வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-
நோயும் பயலைமையும் – மனத்தின் துன்பமும் அத்தாலே வந்த -வைவர்ண்யமும் -பசலை நிறமும். தன் பக்கலிலே காண்கையாலே அவ் விரண்டும் நாரைக்கும் உண்டு என்றிருக்கிறாள்.-துக்க பரிபவங்களைப் பொறுத்திருக்கையாலும் பற்றிற்று விடாதிருக்கிறபடியாலும் பசலை நிறத்தாலும், என்னைப் போன்று இரா நின்றாய்,’ தத் தஸ்ய சத்ருசம் பவேத்-என்று கூறி இருந்த ஸ்ரீ பிராட்டியைப் போன்று இருக்க மாட்டாமைக்கு ‘இருவரும் ஒத்தோமோ?’ என்பாள் ‘எம்மே போல் நீயும்’ என்கிறாள்.-மைந்தனை மலராள் மணவாளனையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்பாள். ‘திருமாலால்’ என்கிறாள்.
நெஞ்சம் கோட்பட்டாயே ‘தோற்புரை அன்றியே, மறுபாடுருவ வேர்ப் பற்றிலே நோவு பட்டாய் ஆகாதே! என்பாள், நெஞ்சம் கோட்பட்டாயே’ என்கிறாள்.
இத்தால் -சாம்சாரிக கல்லோலத்தை மதியாது இருப்பார்க்கு உறங்காமையும் ரூப விபர்யாஸமும் பகவத் விஸ்லேஷ ஜெனிதம் என்று இருக்கை –
——————
கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2-
ஆள்பட்ட எம்மே போல் நீயும் – ‘நெஞ்சு பறி யுண்டு படுக்கையிலுஞ்சேராதே நோவு படுகைக்கு என்னைப் போலே நீயும் அவன் திருவடிகளில் தாஸ்ய பரிமளத்திலே அன்றோ அகப்பட்டது?’ நாட்டாரில் வேறு பாட்டை யுடையதாகப் போந்திருக்கிற நீ’ என்பாள் ‘நீயும்’ என்கிறாள்-மயர்வற மதிநலம் அருளப் பெற்றாய் இல்லை; ஆதலால் என்றனை உட்புகாத நீயும் இப்படி ஆவதே!’ என்பாள், ‘நீயும்’ என்றாள் எனலுமாம்.-ஸாஸ்த்ர ஜன்ய ஞானமும் இல்லை -பகவத் பிரசாத லப்த ஞானமும் இல்லை -என்றபடி
மேல் திருமாலால்’ என்றாள்; இருவருமானால் இருப்பது படுக்கையிலே யாய் இருக்குமே?
ஆதலின், ஈண்டு ‘அரவணையான்’ என்கிறாள்.-ஆக, ‘அவனும் அவளுமாய்த் துகைத்த திருத்துழாய் மாலை பெறவேண்டும்’ என்று ‘அத்தையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்கிறாள்-அவர்கள் இருவரும் கூடத் துகைத்த துழாய்’ என்பாள், ‘தாள்பட்ட துழாய்’ என்கிறாள்.-‘தாளிணை மேல் அணி தண் அம் துழாய்’ என்று அன்றோ தான் கிடப்பது? சங்கத்தளவிலே நில்லாது ‘பெறில் பிழைத்தல்; பெறா விடில் முடிதலான நிலையை அடைந்தாயே! என்பாள், காமுற்றாயே’ என்கிறாள். தாமம் – ஒலியும் மாலையும்.-சங்கம் -காமம் -அநுராகம் -ஸ்நேஹம் -இத்யாதி அவஸ்தைகளில் பிரதமம் சங்கம் -என்றபடி –
இத்தால் -ஆர்த்த த்வனி யுடையார் அவனைப் பிரிந்து கூப்பிடுகிறார்கள் -என்று இருக்கை —
————-
காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3-
அன்றிலுடைய ஒலிக்கு வருந்தி இருக்கமளவில் கடல் என்று ஒரு மஹாதத்வமாய், அது தன் காம்பீர்யம் எல்லாம் இழந்து-கரையிலே வருவது கரையேற மாட்டாதே உள்ளே விழுவதாய், எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி-ஊமைக் கூறனாகக் கூப்பிடுவதாகிறபடியைக் கண்டு, பாவியேன் இராம குணத்தில் அகப்பட்டு, நான் பட்டது நீயும் பட்டாய் ஆகாதே?’ என்கிறாள்.‘உறக்கம் இன்றியே ஒழியினும் நெஞ்சாயினும் அழியாதிருக்கப் பெற்றனையோ?-அதுவும் இன்றே!’ என்பாள், ‘உருகு ஏங்குதியால்’ என்கிறாள்.-பாவியேன், பரத்துவத்திலே ஆசைப்பட்டாய் இல்லையே-
பிரணயிநி -காதலியின் விரஹம் பொறுக்கமாட்டாத சக்கரவர்த்தி திருமகனை யன்றோ நீயும் ஆசைப்பட்டாய?’-தோள் நயந்த யாம் என்னாதே தாள் நயந்த யாம் என்றது ப்ராஹ்மணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமா போலே அடி விடாத வாசனையால்
தேரியும் தேறாமலும் ஸ்வரூபம் குலையாதே அடியோம் தொடர்ந்து குற்றேவல் -அடிச்சியாம் அடிக்கீழ் குற்றேவல்
இத்தால் -மஹத்தையை யுடையார் வாய்விட்டு அலறுவது அவனை பிரிந்தால் என்று இருக்கை –
—————-
கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4-
காற்று என்று ஒரு வியாபக தத்வமாய், அது தான் அபிமத காதலனைப் பிரிந்த விரஹத்தால் உண்டான வியசனத்தால், இருந்த இடத்தில் இருக்க மாட்டாமல், மடல் ஊருவாரைப் போன்று உடலிலே புழுதியை ஏறிட்டுக் கொண்டு வடிவு தெரியாத படியாய், சன்னிசுரம் வந்தவர்களைப் போன்று குளிர்ந்திருந்தது; அதனைப் பார்த்து, ‘நீயும் நான் பட்டது பட்டாய் ஆகாதே?’ என்கிறாள்
துழாய் எம்போல்’ என்பதற்கு, இவள் துழாவினாளோ?’ எனின், காரார் திருமேனி காணு மளவும் போய்ச், சீரார் திருவேங்கடமே திருக்கோவலூரே- ஊராய எல்லாம் ஒழியாமே நான் அவனை’ என்று வருதலால் தேடினாள் -ஆஸ்ரித அர்த்தமாக அசத்திய ப்ரதிஜ்ஜை ஆனவன் ஓரத்து அளவும் -அதாவது- செய்த சூளுறவை அடியார்கட்காகத் தப்பியவனுடைய பக்ஷ பாதத்திலே அகப்பட்டாய் ஆகாதே’ என்பாள், ‘அடல் கொள் படையாழி அம்மான்’ என்கிறாள்.
(ஓரம் -திரு ஆழியின் முனை கூர்மை என்றும் ஸஹஜார்த்தம் -ஆஸ்ரித பக்ஷபாதம் )
உபகார சீலர்க்கும் உடம்பில் வரும் விகாரங்கள் அவனைக் காணப் பெறாமல் -என்று கருத்து –
—————-
ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5-
அவ்வளவிலே ஒரு மேகமானது கரைந்து நீராய் விழப்புக்கது; ‘நீயும் அவனுடைய பகைவர்களைக் கொல்லுகின்ற பண்பிலே அகப்பட்டாய் ஆகாதே?’என்கிறாள்
இத்தால் -உதார ஸ்வபாவர்க்கு ஸைதில்யம் பகவத் விரஹ ஜெனிதம் -என்கிறாள் –
——–
நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –-2-1-6-
மேகத்தின் அருகே கலா மாத்ரமான ஒரு கலையோடு கூடியிருக்கின்ற-சந்திரன் தோன்ற –
சந்திரனே!-உன் வடிவில் எழில் இழந்தாய் ஆகாதே -ஏதத் விரதம் மம என்றும் –மா ஸூச -என்றும் -எம்பெருமான் அருளிச் செய்த வார்த்தையைக் கேட்டு- பெரும் பொய்யாய் மெய்யாகக் கருதி உன்னுடைய உடம்பில் அழகிய ஒளியை இழந்தாயே–என்கிறாள் –நைவு வாய -இடம் -நைவுக்கு இடமாய் நைவை யுடைத்தான என்றும் நைவே தானே வடிவு கொண்டு இருக்கிற என்றபடி –எம்மே -எங்களை என்றது நாரை அன்றில் கடல் வாடை வானம் இவைகளைச் சொன்னவாறு -அவருடைய பெரும் பொய்யிலே அகப்பட்டாய் ஆகாதே நீ’ என்கிறாள்.
‘தம் பாம்பு போல் நாவும் இரண்டு உளவாயிற்று’ என்கிறபடியே, தமக்குப் பொய் சொல்ல ஒரு வாய் உண்டாகில், தம்மைச் சேர்ந்த படைக்கு ஐந்து வாய் உண்டு என்பாள், ‘ஐ வாய் அரவணை’ என்கிறாள்.-இதனால், அவனுக்குப் பள்ளித்தோழமை பலித்தமை தெரிவித்தபடி,-இராமாவதாரத்தில் மெய்யும் கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் அன்றோ அடியார்க்கட்குத் தஞ்சம்? ஆகையாலே தோற்றாள்.
இத்தால் -உஜ்ஜ்வல ஸ்வபாவடைய ஓளி மழுக்கம் அவனுடைய யுக்தி வையர்த்ய சங்கா வஹமான விளம்பம் -என்று கருத்து –
———
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-
மதி கெட்டவாறே அந்தகாரம் வந்து மேலிட்டது,’ என்கிறாள். -இப்பாசுரத்திற்கு, முன்னும் பின்னும் போருகிறபடி ஒழிய, சொற்களின் நயத்தைத் திருவுள்ளம் பற்றி எம்பெருமானார் அருளிச் செய்து போருவது ஒன்று உண்டு:
அம்மங்கியம்மாளும் அதனையே நிர்ப்பந்தித்துப் போரும். அதாகிறது, தான், பிரிவாற்றாதார் பலர் கூடக் கட்டிக்கொண்டு கூப்பிடாநிற்க, இருள் வந்து முகத்தை மறைக்க,
அத்தைப் பார்த்து, ‘ஆற்றாமைக்குப் போக்குவிட்டுத் தரிக்க ஒட்டாதே நீ வந்து நலியக் கடவையோ?’ என்கிறாள் என்பதாம்
எம்பெருமாற்கு –கெடுவாய், வகுத்த விஷயத்திலே அன்றோ நாங்கள் நெஞ்சை இழந்தது?நாரணற்கு –தன்னுடைமை’ என்றால் வாத்சல்ய குணமுடையவனுக்கு அன்றோ இழந்தது?அவனைப் பெறவோ-போன நெஞ்சைப்பெறவோ?-எங்கள் ஆற்றாமையாலே அழப் பெறோமோ?’ என்பாள், ‘சொல்லி அழுவோம்’ என்கிறாள்.‘உன் இழவு கனத்திருந்ததே! வகுத்த எம்பெருமானிடத்தில் யாமெல்லாம் நெஞ்சிழந்து கூப்பிடாநிற்க
நீ உன் ஆற்றாமையைக் காட்டி நலிகின்றாயே! உன் அவசாதம் – நலிவு நீங்கி -ஜீவித்திடுக -வாழ்ந்திடுக,’ என்கிறாள்-
————-
இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8-
இருள் செறிந்தாற்போலே இருப்பதொரு கழியிலே சென்று இழிந்தாள்;-அது மடல் எடுப்பாரைப் போன்று கெட்டு ஓடா நிற்றலைக் கண்டு,‘பாவியேன், சகடாசுரனை -நிரசித்த -அழித்த அச் செயலிலே நீயும் அகப்பட்டாயே?’ என்கிறாள்.-காலத்துக்கு ஓர் எல்லை காணிலும் உன் ஆற்றாமைக்கு ஓர் எல்லை காண்கின்றிலோம். காலமாகில் திவா ராத்ரி விபாக விபக்தமாகவே இருக்கும் என்று இருக்கையாலும் காலம் நசித்தது என்று இருக்கிறாள்-
இத்தால் -ஜல-ஜட -ப்ரப்ருதிகளும் -அவன் கிருபா குணத்திலே அகப்பட்டால் கால் தாழ்வர்-என்று கருத்து –
———–
நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9-
அக்கழிக்கு ஒரு கரை காணமாட்டாமல் மீண்டு வந்து படுக்கையிலே விழுந்தாள்;
( சாடு -தத் துக்கஸ்ய பாரம் த்ரஷ்டும் அசமர்த்தா ஸதீ இதி த்வனி ) அங்கு எரிகிற விளக்கைக் கண்டாள்;-அது ‘உடம்பில் கை வைக்க ஒண்ணாதபடி விரஹசுரம் பற்றி எரியாநின்றது’ என்று அதனைப் பார்த்து, ‘நீயும் நோவுபட்டாய் ஆகாதே?’ என்கிறாள்
அம் தாமம் தண் துழாய் ஆசையால் –‘அழகிய திருத்துழாய் மாலை பெற வேண்டும்’ என்னும் ஆசையாலே.-பதி சம்மானிதா சீதா பார்த்தாராம் அஸி தேஷணா ( ‘கருமை நிறைந்த கண்களையுடைய பிராட்டி,-கணவனாகிய ஸ்ரீராமபிரானால் மாலை அணிந்து கௌரவிக்கப் பட்டாள்,’) என்ற பேறு பெறவேண்டும் என்று அதனையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்றபடி. ( தன் திருக்கழுத்தில் மாலையைச் சாத்தினார் என்று இறே ஆழ்வான் பணிக்கும் படி அஸி தேஷணா என்கையாலே தானும் ஒரு மாலை இட்டால் போலே காணும் -என்னும் ஆழ்வான் )வேவாயே- ‘உக்கக்காலுக்கு உளையக் கூடிய உன் உடம்பே நெருப்பாக வேகிறாயே!’ என்கிறாள். –உக்கம் விசிறி –கால் -காற்று
இத்தால் -அவன் வடிவழகில் ஆசை தேஜஸ்விகளையும் பரிதபிக்கும் -என்கை –
———–
வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-
இவள் அவசாதம் – துன்பமெல்லாம் தீர வந்து கூடின எம்பெருமானைக் குறித்து,
‘இனி ஒருநாளும் என்னை விடாதொழிய வேண்டும்’ என்கிறார்-
வேவ ஆரா வேட்கை நோய் – ‘வேவ’ என்று தொடங்கினால், ஒருகால் வெந்து முடிவு பெறாது மேலும் மேலும் வெந்துகொண்டே இருத்தலின் ‘ஆரா வேட்கை நோய்’ என்கிறாள்.
‘ஆயின், உலகத்தில் வெந்து முடிவு பெறவில்லையோ?’ எனின், அல்லாது நெருப்பைப் போல அன்று;-வெந்த இடமே விரகாக எரிக்கிற வேட்கை நோய்’ என்றபடி.உன்பாலே வீழ்த்தொழிந்தாய் – அகப்பட்டார்க்கு மீள ஒண்ணாத உன் பக்கலிலே விழ விட்டுக்கொண்டாய்.-இனி, இதற்கு ‘உன் பக்கலிலே விழ விட்டுக்கொண்டு. முகங்காட்டாமல் கடக்க நின்றாய்’ என்று பொருள் கூறலுமாம்.-இப்பொருளுக்கு வீழ்த்தொழிந்தாய்’ என்பன-உன்பாலே வீழ்த்து –ஒழிந்தாய் இரண்டு சொற்கள்.
மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா –கேசி வாயை வருத்தம் இன்றிக் கிழித்து, இரட்டை மருத மரங்களின் நடுவே போய்,-மஹாபலி கவர்ந்துகொண்ட பூமியை எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, இப்படி உபகாரங்களை – உதவிகளைச்செய்து,
பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்க் குறைப்பட்டு, இவற்றின் ரக்ஷணத்திலே உக்தனாய் -முயற்சி உள்ளவனாய் இருக்கின்றவனே!
இனி, ‘மூவா முதல்வா’ என்பதற்கு,-‘இப்படி எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதாரைப் போன்று உலகைப் படைத்தல் முதலியவற்றைச் செய்தவனே!’
அச்சேத்யம் என்னும் அது-ஈரும் வேம்-ஈரியாய் உலர்த்த வென்னப் பட-சித்தம் சித்தாய் அல்லேன் என்று நீங்க-கரணங்கள் முடியானேயில் அவையாக-உடலம் ஆத்ம தர்மம் கொள்ள-காற்றும் கழியும் கட்டி அழக்-கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லையே–ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்-—சூரணை –132-
உலர்த்த – வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த -2-1-10–என்று பிரேம வியாதி யானது மிருது ஸ்வாபமான ஆத்மாவை குருத்து வற்றாக உலர்த்த என்றும் – இப்படி சேதன ஆத்யர்ஹம் ஆயிற்று என்று ஸ்வயமேவ சொல்லும்படியாக –
இத்தால் -தம்முடைய அநிஷ்டங்களைப் போக்கி சத்தியை உண்டாக்கின படியை அனுசந்தித்தாறாயிற்று –
——————–
சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-
இத்திருவாய்மொழி கற்றார், கண்ணாற்காணப்பட்டன எல்லாம் பகவானைப் பெறாமையாலே -அலாபத்தாலே – நோவுபடுகிற சம்சாரத்திலே இருந்து நோவுபடாமல்,
கண்டார் எல்லாம் பகவானைப் பெற்று -லாபத்தாலே-களித்து வாழும் நாட்டிலே புகப்பெறுவர்’ இது நிச்சிதம் -என்கிறார்–ஆழ்வாருடைய பாவ வ்ருத்தி உண்டாகும் என்று தாத்பர்யம்
பேறு இழவுகள் இவரது அன்றி, ‘தன்னது’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற நின்றானாதலின் ‘சோதிக்கு’ என்கிறார்.-இதனால்,க்ருதக்ருத்யனானான் -‘செய்ய வேண்டியனவற்றைச் செய்து முடித்தவனாய் இரா நின்றான்’ என்பதனைத் தெரிவித்தபடி.காதலைக் கொண்டே இவரை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘காதல் சடகோபன்’ என்கிறார்.இது, தற்புகழ்ச்சி அன்றோ?’ எனின், தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேண்டுமே. (அவரது பக்தியின் ஸ்வ பாவம் அவருக்கே தெரியுமது ஒழிய பிறருக்குத் தெரியாது இறே –இவருடைய ஆகாரங்கள் வேறே ஓர் இடத்திலே காணாமையாலே -)
இத்திருவாய்மொழியில், முதற்பாட்டிலே தொடங்கி,
நாரை தொடக்கமாக, அன்றில், கடல், காற்று, மேகம், சந்திரன், இருள், கழி, விளக்கு ஆகிய
இப்பொருள்களைக் குறித்துச் சோகித்து
மிகவும் தளர்ந்த அளவிலே அவன் வந்து முகங்காட்ட,
‘இனி என்னை விடா தொழிய வேண்டும்’ என்று கூறி,
இத்திருவாய் மொழி கற்றார்க்குப் பலத்தைச் சொல்லித் தலைக் கட்டினார்.
———————
திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-
இது திருவாய் மொழியில் சொல்லுகிற பரத்வத்தை சங்க்ரஹேண -ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் பிரளய ஆபத் சகனான கிருஷ்ணனே ஈஸ்வரன்-என்கிறார் –எண்ணின் மீதியன் –எல்லை இல்லாத கல்யாண குணங்களையுடையவன்.-எண்ணுக்கும் மேற்பட்ட மோக்ஷம் முதலான உலகங்களை உடையவன்’ -முழுதுமாய் -சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்ய பேத பின்ன சகல வித மோக்ஷ ப்ரதன்-காத்தல் அவனுக்குத் தாரகமாகையாலே ‘உண்ட’ என்கிறார்; இன்றேல், ‘காக்கும்’ என்ன அமையும்.நம்-கண்ணன்-என்று ரக்ஷகத்வ பிரசித்தியை சொல்லுகிறது-
‘நம் கண்ணன் கண்’ என்கையாலே அன்வய -விதி-முகத்தால் பரத்துவமும்,
‘அல்லது இல்லை’ என்கையாலே வ்யதிரேக- மறை-முகத்தாலே பரத்துவமும் அருளிச் செய்தார்.
‘எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன்’ என்றது,அன்வய – விதி-முகத்தாற் கூறியது.
‘அல்லது இல்லை ஓர் கண்’ என்றது -வ்யதிரேக -மறைமுகத்தாற்கூறியது.
———–
ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2-
அல்லது இல்லை’ என்று நீர் சொல்லுவான் என்? ப்ரஹ்ம ருத்ரர்களும் இறையவர்களாகப் பேசப்படுகின்ற பிரமாணங்களும் சில இருக்கின்றனவே?’ எனின்,
‘அவர்கள் நிலையினை ஆராய்ந்தால், தலை அறுப்பாரும் தலை அறுப்புண்டு நிற்பாருமாக இருக்கிறார்கள்;-கர்ம வஸ்யரை ஈஸ்வரராக சொல்ல ஒண்ணாது இறே-அவர்கள் ஆபத்தினைப் போக்கிக் காத்தளிக்கின்றான்-ரக்ஷிக்கிறவன் இவன்;-அவர்களோ, இவனோ சர்வேஸ்வரன்?’ என்கிறார்-அவன் -சர்வ விஷயமாகப் பண்ணின ரக்ஷணம் -எல்லாப் பொருள்களையும் காக்கின்ற தன்மை-கிடக்கக்கிடீர் – நிற்க;
தந்தாம் காலைத் தாம்தாம் நீட்டி முடக்க வல்லராய் இருக்கிறவர்களும் ஓரோர் அளவுகளிலே-ஆபன்னரானால் –ஆபத்தை அடைவர்களாயின், அவற்றைப் போக்கிக் காக்கும்படியைப் பார்க்கலாகாதோ?’ -துக்கத்தைப் போக்கியது அங்கே இங்கே தோன்றித் திரிகிற இடத்திலே என்பார், ‘கோபாலன்’ என்கிறார்.
இதனால், இவர்கள் எத்துணை உயர நிற்பினும் கேட்டினையே சூழ்த்துக் கொள்ளுவார்கள் என்பதும்,-இறைவன் எத்துணைத் தன்னைத் தாழ விட்டாலும் காப்பாற்றுமவனாம் என்பதும் சொல்லப்பட்டன.-கோபால கோள் அரி ஏறு –-கோபாலருடைய மிடுக்கையுடைத்தான ஆண் சிங்கம்.-கோள் – வலிமை.
———-
ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–2-2-3-
ஏறனை –சர்வேஸ்வரன் ‘கருட வாகனன்’ என்று இறுமாந்து இருக்குமாறு போன்று,
ஓர் எருத்தைத் தேடிக் கைக்கொள் ஆண்டிகளைப் போன்று இறுமாந்து இருப்பவன்.பூவனை –‘திருநாபிக் கமலத்தில்-அவ்யவதாநேந- நேரே பிறந்தவன் அன்றோ?’ என்று இறுமாந்து இருக்கும் நான்முகன்.-
ப்ரஹ்மாதிகள் -‘பிரமன் முதலானோர் எப்போதும் திருமேனியைப் பற்றி இருப்பார்களோ?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘ஒரோ ஆபத்துகளிலே திருமேனியிலே இடங்கொடுக்கிறான்; அந் நீர்மையை விட மாட்டாமையாலே ஆழ்வார்கள் அதனையே வாய் புலற்றுகிறார்களத்தனை’ என்று அருளிச் செய்தார். ஓர் தேவும் உளதே –
ஒக்கப் பரிமாறாநிற்க, ‘கட்டக்குடி’ என்று கழிக்கலாம் தெய்வந்தான் உண்டோ?
‘எல்லார் தலைகளிலும் காலை வைத்தவனை ‘ஈஸ்வரன்’ என்னவோ,
இவன் காலிலே துகையுண்டவர்களை ‘ஈஸ்வரர்கள்’ என்னவோ?’
————
தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே –2–2-4–
பூவுக்கு ஈடான ஸுகுமார்யமும் பூஜைக்கு ஈடான ப்ராதான்யமும் அவனை ஒழிய வேறு ஒரு வியக்தியிலே இல்லாமையால் இவனே ஈஸ்வரன்-ஒரு பூவில்-உந்தித் தாமரை- நான்கு பூக்கள் பூத்தாற் போன்று நான்கு முகங்களையுடைய பிரமனை உண்டாக்கினவன்.-சிக்குத் தலையனுக்குப் பூத்தகாது; பிச்சை உண்ணிக்குப் பூசனை தகாது;
அல்லது இல்லை ஒரு கண்ணே’ என்றும்,
‘கோள அரியேறு அன்றி அருளால் அளிப்பார் ஆர்’ என்றும்,
‘மால்தனில் மிக்குமோர் தேவும் உளதே?’ என்றும்,
‘பூவும் பூசனையுந் தகுமோ?’ என்றும்
தாமரைக் கண்ணன் எம்மான் மிகும் ஜோதி மேல் அறிவார் யவரே என்றும்
அவ் வைராக்கியத்தையே அருளிச் செய்தார்.-ஆகையால் ஞானத்தில் காட்டில் இதர விஷயத்தில் சரக்கு அறுகை யாகிற வைராக்யம் ஸ்ரேஷ்டம்
————-
தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-
புண்டரீகாக்ஷனாகையாலும் – இவனே ஈஸ்வரன் ,-தகும் அம்மான் -படைக்கத் தகும் தாமரைக் கண்ணன் -தகுகைக்கு ப்ரகாசகங்கள் திருக்கண்கள்-எம்பெருமானுடைய திருமேனியின் அழகு ஒருவர்க்கு நினைக்க நிலமோ –
—————
யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6-
ஆபத் சகனாகையாலும் இவனே ஈஸ்வரன்-கவர்வு இன்றி –-கவர்கையாவது-க்ரஹிக்கை – பற்றுகை:அதாவது,-ஹிம்சையாய் – துன்பமாய் ஒருவரை ஒருவர் நெருக்காதபடி.-பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி அவர் – இவர்களைக் காப்பதற்கு-ரஷிப்பதற்கு- உறுப்பான பரம்பின ஞான வெள்ளத்தை யுடையனாய்.-இப்படிக் காக்கப் பெற்ற இடம் தன் பேறு என்று தோன்றும்படி இருக்கிற (சுடர் என்றதிலே நோக்கு ) திவ்விய விக்கிரகத்தை யுடையரான அவர்,-இப்படி– ஆபத்துக் காலத்தில் துணைவனாய் -இவனே ஈஸ்வரன்-அசம்பாதகமாகத் தன்னுள்ளே வைக்கப்பட்ட சர்வ ஜகத்தையும் யுடையனாய்- ஸ்வாபாவிக சார்வஞ்ஞத்தை யுடையனாய்-ஆபத் சகனாய்-ஷீரார்ணவ நிகேதனான வண் துவரைப் பெருமானாய்- அணியன் ஆகையாலும் சர்வேஸ்வரன்-
————–
பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –2-2-7-
அகடிதகடநா சாமர்த்தியத்தாலும் இவனே ஈஸ்வரன்-அவாந்தர பிரளயத்தில் மூன்று லோகமாய் இருக்க இங்கு ஏழு உலகம் என்றது ரக்ஷணத்தில் உள்ள பாரிப்பைக் காட்டவே-கண்டது ஒன்றைச் சொன்னேன் இத்தனை. போக்கி,‘முழுதும் யான் தான் அறிந்தேனோ?’அவன் தன் கள்ள மாய மனக் கருத்தை உள்ளுள் அறியார் யார்-இவனுடைய சர்வேஸ்வரத்வ சிஹ்ன பூத திவ்ய சேஷ்டிதங்களுக்கு ஒரு முடிவு யுண்டோ-
————–
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8-
ஸ்ருஷ்டியும் பாலனமும் ஸ்வ அதீனமாக உடையவன் ஆகையாலே இவனே ஈஸ்வரன் -ஸ்ருஷ்ட்டி ரக்ஷணங்கள் இரண்டும் பரம புருஷ ஏக கர்த்ருகம்-
——-
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9-
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றும் ஸ்வ அதீனமாம்படி இருக்கை யாலும் இவனே ஈஸ்வரன்-சம்ஹாரம் ஒன்றே கீழ்ப்பாட்டில் இருந்து இதுக்கு வாசி )பரம புருஷ கர்த்ருகம் -ப்ரஹ்மாதி ஸ்தம்ப பயந்த சர்வ ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றும்
பரம புருஷ கர்த்ருகம்
———–
கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10-
நமோ கண்டாய கர்ணாய நம கட கடாயச -என்று இவன் ஸ்தோத்ரம் பண்ணின படியை வாசிக்கக் கேட்ட ப்ராஹ்மணன்-ஸ்தோத்ரம் பண்ணி அறியாத வாயாகையாலே மீன் துடிக்கிறபடி பாராய் -என்றான்-‘நீ கறுப்புடுத்துத் தாழ நின்ற நிலையிலே இச் செயலைச் செய்தால் இதனை நாட்டார் ‘மெய்’ என்றிருப்பார்களோ?‘கள்வா’ என்பர்கள்-அவர்கள் தங்களுடைய வாக்யமே பிரமாணம் -என்கிறார் ––ஈண்டுக் களவாவது,தன் ஸ்வாதந்தர்யத்தை மறைத்துப் பரதந்திரனாய் நிற்கும் நிலை.-கடவுளை வணங்குகின்றவர்கள் வாகனத்தோடு வருதல் பொருந்துமோ?’ எனின், இராஜ சேவை செய்வார் தம் தமது அடையாளங்களோடே சட்டையும் பிரம்புமாய்ச் சேவிக்குமாறு போன்று,
இவர்களும் தத்தம் அடையாளங்களோடே வந்து சேவிக்கிறார்கள். புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே-அந்தப்புரத்தில் செல்லுகைக்கு அந்தரங்கதை போராமையாலே ஆட்டத்து வெளியிலே யானைக் காலிலே விழுந்து கூப்பிடுவாரைப் போலே பெரிய திருவடியின் மேலே ஏறிப் புறப்பட்ட இடத்தே யாயிற்றுப் புகழ்வது –வேத மயமான கருடன் வாஹனமாகையாலே ஈஸ்வரனுடைய வேதாந்த வேத்யத்வமும் தோற்றுகிறது-
———
ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11-
இத்திருவாய் மொழியைக் கற்று உணர வல்லவர்கட்கு, -தேவதாந்த்ரங்கள் பக்கல்
ஈஸ்வரத்வ புத்தி பண்ணுகையாகிற ஊனம் குற்றம் இல்லை,’-ஏத்தி ஸ்துதிக்க,
அந்த ஹர்ஷத்தாலே -அம்மகிழ்ச்சியாலே எல்லா உலகங்களையும் திருவடியின் கீழே இட்டுக் கொண்ட. கோலக் கூத்தனை-வடிவழகினை அனுபவித்தலே இவர்க்குப் பேறு
—————–
ஊனில் வாழுயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –2-3-1-
பரம பதத்தைப் பெற்று அங்கே தான் பகவத் அனுபவம் பண்ணுகிற இடைத்தேயோ நீ உதவிற்று-மாம்ஸாதி புஞ்சமான சரீரத்திலே நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ நீ உபகரித்தது –ஈஸ்வரனும் என்றும் உளன் – தத் சம்பந்தமும் அநாதி – அவன் எதிர் சூழல் புக்கு அவசர ப்ரதீஷனாய் நிற்க -நீ ஆபிமுக்யம் பண்ணாமையால் அன்றோ இழந்தது-நீ ஆபி முக்கியம் பண்ணி இறே இப்பேறு பெற்றது – ‘கைங்கரிய சாம்ராஜ்யத்திற்கு இட்டுப் பிறந்த வைத்து நெடுநாள் அதனை இழந்து கிடக்க,
இந் நெஞ்சு அன்றோ இப்போது அதனைத் தந்தது?’ என்று தம் திருவுள்ளத்தைக் கொண்டாடுகிறார்.
‘ஊனில் வாழ் உயிரே’ என்பதற்குச் சரீரத்தைப் பற்றி அனுபவிக்கிற அனுபவத்தை யன்றி,
அதற்கு அப்பால் வேறு ஒன்றனையும் அறியாதே வாழ்ந்து போன உயிரே!’ -உயிர்’ என்றது, மனத்தினை-
வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் தானும் யானும் –-தான் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும் -அவதரித்து, மதுவாகிற அசுரனைப் போக்கியது போன்று,
என்னுடன்-சம்ச்லேஷ விரோதியை – கலப்பதற்குத் தடைகளாய் இருந்தனவற்றைப் போக்கி
என்னைத் தோற்பித்துத் தன் பக்கலிலே கைங்கரியத்திலே மூளும்படி செய்த தானும்
கைங்கரியத்திற்கு விஷயமாக உள்ள-விஷய பூதனான – யானும்,–கிருஷி செய்த தானும்,
கிருஷிக்கு விஷயமாக உள்ள நானும்’
‘தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தோம்’ என்கிறார்.-இதற்கு,ஏக –
ஒரு ஜாதிப் பொருள்கள் தம்மில் ஒன்றனோடு ஒன்று கலந்தது போன்று கலந்தோம்’ என்று
ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பொருள் அருளிச் செய்வர்.
அதாவது,-தானும் யானும் எல்லாம் தன்னுள் தேனும் பாலும் நெய்யும்
கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தொழிந்தோம்’–தேனும் தேனும் கலந்தாற் போலவும், பாலும் பாலும் கலந்தாற் போலவும், கன்னலும் கன்னலும் கலந்தாற் போலவும்-அமுதும் அமுதும் கலந்தாற்போலவும் என்பதாம்.
இதற்கு இவற்றைச் சுவை யுடைப் பொருள்களுக்கு எல்லாம் உபலக்ஷணமாக்கித்
‘தானும் நானுமாக கலவிக்குள்ளே எல்லா ரசங்களும் பிறக்கும்படி கலந்தோம் என்கிறார்’ என்று எம்பெருமானார் பொருள் அருளிச் செய்வர். ‘சர்வ ரஸ: சர்வ கந்த:’ என்கிற இறைவனோடே கலக்கும் கலவி ஆதலானும், ஞான ஆனந்தங்களையுடைய இறைவனும் ஆத்துமாவும் கலக்கிற கலவி -சேர்த்தி -ஆதலானும் சர்வ ரஸங்களும் பிறக்கத் தட்டு இல்லை.
அநேக த்ருஷ்டாந்த தாத்பர்யம் -ஸர்வவித சாரஸ்யமும் தோற்றுகைக்காக-
தேன் என்று -சர்வ ரஸ சமவாயம் –பால் என்று ஸ்வாபாவிக ரசம் -நெய் என்று ப்ரும்ஹண ரசம் -கன்னல் என்று கரும்பாய் -அதனுடைய பாகஜ ரசத்தை நினைக்கிறது –
அமுது என்று நித்ய ரசம் –
———
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-
இவர் திருவுள்ளத்தைக் கொண்டாடப் புகுந்தவாறே, நெஞ்சு,-பெற்ற தாய் இருக்க மணை வென்னீராட்டுவரைப் போலே ‘நீர் அடி அறியாதே, வழிப் போவாரைக் கொண்டாடுகிறது என்? என்னையும் இசைவித்த சர்வேஸ்வரனைக் கொண்டாடீர்’ என்ன, கேட்ட ஆழ்வார்,
‘ஒக்கும் ஆராயின், அதற்கும் அடி இறைவன் அன்றோ?-நடுவே நெஞ்சைக் கொண்டாடினோமித்தனை ஆகாதே?’ என்று தம் திருவுள்ளத்தை விட்டு,
சர்வேஸ்வரனைக் கொண்டாடுகிறார்.
எம்பார் திருவாய்மொழிக்குப் பொருள் அருளிச் செய்து வருங்கால், இப்பாசுரம் ப்ரஸ்துதமான அளவிலே அளவில்,
எம்பார் கோஷ்டியிலே ‘இவ்வாத்துமாவுக்குப் பிரதம் குரு யார்?’ என்ற ஒரு வினா எழுந்தது;
இருந்த முதலிகளிற்சிலர், ‘ஆசாரியன்’ என்றனர்; சிலர்,
‘ஆசாரியன் திருவடிகளிலே அடைவதற்கு வா என்று அழைத்துக் கொண்டு போய்ச் சேர விட்ட ஸ்ரீவைஷ்ணவர்,’ என்றனர்;
எம்பார், ‘அங்ஙன் அன்று காண்; அவன் இவனை அழைத்தாலும் இவன் ‘அல்லேன்’ என்னாதபடி
‘இசைவித்து’ என்கிறபடி,
அகவாயிலே இருந்து இசைவித்த சர்வேஸ்வரன் காண் பிரதம குரு’ என்று அருளிச் செய்தார்
திருமகள் கேள்வனுக்கும் தன்னால் கழிக்க ஒண்ணாதபடி இருப்பது ஒரு தாரித்திரியம் உண்டு என்று அருளிச் செய்வார் எம்பார்,
எப்பொருட்கும் ஒத்தாய் -இந்திரா அனுஜன் -இந்திரனுக்குத் தம்பியாகவும்,
இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தும்,
திர்யக்குகளை -விலங்குகளைப் போன்று மஹா வராஹமாகியும்,
ஸ்தாவரங்களோடு ஓக்க -நிலையியற் பொருள் போன்று குட்டை மாமரமாயும் நின்ற நிலைகள் போல்வன.-குப்ஜாம்ரம் ‘குட்டை மாமரமாக நின்றது எற்றிற்கு?’ எனின்,
செவ்வே நிற்பின் பெண்ணுக்கும் பேதைக்கும் ஏற ஒண்ணாது என்று எல்லோர்க்கும் ஒக்க எளியன் ஆகைக்கு.-மேன்மையோடே வரின், ‘கிட்ட ஒண்ணாது’ என்ற அகலுவர்கள்;
தாழவிட்டு வரின், காற்கடைக் கொள்ளுவர்கள்;-ஆகையாலே, சஜாதீயனாய் வந்து அவதரிக்கிறான்.
நீ செய்தன’ என்னுமித்தனை.-செய்த நீ அறியில் அறியுமித்தனை; என்னால் சொல்லித் தலைக்கட்டப் போமோ?-அனுபவித்துக் குமிழி நீர் உண்டு போமித்தனை ஒழிய என்பார், ‘அடியேன் அறியேன்,’
அத்தா என்கிறதுக்கு- ஞான பிரதாத்ருத்வமும் -உபகாரத்வமும் -ஸ்வாமித்வமும்- அர்த்த த்ரயங்கள் –
————
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3-
அறிவு நடையாடாத பருவத்தில் சம்பந்த ஞானத்தினைப் பிறப்பித்தாய்;
பிறப்பித்த ஞானத்தினை அழிக்கக்கூடிய தேஹ சம்பந்த்தத்தோடே பின்னையும் வைத்தாய்,’ என்னும் இன்னாப்பாலே
சொல்லுகிறார் என்று ஆளவந்தார் அருளிச் செ்யாதாராகத் திருமலையாண்டான் அருளிச் செய்வர்.
இதனை, எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிற்பாட்டுகளும் பின்னிற்பாட்டுகளும் பிரீதியோடே நடவா நிற்க,
நடுவே பிரீதியின்மை தோற்றச் சொல்லுமது சேராது;
ஆன பின்னர், இங்ஙனே யாமித்தனை.
அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால் என்கிறார்,’ என்று
இதனையும் ஓர் உபகாரமாக்கி அருளிச் செய்தார்.
‘அத்தா நீ செய்தன’ என்று, ‘நாம் செய்த உபகாரங்களைச் சொல்லுகின்றீர்;
அவற்றிலே நீர் மதித்திருப்பது ஓர் உபகாரத்தைச் சொல்லிக் காணீர்,’ என்ன, அதனைச் சொல்லுகிறார்
பெறாவிடில் முடியும்படியான நிலையினை உண்டாக்கினாய்’ என்பார், ‘அன்பு செய்வித்து’என்கிறார்.-அசித்தில் சேர்ந்தவனாய் இருக்கிற என்னை-நம்முடைய பொருள் அன்றோ?-அடியேனை-‘இத்தண்ணீர்ப் பந்தலை வைத்தாயே’-உபகார ஸ்ம்ருதி-எனது ஆவியுள் கலந்து – நான் இருக்குமிடத்தளவும் வந்து என்னோடே கலந்து,-
அத்யந்தம் அந்நிய பரனான ‘மிகவும் பராக்காய் இருக்கிற ஆத்துமாவிலே புகுந்து
உன் குணத்தாலும் செயலாலும் வசீகரித்தாய்,’
———
எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே –2-3-4-
அவன் திருவடிகளிலே ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணி, அனுசயிக்கிறார் –
உதவியாவது,-உபகரித்தல்.
நல்லுதவியாவது, -பச்சை கொள்ளாதே உபகரித்தல்.
பெருநல்லுதவியாவது, தன் பேறாக உபகரித்தல்.
மயா சமர்ப்பித- ‘தேவரீருடைய திருவடித் தாமரைகளில் எனது உயிரை இப்போது நான் சமர்ப்பித்தேன்,’ என்றும்,
அதவா கின்னு ஸமர்ப்பயாமி தே -‘என்னுடையதும் யானும் ஆகிய எல்லாப் பொருள்களும் தேவரீர் உடைமை அன்றோ?
இதனை நன்கு அறிந்த யான் தேவரீருக்கு என்னுடைய பொருள் என்று எதனைக் கொடுப்பேன்?-ஸ்ரீ ஆளவந்தார்
சத்தை அவன் இச்சாதீனம் ஆகையால் தந்த நீ கொண்டாக்கினையே –பிரளய ஆர்ணவத்திலே நசியாதபடி ஜகத்தை ரஷித்தால் போலே நான் பிரிந்து நோவு படாதபடி என்னோடே கலந்து அடிமை கொண்ட ஸ்வாமி-பண்டே உனக்கு சேஷமாய் இருக்கிற இவ்வாத்மாவை நீ கொண்டு அருளினாய் –
———
இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –2-3-5-
ஞான லாபமே அமையுமோ?பிராப்தி – பேறு வேண்டாவோ?’ என்ன,தனியேன் வாழ் முதலே!! -எனக்குப் பிரதம ஸூஹ்ருதமும் நீயேயாய்,-என்னைச் சமுசாரிகளில் -வ்யாவ்ருத்தன்- வேறுபட்டவன் ஆக்கின அன்றே பெற்றேனே அன்றோ?’ என்கிறார்
கனிவார் வீட்டு இன்பமே – நீ என்றால் உள் கனிந்து பக்குவமாய் இருக்குமவர்களுக்கு மோக்ஷ சுகம் ஆனவனே!
அன்றி, ‘நீ என்றால் இனியராய் இருக்குமவர்கள் இருப்பிடத்திலே வந்து அவர்களுக்கு ஆனந்தத்தை விளைவிக்குமவனே!’ என்றுமாம். –வீட்டு இன்பப்பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் – -அர்ச்சாவதார பரத்வேந –நாயனார்-யசோதைப் பிராட்டிக்குக் காட்டி அருளியது த்ருஷ்டாந்தம்-
என் கடல் படா அமுதே –முயற்சி இன்றிக் கிடைத்த அமுதம் போன்றவனே-(இத்தால் ப்ராப்யத்வம் சொல்லிற்று )
எனக்கு என்றிருப்பார் நடுவே இருக்கையிறே இவர்க்குத் தனிமை.
தம்மை அத்தலைக்கு ஆக்கி வைக்கையிறே இவர்க்கு வாழ்வு,’ என்பது இருபத்து நாலாயிரப்படி
நுன பாதம் சேர்ந்ததேனே –-இமையோர் தலைவா ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்னும்படி,-அறிவைத் தந்த போதே உன் திருவடிகளைப் பெற்றேனே அன்றோ?’
————
சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே –2-3-6-
இனி நுன பாதம் சேர்ந்தேனே’ என்றார். கீழ் திருப்பாசுரத்தில்;
‘இனி என்று தான் விசேஷிக்க வேண்டுமோ?
‘பொய்ந் நின்ற ஞானத்திலே’ நீ விசேஷ கடாக்ஷம் பண்ணின போதே கிட்டிற்றிலேனோ?’ என்கிறார் இப்பாசுரத்தில்,
அன்றிக்கே
ஸ்வரூபத்தை அநுசந்தித்தவாறே, நிலை நின்ற ஸ்வரூபம்
ஸ்வாபாவிக – இயல்பாகவே அமைந்துள்ளதான- சேஷத்துவமேயாய்,
நடுவுள்ளது வந்தேறியாய்த் தோன்றுகையாலே அருளிச் செய்கிறார் எனலுமாம்
அநாதி காலம் பிறவிகளால் உழன்று திரிந்த ஆத்துமா சர்வேஸ்வரனைக் கிட்டுகையாவது
கெடு மரக்கலம் கரை சேர்ந்தது போன்று இருத்தலின், ‘சேர்ந்தார்’ என்கிறார்;இறைவன் தானே அழிக்கப் பார்க்கும் அன்றும்-அழிக்க ஒண்ணாதபடியான திண்ணிய மதியைக் கொடுக்குமவன்-அம்பரீடன் தவம் செய்து கொண்டிருக்க, சர்வேஸ்வரன் இந்திரன் வேடத்தைத் தரித்துக் கொண்டு சென்று, ‘உனக்கு வேண்டியவற்றை வேண்டிக்கொள்’ என்ன ந அஹம் ஆராதயாமி த்வாம் தவ பத்தோயம் அஞ்சலி ,‘நான் உன்னை ஆராதிக்குமவன் அல்லேன் காண்;-என்னைச் சமாதி பங்கம் பண்ணாதே போக வல்லையே! உன்னைக் கும்பிடுகிறேன்’ என்றான்.
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச் சோர்ந்தே புகல் கொடாச் சுடரை –
ஜலான் மத்ஸ்யா விவோத்த்ருதவ் – ‘ஸ்ரீராமரே! உம்மால் நீக்கப்பட்ட பிராட்டி உயிர் வாழாள்; நானும் உயிர் வாழேன்:-ஒருவாறு பிழைத்தோமானால், தண்ணீரினின்றும் மேலே எடுக்கப்பட்ட மீன் போன்று, ஒரு கணநேரமே பிழைத்திருப்போம்’ என்கிறபடியே,
தன்னைப் பிரிய மாட்டாதே இருக்குமவர்கள் நெஞ்சை விட்டுப் போகமாட்டாதே,
அவர்கள் உயிர், தன்னைப் பிரிந்து-த்ரவீபூதமாய் – நீர்ப்பண்டமாக மங்கிப் போகக் கொடாதே,-அது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்ற இருக்குமவனை.-தீர்ந்தார் –
உபாயத்தில் துணிவுடையார்; அவர்கள் ஆகிறார் –-பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்குமவர்கள்;-அவர்கள் தன்னைப் பிரிந்து நோவு படாதபடி அவர்கள் நெஞ்சிலே இருக்குமவன் –தீர்ந்தார் என்று ப்ராப்ய த்வரா நிஷ்டர் என்றும் —
ப்ராப்ய ப்ராபக நிஷ்டர் என்றுமாம்–
அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே –
சேஷ பூதனான நான் பண்டே அடைந்தேன் அன்றோ
‘அநாதி காலம் இழந்த இழவை மறக்கும்படி வந்து கலக்கையாலே, இன்றோ பெற்றது?
இவ்வாத்துமா உள்ள அன்றே பெற்றேன் அல்லேனோ?’ என்கிறார்.-முதன் முன்னமே என்றதுக்கு மூன்று அர்த்தங்கள்
1-இனி என்று பொய் நின்ற ஞானத்திலே விசேஷ கடாக்ஷம் பண்ணின போதே பெற்றேன் என்று விசேஷிக்க வேணுமோ –அநாதி காலம் பிடித்துப் பெற்றேனே அன்றோ
2-இனி -என்று அறியாத அறிவித்த போதே பெற்றேன் என்று விசேஷிக்க வேணுமோ –
பொய் நின்ற ஞானத்திலே நீ விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளினை போதே பெற்றேனே
3-வாயும் திரை யுகளில் ஆர்த்தி தீரக் கலந்த போதே பெற்றேன் என்று விசேஷிக்க வேணுமோ –-அநாதி காலம் தொடங்கி விஸ்லேஷம் இன்றிக்கே ஸம்ஸ்லேஷமாய் அன்றோ தமக்குச் செல்கிறது –
———–
முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7-
அடைந்தேன் முதல் முன்னமே-தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் நினைத்தார்;
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே -இவ்விஷயத்தினுடைய இனிமையையும்-போக்யத்தையும் – அநு சந்தித்தார்;
‘இது இருந்தபடி கண்டோமுக்குத் தொங்காது போலே இருந்தது’ என்று – அதிசங்கை கொண்டு, தேவர் என்னைக் கைவிடில் நான் உளேன் ஆகேன்;-என்னைக் கைவிடாது ஒழிய வேண்டும்,’ என்கிறார்
இவர்கள் தொழுது உளராமாப் போலே -அவர்களைத் தொழுவித்துக் கொண்டு உஜ்ஜவலனாகா நிற்குமவன்-அனுபூதாம்சம் அளவுபட்டு அனுபாவ்ய அம்சமே பெருத்து இருக்குமே ஆதலின், ‘பரனே’ என்கிறார்.-கன்னலே-அமுதே-கார் முகிலே கண்ணா –இவ்வளவும் இவருடைய சங்கா ஹேது-உன்னை ஒழிந்த அன்று-அசித்ப்ராயமான -அறிவு அற்ற பொருளாகக் கிடக்கும் என்னை,-இவ்வயிருக்குத் தாரகனாய் இருக்கிற நீ பார்த்தருள வேண்டும்;-திருவுள்ளம் பற்றல் வேண்டும்-வ்யதிரேகத்தில் அழியும்படியான என்னை -வ்யதிரேகத்தில் அழிக்கும் படியான போக்யதையை யுடைய நீ -இரண்டு தலையையும் அறிந்து திரு உள்ளம் பற்ற வேணும் –
————
குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –2-3-8-
என்னை நீ குறிக் கொள்ளே’ என்றவாறே,-அவன் குளிரக் கடாக்ஷித்தான்;-அதனால் சகல வ்யசனங்களும் – எல்லாத் துன்பங்களும் போய்-அவனை அனுபவிக்கிறார்-
அவன் பின்னே நெறிப் பட்ட நெஞ்சை யுடையனாய்.-பின் நெறி – -பின்னே சொன்ன வழி-பிறவித் துயர் கடிந்து’ என்று தடையின் நீக்கத்தை–சரம ஸ்லோகத்தில் ‘எல்லாப் பாவங்களினின்றும் உன்னை விடுவிக்கின்றேன்’-அர்த்த த்வயம் – பல பரமாயும் உபாய பரமாயும்-இவர், வெண்ணெய் களவு காணப்போன இடத்தில் அடி ஒற்றிக் கொண்டு சென்று, அவன் புக்க வீட்டிலே தாமும் புக்கு, அவன் வெளி வாராமல் படலைத் திருகி வைத்து, உபாய நெறியினைக் கேட்டு அறிந்து, பின் பிறவித்துயர் கடிந்தார் என்ற தொனிப் பொருளும் தோன்றும்-பேறாவது–கிறியாவது பகவத் பிரசாதம் –சம்சார நிவ்ருத்தி பூர்வக பகவத் அனுபவத்தை இஜ் ஜென்மத்தில் அல்ப காலத்திலேயே அயத்நேந நான் பெற்றேன் -என்று தாம் பெற்ற ஸம்ருத்தியைச் சொல்லி அனுபவிக்கிறார் –
———
கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –2-3-9-
சோஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ராஹ்மணா விபச்சிதா ‘-இவ் வுயிரானது முற்றறிவினனான இறைவனுடைய நற் குணங்களை அவ் விறைவனோடு அனுபவிக்கின்றது’ என்கிறபடியே,-தம்முடைய-சகல துரிதங்களும் – எல்லாத் துக்கங்களும் போகும்படி-‘இறைவனை அனுபவிக்கப் பெற்றேன்’ என்று ஹ்ருஷ்டராகிறார்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே –-அடி காண ஒண்ணாதபடி தூறு மண்டிக் கிடக்கிற தீய வினைகளெல்லாம் போகும்படி வந்து கிட்டி,-நான்கு மூலைகளிலும் புக்கு உட் புகுந்து, -அநந்யார்ஹனான -வேறு ஒருவர்க்கும் உரியன் அல்லாத- யான்-முழுமிடறு செய்து அனுபவதித்து, யமன் முதலியோர் தலைகளிலும் அடியிட்டுக் களிக்கப் பெற்றேன்.
படிதல் – கிட்டுதல்-
குடைதல். எங்கும் புகுதல்-
ஆடுதல் – உட்புகுதல்–
வாய் மடுத்துப் பருகுதல் – பெருவிடாயோடே அனுபவித்தல்.களித்தேனே-இதர விஷய ஸ்பர்சம் -சிற்றின்பம் துக்கமே ஆயது போன்று, பகவத் குணானுபவம் களிப்பே ஆதலின்,
‘களித்தேனே’ எனத் தேற்றேகாரம் –
———-
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-
களித்தேனே’ என்றவர்,-மீண்டும்,-‘இவ் வுலக மக்களோடு பொருந்தி யிருத்தல் நீங்கி,
இவ் வனுபவத்திற்குத் தேசிகரான நித்திய ஸூரிகள் திரளில் போய்ப் புகுவது எப்போதோ?’ என்கிறார்-
துளிக்கின்ற வான் இந்நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி அளிக்கின்ற மாயப் பிரான் –வர்ஷிக்கையே ஸ்வபாவமாக யுடைய மழையினைப் பெய்கின்ற ஆகாயம், (துளிக்கின்ற -வர்த்தமான பதார்த்தம் )-அதனால் விளையக் கூடிய இந்தப் பூமி இவற்றைக் கடற்கரை வெளியில் நோக்கியது போன்று, திவ்ய ஆயுதங்களைத் தரித்து நோக்குகிற ஆச்சரியத்தை யுடையவன்.
கலியர் கல அரிசிச் சோறு உண்ண வேண்டும்’ என்று நினைக்குமாறு போன்று,
இவரும் ‘அத்திரளில் போய்ப் புகப் பெறுவது என்றோ!’ என்கிறார்.
ஆற்றாமையின் மிகுதி இங்ஙனம் கூறச் செய்கின்றது. –அடியார்கள் குழாங்களையே -இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் –
பாண்டி நாட்டினின்றும் ஸ்ரீ வைஷ்ணவர் சிலர் வந்து நம்பிள்ளையைக் கண்டு வணங்கித்
‘தேவரீர், எங்களுக்குத் தஞ்சமாக இருப்பது ஒரு வார்த்தை யருளிச் செய்ய வேண்டும்,’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ‘கடற்கரை வெளியை நினைத்திருமின்’ என்று அருளினார்.
அவர்களும் ‘மணற் குன்றையும் காவற் காட்டையும் நினைத்திருக்கவோ?’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் புன் முறுவல் செய்து அருளிச் செய்தபடி:
‘சக்ரவர்த்தி திருமகன் கடற்கரையில் படை வீடு செய்திருக்கும் போது
ஸ்ரீ வானர வீரர்கள் இராகவார்த்தே பராக்ராந்தராய்த் தங்களை உபேக்ஷித்துப் பெருமாளையே நோக்கிக் கொண்டு கிடக்க,
இவர்கள் கண்ணுறங்குந்தனையும் தான் உறங்கி,
இவர்கள் கண்ணுறங்கினவாறே அம்பறாத் தூணியை முதுகிலே கட்டித்
திருக் கையிலே பிடித்த சார்ங்கமும் திருச் சரமுமாய் இராமுற்றும் நோக்கின
சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகளே தஞ்சமென்று இருமின்,’ என்று அருளினார்.
ஆகையால், ஸ்வ ரக்ஷண சிந்தையற்று நியதனாகவே சர்வ ரக்ஷகன் கைக் கொண்டு ரஷிக்கும் என்றபடி’.-இந்த திருவாய் மொழிக்கு –நிதான பாசுரம் இது-ஸமஸ்த விரோதி நிவ்ருத்தி பிறந்து ஆவிர்பூத ஸ்வரூப ஸ்வ பாவரானவர்க்கு ப்ராப்யம் அடியாராக ஸூரிகள்-என்று கருத்து –
————
குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே –2-3-11-
பருகிக் களித்தேனே -என்னா உடன் கூடுவது என்று கொலோ -என்று நான் பட்டது படாதே முதலிலே திரளோடே அனுபவிக்கப் பாருங்கோள்-அநு கூலராய் இருப்பார் அஹங்காராதிகளாலே பிரிய வர்த்தியாதே ஏக கண்டராய் அனுபவிக்கப் பாருங்கோள்-
அர்த்த காமாதிகளைப் பற்றி ஸ்வரூபத்தை இழவாதே கொள்ளுங்கோள் –
—————
ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-
ஆடியாடி –ஸ்திதி கமன சய நாதிகளில் ஒரு நியதி இன்றிக்கே அரதியாலே படுகிற பாடு தான் திருத் தாயாருக்கு ஆகர்ஷகமாய் இரா நின்றதாயிற்று-ஹர்ஷ கார்யமான ந்ருத்தம் -துக்க தசையில் -நம் பெண்ணுக்கு அன்றோ இத்தசை என்று ஆகர்ஷமாக இருக்குமே –முதல் ஆடி -என்கிறதில் காட்டில் இருகால் மட்டு ஆடி என்றதில் அவசாதத்தின் மிகுதி –
தாளம் கொண்டு அறியும் அத்தனை -வெங்கலத் தொனி போலே —கண்ணீர் மல்கி
உருகின மனஸ் தத்வம் -இசையாய் ப்ரவஹித்து – மிக்கது கண்ணீராய் பிரவஹிக்கிற படி -நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ண நீர் இறே-
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரிஸ்ரவதி சோகஜம் -சுந்தர -33-4-
ஆனந்த ஸ்ருவுக்கு யோக்யமான கண்களாலே சோகஸ்ரு பிரவஹிக்கிறது–
ஆர் குடி வேர் அற –என்று பட்டர் அருளிச் செய்யும் படி-இராவணனுடைய குலம் என்றவாறு
அன்றிக்கே –பிள்ளான் -ஆரைச் சேதனராகக் கொண்டு -என்று பணிக்கும் –
இந்த எழிலை அனுபவிக்க பெருமாள் இல்லாத போது இத்தால் என்ன பயன் -என்றவாறே –
பாவியேன் இந்த வரவை பரம சேதனன் அன்றோ பார்க்க வேணும் –
கண்ணீர் மல்கி –அதி ஆகர்ஷகமாக இருக்கிறதே பிராப்த சேஷி அன்றோ பார்க்க வேண்டும்-இவ்வரவு உடையவனான-இந்த கண்ணநீர் இவள் ஸ்வாமியான அவன் – பெருமாள் பார்க்காமல் யாரோ பார்ப்பதா–இத்தையே விவரிக்கும் ஸ்லோகம் —புண்டரீக பலாசாப்யாம் விபர கீர்ண மிவோதகம் –-பாவியேன் இவ்வரவு உடைய பெருமாள் வரவாய்க் காணப் பெற்றது இல்லை – என்றார் இறே திருவடியும்
பத்துடை அடியவர்க்கு பின்பு அவதாரத்துக்கு அவ்வருகு இவர் போக மாட்டார் –-பரத்வத்தை விட்டு அவதாரத்திலே இழிகிறார் –-கஜேந்திர ஆழ்வானுக்கு உதவியவனைத் தேடாமல் நரசிம்ஹனை தேடுகிறாள்-எங்கும் நாடி நாடி – தன் கொய்சகம் உட்பட பாரா நின்றாள் என்று பட்டர் அருளிச் செய்யும் படி -அதுக்குக் கருத்து – கண்ணன் என் ஒக்கலையானே-என்று அவன் இருந்த பிரதேசம் ஆகையாலே
நரசிங்கா வென்று
பிரகலாதனைப் போலே ஒரு தம்பம்-ஆலம்பனம் -(பற்றுக் கொம்பு /ஸ்தம்பம் )- இல்லாதபடி இருக்கையாலே வாடும்
1-மத்தஸ் சர்வமஹம் சத்யம் -என்னும் தெளிவு உடையவனுக்கு தோற்றினவன்-கலங்கின அபலைக்குத் தோற்றானோ என்னுமத்தாலே
2-தமப்பன் பகையானாலோ உதவலாவது -நீர் பகையானாலும் உதவலாகாதோ
3-ஜ்ஞான நிஷ்டர்க்கோ உதவலாவது -பக்தி நிஷ்டர்க்கு உதவலாகாதோ
4-ஆண்களுக்கோ உதவலாவது பெண்களுக்கு உதவலாகாதோ
5-சேராத வடிவு சேர்த்து உதவிலோ உதவலாவது இருந்தபடி உதவலாவார்க்கு உதவலாகாதோ
6-ஒரு அதிகாரி நியதி கால நியதி ஒரு அங்க நியதி என்கிற நிர்பந்தம் வேணுமோ இவளுக்கு
7-இவளுடைய ரஷணத்துக்கும் ஏதேனும் முகம் பண்ண வேணுமோ
வாடிவாடும்-கொம்பை இழந்த தளிர் போலே வாடும்-முதல் வாட்டம் தளிர் என்னும் படி இறே அனந்தரத்தில் வாட்டம்
இவ்வாணுதலே-ஒளியுடன் கூடிய நுதலை உடைய இவள் -இவ் வழகுக்கு இலக்கானார் படுமத்தை இவள் படுவதே-இவள் முடிந்தால் உம்முடைய மேன்மையாலே இன்னம் இப்படி ஒரு வ்யக்தியை உண்டாக்கலாம் என்று இருக்கிறீரோ-தாதா யதா பூர்வம் கல்பயத் -என்கிறபடி சிருஷ்டிக்கலாம் என்று இருக்கிறீரோ
ஊனில் வாழ் உயிரிலே கல்வியால் உண்டான புகர் இன்னமும் அழிந்தது இல்லை காணும்
அம்பு பட்டு முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே தெரியும் இறே
குணாதிக விஷய விரஹத்தாலே வந்த இழவு என்னும் இடம் முகத்தின் எழிலிலே தெரியாது நின்றது காணும்
—————-
வாணுதல் இம்மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே–2-4-2-
வாணனுடைய -பாஹு வனத்திலும் -தோள்கள் ஆயிரத்திலும், இவள் விரோதி பிரபலமோ?’ என்கிறாள்.பேரனுமாய் ஆணுமாகிலோ உதவலாவது?-உம்மோடு கலந்த அபலைக்கு உதவல் ஆகாதோ?’
ஐனக மஹாராஜன் பிராட்டியினுடைய பேரழிகினை நினைந்து, இயம் சீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ ப்ரதீச்ச சைனாம் பத்ரந்தே பாணிம் க்ரஹ்ணீஷ்வ பாணிநா – ‘இச்சீதை’ என்று சுட்டிக் கூறியது போன்று,-பெற்ற தாயாகிய இவளும் பெண்ணின் பேரழகினை நினைந்து ‘இம்மடவரல்’ என்கிறாள்.-‘பெற்ற எனக்கு ஆகர்ஷகத்திற்குக் காரணமான இது, கைப்பிடித்த உமக்கு உபேஷைக்குக் காரணம் ஆவதே!’ என்பாள், ‘நீர் இரக்கம் இலீர்’என்கிறாள்.
உம்மை நீர் அறியாமை இல்லையே;-நம்மைப் பிரிந்தார்கள் பிழையார்கள்’ என்று இருக்க வேண்டாவோ?’
இவள் நைவு பேற்றுக்கு உபாயமன்று; அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்,’ என்று காணும் திருத்தாயார் இருக்கிறது.
‘ஆயின், இவள் நைவிற்குப் பலன் தான் யாதோ?’ எனின்,
‘இவள் நைவு அவன் இரக்கத்துக்ப் பரிகரம்,-அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்;-தானே காட்டக் காணும் இத்தனையே.
——————
இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3–
இன்று இச்செயல் செய்யக்கடவதாக நினைத்த நீர், அன்று,-‘உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடு அறுத்த’ லாகிய அச்செயலை எதற்காகச் செய்தீர்?’ என்கிறாள்-அரக்கன் இலங்கை செற்றீருக்கு –-‘ஒரு காதலிக்கு உதவினவன் நமக்கு உதவானோ?’ என்று ஈடுபடாநின்றான்.
எரி அணை அரக்கும் மெழுகும் ஒக்கும் – எரியை அணைந்த அரக்கும் மெழுகும் போலே உருகா நின்றாள்.
அரக்கும் மெழுகும் என்னும் இவற்றை நெஞ்சுக்கு ஒன்றும், இவள்தனக்கு ஒன்றுமாகக் கொண்டு பொருள் கூறுவர் பிள்ளை திருநறையூர் அரையர்.
நெஞ்சும் இவள் தனக்குக் கையடைப்பு ஆகையாலே இவள் தனக்கே இரண்டையும் அடை ஆக்கி அருளிச் செய்வர் பட்டர்.
உம்மை இரங்கும்படி செய்யவோ?-அன்றி, இவளை இரங்காமற் செய்யவோ? யாது செய்வேன்?’
———
இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4-
இலங்கை செற்றவனே என்னும் – எனக்குப் பண்டே உதவி உபகரித்தவனே!’ என்னா நின்றான்.-முன்பு தனக்கு உதவினவன் இப்பொழுது தனக்கு உதவாது ஒழித்தாற்போலே கூப்பிடுகிறாள்.-கலங்கிக் கைதொழும் – தெளிந்திருந்து தொழுமது இல்லை அன்றே பிரணயிநி- தன்னுடைய நோவு வாயால் சொல்ல மாட்டாமையாலே தன் கருத்தை
கை தொழுகையாலே ஆவிஷ்கரியா நின்றாள் –-இவளே – அவன் தொழும்படியான வேண்டற்பாடுடைய தான் தொழா நின்றாள்.
———-
இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே –2-4-5-
‘வாய் வெருவுவான் அவனாக இருக்க, இவள் வாய் வெருவுகின்றாளே!’ என்கிறாள்.இவள் இராப்பகல் வாய் வெரீஇ’ என்றதனால் ‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கி இத்திருப்பாசுரம் முடிய இவர் பாடிக்கொண்டு வந்தன எல்லாம் வாய் வெருவின இத்தனையே என்பதும், அவதானம் பண்ணி அருளிச் செய்கின்றார் அல்லர் என்பதும் போதரும்.
வாய் வெரீ இ-வாய் வெருவி – ‘அவதானம் பண்ணாமல் அருளிச்செய்தல் கூடுமோ?’ எனின்,
வாசனையே உபாத்தியாயராகச் சொல்லிக் கொண்டுவரச் சொல்லுகிறார் இத்தனை.இக்கண்ணுக்கு இலக்கானார் கண்ணிலே காணக்கூடிய கண்ணீரைத் தன் கண்ணிலே கொண்டாள்’ என்பாள், ‘தன் கண் நீர் கொண்டாள்’ என்றும் கூறுகின்றாள்.
தவள வண்ணர் தகவுகளே-தகவுகளே -தயநீய விஷயங்கள் பல வாகையாலே தயையும் பலவாய் இருக்கை – ‘சுத்த ஸ்வபாவரான உம்முடைய தகவுகள் எங்கே போயின?’ என்று எம்பார் அருளிச் செய்வர்.-‘உம்மைப் போலே நாலு சிஷ்டர்கள் அமையும் அபலைகள் குடிகெட’ என்று பட்டர் அருளிச் செய்வர்.
———–
தகவுடையவனே யென்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் என
தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே–2-4-6-
தகவுடையவனே என்னும் – கெடுவாய் ! ‘ஆகரத்தில் தகவு மறுக்குமோ? நம் குற்றங்காண்,’ என்கிறாள்-முன்பு பண்ணின உபகாரத்தை நினைத்து சொல்லுகிறாள்-என்னுடைய பிரத்யாகாத்மாவுக்கு நிரதிசய போக்யன் ஆனவனே -என்னும் -போக தசையில் சொல்லுமவை எல்லாம் சொல்லா நின்றாள்-.-உள்ளம் உக உருகி நின்று –அமூர்த்தமான -வடிவம் இல்லாத மனமானது-மூர்த்தீ பவித்து – வடிவினை அடைந்து உருகி நீர்ப்பண்டமாய் மங்கிப் போகா நின்றது.
———–
உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7-
தன் நெஞ்சில் ஓடுகின்றவற்றைப் பிறர் அறியாதபடி அடக்கும் இயல்புடைய இவள்,உடல் உலர்ந்த பின்பு அன்றோ ஆவி உலர்தல் வேண்டும்?’ எனின், பாவபந்தம் அடியாக வருகிற நோயாகையாலே அகவாயே பிடித்து வெந்துகொண்டு வருமாயிற்று.-என் வள்ளலே கண்ணனே என்னும் – விடாயர் கற்பூரத்திரள் வாயில் இடுமாறு போன்று, இவ்வளவான ஆர்த்திகளிலே – துன்பத்திற்கு இடையில் வந்து உன்னை எனக்குக் கையாளாகத் தருமவனே என்னாநின்றாள்.-வெள்ளம் நீர்க் கிடந்தாய் என்னும் தாபார்த்தோ ஜல சாயிநம் –‘என்விடாய்க்கு உதவத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தருளிற்றே’ என்னும்.-இக்கிடை, இவளுக்கு ஒரு படுக்கையிலே சாய்ந்தாற்போலே இருக்கிறது காணும்.–தான் பட்ட -தான், வேறுபாடு இல்லாதவனாய் இருக்க, இவள் வேறுபடுவதே!-அத்தலை இத்தலையாய் -அவன் அவிக்ருதனாய்-இவளை தோற்பிக்கும் படி யாவதே-வஞ்சனையே –-பெரும்படை உடையாரை அளவு படை உடையார் வெல்லுவது வஞ்சனையால் இறே
நேர் கொடு நேரே ஜெயம் அன்று என்கிறாள் –
—————–
வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8-
உம்மை அனுபவித்துச் ஸூகித்திருக்க வைத்தீர் அல்லீர்;-கம்ஸனைப் போலே முடித்துவிட்டீர் அல்லீர்;-உம்மை ‘ரக்ஷகர்’ என்ற இருந்த இவள் படும் பாடே இது,’ என்கிறாள்.உம்மைத் தோற்பிக்க நினைத்தாரை நீர் தோற்பிக்குமவராய் இருந்தீர்.-ஆஸ்ரித அடைந்தவர்கள்-நாஸ்ரித – பகைவர்கள் என்னும்-விபாகம் அற – வேற்றுமை இன்றி உமக்கு இரண்டு இடத்திலும் காரியம் ஒன்றேயோ?’ என்கிறாள்.
வஞ்சனே என்னும் –தாயார், ‘வஞ்சித்தான்’ என்னப் பொறுத்திலள்;
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ஊன் ஒட்டி நின்று என் உயிரிற்கலந்து’,
‘நான் அல்லேன் என்றாலும் தவிர ஒண்ணாதபடி என்னையும் அறியாதே வஞ்சித்து,
உன் திருவடிகளிலே சேர்த்த உபகாரகனே!’ என்கிறாள்.
இவள் பட்டனவே –
‘சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய வைத்தீர் அல்லீர்;
நித்திய ஸூரிகளைப் போன்று அனுபவிக்க உம்மைக் கொடுத்தீர் அல்லீர்;
தத் தஸ்ய சத்ருசம் பவேத் ‘இலங்கையை அழித்து என்னை அழைத்துக்கொண்டு போவராகில் போகும் அச் செயல் அவர்க்குத் தக்கதாம்’ என்னும் எங்களைப்போன்று இருக்கப் பெற்றிலள்;
கம்ஸனைப் போன்று முடித்தீர் அல்லீர்;
என் வழி வாராதே உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவளை எத்தனை படுத்த வேண்டும்?
இனி, நீர் படுத்துவமவற்றைச் சொல்லில், ஒரு மஹாபாரதத்துக்குப் போரும் போலே’ என்கிறாள் –
————
பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே–2-4-9-
இவள் பட்டது தான் ஏது-என்ன அத்தை சொல்லுகிறாள் –உம்முடைய கையும் திரு வாழியும் காண ஆசைப் பட்டு உதித்ததும் அஸ்தமித்ததும் அறியாதே சபலையுமாய் இப்படி நோவு படுகிற இவள் திறத்து செய்ய நினைத்தது என்-‘படுவன எல்லாம் பட்டாள் ஆகில் இனி, என் படுவாள் என்கிறாள்.
விரை மட்டு அலர் தண் துழாய் என்னும்
-‘இது ஒரு பரிமளமே; இது ஒரு தேனே; இது ஒரு பூவே; இது ஒரு குளிர்ததியே’ என்று,
திருத்துழாய் விஷயமாக ஒரு கோடியைச் சொல்லும்.
ஆக, ‘உம்முடைய பேரும் தாரும் ஒழிய அறியாள்’ என்கிறாள். என்றவாறே,
நம்மை ஆசைப்பட்டு இப்படிப் படப்பெற்றோமே!’ என்று அலப்ய லாபத்தால் கையில் திரு ஆழியை விதிர்த்தான்
‘சுடர் வட்டம் வாய் நுதி நேமியீர்’ என்கிறாள்.
அதாவது, ‘சுடரையும் வட்டமான வாயையும் கூர்மையையுமுடைய திரு வாழியைக் கையிலே உடையீர்’ என்பதாம்
இப்போது, பெண் பிள்ளையைக் காட்டிலும் திருத்தாய் கையும் திருவாழியுமான அழகுக்கு ஈடுபட்டு விசேஷணங்கள் இட்டு அனுபவிக்கிறாள் -‘சுடர் வட்டம் வாய் நுதி’ என்று.
ஆக, ‘அடைந்தவர் பகைவர் என்னும் வேற்றுமை இன்றி அழிக்கைக்குப் பரிகரம் உமக்கு ஒன்றேயோ?’ என்கிறாள் என்றபடி.
‘ஆழிப்படை அந்தணனை, மறவியை இன்றி மனத்து வைப்பாரே’ என்பதன்றோ இவர் தம்முடைய வார்த்தையும்?
கையும் திருவாயுமான அழகைக் கண்டால் நெஞ்சு அழியுமவர்கள் இவர்கள்.
இவ்வேழைக்கே– அபலைகள் பலரும் உண்டு -என்று இ றே நீர் இருப்பது -இப்படி இருபத்தொரு வ்யக்தி புறம்பு இல்லை என்கிறாள்-அத்யந்தம் சபலையான இவள் திறத்தில் நீர் நினைத்து இருக்கிறது என் –
————–
ஏழை பேதை இராப்பகல் தன்
கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –2-4-10-
இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே -இவள், நோக்கு ஒன்றும் ஒழிய, அல்லாதவை எல்லாம் இழந்தாள்;-இந்நோக்கு ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்’ என்கிறாள்-தாமரையிலே முத்துப் பட்டாற் போன்று, இக்கண்ணும் கண்ணீருமாய் இருக்கிற இருப்பை, காட்டில் எறித்த நிலவு ஆக்குவதே!–இவ்விருப்புக்குக் கிருஷி பண்ணிப் பல வேளையிலே இழப்பதே!–பொன்னும் முத்தும் விளையும்படி அன்றோ கிருஷி பண்ணிற்று?’ என்று
இப்போது இவள் இழவுக்கு அன்றியே, அவன் இழவுக்காக இவள் கரைகின்றாள்‘
(ஒண்முத்தும் பைம்பொன்னும் ஏந்தி’ (திருவிருத். 11) என்றதனை உட்கொண்டு
ரசோக்தியாக அருளிச்செய்கிறார். பொன் –பசலை நிறம். முத்து – கண்ணீர்த்துளி-ஏழை – ‘கிடைக்காது’ என்று பிரமாணங்களால் பிரசித்தமாகக் கூறப்பட்டுள்ள பொருளில்,-கிடைக்கக்கூடிய பொருளில் செய்யும் விருப்பத்தினைச் செய்பவள்.-பேதை –
‘கிடைக்காது’ என்று அறிந்து மீளும் பருவம் அன்று; நான் ஹிதம் சொன்னாலும் கேளாத பருவம்.‘இராவணனைக்காட்டிலும் வலிதோ இவளுடைய விரோதிகளின் கூட்டம்?’இவள் தானே முடிந்து போகிறாள்?-நாங்கள் தாமே இழக்கிறோம்? ஜீவிக்க இருக்கிற நீர் வேண்டுமாகில், உம்முடைய ஜீவனத்தை நோக்கிக் கொள்ளப் பாரும், என்பாள்,
‘வாட்டேன்மின்’ என்று அவன் தொழிலாகக் கூறுகிறாள்.
இவள் நோக்குக் கிடீர் எல்லார்க்கும் உஜ்ஜீவன ஹேது என்று கருத்து –
——–
வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11-
நோக்கு ஒன்றும் வாட்டேன் மினே’ என்றவாறே, ‘புறப்பட்டோம்’ என்று நாணத்தோடே வந்து தோன்றினான்;-இவள் வாட, அவன் புகழாயிற்று வாடுவது.-இத் துன்ப நிலையிலே வந்து முகம் காட்டுகையாலே பூர்ணமான கல்யாண குணங்ளையுடையவன் ஆனான் என்கிறாள்.
தன் உடைமை பெறுகைக்கு இரப்பாளனாமவன் ஆகையாலே ‘வாமனன்’ என்கிறாள்.இவ் வாற்றாமையால் வந்த கிலேசம் இது கற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாமல்,
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைப்பட்டபடியே
அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப்பெறுவர்.
———
அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-
என் ஆவி –அவன் மேல் விழத் தாம் இறாய்த்தமை தோன்றுகிறது.-இவர், முன் நிலையினை நினைந்து இறாய்நின்றார்;அதுவே காரணமாக அவன் மேல் விழாநின்றான்.
கமர் பிளந்து இடத்திலே நீர் பாய்ச்சுவாரைப் போன்று. ‘உள்உள் ஆவி உலர்ந்து உலர்ந்து’ என்கிற ஆவியிலே வந்து சேர்கின்றான் ஆதலின், ‘என் ஆவி’ என்கிறார்.
‘விடாயர் மடுவிலே சேருமாறு போன்று வந்து சேர்கின்றான்’ என்பார், ‘சேர்’ என்கிறார்.
‘இப்படி மேல் விழுகைக்குக் காரணம் என்?’ என்னில், ‘அம்மான் ஆகையாலே’ இவரைப் பெற்ற பின்னரே அவன் சர்வேஸ்வரனானான் என்பார், ‘அம் தாமத்து அன்பு செய்து
என் ஆவி சேர் அம்மான்’ என்கிறார்
அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள – இதற்கு, ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைபட்டபடியே, நித்திய சூரிகளோடே வந்து கலந்தான்,’ என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் அருளிச் செய்வர். ‘
ஆயின், அவர்களை ‘ஆழி நூல் ஆரம்’ என்று சொல்லுவது என்?’ என்னில், சின்மயராய் -ஞானவான்களாய் இருக்கச் செய்தே, பாரதந்திரிய சித்திக்காகத் தங்களை இங்ஙனம் அமைத்துக் கொள்கிறார்கள் இத்தனையே.
இனி, இதற்கு எம்பெருமானார்,-செந்தாமரைத் தடம் கண்’ என்று சொற்களைக் கூட்டியும் பொருள்-இவரோடு கலப்பதற்கு முன்பு அவனைப் போன்றே இவையும்-அனுஜ்ஜ்வலமாய் – ஒளி இழந்தவையாய்ச்–அசத்- சத்தை அற்ற பொருளுக்குச் சமமாய், இவரோடு கலந்த பின்பு உஜ்ஜவலமாய் ஒளிப்பொருளாகிச் சத்தை பெற்ற படையைச் சொல்லுகிறது’ என்று பொருள் அருளிச் செய்வர்.
‘ஆயின், அவன் ஒளியிழந்தால் இவையும் ஒளியிழக்க வேண்டுமோ?’ எனின்,
கற்பகத் தரு வாடினால் அதில் பூவும் தளிரும் வாடுவன அன்றோ?
———-
திருவுடம்பு வான்சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2-
தம்மோடே கலந்த பின்பு அவனுக்குப் பிறந்த புகரைச் சொல்லி, ‘தன் உடம்பைப் பற்றிப் பிரமன் சிவன் முதலியோர்கள் சத்தையாம்படி இருக்கின்றவன் தான், என் உடம்பைப் பற்றித் தன் சத்தையாம்படி இராநின்றான்’ என்கிறார்
’ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை; விபூதி இல்லை’ என்கிறவர்கள் முன்பே, ஆப்த தமரான இவர்,‘திரு உடம்பு வான் சுடர்’ என்னப்பெறுவதே! ‘ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை, குணம் இல்லை’ என்கிறவர்கள் செய்து வைக்க மாட்டாத பாவம் இல்லை; அவர்களைச் சார்ந்து அதனைக் கேட்க இராதபடி பெருமாள் நமக்குச் செய்த உபகாரம் என்?’ என்று அருளிச் செய்வர் நஞ்சீயர்.
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அன்றே திருமேனியில் துவக்கு உண்கிறார்?தான் மதித்தார்க்குக் கொடுப்பதும் திருமேனியை ஆதலானும் ‘திருஉடம்பு’ என்கிறார்.-வான் சுடர் –முதலிலே தேஜோ ரூபமான திருமேனி; மிகவும் ஒளி பெற்றது இவருடைய கலவியாலே-.இப்படித் திருமேனி பேரொளிப் பிழம்பாய் இருப்பத்தற்குக் காரணம் பஞ்ச சக்தி மயமாக இருத்தல்’ என்பது நம்பிள்ளையின் திருவுள்ளம்.
பஞ்ச சக்திகளாவன : – பரமேஷ்டி, புமான், விஸ்வம், நிவிருத்தி, சர்வம் என்பன.
ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கு – என்னோடே வந்து கலக்கிற இடத்தில், நீங்குமிடம் ஒன்றும் இன்றியே வந்து கலந்தான். அநந்ய பரையான ‘தனக்கே உரியவரான பெரிய பிராட்டியாரைப் போன்று, அந்நிய பரரான -பிறர்க்கு உரியவர்களான பிரமனுக்கும் சிவனுக்கும் திருமேனியில் இடங்கொடுத்து வைப்பதே!’ என்று இந்தச் சீல குணத்தை அனுசந்தித்து, வித்தராய் இருந்தார் முன்பு; இப்போது தமக்கு உடம்பு கொடுத்தபடி கண்டவாறே ‘அது பரத்துவம்’ என்று தோற்றி, ‘ இது என்ன சீலத்தின் மிகுதி! ஓ’ என்பார் ‘ஓ’ என்கிறார்.
———-
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-
ஸ்வ வ்யதிரிக்த- தன்னின் வேறுபட்ட -ஸமஸ்த வஸ்துக்களும் -எல்லாப் பொருள்களும் தன்னைப் பற்றி உளவாம்படி இருக்கிற சர்வேஸ்வரன், தான் என்னைப்பற்றி உளனாய் என்னோடே வந்து கலந்தான்’-உலகத்துப் பொருள்கள், இவனைப் பற்றாத போது சத்தை இன்றியே இருக்கிறது, ஸ்வரூபத்தாலே; இவன், ஆழ்வாரைக் கலவாத போது சத்தை இன்றியே இருப்பது,பிரணயித்வ குணத்தால் -காதலாகிய பண்பாலே–என்னுள் கலந்தவன் – அகஸ்தியப் பிராதா ‘அகஸ்தியர்க்கு உடன்பிறந்தவன்’ என்னுமாறு போன்று, நிரூபகம் இருக்கிறபடி.-‘நாராயணன், வாஸூ தேவன்’ என்பன போன்று, ‘என்னுள் கலந்தவன்’ என்று காணும் அவனுக்குத் திருநாமம்.வாட்டம்இல் புகழ் வாமனன்’ இவரோடு கலந்த பின்பு வளர்ந்தபடியும், புகர் பெற்றபடியும், தரையிலே கால் பாவித் தரித்தபடியும், திண்மையை உடையனானபடியும் நோக்கி, ‘மின்னும் சுடர்மலை’ என்கிறார்.
—————-
எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-
நீர் ஒருகால் கூறியதை ஒன்பதில் கால் கூறி இங்ஙனே கிடந்து படுகிறது என்?’ என்ன,
‘நான் அது தவிர்கிறேன்; நீங்கள் அவ் விஷயத்தை ஒருகால் இருந்தபடியே எப்பொழுதும் இருக்கும்படி செய்ய –வல்லிகோளே- வல்லீர்களோ?’ என்கிறார்.மரதகம் குன்றம் ஒக்கும் –
கீழ் –எப்பொருளும் தனாய் -ஜெகதாகாரனாய் , உலகமே உருவமாய் நிற்கும் நிலை சொல்லிற்று; இங்கு, அசாதாரண விக்கிஹம் தன்னையே சொல்லுகிறது.
கீழ் ‘மின்னும் சுடர்’ என்று தம்முடைய கலவியால் வந்த புகரைச் சொல்லிற்று;-அப்புகருக்கு இருப்பிடமான-ஆஸ்ரயமான அசாதாரண விக்கிரஹத்தைச் சொல்லுகிறது இங்கு.
—————
ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5–
ஆராவமுதமாய்-உபமேயத்தையே சொல்லுகிறார்.-அசித்தைக்காட்டிலும் தம்மைக் குறைய நினைத்தபடியாலே ‘அல் ஆவி’ என்கிறார்.-என்னை ஆரா அமுதாக நினைத்து, என் அளவாகத் தன்னை நினைத்து அன்றோ கலந்தது-காரார் கருமுகில் போல் – என்னுடைய கலவி ‘பெறாப்பேறு’ என்னும் இடம் தன் வடிவிலே தோன்ற இரா நின்றான்.-பின்னும் இழை பலவே – அனுபவித்துப் போம் இத்தனை ஒழிய, என்னாற்சொல்லித் தலைக் கட்டப் போமோ? முடியாது,’ என்றபடி.
————-
பலபலவே யாபரண பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-
என்னுடனே கலந்து ஆற்றானாய்ப்-அநேக சரீர பரிக்ரஹம் பண்ணி -பல சரீரங்களை மேற்கொண்டு என்ன அனுபவியா நின்றான்’ -முத்தன் தன்னை யனுபவிக்கும்போது படுமாறு போன்று, தான் என்னை அனுபவிக்கப் பல வடிவு கொள்ளா நின்றான் -ஆக, இவற்றால், தன்னின் வேறு பட்டவற்றை எல்லாம் விஷயமாக உடையனாய், அவற்றை எல்லாம் அறியவும் வல்லவனாய்,-அவற்றை எல்லாம் அனுபவித்தால் வரும் ஏற்றத்தையும் உடையவனாய் இருக்கும் இருப்பைத் தெரிவித்தபடி.-சர்வ இந்திரியங்களுக்கும் போக்யமாய் இருக்கும் பரிகரங்களை உடையவன் என்னும் இடத்துக்கு உப லக்ஷணம் -பாம்பணை மேலாற்கேயோ-என்றது –
————
பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7—
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும், ஷீராப்தியில் -திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளி, இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தன எல்லாம் எனக்காக அன்றோ?’ -பொன் முடி அம் போர் ஏறு பள்ளி அமர்ந்ததுவும், ஏறு செற்றதுவும், மராமரம் எய்ததுவும் ஆன இவையெல்லாம், எனக்காகவே கிடீர்-தன்னுடைய சர்வ சேஷ்டிதங்களையும் எனக்கே போக்யமாகச் செய்து அருளினான் -என்கிறார் –
———-
பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8-
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும் என் தண்மையைப் பாராது,
என்னோடே வந்து கலந்த இம்மஹா குணத்தை என்னால் பேசி முடியாது,’ என்கிறார்.
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை – அவ்விஞ்ஞாத -‘அறியாதவராக இருக்கின்றார்’ என்கிறபடியே, என் தண்மை பாராதே கண்ணைச் செம்பளித்து வந்து கலந்தான்.-இறைவன் பக்கல் நன்மைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருப்பன போன்று,-இவர் பக்கல் தீமைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருக்கின்றபடி.
இனி, இதற்கு,’ ‘ஆடி ஆடி’ என்ற திருப்பதிகத்தில் -விஸ்லேஷ வியசனத்தால் -‘பிரிவுத்துன்பத்தாலே நான் முடியப் புக,-அது காணமாட்டாது என்னோடே வந்து கலந்து
ஒரு குணத்தையும் சொல்லப்புகில், ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லப்புக்க வேதம் பட்டது படும் இத்தனை.
இனி, இத்தொடர்மொழிக்கு, ‘அவன் என்னை அனுபவிப்பிக்க, அத்தால் எனக்குப் பிறந்த ரசம் அனுபவித்துவிடும் அத்தனை அல்லாது, பாசுரமிட்டுச் சொல்லி முடியாது’ என்றுமாம்.சொல்லுவது என் சொல்லீரே – விஷயாந்தர அனுபவத்துக்கு பாசுரம் இட்டுச் சொல்லுகிற நீங்கள் இதுக்கு ஏதேனும் சொல்ல வல்லீர்களோ-
———–
சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –2-5-9-
பாசுரம் இல்லை’ என்னா, கைவாங்கமாட்டாரே; சம்சாரிகளைப் பார்த்து,
‘என் நாயனான சர்வேஸ்வரனை நீங்கள் அனைவரும் கூடியாகிலும் சொல்ல வல்லீர்களோ?’ என்கிறார்.-திவ்யாத்தம ஸ்வரூப குணங்களுக்கு எல்லை காணிலும் திவ்ய மங்கள விக்கிரகங்களின் குணங்களுக்கு எல்லை காண முடியாமல் இருத்தலைத் தெரிவித்தபடி.-உபமான ரஹிதன் –
————-
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10-
பட்டர் இவ்விடத்தில்–
நைநம் வாசா ஸ்த்ரீயம் ப்ரூவன் நைநமஸ்த்ரீ புமான் ப்ரூவன் புமாம்சம் ந ப்ரூவன் நைனம் வதன் வததி கம்சன் அ இதி ப்ரஹ்ம
(,‘பரமாத்துமாவைப் பற்றிப் பேசும் ஒருவன் தனது வாக்கால் இப்பரம்பொருளைப் பெண் என்றும் சொல்லுகிறான் இல்லை;
ஆண் என்றும் சொல்லுகிறான் இல்லை; இவ்விருபாலுக்கும் வேறான அலியாகவும் சொல்லுகிறான் இல்லை.
அத்தகைய பரம்பொருள் அகாரவாச்சியனாய் இருக்கின்றான்’; )
ச வை ந தேவா ஸூரமர்த்ய திர்யங் ந ஸ்த்ரீ ந ஷண்டோ ந புமான் ந ஐந்து நாயங்குண கர்ம ந சன் நிஷேத சேஷோ ஜயதாத சேஷ
(‘அப் பரம்பொருள், தேவன் அசுரன் மனிதன் விலங்கு இவைகளாய் இல்லை; பெண்ணாகவும் இல்லை; அலியாகவும் இல்லை;
ஆணாகவும் இல்லை; வேறுபட்ட மற்றைப் பொருள்களாகவும் இல்லை; குணமாக இல்லை;
கிரியையாக இல்லை; சேதனனுமாக இல்லை; அசேதனனுமாக இல்லை,’ )என்னும்
இவ்வேத புராண வாக்கியங்களை மேற்கோள் காட்டி அருளிச் செய்தவாறே,
அருகு இருந்து கேட்டிருந்த ஒரு தமிழ்ப்புலவர், ‘ஸ்வாமி, நாட்டில் காணப்படுகின்ற மூன்றின்படியும் அல்லனாகில்,
சொல்லப்படுகின்ற பொருள் சூன்யமோ பின்னை?’ என்று கேட்க,
பட்டர், ‘பிள்ளை இயல் அறிவுக்குப் போந்திருந்தது இல்லையே!
‘ஆணல்லன் பெண்ணல்லள் அலியும் அல்லது’ என்றார் இலரே? ‘அல்லன், அல்லன், அல்லன்’ என்கிறார். ஆதலின்
‘புருஷோத்தமன்’ என்பதனை அச்சொற்கள் தாமே தோற்றுவிக்கின்றனவே?’ என்று அருளிச்செய்தார்.
‘ஆணல்லன் பெண்ணல்லன்’ என்கின்ற இத்தால் சஜாதீய விஜாதீய நிஷேதம் செய்தபடி
ஏகப் பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை -நீ எங்கட்குப் புத்திரனாகப் பிறக்க வேண்டும்’ என்ற சிலர் இரந்தால், அப்படியே வந்து பிறப்பான்-அன்போடு தன்னைப் பேணி மறைக்க வேண்டும்படி வந்து அவதரிப்பான்’ -இந்த இந்த நிலைகளை எனக்கு அறிவித்த இறைவன் படிகளைப் பேச என்றால் சால மிறுக்குடைத்து.
————
கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11-
பேச ஒண்ணாது ஒழிந்தது பரத்துவத்தை அன்று; குடக்கூத்து ஆடிய செயல் ஒன்றுமே ஆயிற்று.-கூடுவர் வைகுந்தம் – ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்றுகொலோ’ என்று ஆசைப்பட்டுப் பெறாது ‘ஆடியாடி’யாய் விசனப் படாமல், இப் பாசுர மாத்திரத்தைச் சொல்லவே நான் பிரார்த்தித்துப் பெற்ற பேறு பெறுவார்கள்.-இவருடைய அனுபவத்தை பரமபதத்தில் அனுபவிக்க பெறுவார் –-
—————
வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-
அம் தாமத்து அன்பு’ என்ற திருவாய்மொழியில் இறைவன் அழ்வாருடனே வந்து கலந்து
தான் பெறாப்பேறு பெற்றானாய் இருந்தான்;
இவர், ‘அல் ஆவி உள் கலந்த’ என்றும்,
‘என் முடிவு காணாதே என்னுள் கலந்தான்’ என்றும்
தம்முடைய -நைச்யத்தை அனுசந்தித்தவாறே -தாழ்மையினைச் சொன்னவாறே,
‘வளவேழ் உலகு தலை எடுத்து, இன்னம் இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்று
எம்பெருமானுக்குப் பிறந்த அதி சங்கையை -ஐயத்தை-நிவர்த்திப்பிக்கிறார்
வைகுந்தா –
ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் ‘ஆர்ய புத்ர’ என்னுமாறு போன்றும்,
திருவாய்ப்பாடியில் பெண்கள்‘கிருஷ்ண’ என்னுமாறு போன்றும்,
‘வைகுந்தா’ என்று அவனுடைய முதற்பெயரைச் சொல்லுகிறார்.
இதனால், ‘நித்திய விபூதி யுக்தன் தம்முடனே வந்து கலந்தான் என்று ஹ்ருஷ்டராகிறார்
‘வைகுந்தா’ என்று மேன்மை சொல்லிற்று;
‘மணி வண்ணனே’ என்று வடிவழகு சொல்லிற்று;
‘என் பொல்லாத் திருக்குறளா’ என்று சௌலப்யம் சொல்லிற்று;
இம்மூன்றும் கூடினதாயிற்றுப் பரத்துவமாவது.
இந்திரன் இராஜ்ய லாபம் பெற்றுப் போனான்;
மஹாபலி கொடையின் லாபம் பெற்றுப் போனான்;
அவ்வடிவழகு ஊற்றிருந்தது இவர் நெஞ்சிலே ஆதலின்,‘குறளா என்னுள் மன்ளி’ என்கிறார்.
செய் குந்தா வரும் தீமை –செய்யப்பட்டுத் தப்பாவாய் இருக்கும் தீமை.-இனி, ‘செய்கும் தா அருந்தீமை’ எனப் பிரித்துச் செய்யப்பட்டுக் கடக்க அரிதான தீமை
சிக்கெனப் பிடித்தேன் கொள் – என்னைப் பெறுகைக்கு முற்பட்ட நீ விடிலும் விடாதபடி நான் பிடித்தேனாகவே திருவுள்ளம் பற்று.-அவனைப் பார்த்து, மா ஸூ ச -‘துக்கப்பட வேண்டா’ என்கிறார்.-திருவடிகளை பிடித்தேனாக திரு உள்ளத்தில் கொள்ள அமையும்
மதிப்பன் அல்லன் என்று விடவோ –
வடிவில் பசை இல்லை என்று விடவோ-
ஸூ லபன் அன்று என்று விடவோ-
தேவர் நெகிழ்க்கிலும் நெகிழாத படி பற்றினேன் –
————
சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-
இவர், ‘விடேன்’ என்ற பின்பு அவனுக்கு வடிவில் பிறந்த பௌஷ்கல்யத்தைச் சொல்லுகிறார்-இவரோடே வந்து கலந்து, அக் கலவியில் அதிசங்கையும் தீர்ந்த பின்பாயிற்று, விகஸித ஸஹஜ ஸார்வஜ்ஞனுமாய் விஜ்வரனும் ஆயிற்றது.
ஆளவந்தாருக்குக் குருகை காவலப்பன் அருளிச் செய்ததாக அருளிச்செய்யும் வார்த்தை:
‘அப்பன் ஸ்ரீ பாதத்திலே ஒரு ரஹஸ்ய விசேஷம் உண்டு’ என்று மணக்கால் நம்பி அருளிச்செய்ய,
‘அது கேட்க வேண்டும்’ என்று ஆளவந்தாரும் எழுந்தருள, கங்கை கொண்ட சோழபுரத்து ஏற,
அப்பனும் அங்கே ஒரு குட்டிச் சுவரிலே யோகத்திலே எழுந்தருளியிருக்க,
‘இவரைச் சமாதி பங்கம் பண்ண ஒண்ணாது’ என்று சுவருக்குப் புறம்பே பின்னே நிற்க,
அப்பனும் யோகத்திலே எழுந்தருளி யிருக்கிறவர் திரும்பிப் பார்த்து,
‘இங்கே சொட்டைக் குலத்தில் யாரேனும் வந்தார் உளரோ?’ என்று கேட்டருள,
‘அடியேன்’ என்று ஆளவந்தாரும் எழுந்தருளி வந்து கண்டு,
‘நாங்கள் பின்னே தெரியாதபடி நிற்க இங்ஙனம் அருளிச் செய்கைக்கு ஏது என்?’ என்ன,
‘நானும் தானுமாக அனுபவியா நின்றால், பெரிய பிராட்டியார் அன்பு நிறைந்த வார்த்தைகளைக் கூறினும்
அவள் முகங்கூடப் பாராத சர்வேஸ்வரன், என் கழுத்தை அமுக்கி நாலு மூன்று தரம அங்கே எட்டிப் பார்த்தான்;
இப்படி அவன் பார்க்கும் போது சொட்டைக் குடியிலே சிலர் வந்தார் உண்டாகவேண்டும் என்று இருந்தேன் காணும்,’-என்று அருளிச் செய்தார்.
————–
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3-
நித்திய ஸூரிகளைக் கண் அழகாலே தோற்பித்தான்;-இவரைக் கண்ணியிலே அகப்படுத்தினான்.-அதாவது, ‘மார்வில் மாலையைக் காட்டி மால் ஆக்கினான்’-பொன் மலையை-இவரைப் பெற்ற பின்பு வளர்ந்து புகர் பெற்ற படியைத் தெரிவித்தபடி.-வேதங்களுங்கூட மீண்ட விஷயத்தை மறுபாடுருவ ஏத்துகின்றார் ஆதலின், ‘நன்கு ஏத்தி’ என்கிறார்-நா அலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –நாட் பூ அலருமாறு போன்று-ஜிஹ்வ அக்ரத்திலே – நாக்கின் நுனியிலே -விகசியா நின்றுள்ள சந்தஸானது என் பக்கலிலே நிற்கும் படியாகத் தந்த இது தன்னை –ஸ்வபாவமாக- உடையையாய் இருக்கிற பரம உதாரனே!-மனத்தின் துணையும் வேண்டாதபடி இருத்தலின் ‘நா அலர் பா’ என்கிறார்.
———–
வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து
எள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –2-6-4-
உனை நினைந்து எள்கல் தந்த வெந்தாய் –எள்கல் த்யாகம் ஈடுபாடு –
1-உன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களை நான் விடும்படி பண்ணினவனே -என்னுதல்
அன்றிக்கே
2-எள்கலாவது-ஈடுபாடாய்-உன்னை அனுசந்தித்தால் –காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் – என்கிறபடியே அள்ளி எடுக்க வேண்டும்படி பண்ணித் தந்த என் நாயகனே -என்னுதல்
உன்னை எங்கனம் விடுகேன்
1-உதாரன் அல்ல என்று விடுவோ
2-விரோதி நிரசன் அல்லன் என்று விடவோ
3-உனக்கு வடிவு அழகு இல்லை என்றுவிடவோ
4-உன் விஷயத்தில் இப்படி ஈடுபட்ட நான் உன்னை விட சம்பாவனை உண்டோ -என்னுதல்
5-உன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களிலே விரக்தனான நான் விட சம்பாவனை உண்டோ-என்னுதல்-இப்படி பல பிரகார உபகாரகன் -இனி மேல் எல்லாம் அவன் அதி சங்கையைத் தீர்க்கிறார் –
உய்ந்து போந்து இருந்தே —
உய்ந்து -சந்தமேனம் ததோ விது -என்கிறபடியே உஜ்ஜீவித்து
போந்து -சம்சாரிகளை விட்டு வ்யாவ்ருத்தனாய்-நித்ய ஸூ ரிகள் பரிமாற்றமாய் இருக்கை
இருந்து -நிர்பரனாய் க்ருதக்ருத்யனாய்-இருந்து -வள்ளலே மது சூதனா உன்னை எங்கனம் விடுகேன்-
——————–
உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –2-6-5-
1-ஆஸ்ரித விஷயத்தில் உனக்குப் பொருத்தம் இல்லாமல் விடுகிறேனோ –
2-அவர்கள் ரக்ஷணத்தில் உனக்குச் சிந்தை இல்லாமல் விடுகிறேனோ –
3-உன் அனுபவத்தில் எனக்கு சீலனாம் இல்லாமல் விடுகிறேனோ –
4-என் ஸ்வரூபம் பிரகாசியாமல் விடுகிறேனோ –
5-விஷயாசக்தரான சம்சாரிகளோடு பொருத்தம் யுண்டாய் விடுகிறேனோ –
6-பிரதிபந்தகமான பாபம் யுண்டாய் விடுகிறேனோ –
7-ப்ராப்யமான கைங்கர்யத்தில் சுவடு அறியாமல் விடுகிறேனோ – தாஸ்ய பரிமளத்தில் சுவடு அறியாமல் விடுகிறேனோ?
8-எனக்குத் தெவிட்டி விடுகிறேனோ? -அடிமையின் சுவடு அறிந்த திருவனந்த ஆழ்வான் விடில் அன்றோ நான் உன்னை விடுவது–உன்னைச் சிந்தை செய்து செய்தே –நான் நினைக்கைக்குக் கிருஷி செய்த உன்னை நினைத்து வைத்து விடக் காரணம்-பிரசங்கம் உண்டோ?’
———————-
உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-
என் முன்னைத் தீவினைகள் முழுவேர் அரிந்தனன் யான் –என்னுடைய-பிராக்தனமான – பல காலமாக ஈட்டப்பட்ட கர்மங்களை வாசனையோடே போக்கினேன்.
முழு வேர்-வேர் முழுக்க. அதாவது, ‘பக்க வேரோடே’ என்றபடி.
பாவங்களைப் போக்கினவன் அவன் ஆயினும், பலத்தை அடைந்தவர் தாம் ஆகையாலே
‘அரிந்தனன் யான்’ எனத் தம் தொழிலாகக் கூறுகிறார்.
அவன் விடுவது, மனம் அறிந்தே தீ வினைகளைச் செய்தவர்களை;
கைக் கொள்ளுகைக்கு-மித்ர பாவமே – நட்புத் தன்மையே அமையும் என்றபடி.
என் முன்னைக் கோள் அரியே-நரசிம்ஹமாய் உதவியதும் தமக்கு என்று இருக்கிறார்;
ஆஸ்ரிதர்களில் -அடியார்களில் ஒருவருக்குச் செய்ததும் தமக்குச் செய்ததாக நினைத்து இராத அன்று பகவத் சம்பந்தம் இல்லையாம் இத்தனை. இதனால், ‘எனக்குப் பண்டே உதவி செய்தவனே’ என்கிறார் என்றபடி.-கோளரி –‘மஹாவிஷ்ணும்’ என்கிற மிடுக்கையுடைய சிங்கம் என்னுதல்.-‘ஜ்வலந்தம்’ என்கிற தேஜஸ் – ஒளியையுடைய சிங்கம் என்னுதல்.-முடியாதது என் எனக்கே –ப்ரதிஜ்ஜா சம காலத்திலே நீ தோற்றுவாய் ஆயிற்ற பின்பு எனக்கு முடியாதது உண்டோ?சர்வ அபீஷ்டமும் சித்தம் அன்றோ-இந்த ஸம்ருத்தி எல்லாம் உன்னுடைய ப்ரஸாதத்தாலே விளைந்தது-என்கிறார் –
————
முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7-
முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து – பிரளயாபத்தில் அகப்பட்ட பூமி -தன் வயிற்றிலே புகாத போது-படும் பாடு அடங்க தான் என் பக்கலிலே புகுராத போது படுவானாய் வந்து புகுந்தான் –-எனக்கு இனி முடியாதது உண்டோ-அடியேனுள் புகுந்தான் –-சம்பந்தத்தைப் பார்த்து புகுந்தான்-உட்கலந்தான் –-ஒரு நீராகக் கலந்தான்-தன் பக்கல் ஜகத்து புக்கால் போல் அன்றியே -உகந்து புகுந்தான் –விடியா வென்னரகத்து –-ஒரு நாள் வரையிலே கர்ம ஷயம் பிறந்தவாறே விடியுமது இறே யமன் தண்டல் -இது விடியா வென்னகரம் இறே
நரகம் -என்று புத்தி பிறக்கும் அதில் -தண்மை தோற்றாத நரகம் இது-என்றும் சேர்த்தல் மாறினரே-என்றும் கிட்டக் கடவதான தண்மை தவிர்ந்தார்கள்-நானும் பிரார்த்திக்க வேண்டிற்று இல்லை-அவனும் நினைப்பிட வேண்டிற்று இல்லை-எத்தாலே என்னில் -என் பக்கல் அவன் பண்ணின பஷபாத ராஜ குலத்தாலே மாறிக் கொண்டு நின்றார்கள்
முடியாதது என் எனக்கேல் இனி -என்று அந்வயம் –
————-
மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் –2-6-8-
இப்படி கனத்த பேற்றுக்கு நீர் செய்த ஸூக்ருதம் என் என்ன -ஒரு ஸூக்ருதத்தால் வந்தது அல்ல-நான் பிறந்து படைத்தது என்கிறார் –அதுவும் ஓன்று உண்டு-அந்தாதியாகப் பிறந்து போந்தேன் -என்கிறார் –பிறந்து படைத்தது -தமப்பன் ஐஸ்வர்யம் பிள்ளைக்கு உண்டு -ஜன்ம சித்தம் –அந்தாதி -பூர்வ தேக அந்தம் உத்தர தேஹம் ஆதியாக இருக்குமே -திருவாய்மொழி போலே இதுவும் -என்றவாறு –
அஜீர்ணம் போய் அக்கார அடிசில் பெற்றேன் –ஒரு கடலில் தப்பி பிராப்த கடலில் ஆழ்ந்தேன் –துன்பக் கடலில் இருந்தும் இன்பக் கடலில் மூழ்கினேன் –சம்சார நாற்றத்துக்குள் ஆழ்ந்து இருந்தவன் இப்பொழுது சம்சார கந்தமே இல்லாத நித்ய ஸூரிகள் உடன் ஒரு கோவையாக பெற்றேனே –
உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் – ப்ராப்தனுமாய் -சரண்யனுமாய் -போக்யனுமாய் -விரோதி நிவர்த்தகனுமான – உன்னை –உனக்கு சர்வ பிரகார பர தந்த்ரனான என்னுள்ளின் நின்றும் அகற்றாது ஒழிய வேணும் –-தம்முடைய இனிமையாலே இவரும் அவன் பக்கலிலே அதி சங்கை பண்ணுகிறார் -தம் உகப்பு அவனை எதிர் இட்ட படி
எந்தாய் -விரோதியைப் போக்கி வந்து கலக்கைக்கு அடியான ப்ராப்தியைச் சொல்கிறது
————-
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9-
இனி எங்குப் போகின்றதே-போக்கிடம் இல்லையே உமக்கு -எதனால் என்னை விட முடியும் –
1-எந்தாய் -நீ சேஷி அல்லாமல் போகவோ -சேஷத்வம் மறந்தேன் என்று போகவோ –
2-தண் திருவேங்கடத்துள் நின்றாய் -நீ தூரஸ்தனாய் போகவோ
3-இலங்கை செற்றாய் -நீ விரோதி நிரசன சீலன் அல்லாமல் போகவோ
4-மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா -ஆஸ்ரித விஷயத்தில் மழு ஏந்திக் கொடுத்து கார்யம் செய்யும் அவன் அல்லாமல் போகவோ
5-கொந்தார் தண் அம் துழாயினாய் -ஆஸ்ரித ரஷணத்துக்கு மாலையிட்டிலையாய் போகவோ -கங்கணம் -ரஷை-தீஷை –
6-அமுதே-போகய பூதன் அல்லாமல் போகவோ
7- உன்னை என்னுள்ளே குழைந்த-ஒரு நீராக கலந்திலையாய் போகவோ
8- வெம் மைந்தா -நவீக்ருத ஸ்வ பாவன் அல்லாமல் போகவோ
9-வானேறே -மேன்மையன் அல்லாமல் போகவோ
10-இனி எங்குப் போகின்றதே-போகிலும் கூடப் போம் இத்தனை ஒழிய -ஏக தத்வம் என்னலாம் படி கலந்து தனித்துப் போகலாமோ-
———–
போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10-
சர்வாதிகனாய் இருந்து வைத்து -என்னை அடிமை கொள்ளுகைக்காக ஸ்ரமஹரமான திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவனே-உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ –
இவருடைய ஆர்த்தி எல்லாம் தீரும்படியாக வந்து விஷயீகரித்து-தன்னை அனுபவிப்பித்து -இவர் தன்னை விடில் செய்வது என் என்கிற-அதி சங்கையும் தீர்த்து-தோளில் இட்ட மாலையும் –தண் துழாய் விரை நாறு கண்ணியனே –இப்பொழுது தான் –அதி சங்கை தீர்ந்த பின்பு பரிமளிதமாய்-பிடித்து மோந்த இலைத் தொடை மாலையும் -கைபந்து –தானுமாய் -பரிபூர்ண மநோ ரதனுமாய்-நின்றபடி-
————
கண்னித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –2-6-11-
அவர் கேசவன் தமரே –அவர்கள் ஆரேனும் ஆகவுமாம்-குல சரண கோத்ராதிகள் அபிரயோஜகம்-அரையர்கள் -விண்ணப்பம் செய்வார்கள் என்னுமா போலே இவ்வாகாரத்தாலே அவர்கள் பகவதீயர் -தன் முகத்தாலே -உத்தேச்யர் ஆவார்
———–
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-
கேசவன் தமர்
1-ரூபம்-பிரசஸ்த கேசனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் -என்னுதல் –
2-குணம் -கிலேச நாசன் -கேசவா என்ன கெடும் இடராய எல்லாம் கெடுமே-விரோதி நிரசன சீலதையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
3-ஸ்வரூபம்-தஸ்மாத் கேசவ நாமவான் -என்கிறபடியே சர்வ நிர்வாஹனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
4-சேஷ்டிதங்கள் கேசி ஹந்தா–சர்வேஸ்வரன் உடையார் -என்றாயிற்று -ஆழ்வார் இவர்களை விரும்புகிறது
மாசரிது பெற்று –கேசவன் தமர் ஆகிற பெரும் சதிரைப் பெற்று என்னுதல் –
மாதவன் என்றதே கொண்டு என்றத்தைச் சொல்லுதல் –
விதி சூழ்ந்ததால் என்று ஆகஸ்மிக பகவத் கிருபையை சொல்லுதல்
மா சதிர் -தம் தலையால் வந்ததாகில் இறே சாவதியாய் இருப்பது இது பெற்று
காணக் காண அவன் தலையால் சுமக்கிற படி-
————
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-
மஹா உபகாரகனாய் — இப்படி நார சப்தார்த்தங்கள் தமக்கு விபூதியான படியை எனக்கு பிரகாசிப்பித்த ஸ்ரீ யபதியான ஸ்ரீ கிருஷ்ணன் என்னை அநந்யார்ஹன் ஆக்கின சேஷி –ப்ரஸ்துதமான நாராயண சப்தார்த்தைச் சொல்லுகிறார் –
———-
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-
அவங்கள் –1-நரக ஹேதுவான அவித்யாதிகள்–2-புறம்பே சில பிரயோஜனங்களைக் கொண்டு போக விடுதல் -3–அயோக்யன் என்று அகல விடுதல்- 4–உபாயாந்தர பரிக்ரஹம் பண்ண விடுதல் செய்யேன் என்று-தீதவம் கெடுக்கும் –தீதாகிறது -மயர்வற மதி நலம் அருள பெறுவதற்கு முன்பு புத்தி பூர்வகமாகப் பண்ணின கர்மங்கள்-அவமாகிறது -பின்பு பிராமாதிகம் ஆனவை-நிஷ்க்ருதி இல்லாத கர்மங்களும் நிஷ்க்ருதி உள்ளவையும் என்றுமாம் –அமுதம் –-போக்குவது தன் போக்யதையைக் காட்டி-செந்தாமரை கட்குன்றம்
என்னோட்டை கலவியாலே சிவந்த திருக் கண்களையும் வளர்ந்த திரு மேனியையும் உடையவன் ஆனான் –-சதைக ரூபமான வடிவு விகசிதம் ஆயிற்று –என் கோவிந்தன் -என்னை விஷயீ கரிக்கைக்காக கோவிந்தன் ஆனவன் –
————
கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-
தேவும் தன்னையும்–தேவும் -என்கிறது – ஐஸ்வர்யத்தை –தன்னை -என்கிறது- ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை -அது இறே தானான தன்மை–ஆத்மானம் நாதி வர்த்தேதா -என்றான் இறே -வசிஷ்டர் –ஆத்மபூதம் பரதம் நாதி வர்த்தேதா-என்கிறான் என்று சிலர் சொல்லுவார்கள் –
பட்டர் -நீரான தன்மை யாகிறது ஆஸ்ரித பரதந்த்ரனாகை-உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து நீரான தன்மையை இழவாதே கொள்ளும் என்கிறார் -என்றார்-எம்பிரான் விட்டுவே –எனக்கு உபகாரகனான சர்வேஸ்வரன் –நினைத்த கார்யம் செய்து தலைக் கட்ட வல்லவன்-சர்வ சக்தி மாட்டாதது உண்டோ –வ்யாப்தியும் தமக்காக –என்று இருக்கிறார் –ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளையுமா போலே வியாப்திக்கு பிரயோஜனம் தம்மை வசீகரிக்கை என்று இருக்கிறார் –
————–
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-
திருமாலை யாண்டானோடே எம்பெருமானார் திருவாய் மொழி கேட்டருளுகிற நாளில் பாட்டுக்கள் தோறும் சில வார்த்தைகள் அருளிச் செய்து-(தம்மையும் தம் உடையராயும் விஷயீ கரித்த- அவனை கொண்டாடுகிறார் -முதல் நிர்வாகம் -திருமாலை ஆண்டான் )
இது அர்த்தமானாலோ -என்றால் -இது விஸ்வாமித்ரர் சிருஷ்டி -ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டறியேன் -என்று பணிக்குமாம் ஆண்டான்
ஆண்டான் இப்பாட்டுக்கு விச்வாமித்ர சிருஷ்டி வேண்டாவாய் இருந்ததீ-என்ன -இப்பாட்டால் தன் அவயவ சௌந்தர்யத்தாலே என்னைத் தனக்கு ஆக்கினான் -என்கிறார் -என்று அருளிச் செய்து அருளினாராம்
அதுவும் கிடக்க பட்டர் அருளிச் செய்வது ஓன்று உண்டு –ஆழ்வாரையும் ஆழ்வார் பரிகரத்தையும்-விஷயீ கரித்து அத்தாலே திருமேனியிலே பிறந்த ஔஜ்வல்யத்தை சொல்லுகிறது -என்று விசோதிதஜட ஸ்நாதசசித்ர மால்யாநுலேபன மகார்ஹவஸநோ ராமஸ் தஸ்தௌ தத்ர ஸ்ரீ யா ஜ்வலன் –யுத்த -131-15-என்று
பெருமாள் பிராட்டி உடன் பட்டாபிஷேக திருக் கோலத்துடன் நின்றாப் போலே என்றவாறு –
———
மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-
இவர் பிறந்த ஜன்மங்கள் தோறும்-தானும் எதிரே பிறந்து வந்தான் யாயிற்று-இவர் கர்மம் அடியாக பிறக்க -அவன் அனுக்ரஹத்தால் பிறந்து வந்த இத்தனை –சூழல் என்று அவதாரத்தைச் சொல்லக் கடவது இறே –-சூழ்ச்சி -திட்டம் வைத்து என்னை பிடிக்க -தன் சொத்தை தான் பெற -எனக்கே -அசாதாரனமான விசேஷம் -பிரதம கடாக்ஷம் தொடங்கி பர பக்தி பர்யந்தமாக –அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம் என்று உணரும் படி –அருள்கள்–விதி என்கிறது பகவத் கிருபையை -பகவத் கிருபையை விதி என்பான் என் என்னில் -அவனுக்குத் தப்ப ஒண்ணாத தாகையாலே-நாம் நினைத்தவை தலைக் கட்ட வொட்டாத கர்மம் போலே ஈஸ்வரன் நினைத்த கார்யங்களும் க்ருபா பரதந்த்ரனாய்த் தலைக் கட்ட மாட்டான்-தம்மை விஷயீ கரித்து அல்லது அவனை இருக்க ஒட்டாமையாலே அவனுடைய க்ருபா குணத்தை விதி என்கிறது-
———-
திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-
என் செங்கனி வாய் -உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன்
இவர் ஜிதம்-என்ற பின்பு அவன் ஸ்மிதம் பண்ணின படி -என்னை அனந்யார்ஹன் ஆக்குகையாலே சிவந்த கனிந்த திரு வதரத்தின் உருவிலே -அழகிலே -நிறத்திலே
பொலிந்த பரபாகத்தாலே சம்ருத்தமாய் பரிசுத்தமான ஸ்படிகம் போலே இருக்கிற திரு முத்து நிரையினுடைய நிறத்தை யுடையவன்முத்துப் பல் வரிசை –
பல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் –
1–கல்பம் தோறும் கல்பம் தோறும் பரம போக்யமான உன் திருவடிகளையே அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனசைத் தந்தாய் –
2–விஷயாந்தரங்கள் அஸ்தரம் ஆகையாலும் அபோக்கியம் ஆகையாலும் ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை யாகையாலே
மனஸ்ஸூ -சஞ்சலம் ஹி மன –ஸ்ரீ கீதை -6-34-என்று சஞ்சலமாய் இறே இருப்பது
அப்படி இன்றியே நித்யமுமாய் நிரதிசய போக்யமுமாய் இருக்கையாலே –மருவித் தொழும் மனசைத் தந்தாய் -என்றுமாம்
3–பழைய நெஞ்சைத் திருத்தின அளவன்றிக்கே கருவுகலத்தில் ஒரு நெஞ்சைத் தந்தாய் —திவ்யம் ததாமி தே -ஸ்ரீ கீதை -11-8-போலே –
பழைய நெஞ்சு -இது என்று பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாத படி இரா நின்றது
என் வாமனனே –வல்லை காண்-கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்கு ஒன்றேயோ பரிகரம்-ஆழ்வாரைக் கொண்டார் -மனசைக் கொடுத்தார் -ஔதாரன் பட்டம் கொடுத்தார் -உலகைக் கொண்டார் -தருவதும் பரிப்பதும்- ஒரே உபகரணத்தாலே
வாமன வேஷத்தைக் காட்டி என் நெஞ்சைத் திருத்தித் தந்தாய்-அவ்வழகாலே மகா பலி என்னது என்று இருந்த பூமியை அபகரித்தாய்-வல்லை காண் -என்று உகக்கிறார் –
—–
வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-
என்னைத் தீ மனம் கெடுத்தாய்-அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும் உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய்-நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் –
தேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் -ஸ்ரீ கீதை -10-10-
தேஷா மேவா நுகம் பார்த்தம் அஹம் அஜ்ஞ்ஞானாஜம் தம நாசயாமி ஆத்ம பாவஸ்ய -ஸ்ரீ கீதை -10-11-போலே
உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே — பண்ணின உபகாரத்தின் கனத்தாலே பிரத்யுபகாரம் பண்ணி யல்லது தரிக்க மாட்டு கிறிலேன்-அதுக்கு விரகு காண் கிறிலேன்
நான் ஒரு உபகாரம் கொள்ளாது ஒழிதல்-நீ குறைவாளன் ஆதல் செய்யப் பெற்றிலேன் –சிரீதரனே-புஷ்கலனாய் இருக்கிற உனக்கு நான் எத்தைச் செய்வேன்-
———-
சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9-
ஆடியாடியில் பிறந்த வ்யசனம் எல்லாம் நான் மறந்து மிகவும் பிரீதனாம் படி பண்ணி இந்த்ரியங்களைத் தான் இட்ட வழக்காக்கினான் என்கிறார் –
பக்தி பூர்வகமாக உன்னை அனுபவியா நிற்கச் செய்தே –பிரதி பந்தகங்களும் நீங்கி— நிரதிசய ஹர்ஷமும் பிறக்கும்படி–உன்னை என்னுள்ளே வைத்தாய் என்று ப்ரீதர் ஆகிறார் என்னுமாம் –
இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என்னிருடீ கேசனே –
இவர் பக்தி பரவசர் ஆகையாலே இவருடைய தேக யாத்ரை இருக்கும் படி என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி
அன்றிக்கே –பட்டர்
–இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள-என்கிற இடத்தளவும் ஆடியாடியிலே இவர்க்கு ஓடின தசையாய்
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை-என்கிற இது அந்தாமத்து அன்பு -தொடங்கி- கேசவன் தமர் அளவும் வர உண்டான பரிதியைச் சொல்லுகிறது -என்று
இராப்பகல் வாய் வெரீ இ -என்கிறது –இவள் இராப்பகல் வாய் வெரீ இ -என்றத்தை
அலமந்து -என்கிறது- எங்கும் நாடி நாடி- என்றத்தை
கண்கள் நீர் மல்கி -என்கிறது –தன் குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் -என்றத்தை
வெவ்வுயிர்த்து உயிர்த்து-என்கிறது –உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் -என்றத்தை
மரீ இய தீ வினை மாள-ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே ஆனை இடர் பட்டால் போலே –ஆடியாடியில் ஆற்றாமை
இவருக்கு இப்படி பொருந்தின விஸ்லேஷ வ்யசனம் ஆரும்படியாக-இன்பம் வளர
அந்தாமத்து அன்பு தொடங்கப் பிறந்த ப்ரீதி-வைகல் வைகல்-கழிகிற காலம் தோறும்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை–உன்னை என்னுள்ளே இருத்தி வைத்தனை
என்னிருடீ கேசனே – எனக்குப் பரிகரமாய் விரோதித்த இந்த்ரியங்களும் உன் பக்கலிலே படையற்றன-பரம சேஷியைக் கண்டார் த்வார சேஷிகள் அளவில் நில்லார்கள் இறே -இந்த்ரியங்கள் என்னது — ஈசன் நீ —
————–
இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-
மருடி யேலும் விடேல் கண்டாய்-உனக்கு ஒரு பிச்சு உண்டு இறே-அவன் வைலஷண்யத்தைப் பாரா வருவது – நாம் இவ்விஷயத்தை தூஷிக்கையாவது என்-என்று அயோக்ய அனுசந்தானத்தாலே அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -அத்தைத் தவிரப்பார் கிடாய்-நம்பி பற்ப நாபனையே — கெடுவாய் இவ்விஷயத்தை விட்டு புறம்பே போய் மண்ணை முக்கவோ-மண்ணை அளந்தவனும் அவன் -உண்டவனும் அவன் உமிழ்ந்தவனும் அவன் –ஜகமே நியத பிரகார சரீரம் –
1-அவன் குண பூர்த்தி இருந்த படி கண்டாயே —நம்பி
2-வடிவு அழகு இருந்தபடி கண்டாயே —பத்ம நாபனையே –கொப்பூழில் ஏழு கமலப் பூ அழகர்
3-முன்பு நமக்கு உபகரித்த படி கண்டாயே–நம்பி-பத்ம நாபனையே –இருடீகேசன்
———
பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11-
எனக்கே தன்னைத் தந்த -1-அர்த்தியை உண்டாக்கியும் -2–அவனைத் தானே ஸ்வீகரிக்கையும் -3–அபேஷிதத்தை கொடுக்காமல் தன்னையே கொடுக்கையும் –
4-தானே போக்யமாகவும் இருப்பதால் -கற்பக வியாவ்ருத்தி உண்டே இவனுக்கு-இந்த ஔதார்யத்துக்கு அடி திருமலையின் சம்பந்தம்-கொடுத்தத்தை நினையாதே கொடுக்கும் மேகம் போன்ற ஸ்வபாவத்தை உடைய திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையவன்-விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே – நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகனாய் வைத்து ஆஸ்ரிதைகளான இடைச்சிகளுக்கு கட்டவும் அடிக்கவும் படி இருக்கிற ஸுலப்யத்தைக் காட்டி என்னை அடிமை கொண்டவன் –
————-
தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே –2-7-12-
எங்களை ஒழிய ஒருவருக்குத் தான் அறியப் போமோ என்பர்கள் -இப்படி சொல்லிக் கொண்டு தொழும் ஸ்வ பாவருமாய்-அவனுக்கு சரீரவத் அந்தரங்கரான ருத்ரனுக்கும் ப்ரஹ்மாவுக்கும் தான் அறியலாமோ-தன் குண ஆர்ணவத்தை என் பக்கலிலே மடுத்து என்னை அடிமை கொண்டவனை பரிச்சேதிக்கலாமோ –
————-
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூத்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-
நெடுமாலை-என் அளவில் பர்யவசியாதே என்னோடே பரம்பரயா சம்பந்தித்தவர்கள் அளவும் செல்லும் வியாமோஹ அதிசயத்தை உடையவனை-இவை தான் பண்ணிலே புணர்க்கப் பட்டவை-ஸ்ரீ வைஷ்ணவ சிஹ்னமான திரு நாமங்களை வைத்துப் பாடினவை சர்வேஸ்வரன் திருவடிகளை சேர்க்கும்-இப்பத்தோட்டை சம்பந்தம் தானே கேசவன் தமராக்கும் –
அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-
முக்த பிராப்ய போகத்தைச் சொல்லுகிறது -சர்வேஸ்வரனும் பிராட்டிமாருமாக திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே இருக்கக் கண்டு உகந்து அடிமை செய்கை முக்த ப்ராப்ய போகமாகிறது-முதல் பாட்டுத் தான் இத் திருவாய் மொழிக்கு சங்க்ரஹமாய்-மேலுள்ள பாட்டுக்களில் ஒரு பதத்தை பற்றிப் போருமவையும் அது தன்னைப் பற்றி எழுமவையுமாய் இருக்கிறது –அவனை சேஷ பூதன் அடிமை செய்து அல்லது தரியாதாப் போலே சேஷியும் சேஷ பூதனோடு அணைந்து அல்லது தரியாதானாய் இருக்கும் படி –ப்ரஹ்ம ருத்ரர்கள் சம்சார பக்தர்கள் என்னும் இடமும் ஈஸ்வரனே மோஷ ப்ரதனாக வல்லான் என்னும் இடமும் சொல்லுகிறார்-ஆக -ஆஸ்ரயணீயன் அவனே -ப்ரஹ்ம ருத்ராதிகள் ஆஸ்ரயணீயர் அல்லர் –
1-1- உயர்வற பரத்வனே -திண்ணன் வீடு -அவதரித்து -விபவ பரத்வன் -அணைவது -இங்கே மோஷ ப்ரதத்வ பரன்–மேலே 4-10- ஒன்றும் தேவும் -அர்ச்சா பரத்வம்
விஷ்ணு போதம்-ஏக தேசத்தைப் பற்றி நிற்கை யன்றிக்கே அக்கரையும் இக்கரையும் பற்றி நிற்கும் ஒடமாயிற்று – லீலா விபூதியையும் நித்ய விபூதியையும் பற்றி நிற்கும் –சர்வ வியாபி–
—————
நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2-
அவனோடு உள்ள சம்பந்தமே மோஷ ப்ரதம்–தாண்ட விருப்பம் வேண்டுமே -அப்பொழுது தான் சம்பந்தம் பிரயோஜனப்படும் –பிறவிக் கடல் நீந்துவார்க்கு -என்கிற விவரணமாய் இருக்கிறது –வீடு என்கிறது -சம்சார நிவ்ருத்தி மாதரத்தை அன்று –ஸூகபாவிக லஷணையான பகவத் பிராப்தியை–
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே —
1-வைத்த வளையத்தோடு காணும் மடுவில் போய் விழுந்தது -புருஷோத்தமன் லஷணம் அன்றோ
2-திருத் துழாயில் பரிமளம் போலே காணும் ஆனை இடரைக் கடந்தது -சம்பந்தமே மோஷம் – –வாட்டம் தணிய வீசீறே
3–ஆனை இடராவது -சர்வேஸ்வரன் ஆபத் சகன் -என்று இருந்தோம் -இவன் இப்படி ஆபன்னனாக உதவாது ஒழிவதே –
நிர்க்குணனாய் இருந்தானீ-என்று நாட்டில் உள்ளோர் நினைக்கில் செய்வது என் -என்ற அத்தாலே வந்த இடராகிலுமாம்-
திரௌபதிக்கு எங்கேயோ இருந்து புடவை சுரந்தது போலே ஆகாதே -கையில் உள்ள செவ்வித் தாமரையை திருவடியில் இட வன்றோ இது ஆசைப்பட்டது
என் தனி நாயகன்-–ஆனை இடரைப் போக்குகை அன்றிக்கே நம் இடரைப் பரிஹரித்தால் போலே யாயிற்று இவர்க்கு இருக்கிறது-புணர்ப்பே — அவனோட்டை சம்பந்தம் –-அவன் திருவடிகளிலே சம்பந்தம் துக்க நிவ்ருத்தியையும் பண்ணி –ஸூக பாவைக லஷணம்-என்கிற பேற்றையும் தரும் –
—-
புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3-
இருவரவர் முதலும் தானே -என்கிற பதத்தை விவரியா நின்று கொண்டு -ஸ்ரீ யபதியான அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்களை பிரத்யஷிக்கலாம் என்கிறது –இவை தான் இவர்கள் செய்ய வல்லராவது அவன் திருமேனியைப் பற்றியிருந்த போதாயிற்று –
ஸ்த நந்த்ய பிரஜை வாயில் முலை வாங்கினால் தரியாதாப் போலே – சிவன் நான்முகன் புத்திர முகேன இவரை விடாமல் இருப்பானே –ப்ரஹ்மாதிகளுக்கு நிர்வாஹகன் என்றவோபாதி ஸ்ரீ லஷ்மி சம்பந்தமும் ஐஸ்வர் யத்துக்கு உடலாகையாலே –பெரிய பிராட்டியாரோடு சேர்த்தி நீர்மைக்கும் மேன்மைக்கும் உடலாய் இருக்கும் இறே-பெரும் புணர்ப்பு எங்கும் புலனே — ப்ரஹ்மாதிகள் அதிகரித்த கார்யங்களை அவர்கள் வழியாலே நடத்தியும்- வ்யூஹ மூர்த்தியாக –-தான் அதிகரித்த கார்யங்களை தானே நடத்தியும் -தனக்கு தகுதியான சேஷ்டிதங்கள்- போருகையாலே -தன்னுடைய பெரும் புணர்ப்பு ஆனைத் தொழில்கள் எங்கும் காணலாய் இருக்கும் –
—————
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-
புகுவீர்–இப் பேற்றுக்கு இசைவே அதிகாரம் என்கிறார்–இசைவு அதிகாரம் தான் -உபாயம் இல்லை -அவன் இரக்கமே உபாயம் -இனிமை தானே உபேயம் –பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –ஸ்மர்த்தவ்ய விஷய சாராஸ்யத்தாலே ஆச்ரயண தசையே தொடங்கி ரசியா நிற்கிற கல்யாண குணங்களிலே அவகாஹியுங்கோள்-ஓவாதே – அபர்வணி கடல் தீண்டல் ஆகாதே -என்னுமா போலே இதுக்கு கால நியதி இல்லை என்கை
தமக்கு ரசித்த படியால் இடைவிடாமல் அனுபவியுங்கோள் -என்கிறார்-நானும் சொன்னேன் நமரும் உரைமின் -என்னுமவர் இறே-ரசித்த பேரைச் சொல்லச் சொல்லி -கலியன் –பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –ரசித்த குணங்களைச் – சொல்லச் சொல்லி –நம்மாழ்வார்– யானி நாமானி கௌனானி- வியாசர்–
————
ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-
இணைவனாம் எப்பொருட்கும் -என்றதை உபபாதிக்கிறார் –துயர் பிறவி -தப்பாக சொன்னேன்- ஓவா துயர் பிறவி என்கிறேன் -என்கிறார்-உச்சிவீடும் விடாதே துயரை விளைக்கக் கடவதான ஜன்மம் தொடக்கமான மற்றும் உண்டான ஐந்துக்கும்-ஷட்பாவ விகாரம்-என் தீர்த்தனே — நல்ல போக்யஜாதம் இருக்க நிஷித்த த்ரவ்யங்களை விரும்புவாரைப் போலே தானும் தன்னுடைய குணங்களும் இருக்க -சப்தாதி விஷயங்களை விரும்பிப் போந்த என்னை-அவற்றை விட்டுத் தன்னையே விரும்படியான சுத்தியைப் பிறப்பித்த சுத்தியை உடையவன்--அன்றிக்கே -நான் இழிந்து ஆடும் துறை என்னுதல் –
———-
தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-
நீர் சொல்லுகிறவனுக்கு இந்த உத்கர்ஷம் எல்லாம் உண்டோ என்ன -முன்பே அர்ஜுனன் நிரூபித்து நிர்ணயித்த அர்த்தம் நாம் இன்றி ஆராயும்படி குறை பட்டு இருந்ததோ -என்கிறார் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் இ றே திருத் துழாயை உடையனாகை–இவன் திருவடிகளில் இட்டத்தை அவன் தலையிலே கண்டான்-இது கிருஷ்ண அவதாரத்திலேயாய் இருக்க ஸ்ரீ வாமன அவதாரத்தைச் சொல்லுகிறது –வரையாதே தீண்டுகை –இரண்டு அவதாரத்துக்கு ஒத்து இருக்கையாலே-
————-
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-
ஒருவன் -அர்ஜுனன் -ருத்ரன் -அனுவர்த்தனம் கொண்டு நிச்சயிக்க வேணுமோ –அவனுடைய இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாய் அன்றோ–இஜ்ஜகத்து இருக்கிறது -இதுவே போராதோ பரத்வ ஹேது -என்கிறார் –தன் விபூதியினுடைய ரஷணம் ஒரு தலையானால் அவன் படும் பாட்டை அனுசந்தித்து ஹ்ருஷ்டையாய்-அதுக்கு அபிமானியான
ஸ்ரீ பூமிப் பிராட்டி அணைக்கும் -அத்தாலே தானும் ஹ்ருஷ்டனாய் அணையா நிற்கும்-
———
காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-
அவனுடைய அத்புத கர்மங்களை தனித்தனியும் திரளவும் பரிச்சேதிக்கப் போகாது எத்தனையேனும் அளவுடையார்க்கும் என்கிறார்-சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு கையாளான் ஆனவனை-அவன் தானே காட்ட நான் கண்டால் போலே காண்பார்க்கு காணலாம் இத்தனை போக்கி ஸ்வ யத்னத்தால் சிலர்க்குக் காணப் புக்கால் காணப் போமோ-ஜாதி வியக்தி தோறும் – குறைவற வியாபித்து இருக்கும்-ஆன பின்பு வ்யாபக வஸ்துவை வ்யாபத்திலே ஓன்று பரிச்சேதித்துக் காண்கை-என்று ஒரு பொருள் உண்டோ –
————
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-
நீர் சொன்னது அனுபபன்னமாய் இருந்ததீ-ஒரு வஸ்துவே அநேக பதார்த்தங்களில் குறைவற வியாபித்து இருக்கும் என்றால்-இது கூடுமோ என்ன கெடுவிகாள்-அவன் சர்வகதத்வத்தை இசையாத இரணியன் பட்டது படாதே கிடி கோள்-என்கிறார் –எங்கும் உளன் கண்ணன்--இதுவாயிற்று அவன் சொன்ன தப்பு -சர்வேஸ்வரன் சர்வ கதன் என்றான் என்ற மகனைக் காய்ந்து-இவ் வர்த்தத்தை சத்ருவே சொன்னாலும் கேட்ட போதே காலில் விழ வேண்டும் வார்த்தை சொல்லிற்று-பிரமாண விருத்தமான அர்த்தத்தைச் சொல்லிலும் கொண்டாட வேண்டும்படி யாயிற்று சம்பந்தம்-பருவத்தாலும் கொண்டாட வேண்டும் ஒள்ளியவாகிப் போந்த -இவை ஒன்றுமே இல்லை யாகிலும் சொன்ன போதே இனிமை தான் கொண்டாட வேணும்-பிள்ளையைச் சீறி -திரு நாமம் சொன்னதே ஹேதுவாக புத்திரன் அன்று என்று விட்டான் அவன் திரு நாமம் சொன்னவர்களோடே தமக்கு எல்லா உறவும் உண்டாக நினைத்து இருக்கையாலே இவர் பிள்ளை என்கிறார்-அதிர்த்துக் கொண்டு புறப்பட்ட போதை அட்ட ஹாசமும் -நா மடித்துக் கொண்ட உதடும் -நெற்றியது கண்ணும்–உச்சியது புருவமுமாய்க் கொண்டு- தோற்றின போதே பொசுக்கின பன்றி போலே உருகினான் ஆயிற்று பொன்னன் ஆகையாலே–
——————–
சீர்மை கொள் வீடு ஸ்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-
இவர்களை விடீர் -நாம் முந்துற முன்னம் இவர்களைப் போலே ஆகாதே –அவனை அனுபவிக்கப் பெற்றோம் இறே– என்று ஸ்வ அனுபவ லாபத்தாலே ஹ்ருஷ்டராகிறார் –வித்து –மாறி மரம் ஆகும் -உபாதானம் -சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் உபாதான காரணம்–முதல் -சங்கல்பம் -நிமித்த -சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம்-நிமித்த காரணம்
வேர் -கெட்டியாக இருந்து நிற்கும் சஹ காரி காரணம் -ஞான சக்த்யாதி குண விசிஷ்ட ப்ரஹ்மம்-தனி நின்ற ஸ்ரீ வைகுண்டத்தில் தனித்து உள்ளார் – தோஷங்கள் தட்டாமல் உள்ளார் என்றுமாம்–
——————-
கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-
இத் திருவாய்மொழி அப்யசிக்க வல்லார்கள் இத் திருவாய் மொழியில் சொன்ன முக்த ப்ராப்ய போகத்தைப் பெறுவார் –ஆள்வர் எம்மா வீடே – தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான் -1-5-10-என்று எனக்கும் என் பரிகரத்துக்கும் தருவானாக சமைத்து நிற்கிற பரம பதத்தை ஆளப் பெறுவார் – ஆழ்வார் சம்பந்தம் அடியாகவே ஆளப் பெறுவோமே –-பரந்த சிவந்து இருந்துள்ள திருக் கண்களையும் -அவற்றுக்கு பரபாகமாம் படி கறுத்த திரு மேனியையும் உடைய சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று-பிரதிபாத்ய வைலஷ்யண்யம் .-வெள்ளத்திலே அலைவாரைப் போலே தேன் வெள்ளத்திலே வண்டுகள் அலையா நின்றுள்ள சோலையை உடைய திரு வழுதி வள நாட்டை உடைய ஆழ்வார் அருளிச் செய்தது – வக்த்ரு வைலஷ்யண்யம்-தலையான பண்ணிலே மேலே சொன்ன தமிழ் யாயிற்று இப்பிரபந்தம் தான் அன்றியே -பண்ணின் மேலே சொன்ன -என்னுதல் பிரபந்த வைலஷ்யண்யம்–
————-
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-
1-ஆழ்வீர்-மோஷத்தைக் கொள்ளும் என்றான் ஈஸ்வரன் -வேண்டா என்றார் –
2-மா வீடு கிடீர் –விலஷணமான மோஷம் கிடீர் -என்றான் -அதுவும் வேண்டா என்றார் –
3-எம் மா வீடு கிடீர் -ஐஸ்வர்யம் ஆத்ம லாபம் -என்று இருக்க வேண்டா -பரம புருஷார்த்த லஷண மோஷம் என்றான் -அதுவும் எனக்கு வேண்டா என்கிறார்
செப்பம் –செப்போம் –சொல்லோம்-நீ பிரசங்கிக்கக் கடவை யல்ல -நான் பிரதிஷேதிக்கவும் கடவேன் அல்லேன் –கொக்குவாயும் படு கண்ணியும் போலே உன் திருவடிகளும் என் தலையும் சேர வேணும்-
அதுக்கும் இதுக்கும் உள்ள வாசி பாராய்-1- -அங்கு முதலை ஓன்று –எனக்கு முதலை ஐந்து –2–அங்கு ஆயிரம் தேவ சம்வத்சரம் –இங்கு அநாதி காலம் –3–அங்கு ஒரு சிறு குழி –இங்கு பிறவி என்னும் பிறவிக்கடல் 4–அதுக்கு சரீர நாசம் –எனக்கு ஆத்மா நாசம்--5–ஆனையின் காலை யாயிற்று முதலை பற்றிற்று – இங்கு என்னுடைய நெஞ்சை யாயிற்று அருவித் தின்றிடுகிறது
சேஷத்வமே புருஷார்த்தம் -விக்ரகமே உத்தேச்யம் -ரிஷிகள் ஸ்வரூபத்தில் மண்டி -ஆழ்வார்கள் –திண் கழல் இருவர் -மிதுனம் -விட்டாலும் விடாதே–
————–
ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே –2-9-2-
முதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்-இதிலே மானசமான பேற்றை அபேஷிக்கிறார்-
எய்தா நின் கழல் யான் எய்த
1-ஸ்வ யத்னத்தால் ஒருவருக்கும் பிராபிக்க ஒண்ணாத திருவடிகளை -உன்னாலே பேறு-என்று இருக்கிற நான் ப்ராபிக்கும் படி பண்ணி –அது நீர் மயர்வற மதிநலம் பெற்ற அன்றே பெற்றிலீரோ என்ன-ஞானக் கைதா –
2-இது நீ நினைத்து இருக்கும் அளவு போறாது -அது நான் பெற்றேன் என்று தெளியும்படி பண்ண வேணும்-அமிழ்ந்தினார்க்கு கை கொடுத்தால் போலே இருக்கையாலே ஜ்ஞான லாபம் –பிரத்யஷ சமானாகார ஞானம் –-ஜ்ஞானமான கையைத் தா -என்கிறார் -சர்வம் ஞான பிலவம்-தெப்பம் -கீதை –
இங்கே எம்பாருக்கு ஆண்டான் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-அதாவது
ஒரு கிணற்றிலே விழுந்தவனுக்கு இரண்டு பேர் கை கொடுத்தால் எடுக்குமவர்களுக்கும் எளியதாய் ஏறுமவனுக்கும் எளிதாய் இருக்கும் இறே -அப்படியே ஆகிறது என்று –
ஞானக் கை தா –3-அங்கன் அன்றிக்கே -அது பின்னை பரபக்தி பர ஞான பரம பக்திகளை உடையார் பெரும் பேறன்றோ என்ன-ஞானக் கை தா – அவற்றையும் தேவரே பிறப்பித்து தேவர் திருவடிகளைப் பெற வேணும் -செய்கிறோம் என்ன ஒண்ணாது -செய்து கொடு நிற்க வேணும் –
————-
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3-
இதில் வாசிகமான பேற்றை அபேஷிக்கிறார் –உதக்ரந்தி திசையிலும் கூட உன் திருவடிகளை நான் இளையாது ஏத்தும்படி -பிரானே -கிருபை பண்ணி அருள வேணும் -என்கிறார்-பிரார்த்தித்த எனக்கே அருள் செய் -வேண்டுதல் -அதிகாரி ஸ்வபாவம் -உனது அருளே உபாயம் –
———-
எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-
இத் திருவாய் மொழியிலே இவர் நிஷ்கர்ஷித்த பிராப்யமாவது-(முக்கரணங்களால் கைங்கர்யம் )-ஸ்ரக் சந்த நாதிகளோபாதி தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று இறே
இவ்விடத்தில் எம்பார் அருளிச் செய்யும் படி –சர்வேஸ்வரன் த்ரிவித சேதனரையும் ஸ்வரூப அனுரூபமாக அடிமை கொள்ளா நின்றான் -நாமும் இப்படி பெறுவோமே -என்று –
முக்தரும் நித்யரும்-தாங்களும் ஆனந்தித்து அவனையும் ஆனந்திப்பார்கள்-அஹம் அன்னம் -என்று அவனை -ஆனந்திப்பித்து -அவன் உகந்த வழியாலே–அஹம் அந்நாத என்று தாங்களும் ஆனந்திப்பார்கள் – -பத்தர் தாங்கள் ஆனந்தியாதே-அவனை ஆனந்திப்பார்கள் –இன்புறும் இவ்விளையாட்டுடையான் –3-10-7-இறே –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று பிரார்த்திப்பான் என்- திரு உள்ளம் ஆனபடி செய்கிறான் என்று இராதே -என்று பிள்ளை திரு நறையூர் அரையர் எம்பாரைக் கேட்க
அது கேளீர் -முன்பு பிரிந்து அன்று -பின்பு பிரிவுக்கு பிரசங்கம் உண்டாயன்று -இரண்டும் இன்றி இருக்கத் திரு மார்வில் இருக்கச் செய்தே–அகலகில்லேன் அகலகில்லேன் -என்னப் பண்ணுகிறது விஷய ஸ்வபாவம் இறே –-அப்படியே பிராப்ய ருசி பிரார்த்திக்கப் பண்ணுகிறது -என்று அருளிச் செய்தார் –எம்பார்-
எம்மா வீட்டில் எம்மா வீடாய்–ஸ்ரீ வைஷ்ணவ சர்வ ஸ்வமுமாய் -உபநிஷத் குஹ்யமுமாய் -சர்வேஸ்வரன் பக்கலிலே-அபேஷித்துப் பெறுமதுவாய்-(ராக ப்ராப்தமாய் )-இவ்வாத்மாவுக்கு வகுத்ததுமான பார தந்த்ர்யத்தை– அவன் பக்கலிலே அபேஷிக்கிறார் –-ராக பிராப்தமுமாய் -ஸ்வரூப பிராப்தமாய் இருக்கும் -என்றவாறு -சிஷ்டாசாரமும் மூல பிரமாண சித்தமுமாயும் இருக்குமே -இத்தனையுமாய் இருப்பதால் சாரதமங்களுக்குள் சார தமம்–
எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி தனக்கேயாக- ஏழு சொற்களால் —ஏழு சங்கைகள் தீர்ந்து மகிழ்கிறார் ஆழ்வார் –
முதலிலே ஆட்செய்ய -என்ன வேணும் -ஆட்செய் -என்று -ஸ்வா தந்த்ர்யத்தை வ்யாவர்த்திக்கிறது -பரதன் சங்கை தீர்ந்தது –முதல் சங்கை தீர்ந்தது –
அதில் –எனக்கு ஆட்செய் -என்ன வேணும் -எனக்கு ஆட்செய் -என்று அப்ராப்த விஷயங்களை வ்யாவர்த்திக்கிறது –இரண்டாம் சங்கை தீர்ந்தது –
அதில் எனக்கே ஆட்செய் என்று தனக்கும் எனக்கும் பொதுவான நிலையைத் தவிர்த்து -எனக்கே ஆட்செய் என்ன வேணும் -மூன்றாம் சங்கை தீர்ந்தது
இது தான் ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி நிற்க வேணும் -நான்காம் சங்கை தீர்ந்தது-க்ரியதாமிதி மாம் வத -என்கிறபடியே -இன்னத்தைச் செய் –என்று- ஏவிக் கொள்ள வேணும்
இப்படி ஒரு வார்த்தை அருளிச் செய்து நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது
என் மனக்கே வந்து-என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுர வேணும் -ஐந்தாம் சங்கை தீர்ந்தது-புகுந்தாலும் போக்கு வரத்து உண்டாக ஒண்ணாது-இடைவீடின்றி மன்னி -ஸ்த்தாவர பிரதிஷ்டையாக எழுந்து அருளி இருக்க வேணும் – ஆறாம் சங்கை தீர்ந்தது
இருந்து கொள்ளும் கார்யம் என் என்றால்-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
ஸ்ரக் சந்த நாதிகளோ பாதியாகக் கொள்ள வேணும்-அது சூடுமவனுக்கும் பூசுமவனுக்கும் உறுப்பாய் -மிகுதி கழித்துப் பொகடும் அத்தனை இறே-ஒரு மிதுனமாய் பரிமாறா நின்றால் பிறக்கும் இனிமையும் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்கும் இறே-அங்கன் என்னுடைய ப்ரீதிக்கு நான் அன்வயித்தேன் ஆக ஒண்ணாது – ஏழாம் சங்கை தீர்ந்தது –
பரமம் சாம்யம் உபைதி -சக ப்ரஹ்மம் -சக சாம்ய -சப்தங்கள் -சாம்யா பத்தி சாஸ்திரங்கள் சொல்ல-இவர் தமக்கு அந்வயம் இல்லாமல் அவனுக்கு மட்டுமே என்கிறது என்-
ஆனந்தத்தில் சாம்யா பத்தி -கைங்கர்யத்தால் வருகிற ஆனந்தம் வேண்டாம் என்கிறார் -அவன் ஆனந்தத்தால் இவருக்கும் ஆனந்தம் –அஹம் அன்னம் அஹம் அந்நாத –சாஸ்திர வாசனையாலே -தானே அருளிச் செய்கிறார் –-ஜகத் வியாபார வர்ஜம்-ஹேது மாறுவதால் ஹர்ஷத்தில் மாறுபாடு வாராதே -பிள்ளை தமப்பன் சம்பாதித்த சொத்தை பிரீதியாக அனுபவிப்பது போலே
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற சமயத்திலே திரு முகத்தைப் பார்க்கில் வ்யவசாயம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார்
வங்கி புரத்து நம்பி திருமாளிகையில் மேல் கோட்டையில் ராமானுஜர் கையோலை இன்றும் வைத்து மகிழ்கிறார்கள் –
எனக்கே கண்ணனை-தனக்கேயாக என்ற பின்புத்தை எனக்கே இறே -புருஷார்த்தம் ஆகைக்காக சொல்லுகிறது –பாரதந்த்ர ஞானம் வந்த பின்பு வரும் ஸ்வா தந்த்ர்யம் –
ஞானாதிக்யத்தால் வரும் அஜ்ஞ்ஞானம் —என்னுடைய பந்தும் கழலும் தந்து போ போலே -அடிக் கழஞ்சு பெரும்-தனக்கே என்கிறது -பாரதந்தர்ய காஷ்டாய் -எனக்கே என்கிறது -புருஷார்த்தம் –
சிறப்பே —பல கால் வேண்டா -ஒரு கால் அமையும்-அது தன்னிலும் திருவாசலைத் திருக் காப்புக் கொண்டு ஒருவர் அறியாதபடி சிறப்பாக செய்யவும் அமையும்
சிறப்பாகிறது -ஏற்றம் -அதாவது -புருஷார்த்தம் – ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தைக் கொண்டருள வேணும் -என்றபடி-சிறப்பாவது -1-முக்தியும்-2- சம்பத்தும் –3-நன்றியும்
இவற்றில் நான் உன் பக்கல் கொள்ளும் மோஷம் உனக்கேயாக எனைக் கொள்ளுமதுவே –
உன் பக்கல் நான் கொள்ளும் சம்பத்து என்னவுமாம் –நன்றி என்னவுமாம் –பராங்குசனுக்கு -அவயவ பூதர் ஆனால் நாமும் பெறுவோமே-தேவும் மற்று அறியேன் என்று இருப்பார்கள் யாவரும் அவயவ பூதர்-
———–
சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-
ஏதேனுமாக உண்டான வஸ்து தேவர்க்கே உறுப்பாம் இதுவே வேண்டுவது -என்கிறார் –
வபுராதி ஷூ யோபி கோபி வா –மயா சமர்ப்பிதா –ஜீவன் உனக்கு உரியவன் —ஸ்தோத்ர ரத்னம் -52-என்னுமா போலே –இத்தலையில் உள்ளது எல்லாம் மறக்கலாம் -மறக்க வேண்டும் –அத்தலையில் உள்ளது ஒன்றும் நழுவ ஒண்ணாது –
என்றும் மகிழ்வேனே –மகிழ்ச்சி என்றும் அனுபவம் என்றும் பர்யாயம்-அனுபவிப்பேன் என்கிறார் –தொழுது எழு -பர்யாய சொற்கள் – ஆக -1-இத்தாலே –ஜீவாத்மா -ஸ்வரூபமும் –பெருமான் -என்கையாலே -2- சேஷித்வமும்–மறப்பு ஓன்று இன்றி -என்கையாலே -3–ஜ்ஞாத்ருத்வமும்–என்றும் -என்கையாலே-3- நித்யத்வமும்–மகிழ்வு -என்கையாலே-4- போக்த்ருத்வமும் -போக்யமாக முதலில் இருந்து அவன் போக்கியம் கண்டு நாம் போகிக்க –ஆக -இத்தாலே –ஜீவாத்மா -ஸ்வரூபமும் வெளியிடுகிறார் –
கீழ்ப் பாட்டும் இப்பாட்டும் முன்னிலை யன்றியே ஸ்வ கத அனுசந்தானமாய் இருக்கிறது –
———-
மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6-
தேவாதி பதார்த்தங்களை உண்டாக்கினால் போலே- என்னையும் உன்னை அனுபவிப்பேனாம் படி பண்ண வேணும் -என்கிறாராதல்-
அன்றியே
தேவாதி பதார்த்தங்களுக்கு ஒரோ ஸ்வபாவம் நியதமாம் படி பண்ணினால் போலே எனக்கு உன்னை அனுபவிக்குமது-நியத ஸ்வபாவமாம்படி பண்ணி யருள வேணும் என்கிறாராதல் ஸ்வார்த்ததையே இல்லாத பேற்றைக் கேட்டீர் -லோகத்தில் இப்படி கேட்க வில்லையே அகடிதகடநா-இல்லாதவற்றை உண்டாக்கினாயே -அது போலே இத்தையும் அருளுவாய் –திருதிய விபூதியாக உண்டாக்கி அருளுவாய் –
என்னுடைய ஹிருதயம் உன்னை அனுபவித்து மகிழ்ச்சியை உடைத்தாம் படி பண்ண வேணும்-என்னுடைய வாக் வ்யவஹாரமும் அப்படியேயாகப் பண்ண வேணும்
என்னுடைய வியாபாரமும் ப்ரீதி புரஸ் சரமாக பண்ணும் கைங்கர்யமேயாக வேணும்
நானும் தனியே அனுபவித்து ப்ரீதியை உடையேனாம்படி பண்ண வேணும்
என்றும் இப்படி நான் உன்னை அனுபவிக்கும்படி வர வேணும் –
மகிழ் கொள் ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கையே இப்பாட்டில் ஏற்றம் –
———–
வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-
தம்முடைய அபி நிவேசத்தாலே -எல்லாக் காலமும் என்னை அடிமை கொள்ள வர வேணும் -என்கிறார் –தாராதாய் -என்று இத்தை அவனுக்கு நிரூபகமாகச் சொல்லுகிறார் –மயர்வற மதி நலம் அருளினான் -என்றும் –வீடு திருத்துவான் -என்றும்- கேசவன் தமர் -என்றும் அருளிய இவர்- இன்னாப்பாலே இப்படி அருளிச் செய்கிறார்-அருளாத நீர் -முன்பு சொன்னால் போலே –தாராதாய் -என்று திரு நாமம் சாத்துக்கிறார் –இந்த திரு நாமம் வேண்டாம் என்றால் வாராய்-அந்ய பரோக்தியிலே பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார்–வாராய்-வர வேணும்-உன் திருப் பாத மலர்க் கீழே -பேராதே யான் வந்து அடையும்படி -தாராதாய் –என்னுதல்-உன் திருப் பாத மலர்க் கீழே -பேராதே யான் வந்து அடையும்படி-வாராய் -என்னுதல்-
————-
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-
இதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் படி -இனிக் கூறிட ஒண்ணாத படி சிறு கூறான அத்யல்ப காலத்திலும் நீ ஸ்வாமியான முறை தப்பாதபடி என் ஹிருதயத்திலே வந்து புகரப் பெறில் மற்று எக்காலத்திலும்-இது ஒழிந்த எல்லாக் காலத்திலும்
யாதொன்றும் வேண்டேன் –பின்னை இது தானும் வேண்டேன்-இத்தை எம்பெருமானார் கேட்டருளி-இது பொருள் அழகியது – இவ் வாழ்வாருடைய பிரக்ருதிக்குச் சேராது-நஹி வாசோ தரித்திர -வஸூ தேவர் -ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதரித்த பின் பல நூறு தானம் செய்வதாக எண்ணினால் போலே –-பெறிலும் பெறாது ஒழியிலும் சிறுகக் கோல மாட்டார் -இங்கனேயாக வேண்டும் என்று அருளிச் செய்வர்
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் –-எல்லாக் காலத்திலும் எனக்கு சேஷியான நீ -நான் சேஷமான முறை தப்பாமே வந்து என் ஹிருதயத்திலே புகுரப் பெறில்-எக்காலத்திலும்-இக்காலம் எல்லாவற்றிலும்-மற்று யாதொன்றும் வேண்டேன் பின்னை இது ஒழிந்த மற்று ஒன்றையும் வேண்டேன் –
அக்காரக் கனியே — மற்று -எக்காலத்திலும் யான் ஒன்றும் வேண்டேன் -பிள்ளான் நிர்வாகம்
அக்காரக் கனியே மன்னில் -எக்காலத்திலும் யான் உன்னை – மற்று- யாதொன்றும் வேண்டேன்-யத்ர நான்யத்ர பஸ்யதி -அது தவிர -சுருதி சாயலில் -எம்பெருமானார் நிர்வாகம் –
———–
யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-
யானே –என் இழவு பகவத் க்ருதமல்ல –அவன் எதிர் சூழல் புக்கு திரியா நிற்க –நானே கிடீர் விநாசத்தைச் சூழ்த்துக் கொண்டேன் –இருந்தேன் –இப்படி நெடுநாள் போருகிற இடத்திலே ஒரு நாள் அனுதாபம் பிறக்கவுமாம் இறே –அது அன்றிக்கே க்ருதக்ருத்யனாய் நிர்ப்பரனாய் –இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே -இருந்தேன்–தீ வினையேன் வாளா விருந்தேன்
எம் வானவர் ஏறே —நித்ய ஸூரிகள் தங்கள் சேஷத்வ அனுரூபமாக அடிமை செய்யா நிற்க அவனும் தன் சேஷித்வத்தால் வந்த உத்கர்ஷம் தோற்ற இருக்கும் இருப்பு-எம் -என்றது-எனக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி உண்டாய் இருக்க இழந்து அனர்த்தப் பட்டேன் –
—————
ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10-
அவ்விரோதிகளைப் போக்கினாப் போலே என்னுடைய விரோதிகளையும் போக்க வேணும் –உன் பொன்னடி சேர்த்து ஒல்லை–நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்று தொடங்கின அர்த்தத்தைத் தலைக் கட்டுகிறார்-தலைக்கு கட்டு -தலைக்கட்டினார் -சாடு–நான் இசைந்த போதே சடக்கெனத் திருவடிகளில் திவ்ய ரேகையோபாதி சேர்த்து அருள வேணும்
அவ்வளவும் போராது
வேறே போக எஞ்ஞான்றும் விடலே —-இவனுக்கு எல்லா உத்கர்ஷமும் பண்ணிக் கொடுத்தோம் ஆகில் இனி என் என்ன ஒண்ணாது-நீ எல்லா உயர்த்திகளும் பண்ணித் தந்தாலும் நான் எல்லாத் தாழ்வுகளும் பண்ணிக் கொள்வேன்-என்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் –நெறி காட்டி நீக்காதே —
————–
விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11-
நாம் ஒருவரையும் விடோம் காணும் -என்று திருக் கையில் திரு வாழியைக் காட்டினான் –ஒரு காலும் விடாத திரு வாழியைக் கையிலே உடைய சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று-
இப்பத்தும் கிளர்வார்க்கு கெடலில் வீடு செய்யும் வரில் பொகடேன்-கேடில் தேடேன் -என்று இருக்கை யன்றிக்கே ஸ்ரத்ததாநராய் இருப்பார்க்கு -அனர்த்த கந்த ரஹிதமாய்-
அஹங்கார மமகாரங்கள் உடைத்த தன்றிக்கே- தனக்கே யாக வேணும் -என்று இவர் பிரார்த்தபடியே இவ்வாத்மவினுடைய ஸ்வரூப அனுரூபமான பேற்றைத் பண்ணித் தரும் –
—————
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1-
திருமலையை பிராபிக்கையே இவ்வாத்மாவுக்கு நிரதிசய புருஷார்த்தம் –என்கிறார் –
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே புருஷார்த்தம் -திருமலைக்கு சென்றால் தானே கைங்கர்யம் கிட்டும்-இளமைக்கு கிளர் ஒளி -ஞானம் வளர யோக்யதை உண்டே –பால்யம் -யௌவன ஆரம்ப ரூபமான இளமை-கழிந்த பருவத்தை உங்களால் தான் மீட்கப் போமோ-கரண பாடவம் உள்ள போதே -என்னுதல்-அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
அடிமை செய்கிறவர்கள் -கிளர் ஒளி இளமையை உடையவர்கள்
அடிமை கொள்ளுகிறவன் வளர் ஒளி மாயோன்
அடிமை செய்கிற தேசம் -வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
ஆக –இப்படி அடிமை செய்யுமவனும் அடிமை கொள்ளுமவனும் அடிமை செய்யும் தேசமும் ஒத்த பருவமாயிற்று இருப்பது–சார்வது சதிரே —திருமலையைக் கிட்டும் இதுவே இவ்வாத்மாவுக்கு சதிர்-அல்லாதவை எல்லாம் இளிம்பு-
—————–
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2-
திருமலையோடு சேர்ந்த ஸ்ரீ யபதியை கிட்டுகையே பரம பிரயோஜனம் என்கிறார் –
அன்றிக்கே – -திருமலை தன்னையே சொல்லுகிறதாதல் -அன்றிக்கே (திருப்பதியை யாதல் )-சில கோசங்களில்-கீழே கிளர் ஒளி இளமை -என்றதே -அப்பருவம் கண்ட இடத்தே இழுத்துக் கொள்ளும் முதலைகள் யாயிற்று விஷயங்கள்–பதியது வேத்தி எழுவது பயனே
-தொழுது எழு என்று தம்மைப் போலே என்று இருக்கிறார்-ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கும் அதுவே இவ்வாத்மாவுக்கு பிரயோஜனம்-
அல்லாதவை நிஷ்பிரயோஜனம் -பிரயோஜனம் என்றது பிராப்யம் என்றபடி –ஏத்தி -உக்தி வ்ருத்தி விசேஷம் –
———
பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3-
உத்தேச்யத்துக்கு இது எல்லாம் வேணுமோ –திருமலையோடு சேர்ந்த அயன்மலையை யடைய யமையும் -திருமாலை யோட்டை சம்பந்தத்தையே தனக்கு -பேராக-பேறாக உடைத்தான மலை-அகஸ்த்ய ப்ராதா -மாமான் மகளே-என்னுமா போலே-பயன் அல்லவாக நினைத்து இருக்கிறது -பரம பதத்தில் இருப்பையும் -அல்லாத அவதாரங்களையும்-செயலும் பலமும் இரண்டும் பிரயோஜனமாயிற்று தாம் பற்றின விஷயம் –பிராப்யம் -புயல் மழை வண்ணர்–பிராபகம் -புரிந்துறை-அவன் எண்ணமே பிராபகம்-பயனான விஷயம் தான் இருக்கிறபடி-
—————–
கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-
கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே-இது நம்மால் செய்து தலைக் கட்டப் போமோ -திருமலையை ஆஸ்ரயிக்கும் அது ஒழிய -என்று இங்கனே ஆழ்வான் ஒரு உருவிலே பணித்தானாம்-அங்கனம் நிர்வஹிக்கக் கடவது
அன்றிக்கே –
கரும வன் பாசம் கழிக்கைக்காகவும் -உழன்று உய்க்கைக்காகவும் -கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கைக்காகவும்–என்று இங்கனே எம்பெருமானார் அருளிச் செய்யும் படி
ஊர்க்கு இரண்டாயிற்று மழை-நின்ற இடத்தில் நின்று வர்ஷிப்பதொரு மேகமும் -போவது வருவதுமாய் இருப்பதொரு மேகமும்-புயல் மழை வண்ணர் -என்றது இறே-மால் -என்று பெருமை —இருமை என்றும் பெருமை –ஓன்று ஒக்கத்திலே ஓன்று பரப்பிலே –
———-
திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-
ரஷண உத்யுக்தமான திரு ஆழி உடையவன் வர்த்திக்கிறவன் -புற மலை கிட்டுவதே உபாயம்–கிறி உபாயம் –ஆளவந்தார் நிர்வாகம் -கிறியாவது -விரகு -அதாவது அஸாத்யமானத்தை அயத்நேந லபிக்கை-–அற முயலாழி-சர்வேஸ்வரனைக் காட்டிலும் ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனாகை –
—————
கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6-
அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரிக்க மாட்டாதவன்–அச்சுவடு அழியாமே நின்று அருளுகிற சர்வ போக்யமான திருமலையை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு நினைக்கும் அதுவே ப்ராப்யம்-மார்க்க சிந்தை பண்ணுமதுவே-இவ்வாத்மாவுக்கு நன்மையாவது -போம் வழியை நினைக்கவே நலம் -புருஷார்த்தம் -இந்த வழிக்குள் அடியேன் உட்பட வேண்டும் என்ற நினைவே வேண்டியது –
————-
நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-
திருமலையை சென்று கிட்டி -வலமுறை-நிரந்தர வாஸம் பண்ணுகையே இவ்வாத்மாவுக்கு வெற்றி என்கிறார் –பகவத் விஸ்லேஷம் தான் ஆழ்வார்களுக்கு நரகம் –நெஞ்சே நகு-பகவத் விஸ்லேஷ ஜனித துக்கம் இங்கே தானே -சம்சாரம்–நின் பிரிவினும் சுடுமோ காடு-மலமறு மதி சேர் மாலிரும் சோலை–திருமலை ஆழ்வார் தாம் ஜ்ஞான லாபத்தை உண்டாக்குவார் -என்று பிள்ளான் வார்த்தை—வலமுறை எய்தி மருவுதல் வலமே –
காலயவன ஜரா சந்தாதிகளைப் போலே அன்றிக்கே சேஷ சேஷி பாவமாகிற முறைப் பாட்டால் உள்ள ஆனுகூல்யத்தை பெற்று பொருந்துகையே பலோத்தரம் -இதுவே பரம ப்ராப்யம்–-மருவுதல் வலம்- என்னுதல்- வரம்-என்னுதல் பலவத்தரம் என்னுதல்- ஸ்ரேஷ்டம் என்னுதல் –
——–
வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-
சித்ர கூட பரிசரத்தில் பிராட்டியும் கூடக் கையைப் பிடித்துக் கொண்டு உலாவினால் போலே பிராட்டி கையைப் பிடித்துக் கொண்டு அழகர் ஆதாரத்தோடு சஞ்சரிக்கிற தேசம்-
கீழே –தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பன் -1-8-3–என்கிறார்-இங்கே வானோர் மாலிரும் சோலை என்கிறார்-இதுக்கு நினைவு என்-உகந்து அருளின தேசம் எல்லாம் கிடக்க -என்னில் பிரஜைக்கு தாயினுடைய அவயவம் எல்லாம் கிடக்க முலைக் கண்ணிலே இறே வாய் வைக்கலாவது-அப்படியே இங்கு தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வட மலையும்-என்கிற முலை யாகையாலே அவர்களுக்கேயாய் இருக்கிறது –
பிள்ளை திரு நறையூர் அரையரும் பட்டரும் பிரதஷிணம் பண்ணா நிற்க பின்னே சேவித்துக் கொண்டு போனேன் – அல்லாதார் கடும் குதிரை போலே வாரா நிற்க இவர்கள் திருக் கோபுரங்களையும் திரு மாளிகைகளையும் கண்ணாலே பருகுவாரைப் போலே பார்த்துக் கொண்டு வந்தார்கள் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்-
துறும்பு நறுக்க பிராப்தி இல்லை -பிரபன்ன ஜன கூடஸ்தர் பிரதஷிணம் செய்ய சொல்வான் என் – உபாயதயா புத்தியால் இல்லை -கைங்கர்யத்துக்கு -கண்ணால் பருகுவார் -பிராப்யம் -அனுபவித்து செல்வார்-அவர்களுக்கு அது பிராப்யம் -நஞ்சீயருக்கு இவர்களை பார்த்து கொண்டே செல்வதே பிராப்யம்–வாழ் முதல் -தாரகம் -போஷகம் –வளர் முதல் -போக்யம் மகிழ் முதல் –
———-
வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9-
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை-செல்வாலும் இளமையாலும் அழகரோடு ஒத்த கஜ யூதர்கள் சேர்ந்து வர்த்திக்கிற தேசம்-இள வானைக் கன்றுகள் இன இனமாகச் சேரா நின்றுள்ள திருமலையை லஷண உபேதமாய் இருப்பதொரு ஆனை நின்ற இடத்தே ஆயிரம் ஆனைகள் வந்து சேரா நிற்கும்-அங்கு நிற்கிறது –நந்தா விளக்கின் சுடரே– சோலை மலைக் களிறு இறே–உலகம் ஏத்தும் –தென்னானை இறே-
———–
சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10-
பல படியாலும் திருமலையே பர பிராப்யம் என்று உபக்ரமித்த படியே உப சம்ஹரிக்கிறார்
சார்வது சதிரே -என்றத்தையே புகுவது பொருளே என்கிறார்
களவாவது -சோரேணாத்மாப ஹாரிணா -என்கிற ஆத்மாபஹாரமாய்-சூதாவது சாத்விகனாய் ப்ராமாணிகனாய் இருப்பான் ஒருவன் சர்வேஸ்வரன் ரஷகன் -என்று விஸ்வசித்து இருந்தால் காண்கிற தேஹத்துக்கு அவ்வருகே ஒரு ஈஸ்வரன் ஆவது என் ஆத்மா ஆவது என் -என்று காணக் காண அபஹரிக்கை-
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்-ஸ்ரீ கீதா முகத்தால் வேதார்த்தத்தை விஸதீ கரித்தவன் –உபதேசத்தால் மீளாதாரை வடிவைக் காட்டி மீட்க்கைக்காக விரும்பி வர்த்திக்கிற தேசம் மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை-பேடையோடே கூடின மயில்கள் சேர்ந்து வர்த்திக்கிற திருமலை – மாதென்று மார்த்தவமாய் ஸூகுமாரமான மயில் என்றுமாம் அங்கு உள்ள சத்வங்கள் எல்லாம் மிதுனமே யாய் வர்த்திக்கும் -என்கை
போதவிழ் மலையே புகுவது பொருளே-கொடியும் தண்டும் சருகும் இடை இடையிலே பூவுமாய் இருக்கை யன்றிக்கே திருமலை தன்னை முட்டாக்கிட பூத்துக் கிடக்கும் அத்தனை திருமலையைக் கிட்டுமதுவே இவ்வாத்மாவுக்கு பிரயோஜனமாக தலைக் கட்டுவது -அல்லாதவை எல்லாம் வ்யர்த்த வ்ருத்திகள்-
—————–
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து-பிரபந்தமோ என்னில் –
மருள் உண்டாய் கழிய வேண்டிற்று ஆழ்வாருக்கு-இவருடைய பிரபந்தம் அப்யசித்தார்க்கு முதலிலே அஜ்ஞ்ஞானம் தான் இல்லை-மருள் இருந்து கழிந்த ஆழ்வார் போல் இல்லாமல்
கேட்டார்க்கு தெளிவைப் பிறக்கும்படி யாயிற்று இவர் அருளிச் செய்தது
தம்முடைய ஜ்ஞானத்துக்கு அடி ஈஸ்வரன் -இவர்களுக்கு தம்மடியாக வந்தது –
தூ மணி – துவளில் மா மணி போலே -பந்த மோஷ ஹேது அவனது -சாதாரண ஸ்வ தந்த்ரயம்--உஜ்ஜீவன ஏக ஹேது –அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
அருளை இட்டாயிற்று வஸ்துவை நிரூபிப்பது -அருளை உடையவன் திருவடிகளிலே சேர்த்து விடும்-அது செய்யும் இடத்தில்-முடித்தே-சம்சார பந்தத்தை வாசனையோடு போக்கி திருவடிகளிலே சேர்த்து விடும்-கள் அழகருக்கு -அருளுடைய பெருமாள் என்ற திரு நாமம் உண்டே –
——————————————————————————————————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-