Archive for May, 2018

அருளிச் செயல்களில் திருவடி விசேஷணங்கள்–

May 30, 2018

ஸ்ரீ ரெங்கம்-கோயில் –பொது நின்ற பொன் அம் கழல்
திருமலை –பூவார் கழல்
பெருமாள் கோயில் -துயரறு சுடர் அடி
திரு நாராயண புரம் –திரு நாரணன் தாள்

திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் —

செம் பொற் கழலடி செல்வா பலதேவா –

உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் –

வில்லிபுத்தூர் உறைவான் தன் பொன்னடி காண்பதோர் ஆசையினால் –

திருக் கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே

வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே

நாளும் நம் திருவுடை யடிகள் தம் நலம் கழல் வணங்கி

உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே

மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே

ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்நெஞ்சே
ஓரடியால் தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை

தழல் எடுத்த போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே ஓராழி நெஞ்சே யுகந்து –

விடம் காலும் தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை அளப்பான் பூவாரடி நிமிர்த்த போது

பொன் அம் கழற்கே மனம் துழாய் மாலாய் வரும் –

மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற பொன் அம் கழலே தொழுமின் முழு வினைகள் முன்னம் கழலும் முடிந்து

நீறாடி தான் காண மாட்டாத தாரகல சேவடியை யான் காண வல்லேற்கு இது

தாமரை யுந்தித் தனி பெரு நாயக மூ உலகு அளந்த சேவடியோயே-

மேல் எடுத்த பொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய் கடந்து —

பெரு நிலம் கடந்த நல்லடிப் போது

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லை

அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே –

முடியானே மூவுலகும் தொழுது ஏத்தும் சீர் அடியானே

தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ

திருவேங்கடத்தானே பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே-

திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக்கீழ் சயமே அடிமை தலை நின்றார் திருத் தாள் வணங்கி
இம்மையே பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே –

மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண மென் மலரடி நோவ நீ போய் ஆ மகிழ்ந்து உகந்து

கண்டேன் கமலமலர்ப் பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினையாயின வெல்லாம் –

போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில்
ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின் பாலதுவே ஈந்திட வேண்டும் இராமானுச –

ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே அச்சுதன் -நழுவ விடாதவன் -திண் கழல் இறே
எம்பெருமானார் அச்யுத பதத்வய வ்யாமோஹத்தால் இறே -விஷயாந்தர விரக்தராய் திகழ்ந்தார்
அத்திகிரி பச்சை நிற அச்யுதனுடைய பதாம் புஜங்களிலும்
திருவேங்கடத்து அச்யுதனுடைய தாங்கு தாமரை யன்ன பொன்னாரடியிலும்
அரங்கமா நகர் அச்யுதன் உலகம் அளந்த பொன்னடியிலும்
நண்ணித் தொழுமவர் நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் அச்யுதனுடைய துளங்கு சோதி திருப் பாதத்திலும்
தயரதற்க்கு மகனான அச்யுதன் காடுறைந்த பொன்னடியிலும்
கோவிந்தன் அச்யுதன் பொற்றாமரை அடி என்று பேசும்படியாக கானில் கன்றின் பின் போன பொன்னடியிலும்
அச்யுதன் அனந்தசயனன் செம் பொன் திருவடியிலும்
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதனான விண்ணோர் பிரானார் மாசில் மலரடியிலும் ஆயிற்று– இவர் மையல் கொண்டு இருப்பது –
பூவார் கழல்கள் -கண்ணன் கழலினை -ககுத்தன் தன்னடி -பாற்கடலுள் பையத் துயன்ற பரமன் அடி –
வைகுண்ட செல்வனார் சேவடி –

https://tidley.com/2013/09/18/—அனைத்து திருவடி பிரஸ்தாபம் உள்ள அருளிச் செயல்கள் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

திருவாய்மொழியில் மணிவல்லி பேச்சு பாசுரங்கள் பற்றிய குறிப்பு –

May 29, 2018

தலைமகள் ஆனவள்-
அஞ்சிறை மடநாராய்–1-4-
வைகல் பூம் கழி –6-1-
பொன் உலகு ஆளீர்—6-8-
எம் கானல் -9-7-
என்கிற நாலு திரு வாய் மொழிகளிலும் க்ரம ப்ராப்தி பற்றாமல் தூது —பலகால் ஆள்விட்டு –

வாயும் திரை உகளிலே —2-1– ஆற்றாமை சொல்லி
ஏறாளும் இறையோனில்- 4-8-.. மாறாளன் கவராதவை விட்டு
மாசறு சோதியிலே 5-3–நாடும் இரைக்கவே–மடல் எடுத்து
ஊர் எல்லாம் துஞ்சியிலே-5-4–போக்கற்று
எங்கனே யோவிலே- 5-5–உரு என் நெஞ்சுள் எழ
மானேய் நோக்கிலே – 5-9–கூடும் நாள் தேடி
மின்னிடை மடவாரிலே — 6-2- தாழ்ந்ததுக்கு ஊடி
வெள்ளை சுரி சங்கிலே -7-3–உசாத்துணை அற்று
ஏழையர் ஆவியிலே– 7-7-சூழவும் பகை முகம் செய்ய
நங்கள் வரி வளையிலே 8-2–உங்களோடு இடை இல்லை என்று -தடை நில்லாதே
இன் உயிர் சேவலிலே – 9-5–புயக்கற்று போலி கண்டு நொந்து
மல்லிகை கமழ் தென்றலிலே-9-9- -மாலைப்பூசல்
வேய் மறு தோள் இணையிலே 10-3—காலைப்பூசல்
பதினேழு திரு வாய் மொழிகளிலும் ,பிராப்ய த்வரை தோன்றும் என்கை ..

அந்ய ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த –தீர்ப்பாரை யாமினியும் –4-6-
ஸ்வ ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த துவளில் மா மணியும் —6-5-
இவ் வஸ்து அவனுக்கு சேஷம் என்று அறுதி இட்ட -கரு மாணிக்க மலை-8-9-
தோழிப் பேச்சான இம் மூன்று திரு வாய் மொழியிலும் அனந்யார்ஹ சேஷத்வம் தோன்றும் என்கை ..

ஆடி யாடியிலே -2 -4 –ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போல் வாடி–
பாலனாய் ஏழ் உலகிலே–4 -2 –கை கழிந்தவற்றை ஆசைப்பட்டு மெலிந்து
மண்ணை இருந்து துழாவி- யிலே –4–4-அவனாக நினைத்து கிட்டும் படி பித்தேறி –
கடல் ஞாலத்திலே–5 –6- -ஈசன் வந்து ஏற கொலோ -என்று ஆற்றமையாலேஅனுகரிக்கிரமை அறியாதே – ஏற பேசி —
மாலுக்கு வையத்திலே -6–6-பகவத் அலாப கிலேசத்தாலே ,கட்டடங்க இழந்து .
உண்ணும் சோற்றிலே–6-7-எனக்கு உதவாதே போனாள் என்னும் படி அகன்று —
கங்குலும் பகலிலே -7-2-சார்வதே வழித்தமை சாதனமோ என்று அஞ்சி முறைப்பட்டு முறையிடுகிறாள்
இத்தால் தாய் பேச்சான ஏழு திரு வாய் மொழியும்
உபாயத்வ அவசாய தசையில் பேச்சு என்னும் இடம் ஸ்பஷ்டம் என்ற படி ..

முதல் பத்தில் – மகள் 1-4- ஓன்று மட்டும்
இரண்டாம் பத்தில் –ஒரு மகள் -2-1-/ஒரு தாய் -2-4- ஆக இரண்டும்
மூன்றாம் பத்தில் -ஒன்றுமே இல்லை
நான்காம் பத்தில் -ஒரு மகள் -4-8-/ இரண்டு தாய் -4-2-./-4-4-/ ஒரு தோழி -4-6-ஆக நான்கும்
ஐந்தாம் பத்தில் -5-3 /5-4-/5-5-/5-9-நான்கு மகள் /5–6- ஒரு தாய் -/ ஆக ஐந்தும்
ஆறாம் பத்தில் -6-1/6-2-/6-8-மூன்று-மகள்/6-6-/6-7-/ இரண்டு தாய் / 6-5- ஒரு தோழி /ஆக ஆறும்
ஏழாம் பத்தில் –7-3-/7-7-/இரண்டு மகள் / -7-2-ஒரு தாய் / ஆக மூன்றும்
எட்டாம் பத்தில் –8-2-மகள் /8-9- ஒரு தோழி -ஆக இரண்டும்
ஒன்பதாம் பத்தில் -9-5-/9-7-/9-9-/மகள் மூன்றும்
பத்தாம் பத்தில் -10-3-ஒரு மகள் திருவாய்மொழி-

அடுத்து அடுத்து மணிவல்லி பேச்சு இரண்டு திருவாயமொழிகளில் ஆறாம் பத்திலும் ஏழாம் பத்திலும் உண்டே —
6-1/6-2/- ஆறாம் பத்திலும்
7-2 /7-3/ ஏழாம் பத்திலும்

அடுத்து அடுத்து மணிவல்லி பேச்சு நான்கு திருவாயமொழிகளில் ஐந்தாம் பத்திலும் ஆறாம் பத்திலும் உண்டே
5-3/5-4/5-5-/5-6/–ஐந்தாம் பத்திலும்
6-5/6-6/6-7-/6-8/ ஆறாம் பத்திலும்

——————————————————–

ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் – சூரணை -133-

ஏவம் பூத பக்தி தசையில் இவர் பெண் பேச்சாக பேசும் இடத்தில் ,
தோழி தாய் மகள் என்று த்ரி விதமாக பேசுகிற இதுக்கு கருத்து என் என்னும் அபேஷையில்
அத்தை பிரகாசிப்பிகிறார் மேல் ..

சம்பந்த உபாய பலங்களில்
உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிற
ப்ரஜ்ஞா அவஸ்தைகளுக்கு
தோழி தாயார் மகள் என்று பேர் ..

அதாவது –
தோழி ஆவாள்
-நாயக நாயகிகளை இணக்கி சேர்க்கும் -அவள் ஆகையாலே –
திரு மந்த்ரத்தில் பிரதம பதத்தால் ஈச்வரனோடு ஆத்மாவுக்கு சொல்லப் பட்ட
அநந்யார்ஹ சேஷத்வாதி சம்பந்த ஞானமே ,அவனோடு இந்த ஆத்மா சேருகைக்கு
ஹேது ஆகையால்-அந்த சம்பந்த ஞானம் ஆகிற ப்ரஜ்ஞா அவஸ்தைக்கு தோழி என்றும் –

தாயார் ஆவாள்-
பெற்று வளர்த்த பெண் பிள்ளை ப்ராப்த யவ்வனையாய் நாயக விஷயத்திலே
அதி மாத்திர ப்ராவண்யத்தாலே,அவன் இருந்த இடம் ஏற போக வேணும் என்று
பதறும் அளவிலும் ,அவன்தானே வரக் கண்டு இருக்கை ஒழிய ,படி கடந்து புறப்படுகை
குல மரியாதைக்கு போராது என்று நிஷேதித்து போரும் அவள் ஆகையாலே ,
சித்தோ உபாயத்தை பற்றினவர்களுக்கு ப்ராப்தி விளம்ப ஹேது இல்லாமையாலே ,
சீக்கிரமாக ப்ராப்யத்தை பெற வேணும் என்கிற அந்த த்வரை யினுடைய உத்பத்தியாதிகளுக்கு ,பிரதம ஹேதுவாய் ,
அந்த த்வரை பிராப்ய வைலஷண் ய தர்சனத்தாலே ,க்ரம பிராப்தி பற்றாமல்
முறுகி நடக்கும் அளவில் ,இது பிரபன்ன குல மரியாதைக்கு சேராது என்று ,நிசேஷித்து ,
சேஷியானவன் தானே வந்து விஷயீகரிக்க கண்டு இருக்க வேண்டும் என்று ,
இதின் துடிப்பை அடக்க பார்க்கிற
மத்யம பத பிரதிபாதித -உபாயத்யவசாயம் -ஆகிற -பிரஜ்ஞா அவஸ்தையை தாயார் என்றும்

தலை மகள் ஆவாள் –
இயற்கையிலே புணர்ந்து நாயகனின் வைலஷண்யத்தில் ஈடு பட்டு ,குல மரியாதைகளையும்
பாராதே ,கிட்டி அல்லாது தரியேன் என்னும் பதற்றத்தை உடையவள் ஆகையாலே ,
பிரதம மத்யம பதங்களால் அறுதி இடப் பட்ட சேஷியாய்,சரண்யன் ஆனவனுக்கு ,
சரம பத ப்ரோக்தமான -ஸ்வரூப ரூப குண விபூதிகளால் வந்த வைலஷண்யத்தை
அனுசந்தித்து ,தத் அனுபவ விலம்ப அஷமத்வத்தாலே-தத் ஏக உபாயத்வ அத்யாவசத்தையும்
அதிகிரமித்து ,கிட்டி அனுபவித்து அல்லது தரிக்க மாட்டாதபடி நடக்கிற
பிராப்ய த்வரை ஆகிற பிரஜ்ஞா அவஸ்தைக்கு மகள் என்று பேர் இட்டு சொல்வது என்கை ..
ஞான அவஸ்தைகள் என்னாமல் பிரஜ்ஞா அவஸ்தைகள் என்றது
திரிவித அவஸ்தையும் இவருக்கு சர்வ காலமும் உண்டு என்று தோற்றுகைக்காக..
பிரஜ்ஞா த்ரைகாலிகி மதா – என்ன கடவதிறே–பத த்ர்யார்த்த ஞானமும் திரு உள்ளத்தில்
எப்போதும் உண்டாய் இறே இருப்பது ..

———————————————–

ஆக இத்தால்
வெறி விலக்கியும் ,
ஆசை அறுத்தும் ,
அறத்தோடு நின்றும் –
இவ் வஸ்து -அந்ய சேஷமும் அன்று –ஸ்வ சேஷமும் அன்று -பகவத் ஏக சேஷம்
என்று சொன்ன இம் மூன்று திரு வாய் மொழியும்
சம்பந்த ஜ்ஞான தசையில் பேச்சு என்னும் இடம் சம்பிரதி பன்னம் என்பது ஆயிற்று ..

———————————–

ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் சூரணை -134-

இவ் அவஸ்தைகள் மூன்றும் இவர் பேச்சிலே தோன்றுமோ என்னும்
அபேஷையிலே -தோழி தாய் மகள் பேச்சான திருவாய்மொழிகளிலே
இவை தெரியும் என்னும் அத்தை ஸூக்ரஹமாக வரைந்து அருளி செய்கிறார் மேல்..

சஹி வெறி விலக்கி ஆசை அறுத்து
அறத்தொடு நின்ற மூன்றில்
அனந்யார்ஹத்வமும் ,

வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக்
கட்டு இழந்து அகன்று
சார்வதே வலித்தமை
ஸாதனம் ஆமோ என்று
மாதா அஞ்சி முறைப்பாட்டு
முறை இடுகிற ஏழில் அத்யாசசாயமும் ,

புத்ரி பலகால் ஆள் விட்டு
ஆற்றாமை சொல்லி கவராதமை விட்டு
இரைக்க மடல் எடுத்து ,கண் புதைய போக்கற்று
உரு நெஞ்சுள் எழக் கூடு நாள் தேடி
தாழ்த்ததுக்கு ஊடி உசாத் துணை அற்று
சூழவும் பகை முகம் செய்ய தடை நில்லாதே
புயக்கற்று மாலையும் காலையும் பூசல் இடுகிற
பதினேழில் த்வரை யும் தெரியும் ..

அதாவது
எம்பெருமானோடே இயற்கையில் புணர்ந்து பிரிந்து ஆற்றாமையால் ,
மோகம் கதையாக கிடக்கிற பிராட்டி தசையை கண்டு தாய் மார் கலங்கி ,
இவள் நோயையும் அதுக்கு நிதானத்தையும் ,பரிகாரத்தையும் அறியாதே ,
பிரதி பன்ன பாஷிணியாய் இருப்பாள் ஒரு கட்டுவிச்சி சொல்லை கொண்டு ,
இந்த நோய்க்கு பரிகாரமாக கருதி -வெறியாடல் உற –
இவள் பிரகிருதி அறியும் உயிர் தோழி அநந்யார்ஹையான இவளுக்கு அந்ய ஸ்பர்சம் சஹியாது-
நாம் இதை விலக்காது ஒழியில் , இவளை இழக்க வரும் என்று பார்த்து ,
அப்போது நிரூபித்து அறிந்தாளாக இவள் நோவையும் ,அதுக்கு நிதானத்தையும்
அவர்களுக்கு சொல்லி , தத் உசித பரிகாரங்களையும் விதித்து
அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேல்மின் -என்றும் ,
உணங்கல் கெட கழுதை உதட்டாட்டம் கண்டு என் பயன் -இத்யாதிகளால்
வெறியை விலக்கின பாசுரத்தாலே ,பிராப்ய த்வரை தசையில் அவசாதம் அடியாக ,
உபாயத்வ அத்யவாசம் கலங்கி-தர்மேன பாப மபநுததி – என்கிறபடியே ,
தர்ம அனுஷ்டானத்திலே ,துக்க ஹேதுவை போக்கலாம் என்பார் வார்த்தையை கொண்டு ,
இவ் அவசாதத்தை பரிஹரிக்கலாமோ என்று தேவதாந்தர்யாமி பரமான கர்மகபாலங்களிலே
பிரவர்திக்க தேட – அவ்வளவிலே சம்பந்த ஞானம் ஆனது ,இவ் அவசதம் கர்ம பலம் அன்றிக்கே ,
ஆகஸ்மிக பகவத் கடாஷம் பலமாக -அசாதாராண விக்ரக விசிஷ்டனாவனை அனுபவிக்கையால் உண்டான
பிராவண்யம் கார்யம் ஆகையாலே இதுக்கு அது பரிஹாரம் அன்று .
அநந்யார்ஹ சேஷத்வதுக்கு விருத்தம் ஆகையால் ஸ்வரூப நாசமுமாம் ..
அந்ய ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த –தீர்ப்பாரை யாமினியும் –

திரு துலைவில்லி மங்கலத்திலே அதி பிரவணையாய் இருக்கிற பெண்பிள்ளையை
மீட்க பார்க்கிற தாய்மாரை குறித்து தோழி யானவள்-
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை-என்று நீங்களே அன்றோ
திரு துலைவில்லி மங்கலத்தில் கொண்டு புக்கு இப் ப்ராவண்யத்தை விளைத்தீ கொள் .
இனி பிராப்த விஷய பிரவணையான இவளை உங்களால் மீட்கப் போகாது –
ஆன பின்பு இவள் பக்கல் உங்களுக்கு ஆசை அற அமையும் என்ற பாசுரத்தாலே –
அர்ச்சாவதார சுலபமான விஷயமே உபாயம் ஆகையாலே எப்போதும் இதிலே நோக்காய் இருக்கும் அத்யாவசியம் ,
அவ் விஷய வைலஷண்யத்தை விஷயீகரித்த பிராவண்ய கார்யமான த்வரை
உபாயத்திலே அன்வயிக்கிறதோ என்னும் மதி சங்கையால் , அத்தை நிவர்ப்பிக்க தேட ,
அவ்வளவிலே சம்பந்த ஞானம் சேஷவஸ்து கதமான இப் பிராவண்யம் சேஷி உகப்புக்கு
விஷயமாம் அல்லது உபாய கோடியில் அன்யவியாது ..
பிராப்த விஷய வைலஷண்யம் அதீனமாக வந்தது ஆகையாலே நிவர்த்திக்கவும் போகாது —
இத்தை ஸ்வ நிவர்த்யமாக நினைத்து இருக்கிற ஸ்வாதந்த்ர்யம் அத்யந்த பாரதந்த்ரம் ஆகிற
ஸ்வரூபத்துக்கு விருத்தம் ஆகையாலே ,த்யாஜ்யம் என்று
ஸ்வ ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த துவளில் மா மணியும் —

தலைமகள் பருவத்தை கண்ட பந்து ஜனங்கள் ஸ்வயம் வரத்துக்கு ராஜ லோகத்தை
ஸ்வ ஸ்பர்சத்தை நிவர்ப்பித்த துவளில் மா மணியும் —
திரட்டுகைக்காக மண முரசு அறைவிக்க,திரு புலியூரிலே நாயனாரோடே இவளுக்கு
கலவி உண்டாய்த்து என்னும் இடத்தை ,இவள் வடிவிலும் பேச்சிலும் உண்டான வேறுபாட்டாலே
அறிந்த உயிர் தோழி யானவள் ,இத் த்வனி பெண் பிள்ளை செவியில் படுமாகில்-மானிடவர்க்கு என்று
பேச்சு படில் வாழாத தன்மையளாய் இருக்கிற இவளை கிடையாது —
ஏற்க்கவே பரிக்ரஹிக்க வேணும் என்று ,இவள்பந்து ஜனங்களை
குறித்து ,இவளுக்கு திருப் புலியூரில் நாயனாரோடே சம்ச்லேஷம் ப்ரவ்ருத்தம்
ஆயிற்று போலே இரா நின்றது –தத் குண சேஷ்டிதங்களையே வாய் புலற்றா நின்றாள் ..
ஆன பின்பு நீங்கள் செய்கிறது தர்மம் அல்ல என்ன–
ஆகில் இவளுக்கு தக்க அவயவ சோபை ஆபரண சோபை முதலான நாயக லஷணங்கள் அவனுக்கு உண்டோ என்ன –
அவை எல்லாம் குறை இல்லை –அவை ஒன்றும் இல்லை யாகிலும் ,இவள் அங்கே அநந்யார்ஹை
ஆனமைக்கு அடையாளம் ஸூ வ்யக்தமாக காணலாம் ..
ஆன பின்பு இத்தை தவிறுங்கோள் என்று மத்யஸ்தையாய் நின்று தர்மம் சொல்லுகிறாளாய்
அந்த மணத்தை விலக்கின பாசுரத்தாலே ,
பிராப்ய த்வரையின் உடைய பரிபாகத்தை ,உபாயத்வ அவதாய தசையில் நின்று தரிசித்த
அநந்தரம் ,அது பகவத் அநந்யார்ஹை ஆனமை அறியாதே ,அந்ய விஷயத்துக்கும் அர்ஹமோ என்று , நிரூபிக்க –
அவ்வளவிலே சம்பந்த ஞானம் ,இதுக்கு அந்ய சேஷத்வ பிரசங்கமும் ஸ்வரூப நாசகம் ,
சேஷியானவனுடைய போக்யதையாலும் , அது தன்னை ஒழியவும் நிருபாதிக சேஷத்வத்தாலும் ,
இவ் வஸ்து அவனுக்கு சேஷம் என்று அறுதி இட்ட -கரு மாணிக்க மலை-யுமாகிற தோழிப் பேச்சான
இம் மூன்று திரு வாய் மொழியிலும் அனந்யார்ஹ சேஷத்வம் தோன்றும் என்கை ..
ஆக இத்தால்
வெறி விலக்கியும் ,
ஆசை அறுத்தும் ,
அறத்தோடு நின்றும் –
இவ் வஸ்து -அந்ய சேஷமும் அன்று –ஸ்வ சேஷமும் அன்று -பகவத் ஏக சேஷம்
என்று சொன்ன இம் மூன்று திரு வாய் மொழியும் ,சம்பந்த ஜ்ஞான தசையில்
பேச்சு என்னும் இடம் சம்பிரதி பன்னம் என்பது ஆயிற்று ..

——————————————————–

வாடி மெலிந்து இத்யாதி -அதாவது –
ஆடி ஆடி -யிலே– வாடி வாடும் -என்று அடியார்கள் குழாங்களை உடன் கூடப்
பெறாமையாலே வந்த கிலேசத்தால் ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போல் வாடி–

பாலனாய் ஏழ் உலகிலே–கண்ணன் கழல் துழாய் பென் செய் பூண் மென்முலைக்கு என்று மெலியும்-என்று
கை கழிந்தவற்றை ஆசைப்பட்டு மெலிந்து-

மண்ணை இருந்து துழாவி- யிலே -என் பெண் கொடி ஏறிய பித்தே -என்னும்படி
சத்ருச பதார்த்தங்களையும் ,சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாக
நினைத்து கிட்டும் படி பித்தேறி –

கடல் ஞாலத்திலே -ஈசன் வந்து ஏற கொலோ -என்று ஆற்றமையாலே
அனுகரிக்கிரமை அறியாதே -ஈஸ்வரன் ஆவேசித்தானோ என்னும் படி அவனாகவே பேசி —

மாலுக்கு வையத்திலே –கற்புடை யாட்டி இழந்தது கட்டே -என்னும்படி
பகவத் அலாப கிலேசத்தாலே ,கட்டடங்க இழந்து ..

உண்ணும் சோற்றிலே–இன்று எனக்கு உதவாது அகன்று -என்று தன்னை பிரிந்து
கிலேசப் படுகிற இவ் ஆபத்து தசையிலே ,எனக்கு உதவாதே போனாள் என்னும் படி அகன்று —

கங்குலும் பகலிலே -சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையல்-என்னும் படி
அவனை கிட்டி அவன் சந்நிதியில் ,முடிய வேணும் என்று வியவசிதை ஆனமை ,
உபாசகருக்கு பரபக்தி தசையில் உண்டாகும் க்லானி கார்ச்யாதிகள் போல சாதனத்தில்
மூதலிடுமோ என்று மாதாவானவள் அஞ்சி , அவன் தன்னையும் வினவ வந்தவர்களையும்
குறித்து வாடா நின்றாள், மெலியா நின்றாள் -என்றார் போலே முறைப் பட்டு ,
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே என்று
அத்தலையில் கிருபை ஒழிய இவள் பக்கல் உள்ளவை ஒன்றும் ஹேது இல்லை ..
ஆன பின்பு இவளை இப்படி துடிக்க விட்டு இருக்கை உம்முடைய கிருபைக்கும் ரஷகத்வதுக்கும்
போருமோ என்று கூப்பிடும் ஏழு திரு வாய் மொழிகளிலும் -உபாயத்வ அத்யவாசம் தோன்றும் என்கை

இத்தால் தாய் பேச்சான ஏழு திரு வாய் மொழியும்
உபாயத்வ அவசாய தசையில் பேச்சு என்னும் இடம் ஸ்பஷ்டம் என்ற படி ..

தலைமகள் ஆனவள்-
அஞ்சிறை மடநாராய்–1-4-
வைகல் பூம் கழி –6-1-
பொன் உலகு ஆளீர்—6-8-
எம் கானல் -9-7-
என்கிற நாலு திரு வாய் மொழிகளிலும் க்ரம ப்ராப்தி பற்றாமல் தூது —பலகால் ஆள்விட்டு –
வாயும் திரை உகளிலே —2-1– ஆற்றாமை சொல்லி
ஏறாளும் இறையோனில்- 4-8-.. மாறாளன் கவராதவை விட்டு
மாசறு சோதியிலே 5-3–நாடும் இரைக்கவே–மடல் எடுத்து
ஊர் எல்லாம் துஞ்சியிலே-5-4–போக்கற்று
எங்கனே யோவிலே- 5-5–உரு என் நெஞ்சுள் எழ
மானேய் நோக்கிலே – 5-9–கூடும் நாள் தேடி
மின்னிடை மடவாரிலே — 6-2- தாழ்ந்ததுக்கு ஊடி
வெள்ளை சுரி சங்கிலே -7-3–உசாத்துணை அற்று
ஏழையர் ஆவியிலே– 7-7-சூழவும் பகை முகம் செய்ய
நங்கள் வரி வளையிலே 8-2–உங்களோடு இடை இல்லை என்று -தடை நில்லாதே
இன் உயிர் சேவலிலே – 9-5–புயக்கற்று போலி கண்டு நொந்து
மல்லிகை கமழ் தென்றலிலே-9-9- -மாலைப்பூசல்
வேய் மறு தோள் இணையிலே 10-3—காலைப்பூசல்
பதினேழு திரு வாய் மொழிகளிலும் ,பிராப்ய த்வரை தோன்றும் என்கை ..

புத்ரி -இத்யாதி -அதாவது –
தலைமகள் ஆனவள்-
அஞ்சிறை மடநாராய்
வைகல் பூம் கழி
பொன் உலகு ஆளீர்
எம் கானல்
என்கிற நாலு திரு வாய் மொழிகளிலும் க்ரம ப்ராப்தி பற்றாமல் தூது விட்டு —

வாயும் திரை உகளிலே —ஆற்றாமை சொல்லி அழுவோமை -என்று சகல பதார்த்தங்களும்
பகவத் அலாபத்தாலே நோவு படுவதாக கருதி ,அவற்றை சம துக்கிகளாக கொண்டு அழுது

ஏறாளும் இறையோனில்- .. மாறாளன் கவராத மணிமாமை குறைவிலம்-என்று அவன்
விரும்பாதவற்றை உபேஷித்து

மாசறு சோதியிலே -நாடும் இரைக்கவே–நாம் மடலூர்த்தும் என்று ஜகத் ஷோபம் பிறக்கும் படி
மடலூர்வன் என்று

ஊர் எல்லாம் துஞ்சியிலே –பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன்னிற்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் -என்றே பிரேம வியாதியும் ,
ராத்ரியாகிற கல்பமும் கிருத சங்கேதிகளாய் சூழப் பொருகையாலே , போக்கடி அற்று

,எங்கனே யோவிலே -சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு
என் நெஞ்சுள்ளும் எழும் -என்று தேஜஸ் தரங்கம் மத்யே உன்நேயமான
அப்ராக்ருத விக்ரகம் பிரிதி அப்ரிதி சமமாம் படி உரு வெளிப்பாடே நெஞ்சில் பிரகாசிக்க ,

மானேய் நோக்கிலே -திரு வல்ல வாழ் உறையும் கோனாரை அடியேன் கூடுவது என்று கொல் ?
என்று அவனை கூடும் நாளை பிரார்த்தித்து ,

இப்படி பிரார்தியா நிற்கவும் தாழ்ந்து வந்தவாறே ,
மின்னிடை மடவாரிலே -போகு நம்பீ -என்று பிரணய ரோஷத்தால் ஊடி ,

வெள்ளை சுரி சங்கிலே -என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார், இனி யாரை கொண்டு என் உசாகோ –
என்று அபஹ்ருத சித்தை ஆகையாலே ,உசாத் துணையும் இன்றி —

ஏழையர் ஆவியிலே –கண்ணன் கோள் இழை வாண் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றவே –
என்று உரு வெளிப்பாட்டாலே ,பாதக வர்க்கம் ஒருமுகமாய் நலிய ,

நங்கள் வரி வளையிலே -காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லை-
என்று ஹிதம் சொல்கிற தோழிமார் அன்னைமாரை அதிகிரமித்து ,

இன் உயிர் சேவலிலே -இழை நல்ல வாக்கையும் பெய்யவே புயக்கற்றது –
என்று போலி கண்டு நொந்து முடிகையிலே , வ்யவசிதையாய்

மல்லிகை கமழ் தென்றலிலே -சந்த்யா காலத்தில் கிருஷ்ணனை பசுக்களின்
முற் கொழுந்தில் வரக் காணாமல் பாதக பதார்த்தங்களால் நலிவு பட்டு ,

வேய் மறு தோள் இணையிலே -பிராத காலத்தில் கிருஷ்ணன் பசு மேய்க்க
போனானாக அதி சங்கை பண்ணி -அவன் முகத்தை பார்த்து -நீ பசி மேய்க்க போனால்
நலிய கடவ பாதக பதார்த்தங்கள் -நலியா நின்றது என்று கூப்பிடுகிற

பதினேழு திரு வாய் மொழிகளிலும் ,பிராப்ய த்வரை தோன்றும் என்கை ..
இத்தால் தலைமகள் பேச்சான பதினேழு திரு வாய் மொழிகளும்
பிராப்ய த்வரை தசையில் பேச்சு என்னும் இடம் வ்யக்தம் என்ற படி ..

——————–

ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் சூரணை சூரணை -135-

ஆனால் தோழி என்றும் தாய் என்றும் சொல்லுகிறது சம்பந்த ஞானத்தையும் ,
உபாயத்வ அவசாயத்தையும் ஆகில் ,தத் விஷயமான பன்மை சொலவுக்கு
தாத்பர்யம் எது என்னும் ஆ காங்ஷையில் அருளி செய்கிறார் மேல் ..

தோழிமார் அன்னையர்
என்கிற பன்மை
ரஷகத்வாதி பந்த வாத்சல்யாதி
வ்யவசாய புத்தி பேதத்தாலே–

அதாவது –
தோழிமார்களும் அன்னையரும் -என்றும் ,
அன்னையரும் தோழியரும் -என்றும் ,
தோழிமார் விளையாட போதுமின் என்ன -என்றும் ,
அன்னையர் நாண -என்றும் ,
ஊர் என் சொல்லில் என் தோழிமீர் -என்றும்
எங்கனயோ அன்னைமீர்காள் -என்று
இப்படி தோழி,தாய் விஷயமாக சொல்லுகிற பன்மை
திரு மந்த்ரத்தில் சொல்லுகிற படியே ,இவ் ஆத்மாவோடு ஈஸ்வரனுக்கு
ரஷகத்வ ,சேஷித்வ ,காரணத்வ ,சரீரி-இத்வாதி சம்பந்தங்கள் பலவும் உண்டாகையாலே ,
அவ்வோ சம்பந்தங்களை விஷயீகரித்த ஞானத்தின் உடைய பேதத்தாலும் ,
உபாய பூதனான அவனுடைய -வாத்சல்ய -ஸ்வாமித்வ –சௌசீல்ய சௌலப்ய
ஞான சக்தி கிருபாதிகளை பற்றி வரும் வ்யவசாய ரூபமான ஞானத்தின் உடைய
பேதத்தாலும் என்கை —
புத்தி சப்தம் ஞான வாசி–
புத்திர் மநீஷா திஷணா தீ பிரஜ்ஞா சேமுஷீ மதி -என்ன கடவதிறே ..
இத்தால் சம்பந்த ஞானத்துக்கும் ,உபாயத்வ அத்யாவசாயத்துக்கும் விஷய
பேதத்தாலே ,வ்யக்தி பேதம் உண்டாகையாலே ,தத் விஷய
பஹுவசன பிரயோகத்துக்கு குறை வில்லை என்றது ஆயிற்று ..

—————————————-

ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் சூரணை -136
தலை மகள் என்கிறது -பிராப்ய த்வரை ஆகில் தலை மகளுக்கு சொல்லும்
பருவம் ஏழும் இங்கு கொள்ளும் படி என் என்னும் அபேஷையில் அருளி செய்கிறார் ..
அபிலாஷா
சிந்தனா
அனுஸ்மிர்த்தி
இச்சா
ருசி
பர
பரம பக்திகளிலே
பேதை முதலான
பருவம் கொள்ளும் ..
அதாவது
அனுபாவ்ய விசேஷ பிரேம தர்சனத்தில் ,பிறக்கும் ஆசை ஆகிற அபிலாஷையும் .
த்ருஷ்டமான அவ் விஷயத்தில் உண்டாம் ஸ்மரணம் ஆகிற சிந்தைனையும் ,
அந்த ஸ்மரணம் ,அநவரதம் நடக்கை ஆகிற அனு ஸ்ம்ருதியும்
அவ் விஷயத்தை அவசியம் அனுபவித்தே நிற்க வேணும் என்னும் ஆசை ஆகிற இச்சையும் ,
அவ் ஆசை தானே ரசாந்தரத்தால் மாற்ற ஒண்ணாத படி முதிருகையாகிற ருசியும் ,
அவ் விஷயத்தில் சம்ச்லேஷ விச்லேஷங்களே சுக துக்கங்களாகிற பரபக்தியும் ,
அவ் விஷயத்தின் விச்லேஷத்தில் சத்தை கிடவாது ஒழிகை யாகிற பரம பக்தியும்
ஆகிற ஏழு அவஸ்தையிலும்
பேதை
பெதும்பை
மங்கை
மடந்தை
அரிவை
தெரிவை
பேர் இளம் பெண்
என்கிற ஏழு பருவமும் தலைமைகளான பிராப்ய த்வரைக்கு கொள்ளும் என்ற படி ..
இத்தால், பக்தி ரூபையான பிராப்ய த்வரைக்கு ,பக்தியின் உடைய
பிரதம தசை தொடங்கி சரம தச பர்யந்தமான அவஸ்தா விசேஷங்களிலே
பர்வ சப்தகமும் கொள்ளலாம் என்றது ஆயிற்று

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் நாராயண சப்த பிரயோகங்கள்–

May 28, 2018

ஸ்ரீ முமுஷுப்படி

இத்தை வேதங்களும் ருஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் விரும்பினார்கள் –சூரணை -13-

இதுக்கு சிஷ்ட பரிக்ரஹம் உண்டோ -என்ன அருளிச் செய்கிறார்
அதாவது

விஷ்ணு காயத்ரியிலே வியாபக மந்திர த்ரயத்தையும் சொல்லுகிற அளவில்
பிரதமத்தில் நாராயண சப்தத்தை பிரதானயேன பிரதி பாதிக்கையாலும் –

விச்வம் நாராயணம்  -என்று தொடங்கி
நாராயண பரம் ப்ரஹ்ம தத்தவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராதமா நாராயணா பர யச்ச
கிஞ்சிஜ் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா அந்தர்பகிச்ச தத் சர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்தித –
என்று சகல வேதாந்த சார பூதமான நாராயண அனுவாகத்திலும் –

(விஸ்வம் நாராயணம் -ஸ்வா தீன ஸர்வ தத்வ த்ரயம் -பத்த முக்த நித்ய த்ரிவித ஆத்மாக்களுக்கும் போக்ய போக உபகரண போக ஸ்தான ரூபேண த்ரிவித
அசேதனங்களுக்கும் அந்தர்யாமியாய் இருந்து தாரண நியமன ரக்ஷணங்களைப் பண்ணிக்கொண்டு இருக்குமவனாய்)

(பர ப்ரஹ்ம வாஸ்யனும் நாராயணனே -பர தத்துவமும் நாராயணனே -பரஞ்சோதியும் நாராயணனே -பரமாத்வாவும் நாராயணனே
இந்த ஜகத்தில் ப்ரத்யக்ஷத்தால் காணப்படும் -ஸ்ருதியால் கேட்கப்பட்டும் இருக்கிறது யாதொரு வஸ்து -அந்த ஸகல பிரமாண
ப்ரதிபின்னமான ஸகல வஸ்துக்கள் எல்லாவற்றிலும் உள்ளோடும் புறம்போடும் வாசியற வியாபித்து அந்தராத்மாவாய்க் கொண்டு நிற்குமவன் நாராயணனே)

ஏகோ ஹவை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மோ நேசானோ நேம த்யாவாப்ருதிவி -என்று மகா உபநிஷத்திலும்
(ஒன்றும் தேவும் இத்யாதியால் -நம்மாழ்வார் இத்தை அருளிச் செய்கிறார் )

(நாராயணன் ஒருவனே உளனாவான் -பிரம்மாவும் இல்லை -ருத்ரனும் இல்லை -இந்த்ராதிகளும் இல்லை நக்ஷத்ரங்களும் இல்லை)

சஷுஸ் ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண ஸ்ரோத்ரஞ்ச ஸ்ரோதவ்யஞ்ச நாராயண -என்று தொடங்கி-
திசச்ச பிரதிசச்ச நாராயணா -என்று முடிவாக நடுவு அடைய ஸூபால உபநிஷத்திலும்
(கண்ணும் கருவியும் பார்க்க வேண்டியவையும் நாராயணனே )

யஸ் யாத்மா சரீரம் யஸ்ய ப்ருதுவீ  சரீரம் -என்று தொடங்கி
யஸ்ய ம்ருத்யு சரீரம் -என்கிறது ஈறாக நடுவு உள்ள பர்யாயங்கள் தோறும்
ஏஷ சர்வ பூதாந்த்ராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவா ஏகோ நாராயணா -என்று
அந்தர்யாமி ப்ரஹ்மாணத்திலும்

(காண்கின்ற கண்ணும் காணப்படும் பொருள்களும் நாராயணனே -கேட்க்கிற செவியும் கேட்க்கிற பொருள்களும் நாராயணனே
திக்குகளும் விதிக்குகளும் நாராயணனே -யாவன் ஒருவனுக்கு ஜீவாத்மா சரீரமாய் இருக்கிறது –
யாவன் ஒருவனுக்கு பிருத்வி சஈரமாய் இருக்கிறதோ யாவன் ஒருவனுக்கு ம்ருத்யு சரீரமாய் இருக்கிறதோ
அவன் ஸர்வ பூதங்களுக்கும் ஆத்மாவாய் தத்கத தோஷம் தட்டாதபடி -அபஹத பாப்மாவாய் -பரமபத நிலையனாய் திவ்யமாய் இருக்கிற
லீலா விபூதி யோகத்தால் தேவனாய் இப்படி சர்வாதிகனாகையாலே அத்விதீயனான நாராயணன்)

வாஸூ தேவ விஷ்ணு சப்தங்களை அநாதரித்து-நாராயண சப்தத்தை இட்டு பகவத் ஸ்வரூபாதிகளை நிர்தேசிக்கையாலும் –
அபௌ ருஷேயமாய்
நித்ய நிர்தோஷமாய்
ஸ்வத பிரமாணங்களான வேதங்களும் விரும்பிற்றன

எதா சர்வேர்ஷு தேவேஷு நாஸ்தி நாராயணாத் பர
ததா சர்வேஷு மந்த்ரேஷு நாஸ்தி சாஷ்டாஷராத் பர-என்றும் நாரதீயம்

(ஸ்வரூபாதிகளை–ஆதி ஸப்தத்தாலே குண சேஷ்டிதங்களைச் சொல்லுகிறது
யாதொருபடி ஸர்வ தேவர்களிலும் வைத்துக் கொடு நாராயணனைக் காட்டில் பரமாய் இருப்பது ஓன்று இல்லை
அப்படியே ஸர்வ மந்திரங்களில் வைத்துக் கொண்டு திரு அஷ்டாக்ஷரத்தில் காட்டில் பரமாய் இருப்பது ஓன்று இல்லை)

பூத்வோர்தவ பாஹூ ரதயாத்ர சர்வ பூர்வம் ப்ரவீமிவ
ஹே புத்திர சிஷ்யா ஸ்ருணுத ந மந்த்ரோஷ்டாஷராத் பர-என்றும்

சர்வ வேதாந்த சாரார்த்த சம்சார ஆர்ணவ தாரக கதிரஷ்டாஷரோ
ந்ருனாம் அபு நர்ப்பவ காங்க்ஷினாம் ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச-என்றும்

(புத்ர சிஷ்யர்களைக் குறித்து கை எடுத்து சபத பூர்வகமாகச் சொல்லுகிறேன் கேளுங்கள் -திரு அஷ்டாக்ஷரத்தில் காட்டில் பரமாய் இருப்பது ஓன்று இல்லை
ஸர்வ வேதாந்த ஸாரமான அர்த்தமாய் ஸம்ஸாரமாகிற கடலைக் கடத்துவதான திரு அஷ்டாக்ஷரம் மோக்ஷ காங்க்ஷி களான புருஷர்களுக்குப் புகலிடம்)

பீதா கோரேஷு சவ்யாதிஷு வர்த்த மாநா சங்கீர்த்தாயா நாராயண  சப்த மாதரம்
விமுக்த துக்காஸ் சுகிநோ பவந்தி நாரயணோதி சப்தோச்தி வாகச்தி வசவர்த்திநீ-என்றும்

ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம் -என்றும்

கிம் தத்ர பஹூபிர்  மந்தரை கிம் தத்ர பஹூபிர் விரதை
நமோ நாராயண  யேதி மந்திர  சர்வார்த்தாதா   சாதகா -இத்யாதிகளாலே –

வேதார்த்த உப ப்ரஹ்மணங்களாய் இருக்கிற ஸ்வ பிரபந்தங்களிலே பல இடங்களில்
இத்தை ஸ்லாகித்துக் கொண்டு சொல்லுகையாலே –
வேதார்த்த விசதீ கரண பிரவ்ருத்தரான வ்யாசாதி பரம ருஷிகளும் விரும்பினார்கள்

(நாராயணன் என்கிற ஸப்தம் உண்டு -அதைச் சொல்லுவதற்கு வாக் இந்திரியம் உண்டு
இப்படி இருக்க கோரமான நரகத்தில் எவ்வாறு விழுகின்றார்கள் -இது ஒரு பெரிய ஆச்சார்யமே
திரு மந்திரமானது ஸர்வ அர்த்தத்தையும் சாதித்துக் கொடா நிற்கும் -அது உண்டாய் இருக்க அநேக மந்திரங்களால் என்ன பிரயோஜனம் உண்டு –
வியாஸாதிகள் -ஆதி ஸப்தத்தாலே பராசர வால்மீகி ஸூக ஸுநகாதிகளைச் சொல்லுகிறது)

வண் புகழ் நாரணன் -1-2-10
செல்வ நாரணன் -1-10-8–என்று தொடங்கி
வாழ் புகழ் நாரணன் –10-9-1-
என்று முடிவாக ஆதி மத்திய அவசானமாக நம் ஆழ்வார் அருளிச் செய்கையாலும் –

நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா -திரு பல்லாண்டு -4-என்று தொடங்கி
ஓவாதே நமோ நாரணா என்பன்–பெரிய ஆழ்வார் திரு மொழி -5-1-3-என்று பெரிய ஆழ்வாரும் –

நாத் தழும்பு எழ நாரணா-பெருமாள் திரு மொழி-2-4-
நலம் திகழ் நாரணன் –பெருமாள் திரு மொழி–10-1-என்று பெருமாளும் –

நான்முகனை நாராயணன் படைத்தான் -என்று தொடங்கி
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -திரு சந்த விருத்தம் -77-என்று திரு மழிசைப் பிரானும்
(நான்முகன் திருவந்தாதி முதலிலும் திருச்சந்த விருத்தம் பின்பும் )

நான் கண்டு கொண்டேன நாராயணா என்று ஒரு கால் போலே ஒன்பதின் கால் சொல்லி நாரயாணாவோ
மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று திரு மங்கை ஆழ்வாரும்
உபக்ரமத்தொடு உபசம்காரத்தொடு வாசி அற அருளிச் செய்கையாலும் –

நன் மாலை கொண்டு நமோ நாரணா என்னும் சொல் மாலை கற்றேன் –57-என்றும்
நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -95-என்றும் –
ஞான  சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு-1-
நாரணன் தன் நாமங்கள் 2-2-
பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -2-81-என்றும்
நாமம் பல சொல்லி நாராயணா -என்று-3-8- முதல் ஆழ்வார்களும் அருளிச் செய்கையாலும்

மயர்வற மதி நலம் அருளினன் என்கிறபடியே நிர்ஹேதுக பகவத் கடாஷத்தாலே
சமதிகத சமஸ்த வஸ்து வாஸ்தவரான ஆழ்வார்கள் எல்லாரும் விரும்பினார்கள் –

(நம்மாழ்வாரை முந்துற அருளிச் செய்தது அவயவி பூர்வகமாக அருளிச் செய்ய வேணும் என்னும் அபிப்ராயத்தாலே)

இதர மந்த்ரங்களை அநாதாரித்து இத்தையே தம் தாமுக்கு தஞ்சமாக அனுசந்தித்து –
உபதேச வேளையிலும் தம் தாமைப் பற்றினவர்களுக்கும் இத்தையே உஜ்ஜீவன ஹேதுவாக
உபதேசித்து போருகையாலே அவ் வாழ்வார்களைப் பின் சென்ற ஆச்சார்யர்கள் எல்லாரும் விரும்பினார்கள் -என்கை-

இத்தால் மந்த்ராந்த்ரங்களில் காட்டில்
இம் மந்த்ரத்துக்கு உண்டான வைபவம் சொல்லிற்று ஆய்த்து-

—————–

வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே-1-2-10-

அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே -1-3-3-

ஓன்று எனப் பல வென அறிவரும் வடிவினுள் நின்ற நன்றெழில் நாரணன்-1-3-7-

நாரணனைக் கண்டக்கால் –மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே -1-4-5-

நாடாத மலர் நாடி நாடொறும் நாரணன் தன் வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று -1-4-9-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் மல்கும் கண் பனி நாடுவன் மாயமே -1-10-8-

தோற்றோம் மட நெஞ்சே எம்பெருமான் நாரணற்கு -2-1-7-

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு ஏழு பிறப்பும் மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா –நாரணனாலே -2-7-1-

நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன் வேத மயன் காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை –வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் 2-7-2-

திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ – 4-1-1-

நாகமேறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே உன் ஆகமுற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே 4-3-3-

ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே -4-3-6-

நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும் -4-4-2-

நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும் -4-4-4-

நாறு துழாய் மலர் காணில் நாரணன் கண்ணி ஈது என்னும் -4-4-7-

ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தீ நாராயணா என்று என்று காலம்தோறும் யான் இருந்து கைத்தலை பூசலிட்டால் -4-7-1-

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரை திருவடி சேர்வது கருதி -4-9-11-

மார்க்கண்டேயன் அவனை நக்கபிரானும் அன்று உய்யக் கிளிண்டது நாராயணன் அருளே –4-10-8-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்ரமன் அடியிணை மிசை–குருகூர்ச் சடகோபன் செய்த ஆயிரத்துள்-5-8-11-

தொல்லருள் நல்வினையால் சொலக் கூடுங்கொல்–நம்பெருமான் நாராயணன் நாமங்களே -5-9-10-

நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ -7-5-2-

மால் அரி கேசவன் நாரணன் சி மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று ஓலமிட்டு என்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் -8-2-7-

அற்புதன் நாராயணன் அரி வாமனன் நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம் –திருக் கடித்தானாமே–8-6-10-

ஓராயிரம் உலகு ஏழு அளிக்கும் பேராயிரம் கொண்டதோர் பீடுடையன் காராயின காள நன் மேனியினன் நாராயணன் நங்கள் பிரான் அவனே 9-3-1-

நாவாய் யுறைகின்ற என் நாரண நம்பீ ஆவா வடியான் இவன் என்று அருளாயே -9-8-7-

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே 10-5-1-

நாரணன் எம்மான் பார் அணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே -10-5-2-

பாட்டாய பல பாடிப் பல வினைகள் பற்று அறுத்து நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே 10-6-2-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி –10-6-3

வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே 10-9-1-

நாரணன் தமரைக் கண்டு உகந்து –எங்கும் தொழுதனர் உலகே -10-9-2-

—————

 நாரண (2)
நாமம் பலவும் உடை நாரண நம்பீ - நாலாயி:1925/1
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ - நாலாயி:3864/3

-----
    நாரணமே (1)
திண்ணம் நாரணமே - நாலாயி:3935/4

-----
    நாரணற்கு (5)
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்பு-மினே - நாலாயி:582/4
ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு  ஞான தமிழ் புரிந்த நான் - நாலாயி:2182/3,4
நண்ணரும் ஞானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆயினரே - நாலாயி:2831/4
தோற்றோம் மட நெஞ்சம் எம் பெருமான் நாரணற்கு எம் - நாலாயி:3015/1
நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ - நாலாயி:3606/1

--------
    நாரணன் (37)
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை - நாலாயி:22/2
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழிதருகின்றாள் - நாலாயி:290/2
நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:381/4
நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:382/4
நச்சு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:383/4
நான் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:384/4
நலம் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:385/4
நாடு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:386/4
நண்ணு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:387/4
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:388/4
நா தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள் - நாலாயி:389/4
நலம் திகழ் சடையான் முடி கொன்றை மலரும் நாரணன் பாத துழாயும் - நாலாயி:392/3
நாமம் என்று நவின்று உரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே - நாலாயி:442/4
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர் - நாலாயி:556/2
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே - நாலாயி:657/4
நாரணன் நரகாந்தகன் பித்தனே - நாலாயி:670/4
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே - நாலாயி:718/4
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே - நாலாயி:751/4
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி - நாலாயி:1128/2
அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள் ஊர்தி - நாலாயி:2086/1
நாரணன் பேர் ஓதி நரகத்து அருகு அணையா - நாலாயி:2247/3
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் வானோர் - நாலாயி:2412/2
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் - நாலாயி:2477/4
உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே - நாலாயி:2849/4
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே - நாலாயி:2919/3,4
அமைவு உடை நாரணன் மாயையை அறிபவர் யாரே - நாலாயி:2923/4
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை - நாலாயி:2927/2
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் - நாலாயி:3005/1
நாரணன் முழு ஏழ்_உலகுக்கும் நாதன் வேத மயன் - நாலாயி:3076/1
நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும் அன்னே என் - நாலாயி:3265/3
நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும் - நாலாயி:3267/3
நாறு துழாய் மலர் காணில் நாரணன் கண்ணி ஈது என்னும் - நாலாயி:3270/3
தெய்வ_நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடி இணை மிசை - நாலாயி:3417/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று - நாலாயி:3688/1
நாரணன் எம்மான் - நாலாயி:3936/1
வாழ் புகழ் நாரணன் தமரை கண்டு உகந்தே - நாலாயி:3979/4
நாரணன் தமரை கண்டு உகந்து நல் நீர் முகில் - நாலாயி:3980/1

-----------
    நாரணன்-தன் (3)
ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன்-தன் நாமங்கள் - நாலாயி:2183/1
நாரணன்-தன் நாமங்கள் நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும் - நாலாயி:2201/3
நாடாத மலர் நாடி நாள்-தோறும் நாரணன்-தன் வாடாத மலர் அடி கீழ் வைக்கவே வகுக்கின்று - நாலாயி:2940/1,2

------------
    நாரணனாய் (1)
எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே நர நாரணனாய் உலகத்து அறநூல் - நாலாயி:1898/1

--------------
    நாரணனே (5)
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கரு மா முகில் போல் - நாலாயி:1218/1
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி - நாலாயி:1552/3
நரனே நாரணனே திருநறையூர் நம்பீ எம்பெருமான் உம்பர் ஆளும் - நாலாயி:1611/3
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை அன்றி இலை - நாலாயி:2388/3,4
ஆவனவும் நால் வேத மா தவமும் நாரணனே  ஆவது ஈது அன்று என்பார் ஆர் - நாலாயி:2453/3,4

-----------
    நாரணனை (9)
நலம் திகழ் நாரணனை நணுகும்-கொல் என் நல் நுதலே - நாலாயி:1836/4
பகல் கண்டேன் நாரணனை கண்டேன் கனவில் - நாலாயி:2262/1
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும் - நாலாயி:2445/3
நாரணனை நா_பதியை ஞான பெருமானை - நாலாயி:2448/3
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை - நாலாயி:2649/3
நாட்டிய நீச சமயங்கள் மாண்டன நாரணனை  காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல் - நாலாயி:2844/1,2
நல்க தான் ஆகாதோ நாரணனை கண்ட-கால் - நாலாயி:2936/2
திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை - நாலாயி:3329/1
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே - நாலாயி:3947/4
----------
    நாரணா (9)
நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் - நாலாயி:152/4
நன்று நீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய் - நாலாயி:159/4
வாயினால் நமோ_நாரணா என்று மத்தகத்திடை கைகளை கூப்பி - நாலாயி:372/3
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் - நாலாயி:435/1
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ_நாரணா என்பன் - நாலாயி:435/3
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை ஓவாதே நமோ_நாரணா என்று - நாலாயி:438/2
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது - நாலாயி:661/3
நல் மாலை கொண்டு நமோ_நாரணா என்னும் - நாலாயி:2138/3
நா வாயில் உண்டே நமோ_நாரணா என்று - நாலாயி:2176/1

——————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ பார்த்த ஸ்வாமி திருமஞ்சனக் கட்டியம்-

May 27, 2018

நாயந்தே ! நாயந்தே !

அக்ரே க்ருத்வா கமபி சரணம் ஜாநுநைகேந திஷ்டன்
பச்சாத் பார்த்தம் விவலந ஜூஷா சஷூஷா ப்ரேஷமாண
சவ்யே தோத்ரம் கர சரசிஜே தஷிணே ஞானமுத்ராம்
ஆபிப் ப்ராணோ ரதமதி வசந் பாதுநஸ் ஸூதவேஷ

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
தாஸாம் ஆவீரபூத சவ்ரி ஸ்மயமாந முகாம் புஜ -பீதாம்பர தர ஸ்ரக்வீ சாஷான் மன்மத மன்மத –

ஆழ்வார்கள் மடல் எடுக்கும் அழகுடைய பெருமாள் –
ஆய்ச்சியரைப் பணி கொண்ட மணவாளப் பெருமாள் –
ஆழ்ந்தாரைக் கரையேற்ற அவதரித்த பெருமாள் –
ஆனைக்கு அன்று அருளை ஈந்த அருளாளப் பெருமாள் –
ஆழி கொண்டு அன்று இரவி மறைத்து அருள் செய்த பெருமாள் –
ஆனை மறித்து அழகாலே வெல்ல வல்ல பெருமாள் –
ஆழ் கடலைக் கடைந்து அமரர்க்கு அமுதூட்டும் பெருமாள் –
ஆழ்வார்க்குப் பின்னெறியை அளித்து உகந்த பெருமாள் –
நம் தெய்வ சிகாமணிப் பெருமாள் –

திருவுக்கும் திருவாகிய வான் இளவரசான தேவர் –
அடலாயர் தம் கொம்பினுக்கு விடை கொண்டு நீளா துங்க ஸ்தந கிரி தடீ ஸூ ப்தராய்
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பு அழகை பின்னானார் வணங்க வந்து
திரு மடந்தை மண் மடந்தை இருப்பதாலும் திகழ
சிங்காசனத்தின் மேல் தண் தாமரை சுமக்கச் செங்கமலக் கழலும் சிற்றிதழ் போல் விரலுமாய்
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ -என்னும்படி நிலையார நின்ற அழகும் –

கறையினார் துவருடுக்கைக் கடையாவின் கழி கோல் கைச் சறையினராய்
பசு நிரை மேய்ப்பு உகந்து-கன்று மேய்த்து இனிது உகந்த வாத்சல்யம் விளங்கும்படி
நல் அங்கம் உடையதோர் கோலூன்றி நின்ற அழகும் –

முடிச்சோதி யானது முகச்சோதி மலர்ந்ததுவோ என்று கோவிந்த அபிஷேகத்தால்
திரு முடியில் நல் தரித்த ஸ்வாமித்வ பிரகாசமாய் கதிர் ஆயிரம் இரவி கலந்து எறிந்தால் ஒத்த நீண் முடியும் –

ச விலாச ஸ்மித அதரம் பிப்ராணம் முக பங்கஜம் -என்கிறபடியே
முறுவல் எடுத்த கலம் என்றலாய் -ஸ்வாமித்வ பல உபாதான ஸுசீல்ய ப்ரகாசகமான ஸ்மயமான முகாரவிந்தமும் –

அலர்ந்து குளிர்ந்து இருக்கிற இரண்டு தாமரைப் பூக்களை மதத்தாலே அமுக்கு ஆடுகிற
இரண்டு வண்டு ஒழுங்கு போல் இருக்கிற தன் கைச் சார்ங்கம் அதுவே போல் அழகிய திருப் புருவ வட்டங்களும்

பதிம் விஸ்வஸ்ய-என்கிற பிரமாணம் வேண்டாதே அனைத்து உலகும் யுடைய வரவிந்த லோசனன் என்று
ஸர்வேஸ்வரத்வ சிஹ்னமாய் -மிதோபத்தஸ் பர்த்தஸ்ப் புரித ச பரதவ த்வந்வ லலிதங்களான திருக் கண்களும்

கஸ்தூரீ கலிதோர்த்வ புண்டர திலகம் -என்று திரு நெற்றியில் சாத்தின கஸ்தூரி திலகமும்

மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ -என்று நித்ய சந்தேக ஜனகமான கோல நீள் கொடி மூக்கின் அழகும்

அதினுடைய பல்லவ உல்லாசம் போல் இருக்கிற திருக் கபோலங்களும்

அதினுடைய நவ குஸூமம் போலேயாய்-பன்னிலா முத்தம் தவழ் கதிர் முறுவல் செய்து -என்கிறபடியே
பூர்ண சந்திரன் முழு நிலாவைச் சொரிந்தால் போலே திரு முகத்தின் ஒளியை ப்ரவஹிக்கிற ஸ்மித விலாசமும்

சீலாஜ்ஜடீ பூயதே -என்று அந்த ஸுசீல்ய காஷ்டா பூத ஸுலப்ய ப்ரகாசகமாய்
அலவலமை தவிர்த்த அழகன் என்றும்
ஆதரம் பெறுக வைத்த அழகன் என்றும்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் -என்றும்
அனுகூல பிரதிகூல விபாகமற -ஆண் பெண் வாசி அறுத்து
மற்று ஒன்றினைக் காணாமல் -கண்டவர் தம் மனம் வழங்க
சகல மனுஜ நயன விஷய தங்காதமாய்
மாம் என்னும் தொட்டுக் காட்டின வெளுத்து இளைத்த திரு மேனியும் –

அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி -என்று அர்ச்சக பாரதந்தர்யத்தைத் தன்னை இட்டுப் பார்த்து அஞ்சின அச்சமற
திருக் கையிலே ஞான சக்தி பிரகாசமாய் எடுத்துக் பிடித்த திவ்யாயுதங்களும்

அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனன் என்று சேஷித்வ ஸூசகமாய்
கரியவாகிப் புடை பெயர்ந்து மிளிர்ந்து செவ்வரியோடி ஆழ்வார்கள் அளவும் நீண்டு அலை எறிந்த நெடு நோக்கின் அழகும்

இத்தலையைத் தேற்றி யன்றித் தரியாத அளவான பூர்த்திக்கு பிரகாசமாய்
மாஸூச என்று கொண்டு வைத்த அஞ்சல் என்ற திருக் கையும்

இரண்டு இடத்திலும் மரகத கிரியைக் கடைந்து மடுத்தால் போல் –
திண்ணியவாய் -அலம் புரிந்து என்கிறபடியே தனக்கு உபய விபூதியும் வழங்கி
திவ்ய அஸ்திர புஷ்பிதங்களான கற்பகக் காவென நற்பல தோள்களும் –

பெரிய பிராட்டியாருக்குக் கோயில் கட்டணமாய் -நித்ய அனுபவம் பண்ணச் செய் தேயும் இறையும் அகலகில்லேன் என்று
அவளைப் பிச்சேற்றக் கடவதாய்-கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும்
ஸ்ரீ கௌஸ்துபம் தொடக்கமான குருமா மணிப் பூண் குலாவித் திகழ்கிற திரு மார்பின் அழகும் –

காளமேகத்தில் மின்னல் கொடி படர்ந்தால் போலே திரு மேனிக்கு பரபாக ரசாவகமாய் –
அழகு வெள்ளத்துக்கு அணை காட்டினாள் போலே இருக்கிற வெண் புரி நூலின் அழகும் –

ஸுந்தர்ய சாகரம் இட்டளப்பட்டுச் சுழித்தால் போல் நெஞ்சையும் கண்ணையும் சுழியாறு படுத்துகிற திரு வுந்தியும் –

ஸுந்தர்ய ராக ரஞ்சிதமான ஆகாசம் போலே திருமேனிக்குப் பரபாக ரசாவகமாய்த்
திருவரை பூத்தால் போலே இருக்கிற அந்தி போல் நிறத்து ஆடையும்

ரம்பா ஸ்தம்பாதி கம்பீரங்களான திருத் தொடைகளும் –
அங்கராகம் ப்ரவஹிக்கும் போது இரண்டு குமிழி நீர் எழுந்தால் போல் இருக்கிற திரு முழம் தாள்களும் –

கள்ளச் சகடத்தைக் கலக்கு அழியச் சாடிக்
கன்று மறித்தோடிக்
காளியன் மீதாடிக்
காளிந்தி நீராடிக்
குரவை பிணைந்து ஆடிக்’
குடம் ஏறிட்டு ஆடிக்
கருணையால் தூதோடிக்
கன்னியரோடூடிக்
கழகம் மிதித்து ஏறிச்
சிற்றில் அழித்து ஆடிச்
சரணாகதி தந்து ஒழிந்த
திண் கழல் இருந்த அழகும் –

சீரியதோர் நிதி போலே திரு முன்பே வீற்று இருந்த ஸ்ரீ சடகோபன் இருந்த அழகும் –

இவ்வழகில் ஆழங்கால் பட்டு அலைகின்ற உலகு எல்லாம் சூழ்ந்து இருந்து ஏத்தும் அழகுமாய்
நீராட எழுந்து அருளி இருக்கும் அழகு இது ஏதேனும் சிந்தை மருளோ –
ஜெகன் மோகன மந்த்ர ப்ரபாவமோ
சகல ரசகுளிகா விலாசமோ
சர்வ போக சிந்தாமணி ப்ரகாசமோ
சகல ஜன ஸூஹ்ருத விபாகமோ –
நிகில பல கல்ப லதா பிரசரமோ –
அகில ஜெகஜ் ஜீவன மூலமோ –
அதுலாநந்த கந்தாவதாரமோ –
ஸமஸ்த சம்பத் சாம்ராஜ்ய வேஷமோ
சர்வ மங்கள சந்தான ப்ரஸவமோ –
சகல கலா ரஹஸ்ய சர்வ ஸ்வமோ –
ஈது எல்லாம் திரண்டு எழுந்து கொண்டதோர் வடிவோ –
இதுவும் அன்றியில் அப்ரமேய தேஜஸ் ஸோ-
நாங்கள் ஏது என்று அறியா இவ்வழகுடன் தேவரீர் ஊழி தோறும் ஊழி தோறும் வாழ்ந்திடுகவே
யது ஸார்வ பவ்மனே -திருமஞ்சனம் கண்டு அருளவே ஜய விஜயீ பவ —

சஹஸ்ர தாரைக் திருமஞ்சன கட்டியம்

நாயந்தே நாயந்தே
த்வம்மே அஹம்மே குதஸ்தத் ததபி தவ குதோ வேத மூல பிராமணத்
ஏதச்சா நாததி சித்த அனுபவ விபவாத் தர்ஹி சாக்ரோச ஏவ க்வாக்ரோச
கஸ்ய கீதாதிஷூ மம விதிதி கோத்ர சாஷீ ஸூதி
ஸ்யா ஹந்த த்வத் பஷ பாதீச இதி ந்ருகல ஹே ம்ருக்ய மத்த்யஸ்த் த்வத்தவம்
ச இதா நீமபி முநே த்ருச்யதே தத்ர மாநவை
ருக்மிண்யாச அநிருத்தேனே ப்ரத்யும்நேந ச சேவித ஹலாயுதே ந சஹிதஸ் ததா சாத்யகி
நா ஸஹ பார்த்தசாரதி ரித்யேவ விஸ்ருதோ ஜெகதீபதி
பராக் பராக் ஸ்வாமீ பராக்
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி விடுத்த அசைவோ –
கன்று அதனால் விளவு எறிந்து கனி யுதிர்த்து ஆ நிரை மேய்த்த அசைவோ –
கும்ப மிகு மத யானை மருப்பு ஓசித்து கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த அசைவோ –
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அறு மூன்றும் அளித்து உரைத்த அசைவோ –
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்து ஐவர்க்குத் திறங்கள் காட்டியிட்ட அசைவோ –
அடியார்கள் வினைத்தொடரை அருள் என்னும் ஓள் வாள் உருவி வெட்டிக் கலைந்த அசைவோ –
வடிவாரும் மா மலராள் வலவருகும் மற்றை மண் மகள் இடவருகும் இருக்க
நடுவாக வீற்று இருக்கும் இவ்வழகுடன் தேவரீர் ஊழி தோறும் ஊழி தோறும் வாழ்ந்திடுக வாழ்ந்திடுகவே
ஸ்ரீ பார்த்த ஸூதனே-திருமஞ்சனம் கண்டு அருளவே -ஜய விஜயீ பவ –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ நம்மாழ்வார் திரு அத்யயன உத்சவ திருமஞ்சனக் கட்டியங்கள் –

May 26, 2018

ஸ்ரீ மதுரகவி ப்ரப்ருதி சாத்விக சஜ்ஜனங்கள் ஒரு மகா மேருவாக விண்ணப்பம் செய்யா நின்றார்கள் –
ஸ்ரீ :
ஸ்ரீ மதே சடகோபாய நம:

சத்த்வாஸ்ரயம் ஷட்பத பாவ யுக்தம் ஸூ ஹம்ச சேவ்யம் ஸூ மனஸ் சமேதம்
ஸூ ரேஸ் வராஹ்லாத கரம் விபும் த்வாம் வதந்தி சந்த சடகோப மேரும்-

நாயந்தே ! நாயந்தே !
ஜாயமானம் ஹி புருஷம் யம் பச்யேத் மது ஸூதன சாத்விகஸ் சாது விஜ்ஞேய ச வை மோஷார்த்த சிந்தக -என்னும்படி
உத்பத்தி காலத்திலே தன்னுடைய விசேஷ கடாஷத்தாலே சம்சாரி சேதனரை நிரஸ்த ரஜஸ் தமஸ்கரராயும்
ப்ரவ்ருத்த சத்வ குணராம்படியாகவும் பண்ண வல்ல சர்வேஸ்வரனுடைய நிரந்தர கடாஷ பாத்ர பூதராய்
உபாய உபேயங்கள் இரண்டும் ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுடைய திருவடிகளும் –
அந்தத் திருவடிகளில் பண்ணும் கைங்கர்ய முகமாகவே நிஷ்கர்ஷித்து இருக்குமவராய்
ஜிதேந்த்ரியராலே சேவிக்கப் படுமவராய் –
சம்சார சேதனரை உஜ்ஜீவிப்பிக்கையில் நோக்கமான திரு உள்ளத்தை உடையவராய்
உக்தி விருத்திகளாலே சர்வேஸ்வரனை உகப்பிக்கும் ஸ்வபாவராய்
அபரிச்சேத்ய மகிமரான தேவரை சத்துக்களானவர்கள் ஸ்வ பாவ சாம்யத்தாலே மகா மேருவாக விண்ணப்பம் செய்யா நின்றார்கள் –
அது இங்கனே இரா நின்றது -எங்கனே என்னில் –

சத்த்வாஸ்ரயம் –
அந்த மகா மேருவானது -பஞ்சாசத்கோடி விச்தீர்ணமாய் பூமிக்கு ஒரு ஆணி அடித்தால் போலே
நிற்கைக்கு ஈடான பலத்துக்கு ஆஸ்ரயமாய் இருக்கும் –
தேவர் ரஜஸ் தமஸ்ஸூக்கள் கலசாதபடி சத்வ குணம் ஒன்றுக்குமே ஆஸ்ரயமாய் எழுந்து அருளி இருப்பீர்-

ஷட் பத பாவ யுக்தம்
அந்த மகா மேருவானது நாநாவித புஷ்ப ரஸா ஸ்வாத மத்த ப்ருங்கா வளியாலே சேஷ்டாயுக்தமாய் இருக்கும்
தேவரீர் ஆறு விதமான சரணாகதி விஷயமான திரு உள்ளத்தை உடையராய் எழுந்து அருளி இருப்பீர்-

ஸூ ஹம்ச சேவ்யம் –
மகா மேருவானது மானசாதி சரோவர்த்திகளான அழகிய அன்னங்களாலே சேவிக்கப் படுமதாய் இருக்கும்
தேவர் நாத யாமுன யதிவராதிகளான பரம ஹம்சர்களால் சேவ்யமானராய் எழுந்து அருளி இருப்பீர்-

ஸூ மனஸ் சமேதம்
அந்த மகா மேருவானது உத்யான தடாக ஜலங்களிலே இருக்கிற நாநாவித புஷ்பங்கள் உடன் கூடி இருக்கும்
தேவர் சர்வேஸ்வரன் கை விட்ட சம்சாரிகளையும் திருத்துகையிலே தத்பரர் ஆகையாலே
அழகிய திரு உள்ளத்தை உடையராய் எழுந்து அருளி இருப்பீர்-

ஸூ ரேஸ் வராஹ்லாத கரம் –
அந்த மேரு தேவர்களுக்கு நிர்வாஹகரான ப்ரஹ்மாதிகளுக்கு ஸ்வ வை லஷண்யத்தாலே ஆஹ்லாத கரமாய் இருக்கும்
தேவர் -பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரைக் கண்ணன் -என்றபடி
நிரந்தர கடாஷம் பண்ணி கொண்டு இருக்கும் படி அயர்வறும் அமரர்கள் அதிபதிக்கும் ஆஹ்லாத காரராய் எழுந்து அருளி இருப்பீர்-

விபும்
அந்த மேருவானது பூமிக்கு மேலே 84000 யோஜனை உயர்த்தியை உடையதாய் பர்வதாந்தரங்களை காட்டிலும் பெரியதாய் இருக்கும்
தேவர் அடியார் நிலை நின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே -என்னும்படி
உபய விபூதியிலும் அடங்காத பெருமையை உடையராய் எழுந்து அருளி இருப்பீர் –

ஆக இப்படிகளால் தேவரீரை- வதந்தி சந்த சடகோப மேரும்-
ஸ்ரீ மதுரகவி ப்ரப்ருதி சாத்விக சஜ்ஜனங்கள் ஒரு மகா மேருவாக விண்ணப்பம் செய்யா நின்றார்கள் –

—————————————

திரு அத்யயன உத்சவம்-இரண்டாம் நாள் திரு மஞ்சனக் கட்டியம் –
திருமஞ்சனம் சேவிப்பாரை எல்லாம் சிந்தயந்தி ஆக்கி அருளுகிறீர் –

காதும் பூர்ணஸ்தி தேந்தும் மதுரகவிமுகை ப்ருத்ய வரக்கை ஸ் ச ஸார்த்தம்
ஸ்நாதும் வேத்யாம் நிஷண்ணஸ் தத் அனுகுண மால்யாத் யம்ப ரஸ்த்வம் சடாரே
தாதும் முக்திம் ஸ்வ காந்த யேச்ச ஸி கிமிஹ ந்ருணாம் சாஸ்திர மார்க்காதிகா நாம்
ஸ்வ தந்தர்யாதேவ கிருஷ்ண பிரதம மிஹ யதா சிந்தயந்த்யா ஸ்வரூபம்-

நாயந்தே ! நாயந்தே !
அந்தம் தமஸ் திமிர நிர்மித மேவ யத்ச்யாத் தத் சாரசாதித ஸ்வ தந்தயதி வ்ருத்தவார்த்தம் -என்கிறபடியே
திமிர சார நிர்மிதம் என்னும் படி இருண்ட சுருண்ட திருக் குழல் கற்றையும்
அஷ்டமி சந்திர நிபமான திரு நெற்றியும்
அந்த சந்திர மத்யத்திலே ஒரு அம்ருத தாரை என்னலாம்படி திரு நெற்றியிலே அழகு பெறச் சாத்தின திரு நாமமும்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலையையும் தன் அழகாலே வெல்லும் திருப் புருவமும்
அநவதிக தய அனுராக வாத்சல்ய ஸூசகங்களாய் அப் பொழுதைத் தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களும்
கல்ப லதா கல்பமான திரு மூக்கும்
பிம்ப வித்ரும தம்ப ஹாரியான திரு வதரமும்
ஸூத்த நிஸ்த லாலி போலே இருக்கிற திரு முத்து நிறையும்
கர்ணிகா விலசிதமான கர்ண பாசமும்
திருஷ்டி சித்த அபஹாரிகளான சுபுக கபோலங்களும்
க்ரமுக தருண க்ரீவாகம்பு பிரதிமமான திருக் கழுத்தும்
கனக கிரியைக் கடைந்து எடுத்தால் போலேயாய் ப்ரணத ரஷண தீஷிதமான திருத் தோள்களும்
ஜ்ஞான ப்ரதன் என்னும் இடத்தை கோள் சொல்லுகிற ஜ்ஞானமுத்ரா சஹிதமான கர காந்தியும்
அகில ஜன மநோ ஹரமாய் -அநேக பூஷண பூஷிதமாய் வகுள தாம விராஜிதமான வஷஸ் ஸ்தலமும்
அஷய பாப ஹாரியான குஷி பிரதேசமும்
சௌந்தர்ய அம்ருத நீர பூர பரிவாஹவர்த்த கர்த்தாயிதமான திரு நாபியும்
திருவரை பூத்தால் போலே இருக்கிற திவ்ய அம்பர சோபையும்
ரம்பா ஸ்தம்ப சஹோதரமான திருத் தொடைகளும்
க்குத் மத்ககுத் நிபமான திரு முழம் தாள்களும்
பங்கஜ நாள துல்யைகளான ஜங்கைகளும்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனச்ய -என்கிறபடியே-

அசரண்ய சரணமுமாய்
தத் ஷண உன்மீலித சரசிஜா ஜைத்ரமான சரண யுகளுமுமாய்
ஆக
இப்படி சர்வ அவயவ ஸூந்தரமான திவ்ய விக்ரஹத்தை தேவர் இப்போது
திரு அத்யயன உத்சவ தீஷிதராய் ஸ்வ சிஷ்ய தாரரான மதுரகவி ப்ரப்ருதி சஜ்ஜனங்களோடு
பொலிந்து நின்ற பிரானை பாடி அருளுவதாக சங்கல்ப்பித்து
அலங்க்ருதகாத்ரராய்ச் சென்று சேவிக்க வேண்டுகையாலே
தத் அங்கமாக திரு மஞ்சனம் செய்ய வேணும் என்று மஞ்சன வேதிகா மத்யத்திலே
ஜ்ஞானமுத்ரா சஹிதராய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருப்பு இங்கனே இரா நின்றது
எங்கனே என்னில்-

சிந்தயந்தீ ஜகத் ஸூ திம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம்
நிருச்ச் வாசதயா முக்திம் கதான்யா கோப கன்னிகா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13
அஜ்ஞ்ஞாத பகவத் விஷயையான சிந்தயந்திக்கு ஸ்வ விக்ரஹ ஸ்மரண ஹேதுவாக
தன்னுடைய நிரந்குச ஸ்வாதந்த்ர்யத்தாலே முக்தியைக் கொடுத்த கிருஷ்ணனைப் போலே
இஹ லோகத்தில் விஷய பிரவணராய் ரூப ஆபாசம் கண்டு விஷயங்களிலே மேல் விழுந்து திரிகிற
சம்சாரி சேதனருக்கு தேவர் வடிவு அழகாலே விஷயாந்தர வைமுக்ய பூர்வகமாக
ஸ்வ விஷய ருசியை விளைவித்து
நம்பினேன் மடவாரையும் முன்னெலாம் செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே
என்று வாய் புலம்பும்படி பண்ணி
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்று அறியேன் -என்று
அவிதான்ய தைவிதமாய்க் கொண்டு தேவர் திருவடிகளைப் பற்றி நின்று
அடிமை செய்கையாகிற கைங்கர்ய ஆனந்தத்தையும் கொடுத்து அருளுவதாக திரு உள்ளம் பற்றி
ததர்த்தமாக திரு மஞ்சனம் செய்ய எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது

————————————————————–

திரு அத்யயன உத்சவம்-இரண்டாம் நாள் திரு மஞ்சனக் கட்டியம் –

பிரதஷிண நமஸ் க்ரியா ப்ரப்ருதிபிர்வ நாதரே புரா
பஜ த்வமிதி சோதிதம் பகவதோ குண உபாசனம்
யதத்யய ந்லஷ்யதே பிரகடயன் ஸ்வ வ்ருத்யாதி நா
சமஸ்த ஜன கோசரம் சடாரி போதய சம்ஸ் நாசிபோ —

நாயந்தே ! நாயந்தே !
தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜாயதே
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே -நாராயணாத் ருத்ரோ ஜாயதே
ப்ரஜ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ-என்கிறபடியே
இருவர் அவர் முதலான அரவணை மேல் திரு மாலாலே மயர்வற மதி நலம் அருளப் பெற்றுடையவராய்
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்தோ லஷ்மணோ லஷ்மி வர்த்தன -என்றும்
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து என்றும் சொல்லுகிறபடியே
பேதைப் பருவத்திலே மூதுவராம் விண்ணாட்டவருடைய நித்ய வ்ருத்தியிலே அபி நிவிஷ்டராய்
ந ச சீதா த்வயா ஹீநா நசா ஹம்பி ராகவா முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்த்ருதௌ-என்றும்
நின்னலால் இலேன் காண்-என்றும் சொல்லுகிறபடி
மா மலராள் கோனை விடில் நீரில் குதித்து எழுந்த மீன் எனவே ஆக்கை முடியும்படியான தசையை யுடையவராய்
ந தேவ லோகா க்ரமணம் நாமரத்வ மஹம் வ்ருணே ஐஸ்வர்யம் வாபிலோகா நாம் காமயே ந த்வயா விநா-என்கிறபடியே-

கைம்மா துன்பம் கடிந்த அம்மானுடைய செம்மா பாதபற்பு தலை சேருகையிலே த்வரையாலே
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -என்றும்
தருணீ க்ருதா நுத்தம புத்தி முக்தகராய் பெரு நிலம் கடந்த நல்லடிப்போது அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் என்று
திரு வுலகு அளந்த திருவடிகளிலே த்ரிவித கரணங்களாலும் உண்டான
விவித கைங்கர்யங்களே சர்வ வித புருஷார்த்தம் என்று அறுதி இட்டு அருளி

தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்று
அந்த புருஷார்த்தத்தை நிஷ் பிரயோஜனம் ஆக்குமதான ஸ்வ பிரயோஜனத்தைக் கழித்து
சபிரயோஜனம் ஆக்கி அருளின தேவரீர்
இப்போது திரு அத்யயனம் என்கிற வ்யாஜத்தாலே கிண்ணகத்துக்கு படல் இட்டால் போலே
க்ரீடாதி நூபுர அந்தமான மெய்யமர் பல் கலன்களையும் நன்கு அணிந்து
த்வஜ சத்ர சாமர பேரீ கீதா காஹள சங்காஸீஸ் ஸ்துதி கோலாஹலத்துடனே புறப்பட்டு அருளி
தணியா வெந்நோய் உலகில் தவிர்த்து ஆளுமாளார் என்கிறவனுடைய தனிமையைத் தீர்க்கைக்கு ஆள்பார்த்து உழி தந்து
மீண்டு எழுந்து அருளி திருமேனி இன்ன வண்ணம் என்று காட்டீர் என்று இருப்பார்க்கு
காட்சி கொடுக்கைக்காக

சர்வ பூஷண பூஷார்ஹா -என்கிறபடியே
ஆபரண ஸ்யாபரணமான திருமேனியில் அழகு வெள்ளத்தை முழு மதகாகத் திறந்து
செழு மா மணிகள் சேரும் திரு மா மணி மண்டபமான இத் திரு வோலகத்திலே ஒரு நாயக ரத்னம் அங்குரித்தால் போலே
மஞ்சன வேதிகா மத்யத்திலே ஜ்ஞான முத்ரா சஹிதமாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருக்கும் இருப்பு இங்கனே இரா நின்றது
அது எங்கனே என்னில்-

தஸ்மின் யதந்தஸ் ததுபாசிதவ்யம் தஸ்மின் யதந்தஸ் ததன்வேஷ்டவ்யம் -என்று சாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடியே
பலமுந்து சீரில் படிமின் -என்று விதித்த பகவத் குண உபாசனத்தை சாங்க மாக்க வேண்டுகையாலே
மாலிரும் சோலை தளர்விளர் ஆகில் சார்வது சதிரே –
மாலிரும் சோலை பதியது ஏத்தி எழுவது பயனே
மாலிரும் சோலை தொழக் கருதுவதே துணிவது சூதே
மாலிரும் சோலை வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே
மாலிரும் சோலை நெறி படவதுவே நினைவது நலமே -இத்யாதிகளால்
ஷேத்திர வாச
சங்கீர்த்தன
அஞ்சலி
பிரதஷிண
கதி -சிந்தநாத் அங்கங்களை மலை இலக்கா முன்பு விதித்த படியை அக்காலத்தில் அனுஷ்டிக்கப் பெறாத
கர்ப்ப நிர்பாக்யரான அடியோங்களும் இழவாத படி
அன்பன் தன்னை அடைந்தவர்க்கு எல்லாம் அன்பனான தேவருடைய இவ்வுலகினில் மிக்க அருளாலே
மாட மாளிகை சூழ்ந்து அழகாகிய திருக் குருகூர் அதனைப் பாடி யாடி பரவிச் சென்மின்கள் -என்கிறபடியே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் நீள் குடக் கூத்தனாய் மேவி உறை கோயில் விஷயமான தேவர் உடைய
வந்தன
கீர்த்தன
அர்ச்சனாதி பிரகாரங்களாலே வெளியிட்டு அருளுவதாக திரு உள்ளம் பற்றி
ததார்த்தமாக திரு மஞ்சனம் செய்ய எழுந்து அருளி இருக்கும் இருப்பு என்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

————————————————-

திரு அத்யயன உத்சவம்-மூன்றாம் நாள் திருமஞ்சனக் கட்டியம் –

அவிச் சின்னம் காலம் சகலமவிபோக ந ஸூத்ருடம்
சமஸ்தம் கைங்கர்யம் சட மதன குர்யா மஹமிதி
யதாப்யாத்யா ப்ரோக்தம் ஸூப தரருசே சர்வ ஸூஹ்ருதே
புநஸ் ஸ்பஷ்டீ குர்வன்நிஹ சதசி சம்ஸ் நாஸி ததயோ-

நாயந்தே ! நாயந்தே !
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-
விஸ்வ மேவ தகும் புருஷ –என்று சொல்லுகிறபடியே
சர்வ சப்த வாச்யத்தை -முழுதுமாய் முழுதி யன்றாய்-என்று அருளிச் செய்தும்
அது தான் க்ராமேசயம் புருஷ -என்னுமா போலே அமுக்யம் ஆகாதபடி
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித –
அணோர் அணீ யான் மஹதோ மஹீ யான் -இத்யாதிகளால் அவனுக்கு சொல்லுகிற பரி சமாப்தி வ்யாப்தியை
எங்கணும் நிறைந்த வெந்தாய்-என்றும்
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவர நிறைந்து நின்ற -என்று அருளிச் செய்தும் -அது தான் ஆகாச வ்யாப்தி போலே யாகாத படி
அந்த பிரவிஷ்டா சாஸ்தா ஜநாநாம் சர்வாத்மா -என்று அவனுக்குச் சொல்லப்படுகிற நியந்த்ருத்வேன வ்யாப்தியை
ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி -என்று அருளிச் செய்தும்
அது தான் ஜீவாத்மாவுக்கு போலே ஹேய ஸ்பர்ச சஹம் ஆகாத படி
அனஸ் நன்நன்யோ அபி சாக சீதி-என்று அவனுக்குச் சொல்லப்படுகிற தத் கத தோஷ ஸ்பர்ச ராஹித்யத்தை
அவரவர் சமயம் தோறும் தோய்விலன் -என்று அருளிச் செய்தும்
ஆக
இப்படி சர்வ அந்தர்யாமிதயா
சர்வ சப்த வாச்யனான
சர்வேஸ்வரனுடைய
சர்வ ஹேய ப்ரத்ய நீகமான -ரூபத்தை அருளிச் செய்து

ஹிரன்யமஸ் மஸ்ரு ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண –
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்று
ஆணிப் பொன்னுருவமான திவ்யாத்மா ஸ்வரூபத்துக்கு மாணிக்கச் செப்பு போலே பிரகாசகமாய்
அனுக்ரஹ ஏக பாத்ரமான அவர்களுடைய விரோதியை நிக்ரஹிக்கைக்காக பரிக்ரஹித்த விக்ரஹத்தை
முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ -என்று தொடங்கி
சுட்டுரைத்த நன்பொன் நின் திருமென் ஒளி ஒவ்வாது -என்றும்
அப்பொழுதைத் தாமரைப் பூ கண் -என்றும் அருளிச் செய்தும்-

ச ஏக்தா பவதி த்விதா பவதி த்ரிதா பவதி சத்தா பவதி அபரிமிததா பவதி
இமான் லோகான் காமான் காம ரூப்யநுசஞ்சரன் ஸ தத்ர பர்யேதி -என்று சொல்லப்படுகிற
விக்ரஹ அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யத்தில் அபி நிவேச அதிசயத்தை
தெழி குரல் அருவித் திருவேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா யடிமை செய்ய வேண்டும் நாம் -என்று பிரார்த்தித்து அருளி-

இப்படி பிரார்த்தித்தது சார்த்தமாம் படி
எங்கும் தானாய் நின்ற தன் சர்வாத்ம பாவத்தை சர்வேஸ்வரன் சாஷாத் கரிப்பிக்கையாலே பெரும் காற்றில் விழு பழம் எடுப்பாரைப் போலே
புகழு நல ஒருவன் என்கோ-என்று தொடங்கி
இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ -என்றும்
கூவுமாறு அறிய மாட்டேன் யாவையும் எவரும் தானே -என்று துரும்பை கூடாகக் கண்டு யாசிதையான வாசிக வ்ருத்தியை செய்து அருளி

அது தான் அவ்வளவிலே தவறிப் போகாத படி
நங்கள் வானவர் ஈசன் நிற்க–இழியக் கருதியோர் மானிடம் பாடல் என்னாவது –
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளும் –
வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என் வள்ளல் மணி வண்ணன் -தன்னைக் கவி சொல்ல வம்மின் என்று
நிஷ்க்ருஷ்டையான ஸ்வ வ்ருத்தியிலே மூட்டி யருளி
ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ -என்று மீளவும் தேவரீர் உடைய அனுஷ்டானத்திலே பிரகாசிப்பித்தது
அருளுவதாக திரு உள்ளம் பற்றி ததார்த்தமாக திருமஞ்சனம் செய்து அருள எழுந்து அருளி இருக்கிற இருப்பு என்று
விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

—————————————————-

திரு அத்யயன உத்சவம் -நாலாம் நாள் திருமஞ்சன கட்டியம் –

பிரஜாபதி சிவாதி ஷூ பரவண சேத சாமா கமை
பராவர விபாகதம் பரம சாஸ்திர முக்த்வா புரா
விபாதி சடகோப தத் பிரபல சாஸ்திர சங்கா ஹ்ருதாம்
பவான் ஸ்நபந பூர்வகம் சத்த மத்ய கர்த்தும் யதா —

நாயந்தே ! நாயந்தே !
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் –
ப்ரஹ்மவா இத மேகமே வாக்ர ஆஸீத் –
ஆத்மா வா இத மேகமே வாக்ர ஆஸீத்
ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சாந-
தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜாயதே –
புத் புதா ரஷய ஸூ ல பாணி புருஷோ ஜாயதே –
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே
ப்ரஹ்மாதி ஷூ ப்ரலீ நேஷூ நஷ்டே லோகே சராசரே ஏகதிஷ்டதி விச்வாத்மா ச து நாராயண பர –
தஸ்மின் ஜஞ்ஞே ஸ்வயம் ப்ரஹ்மா ப்ரஹ்மணஸ் சாபி சம்பூதஸ் சிவா – என்னும் இப்படி

ஜகத் காரண முகேன நாராயணன் உடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
ஸ்ருதி ஸ்ம்ருதி புரஸ் சரமாக சகல சாஸ்திரங்களும் ஏக கண்டமாக நின்று கோஷிக்கச் செய்தேயும்
ஸ்ரஷ்ட்ருத்வ சம்ஹாரகத்வ முகேன ருத்ர பிரஜாபதி முக தேவதாந்தர பரத்வத்தையும்
அநாகலித மூல பிரகிருதி சம்பந்த பங்க வாசனா ரூஷித மாநாசர் ஆகையாலே
வைதிக பத விமுகராய் -பாஹ்ய பத அபிமுகராய் லோகாயதர் என்று பேரிட்டு அநாதி மாயையாலே
ஸூ ப்தரான தங்களை புத்தராக பிரதிபத்தி பண்ணியும்

பகவத் விமுகராய் கொண்டு துர்க்கதராய் இருக்க ஸூகதர் என்று பேரிட்டுக் கொண்டு
பகவத் குண கதனத்தாலே சௌ பாஷிகராய் இருக்க மாட்டாதே வை பாஷிகராயும்
ப்ரஹ்ம ஸூத்திர வேதனத்தாலே அசௌத்ராந்திகர் என்ன வேண்டி இருக்க
சௌ த்ராந்திகர் என்று பட்டம் கட்டி யோகாசாரன் என்று பேரிட்டு
வைதிக சரணியில் அயோகாசாரராயும் மாத்யமிகர் என்னச் செய்தே ஸூந்ய பஷவாதிகளாயும்
நியாய வாதிகள் என்று பேர் பெற்று பிரத்யஷத்துக்கு அனுமானம் சொல்லி அநியாய வாதிகளாயும்
பிரமாண பிரமேய விசேஷம் அறியாமையாலே அவைசேஷிகராய் இருக்க வைசேஷிகர் என்று விருது பிடித்தும்

ஸூ பர்ண ஆஸ்ரிதமான வாசூதேவ தருச் சாயையை விட்டு அபர்ண ஆஸ்ரிதமான ஸ்தாணுவின் கீழே ஒதுங்கி
பாசூபத தீஷிதராய் சம்சார வடத்திலே -கர்த்தத்திலே -ஆஸூ பதிதராயும்
இப்படி இவர்கள் தாங்கள் சர்வஞ்ஞர் என்னும்படி மானம் ப்ரதீபவமிவ என்கிறபடியே
சகல சாஸ்திர ப்ரகாசகமான பிரமாணத்தை அவலம்பித்து வைத்து
விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றிலே விழுவாரைப் போலே
அதபதிதர் ஆகையாலே ஸூ த்ருஷ்டிகலான வேதாந்திகளால் குத்ருஷ்டிகள் என்று பேர் பெறுவாரும்
இவை இத்தனைக்கும் தப்பி –

ஸ்வத்வமாத்மநி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்று
நித்ய சேஷத்வ பிரதிபத்திக்கு ய்க்தமான மனசை யுடையனாய் வைத்து
அந்த சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷித்வ
ஹிரண்ய கர்பஸ் சமவர்த்த தாக்ரே –
பூதஸ்ய ஜாத பதிரேக ஆஸீத் –
ததா யதா பூர்வம கல்பயத் –
பிரஜாபதி பிரஜா அச்ருஜத்-
ந சந் நாசச்சிவ ஏவ கேவல –
சம்பு ராகாஸ மத்யே த்யேய-
ஏக ஏவ ருத்ர -என்றும் சொல்லுகிறபடியே-

ஹிரண்ய கர்ப்ப -தாத்ரு -பிரஜாபதி -சப்தங்களாலும்
சிவ சம்பு ருத்ர சப்தங்களாலேயும் பிரதிபாதிதமான சாம்யத்தாலே
சம்ப்ரதிபன்ன ஷேத்ரஞ்ஞரான ப்ரஹ்ம ருத்ராதிகள் அளவிலே சேஷித்வ புத்தியைப் பண்ணியும் அனர்த்தப் படுகிற சேதனருக்கு
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே –
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடில் சீர்ப்புகழ் ஆதிப்பிரான் –
பரன் திறம் அன்றி பல்லுலகீர் தெய்வம் மற்று இல்லை –
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டுகொண்மின் –
ஈசன் பாலோர் அவம் பறைதல் என்னாவது
நும் தெய்வமும் ஆகி நின்றான் –பொலிந்து நின்ற பிரான் கண்டீர் –
உம்மை இன்னே தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே –
ஆடு புட்கொடி ஆதிமூர்த்திக்கு அடிமை புகுவது
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே
உம்மை உய்யக்கொண்டு போகுறில் திருக் குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்முன்
குறிய மாண் யுருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே உறுவதாவது
என்று இப்படி பத்தும் பத்தாக பர அவர விபாக போதன பரம சாஸ்த்ரமான திருவாய்மொழியை
முன்பே அருளிச் செய்து அருளின தேவரீர்

இப்போது திரு அத்யயன உத்சவ வ்யாஜ்யத்தாலே புறப்பட்டு உலாவி அருளி
மீண்டு எழுந்து அருளி
திருமஞ்சனம் செய்து அருளுவதாக மஞ்சன வேதி காம்யத்திலே
ஜ்ஞான முத்ரா சஹிதராய் இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது
எங்கனே என்னில் உகத நிர்தோஷ சாஸ்திர சித்தமான அர்த்த தாத்பர்ய சம்சய மநாக்களை
லப்த விஸ்வாச யுக்தராம்படி சசேல ஸ்நான பூர்வகமாக சப்த கர்மத்தினாலே தீஷித்துக் கொண்டு
எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது-

———————————————————————————–

திரு அத்யயன உத்சவ ஐந்தாம் நாள் திருமஞ்சன கட்டியம் –

ஸ்ரீ மன் ஸ்ரீ சடகோப சம்ப்ரதி பவான் பூர்ண ப்ரவாவோத்தராம்
கீதிம் காதும் உபக்ரமன் ஸூ விஹிதஸ் நா நக்ரியோ ராஜதே
சத்யம் மாம் ந ஜகாதி ஸ ஷணமபி ச்நேஹாத் குருங்காதிப
சித்தே மே வ சதீதி வாச முதிதான் உத்தர்த்தம் இச்சந்நிவா –

நாயந்தே ! நாயந்தே !
த்ரைவித்ய வ்ருத்த ஜன சிரோ பூஷணமாய்
சாத்விக ஜன சாதன சம்பத்தாய்
ஆஸ்ரித சர்வவித பந்து பூதமாய்
அசரண்ய சரண்யமாய் இருக்கையாலே
மேவினேன் அவன் பொன்னடி -என்கிறபடியே சரணவரண அர்ஹமான சரண யுகளமும்
பங்கஜ நாள துல்யைகளான ஜங்கைகளும்
ஜ்ஞானத்வந்த கதிதி வர்த்தகமான ஜா நுத்வந்த்வமும்
சாருக்களான ஊருக்களும்
பத்தலேசமான மத்ய சௌந்தர்யமும்
அஷிப்ரியா வஹமான குஷி பிரதேசமும்
ஆவர்த்த ரூபமான திரு நாபியும்
அதி விசால பீநமாய்-அநேக பூஷித பூஷிதமாய் -வகுள தாம விராஜிதமான வஷஸ்தலமும்
பஜதாம பயதமான புஜ காந்தியும்
க்ரமுக தருண க்ரீவை போலே பந்துரையான கந்தரையும்
ஸூ வர்ண குண்டல மண்டிதமான கர்ண பாசமும்
திருஷ்டி சித்த அபகாரிகளான சிபுக கபோலங்களும்
அருணராக விமோசகமான அதரராகமும்
கந்தர்ப்ப மத ஹரமான மந்த ஸ்மிதமும்
பாசா மநோ ஹரமான நாஸா வலியும்
கிருஷ்ண ராக சஹிதமாய் ஸ்ருத்ய வலம்பி களான திருக் கண்களும்
லோலாயதமான ப்ரூ லதா யுகமும்
அர்த்த சந்திர தளாயுதமான அளீகதேசமும்
அதில் அம்ருதச்யுதி என்னாலான திரு நாமமும்
திமிர கோசமான கேசபாசமும்
ஆக இப்படி பாதாதி கேசாந்தமான அவயவ சோபையாலும்
பரமார்த்த போதகையான ஜ்ஞான முத்ரையாலும்
ஸ்ரீ மான் என்றும் ஸ்ரீ சடகோபன் என்றும் சொல்லப் படுகிற தேவர்

இப்போது நம்பியினுடைய திருவாய் மொழியைப் பாடி அருளுவதாகக் கோலி
சக்ரமமாகத் திரு மஞ்சனம் செய்ய வேணும் என்று மஞ்சன வேதிகா மத்யத்திலே
ஜ்ஞான முத்ரா சஹிதராய் கொண்டு எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது – எங்கனே என்னில்

அல்லு நன்பகலும் இடைவீடு இன்றி நல்கி என்னை விடான் நம்பியே -என்று
குருங்க ஷேத்திர வாசியான பூர்ணாபி நாதன் என்னுடைய ஹிருதயத்திலே சச்நேஹமாக நித்ய வாஸம் பண்ணி
என்னை ஒருக்காலும் விட்டு அகலகில்லேன் என்று
தேவரீர் அருளிச் செய்து அருளின வசனத்திலே
அவிஸ்ரம்ப புத்திகளுக்கு
நிறைந்து என்னுள்ளே நின்று ஒழிந்தான் நீல மேனியும் நான்கு தோளும் என்நெஞ்சம் நிறைந்தனவே
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு என்நெஞ்சுள் எழும் -என்று
சொல்லி சபதம் பண்ணிக் கொடுக்க எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது-

————————————————–

திரு அத்யயன உத்சவம் -ஆறாம் திருநாள் திரு மஞ்சன கட்டியம் –

புரா லோகம் புக்த்வா புநரபி நிவிஷ்டம் பஹூ குணம்
பரா பாவ்யாப் தாங்கம் விபுல மகிலாத்மா நமமலம்
க்ருதாவாசம் தேவம் தரணி திலகே வேங்கட கிரௌ
சடரோத்ய ஸ்நாநம் சரண முபகந்தும் வித நுஷே –

நாயந்தே ! நாயந்தே !
அச்யேசானா ஜகதோ விஷ்ணு பத்னீ –
நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோஸ் ரீர நபாயி நீ-என்றும் சொல்லுகிறபடியே
சகல ஜகத் ஸ்வாமிநியாய -உனக்கு ஏற்கும் -யென்னும்படியாய் -தனக்கு ஹிருதய காமினியாய்
மலர்மகள் -என்றும் -மலர்ப்பாவை -என்றும் -தாமரை மங்கை என்றும்
பூவின் மிசை மங்கை -என்றும் சொல்லுகிறபடி -பங்கயத்தில் பரிமளத்தை பருக்கை யற வடித்து
பாவையாக வகுத்து மங்கைப் பருவத்தில் மங்கையாய் -வாஸம் செய் பூம் குழலாள்-என்கிறபடியே
சர்வகந்த -என்கிற வாசத் தடத்துக்கும் வாஸம் செய்யுமதான கேசத்தை உடையளாய்
விதி தஸ் ஸ ஹி தர்மஜ்ஞ் சரணாகத வத்சலா மித்ரமௌபிகம் கர்த்தும் ராமஸ் ஸ்தானம் பரீப்சதா-இத்யாதிப்படியே
அவிஹிதசாரி யாகையாலே அஹிதனானவன் விஷயத்திலும் அத்யந்த ஹித பாஷிணியாய்
ப்ரியம் ஜன மபச்யந்தீம் பச்யந்தீம் ராஷசீ கணம் ஸ்வ கணேன ம்ருகீம் ஹீ நாம் ஸ்வ கணை ராவ்ருதமிவ -என்கிறபடியே

ஏகாஷீ எககர்ணீ முதலான துர் ஜனங்கள் உடைய தர்ஜனங்களாலே
பத்துக்கோடி செந்நாய்களால் சுற்றப் பட்ட மான்பெடை போலே தான் பட்டது ஒன்றையும் பாராதே
பவேயம் சரணம் ஹிவ -என்றும்
தா ஸீ நாம் ராவணஸ் யாஹம் மர்ஷயாமீஹ துர்பலா -என்றும்
விதேயா நாஞ்ச தாசி நாம் க குப்யேத் வானரோத்தம -என்றும்
கார்யம் கருண மார்யேண் ந கச்சின் ந அபராத்யதி -என்றும் சொல்லுகிறபடியே
புருஷகாரிகள் ஆனவர்கள் விஷயத்திலும் புருஷகார பரையாய்

ஸ்ரீர்தேவி பயசஸ் தஸ்மாத் துத்திதா -என்றும்
செழும் கடல் அமுதினில் பிறந்தவள் என்றும்-சொல்லுகிறபடியே
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுதான பெரிய பிராட்டியார் அனபாயினியாய் இருக்கச் செய்தேயும்
அபாயாதி சங்கையாலே-இறையும் அகல கில்லேன் -என்று மார்பிலே இருந்து மடல் எடுக்கும்படியான வடிவை உடையவனாய்
உலகமுண்ட பெரு வாயா இத்யாதிப்படியே பிரளய அபி பூதையான பூமியை ரஷித்து இருக்கச் செய்தேயும்
ரஷணத்தில் அபிவ்ருத்தமான அபி நிவேசத்தையும் ரஷண அநு குணமான குண கணத்தையும்
ரஷகத்வ ப்ரகாசகமான விக்ரஹத்தையும் உடையனாய்
சௌகுமார்யாதி கல்யாண குண விசிஷ்டனாய் சம்ஸ்ரித சத்தா தாரகனாய்
உலகுக்குத் திலதமான திரு வேங்கட மா மலையிலே -வட மா மலை யுச்சி என்னும்படி
அதன் உச்சியிலே பச்சை மா மலை போல் நிற்கிற நச்சு மா மருந்தான அச்சுதனை அனுபவித்து
நிரபயமான உபாயத்தை பிரார்த்தித்து அருளின தேவரீர் இப்போது திரு அத்யயன உத்சவ அங்கமாக
திவ்ய ஸ்ரகம்பர பரிஷ்கரண அங்க ராகாதிகளால் அழகிய திரு மேனியை அலங்கரித்துக் கொண்டு

நல்லார் நவில் குருகூரிலே எல்லாருடைய பொல்லாங்குகளையும் போக்கி –
பயன் நன்றாகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வதாகப் புறப்பட்டு அருளி
அதி விலாசத்துடனே உலாவி யருளி -மீண்டு எழுந்து அருளி
சாம்சாரிக சகல தாபங்களையும் மாய்க்குமதான வாய்க்கும் தண் பொருநலிலே தெளிந்து எழுந்த நீரிலே
திரு மஞ்சனம் செய்து அருளுவதாக மஞ்சன வேதிகா மத்யத்திலே ஜ்ஞான முத்ரா சஹிதராய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது – எங்கனே என்னில் –

த்வயேன மந்த்ர ரத்நேன -என்கிறபடியே தந்திர சித்தமான மந்திர ரத்னத்திலே பூர்வ வாக்ய பிரக்ரியையாலே
அகலகில்லேன் -என்று தொடங்கி
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று சாபராத சேதனர் உடைய சர்வ அபராதங்களையும் சர்வேஸ்வரனை சஹிப்பித்து
சமாஸ்ரயிப்பிக்கும் புருஷகார நித்ய யோகத்தையும்
சமாஸ்ரயண சௌகர்ய ஆபாதங்களான சௌலப்யாதி சத்குண சாஹித்யத்தையும் அருளிச் செய்து
ஆஸ்ரயணத்துக்கு ஆகாங்ஷிதங்களான-ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களையும் ஆவிஷ்கரித்து
ஆஸ்ரயணத்துக்கு அடைந்த விஷயமான அவன் துயர் அறு சுடர் அடிக் கீழே அமர்ந்து புகுந்து
இப்படி பக்தி யுபாயத்திலே சக்தி ஹீனர்க்கும் முக்தி யுபாயமாய் விதிக்கப்பட்ட ஸ்வ சித்த உபாய நிஷ்டையை
உக்த்ய அனுஷ்டானங்களாலே வ்யக்தமாக்கி அருளிச் செய்தேயும்

அநாதி பாப வாசனா தூஷித அசேஷ சேமுஷீகர் ஆகையாலே
இவ்வர்த்தத்தில் மகா விஸ்வாச பஞ்சகமான சங்க அவகாச லேசங்களை யுடைய சமஸ்த சேதனர் யுடையவும்
சம்ரஷண விஷயமான
தேவருடைய சௌஹார்த்தாதிசயத்தாலே
சக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்த க்ருதோசயம் தார யேந்தரம் -என்கிறபடியே
சக்ருத் கரணீயமாய் இருக்கச் செய்தேயும் போக்யாதிசயத்தாலே அசக்ருதா வ்ருத்திக்கு யோக்யதை யுண்டாய் இருக்கையாலே
திரு வேங்கட மா மலையிலே சென்று சேர்ந்து திருக் குருகூர் அதனுள் பரன் அடிக் கீழ் மீளவும் அமர்ந்து
சரணம் புகுவதாக கோலி ததார்த்தமாக திரு மஞ்சனம் செய்ய எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது –

————————————————————

திரு அத்யயன உத்சவத்தில் ஏழாம் நாள் திரு மஞ்சன கட்டியம் –

ஷீராப்தே ரங்க நாம் நா சஹ விதி சதநம் ஸ்ரீ விமாநேன கத்வா
ரூபேண ஸ்வேன ஸார்தம் ஸூ சிரமத பு வீஷ்வாகு புர்யா முஷித்வா
மத்யே காவேரி ஸூ ப்தம் பணி நிதத இஹ த்வத்க்ருதே ரங்கராஜம்
மத்வா காதும் சடாரோ அபி ஷவ விதி முகைஸ் த்வாமி வா லங்கரோஷி –

நாயந்தே ! நாயந்தே !
பக்தி பிரபாவ பவதத்புத பாவ பந்த சந்து ஷித ப்ரணய சார ரசௌக பூர்ண – என்றும்
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன் -என்றும் சொல்லுகிறபடியே
கிருஷ்ண த்ருஷ்ணா தத்தவ கல்பராய் -த்ரைவித்ய வ்ருத்த ஜனத்துக்கும்
சாத்விக ஜனத்துக்கும் அசரண்ய ஜனத்துக்கும் சிரோ பூஷண சம்பத் சரண்யமாய்
மாதா பித்ரு பரப்ருதி சர்வவித பந்துவுமான சரண நளின யுகளத்தை யுடையரான தேவர் இப்போது
திரு நஷத்ர உத்சவ தீஷிதராய்
கரசரசி ஜத்ருத கௌதுகராய்
நிரவதிக சௌந்தர்யாதி கல்யாண குண கண நிதியான திவ்ய மங்கள விக்ரஹத்தை
சகல மநுஜ நயன விஷயமாக்கிக் கொண்டு புறப்பட்டு உலாவி யருளி மீண்டு எழுந்து அருளி திரு மஞ்சனம் செய்து அருளுவதாக
மஞ்சன வேதிகா மத்யத்திலே ஜ்ஞான முத்ரா சஹிதராய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது எங்கனே என்னில் –

வைகுண்டே து பரே லோகே -என்கிறபடியே பரமபதமான ஸ்ரீ வைகுண்டத்திலே
ஸூ த்த சத்வ மயமாய் ஸ்வயம் பிரகாசமாய் -நிரவதிக தேஜோ ரூபமான
திவ்ய மங்கள விக்ரஹத்தோடே நித்ய முக்தர்க்கு போக்யனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற இது
பக்த சேதன ஜாதத்துக்கு தேச விப்ரக்ருஷ்டம் ஆகையாலே புக்த போகத்தில் நெஞ்சு செல்லாமல் என் செய்வோம் என்று ஊகித்துக் கொண்டு வ்யூஹித்து

அடையும் வைகுந்தமும் பாற்கடலும் -என்கிறபடியே படுக்கைப் பற்றான திருப் பாற் கடலிலே எடுத்து விட்டு
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்று
நிதாநஞ்ஞர் யீடுபடும்படி பவாப்தி மக்நரான சம்சாரிகளை உத்தரிப்பிக்கைக்காக மகாபதி மத்யே பள்ளி கொண்டு அருளின இதுவும்
அதி சயித பாகதேயரான விதி சிவ சனகாதிகளுக்கு லபிக்குமதாய்-
மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடர்க்கு கண்ணுக்கு விஷயாகப் பெறாமையாலே அந்த ஜல சயனத்தை விட்டு
ஸ்தல சயனத்தை விரும்பி -பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும் -என்கிறபடி
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயிலுவதாக கோலி எழுந்து அருளி இருக்கிற அளவில்

சதுர்முக தப்பல நிர்வஹணார்த்தமாக ஸ்ரீ ரெங்க விமானத்தோடு ஸ்வ அசாதாராண திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனாய் கொண்டு
ப்ரஹ்ம லோகத்தில் எழுந்து அருளின பின்பு இஷ்வாகுவினுடைய தபோ வ்யாஜ்யத்தாலே
அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோதியை என்னும் அணி நகரத்திலே எழுந்து அருளி இருந்து
இஷ்வாகு பிரப்ருதி தசரத பர்யந்தமான ராஜாக்களாலும்
தயரதர்கு மகனான தம்மாலும் அர்ச்சிதராய்
ராமாவதார சரமத்தில் -ஸ்ரீ மத் ரங்கம் மஹத்தாம சத்த்வஜம் சபரிச்சதம் பிரதத்தம் ராஷசேந்தராய ப்ரியாய ப்ரிய காரிணே –
என்கிறபடியே செல்வ விபீடணற்கு வேறாக நல்லன் ஆகையாலே
மின்னிலங்கு பூண் விபீடன நம்பிக்கு கோயில் ஆழ்வாரோடு தம்மை உபகரித்து அருள
அவரும் தம்முடைய படைவீடான இலங்கையை நோக்கி எழுந்து அருளுவித்துக் கொண்டு போகா நிற்க-

கங்கையில் புனிதமாய காவேரி நடுவில்
ஸ்ரீ சந்திர புஷ்கரணி தீர பிரதேசமான புளினத்திலே எழுந்து அருளிவித்த அனந்தரம்
அவராலும் எழுந்து அருளுவிக்க ஒண்ணாதபடி அவ்விடத்திலே திரு உள்ளம் வேர் பற்றி
மன்னுடைய விபீடணனை அனுக்ரஹித்து -மதிள் இலங்கை ஏறப் போக விட்டு
அரவரசப் பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
பரத்வம் போலே ஆஸ்ரியிப்பார்க்கு அந்தரம் பட்டு இருத்தல்
வ்யூஹம் போலே கடல் கொண்டு கிடத்தல்
விபவம் போலே தாத்காலிகமாய் இருத்தல்
அந்தர்யாமி போல் அப்ரத்யஷம் ஆதல் செய்கை இன்றிக்கே
வடிவுடை வானவர் தலைவனே -என்றும்
கடலிடம் கொண்ட கடல் வண்ணா காகுத்தா கட்கிலீ -என்னும்படி பரத்வாதிகளில் உள்ள
பரதவ சௌலப்யாதிகளை பிரகாசிப்பித்துக் கொண்டு

அன்போடு தென் திசை நோக்கி பக்கம் நோக்கி அறியாதே தேவரை கடாஷித்துக் கொண்டு
பள்ளி கொண்டு அருளுகிற முகில் வண்ணரான பெரிய பெருமாளை
அடியை அடைந்து அருள் சூடி உய்ந்து சொல் மாலை ஆயிரமும் அருளிச் செய்து அருளின தேவரீர் இப்போது
கங்குலும் பகலும் பாடி அருளுவதாக திரு உள்ளம் பற்றி
பர்த்ரு போகார்த்தமாக குளித்து ஒப்பித்துச்செல்லும் பார்யை போலே
என் திருமகள் சேர் -என்கிறபடியே விஸ்வ பதியான அழகிய மணவாளர்க்குத் திரு என்னும்படி லஷ்மி சத்ருசர் ஆகையாலே
அலங்க்ருத சர்வ காத்ரராய்ச் செல்ல வேணும் என்று ததார்த்தமாக
திரு மஞ்சனம் செய்ய எழுந்து அருளி இருக்கும் இருப்பு என்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

——————————————————

திரு அத்யயன எட்டாம் நாள் உத்சவ திரு மஞ்சன கட்டியம் –

பராவரே சாங்க்ரி சரோஜசேவா பராதிராகாதி தரான் விஹாய
புரேப்சிதா மத்யே ததங்க்ரி வ்ருத்தம் சரன் சடாரே தநுஷே அபிஷேகம்

நாயந்தே ! நாயந்தே !
தேவிமார் ஆவார் திருமகள் பூமி -என்கிறபடியே
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மணமகள் ஆயர் மடமகள் -என்கிற தேவிமார் மூவரையும் உடையனாய் –
மற்று அமரர் ஆட்செய்வார் -என்கிறபடியே ஏழ் உலகும் தனிக் கோல்செல்ல வீற்று இருந்து அருளுகிற சேர்த்திக்கும்
போற்றி என்று ஆட்செய்கிற அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்
மேவிய உலகம் மூன்றவை யாட்சி என்கிறபடியே அந்த நித்ய சூரிகளோபாதி ப்ரகாரதயா சேவ்யமான ஆகாரத்தாலே
தனக்குத் தகுதியாய் இருக்கிற லோகத் த்ரயத்துக்கும் ஏக நாயகனாய்
வேண்டு வேண்டுருவம் நின்னுருவம் -என்கிறபடியே
ஆஸ்ரித அதீனமான ஸ்நான ஆசன சயநாதிகளை உடைய சர்வேஸ்வரனுடைய சௌஹார்த்த விசேஷத்தாலே
சஹஜ சார்வஜ்ஞ்யாதி சத் குண சமேதராய் –

என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசன் -என்கிறபடியே
திறத்துக்கே துப்புரவாம் திருமாலான அவன்
தேவரைக் கொண்டு திருவாய் மொழி பாடுவித்த சீரை
இறைப் பொழுதில் காலம் பருகி இருக்கச் செய்தேயும் அதில் ஆராமையாலே
இன் கவி பரம கவிகளால் தன் கவி தான்தன்னைப் பாடுவியாது -என்கிறபடியே
வியாச பராசர வால்மீகி ஸூ க சௌநகாதிகளும்
முதல் ஆழ்வார்களும் ஆகிற பாலேய் தமிழரும் பத்தருமான பரம கவிகளாலே பாடுவியாதே
தேவரை ஆம் முதல்வன் இவன் என்று நா முதல் வந்து புகுந்து தூ முதல் பத்தரான
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகளை வாய் முதல் அப்பனாய்தப்புதல் அறச் சொன்ன உதவிக் கைம்மாறு
என்னுயிர் என்ன உற்று எண்ணில்-

இயம் சீதா மம ஸூ தா சஹாதர்ம சாரீதவ
ப்ரதீச்ச சைநாம் பத்ரம் தே பாணிம் க்ருஹணீஷ்வ பாணிநா-என்கிறபடியே
வேந்தர் தலைவனான சனகராசன் எனது பெருமை இராமனுக்கு
காந்தள் முகிழ் விரல் சீதையை கடும் சிலை சென்று இறுக்க உதவிக் கைம்மாறாக கைப் பிடித்தாப் போலே
தாள்களை எனக்கே தலைத் தலை சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை ஆரத்தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் என்கிறபடியே
உபகார ஸ்ம்ருதி கொண்டும் மார்பும் தோளும் பணைக்கையாலே
ஆரத் தழுவி அறவிலை செய்த ஆத்மா ஸ்வரூபத்தின் உடைய அத்யந்த போக்யதையும்
அனன்யார்ஹ சேஷத்வத்தையும்
அதனுடைய பரா காஷ்டையான ததீய பாரதந்திர பரம புருஷார்த்தையும்
அவனே பிரகாசிக்கப் பெற்று உடையீர் ஆகையாலே
வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே யானாலும் சுழி பட்டோடும் சுடர் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
அவன் அடியாரான சிறு மா மனிசர் அடியே கூடும் இது வல்லால் பாவியேனுக்கு உறுமோ
என்று அதிகரித்ததான அந்த புருஷார்த்தத்தில் ஆதார அதிசயத்தையும்
வ்யதிரிக்தமான விஷயங்களில் வைத்ருஷ்ண்யத்தையும் விசதமாக்கி அருளின தேவர்
இப்போது-திரு அத்யயன வ்யாஜத்தாலே

வரையார் மாட மன்னு குருகூரில் திரு வீதிகள் தோறும் சிறப்புடனே புறப்பட்டு உலாவி அருளி
மீண்டு எழுந்து அருளி திரு மஞ்சனம் செய்து அருளுவதாக எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது
எங்கனே என்னில்

இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த செங்கோலத்த பவளச் செவ்வாய் செந்தாமரைக் கண் என்னம்மான்
பொங்கேழ் புகழ்கள் வாய் வாய்ப்புலன் கொள் வடிவு என்மனத்ததாய்
அங்கேய் மலர்கள் கையவாய் வழி பட்டோட அருளில் இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் -என்று
ஆபத்சகனானவன் திருவடிகளில் அகில கரணங்களாலும் உண்டான நிகில கைங்கர்யங்களுமே
அந்த பாகவதர்களுக்கு உகப்பு ஆகையால் பரந்த தெய்வமும் பல்லுலகும் அன்று உடனே விழுங்கி கரந்து உமிழ்ந்த
திருக் குருகூர் அதனுள் பரன் திறத்தில் அந்தக் கைங்கர்யத்தைச்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் செய்து அருளத் திரு உள்ளம் பற்றி
ததர்த்தமாக திரு மஞ்சனம் செய்ய எழுந்து அருள இருக்கிற இருப்பு என்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

————————————————-

திரு அத்யயன உத்சவத்தில் ஒன்பதாம் திருநாள் திருமஞ்சன கட்டியம் –

ந்யசன பஜன பாதாவாப்தி வாங் மாத்ர காந
பிராணி பத கராணாம் முக்தி ருக்தாசபி தஸ்யாம்
அபி ருசிர ஹிதா நாம் கிருஷ்ண வச்ச க்தி யோக்யம்
சட மதன ஜநா நாம் ஸ்நாசி சரவாக சாந்த்யை-

நாயந்தே ! நாயந்தே !
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதும் இல்லை -இத்யாதிகளாலே
நல்ல புதல்வர் ,மனையாள் ,நவையில் கிளை இல்லம் மாடு இவை யனைத்தும் அல்ல வென்று
ஔபாதிக பந்துக்கள் உடைய அபந்துத் வாதிகளையும்
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்டபிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் கண்டீர் துணை-இத்யாதிகளால்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் மேலாய்த் தாய் தந்தையரும் அவரே -என்று
சர்வேஸ்வரனுடைய நிருபாதிக பந்துத்வாதிகளையும் உபதேசித்து அருளி-

இப்படி அசேவ்ய சேவாதிகளான அப்ராப்த விஷய பிராவண்யம் கழிகையாலே
அநந்த சாகமாக நிரந்தர அபிவ்ருத்தமான அபி நிவேச அதிசயத்தை யுடையராய்
ஆகம் சேர் நரசிங்கமதாகி -என்கிறபடியே விருத்தமான நரத்வ ஹரித்வங்களை பொருந்தின திருத்தத்தாலே
அரி பொங்கிக் காட்டும் அழகு என்ற சீரிய சிங்கமதாகிய வடிவைக் கண்ட போதே
பயாக்னி கொழுந்திலே தும்பிப் பதம் செய்த வாள் அவுணன் உடைய உடலை வாடின கோரை கீறினால் போலே வளர்ந்த
வாள் உகிராலே அளைந்த கோளரியான அவுணன் உள்ளம் பொருந்தி உறைகிற விளங்கும் சுடர்ச் சோதி உயரத்தொருத்தா என்றே யதுவது என்று
ஒருபடிப் படத் திரு உள்ளம் பற்றி நாளேல் அறியேன் எனக்கு உள்ளன வென்று நித்ய கைங்கர்யத்தை கழித்து-

வைத்தநாள் வரை எத்தனை என்கிற பிரச்னத்துக்கு உத்தரம் தத்தமாவதற்கு முன்னே சைதில்யம் பிறந்து
மல்லிகை கமழ் தென்றலும் மாலைப் பூசலுமாய் மயங்குகையாலே
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்கிறபடியே
சரண -சரணவரண பலசித்தியை திருக் கண்ணபுரத்து தரணியாளன் கருணையாலே
மரணாவதியாக்கி தந்தருளப் பெற்றுடையீர் தேவர்
இப்போது திரு அத்யயன வ்யாஜத்தாலே புறப்பட்டு உலாவி அருளி மீண்டு எழுந்து அருளி
மஞ்சன வேதிகா மத்யத்திலே ஜ்ஞான முத்ரா சஹிதராய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது -எங்கனே என்னில் –

காலை மாலை கமல மலரிட்டு மாலை நண்ணித் தொழுது எழுமின் -என்று அர்ச்சநாதி அங்க யுக்தமான பக்தியையும்
அதில் அசக்தருக்கு -தனதாள் அடைந்தார்க்கு எல்லாம் சரணமாகும் -என்று -ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபையான பிரபத்தியையும் –
அதில் அசக்தருக்கு -திருக் கண்ணபுரம் செல்ல நாளும் துயர் பாடு சாராவே -என்று அர்ச்சா ஸ்தலத்தின் உடைய உச்சாரண மாத்ரத்தையும்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் பாடி யாடிப் பணிமின் -என்று
பூர்வ உகத சர்வ உபாயங்களிலும் அந்வய ஸூன்யர் ஆனவர்களுக்கு ந்ருத்த பிரமாண உக்தமான
இப்பத்துப் பாட்டின் உடைய கீரத்த நத்தையும்
துர்ஜன பீடிதரான அர்ஜுனாதிகளுக்கு தூதனாய் கீதாச்சார்யனைப் போலே
அதிகார அனுகுணமாக நெறி எல்லாம் எடுத்து உரைத்து இருக்கச் செய்தேயும்
அதில் ஆசை இன்றிக்கே ஈசி போமின் என்பர் அளவிலே நாசமான பாசத்தில் நலிவு படுகிற நீசரான
அடியோங்கள் உடைய பிரபல பாப நிபந்தனமான
சகல தாபங்களையும் போக்கி விமலர் ஆக்குகைக்காக எழுந்து அருளி இருக்கும் இருப்பு என்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

—————————————————————–

திரு அத்யயன உத்சவ பத்தாம் திரு நாள் திரு மஞ்சன கட்டியம் –

பர்யாயேண சமேதிதா பகவதா பக்தி பராயா பரம்
ஜ்ஞானம் தே பரமா ச பக்திரிதி யா தத் ப்ராப்திரூபா தசா
தச்சங்காம் சடகோப சம்சமயிதும் சப்ரத்யயம் பிராணி நாம்
சம்ஸ் நாத கரிய யாதசாம் விசத யந்தாம் தாமி வாபாசிபோ.

நாயந்தே
த்ரைவித்ய வருத்த ஜன சிரோ பூஷணமாய்
சாத்விக ஜன சனாதன சம்பத்தாய்
ஆஸ்ரித சர்வ வித பந்து ரூபபூதமுமாய்
அசரண்ய சரணமுமாய் இருக்கையால்

மன்னுயிர்கட்கு எல்லாம் அரனமான சரண பங்கஜங்களும்
நளின நாள லலிதங்கள் ஆகையாலே அவற்றைப் போலான இணைக் காலான கணைக் கால்களும்
யௌவன ப்ரகர்ஷ ப்ரருதோத்போதம் பொழு உத் பானுக்களான ஜானுக்கள்ளும்
கரிப்பிரவர கரங்கள் போலே உருக்களான ஊருக்களும்
கனகாசல தடி போலே இருக்கிற கடி காந்தி லோகாந்தையான படி காந்தையும்

வடபத்ர புடம் போலே ஸூ ந்தரமான துந்தி ஸ்தலமும்
சௌந்தர்ய சரிதாவர்த்த கர்தாபமாய் அதி கம்பீரமான நாபீ சரஸ் ஸூம்
நிரந்தர சஞ்சல புத்தி ஜனகமான மத்திய தேசமும்
அவிரளதரள விராஜிதமாய் அமுகுள வகுள அலங்க்ருதமாய் அதிதரா ஹார பூஷிதம் ஆகையாலே
அநவரத தாஹிச்தமான வஷஸ் ஸ்தலமும்

அவஞ்சகரான அகிஞ்சனருக்கு ஸ்வ ஸ்திதாயியான ஹஸ்த பத்மமும்
அரக்க சாமான தர்க்க ஜாலத்தின் உடைய மாநஹாரியான ஜ்ஞான முத்ரையும்
சம்சார போகி சந்தஷ்ட ஜீவா ஜீவாதுவான க்ரீவா பிரதேசமும்
அகவாயில் அனுராகத்துக்கு வாய்த்தலை போலேயாய்முகிழ் விரிகிற பங்கயமனைய செங்கனி வாயும் திரு முத்து நிரையும்
மகரம் தழைக்கும் தளிரோ என்கிற வர்ண நிர்ணாயகமான கர்ண பாசமும்

சித்தம் சிறை கொள்ளுமதான முத்தின் குழையும்
கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ என்கிற உபமானசம்சயத்துக்கு உதாசிகையான நாசிகையும்
கர்ணாந்தர பிரத்யபேஷையாலே சரவண குதூஹலங்களாய் பரவண ரஷண தீஷிதங்களான ஈஷணங்களும்
நயன பங்கஜங்களை வளைந்து படிகிற மதுகர நிகரங்கள் போலே கருத்தை வருத்துமதான திருப் புருவங்களும்
நாள் மன்னு வெண் திங்கள் போல் கோள் மன்னி ஆவி யடுகிற திரு நுகிலும்

ருக்ணே தோகே சர்வ ஜனனீ தத் கஷாயம் பிபந்தீ -என்கிறபடியே கருநாடு காடு எழச் சாத்தின திரு நாமமும்
சம்சார துக்கார்க்க தாப நாசகரமான வாசத் தடம் என்று பேசத் தகுதியான திரு முக மண்டலமும்
வக்தரமாகிற சித்ர பானுவுக்கு பரபாகமாய் அதி காளிகையான அளகாளிகையும்
சேஷித்வத்துக்கு தலையான தண் துழாய் பொன் முடி போலே சேஷத்வத்துக்கு அடியான மணி முடியும்

ஆக இப்படி ஆராகிலும் நீராய் அலைந்து கரையும்படி
ப்ராவண்ய ஜனகமான லாவண்ய ராசி ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற தேவரீர் இப்போது
திரு அத்யயன உத்சவ வ்யாஜத்தாலே

குன்றம் போலே மணி மாட நீடு திருக் குருகூர் அதனுள் நின்ற ஆதிப் பிரான் உலாவி அருளின நெடு வீதிகள் தோறும்
யேன யேன தாதா கச்சதி தேன தேன சஹ கச்சதி -என்கிறபடியே
உலாவி அருளி மீண்டு எழுந்து அருளி
பொருநல் சங்கணித் துறையில் துகில் வண்ணத் தூ நீராலே திரு மஞ்சனம் ஆடி அருளி ஸ்நானா சனத்திலே
நாநாவித கந்த புஷ்பாதிகளால் அலங்க்ருதராய் எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது
எங்கனே என்னில்

ஜ்ஞானாதி கல்யாண குண கண பூஷிதனான சர்வேஸ்வரன் நிதா நஜ்ஞர் ஈடுபடும்படி ஆமத்தை அறுத்து
பசியை மிகுத்து சோறிடுவாரைப் போலே
மயர்வற மதி நலம் அருளினான் -என்கிறபடியே-அஜ்ஞ்ஞானத்தை சவாசனமாகப் போக்கி அருளி
பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை தந்து அருளி
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்து -என்றும்
காதல் கடலில் மிகவும் பெரிதால் -என்றும்
காதல் உரைக்கில் தோழி மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
அதனில் பெரிய என் அவா -என்கிறபடியே
தத்வ த்ரயத்தையும் விளாக் குலை கொள்ளும்படி

பரபக்தி பரஞான பரம பக்தி ரூபேண அந்த பக்தியையும் அபி வருத்தை யாக்கி
என்னை அவா அறச் சூழ்ந்தாயே -என்னும்படி
கடல் போன்ற ஆதாரத்தோடு சோந்து தாபங்களை ஹரித்து
அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -என்னும்படி

ஸ்வ சரண கமல ப்ராப்தி பர்யந்தமான பர்வ க்ரமேண விளைத்த சர்வ அவஸ்தைகளையும்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பான் அவாவுவன் நான் –
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் -என்றும்
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்த அளவில் முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து என்று
தேவர் தெருள் கொள்ள அருளி இருக்கச் செய்தேயும்
அநாதி பாப வாசனா தூஷித அசேஷ சேமுஷீகர் ஆகையாலே இவ்வர்த்த விசேஷமாக சந்தேஹித்து இருக்கிற
மந்த மதிகளுடைய சங்கா வாகாச லேசங்களை சப்ரத்யயமாக
அவ்வோதசைகளிலே அனுஷ்டானத்தாலே விசதமாக்கா நின்று கொண்டு சமிப்பித்து அருளுவதாக திரு உள்ளம் பற்றி
ததார்த்தமாக திரு மஞ்சனம் செய்து எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது –

———————————————————-

வீடுவிடைத் திருமஞ்சனக் கவி

மேசம் கேசாதி தேவாவிதித நிஜபதம் வ்யூடம் ஆத்யாமரேந்தரம்
ச்வேசம் ஸ்வாசாதிரேக ப்ரவஹித வாசநா பிஷ்டுதம் த்வத்ய க்ருத்வா
கீதம் கீத்வாசத கோதா க்ருதமிஹா தமலம் தர்ப்பயித்வா ச லப்த்வா
கேஹம் தஸ்மாத் க்ருதார்த்த ஸ்தவமிஹ சடரிபோ ஸ்நாசி ந ஸ்ராந்தி சாந்த்யை

நாயந்தே நாயந்தே
ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் –
சமஸ்த கல்யாண குணாத் மகனாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேத்னாய்
நித்ய ஸூரி பரிஷம் நிரந்தர சேவ்யமான சரண நளிதனாய்க் கொண்டு
நித்ய ஆனந்த நிர்பரனாய் செல்லா நிற்கச் செய்தே

ச ஏகாகீ ந ரமேத -என்று உண்டது உருக்காட்டாதே அசித் விசிஷ்டமான சேதன சமஷ்டி பக்கல்
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து -என்கிற படியே பரம காருணிகனாய்
ஸ்வ சரண கமல சமாஸ்ரயண அனுகூலமான கரண களேபரங்களை கொடுக்கக் கோலி-

ப்ரஹ்மாதி ஷூ ப்ரவீ நேஷூ நஷ்டே லோகே சராசரே
ஏகஸ் திஷ்டதி விச்வாத்மா ச து நாராயண பர -என்றும்

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமிலா யன்று நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றபடி
சதுர்முக பிரமுக பஹூ முக சிருஷ்டியைப் பண்ணி
ஸ்ருஷ்டரான சேத்னர்களுக்கு நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு சாஸ்தரங்களான நேத்ரங்களை கொடுத்து இருக்கச் செய்தேயும்

அஜ்ஞ்ஞான ஆர்ணவ மகனாரான இவர்களை உத்தீர்ணா ஆக்குகைக்கு
மனிசரும் மற்றும் முற்றுமாய் மாயாப்பிறவி பிறந்து -என்கிறபடியே ராம கிருஷ்ணாதி ரூபேண அவதரித்து அருளியும்

இப்படி பண்ணின அவதாரங்கள் தானும் தத் காலி நர்களுக்கே உஜ்ஜீவன மாத்ர சேஷம் ஆகையாலே
தத் அனந்தரகாலீ நரரான அச்மதாதி சகல பாமர ஜன உஜ்ஜீவன அர்த்தமாக
மாட மாளிகை சூழ்ந்து அழகாய திருக் குருகூரிலே வீடில் சீர்ப் புகழ் ஆதிபிரானாய் மேவியும்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள் பொலிந்து நின்ற பிரானே நின்றும்

நிலை அழகிலே கண்ட வாற்றால் தனதே உலகென நின்றான் -என்றும்
நீயும் திரு மகளும் நின்றாயால் -என்றும்
நிலையார நின்றான் -என்றும் சொல்லுகிறபடியே
சர்வ ஸ்மாத் பரன் என்னும்படியை அறுதி இட்டு
ஈடுபட்டு அறிவுடையார் அடங்கலும் ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கும் படி

நல்லார் நவில் குருகூரிலே நித்ய சந்நிதி பண்ணி இருக்கிற குறிய மாண் உருவாகிய
நீள் குடக் கூத்தனை பாடி அருளுவதாக சங்கல்பித்து
ஸ்தோத்ரம் வேத மயம்கர்த்தும் தத்ர திராவிட பாஷயா தத்ர வேதாஸ் சமஸ்தாஸ் ச திராவிட த்வாம் உபாகத -என்கிறபடியே

ருக் யஜூஸ் சாம அதர்வணங்களை -திருவிருத்தம் முதலான திவ்ய பிரபந்த சதுஷ்ட்யமாக்கி
மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறையை அதிகரித்தார்க்கு
உடைந்து நோய்களை ஒடுவிக்குமே -என்றும்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே -என்றும்
மீட்சி இன்றி வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே -என்றும்
ஐஹிக ஆமுஷ்மிக பல பிரதான சஹிதமாக விண்ணோர் பெருமான் தன்னை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி அருளின தேவர்

இப்போது சாத்விக ஜன சார்த்தங்களை க்ருதார்த்தராம்படி திவ்ய உத்சவ வ்யாஜத்தாலே
கோயில் நின்றும் புறப்பட்டு அருளி விவித விதான புஜ்ஞ ரஞ்சிதமாய் செழு மா மணிகள் சேரும்
திரு மா மணி மண்டபமான இத் திரு ஓலக்கத்திலே ஒரு நாயக ரத்னம் அங்குரித்தால் போலே
மஜ்ஞன வேதிகா மத்யத்திலே ஜ்ஞான முத்ரா சஹிதராய் கொண்டு ஏறி அருளி
பொங்கிள யாடை அரையில் சாத்தி – திருச் செய்ய முடியும் ஆரமும் படையுமான திவ்ய அலங்காரத்துடனே
அபிஷேக ஜலார்த்த காத்ரராய்
சாத்விக ஜன நேத்ரோத்வச காரராய் -ஆர்த்த வசன பூஷண பூஷிதராய் எழுந்து அருளி இருக்கும் இருப்பு இங்கனே இரா நின்றது
எங்கனே என்னில்

மேசம் மா -என்ற திரு நாமம் உடைய பெரிய பிராட்டியாருக்கு நாயகனாய்
கேசாதி தேவாவிதித நிஜபதம் –
க என்றும் ஈசன் என்றும் சொல்லப் படுகிற ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சர்வ தேவதைகளாலும்
அறிய அரியதான ஸ்ரீ வைகுண்டத்தை இருப்பிடமாக உடையவனாய் –
வ்யூடம்
வி -பஷி வாசகம் -த்ரயீமயனான திருவடியை வாஹனமாகக் கொண்டு
ஆத்யாமரேந்தரம் –
முன்னை அமரர் -என்கிறபடியே ஆத்யரான அமரர்கள் அதிபதி யாய்
ச்வேசம் –
ஆத்மேச்வரம் -என்கிறபடி தனக்குத் தானே நியாமகனாய்

ஆக இப்படி
ஸ்ரீ யபதித்வ -பரமபத நிலயத்வ -கருட வாகனத்வ -ஸூரி போக்யத்வ –
நிரந்குச ஸ்வா தந்த்ரங்கள் உடன் கூடிய சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரனை
ஸ்வாசாதிரேக ப்ரவஹித வாசநா பிஷ்டுதம் த்வத்ய
க்ருத்வா –
அவாவில் அந்தாதி -என்கிறபடியே
தேவரீர் உடைய பக்தி பிரகர்ஷத்தாலே வழிந்து புறப்பட்ட சொற்களாலே வாயாரப் புகழ்ந்து
கீதம் கீத்வாசத கோதா க்ருதமிஹா தமலம் தர்ப்பயித்வா ச –

அவ்வளவும் அன்றிக்கே
பெரியாழ்வார் உடைய குடல் துவக்காலே தேவரீருக்கு திரு மகளாரான ஆண்டாள் உடைய சங்கத் தமிழ் மாலையான
திருப் பாவையை பாடி அருளி
தேவரீர் உடைய திவ்ய பிரபந்த ஸ்ரவணத்தாலே ப்ரீதனான அவனை மிகவும் பிரியப் படுத்தி
லப்த்வா கேஹம் தஸ்மாத் –

திரு அத்யயன உத்சவ அர்த்தமாக
பத்னீ பரிஜனாதிகள் உடன் தேவரீர் உடைய திருப் புளிக் கீழ் வீட்டிலே
பத்து நாளும் எழுந்து அருளி இருந்து
மேவி உறை கோயிலிலே ஏறி அருளுவதாக உத்யோகித்து அருளிய பொலிந்து நின்ற பிரானை
ராஜ நீதியை அனுசரித்து நின்று
ஒரு ரசத்தை விளைப்போம் என்று பார்த்து
வீடு தர வேண்டும் என்று அபேஷித்து
சசானமாகப் பெற்று
க்ருதார்த்த ஸ்தவமிஹ சடரிபோ –

ஆக இப்படி அத்தலைக்கும் சர்வ பிரகார சாவஹர் ஆகையாலே க்ருதார்த்தரான தேவரீர் இப்போது
ஸ்நாசி ந ஸ்ராந்தி சாந்த்யை –
ஸ்நான வ்யாஜத்தாலே படி களைந்து மதகு திறந்தால் போலே ஒரு மடை கொள்ள ப்ரவஹிக்கிற தேவரீருடைய
திருமேனி அழகு வெள்ளத்திலே
முழுக்காட்டி அடியோங்கள் உடைய சாம்சாரிக சகல தாபங்களும் ஆறுவதாக
எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது –

————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மதுரகவி பிரப்ருதிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –457-463- சரம பர்வ நிஷ்டா-குரோர் உபாயதாஞ்ச பிரகரணம் –ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் / ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்-

May 26, 2018

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -8o–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது ஆறாவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் /
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் /

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகாரஞ்ச ச வைபவம் (ச -உபாய வைபவமும் இதில் உண்டே )-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது ஒன்பதாவது பிரகரணம்

த்வய அபிபிரேரிதமான – த்வய யுக்த அர்த்த ஞானமும் -தத் உபதேச ஆச்சார்யர் அனுவர்த்தனைத்தையும் அருளிச் செய்து –
அதுக்கு மூல பூதமான பகவத் கிருபை -ஹேதுதா சங்கதி –
நிவர்த்ய ஞானம்–கர்மா அவித்யாதி தோஷங்கள் நினைத்தால் – பய ஹேது /-நிவர்த்தக பகவத் குண அனுசந்தானம் ஞானம்–பயம் கெடுக்கும் ஹேது
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -/ படிக்கட்டுக்கள் அத்வேஷம் தொடங்கி பிராப்தி வரை -நிர்ஹேதுக கிருபையே காரணம் –

ஆறு பிரகரணங்களில் இறுதியான
சரம பர்வ நிஷ்டா பிரகரணம் –

———————————————————

சூரணை -457-

ஷேத்ராணி மித்ராணி – என்கிற ஸ்லோகத்தில் –
அவஸ்த்தை பிறக்க வேணும் – ஸ்வரூபம் குலையாமைக்கு –

இப்படி ஸ்வரூப ஹானி வரும் என்னும் பயத்தாலே -விடுகிற அளவு -போராது
ப்ராப்த விஷய ப்ரவண சித்ததையாலே -ப்ராக்ருத சகல போக்ய வஸ்துக்களும்
பிரதிகூலமாகத் தோற்றும் அவஸ்த்தை பிறக்கவும் வேணும் –
ஸ்வரூபம் குலையாமைக்கு – என்கிறார் மேல் –

அதாவது –
ஷேத்ராணி மித்ராணி தநாநி நாத புத்த்ராச்ச தாராபசவோ க்ருஹாணி த்வத் பாத பத்ம ப்ரவணா
ஆத்மவ்ருத்தே பவந்தி சர்வே பிரதிகூல ரூப -என்று
பேரருளான பெருமாளைக் குறித்து -பிரம்மா விக்ஜ்ஜாபித்த ஸ்லோகத்தில் சொல்லுகிற –
ஷேத்ரம் மித்ரா தந -ஆதிகளான-சமஸ்த வஸ்த்துக்களும்-
அக்நி கல்பமாய் தோற்றும்படியான  அவஸ்த்தை  பிறக்க வேணும் -ஸ்வரூப பிரச்யுதி பிறவாமைக்கு -என்கை –
இந்த ஸ்லோக அர்த்தத்தை –
நல்ல புதல்வர் ஞானசாரம் -19–இத்யாதியாலே -அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும் அருளி செய்தார் இறே –

தத் வ்யதிரிக்த ஷேத்ராதி சூத்ர விஷயங்கள் அடங்க த்ருஷ்ட்டி விஷயமாகவே தோன்ற வேண்டுமே
நல்ல மனையாள் இத்யாதி இருந்தாலும் நெருப்பில் இட்ட விறகு போலே பரிபக்குவ நிஷ்டை வேண்டுமே
ஸ்வரூபம் நழுவாமல் இருக்க வேண்டும்

———————————————–

சூரணை-458-

ப்ராப்ய பூமியில் பராவண்யமும் –
த்யாஜ்ய பூமியில் – ஜிஹிசையும் –
அனுபவ அலாபத்தில் – ஆத்ம தாரண யோக்யதையும் –
உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும் –

இனிமேல் பிராப்ய பூமியில் ப்ராவண்யாதி த்ரயமும் இவனுக்கு
அவஸ்ய அபேஷிதம் என்னுமத்தை அறிவிக்கைக்காக -அவற்றினுடைய
உபாய  சதுஷ்டய சாதாரண்யத்தை அருளிச் செய்கிறார் –

ப்ராப்ய பூமி -ஆவது -தனக்கு வகுத்த சேஷியான விஷயம் எழுந்து அருளி இருக்கிற தேசம் –
தத் ப்ராவண்யம் ஆவது -அத் தேசத்தை கிட்டி அல்லது தரியாத அதி மாத்ரமான ஆசை –
த்யாஜ்ய பூமி ஆவது -அவ் விஷயத்தை அகன்று இருக்கைக்கு உடலான தேசம் –
தஜ் ஜிஹிசை ஆவது -இத்தை விட்டே நிற்க வேணும் என்னும் இச்சை –
அனுபவ அலாபத்தில் ஆத்ம தாரண யோக்யதை -யாவது -வகுத்த சேஷியான விஷயத்தினுடைய விக்ரஹாத் அனுபவம் பெறாத போது-
தேக தாரணமான போஜனம் இல்லாவிடில் தேகம் தரியாதாப் போலே -தான் தரித்து இருக்கைக்கு யோக்யன் அன்றிக்கே இருக்கை-
உபாய சதுஷ்டயத்துக்கும் வேணும் -என்றது -இவை இத்தனையும் -உபாய சதுஷ்டய அதிகாரிகளுக்கும் –
அதிகார அநு குணமாக வேண்டும் -என்றபடி –
உபாய சதுஷ்டயம்-ஆவது -ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தாலே -என்று துடங்கி -கீழ் அருளிச் செய்த
பக்தி பிரபத்திகளும் -ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத பரகத ஸ்வீகாரங்களும் —
பகவத் விஷயத்தில் ஸ்வகத பரகத ஸ்வீகாரங்களும் – ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத பரகத ஸ்வீகாரங்களும் –ஆகவுமாம்–
இதில் முற்பட்ட யோசனைக்கு ஓவ்சித்தியம் உண்டு –
கீழே நான்கு உபாயத்தையும் சேர இவர் தாமே அருளிச் செய்ததுக்கு சேருகையாலே-
இதில்
பக்தி பிரபத்தி நிஷ்டர் இருவருக்கும் –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்-என்கிற ப்ராப்ய பூமியான பரம பதத்தில் பிராவண்யமும் –
வரம் ஹூத வஹ ஜ்வாலா பஞ்சராந்தர்வ்ய வஸ்த்திதி ந ஸௌரி சிந்தா விமுக ஜந சம்வாச வைசசம்-
கொடு வுலகம் காட்டேல் -என்னும்படி
ப்ராப்ய வஸ்துவை இழந்து -ப்ராக்ருத மத்யே இருக்கைக்கு உடலான சம்சாரம் ஆகிற த்யாஜ்ய பூமியில் ஜிஹிசையும்
உன்னை விட்டு ஓன்றும் ஆற்ற கிற்கின்று இலேன் -என்கிறபடியே –
பகவத் அனுபவ அலாபத்தில் ஆத்ம தாரண  அயோக்யதையும் -அவசியம் உண்டாக வேணும் –
ஆசார்ய விஷயத்தில் -ஸ்வகத பரகத ஸ்வீகார நிஷ்டரான இருவருக்கும் –
எல்லாம் வகுத்த இடம் என்று இருக்கையாலே –
ஆசார்யன் எழுந்து அருளி இருக்கிற தேசம் ப்ராப்ய பூமியாய்-
(பரகால நாயகி- விமல சரம திருமேனி- திருவடி தொட்டு இது அன்றோ எழில் வாலி என்றார் தாமே-
ஆளவந்தார் –திரு முதுகே பிரமேயம்–பின்பழகாம் பெருமாள் ஜீயர் -வைத்தியர் இடம் -ஐதீகம் – )
அவனைப் பிரிந்து இருக்கிற  இடம் த்யாஜ்ய பூமியாய் –
அவனுடைய விக்ரஹாதிகளே அனுபவ விஷயமும் ஆகையாலே –
பிராப்ய பூமியில் ப்ராவண்யாதிகள் மூன்றும் -இவனுக்கு அநு குணமாக
அவசியம் உண்டாக வேணும் என்று -அதிகார அநு குணம் விபஜித்து சொல்லக் கடவது –
அன்றிகே –
மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் -என்று தாம் அருளி செய்த பிரபந்தத்தை அப்யசித்தவர்களுக்கு வாசஸ்த்தானம்-
ததீய வைபவமே நடக்கும் ஸ்ரீ வைகுண்டம் என்று ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் அருளிச் செய்கையாலும் –
சரம பர்வ நிஷ்டரானவர்களுக்கும் –
ஸ்வ ஆசார்யன் உகந்த பகவத் விஷயத்தில் பரி பூர்ண அனுபவாதிகள் சித்திப்பது அவ்  விபூதியிலே ஆகையாலும்
பிராப்ய பூமி பரம பதம் – (ஈரரசு பட்டு இருக்காதே )
இருள் தருமமா ஞாலம் ஆகையாலே -அதுக்கு விரோதியான சம்சாரம் -த்யாஜ்ய பூமி –
அனுபவ அலாபத்தில் ஆத்ம தாரண அயோக்யதை -ஆவது -ஸ்வ ஆசார்ய விஷயத்திலும் அவன் உகந்த பகவத் விஷயத்திலும் உண்டான
அனுபவம் பெறாத அளவில் -தான் தரித்து இருக்க மாட்டாமை என்று –
இங்கனே யோஜிக்கவுமாம் –

பக்தி -பிரபத்தி -ஆச்சார்ய ஸூவ கத அபிமானம் -ஆச்சார்யர் நம்மை அபிமானிப்பது -இந்த நான்கும்
சர்வ உபாய அதிகார சாதாரணங்கள் -அவசியம் அபேக்ஷிதம் -ஸ்ரீ வைகுண்டம் -ப்ராப்ய பூமி -ஆசை பிராவண்யம்
சம்சாரத்தில் வெறுப்பு இல்லாமல் தரியாமை-என்று நேராக சொல்லாமல் -ஆச்சார்யர் திருவடிகளே ப்ராப்ய பூமி -சரம பர்வ நிஷ்டருக்கு
ஒளிக் கொண்ட சோதி -மாக வைகுந்தம் -உடன் கூடுவது என்று கொலோ -முக்த ப்ராப்ய பூமி –
பெற்று அல்லது தரியாத நிரதிசய பிராவண்யம்
கொடு உலகம் காட்டேல்-முமுஷுக்களுக்கு இதுவே த்யாஜ்யம் -சம்சார தர்சனத்தில் வெருவி-
உன்னை விட்டு ஒன்றும் ஆற்ற கில்லேன் -ஆத்ம தாரணம் முடியாமல் ஸூ பாஸ்ரய விக்ரஹம் -தேவரீர் திருமேனி அனுபவம் இல்லையாகில்
காணுமாறு அருளாய் –ப்ருஹத்-ப்ரஹ்மம் அனுபவம் இல்லாவிடில் –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை -எல்லாம் கண்ணன் என்று இருப்பவர்கள் –
மத் விஸ்லேஷம் அஸஹம்–தேஷாம் ஞானி நித்ய யுக்த –எப்போதும் சேர்ந்து இருக்க ஆசை கொண்டவர்கள் –
உள்ளம் துடிப்பு இருக்க வேண்டும் -மலைச்சுமையான ஆத்ம தாரணம்-
பகவத் -ஆச்சார்ய -ஸூ கத -பரகத –இப்படி நான்கும் என்றும் ஒரு நிர்வாஹம்
பக்தி பிரபத்தி ததீய அபிமானம் ஆச்சார்ய அபிமானம் என்றுமாம்
சரம கடாக்ஷம் -ஸூபாஸ்ரய-தத் பிரதான –தத் சம்பந்தி -இப்படி நான்கும் பிரதம மத்யம சரம நிஷ்டருக்கும் -இப்படி -12-விதங்கள் –
தேசிகர் உள்ள தேசம் -தேசிக தர்சனீய விக்ரஹம் -ஏதத் அனுகுண பிராவண்யம் கைங்கர்யம் வேண்டுமே

——————————————————————

சூரணை -459-

பழுதாகாது ஓன்று அறியேன் – என்கிற பாட்டை -பூர்வோபாயத்துக்கு பிரமாணமாக அநு சந்திப்பது —

பூர்வ உக்த உபாய சதுஷ்டயத்திலும் -பகவத் விஷயத்தை அவலம்பித்து இருக்கிற – பக்தி பிரபத்திகள்  ஆகிற உபாய த்வ்யமும் –
இவ் அதிகாரிக்கு நழுவி நின்ற பிரகாரத்தை கீழ்
அருளிச் செய்த அநந்தரம்-
ஆசார்யனை தான் பற்றும் பற்று -என்றும் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம்- என்றும் அருளிச் செய்த ஆசார்ய விஷயத்தில் –
ஸ்வகத பரகத ஸ்வீகார ரூப உபாய த்வத்துக்கும்-
பிரமாண தர்சனம் பண்ணுவிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி –
ப்ரதமம் -ஸ்வகத ஸ்வீகார உபாயத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –

பழுது ஆகாது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல்-தொழுவாரைக் கண்டு
இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து விண் திறத்து
வீற்று இருப்பார் மிக்கு –
அதாவது –
அமோகமாய் இருப்பதோர் உபாயம் அறிந்தேன்-
ஆஸ்ரயிப்பார்க்கு சமாஸ்ரணீயனாய் கொண்டு-திரு பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற அவனுடைய திருவடிகளை
தப்பாத பிரகாரத்தை நினைத்து -நாள் தோறும் அநு கூல விருத்தியை பண்ணிக் கொண்டு போரும் ஞானாதிகரைக் கண்டு
தங்களுக்கு தாரகமாக ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கும் அவர்கள் –
ஆத்மாவோடே அவிநா பூதமான பாபத்தைப் போக்கி -ஸ்ரீ வைகுண்டத்தில் திரு வாசல் திறந்து -அங்கே
சம்ருத்தமான ஞானாதிகளை உடையராய் -ததீய கைங்கர்ய நிரதராய் கொண்டு – வ்யாவிருத்தராய் இருப்பர் என்று –
பரம ஆப்தரான – திருமழிசைப் பிரான் அருளிச் செய்த -பழுது ஆகாது ஓன்று அறிந்தேன் -என்கிற
பாட்டை ஆசார்ய விஷயத்தில் முற்பட சொன்ன
ஸ்வகத ஸ்வீகார மாகிற உபாயத்துக்கு பிரமாணமாக அநு சந்திப்பது -என்கை-
இத்தால் –
ஸ்வகத ஸ்வீகாரம் அஹங்கார கர்ப்பதயா அவத்யகரமாய் இருந்ததே ஆகிலும் –
பல சித்தியில் வந்தால் -பழுது போகாது என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –
குருணா யோபி மன்யேத குரும் வா யோ அபிமந்யதே தாவு பௌ பரமாம் சித்திம் நியமா துபக கச்சத -என்று
பர கத ஸ்வீகாரோத்தோபாதி-ஸ்வகத ஸ்வீகாரத்துக்கும் பலம் தப்பாது என்னும் இடம் –
பாரத்வாஜ சம்ஹிதையிலும் -சொல்லப் பட்டது -இறே-
(தாவு பௌ–இருவருக்கும் நியாமேந-பல சித்தி –
பிரபத்திக்கு சரண்யா ஹ்ருதய அனுசாரி யாக இருக்க வேண்டும் –
பரம தயாளு -என்பதால் அது இங்கு இல்லை -அஹங்கார கர்ப்பம் –பழுது என்று ஒத்துக் கொண்டு –
பழுது ஆகாது -பல சித்தியில் -என்று இரண்டுக்கும் இதுவே பிரமாணம் –
அபலை சிறு பெண் -பிஞ்சாய் பழுத்து அவள் ஸ்ரீ ஸூக்தி அடுத்ததுக்கு -)

பூர்வ உபாயம் என்பது ஆச்சார்யரை நாம் பற்றும் பற்று -ஸூ கத ஸ்வீ காரம்
அடுத்த சூரணை-ஆச்சார்யர் நம்மைப் பற்ற-பரகத ஸ்வீ காரம் -அதுக்கு பிரமாணங்கள் காட்டி அருளுகிறார்
அடியார் அடியார் -வேறு பாடு தோன்ற வீறுடன் மிக்கு வீற்று இருப்பர் – -இவர்கள் –
உபாயத்வ பிரகாசத்வம் காட்டும் பிரமாணங்கள் –
அமோகமாய் -அத்விதீயமாய் -பழுது ஆகாமல் ஒன்றாய் –
அறிவிக்க அறிந்தேன் –
ஆஸ்ரித ரக்ஷணம் -பாற் கடலான் -அதுவே ஸ்வரூப நிரூபனம் -ப்ராப்தமான திருவடிகள் -இறங்கினதே அருள தானே
வழுவாத -பிரயோஜனாந்தர சம்பந்தம் இல்லாமல் -வகை உபாயம்
நிரந்தரம் அனுகூல வ்ருத்தி பண்ணும் -வைகல் தொழுவாரை -கைங்கர்யம்
உத்தாராகராக -கொண்டு சரணம் புகுந்து -உஜ்ஜீவிக்கும் அவர்கள் வாழ்வார்
கலந்த வினை -ஸ்வரூபத்தில் பிரிக்க முடியாமல் கலந்த அவித்யாதி -கர்மா வாசனா ருசி -போக்கி கொண்டு
விண் திறந்து -வாசலை திறந்து -வீற்று -விகசித ஞானம் -கைங்கர்ய சாம்ராஜ்யம் பெற்று வ்யாவருத்தராய் இருக்கார் -மிக்கு –
பூர்வ உபாயத்துக்கு முக்கிய பிரமாணம் –
அமோகமாய் –ஸ்வ கத ஸ்வீ காரமும் வீணாகாதே -இங்கே ஆச்சார்ய அனுசார ஹ்ருதயம் சங்கை இல்லையே -பரதந்த்ரன் என்பதால் –
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு -அங்கும் ததீயருக்கே –

———————————————–

சூரணை -460-

1-நல்ல வென் தோழி –
2-மாறாய தானவனை – என்கிற பாட்டுக்களையும் –
3-ஸ்தோத்ர ரத்னத்தில்-முடிந்த ஸ்லோகத்தையும் –
4-பசுர் மனுஷ்ய -என்கிற ஸ்லோகத்தையும் –
இதுக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –

இனிமேல் பரகத ஸ்வீ காரம் ஆகிற பரம உபாயத்துக்கு பிரமாணங்கள் பலவற்றையும் –
தர்சிப்பித்து அருளுகிறார் –

அதாவது –
1-தோழி யானவள் -தனக்கு பேற்றுக்கு உடலாக நினைத்து இருப்பது -அவன் –
நத்யஜேயம் -என்ன வார்த்தையும் -பெரிய ஆழ்வார் வயிற்றில் பிறப்பையும் -ஆயிற்று –
இப்போது அவன் வார்த்தை தனக்கு பலியாத மாத்ரத்தை கொண்டு -இது தன்னிலும் அதி சங்கை பண்ணா நின்றாள் –
இனி இவள் எங்கனே  ஜீவித்து தலை கட்டப் போகிறாள் என்னும் இழவு தோற்ற இருக்க –
அவளைப் பார்த்து என்னிலும் என் இழவுக்கு நோவு படும் படி ஸ்நிக்தையான என்னுடைய தோழி –
அநந்த சாயியாய்-அத ஏவ- சர்வ ஸ்மாத் பரராய் இருக்கிறவர் -அதுக்கு மேலே –
ஸ்ரீ யபதியாய் -ஒருவருக்கும் எட்ட ஒண்ணாத பெருமையை உடையராய் –
இருப்பார் ஒருவர் -தேவ யோநியில் பிறந்து-சிறிது அணைய நிற்கையும் அன்றிகே –
அவருக்கும் நமக்கும் பர்வத பரம அணுக்கள் ஓட்டை வாசி போரும்படி ஷூத்ரரான மனுஷ்யர் நாமான பின்பு நம்மால் செய்யலாவது உண்டோ –
அவர் ஒரு வார்த்தை முன்பே சொல்லி வைத்தார் என்றதைக் கொண்டு -நம்மால் அவரை வளைக்கப் போகுமோ -அது கிடக்கட்டும் –
நமக்கு பேற்றுக்கு வழி உண்டு காண்-
ஸ்ரீ வில்லி புத்தூரில் அவதரித்த ஏற்றத்தை உடையராய் -சர்வ வ்யாபக வஸ்துவை தன் திரு உள்ளத்தில் அடக்கி கொண்டு இருக்கிற
பெரிய ஆழ்வாரை -ஆசார்ய தேவோ பவ -என்கிறபடியே -நமக்கு தேவரான -தமக்கு தேவராய் இருக்கிற அவரை –
ஓர் இசையை சொல்லி இசைக்கவுமாம் –
கிழியை அறுத்து வரப் பண்ணவுமாம்-
திருமஞ்சனத்தை சேர்த்து வைத்து அழைக்கவுமாம்-
திருக்குழல் பணியை சமைத்து வைத்து அழைக்கவுமாம்-
திருவந்திக் காப்பிட அழைக்கவுமாம் –
அன்றிக்கே
நாம் தம்மை முன்னிட்டாப் போலே -தனக்கு புருஷ்காரமாவரை (நாகணை மிசை நம் பரர் )முன்னிட்டு வரப் பண்ணவுமாம் –
நல்லதொரு பிரகாரம் வருவித்தார் ஆகில் -அத்தைக் கண்டு இருக்கக் கடவோம் –
நாம் மேல் விழக் கடவோம் அல்லோம் -என்று
ஆண்டாள் அருளிச் செய்த -நல்ல என் தோழி -பாட்டையும் –

2-ஈஸ்வரன் என்று பாராதே -தனக்கு எதிரியான ஹிரண்யாசுரனைக் -கூறிய திரு வுகிராலே-வர பலங்களால் பூண் கட்டி இருக்கிற மார்பை –
பொன் மலை பிளந்தால் போல் இரண்டு கூராம்படி அநாயாசேன -கிழித்துப் பொகட்ட மிடுக்கை உடைய நரசிம்ஹத்தை –
அந்தி அம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனை–பல்லாண்டு பாடுதும் -என்று
அநந்ய ப்ரயோஜனராய்  கொண்டு மங்களா சாசனம் பண்ணி இருப்பாரை ஜயிக்குமே-
வ்யாவிருத்தராய் இருக்கிற அவர்கள் பக்கலிலே ந்யஸ்த பரராய் -அவர்கள் அபிமானத்திலே ஒதுங்கி இருப்பாருடைய ஸூக்ருதம் -என்று –
திரு மழிசை பிரான் -அருளிச் செய்த – மாறாய தானவனை -என்கிற பாட்டையும் –

3-அக்ருத்ரிம-என்று துடங்கி -ஸ்வாபாவிகமாய்-தேவருடைய ப்ராப்தமுமாய் -போக்யமுமான –
திருவடிகளில் உண்டான பிரேமத்தினுடைய அதிசயத்துக்கு எல்லை நிலமாய் இருப்பாராய்-
அந்த பிரேம பிரகர்ஷத்துக்கு அடியான -ஆத்ம யாதாத்ம்ய ஞானத்தை உடையராய் –
வித்தையாலும் -ஜன்மத்தாலும் -அடியேனுக்கு பிதா மகராய் இருக்கிற -நாத முனிகளைப் பார்த்து –
அடியேனுடைய விருத்தத்தைப் பாராதே -பிரசன்னராய் அருள வேணும் -என்று பரம ஆசார்யான ஆளவந்தார் அருளிச் செய்த –
வேதாந்த தாத்பர்யமான -ஸ்தோத்ர ரத்னத்தில் -சரமமான ஸ்லோகத்தையும் –

4-ஞானம் பிறக்கைக்கு யோக்யதை இல்லாத பசு பஷிகள் ஆகவுமாம்- ஞான யோக்யதை உள்ள மனுஷ்யர் ஆகவுமாம் –
யாவர் சிலர் பகவத் சம்பந்தமே நிரூபகமாம் படி ( க்ராம குல இத்யாதிகள் வேண்டாம் ) இருப்பானொரு
ததீயனோடே சம்பந்த்தித்து  இருக்கிறார்கள் –
அவர்கள் அந்த வைஷ்ணவனாலே – ப்ராப்ய பூமியான பரம பதத்தை ப்ராபிப்பர்கள் என்கையாலே –
ஞானம் உண்டாகவுமாம் -இல்லையாகவுமாம் – ததீய அபிமானமே உத்தாரகம் –
என்னும் இடத்தை ஸூஸ்பஷ்டமாக சொல்லுகிற -பசுர் மனுஷ்ய பஷீ வா ஏச வைஷ்ணவ  சம்ஸ்ரயா
தேனை வதே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்கிற பௌராணிக ஸ்லோகத்தையும் –

ஆசார்ய அபிமானம் ஆகிற இந்த பரகத ஸ்வீகார உபாயத்துக்கு பிரமாணமாக அநு சந்திப்பது -என்றபடி –

தங்கள் தேவர் -நமக்கு அல்ல என்று விலக்குகிறாள்-பிராட்டி -உற்றது சொல்லும் நல்ல துணை –உயிரான தோழி
அனந்தஸாயி -நாகணை -நம்மை -எட்டாது இருக்கும் -நம்மை மறப்பிக்கும் உபய விபூதி ஐஸ்வர்ய செருக்கு
எல்லாரையும் கும்பீடு கொள்ளும் முதலியார் -அதி ஷூத்ரராய் சிறு மானிடர் -என்னவும் பற்றாமல் முடியும் தண்ணியம் நாம்
அவரை சிறுக்கப் பண்ணவோ -ஸ்வ தந்த்ரர் செய்வதை பார்த்து இருக்கலாம் –
ஸ்ரீ வில்லிபுத்தூர் அவதார வாசியால் சர்வ வியாபக வஸ்துவை தன சித்தத்தில் அடக்கி ஆளும் பெரியாழ்வார்
ஆச்சார்ய தேவோ பவ -அவர் நாங்கள் தேவர்
பேசிற்றே பேசும் ஏக கண்டர் -ஆழ்வார்கள் அனைவரையும் சேர்த்து தங்கள் தேவர் –
சாண் கரு முக மாலை இடுதல் -வாராய் –வருவிப்பார் -வல்ல பரிசு -வல்லமை –
நீராட இத்யாதி -பண்ணை நனைத்துதல்
அஞ்சலி பண்ணி
நம் கால் நடையில் கழுத்தில் கப்படம் -கட்டுப்பட்டு அரங்கில் விழுவான் –
தேர் யானை இத்யாதி இல்லை -காண்போம் -பிஞ்சில் பழுத்த பாசுரம்

த்வயம் சொல்லி -ஏற்றி -தபஸ் -அநந்ய பிரயோஜனர் -அத்யந்த பாரதந்தர்யம்
பகவான் இடம் -பாரதந்தர்யம்
அதி பாரதந்தர்யம் நாம் ஆச்சார்யர்
அத்யந்த -அவர் அபிமானித்தில் ஒதுங்கி
உறை கழற்றியவர் பாசுரம்

நமோ –ஆச்சார்ய பிரணவம் -ஆரம்பத்திலும் முடிவிலும் -வேதாந்த தாத்பர்யம் -பிரணவ ஸஹிதம்-
ஸ்வா பாவிக -தேவரீர் யுடைய –அடியேனுக்கு பிராப்தமான ப்ராப்தமான -போக்யமான அரவிந்த -திருவடிகளில்
பிரேம அதிசய சீமா பூமி – பஹுமந்தவ்யர் நாத முனி பார்த்து -அடியேனுடைய கிருத்யம் பாராமல் -அக்ரித்ரிம என்ற சரம ஸ்லோகம் –

ஞானம் பெற யோக்யதை இல்லாத பசுவோ பஷியோ மனிசனோ -நடுவில் வைத்தது –
ஸ்ரீ வைஷ்ணவ திருவடி பற்றி அதன் பலமாகவே ஸ்ரீ விஷ்ணுவின் பரமபதம் –
அபிமானத்தால் -பெறுதற்கு அறிய பரமபதம் பிராபிக்கும்
இந்த நான்கும் முக்கிய -பர-பரதர–பரதமமான பிரமாணம்
இதில் தானே பசுவும் பஷியும்
ப்ரபத்திக்கு சேஷம் காரணம் என்று கொள்ள வேண்டாம் –
ஞானம் யோக்யதை இல்லாத பசு பஷி எடுத்ததால் இது ஸூவ தந்த்ர உபாயம் என்று ஸூ ஸ்பஷ்ட பிரமாணம் இது

ஆச்சார்யர் மூலம் தானே பகவத் பிரபத்தி -அதே போலே ஆச்சார்ய அபிமானம் பகவத் பிரபத்தி நிரபேஷம் இல்லை
ஈஸ்வர ஸுஹார்த்தம் பொதுவாக அனைவருக்கும் உண்டே –
பலம் தானே கொடுக்கும் -பெருமாள் புருஷகாரம் ஆச்சார்ய லாபம் பகவானால் பார்த்தோம் –
இவ்வர்த்தம் -ப்ரத்யக்ஷமாக யதிராஜா இடம் வசப்பட்டு -திருவடிகளை – –தான் அது தந்து –
கால த்ரயேபி-அடுத்த ஸ்லோகம் -சரணாகதி -கூட நீர் நம் பொருட்டு செய்தீர் -அதுவே ஷேம கரம் நமக்கு-
நல்ல என் தோழி -பெரியாழ்வார் எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டும் –
தங்கள் தேவர் -அவருக்கு பிடித்தம் என்பதால் –
இவளுக்கு அவர் அபேக்ஷிதம் என்றால் நம் தேவர் என்று இருக்க வேண்டுமே –

———————————————-

சூரணை -461-

ஆசார்ய அபிமானம் தான் பிரபத்தி போலே
உபாயாந்தர ங்களுக்கு
அங்கமாய் –
ஸ்வ தந்த்ரமுமாய் –
இருக்கும் –

கீழ் சொன்ன பிரபத்தி நிஷ்டனான அதிகாரிக்கு -உபாய அதிகாரத்தில் குறை உண்டாகிலும் -அது பாராமல் ஈஸ்வரன் –
கார்யம் செய்கைக்கு உடலாகக் கொண்ட -உபாய சேஷமாய் இருந்த -ஆசார்ய அபிமானத்தை -இப்போது
ஸ்வ தந்திர உபாயமாக சொல்லுவான் -என் –
அன்றிக்கே –
உபாய ஆகாரமும் கூடுமோ என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் -மேல் –

அதாவது –
ஆசார்ய அபிமானம் ஆகிற இது –
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே -15-4-
தமேவ சரணம் கச்ச-18-68- -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே –
விரோதி பாப ஷயத்துக்கும் -பக்தி விருத்திக்கும் – உடலாய் கொண்டு உபாயந்தரமான பக்திக்கும் -அங்கமுமாய் –
தத் த்யாக பூர்வகமாக (அந்த பக்தியையும் விட்டு- சர்வ தர்மான் பரித்யஜ்ய ) -மாம் ஏகம் சரணம் வ்ரஜ-என்று விதிக்கும்படி –
இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிகாரங்கள் இரண்டுக்கும் ஸ்வயமேவ உபாயமாகக் கொண்டு –
ஸ்வ தந்திர உபாயமாய் இருக்கும் பிரபத்தி போலே
உபாய அதிகார மாந்த்யத்தைப் பார்த்து -ஈஸ்வரன்  உபேஷியாமல் கார்யம் செய்கைக்கு உறுப்பு ஆகையாலே –
ஸ்வ இதர உபாயமான பிரதிபத்திக்கு
சாபல்யத்தையும் உண்டாக்கி நின்று கொண்டு -அவ்வழியாலே-அதுக்கு அங்கமாய் –
அத்தை ஒழிய தன்னை உபாயமாகக் கொள்ளும் அளவில் -அநிஷ்ட நிவ்ருத்த்யாதிகளுக்கு
தானே உபாயமாக கொண்டு -ஸ்வ தந்த்ரமாயுமாய் இருக்கும் -என்கை –
அன்றிக்கே –
அநாச்சார்யோ பலப்தாஹி வித்யேயம் நச்யதி த்ருவம் -என்றும் –
சாஸ்த்ரா திஷூ சூத்ருஷ்டாபி சாங்கா சஹப லோதய ந பிரசித்திய தீவை வித்யா விநாசது பதேசத -என்றும் சொல்லுகையாலே –
ஏதேனும் ஒரு வித்தையை அவ லம்பிக்கும் அதுக்கு -ஆசார்ய உபதேசம் வேண்டுகையாலே –
ஆசார்ய அபிமானம் சகல உபாய அங்கமாய் இருக்க –
தேனைவ தே  பிரயாச்யந்தி -என்று ஸ்வ தந்திர உபாயமாக சொல்லுவான் என் -என்ன –
ஆசார்ய அபிமானம் தான் -என்று துடங்கி -அருளிச் செய்கிறார் ஆகவுமாம் —
அதாவது –
பிரபத்தி தான் கர்ம ஞான பக்திகள் ஆகிற -உபாயாந்தரங்களுக்கு –
உத்பத்தி விருத்தி விரோதி பரிஹார அர்த்தமாக -விஹிதமாய் கொண்டு –
தத் அங்கமுமாய் –
அநந்ய சாத்த்யே ஸ்வா பீஷ்டே  மகா விச்வாச பூர்வகம் தத் ஏக உபாய தாயாச் ஞா பிரபத்தி சரணாகதி -என்கிறபடியே
அந்ய உபாயங்களை ஒழிந்து-தன்னையே உபாயமாகக் கொள்ளும் அளவில் –
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வ இஷ்ட ப்ராப்த்திக்கு -ஸ்வயமேவ நிர்வாஹகமாய் கொண்டு –
ஸ்வ தந்த்ரமாய் இருக்குமா போலே –
ஆசார்ய அபிமானம் ஆகிற இது தான் –
ஏதேனும் ஒரு உபாயத்துக்கும் ஆசார்ய உபதேசம் அவஸ்ய அபேஷிதம் ஆகையாலே –
அவ்வழியாலே உபாயாந்தரங்களுக்கு அங்கமாய் இருந்ததே ஆகிலும் –
பால மூக ஜடாந் தாச்ச பங்கவோ பதிராஸ்ததா சதா சார்யேன சந்த்ருஷ்டா ப்ராப்னு வந்தி பராங்கதிம் –
பசுர் மனுஷ்ய பஷீவா -இத்யாதிப் படியே
ஸ்வயமேவ உத்தாரகம் ஆகையாலே -ஸ்வ தந்திர உபாயமுமாய் -இருக்கும் -என்கை —

ப்ரபத்திக்கு அங்கமாகவும் ஸ்வ தந்த்ரமாகவும் ஆச்சார்ய அபிமானம் இருக்குமே –
பிரபத்தி பக்திக்கு அங்கமாகவும் ஸ்வ தந்த்ரமாகவும் இருக்குமா போலே –
சதாச்சார்யனால் ஸ்வீ கரிக்கப்படும் உபாயம் —
கர்ம ஞான பக்தி உபாயாந்தரங்களுக்கு விச்சேத பரிகார அர்த்தம் -தத் வர்க்கமான -அங்கமாய் -அங்க பிரபத்தி
யாவதாத்மாபாவி ஸ்தான த்ரய பக்தி பிரார்த்தித்து -பிராப்ய ரூப பக்தி நித்தியமாக கத்யத்த்ரயத்தில் உண்டே –
இரண்டு ஆகாரங்கள் -விதி பேதத்தாலும் அதிகாரி பேதத்தாலும் –
ஈஸ்வர ஸ்வா தந்திரம் கண்டு பயந்த -பயப்படாத அதிகாரிகள் பேதம் உண்டே –
சரமாய் ஸூ ஸ்பஷ்டமாய் –பசு பஷிக்கு பிரபத்தி இல்லையே -வைஷ்ணவனைப் பற்றி -அதனால் ஸ்வ தந்த்ரமாகவே உண்டே –
ஆச்சார்ய உபதேசம் எல்லா வித்யைக்கும் வேண்டும் -சகல உபாயத்துக்கும் அங்கமாய் இருக்கும்
தேனை ஏவ -அந்த வைஷ்ணவனை பற்றிய ஒன்றே எதிர்பார்த்து -தானே ஸ்வ தந்திரமாயும் இருக்கும் –
பிரபத்தி ஸ்வ தந்த்ர உபாயம் இந்த கைங்கர்ய உபயோகி பக்திக்கு –
ஸூ இதர உபாயாந்தரங்களுக்கும் இது -பக்தி ப்ரபத்திகளுக்கு-இவர் தானே உபதேசிக்க வேண்டும் –
அதனால் அங்கம் -அபிமானம் இருப்பதால் தானே உபதேசம் –
தெய்வம் போலே ஆச்சார்யரை உபாசி -சித்த -ஸ்வ தந்திரம்
பக்தி ஸ்வதந்த்ரம் மேலே பிரபத்தி போலே பிரபத்திக்கு இந்த சரம பிரபத்தி
பக்திக்கு அந்தர்யாமி விஷயம்
பிரபத்திக்கு அர்ச்சாவதாரம் விஷயம்
சரம பிராப்திக்கு சாஷாத் தெய்வம் பீதக வாடைப்பிரான் பிரம குருவாக வந்ததே விஷயம்
நம்பி மூத்த பிரான் -ஆதி சேஷனா பெருமாளா -சங்கை –
தசாவதாரம் சேஷ அம்சம் -அவதாரம் விசேஷ அதிஷ்டானம் தானே -பயனுக்காக சக்தி இறக்கி
அதே போலே சேஷ பூதன் ஆச்சார்யரும் -தன் ஆச்சார்யருக்கு சேஷ அம்சம் –
விசேஷ அதிஷ்டானம் -செய்து -பரத்வாதி சரம பகவத் அவதாரம் –
பரத்வம் -வ்யூஹ -விபவ -அந்தர்யாமி அர்ச்சை அடுத்த -நிலை
பக்திக்கு அந்தர்யாமி -பிரபத்திக்கு அர்ச்சை -ஆச்சார்ய அபிமானத்துக்கு இந்த ஆறாவது அதிஷ்டானம் என்றவாறு
பால மூக ஜடாந் தாச்ச பங்கவோ பதிராஸ்ததா சதா சார்யேன சந்த்ருஷ்டா ப்ராப்னு வந்தி பராங்கதிம் –
பரங்கத்திம் -ஸ்தோத்ர ரத்னம் இதே போலே ஆனால் அங்கு பரங்கத்திம்-இல்லை காது கண் பெறுவது -பிரபத்தி பண்ணாதவனுக்கு –
பசு பஷிர்-பிரபத்தி கிடையாதே –

—————————————————

சூரணை -462-

பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி –
பிரபத்தியில் அசக்தனுக்கு இது –

இப்படி ஸ்வதந்த்ரமான இவ் உபாயத்துக்கு அதிகாரி இன்னார் -என்று அருளிச் செய்கிறார் –

அதாவது -உபய பரிகர்மி தச்வாந்தச்ய -என்கிறபடியே –
ஜன்மாந்தர சகஸ்ர சித்த கர்ம ஞான சம்ஸ்க்ருத அந்தகரணனுக்கு-
ஜனிக்குமதாய் -ஸ்வ பாரதந்த்ர்ய விரோதியான -ஸ்வ யத்ன ரூபமாய் இருக்கும் -பக்தி உபாயத்தில் –
துஷ்கரத்வ புத்தியாலும் -ஸ்வரூப விரோதித்வ புத்தியாலும் -நாம் இதுக்கு சக்தர் அல்ல என்று கை வாங்கினவனுக்கு –
நிவ்ருத்தி சாத்திய தயா -ஸூகரமுமாய் -பகவத் பாரதந்த்ர்ய ரூப ஸ்வரூப அநு ரூபமான -பிரபத்தி உபாயம் –

அத்ய அவஸ்ய ஞான ரூபமான பிரபத்தி உபாயத்தில் -மகா விசுவாசம் உண்டாகை அரிதாகையாலும்-
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யா பயத்தாலும் –
நாம் இதுக்கு சக்தன் அல்ல என்று தேங்கினவனுக்கும் பசு வாதிகளுக்கும் கார்யகரம் ஆகையாலே -விசவாஸ அபேஷமும் அன்றிக்கே –
மோஷ ஏக ஹேதுவுமாய் இருக்கும் -பரதந்த்ர்ய ஸ்வரூபனுடைய சதாசார்யனுடைய  அபிமான ரூபமான இந்தசரம உபாயம் -என்கை –

பக்தியில் அசக்தனுக்கு -துஷ்கரத்வ ஸ்வரூப விரோதித்வங்கள் இரண்டும் ஹேதுவாகிலும்-
இவ்விடத்தில் ஸ்வரூப விரோதித்வமே பிரதான ஹேது –
பிரபத்தியில் அசக்தனுக்கும் விச்வாச்யமாந்த்ய பகவத் ஸ்வா தந்த்ர்ய பய ரூப ஹேது த்வயம் உண்டே ஆகிலும் –
பகவத் ஸ்வ தந்த்ர்யமே பிரதான ஹேது –
ஸ்வ தந்தர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று –
பகவத் ஸ்வ தந்தர்ய பயத்தாலே பிரபத்தி நழுவிற்று -என்று இறே இவர் தாமே கீழ் அருளிச் செய்தது –
இத்தால்-
அந்ய உபாய அசக்த தய -அநந்ய கதி யானவனே -பிரபத்தி அதிகாரி யாமோபாதி-
இவ் உபாய அதிகாரியும் -அநந்ய உபாய அசக்த தய -அநந்ய கதி யானவன்-என்றது ஆயிற்று –
அன்றிக்கே –
இதன் ஸ்வ தந்த்ரவத்தை -பக்தியில் அசக்தனுக்கு -இத்யாதியாலே -ஸ்தீகரிக்கிறார்  ஆகவுமாம் –
வாக்யார்த்த யோசனையில் பேதம் இல்லை –
பக்தியில் அசக்தனைக் குறித்து -விஹிதமான பிரபத்தி உபாயம் ஸ்வ தந்த்ரம் ஆனாப் போலே
பிரபத்தியில் அசக்தனை குறித்து -விஹிதமான இதுவும் -ஸ்வ தந்தரமாக குறை இல்லை -என்று கருத்து –
( அதிகாரி ஸ்வரூபமாகவும் -ஸ்வ தந்த்ர உபாயம் என்பதை பக்தி பிரபத்தி போலே இதுவும் என்று திருடிகரிக்கிறார் என்ற இரண்டு யோஜனை )

இயலாமை இல்லை-ஸ்வரூப விருத்தம் என்பதால் அந்வயிக்க சக்தி இல்லை என்று இருக்கும் அதிகாரி -என்றவாறு –
பிரபத்தி -விநிவ்ருத்தி ரூபம் தானே -இதில் சக்தி -ஈஸ்வர ஸ் வாதந்த்ரத்தால் என்ன ஆகுமோ -தெரியாத ஒன்றில் அன்வயம் எதற்கு என்கிற சக்தி –
இதில் இருந்து தாண்டி -வேறுபட்ட சரம அதிகாரி –
பக்தி -கர்ம ஞான சம்ஸ்க்ருத அந்தகரணனுக்கு பிறக்கும் -விஸிஷ்ட வேஷஅனுசந்தான சித்த துஷ்கரத்வ பிரபத்தியாலும் -இங்கு சக்தி இயலாமை -ஆயாசம்
நிஸ்க்ருஷ்ட வேஷம் ஸ்வரூபம் பாரதந்தர்யம் அறிந்து அசக்தி -பகவத் ஸ்வா தந்த்ரயத்துக்கு விரோதி ஸ்வ ஸ்வா தந்தர்யம் –
பாரதந்தர்யம் அறிந்தவனே பிரபதிக்கு அதிகாரம் –
இங்கும் விஸிஷ்ட நிஸ்க்ருஷ்ட வேஷம் -அத்வயவாசாய ஞானம் -மஹா விசுவாச மாந்தியதாலும் –சம்சாரம் இருப்பதால்–
நிஸ்க்ருஷ்ட வேஷத்தில் நிராங்குச ஸ்வா தந்திரம் கண்டு பயந்துஅ சக்தி –
இப்படி நாலு வித அ சக்தி சொல்லி மேலே
சரம -நிலை நின்ற அதிகாரம் -ஸூ வ ஆச்சார்யர் பரதந்த்ர -சதாச்சார்ய அபிமான விசேஷ -பரதந்த்ர சேஷி தானே நம் ஆச்சார்யர்
ஸ்வரூப விருத்தம் அந்வயிக்க கூடாதே -பக்தியில் இருந்து பிரபத்தி
இங்கு பிரதம -சரம -ஸ்வாதந்த்ர ஜெனித பயத்தால் தான் –

————————————————————–

சூரணை -463-

இது பிரதமம் ஸ்வரூபத்தை பல்லவிதம் ஆக்கும் –
பின்பு புஷ்பிதம் ஆக்கும் –
அநந்தரம்
பல பர்யந்தம் ஆக்கும் —

இவ் ஆசார்ய அபிமானம் இவனுக்கும் உண்டாக்கும் பல பரம்பரையை
அருளிச் செய்து -இவ் அர்த்தத்தை நிகமித்து அருளுகிறார் –

அதாவது –
இப்படி கீழ் சொன்ன ஆசார்ய அபிமானம் ஆகிற இது -பிரதமத்தில் இச் சேதனனுக்கு
பிரணவ யுக்த அநந்யார்ஹ சேஷத்வத்தை சரம பர்வ பர்யந்தமாக உணர்த்தி –
அநாதி காலம் ஸ்வாதந்த்ர்யாமாகிற அழலிலே மண்டி -சரக்கு இழந்து கிடந்த ஸ்வரூபத்தை துளிர்த்து எழும்படியாய்  இருக்கும் –
இப்படி பல்லவிதமான பின்பு -மத்யம பத யுக்த -அநந்ய சரணத்வத்தை -சரம பர்யந்தமாக உணர்த்தி –
பல ஸூசகமான உபாயத்வ அவஸாய யோகத்தாலே ஸ்வரூபத்தை புஷ்பிதமாம் படி யாக்கும் –
இப்படி புஷ்பிதமான அநந்தரம் –
சரம பத உக்த -அநந்ய போகத்வத்தையும் -சரம பர்யந்தமாக உணர்த்தி –
நித்ய கைங்கர்ய யோகத்தாலே -ஸ்வரூபத்தை பல பர்யந்தமாம் படி யாக்கும் -என்றபடி –

பரம ரஹஸ்யமான திரு மந்த்ரத்தில் பத த்ரய -ப்ரதிபாத்யமான -அநந்யார்ஹ சேஷத்வாதி ஆகார த்ரயமும் ஆத்மாவுக்கு ஸ்வரூபமாய் –
அது தான் சர்வ பர்வ பர்யந்தமாய் இறே இருப்பது -இவை தான் ஆசார்ய உபதேசாதிகளாலே  -லப்யங்கள் ஆகையாலும் –
இவ் உபதேசாதிகளுக்கு அடி -இவன் நம்முடையவன் என்கிற ஆசார்ய அபிமானம் ஆகையாலும் –
ஆச்சார்ய அபிமானம் இவற்றை உண்டாக்கும் -என்கிறது –

ஆக -இப்படி இருந்துள்ள -பத த்ரய அர்த்த நிஷ்டையை -இவ் ஆசார்ய அபிமானம் இவனுக்கு உண்டாக்கி –
உஜ்ஜீவிப்பித்தே விடும் படி சொல்லிற்று ஆயிற்று –

அதவா –
இப்படி ஸ்வதந்த்ர்ய உபாயமான இது -இவன் ஸ்வரூபத்தை பர்வ க்ரமேண உஜ்ஜீவிக்கும்படியை
பிரகாசிப்பியா நின்று கொண்டு -இவ் அர்த்தத்தை நிகமித்து அருளுகிறார் –
அதாவது –
ஆசார்ய அபிமானம் ஆகிற இது -பிரதமம் பகவத் விஷயத்தில் அன்வயிப்பித்து –
அநாதி காலம் தத் அந்வய ராஹித்யத்தாலே -வாடினேன்-என்னும்படி -யுறாவிக் கிடந்த ஸ்வரூபத்தை பல்லவிதமாக்கும்-
பின்பு பாகவத விஷயத்தில் ஊன்றுவித்து -பல அந்வய யோக்கியம் ஆக்குகையாலே
பல்லவிதமாய் இருந்த இத்தை புஷ்பிதம் ஆக்கும் –
அநந்தரம் –
நின்று தன் புகழ் ஏத்த -என்கிறபடியே சரமபர்வத்தில் -நிலை பெறுத்தி-
புஷ்பிதமாய் இருந்தவற்றை பல பர்யந்தம் ஆக்கும் -என்னவுமாம் –

ஆக –
இப் பிரகரணத்தால் –
ஆசார்யனை உபாயமாகப் பற்றினார்க்கு -பய அபயங்கள் இரண்டும் மாறி மாறி நடக்கும் என்னும் பிரசங்கம் இல்லாமையும் -407
இவ் அர்த்த நிர்ணய பிரமாணம் இன்னது என்னுமதும்-409-
இவ் அர்த்த ஸ்தாபனத்துக்கு ஈடான உபபத்தியும்-410- -ஐதிக்யமும் -411-
இவ் அர்த்த உபபாதன அர்த்தமாக ப்ராப்ய நிர்ணயமும் -412-
இப்படி ப்ராப்ய நிர்ணயம் பண்ணினால் இதுக்கு சத்ருசமாகக் கொள்ள வேணும் ப்ராபகம் என்னும் அதுவும் -425-
அல்லாத போது வரும் -தூஷணமும் -426-
ஈஸ்வர விஷயத்தில் இவனுக்கு உள்ள சரணவத் பாரதந்த்ர்ய அனந்யத்வங்களை ஸூசிப்பித்துக் கொண்டு -427-
ஈஸ்வரனைப் பற்றும் அதில் இவனைப் பற்றும் அதுக்கு உள்ள விசேஷமும் -428-
ஈஸ்வர சேதனர்கள் இருவருக்கும் இவன் உபகாரகன் என்றும் -429
ஈஸ்வரனும் ஆசைபடும் பதத்தை உடையவன் என்றும் -430
இவன் பண்ணும் உபகாரத்துக்கு சத்ருச பிரத்யுபகாரம் இல்லை என்றும் -432
இவனோட்டை சம்பந்தம் மோஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் என்றும் -433
ஈஸ்வரனை உபகரித்த இவனிலும் -இவனை உபகரித்த ஈச்வரனே மகா உபகாரகன் -என்றும் -436
இவ் ஆசார்ய வைபவமும் -ஆத்ம குணம் உண்டானாலும்
ஆசார்ய சம்பந்தத்தை நெகிழ்க்லில் அந்த பிரயோஜனமும் அவத்யகரமும் ஈஸ்வர நிஹ்ரக ஹேதுவாம் படியும் -437-438-439-
ஆசார்ய சம்பந்த விச்சேதத்தில் பகவத் சம்பந்த த்வர்பலமும் -440-
ஆசார்ய அன்வயத்துக்கும் பாகவத சம்பந்தம் அபேஷிதம் என்னும் அதும் -441-442-443-
ஆசார்ய அபிமானம் ஒழிய உஜ்ஜீவன உபாயம் இல்லை என்னும் இடத்தில் -ஆப்த உபதேசமும் –
இவ் அர்த்தத்தினுடைய ஸ்தீரீகரணமும்-444-445-
இவ் ஆசார்ய அபிமான நிஷ்டனான அவன் சுலபமான இவ் விஷயத்தை விட்டு
துர்லபமான பகவத் விஷயத்தை ரஷகமாக விச்வசிக்க கடவன் அல்லன் -என்றும் -448-
பரத்வாதி ப்ராப்ய ஸ்தலங்கள் எல்லாம் இவ் விஷயமே என்று இருக்கக் கடவன் -என்றும் -450-
இவனுக்கு பிரதிகூல அநு கூல அநு பயர் இன்னார் என்றும் -451
இவனுடைய ஞான அனுஷ்டானங்களுக்கு விநியோகமும் -452-
இவனுக்கு நிஷித்த அனுஷ்டானமும் 453–விஹித போகாதிகளும் -த்யாஜ்யம் என்னும் இடமும் -455-
ஸ்வரூப பிரச்யுதி வாராமைக்கு வேண்டும் அவஸ்தையும் -457-
ப்ராப்ய பூமி ப்ராவண்யாதி த்ரயமும் இவனுக்கு அவஸ்ய அபேஷிதம் என்னும் அதுவும் -458-
ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத பரகத ஸ்வீகார உபாய த்வய பிரமாணங்களும் -459-/460-
ஆசார்ய அபிமானத்தின் ஸ்வ தந்திர உபாயத்வமும் -461-
தத் அதிகாரி நிர்ணயமும் -462-
இவ் ஆச்சார்ய அபிமானம் இச் சேதனனுக்கு உண்டாக்கும் பல பரம்பரையும் 463–சொல்லுகையாலே –
சதாச்சார்ய அபிமானமே சர்வருக்கும் உத்தாரகம் -என்னும் இடம் சொல்லப்பட்டது –

ஆக
இத்தால்
வாக்ய த்வயயோ உக்யதா- உபாய உபேய -சரம அவதியை -அருளிச் செய்தார் ஆயிற்று –

அநந்யார்ஹ சேஷத்வ ஞானமே மொட்டு -நமஸ் பரதந்த்ர ஞானம் பூ / அவனாலே அனுபவிக்கப்படுபவன் பல பர்யந்தம் –
அதுக்கும் மேலே அவனுக்கும் அவன் அடியார்க்கும் -அவர்களே உபாயம் பாகவத பாரதந்தர்யம் -அவர்கள் கைங்கர்யமே பலம் -என்று இருக்க வேண்டும்
அதுக்கு மேலே ஆச்சார்ய விஷயம்
அன்றிக்கே
பகவத் சேஷத்வம் -பாகவத சேஷத்வம் -ஆச்சார்ய சேஷத்வம் என்றுமாம்
ஸ்வ தந்த்ர உபாயம் மட்டும் இல்லை -பிரதமத்தில் ஸ்வரூப ஞானம் -அபிமான அன்வய காலத்திலே-
அநாதி காலம் இழந்து சரக்காய் உலர்ந்து போன ஜீவாத்மா -உபய சேஷத்வம் -மிதுனம் -பல்லவம்
அம்ருத வர்ஷத்தால் சரம அளவாக வளர்த்து பிரணவ அர்த்தம் ஆனபின்பு -பார தந்தர்யம் புரிய வைப்பார் –
மடை திறந்த கடாக்ஷத்தால் -தத் ஏக போக்யத்வ சித்த சரம அனுபவ கைங்கர்யம் ஆக்கி உஜ்ஜீவிப்பிக்கும்
சேஷத்வ ஞானம் பல்லவிப்பித்து பாரதந்த்ர ஞானம் பூ பூக்க வைத்து -பழுக்க போக்யமாக கூட்டிச் செல்லும்
ஸ்வ தந்தர்ய த்வத்யம் தோஷம் இல்லை -பிரதமத்தில் பிரஸ்துதமான புருஷகார பூர்வகமாக பகவத் உபாயமே சரம உபாயமாக பழுக்கும்
அது தான் பூத்து காய்த்து பழமானது என்று வடக்குத்திருவீதி பிள்ளை பலகாலும் அருளிச் செய்வார்
ஆக
சார வசன–கண்ணி–பரதந்த்ர சேஷியை பற்றுமதுவே ஸ்வரூப அனுரூப உபாயம்
துர்லபம் ஆச்சார்ய கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
சரம சேஷியே அனைத்தும் -விரக்தி விஷயம் சம்சாரம்
உபகாரர் உத்தாராகர் -சம்பந்த சரம சேஷி
ஸ்வரூப ஞானம் தொடங்கி பல பர்யந்தம் உஜ்ஜீவிக்கும் –

இந்த நிஷ்டை துர்லபம் -நம் ஆச்சார்ய கடாக்ஷத்தாலே கிட்ட வேண்டும் –
வாழி ஸ்ரீ பிள்ளை உலகாசிரியன் —
வாழி திருமழிசை அண்ணா அப்பன் ஐயங்கார் ஸ்வாமி -ஸ்ரீ ரகுவரர் வாழி –
நேர் பொருளும் நீள் கருத்தும் அருளி -பார் பகர் தென்னெறியால் தமிழ் வழங்கியவர் வாழி –
வாழி ஆய் ஸ்வாமிகள் –
வாழி ஸ்ரீ மணவாள மா முனிகள் —

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –450-456- சரம பர்வ நிஷ்டா-குரோர் உபாயதாஞ்ச பிரகரணம் –ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் / ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்-

May 26, 2018

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -8o–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது ஆறாவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் /
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் /

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகாரஞ்ச ச வைபவம் (ச -உபாய வைபவமும் இதில் உண்டே )-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது ஒன்பதாவது பிரகரணம்

த்வய அபிபிரேரிதமான – த்வய யுக்த அர்த்த ஞானமும் -தத் உபதேச ஆச்சார்யர் அனுவர்த்தனைத்தையும் அருளிச் செய்து –
அதுக்கு மூல பூதமான பகவத் கிருபை -ஹேதுதா சங்கதி –
நிவர்த்ய ஞானம்–கர்மா அவித்யாதி தோஷங்கள் நினைத்தால் – பய ஹேது /-நிவர்த்தக பகவத் குண அனுசந்தானம் ஞானம்–பயம் கெடுக்கும் ஹேது
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -/ படிக்கட்டுக்கள் அத்வேஷம் தொடங்கி பிராப்தி வரை -நிர்ஹேதுக கிருபையே காரணம் –

ஆறு பிரகரணங்களில் இறுதியான
சரம பர்வ நிஷ்டா பிரகரணம் –

———————————————————

சூரணை -450-

பாட்டுக் கேட்கும் இடமும் –
கூப்பீடு கேட்கும் இடமும் –
குதித்த இடமும் –
வளைத்த இடமும் –
ஊட்டும் இடமும் –
எல்லாம் வகுத்த இடமே
என்று இருக்கக் கடவன் —

இப்படி சுலபமான ஆசார்ய விஷயம் ஸ்வ ரஷணத்துக்கு உண்டாய் இருக்க
இத்தை உபேஷித்து துர்லபமான பரத்வாதிகளை வாஞ்சிக்க கடவன் அல்லனே ஆகிலும் –
ப்ராப்யத்வேன அவை இவனுக்கு வாஞ்சநீயங்கள் அன்றோ என்ன -அவை எல்லாம் ஆசார்யனே என்று
இருக்கக் கடவன் -என்கிறார் –

அதாவது –
ஏதத்  சாம காயன் நாஸ்தே -என்கிறபடியே –
நிரந்தர அனுபவத்துக்கு போக்குவீடாகப் பண்ணும் சாம கானம் கேட்க்கும் ஸ்தலமான பரம பதமும் –
அசூர ராஷச பீடிதரான ப்ரஹ்மாதி தேவர்கள் ஆர்த்த நாதம் கேட்க செவி கொடுத்துக் கொண்டு கண் வளரும் வ்யூஹ ஸ்தலமும் –
அவர்கள் ஆர்த்த த்வனி கேட்டு -துடித்துக் கொண்டு எழுந்து இருந்து –
நாகபர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -என்கிறபடியே –
திருபாற் கடலிலே திரு அரவணையின் நின்று இவ்வருகே வரக் குதிப்பாரைப் போலே -வந்து அவதரித்த -அவதார ஸ்தலமும் –
நினைத்து தலைக் கட்டும் அளவும் -மலையாளர் வளைக்குமா போலே –
இட்டவடி பேர விடாதே -வளைத்துக் கொண்டு இருக்கிற -அர்ச்சாவதார ஸ்தலங்களும் –
ஏஷாம் இந்தீவரச்யாமோ ஹ்ருதயே சூப்ரதிஷ்டத -என்றும் –
ஒண் சங்கதை வாள் ஆழி யான் ஒருவன் அடியேன் உள்ளானே -என்றும் –
சொல்லுகிறபடியே -ஹிருதய கமலத்திலே இருந்து -தான் உகந்தாருக்கு தன் அழகை புஜிப்பிக்கும்-அந்தர்யாமித்வ ஸ்தலம் ஆகிற –
இந்த ப்ராப்ய ஸ்தலங்கள் எல்லாம் –
தனக்கு வகுத்த ஸ்தலமாய் -பிராப்யமுமாய் -இருக்கும் ஆசார்ய விஷயமே என்று
அத்யவசித்து இருக்க கடவன் -என்கை-
வளைத்த இடமாவது -பிறர் அறியாதபடி திரை வளைத்துக் கொண்டு இருக்கிற அந்தர்யாமி  ஸ்தலம் –
ஊட்டும் இடம் ஆவது -சஷூர் விஷயமாய் இருந்து -தன் வடிவு அழகையும் குணங்களையும் –
ஆஸ்ரிதரை புஜிப்பிக்கும் அர்ச்சாவதார ஸ்தலம் -என்று சொல்லவுமாம்–
ஏனைவ குருணா யஸ்ய ந்யாச வித்யா ப்ரதீயதே தசிய வைகுண்ட்ட துக்த்தாப்த்தி  த்வாரகாஸ் சர்வ ஏவச -என்றும் –
வில்லார் மணி கொழிக்கும் -என்று துடங்கி -அருளாலே வைத்தவர் -என்றும் சொல்லக் கடவது இறே–
அன்றிக்கே –
பாட்டு கேட்கும் இடம் -இத்யாதிக்கு -ரஷகமாக அவற்றை ஆசைப் படக் கடவன் அல்லன் என்கிற அளவன்றிக்கே –
அவை எல்லாம் தனக்கு இவ் விஷயமே என்று
இருக்கக் கடவன் என்கிறது என்று கீழோடு சேர யோஜிக்க்கவுமாம் —

ஆச்சார்யரே பிராப்தம் -அனுபவத்துக்கு போக்கு வீட்டு வைகுண்ட செல்வனார் மேல் -ஏதத் ஸாம கானம் /
ஆர்த்தி உடன் -கூப்பீட்டு கேட்க்கும் இடம்
துடித்து எழுந்து அரை குலைய குதித்த அவதார ஸ்தலங்கள்
கண்ணையும் மனத்தையும் வளைக்கும் அர்ச்சை
தேனும் பாலும் -நிரதிசய போக்யமான அந்தர்யாமி ஓவாத ஊணாக ஊட்டும்-நின்ற ஒன்றை உணர்ந்து
பரமபதம் இத்யாதிகள் ஸ்தலம் -இங்கு -இடம் தான் -அனைத்தும் ஆச்சார்யர் திருவடி –
பகவத் அபிமத ஸ்தலம் -விமல சரம திருமேனியை -குற்றம் அற்ற கடைசியான விக்ரஹம் -திருவடி உப லக்ஷணம் –
அன்றிக்கே–பிரகாரம் நிலைகளை பற்றி
அவனுக்கும் தனக்கும் வகுத்த இடம்-ஆச்சார்யரே உபாயம் உபேயம் முக்த கண்டம் –
பகவானுக்கும் ஆச்சார்யர் -அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் -அவனுக்கும் உத்தேச்யம்
மனக்கடலில் வாழ வல்ல என் மாய -வ்யூஹம்
வில்லாளன் என் நெஞ்சத்து உள்ளான் -விபவம்
ஒருவன் அடியேன் உள்ளான் அந்தர்யாமி
திருவேங்கடமே எனது உடலே -அவனுக்கும் நமக்கும் இதுவே வகுத்த இடம் -அடியார் திருமேனியையையே விரும்பி உள்ளான் –

———————————————

சூரணை-451-

இவனுக்கு பிரதிகூலர் ஸ்வ தந்த்ரரும் – தேவதாந்தர பரரும் –
அனுகூலர் -ஆசார்ய பரதந்த்ரர் –
உபேஷணீயர்-ஈஸ்வர பரதந்த்ரர் –

ஏவம் பூதனான இவ் அதிகாரிக்கு -ஸ்வரூப நாசகத்வ -ஸ்வரூப வர்த்தகத்வ –
தத் உபய ரஹீதத்வங்களாலே -பிரதிகூலராயும் -அனுகூலராயும் -அநு பயராயும்-
இருக்கும் அவர்களை தர்சிப்பிக்கிறார் மேல் –

அதாவது –
இப்படி ஆசார்ய அபிமான நிஷ்டனாய் -பரத்வாதி பஞ்சகத்திலும் உள்ள ப்ராவண்யம் உடைய –
இவ்விஷயத்திலே ஒரு மடைப் படுத்தி -தேவு மற்று அறியேன் -என்று இருக்கும் இவ் அதிகாரிக்கு –
அணுகில் ஆத்ம நாசத்தை பிறப்பிக்கும் பிரதி கூலர் -ஆத்ம அபஹாரிகளான ஸ்வ தந்த்ரரும் –
பாரதந்த்ர்யத்துக்கு இசைந்து வைத்தே பகவத் வ்யதிரிக்த தேவதைகளுக்கு பாரதந்த்ரமாய் இருக்கும் -அவர்களும் —
ஸ்வ சம்சர்க்கத்தாலே ஸ்வரூபத்தை வளர்க்கும் அனுகூலர் –
ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்து -தச் சரம அவதி நிஷ்டரான சதாசார்யா பரத்ந்த்ரர் –
இப்படி ஸ்வரூப நாசகரும் ஸ்வரூப வர்த்தகரும் அல்லாமையாலே -வெருவதலுக்கும் விருப்பத்துக்கும் விஷயம் அல்லாத வுபேஷணீயர் –
சரம பர்வமான ஆசார்ய பாரதந்த்ர்யத்தில் ஊற்றம் அன்றியிலே பிரதம பர்வமான பகவத் பாரதந்த்ர்யத்தில் ஊன்றி நிற்கும் அவர்கள் -என்றபடி –
பிரதிகூலரை சொல்லுகிற இடத்தில் -ஸ்வ தந்திர தேவதாந்திர பரதந்த்ரர் இருவரையும் சொன்ன இது –
பிரபத்தி பிரகரணத்தில் சொன்ன மற்று உள்ள பிரதிகூலருக்கும் உப லஷணம்-
பிரதம பர்வ நிஷ்டனுக்கு பிரதிகூலரான அவர்கள் இவனுக்கு பிரதிகூலர் அல்லாமை இல்லை இறே –
இத்தால் கீழ்
பகவத் பிரபன்ன அதிகாரிக்கு -சஹவாச தந் நிவ்ருத்திகளுக்கு உறுப்பாக அனுகூல பிரதிகூல தர்சனம் பண்ணு வித்தாப் போலே –
ஆசார்ய அபிமான நிஷ்டனான இவனுக்கும்
சஹவாச நிவ்ருத்தி விஷயமான பிரதிகூலரையும் -சஹவாச விஷயமான அனுகூலரையும் -தர்சிப்பித்து –
தத் அதிகமான வுபேஷணீய விஷயமும் இவனுக்கு ஓன்று உண்டு என்னும் இடம் தர்சிப்பித்தாராய் ஆயிற்று —

சரம அதிகாரிக்கு -ஸ்வரூப நாசகர் பிரதிகூலர் -விபரீத அந்யதா ஞானிகள் -ஸ்வ தந்த்ரர்கள் தேவதாந்த்ர பரர்கள்
ஸ்வரூபம் வளர்க்கும் அனுகூலர் -உண்மையாக உணர்த்தும் சரம அதிகாரிகளான ஆச்சார்ய பரதந்த்ரர்
ஆச்சார்யர் பாரதந்தர்யம் அற்ற கேவல ஈஸ்வர பரதந்த்ரர்-உபேஷனீயர்
சம்பாஷணாதி அயோக்யர் ஸஹவாஸி அயோகியர் -பிரதிகூலர்
சதா அனுபவ யோக்யர்-அனுகூலர்

————————————————-

சூரணை -452-

ஞான அனுஷ்டானங்கள் இரண்டும்
அல்லாதார்க்கு உபாய அங்கமாய் இருக்கும் –
இவனுக்கு உபேய அங்கமாய் இருக்கும் –

இவ் அதிகாரிக்கு உண்டாக வேண்டும் பிரதிபத்திய அனுஷ்டானங்களை பல படியாலும் அருளிச் செய்தார் கீழ் –
இந்த பிரசங்கத்திலே -அந்ய உபாய நிஷ்டருடைய ஞான அனுஷ்டானங்களுக்கும் –
இவனுடைய ஞான அனுஷ்டானங்களுக்கும் -உண்டான விநியோக விசேஷத்தை
அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது –
தத்வ ஞானமும் -தத் அநு ரூபமான அனுஷ்டானமும் -ஆசார்ய அபிமான நிஷ்டனான இவனை ஒழிந்த அதிகாரிகளுக்கு –
உபாயம் ( பகவான்)-அதிகாரி சாபேஷம் ஆகையாலே –
உபேய ப்ராப்தி அளவும் -உபாய அதிகாரம் நழுவாமல் நடக்கைக்கு உறுப்பாய்க் கொண்டு –
அவ்வழியாலே உபாய சேஷமாய் -இருக்கும் –
ஆசார்ய அபிமானமே உத்தாரகம்  ஆகையாலும் -உபாய அதிகார சேஷமாக வேண்டுவது ஓன்று இல்லாமையாலே –
இவ் அதிகாரிக்கு உண்டான ஞான அனுஷ்டானங்கள் இரண்டும்
ஆசார்யன் முக மலர்த்தி ஆகிற உபேயத்துக்கு சேஷமாய் (காரணமாய் ) இருக்கும் -என்கை –
இவனுக்கு உபேயமாய் இருக்கும் என்ற பாடம் ஆனபோது –
ஆசார்யனுக்கு அபிமதமாய் கொண்டு இவை தான் அவனுக்கு உபேயமாய் இருக்கும் -என்றபடி –

நாராயணனே நமக்கே பறை தருவான் -அடுத்து செய்யும் கிரிசைகள் -அதிகாரி விசேஷணம் -சித்த உபாயம் நழுவாமல் இருக்க –
சரம அதிகாரிக்கு ஞான அனுஷ்டானங்கள் -எதற்கு –
அதிகாரி எதிர்பார்க்காமல் ஆச்சார்யர் -அருளுவதால் உபேய அங்கமாய் இருக்கும் –
நம்பிள்ளை மரத்தை தொட்டு முக்தி -அளித்தார் -அரங்க மாளி இடம் நீர் என்னை விட்டாலும் நான் உன்னை விட்டேன் -ஸ்ரீ பாஷ்யகாரர் –
பசுர் மனுஷ்ய பஷி வா –ஆச்சார்யர் சம்பந்தம் மூலம் –
அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ எதிராசா நீ இரங்க வேண்டும்
அதிகாரம் உண்டேல் அவன் -உபாயம் உண்டேல் என்று சொல்ல வில்லை -பிரபன்னனுக்கு அவன் அருளுவான் -உபாயாந்தர ப்ரச்னம் இல்லை –
எதி-யத்னம் செய்பவர்களில் பிரதானர் எதிராசர் என்றவாறே -ஊமை செவிடருக்கும் அருளினார் –
ஜடாயு -ஞானம் அனுஷ்டானம் நிறைய இருந்ததே -ஸ்ரீ ராம கைங்கர்ய நிஷ்டர் -சம்பாதியும் உதவினார் முதலிகளுக்கு —
அதிகாரி சாபேஷமும் இல்லை ஆச்சார்யர் இடம் –
பிராப்தி அனுபவ காலத்தில் ப்ரீதி வளர்க்க திரு முக மலர்த்திக்கு ஞானம் அனுஷ்டானங்கள் அனுபவம் ரசிக்க –
ப்ராப்ய அந்தர்பூதமாய் ஞான அனுஷ்டானங்கள் -உபேய அங்கமாய் இருக்கும் -மற்றவர்களுக்கு உபாயம் நழுவாமல் இருக்க வேண்டும் –
ஆச்சார்ய அபிமதமாய் கொண்டு ஞான அனுஷ்டானங்கள் -இந்த சரம அதிகாரிக்கு போகம் வளர்க்க
மற்றவர்களுக்கு இவை உஜ்ஜீவனம் -அன்ன பானாதிகள் ஜீவனம்
இந்த சரம அதிகாரிக்கு ஞான அனுஷ்டானங்கள் ஜீவனம்
ப்ராப்யமாயும் பிராப்ய அங்கமாயும் என்று இரண்டு நிர்வாஹம் -ஆச்சார்ய முக மலர்த்தியே பிராப்தி அன்றோ
சம்பாவித ஸ்வ பாவங்கள் ஞான அனுஷ்டானங்கள் -ஆனுகூல்ய சங்கல்பாதிகள் -தான் ஞான அனுஷ்டானங்கள் சப்தத்தால் இங்கே

———————————————-

சூரணை -453-

இவனுக்கு நிஷித்த அனுஷ்டானம்- தன்னையும் பிறரையும் நசிப்பிக்கையாலே- த்யாஜ்யம்-

இப்படி ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் -ஆசார்ய ப்ரீதி ஹேதுவாக நினைத்து
குறிக் கொண்டு வர்த்திக்கும் இவ் அதிகாரிக்கு அவஸ்யம் நிவர்தநீயங்களை அருளிச் செய்வதாக –
திரு உள்ளம் பற்றி -பிரதமம் -நிஷித்த அனுஷ்டானம் த்யாஜ்யம் என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஏவம் பூதனான இவ் அதிகாரிக்கு -பரதார பரிஹரகாதி நிஷித்த அனுஷ்டானம் –
ஸ்வ விநாசத்தையும்-ஸ்வ அனுஷ்டானம் கண்டவருடைய விநாசத்தையும் –
பண்ணுகையாலே -பரி த்யஜிக்க படுமது ஓன்று என்கை-

மேல் படியில் இருக்கும் இந்த பஞ்சம -சரம அதிகாரி -இவனை பார்த்து மற்றவர்கள் செய்வார்களே –
ஞானம் அனுஷ்டானம் ஜீவனமாக கொண்ட இந்த அதிகாரி -அக்ருத்ய கரணாதி நிஷித்த அனுஷ்டானங்கள் –
சரம அதிகாரியான தன்னையும் -தன்னைக் கண்ட பிறரையும் நசிப்பிக்கும் –
மீண்டு வர முடியாத படி -ஆகையால் வாசனையுடன் விட வேண்டும்
அனைத்து அதிகாரிகளுக்கும் சாதாரணமான நிஷித்த அனுஷ்டானம் இங்கே சொல்லிற்று –

————————————————

சூரணை-454-

தான் நசிக்கிறது மூன்று அபசாரத்தாலும் – அன்வயிக்கையாலே –
பிறர் நசிக்கிறது – தன்னை அநாதரித்தும் – தன் அனுஷ்டானத்தை அங்கீகரித்தும் –

உபய விநாசமும் இத்தாலே வருகிறபடி எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஆசார்ய அபிமானத்திலே ஒதுங்கி –
பகவத் -பாகவத -ஆசார்ய -விஷயங்கள் மூன்றுக்கும் -அபிமத விஷயமாய் இருக்கிற தான் நசிக்கிறது –
அம் மூவருக்கும் அது அநிஷ்டம் ஆகையாலும் –
அபசாரம்-ஆவது -அநிஷ்ட கரணம் ஆகையாலும் –
அதி க்ரூரமான அபசார த்ரயத்திலும் அந்வயிக்கையாலே –
பிறர் நசிக்கிறது –
சரம பர்வ பர்யந்தமாக வந்து நிற்கிற பாகவத உத்தமனான தன்னை நிஷித்த அனுஷ்டானம் பண்ணினான் என்று அநாதரித்து-
தத்வ வித்தான இவன் இப்படிச் செய்கிறான் -இதில் தோஷம் இல்லையாகப் பட்டன்றோ -நமக்கு பின்னை என் என்று –
தன்னுடைய அனுஷ்டானத்தை தாங்கள் அங்கீகரித்தும்  -என்கை —
அநாதரிப்பார் பாகவத வைபவம் அறியாதவர்கள் –
அனுஷ்டானத்தை அங்கீகரிப்பார் -ப்ராப்த ப்ராப்ய விவேக சூன்யர் ஆனவர்கள் –
அனுஷ்டானத்தை அங்கீகரிக்கிறவர்கள் நசிக்கிறார்கள்-அநாதரித்தவர்கள் நசிப்பான் என் –
தோஷம் கண்டால் அநாதாரிக்கல் ஆகாதோ என்னில் –
ராஜ புத்ரனனுக்கு தோஷம் உண்டானால் -ராஜா தான் சிஷித்து கொள்ளும் அது ஒழிய
அவனை அநாதரித்தவர்கள் மேலே நிக்ரஹம் பண்ணி தண்டிக்குமா போலே –
ஸ்வ அபிமதனான இவனுக்கு தோஷம் உண்டானாலும் -சர்வேஸ்வரன் தானே திருத்திக் கொள்ளும் அது ஒழிய
பிறர் அநாதரிக்க பொறாமையாலே- அநாதரித்தவர்களுக்கு விநாசமே பலிக்கையால் அநாதரிகல்  ஆகாது –

அபிசேத சூதுரா சாரோ பஜதேமாம நந்யபாக் சாதுரேவச மந்தவ்ய ஸ் சம்ய க்வ்யவஹி தோஹிச-என்று
உபாஸக விஷயமாக அருளிச் செய்தபடி கண்டால்-எல்லை நிலத்தில் வந்து நின்ற இவ் அதிகாரி
விஷயத்தில் இவன் இருக்கும்படி சொல்ல  வேண்டா இறே-
ஆகையால்-
இப்படி தானும் பிறரும் நசிக்கும்படி இருக்கையாலே -இவனுக்கு நிஷித்த அனுஷ்டானம் பரித்யாஜ்யம் -என்றது -ஆயிற்று –

ஸ்வரூபம் அழியாதே -நசிப்பது என்பது பின்னடைவு –
நிஷித்த அனுஷ்டானத்தில் பயம் கேட்டு அந்வயிப்பதால் பகவத் பாகவத ஆச்சார்ய அபசாரம் –
தனக்கு பிராமாதிகமாய் அறியாமல் செய்த அக்ருத்ய கரணாதி நிஷித்த அனுஷ்டாதானம் கண்டு அநாதரித்தும்
ஞானியான இவன் செய்ய நாம் செய்தால் என் என்று -நோ இதராணி-ஆதரித்து பண்ணும் நல்லத்தை மட்டும் பின் பற்ற வேண்டுமே –
வேணும் விவேக ஞானமும் வேணும் –
தேஜஸ் குற்றங்களை மறைக்கும் -தெரியாமல் செய்த குற்றங்கள் -இவனுக்கு -பார்த்து பிறர் அநர்த்தம் படுவார்கள் –
ஆகையால் அறியாமலும் நிஷித்த அனுஷ்டானங்கள் தவிர்க்க வேண்டுமே
அவனுக்கு அது கிடையாது என்னும்படி அன்றோ உயர்ந்த நிலை சரம பர்வ நிஷ்டனுக்கு

———————————————

சூரணை -455-

விஹித போகம் நிஷித்த போகம் போலே – லோக விருத்தமும் அன்று –
நரக ஹேதுவும் அன்றாய் – இருக்க செய்தே –
ஸ்வரூப விருத்தமுமாய் -வேதாந்த விருத்தமுமாய் -சிஷ்ட கர்ஹிதமுமாய் –
ப்ராப்ய பிரதிபந்தகமுமாய் -இருக்கையாலே -த்யாஜ்யம் –

இப்படி பரதாராதி போகம் -ஸ்வ -பர -விநாச ஹேது வாகைக்கு அடி -சாஸ்திர நிஷித்தமாகை -இறே –
இங்கன் அன்றிக்கே -சாஸ்திர விஹித விஷயமான -ஸ்வதார போகத்துக்கு குறை இல்லையே -என்ன –
அருளிச் செய்கிறார் -மேல் –

அதாவது –
விசிஷ்ட வேஷ விஷயீயான சாஸ்த்ரத்தாலே விதிக்கப் பட்ட -ஸ்வ தாரத்தில் போகம் –
தாத்ருச சாஸ்திர நிஷித்தமான -பர தார போகம் போலே –லோக விருத்தமும் -அன்று –
செம்பினால் இயன்ற பாவையை தழுவுகை முதலான கோர துக்க அனுபவம் பண்ணும் நரக ஹேதுவும் அன்று —
இப்படி ப்ரத்யஷ பரோஷ சித்தங்களான லோக விருத்த நரக ஹேதுக்கள் இரண்டும் அற்று இருக்கச் செய்தே –
அநந்ய போகத்வ ரூபமான ஸ்வரூபத்துக்கு விருத்தமாய் –
சாந்தோதாந்த உபதர ஸ்திதி ஷூச்சமாஹிதோ பூத்வாத்மந்யே வாத்மானம் பச்யேத்-இத்யாதிகளாலும் –
திருமந்த்ராதிகளாலும் -உபாசகனோடு பிரபன்னனோடு வாசி அற-இருவருக்கும் -விஷய போகம் ஆகாது என்னும்
இடத்தைப் பிரதிபாதிக்கிற -வேதாந்தத்துக்கு விருத்தமாய் -தோஷ தர்சனத்தாலும் -அப்ராப்த்த தர்சனத்தாலும் –
விஷய போகத்தை அறுவறுத்து   இருக்கும்
ஆசார்ய பிரதானரான சிஷ்டர்களாலே ஹேயம் என்று நிந்த்திகப் பட்டு இருக்குமதாய் –
அப்ராப்த விஷய விரக்தி பிரியனான ஆசார்யனுக்கு அநபிதம் ஆகையாலே –
ஆசார்ய முக கமல விகாச அனுபவ ரூப ப்ராப்யத்துக்கு பிரதிபந்தகமாய் –
இப்படி அநேக அநர்த்தா வஹமாய் இருக்கையாலே -இவ் அதிகாரிக்கு
பரித்யாஜ்யம் -என்றபடி –

சாஸ்திரம் விஹிதம்-விசிஷ்ட விஷயம் -வர்ணாஸ்ரமம்-சரீரத்துடன் உள்ள ஆத்ம வேஷம் –
நிஸ்க்ருஷ்ட சாஸ்திரம் ரஹஸ்ய த்ரயம் தானே –
கணவனும் மனைவியும் -நிலம் கீண்டதும் -சொல்லிப்பாடி -அது குற்றம் இல்லை -அநந்ய போகத்வ ரூபம் -ஸ்வரூபம் விருத்தம் ஆகக்கூடாதே
நிரந்தர ஸ்னேஹ ரூபம் -பக்த்யா அநந்யா ஸ்நேஹம்-வேதாந்தம் விதிக்கும் -அவிச்சின்ன ஸ்ம்ருதி சிந்தனை வேணும்
அந்தரம் -நடுவே குறுக்கே -அநந்தரம் தடங்கல் இல்லாமல் – அநந்யத்வம் பங்கம் உண்டாகும் –
எம்பார் போல்வார் -விசிஷ்ட வேஷத்திலும் -எங்கும் இருட்டு காண வில்லையே விரக்த அக்ரேஸர்
கைங்கர்யம் முகப்பே கூவி பணி -அர்த்தி அபேக்ஷ நிரபேஷமாய் இருக்குமே

——————————————

சூரணை -456-

போக்க்யதா புத்தி குலைந்து – தர்ம புத்த்யா பிரவர்த்தித்தாலும்
ஸ்வரூபம் குலையும் –

போக்யத்தா புத்தியை விட்டு தர்ம புத்த்யா வர்த்திக்கும் அளவில் -இவை ஒன்றும்
இல்லையே -என்ன -அருளிச் செய்கிறார் -மேல்-

அதாவது –
விஹித விஷய பிரவ்ருத்தியில் காமுகதயா வரும் போக்யதா புத்தியை விட்டு –
உபாசகரான மகரிஷிகள் தொடக்கமான சிஷ்டர் பைத்ரு கருண மோசக பிரஜோத்பாதந அர்த்தமாகவும் –
ஸ்நான திவசத்தில்  அங்கீகரியாவிடில் ப்ப்ரூனஹத்யாதி தோஷம் உண்டு என்னும்  அத்தை பற்றவும் –
தர்ம புத்த்யா ப்ரவர்த்திக்குமா போலே –
இவனும் அப்படி தர்ம புத்த்யா ப்ரவர்த்தித்தாலும்
சித்த தர்ம நிஷ்டனான இவனுக்கு -அந்ய தர்ம அந்வயம்-விரோதி ஆகையாலே –
அநந்ய உபாயத்வ  ரூபமான ஸ்வரூபம் குலையும் -என்கை-
இத்தால்-
போக்க்யதா புத்த்யா ப்ரவர்த்திக்கில் -அநந்ய போகத்வ ரூபமான ஸ்வரூபம் குலையுமோ பாதி –
தர்ம புத்த்யா ப்ரவர்த்திக்கில் -அநந்ய உபாயத்வ ரூபமான ஸ்வரூபம் -குலையும் என்கை —
ஆன பின்பு ஒருபடியாலும் -இவ் அதிகாரிக்கு விஹித  விஷய பிரவ்ருத்தி ஆகாது என்றது -ஆயிற்று –
ஆகையாலே
ஏதேனும் ஒருபடி அன்வயித்தாலும் ஸ்வரூப ஹானி தப்பாது –
ஆனபின்பு பரித்யஜிக்க வேணும் என்னும் இடம் நிச்சிதம் -இறே-

பித்ரு கடன் –தீர்க்க -தர்ம புத்தயா -செய்தாலும் -ஸ்வரூபம் குலையும் –
விஹித போகத்தால்-பிரஜைகளால் -இவை பிரபன்னனுக்கு இல்லை –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்றதோடு விரோதிக்கும் –
தேவ ரிஷி பித்ரு கணங்களுக்கு கிங்கரன் அல்லனே பிரபன்னன் –
கீழே நின்ற நிலைக்கே இல்லாத போது இங்கு சொல்ல வேண்டுமோ –
பகவத் ஏக போக ஸ்வரூபம் குலையக் கூடாதே

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –441-449- சரம பர்வ நிஷ்டா-குரோர் உபாயதாஞ்ச பிரகரணம் –ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் / ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்-

May 26, 2018

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -8o–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது ஆறாவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் /
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் /

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகாரஞ்ச ச வைபவம் (ச -உபாய வைபவமும் இதில் உண்டே )-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது ஒன்பதாவது பிரகரணம்

த்வய அபிபிரேரிதமான – த்வய யுக்த அர்த்த ஞானமும் -தத் உபதேச ஆச்சார்யர் அனுவர்த்தனைத்தையும் அருளிச் செய்து –
அதுக்கு மூல பூதமான பகவத் கிருபை -ஹேதுதா சங்கதி –
நிவர்த்ய ஞானம்–கர்மா அவித்யாதி தோஷங்கள் நினைத்தால் – பய ஹேது /-நிவர்த்தக பகவத் குண அனுசந்தானம் ஞானம்–பயம் கெடுக்கும் ஹேது
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -/ படிக்கட்டுக்கள் அத்வேஷம் தொடங்கி பிராப்தி வரை -நிர்ஹேதுக கிருபையே காரணம் –

ஆறு பிரகரணங்களில் இறுதியான
சரம பர்வ நிஷ்டா பிரகரணம் –

———————————————————

சூரணை -441-

இரண்டும் அமையாதோ -நடுவில் –
பெரும்குடி என் என்னில் –

இப்படி ஆசார்ய சம்பந்த்தத்தை ஒழிய -பகவத் சம்பந்தம் லபியாமையாலே –
ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு இரண்டும் வேணும் என்னும் அத்தை தர்சிப்பித்த அநந்தரம்-
பாகவத விஷய சம்பந்தமும் அவ்வோ பாதி இவனுக்கு அவஸ்ய அபேஷிதம் என்னும் அத்தை
தர்சிப்பிக்கைக்காக தத் விஷயநத்தை அனுவதிக்கிறார்

அதாவது –
ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு -பகவத் சம்பந்த ஸ்தாபாகமான ஆசார்ய சம்பந்தமும் –
தத் ஸ்தாபிதமான பகவத் சம்பந்தமும் ஆகிய உபயமும் போராதோ-
ப்ராப்ய மத்யம பர்வ உக்த தயா -நடுவில் பெரும்குடி போலே இருக்கிற பாகவதர்களோடே-சாத்விகைஸ் சம்பாஷணம் -என்கிற
சம்பந்தம் அத்தை பற்ற வேண்டுவது என்கிறதாகில்-என்கை –

பாகவத சமுதாய சம்பந்தம் -நமஸ் ஆழ்ந்த அர்த்தம் -எதுக்காக -ஆச்சார்ய பிராப்திக்காகவா பகவத் பிராப்திக்காகவா -ப்ரச்னம்-

——————————————-

சூரணை -442-

கொடியை கொள் கொம்பிலே துவக்கும் போது –
சுள்ளிக் கால் வேண்டுமா போலே –
ஆசார்ய அந்வயத்துக்கும் இதுவும் வேணும் —

இப்ப்ரசனத்துக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

அதாவது
உபக்ந அபேஷமாய் வளருவதொரு கொடியை அதின் பரிணாமத்துக்கு எல்லாம் இடம் கொடுக்கத் தக்க பெரியதொரு பக்நத்திலே
சேர்க்கும் போது-முதலிலே அது தன்னோடே சேர்க்கப் போகாமையாலே-தரைப் படாமல் முந்துற -தான் இதுக்கு ஆஸ்ரயமாய் கொண்டு –
அணுகி நின்று தன்னோட்டை அந்வய முகேன கொள்கொம்பில் கொழுந்துவிக்கும் சுள்ளிக்கால் அபேஷிதம் ஆகையால் –
கோல் தேடி யோடும் கொழுந்து போலே -அபிமுகனான இச் சேதனன் -ஆஸ்ரித தப்பதியாமல் உத்தரிப்பிக்கும்
மகத ஆசார்யன்( பேராளன் பேரோதும் பெரியார் ) திருவடிகளில்
அன்வயிக்கும் போது -முதலில் ததன்வயம் சித்திக்கை அரிது ஆகையாலே -முந்துற தாங்கள் அசந்னராய் நின்று -தங்களோடு இணைக்க வைத்து –
அவ்வழி யாலே ஆசார்ய விஷயத்தில் சேர்க்கும் -பாகவதர்களோட்ட சம்பந்தம் அவஸ்ய அபேஷிதம் -என்கை–
இப்படி ஆசார்ய அன்வயத்துக்கு அடி பாகவதர்கள் ஆகையால் -ஆசார்ய லாபம் பகவானாலே -என்பான் ஏன் என்னில் -அதுக்கு குறை இல்லை –
பாகவத அன்வயம் தனக்கு அடியவன் ஆகையாலே -ஆபிமுக்க்ய பர்யந்தமாக தானே கிருஷி பண்ணிக் கொண்டு வந்து –
பின்னை பாகவதர்களோடு இணக்கி -அவ்வழியாலே இறே அவன் தான் ஆசார்ய விஷயத்தில் சேர்ப்பது –
இது இத்தனையும் இவர் அருளி செய்த த்ருஷ்டாந்தத்திலே சித்தம்-
(அத்வேஷம் ஆபீ முக்கியம் -பர்யந்தம் தானே -மேலே பாகவதர்கள் மூலம் )
எங்கனே என்னில் –
சேதனனை- கொடியினுடைய ஸ்தாநே யாகவும்-
பாகவதர்களடைய சுள்ளிக் காலினுடைய ஸ்தாநேயாகவும் -அருளிச் செய்கையாலே
கர்ஷகனாய் இருப்பான் ஒருவன் ஸ்வ பிரயோஜன அர்த்தமாக –
முதலிலே வித்தை இட்டு -முளைவித்து -கொழுந்து விடும் அளவும் –
வளர்த்து கொண்டு போந்த தொரு கொடியை-இனி இதுக்கு இனி ஒரு பக்னம் வேண்டும் என்று
தானே யுபக்னமும் தேடி -அதிலே சென்று ஏறுகைக்கு  சுள்ளிக் காலும் நட்டு –
அவ்வழியாலே உபபக்னத்தில் சேர்க்குமா போலே –
சர்வ சேஷியான சர்வேஸ்வரன் -ஸ்வ பிரயோஜன அர்த்தமாக இச் சேதனனை முதலிலே  சிருஷ்டித்து –
ஈச்வரச்யச  ஸௌ ஹார்த்தம் -இத்யாதிப் படியே -க்ரமேண ஆபிமுக்க்ய பர்யந்தமாக விளைத்து –
இவனுக்கு ஓர் ஆசார்யனையும் இன்னான் என்று -தானே திரு உள்ளம் பற்றி –
அவனோடு சேரும் பாகவதர்களோடு முதல் அன்வயிப்பித்து –
அவ்வழியாலே ஆசார்ய விஷயத்தில் அன்வயிப்பிக்கும் என்னும் இடம்
தோற்றுகையாலே-கொள்கொம்பிலே ஏறவிட்ட கர்ஷகனுக்கே -அந்த கொடியால் உள்ள பிரயோஜனம் போலே –
ஆசார்ய விஷயத்தில்  ஈஸ்வரன் சேர்த்த சேதனனால் உள்ள  பிரயோஜனமும் ஈச்வரனது என்னும் இடமும் பலிதம் –
இனி அசேதனமான கொள்கொம்பு போல் அன்றியே -சேதன உத்தமனான இவ் ஆசார்யன் தானும் பர சம்ருத்த்ய ஏகபரன்
ஆகையாலே -ஸ்வ சேஷியான ஈஸ்வரனுடைய பிரயோஜனமே ஸ்வ பிரயோஜனமாக நினைத்து இருக்கும் இறே –

வளர் இளம் கொடி-ஆத்மா –சுள்ளிக்கால் -போலே–கோல் தேடி ஓடும் கொழுந்ததே போலே மால் தேடி போகும் –
அபி முகனான இவனுக்கு ஆச்சார்ய சம்பந்தம் பெற –ததீய சம்பந்தம் -நடுவில் –
அப்புறம் நடுவில் தருவித்துக் கொள்ள வேண்டும் -பகவத் ப்ரேமம் வளரவும் இந்த சம்பந்தம் திடமாக இருக்கவும் –
போதயந்த பரஸ்பரம் சம்சாரத்தில் வேண்டுமே –
பாகவதர்கள் -மூன்று கர்தவ்யம் -ஆச்சார்யர் இடம் சேர்ப்பித்து –
அப்புறம் தேவதாந்த்ர சம்பந்தம் வராமல் பக்தி ஞானம் வளர்க்க –
அங்கும் அந்தமில் பேரின்பத்து அடியவரோடு கைங்கர்யம் வர்த்தகத்துக்கு -வேண்டும் –
ஆச்சார்ய சம்பந்தம் ததீய சம்பந்தம் ஒன்றுமே போதும் –
பகவத் ஸமாச்ரயணத்துக்கு இரண்டும் வேண்டும் -கையைப் பிடித்து கூட்டிச் செல்பவர்கள் இவர்கள் –

——————————————————

சூரணை-443-

ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு –
ஆசார்ய அபிமானம் ஒழிய -கதி இல்லை என்று -பிள்ளை பலகாலும் அருளி செய்ய –
கேட்டு இருக்கையாய் -இருக்கும் –

இனி -இந்த சூரணை தொடக்கி ஆசார்ய அபிமானமே உத்தாரகம்-என்னும் அளவாக
இப்படி ததீயர் முன்னாக பற்றப் படும்  சதாச்சார்யனுடைய அபிமானமே உஜ்ஜீவனத்துக்கு
உசித உபாயம் என்று இப் பிரபந்த தாத்பர்யத்தை பிரகாசிப்பித்தது அருளுகிறார் –

பெருவிலையான ஆபரணத்துக்கு நாயகக் கல் போலே ஆயிற்று
ஸ்ரீ வசன பூஷணத்துக்கு இப் பிரதேசம் நாயக ரத்னமாய் இருக்கும்படி –
இத்தனையும் அருளிச் செய்கையைப் பற்ற வதிஷ்டிக்கை இட்டுக் கொண்டு வந்தது கீழ் அடங்கலும்-
மேல் அடங்கலும் இதில் நிஷ்டையை ஸ்தாபிககிறது–
இதில் பிரதமத்தில் –
இவ் அர்த்தம் -சத் சம்ப்ரதாய சித்தம் என்று சர்வரும் விசவசிக்கைக்கு உடலாக –
இது தமக்கு ஆப்த உபதேச லப்தம் என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
அநாதிகாலம் தானே எனக்கு நிர்வாஹன் என்று இருக்கும் தன்னுடைய துர் அபிமானத்தாலே இவன் நமக்கு சேஷம் –
இவன் கார்யம் நமக்கே பரம் என்று தன்னை -உஜ்ஜீவிப்பிகைக்கு உடலான ஈஸ்வர அபிமானத்தை அழித்து கொண்ட இவனுக்கு –
துர்கதியே பற்றாசாக அங்கீகரித்து -தன்னுடைய உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணிப் போரும் பரம தயாளுவான ஆசார்யன் –
இவன் நம்முடையவன் என்று அபிமானித்து இருக்கும் அந்த அபிமானம் ஒழிய வேறு உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று –
சகல சாஸ்திர சார வித் அக்ரேசரான-நம்பிள்ளை-திருவடிகளிலே பழுக்க சேவித்து -தத் ஏக பரதந்தரராய் –
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் -அவர் அருளிச் செய்ய கேட்டு –
தந் நிஷ்டராய் இருக்கும் நம்முடைய ஆசார்யரான பிள்ளை -தஞ்சமாக பலகாலும் அருளிச் செய்யக் கேட்டு இருக்கையாய் இருக்கும் -என்றபடி –
ஆகையால்-ஆசார்ய அபிமானமே இவ் ஆத்மாவுக்கு உஜ்ஜீவன உபாயம் -என்று கருத்து –

ரத்னம் போன்ற சூரணை இது -மேம் பொருள் பாசுரம் போலே -கீழே பெட்டி-மேலே மூடி போலே
வடக்குத்திரு வீதிப்பிள்ளை திரு வாக்கு -இவர் திருத் தமப்பனார் தானே -பலகாலும் அருளிச் செய்ய கேட்டு இருப்பார் –
நமஸ் பாத தாத்பர்யம் ததீயர் முன்னால் ஆச்சார்யரைப் பற்றி அவர் அபிமானம் உஜ்ஜீவன ஹேது –
சிர காலம் சதாச்சார்ய சேவா மூலம் பெற்ற பிரமேய சாரம்
சர்வ சமாதி பரம் சர்வேஸ்வரன் தவம் மே மதீயத்வ அபிமானம் -அஹம் மே-மன்றாடி குலைத்துக் கொண்டு-
அஸத்சமனான–நம்முடையவன் விசேஷ கடாக்ஷம் பண்ணி அபிமானம் ஒன்றே உஜ்ஜீவன ஹேது -வேறு ஒன்றும் இல்லை –
நம்மாழ்வார் அவதாரமான நம்பிள்ளை திருவடிகளில் கைங்கர்யம் செய்து -அடியேனுக்கு தஞ்சம் –
தேன் பொழிய அருளிச் செய்து வடக்குத் திரு வீதி பிள்ளை கேட்டு அருளிச் செய்து
விசேஷ கடாக்ஷ பூதர்–தத் ஏக பர தந்த்ரர் –எத்தனை தடவை ஏகாந்தமாக கேட்ட பொழுது எல்லாம் இந்த பரம ரஹஸ்யம்
அருளிச் செய்ய பிள்ளை லோகாச்சார்யார் -நெஞ்சும் செவியும் நிறைய கேட்டு –
இதுவே தஞ்சம் -என்று அறுதியிட்டு நிர்ப்பரராய் நிஸ் சம்சயனாய் இருக்கலாமே –
அஷ்டாதச ப்ரபந்தங்களில் சரம பிரபந்தம் -ஸ்ரீ வசன பூஷணம் -அதில் இது சரம வசனம் –

இவன் நம்முடையவன் என்று அபிமானித்து இருக்கும் அந்த அபிமானம் ஒழிய-ஆச்சார்யரை நாம் அபிமானத்து இருப்பதும் உஜ்ஜீவன ஹேது இல்லை –

————————————————

சூரணை -444-

ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று –

இப்படி ஆசார்ய அபிமானம் ஒழிய கதி இல்லை-என்பான் என்-
சாஸ்திர சித்தங்களான பக்த்த்யாத் உபாய விசேஷங்கள் உண்டே என்கிற சங்கையிலே –
இது ஒழிந்தவை எல்லாம் -இவனுக்கு உபாயம் அன்றிக்கே நின்றமையை அடைவே அருளிச் செய்கிறார் மேல் –
அதில் பிரதமத்தில் பக்தி உபாயம் இன்றி நின்ற படியை அருளிச் செய்கிறார் –

அதாவது –
பகவத் ப்ராப்தி சாதனா தயா விஹிதையாய்  ஸ்வ யத்ன சாத்த்யையான பக்தி –
பகவத் ஏக பாரதந்த்ர்ய விரோதியான ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தை உண்டாக்கும்
என்னும் பயத்தாலே இவனுக்கு உபாயம் அன்றியிலே நழுவி நின்றது -என்கை –

சாஸ்திரம் விதித்த பக்தி பிரபத்தி -ஸ்வரூபம் நினைக்க பயம் -ஸ்வ பர அனுசந்தான -பயம் த்வயம்
நம் தோஷ அவன் ஸ்வா தந்தர்ய அனுசந்தான த்வயத்தாலும் பயம் –
ஸ்வரூப ஹானி -பாரதந்தர்யத்துக்கு கொத்தை -பக்தி விருத்தம் –
ஸூ யத்ன சாதிய பக்தி உபாயம் உறங்குகிறவன் கையில் எலுமிச்சம் பழம் போலே தன்னடையே நழுவுமே

——————————————

சூரணை -445-

பகவத் ஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பிரபத்தி நழுவிற்று —

அநந்தரம்-பிரபத்தி உபாயம் அன்றியே நின்றபடியை அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஸ்வ பாரதந்த்ர்ய அநு ரூபையாய்-மகா விசுவாச ரூபையான பிரபத்தி –
பந்த மோஷ உபய நிர்வாஹனான பகவான் தன் ஸ்வாதந்த்ர்யத்தாலே
மீளவும் -கர்ம அநு குணமாக வைத்த சிந்தை வாங்குவித்து சம்சரிப்பிக்கில் செய்வது என் என்கிற மகா பயத்தாலே –
இவனுக்கு உபாயம் அன்றியிலே நழுவி நின்றது -என்கை –

பந்த மோக்ஷ ஹேது தன் இச்சைப்படியே -செய்யும் பகவத் ஸ்வாதந்தர்யம் -மஹா பயம் –
தத் விஷய மஹா விசுவாசம் குலைந்து பிரபத்தி நழுவுமே
நடுங்கினவன் நெஞ்சில் தைர்யம் போலே நினைவற நழுவுமே
ஸூவ ஸ்வரூப பர ஸ்வரூப அனுசந்தானந்தத்தால் -சரம உபாயம் ஞானம் வந்தவனுக்கு-முமுஷுவுக்கு –
பஞ்சம உபாயம் அறிந்தவனுக்கு இரண்டும் நழுவும்

———————————————–

சூரணை -446-

ஆசார்யனையும் தான் பற்றும் பற்று -அஹங்கார கர்ப்பம் ஆகையாலே –
காலன் கொண்டு மோதிரம் இடுமோ பாதி –

அநந்தரம் -ஆசார்ய விஷயத்தில் ஸ்வகீய ஸ்வீகாரம் உபாயம் அன்றிகே ஒழிந்தமையை
அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஆசார்யனையும் உபாயமாக- தான்- ஸ்வீகரிக்கிற ஸ்வீகாரம் –
ஸ்வ பலித்வ கர்த்ருத்வ ரூபமாய் -ஸ்வரூப நாசகமாய் இருக்கிற அஹங்காரத்தை உள்ளே உடைத்தாய் -இருக்கையாலே –
ஸ்வ விநாச கரமான காலனை பரிகிரஹித்து -அந்தப் பொன்னாலே அங்குள்யக தாரணம் பண்ணினால் அவத்ய கரமோபாதி
தன்னுடைய ஸ்வரூபத்துக்கு அவத்ய கரமாய் இருக்கும் -என்கை –
ஆகையால் இதுவும் உபாயம் அன்றியே நின்றது என்று கருத்து –

தூ மணி / நோற்று சுவர்க்கம் -தூங்கும் -என்றாலே பிரபத்தி -ஸூ வகத பிரபத்தி –
ஆனந்தம் ப்ரஹ்மானோ வித்வான் -ஸூ கத பிரபத்தி சுருதி வாக்கியம் -தூ மணி பாசுர விஷய வாக்கியம்
ஏஷ-அவன் யாருக்கு தன் ஆனந்தம் ஊட்டுகிறானோ -பரகத் ஸ்வீ காரம்
ஆச்சார்ய அபிமானமும் -இதே போலே ஸ்வா தந்த்ரயம் வர யோக்யதை இல்லாமல் இருக்க வேண்டுமே
அகங்கார கர்ப்பம் -ஆச்சார்ய உபாய வாரணம் -நித்ய ஸ்வாமி -அவனுடைய ஸ் வம்மான தானே –
சொத்து பிரார்த்திக்க கூடாதே -தனக்கு ஆச்சார்யர் உபாயமாக
வேணும் என்பது ஸ்வரூப விருத்தமான பற்று –ஸூ பலித்தவ -அபிமானித்து சொத்தை ஸ்வாமி கொள்ள வேண்டுமே -பாரதந்த்ரயம் சித்திக்கும் –
நாம் பலன் அடைகிறோம் என்ற உத்தி அகங்கார கர்ப்பம் ஆகுமே
ஸூ விநாசம் பாராமல் -தங்க மோதிரம் -வாங்க கூடாத காலன் பொம்மை -சாவாமல் பிழைத்தால் -அருளாழி மோதிரம் -இட்டு வாழுமோ பாதி –
பகவத் விஷயம் போலே -ஸூவ கத–குரங்கு குரங்கு குட்டி போலவும் – பரகத-பூனை பூனைக்குட்டி போலவும் இங்கும் உண்டே –
பக்தி முதல் நிலை -ஸூவகத பிரபத்தி அடுத்து -பர கத பிரபத்தி அடுத்து இதிலும் -பர ஸ்வா தந்திரம் -கொத்தை –
ஆகையால் ஆச்சார்யர் அபிமானம் -இதிலும் -பர கத ஸ்வீ காரம் வேண்டுமே –
ஆச்சார்யர் பயனுக்காக -என்றே இருக்க வேண்டுமே –
உபாயம் எதிர்பார்ப்பு பக்தியில் -அதிகாரி எதிர்பார்ப்பு -அடுத்து பிரபன்னன் இடம் –
ஆச்சார்யர் அபிமானம் இத்தையும் எதிர்பார்க்காமல் -மத் அர்த்தம் இந்த செயல் -என் பொருட்டு இது என்ற எண்ணமும் இருக்காதே –
இதில் -ஸூ பல ஸூ யத்னம் அஸஹத்வ ஸ்வரூபம் என்று உணர வேண்டும் – –
சேஷத்வம் -பலன் நம்மது இல்லை பாரதந்த்ரம் முயற்சி நம்மது இல்லை –
பகவத் அத்யந்த அபிமத -விசேஷ ப்ரீதி குலைய கூடாதே -ஸ்வரூபம் நாஸகம் அடையும்

——————————————————-

சூரணை -447-

ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –

பாரிசேஷயாத் கீழ் தாம் அருளிச் செய்ததே உபாயம் என்று தலை கட்டுகிறார்-
(பாரி சேஷம் –பாதிப்புக்கள் இல்லாமல் -கீழே சொன்னதையும் வேறே எதுவும் இல்லாமல் இருக்க வேண்டுமே –
ஸூ கத ஸ்வீ காரமும் இல்லாமல் -என்றபடி –
சம்சாரத்தில் வெறுப்பு -பரதந்த்ரம் ஸ்வரூபம் அறிந்து -சேதனன்-சம்சார பீதி -அனைத்துக்கும் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டுமே –
ஆச்சார்ய அபிமானம் -உபாயத்தையோ அதிகாரி யோக்யதையையோ -அதிகாரியையோ எதிர்பார்க்காதே –
விசேஷ ஸாத்ய சித்தியே பாரி சேஷம் -அனைவருக்கும் பொருந்தும் -)

அதாவது –
மோஷ சாதனா தயா சாஸ்திர சித்தங்களான -பக்தியாதிகள் ஒன்றும் உபாயம் அன்றியிலே நின்ற பின்பு -நிரதிசய க்ருபாவானாய்
நிர்ஹேதுகமாக-தன்னை அங்கீகரித்து அருளி -நிரபயமாக நோக்கிக் கொண்டு போரும் ஆசார்யன்- இவன் நம் உடையவன் என்று இருக்கும்
அந்த அபிமானமே இவனை சம்சாரத்தின் நின்று நம்மை உத்தரிப்பிக்கும் -என்கை –
ஆக –
ஸ்வதந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே -என்று துடங்கி –
உபபாதித்து கொண்டு வந்த -சரம உபாய ஸ்வரூபத்தை -உள்ளபடி சோதித்து நிர்ணயித்து அருளினார் ஆயிற்று –

வேதார்த்தம் ஆச்சார்ய அபிமானம் உத்தாராகம் -தொடக்கமும் முடிவும் சேர்த்து -அருளிச் செய்கிறார் -இதுவே கடைந்து எடுத்த தாத்பர்யம் –
தரணம் தாண்டுதல் -சம்சாரம் தூண்டுவிக்கும் -உத்தாரகம் –
சரம உபாய ஸ்வரூபம் சோதனம் பண்ணி நிச்சயித்து -கல்லை ஆராய்ந்து சோதித்து போலே உமி -ஸூ கத தோஷம் இருக்கக் கூடாதே
சம்சாரம் தாண்டுவித்து ஸ்ரீ வைகுண்டத்துக்கு தூக்கி வைக்கும் -உத்தாரணம் உத்தாரகம்

—————————————————

சூரணை -448-

கைப் பட்ட பொருளை கைவிட்டு
புதைத்த பொருளைக் கணிசிக்க
கடவன் அல்லன் –

அநந்தரம் இவ் உபாய நிஷ்டனான அதிகாரிக்கு –
கர்தவ்ய அகர்தவ்ய விசேஷங்களை விஸ்தரேண அருளி செய்கிறார் –
அதில் பிரதமத்தில் -சுலபமான ஆசார்ய விஷயத்தை விட்டு
துர்லபமான பகவத் விஷயத்தை இச்சிப்பான் அல்லன் என்னும் இடத்தை
த்ருஷ்டாந்தன முகேன அருளிச் செய்கிறார் –

அதாவது –
கையிலே இருக்கிற தனம் போலே அதி சுலபனாய் இருக்கிற ஆசார்யனை குறைய நினைத்து –
அநாதாரத்தாலே கை விட்டு -பூமியிலே பிறர் புதைத்து வைத்த தனம் போலே –
எட்டுப் படாமையாலே -அரும் பொருள்-என்னும்படி -துர்லபமான
பகவத் விஷயத்தை ரஷகமாக பற்ற -விச்வசிக்க கடவன் அல்லன் -என்கை –
சுலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் உபாசதே
லப்ப்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்தம் அந்வேஷதி ஷிதெவ்-என்றும் –
பற்றி குருவை -என்று துடங்கி –
தன் கைப் பொருள் விட்டார் யேனும் காசினியில் தாம் புதைத்த
வப்பொருள் தேடித் திரிவான் ஒத்து -என்றும்
சொல்லக் கடவது -இறே-

தீர்த்த அடியான் -சதாச்சார்யர் அபிமானத்தில் ஒதுங்கி -அற்று தீர்ந்த -ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே –
அத்யாவசியம் -விசேஷத்தை அருளிச் செய்கிறார் -அத்யந்த ஸூ லபம் -சீரியன் -அத்யாவசாய மாந்தியத்தால் –
மந்த புத்தி குழப்பம் -பாக்யம் அற்று விட்டு
புதைத்த பொருளாய் -எட்டுப்படாமல் துர்லபமான பகவத் விஷயத்தை உத்தேச்யமாக வருந்தி தேட கடவன் அல்லன் –
ஸுலப்யமே குறையாக நினைக்கப் பண்ணுமே -சஜாதீய பத்தி பண்ணி அநாதரித்து -அத்யாவசியம் குலைந்து –
பிறர் புதைத்த புதையலை தேடி -அரும் பொருள் -பகவத் விஷயம் ரக்ஷகன் என்று தேடி அலைந்து -வீணாகிறார்களே –
உபாயம் -கர்மாதிகளை விட்டு -அபாயம் -துர் நடத்தை பற்றாமல் -பிரதம பர்வ நிஷ்டை
அதே போலே சரம பர்வ த்தில் -தான் பற்றவும் கூடாது -ஆச்சார்யர் இடம் தோஷமும் காண முயலக் கூடாது -பிரதம பர்வ ஆஸ்ரயணம் கூடாதே –
சோதித்து அருளிச் செய்கிறார்
சுள்ளிக்கால் இத்யாதி -442-புருஷகார வைபவமும்
பூர்வ உத்தர கிரந்தங்கள் உபாயா வைபவம்
உபாயாந்தர தோஷம் -ஸூ ஸ்வதந்த்ர பர ஸ்வாதந்த்ர –உபாயாந்தர தோஷமும்
-446-ஸூ வீ கய ஸ்வீகாரம் கூடாது என்றும்
-452-சாதனத்தவ நிஷ்டை மேலே -அருளிச் செய்கிறார்

————————————–

சூரணை -449-

விடாய் பிறந்த போது கரஸ்தமான உதகத்தை உபேஷித்து-
ஜீமுத ஜலத்தையும் –
சாகர சலிலத்தையும் –
சரித் சலிலத்தையும் –
வாபீ கூப  பயஸ் ஸூ க்களையும்- வாஞ்சிக்கக் கடவன் அல்லன் –

இன்னமும் திருஷ்டாந்த முகத்தாலே சுலபமான ஆசார்ய விஷயத்தை விட்டு –
துர்லபமான பகவத் விஷயத்தை ஆசைப் படுவான் அல்லன் என்கிறார் மேல் –

அதாவது –
பிபாசை விஞ்சின போது -சடக்கென பானம் பண்ணலாம்படி பாத்ர கதமாய் கொண்டு
தன் கையில் இருக்கிற ஜலத்தை சுலபதையே ஹேதுவாக அநாதரித்து-
தரையிலே உகுத்து ஆகாசச்தமாய் கொண்டு எட்டாதபடி யாயும் –
பூமி ஸ்த்தமாய் இருக்கிற தூரஸ்தமாயும்-
ஆசன்னமாய் இருக்கச் செய்தே – பெருகும் காலம் ஒழிய வற்றின காலம் இன்றிக்கேயும் –
எப்போதும் உண்டானாலும் – அவ்வளவும் சென்று ஜீவிக்க வேண்டியும் –
இருந்த இடம் தன்னிலே உண்டானாலும் கநித்ராதிகள் கொண்டு கல்லிப் பெற வேண்டி இருக்கும்
ஜீமூதாதிகளின் ஜலத்தை ஆசைப் படுமவனைப் போலே-
ரஷக அபேஷை பிறந்த தசையில் -அப்போதே தனக்கு உதவும் படி கைபுகுந்து இருக்கிற
ஆசார்ய விஷயத்தை -ஸௌலப்யமே பற்றாசாக உபேஷித்து-
பரம ஆகாச வர்த்தியாய் -துஷ் ப்ராபமாய் இருக்கிற பரத்வத்தையும் –
பூமியிலேயாயும் -ஷீராப்தி அளவும் செல்ல வல்ல வர்களுக்கு அன்றி -உதவாத வியூகத்தையும் –
ஆசன்னமாக வந்தும் தத் காலிகர்க்கு ஒழிய பச்சாத்யர்க்கு உதவாத விபவத்தையும் –
நித்ய சந்நிதி உண்டாயும் சம்பாஷணாதிகளால் இவனோடு கை கலந்து இராத -அர்ச்சாவதாரத்தையும் –
இருந்த இடம் தன்னிலே உண்டாய் இருந்ததே ஆகிலும் -யம நியம ஆதி க்ரமேண யத்நித்து தர்சிக்க வேண்டும் அந்தர்யாமித்வத்தையும் –
ஆசைப் படக் கடவன் அல்லன் -என்கை –
சஷூர் கம்யம் குரும் த்யக்த்வா சாஸ்திர கம்ய ந் துய  ச்மரேத் ஹஸ்த சத்த முதகம் த்யக்த்வா கநச்தம் சோபிவாஞ்ச்ச்சதி-என்றும் –
எட்ட இருந்த குருவை இறை அன்று என்று விட்டு -என்று துடங்கி – அம்புயத்தை பார்த்து இருப்பான் ஒத்து ஞான சாரம் -33-
-என்று சொல்லக் கடவது இறே – இது வ்யூஹாதிகளுக்கும் உப லஷணம்-

கண்ணால் காணும் ஆச்சார்யர் விட்டு சாஸ்த்ர கம்யமான பகவானையே தேடி –
ஜீமுத ஜலத்தையும் -ஆகாச நீர் -ஸ்ரீ வைகுண்டம்
சாகர சலிலத்தையும் -ஷீராப்தி -ஓர் இடம் தான் இருக்கும்
சரித் சலிலத்தையும் -ஓடும் நதி நீர் போலே விபவங்கள்-காலாந்தரத்தில்
வாபீ கூப  பயஸ் ஸூ க்களையும்- குளங்கள் கிணறு நீர் அர்ச்சை-அந்தர்யாமி -/
வாஞ்சிக்கக் கடவன் அல்லன் –
மனன் உணர்வு அவை இலன் -பொறி உணர்வு அவை இலன் -அறிந்து அறிந்து தேறி தேறி -சம்சார காட்டுத்தீ -பெரும் விடாய் பிறந்தவனுக்கு
-தெளிந்து குளிர்ந்து-நிறைந்த கரஸ்த சரஸ திவ்யோதகம் -சுலப சகல தாப கர சதாச்சார்யன் இருக்க –
அத்யந்த ஸுலப்யமே பற்றாசாக உபேக்ஷித்து -நாக்கு வற்றக் கடவன் –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –429-440- சரம பர்வ நிஷ்டா-குரோர் உபாயதாஞ்ச பிரகரணம் –ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் / ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்-

May 26, 2018

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -8o–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது ஆறாவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் /
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் /

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகாரஞ்ச ச வைபவம் (ச -உபாய வைபவமும் இதில் உண்டே )-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது ஒன்பதாவது பிரகரணம்

த்வய அபிபிரேரிதமான – த்வய யுக்த அர்த்த ஞானமும் -தத் உபதேச ஆச்சார்யர் அனுவர்த்தனைத்தையும் அருளிச் செய்து –
அதுக்கு மூல பூதமான பகவத் கிருபை -ஹேதுதா சங்கதி –
நிவர்த்ய ஞானம்–கர்மா அவித்யாதி தோஷங்கள் நினைத்தால் – பய ஹேது /-நிவர்த்தக பகவத் குண அனுசந்தானம் ஞானம்–பயம் கெடுக்கும் ஹேது
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -/ படிக்கட்டுக்கள் அத்வேஷம் தொடங்கி பிராப்தி வரை -நிர்ஹேதுக கிருபையே காரணம் –

ஆறு பிரகரணங்களில் இறுதியான
சரம பர்வ நிஷ்டா பிரகரணம் –

———————————————————

சூரணை -429-

ஈஸ்வரனுக்கு சேஷ வஸ்துவை உபகரித்தான் –
சேதனனுக்கு சேஷியை உபகரித்தான் –

இரண்டு தலைக்கும் இவன் உபகரித்தவை இவை என்று அருளிச் செய்கிறார் –

ஸ்ருஷ்ட்டி அவதாரங்களில் ஒரு வஸ்துவும் எட்டுப்படாமல் இழவானாய் இடம் பார்த்து தேடி திரியின் ஈஸ்வரனுக்கு
ஸ்ரீ கௌஸ்துபம் போலே -சரீர -மாய வன் சேற்று -கழுவி பொலிந்து நின்று பிரான் திருக்கையிலே கொடுத்து அருளி –
அசத் கல்பனான -கையில் கனி என்ன அபகரித்து -பிராப்த நிரதிசய போக்யனான
வஸ்துவை -அவனுக்கும் -கண் கெட்டு இருந்த இவனுக்கு கண்ணையும் கொடுத்து அவனையும் காட்டித் தந்தான் –
சரீரம் அவனுக்கு -பிராணனை இவனுக்கு கொடுத்து
சா பேஷணனுக்கு நிரபேஷ வஸ்துவை உபகரித்து நிரபேஷணனுக்கு சா பேஷணனை உபகரித்து –

அதாவது –
மேன்மேலும் சிருஷ்டி அவதாரங்களைப் பண்ணி வசீகரிக்க பார்த்த இடத்திலும் –
ஓர் ஆத்ம வஸ்துவும் எட்டுப் படாமையாலே -இழவாளனாய் இருக்கிற ஈஸ்வரனுக்கு –
சேஷமான ஆத்ம வஸ்துவை அஜ்ஞாத ஜ்ஞாபன முகேன திருத்தி -இஷ்ட விநியோக அர்ஹமாமாம் படி கை படுத்தினான் –
பகவத் ஜ்ஞான அபாவத்தாலே அசத் கல்பனாய் கிடந்த சேதனனுக்கு –
பகவத் சம்பந்தத்தை அறிவித்து -இச் சேஷியான அவனைக் காட்டிக் கொடுத்தான் என்கை –
இத்தால் ஆசார்யனுடைய -சேதன ஈச்வரர்கள் இருவருக்கும் உபகாரகன் ஆகை ஆகிற வைபவம் சொல்லப்பட்டது –

———————————————————–

சூரணை -430-

ஈஸ்வரன் தானும் ஆசார்யத்வத்தை ஆசைப் பட்டு இருக்கும் –

இன்னம் ஒரு பிரகாரத்தாலே ஆசார்ய வைபவத்தை பிரகாசிப்பிக்கிறார் –

பொறாமை -ராம தூதன் பெயர் பெற்றான் நாமும் பெறுவோம் என்று ஆசைப்பட்டான் -அநன்யர் அனைவரும்
இன்னார் தூதன் என நின்றான் -அதே போலே குரு பரம்பரையில் முதல் ஸ்தானம் -தேர் தட்டில் கீதாச்சார்யன் –
குரு பரம்பரையில் இல்லாதவர்களுக்கு /அதுவும் போராது என்று -சுக்ரீவனுக்கு சொல்லி விபீஷணன் கேட்க சொல்பவனும் இவன்
குரு பரம்பரை -ஸ்ரீ கீதையும் -அபய பிரதானம் சேர்த்து -சுக்ரீவன் முகேன விபீஷணனுக்கு –
இந்த ஏற்றத்தைக் கண்ட ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரன் தானும் -உம்மைத் தொகை -பாரதந்தர்ய வேஷம் ஒவ்வாது –
பொருந்தாது இருந்தாலும் -நாக்கு நீரூற பேகணித்து இருக்கும் -பரதந்த்ரனான சேஷியாவதற்கு -சேராச் சேர்க்கை அன்றோ இது –
பரதந்த்ர சேஷி -ஆச்சார்யர் சேஷித்வத்தை ஆசைப்பட்டு -பேகணித்து இருக்கும்-நாமும் இப்படி உபகரிக்கும் படியாய் –
போலே -மோக்ஷ ஏக ஹேதுவாய் -உபயத்துக்கும் இல்லாமல்–பந்த ஹேது இல்லாமல் –
யார் மோக்ஷ ஏக ஹேது -அவரைப் போலே இருக்க ஆசைப்பட்டு -ஆச்சார்யராக –
குருத்வம் பெற்று வாழப் பெறுவோம் என்று ஆசைப்பட்டு இறுமாந்து இருக்கும் –

அதாவது –
இதுக்கு இட்டு பிறவாத ஈஸ்வரன் தானும் இவ் ஆசார்யத்வத்தின் ஏற்றத்தை பற்ற
இதிலே மிகவும் ஸ்ரத்தை பண்ணி இருக்கும் -என்கை –

முனிவரை இடுக்கியும் -முந்நீர் வண்ணனாயும் -கீதாச்சார்யராக –
ஸத்வாராக மட்டும் இல்லாமல் அத்வாராக-ஆசைப்பட்டு -அநாதி -குரு பரம்பரை

—————————————

சூரணை -431-

ஆகை இறே -குரு பரம்பரையில் அன்வயித்ததும் –
ஸ்ரீ கீதையும் -அபய பிரதானமும் -அருளிச் செய்ததும் –

அது எங்கே கண்டது என்னும் ஆ காங்ஷையிலே அத்தை மூதலிக்கிறார்-

அலங்கரித்து -தலைமை -அந்வயம் மட்டும் இல்லை -இங்கும் அன்வய சப்தம் -ஆசைப்பட்டு –
உயர்ந்ததால் தானே ஆசைப்படுவார் -ஆகையால் அலங்கார சப்தம் இல்லாமல் அந்வயம் -இங்கு பிரயோகம் –
அபய பிரதானம் மூன்றே ஸ்லோகங்கள் ஸ்ரீ ராமாச்சார்யார் -சக்ருதேவ –ஏதத் விரதம் மம -பிசாசான் இத்யாதி –
விபீஷணனுக்கு விஷயம் -சுக்ரீவனுக்கு சொல்லி -சமாதானப்படுத்தி -ராவணன் வந்தாலும் -கூட்டி வா –
சந்திக்கும் முன்பே இந்த உபதேசம் -பின்பு தானே ஸ்ரீ விபீஷண ஆழ்வான் வந்து பெருமாளை சரண்
ரஹஸ்ய த்ரயம் உபதேசம் -நர நாராயணனாய் -சிங்காமை விரித்து –
நரன்-அர்ஜுனன் பிறருக்கு உபதேசம் இல்லையே
ஆகையால் பெரிய பெருமாள் பெரிய பிராட்டியாருக்கு உபதேசித்து -ஸ்ரீ விஷ்வக் சேனர்-
மருவற்ற பரதந்த்ர சேஷி நிறைந்த குரு பரம்பரையில் -ஸ்வா தந்தர்யம் மாற்றி -சேஷித்வத்தை -மறைத்துக் கொண்டு –
மேனாணிப்பு -பொருந்தாதே ஆகையால் மறைக்க வேண்டுமே -ஆச்சார்யர் உயர்த்தி நமக்கு தெரிவிக்க -ஆசைப்படுகிறான் –
மெள்ள ஒரு தலையிலே அந்வயித்ததும் -தேடிப்பிடித்து மா முனிகளை தேர்ந்து எடுத்து நடுவில் -அந்வயம் சப்தம் நடுவில் இருக்க வேண்டுமே –
ஆச்சார்யர் க்ருத்யத்தை -நாச்சியார் விழி -பழகி -பழகி -ஏறிட்டுக் கொண்டால் போலே-பாவித்து -பாவித்து –
ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யர் -சரம ஸ்லோகம் சாரம்
வசிஷ்ட சிஷ்யர் ஸ்ரீ ராமனாய் சரம ஸ்லோகத்தில் யுக்த சரணாகதி பிரபாவ பரமான அபய பிரதானம் -அச்சம் இன்மை வழங்கி –
அபய பிரதான சாரம் -அநாதிகாரிகளும் கேட்க்கும்படி பிரகாசிப்பித்து –

அதாவது –
ஆச்சர்யத்வத்தை ஆசைப் பட்டு இருக்கையாலே இறே –
சதாசார்யவம்  சொஜ்ஜேய ஆசார்யணாம சாவசாவித்யா பகவத்த -அசவ் அசவ் இதி ஆ பகவதா -என்னும்படி –
குரு பரம்பரையிலே -த்வய உபதேஷ்ட்ருத்வேன அன்வயித்ததும் –
ஆசார்ய க்ருத்யத்தை ஏறிட்டுக் கொண்டு அர்ஜுனனைக் குறித்து -தத்வ விவேகாதி-2-12- சரம உபாய பர்யந்தார்த்த-18-66- பிரதிபாதிகையான
ஸ்ரீ கீதை அருளி செய்ததும் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நிமித்தமாக – சக்ருதேவ பிரபன்னாய த்வாச்மீதி சயாசதே அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வரதம் மம-என்று
அபய பிரதானம் அருளி செய்ததும் -என்கை –
இத்தால்-
ஈஸ்வரனும் ஆசைப் படும் படி அன்றோ ஆசார்யத்வத்தின் பெருமை என்று -ஆசார்ய வைபவம் சொல்லிற்று ஆயிற்று

———————————————

சூரணை -432-

ஆசார்யனுக்கு சத்ருச பிரத்யுபகாரம் பண்ணலாவது-
விபூதி சதுஷ்டயமும் -ஈஸ்வர த்வயமும் உண்டாகில் –

இன்னும் ஒரு வழியாலே ஆசார்ய வைபவத்தை தர்சிப்பிக்கிறார் –

இல்லா வற்றைச் சொல்லி -உயர்த்தியை ஸ்தாபிக்கிறார் -/
மஹா உபஹாரர் -ஆச்சார்யர் -தன்னேற்றம் -உபகரித்த உபய விபூதிக்கும் -விபூதிமானுக்கும் -சத்ருசமாக பிரதியுபகாரம்-
நித்ய விபூதி த்வயமும் -லீலா விபூதி த்வயமும் -ஆக விபூதி சதுஷ்ட்யமும் –
நஹி வாசோ தரித்திரத-சொல்லி வைக்கலாம் -மிடியன்-கைம்முதல் இல்லாதவன் –
ஈஸ்வர த்வயமும் -புதிதான துவயத்துக்கு ஆள வேண்டுமே -அகடிதம் உண்டானால் செய்யலாம் -என்கிறார் –
பகவத் த்யானம் அளித்தவர்க்குக்கு கைங்கர்யம் மட்டுமே முடிந்த அளவு செய்ய வேண்டும் – -தத் துல்யம் தர முடியாதே

அதாவது –
உபய விபூதியையும் விபூதிமாணன் ஈஸ்வரனையும் தான் இட்ட வழக்காம் படி பண்ணிக் கொடுத்த ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு சத்ருசமாக
பிரத்யுபகாரம் பண்ணலாவது -இப்படியே இன்னும் இரண்டு விபூதியும் விபூதிமானாய் இருப்பான் ஈஸ்வரனும் வேறு உண்டாகில் இறே -என்கை –
யோதத் யாத்ப் பகவத் ஜ்ஞானம் குர்யாத்த்தர்ம உபசேவனம் க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யான்ந் தத் துல்யம் கதஞ்சன -என்றார் இறே –
(சிஷ்ய தர்மம் பொருத்தமான பணிவிடைகள் செய்வதே -கிருத்ச்னம் பிருத்வி லீலா -வா நித்ய விபூதி )
இத்தால் ஆசார்யனுடைய பிரத்யுபகார அவகாச ரஹித மகா உபகாரத்வம் ஆகிற வைபவம் சொல்லிற்று ஆயிற்று
(பயன் நன்றாகிலும் –முயல்கின்றேன் என்னும் அளவே -ஈடு அல்லவே )

—————————————–

சூரணை-433-

ஈஸ்வர சம்பந்தம் பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும் –
ஆசார்ய சம்பந்தம் மோஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் –

இன்னமும் ஒரு முகத்தாலே ஆச்சார்ய வைபவத்தை அருளிச் செய்கிறார் –

சம்பந்தம் என்றால் என்ன -சேஷ சேஷி சம்பந்தம் -மஹா உபகாரகன் ஆச்சார்யர் உபகரிக்கும்
தந்த்ரனான ஈஸ்வரன் உடன் சேதனனுக்கு சம்பந்தம் –
ஆச்சார்யர் உடன் நேராக சம்பந்தம் -இவர் காட்டிய பகவத் சம்பந்தம் இரண்டுக்கும் காரணம் –
ஈஸ்வர சம்பந்தம் -சேஷி சேஷ சம்பந்தம் -அநாதி சம்சார சம்பந்தத்துக்கும் -மத்யத்தில் வரும் –
நடுவே வந்து உய்யக் கொள்ளும் நாதன் -மோக்ஷ சம்பந்தம் -அநியதமாய் இருக்கும் -பொதுவாய் இருக்கும்
ஈஸ்வரன் உபகரித்த மஹா உபாகாரகன் சதாச்சார்யர் ஸச் சிஷ்ய சம்பந்தம் -விளம்பம் அற்ற சம்சார மோக்ஷத்துக்கே ஹேதுவாய்
அபங்குரமாய்-அஹிதம் கலசாமல் இருக்கும் –

இவ்விடத்தில் ஈஸ்வர சம்பந்தம் -என்கிறது -ஈஸ்வரனைப் பற்றுகை -என்ற கீழ் சொன்ன -தத் ஆஸ்ரய ரூப -சம்பந்தத்தை –
அந்த -பந்த மோஷங்கள் இரண்டுக்கு பொதுவாகையாவது-
கர்ம அநு குணமாக சம்சரிப்பிக்கவும் -காருண்ய அநு குணமாக முக்தனாக்கவும் -வல்ல
நிரந்குச ஸ்வாதந்த்ரனோடு உண்டான சம்பந்தம் ஆகையாலே -உபய சாதாரணமாய் இருக்கை-
ஆசார்ய சம்பந்தம் -ஆகிறது -ஆசார்யனை பற்றுகை -என்று கீழ் சொன்ன தத் ஆஸ்ர்யண ரூப சம்பந்தம் –
அது -மோஷத்துக்கே ஹேதுவாகையாவது-கர்ம அநு குணமாக சம்சரிக்கவும் விடும் ஸ்வதந்த்ரன் அன்றிக்கே –
சர்வ பிரகாரத்தாலும் இவனை உஜ்ஜீவிப்பித்தே விடும் நிரதிசய க்ருபாவானோட்டை சம்பந்தம் ஆகையாலே –
சம்சார மோஷங்களுக்கு பொது அன்றிக்கே சம்சார விமோசன ஏக ஹேதுவாய் இருக்கை –
இத்தால்-
மோஷ ஏக ஹேதுத்வ நிபந்தனமான வைபவம் சொல்லப்பட்டது –

ஆச்சார்ய அபிமான ஹேதுக-இச்சா ரூப ஞானம் காரணம் -பகவானுக்கே உள்ள மோக்ஷ பிரதான சங்கல்பம் –
விஷய ரூப ஈஸ்வர சம்பந்தம்-மோக்ஷம் கொடுத்தே தீருமே -பொது அல்லவே பந்தத்துக்கும் மோக்ஷத்துக்கும் –
கேவல பகவத் சம்பந்தம் இல்லை -ஆச்சார்யர் மூலம் போகும் பகவத் சம்பந்தத்துக்கும் மேலே ஆச்சார்ய சம்பந்தம் –
தோள் மாறி பகவத் சம்பந்தம் போக கூடாதே -இங்கேயே நிற்க வேண்டுமே -உறுதி தளரக் கூடாதே –
ஆச்சார்யர் மூலம் பெற்ற பகவத் சம்பந்தம் பந்துக்கு ஹேது வாகாதே-சக்தியும் நியதமாயும் இருக்க வேண்டுமே
ஆஸ்ரயணம்-சரண வரணம்–கர்ம நாஸகம் அல்லாமையாலே அருளிச் செய்கிறார் -சங்கல்பம் இருந்தால் தானே பலிக்கும் –
ஸ்ரீ பரத ஆழ்வான் -விளம்பம் -சரண்ய ஹ்ருதய அனுசரணம் இருக்க வேண்டுமே –
நிரங்குச ஸ்வதந்த்ரன் – நிரதிசய -காருண்யகன் ஆச்சார்யர் இல்லையே –
ஆகையால் நியதமாக இருக்காதே –
சரண வரணம்-அதிகாரி விசேஷணம் தானே -பிரபாவம் இல்லை -ஒன்றுமே பண்ணவில்லை –
சரண்ய ஹ்ருதய அனுசாரியாக இருந்தால் தானே சரண வரணம் ஆகும்-
அதுவும் அவனது இன்னருள் -சரண வரணம் வார்த்தை -தேவரீர் அனுக்ரஹம் வந்தால் தானே –
ஆகையால் தான் தோள் மாறாமல் இங்கேயே நிலை நின்று இருக்க வேண்டும்
சரண்ய ஹ்ருதயம் அனுசாரியாக இருந்தால் தான் சரண வரணம் ஆகும்
உபதேச அதீன ஞானவத்தான ஆச்சார்ய சம்பந்தம் -பகவத் சம்பந்தம் இடைவராமல் இருக்க வேணும் –
ஷிபாமி சங்கல்பம் இல்லை இங்கே – கிருபையே ஸ்வ பாவம் இங்கே –

——————————————-

சூரணை -434-

பகவல் லாபம் ஆசார்யனாலே-

உத்தராகத்வத்தில் ஆசார்யனுடைய ஆதிக்யத்தை அருளிச் செய்தார் கீழ் –
உபகாரத்வத்தில் ஈஸ்வரனுடைய ஆதிக்யத்தை அருளி செய்க்கைகாக வடி கொண்டு எழுந்து இருக்கிறார் மேல் –

–மேலே -436-சூரணைக்கு அடித்தளம் இதுவும் அடுத்ததும் -யத்னம் இல்லாமல் லபிக்கை ஆச்சார்யராலே
உத்தாராகம் -வேறே உபகாரத்வம் வேறே -இது தகுதி கொடுக்கும் -அது மோக்ஷம் அளிக்கும் –
ஈஸ்வரன் உபகாரகன் -ஆச்சார்யர் உத்தாரகன் -என்கிறார் –
உயர்ந்த ஆச்சார்யர் கொடுத்ததால் ஏற்றம் பகவானுக்கு என்றவாறு –

அதாவது –
நிருபாதிக சேஷியாய் நிரந்குச ஸ்வதந்த்ரனாய் இருக்கும் பகவானை லபிக்கை –
தத் சம்ருத ஏக பிரயோஜனனாய் கொண்டு -மங்களா சாசனத்துக்கு ஆளாக வேணும் என்று தன்னை அங்கீகரித்து –
தத் வியாமோஹ விஷயம் ஆக்கின ஸ்வ ஆசார்யனாலே -என்கை -‘

——————————————————

சூரணை -435-

ஆசார்ய லாபம் பகவானாலே –

ஏவம் பூதனான ஆசார்யன் தன்னை லபிக்கைக்கு ஹேது எது என்னும் அபேஷையில்
அருளிச் செய்கிறார் –

அசாதாரண சிறந்த பந்து -ஆச்சார்யர் தானே -பகவான் சாதாரண பொது பந்து தானே –
அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் இல்லை

அதாவது –
பகவத் லாப ஹேதுவாய் -பரம ப்ராப்ய பூதனான ஆசார்யனை லபிக்கை –
ஈச்வரச்யச ஸௌ ஹார்த்தம் -இத்யாதிபடியே –
நிருபாதிக சூஹ்ருதாய் –
விசேஷ கடாஷ பற்றாசைகளையும்-(யதிருச்சா ஸூ ஹ்ருத்துக்கள்நாம் யார் நிரூபண விசேஷங்கள் -இத்யாதி ) தானே கற்பித்து கொண்டு –
விசேஷ கடாஷம் பண்ணி –
அத்வேஷத்தை பிறப்பித்து –
ஆபிமுக்க்யத்தை உண்டாக்கி –
சாத்விக சம்பாஷணத்திலே மூட்டி –
சதாச்சார்யா ப்ராப்தியை –
பண்ணுவிக்கும் -நிர்ஹேதுக க்ருபாவானான -பகவானாலே -என்கை-

ஈஸ்வர ஸுஹார்த்தம் அனைவருக்கும் பொது -பொதுவான ஸ்ருஷ்ட்டி தானே -அது மோக்ஷ ஹேது இல்லையே –
ஆச்சார்ய சம்பந்தம் –பெற்ற பின்பு -சரம பர்வ நிஷ்டை துர்லபம் –
விசேஷித்து பெருமாள் இடம் உறுதி பட ஆச்சார்யர் மூலம் -/ ஆச்சார்யர் கைங்கர்யமே பரம ப்ராப்யம் என்று இருக்கை-
அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் இல்லாமல் நிரூபகம்-பகவல் லாபம் ஆச்சார்யர் என்றது சாதாரண ஆச்சார்யர் –
பொதுவாக அனைவருக்கும் கீழ் சொன்ன படிக்கட்டுகள்
ஆச்சார்யராலே பகவல் லாபம் உயர்ந்த பகவான் என்றபடி
பிரகரண விரோதம் இல்லை -ராஜா கொண்டாட -புலவன் -நீர் என்ன உம்முடைய ராஜ்ஜியம் ராணி புதல்வனை கொண்டாடுவது போலே
பகவானை பெற்றதே ஆச்சார்யராலே என்பதால் -தோஷம் இல்லை

———————————

சூரணை -436-

உபகார வஸ்து கௌரவத்தாலே -ஆசார்யனில் காட்டில் – மிகவும் உபகாரகன் ஈஸ்வரன் —

ஆனால் இருவரும் உபகாரத்தில் சமரோ என்ன -அருளிச் செய்கிறார் –

ஈஸ்வரனே மஹா உபகாரகன் -உபகரித்த வஸ்துவை சேர பிடித்து ஒப்பிட்டால் –

அதாவது –
உபயரும் உபகரித்த வஸ்துக்களை சீர் தூக்கி பார்த்தால் -ஆசார்ய உபகார வஸ்துவான -பந்த மோஷ அபய ஹேதுவாய் -பிரதம பர்வமாய் –
இருக்கிற பகவத் விஷயத்தில் காட்டில் -பகவத் உபகார வஸ்துவான -மோஷ ஏக ஹேதுவாய் -சரம பர்வமாய் -இருக்கிற
ஆசார்ய விஷயத்தினுடைய கௌரவத்தாலே -ஈஸ்வரனை உபகரித்த ஆசார்யனைக் காட்டில் மிகவும் உபகாரகன் ஈஸ்வரன்

———————————————————–

சூரணை -437
ஆசார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால் –
ஞான பக்தி வைராக்யங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம் –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் – அவை உண்டானாலும் பிரயோஜனம் இல்லை —

நமோ சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஞான வைராக்ய ராசயே நாதாய முநயே அகாத பகவத் பக்தி சிந்தவே -என்கிறபடியே –
ஆசார்யன் தனக்கு ஏற்றம் -ஞான வைராக்ய பக்திகளாலே -இறே-
அந்த ஞான வைராக்ய பக்திகள் உண்டான அவன் இந்த ஆசார்ய சம்பந்தத்தை நெகிழ நின்றான் ஆகிலும் –
அவை பகவல் லாபத்துக்கு உடலாமோ என்ன –
அருளிச் செய்கிறார் -மேல் –

சேஷ பூத சிஷ்யத்வ சம்பந்தம் -தேவதாந்தர -மந்த்ராந்தர தோஷ கந்தம் ஸ்பர்சத்தால் – குலையாமல்
ஞானம் இத்யாதி மெள்ள உண்டாக்கிக் கொள்ளலாம் –
இவை இருக்க அவன் கை விட்டால் -அநர்த்தம்-ஆகி – ஆத்ம அலங்காரமாக அவை இருந்தாலும்-பூர்வ ஜென்ம கர்ம பலனாக பிரயோஜனம் இல்லை –
ஆச்சார்யர் கை விட்டாலும் ஞானம் இத்யாதி வருமோ என்றால் பூர்வ ஜென்ம கர்ம பலன்கள் –
ஆத்ம குணம் இருப்பதே ஆச்சார்ய சம்பந்தம் பெறுவதற்கு -இவை மோக்ஷ பலம் ஆகாதே
மிருத சஞ்சீவனம் ஆச்சார்ய சம்பந்தம் –
அகாத பகவத் பக்தி சிந்து -ஸ்ரீ மன் நாத முனிகள் –
முளை விட்ட ஆத்ம குணம் ஆச்சார்ய சம்பந்தத்துக்கு ஹேது -வளருவது ஆச்சார்யராலே–கொடி மேலே ஏற்ற கொள் கொம்பு வேண்டுமே –
அத்வேஷம் -ஆபீமுக்யம் -வரை ஸுஹார்த்தம் -அத்வாரகம் இது வரை -மேலே சத்வாரகம் -ஸ்ருஷ்ட்டி போலே இங்கும்
ஆச்சார்யர் இடம் சேர்க்க சாது சமாகம் வேண்டும் -பாகவதர்கள் தானே சேர்த்து வைப்பர் –
ஆச்சார்யர் தான் ஆத்ம குணங்களை வளர்ப்பார் -பின்பு பரம ப்ராப்ய பகவ லாபம் பெறுவோம் என்றபடி
ஆத்ம குணம் தானே ஆச்சார்யர் இடம் சேர்க்கும் என்பது முளை விடுவது போலே –
அந்யோன்ய தோஷம் வர கூடாதே –
ஐந்து படிக்கட்டுக்கள் வரை அத்வாரகம் -மேலே சத்வாராகம்
சத்தைக்கு-அவன் -வளர்த்து பிராப்தி பர்யந்தம் வரை ஆச்சார்யர் க்ருத்யத்வம்
சத்தா ப்ரயுக்தம் -பகவத் சம்பந்தம் குலையாது / ஆச்சார்யர் சம்பந்தம் குலைய வாய்ப்பு மந்த்ர குரு தேவதா பரிபவம் பண்ணினால் உண்டாகும்

அதாவது –
கீழ் சொன்னபடியே-உத்தாரகனும் உபகாரனுமாய் இருந்துள்ள ஸ்வ ஆசார்யன் இவன் என்னுடையவன் என்று அபிமானித்து
இருக்கும் படி அவன் திருவடிகளில்
தனக்கு உண்டான சம்பந்தம் -ஸ்வ விப்ரபத்தியாலே குலையாத படி அதை நோக்கிக் கொண்டு கிடந்தால்-
ஆத்ம அலங்காரங்களான -தத்வ ஞானம் -அப்ராப்தி விஷய வைராக்கியம் – ப்ராப்த விஷய பக்தி -ஆகிற ஆத்ம குணங்கள் இல்லையாகிலும் –
அவ் ஆசார்ய பிரசாதிகளாலே க்ரமமே உண்டாக்கி கொள்ளலாம் –
சர்வ மங்கள ஹேதுவான அந்த ஆசார்ய சம்பந்தம் ஸ்வ பிரதிபத்தியால் குலைந்தால் –
ஞாநாதிகளானவை பூர்வ சூக்ருதங்களாலே சிறிது உண்டாயிற்று ஆகிலும் –
பகவத் அங்கீகார ஹேது  ஆகாமையாலே நிஷ் பிரயோஜனம் -என்கை

———————————–

சூரணை -438-

தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிக் கொள்ளலாம் –
தாலி போனால் பூஷணங்கள் எல்லாம் அவத்யத்தை விளைக்கும் –

பிரயோஜனம் அல்லாமையே அன்று -அவத்யகரமும் -என்கிறார் –

தாலி ஸ்தானீயம் ஆச்சார்யர் / பூஷணங்கள் ஸ்தானீயம் ஞானாதிகள் -/பதி சம்பந்த ஸூ சகம் தாலி பிரதமம் –
அபிரூபைக்கு தாலி அளவே போதும் -ஆத்ம குண ஜீவனுக்கு -ஆச்சர்ய சம்பந்தம் ஒன்றுமே போதும் –
ஞானாதி -ஆதி பக்தி வைராக்யங்கள்
ஆச்சார்யர்கள் இதனால் தான் சிஷ்யர்களை விட்டே கொடுக்காமல் அபிமானித்து இருப்பார்கள் —
ஸ்ரீ ராமானுஜர் இடம் சேர்த்து விடுவதே அவர் கர்தவ்யம் –
ஆச்சார்யர் சிஷ்யர்கள் மேல் உள்ள அபிமானம் குலையவே குலையாமல் இருக்குமே

அதாவது –
பதி விரதையான ஸ்திரீக்கு பதி சம்பந்த சூசுகமான தாலி ஒன்றும் போகாமல் கிடந்தால் –
பூஷணங்கள் இல்லையே ஆகிலும் -முதல் உண்டான போது-பண்ணிப் பூண்டு கொள்ளலாய் இருக்கும் –
இத்தனை பூஷணங்கள் உண்டே என்று நினைத்து தாலியை வாங்கிப் பொகட்டால்-
விதவ அலங்கார கல்பம் ஆகையாலே பூண்ட பூஷணங்கள் எல்லாம் அவத்யவஹங்களாய் இருக்கும் -என்கை –
இத்தால் –
ஆத்ம பூஷணங்களான-ஞான வைராக்ய பக்திகள் இல்லையே ஆகிலும் -ஆசார்ய சம்பந்தம் மாத்ரம் குலையாமல் கிடந்தால்
அவன்-ஆசார்ய- பிரசாதத்தாலே அவைகளை க்ரமேண உண்டாக்கிக் கொள்ளலாம் –
ஆசார்ய சம்பந்தம் இத்தனையும் குலைந்தால் ஆத்ம குணங்களான ஞான வைராக்ய பக்திகள் எல்லாம் உண்டானாலும் –
அவை ஸ்லாக்யதா ஹேது அன்றிக்கே -அவத்யாவஹமாய் விடும் -என்றபடி

———————————————

சூரணை-239-

தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே -நீரைப் பிரிந்தால் –
அத்தை உலர்த்துமா போலே -ஸ்வரூப விகாசத்தை பண்ணும் ஈஸ்வரன் தானே –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் -அத்தை வாடப் பண்ணும் —

ஆச்சார்ய சம்பந்தம் கிடந்தாலும் -ஸ்வரூப விகாசகன் ஈஸ்வரன் அன்றோ –
அது குலைந்தது ஆகிலும் -இத்தனை ஆத்ம குணம் உடைய அவனுக்கு அவன்
ஸ்வரூப விகாசத்தை பண்ணானோ என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஜலஜம் -என்னும்படி ஜலத்திலே பிறந்து ஜல ஏக தாரமாய் இருக்கும் தாமரைக்கு –
(செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் அலராவால் )
நியமேன விகாசகனாய் போரும் ஆதித்யன் தானே -ஸ்வ தாரகமான ஜலத்தை
விச்லேஷித்தால் -அந்த தாமரையை விகசிப்பியாத மாத்ரம் அன்றிக்கே -சோஷிப்பிக்குமா போலே –
ஆச்சார்ய அன்வயத்தாலே சத்தை பெற்று -ஸ்வ சத்தா தாரகமான தத் சம்பந்தம்
குலையாதே நிற்கும் அளவில் -இவனுடைய ஸ்வரூபத்தை ஞான விகாச முகேன-
உள்ள உலகு அளவும் யானும் உளனாவன் -என்னும்படி –
விகசிப்பிக்கும் ஈஸ்வரன் தானே -ஸ்வ சத்தா தாரகமான ஆசார்ய சம்பந்தத்தை
ஸ்வ விப்ரபத்தியாலே இவன் குலைத்து கொண்ட காலத்தில் -தான் விகசிப்பிக்க
கடவ அந்த ஸ்வரூபத்தை விகசிப்பியாத மாத்ரம் அன்றிக்கே -நாளுக்கு நாளும்
நஷ்ட பிரஜ்ஞ்மாய் -சங்கோசித்து போம்படி பண்ணும் -என்கை –
நாராயணா அபிவிக்ருதம் யாதி குரோ பிரச்யுதச்ய துர்புத்தே
கமலம் ஜலாதபேதம் சோஷய திரவிர்ந தோஷயதி- என்னக் கடவது இறே–

ஸ்வரூப ஆவிர்பாவம் பண்ணும் ஈஸ்வரன் தானே –அலர்த்தும் ஆதித்யன் உலர்த்துமா போலே –
பரம பந்து தானே விடப்பார்க்கும் -நாராயணன் அபி -அவன் -கூட-விகாரம் அடைந்து –
துர்புத்தி படைத்தவன் -குருவிடம் நழுவினால்-ஸ்வரூப நாசம் அடைவிக்கிறார் –
தாரகம் நீர்-தாமரை தானே வெளியிலே வராதே -அசேதனம் -ஜீவாத்மா சேதனன்- அந்நியர் பிரிக்கப் பிரிந்தால் –
ஆச்சார்யம் திருவடி சம்பந்தமே தாரகம் -அபிமானத்தில் ஒதுங்கி -ஞானம் வளர்ந்து –
ஆனந்தம் -அவன் அளவும் -உள்ள உலகம் அளவும் யானும் உளன் ஆவான் என் கொலோ -பெரிய திருவந்தாதி -76-
உலகு அளந்த அவன் ஆனந்தம் வரை ஞான விகாசம் பண்ணும் ஈஸ்வரன்
தேவதாந்த்ர அந்நிய ஸ்பர்சத்தால் -ஆதி -மந்தர இத்யாதி -ஆச்சார்ய சம்பந்தம் குலைந்தால்-பவிஷ்கரன் ஆனால் –
உபயோக யோக்யம் இல்லாதபடி வாடப் பண்ணும் – பழைய பகவத் சம்பந்தம் உண்டாக்கிக் கொள்வோம் என்னப் பண்ண முடியாது

————————————————–

சூரணை -240-

இத்தை ஒழிய பகவத் சம்பந்தம் துர்லபம் –

இங்கன் சொல்லுகிறது என்-இவ் ஆசார்ய சம்பந்தம் குலைந்தது ஆகிலும் –
ஒழிக்க ஒழியாது -என்கிற பகவத் சம்பந்தம் உஜ்ஜீவனத்துக்கு உடல் ஆவாதோ என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
அநாதி சித்தமாய் இருக்க செய்தேயும் -ஆசார்யன் உணர்த்துவதற்கு முன்பு அசத் கல்பமாய் –
அவன் உணர்த்தின பின்பு இவனுக்கு கார்யகரமாகக் கடவதாய் -இருக்கும் அது –
இவ் ஆசார்யம் சம்பந்தம் குலைந்த போது-இதடியாக வந்த தானும் குலைந்து போம் ஆகையாலே –
இவ் ஆசார்ய சம்பந்த்தத்தை ஒழிய பகவத் சம்பந்தம் இவனுக்கு கிடையாது -என்கை –
ஆகையால் இது போயிற்று ஆகிலும் அது நமக்கு உஜ்ஜீவனத்துக்கு உடல் என்று இருக்க விரகு இல்லை என்று கருத்து –

ஸ்வரூப உஜ்ஜீவனம் -ஆச்சார்ய சம்பந்தம் பிரதானம் –இது ஒழிந்தால் -பகவத் சம்பந்தம் -நிலை நின்ற -யவாதாத்மபாவி துர்லபம் –
தத் சம்பந்தம் குலைந்து இருந்தால் -ஏதத் சம்பந்தம் சுலபமாம் -இது குலைந்தால் அது துர்லபம் –
சத்தா ப்ரயுக்தம் அன்றோ -பகவத் சம்பந்தம் -இங்கு சொல்வது ஆஸ்ரயண சம்பந்தம் –
சேஷி சேஷ பாவ சம்பந்தம் குலையாது –
ஆச்சார்யனால் பகவத் ஆஸ்ரயணம் -பகவானால் ஆச்சார்ய லாபம் பொது- முதல் ஐந்து படிகள் -பந்து சம்பந்தம் போகாது –
சாமான்ய சம்பந்தம் இருந்தால் ஆச்சார்ய சம்பந்தம் கிட்ட வாய்ப்பு உண்டு –
அவன் ஸுஹார்த்தத்தால் ஆச்சார்ய சம்பந்தம் -ஆச்சார்ய சம்பந்தத்தால் பகவத் ஆஸ்ரயணம்-
உஜ்ஜீவனம் -மோக்ஷ பர்யந்தம் -வஸ்து சத்தை வேறே –ஆச்சார்ய சம்பந்தம் அறிந்து உபதேசம் பெற்று தானே
ஆஸ்ரயணம் மூலம் உஜ்ஜீவனம் -லீலா விபூதி விளையாட்டு -சத்தை அடியாக –

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –421-428- சரம பர்வ நிஷ்டா-குரோர் உபாயதாஞ்ச பிரகரணம் –ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் / ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்-

May 26, 2018

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -8o–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463-

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது ஆறாவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் /
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் /

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகாரஞ்ச ச வைபவம் (ச -உபாய வைபவமும் இதில் உண்டே )-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது ஒன்பதாவது பிரகரணம்

த்வய அபிபிரேரிதமான – த்வய யுக்த அர்த்த ஞானமும் -தத் உபதேச ஆச்சார்யர் அனுவர்த்தனைத்தையும் அருளிச் செய்து –
அதுக்கு மூல பூதமான பகவத் கிருபை -ஹேதுதா சங்கதி –
நிவர்த்ய ஞானம்–கர்மா அவித்யாதி தோஷங்கள் நினைத்தால் – பய ஹேது /-நிவர்த்தக பகவத் குண அனுசந்தானம் ஞானம்–பயம் கெடுக்கும் ஹேது
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -/ படிக்கட்டுக்கள் அத்வேஷம் தொடங்கி பிராப்தி வரை -நிர்ஹேதுக கிருபையே காரணம் –

ஆறு பிரகரணங்களில் இறுதியான
சரம பர்வ நிஷ்டா பிரகரணம் –

———————————————————

சூரணை -421-

இப்படி சொல்லும்படி பண்ணிற்று கிருபையாலே என்று –
சிநேகமும் -உபகார ஸ்ம்ருதியும் -நடந்தது -இறே–

இவ் உக்தி தான் தாயார் சொன்ன குண ஹானிக்கு ஒரு பரிகாரம்
பண்ணின மாத்ரமோ-ச ஹ்ருதயமாய் சொன்னதோ -என்கிற சங்கையில் -அதன் ச ஹ்ருதயத்தை மூதலிக்கிறார்–

குண ஹானி தாயார் சொல்ல -கிருபை உடையவன் -என்னை சரியாக புரிய வைத்த உபகார ஸ்ம்ருதி –
மேலும் ஸ்நேஹம் -பின்னும் மிக விரும்பும் உடனே -பிரான் -செய்த உபகாரத்துக்கு –
தோஷ ஸ்ரவண வேளையிலே – குண கிரஹணம் பண்ணுவித்ததுக்கு -நெஞ்சாறால் பண்ண வேண்டிய விஷயம்

அதாவது -குண ஹானி சொன்னத்தைத் தள்ளி -குணம் சொல்லும்படி பண்ணிற்று-கிருபையாலே என்று –
மிக விரும்பும் -என்று சிநேகமும் –
பிரான்-என்று உபகார ஸ்ம்ருதியும் -நடந்தது இறே –
ஆகையால்-தகவுடையவனே -என்ற இது ச ஹ்ருத யோக்தி -என்கை-

——————————————–

சூரணை -422-

நிரக் க்ருணனாக சங்கித்துச்
சொல்லும் அவஸ்தையிலும் –
காரணத்தை ஸ்வ கதமாக -விறே சொல்லிற்று –

அநந்தரம் -பிராட்டி உடைய வசனத்தை தர்சிப்பிக்கிறார் –

நெஞ்சு நிறைந்து வாய் கொள்ளாமல் -கரை புரண்ட ஆற்றாமை அவஸ்தையிலும் -சங்கா காரணம் –
குணம் மட்டுமே நினைக்க வேண்டிய நான் தோஷம் நினைத்ததே என் குற்றம் –
இதே போலே ஸ்ரீ பரத ஆழ்வானும்-ந மந்த்ர –மத் பாபவே நிமித்தம்-விஸ்லேஷ சித்த கலுஷ அவஸ்தையிலும் –
ஸ்வ கதமாகவே அருளிச் செய்தால் போலே –

அதாவது –
பிரிவாற்றாமையாலே பெருக கலங்கின ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் –
பெருமாள் தன் ஆற்றாமைக்கு உதவ வந்து முகம் காட்டப் பெறாதா இன்னாப்பாலே –
க்யாதா ப்ராஞ்சக்ருதஞ்ச சாநுக்ரோசச்ச ராகவா
சத்வருத்தோ நிர நுக்ரோச  சங்கே-சுந்தர காண்டம் -26-13- -என்று பெருமாளை -நிரக் க்ருணனாகச் சொல்லுகிற அவஸ்தையிலும் –
மத்பாக்ய சம்ஷயாத்-என்று இப்படி சங்கிகைக்கு அடி என்னுடைய பாஹ்ய ஹானி என்கையாலே –
சங்கா காரணத்தை ஸ்வ கதமாக விறே சொல்லிற்று -என்கை –

—————————————————

சூரணை -423-

குண தோஷங்கள் இரண்டும் –
சூத்திர புருஷார்த்தத்தையும் –
புருஷார்த்த காஷ்டையையும் குலைக்கும்—

பிரதம பர்வதத்தை விட்டு -என்கிற இடத்தில் -அர்த்தாத் உக்தமான -பகவத் சம்ச்லேஷமும் –
தோஷம் உண்டானாலும் -என்கிற இடத்தில் -அர்த்தாத் உக்தமான -பகவத் விச்லேஷமும் ஆகிற –
இவை இரண்டும் செய்யும் அத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்வரூப குணம் -திருமேனி அழகு தோஷம் இரண்டும் -என்றபடி –
விஷயாந்தர ஷூத்ர புருஷார்த்தம் குலைக்கும் –ஸ்வரூப குணம்
திருமேனி அழகு புருஷார்த்த காஷ்டயை குலைக்கும்
அன்றிக்கே
கலவி -சம்ச்லேஷம் குணம் -ஷூத்ர புருஷார்த்தம் குலைக்கும் -விஸ்லேஷ தசையில் -ஆச்சார்யர் இடம் வர வில்லை
கிடைக்கும் வரை காத்து இருந்து புருஷார்த்த ஷ்டையைக் குலைக்கும்
இப்படி இரண்டு நிர்வாகங்கள் –
பிரதம பர்வ விரோதியை அறுக்கும் குணங்கள் -சரம பர்வ விரோதி திருமேனி அழகு -ரூப ஸுந்தர்ய தோஷம்
ஆச்சார்ய கைங்கர்யம் நிஷ்டையை குலைத்து தன் பக்கலிலே இழுக்கும்
கூட்டம் கலக்கியார் -விரோதி தானே திருவாய்மொழி கேட்க்கும் உத்தேசியத்துக்கு விரோதி ஆவது போலே –
மா முனிகள் -குணமே இரண்டையும் குலைக்கும் / தோஷம் இரண்டையும் குலைக்கும்
கொப்பூழில் எழு கமல பூ அழகு –சுழியாறு-ஸுந்தர்ய நதி -போக முடியாமல் -ஷூத்ர புருஷார்த்தம் புருஷார்த்த காஷ்டையும் குலைக்கும் –

குணமாவது -ஸ்வ சௌந்த்ர்யாதிகளை -ஆஸ்ரிதர்க்கு முற்றூட்டாக அனுபவிக்கக் கொடுத்து கொண்டு இருக்கும் -கலவி –
தோஷம் ஆவது -அவ் வனுபவ அலாபத்தாலே அவர்கள் கண்ணாஞ்சுழலை இட்டு துடிக்க- தான் முகம் காட்டாது இருக்கை யாகிற -பிரிவு –
இவை இரண்டும் சூத்திர புருஷார்த்தத்தையும் -புருஷார்த்த காஷ்டையையும் குலைக்கை -யாவது —
ஓர் ஒன்றே இரண்டையும் குலைக்கை –

இதில் குணம் இரண்டையும் குலைக்கை  யாவது –
மால் பால் மனம் சுழிப்ப –மங்கையர் தோள் கை விட்டு -என்றும் –
மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம் துரந்தார் தொழுது ஆரத் தோள் -என்றும் தத் விஷய வை லஷண்யத்தாலே
சூத்திர விஷய வைராக்யத்தை பிறப்பிக்கையாலே- சூத்திர புருஷார்த்த அந்வயத்தை குலைக்கையும் –

பயிலும் சுடர் ஒளியிலே -ததீய சேஷத்வத்தில் ஊன்றின ஆழ்வாரை அந்த ததீயருடைய ஸ்வரூப நிரூபகத்வேந ப்ரஸ்துதமான
தத் ஸௌந்த்ர்ய சீலாதிகளாலே -ததீய தாஸ்ய ரசத்தை மறந்து அவனை அனுபவிக்கையில் ஆசை கரை புரண்ட அநந்தரம் –
திருவாய் மொழியிலே தாமும் தம்முடைய கரண க்ராமங்களும்-பெரு விடாய் பட்டு – கூப்பிடும்படி பண்ணினாப் போலே –
(பயிலும் சுடர் ஒளி -அடுத்த திருவாய் மொழியிலே -முடியானே-என்று கிடக்கும் என் நெஞ்சமே –)
வேறு ஒன்றுக்காக புகுந்தாலும் -தன்னை ஒழிய புறம் ஒன்றுக்கு ஆளாகாதபடி பண்ணும் –
த்ருஷ்டி சித்த அபஹாரி யானவன் -பக்கலிலே சுழி ஆறுபடுத்தி புருஷார்த்த காஷ்டையான ததீய சேஷத்வத்தில் நிலையை குலைக்கையும் –

தோஷம் இரண்டையும் குலைக்கை யாவது –
அனுபவ அலாப க்லேசத்தாலே -சர்வ காலமும் தன் பக்கலிலே மனசாய்-
உண்டு அறியாள் உறக்கமும் பேணாள் -சிறகின் கீழ் அடங்கா பெண் பெற்றேன் -பரகால நாயகி தாயார்
பந்தொடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்-5-5- -என்கிறபடியே –
முன்பு அனுபவித்துப் போந்த ப்ராக்ருத போகங்கள் ஆகிற சூத்திர புருஷார்த்தங்களில் பொருந்தமையை விளைக்கையும் –

அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய –8-10-
செந்தாமரை கண் திருக் குறளன் நறு மா விரை நாண் மலர் அடிக்கீழ் புகுதல்-உறுமோ பாவியேனுக்கு-என்றும் –
தனிமா தெய்வத் தளிரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் நனிமா கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே-என்றும்
இப்படி தத் விஷய சம்ச்லேஷ ரசம் வேண்டாதபடி -ததீய விஷய சம்ச்லேஷ ரசமே அமையும் என்று இருக்கும் அவர்களையும் –
அந்த ததீயருடனே கூடி இருந்தாலும் அவர்கள் பக்கல் நெஞ்சு அற்று அவனை அனுபவிக்கையில் ஆசையால் –
காண வாராய் –
காணுமாறு அருளாய் -என்று கூப்பிடுவது –
வெஞ்சிறைப்புள் தனிப்பாகன் -இத்யாதிகளாலே அவர்கள் தங்களோடு வெறுத்து வார்த்தை சொல்லுவதாம் படி பண்ணுகையாலே –
புருஷார்த்த காஷ்டையிலே நெஞ்சு பற்றாதபடி பண்ணுகையும்–

—————————————–

சூரணை -424-

நித்ய சத்ருவாய் இறே இருப்பது –

இதில் சூத்திர புருஷார்த்தைத்தை குலைக்கும் -என்ற இது -தன் பக்கலிலே அகப்பட்டாரை- புறம்பு ஒரு விஷயம் அறியாதபடி பண்ணும் –
( மற்று ஒன்றை காணா என்னப் பண்ணுமே-பாவோ நான்யத்ர கச்சதி -துஷ்க்ருதம் க்ருதவான் ராம -பிரபு –
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமாள்- சோகத்தால் –முடியலாமே -கர்மாதீனத்தால் முடிவு இல்லை நித்யம் -கிருபாதீனத்தால் முடிய வேண்டாமோ )
இவ் விஷயத்தின் ஸ்வாபம் சொல்லுகைக்காக கூப்பிட்டுக் கொண்ட இத்தனை -புருஷார்த்த காஷ்டையை குலைக்கும்
என்னும் அதுவே இவ்விடத்தில்  அபேஷிதம்-ஆன பின்பு சூத்திர புருஷார்த்த பஞ்சகத்வம் ப்ராசங்கிகம் – ( இடை பிற வரல் -ப்ராசங்கிகம் )
ஆகையாலே -அத்தை விட்டு –
பிராகரணிகமான -சரம புருஷார்த்த பஞ்சகத் வத்தை மூதலிக்கிறார்-

அயோத்யா காண்டம் முதல் ஸ்லோகம் -கச்சதா மாதுல குலம்–பாகவத சேஷத்வ பாரதந்த்ரம் அறிந்த ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான்-
நிறைய வியாக்யானம் -உண்டே-பாயச அம்ருதம் ஒத்த இறுதி பகுதி உண்டு பெற்ற பிள்ளை அன்றோ –
செம்புகன் தன்னை -தம்பிளால் வான் ஏற்று -லவணாசுரன் வென்ற விருத்தாந்தம் –
ராம ஸுந்தர்யம் இ றே நித்ய சத்ரு இவர் நிலையில் -உத்தேச்ய விரோதி -என்பதால் -அநக -நித்ய சத்ரு –
சரம புருஷார்த்தம் பஞ்சகம் -குலைக்கும் –
விஷயாந்தர பிராவண்யங்கள் நமக்கு சத்ரு -நித்யம் இல்லையே -அநித்தியம் தானே ‘
இங்கு நித்ய சத்ரு -ஸ்ரீ ராம ஸுந்தர்யம் –
ஏவம் ரூப பகவத் தோஷம் சரமத்தில் வர ஒட்டாமல் –
ஆர் ஆர் எனச் சொல்லி ஆடுமது கண்டு -வாராயோ -நீ தான் ஆடி வெல்லுவாய் –சென்றேன் என் வல்வினையால் -மடல் எடுக்க விரோதி அன்றோ
மன்றம் அமரும் படி பண்ணிச் சென்றான் -ஸ்ரீ கிருஷ்ண பக்தி -சத்ரு இங்கு –
ஆச்சார்ய கைங்கர்யம் துர்லபம் -அமுக்குண்ணாமல் அவ்வளவும் வர பெற்றால் அலப்ய லாபம் –
பிரதம பர்வ அன்வயம் -அதன் பலமே சரம பிராப்யம்

அதாவது –
சத்ருக்னோ நித்ய சத்ருக்ன -என்று பெருமாளுக்கு அபிமத விஷயமான ஸ்ரீ பரத ஆழ்வானையே தமக்கு உத்தேச்யமாகப் பற்றி –
அவனை அல்லாது அறியாதே  இருக்கும் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் –
பரத அனுவ்ருத்திக்கு விரோதியான -ராம ஸௌ ந்த்ர்யம் ஆகிற நித்ய சத்ருவை ஜெயித்து இருக்கும் என்கையாலே –
ததீய கைங்கர்ய நிஷ்டனுக்கு -நித்ய சத்ருவாய் இறே -பகவத் ஸௌந்த்ர்யம் இருப்பது -என்கை –
ஆகையால் இப்படி விலஷணமான விஷயத்தில் -சம்ச்லேஷ விச்லேஷங்கள் இரண்டும்
புருஷார்த்த காஷ்டையை குலைக்கும் என்ன குறை இல்லை என்று கருத்து –

அன்றிக்கே –
கீழ் சொன்ன குண தோஷங்கள் இரண்டும் செய்யும் அத்தை அருளிச் செய்கிறார் –
குணமாவது -இங்கு அது செய்ய ஒண்ணாது -என்கிற இடத்தில் சொன்ன
பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரியான ஸௌந்த்ர்ய சீலாதிகள் –
தோஷம் ஆவது -குணம் போலே உபாதேயமாய் இருக்கும் -என்கிற இடத்தில் சொன்ன-கடியன் கொடியன்-இத்யாதிகள்-
இரண்டும் சூத்திர புருஷார்த்தையும் புருஷார்த்த காஷ்டையும் குலைக்கும் -என்றது –
ஓர் ஒன்றே இரண்டையும் செய்யும் என்றபடி -(ஆய் ஸ்வாமி ஒவ் ஒன்றும் ஒன்றை குலைக்கும் )-

குணம் இரண்டையும் செய்கையாவது –
மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம் துரந்தார் தொழுது ஆரத் தோள் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே –
சூத்திர புருஷார்த்தைத்தை குலைக்கையும் –
ஸ்வ வைலஷண்யத்தால் ஆழங்கால் படுத்தி புருஷார்த்த காஷ்டையான ததீய சேஷத்வ நிலையை குலைக்கையும் –

தோஷம் இரண்டையும் குலைகையாவது -குணம் போலே உபாதேயமாய் -அவன் என்றே கிடக்கும்படி பண்ணுகையாலே
ஊண் உறக்கம் பந்து கழல் -முதலானவற்றில் பொருந்தாமை விளைத்து சூத்திர புருஷார்த்தத்தை குலைக்கையும் –
சிறுமா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய –நறு மா விரை நாண்-மலர் அடிக்கீழ் புகுதல் -உறுமோ -என்னும் படியான
புருஷார்த்த காஷ்டையை குலைக்கையும் – என்று இங்கனே யோஜிக்க்கவுமாம் –
இந்த யோஜனைக்கு -நித்ய சத்ரு -என்கிறது -ஸௌந்த்ர்யாதி குண விசிஷ்ட வஸ்து விஷயமாகக் கடவது -( அழகன் நித்ய சத்ரு என்றபடி)

அங்கனும் அன்றிக்கே –
குணம் புருஷார்த்த காஷ்டையை குலைக்கும் என்னும் அதுக்கும் –
தோஷம் சூத்திர புருஷார்த்தத்தை குலைக்கும் என்னும் அதுக்கும் –
பூர்வ யோஜனைகளில் சொன்னபடியே பொருளாககடவது-
இவ் விஷய ஸ்வாபம் இது வாகையாலே சரம பர்வமான ஆச்சார்ய கைங்கர்யம் ஆகிற இது -தான் துர்லபம் என்று
சிம்ஹாவலோகந ந்யாயத்தாலே -கீழோடு அந்வயம்-

—————————————

சூரணை-425-

இப்படி பிராப்யத்தை அறுதி இட்டால் அதுக்கு சத்ருசமாக வேணும் இறே ப்ராபகம் –

ஸ்வரூபத்துக்கும் ப்ராபகத்துக்கும் சேர்ந்து இருக்க வேணும் இறே ப்ராபகம் -என்ற இதில் –
ஸ்வரூப அநு ரூபமான ப்ராப்யம் -சரம பர்வமான ஆசார்ய கைங்கர்யம்-என்று நிர்ணயித்தாரார் நின்றார் கீழ் –
இந்த ப்ராப்ய அநு ரூபமான பிராபக நிர்ணயம்-பண்ணுகிறார் மேல் –

ஆச்சார்யன் கைங்கர்யம் ப்ராப்யம் என்று நிரூபித்த பின்பு -அதுக்கு உபாயம் -பற்றி மேலே -ஆச்சார்யர் திருவடிகளே சத்ருசமான உபாயம் –
சாத்தியம் -சாதனம் – திருக்கடித்தானம்-ஸாத்ய ஹ்ருதஸ்யத்னன்-சாதனம் ஓருக்கடிக்கும் தாயப்பதி-க்ருதஜ்ஜை
திவ்ய தேசம் சாதனமாக கொண்டு ஆழ்வார் திரு உள்ளம் அங்கு போலே –

அதாவது –
இப்படி ஆசார்ய கைங்கர்யமே ப்ராப்யம் என்று அறுதி இட்டால் இந்த
ப்ராப்யத்துக்கு தகுதியாக வேணும் இறே ஏதத் ப்ராபகம் -என்கை –
இத்தால் ஆசார்ய கைங்கர்யம் ஆகிற சரம ப்ராப்யத்துக்கு ஆசார்யனே ப்ராபகனாக வேணும் -என்றபடி –

சத்ருசம் -அனுரூபம் -தகுதி -யோக்யதை மட்டும் போதாதே -சிறப்பான பொருத்தம் -இருக்க வேண்டும்
பகவத் திருவடியும் தகுதி தானே -அனுரூபம் இல்லை என்றபடி –
ச ஹ்ருதய ஆஹ்லாத கரத்வம் -தகுதி -ஆகும் -சந்த்ர சகோதரி -சம்சாரி தாபம் போக்கும் -பிராட்டி
ச ஹ்ருதயர் -சேதன ஸ்வரூப யாதாத்ம்யம் அறியும் ஈஸ்வரன் -பகவான் திரு உள்ளம் குளிர வைக்கும் தகுதி என்றபடி –
தன்னை பிடித்தாலும் குளிரும் -உபாயம் தன்னைப் பொறுக்கும் -அனுரூபத்வம் இல்லையே -தகுதிக்கு மேலே அனுரூபத்வம் –
சேதன ஸ்வரூப யாதாம்யாம் அறிந்த -ஆச்சார்ய சேஷத்வம் அறிந்த பெருமாள் என்றபடி –
அல்லி கமலக் கண்ணன் -அவனை விட்டு ஆச்சார்யரை பற்றினால்-அன்றோ –

—————————————-

சூரணை -426–

அல்லாத போது ப்ராப்ய ப்ராபகங்களுக்கு ஐக்க்யம் இல்லை —

இப்படி இல்லாத போது வரும் ஹானி எது என்ன –
அருளிச் செய்கிறார் –

அவனும் அவளுமான சேர்த்தியில் அவர்கள் ஆனந்தத்துக்கு கைங்கர்யம் -இருக்க வேண்டுமே –
கர்ம ஞான பக்தி -உபாயாந்தரங்கள் -ப்ராபகம் பகவான் -ஐக்கியம் இல்லை
சரணாகதி மூலம் -ஐக்கியம் உண்டே –
அடுத்த நிலை -ஆச்சார்ய கைங்கர்யம் பிராப்யம் நிரூபித்த பின்பு ப்ராபகம் ஆச்சார்யர் திருவடிகள்
இது உபாயாந்தரம் தோஷம் ஆகுமோ என்னில்–இல்லை என்கிறார் மேல் –
அங்கும் ஆச்சார்யர் பின்பு வர தான் பூர்ண கும்பம் வைத்து வணங்கி -ஆழ்வான் நிஷ்டை –
ஆச்சார்யர் ராஜ்ஜியம் ஸ்ரீ வைகுந்தம் ஈர் அரசு பட்டு இராதே –
புல்லை காட்டி அழைத்து புல்லை இடுவாரைப் போலே சரம உபாயம் கொண்டு சரம ப்ராப்யம் –

அதாவது –
இப்படி இப் ப்ராப்யத்துக்கு சத்ருசாம்படி ஆசார்யனை ப்ராபகமாக கொள்ளாதே ஈஸ்வரனை ப்ராபகமாக கொள்ளும் போது –
ப்ராப்யத்துக்கும் ப்ராபகத்துக்கும் – தன்னில் ஐக்க்யம் இல்லை என்கை-
பிரதம  பர்வதுக்கு உண்டான ப்ராப்ய பிராபக ஐக்க்யம் -சரம பர்வதத்துக்கும் ஒக்கும் இறே –
ஆகை இறே பிள்ளை அமுதனார் –
பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி –
அப்பேறு அளித்ததற்கு ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி -என்று –
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டுமே ஏக விஷயமாகவே அருளி செய்தது –

————————————

சூரணை -427-

ஈஸ்வரனை பற்றுகை கையை பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி –
ஆசார்யனைப் பற்றுகை அவன் காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ  பாதி–

இப்ப்ரபந்தத்தில் உபக்ரமே பிடித்து -ஸ்வ தந்த்ரனை -இத்யாதி -வாக்யத்து  அளவும் –
சித்தோ உபாய தயா சகல சாஸ்திர சித்தனான ஈச்வரனே -பரம உபாயமாகவும் –
ஆசார்யன் அஜ்ஞாத ஜ்ஞாபனம் முகேன-உபகாரனாகவும் இறே சொல்லிப்  போந்தது –
இப்போது ஈஸ்வரனை விட்டு ஆசார்யனே உபாயம் என்னும் அளவில் -சாஸ்திர விரோதமும் -ஸ்வ உக்தி விரோதமும் சம்பவியாதோ –
(இரண்டாம் கேள்வி -யாதோ வா இமானி –ஜாயந்தே -இத்யாதி சாஸ்த்ர வாக்கியம் ப்ரஹ்மத்தாலே மோக்ஷம்
இரண்டும் சித்தம் ஸூ கரத்வம் -ஏற்றம் எது )
ஈஸ்வரனை உபாயமாக பற்றுமத்தில் காட்டில் -ஆசார்யனை உபாயமாகப் பற்றினால் வரும் ஏற்றம் தான் ஏதோ என்கிற சங்கையின் மேலே
அருளிச் செய்கிறார் –

சித்த உபாயம் பகவான் தன்னைப் பொறுக்கும் -ஆச்சார்யர் அந்நயத்வம் சுலபம் உறுதி -எளிமை -கெஞ்சினால் கார்யகரம் ஆகுமே
நிரங்குச ஸ்வ தந்த்ரன் -திமிறி உதறினாலும் உதறுவான் -ஸ்வ ஆச்சார்ய பரதந்த்ரர் கிருபா பரதந்த்ரர் ஸ்வ ஆச்சார்யரை பற்றுகை –
கிருபாளுவானவன் சுலபனானவனுடைய காலைப் பிடித்து-அங்கே கலசல் -கிருபையும் ஸ்வ தந்தர்யம்
இள நெஞ்சு -தாக்ஷிண்யம் பார்த்து கார்யகரம் ஆகுமே -அபேக்ஷிதம் செய்து தலைக்கட்டுக்கைக்கு உடலாகும்
அன்றிக்கே
ஈஸ்வரன் -அர்ச்சா அவதாரம் -கையைப் பிடித்தது -இம்மூவரும் சரணாகதி அர்ச்சையில் பார்த்தோம் -அஞ்ஞர் ஞானாதிகர் பக்தி பாரவஸ்யர் –
ஆச்சார்யர் திருவடிகள் ஸ்தானம் –
அவயவி பகவான் ஒருவனே -அர்ச்சா ஆச்சார்யர் இருவரும் அவயவங்கள் -கர ஸ்தானம் சுலப விஷயம் காட்டில் –
சரண ஸ்தானம் சுலப விஷய பகவத் விஷயம் பற்றுவது போலே -ஆகையால் உபாயாந்தர தோஷம் வராதே -சுகமாகவும் திருடமாகவும் இருக்குமே
இரண்டாம் நிர்வாகம் இது –

அதாவது –
ஈஸ்வரனைப் பற்றுகை அவன் கையைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி –
ஆசார்யனைப் பற்றுகை அவன் காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ  பாதி -என்கை
இங்கன் அருளிச் செய்தது –
ஈஸ்வர விஷயத்தோடு ஆசார்ய விஷயத்து உண்டான அநந்யத்வமும் –
(அநந்யத்வம்–ஸ்வரூப ஐக்கியம் இல்லை -ஏக தத்வம் -ஜீவ பர பேதம் இல்லை -தோஷம் வரக் கூடாதே –
தப்த அய பிண்டம் -இரும்பு -அக்னி தேஜஸ் -கொல்லன் பட்டறையில் -தக தக இருக்குமே –
நெருப்பா பிருத்வியா சங்கை போலே-பண்டம் இரண்டு -அதுவே இது சொல்லுமா போலே –
அதிஷ்டானம் -ஒரு நிலையில் இருக்கும் அவஸ்தை -இரும்பை நெருப்பாக பார்க்க வைக்கும்
ஆச்சார்யரை அப்படி அதிஷ்டான விசேஷம் செய்து அருளி -தாதாத்ம்யம் -அதுவே இது என்கிற தன்மை -தவிர ஸ்வரூப ஐக்கியம் இல்லை -)
அவ் விஷயத்தை பற்றுமதில் இவ்விஷயத்தை பற்றுமதுக்கு உண்டான கார்ய சித்தியில் அமோகத்வமும்-(வீணாகாதே) தோற்றுகைக்காக-
(ஸ்ரீ பரத ஆழ்வான் சரணாகதி பலிக்க -14- ஆண்டுகள் ஆனதே -)
அது எங்கனே என்னில் –
சரணத்வ உக்தியாலே தத் அநந்யத்வம் சம்ப்ரதிபந்தம் –
ஈஸ்வரனைப் பற்றுகை அவன் கையைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி – என்கையாலே -மகா பிரபுவாய் இருப்பான் ஒருவனை
வசீகரித்து காரியம் கொள்ளுவான் ஒருவன் -அவன் கையைப் பிடித்து வேண்டிக் கொண்டு கார்யம் கொள்ளப் பார்க்கும் அளவில் –
நீர்மையாலே -நெஞ்சு இளகி கார்யம் செய்யவுமாய்-ஸ்வாதந்த்ர்யத்தால் உதறி விடவுமாய் இருக்கையாலே –
இன்னபடி என்று அறுதி இட ஒண்ணாது போலே –
ஆஸ்ரிதனான இவனுடைய அபேஷிதம் தன்னுடைய கிருபையாலே நெஞ்சு இளகி கார்யம் செய்யில் பலிக்கும் படியாயும் –
ஸ்வதந்த்ர்யத்தால் முருகி செய்யாது ஒழியில் விபலிக்கும்படியாயும் இருக்கையாலும் –
ஆசார்யனைப் பற்றுகை அவன் காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ  பாதி-என்கையாலே
அப்படி பிரபுவானவன் தன்னையே காலைப் பிடித்து வேண்டிக் கொண்டு கார்யம் கொள்ளும் அளவில் -தயா பரவசனாய்
கார்யம் செய்து அல்லது நில்லாமையாலே தப்பாமல் கார்யம் சித்திக்குமா போலே -ஆஸ்ரிதனான இவனுடைய அபேஷிதம்
உறுதியாக பலிக்கும்படி இருக்கையாலும் -அமோகத்வம் சம்ப்ரதிபன்னம்–

———————————–

சூரணை -428-

ஆசார்யன் இருவருக்கும் உபாகாரகன் —

உபயருக்கும் உபகாரகர் -ஆஸ்ரயண சுலபனாவது மட்டும் இல்லை -சேஷ சேஷி சா பேஷரான சேஷி சேஷருக்கும் என்றவாறு –

ஆக –
ப்ராப்ய நிர்ணயத்தை பண்ணி -இதுக்கு சத்ருசமாக வேணும் இறே ப்ராபகம் -என்கிற இத்தாலே ஆசார்ய கைங்கர்யம் ஆகிற
சரம ப்ராப்யத்துக்கு ஆசார்யனே சத்ருச உபாயம் என்னும் அத்தை பிரதிபாதித்து –
அப்படி அன்றிகே –
ஈஸ்வரனை உபாயமாக கொள்ளும் அளவில் வரும் விரோதம் காட்டி -ஆசார்யனுக்கு ப்ராப்யத்வம் ஈச்வரனோடே அன்வயத்தாலே யாமோபாதி-
(அன்வயம் -என்றால் -அதிஷ்டானம் -சிறப்பு -தனது முக உல்லாச காஷ்டை அதுக்கு ஹேது-அதிஷ்டான ரூப சம்பந்தம் —
ஆச்சார்யர் முக மலர்ச்சியை பகவான் திரு முக மலர்ச்சியின் எல்லை நிலம் -சாஷான் நாராயண தேவ என்கையாலே
குழந்தைக்கு ஏதோ கொடுக்க அது சிரிக்க தாய் மிக மகிழுமா போலே -மத் பக்த பஃதேஷூ ப்ரிய தமம்)
ப்ராபகத்வமும் தத் அனந்யத்வ நிபந்தனம் என்னும் அத்தையும் –
(அநந்யத்வ நிபந்தனம்-தத் கிருபா அதிசய ஆச்சார்யர் கிருபையே -பகவத் கிருபையை தூண்டி விடும் அதிஷ்டான விசேஷம் )
ஈஸ்வரனை பற்றுமதில் இவனை பற்றும் அதுக்குள்ளே ஏற்றத்தையும்
அருளிச் செய்தார் கீழ் –
இனிமேல் பல ஹேதுக்களாலும் ஆசார்ய வைபவத்தை பிரகாசிக்கிறார் –
இவ்விஷயத்தை உபாயமாக பற்றுமவர்களுக்கு ருசி விச்வாசங்கள் விளைக்கைக்கு உறுப்பாக -அதில் பிரதமத்தில் –
ஈஸ்வர சேதனர் இவர்களுக்கும் இவன் உபகாரகன் ஆனமையை
அருளிச் செய்கிறார் –

அதாவது –
இப்படி உபாயமாக கீழ் சொல்லப்பட்ட ஆசார்யன் -சேஷி சேஷபூதரான-ஈஸ்வர சேதனர் –
இருவருக்கும் அபிமத வஸ்துகளை கொடுத்த உபகாரகன் -என்கை –

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –