திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

 காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்துதன் உந்தி உள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ உலகுகளே.

    பொ-ரை : எல்லா உயிர்களையும் பாதுகாத்தலையே தனக்கு இயல்பாகவுடையவன் கண்ணபிரானாகிய நம் இறைவன்; அவன், அழிக்கும் காலம் வந்தவாறே, எல்லா உயிர்களையும் தன் திருமேனியில் சேரச் செய்து, பின்னர், தனது திருநாபிக்கமலத்திலே, எல்லாக்குணங்களும் பொருந்திய பிரமனையும், இந்திரனையும், தேவர்களையும், தேவர்களுக்குரிய உலகங்களையும் உண்டாக்கினான்.

    வி – கு : ‘தன உந்தியுள்ளே ஆக்கினான்’ எனக் கூட்டுக. சேர்க்கை செய்தல் – அழித்தல்; ஒரு சொல். இனி, தன் திருமேனியில் சேர்தலாகிய தொழிலைச் செய்து என்று பொருள் உரைத்து இதனை இருசொல்லாகக் கோடலுமாம்.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. ‘படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் இம்முத்தொழிலையும் 1தன் அதீனமாம்படி இருக்கின்றான் ஆதலானும், இவனே இறைவன்,’ என்கிறார்.

    காக்கும் இயல்வினன் – 2‘செல்வங்களைக் கொடுப்பதிலும் ஆபத்துக்களை நீக்குவதிலும் ஆடவர் திலகனான திருமகள் கேள்வனைத் தவிர, வேறு ஒருவரும் ஆற்றலுடையவராகக் காணப்படுகின்றார் இலர்,’ என்கிறபடியே, காப்பாற்றுதலை இயற்கையாகவுடையவன். கண்ண பெருமான் – காப்பாற்றும்பொருட்டுக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்த இறைவன். சேர்க்கை செய்து – அழிக்கிற காலம் வந்த அளவில், காரிய வடிவமான இவ்வுலகங்கள் முழுதும் தன் பக்கலில்சேர்தலாகிய செயலைச் செய்து. 1தன் உந்தியுள்ளே – தன்னுடைய திருநாபிக்கமலத்தில். வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் தெய்வ உலகுகள் ஆக்கினான் – பிரமன் இந்திரன் மற்றும் உண்டான தேவர்களோடே கூட அவர்களுக்கு இருப்பிடமான உலகங்களையும் கட்டளைப்பட உண்டாக்கினான். இறைவன், 2பிரமனைப் படைத்து அவனை நோக்கி, ‘உலகத்தை எல்லாம் படைப்பாய்’ என்று ஒருகால் ஏவிவிட்டால் பின்னைத் தன்னையும் கேட்க வேண்டாதபடி படைத்தலின் ஆற்றல் வாய்த்தவனாதலின் ‘வாய்த்த திசைமுகன்’ என்கிறார்.

. ‘பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனை’–
  என்றார் இளங்கோவடிகள்.

மூன்றும் சுவாதீனம்
சம்காரம் சங்கை வேண்டாம்
காக்கும் இயல்பினன்
சேர்க்கை செய்து உந்தி உள்ளே
திசை முகன்
தெய்வ உலகு ஆக்கினான்
நல்லது சேரவும் தீயதும் விலக்க சமர்த்தன் புருஷோத்தமன் ஒருவனே –
கண்ணா பெருமான் -நிரூபிக்க கிரிஷ்ணனான வந்த சர்வச்வரன்
கிரிஷ்ணனை எ தொட்டு கொண்டு போவார்
கிருஷ்ண த்ர்ஷ்ணா தத்வம்
கண்ணன் அடி மேல் குருகூர் சடகோபன்
தன் பக்கல் சேர்த்து கொண்டு
திரு நாபி கமலத்தில் ஆக்கி
வாய்த்த திசை முகன்
ஒரு கால் சிருஷ்டி என்று விட்டால் பின்பு –தன்னையும் கேட்க்காமல் செய்து கொண்டே -வாய்த்த அடை மொழி –
தானே சிருஷ்டிக்கும் சக்தன்
தெய்வ லோககங்களையும் கட்டளை பட உண்டாக்கி கொடுத்தான் .

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading