்லிற்றாம் இறே-அவனைச் சொன்ன போதே அவயவ பூதங்களான பாகவதர்களையும் சொன்னது ஆகுமே-

நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றாவது –
உன் அளவில் நின்றவன் அல்லேன் -என்ற போது அவன் திரு உள்ளம் என் படுகிறதோ  -என்று நஞ்சீயர் அருளிச் செய்ய-பிள்ளை –அல்லிக் கமலக் கண்ணன் ஆகிறான் -(திருவாய் -8-10-11)-என்று அருளிச் செய்தார் –-நீக்கமில்லா அடியார்  தன் அடியார்  அடியார் எம் கோக்கள் -(திருவாய் -8-10-10 )-என்று இவர் பாகவத சேஷத் தளவில் நின்றவாறே அவன் அல்லிக் கமலக் கண்ணன் ஆனான் –

இவர் நின்ற நிலையிலே தமக்கு பிறந்த ப்ரீதி அதிசயத்தாலே -பின்னையும் அவ் வாழ்வார் திரு உள்ளத்தை
சோதிகைக்காக –
அடியிலே நம்மைக் கவி பாட என்று இழிந்து
நம் அடியார் திறத்திலே மண்டிற்று என் -என்ன –

ராஜபுருஷ என்னுமா போலே -ஒருவனைக் கவிபாடுமவன் ஊரும் பேரும் தாரும்
குடியும் வைத்துக் கவிபாடுமா போலே சொன்னேன் இத்தனை –
ததீய விஷயமே உத்தேச்யம் என்ன –

ஆகிலும் பிரித்துச் சொன்னீரே என்ன –

பர்த்தாவின் தேகத்தை விரும்பின பதி வ்ரதைக்கு குற்றம் உண்டாகில் இறே -திவ்ய மங்கள விக்ரஹத்தை
விரும்பின எனக்கு குற்றம் உண்டாவது -என்ன –

என்று தமக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றத்தைச் சொல்ல

ஈஸ்வரன் திரு உள்ளமும் களித்து –
இவ் வாழ்வாருக்கு தோற்றோம் -என்று-
இவர் திறத்தில் மடல் எடுக்கும்படி யாயிற்று ஈஸ்வரன் திரு உள்ளம் –

———————-

பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்றும் இருக்கை –

(-தத்தாலே ததீயரா – ததீயராலே நாமா-எம்பெருமானுக்கும் திருமங்கையாழ்வாருக்கும் சம்வாதமாக   -ததீய பரகத ஸ்வீ கார மஹிமை வைபவம் -காட்டும்-அவர்கள் மூலமே உம்மைப் பற்றினேன் -உம் மூலமே பாகவத கைங்கர்யம் பெற்றேன் -பேறு பெரும் வரை இவர்களையே மண்டினேன்-பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -)
ஆழ்வீர் உமக்கு இவர்களோட்டை சம்பந்தம் ஓரளவு இன்றியிலே இருந்ததீ -என்ன
என் செய்கேன் – 1-உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும்
2-உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும்
3-இருந்த நாளைக்கு உசாத் துணை யாகையாலும் பிரிகிலேன் என்கிறார்-

(சாண்டில்யை வ்ருத்தாந்தம் -இது வன்றோ எழிலாலி என்றான் தானே -இவையும் உண்டு -இங்கு போல் திவ்ய தேச வாசமும் வேண்டும் என்றும் அடியார் ஸஹவாசமும் வேண்டும் என்பதும் உண்டு-நாம் சாண்டில்யையும் திருமங்கை ஆழ்வாரும் போல் அல்லவே-மனம் ஈடுபாடு வேண்டுமே –போதயந்த பரஸ்பரம் துஷ்யந்தி ச ரமயந்தி இத்யாதி)


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கலியனுக்கும்‌ ஸ்ரீ கண்ணனுக்கும்‌ 12 வகைகளால் ஓற்றுமை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்–

July 26, 2025
1-[ஸூர்யத்வாத்‌] ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌ கண்ணபிரானுடைய திருவவதாரத்தைக்‌ கூறுகின்ற பராசரமஹரிஷி கண்ணனவதரித்தானென்று சொல்லவில்லை ; *ததோகிலஜஐக த்பத்மபோதாய அச்யுதபாநுநா, தேவகீபூர்வஸந்த்யாயாம்‌ ஆவிர்ப்பூதம்‌ மஹா த்மநா* என்கிற ச்லோகம்‌ க்ருஷ்ணாவதாரத்தைக்‌ கூறுமது. இதில்‌, தேவகியாகிற பூர்வஸந்தியையிலே க்ருஷ்ணஸூரியன்‌ ஆவிர்ப்பவித்தான்‌ என்றது. இதனால்‌ க்ருஷ்ணன்‌ ஸுூர்யனென்னுமிடம்‌ ஸித்தித்தது. 
கலியனும்‌ ஸூர்யனாகவே பேசப்பட்டிருப்பதை “கலயாமி கலித்‌வம்ஸம்‌ கவிம்‌ லோக திவாகரம்‌” என்கிற அவருடைய ஸ்துதிபத்யத்‌தினால்‌ உணரலாம்‌, ஆக இருவரும்‌ ஸூர்யர்களென்னு மத்தாலே ஸாம்யம்‌.

2-[ஸூசிதத்வாத்‌] ஸூசிப்பிக்கப்பட்டபடியாலே என்பது இதன்‌ பொருள்‌. கண்ணனுடைய அவதாரமும்‌ கலியனுடைய அவதாரமும்‌: இவர்கள்‌ அவதரிப்பதற்கு வெகுநாள்‌ முன்னமே ஸசஃசிப்பிக்கப்‌' பட்டிருந்தது. எங்ஙனே யென்னில்‌ ; கண்ணனுடைய திருத்தாயாரான தேவகிப்பிராட்டி கம்ஸனுக்கு உடன்பிறந்தவள்‌ அக்கம்ஸன்‌- தேவகிக்கு. மிகச்‌ சிறப்பாக விவாஹமஹோத்ஸவத்தை நடத்தி வத்துப்‌ பரமப்ரீதியுடன்‌ தம்பதிகளை ரதத்தில்‌ வீற்றிருக்கச்‌ செய்து அதனைத்‌ தானே ஓட்டிக்கொண்டு போகையில்‌ ஆகாசவாணி யொன்று செவிப்பட்டது! “இத்‌ தேவகியின்‌ எட்டாவது குழந்தையினால்‌ உனக்கு ம்ருத்யு விளையும்‌' என்று, அந்த வாக்கு அப்படியே பலித்தது. இதனால்‌ ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய திருவவதாரம்‌
முன்னமே ஸுசிதமாயிற்றென்பது விளங்கிற்று. இது போலவே திருமங்கை யாழ்வாருடைய திருவவதாரமும்‌ முன்னமே ஸூசிதமாகி யுள்ளது. திருவாய்மொழியில்‌ (5-௨-1) “'கலியுங்‌ கெடும்‌ கண்டு கொண்மின்‌” என்கிற பாசுரத்தை ஆகாசவாணி யென்றே கொள்க. -தவறாமல்‌ பலிப்பது ஆகாசவாணி. இந்தப்‌ பாசுரமும்‌ தவறாமல்‌
பலித்திருக்கின்‌றது. ஆசார்யஹ்ருதயத்தில்‌ “கலியுங்‌ கெடும்‌ போலே ஸுசிதம்‌'” என்றவிடத்து வியாக்கியானத்தில்‌ மணவாளமாமுனிகள்‌ -“இவர்‌ தாம்‌ மயர்வற மதிநலம்‌ பெற்றவராகையாலே “கலியுங்‌ கெடும்‌' என்று-திருமங்கையாழ்வார்‌, உடையவர் போல்வார்‌ அவதரித்துக்‌ கலியுக ஸ்வபாவமும்‌ கழியுமென்று மேல்‌ வரும்‌ அம்சத்தை தர்சித்து அருளிச் செய்தாப் போலே” என்று திருவாய்மலர்ந்தருளியுள்ள திவ்ய உக்தி இங்கே அநுஸந்தேயம்‌, கண்ணன்‌ கம்ஸ வதம்‌ செய்தவன்‌ ;இவ் வாழ்வார்‌ கலி புருஷவதம்‌ செய்தவர்‌.

3-[அபஹ்ருதிகரணாத்‌] கண்ணன்‌ கள்வனென்று ப்ரஸித்தி பெற்றதுபோல இவ்வாழ்வாரும்‌ கள்ளரென்று ப்ரஸித்திபெற்றவர்‌. “வெண்ணெய்‌ களவுசெய்தான்‌, பெண்களைக்‌ களவுசெய்தான்‌! என்று ஸ்ரீ க்ருஷ்ண சரித்திரங்களிலே வாசிக்கிறோம்‌. இவருடைய சரித்திரத்‌திலும்‌ திருவரங்கம்‌ பெரியகோயிலில்‌ கோபுர ப்ராகார மண்டபாதி நிர்மாணத்திற்காகப்‌ பலபல களவுகள்‌ செய்த செய்திகளை வாசிக்‌கின்றோம்‌. ஆக இத்தகைய கள்வத்தினாலும்‌ ஸாம்யம்‌.

4-[கோகுலோத்தாரகத்வாத்‌] *ஆயர்பாடிக்கணிவிளக்கே' என்‌றும்‌, “'ஆயர்குலத்தினில்‌ தோன்று மணிவிளக்கை” ' என்றும்‌ சொல்லுகிறபடியே கண்ணன்‌ திருவாய்ப்பாடியில்‌ திருவவதரித்துக்‌ கோகுலத்தை உத்தரிப்பித்தமை பிரஸித்தம்‌, இவ்வாழ்வாரும்‌
கோகுலோத்தாரணம்‌ செய்ததுண்டு; எங்ஙனே யென்னில்‌; *ந்ருபசு;” என்று ஆளவந்தாரும்‌, “வ்ருத்த்யா பசுர்‌ ஈரவபு:” என்று மணவாள மாமுனிகளும்‌ அருளிச்செய்தபடி நாமெல்லாரும்‌ பசுக்களேயன்றோ.
“ஜ்ஞாநறேற ஹீந : பசுபிஸ்‌ ஸமா௩ :”” என்றும்‌ ப்ரஸித்தமாகவுள்ளது.
ஞானமும்‌ நன்னடத்தையும்‌ ஒன்றுமின்றிக்கே யிருப்பதனால்‌ கோக்களா யிருக்கின்ற நம்முடைய குலத்திலே ஆழ்வார்‌ வந்து அவதரித்து உத்தாரகராயினர்‌.

5-[பத்தத்வாத்‌] கண்ணன்‌ “மத்துறு கடை வெண்ணெய்‌ களவினிலுரவிடையாப்‌ புண்டு” என்றும்‌ “கண்ணிக்‌ குறுங்கயிற்றால்‌ கட்டுண்டான்‌?' என்றும்‌ சொல்லுகிறபடியே கட்டுண்டமை ப்ரஸித்‌தம்‌, இவ்வாழ்வாரும்‌, பகவதாராதனத்திற் காட்டிலும்‌ பரமபாவனமான பாகவதாராதனத்தில்‌ ஊன்‌றியிருந்த காலத்தில்‌ தாம்‌ அரசுக்‌குச்‌ செலுத்தவேண்டிய பகுதிப்பொருளுமுட்படச்‌ செல்வம்‌ முழுதையும்‌ செலவிட்டுவர, அச்செய்தியைச்‌ சிலர்‌ சொல்லக்கேட்ட கொற்றவன்‌ கோபங்‌ கொண்டு। இவரை ஒரு தேவாலயத்தில்‌ சிறைவைக்கச்‌ செய்தனனென்பது இவ்வாழ்வாருடைய சரித்திரத்தில்‌ பிரஸித்தம்‌. -ஆக, கட்டுண்டமையினால்‌ இருவர்க்கும்‌ ஸாம்யம்‌.

6-[சாஸ்த்ரதத்வாத்‌] சேதநர்களுக்கு உஜ்ஜீவநோபாயமான சரஸ்‌திரத்தைக்‌ கொடுத்ததனாலே என்று பொருள்‌. கண்ணபிரான்‌ “அறிவினால்‌ குறைவில்லா அகல்ஞாலத்தவரறிய, நெறியெல்லா மெடுத்துரைத்த நிறைஞானத்‌ தொருமுர்‌த்தி என்கிறபடியே-ஸகலார்த்தப்ரகாசகமாய்‌ ஸகலசேதரோஜ்ஜீவரஸாதனமான கீதா சாஸ்த்‌ரத்தை யருளிச்செய்தான்‌. திருமங்கையாழ்வாரும்‌ “நெஞ்சுக்கிருள்‌ கடி திபம்‌ அடங்கா நெடும் பிறவி நஞ்சுக்கு நல்லவமுதம்‌, தமிழ நன்னூல்‌ துறைகளஞ்சுக் கிலக்கிய மாரண சாரம்‌, பர சமயப் பஞ்சுக்‌ கனலின்‌ பொறி பரகாலன்‌ பனுவல்களே! என்கிறபடியே கீதா சாஸ்த்ரத்திற்காட்டிலும்‌ பரமோத்க்ருஷ்டமான திவ்யப்ரபந்த மஹா
சாஸ்த்ரத்தை யுபகரித்தருளினார்‌. கண்ணன்‌ தந்த சாஸ்திரத்தை *கீதோப நிஷத்து” என்னுமாபோலே இதையும்‌ “பொங்கு புகழ்‌ மங்கையர்கோனிந்த மறையாயிரம்‌” என்பர்கள்‌. : ஆக, சாஸ்த்ர ப்ரதாநத்தாலே இருவர்க்கும்‌ ஸாம்யம்‌ பொருந்தும்‌.

7-படுஜநஸஹயோகாத்‌ -கண்ணபிரான்‌ “ தன்னேராயிரம்‌ பிள்ளைகளோடு தளர்நடையிட்டுவருவான்‌?” என்கிறபடியே 'கொந்தளமாக்கிப்‌ பரக்கழித்துக்‌ குறும்பு செய்வானோர்மகனான தான்‌ செய்யும்‌ திமைகளுக்குத்‌ துணைவராகப்‌ பல சதுரர்களை உடன்‌ கொண்டிருக்‌தான்‌. திருமங்கையாழ்வாரும்‌, நீர்மேல்‌ நடப்பான்‌, நிழலிலொதுங்குவான்‌, தாளூதுவான்‌, தோலாவழக்கன்‌ முதலான சதுரர்களைத்‌
தமது செய்கைகளுக்குத்‌ துணைவராகக்‌ கொண்டிருந்தார்‌.

8-லக்ஷ்மீபதித்வாத்‌ -கண்ணபிரான்‌ ஸாக்ஷாத்‌ நாராயணமூர்த்தி யாதலால்‌ லக்ஷ்மீபதியாவன்‌. திருமங்கையாழ்வாரும்‌ லக்ஷமீபதி யாவர்‌. எங்ஙனே யென்னில்‌ : இவர்‌ வளர்ந்து வருகையில்‌ அற்‌மாட்டில்‌ அண்ணன்கோயில்‌ என்று வழங்குகின்‌ற திருவெள்ளக்குளமென்னும்‌ திருப்பதியில்‌ மிகச்‌ சிறர்ததொரு தாமரைப்‌ பொய்கையில்‌
ீதவலோகத்து அப்ஸர ஸ்த்ரீகள்‌ பலர்‌ வந்து ஜலக்ரிடைசெய்து செல்ல, அவர்களுள்‌ திருமாமகளென்பாள்‌ தன்‌ இச்சையால்‌ தெய்வ வடிவத்தைவிட்டுமானுடவடிவங்கொண்டு தனியே குழுதமலர்‌ கொய்து நின்றாளாக, அங்கு அநுஷ்டாஈத்திற்காக வந்த ஒரு
வைஷ்ணவ வைத்யன்‌ அவளைக்‌ கண்டு செய்தி விசாரிக்க, அவள்‌ என்னோடு கூடவந்த மாதர்கள்‌ என்னைவிட்டுப்‌ போய்விட்டார்கள்‌, தனியிருந்து அலைகின்ற என்னை நீர்‌ பாதுகாத்தருளவேணும்‌” என்று வேண்டிக்கொள்ள, மலடனான அம்மருத்துவன்‌ மகிழ்ச்சியோடு அதற்கு உடன்பட்டு அம்மகளைத்‌ தன்‌ மாளிகைக்கு அழைத்துப்‌ போய்‌ மனையாள்‌ வசம்‌. ஒப்பித்து, குமுதமலர்‌ கொண்டு நின்றது
காரணமாகக்‌ குமுதவல்லியென்று அப்பெண்ணுக்கு நாமமிட்டு வளர்த்து வருகையில்‌ அக்கன்னிகைக்கு விவாஹத்துக்குரிய, பிராயம்‌ வந்தவளவிலே அவளை வளர்க்கிற அந்த வைத்தியனுக்கு “மஹா குணவதியான இப்‌ பெண்ணுக்கு ஏற்ற கணவன்‌ உலகத்திலுளனோ' என்ற கவலையுண்டாக, அப்பொழுது அவளுடைய ரூப
லாவண்ய ஸெளந்தரியங்களையும்‌ குணாதிசயங்களையும்‌ சாரர்கள்‌ திருமங்கை மன்னனிடம்‌ கொண்டாடிக்‌ கூற, உடனே அவர்‌ அங்கு வந்து அந்த வைத்தியனிருக்கும்‌ வீட்டிலே புக்கு அவனோடு ஸம்பாஷை செய்து அப்பெண்ணின்‌ வரலாற்றை வினாவி அதைத்‌ தந்தையார்வாயில்‌ அறிந்த வளவில்‌ “இவளை எனக்குத்‌ தாரைவார்த்துக்‌
கொடுக்கவேணும்‌” என்று அவரை வணங்கிக்கேட்டார்‌, அப்போது குமுதவல்லி குறுக்கிட்டு **திருவிலச்சினை திருமண்காப்பு முதலிய பஞ்ச ஸம்ஸ்காரமுடைய ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்க்கேயன்றிப்‌ பிறர்க்கு வாழ்க்கைப்பட மாட்டேன்‌” என்று தன்‌ உறுதியைத்‌ தெரிவித்தாள்‌. -அதுகேட்ட திருமங்கை மன்னன்‌ உடன்‌ திருநறையூர்க்குச்‌ சென்று அங்கு எழுந்தருளியுள்ள நம்பி என்னு மெம்பெருமானுடைய திருமுன்‌
பேஙின்று பிரார்த்தித்து அப்பிரானிடத்தில்‌ திருவிலச்சினை பெற்றுப்‌ பன்னிரண்டு திருமண்‌ காப்புகளும்‌ சாத்திக்‌ கொண்டு விவாஹார்த்தமாக விரைவில்‌ வந்துசேரக்‌ கண்டு மீண்டும்‌ குமுதவல்லி “நீர்‌ ஓராண்டளவும்‌ நித்தியமாக ஆயிரத்தெட்டு ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்வித்து அவர்களுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தையும்‌ போனகஞ்‌ செய்த சேஷத்தையும்‌ உட்கொண்டாலன்றி உம்மை நான்‌பாணிக்கிரஹணஞ்‌ செய்து கொள்ளமாட்டேன்‌”! என்ன, அவளிடத்‌தில்‌ கொண்ட ஆசையின்‌ கனத்தால்‌ அவர்‌ இவ்வரிய விரதத்தைச்‌ செய்து முடிப்பதற்கும்‌ உடன்பட்டு அங்ஙனமேசெய்வதாகச்‌ சபதஞ்‌ செய்து கொடுக்க, அதன்பின்‌ இருவர்க்கும்‌ திருமணம்‌ நடை பெற்றது. லக்ஷ்மீபதித்வமானது பகவானுக்கு அஸாதாரணமாயிருந்தாலும்‌ லக்ஷ்மியின்‌ பெயரைத்‌ தரித்திருந்த குமுதவல்லித்‌ தாயாருக்குப்‌ பதியென்னுங்‌ காரணத்தினால்‌ ஆழ்வாரும்‌ லக்ஷ்மீபதி யாயினர்‌. ஸ்ரீ வைஷ்ணவலக்ஷ்மிக்குப்‌ பதியென்றுங்‌ கொள்ளலாம்‌.

9-நீலத்வாத்‌ -கண்ணபிரான்‌ “கண்ணனென்னுங்‌ கருந்தெய்வம்‌” என்றும்‌ “கானகமெல்லாக்‌ திரிந்து உன்‌ கரிய திருமேனிவாட” என்றும்‌ சொல்லுகிறபடியே நீலநிறத்தழகார்ந்தவன்‌. திருமங்கை யாழ்வாரோவென்னில்‌ நீலனென்னுக்‌ திருநாமமுடையவர்‌. இராமானுச நூற்றந்தாதியில்‌ “தண்டமிழ்‌ செய்த நீலன்‌ தனக்கு” என்னுமிடத்தில்‌ நீலனென்ற சொல்லால்‌ திருமங்கையாழ்வாரே விவக்ஷிதரென்பதறிக. குருபரம்பராப்ரபாவத்திலு முள்ளதேயிது.

10-நீதிமார்க்கச்யுதிமதிபஜநாத்‌ -கண்ணபிரானுடைய சரித்திரங்‌களை நோக்குமிடத்து “மச்சொடுமாளிகையேறி மாதர்கள்‌ தம்மிடம்‌ புக்குக்‌ கச்சொடுபட்டைக்‌ கிழித்துக்‌ காம்பு துகிலவை கீறி நிச்சலுற்‌ தீமைகள்‌ செய்வாய்‌” என்றும்‌ “பிறர்‌ மக்களை மையன்மை செய்து தோளாலிட்டவரோடு திளைத்து. நீ சொல்லப்படாதன செய்தாய்‌” என்றுமுள்ள பாசுரங்களின்படி கொடிய கடிய சேஷ்டி தங்களைச்‌ செய்த விவன்‌ நீதிநெறியில்‌ நின்றும்‌ நழுவினவனல்லவா என்று நினைப்பதற்கு இலக்காயிருப்பன்‌ கண்ணபிரான்‌. திருமங்கையாழ்‌வாரும்‌ அப்படியேயன்றோ. இத்‌ தன்மையினால்‌ ஒரு ஸாம்யம்‌. நீதி
நெறியில்‌ ஈழுவின தாக நினைக்கலாமத்தனையன்‌றி உண்மையில்‌ இருவரும்‌ நீதிநெறிவழுவாதவர்களே, மது: ச்லோகத்தில்‌ “நீதி மார்க்கச்யுதிமதிபஜநாத்‌” என்றது ச்யுதிமதிவிஷயத்வாத்‌' என்றபடி கண்ணபிரானுடைய நீதிநெறிவழுவாமையை வேதாந்த தேசிகன்‌ யாதவாப்யுதயத்தில்‌ (4-64) “விமோஹரே வல்லவகேஹிநீநாம்‌
நப்ரஹ்மசர்யம்‌ பிபிதே ததீயம்‌, ஸம்பத்ஸ்யதே பரலகஜீவரம்‌ தத்‌ ஸத்யேக யேறைவ ஸதாம்‌. ஸமக்ஷம்‌?
என்னும்‌ ச்லோகத்தினால்‌ தெளிவித்தார்‌. அதாவது,பாரதப்போரில்‌ அச்வத்தாமா பிரயோகித்த அபாண்டவாஸ்த்ரத்தினால்‌ உத்தரையின்‌ கருப்பிண்டம்‌ கரிக்கட்டையாக, அப்போது கண்ணபிரான்‌ “யதி மே ப்ரஹ்மசர்யம்‌ ஸ்யாத்‌ ஸத்‌
யஞ்ச மயி திஷ்டதி, அவ்யாஹதம்‌ மமைச்வர்மம்‌ த ஜீவது பாலக!
” (நான்‌ ப்ரஹ்மசர்யமும்‌ ஸத்யமும்‌ வழுவா தவனாயிருந்தேனாகில்‌ இது உயிர்பெற்றெழுக) என்று பலருமறிய ப்ரதிஜ்ஞை செய்து நிறைவேற்றப்பெற்ற கதையினால்‌ கண்ணன்‌ நீதிநெறிவமுவாதவனென்‌பது விளங்கிற்று, திருமங்கையாழ்வார்‌ நீதிறெறிவமுவா தவரென்‌பதை பட்டர்‌ ஸ்ரீ ரங்கராஜஸ்‌தவதத்தில்‌ “ஜிதபாஹ்யஜிநா தி மணிப்ரதிமா அபி வைதிகயந்நிவ ரங்கபுரே, மணிமண்டபவப்ரகணாக்‌ வித்தே பரகாலகவி: ப்ரணமேமஹி தாக்‌” என்னும்‌ ச்லோக ரத்நத்தினால்‌ வெளியிட்டருளினர்‌.

11-[அந்ததச்ச அவதாராத்‌] பகவானது விபவாவதாரங்களில்‌ க்ருஷ்ணாவதாரமே முடிவானது. கல்கியவதாரம்‌ பவிஷ்யத்தென்‌கிறார்கள்‌. அது வந்தபோது பார்த்துக் கொள்வோம்‌. இதுகாறும்‌ முடிந்துள்ள அவதாரம்‌ க்‌ருஷ்ணாவதாரமே. திருமங்கையாழ்வாரும்‌ ஆழ்வார்களுக்குள்‌ கடைப்பட்டவர்‌. “பொய்கையார்‌ பூதத்தார்‌
பேயார்‌ புகழ்‌ மழிசையையனருள் மாறன்‌ சேரலர்கோன்‌, துய்யபட்ட நாதன்‌ அன்பர்தாள்தூளி நற்பாணன்‌ *நன்கலியன்‌', ஈதிவர்தோற்‌ றத்து அடைவாமிங்கு”
என்ற உபதேசரத்தினமாலைப்‌ பாசுரமுங்‌ காண்க. ஆக இருவரும்‌ சரமாவதாரபூதர்‌ என்பதனால்‌ ஸாம்யம்‌ பெற்றனர்‌.

12-சத்ருத்வம்ஸோத்படத்வாத்‌ -கண்ணபிரான்‌ '*தேனுகன்‌ பிலம்‌பன்‌ காளியனென்னும்‌ தீப்பப்பூடுகளடங்கவுழக்கி” என்றும்‌ “மலை புரைதோள்‌ மன்னவரும்‌ மாரதரும்‌ மற்றும்‌ பலர்‌ குலைய, நூற்றுவரும்‌ பட்டழிய” என்றும்‌ சொல்லுகிறபடியே பகைவர்களை யெல்லாம்‌ வேரோடு களைந்கொழிப்பதில்‌ பேர்‌ பெற்றவன்‌. ஆழ்வாரும்‌ “அருள்‌ மாரி அரட்டமுக்கி அடையார்‌ சீயம்‌” என்றும்‌ '*ஒற்றலர்‌ தங்களை வெல்லு மாடல்மாவலவன்‌ கலிகன்றி” என்றும்‌ தாமே யருளிச்‌ செய்தபடியே புறமதத்தவர்களாகிற பகைவர்களைக்‌ களைக்தொழித்து இதனாலேயே பரகாலனென்று பேர்பெற்றவர்‌.

ஆக இப்பன்னிரண்டு படிகளாலே கண்ணனுக்கும்‌ கலியனுக்கும்‌ ஒற்றுமை நிர்வஹிக்கப்‌ பட்ட தாயிற்று. இந்த 12 அர்த்தங்களைக்‌ காட்டுவதொரு சுலோகம்‌--
ஸூர்யத்வாத்‌ ஸூசிதத்வாத்‌ அபஹ்ருதிகரணாத்‌ கோகுலோத்தாரகத்வாத்‌
பத்தத்வாத்‌ சாஸ்த்ரதத்வாத்படுஜஸஹயோகாச்ச லக்ஷ்மீபதித்வாத்‌
நீலத்வாத்‌ நீதிமார்க்கச்யுதி மதிபஜநாத்‌ அந்ததச்சாவதாராத்‌
சத்ருத்வம்ஸோத்படத்வாத்‌ கலிரிபுமுநிராட்‌ க்ருஷ்ணதுல்யோ விபாதி.


———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ பராங்குச பரகால மஹாத்ம்யம்–

August 30, 2024

ஆனால் அந்த வேதத்துக்கு அங்க உபாங்கங்கள் உண்டானவோ பாதி
இதுக்கும் அவை உண்டோ என்ன சொல்லுகிறது மேல்-

வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் )
அங்க உபாங்கங்கள் போலே
இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும்-
(இருமை -பெருமை -)

அதாவது
ருகாதி வேத சதுஷ்டயத்துக்கும்
சீஷா வியாகரண நிருக்த சந்த கல்ப ஜோதிஷங்கள் ஆகிற ஆறு அங்கங்களும்
மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராத் உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே
(ஆதி -ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் அர்த்த வேதம் தனுர் வேதம் )
இந்த திராவிட வேத சதுஷ்டயதுக்கும்
இரும் தமிழ் நூல் புலவன் நங்கை யாளன்–பெரிய திருமொழி -1-7-10- -என்று
ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற திராவிட வேத சாஸ்த்ரத்தை
கரை கண்ட ஞான ஆதிக்கத்தை உடையரான திரு மங்கை ஆழ்வார் உடைய
கலியன் வாயொலி செய்த பனுவல் -பெரிய திருமொழி -1-4-10–என்று சாஸ்திர ரூபங்களான பிரபந்தங்கள் ஆறும்
மற்றை ஆழ்வார்கள் எண்மர் உடையவும் விலஷணமான பிர பந்தங்களும் என்கை ..

நன் மாலைகள் என்றது -நய நின்ற நன் மாலை-முதல் திருவந்தாதி -57- -என்று
முதல் ஆழ்வார் பிரபந்தத்தில் அருளிச் செய்தது எல்லா பிரபந்ததுக்கும் ஒக்கும் என்று நினைத்து ..

(அங்க உபாங்க சேவை உண்டே -பவித்ர உத்சவம் பொழுது -ஜ்யேஷ்டாபிஷேகம் -அங்கங்கள் உப அங்கங்கள் சேவிக்கிறோம்
அத்யயன உத்சவம் தமிழர் திரு நாள் -247-பாசுரங்கள் மங்களா சாசனம் திருவரங்கத்துக்குத் தானே – )

1-பொய் நின்ற ஞானமும்-திருவிருத்தம் -1– –இத்யாதியாலே ஸ்வரூப விரோதியாய்
வந்தேறி யான தோஷங்களை முதல் அடியிலே பேசினால் போலே
பிரதமத்திலே -வாடினேன் வாடி–பெரிய திருமொழி -1-1-1- -இத்யாதியாலே ஸ்வ ரூபத்துக்கு
வந்தேறியான தோஷங்களை கண்டு நொந்து பேசுகையும்
2-பகவத் ப்ராவண்ய ப்ராசுர்யமும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் –எத்திறம் –ப்ராவண்ய ப்ராஸூர்யம் – /
உருகுமால் நெஞ்சம் கார் ஒக்கும் காட்கரை அப்பன் /முலையோ முழு முற்றும் போந்தில -பால்யாத் ப்ராவண்யம் /
கணபுரம் கை தொழும் பிள்ளையை -பிறர் சொல்ல கேட்டு கை தொழும் இவள் /
அருவி சோர் வேங்கடம் நீர் மலை உருகினாள் உள் மெலிந்தாள்
3-அதில் அர்ச்சாவதாரத்தில் ஊற்றமும்
செய்ய பரத்துவுமாய் –எய்துபவர்க்கு அர்ச்சாவதார எளிது -அவனாகும் நீள் கடல் வண்ணனே –
அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ-ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –
விபவம் பாடப் பிறந்தவர் அர்ச்சையை பாடுவது ஏற்றம் /
காரார் திருவேங்கடம் காணும் அளவும் போய்–ஆராமம் சூழ் / மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே/
ஏரார் முயல் வீட்டுக் காக்கை பின் போவதே
4-கலவியும் பிரிவும் மாறி மாறி வருகையும்
5-அந்ய உபதேச பேச்சும்
6-அது தன்னில் ராத்ரி வ்யசனமும்
7-தூத ப்ரேஷணமும்
8-அநுகாரம்
9–மடல் எடுக்கை-மாசறு சோதி பதிகம் –/ஸ்ரீ சிறிய திருமடல் ஸ்ரீ பெரிய திரு மடல் -ஸ்ரீ திரு நறையூர் நம்பி மேல் –
10/11/12-தோழி தாய் மகள் என்னும் அவஸ்தை த்ர்யாபத்திகளும்-சாழல் பதிகம் அவ்யக்தம் தோழி பதிகம்
இவள் திறத்து இருவரும் –2-7-/-7-2-திருத்தாயார் பதிகங்கள் /
திண்ணம் என் இள மான் புகுமூர் திருக்கோளூரே-உண்ணும் சோறு / கள்வன் கொல்-அவனூர் வினவி சென்றாள்/
கரியான் ஒரு காளை வந்து–அணி யாலி புகுவார் கொலோ -கள்வன் கொல் பிராட்டி திருக்கோலம் இன்றும் சேவை உண்டே /
பொன்னிவர் மேனி -நாள் வேதம் ஓதும் -அவர் நாகரீகர் செல்வர் பெரியர்-என்னையும் நோக்கி
அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகிறேன் –அச்சோ ஒருவர் அழகியவா -ஸுந்தர்யம் இங்கு /
எங்கனே நீ லாவண்யம் அங்கு/இரண்டும் மகள் பாசுரங்கள்
13-இந்திரிய பய குரோசம் -ஐவர் திசை திசை எற்றி-
14-ஈஸ்வர ஸ்வாதந்த்ர்ய பயம் ,
அரவணை மேல் பள்ளி கொள்ளும் முகில் வண்ணனே அறையோ முறையோ ஸ்ரீ திருவிருத்தம் —
தடுப்பார் இல்லாத நிரங்குச ஸ்வாதந்தர்யம் /
தெள்ளியீர்-கை வளை கொள்வது தக்கதோ -ஸ்ரீ நீல மேக பெருமாள் -நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்
15-அசக்ருத் பிரபத்தி கரணம்-ஐந்து தடவை-நோற்ற நாலும்/ உலகுண்ட பெரு வாயா ஸ்ரீ நம்மாழ்வார் / பத்து தடவை இவர்
ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ திருவேங்கடமுடையான் -ஸ்ரீ அண்ணன் கோயில் -ஸ்ரீ திருவரங்கம் -ஸ்ரீ திரு விண்ணகர்
திரு நறையூர் இடர் கெடுத்த திருவாளர் –6-9-பாட்டு தோறும் திருப்பாத பிரஸ்தாபம் இங்கும் உலகுண்ட பெரு வாயா போலே
தேரெழுந்தூர் /திருக்குறுங்குடி மகள் பாவனையில் -9-5-/ 5-9 மானே நோக்கு அங்கு நாயகா பாவம் /
16-ஆர்த்தியின் உடைய கரை புரட்சிகளும்
மாலுக்கு ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி அங்கு -ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சி இவர் –
17-பர துக்க அசஹிஷ்ணுதையாலே பல காலும் ஹிதம் சொல்லுகையும்–தொடக்கமான கட்டளையாலே
மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது ..

———–

நம்மாழ்வார் விஸ்தரித்து அருளியதை திருமங்கை ஆழ்வார் சுருக்கி அருளும் இடங்கள்-

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் –தாய்ப் பாசுரமாக நம்மாழ்வார் ஸர்வேஸ்வரனாக அநு கரித்து அருளிச் செய்த பதிகம் –5-6

திருமங்கை ஆழ்வார் –8-2-6-ஒரே பாசுரத்தில் அநு கரித்து அருளிச் செய்த பாசுரம்
வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இட வகை கொள்வது யாம் என்று பேசினாள் –
இதுவும் தாய் பாசுரம்

——-

இதே போல் தூத ப்ரேஷணமும்
அஞ்சிறைய மடநாராய்
வைகல் பூங்கழிவாய்
பொன்னுலகு ஆளீரோ
எங்கானல் அகம் கழிவாய் -நான்கு பதிகங்களில் முழுவதும் அருளிச் செய்துள்ளார்

திரு மங்கை ஆழ்வாரோ
தூவிரிய மலருழக்கி -3-6-பதிகத்தில் தூது விடுவதில் இறங்கி -நான்கு பாசுரங்களே அருளிச் செய்தார்
இதே போல் -காவார் மடற் பெண்னை -9-4- பதிகத்தில் இரண்டே பாசுரங்களே தூது விடல் அருளிச் செய்தார்

——

சொன்னால் விரோதம் –3-9-பதிகம் முழுவதும் சோறு கூறைக்காக -நர ஸ்துதி பண்ணி ஸ்வரூபம் நாசமடையும் சம்சாரிகளை நோக்கி -நம்மாழ்வார் அருளிச் செய்துள்ளார்

திரு மங்கை ஆழ்வாரோ
ஒரே பாசுரத்தால் -1-1-7-கண்டவா தொண்டரைப் பாடும் சொற் பொருள் ஆளீர் -சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின் நற் பொருள் காண்மின் பாடி நீர் உய்ம்மின் -நாராயணா என்னும் நாமம் -என்று அவற்றையே சுருக்கிப் பேசி அருளுகிறார்-

இதே போல் கொண்ட பெண்டிர் மக்களுற்றார் –9-1-sஆபாச பந்துக்களின் ஹேயத் தன்மைகளை விரித்து அருளிச் செய்துள்ளார் நம்மாழ்வார்
இவற்றையே-பெரிய திருமொழி-8–9-7-பெற்றாரும் சுற்றமும் என்றிவை பேணேன் நான் மாற்றாரும் பற்றிலேன் -என்று சுருக்கி அருளிச் செய்துள்ளார்

இதே போல் உயர் திண்ணன் அணைவது ஒன்றும் தேவும் -நான்கு பதிகங்களால் பரத்வத்தை அருளிச் செய்து இருப்பவற்றையே சுருக்கி
மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி –11-6-ஒரே பதிகத்தால் அருளிச் செய்துள்ளார்

———-

2-நம்மாழ்வார் சுருக்கமாக அருளிச் செய்தவற்றுக்கு திரு மங்கை ஆழ்வார் விஸ்தரித்து அருளிச் செய்தவை
மாசறு சோதி -5-3 பதிகத்தில் -குதிரியாய் மடலூர்துமே -என்றும்
யாம் மடலூர்ந்தும் எம் ஆழி யங்கையனைப் பிரானுடைத் தூ மடல் தண்ணம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் என்றும்
இரண்டு துண்டுகளால் மடலூர்தலைப் பிரஸ்தாபித்தார் –
இவ்வாறு சுருக்கி அருளிச் செய்தவற்றையே இரண்டு மடல்களாக விஸ்தரித்து அருளிச் செய்துள்ளார்

——–

நாராயண மந்திரத்தின் சிறப்பை
எண் பெருக்கு அந்நலத்து ஒண்பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -1-2-10- என்றும்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே -10-5-1- என்றும்
சுருக்கமாக அருளிச் செய்தவற்றையே
பெரிய திருமொழியில்
வாடினேன் வாடி -1-1-என்றும்
கிடந்த நம்பி குடந்தை மேவி -6-10 என்றும்
இரண்டு பதிகங்களில்
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் என்றும்
நாமம் சொல்லில் நமோ நாராயணமே -என்றும்
ஒரு கால் சொன்னால் போல் ஒன்பதின் கால் அருளிச் செய்துள்ளார்

————-

தளிர் மதிச் சடையனும் நான் முகக் கடவளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா —ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்
அகப்படக் கரந்துஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமோ –திருவாசிரியம் -7-
மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி பதிகம் -11-6–தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும் யாவரையும்
ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன -நிகமனப் பாசுரம் –


இன்னமும் எம்பருமான் ஸம்ஸாரி சேதன ஸம் ரக்ஷணார்த்தமாக பல திரு அவதாரங்கள் செய்து அருளும்படியை
எந்நின்ற யோநியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா -திருவிருத்தம் -1- என்றும்
மீனாய் ஆமையுமாய் நரசிங்கமுமாய் குறளாய் கானோர் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே -5-1-10-என்றும்
சுருக்கமாய் அருளிச் செய்தவற்றை
வானோர் அளவும் முது முந்நீர் –8-8-என்றும்
நிலையிடம் எங்கும் இன்றி –11-4- என்றும்
இரண்டு பதிகங்களாலே மிக விஸ்தாரமாக அருளிச் செய்துள்ளார்

—————-

நம்மாழ்வாருக்கு அபிநிவேச அதிசயம் வராஹ அவதாரம் என்பதை
திருவிருத்தத்தின் முடிவிலே -ஏனத்துருவாய் இடந்த ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என்றும்
திருவாய் மொழியின் முடிவிலும்-கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் -என்றும்
ஈடுபட்டு அருளிச் செய்தவற்றை ஒட்டியே
பெரிய திருமொழியின் தொடக்கத்திலேயே -பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே -என்று அருளிச் செய்துள்ளார்

———–

இதே போல் அர்ச்சாவதாரங்களில் திருக் குடந்தை யில் ஈடுபாட்டை
திருவாய் மொழியின் இறுதியிலும் -குடந்தை யங்கோவலன் குடி குடியார்க்கு தொடர்ந்து எங்கும் ஸ்தோத்திரம் சொல்லினர் -என்று அருளிச் செய்து
கோயில் திருமலை பெருமாள் கோயில் -எல்லாம் கிடக்க மூவரில் முதலான ஆராவமுத ஆழ்வாரின் மேல் ஈடுபாடு நாலாயிரமும் புனராவதாரம் செய்யப்பட்டு அருளப் போவதை ஸூசிப்பித்து அருளிச் செய்தவாறு
இந்த அபிநிவேச அதிசயத்தை உணர்ந்தே திருமங்கை ஆழ்வாரும்
சூழ் புனல் குடந்தையே தொழுது -1-1-2- என்றும்
சூழ் புனல் குடந்தையே தொழுமின் –1-1-7-என்றும் முதலிலேயே அருளிச் செய்து
சரம ப்ரபந்தமாகிய திருநெடும் தாண்டகத்திலும் -தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -என்று நிகமித்தும் அருளிச் செய்துள்ளார் –

மேலும் அடுத்த பாசுரத்திலேயே
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை -என்று
நம்மாழ்வாருக்கு திரு நாட்டில் திருக்குடந்தை நினைவு வருவதற்கு உறுப்பான ஐதிக்யத்தையும் காட்டி அருளுகிறார்
நாத யாமுனர் போல்வாரை அன்னம் என்னும் -ஆச்சார்ய ஹ்ருதயம் -151-
அன்னமாயும் முனிவராயுமுள்ள நாதமுனிகளுடன் திருக்குடந்தை நிலத்தேவர்களான ஸ்துதிக்க –
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை-என்று நாதனுக்கு நாலாயிரமும் உரைத்தான் வாழியே –என்றபடி
அரும் தமிழ் மறையை வெளிப்படுத்தி அருளிய நம்மாழ்வார்
ஆராவமுதாழ்வாருக்கு பதிகம் அருளி சமர்ப்பித்த பின்னர் -தாமும் அவ்வாறு செய்யக் கூடாது என்று திரு உள்ளம் பற்றியே துணுக்குப் பாசுரங்கள் பரவி அருளிச் செய்துள்ளார்

———–

3- இருவரும் சமமாக அருளிச் செய்தவை –

3-1- ததீய சேஷத்வம்

பயிலும் சுடர் ஒளி -3-7- நெடுமாற்கு அடிமை -8-10-இரண்டு பதிகங்கள் திருவாய் மொழியில்
நண்ணாத வாள் அவுணர் -2-6-கண் சோர வெங்குருதி –7-4- இரண்டு பதிகங்கள் பெரிய திருமொழியில் –

3-2- தலைமகள் எல்லாம் இழந்தவற்றை அருளிச் செய்யும் அருளிச் செயல்கள்

மாலுக்கு வையம் அளந்த பதிகத்தில் -6-6–இழந்தது சங்கே -இழந்தது மாமை நிறமே -இழந்தது பீடே —இழந்தது கட்டே –என்று திருத்தாயார் பேச்சு
கரை எடுத்த சுரி சங்கு -பெரிய திருமொழி -8-3- பதிகத்தில் -இழந்ததேன் என் வரி வளையே -இழந்ததேன் என் கன வளையே
இழந்தேன் என் சரி வளையே –இழந்தேன் என் பெய் வளையே –என்று தன வாயாலே அருளிச் செய்கிறார்

3-3- திருத்தாயார் என் நினைந்து இருக்கிறாய்

கங்குலும் பகலும் -7-2- பதிகத்தில் இவள் திறத்து என் செய்கின்றாயே –இவள் திறத்து என் சிந்தித்தாயே –என்று பாசுரம் தோறும் திருத் தாயார் பேச்சு
திவளும் வெண் மதி போல் திருவிடவெந்தை பதிகத்தில் -2-7- உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் என்று பாசுரம் தோறும் திருத் தாயார் பேச்சு

————————————————————————————————

4- கட்டுவிச்சி பேச்சு

தீர்ப்பாரை யாமினி -4-6-தேவதாந்திர கட்டுவிச்சி வந்து புகுந்தமை சொல்லிற்று
சிறிய திரு மடலிலும் திரு நெடும் தாண்டகத்திலும் வைஷ்ணவ கட்டுவிச்சியின் பேச்சு சொல்லிற்று

——————————————————————————————-

5- திருத் தாயாரை விட்டு செல்வது

உண்ணும் சோறு பதிகம் -6-7-பராங்குச நாயகி திருத் தாயாரை விட்டு தனியாகவே திருக் கோளூர் நோக்கி நடந்தமை சொல்லிற்று
கள்வன் கொல் பதிகம் -3-7-வயலாலி மணவாளன் வந்து பரகாலை நாயகியை திருத் தாயாரை விட்டு கூட்டிப் போனமை சொல்லிற்று ‘-

—————–

ஏவம் பூத பக்தி தசையில் இவர் பெண் பேச்சாக பேசும் இடத்தில் –
தோழி தாய் மகள் என்று த்ரி விதமாக பேசுகிற இதுக்கு கருத்து என் என்னும் அபேஷையில்
அத்தை பிரகாசிப்பிகிறார் மேல் —

சம்பந்த உபாய பலங்களில்
உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிற
ப்ரஜ்ஞா அவஸ்தைகளுக்கு
தோழி தாயார் மகள் என்று பேர் —சூரணை -133-

(சம்பந்தத்தில் -உணர்த்தி ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு-தோழி என்று பெயர் –
உபாயத்தில் -துணிவு ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தாயார் என்று பெயர் –
பலத்தில்- பதற்றம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு மகள் என்று பெயர் )

(ஞானத்தில் தம் பேச்சு வேதாந்தம் ஞானம் -என்றவாறு-திருமந்திர ஞானம் -பெண் பேச்சு
சம்பந்த ஞானம் -தோழி -/ உபாய அத்யாவசியம்–தாய் / பேற்றுக்கு த்வரிக்கை மகள்
பிரஞ்ஞா வேறே ஞானம் வேறே -எப்பொழுதும் உள்ள ஞானத்துக்கு பிரஞ்ஞா அவஸ்தை –
மூன்றுமே எப்பொழுதும் இருக்கும் -ஓன்று உந்த மூன்று அவஸ்தைகள்
நமக்கு முக்குணங்களும் இருந்து ஒவ் ஓன்று ஒவ் ஒரு காலத்தில் உயருமா போலே — )

சம்பந்தத்தில் -உணர்த்தி ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு-தோழி என்று பெயர் –
அதாவது –
தோழி ஆவாள்-நாயக நாயகிகளை இணக்கிச் சேர்க்குமவள் ஆகையாலே –
திரு மந்த்ரத்தில் பிரதம பதத்தால் ஈஸ்வரனோடு ஆத்மாவுக்கு சொல்லப் பட்ட
அநந்யார்ஹ சேஷத்வாதி சம்பந்த ஞானமே -அவனோடு இந்த ஆத்மா சேருகைக்கு
ஹேது -சம்பந்தம்-ஆகையால்-அந்த சம்பந்த ஞானம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தோழி என்றும் –
(ஆதி -காரண கார்ய பாவம் -ரக்ஷக ரஷ்ய பாவம் -சேஷ சேஷி சம்பந்தம் இத்யாதிகள்)

உபாயத்தில் -துணிவு ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தாயார் என்று பெயர் –
அதாவது
தாயார் ஆவாள்-பெற்று வளர்த்த பெண் பிள்ளை ப்ராப்த யவ்வனையாய் நாயக விஷயத்திலே அதி மாத்திர ப்ராவண்யத்தாலே-
அவன் இருந்த இடம் ஏறப் போக வேணும் என்று பதறும் அளவிலும் – அவன்தானே வரக் கண்டு இருக்கை ஒழிய –
படி கடந்து புறப்படுகை குல மரியாதைக்கு போராது என்று நிஷேதித்து போருமவள் ஆகையாலே –
சித்தோ உபாயத்தை பற்றினவர்களுக்கு ப்ராப்தி விளம்ப ஹேது இல்லாமையாலே –
சீக்கிரமாக ப்ராப்யத்தை பெற வேணும் என்கிற அந்த த்வரையினுடைய உத்பத்தியாதிகளுக்கு பிரதம ஹேதுவாய் –
அந்த த்வரை பிராப்ய வைலஷண்ய தர்சனத்தாலே -க்ரம பிராப்தி பற்றாமல் முறுகி நடக்கும் அளவில் –
இது பிரபன்ன குல மரியாதைக்குச் சேராது என்று நிசேஷித்து –
சேஷியானவன் தானே வந்து விஷயீகரிக்கக் கண்டு இருக்க வேண்டும் என்று -இதின் துடிப்பை அடக்கப் பார்க்கிற
மத்யம பத பிரதிபாதித -உபாயத்யவசாயம் -ஆகிற -பிரஜ்ஞா அவஸ்தையை தாயார் என்றும்-

பலத்தில்- பதற்றம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு மகள் என்று பெயர்
அதாவது
தலை மகள் ஆவாள் –இயற்கையிலே புணர்ந்து நாயகனின் வைலஷண்யத்தில் ஈடு பட்டு –
குல மரியாதைகளையும் பாராதே கிட்டி அல்லாது தரியேன் என்னும் பதற்றத்தை உடையவள் ஆகையாலே
பிரதம மத்யம பதங்களால் அறுதி இடப் பட்ட சேஷியாய்-சரண்யன் ஆனவனுக்கு –
சரம பத ப்ரோக்தமான -ஸ்வரூப ரூப குண விபூதிகளால் வந்த வைலஷண்யத்தை அனுசந்தித்து –
தத் அனுபவ விளம்ப அஷமத்வத்தாலே-தத் ஏக உபாயத்வ அத்யாவசத்தையும் அதிக்ரமித்துக்
கிட்டி அனுபவித்து அல்லது தரிக்க மாட்டாதபடி நடக்கிற பிராப்ய த்வரை ஆகிற பிரஜ்ஞா அவஸ்தைக்கு
மகள் என்று பேர் இட்டு சொல்வது என்கை —

ஞான அவஸ்தைகள் என்னாமல் பிரஜ்ஞா அவஸ்தைகள் என்றது
திரிவித அவஸ்தையும் இவருக்கு சர்வ காலமும் உண்டு என்று தோற்றுகைக்காக–
பிரஜ்ஞா த்ரைகாலிகீ மதா – என்னக் கடவதிறே–பத த்ர்யார்த்த ஞானமும் திரு உள்ளத்தில்
எப்போதும் உண்டாய் இறே இருப்பது ..

——

இவ் அவஸ்தைகள் மூன்றும் இவர் பேச்சிலே தோன்றுமோ என்னும் அபேஷையிலே –
தோழி தாய் மகள் பேச்சான திரு வாய் மொழிகளிலே இவை தெரியும் என்னும் அத்தை
ஸூக்ரஹமாக வரைந்து அருளிச் செய்கிறார் மேல்–
(தோழி -கடகர் ஸமாச்ரயணம் -பிரணவார்த்தம் -ஆதாரம் –
அதுக்குத் தக்க உபாய அத்யாவசியம் -நமஸ் சப்தார்த்தம் -தாய் பாசுரம் –
ப்ராப்ய த்வரை தலைமகள் பாசுரம் -நாராயணாயா சப்தார்த்தம் )

சஹி வெறி விலக்கி ஆசை அறுத்து அறத்தொடு நின்ற மூன்றில்
அனந்யார்ஹத்வமும் —

வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக் கட்டு இழந்து அகன்று
சார்வதே வலித்தமை ஸாதனம் ஆமோ என்று
மாதா அஞ்சி முறைப்பாட்டு முறை இடுகிற ஏழில் அத்யவசாயமும் –

புத்ரி பலகால் ஆள் விட்டு – ஆற்றாமை சொல்லி -கவராதமை விட்டு
இரைக்க மடல் எடுத்து – கண் புதைய போக்கற்று- உரு நெஞ்சுள் எழக் கூடு நாள் தேடி
தாழ்ந்ததுக்கு ஊடி உசாத் துணை அற்று – சூழவும் பகை முகம் செய்ய- தடை நில்லாதே
புயக்கற்று – மாலையும் – காலையும் பூசல் இடுகிற பதினேழில் த்வரையும் தெரியும் —சூரணை -134-

சஹி வெறி விலக்கி ஆசை அறுத்து
அறத்தொடு நின்ற மூன்றில்-(தீர்ப்பாரை யாமினி- துவளில் மா மணி மாடம் – கரு மாணிக்க மலை )
அனந்யார்ஹத்வம்-சம்பந்த ஞானம் தெரியும்-
வெறி விலக்கி-
அதாவது
எம்பெருமானோடே இயற்கையில் புணர்ந்து பிரிந்து ஆற்றாமையால் –
மோகங்தையாகக் கிடக்கிற பிராட்டி தசையைக் கண்டு தாய் மார் கலங்கி –
இவள் நோயையும் அதுக்கு நிதானத்தையும் -பரிகாரத்தையும் அறியாதே –
பிரதிபன்ன பாஷிணியாய் இருப்பாள் ஒரு கட்டுவிச்சி சொல்லைக் கொண்டு –
இந்த நோய்க்கு பரிகாரமாகக் கருதி -வெறியாடல் உற –
இவள் பிரகிருதி அறியும் உயிர்த் தோழி அநந்யார்ஹையான இவளுக்கு அந்ய ஸ்பர்சம் சஹியாது-
நாம் இதை விலக்காது ஒழியில் -இவளை இழக்க வரும் என்று பார்த்து –
அப்போது நிரூபித்து அறிந்தாளாக இவள் நோவையும் -அதுக்கு நிதானத்தையும் அவர்களுக்கு சொல்லி –
தத் உசித பரிகாரங்களையும் விதித்து- அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேல்மின் -என்றும் –
உணங்கல் கெட கழுதை உதட்டாட்டம் கண்டு என் பயன் -இத்யாதிகளால் வெறியை விலக்கின பாசுரத்தாலே

(தலைமகள்) பிராப்ய த்வரை தசையில் அவசாதம் அடியாக – உபாயத்வ அத்யவாசம் ( தாயார் )கலங்கி-
தர்மேன பாபம் அபநுததி -தைத்ரியம் -–
( பலத்தில் விருப்பம் இல்லாமல் கர்மங்களை செய்வதனால் பாவத்தைப் போக்கடிக்கிறான் )என்கிறபடியே –
தர்ம அனுஷ்டானத்திலே துக்க ஹேதுவை போக்கலாம் என்பார் வார்த்தையைக் கொண்டு –
இவ் அவசாதத்தை பரிஹரிக்கலாமோ என்று தேவதாந்தர்யாமி பரமான கர்ம கபாலங்களிலே பிரவர்திக்கத் தேட –
அவ்வளவிலே சம்பந்த ஞானம் ஆனது ( தோழியானவள் )இவ் அவசதம் கர்ம பலம் அன்றிக்கே ஆகஸ்மிக பகவத் கடாஷம் பலமாக –
அசாதாராண விக்ரக விசிஷ்டனாவனை அனுபவிக்கையால் உண்டான பிராவண்யம் கார்யம் ஆகையாலே
இதுக்கு அது பரிஹாரம் அன்று – அநந்யார்ஹ சேஷத்வதுக்கு விருத்தம் ஆகையால் ஸ்வரூப நாசமுமாம் —
அந்ய ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த –தீர்ப்பாரை யாமினியும் –

ஆசை அறுத்து –
அதாவது
திரு துலைவில்லி மங்கலத்திலே அதி பிரவணையாய் இருக்கிற பெண் பிள்ளையை
மீட்கப் பார்க்கிற தாய்மாரைக் குறித்து தோழி யானவள்-
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை-என்று நீங்களே அன்றோ
திரு துலைவில்லி மங்கலத்தில் கொண்டு புக்கு இப் பிராவண்யத்தை விளைத்தீ கோள் –
இனி பிராப்த விஷய பிரவணையான இவளை உங்களால் மீட்கப் போகாது –
ஆன பின்பு- இவள் பக்கல் உங்களுக்கு ஆசை அற அமையும் என்ற பாசுரத்தாலே –

அர்ச்சாவதார சுலபமான விஷயமே உபாயம் ஆகையாலே எப்போதும் இதிலே நோக்காய் இருக்கும் அத்யாவசியம் –
அவ் விஷய வைலஷண்யத்தை விஷயீகரித்த பிராவண்ய கார்யமான த்வரை
உபாயத்திலே அன்வயிக்கிறதோ என்னும் அதி சங்கையால் – அத்தை நிவர்ப்பிக்கத் தேட –
அவ்வளவிலே சம்பந்த ஞானம் சேஷ வஸ்து கதமான இப் பிராவண்யம் சேஷி உகப்புக்கு
விஷயமாம் அல்லது உபாய கோடியில் அன்யவியாது —
பிராப்த விஷய வைலஷண்யம் அதீனமாக வந்தது ஆகையாலே நிவர்த்திக்கவும் போகாது —
இத்தை ஸ்வ நிவர்த்யமாக நினைத்து இருக்கிற ஸ்வாதந்த்ர்யம் அத்யந்த பாரதந்த்ரம் ஆகிற
ஸ்வரூபத்துக்கு விருத்தம் ஆகையாலே த்யாஜ்யம் என்று ஸ்வ ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த
துவளில் மா மணியும் —

அறத்தொடு நின்ற
அதாவது
தலைமகள் பருவத்தை கண்ட பந்து ஜனங்கள் ஸ்வயம் வரத்துக்கு ராஜ லோகத்தைத் திரட்டுகைக்காக மண முரசு அறைவிக்க-
திரு புலியூரிலே நாயனாரோடே இவளுக்கு கலவி உண்டாய்த்து என்னும் இடத்தை
இவள் வடிவிலும் பேச்சிலும் உண்டான வேறுபாட்டாலே அறிந்த உயிர் தோழி யானவள் –
இத் த்வனி பெண் பிள்ளை செவியில் படுமாகில்-மானிடவர்க்கு என்று பேச்சு படில் வாழாத தன்மையளாய்
இருக்கிற இவளைக் கிடையாது — ஏற்க்கவே பரிக்ரஹிக்க வேணும் என்று இவள்
பந்து ஜனங்களைக் குறித்து இவளுக்கு திருப் புலியூரில் நாயனாரோடே சம்ஸ்லேஷம் ப்ரவ்ருத்தம் ஆயிற்று போலே இரா நின்றது –
தத் குண சேஷ்டிதங்களையே வாய் புலற்றா நின்றாள் –ஆன பின்பு நீங்கள் செய்கிறது தர்மம் அல்ல என்ன–
ஆகில் இவளுக்கு தக்க அவயவ சோபை ஆபரண சோபை முதலான நாயக லஷணங்கள் அவனுக்கு உண்டோ என்ன –

அவை எல்லாம் குறை இல்லை –அவை ஒன்றும் இல்லை யாகிலும் -இவள் அங்கே அநந்யார்ஹை ஆனமைக்கு
அடையாளம் ஸூ வ்யக்தமாக காணலாம் –ஆன பின்பு இத்தை தவிறுங்கோள் என்று
மத்யஸ்தையாய் நின்று தர்மம் சொல்லுகிறாளாய்-அந்த மணத்தை விலக்கின பாசுரத்தாலே பிராப்ய த்வரையின் உடைய பரிபாகத்தை
உபாயத்வ அத்யவசாய தசையில் நின்று தரிசித்த அநந்தரம் -அது பகவத் அநந்யார்ஹை ஆனமை அறியாதே –
அந்ய விஷயத்துக்கும் அர்ஹமோ என்று நிரூபிக்க –
அவ்வளவிலே சம்பந்த ஞானம் -இதுக்கு அந்ய சேஷத்வ பிரசங்கமும் ஸ்வரூப நாசகம் –
சேஷியானவனுடைய போக்யதையாலும் அது தன்னை ஒழியவும் நிருபாதிக சேஷத்வத்தாலும்
இவ் வஸ்து அவனுக்கு சேஷம் என்று அறுதி இட்ட –
கரு மாணிக்க மலை-8-9-யுமாகிற தோழிப் பேச்சான
இம் மூன்று திரு வாய் மொழியிலும் அனந்யார்ஹ சேஷத்வம் தோன்றும் என்கை —

ஆக இத்தால்
வெறி விலக்கியும் ,
ஆசை அறுத்தும் ,
அறத்தோடு நின்றும் –
இவ் வஸ்து -அந்ய சேஷமும் அன்று –ஸ்வ சேஷமும் அன்று -பகவத் ஏக சேஷம் என்று சொன்ன
இம் மூன்று திரு வாய் மொழியும் -சம்பந்த ஜ்ஞான தசையில் பேச்சு என்னும் இடம் சம்பிரதி பன்னம் என்பது ஆயிற்று —

வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக் கட்டு இழந்து அகன்று சார்வதே வலித்தமை
ஸாதனம் ஆமோ என்று மாதா அஞ்சி முறைப்பாட்டு முறை இடுகிற ஏழில் அத்யாசசாயமும் –
அதாவது

1-வாடி –
ஆடி ஆடி– -யிலே– வாடி வாடும்-2-4-1– -என்று அடியார்கள் குழாங்களை உடன் கூடப்
பெறாமையாலே வந்த கிலேசத்தால் ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போல் வாடி–
( காசை இழந்ததுக்கும் மேலும் பொன்னை இழந்ததுக்கும் மேலே மணியை இழந்த தசை அன்றோ )

2-மெலிந்து
பாலனாய் ஏழ் உலகிலே- கண்ணன் கழல் துழாய் பென் செய் பூண் மென்முலைக்கு என்று மெலியும்-4-2-1-என்று
கை கழிந்தவற்றை ஆசைப்பட்டு மெலிந்து-
(என்னுடை கோமளம் என் சொல்லும் என் வசமும் இல்லை நங்கைமீர் -உடல் மெலிய திருவடி மேலே சாத்திய
திருத்துழாய் கிடைக்காமல் -கை கழிந்தவற்றையும் ஆசைப்பட்டு -முடியானே -3-8-உடன் சங்கதி இதுக்கு –
இதில் பாசுரம் தோறும் திருவடி பிரஸ்தாபம் –உலகமுண்ட பெரு வாயா போலே இங்கும் உண்டே -)

3-பித்தேறி –
மண்ணை இருந்து துழாவி- யிலே -என் பெண் கொடி ஏறிய பித்தே-4-4-1- -என்னும்படி
சத்ருச பதார்த்தங்களையும் -சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாக நினைத்து கிட்டும் படி பித்தேறி –
( ஏறிய பித்துடன் எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் -என்று சொல்லுவாள் -ஞானம் முற்றிய பித்து தானே இது
தேறியும் தேறாமல் மாயன் திறத்தனள் இவள் )

4-ஏறப்பேசி
கடல் ஞாலத்திலே -ஈசன் வந்து ஏறக் கொலோ -5-6-1–என்று ஆற்றமையாலே
அனுகரிக்கிரமை அறியாதே -ஈஸ்வரன் ஆவேசித்தானோ என்னும் படி அவனாகவே பேசி —
(திருக்குறுங்குடிக்கும் வானமா மாலைக்கும் தூரம் கடல் ஞாலம் உண்டே -சாடுவாகச் சொல்வர்
அநுகாரமும் ஆவேசமும் -கீழே தரிப்பும் தளர்வும் போலே )

5-கட்டு அழிந்து
மாலுக்கு வையத்திலே –கற்புடை யாட்டி இழந்தது கட்டே-6-6-1- -என்னும்படி
பகவத் அலாப கிலேசத்தாலே கட்டடங்க இழந்து —
(துவளில் மா மணி மாடம் ஆசை அறுத்து -அதில் இருந்து தாய் பாசுரம் -மாலுக்கு சென்றதுக்கு அவதாரிகை –
த்வரை மிக்கு அனுபவ அலாபம்–ஆற்றாமை முறுகி-தோழி தசையும் கலங்கி -சம்பந்த ஞானமும் தரிப்புக்கு உறுப்பாகாமல்
தளர்ச்சிக்கு உறுப்பாக -உபாய அத்யாவசாயம் இத்தனைக்கும் கலங்காமல் இருந்து –
மாலுக்கு பாரவஸ்யத்தால் எறாளும் வேண்டாம் என்று உபேக்ஷித்தவை தன்னடையே இழந்தவற்றை அன்றோ அருளிச் செய்கிறார் )

6-அகன்று –
உண்ணும் சோற்றிலே–இன்று எனக்கு உதவாது அகன்று-6-7-1- -என்று தன்னைப் பிரிந்து
கிலேசப் படுகிற இவ் ஆபத்து தசையிலே எனக்கு உதவாதே போனாள் என்னும் படி அகன்று —
(மூன்றாவது சேர்ந்தால் போலே பிரேம தசை திருவாய்மொழி
தன் சொத்தை பார்த்து போனவள் என் சொத்தையும் எடுத்து போக வேண்டுமோ –
கண்ணும் கண்ண நீருமான இவள் திரு முகம் தானே தாயாருக்கு சொத்து
தன் திருவும் என் திருவும் -திருமாலைத் தேடித் போனாள்-என் திருமகள் சேர் மார்பனே 7-2- )

7-சார்வதே வலித்தமை
கங்குலும் பகலிலே -சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையல்-7-2-1–என்னும் படி
அவனைக் கிட்டி அவன் சந்நிதியில் முடிய வேணும் என்று வியவசிதை ஆனமை
(வலித்தமை-அத்யாவசியம் -உறுதி உடைமை -சிக்கனவே -அவன் முன்னே முடியும் நிலை -பதினாறாயிரப்படி )
உபாசகருக்கு பரபக்தி தசையில் உண்டாகும்
க்லானி கார்ச்யாதிகள் (வாட்டமும் மெலிவும் -துரும்பாக இளைத்து போவது ) போல சாதனத்தில்
மூதலிடுமோ என்று மாதாவானவள் அஞ்சி – அவன் தன்னையும் வினவ வந்தவர்களையும்
குறித்து வாடா நின்றாள்- மெலியா நின்றாள் -என்றார் போலே முறைப் பட்டு –
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே–திருவிருத்தம் -62- என்று
( முகில் வண்ணன் -அரங்கன் -7-2-திருவாய் மொழிக்கும் இந்த திரு விருத்த பாசுரத்துக்கும் சம்பந்தம் உண்டே
உபாய அத்யாவசியம் ப்ராப்யம் அந்தர்கதம் ஒழிய உபாயாந்தரம் இல்லையே )
அத்தலையில் கிருபை ஒழிய இவள் பக்கல் உள்ளவை ஒன்றும் ஹேது இல்லை –
(பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு -இதுவே கிருபை -பக்தி உபாயம் இல்லை -)

ஆன பின்பு இவளை இப்படி துடிக்க விட்டு இருக்கை உம்முடைய கிருபைக்கும் ரஷகத்வதுக்கும்
போருமோ என்று கூப்பிடும் ஏழு திரு வாய் மொழிகளிலும் –
உபாயத்வ அத்யவாசம் தோன்றும் என்கை-
இத்தால் தாய் பேச்சான ஏழு திரு வாய் மொழியும்
உபாயத்வ அத்யாவசாய தசையில் பேச்சு என்னும் இடம் ஸ்பஷ்டம் என்ற படி —

புத்ரி பலகால் ஆள் விட்டு ஆற்றாமை சொல்லி கவராதமை விட்டு
இரைக்க மடல் எடுத்து -கண் புதைய போக்கற்று உரு நெஞ்சுள் எழக் கூடு நாள் தேடி
தாழ்த்ததுக்கு ஊடி உசாத் துணை அற்று சூழவும் பகை முகம் செய்ய தடை நில்லாதே
புயக்கற்று மாலையும் காலையும் பூசல் இடுகிற பதினேழில் த்வரை யும் தெரியும் —
அதாவது –

1-2-3-4-புத்ரி பல கால் ஆள் இட்டு
தலைமகள் ஆனவள்-
அஞ்சிறை மடநாராய்-1-4-
வைகல் பூம் கழி-6-1–
பொன் உலகு ஆளீர்-6-8–
எம் கானல்-9-7–
என்கிற நாலு திரு வாய் மொழிகளிலும் க்ரம ப்ராப்தி பற்றாமல் தூது விட்டு —
( திருவாய் மொழி முழுவதுக்கும் மூன்று ஸங்க்ரஹம் -அதுக்கு முதல் மூன்று பாசுரங்கள் ஸங்க்ரஹம் –
அதுக்கு முதல் பாசுரம் ஸங்க்ரஹம் )

5-ஆற்றாமை சொல்லி –
வாயும் திரை உகளிலே –2-1-ஆற்றாமை சொல்லி அழுவோமை -என்று சகல பதார்த்தங்களும்
பகவத் அலாபத்தாலே நோவு படுவதாக கருதி அவற்றை சம துக்கிகளாக கொண்டு அழுது-

6-கவராதவை விட்டு –
ஏறாளும் இறையோனில்-4-8– மாறாளன் கவராத மணிமாமை குறைவிலம்-என்று அவன் விரும்பாதவற்றை உபேஷித்து-
(ஏறாளும் இறையோனில்-4-8 -ஆத்மாத்மீயங்கள் வைராக்யம்
என்னையும் என் உடைமையையும் சக்கரைப்பொறி ஒற்றிக் கொண்டு-பெரியாழ்வார் –
மாம் மதியஞ்ச அகிலம் – -தேசிகன்-அனைத்தும் சேஷம் -இது இல்லை என்றால் வேண்டாமே ஆழ்வார்
லோக யாத்ரை வைராக்யம் கீழே-ஐஸ்வர்ய கைவல்யம் ஒரு நாயகம் )

7-இரைக்க மடல் எடுத்து –
மாசறு சோதியிலே-5-3- -நாடும் இரைக்கவே–நாம் மடலூர்த்தும் என்று ஜகத் ஷோபம் பிறக்கும் படி மடலூர்வன் என்று
(ஹஸ்திகிரி பிரதிவாதி பயங்கரம் அண்ணா-மா முனிகள் சார்பில் அவர் முன்னிலையில் -வேங்கடேச ஸூப்ரபாதம் – ஸ்தோத்ரம் –
மங்களம் இத்யாதி சமர்ப்பித்து -ஒன்றும் தேவும் பதிக வியாக்யானம் கேட்டு சமஸ்க்ருத பாண்டித்யம் அறிந்து அடி பணிந்தார் –
உபதேசம் கேட்டு பொலிக பொலிக பொலிக மங்களாசானம் -5-2-)

8-கண் புதைக்கப் போக்கற்று-
ஊர் எல்லாம் துஞ்சியிலே -5-4–பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன்னிற்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் -என்றே பிரேம வியாதியும் ,
ராத்ரியாகிற கல்பமும் கிருத சங்கேதிகளாய் சூழப் பொருகையாலே , போக்கடி அற்று –
( கிருஷ்ணை ரஷித்த இருள் அங்கு க்ருஷ்ண த்ருஷ்ண தத்துவத்தை சிஷித்த இருள் இங்கு-
பேர் அமர் காதல் பின்நின்ற காதல் கழிய மிக்கதொரு காதல் 5-3-/-4-/-5-மொத்தமான நாயகி –
பின்பு மொத்தமாக தானான தன்மையில் சரணாகதி -நாயகி பாவத்திலும் சரணாகதியும் உண்டே – )

9-உரு நெஞ்சு உள் எழ
எங்கனேயோ அன்னைமீர்காள் -திருவாய்மொழியிலே -5-5– -சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு
என் நெஞ்சுள்ளும் எழும் -என்று தேஜஸ் தரங்கம் மத்யே உன்நேயமான
அப்ராக்ருத விக்ரகம் பிரிதி அப்ரிதி சமமாம் படி உரு வெளிப்பாடே நெஞ்சில் பிரகாசிக்க –

10-கூடு நாள் தேடி
மானேய் நோக்கிலே-5-9- -திரு வல்ல வாழ் உறையும் கோனாரை அடியேன் கூடுவது என்று கொல் ?
என்று அவனை கூடும் நாளை பிரார்த்தித்து -இப்படி பிரார்தியா நிற்கவும் தாழ்ந்து வந்தவாறே –
( அடி பிரஸ்தாபம் ஏழு பாசுரங்கள் இந்த பதிகத்திலும் உண்டே )

11-தாழ்த்ததுக்கு ஊடி
மின்னிடை மடவாரிலே-6-2- -போகு நம்பீ -என்று பிரணய ரோஷத்தால் ஊடி
(தானான தன்மை -ஞானத்தால் சரணாகதியும் பண்ணி -பிரேமத்தால் நாயகி பாவத்தால் தூதும் விட்டு
சற்றே காலம் தாழ்த்து வந்ததால் பிரணாய ரோஷம் )

12-உசாத் துணை அற்று
வெள்ளை சுரி சங்கிலே -7-3–என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் இனி யாரை கொண்டு என் உசாகோ –
என்று அபஹ்ருத சித்தை ஆகையாலே உசாத் துணையும் இன்றி —

13-சூழவும் பகைமுகம் செய்ய
ஏழையர் ஆவியிலே –7-7 –கண்ணன் கோள் இழை வாண் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றவே –
என்று உரு வெளிப்பாட்டாலே பாதக வர்க்கம் ஒருமுகமாய் நலிய –

14-தடை நில்லாதே –
நங்கள் வரி வளையிலே-8-2- -காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லை-
என்று ஹிதம் சொல்கிற தோழிமார் அன்னைமாரை அதிகிரமித்து –

15-புயக்கற்று
இன் உயிர் சேவலிலே–9-5 -இழை நல்ல வாக்கையும் பெய்யவே புயக்கற்றது –
என்று போலி கண்டு நொந்து முடிகையிலே வ்யவசிதையாய்

16-17- மாலையும் காலையும் பூசல் இடுகிற-
( முழு இரவு வியசனம் ஊரெல்லாம் துஞ்சி–5-4-இப்பொழுது மிகவும் தளர்ந்து அவ்வளவும் தங்க மாட்டாரே )
மல்லிகை கமழ் தென்றலிலே-9-9- -சந்த்யா காலத்தில் கிருஷ்ணனை பசுக்களின்
முற் கொழுந்தில் வரக் காணாமல் பாதக பதார்த்தங்களால் நலிவு பட்டு –
வேய் மரு தோள் இணையிலே-10-3- -பிராத காலத்தில் கிருஷ்ணன் பசு மேய்க்க
போனானாக அதி சங்கை பண்ணி -அவன் முகத்தை பார்த்து -நீ பசு மேய்க்கப் போனால்
நலியக் கடவ பாதக பதார்த்தங்கள் -நலியா நின்றது என்று கூப்பிடுகிற

பதினேழு திரு வாய் மொழிகளிலும் பிராப்யத் த்வரை தோன்றும் என்கை —
இத்தால் தலைமகள் பேச்சான பதினேழு திரு வாய் மொழிகளும்
பிராப்ய த்வரை தசையில் பேச்சு என்னும் இடம் வ்யக்தம் என்ற படி —

திருமங்கை ஆழ்வார் தலைமகள் திருத்தாயார் பதிகங்களும் 27 ஆகும்
மானமரும் மென்னோக்கி பதிகம் தோழிமார் இருவரும் பரஸ்பரம் ஸம்பாஷிக்கும் முகத்தாலே பரத்வ ஸுலப்யங்களை வெளியிட்டு அருளுகிறார் -அது தோழி பதிகம் அன்று –
திருத்தாயார் பதிகங்கள் ஒன்பது -அவை
1-திவளும் வெண் மதி போல்
2-கள்வன் கொல் நான் அறியேன்
3-கவள யானை கொம்பு ஒசித்த
4-வெருவாதாள் வாய் வெறுவி
5-சிலையிலங்கு பொன்னாழி
6-தெள்ளியீர் தேவருக்கும் தேவர்
7-மூவரில் முன் முதல்வன்
8-புள்ளுருவாகி நள்ளிருள் வந்த
9-திருநெடும் தாண்டகத்தில் பட்டுடுக்கும் பதிகம்

தலை மகள் பதிகங்கள் -18
1- திரிபுரம் மூன்று எரித்தானும்
2-தூ விரிய மலர் உழக்கி
3-தந்தை காலில் பெரு விலங்கு
4-கரையெடுத்த சுரி சங்கம்
5-விண்ணவர் தங்கள் பெருமான்
6- தந்தை காலில் விலங்கற
7-பொன்னிவர் மேனி மரகதத்தின்
8-தன்னை நைவிக்கிலென்
9-காவார் மடற் பெண்ணை
10-தவள விளம்பிறை துள்ளு
11-காதில் கடிப்பிட்டு
12-திருத்தாய் செம்போத்தே
13-குன்றம் ஓன்று எடுத்தேந்தி
14-குன்றம் எடுத்து மழை தடுத்து
15-மன்னிலங்கு பாரதத்து
16-சிறிய திருமடல்
17-பெரிய திருமடல்
18- திருநெடும் தாண்டகத்தில் மை வண்ண நறுங்குஞ்சி -பதிகம்
ஆக இரண்டும் சேர்ந்து -அந்யாபதேச பதிகங்கள் 27 ஆயிற்று
இவற்றின் ஸா தர்ம்ய வைதர்ம்யங்களைப் பார்ப்போம் –

திவளும் வெண் மதி போல் பதிகம் கங்குலும் பகலும் போல்
அவருடைய தாய்ப்பேச்சில் அது முடிவு பதிகம்
இவருடைய தாய்ப் பேச்சில் இது உபக்ரமம்
இவள் திறத்து என் செய்கின்றாயே -என்று வினவுதல் அங்கு
நின் தாள் நயந்திருந்த இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்று வினவுதல் இங்கு
இவ்வினா பாட்டுத்தோறும் ஒக்கும்

கள்வன் கொல் யான் அறியேன் -உண்ணும் சோறு பருகும் நீர்
தாயை விட்டு மகள் பிரிந்து போதல் இரண்டிலும் உண்டு
திருக்கோளூரை வினவிக்கொண்டு தனியாகப் போனாள் பராங்குச நாயகி
வயலாலி மணவாளன் கொண்டு போகப் போனாள் பரகால நாயகி

கவள யானை கொம்பு ஒசித்த –ஆடியாடி அகம் கரைந்து
இரண்டிலும் இசை பாடிப்பாடி உருகுதல் ஒக்கும்
என் வள்ளலே கண்ணனே என்னும் என்றாள் பராங்குச ஜனனி
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணனே என்கிறாள் பர கால ஜனனி

வெருவாதாள் வாய் வெருவி திருமொழி –பாலனாய் ஏழுலகு திருவாய் மொழியைப் போலவே
என் செய்கேன் என்னுடைப் பேதை என் கோமளம் என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர்–என்றாள் பராங்குச ஜனனி
இதில் -தாய் வாயில் சொற் கேளாள் தன்னாயத் தோள் அணையாள் -என்கிறாள் பர கால ஜனனி

——-

சிலையிலங்கு திருமொழி–கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் திருவாய் மொழியைப் போலவே
அதில் ஈசன் வந்தேறக் கொலோ –பாட்டுத்தோறும்
இங்கு -கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ -பாட்டுத் தோறும்

தெள்ளியீர் தேவர்க்கும் திருமொழியும் கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் திருவாய் மொழியைப் போலவே
அதில் யானே யானே என்று எம்பெருமானுடைய தாதாத்ம்ய அநுஸந்தானம் பண்ணின படியைத் திருத்தாயார் அருளிச் செய்த படியே
இதில் -வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று பேசினாள் -என்று தத் தாதாத்ம்ய அநுஸந்தானம் பண்ணின படியைத் திருத் தாயார் அருளிச் செய்கிறாள்

—-

மூவரில் முன் முதல்வன் திரு மொழியும் -மண்ணை இருந்து துழாவி திருவாய் மொழியும்
அதில் பிரான் கிடக்கும் கடல் என்னும்
இதில் முழங்கார் கடலுள் கிடந்தது
அதில் எல்லா வுலகு கண்ணன் படைப்பு என்னும்
இதில் பூவலருமுந்தி தன்னுள் புவனம் படைத்து -என்றும் மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னை –

புள்ளுருவாகி நள்ளிருள் திருவாய் மொழியிலும் -பட்டுடுக்கும் -திரு நெடும் தாண்டக பதிகத்திலும் பராங்குச ஜனனியின் பேச்சுக்களின் பிரபஞ்ச ப்ரணாளிகள் உய்த்து உணரத் தக்கது
திரு விருத்தத்தில் -அருளார் திருச்சக்கரத்தால் -என்னும் தாய்ப் பாசுரத்தில் -ஈங்கோர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ -என்ற வார்த்தையே
புள்ளுருவாகியில் ஒன்பது பழமொழிகளால் விஸ்தரிக்கப்பட்டு அருளிச் செய்கிறார்

பட்டுடுக்கும் பாசுரத்தில்
மட்டுவிக்கி மணி வண்டு முரலும் கூந்தல் என்று பர கால நாயகி -வர்ணிக்கப் படுகிறாள்
நாம ஏகதேச க்ரஹண நியாயத்தாலே மணி வண்டு திருநாமம் ப்ரஸித்தம் ஆகிறது-
பெரிய திருமொழி-அம்பரமும் பெரு நிலமும் என்று தொடங்கும் திருநறையூர் பதிகத்தில் -6-6-
வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு -என்று மணி வண்டானது முந்துற செண்பகப் பூவை அநுபவித்து விட்டுப் பிறகு மகிழ மலரிலேயே படுகாடு கிடப்பதாகச் சொல்லப் படுகிறது
யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதஸ் வகுலா மோத வாஸிதம் –யதிராஜ ஸப்ததி -என்றபடி திருவாய் மொழி அனுபவத்திலேயே ஊன்றி இருப்பதைக் குறித்த படி
இவர் கடைக்குட்டி ஆழ்வாராகையாலே மற்றைய ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் அனுபவங்களில் -செண்பகத்தின் வாஸம் உண்டு -என்று முதலில் குறிப்பிட்டு பின்பு வகுளத்தின் மலர் மேல் வைகு -என்று திருவாய் மொழி அனுபத்திலேயே கால க்ஷேபம் செய்தமையைச் சொன்னவாறு
இங்கு மணி வண்டு -என்று தம்மையே அருளிச் செய்து கொள்கிறார்
இத்தை முன்னமே உணர்ந்து அறிந்த நம்மாழ்வார் திரு விருத்தத்தில்
வண்டுகளோ வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண் பூ உண்டு களித்து உழல்வீர்க்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய் மண் துகளாடி வைகுந்த மன்னாள் குழல் வாய் விரை போல் விண்டுகன் வாரும் மலருளவோ நும்மியல் இடத்தே -என்று
வண்டுகளோ வம்மின் என்று திருமங்கை ஆழ்வாரையே விளித்து
நீர் உகந்து அருளின திருப்பதிகள் தோறும் உழல்கின்றீரே -திருவாய் மொழி போல் பரம போக்யமான பிரபந்தம் கடல் சூழ்ந்த மண்ணுலகம் எங்கேனும் கண்டதுண்டோ -என்ற வினாவுக்கு இவர் விடை இறுத்து அருளுகிறார் —
ஸ்வாமிந் கண்டதில்லை-ஆனது பற்றியே வகுளத்தின் மலர் மேலே தானே வைகிக் கிடக்கிறேன் -என்று
இதுவரை திருத்தாயார் பதிகங்களில் விசேஷப் பொருத்தங்களை அனுபவித்ததோம்

————–

மேல் விசேஷப் பொருத்தங்களைப் பார்ப்போம்

1-தைத்ரிய யஜுர் ப்ராஹ்மண்யத்தில் –கிருத்திகா ப்ரதமம் விசாகே உத்தமம் -என்று இவருடைய திருவவதார திரு நக்ஷத்ரங்களும் விசேஷித்து ஒதப்பட்டுள்ளது
2-பாஹ்ய குத்ருஷ்டிகளின் செருக்கை அடக்கும் திறமையினால் பரகாலன் என்றும் பராங்குசன் என்றும் திரு நாமங்கள்
3-அடியார்களை உகப்பிக்கும் திறமையினால் -இன்ப மாரி
என்றும் அருள் மாரி என்றும் திருநாமங்கள்
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே -4-5-10-
அங்கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்ட முக்கி அடையார் சீயம் -3-4-10
ஆனந்த வர்ஷுகர்- -இன்ப மாரி
கருணா வர்ஷுகர்–அருள் மாரி
4-தன்னொப்பார் இல் அப்பன் -6-3-9-என்ற மங்களா ஸாஸனத்துக்கு ஏற்ப-ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா என்னப்பா -8–1-2-என்று அதற்குச் சேமக் காப்பு சாற்றி அருளினார்
5-திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே -என்னும் -4-4-8-என்று பகவத் பக்தர்களான அரசர்களை மதித்து அருளிச் செய்ததை அடியொற்றியே
தென்னன் தொண்டையர் கோன் -மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீண் முடிமாலை வயிர மேகன் -பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய் பல வேந்தர் வணங்கு கழற் பல்லவன்-துளங்கு நீண் முடி அரசர் தங்குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவன் செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில் —
இருக்கிலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட திருக்குலத்து வளச் சோழன்
என்று இப்படி பகவத் பக்தரான சில சக்ரவர்திகளைச் சிறப்பித்து அருளிச் செய்கிறார்
6-கண்ணபிரான் திருவாய்ப்படியில்
படலடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் களவு காணப் புகும் இடத்தில்
தன்னிறத்தின் இருட்சியாலும் அவ்விடத்தின் இருட்சியாலும் வெண்ணெய் இருக்கும் இடம் தெரியாமல் தடவா நிற்கையில் யாதிருச்சிகமாகக் கையிலே வெண்ணெய்த் தாழி தட்டின உவப்பினாலே பல்லைத் திறந்து சிரிக்க நேரும் -பூர்ண சந்த்ரனுடைய கிரணம் போலே திரு முத்துக்களின் ஒளி புறப்பட -அந்த ஒளியைக் கை விளக்காகக் கொண்டு வெண்ணெயை வாரி விழுங்குவான்
நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து வேயகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆனாயர் தாயவனே –3-8-3-
உறி யார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானே -2-10-6-
7-தீர்ப்பாரை யாமினி -7-6- தேவதாந்தர கட்டுவிச்சி
சிறிய திருமடலிலும் திரு நெடும் தாண்டகத்திலும் -பகவத் ப்ரவணை
8-முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூங்குழல் குறிய கலையோ வரையில்லை நாவோ குழறும் –திருவிருத்தம்
முள் எயிறு ஏந்தில கூழை முடி கொடா தெள்ளியள் என்பதோர் தேசிலள் என் செய்கேன்
9-பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை போல் இவரும்
நண்ணாத வாள் அவுணரிலும் கண் சோர வெங்குருதியிலும் ததீய மஹாத்ம்யம்
10-ஊரெல்லாம் துஞ்சியிலே தனிமைக்கு வருந்தியது போல் இவரும்
தந்தை காலில் விலங்கற -திருக் கண்ணபுர பதிகத்தில் வருந்துகிறார்

11-ஒரு நாயகம் -பதிகம் ஐஸ்வர்யம் அல்பம் அஸ்திரம்
பாண்டேன் வண்டறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே மாண்டார் என்று வந்தார் அந்தோ -6-2-5- சுருக்கமாக அருளிச் செய்கிறார்
12-குரவை ஆய்ச்சியாரோடு -கிருஷ்ணாவதாரம் விரித்த பதிகம் போல் இவரும்
மானமுடைத்து உங்கள் ஆயர் குலம் -திருமொழியில் அருளிச் செய்கிறார்
13-இன்னுயிர் சேவலில் -என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவுகிலீர் -என்று இன்னாப்புடன் அருளிச் செய்தது
இவரும் திருத்தாய் செம்போத்திலே வெறுப்பின்றியே அநு நயமாக அருளிச் செய்கிறார்
14-மின்னிடை மடவார் ஊடல் ரஸம்
காதில் கடிப்பிட்டில் அதே ரஸம்
15-உண்ணிலாய ஐவரில் இந்திரியங்களுக்கு ஆற்ற உண்ணாமல் ஓலமிட்டபடியே திருவுக்கும் திருவாகிய திருமொழி
16-ஆழி எழ -திருவாய் மொழி போல் பல அவதான அனுபவ ரஸம் ஏழை ஏதலனிலும்
17- கடியன் கொடியன் நெடியமால் –ஆகிலும் கொடிய என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -என்Kkruthamக்ருத தாஸ்யம் இன்றிக்கே ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யத்தை
வேம்பின் புழு வேம்பு அன்றி யுண்ணாது அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்று நயவேன் -என்று அருளிச் செய்கிறார்
18-சூட்டு நன் மாலைகள் –பாசுரத்தில் -கண்ணன் வெண்ணெய் தொடு உண்பதற்க்காகவே-திருவாய்ப்பாடியில் திருவாவதரித்தான் என்று அருளிச் செய்தது போல்
இவரும்-கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற வானாயன் -என்று அருளிச் செய்கிறார்
19- எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -என்று ஒருகால் சொல்லித் தரைப்பட்டார்
இவரோ அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டு இருந்தவனே -என்று ஒருகால் சொன்னால் போலே ஒன்பதின் கால் சொல்லித் தரைப்படுகிறார்
20- பக்தாம்ருதம் –நெஞ்சுக்கு இருள் கடி தீபம் -இரண்டு தனியன் களிலும் அமைந்த ஐந்து விசேஷணங்களும் தேனிலும் இனியவை
சீரார் சடகோபன் செந் தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெறவும்
பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த
மறை யாயிரம் அனைத்தும் தங்கு மனம் பெறவும்
இராமானுச முனியை வணங்கி வேண்டுதல் ஒக்கும்

சதுர் முக சமாக்கயாபி சடகோப முனவ் ஸ்திதா -ஸ்வ வாஸா மாத்ரு துஹித்ரு ஸஹி வாஸா ச வர்ணநாத்
தாஸத்வ தேஹத்வ சேஷத்வங்கள் போலவே ஸ்த்ரீத்வமும் ஸ்வா பாவிகமே -இயற்கையே -வந்தேறி அல்ல
பதி பத்நி பாவ சம்பந்தம் -ப்ரணவத்தில் உகாரத்தாலே அவதாரண அர்த்த்தாலே அவனுக்கே ஆட்ப்படும் அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லிற்று –
கண்டார் இகழ் வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள்-போல் இருக்க வேண்டும் அன்றோ
பின்னை கொல் நில மா மகள் கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள் -6-5-10- தோழி பாசுரம்
பெரிய திருமொழியில்-காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை ஒப்பாள் -திருத்தாயார் பாசுரம்
மாறன் இங்கே நாயகனைத் தேடி மலங்கியதும் பத்தி வளம் –

————————————————————————

மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில்
அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது ..

ஆக -சீஷாயாம் வர்ண சிஷா பத சமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தஸ்
சந்தச் சிதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யோதிஷம் ரெங்கநாத ,கல்ப அனுஷ்டான
முக்தம் ஹ்யுசித கமிதயோர் நியாய மீமாம்ச யோஸ் ஸ்யாத் அர்த்த வ்யக்தி
புராண ஸ்ம்ருதிஷூ ததனுகாஸ் த்வாம் விசின் வந்தி வேதா -ஸ்ரீ ரெங்கராஜ உத்தர ஸ்தவம்-18- –என்கிற படியே –
(சிஷை -வேத அங்கங்களில் எழுத்துக்களை உச்சரிக்கும் முறையும்
வியாகாரணத்தாலும் நிருத்தத்தாலும் பதங்களின் அறிவும்
சந்தஸ் -என்னும் வேத அங்கத்தில் காயத்ரி போன்ற சந்தஸ்ஸுக்களின் இலக்கணமும்
ஜ்யோதிஷத்தால் கர்மங்கள் செய்ய வேண்டிய காலமும்
கல்ப சங்கத்தால் கர்ம அனுஷ்டானங்களையும்
தர்க்க சாஸ்திரம் மீமாம்சைகளாலும் தெளிவான பொருள்களும்
புராணங்களாலும் ஸ்ம்ருதிகளாலும் கருத்துக் பொருள்களையும் சொல்லப்படுகின்றன
இந்த வேத அங்கங்களோடே வேதங்கள் தேவரீரைத் தேடுகின்றன -என்றவாறு )
அவை அந்த வேத சதுஷ்டயத்துக்கும் உபகார அங்கங்களாய் இருக்குமா போலே
இவையும் கீழ் சொன்ன படியே இத வேத சதுஷ்டயத்துக்கும் உப அங்கங்களாய் இருக்கும் என்றது ஆய்த்து —

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ கலியனும்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

January 5, 2022

ஸ்ரீ யதிராஜருக்கும் யதுகுல திலகமான ஸ்ரீகண்ணனுக்கும் உள்ள
ஸாம்யத்தை சாடுக்தியான ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்

சமித உதய சங்கராதி கர்வ ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச
அவரோபி தவான் ஸ்ருதே அபார்த்தான் நநு ராம அவரஜ ச ஏஷ பூய –ஸ்ரீ யதிராஜ சப்ததி—13-ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–-

ஸ்ரீ கண்ணனே ஸ்ரீ எம்பெருமானார் -சிலேடையில் அமைந்த ஸ்லோகம் –
கார்த்திகையானும் கரி முகத்தானும் -22-படியே முக்கண்ணனான சங்கரன் செருக்கை அடக்கிய கண்ணன் –
யது குலத்தில் உதித்து தன் வல்லமையால்
யாதவர்களை பிரகாசப் படுத்தியவன் -பார்த்தனின் விரோதிகளை பெருமை யுறாமல் அழித்தவன்-
பலராமனின் தம்பியான அந்த ஸ்ரீ ராமானுஜன்-

ஸ்ரீ பார்த்த சாரதியே தானே இந்த நம் ஸ்ரீ ராமானுஜன் என்று அதிசயிக்கும் படி அன்றோ
சங்கராதி வேத குத்ருஷ்டிகளின் செறுக்கை தம் ஸ்ரீ ஸூ க்திகளாலும் தர்க்க வாதங்களாலும் அடக்கி –
தம் புத்தி சாமர்த்யத்தாலும் கிருபா அதிசயத்தாலும் யாதவ பிரகாசரை வாழ்வித்து –
பிறர் -கல்பித்து -கூறும் ஸ்ருதிகளும் அபார்த்தங்களை களைந்து ஒழித்தவர்-

———-

ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ கலியனும்

1-ஸூர்யத்வாத் –
2-ஸூசிதத்வாத் –
3-அபஹ்ருதி கரணாத் –
4-கோகுல உத்தாரகத்வாத்
5-பத்தத் வாத்
6-ஸாஸ்த்ர தத்வாத்
7-ஜன ஸஹ யோ கச்ச
8-லஷ்மீ பதித் வாத் –
9-நீலத் வாத்
10-நீதி மார்க்கச்யுதி மதி பஜ நாத்
11-அந்த தச்சா வதாராத்
12-ஸத்ரு த்வம்ஸ உத் படத் வாத்
கலிரிபு முநிராட் கிருஷ்ண துல்யோ விபாதி

ஸூர்யத்வாத் –

தத் அகில ஜகத் பத்ம போதாய அச்யுதா பாநுநா தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்ப்பூதம் மஹாத்மநா -ஸ்ரீ விஷ்ணு புராணம்

கலயாமி கலி த்வம்ஸம் கவிம் லோக திவாகரம் –5-2-1-

ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் கண்ணபிரானுடைய திருவவதாரத் தைக் கூறுகின்ற பராசரமஹரிஷி கண்ணனவதரித்தானென்று சொல்லவில்லை,
*ததோகிலஜகத்பத்மபோதாய அச்யுதபாநுநர், தேவகீபூர்வஸந்த்யாயாம் ஆ ர்ப்
பூதம் மஹாத்மநா. என்கிறச்லோகம் க்ருஷ்ணாவதாரத்தைக் கூறுமது. இதில்
தேவகியாகிற பூர்வஸந்தியையிலே க்ருஷ்ணஸூரியன் ஆவிர்ப்பவித்தான் என்றது.
இதனால் க்ருஷ்ணன் ஸுர்யனென்னுமிடம் ஸித்தித்தது. கலியனும் ஸூர்யனாகவே பேசப்பட்டிருப்பதை *கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோகதிவாகரம் * என்கிற அவருடைய
ஸ்து பத்யத்தினால் உணரலாம். ஆக இருவரும் ஸூர்யர்களென்னு மத்தாலே
ஸாம்யம் பெற்றனர்.

——-

ஸூசிதத்வாத் –

அவதாரம் அசரீரி வாக்கு –

கலியும் கெடும் கண்டு கொண்மின்

கண்ணன் கம்ச வதம்
கலியன் கலி புருஷ வதம்

ஸூசிப்பிக்கப்பட்டபடியாலே என்பது இதன் பொருள்.
கண்ணனுடைய அவதாரமும் கலியனுடைய அவதாரமும் இவர்கள் அவதரிப் பதற்கு வெகுநாள் முன்னமே ஸூசிப்பிக்கப்பட்டிருந்தது எங்ஙனே யென்னில்;
கண்ணனுடைய திருத்தாயாரான தேவகிப்பிராட்டி கம்ஸனுக்கு உடன்பிறந்தவள்
அக்கம்ஸன் தேவகிக்கு மிகச் சிறப்பாக விவாஹமஹோத்ஸவத்தை நடத்திவைத் துப் பரமப்ரீதியுடன் தம்பதிகளை ரதத்தில் வீற்றிருக்கச் செய்து அதனைத் தானே ஓட்டிக்கொண்டு போகையில் ஆகாசவாணியொன்று செவிப்பட்டது; ‘இத் தேவகியின் எட்டாவது குழந்தையினால் உனக்கு மருத்யு விளையும்’ என்று அந்த
வாக்கு அப்படியே பலித்தது. இதனால் ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய திருவவதாரம்
முன்னமே சிதமாயிற்றென்பது விளங்கிற்று. இது போலவே திருமங்கை
யாழ்வாருடைய திருவவதாரமும் முன்னமே சிதமாகியுள்ளது. திருவாய்மொழி
பயில் (5-2-1)*கலியுங் கெடும் கண்டு கொண்மின்* என்கிற பாசுரத்தை ஆகாச
வாணி யென்றே கொள்க. தவறாமல் பலிப்பது ஆகாசவாணி. இந்தப் பாசுரமும்
தவறாமல் பலித்திருக்கின்றது ஆசார்யஹ்ருதயத்தில் “கலியும் கெடும்போலே
ஸூசிதம்” என்றவிடத்து வியாக்கியானத்தில் மணவாளமாமுனிகள் “இவர் தாம்
மயர்வற மதிநலம் பெற்றவராகையாலே *கலியுங்கெடும் * என்று – திருமங்கையாழ்
வார் உடையவர்போல்வார் அவதரித்துக் கலியுகஸ்வபாவமும் கழியுமென்று மேல்
வரும் அம்சத்தை தர்சித்து அருளிச்செய்தாப்போலே ”என்று திருவாய்மலர்ந்
தருளியுள்ள திவ்யஸுத்தி இங்கே அநுஸந்தேயம், கண்ணன் கம்ஸவதம் செய்த
வன்; இவ்வாழ்வார் கலிபுருஷவதம் செய்தவர்.

———

அபஹ்ருதி கரணாத் -பட்டர் மங்களா ஸாஸனம் கலியன் திருட்டுக்கு
மணி கொடுத்த பெருமாள் ஸூசிக்கும்படி காஞ்சியில் திருமங்கை சேவை மணி கையில்

வெண்ணெய் பெண்களை களவு கண்ணன்
கோயில் பிரகார மண்டபாதி நிர்மாண அர்த்தத்துக்காக கலியன் பல பல களவுகள் ப்ரஸித்தம்

வீரனாக முன்
விநயனாக பின்
இன்றும் வேடுபரி உத்சவத்தில் சேவிக்கிறோமே

அபஹ்ருதிகராத் கண்ணன் கள்வனென்று ப்ரஸித்திபெற்றதுபோலே இவ்வாழ்வாரும் கள்ளரென்று ப்ரஸித்திபெற்றவர். ‘வெண்ணெய் களவுசெய்தான்,பெண்களைக் களவுசெய்தான்’ என்று ஸ்ரீக்ருஷ்ண சரித்திரங்களிலே வாசிக்கிறோம்,
இவருடைய சரித்திரத்திலும் திருவரங்கம் பெரியகோயிலில் கோபுர ராகார மண்டபாதி நிர்மாணத்திற்காகப் பலபல களவுகள் செய்த செய்திகளை வாசிக் கின்றோம். ஆக இத்தகைய கள்வத்தினாலும் ஸாம்யம்.

————

கோகுல உத்தாரகத்வாத்

ஆயர்பாடிக்கு அணி விளக்கு
ஆயர் குலத்தினில் தோன்றும் மணி விளக்கு

இவரும்
ந்ருபசு
வ்ருத்தயா பசுர் நரவபு
ஞாநேந ஹீந பசுபிஸ் ஸமாந
நம்மை உத்தரிக்கவே இவரது அவதாரம்

*ஆயர்பாடிக்க விளக்கே என்றும், *ஆயர்குலத்தினில் தோன்று மணிவிளக்கை என்றும் சொல்லுகிறபடியே கண்ணன் திரு வாய்ப்பாடியில் திருவவதரித்துக் கோகுலத்தை உத்தரிப்பித்தமை பிரஸித்தம்.-இவ்வாழ்வாரும் கோகுலோத்தாரணம் செய்ததுண்டு; எங்ஙனே யென்னில்;*ந்ருபசு:* என்று ஆளவந்தாரும் *வ்ருத்த்யா பசுர் நரவபு:* என்று மணவாள மாமுனிகளும் அருளிச்செய்தபடி நாமெல்லாரும் பசுக்களேயன்றோ. * ஞாநேந்
ஹீந: பசுபிஸ் ஸமாந:* என்றும் ப்ரஸித்தமாகவுள்ளது. ஞானமும் நன்னடத்தையு மொன்றுமின்றிக்கே யிருப்பதனால் கோக்களாயிருக்கின்ற நம்முடைய குலத்திலே ஆழ்வார் வந்து அவதரித்து உத்தாரகராயினர்.

———

பத்தத் வாத்

மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டான்
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான்
இவரும் அரசனால் சிறையில் வைக்கப்பட்டார்

[பத்தத்வாத்] கண்ணன் * மத்துறு கடைவெண்ணெய் களவினிலுரவிடை
யாப் புண்டு* என்றும் *கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான்* என்றும்
சொல்லுகிறபடியே கட்டுண்டமை ப்ரஸித்தம். இவ்வாழ்வாரும், பகவதாராதனத்திற் காட்டிலும் பரமபாவனமான பாகவதாராதனத்தில் ஊன்றியிருந்தகாலத்தில் தாம் அரசனுக்குச் செலுத்தவேண்டிய பகுதிப்பொருளுமுட்படச் செல்வம் முழுதையும் செலவிட்டுவர, அச்செய்தியைச் சிலர் சொல்லக்கேட்ட கொற்றவன் கோபங்கொண்டு இவரை ஒரு தேவாலயத்தில் சிறைவைக்கச் செய்தனனென்பது இவ்வாழ்வாருடைய சரித்திரத்தில் பிரஸித்தம், ஆக கட்டுண்டமையினால் இருவர்க்கும் ஸாம்யம் உணரத்தக்கது.

———-

ஸாஸ்த்ர தத்வாத்

அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –
கீதாச்சார்யன்
நெஞ்சுக்கு இருள் கடி தீபம் அடங்கா நெடும் பிறவி நஞ்சுக்கு நல்லமுதம்
தமிழ் நன்னூல் துறைகள் அஞ்சுக்கு இலக்கியம் ஆரண சாரம்
பர சமயப் பஞ்சுக் கனலின் பொறி பரகாலன் பனுவல்களே

பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை ஆயிரம்

[சாஸ்த்ரதத்வரத்] சேதநர்களுக்கு உஜ்ஜீவநோபாயமான சாஸ்திரத்தைக்கொடுத்ததனாலே என்று பொருள், கண்ணபிரான் அறிவினால் குறைவில்லாஅகல்ஞாலத்தவரறிய, நெறியெல்லாமெடுத்துரைத்த நிறைஞானத்தொருமூர்த்தி* என்கிறபடியே ஸகலார்த்தப்ரகாசமாய் ஸகலசேதநோஜ்ஜீவநஸாதனமான கீதா சாஸ்த்ரத்தை யருளிச்செய்தான். திருமங்கையாழ்வாரும் *நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி நஞ்சுக்கு நல்லவமுதம், தமிழநன்ணூல் துறைகளஞ்சுக்கிலக்கிய மாரணசாரம், பரசமயப்பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே*-என்கிறபடியே கீதா சாஸ்த்ரத்திற் காட்டிலும் பரமோத்க்ருஷ்டமான திவ்யப்ரபந்த மஹாசாஸ்த்ரத்தை யுபகரித்தருளினார். கண்ணன் தந்த சாஸ்திரத்தை கீதோப நிஷத்து‘ என்னுமாபோலே இதையும் பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையா யிரம்” என்பர்கள். ஆக, சாஸ்த்ரப்ரதாநத்தாலே இருவர்க்கும் ஸாம்யம்

————-

ஜன ஸஹ யோ கச்ச

தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான்
வாரணம் ஆயிரம் சூழ வலம்

நீர் மேல் நடப்பான்
நிழலில் ஒதுங்குவான்
தாளூதுவான்
தோலா வழக்கன்

படு ஜநஸஹயோகாத்] கண்ணபிரான் *தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவான்* என்கிறபடியே கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர்மகனான தான் செய்யும் தீமைகளுக்குத் துணைவராகப் பல சதுரர்களை உடன் கொண்டிருந்தான். திருமங்கையாழ்வாரும், நீர்மேல் நடப்பான் நிழலிலொதுங்குவான், தாளூதுவான், தோலாவழக்கன் முதலான சதுரர்களைத் தமது செய்கைகளுக்குத் துணைவராகக் கொண்டிருந்தார்.

———

லஷ்மீ பதித் வாத் –

ஸுமங்களா -குமுதவல்லி நாச்சியார் இயல் பெயர்
மாப்பிள்ளை மிடுக்குடன் அண்ணன் கோயிலுக்கு எழுந்து அருளுவார்
நீசனை–நீலனை சந்தித்து பாகவத ஸ்ரேஷ்டர் ஆக்குவாய் -சாபம்
குமுத வல்லி வஸ்திரம் தலைப்பாகையாக சூட்டிக்கொண்டு மஞ்சக்குழி உத்ஸவம் திருமஞ்சனம் -சென்னிக்கு அணி

ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மிக்கு பதி என்றும் இவரைக் கொள்ளலாம்
மற்று எல்லாம் பேச்சிலும் உன் அடியார்க்கு அடிமை என்றார் அன்றோ –

[லக்ஷ்மீபதித்வாத் . கண்ணபிரான் ஸாக்ஷ த் நாராயணமூர்த்தியாதலால்
லக்ஷமீபதியாவன்.திருமங்கையாழ்வாரும் லக்ஷ்மீபதியாவர். எங்ஙனே யென்னில்;
இவர் வளர்ந்துவருகையில் அந்நாட்டில் அண்ணன்கோயில் என்று வழங்குகின்ற
திருபெள்ளக்குள மென்னுந் திருப்பதியில் மிகச் சிறந்ததொரு தாமரைப் பொய்
கையில் தேவலோகத்து அப்ஸரஸ் ஸ்த்ரீகள் பலர் வந்து ஜலக்ரீடைசெய்து செல்ல
அவர்களுள் திருமாமகளென்பாள் தன் இச்சையால் தெய்வவடிவத்தைவிட்டு,
மானுடவடிவங்கொண்டு தனியே குமுதமலர் கொய்துநின்றாளாக, அங்கு அநுஷ்டாநத்திற்காக வந்த ஒரு வைஷ்ணவ வைத்யன் அவளைக் கண்டு செய்தி விசாரிக்க
அவள் ‘என்னோடு கூடவந்த மாதர்கள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள். தனி
யிருந்து அலைகின்ற என்னை நீர் பாதுகாத்தருளவேணும்’ என்று வேண்டிக்கொள்ள,
மலடனான அம்மருத்துவன் மகிழ்ச்சியோடு அதற்கு உடன்பட்டு அம்மகளைத் தன்
மாளிகைக்கு அழைத்துப்போய் மனையாள் வசம் ஒப்பித்து, குமுதமலர் கொண்டு
நின்றது காரணமாகக் குமுதவல்லியென்று அப்பெண்ணுக்கு நாமமிட்டு வளர்த்து
வருகையில் அக்கன்னிகைக்கு விவாஹத்துக்குரிய பிராயம் வந்தவளவிலே
அவளை வளர்க்கிற அந்த வைத்தியனுக்கு ‘மஹாகுணவதியான இப்பெண்
ணுக்கு ஏற்ற கணவன் உலகத்திலுள்னோ என்ற கவலையுண்டாக, அப்பொழுது
அவளுடைய ரூபலாவண்ய ஸௌந்தரியங்களையும் குணாதிசயங்களையும் சாரர்கள்
திருமங்கை மன்னனிடம் கொண்டாடிக்கூற,உடனே அவர் அங்கு வந்து அந்த
வைத்தியனிருக்கும் வீட்டிலே புக்கு அவனோடு ஸம்பாஷணை செய்து அப்பெண்ணின்
வரலாற்றை வினவி அதைத் தந்தையார்வாயில் அறிந்த வளவில் ‘இவளை எனக்
குத் தாரைவார்த்துக்கொடுக்கவேணும்’ என்று அவரை வணங்கிக் கேட்டார்
அப்போது குமுதவல்லி குறுக்கிட்டு ‘‘திருவிலச்சினை திருமண்காப்பு முதலிய
பஞ்ச ஸம்ஸ்காரமுடைய ஒரு ஸ்ரீவைஷ்ணவர்க்கேயன்றிப் பிறர்க்கு வாழ்க்கைப்பட
மாட்டேன்” என்று தன் உறுதியைத் தெரிவித்தாள். அதுகேட்ட திருமங்கை
மன்னன் உடன் திருநறையூர்க்குச் சென்று அங்கு எழுந்தருளியுள்ள நம்பி என்னு
மெம்பெருமானுடைய திருமுன்பே நின்று பிரார்த்தித்து அப்பிரானிடத்தில்
திருவிலச்சினை பெற்றுப்பன்னிரண்டு திருமண் காப்புகளும் சாத்திக்கொண்டு
விவாஹார்த்தமாக விரைவில் வந்துசேரக் கண்டு மீண்டும் குமுதவல்லி “நீர்
ஓராண்டளவும் நித்தியமாக ஆயிரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுதுசெய்வித்து
அவர்களுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தையும் போனகஞ் செய்த சேஷத்தையும் உட்
கொண்டாலன்றி உம்மை நான்பாணிக்கிரஹணம் செய்து கொள்ளமாட்டேன்
ன்ன, அவளிடத்தில் கொண்ட ஆசையின் கனத்தால் அவர் இவ்வரிய விரதத்
தையும் செய்துமுடிப்பதற்கு உடன்பட்டு அங்ஙனேமே செய்வதாகச் சபதஞ்செய்து
கொடுக்க, அதன்பின் இருவர்க்கும் திருமணம் நடைபெற்றது லக்ஷ்மீபதித்வ
மானது பகவானுக்கு அஸாதாரணமாயிருந்தாலும் லக்ஷ்மியின் பெயரைத் தரித்
திருந்த குமுதவல்லித்தாயாருக்குப் பதியென்னுங் காரணத்தினால் ஆழ்வாரும்
லக்ஷ்மீபதியாயினர். ஸ்ரீவைஷ்ணவலக்ஷ்மிக்குப் பதியென்றுங் கொள்ளலாம்.

———-

நீலத் வாத்

கண்ணன் என்னும் கரும் தெய்வம்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திரு மேனி வாட

தண் தமிழ் செய்த நீலன் தனக்கு

நீலத்வாத்] கண்ணபிரான் * கண்ணனென்னுங் கருந்தெய்வம்* என்றும்
*கானகமெல்லாந் திரிந்து உன் கரிய திருமேனிவாட என்றும் சொல்லுகிறபடியே
நீலநிறத்தழகார்ந்தவன். திருமங்கையாழ்வாரோவென்னில் நீலனென்னுந்திருநாம
முடையவர் . இராமானுச நூற்றந்தாதியில் “தண்டமிழ்செய்த நீலன் தனக்கு”
என்னுமிடத்தில் நீலனென்ற சொல்லால் திருமங்கையாழ்வாரே விவக்ஷிதரென்ப
தறிக. குருபரம்பராப்ரபாவத்திலு முள்ளதேயிது.

——–

நீதி மார்க்கச்யுதி மதி பஜ நாத்

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்குக் கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய்

கலியனும் இது போல் பல அநீதி சேஷ்டிதங்கள் ப்ரஸித்தம்

விமோஹநே வல்லவ கேஹி நீநாம் ந ப்ரஹ்ம சர்யம் பிபதே ததீயம் ஸம்பத்ஸ்யதே
பாலக ஜீவநம் தத் ஸத்யேன யேநைவ ஸதாம் சமஷம் –யாதவா ப்யுதம் -4-64-

யதி மே ப்ரஹ்ம சர்யம் ஸ்யாத் ஸத்யஞ்ச மயிதிஷ்டதி அவ்யா ஹதம் மமைஸ்வர்யம் தேந ஜீவது பாகை

ப்ரஹ்ம சர்யம் ஸத்யம் வழுவாதனானால் உயிர் பெற்று எழுக என்றதும் கரிக்கட்டை போல் இருந்த பரிஷீத் எழுந்தான்

ஜித பாஹ்ய ஜிநாதி மணி ப்ரதிமா அபி வைதிகயந்நிவ ரெங்கபுரே மணி மண்டபவ பிரகாரணன் விததே –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்

(நீதிமார்க்கச்யுதிமதிபஐநாத்] கண்ணபிரானுடைய சரித்திரங்களை நோக்கு
மிடத்து”மச்சொடுமாளிகையேறி மாதர்கள் தம்மிடம் புக்குக் சுச்சொடுபட்டைக்
கிழித்துக் காம்பு துகிலவை கீறி நிச்சலுந் தீமைகள் செய்வாய்* என்றும், * பிறர்
மக்களை மைன்மை செய்து தோளா ட்டவரோடு திளைத்து நீ சொல்லப்படாதன செய்தாய்* என்றுமுள்ள பாசுரங்களின்படி கொடிய கடிய சேஷ்டிதங்களைச்செய்த
விவன் நீதிநெறியில் நின்றும் நழுவினவனல்லவா? என்று நினைப்பதற்கு இலக்கா யிருப்பனன்றோ கண்ணபிரான். திருமங்கையாழ்வாரும் அப்படியேயன்றோ. இத்
தன்மையினால் ஒரு ஸாம்யம். நீதி நெறியில் நழுவினதாக நினைக்கலாமத்தனை
யன்றி உண்மையில் இருவரும் நீதிநெறிவழுவாதவர்களே. நமது ச்லோகத்தில் ”நீதிமார்க்கச்யுதிமதிபஜநாத்” என்றது ‘சயுதிமதிவிஷயத்வாத்’ என்றபடி.
கண்ணபிரானுடைய நீதிநெறிவழுவாமையை வேதாந்த வாசிரியர் யாதவாப்யுத
யத்தில் (4-64.) விமோஹநே வல்லவகேஹிநீநாம் நப்ரஹ்மசர்யம் பிபிதே ததீயம், ஸம்பத்ஸ்யதே பாலகஜீவநம் தத்ஸத்யேந யேநைவ ஸதாம் ஸமக்ஷம். * என்னும்
ச்லோகத்தினால் தெளிவித்தார். அதாவது, பாரதப்போரில் அச்வத்தாமா பிரயோ கித்த அபாண்டவாஸ்த்ரத்தினால் உத்தரையின் கருப்பிண்டம் கரிக்கட்டையாக. அப்போது கண்ணபிரான் “ யதி மே ப்ரஹ்மசர்யம் ஸ்யாத் ஸத்யஞ்ச மயி திஷ்டதி, அவ்யாஹதம் மமைச்வர்யம் தேந் ஜீவது பாலக:‘ (நான் ப்ரஹ்மசர்யமும் ஸத்யமும் வழுவாதவனாயிருந்தேனாகில் இது உயிர்பெற்றெழுக.) என்று பலருமறிய ப்ரதிஜ்ஞை செய்து நிறைவேற்றப்பெற்ற கதையினால் கண்ணன் நீதி நெறிவழுவாதவனென்பது விளங்கிற்று திருமங்கையாழ்வார் நீதிநெறி வழு வாதவரென்பதை பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் *ஜிதபாஹ்யஜிநாதி மணிப்ரதிமா அபி வைதிகயந்நிவ ரங்கபுரே, மணிமன்டபவப்ரகணாந் விததே பரகாலகவி ப்ரணமேமஹி தாந் என்னும் ச்லோக ரத்நத்தினால் வெளியிட்டருளினர்.

——–

அந்த தச்சா வதாராத்

கடைக்குட்டி அவதாரங்கள் இரண்டும்
இருவரும் சரம அவதார பூதர் இப்பொழுது –
கல்கி இன்னும் அவதரிக்க வில்லையே

(அந்ததச்ச அவதாராத் ] பகவானது விபவாவதாரங்களில் கிருஷ்ணாவ தாரமே முடிவானது. கல்கியவதாரம் பவிஷ்யத்தென்கிறார்கள். அது வந்தபோது பார்த்துக்கொள்வோம். இதுகாறும்முடிந்துள்ள அவதாரம் க்ருஷ்ணாவதாரமே. திரு மங்கையாழ்வாரும் ஆழ்வார்களுக்குள் கடைப்பட்டவர் *பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசையையனருள்மாறன் சேரல கோன், துய்யப ட நாதன் அன்பர்தாள் தூளி நற்பாணன் நன்கலியன், ஈதிவர்தோற்றத்து அடைவாமிங்கு என்ற உபதேசரத்தினமாலைப் பாசுரமுங்காண்க. ஆக இருவரும் சரமாவதாரபூதர் என்பதனால் ஸாம்யம் பெற்றனர்.

———

ஸத்ரு த்வம்ஸ உத் படத் வாத்

தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்பப் பூடுகள் அடங்க உழக்கி
மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழிய

அருள் மாரி அரட்ட முக்கி அடையார் சீயம்
ஒன்றலர் தங்களை வெல்லும் ஆடல் மா வலவன் கலிகன்றி

[சத்ருத்வம்ஸோத்படத்வாத்.] கண்ணபிரான் *தேனுகன் பிலம்பன்காளிய னென்னும் தீப்பப்பூடுகளடங்கவுழக்கி*என்றும் மலைபுரைதோள் மன்னவரும் மார
தரும் மற்றும் பலர் குலைய, நூற்றுவரும் பட்டழிய * என்றும் சொல்லுகிற படியே பகைவர்களையெல்லாம் வேரோடு களைந்தொழிப்பதில் பேர் பெற்றவன் ஆழ்வாரும் * அருள்மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் என்றும் *ஒன்றலர் தங்களை வெல்லு மாடல்மாவலவன் கலிகன்றி* என்றும் தாமே யருளிச் செய்த படியே புறமதத்தவர்களாகிற பகைவர்களைக் களைத்தொழிந்து இதனாலே பரகாலனென்று பேர்பெற்றவர். ஆக இப்பன்னிரண்டு படிகளாலே கண்ணனுக்கும் கலியனுக்கும் ஒற்றுமை நிர்வஹிக்கப்பட்டதாயிற்று.

———–

கலிரிபு முநிராட் கிருஷ்ண துல்யோ விபாதி

ஆக இப்பன்னிரண்டு படிகளாலே ஸாம்யம் காட்டப் பட்டது

ஸ்ரீ க்ருஷ்ண கலித்வம்ஸி ஸாம்ய நிர்வாஹம் முற்றிற்று.

—————-

மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும், நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணணைக் கலியன் சொன்ன,
பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி,
கோவிள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ குமுத வல்லி ஸமேத கலியன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருநாங்கூர் 11 கருடசேவை வைபவம்-ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: ஸ்ரீ உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள்

December 16, 2021

ஸ்ரீ திருநாங்கூர் 11 கருடசேவை வைபவம் –

இறைவனை நமக்குக் காட்டித் தரும் கருவியாக வேதம் உள்ளது.
ஆனால் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு, வேதத்தைக் கற்று, அதன் பொருளை அறிந்து,
அதைப் பின்பற்றி இறைவனை அறிவது என்பது மிகவும் கடினமான காரியம்.
எனவே நம்மேல் கருணை கொண்ட வேதமே, இறைவனை நமக்கு எளிதில் காட்டித் தரும் பொருட்டு
மற்றோர் உருவம் எடுத்துக் கொண்டது.

அவ்வுருவத்தின் தலையாக வேதத்திலுள்ள திரிவ்ருத் மந்திரமும்,
கண்களாக காயத்திரி மந்திரமும்,
உடலாக வாமதேவ்யம் எனும் வேதப்பகுதியும்,
இரு இறக்கைகளாக பிருகத்-ரதந்தரம் ஆகிய வேதப்பகுதிகளும்,
கால்களாக வேதத்தின் சந்தங்களும்,
நகங்களாக திஷ்ண்யம் எனும் வேதப்பகுதியும்,
வாலாக யஜ்ஞாயஜ்ஞம் எனும் வேதப்பகுதியும்,
ஆத்மாவாக ஸ்தோமம் எனும் வேதப்பகுதியும் வடிவெடுக்க,
அவ்வாறு உருவான வடிவமே வேதசொரூபியான கருடனின் வடிவம்.

கருட சேவை உற்சவத்தின் போது, இறைவனைத் தனது தோளில் சுமந்தபடி நம்மைத் தேடி வரும் வேத ஸ்வரூபியான
கருட பகவான், நம்மைப் பார்த்து, “நீ வேதங்களின் துணைகொண்டு இறைவனைத் தேடிக் கொண்டிருந்தாயே!
இதோ அந்த இறைவனையே நான் உன்னிடம் அழைத்து வந்துவிட்டேன் பார்!” என்று
சொல்லிப் பரமனின் பாதங்களைப் பாமரர்க்கும் எளிதில் காட்டித் தந்து விடுகிறார்.

காஸ்யப மகரிஷிக்கும் வினதைக்கும் மகனாக ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி நன்னாளில் சுவாதி நட்சத்திரத்தில் தோன்றினார் கருடன்.
பருத்த உடல், பொன்மயமான சிறகுகள், வெண்மையான கழுத்துப் பகுதி, உருண்டையான கண்கள், நீண்ட மூக்கு,
கூரிய நகங்களுடன் கூடியவராய்க் கருடன் திகழ்கிறார்.
‘கரு’ என்றால் சிறகு என்று பொருள். ‘ட’ என்றால் பறப்பவர்.
சிறகுகளைக் கொண்டு பறப்பதால் ‘கருடன்’ என்றழைக்கப்படுகிறார்.
வடமொழியில் ‘க்ரு’ என்பது வேத ஒலிகளைக் குறிக்கும்.
வேத ஒலிகளின் வடிவாய்த் திகழ்வதாலும் ‘கருடன்’ எனப் பெயர் பெற்றார்.

கருடனின் தாயான வினதை, தனது சகோதரியான கத்ருவிடம் ஒரு பந்தயத்தில் தோற்றாள்.
அதன் விளைவாகக் கத்ருவுக்கும் அவளது பிள்ளைகளான நாகங்களுக்கும் அடிமையாகிச் சிறைப்பட்டிருந்தாள் வினதை.
அவளை விடுவிக்க வேண்டும் என்றால், தேவலோகத்தில் இருந்து அமுதத்தைக் கொண்டு வர வேண்டும் என்று
நிபந்தனை விதித்தாள் கத்ரு. தேவலோகத்துக்குச் சென்று அமுதத்தைக் கொண்டு வந்து
தன் தாயான வினதையைச் சிறையிலிருந்து மீட்டார் கருடன்.

தனது தாயைக் கத்ருவும் அவள் ஈன்றெடுத்த பாம்புகளும் சிறைவைத்தபடியால், பாம்புகளைப் பழிவாங்க நினைத்த கருடன்,
பாம்புகளை வீழ்த்தி அவற்றையே தனது திருமேனியில் ஆபரணங்களாக அணிந்தார்.
கருடன் தனது உடலில் எட்டுப் பாம்புகளை எட்டு இடங்களில் அணிந்துள்ளார். அவையாவன,

1.தலையில் சங்கபாலன்
2.வலக்காதில் பத்மன்
3.இடக்காதில் மகாபத்மன்
4.கழுத்தில் மாலையாகக் கார்க்கோடகன்
5.பூணூலாக வாசுகி
6.அரைஞாண்கயிறாக தட்சகன்
7.வலக்கையில் குளிகன்
8.இடக்கையில் சேஷன்

அதனால் தான் கருடன், ‘அஷ்ட நாக கருடன்’ என்றழைக்கப்படுகிறார்.
திருமால் ஒருமுறை கருடனிடம், “நான் உனக்கு ஒரு வரம் தரட்டுமா?” என்று கேட்டார்.
கருடனோ, “திருமாலே! எனக்கு வரம் வேண்டாம்! உமக்கு ஏதேனும் வரம் வேண்டுமென்றால், நான் தருகிறேன்! கேளுங்கள்!” என்றார்.
கருடனின் பிரபாவத்தைக் கண்டு வியந்த திருமால், “நீயே எனக்கு வாகனமாகி விடு!” என்று கருடனிடம் வரம் கேட்டார்.
கருடனும் அதற்கு இசைந்து, திருமாலுக்கு வாகனமானார்.

அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பெருமாள் சந்நதிக்கு நேராகக் கருடன் சந்நதி இருப்பதைக் காணலாம்.
ஏனெனில், நாம் ஒப்பனை செய்து கொண்டால், கண்ணாடியில் அழகு பார்ப்போம் அல்லவா?
அதுபோல் அலங்காரப் பிரியரான திருமால் அலங்காரம் செய்துகொண்டால் அழகு பார்க்க ஒரு கண்ணாடி வேண்டுமல்லவா?
இறைவனைக் காட்டும் கண்ணாடி வேதம்! கருடன் வேத ஸ்வரூபியாகவே இருப்பதால்,
கருடனையே கண்ணாடியாகக் கொண்டு திருமால் அழகு பார்க்கிறார்.
அதனால் தான் பெருமாள் சந்நதிக்கு நேரே, கண்ணாடி போல் கருடன் சந்நதி இருக்கும்.

பெருமாள் கோயில்களில் பிரம்மோற்சவங்கள் நடைபெறும் போது கருடனின் படம் வரைந்த கொடி,
கொடி மரத்தில் ஏற்றப்படுவதைக் காணலாம்.
திருமலையிலுள்ள ஏழு மலைகளுள் கருடனின் பெயரில் ‘கருடாத்ரி’ என்றொரு மலை உள்ளது.
ராம ராவணப் போரில், இந்திரஜித்தின் நாகபாசத்தால் தாக்கப்பட்டு ராமனும் வானர சேனையும் மயங்கிக் கிடந்த வேளையில்,
வானிலிருந்து தோன்றிய கருடன் அந்த நாக பாசங்களை உடைத்து, ராமனும் வானர வீரர்களும் மீண்டும் எழுவதற்கு உதவினார்.

இறைவனை நாம் அழைக்கும் போதெல்லாம், அவனை விரைவில் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் வாகனமாகக் கருடன் திகழ்கிறார்.
கருடனை வழிபடுவோர்க்குப் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் ஏற்படும் பயம் விலகி, குடும்பத்தில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.

கருடன் எத்தனை கருடனடி?
பட்சிராஜன்,
வைனதேயன்,
கருத்மான்,
சுபர்ணன்,
தார்க்ஷ்யன்,
காச்யபி,
சுதாஹரன்,
ககேச்வரன்,
நாகாந்தகன்,
விஷ்ணுரதன்,
புள்ளரசன்,
புள்ளரையன்,
மங்களாலயன்,
பெரிய திருவடி,
கலுழன் எனப் பல்வேறு பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார்.

ஆளவந்தார் என்னும் மகான்,
“தாஸ: ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய:” என்ற ஸ்லோகத்தில்
கருடன் திருமாலுக்குத்
தொண்டராகவும்,
நண்பராகவும்,
வாகனமாகவும்,
இருக்கையாகவும்,
கொடியாகவும்,
மேல்கட்டாகவும்,
விசிறியாகவும் இருப்பதாகக் காட்டுகிறார்.

கருட மந்திரத்தை ஜபித்து, கருடனை நேரில் தரிசித்தவர் 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வேதாந்த தேசிகன் என்னும் மகான்.
அவர் ஒன்று, இரண்டு, மூன்று… என எண்ணிக்கைகளை வைத்து வடமொழியில் ஸ்லோகம் அமைத்துக் கருடனைத் துதித்தார்.
ஒப்பற்ற ஒருவரான கருடன்,
திருமாலின் இரண்டாவது வடிவமாய் விளங்குகிறார்.
ஞானியர், முனிவருள்ளும் மூன்று,
நான்கு பேர்கள் மட்டுமே
ஐந்தெழுத்து உடைய கருட மந்திரத்தின் பெருமையை நன்கறிவர்.
ஞானம், பலம், வீரியம், சக்தி, ஐஸ்வரியம், தேஜஸ் என ஆறு குணங்களை உடையவர் கருடன்.
ஏழு ஸ்வரங்களுக்கும் ஆதாரமான சாம வேத ரூபியாக உள்ளார்.
எட்டு மகாசித்திகளையும் பெற்றவர்.
அவரது உடல் நவமாக உள்ளது. (நவம் என்பது எண் ஒன்பதையும் குறிக்கும், எப்போதும் புதிதாக இருத்தல் என்றும் பொருள்படும்.
கருடனின் திருமேனி எப்போதும் புதிதாகவே உள்ளது. அதையே நவம் எனக்குறிப்பிடுகிறார்.)
பத்து நூறு (10×100=1000) கண்களை உடைய இந்திரனின் ஆயிரக்கணக்கான எதிரிகளை வீழ்த்துகிறார் கருடன்.
அவர் எண்ணிலடங்காத உருவங்களை உடையவர் என்று அந்த ஸ்லோகத்தில் கூறுகிறார் வேதாந்த தேசிகன்.

இந்த ஸ்லோகத்துக்கு ஸ்ரீமான். அன்பில் ஸ்ரீநிவாசன் என்பவர் வழங்கிய
தமிழ் மொழி பெயர்ப்பை வாசகர்களின் அனுபவத்திற்காக வழங்குகிறோம்.

“ஒருவராயும் விட்டுவிற்கு இரண்டாவது மூர்த்தியாயும்
திரிநான்கு பேர்களேதான் நன்கறிய முடிந்ததான
ரகசிய மந்திரமாம் ஐயெழுத்தின் தேவராயும்
இருமூன்று குணங்களினால் இணையற்று விளங்குவரும்
ஸ்ருதியான ஏழுஸ்வர சாமத்தின் உறைவிடமும்
இருநான்கு அணிமாதி ஐஸ்வரியக் கொள்கலனும்
திருமேனி நவமென்னும் புதிதாக அமைந்தவரும்
இருவைந்து நூறான கண்ணுடைய இந்திரனின்
விரோதிகள் பல்லாயிரர் தம்மோடு விளையாடும்
சிறகுகளின் கூர்முனையைச் சிறப்பாக உடையவரும்
உருக்களுமே எண்ணற்று உடையவரும், நாகங்களின்
ஒருபெரிய பகைவருமாய் உறும் கருட பகவானே
பெரிதாம் நம் சம்சார பயந்தன்னைப் போக்கிடுக!”

எண்ணற்ற உருவங்கள் உடையவராகக் கருடன் விளங்குவதால், கருட சேவை உற்சவங்களில்
பற்பல உருவங்களோடு கருடன் வருவதைக் காணலாம்.

தஞ்சையில் நடைபெறும் 24 கருட சேவை,
காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையிலுள்ள கூழமந்தலில் நடைபெறும் 15 கருட சேவை,
அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் நடைபெறும் 12 கருட சேவை,
திருநெல்வேலிக்கு அருகே ஆழ்வார் திருநகரியில் நடைபெறும் 9 கருட சேவை,
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் 5 கருட சேவை உள்ளிட்ட உற்சவங்கள் இதற்குச் சான்றாகும்.

நாச்சியார்கோவிலில் கல் கருடனாகத் திகழும் கருடன்,
தானே உற்சவராகவும்,
மூலவராகவும்,
வாகனமாகவும் திகழ்கிறார்.

———–

திருநாங்கூர் திருத்தலங்கள்

இப்படிப் பல ஊர்களில் கருட சேவை உற்சவங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றாலும்,
தை அமாவாசைக்கு மறுநாளன்று, சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூரில் நடைபெறும் 11 கருட சேவை உற்சவம்
உலகப் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
சுமார் 125 வருடங்களுக்கு முன்பு திருநாங்கூரில் வாழ்ந்த திருநாராயணப் பிள்ளை, இன்ஸ்பெக்டர் சுவாமி ஐயங்கார்
போன்ற பெரியோர்கள் இந்த உற்சவத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
அன்று தொட்டு இன்று வரை வருடந்தோறும் இவ்வுற்சவம் செவ்வனே நடந்து வருகிறது.

ஆழ்வார்களால் பாடப் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களுள் சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூர்
எனும் ஊரைச் சுற்றி 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன.
தட்சனின் யாகத்துக்குச் சென்ற சதிதேவியை தட்சன் அவமானப் படுத்திய செய்தியைக் கேள்வியுற்றுக்
கடுஞ்சினம் கொண்ட பரமசிவன், சீர்காழிக்கு அருகிலுள்ள உபயகாவிரி எனும் இடத்தில் ருத்திர தாண்டவம் ஆடத் தொடங்கினார்.

அவரது ரோமம் விழுந்த இடங்களில் எல்லாம் புதிய ருத்திரர்கள் தோன்றத் தொடங்கினார்கள்.
சிவபெருமானின் கோபத்தை அடக்க வழிதெரியாது தேவர்கள் தவித்தபோது,
திருநாங்கூரில் பதினொரு வடிவங்களோடு திருமால் வந்து காட்சி கொடுத்து,
பதினொரு வடிவங்களில் இருந்த பரமசிவனின் கோபத்தைத் தணித்தார்.
அதனால் தான் இன்றும் திருநாங்கூரில் 11 பெருமாள் கோயில்களும்,
அவற்றுக்கு இணையாக 11 சிவன் கோயில்களும் இருப்பதைக் காணலாம்.

1.திருமணிமாடக்கோவில் (ஸ்ரீநாராயணப் பெருமாள்)
2.திரு அரிமேய விண்ணகரம் (குடமாடு கூத்தர்)
3.திருச்செம்பொன்செய்கோவில் (செம்பொன் அரங்கர்)
4.திருத்தெற்றியம்பலம் (செங்கண்மால்)
5.திருவெள்ளக்குளம் (அண்ணன் பெருமாள்)
6.திருவண்புருடோத்தமம் (புருஷோத்தமப் பெருமாள்)
7.திருமணிக்கூடம் (வரதராஜப் பெருமாள்)
8.திருவைகுந்த விண்ணகரம் (வைகுந்தநாதன்)
9.திருத்தேவனார்த் தொகை (மாதவன்)
10.திருப்பார்த்தன்பள்ளி (தாமரையாள் கேள்வன்)
11.திருக்காவளம்பாடி (கோபாலன்)
ஆகியவையே திருநாங்கூரைச் சுற்றியுள்ள பதினொரு திருமால் திருத்தலங்களாகும்.

1.திருநாங்கூர் மதங்கேஸ்வரர்
2.திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர்
3.திருயோகீஸ்வரம் யோகநாதஸ்வாமி
4.கார்த்தியாயினி இருப்பு (காத்திருப்பு) ஸ்வர்ணபுரீஸ்வரர்
5.திருநாங்கூர் ஜ்வரஹரேஸ்வரர்
6.அல்லிவிளாகம் நாகநாதஸ்வாமி
7.திருநாங்கூர் நம்புவார்க்கு அன்பர்
8.திருநாங்கூர் கயிலாயநாதர்
9.திருநாங்கூர் சுந்தரேஸ்வரர்
10.பெருந்தோட்டம் ஐராவதேஸ்வரர்
11.அன்னப்பன்பேட்டை கலிக்காமேஸ்வரர்
எனப் பதினொரு திருவடிவங்களுடன் திருநாங்கூரைச் சுற்றி சிவபெருமான் காட்சி தருகிறார்.

திருவரங்கத்தில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வரும் பகல்பத்து – ராப்பத்து உற்வசவங்களைப்
பன்னிரு ஆழ்வார்களுள் கடைக்குட்டியான திருமங்கையாழ்வார் நடத்தி வைத்தார்.
அது நிறைவடைந்த பின், தைமாதம் அமாவாசை அன்று திருநாங்கூரில் கோயில் கொண்டிருக்கும்
பதினொரு பெருமாள்களையும் இனிய தமிழ்ப் பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்வதற்காகத்
திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு வருகிறார்.

அப்பாசுரங்களைப் பெறும் ஆர்வத்தில் பதினொரு பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் வந்து காட்சி கொடுத்து,
ஆழ்வாரிடம் பாடல்களை ஏற்றுச் செல்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியை நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டுவது தான் திருநாங்கூர் பதினொரு கருட சேவை.
ஒவ்வொரு வருடமும் இந்தப் பெருமாள்களைப் பாடத் திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு நேரே வருவதாக ஐதீகம்.
இந்தக் கருட சேவைக்கு முந்தைய நாள் நள்ளிரவில், திருநாங்கூர் வயல் வெளிகளில் காற்றினால்
நெற்பயிர்கள் சலசலவென ஓசையிடும்.
இந்த ஓசையைக் கேட்டவுடன் திருமங்கையாழ்வார் ஊருக்குள் நுழைந்துவிட்டதாக மக்கள் புரிந்து கொள்வார்கள்.
திருமங்கையாழ்வாரின் ஸ்பரிசம் பட்ட வயல்களில் நல்ல விளைச்சல் ஏற்படும் என்பது அவ்வூர் விவசாயிகளின் நம்பிக்கை.

திருநாங்கூர் 11 கருட சேவை உற்சவம் மூன்று நாள் உற்சவமாக நடைபெறுகிறது

1.தை அமாவாசை அன்று நடைபெறும் திருமங்கை ஆழ்வாரின் மஞ்சள் குளி உற்சவம்
2.தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் பதினொரு கருட சேவை
3.அதற்கு மறுநாள் பெருமாள்களும் ஆழ்வாரும் தத்தம் திருக்கோயில்களுக்குத் திரும்புதல்

திருநாங்கூர் பதினொரு கருட சேவை திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாகத்
தை அமாவாசையன்று திருமங்கையாழ்வாருக்கு மணிகர்ணிகை நதிக்கரையில் ‘மஞ்சள் குளி உற்சவம்’ நடைபெறுகின்றது.
மஞ்சள் குளி உற்சவம் என்றால் என்ன?
திருவரங்கத்தில் கார்த்திகை தீப நன்னாளில் ‘திருநெடுந்தாண்டகம்’ என்றழைக்கப்படும் முப்பது பாசுரங்களை இயற்றி
அரங்கன் முன்னே விண்ணப்பித்தார் திருமங்கையாழ்வார்.
அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த அரங்கன், ஆழ்வாரிடம், “உமக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்குத் திருமங்கை ஆழ்வார், “அரங்கா! உனக்கு மார்கழி மாதத்தில் நடைபெறுகின்ற அத்யயன உற்சவத்தின் போது,
வடமொழி வேதங்களை மட்டும் ஓதுகிறார்கள். அத்தோடு சேர்த்து நம்மாழ்வார் தந்த தமிழ் வேதமாகிய
திருவாய்மொழியையும் அந்த உற்சவத்தில் ஓதச் செய்யுமாறு அருள் புரிய வேண்டும்!” என்று வேண்டினார்.
அரங்கனும் அதற்கு இசைந்தார்.

வடமொழி மறை, தென்மொழி மறை ஆகிய இருமறைகளின் பாராயணத்தோடு வெகுசிறப்பாக அத்தியயன உற்சவம் நிறைவடைந்தது.
இவ்வுற்சவத்துக்கு ஏற்பாடு செய்த திருமங்கையாழ்வாரைப் பாராட்ட விழைந்தார் அரங்கன்.
ஒவ்வொரு வருடமும் தை அமாவாசையன்று, அரங்கன் மஞ்சள் நீரில் திருமஞ்சனம் கண்டருள்வது வழக்கம்.
அதற்கு மஞ்சள் குளி உற்சவம் என்று பெயர்.
“எனக்கு நடைபெறும் இந்த மஞ்சள்குளி உற்சவம் இனி திருமங்கையாழ்வாருக்கும் வருடா வருடம் நடைபெற வேண்டும்!”
என்று அருட்பாலித்தார் அரங்கன்.

அந்த வருடம் தை அமாவாசையன்று, திருமங்கையாழ்வாரைக் கொள்ளிடக் கரைக்கு அழைத்துச் சென்ற அரங்கன்,
ஆழ்வாருக்குத் தன் கையால் மஞ்சள் குளியலை நடத்தி வைத்தார்.
வெகுசிறப்பாக நடைபெற்ற அந்த மஞ்சள் குளி உற்சவத்தின் முடிவில், “அரங்கா! நீ கருணை கூர்ந்து இந்த உற்சவத்தை
எனக்காக நடத்தி வைத்தாய். ஆனால் எங்கள் ஊரில் வாழும் எனது அன்பர்கள், இவ்வளவு தூரம் தள்ளி வந்து
இக்காட்சியைக் காண இயலாதே!” என்று அரங்கனிடம் கூறினார் திருமங்கையாழ்வார்.

“உங்களது ஊரார் கண்டு களிக்கும்படி இந்த உற்வசத்தை அடுத்த ஆண்டு முதல் உங்கள் ஊரிலேயே நடத்தி விடலாம்!” என்றார் அரங்கன்.
திருமங்கையாழ்வார் திருநாங்கூருக்கு அருகிலுள்ள திருக்குறையலூர் என்னும் ஊரைச் சேர்ந்தவரானபடியால்,
அடுத்த வருடம் முதல் தை அமாவாசை அன்று திருநாங்கூரை ஒட்டி ஓடும் மணிகர்ணிகை ஆற்றங்கரையில்
திருமங்கையாழ்வாருக்கு மஞ்சள் குளி உற்சவம் நடைபெறத் தொடங்கியது.

மஞ்சள்குளி உற்சவம்

தை அமாவாசையன்று அதிகாலை 3 மணி அளவில், திருமங்கையாழ்வார் தனது மனைவி குமுதவல்லி நாச்சியாருடன்
திருவாலி திருநகரியில் இருந்து மஞ்சள்குளி உற்சவத்துக்காகப் புறப்படுகிறார்.
திருமங்கை ஆழ்வார் ஆராதித்த பெருமாளான சிந்தனைக்கு இனியானும் அவருடன் புறப்பட்டுச் செல்கிறார்.

முதலில் திருக்குறையலூரிலுள்ள உக்ர நரசிம்மப் பெருமாள் கோயிலை அடைந்து,
உக்ர நரசிம்மரை மங்களாசாசனம் செய்துவிட்டு,
அடுத்து,
தான் திருமால் அடியார்களுக்கு அன்னதானம் செய்த இடமான மங்கை மடத்தை அடைந்து,
அங்கே வீர நரசிம்மரையும் மங்களாசாசனம் செய்து,
அதைத் தொடர்ந்து,
திருநாங்கூரிலுள்ள திருக்காவளம்பாடிக்கு எழுந்தருளி, “காவளம்பாடி மேய கண்ணா!” என்று அங்குள்ள பெருமாளைப் பாடி,
அடுத்து
திருமணிக்கூடம் வரதராஜப் பெருமாளை, “திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே!” என்று பாடிவிட்டு,
நிறைவாகத்
திருப்பார்த்தன் பள்ளியில் ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளை,
“பவள வாயால் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவானே!” என்று பாடிவிட்டு,
நண்பகல் 12 மணியளவில் திருநாங்கூர் மணிகர்ணிகை நதிக்கரையில் உள்ள மஞ்சள் குளி மண்டபத்தை
அடைகிறார் திருமங்கை ஆழ்வார்.

அங்கிருந்தபடி, தனக்கு வைணவ இலச்சினை அளித்த ஆசாரியனாகத் திகழும் நாச்சியார்கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாளை,

“குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளை முத்தும்
தலையார்ந்த இளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர்
மலையார்ந்த கோலஞ்சேர் மணிமாடம் மிகமன்னி
நிலையார நின்றான்தன் நீள்கழலே அடைநெஞ்சே!”–என்று பாடி விட்டு,
மஞ்சள் குளி உற்சவத்தை நடத்தி வைத்த திருவரங்கநாதனை மங்களாசாசனம் செய்கிறார் திருமங்கையாழ்வார்.

அந்தத் திருத்தலங்களில் இருந்து விசேஷமான மாலைகளும், பரிவட்டங்களும் ஆழ்வாருக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன.
மஞ்சள்குளி மண்டபத்தில், முதலில் திருமங்கை ஆழ்வார் ஆராதித்த பெருமாளான
சிந்தனைக்கினியானுக்கு ஸஹஸ்ர தாரைத் தட்டில் மஞ்சள் நீரால் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
பின், அதே ஸஹஸ்ர தாரைத் தட்டில் திருமங்கையாழ்வாரும் மஞ்சள் நீரால் திருமஞ்சனம் கண்டருள்கிறார்.
அதன்பின் விசேஷ அலங்காரங்கள் பெருமாளுக்கும் ஆழ்வாருக்கும் செய்யப்படுகின்றன.

அன்று மாலை 4 மணியளவில் அங்கிருந்து புறப்படும் திருமங்கையாழ்வார்,
திருநாங்கூர் மணிமாடக் கோயிலை அடைந்து,
“மணிமாடக் கோவில் வணங்கு என் மனனே!” என்று அப்பெருமாளைப் பாடி,
அதன்பின்
“நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே!” என்று
திருவண்புருடோத்தமப் பெருமாளைப் பாடி,
திருவைகுந்த விண்ணகரத்தில்,
“வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே!” என்று வைகுந்த நாதனைப் பாடி,
திருச்செம்பொன்செய் கோயிலில்,
“கடல்நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே!”
என்று செம்பொன் அரங்கரைப் பாடி,
திருத்தெற்றியம்பலத்தில் பள்ளிகொண்ட பெருமாளை,
“திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே!” என்று பாடி,
அரிமேய விண்ணகரத்தை அடைந்து,
“நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே!” என்று குடமாடு கூத்தரைப் பாடுகிறார்.

அன்று இரவு திருநாங்கூர் மணிமாடக் கோயிலை அடைகிறார் திருமங்கை ஆழ்வார்.
அங்கே அர்த்த ஜாம பூஜை நடைபெறுகிறது.
அடுத்த நாள் – தை அமாவாசைக்கு மறுநாள் காலை,
மணிமாடக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் திருமங்கையாழ்வாரிடம் மங்களாசாசனம் பெற்றுக் கொள்வதற்காக,
வைகுந்த விண்ணகரத்தின் வைகுந்த நாதப் பெருமாள்,
அரிமேய விண்ணகரத்தின் குடமாடு கூத்தர்,
திருத்தேவனார்தொகையின் மாதவப் பெருமாள்,
திருவண்புருடோத்தமத்தின் புருஷோத்தமப் பெருமாள்,
செம்பொன்செய்கோவிலின் செம்பொன் அரங்கர்,
திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மால்,
திருமணிக்கூடத்தின் வரதராஜப் பெருமாள்,
திருக்காவளம்பாடியின் கோபாலகிருஷ்ணன்,
திருவெள்ளக்குளத்தின் அண்ணன் பெருமாள்,
திருப்பார்த்தன்பள்ளியின் தாமரையாள் கேள்வன் ஆகிய
பத்து திவ்ய தேசத்துப் பெருமாள்களும் நாங்கூர் மணிமாடக் கோயிலை நோக்கிப் பல்லக்குகளில் வரத் தொடங்குவார்கள்.

ஆழ்வாரைக் காணும் ஆவலுடன் ஒவ்வொரு பெருமாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் வருவார்கள்.
பக்தனைக் காண்பதில்தான் பரமனுக்கு எத்தனை ஆனந்தம்!
திருமங்கை ஆழ்வார் கோயிலுக்குள்ளே வீற்றிருக்க, வெளியே பத்து பெருமாள்கள் அவருக்காகக் காத்து நிற்கிறார்கள்.
அப்போது அங்கிருக்கும் அடியார்களுள் சிலர்,
“இதென்ன தலைகீழாக உள்ளது? பக்தரான ஆழ்வாருக்காக பகவான் காத்திருக்கிறாரே!” என்று பேசிக் கொள்வார்களாம்!
ஆனால் பத்துப் பெருமாள்களும் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வார்களாம்,
“முப்பத்தேழு திவ்ய தேசத்துப் பெருமாள்கள் திருக்குருகூரில் புளியமரப் பொந்தில் யோகத்தில் அமர்ந்திருந்த
நம்மாழ்வாரைத் தேடிச் சென்று காத்திருந்து அவரிடம் இருந்து பாடல் பெற்று வந்தார்களல்லவா?
அவர்களெல்லாம் நம்மாழ்வாரிடம் பாடல் பெற்று திவ்ய தேசப் பெருமாள்கள் ஆகி விட்டார்கள்.
ஆனால், திருநாங்கூரில் உள்ள நமது பதினோரு கோயில்களையும் தனது பாசுரங்களால் பாடி,
திவ்ய தேசங்களாக ஆக்கிய ஆழ்வார் திருமங்கை ஆழ்வார். நம்முடைய ஆழ்வாருக்காக நாம் காத்திருக்க வேண்டாமா?” என்று.
பக்தன் மேல் இறைவன் கொண்டிருக்கும் அன்பை இதன் மூலம் அறிய முடிகிறதல்லவா?
அவ்வாறு காத்திருந்து, மணிமாடக் கோயிலுக்குள் வரிசையாகப் பத்துப் பெருமாள்களும் நுழைகிறார்கள்.
அவர்களுடன் மணிமாடக் கோவில் பெருமாளும் இணைவார்.
பதினோரு பெருமாள்களையும் மங்களாசாசனம் செய்யக் குமுதவல்லி நாச்சியாரோடு திருமங்கையாழ்வார் தயாராவார்.

ஒவ்வொரு பெருமாளும் வந்து ஆழ்வாருக்குக் காட்சியளிக்க,
அந்தப் பெருமாளைத் தமது பாசுரங்களால் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வார்.
அந்தப் பெருமாளை வலம் வந்துவிட்டு, மாலை உள்ளிட்ட பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு,
அடுத்த பெருமாளைப் பாடச் செல்வார் ஆழ்வார்.
இவ்வளவு நேரம் புறப்பாடுகளில் திருமங்கையாழ்வார் மெல்ல நகர்வதையும்,
ஒரே நேரத்தில் பதினோரு பெருமாள்களையும் தரிசித்தபின் அந்த மகிழ்ச்சியில்
ஆழ்வாரின் புறப்பாடு புதிய வேகம் எடுப்பதையும் இன்றும் கண்கூடாகக் காணலாம்!
இவ்வாறு வரிசையாகப் பதினோரு பெருமாள்களையும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தவுடன்,
வண்புருடோத்தமம் திருத்தலத்தில் இருந்து அங்கே எழுந்தருளும் மணவாள மாமுனிகள்,

“வேல் அணைத்த மார்பும் விளங்கு திரு எட்டெழுத்தை
மால் உரைக்கத் தாழ்த்த வலச்செவியும்
தாளிணைத் தண்டையும் தார்க் கலியன் நன்முகமும்
கண்டு களிக்கும் என் கண்”
என்று பாடித் திருமங்கையாழ்வாரை மங்களா சாசனம் செய்வார்.

அதைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில், ஒரே நேரத்தில் பதினோரு திவ்ய தேசத்துப் பெருமாள்களுக்கும்,
திருமங்கை ஆழ்வாருக்கும் திருமஞ்சனம் நடைபெறும்.
அப்போது பெருமாள் திருமங்கையாழ்வாரிடம்,
“ஆழ்வீர்! உமது பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தேன். நீங்கள் பாடிய பாடல்கள் யாவும் வேதத்துக்கு நிகரானவை.
எனவே இன்று இரவு வேத ஸ்வரூபியான கருடன் மேலேறி உங்களுக்கு காட்சி தர உள்ளேன்.

திருமங்கை மன்னரே! நீங்கள் வழிப்பறி செய்தாலும், என் அடியார்க்கு உணவளிப்பதற்காகவே அதைச் செய்தீர்கள்!
உங்களது உள்ளம் தங்கம் போல் தூய்மையாகத் திகழ்கிறது.
உங்களது தங்கம் போன்ற உள்ளத்தைப் பறைசாற்றும் வகையில் தங்கக் கருடன் மேல் ஏறி உங்களுக்குக் காட்சி தரவுள்ளேன்.
நீங்கள் பாடிய பெரிய திருமொழி என்னும் நூலில் பதினொரு சதகங்கள் உள்ளன.
அதற்கு இணையாகப் பதினோரு கருடன்கள் மேல் பதினோரு வடிவங்களுடன் நான் காட்சி தர உள்ளேன்!” என்று கூறுவார்.

மேலும், “மங்கை மன்னரே! அன்னப் பறவை எப்படித் தண்ணீரையும் பாலையும் கலந்து வைத்தால்,
தண்ணீரை விலக்கி விட்டுப் பாலை மட்டும் எடுத்துக் கொள்கிறதோ,
அதுபோல் நீங்களும் சாரமில்லாத உலக விஷயங்களை விலக்கிவிட்டு, சாரமாக இருக்கும் இறைபக்தியைக் கைக்கொண்டீர்கள்!
எனவே நீங்கள் அன்னப்பறவையின் மீது அமர்ந்து வந்து என்னைத் தரிசனம் செய்யுங்கள்!
அதுவே பொருத்தமாக இருக்கும்!” என்று திருமங்கையாழ்வாரிடம் கூறுவார் பெருமாள்.

பதினோரு கருடன்மேல் பதினோரு பெருமாள்கள் அன்றைய தினம் நள்ளிரவில், தோளுக்கினியானில்
மணவாள மாமுனிகள் முதலில் மணிமாடக் கோயிலில் இருந்து வெளியே வருவார்.
அவரைத் தொடர்ந்து, அன்னப்பறவை (ஹம்ஸ) வாகனத்தில், குமுதவல்லி நாச்சியாரோடு திருமங்கை ஆழ்வார் வெளியே வந்து,
பெருமாள்களை வரவேற்கத் தயாராக நிற்பார்.

1.மணிமாடக் கோயிலின் நாராயணப் பெருமாள்
2.அரிமேய விண்ணகரத்தின் குடமாடு கூத்தர்
3.செம்பொன்செய்கோயிலின் செம்பொன் அரங்கர்
4.திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மால்
5.திருவெள்ளக்குளத்தின் அண்ணன் பெருமாள்
6.திருவண்புருடோத்தமத்தின் புருஷோத்தமப் பெருமாள்
7.திருமணிக்கூடத்தின் வரதராஜப் பெருமாள்
8.வைகுந்த விண்ணகரத்தின் வைகுந்தநாதப் பெருமாள்
9.திருத்தேவனார்தொகையின் மாதவப் பெருமாள்
10.திருப்பார்த்தன்பள்ளியின் தாமரையாள் கேள்வன்
11.திருக்காவளம்பாடியின் கோபால கிருஷ்ணன்

ஆகிய பதினோரு பெருமாள்களும் விசேஷ அலங்காரங்களோடு தங்கக் கருட வாகனங்களில்
திருநாங்கூர் மணிமாடக் கோயிலில் இருந்து புறப்படுவார்கள்.
பதினோரு பெருமாள்கள் மங்களாசாசனம் பெறும் வரிசை பற்றி அழகான வடமொழி ஸ்லோகம் ஒன்று உள்ளது.

“நந்தாதீப கடப்ரணர்தக மஹாகாருண்ய ரக்தாம்மக
ஸ்ரீ நாராயண புருஷோத்தமதி ஸ்ரீ ரத்னகூடாதிபாந் |
வைகுண்டேஸ்வர மாதவௌ ச கமலாநாதம் ச கோபீபதிம்
நௌமி ஏகாதசாந் நாகபுரி அதிபதீந் ஸார்தம் கலித்வம்ஸிநா ||”

இதன்பொருள்: மணிமாடக் கோயிலின் நாராயணப் பெருமாள், அரிமேய விண்ணகரத்தின் குடமாடு கூத்தர்,
செம்பொன்செய்கோயிலின் செம்பொன் அரங்கர், திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மால்,
திருவெள்ளக்குளத்தின் அண்ணன் பெருமாள், திருவண்புருடோத்தமத்தின் புருஷோத்தமப் பெருமாள்,
திருமணிக்கூடத்தின் வரதராஜப் பெருமாள், வைகுந்த விண்ணகரத்தின் வைகுந்தநாதப் பெருமாள்,
திருத்தேவனார்தொகையின் மாதவப் பெருமாள், திருப்பார்த்தன்பள்ளியின் தாமரையாள் கேள்வன்,
திருக்காவளம்பாடியின் கோபாலகிருஷ்ணன்
ஆகிய பதினோரு பெருமாள்களையும்
திருமங்கை ஆழ்வாரையும் வணங்குகிறேன்.

மணிமாடக் கோயிலிலிருந்து வரிசையாக வெளியே வரும் ஒவ்வொரு பெருமாளுக்கும் கோயில் வாசலில்
விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது.
ஒவ்வொரு பெருமாளாகத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்வார்.
பதினோரு பெருமாள்களுக்கும் மங்களாசாசனம் ஆனபின், கருட வாகனத்தில் வீதியுலா செல்லும் பெருமாள்களைப் பின்தொடர்ந்து,
ஹம்ஸ வாகனத்தில் திருமங்கையாழ்வாரும் செல்வார்.

ஆழ்வாரின் பாடல்களைப் பெற்று அவருக்கு அருள்புரிந்தாற்போல், ஊர்மக்களுக்கும், உற்சவத்தைத் தரிசிக்க வந்த
அடியார்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்ற எண்ணத்தில், பக்தர்கள் வெள்ளத்துக்கு மத்தியில்,
பதினோரு பெருமாள்களும் கருட வாகனத்தில் திருநாங்கூர் மாட வீதிகளைச் சுற்றி
மேளவாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் வலம் வருவார்கள்.

இந்த 11 கருட சேவையைத் தரிசிக்கும் அடியார்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில்
பதினோரு திவ்ய தேசங்களைத் தரிசித்த பலன் கிட்டும் என்பது பெரியோர்களின் வாக்கு.

————-

மூன்றாம் நாள் உற்சவம் திருமங்கை ஆழ்வார் திருநகரிக்குத் திரும்புதல்
11 கருட சேவை உற்சவம் நடைபெற்ற மறுநாள் காலை, மணிமாடக் கோயிலிலிருந்து புறப்பட்டு,
அந்தந்தப் பெருமாள்கள் தத்தம் திருத்தலங்களுக்கு மீண்டும் எழுந்தருள்வார்கள்.

காலையில் மணிமாடக் கோயிலில் திருமஞ்சனம் கண்டருளும் திருமங்கையாழ்வார், மாலையில் குமுதவல்லியுடன் புறப்பட்டு,
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாளை,
“அண்ணா அடியேன் இடரைக் களையாயே!” என்று மங்களாசாசனம் செய்து,
திருத்தேவனார்தொகை மாதவப் பெருமாளை,
“தேதென என்றிசைப் பாடும் திருத்தேவனார்த் தொகையே!” என்று பாடி,
திருவாலியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலட்சுமிநரசிம்மப் பெருமாளை “திருவாலி அம்மானே!” என்று பாடிவிட்டுத்
தனது இருப்பிடமான திருநகரியை அடைவார்.
திருநகரியில் எழுந்தருளியிருக்கும் வயலாளி மணவாளன் எனப்படும் பெருமாள், கருட வாகனத்தில் வந்து,
ராஜகோபுரத்தின் முன்னே திருமங்கையாழ்வாரையும் குமுதவல்லியையும் எதிர்கொண்டு அழைப்பார்.

“கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே
பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீள் வயல் சூழ் வயலாலி அம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே!”–என்று திருமங்கையாழ்வார் பாடி,
வயலாலி மணவாளனோடு திருக்கோயிலுக்குள்ளே எழுந்தருளுவதோடு,
இந்தப் பதினோரு கருட சேவைத் திருவிழா இனிதே நிறைவடையும்.

சிறப்பம்சங்கள்
பக்தர்கள் இறைவனை நாடிச் செல்வது வழக்கமாய் இருக்க, இங்கே இறைவன் பக்தரைத் தேடி வருகிறார்.
ஆம்! திருநாங்கூரிலுள்ள பதினோரு திருத்தலங்களுள் ஒன்றான மணிமாடக் கோயில் திருமங்கையாழ்வார் அமர்ந்திருக்க,
மீதமுள்ள பத்துத் திருத்தலங்களின் பெருமாள்களும் ஆழ்வாரைத் தேடி வந்து, காத்திருந்து, அவரிடம் பாடல் பெற்றுச் செல்வார்கள்.

* திருமங்கையாழ்வார் அருளிய தமிழ்ப் பாசுரங்கள் யாவும் வேதத்துக்கு நிகரானவை என்பதால்,
வேத ஸ்வரூபியாக இருக்கும் கருடனின் மேல் வந்து காட்சி தந்து பாடல் பெற்றுக் கொள்கிறார் பெருமாள்.

* திருமங்கை ஆழ்வாரின் பொன்போன்ற உள்ளத்தைப் பறைசாற்றும் வகையில் தங்கக் கருடன் மேல் திருமால் காட்சி தருகிறார்.
திருமங்கை ஆழ்வார், பதினோரு சதகங்களை உடைய பெரிய திருமொழி என்னும் பிரபந்தத்தால் திருமாலைத் துதி செய்தார்.
சதகம் என்பது நூறு பாடல்களின் தொகுப்பைக் குறிக்கும்.
1084 பாடல்களை உடைய பெரிய திருமொழியில் பதினோரு சதகங்கள் உள்ளன.
அந்தப் பதினோரு சதகங்களுக்கு இணையாகத் திருமாலும் பதினோரு கருடன்கள் மேல் ஆழ்வாருக்குக் காட்சி அளிக்கிறார்.

* இறைவன் கருட சேவை கண்டருள்வதோடு மட்டுமின்றி, அந்த இறைவனைக் காட்டித் தந்த ஆழ்வார் அன்ன வாகனத்திலும்,
அந்த ஆழ்வாரின் பாசுரங்களுக்கு விளக்கவுரை தந்த ஆசாரியர் தோளுக்கினியானிலும் சேர்ந்து எழுந்தருள்வது
இந்த உற்சவத்தின் மற்றொரு சிறப்பு.

கடந்த பதினேழு ஆண்டுகளாக, பதினோரு கருட சேவைக்கு மறுநாள்,
திருநாங்கூருக்கு அருகிலுள்ள திருவெள்ளக்குளம் எனப்படும் அண்ணன் கோவிலில்,
ஸ்ரீஅண்ணன் பெருமாள் திருமண மண்டபத்தில், திருமாலின் பெருமைகளையும்,
திருமங்கை ஆழ்வாரின் பெருமைகளையும் பற்றிச் சான்றோர்கள் பங்கேற்று உரையாற்றும்
‘கலியன் ஒலி மாலை’ என்னும் கருத்தரங்கம் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருச்சித்ரகூடம் ரங்காச்சாரியார் சுவாமிகளின் தலைமையில்,
கோயில் ஸ்ரீ மான். சடகோப கல்யாணராமன் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

திருநாங்கூர் மணிமாடக் கோயிலில் ஒரே சமயத்தில் பல்லாயிரக் கணக்கான அடியவர்கள் ஒன்று கூடி
இறைவனை வணங்கும் ஒப்பற்ற உற்சவமாகிய இந்தப் பதினோரு கருட சேவை விழாவில் பங்கேற்று,
தங்கக் கருட வாகனத்தில் காட்சி அளிக்கும் பதினோரு பெருமாள்களையும், கருடன்களையும்,
அன்ன வாகனத்தில் வரும் திருமங்கையாழ்வார் – குமுதவல்லி நாச்சியாரையும்,
மணவாள மாமுனிகளையும் கண்ணாரக் கண்டு, மனதாறத் தொழும் அனைத்து அன்பர்களுக்கும்
உடல்நலம், மன அமைதி, நீண்ட ஆயுள், ஆற்றல், பொலிவு ஆகியவை பெருகும். நினைத்த நற்செயல்கள் கைகூடும்.
நோய்கள் அகலும். நற்செல்வம் பெற்றுப் பல்லாண்டு வாழ்வர் என்பதில் ஐயமில்லை.

—————

தை அமாவாசையை ஒட்டி மூன்று நாட்கள் சீர்காழி அருகில் உள்ள திருநாங்கூரில் 11 கருட சேவை நடக்கும்.
முதல் நாள் திருமங்கையாழ்வார் திருநகரியிலிருந்து புறப்பட்டு
ஸ்ரீ நாராயணப் பெருமாளிடம் தொடங்கி,11 திவ்யதேசங்களையும் மங்களாசாஸனம் செய்யும் விழா நடைபெறும்.

அடுத்த நாள் ஸ்ரீ திருமங்கை யாழ்வார் ஹம்ஸ வாஹன உத்ஸவமும் நடக்கும்.

முதல் நாள் அதிகாலை 1 மணிக்கு ஸ்ரீ திருமங்கை யாழ்வார்
திருநகரியிலிருந்து புறப்பட்டு
திருக் குறை யலூர்,
திருமங்கை மடம்,
1. திருக்காவளம்பாடி, ஸ்ரீகோபாலன்.
2. திருமணிக்கூடம், ஸ்ரீவரதராஜன்
3. திருப்பார்த்தன் பள்ளி ,ஸ்ரீபார்த்தசாரதி ஆகிய திவ்யதேசங்களுக்கு
சென்று மங்களாசாஸனம் செய்து விட்டு, மஞ்சள் குளி மண்டபம் எழுந்தருளுவார்.

அங்கு திருநறையூர் நம்பியையும், ஸ்ரீ ரங்கம் அழகிய மணவாளனையும் மங்களாசாஸனம் செய்த பிறகு
திருமஞ்சனம், திருப்பாவை சாற்றுமுறை நடைபெறும்.
அருகில் இருக்கும் நதியில் இருந்து நீர் எடுத்து வந்து திருமஞ்சனம் நடைபெறுகிறது.
திருமஞ்சனம் முடிந்த பின் திருமங்கையாழ்வார் தன் மனைவியார் குமுத வல்லி நாச்சியாரின் வஸ்திரத்தைத்
தலையில் சூடிக் கொள்கிறார்.
தன்னைக் கடைத் தேற்றிய குமுதவல்லிநாச்சியாரை உயர்த்த அந்த வஸ்திரத்தை அணிந்து கொள்கிறார்.

மாலை 6 மணிக்கு ஆரம்பித்து திருநாங்கூரிலிருந்து புறப்பட்டு,
4.மணிமாடக்கோயில், -ஸ்ரீநாராயணப்பெருமாள்
5.வண்புருடோத்தமம், -ஸ்ரீவண்புருடோத்தமப் பெருமாள்
6.வைகுந்த விண்ணகரம் – ஸ்ரீவைகுண்டநாதர்,
7.செம்பொன்செய் கோயில்,- ஸ்ரீசெம்பொன்னரங்கர்
8.திருத்தெற்றி யம்பலம்-ஸ்ரீபள்ளிகொண்டபெருமாள்
9.அரிமேய விண்ணகரம் -ஸ்ரீகுடமாடுகூத்தர்
ஆகிய திவ்யதேசங்களுக்கு எழுந்தருளி மங்களா சாஸனம் செய்து முடித்து
இரவு மணிமாடக்கோயி லுக்கு எழுந்தருளிய பின் அர்த்த ஜாமம் நடைபெறும்.

இரண்டாம் நாள் பகலில் சுமார் 12 மணி அளவில் மேற்கண்ட 9 திவ்யதேசத்து எம்பெருமான்களுடன்
10 திருவெள்ளக்குளம்,_ ஸ்ரீஅண்ணன் பெருமாள்
11 திருத்தேவனார் தொகை_ ஸ்ரீமாதவப்பெருமாள்
ஆக 11 திவ்ய தேசத்து எம்பெருமான்களும் மணி மாடக்கோயில் முன் பந்தலில் எழுந்தருளுவர்.
அவர்களை ஸ்ரீ திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வார்.

ஸ்ரீ புருஷோத்தமப் பெருமாள் ஸந்நிதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமணவாளமாமுனிகள்
ஸ்ரீ திருமங்கையாழ்வாரை மங்களாசாஸனம் செய்வார்.
மாலை பதினொரு திவ்யதேசத்து எம்பெருமான்களுக்கும் மற்றும்
ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கும் திருமஞ்சனம் நடை பெறும்.
இரவு பதினொரு எம்பெருமாளுக்கும் கருட சேவையும்,
ஸ்ரீ திருமங்கையாழ்வாருக்கு ஹம்ஸ வாஹன உத்ஸவமும்
ஸ்ரீ மணவாள மாமுனிகள்
திருவீதி புறப்பாடும் நடைபெறும்.

மூன்றாம் நாள் காலை மணிமாடக் கோயிலில் ஸ்ரீ திருமங்கை யாழ்வாருக்கு திருமஞ்சனம்,
திருப்பாவை சாற்றுமுறை, நடைபெறும்.
பிறகு காலையில் 11 மணியளவில் புறப்பட்டு
திருவெள்ளக் குளம்,
திருததேவனார்தொகை,
திருவாலி ஆகிய
திவ்யதேசங்களுக்கு எழுந்தருளி மங்களாசாஸனம் செய்து திருநகரி சேர்வார்.

இரவு திருநகரியில்
ஸ்ரீ வயலாலி மணவாளன் கருடசேவையும்
ஸ்ரீதிருமங்கையாழ்வார் மங்களாசாஸனமும்
நடைபெறும்.

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் வைபவம் —

November 6, 2021

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் தனியன்:

கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகாரம்
யஸ்ய கோபி: ப்ரகாஶாபிர் ஆவித்யம் நிஹதம் தம:

“வ்ரிஸ்சிகே க்ருத்திகா ஜாதம் சதுஷ்கவி ஸிகாமணீம் |
ஷட்ப்ரபந்த க்ருதம் ஸார்ங்கமூர்த்திம் கலி ||”

திருமாலின் வில்லான ஸார்ங்கத்தின் அம்சமாய், சோழ நாட்டில் திருமங்கை என்னும் பகுதியில்,
திருவாலி என்ற (இப்போது, திருநகரி என்று வழங்கப்படுகிறது) திவ்யதேசத்தின் அருகே உள்ள
திருக்குறையலூரில் கள்ளக்குடியில், கலியுகத்தில் 398ஆவதான நள வருடத்தில் பௌர்ணமி திதி அன்று,
வியாழக்கிழமை, கிருத்திகை நட்சத்திரம் ஆகியவை பொருந்திய கார்த்திகை மாதத்தில் அவதரித்தார்.
சோழ அரசனின் சேனைத் தலைவர்களில் ஒருவருக்கு மகனாகப் பிறந்த இவர் “நீலன்” என்று நிறம் கொண்டு பெயரிடப்பட்டார்.

திருநக்ஷத்ரம்: கார்த்திகை, கார்த்திகை
அவதாரஸ்தலம்: திருக்குறையலூர்
ஆசார்யன்: விஷ்வக்சேனர்
ஶிஷ்யர்கள்: ஆழ்வாரின் மைத்துனர் இளையாழ்வார், பரகால ஶிஷ்யர்,
நீர்மேல் நடப்பான், தாளூதுவான், தோலா வழக்கன், நிழலில் மறைவான்,
உயரத் தொங்குவான்
பிரபந்தங்கள்: பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம்
பரமபதம் அடைந்த இடம்: திருக்குறுங்குடி

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தம் பெரிய திருமொழி வ்யாக்யான அவதாரிகையில் ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரைத்
தன் நிர்ஹேதுக க்ருபையால் திருத்திப் பணிகொண்ட எம்பெருமான் ஆழ்வார் மூலம் ஜீவாத்மாக்களைக் கரை ஏற்றுகிறான்
எனும் ஶாஸ்த்ரார்த்தத்தை அழகாகக் காட்டினார்.

ஆழ்வார் தம் ஆத்மாவை வெயிலில் போட்டு, உடம்பை நிழலில் வைத்தார்.
ஆத்மாவை வெயிலில் வாட விடுவதாவது பகவத் விஷயத்தில் ஈடுபாடின்றி இருத்தல்,
ஶரீரத்தை நல்ல குளிர் நிழலில் வைப்பதாவது லௌகிக விஷயங்களில் ஈடுபட்டு அநுபவித்து அவற்றையே லக்ஷ்யமாகக் கொள்தல்.
”வாசுதேவ தருச் சாயா” என்பதில் சொன்னாப் போலே உண்மையான நிழல் தரும் மரம் வாஸுதேவனே.
கிருஷ்ணனாகிய இம்மரம் உண்மையில் நல்ல நிழல் தந்து ஆத்மாவைக் காக்கும்.
அதி சீதளமும் அத்யுஷ்ணமும் இன்றிப் புலன்களாலும் இந்த்ரிய போகங்களாலும் உண்டாகும் தாபம் தீர்க்கும்.
ஆழ்வார் விஷயாந்தரங்களில் மிக ஆழ்ந்து கிடந்தவர் திவ்ய தேசத்தெம்பெருமான்களின் ஸௌந்தர்யத்தில்
கண்களையும் மனதையும் திருப்பி, அவ்வனுபவம் இன்றேல் க்ஷணமும் தரிக்கவொண்ணாது என்ற நிலை எய்தினார்.
எம்பெருமான் அவர்க்கு இவ்வுலகிலே நித்ய முக்தரின் அனுபவங்களைத் தந்து,
பரம பதத்தில் ஆசையைக் கிளர்த்தி, பரமபதமும் தந்தருளினான்.

ஆழ்வாரின் விஷயத்தில் எம்பெருமான் தன் திறத்தில் முதலில் அத்வேஷத்தைக் கிளப்பி அதாவது
ஈஶ்வரன் மீது சேதனனுக்குள்ள வெறுப்பை மாற்றி அவனுக்கு விஷயங்களில் உள்ள பற்றைத் தன்புறம் திருப்பி,
பின் ஆபிமுக்யம் விளைத்து அதாவது ஈஶ்வரனே முக்கியம் பிற புலன் அனுபவங்கள் யாவும் வீண் என உணர்த்தி
திருமந்திர அர்த்தம் ஆழ்வார் மனதில் இருத்தி ஈஶ்வரனின் ஸ்வரூப ரூப குண விபவங்களில் ருசி ஏற்படுத்தி
இந்த ஞானம் இன்றேல் தன் ஸ்வரூபம் தெரியாது என்பதால் மயர்வற மதிநலம் அருளினான்.
ஆனது பற்றி எம்பெருமான் திறத்தில் தம் நன்றி/க்ருதஞதையை வெளிப்படுத்தவே ஆழ்வார் பிரபந்தங்கள் அமைந்தன.

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஆழ்வாருக்கு எம்பெருமானின் நிர்ஹேதுக கிருபையால் இது விளைந்தது என
ஆழ்வாரே பாடிய பெரிய திருமொழிப் பாசுரம் 4.9.6 “நும்மடியாரோடும் ஒக்க எண்ணியிருந்தீர்” என்பதற்கான
வ்யாக்யானத்தில் அழகாகக் காட்டுகிறார்.

ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி இரண்டாம் பாசுரத்தில் ஸ்ரீ அமுதனார், ஸ்ரீ இராமானுசரைப் பற்றி,
“குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன்”என எம்பெருமானாரின்
அசைக்கமுடியாத கலியன் பக்தியைப் பாடுகிறார்.

————

ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ திருவாலி திருநகரி அருகே ஸ்ரீ திருக்குறையலூரில் சதுர்த்த வர்ணத்தில் கார்முக அம்ஶமாய்
தம் நிறத்துக்கேற்ப நீலன் எனும் பெயருடன் அவதரித்தார் என கருட வாஹன பண்டிதரின் திவ்ய ஸூரி சரிதை கூறுகிறது.
பால்யத்தில் பகவத் விஷயத்தில் ருசியின்றியே வளர்ந்த இவர் போர்க்கலையில் தேர்ச்சியும் பெற்றுத் திகழ்ந்தார்.
இவர்தம் போராற்றலறிந்த சோழ பூபதி இவரைத்தன் சேனாபதிகளில் ஒருவர் ஆக்கிக் கொண்டனன்,

அப்போது ஸ்ரீ திருவாலியில் விளையாட வந்த அப்ஸரஸுகளில் திருமாமகள் (குமுதவல்லி) என்பாளை
அவள் தோழிகள் ஆட்டமுடிவில் மறந்து விட்டுச் செல்ல, அம்மானிட உடல்தாங்கிய அப்ஸரஸை அவ்விடம் வந்த
ஒரு ஸ்ரீவைஷ்ணவ வைத்தியன் பரிவினால் காக்கவும், அவள் அழகுபற்றிக் கேள்வியுற்ற நீலன்
அவளை மனம் புணர விரும்பினாராக,
அவள் ஓர் ஆசார்யனிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் ஆன ஸ்ரீவைஷ்ணவனையே மணப்பேன் என்ன
அவரும் உடனே திருநறையூர் நம்பியிடம் ஓடி இரக்க எம்பெருமான் மிக்க கருணையோடு
ஶங்க சக்கர முத்திரை செய்து திருமந்தரம் ஓதுவித்தான்.

ஸ்ரீ பாத்ம புராணத்தில் இது பற்றி
ஸர்வை: ஶ்வேதம்ருதா தார்யம் ஊர்த்வபுண்ட்ரம் யதாவிதி
ருஜுநி ஸாந்தராளாநி ஹ்யங்கேஷு த்வாதஶஸ்வபி–என்று சொல்லப்படுகிறது.

பன்னிரு ஊர்த்வபுண்ட்ர தாரணத்தோடு வந்த நீலன் குமுதவல்லியை மணம் புரியக் கேட்க,
குமுதவல்லி, தான் எவர் ஒருவர் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஓராண்டு காலம் ததீயாராதனம் செய்கிறார்களோ,
அவரையே மணப்பேன் என்று சொல்ல, ஓராண்டு காலம் அவர் 1008 ஸ்ரீ வைஷ்ணவர்க்குத்
ததீயாரதனம் செய்ய வேணும் என்றனள். இதுவும் நிறைவேறின பின்பே திருமணம் ஆயிற்று.

ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதநம் பரம்
தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் ந்ரூப–என்று பாத்ம புராண வசனமுண்டிறே.
ஓ அரசனே விஷ்ணு ஆராதனத்திற் காட்டிலும் விஷ்ணு பக்த ஆராதனமே மேலானது என்பதை அறிந்து
ஆழ்வார் அதில் ஊன்றித் தம் பொருள் முழுதும் அதிலேயே செலவழிக்கலானார்.

இது கண்ட சிலர் அரசனிடம் பரகாலன் அரசுப் பணம் முழுதும் அடியார்க்கு உணவளிப்பதில் ஒழித்து விடுவதாகப் புகார் சொல்ல,
அரசன் அவரை அழைத்துவர ஆட்களை அனுப்ப, அவர் அவர்களிடம் ஹிதமாகப் பேசவும் அந்த வீரர்களின் தலைவன்
அவரிடம் பணங்கேட்டுப் பேருஞ்சேநையோடு பொருதனன். சினமுற்ற ஆழ்வார் அவர்களைத்தோற்கடித்து அனுப்ப
அரசன் மீண்டும் அனுப்பிய பெரும் சேனையும் தோற்க
அவர் வீரங்கண்டுகந்த அரசன் தானே வந்து ஸமாதானம் ஆகினான் என ஆழ்வார் அவனிடம் செல்ல
அவன் அவரை வளைத்துப் பிடித்து ஒரு கோயிலில் சிறையிட அவர் மூன்றுநாட்கள் உணவின்றி,
ஸ்ரீ திருவேங்கடத்தானையும் ஸ்ரீ பெரிய பெருமாளையும் தொழுது மறுபடி அவர்களை வென்றார்.

ஸ்ரீ தேவப்பெருமாள் இவர் கனவில் வந்து காஞ்சீபுரம் அருகே பெரும் செல்வம் உண்டென்ன,
அவர் அரசனிடம் சொல்ல அவன் ஆட்களோடு அவரைக் காஞ்சீபுரம் அனுப்பினான்.
அங்கு செல்வம் இல்லாதபோது அடியாரை விடாத தேவப்பெருமாள் மீட்டும் அவர் கனவில் வந்து
வேகவதிக்கரையில் தோண்டச் சொல்ல அவர்கள் தோண்டி அவர் தந்த வெறும் மணல் நெல்லாக மாறியது கண்டு
அவ்வீரர்கள் வியந்து அரசனிடம் கூறினர். ஆழ்வார் பெருமை உணர்ந்த அவன் தனது பிழையுணர்ந்து
அவரிடம் க்ஷமாபனம் வேண்டி. தானும் அறம் செய்யத் தொடங்கினான்.
தேவப்பெருமாள் தெரிவித்தபடியே வேகவதிப் படுகையில் ஆழ்வார் பெரும்புதையல் கண்டெடுத்து,
அரசனின் கப்பமும் கட்டித் தம் கைங்கர்யமும் நிறைவேறத் திருக்குறையலூர் திரும்பித் தொடர்ந்தார்.

ததீயாராதனம் தொடர்ந்த ஆழ்வார் மீண்டும் பொருள் செலவாகிவிடவே மேல்செலவுக்குப் பொருள் களவில் சேர்க்க
எண்ணிச் செல்வர்களைக் கொள்ளையடித்தார். இவ்வளவில் இவரைத் திருத்திப்பணிகொள்ள நினைத்த எம்பெருமான்
ஏற்கெனவே சரம புருஷார்த்த நிலை நின்ற இவர் விஷயமாக ஒரு திருவிளையாடல் நிகழ்த்தத் திருவுளம் பற்றினானாக,
திருநகரியில் திருமணம் ஆகிய புதுமண மக்களாக அவனும் பிராட்டியும் வர, நிறையப் பொருளோடு
இவர்கள் வருவதைச் ஶிஷ்யர்கள் மூலமறிந்த நீலன் அவர்களைத் திருமணங்கொல்லையில் வழிப்பறிக்கு ஆளாக்கினார்.
எல்லாப் பொருள்கள் அணிகலன்களையும் எடுத்துக்கொண்ட ஆழ்வாரால் பெருமாளின் திருவடியில் இருந்த மோதிரத்தைக் கழற்ற
அவன் திருவடியைப்பிடித்த அளவில் அவர்க்கு மெய்ஞானம் ஸ்வரூபம் பிறந்ததாக, “நீர் யார்” எனக் கேட்க
அவன் “நீர் நம் கலியனோ” என்றான். கலியன் எனில் பெருவீரன், ஆனால் அவர் வீரம் அவன் முன் தோற்றுக் காதலாகியது.

நகைகளை மூட்டை கட்டியவரால் அவற்றைத் தூக்க முடியவில்லை. அவனிடம் நீ மந்த்ரம் போட்டாயோ என்று வினவ
அவன் ஆம் என்று அவர் காதில் திருமந்தரம் சொல்ல அவரது மீதி பிரகிருதி மாயைகளும் விலக
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவராய், அந்த ஆனந்த ப்ரகர்ஷத்தை
“வாடினேன் வாடி வருந்தினேன்” என்று தொடங்கி அவன்பால் தம் க்ருதஜ்ஞதையை அங்கேயே அப்போதே வெளியிட்டாராயிற்று.

ருசோ யஜுகும்ஷி ஸாமாநி ததைவ அதர்வணாநி ச
ஸர்வம் அஷ்டாக்ஷராந்தஸ்த்தம் யச்சாந்யதபி வாங்மயம்–வ்ருத்த ஹாரீத ஶ்ருத
என்றாப்போலே எல்லாம் அஷ்டாக்ஷர மந்தரப் பொருளே என்ற தத்துவம் உணர்த்தினார்.

ஸர்வவேதாந்த ஸாரார்த்தஸ் ஸம்ஸாரார்ணவ தாரக:
கதிர் அஷ்டாக்ஷரோ ந்ருணாம் அபுநர்பவகாங்க்ஷிணாம்–நாரதீய புராணம்
என்றாப்போலே மோக்ஷம் பெற இச்சித்தானுக்கு வேதாந்த ஸாரம் அதுவே என உறுதிப்படுத்தினார்.

ஓமித்யக்ரே வ்யாஹரேத், நம இதி பச்சாத், நாராயணாயேத்யுபரிஷ்டாத்,
ஓமித்யேகாக்ஷரம், நம இதி த்வே அக்ஷரே, நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி–நாராயண உபநிஷத்
என்றாப்போலே ஓம் என ஓர் எழுத்திலே தொடங்கி நம என்கிற ஈரெழுத்து நடுவாகி
நாராயணாய எனும் பஞ்சாக்ஷரம் ஈறாகி இது அமைந்துள்ளது.என்று ஶாஸ்திரம் இதன் வடிவை வர்ணிக்கிறது.

மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யாநாம் குஹ்யமுத்தமம்
பவித்ரஞ்ச பவித்ராணாம் மூலமந்த்ரஸ் ஸநாதந:–நாரதீய புராணம்

மந்த்ரங்களில் பரம பவித்ரமானது, ரஹஸ்யங்களில் பரம ரஹஸ்யம்,
மிகத் தொன்மையானது மூல மந்த்ரமும் ஆனது அஷ்டாக்ஷரம்.

“பேராளன் பேரோதும் பெரியோர்” என ஆழ்வார் திருநாம மஹிமை சொன்னார்.
“பெற்ற தாயினும் ஆயின செய்யும்” என்றார்.
எம்பெருமான் பிராட்டிமாரோடும் தன் திவ்ய ஸ்வரூபம் காட்டி நிர்ஹேதுக க்ருபையடியாக அவர்க்கு அருள் செய்தான்.

எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையால் திருமந்த்ரோபதேஶம் பெற்று மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்
அவனருளால் திவ்ய மஹிஷிகளோடு கருடாரூடனான அவன் திவ்ய தர்ஶனம் பெற்று ஆனந்தக் களிப்பில்
ஆறு ப்ரபந்தங்களில் நம்மோடு தம் பாவநாப்ரகர்ஷத்தைப்பகிர்ந்துகொண்டார்.
அவை பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திரு எழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் என்பன.
அவ்வாறு திவ்ய பிரபந்தங்களும் நம்மாழ்வாரின் நான்கு வேதங்களுக்கு ஆறங்கமாய் அமைந்தன.
பிராட்டியின் புருஷகாரத்தால் தாம் பெற்ற பேற்றை ஆழ்வார் நாமுமடையத் திருவுளம் பற்றி இத்திவ்ய பிரபந்தங்களை அருளினார்.

ஆசுகவி, விஸ்தாரகவி, மதுரகவி, சித்திரகவி என நால்வகைக் கவிதைகள் யாப்பதில் வல்லவரானதால் ஆழ்வாருக்கு
நாலுகவிப் பெருமாள் வந்தார் என ஶிஷ்யர்கள் முழங்க.
அங்கு வந்த சைவ அடியார் திருஞான சம்பந்தரடியார்கள் ஆக்ஷேபிக்கவும்,
ஆழ்வார் சம்பந்தர் விரும்பியபடியே “ஒரு குறளாய் ஈரடியால்” என்று தொடங்கிப் பாடிய பாசுரங்கள் கேட்டு
சம்பந்தர் உகந்து நீரே நாலு கவிப் பெருமாள் எனப் பாராட்டித் தம் கை வேலையும் அளித்துச் சென்றனர்.
ஆழ்வாரும் எல்லா திவ்ய தேசங்களுக்கும் ஆவலோடு சென்று மீதூராக் காதலோடு எம்பெருமானை மங்களாசாசநம் செய்து வந்தார்.

ஆழ்வார் திருவரங்கம் செல்ல விழைந்தார்.
விமாநம் ப்ரணவாகாரம் வேதஶ்ருங்கம் மஹாத்புதம் ஸ்ரீரங்கஸாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாஶக: – எனும்படியான
திருவரங்கத்தை சேவிக்க ஆழ்வார் திருவுளம் பற்றி ஆங்கே கைங்கர்யமும் செய்ய ஆவலுற்றார்.
ஆச்சர்யகரமான ஸ்ரீரங்க விமானம் ஓங்கார வடிவானது, அதன் முடி வேத ஸ்வரூபம், அங்குள்ள ஸ்ரீரங்கநாதனே ப்ரணவப் பொருள்.
ஆழ்வார் அரங்கன் சன்னிதியைச் சுற்றித் திருமதிள் எடுக்க விரும்ப, ஶிஷ்யர்கள் அதற்காம் பெரும் செலவுக்கு,
நாகப்பட்டினத்து புத்த விஹாரத்துள்ள பொன் விக்ரஹம் சரியாயிருக்கும் என,
அந்த விக்ரஹத்தைக் களவாட அவர் விக்ரஹத்தின் பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்த ஸ்தபதி வேறு தீவில் இருப்பதைக் கேள்விப்பட்டு
உடனே அவர்களோடு அங்கே செல்ல முற்பட்டு, அங்குச் சென்ற அளவில் அவ்விடத்து ஸ்தபதி தன் ஆகாராதிகளை முடித்துவர
அவனிடம் இவர், “நாகைக் கோயிலில் களவு போயிற்றாம்” என்று வருந்துவதுபோல் சொல்ல
அவன் “ஐயோ யார் குறும்போ இது. நான் விமானத்தில் வழியே பூட்டுப் போட்டேனே, இதுபோல்” என்று
திறக்கும் வழியைச் சொல்லிக் காட்ட அதைக் கிரஹித்துக்கொண்ட இவர்
அக்கோயிலை உடைத்து உள்ளே புகும் வழி அறிந்துகொண்டார்.

அங்கே அப்போது ஒரு கப்பல் கிளம்ப, இவர் அந்த மாலுமியிடம் ஒரு கொட்டைப் பாக்கில் பாதியை வெட்டித் தந்து
“இதை வைத்துக்கொள்ளும், பயணம் முடிந்து நான் வாங்கிக்கொள்வேன் அதற்கு ஒரு சீட்டு மட்டும் கொடும்” என்ன அவன்,
“ஆழ்வாரிடம் இக்கப்பலின் அரைப் பாக்குப் பெற்றேன்” என எழுதித் தர, பயணம் தொடங்கியது.
நாகப்பட்டினம் சேர்ந்த அளவில் இவர் அவனிடம் கப்பல் சரக்கில் பாதியைத் தமக்குத் தரக் கேட்க,
அவன் மறுக்க அவ்விடத்து வணிகர்களிடம் இவர் முறிச்சீட்டுக் காட்டவும்
அவர்கள் இவர்க்கு ஸாதகமாகத் தீர்ப்பு சொல்லிப் பொருள் சேர்ந்ததும், மீண்டும் ததீயாராதனம் தொடங்கியது.

பின் ஆழ்வார் ஶிஷ்யர்களோடு அப்புறமதக் கோயிலில் நுழைந்து பளபளக்கும் ஸ்வர்ண விக்ரஹம் கண்டு எடுக்கப்போக,
அது “ஈயத்தால் ஆகாதோ இரும்பினால் ஆகாதோ, பூயத்தால் மிக்கதொரு பூதத்தால் ஆகாதோ,
தேயத்தேய் பித்தளை நற்செம்புகளாலாகாதோ, மாயப்பொன் வேணுமோ மதித்தென்னைப் பண்ணுகைக்கே” என்று வினவ,
ஆழ்வார் தன் மைத்துனனைக் கொண்டு அந்த விக்ரஹத்தை எடுத்தார்.
ஆழ்வார் அவ்விக்ரஹத்தை எடுத்து ஶிஷ்யர்களோடு அருகிலுள்ள சிற்றூரில் அப்போதே உழுது ஈரமாயிருந்த ஒரு நிலத்தில்
பாதுகாப்புக்காகப் புதைத்துச் சென்றனர். பின்னர் அவர் அதைத் தோண்டப் போகவும் உழவர்கள்
எங்கள் நிலம் நீர் யார் இதில் என்று சினக்க, ஆழ்வார் இது நம் நிலம் நாளை நாம் நிரூபகம் காட்டுவோம் என்று போக,
விக்ரஹக் களவறிந்த ஊரார் அறியாமல் அதை உத்தமர் கோயிலில் சென்று சேர்ப்பித்தார்.
அவர்கள் வந்து கேட்க முதலில் ஏதும் அறியேன் என்றவர்
பின் பங்குனியில் மழை நின்றபின் விரலளவும் தருகிறேன் என்று எழுதிக் கொடுத்தார்.
அவர் உடனே அதை உருக்கி விற்றுக் காசாக்கி, பெரிய கோயிலின் பெரு மதிள் கட்டலானார்.
இடையில் தொண்டரடிபொடி ஆழ்வார் திருநந்தவநம் வர, அங்கு சுவரை வளைத்து நந்தவனத்தோடே சேர்த்துக் கட்டினார்.
தொண்டரடிப்பொடிகள்பால் தம் ஆதரத்தால் தம் பூக்குடலைக்கு அருள்மாரி என்று பேரிட்டுக் க்ருதஜ்ஞதானுஸந்தானம் பண்ணினாராயிற்று.

மழைக்காலத்துப்பின் அவர்கள் மீளவும் வந்து விக்ரஹத்தைக் கேட்க, வாக்குவாதம் முற்றி அவர்கள் நீதிபதியிடம் சென்று முறையிட,
நீதிபதியின் முன்னால் விரலளவும் தருகிறேன் என்று எழுதிக் கொடுத்துள்ளதால் தன் விரலைத் தருகிறேன் என்கிறார்.
நீதிபதியும் அதை ஏற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்குச் சொல்ல, அவர்கள் ஆழ்வாரின் ஸாமர்த்தியத்தைப் புரிந்து கொண்டனர்.
பின்னர், ஆழ்வார் அந்தக் கட்டிடத் தொழிலாளிகளை அழைத்து, ஒரு தீவில் தன் சொத்து உள்ளதாகவும்,
அங்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறும் கூறுகிறார். அவர்கள் படகில் செல்லும் பொழுது
படகோட்டியிடம் சொல்லி அவரகளை மூழ்கடித்துவிடுகிறார். இறந்தவர்களின் பேரன்கள் ஆழ்வார்மீது சந்தேகப்பட்டு
அவர்கள் தம் மூத்தோர் என்னாயினர் என்றும் கேட்க இவர் கவலையுற்றார். பெரிய பெருமாளின் ஆணைப்படி,
அவர்களிடம், காவிரியில் நீராடி ஊர்த்வ புண்ட்ர தாரணம் செய்து பெரிய பெருமாளை ஶரண் புகுருங்கோள் என்ன
அவர்களும் அவ்வாறே செய்து எம்பெருமான் திருமுன்பே வர, பெரிய பெருமாள் அவர்களை நோக்கி
“உங்கள் பாட்டனார்களின் பெயர்களைக் கூப்பிட்டு அழையும்” என, அவரகளும் அவ்வாறு செய்ய,
இறந்த ஒவ்வொருவரும் பெருமாளின் பின்புறம் இருந்து வெளி வந்து
“நாங்கள் ஆழ்வார் ஸம்பந்தத்தால் மோக்ஷம் பெற்றோம், நீங்களும் அவ்வாறே செய்யுங்கோள்” என,
அவர்களும் அவரை ஆசார்யனாய் ஏற்று ஊர் திரும்பினர்.

ஸ்ரீ பெரியபெருமாள் இவரை, உமக்கு ஏதும் ஆசையுண்டோ என வினவ,
ஆம் உம் தஶாவதாரம் சேவிக்க வேணும் என்றாராய்
அவர் “ஆகில் நீரே ஒரு தஶாவதார ஸந்நிதி கட்டுவியும்” என்ன அவ்வாறே கட்டினார்.

ஸ்ரீ பெரியபெருமாள் ஆழ்வாரின் மைத்துனரை அழைத்துத் திருக்குறையலூர்க் கோயிலில்
ஆழ்வார் அர்ச்சையை எழுந்தருளப் பண்ணுவித்தார், ஆழ்வாரும் எப்போதும்போல்
சேதனர்களை உஜ்ஜீவிப்பித்துக் கொண்டு எம்பெருமானே உபாய உபேயம் என உபதேசித்து எழுந்தருளியிருந்தார்.

கலி காலத்தின் கொடுமையை, அடியார்க்கு அடிமையாய் இருந்து ஒழித்தவர் என்பது பற்றி
திருமங்கை ஆழ்வார் “கலிகன்றி” என்று பெயர் பெற்றார். 105 இவ்வுலகில் ஆண்டுகள் வாழ்ந்த இவர்,

இறுதியாகத் திருக்குறுங்குடி சென்று, அங்கு எழுந்தருளியுள்ள “நம்பி” எம்பெருமானை, சில காலம் தொழுது
குமுதவல்லியாருடன் நலம் அந்தம் இல்லதோர் திருநாட்டை (வாழ்சிக்கு முடிவே இல்லாத பரமபதம்) எய்தினார்.

—————–

இசையால் தமிழ் வளர்த்தவர்:

திருமங்கை ஆழ்வார், தமது திவ்யப்பிரபந்தங்களை அருளிச்செய்த பிறகு திருவரங்கத்திற்குச் சென்று,
தமது நிறைவுப் பிரபந்தமான “திருநெடுந்தாண்டகத்தை” தேவகானத்தில் இசைத்துப்பாடினார்.
அதனைக் கேட்டு, திருவுள்ளம் உகந்த (மகிழ்ந்த) அரங்கன் இவரைப் பார்த்து, “உமக்கு வேண்டிய வரத்தைக் கேளும்” என்று கூற,
உடனே இவ்வாழ்வார், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று தொடங்கி நடக்கும் விழாவில்,
நம்மாழ்வாரின் திராவிட வேதத்தை (திருவாய்மொழி) திருச்செவி சாத்தவேணும் (கேட்கவேண்டும்) என்று வேண்டிக் கேட்டார்
பெருமானும் அப்படியே ஆகட்டும் என்று உறுதி அளித்தான்.
அதன்படி, திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வாரை அவரது அவதாரத் தலமாகிய “ஆழ்வார் திருநகரி”யிலிருந்து
திருவரங்கத்திற்கு எழுந்தருளச்செய்து, திருவரங்கன் முன்னிலையில் தாமே நம்மாழ்வாரின்
திருவாய்மொழியை 10 நாட்கள் தேவகானத்தில் பண் இசையோடு பாடி, அத்யயன உத்சவத்தைத் தமிழ்த் திருவிழாவாக அமைத்தார்.

அத்யயன விழா, பின்னர் ஆசார்யர்கள் காலத்தில் 21 நாள் விழாவாக அமைந்து, 4000 பாசுரங்களையும் இயல்,
இசை நாடகமாக, முத்தமிழ் விழாவாக அனைத்து திவ்ய தேசங்களிலும் நடைபெறத்தொடங்கி,
இன்றும் கடைபிடிக்கப்படுகின்றது (வழக்கத்தில் உள்ளது).

இவ்வாறு தமிழ் இலக்கியத்தில் புதுமை படைத்தும், இசை இன்பத்தோடும், ஒலி மாலை பாடியும்,
திவ்யதேசத்து எம்பெருமானோடு ஊடியும் (எம்பெருமானைப் பிரிந்தால் ஏற்படும் துக்கம்),
கூடியும் (எம்பெருமானுடன் சேர்ந்திருந்தால் ஏற்படும் இன்பம்),
திவ்யதேச வர்ணனையில் இயற்கைக் காட்சிகளைப் படம் பித்துக் காட்டியும்,
இசையால் தமிழ் வளர்த்த திருமங்கை ஆழ்வார் அருளியுள்ள திவ்யப்ப்ரபந்தங்களை அனைவரும் கற்கும் ஆவல் கொண்டு,
கற்றது உள்ளத்தில் நன்கு பதிந்து, அதன் படி வாழ்கையை நெறிப்ப்படுத்திக்கொண்டு,
எம்பெருமானாரின் இன்னருளால், ஆழ்வார்களின் அனுக்ரஹத்தைப் பெற்று,
எம்பெருமானைப் பற்றிய “துய்யமதி” பெறுவோம்.

————————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரின் வடிவழகை எப்படியெல்லாம் அனுபவிக்கிறார் ஸ்ரீ மாமுனிகள்!

“அணைத்த வேலும், தொழுத கையும்,
அழுந்திய திருநாமமும், ஓம் என்றவாயும்,
உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,
பரந்த விழியும், பதிந்த நெற்றியும்,
நெறித்த புருவமும், சுருண்ட குழலும்,
வடிந்த காதும், அசைந்த காதுகாப்பும்,
தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும்,
அகன்ற மார்பும், திரண்டதோளும்,
நெளித்த முதுகும், குவிந்த இடையும்,
அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும்,
தூக்கிய கருங்கோவையும், தொங்கலும் தனிமாலையும்,
தளிருமிளிருமாய் நிற்கிற நிலையம்,
சாற்றிய திருத்தண்டையும், சதிரான வீரக்கழலும்,
தஞ்சமான தாளிணையும், குந்தியிட்ட கணைக்காலும்,
குளிரவைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும்
வயலாலி மணவாளனும், வாடினேன் வாடி (என்று)
வாழ்வித்தருளிய நீலக்கலிகன்றி மருவலர்தம்
உடல்துணிய வாள்வீசும் பரகாலன்
மன்கைமன்னனான வடிவே!

உறைகழித்த வாளையொத்த விழிமடந்தை மாதர்மேல்
உருகலைத்த மனமொழித்து இவ்வுலகளந்த நம்பிமேல்
குறைவைத்து மடலெ டுத்த குறையலாளி திருமணங்
கொல்லைதன்னில் வழிபறித்த குற்றமற்ற செங்கையான்
மறையுரைத்த மந்திரத்தை மாலுரைக்க, அவன்முனே
மடியொடுக்கி மனமடக்கி வாய்புதைத்து, ஒன்றலார்
கரைகுளித்த வேலணைந்து நின்றவிந்தநிலைமை, என்
கண்ணைவிட்டகன்றிடாது கலியனாணை ஆணையே.

காதும்சொரிமுத்தும் கையும் கதிர்வேலும்
தாதுபுனைதாளிணையும் தனிச்சிலம்பும்
நீதிபுனைதென்னாலி நாடன்திருவழகைப்போல
என்னாணை ஒப்பாரில்லையே.

வேலணைத்த மார்பும், விளங்கு திருவெட்டெழுத்தை
மாலுரைக்கத்தாழ்ந்த வலச்செவியும்
தாளிணைத் தந்தையும், தார்க்கலியன் நன்முகமும்,
கண்டு களிக்குமென்கண்.

இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர்
இதுவோ தாள்வெட்டும் கலியன்வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்தவிடம்.

இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர் இதுவோதான்
வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்தவிடம்.

[வெண்பா இலக்கணம் அமைந்த பாட பேதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது]
ஈதோ திருவரசு! ஈதோ மணங்கொல்லை
ஈதோ எழிலாலி என்னுமூர் — ஈதோதான்
வெட்டுங் கலியன் வெருட்டி நெடுமாலின்
எட்டெழுத்தும் பெற்ற இடம்.

ஆழ்வார்க்கு பரகாலன், கலியன், நீலன், கலி த்வம்ஶன், கவிலோக திவாகரன், சதுஷ்கவி ஶிகாமணி ஷட் பிரபந்தக் கவி,
கலிவைரி, நாலுகவிப் பெருமாள், திருநாவீறுடைய பெருமான், மங்கையர்கோன், அருள்மாரி, மங்கைவேந்தன்,
ஆலிநாடன், அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள், கொற்றவேந்தன்,
கொற்றவேல் மங்கை வேந்தன் என்னும் பல பெயர்களால் ப்ரஶித்தி உண்டு.

——————–

திருமங்கை ஆழ்வார் வாழி திருநாமம்:

கலந்திருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே
காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே
நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தோன் வாழியே
நாலைந்துமாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே
இலங்கெழுகூற்றிருக்கையிருமடலீந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழீந்தான் வாழியே
வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே

அய்யன் அருள்மாரி கலை ஆய்ந்துரைத்தோன் வாழியே
அந்துகிலும் சீராவும் அணியுமரை வாழியே
மையிலகு வேலணைத்த வண்மை மிகு வாழியே
மாறாமல் அஞ்சலிசெய் மலர்க்கரங்கள் வாழியே
செய்ய கலனுடன் அலங்கல் சேர்மார்பும் வாழியே
திண்புயமும் பணியமர்ந்த திருக்கழுத்தும் வாழியே
மையல் செய்யும் முகமுறுவல் மலர்க்கண்கள் வாழியே
மன்னுமுடித் தொப்பாரம் வலயமுடன் வாழியே

மங்கள ச்லோகம் :

ஸ்ரீமதாலி ஸ்ரீநகரிநாதாய கலிவைரிணே |
சதுஷ்கவிப்ரதானாய பரகாலாய மங்களம் ||

—————————————————-———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பரகாலர் அந்தாதி –ஸ்ரீமான் கண்ணபிரான் முதலியார் —

November 6, 2021

சுவை யார்ந்த சொல் லுந்து கடீர் பொருளும் தொடை நடையும்
சவையார் மகிழ அமைத்த தோர் அந்தாதி சதுர்க் கவி மன்
செவையார் பரகால வித்தகற்கு ஓத என் சிந்தை நிற்பாய்
குவையார்ந்த கீர்த்தி ராமானுஜர் இது என் கோரிக்கையே –1-

ஆசு மதுர சித்ர விஸ்தார
செவை -செவ்வாய் -செம்மை –
குவை -கூட்டம்

வான் பிடிக்கும் பொருள் வையம் பிடித்து உய்ய வாச மிகும்
தேன் பிடிக்கும் பொழில் அம் குருகூர் என்னும் தெய்வப்பதி
தான் பிடிக்கும் சடகோபர் சரோருகத்தாள் பரவி
நான் பிடிக்கும் பரகாலர் அந்தாதியை நாட்டுவனே –2-

வான் -ஆகுபெயர் -நித்ய ஸூ ரிகள்
தேன் -வண்டு

வேங்கடம் கொண்டவரே அவர் உள்ளத்துக்கு விளங்கி யன்னோர்
தாம் கடங்கட்கு நலந்தேட நன்று அருள் தாயகனாம்
வேங்கடவா பரகாலன் அந்தாதி விளம்ப என் தன்
தீங்கட நா விருந்து ஆதரிப்பாய் சுவை தேங்கிடவே –3-

வேங்கடம் கொண்டவர் -வெவ்விய கடமாகிய தேகத்தைக் கொண்டவர்கள்
தாயகன் –கடவுள் -சர்வமும் தந்தவன் –
தீங்கு அட -தீங்குகள் நீங்க

நம் பொற் குல ஆரியர் கோன் எதிராசர் நயந்து அளித்த
அம் பொற் குமாரர் எம்மான் பெமான் சந்ததியாய்ப் பாடி வாழ்
எம் பொற் குல ஆரியர் வேங்கடாச்சாரியர் இன்னிசையார்
தம் பொற் கமல மலர்த்தாள் எனது தலைக் கொள்வேனே –4-

துப்பு ஆர -தெளிவு பெற -அறிவு விளங்க

ஒப்பார் இவர்க்கு இல்லை என்று ஓத ஓத உவர்க்கடல் சூழ்
இப்பாரில் எய்தி நம் மால் சமயத்துள்ள ஏற்றம் முற்றும்
துப்பார ஓதித் துணை புரிந்து என்னைத் துலங்க வைத்த
அப்பாரியர் தம் அரவிந்தத் தாள் எம் அக விளக்கே –5–

—————–

திருமங்கை நாதன் திருப்புகழ் நாளும் சிந்தித்து இருந்து
தரு மங்கை யாள்வீர் எனும் போதனை தனைச் சாற்று நல்ல
கரு மங்கை ஏந்து மிக்கோர் இனம் நம்மைக் கடைத்தேற்ற வந்த
திருமங்கை மன் பரகாலன் திருப்பதம் சேவிப்பமே –1-

திருமங்கை நாதன் -ஸ்ரீ யபதி -பகவான்
தருமம் கை ஆள்வீர் -ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி வாழும் சேதனரே
நல்ல கருமம் -ஸத் கார்யம்

சேவேறும் ஈசன் திருக்கைத் தலத்தினைச் சேர்ந்த அந்தப்
பூ வேறு மண்ண றலைத் துயர் போக்கிய புண்ணியன் தாள்
நா வேறு செஞ்சொல் பனுவல் தந்து ஏத்து நல் ஆடல் எனும்
மா வேறு நம் கலிகன்றிப் பிரான் காண் நமக்கு அரணே –2-

சே -ரிஷபம்
ஏறு -வாகனமாக ஊர்ந்து செல்லும்
அந்தப் பூ ஏறும் அண்ணல் -உந்தித் தாமரையின் நின்றும் போந்த நான்முகன்

நல் திருமங்கை மன் ஆலிக் குறையலூர் நல் பதியில்
பற்று கலி ஒரு முந்நூற்று எட்டில் பெரும் பாக்யம் சேர்
கற்ற நள வாண்டு கார்த்திகை மா மதிக் கார்த்திகையில்
உற்ற நல் சார்ங்க அம்சத்துக் குருவில் உலகு உய்யவே –3-

கற்ற -பழகிய -தெரிந்த
குருவின் -வியாழக் கிழமையில்

உலகில் பொருள் சேர் இறைவன் புகழே யுறு துணை மற்று
இலகும் துணை வேறு இல்லை இஃது உணராது இகல் புரியும்
கலகத்து இறங்கல் இழிவு என்றனன் பரகாலன் முந்தை
அலகின் மறையின் அறுதியைக் கண்டு உளத்து அன்பு கொண்டே –4-

இகல் -போர் வாதம்
அலகு இல் -கணக்கில்லாத பல
அறுதி -முடிவு

அன்பின் பரிசு அறிவிப்பான் புவிக்கண் அவதரித்த
இன்புருவாய குருகூர் எதீசர் இசை மறையாம்
என்பும் உருகும் அவ் வின் தமிழ்க்கு ஆறு அங்கமேய அருள்
அன்பால் எழிலாலி அண்ணல் அடியேனை ஆதரியே –5–

பரிசு -தன்மை
எதி ஈசர் -உலகப் பற்று முற்றும் துறந்த தலைவர்
ஏய -பொருந்த

ஆதரம் கூற அவரைக் கணமேனும் அமர்ந்து நின்னை
மாதரங்கள் சூழ் தராதலத்து எண்ணிலன் மாசுடையேன்
மாதர் அம் கண் வலைப்பட்டு உழல்வேன் எனை மன்னித்து அருள்
சீதரருக்கு ஏற்ற திருவுடையாய் மங்கைத் தேசிகனே –6-

மா தரங்கம் -பெரிய கடல்

தேவர்கள் போற்றும் திரு அரங்கேசர் திருத்தளிக்கு இங்கு
ஆவன வெல்லாம் அமைத்து இசை வாய்ந்த நின்னாள் வினை தான்
ஏவருக்கு உண்டென் இழுக்கு ஒழித்து ஆள் மங்கை ஏத்த வந்த
வேதனே நினையே நம்பினேன் அருள் செய் வள்ளலே–7-

தளி-கோயில்
இசை -கீர்த்தி
வாய்ந்த -கொண்ட
ஆள் வினை -முயற்சி
ஏவருக்கு -பிறர் எவருக்கு

வள்ளற்றமிழும் வளம் திகழ் பண்ணும் வளர் மறையும்
மள்ளற் புவியும் மகிழ் வான் தலமும் மணம் பெற்றன
விள்ளற்க்கு அரிய பெரும் புகழான் மங்கை வேந்து அருளும்
உள்ளற்கு இனிய மொழி ஆயிரம் இங்கு உதித்த பின்பே –8-

வள்ளல் -வளமை
மள்ளல்-வளமை -செழுமை
வான் தலம் -பரமபதம்

பின்னை மணாளனை வாள் வலி காட்டிப் பிறங்கு நலம்
தன்னை அடைந்த தயா நிதியே இத் தரா தலத்தில்
உன்னை நினைக்கும் உபாயம் உறா வகை ஒங்க நின்றே
என்னை வருத்தும் கொடும் பிணியைச் சீறித் தீர்த்து அருளே –9-

பிறங்கு -விளங்கும்
ஈர்த்து அருள் -ஒழித்து அருள்

ஈர் ஒளியே முன் இருந்தன மூன்றாய் இலகினவால்
வேர் ஒளிருஞ் சனனத் தரு வீழ்த்தி விளங்கின சீர்
கார் ஒளி செய் பொழில் மங்கை வரோதயன் கண்டு அளித்த
பேர் ஒளியாய பெரிய திருமொழி பேறு உற்றதே –10-

ஈர் ஒளி -இரு சுடர் -ஸூர்ய சந்த்ரர்கள்
வேர் ஒளிரும் -வேர் ஊன்றிய
சனனம் தரு -பிறவியாகிய மரம்

பேயிருக்கும் பெரு வெள்ளம் விண் மீது பெருகிய
போதாய் இருக்கும் விதம் ஆதரித்தானை விட்டு அந்நியர் பால்
போய் இருப்பீர் மங்கை நாதன் புகன்றதைப் போற்ற கில்லீர்
ஆய் இருக்க அங்கு ஆன் மணை வெந்நீராட்டுதல் தக்கதன்றே –11-

பே -நுரை
ஆய் -தாய்

தத்துவச் செம் பொருளாயும் தருமம் தனைக் கை யுற்றீர்
ஒத்த மெய் ஞானம் யுடையீருடனே யுலகுரைக்கும்
வித்தகன் ஆலிப்பதியான் குறையலூர் மேவிடுவீர்
சித்தம் களிக்கச் சிறந்திடுவீர் ஒரு தீது இன்றியே –12-

தீ வினையேனைத் திருத்தித் திருக்கறச் சிந்தை வந்து
மே வினையாயின் மிளிர்ந்திடுவேன் மெச்சும் வித்தகன் சேர்
காவினை ஏந்தும் திருவாலி உற்ற என் காவலவா
நீ விசை மா ஊர்ந்து வாராய் மனத்துயர் நீங்கிடவே –13–

திருக்கு குற்றம்

நீர் மேல் நடப்பான் நிழலில் ஒதுங்குவான் நேர்ந்தவர் பால்
தார் மேவு நல்லதோரா வழக்கன்று இருத்தாளூதுவான்
ஊர் மேவு சாயை பிடிப்பான் உயர நின்றே தொங்குவான்
ஏர் மேவிய இந்த நால்வரைத் தோள் துணை ஏற்றனையே –14-

தோள் துணை -பக்க சகாயம்

ஏற்றமுறும் திரு நாதன் திருவடி எண்ணி வெறும்
மாற்ற முறும்பாகிய மதத் தும்பியின் மத்தகத்தை
வீற்றமுறப் பிளக்கும் சிங்கமாகும் உன் வீரம் தன்னில்
தேற்ற முற அருள் மாரியாம் தெய்வ செகாதிபனே –15-

வெறும் மாற்றம் -பயன் இல்லாத சொல்
தும்பி -ஆனை
வீற்றம் -விளக்கம்

செப்பும் குமுத வல்லி நங்கை மேவும் செழும் கரும்பே
தப்பும் வழி இன்றி வெந்துயர் வாரியில் தத்தளித்து இங்கு
அப்பும் விழிகள் பேர் ஆறாகப் பெருக அழுது அழுது
துப்பும் இழந்து அலைகின்றேன் துணை புரி தூ மணியே –16-

புரிகின்ற பால் வாய்ப் பிறைச் சேய் மருங்கில் பொருந்த வந்தி
வருகின்ற மேல் திசை மாதழும் வேளை நம் மங்கையர் கோன்
அரி யொன்று தொங்கற்கு அவா வுறுவார்கட்க்கு அமைந்த வெல்லாம்
தெரிப்பா னிதோர் பனி வாடை புகுந்து சிவண்கின்றதே –17-

பிறை சேய் -இளம் சந்திரன்
தெரிப்பான் -விளக்க
சிவண்கின்றது -சமீபிக்கின்றது

சிவணிய தீ வினை தீட்டிய நாளிவை சேர்ந்தெமை இப்
புவனியில் சன்மப் புழுதியினால் இட்டுப் போக்கிடுமோ
பவனியில் காழிப் பதியானை வென்ற நின் பைஞ் சொற்களாம்
அவனில் பெரிய திருமொழி சேர்ந்த பேர் அன்பரையே –18-

சிவணிய -அடைந்த நெருங்கிய
தீட்டிய -எழுதிய -தலைவிதி
சன்ம புழுதி -பிறவியாகிய வயல் நிலம்
காழி -சீர்காழி
பதியான் -சம்பந்தர்

அனலைப் பிளந்தோர் மதிக் கொழுந்தாக்கிய தன்றி அன்றில்
பனையைப் பிளவார் துனியைப் பிளக்கும் பைந்தார் பயவார்
இனலைத் தரு வெம் பவக் கிழியைப் பிளந்து இன்பு அளிக்கப்
புனலை யுடைய குறையலூர் போந்து அருள் புண்ணியரே –19-

அனல் -தீ –
மதி கொழுந்து -இளம் சந்திரன்
அன்றில் பனை -அன்றில் பட்சி வாழும் பனைமரம்
துனி -மன வேதனை
பயவார் -தர மாட்டார்
இன்னல் –துன்பம்
பவம் கிழி -பிறவியாகிய கட்டு

புலஞ்சேர் கழி முகப் பொன் மங்கையாளன் புகன்ற வின்ப
நலஞ்சேர் திருமொழியாய் திருமாலை நமது கரத்
தலஞ்சேர் கனி யிற்ற றரநா மவன்றா டலை வைத்திலம்
வலஞ்சேர்ந்து இனிது வணங்கில நன்றி மறந்தனமே –20-

புலம் -வயல்
கழி முகம் -நீர்க் கால்வாயை யுடைய
கரம் தலம் சேர் கனி இல் -உள்ளங்கை நெல்லிக் கனியைப் போல்

மறந்தும் புறம் பணியாத திரு மங்கை மன் குலத்தில்
பிறந்தும் வயிற்றுப் பிணிக்கே திரிந்து பிறருக்கு அடிமைத்
திறந் தும்பியில் விழைகின்றோம் எவ்வாறு இனிச் சீர் பயின்று
சிறந்தும் புகழில் இருந்தும் விளங்குவஞ் செப்புமினே –21-

தும்பியில்- வண்டைப் போல்
விழைதல் -விரும்புதல்

செப்பம் உணராத தீயர் பொருளைத் திரை கடல் நீர்
உப்பு என்று மா முகில் உண்டு நன்னீர் செய்து உயிர்களுக்கு இங்கு
எப்படி தந்து பயன் பெறும் அப்படியே அடைந்து
நற் படி நல்கிப் பயன் அளித்தான் மங்கை நாயகனே –22-

நாயகனாய் நின்று நந்தகோபன் தனகர் புரந்த
தாயகன் பொன்னடி யின்னே தழிஇச் சுகஞ்சாரும் என்றான்
தீ யக வேள்வி தினமும் வளர்க்கும் திருவாலி நாட்
டேயவன் தூயவன் வாள் கலிகன்றி எமது இறையே –23-

இன்னே -இப்பொழுதே
தீ அக வேள்வி -அக்னியைக் கொண்ட யாகம்
ஏயவன் -வந்தவர்

இறையின் நிலையும் உயிரின் நிலையும் இயறடையாம்
குறையின் நிலையும் நெறியின் நிலையும் குறி பயனாம்
நிறையின் நிலையும் பரகாலர் சொன்ன நெறியின் படி
மறையின் நிலை பொருள் ஏரி நமது மயல் அறுமே –24–

இயல் தடை -பொருந்திய மயக்கம் -அசித்து

மயிலின் குண முணர் காலம் பெறாத இம்மான் விழியாள்
செயல் பிறிது ஒன்றும் புரிகிலாள் ஆலித் திரு நகரான்
பெயரே இராப்பகல் பேசுகின்றாள் என் சொல் பேண கில்லாள்
நயனோ விது மங்கை வேந்தற்கு அனை நிகர் நங்கையரே –25-

மயல் -காம இச்சை
நயனோ -நியாயமோ

நறை சேர் பசும் துளபத் திரு மார்பர் நளின வடி
நிறை சேர் மனத்தில் இருத்திய மங்கை மன் நீள் அலங்கல்
பிறை சேர் நுதற்கு இன்று நல்கிலர் நைந்து உளம் பித்தாயினள்
கறை சேர் ஒளிர் வாள் பரகாலர்க்கு ஈது கழறுமினே –26-

நறை -தேன்
நளினம் -தாமரை
நிறை -கலங்கா நிலை
அலங்கல் -மாலை
கறை -இரத்தக் கறை

கரம் சிரம் சேர்த்துக் கடும் பூசலிட்டுக் கடல் உலகைத்
திரம் பெறு சொல்லால் உய்வித்ததும் பொய் என்று செப்புதுமோ
வரம் பெறு நல் குறையல் பதி போய் வசையாடுதுமோ
தரம் பெறாப் பைதலை நேரற வேட்டேற்றுத் தஞ்சனையே –27-

பைதலை -இளம் பெண்ணை
ஏடு ஏற்றல் -மடலூரச் செய்தல்
தஞ்சன் -சகாயன்

தகு மறை ஆயிரத்திற்கும் அலங்காரம் தண் தமிழுக்கு
நிகரறு பாயிர நூற்கெலாம் தாய் நிகழ் நாற் கவிக்குத்
திகழ் படிச் சந்தந் திசைக்கு யரும் தீபம் திரு மங்கை மன்
மகிழுறும் வண்ணம் திருவாய் மலர்ந்து அருள் வான் கவியே –28-

வாசக் குழலாள் குமுத வல்லிப் பெயர் மாதர் அதி
நேசத்துடன் நிழல் போல் வாழ்வது கண்டு நிற்கும் கொலோ
பாசத்தொடு மீளும் கொலோ பரகாலன் பற்றி விடும்
தேசுற்று ஒளிர் கொக்கின் பின் சென்ற நெஞ்சந் திடத்துடனே –29-

கொக்கு -குதிரை

திரு மடப்பள்ளி திரு நட மாளிகை திண் சிகரம்
பொருவறும் ஆலி நாடன் திரு மண்டபம் பொன் மதிள்கள்
தரு நிகரஞ்சு களஞ்சியம் கொட்டாரம் சார் பணிகள்
பெருமித மங்கை மன் செய்தான் அரங்கற்குப் பெட்புடனே -30-

பெட்பு–அன்பு

பெட்பின் இரு பூதலத்தில் பிறியாது இருந்து எனது
தெட் பமுறத் தொல் வினை வேர் அறுத்தாதி தே வினையே
நட்பில் பணிய வைத்தான் பரகாலன மன்றமர்கள்
கொட் பென்றனை யென் குயிற்ற முடியும் குவலயத்தே –31-

கொட்பு–சூழ்ச்சி
குயிற்றல் -செய்தல்

குறும்பு ஒரு மூன்றும் கெடுத்தனை மெய்த் தொண்டர் கூட்டத்திலே
நறும் புகழ் எய்த இணங்க வைத்தான் ஆலி நன்னகரான்
மறம் திகழ் வாள் கலிகன்றி அருள் மாறி மங்கையர் கோன்
அறம் குலவும் கழல் போது இரண்டும் என்னகத்தனவே -32-

அகத்தை வருத்தும் புற விருள் மாற்றி யருளின யல்ல
சுகத்தை அளித்த பிரான் மங்கை வேந்தன் துணைப் பதங்கள்
இகத்தும் பரத்தும் இத யாலயத்தில் இருத்தி ஐவர்
புகுத்தும் கொடும் செயலில் புகுதாமல் பொருந்துவனே -33-

பொற் பார் கதியடை வான் கானொடு கற் புணரியுமே
நற் பார் மதிக்கக் கொதிக்கத் தவம் செயு நாட்ட மற்றேன்
அற் பால் உலகை யாதரிப்பான் வந்த வாத்தன் மங்கை
சொற் பாவலர் பெருமான் எனக்கும் துணை யாயினனே –34–

ஆத்தன் -துணைவன் பர உபகாரி

நுனியார் இடும்பைகள் முந்தினும் இன்பம் துதைந்திடினும்
கனியார் உளம் கடல் மல்லை நின்றானைக் கழல் வணங்கும்
இனியானை நல் தமிழ் மாலை செய் நீலனை எண்ணலுற்றார்
வினையாயின அனைத்தும் கெடும் ஒண்மை விளையுறுமே –35–

துனி -வருத்தம்
துதைதல் -நெருங்கல்
கனியார் -மனத்தளர்வு அல்லது உற்சாகம் அடையார்
ஒண்மை -நேர்மை

விளைத்து எழும் கீர்த்தி விளங்க வியலிசை மேவ வின்ப
மளைந்த சதுர்க்கவி தந்த பிரான் அருள் மாரி என்னை
வளைந்த வினைத்தொகை யாவும் இனி வருத்தாத வண்ணம்
களைந்து அருள் செய்தான் அவன் கழல் நாளும் கழறுவேனே –36–

அளைந்த -சேர்ந்த கலந்த

கதிக்கு அந்த மார்க்கமோ இம்மார்க்கமோ என்று காசினியில்
விதிக்கும்ப நூல் கற்று உழன்றிடுவீர் மங்கை வேந்தன் இன்ப
முதிக்கும் படி யுரை நன் மொழி தேர்ந்து உம்பரும் பணிந்து
துதிக்கும் பதம் பெற்று நீங்கா மகிழ்க் கட றேயுமினே –37-

கதி -பரகதி -முக்தி
விதிக்கும் -உண்டாக்கிய
தோய்தல் -மூழ்குதல்

தோகையர் அன்னம் கிளி வண்டு எனக்குத் தூது இருந்தும்
வாகையுறோம் என்று என் நெஞ்சம் தனை நம்பி மங்கையர் கோன்
ஆகத்து அணி மாலைக்காக விடாதவனார் எழிலில்
சோகித்து எனையும் தனையும் மறந்து துயக்குற்றதே –38-

வாகை -வெற்றி
ஆக்கம் -மார்பு
விட அஃது -விட ஃது-என நின்றது –தூது விட அந்த நெஞ்சம்
துயக்கு -மயக்கு

துயக்கமில் ஞானத்தவரையும் நன்கு துயக்க வல்ல
மயக்குடை மாயன் மலரடி வாழ்த்தி மயல் அறுத்த
வியக்குறு நம் பரகாலன் விரை கமழ் வீரக்கழல்
நயக்குறும் அன்பருக்கு இலை பிறவித்துயர் நானிலத்தே –39–

வியக்குறும் -மெச்சும்
விரை கமழ் -வாசனை வீசுகின்ற
நயக்குறும் -விரும்பும்

நால் வகை வேத நவில் ஐந்து வேள்வி நயந்து செயும்
மேல் வகை வானவரின் மிக்க வேதியர் மேவி யுறை
சேல் வயலாலித் திரு நகர்ச் செல்வன் திருப் பதங்கள்
போல் வரு நந்தம் பிறவிப் பிணிக்குப் புகல் இல்லையே – 40-

புயல்காள் உரையீர் புனல் ஆலி நாடன் புனிதமுறும்
வியன் மேனி ஒத்திடும் யோகங்கள் நீங்கள் விழைந்து அடைந்த
செயல் தான் கைம்மாறுகவாது செழும் பார் திருத்தவன் போல்
இயன் மாரி பெய்து உலகத்தை வாழ்விக்க இசைந்ததுமே –41-

இசையார் சகத்திர மா முடி யங்கை இனிது அலர்த்தி
மிசையா யிரஞ்சிர நாகம் கவிப்ப விசும்பவிர் பங்
கசமாமென வாயிரம் கண் வளர அரங்கத்து எம்பிராற்கு
இசைவான் பணிகள் இழைத்தனன் மங்கைக்கு இறை இனிதே –42-

சகத்திரம் –ஆயிரம்
விசும்பு அவிழ் -ஆகாயத்தில் பூத்த

இந்திரற்கும் த்ரி யம்பகரற்கும் கஞ்ச வேந்தலுக்கும்
முந்திய வாழ்வில் இருந்து இன்ப வாரிதி மூழ்குவரால்
வெந்திறல் வாள் கலிகன்றி விருப்பின் விளம்பிய நற்
செந்தமிழ் வேதம் ஓர் ஆயிரமும் கற்ற சேதனரே –43–

திரியம்பகன் -சிவன்
கஞ்ச எந்தல்–பிரமன்
வாரிதி -கடல்

சேடேறு செண்பகம் செய்ய செருந்தி செழும் கமுகம்
ஏடேறு தாமரை நன் மணம் வீசும் எழில் பொழிலூ
டாடேறு மா வயலாலைப் புகை கமழ் ஆலி நகர்
ஈடேற வந்த பரகாலன் எங்கட்கு இயல் கதியே –44-

சேடு -இளமை

இயலும் இசையும் இயையக் கவிகள் ஈந்த எம்மோய்
குயில் நின்று ஒளிர் பொழில் சூழும் குறையற் குலபதி யோய்
வெயில் வாள் காலிகன்றி வேந்தே அடியேன் வினை அகற்றிச்
செயலும் குணமும் செவை யுறவே அருள் செய்குவையே –45-

எம் மோய் -எங்கட்க்குத் தாய் போன்றவரே
வெயில் -ஒளி
செயல் -செய்கை

சென்று சின விடை ஏழும் வலி கெடச் செற்று ப்பினர்
மன்றற் குழலி நப்பின்னை தடம் தோள் மருவும் எந்தை
வென்றித் திறனை விளக்கிய மங்கையர் வித்தகனே
என் தன் துயர் ஒழித்து இன்பம் அளிக்க இயைந்து அருளே –46-

மன்றல் -வாசனை
இயைந்து அருள் -இசைவாய்

இலை காய் அருந்தி இரும் கானம் எய்தி எழில் கதிக்கே
அலை சூழ் புவியை வலம் வந்து அனலிடையே அமர்ந்து
நிலை இன்றி ஓடித் திரிவீர் பரகாலன் நேச மிக்கான்
மலைவின்றி அன்னவன் தாள் அடைந்தால் சுகம் வாய்த்திடுமே –47-

அலை -கடல்
அனல் -அக்னி -பஞ்சாக்னி
மலைவு -மயக்கம்

வாயில் இரங்கி வயங்காரம் வீசி வளை சொரிந்து
பயலை யுந்தி யம்மாலை அடைந்து பகர் புவிக்கண்
ஏயனந்தல் விட்டு நின்றனை என் போல் எழில் கலியன்
நேய மிகுந்து வருந்தினை கொல்லோ நெடும் கடலே –48-

வயங்கு -பிரகாசிக்கும்
ஆரம் -முத்து
வளை -சங்கு
உந்தி -தள்ளி
அனந்தல் -நித்ரை

இது கடலுக்கும் நாயகிக்கும் சிலேடை
கடலைப் பார்த்து நாயகி யானவள் –
கடலே திரு மங்கை விஷயமாய் அன்பு மேலிட்டு என்னைப் போல் நீயும் வருந்தினை போலும்
நான் வாய் விட்டுப் புலம்பியது போல் நீயும் ஓ என்கிற கோஷம் இடுகிறாய்
நான் முத்து மாலையை அகற்றியது போல் நீயும் முத்துக்களை வெளியே எறிகிறாய்
நான் என் கை வளையை இழந்தது போலே நீயும் சங்கு இனங்களைச் சொரிகிறாய்
நான் பாயலை -படுக்கையை -நிராகரித்தது போல் -நீயும் -பாயலை -பாயும் அலைகளை -வீசுகிறாய்
நான் மாலை -மயக்கத்தை அடைந்தது போல் நீயும் மாலை -பகவானை -உன்னிடம் கொண்டு இருக்கிறாய்
நான் அனந்தல் -நித்ரையை -விட்டது போல் நீயும் இரவு பகல் ஓயாமல் நித்திரை இன்றிக் கத்துகிறாய் -என்பதாகும் –

கதியாம் கடவுளும் காத்த குருவும் களித்து அளித்த
துதி யாரந்த அன்னையும் அப்பனும் சூழ் தரு சுற்றமும் என்
நிதியாக வந்து எனை ஆளும் கலிகன்றி நீலன் அல்லால்
விதியார் விதிவினைக காணவரோ மெய்ம்மை வித்தகரே –49-

விதியார் -பிரமன்

விளங்கூசலூர் சகடு ஒண் வடம் என்ன என் மெய்யொடு உயிர்
உளங் கூசும் எள்குதல் கண்டும் பாராமுகம் உற்று இருத்தல்
துளங்கூக்கம் அருள் கருணைக்கு மாண்போ சுகம் விளைக்கும்
வளங்கூரு மங்கைக்கு அதிபா எனக்கு வழுத்துவையே –50-

ஊசல்-ஊஞ்சல்
எள்குதல் -வருந்துதல்

வழுத்தவிர் மெய்யடியார் மகிழ்ந்து உள் கொள்ளும் மா மதுரம்
பழுத்தவிர் முக்கனி சக்கரை கற்கண்டு பால் அமுதம்
முழுத்திய பைந்தமிழ் வேதம் உதவிய மூதறிஞன்
விழுத்தவன் மங்கையர் வேந்தன் என்னைக் கை விடான் இனியே –51-

அவிர் -விளங்கும்
விழு தவன் -மேலான தவத்தை யுடையவன்

விரவிய தேசும் வியன் பொறை யோடு விழுப் புகழும்
பரவிய ஞானமும் திண்மையும் வெற்றிப் படைக்கலமும்
திரவியமும் பெருகும் தாரணியைத் திருத்த வந்த
உரவியனார் திரு மங்கையர் கோன் துணை உற்றவர்க்கே –52-

உலகை வருத்தும் கொடும் கலி யாட்சிக்கு ஒடுங்கி நித்தம்
அலகை எனத் திரிந்து அல்லல் கடற்குள் அழுந்தும் என்னை
இலைகைக்கிய நின்னடியர் இனத்துள் எய்த அன்பர்
திலக திருமங்கை நாயக செய்ய அருள் ஈது ஒழித்தே –53-

அலகை -பேய்

தீதறச் சிந்தையில் தூய்மையும் வாயினில் செம் மொழியும்
ஆதரித்தே அறியேன் பாவியாகி அரும் துயரில்
வேதனை ஆர்ந்தனன் வேங்கட நாதனை மேவித் தொழும்
போத எழில் பரகால எனையும் புரந்து அருளே –54-

புதல்வரும் பூங்குழலாரும் புவியும் பொருளும் என்றே
நுதலி இளைக்கு நமக்கு நெஞ்சே கதி நோக்கின் எவர்
உதவுவர் இன்றே கலிகன்றி ஒண் கழல் உற்று இறைஞ்சின்
பதவி உண்டாம் உய்ய நன்கு அவன் கீர்த்தி பரவுவமே –55-

பற்றுக பற்றிலன் பற்றினை என்னும் பணியதனை
நற்றுணையாக நமக்கு விளக்கிய நான் மறையும்
கற்றவனால் இக்கடி நகரான் கலிகன்றி மலர்ப்
பொற் திருப்பாதம் இதய அம்புவத்தில் பொருத்துவமே –56–

பணி -கட்டளை
கடி -காவல்

பொற்புறு முத்தமிழும் மறை நான்கும் புகழ் அறத்தின்
வற் புறு மார்க்கம் கண் முற்றும் தெரிந்தவன் வாள் கலியன்
அற்புத நாற் கவியாளன் நன் நாமம் அறிந்து கல்லார்
நற் பதம் எய்தார் ஒருவார் பிறவி நடலையுமே –57-

ஒருவார் -நீங்கார்

நலனறு நீசச் சமயங்கள் ஒழிந்தன நாரணனை
வலனுறக் காட்டும் சுருதி மகிழ்ந்தது மங்கையர் கோன்
பொலனுறு செந்தமிழ் வேதம் பொலிவுறப் பூ வுலகில்
பலனுறு மெய்யடியார்கள் செழித்துப் பரவினரே –58-

பவக்கடன் நீந்திப் பராங்கதி பெற்று உயும் பாக்யமாம்
தவக்கடலில் இளைக்காமல் சகத்தில் சலனமுறும்
அவத் தொழில் மேல்கொண்டு அலையும் நெஞ்சே அருள் மாரி அம் பொன்
நிவக் கழல் என்னும் புணையை யடைய நினைகுவியே – 59-

நில உலகில் பிறக்கும் வேலை நீங்கில நீலன் என்னும்
நலன் அமர் ஆலி நன்னாடன் கலிகன்றி நாந்தகக் கைத்
தலன் அருள் ஒண் தமிழ் தங்கு மனமிலந் தாபம் இன்றி
வலனுற வாழ்வது எவ்வண்ணம் மனமே வகுத்துரையே –60-

வங்கக் கடலை மதித்த முதத்தை வரர்க்கு உகந்து
பங்கிட்டு அருளும் பரமற்கு இனிய பராங்குசற்குத்
துங்க விழாவொடு அவன் தரும் வேதம் துலங்க வைத்த
மங்கைக்கு அரசே அடியேன் மனப்புன் கண் மாற்றுவையே–61-

மதித்தல் -கடைதல்
துங்கம் -பரிசுத்தம்
புன் கண் -துன்பம்
மாற்றல் -நீக்கல்

மான் விழி மைக்குழல் வாணுதல் வேய் தோள் மதி வதனத்
தேன் மொழியார் மயலில் சிக்கி வீழ் பொருள் ஓடி அந்தோ
நோன்மை கெடப் பலர் ஏச நின்றேன் மங்கை நோற்க வந்த
கோன்மையனே அடையார் சீயமே நற் குண அம்புதியே -62-

குண நலம் கொண்டார் குறை கழல் நாடேன் குவலயத்தில்
பண நலம் கொண்டார்க்கு அடிமையாய் ஓர் நற் பயனும் உறா
வண நலம் குன்றி வருந்தி யுன் தாள் மலர் வந்து அடைந்தேன்
மண நலம் சேர் பொழில் மங்கை மன்னா நல் வழி அருளே–63-

வசுந்தரை மீது அடியேன் பால் வரவு நல் வார்த்தை சொல்லிப்
பசுத் திருப்பாதம் என் சென்னியில் சூட்டிக் கண் பார்த்து மனம்
கசிந்து உரை விண்ணப்பம் கேட்டு அருள் செய்யவும் காதலிப்பாய்
வசந்த முள்ளிச் செழுந்தார் வயங்கும் புய மாதவனே –64-

மா தவத்தால் பெற்ற என் மகள் நின் முள்ளி மா மலர்த் தார்க்
கே தவம் செய்து உடல் எய்துலாள் வேறு பெண் எங்கட்கிலை
நீ தயை கூர்ந்து அருள் செய்வாய் விரைந்து நெடும் புகழ் சேர்
ஏதமில் மங்கையர் வாள் கலிகன்றி எனும் துரையே –65-

எங்கள் அரங்கற்கு தொண்டர் அடிப் பொடி ஏந்தல் கொண்ட
துங்க மதிள் பணியின் குறை தீர்த்தவன் துய்து அருள் பெட்ரா
எங்கள் நெடும் புவிக்கு இன்னருள் செய்த யாரும் தவனே
மங்கையர் கோனே அருள் மாரியே உனை வாழ்த்துவனே –66-

வாய் வுன்னை அல்லால் வாழ்த்தாது உன் தாளே வணங்கும் தலை
ஆயும் உன் திருப் புகழே செவி கேட்கும் கண் ஆர்ந்து உனையே
நேயம் கொள்ளக் காணும் வண்டு அறை மா நீர் நெடிய மங்கைத்
தூயவ நால் நிகமத் தமிழ் தந்த சுபா கரனே –67–

சுபா கரன் -சுபத்தை யுடையவர்

சுகா நந்தமாய் நெடியோற்கே உயிர்கள் ஓழும்பு என்று உணர்
விகாத மில் ஞானம் தனால் ஐம் பொறி வாசல் வேய்ந்த வன் தாள்
மகாரினடைந்து இரு பற்று இன்றி இருத்தலே மா தவம் காண்
தகாது பிறிது என்றனன் மங்கை வேந்தன் தரா தலத்தே –68–

தொழும்பு -அடிமை
விகாதம் -வேற்றுமை
வேய்தல் -மூடல் -அடைத்தல்
மகாரின் -பிள்ளைகளை போலே

தனம் கொண்ட பான் மணம் வாய் நீங்கிற்றில்லை யத் தார் குழலோ
வனம் கொண்ட என் கரத்தின் அணையேயினும் வர்த்திப்பதும்
மினுங்குந்த மங்கை மன் கண்ட ஊர் எல்லாம் விலை கொளும் அக்
கனங்கொண்ட வாள் விழியாள் சென்றது எங்கன் கடுஞ்சுரமே –69–

தனம் -கொங்கை -முலை
குந்தம் -வேலை
சுரம் -பாலை வனம்

ககனத் திருவிடமோ வட வேங்கடக் கல்லிடமோ
புகனற் கமலத் தடவிடமோ பணிப் பெண்ணிடமோ
சுக மிக்குறு குறையற் பதியா மங்கைத் தோன்றல் வந்த
உகப்பார் இடமோ விடங்காவின் நின்ற ஒருவருக்கே –70-

பணி -பாம்பு
பணிப்பொன் இடம் -நாக லோகம்

ஒரு வழி நில்லாது உழலும் மனம் தனை ஓர்ந்து அடக்கிப்
பொரு வறு மங்கையர் கோன் பரகாலன் தன் பொற் பாதத்தை
மருவுறு வைப்பின் இகத்தும் பரத்தும் மகிழ் வுறலாம்
கரு வரு மார்க்கம் நமைத் தொடராது கடந்திடுமே –71–

கதி தரும் அஷ்டாக்ஷர மந்த்ரத்தைக் கண்டு கொண்டு
மதி தரும் தூய நலத்தை அடைந்து மயர்வு ஒழிந்து அத்
துதி யுறும் பேற்றை நமக்கு அறிவித்தான் சுகம் தழைத்து
வதி தர வாள் கலிகன்றி குறையலூர் மன்னவனே –72-

வதிதர -வாழ

மன்னிய வேம்பின் புழு வேம்பினை விட்டு மற்று அருந்தா
துன்னிய நாயேன் உனது தாள் அன்றி வேறு ஓன்று உகவேன்
துன்னிய வென் சோர்வு அற அருள்வாய் நற் சுடர் அறிவே
மின்னிய வேல் வலவா பரகால விசாதரனே –73-

விசாரதன் -ஞானவான்

விதித்த வுருவார் பிறவியில் இன்னும் வியன் உலகில்
உதித்து நெகிழ என்தனை எங்கு நீக்குதியோ என யான்
மதித்து வெருவி இரு பாடு எரி கொள்ளி வைகு எறும்பில்
பதைத்து உள் உருகா நின்றனன் பார் மங்கை பார்த்திபனே –74-

பாழ்த்த பிறவியில் இன்னம் எனை எங்கு பாரிடத்தே
வீழ்த்தி விடுவையோ என்று மருண்டு வியாளத்துடன்
காழ்த்த ஒரு கூரையின் கண் பயிலவே கட்டுணல் போல்
வாழ்த்து பரகால வாடுமென் வாட்டத்தை மாற்றுவையே–75-

வியாளம் -புலி

மாற்றமுள யாகிலும் சொல்லுவன் மக்கள் மா நிலத்தில்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று உளம் தொல்லை யுற்றே
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அடியன் நான் அஞ்சுகின்றேன்
தேற்றி அருள்வாய் அருள் மாரியாம் எங்கள் தேசிகனே –76-

தேற்றமுடைய திருவாலி மைந்த சிதா நந்தனே
சீற்றமுள வாகிலும் செப்புவன் மக்கடிண் புவியில்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று அஞ்சித் தொல் கடலில்
காற்றத்திடை சேர் கலவர் மனம் போல் கலங்குவனே –77-

சிதா நந்தன் -ஞானாநந்தன்
கலவர் -கப்பலோட்டிகள்

கள்ளர் மரபில் உதித்து மெய்ஞ்ஞானம் கடைப் பிடித்தோய்
கொள்ளக் குறையா இடும்பைக் குழியில் குமைய நெஞ்சம்
தள்ளிப் புகப் பெய்தி கொல் என்று அதற்கு அஞ்சித் தத்தளித்து
வெள்ளத்திடை சேர் நரியினம் போன்று விதிர்த்தனனே –78–

விடை ஏழ் தழுவும் விமலற்க்கு இனிய நல் வித்தகனே
மடை நின்று அலரும் வயலாலி மைந்த மா மங்கை யன்பா
இடையன் எறிந்த மரம் ஒத்து இராமல் என்னை அணுகி
அடைய அருள் புரிவாய் யுன் அருளானவிர் தரவே –79-

அவிர் தர –விளங்க

அவிரும் புரவியும் தேரொடு காலாள் அணி அமைந்த
சிவிகையும் சேனைத் தொகையும் உள பெரும் திண்ணியனே
அவியை நிகர்த்த இன் சங்கத்தமிழ் இன்றனன் அற்புதமார்
கவிகள் ஒரு நான்கு நல்கும் கலிகன்றி காத்தருளே –80–

அவிரும் -விளங்கும்

காத்தற்குத் தானே கருதாது இருப்பினும் காதல் மிகப்
பூத்து உன் தன்னையே நினைந்து நைவேற்கு ஒரு பூங்கணையான்
காத்திரம் கொண்டு வலி செய்ய எங்கன் கமித்திருப்பேன்
கோத்த முள்ளிக் கொழும் கண்ணி யம் மங்கையர் கோமகனே –81-

காத்திரம் -ஷத்திரம் வைராக்யம்
கமித்தல் -பொறுத்தல்

கோதற்ற பண்ணும் பரதமும் கல்வியும் கோக் கவியும்
ஓதற்கு அடியேன் உறும் போது எளிதில் உதவ அருள்
தாதுற்ற முள்ளி யம் தாராடு மார்ப தயா நிதியாய்
வாதற்று எழுதா மறையைத் தமிழ் செய்த வண்மையனே –82-

வண்ணப் புவியொடு வானும் புனலும் வளி கனலும்
எண்ணும் எழுத்தும் எக்காலத்தும் மாறாது இறைஞ்சும் அன்பர்
கண்ணும் கருத்தும் களிக்க வரும் பரகால அருள்
பண்ணும் செயலும் பழகும் குணமும் பயன் உறவே –83-

பண்ணின் மொழியார் பைய நடமின் பாடு அடைந்து
கண்ணும் சுழன்று இழி பீளையும் ஈளையும் கண்டீர் என்று
துண்ணென ஏசுமுன் துக்கச் சுழலை துணிப்பதற்கு
விண்ணும் பரவு நம் மங்கையர் வேந்து உரை மெய்க் கொண்மினே –84-

களை -கோழை
சுழலை -சூழ்ச்சி

மெய்மை இழந்து விரி குழலார் வலை மேவி என்றும்
பொய்மை புகன்று புரை பல செய்தி வண் புன்மை யுற்றேன்
நொய்மை கெடக் கடைக் கண் பார்த்து அருள் உண்மை நூல் பயன்றோ
ஐமை முகில் தங்கும் அம் பொழில் மங்கைக்கு அதிபதியே –85-

அன்னைக் கலமுத்தனையைக் குனி கோன் அணையைத் தரும்
அன்னைக்கும் அல்லவே மன்னனைக் கன்றி யடுத்து அளித்த
பின்னனைக்கும் உதவாப் புளால் எய்தினன் பீழை யந்தோ
துன்னிடர் தீர்த்து அருள் மங்கை வரோதய சோபிதனே –86-

முத்து அன்னை -கரும்பு
குனி -வளைக்கும்
கோன் -மன்மதன் -இவன் அன்னை -ஸ்ரீ லஷ்மி -அவள் அன்னை -கடல்
மன் அன்னை -ஸாஸ்வதமான தாய்
அடுத்து அளித்த பின் அனைக்கும்-அடுத்துக் காத்த பிற்பட்ட தாயான காகத்திற்கும்
இதற்கும் உதவாத பட்சி -குயில் -இந்தக் குயிலால்
பீழை -துன்பம்

சோதனை செய்வது நீதம் அன்று என் தன் உரி சொழிய
வாதரம் கூர் அன்னையில் புரந்தாள்வது அழகு கண்டாய்
பூதலத்தே அரண் புக்கவர் தம்மைப் புறக்கணித்தால்
சூது என் எவ்வாறு உய்குவேன் பரகால நீ சொல்லுவையே –87-

சொல்லிய மேம் பொருள் செல்ல விட்டு உண்மை துணிந்து உணர்ந்து
நல்லியலாம் பரி சோர்ந்து கொண்டு ஐம்புலன் நன்கு அடக்க
வல்லவர் போற்றும் பரகால இவ்வேளை வந்து எனது
புல்லறிவு வேக அருள்வாய் ஒரு வரம் புங்கவனே –88-

புகலும் திறம் கொண்டு நின் கழற்குத் தொண்டு புல்கி யற்றும்
பகரஞ் சிறிதும் இல்லாக் கொடியேன் எனைப் பார்ப்பவரார்
திகழும் கருணைக் கடலா நினை யன்றிச் சீர்மை என்றும்
மிகு நல் திரு மங்கை வேந்தே இணை யறு வித்தகனே –89-

பகரம் -விளக்கம்

விறல் சேர்ந்த சித் அசித்தோடு ஈசன் என்று விளம்புறுமம்
மிறல் சேர்ந்த தத்துவ மூன்றின் முடிபை விழைந்து உணர்ந்த
திறல் சேர்ந்த மெய்த் தொண்டர் சிந்தையின் ஆளும் திகழும் எங்கள்
அறல் சேர்ந்த நீர் மங்கை வேந்தே எனையும் நன்கு ஆண்டு அருளே –90-

அறல் -கரு மணல்

அம்பர மூடறுத்து ஓங்கி உலகை அளந்த பிரான்
செம்பத மா மலர் சென்னியில் ஏந்தும் திருத் தொண்டரே
பம்பரம் போல் சுழலும் பிறப்பின் பெரும் பற்று அறுப்பர்
நம்புமின் என்ற பரகாலன் நங்கட்க்கு ஞான வைப்பே –91-

ஞாலம் தனில் நங்கைமீர் நீவீர் பெண் பெற்று நல்கினீர் யான்
சீலம் பெறப்பெற்ற ஏழையை என் சொல்வன் சித்தம் ஒத்துக்
கோலம் பெறு திருவாளன் என்றும் வேல் என்றும் கோது அகன்ற
வாலம் பெறும் ஆடல் மா என்றும் வாய் விட்டு வாழ்த்துவனே –92-

வாலம் -வால்

வாழ்ந்தார்கள் எவர் கொல் முற்றும் வழு வின்றி வையகத்தில்
சூழ்ந்து ஆலி நாடன் தன் தொல் சீர் புகழ்ந்து அவன் தூ மலர்த்தாள்
தாழ்ந்து ஆவி யாகம் பொருள் தந்து நாளும் தனி அன்பினில்
ஆழ்ந்தார்கள் அன்றி அறைமின் அடு விழவாது அறிந்தே –93–

அறியாது பாலகனாய்ப் பல தீமைகள் ஆதரித்தேன்
நெறியாதும் இன்றிப் பெரியவனாய பின் நீண் நிலத்தில்
குறியாமலே பிறர்க்கே உழைத்து ஏழையாய்க் குன்றி நின்றேன்
வெறி யார்ந்த முள்ளி யம் தண்டார்ப் பரகால விண்ணவனே –94-

விண்ணார் சிகரத் திருவாலி நாட வினை வயத்தேன்
மண்ணாய் புனல் எரி காலொடு மஞ்சுலாம் வானகமாம்
புண்ணார் உடலில் புலம்பி நன்கு எய்த்துப் புலர்ந்து ஒழிந்தேன்
அண்ணா அளித்து அருள் நின்னை அடைந்தேன் அரண் எனவே –95–

அருள் அகத்தில் இல்லாத புல்லரைப் பாடி யலுத்து வந்த
தெருள் அறிவாளர் உளக் கொதிப்பில் கொதி செம்புலத்தை
மருள் விழி மானே கடந்து விட்டோம் இதோ வான் தழுவும்
பொருள் செறி நல் திருவாலி எனும் பதி போந்தனமே –96-

புலம் -பாலைவனம்

போதத் திரு மங்கை வேந்தே நினது புகழ்க் கடலில்
தீதற்று அடியேன் திளைத்து உய்யுமாறு திருவருள் செய்
வேதப் பொருளை வியன் தென் மொழியில் விரித்தவனே
காதல் குமுத வல்லிக்கு உகப்பாம் அரும் பேகனியே –97–

கலங்கா மனம் கொடு நின்னை எந்நாளும் கருத்து இருத்தி
நலம் காண நாயேற்கும் வாய்க்கும் ஒரு திரு நாளும் உண்டோ
துலங்காத தீ நெறியாளரைச் செற்று அருள் சுந்தரனே
வலம் காணும் வாள் படை மங்கை மன்னா எங்கள் வான் கதியே –98-

வார் இருளாய வையத்தை வயங்க வைக்கும் இரவி
ஓர் பொருளாகப் பரந்தது தான் பொதுவுற்றது போல்
தேர் அறிவாளன் எம் மங்கையர் கோன் அருள் சேர்ந்த பின்னோர்
ஏர் பரன் உண்டு என்று எலாச் சமயங்களும் இன்புற்றவே –99-

வார் -நீண்ட

இரும் தமிழ் ஆரணம் கீர் வாண வேதம் எழுத்து எட்டு எனும்
பெரும் திரு மந்திரம் ஐம்படை உம்பர் பிறங்கறவோர்
அரும் திரு நாதனோடு ஆழ்வார்கள் மண் விண் அருள் மாரியாய்
வரும் திரு மங்கை மன் வாழ்க என்றும் பெற்று வண் திருவே –100–

பிறங்கு -விளங்கும்படியான

————-

பரகாலன் பாசக் கயத்தார்ப் புணாகருள் பாரெனவம்
பரகால னாந்திரு மாலவ னெங்கட் படமையினிம்
பரகால னென்றி யவர்க்குரித் தாமுனைப்பற்றி னஞ்சீர்ப்
பரகால னான்மறை யாறங்க மோ துமெய்ப் பாவலனே.

பரகாலன்(யமன்), ஆர்ப்புணாது அருள் பார்(பாசக் கயிற்றால் கட்டுப் படாமல் இருக்க அருள்வாய்),
அம்பரக் காலனாம் திருமால்(ஆகாயத்தை அளந்தப் பாதத்தையுடையத் திருமால்),
இம்பர காலன் அன்றி அவர்க்கு உரித்தாம் உன்னை- இவ்வுலகில் அக்காலனுக்கு உரித்தாகாமல்
விஷ்ணுவிக்கே உரித் தானப் பரகாலனான உன்னைப் பற்றினேன், நான்மறை ஆரு அங்கம் ஓதும்

(நான்மறைக்குச் சமமான, திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி
ஆகியவற்றுக்கு 6 அங்கங்கள் போல் அமைந்த பெரிய திருமொழி, திருவெழுக்கூற்றிருக்கை, திருக்குறுந்தாண்டகம்,
திருநெடுந் தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய 6 நூல்களை அருளிச் செய்தப் பரகாலன்
என்ற திருமங்கையாழ்வாரைத் தாள் பணிந்துச் சேவிக்கிறேன், என்கிறார்.

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பரகாலர் திரு வைபவ மாலை –ஸ்ரீமான் கண்ணபிரான் முதலியார் —

November 4, 2021

வள மலியும் கலி யுகத்தில் வாய்ந்த நள வருஷம்
மன்னு முயர் கார்த்திகையில் குரு வாரம் தன்னில்
கிளர் ஒளி சேர் பவுர்ணமியில் கிருத்திகை நக்ஷத்ரம்
கெழுமிய தோர் சுப தினத்தில் விழுமியர் கொண்டாடத்
தளர்வறு சீர் கள்ளர் குலம் தனை யாளும் கோமான்
சாந்த மிகு நீலன் எனும் தந்தை மகிழ்ந்து உடலம்
புளகமுறபி புவியில் வரும் பொரு வறு சார்ங்க அம்ச
பூதன் எனும் கலி கன்றீ புங்கவர் பெம்மானே –1-

ஆர் கலி சூழ் உலகு உய்ய அவதரித்த பெருமாள்
அமுத மொழிக் குமுத வலிக்கு அன்புடைய பெருமாள்
சீர் கொள் திரு மணக்கொல்லை சேர்ந்து உறையும் பெருமாள்
திரு அரசத் தரு நிழலில் சென்று அமரும் பெருமாள்
ஏர் கொள் வயலாலி மணவாளனைக் காண் பெருமாள்
எதிர்த்து அவன் நற் காலின் விரலைக் கடித்த பெருமாள்
பார் கொள் சுமை தூக்க அரிதாய்ப் பரிவடைந்த பெருமாள்
பங்கய நாபன் கருணைப் பரிசு பெறும் பெருமாள் –2-

வட்ட உலகங்கள் அருள் மந்திரம் கொள் பெருமாள்
வாசவன் ஈசன் பரவு மந்திரம் கொள் பெருமாள்
சிட்டர் பலர் முனிவர் எனும் மந்திரம் கொள் பெருமாள்
திரு வட்டாஷரம் எனும் மந்திரம் கொள் பெருமாள்
கட்டெழில் சேர் வயலாலி மணவாளப் பெருமாள்
கருணை புரிந்து உபதேசம் செய்ய மகிழ் பெருமாள்
இட்டமுடன் கலியன் எனத் திருப் பெயர் கொள் பெருமாள்
எமை யாள வந்துதித்த நாலு கவிப் பெருமாள் –3-

பேர் அழகால் நீலன் எனப் பேர் அடையும் பெருமாள்
பேச அரிய கலை கள் எல்லாம் பெற்று உணரும் பெருமாள்
ஸூரரனை வரும் நிதமும் தொழுது ஏத்தும் பெருமாள்
சோழ நிருபன் புகழத் தொழுது ஏத்தும் பெருமாள்
சீர் அணவும் திருவாளன் மா வூரும் பெருமாள்
திவ்ய தேசங்கள் வலம் செய்து வரும் பெருமாள்
தார் அணவும் தாடாளன் தயை கூறும் பெருமாள்
சம்பந்தன் கை வேலைத் தான் பறித்த பெருமாள் –4-

நேச மிகு நீரில் நடப்பான் நிழலில் மறைவான
நெருங்கிய தோலா வழக்கன் உயரத் தொங்கிடுவான்
ஏசறு தாளூதிடடுவான் சாயை பிடிப்பான் என்று
ஏற்றமுறு தோள் துணைவர் நால்வரையும் கொண்டான்
ஆசு மதுரத்துடன் விஸ்தாரம் அரும் சித்ரமாகும்
ஒரு நாற் கவியும் அணி பெறவே சொல்வான்
வீசு புகழ் சேனையர் கோன் மெல்லடி மேல் விடுவான்
வீறுறு சிந்தனைக்கு இனியான் மெய்யருள் சேர் பெருமான் –5-

கலியன் அருள் மாரி கலி கன்றி கலி த்வம்ஸன்
கவி லோக திவாகரன் நற் பரகாலன் நீலன்
நலனுறு ஷட் பிரபந்தக் கவி யாலி நாடன்
நாலு கவிப்பெருமாள் நா வீறுடைய பெருமாள்
வலி கொள் கலி வைரி யடையார் சீயம் வையம்
மதி யரட்ட முக்கி சதுஷ் கவி மங்கை மன்னன்
குலவு நறும் கொங்கு மலர்க் குழலியர் வேள் எனும்
கொற்ற வேலுற்ற திருமங்கை யாழ்வாரே — 6-

————-

நேரிசை வெண்பா

திருவாலி நாடன் திருக் கலியன் மால் பால்
ஒரு வாள் வலியோச்சி ஒண் மந்திரமாகும்
எட்டெழுத்தும் கொண்ட இணையில் பரகாலன்
கட்டழகில் ஆழும் என் கண் –1-

கண்ணார் கடல் வண்ணக் காரணனார் தான் களிக்கத்
திண்ணார் மணக்கொல்லை சேர்ந்து இருந்து
மண்ணார் இழி பிறவி நீங்க எதிர் உறுவார் தம்மை
வழி பறித்த வேல் வேந்தே வா –2-

வாடினேன் வாடி வருந்தினேன் என்று எடுத்துத்
தேடிப் பெரிய திருமொழியைப் பாடி
நெடு பிறவி நஞ்சுக்கு நீள் அமுதமாக
இடும் கருணையார்க்கு உண்டு இவண்–3-

வாழ்த்தும் மலர் வாயும் வாண் முகமும் வண் பொருட்காத்
தாழ்த்து வலச் செவியும் தார் மார்பும் ஆழ்த்தும் அருள்
கண்ணும் கலியன் கழல் காலும் கை வேலும்
எண்ணும் தினம் எனதுளமே –4-

ஆலி நாடு ஈதோ வரசீது ஈதோ சீர்
ஏலும் மணக்கொல்லை ஈதோ தான் நீலனார்
நே மாற்றும் மாலை நெருக்கியவன் எட்டு எழுத்தை
ஏமாற்றிப் பெற்ற இடம் –5-

———

அடியார்கள் ஈடுபாடு

எச்சரிக்கை –பராக் –ஸ்வாமி பராக்
தாரக போஷக போக்ய அநு குணாதி தேவா மோதா
தராதலோத் தாரணா வதாரா சார்ங்க அம்ச பூதா
ஸமான அதிக ரஹித ஸுந்தர அங்க விநோதா
ஸர்வ துன்மத கர்வ நிவாரணா நந்த போதா
ஸர்வ அபீஷ்ட பிரத உபாய தனி மந்த்ரம் எய்து நீ தா

சடகோப வாங்மய தமிழ் மறைக்கு அமுது என ஆறு அங்கம் உதவு மதீ தா
ஸுசீல நெடு வேல பரகால மிகு கோல தனி நீலனாம் ப்ரக்யாதா
தாதோடு வண்டலம்பும் தண் மங்கை நாதா தமிழ் சொலாம் ஸஹஸ்ர வேதா
நல்லிசைக் குமுத வல்லி சமேதா நற் குணாதீதா
நளின மலர்ப்பாதா நாரணனார் உடனாடிய விவாதா

ஏ மங்கை வேந்தே
கண்டல் வேலி மங்கை வேந்தே
காரார் புறவின் மங்கை வேந்தே
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தே
கலி கெழு மாட வீதி வயல் மங்கை வேந்தே

கொங்கு மலர்க குழலியர் வேள் மங்கை வேந்தே
வண்டு பாடும் பைம் புறவின் மங்கை வேந்தே
வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தே
வல்லி பொதும்பில் குயில் கூவு மங்கை வேந்தே
வலி கெழு மதிள் அயல் வயல் அணி மங்கை வேந்தே

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கை வேந்தே
புல மங்கைக் குல வேந்தே
மஞ்சுலாம் சோலை வண்டறை மா நீர் மங்கை வேந்தே
கற்றார் பரவும் மங்கை வேந்தே
பார் மலி மங்கை வேந்தே
சுரும்பார் பொழில் மங்கை வேந்தே

ஜய ஜய எச்சரிக்கை

ஸ்வாமீ -ஸ்ரீ யபதியால் தேவரீருக்கு இடப்பட்ட திரு நாமத்தை கலியன் என்கோ
கல்லின் மலி தோள் கலியன் என்கோ
கல்லின் மன்னு தோள் கலியன் என்கோ
கலங்கல் இல்லாப் புகழார் கலியன் என்கோ
கலையார் பனுவல் வல்ல கலியன் என்கோ

கறை வளரும் வேல் வல்ல கலியன் என்கோ
கன்றி நெய் நீர் நின்ற வேல் கை கலியன் என்கோ
காமக் கதிர் வேல் கலியன் என்கோ
கை இலங்கு வேல் கலியன் என்கோ
காய் சின வேல் கலியன் என்கோ

கூரார்ந்த வேல் கலியன் என்கோ
பார் அணிந்த தொல் புகழ்க் கலியன் என்கோ
கூர் கொள் நல்ல வேல் கலியன் என்கோ
மான வேல் கலியன் என்கோ
ஊனார் வேல் கலியன் என்கோ

ஏ மங்கையர் தலைவா
மன்னு மா மாட மங்கையர் தலைவா
கன்னி நன் மாட மங்கையர் தலைவா
மலை குலா மாட மங்கையர் தலைவா

கலி கன்றீ
வாள் கலி கன்றீ
கற்ற நூல் கலி கன்றீ
ஏந்து எழில் தோள் கலி கன்றீ
காமரு சீர்க் கலி கன்றீ
வடி கொள் நெடு வேல் வல்ல கலி கன்றீ
பராக் பராக் எச்சரிக்கை –

————

திருப் பாதாதி கேச வர்ணனம்

நாயந்தே
ஜய விஜயீ பவ
நாயந்தே

1-திருவடி
குளிர்ந்து மிளிர்ந்து
நீரில் பிறந்து கொழுத்துச் செழித்துத் தழைத்துப் பழுத்துக்
குண திசைச் சிகரத்து அணை தருகின்ற ஆதித்தியனுடைய சோதிக் கிரணத்தால் விகசித்து
சிவந்த இதழ்களை யுடைத்தாய்
உவமிக்கத் தன்னிலும் உயர்வாகக் கிடைப்பது வேறே ஓன்று இன்றி விளங்கி
நிறத்தில் பவளத்தையம் குவளை யாக்கத் தக்க
தேவரீரது திருப் பாத கமலங்களின் போக்ய அதிசயத்துக்கு ஓர் போலியாய் அமைந்துள்ள கந்தமே
யரவிந்தப் பூவை அதன் ஸர்வ கர்வ பங்க அர்த்தமாக
உமது இணைத் தாள்களின் கீழ் ஒதுக்கி
அதன் சிரஸ்ஸின் மீது வெற்றி குலவப் பற்றி நிலவும்
திருக் கழல் களின் அழகும்

2- திருப் பாத விரல்
விற்பனர் பரவும் அற்புதம் வாய்ந்த கற்பகப்பூவின் பொற்புறும் அரும்பினுடையவும்
ஈரம் நிறைந்த நீரில் உறைந்து துவளும் பவளக் கவினார் கொடியினுடையவும்
ஒருமித்த காந்தியை மாந்தி துதி யுறும் கதிரவன் விதி இளம் சுடரினை நிகர்த்து
முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும் தத்தித் பதித்துத் தலை பெய்தால் போன்று
ஒத்திட்டுள்ள திருப்பாத விரல்களின் அழகும்

3-திருப் பாத திரு நகம்
அந்தியம் போதினில் அந்தரத்து இருந்து சுந்தரச் சுடர் தரும் சந்த்ரன்
வடிவில் சிறுத்தும் பெருத்தும் நிற்பதோடு
என்றும் ஒன்றானதன்றிப் பத்தாக இராமையாலும்
உவமைக்கு இவ்விரண்டிலும் சுதீரியது ஓன்று எளிதில் அகப்படாமையாலும்
இவற்றையே ஒருவாறு ஒத்து ஒளிரும் திருவடி விரல்களின் திரு நக அழகும்

4-திருப்புற வடிகள்
முழுது உலகத்தும் பழுதற நிலவத் தொழுதகையாளர் நூல் எழுது புத்தகத்தை
ஏய்ந்து செம்மை வாய்ந்து விளங்கும் புறவடியின் அழகும்

5-திருக் கணைக் கால்
வம்பர் தம்முயிரை யும்பர் நாட்டுய்த்து அவர் வெம்பு மெய்யதனைப் பம்புநாய்
நரிக்கிடும் அம்பறாத் துணியை ஒருவிதம் மருவிடும்
தீங்கு அணையாத பூங்கணைக் காலின் அழகும்

6-திருத்தொடை
உவரி சூழ் தரும் அவனி முழுமையும் தவறுறா வகை தாங்கி நிற்கும்
இசைக்கு உரித்தாகிய திசைக்கரி துதிக்கையை
விதியிலாது எதிர்த்து வதி தரும் செய்ய திருத்தொடை அழகும்

7-திரு உந்தி
வலம் சுழித்தோடு நீர்ப் பொலம் சுழி அதனையும்
புகழறா மணம் கமழ் மகிழ மா மலரையும்
சிறிது நேர் எனக் கருத இலங்கும் திரு உந்தி அழகும்

8-திரு மார்பு
பாரொடு வானும் பேரொலி யார்த்திதன் நேரிலை எனப் புகழ் சீரினைப் பெற்ற
மேரு மால் வரையும் என்னே என்னே என்னலாம் படி
நன்னயப் பொன்னணி மின்னிற்றுன்னப் பரந்து சிறந்து தெண் திரைப்பூமியாம் பெண்டு
நாண் கொண்டிட விளங்கும் திரு மார்பின் அழகும்

9-திருக் கரம்
செயிரிலாக் குண திசை ஐரா வதத்தின் அந்த மிகுந்த தந்த நடுவில் தங்கி
மாண்பொடு தொங்கி நெடும் கரத்துடன் போரிட்டுப் பொலிவுற்றுக்
கெழு முறு முழம் தாளின் கீழும் நீண்டு ஒளிர்ந்து
மாமேகம் என்பதைக் காட்டுவது போல்
நெஞ்சுக்குச் சரியாகச் சிறிது சாய்த்து அஞ்சலித்த திருக்கையின் அழகும்

10-திருக் கை நகங்கள்
சிந்தா வளனுறு செந்தாமரைப் பூவின் பக்குவ மொக்குகளை ஓக்கினும் ஒக்கும் என்று
இக் குவலயம் தொழும் திருக்கை விரலின் திரு நக அழகும்

11-திருப்புயம்
மிகை மிக முந்தப் புகை விழி யுந்த வகை வகை பந்தத் தொகை கொடு வந்த பகைவர்களின் வலி சிந்த
நகை புரிந்து அவர் தம் சொந்த உயிர் தனைத் தந்த வீரம் பொருந்தி
அத்துணை உயர்ச்சியும் அமை தரு திரட்சியும் தனக்கு இன்மையால்
விரிந்து ஓங்குகின்ற பொன் மலையும் ஈடு அன்று என மனம் சரிந்து
ஓங்கிக் குன்றப் பொலிந்து உருண்டு திரண்டு விளங்கும் திருப்புய அழகும்

12-திருக்கண்டம்
கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன் உடலில் வளர்ந்து போய்
ஊழி யான் கைத்தலத் திடரில் குடியேறித் தீய அசுரர் நடலைப் பட முழங்கும்
தோற்றத்து ஏற்றம் வாய்ந்த ஸ்ரீ பாஞ்ச சன் யாழ்வான் இருக்கப்
பிறிது ஒரு சங்கும் தெரி தரும் கமுகும் சரியென முன் வரச்
சரி தரும் பொலிவினை யுடைய திருக்கண்டத்தின் அழகும்

13-திரு முகம்
கூம்பிய ஆம்பலும் சோம்பற மேம்படத் தெளி விட்ட ஒளி வட்டம் சூழ்ந்து
தறை இருள் நீக்கும் நிறை கதிர் மதியும்
கறை யுண்டு கரும் பாம்பால் குறை யுண்டு சிறிது நாள் வளர்வுண்டு சிறிது நாள் தளர்வுண்டு
நின்றமையாலே தாழ்ச்சி எய்த
மாட்சி எய்தி அப்பொழுது அலர்ந்த அரவிந்தத்தையும் எப்படி ஒக்கும் என்று எவரும் இசைக்க நிவர்ந்து
எதிர் யுறுவோரை மயலில் இருத்தும் பேர் அருள் பொழியும் திரு முக அழகும் –

14-திருச்செவி
அலை யுறும் புலை மனம் நிலை பெறும் வலை எனச் சுருண்டு உருண்டு நீண்டு மநோ கரமாய்
விதி சிவாதியர் எவரும் துதி கொளாதி மறை ஒரு நான்கும் உணர்தற்கு அரிய
உணர்வு எனும் பெரும் பதப்பொருளைப்
பேர் அறிவு ஐந்தையும் ஓர் அறிவாக்கி யுணர்ந்து கொண்ட பெரு மிதத் திருச்செவி அழகும்

15-திருவாய்
சீருண்ட நீருண்டு நிவந்து நிவந்தாலும் பன்னுலகு அனைத்தையும் தன்னகப் படுத்தும்
மன்னமுதூறும் இன்னுரை இயம்பும் பேர் ஆற்றலும்
சரி செயும் தந்த வரிசையோடு அந்த வெள்ளென வெளுத்த ஒள்ளிய திரு முறுவலும்
தான் எய்தப் பெறாமையால் மா மலரான தாமரையே தலை நாணுமாயின்
நிவரும் பவளமோ நேர் எனப் போரிட வல்லது என்று பொலிந்து நின்ற திருவாயின் அழகும்

16-திரு மந்தஸ்மிதம்
அண்டி வரும் தொண்டக் குழாங்களை அன்புடன் நோக்கும் ஆனந்த விளைவால்
அர்ச்சாவதார நிலையை அதிக்ரமித்து விம்மி வெளி விழும் அவ்யக்த மதுர மந்த ஹாஸத்தின் அழகும்

17-திருக் கபோலம்
துளங்கும் பளிங்கு மண்டலங்கள் இரண்டைத் துகளறக் கடைந்து
துலக்கித் துடைத்துச் சேர்த்து வைத்தது போலே
பள பள என்று ஒளிரும் திருக் கபோல அழகும்

18-திரு மூக்கு
பண்பொடு தொங்கும் சண்பக மலர் என முனை மலர்ந்து உயர்ந்து அடி மிக ஒடுங்கி
உபய துவார சோபிதமாய் நிலவி
இந்த்ர நீலக் கொழுந்தையும் மரகதச் சோதியையும் புறக்கணி நிறத்ததோ இது எனக் கருதி
ப்ராந்தி ஏந்தி ஓந்தியானது இந்த்ரகோபத்தின் மேலே தாவி மேவி
நீண்டு வந்து நிமிர்ந்து இருக்கிற தோற்றத்தையும் மாற்றத் தக்க ஏற்றம் பெற்ற
கோல நீள் கொடி மூக்கின் அழகும்

19-திருப்புருவம்
குன்று எடுத்து ஆயர் மாதர் குரவை கொண்டு
ஒரு விளாவில் கன்று எடுத்து எறிந்து
வெய்ய காளியற்கு இரு தாள் நல்கிய
கோவலர் சேவகனார் நன்று எடுத்த
வைதேகியார் தம் மன்று எடுத்து ஒடித்த வில்லும்
வழியில் நின்று எடுத்து ஒசித்த வில்லும்
கம்சன் விழாவில் சென்று எடுத்து இறுத்த வில்லும்
சதுரர்கள் புகழும் விதுரன் கை வில்லும்
கனஞ்செறிந்துள்ள தனஞ்சயன் வில்லும்
பெரு வலி பெற்ற வுரு விலி வில்லும்
புல்லெனச் சொல்லும் வல்லமை ஆர்ந்து
அல் ஒக்கும் நிறத்தவளது வயிரக் குன்றக் கல் ஒக்கும்
நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று
கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் எனப் போயதும்
வைதவையின் மராமரம் ஏழும் தொளை எய்தச் செய்ததும்
மற்றும் பற்பல கொற்ற வசடரை முற்றும் செற்று உயர் வெற்றி உற்றதும்
வெள்ளெருக்க மலர் முடியான் வெற்பு எடுத்த திரள் தோளின் மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ எனும்படி
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியைக் கடும் சிறையில் வைத்த காதலானது
இராவணனுடைய உள்ளிருக்கும் எனக்கருதி அவன் உடல் பிளந்து தடவியதுமான
சுடு சாரம் கொண்ட நெடிய கோதண்டத்தை ஒன்றி நின்ற
திருப்புருவத்து அழகும் –

20-திரு நெற்றி
மறுவும் வெருவும் பொலிவும் நலிவும் பிறப்பும் இறப்பும் இன்றிக்கே
என்றும் ஒரு தன்மையதாய் நிலவெறிக்கும் இஷ்டமிக்குதவும் அஷ்டமிப்பிறை ஓன்று இருந்தால்
அதனைப் பொருந்தா நின்று
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயின வெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரும் நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல் ஆகிய
ஆழியான் அளவினாமம் நெய் சுடர் விளக்கில் என்றப் பெற்று விளங்கும்
திரு நெற்றி அழகும்

21- திரு முடி
நீண்டு குழன்று நெய் திரண்டு நெறிந்து செறிந்து
நெடு நீலம் பூண்டு புரிந்து சரிந்து கடை சுருண்டு
புகையும் நறும் பூவும் வேண்டும் அல்ல எனத் தெய்வ வெறியே கமழும்
திருச்சிகையோடு பொன்னு மணியும் பொழிந்து ஓங்கி மின்னி
மலர்ந்து உயர்ந்த திருமுடி அழகும்

சம்பூர்ணமாக அறிந்து ஏத்த
வென்றியே வேண்டி வீழ் பொருளுக்கு இரங்கி வேல் கணார் கலவியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை யுடைய அடியோங்கள் அறியோம் அறியோம்
தேவரீர் நித்தியமான இந்த ஸுந்தர்யத்துடன் நீடூழி வாழ்ந்திடுக வாழ்ந்திடுகவே
ஜய விஜயீ பவ

—————–

பங்குனி உத்திர இரவில்.ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 35வது திவ்ய தேசம் திருவாலி – திருநகரி.

இது இரண்டும் ஐந்து கிலோ மீட்டர் இடைவெளியில் இருந்தாலும்,
ஒரே திவ்யதேசமாகவே கருதப்படும் ஆழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்து, ஞானம் கொடுத்து ,
மாற்றமும் தந்த அற்புத நிகழ்வு இந்தத் தலத்தில்தான் நடைபெற்றது.
குலசேகர ஆழ்வாரும் திருமங்கையாழ்வாரும் பாடியிருக்கும் இத்தலம் மிக சிறப்பு வாய்ந்தது.
ஆதி காலத்தில் பில்வாரண்யம், ஸ்ரீபூரி, ஆலிங்கனபுரி என்றெல்லாம் பெயர்.
மூலவருக்கு வேதராஜன், வயலாலி மணவாளன் என்று பெயர்.வீற்றிந்த கோலத்தில் காட்சி தருவார்.

உற்சவருக்கு கல்யாண ரங்கநாதப் பெருமாள் என்று பெயர். தாயாருக்கு அமிர்தவல்லி என்ற திருநாமம்.

திருமங்கையாழ்வார் தம்முடைய கடைசிக் காலத்தில் திருக்குறுங்குடியில் இருந்தார்.
அப்போது தம்மைப் போலவே தங்கத்தினால் ஒரு சிலையை வடிக்கச் செய்து,
அதன் எதிரில் தான் நின்று கொண்டு, ‘‘வா” என்று அழைத்தார்.
அந்த சிலையும் திருமங்கையாழ்வார் அருகில் நடந்து வந்தது. அதனை ஆழ்வார் கட்டித் தழுவினார்.
ஆழ்வாரின் சக்தி முழுக்க அந்த சிலையில் இறங்கியது. பிறகு ஆழ்வார் பரம பதம் அடைந்தார்.
அந்த உற்சவமூர்த்தி தான் இன்றைக்கும் நாம் திருநகரியில் தரிசிக்கிறோம்.

ஆழ்வார்க்கு பரகாலன், கலியன், நீலன், கலி த்வம்சன், கவிலோக திவாகரன், சதுஷ்கவி சிகாமணி, ஷட் பிரபந்தக் கவி,
கலிவைரி, நாலுகவிப் பெருமாள், திருநாவீறுடைய பெருமான், மங்கையர்கோன், அருள்மாரி, மங்கைவேந்தன்,
ஆலிநாடன், அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள், கொற்றவேந்தன்,
கொற்றவேல் மங்கை வேந்தன் என்னும் பல பெயர்கள் உண்டு.

பிரஜாபதிக்கு மோட்சம் பெருமாள் கொடுக்கவில்லை. இது நடந்தது முதல் யுகமான கிருதயுகத்தில்.

அடுத்த திரேதாயுகத்தில் அந்த பிரஜாபதி உபரிசரவசு என்கிற மன்னனாகப் பிறந்தான்.
ஞானத்தைத் தேடி இந்தத் தலத்திற்கு தன்னுடைய புஷ்பக விமானத்தில் வந்தான்.
இத்தலத்தில் பறக்க முயன்றபொழுது அந்த விமானமானது மேற்கொண்டு பறக்காமல் நின்று விட்டது.
எனவே இத்தலத்தில் ஏதோ ஒரு புண்ணியம் இருக்கிறது என்று நினைத்து இறங்கி பெருமாளை நோக்கி மறுபடியும் தவம் செய்தான்..

இந்த யுகத்திலும் அவனுக்கு வீடுபேறு கிடைக்காததால், அடுத்த யுகமான துவாபர யுகத்தில்
சங்கபாலன் என்ற பெயரில், ஒரு மன்னனுக்கு மந்திரியாக இருந்தான் . அப்பொழுதும் தவம் செய்தான்.
பெருமாள் சொன்னார்.“உனக்கு அடுத்த பிறவி ஒன்று உண்டு. நீ கலியுகத்தில் இதே இடத்தில் பிறப்பாய்.
அப்பொழுது நாம் உமக்கு திருமந்திர உபதேசம் செய்து மோட்சம் தருவோம். உம்மால் இந்த உலகம் நன்மை அடையும்” என்று சொன்னார் .

அதைப் போலவே கலியுகத்தில் நீலன் என்கிற பெயரில் ஒரு படைத்தலைவனின் மகனாகப் பிறந்தார்.
திருவெள்ளக் குளம் என்கிற தலத்தில் அவதரித்த குமுதவல்லி நாச்சியாரைத் திருமணம் செய்ய விரும்பினார்.
ஆனால் குமுதவல்லி நாச்சியார், ‘‘ஓராண்டுக்கு தினமும் ஆயிரம் வைணவர்களுக்கு உணவு படைத்து வணங்கினால்,
உங்களுக்கு மனைவியாவேன்” என்கிற நிபந்தனை விதித்தார்.

நிபந்தனையை ஏற்றுக்கொண்ட நீலன், தன்னிடம் இருக்கின்ற பணத்தைக் கொண்டு,
வைணவர்களுக்கு உணவு படைக்கும் உத்தமமான தொண்டை நடத்திவந்தார்.
தினம் ஆயிரம் பேருக்கு உணவு படைக்கும் தொண்டைச் செய்ததால் கைப்பணம் கரைந்தது.
சோழ மன்னனுக்குச் செலுத்த வேண்டிய திறைப் பணத்தையும் செலவிட்டார். அப்பொழுதும் இந்த நிபந்தனை நிறைவேறவில்லை.

இனி பொருள் ஈட்ட வழி இல்லாத நிலையில், தனவந்தர்களிடம் பொருளைக் கவர்ந்து, நல்ல காரியத்திற்குப் பயன்படுத்த வேண்டும்
என்கிற உறுதிகொண்டு, வழிப்பறி செய்ய ஆரம்பித்தார்.
ஏற்கனவே இவருக்கு வீடுபேறு தரவில்லை என்று வருந்திய மகாலட்சுமித் தாயார், இந்த பிறவியிலாவது அவசியம்
திருமந்திர உபதேசம் செய்து மோட்சம் தர வேண்டும் என்று சொல்ல, அதனை ஏற்றுக் கொண்ட பெருமாள்,
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் திருவாலியில் திருமணத்தை முடித்துக் கொண்டு,
தம்பதியாக தம்மை மாற்றிக்கொண்டு, திருநகரிக்குச் செல்லும் வழியில் வேதராஜபுரம் என்ற இடத்தில் தங்கினார்.

அடுத்த நாள் அடியார்களுக்கு உணவளிக்க பொருள் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த திருமங்கை ஆழ்வார்,
தம்முடைய பரிவாரத்தோடு, திருமணத் தம்பதியரின் நகைகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டார்.
உடனே தன்னுடைய ஆடல்மா என்கிற குதிரையில் புறப்பட்டார். திருநகரிக்குத் திரும்பிக் கொண்டிருந்த தெய்வத் தம்பதியரை,
இரவு நேரத்தில் வழிமறித்தார்.தன்னுடைய வாளைக் காட்டி அவர்களைப் பயமுறுத்தி, நகைகளை எல்லாம் கொள்ளை அடித்தார்.

கடைசியில் எம்பெருமான் காலில் அணிந்திருந்த மெட்டியை அவரால் கழற்ற முடியவில்லை.
அதை விட்டுவிட்டுச் செல்வதா என்று நினைத்த நீலன், தன்னுடைய வலிமையான பற்களால் அந்த மெட்டியைக் கடித்து இழுத்தார்.
பாதத்தின் தொடுவுணர்ச்சி பரவசம் தந்தது. எம்பெருமான் புன்னகை பூத்தார். அவருடைய வலது செவியில் திருமந்திரத்தை ஓதினார்.

இந்த எட்டு எழுத்து மந்திரம் காதிலே விழுந்ததும், அதுவரை இருந்த உலகியல் சிந்தனைகள் எல்லாம் மறைந்தன.
நீலன் என்பவர் மறைந்தார். இப்போது புதியதாக ஒருவர் பிறந்தார். ஆழ்வாராக மாறினார்.
அவருடைய திரு நாவிலிருந்து பெரிய திருமொழி பாசுரத்தின் முதல் பாசுரம் வீறு கொண்டு எழுந்தது.திருமந்திரத்தின் சுருக்கம் பிரணவம்.

அதில் மூன்று எழுத்துக்கள் உண்டு. அ, உ, ம என்கிற மூன்று எழுத்துக்களின் தொகுப்பு தான் இந்த உற்சவத்தில் நடைபெறுகிறது.
அதில் “அ” என்கிற எழுத்து கல்யாண ரங்கநாதரைக் குறிக்கும்.
“உ” என்ற எழுத்து அந்த கல்யாண ரங்கநாதரின் பக்கத்தில் இருக்கக்கூடிய மகாலட்சுமியான தாயாரைக் குறிக்கும்.
‘‘ம’’ என்ற எழுத்து ஜீவாத்மாவாகிய திருமங்கையாழ்வாரைக் குறிக்கும்.

இந்த மூன்று அட்சரச் சேர்க்கைதான் பங்குனி உத்திர இரவிலே நடக்கிறது.அ, உ, ம -இவை மூன்றும் இணைந்தது
தான் “ஓம்” என்கிற ப்ரணவ சப்தம். அந்த சப்தத்தின் விரிவுதான் எட் டெழுத்து மந்திரம்.
அந்த எட்டெழுத்து மந்திரத்தின் விரிவுதான் இரண்டாவது மந்திரமாகிய த்வய மகா மந்திரம்.
அந்த மந்திரத்தின் விரிவானது சரம ஸ்லோகம். இவை மூன்றின் விரிவுதான் சகல உபநிடதங்கள் .
அந்த உபநிடதங்களின் விரிவுதான் சகல வேதங்கள்.

அதனால் தான் மணவாள மாமுனிகள், இந்த இடத்தில் நடந்த அந்த அதிசயத்தை சொல்லுகின்ற பொழுது,
தேவர்களின் ராஜாவான வேதராஜன்,
மந்திரங்களின் ராஜாவான திரு எட்டெழுத்து மந்திரத்தை,
அரசர்களின் அரசனான திருமங்கை ஆழ்வாருக்கு, மரங்களுக்கு
அரசனான ஒரு அரசமரத்தடியில், உபதேசித்தார் என்பதால்
இந்த தலத்திற்கு வேதராஜபுரம் என்று வியந்து பாடுகிறார்.

ஈதோ திருவரசு!
ஈதோ மணங்கொல்லைஈதோ எழிலாலி என்னுமூர் –
ஈதோதான்வெட்டுங் கலியன் வெருட்டி நெடுமாலின்எட்டெழுத்தும் பெற்ற இடம்.

இந்த நிகழ்ச்சிதான் திரு வேடுபறி உற்சவமாக, ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில்,
இரவு 12 மணியளவில் இத்தலத்தில் நடைபெறுகிறது. லட்சக்கணக்கான மக்கள் அந்த உற்சவத்தைக் காண்கின்றனர்.

சாதாரண மனித எண்ணங்களும், ஆசைகளும் கூடி, உலகியல் சுகபோகத்தில் இருந்த நீலன் என்கிற ஒரு மனிதன்,
எம்பெருமானால், திரு எட்டெழுத்து மந்திரம் உபதேசிக்கப் பெற்று, ஆழ்வாராக – சாதாரண பிறப்பிலிருந்து
புதிய பிறப்பிற்கு மாறிய காட்சிதான்- கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளாக, இந்த பங்குனி உத்திர நன்னாளில்,
திருவாலி திருநகரியில் நடைபெற்று வருகிறது.

இந்த உற்சவத்தைக் காணுகின்ற நமக்கும் அந்த ஞானம் பிறக்கும் என்பதால் அடியார்கள் எல்லாம் இந்த உற்சவத்தைக் காண்கிறார்கள்.
உற்சவத்தைக் கண்டு களிக்க நமக்கு இயலாவிட்டாலும், இந்தக் கதையையும் இந்தக் கதையின் சாரத்தையும்
தெரிந்து கொள்வதன் மூலம், நமக்கும் எம்பெருமானுடைய அருளும் ஆழ்வாரின் அருளும் கிடைக்கும்.

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீமான் கண்ணபிரான் முதலியார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும் அர்ச்சாவதாரமும் -ஸ்ரீ உ வே ஸூ தர்சன ராமானுஜ ஸ்வாமிகள் –

April 20, 2021

ஸ்ரீ: ஸ்ரீமத்யை கோதாயை நம: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம:

மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்று
கோலிப் பதிவிருந்த கொற்றவனே – வேலை
அணைத்தருளும் கையா லடியேன் வினையைத்
துணித்தருள வேணும் துணிந்து

எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஐந்து நிலைகள்
ஸ்ரீயபதியான ஸர்வேஶ்வரன் எழுந்தருளியிருக்கும் நிலைகள் ஐந்து. அவற்றுள் பரத்வமாவது
(1), ஒளிக் கொண்ட சோதியாய் நித்ய முக்தர்களுக்குத் தன்னை அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு பரமபதத்தில்
எழுந்தருளியிருக்கும் இருப்பாகும். இப்படிப்பட்ட பரமபதத்தின் லக்ஷணங்களை ஸ்ரீ பராசரபட்டர்

யத்தூரே மநஸோ யதேவ தமஸ:பாரேய தத்யத்புதம்
யத் காலா தபசேலிமம் ஸுரபுரீ யத் கச்சதோ துர்கதி: |
ஸாயுஜ்யஸ்ய யதேவ ஸுதிரதவா யத் துர்க்ரஹம் மத் கிராம்
தத்விஷ்ணோ: பரமம் பதம்……. * (ஸ்ரீ குண கோ – 21) என்கிற ஶ்லோகத்தில் அருளினார்.

[எந்த இடம் மனத்திற்கு தூரத்தில் உள்ளதோ, எந்த இடமே ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டதோ எந்த இடம் மிகவும் வியக்கத்தக்கதோ,
எந்த இடம் காலத்தினால் முதுமை அடையாததோ, எந்த இடத்தை நோக்கி போகின்றவனுக்கு தேவர்களின் நகரமான
அமராவதியும் நரகமோ எந்த இடமே முக்தி நிலைக்கு பிறப்பிடமோ , இறைவனான விஷ்ணுவின் மேலான ஸ்தானம் ஆகிற பரமபதம்].

திருமாமணிமண்டபத்தில், நித்ய முக்தர்களுக்கு தன்னுடைய அழகை எல்லாம் காட்டி –
எப்படி கடலானது அலையெடுத்த வண்ணம் இருக்கிறதோ அதே போன்று தன்னுடைய திருக்கல்யாண குணங்களை
அவர்களுக்குக் அனுபவிக்கக் கொடுத்து கொண்டு தன்னுடைய செங்கோல் ஆட்சி ஒரு குடைக்குக் கீழ் நடத்துகிற இடம்.
இதனை பட்டர் ஸ்ரீ குணரத்ன கோசத்தில்
ஸ்புரது பரிபணாரத்நரோசிர் விதானம் விஸ்தீர் யாநந்த போகம் ததுபரி நயதா விச்வமே காத பத்ரம்
(படங்களின் ரத்நங்களினுடைய ஒளியாகிற மேல் கட்டியை உடையதுமான ஆதிசேஷன் திருவுடம்பை விரித்து
அதன்மீது வீற்றிருந்து உலகை ஒருகுடைக்கீழாம்படி நடாத்துகிறவனும்) என்றருளினார்.

வ்யூஹமாவது (2) பரமபத நாதனிடமிருந்து உத்பத்தியான வாஸுதேவ, ஸங்கர்ஷண, ப்ரத்யும்ந, அநிருத்த ரூபங்கள்.
இந்த ரூபங்களை உடையவனாய் ஆமோத ப்ரமோத ஸம்மோத லோகங்களிலும், க்ஷீராப்தியிலும் எழுந்தருளியிருக்கும் நிலை.
ப்ரஹ்மாதிகளின் குறைகளைக் கேட்பதற்கும், ஸனத்குமாரர்கள் முதலானோர்கள் கிட்டி அனுபவிப்பதற்காகவும் இருக்கும் நிலை.

விபவமாவது(3) அநிருத்தனிடத்தில் இருந்து உண்டான இராம க்ருஷ்ணாதி அவதாரங்கள்.
இவை பூர்ணாவதாரங்கள், ஆவேசாவதாரங்கள் என இருவகைப்படும்.
பூர்ணாவதாரங்கள் – இராம க்ருஷ்ணாதி அவதாரங்கள்;
ஆவேசாவதாரங்கள் – பரசுராம, பலராமாதி அவதாரங்கள்; பூர்ணாவதாரங்கள்
ஜன்ம கர்ம ச மே திவ்யம் (கீதை – 4-9) [அர்ஜுனா! என்னுடைய அப்ராக்ருதமான பிறப்பையும், சேஷ்டிதங்களையும்
எவன் இப்படி உண்மையாக அறிகிறானோ, அவன் தேஹத்தை விட்டு மறுஜன்மம் அடையான்; என்னை அடைகிறான்] என்கிறபடி
விக்ரஹங்கள் (திருமேனிகள்) அப்ராக்ருதம்.

அந்தர்யாமித்வமாவது (4) சேதனாசேதனங்களில் எழுந்தருளியிருக்கும் இருப்பு.
இதனைக் குறிக்கிற ஶ்ருதியானது “ய: ப்ருதிவ்யாம் திஷ்டந் ய: ஆத்மநி திஷ்டந்” என வஸ்துக்கள் தோறும்
எம்பெருமான் அந்தர்யாமியாய் இருக்கின்றான் என ஒதிற்று.
இது தன்னை திருமழிசைப் பிரான் * நின்றியங்கும் ஒன்றலா உருக்கள் தோறும் ஆவியாய் ஒன்றி உள்கலந்து நின்ற இன்ன தன்மை *
(நின்று – நிலைபேராதே நிற்கும் மலைமுதலிய ஸ்தாவர பதார்த்தங்களைச் சொல்லுகிறது;
இயங்கும் – அசையக்கூடிய பசுபக்ஷ்யாதி ஜங்கம பதார்த்தங்களைச் சொல்லுகிறது,
இப்படிப் பலவகைப்பட்ட சரீரங்கள் தோறும் ஆத்மாவாய் பொருந்தி நின்ற உன்னுடைய ஸ்வபாவம்) என்றருளினார்.
எம்பெருமான் இப்படி எழுந்தருளியிருப்பது, யோகிகளின் ஹ்ருதயத்தில் அவனை த்யானிப்பதற்காக.

அர்ச்சையாவது (5) * அர்ச்சாயாம் ப்ரதிமா பூஜா * என்கிற நிகண்டுவின்படி தனது பக்தர்களின்
திருவாராதனத்திற்காவும், உஜ்ஜீவனத்திற்காவும், தான் பரிபூர்ணனாய் நிற்கும் நிலை.
இது தன்னை வானிட்ட கீர்த்தி வளர் கூரத்தாழ்வான் திருக்குமாரரும், ஸ்ரீரங்கேசரின் புரோஹிதருமான பட்டர்
ஸ்ரீ ரங்கராஜஸ்தவத்திலே
ஆஸ்தாம் தே குணராஶிவத் குணபரீவாஹாத்மநாம் ஜன்மநாம் ஸங்க்யா பௌமநிகேதநேஷ்வபி குடீகுஞ்ஜேஷு ரங்கேஶ்வர | அர்ச்ச்யஸ்ஸர்வஸஹிஷ்ணுரர்ச்சகபராதீநாகிலாத்மஸ்திதி: ப்ரீணீஷே ஹ்ருதயாலுபிஸ்தவ ததஶ்ஶீலாஜ்ஜடீபூயதே ||* (ஸ்ரீ ரங். ஸ்த் – உத் 74) என்றருளினார்.

ரங்கேஶ்வர – பெரிய பெருமாளே!; தே குணராஶிவத் – தேவரீருடைய திருக்கல்யாணகுணக் கூட்டங்கள் போல;
குணபரீவாஹாத்மநாம் – அந்த திருக்கல்யாண குணங்களை காரணங்களாகவும், அவற்றைப் ப்ரகாஶிப்பவைகளாகவும்
இருப்பதினாலே அந்த திருக்குணங்களுக்கு ப்ரவாஹங்களாயிருக்கிற; ஜன்மநாம் – திருவவதாரங்களுடைய;
ஸங்க்யா – எண்ணித் தலைக்கட்டி முடிக்கமுடியாமையானது;

அஜாயமானோ பஹுதா விஜாயதே * (தை. பு 21) (பிறப்பில்லாதவன் பலபடியாகப் பிறக்கிறான்),

பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி * (கீதை – 4-5) இத்யாதி ப்ரமாணங்கள் இதனை உணர்த்தும்.
ஆஸ்தாம் – இருக்கட்டும். இதனால் இவருக்கு அர்ச்சையில் உள்ள ஆதரத்தினை உணர்த்தினாராயிற்று,
அர்ச்சாவதாரத்தை அனுபவித்தால் தேவரீர் எவ்வளவு திருவவதாரங்கள் எடுத்த போதிலும் அவற்றில் ஊற்றமில்லை என்றபடி;
த்வம் – தேவரீர்; பௌமநிகேதநேஷ்வபி – இப்பூமண்டலத்திலுள்ள ஆலயங்களிலும்;
குடீகுஞ்ஜேஷு – க்ருஹங்களிலும் ஆச்ரமங்களிலும்; அல்லது பௌமநிகேதநேஷ்வபி – திருவரங்கம் முதலான கோயில்களிலும்;
குடீகுஞ்ஜேஷு – திருக்குறுங்குடி, திருக்கண்ணங்குடி, திருவெள்ளியங்குடி, முதலான குடிகளிலும்;
அர்ச்ச்ய இதி – அர்ச்சாவதாரமாய் எழுந்தருளி * தன்னை அநாதரிக்கிறவர்களை தான் ஆதரிப்பவராயும் *
ஸாக்ஷாதபசாரம், உபசாராபதேஶமான அபசாரம் (உபசாரம் செய்ய வேண்டும் என்றாரம்பித்துப் பண்ணும் அபசாரம்)
ஆகியவற்றை ஸஹிக்கையே ஸ்வபாவமாகக் கொண்டும், ப்ரீணீஷே – உகந்து எழுந்தருளுகின்றீர்;
(அணியழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – அழகிய திருவழுந்தூரில் வந்துநின்று
(அத்தலத்தில் வாழ்க்கையையே பெறாப் பேறாக நினைத்து) அகமகிழ்கின்ற நித்யஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானே);
தத: – அப்படிப்பட்டதான; தவ ஶீலாத் – தேவரீருடைய ஶீலகுணத்தினால்; ஹ்ருதயாலுபி: ஜடீபூயதே – ஸஹ்ருதயர்கள் மோஹிக்கிறார்கள்.
இங்கு ஸஹ்ருதயர்கள் என்றது ஆழ்வார்களை. மயர்வற மதிநலம் அருளப்பெற்று ஸர்வஜ்ஞரான ஆழ்வார்கள்,
இந்த ஶீல குணத்தை அநுஸந்தித்து மோஹிக்கிறார்கள்.

இப்படி ஐந்து ப்ரகாரங்கள் இருந்தாலும் அவற்றில் ஸ்தல பேதமேயொழிய வஸ்து பேதமில்லை என்பதினை
ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் தம்முடைய ஆசார்ய ஹ்ருதயத்தில்,

” பகலோலக்கமிருந்து கருப்புடுத்துச் சோதித்து காரியம் மந்த்ரித்து வேட்டையாடி ஆராமங்களிலே விளையாடும் ராஜநீதி
யாதுஞ்சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்தவென்னும் மூன்று முடிக்குரிய இளவரசுக்கு விண்மீதென்கிற ஐந்திலும் காணலாம் ” (157)
என்ற சூர்ணிகையில் அருளினார்.

—————

கலியனும் அர்ச்சாவதாரமும்
ஸ்ரீய பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆழ்வார்கள்.
அவர்களுள் இறுதியாக, ஆசார்ய பரம்பரையிலே ஸ்ரீமத் வரவரமுனிகள் போலே, திருவவதாரம் பண்ணியருளியவர் திருமங்கை ஆழ்வார்.
மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற அவதரித்த * என்கிற உபதேசரத்தினமாலை ஸ்ரீஸுக்திப்படியே,
நான்கு வேதங்களின் ஸாரமாக நம்மாழ்வார் அருளிச் செய்த நான்கு திவ்யப்ரபந்தங்களுக்கு,
இவ்வாழ்வாருடைய ஆறு திவ்யப்ரபந்தங்கள் ஆறு அங்கங்களாம்.
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள் * (ஆ. ஹ். 36) என்னும் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகை கொண்டு இவர் ப்ரபாவம் அறியலாம்.

நம்மாழ்வாரை * க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் * என்றார் ஸ்ரீ பராசர பட்டர்.
ஸ்வாமி மணவாள மாமுனிகளை * யதீந்த்ர ப்ரவணர் * (எம்பெருமானார் மீது அளவற்ற ப்ரேமை கொண்டவர்) என்றான் ஸ்ரீ அழகிய மணவாளன்.
அதே போன்று * அர்ச்சாவதார ப்ராவண்யமே * வடிவெடுத்தவர் யார் என்று கேட்டால் – அது திருமங்கை ஆழ்வார் ஒருவரே ஆவர்.
நம்மாழ்வார் * செய்ய பரத்துவமாய் சீரார் வ்யூஹமாய் துய்ய விபவமாய்த் தோன்றிவற்றுள் எய்துமவற்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான் * என்று உபதேசிப்பது அர்ச்சாவதார விஷயமாய் இருந்தாலும்,
அதை அனுஸரித்துக் காட்டியவர் திருமங்கை ஆழ்வாரே ஆவர்.
நம்மாழ்வார் அப்பதிகந்தன்னிலேயே (அர்ச்சாவதார ஏற்றம் சொல்லும் பதிகந்தன்னில்)
* அன்றுதேர்கடவிய பெருமான்கனைகழல் காண்பதென்றுகொல் கண்களே? * என்று தான்
க்ருஷ்ணாவதாரத்தில் ஆதரத்துடன் இருப்பதைக் காட்டினார்.
அயர்வறுமமரர்களுக்கு இனியனாய், நாகபர்யங்கங்கத்திலே சயனிப்பவனாயிருந்துவைத்து வஸுதேவருடைய திருமாளிகையிலே
அவதரித்தவனாய் எனக்குப் பிராணனாய், துரியோதனன் முதலானோர் படையொடும் முடியும்படியாக
பாண்டவ பக்ஷபாதியாயப் பார்த்தஸாரதியாயிருந்த எம்பெருமானுடைய திருவடிகளை என்னுடைய கண்கள் ஸேவிக்கப்பெறுவது என்றைக்கோ என்கிறார்.

பேயாழ்வார் எம்பெருமானை அமுதம் என்றார் – * மருந்தும் பொருளும் அமுதமும் தானே * எம்பெருமானை அமுதம் என்றது –
இஷ்டங்களைப் பெறுவிப்பதற்கும் அநிஷ்டங்களைத் தொலைப்பதற்கும் உபாயமாகநிற்கும் மட்டுமேயன்றி
ஸ்வயம் போக்யமாயும், ஆனதுபற்றியே ப்ராப்யமாயுமிருக்கும் என்றபடி.

பரத்வத்திலே அமுதமாயிருப்பது * மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது * ஆகும் –
நித்யமாய் மூவகைப்பட்டதான ஆத்மவர்க்கத்துக்கும் அப்பால் பரமபத்திலே (உபயவிபூதிக்கும்) முதல்வனாய்க் கொண்டு
எழுந்தருளியிருப்பவனும் (ஸ்வரூபரூபகுணங்களில்) அளவிடமுடியாதவனும் அருமையான அம்ருதம் போன்றவன்.

* நரம்கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே, அங்கண்மா ஞாலத் தமுது.* என்றிருப்பது விபவதாரங்களாகிற அமுது.
நரசிங்கவுருக்கொண்டு பிளந்தொழிந்த அழகனுடைய இணையடியே அழகிய இடமுடைத்தான இம்மாநிலத்தில் போக்யமான அம்ருதமாகும்.

அந்தர்யாமி தஶையிலே அமுதமாயிருப்பது * கடிசேர் நாற்றத் துள்ளாலை * என்பது.
கடிசேர் நாற்றத்துள்ளாலை – விலக்ஷணான பரிமளங்களெல்லாம் சேர்ந்த தேனிலுள்ள சுவையினுடைய
கோது கழிந்த (குற்றங்கள் கழிந்து) ஸாரமான பாகம் போலிருக்கிற விச்சேதமற்று (தடையின்றி) நித்யமான ஆனந்தமயனாய் இருப்பவன்.
இப்பாசுரத்தில் ஆழ்வார் அனுபவிப்பது அந்தர்யாமி தத்வத்தை என்பது குறித்துக்கொள்ளத் தக்கது.

இப்படி எம்பெருமான் மற்ற தஶைகளில் அமுதமாயிருந்தாலும், திருமங்கை ஆழ்வார் உகப்பது
* திருமூழிக்களத்து விளக்கே – இனியாய தொண்டரோம் பருகின்னமுதாய கனியே * என்று அர்ச்சாவதார நிலையையேயாம்.
திருமூழிக்களமென்னுந் திருப்பதியில் விளக்குப்போல் விளங்குமவனே, பரமபோக்யனே! தொண்டரான அடியோங்கள்
பானம் பண்ணுதற்கு உரிய இனிய அமுதமானவனே! கனிபோன்றவனே! ; ஸ்ரீவைஷ்ணவர்களாகிய அடியோங்கள் பருகும்
அம்ருதமாய் அப்போதே எடுத்து நுகரலாம்படி கனி போன்று இருக்கிறவனே!

திருமங்கை ஆழ்வாரை ஸ்ரீரங்கநாதன் விஷயீகரிக்கத் திருவுள்ளம் பற்றி, வாய்த்த திருமணங்கொல்லையினில்
அவருக்கு திருமந்த்ரம் அருளிச் செய்த பின்பு, ஆழ்வார் தம்முடைய நிலைக்குச் சேராதவைகளை வெறுத்து ஒதுக்கி,
அத்திருமந்த்ரம் திருவவதரித்த இடமான திருவதரி தொடங்கி அர்ச்சாவதார எம்பெருமான்களை மங்களாஸாஸனம் செய்யத் தொடங்கினார்.
திருமந்த்ரம் விளைந்த இடமான திருப்பிரிதியை மங்களாஸாஸனம் செய்தருளின பின்பு, அந்த திருமந்த்ரம் உள்ளே கொண்ட
வஸ்துவான அர்ச்சாவதார எம்பெருமான்களை மங்களாஶாஸனம் செய்தருளத் தொடங்கி அருளிச் செய்கிறார்.

* மந்த்ரத்திலும், மந்த்ரத்திற்கு உள்ளீடான வஸ்துவிலும், மந்த்ரப்ரதனான ஆசார்யன் பக்கலிலும்
ப்ரேமம் கனக்க உண்டானால் கார்ய கரமாவது * என்னும் மூமுக்ஷுப்படி சூர்ணிகை நினைக்கத் தக்கது.
வெறும் தேஸங்களாக இருந்த உகந்தருளின நிலங்களைத் திவ்யதேஸங்களாக ஆக்கித் தந்தவர்கள் ஆழ்வார்கள்.

திருமங்கையாழ்வார் மொத்தம் 86 எண்பத்தாறு திவ்யதேஶங்களை மங்களாஶாஸனம் செய்துள்ளார்.
இவற்றுள் கலியன் மட்டுமே மங்களாஶாஸனம் செய்துள்ள திவ்யதேஶங்கள் நாற்பத்து ஏழு (47).
இந்த திவ்ய தேஶங்கள் பிற ஆழ்வார்களால் மங்களாஶாஸனம் செய்யப்படாமல் இவர் மட்டுமே மங்களாஶாஸனம் செய்துள்ளார்.
இங்ஙனம் ஆழ்வார் மங்களாஶாஸனம் செய்து அருளவில்லை எனில் திவ்யதேஶங்கள் எண்ணிக்கை 108 ஆக இருந்திராது!
ஆழ்வார் தாமும் முதல் பத்தில் திருமந்த்ரத்தினைப் பற்றி அருளிச் செய்த பின்பு
இரண்டாம் பதிகத்தில் திருப்பிரிதி தொடங்கி வரிசையாக
வடநாடு, தொண்டைநாடு, சோழநாடு, பாண்டிய நாடு, மலை நாடு என மங்களாஸாஸனம் அருளியுள்ளார்.

திருமங்கை ஆழ்வார் மட்டும் மங்களாஶாஸனம் செய்த திருப்பதிகள்
திருஉறையூர்
திருக்கரம்பனூர்
திருபுள்ளம்பூதங்குடி
திருஆதனூர்
திருதேரழுந்தூர்
திருசிறுபுலியூர்
திருசேறை
திருதலைச்சங்கநாண்மதியம்
திருக்கண்டியூர்
திருநாகை
திருநறையூர்
திருநந்திபுரவிண்ணகரம்
திருஇந்தளூர்
திருக்காழிசீராம விண்ணகரம்
திருக்கூடலூர்
திருக்கண்ணங்குடி
திருக்கண்ணமங்கை
திருவெள்ளியங்குடி
திருமணிமாடக்கோயில்
திருவைகுந்தவிண்ணகரம்
திருஅரிமேய விண்ணகரம்
திருத்தேவனார்தொகை
திருவண்புருடோத்தமம்
திருச்செம்பொன்செய் கோயில்
திருத்தெற்றியம்பலம்
திருமணிக்கூடம்
திருக்காவளம்பாடி
திருவெள்ளக்குளம்
திருப்பார்த்தன்பள்ளி
திருமெய்யம்
திருப்புல்லாணி
திருவஹீந்த்ரபுரம்
திருநீரகம்
திருநிலாத்திங்கள்துண்டம்
திருக்காரகம்
திருக்கார்வானம்
திருக்கள்வனூர்
திருபவளவண்ணம்
திருப்பரமேச்சுர விண்ணகரம்
திருப்புட்குழி
திருநின்றவூர்
திருஇடவெந்தை
திருசிங்கவேள்குன்றம்
திருநைமிசாரண்யம்
திருப்பிரிதி

திருநெடுந்தாண்டகத்தின் அவதாரிகையிலே, ஆழ்வார்களின் ஊற்றத்தை அருளிச் செய்யும் விதமாக
(ஆழ்வார்கள் ஒவ்வொருவரும் எந்தெந்த நிலையின்லே ஊன்றியிருப்பார்கள்) ,
இவரது அர்ச்சாவதார ப்ராவண்யத்தைக் காட்டியருளுகிறார் ஸ்ரீ பெரிய ஆச்சான் பிள்ளை.

முதலாழ்வார்கள்–பரத்வம்
திருமழிசைப்பிரான்–அந்தர்யாமி தஶை
குலசேகரப் பெருமாள்–ராமாவதாரம்
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள்–க்ருஷ்ணாவதாரம்
தொண்டரடிப்பொடிகள், திருப்பாணாழ்வார்–திருவரங்கம் பெரிய கோவில்
திருமங்கையாழ்வார்–அர்ச்சாவதாரம்

இது தன்னைக் கலியன் திருநெடுந்தாண்டகத்தில் ஒரு பாசுரம் கொண்டு பார்க்கலாம்.

கல்லெடுத்துக் கன்மாரி காத்தாய்! என்றும்
காமருபூங் கச்சியூரகத்தாய்! என்றும்
வில்லிறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாய்! என்றும்
வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே! என்றும்
மல்லடர்த்து மல்லரையன் றட்டாய்! என்றும்
மாகீண்ட கைத்தலத்தென் மைந்தா வென்றும்
சொல்லெடுத்துத் தன்கிளியைச் சொல்லே யென்று
துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின் றாளே. (13)

ராஜகுமாரர்கள் ஒவ்வொரு பிடி சோற்றுக்கும் நெய் கொண்டு புஜிக்குமா போலே, இவ்வாழ்வார் தாமும் பாசுரத்தின்
அடிதோறும், காமருபூங் கச்சியூ ரகத்தாய்! என்றும் – வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே! என்றும் – அர்ச்சையை அனுபவிக்கிறார்.
இதே போன்று அருளிச் செய்யப்பட்ட * மண்ணளந்த தாளாளா! தண்குடந்தை நகராளா! வரையெடுத்த தோளாளா! *,
முதலானவைகள் நோக்கத்தக்கது.
இங்கு ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீ ஸூக்தி * அல்லாத ஆழ்வார்களுக்கும் இவர்க்குமுண்டான வாசி இதுவிறே.
அவர்கள் மேன்மையை அநுபவிக்கும் போது பராவஸ்தையைப் பேசுவர்கள்;
அந்நீர்மையை ஸாக்ஷாத்கரிக்கைக்காகத் திருப்பதிகளிலே இழிவர்கள்;
இவர் மேன்மையை அநுபவிப்பதும் திருப்பதிகளிலே, நீர்மையை அநுபவிப்பதும் திருப்பதிகளிலே; அத்தை ஸாக்ஷாத்கரிப்பதும் திருப்பதிகளிலே.
* மற்றைய ஆழ்வார்களுக்கும் இத்திருமங்கை ஆழ்வாருக்கும் உள்ள வாசி (வேறுபாடு) இதுவேயாகும்.
அவர்கள் எம்பெருமானது மேன்மையை அனுபவிக்க வேண்டுமானால் பரத்வத்திலே இழிவார்கள்.
எம்பெருமானது நீர்மையை அனுபவிக்க வேண்டுமானால் அவனது அவதாரங்களைப் பேசுவார்கள்.
அந்த நீர்மையை நேராகக் காணவேண்டில் மட்டுமே அர்ச்சாவதாரத்தைப் பேசுவார்கள்.
ஆனால் திருமங்கை ஆழ்வாரோ மேன்மையை அனுபவிப்பதும் திருப்பதிகளிலே; நீர்மையை அனுபவிப்பதும் திருப்பதிகளிலே;
அதை நேரே கண்டனுபவிப்பதும் திருப்பதிகளிலே.

மேன்மையை அர்ச்சையிலே அனுபவித்தது
யாவருமா யாவையுமாய் எழில்வேதப் பொருள்களுமாய் – மூவருமாய் முதலாய மூர்த்தியமர்ந் துறையுமிடம்
[சேதனப் பொருள்கள் எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய், அசேதனப் பொருள்கள் எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய்,
அழகிய வேதங்களின் அர்த்தமும் தானாய், (பிரமன், விஷ்ணு, ருத்ரன் என்று) மூன்று வடிவுகள் கொண்டவனும் தானேயாய்,
முழுமுதற் கடவுளான, எம்பெருமான் அமர்ந்து உறையும் இடம்- திருத்தேவனார்தொகையே] (பெரி திரு 4-2-1)

வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும் தானாய வெம்பெருமான் தலைவனமர்ந் துறையுமிடம்
[நித்ய விபூதியும் லீலாவிபூதியும் அவ்வவ்விடங்களிலுள்ள பல வகைப்பட்ட ஜீவராசிகளும் ஆகிய அவையெல்லாம்
தானேயாயிருக்கப்பெற்ற எம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் – திருத்தேவனார்தொகையே] (பெரி திரு 4-2-2)

உலகுண்ட பெருவாயரிங்கே வந்து, என் பொருகயல்கண்ணீரரும்பப் புலவி தந்து புனலரங்கமூரென்று போயினாரே
[பிரளயகாலத்தில் உலகங்களை யெல்லாம் அமுதுசெய்த பெரிய திருவாயையுடைய வரும்,
நீர்வளம் பொருந்திய திருவரங்கம் தம்மூர் ] (திருநெடுந்தாண்டகம் – 24)

அண்டமுமெண்டிசையும் நிலனும் அலைநீரொடு வானெரி கால்முதலா உண்டவன் [அண்டங்களையும் எட்டுத்திசைகளையும் பூமியையும்
கடல்களையும் ஆகாசத்தையும் அக்நியையும் காற்றையும் இவை முதலான மற்றும் பல பொருள்களையும் பிரளயம் கொள்ளாதபடி
திருவயிற்றிலே வைத்து நோக்கின எம்பெருமானுக்கு இடமாவது பரமேச்சுரவிண்ணகரம் ] (பெரி திரு 2-9-4)

நன்மான வொண்சுடரே நறையூர்நின்ற நம்பீ
நன்மானவொண்சுடரே! = விலக்ஷணமாய் அளவிடமுடியாத அழகிய சுடரையுடையவனே!, என்றவாறே
இப்படிப்பட்ட திருவுருவம் பரமபதநாதனுக்கே யன்றேவுள்ளது’ என்று சிலர் நினைக்கக்கூடு மென்றெண்ணி
உடனே ‘நறையூர் நின்ற நம்பீ!’ என்கிறார்] (பெரி திரு 7-2-3)

நீர்மையை அர்ச்சையிலே அனுபவித்தது
பின்னானார் வணங்கும் சோதி – அவதாரத்திற்குப் பிற்பட்டவர்கள் ஆச்ரயிக்கத்தக்க சோதியாக திருமூழிக்களம் முதலிய திருப்பதிகளிலுறைபவனே!
பரத்துவத்திலும் வ்யூகத்திலும் விபவங்களிலும் அந்தர்யாமித்துவத்திலும் அந்வயிக்கப் பெறாதவர்கள் இங்குப் பின்னானார்’ எனப்படுகின்றனர்.
அன்னவர்கட்காகத் திருமூழிக்களம் முதலான அர்ச்சாவதார நிலங்களிலே எழுந்தருளியிருப்பவனே!’ என்கின்றார் ஆழ்வார்.
திருமூழிக்களமென்றது உபலக்ஷணமாய் அர்ச்சாவதார ஸாமாந்ய வாசகமாய் நிற்கும்.
திருமூழிக்களமென்றது மற்றைய அர்ச்சாவதாரங்களுக்கு உபலக்ஷணம். பின்னானார் – அவதாரத்திற்குப் பிற்பாடர்;
வணங்கும் சோதி – ஆஶ்ரயிக்கக்கூடிய ஜ்யோதிர்மயமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையவனே.
நம்மாழ்வாரும் ‘திருமூழிக்களத்துறையுமொண்சுடர்‘ என்றது குறிக்கொள்ளத்தக்கது.

எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களுள் ஸௌலப்யம் சிறந்தது;
அத்திருக்குணம் இருட்டறையில் விளக்குப்போலே பிரகாசிப்பது அர்ச்சாவதாரத்திலே;
ஆகையால் ‘ஒண்சுடர்‘ என்றும் ‘விளக்கு‘ என்றும் ‘சோதி‘ என்றும் அருளினார் என்று உணரவேண்டியது.
இங்கு * இருட்டறையில் விளக்குப் போலே ப்ரகாஶிப்பது இங்கே * என்னும் பிள்ளைலோகாசார்யர் ஸ்ரீஸூக்தி நினைக்கத்தக்கது.

திருக்கண்ணபுரத்து அம்மான்
திருக்கண்ணபுரத்து அம்மான் என்றால் திருக்கண்ணபுரத்திலே உறையும் ஸ்வாமி என்றர்த்தம்.
இங்கு ஆழ்வார் திருக்கண்ணபுரத்து அம்மான் என்றழைத்ததற்கு ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை அற்புதமாகத் தாத்பர்யம் அருளிச் செய்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமானாகிற தத்வம் ஸர்வஸ்மாத்பரனாயிருக்கும். அதனை அனுபவிப்பவர்களும் நித்யமுக்தர்கள்.
அவதாரங்களில் மநுஷயத்வே பரத்வமாயிருக்கும். அனுபவிப்பதும் விதுரர், சபரி போன்ற ஒரு சிலருக்காயிருக்கும்.
பரகால நாயகியானவள் அர்ச்சாவதராத்தில் பரத்வம் உட்பட அனைத்தையும் அறிந்தாள்.
இதனை ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை –
” அவதாரங்களிற் காட்டில் அர்ச்சாவதாரத்தில் பரத்வமும் அகப்பட அறிந்தாளென்று தோற்றியிராநின்றது “.
இதனை ஸ்வாமி அருளிய இப்பதிகத்தின் அவதாரிகையோடு ஒப்பிட்டு நோக்க வேண்டும்.
அதன் சாராம்சம் – எம்பெருமானோடு அனுபவிக்க மாட்டாமையாலே தளர்ந்து பிராட்டி தஶையினை அடைந்து,
திருத்தாயார் வாயாலே பேசுவதாக அமைந்தது இத்திருமொழி. வேதாந்தங்களை அதிகரிக்காது ஒரு சில ஆசார்யர்களிடம் கேட்டு
எல்லாம் தெரிந்தவன் போல் இருந்த ஶ்வேதகேதுவை நோக்கி “ஸ்தப்தோஸி” (எல்லாம் அறிந்தவன் போன்று நின்றாய்!) என்று
அவனுக்கு ப்ரஹ்மமே ஜகத்காரணம் என்று அறிவுறுத்துவதற்காக வினவினார் அவனது தந்தையான உத்தாலகர்.
அவன் அறியாததை அறிவிப்பதற்காக தந்தை வினவினார்.
இங்கு இவள் பேச்சுக்களைக் கேட்டால் இவள் பரத்வத்தில் ஈடுபட்டிருக்கவில்லை; விபவத்தில் ஈடுபட்டிருக்கவில்லை;
வ்யூஹத்திலும் ஈடுபட்டிருக்கவில்லை; அர்ச்சாவதாரத்தில், அதிலும் திருக்கண்ணபுரத்தில் தான் ஈடுபட்டிருக்கிறாள்.
இங்கு கலியனது திருத்தாயார் ஸர்வாதிகனான ஸர்வேஶ்வரனையும் நன்றாக அர்ச்சையிலே அறிந்திருக்கிறாள் என்று தானறிந்ததைச் சொல்லுகிறாள்.

திருஇந்தளூர் விசேஷானுபவம்
திருமங்கையாழ்வாரின் திருஇந்தளூர் மங்களாஶாஸனம் அதிவிலக்ஷணமானது. அர்ச்சாவரதார பெருமையை இப்பதிகத்தில்
ஆழ்வார் அனுஸந்தித்தது சிறிது அனுபவிக்கலாம். ஆழ்வார் திருஇந்தளூரில் எம்பெருமானை கிட்டி அனுபவிக்கலாம் என்று
மிகுந்த பாரிப்போடே திருஇந்தளூர் எழுந்தருளினார். ஆனால் அந்த சமயம் அகாலமானதால்
திருஇந்தளூர் எம்பெருமான் ஸேவை ஸாதிக்கவில்லை. அதனால் ஆழ்வார் மிகவும் நைந்து எம்பெருமானோடு ஊடி வார்த்தையாடுகிறார்.

இங்கு குறிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு

ஆழ்வார் ஊடுவதும் அர்ச்சாவதார எம்பெருமானோடே! நம்மாழ்வார் ” மின்னிடை மடவாரில் ” கண்ணனோடே ஊடினார்.
ஆழ்வார் தாமான தன்மையில் ஊடுகிறார்.
திருஇந்தளூர் எம்பெருமானை நோக்கி ஆழ்வார் அருளிச் செய்யும் ப்ரகாரம்
தீயெம் பெருமான் நீரெம் பெருமான் திசையு மிருநிலனு
மாய், எம் பெருமா னாகி நின்றா லடியோம் காணோமால்,
தாயெம் பெருமான் தந்தை தந்தை யாவீர், அடியோமுக்
கேயெம் பெருமா னல்லீ ரோநீர் இந்த ளூரீரே.

திருவிந்தளூர்ப் பெருமாளே! தேவரீர் தேஜஸ்தத்வத்திற்கு அந்தர்யாமியான எம்பெருமானாகவும் ஜலதத்வத்திற்கு
அந்தர்யாமியான பெருமானாயும் திசைகளுக்கு அந்தர்யாமியான பெருமானாயும் விசாலமான பூமிக்கு அந்தர்யாமியான பெருமானாயும்
நின்றால் – (அஜ்ஞரான) அடியோங்கள் தேவரீரைக் காணமாட்டாதவர்களாயிருக்கிறோம்;
தாயாகவும் ஸ்வாமியாகவும் பிதாவுக்கும் பிதாவாகவும் இருக்கின்ற பெருமானே! தேவரீர் எமக்கே அஸாதாரணரான ஸ்வாமியல்லவோ?
அடியோமுக்கே எம்பாருமானல்லீரோ நீர் – பரவாஸுதேவனாயிருக்கும் இருப்பு நித்ய முக்தர்களுக்கு அநுபவிப்பதற்கு.
வ்யூஹ நிலை பிரமன் முதலானாருடைய கூக்குரல் கேட்கைக்காக. ராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்கள்
அக்காலத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே பயனளித்தற்கு. அந்தர்யாமியாய் இருக்குமிருப்பு ப்ரஹ்லாதாழ்வான் போல்வார்க்குப் பயனளிக்கும்.
அர்ச்சாவதார நிலையொன்றே அடியோங்களுக்கு ஜீவனம். ஸம்ஸாரிகளுக்கு முகங்கொடுக்கைக்காகவேயன்றோ இது ஏற்பட்டது.

பரத்வம் நித்ய ஸூரிகளுக்காய் இருக்கும். வ்யூஹம், ப்ரஹ்மாதிகளுடைய கூக்குரல் கேட்கைக்காக.
விபவங்களான ராமக்ருஷ்ணாதியவதாரங்கள் தசரத வாஸுதேவாதிகளுடைய பாக்யத்தினால் பெற்றவைகளாய் இருக்கும்.
அர்ச்சாவதாரங்களோ என்னில் ஸம்ஸாரிகளுக்காக. ஸம்ஸாரிகளோ தங்களுக்கு ஹிதம் (நன்மை) இன்னது என்றோ,
இந்த உலக வாழ்க்கையாகிற ஸம்ஸாரம் த்யாஜ்யம் (விடத்தக்கது) என்றோ,
ஸர்வேஶ்வரன் ஆகிய எம்பெருமான் ப்ராப்யன் (அடையத்தகுந்தவன்) என்றோ ஜ்ஞானம் இல்லாதவர்கள்.

இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி – * குருடர்க்கு வைத்த இறையிலியில் விழித்தார்க்குப் ப்ராப்தி இல்லையிறே *
[இறையிலி – அறச்சாலை – வரி நீக்கப்பட்ட நிலம். இறையிலி = இறை + இல். இறை – வரி].
கண் இழந்தவர்களுக்கு என்று உரித்தானதில், கண் உடையோர் அனுபவிக்கக் கூடாதிறே என்பது தாத்பர்யம்.
பரத்வத்தை அனுபவிக்கும் நித்யமுக்தர்கள் – இவர்கள் படியை ஸ்ரீ பராசர பட்டர் தம்முடைய ஸ்ரீகுணரத்னகோஸத்தில் –

தே ஸாத்யா ஸந்தி தேவா ஜநநி! குணவபுர் வேஷ வ்ருத்த ஸ்வரூபை:
போகைர்வா நிர்விசேஷாஸ் ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா:
ஹே ஸ்ரீ:! ஸ்ரீரங்க பர்த்து ஸ்தவச பதவரீசாரவ்ருத்யை ஸதாபி
ப்ரேம ப்ரத்ராண பாவா விலஹ்ருதய ஹடாத்கார கைங்கர்ய போகா: ||

[ தாயான இலக்குமியே எவர்கள் குணங்களாலும் வடிவங்களாலும் கோலங்களாலும் நடத்தைகளாலும் ஸ்வரூபங்களாலும்
வேற்றுமையற்றவர்களோ, ஆகையால் எப்பொழுதும் சிறிதும் குற்றமற்றவர்களோ, எப்பொழுதும் ஒழிவில் காலமெல்லாம்
ப்ரீதியினால் உருகின மனோவிகாரத்தாலே கலங்கின ஹ்ருதயத்தாலே கைங்கர்யங்களின் இன்பமுடையவர்களோ அந்த நித்ய ஸூரிகள்].
இதனால் இவர்களது மேன்மை விளங்கும். இவர்களுக்கு அருளுமிடம் பரத்வம்.

வ்யூஹமோ என்னில் – மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வாரே வ்யூஹத்தை அருளிச் செய்யுமிடத்து
* பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் * என்றார். ஆழ்வாரே யாம் கண்டேயும் என்னாதே யாம் கேட்டேயும் என்றருளினார்.
அவர்க்கும் இது கேட்கையோடிருத்தல் என்றால் மற்றவர்களுக்கு அரிது என்பது சொல்லவும் வேண்டுமோ?

விபவமோ – அக்காலத்தில் உள்ளார்களுக்கு மட்டும் அனுபவமாய் இருக்கும்.

அந்தர்யாமி தஶை – * என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும் உட்கண்ணால் காணுமேல் * என்று அரிதாய் இருக்கும்.
எக்காலத்திலும் வெளிக்கண்ணாலே காணக்கூடாத அப்படிப்பட்ட விலக்ஷணமான திருவுருவத்தை நெஞ்சாகிற
அகக்கண் விகஸித்து (மலர்ந்து) ஸாக்ஷாத்கரிக்குமாகில் என்று ச்ரமாமாயும் ப்ரஹ்லாதாழ்வான், திருமழிசைப்பிரான் போன்றோருக்குமாய் இருக்கும்.

எனவே தான் இவர்களை * விழித்தார் * என்றழைக்கிறார் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை.
இவ்வர்த்தங்கள் ஸ்ரீ வசனபூஷணம் ஸு 39 (பூகத ஜலம் போலே….) ஸ்ரீமத் வரவரமுனிகள் வ்யாக்யானத்தால் விரிவாக அறியலாம்.

ஸ்ரீமத் இத்யாதி பூஜ்யராய், அஸ்மத் ஆசார்யனாய், சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று
போது போக்குவது அருளிச் செயலிலேயாய், தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
நும்மடியோமுக்கு நும்மைக் காட்டாது அடியேனை
நும்மடியாரோடொப்ப எண்ணுதிரென் – நம்கலியன்
இந்தளூரானுக்கு இயம்பினான் தன் இன்னாமையைத்
தந்நிலை மாறாத வனாய் (39)

அநுகாரமும் அர்ச்சையிலே!
ஒருவர் போன்று மற்றொருவர் செய்து காட்டுவது அநுகாரமாகும். கோபிகைகள் கண்ணன் வாராமையாலே மிகவும்
விஶ்லேஷப்பட்டு ஒரு கோபிகை கண்ணன் போன்று அநுகரித்துத் தரித்தார்கள்.
ஆண்டாள் நாச்சியாரும் கோபிகைகள் போன்றே இடைப்பேச்சும் முடைநாற்றமும் என அநுகரித்துத் தானும் திருப்பாவை அருளிச் செய்தார்.
இவ்வாறு அநுகரித்தல் பிரிவாற்றாமையின் துன்பம் குறைவதற்க்குச் செய்ய்யும் செய்கை ஆகும்.
நம்மாழ்வார் திருவாய்மொழியில் * கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் * (5-6) என்கிற பதிகத்தில்
கடல் ஞாலத்தீசனாக அநுகரித்துத் தரித்தார்.
ஆனால் திருமங்கையாழ்வாரோ என்னில் அவ்வநுகாரமும் அர்ச்சையினிலே அநுகரித்துத் தரித்தார்.
தெள்ளியீர் பதிகத்தில் * வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று பேசினாள் * (8-2-6) என்பதே.
திருவேங்கடமலையில் நின்றும் திருக்கண்ணபுரத்தேற வந்து சௌரிப்பெருமாளாக நிற்பது யானே என்றார் ஆழ்வார்.
இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யான ஸ்ரீஸூக்தி
*வேறே அநுகரித்தாரும் சிலர் உண்டிறே. “கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்” என்று.
அவளைப் போலே ஜகத்காரணரூபியைப்பற்றும் அவளன்றிறே இவள். அர்ச்சாவதாரரூபியையிறே இவள் அநுகரிப்பது.
இவ்வர்ச்சாவதார ரூபத்தால் பிறக்கும் அநுபவமொழிய, அந்தந்த அவதாரங்களால் பிறக்குமநுபவத்தை நாய்க்கிடவென்றிருக்குமவளிறே இவள்.
அர்ச்சாவதாரங்களால் வரும் அனுபவமன்றி மற்றவை திருமங்கை ஆழ்வார் கைக்கொள்ள மாட்டார் என்பது இங்கு நோக்கத்தக்கது.
மற்றைய ஆழ்வார்களிற் காட்டிலும் இவ்வாழ்வார்க்கு அர்ச்சாவதாரத்தில் ப்ராவண்யம் அளவற்றதாகையாலே
இவ்வநுகாரமும் அர்ச்சாவதார விஷயமாகவே செல்லுகின்றது.

தூதுவிடுவதும் அர்ச்சைக்கே
நம்மாழ்வார் எம்பெருமானைக் குறித்து அவரது நிலையை அறிவிக்கும் பொருட்டு திர்யக்குக்களை (பறப்பன முதலியவற்றை) தூது விட்டார்.
அது நான்கு திருவாய்மொழிகளில் – * அஞ்சிறைய மடநாராய், வைகல் பூங்கழிவாய், பொன்னுலகாளீரோ, எங்கானலகங்கழிவாய் *.
இந்த நான்கு பதிகங்களிலும் ஒவ்வொரு நிலையில் தூது விட்டார். முதலில் விபவம், கடைசியாகத் திருமூழிக்களம் அர்ச்சையில் தூதுரைத்தார்.
இவையனைத்தும், ஆசார்ய ஹ்ருதயத்தில் விரிவாக அருளிச் செய்யப்பட்டுள்ளது.

கலியனோ தூதும் அர்ச்சாவதார எம்பெருமானுக்கே உரைத்தார். * தூவிரிய மலருழக்கி * (3-6) அழகிய சிறகுகளோடு கூடிய
வண்டு, குருகு முதலானவற்றை வயலாலி மணவாளன் திறத்து தன்னுடைய சிந்தை நோய், உடலின் நோய் ஆகியவற்றை அறிவிக்கும்படி பணிக்கிறார்.
ஒன்பதாம் பத்தில் * காவார் மடற்பெண்ணை * (9-4) பதிகத்தில் ஆழ்வார் உள்ளத்தாலும், உடலாலும் எய்திய நோய் கூற
புள்ளினத்தை திருப்புல்லாணி எம்பெருமானிடத்து தூது விடுகிறார்.
திருநெடுந்தாண்டகத்தில் இரண்டு பாசுரங்கள், அணியழுந்தூர் எம்பெருமானிடத்தும், திருக்கண்ணபுரம் சௌரிராஜனிடத்தும் தூது விடுவதாக அமைந்தது.
இங்கு வ்யாக்யான ஸ்ரீஸூக்தி *
(திருக்கண்ணபுரம் புக்கு) ரிஷிகளும் அல்லாத ஆழ்வார்களும் சொல்லுமாபோலேயன்று காணும் – இவர்க்குத் திருக்கண்ணபுரம் என்றாலிருக்கும்படி.
அவர்கள் அளவன்றே இவர்க்கு அவ்வூரில் உண்டான பாவபந்தம்.
அநந்தாழ்வான் “திருவேங்கமுடையான்” என்னுமாப்போலேயும்,
பட்டர் “அழகிய மணவாளப் பெருமாள்” என்னுமாப்போலேயும்.
சோமாசியாண்டான் ” எம்பெருமானாரே சரணம்” என்னுமாப்போலேயும் திருநாமங்களைச் சொல்லும்போது இவராதரம்.
ஆழ்வார் திருக்கண்ணபுரம் என்பதை மிகுந்த ஆதரத்துடன் (ப்ரேமத்துடன்) சொல்வார் என்பதே இதன் தாற்பர்யம்.

இன்னமும் * காணுமோ கண்ண புரமென்று காட்டினாள் * (8-2-2) என்றவிடத்தில் ஆழ்வாருக்கு
திருக்கண்ணபுரத்தில் உள்ள ஆதரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
(காணுமோ கண்ண புரமென்று காட்டினாள்) சுற்றும்கண்ணையோட்டிப் பார்த்தவாறே திருக்கண்ணபுரம் கண்ணுக்கு விஷயமாக
வேண்டுவானென்னென்னில்; இவளுக்கு அபிமதம் சவுரிப்பெருமாள் பக்கலிலே யாகையாலும்,
இவள் தான் லக்ஷ்யத்தை உடையளாகையாலும், திருக்கண்ணபுரம் கண்ணுக்கு விஷயமாயிற்று.
திருக்கண்ணபுரத்தைக் காணிகோள், அஞ்சலியைப் பண்ணிகோள்” என்று சொல்லப்புக்கு முடியச் சொல்லமாட்டாதே
குறையும் ஹஸ்தமுத்ரையாலே காட்டினாள் * இது பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யான ஸ்ரீஸூக்தி.

‘திருக்கண்ணபுரத்தைப் பாருங்கள்; கையெடுத்துக் கும்பிடுங்கள்’ என்று சொல்லத் தொடங்கி,
பூர்த்தியாகச்சொல்லித் தலைக்கட்டமாட்டாமல் ‘காணுமோ கண்ணபுரம்’ என்று வாயாற் சொல்லி மற்றதை கையினால்
முத்திரையினால் முடிக்கிறாள். திருக்கண்ணபுரம் என்றால் மேலே ஒன்றும் செய்ய முடியாதபடி ஆயிற்று,
இவ்வாழ்வாருக்கு அவ்வூரில் உள்ள ப்ராவண்யம்.

இவ்வாழ்வாரின் தூதும் அர்ச்சாவதார எம்பெருமானுக்கே உரைத்தார்.

பாகவத சேஷத்வம்
வேதத்தின் உட்பொருளான பாகவத் சேஷத்வத்தை கலியன் இரண்டு திருமொழிகளில் அருளிச் செய்தார்.
அதுவும், கடல்மல்லைத் தலசயனத்து எம்பெருமான் திறத்து அடியார்களாய் இல்லாதவர்களோடு கூடாமையும்,
திருச்சேறை எம்பெருமானின் அடியார்களை விட்டுப் பிரியாதவராய் இருத்தலையும் (கண்சோர வெங்குருதி வந்திழிய) சொல்லி
பாகவத சேஷத்வத்தை அனுஸந்தித்தார். இதுவும் அர்ச்சாவதார எம்பெருமானிடத்து அடியவராய் இருத்தலே சொல்லப் பட்டது.
இரண்டு திவ்யதேஶங்களைச் சொன்னது மற்றவைகளுக்கு உபலக்ஷணம்.

மடல்
ஆழ்வார் மடலெடுத்ததும் அர்ச்சாவதாரத்திலேயாகும். பெரிய திருமடல் தனியன் இது தன்னை விளக்கும்.

பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றி செய்யும் – நன்னுதலீர் நம்பி நறையூரர் *
மன்னுலகில், என்னிலைமை கண்டு மிரங்காரே யாமாகில் * மன்னு மடலூர்வன் வந்து.

அழகிய நெற்றியையுடைய மாதர்காள்! பரமபதத்திலுள்ள நித்யஸூரிகளும் தாமரைப்பூவிற்பிறந்த பிராட்டியும்
தோத்திரம் செய்யப்பெற்ற திருநறையூரில் எழுந்தருளியிருப்பவனும் கல்யாண குணபரிபூர்ணனுமான எம்பெருமான்
எனது அவஸ்தையைக் கடாக்ஷித்தும் க்ருபை செய்யாவிடில் திருப்பதிகள் தோறும் மடலூர்ந்து கொண்டு இருப்பேன்.

நாயகியாய் வளை இழத்தலும் அர்ச்சைக்கே
ஆழ்வார் நாயகி தஶையினை அடைந்து எம்பெருமானது திருக்குணங்களில் ஈடுபட்டு இருக்க, அந்நாயகியைப் பார்த்து திருத்தாயார்,
அவள் எப்படி வளை இழந்தாள், என்று கூறுவதாக திருவாய்மொழியிலும், திருமொழியிலும் ஒவ்வொரு பதிகம் இருக்கின்றன.
திருமொழியில் தானிழந்தவற்றைத் தன் வாக்காலே அருளினார் என்னும் வாசி குறிக்கத் தக்கது.
இங்கு * கலை வளை அஹம் மம க்ருதிகள் * என்ற ஆசார்ய ஹ்ருதயம் காட்டுகிற ஸ்வாபதேஶார்த்தம் நோக்கத் தக்கது.

* மாலுக்கு வையமளந்த மணாளற்கு * (6-6) பதிகத்தில், நம்மாழ்வார் வாமனன் எம்பெருமான் முதலாக
* இழந்தது பீடே, இழந்தது சங்கே * என எல்லாம் இழந்ததாக தாய்ப் பேச்சாலே சொல்லப்பட்டது.

பரகால நாயகி (திருமங்கை ஆழ்வாரோ) என்னில் * இழந்தேனென் வரிவளையே இழந்தேனென் கனவளையே,
இழந்தேனென் செறிவளையே, இழந்தேனென் பொன்வளையே, இழந்தேனென் கனவளையே, இழந்தேனென் ஒளிவளையே *
என்று வரிவளையை இழந்தது திருக்கண்ணபுரத்துறையும் எம்பெருமானுக்கே ஆதலால், இவ்வனுபவமும் அர்ச்சையிலே ஆயிற்று.
இத்திருமொழியில் ஆழ்வார் தாமான தசையில் இழந்தேன் என்னுடைய வரிவளையே என்றருளினார்.
தெள்ளியீர் பதிகத்தில் ஆழ்வார் தாய்ப்பேச்சாக சவுரிப்பெருமாளை நோக்கி இவளது கைவளையைக் கொள்ளை கொள்வது
தகுதியோ சொல்வீர் என்று கேட்கிறாள்.
இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி குறிப்பிடத் தக்கது –
* பராவஸ்த்தையைத் தொழுதாளோ? வ்யூஹங்களைத் தொழுதாளோ? அவதாரங்களைத் தொழுதாளோ?
அர்ச்சாவதாரத்தில் நீர் நின்ற ஊரையன்றோ இவள் தொழுதது * .

அர்ச்சாவதாரமே ஆறும் பேறும்
திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகத்தில் அர்ச்சாவதாரத்தில் இழிகையே உஜ்ஜீவன ஹேது என்பதனை –
* உலக மேத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று மண்டினார், உய்யல் அல்லால் மற்றையார்க்குய்யலாமே? * என்றருளினார்.
உலகத்தவர்களால் கொண்டாடப்பட்டனவாயுள்ள திருக்கண்டியூர், திருவரங்கம், திருமெய்யம், திருக்கச்சி, திருப்பேர்நகர், திருக்கடல்மல்லை,
ஆகிய இத்திருப்பதிகளைப் பேசிக்கொண்டு அவகாஹிக்குமவர்கள் உஜ்ஜீவிக்கலாமத்தனையொழிய அல்லாதவர்களுக்கு உஜ்ஜீவிக்க வழியுண்டோ?

பரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே – திவ்யதேஶங்களையே ஏத்தித்தொழுகின்ற பாகவதர்களுக்குக் கதியானவனே! –
விண்ணகரம் வெஃகா விரிதிரை நீர்வேங்கடம் மண்ணகரம் மாமாடவேளுக்கை, மண்ணகத்த தென்குடந்தை தேனார் திருவரங்கம்
தென்கோட்டி என்று தானுகந்த ஊரெல்லாம் தன்தாள் பாடி என்று அர்ச்சாவதாரங்கள் தோறும்
யாத்திரையாகப் போவது போக்கித் திரியும் பரமபாகவதர்களுக்குக் கதியே.

இனி, திருக்கண்ணபுரத்தையே ஆறாகவும் பேறாகவும் சொன்னது இரண்டு திருமொழிகள்.
* தொண்டீர் உய்யும் வகை * (8-6) என்பது திருக்கண்ணபுரத்து எம்பெருமானை ஆறாக (வழியாக) சொன்னது.
* வியமுடை விடையினம் * (8-7) திருமொழி திருக்கண்ணபுரத்தைப் பேறாக (உபேயமாகச்) சொன்னது.

தொண்டீர் உய்யும் வகை பதிகத்தில் * வருந்தாதிரு நீ மடநெஞ்சே நம்மேல் வினைகள் வாரா * (8-6-6) என்றும்
*மால் ஆய், மனமே! அருந்துயரால் வருந்தாதிரு* (8-6-8) என்றும் உபாயத்வம் (விரோதி நிரஸநத்வம்) சொல்லப்பட்டது.
இத்திருமொழி அவதாரிகை * ஸர்வேஶ்வரன் நம்முடைய ரக்ஷணத்தில் உத்யுக்தனாய் கொண்டு திருக்கண்ணபுரத்திலே ஸந்நிஹிதனானான்;
நாமும் அவனை ஆஶ்ரயித்து உஜ்ஜீவிப்போம் * என்று உபாயத்வம் சொல்லப்பட்டது குறிக்கத்தக்கது.

வியமுடை விடையினம் பதிகந்தன்னில் திருக்கண்ணபுரத்தின் ப்ராப்யத்வம் சொல்லப்பட்டது. எங்ஙனேயென்னில்,
விரோதிகள் தொலைந்தால், எம்பெருமானை அனுபவிப்பது பரமபத்திலேயாம். ஆனால் அவ்வெம்பெருமானும் அதனை விட்டு
இத்திருக்கண்ணபுரமே ப்ராப்யம் என இங்கு எழுந்தருளியிருப்பதனால் இதுவே ப்ராப்யமாயிற்று,
* கணபுரம் அடிகள் தம் இடமே* என்று ஒரு தடவைக்கு ஒன்பது தடவை எம்பெருமானின் இருப்பிடத்தை அநுபவித்து இனியரானதும் நினைக்கத்தக்கது.

இவ்வர்த்தங்களை * தொண்டர்க்கு வேண்டிற்றுச் செய்யும் கண்ணபுரத்தான் நண்ணார் ஒழிப்பானை ஆறாக * என்றும்
* வியன்ஞாலத்தில் மல்கு சீரால் நல்வானில் நயமுடைக் கண்ணபுரம் பேறாக * என்றும்
திருமொழி நூற்றந்தாதியில் அழகுற அருளியது காணத்தக்கது.

ஒரு நல் சுற்றம் பதிகம்
இப்பதிகம் பெரிய திருமொழியில் பத்தாம் பத்து முதல் பதிகமாகும். இப்பதிகந்தன்னில் ஆழ்வார் பரமபதத்தேறப் போவதாகத்
திருவுள்ளம் பற்றி இந்தத் திருமொழியை அருளிச் செய்கிறார். இதில் கல்யாணமான ஒரு பெண்பிள்ளையானவள் தனது
பிறந்தகத்தில் நின்றும் புகுந்தகத்திற்க்குச் செல்லும்முன் தனது உற்ற தோழிகளிடமும் உறவினர்களிடமும் சொல்லிவிட்டு
புறப்படுமாபோலே அமைந்தது. நவோடையான பெண் – பிறந்தகத்தின்றும் புக்ககத்துக்குப்போம்போது ஜந்மபூமியிலுள்ள
உறவுமுறையாருள்ளிடமெங்கும் புக்கு முகம் காட்டுமாபோலே
ஆழ்வார் தமக்கு ஒரு (அத்விதீயமான) நற்சுற்றமாகக் கொண்டது திவ்யதேஶ எம்பெருமான்களையே.
இங்கு திருநீர்மலை, திருக்கண்ணமங்கை முதலான திவ்யதேஶ எம்பெருமான்களின் குணாநுபவம் பண்ணுகிறார்.

இளையபெருமாள், மாதா பிதா என அனைவரும் எனக்குப் பெருமாளே என்றார். மார்க்கண்டேய மஹரிஷி பாண்டவர்களுக்கு
மாதா, பிதா, ஸுஹ்ருத் என அனைத்தும் ஸ்ரீமந் நாராயணனே என உபதேஶித்தார்.
கலியன் இப்படி எல்லாமாகப் பற்றுவது அர்ச்சாவதார எம்பெருமான்களையே. ஆழ்வார்க்கு இவ்வுலகம் பிறந்தகம்; புகும்வீடு பரமபதம்;
திவ்யதேஶ எம்பெருமான்களே உற்றார் உறவினர், சுற்றத்தவர் மற்றும் பிறரும் ஆவர்.
இங்குள்ள திவ்யதேஶ எம்பெருமான்களிடம் சொல்லிக் கொண்டு ஆழ்வார் வானேறப் புறப்படுகிறார்.

மோஹிப்பதும் அர்ச்சையிலே
கண்ணன் யசோதையுடன் விளையாடி, அவள் கையால் அடி வாங்கி, அவள் கையால் கட்டுப்பட்டிருந்த அனுபவத்தை நினைத்து,
எத்திறம்! உரலினோடிணைந்திருந்தேங்கிய எளிவே! * என்று ஆறுமாதம் மயங்கி மோஹித்திருந்தாராம் ஸ்வாமி நம்மாழ்வார்!
இதனை * த்வா மந்ய கோபக்ருஹ கவ்யமுஷம் யசோதா குர்வி த்வதீய மவமாந மம்ருஷ்யமாணா,
ப்ரேம்ணா த தாம பரிணாமஜுஷா பபந்த தாத்ருக் ந தே சரித மார்யஜனாஸ் ஸஹந்தே* (40) என்கிற
அதிமானுஷஸ்தவ ஸ்லோகத்தில் அருளிச் செய்தார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.
இங்ஙனம் நீ கட்டுண்டிருந்தாய் என்கிற சரிதத்தைப் ப்ரஸ்தாவித்த மாத்ரத்தில் ஸஹிக்க முடியாமல் *எத்திறம்* என்று ஆழ்வார்கள் மோஹிப்பர்கள்.

திருமங்கையாழ்வார் மோஹிப்பதோ அர்ச்சாவதாரத்திலே!
உம்பொன்னுமஃதே (திருநெடு – 19) * உம்பொன் என்கிறது அல்லாத ஆழ்வார்களை;
‘மத்துறுகடைவெண்ணெய் களவினிலூரவிடையாப்புண்டு, எத்திறம்! உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே!!‘ என்று
அவதாரத்தை அநுஸந்தித்திறே அவர்கள் மோஹித்தது; அர்ச்சாவதாரத்திலேயிறே இவள் மோஹிப்பது -இது வ்யாக்யான ஸ்ரீஸூக்தி.
இத்தன்மை மற்ற ஆழ்வார்களுக்குத் தான் உண்டோ என திருத்தாயார் கேட்கிறார்

இதன் மூலம் கலியனின் அர்ச்சாவதார ஈடுபாடு விண்ணப்பிக்கப்பட்டது.

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்
எண்ணும் திருப்பதி நூற்றெட்டினையும் நண்ணுவார்
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்
பொற்பாதம், என்றலைமேல் பூ

மால்நீர்மைக்கு எல்லை உகந்தஊர் நூற்றெட்டு
சாலநண்ணியுள்ள கணக்கினிதாய் – ஆலிநாடன்
செய்யுந்திருமொழி நூற்றெட்டும் ஓதிடுவார்
எய்துவர் வைகுந்தம் ஏய்ந்து. (திருமொழி நூற்றந்தாதி சாற்றுப் பாசுரம்)

திருமாலின் நீர்மை குணத்திற்கு எல்லை நிலமான திவ்ய தேசங்கள் 108. அந்த கணக்கு வரும்படி திருவாலி நாட்டிற்கு
அதிபதியான ஆழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழி 108ம் ஓதிடுவார் (திருமொழி மொத்தம் 108 பத்துக்கள்),
விரைவாக வானவர் நாடான ஸ்ரீவைகுந்தம் புக்கு அங்கு திருமாலிற்கு அடிமை செய்வார்.

ஸ்ரீமதாலி ஸ்ரீநகரி நாதாய கலிவைரிணே
சதுஷ்கவிப்ரதாநாய பரகாலாய மங்களம்.

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே ஸூதர்சன ராமானுஜ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கோயில் பெரிய திருமொழி -ஸ்ரீ பரகாலன் பனுவல்கள் —

April 8, 2021

ஸ்ரீ கோயில் பெரிய திருமொழி –

1-வாடினேன் வாடி
2-தாயே தந்தை
3-விற் பெரு விழவும்
4-அன்றாயர்
5-திவளும்
6-தூ விரிய
7-நும்மைத் தொழுதோம்
8-ஏழை ஏதலன்
9-பெடை அடர்த்த
10-கண் சோர
11-தெள்ளியீர்
12-மூவரில்
13-காதில் கடிப்பு
14-மாற்றமுள

———–

ஸ்ரீ பரகாலன் பனுவல்கள் —

மஞ்சுலாம் சோலை வண்டறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை யிவை–1-1-10-

மங்கையர் கலியனது ஒலி மாலை அரிய வின்னிசை –1-2-10-

மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை–1-3-10-

கலியன் வாயொலி செய்த பனுவல் வரம் செய்த வைந்தும் ஐந்தும்–1-4-10-

மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை–1-5-10-

காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை–1-6-10-

இரும் தமிழ் நூல் புலவன் மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன் செங்கை யாளன் செஞ்சொல் மாலை-1-7-10-

மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்-1-8-10-

திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன் பண்ணார் பாடல் பத்து-1-9-10-

கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை–1-10-10-

———-

கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம் மன்னு பாடல்-2-1-10-

மங்கையர் கோன் கலியன் கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும்-2-2-10-

கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி சொன்ன சொல் மாலை பத்து-2-3-10-

மங்கையர் கோன் அமரில் கட மா களியானை வல்லான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை-2-4-10-

கடமாரும் கருங்களிறு வல்லான் வெல் போர்க் கலி கன்றி யொலி செய்த வின்பப் பாடல் திடமாக விவை யைந்தும் ஐந்தும் வல்லார்–2-5-10-

வடி கொள் நெடு வேல் வலவன்கலிகன்றி யொலி -2-6-10-

மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் பன்னிய பனுவல்–2-7-10-

கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை–2-8-10-

மங்கையர் தம் தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த சீர் மன்னு செந்தமிழ் மாலை -2-9-10-

மங்கை வேந்தன் வாள் கலியன் ஒலி யைந்தும் யைந்தும்-2-10-10-

————–

வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த பாவு தண் தமிழ் பத்திவை-3-1-10-

உலகுக்கு அருளே புரியும் காரார் புயல் கைக் கலி கன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும்-3-2-10-

மங்கையர் கோன் மருவார் ஊனமர் வேல் கலி கன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்-3-3-10-

அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்டமுக்கி யடையார் சீயம் கொங்குமலர் குழலியர் கோன்
மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன சங்க முத்தமிழ் மாலை பத்து–3-4-10-

கல்லின் மன்னு திண தோள் கலியன் ஒலி செய்த நல்ல இன்னிசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும்–3-5-10-

கையிலங்கு வேல் கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை ஐயிரண்டும் இவை-3-6-10-

காய்சின வேல் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பத்து-3-7-10-

நெடுமாலுக்கு என்றும் தொண்டாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய் தமிழ் மாலை -3-8-10-

மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்க மலி தமிழ் மாலை பத்து இவை–3-9-10-

————-

கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்து–4-1-10-

ஆலிமன் அருள் மாரி பண்ணுளார் தரப் பாடிய பாடல் இப் பத்து-4-2-10-

மங்கையார் வாள் கலிகன்றி ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும்–4-3-10-

கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் –4-4-10-

மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள்–4-5-10-

கலியன் சொன்ன பாவளம் பத்தும் –4-6-10-

கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை–4-7-10-

வார்கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்து–4-8-10-

காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த சீரார் இன் சொல் மாலை-4-9-10-

வண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்-4-10-10-

————

கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலி கன்றி சொல் தான் ஈரைந்து இவை -5-1-10-

கோவைத் தமிழால் கலியன் சொன்ன பா–5-2-10-

நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ இரண்டும்–5-3-10-

கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல் நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் –5-4-10-

நீல மலர்க் கண் மடவாள் நிறைவழிவைத் தாய் மொழிந்த வதனை நேரார் கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை–5-5-10-

காமரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர் நாமருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும்–5-6-10-

மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள் பன்னிய பனுவல்–5-7-10-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும் ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ்
திரு வரங்கத் தம்மானை நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த பாடல் –5-8-10-

மாட மங்கை திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை–5-9-10-

ஒளி சேர் கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்–5-10-10-

————-

காமரு சீர்க் கலிகன்றி சொன்ன பாமரு தமிழ் இவை–6-1-10-

வானாரும் மதிள் சூழ் வயல் மங்கையர் கோன் மருவார் ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை –6-2-10-

காரார் புயல் தடக்கைக் கலியன் ஒலி மாலை-6-3-10-

கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலி கன்றி சொல்–6-4-10-

காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை–6-5-10-

பொய்ம் மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன் புலங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த
அம் மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல்–6-6-10-

கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை–6-7-10-

வம்பவிழ் தார்க் கன்னவிலும் தோளான் கலியன் ஒலி–6-8-10-

வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன் பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்து–6-9-10-

காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை–6-10-10-

————-

நறையூர் நம்பிக்கு என்றும் தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை–7-1-10-

கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன் சொன்னீர் சொல் மாலை –7-2-10-

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி நாடன்
நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச் சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்
தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை பாடல் பத்திவை–7-3-10-

தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை–7-4-10-

மங்கை வேந்தன் பரகாலன் சொல்லில் பொதிந்த தமிழ் மாலை -7-5-10-

யணி யாலியர் கோன் மருவார் கறை நெடுவேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்–7-6-10-

கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன்
சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்து–7-7-10-

கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல்
ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும்–7-8-10-

காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை–7-9-10-

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை–7-10-10-

———–

மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று காவளரும் கடி பொழில் சூழ்
கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும்–8-1-10-

கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல்–8-2-10-

கடல் சூழ் வயலாலி வள நாடன் காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை–8-3-10-

வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன் கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை–8-4-10-

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து ஆர்வத்தால் அவர் புலம்பிய
புலம்பலை யறிந்து முன்னுரை செய்தn கார் கொள் பூம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி–8-5-10-

கருமா முகில் தோய் நெடுமாடக் கண்ண புரத் தெம்மடிகளைத் திரு மா மகளால் அருள் மாரிச் செழு நீராலி வள நாடன்
மருவார் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி –8-6-10-

மலி புகழ் கண புர முடைய வெம்மடிகளை வலி கெழு மதிளயல் வயலணி மங்கையர்
கலியன தமிழிவை விழுமிய விசையினொடு ஒலி –8-7-10-

கண்ண புரத் தடியன் கலியன் ஒலி -8-8-10-

செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன் கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள்–8-9-10-

கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை–8-10-10-

————–

பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக் கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த சொல் –10-1-10-

அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப்
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம்–10-2-10-

வென்ற தொல் சீர் தென்னிலங்கை வெஞ்சமத்து அன்று அரக்கர்
குன்ற மன்னார் ஆடி யுய்ந்த குழ மணி தூரத்தை–10-3-10-

எழில் தோள் கலிகன்றி செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்–10-4-10-

காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10-

அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்
நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை –10-6-10-

கடல் சூழ் கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும்-10-7-14-

அல்லிக் கமலக் கண்ணனை யங்கோர் ஆய்ச்சி எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை-10-8-10-

வாள் திறல் தானை மங்கையர் தலைவன் மான வேற் கலியன் வாய் ஒலிகள்
தோட்டலர் பைந்தார்ச் சுடர் முடியானைப் பழ மொழியால் பணிந்து உரைத்த பாட்டிவை–10-9-10-

சுரும்பார் பொழில் மங்கையர் கோன் ஒண்டார் வேல் கலியன் ஒலி மாலைகள்–10-10-10-

—————

அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச் சென்ற மாயனைச் செங்கண் மாலினை
மன்றிலார் புகழ் மங்கை வாள் கலி கன்றி சொல்–11-1-10-

வென்று விடை யுடன் ஏழு அடர்த்த வடிகளை மன்றின் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல் ஓன்று நின்ற ஒன்பதும்–10-2-10-

பெற்றார் ஆயிரம் பேரானைப் பேர் பாடப் பெற்றான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை-11-3-10-

வேலை புடை சூழ கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலி கன்றி சொன்ன பனுவல் ஒழி கெழு பாடல்–11-4-10-

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே—11-5-10-

யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை–11-6-10-

மெய்நின்ற பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும் ஐந்தும் இவை பாடி ஆடுமினே –11-7-10-

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே —11-8-10-

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –