ராஜதர்மாந் ப்ரவக்ஷ்யாமி யதாவருத்தோ பவேந் ந்ருப: |
ஸம்பவஷ்ச யதா தஸ்ய ஸித்திஷ்ச பரமா யதா|||-1-
மன்னன் அனுசரிக்க வேண்டிய தர்மங்களைப் பற்றியும், அதனால் அவன் இகத்திலும் பரத்திலும் அடையக்கூடிய மேலானபலன்களைப் பற்றியும் கூறுகிறேன்.
ப்ராஹ்மம் ப்ராப்தேந ஸம்ஸ்காரம் க்ஷத்ரியேண யதாவிதி | ஸர்வஸ்யாஸ்ய யதாநியாயம் கர்தவ்யம் பரிரக்ஷணம் || 2
சாஸ்திர முறைப்படி சம்ஸ்காரங்கள் (உபநயனம் முதலானவை) செய்யப்பட்ட க்ஷத்ரியன் நியாயப்படி தன் நாட்டிலுள்ள மக்களைக் காக்க வேண்டும்.
அராஜகேஹி லோகே அஸ்மி ஸர்வதோ வித்ருதே பயாத் | ரக்ஷார்த்தமஸ்ய ஸர்வஸ்ய ராஜாநமச்ருஜத் ப்ரபு: || 3
அரசன் இல்லாவிடில் எளியோரை வலியோர் வீழ்த்தி விடுவர். அவ்வாறு ஏற்படாமல் அனைவரையும் காப்பதற்காகவே அரசனை பிரம்மா படைத்தார்.
இந்த்ராநில யமார்காணா மக்நேஷ்ச வருணஸ்ய ச 11 சந்த்ர வித்தேஷயோஷ்சைவ மாத்ரா நிர்ஹ்ருத்ய ஷாஷ்வதீ: |-4
இந்திரன், வாயு, யமன், சூரியன், அக்னி, வருணன், சந்திரன், குபேரன் முதலானவர்களுடைய அம்சத்தைக் கிரகித்து அரசனைப் படைத்தார்.
யஸ்மாதேஷாம் சுரேந்த்ராணாம் மாத்ராப்யோ நிர்மிதோ ந்ருப: |
தஸ்மாதபி பவத்யேஷ ஸர்வ பூதாநி தேஜஸா|| 5
தேவ சிரேஷ்டர்களுடைய அம்சத்தால் பிறந்தவனாதலால் அரசன் எல்லோரையும்விட உயர்ந்தவனாக, தேஜஸ் மிக்கவனாக விளங்குகிறான்.
தபத்யாதித்ய வச்சைஷ சக்ஷம்ச மநாம்ஸி ச
நசைநம் புவி ஷக்நோதி கஷ்சித்தப்யபிவீதும் |6
இவன், சூரியனைப்போன்று தன்னைப் பார்ப்பவருடைய கண்ணையும் மனத்தையும் தகிக்கிறான். அதனால் எவரும் இவனை ஏறிட்டுப் பார்க்க இயலாது.
ஸோ அக்நிர்பவதி வாயுஷ்ச ஸோ அர்கஸ்ஸோமஸ்ஸதர்மராட் |
ஸ குபேரஸ்ய வருணஸ்ய மஹேந்த்ர: ப்ரபாவத: 11 7
அவனே அக்னி; அவனே வாயு; அவனே சூரியன்; அவனே சந்திரன்; அவனே குபேரன்; அவனே வருணன்; அவனே தன் பிரபாவத்தால் தேவேந்திரனுமாவான்.
பாலோ அபி நாவமந்தவ்யோ மனுஷ்ய இதி பூமிப: 1
மஹதீ தேவதா ஹ்யேஷா நரரூபேண திஷ்டதி || 8
எனவே, அரசன் சிறுவனாக இருந்தாலும்கூட, அவனும் மனிதன்தானே என்று எண்ணி அவமானப்படுத்தக் கூடாது. உயர்ந்த தெய்வமே மனித உருவில் அவதரித்திருப்பதாக எண்ண வேண்டும்.
ஏகமேவ தஹத்யக்நிர்நரம் துருபஸர்பிநம் |
குலம் தஹதி ராஜாக்நி: ஸபஷத்ரவ்ய சஞ்சயம்|| 9
நெருப்பு, தன்னைத் தீண்டியவனை மட்டுமே எரிக்கும். அரசன்என்னும் நெருப்போ தன்னைத் தீண்டியவனை அவன் குலத்தோடு, பசு, திரவிய, தானியங்களோடு, புத்ர மித்திரர்களோடு, பந்துக்களோடு அழித்துவிடும்.
கார்யம் ஸோ அவேஷ்ய ஷக்திம் ச தேஷகாலௌ ச தத்வத: |
குருதே தர்ம ஸித்யர்த்தம் விஷ்வரூபம் புந:புந: [-10
ராஜா தன் காரியத்தை அனுசரித்து, இடத்தையும் காலத்தையும் கணக்கிட்டு, தான் வெல்வதற்காக பல பலப்படியான தோற்றங்களை எடுப்பான். சக்தி குறைந்திருக்கும்போது எதிரியிடம் பொறுமையோடிருப்பான். தன் சக்தியைப் பெருக்கிக் கொண்டு எதிரிகளை
அழிப்பான். இவ்வாறு தேசகாலங்களை அனுசரித்து, மித்ரனைப் போலவும் இருப்பான்; காலம் வந்ததும் சத்ருவாக மாறியும் அழிப்பான்.
யஸ்ய ப்ரஸாதே பத்மா ஷ்ரீர்விஜயஷ்ச பராக்ரமே 1 ம்ருத்யுஷ்ச வஸதி க்ரோதே ஸர்வதேஜோமயோஹி : Π 11
எவனுடைய அனுக்ரஹத்தில் செல்வம், வெற்றி, பராக்ரமத்தோடு திருமகளும் உள்ளாளோ, எவனுடைய கோபத்தில் மிருத்யு தேவன் வசிக்கிறானோ, அத்தகைய மன்னன் ஸர்வதேஜோமயனாக விளங்குகிறான்.
தம் யஸ்து த்வேஷ்டீ ஸம்மோஹாத்ஸவி நஷ்யத்யஸம்ஷயம் |
தஸ்யஹ்யா விநாஷாய ராஜா ப்ரகுருதே மந: |12
அத்தகைய அரசனை எவன் அஞ்ஞானத்தால் விரோதித்துக்கொள்கிறானோ, அவன் கண்டிப்பாக அழிவான். அரசன் தன் விரோதியை அழிப்பதிலேயே குறியாக இருப்பான்.
தஸ்மாத் தர்மம் யமிஷ்டேஷு ஸம்வ்ய வஸ்யேந்நராதிப: | அநிஷ்டம் சாப்யநிஷ்டே ஷு தம் தர்மம் ஸ விசாலயேத் || 13
மன்னன் எது தர்மமோ, எது தர்ம விரோதமோ அதை விசாரித்து நிர்ணயிப்பான். தன்னுடைய விருப்பு வெறுப்புகளுக்கப்பாற்பட்டு சாஸ்திரம் விதித்ததைச் செய்வான்.
தஸ்யார்தே ஸர்வபூதாநாம் கோப்தாரம் தர்மமாத்மஜம் |
ப்ரஹ்மதேஜோமயம் தண்டமஸ்ருஜத் பூர்வமீஷ்வர: || 14
அரசன் உயிர்களைத் தர்மமாகக் காக்கும் பொருட்டுத் தன்னுடைய ஒளியின் உருவமாக தண்டத்தைப் படைத்தார்.
தஸ்ய ஸர்வாணி பூதாநி ஸ்தாவராணி சராணி ச 1
பயாத்போகாய கல்பந்தே ஸ்வதர்மாந் நசலந்தி ச || 15
அந்த தண்டத்துக்கு அஞ்சியே சகல உயிர்களும் தத்தமக்குரிய தர்மங்களை விடாது கடைப்பிடித்தபடி சுகமாக வாழ்கின்றன.
தம் தேஷகாலௌ ஷக்திம் ச வித்யாம் சாவே ய தத்வத: 1 யதார்ஹதஸ்ஸம்ப்ரண யேந்நரேஷ்வந்யாய வர்திஷு|| 16
அந்த தண்டத்தின் சக்தியை அறிந்து, தேசத்துக்கும் காலத்துக்கும் தக்கபடி, எந்தக் குற்றத்துக்கு எந்தத் தண்டனை என்பதை சாஸ்திரப்படி நிர்ணயித்து, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.
ஸ ராஜா புருஷோ தண்டஸ்நேதா ஷாஸிதா சஸ:
சதுர்ணா மாஷ்ர மாணாம் ச தர்மஸ்ய ப்ரதிபூ: ஸ்ம்ருத: || 17
அந்த தண்டத்திலேயே அரசனுடைய பலம் இருப்பதால் அதுவே அரசன். ஆணுக்குப் பெண்கள் கட்டுப்படுவதைப் போல, அனைவரும் அதற்குக் கட்டுப்படுவதால் அதுவே புருஷன். அந்த தண்டத்தாலேயே அனைத்துக் காரியங்களும் நிறைவேற்றப்படுவதால்
அதுவே நாயகன். அந்த தண்டமே சாசனம் செய்வதால் அதுவே சாசனகர்த்தா. நான்கு ஆஸ்ரமவாசிகளுக்கும் காவலாக இருப்பதால் அதனை அரண் என்று முனிவர்கள் கூறுகிறார்கள்.
தண்டஷ்ஷாஸ்தி ப்ரஜாஸ்ஸர்வா தண்ட ஏவாபிரக்ஷதி |
தண்டஸ்சுப்தேஷு ஜாகர்தி தண்டம் தர்மம் விதுர்புதா: ||–18
தண்டமே பிரஜைகளனைவருக்கும் ஆணையிடுகிறது. தண்டமே பிரஜைகளைக் காப்பாற்றுகிறது. காவலர்கள் தூங்கினாலும் தான் தூங்காமல் காவல் காக்கிறது. தண்டமே தர்மத்துக்குக் காரணமாக இருப்பதால் அதை தர்மம் என்று பெரியோர் கூறினர்.
ஸமீக்ஷ்ய ஸத்ருதஸ் ஸம்யக் ஸர்வா ரஞ்ஜயதி ப்ரஜா:
அஸமீக்ஷ்ய ப்ரணீதஸ்து விநாஷயதி ஸர்வத: |-19
தண்டநீதி நன்கு செலுத்தப்பட்டால் பிரஜைகள் இன்புற்று வாழ்வார்கள். இல்லாவிடில் அனைவரும் நசிப்பர்.
யதி ந ப்ரணயேத்ராஜா தண்டம் தண்ட்யேஷ்வதந்த்ரித: |
சூலே மத்ஸ்யாநி வாபக்ஷ்யந் துர்பலாந் பலவத்தரா: || 20
அரசன் தண்டிக்க வேண்டியவர்களைத் தக்கபடி தண்டிக்க வேண்டும். இல்லாவிடில் பலத்தோடிருப்பவர்கள் பலவீனர்களை சூலத்தில் குத்தப்படும் மீன்களைப் போன்று குத்துவார்கள். அதாவது எளியோர் துன்புறுவார்கள் என்று பொருள்.
அத்யாத்காக: புரோடாஷம் ஷ்வா ச லிஹ்யாத் ஹவிஸ்ததா
ஸ்வாம்யம் ச ந ஸ்யாத் கஸ்மிஞ்சித் ப்ரவர்தேதாதரோத்தரம் || 21
சரியாக தண்டநீதி செலுத்தப்பட வில்லையானால், யக்ஞத்தில் புரோடாசத்தை (ஹவிஸை) சாப்பிடக்கூடாத காகம் சாப்பிடும்.அவ்வாறே நாய் சாப்பிடும். உரியவர்க்கு அவர்கள் உடைமைகள் சேராமல் பிறரால் பறிக்கப்படும்.
ஸர்வோ தண்டஜிதோ லோகோதுர்லபோ ஹி ஷுசிர்நர: 1
தண்டஸ்ய ஹி பயாத் ஸர்வம் ஜகத்போகாய கல்பதே || 22
இவ்வுலக முழுவதும் தண்டத்தினாலேயே நன்னெறியில் ஒழுக்கும். தண்டம் இல்லாமல் இயல்பாகவே தர்ம நெறி தவறாமல் ஒழுகும் மானிடர்கள் மிகவும் அரிது. தண்ட பயத்தாலேயே உலகத்தவர் நெறியோடு நடந்து நல்லபடி போகங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
தேவதாநவ கந்தர்வா ரக்ஷாம்ஸி பதகோரகா: |
தேஅபி போகாய கல்பந்தே தண்டேநைவ நிபிடிதா || 23
தேவர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், அரக்கர்களும், பறவைகளும், பாம்புகளும் தத்தம் கடமைகளைச் செவ்வனே செய்கிறார்கள் என்றால் அதற்கு பரமாத்மாவின் தண்டத்தின மீதுள்ள பயமே காரணம்.
துஷ்யேயுஸ் ஸர்வவர்ணாஷ்ச பித்யேரந் ஸர்வஸேவத:
ஸர்வலோக ப்ரகோபஷ்ச பவேத் தண்டஸ்ய விப்ரமாத்|| 24
தண்டநீதி நன்கு செலுத்தப்படாவிட்டால் நான்கு வர்ணத் தாருள்ளும் மாறுபாடு ஏற்பட்டு விடும். தர்மம், அர்த்தம், காமம் மோட்சம் என்னும் நான்கும் நசிக்கும். திருட்டு வன்முறைகளால் மக்கள் கலவரத்தோடு வாழ நேரிடும்.
யத்ர ஷ்யாமோ லோஹிதாக்ஷோ தண்டஷ்சரதி பாபஹா
ப்ரஜாஸ் தத்ர ந முஹ்யந்தி நேதா சேத்சதுபஷ்யதி || 25
தண்டநீதி நன்கு செலுத்தப்படும் நாட்டில், கறுத்த மேனியும் சிவந்த கண்களும் கொண்ட பாவத்தைப் போக்குகின்ற தண்ட நீதிக்குரிய தெய்வம் சஞ்சரித்த வண்ணம் இருக்கும். மக்கள் அங்கு கலவரமின்றி சந்தோஷமாக வாழ்வார்கள்.
தஸ்யா ஹுஸ் ஸம்ப்ரணேதாரம் ராஜாநம் ஸத்யவாதிநம் |
ஸமீஷ்ய காரிணம் ப்ராக்ஞம் தர்மகாமார்த கோவிதம்|-26
தண்டநீதி செலுத்துபவனாகிய அரசன், சாத்தியவானாகவும், விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிவதில் சாமர்த்தியமுடையவனாகவும், தர்மார்த்த காமங்களைப் பற்றி நன்கு அறிந்தவனாகவும்,தெளிந்த புத்தியுடையவனாகவும் இருக்க வேண்டும்.
தம்ராஜா ப்ரணயந் ஸம்யக் த்ரிவர்கேணாபி வர்ததே |
காமாத்மா விஷம: க்ஷத்ரோ தண்டேநைவ நிஹந்யதே || 27
சரியாக தண்டநீதியைச் செலுத்தும் அரசன், தர்மார்த்தகாமங்களை அடைவான். அவ்வாறன்றி விஷய சுகங்களில் ஆழ்ந்து,நீச நடத்தைகளில் ஈடுபடும் அரசன், அந்த தண்டத்தினால் தானேஅழிவான்.
தண்டோ ஹி சுமஹத் தேஜோ துர்தரஷ்சாக்ருதாத்மபி:
தர்மாத் விசலிதம் ஹந்தி ந்ருபமேவ ஸபாந்தவம்|| 28
தண்டம் என்பது மிகுந்த தேஜோமயமாய் பிரகாசிப்பது.தக்கவர்களைத் தவிர்த்து மற்றவர்களால் அதை ஏந்த முடியாது.தண்டமானது, ராஜ நீதியிலிருந்து தவறிய மன்னனை, அவன் பந்துக்களோடும் புத்திர மித்திரர்களோடும் அழித்து விடும்.
ததோ துர்கம்ச ராஷ்ட்ரம் ச லோக்ச ஸசராசரம் |
அந்தரிக்ஷகதாம்ஷ்சைவ முநீந் தேவாம்ஷ்ச பீடயேத் 29
பிறகு கோட்டையையும், ராஜ்ஜியத்தையும், சராசரங்களையும்,வானத்தில் சஞ்சரிக்கும் தேவதைகளையும், முனிவர்களையும்கூட தண்டம் என்னும் தெய்வம் அழித்து விடும்.
ஸோ அசஹாயேந மூடேந லுப்தேநாக்ருதபுத்திநா |
ஸ ஷக்யோந்யாயதோ நேதும் ஸக்தேந விஷயேஷுச |-30
மந்திரிகள் முதலான துணைவர்கள் இல்லாதவன், லோபி,மூடன்,படிப்பறிவற்றவன், விஷய சுகங்களில் இச்சை வைப்பவன் இத்தகைய அரசனால் தர்மநெறிப்படி தண்டத்தை உபயோகிக்க இயலாது.
ஷுசிநா சத்யசந்தேந யதா ஷாஸ்த்ராநு ஸாரிணா |ப்ரணேதும் ஷக்யதே தண்டஸ்சுசஹாயேந தீமதா|| 31
தூய்மையானவனும், சத்தியவந்தனும், சாஸ்திர முறையை அனுசரிப்பவனும், மந்திரிகள் முதலான துணைவர்களைக் கொண்டவனும், புத்திசாலியுமான அரசன், இந்த தண்டத்தைச் சரியாகச் செலுத்துவான்.
ஸ்வராஷ்ட்ரே ந்யாய வ்ருத்தஸ் ஸ்யாத் த்ருத தண்டஷ்ச ஷத்ருசு |
சுஹ்ருத்ஸ்வஜிஹ்ம்: ஸ்ரீக்தே ப்ராஹ்மணேஷு க்ஷமாந்வித: || 32
தன் ராஜ்ஜியத்தில் நீதியை செலுத்துபவனாகவும், சத்ருக்களைத் தண்டிப்பவனாகவும், நண்பர்களிடம் வஞ்சனை இல்லாதவனாகவும், தவறிழைத்தவர்களே ஆனாலும் பிராம்மணர்களிடம் பொறுமை யுடையவனாகவும் அரசன் இருக்க வேண்டும்.
ஏவம் வ்ருத்தஸ்ய ந்ருபதேஷ்ஷிலோம்சேநாபி ஜீவத: |
விஸ்தீர்யதே யஷோ லோகே தைலபிந்துரிவாம்பஸி || 33
அரசன் இப்படிப்பட்டவனாக இருந்தால், அவனிடம் செல்வம் குறைந்திருந்தாலும்கூட, தண்ணீரில் எண்ணெய்த் துளியைப் போல, அவனது புகழ் உலக முழுவதும் பரவும்.
அதஸ்து விபரீதஸ்ய ந்ருபதேரஜி தாத்மந: 1
ஸம் ப்யதே யஷோ லோகே க்ருதபிந்துரிவாம்பஸி |-34
இதற்கு மாறானவனாகவும், புலனடக்கமற்றவனாகவும் அரசன் இருந்தால், தண்ணீரில் நெய்த்துளி போல் நசித்துப் போவான்.
ஸ்வே ஸ்வே தர்மே நிவிஷ்டாநாம் ஸர்வேஷா மநுபூர்வஷ: |
வர்ணாநாமாஷ்ரமாணாம் ச ராஜாஸ்ருஷ்டோ அபிரக்ஷிதா ||35
நான்கு வர்ணத்தாரும் தத்தமது தர்மங்களை பற்றுதலோடு கடைப்பிடித்து ஒழுகுவதற்காகவும், நான்கு ஆஸ்ரமத்தாரையும் நன்கு காப்பதற்காகவும் அரசன் படைக்கப்பட்டான்.
தேந யத்யத்ஸப்ருத்யேந கர்தவ்யம் ரக்ஷதா ப்ரஜா: |
தத் தத்வோ அஹம் ப்ரவக்ஷ்யாமி யதாவ தநு பூர்வஷ: |-36
இத்தகைய அரசன், தன் பரிவாரங்களோடு நடந்து கொள்ள வேண்டிய விதிமுறைகளைக் கூறுகிறேன்; கேளுங்கள்.
ப்ராஹ்மணாந் பர்யுபாஸீத ப்ராதருத்தாய பார்திவ: 1
த்ரைவித்யவ்ருத்தாந் விதுஷஸ்திஷ்டேத் ஏஷாம் ச சாஸ்நே|| 37
அரசன் அதிகாலையில் எழுந்து வேதங்களை முழுமையாகக் கற்ற வித்வான்களான பிராம்மணர்களை வணங்கி அவர்கள் வழிகாட்டுதல்படி ஆணை செலுத்த வேண்டும்.
வருத்தாந்ஷ்ச நித்யம் ஸேவேத விப்ராந் வேதவிதஷ்சீந் |
வ்ருத்தஸேவீ ஹி ஸத்தம் ரக்ஷோபிரபி பூஜ்யதே || 38
வயதாலும் தவத்தாலும் பெரியோராகவும், வேதங்கள்முழுமையும் அறிந்தவர்களாகவும், உள்ளும்புறமும் தூய்மையுடன்இருப்பவர் களுமான பிராம்மணர்களை அரசன் வணங்க வேண்டும்.அப்படி வணங்குபவனை அரக்கர்களும் போற்றிப் பூஜிப்பார்கள்.
தேப்யோஅதிகச்சேத் விநயம் பிரீதாத்மாஅபி நித்ய : 1
விநீதாத்மாஹி ந்ருபதிர்ந விநஷ்யதி கர்ஹிசித்|-39
இயற்கையான அறிவாலும், அர்த்த சாஸ்திரம் முதலான நூல்களைப் படித்துப் பெற்ற அறிவாலும் நீதி (தீர்ப்பு) வழங்கத் தக்கவனாயினும் பெரியோரிடமும் கேட்டு தீர்ப்பு வழங்குபவன் என்றும் நசிக்க மாட்டான்.
பஹவோ அவிநயாந்நஷ்டாராஜாநஸ்ஸபரிச்சதா: |
வநஸ்தா அபிராஜ்யாநி விநயாத் ப்ரதிபேதிரே || 40
பல அரசர்கள் படைபலத்தோடு, பொக்கிஷம் நிறைந்திருந்தும்கூட பெரியோர் வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் அழிந் துள்ளனர். சில அரசர்கள் காடுகளில் வசிக்க நேர்ந்த போதும்
பெரியோர் வழி காட்டுதலால் ராஜ்ஜியத்தை அடைந்துள்ளனர்.
வேநோ விநஷ்டோ அவிநயாந்நஹுஷஷ்சைவ பார்திவ: 1
சுதாஸோ யாவநஷ்சைவ சுமுகோ நிமிரேவச|| 41
வேனன், நகுஷன்,யவனபுத்திரன், சுதாசுதன், சுமுகன், நிமி முதலானோர் பெரியோர் சொல் கேளாமல் அழிந்தனர்.
ப்ருதஸ்து விநயாத்ராஜ்யம் ப்ராப்தவாந் மநுரேவ ச |
குபேரஷ்ச தநைஷ்வர்யம் ப்ராஹ்மண்யம் சைவ காதி :-42
பிருது, மநுமுதலானோர் பெரியோர் வழிகாட்டுதலோடு அரசாண்டனர். குபேரன் தனத்துக்கு அதிபதியானான். விஸ்வாமித்திரன் பிராம்மணத் தன்மையைப் பெற்றான்.
த்ரைவித்யேப்ய:த்ரயீம் வித்யாம் தண்டநீதிம் ச சாஸ்வதீம் |
அந்வீக்ஷிகீம் ச ஆத்மவித்யாம் வார்தாரம்பாம்ஷ்ச லோகத: || 43
மூன்று வேதங்களையும் நன்கு அறிந்தவர்களிடம், அரசன் வேதங்களைக் கற்க வேண்டும். தண்டநீதியை அந்த சாஸ்திரவல்லோரிடமும், அர்த்த சாஸ்திரத்தை அந்த சாஸ்திர வல்லோ
ரிடமும் கற்க வேண்டும். பிரம்ம வித்தையை அதற்குரியவரிடம் கற்க வேண்டும். பற்பல பாஷைகளையும் அந்தந்த பாஷைகளின் வல்லுநர்களிடம் கற்க வேண்டும். அனைத்துப் பயிற்சிகளையும் பெற வேண்டும்.
இந்த்ரியாணாம் ஐயே யோகம் ஸமாதிஷ்டேத்திவாநிஷம் |
ஜிதேந்த்ரியோ ஹி ஷக்நோதி வஷே ஸ்தாபயிதும் ப்ரஜா: 44
இரவும் பகலும் இந்திரியங்களைத் தன் வசத்தில் வைக்க முயல வேண்டும். இந்திரியங்களை வென்று தன் வசப்படுத்திய மன்னனே மக்களைத் தன் வசத்தில் வைத்துக் கொள்ள முடியும்.
தஷகாமசமுத்தாநி ததா அஷ்டௌ க்ராதஜாநிச |
வ்யசநாநி துரந்தாநி ப்ரயத்நேந விஸர்ஜயேத்|| 45
காமத்தால் தோன்றும் பத்தும், கோபத்தால் தோன்றும் எட்டும் துயரங்களையே தரும். எனவே முயற்சி செய்து காமத்தையும்கோபத்தையும் விட்டுவிட வேண்டும்.
காமஜேஷு ப்ரசக்தோ ஹி வ்யஸநேஷு மஹீபதி: |
வியுஜ்ய தேர்த்தர்மாப்யாம் க்ரோதஜேஷ்வாத்மநைவ து || 46
காமத்தில் பற்றுள்ள அரசன் தர்மத்தையும் பொருளையும்இழப்பான். கோபம் கொள்ளும் அரசன், தனக்குத்தானே அழிவைத்தேடிக்கொள்வான்.
மருகயாக்ஷா திவாஸ்வப்ந: பரிவாத ஸ்த்ரியோ மத: 1
தௌர்யத்ரிகம் வ்ருதாட்யா ச காமஜோ தஷகோ கண: 47
காமத்தால் தோன்றும் பத்து: (1) வேட்டை (2) வாதம்(3) பகல் தூக்கம் (4) பெண்கள் சேர்க்கை (5) குடிபோதை(6) பிறர் நிந்தை (7)பாட்டு (8) நடனம் (9) பொய் (10) வீண்சஞ்சாரம்.
பைஷுந்யம் ஸாஹஸம் த்ரோஹஈர்ஷ்யாஅ யார்த்த தூஷணம் |
வாக்தண்டஜம் ச பாருஷ்யம் க்ரோதஜோ அபிகணோ அஷ்டக: |-48
கோபத்தால் தோன்றும் எட்டு: (1) கோள் சொல்லல் (2) வீண்துணிச்சல் (3) துரோகம் (4) பொறாமை (5) திருட்டு (6) தூற்றுதல்(7) வாய்ச் சண்டை (8) காரணமின்றி தண்டித்தல் (அடித்தல்)
த்வயோரப்யேதயோர்மூலம் யம் ஸர்வே கவோய விது:
தம்யத்நேந ஐயேத் லோபம் தஜ்ஜாவேதாவுபெள கணௌ || 49
காமத்துக்கும் கோபத்துக்கும் மூலகாரணம் என்று லோப குணத்தை அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே முயற்சித்து லோபத்தை வென்றுவிடுவதன் மூலம் காமம், கோபம் இரண்டையும் வெல்லலாம்.
பாநமக்ஷா ஸ்த்ரியஷ்சைவ ம்ருகயா ச யதாக்ரமம் | ஏதத்க்ருஷ்டதமம் வித்யாச்சதுஷ்கம் காமஜே கணே 50
காமத்தால் ஏற்படும் பத்து குணங்களில், குடி, சூதாட்டம், பெண் கலவி, வேட்டை என்னும் நான்கும் மிகவும் துன்பமளிப்பவை.
தண்டஸ்ய பாதநம் சைவ வாக்பாருஷ்யார்த தூஷணே|
க்ரோதஜே அபிகணே வித்யாத் கஷ்டமேதத்ரிகம் ஸதா || 51
அடித்தல். வைதல் (ஏசுதல்), திருடல் என்னும் மூன்றும் கோபத்தால் விளையும் குணங்களில் மிகவும் துன்பமளிப்பவை.
ஸப்தகஸ்யாஸ்ய வர்கஸ்ய ஸர்வத்ரைவாநுஷங்கிண: |
பூர்வம் பூர்வம் குருதரம் வித்யாத் வ்யஸநமாத்மவாந் Il 52
காமத்தால் விளையும் குணங்களை எடுத்துக் கொண்டால், ஒன்றைவிட ஒன்று துயரம் அதிகம் தருவதாகும். அதே போன்றுதான் கோபத்தால் விளைபவையும் ஒன்றைவிட ஒன்று அதிகம் துயர் தருவதாகும்.
வ்ஸநஸ்ய ச ம்ருத்யோஷ்ச வ்யசநம் கஷ்டமுச்யதே | வ்யஸந்யதோ அதோ வ்ரஜதிஸ்வர்யாத்யவ்யஸநீ ம்ருத: || 53
கவலை, மரணம் இரண்டையும் எடுத்துக் கொண்டால், கவலை கொடியது. கவலை கொண்டவன் தினம் தினம் ணத்தைஅடைவான். கவலையற்றவன் இறந்த பின் மேலுலகம் போவான்./ எனவே கவலைகளை விடவேண்டும்.
மௌலாந் ஷாஸ்த்ர விதஷ்ராந் லப்தலக்ஷாந் குலோத்பவாந் |
ஸசிவாந் ஸப்தசாஷ்டெள வா ப்ரகுர்வீத பரீக்ஷிதாந்|-54
அரசாங்கப் பதவிகளில் பரம்பரையாக வந்தவர்களும்,சாஸ்திர மறிந்தவர்களும், சூரர்களும், வில்வித்தை போன்ற போர்ப் பயிற்சிகளில் சிறந்தவர்களும், நல்ல வம்சத்தில் பிறந்தவர்களுமான ஏழு பேரையோ அல்லது எட்டுப் பேரையோ நன்கு பரீட்சித்துமந்திரிகளாக நியமித்துக் கொள்ள வேண்டும்.
அபியத்சுககரம் கரம் கர்ம ததாப்யே கேந் துஷ்கரம் |
விசேஷதோ அசஹாயேந கிந்து ராஜ்யம் மஹோதயம் |-55
சிறிய காரியத்தைக்கூட வேகமாகத் தனியாக முடிப்பது கடினம். அப்படியிருக்கும்போது மிகப் பெரும் நிர்வாகங்கள் அடங்கிய ராஜ்யபரிபாலனத்தை ஒருவனால் எங்ஙனம் தனியாகச் செய்ய முடியும்?
தைஸ்ஸார்தம் சிந்தயேந்நித்யம் ஸாமாயம் ஸந்தி விக்ரஹம்| ஸ்தாநம் ஸமுதயம் குப்திம் லப்தப்ரஷமநாநி ||ச 56
அரசன், மந்திரிகளிடம் சாதாரண விஷயங்களைப் பற்றியும்,ஒரு நாட்டுடன் நட்பு பூணுவதைப் பற்றியும், படையெடுப்பதைப்பற்றியும், தண்டனையளிப்பதைப் பற்றியும், திரவியங்களைப் (செல்வங்களைப்) பற்றியும், புரம், ராஷ்டிரம் இவைகளைப் பற்றிய
விவகாரங்களைப் பற்றியும், தங்கம் முதலானவை கிடைக்கும் இடங்களைப் பற்றியும், அவற்றைத் தோண்டி எடுப்பதும், எடுத்ததைக் காப்பதும், அவற்றை நல்லபடி உபயோகிப்பது
மானவைகளைப் பற்றியும் ஆலோசிக்க வேண்டும்.
தேஷாம் ஸ்வம் ஸ்வமபிப்ராயமுபலப்ய ப்ருதக் ப்ருதக் |
ஸமஸ்தாநாம் ச கார்யேஷு விதத்யாத்திதமாத்மந: || 57
அந்த மந்திரிகள் ஒவ்வொருவருடைய அபிப்ராயத்தையும் தனித்தனியாகக் கூப்பிட்டு அந்தரங்கமாகக் கேட்டறிய வேண்டும். பிறகு அனைவருடைய அபிப்ராயத்தையும் பகிரங்கமாகக் கேட்டறிய வேண்டும். அதன்பிறகு எப்படிச் செய்தால் சரியோ
அப்படிச் செய்ய வேண்டும்.
ஸர்வேஷாம்து விஷிஷ்டேந ப்ராஹ்மணேந விபஷ்சிதா|
மந்த்ரயேத்பரமம் மந்த்ரம் ராஜா ஷாட்குண்ய ஸம்யுதம் || 58
இந்த மந்திரிகளில் சிறந்தவராக, குணங்களால் உயர்ந்தவராக, வித்வானாக இருக்கும் ஒருவரிடம், சத்ருவுடன் சமாதானம் செய்து கொள்ளுதல் அல்லது போர் புரிதல் முதலான முக்கிய விஷயங்களைப் பற்றி ஆலோசனைகளை நடத்த வேண்டும்.
நித்யம் தஸ்மிந் ஸமாஷ்வஸ்த: ஸர்வகார்யாணி விபேத் |
தேந ஸார்தம் விநிஷ்சித்ய தத: கர்ம ஸமாரபேத் 1 59
தினமும் அம்மந்திரியிடம், செய்யவேண்டியவைகளைப் பற்றி எடுத்துக் கூறி,அவரது ஆலோசனையைக் கேட்டு அப்படியே நடத்த வேண்டும்.
அந்யாநபி ப்ரகுர்வீத சுசீந்ப்ராக்ஞாநவஸ்திதாந்
ஸம்யகர்த ஸமாஹர்த்ரூநமாத்யாந் சுபரீக்ஷிதாந் || 60
தூய்மையானவர்களாகவும், சிறந்த அறிவாளிகளாகவும், தீரர்களாகவும், பணம் படைத்தவர்களாகவும் இருப்பவர்களை நன்கு பரீட்சித்து காரிய மந்திரிகளாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நிர்வர்தேதாஸ்ய யாவத்பீரிதிகர்தவ்யதா ந்ருபி: |
தாவதோ அதந்த்ரிதாந் தக்ஷாந் ப்ரகுர்வீத விசக்ஷணாந் || 61
அம்மந்திரிகளில் திறமைசாலிகளாகவும், குலதர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்களாகவும், பொருளாசை அற்றவர்களாகவும் இருப்பவர்களை பொக்கிஷ இடத்தில் நியமிக்க வேண்டும். அவ்வாறே இத்தகையவர்களை தானியக் கருவூலங்களிலும் நியமிக்க
வேண்டும்.
தேஷாமர்தே நியுஞ்ஜீத சூராந் தக்ஷாந் குலோத்கதாந் | ஷுசீநாகரகர்மாந்தே பிருநந்தர்நிவேஷநே|-62
அரண்மனையில், பயந்தவர்களை நியமிக்க வேண்டும். இல்லாவிடில் பலசாலிகளான சூரர்கள் எதிரிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, ராணிகளுடன் அரசன் தனித்திருக்கும்போது கொன்று விடவும் கூடும். எனவே சூரர்களை அரண்மனையில் நியமிக்கக் கூடாது.
தூதம் சைவ ப்ரகுர்வீத ஸர்வஷாஸ்த்ர விஷாரதம் |
இங்கிதாகார சேஷ்டக்ஞம் சுசிம் தக்ஷம் குலோத்கதம் || 63
சகல சாஸ்திரங்களையும் அறிந்தவனாகவும், பிறர் மனத்தை அறியக்கூடியவனாகவும், உடல் அசைவுகள் மற்றும் கைகளால் செய்யும் சமிக்ஞைகளை அறிந்தவனாகவும், பரிசுத்தனாகவும், திறமைசாலியாகவும் வம்ச பாரம்பரியமாக வந்தவனாகவும்
இருப்பவனை தூதனாக நியமிக்க வேண்டும்.
அனுரக்த: ஷுசிர்த : ஸ்ம்ருதிமாந் தேஷகாலவித் | வபுஷ்மாந் வீதபீர்வாக்நீ தூதோ ராக் : ப்ரஷஸ்யதே || 64
மக்களிடம் அன்பு செலுத்துபவனாகவும், பெண், பொன் விஷயங்களில் பரிசுத்தனாகவும், திறமைசாலியாகவும், ஞாபக சக்தி மிகுந்தவனாகவும், தேச காலங்களை அறிந்தவனாகவும், உருவத்தில் எந்தக் குறைபாடும் இல்லாதவனாகவும், பயமறியாதவனாகவும்,
பேச்சுத் திறன் கொண்டவனாகவும் இருக்கும் தூதனைத் தன்னருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அமாத்யே தண்ட ஆயத்தோ தண்டே வைநயிகீ க்ரியா |
ந்ருபதெள கோஷராஷ்ட்ரே ச தூதே ஸந்திவிபர்யயௌ || 65
நால்வகைப் படைகளும் படைத் தலைவனுக்கு அடங்கியிருக்க வேண்டும். தண்டத்துக்கு வினயம் ஆதீனமாயிருக்கும். ராஜ்ஜியத்தையும், பொக்கிஷங்களையும் அரசன் தன் ஆதீனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.-அவற்றைத் தானே பார்த்துக் கொள்ள வேண்டும். போரும்-சமாதானமும் தூதுவனுடைய ஆதீனத்தில் இருக்கும். போரும்
சமாதானமும் தூதுவனாலேயே ஏற்படும். எனவே தூதுவனாக இருப்பவன் மிக்க திறமைசாலியாக இருக்க வேண்டும்.
தூதஏவஹி ஸந்தத்தே பிநத்யேவ ச ஸம்ஹதாந் |
தூதஸ்தத்குருதே கர்ம பித்யந்தே யேந மாநவாஹ 66
தூதுவனே பகைவரை நண்பனாக்க வல்லான். நண்பர்களாக இருப்பவர்களைப் பகை கொள்ள வைக்கவும் வல்லான். எதைச் செய்தால் பகைவர்கள் நண்பர்களாகி இணைவார்களோ, எதைச் செய்தால் நண்பர்கள் வேறுபடுவார்களோ, அதைச் செய்ய வல்லவன்.எனவே போரும் சமாதானமும் அவன் ஆதீனத்திலுள்ளவை.
ஸ வித்யாதஸ்ய க்ருதே நிகூடேங்கித சேஷ்டிதை: |
ஆகாரமிங்கிதம் சேஷ்டாம் ப்ருத்யேஷு ச சிகீர்ஷிதம்|| 67
தூதுவன் எதிரி மன்னனிடம் போய் மாறுவேஷத்தோடு தங்கியிருந்து, அவனது மனத்திலுள்ள அபிப்ராயத்தையும், நடவடிக்கைகளையும், அவனது வீரர்களின் அபிப்ராயங்களையும், அவர்கள் உருவங்களையும்,அங்கசேஷ்டைகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.
புத்வா ச சர்வம் தத்வேந பரராஜ சிகீர்ஷிதம்|
ததா ப்ரயத்னமாதிஷ்டேத் யதாத்மாநம் ந பீடயேத்|| 68
இவ்வாறு தூதுவர்கள் மூலமாக எதிரி மன்னர்களைப் பற்றி அரசன் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அறிந்து எவ்வகையில் தனக்கு அபாயம் நேராமல் இருக்குமோ அவ்வகையாக நடந்து கொள்ள வேண்டும்.
ஜாங்கலம் ஸஸ்ய ஸம்பந்நமார்ய ப்ராயமநாவிலம் |
ரம்ய மாஸதஸாமந்தம் ஸ்வாஜீவ்யம் தேஷமாவசேத் || 69
அரசன் தன் பட்டினத்துக்கருகில் வயல்களையும், வியாபாரிகளுக்குரிய இடங்களையும், பசுஞ்சோலைகளையும், கிராமங்களையும் ஏற்படுத்த வேண்டும்.
தந்வதுர்கம் மஹீதுர்கமப்துர்கம் வார் மேவ வா |
ந்ருதுர்கம் கிரிதுர்கம் வா ஸமாஷ்ரித்ய வஸேத்புரம் || 70
ஐந்து யோஜனை தூரத்துக்கு சுற்றிலும் தண்ணீரில்லாத மணல் பரப்பு அமைக்க வேண்டும். இதற்கு மருதுர்கம் என்று பெயர்.-கற்களால் கட்டப்பட்ட பன்னிரண்டு முழ உயரமும், அதிக
அகலமும் கொண்டதாக விசாலமான பிராகாரங்களோடு, மனிதர்கள் அங்கிருந்தே போர் புரியத் தக்கதான கற்கோட்டையைக் கட்ட வேண்டும். சுற்றிலும் ஆழமாகத் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும். முதலைகளையும் அதில் விட்டு வளர்க்க வேண்டும். இதற்கு
ஜலதுர்கம் என்று பெயர். வெளிப்புறத்தைச் சுற்றிலும் ஒரு யோஜனை தூரத்துக்கு அடர்த்தியாக மரங்களை வளர்க்க வேண்டும். இதற்கு விருட்சதுர்கம் என்று பெயர். நால்வகைப் படைகளாலும் காவல் காப்பது மனிததுர்கம். நாற்புறமும் மலைகளால் சூழப்பட்டு உள்ளே நுழைய முடியாதபடி இருப்பதோடு, உட்புறமாக நதிகளும், நீர்நிலைகளும், விளைச்சல் தரும் இடங்களும் இருப்பது கிரிதுர்கம்எனப்படும்.-துர்கம் என்றால் கோட்டை. இத்தனை கோட்டைகளில் ஏதேனும் ஒன்றைத் தன் தலைநகரத்தைச் சுற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஸர்வேண து ப்ரயத்நே கிரிதுர்கம் ஸமாஷ்ரயேத் |
ஏஷாம் ஹி பாஹுகுண்யேந கிரிதுர்கம் விசிஷ்யதே|| 71
த்ரீண்யாத்யாஷ்ரிதாஸ் த்வேஷாம் ம்ருக கர்தாஷ்ரயா அப்ஸரா: |
த்ரீண்யுத்தராணி க்ரமஷஹ ப்லவங்கம நராஅமராஹ|| 72
ஐந்து யோஜனை தூரம் சூழப்பட்ட மணல் கோட்டையில் மிருகங்கள் வாழ வேண்டும்.
கற்கோட்டையில் எலி, பெருச்சாளிகள் வாழ வேண்டும்.
ஜலதுர்கத்தில் முதலைகள் வாழ வேண்டும்.
மரங்கள் சூழ்ந்த விருட்ச துர்கத்தில் வானரங்கள்வாழ வேண்டும்.
மனித துர்கத்தில் மனிதர்கள் காவல் இருக்க வேண்டும்.
கிரி துர்கத்தில் தேவதைகள் வசிக்க வேண்டும்.தேவதைகளுக்கான பூஜைகளைச் செய்ய வேண்டும்.
யதா துர்காஷ்ரிதாநே தாந்நோ பஹிம்ஸந்தி ஷத்ரவ: |
ததாரயோ ந ஹிம்ஸந்தி ந்ருபம் துர்கம் ஸமாஷ்ரிதம்|| 73
கோட்டைகளிலிருக்கும் மிருகங்கள் முதலானவற்றை எதிரிகளால் ஹிம்சிக்க முடியவில்லை என்றால், கோட்டைக்குள்ளிருக்கும் அரசனை எதிரிகளால் நெருங்க முடியாது.
ஏகஷ்ஷதம் யோதயதி ப்ராகாரஸ்தோ தநுர்தர: |
ஷதம் தஷசஹஸ்ராணி தஸ்மாத்துர்கம் விதீயதே|-74
கற்கோட்டை பிரகாரத்தின் மீதுள்ள ஒரு வில் வீரன் நூறு எதிரிகளை அழிக்க முடியும். நூறு வில் வீரர்கள் பத்தாயிரம் எதிரிகளை அழிக்க முடியும். எனவே கோட்டை அரசனுக்கு மிக மிக
முக்கியம்.
தத் ஸ்யாதாயுத ஸம்பந்தம் தனதான்யேந வாஹநை: 1
ப்ராஹ்மணைஷ் ஷில்பிபி ரந்த்ரையவ ஸேநோதகேந ச 75
அந்தக் கோட்டை படைக் கலங்கள், தனங்கள், தானியங்கள், வாகனங்கள், அறிஞர்கள், பொறியியல் அறிஞர்கள், யந்திரங்கள் மற்றும் தண்ணீரோடு கூடியிருக்க வேண்டும்.
தஸ்ய மத்யே சுபர்யாப்தம் காரயேத் க்ருஹமாத்மந: |
குப்தம் ஸர்வர்துகம் சுப்ரம் ஜலவ்ருக்ஷஸமந்விதம் || 76
அந்தக் கோட்டைக்கு மத்தியில் தன்னுடைய கிருஹத்தை அரசன் அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அங்கு ஆலயம், அரண்மனைப் பெண்டிருக்கான கிருஹங்கள், ஆயுதச் சாலை, சமையல் கூடம் முதலானவைகள் இருக்க வேண்டும். சுற்றிலும்
அகலமான பிராகாரங்கள் இருக்க வேண்டும். புஷ்ப மரங்களும் பழ மரங்களும் நிறைந்திருக்க வேண்டும். நீர் நிறைந்த நடைவாவிகளும் அமைந்திருக்க வேண்டும். சுற்றிலும் சோலைகள் சூழ்ந்ததாக ராஜகிருஹம் இருக்க வேண்டும்.
ததத்யாஸ்யோத்வஹேத் பார்யாம் ஸவர்ணாம் லக்ஷணாந்விதாம் |1
குலே மஹதி ஸம்பூதாம் ஹ்ருத்யாம் ரூபகுணாந்விதாம் || 77
க்ஷத்ரிய குலத்தில் பிறந்த, நல்ல லட்சணங்களோடு கூடிய மனதிற்கினிய, அழகும் நற்குணங்களும் நிறைந்த பெண்ணை அரசன் மணக்க வேண்டும்.
புரோஹிதம் சகுர்வீத வருணுயாதேவசரிக் த்விஜ: || தே அஸ்ய க்ருஹ்யாணி கர்மாணி குர்யுர்வை தாநிகாநிச || 78
ரிக்வேதிகளை புரோகிதர்களாக நியமிக்க வேண்டும். யக்ஞம் முதலான கிரியைகளையும், ராஜகிருஹ பூஜைகளையும் அவர்கள் செய்ய வேண்டும்.
யஜேத ராஜா க்ரதுபிர் விதைராப்த தட்சிணை: 1
தர்மார்தம் சைவ விப்ரேப்யோ தத்யாத் போகாந் தநாநி ச ||| 79
அவர்களைக் கொண்டு யாக யக்ஞங்களைச் செய்ய வேண்டும். தாராளமாக தட்சிணைகளை வழங்க வேண்டும். அவர்களுக்கு வீடுகள், பூமி, படுக்கை, தங்கம்,வெள்ளி ஆபரணங்களை வழங்க வேண்டும்.
ஸாம்வத்ஸரிக மாஷப்த்சைராஷ்ட் ரைதாஹாரயேத் பலிம்
ஸ்வாச்சாம்நாயாவரோ லோகே வர்தேத பித்ருவத் ந்ருஷு || 80
அரசன் தக்க அதிகாரிகளை நியமித்து வருடத்துக்கு வர வேண்டிய வரியை வசூலிக்க வேண்டும். வரி வசூல் செய்வதில் சாஸ்திர நெறியறிந்து வசூல் செய்ய வேண்டும். தன் குடிமக்களிடம் தந்தையைப் போல் அன்பு காட்ட வேண்டும்.
அத்யக்ஷாந் விவிதாந் குர்யாத் தத்ர தத்ர விபஷ்சித: |
தே அஸ்ய ஸர்வாண்ய வேக்ஷேரந் ந்ருணாம் கார்யாணி குர்வதாம் || 81
காலாட் படை, குதிரைப் படை, தேர்ப் படை, யானைப் படை முதலான வற்றுக்கு நிர்வாகிகளாகத் தக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அந்தந்த அதிகாரிகள் அந்தந்த இடங்களில் இருந்து கொண்டு பயிற்சிகளும் மற்ற காரியங்களும் நன்கு நடைபெறுகிறதா
என்பதைக் கண்காணித்து, குறைகளை நீக்க வேண்டும்.
ஆவ்ருத்தாநாம் குருகுலாத் விப்ரானாம் பூஜகோ பவேத் |
ந்ருபாணாமக்ஷயோஹ்யேஷ நிதிர் ப்ரஹ்மோ அபிதீயதே || 82
குருகுலத்தில் படிப்பை முடித்த பிராம்மணர்களுக்குத் தேவையான தன தானியங்களை வழங்கிக் கௌரவிக்க வேண்டும். இவ்வாறு பிராம்மணர்களுக்கு வழங்கப்பட்ட நிதியே அரசனுடைய சொந்த நிதியாகும். அதுவே அரசனுக்கு எப்போதும் குறையாத
நன்மைகளைத் தரும்.
நதம் ஸ்தேநா ந சாமித்ரா ஹரந்தி ந ச நஷ்யதி |
தஸ்மாத் ராக்ஞாநிதாதவ்யோ ப்ராஹ்மணேஷ்வக்ஷயோ நிதி: || 83
இவ்வாறு பிராம்மணர்களுக் களிக்கப்பட்ட பொருள் அரசனுடையது என்று கூறப்பட்டதல்லவா? இந்தப் புண்ணியமாக மாறிய நிதியை திருடர்கள் திருட முடியாது. எதிரிகள் கொள்ளையிட்டு எடுத்துச் செல்ல முடியாது. அது குறையவும் குறையாது. எனவே, அரசன் தன தானிய ரூபமான நிதியை பிராம்மணனிடம் வைக்க வேண்டும்.
ந ஸ்கந்தந்தே நவ்யததே ந விநஷ்யதி கர்ஹிசித் | வரிஷ்டமக்நி ஹோத்ரேப்யோ ப்ராஹ்மணஸ்ய முகேஹுதம் || 84
அக்னியில் ஹோமம் செய்யப்பட்ட ஹவிஸ் (நெய்) அக்னியில் விழாமல் கீழே விழலாம். ஆனால் பிராம்மணன் கையில் கொடுக்கப் பட்ட தானம் என்னும் ஹவிஸ் கீழே விழாது; கெடாது; எனவே பிராம்மணனுக்குக் கொடுக்க வேண்டும்.
ஸமமப்ராஹ்மணே தாநம் த்விகுணம் ப்ராஹ்மணப்ருவே
ப்ராதீதே ஷதஸாஹஸ்ரமநந்தம் வேதபாரகே || 85
பிராம்மணனல்லாத கூக்ஷத்ரியன் முதலானோருக்கு வழங்கிய தானம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட அளவுக்குப் பலன் தரும். அனுஷ்டானத்தோடு கூடிய பிராம்மணனுக்கு வழங்கிய தானம் அதைவிட இருமடங்கு பலன் தரும். வேதாத்யயனம் செய்யும் பிராம்மணனுக்கு வழங்கிய தானம் லட்சம் மடங்கு மேலான பலன் தரும். வேதங்களை முழுமையாகப் படித்த பிராம்மணனுக்கு அளித்த தானம் அளவில்லாத பலனைத் தரும்.
பாத்ரஸ்ய ஹி விசேஷேண ஷ்ரத்ததாநதயைவ ச 1
அல்பம் வா பஹுவா ப்ரேத்ய தாநஸ்யாவாப்யதே பலம் || 86
வழங்கப்பட்ட தானம் சிறியதாயினும் அதிகமாயினும், தானம் வழங்கியவனுடைய வேதாத்யயனம், தூய்மை, தவம் முதலானவைகளைப் பொறுத்தும், தானம் கொடுத்தவன் எந்த அளவுக்கு சிரத்தையாக வழங்கினான் என்பதைப் பொறுத்துத்தான் பலன் கிட்டும்.
ஸமோத்தமாதமை ராஜா த்வாஹுத: பாலயந் ப்ரஜா: 1
ந நிவர்தேத ஸம்க்ராமாத் க்ஷாத்ர தர்மமனுஸ்மரம்II 87
அரசன், தன்னைப் போருக்கு அழைத்தவன் தனக்கு சமமானவனாக இருந்தாலும், உயர்ந்தவனாக இருந்தாலும், தாழ்ந்தவனாக இருந்தாலும் க்ஷத்ரிய தர்மப்படி போர் புரியவே வேண்டும். பயத்தால் பின்வாங்கக் கூடாது.
ஸம்க்ராமேஷ்வநிவர்தித்வம் ப்ரஜாநாம்சைவ பாலநம் |
சுஷ்ரூஷா ப்ராஹ்மணாநாம் ச ராக்ஞாம் ஷ்ரேயஸ்கரம் பரம் |-88
போரில் புறங்காட்டாமை, மக்களைக் காப்பாற்றுதல், பிராம்மணர்க்குப் பணிவிடை புரிதல் இவை அரசனுக்கு மேன்மையைத் தரும்.
ஆஹவேஷு மிதோ அந்யோந்யம் ஜிகாம்சந்தோ மஹுக்ஷித: | யுத்யமாநா: பரம் ஷக்த்யாஸ்வர்கம் யாந்த்ய பராங்முகா: || 89
அரசர்கள் ஒருவரை ஒருவர் கொல்ல முயல்பவர்களாய்த் தங்கள் சக்தியைப் பிரயோகித்துப் போரிட்டு, அந்தப் போரில் இறந்தால் ஸ்வர்க்கத்தை அடைவார்கள்.
நகூடையராயுதைர்வா ந்யாத்யுத்யமாநோ ரணே ரிபூந் | நகர்ணிபிர்நாபி திக்த்தைர் நாக்நி ஜ்வலிததேஜஸை: |-90
மேலே பார்ப்பதற்கு வெறும் மரக்கட்டையைப் போலிருந்து உள்ளே கொடிய ஆயுதம் மறைத்து வைத்திருந்து அதனால் கொல்லக்கூடாது . காதுகள் பொருந்தியுள்ள ஆயுதங்களாலும் கொல்லக்கூடாது . விஷம் தடவிய ஆயுதங்களாலும் கொல்லக்கூடாது. நெருப்பில் காய்ச்சிய நிலையில் ஒளியோடிருக்கும் ஆயுதத் தாலும் கொல்லக்கூடாது.
நசஹந்யாத் ஸ்தலாரூடாந் ந க்லீபம் ந க்ருதாஞ்ஜலிம் |
நாமுக்தகேஷம் நா நம் நதவாஸ்மீதி வாதிநம்|| 91
தான் தேரில் இருக்கும்போது, தேரின்றி பூமியில் நிற்கும்எதிரியைக் கொல்லக்கூடாது. நபும்சகனைக் கொல்லக்கூடாது.-சரணடைந்தவனைக் கொல்லக்கூடாது. தலை விரித்துக் கொண் டிருப்பவனையும், அமர்ந்து கொண்டிருப்பவனையும் கொல்லக் கூடாது.
ந சுப்தம் ந விஸந்நாஹம் ந நக்நம் நநிராயுதம் | நாயுத்யமாநம் பஷ்யந்தம் நபரேண ஸமாகதம் || 92
தூங்குபவனையும், யுத்தத்துக்கு முயற்சி செய்யாதவனையும்கொல்லக்கூடாது .ஆடையற்று இருப்பவனையும், ஆயுதங்களற்றுஇருப்பவனையும் கொல்லக்கூடாது. தன்னுடன் யுத்தம் செய்யவராதவனையும், யுத்தத்தை வேடிக்கை பார்ப்பவனையும் கொல்லக்கூடாது. இன்னொருவனுடன் யுத்தம் செய்து கொண்டிருப்பவனையும் கொல்லக்கூடாது.
நாயுதவ்யசநப்ராப்தம் நார்தம் நாதிபரிக்ஷதம் |
நபீதம் நபராவ்ருத்தம் ஸதாம் தர்மமனுஸ்மரந்I-93
உடைந்த ஆயுதங்களோடு இருப்பவனையும், துயரத்தால் நிலை குலைந்து போயிருப்பவனையும், அடிப்பட்டு வீழ்ந்திருப்பவனையும், பயந்தவனையும், புறமுதுகு காட்டி ஓடுபவனையும் க்ஷத்ரிய தர்மத்தை எண்ணிப்பார்த்துக் கொல்லக்கூடாது.
யஸ்து பீத: பராவ்ருத்த: ஸங்க்ராமே ஹந்யதே பரை:
பர்துர்யத் துஷ்க்ருதம் கிஞ்சித்தத் ஸர்வம் ப்ரதிபத்யதே |-94
எவன் எதிரிகளுக்குப் பயந்து புறமுதுகு காட்டி ஓடும்போது எதிரிகளால் கொல்லப்படுகிறானோ, அவன் தன்னுடைய அரசனுடைய பாபம் முழுவதையும் அடைகிறான்.
யச்சாஸ்ய சுக்ருதம் கிஞ்சிதமுத்ரார்த்தமுபார்ஜிதம் | பர்தா தத்ஸர்வமாதத்தே பராவ்ருத்த ஹதஸ்ய து |-95
இவ்வாறு கொல்லப்பட்டவனால் எந்தப் புண்ணியங்கள் சம்பாதிக் கப்பட்டிருந்தனவோ, அவை யாவும் அவனுடைய தலைவனான அரசனைச் சென்றடையும்.
ரதாஷ்வம் ஹஸ்திநம் சத்ரம் தநம் தாந்யம் பசூந் ஸ்த்ரிய: |
ஸர்வ தரவ்யாணி குப்யம் சயோ யத்ஜயதி தஸ்ய தத்|| 96
யுத்தத்தில் வென்றவன், தோற்றவனுடைய தேர்கள், யானைகள், குதிரைகள்,குடை, தன தானியங்கள், பசுக்கள், பெண்கள், சகல திரவியங்கள், தங்கம், வெள்ளி போன்ற அனைத்துக்கும் உரிமையுடையவன் ஆவான்.
ராக்ஞஷ்ச தத்யுருத்தாரமித்யேஷா வைதிகீ ஷ்ருதி: |
ராக்ஞாச ஸர்வயோதேப்யோ தாதவ்யமப்ருதக் ஜிதம் | 97
இவ்வாறு போரில் வென்று கிடைத்த பொருட்களில் உயர்ந்தவைகளை அரசன் தனக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.-மற்றவைகளை வீரர்களுக்கு அவரவர்க்குத் தக்கபடி வெகுமதிகளாகப் பகிர்ந்தளிக்க வேண்டும்..
ஏஷோ அநுபஸ்க்ருத: பரோக்தோ யோததர்மஸ்ஸநாதந: 11
அஸ்மாத் தர்மாந் நச்யவேத க்ஷத்ரியோக்நந் ரணேரிபூந் I-98
சாஸ்வதமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் யுத்த தர்மம் இது.க்ஷத்திரியன் இந்த தர்மங்களை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்.
அலப்தம் சை லிப்ஸேத லப்தம் ரக்ஷேத் ப்ரயத்நத: |
ரக்ஷிதம் வர்தயேச்சைவ வருத்தம் பாத்ரேஷு நிக்ஷிபேத் “-99
அரசன் தன்னிடமில்லாத பொருளை சம்பாதிக்க வேண்டும்.சம்பாதித்த பொருளை நன்கு காப்பாற்ற வேண்டும். காப்பாற்றும் பொருளை பன்மடங்காகப் பெருக்க வேண்டும். பெருக்கிய பொருளை பாத்திரமறிந்து வழங்க வேண்டும்.
ஏதத் சதுர்விதம் வித்யாத் புருஷார்த்த ப்ரயோஜநம் |
அஸ்ய நித்யமனுஷ்டானம் ஸம்யக் குர்யாதந்த்ரித: || 100
இவ்வாறான நான்கு வகைகளும் புருஷார்த்தங்கள் என்றறிந்து,தினமும் முயற்சியோடு இந்நான்கு வகையான காரியங்களையும்செய்து கொண்டேயிருக்க வேண்டும்.
அலப்தமிச்சேத் தண்டேந லப்தம் ரக்ஷேதவேக்ஷயா ||
ரக்ஷிதம் வர்தயேத்வ்ருத்யா வருத்தம் தாநேந நிக்ஷிபேத் || 101
தான் கைப்பற்ற வேண்டிய பொருட்களைப் போரின்மூலமாகவே கைப்பற்ற வேண்டும். கைப்பற்றியவற்றைஜாக்கிரதையாகக் காப்பாற்ற வேண்டும். அவ்வாறு காப்பாற்றப் படுவதை வாணிபம் போன்றவற்றால் பெருக்க வேண்டும். அப்படிப் பெருக்கியதை தக்கவர்களுக்குத் தானம் செய்ய வேண்டும்.
நித்யமுத்யத்தண்ட: ஸ்யாத் நித்யம் விவருத பௌருஷ: |
நித்யம் ஸம்வ்ருத ஸம்வார்யோ நித்யம் சித்ராநுஸார்யரே ! 102
அரசன், எப்போதும் தண்ட நீதியைச் செலுத்துபவனாக இருக்க வேண்டும். நால்வகைப் படைகளும் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். எப்போதும் தன்னுடைய ரகசியங்கள் சிறிதும் வெளியே கசியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சத்ருக்களிடம்
என்ன குறைபாடுகள் உள்ளன என்பதையும் – அதை உபயோகப்படுத்தி, தான் எப்படி அவர்களை வெல்லலாம் என்பது குறித்தும் யோசித்தபடி இருக்க வேண்டும்.
நித்யமுத்யத தண்டஸ்ய க்ருத்ஸ்நமுத் விஜதே ஜகத் |
தஸ்மாத் ஸர்வாணி பூதாரி தண்டேநைவ ப்ரசாதயேத் 103
எப்போதும், தண்டனை வழங்குபவனிடம் சகலரும் பயப்படுவார்கள். எனவே, சகல உயிர்களையும் தண்ட நீதியைச்செலுத்துவதன் மூலமே தன் சுவாதீனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அமாத்யைவ வர்தேத ந கதஞ்சந மாயயா|
புத்யே தாரி ப்ரயுக்தாம் ச மாயாம் நித்யம் ஸ்வஸம்வ்ருத: || 104
அரசன், தன் மந்திரிகளிடம் எக்காலத்தும் வஞ்சகமாக நடக்கக் கூடாது. தன்னுடைய மனத்திலுள்ள கருத்தை வெளிப்படுத்தக் கூடாது. பிறரைக் குறித்த விஷயங்களை எப்போதும் ஒற்றர்கள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.
நாஸ்யச்சித்ரம் பரோ வித்யாத் வித்யாச்சித்ரம் பரஸ்யது |
கூஹேத் கூர்ம இவாங்காநி ரக்ஷேத்விவரமாத்மந: I-105
தன்நாட்டில் உள்ள உள் விவகாரங்களை, படைகளில் உள்ள தற்காலிக பலவீனங்களை எதிரிகள் அறியாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆமை தன் உடலுறுப்புகளை எவ்வாறு மற்றவர் அறியா வண்ணம் மறைத்துக் கொள்கிறதோ, அவ்வாறு எதிரிகள் அறியா வண்ணம் தன் ராஜாங்க ரகசியங்களைப் பாதுகாக்க வேண்டும் . அதே தருணத்தில் எதிரிகளின் ராஜாங்க விஷயங்களை, ரகசியங்களை தான் அறிந்து கொள்ள வேண்டும்.
பகவத் சிந்தயேதர்த்தாந் சிம்ஹவச்ச பராக்ரமேத் |
வ்ருகவச்சா அவலும்பேத ஷஷவச்ச விநிஷ்பதேத் || 106
தண்ணீரில் ஓடும் மீன்களில் நல்ல மீன் கிடைக்கும் வரை, ஓடும் மீன்களையே பார்த்துக் கொண்டு, சிந்தனையை வேறு எங்கும் செலுத்தாமல் காத்திருக்கும் கொக்கு. பெரிய மீன் கிடைத்ததும் சட்டென்று பிடித்துத் தன் உணவாக்கிக் கொள்ளும். அவ்வாறு எதிரிகள்நாட்டை வெல்வதையே குறிக்கோளாகக் கொண்டு தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். தருணம் கிடைத்ததும் உடனே செயல்பட்டு வெல்ல வேண்டும்.மிகவும் பலம் வாய்ந்த மிருகம் யானை. உருவத்திலும் பெரியது. அதன் தந்தங்களும் வலிமை வாய்ந்தவை. சிங்கம் யானையைவிட பலத்தில் குறைந்தது, உருவத்தில் சிறியது. அவ்வளவு நீண்டதந்தங்களும் கிடையாது. ஆனால் தருணம் பார்த்துப் பாய்ந்து யானையைப் பிடித்திழுத்துக் கொல்லும். அவ்வாறு எதிரி மிக்க பலவானாக இருந்தாலும் சிங்கத்தின் பாய்ச்சலைப் போன்று தாக்குதலை நடத்தி அவனை வெல்ல வேண்டும்.பசு மேய்ப்பவன் மிக்க ஜாக்கிரதையோடு தான் பசுக்களைக் காத்துக் கொண்டிருப்பான். ஆனாலும், அவன் ஏமாந்த தருணம் பார்த்து, செந்நாய் பாய்ந்து பசுவைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் தன் உணவாக்கிக் கொள்ளும். அவ்வாறு எதிரியைக் கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும். எதிரி அரசன் கோட்டைக்குள் பாதுகாப்பாக இருந்தாலும்கூட அவன் ஏமாந்ததருணம்பார்த்து அவனை வெல்ல வேண்டும்.வேட்டைக்காரனிடம் அகப்பட்ட முயல், தருணம் பார்த்து அவனை ஏமாற்றிவிட்டு சட்டென்று மேலே பாய்ந்து விடுவதைப் போன்று, எதிரியிடம் அகப்பட நேர்ந்தாலும் தருணம் பார்த்துத் தப்பித்து விட வேண்டும். பிறகு மறைந்திருந்து, தன் பலத்தை, மற்ற அரசர்களின் உதவியோடு பெருக்கிக் கொண்ட பிறகு வெளிப்பட்டு, இழந்த அரசை மீட்க வேண்டும்.இவ்வாறு அரசன், கொக்கைப் போன்று காத்திருந்தும்,சிங்கத்தைப் போன்று தன்னைவிடப் பலமான எதிரியைக்கூடத் தாக்குவதைப் போன்றும், எதிரி எவ்வளவு ஜாக்ரதையானவனாக இருந்தாலும் காத்துக் கொண்டேயிருந்து அவன் ஏமாறும் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேடுவனிடம் அகப்பட்ட முயல் அவன் கை சற்று தளர்ந்த நேரம் பார்த்து தப்பி விடுவதைப் போன்று, தான் தப்பித்து, பிறகு தன் பலத்தைப் பெருக்கிக் கொண்டு நட்பு நாடுகளை இணைத்துக் கொண்டு எதிரி அரசனை வெல்ல வேண்டும்.
ஏவம் விஜயமாநஸ்ய யே அஸ்யஸ்யு: பரிபந்திந: ||
தாநாநயேத் வஷ்ம் சர்வாந் சாமாதிபிருபக்ரமை:!-107
இவ்வாறாக தன் வெற்றிக்காகப் பாடுபடும் அரசன், எதிரி அரசர்களை சாமம், தானம், பேதம், தண்டம் என்னும் நான்கு வகை உபாயங்களால் தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எல்லா அரசர்களையும், படையெடுத்துச் சென்று போரிட்டு அடக்கித் தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும்; அதாவது தனக்குக் கப்பம் கட்டுபவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடாது. படையெடுப்பது என்பது தண்டம் என்னும் உபாயம். இது
எதிரி அரசனை வெல்லும் உபாயம்தான். என்றாலும், இதற்கு முன்பு குறிப்பிட்டுள்ள மூன்று உபாயங்களையும் முயற்சித்து, இறுதியாகவே தண்டம் என்னும் உபாயத்தைக் கையாள வேண்டும். அதாவது, படை நடத்திச் சென்று போரிட்டு வெல்ல வேண்டும்.-முதலில் சமாதானமாக அடைய முயல வேண்டும். அடுத்து அவன் அதிகாரிகளுக்கோ, தேவையான இடத்திலே லஞ்சம் கொடுத்தோ, தந்திரமாகவோ எதிரி அரசனைப் பணிய வைக்க வேண்டும். இதற்குத் தான உபாயம் என்று பெயர். அடுத்து எதிரி அரசனின் உள்நாட்டிலேயே கலகங்களை ஏற்படுத்தியோ, அவன் குடும்பத்தார்களிடம் கலகங்களை ஏற்படுத்தியோ, தந்திரமாக எதிரி அரசனைப் பணிய வைக்க வேண்டும். இதற்குப் பேத உபாயம் என்று பெயர்.-இந்த மூன்று உபாயங்களும் பயனளிக்காது போனால் இறுதியாக படைகளால் தாக்கி வெல்ல வேண்டும். அதாவது, தண்டோபாயத்தை பயன்படுத்த வேண்டும்.
யதி தே து ந திஷ்டேயுருபாயை: ப்ரதமைஸ் த்ரிபி: 1
தண்டேநைவ ப்ரஸஹ்யைதாம்ஷ் சநகைர் வஷமாநயேத்!| 108
முதலில் கூறப்பட்ட மூன்றுஉபாயங்களுக்கும் வசப்படாத எதிரி அரசர்களைத் தன் பலத்தைப் பிரயோகித்து போர் புரிந்து அவர்களை வென்று அந்த நாடுகளைத் தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஸாமாதீநாமுபாயாநாம் சதுர்ணாமபி பண்டிதா: 11
ஸாமதண்டெள ப்ரஷம்ஸந்தி நித்யம் ராஷ்ட்ரா அபிவ்ருத்தயே || 109
சாம, தான், பேத, தண்டம் என்னும் நான்கு உபாயங்களில் சாம உபாயத்தால், அதாவது சமாதானத்தால் எதிரியை வசப்படுத்துவதையும், போரிட்டு வென்று நாட்டைத் தன்னுடையதாக்கிக் கொள்வதையும் பண்டிதர்கள் நல்ல உபாயங்கள் என்று போற்றுகிறார்கள். இவ்விரண்டும் ராஜ்ஜியத்தின் அபிவிருத்திக்குச் சிறந்தது என்பது அவர்கள் கருத்து.
யதோத்தரதி நிர்தாதா கக்ஷம் தான்யம் ச ரக்ஷதி |
ததா ரக்ஷேந் ந்ரூபோ ராஷ்ட்ரம் ஹந்யாச்ச பரிபந்தி : I-110
வயலில் பயிரோடு வேண்டாத புல் வகைகளும் வளர்ந்து மண்டியிருக்கும். விவசாயி பயிரை மட்டும் வைத்துக்கொண்டு, வேண்டாத மற்ற புல் செடிகளை பிடுங்கி எறிவான். அப்படிச் செய்தால் மட்டுமே பயிர்கள் செழித்து வளர்ந்து நல்ல பலனைத்
தரும். அவ்வாறே அரசன் தன் நாட்டில் கொடியவர்கள் தலையெடுத்தால், அவர்களைக் கொன்று நல்லவர்களான மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
மோஹாத் ராஜா ஸ்வராஷ்ட்ரம் ய: கர்ஷயத்யநவேக்ஷயா |
ஸோ அசிராத் ப்ரஷ்யதே ராஜ்யாஜ்ஜீவிதாச்ச ஸபாந்தவ: || 111
மோகமென்னும் அறியாமையால் தன் ராஜ்ஜியத்து மக்களை, நல்லோர் தீயோர் இவர் இவரென்று பிரித்துப் பாராமல், அனை வரையும் பீடிப்பவன் அதாவது தண்டிப்பவன், தன்நாட்டை இழந்து, தன் மனைவி மக்களோடு அழிவான்.
ஷரீரகர்ஷணாத்ப்ராணா: யந்தே ப்ராணிநாம் யதா |
ததா ராக்ஞாமபி ப்ராணா: யந்தே ராஷ்ட்ர கர்ஷணாத் 112 11
உடலைத் தக்க உணவு, மருந்துகளைக் கொண்டு பேணாமல் போனால் உடல் மெலிந்து சக்தியற்று உயிர் போகும் நிலை வரும். அரசன், தன்மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், பிற தேவைகள் கிடைக்கச் செய்ய வேண்டும். திருடர்களாலும்,
விலங்குகளாலும் துன்பம் நேராமல் காத்தல் வேண்டும். அவ்வாறு அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து நன்கு பாதுகாக்காவிட்டால் அரசன் தன் ராஜ்ஜியத்தை இழக்கும் நிலை வரும்.
ராஷ்ட்ரஸ்ய ஸங்க்ரஹே நித்யம் விதாநமிதமாசரேத் |
அசங்க்ருஹீத ராஷ்ட்ரோ ஹி பார்திவ: சுகமேததே |-113
தன் ராஜ்ஜியத்தை நன்கு காப்பாற்றுவதற்காக அரசன் சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிக் கடைப் பிடிக்கும் அரசன் சுகமாக விருத்தியடைவான்.
த்வயோஸ் த்ரயாணாம் பஞ்சாநாம் மத்யே குல்ம மதிஷ்டிதம் |
ததா க்ராமஷதாநாம் ச குர்யாத் ராஷ்ட்ரஸ்ய ஸங்க்ரஹம் || 114
இரண்டு ஊர்களுக்கு ஒரு நிர்வாகத் தலைமையிடமோ அல்லது மூன்று ஊர்களுக்கு ஒரு தலைமையிடமோ அல்லது ஐந்துஊர்களுக்கு நடுவில் ஒரு தலைமையிடமோ ஏற்படுத்தி உண்மையும் நேர்மையும் கொண்ட அதிகாரிகளை அங்கு நியமிக்க வேண்டும். சிறு கிராமங்களாக இருந்தால், ஐந்து கிராமங்களுக்கு ஒரு நிர்வாகத் தலைமையிடம் இருக்கலாம். சற்றுப் பெரியதாக இருந்தால், மூன்று ஊர்களுக்கு ஒரு நிர்வாகத் தலைமையிடம் இருக்க வேண்டும் அதைவிடப் பெரியதாக இருந்தால்,இரண்டு ஊர்களுக்கு ஒரு தலைமையிடம் இருக்க வேண்டும்.இவ்வாறு செய்வதோடு, இந்த நிர்வாக அதிகாரிகளைக் கண்காணிக்கவும், விசாரணை செய்யவும் நூறு கிராமங்களுக்கு ஒரு தலைமையிடமும் அங்கு விசாரணை அதிகாரியும் இருக்க வேண்டும்.இவ்வாறு நூறு, நூறு ஊர்களுக்கு ஒரு விசாரணை அதிகாரியை ராஜ்ஜியம் முழுமைக்கும் நியமிக்க வேண்டும்.
க்ராமஸ்யா அதிபதிம் குர்யாத் தஷக்ராம பதிம் ததா
விம்தீஷம் ஷதேஷம் ச ஸஹஸ்ரபதிமேவ ச ||-115
ஒரு கிராமத்துக்கு ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். பத்து கிராமங்களுக்கு பத்து அதிகாரிகள் இருப்பார்கள். இந்தப் பத்து அதிகாரிகளுக்கு ஒரு மேலதிகாரியை நியமிக்க வேண்டும். சிறிய கிராமங்களானால் இருபது கிராமாதிகாரிகளுக்கு ஒரு மேலதிகாரியை
நியமிக்க வேண்டும். பிறகு ஆயிரம் கிராமங்களுக்கு ஒரு மேலதிகாரியை நியமிக்க வேண்டும். இவ்வாறாக அதிகாரிகளைக் கண்காணிக்க மேலதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
க்ராமதோஷாந் ஸமுத்பந்நாந்க்ராமிக: ஷநகை: ஸ்வயம் |
ஷம்ஸேத் க்ராமதஷேஷாய தஷேஷோ விம்ஷதீஷிநே || 116
கிராமாதிகாரி தன் கிராமத்தில் நடக்கும் சிறு சிறு குற்றங்களைத் தானே விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும். தன் கிராமத்தைக்கடந்து உபாதை அளிக்கக்கூடிய குற்றவாளிகளைத் தன்கிராமத்தையும் சேர்த்து பத்து கிராமங்களுக்கு அதிகாரியாக இருப்பவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
விம்தீஷஸ்து தத்ஸர்வம் ஷதேஷாய நிவேதயேத்
ஷம்ஸேத் க்ராம தேஷஸ்து சஹஸ்ரபதயே ஸ்வயம் 117
தேசத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடியவன், எதிரி நாட்டவன்என்னும் பெரிய குற்றவாளிகளை, குற்றவாளிகளின் தன்மையைப்பொறுத்து இருபது, நூறு, ஆயிரம் கிராமங்களுக்குப் பொறுப்பானகிராம அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
யாநி ராஜப்ரதேயாநி ப்ரத்யஹம் க்ராமவாஸிபி: |
அன்னபாநேந்தநாதீநி க்ராமிகஸ் தாந்யவாப்னுயாத் || 118
கிராம மக்கள் அரசனுக்கு வழங்க வேண்டிய வரியிலிருந்து தன்னுடைய அன்னபானங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு,விறகு முதலானவைகளை கிராமவாசிகளிடமிருந்து கிராமாதிகாரி பெற வேண்டும்.
தஷீகுலம்து புஞ்ஜீத விம்ஷீ பஞ்ச குலாநி ச|
க்ராமம் க்ராமஷதா அத்யக்ஷ: சஹஸ்ரா அதிபதி: பூரம் || 119
பத்து கிராமாதிகாரிகள், பன்னிரண்டு எருதுகள் ஒரே நாளில் உழக்கூடிய நிலம் எவ்வளவோ, அவ்வளவு நிலத்தை தன் ஜீவனத்துக்காக அனுபவிக்க வேண்டும்.
அந்த நிலத்தில் தேவையானதைப் பயிரிட்டு அனுபவிக்கலாம். அல்லது பயிரிட்டதை விற்றுக் கிடைக்கும் பொருளையும் எடுத்துக் கொள்ளலாம். அந்த நிலத்தின் அனுபவ பாத்தியதை பத்து கிராமங் களின் அதிகாரிக்கு உண்டு.-இருபது கிராமங்களின் அதிகாரி, ஒரு கிராமாதிகாரி அனுபவிக்கும் நிலத்தைப் போன்று ஐந்து மடங்கு நிலத்தை அனுபவிக்க பாத்தியதை உண்டு.-நூறு கிராமங்களின் அதிகாரி, ஒரு கிராமத்தின் வருவாயை
அனுபவிக்கலாம்.-ஆயிரம் கிராமங்களின் அதிகாரி, ஒரு பட்டணத்தின் வருவாயை
அனுபவிக்கலாம். அந்த அதிகாரத்தில் இருக்கும் வரை மட்டுமே இந்த அனுபவ
பாத்தியதை உண்டு. அனுபவபாத்தியதை என்றால் அனுபவிக்கும் உரிமை என்று
பொருள். அனுபவிக்க மட்டுமே உரிமை உண்டு. மற்றபடி அது அவன் சொத்தாகாது.
தேஷாம் க்ராம்யாணி கார்யாணி ப்ருதக் கார்யாணிசைவஹி |
ராக்ஞோ அந்ய: ஸசிவ: ஸ்நிக்தஸ் தாநி பஷ்யேததந்த்ரித: |-120
கிராமாதிகாரி முதல் படிப்படியான மேலதிகாரிகள் வரை தங்களிடம் வந்த வழக்குகளுக்குத் தெரிவித்த தீர்ப்புகள் முறைகேடானவை என்று அரசனிடம் கிராம மக்கள் வந்து முறை
யிட்டால், அரசன் தனக்கு நம்பிக்கையான மந்திரியைக் கொண்டு தக்கபடி உண்மைகளை விசாரித்தறிய வேண்டும்.
நகரே நகரே சைகம் குர்யாத் ஸர்வா அர்த்தசிந்தகம் |
உச்சை: ஸ்தானம் கோரரூபம் நக்ஷத்ராணாமிவ க்ரஹம்|-121
ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு தலைமைச் செயலகத்தை ஏற்படுத்த வேண்டும். அதில் குலத்தாலும் குணத்தாலும் நூல் அறிவாலும் சிறந்த ஒருவனை பிரதான தலைவனாக நியமிக்க வேண்டும். நட்சத்திரங்களுக்கு நடுவே பிரகாசிக்கும் சந்திரனைப் போல் அவன் விளங்க வேண்டும்.
ஸ தானனுபரிக்ராமேத் ஸர்வாநேவ ஸதா ஸ்வயம் |
தேஷாம் வ்ருத்தம் பரிணயேத் ஸம்யக் ராஷ்ட்ரேஷுதச்சரை: || 122
இந்தப் பிரதான தலைவன், ஒரே ஒரு கிராமத்துக்கு அதிகாரியாக இருப்பவன் முதல் அனைத்து அதிகாரிகளையும் ஒற்றர்களைக் கொண்டு கண்காணிக்க வேண்டும். எந்த அதிகாரியையும் வரவழைத்து விசாரிக்கும் அதிகாரம் இந்தப் பிரதான தலைவனுக்கு உண்டு. இந்தத் தலைவன் தன் அதிகார பலத்தைப் பயன்படுத்தி அனைத்தையும் அறிய வேண்டும்.
ராக்ஞோ ஹி ரக்ஷா அதிக்ருதா: பரஸ்வா ஆதாயிந: ஷடா: | ப்ருத்யா பவந்தி ப்ராயேண தேப்யோ ரக்ஷேதிமா: ப்ரஜா: || 123
அரசாங்க அதிகாரிகள் பெரும்பாலும் பிறர் சொத்தை அபகரிப்பவர்களாக இருப்பார்கள். அத்தகைய தீயவர்களிடமிருந்து மக்களை அரசன் காக்க வேண்டும். மக்களைத் தான் பெற்ற
பிள்ளைகளைப் போன்று பார்த்துக் கொள்ள வேண்டும்.
யே கார்யிகேப்யோ அர்தமேவ க்ருஹ்ணியு: பாபசேத : தேஷாம் ஸர்வஸ்வமாதாய ராஜா குர்யாத் ப்ரவாஸநம் || 124
பாபத்துக்கு அஞ்சாத மனம் கொண்ட அரசாங்க அதிகாரிகள், தங்களிடம் ஒரு காரிய நிமித்தமாக வந்தவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அந்தக் காரியத்தை நிறைவேற்றித் தருவார்கள்.லஞ்சம் தராதவர்களுடைய காரியம் நிறைவேற முடியாதபடி செய்வார்கள். இத்தகையவர்களைக் கண்டுபிடித்து அவர்களுடைய சொத்துகள் முழுவதையும் பறிமுதல் செய்து, அவர்களை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்.
ராஜா கர்மசு யுக்தாநாம் ஸ்த்ரீணாம் ப்ரேஷ்யஜனஸ்ய ச |
ப்ரத்யஹம் கல்பயேத் வருத்திம் ஸ்தானகர்மா அனுரூபத: |-125
அரசன் தன்னிடம் நேரடியாக வேலை செய்யும் பணியாளர் களுக்கும், வேலைக்காரிகளுக்கும் அவர்களுடைய பணிகளின் தராதரத்தைப் பொறுத்து கூலி கொடுக்க வேண்டும்.
பணோ தேயோ அவக்ருஷ்டஸ்ய ஷடுத்க்ருஷ்டஸ்ய வேதநம்
ஷாண்மாஸிகஸ் ததா ஆச்சாதோ தான்யத்ரோணஸ்து மாஸிக: |-126
சாதாரண வேலைக்காரர்களுக்கு தினமும் ஒரு பணம் கூலியாகக் கொடுக்க வேண்டும். மேலான வேலை செய்பவர்களுக்கு ஆறு பணம் கொடுக்க வேண்டும். மேலும் சாதாரண வேலைக்காரர்களுக்கு ஆறு மாதத்துக்கொருமுறை ஒரு ஜதை ஆடைகளைத் தரவேண்டும்.
மேலான வேலை செய்து ஆறு பணம் கூலி வாங்குபவர்களுக்கு ஆறு மாதத்துக்கொரு முறை ஆறு ஜதை ஆடைகளைத் தர வேண்டும்.-மாதத்துக்கு தானியம் கொடுக்க வேண்டும்.
நடுத்தர வேலைக்காரனுக்கு தினமும் மூன்று பணம் கூலி தர வேண்டும். ஆறு மாதத்துக் கொருமுறை மூன்று ஜதை ஆடைகளைத் தர வேண்டும். மாதத்துக்கு தானியம் கொடுக்க வேண்டும்.
க்ரய விக்ரயமத்வாநம் பக்தம் ச ஸபரிவ்யயம்|
யோகக்ஷேமம் ச சம்ப்ரேஷ்ய வணிஜோ தாபயேத்கராந் || 127
வணிகன் தான் விற்கும் பொருளை எந்த விலைக்கு வாங்கி யுள்ளான்? எந்த விலைக்கு விற்கிறான்? இடையில் அவனுக்கு என்னென்ன செலவுகள் உள்ளன? அனைத்து செலவுகளும் போக எவ்வளவு லாபம் அவனுக்குக் கிடைக்கும்? – என்னும் இத்தனை விஷயங்களையும் தெரிந்து கொண்டு அந்த வணிகனிடம் தக்க வரியை வசூலிக்க வேண்டும்.
யதா பலேந யுஜ்யேத ராஜா கர்தா ச கர்மணாம் |
ததா அவேஷ்ய ந்ருபோ ராஷ்ட்ரே கல்பயேத் ஸத்தம் கராந்|| 128
தன்னுடைய கஜானாவுக்கும் பணம் வந்து சேர வேண்டும். உற்பத்தியாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் லாபம் கிடைக்க வேண்டும். இவைகளை யோசித்து வரி விதிக்க வேண்டும்.
யதா அல்பா அல்ப மதந்த் யாத்யம் வார்யோகோவத்ஸ ஷட்பதா: |
ததா அல்பா அல்போக்ரஹீதவ்யோராஷ்ட்ராத் ராஞா ஆப்திக: கர: | 129
வானத்திலிருக்கும் மேகமானது சிறிது சிறிதாக சமுத்திரத்திலிருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. அதனால் சமுத்திரத்துக்கு எந்தக் குறைவும் ஏற்படுவதில்லை.
கன்று தன் தாய் மடியிலிருந்து சிறிது சிறிதாகப் பாலை உறிஞ்சி சாப்பிடுகிறது. தாய்க்கு ஒரு வலியும் இல்லை. தேனீ மலரிலிருக்கும் தேனைச் சிறிது சிறிதாக உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. மலருக்கு அதனால் சிறிதும் வாட்டம் இல்லை. அவ்வாறே அரசன் மக்களிடமிருந்து சிறிது சிறிதாக வரியை வசூலிக்க வேண்டும். வரி செலுத்துபவர்கள் வாட்டமுறாமல் வரி வசூலித்து தன் கஜானாவை நிரப்ப வேண்டும்.
பஞ்சாஷத்பாக ஆதேயோ ராக்ஞா ப ஹிரண்யயோ: 1 தான்யாநாமஷ்டமோ பாக: ஷஷ்டோ த்வாதஷ ஏவ வா || 130
பசுக்கள், தங்கம் இவைகளில் கிடைக்கும் லாபத்தில் பாதியை அரசன் வரியாக வசூலிக்க வேண்டும். தானியங்களில் ஆறில் ஒரு பங்கையோ, எட்டில் ஒரு பங்கையோ, பன்னிரண்டில் ஒரு பங்கையோ விளைச்சலின் போது வரியாக வசூலிக்க வேண்டும்.-சில உழு நிலங்களில் விளைச்சல் அதிகம் கிடைக்கும், சிரமம் குறைவாக இருக்கும். சில நிலங்களில் சிரமத்துக்கு ஏற்ற விளைச்சல் கிடைக்கும். சில நிலங்களில் அதிகம் பாடுபட்டு சிறிதே விளைச்சலைப் பெற முடியும். இந்த பேதங்களைக் கணக்கில் கொண்டு ஆறுக்கு ஒன்று, எட்டுக்கு ஒன்று, பன்னிரண்டுக்கு ஒன்று என்று தானியங்களை வரியாக வசூலிக்க வேண்டும்.
ஆ தீதா அத ஷட்பாகம் த்ருமாம்ஸ மது ஸர்பிஷாம் |
கந்தௌஷதி ரஸாநாம் ச புஷ்ப மூல பலஸ்ய ச || 131
மரங்கள், மாமிசம், தேன்,நெய், சந்தனம், அகில் முதலான சுகந்த திரவியங்கள், மூலிகை ரசங்கள், மலர்கள், வேர்கள், பழங்கள் முதலானவைகளில் ஆறில் ஒரு பாகத்தை வரியாகப் பெற வேண்டும்.
பத்ர ஷாக த்ருணாநாம் ச சர்மணாம் வைதலஸ்ய ச | ம்ருந்மயாநாம் ச பாண்டாநாம் சர்வஸ்யா அஷ்ம மயஸ்யச ||| 132
கீரைகள், காய்கறிகள், வைக்கோல், தோல்கள், மூங்கில், மண்பாத்திரங்கள் முதலானவைகளால் வரும் லாபத்திலும் ஆறில் ஒரு பாகத்தை வரியாகப் பெற வேண்டும்.
ம்ரியமாணோ அப்யாததீத ந ராஜா ஸ்ரோத்ரியாத் கரம் |
நச தாஅஸ்ய ஸம்சீதேச்ச்ரோத்ரியோ விஷயே வஸந் |-133
வேதமோதுவதிலேயே ஈடுபட்டுள்ளவனிடம் அரசன் வரி வசூலிக்கக்கூடாது. அரசன் தன் நாட்டிலுள்ள வேதமோதுபவர்கள் பட்டினியிருக்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
யஸ்ய ராக்ஞஸ்து விஷயே ஸ்ரோத்ரிய: சீததி க்ஷதா|
தஸ்யா அபி தத் க்ஷதா ராஷ்ட்ரமசிரேணைவ சீததி || 134
எந்த நாட்டில் வேதமோதுவோன் பசியால் வாடுகிறானோ, அந்த நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடும். எல்லா மக்களும் பசியால் வாடுவார்கள்.
ஷ்ருதவ்ருத்தே விதிவத்வா அஸ்ய வருத்திம் தர்ம்யாம் ப்ரகல்பயேத் |
ஸம்ரக்ஷேத் ஸர்வதஷ் சைநம் பிதா புத்ரமிவெளரஸம்|| 135
வேதமோதுபவன் செய்யத்தக்க ஜீவனத்துக்கான வேலை என்ன என்று பார்த்து, தர்மமான தொழிலை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தந்தை மகனைக் காப்பாற்றுவது போல் எந்த வகையிலும் அவனைக் காப்பாற்ற வேண்டும்.
ஸம்ரமாணோ ராக்ஞா யம் குருதே தர்மமந்வஹம் | தேநா ஆயுர்வர்ததே ராக்ஞோ த்ரவிணம் ராஷ்ட்ரமேவ ச |-136
அரசனால் நன்கு ரட்சிக்கப்படும் வேதமோதுபவன் தன்னுடைய ஸ்வதர்மங்களை, அதாவது தர்ம சாஸ்திரத்தில் தான் கடைப்பிடிக்க வேண்டியதாகக் கூறப்பட்டுள்ள தர்மங்களை நன்கு கடைப்பிடிப்பான். அதனால் அரசனுக்கு ஆயுளும், செல்வமும் கூடும். நாடும் மேன்மை யுறும்.-பிராம்மணன் வேதமோதுதல் மற்றும் அவன் செய்யும் பூஜைகள், கிரியைகள் அனைத்தும் அவனுக்கு மட்டும் நன்மை பயப்பதன்று. பிரதானமாக நாட்டு மக்களும் செழிப்புற்றிருப்பார்கள். நாட்டில் தீய சக்திகளால் (பேய், பிசாசுகளால்) தொல்லையிருக்காது. தேவேந்திரன் முதலான அனைத்துத் தேவர்களும் மகிழ்ச்சியடைவார்கள். தேவையான அளவு மழை பொழிந்து பயிர்கள் செழித்து வளரும். அளவுக் கதிகமான மழை பொழிந்து வெள்ளத்தால் பயிர்கள், பசுக்கள் முதலானவை அழியாது. மிகக் குறைந்த மழை பெய்து விளைச்சலும் குறையாது.அகால மரணங்கள் ஏற்படாது.பகைவர்கள் ஒடுங்குவார்கள். நாடும், அரசனும் செல்வச் செழிப்போடு இன்பமாக இருப்பார்கள்.மக்கள் மனத்தில் தர்ம சிந்தனை ஓங்கியிருக்கும். திருட்டு, கொலை முதலானவை இருக்காது. அரசனும், மக்களும் தீர்க்காயுளோடும் நல்ல ஆரோக்யத்தோடும், செல்வ சுகங்களோடும் தெய்வ அனுக்ரஹம் பெற்று வாழ வேண்டுமென்றால் பிராம்மணன் நிம்மதியாக பூஜை, ஹோமம், வேதமோதுதல் முதலியவைகளைச் செய்ய வேண்டும்.
எனவே, பிராம்மணன் தன் குடும்ப ஜீவனத்துக்காக தொழில் செய்ய வேண்டியிருப்பதை அரசன் தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஹோமம்,பூஜை, வேதமோதுதல் இவைகளை முறையாகச் செய்தால், நாள் முழுவதும் அதற்கே செலவாகும். இதில் சம்பாதிக்க வேண்டி, அதற்காகச் செலவு செய்யஏது நேரம்? சம்பாதிப்பதற்காக நேரத்தைச் செலவிட்டால் தான் செய்ய வேண்டியதைச் செய்ய நேரம் கண்டிப்பாக இருக்காது-இதையெல்லாம் யோசித்துப் பார்த்து, அரசன் அவனைக் காப்பாற்ற வேண்டும். அவன் தேவைகளுக்குத் தக்க செல்வத்தைக் குறைவின்றி அவன் அடைய தானே ஆவன செய்ய வேண்டும்.
யத்கிஞ்சிதபி வர்ஷஸ்ய தாபயேத் கரசம்நிதம் |
வ்யவஹாரேண ஜீவந்தம் ராஜா ராஷ்ட்ரே ப்ருதக்ஜனம் || 137
காய்கறிகளையும் கீரைகளையும் சிறிதளவு நிலத்தில் பயிர் செய்து அதை தேவையானவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் அதற்குப் பதிலாகக் கொடுக்கும் அரிசி, பருப்பு முதலான பண்டங்களைப் பெற்று ஜீவனம் நடத்துபவனிடம் வருடத்துக்கு ஒரு
முறை குறைந்த அளவு வரி வசூலிக்க வேண்டும்.
காருகாஞ்சில்பிநஷ்சைவ சூத்ராம்ஷ்சா ஆத்மோபஜீவிந:
ஏகைகம் காரயேத் கர்ம மாஸி மாஸி மஹீபதி: –138
சிற்பிகள், மற்ற கலைஞர்கள், உடல் உழைப்பால் ஜீவனம் நடத்துபவர்கள் முதலானவர்களிடம் மாதத்துக்கு ஒரு நாள் வேலை வாங்க வேண்டும். இதுவே அரசன் அவர்களிடம் பெறும் வரியாகும்.
நோச்சிந்த்யாதாத்மாநோ மூலம் பரேஷாம் சாஅதித்ருஷ்ணயா |
உச்சிந்தன்ஹ்யாத்மநோ மூலமாத்மாநம் தாம்ஷ்ச பீடயேத் |-139
மக்களிடம் கொண்ட அன்பால் வரி வாங்காமல் தன் பொக்கிஷத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. தனக்கு அதிகம் பொருள் தேவைப்படுகிறது என்பதற்காக மக்களுக்கு அதிக வரி போட்டு அவர்களைப் பீடிக்கவும் கூடாது.
தீக்ஷ்ணஷ்சைவ ம்ருதுஷ் ச ஸ்யாத் கார்யம் வீக்ஷ்ய மஹீபதி: |
தீஷ்ணஷ்சைவ ம்ருதுஷ்சைவ ராஜா பவதி ஸம்மத: || 140
அரசன் மிகவும் மென்மையானவனாகவும் இருக்கக் கூடாது; மிகவும் கடினமானவனாகவும் இருக்கக் கூடாது. கருணை காட்ட வேண்டிய இடத்தில் கருணை காட்ட வேண்டும். கடுந்தண்டனை வழங்க வேண்டிய கட்டத்தில் கடுந் தண்டனை வழங்கவே
வேண்டும். கருணை உள்ளமும், கடின உள்ளமும் இரண்டுமே மன்னனுக்குரியவையே.
அமாத்யமுக்யம் தர்மக்ளும் ப்ராக்ஞம் தாந்தம் குலோத்கதம் | ஸ்தாபயேதாசநே தஸ்மிந் கிந்ந: கார்யேக்ஷணே ருணாம் || 141
அரசன், தர்மங்களைப் பற்றி நன்கு அறிந்தவனும், சிறந்த அறிவாளியும், நற்குலத்தில் பிறந்தவனும், புலனடக்கம் மிக்க வனுமான மந்திரியை முக்கிய மந்திரியாக நியமிக்க வேண்டும். இந்த முக்கிய மந்திரியே எல்லாக் காரியங்களையும் கண்காணித்து தக்க
நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஏவம் ஸர்வம் விதாயேதமிதி கர்தவ்யமாத்மந: | யுக்தஷ்சைவா அப்ரமத்தஷ்ச பரிரக்ஷேதிமா: ப்ரஜா: 142
இவ்வாறு எல்லாக் காரியங்களுக்கும் நிர்வாக முறைகளை வகைப்படுத்தி, தக்க நிர்வாகிகளை ஏற்படுத்திக் குறைவின்றி அனைத்துக் காரியங்களும் நடைபெறச் செய்யவேண்டும்.-தானும் எப்போதும் மிகுந்த விழிப்போடு இவையெல்லாம்
முறையாக நடக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.-இவ்வாறாக மக்களை நன்கு ரட்சிக்க வேண்டும்.
விக்ரோஷந்த்யோ யஸ்ய ராஷ்ட்ராத் த்ரியந்தே தஸ்யுபி: ப்ரஜா 11 ஸம்பஷ்யத: ஸப்ருத்யஸ்ய ம்ருத: ஸ ந து ஜீவதி |-143
கள்வர்கள் பாதிப்பால் அழுதபடி அரசனிடம் மக்கள் வந்து முறையிடும் வண்ணம் ஆளும் அரசன் உயிரோடிருந்தாலும்இறந்தவனுக்கேசமம். எனவே, அரசன் மந்திரிகளையும், அதிகாரிகளையும் கொண்டு மக்களை நன்கு காப்பாற்ற வேண்டும்.
க்ஷத்ரியஸ்ய பரோதர்ம: ப்ரஜாநாமேவ பாலனம் |
நிர்திஷ்டபலபோக்தா ஹி ராஜா தர்மேண யுஜ்யதே ||-144
அரசனுடைய மேலான தர்மம், அதாவது கடமை எதுவெனில், மக்களைக் காப்பாற்றுவதேயாகும். மக்களிடமிருந்து வரி பெற்று அரசாட்சி நடத்துவதும் அரசனுடைய தர்மமேயாகும்.
உத்தாய பஷ்சிமே யாமே க்ருதஷெளச: ஸமாஹித: |
ஹுதா அக்நிர் ப்ராஹ்மணாம்ஷ்சா ஆர்ச்ய ப்ரவிஷேத் ஸ சுபாம் சபாம் || 145
இரவின் கடைசி ஜாமத்தில் எழுந்திருக்க வேண்டும். காலைக் கடன்களை முடித்து நீராடி சந்தியாவந்தனம் முதலான அனுஷ்டானங்களை (தினமும் கடைப்பிடிக்க வேண்டிய நியமங்களை)முடிக்க வேண்டும். மன ஒருமைப்பாட்டோடு ஹோமங்களைச் செய்ய வேண்டும். சிரேஷ்டர்களைப் பூஜித்து அவர்களது ஆசீர்வாதங்களைப் பெற வேண்டும். அதன் பிறகு காலை ஆஹாரத்தைச் சாப்பிட்டு சபா மண்டபத்துக்குச் செல்ல வேண்டும்.
தத்ர ஸ்தத: ப்ரஜா: ஸர்வா: ப்ரதிநந்த்ய விஸர்ஜயேத் 11
விஸ்ருஜ்ய ச ப்ரஜா: ஸர்வாமந்த்ரயேத் ஸஹ மந்த்ரிபி: 146
சபா மண்டபத்தில் அரச தரிசனத்துக்காக மக்கள் காத்திருப்பர்.அவர்கள் மனங்குளிர நலம் விசாரித்து, குறைகள் ஏதும் சொல்ல வந்திருந்தால் அதைக் கேட்டறிந்து கொண்டு,சந்தோஷமாக அவர்கள் விடை பெற்றுச்சென்ற பிறகு, மந்திரிகளோடு நாட்டு
விஷயங்களைப் பற்றி ஆலோசனை நடத்த வேண்டும்.
கிரிப்ருஷ்டம் ஸமாருஹ்ய ப்ராஸாதம் வா ரஹோகத: |
அரண்யே நிஷ்ஷளாகே வா மந்த்ரயேதவிபாவித: 147
முக்கிய விஷயங்களில் நம்பிக்கையான மந்திரிகள், படைத் தலைவர்களோடு ரகசிய ஆலோசனை நடத்த வேண்டி வரும்போது,-ஆலோசனை நடத்தும் இடம் பிறர் அறிய முடியாததாக, நுழைய முடியாததாக இருக்க வேண்டும். இந்த மாதிரி ரகசியங்களை வேறு
யாருக்கும் தெரியாமல் பாதுகாக்க வேண்டும். எனவே, ஆலோசனை நடத்தும் இடத்தை காலத்துக்கும் சூழ்நிலைக்கும் தக்கபடி தேர்ந்தெடுக்க வேண்டும். எப்போதும் ஒரே இடத்தில் கூடி ஆலோசிக்காமல் வெவ்வேறு இடங்களில் ஆலோசிக்க வேண்டும். அந்த இடங்கள் மலை யுச்சியிலுள்ள இடமாக இருக்கலாம். மேன் மாடத்திலுள்ள ரகசியக் கூடமாக இருக்கலாம். ஆட்கள் நடமாட்ட மில்லாத ஆரண்யமாகவும் இருக்கலாம்.
யஸ்ய மந்த்ரம் ந ஜாநந்தி ஸமாகம்ய ப்ருதக்ஜநா: |
ஸ க்ருத்ஸ்நாம் ப்ருதிவீம் புக்ங்தே கோஷஹிநோ அபி பார்திவ: | 148
எந்த அரசன் செய்யும் மந்திராலோசனையை மற்றவர்கள் அறியமுடியாதோ, அந்த அரசனின் பொக்கிஷ அறையிலுள்ள பொக்கிஷங்கள் (செல்வங்கள்) குறைந்திருந்தாலும்கூட, உலக முழுவதையும் தன் ஒரு குடைக்கீழ் கொண்டு வர முடியும்.
உலகாளும் சக்ரவர்த்தியாக உலா வர முடியும்.
ஜடமூகா அந்தபதிராஸ் தைர்யக்யோநாந் வயோ அதிகாந்|
ஸ்த்ரீ ம்ளேச்ச வ்யாதித வ்யங்காந் மந்த்ரகாலே அபஸாரயேத் |-149
மந்த புத்திக்காரர்கள், ஊமைகள், குருடர்கள், செவிடர்கள், கிழவர்கள், பெண்கள், மிலேச்சர்கள், வியாதியஸ்தர்கள்,அங்க ஹீனர்கள் முதலானவர்கள் ஆலோசனை நடக்குமிடத்தில் இருக்கக் கூடாது. கிளிகளும் அங்கு இருக்கக் கூடாது. அரண்மனையில் இப்போது குறிப்பிட்ட இத்தகையவர் களெல்லாம் வேலைக் கமர்த்தப்பட்டிருப்பார்கள். சிறுசிறு வேலைகளை இவர்கள் செய்வார்கள். விளக்குகளைத் துடைப்பது, தூபம் போடுவது, தரையைச் சுத்தம் செய்வது, தண்ணீர் கொணர்ந்து வைப்பது, தாம்பூல வட்டில் ஏந்துவது என்ற சிறு சிறு பணிகளை இத்தகையோர் செய்வார்கள். மந்திராலோசனை சமயத்தில் இத்தகையோரை நெருங்கவிடக் கூடாது. குருடனாகவும், செவிடனாகவும், மந்தபுத்திக் காரனைப்போன்றும், ஊமையைப் போன்றும் நடிக்கும் எதிரி ஒற்றர்கள் அரண்மனைக்குள் ஊடுருவி யாரையேனும் நம்ப வைத்து அல்லது லஞ்சம் கொடுத்து பணியைப் பெற்றிருக்கலாம். எதிரிநாட்டுப் பெண்கள் தங்கள் அழகாலும் கலை ஆற்றலாலும் அரசனுடைய அந்தப்புரம் வரை நெருங்க வாய்ப்புண்டு. மேலே கூறப்பட்ட மற்றவர்களும் அப்படியேதான். அரசன் யாரையும் நம்பக்கூடாது. முக்கியமாக மந்திராலோசனை தருணத்தில் தனக்கு நம்பிக்கையான மந்திரிகளையும், பிரதானிகளையும் தவிர கிளிகள்போன்ற பறவைகள்கூட அங்கு இருக்கக்கூடாது. ஈ. காக்கை நுழைய முடியாத இடம் என்று பேச்சு வழக்கில் கூறுவார்களல்லவா,
அந்தப்படிக்கு ஆலோசனைக் கூடம் மற்ற எதுவும் யாரும் நுழைய முடியாமலிருக்க வேண்டும்.
பிந்த்யந்த்யவமதா மந்த்ரம் தைர்யக்யோநாஸ் ததைவ ச
ஸ்த்ரியஷ்சைவ விசேஷேண தஸ்மாத் தத்ரா ஆத்ருதோ பவேத்|| 150
மேலும், இத்தகையவர்கள், முக்கியமாகப் பெண்கள், எதிரி நாட்டு ஒற்றர்களாக இல்லாமல், தன்னுடைய நாட்டைச் சேர்ந்தவர்கள்தான், அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த தன்
பணியாட்களின் பிள்ளைகள்தான் என்று நன்கு அறிந்திருந்தாலும் கூட நம்பிவிடக் கூடாது. இத்தகையோர் சபல புத்தி படைத்தவர்களாக, எதிரிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு, தங்களுக்குத் தெரிந்த ரகசியங்களை வெளியிட வாய்ப்புண்டு. எனவே. கண்டிப்பாக இவர்களனைவரும் ஆலோசனைக் கூடத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
மத்யந்தினே அர்த்தராத்ரே வா விஷ்ராந்தோ விகதக்ளம:
சிந்தயேத் தர்மகாமார்தாந் ஸார்தம் தைரேக ஏவ வா|| 151
நடுப்பகலிலோ, நடு இரவிலோ உடல் சோர்வில்லாது விச்ராந்தியாக அமர்ந்து தர்மம், அர்த்தம், காமங்களைப் பற்றி மந்திரிகளுடன் கூடி ஆலோசிக்க வேண்டும். அல்லது தனியாக ஆலோசிக்க வேண்டும். ஒரு அரசன் காலையிலிருந்து தன் அன்றாடக் காரியங்களையும், சபைக் காரியங்களையும் முடிக்க நடுப்பகல் ஆகிவிடும். பிறகு மதிய
உணவை உண்டு முடித்து ஓய்வாகச் சற்று நேரம் அமர்ந்து, அன்று அதுவரை தான் செயல்படுத்திய விஷயங்களைப் பற்றி மனத்தில்யோசிக்க வேண்டும். தர்மத்துக்கு ஏதும் விருத்தமாக அதாவது எதிர்மறையாக நடந்ததா, எந்த எந்த வேலைகளால் தன்னுடைய
விருப்பங்கள் நிறைவேறும், எந்த எந்த வேலைகளால் பொக்கிஷம் பெருகும் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டும். பசு, தான் சாப்பிட்ட புல்லை சாவதானமாக அமர்ந்து அசைபோடுவதைப் போன்று அதுவரை நடந்ததைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இனிமேல் நடத்த வேண்டியதையும் சிந்திக்க வேண்டும். முக்கிய தருணங்களில், அவசரம் வந்துற்ற காலங்களில் நடு இரவானாலும்கூட மந்திரி பிரதானியரை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும்.
பரஸ்பர விருத்தாநாம் தேஷாம் ச ஸமுபார்ஜநம்|1
கன்யாநாம் ஸம்ப்ரதாநம் ச குமாராணாம் ச ரக்ஷணம்|| 152
அரசன், செல்வத்தைப் பெருக்கும் விஷயத்திலும், தன்விருப்பங்களை ஈடேற்றிக் கொள்ளும் விஷயத்திலும், தான் எடுக்கும்செயல்பாடுகள் தர்மத்துக்கு முரண்படாமல் இருக்கிறதா என்றும்,தர்மத்துக்கு முரண்படாமல் அவற்றை நிறைவேற்றிக் கொள்வதுஎப்படி என்றும் யோசிக்க வேண்டும்.-தன்னுடைய பெண்ணை யாருக்கு மணமுடித்தால்,அவளுக்கும், தனக்கும், தன் நாட்டுக்கும் நல்லது என்பதைப் பற்றிதீர்க்கமாக யோசிக்க வேண்டும். வெல்ல முடியாத பலம்வாய்ந்தஎதிரியை, தன் மகளைக் கொடுத்து சம்பந்தியாக்கிக் கொண்டால்,அந்த பலம் வாய்ந்த எதிரி அரசன் நண்பனாகி விடுவான்.பகைவர்களோடு போர் புரிய வேண்டிய தருணத்தில் அவன் தன்படை பலத்தைக் கொடுத்து உதவுவான். இப்படி இரண்டு வகையில்நன்மை ஏற்படும். இவ்வாறாகப் பலப்பல வகையில் யோசித்து தன்பெண்ணின் திருமணத்தைப் பற்றி முடிவெடுக்க வேண்டும்.-தன் பிள்ளைகள் படிப்பு, போர்ப் பயிற்சி அனைத்தையும்சோம்பலின்றி கற்றுக் கொள்கிறார்களா என்பதை யெல்லாம் அறிந்துகொள்ள வேண்டும். அவர்கள் போகுமிடங்களில் பகைவர்களால்துன்பம் வராதிருக்குமா, வந்தால் தங்களைக் காத்துக் கொள்வதில்அவர்கள் எந்த அளவுக்குத் திறன் பெற்றிருக்கிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தூதஸம்ப்ரேஷணம் சைவ கார்யசேஷம் ததைவ ச
அந்த:புரப்ரசாரம் ச ப்ரணிதீநாம் ச சேஷ்டிதம் ||–153
அரசன், தூதர்களை அனுப்புதல் முதலான காரியங்களைக் கவனிக்க வேண்டும். தன் அந்தப்புரத்துப் பெண்களை மற்ற வேலைக்காரப் பெண்களைக் கொண்டு வேவு பார்க்க வேண்டும்.-வெளி தேசங்களில் வேவு பார்க்க தான் அனுப்பிய வேவுகாரர்கள் சரியாக வேவு பார்க்கிறார்களா என்பதை, பிற வேவுகாரர்களை அனுப்பி வேவு பார்க்க வேண்டும்.
அரசன், தூதர்கள் விஷயத்தில் தானே நேராக ஈடுபட வேண்டும். மந்திரிகளுக்கும், முக்கியமான பிரதானிகளுக்கும்கூடத் தெரியாத வண்ணம் வேவுகாரர்களைத் தனிப்பட அமர்த்தி அனைவரைப் பற்றியும் அறிய வேண்டும்.-அரண்மனையிலுள்ள பெண்கள், அரசனுடைய மனைவியராகவே இருந்தாலும்கூட நம்பக்கூடாது. அத்தனை பேரும்
அரசனிடம் பக்தியோடும், விசுவாசத்தோடும், அன்போடும் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதில் ஒருவரோ சிலரோ பிறந்த இடத்துப் பாசத்தால்கூட உடன்பிறந்த தம்பி
போன்றோருக்காக, அவர்கள் ராஜ்ஜியத்தை அடைவதற்காக அரசனைக் கொல்லவும் துணியலாம். எனவே, அரசன் வேவுகாரப் பெண்களை அந்தப்புரத்தில் பணிப்பெண்களாக அமர்த்தி, தன் ராணிகளுடைய நடவடிக்கைகளை ரகசியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
க்ருத்ஸ்நம் சாஅஷ்டவிதம் கர்ம பஞ்சவர்கம் ச தத்வத: |
அநுராகா அபராகௌச ப்ரசாரம் மண்டலஸ்ய ச || 154
1) ஒரு அரசனுடைய முதல் தேவை புலனடக்கம். காமம் கோபம் முதலியவைகளை அடக்கத் தெரிந்தவனாக இருக்க) வேண்டும். இந்த இரண்டு பலவீனங்களால்தான் எதிரிகள் அவனை வீழ்த்தப்பார்ப்பார்கள்.0அரசனானவன்,தன்னைச் சுற்றி எப்போதும் எதிரிகள் இருப்பார்கள் என்ற ஜாக்கிரதை உணர்வோடு எச்சரிக்கையாக-இருக்க வேண்டும்.-
2) குடிமக்களின் கருத்துகளை அறிதல். தன்னைச் சுற்றி யிருப்பவர்கள் கூறுவதையே நம்பிக் கொண்டிராமல்,தானே அவ்வப்போது மாறுவேடமிட்டுச் சென்று மக்கள் என்னபேசிக் கொள்கிறார்கள் என்பதை நேரடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
3) நாட்டில் பூஜைகளும், ஹோமங்களும் குறைவின்றி நடக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
4) கோட்டை கொத்தளங்கள் பழுதுபடாமல் உள்ளனவா, பாதுகாப்பு பலமாக உள்ளதா என்பதைத் தானே நேரடியாகச் சென்று கண்காணிக்க வேண்டும்.
5) தனக்குக் கீழுள்ள அரசர்களிடம் கப்பம் வசூலிக்க வேண்டும்.
கப்பம் கட்டாத அரசனைத் தண்டித்து தனக்குக் கீழ்ப்படிய வைக்க வேண்டும்.
6) குறித்த காலங்களில் தவறாமல் வரி வசூல் நடத்த வேண்டும். வரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்களைத் தண்டிக்க வேண்டும்.
7) நாட்டில் கொலை, கொள்ளை முதலான குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் தலையெடுக்கும் போதெல்லாம் அவர்களுக்குக் கடுந்தண்டனை அல்லது மரண தண்டனை கொடுத்து மக்கள் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்.
8) தன் பொக்கிஷம் குறையாமலிருக்கிறதா, அதைப் பெருக்கும் வழி என்ன என்று யோசிக்க வேண்டும்.
9) தன்னிடம் வந்த வழக்குகளை எச்சரிக்கையோடு விசாரித்து
உரிய தீர்ப்பு வழங்க வேண்டும்.
10) தன் அரண்மனையிலும், தன் நாட்டிலும், அண்டை நாடு களிலும், தூரத்து நாடுகளிலும் நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் ஒற்றர்கள் மூலமாக நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
11) மந்திராலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்தத் தீர்மானத்தையும் எடுப்பதற்கு முன்பு மந்திரிகளிடம் கலந்து பேசி அவர்களது அபிப்ராயங்களை அறிந்து கொள்ள வேண்டும்.அவர்களின் கருத்துகளை சீர்தூக்கிப் பார்த்து அரசன் தன்னுடைய முடிவை எடுக்க வேண்டும்.
12) தன் படை பலத்தை எப்போதும் பெருக்குவதில் கருத்து வைக்க வேண்டும். எப்போது போர் என்றாலும் உடனே உற்சாகமாகக் கிளம்பும் நிலையில் படைவீரர்கள் இருக்க வேண்டும்.
13) தண்ட நீதியை நன்கு செலுத்த வேண்டும். இதில் தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாரபட்சம் கூடாது.
எட்டும் ஐந்துமான இந்தப் பதின்மூன்றும் மன்னன் பின்பற்ற வேண்டியவையாகும். வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்பதைக் கொண்டும் அன்பு காட்டுதல், வெறுத்தல் இரண்டுமே கூடாது-பாரபட்சமின்றி மனைவி மக்களிடமும் நடந்து கொள்ள வேண்டும்.
மத்யமஸ்ய ப்ரசாரம் ச விஜிகீஷேஸ்ச சேஷ்டிதம் |
உதாசீந ப்ரசாரம் ச ஷத்ரோஷ் சைவ ப்ரயத்நத: || 155
வெற்றியை விரும்பும் அரசன், தன் நாட்டுக்கும் எதிரி நாட்டுக்கும் இடையிலுள்ள அரசன் எதிரியோடு சமாதானமாக இருப்பவனாக இருந்தாலும் அவனைத் தன்னுடைய துணைவ
னாக்கிக் கொள்ள வேண்டும். அவன் எதிரியோடு சமாதானமாக இல்லாதவன் என்றால் இவனை அடக்கியபிறகு இவனைத் தாண்டிச் சென்று எதிரியையும் அடக்க வேண்டும். இவ்வாறு தக்கபடி யோசித்து முயற்சியோடு எதிரியை வெல்ல வேண்டும்.
ஏதா: ப்ரக்ருதயோ மூலம் மண்டலஸ்ய ஸமாஸத: |
அஷ்டௌசா அந்யா: ஸமாக்யாதா த்வாதஷைவ து தா: ஸ்ம்ருதா:|| 156
அரசன், அமைச்சர்கள், படைகள், நண்பர்கள் இவர்களுக்கும், நாடு, கோட்டை, பொக்கிஷம் இவைகளுக்கும் பிரகிருதிகள் என்று பெயர். இன்னும் நாட்டு மக்களுக்கு நன்மை தரக்கூடியவைஅனைத்தும் பிரகிருதிகளேயாகும். இவையே செல்வங்கள்.
1) அரசன்தான் மக்களுடைய முழுமுதற் செல்வம். தெய்வ பலம், புத்தி பலம், புஜ பலம், தர்ம பலம் கொண்ட அரசனே மக்களுக்கு செல்வத்துளெல்லாம் பெருஞ்செல்வம். இத்தகைய
அரசன் வாய்க்கப் பெற்றுவிட்டால் அஷ்ட ஐஸ்வரியங்களோடு மக்கள் வாழ்வார்கள்.
2) நீர்வழியோடும் நிலவழியோடும் விளைச்சல் தரும் நல்ல மண்வளத்தோடும் இருப்பது நாட்டின் செல்வம்.
3) தர்மம் மூலமாக அடைந்த செல்வத்தோடு பொக்கிஷம் (கருவூலம்) நிறைந்திருக்க வேண்டும். பஞ்சம் ஏற்பட்டாலும் தாங்கக்கூடிய அளவில் அரசனுடைய பொக்கிஷம் இருக்க
வேண்டும். இதுவும் ஒரு பிரகிருதி செல்வம்.-4) ராஜபக்தியும், புஜ பலமும், உற்சாகமும் நிறைந்த படைவீரர்கள் அமைவது ஒரு பிரகிருதி செல்வம்.
5) குதிரைப் படையும், தேர்ப் படையும், யானைப் படையும் திறமையோடு செயல்படத்தக்க முறையில் இருக்குமானால் இதுவும் ஒரு செல்வமாகும்.
6) அண்டை நாடுகள் எதிரிகளாக இல்லாமல் அரசனுக்கு வசப்பட்டு இருப்பதும் ஒரு செல்வம்.
7) அப்படியே எதிரி இருந்தாலும் அவன் கெட்டவனாக இருந்தால் அதுவும் ஒரு செல்வம்தான்-எப்படியெனில், அவன் அரச வம்சத்தைச் சேராதவனாகவோ,காம கோபங்கள் கொண்டவனாகவோ, சாமர்த்தியமற்றவனாகவோ,மந்திராலோசனைகளை ஏற்காதவனாகவோ இருந்தால், அத்தகைய அரசனை மந்திரிகளும் அதிகாரிகளும் வெறுப்பார்கள். அவன் தெய்வ நம்பிக்கையற்றவனாக இருந்தால் பிராம்மணர்கள் வெறுப்பார்கள்-அதிக வரி வசூல் செய்வது, கருணையின்றி தண்டிப்பது, பிறரை ஹிம்சிப்பதிலேயே ஆர்வத்தோடிருப்பது என்றிருப்பவனை அனைத்து மக்களுமே வெறுப்பார்கள்.-அவன் நாட்டு மக்களே அவனை வெறுக்கும் வண்ணம் இருக்கும் அரசனை வெல்வது மிக எளிது என்பதால் அதுவும் ஒரு செல்வம்தான். அவன் நாடு இந்த அரசன் வசமாகும்.
8) ஒரு அரசனுடைய நண்பர்களான அரசர்கள், அவனுக்குப் போர் வந்தபோதும், எதிரிகளால் தொல்லைகள் ஏற்பட்ட போதும்,எதிரியால் தோல்வியடைந்தபோதும் விரைந்து தங்கள்படைபலத்தோடு வந்து உதவுபவர்களாக இருக்க வேண்டும். இதுவும்ஒரு செல்வம்.-இந்த எட்டு வகையான செல்வங்களுக்குள் அரசன் தானே ஒரு பெருஞ் செல்வமாக இருந்து கொண்டு சாமம், தானம், பேதம்,தண்டம் என்னும் நான்கு உபாயங்களோடு நாட்டு மக்களை நன்குபரிபாலிக்க வேண்டும்.
அமாத்ய ராஷ்ட்ர துர்கா அர்த்ததண்டா ஆக்யா பஞ்சசாபரா: |
ப்ரத்யேகம் கதிதாஹ்யேதா: ஸங்க்ஷேபேண த்விஸப்ததி: || 157
மொத்தம் எழுபத்திரண்டு பிரகிருதி செல்வங்கள் உண்டு. மந்திரி, நாடு, கோட்டை, பொக்கிஷம், தண்டநீதி இவைகளினால் ஏற்படும் செல்வங்களைப் பற்றி விரிவாகப் பார்த்தால் அவை மொத்தம் எழுபத்திரண்டு.
அனந்தரமரிம் வித்யாதரி ஸேவிநமேவ ச |
அரேரனந்தரம் மித்ரமுதாஸீநம் தயோ: பரம் || 158
தன் நாட்டு எல்லையிலுள்ள அரசன் நட்புடன் இல்லாவிட்டாலும் அல்லது எதிரியாகவே இருந்தாலும்கூட அவனை நண்பனாகவே கருத வேண்டும். தான் பலமான அரசனாக இருக்கும் வரையில் அவன் ஒன்றும் செய்ய இயலாது. அவனுக்கு அந்தப் பக்கத்து எல்லையிலும் பலமான அரசு இருக்குமானால் இரண்டுக்குமிடையில் அவன் அடங்கியேயிருப்பான். ஆனாலும், அவனைக் கண்காணித்தபடியே இருக்க வேண்டும். அவனுக்கு நண்பர்களாக யாரெல்லாம் இருக்கிறார் களோ அவர்களையும்
கவனமாகக் கண்காணிக்க வேண்டும். படைபலம் மிக்க அரசன் நண்பனாக இருந்தாலும்கூட, அந்த நண்பன் வெகுதூரத்திலும், சோம்பல் மிக்கவனாகவும் இருந்தால், அவனிடமிருந்து உடனடி உதவியை எதிர்பார்க்க முடியாது.
தாந்ஸர்வாநபிஸந்தத்யாத் ஸாமாதிபிருபக்ரமை: |
வ்யஸ்தைஷ் சைவ ஸமஸ்தைஷ் ச பௌருஷேண நயேந ச|| 159
அந்த அரசர்களனைவருடனும் சாமம், தானம், பேதம், தண்டம் என்னும் நான்கு உபாயங்களைப் பயன்படுத்தி அவர்களை எந்த வகையிலேனும் தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும். நயமாகப் பேசியும் மற்றபடி தானத்தாலும் பேதத்தாலும் காரியம் சாதிக்க முடியாதபோது, தன் படைபலத்தைப் பிரயோகித்து அந்த நாட்டை வென்று தன்நாட்டுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஸந்திம் ச விக்ரஹம்சைவ யாநமாஸநமேவ ச | த்வைதீபாவம் ஸம்ஷ்ரயம் ச ஷட்குணாம்ஷ்சிந்தயேத் ஸதா|| 160
அரசன், சந்தி, விக்ரகம், ஆசனம், யானம், சம்ஸ்ரயம், துவைதீபாவம் என்னும் ஆறைப் பற்றியும் எப்போதும் சிந்தித்த வண்ணம் இருக்க வேண்டும்.அரசன் இன்னொரு அரசனுடன் சில நிபந்தனைகளோடு ஒப்பந்தம் செய்து கொள்வது ‘சந்தி’ எனப்படும். அவனுடன் விரோதம் கொண்டு அபகாரம் செய்வது ‘விக்ரகம்’ எனப்படும். ஒப்பந்தமும் செய்து கொள்ளாமல், விரோதமும் காட்டாமல் இருந்தால் அதற்கு ‘யாநம்’ என்றுபெயர்
எதிரியின் மீது படையெடுப்பதற்கு ‘யாநம் என்று பெயர். எதிரி தன்னைவிட பலமாக இருக்கும்போது பணிந்து போவது சம்ஸ்ரயம்’ எனப்படும். உதவி நாடி ஒரு அரசனிடம் அடைக்கல) மாவதற்கும் ‘சம்ஸ்ரயம்’ என்றே பெயர்.
ஆஸநம் சைவ யாநம் ச ஸந்திம் விக்ரஹமேவ ச
கார்யம் வீக்ஷ்ய ப்ரயுஞ்ஜீத த்வைதம் ஸம்ஸ்ரயமேவ 161
அரசன், தன் வெற்றியை மனத்தில் கொண்டு காலத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் தக்கபடி, சந்தி செய்து கொள்வதையோ படையெடுப்பதையோ, பணிவதையோ, சந்தியும் இன்றி விரோதமும் இன்றி இருப்பதையோ செய்ய வேண்டும்.
ஸந்திம் து த்விவிதம் வித்யாத்ராஜா விக்ரஹமேவ ச 1
உபே யாநா ஆஸநே சைவத்வி வித: ஸம்ஸ்ரய: ஸ்ம்ருத: 162
சந்தி இரு வகையானது. விக்ரகமும் இரு வகையானது. அவ்வாறே ஆசனமும், யானமும்,சம்ஸ்ரயமும்கூட இரு வகை யானவையே.
ஸமாநயாநகர்மா ச விபரீதஸ் ததைவ ச
ததாத்வா ஆயதிஸம்யுக்த: ஸந்திர் ஞேயோ த்விளக்ஷண: 1| 163
சமாதானமாகப் போவதில் இரண்டு வகைகள் உள்ளன. யுத்தம் செய்வதால் தனக்கு வெற்றியும் கிட்டலாம், தோல்வியும் கிட்டலாம்,-இரண்டுக்கும் சமமான வாய்ப்பு உண்டு என்னும்போது சமாதானமாகப் போக வேண்டும். தன்னைவிட அதிக பலம் வாய்ந்த அரசன் படையெடுத்து வந்து ஆக்ரமித்துக் கொண்டபோது, உடனடியாக அவனிடம் சமாதான
உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும். அந்த அரசன் கேட்கும் அளவு படையையும், பொக்கிஷத்தையும் கொடுத்து சமாதானம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு சந்தி இரு வகைப்படும்.
ஸ்வயம் க்ருதஷ் ச கார்யார்த்தமகாலே கால ஏவவா|
மித்ரஸ்ய சைவா அபக்ருதே த்விவிதோ விக்ரஹ: ஸ்ம்ருத: || 164
காலம் வந்துற்றபோது செய்வது, தக்க காலம் இல்லை யென்றாலும் பரவாயில்லை என்று தன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக எதிரிக்கு அபகாரம் செய்வது. அடுத்து தனக்காக என்றில்லாமல், தன்னுடைய நண்பனுக்காக அவ்வாறு செய்வது என்று விக்ரகம் இரு வகைப்படும்.
ஏகாகிநஷ்சாஅத்யயிகே கார்யே ப்ராப்தே யத்ருச்சயா |
ஸம்ஹதஸ்ய ச மித்ரேணத்விவிதம் யாநமுச்யதே|| 165
எதிரி மன்னன் துயரத்திலிருக்கிறான் அல்லது பஞ்சம் வெள்ளத்தால் அவன் நாடு ணமுற்றிருக்கிறது அல்லது அவனைச் சார்ந்த மந்திரி பிரதானிகளே அவனிடம் அதிருப்தியுற்றிருக்கிறார்கள் என்னும்போது அவன் மீது படையெடுக்க வேண்டும். இப்படிப்
படையெடுக்கும்போது தான் தனியாகப் போருக்குப் புறப்படுவது என்றும், பலவானான அரசன் துணையோடு, அதாவது அவன் படைபலத்தையும் சேர்த்துக்கொண்டு போருக்குப் புறப்படுவது என்றும் போரிடுவது இருவகைப்படும்..
ஷீணஸ்ய சைவ க்ரமஷோ தைவாத் பூர்வக்ருதேந வா|
மித்ரஸ்ய சாஅநுரோதேந த்விவிதம் ஸ்ம்ருதமாஸநம் || 166
மாற்று அரசனோடு சமாதான ஒப்பந்தமும் செய்து கொள்ளாமல், அவனுக்கு விரோதமான காரியங்களையும் செய்யாமல் இருப்பது ‘ஆசனம்’ எனப்படும். இதுவும் இரண்டு
வகைப்படும். தெய்வ வசத்தாலும், பூர்வ வினையாலும் தன்நிலை தாழ்ந்துவிட்ட தருணத்தில் சமாதானம் செய்து கொண்டாலும், பகை பாராட்டினாலும் தனக்குக் குறையோ நிறையோ இரண்டும் இல்லை என்னும்போது பேசாமலிருந்துவிட வேண்டும்.
அதேபோன்று நண்பனான அரசன் தனக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளும்போதும், போரில் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்னும்போதும் உதவி செய்யலாம். வெற்றியும் கிடைக்கலாம்
தோல்வியும் கிடைக்கலாம் என்ற நிலையிலோ, வெற்றி பெறுவது துர்லபம் என்று தோன்றும் போதோ பேசாமலிருந்துவிட வேண்டும்.-இவ்வாறு ‘ஆசனம்’ இரு வகைப்படும்.
பலஸ்யஸ்வாமிநஷ் சைவ ஸ்திதி: கார்யா அர்த்தசித்தயே |
த்விவிதம் கீர்த்யதே த்வைதம் ஷாட்குண்ய குணவேதிபி: |-167
ஒரு எதிரி அரசனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இன்னொரு எதிரி அரசனுடன் பகைமை பாராட்டுவது துவைதீபாவம்’ எனப்படும். எதிரி அரசர்கள் பலமானவர்களாக இருக்கும்போது அவர்களைவெல்வது இயலாத காரியம். அத்தகைய தருணத்தில் பலமான ஒரு எதிரி அரசனை தன் நண்பனாக்கிக் கொண்டு,அவனிடமே படைபலத்தைக் கேட்டுப் பெற்று, வெற்றி பெற்றதும் செய்த உதவிக்குப் பதிலாக இவ்வளவு தருகிறேன் என்று ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் இவனை நிரந்தர நண்பனாக நினைக்கக் கூடாது. காரியம் நிமித்தமாகவே ஏற்பட்ட நட்பாகவே கொள்ள வேண்டும். ஒரு எதிரி இப்போது நண்பனாகி உள்ளான். இவன் உதவியைக் கொண்டு அந்த மற்றொரு எதிரியை வெல்ல வேண்டும். அடுத்து, எதிரி மன்னனுக்கு ஒரு எதிரி இருந்தால், அவனுடன்’சந்தி’ செய்து கொள்ள வேண்டும். அவன் உதவியோடு எதிரி மன்னனை வீழ்த்த வேண்டும். இவ்வாறு துவைதீபாவம் இரு வகைப்படும்.
அர்த்த ஸம்பாதநார்த்தம் ச பீட்யமாநஸ்ய சத்ருபி: 11
ஸாது வ்யப தேஷார்த்தம் த்விவித: ஸம்ஷ்ரய: ஸ்ம்ருத:|| 168
தன்னைவிடப் பலமான எதிரியிடம் பணிந்து போவதும், வேறு ஒருவனிடம் அடைக்கலம் தேடுவதும் ‘சம்ஸ்ரயம்’ எனப்படும். பலமான எதிரி தன்னைத் தாக்க வரும்போது, எதிர்க்கத் தகுந்த படைபலம் இல்லையெனில் பணிந்து போக வேண்டும். அதனால் தன் நாட்டையும் செல்வத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். அடுத்தது, கபடமாக அவனை ஏமாற்றி அப்போதைக்கு அவனிடம் பணிந்து, அவனைப் புகழ்ந்து, அவனுக்கு அதிக செல்வங்களைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும். பிறகு, அவனை வெல்ல வேண்டும் என்ற ஒன்றையே மனத்தில் கொண்டு எந்த அரசன் மிகுந்த பலவானாக உள்ளானோ அவனிடம் அடைக்கலமாக வேண்டும்.-இவ்வாறு சம்ஸ்ரயம் இரண்டு வகைப்படும்.
யதா அவகச்சேதாயத் யாமாதியம் திருவமாத்மந: |
ததாத்வே சாஅல்பிகாம் பிடாம் ததா ஸந்திம் ஸமாஸ்ரயேத் 169
எதிர் காலத்தில் தனக்கு மேன்மை ஏற்படும் என்று தோன்றினால் சிறிது செல்வத்தைக் கொடுத்து எதிரியுடன் சந்தி (சமாதானம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறே தானும் எதிரியிடமிருந்து சிறிது செல்வத்தைப் பெற்றுக்கொண்டு சமாதானம் செய்து கொள்ள
வேண்டும்.-இதனால் அவன் எதிரி என்ற நிலையிலிருந்து மாறிவிடுகிறான்.
அவன் நாட்டின் வழியாக தன்னுடைய வர்த்தகம் பெருகும் அல்லது தனக்குத் தேவைப்பட்டபோது அவன் படை கொடுத்து உதவுவான் என்னும் காரணங்களை யோசித்து இந்த சந்தி செய்து கொள்ளல் வேண்டும்.
யதா ப்ரஹ்ருஷ்டா மந்யேத ஸர்வாஸ் து ப்ரக்ருதீர் ப்ருஷம் |
அத்யுச்சரிதம் ததா ஆத்மாம் ததாகுர்வீத விக்ரஹம்|| 170
அரசன், நாடு, அமைச்சர்கள், கோட்டை, படை, நண்பர்கள் என்னுமிவற்றுக்கு பிரக்ருதிகள் என்று பெயர்.-இந்த பிரக்ருதிகள் நல்லபடி இருக்கும்போது அரசன், எதிரி நாட்டின் மீது படையெடுக்க வேண்டும்.-முதலில் அரசன் மற்ற எந்தவிதமான தொல்லைகளும் இல்லாமல் உற்சாகமாக இருக்க வேண்டும். அடுத்து அவன் நாட்டில் பஞ்சம் வெள்ளம் போன்றவை எதுவுமில்லாமல் மக்கள் செழிப்போடு சுகமாக வாழ்பவர்களாக இருக்கவேண்டும்.அவனுடைய அமைச்சர்கள் அவனுக்குத் தக்க மந்திராலோசனை கூறும் புத்திமான்களாகவும், விசுவாசமானவர்களாகவும் இருக்க வேண்டும். அடுத்து கோட்டை யரண்கள் பலமாக இருக்க வேண்டும். படைகள் வேண்டிய அளவுக்கு இருக்க வேண்டும். படை வீரர்கள் யுத்தத்தில் புறமுதுகு காட்டாதவர் களாகவும், தங்கள் அரசனுக்கு எதையும் செய்யக் கூடியவர்களாகவும் அரச பக்தி தேச பக்தி நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும். நல்ல நண்பர்கள் அதாவது அரசர்களாக இருக்கும் நண்பர்கள் தனக்கு உதவக்கூடிய நிலையில் இருக்க வேண்டும்.இந்த நிலையில் அரசன் எதிரி நாட்டை வெல்வதைப் பற்றி யோசிக்க வேண்டும். படையெடுப்புக்கு முன்னால் எதிரி அரசனுக்கும், அவன் நாட்டுக்கும் பல தொல்லைகளை மறைமுகமாகக் கொடுக்க வேண்டும். எதிரி மன்னனுடைய உற்சாகத்தையும்சந்தோஷத்தையும் குலைக்க வேண்டும்.
யதா மந்யேத பாவேந ஹ்ருஷ்டம் புஷ்டம் பலம் ஸ்வகம் ||
பரஸ்ய விபரீதம் ச ததா யாயாத் ரிபும் ப்ரதி || 171
இவ்வாறாக அரசன் தான் சந்தோஷத்தோடும் உற்சாகத்தோடும் பிரகிருதிகளின் பலத்தோடும் இருந்து கொண்டு, எதிரி அரசன் தொல்லைகளால் பீடிக்கப்பட்டு உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் இழந்து துயர நிலையில் இருக்கும்போது அவன் மீது படையெடுக்க வேண்டும்.
யதா து ஸ்யாத் பரி ணோ வாஹநேந பலேந ச |
ததா ஆஸீத ப்ரயத்நேந ஷநகை: ஸாந்த்வயந்நரீந் |-172
யானைப் படையும். குதிரைப் படையும், தேர்ப் படையும் குறைந்தும், போர் வீரர்கள் உற்சாகம் குறைந்தும் இருக்கும்போதுஎதிரி அரசன் தாக்க வந்தால், முயற்சி செய்து எவ்வகையிலேனும் எதிரி அரசனுடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.
மந்யேதா அரிம் யதா ராஜா ஸர்வதா பலவத் தரம் |
ததா த்விதா பலம் க்ருத்வா ஸாதயேத் கார்யமாத்மந: | 173
எதிரி அரசன் எவ்வகையிலும் சமாதானத்துக்கு இணங்கவில்லை என்றால், தன் படையை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை படைத் தலைவன் தலைமையில் எதிரியைத் தாக்க அனுப்ப வேண்டும். மற்றொரு பகுதியை தன் நாட்டுக் காவலுக்காக இருத்த வேண்டும். தன் நட்பு அரசர்களின் உதவி பெறுதல் முதலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி கிட்டும் வழியை ஆராய்ந்து வெற்றியைத் தேடிக்கொள்ள வேண்டும்.
யதா பரபலாநாம் து கமநீயதமோ பவேத் |
ததா து ஸம்ஷ்ரயேத் க்ஷிப்ரம் தார்மிகம் பலிநம் ந்ரூபம் ||174
இவ்வாறு படையைப் பிரித்தும் வெற்றி பெறவோ, தன்னாட்டைக் காப்பாற்றிக் கொள்ளவோ முடியாது என்ற நிலை ஏற்பட்டால், அப்போது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயல
வேண்டும். எதிரியிடம் தான் அகப்படாமல் தப்பித்துச் சென்றுபடைப்பலம் மிகுந்தவனும், தர்மவானுமான தக்க அரசனிடம் அடைக்கலம் புகவேண்டும்.
நிக்ரஹம் ப்ரக்ருதீநாம் ச குர்யாத் யோ அரிபலஸ்ய ச|
உபஸேவேத தம் நித்யம் ஸர்வ யத்நைர் குரும்யதா|-175
எதிரி மக்களிடம் கலகங்கள் ஏற்படுத்தக்கூடியவனாகவும், எதிரிப் படைகளை வெல்லக்கூடியவனாகவும் தான் அடைக்கலம் புகும் அரசன் திறமையும் படைபலமும் கொண்டிருக்கிறானா என்று பார்த்து, அத்தகைய அரசனிடம் அடைக்கலம் புகுந்து, அனைத்து முயற்சிகளும் செய்து, அவன் மனம் தன்னிடம் ஈடுபடுமாறு அதாவது
தனக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணம் அவன் மனத்தில் ஏற்படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மனப்பூர்வமாக அவன் தனக்கு உதவுமாறு அவனைப் போற்றிக் கொண்டாட வேண்டும்.
யதி தத்ராஅபி ஸம்பஷ்யேத் தோஷம் ஸம்ரயகாரிதம்
சுயுத்தமேவ தத்ராஅபி நிர்விஷங்க: ஸமாசரேத்|| 176
ஆனால், இப்படி பலம் மிகுந்த அரசன் இல்லாவிட்டால் அல்லது இருந்தும் தான் அவனை அண்டுவதால் ஒரு பயனும் இருக்காது என்பது சந்தேகமின்றித் தெரிந்தால் யுத்தம்தான் செய்ய வேண்டும்.-வெற்றியோ தோல்வியோ எது கிட்டினாலும் சரி, வெற்றி கிட்டினால்
அரசு நிலைக்கும், மரணமெய்னால் சொர்க்கம் கிடைக்கும் என்ற தீர்மானத்தோடு போர்க்களம் புக வேண்டும்.
ஸர்வோபாயைஸ்ததா குர்யாந் நீதிஞ: ப்ருதிவீபதி: |
யதாஅஸ்யா அப்யதிகா ந ஸ்யுர் மித்ரோ தாஸீநஷத்ரவ: |-177
மித்ரர்களாயிருக்கும் அரசர்களாயினும் சரி, எதிரிகளாகஇருக்கும் அரசர்களாயினும் சரி, அவர்கள் தன்னை மீறிவளர்ச்சியுற்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ராஜதர்மம்
தெரிந்த அரசன், இந்த விஷயத்தில் சகல உபாயங்களையும் பயன்படுத்த வேண்டும்.
ஆயதிம் ஸர்வகார்யாணாம் ததாத்வம் ச விசாரயேத்
அதீதாநாம் ச ஸர்வேஷாம் குணதோஷௌ ச தத்வத: I-178
அரசன்,தான் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அதைச் செய்வதால் தனக்குக் கிடைக்கும் லாபம் என்ன என்பதை யோசித்துப் பார்த்துச் செய்ய வேண்டும். இது போக, செய்து முடித்த காரியத்தால் தான் அடைந்த நன்மைகள் என்ன, தீமைகள் என்னஎன்பதையும் யோசிக்க வேண்டும்.
ஆயத்யாம் குணதோஷக் ஸ் ததாத்வே சிப்ரநிஷ்சய: |
அதீதே கார்யசேஷக்: ஷத்ரூபிர் நாஅபிபூயதே|-179
தான் இதுவரை செய்த காரியங்களால் விளைந்த நன்மை தீமைகளைத் தெரிந்து வைத்துக்கொண்டு, இனி செய்யப்போகும்காரியங்களால் விளையக்கூடிய நன்மை தீமைகளையும் ஆராய்ந்துஅறிந்து கொண்டு, யோசித்து முடிவெடுத்து, இப்போது செய்யும்காரியங்களில் விடாமுயற்சியோடு ஆற்றலைச் செலுத்திக்
காரியமாற்ற வேண்டும். இப்படிச் செய்யும் மன்னன் எந்நாளும் தோல்வியடைய மாட்டான்.
யதைநம் நா அபிஸந்தத்யுர் மித்ரோதாஸ் நஷத்ரவ: |
ததா ஸர்வம் ஸம்விதத்யாதேஷ ஸாமாஸிகோ நய: !| 180
ராஜதர்ம சாஸ்திரத்தை நன்கு படித்தறிந்த அரசன், எந்த வகையிலும் தன் நண்பர்களாலோ, பகைவர்களாலோ,நட்போ பகையோ இரண்டுமில்லாதவர்களாலோ தனக்கு இன்னல் நேரிடா வண்ணம் பார்த்துக் கொள்வான்.
யதா து யாநமாதிஷ்டே தரிராஷ்ட்ரம் ப்ரதி ப்ரபு: |
ததா அநேந விதாநேந யாயாதரிபுரம் ஷனை: || 181
அரசன், எதிரி மன்னன் மீது போருக்குப் புறப்பட வேண்டும் என்றால், அதற்கு இனி சொல்லப்போகும் முறைகளோடு யுத்த யாத்திரையைத் தொடங்க வேண்டும்.
மார்கஷீர்ஷே சுபே மாஸி யாயாத்யாத்ராம் மஹீபதி: 11
பல்குநம் வா அத சைத்ரம் வா மாஸௌ ப்ரதி யதா பலம் 182
படைகளோடு யுத்த யாத்திரை கிளம்பும் காலத்தை முதலில் நிர்ணயிக்க வேண்டும். நீண்ட காலம் யாத்திரை போக வேண்டிய தூரமானால் மார்கழியில் கிளம்பலாம். அல்லது தை மாத ஆரம்பத்திலும் கிளம்பலாம்.-எப்போதும் பனி மூட்டம் இருக்கும் பிரதேசம் என்றாலும்
ஆழமான நீர்நிலைகள் நிறைந்த பிரதேசம் என்றாலும், நுழைய முடியாத அளவு புதர் மண்டிக் கிடக்கும் பிரதேசம் என்றாலும் பங்குனி, சித்திரைகளில் யுத்த யாத்திரை கிளம்ப வேண்டும்.
அந்யேஷ்வபி து காலே யதா பஷ்யேத் த்ருவம் ஐயம் |
ததா யாயாத் விக்ருஹ்யைவ வ்யசநே சோத்திதே ரிபோ: II 183
மற்ற காலங்களிலும்கூட யுத்த யாத்திரை கிளம்பலாம். அதாவது நிச்சயம் தனக்கு வெற்றி கிட்டும் என்ற நிலையில் எந்தக் காலத்திலும் யுத்த யாத்திரையை மேற்கொள்ளலாம். எதிரி நாட்டில் உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டிருக்கும் காலத்திலும், எதிரிப் படைகள் ஷீணமடைந் திருக்கும் காலத்திலும் யுத்த யாத்திரை மேற்கொள்ளலாம்.
க்ருத்வா விதாநம் மூலேது யாத்ரிகம் ச யதாவிதி | உபக்ருஹ்யா ஆஸ்பதம் சைவ சாராந் ஸம்யக் விதாய ச 184
தன்னுடைய நாட்டில் சிறிது பாதுகாப்புப் படையை படைத் தலைவன் ஒருவனிடம் ஒப்படைக்க வேண்டும். தானும் படையும் இல்லாதபோது நாட்டைத் தாக்கி எவரும்கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காக இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு. தான் எங்கிருந்தாலும் ஒற்றர்கள் மூலமாக தனக்கு எதிரி நாட்டுச் செய்திகள் கிடைத்த வண்ணம் இருக்க வேண்டும். இதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.-தான் எந்தப் படைகளோடு செல்ல வேண்டும் என்பதைத்
தீர்மானிக்க வேண்டும். எதிரியிடம் யானைப்படை இருக்குமானால் தானும் யானைப் படைகளோடும், எந்திரங்களோடும் போக வேண்டும். பொதுவாக அனைவரிடமும் பலம் வாய்ந்தயானைப்படை இருப்பது அரிது.-எந்தப் படை எதிரியிடம் அதிகமாக உள்ளதோ, அந்தப் படையைதானும் அதிகம் நடத்திச் செல்ல வேண்டும்.-எதிரியிடம் நால்வகைப் படையும் இருக்குமானால் தானும் நால்வகைப் படைகளோடும், கற்கள், ஈட்டிகளை எறியத்தக்க எந்திரங்களோடும் யாத்திரை கிளம்ப வேண்டும். முக்கியமாக விசுவாசமான போர் வீரர்களோடு போக வேண்டும்.
ஸம்ஷோத்ய த்ரிவிதம் மார்கம் ஷட்விதம் ச பலம் ஸ்வகம்
ஸாம்பராயிக கல்பேந யாயாதரிபுரம் ஷனை: || 185
யுத்த யாத்திரை புறப்படுவதற்கு முன்பு, தொழிலாளர்களின் அதிகாரியும், காவல் துறை அதிகாரியும் அந்தப் பாதையை ஆராய வேண்டும். காவல் துறை அதிகாரி பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டும். படைகள் ஆங்காங்கு ஓய்வு பெறும் இடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.தொழிலாளர்களின் அதிகாரி வழியிலுள்ள புதர்களையும் காடுகளையும் அழித்து பாதைகளைச் சரிப்படுத்த வேண்டும்.படைகள் முகாமிடுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.மற்றபடி, கிராமங்கள் வழியாகவும், ஆரண்யங்கள் வழியாகவும் போகும்போது வழியில் விலங்குகளுக்கு உணவு, நீர் கிடைப்பதைப் பொறுத்தும், படைவீரர்களுக்குச் சமைக்க விறகுகள் கிடைப்பதைப் பொறுத்தும் எந்த எந்த இடத்தில் எவ்வளவு நாட்கள் தங்கலாம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.பிரயாணத்துக்கு மொத்தம் எத்தனை நாட்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டு, தேவையான உணவுப் பொருட்களை இருமடங்காக ஆங்காங்கே முகாமிடும் இடங்களில் கொண்டு சேர்க்க வேண்டும்.அல்லது ஆங்காங்கே அவை கிடைக்கத்தக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.எதிரிப் படைகள் வரும் பாதையில் அவர்களுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தக்கூடிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.பாதையில் குழிகளை ஏற்படுத்தி மேலே புற்களால் மூடுவது, நீர் நிலைகளை அழிப்பது போன்றவை அவை யுத்த பூமிக்கு அருகில் பிரதான சேனாபதி, வீடுகளை அமைக்கும் ஸ்தபதி, வாஸ்து நிபுணர் – இவர்கள் தேர்ந்தெடுத்த இடத்தில் படைகளை நிறுத்துவதற்கான படைத் தளங்களை அமைக்க வேண்டும்.இவ்வாறாக, பாதைகளைச் சீர்படுத்துவது, படைகள் போகும் வழியில் படைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவு, தண்ணீர் கிடைக்க முன்கூட்டி ஏற்பாடு செய்வது, எதிரிகள் வரும் பாதைகளை சீர்குலைப்பது என்று இம் மூவகையான ஏற்பாடுகளையும் யுத்த யாத்திரை போகும் வழியில் செய்ய வேண்டும். அடுத்து –
1) ஜோதிடர்களும், ஒற்றர்களும் ‘வெற்றி நமக்கே, வெற்றி நிச்சயம்’ என்று கூறியபடி வீரர்களை உற்சாகப்படுத்திய வண்ணம் இருக்க வேண்டும்.
2) படைவீரர்கள் ஒருவரோடொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, குடிப்பது, சூதாடுவது போன்றவற்றைச் செய்யாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
3) சூதர்களும், மாகதர்களும் ஆங்காங்கே படை வீரர்களுக்கு,அவர்கள் குலப் பெருமையையும் வீரத்தையும் போற்றியபடி இருக்க வேண்டும்.
4) ரண சிகிச்சைக்குத் தேவையான ஆயுதங்கள், மருந்துகள், எண்ணெய்கள், துணிகள் முதலானவற்றைத் தயாராக வைத்துக் கொண்டு, வைத்தியர்கள், படைவீரர்களுக்குப் பின்னால் இருக்க வேண்டும். 5) உணவுப் பண்டங்களைக் காத்தபடி வீரர்களுக்கு உற்சாகமூட்டும் பெண்களும் வைத்தியர்களுக்கடுத்து இருக்கவேண்டும். 6) முக்கியமாக அரசன், படைவீரர்களை நேரடியாகச் சந்தித்து உற்சாகமூட்டிய வண்ணம் இருக்க வேண்டும். இந்த ஆறு வழிகளில் படைவீரர்களிடம் உற்சாகமும் வீரமும்தைரியமும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு எதிரி நாட்டை நோக்கி மெதுவாக யுத்த யாத்திரை கிளம்ப வேண்டும்.
ஷத்ருசேவிநி மித்ரேச கூடே யுக்ததரோ பவேத் |
கத ப்ரத்யாகதே சைவ ஸஹி கஷ்டதரோ ரிபு: || 186
தன்னிடத்தில் மித்ரபாவத்தோடிருந்தபடி எதிரியிடம் போய் ரகசியமாகச் சேர்ந்தவன் மீண்டும் தன்னிடம் திரும்பி வந்தால்,அவனிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இத்தகையவனான தளபதி போன்றோரிடமும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இவர்கள் நம்பிக்கைக்குரியவர்களல்லர். ஆனாலும், அதை வெளிப்படுத்திக்கொள்ளக் கூடாது. அவர்கள் ரகசியமாகச்செய்ததை, தனக்குத் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் எப்போதும் போல் மேலுக்கு இருந்தபடி, உள்ளே எச்சரிக்கை யோடிருந்து தக்க தருணம் வாய்த்ததும் அவர்களை அழித்துவிடவேண்டும். பகைவனைவிட இவர்கள் மிகவும் அபாயகரமானவர்கள்.
தண்டவ்யூஹேந தந்மார்கம் யாயாத்து ஷகடேந வா | வராஹமகராப்யாம் வா சூச்யா வா கருடேந வா || 187
தண்ட வியூகம், சகட வியூகம், வராக வியூகம், மகர வியூகம், ஊசி வியூகம், கருட வியூகம் போன்ற வியூகங்களில் ஏதாவது ஒரு வியூகத்தினால் எதிரி நாட்டை முற்றுகையிட வேண்டும்.-வியூகம் என்பது போர் வீரர்களைக் குறித்த முறைப்படிநிறுத்துவது. எந்த இடத்தில் எந்த வியூகப்படி வீரர்களை நிறுத்தினால் நலம் என்று தோன்றுகிறதோ அந்த முறைப்படி நிறுத்த வேண்டும்.
யதஷ்ச பயமாஷங்கேத் ததோ விஸ்தாரயேத் பலம் |
பத்மேந சைவ வ்யூஹேந நிவிஷேத ஸதா ஸ்வயம் || 188
எந்தப் பக்கத்தில் எதிரியின் தாக்குதல் அதிகமாக இருக்கும் என்று தோன்றுகிறதோ, அங்கே அதிகப் படையை நிறுத்த வேண்டும். அரசன் எப்போதும் பத் வியூகத்தை அமைத்துக்
கொண்டு அதன் நடுவில் இருப்பது நல்லது.
சேநாபதி பலாத்யக்ஷெள ஸர்வதிட்சு நிவேஷயேத் |
யதஷ்ச பயமாஷங்கேத் ப்ராசீம் தாம் கல்பயேத் திஷம் | 189
ஒரு தேர், ஒரு யானை, ஐந்து குதிரைகள், முப்பது படை வீரர்கள் (காலாட்கள்) சேர்ந்தது ஒரு அங்கம் எனப்படும்.-இவ்வாறான பத்து அங்கங்களின் தலைவனுக்கு பதிகன் என்று
பெயர்-பத்து பதிகன்களின் தலைவனுக்கு சேனாபதி என்று பெயர்.-பத்து சேனாபதிகளின் தலைவனுக்கு நாயகன் என்றும்-பலாத்யக்ஷன் என்றும் பெயர். நாற்புறமும் இந்த சேனா நாயகர்கள் சேனைகளோடு நிறுத்தப்பட வேண்டும். எந்தத் திசையில் எதிரியின் பலம் அதிகமாக வெளிப்படும் என்று தோன்றுகிறதோ அங்கே அதிகப் படைபலம்
நிறுத்தப்பட வேண்டும்.
குல்மாம்ஷ்ச ஸ்தாபயேதாப்தாந் க்ருதஸம்ஞாந் ஸமந்தத: |
ஸ்தாநே யுத்தே ச குஷலாந பீருநவிகாரிண: 11 190
யுத்த களத்தின் முன்புறத்தில் பயமறியாதவர்களான மகா வீரர்களை நிறுத்த வேண்டும். சாதாரண வீரர்களில் தேவையானவர்களை எதிரியின் வருகையைத் தெரிவிக்கும் விதவிதமான ஒலிகளை எழுப்புவதற்கும், புகையாலும் நெருப்பாலும்
சதருக்களைப் பற்றி சூசகமாகத் தெரிவிப்பதற்கும், இடையர்கள் போன்று சாதாரண வேடத்தோடு நடமாடச் செய்ய வேண்டும்.
ஸம்ஹதாந் யோதயேதல்பாந் காமம் விஸ்தாரயேத் பஹுந் சூச்யா வஜ்ரேண சைவைதாந் வ்யூஹேந வ்யூஹ யோதயேத் || 191
சாதாரண படைவீரர்களை, அதிகம் பேர் சேர்ந்து யுத்தம் செய்யும் முறையான ஊசி வியூகம், வஜ்ர வியூகம் போன்ற வியூக முறைகளில் நிறுத்த வேண்டும்.
ஸ்யந்தநா அஷ்வை: ஸமே யுத்யேதனூபே நௌத்விபைஸ் ததா |
வ்ருக்ஷகுல்மா ஆவ்ருதே சாபை ரஸிசர்மாயுதை: ஸ்தலை: ||192
போர் படைகள் புரியும்போது அந்தந்தப் படைக்கு அனுகூலமான பூமி அமைந்திருக்க வேண்டியது அவசியம். மேடுபள்ளங்களற்றதும், சுற்றிலும் செடிகொடிகளற்றதும்,
சக்கரங்கள் கீழிறங்கிப் புதைந்து போகாமல் கெட்டியான மண் அமைந்து இருப்பதும், மணல், சேறு, வயல்கள் அற்றதுமான பூமி தேர்ப் படைக்கு உகந்த பூமி.
தேர்ப்படைக்கு உகந்த பூமி, மற்ற மூன்று படைகளுக்கும் சிறந்த பூமியாகும்.
தண்ணீர் பிரதேசமெனில் படகுகளில் தாண்டிச் சென்று யுத்தம் செய்ய வேண்டும்.
செடிகளும், புதர்களும் நிறைந்த பிரதேசமெனில் வில் அம்புகளோடும், கத்தி வாள் முதலான ஆயுதங்களோடும் யுத்தம் செய்ய வேண்டும்.
குருக்ஷேத்ராம்ஷ் ச மத்ஸ்யாம்ஷ்ச பஞ்சாலாஞ்சூரஸேநஜாந் | தீர்காந்லகூம்ஷ்சைவ நராநக்ரா அநீகேஷு யோஜயேத் |-193
குருக்ஷேத்திரம், மத்ஸ்யதேசம், பாஞ்சாலதேசம், சூரசேந் தேசம் என்னும் இத்தேசங்களில் பிறந்தவர்களான வீரதீர பராக்ரம சாலிகளை படைகளின் முன்புறத்தில் யுத்தம் செய்ய நிறுத்த வேண்டும்.
ப்ரஹர்ஷயேத் பலம் வ்யூஹ்ய தாம் ச ஸம்யக் பரீக்ஷயேத் |
சேஷ்டாஷ்சைவ விஜாநீயாதரீந் யோதயதாமபி |-194
படை வீரர்களிடம் ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு வெற்றி பெறுவதிலுள்ள நம்பிக்கையையும் உறுதியையும் கண்டறிய வேண்டும்.
உபருத்யா அரிமாஸீத ராஷ்ட்ரம் சாஅஸ்யோப பீடயேத்
தூஷயேச்சாஅஸ்ய ஸத்தம் யவஸா அந்நோதகேந்தனம் 195
போர் செய்ய கோட்டையை விட்டு வெளியில் வந்த எதிரிப் படைகள் மீண்டும் உள்ளே போகாதவாறு அப்படைகளை அழிக்க வேண்டும். அந்தக் கோட்டைக்குள் எந்த வகையிலும் உணவு, நீர், விறகுகள் எதுவும் உள்ளே போகாதவாறு தடுக்க வேண்டும். உள்ளிருக்கும் நீர்நிலைகள் முதலியவற்றிலும் விஷம் கலக்கச் செய்து அவர்களுக்கு உபயோகப்படாமல் செய்ய வேண்டும்.
பிந்த்யாச்சைவ தடாகாநி ப்ராகாரபரிகாஸ்ததா |
ஸமவஸ்கந்தயேச்சைநம் ராத்ரௌ வித்ராசயேத் ததா|| 196
நீர் நிலைகளை அழிப்பதோடு, கோட்டையைத் தகர்க்க வேண்டும். இரவு நேரங்களில் எதிரிகளிடம், அவர்களின் நாடு கைப்பற்றப்பட்டது, அவர்களின் ஊர்கள் தீக்கிரையாயின என்பன போன்ற ஏதேனும் செய்திகளைப் பரப்பி அவர்களை அச்சுறுத்த வேண்டும்.
உபஜப்யா பஜபேத் புத்யேதைவ ச தத்க்ருதம்
யுக்தே ச தைவே யுத்யேத ஐயப்ரேப்சுரபேதபீ: II 197
ஒரு நாட்டு அரசனை வெல்ல அவனது அமைச்சர்கள், பிரதானிகள், உறவினர்களிடையே பேதத்தை ஏற்படுத்த வேண்டும்.-தன் எதிரிகள் இந்த முறையில் தனக்கு ஏற்படுத்தும் பேதங்களையும் அரசனாயிருப்பவன் அறிய வேண்டும். தன் படைபலமும் தெய்வ பலமும் கூடியுள்ள நேரத்தில் வெற்றியை விரும்பும் மன்னன் பயமற்றவனாக படையெடுக்க வேண்டும்.
ஸாம்நாதாநேந பேதேந ஸமஸ்தைரதவா ப்ருதக் |
விஜேதும் ப்ரயதேதா அரீந் நயுத்தேந கதாசந |-198
சாம், பேத, தானங்களால் எதிரிகளை வசப்படுத்தப் பார்க்க வேண்டும். போர்தான் ஒரே வழி என்று நினைக்கக்கூடாது. அந்த மூன்று வழிகளாலும் முடியாத போது இறுதி நிலையில் வேறு வழியில்லை என்னும்போது போருக்குப் புறப்பட வேண்டும்.
அநித்யோ விஜயோ யஸ்மாத் த்ருஷ்யதே யுத்யமாநயோ: | பராஜயஷ்ச ஸங்க்ராமே தஸ்மாத் யுத்தம் விவர்ஜயேத் |-199
எவ்வளவுதான் முயன்றாலும் யுத்தத்தில் வெற்றி என்பது நிச்சயமான ஒன்றல்ல. தோல்வியும் ஏற்படலாம். எனவே யுத்தத்தைத் தவிர்க்கவே பார்க்க வேண்டும்.
த்ரயாணாமப்யுபாயாநாம் பூர்வோத்தாநாம ஸம்பவே |
ததா யுத்யேத ஸம்பந்நோவிஜயேத ரிபூந் யதா || 200
எப்போது சாமம்,பேதம், தானம் என்னும் மூன்று உபாயங்களும் பலனளிக்கவில்லையோ, அப்போது யுத்தம் செய்து எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும்.
ஜித்வா ஸம்பூஜயேத் தேவாந் ப்ராஹ்மணாம் சைவ தார்மிகாந் | ப்ரதத்யாத் பரிஹாரம்ஷ்ச க்யாபயேதபயாநி ச || 201
எதிரியை வென்று அந்நாட்டைக் கைப்பற்றிய பிறகு அரசன், அங்குள்ள தெய்வங்களைப் பூஜிக்க வேண்டும். பிராம்மணர்களையும், தர்மாத்மாக்களான சாதுக்களையும் அழைத்து அறிமுகப் படுத்திக் கொண்டு, அவர்களைப் பூஜித்து அவர்களது ஆசிகளைப் பெற வேண்டும். படை வீரர்களுக்கும் மக்களுக்கும் பயத்தைப் போக்கி. தன் ஆட்சியில் இனி அவர்கள் இன்னலின்றி, பயமின்றி வாழலாம் என்ற அபயத்தை நல்க வேண்டும்.
ஸர்வேஷாம் து விதித்வைஷாம் ஸமாஸேந சிகீர்ஷிதம் |
ஸ்தாபயேத் தத்ர தத்வம்ஷ்யம் குர்யாச்ச ஸமயக்ரியாம் || 202
அடுத்து, அங்கு அந்த எதிரி மன்னனுடைய வம்சத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு முடிசூட்ட வேண்டும்.யாருக்கு முடிசூட்டலாம். என்பதைத் தீர்மானிக்க அந்நாட்டு மந்திரி பிரதானியரை அழைத்து அவர்கள் அபிப்ராயத்தைக் கேட்டறிய வேண்டும். தனக்கு ஆண்டுக்குச் செலுத்த வேண்டிய கப்பத் தொகை முதலானவற்றைத் தீர்மானித்துக் கூற வேண்டும்.
ப்ரமாணாநி ச குர்வீத தேஷாம் தர்ம்யாந் யதோதிதாந்
ரத்னைஷ்ச பூஜயேதேநம் ப்ரதான புருஷை: ஸஹ-203
அந்நாட்டில் எந்தெந்த தர்மங்கள், எந்தெந்த முறைகள் அனுசரிக்கப்படுகின்றனவோ அவற்றையே தானும் பிரமாணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். (கேரள நாட்டில் சொத்துரிமை பெண்வழியைச் சேர்ந்தது. இதுபோன்று அந்தந்த தேசத்துக்கு என்று
சில தர்ம முறைகள் இருக்கும்.) தான் வென்ற தேசத்தில் எந்த தர்ம முறைகள் உள்ளனவோ அவற்றையே அங்கு ஆட்சியை நிலை நாட்டும்போது கடைப்பிடிக்க வேண்டும்.
முடிசூட்டிக் கொண்டு அரசனானவனுக்கும், அவன் மந்திரி பிரதானியருக்கும் ரத்தினங்கள் முதலானவற்றை சன்மானமாக அளித்து கெளரவிக்க வேண்டும்.
ஆதாநமப்ரியகரம் தாநம் ச ப்ரியகாரகம் |
அபீப்ஸிதாநாமர்த்தாநாம் காலே யுக்தம் ப்ரஸ்யதே || 204
வெற்றி பெற்ற அரசனுக்கேஎதிரி நாட்டுப் பொக்கிஷம் முதல் அனைத்தும் உடைமையாகும். ஆனால், தூரத்திலுள்ள அந்த அரசை ஆள அங்குள்ள அரச வம்சத்தைச் சேர்ந்தவனை நியமிப்பதே சாஸ்திர சம்மதமான முறை. அவனுக்கே அங்கு கடைப்பிடிக்கப்படும்-நெறிமுறைகள் தெரியும். பூமி அமைப்பு இப்படிப்பட்டதென்று தெரியும். மக்களின் நம்பிக்கைகள் தெரியும். அப்படி முடிசூட்டப்பட்டவன், வென்ற அரசனுக்குக்
கீழ்ப்பட்டவனாக இருந்து இவன் சொற்படி கேட்டு அரசாட்சி செலுத்த வேண்டும். கப்பம் கட்ட வேண்டும். வென்ற அரசன் அந்நாட்டுச் செல்வங்களை எடுத்துக் கொண்டு புறப்பட வேண்டும். அப்போது பொன், பொருள், ரத்தினங்களைத் தான் முடிசூட்டிய
அந்தப் புதிய அரசனுக்கும் மந்திரி பிரதானிகளுக்கும் அன்பளிப்பாக
அளிக்க வேண்டும். வெற்றி பெற்ற அரசன் தங்கள் செல்வங்களைக் கொண்டு
போகும்போது அவர்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால்,
தங்களுக்குப் பிடித்த பொன், பொருள், ரத்தினங்களை தங்களுக்கு
அளித்துச் செல்லும்போது அவர்கள் சந்தோஷப்படுவார்கள்.
ஸர்வம் கர்மேதமாயத்தம் விதாநே தைவமானுஷே | தயோர்தைவமசிந்தியம்து மானுஷே வித்யதே க்ரியா || 205
செய்யும் எல்லாச் செயல்களும்பாபம், புண்ணியம் என்னும் இரண்டினைத் தருபவையே இந்தப் பாப, புண்ணியங்களையே தெய்வச் செயல் என்று குறிப்பிடுவது வழக்கத்தில் உள்ளது. தான் ஏற்கெனவே சேர்த்து வைத்துள்ள பாப புண்ணியங்களை அறிய
முடியாது. அந்தப் பாப புண்ணியங்களால் தனக்குக் கிடைக்க வேண்டியவற்றை அறிய முடியாது. ஆனால், முயற்சி செய்வது மனிதன் கையில் உள்ளது. எனவே, தன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக எப்போதும் முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும்.
ஸஹ வா அபி வ்ரஜேத் யுக்த: ஸந்திம் க்ருத்வா ப்ரயத்த: |
மித்ரம் ஹிரண்யம் பூமிம்வா ஸம்பஷ்யம்ஸ் த்ரிவிதம் பலம்|| 206
இவ்வாறாக யுத்தத்தால் வெற்றி பெற வேண்டிய எதிரியை யுத்தத்தால் வெல்ல வேண்டும். எதிரி அரசன் சமாதானத்துக்கு வருவானேயானால் அவனுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.-இவ்வளவு பூமி, இவ்வளவு நிதி (தங்கம், வைரம் முதலானவை) தனக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் அதைப் பெற்றுக் கொண்டுதான் சமாதானத்துக்கு உடன்படுவேன் என்றும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.ஒப்பந்தப்படி பூமியையும் நிதியையும் பெற்றுக்கொண்டு, மூன்றாவதாக அந்த அரசனின் நட்பையும் பெற்று
நாடு திரும்ப வேண்டும்.
பார்ஷ்ணிக்ராஹம் ச சம்ப்ரேஷ்யததா ஆக்ரந்தம் ச மண்டலே |
மித்ராததா அப்யமித்ராத் வா யாத்ராபலமவாப்னுயாத் || 207
எதிரியின் மீது படையெடுப்பதற்காக யுத்த யாத்திரை கிளம்பும் மன்னன் தன் பக்கத்திலுள்ள நாட்டு அரசனைப் பற்றியும், பின்புறமுள்ள நாட்டு அரசனைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.-அவர்கள் தனக்கு நண்பர்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும்
சரி, தன்நாட்டுக்கு தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவர்கள் தரும் நிதி,பூமி முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
ஹிரண்ய பூமிஸம்ப்ராப்த்யாபார்திவோ ந ததைத்தே |
யதா மித்ரம் த்ருவம் லப்த்வா க்ருஷமப்யாயதிக்ஷமம் || 208
நல்ல நண்பன், மாபெரும் செல்வம். பூமி, தங்கம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதாலேயே ஒரு அரசன் மேன்மேலும் மேன்மை பெறுவான் என்று கூற முடியாது. ஆனால் உத்தம
நண்பனைப் பெற்ற அரசன் நிச்சயமாக மேன்மேலும் மேன்மை யடைவான்.
தர்மக்ஞம் ச க்ருதக்ஞம் ச துஷ்ட ப்ரக்ருதிமேவ ச
அனுரக்தம் ஸ்திரா ஆரம்பம் லகு மித்ரம் ப்ரஷஸ்யதே |-209
எத்தகைய அரச நண்பனால் உயர்வைப் பெற முடியும் என்று பார்ப்போம். முதலில் குணம். அவன் தர்மங்களை அறிந்தவனாகவும், தர்ம நெறி மாறாமல் வாழ்வதில் உறுதியானவனாகவும் இருக்க வேண்டும். இரண்டாவதாக, செய்ந்நன்றி மறவாதவனாக இருக்க வேண்டும்.மூன்றாவதாக, அவன் நாட்டு மக்கள் அவனிடம் அன்பு பூண்டவர்களாகவும், தொல்லைகள் ஏதுமற்று சௌக்கியமாக வாழ்பவர்களாகவும் இருக்க வேண்டும்.-நான்காவதாக, அவனுடைய அமைச்சர்களும் படைத் தலைவர்களும் அவனிடம் விசுவாசத்தோடிருப்பவர்களாக இருக்க வேண்டும். ஐந்தாவதாக,அவனுடைய கோட்டை பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.-ஆறாவதாக, பலம் வாய்ந்த நால்வகைப் படைகளையும் வைத்திருப்பவனாக இருக்க வேண்டும். ஏழாவதாக, அவன் தனக்கு உண்மையான உத்தம நண்பனாக இருக்க வேண்டும். எதற்காகவும் நட்பை விட்டுக் கொடாத
திடசித்தம் உள்ளவனாக இருக்க வேண்டும்.-இத்தகைய அரச நண்பனைப் பெற்றால் அதுவே பெரும் நிதியாகும். இத்தகைய நண்பனைப் பெற்றவன் பாக்கியசாலி.
ப்ராக்ஞம் குளீநம் சூரம் ச தக்ஷம் தாதாரமேவ ச |
க்ருதக்ஞம் த்ருதிமந்தம் ச கஷ்டமாஹுரரிம் புதா: || 210
உயர் குடியில் பிறந்தவனாகவும்,படிப்பும் அறிவும் நிறைந்தவனாகவும், சூரனாகவும், திறமையாகச் செயல்படுபவனாகவும், செய்ந்நன்றியும் ஒழுக்கமும் உள்ளவனாகவும், உறுதியானவனாகவும் எதிரி அரசன் இருப்பானேயானால் அவனை வெல்வது அரிது.
அத்தகையோனிடம் சந்தி செய்து கொள்வதே நல்லது.
ஆர்யதா புருஷஞானம் ஷெளர்யம் கருணவேதிதா | ஸ்தௌளலக்ஷ்யம் ச ஸததமுதா ந குணோதய: || 211
உயர் குணங்களும், மனிதர்களின் இயல்புகளைப் பற்றிய அறிவும், பராக்ரமமும், கருணையும், ஒழுக்கமும், வள்ளல் தன்மையும், எப்போதும் நட்பும் இன்றி பகையும் இன்றி இருக்கும்உதாசீன புத்தி இவைகளைக் கொண்ட அரசனையும் நண்பனாக்கிக் கொள்ள வேண்டும்.
க்ஷேம்யாம் ஸஸ்யப்ரதாம் நித்யம் பசுவருத்தி கரீமபி|
பரித்யஜேந் ந்ருபோ பூமிமாத்மார்தமவிசாரயந்|| 212
மிகுந்தபடி விளைச்சலைத் தரக் கூடியதும், நீர்வசதி மிக்கதும், பயன் தரும் மரங்கள் நிறைந்ததும், புல்வெளிகள் இருப்பதால் பசுக்களுக்கு விருத்தி ஏற்படுத்துவதுமான பூமி உயர்ந்த பூமி. இதைக் கொடுத்து சமாதானம் செய்து கொள்ளக்கூடாது. சாதாரண
பூமியையே கொடுக்க வேண்டும். ஆனால், தன்னைக் காத்துக் கொள்ள வேறு வழியில்லாதபோது, தன்னைவிடப் பெரியதல்ல இந்தப் பூமி என்று எண்ண வேண்டும். தன்னைக் காத்துக் கொண்டால் எதிர் காலத்தில் இழந்த பூமியை சம்பாதிக்க முடியும்.
தானே இல்லாதபோது அந்தப் பூமியால் ஏது பயன்? எனவே, தன்னைக் காத்துக் கொள்ள, எத்தகைய வளமான பூமியையும் விட்டுத்தான் கொடுக்க வேண்டும்.
ஆபதர்த்தம் தனம்ரக்ஷேத் தாராந் ரக்ஷேத் தநைரபி
ஆத்மாநம் ஸததம் ரக்ஷேத் தாரைரபி தநைரபி || 213
அரசன் மிகுந்த நிதியை சேர்த்து வைக்க வேண்டும். நாட்டுக்கு ஆபத்து வந்துற்ற காலத்து அந்த நிதியைக் கொடுத்து காத்துக்கொள்ள வேண்டும்.அந்த நிதியால் அந்தப்புரப் பெண்களையும் காப்பாற்ற வேண்டும். நிதியையும் காப்பாற்ற முடியாது, அந்தப்புரப் பெண்களையும் காப்பாற்ற முடியாது என்னும்போது தப்பித்துச் சென்று தன்னைக்
காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இப்படிக் கூறப்பட்ட விஷயத்தில் ஒன்றை நன்கு புரிந்து
கொள்ள வேண்டும். அரசன், பொக்கிஷத்தில் நிதி சேர்ப்பது பொருளாசையால் அல்ல. தன்னுடைய நாட்டை எதிரி தாக்க வரும்போது, அவனை வெல்ல முடியாது என்ற நிலையில் அவனிடம் சமாதானம் செய்து கொள்ள வேண்டும். அப்போது சிறிது பூமியையோ அல்லது பெரும் நிதியையோ அல்லது இரண்டையுமோ கொடுத்து சமாதானம் செய்ய வேண்டி வரும். இதற்காகவும் நிதி சேர்க்க வேண்டும். ஆனால், எல்லா சமயங்களிலும் நிதி காப்பாற்றும் என்று சொல்ல முடியாது. சமாதானத்துக்கு உடன்படாமல் எதிரி அரசன்
தாக்கும்போது, மிகுந்த நிதியோடும், நல்ல துணைவர்களோடும் தன் அந்தப்புரத்துப் பெண்களை ரகசிய வழியாக வெளியேறச் செய்ய வேண்டும். அதற்குக்கூட அவகாசமின்றி தான் எதிரியிடம் பிடிப்பட்டு விடுவோம் என்று தெரிந்தால், தப்பித்துச் சென்று தன்னைக்
காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
ஸஹ ஸர்வா: ஸமுத்பந்நா: ப்ரஸமீ யா ஆபதோ ப்ருஷம் |
ஸம்யுக்தாம் ச வியுக்தாம் ச ஸர்வோபாயாந் ஸ்ருஜேத் புத: || 214
இயற்கையாலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களாலும், எதிரிகளாலும் என்று பலப்பல இன்னல்கள் ஒரே சமயத்தில் தன்னைத் தாக்கினாலும், அறிவாளியான மன்னன் சோர்ந்து போகக்கூடாது.-எந்த எந்த உபாயங்களை, எந்த எந்த இடத்தில், எவர் எவரிடம் எவ்வாறு பிரயோகம் செய்தால் நிலைமைகளைச் சீர்திருத்தலாம் என்று யோசித்து கவலையும் பதட்டமுமின்றி காரியமாற்ற வேண்டும்.
உபேதாரமுபேயம் ச ஸர்வோபாயாஷ்ச க்ருத்ஸ்நஷ: |
ஏதத் த்ரயம் ஸமாஸ்ரித்ய ப்ரயதேதா அர்த்தஸித்தயே 215
முதலில், தான் செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன என்று அனைத்தையும் வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.-அடுத்ததாக, அதைச் செய்ய, தன்னிடமுள்ள சக்திசாமர்த்தியங்களைப் பற்றி யோசிக்க வேண்டும்.-மூன்றாவதாக, தன்னுடைய சக்தி, சாமர்த்தியங்களைக் கொண்டு தான் செய்ய வேண்டிய காரியங்களை எப்படியெல்லாம்
செய்ய முடியும் என்னும் உபாயங்களைப் பற்றித் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு மூன்று விஷயங்களை நன்கு ஆலோசித்துச் செய்தால் நிச்சயம் நினைத்ததை அடையலாம்.
ஏவம் ஸர்வம் இதம்ராஜா ஸஹ ஸம்மந்த் ய மந்த்ரிபி: |
வ்யாயம்யா ஆப்த்ய மத்யாஹ்நே போக்துமந்த: புரம் விஷேத் |-216
இவ்வாறாக அரசன் மத்யான்னம் வரை மந்திரிபிரதானிகளுடன் யோசித்தல், கப்பம் வாங்குதல் முதலான ராஜ காரியங்களைக் கவனிக்க வேண்டும். இன்றைய காலக் கணக்குப்படிமத்யான்னம் ஒன்று அல்லது ஒன்றரை மணியளவில் நீராடி, உண்டு.களைப்பு தீர்த்துக் கொள்வதற்காகத் தன் மாளிகைக்குச் செல்ல வேண்டும்.
தத்ராத்ம பூதை: காலக்ஞைரஹார்யை: பரிசாரகை: | சுபரீக்ஷிதமந்நாத்ய மத்யாந் மந்த்ரைர் விஷாஅபஹை: II 217
அரசனுக்கு உணவு சமைக்கும் தலைமைச் சமையல்காரன், புதிய ஆளாகவோ, அரண்மனையைச் சேர்ந்தவனாகவோ இருந்தாலும்இதுநாள்வரை கூடஇருந்தவர்களைத் தவிர்த்து மற்றவர்களைசமையல் கூடத்துக்குள் சேர்க்கக் கூடாது.-அரசன் தான் சாப்பிடுவதற்கு முன்பு, தனக்குப் பரிமாறப்பட்ட உணவுகளில் சிறிது சிறிது எடுத்து முதலில் நெருப்பிலும் பிறகுபறவைகளுக்கும் போட வேண்டும்.-விஷம் கலந்த உணவை நெருப்பில் போட்டதும் நெருப்புபடபடவென்ற ஓசையோடு நீலநிறமாக எரியும். பறவைகள் சாப்பிட்டதும் இறந்து போகும்.-இவ்வாறு பரீட்சித்துப் பார்த்த பிறகு அரசன் சாப்பிட வேண்டும்.
விஷக்னைரகதைஷ் சாஅஸ்ய ஸர்வத்ரவ்யாணி யோஜயேத் 11
விஷக்நாநி ச ரத்நாநி நியதோ தாரயேத் ஸதா |-218
விஷத்தை முறியடிக்கும் மூலிகைகளோடு வைத்தியர்கள் அருகிலிருக்க வேண்டும். விஷத்தை முறிக்கும் ரத்தினங்களை எப்போதும் அணிந்து கொண்டிருக்க வேண்டும்.
பரீக்ஷிதா: ஸ்த்ரியஷ் சைநம் வ்யஜநோதகதூபநை: 1
வேஷா ஆபரணஸம்சுத்தா: ஸ்ப்ருஷேயு: சுசமாஹிதா: 219
அரச மாளிகைக்குள் சாம்பிராணி, அகில் முதலானவற்றைக் கொண்டு தூபம் போட வரும் பெண்கள், அரசனுக்கு சாமரம் வீச வரும் பெண்கள், தண்ணீர் கொண்டு வரும் பெண்கள் – இவர்கள் அரசனுடைய சயனகிருஹம் வரை செல்பவர்கள். எனவே, இவர்கள் வேலை செய்ய அரண்மனைக்குள் வரும்போது, அவர்களின் ஆடை ஆபரணங்களை நன்கு சோதித்த பிறகே உள்ளேஅனுப்ப வேண்டும்.ஒற்றர்களைக் கொண்டு அவர்களின் முழு நேர நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும்.
ஏவம் ப்ரயத்நம் குர்வீத யாநஷய்யா ஆஸநாஅஷநே |
ஸ்நாநே ப்ரஸாதநே சைவ ஸர்வா அலங்காரகேஷு ச|| 220
அவ்வாறே அரசன் ஏறுவதற்கு முன் வாகனங்களை நன்குசோதிக்க வேண்டும். வாகன ஓட்டிகளையும் சோதிக்க வேண்டும்.-அவர்களையும் முழு நேரமும் ஒற்றர்களைக் கொண்டு கண்காணிக்கவேண்டும். அவ்வாறே அவரது படுக்கை, படுக்கை விரிப்பவர்கள், நீராடும் தண்ணீர், நீராட்டுவிப்பவர்கள், அரசன் அணியும் ஆடை, ஆபரணங்கள், அலங்கரிப்பவர்கள் சோதிக்கப்பட வேண்டும்.இவற்றில் அஃறிணைப் பொருட்களான வாகனம், படுக்கை,தண்ணீர், ஆபரணங்கள், ஆடைகள் முதலிய அனைத்தும் ஒவ்வொரு
முறையும் அரசன் உபயோகப்படுத்துவதற்கு முன்பு சோதிக்கப்பட வேண்டும்.-வாகன ஓட்டிகள், படுக்கை விரிப்பவர்கள், நீராட்டுவிப்பவர்கள்,அலங்கரிப்பவர்கள், சாமரம் வீசுபவர்கள், தூபம் போடுபவர்கள்,/தண்ணீர் கொண்டு வருபவர்கள் முதலான அனைவரையும் ஒற்றர்களைக் கொண்டு இரவும் பகலும் கண்காணிக்க வேண்டும்.
புக்தவாந் விஹரேச் சைவ ஸ்த்ரீபிரந்த:பூரே ஸஹ |
விஹ்ருத்ய து யதாகாலம் புந: கார்யாணி சிந்தயேத் |-221
அரசன் உணவு உண்ட பிறகு தன்னிஷ்டமாக சற்று நேரம்நடக்க வேண்டும். அந்தப்புரப் பெண்கள் வந்தாலும் அவர்களுடன்பேசலாம். அதன் பிறகு மூன்று மணியளவில் அடுத்தபடியான தன் அலுவல்களைக் கவனிக்க வேண்டும்.
அலங்க்ருதஷ்ச ஸம்பயேதாயுதீயம் புநர்ஜநம்
வாஹநாநி ச ஸர்வாணி ஷஸ்த்ராண்யாபரணாநி ச|| 222
அரசன், சர்வாலங்கார பூஜிதனாகக் கிளம்பி, யானைப் படை, குதிரைப் படை, தேர்ப் படை, காலாட் படை முதலானவைகளைப் பார்வையிட வேண்டும். ஆயுதச் சாலைகளையும், ஆபரணச் சாலைகளையும் பார்வையிட வேண்டும்.
ஸந்த்யாம் சோபாஸ்ய ஷ்ருணு யாதந்தர்வேஷ்மநி ஷஸ்த்ரப்ருத் |
ரஹஸ்யா ஆக்யாயிநாம் சைவ ப்ரணிதீநாம் ச சேஷ்டிதம் || 223
சந்தி நேரத்தில் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும். அதன் பிறகு ஆயுதபாணியாக ரகசிய அறையில் ஒற்றர்களைச் சந்திக்க வேண்டும். தனித்தனியாக அவர்களிடம் விவரங்களை அறிய வேண்டும்.
கத்வா கக்ஷாந்தரம் த்வந்யத்ஸமனுக்ஞாப்ய தம் ஜநம் |
ப்ரவிஷேத் போஜநார்தம் ச ஸ்த்ரீவருதோ அந்தபுரம் பு : !! 224
ஒரு மாளிகையின் ரகசிய அறையில் ரகசிய ஒற்றர்களை, மிக முக்கியமானவர்களைப் பார்த்துவிட்டு பிறகு வேறொரு அறையில் காத்திருக்கும் பொதுவான ஒற்றர்களைச் சந்திக்க வேண்டும். அவர்களிடமும் தனித்தனியாகப் பேசி ரகசியச் செய்திகளை அறிந்து
கொள்ள வேண்டும். அதன் பிறகு உணவு உண்பதற்காக பணிமகளிருடன் அந்தப்புரத்துக்குப் போக வேண்டும்.
தத்ரபுக்த்வா புந: கிஞ்சித் தூர்யகோஷை: ப்ரஹர்ஷித: |
ஸம்விஷேத் து யதாகால முத்திஷ்டேச்ச கதக்லம: I-225
அங்கு உணவை உண்ட பிறகு, சிறிது நேரம் கீதம், வாத்தியங்களைக் கேட்ட பிறகு உறங்கச் செல்லவேண்டும் அதிகாலையில் உற்சாகத்தோடு துயில் எழ வேண்டும்.
ஏதத் விதாநமாதிஷ்டேதரோக: ப்ருதிவீபதி: 1
அஸ்வஸ்த: ஸர்வமேதத் து ப்ருத்யேஷு விநியோஜயேத் || 226
ஆரோக்கியமான அரசன் இவ்வாறாகக் காரியங்களாற்ற வேண்டும். உடல் நிலை கெட்டிருக்கும்போது தக்க மந்திரிகளைக் கொண்டு காரியமாற்றச் செய்ய வேண்டும்.
(ஏழாம் அத்தியாயம் முற்றிற்று.)
————
அத்தியாயம் – 8
வ்யவஹாராந் தித்ருக்ஷஸ்து ப்ராஹ்மணை: ஸஹ பார்திவ: 11
மந்த்ரக்ஞைர் மந்த்ரி பிஷ்சைவ விரீத: ப்ரவிஷேத் ஸபாம்|| 1
நாட்டு விவகாரங்களைக் கவனிக்கவும், தன்னைக் காண வருபவர்களிடம் அவர்கள் குறை நிறைகளை விசாரித்தறியவும், நீதியோடு வாத பிரதிவாதங்களை விசாரித்தறியவும் வேண்டி அரசன், ஆலோசனைகள் வழங்கத்தக்க மந்திரிகள், பஞ்சாங்கப் பிராம்மணர்கள் முதலானோருடன், அடக்கமாக சபா மண்டபத் துக்குள் பிரவேசிக்க வேண்டும்.
தத்ராஸீந: ஸ்திதோவாபி பாணிமுத்யம்ய தக்ஷிணம் |
விநீதவேஷா ஆபரண பஷ்யேத் கார்யாணி கார்யிணாம் 2
அரசன், தனது சிம்மாசனத்தில் அமர்ந்து, சபை நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என்பதை தனது வலது கையை உயர்த்தி சைகையால் உணர்த்த வேண்டும். தன்னுடைய விநய குணமே தனது ஆபரணங்களாக விளங்கும் வண்ணம், தான் அமர்ந்திருப்பது
தர்மாசனம் என்ற பக்தியோடு அன்றைய விவகாரங்களைக் கவனிக்கவேண்டும்.
ப்ரத்யஹம் தேஷத்ருஷ்டைஷ்ச ஷாஸ்த்ர த்ருஷ்டைஷ் ச ஹேதுபி: |
அஷ்டாதஷசு மார்கே நிபத்தாநி ப்ருதக் ப்ருதக் | 3
வழக்குகளை விசாரிக்க வேண்டி வரும்போது, சாஸ்திரம்கூறியிருப்பதையும், சாட்சிகள் கூறுவதையும் நன்கு கவனிக்கவேண்டும்.-வழக்குகள் மொத்தம் பதினெட்டு வகைப்படும்:
தேஷாமாத்யம்ருணா ஆதாநம் நிக்ஷேபோ அஸ்வாமிவிக்ரய:
ஸம்பூய ச ஸமுத்தாநம் தத்தஸ்யா அநபகர்ம ச ||-4
வேதநஸ்யைவ சாஆதாநம் ஸம்விதஷ்ச வ்யதிக்ரம்: |
க்ரயவிக்ரயா அநுஷயோ விவாத: ஸ்வாமி பாலயோ: || 5
ஸீதா விவாததர்மஷ்ச பாருஷ்யே தண்டவாசிகே |
ஸ்தேயம் ச ஸாஹஸம் சைவ ஸ்த்ரீஸங்க்ரஹணமேவச 6
ஸ்த்ரீபும் தர்மோ விபாகஷ்ச த்யூதமாஹ்வய ஏவச பதாந்யஷ்டா தஷைதாநி வ்யவஹாரஸ்திதாவிஹ || 7
1. கடன் கொடுக்கல், வாங்கல்
3. தன் உடைமை அல்லாதவற்றை விற்றல்
2. அடைக்கலமாக வைக்கக் கொடுத்த பொருள் விவகாரம்
4. கூட்டுத் தொழிலில் வரும் விவகாரங்கள்
5. வாக்குத் தவறுதல்
6. கூலி கொடாமை
7. வாங்குதல் விற்றலில் வரும் விவகாரங்கள்
8. இடையனுக்கும் எஜமானனுக்கும் இடையில் வரும் விவகாரங்கள்
9. ஊர் எல்லைகளைப் பற்றியவை
10. ஒருவர் மீதொருவர் வசை மொழிதல்
11.ஏமாற்றிபணத்தைப் பறித்தல்
12. பலாத்காரமாகப் பணத்தைப் பறித்தல்
13. பெண் நெறியிழந்து பிற ஆடவனைச் சேர்தல்
14. ஆண், பெண் விவகாரங்கள்-15. பாகப் பிரிவினை
16. சூதாட்டம்
17. பந்தயம்
18. உடன்படிக்கையை மீறுதல்–என்னும் இவையே அந்தப் பதினெட்டாகும்.
ஏ ஸ்தாநேஷு பூயிஷ்டம் விவாதம் சரதாம் ந்ருணாம் |
தர்மம் ஷாஷ்வதமாஸ்ரித்ய குர்யாத் கார்ய விநிர்ணயம் ||–8
இவ்வாறாக வரும் விவகாரங்களை நன்கு விசாரிக்க வேண்டும்.-சாதாரண வழக்குகள் அதிகமாக வரவே செய்யும். இவைகளை விசாரித்துத் தர்மப்படி தீர்ப்பு வழங்க வேண்டும்.
யதாஸ்வயம் நகுர்யாத்து ந்ருபதி: கார்யதர்ஷநம் |
ததா நியுஞ்ஜ்யாத் வித்வாம்ஸம் ப்ராஹ்மணம் கார்யதர்ஷநே || 9
அரசன், தான் முக்கியமான மற்றகாரியங்களில் ஈடுபட்டிருக்கும்போதோ அல்லது பிணியுற்றிருக்கும் போதோ நேரடியாக இந்த வழக்குகளை விசாரிக்க முடியாது. எனவே, அப்போது கற்றறிந்த பிராம்மணனைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.
ஸோ அஸ்ய கார்யாணி ஸம்பஷ்யேத் ஸப்யைரேவ த்ரிபிர்வ்ருத: |
ஸபாமேவ ப்ரவிஷ்யாகிர்யாமாஸீ : ஸ்தித ஏவ வா || 10
அரசனால் நியமிக்கப்பட்ட அந்தப் பிராம்மணன் தன்னுடன் மூன்று அறிஞர்களை அழைத்துக் கொண்டு, விசாரணை மண்டபத்துக்கு வரவேண்டும். அங்கே வழக்குகளை நின்றுகொண்டோ அல்லது ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டோ விசாரிக்கலாம்.
யஸ்மின் தேஷே நிவீதந்தி விப்ரா வேதவிதஸ் த்ரய: | ராக்ஞஷ் சாஅதிக்ருதோ வித்வாந் ப்ரஹ்மணஸ் தாம் ஸபாம் விது: || 11
மூன்று வேதங்களையும் அறிந்த மூன்று பிராம்மணர்களும் அரசனால் நிர்ணயிக்கப்பட்ட பிராம்மணனும், ஆக இந்த நால்வர் இருக்கும் சபையானது பிரம்மதேவருடைய சபைக்குச் சமம் என்று அறிஞர் கூறுவர்.
தர்மோ வித்தஸ் த்வதர்மேண ஸபாம் யத்ரோபதிஷ்டதே 1
ஷல்யம் சாஅஸ்ய ந க்ருந்தந்தி வித்தாஸ் தத்ர ஸபாஸத: |-12
அதர்மத்தால் நிலைகுலைந்த தர்மம், தீர்ப்புக்காக வழக்காடு மன்றத்துக்கு வரும்போது, நீதிபதி ஸ்தானத்தில் இருக்கும் அந்த நால்வரும் தர்மத்தைக் காப்பாற்றாவிடில் மிகுந்த பாவத்துக்காளாவர்.
ஸபாம் வா ப்ரவேஷ்டவ்யம் வக்தவ்யம்வா ஸமஞ்ஜஸம்
அப்ரூவந் விப்ருவந்வாஅபி நரோ பவதி கிள்விஷீ || 13
எடுத்ததற்கெல்லாம் வழக்காடு மன்றத்துக்குப் போகக் கூடாது.போக நேர்ந்தால், நீதிபதிகள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையையே கூற வேண்டும். அவ்வாறின்றி பொய் பேசுபவனும், உண்மையை மறைத்து மெளனமாக இருப்பவனும் உடனடியாக பாபத்தை அடைவார்கள்.
யத்ர தர்மோ ஹ்யதர்மேண ஸத்யம் யத்ரா அந்தேந ச |
ஹந்யதே ப்ரேக்ஷமாணாநாம் ஹதாஸ் தத்ர ஸபாஸத: || 14
எங்கு,நீதிபதிகள் முன்னிலையிலேயே தர்மம் அதர்மத்தாலும், சத்தியம் பொய்யாலும் அடிக்கப்படுகிறதோ அங்கு நீதிபதிகள் அந்தப் பாபத்தால் அடிக்கப்படுகிறார்கள்.
தர்மஏவ ஹதோ ஹந்தி தர்மோ ரக்ஷதி ரக்ஷித: |
தஸ்மாத் தர்மோ ந ஹந்தவ்யோ மா நோ தர்மோ ஹதோ வதீத் || 15
எவன் தர்மத்தை அழிக்கிறானோ, அவனைத் தர்மம் அழிக்கும். எவன் தர்மத்தைக் காப்பாற்றுகிறானோ அவனை தர்மம் காப்பாற்றும். எனவே, தர்மத்தை அழிக்கக் கூடாது. தர்மம் அழியாமலிருந்து நம்மைக் காப்பாற்றட்டும்.
வ்ருஷோ ஹி பகவாந் தர்மஸ்தஸ்ய ய: குருதே ஹ்யலம் |
வ்ருஷளம் தம் விதுர்தேவாஸ் தஸ்மாத் தர்மம் ந லோபயேத் Il-16
அனைத்து நன்மைகளையும் அளிக்கின்ற தர்மம் மிகமிக உயர்ந்தது ; தெய்வ உருவானது. இத்தகைய தர்மத்தை எவன் உதாசீனப்படுத்துகிறானோ, அவனை, தர்மத்தைக் கொல்பவனாக எண்ண வேண்டும்.-மழை இந்த இடம், அந்த இடம் என்று பாகுபாடின்றி எங்கும் பொழியும். அவ்வாறே தர்மமும் படித்தவன் படிக்காதவன்,
பிராம்மணன் – சூத்ரன், அரசன் – ஆண்டி என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காது. யாரெல்லாம் தன்னைக் காப்பாற்றுகிறார்களோ,-அதாவது தர்மம் தவறாமல் நடக்கிறார்களோ அவர்களையெல்லாம் தர்மம் காப்பாற்றும்.
எனவே எப்போதும் தர்ம மறிந்து, தர்ம வழியில் வாழ்க்கைநடத்த வேண்டும்.
ஏக ஏவ சுஹ்ருத் தர்மோ நிததே அப்யனு யாதிய: | ஷரீரேண ஸமம் நாஷம் ஸர்வமந்யத்தி கச்சதி || 17
மனிதனுக்கு தர்மம் ஒன்றே நல்ல நண்பன். அவனுடைய நன்மையை விரும்பும் நண்பன். மரணத்துக்குப் பிறகும் கைவிடாமல் உடனிருக்கும் நண்பன். மற்றவையெல்லாம் மரணத்தோடு தொடர்பற்றுப் போகும்.
பாதோ அதர்மஸ்ய கர்தாரம் பாத: ஸாஹிணம்ருச்சதி |
பாத: ஸபாஸத: ஸர்வாந் பாதோ ராஜாநம்ருச்சதி || 18
தர்மத்துக்கு நான்கு கால்கள். வழக்கு விசாரணையில் தர்மம்நசுக்கப்படுமானால் அதனால் ஏற்படும் பாபமும் நான்குபாகங்களாகும். ஒரு பாகம், அநியாயம் செய்தவனைச் சேரும்.அடுத்த பாகம், பொய்சாட்சி சொன்னவனைச் சேரும். மூன்றாவதுபாகம், நீதி விசாரணை நடத்திய நீதிபதிகளைச் சேரும். நான்காவது பாகம், அரசனைச் சேரும்.
ராஜா பவத்யநேநாஸ்து முச்யந்தே ச ஸபாஸத: 1
ஏநோ கச்சதி கர்தாரம் நிந்தாஅர்ஹோ யத்ர நிந்த்யதே |-19
வழக்கில்பாபிகள் தண்டிக்கப்பட்டால், அரசனுக்குப்பாபம் பற்றாது; நீதிபதிகளும் பாபத்தை அடைய மாட்டார்கள். பாபிகள் யார் யாரோ அவர்களையே பாபம் பற்றும்.
ஜாதிமாத்ரோபஜீவீவா காமம் ஸ்யாத் ப்ராஹ்மணப்ருவ: 11
தர்மப்ரவக்தா ந்ருபதேர் நது சூத்ர: கதஞ்சந || 20
வழக்கை விசாரிக்க. மூன்று வேதங்களையும் படிக்காத ஜாதியால் மட்டும் பிராம்மணனாக இருப்பவனைக்கூட அரசன் விருப்பப்பட்டால் நியமிக்கலாம். ஆனால் சூத்திரனை அந்தப்
பதவிக்கு நியமிக்கக் கூடாது. இதற்கான காரணத்தைப் பார்ப்போம்.-பிராம்மணன் வேதம் படிக்காதவனாக இருக்கலாம். ஆனால் தாத்தா, தந்தை வழியாக தர்மங்களைப் பற்றிய ஞானம் முழுமையாக இருக்கும். தான் நன்கு விசாரிக்காமலோ, வேறு எதற்காகவோ
தவறான தீர்ப்பளித்தால், நீதியைக் கேட்டு வந்தவனுக்கு நீதி கிடைக்காமல் போனால், அதனால் தான் அடையும் பாபகதி என்ன என்பது தெரியும். பாபத்தைக் கண்டு பயப்படுவான். தர்மத்தை அனுஷ்டிப்பதும், தர்மம் எது என்று எடுத்துரைப்பதுமே
பிராம்மணனின் முழுநேர வேலை. எனவே இத்தகையவன் தவறான தீர்ப்பளிக்க மாட்டான்.
சூத்திரன் முழுநேரமும் உழைப்பவன். சாஸ்திர அறிவு அவனுக்குக் கிடையாது. பாபத்தின் பலன் எவ்வளவு கொடியது என்று கேள்விப்பட்டிருந்தாலும்கூட, அது அவ்வளவு ஆழமாக
அவன் மனத்தில் பதிந்திருக்காது. மேலும் தர்மம் மிகமிக நுட்பமானது. தர்ம சாஸ்திரத்தை நன்கு அறிந்தவர்களேகூட சில சமயம் தர்மத்தை நிர்ணயிப்பதில் திணறுவார்கள்.
சாட்சிகளை விசாரித்தும், வாதப்பிரதிவாதங்களைக் கேட்டும் மட்டும் ஒரு வழக்கில் நீதியை நிலைநிறுத்த முடியாது. கூரிய மதியும், தர்மத்தின் நுட்பங்களும் தெரிந்திருக்கும் ஒருவனே வழக்கில் உண்மையை அறிய முடியும்.
யஸ்ய சூத்ரஸ்து குருதே ராக்ஞோ தர்மவிவேசநம் |
தஸ்ய சீததி தத்ராஷ்ட்ரம் பங்கே கௌரிவ பஷ்யத: ||-21
எந்த அரசன் ஞானமே இல்லாத ஒருவனை நீதிபதி ஸ்தானத்தில் நிறுத்துகிறானோ, அவனுடைய ராஜ்ஜியம், புதைச் சேற்றில்அகப்பட்ட பசுவைப் போல, பார்த்துக் கொண்டிருக்கும் போதே நசித்து விடும்.
யத் ராஷ்ட்ரம் சூத்ரபூயிஷ்டம் நாஸ்திகா ஆக்ராந்தமத்விஜம் |
விநஷ்யத்யாசு தத்க்ருத்ஸ்நம் துர்பிக்ஷ வியாதி பீடிதம் || 22
நீதிமான்களும், தர்மபுத்திரர்களும், சிரேஷ்டர்களும் இல்லாதநாடு பஞ்சத்தாலும் நோய்களாலும் நசிக்கும்.
தர்மா ஆஸநமதிஷ்டாய ஸம்வீதாஅங்க: ஸமாஹித: |
ப்ரணம்ய லோகபாலேப்ய: கார்யதர்ஷநமாரபேத் |-23
நீதிபதி வழக்கை விசாரிக்க தனக்குரிய ஆசனத்தில் அமர வேண்டும். உடலை நன்கு போர்த்திக் கொண்டிருக்க வேண்டும். அமர்ந்ததும் லோகபாலர்களை வணங்க வேண்டும். (இந்திரனும்,அக்னியும், யமதர்மனும், நிருதியும், வருணனும், வாயுவும்,குபேரனும், ஈசானியனும் லோகபாலர்கள்.) அதன் பிறகு வழக்கைவிசாரிக்கத் தொடங்க வேண்டும்.
அர்தா அநர்தாவுபௌ புத்வா தர்மாதர்மெள ச கேவலௌ |
வர்ணக்ரமேண ஸர்வாணி பஷ்யேத் கார்யாணி கார்யிணாம் 24
வழக்கின் தன்மையை அறிந்து, தர்மத்தையும் அதர்மத்தையும்நன்கு பரிசீலித்து, அந்த வழக்கினால் யாருக்கு நன்மை யாருக்குதீமை என்பதையும் யோசித்து சாட்சிகளை விசாரிக்க வேண்டும்.சாட்சிகள் இருக்கும்போது பிராம்மணரை முதலிலும், க்ஷத்திரியரைஅடுத்தும், வைசியரை அதற்கடுத்தும், இறுதியாக சூத்திரரையும்விசாரிக்க வேண்டும்.-முதலில் சொன்ன சாட்சிகளின் சாட்சியத்தைக் கேட்டு பின்னால் வரும் சாட்சிகள் பிறழக்கூடும். எனவே சத்தியத்துக்கும், தர்மத்துக்கும் கட்டுப்பட்டவர்களை முதலில் விசாரிக்க வேண்டும்.
பாஹ்யேர் விபாவயேல் லிங்கைர் பாவமந்தர்கதம் ருணாம் 11
ஸ்வரவர்ணேங்கிதா ஆகாரைஷ்சக்ஷஷா சேஷ்டிதேந ச |||-25-
ஆகாரைரிங்கிதைர் கத்வா சேஷ்டயா பாஷிதேந ச
நேத்ரவக்த்ரவிகாரைஷ் ச க்ருஹ்யதேஅந்தர்கதம் மந:-26-
வெறுமனே சாட்சிகள் சொல்லும் வார்த்தைகளை மட்டும் கேட்டுக் கொள்ளக் கூடாது. அவர்களை விசாரிக்கும்போது, குரலில் ஏற்படக்கூடிய நடுக்கம், பதட்டம், நிமிர்ந்து பார்க்க முடியாமல் தடுமாறுதல், உடல் நெளிதல், கைகளையும் கால்களையும் சாதாரணமாக வைத்திருக்க முடியாமல் திணறுதல், முகம் நிறம் மாறுதல், கண்களில் தோன்றும் பாவங்கள், உடல் அசைவுகள் இவை அனைத்தையும் கண்காணிக்க வேண்டும்.
மேலும் பேசுவதற்கு முன்பு எச்சிலை விழுங்குதல், விசாரணைக்காக எழுந்து நடந்து வரும்போது நடையிலுள்ள தன்மைகள் இவைகளையும் கண்காணிக்க வேண்டும்.
பாலதாயாதிகம் ரிக்தம் தாவத் ராஜா அநுபாலயேத்
யாவத் ஸஸ்யாத் ஸமாவ்ருத்தோ யாவச்சா அதீதஷைஷவ: I-27
தாய் தந்தையிழந்த சிறுவனுடைய சொத்தை, மற்றவர்கள் அபகரிக்காமல் அரசே காக்க வேண்டும். அவன் குருகுலத்தில் படித்தால் படித்து முடித்து திரும்ப வந்த பிறகு அவனிடம் சொத்தை ஒப்படைக்க வேண்டும். அன்றேல் சிறுவன் வாலிப வயதை அடைந்ததும் அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
வஷா அபுத்ராசு சைவம்ஸ்யாத் ரக்ஷணம் நிஷ்குலாசு ச
பதிவரதாசு ச ஸ்திரீஷு விதவாஸ்வாதுராசு ச || 28
கணவனால் கைவிடப்பட்ட மலடிகள், கணவனையும் பிள்ளைகளையும் இழந்த பெண்கள், நாட்டை விட்டுப் போனவனுடைய மனைவி, அனாதையான பெண்கள், விதவைகள் – இவர்களின் சொத்துகளையும் அரசனே பாதுகாக்க வேண்டும்.
ஜீவந்தீநாம்து தாஸாம்யே தத் தரே : ஸ்வபாந்தவா: | தாந்சிஷ்யாச் செளரதண்டேந தார்மிக ப்ருதிவீபதி: |-29
அவர்களுடைய சொத்துகளை உறவினர்கள் அபகரித்துக் கொண்டால், அதைத் திருட்டுக் குற்றமாகவே கொள்ள வேண்டும். திருட்டுக்குரிய தண்டனையைக் கொடுக்க வேண்டும்.
ப்ரநஷ்டஸ்வாமிகம் ரிக்தம் ராஜா த்ரயப்தம் நிதாபயேத் |
அர்வாக் த்ரயப்தாத் தரேத் ஸ்வாமீ பரேண ந்ருபதிர் ஹரேத் |-30
சொத்துக்கள் யாருடையது என்று தெரியாதபோது அந்தச் சொத்துகள் யாருடையவை என்று வந்து தெரிவிக்க வேண்டுமெனப் பிரகடனப்படுத்த வேண்டும். உரியவர்கள் வந்தால், அந்தச் சொத்துகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மூன்று வருடங்கள் வரை தன்னுடையது என்று உரிமைகோரி யாரும் வராவிட்டால் அதை அரசாங்கச் சொத்துடன் சேர்த்துவிட வேண்டும்.
மமேதமிதி யோ ப்ரூயாத்ஸோஅனுயோஜ்யோ யதாவிதி | ஸம்வாத்ய ரூபஸங்க்யாதீர் ஸ்வாமீ தத் த்ரவ்ய மர்ஹதி |-31
இது என்னுடைய பொருள் என்று கூறிக் கொண்டு வருபவனிடம், அந்தப் பொருளைப் பற்றி அவனிடம் பல வகையாக விசாரித்து, அவன் கூறுவது உண்மைதானா என்று கண்டுபிடிக்க
வேண்டும். உரிமை யாளன் அவன்தான் என்று தெரிந்தால், அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
அவேதயாநோ நஷ்டஸ்ய தேஷம் காலம் ச தத்வத: |
வர்ணம் ரூபம் ப்ரமாணம் ச தத்ஸமம் தண்டமர்ஹதி || 32
ஒரு பொருளை, தன்னுடையது என்று கூறிக் கொண்டு வருபவனிடம், அந்தப் பொருள் எப்போது தொலைந்தது, எங்கு தொலைந்தது, அதன் உருவம் என்ன, நிறம் என்ன, எடை என்ன, மதிப்பு என்ன, எத்தனை காலமாக அவன் ஆதீனத்தில் இருந்தது என்பதை யெல்லாம் கேட்டு விசாரிக்கும்போது, அவன் பொய் கூறியிருக்கிறான், பொருள் அவனுடையதல்ல என்பது தெரிந்தால், அப்பொருளின் மதிப்புக்குத் தக்க தண்டனையை அவனுக்கு வழங்க வேண்டும்.
ஆததீதா அத ஷட்பாகம் ப்ரநஷ்டாஅதிகதாந் ந்ரூப: 1
தஷமம் த்வாதஷம் வா அபி ஸதாம் தர்ம மனுஸ்மரந்|| 33
பொருளுக்குரியவனிடம் பொருளை ஒப்படைக்கும்போது, இதுவரை அதைப் பாதுகாத்தமைக்காக அப்பொருளின் ஆறில் ஒரு பாகத்தையோ, பத்தில் ஒரு பாகத்தையோ, பன்னிரண்டில் ஒரு பாகத்தையோ அரசன் எடுத்துக் கொண்டு, மிகுதியை உரியவனிடம்
ஒப்படைக்க வேண்டும்.
ப்ரநஷ்டா அதிகதம் த்ரவ்யம் திஷ்டேத் யுக்தைரதிஷ்டிதம்
யாம்ஸ்தத்ர சௌராந் க்ருஹ்ணியாத் தாந்ராஜேபேந காதயேத் || 34
காவலர்கள் யாருடைய பொருளையாவது கண்டெடுத்துக் கொண்டு வந்தால், அதைத் தனியாக வைத்துக் காவல் காக்க வேண்டும். காவலில் இருக்கும் அவற்றை யாரேனும் திருடினால், திருடியவர்களை யானையினால் மிதிக்கச் செய்து கொல்ல வேண்டும்.
மமாஅயமிதி யோ ப்ரூயாந் நிதிம் ஸத்யேந மாநவ: |
தஸ்யா ஆததீத ஷட்பாகம் ராஜா த்வாதஷமேவ வா || 35
ஒருவன் புதையலைக் கண்டெடுத்தால், அதை எடுத்தது தான்தான் என்ற உண்மையை அவன் நிலைநாட்டினால் அப்புதையல் பொருளில் ஆறில் ஒரு பங்கையோ, பன்னிரண்டில் ஒரு பங்கையோ அரசன் எடுத்துக் கொள்ள வேண்டும். மிகுதியை புதையலைக் கண்டெடுத் தவனுக்கு அளிக்க வேண்டும்.
அந்ருதம் து வதந் தண்ட்ய: ஸ்வவித்தஸ்யா அம்ஷமஷ்டமம் |
தஸ்யைவ வா நிதானஸ்ய ஸங்க்யயா அல்பீயஸீம் கலாம் ||-36
தன்னுடையதல்லாத பொருளை, ஒருவன் தன்னுடையது என்று கூறுவானாயின், அவன் சொத்தில் எட்டில் ஒரு பங்கையோ அல்லது அவன் தன்னுடையது என்று பொய்யுரைத்த பொருளின் மதிப்பில் சிறிதளவையோ தண்டம் விதித்து வசூலிக்க வேண்டும்.
வித்வாம்ஸ் து ப்ராஹ்மணோ த்ருஷ்ட்வா பூர்வோபநிஹிதம் நிதிம் |
அஷேஷதோ அப்யாததீத ஸர்வஸ்யா அதிபதிர் ஹி ஸஹ: | 37
முன்னர் எவராலோ புதைக்கப்பட்ட நிதியை வித்வானான பிராம்மணன் கண்டெடுத்தால், அது மொத்தமும் அவனுக்கே உரியது.
யம் து பஷ்யேந் நிதிம் ராஜா புராணம் நிஹிதம் க்ஷிதௌ |
தஸ்மாத் த்விஜேப்யோ தத்வா அந்தமர்த்தம் கோஷே ப்ரவேஷயேத்-38
உரிமையாளர் யாரும் இல்லாத நிலையில் உள்ள நிதி அரசனைச் சேர்ந்தது. அரசன் அதில் பாதியை பிராம்மணர்களுக்கு அளிக்க வேண்டும். பாதியைத் தன்னுடைய பொக்கிஷத்தில் சேர்க்க வேண்டும்.
நிதீநாம்து புராணாநாம் தாதூநாமேவ ச தௌ |
அர்தபாக் ரக்ஷணாத் ராஜா பூமேரதிபதிர் ஹி : 39
பிராம்மணர்கள் தவிர்த்து,மற்றபடி கண்டெடுக்கப்பட்டபுதையலுக்கு அரசனே அதிபதி. ஏனெனில் பூமிக்கு அதிபதிஅரசனல்லவா… அரசன் விரும்பினால் புதையல் எடுத்தவனுக்கு அதில் பாதிவரை கொடுக்கலாம்.
தாதவ்யம் ஸர்வவர்ணேப்யோ ராக்ஞாசௌரைர் ஹ்ருதம் தநம்
ராஜா ததுபயுஞ்ஜாநஷ் சௌரஸ்யா ஆப்நோதி கில்விஷம்|| 40
அரசன், திருடர்கள் திருடிய சொத்தைக் கண்டுபிடித்து அதை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படியின்றி அதைத் தானே எடுத்துக் கொண்டால் அந்தத் திருடனுடைய பாபத்தை அரசன் அடைவான்.
ஜாதிஜாநபதாந் தர்மாஞ்ஷ்ரேணீதர்மாஷ்ச தர்மவித்|
ஸமீக்ஷ்ய குலதர்மாம்ஷ்ச ஸ்வதர்மம் ப்ரதிபாதயேத் |-41
தர்மம் அறிந்தவனான அரசன்,ஒரு விவகாரத்தில் தீர்ப்பு வழங்குவதற்கு ஜாதியையும், நாட்டையும் குலத்தையும், வியாபார முறையையும் பார்க்க வேண்டும்.-குற்றம் ஒன்றேயாயினும் அதை பிராம்மணன் செய்தால் பாவம் அதிகம்; தண்டனையும் அதிகம். சூத்திரன் செய்தால் தண்டனையும் பாவமும் குறைவு. இவையெல்லாம் தர்மசாஸ்திரமறிந்த
அரசனுக்குத் தெரியும். அவ்வாறே ஒவ்வொரு தேசத்திலும் இருக்கும் நடைமுறைகள் வேறுவேறாக இருக்கும். அவ்வாறே தேசத்துக்குத் தேசம் வியாபார முறைகளும் மாறுபடும்.
ஒவ்வொரு குலத்தையொட்டி பழக்கங்கள் மாறுபடும்.-இவைகளை யெல்லாம் யோசித்தே விவகாரத்தைத் தீர்க்க வேண்டும்.
ஸ்வாநி கர்மாணி குர்வாணா தூரே ஸந்தோ அபி மாநவா: |
ப்ரியா பவந்தி லோகஸ்ய ஸ்வே ஸ்வே கர்மண்யவஸ்திதா: |] 42
தத்தமது சுயதர்மத்தை அனுஷ்டிப்பவர்கள் தூர தேசத்தவர்களானாலும் அனைவருக்கும் பிரியமானவர்களாக இருப்பார்கள்.
நோத்பாதயேத் ஸ்வயம் கார்யம் ராஜா நா அப்யஸ்ய பூருவு: |
ந ச ப்ராபிதமந்யேந க்ரஸேதா அர்தம் கதஞ்சந || 43
அரசனோ, அரசனால் நியமிக்கப்பட்ட நீதிபதியோபொருள் ஆசையால் தானாக ஒரு விவகாரத்தை ஏற்படுத்தக்கூடாது. வாதப் பிரதிவாதங்களைப் பொருளாசையால் அலட்சியப்படுத்தக் கூடாது.
யதா நயத்யஸ்ருபாதைர் மருகஸ்ய மருகயு: பதம் |
நயேத் ததா அனுமாநேந தர்மஸ்ய ந்ருபதி: பதம் || 44
வேடன் தன்னால் தாக்கப்பட்ட மிருகம், தப்பியோடிய பாதையை, சிந்தியிருக்கும் அதன் ரத்தத் துளிகளைக் கொண்டு அறிவான். அவ்வாறே அரசன் அனுமானத்தால் உண்மையைக் கண்டறிய வேண்டும்.
ஸத்யமர்த்தம் ச ஸம்பஷ்யேதாத்மாநமத ஸாக்ஷிண: | தேஷம் ரூபம் ச காலம் ச வ்யவஹாரவிதௌ ஸ்தித: Il 45
வழக்கில் தீர்ப்புக் கூறுவதற்குமுன் அரசன் உண்மையைக் கண்டறிய வேண்டும். வழக்குக்கு அடிப்படைக் காரணம் வேறு ஏதேனும் இருக்குமா என்று ஆராய வேண்டும்.சாட்சிகள் உண்மையைக் கூறுகிறார்களா அல்லவா என்பதையும் அறிய வேண்டும். எந்த இடத்தில், எந்தக்காலத்தில், எவ்விதத்தில் நடந்தது என்று ஆராய வேண்டும். இப்படிக் காலத்தையும், இடத்தையும், நடந்த விஷயத்தையும், அது நடந்த முறையையும் சேர்த்து ஆராயும்போது பல உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும்.
ஸத்பிராசரிதம் யத்ஸ்யாத் தார்மிகைஷ் சத்விஜாதிபி: | தத் தேஷகுலஜாதீநாமவிருத்தம் ப்ரகல்பயேத் || 46
சாஸ்திர விற்பன்னர்களான துவிஜர்களாலும் சாதுக்களாலும் தேசத்துக் குரியதாகவும், குலத்துக் குரியதாகவும், ஜாதிக்குரியதாகவும் எந்த தர்மங்கள் வரையறுக்கப்பட்டனவோ, அவற்றுக்கு விரோத மின்றி அரசன் காரியமாற்ற வேண்டும்.
அதமர்ணா அர்த்தஸித்யர்தமுத்தமர்ணேந சோதித: |
தாபயேத் தநிகஸ்யா அர்தமதமர்ணாத் விபாவிதம் || 47
தன்னிடம் கடனாகப் பணம் பெற்றுக் கொண்டவன் தன்னை ஏமாற்றி விட்டான் என்று ஒருவன் வந்து வழக்குத் தொடர்ந்தால், அந்த வழக்கை எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும். அவனுடைய பணத்தை மீட்டு அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
யைர்யைருபாயைரர்த்தம் ஸ்வம் ப்ராப்நுயாதுத்தமர்ணிக: |
தைஸ்தைருபாயை: ஸங்க்ருஹ்ய தாபயேத்தமர்ணிகம்|| 48
பணத்தை மீட்டு அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்னும்போது அதற்கான வழிமுறைகளையும் கூற வேண்டுமல்லவா? மேலும் கடன் கொடுத்தவன் தானே மீட்டுக் கொள்ளவும் வழி கூறுகிறார்.
தர்மேண வ்யவஹாரேண சலேநா ஆசரிதேந ச 1
ப்ரயுக்தம்ஸாதயேதர்தம் பஞ்சமேந பலேந ச || 49
முதலில் வாங்கிய பணத்தைக் கொடுத்துவிடும்படி நயமாக எடுத்துரைக்க வேண்டும். அவர்கள் குலத்து மூத்தோர்களைக் கொண்டோ, உறவினர்களைக் கொண்டோ அறிவுரை கூறச் செய்ய வேண்டும்.-நான் பணம் வாங்கிக் கொள்ளவே இல்லை’ என்று அவன்
பொய்யுரைத்தால், அது பொய்தானா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பொய்தான் என்று தெரிந்தால், அவனிடமிருக்கும் சொத்தை அபகரித்து, கடன் கொடுத்தவனுக்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடுக்க வேண்டும்.
ய:ஸ்வயம் ஸாதயேதர்தமுத்தமர்ணோ அதமர்ணிகாத்
நஸ ராக்ஞா அபியோக்தவ்ய: ஸ்வகம் ஸம்ஸாதயந் தநம் || 50
கடன் கொடுத்தவன் தன் பணத்தை மீட்கவேண்டி எந்த உபாயத்தையும் செய்யலாம். கடனாளியை மிரட்டி, அடித்துத் தன் பணத்தை வசூலித்தாலும் அரசன் ஏன் இவ்வாறு செய்தாய் என்று கேட்கலாகாது. அதாவது, என்னை அடித்தான், மிரட்டினான் என்று அந்தக்
கடனாளி வழக்குத் தொடுத்தால், அந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
அர்தே அபவ்யயமாநம் து கரணே விபாவிதம் |
தாபயேத் தநிகஸ்யா அர்த்தம் தண்டலேஷம் ச ஷக்தித: |-51
கடன் வாங்கிக் கொண்டு, இல்லையென்று ஒருவன் வாதிட்டால், கடன் பத்திரம், சாட்சி முதலியவைகளைக் கொண்டு உண்மையை நிரூபித்துக் கடனைக் கொடுத்தவனுக்கு மீட்டுக்கொடுத்து, ஏமாற்றப் பார்த்தவனை, அவன் சக்திக்குத் தக்க அளவு தண்டிக்க வேண்டும்.
அபஹ்நவே அதமர்ணஸ்ய தேஹீத்யுக்தஸ்ய ஸம்ஸதி |
அபியோக்தா திஷேத் தேஷ்யம் கரணம்வா அந்யதுத்திஷேத் 52
கடன் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு கூறும்போது, கடனாளி தான் வாங்கவில்லை என்று மறுத்தால்,கடன் கொடுத்தவன், தான்கடன் கொடுத்த இடத்தையும்,
கொடுத்தபோது உடனிருந்த சாட்சியையும் கூறவேண்டும். கடன் பத்திரம் முதலானவைகள் இருந்தால் அவற்றை நீதிபதியிடம் காட்ட வேண்டும்.
அதேஷ்யம் யஷ்ச திஷதி நிர்திஷ்யா பஹ்நுதே சய: |
யஷ்சாதரோத்தராநர்தாந் விகீதாந்நாவ புத்யதே|-53
நீதிபதி கடன் வாங்கிய இடத்தைப் பற்றி விசாரிக்கும்போது,தான் அப்போது அங்கே இல்லவே இல்லை என்று கூறுபவன் – முதலில், இந்த இடத்தில் வாங்கினேன் என்று ஒப்புக் கொண்டு,பிறகு கேள்வி கேட்கும்போது இல்லை என்று மறுப்பவன்,-முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளிப்பவன் – இத்தகையவனை வழக்கில் பொய்யுரைப்பவராகக் கூற வேண்டும்.
அபதிஷ்யா அபதேஷ்யம் ச புநர்யஸ் த்வதாவதி |
ஸம்யக் ப்ரணிஹிதம் சாஅர்தம் ப்ருஷ்ட: ஸந்நா அபிநந்ததி || 54
முதலில் நான் பணத்தைத் திருப்பிக் கொடுத்தேன் என்று கூறி, பிறகு எனக்காக இன்னார் கொடுத்தார்கள் என்று கூறுபவன், கேட்ட குறுக்குக் கேள்விகளுக்கு சரிவர பதில் கூறாது, மௌனமாகத் தலை குனிபவன் – இத்தகையவர்களைப் பொய் கூறுபவர்களாகக் கூற
வேண்டும்.
அஸம்பாஷ்யே ஸாக்ஷிபிஷ்ச தேஷே ஸம்பாஷதே மித:
நிருச்யமாநம் ப்ரஷ்நம் ச நேச்சேத் யஷ்சேஅபி நிஷ்பதேத் I 55
சாட்சிகளைத் தனியாக ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று இப்படி இப்படிக் கூறுங்கள் என்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பவன், குறுக்கு விசாரணையின்போது பதில் கூறத் திணறுபவன், அடுத்த விசாரணையின்போது வராமலே எங்காவது ஓடிவிடுபவன் – இத்தகையவர்களையும் இவர்களின் இந்தச் செயல்களுக்காகவே அவர்கள் பொய் கூறுபவர்களாக அறிவிக்க வேண்டும்.
ப்ரூஹித்யுக்தஷ் ச ந ப்ரூயாதுக்தம் ச ந விபாவயேத் |
ந ச பூர்வா அபரம் வித்யாத் தஸ்மாதர்தாத் ஸ ஹீயதே || 56
நீதிபதி ஒரு விஷயத்தைப் பற்றி விளக்கம் கேட்கும்போது சொல்ல முடியாதவன், முன் விஷயம் பின்விஷயம் எதுவும் தெரியாமல் பேசுபவன் – இவர்களும் பொய் கூறுபவர்களே.
ஸாக்ஷிண: ஸந்திமேத்யுத்வா திஷேத்யுக்தோ திஷேந் நய: 1
தர்மஸ்த: காரணைரேதைர் ஹீநம் தமபி நிர்திஷேத் | 57
சாட்சிகளை அழைத்து வருவதாகக் கூறிவிட்டு பின்னர் அழைத்து வராதவனையும் பொய் கூறுபவனாகவே கொள்ள வேண்டும். இந்த மாதிரியாக பொய் கூறுபவர்களை வழக்கில் தோற்றவர்களாகவே நீதிபதி கூறவேண்டும்.
அபியோக்தா நசேத் ப்ரூயாத் வத்யோ தண்டஷ்ச தர்மத: |
நசேத் த்ரிபக்ஷாத் ப்ரப்ரூயாத் தர்மம் ப்ரதி பராஜித: || 58
வழக்குத் தொடர்ந்தவன், தன் பக்கத்து நியாயத்தை நிரூபிக்காவிடில், அவனை கட்டிப் போடல் அல்லது காவலில் வைத்தல், அபராதம் விதித்தல் முதலான தண்டனைகளை வழக்கின் தன்மைக்குத் தக்கபடி விதிக்க வேண்டும். வழக்குத் தொடரப்பட்ட நாற்பத்தைந்து நாட்களுக்குள் பிரதிவாதி மன்றத்துக்கு வந்து தன் கட்சியைப் பற்றிப் பேசா விட்டால், அவன் தோற்றதாகத் தீர்ப்பளிக்க வேண்டும்.
யோ யாவந் நிஹநுவிதா அர்தம் மித்யா யாவதிவா வதேத் | தௌ ந்ருபேண ஹ்யதர்மக்ஞௌ தாப்யௌ தத் த்விகுணம் தமம் || 59
கடன் வாங்கிக் கொண்டவன் தான் அவ்வளவு தொகை வாங்கிக் கொள்ளவில்லை என்று வாங்கிக் கொண்ட தொகையை விடக்குறைத்துக் கூறுவானாயின், அவன் குறைத்துக் கூறிய தொகைக்கு இரு மடங்கு தொகையை அபராதமாக விதிக்க வேண்டும்.
அவ்வாறே கடன் கொடுத்தவன், தான் கொடுத்த தொகைக்கும் அதிகமான தொகையைக் கூறுவானாயின் அவன் அதிகமாகக் கூறிய தொகைக்கு இருமடங்கு தொகையை அபராதமாக விதிக்க வேண்டும்.
ப்ருஷ்டோ அபவ்யயமாநஸ் து க்ருதா அவஸ்தோ தநைஷிணா|
த்ரயவரை: ஸாக்ஷிபிர் பாவ்யோ ந்ரூபப்ராஹ்மண ஸந்நிதௌ || 60
கடன் வாங்கிக் கொண்டவன், தான் கடன் வாங்கவே இல்லை என்று கூறினால், அதை மூன்றுக்கு குறையாத சாட்சிகளைக் கொண்டு, அரசன் நியமித்துள்ள மூன்று பிராம்மணர்களோடு நீதிபதியும் கொண்ட சபை முன் நிரூபிக்க வேண்டும்.
யாத்ருஷா தநிபி: கார்யா வ்யவஹாரேஷு ஸாக்ஷிண: 11
தாத்ருஷாந் ஸம்ப்ரவக்ஷ்யாமி யதா வாச்யம்ருதம் ச தை: || 61
வாதி தன் விவகாரங்களில் எத்தகையவர்களை சாட்சிகளாகக் கொண்டு வரவேண்டும். சாட்சிகள் எவ்வாறு சாட்சியுரைக்க வேண்டும் என்கிற முறைகளையும் கூறுகிறேன், கேளுங்கள்:
க்ருஹிண: புத்ரிணோமௌலா: க்ஷத்ரவிட்சூத்ரயோநய: |
அர்த்யுக்தா: ஸாஹ்யமர்ஹந்தி நயே கேசிதநா பதி|| 62
மனைவி மக்களோடு இருப்பவன், அந்த நாட்டைச் சேர்ந்தவர்களான க்ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்ரர்கள் முதலானோர் அழைக்கும் போது வந்து சாட்சி கூறத் தக்கவர்கள். ஆபத்துக் காலங்கள் தவிர மற்றபடி இவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் சாட்சிகளாக இருக்கக் கூடாது.
ஆப்தா: ஸர்வே வர்ணேஷு கார்யா: கார்யேஷு ஸாக்ஷிண: |
ஸர்வதர்மவிதோ அலுப்தா விபரீதாம்ஸ்து வர்ஜயேத் || 63
பிராம்மணனாயினும், க்ஷத்ரியனாயினும், வைசியனாயினும், சூத்திரனாயினும் தர்மவான்களாக இருப்பவர்களே சாட்சி கூறத் தகுதியுடையவர்கள். கயமைக் குணம் கொண்டவர்களையும் தீயவர்களையும் சாட்சிகளாக ஏற்கக்கூடாது.
நாஅர்தஸம்பந்திநோ நாஆப்தா நஸஹாயா நவைரிண: 1
ந த்ருஷ்டதோஷா: கர்தவ்யா நவ்யாத்யார்தா ந தூஷிதா: || 64
எதற்காக வழக்குத் தொடுக்கப்பட்டதோ, அந்தப் பணத்தோடு சம்பந்தமுடையவர்கள், வாதி பிரதிவாதிகளின் உற்ற நண்பர்கள், உதவியாளர்கள், எதிரிகள், தீயவர்கள், நோயாளிகள், பெரும் பாவங்களைச் செய்தவர்கள் முதலானோர்களைச் சாட்சிகளாக ஏற்கக் கூடாது.
நஸா ந்ருபதி: கார்யோ ந காருககுஷீலவௌ |
நஸ்ரோத்ரியோ ந லிங்கஸ்தோ ந ஸங்கேப்யோ விநிர்கத: ! 65
எக்காரணத்தைக் கொண்டும் அரசனை சாட்சியாக்கக் கூடாது. சமையல்காரன், நட்டுவாங்கம் செய்பவன், வேதம் படித்துக் கொண்டிருக்கும் மாணாக்கன், சந்நியாசி இவர்களையும் சாட்சிகளாக ஏற்கக்கூடாது.
நாஅத்யதீநோ ந வக்தவ்யோ ந தஸ்யுர் ந விகர் மக்ருத்|
நவ்ருத்தோ நசிசுர் நைகோ நாஅந்த்யோந விகலேந்த்ரிய: || 66
அடிமையாக இருப்பவன், நிந்திக்கத்தக்கவன், குரூரமான செயல்களைச் செய்பவன், சாஸ்திரத்தால் தடுக்கப்பட்டகாரியங்களைச் செய்பவன், கிழவன்,சிறுவன், ஒற்றையாய் வாழ்பவன், சஞ்சலபுத்தி கொண்டவன் இவர்களைச் சாட்சிகளாக ஏற்கக் கூடாது.
நாஅர்தோ ந மத்தோ நோந்மத்தோ ந க்ஷத்த்ருஷ்ணோப பீடித: 11
நஸ்ரமா ஆர்தோ ந காமா ஆர்தோ நக்ருத்தோ நாபிதஸ்கர: || 67
கவலையில் ஆழ்ந்தவன், குடிகாரன், பைத்தியக்காரன், பசி தாகங்களால் பீடிக்கப்பட்டவன்,களைப்புற்றவன்,காமுகன்,கோபிஷ்டன், திருடன் முதலானோரை சாட்சிகளாக ஏற்கக் கூடாது.
ஸ்த்ரீணாம்ஸாஷ்யம் ஸ்த்ரிய: குர்யுர் த்விஜாநாம் ஸத்ருஷா த்விஜா: |
சூத்ராஷ்ச ஸந்த: சூத்ராணாமந்த்யா நாமந்த்யயோநய: || 68
பெண்களுடைய வழக்கில் பெண்கள் சாட்சிகளாக இருக்கலாம். பிராம்மணர்களுக்கு பிராம்மணர்களும்,க்ஷத்திரியர்களுக்குக்ஷத்திரியர்களும், வைசியர்களுக்கு வைசியர்களும், சூத்திரருக்குசூத்திரர்களும் சாட்சிகளாகலாம்.
அனுபாவீது ய: கஷ்சித் குர்யாத் சாக்ஷ்யம் விவாதிநாம் |
அந்தர்வேஷ்மந்யரண்யே வா ஷரீரஸ்யா அபி சாந்யயே|| 69
வழக்கு வீட்டிற்குள் நடந்ததாக இருந்தால் அப்போது வீட்டிற்குள் அருகிலிருந்தவர் யாராக இருந்தாலும் அவர்களை சாட்சிகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.-ஆரண்யத்தில் நடந்த விஷயமாக இருந்தால். அருகில் இருந்தவர், பார்த்தவர் யாராக இருந்தாலும் அவர்களைச்
சாட்சிகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.-மரணத்தறுவாயிலும் இவ்வாறேதான் அருகிலிருப்பவர் யாராயினும் அவர்களைச் சாட்சிகளாக ஏற்கலாம்.
ஸ்த்ரியாஅப்யஸம்பவே கார்யம் பாலேந ஸ்தவிரேணவா
ஷிஷ்யேண பந்துநா வா அபிதாஸேந ப்ருதகேந வா || 70
வீட்டிற்குள் நடந்தது முதலான வழக்குகளில் பெண்கள், சிறுவர், வயோதிகர், மாணாக்கன், உறவினன், வேலைக்காரன், அடிமை முதலானோர் சாட்சியங்களை ஏற்கலாம்.
பாலவ்ருத்தா ஆதராணாம்ச சாட்ச்யேஷ வததாம்ருஷா |
ஜாநீயா தஸ்திராம் வாசமுத்சிக் தமநஸாம் ததா||| 71
சிறுவர், முதியோர், நோயாளி, பொய்யர் முதலான சாட்சிகளிடம் விசாரிக்கும்போது அவர்களுடைய முகபாவங்களையும், உடல் அசைவுகளையும் கவனிக்க வேண்டும்.
ஸாஹஸே ச ஸர்வே ஸ்தேயஸங்க்ரஹணேஷுச |
வாக் தண்டயோஷ் ச பாருஷ்யே ந பரீக்ஷே த.ஸாக்ஷிண: 72
வீட்டைக் கொளுத்துதல், பயிர்களை அழித்தல், கொல்லுதல் போன்ற கொடுஞ் செயல்களிலும், திருட்டிலும், பெண்களைக் கவர்ந்து போதலிலும், வாய்ச்சண்டை,அடிதடி வழக்குகளிலும் சாட்சிகளின் தராதரத்தைப் பார்க்க வேண்டியதில்லை.
பஹுத்வம் பரிக்ருஹ்ணீயாத் ஸாக்ஷித்வைதே நராதிப |
ஸமேஷுது குணோத்க்ருஷ்டாந் குணித்வைதே த்விஜோத்தமாந்|| 73
சாட்சிகள் வெவ்வேறு விதமாகச் சொல்லும் போது அதிகம்பேர் சொன்னதை எடுத்துக் கொள்ள வேண்டும். சமமாக இருக்கும்போது, சாட்சிகளில் குணவான்கள் கூற்றை ஏற்க வேண்டும். குணவான்களும் இரு தரப்பாகச் சொன்னால், திவிஜோத்தமர்கள் கூற்றை அதாவது உத்தமமான பிராம்மணன், உத்தமமான க்ஷத்திரியன், உத்தமமான
வைசியன் கூறுவதை ஏற்க வேண்டும்.
ஸமக்ஷதர்ஷநாத் ஸாக்ஷ்யம் ஷ்ரவணாச்சைவ ஸித்யதி |
ததர் ஸத்யம் ப்ருவந் ஸா தர்மாஅர்தாப்யாம் ந ஹீயதே II 74
கண்ணால் பார்த்துக் கூறும் சாட்சிகளையும், காதால் கேட்டதைக் கூறும்சாட்சிகளையும் ஏற்க வேண்டும். இந்தச் சாட்சிகள் சத்தியம் மாறாமல் சாட்சி கூறினால் இவர்களை விட்டு தர்மமும் அர்த்தமும் விலகாது இருக்கும். இவன் சத்தியம் பேசி வழக்கில் உண்மையை நிலைநாட்டுவதால், தர்மம் இவனை விட்டு விலகாதிருக்கும். இவனுடைய செல்வமும் இவனை விட்டு விலகாதிருக்கும்.
ஸா த்ருஷ்டஸ்ருதாதந்யத் விப்ருவந்நார்ய ஸம்ஸதி |
அவாங் நரகமப்யேதி ப்ரேத்ய ஸ்வர்காச்ச ஹீயதே|| 75
சாட்சி உரைப்பவன் தான் கண்டதையும், கேட்டதையும் அப்படியே உரைக்காமல் மாற்றிக் கூறுவானேயானால் இறந்தபிறகு சொர்க்க லோகங்கள் கிட்டாது; நரகத்தில் வீழ்வான்.
யத்ரா அநிபத்தோ அபீக்ஷேத ஷ்ருணுயாத் வா அபிகிஞ்சந| ப்ருஷ்டஸ் தத்ராஅபி தத்ப்ரூயாத் யதாத்ருஷ்டம் யதாஷ்ருதம்|| 76
வாதி, பிரதிவாதிகள் தன்னை சாட்சியாக அழைக்கா விட்டாலும்கூட, நீதிபதி வரவழைத்துக் கேட்டால், தான் கண்ணால் பார்த்ததையும், காதால் கேட்டதையும் அப்படியே கூற வேண்டும்.
ஏகோ அலுப்தஸ்து ஸா ஸ்யாத் பஹவ்ய: சுச்யே அபிநஸ்திரிய: 1 ஸ்த்ரீபுத்தோரஸ்திரத்வாத்து தோஷைஷ்சா அன்யே அபியேவ்ருதா:|| 77
பேராசையற்றவன் கூறும் ஒரு சாட்சியமே மேலானது. சலனப்படும் மனம் கொண்ட பெண்களும், ஆசை மிகுந்தவர்களும் அதிகம் பேர்சாட்சி கூறினாலும், பொருள், கடன் சம்பந்தப்பட்ட விஷயமாயின், பணத்துக்கு விலைபோகக்கூடிய இந்தச் சாட்சிகளை
ஏற்கத் தேவையில்லை.
ஸ்வபாவேநைவ யத் ப்ரூயுஸ் தத்க்ராஹ்யம் வ்யாவஹாரிகம் |
அதோ யதந்யத் விப்யுர் தர்மார்தம் த பார்தகம் || 78
சாட்சிகள் இயல்பாக சாட்சி கூறுகிறார்களா என்று பார்க்க வேண்டும். மற்றபடி பயத்தாலோ, நமக்கு வேண்டியவராயிற்றே என்ற தாட்சண்யத்தாலோ, லஞ்சத்துக்காகவோ சாட்சி கூறு
கிறார்களா என்பதைக் கண்டறிய வேண்டும்.
ஸபா அந்த: ஸாக்ஷிண: ப்ராப்தாநர்திப்ரத்யர் திஸந்நிதௌ |
ப்ராட்விவாகோ அனுயுஞ்ஜீத விதிநா அநேந ஸாந்த்வயந் || 79
சபைக்குள் வந்த சாட்சிகளிடம், விசாரிப்பதற்காக வந்துள்ள பிராம்மணர் மூவரில் ஒருவர் பிரியமாக இனி சொல்லப் போகும் முறையில் பேச வேண்டும்.
யத் த்வயோரநயோர் வேத்த கார்யே அஸ்மிந்ஷ் சேஷ்டிதம் மித: 1
தத் ப்ரூத ஸர்வம் ஸத்யேந யுஷ்மாகம் ஹ்யத்ர ஸாக்ஷிதா || 80
ஸத்யம் ஸாக்ஷ்யே ப்ருவந் ஸாக்ஷி லோகாநாப்நோதி புஷ்கலாந் |
இஹசாஅனுத்தமாம் கீர்திம் வாகேஷா ப்ரஹ்ம பூஜிதா|| 81
ஸாக்ஷ்யே அந்ருதம் வதந் பாஷைர் பத்யதே வாருணைர் ப்ருஷம்
விவஷ: ஷதமா ஜாதீஸ் தஸ்மாத் ஸாக்ஷ்யம் வதேத்ருதம்||-82-
ஸத்யேந பூயதே ஸா தர்ம: ஸத்யேந வர்ததே 11
தஸ்மாத் ஸத்யம் ஹி வக்தவ்யம் ஸர்வ வர்ணேஷு ஸாக்ஷிபி: -83
ஆத்மைவ ஹ்யாத்மந: ஸாக்ஷகதிராத்மாததா ஆத்மந: |
மாஅவமம்ஸ்தா: ஸ்வமாத்மாநம் ந்ருணாம் ஸாக்ஷிணமுத்தமம்||-84-
மந்யந்தேவை பாபக்ருதோ நகஷ்சித் பஷ்யதீதி ந: 1
தாம்ஸ் து தேவா: ப்ரபஷ்யந்தி ஸ்வஸ்யைவா ஆந்தரபூருஷ: [I 85
த்யௌர் பூமிராபோ ஹ்ருதயம் சந்த்ரா அர்கா அக்நி யமா அநிலா: |
ராத்ரி: ஸந்த்யே ச தர்மஷ் ச வ்ருத்தக்ஞா: ஸர்வதேஹிநாம்|-86
சாட்சி கூற வந்திருப்பவர்களே! வாதி பிரதிவாதி இவர்களில் யார் தரப்பில் நீங்கள் சாட்சி கூற வந்திருந்தாலும் உங்களுக்குத் தெரிந்த வற்றை உண்மையாக எங்களிடம் கூறுங்கள்.
சத்தியவாக்கை பிரம்மதேவரே பூஜிக்கிறார். அதனால் சத்தியம் பேசுபவருக்கு இவ்வுலகில் பெரும் கீர்த்தி கிட்டும். இவ்வுலக வாழ்க்கைக்குப் பின் நல்ல புண்ணிய லோகங்கள் கிட்டும்.
பொய்சாட்சி கூறினால், அவன், வருண பாசங்களால் கட்டப்பட்டு நீர் சம்பந்தமான வியாதிகளால் பீடிக்கப்படுவான். இறந்த பிறகு நூறு ஜன்மங்கள்வரை மிகுந்த துன்பத்துக்காளாவான்.(அதாவது பொய்சாட்சி கூறிய அந்த ஐந்து நிமிஷத்து பாபம் அல்லது நீண்ட விசாரணையானால் முப்பது நிமிஷத்துப் பாபம், அடுத்த நூறு பிறவிகள் வரை அவனைத் தொடரும். வறுமை, நோய், சிறைவாசம்,பழிக்காளாதல், உற்றார் உறவினரால் வெறுக்கப்படுதல், துர்மரணம் போன்ற எந்தெந்த துன்பங்கள் மனிதர்களைப் பாதிக்கின்றனவோ, அத்தனை துன்பங்களுக்கும் அவன் செய்த பாபங்கள்தானே
காரணம். காரணமின்றி உலகில் எந்தக் காரியமும் நடைபெறுவதில்லை. எனவே மனிதன் பாபம் செய்வதற்கு மிகமிக அஞ்ச வேண்டும்.சாட்சி கூறுபவன் சத்தியத்தைப் பேசுவதால் முன்ஜென்மப் பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான். இந்தக் காரணத்துக்காகவும்
சத்தியம் பேச வேண்டும். அதற்கும் மேல் அவனுக்குப் புண்ணியமும் பெருகும். பிராம்மணர் க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் யாராயினும் சாட்சி உரைக்கும்போது உண்மையையே பேச வேண்டும்.-பயத்தாலோ வேறு காரணத்தாலோ, உண்மையும் சொல்ல வேண்டாம். பொய்யும் சொல்ல வேண்டாம். சாட்சியகப் போகாமலே இருந்து விடுவோம் என்று வழக்கு சம்பந்தப்பட்டவற்றை கண்ணால் பார்த்தவனோ காதால் கேட்டவனோ பேசாமல் இருந்துவிடக் கூடாது. நமக்கேன் இந்தத் தொல்லை என்று இருப்பவன், தனக்குப் புண்ணியம் சேரக் கிடைத்திருக்கும் வாய்ப்பை இழக்கிறான். அதற்கும் மேல் போன ஜென்மத்துப் பாபங்கள் தொலைவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்! கிடைத்தற்கரிய விஷயம். இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டால் எவரும் பொய்ச்சாட்சி கூறமாட்டார்கள். தெரிந்த உண்மைகளை சொல்லப் பயந்து சாட்சியாக வராமலும் இருக்க மாட்டார்கள். கிடைத்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு,சாட்சியாக வந்து உண்மையைக் கூற வேண்டும். வாதியோ, பிரதிவாதியோ அழைக்காவிட்டாலும்கூட, விசாரணை மண்டபத்துக்குச் சென்று சபையோர்முன் சாட்சியாக வந்திருப்பதாகத் சொல்ல தெரியப்படுத்தி, கண்டதையும் கேட்டதையும் அப்படியே வேண்டும்.-ஒவ்வொரு மனிதன் செய்யும் பாப புண்ணியங்களையும் அவனவனுக்குள்ளிருக்கும் ஆத்மா கவனித்துக் கொண்டிருக்கும். ஒருவன் செய்யும் செயல்களுக்கு அவன் ஆத்மாவே சாட்சி. இவன் சாட்சியை வெளியே பொய்ச்சாட்சி கூறி உள்ளிருக்கும் அவன் ஆத்மாவாகிய அவமதிக்கக் கூடாது. பாபம் செய்பவர்கள் தாங்கள் பாபம் செய்யும்போது யாரும் பார்க்கவில்லை, சாட்சி யாருமில்லை என்று நினைக்கிறார்கள். அது அந்தப் பாபிகளின் அறியாமை. முதலில் அந்தப் பாபியின் ஆத்மா சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அடுத்து தேவர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.பூமியும் ஆகாசமும் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆத்மாவோடு நீரும் பார்த்துக் கொண்டிருக்கிறது. சூரியனும் சந்திரனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அக்னியும்,யமனும், வாயுவும், இரவும் பகலும், காலை சந்தியும், மாலை சந்தியும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தர்ம தேவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.-காற்றுக்கென்ன கண்ணா இருக்கிறது, ஆகாசத்துக்கென்ன காதா
இருக்கிறது. அப்படியே இருந்தாலும் வந்து சாட்சியா சொல்லப் போகிறது என்று நினைக்கும் பாபி அறிவிலியாவான். பூமி, ஆகாசம், காற்று, அக்னி, சந்திகாலம் இரவு பகல் எல்லாமே தேவர்களின் சொரூபங்களாகும். மனிதர்களுக்கு அந்தத் தெய்வங்கள் கண்ணுக்குப் படாமல்போவதால், இல்லையென்று நினைக்கலாம்.அதிலும் பாபிகள்தான் அப்படி நினைப்பார்கள். நல்லவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். மனிதனுடைய கண் ஊனக்கண், தான் செய்யும் எந்தக் காரியத்தையும் தெய்வங்கள்பார்த்துக் கொண்டிருக்
கிறார்கள் என்பதை ஒவ்வொரு மனிதனும் நன்கு உணரவேண்டும்.
தேவ ப்ராஹ்மண ஸாந்நித்யே ஸாஷ்யம் ப்ருச்சேத்ருதம் த்விஜாந் |
உதங்முகாங் ப்ராங்முகாந் வா பூர்வாஹ்நே வை சுசி: சுசீந் || 87
நீதிபதி பரிசுத்தமானவனாக வந்து அமர வேண்டும். சாட்சிகளைக் கிழக்கு முகமாகவோ வடக்கு முகமாகவோ நிற்கச் சொல்ல வேண்டும். அருகில் தெய்வவிக்ரகம் இருக்க வேண்டும். வேதமறிந்த பிராம்மணர்களும் இருக்க வேண்டும். சாட்சிகளை மத்தியானத்
துக்குள் விசாரிக்க வேண்டும்.
ப்ரூஹீதி ப்ராஹ்மணம் ப்ருச்சேத் ஸத்யம் ப்ரூஹீதி பார்திவம்
கோபீஜ காஞ்சநைர் வைஷ்யம் சூத்ரம் ஸர்வைஸ்து பாதகை: || 88
சாட்சியாக பிராம்மணன் வந்து நின்றால், ‘சொல்’ என்றும், சூத்திரனானால் ‘சத்தியம் சொல்’ என்றும், வைசியனானால் நீ பொய் சொன்னால் பசுக்கள், விதைகள், தங்கம் இவைகளைத் திருடிய பாபம் சேரும்’ என்றும், சூத்திரனானால் ‘பொய் சொன்னால் சகல பாபங்கள் சேரும்’ என்றும் கூறவேண்டும்.
ப்ரஹ்மக்நோ யேஸ்ம்ருதா லோகா யே ச ஸ்த்ரீபால காதிந: | மித்ரக்ஹ: க்ரூகக்கஸ்ய கேகேஸ்பர் ப்கலகோ-89
பொய்ச்சாட்சி கூறினால் என்னென்ன சம்பவிக்கும் என்பதை சாட்சி கூற வந்திருப்பவர்களிடம் நீதிபதியோ அல்லது அருகில் இருக்கும் பிராம்மணர்களில் ஒருவரோ எடுத்துக் கூறவேண்டும்.-இனி அவர் எடுத்துக் கூறவேண்டிய விஷயங்களைப் பற்றிப்
பார்ப்போம். அவை: நீ இங்கு பொய் பேசுவாயானால், உனக்கு ஏற்படக்கூடிய பாபங்களைப் பற்றிக் கூறுகிறேன், கேள் என்று சொல்லி பின்வருமாறு கூற வேண்டும். பிரம்மஹத்தி செய்தவனும், பெண்ணைக் கொன்றவனும், குழந்தையைக் கொன்றவனும், நண்பனுக்குத் துரோகம் செய்தவனும், நன்றி கொன்றவனும், எந்தெந்த பாபங்களுக்காளாகி
எத்தகைய நரகங்களை அனுபவிப்பார்களோ, அத்தகைய பாபங்களை நீ அடைவாய்; அத்தகைய நரகங்களை நீ அனுபவிப்பாய்
ஜன்மப்ரப்ருதியத் கிஞ்சித் புண்யம் பத்ரத்வயா க்ருதம் |
தத்தே ஸர்வம் சுநோ கச்சேத் யதி ப்ரூயாஸ் த்வமந்யதா|| 90
நல்லவனே! நீ இந்த ஜன்மத்தில் என்னென்ன புண்ணியங்களைச் செய்திருக்கிறாயோ அத்தனையும் பொய்யாக நீ சாட்சி கூறினால், நீ வளர்க்கும் நாய்களுக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.
ஏகோ அஹமஸ்மீத்யாத்மாநம் யத்த்வம் கல்யாண மந்யஸே |
நித்யம் ஸ்திதஸ் தேஹ்ருத்யேஷ புண்ய பாபேக்ஷிதா முநி: || 91
நல்லவனே! நான் மட்டும்தானே இருக்கிறேன்’ என்று உன்னை நீ நினைத்துக் கொள்ளாதே.நீ செய்யும் புண்ணியத்துக்கும் பாபத்துக்கும் சாட்சியாக, நித்தியமான ஆத்மா உன் உள்ளத்துக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.
யமோ வைவஸ்வதோ தேவோ யஸ்தவைஷ ஹ்ருதிஸ்தித: | தேநசேதவிவாதஸ் தே மா கங்காம் மாகுரூந்கம: II 92
சூரியன் மகனான யமதர்மராஜா இப்போது உன் உள்ளத்தில் இருக்கிறார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போது, நீ உண்மை பேசினால், இதற்குப் பிறகு நீ கங்கையில் குளித்துத்தான் பாபம் போக்க வேண்டும். கயைக்குப் போய்த்தான் வினை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. எமதர்மராஜா, நீ சத்தியம் பேசுவதைப் பார்த்து இப்போதே உனக்கு அருள் செய்வார். உன் பாபங்களைத் தீர்ப்பார். எனவே, நீ இங்கு உண்மை உரைத்தால், இங்கு, இப்போதே காசிக்கும் கயைக்கும் போய் வந்த பயனை
அடைந்து விடுவாய்.
நக்னோமுண்ட: கபாலேந பிக்ஷார் க்ஷத்பிபாஸித:
அந்த: ஷத்ருகுலம் கச்சேத் ய: ஸாக்ஷ்யமந்ருதம் வதேத்! |-93
பொய்ச்சாட்சி கூறினால், மொட்டையனாக, திகம்பரனாக, குருடனாக ஆவாய். இத்தனைக்கும் மேல் பசியாலும் தாகத்தாலும்பீடிக்கப்பட்டவனாக, இந்தக் கோலத்தோடு உன் எதிரியிடமேபோய் பிச்சைக்கு நிற்பாய்.
அவாக்ஷிராஸ் தமஸ்யந்தே கில்விஷீ நரகம் வரஜேத்|
ய: ப்ரஷ்நம் விததம் ப்ரூயாத் ப்ருஷ்ட: ஸந்தர்ம நிஷ்சயே|||-94
நீதியை நிலைநாட்டுவதற்காக நீதிபதி கேள்வி கேட்கும்போதுபொய்சொல்பவன் பெரும் பாபங்களுக்காளாவான். இறந்த பிறகு கொடிய நரகத்தை அடைவான்.
அந்தோ மத்ஸ்யாநிவா அஷ்நாதி ஸநர: கண்டகை: ஸஹ |
யோ பாஷதே அர்த்தவைகல்யம ப்ரத்யக்ஷம் ஸபாம் கத: 1-95
குருடனுக்கு மீனைச் சாப்பிட ஆசை.ஆனால் முள்ளையும்மீனையும் கைகளால் துழாவிப் பிரித்தறிய அவனுக்குப் பொறுமைஇல்லை. சட்டென்று முள்ளை எடுத்தெறிய கண்களும் இல்லை.-பொறுமையின்றி ஆசை ஆசையாக முள்ளோடு மீனைச் சாப்பிட்டவன் நிலையை எண்ணிப் பாருங்கள்.-தான் பார்த்ததை, பார்க்கவில்லை என்றும்; கேட்டதை,கேட்கவில்லை என்றும், பார்க்காததை பார்த்தேன் என்றும்,கேட்காததை கேட்டேன் என்றும் நீதிமன்றத்தில் வந்து பொய் கூறுபவன், முள்ளோடு மீனைச் சாப்பிட்ட குருடனைப் போன்றுதுன்புறுவான். சொற்பமாகக் கிடைக்கப்போகும் பணத்துக்காக ஆசைப்பட்டு, இவ்வாறு பொய்ச்சாட்சி கூறுபவன் பெரும் பாபத்துக்கு ஆளாவான்.
யஸ்ய வித்வாந் ஹி வதத: க்ஷேத்ரக்ஞோநா அபிஷங்கதே |
தஸ்மாந் ந தேவா: ஷ்ரேயாம்ஸம் லோகே அந்யம் புருஷம் விது: || 96
ஒருவன் சாட்சியம் சொல்ல வரும்போது உள்ளேயிருக்கும் ஆத்மா ‘இவன் பொய் சொல்லப் போகிறானா, உண்மை சொல்லப் போகிறானா’ என்று சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.-அதாவது, ஆத்மா இவன் செயல்களுக்கு வெறும் சாட்சியாக
நின்று பார்த்துக் கொண்டிருக்கும். இவனே ஒரு சாட்சியாக நீதிமன்றத்துக்கு வரும்போது, இவன்உத்தமன், எக்காரணத்தாலும் பொய் சொல்ல மாட்டான், சத்தியம் மட்டுமே பேசுவான். எனவே, இப்போது இவன் சத்தியமே பேசப் போகிறான் என்று அந்த ஆத்மா
தைரியமாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு உள்ளிருக்கும் ஆத்மா சந்தேகமின்றி தைரியமாக இருக்க வேண்டுமானால், அவன் எவ்வளவு உத்தமனாக இருப்பான் என்று ஊகிக்க முடிகிறதல்லவா? இத்தகையவனைவிட உயர்ந்த
மனிதன்வேறெவனும் உண்டோ என்று தேவர்களே இவனைப் போற்றுவார்கள்.
யாவதோ பாந்தவாந் யஸ்மிந் ஹந்தி ஸாக்ஷ்யே அந்ருதம் வதந் |
தாவத: ஸங்க்யயா தஸ்மிஞ்ச்ருணு ஸௌம்யா அனுபூர்வஷ: /I 97
பொய்ச்சாட்சி கூறுபவன் எந்த விஷயத்துக்காக பொய் கூறுகிறான் என்று பார்த்தே அவன் அடையும் பாபத்தைக் கணக்கிட முடியும். தன் புத்திர, பௌத்திரர்களில் எத்தனை பேரை நரகத்தில் வீழ்த்துவான் அல்லது எத்தனை உறவினரைக் கொன்ற பாபம் சேரும்
என்பதைக் கூறுகிறேன்.
பஞ்ச பஷ்வந்ருதே ஹந்தி தஷ ஹந்தி கவா அந்ருதே ஷதமஷ்வா அந்ருதே ஹந்தி ஸஹஸ்ரம் புருஷா அந்ருதே||-98-
கால்நடைகளைப் பற்றிய வழக்குகளில் பொய்ச்சாட்சி சொன்னவனுடைய பாபத்தைப் பற்றிப் பார்ப்போம்.சாதாரணமான நான்கு கால் ஜீவன்களைப் பற்றியதானால், ஐந்து
உறவினரைக் கொன்ற பாபம் சேரும். அதுவே பசுக்களைப் பற்றிய
பொய்யானால் பத்து உறவினரைக் கொன்ற பாபத்தைச் சேர்க்கும். குதிரைகளைப் பற்றியதானால், நூறு உறவினர்களைக் கொன்ற பாபத்தைச் சேர்க்கும். மனிதர்களைப் பற்றிய பொய்யானால், ஆயிரம் உறவினர்களைக் கொன்ற பாபத்தை அடைவான்.
ஹந்தி ஜாதாநஜாதாம்ஷ்ச ஹிரண்யா அர்தே அந்ருதம் வதந் |
ஸர்வம் பூம்யந்ருதே ஹந்தி மாஸ்ம பூம்யந்ருதம் வதி: |-99
தங்கத்தைப் பற்றிய விஷயத்தில் பொய்ச்சாட்சி உரைத்தால், இப்போதுள்ள சந்ததிகளையும்,இனி பிறக்கப் போகும் சந்ததிகளையும் நசிக்கச் செய்யும். பூமி விஷயமான பொய்யானால், சகல பிராணிகளையும் கொன்ற பாபத்தைச் சேர்க்கும். எக் காரணத்தாலும் பூமியைப் பற்றிய விஷயத்தில் பொய்ச்சாட்சி சொல்லக்கூடாது .
அப்சு பூமிவதித்யா : ஸ்த்ரீணாம் போகேச மைதுநே|
அப்ஜேஷு சைவ ரத்னேஷு ஸர்வேஷ்வஷ்ம மயேஷுச| 100
கிணறு, குளம், ஏரி முதலானவைகளைத் தன்னுடைமையாக்கிக் கொள்ளல், பெண்ணை அடைந்து அனுபவித்தல், சங்குகள், முத்துகள், ரத்தினங்கள் பற்றிய விஷயங்களில் பொய்யுரைத்தால், பூமி விஷயத்தில் போன்று சகல பிராணிகளையும் கொன்ற பாபத்தை
அடைவான்.
ஏதாந் தோஷாநவேக்ஷ்ய த்வம் ஸர்வாநந்ருதபாஷணே | யதாஸ்ருதம் யதாத்ருஷ்டம் ஸர்வமேவா அஞ்ஜஸா வத |-101
இவ்வாறாக, பொய்யுரைப்பதால் ஏற்படும் தோஷங்களை யெல்லாம் அறிந்து, கண்டதையும் கேட்டதையும் உள்ளது உள்ளவாறு சொல் என்று நீதிபதியோ, சபை பிராம்மணனோ சொல்ல வேண்டும்.
கோரக்ஷகாந் வாணிஜிகாம்ஸ் ததாகாருகுஷீலவாந் 11
ப்ரேஷ்யாந் வார்துஷிகாஷ்சைவ விப்ராந்த்ரவதாசரேத்|-102
பசு மேய்க்கும் கோபர்கள், வாணிகம் செய்பவர்கள், சமையல் செய்பவர்கள், தெருப் பாடகர்கள், சிற்பிகள், வட்டியால் ஜீவிப்பவர்கள், பணியாட்கள் முதலானோரை விசாரிக்கும்போது, அவர்கள் பிராம்மணர்களாக இருந்தாலும் சூத்திரர்களைப்போன்றே
விசாரிக்க வேண்டும்.
தத் வதந் தர்மதோ அர்தேஷு ஜாநந்நப்யந்யதா நர: 1
ந ஸ்வர்காச் ச்யவதே லோகாத் தைவீம் வாசம் வதந்தி தாம் || 103
சில தருணங்களில் தர்மமறிந்தவன், தர்மம், பொருள் பற்றிய விஷயங்களில் உண்மையை மாற்றிக் கூறினாலும் அவன் ஸ்வர்க்கத்தினின்றும் நழுவ மாட்டான் என்பது தேவவாக்கு.
சூத்ரவிட் க்ஷத்ர விப்ராணாம் யத்ரர்த்தோக்தெள பவேத்வத: 11
தத்ர வக்தவ்யமந்ருதம் தத்தி ஸத்யாத் விசிஷ்யதே || 104
உண்மையை உள்ளவாறே உரைக்கும் போது பிராம்மண க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களில் நல்லவர்களான எவருக்கேனும் உயிருக்கு ஹானி ஏற்படும் என்றால், அத்தகைய தருணங்களில் சத்தியம் கூறக் கூடாது. அப்போது உரைக்கும் பொய்யும்கூட
சத்தியத்தைவிட பல மடங்கு மேலானதாகும்.
வாக்தைவத்யைஷ்ச சருபிர் யஜேரம்ஸ் தே ஸரஸ்வதீம் |
அந்ருதஸ்யைநஸஸ் தத்ர குர்வாணா நிஷ்க்ருதிம் பராம் 105
ஆனாலும், பொய்யுரைக்க வேண்டி நேர்ந்தமைக்காக பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். ஸரஸ்வதியைக் குறித்து யக்ஞம் வளர்க்க வேண்டும்.
கூஷ்மாண்டைர் வாஅபி ஜூஹுயாத் க்ருதமக்நெள யதாவிதி |
உதித்ய்ருசா வா வாருண்யா த்ருசேநா அப்தைவதேந வா|-106
அக்னியில் நெய்சொரிந்து, பூசணிக்காய்களால் ஹோமம் வளர்க்க வேண்டும். வருண மந்திரங்களால் அல்லது மற்ற ஜல தேவதைகளின் மந்திரங்களால் ஹோமம் செய்ய வேண்டும்.
த்ரிபக்ஷாதப்வந் ஸாக்ஷயம்ருணாதி நரோஅகத: 1 தத்ருணம் ப்ராப்னுயாத் ஸர்வம் தஷபந்தம் ச ஸர்வத: 107
நீதி மண்டபத்திலிருந்து கடன் முதலான வழக்குகள் விஷயமாக அழைக்கப்பட்டவன்,நாற்பத்தைந்து நாட்களுக்குள் வந்து தன்பக்கத்து நியாயத்தைக் கூற வேண்டும். இல்லாவிட்டால் பிரதிவாதியான அவன், வாதி கூறிய கடன் முழுவதையும் செலுத்தவேண்டும். மேலும் அந்தத் தொகையில் பத்தில் ஒரு பங்கை அபராதமாக அரசனுக்குச் செலுத்த வேண்டும்.
யஸ்ய த்ருஷ்யேத ஸப்தாஹாதுக்த வாக்யஸ்ய ஸாகூக்ஷிண: |
ரோகோ அக்னிர் ஞாதிமரணம்ருணம் தாப்யோ தமம் ச ஸ: || 108
சாட்சியளித்த ஏழு நாட்களுக்குள் அந்த சாட்சிக்காரனை கொடியநோய் பற்றினாலோ, அவன் வீடு முதலானவை எரிந்துபோனாலோ, அவன் பங்காளிகளில் யாரேனும் இறந்தாலோ அவன் பொய்ச்சாட்சி கூறியிருக்கிறான் என்று அறிய வேண்டும்.
அஸாக்ஷிகேஷு த்வர்த்தேஷு மிதோ விவதமாநயோ: |
அவிந்தம்ஸ் தத்வத: ஸத்யம் ஷபதேநாபி லம்பயேத் |-109
சாட்சிகள் இல்லாத வழக்கில், வாதி பிரதிவாதிகளின்வாதத்தைக் கேட்ட பிறகும் உண்மையறிய முடியவில்லை எனில் அவர்களை சத்தியப் பிரமாணம் செய்யச் சொல்லி உண்மையை அறிய வேண்டும்.
மஹர்ஷிபிஷ்ச தேவைஷ்ச கார்யார்தம் ஷபதா: க்ருதா: | வஸிஷ்டஷ்சா அபி ஷபதம் ஷேபே பைஜவநே ந்ருபே|| 110
சப்த ரிஷிகளும், தேவர்களும்கூட இவ்வாறு சத்தியப் பிரமாணங்கள் செய்திருக்கிறார்கள். அதாமன் என்ற அரசன் முன்னிலையில் வசிஷ்ட மகரிஷியும் சத்தியப் பிரமாணம்
செய்திருக்கிறார்.
நவ்ருதா ஷபதம் குர்யாத் ஸ்வல்பே அப்யர்தே நரோ புத:
வ்ருதா ஹி ஷபதம் குர்வந் ப்ரேத்ய சேஹ ச நஷ்யதி||111
மிகச் சிறிய விஷயத்துக்கெல்லாம் சபதம் செய்யக் கூடாது. அவ்வாறு வீணாக சபதம் (சாத்தியப் பிரமாணம்) செய்பவன் இம்மையிலும் மறுமையிலும் நாசமடைவான்.
காமிநீஷு விவாஹேஷு கவாம் பக்ஷ்யே ததேந்தநே |
ப்ராஹ்மணா அப்யுபபத்தெள ச ஷபதே நாஸ்தி பாதகம் 112
இவ்வாறு பிரமாணம் செய்வதிலும்கூட சில விசேஷ விதி விலக்குகள் உண்டு. சில மனைவிகளைக் கொண்டவன் ‘நீதான் எனக்கு மிகவும் பிரியமானவள்’ என்று பொய்ச் சத்தியம் கூறும்போது அது ஒன்றும் பாதகமாகாது.-அவ்வாறே திருமண விஷயங்களிலும், வைக்கோல், ஹோம் சமித்துகள் விஷயங்களிலும், பிராம்மணனைக் காப்பதற்காகவும்
பொய்ச் சத்தியம் செய்தால் பாதகமில்லை.
ஸத்யேந ஷாபயேத் விப்ரம் க்ஷத்ரியம் வாஹநா ஆயுதை:
கோபீஜ காஞ்சநைர் வைஷ்யம் சூத்ரம் ஸர்வைஸ்து பாதகை:|| 113
‘சத்தியமாகச் சொல்கிறேன்’ என்று பிராம்மணனை பிரமாணம் செய்யச் சொல்ல வேண்டும்.
க்ஷத்ரியனைத் தனது வாகனங்களின் மீதும், ஆயுதங்களின் மீதும் சத்தியப் பிரமாணம் செய்யச் சொல்ல வேண்டும்.-வைசியனை, பசு, தனங்கள், தானியங்களின் மீது ஆணையிட்டுசத்தியப் பிரமாணம் செய்யச் சொல்ல வேண்டும். சூத்திரனிடம், ‘நான் பொய்கூறினால் பஞ்சமகா பாதகங்கள் செய்த பலனை அடைவேனாக!’ என்று ஆணையிட்டு சத்தியப்பிரமாணம் செய்யச் சொல்ல வேண்டும்.
அக்நிம் வாஆஹார யேதேந மப்அ சைநம் நிமஜ்ஜயேத்
புத்ரதாரஸ்ய வா அப்யேநம் ஷிராம்ஸி ஸ்பர்ஷயேத் ப்ருதக் 114
அக்னியை வைத்து சபதம் செய்யச் சொல்ல வேண்டும். அல்லது தண்ணீரில் மூழ்கி நின்று சபதம் செய்யச் சொல்லவேண்டும். அல்லது மனைவி மக்களின் மீது தலையில் கை வைத்துச் சபதம் செய்யச் சொல்ல வேண்டும்.
யமித்தோ ந தஹத்யக்நிராபோ நோந்மஜ்ஜயந்தி ச |
நசா ஆர்திம்ருச்சதி க்ஷிப்ரம் ஸ ஞேய: ஷபதே சுசி: || 115
அக்னியில் வைத்து சபதம் செய்த கை வெந்து போகாமல் இருந்தால், தண்ணீரில் மூழ்கியவன் நல்லபடி மேலே எழுந்து வந்தால், தலையில் அடித்து சபதம் செய்தவன் மனைவி மக்களுக்கு உடனடியாக எந்தத் துன்பமும் நேராதிருந்தால் அந்தச் சபதம் உண்மையானது.
வத்ஸஸ்யஹ்யபிஷஸ்தஸ்ய புரா ப்ராத்ரா யவீயஸா | நாக்நிர் ததாஹ ரோமாஅபி ஸத்யேந ஜகத: ஸ்ப : I-116
முன்னர் வத்ஸன் என்னும் மகரிஷி தன் தம்பி தன் மீது சுமத்தியபழிக்காக சபதம் செய்து அக்னிப் பிரவேசம் செய்தார். அவரது ஒரு ரோமம்கூட அக்னியால் எரிக்கப்படவில்லை.
யஸ்மிந் யஸ்மிந் விவாதே து கௌடஸாக்ஷ்யம் க்ருதம் பவேத் தத்தத் கார்யம் நிவர்தேத க்ருதம் சாஅப்யக்ருதம் பவேத் |-117
சொன்னது பொய்ச்சாட்சி என்பது தெரிந்தால் வழக்கு முழுவதும் விசாரித்து முடித்த பிறகானாலும்கூட மீண்டும் விசாரணையைத் தொடங்க வேண்டும்.
லோபாந் மோஹாத் பயாந்மைத்ராத் காமாத் க்ரோதாத் ததைவச
அக்ஞாநாத் பாலபாவாச்ச ஸாக்ஷ்யம் விததமுச்யதே!-118
பேராசை, விவேகமின்மை, பயம், நெருங்கிய நட்பு,காமம், குரோதம், அறியாமை, சிறுபிள்ளைத்தனம் முதலான காரணங்களால் ஜனங்கள் பொய்ச்சாட்சி கூறுவார்கள்.
ஏஷாமன்யதமேஸ்தாநேய: ஸாக்ஷயமந்ருதம் வதேத் |
தஸ்ய தண்ட விசேஷாம்ஸ்து ப்ரவக்ஷ்யாம்யனுபூர்வஷ: || 119
இவற்றில் எந்தெந்தக் காரணத்துக்காக பொய்ச் சாட்சி கூறப்பட்டதோ, அத்தற்கான தண்டனையைக் கூறுகிறேன், கேளுங்கள்.
லோபாத் ஸஹஸ்ரம் தண்ட்யஸ் து மோஹாத் பூர்வம் து ஸாஹஸம் |
பயாத் த்வெள மத்யமௌ தண்டெளமைத்ராத் பூர்வம் சதுர்குணம்11 120
பேராசையால் பொய்ச் சாட்சிகூறுபவனுக்கு ஆயிரம் பணம் தண்டமாக (அபராதமாக) விதிக்க வேண்டும்.-மோகத்தால் பொய்ச் சாட்சி கூறுபவனுக்கு பிரதம சாகச
தண்டம்.-பயத்தால்பொய்ச்சாட்சி கூறுபவனுக்கு இரண்டு மத்திம சாகச தண்டம்.
நட்பின் காரணமாக பொய்ச் சாட்சி கூறினால், நான்கு மடங்கு பிரதம சாகச தண்டம்.
காமாத் தஷகுணம் பூர்வம் க்ரோதாத் து த்ரிகுணம் பரம் |
அக்ஞாநாத் த்வே ஷதே பூர்ணே பாலிஷ்யாச்சதமேவது || 121
காமத்தால் பொய்ச்சாட்சி கூறியவனுக்க பத்து மடங்கு பிரதமசாகசம்.
குரோதத்தால் பொய்ச்சாட்சி கூறியவனுக்கு மும்மடங்குமத்திம சாகசம்.
அஞ்ஞானத்தால் பொய்ச்சாட்சி கூறியவனுக்கு இரண்டுசதங்கள்.
சிறுபிள்ளைத்தனமாக பொய்ச்சாட்சி கூறியவனுக்கு ஒரு சதம்.
ஏதாநாஹு: கௌஸாக்ஷ்யே ப்ரோக்தாந் தண்டாந் மநீஷிபி: |
தர்மஸ்யா அவ்யபிசாரார்மதர் மநியமாய ச|-122
இவ்வாறாக பொய்ச்சாட்சி கூறுபவர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும். தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் அதர்மத்தை அழிப்பதற்காகவும் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்பது சான்றோர் கூற்று.
கௌடஸாக்ஷ்ஷ்யம் து குர்வாணாம்ஸ் த்ரீந் வர்ணாந் தார்மிகோ ந்ருப: |
ப்ரவாஸயேத் தண்டயித்வா ப்ராஹ்மணம் து விவாசயேத் || 123
பொய்ச்சாட்சி கூறிய க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களுக்கு இதுவரை கூறியபடி தண்டனைகளை விதிக்க வேண்டும். பொய்ச் சாட்சி கூறியவன் பிராம்மணனாக இருப்பின், அவனுக்குத் தண்டனை விதிக்காமல் நாடு கடத்த வேண்டும்.
தஷ ஸ்தாநாநி தண்டஸ்ய மனு: ஸ்வாயம்புவோ அப்ரவீத் | த்ரிஷு வர்ணேஷு யாநி ஸ்யுரதோ ப்ராஹ்மணோ வ்ரஜேத்|| 124
க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களுக்கு விதிக்கும் தண்டனைகளில், குற்றவாளியின் உடம்பில் பத்து இடங்களில் தண்டிக்கும் முறையை ஸ்வாயம்புவ மனு குறிப்பிட்டுள்ளார். பிராம்மணனை மாத்திரம் உடம்பில்எந்தக் காயமும் ஏற்படுத்தாமல் நாடு கடத்த வேண்டும்
என்று கூறுகிறார்.
உபஸ்தமுதரம் ஜிஹ்வா ஹஸ்தெள பாதெள ச பஞ்சமம் |
சக்ஷர் நாஸா கர்ளெ சஸ் தனம் தேஹஸ் ததைவ ச 125
குறியிடம் வயிறு, நாக்கு, கைகள், கால்கள், கண்கள், மூக்கு, செவிகள், மார்பு, சரீரம் – இந்தப் பத்தும் தண்டனைக்குரிய இடங்கள். அதாவது தண்டனைப்படி இத்தனை அடிகள் என்று
அடிக்க வேண்டும்.
அனுபந்தம் பரிஞாய தேஷகாலெள ச தத்வத: |
ஸாரா அபராதெள சாஆலோக்ய தண்டம் தண்ட்யேஷு பாதயேத் | 126
தண்டனை விதிக்கும்போது இன்னும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
திரும்பத் திரும்பக் குற்றம் செய்பவனா அல்லது முதன்முறையாக குற்றமிழைத்திருக்கிறானா என்று பார்க்க வேண்டும். தேச,காலங்களையும் பார்க்க வேண்டும். இரவா, பகலா என்பதைப் பார்க்க வேண்டும்.அவன் பலசாலியா, பணக்காரனா என்பதைப் பார்க்க வேண்டும். முக்கியமாக இழைத்த குற்றம் எத்தன்மையது, எதற்காக
இழைக்கப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும்.
அதர்மதண்டநம் லோகே யஷோக்நம் கீர்திநாஷநம்
அஸ்வர்க்யம் ச பரத்ரா அபி தஸ்மாத் தத் பரிவர்ஜயேத் || 127
குற்றமற்றவனைக் குற்றவாளி எனக் கருதி அல்லது வேண்டுமென்றே தண்டனை விதித்தால், அந்த அதர்மத்தால் இவ்வுலக வாழ்வில் இகழை அடைவான். இறந்த பிறகு சொர்க்க லோகமும் கிட்டாது. மறுமையிலும் இகழத்தக்க வாழ்க்கையே அமையும்.
எனவே, அநீதியாக எவரையும் தண்டிக்கலாகாது.
அதண்ட்யாந் தண்டயந் ராஜா தண்ட்யாம்ஷ்சைவா அப்யதண்டயந் |
அயஷோ மஹதாப்நோதி நரகம்சைவ கச்சதி || 128
தண்டிக்க வேண்டியவர்களைத் தண்டிக்காமல் விடும் அரசனும், குற்றமற்றவனுக்கு தண்டனை அளித்த அரசனும் புகழை இழந்து இகழ்ச்சிக்காளாவான். மரணத்துக்குப் பிறகு கொடிய நரகத்தை அடைவான்.
வாக்தண்டம் ப்ரதமம் குர்யாத் திக்கண்டம் ததநந்தரம்|
த்ருதீயம் தனதண்டம் து வததண்டமத:பரம் || 129
தெரியாமல், சிறிய தவறிழைத்தவனானால் அவனை அதட்டி அனுப்புவதே தண்டனைதான். உத்தமனானவன் தெரியாமல் ஏதோ சூழ்நிலையால் தவறிழைத்தால், அவனுக்கு அந்தத் தண்டனையே பெரும் தண்டனையாக அவனைப் பாதிக்கும். அடுத்து, பெரிய தவறிழைத்தவனானால் அவனைத் திட்டி மிரட்டி அனுப்ப வேண்டும். இத்தகையவன் பயந்து மீண்டும் தவறிழைக்க மாட்டான்.-இந்த இரு தண்டனைகளும் சூழ்நிலையால் தெரியாமல் வேறு வழியின்றி செய்துவிட்ட தவறுகளுக்கான தண்டனையேயன்றி
குற்றங்களுக்கான தண்டனையன்று. தவறுவது என்பது வேறு, குற்றமிழைப்பது என்பது வேறல்லவா? மூன்றாவது தண்டனை எதுவெனில் – குற்றத்தின் தன்மையைப் பொறுத்து குற்றவாளிக்கு இவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்று அபராதம் விதிப்பது.
நான்காவது தண்டனையாகத்தான் அடிப்பதைக் கூறியிருக் கிறார். ஒருவன் செய்த குற்றத்தைப் பொறுத்து அவனுடைய பத்து அங்கங்களில் எந்த அங்கத்தில், எத்தனை அடிகள் அடிக்க வேண்டும் என்று தண்டனை விதிக்க வேண்டும்.
வதேநாபி யதாத்வேதாந் நிக்ரஹீதும் ந ஷக்னுயாத் |
ததை ஸர்வமப்யேதத் ப்ரயுஞ்ஜீத சதுஷ்டயம் || 130 அடிகளைக் கொடுத்தும்கூட ஒருவனை அடக்க முடியவில்லை யெனில், அதிக அளவு அபராதம் போட்டும், நயமாகவும் பயமாகவும் பேசித் திருத்தப் பார்க்க வேண்டும்.
லோகஸம்வ்யவஹாரார்த்தம் யா: ஸம்ஞா ப்ரதிதா புவி |
தாம்ர ரூப்ய சுவர்ணாநாம் தா: ப்ரவஷ்யாம்யசேஷத: || 131
வாங்கவும் விற்கவும் உபயோகப்படும் (நாணயங்கள்) தங்கம், வெள்ளி,செம்பு இவற்றின் அளவுகளைக் கூறுகிறேன், கேளுங்கள்.
ஜாலாந்தரகதே பாநெள யத்சூக்ஷ்மம் த்ருஷ்யதே ரஜ: 1
ப்ரதமம் தத் ப்ரமாணாநாம் த்ரஸரேணும் ப்ரசக்ஷதே |-132
கதவு, ஜன்னல்களின் வழியாக சூரிய கிரணங்கள் நுழையும் போது அதில் தூசுகள் நம் கண்ணுக்குத் தெரியும். அதில் ஒரு தூசி அளவிலானது த்ரஸரேணு எனப்படும்.
த்ரஸரேணவோ அஷ்டௌ விக்ஞேயா லிக்ஷைகா பரிமாணத: 1
ஸா ராஜஸர்ஷபஸ் திம்ரஸ் தே த்ரயோகௌரஸர்ஷய: || 133
இந்த திரசரேணுக்கள் லிட்சை எனப்படும். மூன்று லிட்சைகள் கொண்டது ராஜஸர்ஸபம் எனப்படும். மூன்று ராஜஸர்ஸபங்கள் கொண்டது கௌரஸர்ஸபம் எனப்படும். (வெண்கடுகு அளவு)
ஸர்பஷா: ஷட்கவோ மத்யஸ் த்ரியவம் த்வேக க்ருஷ்ணலம் |
பஞ்ச கிருஷ்ணலகோ மாஷஸ்தே சுவர்ணஸ் து சோடஷ || 134
ஆறு வெண்கடுகுகள் எடை கொண்டது யவம் எனப்படும். மூன்று யவைகள் எடை கொண்டது ஒரு குன்றிமணி. ஐந்து குன்றிமணிகள் எடை கொண்டது மாஷம் எனப்படும். பதினாறு மாஷங்கள் எடை கொண்டது ஒரு சுவர்ணம் எனப்படும்.
பலம் சுவர்ணாஷ் சத்வார: பலாநி தரணம் தஷ |
த்வே க்ருஷ்ணலே ஸமத்ருதே விக்ஞேயோ ரூப்யமாஷக: || 135
நான்கு சுவர்ணம் எடை கொண்டது ஒரு பலம். பத்து பலங்கள் எடை கொண்டது ஒரு தரணம். இரண்டு குன்றிமணி எடை கொண்டது ஒரு ரூப்யமாஷகம் ஆகும். (இது வெள்ளியின் எடைஅளவு.)
தே ஷோடஷ ஸ்யாத் தரணம் புராணஷ்சைவ ராஜத:
கார்ஷாபணஸ்து விக்ஞேயஸ் தாம்ரிக: கார்ஷிக: பண: 136
பதினாறு வெள்ளி மாஷங்கள் எடை கொண்டது ஒரு வெள்ளி தரணம் ஆகும். இந்த வெள்ளி தரணத்துக்கு புராணம் என்னும் ஒரு பெயர் உண்டு..-செம்பினால் செய்யப்பட்ட நாணயம் கார்ஷாபணம் எனப்படும்.
தரணாநி தஷஞேய: ஷதமாநஸ்து ராஜத: |
சது: ஸௌவர்ணிகோ நிஷ்கோ விஞேயஸ் து ப்ரமாணத: || 137
பத்து வெள்ளி தரணங்கள் சேர்ந்த எடைக்கு சதமானம் என்று பெயர். நான்கு சுவர்ணங்கள் எடை கொண்ட தங்கத்துக்கு நிஷ்கம் என்று பெயர்.
பணாநாம் த்வே ஷதே ஸாஅர்தே ப்ரதம: ஸாஹஸ: ஸ்ம்ருத: 11
மத்யம: பஞ்ச விஞேய: ஸஹஸ்ரம் த்வேவ சோத்தம:I-138
இருநூற்று ஐம்பது பணம் கொண்டது பிரதம சாகசம் அல்லது பூர்வசாகசம் எனப்படும். ஐநூறு பணம் கொண்டது மத்திய சாகசம். ஆயிரம் பணம் கொண்டது உத்தம சாகசம் எனப்படும்.
ருணேதேயே ப்ரதிஞாதே பஞ்சகம் ஷதமர்ஹதி 11
அபஹ்நவே தத் த்விகுணம் தந்மநோரனுஷாஸநம்|| 139
கடனாளி கடனைத் திருப்பித் தராமல் வழக்கு நீதிமன்றத்துக்குவந்த பிறகு, தான் கடன் பெற்றுக் கொண்டது உண்மைதான் என்று கூறினால், அவனிடமிருந்து கடன் தொகையை கடன் கொடுத்தவனுக்கு வாங்கித் தர வேண்டும். மேலும் நூற்றுக்கு ஐந்துபணம் அபராதம் விதிக்க வேண்டும்.-கடனாளி தான் வாங்கவே இல்லை என்று பொய் கூறி மறுத்தால், வழக்கு விசாரணையில் அவன் பொய் கூறியுள்ளான் என்பது நிரூபணமானால் கடன் கொடுத்தவனுக்கு அந்தத் தொகையை வாங்கித் தர வேண்டும். அதற்கும் மேல் நூற்றுக்குப்
பத்து பணம் அபராதம் விதிக்க வேண்டும். இது மனுவின் சாசனம்.
வசிஷ்டவிஹிதாம் வ்ருத்திம் ஸ்ருஜேத் வித்தவிவர்திநீம்
அஷீதிபாகம் க்ருஹ்ணீயாந் மாஸாத் வார்துஷிக: ஷதே|| 140
வட்டி ஜீவனம் செய்பவன், தன் செல்வத்தைப் பெருக்குவதற்காக நூற்றுக்கு எண்பதில் ஒரு பாகம் மாத வட்டியாகப்பெற வேண்டும். இது வசிஷ்டர் வாக்கு.
த்விகம் ஷதம்வா க்ருஷ்ணீயாத் ஸதாம் தர்மமணுஸ்மந் |
த்விகம் ஷதம் ஹி க்ருஹ்ணாநோ ந பவத்யர்தகில்பிஷி |-141
சாதுக்களுடைய தர்மத்தை அனுசரிப்பவன், நூற்றுக்கு இரண்டுவட்டிகூட வாங்கலாம். இப்படி வாங்கினாலும் அவன் பாபியாக மாட்டான்.
விகம் த்ரிகம் சதுஷ்கம் ச பஞ்சகம் ச ஷதம் சமம் 1
மாஸஸ்ய வ்ருத்திம் க்ருஹ்ணீயாத் வர்ணாநாமனுபூர்வவு: |-142
சாதுக்களுடைய தர்மத்தை அனுசரிப்பவன், நூற்றுக்கு மாதத்துக்கு இரண்டு வட்டியைப் பிராம்மணனிடம் வாங்கலாம்;-மூன்று வட்டியை க்ஷத்திரியனிடம் வாங்கலாம்; நான்கு வட்டியை வைசியனிடம் வாங்கலாம்; ஐந்து வட்டியை சூத்திரனிடம் வாங்கலாம்.
நத்வேவாஆதௌ ஸோபகாரே கௌஸீதீம் வருத்திமாப்நுயாத் | நசாஆதே: காலஸம்ரோதாந் நிஸர்கோ அஸ்தி நவிக்ரய: || 143
நிலத்தை அடகு வைத்திருந்தால், அதில் வரும் லாபத்தை அனுபவிப்பதால் வட்டி என்று எதுவுமே வாங்கக்கூடாது.-நெடுங்காலம் அடகில் இருக்கிறது என்பதற்காக அதை விற்கவும் கூடாது.
நபோக்தவ்யோ பலாதாதிர் புஞ்ஜாநோ வ்ருத்திமுத்ஸ்ருஜேத் | மூல்யேந தோஷயேச் சைநமாதிஸ்தேநோ அந்யதா பவேத் || 144
அடகு வைக்கப்பட்ட பொருட்களை, பலாத்காரமாக,தான் அனுபவிக்கக்கூடாது . அப்படி அனுபவிப்பவன் வட்டி வாங்கக் கூடாது. அவன் அனுபவிப்பதால் அந்தப் பொருள் பாழாகுமானால், அப்பொருளின் விலைமதிப்பு எவ்வளவோ, அவ்வளவு தொகையை பொருளின் உடைமைக்காரனுக்குக் கொடுக்க வேண்டும். இல்லாவிடில் இவன் திருடன் எனப்படுவான்.
ஆதிஷ் சோபநிதிஷ் சோபெள ந காலாஅத்ய யமர்ஹத: அவஹார்யெள பவேதாம் தௌதீர்க்ககால மவஸ்திதெள || 145
அடகு வைக்கப்பட்ட பொருளும், இரவல் பெற்ற பொருளும் ஒருக்காலும் அவன் உடைமையாகாது. அப்பொருளின் சொந்தக்காரன் கேட்கும்போது அவைகளைக் கொடுத்துவிட வேண்டும்.
ஸம்ப்ரீத்யா புஜ்யமாநாநி ந நஷ்யந்தி கதாசந | தேனுருஷ்ட்ரோ வஹந்நஷ்வோ யஷ்ச தம்ய: ப்ரயுஜ்யதே|| 146
பசு, ஒட்டகம், சவாரி செய்யும் குதிரை, எருது முதலானவைகளை, அதன் சொந்தக்காரன் மனமுவந்து அனுபவித்துக் கொள்ளுமாறு கொடுத்தால் அனுபவிக்கலாம். ஆனால், எந்நாளும் அவைகள் இவனுடைய சொந்தமாகாது.
யத்கிஞ்சித் தஷ வர்ஷாணி ஸந்நிதெள ப்ரேக்ஷதே தநீ புஜ்யமாநம் பரைஸ்தூஷ்ணீம் நஸதல்லப்து மர்ஹதி !-147
எந்த ஒரு பொருளையும் அதன் சொந்தக்காரன் அனுமதியின்றி அனுபவிதித்துக் கொண்டிருந்தால், சொந்தக்காரன் அதைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சொந்தக்காரன் எந்த நடவடிக்கையும்
அஜடஷ் சேதபோகண்டோவிஷயே சாஸ்ய புஜ்யதே 1
பக்நம் தத் வ்யவஹாரேண போக்தா தத் தனமர்ஹதி ||| 148
அப்பொருளின் சொந்தக்காரன் அறிவிலியல்லன், மேலும் பதினாறு வயதைக் கடந்தவன், என்னும்போது அவன் தன் சொத்தை பிறர் அனுபவிப்பதைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தால், பத்தாண்டுகளில் அது அனுபவித்தவன் சொத்தாகிவிடும். ஆனால்,
சொந்தக்காரன் அறிவு குறைந்தவன் (அரைப் பைத்தியம், அசடாக இருப்பவன்) என்றாலும், பதினாறு வயது நிறையாதவன் என்றாலும் இந்த விதிமுறை பொருந்தாது..
ஆதி: ஸீமா பாலதனம் நிக்ஷேபோபநிதி: ஸ்த்ரிய: 1
ராஜஸ்வம் ஸ்ரோத்ரியஸ்வம் ச ந போகேந ப்ரணஷ்யதி||| 149
அடகு வைத்த பொருள், பூமி எல்லை, பாலகர் சொத்து, இவ்வளவு என்று கூறி பாதுகாக்கச் சொல்லி கொடுத்து வைத்த பொருள், இவ்வளவு என்று கூறாமல் பூட்டி வைத்துக் கொடுத்த
பெட்டி, பணிப்பெண்கள், மன்னனுக்குரிமையானது, பிராம்மண னுக்குரிமையானது இவையெல்லாம் அனுபவித்துக் கொண்டிருப்ப வனுக்கு உரிமையாகாது. அதாவது பத்து வருட அனுபவ உரிமை என்பது இந்த விஷயங்களுக்குக் கிடையாது.
ய: ஸ்வாமிநாஅநநுஞாதமாதி தே அவிசக்ஷண:
தேநா அர்தவ்ருத்திர் மோக்தவ்யா தஸ்ய போகஸ்ய நிஷ்க்ருதி: || 150
தன்னிடம் அடகு வைக்கப்பட்ட பொருளை சொந்தக் காரனுக்குத் தெரியாமல் அனுபவிப்பவன், தான் அனுபவித்த காரணத்தால் அதன் வட்டித் தொகையில் பாதியைத் தள்ளுபடி செய்யவேண்டும்.
குஸீ தவ்ருத்திர் வைகுண்யம் நாஅத்யேதி ஸக்ருதாஹ்ருதா | தான்யே ஸதே லவே வாஹ்யே நாஅதிக்ராமதி பஞ்சதாம் ||-151
ஒருமுறை நிர்ணயித்த வட்டித் தொகையை இரு மடங்காக்கலாம். அதற்கும் மேல் கூடாது. தானியங்கள், பழங்கள், காய்கள்,கம்பளத்துக்கான ரோமம், வாகனம் இவைகளை விலை பேசிய பிறகுகாலம் கடந்தால், ஐந்து மடங்கு அதிகரிக்கலாம்.
க்ருதா அனுஸாராததிகா வ்யதிரிக்தா நசித்யதி 11 குஸீதபதமாஹுஸ்தம் பஞ்சகம் ஷதமர்ஹதி || 152
அந்தந்த வர்ணத்தாருக்குத் தக்கபடி நூற்றுக்கு இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்று விதிக்கப்பட்டதைவிட அதிக வட்டி வாங்கக் கூடாது. வர்ணபேதம் பாராமல் அதிக வட்டி வாங்குவது நிந்தைக் குரியது.
நாதிஸாம்வத்ஸரீம் வருத்திம் ந சாஅத்ருஷ்டாம் புநர்ஹரேத் |
சக்ரவ்ருத்தி காலவ்ருத்தி காரிதா காயிகா சயா |-153
இவ்வளவு மாத வட்டி, இவ்வளவு காலத்துக்குள் தொகையைத் திரும்ப அடைக்க வேண்டும் என்பதை முதலிலேயே பேசிக்கொள்ள வேண்டும். இந்த ஏற்பாடு ஒரு வருடத்துக்குச் செய்து கொள்ளலாம். அதற்கு மேற்படக்கூடாது. மேலும் சாஸ்திரத்தில் சொல்லப்படாத முறையில் சாஸ்திர விரோதமாக வட்டி வாங்கக் கூடாது. வட்டிக்கு வட்டி கட்டுவது சக்கரவிருத்தி எனப்படும்.-தினவட்டி,வார வட்டி என்று அதிக வட்டி வசூலிப்பதற்கு காலவிருத்தி எனப்படும்.
கடன் பெற்றுக் கொண்டவன், கடன் கொடுத்தவன் கொடுத்த தொல்லைகள் தாங்க முடியாமல் குறித்த காலத்துக்கு முன்பே கொடுக்கும் அதிக வட்டி காரிதவிருத்தி எனப்படும்.
உடலுழைப்பு செய்யுமாறு நியமிப்பது காயிகவிருத்திஎனப்படும். சக்கரவிருத்தி, காலவிருத்தி, காரிதவிருத்தி, காயிகவிருத்திஎன்னும் இந்த நான்கு முறைகளுமே சாஸ்திரத்துக்கு விரோதமானவை.
ருணம் தாதுமஷக்தோ ய: கர்துமிச்சேத் புந: க்ரியாம் |
ஸ தத்வா நிர்ஜிதாம் வ்ருத்திம் கரணம் பரிவர்தயேத் !-154
கடன் வாங்கிக் கொண்டவன் கடன் தொகையைத் திருப்பித் தர இயலாத நிலையில் இருந்தால், அவனிடம் கடன் கொடுத்தவன் வட்டியை மட்டும் வாங்கிக் கொள்ள வேண்டும். அசலுக்குப் புதிதாக மீண்டும் ஒரு பத்திரம் எழுதி வாங்க வேண்டும்.
அதர்ஷயித்வா தத்ரைவ ஹிரண்யம் பரிவர்தயேத்
யாவதீ ஸம்பவேவ்ருத்திஸ்தாவதீம் தாதுமர்ஹதி || 155
கடன்காரன் அந்த வட்டிப் பணத்தைக்கூட செலுத்த இயலாத நிலையில் இருந்தால், அப்போது அந்த வட்டித் தொகையோடு அசலையும் சேர்த்து முழுத் தொகைக்குமாக புதிதாக ஒரு கடன் பத்திரம் எழுதி வாங்க வேண்டும்.
சக்ரவ்ருத்திம் ஸமாரூடோ தேஷகாலவ்யவஸ்தித: |
அதிக்ராமந் தேஷகாலௌ ந தத்பலமவாப்னுயாத் || 156
வண்டியோட்டி இவ்வளவு தூரம் இந்தப் பொருளைக் கொண்டு போய்ச் சேர்க்கிறேன், அதற்கு இவ்வளவு பணம் தர வேண்டும் என்று நிர்ணயித்துக் கொள்வது தேசவியவஸ்தை எனப்படும்.-இத்தனை நாட்களில் இந்த வேலையைச் செய்து முடிக்கிறேன்,-அதற்கு இவ்வளவு தொகை தரவேண்டும் என்று நிர்ணயித்துக் கொள்வது காலவியவஸ்தை எனப்படும்.-இவ்வாறு நிர்ணயித்துப் பேசிய பிறகு அப்படிச் செய்யாவிட்டால். குறிப்பிட்ட தூரம் கொண்டு போகாவிட்டால் அல்லது குறிப்பிட்ட நாட்களுக்குள் செய்து முடிக்காவிட்டால் பேசியபடி தொகையைக் கொடுக்க வேண்டியதில்லை..
ஸமுத்ரயாநகுஷலா தேஷகாலா அந்த தர்ஷி : |
ஸ்தாபயந்தி து யாம் வ்ருத்திம் ஸா தத்ராஅதிகமம் ப்ரதி || 157
தரை மார்க்கமாகவும், சமுத்திர மார்க்கமாகவும் செல்லும்போது, இவ்வளவு சுமைக்கு, இவ்வளவு தூரத்துக்கு, இவ்வளவு காலத்துக்கு, இவ்வளவு தொகை வாடகை என்று வர்த்தகர்களிடம் பேசிக் கொள்ள வேண்டும்.
யோ யஸ்ய ப்ரதிபூஸ் திஷ்டேத் தர்ஷநாயேஹ மாநவ: அதர்ஷயந் ஸ தம் தஸ்ய யதேத ஸ்வதநாத்ருணம் |-158
கடன் விஷயத்தில், பிணையாக நின்று கடன் வாங்கிக் கொடுத்தவன், கடன் கொடுத்தவன் கடனாளியைப் பார்க்க வேண்டும் என்று சொல்லும்போது அவனை அழைத்து வரவேண்டும்.-அவனைக் காட்டாமலே இருந்துவிட்டால், பிணையாளனே கடன் முழுவதையும் தீர்க்க வேண்டும்.
ப்ராதிபாவ்யம் வ்ருதாதாநமாக்ஷிகம் ஸௌரிகம் ச யத் | தண்ட ல்காஅவசேஷம் ச ந புத்ரோ தாதுமர்ஹதி |-159
பிணை நின்று கடன் வாங்கித் தந்த தொகைக்கு பிணையாளனே பொறுப்பு. அவன் இறந்து விட்டால் அவன் மகன் பொறுப்பு. அதேபோல் இறந்தவன், பிரயோஜனமேதுமின்றி பந்தயம் கட்டிய தொகைக்கும் அவன் மகனே பொறுப்பு. இவ்வாறு சூதாடியதில் கடன் வைத்துள்ள தொகைக்கும், மதுபானக் கடைகளில் கடன் வைத்துள்ள தொகைக்கும், தண்டனையாக விதிக்கப்பட்ட அபராதத் தொகைக்கும், செலுத்த வேண்டிய வரித் தொகைக்கும் அவன் மகனே பொறுப்பு.
தர்ஷநப்ராதிபாவ்யே து விதி: ஸ்யாத் பூர்வசோதித: தானப்ரதிபுவி ப்ரேதே தாயாதாநபி தாபயேத் || 160
தந்தை உயிரோடிருக்கும்போது தனது கடன்களுக்கு வேறொருவரை பிணையாக நியமித்திருந்தால் அவன் மகன்கள் அந்தக் கடன் தொகைக்கு பொறுப்பேற்க வேண்டியதில்லை. ஆனால் வேறு ஒருவரின் கடனுக்கு இவர்களின் தந்தை பிணையாக நின்று பொறுப்பேற்றிருந்து இறந்து விட்டால் அந்தத் தொகைக்கு அவன் மகன்களே பொறுப்பேற்க வேண்டும்.
அதாதரி புநர்தாதா விக்ஞாத ப்ரக்ருதாவருணம் |
பஷ்சாத் ப்ரதிபுவி ப்ரேதே பரீப்ஸேத் கேந ஹேது நா|| 161
பிணையாக நின்றவன் இறந்துவிட்டால், கடன் கொடுத்தவன் தனக்குச் சேரவேண்டிய தொகையைப் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.
நிராதிஷ்ட தனஷ்சேத் து ப்ரதிபூ: ஸ்யாதலம்தன:
ஸ்வதநாதேவ தத் தத்யாந் நிராதிஷ்ட இதி ஸ்திதி: || 162
பிணையாக நின்றவன், கூறியபடி உரிய காலத்தில் கடனைத் தீர்க்காமலும், கடன்காரனையும் அழைத்து வந்து காட்டாமலும் இருந்துவிட்டு இறந்தும் போய் விட்டால், பிணையாக நின்றவனுடைய சந்ததியினரே கடன் கொடுத்தவனுக்குச் சேரவேண்டிய தொகையைச் செலுத்த வேண்டும்.
மத்தோந் மத்தா ஆர்தா அத்யதீநைர் பாலேந ஸ்தவிரேண வா |
அஸம்பத்த க்ருதஷ்சைவ வ்யவஹாரோ ந ஸித்யதி | 163
குடிகாரன், பைத்தியக்காரன், நோயாளி, சிறுவன், வயோதிகன் முதலானவர்களுடன் வாங்கல் கொடுக்கல் சம்பந்தமான வழக்குகளையும், பந்துக்களே ஆற்ற ஒருவனிடம் வாங்கல் கொடுக்கல் சம்பந்தமான வழக்கையும் ஏற்கத் தேவையில்லை.
ஸத்யா ந பாஷா பவதி யத்யபிஸ்யாத் ப்ரதிஷ்டிதா |
பஹிஷ் சேத் பாஷ்யதே தர்மாந் நியதாத் வ்யாவஹாரிகாத் || 164
எழுத்து மூலமான பத்திரமாக இருந்தாலும்கூட அவரவர் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொண்டுவிட முடியாது. காலங்காலமாகக் கடைப்பிடித்து வரும் வழக்கத்துக்கு விரோதமாகவும், தர்மத்துக்கு விரோதமாகவும் இருக்கும் ஒப்பந்தங்களை நிறைவேற்றத் தேவையில்லை. இத்தகைய வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
யோகா ஆதமநவிக்ரீதம் யோகதாந ப்ரதிக்ரஹம்
யத்ர வாஅப்யுபதிம் பஷ்யேத் தத் ஸர்வம் விநிவர்தயேத்-165
மோசடியாக அடகு வைக்கப்பட்ட பொருள், மோசடியாக வாங்கிய பொருள், மோசடியாகத் தானம் கொடுத்த பொருள்இவையெல்லாம் செல்லுபடியாகாது. உதாரணமாக, ஒருவன் எங்கோதிருடிய பொருளைக் கொண்டு வந்து விற்றான் என்று வைத்துக்கொள்வோம். அதை ஒருவன் விலை கொடுத்து வாங்கியிருந்தாலும்அது அவனுடையது ஆகாது. காவலர்கள் தேடிப் பிடிக்கும்போதுஅதை அவனிடமிருந்து பறித்துச் செல்வார்கள்.
அடகு வைக்கப்பட்ட பொருளும் அப்படியே.மோசடிப் பொருளாக இருந்தால், காவலர்களிடம் கொடுத்துவிடவேண்டியதுதான். தானம் வாங்கியவன் அந்தப் பொருளைத்தன்னுடையது என்று நினைத்துக் கொண்டிருப்பான். ஆனால் அது மோசடிப் பொருளாக இருந்தால் அவனுடையதாகாது. மோசடிக்குள்ஈடுபட்ட எந்த விவகாரமானாலும் இதுதான் கதி.
க்ரஹீதா யதி நஷ்ட: ஸ்யாத் குடும்பார்தே க்ருதோ வ்யய: | தாதவ்யம் பாந்தவைஸ் தத்ஸ்யாத் ப்ரவிபக்தைரபி ஸ்வத: I |-166
கூட்டுக் குடும்பமாக இருக்கும்போது, அதில் ஒருவன் கடன் வாங்கி குடும்பத்துக்காகச் செலவு செய்கிறான். அவன் இறந்து போய்விட்டான். குடும்பத்தவர்களும் தனித்தனியாகத் தங்களுக்குரியபங்கைப் பிரித்துக் கொண்டு விட்டார்கள். இப்போது அந்தக் கடன்
தொகையை யார் அடைப்பது? குடும்பச் சொத்துகளை பங்கு பிரித்துக் கொண்ட அத்தனைபேருக்கும் அந்தக் கடனை அடைக்க வேண்டிய கடமை உண்டு.எந்த விகிதத்தில் சொத்துகளைப் பிரித்துக் கொண்டார்களோ அந்தவிகிதாசாரப்படியே கடன் தொகையை அவரவரும் கொடுக்கவேண்டும்.
குடும்பார்தே அத்யதீநோ அபி வ்யவஹாரம் யமாசரேத்
ஸ்வதேஷேவா விதேஷே வாதம் ஜ்யாயாந் ந விசாலயேத் || 167
குடும்பத்தலைவன் ஊரிலிருந்தபோதும், வெளியூருக்குச் சென்றிருக்கும்போதும், அந்தக் குடும்பத் தேவைகளுக்காக அவன் பணியாளன் கடன் வாங்கினால், அதைக் குடும்பத் தலைவன் அடைக்க வேண்டும்.
பலாத் தத்தம் பலாத்புக்தம் பலாத் யச்சா அபி லேகிதம் |
ஸர்வாந் பலக்ருதா நர்தாநக்ருதாந் மனுரப்ரவீத் || 168
பலவந்தமாக ஒருவனுக்குக் கடன் கொடுத்துவிட்டு, வட்டி கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று ஒருவன் வழக்குப் போட்டால் அது செல்லாது.-ஒருவன் பலாத்காரமாக பிறனொருவனிடமிருந்து நிலத்தைப் பறித்துக் கொண்டு அனுபவித்து வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். பத்து வருடம் அனுபவித்தவனுக்கு அந்த நிலம் உரிமையாகும் என்னும் சட்டம் இந்த வழக்கில் செல்லாது. பலாத்காரமாக ஒருவனிடமிருந்து சொத்தை எழுதி வாங்கிக் கொண்டால் அந்தப் பத்திரமும் செல்லாது. இவ்வாறு மனுபகவான் கூறியுள்ளார்.
த்ரய: பரார்தே க்ளிஷ்யந்தி ஸாக்ஷிண: ப்ரதிபூ : குலம்| சத்வாரஸ் தூபசீயந்தே விப்ர ஆட்யோ வணிங்ந்ருப:I-169
சாட்சிகள், பிணையாளர்கள், தன்னிடம் வந்த விவகாரங்களைத் தீர்த்து வைக்கும் அந்தந்த ஊர்த் தலைவர்கள் என்னும் இம்மூவகையாரும் பிறருக்காக கிலேசத்தை அனுபவிப்பவர்கள். அந்தணன், செல்வந்தன், வர்த்தகன், அரசன் என்னும் இந் நால்வகையாரும் மற்றவர்களால் பயனடைபவர்கள். ஒரு அரசனுடைய வளர்ச்சி என்பது அவன் தேசத்தைச் சேர்ந்த அத்தனை தரப்பு மக்களையும் சேர்ந்தது. தனியொருவனாக ஒரு
அரசன் வளர்ச்சியடைந்து விட முடியாது.-அதேபோன்று, வட்டிக்கு விட்டு பணத்தைப் பெருக்கும் செல்வந்தர்கள், தங்களிடம் வட்டிக்குக் கடன் வாங்கி வட்டி செலுத்துபவர்களால்தான் வளர்ச்சியடைகிறார்கள். வர்த்தகர்கள் தாங்கள் விற்கும் பொருள்களை பிறர்வாங்க. வாங்க அதில் கிடைக்கும் லாபத்தால் வளர்ச்சியடைகிறார்கள்.-பிராம்மணர்கள், மற்றவர்கள் கொடுக்கும் தானங்களாலும் தட்சிணைகளாலும் வளர்ச்சியடைகிறார்கள்.
அநாதேயம் நாஆததீத பரி நோ அபி பார்திவ: 1 நசாஆதேயம் ஸம்ருத்தோ அபி ஷ்மமப் யர்தமுத்ஸ்ருஜேத் ||| 170
அரசன் தன் பொக்கிஷத்தில் தனம் குறைந்தவனாக இருந்த போதிலும்கூட மக்களிடமிருந்து வாங்கும் வரித் தொகையை அதிக மாக்கக் கூடாது.
அதேபோன்று, தன் பொக்கிஷத்தில் தனம் நிரம்பி வழிந்த போதிலும் வாங்க வேண்டிய வரித் தொகையை, அது சிறிதளவே யானாலும்கூட வாங்காமல் இருக்கவும் கூடாது.
அநாதேயஸ்ய சாஆதாநாதாதேயஸ்ய ச வர்ஜநாத் | தௌர்பல்யம் க்யாப்யதே ராக்கு: ஸப்ரேத்யேஹ ச நஷ்யதி || 171
அரசன் வாங்க வேண்டிய பொருளை வாங்காமல் விடுவதாலும்,
வாங்க வேண்டாததை வாங்குவதாலும் திறமையற்ற அரசன் இவன் என்று தூற்றப்படுவான். மேலும் தனது தர்மத்தைச் சரியாக நிறைவேற்றாத காரணத்தால் இகபர சுகங்களை இழப்பான்.
ஸ்வாதாநாத் வர்ணஸம்ஸர்காதபலாநாம் ச ரக்ஷணாத் |
பலம் ஸஞ்ஜாயதே ராக் : ஸப்ரேத்யேஹ ச வர்ததே || 172
தனக்குச் சேர வேண்டியதை வசூலிப்பதாலும், வர்ணாஸ்ரம தர்ம முறைப்படி மக்களைக் காப்பதாலும், ‘இந்த அரசன் பலம் நிறைந்தவன், திறமைசாலி’ என்று போற்றப்படுவான். மேலும் இகபர சுகங்களை அடைவான்.
தஸ்மாத் யம இவஸ்வாமீ ஸ்வயம் ஹித்வாப்ரியா அப்ரியே 11 வர்தேத யாம்யயா வ்ருத்யா ஜிதக்ரோதோ ஜிதேந்த்ரிய: | 173
எனவே,அரசன் யமதர்மராஜனைப் போன்று யாரிடத்தும் விருப்பு வெறுப்பு அற்றவனாக அரசாட்சி நடத்த வேண்டும்.-கோபத்தை அடக்கியவனாக, புலனடக்கம் மிக்கவனாக, நீதிநெறி வழுவாது அரசாட்சி நடத்த வேண்டும்.
யஸ்த்வதர்மேண கார்யாணி மோஹாத் குர்யாந் நராதிப:
அசிராத் தம் துராமாம் வஷே குர்வந்தி ஷத்ர: ||1174
எந்த அரசன் மோகத்தால் அதர்மமாக ஆட்சி நடத்துகிறானோ, அந்தத் துஷ்ட அரசன் வெகு சீக்கிரத்திலேயே எதிரிகள் வசப் படுவான்.
காமக்ரோதெள து ஸம்யம்ய யோ அர்தாந் தர்மேண பஷ்யதி
ப்ரஜாஸ் தமனுவர்தந்தே ஸமுத்ரமிவ ஸிந்தவ: || 175
காம, குரோதங்கள் அற்றவனாக, சாஸ்திரம் விதித்தபடி வரி வசூலித்து, சாஸ்திரம் விதித்தபடி தர்மமாக அரசாட்சி செய்யும் அரசனை மக்கள் போற்றித் துதிப்பார்கள். கடலைச்
சென்றடை வதையே நோக்க மாகக் கொண்டிருக்கும் நதிகளைப் போல, மக்களும் அம் மன்னனை அண்டி இன்புற்று வாழ்வார்கள்.-உள்நாட்டுக் கலகங்கள் எதுவும் நேரிடாது. மக்கள் அவனிடம் மிக்க பக்தியோடும் அன்போடும் இருப்பதால் அவனை எத்தகைய
எதிரியாலும் வெல்ல முடியாது.
ய:ஸாதயந்தம் சந்தேந வேதயேத் தனிகம் ந்ருபே|
ஸராக்ஞா தச்சதுர்பாகம் தாப்யஸ் தஸ்ய ச தத் தனம் 176
அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற்ற தனிகனான ஒருவன், பிறருக்கு வட்டிக்குக் கடன் கொடுப்பவனாக இருந்து, அவன் தன் செல்வாக்கினால் ஏற்பட்ட அகந்தையால், தன்னால் எதுவும் செய்ய முடியும் என்று பயமுறுத்தி கடனாளிகளைத் துன்புறுத்தினால், கடன் தொகையில் நான்கில் ஒரு பாகத்தை அபராதமாக வசூலிக்க வேண்டும்.
கர்மணா அபி ஸமம் குர்யாத் தநிகாயா அதமர்ணிக: 1 )
ஸமோ அவக்ருஷ்ட ஜாதிஸ் து தத்யாச்ச்ரேயாம்ஸ் து தச்சநை:||-177
கடன்பட்டவன் தன் கடனைத் தீர்க்க இயலாத வறுமையில் இருந்தால், கடன் கொடுத்த தனிகன் அவனிடம் வேலை வாங்கிக்குகொள்ள வேண்டும். அதற்குக் கூலி தராமல் அந்தக் கூலித் தொகையைக் கடனுக்குக் கழிக்க வேண்டும். ஆனால், அந்தக் கடனாளி இந்தத் தனிகனுடைய வருணத்தைச் சேர்ந்தவனாகவோ அல்லது கீழ் வர்ணத்தைச் சேர்ந்தவனாகவோ இருந்தால் மட்டுமே இவ்வாறு செய்ய வேண்டும். மேல் வர்ணத்தவனாக இருந்தால் வேலைக்கு அமர்த்திக் கொள்ளக்கூடாது. சிறிது சிறிதாக கிடைத்த போது வசூல் செய்ய வேண்டும்.
அநேந விதிநா ராஜா மிதோ விவததாம் ந்ருணாம் |
ஸாக்ஷி ப்ரத்யய ஸித்தாநி கார்யாணி ஸமதாம் நயேத் 178
இவ்வாறாக, கடன் விஷயமான வழக்குகளில் அரசன், சாட்சிகளைக் கொண்டும், ஆதாரங்களைக் கொண்டும், உண்மையை ஊகித்து, பிறகு அது உண்மைதான் என்று ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட பிறகு தீர்ப்பளிக்க வேண்டும்.
குலஜே வ்ருத்தஸம்பந்நே தர்மக்ஞே ஸத்யவாதிநி 11
மஹாபக்ஷே தநிந்யார்யே நிக்ஷேபம் நிக்ஷிபேத் புத: | 179
ஒருவன், தான் வெளியூர் போகும்போதோ, வேறு காரணத்துக் காகவோ தன் பொருளை யாரிடமாவது ஒப்படைத்து, தான் கேட்கும் போது மீண்டும் பெற்றுக் கொள்ள எண்ணினால்,
எத்தகையவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பார்ப்போம்.
1. அவன் நற்குலத்தில் பிறந்தவனாக இருக்க வேண்டும்.
2. தூய பழக்கங்களோடு ஒழுக்கமானவனாக இருக்க வேண்டும்.
3. தர்மத்தை அறிந்தவனாக இருக்க வேண்டும்.
4. சத்தியமே பேசுபவனாக இருக்க வேண்டும்.
5.மனைவி மக்களோடு வாழும் குடும்பஸ்தனாக இருக்க வேண்டும்.-6. செல்வந்தனாக இருக்க வேண்டும்.-7. மதிக்கத்தக்கவனாக இருக்க வேண்டும்.-இத்தகையவனிடம் ஒப்படைத்த பொருள் மீண்டும் பத்திரமாக அவனுக்குக் கிடைக்கும்.
யோயதா நிக்ஷக்ஷிபேத் தஸ்தே யமர்தம் யஸ்ய மாநவ: |
ஸததைவ க்ரஹீதவ்யோ யதா தாயஸ் ததா க்ரஹ: || 180
முத்திரையிட்டோ, முத்திரையிடாமலோ, அடையாளமிட்டோ இடாமலோ எந்த வகையில் ஒரு பொருள் தன்னிடம் ஒப்படைக்கப் பட்டதோ, அதே வகையில் ஒப்படைத்தவன் வந்து கேட்கும்போது கொடுக்க வேண்டும்.
யோநிக்ஷேபம் யாச்யமாநோ நிக்ஷேப்துர் நப்ரயச்சதி |
ஸயாயஃப்ராட் விவாகேந தந் நிக்ஷேப்துர ஸந்நிதௌ || 181
ஒருவன், தான் ஒப்படைத்துச் சென்ற பொருளை திரும்ப வந்து கேட்கும்போது, வைத்துக் கொண்டிருப்பவன் கொடுக்காவிட்டால், அவன் நியாயாதிபதியிடம் சென்று முறையிட வேண்டும்.
ஸாக்ஷ்யபாவே ப்ரணிதிபிர் வயோரூபஸமந்விதை: 1
அபதேஷைஷ்ச ஸந்யஸ்ய ஹிரண்யம் தஸ்ய தத்வத: 11 182
நியாயாதிபதி தன் சபையில் உள்ள வயதான ஒருவரை மாறுவேடத்தில் அனுப்பி வாதி சொன்னவனிடம் பொருளை ஒப்படைக்கச் சொல்ல வேண்டும். மாறுவேட வயோதிகனும் நம்பத்தக்க அளவில் காரணங்களைக் கூறி தங்கத்தை அவனிடம் கொடுத்து சிறிது காலம் வைத்து வைக்குமாறும், சீக்கிரமே வந்து வாங்கிக் கொள்வதாகவும் கூற வேண்டும்.
தான் ஒப்படைக்கும் பொருளுக்கு பிறர் அறியாத ஏதோ ஒரு அடையாளத்தை வைக்க வேண்டும்.
ஸ யதி ப்ரதிபத்யேத யதாந்யஸ்தம் யதாக்ருதம் |
ந தத்ர வித்யதே கிஞ்சித் யத் பரை பியுஜ்யதே ||-183
பிறகு, சிறிது நாள் சென்று திருப்பித் தருமாறு கேட்க வேண்டும்.-வைத்த அடையாளத்தோடு கொடுத்ததைக் கொடுத்தபடியே திருப்பியளித்தால் அவன் நேர்மையானவன், அவன் மீது குற்றஞ்சுமத்தியவனே குற்றவாளி என்றறியலாம்.
தேஷாம் ந தத்யாத் யதி து தத்திரண்யம் யதாவிதி |
உபௌ நிக்ருஹ்ய தாப்ய: ஸ்யாதிதி தர்மஸ்ய தாரணா1I 184
அவ்வாறின்றி, அவன் கொடுத்ததை அப்படியே திருப்பித் தராமல் ஏமாற்றினால், அந்த ஏமாற்றுக்காரனிடமிருந்து நியாயாதிபதி உண்மை அறிவதற்காகக் கொடுத்து வைத்த தங்கத்தையும், தன்னிடம் முறையிட்டவன் பொருளையும் சேர்த்து இரண்டையும் பறிமுதல் செய்ய வேண்டும். முறையிட்டவனிடம் அவன் பொருளை ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு தர்மம் நிலைநிறுத்தப்பட வேண்டும்.
நிஷேபோபநிதீ நித்யம் நதேயௌ ப்ரத்யநந்தரே | நஷ்யதோ விநிபாதே தாவநிபாதே த்வநாஷிநௌ || 185
ஒருவன் தன்னிடம் எவருக்கும் தெரியாமல் கொடுத்து வைத்த பொருள், முத்திரையிட்டு அல்லது எண்ணிக் கொடுத்தது இவை களைத் தன்னிடம் ஒப்படைத்தவன் உயிரோடிருக்கும்போது, அவன் மகனிடமோ மற்றவரிடமோ கொடுக்கக் கூடாது.
ஸ்வயமேவ து யோ தத்யாந் மருதஸ்ய ப்ரத்யநந்தரே | நஸராக்ஞா நியோக்தவ்யோ ந நிக்ஷேப்துஷ் ச பந்துபி: || 186
ஒப்படைத்தவன் இறந்துவிட்டால், அவன் தன்னிடம் ஒப்படைத்த பொருளை இறந்தவன் மகனிடமோ, மகனில்லாவிடில் சொத்துக்கு அடுத்த உரிமையுடையவர் யாரோ அவரிடம் தானே எடுத்துச் சென்று கொடுத்துவிட வேண்டும். அப்படித் தானே எடுத்து வந்து கொடுத்தவனைப் போற்ற வேண்டுமே தவிர, அவன்மீது சந்தேகப்படக் கூடாது. இது
மட்டும்தான் கொடுத்து வைத்திருந்தாரா, இன்னும் ஏதேனும் இருக்கிறதா என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு அவன் மனத்தைப் புண்படுத்தக்கூடாது. தன்னிடம் இப்படிப்பட்ட வழக்கு வந்தால் அரசன் நேரடியாக விசாரித்து அவனைப் புண்படுத்தக் கூடாது.
அச்சலேநைவ சாஅந்விச்சேத் தமர்தம் ப்ரீதிபூர்வகம் |1
விசார்ய தஸ்ய வா வருத்தம் ஸாம்நைவ பரிஸாதயேத் || 187
வேறு அடைக்கலப் பொருள் அவனிடம் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டால், ஏதேனும் குறிப்பால் அதை உணரமுடிந்தால், நேரடியாக விசாரிக்காமல் ஒற்றர்களைக் கொண்டு
கண்டுபிடிக்க வேண்டும்.
நிக்ஷேபேஷ்வேஷ ஸர்வே விதி: ஸ்யாத் பரிஸாதநே |
ஸமுத்ரே நாஆப்னுயாத் கிஞ்சித் யதி தஸ்மாந் ந ஸம்ஹரேத் 1| 188
அடைக்கலமாக வைக்கப்பட்ட பொருட்களைப் பற்றிய விவகாரங்களை இவ்வண்ணமாக முடிவு செய்ய வேண்டும்.-அடைக்கலப் பொருளை திருப்பிக் கொடுத்தவன் மீது கொண்டு
வரப்படும் வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.
சௌரைப் ஹ்ருதம் ஜலேநோடமக்நிநா தக்தமேவ வா |
ந தத்யாத் யரி தஸ்மாத் ஸ ந ஸம்ஹரதி கிஞ்சந |–189
காப்பாற்றச் சொல்லி கொடுத்து வைக்கப்பட்ட நிதி அல்லது பொருள் திருடு போனாலோ, வெள்ளத்தால் அடித்துக் கொண்டு போனாலோ, நெருப்பில் எரிந்து போனாலோ அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை. எப்படித் திருப்பிக் கொடுக்க முடியும்? தெய்வ வசத்தால் அந்தப் பொருள் நாசமடைந்ததால், அதை வாங்கி வைத்துக் கொண்டவன் என்ன செய்யமுடியும்? எனவே அவன் எந்த வகையிலும் அந்தப் பொருளுக்குப் பொறுப்பாளியல்ல
நிக்ஷேபஸ்யா அபஹர்தாரமநிக்ஷேப்தாரமேவ ச |
ஸர்வை ருபாயைரந்விச்சேத் சபதைஷ் சைவ வைதிகை: I–190
அடைக்கலமாகக் கொடுத்ததை தானே எடுத்துக் கொண்டவன், அடைக்கலமாக வைத்துக் கொள்ளுமாறு எந்தப் பொருளையும் கொடுக்காமலே கொடுத்ததாகக் கூறுபவன் – இவர்களைப் பற்றிய உண்மைகளை பிரமாணம் (சத்தியம்) செய்யச் சொல்லியும், மற்ற
உபாயங்களாலும் கண்டறிய வேண்டும்..
யோ நிக்ஷேபம் நாஅர்பயதி யஷ் சா அநிஷிப்ய யாசதே |
தாவுபௌ சௌரவச்சாஸ்யௌ தாப்யௌ வாதத்ஸமம் தமம்|| 191
எவன் அடைக்கலப் பொருளைக் கொடுத்து வைக்காமலே, கொடுத்து வைத்ததாகக் கூறிக் கேட்கிறானோ, எவன் தன்னிடம்கொடுத்து வைக்கப்பட்ட அடைக்கலப் பொருளை இல்லை என்று கூறி தானே அபகரித்துக் கொள்ளப் பார்க்கிறானோ – இவர்களுக்கு திருடர்களுக்குரிய தண்டனை வழங்க வேண்டும். சிறிய தொகையாயின் தொகைக்கு சமமாக அபராதம் விதிக்க வேண்டும்.
நிக்ஷேபஸ்யா அபஹர்தாரம் தத்ஸமம் தாபயேத் தமம் |
ததோபநிதிஹர்தாரமவிசேஷேண பார்திவ: || 192
முதல் முறையாகக் குற்றம் செய்த குற்றவாளிக்கு இவ்வாறுஅபராதம் விதிக்க வேண்டும். இரண்டாம் முறையும் குற்றம்செய்தால் தண்டனை விதிக்க வேண்டும்.
உபதாபிஷ் ச ய கஷ்சித் பரத்ரவ்யம் ஹரேந்நர: |
ஸஸஹாய: ஸ ஹந்தவ்ய: ப்ரகாஷம் விவிதைர் வதை:|| 193
ஏதேனும் காரியம் நிறைவேற்றித் தருவதாக ஏமாற்றி லஞ்சம்பெற்றவனையும், அவனுக்கு உதவியாக இருந்தவர்களையும் விசாரித்து கடுமையான தண்டனைகளைக் கொடுக்க வேண்டும். அதிகபட்சமாக மரண தண்டனையும் கொடுக்கலாம்.
நிக்ஷேபோய: க்ருதோ யேந யாவாம்ஷ் ச குலஸந்நி தௌ |
தாவாநேவ ஸ விக்ஞேயோ விப்ருவந் தண்டமர்ஹதி || 194
சாட்சிகள் முன்னிலையில் எடை போட்டு, அல்லது எண்ணிக் கொடுக்கப்பட்ட அடைக்கலப் பொருளை திருப்பிக் கொடுக்கும் போதும் அவ்வாறே சாட்சிகளை வைத்துக் கொண்டு எடை போட்டு அல்லது எண்ணிக் கொடுக்க வேண்டும். எடையிலோ அல்லது எண்ணிக்கையிலோ கொடுத்தவனுக்கும், காப்பாற்றி வைத்தவனுக்கும் இடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டால் சாட்சிகள் கூறுவதையே பிரமாணமாக ஏற்க வேண்டும். ஏற்கவில்லையேல்,
பொய் கூறுபவர்களைத் தண்டிக்க வேண்டும்.
மிதோ தாய: க்ருதோ யேந க்ருஹீதோ மித வவா |
மித ஏவ ப்ரதாதவ்யோ யதா தாயஸ் ததா க்ரஹ: ! | 195
அடைக்கலப் பொருளை ரகசியமாகக் கொடுத்து வைத்திருந்தால், அதைத் திரும்பக்கொடுக்கும் போதும் ரகசியமாகவே திரும்பக் கொடுக்க வேண்டும்.
நிக்ஷிப்தஸ்ய தநஸ்யைவம் ப்ரீத்யோபநிஹிதஸ்ய ச|
ராஜா விநிர்ணயம் குர்யாதக்ஷிண்வந் நியாஸதாரிணம்|| 196
இவ்வாறாக சாட்சிகளைக் கொண்டும், சாட்சிகள் இல்லாமலும், முத்திரையோ அடையாளமோ வைத்தும், முத்திரையோ அடையாளமோ வைக்காமலும் கொடுக்கப்பட்டதுமான எந்த அடைக்கலப் பொருளையும் அதுவரை பாதுகாத்து வைத்துக் கொண்டிருந்தவனிடமிருந்து பொருளுக்கு உரிமை உடையவனுக்கு நல்ல முறையில் வாங்கித் தர வேண்டியது அரசனது கடமை.
விக்ரீணீதே பரஸ்ய ஸ்வம்யோ அஸ்வாமீ ஸ்வாம்யஸம்மத: 1
நதம் நயேத ஸாக்ஷ்யம்து ஸ்தேநமஸ்தேநமாநிநம்|| 197
பிறர் பொருளை எடுத்து விற்பவன் திருடனே அல்லவா? ஆனால், அந்த நினைப்பு சிறிதுகூட இல்லாமல் பிறர் பொருளை விற்பவனை எந்த வழக்கிலும் சாட்சியாக ஏற்கக்கூடாது.
அவஹார்யோ பவேச்சைவ ஸா அந்வய: ஷட்சதம் தமம் |
நிரன்வயோ அநபஸர: ப்ராப்த: ஸ்யாச் சௌரகில்பிஷம்|| 198
தன் உறவினன் பொருளை எடுத்து விற்றவனுக்கு அறுநூறு பணம் தண்டம் விதிக்க வேண்டும். அந்நியர் பொருளை எடுத்து விற்றவனுக்கு திருடனுக்குரிய தண்டனையை விதிக்க வேண்டும்.
அஸ்வாமிநா க்ருதோ யஸ்து தாயோ விக்ரய ஏவவா | அக்ருத: ஸ து விக்ஞேயோ வ்யவஹாரே யதா ஸ்திதி: || 199
பிறருடைய சொத்தை ஒருவன் தானம் கொடுத்தாலோ, விற்றாலோ அது செல்லுபடியாகாது. அது விற்றதாகவோ, தானமளிக்கப்பட்டதாகவோ ஆகாது.
ஸம்போகோ த்ருஷ்யதே யத்ர ந த்ருஷ்யேதா ஆகம:வசித் | ஆகம: காரணம் தத்ர ந ஸம்போக இதி ஸ்திதி: || 200
ஒருவன் ஒரு சொத்தை வெகு காலமாக அனுபவித்துக் கொண்டிருப்பதால் மட்டுமே அது அவனுடைமை ஆகிவிடாது. அந்தச் சொத்தை அவன் எப்படி அடைந்தான் என்று பார்க்க வேண்டும். வாங்கியதாகவோ, எவரோ தானம் கொடுத்ததாகவோ இல்லாத பட்சத்தில் அனுபவிப்பதால் மட்டும் அந்தச் சொத்து அவனுடைய பாத்தியதையாகி விடாது.
விக்ரயாத் யோ தனம் கிஞ்சித் க்ருஹ்ணீயாத் குலஸந்நிதௌ |
க்ரமேண ஸ விசுத்தம் ஹி ந்யாயதோ லபதே தனம்|| 201
ஊராருக்கெல்லாம் தெரியும்படி ஒருவன் ஒரு சொத்தை விலைக்கு வாங்கிய பிறகு, சிறிதுகாலம் கழித்து அந்தச் சொத்தின் உண்மையான உரிமையாளன் வந்து கேட்கும்போதுதான் தான் வாங்கிய அந்தச் சொத்து திருட்டுச் சொத்து என்று தெரிகிறது.
இப்போது என்ன செய்ய வேண்டும்?-உண்மையான உரிமையாளனுக்கு அந்தச் சொத்துக்குரிய விலையைக் கொடுத்து முறைப்படி அந்தச் சொத்தை தன்னுடைமை
யாக்கிக் கொள்ள வேண்டும்.-எவரிடம் தான் ஏமாந்தானோ, அவனைப் பிடித்து மிரட்டிக்
கேட்டோ, வழக்குத்தொடர்ந்தோதான் கொடுத்த தொகையை வசூலித்துக் கொள்ள வேண்டும்.
அத மூலமநாஹார்யம் ப்ரகாஷ க்ரயஷோதித: 1
அதண்ட்யோ முச்யதே ராக்ஞா நாஷ்டிகோ லாபதே தனம் || 202
அங்காடி வீதி முதலான பகிரங்கமான இடத்தில் பலரும் அறிய விற்றவன் அந்த ஊரை விட்டே போய் விடுகிறான் அல்லது இறந்து விடுகிறான். அதற்குப் பிறகு அந்தப் பொருள் திருட்டுப் பொருள் என்று தெரிகிறது. உண்மையான சொந்தக்காரன் தேடிக் கண்டுபிடித்து வந்து தன் பொருளைக் கொடுக்குமாறு கேட்கிறான். இத் தருணத்தில் ராஜா செய்ய வேண்டியது என்ன? உண்மையான சொந்தக்காரனிடம் அந்தப் பொருளை ஒப்படைக்க வேண்டும். திருட்டுப் பொருளை, அது திருட்டுப் பொருள் என்று தெரியாமல், அதுவும் பகிரங்க இடத்தில் வாங்கியிருப்பவன் தண்டனைக்குரியவனல்ல. அவனை விட்டுவிட
வேண்டும்.
நாஅந்யதந்யேந ஸம்ஸ்ருஷ்டரூபம் விக்ரயமர்ஹதி
நசாஅஸாரம் நசந்யூநம் ந தூரேண திரோஹிதம் || 203
உண்மையான பொருளுடன், அதே போன்றுள்ள வேறு ஒன்றையும் சேர்த்துக் கலப்படம் செய்து விற்கக்கூடாது. (உ – ம்.பாலில் தண்ணீர் கலந்து விற்பது.) சாதாரணப் பொருளை உயர்வானது என்று பொய்சொல்லி விற்கக் கூடாது. (உ- ம்.கண்ணாடிக் கல்லை உயர்ந்த ஜாதிக்கல் என்று கூறி விற்பது.) எடையைக் குறைத்து விற்கக் கூடாது.-விற்கும் பொருளை தூர வைத்து விற்கக் கூடாது.(தூர இருக்கும் போது அழுகிய பழத்தை அடியில் வைத்து, நல்ல பழத்தை மேலே வைத்து மொத்தமாக விற்று விடுவது.) மறைவில் உள்ள பொருளை விற்கக்கூடாது. அதாவது விற்கும் பொருளை கண்ணுக்கே காட்டாமல், நைச்சியமாகப் பேசி, ‘பொருள் அங்கே இருக்கிறது, போய் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி விலைத் தொகையை வாங்குவது… அதே போன்று செப்புக் குடத்துக்கு தங்கமுலாம் பூசி அதை மறைத்து விற்பது போன்ற ஏமாற்று வேலைகளால் விற்பது கூடாது. இப்படியெல்லாம் விற்பவனுக்கு திருட்டுப் பொருளை விற்பவனுக்குரிய தண்டனையைத் தர வேண்டும்.
அந்யாம் சேத் தர்ஷயித்வா அந்யா வோடு: கந்யா ப்ரதீயதே |
உபே த ஏகஅல்கேந வஹேதித்யப்ரவீந்மனு: || 204
பெண்ணின் தந்தை தன் பெண்ணைத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி பரிசத் தொகை பெற்றுக் கொண்டு முதலில்காட்டிய பெண்ணல்லாது வேறொரு பெண்ணை மணமேடையில்கொண்டு வந்து நிறுத்தினால் என்ன செய்ய வேண்டும்? இரண்டு பெண்களையும் அவனுக்கே மணமுடித்துக் கொடுக்க வேண்டும். ஏமாற்றியதற்காக, தான் முதலில் பெற்றுக் கொண்ட பரிசத் தொகைக்கே இரண்டு பெண்களையும் கொடுத்து விட வேண்டியதுதான் என்று மனுபகவான் கூறியுள்ளார்.
நோந்மத்தாயா நகுஷ்டிந்யா நசயாஸ்ப்ருஷ்டமைதுநா |
பூர்வம் தோஷாநபிக்யாப்ய ப்ரதாதா தண்டமர்ஹதி || 205
பைத்தியம், குஷ்டரோகி, திருமணத்துக்கு முன்பே ஆடவனுடன் தொடர்பு கொண்டவள் – இத்தகைய பெண்ணை மணமுடித்துக் கொடுப்பதானால் முதலிலேயேஇத்தகையவள் என்று தெரியப்படுத்தி மணமகன் ஒப்புக் கொண்ட பிறகு பரிசத் தொகை
பெற்றுக்கொண்டால், அந்தத் திருமணம் செல்லும். அவ்வாறின்றி, பெண்ணைப் பற்றிய உண்மைகளை மறைத்து பரிசத் தொகை பெற்றுக் கொண்டவன் தண்டனைக்குரியவன்.
ருத்விக் யதி வ்ருதோ யக்ஞே ஸ்வகர்ம பரிஹாபயேத் |
தஸ்ய கர்மா அனுரூபேண தேயோ அம்ஷ: ஸஹகர்த்ருபி: || 206
யக்ஞம் செய்வதற்காக ஒரு ரித்விக்கை நியமித்து யக்ஞம் நடந்து கொண்டிருக்கிற போது, ரித்விக்குக்கு நோய் ஏற்பட்டு தொடர்ந்து நடத்த முடியாமல் போனால், அதுவரை நடத்திக் கொடுத்ததற்கான தட்சிணை எவ்வளவு என்று மற்ற ரித்விக்குகளுடன் ஆலோசித்துக்
கொடுத்துவிட வேண்டும்.
தக்ஷிணாசு ச தத்தாசு ஸ்வகர்ம பரிஹாபயந் 1
க்ருத்ஸ்நமேவ லபேதா அம்ஷமந்யேநைவ ச காரயேத் Π 207
யக்ஞங்களின்போது இடையிடையே வரும் தட்சிணை பெற்றுக் கொண்ட ரித்விக், தன் சுயகாரியத்துக்காக விலக நினைத்தால், தனக்குப் பதிலாக வேறொருவரை நியமித்து யக்ஞம் பூர்த்தியான பிறகு முழு தட்சிணையையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அல்லது யக்ஞம் நடத்தும் கர்த்தா தானாகவும் ஒரு ரித்விக்கை அமர்த்தி மீதி யக்ஞத்தை முடித்து, அவருக்குச் சேர வேண்டிய தட்சிணையை வழங்கலாம்.
யஸ்மிந் கர்மணி யாஸ்து ஸ்யுருக்தா: ப்ரத்யங்கதக்ஷிணா: |
ஸ் ஏவதா ஆததீத பஜேரந் ஸர்வ ஏவ வா|| 208
எந்தெந்த கிரியைகளுக்கு எவ்வளவு தட்சிணையோ அது அந்தந்தக் கிரியைகளைச் செய்பவனுக்கா அல்லது மொத்தமாக அனைவரும் பங்கிட்டுக் கொள்வதா என்று பார்ப்போம்.
ரதம் ஹரேதசாஅத்வர்யுர் ப்ரஹ்மா ஆதாநே ச வாஜிநம் |
ஹோதா வா அபி ஹரேதஷ்வமுத்காதா சாஅப்யந: க்ரயே-209
அத்வர்யுவுக்கு ரதமும், பிரம்ம ஸ்தானத்தில் இருப்பவருக்கு உயர்ந்த ஜாதிக் குதிரையும், ஹோதாவுக்கு சாதாரணக் குதிரையும், உத்காதாவுக்கு சுமை வண்டியும் தட்சிணைகளாக விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அவரவர் தத்தமக்குரிய தட்சிணையைப் பெற வேண்டும்.
ஸர்வேஷாமர்திநோ முக்யாஸ் ததர்தேநா அர்திநோபரே த்ருதீயிநஸ் த்ருதீயா அம்ஷாஷ் சதுர்தா அம்ஷாஷ் ச பாதி : ” 210
சில யாகங்கள் பதினாறு ரித்விக்குகளால் நடத்தப் பெறும். அத்தகைய யாகங்களில் நூறு பசுக்கள் தட்சிணையாகத் தர வேண்டும் என்று ஸ்மிருதி கூறுகிறது. நூறு பசுக்களை இந்தப் பதினாறு ரித்விக்கு களும் எப்படிப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.
முக்கியமானவர்களுக்கு தட்சிணையின் பாதி பாகம் தரப்பட வேண்டும். முக்கியமான ரித்விக்குகள் யாரென்று பார்த்தால் பிரம்மா, அத்வர்யு, ஹோதா, உத்கீதா ஆவர். இந்த நால்வருக்கும் பாதி தட்சிணை என்றாலும், நூறு பசுக்களில் நாற்பத்தியெட்டு
பசுக்களை தட்சிணை யாகக் கொடுக்க வேண்டும். இரண்டாவதாக, மைத்ராவருணன், பிரதிபஸ்தாத்ரு, பிராம்மணாச்சம்சி, பிரஸ்தோதா. இந்த நால்வருக்கும், முதலில் கொடுத்ததில் பாதியை தட்சிணையாகக் கொடுக்க வேண்டும்.. மூன்றாவதாக, அச்சாவாக், நேஷ்டன், அக்நீத்ரன், பிரதிஹர்தாஎன்னும் இந்த நால்வருக்கும் முதலில் கொடுத்ததில் மூன்றில் ஒரு பாகத்தை தட்சிணையாகக் கொடுக்க வேண்டும். நான்காவதாக, கிராவஸ்துத், உன்னேத, போதா, சுப்பிரமண்யா என்னும் நால்வருக்கும் முதலில் கொடுத்ததில் நாலில் ஒரு பாகத்தைக் கொடுக்க வேண்டும். அதாவது முக்கிய ரித்விக்குகளுக்கு 48 பசுக்கள் தட்சிணை, இரண்டாவது வகை ரித்விக்குகளுக்கு 24 பசுக்கள் தட்சிணை, மூன்றாவது வகை ரித்விக்குகளுக்கு 16 பசுக்கள் தட்சிணை, நான்காவது வகை ரித்விக்குகளுக்கு 12 பசுக்கள் தட்சிணை. இவ்வாறு பாகம் பிரித்து தட்சிணை வழங்க வேண்டும்.
ஸம்பூய ஸ்வாநி கர்மாணி குர்வத்பிரிஹ மாநவை: |
அநநே விதியோகேந கர்தவ்யா அம்ஷப்ரகல்பநா ||–211
இவ்வாறே அதிகம் பேர் சேர்ந்து கட்டடம் கட்டுதல் முதலான வேலைகளைச் செய்யும்போதும், இவ்வாறே கூலியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
தர்மார்தம் யேந தத்தம் ஸ்யாத் கஸ்மைசித் யாசதே தநம் |
பஷ்சாச்ச நததா தத் ஸ்யாந் ந தேயம் தஸ்ய தத்பவேத் || 212
குளம் வெட்டுதல், யாகம் செய்தல் போன்ற தர்ம காரியங்களுக்காக ஒருவன் தானம் (நன்கொடை) கேட்டு வாங்கிக் கொண்டு, அந்தத் தர்ம காரியத்தைசெய்யாதிருந்து விட்டால், தான் கொடுத்த தனத்தை மீண்டும் வாங்கிக் கொண்டுவிட வேண்டும்.. அவன் தானம் கேட்டு தருகிறேன்’ என்று வாக்கு மட்டும் கொடுத்திருந்தால் தரத் தேவையில்லை.
யதி ஸம்ஸாதயேத் தத்து தர்பால் லோபேநவா புந: |
ராக்ஞா தாப்ய: சுவர்ணம் ஸ்யாத் தஸ்ய ஸ்தேயஸ்ய நிஷ்க்ருதி: || 213
அப்படி நன்கொடை வாங்கிக் கொண்டவன், அகங்காரத்தாலோ பேராசையாலோ அந்தத் தனத்தைத் திரும்பக் கொடாவிட்டாலும், தருகிறேன் என்று வாக்குக் கொடுத்தவனிடமிருந்து
பலாத்காரமாக அந்தத் தானத்தைப் பறித்துக் கொண்டாலும் அது திருட்டுக்குச் சமம். ஆகவே, திருடனுக்குரிய தண்டனையை அவனுக்கு வழங்க வேண்டும். அவனிடமிருந்து தானங்களைப் பறிமுதல் செய்து உரியவர்களுக்கு வழங்க வேண்டும். அந்தத் திருடனுக்கு ஒரு சுவர்ணம் அபராதம் விதிக்க வேண்டும்.
தத்தஸ்யைஷோதிதா தர்ம்யா யதாவத நபக்ரியா |
அத ஊர்த்வம் ப்ரவக்ஷ்யாமி வேதநஸ்யா அநபக்ரியாம் || 214
அடைக்கலமாகக் கொடுத்து வைத்த பொருளைக் குறித்த ஏமாற்று வேலைகளுக்குரிய நிவாரணம் பற்றிய விதிமுறைகள் இதுவரை கூறப்பட்டன. இனி கூலி குறித்த ஏமாற்று வேலைகளுக்குரிய நிவாரணம் பற்றிய விதிமுறைகளைக் கூறுகிறேன்.
ப்ருதோ அநார்தோ நகுர்யாத்யோ தர்பாத் கர்ம யதோதிதம்
ஸதண்ட்: க்ருஷ்ணலாயஷ்டௌ நதேயம் சாஅஸ்ய வேதநம்|| 215
ஒரு வேலையைச் செய்து கொடுப்பதாகக் கூறி, அதற்குரிய கூலியையும் பேசி முடித்த பிறகு, அகங்காரத்தால் அந்த வேலையைச் செய்து கொடுக்காவிடில் அவனுக்கு எட்டு குன்றிமணிப் பொன் அபராதம் விதிக்க வேண்டும். அவனுக்குக் கூலியும் கொடுக்கக்
கூடாது. அதாவது அதுவரை செய்துள்ள அரைகுறை வேலைக்குரிய கூலி கொடுக்கத் தேவையில்லை.
ஆர்தஸ்து குர்யாத் ஸ்வஸ்த: ஸந் யதாபாஷிதமாதித: |
ஸ தீர்கஸ்யாஅபி காலஸ்ய தல்லபேதைவ வேதநம் || 216
ஒருவேளை, அந்த வேலையைச் செய்து முடிப்பதாக ஒப்புக் கொண்டு கூலியும் பேசி முடித்தவனுக்கு, திடீரென்று உடல்நலம் குன்றி, தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் போனால், மீண்டும் அவன் உடல்நலம் தேறிய பிறகு வந்து மிகுதி வேலையைச் செய்து
முடித்து முழுக் கூலியையும் பெறலாம். உடல்நலம் தேறி செய்து முடிக்க காலம் அதிகமாகும். ஏற்கனவே சொன்ன கெடுவுக்குள் செய்து முடிக்க முடியாது. ஆனாலும் அது தவறில்லை.
யதோத்தமார்த: சுஸ்தோ வாயஸ் தத்கர்ம நகாரயேத் |
ந தஸ்ய வேதநம் தேயமல்போநஸ்யாஅபி கர்மண: |-217
ஒப்புக்கொண்ட வேலையை, நோயுற்ற காரணத்தால் செய்ய முடியாதவன், வேறு யாரையேனும் கொண்டு அந்த வேலையைசெய்து முடிக்க வேண்டும். அல்லது தான் குணமடைந்தபிறகு வந்துசெய்து தர வேண்டும். இரண்டும் செய்து முடிக்காதவனுக்கு, அவன் செய்த வரையான வேலைக்குச் சிறிதும் கூலி தரத் தேவையில்லை.
ஏஷதர்மோ அகிலேநோக்தோ வேதநா அதாநகர்மண: ||
அத ஊர்த்வம் ப்ரவக்ஷ்யாமி தர்மம் சமயபேதிநாம் || 218
கூலியைக் குறித்த குற்றங்களைப் பற்றி இதுவரை கூறினேன். இனி ‘இந்த வேலையைச் செய்கிறேன்,’ என்று கூறிச் செய்யாமல் போகிறவனுக்குரிய தண்டனைகளைக் கூறுகிறேன்.
யோ க்ராமதேஷஸங்காநாம் க்ருத்வா ஸத்யேந ஸம்விதம் |
விஸம்வதேந் நரோ லோபாத் தம் ராஷ்ட்ராத் விப்ரவாஸயேத் 219
கிராமவாசிகள் அல்லது நகரவாசிகள் ஒரு சங்கமாக (குழுவாக) சேர்ந்து ‘இந்தக் காரியத்தை நாம் செய்வோம்’ என்று சத்யப் பிரமாணமாக ஏற்பாடு செய்து கொண்ட பின்னர், அதில் யாரேனும் ஒருவன் கோபத்தால் செய்யாமல் போனால், அவன் தேசபிரஷ்ட
தண்டனைக்குரியவன். அவனை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் .
நிக்ருஹ்ய தாபயேச்சைநம் ஸமயவ்யபிசாரிணம் |
சது: சுவர்ணாந் ஷண்நிஷ்காம்ஷ்சதமாநம் ச ராஜதம்|| 220
அல்லது அரசன் அவனை இழுத்து வரச்செய்து, அவன் குற்றத்துக்குத் தக்கபடி அவனுக்கு நான்கு சுவர்ணங்கள் அல்லது ஆறு நிஷ்கங்கள் அல்லது நூறு வெள்ளிகள் அபராதம் விதிக்க வேண்டும்.
ஏதத் தண்டவிதிம் குர்யாத் தார்மிக: ப்ருதிவீபதி: |
க்ராம ஜாதி ஸமூஹே ஸமயவ்யபிசாரிணாம்|-221
கிராமக் கட்டுப்பாட்டையும், ஜாதிக் கட்டுப்பாட்டையும். சமுகக் கட்டுப்பாட்டையும் மீறுபவனுக்கும் இவ்வாறே அபராதம் விதிக்க வேண்டும் அல்லது தேசபிரஷ்டம் (நாடு கடத்தல்) செய்ய வேண்டும்.
க்ரீத்வா விக்ரீய வா கிஞ்சித் யஸ்யேஹாஅநுஷயோ பவேத் |
ஸோ அந்தர்தஷா அஹாத் தத்திரவயம் தத்யாச்சைவா ஆததீதவா||-222
விற்பவனுக்கும் வாங்குபவனுக்கும் இடையே ஏற்படக்கூடிய விவகாரத்தைப் பார்ப்போம். ஒரு பொருளை விலை கொடுத்து வாங்கியவனுக்கு அப்பொருளில் திருப்தி ஏற்படாவிட்டாலோ, தான் ஏமாந்துவிட்டதாகத் தோன்றினாலோ, வாங்கிய பத்து நாட்களுக்குள் அப்பொருளைத் திருப்பிக் கொடுத்துவிட்டு தான் கொடுத்த
தொகையை வாங்கிக் கொள்ளலாம்.-அவ்வாறே விற்றவனுக்கும், தான் விலையுயர்ந்த பொருளைக் கவனக் குறைவாகக் குறைந்த தொகைக்கு விற்றுவிட்டதாகத்தோன்றினால் பத்து நாட்களுக்குள் வாங்கியவனைக் கண்டுபிடித்து, அவன் கொடுத்த தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு தன் பொருளை மீட்டுக் கொள்ளலாம்.
பரேண து தஷா அஹஸ்ய நதத்யாந்நாஅபி தாபயேத் |
ஆததாநோ ததச்சைவ ராக்ஞா தண்ட்ய: ஷதாநி ஷட்|| 223
ஆனால், பத்து நாட்கள் கடந்துவிட்டால், அதன் பிறகு விற்றவன் வாங்கியவனிடம் போய், தன்பொருளைத் திருப்பித் தருமாறு நிர்பந்திக்கக் கூடாது. அவ்வாறே பத்து நாட்கள் கடந்த
பிறகு வாங்கியவனும் விற்றவனிடம் போய் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி நிர்பந்திக்கக் கூடாது.
யஸ்து தோஷவதீம் கந்யாமநாக்யாய ப்ரயச்சதி 11 தஸ்ய குர்யாந் ந்ருபோ தண்டம் ஸ்வயம் ஷண்ணவதிம் பணாந்|| 224
ஏதோ ஒரு தோஷமுள்ள பெண்ணை பரிசத்தொகை பெற்றுக் கொண்டு, அந்த தோஷத்தை அல்லது தோஷங்களை மறைத்துத் |திருமணம் செய்து வைப்பவனுக்கு அரசன் தொண்ணூற்றியாறு பணங்களை அபராதமாக விதிக்க வேண்டும்.
அகந்யேதி து ய: கந்யாம் ப்ரூயாத் வேஷேண மாநவ: |
ஸ ஷதம் ப்ராப்னுயாத் தண்டம் தஸ்யா தோஷமதர்ஷய || 225
ஒரு கன்னிப் பெண்ணின் மீது ‘இவள் கற்பிழந்தவள்’ என்று பழி கூறியவனுக்கு நூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும். அவன் சொன்னதைக் கொண்டு அப் பெண் எப்படிப்பட்டவள் என்று விசாரிக்கக் கூடாது.
பாணிக்ரஹணிகா மந்த்ரா: கந்யாஸ்வேவ ப்ரதிஷ்டிதா: |
நாஅகந்யாசு கவசித் ந்ருணாம் லுப்ததர்மக்ரியா ஹிதா:|| 226
பாணிக்ரஹண மந்திரங்கள் கன்னிப் பெண்ணுக்காக ஏற்பட்டவை. கன்னிகையற்றவளுக்கு இந்த மந்திரங்களைக் கூறக்கூடாது. அத்தகையவள் இந்தக் கிரியைகளுக்கே அருகதையற்றவள்.பாணிக்ரகணம் என்பது பெண்ணின் தந்தை தன் மகளின் கரத்தைப் பற்றி மணமகன் கரத்தில் வைத்து அவளை ஏற்றுக்கொள்ளும்படி கூறும் கிரியை. இப்படி திருமணத்தின் ஒவ்வொரு கிரியைக்கும் அர்த்தமும் உண்டு; மந்திரமும் உண்டு. அவை யாவும் உத்தமமான கன்னிப் பெண்ணுக்கே உரித்தானவை.
பாணிக்ரஹணிகா மந்த்ரா நியதம் தாரலக்ஷணம் 1
தேஷாம் நிஷ்டா து விக்ஞேயா வித்வத்பி: ஸப்தமே பதே !- 227
பாணிக்ரஹணம் முதலான மந்திரங்களால்தான் ஒரு பெண் ஒருவனின்தாரமாகும் தகுதியைப் பெறுகிறாள். ஏழடி நடந்து அக்னியை வலம் வரும் சப்தபதி என்னும் மந்திர கிரியைக்குப் பிறகு அவள் அவன் மனைவி என்றுஊர்ஜிதப்படுகிறாள் என்பது
அறிஞர்கள் கூற்று.
யஸ்மிந் யஸ்மிந் க்ருதே கார்யே யஸ்யேஹா அனுஷயோ பவேத் |
தமநேந விதாநேந தர்ம்யே பதி நிவேஷயேத் || 228
விற்றல், வாங்கல் விஷயங்களில் பத்து நாட்களுக்குள்விவகாரத்தைத் தீர்த்துக் கொள்வது போன்று, மற்ற விஷயங்களில் எந்தெந்தக் காரியத்தை யார் யார்செய்கிறார்களோ, அந்த விவகாரங்களிலும் பத்து நாட்களுக்குள் தீர்த்துக் கொள்ளலாம் என்று அரசன் நியமம் ஏற்படுத்த வேண்டும்.
பஷுசு ஸ்வாமிநாம் சைவ பாலாநாம் ச வ்யதிக்ரமே |
விவாதம் ஸம்ப்ரவக்ஷ்யாமி யதாவத் தர்மதத்வத: || 229
பசுக்களின் சொந்தக்காரனுக்கும் பசுக்களை மேய்ப்பவனுக்கும் இடையே ஏற்படும் விவகாரங்களை எப்படித் தீர்க்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறியுள்ளதை இனிக் கூறுகிறேன்.
திவா வக்தவ்யதா பாலே ராத்ரௌ ஸ்வாமிநி தத்க்ஹே|
யோகக்ஷேமே அந்யதா சேத் து பாலோ வக்தவ்யதாமியாத் || 230
பகலில் பசுக்கள் மேய்ப்பவனுடைய ஆதீனத்தில் இருப்பதால் அவனே பொறுப்பு. மாலையில் மேய்ப்பவன் அவைகளைக் கொண்டுபோய் உரிமையாளன் வீட்டில் கட்டி விடுவான். அதுமுதல் இரவில் உரிமையாளனே பொறுப்பு
கோப: வீரப்ருதோ யஸ் து ஸதுஹ்யாத் தஷதோ வராம் | கோஸ்வாம்யனுமதே ப்ருத்ய: ஸாஸ்யாத் பாலேஅப்ருதே ப்ருதி: || 231
கோபன் (பசு மேய்ப்பவன்) பசுவின் பாலைக் கூலியாகப் பெற்று பசு மேய்ப்பதனால், பத்துப் பசுக்களின் பாலைக் கறந்து பசுவின் சொந்தக்காரனுக்குக் கொடுத்துவிட்டு, நல்ல பசு ஒன்றின்பாலை) தான் கறந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை கோஸ்வாமியின்
(பசுவின் சொந்தக்காரனின்) அனுமதியோடு செய்ய வேண்டும்.
நஷ்டம் விநஷ்டம் க்ருமிபி: ஷ்வஹதம் விஷமேம்ருதம்|
ஹீநம் புருஷகாரேண ப்ரதத்யாத் பாலஏவ து || 232
பசுக்களை மேய்க்கும்போது, பசுக்கள் தொலைந்து போனாலோ, பாம்பு கடித்து இறந்தாலோ, நாய் கடித்தாலோ, சேற்றில் மாட்டிக் கொண்டு இறந்தாலோ, எந்த வகையில் நஷ்டம் ஏற்பட்டாலும் பசு மேய்க்கும் கோபனே பொறுப்பாளி . நஷ்டஈட்டை கோபன்கோஸ்வாமிக்குக் கொடுக்க வேண்டும். அதாவது பசு மேய்ப்பவன்,பசுவின் உரிமையாளனுக்குக் கொடுக்க வேண்டும்.
விகுஷ்யது ஹ்ருதம் சௌரைர் ந பாலோ தாதுமர்ஹதி |
யதி தேஷே ச காலே ச ஸ்வாமி : ஸ்வஸ்ய ஷம்ஸதி || 233
திருடர்களை பசுக்களை மறித்து அபகரித்துக் கொண்டு போனால், அந்த நஷ்டம் மேய்ப்பவனுடைய பொறுப்பாகாது-ஆனால், கோபன் உடனடியாக கோஸ்வாமியிடம் போய்
விஷயத்தைத் தெரிவித்துவிட வேண்டும்.
கர்ணெள சர்ம ச வாலாஷ்சபஸ்திம் ஸ்நாயும் ச ரோசநாம் |
பஷுசு ஸ்வாமிநாம் தத்யாந் ம்ருதேஷ்வங்காநி தர்ஷயேத் |-234
பசு தானாக இறந்து போகுமானால், செவிகள், தோல், வால், கோரோசனை இவைகளைக் கொண்டு வந்து எஜமானனிடம் காட்ட வேண்டும். மற்ற அங்கங்களைக் காட்டிவிட்டு தான் எடுத்துக் கொள்ளலாம்.
அஜாவிகே து ஸம்ருத்தே வ்ருகை: பாலே த்வநாயதி
யாம் ப்ரஸஹ்ய வ்ருகோ ஹந்யாத் பாலே தத் கில்பிஷம் பவேத் 235
வனத்தில் கோபன் மேய்த்துக் கொண்டிருக்கும் போது நரி, செந்நாய் போன்றவை பசுக்களின் மீது பாய்ந்தால், கோபன் அவைகளை விரட்டிப் பசுக்களைக் காக்க வேண்டும். இல்லாவிட்டால் இறந்த பசுக்களுக்கு கோபனே பொறுப்பேற்று நஷ்டஈடு கொடுக்க வேண்டும்.
தாஸாம் சேதவருத்தாநாம் சரந்தீநாம் மிதோ வநே |
யாமுத்ப்ளுத்ய வ்ருகோ ஹந்யாந் நபாலஸ் தத்ர கில்பிஷீ|| 236
மந்தையை விட்டுப் பிரிந்து போனவற்றை செந்நாய் போன்றவை அடித்தால், அதற்கு கோபன் பொறுப்பேற்க வேண்டியதில்லை.
தநு:ஷதம் பரீஹாரோ க்ராமஸ்ய ஸ்யாத் ஸமந்தத: |
ஷம்யாபாதாஸ் த்ரயோ வாபி த்ரிகுணோ நகரஸ்ய து !! 237
ஒரு கிராமத்தைச் சுற்றிலும் நானூறு முழ பரப்பளவுக்கு மேய்ச்சல் நிலமாக விட வேண்டும். அல்லது கோலை சுழற்றி வீசினால் எவ்வளவு தூரம் போய் விழுமோ அவ்வளவு பரப்பளவு சுற்றிலும் மேய்ச்சல் நிலமாக விட வேண்டும். இதற்கு மும்மடங்கு நிலத்தை நகரத்தில் விட வேண்டும்.
தத்ரா அபரிவ்ருதம் தான்யம் விஹிம்ஸ்யு: பஷவோயதி |
ந தத்ர ப்ரணயேத் தண்டம் ந்ருபதி: ப ரக்ஷிணாம் !| 238
மேய்ச்சல் பூமிக்கு அருகில், வேலியிடப்படாத பயிரை பசுக்கள் மேய்ந்தால், அவற்றை மேய்த்த கோபனுக்கு அரசன் எந்தத் தண்டனையும் விதிக்கக் கூடாது.
வ்ருத்திம் தத்ர ப்ரகுர்வீத யாமுஷ்ட்ரோ ந விலோகயேத் சித்ரம் ச வாரயேத் ஸர்வம் ஷ்வ கரமுகா அனுகம் ||| 239
பயிர் பூமிக்கு, ஒட்டகம் தலைதூக்கிப் பார்த்தால் உள்ளே இருப்பது தெரியாத அளவுக்கு உயரமான வேலி அமைக்க வேண்டும். பன்றிகளும் நாய்களும் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு இறுக்கமாக வேலி அமைக்க வேண்டும்.
பதி க்ஷேத்ரே பரிவ்ருதே க்ராமந்தீயே அதவா புந: 1
ஸபால: ஷத்தண்டா அர்ஹோ விபாலாந் வாரயேத் ப ந் l 240
கிராமத்துக்கு அருகிலுள்ள வேலியிட்ட இடங்களில் பசுக்கள் மேய்ந்தால், மேய்க்கும் கோபனுக்கு நூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.-கோபன் அருகில் இல்லாவிட்டால், அந்தப் பசுவை அந்த இடத்துக்குரியவன் கட்டிப்போட வேண்டும்.
க்ஷேத்ரேஷ்வன்யேஷு து ப : ஸபாதம் பணமர்ஹதி |
ஸர்வத்ரது ஸதோ தேய: க்ஷேத்ரிகஸ்யேதி தாரணா || 241
மேய்ச்சல் நிலத்துக்குப் போகும் வழியிலுள்ள இடங்களில் பசுக்கள்மேய்ந்தால், கோபனுக்கு ஒன்றே கால் பணம் அபராதம் விதிக்க வேண்டும். மொத்தத்தில் பசுக்கள் மேய்வதால் நிலத்துச் சொந்தக் காரனுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு கோபனோ, கோஸ்வாமியோ நஷ்டஈடு கொடுக்க வேண்டும்.
அநிர்தஷாஹாம் காம்தாம் வ்ருஷாந் தேவபசூம் ததா |
ஸபாலாந்வா விபாலாந்வா ந தண்ட்யாந் மனுரப்ரவீத் /I 242
கன்றை ஈன்று பத்து நாட்கள் கடக்காத பசுக்கள், கோயில்களுக்காக விடப்பட்ட காளைகள், பசுக்கள் முதலானவை மேய்ந்தால், மேய்க்கும் கோபன் அப்போது அங்கிருந்தாலும்,
இல்லாவிட்டாலும் அவனுக்குத் தண்டனை ஏதும் கிடையாது.
க்ஷேத்ரிகஸ்யாஅத்யயே தண்ட்யோ பாகாத் தஷகுணோ பவேத் |
ததோ அர்த தண்டோ ப்ருத்யா நாமஞாசாத் க்ஷேத்ரிகஸ்ய து 243
கழனிக்குச் சொந்தக்காரனுடைய பசுக்களே அங்குள்ள பயிரை மேய்ந்தாலும். விதைக்க வேண்டிய சமயத்தில் விதைக்காமல் வெறுமனே நிலத்தைப் போட்டு வைத்தாலும், அவனுக்கு அரசன் தான் விதிக்க வேண்டிய முறையான வரித் தொகைக்கு பத்து மடங்கு
அபராதம் விதிக்க வேண்டும்.-சொந்தக்காரனுக்குத் தெரியாமல், வேலைக்காரனால் இந்தக்
குற்றம் இழைக்கப்படுமானால் ஐந்து மடங்கு அபராதம் விதிக்க வேண்டும்.
ஏதத் விதாநமாதிஷ்டேத் தார்மிக: ப்ருதிவீபதி: ||
ஸ்வாமிநாம் ச ப நாம் ச பாலனாம் ச வ்யதிக்ரமே |-244
பசுக்களின் சொந்தக்காரர்களான கோஸ்வாமிகளுக்கும்,பசுமேய்ப்பவர்களான கோபர்களுக்கும் ஏற்படும் விவகாரங்களுக்குஇவ்விதமாக தார்மிகமான தீர்ப்பை அரசன் வழங்க வேண்டும்.
ஸீமாம் ப்ரதிஸமுத்பந்நே விவாதே க்ராமயோர் த்வயோ: |
ஜ்யேஷ்டே மாஸி நயேத் ஸீமாம் சுப்ரகாஷேசு சேதுஷு || 245
இரு கிராமங்களுக்கிடையில் எல்லையைப் பற்றிய தகராறு ஏற்படுமானால், ஆனி மாதத்தில் நன்கு கண்ணுக்குப் புலப்படும் எல்லைகளின் அடையாளத்தைக் கொண்டு எல்லைகள் இவை என தீர்மானிக்க வேண்டும்.
ஸீமாவ்ருக்ஷாம்ஷ்ச குர்வீத ந்யக்ரோதா அஷ்வத்த கிம்சுகாந் ||
ஷால்மலீந் ஸாலதாலாம்ஷ்ச ரிணஷ்சைவ பாதபாந் || 246
எல்லைகளை அறிவதற்காக, எல்லைகளில் ஆல மரம், அரச மரம், புரச மரம், இலவ மரம், குங்குலிய மரம், மற்றும் பனை மரம், கீறினால்பால் வெளிப்படும் மரங்களை வளர்க்க வேண்டும்.
குல்மாந் வேணும்ஷ்ச விவிதாஞ்ச மீ வல்லீஸ்தலாநி ச
ஷராந் குப்ஜக குல் மாம்ஷ் ச ததா ஸீமா ந நஷ்யதி || 247
புதர்கள், மூங்கில் மரங்கள், வன்னி மரங்கள், கொடிகள்முதலானவைகளை வளர்க்க வேண்டும். மேடுகளையோ பள்ளங்களையோ ஏற்படுத்த வேண்டும். இதனால் எல்லைகள்
அழியாதிருக்கும்.
தடாகாந்யுதபாநாநி வாப்ய: ப்ரஸ்ரவணாநிச |
ஸீமாஸந்திஷு கார்யாணி தேவதாயதநாநி ச ||-248
இரண்டு கிராமங்களுக்கும் நடுவில் குளங்கள், ஏரிகள், கிணறுகள் ஏற்படுத்த வேண்டும். ஏரி, குளங்களில் தண்ணீர் அதிகமானால், அதிகப்படி நீர் வெளியேறும் கால்வாய்கள்
முதலானவைகளை ஏற்படுத்த வேண்டும்.
உபச்சந்நாநி சாஅந்யாநி ஸ்மாலிங்காநி காரயேத் 11
ஸீமாஞாநே ந்ருணாம் வீக்ஷ்ய நித்யம்லோகே விபர்யயம் || 249
எல்லைகளை அறிய உதவும் இந்த அடையாளங்கள் போக, மேலும் சில ரகசிய அடையாளங்களையும் ஏற்படுத்த வேண்டும்.
அஷ்மநோ அஸ் நி கோவாலாம்ஸ் துஷாந் பஸ்ம கபாலிகா |
கரீஷமிஷ்ட கா அங்காராம்ஷ்சர்கரா வாலுகாஸ் ததா|| 250
கற்கள், எலும்புகள், பசுவின் வால்கள், உமி, சாம்பல், மண்டையோடுகள், வரட்டிகள், சுட்ட செங்கற்கள், கரி,கூழாங்கற்கள், பருமணல் முதலானவைகளை குடங்களிலிட்டு
எல்லை பூமிக்குள் அடையாளமாக புதைத்து வைக்க வேண்டும். இது
கிராமத்தார்களுக்குத் தெரிய வேண்டியது இல்லை. அரசன் என்றேனும் சர்ச்சை ஏற்படும்போது, எல்லையை தான் அறிவதற்காக செய்து வைக்கும் ஏற்பாடு இது.
யாநிசைவம்ப்ரகாராணி காலாத் பூமிர் நபக்ஷயேத் 11
தாநி ஸந்திஷு ஸீமாயாம ப்ரகாஷாநி காரயேத் || 251
இந்தப் பொருட்கள் காலத்தால் அழிந்து போகாமல் அப்படியே இருக்கும். இதைக் கொண்டு எல்லை எதுவெனத் தெரிந்து கொள்ளலாம்.
ஏதைர் லிங்கைர் நயேத் ஸீமாம் ராஜா விவதமாநயோ:
பூர்வபுக்த்யா ச ஸத்தமுதகஸ்யா ஆகமேந ச !!-252
கலகமிட்டுக் கொண்டிருக்கும் இரு கிராமத்தாருக்கும், இந்த அடையாளங்களைக் கொண்டு எல்லை எதுவென அறிந்து கலகத்தை அரசின் தீர்த்து வைக்க வேண்டும். இதையும் மீறி சந்தேகம் ஏற்பட்டால் பூர்வத்தில் யாருடைய அனுபவத்தில் இருந்தது என்று பார்க்க வேண்டும். பிரதானமாக நீர்நிலைகளின் இக்கரை, அக்கரைகளைக் கொண்டு எல்லைகளை நிர்ணயிக்கலாம்.
யதி ஸம்ஷய ஏவ ஸ்யால் லிங்காநாமபி தர்ஷநே |
ஸாக்ஷிப்ரத்யய ஏவஸ்யாத் ஸ்மாவாதவி நிர்ணய: || 253
கண்ணுக்குத் தெரியும் அடையாளங்களாலும், மறைவான அடையாளங்களாலும்கூட எல்லைகளைத் தீர்மானிக்க முடியாத போது, சத்தியப் பிரமாணம் செய்து சொல்லும் சாட்சிகளின் கூற்றை ஏற்று எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும்.
க்ராமேயக குலாநாம் ச ஸமக்ஷம் ஸீம்நி ஸாக்ஷிண: |
ப்ரஷ்டவ்யா: ஸீமலிங்காறி தயோஷ் சைவ விவாதிநோ: || 254
கிராமத்து மக்கள் முன்னிலையில் எல்லையைப் பற்றி சாட்சிகளை விசாரிக்க வேண்டும். விசாரணையில் எல்லையைப் பற்றின் அடையாளங்களைக் கேட்க வேண்டும்.
தேப்ருஷ்டாஸ்து யதா ப்ரூயு: ஸமஸ்தா: ஸீம்நி நிஷ்சயம் | நிபத்நீயாத் ததாஸீமாம் ஸர்வாம்ஸ் தாம்சைவ நாமத: | 255
இவ்வாறாக சாட்சியங்களைக் கொண்டு தீர விசாரித்து எல்லையை நிர்ணயம் செய்து, அவைகளைப் பத்திரமாக எழுத வேண்டும். அந்தப் பத்திரத்தில் சாட்சி சொன்னவர்களும் கையெழுத்திட வேண்டும்.
ஷிரோபிஸ்தே க்ருஹீத்வோர்வீம் ஸ்ரவிணோ ரத்தவா ஸ்: | சுக்ருதை: ஷாபிதா: ஸ்வை: ஸ்வைர்நயேதுஸ்தே சமஞ்சஸம்|| 256
சாட்சிகள் சாட்சி சொல்லும்போது சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டிய முறை இது. சிவந்த ஆடைகளை உடுத்து, சிவப்பு மலர் மாலையை போட்டுக் கொண்டு, தலையில் மண் சட்டியை வைத்துக் கொண்டு, ‘நாங்கள் உண்மைக்குப் புறம்பாகக் கூறினால் எங்கள் புண்ணியங்கள் நாசமடையட்டும்’ என்று சபதம் செய்த பிறகு சாட்சியமளிக்க வேண்டும்.
யதோக்தேந நயந்தஸ் தே பூயந்தே ஸத்யஸாக்ஷிண: |
விபரீதம் நயந்தஸ்து தாப்யா:ஸ்யுர் த்விஷதம் தமம்|| 257
வாதிகளின் பக்கமும்சாட்சிகளிருப்பார்கள், பிரதிவாதிகளின் பக்கமும் சாட்சிகளிருப்பார் களல்லவா? இவர்கள் ஒரு தரத்தாரின் கூற்று சத்தியமாக இருக்க வேண்டும். இன்னொரு தரத்தாரின் கூற்று அசத்தியமே அல்லவா? அவ்வாறு தவறான சாட்சியம் கூறிய ஒவ்வொருவனுக்கும் இருநூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
ஸாக்ஷ்யபாவேது சத்வாரோக்ராமா: ஸாமந்தவாஸிந: |
ஸீமாவி ர்ணயம் குர்யு: ப்ரயதா ராஜஸந்நிதௌ || 258
இரு கிராமத்தாரிலும் இவ்வாறு எல்லைகள் தெரிந்த சாட்சிகள் இல்லாதபோது, அந்த கிராமங்களைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருக்கும் நான்கு பேர் அரசன் முன்கூறும் சாட்சியை அனுசரித்து எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும்.
ஸாமந்தாநாமபாவே து மௌலாநாம் ஸீம்நி ஸாக்ஷிணாம் |
இமாநப்யனுயுஞ்ஜீத புருஷாந் வனகோசராந்|| 259
இவ்வாறும்கூட எல்லைகளை நிர்ணயிக்க முடியவில்லை என்றால், ஊர்ஜிதமாக எல்லைகளை அறிய முடியவில்லை என்றால் என்ன செய்வது? பாரம்பரியமான எல்லைகளை அறிந்த கிராமவாசிகளே இல்லை என்னும்போது என்ன செய்யலாம்? வனவாசிகளுக்குத் தெரிகிறதா என்று பார்க்கலாம்.
வ்யாதாஞ்சாகு நிகாந் கோபாந் கைவர்தாந் மூலகாநகாந்| வ்யாலக்ராஹானுஞ்ச வ்ருத்தீநந்யாம்ஷ்ச வநசாரிண: || 260
வேடர்கள், பறவைகளைக் கொன்று விற்று ஜீவிப்பவர்கள், இடையர்கள் (கோபர்கள்), வலைஞர்கள் (இருளர்கள்), மூலிகைகளை சேகரிப்பவர்கள் அல்லது விறகு வெட்டுபவர்கள்,
பாம்பாட்டிகள், உஞ்சவிருத்திகள் (சிந்தியிருக்கும் நெல்லைப் பொறுக்கிக் கொண்டுபோய் ஜீவனம் நடத்துபவர்கள்), மற்றுமுள்ள வனவாசிகளை விசாரிக்கலாம்.
தே ப்ருஷ்டாஸ்து யதாப்ரூயு: ஸீமாஸந்திஷு லக்ஷணம் |
தத் ததா ஸ்தாபயேத் ராஜா தர்மேணக்ராமயோர் த்வயோ: || 261
அவர்களை விசாரித்ததில் கிடைத்த தகவல்களைக் கொண்டு, அரசன் இரண்டு கிராமங்களுக்கு இடையேயுள்ள எல்லைகளைத் தீர்மானிக்க வேண்டும்.
க்ஷேத்ர கூப தடாகாநாமாராமாஸ்ய க்ருஹஸ்ய ச |
ஸாமந்தப்ரத்யயோ ஞேய: ஸீமாஸேது விநிர்நய: II 262
வயல்கள், கிணறுகள், குளங்கள் இவைகளைப் பற்றிய எல்லாத் தகராறுகளுக்கும், வீடுகளுக்கிடையேயான எல்லைத் தகராறுகளுக்கும், அங்கே சுற்றிலும் வாழ்பவர்களை விசாரித்து, எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும்.
ஸாமந்தாஷ்சேந் ம்ருஷா ப்ரூயு:ஸேதெள விவததாம் ந்ருணாம் |
ஸர்வே ப்ருதக் ப்ருதக் தண்ட்யா ராக்ஞாமத்யமஸாஹஸம்|| 263
இந்த விஷயங்களில் தகராறு ஏற்பட்டிருக்கும்போது அக்கம்பக்கத்தவர்கள் பொய் கூறினால், அப்படிப் பொய் கூறிய ஒவ்வொருவருக்கும் அரசன் மத்திய சாகா தண்டம் அபராதமாக விதிக்க வேண்டும்.
க்ருஹம் தடாகமாராமம் க்ஷேத்ரம்வா பீஷயா ஹரந் |
ஷதாநி பஞ்ச தண்ட்ய: ஸ்யாதக்ஞாநாத் த்விஷதோ தம: || 264
வீடு,குளம், வயல் முதலானவைகளை அதன் சொந்தக்காரனை மிரட்டி பயமுறுத்தி பறித்துக் கொண்டவனுக்கு ஐநூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும். பலாத்காரமாக அல்லாமல், அறியாமையால் தன்னுடையதுதான் என்று எண்ணி அனுபவிப்பவனுக்கு இருநூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
ஸீமாயாமாவிஷஹ்யாம் ஸ்வயம் ராஜைவ தர்மவித் |
ப்ரதிஷேத் பூமிமேதேஷாமுபகாராதிதி ஸ்திதி: || 265
அடையாளங்களோ சாட்சியங்களோ சரிவர இல்லாதபோது எல்லைகளை எவை யாருடையவை என்று சரியாகத் தீர்மானிக்க முடியாதபோது தர்மவானான அரசன் இவ்வாறு செய்ய வேண்டும். அதாவது, அந்த பூமி முதலானவற்றால் யாருக்கு அதிக லாபம் கிடைக்குமோ அல்லது அந்தப் பகுதி இல்லாவிட்டால் எவருக்கு அதிக நஷ்டமோ அவர்களுக்கே அதைக் கொடுக்க வேண்டும்.
ஏஷோ அகிலேநா அபிஹிதோ தர்ம: ஸீமா விநிர்ணயே |
அத ஊர்த்வம் ப்ரவக்ஷ்யாமி வாக்பாருஷ்ய விநிர்ணயம் |1 266
இதுவரை எல்லையைப் பற்றிய நிர்ணயங்கள் முழுவதுமாகக் கூறப்பட்டன. இனி கடுஞ் சொற்களுக்கான (திட்டுதல்) நிர்ணயங்களைக் கூறுகிறேன்.
ஷதம் ப்ராஹ்மணமாக்ருஷ்ய க்ஷத்ரியோ தண்டமர்ஹதி
வைஷ்யோ அத்யர்த தம் த்வே வாசூத்ரஸ்து வதமர்ஹதி || 267
பிராம்மணனை அநீதியாகத் திட்டிய க்ஷத்ரியனுக்கு நூறு பணங்களை அபராதமாக விதிக்க வேண்டும். வைசியனாயின்,-நூற்றைம்பது பணங்கள் அபராதம். சூத்திரனாயின், இத்தனை அடிகள் அடிக்க வேண்டும் என்று வசை மொழிக்குத் தக்கவாறு தண்டனை விதிக்க வேண்டும்.
பஞ்சாஷத் ப்ராஹ்மணோ தண்ட்: க்ஷத்ரியஸ்யா அபிஷம்நே 1
வைஷ்யே ஸ்யாதர்தபஞ்சாஷச் சூத்ரே த்வதாஷகோ தம: || 268
பிராம்மணன் க்ஷத்திரியனைத் திட்டினால், அவனுக்கு ஐம்பது பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும். அதேபோல் வைசியனை பிராம்மணன் திட்டினால், அவனுக்கு இருபத்தைந்து பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும். சூத்திரனைத் திட்டியபிராம்மாணனுக்கு பன்னிரண்டு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
ஸமவர்ணே த்விஜாதீநாம் த்வாதஷைவ வ்யதிக்ரமே | வாதேஷ் வவசநீயேஷு ததேவ த்விகுணம் பவேத் || 269
பிராம்மணனை பிராம்மணனே திட்டினால் பன்னிரண்டு பணங்கள் அபராதம்.
அவ்வாறே க்ஷத்ரியனை க்ஷத்ரியனே திட்டினாலும், வைசியனை வைசியனே திட்டினாலும் பன்னிரண்டு பணங்கள் அபராதம்.-சாதாரண வசவு மொழிகளாக இல்லாமல் நாக்கூசும்வார்த்தைகளால் திட்டினால் இருமடங்காக அபராதம் விதிக்க வேண்டும்.
ஏகஜாதிர் த்விஜாதீம்ஸ்து வாசா தாருணாயா க்ஷிபந் |
ஜிஹ்வாயா: ப்ராப்னுயாச்சேதம் ஐகந்யப்ரபவோ ஹி ஸ: || 270
பிராம்மணன், க்ஷத்திரியன், சூத்திரன் முதலானோரை, சூத்திரன் கடுமையான தகாத வார்த்தைகளால் திட்டினால், அத்தகைய வனுக்குக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
நாமஜாதிக்ரஹம் த்வேஷாமபித்ரோஹேண குர்வத: –
நிக்ஷேப்யோஅயோமய: ஷங்குர் ஜ்வலந் நாஸ்யேதஷா அங்குல: || 271
மேலும் பெயரைக் குறிப்பிட்டோ, ஜாதியைக் குறிப்பிட்டோ தூஷிப்பவனுக்கு, பத்து அங்குல் நீளமுள்ள வேலை பழுக்கக் காய்ச்சி அவன் நாவில் சூடு போட வேண்டும்.
தர்மோபதேஷம் தர்பேண விப்ரா ணாமஸ்ய குர்வத: |
தப்தமாஸேசயேத் தைலம் வக்த்ரேஸ்ரோத்ரேச பார்திவ: || 272
அகந்தையினால், பிராம்மணனிடம் வந்து ‘இப்படிச்செய், அப்படிச்செய்’, என்று தர்மோபதேசம் செய்யும் சூத்திரனுக்கு, அவன் அகந்தை அழியும் வண்ணம் அரசன் கொடுக்க வேண்டிய தண்டனை யாதெனில் – எண்ணெயை நன்கு காய்ச்சி, அவன்
நாவிலும் காதிலும் ஊற்ற வேண்டும். இதுவே தண்டனை.
ஸ்ருதம் தேஷம் ச ஜாதிம் ச கர்ம ஷாரீரமேவ ச |
விததேந ப்ருவந் தர்பாத் தாப்ய:ஸ்யாத் த்விஷதம் தமம்|| 273
அதே சமயம் சூத்திரனைப் பார்த்தும் யாரும் இழிவாகப் பேசக் கூடாது. அவனது பேச்சு, தேசம், ஜாதி,தொழில், குரல் முதலானவைகளை தூஷிக்கக் கூடாது. அப்படி அகந்தையால் தூஷிப்பவர்களுக்கு இருநூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
காணம் வாஅப்யதவா கஞ்ஜமந்யம் வாஅபி ததாவிதம் |
தத்யேநா அபி பருவந் தாப்யோ தண்டம் கார்ஷாபணா அவரம்|-274
ஒற்றைக் கண் கொண்டவன், முடவன் முதலான அங்க ஹீனர்களை, அவர்களது அங்கக் குறைகளைக் குறிப்பிட்டு தூஷிப்பவர்களுக்கு கார்ஷா பணம் அபராதம் விதிக்க வேண்டும்.
மாதரம் பிதரம் ஜாயாம் ப்ராதரம் தநயம் குரும்|
ஆக்ஷார யஞ்சதம் தாப்ய: பந்தாநம் சாஅதத் குரோ:I-275
தாய், தந்தை, மனைவி, சகோதரன், மகன், குரு – இவர்களை நிந்திப்பவனுக்கு நூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும். குரு எதிர்ப்படும்போது அவருக்கு வழிவிட்டு விலகாதவனுக்கும் நூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
ப்ராஹ்மண க்ஷத்ரியாப்யாம் து தண்ட: கார்யோவிஜாநதா |
ப்ராஹ்மணே ஸாஹஸ்: பூர்வ: க்ஷத்ரியே த்வேவ மத்யம: || 276
பிராம்மணனுக்கும் க்ஷத்ரியனுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு வசவுகளை பேசினால், வசைமாரி பொழிந்தவன் பிராம்மணன் என்றால், இருநூற்றைம்பது பணங்களும், க்ஷத்ரியன்என்றால், ஐநூறு பணங்களும் அபராதம் விதிக்க வேண்டும். தண்ட
நீதியை செலுத்தும் அரசன் விதிக்க வேண்டிய தண்டனை இதுவேயாகும்.
விட்சூத்ரயோரேவமேவ ஸ்வஜாதிம் ப்ரதி தத்வத: |
சேதவர்ஜம் ப்ரணயநம் தண்டஸ்யேதி விநிஷ்சய:II 277
வைசியனுக்கும் சூத்திரனுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு வசை பேசினால், வசைமாரி பொழிந்தவன் வைசியன் என்றால், அவனுக்கு இருநூற்றைம்பது பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும். சூத்திரன் என்றால் ஐநூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
ஏஷ தண்டவிதி: ப்ரோக்தோ வாக்பாருஷ்யஸ்ய தத்வத: |
அதஊர்த்வம் ப்ரவ யாமி தண்டபாருஷ்ய நிர்ணயம்|-278
ஒருவரை ஒருவர் வைதல் தொடர்பான தண்டனைகளை இதுவரை கூறினேன். இனி ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்வதுதொடர்பான தண்டனைகளைக் கூறுகிறேன்.
யேநகேநசிதங்கேந ஹிம்ஸ்யாச்சேச் ச்ரேஷ்டமந்த்யஜ: |
சேத்தவ்யம் தத்ததேவா அஸ்யதந் மநோரனுஷாஸநம் || 279
சூத்திரன், பிராம்மண க்ஷத்ரிய வைசியர்களை எந்த அங்கத்தால் அடிக்கிறானோ, அந்த அங்கத்தை வெட்ட வேண்டும். இது மனு பகவானின் சாசனம்.
பாணிமுத்யம்ய தண்டம்வா பாணிச்சேதநமர்ஹதி |
பாதேந ப்ரஹரந் கோபாத் பாதச்சேதநமர்ஹதி || 280
அவன் கையாலோ தடியெடுத்தோஅடித்தால் அடித்த கையைவெட்ட வேண்டும்.கோபத்தோடு காலால் உதைத்தால் காலை வெட்ட வேண்டும்.
ஸஹா ஆஸ்நமபிப்ரேப்சுருத் க்ருஷ்டஸ்யா அபக்ருஷ்ட : |
கட்யாம் க்ருதாங்கோ நிர்வாஸ்ய: ஸ்பிசம் வாஅஸ்யாஅவ கர்தயேத்|| 281
சூத்திரன் அகங்காரத்தால் பிராம்மணனுடன் சமமான ஆசனத்தில் உட்கார்ந்தால் இடுப்பின் பின்புறத்தில் சூடு போட வேண்டும்.
அவநிஷ்டீவதோ தர்பாத் த்வாவோஷ்டௌ சேதயேந் ந்ருப: | அவமூத்ரயதோ மேட்ரமவஷர்தயதோ குதம்|| 282
சூத்ரன் அகங்காரத்தால், பிராம்மணன் மீது காறியுமிழ்ந்தால், அவன் உதடுகளை அறுக்க வேண்டும். பிராம்மணன் மீது சிறுநீர் கழித்து அவமானப் படுத்தியவனின் சிறுநீர் கழிக்கும் உறுப்பை அறுக்க வேண்டும். பிராம்மணன் மீது மலத்தை எறிந்தவனின் குதத்தை அறுக்க வேண்டும். இது அரசன் செலுத்த வேண்டிய தண்ட நீதி
கேஷேஷு க்ருஷ்ணதோ ஹஸ்தெள சேதயேதவிசாரயந் பாதயோர் தாடிகாயாம் ச க்ரீவாயாம் வ்ருஷணேஷுச | 283
பிராம்மணன் முடியைப் பற்றியிழுத்த சூத்திரன் கைகளை எந்தத் தயக்கமுமின்றி வெட்டியெறிய வேண்டும். தாடி, மீசை, கழுத்து, குறி இவைகளைப் பற்றி இழுத்தவனுக்கும் இதே தண்டனை விதிக்க வேண்டும்.
த்வக்பேதக: ஷதம் தண்ட்யோ லோஹிதஸ்ய ச தர்வுக:
மாம்ஸபேத்தா து ஷண் நிஷ்காந் ப்ரவாஸ்யஸ் த்வஸ்திபேதக: || 284
யாரும் யாரையும் தோல் பிய்ந்துபோகுமாறு அடித்தால் நூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும். ரத்தம் வருமாறு அடித்தாலும் நூறு பணங்கள் அபராதம். சதை பிய்ந்து போகுமாறு அடித்தால் ஆறு நிஷ்கங்கள் அபராதம் விதிக்க வேண்டும். எலும்புகள்
முறியுமாறு அடித்தவனை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.
வநஸ்பதீநாம் ஸர்வேஷா முபபோகோ யதாயதா |
ததா ததா தம: கார்யோ ஹிம்ஸாயாமிதி தாரணா || 285
மலர்களையும் பழங்களையும் அளிக்கும் மரங்களை வெட்டக் கூடாது. வெட்டுபவனுக்கு,ஏற்படும் நஷ்டத்துக்குத் தக்கவாறு அபராத தண்டனை விதிக்க வேண்டும்.
மநுஷ்யாணாம் ப நாம் ச துக்காய ப்ரஹ்ருதே ஸதி |
யதாயதா மஹத் துக்கம் தண்டம் குர்யாத் ததாததா || 286
மனிதர்களையும், பசுக்களையும் அடித்துத் துன்புறுத்துபவனுக்கு, ஏற்படும் துக்கத்தின் தன்மைக்கேற்பதண்டனையளிக்க வேண்டும்.
அங்காஅவபீடநாயாம் ச வ்ரணஷோணிதயோஸ் ததா | ஸமுத்தாநவ்யயம் தாப்ய: ஸர்வதண்டமதாஅபி வா ||| 287
உடம்பில் காயம் ஏற்படுமாறு அடித்தவனிடம், அந்தக் காயத்தின் தன்மைக்கேற்பவும், அந்தக் காயம் ஆறும் வரையில் அதற்காகும் மருத்துவச் செலவுகளுக்கும்,காயம்பட்டவன் சம்பாதிக்க முடியாமல் போய்விடுவதால் அந்த நஷ்ட ஈட்டுத் தொகையையும் அடித்தவனிட மிருந்து வசூலித்து அடிபட்டவனுக்குக் கொடுக்க வேண்டும்.
த்ரவ்யாணி ஹிம்ஸ்யாத் யோ யஸ்ய ஞாநதோ அஞ்ஞாதோ அபி வா|
ஸதஸ்யோத் பாதயேத் துஷ்டிம் ராக்ஞே தத்யாச்ச தத்ஸமம்|| 288
பிறருடைய பொருட்களை அறிந்தோ அறியாமலோ தொலைத்து விட்டால்,அப்பொருளின் சொந்தக்காரனுக்கு வேறொரு பொருளை ஈடாகக் கொடுத்துவிட வேண்டும். மேலும்
அப்பொருளுக்குரிய விலையை அபராதமாக அரசனுக்குச் செலுத்த வேண்டும்.
சர்ம சார்மிக பாண்டே காஷ்ட லோஷ்டமயே ச1
மூல்யாத் பஞ்சகுணோ தண்ட: புஷ்பமூல பலே ச |-289
ஒருவனுக்குச் சொந்தமான தோல், தோல் பாத்திரங்கள், மண் பாத்திரங்கள், மரப் பாத்திரங்கள் இவற்றைத் தொலைத்துவிட்டால், அவற்றின் மதிப்புக்கு ஐந்து மடங்கு அபராதம் அரசன் விதிக்க வேண்டும். சொந்தக்காரனுக்கு அவற்றின் மதிப்புக்குத் தக்க தொகையை அளிக்கச் செய்ய வேண்டும். புஷ்பங்கள், வேர்கள், பழங்கள், முதலானவற்றுக்கும் இதே முறையில் தண்டிக்க வேண்டும்.
யாநஸ்யசைவ யாதுஷ்ச யாநஸ்வாமிந ஏவ ச தஷாஅதிவர்தநாந்யா :சேஷே தண்டோ விதீயதே|| 290
தேர் முதலான வாகன சாரதிகளுக்கும், வாகனத்தின் சொந்தக்காரர்களுக்கும் விபத்து ஏற்படுத்தினால், விபத்துக்கான பத்து தவறுகளுக்கு தண்டனை கிடையாது. இந்த பத்தின் காரணமாக ஏற்படும் பிராண நஷ்டம், பொருள் நஷ்டம் இவற்றிற்கு தண்டனை கிடையாது. இவை தவிர்த்து மற்றபடி ஏற்படும் விபத்துக்களில் ஏற்படும் பிராண நஷ்டம், பொருள் நஷ்டம் முதலானவற்றுக்கு தண்டனை உண்டு.
சிந்நநாஸ்யே பக்நயுகே திர்யக் ப்ரதிமுகா ஆகதே |
அக்ஷபங்கே ச யாநஸ்ய சக்ர பங்கே ததைவ ச || 291
சேதநே சைவ யந்த்ராணாம் யோக்த்ர ரஷ்ம்யோஸ் ததைவ ச ஆக்ரந்தே சாஅப்யபைஹீதி ந தண்டம் மனுரப்ரவீத் ||-292–
1) மூக்கணாங்கயிறு அறுந்து போதல்.
2) நுகத்தடி ஒடிந்து போதல்.
3) மேடு பள்ளங்களால் ரதம் குடைசாய்ந்துபோதல்.
4) இருசு அச்சு ஒடிந்து போதல்.
5) சேணம் அறுந்து போதல்.
6) கடிவாளக் கயிறு அறுந்து போதல்.
7) சாட்டை அறுந்து போதல்.
8) வாகனத்தோடு குதிரையைப் பூட்டியுள்ள இடத்தில் மரம் உடைந்து போதல்.
9) எதிரில் வேறு வண்டி வந்து மோதுதல்.
10) சாரதி குறுக்கே வருபவனை விலகு விலகென்று கூறியும் விலகாமை.
என்னும் பத்து வகையான காரணங்களால் விபத்து ஏற்பட்டு, அதனால் உயிர் நஷ்டமும் பொருள் நஷ்டமும் ஏற்பட்டாலும்கூடதண்டனை எதுவும் கொடுக்கக் கூடாதென மனு பகவான் கூறுகிறார்.
யத்ரா அபவர்ததே யுக்யம் வைகுண்யாத் ப்ராஜகஸ்ய து |
தத்ர ஸ்வாமீ பவேத் தண்ட்யோ ஹிம்ஸாயாம் த்விஷதம் தமம் | 293
வண்டியோட்டி தன் அஜாக்ரதையால் வண்டியை ஒடித்தாற்போல் திருப்பி, அதனால் பிறர் உயிருக்கோ உடைமைகளுக்கோ ஹாநி ஏற்பட்டால், அப்படிப்பட்ட அறிவிலியை சாரதியாக அமர்த்திக் கொண்ட வண்டியின் சொந்தக்காரனுக்கு இருநூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
ப்ராஜகஷ்சேத் பவேதாப்ய: ப்ராஜகோ தண்டமர்ஹதி |
யுக்யஸ்தா: ப்ராஜகே அநாப்தே ஸர்வே தண்ட்யா: ஷதம்ஷதம் |-284
வண்டியோட்டிய சாரதி புத்திமானாக இருந்தால், தன்னால் ஏற்பட்ட நஷ்டத்தை தன் எஐமானன் ஏற்க விடக்கூடாது. தானே அந்த அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும். சாரதி அந்த அளவுக்கு அறிவில்லாத மூடனாக இருந்தால், எஜமானனே அபராதம்
கட்ட வேண்டும். அதுபோக அந்த வண்டியில் பயணம் செய்தவனுக்கும், சாரதிக்கும் தனித்தனியே நூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
ஸசேத்து பதி ஸம்ருத்த: பசுபிர் வா ரதேந வா |
ப்ரமாபயேத் ப்ராணப்ருதஸ் தத்ர தண்டோ அவிசாரித: || 295
எதிரில் மிருகங்களோ, ரதமோ வரும்போது தன் வண்டியை நிறுத்தாமல் ஒட்டி, அதனால் மிருகங்களுக்கு உயிர்ச் சேதமோ, உடலுக்கு ஹிம்சையோ ஏற்பட்டால், சற்றும் யோசிக்காமல் அந்த சாரதிக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
மநுஷ்ய மாரணே க்ஷிப்ரம்சௌரவத் கில்பிஷம் பவேத் ||
ப்ராணப்ருத்சு மஹத்ஸ்வர்தம் கோகஜோஷ்ட்ரஹயாதிவு !-296
மனிதன் இந்த விபத்தில் இறந்தால், அவனுக்கு திருடனுக்கு விதிக்கும் தண்டனையை விதிக்க வேண்டும். பசுக்கள், யானைகள், குதிரைகள் முதலானவற்றுக்கு ஆபத்து நேரிட்டால் அல்லது இறந்தால் அதில் பாதி தண்டனையும் விதிக்க வேண்டும்.
க்ஷத்ரகாணாம் ப நாம் து ஹிம்ஸாயாம் த்விஷதோ தம: |
பஞ்சாசத் து பவேத் தண்ட: சுபேஷு ம்ருக பக்ஷி || 297
மிகவும் சாதாரண கால் நடைகளுக்கு (பூனை போன்றவை) ஆபத்து ஏற்பட்டால், சாரதியிடம் இருநூறு பணங்கள் அபராதம் வசூலிக்க வேண்டும். உயர்ந்தவைகளான மான் முதலான மிருகங்களுக்கும், அன்னம் முதலான பறவைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டால், ஐம்பது பணங்கள் அபராதம் வசூலிக்க வேண்டும்.
கர்தபாஅஜாவிகாநாம் து தண்ட:ஸ்யாத் பஞ்சமாஷிக: |
மாஷிகஸ்து பவேத் தண்ட: ஷ்வசூகர நிபாதநே|| 298
கழுதை, ஆடு,செம்மறியாடு முதலானவற்றுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஐந்து வெள்ளி மாஷங்கள் அபராதம் விதிக்க வேண்டும். நாய், பன்றி போன்றவை வண்டியில் அடிபட்டு
வீழ்ந்தால், ஒரு வெள்ளி மாஷம் அபராதம் விதிக்க வேண்டும்.
பார்யா புத்ரஷ்ச தாஸஸ்ச ப்ரேஷ்யோ ப்ராதா ச ஸோதர: |
ப்ராப்தாஅபராதாஸ் தாட்யாஸ்யூ ரஜ்வா வேணுதலேந வா || 299
மனைவி, பிள்ளை, வேலைக்காரன், சிஷ்யன், பிரியமான நண்பன், தம்பி இவர்கள் குற்றமிழைத்தால், பிரம்பாலோ, கயிற்றாலோ அடிக்க வேண்டும்.
ப்ருஷ்டதஸ்து ஷரீரஸ்ய நோத்தமாங்கேகதஞ்சந |
அதோ அந்யதா து ப்ரஹரந் ப்ராப்த: ஸ்யாச்சௌரகில்பிஷம்|| 300
இவ்வாறு அடிக்க நேரும்போது, தலை முதலான உத்தம பாகங்களில் அடிக்கக்கூடாது. உடலின் பின்புறம் முதுகில் அடிக்கலாம். அவ்வாறன்றி தலையில் அடிப்பவன் திருடனுக்குரிய தண்டனையைப் பெறுவான்.
ஏஷோ அகிலேநா அபிஹிதோ தண்டபாருஷ்ய நிர்ணய: |
ஸ்தேநஸ்யாஅத: ப்ரவக்ஷ்யாமி விதிம் தண்டவிநிர்ணயே| 301
இதுவரை தண்ட நீதியில் வசைகளுக்கும், விபத்து முதலான வற்றுக்குமுரிய தண்டனைகளைக் கூறினேன். இனி திருட்டுக் குற்றத்துக் குரிய தண்டனைகளைக் கூறுகிறேன்.
பரமம் யத்நமாதிஷ்டேத் ஸ்தேநாநாம் நிக்ரஹே ந்ருப: |
ஸ்தேநாநாம் நிக்ரஹாதஸ்ய யஷோ ராஷ்ட்ரம் ச வர்ததே|| 302
திருடர்களைப் பிடிக்கும் விஷயத்தில் மேலான முயற்சிகளை அரசன் மேற்கொள்ள வேண்டும். திருடர்களை அடக்கும் அரசனுடைய புகழும், ராஜ்ஜியமும் பெருகும்.
அபயஸ்ய ஹி யோ தாதா ஸ பூஜ்ய:ஸத்தம் ந்ருப: |
ஸத்ரம் ஹி வர்ததே தஸ்ய ஸதைவாஅபய தக்ஷிணம்|| 303
அபயத்தை அளிக்கும் வள்ளலான அரசன் எப்போதும் போற்றுதற் குரியவன். மக்களைக் காப்பாற்றுதல் என்பது அரசனுக்கு ஒரு வேள்வியாகும். அபயமளித்தலே தட்சிணையாகும். அபயமளிப்பதால் அரசனது ஆட்சி உயர்வடையும்.
ஸர்வதோ தர்மஷட்பாகோ ராக்ஞோபவதி ரக்ஷத:
அதர்மாதபி ஷட்பாகே பவத்யஸ்ய ஹ்யரக்ஷத: | ]-304
மக்களை நன்குரட்சிக்கும் அரசனுக்கு அவன் குடிமக்கள் செய்யும் புண்ணியத்தில் ஆறில் ஒரு பாகம் வந்தடையும். மக்களை நன்கு ரட்சிக்காத அரசனுக்கு, அவன் குடிமக்கள் செய்யும் பாபத்தில் ஆறில் ஒரு பங்கு வந்தடையும்.
யததீதே யத் யஜதே யத் ததாதி யதர்சதி |
தஸ்ய ஷட்பாகபாக் ராஜா ஸம்யக் பவதி ரக்ஷணாத் 305
மேலும் கோயில்களில் நடைபெறும் தேவபூஜைகள், யாகங்கள், தானங்கள் முதலானவற்றின் பலனிலும் ஆறில் ஒரு பாகம், பிரஜைகளை நன்கு ரட்சிப்பதால் அரசனை வந்தடையும்.
ரக்ஷந் தர்மேண பூதாநி ராஜா வத்யாம்ஷ் ச காதயந் |
யஜதே அஹரஹர் யக்ஞை: ஸஹஸ்ரஷததக்ஷிணை: |-306
அரசன் சகல உயிர்களையும் தர்மமாக ரட்சிப்பதாலும், தீயவர்களை ஒடுக்குவதாலும், ஒவ்வொரு நாளும் யாகங்களியற்றி ஆயிரங்களாய், நூறுகளாய் தட்சிணைகளைக் கொடுத்த பலனை அடைகிறான்.
யோ அரக்ஷந் பலிமாதத்தே கரம் ஷூல்கம் ச பார்திவ: |
ப்ரதிபாகம் ச தண்டம் ச ஸ ஸத்யோ நரகம் வ்ரஜேத் || 307
விளைபொருள்களுக்கான வரி, நில வழி வரி, நீ ர்வழி வரி. வணிகர்களிடமிருந்து பெறும் வரி, அபராதத் தொகைகள் முதலியவற்றையெல்லாம் குறைவர வசூலித்துக் கொண்டு, மக்களைக் காப்பாற்றாத அரசன் இறந்த வேகத்தில் நரகத்தை அடைவான்.
அரக்ஷிதாரம் ராஜாநம் பலிஷட்பாக ஹாரிணம் |
தமாஹு: ஸர்வலோகஸ்ய ஸமக்ரமலஹாரகம் || 308
மக்களைக் காப்பாற்றாமல், அவர்களிடமிருந்து ஆறில் ஒரு பாகத்தை வரியாக வசூலிக்கும் அரசன், உலக மாந்தரின் பாபங்களை அடைந்தவனாகிறான் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.
அநபேக்ஷிதமர்யாதம் நாஸ்திகம் விப்ரலும்பகம் | அரக்ஷிதாரமத்தாரம் ந்ருபம் வித்யாததோகதிம் || 309
தர்ம சாஸ்திரங்களுக்கு மரியாதையளிக்காமல், நாஸ்திகனாக, மேலுலகங்கள் இல்லை யென்று கூறிக்கொண்டு மக்களைக் காப்பாற்றாமல், தண்ட நீதியைச் செலுத்தாமல், வரியை மட்டும் வசூலிக்கும் அரசன் அதோகதியை, அதாவது நரகத்தை அடைவான்.
அதார்மிகம் த்ரிபிர் ந்யாயைர் நிக்ருஹ்ணீயாத் ப்ரயத்நத: |
நிரோதநேந பந்தேந விவிதேந வதேந ச || 310
அதர்மங்கள் செய்பவரை அரசன், அபராதம் வாங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல், மிக்க முயற்சியோடு மூன்று வகையாகத் தண்டிக்க வேண்டும்.
நிக்ரஹேண ஹி பாபாநாம் ஸாதூநாம் ஸங்க்ரஹேண ச |
த்விஜாதஸ்ய இவேஜ்யாபி: பூயந்தே ஸத்தம்ந்ருபா: ! 311
தீயோரைத் தண்டித்தலையும், நல்லோரைக் காத்தலையும் செய்வதனால்,பிராம்மண, க்ஷத்திரிய, வைசியர்கள் யாகத்தால் பரிசுத்தமடைவதைப் போன்று அரசன் பரிசுத்தனாவான்.
க்ஷந்தவ்யம் ப்ரபுணா நித்யம்க்ஷிபதாம் கார்யிணாம் ந்ருணாம் |
பாலவ்ருத்தாஆது ராணாம்ச குர்வதா ஹிதமாத்மந: || 312
தங்கள் வழக்குகளைத் தீர்த்துக் கொள்ள வந்தவர்களில் சிறுவர்களும், வயோதிகர்களும், வியாதியஸ்தர்களும் அறியாமையாலோ, உடல் கஷ்டங்களைப் பொறுக்க முடியாமலோ அரசனைக் கடிந்து கொண்டாலும்கூட அரசன் பொறுத்துக் கொள்ள வேண்டும். தன்னுடைய நன்மையை விரும்பும் அரசன் இவ்வாறே செய்ய வேண்டும்.
ய:க்ஷிப்தோ மர்ஷயத்யார்தைஸ் தேநஸ்வர்கே மஹீயதே |
யஸ் த்வைஷ்வர்யாந் ந க்ஷமதே நரகம் தேந கச்சதி || 313
தன்னைக் குறைகூறிக் கடிந்தவர்களைப் பொறுத்துக் கொள்ளும் அரசன், அந்தப் பொறுமையினாலேயே சொர்க்க லோகத்தை யடைந்து மேன்மையுறுகிறான். தான் அரசன் என்ற கர்வத்தால் பொறுக்காதவன், நரகத்தை அடைகிறான்.
ராஜா ஸ்தேநேந கந்தவ்யோ முக்தகேஷேந தாவதா
ஆசக்ஷாணேந தத் ஸ்தேயமேவம் கர்மாஸ்மி ஷாதிமாம்-314
பிற டமிருந்து தங்கத்தைத் திருடியவன், தன் குற்றத்தை உணர்ந்தால், அரசனிடம் சென்று தன் குற்றத்தைக் கூறி தண்டனையை வேண்ட வேண்டும். ஏனெனில், அரசனால் தண்டிக்கப்படுபவனுக்கு அந்தப் பாபம் நீங்கி விடுகிறது. இல்லாவிட்டால் அந்தப் பாபம் அடுத்த பிறவியிலும் தொடரும். அந்தப் பாபப் பயனால் வாழ்க்கையில் இன்னல்களை
அடைய வேண்டி வரும். இந்த உண்மையை உணர்ந்து ‘நாம் குற்றம் புரிந்து விட்டோம்,
அதற்குரிய தண்டனை, அது எவ்வளவு பொறுக்க முடியாததாயினும் இந்த இன்மத்திலேயே அனுபவித்து பாபத்தைப் போக்கிக் கொள்ளலாம்,’ என்று நினைப்பவன், அரசனிடம் சென்று தான் எப்போது எங்கு எவரிடம் திருடினேன் என்பதைத் தெரியப்படுத்தி, தனக்குத் தண்டனை அளிக்குமாறு வேண்ட வேண்டும்.
ஸ்கந்தேந ஆதாய முஸலம் லகுடம் வாஅபி காதிரம் |
ஷக்திம் சோபயதஸ் தீஷ்ணாமாயஸம் தண்டமேவ வா || 315
அப்படி அரசனிடம் போகும்போது, இரும்பு உலக்கை, கருங்காலித் தடி, இருமுனையும் கூர்மையாக இருக்கும் கத்தி, வேல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தோளில் சுமந்து செல்ல வேண்டும்.
ஷாஸநாத் வா விமோக்ஷாத்வா ஸ்தேந: ஸ்தேயாத் விமுச்யதே |
அஷாஸித்வா து தம் ராஜா ஸ்தேநஸ்யா ஆப்நோதி கில்பிஷம் || 316
அப்படி வரும் திருடனை, அரசன் அவன் கொண்டு வந்த ஆயுதத்தாலேயே அடிக்கச் செய்ய வேண்டும். குற்றத்தின் தன்மையைப் பொறுத்து இறக்கும் வரை அடித்தாலும் சரி, ஓரளவு அடித்துவிட்டு பிழைத்துப் போக விட்டாலும் சரி, அந்தத் திருடனின்பாபம் முழுமையாகத் தொலைந்து விடும்.-ஆனால், மனந் திருந்தி விட்டானே என்று இரக்கப்பட்டு அரசன்
அவனைத் தண்டிக்காமல் விட்டுவிட்டால், அந்தப் பாபம் அரசனை வந்தடையும்.
அந்நாததே ப்ரூணஹா மார்ஷ்டி பத்யௌ பார்யா அபசாரிணி|
குரௌ சிஷ்யஷ்ச யாஜ்யஷ் ச ஸ்தேநோ ராஜநி கில்பிஷம்|| 317
பிரம்மஹத்தி செய்தவனுடைய பாபம், அவன் சாப்பாட்டைச் சாப்பிடுபவர்க்கும் போகும்.
கர்ப்பத்தை அழித்தவனுடைய பாபம், அவன் சாப்பாட்டைச் சாப்பிடுபவர்க்கும்போகும்
மனைவி செய்யும் பாபம் கணவனைச் சேரும்.சிஷ்யன் செய்யும் பாபம் குருவைச் சேரும்.
யாகம் செய்து வைக்கின்றவனுடைய பாபம், யாகம் செய்விக்கின்ற கர்த்தாவைச் சேரும்.
திருடன் செய்யும் பாபம் அரசனைச் சேரும்.பிரம்மஹத்தி செய்தவன், கர்ப்பத்தை அழித்தவன் இவர்கள் சாப்பாட்டைச் சாப்பிடாமல். அந்தப் பாபம் தங்களை
வந்தடையாமல் பார்த்துக் கொள்ளலாம்.-அடுத்து, மனைவி பாபம் செய்வதைப் பொறுத்துக்
கொண்டிராமல் கணவன் அவளைத் தண்டிக்க வேண்டும். இதனால் அந்தப் பாபம் கணவனைச் சேராது. யாகம் செய்கின்ற கர்த்தாவானவன்,யாகத்தைச் செய்து
வைக்கின்றவன் செய்கின்ற பிழைகளைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது; சாஸ்திர விதிகளை அவன் மீறா வண்ணம் கண்டிப்போடு நடந்து கொள்ள வேண்டும். இதனால் யாகம் செய்கின்ற கர்த்தா தன்னைப் பாபம் வந்தடையாமல் காத்துக் கொள்கிறான்.
ராஜபி: க்ருததண்டாஸ் துக்ருத்வா பாபாநி மாநவா: |
நிர்மலா: ஸ்வர்கமாயாந்தி ஸந்த: சுக்ருதிநோ யதா|| 318
குற்றம் புரிந்த மனிதர்கள் மன்னனால் தண்டிக்கப்பட்டால், பாபங்கள் நீங்கியவர்களாக,அவர்களுடைய புண்ணிய பலன்களோடு, நல்லோர்கள் அடையும் சொர்க்கத்தை அடைகிறார்கள்.
யஸ்து ரஜ்ஜும் கடம் கூபாத்தரேத் பிந்த்யாச்ச யப்ரபாம் |
ஸதண்டம் ப்ராப்நுயாந் மாஷம் தச் ச தஸ்மிந் ஸமாஹரேத் |-319
தண்ணீரை முகர்ந்தெடுப்பதற்காக கிணற்றடியில் வைக்கப் பட்டிருக்கும் குடத்தை உடைப்பவன், தாம்புக் கயிற்றைத் திருடுபவன், வழியிலுள்ள பந்தல்களைச் சாய்ப்பவன் – இவர்களுக்கு ஒரு பொன் மாஷம் அபராதம் விதிக்க வேண்டும்.மேலும் அவன் தாம்புக் கயிற்றையும் குடத்தையும் வாங்கிக் கொண்டு வந்து கிணற்றடியில் சேர்ப்பிக்க வேண்டும்.
அழித்த பந்தலை மீண்டும் நிறுவச் செய்ய வேண்டும்.
தான்யம் தஷப்ய: கும்பேப்யோ ஹரதோ அப்யதிகம் வத: |
சேஷேஅப்யேகாத குணம் தாப்யஸ் தஸ்ய ச தத் தநம் || 320
இருநூறு பலம்கள் கொண்டது ஒரு துரோணம் எனப்படும். இருபது துரோணங்கள் கொண்டது ஒரு கும்பம்.-பத்து கும்பங்களுக்கும் அதிகமாக தானியங்களைத் திருடிய வனுக்கு, கசையடிபோன்ற உடலைக் காயப்படுத்தும் தண்டனை விதிக்க வேண்டும்.
பொருளுக்கு சொந்தக்காரனுக்கும், எடுத்தவனுக்கும் இடையே யுள்ள உறவை அனுசரித்து தண்டனை விதிக்க வேண்டும். பத்து கும்பங்களுக்கும் குறைவான தானியத்தைத் திருடியவனுக்கு, அவன் திருடியதற்கும் மேல் பதினொரு மடங்கு அபராதம் விதிக்க வேண்டும். சொந்தக்காரனிடம் தானியத்தை ஒப்படைக்க வேண்டும்.
ததா தரிமமேயாநாம் ஷதாதப்யதிகே வத: |
சுவர்ண ரஜதாதீநா முத்தமாநாம் ச வாஸஸாம் || 321
அளக்கும் தானியங்களுக்கு விதிக்கப்படுவது போலவே, தராசில் நிறுத்தி எடைபோடும் தங்கம், வெள்ளி முதலானவற்றுக்கும், உயர்ந்த பட்டாடைகளுக்கும் தண்டனை விதிக்க வேண்டும். எடுத்த பொருளின் அளவு, தன்மைகளுக்குத் தக்கபடி அடிப்பது, அங்கங்களை அறுப்பது போன்ற தண்டனைகளை விதிக்க வேண்டும்.
பஞ்சாஷதஸ் த்வப்யதிகே ஹஸ்தச்சேதந மிஷ்யதே |
சேஷே த்வேகாத குணம் மூல்யாத் தண்டம் ப்ரகல்பயேத் |-322
அதிக அளவு திருடியவன் கைகளை வெட்ட வேண்டும். சிறிதளவே என்றாலும்கூட திருடியதன் மதிப்புக்கு பதினொரு மடங்கு அபராதம் விதிக்க வேண்டும். திருடிய பொருளையும் கைப்பற்றி சொந்தக்காரனிடம் ஒப்படைக்க வேண்டும்.
புருஷாணாம் குலீநாநாம் நாரீணாம் ச விசேஷத: |
முக்யாநாம் சைவ ரத்நாநாம் ஹரணே வதமர்ஹதி || 323
உயர் குலத்து பிறந்த ஆடவர்களையும், பெண்களையும், உயர்ந்த ரத்தினங்களையும் அபகரிப்பவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.
மஹா ப நாம் ஹரணே ஷஸ்த்ராணா மௌஷதஸ்ய ச
காலமாசாத்ய கார்யம் ச தண்டம் ராஜா ப்ரகல்பயேத் |-324
உயர்ந்த நாற்கால் பிராணிகளான யானை, குதிரைகளையும், ஆயுதங்களையும், ஒளஷதங்களையும் அபகரித்தவனுக்கு என்ன தண்டனை என்றுபார்ப்போம்.
முதலில் எந்தக் காலத்தில் என்ன காரணத்துக்காக அதை அபகரித்தான் என்று பார்க்க வேண்டும். அதைப் பொறுத்து தண்டனையை விதிக்க வேண்டும்.
கோஷு ப்ராஹ்மண ஸம்ஸ்தாசு சூரிகாயாஷ்ச பேதநே |
ப நாம் ஹரணே சைவ ஸத்ய: கார்யோ அர்தபாதிக: !-325
பிராம்மணர்களுடைய பசுக்களை அபகரித்தவனுக்கும், மலட்டுப்பசுக்களை சுமை சுமப்பதற்காக மூக்கணாங் கயிறு போட்டவனுக்கும், யாகத்துக்குரிய பிராணி எதுவானாலும், அதை அபகரித்தவனுக்கும் முழங்காலை வெட்ட வேண்டும். மேலும் திருடு
கொடுத்தவர்களுக்கு அவரவருடையதற்குத் தக்கபடி தொகையைக் கொடுக்க வேண்டும்.
சூத்ர கார்பாஸகிண்வாநாம் கோமயஸ்ய குடஸ்ய ச |
தத்ந: ரஸ்ய தக்ரஸ்ய பாரீயஸ்ய த்ருணஸ்ய ச || 326
வேணுவைதல பாண்டாநாம் லவணாநாம் ததைவ ச
மருந்மயாநாம் ச ஹரணே ம்ருதோ பஸ்மந ஏவச || 327
மத்ஸ்யாநாம் பக்ஷிணாம் சைவ தைலஸ்ய ச க்ருதஸ்யச |
மாம்ஸஸ்ய மதுநஷ் சைவ யச் சாஅந்யத் பசுஸம்பவம் ||-328-
அந்யேஷாம் சைவமாதீநாம் மத்யாநாமோதநஸ்யச
பக்வா அந்நாநாம் ச ஸர்வேஷாம் தந்மூல்யாத் த்விகுணோ தம: [-329-
பஞ்சு பட்டு நூல்கள், பஞ்சு, கஞ்சா, கோமயம்,வெல்லம், தயிர்,பால், மோர், குடிநீர், புல் இவைகளையும், மூங்கில், பிரம்பு முதலானவற்றால் பின்னப்பட்ட கூடைகள்,
உப்புகள், மண் பாத்திரங்கள், மண், சாம்பல் இவைகளையும், மீன்கள், பறவைகள், எண்ணெய், நெய்,மாமிசம், தேன், கால்நடைகளிடமிருந்து கிடைக்கும் பொருட்கள் இவைகளையும், பலவகையான மதுபான வகைகள், சமைத்த அன்னங்கள் இவைகளையும்,
திருடியவனுக்கு பொருளின் மதிப்புக்கு இருமடங்கு அபராதம் விதிக்க வேண்டும்.
புஷ்பேஷு ஹரிதே தாந்யேகுல்ம வல்லீநகேஷு ச | அந்யேஷ்வபரிபூதேஷு தண்ட: ஸ்யாத் பஞ்சக்ருஷ்ணல: –330
மலர்கள், தானியங்கள், காய்கறிகள், கிழங்குகள், பழங்கள் முதலானவற்றைத் திருடியவனுக்கும் அபராதம் விதிக்க வேண்டும்.
பரிபூதேஷு தாந்யேஷு ஷாகமூலபலே ச |
நிரந்வயே ஷதம் தண்ட: ஸாஅந்வயே அர்த தம் தம: || 331
வேலியிட்டிருக்கும்போது அதைத் தாண்டிப் போய் தானியங்களையும், காய்கறிகளையும், வேர்களையும், பழங்களையும் திருடினால், நூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும். வேலியில்லாத இடத்தில் திருடினால், ஐம்பது பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
ஸ்யாத் சாஹஸம் த்வவயவத் ப்ரஸபம் கர்ம யத்க்ருதம் |
நிரந்வயம் பவேத்ஸ்தேயம் ஹ்ருத்வா அபவ்யயதே ச யத்|| 332
தான் அனுபவிப்பதற்காக வைத்துள்ளபொருட்களைத் திருடுபவனுக்கும், வைதிகரிடமிருந்து அக்னியைத் திருடியவனுக்கும்இருநூற்றைம்பது பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும். மேலும் சொந்தக்காரனுக்கு நஷ்ட ஈடும் கொடுக்க வேண்டும்.
யஸ் த்வேதாந்யுபக்லுப்தாறி த்ரவ்யாணி ஸ்தேநயேந் நர: |
தமாத்யம் தண்டயேத் ராஜா யஷ்சாஅக்நிம் சோரயேத் க்ருஹாத்|| 333
வைதிக அக்னியைத் திருடியவனுக்கு பிரதமசாகச தண்டமாக அபராதம் விதிக்க வேண்டும்.
திருடிய பொருட்களின் தன்மைக்குத் தக்கபடி அரசன் திருடனுக்கு தண்டனை விதிக்க வேண்டும்.
யேநயேந யதாஅங்கே ஸ்தேநோ ந்ருஷு விசேஷ்டதே |
தத்ததேவ ஹரேத் தஸ்ய ப்ரத்யாதேஷாய பார்திவ: |-334
எந்தெந்த அங்கங்களால் குற்றங்களைச் செய்தானோ, அந்த அந்த அங்கங்களை (பெரிய குற்றமாகச் செய்திருப்பின்) வெட்ட வேண்டும்.
பிதா ஆசார்ய: சுஹ்ருந்மாதா பார்யாபுத்ர: புரோஹித:
நா அதண்ட்யோ நாமராக்ஞோ அஸ்திய: ஸ்வதர்மேந திஷ்டதி || 335
அரசன், தன்னுடைய தந்தை,தாய், நண்பன், ஆசார்யன், மனைவி, மகன், புரோஹிதன் முதலானோர் தவறு செய்தாலும் அவர்களையும் தண்டிக்கவே வேண்டும்.
கார்ஷா பணம் பவேத் தண்ட்யோ யத்ரா அந்ய ப்ராக்ருதோ ஐந: | தத்ர ராஜா பவேத் தண்ட்ய: ஸஹஸ்ரமிதி தாரணா |-336
பிறர் செய்த எந்தக் குற்றத்துக்கு ஒரு கார்ஷா பணம் அபராதம் விதிக்கப்படுமோ, அதே குற்றத்தை அரசன் செய்தால், ஆயிரம் மடங்கு அபராதம் விதிக்க வேண்டும்.. அதாவது, எந்தத் தண்டனையானாலும் சாதாரண மனிதனுக்கு விதிக்கப்படுவதைப்போல, அதே குற்றத்துக்கு ஆயிரம் மடங்கு தண்டனை அரசனுக்கு விதிக்கப்பட வேண்டும்.
அஷ்டாபாத்யம் து சூத்ரஸ்ய ஸ்தேயே பவதி கில்பிஷம் | ஷோடஷைவ து வைஸ்யஸ்ய த்வாத்ரிம்ஷத் க்ஷத்ரியஸ்ய ச 337
திருடனுக்கு என்று பொதுவாக விதிக்கப்பட்ட தண்டனைகளைப் பார்த்தோம். திருட்டினால் வரும் தீமைகளை அறிந்து திருடியவன் சூத்திரனாக இருப்பின், அந்தத் தண்டனை எட்டு
மடங்காக விதிக்கப்பட வேண்டும். அவ்வாறே வைசியனாக இருப்பின், பதினாறு மடங்கு
தண்டனை விதிக்கப்பட வேண்டும். க்ஷத்திரியனாயின், முப்பத்திரண்டு மடங்கு தண்டனை
விதிக்கப்பட வேண்டும்.
ப்ராஹ்மணஸ்ய சது:சஷ்டி: பூர்ணம் வாஅபி ஷதம் பவேத் |
த்விகுணா வா சது:சஷ்டிஸ் தத்தோஷ குணவித் திஸ: || 338
பிராம்மணனுக்கு அறுபத்து நான்கு மடங்கோ, நூறு மடங்கோ தண்டனை விதிக்கப்பட வேண்டும். அதற்கும் மேல் நூற்றியிருபத் தொட்டு மடங்கும்கூட தண்டனையளிக்கலாம்.
திருட்டின் பாபா புண்ணியங்களை அறிந்தவன் பிராம்மணன். அவனே பாபத்துக்கு அஞ்சாமல் திருடுவானாயின், அவனை இப்படிப் பலப்பல மடங்கு தண்டிப்பதே தகும்.
வாநஸ்பத்யம் மூலபலம் தார்வக் யரதம் ததைவ ச|
த்ருணம் ச கோப்யோ க்ராஸார்தமஸ்தேயம் மநுரப்ரவீத் 339
சுற்றிலும் வேலியிடாத இடத்திலுள்ள மரங்களிலிருந்து பழங்களை, கிழங்குகளை எடுத்தால் அது திருட்டாகாது. அவ்வாறே வேலியிடாத இடத்திலிருந்து ஹோமத்துக்காக சமித்துகளையும், பசுக்களுக்காக புல்லையும் எடுத்துக்கொண்டு போகிறவனை திருடன்
என்று கூறக் கூடாது. அது திருட்டுத்தனமல்ல என்று மனு பகவான் கூறியுள்ளார்.
யோ அதத்தா ஆதாயிநோ ஹஸ்தால்லிப்ஸேத ப்ராஹ்மணோதநம் ||
யாஜநா அத்யாபநேநாஅபி யதா ஸ்தேநஸ் ததைவ : || 340
ஒரு பொருளை சொந்தக்காரன் கொடுக்காமல்தானே எடுத்துக் கொண்டு, தன் இஷ்டத்துக்கு அதை செலவழிப்பவன் திருடனே யல்லவா? இத்தகையவனுக்கு யக்ஞங்களை செய்து கொடுத்து, அவன் தரும் தட்சிணைகளைப் பெற்றுக்கொள்ளும் பிராம்மணனும் திருடனேயாவான். ஏனெனில், தெரிந்தே அவன் பெறும் தட்சிணை
திருட்டால் வந்ததல்லவா?
த்விஜோ அத்வக : ணவருத்திர் த்வாவிக்ஷத்வேச மூலகே
ஆததாந பரக்ஷேத்ராந் நதண்டம் தாதுமர்ஹதி |-341
வழிப்போக்கனான பிராம்மணனோஷேத்திரியனோ, வைசியனோ, வழியில் இரண்டு கரும்புகளையோ அல்லது இரண்டு கிழங்கு களையோ எடுத்துக் கொண்டால் அது திருட்டாகாது. அது அயலானுடையதோட்டம். கேட்காமல் எடுத்தது தவறு என்று கூறக்கூடாது. அவனுக்கு எந்தத் தண்டனையும் இல்லை.
அஸந்திதாநாம் ஸந்தாதா ஸந்திதாநாம் சமோக்ஷக: | தாஸா அஷ்வ ரதஹர்தா சப்ராப்த: ஸ்யாச் சௌரகில்பிஷம் |-342
பிறருடைய குதிரைகள், காளைகள் போன்றவை யதேச்சையாகத் திரிந்து கொண்டிருந்தால், அவற்றைப் பிடித்துக் கட்டுதல்,கட்டப்பட்டிருக்கும் குதிரைகளையும், காளைகளையும் அவிழ்த்துவிடுதல் போன்ற காரியங்களைச் செய்பவன், ரதம், குதிரைகளைத்திருடுபவன், பிறனுடைய வேலைக்காரனை அபகரித்துக் கொண்டு போய் தான்வைத்துக் கொள்பவன் – இத்தகையோருக்கு திருடனுக்குரிய தண்டனையே வழங்க வேண்டும்.
அநேந விதிநா ராஜா குர்வாண: ஸ்தேநநிக்ரஹம் | யஷோ அஸ்மிந் ப்ராப்நுயால்லோகே ப்ரேத்ய சாஅநுத்தமம் சுகம்|| 343
இவ்வாறாக அரசன் திருடர்களைத் தண்டித்து ஒடுக்கினால்,இவ்வுலகில் புகழையும் மேலுலகில் மிக உத்தமமான சுகத்தையும்அடைவான்.)
ஐந்த்ரம் ஸ்தாநமபிப்ரேப்சுர் யஷஷ் சாஅக்ஷயமவ்யயம் | நோபேக்ஷேத க்ஷணமபி ராஜா ஸாஹஸிகம் நரம் || 344
சொர்க்கத்தை அடைந்து, தேவேந்திரனைப் போன்று சுகங்களை அனுபவித்துக் கொண்டு அளவற்ற அழியாத புகழோடு ஒரு அரசன் இருக்க முடியும். அதற்கு அவன் சற்றும் அலட்சியமின்றிஉடனடியாக குற்றவாளிகளைப் பிடித்துத் தண்டிக்க வேண்டும்.
வாக்துஷ்டாத் தஸ்கராச்சைவ தண்டேநைவ ச ஹிம்ஸத: | சாஹஸஸ்ய நர: கர்தா விஞேய: பாபக்ருத்தம: II 345
வசை மொழிதல், திருடுதல், அடித்தல் முதலான குற்றங்களைச்செய்பவனைவிட பலாத்காரம் செய்பவன் பெரும் பாபி என்பதைஅறிய வேண்டும்.
ஸாஹஸே வர்தமாநம் துயோ மர்ஷயதி பார்திவ: 1
ஸ விநாஷம் வ்ரஜத்யாஷு வித்வேஷம் சா அதிகச்சதி || 346
பலாத்காரம் செய்பவனை தண்டிக்காத அரசன் அழிவை அடைவான். மக்களுடைய வெறுப்புக்கும் ஆளாவான்.
நமித்ர காரணாத் ராஜா விபுலாத் வாதநா ஆகமாத் |
ஸமுத்ஸ்ருஜேத் ஸாஹஸிகாந்ஸர்வபூதபயா ஆவஹாந் 347
நண்பனின் காரணமாகவோ, அதிக செல்வம் கிட்டும் என்பதற்காகவோ பலாத்காரம் செய்பவர்களை தண்டிக்காமல் விடக்கூடாது. இவர்கள் ஒருவர் இருவருக்கல்ல, சகல ஜீவன்களுக்கும் நடுக்கத்தைக் கொடுக்கக்கூடிய பயங்கரமானவர்கள். இவர்களைத்
தண்டித்து ஒடுக்க வேண்டும்.
ஷஸ்த்ரம் த்விஜாதிபிர் க்ராஹ்யம் தர்மோ யத்ரோபருத்யதே
த்விஜாதீநாம் ச வர்ணாநாம் விப்லவே காலகாரி தேI-348
ஆத்மநஷ்ச பரித்ராணே தக்ஷிணாநாம் ச ஸங்கரே |
ஸ்த்ரீவிப்ரா அப்யுபபத்தௌ ச க்நந்தர்மேண ந துஷ்யதி || 349
பிராம்மணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்ரன் என்னும் நான்கு வர்ணத்தாரும், பிரம்மச்சாரி, கிருகஸ்தன், வானப்ரஸ்தன், சந்யாசி என்னும் நான்கு ஆசிரமத்தாரும் தத்தம் சுயதர்மங்களை, அவரவர் கடமைகளைச் செய்ய இயலாது போகும் போதும்,-ராஜ்ஜியத்தில் அராஜகம் அநியாயம் திலைவிரித்தாடும் போதும், எதிரி நாட்டு மன்னர்கள் படையெடுத்து வந்த காலத்தில் பெண்களைக் காப்பாற்றுவதற்காகவும், தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்வதற்காகவும், அனைவரும் ஆயுதமேந்தி எதிரிகளை அழிக்கலாம்.
குரும் வா பலவ்ருத்தெள வா ப்ராஹ்மணம் வா ப ஸ்ருதம் | ஆததாயிநமாயாந்தம் ஹந்யா தேவா அவிசாரயந் || 350
குரு, சிறுவன், வயோதிகன், வேதமோதிய பிராம்மணன்இவர்களைக் கொல்ல வருகின்ற ஆததாயியை சற்றும் யோசிக்காமல்கொல்ல வேண்டும்.
நா ஆததாயிவதே தோஷோ ஹந்துர் பவதி கஷ்சந |
ப்ரகாசம் வாஅப்ரகாசம் வா மந்யுஸ்தம் மந்யும்ருச்சதி Π 351
ஆததாயியைக் கொல்வதில் எந்தப் பாபமும் ஏற்படாது. பிறர்அறியக் கொன்றாலும் சரி, எவரும் அறியாமல் கொன்றாலும் சரி,அது சரியான காரியம் செய்ததாகவே ஆகும்.
பரதாரா அபிமர்ஷேஷு ப்ரவ்ருத்தாந் ந்ருந் மஹிபதி: 11 உத்வேஜநகரைர் தண்டைஷ் சிஹ்நயித்வா ப்ரவாஸயேத் |-352
பிறர் மனைவியை நாடுபவனுக்குக் கடுமையான தண்டனைகொடுக்க வேண்டும். அந்தத் தண்டனையைப் பார்த்து அச்சப்பட்டுஎவரும் அந்தக் குற்றத்தை மனத்தாலும் நினைக்கக்கூடாது. பிறர் மனைவியைநாடியவன் உதடு, மூக்கு முதலானவைகளை
அறுக்க வேண்டும். நாட்டை விட்டே ஓட்ட வேண்டும்.
தத்ஸமுத்தோஹி லோகஸ்ய ஜாயதே வர்ணஸங்கர: |
யேந மூலஹரோதர்ம: ஸர்வநாஷாய கல்பதே || 353
பிற வர்ணத்து பெண்களை மணப்பதால் கலப்பு இனங்கள்ஏற்படும். கலப்பு இனங்கள் பெருகிப் போவதால், கலப்பற்றதூய வர்ணத்தவர்கள் குறைந்து போவார்கள்.
கலப்பற்ற தூய பிராம்மணர்கள் இல்லாத போது தேசத்தின்க்ஷேமத்துக்காகவும், தர்மம் செழிப்பதற்காகவும் செய்யும் யாக யக்ஞங்கள் இல்லாது போகும். யாக யக்ஞங்கள் நல்லபடி நடவாது போனால் தேவர்கள் பூமிக்கு மழையைக் கொடுக்க மாட்டார்கள்.
மழையில்லாது பஞ்சமேற்பட்டால், நாட்டில் கொலை கொள்ளை முதலான மாபாதகச் செயல்கள் எங்கும் தலைவிரித்தாடும். தர்மம் அடியோடு அழிந்து விடும்.
கலப்பற்றதூய க்ஷத்திரியர்கள் இல்லாதபோது, படை வீரர்கள் குறைந்துபோவார்கள். வீரம் நிறைந்த படைவீரர்கள் இல்லாதபோது, அரசனுக்கு வேறு எல்லாம் இருந்தாலும் ஒரு பயனும் இல்லை. பயன்? யானை இருந்தென்ன பயன்? குதிரை இருந்தென்ன
களஞ்சியம் நிறைந்திருந்தாலும், பொக்கிஷம் நிறைந்திருந்தாலும் ஒரு பயனுமில்லை. பகைவர்கள் வெகு எளிதில் இத்தகைய நாட்டைக் கைப்பற்றி விடுவார்கள்.
இதே போன்று வாணிப தர்மமும் இருக்காது. வாணிடம் செய்பவர்களுக்கு க்ஷத்திரியர்கள்தான் பாதுகாப்பளிப்பார்கள்.-க்ஷத்திரியர்கள் குறைந்து போனால் வாணிபம் செய்பவர்களின் விலையுயர்ந்த பொருட்கள் அத்தனையும் கொள்ளை போகும்.
வணிகர்களின் உயிருக்கும் பாதுகாப்பில்லை. விலை கொடுத்து வாங்குவார் இருக்க மாட்டார்கள். பலாத்காரமாகக் கொள்ளை யடிக்கும் கொள்ளைக்காரனே பெரிய தனிகனாக இருப்பான். இனி சூத்திரனின் நிலையை சொல்லவும் வேண்டுமா? அவன் உழைப்புக்குக் கூலி கிடைக்காது. கொள்ளைக்காரர்களின் அடிமையாக, கொடும் பாபிகளின்
கைப்பாவையாக, தன் வீட்டுப் பெண்களுக்கு பாதுகாப்பளிக்க முடியாதவனாக சீரழிவான்.
மொத்தத்தில் தர்மம் வேரோடு அழியும். அதனால் நாடு மொத்தமாக அழியும்.
பரஸ்ய பத்ந்யா புருஷ: ஸம்பாஷாம் யோஜயந் ரஹ: |
பூர்வமாக்ஷாரிதோ தோஷை: ப்ராப்னுயாத் பூர்வஸாஹஸம்|| 354
ஒருவன் இன்னொருவன் மனைவியுடன் தனித்துப் பேசினால், அந்த ஆணின் நடத்தை மீது ஏற்கெனவே மற்றவர்களுக்கு சந்தேகமும் இருக்குமானால், அந்த ஆணுக்கு இருநூற்றைம்பது பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
யஸ் த்வநாக்ஷாரித: பூர்வமபிபாஷேத காரணாத் | நதோஷம் ப்ராப்னுயாத் கிஞ்சித் நஹிதஸ்ய வ்யதிக்ரம: ||355
இதற்கு முன் சந்தேகத்துக்கு ஆட்படாத ஒருவன், பொது இடத்தில் வைத்து பிறர் முன்னிலையில் பிறன் மனைவியிடம் பேசினால், அந்தப் பெண்ணை அடையும் நோக்கத்தோடு பேசும் தீயவன் அல்ல அவன். எனவே, அவனுக்குச் சிறிதும் பாபம் இல்லை. எந்தத் தண்டனைக்கும் உரியவனுமல்லன்.
பரஸ்த்ரியம்யோ அபிவதேத் தீர்த்தே அரண்யேவனே அபி வா வாஅபி ஸம்பேதேஸ ஸங்க்ரஹணமாப்யாத்|| 356
குளக்கரை, ஏரிக்கரைகளிலோ, ஆளரவமற்ற காட்டிலோ,பழ மரங்களும் மலர் மரங்களுமாக அடர்ந்திருக்கின்ற வனத்திலோ, நதிக்கரையிலோ ஒருவன் தனிமையில் பிற பெண்ணிடம் பேசினால், அவன் இதற்கு முன் எந்தச் சந்தேகத்துக்கும் ஆட்படாதவனாயினும், அவன் காரணத்தோடுபேசியவனாயினும்கூட, அவனுக்கு ஆயிரம் பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
உபசாரக்ரியா கேளி: ஸ்பர்ஷோ பூஷணவாஸஸாம் | ஸஹகட்வா ஆஸநம் சைவஸர்வம் ஸங்க்ரஹம் ஸ்ம்ருதம் || 357
ஒரு பெண்ணுக்கு, அவளுக்குப் பிடித்தமானவற்றைக் கொண்டு வந்து கொடுத்து சாப்பிடச்சொல்வது, கேளிக்கைகளில் ஈடுபடுவது, தொடுவது, அணிகலன்களை அளிப்பது, ஆடைகளை அளிப்பது. ஒரே கட்டிலில் அமர்வது முதலானவை அந்தப் பெண்ணைத் தன் வலையில் வீழ்த்தி அவளை அபகரிப்பதற்கான வழி என்று கூறப்படுகிறது.
ஸ்த்ரியம் ஸ்ப்ருஷேததேஷே ய: ஸ்ப்ருஷ்டோவா மர்ஷயேத் தயா | பரஸ்பரஸ்யா அனுமதே ஸர்வம் ஸங்க்ரஹணம் ஸ்ம்ருதம் || 358
எவன், ஒரு பெண்ணைத் தொடத்தகாத இடத்தில் தொடுகிறானோ, எவன் ஒரு பெண் தன்னைத் தொடத்தகாத இடத்தில் தொடுவதற்கு அனுமதிக்கிறானோ, அவனும் அவளும்
நிச்சயமாக தகாத தொடர் புடையவர்களே ஆவர்.
அப்ராஹ்மண: ஸங்க்ரஹணே ப்ராணாஅந்தம் தண்டமர்ஹதி |
சதுர்ணாமபி வர்ணாநாம் தாரா ரஷ்யதமா: ஸதா 359
பிராம்மணனல்லாத ஒருவன் பிராம்மணப் பெண்ணை அடைய நினைத்தால் அவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். பிராம்மண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களான நான்கு வர்ணத்தாருமே தங்கள் மனைவியரை எப்போதும் பிறரிடமிருந்து ரட்சிக்க
வேண்டும்.
பி கா பந்திநஷ்சைவ தீக்ஷிதா காரவஸ் ததா |
ஸம்பாஷணம் ஸஹ ஸ்த்ரீபி: குர்யுரப்திவாரிதா: H-360
பிச்சையெடுப்பவர்களும், துதிபாடும் வந்திகளும், யக்ஞ தீட்சை வகித்தவர்களும், சமையல்காரர்களும் பெண்களுடன் தடையற்றுப் பேசலாம்.
நஸம்பாஷாம் பரஸ்த்ரீபி ப்ரதிஷித்த: ஸமாசரேத் |
நிஷித்தோ பாஷமாணஸ்து சுவர்ணம் தண்டமர்ஹதி || 361
பிற பெண்ணுடன் பேசக்கூடாது என்று ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டவன், அதை மீறிப் பேசினால் ஒரு பொன் அபராதம் விதிக்கவேண்டும்.
நைஷ சாரணதாரேவு விதிர் நாஆத்மோபஜீவிஷு | ஸஜ்ஜயந்தி ஹி தே நாரீர் நிகூடாஷ் சாரயந்தி ச||| 362
வேசி மனைவியைக் கொண்டு ஜீவனம் நடத்தும் கணவர்கள் உண்டு. இதுவரை சொன்ன நீதி இத்தகைய பெண்களுக்கல்ல.-இவர்களைப் பிறர் மனைவியர் என்று கொள்ளத் தேவையில்லை. இத்தகையவர்களிடம் பேசுபவருக்கும் பழகுபவருக்கும் எந்தத்
தண்டனையும் இல்லை.
கிஞ்சிதேவலு தாப்ய: ஸ்யாத் ஸம்பாஷாம் தாபிராசரந் |
ப்ரேஷ்யாசு சைகபக்தாசுரஹ: ப்ரவ்ரஜிதாசு ச ||| 363
யாருமற்ற இடத்தில் பணிப்பெண்கள் போன்றோரிடம்பேசினால் சிறிதளவு அபராதம் விதிக்க வேண்டும்.
யோ அகாமாம் தூஷயேத் கந்யாம் ஸ ஸத்யோ வதமர்ஹதி |
ஸகாமாம் தூஷயம்ஸ்துல்யோ ந வதம் ப்ராப்னுயாந் நர: I-364
தன்னை விரும்பாத பெண்ணை பலாத்காரமாக அடைப வனுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்க வேண்டும்.-பெண்ணும் விரும்பியிருந்தால் இந்தத் தண்டனை கிடையாது.
கந்யாம் பஜந்தீமுத் க்ருஷ்டம் ந கிஞ்சிதபி தாபயேத் ஜகந்யம் ஸேவமாநாம் து ஸம்யதாம் வாஸயேத் க்ருஹே || 365
ஒரு பெண் தன்னைவிட உயர் குலத்தானை மணக்க நினைத்தால் அது தவறல்ல, அவளுக்கு தண்டனை எதுவும் இல்லை.ஆனால், உயர் குலத்துப் பெண் தன்னைவிட தாழ்ந்தவனை மணக்க விரும்பினால் அது சரியல்ல. அவளை அடக்கி வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும்.
உத்தமாம் ஸேவமாநஸ் து ஜகந்யோ வதமர்ஹதி |
ஷூல்கம் தத்யாத் ஸேவமாந: ஸமாமிச்சேத் பிதா யதி 366
மேற்குலத்துப் பெண்ணை அடைந்தவன் தண்டனைக்குரியவன்.தன் குலத்துப் பெண்ணையே அடைந்தவனாயின் பெண்ணின்தந்தை விரும்பினால் அவனுக்குப் பரிசத்தொகை அளித்து தன்மாப்பிள்ளையாக ஏற்கலாம்.
அபிஷஹ்ய து ய: கந்யாம் குர்யாத் தர்பேண மாநவ: |
தஸ்யா ஆஷு கர்த்யே அங்குல்யௌ தண்டம் சா அர்ஹதி ஷட்ஷதம்|| 367
ஒரு ஆண் தன் குலத்துப் பெண்ணையேகூட பலாத்காரமாக தன் விரல்களைக் கொண்டு மர்ம ஸ்தானத்தில் துன்புறுத்தினால், துன்புறுத்திய இரண்டு விரல்களையும் வெட்ட வேண்டும். மேலும் அறுநூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
ஸகாமாம் தூஷயம்ஸ் துல்யோ நா அங்குலிச்சேத மாப்நுயாத் |
த்விஷதம் து தமம் தாப்ய: ப்ரஸங்க விநிவ்ருத்தயே|| 368
பலாத்காரமாக அல்லாமல், விரும்பி வந்த பெண்ணிடம் இவ்வாறு நடந்து கொண்டால், மீண்டும் அவன் அவ்வாறு நடக்காமலிருக்கும் பொருட்டு இருநூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும் .
கந்யைவ கந்யாம் யா குர்யாத் தஸ்யா: ஸ்யாத் த்விஷதோ தம: |
ஊல்கம் சத்விகுணம் தத்யாச்சிபாஷ் சைவா ஆப்னுயாத் தஷ || 369
எந்தக் கன்னிப் பெண்ணாவது, மற்றொரு கன்னிப் பெண்ணை இவ்வாறு துன்புறுத்தினால், அவளுக்கு இருநூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும். பெண்ணின் தந்தை கேட்கும் பரிசத் தொகைக்கு இரு மடங்கு தொகையை இவளிடமிருந்து வாங்கி அந்தத் தந்தையிடம் கொடுக்க வேண்டும். மேலும் ஆலம் விழுதுகளைக்
கொண்டு அவளுக்கு பத்து அடிகள் கொடுக்க வேண்டும்.
யாது கந்யாம் ப்ரகுர்யாத்ஸ்த்ரீ ஸர ஸத்யோ மௌண்ட்யமர்ஹதி |
அங்குல்யோரேவ வா சேதம் கரேணோத்வஹநம் ததா || 370
எந்தக் கன்னிப் பெண்ணையாவது, ஒரு பெண் இவ்வாறு துன்புறுத்தினால், அவளை மொட்டையடித்து, இரண்டு விரல்களையும் வெட்டி, கழுதை மேலேற்றிதெருத் தெருவாகக் கொண்டு போக வேண்டும்.
பர்தாரம் லங்கயேத் யா துஸ்த்ரீ ஞாதிகுணதர்பிதா | தாம் ஷ்வபி:
காதயேத் ராஜா ஸம்ஸ்தாநே பஹுஸம்ஸ்திதே|| 371
ஒரு பெண்தான் பணக்கார இடத்துப் பெண் என்ற கர்வத்தாலோ, தான் பேரழகி என்ற கர்வத்தாலோ, தன் கணவனை அலட்சியப்படுத்தி, பிற ஆண்சேர்க்கை கொண்டால், அரசன் பலர் கூடியுள்ள இடத்தில் அவளை நிறுத்தி அவள் மீது நாயை ஏவி கடிக்கச் செய்ய வேண்டும்.
புமாம்ஸம் தாஹயேத் பாபம் ஷயநே தப்த ஆயஸே |
அப்யாதத்யுஷ் ச காஷ்டாநி தத்ர தஹ்யேத பாபக்ருத்|| 372
அந்தப் பெண்ணிடம் தகாத உறவு கொண்ட ஆணை தகதகவென காய்ச்சின இரும்புப் பலகையில் படுக்க வைத்து அவன் மீது விறகுகளைப் போட்டு அந்த நெருப்பில் அவன்சாகுமாறு செய்ய வேண்டும்.
ஸம்வத்ஸரா அபிஷஸ்தஸ்ய துஷ்டஸ்ய த்விகுணோ தம: |
வ்ராத்யயா ஸஹ ஸம்வாஸே சாண்டால்யா தாவதேவ து||| 373
பிறன் மனைவியை மோகித்ததால் தண்டனை பெற்றவன்,-ஓராண்டுக்குள் மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால், தண்டனையை இரு மடங்காக்க வேண்டும்.-சண்டாளப் பெண்ணைஅடைந்தவனுக்கு சமமான தண்டனையைக் கொடுக்க வேண்டும்.
சூத்ரோ குப்தமகுப்தம் வாத்வைஜாதம் வர்ணமாவஸந் | அகுப்தமங்கஸர்வஸ்வைர் குப்தம் ஸர்வேண ஹீயதே || 374
கணவனால் காப்பாற்றப்படும் பெண்ணாக இருந்தாலும் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாக இருந்தாலும், பிராம்மண, க்ஷத்திரிய, வைசியப் பெண்ணை ஒரு சூத்திரன் பலாத்காரமாக அடைந்தால், அவனுக்களிக்க வேண்டிய தண்டனை
என்ன?-கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாக இருந்தால், அவனது லிங்க உறுப்பை வெட்டியெறிய வேண்டும். அவனுடைய சொத்து முழுவதையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
கணவனால் காப்பாற்றப்படும் பெண்ணாக இருந்தால், அவன் உடலை துண்டங்களாக வெட்டியெறிய வேண்டும். அவன் சொத்தையும் அரசனே எடுத்துக் கொள்ள வேண்டும்.
வைஷ்ய: ஸர்வஸ்வதண்ட: ஸ்யாத் ஸம்வத்ஸர நிரோதந: |
ஸஹஸ்ரம் க்ஷத்ரியோ தண்ட்யோமௌண்ட்யம் மூத்ரேண சார்ஹதி || 375
கணவனால் காப்பாற்றப்படும் பிராம்மணப் பெண்ணை அடைந்த வைசியனுக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனையளிக்க வேண்டும். இதே குற்றத்தை க்ஷத்திரியன் செய்தானானால் ஆயிரம் பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும். கழுதையின் சிறுநீரால்
அவன் தலையை மொட்டை யடிக்க வேண்டும்.
ப்ராஹ்மணீம் யத்யகுப்தாம் து கச்சேதாம் வைஷ்யபார்திவௌ ||
வைஷ்யம் பஞ்சசதம் குர்யாத் க்ஷத்ரியம் து ஸஹஸ்ரிணம் || 376
கணவனால் கைவிடப்பட்ட பிராம்மணப் பெண்ணை அடைந்த வைசியனுக்கு, ஐநூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.-அதுவேக்ஷத்ரியனாக இருந்தால், ஆயிரம் பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
உபாவபி து தாவேவ ப்ராஹ்மண்யா குப்தயா ஸஹ |
விப்தெள சூத்ரவத் தண்ட்யௌதக்தவ்யெள வாகடாஅக்நிநா || 377
கணவனால் காப்பாற்றப்படும் கற்பினளான பிராம்மணப் பெண்ணை பலாத்காரம் செய்தவன் க்ஷத்திரியனாயினும் வைசியனாயினும் சூத்திரனுக்குக் கொடுக்கும் தண்டனையையே கொடுக்கவேண்டும். இத்தகைய செயலைச் செய்தவனை பாயில் வைத்து சுருட்டி தீயிட்டுக் கொளுத்த வேண்டும். அல்லது பழுக்கக் காய்ச்சிய இரும்புப் பலகையில் படுக்கப் போட்டு மேலே விறகுகளைப் போட்டுக் கொளுத்த வேண்டும்.
ஸஹஸ்ரம் ப்ராஹ்மணோ தண்ட்யோ குப்தாம்விப்ராம் பலாத் வ்ரஜந்|
ஷதாநி பஞ்ச தண்ட்ய: ஸ்யாதிச்சந்த்யா ஸஹ ஸங்கத: || 378
இதே காரியத்தை பிராம்மணன் செய்தால், அவனுக்கு ஆயிரம் பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும். அந்தப் பெண்ணின் விருப்பத்தோடு நடந்திருந்தால், ஐநூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
மௌண்ட்யம் ப்ராணா அந்திகோ தண்டோ ப்ராஹ்மணஸ்ய விதீயதே
இதரேஷாம் து வர்ணாநாம் தண்ட: ப்ராணா அந்திகோ பவேத்|| 379
ஒரு குற்றத்துக்குரிய தண்டனை மரண தண்டனையெனில், அந்தக் குற்றத்தை பிராம்மணன் செய்திருந்தால் அவனுக்கு மரண தண்டனை விதிக்கலாகாது. அவன் தலையை மொட்டையடிக்க வேண்டும்.-பிராம்மணன் தலையை மொட்டையடிப்பது அவன் உயிரைப் பறிப்பதற்குச் சமம்.
நஜாது ப்ராஹ்மணம் ஹந்யாத் ஸர்வபாபேஷ்வபி ஸ்திதம் |
ராஷ்ட்ராதேநம் பஹி:குர்யாத் ஸமக்ரதநம தம்|| 380
பிராம்மணன் எத்தகைய குற்றங்களை இழைத்தவனாயினும் அவனுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது. அவனுடைய செல்வத்தையும் பறிக்கக்கூடாது. அவன், தன் செல்வத்தை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறச் செய்ய வேண்டும்.
ந ப்ராஹ்மணவதாத் பூயாநதர்மோ வித்யதே புவி | தஸ்மாதஸ்ய வதம் ராஜா மநஸாஅபி ந சிந்தயேத்|| 381
உலகில் பிராம்மண வதத்தைவிட பெரிய அதர்மம் வேறெதுவும் இல்லை. எனவே, அரசன் பிராம்மண வதத்தை மனத்தாலும் நினைக்கக் கூடாது.
வைஷ் யஷ் சேத் க்ஷத்ரியாம் குப்தாம் வைஷ்யாம் வாக்ஷத்ரியோ வரஜேத் |
யோ ப்ராஹ்மண்யாமகுப்தாயாம் தாவுபெள தண்டமர்ஹத: 11 382
கணவனால் காப்பாற்றப்படும் வைசியப் பெண்ணை க்ஷத்திரியன் அடைந்தால், அவனுக்கு ஆயிரம் பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.-கணவனால் காப்பாற்றப்படும் க்ஷத்திரியப் பெண்ணை வைசியன் அடைந்தால், ஐநூறு பணங்கள் அபராதம் விதிக்க
வேண்டும்.
ஸஹஸ்ரம் ப்ராஹ்மணோ தண்டம் தப்யோகுப்தேது தேவ்ரஜம் |
சூத்ராயாம் க்ஷத்ரிய விஷோ: ஸாஹஸ்ரோவை பவேத் தம: || 383
கணவனால் காப்பாற்றப்படும் க்ஷத்திரியப் பெண்ணையோ. வைசியப் பெண்ணையோ அடைந்த பிராம்மணனுக்கு ஆயிரம் பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்..
கணவனால் காப்பாற்றப்படும் சூத்திரப் பெண்ணை அடைந்த க்ஷத்திரியனுக்கும் வைசியனுக்கும் ஆயிரம் பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
க்ஷத்ரியாயாம் அகுப்தாயாம் வைஷ்யே பஞ்சஷதம் தம: |
மூத்ரேண மௌண்ட்யம் ச்சேத் து த்ரியோ தண்டமேவவா 384
கணவனால் காப்பாற்றப்படாத க்ஷத்திரியப் பெண்ணை அடைந்த வைசியனுக்கு ஐநூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.-கணவனால் காப்பாற்றப்படாத வைசியப் பெண்ணைஅடைந்த க்ஷத்திரியனுக்கு கழுதை மூத்திரம் கொண்டு மொட்டையடிக்க வேண்டும். மேலும் ஐநூறு பணங்கள் அபராதமும் விதிக்க வேண்டும்.
அகுப்தே க்ஷத்ரியாவைஷ்யே சூத்ராம்வா ப்ராஹ்மணோவ்ரஜந் |
ஷதாநி பஞ்ச தண்ட்: ஸ்யாத் ஸஹஸ்ரம் த்வந்த்ய ஜஸ்த்ரியம் || 385
கணவனால் காப்பாற்றப்படாத க்ஷத்திரியப் பெண்ணையோ வைசியப் பெண்ணையோ, சூத்திரப் பெண்ணையோ அடையும் பிராம்மணனுக்கு ஐநூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.-அதுவே சண்டாளப் பெண்ணானால் ஆயிரம் பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
யஸ்ய ஸ்தேந: புரே நாஅஸ்தி நாஅந்யஸ்த்ரிகோ ந துஷ்டவாக்
ந ஸாஹஸிக தண்டக்நெள ஸராஜா ஷக்ரலோகபாக் |-386
திருடன், பிறர் மனைவியை சுகிப்பவன், கொடுமையான சொற்களைப் பேசுபவன், கொடிய செயல்களைச்செய்பவன் ,அடிதடிகளில் ஈடுபடுபவன் முதலானோர் எந்த தேசத்தில் இல்லையோ, அந்த தேசத்தை ஆளும் அரசன் இந்திர லோகத்தை அடைவான்.
ஏதேஷாம் நிக்ரஹோ ராக்ஞ: பஞ்சாநாம் விஷயே ஸ்வகே ஸாம்ராஜ்யக்ருத் ஸஜாத்யேஷு லோகேசைவ யஷஸ்கர: ||-387
தன்னுடைய தேசத்தில் இந்த ஐந்து வகையினரையும் இல்லாமலே செய்த அரசன், எல்லா அரசர்களையும் ஆளும் சக்கரவர்த்தியாக புகழோடு வாழ்வான்.
ருத்விஜம் யஸ் த்யஜேத் யாஜ்யோ யாஜ்யம் சரித்விக் த்யஜேத்யதி | ஷக்தம் கர்மண்யதுஷ்டம் ச தயோர் தண்ட: ஷதம் ஷதம் || 388
யாகம் செய்பவன்,தனக்கு யாகம் செய்து வைக்க வந்த ரித்விக்கை, எந்த தோஷமுமற்றவனாக இருக்கும்போதும், நீக்கு கிறானோ, அவனுக்கு நூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.-அவ்வாறே யாகம் செய்து வைக்கும் ரித்விக்கும், எந்த தோஷ
முமற்றவனாக இருக்கும் யாகம் செய்யும் கர்த்தாவை விட்டு விலகி, யாகத்தைச் செய்யாமல் நீங்கினால் அந்த ரித்விக்கிற்கும் நூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
ந மாதா ந பிதா ந ஸ்த்ரீ ந புத்ரஸ் த்யாகமர்ஹதி /
த்யஜந் நபதிதாநேதாந் ராக்ஞா தண்ட்ய: ஷதாநி ஷட்|| 389
தாய், தந்தை, மனைவி, மகன்கள் இவர்களைக் காப்பாற்றாமல் விடக்கூடாது. அப்படிக் காப்பாற்றாமல் விடுபவனுக்கு அறுநூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
ஆஸ்ரமேஷு த்விஜாதிநாம் கார்யே விவததாம் மித: |
நவிப்ரூயாந் ந்ருபோ தர்மம் சிகீர்ஷந் ஹிதமாத்மந: |-390
யதா அர்ஹமேதாப்யர்ச்ய ப்ராஹ்மணை: ஸஹ பார்திவு: |
ஸாந்த்வேந ப்ரஷமய்யா ஆதெள ஸ்வதர்மம் ப்ரதிபாதயேத்|-391
பிராம்மண, க்ஷத்ரிய, வைசியர்கள் தங்கள் சுயதர்மங்களைப் பற்றி விவாதத்தில் ஈடுபட்டு வரும்போது, தன்னுடைய நன்மையை விரும்பும் அரசன், “இது சரி, இது தவறு, இது சாஸ்திர சம்மதம், இது சாஸ்திர விரோதம்’ என்று தான் அறுதியிட்டுக் கூறக்கூடாது.
விவாதத்தில் ஈடுபட்டிருப்போரைக் கொண்டு ஒரு சபை கூட்ட வேண்டும். அதில் பண்டிதர்களான பிராம்மணர்களை வரவழைத்து கௌரவிக்க வேண்டும். அவர்கள் எதிரில், விவாதிப்போர் தங்கள் விவாதங்களைச் சொல்ல வேண்டும். பண்டிதர்கள் அவைகளைக்
கேட்டு, உரிய சாஸ்திர தர்மங்களை எடுத்துக் கூறி தீர்ப்புக் கூறுவார்கள்.
ப்ராதிவேஷ்யா ஆநுவேஷ்யௌ ச கல்யாணே விம்ஷதித்விஜே |
அர்ஹாவபோஜயந் விப்ரோ தண்டமர்ஹதி மாஷகம் || 392
திருமணம் முதலான விசேஷ நாட்களில், இருபதுக்கும் அதிகமான பேருக்கு விருந்தளிக்கும்போது, அக்கம்பக்கத்தாரையும் அழைத்து விருந்தளிக்க வேண்டும். அவ்வாறு அழைக்காத பிராம்மணனுக்கு ஒரு மாஷம் பொன் அபராதம் விதிக்க வேண்டும்.
ஸ்ரோத்ரிய: ஸ்ரோத்ரியம் ஸாதும் பூதிக்ருத்யேஷ்வபோஜயந்|
ததந்நம் த்விகுணம் தாப்யோ ஹிரண்யம் சைவ மாஷகம் || 393
வேதமறிந்த பிராம்மணன், தன் இல்ல விசேஷத்தில் தன் பக்கத்து வீட்டு வேதமறிந்த பிராம்மணர்களையும் அழைத்து விருந்தளித்து உபசரிக்க வேண்டும். இல்லையேல், இருமடங்காக அவர்களுக்கு விருந்தன்னத்தைக் கொடுத்து, ஒரு மாஷம் பொன்னை
அரசனுக்கு அபராதம் செலுத்த வேண்டும்.
அந்தோ ஐட: பீடஸர்பீ ஸப்தத்யா ஸ்தவிரஷ் சய: |
ஸ்ரோத்ரியேசூப குர்வம்ஷ் சந தாப்யா: கேநசித் கரம்|| 394
குருடன், ஊமை, முடவன், எழுபது வயதைக் கடந்தவன், வேதமோதுபவர்களுக்கு எல்லா வகையிலும் உதவுபவன் முதலானோருக்கு சிறிதும் வரி விதிக்கக் கூடாது.
ஸ்ரோத்ரியம் வ்யாதிதா ஆர்த்தெள ச பாலவ்ருத்தாவகிஞ்சநம் |
மஹாகுலீநமார்யம்ச ராஜாஸம்பூஜயேத் ஸதா|| 395
வேதமறிந்த பிராம்மணன், வியாதியஸ்தன், துக்கத்திலிருப்பவன், வயோதிகன், ஏழை, உயர்குலத்தோன், வள்ளல் இவர்களிடம் அரசன் தனிப்பட்ட அக்கறையைச் செலுத்த வேண்டும்.
ஷால்மலீபலகே ஷ்பலக்ஷ்ணே நேநிஜ்யாந் நேஜக: ஷனை: |
ந ச வாஸாம்ஸி வாஸோபிர் நிர்ஹரேந் ந ச வாஸயேத்|| 396
வண்ணான் துணிகளை மேடு பள்ளங்களில் போட்டுத் துவைக்கக் கூடாது. இலவமரம் போன்ற மரப்பலகைகளில் நிதானமாகத் தோய்க்க வேண்டும். ஒருவர் துணிகளை இன்னொருவருக்கு இரவல் கொடுக்கக் கூடாது.-அப்படிச் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
தந்து வாயோ தஷபலம் தத்யாதேகபலாஅதிகம்|
அதோ அந்யதா வர்தமாநோ தாப்யோத்வாதஷகம் தமம் 397
நெசவாளி பத்து பலம் நூலை வாங்கிக் கொண்டு நெய்து தந்தால் அது பதினோரு பலம் இருக்க வேண்டும். (கஞ்சி போடுவதாலும் சாயம் ஏற்றுவதாலும் இந்த அளவு எடை கூடும்.)
குறைவாகத் தந்தால் அவனுக்குப் பன்னிரண்டு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
ஷூல்கஸ்தாநேஷு குஷலா: ஸர்வ பண்ய விசக்ஷணா: |
குர்புரர்கம் யதாபண்யம் ததோ விம்ஷம் ந்ருபோ ஹரேத் 398
சுங்க வரி வசூலிக்கும் சுங்கச் சாவடிகளில், சகலமான விலை யுயர்ந்த, விலை குறைந்த பொருட்களின் மதிப்பை அறிந்தவர்களை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும்.
அவர்கள் வணிகர்கள் கொண்டு வரும் சரக்குகளின் மதிப்புகளை ஆராய்ந்து விலையை நிர்ணயிப்பார்கள். வணிகர்கள் விற்ற பிறகு விற்றதில் கிடைத்த லாபத்தில் இருபதில் ஒரு பங்கு வரியை வசூலிப்பார்கள்.
ராக்கு: ப்ரக்யாத பாண்டாநி ப்ரதிஷித்தாநி யாநி ச |
தாநி நிர்ஹரதோ லோபாத் ஸர்வஹரம் ஹரேந் ந்ருப: 399
அரசன் உபயோகிக்கத் தக்கதான உயர்ந்த ஜாதிக் குதிரைகள், மிக விலையுயர்ந்த வைரங்கள், முத்துக்கள் முதலானவைகளை பேராசையால் அயல் தேசங்களுக்கு விற்கக் கொண்டு போகிறவனிடமிருந்து, அனைத்துப் பொருட்களையும் அரசன் பறிமுதல் செய்ய
வேண்டும்.
ஷுல்கஸ்தாநம் பரிஹரந் நகாலே க்ரய விக்ரயீ | மித்யாவாதீ ச ஸங்க்யாநே தாப்யோ அஷ்டகுணமத்யயம்-400
நீர்வழியில் கப்பல்கள் வந்து நிற்கும் இடங்களிலும், நகரத்தினுள் நுழையும் இடங்களிலும் சுங்கச் சாவடிகள் இருக்கும். வரி கொடாமல் ஏய்ப்பதற்காக அந்த வழிகளில் வராமல், வேறு வழிகளில் உள்ளே நுழைந்து விற்கப் பார்க்கிறவனையும், இரவு நேரங்களில் வாங்கவோ
விற்கவோ முனைபவனையும், சுங்க வரியைக் குறைப்பதற்காகவிலையுயர்ந்த பொருளின் விலையைக் குறைத்துக் கூறுபவனையும் தண்டிக்க வேண்டும். அவர்களின் பொருளின் மதிப்புக்கு எட்டு மடங்கு தொகையை அபராதமாக விதிக்க வேண்டும்.
ஆகமம் நிர்கமம் ஸ்தாநம் ததா வ்ருத்திக்ஷயாவுபௌ | விசார்ய ஸர்வபண்யாநாம் காரயேத் க்ரயவிக்ரயெள |-401
சுங்கச் சாவடி அதிகாரிகள் விற்பனைக்கு வரும் சரக்குகளையும், போகும் சரக்குகளையும் அறிய வேண்டும்.-விற்பனைக்கு வரும் சரக்குகள் எவ்வளவு தூரத்திலிருந்துவருகின்றன, வர எத்தனை நாட்களாயின, வழிப் பயணச் செலவுகள் எவ்வளவு, அந்த சரக்குகளை எவ்வளவு தொகைக்கு விற்க முடியும். வணிகன் தன் வேலையாட்களுக்கு எவ்வளவு சம்பளம் தர வேண்டியிருக்கும் போன்றவற்றையெல்லாம் நன்கு விசாரித்து வணிகர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில், தக்க லாபம் கிட்டும் வகையில் விலைகளை நிர்ணயிக்க வேண்டும்.
பஞ்சராத்ரே பஞ்சராத்ரே பக்ஷேபக்ஷேஅதவா கதே |
குர்வீத சைஷாம் ப்ரத்யக்ஷ மர்கஸம்ஸ்தாபநம் ந்ரூப: || 402
அனைத்து சரக்குகளும் ஒரேமாதிரியாக இருக்காது. விலை ஏறியிறங்கக்கூடிய சரக்குகளும் இருக்கும். இவ்வாறான அடிக்கடி விலை ஏறவும் இறங்கவும் கூடிய சரக்குகளுக்கு ஐந்து நாட்களுக்குஒருமுறை விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்..
சில சரக்குகளுக்கு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
துலாமாநம் ப்ரதீமாநம் ஸர்வம் ச ஸ்யாத் சுலக்ஷிதம் |
ஷட்சுஷட்சு ச மாஸே புநரேவ பரீக்ஷயேத் || 403
தராசில் நிறுக்கும் அளவைகளான எடைக் குண்டுகள், தானியங்களை அளக்கும் படிகள் முதலான எடை அளவைகள் அனைத்தையும் ஆறு மாதங்களுக்கொருமுறை சரியாக இருக்
கின்றனவா என்று பார்க்க வேண்டும்.
பணம் யாநம் தரே தாப்யம் பௌருஷோ அர்தபணம் தரே |
பாதம் பஷுஷ் ச யோஷிச் ச பாதா அர்தம் ரிக்தக: புமாந் || 404
படகோட்டி வசூலிக்க வேண்டிய தொகையைப் பார்ப்போம். பாரமற்ற சிறு வண்டியை அக்கரை சேர்ப்பதற்கு ஒரு பணம் கூலி வாங்க வேண்டும்.-சுமையோடு ஏறுபவனிடம் அரைப் பணம் கூலி வாங்க வேண்டும். கால்நடையை ஏற்றிக் கொண்டால், அதற்கு கால் பணம் வாங்க வேண்டும். வெறும் மனிதன் ஏறினால், அரைக்கால் பணம் வாங்க வேண்டும்.
பாண்ட பூர்ணாநி யாநாநி தார்யம் தாப்யாநி ஸாரத: |
ரிக்த பாண்டாநி யத்கிஞ்சித் புமாம்ஸஸ் சா அபரிச்சதா: 405
விற்பனைச் சரக்குகளுடன் கூடிய வண்டியை படகில் ஏற்றிச் செல்ல அந்த பாரத்துக்குத் தக்கபடி கூலி வாங்க வேண்டும். மிகவும் ஏழைகள் படகில் ஏறினால், அவர்களிடம் ஏதோ பெயருக்குச் சிறிது கூலி வாங்க வேண்டும்.
தீர்கா அத்வநி யதாதேஷம் யதாகாலம் தரோ பவேத்
நதீதீரேஷு தத் வித்யாத் ஸமுத்ரே நாஅஸ்தி ஸக்ஷணம் 406
நதியைக் கடக்கும் தூரம், காற்றின் வேகம், காற்றின் போக்கு இவற்றைக் கொண்டும், காலத்தையும் தேசத்தையும் அனுசரித்தும் கட்டணம் ஏற்படுத்த வேண்டும்.-இவை நதி வழிகளுக்கு மட்டுமே.கடல்வழி பிரயாணம் என்பதுகாற்று வீசும் திசையைப் பொறுத்தது. பிரயாணம் எப்போது முடியும்.எப்போது கரையை அடையலாம் என்று நிர்ணயிக்க முடியாது.
எனவே, படக்குக் கூலியைப் போன்று கப்பல் கூலியை நிர்ணயிக்க இயலாது.
கர்பிணீ து த்விமாஸாதிஸ் ததா ப்ரவரஜிதோ முனி: | ப்ராஹ்மணாலிங்கிநஷ்சைவ நதாப்யாஸ்தாரிகம் தரே !! 407
இரண்டு மாதங்கள் நிறைந்த கர்ப்பிணிப் பெண், சந்யாசி,வானப்பிரஸ்தன், பிரம்மச்சாரி, பிராம்மணன் முதலியவர்களிடம்படகோட்டி கூலி வாங்கக்கூடாது.
யந் நாவி கிஞ்சித் தாஷாநாம் விஷீர்யே தா அபராதத: | தத் தாஷைரேவ தாதவ்யம் ஸமாகம்ய ஸ்வதோ அம்த: 408
படகு போகும்போது அங்குள்ளவர்களின் அஜாக்ரதையால்ஏதேனும் பொருள் தண்ணீரில் விழுந்து விட்டால், அவர்கள் அனைவரும் பங்கிட்டுக் கொண்டு அப்பொருளின் மதிப்புக்குரியதொகையை சொந்தக்காரனுக்குக் கொடுக்க வேண்டும்.
ஏஷ நௌயாயிநாமுக்தோ வ்யவஹாரஸ்ய நிர்ணய: 11
தாஷா அபராததஸ் தோயே தைவிகே நா அஸ்திநிக்ரஹ: !-409
படகோட்டுபவனின் கவனக் குறைவால் பொருள் நஷ்டம்ஏற்பட்டால், படகோட்டியே நஷ்டஈடு தர வேண்டும்.-ஆனால், புயல் முதலான காரணங்களால் பொருள் நஷ்டம்ஏற்பட்டால், படகோட்டிகள் அதற்குப் பொறுப்பல்ல.
வாணிஜ்யம் காரயேத் வைஷ்யம் குஸீதம் க்ருஷிமேவ ச
பசூநாம் ரக்ஷணம் சைவ தாஸ்யம் சூத்ரம் த்விஜன்மநாம் ||| 410
வைசியர்கள் வணிகம், வட்டிக்குக் கடன் கொடுத்தல், விவசாயம், பசுக்களைக் கொண்டு ஜீவனம் நடத்துதல் முதலான தொழில்களைச் செய்ய வேண்டும். சூத்திரன், பிராம்மண, க்ஷத்திரிய, வைசியர்களுக்கு பணிபுரிய வேண்டும்..
க்ஷத்ரியம் சைவ வைஷ்யம் ச ப்ராஹ்மணோ வ்ருத்தி கர்ஷிதௌ | பிப்ருயாதாந்ருஷம் ஸ்யேந ஸ்வாநிகர்மாணி காரயந்|| 411
வறுமையுற்ற நிலையில் க்ஷத்திரியனோ, வைசியனோ, செல்வந்தனான பிராம்மணனிடம் பணிபுரிய வந்தால், பிராம்மணன் அவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், அவரவர் தர்மத்துக்குரிய தொழில்களையே அவர்களுக்குப் பணியாக விதிக்க வேண்டும். வைசியனைத் தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்யச் சொல்லலாம். க்ஷத்திரியனை பாதுகாவலுக்கு நியமிக்கலாம்.-மொத்தத்தில் தன்னை அண்டி வந்த அவர்களை பிராம்மணன் ரட்சிக்க வேண்டும்.
தாஸ்யம் து காரயல்லோபாத் ப்ராஹ்மண: ஸம்ஸ்க்ருதாந் த்விஜாந் |
அநிச்சத: ப்ராபவத்யாத் ராக்ஞா தண்ட்: ஷதாநி ஷட் |-412
இவ்வாறு வந்த க்ஷத்திரிய, வைசியர்களை பிராம்மணன் தன் செல்வச் செருக்காலும், லோப குணத்தாலும் கீழான வேலைகளுக்கு அமர்த்தினால் அது குற்றம். அந்தக் குற்றத்துக்கு அரசன் அறுநூறு பணங்களை அந்த பிராம்மணனுக்கு அபராதமாக விதிக்க வேண்டும்.
சூத்ரம் து காரயேத் தாஸ்யம் க்ரீதமக்ரீதமேவ வா |
தாஸ்யாயைவ ஹி ஸ்ருஷ்டோ அஸௌ ப்ராஹ்மணஸ்ய ஸ்வயம்புவா|| 413
சம்பளம் கொடுத்தோ அல்லது கொடுக்காமலோ (உணவு. உடை, தங்க இடம் கொடுத்தோ) ஆதரிக்கலாம்.
ந ஸ்வாமிநா நிஸ்ருஷ்டோ அபி சூத்ரோ தாஸ்யாத் விமுச்யதே |
நிஸர்கஜம் ஹி தத் தஸ்யகஸ் தஸ்மாத் ததபோஹதி || 414
பிராம்மணனுக்குப் பணிவிடை புரிவதால் சூத்திரன் மறுமையில் நல்வாழ்வைப் பெறுவான்.எஜமானன் அவனை வேலையை விட்டுப் போகச் சொன்னாலும் கூட, இம்மையில் செய்யும் இந்தப் பணிவிடையால் மறுமையின்பம் கிட்டுவதால், அவன் இறுதிவரை பணி புரிய வேண்டும்.
த்வஜா ஆஹ்ருதோ பக்ததாஸோ க்ருஹஜ: க்ரீததத் த்ரிமௌ | பைத்ரிகோ தண்டதாஸஷ் ச ஸப்தைதே தாஸயோநய: []-415
ஏவலர்கள் ஏழு வகையினர்.-போரில் சிறைப்பிடிக்கப்பட்டவன், பக்தியோடு தொண்டு புரிய வந்தவன், வைப்பாட்டியின் மகன், விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமை,பிறரால் கொடுக்கப்பட்ட அடிமை, பரம்பரையாக பணி செய்பவன், அபராதத் தொகையை வேலை செய்து தீர்ப்பவன் என்னும் ஏழு வகையினரே ஏவலர்களாவர்.
பார்யா புத்ரஷ் ச தாஸஷ் ச த்ரயவா அதநா: ஸ்ம்ருதா: | யத் தே ஸமதிகச்சந்தி யஸ்ய தே தஸ்ய தத் தநம் || 416
மனைவி, மகன், அடிமை இம்மூவரும் தனமற்றவர்கள். ஏனெனில், இவர்களிடம் எவ்வளவு தனமிருந்தாலும் அது அவர்கள் உடைமையாகாது. அக்குடும்பத் தலைவனுடைய உடைமையே யாகும்.
விஸ்ரப்தம் ப்ராஹ்மண: சூத்ராத் த்ரவ்யோபாதாநமாசரேத் |
நஹி தஸ்யாஅஸ்தி கிஞ்சித் ஸ்வம் பர்த்ரூஹார்யதநோஹிஸ: || 417
தன் வேலைக்காரனிடமுள்ள தனத்தை பிராம்மணன் கைப்பற்றலாம்; தவறில்லை. ஏனெனில், எஜமானனான பிராம்மண னுக்கே அந்ததனம் சொந்தம்..
வைஷ்ய சூத்ரெள ப்ரயத்நேந ஸ்வாநிகர்மாணிகாரயேத் தௌஹி ச்யுதெள ஸ்வகர்மப்ய: க்ஷோபயேதாமிதம் ஐகத் || 418
அரசன், க்ஷத்ரியனையும் வைசியனையும் அவரவர் குலத் தொழிலை வற்புறுத்தியாவது செய்ய வைக்க வேண்டும்.-இல்லாவிடில் தத்தம் தொழில்களைச் செய்யாமல் மதங்கொண்டு திரிந்து உலகையே நாசம் செய்வார்கள்.
அஹந் அஹந்யவேக்ஷேத கர்மாந்தாந் வாஹநாநி ச
ஆய்வயயெள ச நியதாவாகராந் கோஷமேவ ச || 419
அரசன் நாட்டில் நடக்கும் எல்லாவற்றையும் ஒற்றர்களைக் கொண்டு தினம் தினம் அறிய வேண்டும். தினமும் யானைகளையும் குதிரைகளையும் பார்வையிட வேண்டும். வரவு செலவுகளைப் பார்க்க வேண்டும். பொக்கிஷத்தைப் பார்வையிட வேண்டும்.
ஏவம் ஸர்வாநிமாந் ராஜா வ்யவஹாராந் ஸமாபயந் |
வ்யபோஹ்ய கில்பிஷம் ஸர்வம் ப்ராப்நோதி பரமாம் கதிம் || 420
இதுவரை கூறியபடி எல்லா விவகாரங்களையும் நடத்துகின்ற அரசன், தன் பாபங்கள் நீங்கியவனாக மேலான உலகங்களை அடைவான்.
(எட்டாம் அத்தியாயம் முற்றிற்று.)
——————
அத்தியாயம் – 9
புருஷஸ்ய ஸ்த்ரியாஷ்சைவ தர்ம்யே வர்த்மநி திஷ்டதோ: |
ஸம்யோகே விப்ரயோகே ச தர்மாந் வக்ஷ்யாமி ஷாஷ்வதாந் | 1
தர்ம வழியில் நிலைத்திருக்கின்ற ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும்போதும், பிரிந்த பின்னரும் கடைப்பிடிக்க வேண்டிய சாஸ்வதமான தர்மங்களைக் கூறுகிறேன்.
அஸ்வதந்த்ரா: ஸ்த்ரிய: கார்யா: புருஷை: ஸ்வைர் திவாநிஷம் | விஷயேஷு ச ஸஜ்ஜந்த்ய: ஸம்ஸ்தாப்யா ஆத்மநோ வஷே||| 2
புருஷர்கள் இரவும் பகலும் ஸ்திரீகளைப் பாதுகாக்க வேண்டும்..ஏனெனில் பெண்கள் கண்ணுக்கு ரம்யமானவற்றைக் காண்பதிலும், காதுக்கு ரம்யானவற்றைக் கேட்பதிலும், ரம்யமான வாசனைகளை முகர்வதிலும், மனத்துக்கு ரம்யமானவற்றைச் செய்வதிலும் எப்போதும் ஈடுபடுவார்கள். இவ்வாறான விஷய சுகங்களை அனுபலிக்கும்போது சில தவறுகள் நேரிட வாய்ப்பு ஏற்படலாம். எனவே அத்தகைய வாய்ப்புகள் ஏற்படாமல் இருக்க பெண்கள் சுதந்திரமாகத் திரியாமல் ஆண்கள் தங்கள் வசத்தில் அவர்களை வைத்துக்கொண்டு பாதுகாக்க வேண்டும்.
பிதா ரக்ஷதி கௌமாரே பர்தா ரக்ஷதியௌவநே | ரக்ஷந்தி ஸ்தவிரே புத்ரா நஸ்த்ரீ ஸ்வாதந்த்ரயமர்ஹதி |-3
சிறுவயதுப் பெண்ணை தந்தை பாதுகாப்பான். யெளவனப் பருவத்தில் கணவன் பாதுகாப்பான். வயோதிகத்தில் புத்திரர்கள்பாதுகாப்பார்கள். எனவே பெண் என்பவள் எப்போதும் பிறரால் பாதுகாக்கப்படுபவாளேயன்றி, சுதந்திரமாக இருக்கத்தக்கவளல்ல.
காலே அதாதா பிதா வாச்யோ வாச்யஷ் சாஅனுபயந் பதி: 1
ம்ருதே பந்தரி புத்ரஸ் து வாச்யோ மாதுரரக்ஷிதா -4
தக்க பருவத்தில் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்காத தந்தை நிந்தனைக்குரியவன்.-ருது காலத்தில் தன் மனைவியைக் கூடாத கணவன் நிந்தனைக்
குரியவன்.-தந்தை இறந்த பிறகு தாயைக் காப்பாற்றாத தனயன் நிந்தனைக்குரியவன்.
சூக்ஷ்மேப்யோ அபி ப்ரஸங்கேப்ய: ஸ்த்ரியோ ரஷ்யா விசேஷத: |
த்வயோர் ஹி குலயோ: ஷோகமாவஹேயுரரக்ஷிதா: |-5
சூட்சுமமான தகாத சேர்க்கைகள் ஏற்பட்டு விடாதபடி பெண்ணை விசேஷமாகக் காப்பாற்ற வேண்டும். அப்படிக் காப்பாற்றாவிட்டால் அப்பெண்ணால் பிறந்த குலத்துக்கும் புகுந்த
குலத்துக்கும் துக்கம் ஏற்படும்.
இமம் ஹி ஸர்வ வர்ணாநாம் பஷ்யந்தோ தர்மமுத்தமம்
யதந்தே ரக்ஷிதும் பார்யாம் பாதாரோ துர்பலா அபி || 6
இவ்வாறு பெண்களைக் காப்பதே பிராம்மண க்ஷத்ரிய வைசிய சூத்திர சகல வர்ணத்தாருக்கும் உயர்ந்த தர்மமாகும். கணவன் தரித்திரனாக இருந்தாலும், அங்கஹீனம் உள்ளவனாக இருந்தாலும், எந்த வகையில் குறையுள்ளவனாக இருந்தாலும் மனைவியைக்
காப்பாற்ற வேண்டும்.
ஸ்வாம் ப்ரசூதிம் சரித்ரம் ச குலமாத்மாநமேவ ச
ஸ்வம் ச தர்மம் ப்ரயத்நேந ர்யாம் ரந் ஹி ரக்ஷதி || 7
மனைவியினால், புத்திரர்கள் பிறப்பார்களாதலால் அவளால் தான் வம்சம் விருத்தியடைகிறது. மனைவியின் நற்குணங்களால்தான் வம்சத்தின் நற்பெயர் நிலைநாட்டப்படுகிறது. மனைவி உடனிருந்து தர்மத்தை நடத்துவதால்தான் ஒருவன் மேன்மையடைகிறான். ஆகவே தன்னையும் தன் தர்மத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக மனைவியை மிகுந்த முயற்சியுடன் ரட்சிக்க வேண்டும்.
பதிர் பார்யாம் ஸம்ப்ரவிஷ்ய கர்போ பூத்வேஹ ஜாயதே | ஜாயயாஸ் தத் தி ஜாயாத்வம் யதஸ்யாம் ஜாயதே புந: |-8
கணவன் தன் ரேதஸ் ரூபத்தில் மனைவியினுள் பிரவேசித்து புத்திரனைப் பெறுகிறான். கணவனின் சொரூபத்தையே சுமந்து தன் மகனாகப் பெறுவதால் மனைவிக்கு ‘ஜாயா’ என்றும் பெயருண்டு.
யாத்ருஷம் பஜதேஹி ஸ்த்ரீஅதம் சூதே ததாவிதம்| தஸ்மாத் ப்ரஜாவிஷுத்த்யர்தம் ஸ்த்ரியம் ரக்ஷேத் ப்ரயத்நத: || 9
பெண்ணானவள், எந்த ஆடவனைச் சேர்கிறாளோ, அவனுடைய தன்மையைக் கொண்ட புத்திரனைப் பெறுவாள் -எனவே மற்றவரால் அவள் பலாத்கரிக்கப்படாமல் கணவன் காப்பாற்ற வேண்டும். காப்பாற்றினால்தான் அவளிடமிருந்து தன்னைப் போன்ற நன்மக்களைப் பெற முடியும்.
ந கஷ்சித் யோஷித: ஷக்த: ப்ரஸஹ்ய பரிரக்ஷிதும் | ஏதைருபாயயோகைஸ்து ஷக்யாஸ் தா: பரிரக்ஷிதும் || 10
பெண்களைக் காப்பாற்றுதல் என்பது, அவர்களைப் பலவந்தமாகப் பூட்டி வைப்பது போன்ற செயல்கள் அல்ல. சில உபாயங்களால் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.
அர்தஸ்ய ஸங்க்ரஹே சைநாம் வ்யயே சைவ நியோஜயேத் |
ஷௌசே தர்மேஅந்ந பக்த்யாம் ச பாரிணாஹ்யஸ்ய வேக்ஷணே 11
தனத்தைச் சேர்த்து வைக்கவும், தேவையானவற்றுக்கு செலவிடவும் அவர்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். இதைப் பிரதானமாக மனைவிதான் பார்த்துக் கொள்ள வேண்டும். கணவன்-சம்பாதித்துக் கொண்டு வந்து தரும் தனத்தை சிக்கனமாக செலவு
செய்து, மிகுதியைச் சேர்த்து வைக்க வேண்டும். இது மனைவியின் கடமை.
வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டியதும், தன்னையும் வீட்டையும் அலங்காரமாக லமிகரமாக வைத்திருக்க வேண்டியதும் மனைவியின் கடமை.-களைத்து வரும் கணவனுக்கு உணவளித்து பணிவிடை புரிவதும் மனைவியின் கடமை.
சமையலும் சமையல் சாதனங்களும் நல்லபடி இருக்கச் செய்வதும் மனைவியின் கடமையே.(ஒருவன் ஏழையாக இருக்கலாம் அல்லது பணக்காரனாக இருக்கலாம். அவனுடைய இல்லம் என்பது குடிசையாக இருக்கலாம் அல்லது பெரிய மாளிகையாக இருக்கலாம். குடிசையாக இருந்தாலும் அவன் மனைவி அங்கு அரசி. பெரிய மாளிகையாக இருந்தாலும் அவன் மனைவி அங்கு அரசி. அதனால்தான் தமிழில் இல்லத்தரசி
என்று கூறுகிறோம்.-வாயிற்படிக்கு உள்ளே மனைவியின் சாம்ராஜ்யம் நடைபெறும்.
உள்ளே எத்தனை வேலைக்காரர்கள் வேலை செய்தாலும் அவர்களை வழிநடத்துபவள் மனைவியாகவே இருக்க வேண்டும்.-மகாராணியாகவே இருந்தாலும் மனைவியின் கடமைகளை அவள் செய்யவே வேண்டும். பாண்டவர்களின் மனைவியான பாஞ்சாலியை அனைவருக்கும் தெரியும். கற்பில் சிறந்தவளான பாஞ்சாலி ஒரு சமயம். கிருஷ்ணருடைய பத்தினியான சத்யபாமையிடம் சில விஷயங்களை எடுத்துரைக்கிறாள். அதை அவளுடைய கூற்றாகவே பார்ப்போம்…’நான் பாத்ரு சிச்ரூஷையை (கணவனுக்குப் பணிவிடையை)
எப்போதும் செய்கிறேன். என்கணவர் வரும்போது விரைந்து சென்று ஆசனத்தில் அமரச் செய்து தீர்த்தம் கொடுக்கிறேன். நான் மாளிகையை நன்கு பராமரிக்கிறேன். பூந்தோட்டங்களில் நெடுநேரம் சஞ்சரித்துக் கொண்டு இருக்க மாட்டேன். தேவ பூஜை,
பித்ரு பூஜைகளைச் செய்கிறேன்.-யுதிஷ்ரருக்கு லட்சம் வேலைக்காரிகள். அவர்கள் எல்லோர் பெயரும் எனக்குத் தெரியும். அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன
செய்யவில்லை என்பது எனக்குத் தெரியும். அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறையை நானே ஏற்படுத்துகிறேன்.-அவர்களுக்குக் குறைகள் இருந்தால் சரி செய்கிறேன்.-நான் ஒருத்தியே வரவையும் செலவையும் சொத்து முழுவதையும் அறிவேன். பாண்டவர்கள் என்னிடத்தில் குடும்பப் பொறுப்பு முழுமையும் ஒப்படைத்து விட்டு, அதைப் பற்றிய
கவலையின்றி இருக்கிறார்கள். அவர்களுடைய பொக்கிஷத்தில் இருப்பதை நான் ஒருத்தி தான் அறிவேன்.- இது பாஞ்சாலி கூறியது.-இதுவே ஒரு இல்லத்தில் மனைவியின் கடமை. எனவே இல்லத்தைப் பற்றிய பொறுப்புகளனைத்தையும் திறமையுள்ள மனைவியிடம் கணவன் ஒப்படைக்க வேண்டும்.)
அரக்ஷிதா க்ருஹே ருத்தா: புருஷைராப்தகாரிபி: 1
ஆத்மாநமாத்மநா யாஸ்து ரக்ஷேயுஸ் தா: அரதா: |-12
காவல் போட்டு பெண்களைக் காப்பாற்ற முடியாது. தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்பவர்களே உண்மையில் நன்கு காப்பாற்றப்படுபவர்கள்.
பாநம் துர்ஐந ஸம்ஸர்க: பத்யா ச விரஹோ அடநம் ஸ்வப்நோ அந்யகேஹ வாஸஷ் ச நாரீஸந்தூஷணாநிஷட்|| 13
மதுவருந்துதல், தீயோர் சேர்க்கை, கணவனை விட்டு விட்டு விலகியிருத்தல், வேலையேதுமின்றி ஊரைச் சுற்றுதல், தூக்கம், பிறர் வீட்டுக்குப் போய் நாட்கணக்கில் இருத்தல்- இந்த ஆறும் ஒரு பெண்ணை தூற்றுதலுக்கு ஆளாக்கும்.
நைதா ரூபம் பரீக்ஷந்தேநா ஆஸாம் வயஸிஸம்ஸ்திதி:
சுரூபம் வா விரூபம் வா புமாநித்யேவ புஞ்ஜதே || 14
பெண்கள் ஆணின் அழகையோ,வயதையோ பார்க்க மாட்டார்கள். அழகனாக இருந்தாலும், குரூபியாக இருந்தாலும் பொருட்படுத்தாமல், ஆண்மகனாக இருந்தால் போதுமென்று
அனுபவிப்பார்கள்.
பைம் சலயாச் சலசித்தாச்ச நைஸ்நேஹ்யாச்ச ஸ்வபாவத: 1
ரக்ஷிதா யத்நதோ அபீஹ பர்த்ருஷ்வேதா விகுர்வதே || 15
பெண்கள் ஆசைப்படுபவர்களாக, சலன சித்தம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஆத்மார்த்தமான நட்பை எவரிடமும் வைக்க மாட்டார்கள். இந்தக் காரணங்களால், எளிதில் மனம் மாறக்கூடியவர்களாக இருப்பார்கள். மனம் மாறி கணவனிடம் பற்றுதல் நீங்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.
ஏவம் ஸ்வபாவம் ஞாத்வா ஆஸாம் ப்ரஜாபதி நிஸர்கஜம்
பரமம் யத்நமாதிஷ்டேத் புருஷோ ரக்ஷணம் ப்ரதி |1 16
பிரம்ம சிருஷ்டியில் பெண்களின் இயல்பு இவ்வாறாக இருப்பதால் ஆண்மகன் மேலான முயற்சிகளால் அவர்களைத் தன்வசப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஷய்யா ஆஸநமலங்காரம் காமம் க்ரோதமநார்ஜவம் !
த்ரோஹ பாவம் குசர்யாம் ச ஸ்த்ரீப்யோ மனுரகல்பயத் || 17
பெண்கள் படுக்கை, ஆசனம்,அலங்காரங்களுக்கு ஆசைப் படுவார்கள். காம குரோதங்களுக்கு வசப்பட்டிருப்பார்கள். செய்யத் தகாததைச் செய்பவர்களாகவும் துரோக பாவத்தோடும் இருப்பார்கள்.
நாஸ்தி ஸ்த்ரீணாம் க்ரியா மந்த்ரைரிதி தர்மே வ்யவஸ்திதி: நிரிந்த்ரியாஹ்யமந்த்ராஷ் ச ஸ்த்ரியோ அந்ருதமிதி ஸ்திதி: || 18
ஜாதகர்மா முதலான மந்திரபூர்வமான கிரியைகள் பெண்களுக்குதர்மசாஸ்திரத்தில் விதிக்கப்படவில்லை. மந்திரங்களால் ஆண்கள் பாவத்தைத் தொலைத்துக் கொள்வது போன்று பெண்கள் தொலைத்துக் கொள்ள முடியாது. பெண்கள் சுதந்திரமற்றவர்களாக
இருப்பதால், தண்டனைக்குப் பயந்தோ, வசவுக்குப் பயந்தோ பொய் பேசுபவர்களாக இருப்பார்கள்.
ததா ச ஸ்ருதயோ பஹவ்யோ நிகீதா நிகமேஷ்வபி 1
ஸ்வாலக்ஷண்ய பரீக்ஷார்தம் தாஸாம் ஷ்ருணுத நிஷ்க்ருதீ: ||-19
எனவே பல பெண்கள் தீயொழுக்கத்தோடு இருப்பார்கள். உதாரணத்துக்கு ஒன்று கூறுகிறேன், கேளுங்கள்.
யந்மே மாதா ப்ரளுளுபே விசரந்த்யபதிவரதா | தந்மேரேத: பிதா வ்ருங்தாமித்யஸ்யைதந் நிதர்ஷநம்|| 20
இது ஒரு மந்த்ர வாக்யம்:- என் தாய் பதிவிரதையாக இல்லாமல்,பிற வீடுகளுக்குச் செல்பவளாக, பரபுருஷனை நினைத்தவளாக இருந்தால், எனது தந்தை தன் வீரியத்தால் அவளைஅடக்கட்டும்..
த்யாயத்யநிஷ்டம் யத்கிஞ்சித் பாணிக்ராஹஸ்ய சேதஸா | தஸ்யைஷ வ்யபிசாரஸ்ய நிநவ: ஸம்யகுச்யதே || 21
ஒரு பெண்கரம் பிடித்துக் கொடுக்கப்பட்ட தன் கணவனுக்குஇஷ்டமில்லாததை சிறிதேனும் மனத்தில் நினைத்திருந்தால்,அதாவது மனத்தால் வேறொரு ஆடவனை நினைத்திருந்தால், அதுவும் விபசாரமேயாகும்.
யாத்ருக் குணேந பர்த்ரா ஸ்த்ரீ ஸம்யுஜ்யேத யதாவிதி | தாத்ருக் குணா ஸா பவதி ஸமுத்ரேணேவ நீம்நகா || 22
ஒரு கணவன் எந்த குண நலன்களோடு இருக்கிறானோ,அவனை மணந்து அவனுக்குப் பணிவிடைகள் செய்யும் மனைவியும் அத்தகைய குணநலன்களையே அடைகிறாள். ஆறுகள் கடலைச் சென்றடைந்ததும் கடல் நீராகவே மாறிவிடுவது போல் கணவனை
அடைந்த பெண்ணும் அவனைப் போன்றேஆகிறாள்.
அக்ஷமாலா வஸிஷ்டேந ஸம்யுக்தா அதமயோநிஜா |
ஷாரங்கீ மந்தபாலேந ஜகாமா அப்யர்ஹணீ யதாம் ||-23
அக்ஷமாலா என்னும் நீச ஜாதிப் பெண் வசிஷ்டரை மணந்தும், சாரங்கீ என்னும் நீச ஜாதிப் பெண் மந்தபாலரை மணந்தும் மேன்மையானவர்களாக வாழ்ந்தார்கள்.
ஏதாஷ் சா அ யாஷ் ச லோகே அஸ்மிந் நபக்ருஷ்ட ப்ரசூதய: |
உத்கர்ஷம் யோஷித: ப்ராப்தா: ஸ்வை: ஸ்வைர் பாத்ருகுணை: பை: 24
இவர்கள் மட்டுமல்ல, உலகில் இன்னும் பல ஈன ஜாதிப் பெண்களும் மேலான கணவர்களை அடைந்து, தங்கள் தங்கள் கணவன்மார்களின் குணங்களைப் பெற்று மேன்மையடைந்துள்ளார்கள்.
ஏஷோதிதா லோகயாத்ரா நித்யம் ஸ்த்ரீபும்ஸயோ: பா |
ப்ரத்யேஹ ச சுகோதர்காந் ப்ரஜாதர்மாந் நிபோதத || 25
கணவன் மனைவியர் நித்தியமாக நடத்த வேண்டிய முறைகளைக் கூறினேன். இனி சுகமளிக்கும் சந்ததி தர்மங்களைக் கூறுகிறேன்.
ப்ரஜநார்தம் மஹாபாகா: பூஜாஅர்ஹா க்ருஹதீப்தய: |
ஸ்த்ரிய: ஷ்ரியஷ் ச கேஷேஷு ந விசேஷோ அஸ்தி கஷ்சந 11 26
வீட்டை விளங்கச் செய்து சந்ததிகளை உருவாக்குவது பெண்களே என்பதால், அவர்கள் மிகவும் போற்றுதலுக்குரியவர்கள். அவர்கள் வீட்டில் இருக்கும் லக்ஷ்மிகள் (கிருஹ லக்ஷ்மிகள்), இதற்கும் மேல் அவர்களைப் போற்ற வேறு வார்த்தைகள் ஏது?
உத்பாதநமபத்யஸ்ய ஜாதஸ்ய பரிபாலனம் |
ப்ரத்யஹம் லோகயாத்ராயா: ப்ரத்யக்ஷம் ஸ்த்ரி நிபந்தநம் ||-27
பிள்ளை பெறுபவளும் பெண்தான்; பெற்ற பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவளும் பெண்தான். ஒரு குடும்பத்தைக் கட்டுக்கோப்பாக நடத்திச் செல்பவர்களும் பெண்கள்தான். உலக வாழ்க்கையின் அஸ்திவாரமே பெண்கள்தான்.
அபத்யம் தர்மகார்யாணி சுஷ்ரூஷா ரதிருத்தமா |
தாராதீநஸ் ததா ஸ்வர்க: பித்ருணாமாத்மநஷ் சஹ|| 28
ஒருவன் சந்ததியைப் பெற்று இம்மை மறுமை இன்பங்களை அடையச் செய்பவள் மனைவியே. ஒருவன் தர்மகாரியங்களைச் செய்ய உறுதுணையாக இருப்பவளும் மனைவியே. மந்திரபூர்வமான தர்ம காரியங்களுக்கு அவன் மனைவியும் உடனிருந்தாக வேண்டும். மனைவியில்லாவிடில் செய்ய முடியாது.-அவனுக்குப் பணிவிடை புரிபவளும், சுகம் தருபவளும் மனைவியே. பித்ரு காரியங்களுக்கு உடனிருந்து உதவுபவளும் அவளே. மொத்தத்தில் அவனுக்கும்,அவன் முன்னோருக்கும் சொர்க்கலோகம் கிடைக்கச் செய்பவள் அவன் மனைவியேயாகும்.
பதிம் யா நா அபிசரதி மநோவாக்தேஹஸம்யதா |
ஸா பர்த்ருலோகாநாப்நோதி ஸத்பி: ஸாத்வீதி சோச்யதே || 29
மனத்தாலும், வாக்காலும், சரீரத்தாலும் கணவனையே அனுசரித்திருக்கும் மனைவி, கணவன் தன் புண்ணிய பலன்களால் எத்தகைய உயர்ந்த லோகத்தை அடைகிறானோ, அதே லோகத்தை தானும் அடைகிறாள்.
வ்யபிசாராத் து பாது: ஸ்த்ரீலோகே ப்ராப்நோதி நிந்த்யதாம்|
ஸ்ருகாலயோநிம் சாஆப்நோதி பாபரோகைஷ் ச பீட்யதே|| 30
விபசாரியான பெண்உலகத்தில் நிந்திக்கப்படுவாள்; இறந்தபின் நரியாகப் பிறப்பாள்; பாப ரோகங்களால் (கொடிய நோய்களால்) பீடிக்கப்படுவாள்.
புத்ரம் ப்ரத்யுதிதம் ஸத்பி: பூர்வஜைஷ்ச மஹர்ஷிபி: |
விஷ்வஐந்யமிமம் புண்யமுபந்யாசம் நிபோதத || 31
புத்திரர்களைப் பற்றி, மஹான்களான,முன்னோர்களான, மஹரிஷிகளால் உலகுக்கு ஹிதமானதாக,நன்மை தரக்கூடியதாக சொல்லப்பட்ட தர்மமான விஷயங்களைக் கூறுகிறேன்.
பர்து: புத்ரம் விஜாநந்தி ஸ்ருதித்வைதம் து பர்தரி |
ஆஹுருத்பாதகம் கேசிதபரே க்ஷேத்ரிணம் விது: |-32
கணவன் விஷயத்தில் புத்திரர்களைப் பற்றி ஸ்ருதிகள் இருவகையாகக் கூறுகின்றன. கர்ப்பத்தை அளித்தவனே அந்தக் குழந்தைக்குத் தந்தை என்றும், கர்ப்பத்தை அளித்தவன் வேறாக இருந்தாலும் அவளை மணந்தவனே அக்குழந்தைக்குத் தந்தை என்றும் இருவகையாகக் கூறுகின்றன.
க்ஷேத்ர பூதா ஸ்ம்ருதா நாரீ பீஜபூத: ஸ்ம்ருத: பூமாந்
க்ஷேத்ர பீஜஸமாயோகாத் ஸம்பவ: ஸர்வதேஹிநாம் |-33
பெண் என்பவள் நிலத்துக்குச் சமம். ஆண் விதைக்கு சமம் நிலமும் விதையும் சேர்வதால் சகல உயிர்களும் உண்டாகின்றன.
விசிஷ்டம் குத்ரசித் பீஜம் ஸ்த்ரீயோநிஸ்த்வேவ குத்ரசித் |
உபயம் து ஸமம் யத்ர ஸா ப்ரசூதி: ப்ரஷஷ்யதே || 34
விதையின் தன்மை மேலோங்க சில இடங்களில் புத்திரர்கள் பிறப்பார்கள். நிலத்தின் தன்மை மேலோங்க சில இடங்களில் புத்திரர்கள் பிறப்பார்கள். இரண்டு தன்மைகளும் சேர்ந்தும் சில இடங்களில் பிறப்பார்கள். இத்தகைய சந்ததி தோன்றுவது உயர்வு என்பது பெரியோர் கூற்று.
பீஜஸ்ய சைவ யோந்யாஷ் ச பீஜமுத்க்ருஷ்டமுச்யதே பூதப்ரசூதிர் ஹி பீஜலக்ஷணலதா|| ஸர்வ-35
தோன்றும் உயிர்களெல்லாம் பீஜத்தின் (விதையின்) தன்மைகளைக் கொண்டே தோன்றுகின்றன. எனவே பீஜம் யோநிஇரண்டையும் பார்க்கும்போது பீஜமே சிறந்ததாகச் சொல்லப் படுகிறது..
யாத்ருஷம் தூப்யதே பீஜம் க்ஷேத்ரே காலோபபாதிதே | தாத்ருக் ரோஹதி தத் தஸ்மிந்பீஜம் ஸ்வைர் வயஞ்ஜிதம் குணை ॥ 36
காலமறிந்து நிலத்தில் விதைக்கப்பட்ட விதை, அதன்குணங்களோடே வளர்கிறது. மாங்கொட்டையை நிலத்தில் நட்டால்மாமரம்தானே வளரும். எது விதைக்கப்படுகிறதோ, அது தன்னைப் போன்றவற்றையே உண்டாக்கி பலன் தந்து விளங்குகிறது.
இயம் பூமிர் ஹி பூதாநாம் ஷாஷ்வதீ யோநிருச்யதே |
நச யோநிகுணாந் காம் சித் பீஜம் புஷ்யதி பூஷ்டிஷு|| 37
பூமியே எல்லா உயிர்களுக்கும் காரணம் எனப்படுகிறது. ஆனால் நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகள் பூமியின் தன்மையைக் கொண்டு வளர்வதில்லை. விதையின் தன்மையைக் கொண்டே வளர்கின்றன. எனவே பீஜமே (விதையே) பிரதானம்.
பூமாவப்யேக கேதாரே காலோப்தாநி க்ருஷீவலை: |
நாநாரூபாணி ஜாயந்தே பீஜாநீஹ ஸ்வபாவத: I| 38
பூமியில் அந்தந்தக் காலங்களில் எந்தெந்த விதைகள் விதைக்கப் படுகின்றனவோ, அந்தந்த விதைகளின் உருவத்தோடும், தன்மையோடும் வளர்கின்றன. பூமியைப் போன்று எதுவும் ஆவதில்லை யன்றோ.
வ்ரீஹய: ஷாலயோ முத்காஸ் திலா மாஷாஸ் ததா யவா: |
யதாபீஜம் ப்ரரோஹந்தி ல நா க்ஷவஸ் ததா|| 39
நெல் வகைகள், சம்பா வகைகள், பருப்பு வகைகள்,எள், உளுந்து, பார்லி முதலான அனைத்தும் விதைகளைப் பொறுத்தே உருவாகின்றன.
அந்ததுப்தம் ஜாதமந்யதித்யேதந் நோபபத்யதே |
உப்யதே யத் தி யத் பீஜம் தத்ததேவ ப்ரரோஹதி -40
விதைப்பது ஒன்றும் விளைவது வேறொன்றுமாக எப்போதும் ஆவதில்லை. விதையைப் பொறுத்தே விளைவது இருக்கிறது. எனவே விதையே பிரதானமானது.
தத் ப்ரக் ேந விநீதேந ஞானவிஞ்ஞானவேதிநா |
ஆயுஷ்காமே வப்தவ்யம் ந ஜாது பரயோஷிதி |-41
நல்லொழுக்கமுள்ள, ஞான விஞ்ஞானங்களையறிந்த, நீண்ட ஆயுளை விரும்பும் புத்திசாலி எப்போதும் தன் விதையை பிறர் நிலத்தில் விதைக்க மாட்டான். அதாவது பிறருடைய தாரத்துடன் சேர மாட்டான்.
அத்ர காதா வாயுகீதா: கீர்தயந்தி புராவித: |
யதா பீஜம் ந வப்தவ்யம் பும்ஸா பரபரிக்ரஹே|| 42
முன்னர் இருந்த மூத்தவர்கள், புருஷன் பிறன் மனைவியிடம் தன் பிஜத்தைச் சேர்க்கக்கூடாது என்னும் வாயுவின் கூற்றுக்களை இசைத்துக் கொண்டிருப்பார்கள்.
நஷ்யதீஷுர் யதா வித்த: கே வித்தமனுவித்யத: 1
ததா நஷ்யதி வை க்ஷிப்ரம் பீஜம் பரபரிக்ரஹே 43
ஒரு மிருகத்தின் மீது ஒருவன் அம்பெய்கிறான். அதன் மீதேஇன்னொருவனும் அம்பெய்தால், அந்த மிருகம் முதலில்அம்பெய்தவனுக்கே உரியதாகும். அவ்வாறே பிறன் மனைவியிடம் சேர்க்கும் பீஜமும் வீணாகும்.
ப்ருதோரபீமாம் ப்ருதிவீம் பார்யாம் பூர்வவிதோ விது: | ஸ்தாணுச்சேதஸ்ய கேதாரமாஹு: ஷல்யவதோ ம்ருகம் || 44
முதலில் இந்த பூமியை பிருது சக்கரவர்த்தி கைப்பற்றிஆண்டதால் பிருதுவின் மனைவி என்ற பொருளில் பூமிக்கு பிருதிவிஎன்ற பெயர் ஏற்பட்டது.-முதலில் ஒரு நிலத்தை சமன்படுத்தி உழுபவனுக்கே அந்த நிலம்சொந்தம்.-முதலில் வீழ்த்தியவனுக்கே மிருகம் சொந்தம்.
ஏதாவாநேவ புருஷோ யஜ் ஜாயா ஆத்மா ப்ரஜேதி ஹ|
விப்ரா: ப்ராஆஹுஸ் ததா சைதத் யோ பர்தா ஸாஸ்ம்ருதா அங்கநா || 45
ஒரு புருஷன் என்று சொல்லும்போது அது அவனை மட்டுமேகுறிக்காது. மனைவி என்பவள் அவனில் பாதி. புத்திரர்களோவெனில்அவனேதான். வேறு அல்ல.ஆகவே மனைவி மக்களோடு கூடிய ஒருவனே புருஷன் எனப்படுவான்.
ந நிஷ்க்ரியவிஸர்காப்யாம் பர்துர் பார்யா விமுச்யதே
ஏவம் தர்மம் விஜாநீம: ப்ராக் ப்ரஜாபதி நிர்மிதம் 1-46
சுல்கத்தை (பரிசத்தை) திருப்பிக் கொடுத்து விடுவதால்அவர்களின் கணவன் – மனைவி பந்தம் இல்லாமல் போகாது.மனைவியை அயலானுக்கு தானம் கொடுப்பதாலும் கூட கணவன் -மனைவி பந்தம் நீங்காது. இவ்வாறான தர்மத்தை பிரம்மதேவர்நியமித்துள்ளார்.
ஸக்ருதம்ஷோ நிபததி ஸக்ருத் கந்யா ப்ரதீயதே |
ஸக்குதாஹ ததாநீதி த்ரீண்யேதாநி ஸதாம் ஸக்ருத்-47
மூன்று விஷயங்களை ஒரே ஒரு முறைதான் செய்ய முடியும். மற்றொரு முறை செய்தால் செல்லுபடியாகாது.
1) சகோதரர்களுக்குள் பாகப் பிரிவினை ஒருமுறைதான் நடைபெற வேண்டும்.
2) ஒரு தந்தை தன் மகளை ஒரு முறைதான் ஒருவனுக்குக் கரம்பற்றிக் கொடுக்க வேண்டும்.
3) தானம் ஒரு முறைதான் கொடுக்க வேண்டும். கொடுத்த பொருளை திரும்பக் கொடுக்க முடியாது.
யதா கோஅஷ்வோஷ்ட்ரதாஸீஷு மஹிஷ்யஜா அவிகாசு ச |
நோத்பாதக: ப்ரஜாபாகீ ததைவா அந்யா அங்கநாஸ்வபி |-48
பசுக்கள், குதிரைகள், ஒட்டகங்கள், எருமைகள், ஆடுகள் முதலியவைகளுக்குப் பிறந்தவை அவைகளின் உரிமைக்காரனுக்கே சொந்தம். அதேபோன்று தாசிகளுக்குப் பிள்ளை பிறந்தாலும், அந்த தாசிக்கு சொந்தக்காரன் யாரோ அவனுக்கே சொந்தம். யாருக்கு
அந்தப் பிள்ளை பிறந்ததோ அவனுக்கு சொந்தமாகாது.
யே அக்ஷேத்ரிணோ பீஜவந்த: பரக்ஷேத்ர ப்ரவாபிண: |
தேவை ஸஸ்யஸ்ய ஜாதஸ்ய ந லபந்தே பலம் க்வசித்|| 49
தன்னுடைய விதைகளை பிறருடைய நிலத்தில் விதைத்தால், அதில் வரும் விளைச்சல் அவனுக்குச் சொந்தமாகாது. நிலத்துக்கு சொந்தக்காரன் எவனோ, அவனுக்கே அந்த விளைச்சல் சொந்த மாகும்.
யதந்யகோஷு வருஷபோ வத்ஸாநாம் ஐநயேச்சதம் | கோமிநாமேவ தே வத்ஸாமோகம் ஸ்கந்திதமார்ஷபம் ॥-50
தனது ரிஷபத்தைக் கொண்டு அந்நியரின் பசுக்களிடம் எத்தனை சந்ததிகளை உருவாக்கினாலும் அந்த சந்ததிகள் பசுக்களின் சொந்தக்காரனுக்கே உரியவை. ஒருநாளும் ரிஷபத்தின் சொந்தக்காரனான இவனுக்கு உரிமை கிடையாது.
ததைவா அக்ஷேத்ரிணோ பீஜம் பரக்ஷேத்ர ப்ரவாபிண: | குர்வந்தி க்ஷேத்ரிணாமர்தம் ந பீஜீ லபதே பலம் |-51
அவ்வாறே பிற பெண்ணிடம் ஒரு சந்ததியை உற்பத்தி செய்தால்,அப்பெண்ணின் கணவனுக்கே அந்த சந்ததி சொந்தமாகும். இவனுக்கு சொந்தமாகாது.
பலம் த்வநபிஸந்தாய க்ஷேத்ரிணாம் பீஜிநாம் ததா | ப்ரத்யக்ஷம் க்ஷேத்ரிணாமர்தோ பீஜாத் யோநிர் கரீயஸ் 52
நிலத்து சொந்தக்காரனும், விதைகளின் (பீஜங்களின்) சொந்தக்காரனும் ஏதும் ஒப்பந்தம் செய்து கொள்ளாத வரையில் விளைந்த பொருள் நிலத்துச் சொந்தக்காரனுக்கே உரியது.
க்ரியா அப்யுபகமாத் த்வேதத் பீஜார்தம் யத் ப்ரதீயதே|
தஸ்யேஹ பாகிநௌ த்ருஷ்டௌ பீஜீ க்ஷேத்ரிக ஏவ ச || 53
இதில் கிடைக்கும் விளைச்சல் நம் இருவருக்கும் சேர்ந்தது என்று ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டால், அந்த விளைச்சல் நிலத்துக்காரன் விதைத்தவன் ஆகிய இருவருக்கும் சொந்தம்.
ஓகவாதா ஆஹ்ருதம் பீஜம் யஸ்ய க்ஷேத்ரே ப்ரரோஹதி |
க்ஷேத்ரிகஸ்யைவ தத் பீஜம் நவப்தா லபதே பலம்|| 54
நதியின் வேகத்தாலும், காற்றின் வேகத்தாலும் கொண்டு போகப்பட்ட விதை எந்த நிலத்தில் விளைகிறதோ, அந்நிலத்துக் காரனுக்கே அந்த விதையின் விளைச்சல் சொந்தம். விதையின் சொந்தக்காரனுக்கு பலன் கிடையாது.
ஏஷதர்மோகவா அஷ்வஸ்ய தாஸ்யுஷ்ட்ரா அஜாஅவிகஸ்யச |
விஹங்க மஹிஷீணாம் ச விக்ஞேய: ப்ரஸவம் ப்ரதி || 55
பசுக்கள், குதிரைகள், தாசிகள், ஒட்டகங்கள், ஆடுகள், எருமைகள் விஷயத்திலும் சந்ததிகள் ஏற்படும்போது, இவற்றின் சொந்தக்காரனும், ரிஷபம் முதலானவற்றின் சொந்தக்காரனும்
ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அப்போது சந்ததிகள் இருவருக்கும் சொந்தமாகும்.
ஏதத் வஹஸாரபல்குத்வம் பீஜயோந்யோ ப்ரகீர்திதம் |
அத:பரம் ப்ரவக்ஷ்யாமி யோஷிதாம் தர்மமாபதி || 56
பீஜம், யோநி இவைகளில் எது சிறந்தது என்பது பற்றி கூறினேன். இனி ஆபத்துக்கால தர்மத்தைக் கூறுகிறேன், கேளுங்கள்.
ப்ராதுர் ஜ்யேஷ்டஸ்ய பார்யா யா குருபத்ந்யனு ஜஸ்யஸா |
யவீயஸஸ்து யா பார்யா ஸ்நுஷா ஜ்யேஷ்டஸ்ய ஸாஸ்ம்ருதா || 57
ஒருவனுக்கு அவன் தமையனின் மனைவி, குரு பத்தினிக்கு சமமானவள். தம்பியின் மனைவி மருமகளுக்கு (தன் மகனை மணந்து வந்த பெண்) சமம் என்று பெரியோர் கூறுவர்.
ஜ்யேஷ்டாயவீயஸோ பார்யாம் யவீயாந்வா அக்ரஐ ஸ்த்ரியம்|
பதிதெள பவதோ கத்வா நியுக்தாவப்யநாபதி || 58
அண்ணனோ தம்பியோ, தங்களுக்கு சந்ததியே ஏற்படாது என்ற நிலை ஏற்பட்டாலன்றி ஒருவர் மனைவியை அடுத்தவர் கூடுவது தவறு. அப்படிக் கூடியவர்கள் பெரும் பாபிகளாவார்கள்.
தேவராட்வா ஸபிண்டாத் வா ஸ்த்ரியா ஸம்யக் நியுக்தயா |
ப்ரஜேப்ஸிதா அதிகந்தவ்யா ஸந்தானஸ்ய பரிக்ஷயே|-59
சந்தானம் இல்லாதபோது ஒரு பெண், தன் கணவன் மற்றும் பெரியோர் அனுமதியுடன் மைத்துனன் அல்லது பங்காளியினால் ஒரு பிள்ளையைப் பெறலாம்.
விதவாயாம் நியுக்தஸ் து க்ருதாஅக்தோ வாக்யதோ நிஷி |
ஏகமுத்பாதயேத் புத்ரம் நத்விதீயம் கதஞ்சந|| 60
பெரியோரால் அனுமதிக்கப்பட்டு விதவையைக் கூடுவதற்குச்செல்பவன், உடல் முழுதும் நெய்யைப் பூசிக்கொண்டு, மௌனமாக இருட்டில் அவளிடம் ஒரு சந்ததியை ஏற்படுத்த வேண்டும். அதற்கும்மேல் மீண்டும் இன்னொரு சந்ததியை ஏற்படுத்தக் கூடாது.
த்விதீயமேகே ப்ரஜநம் மந்யந்தே ஸ்திரீஷு தத்வித:
அநிர்வ்ருதம் நியோகார்தம் பஷ்யந்தோ தர்மதஸ் தயோ: |-61
சில அறிஞர்கள் ஒரு மகனைப் பெற்றவள் மலடியே என்பதால், இன்னொரு மகனையும் உருவாக்குவது சரியே என்று கூறியிருக்கிறார்கள்.
விதவாயாம் நியோகார்தே நிர்வ்ருத்தே து யதாவிதி |
குருவச்ச ஸ்நுஷாவச்ச வர்தேயாதாம் பரஸ்பரம் ||| 62
விதவை கருவுற்ற பிறகு, அவள், அவனை குருவைப் போல் நினைக்க வேண்டும். அவன், அவளை மருமகளைப் போல் நினைக்கவேண்டும்.
நியுக்தெள யெள விதிம் ஹித்வா வர்தேயாதாம் து காமத: 1
தாஷபௌ பதிதௌ ஸ்யாதாம் ஸ்நுஷா குருதல்பகௌ || 63
அவனும் அவளும் அவ்வாறு நினைக்காமல் மீண்டும்காமத்தோடு கூடினார்களானால், குருவைக் கூடிய, மருமகளைக் கூடிய பாபத்துக்காளாவார்கள்.
நா அந்யஸ்மிந் விதவா நாரீ நியோக்தவ்யா த்விஜாதிபி: | அந்யஸ்மிந் ஹி நியுஞ்ஜாநா தர்மம் ஹந்யு: ஸநாதநம்||| 64
பிராம்மண விதவைப் பெண்ணை, இன்னொருவன் மூலம் புத்திரனைப் பெறுவதற்கு, பெரியோர் அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தவர்களுக்கு தர்மத்தைக் கெடுத்த பாவம் வந்து சேரும்.
நோத்வாஹிகேஷு மந்த்ரேஷு நியோக: கீர்த்யதேக்வசித் |
நவிவாஹ விதாவுக்தாம் விதவா வேதனம் புந: |-65
சந்ததியில்லாமல் போனால்,மற்றொருவனிடமிருந்து பிள்ளை பெறலாம் என்று வேத மந்திரத்திலும் கூறப்படவில்லை.விவாக விதிகளில் விதவைக்கு இன்னொரு விவாகத்தையும் சொல்லவில்லை.
அயம் த்விஜைர் ஹி வித்வத்பி: ப தர்மோ விகர்ஹித: |
மனுஷ்யாணாமபி ப்ரோக்தோ வேநே ராஜ்யம் ப்ரஷாஸதி || 66
த்விஜர்களான வித்வான்கள், விலங்குகளைப்போன்று நடந்து கொள்ளும் இந்த தர்மத்தைநிந்திக்கிறார்கள். முதலில் மனிதர்களிடம் இந்தப் பழக்கங்களெல்லாம் கிடையாது. வேனன் என்ற ஒரு அரசன் ஆண்டபோது கொடியவனும் மகா அதர்மவானுமான அவன் எல்லோரும் இப்படியெல்லாம் நடந்து கொள்ளலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தான். அவனுடைய அதர்மத்தாலேயே அவன் அழிந்தான். ஆனால் அவன் கொண்டு வந்த பழக்கங்கள் ஆங்காங்கே வேரூன்றி விட்டன.
ஸ மஹீமகிலாம் புஞ்ஐந் ராஜர்ஷி ப்ரவர: புரா |
வர்ணாநாம் ஸங்கரம் சக்ரே காமோபஹதசேதந: 67
இந்த வேனன் சக்கரவர்த்தியாக இருந்து இந்த உலகம் முழுவதையும் ஆண்டவன். இவன் காமுகன். இவனால்தான் உலகில் கலப்பினங்கள் ஏற்பட்டன.-(மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. தர்மமல்லாததைச் செய்யும் மக்களுக்கு அரசன் தண்டனை விதித்து நாட்டில் அதர்மம் செய்பவர்களே இல்லாதபடி செய்ய வேண்டும். இதுதான் மனு சொல்லும் தர்மம்.
வேனனோ தானே அதர்மவானகி, உலகில் அதர்மம் செய்பவர்களுக்கு ஆதரவு கொடுத்தான். இதனால்தான் மக்களிடையே இந்த மாதிரி விலங்கைப் போன்ற பழக்கங்கள்
ஏற்பட்டன. எந்தக் கெட்ட பழக்கமும் மனிதர்களுக்கு ஏற்படாமலேபார்த்துக் கொள்ள வேண்டும். இது உத்தமம்.அப்படி ஏற்பட்டு விட்டால் உடனே அழிக்க வேண்டும். அப்படிச் செய்தால் தான் மற்றவர்களிடமும் அந்தப் பழக்கங்கள் பரவாமல் தடுக்க முடியும். மாறாக அந்தப் பழக்கங்கள் பரவி வேரூன்றி விட்டால் பிறகு அவற்றை மாற்றுவது கடினம். ஆனால்
அவற்றை வேரூன்றச் செய்து விட்டான் வேனன். இதனால் உலகில் இந்த விலங்கு தர்மம் மனிதனிடம் புகுந்தது.)
தத: ப்ரப்ருதியோ மோஹாத் ப்ரமித பதிகாம் ஸ்த்ரியம் நியோஜயத்ய பத்யாஅர்தம் தம் விகர்ஹந்தி ஸாதவ: ||68
விதவா விவாகமும், அல்லது அவர்களுக்கு சந்ததியைக் கொடுப்பதும் சாதுக்களால் தூஷிக்கப்படுகின்றன. ஆனால் வேனன் அரசாண்ட காலத்திலிருந்து பல குடும்பங்களில் அவை பாரம்பரிய பழக்கங்களாகி விட்டன.)
யஸ்யா ம்ரியேத கந்யாயா வாசா ஸத்யே க்ருதே பதி: |
தாமநேந விதாநேந நிஜோ விந்தேத தேவர: || 69
ஒரு கன்னிகையை ஒருவனுக்குக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்த பிறகு அவன் இறந்து விட்டால், அவன் தம்பி அவளை இந்த விதிமுறைகளுக்குட்பட்டு அடையலாம்.
யதா வித்யதிகம்யைநாம் ஷுக்லவஸ்த்ராம் ஷூசிவ்ரதாம் | மிதோ பஜேதா ஆப்ரஸவாத் ஸக்ருத்ஸக்ருதாஅருதௌ || 70
அப்பெண்ணை, அந்த மைத்துனன் மணந்து கொண்டு, வெள்ளை ஆடை பூண்டு, உடலாலும் மனத்தாலும் சுத்தமாக இருக்கின்ற அவளை, அவள் கர்ப்பமடையும்வரை, ஒவ்வொரு
முறையும் அவள் ருது ஸ்நானம் செய்த பிறகு அடைய வேண்டும்.
ந தத்வா கஸ்யசித் கந்யாம் புநர் தத்யாத் விசக்ஷண: | தத்வா புந: ப்ரயச்சந்ஹி ப்ராப்நோதி புருஷா அந்ருதம்|| 71
பெண்ணின் தந்தை வாக்குதத்தம் (என் பெண்ணை உனக்கு மணமுடித்துக் கொடுக்கிறேன் என்று வாக்களிப்பது) செய்த பிறகு, அவன் இறந்து விட்டால், வேறொருவனுக்கு அந்த கன்னிகையைக் கொடுக்கலாகாது. அவ்வாறு செய்பவன் புருஷா அங்ருதம் என்னும்
தோஷத்துக்கு ஆளாகிறான்.
விதிவத் ப்ரதிக்ருஹ்யா அபித்யஜேத் கந்யாம் விகர்ஹிதம் 1
வ்யாதிதாம் விப்ரதுஷ்டாம்வா சத்மநாசோபபாதிதாம் || 72
விதிப்படி ஒரு கன்னிகையை மணந்திருந்தாலும், அவள் வியாதிக்காரியாகவோ, தீயவளாகவோ இருந்து ஏமாற்றி, விஷயத்தை மறைத்து மணம் புரிவித்திருந்தால் அது செல்லாது. அந்தப் பெண்ணை விட்டு விடலாம்.
யஸ் து தோஷவதீம் கந்யாமநாக்யாயோப பாதயேத் |
தஸ்ய தத் விததம் குர்யத் கந்யாதாதுர் துராத்மந: II 73
தோஷங்களுள்ள, குறைகளுள்ள பெண்ணை, அந்தக் குறைகளை மறைத்து கல்யாணம் செய்து கொடுத்த துராத்மாவான அவனுக்கு, அவன் கொடுத்த பரிசப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை.
விதாய வருத்திம் பார்யாயா: ப்ரவஸேத் கார்யவாந் நர: |
அவருத்தி கர்ஷிதா ஹி ஸ்த்ரீப்ரதுஷ்யேத் ஸ்திதிமத்யபி || 74
ஒருவன் ஏதோ காரியமாக அயல்நாடு போக வேண்டியிருந்தால், தான் வருவதற்கு பல நாட்களாகும் என்னும்போது, அது வரை தன் மனைவி பிள்ளைகளுக்குத் தேவையான உணவு உடை மற்றசெலவுகளுக்கு வேண்டிய அளவு பொருள் வசதி செய்துவிட்டுப்
போக வேண்டும். நல்ல பெண்ணாயினும்கூட உணவுக்காகவும் உடைக் காகவும் வெளியே சென்று வேலை பார்க்க நேரும்போது, தகாதவர்களால் துன்பம் ஏற்பட்டு, அவளும் குடும்பமும் சிதறிப் போக வாய்ப்பு ஏற்படும்.
விதாய ப்ரோஷிதே வ்ருத்திம் ஜீவேந் நியமமாஸ்திதா | ப்ரோஷிதே த்வவிதாயைவ ஜீவேத் சில்பைரகர்ஹிதை: II 75
அவ்வாறு கணவன் தேவையான ஏற்பாடுகளைக் குறைவின்றிச் செய்துவிட்டு அயல்நாடு போயிருக்கும்போது, அவன் வரும்வரை இருப்பதை வைத்துக்கொண்டு நியமமாக வாழ வேண்டும்.-வாழ்க்கைக்குத் தேவையான பொருள் வசதி குறைந்தால், சிறு கைத்தொழில்களைச் செய்து சம்பாதித்து வாழ வேண்டும்.
ப்ரோஷிதோ தர்மகார்யார்தம் ப்ரதீஷ்யோ அஷ்டௌநர: ஸமா: I
வித்யா அர்தம் ஷட் யஷோ அந்தம் வாகாமார்தம் த்ரீ ஸ் து வத்ஸராந்| 76
தர்ம காரியங்களைச் செய்வதற்காக தொலைதூரம் சென்ற கணவன் வராவிட்டால் எட்டு ஆண்டுகள் வரை மனைவி காத்திருந்து பார்க்க வேண்டும். படிப்பதற்காகவும் புகழ் தேடவும்
சென்ற கணவன் வருகைக்காக ஆறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். வேறொரு பெண்ணை நாடிச் சென்றவன் வருகைக்காக மூன்றாண்டுகள் காத்திருந்து பார்க்க வேண்டும்..
ஸம்வத்ஸரம் ப்ரதீக்ஷேத த்விஷந்தீம் யோஷிதம் பதி: 1
ஊர்த்வம் ஸம்வத்ஸராத் த்வேநாம் தாயம் ஹ்ருத்வா ந ஸம்வஸேத்|| 77
தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மனைவிக்காக, கணவன் ஒரு வருடம்காத்திருக்க வேண்டும். அதற்கு மேல் அவளை விட்டு விடலாம்.ஆனால் அவளுக்குக் கொடுத்த பொருளை திரும்பி வாங்கிக் கொள்ளக் கூடாது.
அதிக்ராமேத் ப்ரமத்தம் யாமத்தம் ரோகா ஆர்தமேவ வா
ஸாத்ரீந் மாஸாந் பரித்யாஜ்யா அவிபூஷணபரிச்சதா |||78
கணவன் தன் மனத்துக்குப் பிடித்தவனாக இல்லாவிடினும், மனைவி அவனைக் கவனித்துக் கொள்ளவே வேண்டும். அதே போன்று அவன் நோயுற்றிருக்கும்போதும், போதை நிலையில் இருக்கும்போதும் அவனை கவனித்துக் கொள்ளாமல் அவமானப் படுத்துபவளை மூன்று மாதங்கள் பொறுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அவளுக்குக் கொடுத்த ஆபரணங்களை எடுத்துக் கொண்டு, அவளை விட்டுவிட வேண்டும்.
உன்மத்தம் பதிதம் க்லீபமபீஜம் பாபரோகிணம் |
நத்யாகோ அஸ்தி த்விஷந்த்யாஷ் சநச தாயா அபவர்தநம்|| 79
பைத்தியக்காரன், மகாபால், நபும்சகன், ஆண்மையற்றவன், குஷ்டம் போன்ற பாப ரோகங்களையடைந்தவன் – இத்தகையவரை மனைவி கவனிக்காவிட்டாலும், அவளை வெளியேற்றவும் கூடாது; அவளுடைய தனத்தை திரும்பப் பெறவும் கூடாது.
மத்யாபா அசாதுவருத்தா ச ப்ரதிகூலா ச யாபவேத் |
வ்யாதிதா வாஅதி வேத்தவ்யா ஹிம்ஸ்ரா அர்தக்நீ ச ஸர்வதா|| 80
குடிகாரி, தீய நடத்தை கொண்டவள், கணவனிடம் எதிரியைப் போல் நடந்து கொண்டு,எதிரிடையான காரியங்களையும் செய்பவள், குஷ்டம் போன்ற கொடிய வியாதிக்காரி, குடும்பத் திலுள்ளவர்களை எப்போதும் வேதனைப்படுத்துபவள், சம்பாத்தியம் முழுவதையும் வீண் செலவு செய்து பா டிக்கும் ஊதாரி இத்தகையவளை விட்டு விடலாம்.
வந்த்யா அஷ்டமே அதிவேத் யாஅப்தே தஷமே து ம்ருதப்ரஜா | ஏகாதஷே ஸ்த்ரீ நநீ ஸத்யஸ் த்வ ப்ரியவாதிநீ |-81
மனைவி மலடியாக இருந்தால் எட்டு ஆண்டுகள் வரை குழந்தை பிறக்கிறதா என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். அதற்கு மேல் இன்னொரு பெண்ணை மணம் புரிந்து கொள்ளலாம்.-குழந்தை பிறந்து பிறந்து இறக்கிறது அல்லது கர்ப்பச் சிதைவுஏற்படுகிறது என்றால் பத்து ஆண்டுகள் காத்திருந்து பார்த்து, பிறகும் சந்ததி இல்லையெனில் இன்னொரு பெண்ணைத் திருமணம் புரிந்துகொள்ளலாம். பெண்குழந்தைகளை மட்டுமே பெறுபவளாக இருப்பின்பதினொரு ஆண்டுகள் காத்திருந்து பார்த்தும் ஆண் சந்ததி பிறக்காவிடில், இன்னொருபெண்ணைத் திருமணம் புரிந்து கொள்ளலாம். எப்போதும் பிரியமற்றதான நிஷ்டூரப் பேச்சுக்களைப் பேசும் பெண்ணைஉடனடியாக விட்டு விடலாம்.
யா ரோகிணீ ஸ்யாத்து ஹிதா ஸம்பந்நா சைவ ஷீலத: |
ஸாஅனுஞாப்யா அதிவேத்தவ்யா நாஅவமாந்யா ச கர்ஹிசித்|| 82
கணவனுக்கு ஹிதத்தைச் செய்பவளாயும், கற்பிற் சிறந்தவளுமான மனைவி, நோயாளியாகிவிட்டால், அவள் அனுமதி பெற்று இன்னொரு பெண்ணை மணக்கலாம். ஆனால் எப்போதும்அவளை அவமானப்படுத்தலாகாது.
அதிவிந்நா து யா நாரீ நிர்கச்சேத் ருஷிதா க்ருஹாத் |
ஸா ஸத்ய: ஸந்நிரோத்தவ்யா த்யாஜ்யாவா குலஸந்நிதெள|| 83
பொதுவாக இரண்டாம் மணம் புரிந்ததும், மூத்த மனைவி மிகவும் கோபத்தோடு நடந்து கொண்டால், அவள் கோபத்தைத் தணிக்கப் பார்க்க வேண்டும். அது இயலாத பட்சத்தில் அவளது பெற்றோரிடம் அனுப்பி வைக்க வேண்டும்.
ப்ரதிஷித்தா பிபேத் யா து மத்யமப்யுதயேஷ்வபி |
ப்ரேக்ஷாஸமாஜம் கச்சேத் வா ஸா தண்ட்யா க்ருஷ்ணலாநி ஷட்|| 84
தடுத்தும் கேளாமல் குடித்து விட்டு, எல்லோரும் கூடும் இடங்களில் கூத்து, ஆடல், பாடல் முதலான களியாட்டங்களில் ஈடுபடுபவளுக்கு ஆறு குன்றிமணிப் பொன் அபராதம் விதிக்கவேண்டும்.
யதி ஸ்வாஷ் சாஅபராஷ் சைவ விந்தேரந் யோஷிதோ த்விஜா: 1
தாஸாம் வர்ணக்ரமேண ஸ்யாஜ் ஜ்யைஷ்யம் பூஜாச வேஷ்மச | 85
பிராம்மண க்ஷத்ரிய வைசியர்கள் தங்கள் இனத்துப் பெண்களையும், வேறு இனத்துப் பெண்களையும் மணம் புரிந்து கொண்டிருந்தார்களானால்,முதன்மையான கௌரவம், வீடு,
ஆடை ஆபரணங்களை வர்ணாஸ்ரமங்களுக்குத் தக்கபடி முதலில் பிராம்மண மனைவிக்கும், அடுத்து க்ஷத்ரிய மனைவிக்கும், அடுத்து வைசிய மனைவிக்கும், அடுத்து சூத்திர மனைவிக்கும் வழங்க வேண்டும்.
பர்து: ஷரீரஷுஷ்ரூஷாம் தர்மகார்யம் ச நைத்யகம் |
ஸ்வா சைவ குர்யாத் ஸர்வேஷாம் நாஅந்வஜாதி: கதஞ்சந || 86
கணவனுக்குச் செய்யும் சரீர சிக் ஷைகளை (கால் பிடித்து விடல், எண்ணெய் தேய்த்து விடல்) சொந்த இனத்து மனைவியே செய்ய வேண்டும் . அதேபோன்று ஒருவன் செய்யும் தர்ம காரியங்களுக்கு உடனிருப்பவளும் அவன் இனத்து மனைவியாக
இருக்க வேண்டும். அந்நிய இனத்துப் பெண் எந்நாளும் இதையெல்லாம் செய்யக்கூடாது.
யஸ் து தத் காரயேந் மோஹாத் ஸஜாத்யா ஸ்திதயா அந்யயா
யதா ப்ராஹ்மண சாண்டால: பூர்வத்ருஷ்டஸ் ததைவ ஸ: || 87
தன் இனத்து மனைவி இருக்கும்போது, மோகத்தால் அன்னிய இனத்து மனைவியைக் கொண்டு சரீர சிச்ருஷைகளை, பணி விடைகளை செய்து கொள்பவன், பிராம்மண சண்டாளனுக்கு சமமாவான். அதாவது பிராம்மணப் பெண்ணுக்கும் சூத்திரனுக்கும்
பிறந்தவனுக்கு சமமாவான்.
உத்க்ருஷ்டாயா அபிரூபாய வராய ஸத்ருஷாய ச 1 அப்ராப்தாமபி தாம் தஸ்மை கந்யாம் தத்யாத் யதாவிதி 11 88
பதவி முதலியவற்றால் உயர்ந்தவனாகவும், நல்ல ரூபமுடையவனாகவும், குணநலன் மிக்கவனாகவும், தனக்கு சரிசமமானவனுமான வரன் கிடைத்தால்,தன் மகள் சிறு வயதினளாக இருந்தாலும் அவனுக்கு முறைப்படி மணமுடித்துக் கொடுக்கலாம்.
காமமா மரணாத் திஷ்டேத் க்ருஹே கந்யர்து மத்யபி 1
நசைவைநாம் ப்ரயச்சேத் து குணஹீநாய கர்ஹிசித் || 89
குணங்கெட்டவனுக்கு எக்காரணத்தைக் கொண்டும் தன் கன்னிகையை மணமுடித்துக் கொடுக்கக்கூடாது. அவளுக்குத் திருமணமாகாமலே போய் மரண பரியந்தம் தன் வீட்டிலேயே இருந்தாலும் இருக்கட்டும் என்று நினைக்காலாமே தவிர எப்படியேனும் கல்யாணமானால் போதுமென்று கெட்டவனுக்குத் திருமணம் செய்து கொடுக்கலாகாது.
த்ரீணி வர்ஷாண்யுதீக்ஷேத குமார்ய்ருதுமதீ ஸதீ 1
ஊர்த்வம் து காலாதே தஸ்மாத் விந்தேத ஸத்ருஷம் பதிம்|| 90
ஒரு கன்னிகை, தான் ருதுமதியான பிறகு, தந்தையோ சகோதரனோ தனக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்யாவிடில் மூன்று வருடங்கள் பொறுத்துப் பார்க்க வேண்டும்.
பிறகு தனக்குத் தக்க கணவனைதானே தேடி அடையலாம்.
அதீயமாநா பர்தாரமதிகச்சேத் யதி ஸ்வயம்
நைந: கிஞ்சித்தவா ஆப்நோதி நசயம்ஸா அதிகச்சதி || 91
இவ்வாறாகத் தானே கணவனை அடைந்த பெண்ணுக்கு எந்தப் பாவமும் ஏற்படாது. அவ்வாறே அவளை மணந்தவனுக்கும் எந்தப் பாவமும் ஏற்படாது.
அலங்காரம் நாஆததீத பித்ர்யம் கந்யா ஸ்வயம்வரா |
மாத்ருகம் ப்ராத்ரு தத்தம் வாஸ்தேநா ஸ்யாத் யதிதம் ஹரேத் || 92
அதேசமயம், தானாகத் தன் மணாளனைத் தேடிக் கொண்டவள், தன் பெற்றோரும் சகோதரரும் தனக்குக் கொடுத்த ஆபரணங்களைக் கொண்டு போகக்கூடாது. அதில் அவளுக்கு உரிமையில்லை. கொண்டு போனால், அவள் திருடிக் கொண்டு
போனவளாகவே கருதப்படுவாள்.
பித்ரே ந தத்யாச் சுல்கம் து கந்யாம்ருதுமதீம் ஹரந் |
ஸஹி ஸ்வாம்யாததிக்ரமேத்ருதூநாம் ப்ரதிரோத நாத் || 93
ருதுமதியான பெண்ணை மணப்பவன், அப்பெண்ணின் தந்தைக்கு பரிசத் தொகை எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.-ஏனெனில், ருதுவான பிறகு அம்மகளிடம் அவனுக்கு உரிமையற்றுப் போகிறது.
த்ரிம் த் வர்ஷோத்வஹேத் கந்யாம் ஹ்ருத்யாம் த்வாதஷவார்ஷிகீம்
த்ரயஷ்டவர்ஷோ அஷ்டவர்ஷாம் வாதர்மே ஸீததி ஸத்வர: || 94
ஆண் மகன் தனக்கு முப்பது வயது என்றால் பன்னிரண்டு வயது கன்னியை மணக்கலாம். இருபத்து நான்கு வயது என்றால் எட்டு வயது கன்னிகையை மணக்கலாம்.
இருபத்து நான்கு வயதுக்கு முன்பு ஆண்கள் திருமணம் செய்து கொள்ளத் தேவையில்லை. எந்த வர்ணத்தவராயினும் அவரவர் தமது படிப்பிலும், குலத் தொ லிலும் முழுமையாகத் தேர்ச்சி பெற்று முடித்த பிறகுதான் மணம் புரிந்து கொள்ள வேண்டும்.
தேவதத்தாம் பதிர் பார்யாம் I பதிர் பார்யாம் விந்ததே நேச்சயா ஆத்மந:
தாம் ஸாத்வீம் பிப்ருயாந் நித்யம் தேவாநாம் ப்ரியமாசரந் || 95
மனிதர்களுக்கு, மனைவி என்பவள் தெய்வங்களால் அளிக்கப் படுபவள். தன்னிச்சையாக யாரும் மனைவியை அடைவதில்லை.-தெய்வங்களால் அளிக்கப்பட்ட மனைவியைக் கொண்டு தெய்வ பிரீதியான பூஜைகளை நித்தியமும் செய்ய வேண்டும்.
ப்ரஜநார்தம் ஸ்த்ரிய: ஸ்ருஷ்டா: ஸந்தாநார்தம் சமாநவா: |
தஸ்மாத் ஸாதாரணோ தர்ம: ஸ்ருதெள பத்ந்யா ஸஹோதித: I-96
சந்ததிகளை உற்பத்தி செய்யவே ஆண்களும் பெண்களும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறே அக்னிஹோத்ரம் முதலான பாகங்களும் பூஜைகளும் செய்யவுமே அவர்கள் படைப்பு ஏற்பட்டுள்ளது.
கந்யாயாம் தத்த ல்காயாம் ம்ரியேத யதி ஷூல்கத:
தேவராய ப்ரதாதவ்யா யதி கந்யா அனுமந்யதே || 97
ஒருவனுக்கும் ஒருத்திக்கும் திருமணம் பேசி மணமகனுக்குப் பரிசுப் பணமும் கொடுத்த பிறகு, மணமகன் இறந்து விட்டால், அம்மணமகனின் தம்பிக்கு அவளை மணமுடித்துக் கொடுக்கலாம். ஆனால் அப்பெண் ஒப்புக்கொண்டால் மட்டுமே செய்யலாம்.
ஆத்தீத ந சூத்ரோ அபி ஷூல்கம் துஹிதரம் ததத் |
ஷூல்கம் ஹி க்ருஹ்ணந் குருதே சந்நம் துஹித்ரு விக்ரயம் || 98
ஆனால் சுல்கம் (பரிசம் ) பெற்றுக்கொண்டு பெண்ணைக் கொடுப்பது என்பது சாஸ்திர சம்மதமானதன்று. சூத்திரனும்கூட அதைச்செய்யக்கூடாது. விலைக்குரிய தொகையை வாங்கிக் கொண்டு, பெண்ணை விற்றதற்கே அது சமம்.
ஏதத் து நபரே சக்ரூர் நா அபரேஜாது ஸாதவ:
யதந்யஸ்ய ப்ரதிஞாய புநரந்யஸ்ய தீயதே || 99
அதேபோன்று, ஒருவனுக்குக் கொடுப்பதாக வாக்களித்தபெண்ணை இன்னொருவனுக்குக் கொடுப்பதை, நல்லவர்கள் யாரும் செய்வதில்லை.
நா அனுஷுஷ்ரும ஜாத்வேதத் பூர்வேஷ்வபி ஹி ஜன்மஸு |
ஷுல்க ஸம்ஞேந பூல்யேந சந்நம் துஹித்ரு விக்ரயம் || 100
இதற்கு முன் நம் முன்னோர்கள் யாரும் இவ்வாறு ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு பெண்ணை விற்கும் இழிசெயலைச் செய்ததில்லை.
அந்யோ அந்யஸ்யா அவ்யபீசாரோ பவேதாமரணா அந்திக: |
ஏஷ தர்ம: ஸமாஸே ஞேய: ஸ்த்ரீபும்ஸயோ: பர: // 101
கணவனும் மனைவியும் அந்யோந்யமாக, கற்புநிலை பிறழாதவர்களாக மரணம் வரை வாழ்வதே மேலான தர்மமாகும்.
ததா நித்யம் யதேயாதாம் ஸ்த்ரீபும்ஸௌ து க்ருதக்ரியௌ |
யதா நா அபிசரேதாம்தெள வியுக்தாவிதரேதரம் || 102
ஆணும் பெண்ணும் திருமணம் புரிந்து கொண்டு, ஒருவரை விட்டு ஒருவர் இணைபிரியாமல், தினமும் கிருஹஸ்தன் செய்ய வேண்டிய தர்மங்களைச் செய்ய வேண்டும்.
ஏஷ ஸ்த்ரீபும்ஸ யோருக்தோ தர்மோ வோ ரதிஸம்ஹித:
ஆபத்ய பத்யப்ராப்திஷ் ச தாயபாகம் நிபோதத || 103
இதுவரை தம்பதியர் நடத்த வேண்டிய இல்ல. தர்மத்தைக் கூறினேன். சந்ததியற்றுக் குலம் நசிக்கும் நிலையில் சந்ததியைப் பெறுவது குறித்தும் கூறினேன். இனி பாகப்பிரிவினை முறைகளைப் பற்றிக் கூறுகிறேன், கேளுங்கள்:
ஊர்த்வம் பிதுஷ்ச மாதுஷ்ச ஸமேத்ய ப்ராதர: ஸமம் 11
பஜேரந் பைத்ருகம் ரிக்தமநீஷாஷ் தே ஹி ஜீவதோ:|| 104
தாயும் தந்தையும் இறந்த பிறகு சகோதரர்கள் சொத்தைப் பிரித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உயிரோடிருக்கும்போது, சொத்தில் பிள்ளைகளுக்கு எந்த உரிமையும் கிடையாது.
ஜ்யேஷ்ட ஏவ து க்ருஹ்ணீயாத் பித்ர்யம் தமநசேஷத: |
சேஷாஸ் தமுபஜீவேயுர் யதைவ பிதரம் ததா||-105
தாய்தந்தையர் இறந்தபிறகு, அனைத்து சொத்துக்களுக்கும் மூத்த மகன் உரிமையுடையவனாகிறான். மற்றப் பிள்ளைகள் தந்தையிடம் இருந்ததைப் போன்று அவனிடம் இருக்க வேண்டும்.
ஜ்யேஷ்டேந ஜாதமாத்ரேண புத்ரீபவதி மாநவ: |
பித்ருணா மந்ருணஷ் சைவ ஸ தஸ்மாத் ஸர்வமர்ஹதி 106
ஒரு மனிதன், முதன் முதலில் மகனைப் பெற்றதுமே ‘புத்திரவான்’ ஆகிறான். பித்ருக்களின் கடன் தீர்ப்பவனாகிறான். எனவே மூத்த மகனுக்கே அனைத்து உரிமைகளும் இருக்க வேண்டும்.
யஸ்மிந்ந்ருணம் ஸந்நயதி யேந சாஆநந்த்ய மஷ்நுதே |
ஸ ஏவ தர்மஜ: புத்ர: காமஜாநிதராந் விது: || 107
மூத்த மகன் பிறந்ததுமே ஒருவன் பித்ரு கடனைத் தீர்த்தவனாகிறான். தானும் சொர்க்கம் அடைவதற்கு தகுதி பெற்றவ னாகிறான். எனவே அம்மகனே தர்மத்தால் பிறந்தவனாகிறான்.அடுத்துப் பிறந்த பிள்ளைகள் காமத்தால் பிறந்தவர்களாகிறார்கள்.
பிதேவ பாலயேத் புத்ராஞ்ஜ்யேஷ்டோ ப்ராத்ரூந் யவீயஸ: 1 புத்ரவச்சாஅபி வர்தேரஞ் ஜ்யேஷ்டே ப்ராதரி தர்மத: || 108
மூத்தவன், தன் சகோதரர்களை தந்தையைப்போன்று பேணிப் பாதுகாக்க வேண்டும். சகோதரர்களும் அவனிடம் தந்தையிடம்மகன்கள் நடந்து கொள்வதைப் போன்று நடந்து கொள்ள வேண்டும்.
ஜ்யேஷ்ட: குலம் வர்தயதி விநாஷயதி வா புந: 1
ஜ்யேஷ்ட: பூஜ்யதமோ லோகே.ஜ்யேஷ்ட: ஸத்பிரகர்ஹித: I-109
குலம் மேன்மேலும் சிறப்பதற்கும் மூத்தவனே காரணம்; குலம் நசித்துப் போவதற்கும் மூத்தவனே காரணம். குலம் விளங்கச் செய்யும் மூத்தவன் உலகத்தாரால் போற்றப்படுவான். சாதுக்களின் நிந்தனைக்கு ஆளாகமாட்டான்.
யோஜ்யேஷ்டோ ஜ்யேஷ்டவ்ருத்தி: ஸ்யாந்மாதேவஸ பிதேவ : |
அஜ்யேஷ்டவ்ருத்திர் யஸ்து ஸ்யாத் ஸ ஸம்பூஜ்யஸ் து பந்துவத் || 110
பெற்ற தந்தையைப் போன்று தம்பிகளிடம் நடந்து கொள்பவனிடம் தம்பிகளும் அவனிடம் பிதாவிடம் நடப்பது போல் நடந்து கொள்ள வேண்டும். அப்படியில்லாமல் இருப்பவனிடம் ஒரு பந்துவிடம் நடந்து கொள்வதுபோல் நடந்து கொள்ள வேண்டும்.
ஏவம் ஸஹ வஸேயுர் வா ப்ருதக் வா தர்மகாம்யயா |
ப்ருதக் விவர்ததே தர்மஸ் தஸ்மாத் தர்ம்யா ப்ருதக் க்ரியா || 111
இவ்வாறு உடன் பிறந்த சகோதரர்கள் சேர்ந்து ஒரு குடும்பமாக வசிக்கலாம். அல்லது பாகப்பிரிவினை செய்து கொண்டு தனித்தனியாகவும் வசிக்கலாம். பிரித்துக் கொண்டவர்கள் தனித்தனியாக யாகங்களையும் பூஜைகளையும் தர்ம காரியங்களையும் நிகழ்த்தும் போது தர்மம் மேலும் விரிவடைவதால், பாகப்பிரிவினை தர்ம சம்மதமானது.
ஜ்யேஷ்டஸ்ய விம்ஷ உத்தார: ஸர்வத்ரவ்யாச்ச யத்வரம் |
ததோ அர்தம் மத்யமஸ்யாத் துரீயம் துயவீய : || 112
மொத்த சொத்தில், அனைவரையும் காப்பாற்றுபவனான மூத்த மகனுக்கு ஒரு தனிப்பங்கை கொடுக்க வேண்டும். இதற்கு உத்தாரம் என்று பெயர். இது எவ்வளவு என்று பார்ப்போம். மொத்த சொத்தில் இருபதில் ஒரு பங்கை இவ்வாறு உத்தாரமாக மூத்தவனுக்குக் கொடுத்துவிட வேண்டும். மத்யமனுக்கு, மூத்தவனுடைய உத்தார சொத்தில் பாதியைக் கொடுக்க வேண்டும். கடைசி மகனுக்குஉத்தார சொத்தின் அளவில் கால் பங்கைக் கொடுக்க வேண்டும். மூத்தவனுக்குக் கொடுக்கும் உத்தார பங்கில் சொத்தில் விலை மதிப்புள்ளவை இடம் பெற வேண்டும். மீதியுள்ளசொத்தை எத்தனை பேர் சகோதரர்களோ அத்தனை சமபாகங்களாகப் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். உத்தார பாகத்தோடு இந்த சமபாகமும் மூத்தவனுக்கும், மத்தியமனுக்கும், கனிஷ்டனுக்கும் கிடைக்கும்.
ஜ்யேஷ்டஷ்சைவ கநிஷ்டஷ்ச ஸம்ஹரேதாம் யதோதிதம் |
யே அந்யே ஜ்யேஷ்ட கநிஷ்டாப்யாம் தேஷாம் ஸ்யாந் மத்யமம் தநம்| 11:31
இவ்வாறான பாகப்பிரிவினையில் உத்தார பாகம் போக மீதியை பங்கிட்டுக் கொள்ளும்போது, அது சமமாகவே பிரிக்கப்பட வேண்டுமேயன்றி, அதில் பெரியவன் சிறியவன் என்று பார்க்கக்கூடாது.
ஸர்வேஷாம் தநஜாதாநாமாததீதா அகிர்யக்ர : |
யச்ச ஸா அதிஷயம் கிஞ்சித் தஷதஷ் சாஆப்னுயாத் வரம்|| 114
மொத்த சொத்திலும் உயர்ந்தது மூத்தவன் பங்காகும். அதாவது குதிரைகளைப் பங்கிட்டுக் கொள்ளும்போது உயர்ந்த ஜாதிக் குதிரை மூத்தவன் பங்காகும். இவ்வாறே உயர்ந்த ரத்தினம், நல்ல விளைநிலம் என்று சிறந்தவை அவன் பங்காகப் போகும். இப்படி
உயர்ந்தவை பத்துக்கு ஒன்று வீதம் அவன் பங்காகும். அதாவது அவனுக்குரிய பாகத்தில் இது சேரும்.
உத்தாரோ ந தஷஸ்வஸ்தி ஸம்பந்நாநாம் ஸ்வகர்மசு
யத்கிஞ்சிதேவ தேயம்து ஜ்யாயஸே மாநவர்தநம் || 115
சகோதரர்களில் எல்லோரும் மேன்மையானவர்களாக கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக இருந்தால், மூத்தவனுக்கு கௌரவத் துக்காக சிறிது பங்கை கொடுத்துவிட்டு மீதியை அனைவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம்.
ஏவம் ஸமுத்திருதோத்தாரே ஸமாநம்ஷாந் ப்ரகல்பயேத் |
உத்தரோ அனுத்த்ருதே த்வேஷாமியம் ஸ்யாதம்ஷகல்பநா || 116
பாகப் பிரிவினையில் இதுவரை கூறிய முறைப்படியும் பிரித்துக் கொள்ளலாம். அல்லது வேறு முறையிலும் பிரித்துக் கொள்ளலாம்.
ஏகாஅதிகம் ஹரேஜ் ஜ்யேஷ்ட: புத்ரோ அத்யர்தம் ததோ அனுஜ: |
அம்ஷமம்ஷம் யவீயாம்ஸ இதி தர்மோ வ்யவஸ்தித: || 117
பாகத்தில் மூத்தவனுக்கு இரண்டு பங்கு கொடுக்க வேண்டும். அடுத்தவனுக்கு ஒன்றரை பங்கு கொடுக்க வேண்டும். மற்ற அனைவரும் ஒவ்வொரு பாகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது தர்மத்துக்குட்பட்ட பங்கீடு.
ஸ்வேப்யோ அம்ஷேப்யஸ்து கந்யாப்ய: ப்ரதத்யுர் ப்ராதர: ப்ருதக்|
ஸ்வாத்ஸ்வாதம்ஷாச் சதுர்பாகம் பதிதா: ஸ்யுரதித்ஸவ: |-118
பாகப் பிரிவினை செய்து கொள்ளும்போது, திருமணமாகாத சகோதரிகள் இருந்தால், சகோதரர்கள் தங்கள் தங்கள் பாகத்திலிருந்து நாலில் ஒரு பங்கை அப்பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்..
அஜா அவிகம் ஸைகஷபம் நஜாது விஷமம் பஜேத் |
அஜா அவிகம் து விஷமம் ஜ்யேஷ்டஸ்யைவ விதீயதே 119
குதிரை, ஆடு, பசு போன்றவை பங்கிட முடியாத எண்ணிக்கையில் இருந்தால் அதை மூத்தவனே எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது இருபது குதிரைகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதை ஒன்பது பங்கு போடுகிறார்கள். ஆளுக்கு இரண்டு போக மீதி இரண்டு குதிரைகள் இருக்கும். இதை மூத்தவன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
யவீயாஞ் ஜ்யேஷ்டபார்யாயாம் புத்ரமுத்பாதயேத் யதி 11
ஸமஸ் தத்ர விபாக: ஸ்யாதிதி தர்மோ வ்யவஸ்தித: ||| 120
மூத்தவனின் மனைவி, தன் மைத்துனன் மூலமாக புத்ரோத்பத்தி செய்திருந்தால், மூத்தவனுக்குக் கூடுதல் பாகம் கிடையாது.சம பாகம்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உபஸர்ஜநம் ப்ரதாநஸ்ய தர்மதோ நோபபத்யதே |
பிதா ப்ரதாகம் ப்ரஜநே தஸ்மாத் தர்மேண தம் பஜேத் 121
சந்ததி பெறுவதில் தந்தைக்கே பிரதான ஸ்தானம். எனவே இப்படிப் பிறந்தவன் தர்மத்தினைக் கொண்டு பார்க்கும்போது தந்தையின் உத்தாரம் என்னும் தனிப்பங்கை பெறுவது தர்மமல்ல. எல்லோரையும் போன்று சம பங்குக்கே உரியவன்.
புத்ர: கநிஷ்டோ ஜ்யேஷ்டாயாம் கநிஷ்டாயாம் ச பூர்வஜ: | கதம் தத்ர விபாக: ஸ்யாதிதி சேத் ஸம்ஷயோ பவேத் || 122
ஒருவனுக்கு தாரங்கள் பல இருக்கும்போது, இளைய மனைவிக்கு முதலில் பிள்ளை பிறந்திருக்கலாம். மூத்த தாரத்துக்கு அதன் பிறகு பிள்ளை பிறந்திருக்கலாம். இப்படியிருக்கும்போது மூத்த மகன் என்று யாருக்குப் பாகப் பிரிவினையில் உத்தாரம் என்ற
கூடுதல் சொத்தை எடுத்துக் கொள்வது என்ற சந்தேகம் ஏற்படுமல்லவா?
ஏகம் வ்ருஷபமுத்தாரம் ஸம்ஹரேத ஸ பூர்வஜ: 1
ததோ அபரே ஜ்யேஷ்டவ்ருஷாஸ் ததூநாநாம் ஸ்வமாத்ருத: II 123
மூத்த தாரத்துக்குப் பிறந்த மகன், வயதில் இளையவனாயினும் கூட அவன் ஜேஷ்டனேயாவான். அதாவது அவனே மூத்தவனுக்குரிய மரியாதையை, பங்கைப் பெற வேண்டும்.
ஜ்யேஷ்டஸ் து ஜாதோ ஜ்யேஷ்டாயாம் ஹரேத் வ்ருஷபஷோடஷா: |
தத: ஸ்வமாத்ருத: சேஷா பஜேரந்நிதி தாரணா || 124
மூத்த மனைவியிடம் பிறந்த மூத்த மகனுக்கு இருக்கும் சொத்தில் மேலானதாக பதினாறு பாகம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு அடுத்த மனைவியின் பிள்ளைகளும், அதற்கடுத்த மனைவியின் பிள்ளைகளும் மீதியுள்ளவற்றை பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.
ஸத்ருஷ: ஸ்த்ரீஷு ஜாதாநாம் புத்ராணாமவிசேஷத: |
நமாத்ருதோ ஜ்யைஷ்ட்யமஸ்தி ஜன்மதோ ஜ்யைஷ்ட்யமுச்யதே|| 125
ஒருவனுடைய மனைவியர் அவனுடைய வர்ணத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தால், இரண்டாவது மனைவியின் பிள்ளைகள், மூன்றாவது மனைவியின் பிள்ளைகள் என்று அந்த வகையில் பாராமல், பிள்ளைகளின் வயதைக் கொண்டேமூத்த தன்மையையும் இளைய தன்மையையும் பார்க்க வேண்டும்.
ஜன்மஜ்யேஷ்டேநசா ஆஹ்வாநம் சுப்ரஹ்மண்யாஸ்வபி ஸ்ம்ருதம் |
யமயோஷ்சைவ கர்பேஷு ஐன்மதோ ஜ்யேஷ்டதா ஸ்ம்ருதா|| 126
பார்வதி பரமேஸ்வரர்களின் மகன் சுப்ரமணியன். சிவபிரானின் வீர்யம், வாயு, அக்னி, கங்கை முதலியோரால் தாங்கப்பட்டு, கடைசியில் சரவணப் பொய்கையில் குழந்தையானது. இதற்கு நீண்ட காலம் பிடித்தது. பார்வதி மண்ணைப் பிசைந்து வைத்து உயிர் கொடுத்த உருவம் விநாயகரானது. முதலில் கர்ப்பமானது சுப்ரமணியர். முதலில் உருவமெடுத்தது விநாயகர். இருவரில் ஜன்மம் முதலில் ஏற்பட்டதால் விநாயகர்
மூத்தவரானார். கர்ப்பம் முதலில் ஏற்பட்டபோதும், அவதாரம் அடுத்து நிகழ்ந்ததால் சுப்ரமணியர் முருகன் இளையவரானார். எனவே வயதில் மூத்தவனுக்கே முதல் தன்மை ஏற்படும்.
அபுத்ரோ அநேந விதிநா சுதாம் குர்வீத புத்ரிகாம் | யதபத்யம் பவேதஸ்யாம் தந் மமஸ்யாத் ஸ்வதாகரம் |1–127
புத்திரர்களில்லாமல் மகள் மட்டும் இருந்தால், அவளை மணம் செய்து கொடுக்கும்போது மாப்பிள்ளையிடம் இவளுக்குப் பிறக்கும் மகனை எனக்கு அளித்துவிட வேண்டும்’ என்று ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அப்படி அப்பெண்ணுக்குப் பிறந்த மகனை தன் வம்சத்தவனாக வளர்த்துத் தன் சொத்துக்களை அவனுக்கு அளிக்க வேண்டும்.
அரசனாக இருந்தால் அரசாட்சியை அளிக்க வேண்டும்.(இத்தகைய ஒப்பந்தத்தோடு மணமுடிக்கப்பட்டவளுக்கு புத்ரிகை’ என்று பெயர். இவளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கு ‘புத்ரிகா புத்ரன்’ என்று பெயர். பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இந்த விதிமுறைப்படி சித்ரவாகனன் என்ற அரசன் மகளான சித்ராங்கதை என்னும் பெண்ணை மணந்தான். அவளுக்குப் பிறந்த பப்ருவாகனன் என்ற மகனை புத்ரிக்கா புத்ரனாக சித்ரவாகனனுக் களித்தான். பப்ருவாகனன் அங்கேயே வளர்ந்து சித்ரவாகனனுக்
கடுத்து அந்நாட்டு அரசனானான்.)
அநேந து விதாநேந புரா சக்ரே அத புத்ரிகா | விவருத்த்யர்தம் ஸ்வவம்ஷஸ்ய ஸ்வயம் தக்ஷ: ப்ரஜாபதி:–128
முன்னர் இந்த விதிமுறையை நன்கு அறிந்தவனான தட்ச பிரஜாபதி தன் வம்சம் விரிவடைவதற்காக, தன் பெண்கள் அனைவரையுமே புத்ரிகா தர்மப்படியே திருமணம் செய்து கொடுத்தான்.
ததௌ ஸ த தர்மாய கஷ்யபாய த்ரயோதஷ |
ஸோமாய ராக்ஞே ஸத்க்ருத்ய ப்ரீதா ஆத்மா ஸப்தவிம்திம் || 129
தட்ச பிரஜாபதி தனது ஐம்பது பெண்களையும் இந்த புத்ரிகா முறையில் திருமணம் செய்து கொடுத்தார். யம தருமனுக்கு பத்து பெண்களையும், கஸ்யப மகரிஷிக்குபதிமூன்று பெண்களையும், சந்திரனுக்கு இருபத்தேழு பெண்களையும் புத்ரிக்கா தர்மப்படி
திருமணம் செய்து கொடுத்தார்.
யதைவா ஆத்மா ததா புத்ர: புத்ரேண துஹிதா ஸமா|
தஸ்யாமாத்மநி திஷ்டந்த்யாம் கதமந்யோ தனம் ஹரேத் || 130
ஒருவனுக்கு அவனுடைய ஆத்மாவே அவனுடைய மகன். மகளும் மகனுக்கு சமமானவள். இந்தப்படி பார்த்தால் மகளும் இவனுடைய ஆத்மாவேதான். எனவே இவனுடைய தனம் மகளைத் தவிர்த்து வேறு யாருக்குக் கிட்ட முடியும்?
மாதுஸ் து யௌதகம் யத் ஸ்யாத் குமாரீபாக ஏவஸ:
தௌஹித்ர ஏவச ஹரேதபுத்ரஸ்யா அகிலம் தனம்||||131
ஒரு பெண்இறந்தால் அவளுடைய ஸ்ரீதனப் பொருள் அவள் பெண்களுக்குச் சேரும். புத்ரிகையாக மணந்தவளுக்கு இந்த ஸ்ரீதனப் பொருளும் வந்து சேரும். மேலும் இவள் மகனான புத்ரிகாபுத்ரனுக்கு இவள் தந்தையின் சொத்தும் வந்து சேரும்.
தௌஹித்ரோ ஹ்யகிலம் ரிக்தமபுத்ரஸ்ய பிதுர் ஹரேத் |
ஸ ஏவ தத்யாத் த்வெள பிண்டெள பித்ரேமாதாமஹாய ச|-132
புத்ரிக்கா புத்ரன் தன் தந்தையின் தனத்தையும் தாய்வழிப் பாட்டனின் தனத்தையும் அடைவான். இருவருக்கும் அவனே சிராத்த காரியங்களைச் செய்ய வேண்டும்.
பௌத்ர தௌஹித்ரயோர் லோகே ந விசேஷோ அஸ்தி தர்மத: 1
தயோர் ஹி மாதாபிதரெள ஸம்பூதெள தஸ்ய தேஹத: ||| 133
மகள் வயிற்றில் பிறந்த பிள்ளை, மகன் வயிற்றில் பிறந்த பிள்ளை இவர்களுக்குள் தர்மத்தின்படி வித்தியாசம் ஏதுமில்லை. மகனின் பெற்றோரும் மகளின் பெற்றோரும் அவர்களே யல்லவா? எனவே மகள் வயிற்றுப் பேரனுக்கும் மகன் வயிற்றுப் பேரனுக்கும்
எந்த வித்தியாசமும் இல்லை.
புத்ரிகாயாம் க்ருதாயாம் து யதி புத்ரோ அனுஜாயதே |
ஸமஸ் தத் ர விபாக: ஸ்யாஜ் ஜ்யேஷ்டதா ந அஸ்திஹி ஸ்த்ரியா:|| 134
ஒருவனுக்கு ஆண் சந்ததி இல்லாமலிருந்து தன் மகளை புத்ரிகையாக திருமணம் செய்து கொடுத்த பிறகு அவனுக்கு ஆண் சந்ததி பிறந்தால், என்ன செய்வது? ஏற்கெனவே பெண்வயிற்றுப் பிள்ளையை வேண்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இப்போது சொந்த மகன் பிறந்து விட்டான். சொத்தை யாருக்கு எவ்வளவு என்று கொடுப்பது? மூத்தவனுக்கு
உத்தாரம் என்ற கூடுதல் பங்கைத் தர வேண்டுமே, அது யாருக்குத் தருவது? அது போக மூத்தவளாகப் பிறந்த பெண்ணுக்கு உத்தார பாகம் உண்டா என்று பார்த்தால் – மூத்தவளாகப் பிறந்திருந்தாலும் பெண்ணுக்கு உத்தார பாகம் கிடையாது. பெண்களுக்கு இந்த உத்தார பாகம் எப்போதுமே கிடையாது..-அடுத்து, புத்ரிகா முறைப்படி பிறந்த பேரனான புத்ரிகா புத்ரனுக்கும், சொந்த மகனுக்கும் சமமாகப் பங்குபிரிக்க வேண்டும்.
அபத்ராயாம் ம்ருதாயாம் து புத்ரிக்காயாம் கதஞ்சந |
தனம் தத் புத்ரிகா பர்தா ஹரேதைவா அவிசாரயந்|-135
புத்ரிகையாக ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்ட பெண்சந்ததிகளை அடையாமலே இறந்து போனால் அப்போது என்ன செய்வது? சொத்தில் யாருக்கு உரிமை? பெண்ணை மணந்த மாப்பிள்ளைக்கே சொத்தில் முழு உரிமையும் உண்டு. இதில் சந்தேகமேயில்லை.
அக்ருதா வா க்ருதா வாபி யம் விந்தேத் ஸத்ருஷாத் சுதம் 11
பௌத்ரீ மாதாமஹஸ் தேந தத்யாத் பிண்டம் ஹரேத் தநம்|| 136
புத்ரிகையாக ஒப்பந்தம் செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும், அவளின் தந்தைக்கு ஆண் சந்ததி இல்லையென்னும்போது அவள் வயிற்று மகனே அவள் தந்தையின் சொத்து மொத்தத்தையும் அடைந்து அந்த தந்தைக்கு (பாட்டனுக்கு) சம்ஸ்காரங்களை செய்ய
வேண்டும்.
புத்ரேண லோகாஞ்ஜயதி பௌத்ரேணா அநந்த்யமஷ்னுதே |
அத புத்ரஸ்ய பௌத்ரேண ப்ரத்நஸ்யா ஆப்நோதி விஷ்டபம் | 137
ஒருவன், புத்திரனைப் பெற்றவுடனே சொர்க்கம் முதலான நல்லுலகங்களை ஜெயித்தவனாகிறான். பௌத்ரன் (பேரன்) பிறந்தவுடன் அவ்வுலகங்களில் நெடுங்காலம் வாழ்பவனாகிறான்.-புத்திரனுக்கு பௌத்திரன் பிறந்தால் (பேரனுக்கு மகன்) சூரிய
லோகத்தை வென்றவனாகிறான்.
புந் நாம்நோ நரகாத் யஸ்மாத் த்ராயதே பிதரம்சுத: |
தஸ்மாத் புத்ர இதி ப்ரோத: ஸ்வயமேவ ஸ்வயம்புவா || 138
புத் என்னும் நரகத்தில் வீழாமல், தந்தையை மகன் காப்பாற்று கிறான் என்பதால் அவனுக்குப் புத்திரன் என்று பெயர் ஏற்படுகிறது என்று பிரம்மதேவர் தாமே தம் திருவாக்கால் கூறியுள்ளார்.
பௌத்ர தௌஹித்ரயோர் லோகே விசேஷோ நோபபத்யதே
தௌஹித்ரோ அபி ஹ்யமுத்ரைநம் ஸந்தாரயதி பௌத்ரவத் |-139
மகனுடைய மகனுக்கும் மகளுடைய மகனுக்கும் பேதம் ஏதும் இல்லை. இருவருமே பரலோக வாசத்தைப் பெற்றுத் தருவார்கள். அதாவது புத்ரிகா புத்ரனும் ஒருவனுக்கு புண்ணிய லோக வாசத்தை பெற்றுத் தருகிறான்.
மாது: ப்ரதமத: பிண்டம் நிர்வபேத் புத்ரிகா சுத: 1
த்விதீயம்து பிதுஸ் தஸ்மாத் த்ருதீயம் தத்பிது: பிது: |-140
புத்ரிகா புத்ரன் சிராத்தம் செய்யும்போது முதலில் தன்னுடைய தாய்க்கும், அடுத்து தாயின் தந்தைக்கும் (தாய்வழிப் பாட்டனுக்கும்),அதற்கு பிறகு அவரின் தந்தைக்கும் (தாய்வழிப் பாட்டனின் தந்தைக்கும்) பிண்டமளிக்க வேண்டும்.
உபபந்நோ குணை: ஸர்வை: புத்ரோ யஸ்யது தத்ரிம: |
ஸஹரேதைவ தத்ரிக்தம் ஸம்ப்ராப்தோ அப்யந்ய கோத்ரத: || 141
ஒருவனுக்குத் தத்தெடுத்துக் கொண்ட உத்தமனான மகனும் சொந்த மகனும் இருக்கும் பட்சத்தில், தத்தெடுத்த மகன் வேறு கோத்திரத்திலிருந்து வந்தவனாயினும்,அவனுக்கும் சொத்தில் பங்குண்டு.
கோத்ரரிக்தே ஐநயிதுர் ந ஹரேத் தத்ரிம: க்வசித் 1
கோத்ரரிக்தா அனுக: பிண்டோ வ்யபைதி ததத: ஸ்வதா 142
தத்தனான மகன், தன்னைப் பெற்றெடுத்த தந்தையின் கோத்திரம் கொண்டவனல்ல. தத்தெடுத்த தந்தையின் கோத்திரக் காரனேயாவான். அவ்வாறே பெற்ற தந்தையின் சொத்தில் இவனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. தத்தெடுத்த தந்தையின் சொத்துக்கே இவன் உரிமை யுடையவனாவான். அதே போன்று பெற்ற தந்தைக்கு இவன் சிராத்தம் செய்ய வேண்டியதில்லை. தத்தெடுத்த தந்தைக்கே சிராத்தம் செய்ய வேண்டும்.
அநியுக்தாஅதஷ் சைவ புத்ரிண்யாஆப்தஷ் ச தேவராத் |
உபௌதௌ நார்ஹதோ பாகம் ஜாரஜாதக காமஜௌ || 143
குழந்தைப் பேறில்லாத விதவை, பெற்றோர் பெரியோர் அனுமதியோடு மைத்துனன் மூலமாக ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று முதலிலேயே கூறப்பட்டிருந்ததல்லவா? அவ்வாறின்றி பெரியோரின் அனுமதி பெறாமல் இம்முறையில்
ஒரு பெண்பெற்ற பிள்ளைக்கும், அல்லது அவர்கள் பெரியோரின் அனுமதியைப் பெற்றிருந்தாலும்கூட, இருவரும் மனத்தால் இணைந்தவர்களாக வாழ்க்கை நடத்தி பெற்ற பிள்ளைக்கும்தந்தையின் சொத்தில் பங்கு கிடையாது. சோரம் போனவள் பெற்ற
பிள்ளை,காமுகி பெற்ற பிள்ளை என்பதால் தந்தையின் சொத்துக்குஅவர்கள் அருகதையற்றவர்கள்.
நியுக்தாயாமபி புமாந் நார்யாம் ஜாதோ அவிதாநத: |
நைவா அர்ஹ: பைத்ருகம் ரிக்தம் பதிதோத் பாதிதோஹி : /-144
பெரியோரால் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இதற்குரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஒழுகிய ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்தவன், தந்தையின் (அப்பெண்ணின் கணவன்) சொத்தில் உரிமை பெற முடியாது. காரணம் பதிதர்களுக்குப் பிறந்தவனாகிறான் இவன்.
(உடல் முழுவதும் நெய்பூசிக்கொண்டு, இருட்டில் வருதல் முதலானவைகளே இங்கு விதிமுறைகள் என்று கூறப்படுகின்றன.)
ஹரேத் தத்ர நியுக்தாயாம் ஜாத: புத்ரோ யதௌரஸ: |
க்ஷேத்ரிகஸ்யது தத்பிஜம் தர்மத: ப்ரஷவஷ் ச ஸ: / 145
முறைப்படி பெரியோரால் அனுமதிக்கப்பட்டு பிறந்தவன் தன் தந்தையின் சொத்தை சொந்த மகனைப் போன்றே அடையலாம்.
தனம் யோ பிப்ருயாத் ப்ராதுர் மருதஸ்ய ஸ்த்ரியமேவ ச |
ஸோ அபத்யம் ப்ராதுருத்பாத்ய தத்யாத் தஸ்யைவ தத்தநம்|-146
பாகப் பிரிவினைக்குப் பின்னர் சகோதரன் இறந்து அவனுக்கு மகனும் இல்லாவிட்டால், பெரியோர் அனுமதியோடு அண்ணன் மனைவிக்கு ஒரு பிள்ளை பிறக்கச் செய்து, அந்த சொத்துக்களைக் காப்பாற்றி அவனுக்களிக்கலாம்.
யோ நியுக்தா அந்யத: புத்ரம் தேவராத் வா அப்யவா ஆப்னுயாத் |
தம் காமஜமரிக்தீயம் வ்ருதோத்பந்நம் ப்ரசக்ஷதே // 147
பெரியோர் அனுமதித்திருந்தாலும், மைத்துனன் மூலமாகவோ மற்றப் பங்காளி மூலமாகவோ காமத்தால் பிள்ளைப் பேற்றை அடைந்திருப்பாளாயின் அந்தப் பிள்ளைக்கு தந்தையின் சொத்தில் உரிமை கிடையாது.
ஏதத் விதாநம் விக்ஞேயம் விபாகஸ்யைக யோநிஷு |
பஹ்வீஷு சைகஜாதாநாம் நாநாஸ்த்ரீஷு நிபோதத ||| 148
இதுவரை கூறிய அனைத்தும் ஒரே குலத்து ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த பிள்ளைகளின் சொத்துரிமை பற்றியது. இனி பிற இனத்துப் பெண்களுக்குப் பிறந்த பிள்ளைகளின் சொத்துரிமையைப் பற்றிப் பார்ப்போம்.
ப்ராஹ்மணஸ்யா ஆனுபூர்வ்யேண சதஸ்ரஸ்து பதி ஸ்த்ரிய: |
தாஸாம் புத்ரேஷு ஜாதேஷு விபாகே அயம் விதி: ஸ்ம்ருத: || 149
பிராம்மணன் நான்கு வர்ணத்து பெண்களையும் மணந்திருந்தால், அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கான பாகப்பிரிவினை முறையைக் கூறுகிறேன்.
கீநாஷோ கோவ்ருஷோ யாநமலங்காரஷ் ச வேஷ்ம ச |
விப்ரஸ் யௌத்தாரிகம் தேயமேகாஅம் ஷஷ் ச ப்ரதாநத: || 150
ஏற்கெனவே மூத்த மகனுக்கு உத்தாரகம் என்னும் வகையில் சொத்தில் கூடுதல் பங்கு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அந்த உத்தாரகம் பிராம்மணப் பெண்ணிடம் பிறந்த புத்ரனுக்குவழங்கப்பட வேண்டும். சிறிய அளவேயான சொத்தாக இருந்தாலும்கூட பசு, காளை, வாகனம்,ஆபரணம், வீடு முதலியவற்றில் பிரதான பாகத்தைபிராம்மணப் பெண்ணுக்குப் பிறந்த மகனுக்கு அளிக்க வேண்டும்.
த்ரயம்ஷம் தாயாத் தரேத் விப்ரோ த்வாவம்ஷெள க்ஷத்ரியாசுத: |
வைஷ்யாஜ: ஸா அர்தமேவா சும்ஷமம்ஷம் சூத்ராசுதோ ஹரேத்|| 151
பாகப் பிரிவினையில், பிராம்மணப் பெண்ணின் மகனுக்கு மூன்று பாகமும், க்ஷத்திரியப் பெண்ணின் மகனுக்கு இரண்டு பாகமும், வைசியப் பெண்ணின் மகனுக்கு ஒன்றரை பாகமும், சூத்திரப் பெண்ணின் மகனுக்கு ஒரு பாகமும் பிரிக்க வேண்டும்.
ஸர்வம் வா ரிக்தஜாதம் தத் தஷதா பரிகல்ப்யச |
தர்ம்யம் விபாகம் குர்வீத விதிநா அநேந தர்மவித் ||-152
இல்லாவிடில், மொத்த சொத்தையும் பத்து பாகங்களாக்கி தர்மமறிந்த அறிஞர்கள் இவ்வாறும் பங்கிடலாம்.
சதுரோ அம்ஷாந் ஹரேத் விப்ரஸ் த்ரீநம்ஷாந் க்ஷத்ரியா சுத: |
வைஷ்யாபுத்ரோ ஹரேத் த்வய்யம்ஷமம்ஷம் சூத்ராசுதோ ஹரேத் || 153
பிராம்மணப் பெண்ணின் மகனுக்கு நான்கு பாகங்களும், க்ஷத்திரியப் பெண்ணின் மகனுக்கு மூன்று பாகமும், வைசியப் பெண்ணின் மகனுக்கு இரண்டு பாகங்களும், சூத்திரப் பெண்ணின் மகனுக்கு ஒரு பாகமும் கொடுக்க வேண்டும்.
யத்யபி ஸ்யாத் து ஸத்புத்ரோ அப்யஸத் புத்ரோஅபி வா பவேத் |
நாஅதிகம் தஷமாத் தத்யாச் சூத்ராபுத்ராய தர்மத: 111 154
மற்றப் பிள்ளைகள் எப்படிப்பட்டவர்களாக இருப்பினும் சூத்திரப் பெண்ணிடம் பிறந்த மகன் உத்தமனாக இருந்தாலும், அவனுக்கு பத்தில் ஒரு பங்கு தருவதே சரியானது.
ப்ராஹ்மண க்ஷத்ரியவிஷாம் சூத்ராபுத்ரோ நரித்தபாக்
யதேவா அஸ்ய பிதா தத்யாத் ததேவாஅஸ்ய தநம் வேத் |-155
பிராம்மண, க்ஷத்ரிய, வைசியப் பெண்களுக்குப் பிறந்த பிள்ளைகளைப் போல் சொத்தில் பாகத்தை சூத்திரப் பெண்ணின் மகன் அடைய முடியாது. தந்தை அவனுக்கு எவ்வளவு சொத்து கொடுக்கிறாரோ அதுவே அவனுடைய சொத்தாகும். (தந்தை உயிரோடிருக்கும்போது பாகப்பிரிவினை நடத்தினால் இத்தகைய முறை)
ஸ்மவர்ணாசு யேஜாதா: ஸர்வே புத்ரா த்விஜன்மநாம் |
உத்தாரம் ஜ்யாயஸே தத்வா பஜேரந்நிதரே ஸமம் ||-156
பிராம்மண,க்ஷத்திரிய, வைசிய வர்ணத்துப் பெண்களிடம் பிறந்த பிள்ளைகள் பாகம் பிரித்துக் கொள்ளும்போது தங்கள் தங்கள் வர்ணத்தில் மூத்தவனுக்கு உத்தாரம் என்ற பிரதானமாக பங்கை அளித்துவிட்டு, பிறகு மற்ற மகன்கள் மீதி சொத்தை சமமாகப்பிரித்துக் கொள்ள வேண்டும்.
சூத்ரஸ்ய து ஸவர்ணைவ நாஅந்யா பார்யா விதீயதே |
தஸ்யாம் ஜாதா: ஸமாம்ஷா: ஸ்யுர் யதி புத்ரஷதம் பவேத் 157 Π
சூத்ரன் தன் வர்ணத்துப் பெண்ணை மட்டுமே மணக்க வேண்டும். அவனுக்கு அவன் வர்ணத்துப் பெண்களிடம் நூறு பிள்ளைகள் பிறந்திருந்தாலும், அத்தனை பேருக்கும் சமமாகவே பாகப் பிரிவினை செய்ய வேண்டும்.
புத்ராந் த்வாதஷ யாநாஹ ந்ருணாம் ஸ்வாயம்புவோ மநு: |
தேஷாம் ஷட் பந்துதாயாதா: ஷட்தாயாத பாந்தவா: || 158
ஸ்வாயம்புவ மனு புத்திரர்களை பன்னிரண்டு வகையினராகக் கூறுகிறார். அவர்கள் ஆறு வகையினர் பந்துக்களும் பங்காளிகளும் ஆவார்கள். மற்ற ஆறு வகையினர் பந்துக்கள் மட்டுமே ஆவார்கள்.
ஒளரஸ: க்ஷேத்ரஜஸ்சைவ தத்த: க்ருத்ரிம ஏவ ச
கூடோத்பந்நோ அபவித்தஷ்ச தாயாதா பாந்தவாஷ்ச ஷட் || 159
ஒளரச புத்திரன், க்ஷேத்ரஜ புத்திரன், தத்த புத்திரன், கிருத்திரமபுத்திரன், கூடோத்பந்ந் புத்திரன், அபவித்த புத்திரன் என்னும் ஆறுவகையான புத்திரர்களும் தந்தையின் சொத்துக்கும், வாரிசில்லாதபங்காளிகளின் சொத்துக்கும் உரிமையுடையவர்கள்.
கா நஷ்ச ஸஹோடஷ்ச க்ரீத பௌநர்பவஸ் ததா
ஸ்வயம் தத்தஷ்ச ஷௌத்ரஷ்ச ஷடதாயாத பாந்தவா: I-160
கானீன புத்திரன், சஹோட புத்திரன், க்ரீத புத்திரன், பவுநர்பவ புத்திரன், சுயதத்த புத்திரன், சௌத்ர புத்திரன் என்னும் ஆறு வகையான புத்திரர்களும் தந்தையின் சொத்துக்கு மட்டுமே உரிமை யுடையவர்கள்.
யாத்ருஷம் பலமாப்நோதி குப்லவை: ஸந்தரஞ்ஜலம்
தாத்ருஷம் பலமாப்நோதி குபுத்ரை: ஸந்தரம்ஸ் தம: || 161
கடக்க முடியாத கடலை, கையில் கிடைத்த கயிற்றைப் பற்றிக் கொண்டு கடக்க நினைப்பவன் கதியை கெட்ட மகனை அடைந்தவன் அடைவான்.
யத்யேகரிக்திநௌ ஸ்யாதாமௌரஸ க்ஷேத்ரஜௌ சுதௌ |
யஸ்யயத் பைத்ருகம் ரிக்தம் ஸ தத் க்ருஹ்ணீத நேதர: | 162
க்ஷேத்ரஜ புத்திரன் பிறந்த பின்னர் ஔரஸ புத்திரன் பிறந்து, க்ஷேத்ரஜனை உண்டாக்கியவனுக்கு அவன் மனைவியிடம் பிள்ளை பிறக்கவில்லை எனில், க்ஷேத்ரஜன் அவன் சொத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒளரச புத்திரன் தன் தந்தையின் சொத்தை
அடைய வேண்டும்.(ஒருவன் தன் மனைவியிடம் தான் பெற்ற பிள்ளை ஒளரசன். தன் மனைவியிடம் மற்றொருவன் மூலமாகப் பெற்ற பிள்ளை க்ஷேத்ரஜன்.)
ஏக ஏவெளரஸ: புத்ர: பித்ர்யஸ்ய வசுந: ப்ரபு: |
சேஷாணா மாந்ருஷம்ஸ்யா அர்தம் ப்ரதத்யாத்து ப்ரஜீவநம் || 163
ஒளரச மகன் பின்னர் பிறந்தவனாயினும், அவனே தந்தையின் சொத்துக்கு உரிமையாளன். மற்றவர்களுக்கு அவர்கள் தேவைக்குத் தக்கபடி பொருளைக் கொடுக்கலாம்.
ஷஷ்டம் து க்ஷேத்ரஜஸ்யா அம்ஷம் ப்ரதத்யாத் பைத்ருகாத் தநாத்
ஔரஸோ விபஐந் தாயம் பித்ர்யம் பஞ்சமமேவ வா||-164
ஒளரச மகன், க்ஷேத்ரஜ மகனுக்கு தந்தையின் தனத்தில் ஆறில் ஒரு பங்கோ, அல்லது ஐந்தில் ஒரு பங்கோதர வேண்டும்.
ஒளரஸ க்ஷேத்ரஜௌ புத்ரௌ பித்ருரிக்தஸ்ய பாகிநௌ |
தஷா அபரேது க்ரமஷோ கோத்ரரித்தா அம்ஷ பாகிந: || 165
ஒளரச,ஷேத்ரஜ புத்திரர்கள் இவ்வாறாக தந்தையின்சொத்துக்கு உரிமையாளர்கள். மற்றவர்கள் கோத்திர தனத்தை பங்கிட்டுக் கொள்ளலாம். அதற்குப் பிறகு தத்தன், அதற்கடுத்து க்ருத்திமன் என்று ஒருவரையடுத்து அடுத்தவர் உரிமை பெறுவார்கள்.
ஸ்வக்ஷேத்ரே ஸம்ஸ்க்ருதாயாம் து ஸ்வயமுத்பாதயேத் தி யம் |
தமௌரஸம் விஜாநீயாத் புத்ரம் ப்ரதமகல்பிதம் || 166
ஒருவன், தன் வர்ணத்தைச் சேர்ந்த பெண்ணை மணந்து அவள் மூலமாகப் பெற்ற மகன் ‘ஒளரசன்’ எனப்படுவான். இவனே பிரதானமான மகன்.
யத் தல்பஜ: ப்ரமிதஸ்ய க்ளீபஸ்ய வ்யாதிதஸ்ய வா |
ஸ்வதர்மேண நியுக்தாயாம் ஸ புத்ர: க்ஷேத்ர : ஸ்ம்ருத: I! 167
ஒருவன் இறந்து போனாலோ,நபும்சகனாக இருந்தாலோ, பிள்ளைப் பேற்றை அடைய முடியாதபடியான குறைபாடுடையவனாக இருந்தாலோ, அவன் மனைவி விதிமுறைப்படி பெரியோர்களால் சொல்லப்பட்டு, மைத்துனன் அல்லது பங்காளியுடன் கலந்து பெற்ற பிள்ளைக்கு ‘க்ஷேத்ரஜன்’ என்று பெயர்.
மாதா பிதா வா தத்யாதாம் யமத்பி: புத்ரமாபதி
ஸத்ருஷம் ப்ரீதி ஸம்யுக்தம் ஸ ஞேயோ தத்ரிம: சுத: || 168
தாயோ, தந்தையோ, அல்லது இருவரும் சேர்ந்தோ தங்கள் மகனை, புத்திரப் பேறு இல்லாதவருக்கோ அல்லது ஆபத்துக் காலத்திலோ பிரீதியோடு ‘இனி இவன் உங்கள் புத்ரன்’ என்று அளித்தால், அப்படி அளிக்கப்பட்ட மகன் தத்தன்’ எனப்படுவான்.
ஸத்ருஷம் து ப்ரகுர்யாத் யம் குணதோஷ விசக்ஷணம் 1
புத்ரம் புத்ரகுணைர் யுக்தம் ஸ விக்ஞேயஸ்ய க்ருத்ரிம: 169
தன் இனத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளை, ஒரு புத்திரனுக்குரிய கடமைகளையும், அக்கடமைகளைச் செய்யாவிடில் ஏற்படும்பாபங்களையும் அறிந்தவனாகவும், உத்தமனாகவும் இருக்கின்ற பட்சத்தில் அவனைத் மகனாக மனதார ஏற்றுக் கொண்டவனுக்கு அவன் ‘க்ருத்திமன்’ என்ற வகை புத்திரனாவான்.
உத்பத்யதே க்ருஹே யஸ்ய நச ஞாயேத கஸ்ய ஸ: 1
ஸக்ருஹே கூட உத்பந்நஸ் தஸ்ய ஸ்யாத் யஸ்ய தல்ப :-170
ஒரு மனைவி பிள்ளையைப் பெற்றால், அக்குழந்தைக்குத் தான் தந்தையில்லை என்று அவள் கணவனுக்குத் தெரிந்து, அப்பிள்ளை யாருக்குப் பிறந்தவன் என்றும் தெரியாதபோது, அப்பிள்ளை அந்தக் கணவனுக்கு ‘கூடோத்பன்னன்’ என்ற பெயர் கொண்ட பிள்ளை யாகிறான்.
மாதா பித்ருப்யாமுத்ஸ்ருஷ்டம் தயோரன்யதரேண வா |
யம் புத்ரம் பரிக்ருஹ்ணீ யாதபவித்த: ஸ உச்யதே|| 171
பெற்றவர்களால் வேண்டாம் என்று கைவிடப்பட்ட பிள்ளையோ, தாயோ தந்தையோ இறந்ததால் விடப்பட்ட பிள்ளையையோ ஒருவன் எடுத்து வளர்த்தால் அப்பிள்ளை
அவனுக்கு ‘அபவித்தன்’ என்ற மகனாவான்.
பித்ருவேஷ்மநி கந்யா து யம் புத்ரம் ஜனயேத் ரஜ: |
தம் காநீநம் வதேந் நாம்நா வோடு: கந்யாஸமுத்பவம்-172
பெற்றோரின் வீட்டில், ஒரு கன்னிப் பெண் கள்ளத் தொடர்பால் பெற்றெடுத்த பிள்ளை, பிறகு அவளை மணந்தவனுக்கு ‘காநீநன்’ என்ற மகனாகிறான்.
யா கர்பிணீ ஸம்ஸ்க்ரியதே ஞாதாஅஞாதாஅபி வா ஸதி |
வோடு: ஸ கர்போ பவதி ஸஹோட இதி சோச்யதே !! 173
கருவுற்றிருக்கும் பெண்ணை, அந்த விஷயம் தெரிந்தோ தெரியாமலோ மணந்தவனுக்கு, அவள் பெற்ற அப்பிள்ளை சகோடன்’ என்ற மகனாவான்.
க்ரீணீயாத் யஸ்த்வபத்யார்த்தம் மாதாபிதோர் யமந்திகாத் |
ஸக்ரீதக: சுதஸ் தஸ்ய ஸத்ருஷோ அஸத்ருஷோ அபி வா I 174
பிள்ளைப்பேறு இல்லாதவன், இன்னொரு தம்பதியிடமிருந்து விலை கொடுத்து ஒரு பிள்ளையை வாங்கிக்கொண்டால், அப்பிள்ளை இவன் தகுதிக்கும் குணநலன்களுக்கும் ஒத்தவனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கிரீதன்’ என்ற மகனாவான்.
யா பத்யா வா பரித்யக்தா விதவா வா ஸ்வயேச்சயா |
உத்பாதயேத் புநர் பூத்வா ஸபௌநர்பவ உச்யதே || 175
ஒரு பெண்கணவனால் கைவிடப்பட்டவளாகவோ அல்லது கணவன் இறந்தவளாகவோ ஆனபிறகு இன்னொருவனை மணந்து பெற்ற பிள்ளை அவனுக்கு ‘பவுநர்பவன்’ என்ற மகனாவான்.
ஸா சேதக்ஷதயோநி: ஸ்யாத் கத ப்ரத்யாகதா அபி வா
பௌணர்பவேந பர்த்ராஸா புந: ஸம்ஸ்காரமர்ஹதி|–176
கணவனால் கைவிடப்பட்டவளாக இருந்து, பவுநர்பவ புத்திரனை இன்னொருவனுக்குப் பெற்றுக் கொடுத்தவள் மீண்டும் தன் கணவனை மறுமண முறைப்படி மணக்கலாம்.
மாதா பித்ருவிஹீநோ யஸ் த்யக்தோ வா ஸ்யாதகாரணாத் |
ஆத்மாநம் ஸ்பர்ஷயேத் யஸ்மை ஸ்வயம் தத்தஸ்து ஸ ஸ்ம்ருத: || 177
தாய் தந்தையற்ற பிள்ளை அல்லது காரணமின்றி பெற்றவர்களால் கைவிடப்பட்ட பிள்ளை தானாக வந்து ஒருவனிடம், தன்னைப் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளுமாறு கூறி, தன்னை
ஒப்படைத்தால் அப்பிள்ளை அவனுக்கு ‘சுயதத்தன்’ என்ற மகனாவான்.
யம் ப்ராஹ்மணஸ்து சூத்ராயாம் காமாதுத்பாதயேத் சுதம் |
ஸ பாரயந்நேவ ஷவஸ் தஸ்மாத் பாரஷவ: ஸ்ம்ருத: || 178
பிராம்மணன், சூத்ரப் பெண்ணிடம் காமம் கொண்டு அதனால் பிறந்த பிள்ளை, சிராத்த கிரியைகள் செய்ய அதிகாரமற்றவன். இத்தகைய பிள்ளைக்கு ‘பாரசவன்’ என்று பெயர்.
தாஸ்யாம் வா தாஸதாஸ்யாம்வா ய: சூத்ரஸ்ய சுதோ பவேத் |
ஸோ அனுஞாதோ ஹரேதம்ஷமிதி தர்மோ வ்யவஸ்தித: || 179
ஒரு சூத்திரனுக்கு அவனது வேலைக்காரியிடமோ அல்லது வேலைக்காரன் மனைவியிடமோ பிள்ளை பிறந்திருந்தால் அவனுக்கு, அந்த சூத்திரன் தன் மற்றப் பிள்ளைகளுக்குக் கொடுப்பது போல் சொத்தில் பாகம் கொடுப்பது தர்மமேயாகும்..
க்ஷேத்ர ஜாதீந் சுதாநேதாநேகா தஷ யதோதிதாந் 1
புத்ரப்ரதிநிதீநாஹு க்ரியாலோபாந் மநீஷிண: || 180
க்ஷேத்ரஜன் முதலான பதினொரு வகைப் பேரும் சொந்தப் புத்திரனுக்குப் பதிலாக, பிரதிநிதியாக இருந்து கிரியைகளைச் செய்யலாம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
ய ஏதேஅபிஹிதா: புத்ரா ப்ரசங்காதன்யபீஜ ஜா: I யஸ்யதே பீஜதோ ஜாதாஸ் தஸ்யதே நேதரஸ்ய து || 181
இவ்வாறு கூறினாலும், தன் சொந்த மகனைப் போன்று, மற்ற வகையில் கூறப்பட்ட மகன்கள் ஆக மாட்டார்கள். தான் பெற்ற மகனே ஒருவனுக்கு கிரியைகளை இயற்றவும், வம்சத்தை வளர்க்கவும் தக்க மகனாவான். வேறு வழியற்றபோது மற்ற வகைப் பிள்ளைகளை ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது..
ப்ராத்ருணாமேகஜாதா நாமேகஷ்சேத் புத்ரவாந் பவேத்
ஸர்வாம்ஸ் தாம்ஸ் தேந புத்ரேண புத்ரிணோ மனுரப்ரவீத் || 182
சகோதரர்களில் ஒருவனுக்கு மட்டும் புத்திரன் இருந்தாலும், அத்தனை சகோதரர்களுக்கும் அவன் புத்திரனே ஆவான் என்று மனு கூறியிருக்கிறார்.
ஸர்வாஸாமேக பத்நீநா மேகா சேத் புத்ரிணீ பவேத் |
ஸர்வாஸ் தாஸ் தேந புத்ரேண ப்ராஆஹ புத்ரவதீர் மனு: 183
ஒருவனுக்கு ஒருசில மனைவியரிருந்து, அவர்களில் ஒருத்திக்குபுத்திரன்பிறந்திருந்தாலும், அம்மனைவியர் அனைவருமே சந்ததி யடைந்தவராகின்றனர் என்று மனு கூறியுள்ளார்.
ஷ்ரேயஸ: ஷ்ரேயஸோ அலாபே பாபீயாந் ரித்தமர்ஹஸி | பஹவஷ் சேத் து ஸத்ருஷா: ஸர்வே ரிக்தஸ்ய பாகிந: |-184
இப்படிப்பட்ட சொந்த மகன் (ஔரசன்) இல்லாதபோது, அதற்கடுத்தடுத்துக் கூறப்பட்ட வகையினரான பிள்ளைகள் சொத்தில் பாகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒளரச புத்திரன் இல்லாதபோது க்ஷேத்ரஜன் சொத்துக்குரியவன். அப்படிப்பட்டவன்
இல்லாதபோது அதற்கடுத்த வகையினனான தத்தனான புத்திரன் சொத்துக்குரியவன்.ஒரே வகையில் பல புத்திரர்கள் இருந்தால் அவர்கள் சொத்துக்கு சமமான உரிமை யுடையவராவர்.
நப்ராதரோ ந பிதர: புத்ரா ரிக்குஹரா பிது: |
பிதா ஹரேதபுத்ரஸ்ய ரிக்தம் ப்ராதர ஏவ ச |-185
ஒருவனுடைய சொத்தில், அவனுடைய தந்தைக்கோ சகோதரர்களுக்கோ உரிமை கிடையாது. அவனுடைய எந்த வகையான புத்திரனும் இல்லை என்னும் போது அவன் இறந்து, அவன் தந்தை உயிரோடிருந்தால், அந்தத் தந்தை அவன் சொத்தை அடையலாம். தந்தை உயிரோடில்லாவிடில் அவன் சகோதரர்கள் அவன் சொத்தைப் பங்கிட்டுக் கொள்ள
வேண்டும்.
த்ரயாணாமுதகம் கார்யம் த்ரிஷு பிண்ட: ப்ரவர்ததே |
சதுர்த: ஸம்ப்ரதாதைஷாம் பஞ்சமோ நோபபத்யதே |-186
மூன்று தலைமுறை வரையில் (தந்தை, தந்தையின் தந்தை. அவரின் தந்தை) பிண்டமளிக்க வேண்டும். நான்காவது தலைமுறைக்கு சம்பிரதாயமாக அளிக்கலாம். ஐந்தாவது தலைமுறைக்கு அளிக்க வேண்டியதில்லை.
அநந்தர: ஸபிண்டாத் யஸ் தஸ்யதஸ்ய தனம் பவேத் |
அத ஊர்த்வம் ஸகுல்ய: ஸ்யாதாசார்ய: சிஷ்ய ஏவ வா || 187
பிண்டமளிப்பவர்களே, இறந்து போன அவர்களுடைய சொத்துக்கு உரிமையுடையவர்கள்.
ஒருவனுக்கு பிண்டதானம் செய்ய உரிமையுடையவர் யாருமில்லாதபோது அவனுடைய ஆசார்யன் இருந்தால் சொத்தை எடுத்துக் கொண்டு பிண்டதானம் செய்யலாம். அல்லது சிஷ்யன் இருந்தால் அவனும் சொத்தை எடுத்துக் கொண்டு பிண்டதானம் செய்யலாம். (சிராத்த காரியங்களைச் செய்யலாம்.)
ஸர்வேஷாமப்யபாவே து ப்ராஹ்மணா ரிக்த பாகிந: |
த்ரைவித்யா: சுசயோ தாந்தாஸ் ததா தர்மோ ந ஹீயதே |188
இப்படியும்கூட யாருமில்லாதபோது, அதாவது ஆசார்யனும் சிஷ்யனும்கூட இல்லாதபோது, மூன்று வேதங்களும் அறிந்தவர்களும், உள்ளும்புறமும் தூய்மையானவர்களும், புலனடக்கம் மிக்கவர் களுமான பிராம்மணர்கள் அந்த சொத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்த சொத்தை எடுத்துக் கொண்டவன், சொத்துக் குடையவனுக்கு பிண்டதானம் வழங்க வேண்டும்.
அஹார்யம் ப்ராஹ்மண த்ரவ்யம் ராக்ஞா நித்யமிதி ஸ்திதி:
இதரேஷாம் து வர்ணாநாம் ஸர்வாஅபாவே ஹரேந் ந்ருப: 189
பிராம்மணனுடைய சொத்துக்கு உரிமையாளன் யாருமில்லாத போதும் அரசன் அதை தன் பொக்கிஷத்தில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதுவே க்ஷத்திரிய வைசிய சூத்திரர்களுடைய சொத்தாக இருந்தால், அந்த சொத்து எந்த வகையிலும் அரசனைச் சேர வேண்டியதேயாகும்.
ஸம்ஸ்திதஸ்யா அநபத்யஸ்ய ஸகோத்ராத் புத்ரமாஹரேத் | தத்ரயத் ரிக்தஜாதம் ஸ்யாத் தத் தஸ்மிந் ப்ரதிபாதயேத்|| 190
பிள்ளைப் பேறில்லாது இறந்து போனவனின் மனைவி கணவனின் கோத்திரத்தைச் சேர்ந்தவனோடு கலந்து ஒரு மகனைப் பெற்றுக் கொள்ளலாம். அவளுடைய கணவனது சொத்து முழுவதும் அம்மகனுக்கே சொந்தமாகும்.
த்வெள து யௌ விவதேயாதாம் த்வாப்யாம் ஜாதௌ ஸ்திரியா தநே | தயோர் யத் யஸ்ய பித்ர்யம் ஸ்யாத் தத்ஸ க்ருஹ்ணீத நேதர: || 191
ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த பிறகு கணவன் இறந்து போய், அவள் இன்னொருவனை மணந்து கொண்டு குழந்தைபெற்றுக்கொண்டால், அந்தப் பிள்ளைகள், அவனவன் தந்தையின் சொத்தை அடைய வேண்டும். ஒருவன் சொத்தில் இன்னொருவனுக்கு உரிமை கிடையாது.
ஐநந்யாம் ஸம்ஸ்திதாயாம் து ஸமம் ஸர்வே ஸஹோதரா: |
பஜேரந் மாத்ருகம் ரிக்தம் பகியஷ் ச ஸநாபய: |-192
தாய் மரித்தபின், அவளுடைய செல்வத்தை அவள் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். திருமணமான பெண்களுக்கு விருப்பப்படி கொடுக்கலாம்.
யாஸ் தாஸாம் ஸ்யுர் துஹிதரஸ் தாஸாமபி யதாஹர்த: |
மாதாமஹ்யா தநாத் கிஞ்சித் ப்ரதேயம் ப்ரீதிபூர்வகம் || 193
பெண்வயிற்றுப் பேத்திகளில் திருமணமாகாதவர்கள் இருந்தால் அவர்களுக்கும் சந்தோஷப்பட்டு ஏதோ சிறிது கொடுக்கலாம்.
அத்யக்ந் யத்யாவாஹநிகம் தத்தம் ச ப்ரீதிகர்மணி |
ப்ராத் ரு மாத்ரூபித் ரூப்ராப்தம் ஷட்விதம் ஸ்த்ரீதனம் ஸ்ம்ருதம் || 194
அந்வாதேயம் ச யத் தத்தம் பத்யா ப்ரீதேந சைவ யத்|
பத்யௌ ஜீவதி வ்ருத்தாயா: ப்ரஜாயாஸ் தத் தநம் பவேத் || 195
ஸ்திரீதனம் என்றால் பெண்ணின் தனம், பெண்ணின் சொத்து என்று பொருள்படும். இது ஆறு வகையில் அவளுக்குக் கிடைக்கும்.-1. திருமண சமயத்தில் அக்னியின் முன்னிலையில், தந்தையினால் வழங்கப்படுவது, அப்பெண்ணின் சொந்தச்சொத்தாகிறது.
இந்தச் சொத்துக்கு ‘அத்யாக்னி’ என்று பெயர்.-2. திருமணமான பெண்ணை புக்ககத்திற்கு கணவனுடன் அனுப்பி வைக்கும்போது அவளுக்குக் கொடுத்த பொருள், இந்த சொத்துக்கு ‘அத்யாவாஹனிகம்’ என்டறு பெயர்.-3. மேலும் திருமண சமயத்தில் மற்றவர்கள் பிரீதியோடு
அவளுக்குக் கொடுத்த பொருட்கள். 4. கூடப் பிறந்த சகோதரர்கள் அவள் தங்கள் இல்லத்துக்கு வந்தபோதோ, அல்லது அவள் இல்லத்துக்கு இவர்கள் போனபோதோ மற்றும் விசேஷ நாட்களிலோ அவளுக்கு வழங்கியவை.. 5. தந்தை மூலமாகக் கிடைத்த தனம். 6. தாய்மூலமாக கிடைத்த தனம்.-இவ்வாறு ஆறு வகைகளில் ஒரு ஸ்த்ரீக்கு தனம் கிடைக்கும்.
இப்படிக் கிடைத்த யாவும் அவளுடைய சொந்த சொத்தேயாகும்.-திருமணத்துக்குப் பிறகு கணவனின் வீட்டுச் சொத்திலிருந்தோ, தாய் வீட்டுச் சொத்திலிருந்தோ கிடைத்தவையும், கணவன் அன்போடு அவளுக்கு அளித்தவையும், முதலில் சொன்னபடி ஆறு வகைகளில் அவளுக்குக் கிடைத்தவையுமான சொத்து முழுவதும், கணவன் உயிரோடிருந்து, அவள் இறந்து விட்டாலும் அவளது சந்ததியினரையே சேரும். கணவனுக்கு அந்த சொத்தில் உரிமை யில்லை.
ப்ராஹ்மதைவா ஆர்ஷகாந்தர்வ ப்ராஜாபத்யே யத் வசு | அப்ரஜாயாமதீதாயாம் பாதுரேவ ததிஷ்யதே|| 196
பிராம்ம விவாகம், தெய்வ விவாகம், ஆர்ஷ விவாகம், கந்தர்வவிவாகம், பிராஜாபாத்ய விவாகம் என்னும் ஐந்து வகை விவாகங் களாலும் மணந்த பெண்ணின் சொத்து, அவள் சந்ததியின்றி இறந்து விட்டால், அவள் கணவனுக்கு உரித்தாகும்.
யத் த்வஸ்யா: ஸ்யாத் தநம் தத்தம் விவாஹேத்வாசுராதிஷு | அப்ரஜாயாமதீதாயாம் மாதாபித்ரோஸ் ததிஷ்யதே || 197
ஆசுர விவாகம், ராக்ஷச விவாகம், பைசாச விவாகம் என்னும் மூன்று வகை விவாகங்களாலும் மணந்த பெண்ணின் சொத்து, அவள் சந்ததியின்றி இறந்து விட்டால், அவள் பெற்றோருக்கே உரித்தாகும்.
ஸ்த்ரியாம் து யத் பவேத் வித்தம் பித்ரா தத்தம் கதஞ்சம்
ப்ராஹ்மணி தத் தரேத் கந்யா ததபத்யஸ்ய வாபவேத் || 198
பிராம்மணன், பிராம்மணப் பெண்ணையும் மணந்து, மற்ற வர்ணத்துப் பெண்களையும் மணந்திருந்து, மற்ற வர்ணத்துப் பெண் சந்ததியின்றி இறந்து விட்டால், அவள் சொத்து, அவள் கணவனுக்கு பிராம்மணப் பெண்ணிடம் பிறந்த பெண் சந்ததியினரைச் சேரும்.
பெண் சந்ததி இல்லாத போது ஆண்சந்ததியினரைச் சேரும்.
ந நிர்ஹாரம் ஸ்த்ரிய: குர்யு: குடும்பாத் பஹுமத்யகாத்
ஸ்வகாதபி ச வித்தாத் தி ஸ்வஸ்ய பர்துரநாக்ஞயா || 199
பல பேர் இருக்கின்ற குடும்பத்தில்,குடும்ப வரவுப் பணத்திலிருந்து பெண்கள் தனியாக தங்களுக்கென்று பொருளை சேர்த்து வைக்கக் கூடாது. தன் கணவனுடைய சம்பாத்தியமாகவே இருந்தாலும், கணவனாக எதுவும் கொடுக்காத போது தனியாக
எதையும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
பத்யெள ஜீவதிய: ஸ்த்ரீபிலங்காரோ த்ருதோ பவேத்
நதம் பஜேரந் தாயாதா பஜமாநா: பதந்தி தே!-200
கணவன் இருக்கும்போது ஒரு பெண்அணிந்து கொண்டிருந்த ஆபரணங்களை, அவன் (கணவன்) இறந்த பிறகு அவன் பிள்ளைகள் பங்கிட்டுக் கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்பவர்கள் பாபத்துக்காளாவார்கள்.
அநம்ஷெள க்ளீபபதிதெள ஜாத்யந்த பதிரெள ததா |
உன்மத்த ஜடமூகாஷ்ச யே ச கேசிந் நிரிந்த்ரியா: |-201
நபும்சகன், செய்த பாவத்தால் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டவன், பிறவிக் குருடன், செவிடன், பைத்தியக்காரன், மூடன், ஊமை. முடவன், உடலியக்கமற்றவன் முதலானோர் தந்தையின் தனத்தைப் பங்கிட்டுக்கொள்ள உரிமையற்றவர்கள்.
ஸர்வேஷாமபி து ந்யாய்யம் தாதும் ஷக்த்யா மநீஷிணா க்ராஸா ஆச்சாதநமத்யந்தம் பதிதோ ஹ்யதத் பவேத் |||202
ஆனால், அந்த தனத்தை எடுத்துக் கொண்டவன், இத்தகையோன் உயிரோடிருக்கும் வரை உணவு உடை இருப்பிடம்கொடுத்து போஷிக்க வேண்டும். இல்லாவிடில் அவன்பாபத்துக்
காளாவான்.
யத்யர்திதா து தாரை: ஸ்யாத் க்லீபாதிநாம் கதஞ்சன தேஷாமுத்பந்நதந்தூ நாமபத்யம் தாயமர்ஹஸி || 203
இத்தகையோருக்கு திருமண ஆசை ஏற்பட்டு,யாரோ ஒருத்திதிருமணமும் செய்து கொண்டு அவர்களுக்கு சொந்த மகனோ அல்லது க்ஷேத்ரஜ வகையிலோ சந்ததி ஏற்பட்டால் அப்போது சொத்தில் உரிய பாகத்தைக் கொடுக்க வேண்டும்.
யத்கிஞ்சித் பிதரி ப்ரேதே தநம் ஜ்யேஷ்டோ அதிகச்சதி |
பாகோ யவியஸாம் தத்ர யதி வித்யா அனுபாலிந: |-204
தந்தை இறந்து பாகப் பிரிவினை செய்யாமல் இருக்கும்போது,மூத்தவன் தான் சொந்தமாக தனத்தை சம்பாதித்தால், தன் சகோதரர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
அவித்யாநாம் து ஸர்வேஷாமீஹாதஷ்சேத் தனம் பவேத் |
ஸமஸ் தத்ர விபாக: ஸ்யாதபித்ர்ய இதி தாரணா|| 205
வித்யையால் தான் ஒருவன் மட்டும் சம்பாதிக்காமல், சகோதரர்கள் சேர்ந்து செய்யும் வாணிபம் போன்றவற்றால் சம்பாதித்ததை எல்லா சகோதரர்களும் சரிசமமாக பங்கிட்டுக்
கொள்ள வேண்டும். தந்தையின் தனத்தை இதில் சேர்க்கக்கூடாது.
வித்யாதநம் து யத் யஸ்ய தத் தஸ்யைவ தனம் பவேத் |
மைத்ர்ய மௌத்வாஹிகம் சைவ மாது பர்கிகமேவ ச || 206
ஒருவன் தன் வித்யையினால் சம்பாதித்த செல்வம் அவனுக்கே சொந்தமானது. மேலும் சிநேகிதத்தால் கிடைத்த செல்வம், விவாக சமயத்தில் கிடைத்த செல்வம், பிறர் பூஜித்து அவனுக்களித்த செல்வம் முதலானவையும் அவனுக்கே சொந்தமானது.
ப்ராத்ருணாம் யஸ்து நேஹேத தநம் ஷக்த: ஸ்வகர்மணா |
ஸ நிர்பாஜ்ய: ஸ்வகாதம்ஷாத் கிஞ்சித் தத்வோ பஜீவனம் || 207
சகோதரர்களில் ஒருவன் சொந்த சம்பாத்தியமாக தனம் சேர்த்து, பாகப் பிரிவினையின் போது, தனக்குப் பாகம் தேவையில்லை என்று கூறினால், பங்கில் அவன் ஜீவனத்துக்கு என்று சிறிது கொடுத்து, மீதியை மற்றவர்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.
அனுபக்நந் பித்ருத்ரவ்யம் ஷ்ரமேண யதுபார்ஜிதம் |
ஸ்வய மீஹிதலப்தம் தந் நாஅகாமோ தாதுமர்ஹதி || 208
தந்தையின் தனத்தைச் சேர்க்காமல், தானாக தன் தனத்தைக் கொண்டு ஒருவன் சம்பாதித்தால் (வட்டி போன்றவற்றால்) தன் சகோதரர்களுக்கு அதில் பங்கு கொடுப்பதும் கொடுக்காததும் அவனுடைய விருப்பத்தைப் பொறுத்தது.
பைத்ருகம் து பிதா த்ரவ்யமநவாப்தம் யதாப்னுயாத் |
ந தத் புத்ரைர் பஜேத் ஸார்தமகாம: ஸ்வயமர்ஜிதம் |-209
ஒரு தந்தை, சாமர்த்தியமில்லாமையால் தொலைத்த செல்வத்தை மகன் தன் திறமையால் மீட்டுக்கொண்டு வந்தால் அது அவனுடையதே யாகும். தான் சுயமாக சம்பாதித்ததை, தந்தை விரும்பினால் மட்டுமே பிள்ளைகளுக்குப் பகிர்ந்தளிக்கலாம். சுயார்ஜித செல்வத்தை பாகப் பிரிவினை செய்து கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
விபக்தா: ஸஹ ஜீவந்தோ விபஜேரந் புநர் யதி 1
ஸமஸ்தத்ர விபாக: ஸ்யாஜ் ஜ்யைஷ்ட்யம் தத்ர நவித்யதே|| 210
அனைவரும் பாகப் பிரிவினை செய்து கொண்ட பிறகும் மீண்டும் ஒன்றாகவே இருந்து சேர்த்த செல்வத்தை திரும்பவும் பங்கு போட்டுக் கொண்டால்அப்போது மூத்தவனுக்கு என்று தனியாக எந்தப் பங்கும் கிடையாது. எல்லோரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.
யேஷாம் ஜ்யேஷ்ட: கநிஷ்டோ வாஹீயேதா அம்ஷப்ரதாநத: ||
ம்ரியதே அந்யதரோ வாஅபி தஸ்ய பாகோந லுப்யதே |-211
சகோதரர்களில் எவனாவது இறந்து போனாலோ, நாடு கடத்தப்படுதல் சந்யாசியாகிப் பே தல் போன்றவற்றால் அவன் அவ்விடத்தில் இல்லாமல் போனாலோ, அவனுக்குப் பங்கு
இல்லாமல் போகாது.
லொதர்யா விபஜேரம்ஸ் தம் ஸமேத்ய ஸஹிதா: ஸமம் | ப்ராதரோ யே ச ஸம்ஸ்ருஷ்டா பகிந்யஷ் ச ஸநாபய: || 212
அவனுடைய பங்கு அவன் பிள்ளைகளுக்குப் போக வேண்டும். அவனுக்குப் பிள்ளைகளும் இல்லை. மனைவியும் இல்லை, பெற்றோரும் இல்லைஎன்றால், அவன் சொந்த உடன் பிறந்த சகோதரர்களும், சகோதரிகளும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.
யோ ஜ்யேஷ்டோ விநிகுர்வீத லோபாத் ப்ராத்ரூந் யவீயஸ: |
ஸோ ஜ்யேஷ்ட: ஸ்யாதபாகஷ் ச நியந்தவ்யஷ் ச ராஜபி: || 213
மூத்தவன் பேராசையால், உடன் பிறந்தார் சொத்தை மோசடி செய்து எடுத்துக் கொண்டால், அவனுக்கு சொத்தில் பங்கு கிடையாது. மேலும் அவனை அரசன் தண்டிக்க வேண்டும்.
ஸர்வ ஏவ விகர்மஸ்தா நா அர்ஹந்தி ப்ராதரோ தநம் |
ந சா ஆதத்வா கனிஷ்டேப்யோ ஜ்யேஷ்ட: குர்வீத யௌதகம் 214
சகோதரர்களில் செய்யத்தகாத காரியங்களைச் செய்பவனுக்கு சொத்தில் பங்கு கிடையாது. மூத்தவன், தன் தம்பியர் இருக்கும் போது, தனக்கென்று சொத்தில் தனியுரிமைகொண்டாட முடியாது.
ப்ராத்ரூணாமவிபக்தாநாம் யத்யுத்தாநம் பவேத் ஸஹ |
நபுத்ரபாகம் விஷமம் பிதா தத்யாத் கதஞ்சந || 215
உடன் பிறந்தாரனைவரும் தந்தையுடன் இருந்து ஒன்றாகச் சேர்ந்து சம்பாதித்திருந்தால், தந்தை அவர்களுக்கு தனத்தை சமமாகப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். ஏற்றத்தாழ்வாகப் பங்கிடக் கூடாது.
ஊர்த்வம் விபாகாஜ் ஜாதஸ் து பித்ர்யமேவ ஹரேத் தநம் ||
ஸம்ஸ்ருஷ்டாஸ் தேந வா யே ஸ்யுர் விபஜேத ஸதை: ஸஹ 216
தந்தை தான் உயிரோடிருக்கும்போதே. பிள்ளைகளுக்குத் தனத்தை பங்கிட்டு அளித்த பிறகு, அவருக்குக் குழந்தை பிறந்தால், அவன் (அந்தக் குழந்தை) தந்தை தன் வசம் வைத்திருந்த தனத்துக்கு உரிமை உடையவனாவான். மேலும் தந்தையுடன் கூட்டுக் குடும்பமாக சகோதரர்களும் இருந்தால், அவர்களுடன் சேர்ந்து அந்த தனத்தைப் பங்கிட்டுக்
கொள்ள வேண்டும்.
அநபத்யஸ்ய புத்ரஸ்ய மாதா தாயமவாப்னுயாத் |
மாதர்யபி வ்ருத்தாயாம் பிதுர் மாதா ஹரேத் தநம் ||-217
சந்ததியில்லாமல் புத்திரன் இறந்து போனால் தாய்க்கு அவன் பங்குசேரும். அவளும் இல்லாவிடில், தந்தையைப் பெற்ற தாய்க்கு அந்த தனம் சேரும். இது திருமணமாகாத மகனுக்கான விஷயம்.
ருணே தநே ச ஸர்வஸ்மிந் ப்ரவிபக்தே யதாவிதி |
பஷ்சாத் த்ருஷ்யேத யத்கிஞ்சித் தத் ஸர்வம் ஸமதாம் ந்யேத் 1-218
தந்தை இறந்து, பாகப் பிரிவினைக்குப் பிறகு, தந்தையின் வேறு ஏதோ சொத்து இருப்பது தெரிந்தால் அந்தச் சொத்தை சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். அவர் வைத்துவிட்டுப்போன கடன் இருந்தால், அதையும் சமமாக அடைக்க வேண்டும்.
வஸ்த்ரம் பத்ரமலங்காரம் க்ருதா அந்நமுதகம் ஸ்த்ரிய:
யோகக்ஷேமம் ப்ரசாரம் ச ந விபாஜ்யம் ப்ரசக்ஷதே|| 219
வஸ்திரங்கள், வாகனம், ஆபரணங்கள், பக்குவம் செய்யப்பட்ட உணவு வகைகள், கிணறு, வேலைக்காரப் பெண்கள், தான் செளக்கிய மாக வாழ இதுவரை அனுபவித்துக் கொண்டிருந்தவை(ஒரு பசு வைத்துக் கொண்டிருப்பவனானால் இதுவரை அவனுக்குபால் தயிர் நெய் போன்றவற்றை அனுபவித்து வந்திருப்பான்) பாதை முதலானவைகளை எவரெவர் அதுவரை அனுபவித்துக்கொண்டிருந்தனரோ, அவரவரே அவற்றை அனுபவித்து வர வேண்டும். இவைகளைப் பங்கிட்டுக் கொள்ளக்கூடாது.
அயமுக்தோ விபாகோ வ: புத்ராணாம் ச க்ரியாவிதி:
க்ரம : க்ஷேத்ரஜாதீநாம் த்யூததர்மம் நிபோதத || 220
சொந்த புத்திரர்களுக்கும், மற்ற வகைப் புத்திரர்களுக்குமானபாகப்பிரிவினைக்கான நியமங்களை இதுவரை கூறினேன். இனிசூதாட்டம் குறித்துக் கூறுகிறேன், கேளுங்கள்.
த்யூதம் ஸமாஹ்வயம் சைவ ராஜா ராஷ்ட்ராந் நிவாரயேத் |
ராஜ்யா அந்தகரணாவேதெள த்வெள தோஷெள ப்ருதிவீக்ஷிதாம் || 221
த்யூதம், ஸமாஹ்வயம் இவை இரண்டையும் அரசன் தன் நாட்டில் அறவே இல்லாதவாறு ஒழிக்க வேண்டும். ஏனெனில் இவை இரண்டும் ராஜ்ஜியத்தை அழிப்பவை.
ப்ரகாஷமேதத் தாஷ்கர்யம் யத் தேவநஸமாஹ்வயௌ |
தயோர் நித்யம் ப்ரதீகாதே ந்ருபதிர் யத்நவாந் பவேத் !-222
இவையிரண்டும் பகிரங்கமாகச் செய்யும் திருட்டுப் போன்றவை யாகும்.எனவே அரசன் எப்போதும் முயற்சியோடு இவையிரண்டும் தன்னுடைய நாட்டில் இல்லாதவாறு செய்ய வேண்டும்.
அபராணிபிா யத கரியதே தலலோகே த்யூதமுச்யதே |
ப்ராணிபி: க்ரியதே யஸ் து ஸ விக்ஞேய: ஸமாஹ்வய: 223
உயிரற்றவையான பகடைகளைக் கொண்டு ஆடுவது த்யூதம் என்னும் சூதாட்டம். உயிருள்ளவையான கோழி, காளை போன்றவைகளைக் கொண்டு ஆடுவது சமாஹ்வயம் என்னும் பந்தயம் வைத்து ஆடும் ஆட்டம்.
த்யூதம் ஸமாஹ்வயம் சைவய: குர்யாத் காரயேத வா | தாந் ஸர்வாந் காதயேத் ராஜா சூத்ராம் ச த்விஜலிங்கிந: |-224
சூதாட்டம், பந்தயம் இரண்டையும் ஆடுபவனையும், மற்றவரைக் கொண்டு ஆடச் செய்விப்பவனையும் அரசன் தண்டிக்க வேண்டும். அவ்வாறே பிராம்மணனைப் போன்று பூணூல் முதலானவற்றை தரித்து, ஜபம் முதலானவற்றைச் செய்யும் சூத்திரனையும் தண்டிக்க வேண்டும்.
கிதவாந் குஷீலவாந் க்ரூராந் பாஷண்டஸ்தாம்ஷ்ச மாநவாந் |
விகர்மஸ்தாஞ் சௌண்டிகாம்ஷ் ச ப்ரம் நிர்வாஸயேத் புராத் | 225
சூதாட்டம் பந்தயம் முதலியவற்றில் ஈடுபடுபவர்களையும், கூத்தாடிகளையும், தெருவில்பாடிக்கொண்டே செய்திகளைப் பரப்புபவர்களையும், குரூரர்களையும், வேதத்துக்கு விரோதமாக நடப்பவர்களையும் தகாத காரியங்களைச் செய்பவர்களையும்,
குடிகாரர்களையும், அரசன் தன் நாட்டை விட்டு வெளியேற்றவேண்டும்.
ஏதே ராஷ்ட்ரே வர்தமாநா ராக்கு ப்ரச்சன்னதஸ்கரா: |
விகர்மக்ரியயா நித்யம் பாதந்தே பத்ரிகா: ப்ரஜா: I-226
இவர்கள் அனைவருமே வேறு வேறு வேஷங்கள் பூண்டதிருடர்களைப் போன்றவர்களேயாகும். இவர்கள் நாட்டில் இருந்தால் எப்போதும் நல்லவர்களுக்குத் துன்பமிழைப்பார்கள்.
த்யூதமேதத் புராகல்பே த்ருஷ்டம் வைரகரம் மஹத் 11
தஸ்மாத் த்யூதம் ந ஸேவேத ஹாஸ்யார்தமபி புத்திமாந் 227
இதற்கு முந்தைய கல்ப காலங்களிலும்கூட, சூதாட்டத்தால் மனிதர்களுக்குள் கடுமையான பகை ஏற்பட்டிருக்கிறது. எனவே விளையாட்டுக்கும்கூட புத்திமானான மனிதன் சூதாடக்கூடாது.
ப்ரச்சந்நம் வா ப்ரகாஷம் வா தந்நிஷேவேத யோநர: |
தஸ்ய தண்ட விகல்ப: ஸ்யாத் யதேஷ்டம் ந்ருபதேஸ் ததா || 228
எந்த மனிதன் ரகசியமாகவோ அல்லதுவெளிப்படையாகவோ சூதாடுகிறானோ அவனை அரசன் தன் விருப்பப்படி தண்டிக்க வேண்டும்.
க்ஷத்ரவிட் சூத்ரயோநிஸ் து தண்டம் தாதுமஷக்னுவந் |
ஆந்ருண்யம் கர்மணா கச்சேத் விப்ரோ தத்யாச்சநை: ஷநை: ||229
அபராத தண்டனைக்கு ஆளான க்ஷத்திரிய வைசிய சூத்திரர் அபராதத் தொகை செலுத்த முடியாத தரித்திரர்களாக இருந்தால், வேலை செய்து அதைக் கழிக்க வேண்டும். பிராம்மணனாக இருந்தால் சிறுகச் சிறுகவாவது சம்பாதித்து அந்தத் தொகையைச் செலுத்த வேண்டும்.
ஸ்த்ரீ பாலோந்மத்த வருத்தாநாம் தரித்ராணாம் ச ரோகிணாம்
ஷிபாவிதலரஜ்வாத்யௌர் விதத்யாந் ந்ருபதிர் தமம்| |-230
பெண்கள், சிறுவர்கள், போதையிலிருப்பவர்கள், வயோதிகர்கள், தரித்திரர்கள்,நோயாளிகள் முதலானோர் சூதாடினால் மரவேர்கள், பிரம்பு, கயிறு முதலானவற்றால் அடிக்க வேண்டும்.
யே நியுக்தாஸ்து கார்யேஷு ஹந்யு: கார்யாணி கார்யிணாம் |
தநோஷ்மணா பஞ்சமாநாஸ் தாந் நிஸ்ஸ்வாந் காரயேந் ந்ரூப: |-231
கிராமாதிகாரி முதல் பிரதான நீதிபதி வரை அரசனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யாமல், சண்டையிட்டுக் கொண்டு வந்தவர்களின் சண்டையை
நீதியாகத் தீர்த்து வைக்காமல், லஞ்சம் பெற்றுக்கொண்டு நீதிக்குப் புறம்பாக ஒருவனுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தால், அத்தகையோரின் மொத்தச் சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
கூட ஷா நகர்த்ரூம்ஷ்ச ப்ரக்ருதீநாம் ச தூஷகாந் |
ஸ்த்ரீ பால ப்ராஹ்மணக் நாஷ் ச ஹந்யாத் த்விட் ஸேவிநஸ் ததா|| 232
பொய் சாசனம் தயாரிப்பவர்களுக்கும், அரசனைப் பழிப்பவர் களுக்கும், அரசனைச் சேர்ந்த மந்திரிகளையும் அரசனின் நண்பர்களையும் அரசனின் பொக்கிஷத்தையும் நாட்டின் பாதுகாப்பு அரண்களைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் குறைகூறி பேதம் விளைவிப்பவர்களுக்கும், பெண்களையும் குழந்தைகளையும் பிராம்மணர்களையும் கொல்லும் கொடியவர்களுக்கும், எதிரி நாட்டு ஒற்றர்களுக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும்.
தீரிதம் சாஅனுசிஷ்டம் ச யத்ர க்வசந யத் பவேத் |
க்ருதம் தத் தர்மதோ வித்யாந் ந தத் பூயோ நிவர்தயேத் 233
முறைப்படி விசாரிக்கப்பட்டு அறிஞர்களால் நீதி வழங்கப்பட்ட பிறகு அதை அரசன் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். மீண்டும் அதை விசாரிக்கக் கூடாது.
அமாத்யா: ப்ராட் விவாகோ வா யத் குர்யு: கார்யமந்யதா |
தத் ஸ்வயம் ந்ருபதி: குர்யாத் தாந் ஸஹஸ்ரம் ச தண்டயேத் || 234
அரசனால் நியமிக்கப்பட்ட மந்திரிகளும் நீதிபதிகளும் வழக்குகளை நன்கு விசாரிக்காமல் தவறாக தீர்ப்பு வழங்கியிருந்தால், அவற்றை அரசன் மீண்டும் விசாரிக்க வேண்டும். மேலும் சரியாக விசாரிக்காத அவர்களுக்கு ஆயிரம் பணங்களை அபராதமாக விதிக்க வேண்டும்.
ப்ரஹ்மஹா ச சுராபஷ் ச ஸ்தேயீச குருதல்பக: |
ஏதே ஸர்வே ப்ருதக் ஞேயா மஹாபாதகிநோ நரா: 11 235
பிராம்மணனைக் கொன்றவனும், குடிகாரனான பிராம்மணனும், பிராம்மணனிடம் திருடியவனும்,குருவின் மனைவியைக் கூடியவனும் மனிதர்களிலேயே மகாபாவிகள்.
சதுர்ணாமபி சைதேஷாம் ப்ராயஷ்சித்த மகுர்வதாம் |
ஷாரீரம் தநஸம்யுக்கம் தண்டம் தர்ம்யம் ப்ரகல்பயேத் | 236
இந்நால்வகைப் பாவிகளும் பிராயச்சித்தம் செய்து கொள்ளாதபோது அரசன் தண்டனை விதிக்க வேண்டும். அபராதமும், சரீரதண்டனையும் விதிக்க வேண்டும்.
குருதல்பே பக: கார்ய: சுராபாநே சுராத்வஜ: |
ஸ்தேயே ச ஷ்வபதம் கார்யம் ப்ரஹ்மஹண்யஷிரா: பூமாந் ||237
குரு மனைவியைக் கூடியவன் நெற்றியில் பழுக்கக் காய்ச்சிய இரும்புச் சலாகையால் பெண்குறியைப் போன்று சூடு போட வேண்டும்.-கள்ளுண்ட பிராம்மணன் நெற்றியில் கள் குடுவையைப் போன்று சூடு போட வேண்டும்.பிராம்மணனிடம் திருடியவன் நெற்றியில் நாயின் காலைப் போன்று சூடு போட வேண்டும்.-பிரம்மஹத்தி செய்தவன் நெற்றியில் தலையற்ற முண்டம் போன்று சூடு போட வேண்டும்.
அஸம்போஜ்யாஹ்யஸம் யாஜ்யா அஸம்பாட்யா அவிவாஹிந: 1
சரேயு: ப்ருதிவீம் தீநா: ஸர்வதர்ம பஹிஷ்க்ருதா:|| 238
இவர்களுக்கு யாரும் உணவு வழங்கக்கூடாது. இவர்களைக்கொண்டு யக்ஞங்கள் செய்யக்கூடாது. இவர்களுக்கு வேதபாடம் நடத்தக்கூடாது. திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ளக்கூடாது. எந்தவித தர்ம கிரியைகளும் இயற்றாதவர்களாக, தீனர்களாக,
எல்லோராலும் ஒதுக்கப்ட்டவர்களாக இவர்கள் திரிய வேண்டியதுதான்.
ஞாதிஸம்பந்திபிஸ் த்வேதே த்யக்தவ்யா: க்ருதலக்ஷணா: |
நிர்தயா நிர்நமஸ்காராஸ் தந்மநோரனுசாஸநம் || 239
இவ்வாறு நெற்றியில் குறியிடப்பட்டவர்களை, பங்காளிகளோ, பந்துக்களோ சேர்க்கக்கூடாது. இவர்களிடம் சற்றும் கருணை காட்டக்கூடாது. இவர்களை யாரும் வணங்கக்கூடாது. இவ்வாறு மனு பகவான் கட்டளையிட்டுள்ளார்.
ப்ராயஷ்சித்தம் து குர்வாணா: பூர்வே வர்ணா யதோதிதம் |
நாஆக்யா ராக்ஞா லலாடே ஸ்யுர் தாப்யாஸ் தூத்தமஸாஹஸம் || 240
தாங்கள் செய்த பாவங்களுக்குரிய, சாஸ்திரம் விதித்தபிராயச்சித்தங்களை செய்து கொண்ட க்ஷத்ரிய வைசியர்களுக்குஅரசன், நெற்றியில் குறியிடக்கூடாது. உத்தம சாகச தண்டம் என்னும் ஆயிரம் பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
ஆகஸ்சு ப்ராஹ்மணஸ்யைவ கார்யோ மத்ய மஸாஹஸ:
விவாஸ்யோ வா பவேத் ராஷ்ட்ராத் ஸத்ரவ்ய: ஸபரிச்சத:|241
பிராம்மணன் தன்னிலை பிறழ்ந்து அறியாமையால்இக்குற்றங்களைச் செய்திருந்தால் ஐந்நூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும். தெரிந்தே செய்திருந்தால் அவன் சொத்துகளை பறிமுதல் செய்து, அவனை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.
இதரே க்ருதவந் தஸ்து பாபாந்யேதாந்யகாமத: | ஸர்வஸ் வஹாரமர்ஹந்தி காமதஸ்து ப்ரவாசநம் || 242
பிராம்மாணனைத் தவிர்த்து மற்றவர்கள் தங்களையறியாமல் இத்தவறுகளை செய்ய நேரிட்டிருந்தால், அவர்களது மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். தெரிந்து வேண்டு மென்றேசெய்திருந்தால் மரண தண்டனை விதிக்க வேண்டும்.
நாஆததீத ந்ருப: ஸாதுர் மஹாபாதகிநோ தநம்
ஆததாநஸ்து தல் லோபாத் தேந தோஷேண லிப்யதே|| 243
மஹாபாவிகளிடமிருந்து வசூலித்த அபராதத் தொகையையோசொத்தையோ அரசன் தான் எடுத்துக்கொள்ளக் கூடாது. பேராசையால் அதை எடுத்துக் கொண்டால், அந்தப்பாவங்கள்
அரசனை வந்தடையும்.
அப்சு ப்ரவேஷ்ய தம் தண்டம் வருணாயோப பாதயேத் 1
ஸ்ருத வ்ருத்தோபபந்நே வா ப்ராஹ்மணே ப்ரதிபாதயேத் ॥ 244
அந்த தனத்தை தண்ணீரில் போட்டு வருணனுக்கென்று அளிக்க வேண்டும். அல்லது வேதமோதலையே செய்து வரும் பிராம்மணனுக்குக் கொடுக்க வேண்டும்.
ஈஷோ தண்டஸ்ய வருணோ ராக்ஞாம் தண்டதரோஹிஸ: |
ஈஷ: ஸர்வஸ்ய ஐகதோ ப்ராஹ்மணோ வேதபாரக: ||| 245
வருணனே பாவிகளின் தண்டனைக்கு அதிகாரி. வருணனே தண்டனை அளிக்கும் அதிகாரமுடைய அரசர்களுக்கு பிரபு. வேதங்களை எப்போதும் ஓதுகின்ற பிராம்மணன் இவ்வுலகத்தார் அனைவருக்கும் பிரபு.
யத்ர வர்ஜயதே ராஜா பாபக்ருத்ப்யோதநா ஆகமம் |
தத்ர காலேந ஜாயந்தே மாநவா தீர்க்கஜீவிந: || 246
எந்த நாட்டில் பாவிகளின் தனத்தை அரசன் எடுத்துக் கொள்ளாமலிருக்கிறானோ, அந்த நாட்டில் ஜனங்கள் தீர்க்காயுளோடு வாழ்வார்கள்.
நிஷ்பத்யந்தே ச ஸஸ்யாநி யதோப்தாநி விஷாம் ப்ருதக்|
பாலாஷ்ச ந ப்ரமீயந்தே விக்ருதம் ந ச ஜாயதே |-247
எந்த நாட்டில் பாவிகளின் தனத்தை அரசன் எடுத்துக் கொள்ளாமலிருக்கிறானோ அந்த நாட்டில் பூமி நல்ல விளைச்சலைக் கொடுக்கும். சிசு மரணங்கள் ஏற்படாது. ஊனமுற்றவர்கள் பிறக்க மாட்டார்கள்.
ப்ராஹ்மணாந் பாதமாநம் து காமாதவரவர்ணகம் | |
ஹந்யாச் சித்ரைர் வதோபாயை ருத்வேஜநகரைர் ந்ருப: |-248
வேண்டுமென்றே பிராம்மணர்களை அடிப்பவனையும், அவர்கள் செல்வத்தை பிடுங்கிக் கொள்பவனையும், அவன் ஈன ஜாதிக்காரனாக இருந்தால், அவனைப் பலவகையான சித்திரவதைகளுக்காளாக்க வேண்டும்.
யாவாந வத்யஸ்ய வதே தாவாந் வத்யஸ்ய மோக்ஷணே |
அதர்மோ ந்ருபதேர் த்ருஷ்டோ தர்மஸ் து விநியச்சத: ||| 249
நிரபராதியைத் தண்டிப்பதால் எவ்வளவுபாபம் நேருமோ, அதே அளவு பாபம் குற்றவாளியைத் தண்டிக்காமல் விடுவதாலும் நேரும். எனவே சாஸ்திர விதிப்படி தண்டனை வழங்கி தர்ம நெறியோடு அரசன் ஆளவேண்டும்.
உதிதோ அ ம் விஸ்தரஷோ மிதோ விவதமாநயோ: | அஷ்டாதஷசு மார்கேஷு வ்யவஹாரஸ்ய நிர்ணய: ||| 250
இதுவரை கடன் முதலான பதினெட்டு வகையான விவகாரங்களைப் பற்றிய விஷயங்களைத் தீர்ப்பதற்கான வழிகள் விரிவாகக்கூறப்பட்டது.
ஏவம் தர்ம்யாணி கார்யாணி ஸம்யக் குர்வந் மஹீபதி: )
தேஷாநளப்தால்லிப்ஸேத்த லப்தாம்ஷ்ச பரிபாலயேத் || 251
இவ்வாறாக தர்ம நெறியோடு வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்து, பிற நாடுகளை வென்று வென்ற நாடுகளையும் சேர்த்து நல்லபடி ஆண்டு வர வேண்டியது அரசன் கடமை.
ஸம்யக் நிவிஷ்ட தேஷஸ் து க்ருததுர்கஷ்ச ஷாஸ்த்ரத: கண்டகோத்தரணே நித்யமாதிஷ்டேத் யத்நமுத்தமம்|| 252
தக்க இடத்தில் தலைநகரை நிர்மாணித்துக் கொண்டு ஏற்கெனவே கூறிய முறையில் தக்கபடி கோட்டைகளை சாஸ்திரமுறையோடு நிர்மாணித்துக் கொண்டு அரசாள வேண்டும்.
நாட்டில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதில்முயற்சியோடிருக்க வேண்டும்.
ரக்ஷணாதார்ய வருத்தாநாம் கண்டகாநாம் ச ஷோதநாத் |
நரேந்த்ராஸ் த்ரிதிவம் யாந்தி ப்ரஜாபாலந தத்பரா: || 253
நல்லோரைக் காத்து, தீயோரைத் தண்டித்து, தன் மக்களைக் காப்பதிலேயே எப்போதும் கருத்தோடிருக்கும் அரசர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.
அஷாஸம்ஸ் தஸ்கராந் யஸ் து பலிம் க்ருஹ்ணாதி பார்திவ: |
தஸ்ய ப்ர ப்யதே ராஷ்ட்ரம் ஸ்வர்காச்ச பரிஹியதே |-254
திருடர்கள் முதலானவர்களை தண்டித்து ஒடுக்காமல், வரியை மட்டும் வசூலிக்கின்ற அரசனை மக்கள் வெறுப்பார்கள். மேலும் அவ்வரசன் புண்ணியங்களை இழந்து சொர்க்கத்தையும் அடைய முடியாது போகும்.
நிர்பயம் து பவேத் யஸ்ய ராஷ்ட்ரம் பாஹுபலா ஆஷ்ரிதம் |
தஸ்யதத் வர்ததே நித்யம் ஸிச்யமாந இவ த்ரும:|| 255
தன் தோள் வலிமையால், மக்கள் பயமற்று வாழுமாறு ஆள்கின்ற அரசனின் நாடு, தண்ணீர் ஊற்றுவதால் நன்கு வளரும் செடியைப் போன்று தினந்தினம் விருத்தியடையும்.
த்விதாம்ஸ் தஸ்கராந் வித்யாத் பரத்ரவ்யா அபஹாரகாந் ப்ரகாஷாம்ஷ் சாஅப்ரகாஷாம்ஷ்ச சாரசக்ஷர் மஹீபதி: |-256
வெளிப்படையாகவும், ரகசியமாகவும் என்று இரு வகைகளில், கொள்ளையடிக்கும் கொள்ளையரை, ஒற்றர்களைக் கொண்டு கண்டறிய வேண்டும்.
ப்ரகாஷ வச்சகாஸ் தேஷாம் நாநாபண்யோப ஜீவிந:|
ப்ரச்சந்ந வஞ்சகாஸ் த்வேதே யே ஸ்தேநா ஆட விகாதய: || 257
திருடர்கள், ரகசிய வஞ்சகர்கள், வெளிப்படையான வஞ்ச கர்கள் என்று இரு வகையானவர்கள்.-வியாபாரம் செய்பவர்கள், எடை தரம் முதலானவற்றில்
ஏமாற்றினால் அவர்கள் வெளிப்படையான வஞ்சகர்கள்.-இரவில் எவருமறியாமல் வந்து கன்னமிட்டு,பொருட்களைத் திருடிச்செல்பவர்கள் ரகசிய வஞ்சகர்கள்.
உத்கோசகாஷ் சௌபதிகா வஞ்சகா: கிதவாஸ்ததா ||
மங்களா ஆதேஷவ்ருத்தாஷ் ச பத்ராஷ் சேக்ஷணிகை: ஸஹ ||258
லஞ்சம் வாங்குபவர்கள்,பயமுறுத்தி மிரட்டி சொத்தைக் கைப்பற்றுபவர்கள், பிறர் பொருளை இரவல்வாங்கி, அதேபோன்று தோற்றமளிக்கும் வேறொன்றைக் கொடுத்து ஏமாற்றுவது போன்ற வஞ்சகச் செயல்களில் ஈடுபடுபவர்கள், சூதாட்டத்தால் தனத்தைப்
பறிப்பவர்கள், ‘உனக்கு இது கிடைக்கும், அது கிடைக்கும்’ என்று ஆசை வார்த்தைகள் காட்டி எதையாவது செய்யச் சொல்லி அதன் மூலம் தனத்தைப் பறிப்பவர்கள், மஹான்களைப் போன்றும் குருமார்களைப் போன்றும் வேடமிட்டுக் கொண்டு தனத்தைப் பறிப்பவர்கள், இதை அதை என்று எதையாவது எண்ணி, எண்ணிக்கையைக் கொண்டு ஜோதிடம் என்று எதையாவது சொல்லி ஏமாற்றுபவர்கள் – இவர்கள் வெளிப்படையாகப் பொருளைப் பறிக்கும் திருடர்கள்.
அஸம்யக் காரிணஷ் சைவ மஹாமாத்ராஷ் சிகித்ஸகா: |
ஷில்போபசார யுக்தாஷ்ச நிபுணா: பண்யயோஷித: || 259
ஒரு காரியத்தைச் சரிவரச் செய்யத் தெரியாமலே, தெரிந்தது போல் காட்டிக் கொண்டு, செய்து தருவதாகக் கூறி பணம் பறிப்பவர்கள், நோயின் தன்மைகளையும் நோய்க்கேற்ற மருந்தின்தன்மைகளையும் சரிவர அறியாமலே. மருத்துவர்கள் என்று கூறிக்கொண்டு தனம் பறிப்பவர்கள், சரிவர தொழிலைக் கற்றுக் கொள்ளாமல், பணம் பறிக்கத் தொழில் செய்யும் வண்ணார், கருமார்முதலானோர், பணம் பறிக்கும் வேசியர் – இவர்களும்
வெளிப்படையாகப் பொருளைப் பறிக்கும் திருடர்கள்.
ஏவமாதீந் விஜாநீயாத் ப்ரகாஷால் லோக கண்டகாந்
நிகூடசாரிணஷ் சா அந்யாநநார்யா நார்லிங்கிந: 260
இவர்கள் இத்தனை பேரும் பகிரங்கமாக மக்களிடம் கொள்ளை யடிப்பவர்கள் என்பதை அறிய வேண்டும். இத்தகையவர்களைப் பல வேடங்களில் சென்று ஒற்றர்கள் கண்டறிய வேண்டும்.
தாந் விதித்வா சுசரிதைர் கூடைஸ் தத்கர்மகாரிபி: |
சாரைஷ் சா அநேகஸம்ஸ்தாநை: ப்ரோத்ஸாஹ்ய வஷமாநயேத்|| 261
எந்தத் தொழில் செய்யும் வஞ்சகரையும், அந்தத் தொழில் செய்பவரைப் போன்ற வேடமிட்ட ஒற்றர்களைக் கொண்டு கண்டறிய வேண்டும். ஆங்காங்கே இருக்கும் ஒற்றர்களும் பல
வகையான வேடங்களோடு பலவகையான வஞ்சகர்களைத் தக்கபடி கண்டறிந்து அரசனுக்கு அறிவிக்க வேண்டும்.
தேஷாம் தோஷாநபிக்யாப்ய ஸ்வே ஸ்வே கர்மணி தத்வத: |
குர்வீத ஷாஸநம் ராஜா ஸம்யக் ஸாரா அபராதத: || 262
இவ்வாறான ரகசியத் திருடர்களையும் வெளிப்படைத் திருடர்களான வஞ்சகர்களையும் கண்டுபிடித்து, அவரவர் செயலுக்குத் தக்கபடி தண்டித்து குற்றவாளிகளை ஒடுக்க வேண்டும்.
நஹி தண்டாத்ருதே ஷக்ய: கர்தும் பாபவிநிக்ரஹ: |
ஸ்தேநாநாம் பாபபுத்நாம் நிப்ருதம் சரதாம் தௌ || 263
உள்ளுக்குள் பாப புத்தியோடு கெடுதிகளைச் செய்து கொண்டு, வெளியே நல்லவரைப் போன்று திரிகின்ற இத்தகைய தீயவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும். தண்டனை ஒன்றினாலேயேஇவர்கள் தங்கள் பாபச் செயல்களை விடுவார்கள்.
ஸபா ப்ரபா அபூபஷாலா வேஷ மத்யா அந்ந விக்ரயா: |
சதுஷ்பதாஷ் சைத்யவருக்ஷா: ஸமாஜா: ப்ரேக்ஷணாநி ச ||-264
ஜீர்ணோத்யாநாந்யரண்யாநி காருகா ஆவேஷநாநிச |
சூந்யாநி சாஅப்யகாராணி வநாந்யுபவநாநி|| ச-265
ஏவம் விதாந் ந்ருபோ தேஷாந் குல்மை: ஸ்தாவர ஜங்கமை: |
தஸ்கர ப்ரதிஷேதார்தம் சாரைஷ் சாஅப்யனு சாரயேத் || 266
ஊர்மக்கள் கூடும் சபா மண்டபங்கள், குடிநீர் பந்தல்கள், சிற்றுண்டி விற்குமிடங்கள், வேசியர் இல்லங்கள், கள்ளுக் கடைகள், அன்ன சத்திரங்கள், நான்கு தெருக்கள் கூடுமிடங்கள், மரத்தடி, மக்கள் அதிகம் நடமாடும் இடங்கள், பாழடைந்த மலர் வனங்கள்,
வனங்கள், தோட்டங்கள், இரும்புப் பட்டறை போன்ற தொழில்செய்யும் இடங்கள், பாழடைந்த மாளிகைகள், தோப்புகள்,நந்தவனங்கள் முதலான இடங்களில் எப்போதும் ஒற்றர்களின் கண்காணிப்பு இருக்க வேண்டும். இவ்விடங்களில் திருடர்களைப்பிடிப்பதற்காக நிரந்தரமான சில வீரர்கள் இருக்க வேண்டும். மேலும்சஞ்சரித்துக் கொண்டே திருடர்களைப் பிடிக்கும் வீரர்களையும் நியமிக்க வேண்டும்.
தத்ஸஹாயைரனுகதைர் நாநாகர்ம ப்ரவேதிபி: வித்யாதுத்ஸாதயேச் சைவ நிபுணை: பூர்வதஸ்கரை: 267
பழைய திருடர்களைக் கொண்டும் புதிய திருடர்களைப் பிடிக்கலாம். தண்டனை பெற்றுத் திருந்திய பழைய திருடர்களை ஒற்றர்களாக்கிக் கொள்ள வேண்டும். திருடன் வழிகளைத் திருடன் அறிவானல்லவா? பழைய திருடர்களான ஒற்றர்கள் தங்கள் திறமைகளைக் கொண்டு புதுத் திருடர்களைப் பிடித்துக் கொடுக்குமாறு செய்ய வேண்டும்.
பக்ஷ்யபோஜ்யா அபதேஷைஷ் ச ப்ராஹ்மணாநாம் ச தர்ஷநை: 1
ஷௌர்ய கர்மா அபதேஷைஷ் ச குர்யஸ் தேஷாம் ஸமாகமம் ||| 268
இந்த ஒற்றர்கள் திருடர்களைக் கண்டுபிடித்த பிறகு இவர்களை அரசாங்க வீரர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்காக அத்திருடர்களை ஏதேனும் காரணம் காட்டி ஓரிடத்துக்கு
வரவழைக்க வேண்டும். தன் இல்லத்துக்கு விருந்துக்கு வருமாறு கூறி ஓரிடத்துக்கு
வரவழைத்துப் பிடித்துக் கொடுக்கலாம். தன் இல்லத்துக்கு முற்றும் உணர்ந்த முனிவர்
வந்திருப்பதாகவும், அவரிடம் வருங்காலத்தைப் பற்றி அறியலாமென்றும் கூறி, ஓரிடத்துக்கு வரவழைத்து வீரர்களிடம் பிடித்துக் கொடுக்கலாம்.-வாட்பயிற்சி.மற்போர் ஆசிரியர்களிடம் கூட்டிப் போய்அவற்றைப் பயிற்றுவிப்பதாக ஆசை காட்டி, ஓரிடத்துக்கு
வரவழைத்துப் பிடித்துக் கொடுக்கலாம். எப்படியேனும் அத்திருடர்களுடன் பழகி, அவர்களை நம்ப வைத்து, தந்திரமாகக் காவலரிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும்.
யே தத்ர நோபஸர்பேயுர் மூல ப்ரணிஹிதாஷ்ச யே |
தாந் ப்ரஸவஹ்ய ந்ருபோ ஹந்யாத் ஸமித்ரஞாதிபாந்தவாந் || 269
இத்தகைய ஒற்றர்களிடம் நம்பிக்கையின்றி பட்டும் படாமலும் பழகுபவர்களாக, பிடிபடாமல் இருக்கும் குற்றவாளிகளை, அவர்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் சேகரித்து
அவர்கள் உண்மையில் குற்றவாளிகளே என்பதை சந்தேகமறத் தீர்மானித்தபிறகு அக்குற்றவாளிகளை அவர்களின் குடும்பத்தோடு கொல்ல வேண்டும்.
ந ஹோடேந விநாசௌரம் காதயேத் தார்மிகோ ந்ரூப:
ஸஹோடம் ஸோபகரணம் காதயதே விசாரயந் ||-270
மரண தண்டனை விதிக்க வேண்டிய குற்றங்களைச் செய்தவன் என்று ஒரு குற்றவாளி பிடிப்பட்டால், அந்தக் குற்றத்தை அவன் செய்தற்கான தகுந்த ஆதாரங்கள் தடயங்கள் இல்லாவிடில் அவனைக் கொல்லக்கூடாது. ஆதாரங்களும், அக்குற்றத்தைச் செய்ய
உபயோகித்த கருவிகளும் கிடைத்தபோது, அவனைக் கொல்ல வேண்டும்.
க்ராமேஷ்வபி ச யே சேசிச் சௌராணாம் பக்த தாயகா: |
பாண்டா அவகாஷதாஷ் சைவ ஸர்வாம்ஸ் தாநபி காதயேத்I-271
கிராமங்களிலிருப்பவராயினும்கூட, திருடர்கள் இவர்கள் என்பதை நன்கு அறிந்தும், அவர்களுக்கு உணவு கொடுத்து தங்க இடங்கொடுத்தாலும், மற்ற உதவிகள் புரிந்தாலும் அவர்களையும் திருடர்களாக எண்ணி தண்டிக்க வேண்டும்.
ராஷ்ட்ரேஷு ரக்ஷா அதிக்ருதாந் ஸாமந்தாம்ஷ்சைவ சோதிதாந் |
அப்யாகாதேஷு மத்யஸ்தாஞ்சிஷ்யாச் சௌராநிவ த்ருதம் || 272
ஊர்க்காவல்காரர்களும், எல்லைக் காவல்காரர்களுமாக இருக்கும் வீரர்களில் எவரேனும் இத்தகைய திருடர்களுக்கு உதவி புரிபவர்களாக, அவர்கள் திருடர்களல்ல என்று பேசுபவர்களாக இருந்தால் அவர்களையும் திருடர்களாக எண்ணி திருடர்க்குரிய
தண்டனை வழங்க வேண்டும்.
யஷ்சாஅபி தர்மஸமயாத் ப்ரச்யுதோ தர்மஜீவந: |
தண்டேநைவ தமப்யோஷேத் ஸ்வகாத் தர்மாத்தி விச்யுதம் || 273
பிறருக்கு யாகம் செய்து கொடுத்தும் தானம் வாங்கியும் ஜீவிப்பவன், தர்ம நெறியிலிருந்து தவறினால் அவனும் அரசனால் தண்டிக்கப்பட வேண்டியவன்.
க்ராமகாதே ஹிதாபங்கே பதி மோஷா அபிதர்ஷநே |
ஷக்திதோ நாஅபிதாவந்தோ நிர்வாஸ்யா: ஸபரிச்சதா: 274
கிராமத்தில் கொள்ளையர் புகுந்து கொள்ளையடிக்கும் போதும், அணை உடையும்போதும், வழியை மறித்து திருடர்கள் கொள்ளை யடிக்கும்போது அருகிலுள்ளவர் உதவிக்கு ஓடி வரவில்லை என்றால் அவர்களை பந்து ஜனங்களோடு நாடு கடத்த வேண்டும்.
ராக்: கோஷா அபஹர்த்ரூம் ச ப்ரதிகூலே சஸ்திதாந்| காதயேத் விவிதைர் தண்டைரரீணாம் சோபஜாபகாந் |-275
பொக்கிஷத்திலிருந்து திருடியவன், அரசன் ஆணையை மீறுபவனாகவும் அரசனுக்கு துரோகம் இழைப்பவனாகவும் இருப்பவன் போன்றோரை விதவிதமான சரீர சித்ரவதைகளால் தண்டிக்க வேண்டும். குற்றத்தின் தன்மையைப் பொறுத்து மரண
தண்டனையும் விதிக்கலாம்.
ஸந்திம் சித்வா து யே சௌர்யம் ராத்ரௌ குர்வந்தி தஸ்கரா: |
தேஷாம் சித்வா ந்ருபோ ஹஸ்தௌ தீக்ஷ்ணே சூலே நிவேஷயேத் 11 276
இரவில் கன்னமிட்டுத் திருடுபவர்களின் கைகளைத் துண்டித்து, கூரான வேலாயுதத்தில் அவனைக் குத்தித் தொங்கவிட வேண்டும்.
அங்குளீர் க்ரந்திபேதஸ்ய சேதயேத் ப்ரதமே க்ரஹே 11 த்விதீயே ஹஸ்த சரணௌ த்ருதீயே வதமர்ஹதி |-277
முதல் முறையாக ஒரு பெண்ணிடம் தவறாக நடப்பவனின் விரல்களை வெட்ட வேண்டும். இரண்டாம் முறை செய்தால் கைகால்களை வெட்ட வேண்டும். மூன்றாம் முறை செய்தால்
மரணமே தண்டனையாகும்.
அக்நிதாந் பக்ததாம்ஷ்சைவ ததா ஷஸ்த்ரா அவகாஷதாந் || ஸந்நிதாத்ரூம் ச மோஷஸ்ய ஹந்யாச்சௌரமிவேஷ்வர: 278
இப்படிப்பட்ட குற்றவாளிக்கு, தெரிந்தே நெருப்பு, சாப்பாடு, ஆயுதங்கள், தங்க இடம் கொடுப்பவனுக்கு திருடனுக்குரிய தண்டனை வழங்க வேண்டும்.
தடாகபேதகம் ஹந்யாதப்சு சுத்தவதேந வா | யத் வாஅபி ப்ரதிஸம் ஸ்குர்யாத் தாப்யஸ்தூத்தமஸாஹஸம்||279
மக்களுக்குப் பயன்படும் குளம் ஏரி போன்றவற்றின் கரைகளை உடைப்பவனை தண்ணீரில் மூழ்கடித்தே கொல்ல வேண்டும்.ஒருவேளை அறியாமையால் செய்து, உடைப்பைச் சரிசெய்தும் கொடுத்தானானால் ஐந்நூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
கோஷ்டாஅகாரா ஆயுதா அகாரதேவதா அகாரபேதகாந் | ஹஸ்த்யஷ்வரத ஹர்த்ரூம்ஷ்ச ஹந்யாதேவா அவிசாரயந் 1l 280
அரசனுடைய பொக்கிஷ சாலை, ஆயுத சாலை, ஆலயம் இவைகளை இடிப்பவனை உடனடியாகக் கொல்ல வேண்டும். அரசனுடைய குதிரை யானை தேர் இவைகளை அபகரிப்பவனையும் உடனடியாகக் கொல்ல வேண்டும்.
யஸ்து பூர்வநிவிஷ்டஸ்ய தடாகஸ்யோதகம் ஹரேத் |
ஆகமம் வாஅப்யபாம் பிந்த்யாத் ஸ தாப்ய: பூர்வசாஹஸம் 281
முன்னர் ஏற்படுத்தப்பட்டிருந்த மக்கள் உபயோகத்துக்கான ஏரி முதலான நீர்நிலைகளிலிருந்து நீரைத் தன் உபயோகத்துக்காக வெட்டி தன் வயலுக்குப் பாய்ச்சுகிறவனுக்கும், நீர் வரும்பாதையை அடைப்பவனுக்கும் இருநூற்றைம்பது பணம் அபராதம் விதிக்கவேண்டும்.
ஸமுத்ஸ்ருஜேத் ராஜமார்கே யஸ்த்வமேத்ய மநாபதி |
ஸ த்வெள கார்ஷாபணௌ தத்யாதமேத்யம் சாஆஷுஷோதயேத்|| 282
ராஜவீதியில் மலங்கழிப்பவனுக்கு இரண்டு கார்ஷ்ணா பணங்களை அபராதம் விதித்து, அவனைக் கொண்டே அவ்விடத்தை சுத்தம் செய்விக்க வேண்டும்.
ஆபத்கதோ அதவா வ்ருத்தா கர்பிணீ பால ஏவ வா
பரிபாஷணமர்ஹந்தி தச்ச ஷோத்யமிதி ஸ்திதி: ||I283
நோயாளி, வயோதிகன், கர்ப்பிணி, சிறுவன் முதலானோர் ஆபத்தில் இத்தகைய செயலைச் செய்து விட்டால், அவர்களைக் கொண்டே அவ்விடத்தை உடனடியாக சுத்தம் செய்வித்து,
அவர்களை கண்டித்து அனுப்பி வைக்க வேண்டும். அபராதம் ஏதும் போடத் தேவையில்லை.
சிகித்ஸசகாநாம் ஸர்வேஷாம் மித்யாப்ரசரதாம் தம: |
அமானுசேஷு ப்ரதமோ மானுசேஷுது மத்யம: |-284
மருத்துவன் சிகிச்சை செய்யும்போது தவறான மருந்து கொடுத்தானானால் அவனைத் தண்டிக்க வேண்டும். அவன் சிகிச்சை செய்தது மிருகங்களுக்கானால் இருநூற்றைம்பது பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும். மனிதர்களுக்கானால் ஐந்நூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும்.
ஸங்க்ரமத்வஜயஷ்டீநாம் ப்ரதிமாநாம் ச பேதக: 1
ப்ரதி குர்யாச்ச தத் ஸர்வம் பஞ்ச தத்யாச்சதாநிச 285
தண்ணீரைக் குறுக்கே கடப்பதற்காகப் போடப்பட்டிருக்கும் மரப்பாலம், கற்பாலம் போன்றவற்றையும், ராஜதுவாரங்களில் இருக்கும் கொடிமரங்கள் யூப ஸ்தம்பங்களையும், தெய்வச் சிலைகளையும் சேதப்படுத்துபவனுக்கு ஐந்நூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும். அவன் சேதப்படுத்தியவைகளை அவனே மீண்டும் புதிதாக செய்து வைக்க வேண்டும்.
அதூஷி தாநாம் த்ரவ்யாணாம் தூஷணே பேதநே ததா |
மணீ நாமபவேதே ச தண்ட: ப்ரதம ஸாஹஸ்: || 286
தங்கத்தோடு அதிகம் செம்பைக் கலப்படம் செய்தவன், உயர்ந்தரத்தினங்கள் முதலானவற்றைப் பதிக்கும்போது அவற்றை உடைத்து விட்டவன், முத்துக்களை மாலை கோக்கத் துளையிடும்போது தவறுதலாகத் துளையிட்டு அவற்றைக் கெடுத்தவன் போன்றோருக்குஇருநூற்றைம்பது பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும். மேலும்பொருளின் உடைமைக்காரனுக்கு புதிதாக அதைச் செய்து கொடுக்க வேண்டும்.
ஸமைர் ஹி விஷமம் யஸ் து சரேத் வை ல்யதோ அபிவா|
ஸ ப்ராப்னுயாத் தமம் பூர்வம் நரோ மத்யமமேவ வா|-287
ஒரே விலையைக் கூறாமல் ஆளுக்குத் தக்கபடி விலையைக் கூறி விற்கும் ஏமாற்றுக்காரனுக்கு நூறு பணங்களிலிருந்து இருநூறு பணங்கள் வரை அபராதம் விதிக்க வேண்டும்.
பந்தநாநி ச ஸர்வாணி ராஜமார்கே நிவேஷயேத் |
துக்கிதா யத்ர த்ருஷ்யேரந் விக்ரூதா: பாபகாரிண: || 288
குற்றவாளிகளைக் கட்டிப்போட்டு அடிப்பது, உடல் சித்திரவதைகளைச் செய்வது முதலானவற்றை பலரும் பார்க்கும்இடங்களான ராஜவீதிகளில் செய்ய வேண்டும்.அப்போதுதான்குற்றம் செய்தால் கிடைக்கும் தண்டனைகளைக் காணும் மற்றவர்களுக்கு குற்றம் செய்வதில் கருத்துப் போகாது. மற்றகுற்றவாளிகளும்கூட திருந்தி நல்வழிப்படுவார்கள்.
ப்ராகாரஸ்ய ச பேத்தாரம் பரிகாணாம் ச பூரகம் |
த்வாராணாம் சைவ பங்தாரம் க்ஷிப்ரமேவ ப்ரவாஸயேத்|| 289
அரண்மனை மதிளை இடிப்பவன், கோட்டை மதிளை இடிப்பவன், அகழியைத் தூர்ப்பவன் போன்றோரை உடனடியாக நாடு கடத்தவேண்டும்.
அபிசாரேஷு ஸர்வேஷு கர்தவ்யோ த்விஷதோ தம: |
மூலகர்மணி சாஅநாப்தை: க்ருத்யாசு விவிதாசு ச|| 290
ஒருவனைக் கொல்வதற்காக அபிசார ஹோமம் செய்பவனுக்கு இருநூறு பணங்கள் அபராதம் விதிக்க வேண்டும். இவன் செய்த ஹோமத்தால் யாருக்கேனும் மரணம் நேரிட்டிருந்தால் இவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். மரணத்துக்காக மட்டுமின்றி, வேறு எந்த வகைக் கெடுதி செய்வதற்காக ஹோமமோ, மாந்திரீகமோ செய்திருந்தாலும் இதே தண்டனைதான்.
அபிஜவிக்ரயீ சைவ பீஜோத்க்ரஷ்டா ததைவ ச |
மர்யாதா பேதகஷ்சைவ விக்ருதம் ப்ராப்னுயாத் வதம்|-291
முளைக்கவியலாத தானியங்களை, விதைக்கான தானியங்கள் என்று கூறி விற்பவனுக்கும், அவ்வாறே விதைக்கான தானியங்களோடு முளைக்காத தானியங்களைக் கலப்படம் செய்து விற்பவனுக்கும், வயல்களின் எல்லைகளை மாற்றியமைப்பவனுக்கும்,
சித்ரவதைகளை தண்டனையாக விதிக்க வேண்டும்.
ஸர்வகண்டகபாபிஷ்டம் ஹேமகாரம் து பார்திவ: 1
ப்ரவர்தமாநமந்யாயே சேதயேத் கண்ட : க்ஷரை: !! 292
தங்கத்தை எடையில் ஏமாற்றுவது, உரசிப் பார்த்து மாற்று இவ்வளவு என்று உரைப்பதில் ஏமாற்றுவது, தங்கத்தில் கலப்படம் செய்து விற்பது, பொருள் செய்யக் கொடுத்த தங்கத்தில் திருடுவது போன்றவற்றைச் செய்யும் பொற்கொல்லனுக்கு அவன் செய்த குற்றத்துக்குத் தக்கபடி சித்ரவதைகளை தண்டனையாக விதிக்க வேண்டும். குற்றம் பெரிதாயின் உடல் பாகங்களை வெட்டிக் கொல்ல வேண்டும்.
ஸீதா த்ரவ்யா அபஹரணே ஷஸ்த்ராணா மௌஷதஸ்யச |
காலமாஸாத்ய கார்யம்ச ராஜா தண்டம் ப்ரகல்பயேத் || 293
மண்வெட்டி, கோடரி, கலப்பை முதலியவற்றைத் திருடியவனுக்கும், வாள் வில் கத்தி முதலான ஆயுதங்களைத் திருடியவனுக்கும், ஒளஷதங்களை (மருந்துகளை) திருடியவனுக்கும்,எந்த காலத்தில் எந்த அவசரத்துக்காக அந்தக் காரியத்தைச் செய்தான்
என்பதைப் பார்த்து, அதற்குத் தக்கபடி அரசன் தண்டனை விதிக்கவேண்டும்.
ஸ்வாம்யமாத்யெள புரம் ராஷ்ட்ரம் கோஷதண்டௌ சுஹ்ருத் ததா|
ஸப்த ப்ரக்ருதயோஹ்யேதா: ஸப்தாங்கம் ராஜ்யமுச்யதே |-294
அரசன், அமைச்சர்கள், அந்தப்புரம், நாடு, பொக்கிஷம், படைபலம், நட்பு அரசர்கள் இந்த ஏழு பிரக்கதிகளும் ஒரு அரசனின் அங்கங்களாகும். இதையே ராஜாங்கம் என்று கூறுகிறோம்.
ஸப்தாநாம் ப்ரக்ருதீநாம் து ராஜ்யஸ்யா ஆஸாம் யதாக்ரமம் பூர்வம் பூர்வம் குருதரம் ஜாநீயாத் வ்யஸநம் மஹத்|| 295
இவற்றில் பின்னிருப்பதைக் காட்டிலும் முன்னிருப்பது உயர்ந்தது. பின்னிருப்பவற்றைவிட முன்னிருப்பவற்றுக்கு குறைவு வராமல்காக்க வேண்டும். அதாவது நட்பு அரசர்களைவிட தன் படைபலம் முக்கியம். படைபலத்தைவிட பொக்கிஷம் முக்கியம். பொக்கிஷத்தைவிட நாடு முக்கியம். நாட்டைவிட தலைநகரம் முக்கியம். தலைநகரைவிட அமைச்சர்கள் முக்கியம். அமைச்சர்களை விட அரசனேமிக மிக முக்கியம்.
ஸப்தாங்கஸ்யேஹ ராஜ்யஸ்ய விஷ்டப்தஸ்ய த்ரிதண்டவத் |
அந்யோஅந்ய குணவைஷேஷ்யாந் ந கிஞ்சித்திரிச்யதே |-296
இப்படிக் கூறியிருப்பதால் ஒன்றுக்கு மற்றொன்றுதாழ்ந்தது என்று எண்ணிவிடக்கூடாது. இந்த ஏழு அங்கங்களுமே ஒரே நிகரானவையே. சந்யாசியின் கையிலுள்ள திரிதண்டத்தின் மூன்று முனைகளும் சமமாக இருப்பது போன்று ஒரு ராஜ்யத்துக்கு இந்த ஏழு அங்கங்களும் சமமானவை. ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை. ஒன்றைச் சார்ந்து ஒன்று இருக்கும். ஆபத்துக் காலத்தில் எது முக்கியம் என்பதை அறிந்து கொள்வதற்காகவே எதைவிட எது
முக்கியம் என்று கூறப்பட்டது.
தேஷு தேஷு து க்ருத்யே தத்தங்கம் விசிஷ்யதே |
யேந யத் ஸாத்யதே கார்யம் தத் தஸ்மிஞ்ச்ரேஷ்ட முச்யதே 297
இந்த ஏழு அங்கங்களில், அந்தந்த காரியங்களைச் செய்ய அந்தந்த அங்கங்களால் மட்டுமே முடியும். எனவே எந்த காரியத்தை நிறைவேற்ற வேண்டுமானாலும் அதற்குரிய அந்த அங்கத்தைக் கொண்டே நிறைவேற்ற இயலும். எனவே அந்தந்த காரியங்களுக்கு,
அந்தந்த அங்கங்கள் முக்கியமானவை.
சாரேணோத்ஸாஹயோகேந க்ரியயைவ ச கர்மணாம்|
ஸ்வஷக்திம் பரஷக்திம் சரித்யம் வித்யாந் மஹீபதி:|| 298
அரசன் தினதன் சக்தியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஒற்றர்களைக் கொண்டு தன் நாட்டில் நடப்பவை களையும், அருகிலுள்ள நாடுகளில் நடப்பவைகளையும், எதிரி
நாடுகளில் நடப்பவைகளையும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். தன் படை வீரர்களுக்கு எப்போதும் உற்சாகமூட்டி வைத்திருக்க வேண்டும். யானைகள் குதிரைகள் முதலானவற்றை நன்கு கவனித்து அவைகளுக்கு நோய் வராமல் காத்து, வந்த
நோயைப் போக்கி பலத்தோடு வைத்திருக்க வேண்டும். ஆயுதங்களும் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஒரு அரசன் தன்னுடைய சக்தியையும், மாற்றான் சக்தியையும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
பீடநாநி ச ஸர்வாணி வ்யஸநாநி ததைவ ச
ஆரபேத தத: கார்யம் ஸஞ்சிந்த்ய குருலாகவம்|| 299
ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு முன்பு அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை நன்கு ஆராய வேண்டும். வெற்றியை எளிதில் அடைய முடியுமா அல்லது வெற்றியை அடைவது கடினமா என்பதை யெல்லாம் நன்கு யோசித்து பிறகு போர் தொடுப்பது சரியே என்று தெரிந்தால் போர் தொடுக்க வேண்டும்.
ஆரபேதைவ கர்மாணி ஷ்ராந்த: ஷ்ராந்த: பூந: பூந: | கர்மாண்யாரபமாணம் ஹி புருஷம் ஷ்ரீர் நிஷேவ தே||| 300
இடையிடையே இளைப்பாறி மீண்டும் மீண்டும் யுத்தங்களைத் தொடர வேண்டும். இவ்வாறு காரியங்களைத் தொடர்ந்து செய்பவனிடமே ராஜ்ய லக்ஷ்மி விடாமல் அவனுடன் இருப்பாள்.
க்ருதம் த்ரேதா யுகம் சைவ த்வாபரம் கலிரேவ ச |
ராக்ஞோவ்ருத்தாநி ஸர்வாணி ராஜாஹி யுகமுச்யதே||| 301
அரசன் செயல்களே கிருதயுகத்தையும் திரேதாயுகத்தையும்துவாபரயுகத்தையும் கலியுகத்தையும் நிலைநிறுத்துவதால் அரசனே யுகம் எனப்படுவான்.
கலி: ப்ரசுப்தோ பவதிஸ ஜாக்ரத் த்வாபரம் யுகம் |
கர்மஸ்வப்யுத்யதஸ் த்ரேதா விசரம்ஸ்து க்ருதம் யுகம் 302
அரசன் சோம்பலோடு எந்த முயற்சியும் செய்யாதவனாக அஞ்ஞானத்தோடு இருக்கும்போது கலியுகத்தவனாகிறான்.-அறிஞனாக இருந்த போதும்கூட விழிப்புடன் ஆட்சி நடத்தாதபோது துவாபர யுகத்தவனாகிறான். முயற்சியோடு காரியங்களிலீடுபட்டு விழிப்புடன் ஆட்சி
நடத்தும் போது திரேதா யுகத்தவனாகிறான். அரசன் தர்மவானாக தானிருந்து, மக்களையும் தர்மத்தின்வழியை விட்டு விலகாதவாறு நடத்திச் செல்லும்போது கிருத யுகத்த வனாகிறான்.
இந்த்ரஸ்யா அர்கஸ்ய வாயோஷ்ச யமஸ்ய வருணஸ்ய ச
சந்த்ரஸ்யா அக்நே: ப்ருதிவ்யாஷ்ச தேஜோவ்ருத்தம் ந்ருபஷ் சரேத் || 303
இந்திரன், சூரியன், வாயு, யமன்,வருணன், சந்திரன், அக்னி, பூமியினுடைய தன்மைகளை அரசன் பெற்றிருக்க வேண்டும்.
வார்ஷிகாம்ஷ் சதுரோ மாஸாந் யதேந்த்ரோ அபிப்ரவர்ஷதி |
ததா அபிவர்ஷேத் ஸ்வம் ராஷ்ட்ரம் காமைரிந்த்ரவரதம் சரந் ||| 304
இந்திரன் ஆவணி தொடங்கி நான்கு மாதங்கள் மழையைப் பொழிவிக்கிறார். அதனால் பயிர்கள் செழித்து வளர்ந்து உயிர் வாழ்வதற்கான உணவுகளை மனிதர்கள் நிறைவாகப் பெற்று மகிழ்கிறார்கள்.-அவ்வாறே அரசனும் தன் குடிமக்களுக்குத் தேவையான
அனைத்தும் கிடைக்குமாறு செய்து அவர்களை மகிழ்வோடு வைத்திருக்க வேண்டும்.
இந்த வகையில் அரசன் இந்திரனைப்போன்றுநடந்து கொள்ள வேண்டும்.
அஷ்டௌ மாஸாந் யதா ஆதித்யஸ் தோயம் ஹரதி ரஷ்மிபி: |
ததா ஹரேத் கரம் ராஷ்ட்ராந் நித்யமர்கவரதம் ஹி தத் || 305
மார்கழி தொடங்கி எட்டு மாதங்கள் சூரியன் பூமியிலிருந்து சிறிது சிறிதாக தண்ணீரை கிரகித்துக் கொள்கிறார். அவ்வாறே அரசனும் தனக்குச் சேர வேண்டிய வரிப்பணத்தை மக்களிடமிருந்து சிறிது சிறிதாகக் கிரகித்துக் கொள்ள வேண்டும். இந்த வகையில் அரசன் சூரியனைப் போன்று நடந்து கொள்ள வேண்டும்.
ப்ரவிஷ்ய ஸர்வ பூதாநி யதா சரதி மாருத: |
ததா சாரை: ப்ரவேஷ்டவ்யம் வரதமேதத் தி மாருதம்|| 306
வாயுவானது எல்லா பிராணிகளின் உடல்களிலும் உள் நுழைந்து சஞ்சரிப்பதைப் போன்று அரசன் ஒற்றர்களை எல்லா இடங்களிலும் பிரவேசிக்கச் செய்து, அவர்கள் மூலம் அனைத்தையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். இந்த வகையில் அரசன் வாயுவைப் போன்று நடந்து கொள்ள வேண்டும்.
யதா யம: ப்ரியத்வேஷ் யெள ப்ராப்தேகாலேநியச்சதி |
ததா ராக்ஞா நியந்தவ்யா: ப்ரஜாஸ் தத் தி யமவரதம்|| 307
யமன்,இவன் வேண்டியவன் – இவன் வேண்டாதவன் என்று யாரையும் பேதப்படுத்திப் பார்ப்பதில்லை. அவரவர்க்குரிய மரண காலத்தை விதிப்படி நிர்ணயிக்கிறார். அவரவர் பாவ புண்ணியங் களுக்கேற்ப சொர்க்கத்தையோ நரகத்தையோ உரியதாக்குகிறார்.
அவ்வாறே அரசனும், இவன் தனக்கு வேண்டியவன், இவன் வேண்டாதவன் என்று யாரையும் பேதப்படுத்திப் பார்க்காமல், குற்றமிழைத்தவர்கள் எவராயினும் தக்கபடி தண்டிக்க வேண்டும். இந்த வகையில் அரசன் யமனைப் போன்று நடந்து கொள்ள வேண்டும்.
வருணேந யதா பாஷைர் பத்த ஏவாஅபித்ருஷ்யதே
ததா பாபாந் நிக்ருஹ்ணீயாத் வரதமேதத் தி வாருணம் 308
பாவிகளை வருணன் தமது பாசக் கயிற்றால் பிணைத்துக் கட்டிப் போடுவார். (ஒருவன் உயிர் பிரிந்த பிறகு அவனுக்குரிய தண்டனைகளை வழங்குபவர் யமன். ஒருவன் உயிரோடிருக்கும்போதே, அவன் பாவங்கள் எல்லை மீறும் போது தண்டிப்பவர்
வருணன்.) அவ்வாறே அதிகாரிகளை அவர்கள் பாவம் புரியாதவாறு தன்னுடைய அதிகாரம் என்னும்பாசக் கயிற்றால் அவர்களைக் கட்டிப் போட வேண்டும். அதாவது அரசன் எத்தகைய அதிகாரிகளையும் தன்னிச்சையாக அதிகாரம் செலுத்த விடக்கூடாது.
இந்த வகையில் அரசன் வருணனைப் போன்று நடந்து கொள்ள வேண்டும்.
பரிபூர்ணம் யதா சந்த்ரம் த்ருஷ்ட்வாஹ்ருஷ்யந்தி மாநவா: 11
ததா ப்ரக்ருதயோ யஸ்மிந் ஸ சாந்த்ர வ்ரதிகோ ந்ருப: |-309
பூரண சந்திரனைப் பார்ப்பவர்கள் மனம் சந்தோஷப்படும். அவ்வாறே அரசனைப் பார்க்கும்போது மந்திரிகள் முதலானோருக்கு சந்தோஷம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் அரசனுக்கு ஹிதத்தைப் பயமின்றி எடுத்துக் கூறுவார்கள். இந்த வகையில் அரசன் பூர்ண சந்திரனைப்போன்று இருக்க வேண்டும்.
ப்ரதாபயுக்தஸ் தேஜஸ்வீ நித்யம் ஸ்யாத் பாபகர்மசு |
த்ருஷ்ட ஸாமந்தஹிம்ஸ்ரஷ் ச ததாக்நேயம் வ்ரதம் ஸ்ம்ருதம்|| 310
பிரதாபம் மிக்கவனாகவும், தேஜஸ்மிக்கவனாகவும் இருப்பதில் அக்னியை ஒத்திருக்க வேண்டும் அரசன். அவ்வாறே தன்னைச் சுற்றியுள்ளவர்களில் எவர்கள் தனக்கு அனுகூலமாக இல்லாமல் பிரதிகூலமாக இருக்கிறார்களோ அவர்களைக் கடின மனத்தோடு
அழிக்க வேண்டும். தனக்கு அனுகூலமாக இருப்பவர்களுக்கு எப்போதும் நன்மைகளைச் செய்யவேண்டும்.. தன்னை முறையாக ஹோமத் தீயாக வளர்த்து, போற்றுபவர்களின் வம்சத்தையே காக்கிறார் அக்னி பகவான். தன்னை முறைகேடாக உபயோகிக்க நினைப்பவர்களை, அவர்கள் கூட இருப்பவர்களோடு சேர்த்து அழித்து விடுகிறார். அரசனும் அக்னியின் இந்த குணத்தோடு இருக்க வேண்டும். இந்த வகையில் அரசன் அக்னியைப் போன்று இருக்க வேண்டும்.
யதா ஸர்வாணி பூதாநி தரா தாரயதே சமம் |
ததா ஸர்வாணி பூதாநி பிப்ரத: பார்திவம் வ்ரதம் || 311
பூமி தன் மீதுள்ள தாவரங்களையும் மற்ற எல்லா உயிர்களையும் சமமாகப் பாவித்து தாங்குகிறது. அதைப்போன்று அரசன் தன் குடிமக்கள் அனைவருக்கும் உணவு, உடை, உறையுள் முதலானவை கிடைக்குமாறு செய்து காப்பாற்ற வேண்டும்.-இந்த வகையில் அரசன் பூமியைப் போன்று இருக்க வேண்டும்.
ஏதைருபாயைரந்யைஷ்ச யுக்தோ நித்யமதந்த்ரித: 11 ஸ்தேநாந் ராஜா நிக்ருஹ்ணீயாத் ஸ்வராஷ்ட்ரே பரரவச 312
இதுவரை கூறிய உபாயங்களாலும், மற்றும் சூழ்நிலைக்குத் தக்கபடி வேறு உபாயங்களாலும்,தன் நாட்டிலுள்ள திருடர்களையும் மற்றக் குற்றவாளிகளையும், பிற நாட்டிலிருந்து வந்து தன்நாட்டில் இருக்கும் திருடர்களையும் மற்றக் குற்றவாளிகளையும்
கண்டுபிடித்து தண்டித்து அடக்க வேண்டும்.
பராமப்யாபதம் ப்ராப்தோ ப்ராஹ்மணாந் ந ப்ரகோபயேத்
தே ஹ்யேநகம் குபிதா ஹந்யு: ஸத்ய: ஸபலவாஹநம்|| 313
அரசன், தனக்கு மிகுந்த ஆபத்துகள் ஏற்பட்ட காலத்திலும்கூட பிராம்மணர்கள் தன்னிடம் கோபம் கொள்ளுமாறு நடந்து கொள்ளக்கூடாது. அவர்களுடைய கோபம் அவனை அவன்
பரிவாரத்தோடு சேர்த்துஅழித்து விடும்.
யை: க்ருத: ஸர்வ பக்ஷ்யோ அக்நிரபேயஷ் ச மஹோததி:
க்ஷயீ சாஆப்யாயித: ஸோம: கோ ந நஷ்யேத் ப்ரகோப்ய தாந்|| 314
அக்னியை அனைத்தையும் உண்பவராகச் சபித்தது பிராம்மணரே. சமுத்திர ஜலத்தை ஒரு கை ஜலமாக்கிக் குடித்து சமுத்திரமே இல்லாமல் வற்றச் செய்தது பிராம்மணரே. சந்திரனை
க்ஷயரோகம் ஏற்படுமாறு சபித்ததும், பின் காத்ததும் பிராம்மணரே. இத்தகைய பிராம்மணருக்கு கோபத்தை ஏற்படுத்திய எவர்தான் அதன்பின் சுகமாக வாழமுடியும்?
லோகாநந்யாந் ஸ்ருஜேயுர் யே லோகபாலாம்ஷ் ச கோபிதா: | தேவாந் குர்யுரதேவாம்ஷ் ச க: க்ஷிண்வம்ஸ் தாந் ஸம்ருத்து யாத்|| 315
பிராம்மணர்கள் நினைத்தால் சொர்க்கம் முதலான உலகங்களையும் படைப்பார்கள்; இந்திரன் முதலான தேவர்களையும் படைப்பார்கள்; தேவர்களைச் சபித்து அவர்களை மானிடராக்குவார்கள். இத்தகைய சக்தி வாய்ந்த பிராம்மணர்களின் கோபத்துக்
காளான எவர்தான் சௌக்கியமாக வாழமுடியும்?
யாநுபாஷ்ரித்ய திஷ்டந்தி லோகா தேவாஷ்ச ஸர்வதா |
ப்ரஹ்ம சைவ தநம் யேஷாம் கோ ஹிம்ஸ்யாத் தாந்ஜி ஜீவிஷு:|| 316
உலகங்களும் தேவர்களும் யாரை அண்டி எப்போதும் இருக்கின்றனரோ, எவர் வேதத்தையே தமது சொத்தாகக் கொண்டிருக்கின்றனரோ அத்தகைய பிராம்மணர்களை இம்சித்து அதன்பிறகு யார்தான் சௌக்கியமாக வாழ்வார்கள்?
அவித்வாம்ஷ் சைவ வித்வாம்ஷ்ச ப்ராஹ்மணோ தைவதம் மஹத் |
ப்ரணீதஷ் சா அப்ரணீதஷ்ச யதாஅக்ர் தைவதம் மஹத் |-317
சாஸ்திர முறைப்படி மூட்டப்பட்டாலும் அல்லாவிட்டாலும் அக்னி மேலான தெய்வமாக இருப்பதைப் போன்று பிராம்மணன் வித்வானாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மேன்மையானவனேயாவான்.
ஷ்மஷாநேஷ்வபி தேஜஸ்வீ பாவகோ சைவ துஷ்யதி | ஹுயமாநஷ்ச யக்ஞே பூய ஏவா அபிவர்ததே|-318
ஏவம் யத்யப்யநிஷ்டேஷு வர்தந்தே ஸர்வகர்மசு |
ஸர்வதா ப்ராஹ்மணா: பூஜ்யா: பரமம் தைவதம் ஹி தத்||-319-
தேஜஸ்வியான அக்னி பகவான் சுடுகாட்டில் சவங்களை எரித்துச் சாம்பலாக்குகிறார். அவரே யக்ஞங்களில் வளர்க்கப்படுகிறார்.-அவ்வாறே பிராம்மணர்கள் விரும்பாதவற்றைச் செய்தாலும், எப்போதும் எல்லா வகையிலும் போற்றுதலுக்குரியவர்களாவர். அவர்களே மேலான தேவர்கள்.
க்ஷத்ரஸ்யா அதிப்ரவருத்தஸ்ய ப்ராஹ்மணான் ப்ரதி ஸர்வ : |
ப்ரஹ்மைவ ஸந்நியந்த்ரு ஸ்யாத் க்ஷத்ரம் ஹி ப்ரஹ்மஸம்பவம்|| 320
பிராம்மணர்களுக்கு எந்த வகையிலாவது துன்பம் இழைத்தால் அவர்கள் சாபம் கொடுத்தோ, ஹோமத்தாலோ தண்டனையளித்து விடுவர். க்ஷத்திரியன் பிராம்மணனால் பிறந்தவன்.
அத்ப்யோ அக்ர் ப்ரஹ்மத: க்ஷத்ரமஷ்மநோ லோஹமுத்திதம் |
தேஷாம் ஸர்வத்ரகம் தேஜ: ஸ்வாசு யோநிஷு ஷாம்யதி ||| 321
நீரிலிருந்து நெருப்பும், பிராம்மணரிலிருந்து க்ஷத்ரியனும், கல்லிலிருந்து உலோகங்களும் பிறந்ததால் நெருப்பும் க்ஷத்ரியனும் உலோகங்களும் தத்தம் பராக்ரமத்தை மற்ற இடங்களில் காட்ட முடியுமேயன்றி தம் பிறப்பிடத்தில் காட்ட முடியாது. நெருப்பு நீரால் அணைந்து போகும். உலோகங்கள் கல்லில் உடைந்துபோகும். க்ஷத்ரியன் பிராம்மணனிடம் ஒடுங்கி விடுவான்.
நா அப்ரஹ்ம க்ஷத்ர ம்ருத்நோதி நா அக்ஷத்ரம் ப்ரஹ்ம வர்ததே |
ப்ரஹ்ம க்ஷத்ரம் ச ஸம்ப்ருக் தமிஹ சாஅமுத்ர வர்ததே|| 322
பிராம்மணனில்லாமல் க்ஷத்ரியன் மேன்மையடைய முடியாது. க்ஷத்ரியன் இல்லாமல் பிராம்மணன் நிம்மதியாக தன் கிரியைகளைச் செய்ய முடியாது. பிராம்மணனும் த்ரியனும் ஒருவருக்கொருவர் சாதகமாக வாழும்போது இரு தரப்பினருமே இகபர சுகங்களை
இடையூறின்றி பெறமுடியும்.
தத்வா தநம் து விப்ரேப்ய: ஸர்வதண்ட ஸமுத்திதம் |
புத்ரே ராஜ்யம் ஸமாஸ்ருஜ்ய குர்வீத ப்ராயணம் ரணே || 323
அரசனின் மரணம் எப்படியேற்பட வேண்டுமென்றால், போர்க்களத்தில் போரிட்டு வீரமரணம் அடைய வேண்டும். அல்லது முதுமையடைந்த பிறகு தன் பொக்கிஷத்தில் இருக்கும்
அபராதமாக வசூலித்த தொகை முழுவதையும் பிராம்மணர்களுக்குக் கொடுத்துவிட்டு, ராஜ்ஜியத்தை மகனுக்களித்து முடிசூட்டிவிட்டு தன்னுடைய சுயவிருப்பப்படி மரணத்தை அடைய வேண்டும்.
ஏவம் சரந்ஸதா யுக்தோ ராஜதர்மேஷு பார்திவ: 1
ஹிதேஷு சைவ லோகஸ்ய ஸர்வாந் ப்ருத்யாந் நியோஜயேத் || 324
இவ்வாறாக அரசன் ராஜதர்மங்களை எப்போதும் விடாது செய்தபடி, சகல மக்களின் நன்மையை மனத்தில் கொண்டு வேலையாட்களை நியமிக்க வேண்டும்.
ஏஷோ அகில: கர்மவிதிருக்தோ ராக்கு: ஸநாதந: |
இமம் கர்மவிதிம் வித்யாத் க்ரமஷோ வைஷ்ய சூத்ரயோ: 325
அரசனுக்குரிய தர்ம விதிகள் அனைத்தும் இதுவரை கூறப் பட்டது. இனி வைசிய சூத்திரர்களுக்குரிய தர்ம விதிகளைக் கூறுகிறேன்.
வைஷ்யஸ்து க்ருத ஸம்ஸ்கார: க்ருத்வா தாரபரிக்ரஹம் !
வார்தாயாம் நித்ய யுக்த: ஸ்யாத் பசூநாம் சைவ ரக்ஷணே|| 326
வைசியன் உபநயனம் முதலான கிரியைகளைச் செய்து கொண்ட பிறகு திருமணம் புரிந்து கொள்ள வேண்டும். ஜீவனத்துக்கான தொழிலில் ஈடுபட வேண்டும். பசுக்களை வைத்து
போஷிக்க வேண்டும்.
ப்ரஜாபதிர் ஹி வைஷ்யாய ஸ்ருஷ்ட்வா பரிததே பசூந்|
ப்ராஹ்மணாய ச ராக்ஞே ச ஸர்வா: பரிததே ப்ரஜா: || 327
பிரம்மதேவர், பசுக்களைக் காப்பதற்காகவே வைசியர்களைப் படைத்தார். அவ்வாறே பிரஜைகளைப் படைத்து அவர்களைக் காக்கும் பொறுப்பை பிராம்மணரிடமும், க்ஷத்ரியரிடமும் ஒப்படைத்தார்.
நச வைஷ்யஸ்ய காம: ஸ்யாந் ந ரக்ஷேயம் ப நிதி
வைஷ்யே சேச்சதி நாஅந்யேந ரக்ஷிதவ்யா: கதஞ்சநII 328
வைசியன் மற்றத் தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பவனாக இருந்தாலும் பசுக்களின் ரட்சணத்தையும் கட்டாயம்செய்ய வேண்டும். பசுக்களை ரட்சிப்பது தன் கடமையல்ல என்றுஒருபோதும் வைசியன் எண்ணக்கூடாது.அவ்வாறே வைசியன் இருக்கும்போது மற்றவர்கள் எப்போதும் பசுவைக் காத்தலில் ஈடுபடக்கூடாது.
மணி முக்தா ப்ரவாலாநாம் லோஹாநாம் தாந்தவஸ்ய ச கந்தாநாம் ச ரஸாநாம் ச வித்யாதர்கபலா அபலம் || 329
ரத்தினங்கள், முத்துக்கள், பவழங்கள், தங்கம், வெள்ளி, துணிகள், சந்தனம், அகில் முதலான வாசனைத் திரவியங்கள், தேன் முதலான ரசங்களின் அவ்வப்போதைய விலைகளை, தேச
காலங்களைப் பொறுத்து அவற்றின் விலை ஏற்ற இறக்கங்களை, பொருட்களின் தரங்களை நன்கு அறிந்தவனாக வைசியன் இருக்க வேண்டும்.
பீஜாநாமுப்திவிச்ச ஸ்யாத் க்ஷேத்ர தோஷகுணஸ்ய ச 1
மாநயோகம் ச ஜாநீயாத் துலா யோகாம்ஷ்ச ஸர்வ : | 330
விதைகளின் தன்மைகள், விதைக்கும் முறைகள், விதைக்கும் காலங்கள், மண்ணின் தன்மைகள், அளக்கும் தராசுக் கோல்கள் முதலான கருவிகள், அவற்றின் தன்மைகளை அறியும் திறமை பெற்றவனாக வைசியன் இருக்க வேண்டும்.
ஸாரா அஸாரம் ச பாண்டாநாம் தேஷாநாம் ச குணாஅகுணாந் 1
லாபாஅலாபம் ச பண்யாநாம் ப நாம் பரிவர்தநம் || 331
விற்கும் பொருட்களின் தரம் உயர்ந்ததா, தாழ்ந்ததா என்பதையும், அந்தப் பொருட்களுக்கு எந்தெந்த நாடுகளில் நல்ல விலை கிடைக்கும். எந்தெந்த நாடுகளில் விற்பனை நல்லபடி
இருக்காது என்பதையும், அவற்றை எந்த இடத்தில் எந்த காலத்தில் விற்றால் நல்லலாபம் கிடைக்கும் என்பதையும், விற்கும் பொருட்களுக்கு நஷ்டம் எந்தெந்த வகைகளில் ஏற்படக்கூடும் என்பதையும்,பசுக்களைப் போஷிக்கும் முறைகளையும் வைசியன் நன்கு அறிந்துவைத்திருக்க வேண்டும்.
ப்ருத்யாநாம்ச ப்ருதிம் வித்யாத் பாஷாஷ்ச விவிதா ந்ருணாம் த்ரவ்யாணாம் ஸ்தாநயோகாம்ஷ்ச க்ரயவிக்ரயமே. ச 332
பசு மேய்ப்பவர்களுக்கு எவ்வளவு கூலி கொடுக்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். வெளிநாடுகளில் மக்கள்பேசும் மொழிகளை அறிந்திருக்க வேண்டும். விற்பனைப் பண்டங்களை எத்தகைய இடங்களில் சேகரித்து வைக்க வேண்டும், அவற்றைக்கெட்டுப் போகாமல் பாதுகாப்பது எப்படி என்பதை அறிந்திருக்க
வேண்டும். எந்த தேசத்தில் எந்தப் பொருளை எவ்வளவு விலைக்கு வாங்கலாம், அதை எந்த தேசத்தில் எவ்வளவு விலைக்கு விற்கலாம்முதலானவற்றை நன்கு அறிந்தவனாக வைசியன் இருக்க வேண்டும்.
தர்மேண ச த்ரவ்யவருத்தா வாதிஷ்டேத் யத்நமுத்தமம்
தத்யாச்ச ஸர்வபூதாநாமந்தமேவ ப்ரயத்நத: II 333
தர்மமான முறையில் பொருட்களை விற்று தனத்தைப் பெருக்க நன்கு முயற்சி செய்ய வேண்டும். எல்லா உயிர்களுக்கும் முயற்சியோடு அன்னத்தை அளிக்க வேண்டும்.
விப்ராணாம் வேத விதுஷாம் க்ருஹஸ்தாநாம் யஷஸ்விநாம் 11
சுஷ்ரூஷைவ து சூத்ரஸ்ய தர்மோ நைஷ்ரேயஸ: பர ||-334
வேத விற்பன்னர்களும், தங்கள் கர்மானுஷ்டானங்களை விடாது செய்பவர்கள் என்று புகழ் பெற்றவர்களும், இல்லறவாசிகளுமான பிராம்மணர்களுக்கு பணிவிடை புரிவதே சூத்ரனுக்கு மேலான தர்மமாகும். இந்த தர்மத்தை நல்லபடி செய்வதாலேயே அவன் சொர்க்கத்தை அடைந்து விட முடியும்.
ஷுசிருத்க்ருஷ்ட சுஷ்ரூ ர் ம்ருதுவாகநஹங்க்ருத: 11
ப்ராஹ்மணா ஆத்யாஷ்ரயோ நிதய்முத்ருஷ்டாம் ஜாதிமஷ்நுதே |-335
சூத்திரன், உள்ளும் புறமும் பரிசுத்தமானவனாக இருந்து, பணிவாகப் பேசுபவனாக, அகந்தையற்றவனாக பிராம்மணர்களுக்குபணிவிடை புரிய வேண்டும். இயலாதபோது க்ஷத்திரியர்களுக்கும், அதுவும் இயலாதபோது வைசியர்களுக்கும் பணிவிடை புரிய
வேண்டும். இப்படி க்ஷத்ரிய வைசியர்களுக்குப் பணிபுரிபவன் அடுத்து உயர்குலத்தில் பிறப்பான்.
ஏஷோ அநாபதி வர்ணா நாமுக்த: கர்மவிதி: சுப: 1
ஆபத்யபி ஹி யஸ் தேஷாம் க்ரமஸ் தம் நிபோதத 336
ஆபத்தற்ற காலங்களில் நான்கு வர்ணத்தாரும் கடைப்பிடிக்க வேண்டிய தர்ம நெறிகள் இதுவரை கூறப்பட்டன. இனி ஆபத்துக்காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய தர்ம நெறிகளையும்கலப்பினத்தாரின் தர்ம நெறிகளையும் கூறுகிறேன், கேளுங்கள்.
( ஒன்பதாம் அத்தியாயம் முற்றிற்று.)
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மநு பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –