Archive for July, 2020

ஸ்ரீ கோதா உபநிஷத் – ஸ்ரீ ஆண்டாள் கீதை – ஸ்ரீ நாச்சியார் ராமாயணம் – ஸ்ரீ சூடிக் கொடுத்தவள் பாகவதம் –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் =

July 29, 2020

ஸ்ரீ கோதா உபநிஷத்

ஸ்ரீ பெரியாழ்வார் -பா மாலை பூ மாலை பெண் மாலை –
வேதம் அனைத்துக்கும் வித்து ஆகுமே –
மறை -மறைத்து சொல்வதை எளிமையாக அனைவரும் அறியும்படி -வேதக் கருத்தையே காட்டி அருளி –
வேதாந்தமே உப நிஷத் -ப்ரஹ்மம் சமீபத்தில் நம்மை வைக்கும்-பாதகங்கள் தீர்க்கும் -பரமன் அடி காட்டும்
பரமன் அடி பாடி உபக்ரமம் –பொற்றாமரை அடி உப ஸம்ஹாரம் –

அநாதி மாயையால் ஸூப்தா யதா ஜீவா ப்ரப்புத்தயா- நாம் தூங்க -நம்மை எழுப்புகிறாள் -லௌகிக விழிப்பு இருந்தாலும் –
ஆன்மிக விழிப்பு உணர்வு இல்லாமல் பல பிறவிகளில் இருக்க -பிள்ளாய் -இத்யாதி விழிச் சொற்கள் –
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –
பாரார்த்யம் ஸ்வம் -ஸ்வாமி -யஸ்யாஸ்மி -அந்தர்யாமி -கண்ணாடியில் அழுக்கு போலே சம்சாரம் –
நித்ய அனுசந்தானம் ஆராதனம் இதுக்குத் தானே –

நாராயணனே -ஒருமை -நமக்கே-பன்மை -பறை தருவான் -இனியது தனி அருந்தேல் –
தகுதியை உருவாக்கி அருளுகிறார்
ஏக பஹு -நித்யன் -ஒருவன் -சேதனன்
நாம் -நித்யம் -பலர் -சேதனர்கள் –
நமக்கே -ஆத்ம ஞானம் உடையவர்களாக நமக்கு
அறிவு இல்லாதவர்களுக்கும் அறிவை அருளுகிறார் -சகல பல பிரதன் -சர்வ லாபாய கேசவ –
ஸ்ரீ கிருஷ்ண கர ஸ்பர்சத்தால் தானே பாலைப் பொழியும் –

சத்யம் வத தர்மம் சர –ஆச்சார்ய பிரியம் கொடுக்க வேண்டும் –மாதா தேவோ பவ –
ப்ரஹ்மம் அருகில் இருக்க பயம் போகுமே –தைத்ரியம் உபநிஷத்-இதம் குரு –செய்யும் கிரிசைகள் கேளீரோ
செய்யாதன செய்யோம் –மேலையார் செய்வனகளையே செய்வோம்
ஸ்ரத்தயா தேயம் அஸ்ரத்தயா அதேயம்-ஸ்ரீ யா தேயம் -ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் –

அனுக்ரஹம் செய்பவனுக்கு சொத்தை பறித்து -குந்தி தேவியும் சொத்தைப் பறித்துக் கொள்ள பிரார்த்தனை –
இவளோ நீங்காத செல்வம் -குலம் தரும் செல்வம் தந்திடும் –
செல்வம் பாகவத கைங்கர்யம் -ஆந்தனையும் கை காட்டவே -மழை செல்வம் பால் செல்வம் நெல் செல்வம் சோலைச் செல்வம் –
ஸதாயுர் வை புருஷ–தனம் தானம் பஹு புத்ர லாபம் -வேதம் -படிப்படியாக கூட்டி -அவாந்தர பலம் —
ஸாஸ்த்ரம் கொண்டே ப்ரஹ்மம் -சம்சாரம் த்யாஜ்யம் ப்ரத்யக்ஷம் மூலம் அறிகிறோம் —
வைராக்யம் பிறந்து நாமே ப்ரஹ்மம் தேடிப் போவோமே -பர்ஜன்ய வர்ஷதி –முகில் வண்ணன் –

போய பிழையும் புகுதருவான் நின்றனவும் –ஆகாமி தெரியாத் தனத்தால் -தாமரை இலைத் தண்ணீர் –
பத்ம பத்ம இவ -முன் செய்தவை தீயினில் தூசாகும் –
புஷ்கல பலாசம் ஆப –
இஷீக ஸ்தூலம்-
உத்தர பூர்வ ஆகம் அஸ்லேஷ வினாசம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்
மாரீசனை விரட்டி ஸூபாஹு முடித்து ராமர் அனுஷ்டித்துக் காட்டி –

வாயில் காப்போன் -நாயகனாய் நின்ற
எட்டு த்வாபர எட்டு க்ஷேத்ர பாலகர்கள் -ஆகமங்கள் பெயர்கள் சொல்லும் –
த்வார சேஷி –க்ஷேத்ர சேஷி –ஆச்சார்யர் பாகவதர்கள் மூலமே அவனைப் பெற வேணும்

வள்ளல் பசுக்கள் –ஊற்றம் உடையாய் பெரியாய்–வேதங்களால் -வேதைக சமைதிகன்–யஸ்ய அமதம் தஸ்ய மதம்-
சொல்லி முடிக்காதே -யதோ வாசோ நிவர்த்தந்தே -அப்ராம்ய மனசா ஸஹ-

மாலே –ஆலின் இலையாய் அருள் -பாஞ்ச ஜன்யம் போல்வன சங்கங்கள் -சாலப் பெரும் பறை –
பல்லாண்டு இசைப்பார் கோல விளக்கு கொடி விதானம்
சாம்யா பத்தி–
ஆதி சேஷன் -வேண்டும் -கருடக்கொடி -நப்பின்னைப்பிராட்டி -பெரியாழ்வார் –
நிரஞ்சனம் பரமம் சாம்யம் உபைதி
ருக்ம வர்ணம் -கர்த்தாராம் ஈசன் புருஷம் பச்யதே –பார்த்ததுமே ததா புண்ய பாப விதய –
ஆனந்தத்தில் சாம்யம் -தாரதம்யம் இல்லாமல் -ஸ்வரூப ஆவிர்பாவம்
அபஹத பாப்மா விஜய விமிருத்யு –சத்ய காம ஸத்ய சங்கல்ப -எட்டும் பெறுவோம் -மம சாதரம்யம் ஆகதா
ஸ்வாமியாக அவன் ஆனந்தம் -சொத்தாக நமக்கு ஆனந்தம்

கூடாரை –சூடகமே தோடே செவிப்பூவே –சம் மானம் பிரார்த்தனை
சோச்னுதே ஸர்வான் காமான் சக ப்ரஹ்மணா விபச்சிதா -கல்யாண குணங்களை பெற்று ஆனந்தம்
அவன் குணம் நினைக்க பயம் போகுமே -சாயுஜ்யம் சொல்லும் பாசுரம் இது
கூடி இருந்து குளிர்ந்து -பாலே போல் சீர் நினைக்க குளிரும்
வைகும் சிந்தையிலும் நீ கொடுக்கும் வைகுந்தம் பெரியதோ –

அநு காரம் செய்த ஆண்டாள் போல் அநுஸந்திக்கும் நமக்கும் பேறு சித்தம்

————————

ஸ்ரீ ஆண்டாள் கீதை

முதல்வன் -ஜகத் காரணன் -அவனையே த்யானம் -ஞானம்
புருஷோத்தம வித்யை அறிந்து -பக்தி செய்தவன் ஆகிறான் என்னையே அடைகிறான் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -அவனே பரமன் -நாராயணன்
முக்கரணங்களால்-மன் மநா பவ -மத் பக்த -மத் யாஜி -மாம் நமஸ்குரு-பக்தி யோகம்-
மாஸூ ச -புண்ணியம் யாம் உடையோம் -இறைவா நீ தாராய் பறை -கைங்கர்யம்

அறிவு இல்லாத -கர்மம் யோகம் இல்லாத
அறிவு ஓன்று இல்லாத -ஞானம் யோகம் இல்லாத
அறிவு ஒன்றும் இல்லாத – பக்தி யோகம் இல்லாத
சரணாகதி -மூன்றுக்கும் தகுதி இல்லாததால் -உபாயமாக இல்லாமல்
எங்களைத் தேடி வந்த புண்ணியமே நீயே –இறங்கி வந்து கூட்டிச் சென்று சாம்யாபத்தி–ஸாயுஜ்யம் -அருளுகிறாய்

தத்வ விவேகம்
நித்ய அநித்ய -ஆத்ம தேக விலக்ஷணம் -பரம சேதனன் -புருஷோத்தமன் -வெட்டவோ உலர்த்தவோ நினைக்கவோ முடியாதே
நாராயணன் -நமக்கே -பறை -பிரித்து எளிதாக அருளி -தத்வ த்ரய ஞானம் –
நான் நேற்று இருந்தேன் அல்லேன் என்பது இல்லை – -மன்னர்கள் நேற்று இருந்தார்கள் என்பது இல்லை –இத்யாதி-

வையத்து வாழ்வீர்காள் -ஆண்டாள் –
அரக்கர் அசுரர் உள்ளீரேல் -நம்மாழ்வார்
வாழாட்பட்டு உள்ளீர் -கூழாட்பட்டாரை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம் -பெரியாழ்வார்

ஐந்தாம் அத்யாய ஸ்லோகங்கள் –
வித்யா வினய சம்பன்ன -பண்டித சம தர்சன -த்ரிவித தியாகம் -ப்ரஹ்ம ஞானம் -சம தர்சனம்
நிரதோஷம் -சமம் -ஆத்ம ஸ்வரூபம் ப்ரஹ்மம் -சரீரத்தை விலக்கி ஆத்மாவைப் பார்த்தால் ஞான ஆனந்த ஸ்வரூபம் அறிவோம்
மற்று ஒரு இடத்தில் சரீரமே ப்ரஹ்மம் என்பர்
இஹைவ -ஜித சர்க்கம் -இங்கேயே சம்சாரம் ஜெயிக்கிறான் கர்மயோகம் தொடங்கும் போதே -சாம்யத்தில் மனம் நின்றால்
விசிஷ்ட வேஷம் -நிஷ்க்ருஷ்ட வேஷம் -சமதர்சனம் இருந்தால் தான் ப்ரஹ்மத்தில் நிலை நிற்போம்
சம்சாரம் இத்தால் இங்கேயே வெல்லலாம் –வையத்து வாழ்வீர்காள் –
செல்வச் சிறுமீர்காள் -பிள்ளாய் இவள் சூட்டிய பெயர்கள்-

நீங்காத செல்வம் நிறைந்து –உத்தமன் பேர் பாடி –சாற்றி நீராடினால் -பரமன் அடியே நீங்காத செல்வம் –
அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை தப்பாக சொல்வர் -இதுக்கும் அருள் வேண்டும்
பக்தி ஒன்றே நிறைவை நிம்மதியை சாந்தியைத் தரும்
அநந்யா சிந்தயந்தாம்-தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோக க்ஷேமம் வஹாம் அஹம் –
கிடைக்காதது கிடைக்கவும்-செல்வம் யோகம் – கிடைப்பது நிலைக்கவும் க்ஷேமம் -நீங்காமல் இருக்க –
திருப்தி வேறே ஸந்தோஷம் வேறே
படாடோபங்கள் குறைந்து -நேரம் நல்ல முறையில் செலவளித்து -சாந்தி
சாஸ்த்ரா விதி -மீறி நடந்தால் சித்தி இல்லை -இங்கும் அங்கும் செல்வம் கிட்டாதே
அஸ்ரத்தயா குதம் தபஸ் தத்தம்–அஸத் செயல்

கர்மயோகம் மூன்றாவது -ப்ரஹ்மம் -சரீரத்தையே கீதையில் -ஏவம் ப்ரவர்த்திதம் -இந்திரிய ராமனாக
புலன்களின் பிடியில் ஆயுளை வீண் அடிக்கிறான்
சக்கரம் –உன் பங்கை நீ ஆற்ற வேண்டும் -அன்னம் -பர்ஜன்யம் -மழை வேண்டும் -ஆழி மழை க் கண்ணா
யாகங்களினால் -மழை -பெய்யும் -கர்மயோகத்தில் ஒரு வகை –
கர்மம் சரீரம் இருந்தால் தானே முடியும் -இத்தையே ப்ரஹ்மம் என்று அறிவாய்
தேவர்கள் -பரஸ்பரம் -வாயு காற்று அக்னி நெருப்பு குபேரன் செல்வன்
ஆத்மா சரீரத்தை தூண்டி கர்மம் -யாகம் -மழை -அன்னம்-ஜீவராசிகள் இது தான் சக்கரம்
மநு பகவான் -அக்னி ஆஹுதி கொடுக்க- ஆதித்யன் -மழை பெய்து -இத்தையே

தூ மலர் தூவித் தொழுது -தூய்மை
பத்ரம் புஷ்ப்பம் பலம் தோயம் –பக்தியா பிரயச்சதி –அஸ்நாமி
சததம் கீர்த்தயந்த– -பக்தி தோய்ந்த
மடி தடவாத சோறு
பக்தியுடன் கொடுக்கிறானோ அப்படி பக்தியுடன் -மீண்டும் சொல்லி அதில் உள்ள
தனது பிரியத்தை கீதையில் -தொழும் காதல் களிறு

அம்பரமே -தண்ணீரே -சோறே-தானம் செய்யும் இல்லை அறம் செய்யும் தர்ம சிந்தனை –
சாத்விக தானம் -ராஜஸ தானம் -தாமஸ தானம் மூன்று வகை கீதையில்
பிரதி உதவிக்காகக் கொடுக்காமல் எதிர்பார்ப்புடன் செய்யாமல்
ஸத்காரம் பண்ணி மரியாதையுடன் சாஸ்த்ர விதிப்படி செய்ய வேண்டும்
அத்தேச காலம் அபாத்ரம் தேவை அற்ற முறையில் தாமஸ தானம்

கப்பம் தவிர்க்கும் –விமலா –செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் -ஆஸ்ரித விரோதிகள் –
பாகு பாடு பார்க்கும் -கருணை இல்லாத தோஷம் இல்லாதவன் -என்னை கர்மம் தீண்டாது –
நீங்கள் செய்யும் கர்மங்களை அனுமதித்துக் கொண்டு உள்ளேன் -அதன் வழி பலத்தைக் கொடுக்கிறேன் –
இனிமேல் விட்டு வைத்தால் ஆஸ்ரிதர் பாதிப்பு -சீறி அருளுகிறார்

கறைவைகள் -சரணாகதி பாசுரம்
வருத்தம் தீர்ந்து
வருத்தமும் தீர்ந்து
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து

—————

ஸ்ரீ நாச்சியார் ராமாயணம்

ஸூந்தரே ஸூந்தரோ சீதா ஸூந்தரே ஸூந்தரோ ராமோ ஸூந்தரே ஸூந்தரோ அசோக வனம்
ஸூந்தரே ஸூந்தரோ ஸ்லோகம் -எது தான் இதில் ஸூந்தரமாக இல்லை
ஸ்ரீ ராமாயணமும் ஸ்ரீ திருவாய் மொழியுமே ஸ்ரீ வைஷ்ணவத்துக்கு அரண் -அவ்யபதேசனுக்கு வனாந்தரத்தில் அவன் பிள்ளை வார்த்தை
இன்னார் தூதன் என நின்றான் -திருவடி பெயராலே ஒரு காண்டம் -இதன் பெருமையை உணர்ந்து பாண்டவ தூதனாக ஆனபின்பு
தரித்து நின்றான் -வேறே அவதாரம் இல்லாமல் நின்றானே -பார்த்தன் தன் தேர் முன்னும் நின்றானே –

ரூப உதார குணத்தால் பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரினாம்
ரஞ்சநீ யஸ்ய விக்ரமே
ந நமேயம் என்று இருப்பாரையும் மித்ர பாவேந வும் அமையும் என்பார் பெருமாள்
அப்ரமேய ஜநகாத்மஜா -மாரீசன்
உத்தம தார்மிகஸ்ய அக்ஷய கீர்த்தி- -தாரை
வைய வந்த வாயாலே வாழ்த்திப் போவார்கள்
பரமாத்மனே சனாதன சங்கு சக்ர கதாதரா -மண்டோதரி –
தருணவ் ரூப சம்பன்னவ் ஸூ குமாரவ் –புண்டரீகாக்ஷவ் சூர்ப்பணகை-
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய் –மூல மந்த்ரத்தை ஏழு உலகுக்கும் மருந்து –வாலி

ஆதி காவ்யம்–ஆறு காண்டங்கள் –500 க்கும் மேலான சர்க்கங்கள் –25000 ஸ்லோகங்கள்
குணங்களைப் பற்றியே உபக்ரமம் உப சம்ஹாரம் கோன் வஸ்மி குணவான் -16-குணங்கள் நாரதர் வால்மிகி சம்வாதம் –
குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் -ராமம் ரத்ன மய பீடம் -பகவோ கல்யாண குணவ் –
ஆசாரம் பிரபு பெருமாள் -நடுவிலும் குணங்களைப் பற்றி அயோத்யா மக்கள் தசரதன் இடம்-

மனத்துக்கு இனியான்
சினத்தினால் மனத்துக்கு இனியான்
தென் இலங்கை கோமானுக்கும் இனியான்
செற்ற மனத்துக்கு இனியான்
தேவர்களுக்கும் -சக்கரவர்த்திக்கும் -கௌசல்யாதிகளுக்கும் -குகாதிகளுக்கும் -இளைய பெருமாளாதிகளுக்கும் –
ஸூக்ரீவாதிகளுக்கும் -ரிஷிகளுக்கும் -சர்வருக்கும்- இனியான்

பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான் மனத்துக்கு இனியான்-
நல்லா அரக்கரனுக்கும் மனத்துக்கு இனியான் –

சதுர்விதமாக பிரித்து தாய் தந்தையை கொண்டு –அனுஷ்டானம் காட்ட பெருமாள் –
நேர்மையாக வாழ்தல் குரங்குகளும் உதவும் சாமான்ய தர்மம் -காட்ட ராமன்
பொல்லாதவனாக இருந்தால் தம்பியும் உதவான்
கைங்கர்ய செல்வம் காட்ட இளைய பெருமாள் -கிரியதாம் மாம் வத -சர்வம் கரிஷ்யாமி -சேஷத்வம்
பாரதந்தர்ய சிறப்பைக் காட்ட பரதாழ்வான்
பாகவத சேஷத்வம் பரதந்த்ரம் சத்ருக்னன் -அநகன்
ராமனைத் தவிர மற்ற ஒரு தெய்வம் இல்லாத பரதனை அல்லது தெய்வம் அறியாத சத்ருக்னனைத் தவிர
மற்று தெய்வம் இல்லை என்று இருப்பதே நமக்கு கர்தவ்யம்
ஆயில்யம் நக்ஷத்ரம் -புஷ்யம் பரதாழ்வான் -தனது மாமா யுகாஜித் இடம் செல்ல -உடை வாள் போல்-
நிழல் போல் பின்னே சென்றான்

அபிமான பங்கமாய் -அடியார்க்கு அடியார் -நானே தான் ஆயிடுக –
நெடுமாற்கு அடியான் -கொடு மா வினையேன் –பழுதே கிருஷ்ண த்ருஷ்ண தத்துவமாக கீழே இருந்ததுக்கு —
நொந்து கொண்டார்
இவளோ அனைத்தும் பாகவத -ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
உச்சிஷ்ட புருஷ ஹரி உபநிஷத்
கௌசல்யா ஸூப்ரபாதம்
அரவணையாய் துயில் எழாய்
திருப்பள்ளி எழுச்சி
இவளோ பாகவத ஸூப்ரபாதம்

எல்லே இளங்கிளியே பாகவத லக்ஷணம் -அனந்தாழ்வான் -திருமேனியில் நோவு சாத்திக் கொள்ள –
திருமலை அப்பன் ஆள் விட்டு -அனுப்ப தானே வந்தாலும் தாழ்ந்து வர –
பாகவதனைக் காக்க வைக்கவில்லையே -நீ எனக்குள்ளே எத்தனை ஜென்மங்கள் காத்து இருந்தாய் –

ஸ்வம் பாரார்த்யம் –திருப்பாவை முழுவதும் -பரதாழ்வான் படி
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து –குற்றம் ஓன்று இல்லாத கோவலன் தன் பொற்கொடி —
கர்மம் செய்வதிலே நோக்கம் -இளைய பெருமாள் படி இது
கனைத்து –நற் செல்வன் தங்காய் -பால் வெள்ளம் பனி வல்லம் மால் வெள்ளம் -இருவரையும் கொண்டாடுகிறான்
பரதாழ்வான் படி இது -அந்தரங்க கைங்கர்யம்-அவன் திரு உள்ளபடி நடந்து –

ராமனை பிரிந்த மூச்சு அடங்கிய உறவும் வேண்டும்
தூது போகும் உறவும் வேண்டும்
கூடச் சென்ற படியும் வேண்டும்
இருந்து கைங்கர்யம் செய்த படியும் வேண்டும்
அனைத்தும் ஆண்டாளுக்கு வேண்டும் –

மத் பாபமே நிமித்தம் –நானே தான் ஆயிடுக -மந்தரையோ -கைகேயியோ –தசரதனோ –
பெருமாளோ -மூத்தவன் குல மரியாதை -இவர்கள் யாவரும் இல்லை
இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏறிட்டு ச் சொன்னாலும் இல்லை செய்யாதே உண்டு என்று இசைந்தான் -பாகவத லக்ஷணம்

செய்யாதன செய்யோம் -2-
மேலையார் செய்வனகள் -26-
பரத்வாஜர் சொல்படி தங்கி -தார்மிகன் பரதாழ்வான் உடன் தான் அடுத்த ஸ்நானம் என்று இருந்தவர்
ரிஷி சொல்லைத் தட்ட மாட்டாமல் இருந்தாரே

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் ;போகாது -இளைய பெருமாள் படி –

கோபஸ்ய வசம் -திருவடியை ராவணன் அடிக்க
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு என்று நாம் நிர்பயமாய் நிர்பரராய் இருப்போம்

பாவோ நான்யத்ர கச்சதி -ராமனே மனத்துக்கு இனியான் -கல்யாண ராமன் –
சிந்தையில் வைக்கும் இதுக்கு ஸ்ரீ வைகுந்தம் ஒக்குமோ -பக்திச்ச வீரோ –

லோக நாதம் ஸூ க் ரீவம் நாதம் இச்சதி –ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நமக்குக் கிடைப்பானோ என்று இருக்கும்
அஸஹாய ஸூரன் -வீரத்தினால் சீலத்தால் அலகால் மனத்துக்கு இனியன்
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி

உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து -பெண் இனத்துக்கு எல்லாம் மனத்துக்கு இனியான்
கொல்லை அரக்கியை மூக்கு அறிந்த குமரனார் சொல்லும் பொய்யானால் —
ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் -நமக்கு உஜ்ஜீவன மந்த்ரம் –
நத்யஜேயம் கதஞ்சன–அங்குல அக்ரேன -அபயம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் விரதம்
சபரி மோக்ஷம் -எங்கள் மேல் சாபம் போக -செங்கண் சிறுச் சிறுதே எங்கள் மேல் விழித்து –
பூதாத்ம ரகு நந்தன -போல் அருள வேணும்

————

ஸ்ரீ சூடிக் கொடுத்தவள் பாகவதம்

ஸ்ரீ மத் பாகவதம் -12 ஸ்கந்தங்கள் –18000 ஸ்லோகங்கள்
சர்க்கச்ச பிரதி சர்க்கச்ச வம்ச மன்வந்தராணி ச அநு சரித்திரங்கள் பஞ்ச லக்ஷணம் பூர்ணமாக இதில் உண்டே –
ஸூராணாம் அபி துர்லப
ஸூ ஸ்தாம கம்நம் –கலியுகத்தில் பாகவத புராணத்தில் இருப்பேன் என்று உத்தவர் இடம் சொல்லிச் சென்றான்
பரீக்ஷித் மஹாராஜருக்கு ஸூ கர் அருளிச் செய்தது -பல அவதாரங்கள் -இதில் உண்டே
அஜிதன் அலை கடல் கடைந்தான் -கிடந்து கடைந்து அணை கட்டி –
புராண ரிஷிகளுக்கும் ஆழ்வார்களும் ஆண்டாளுக்கும் நெடு வாசி

ஸ்ரீ கஜேந்திர வ்ருத்தாந்தம்
மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த நம் அழகனார் -ஸ்ரக் பூஷ அம்பரம் அலைய –ரஷிக்க ஓடி வர வேண்டாமா
அபலை பெண் ஐந்து முதலைகள் அநாதி கால சம்சாரம் கடலில் -ஜனனம் மரணம் இரண்டு தாடைக்குள் மாட்டி உள்ளோம்-
இங்கே உள்ளேயே இருந்தும் ரஷிக்காமல்
பரும் தாள் களிற்றுக்கு –பரமன் தன்னை பாரின் மேல் ப்ருந்தாவனத்தே கண்டமை –
அருளிச் செய்த நாச்சியார் திருமொழியை மருந்தாம் என்று
தன் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் –பெரும் தாள் பிரான் அடிக்கீழ் பிரியாது இருப்பாரே
சாது பரித்ராணத்துக்கு நேராக வர வேண்டும் –இதுவே சிறப்பு பயன் –
உன்னால் வந்த ஆபத்து -நீ வந்து சேவை காட்டப் பிரார்த்திக்க-நேராக கண்டு -அருளிச் செய்தாள்

வ்யூஹம் -ஷீராப்தி நிகேதன் -ஏஷ நாராயண ஸ்ரீ மான் -பாற் கடலில் பையத் துயின்ற பரமன் –
ஆகதோ மதுராம் புரிம் -தூய பெரு நீர் யமுனைத் துறைவன்–
ஒப்பில்லாத அப்பன் -கிடந்த அவஸ்தையில் பரமன்
பொங்கிய பாற் கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால்
சந்திரனைப் பார்த்துப் பொங்கும் -அஷ்டமி சந்திரன் போல் திருவடி திரு நகங்கள்
சந்திரன் -மனஸோ ஜாத –சூர்யன் கண்களில் இருந்து -இதனாலும் பொங்கும்

வட பெரும் கோயில் உடையான் -ஆலின் இலை மேல் துயின்றான் –ஆலின் இலையாய் அருள் –மாலே மணி வண்ணா பாசுரம் –
மூன்று பண்புகள் ஸுவ்லப்யம் எளிமை அழகு பரத்வம் -பித்தன் -மாலே -நீல மணி ஸுவ் ந்தர்யம் -ஆலின் இலையாய் -பரத்வம்

அன்று பாலனாகி –மார்கண்டேயருக்கு மட்டும் காட்ட கராரவிந்தே –பால முகுந்தம் –
ஆலின் இலை மேல் துயின்ற எம் ஆதியாய் –தொட்டிலில் யசோதாதிகள் இருக்க –
இங்கே தனியாக முகிழ் இலையில் -அகடி கட நா சாமர்த்தியம் –
பால் ஆல் இலையில் துயின்ற -13-பதிகம் -பரமன் வலைப்பட்டு இருந்தேன்
இங்கும் பரமன்

அம்ருத மதனம் –
கடலே கடலே –படுக்கை அறை என்று பார்க்காமல் கடைந்து ப்ரயோஜனாந்தர பரர்களுக்காக —
உன்னைக் கடைந்து கலக்குற்று
மந்த்ரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்டார் —சுந்தர தோளுடையான் —
ஆராவமுதன் பிராட்டியை பெண்ணமுதை கொண்டதை
அஸ்வம் -அப்சரஸ் பாரிஜாதம் -பெண்ணமுது –
கொண்டு உகந்த அம்மான் -உப்புச்சாறு தானே கொடுத்தான் -ஈந்தான்
வங்கக் கடல் கடைந்த மாதவன் கேசவனை -மா வந்து அமர்ந்ததால் தானே மாதவன் ஆனார்
கேசபாசம் -கட்டுக் குடுமி அவிழ கடைந்தான் -அந்த அழகையும் அனுபவிக்கிறாள்
வண்டமர் –கடைந்திட்ட வண்ணம் மெய் அறிவேன் நானே -குலசேகரர்

பாசி தூர்த்து கிடந்த பார் மகள் -தன்னைப் பற்றியும்
மாசு உடம்பில் நீர் வாரா மானமிலா பன்றியாய் தேசுடைய –திருவரங்கச் செல்வனார் பேசி ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
அஹம் ஸ்மராமி -நயாமி மத் பக்தம் -பேர்க்கவும் பேராதே

ஊன் கொண்ட வள்ளுகிரால்– எட்டாம் பதிகம் -தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் —
வேஷம் மாற்ற வேண்டாம் தூணில் இருந்து வர வேண்டும்
சங்கு தங்கு முங்கை நங்கை சீரார் வளையாக இருக்க வேண்டும்

காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் –வாமன நம்பி வர –கூடல் -முத்துக்குறி உத்சவம் –
பெரியாழ்வார் இடம் பெண்ணைக் கேட்பது -எவ்வளவு உயர்ந்தது மண்ணை மஹாபலியிடம் பிச்சைக் குறளாகி —
குறை அதில் -தன்னது என்ற அபிமானம்
அத்தைப் போக்க இச்சை கொண்டு இத்தெரு வழி வரக் கூடாதோ

பொல்லாக் குறளாகி -பொற் கையில் நீர் ஏற்று த்ருஷ்டிக்காக
ஓங்கி -உத்தமன் -அம்பரம் -உம்பர் கோமான் அன்று உலகு அளந்தான் அடி போற்றி -மூன்று இடங்களில்
பிச்சை எடுத்தாதவாது சொத்தை மீட்டுக் கொள்ளும் ஸ்வாமி அன்றோ
உலகம் அளந்த பொன்னடிக்கே அடிமை செய்ய வேண்டும் -மூன்று பதார்த்தம் -மூன்று அக்ஷரங்கள்–மூன்று பதங்கள்

செல்வா பலதேவா -பரசுராமர் -செம் பொன் கழல் அடி –கிருஷ்ண அவதாரத்துக்கு பொற் கால் இட்டார்
படுக்கையும் தூங்குமோ

மாலாய்ப் பிறந்த நம்பியை-
வினைதை சிறுவன் மேலாப்பின் கீழ் வருவான் -மாலே செய்யும் மணாளன் –
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போத க் கண்டீரே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் -கண்ணன் என்னும் கரும் தெய்வம்
கண்ணன் என்று இருந்தேன் தெய்வமாக இருந்தானே
மறக்கவும் முடியாமல் கரும் வண்ணன் -காட்சி பழகிக் கிடந்தேன்
மனத்துக்கு இனியான் அவனை
அரையில் பீதக வாடை கொண்டு என் வாட்டம் தணிய வீசீரே
துஷ்கரம்-பிரபு -ராமனை திருவடி
ஒருத்தி மகனாய் பிறந்து –சரித்திரம் முழுவதும் சொல்லும் பாசுரம்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர –அத்புதம் பாலகம் –
சங்கு சக்கரம் உப ஸம்ஹர சொன்னதும் மறைத்துக் கொண்ட இவன் அன்றோ மகன்
பிறந்தவாறும் வளர்ந்தவாறும் கம்சனை நிரசித்ததும்
புள்ளும் சிலம்பின –பேய் முலை நஞ்சுண்டு -விஷமே அமுதமாகும் வேளையில் பிறந்தான்
கள்ளச் சகடம் காலோச்சி ஏழு மாதக் குழந்தை
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்து -விஷத்துக்கு விஷம் மருந்து
மாயனை –தாமோதரனை -உபநிஷத் -கீதை பக்தி -இன்று பாகவத அர்த்தமும் இதில்
மன்னு -வராஹ -விஸ்ராம் காட் –சத்ருக்னன் 12 வருஷம் ஆண்டு –
யமுனைத் துறைவன் தூய்மை -வாய் கொப்பளித்த தூய்மை –
கருமை -யமுனை -கண்ணன் குளித்து -இவனுக்கும் உடலில் ஏறி
இது தான் மாயம்
தாமோதரன் -தாயைக் குடல் விளக்கம் -கட்டி வைத்து பேர் பெற்றவள்

கற்றுக் கறவை –பாசுரம் நின் முற்றம் புகுந்து முகில் வண்ணம் பேர் பாட -திருப்பாவை -சிற்றில் கட்டி விளையாட சிதைப்பான் –
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்
வேறு ஒன்றில் இன்பம் பார்க்கக் கூடாதே
முற்றத்தூடு புகுந்து -அதே முற்றம் -நின் முகம் காட்டி புன் முறுவல் செய்து -அனைத்துக்கும் அந்தராத்மா –
நமட்டுச் சிரிப்பு -சிற்றிலோடு சிந்தையும் சிதைத்தான்
தோழியும் நானும் தொழுதோம்
லஜ்ஜை விட்டு கண்ணனே ரக்ஷகன் என்று இருக்க வேண்டுமே -கோலம் கரிய பிரானே –
உன் இடம் உள்ள கூறை வேண்டாம் -குருந்திடை கூறை பணியாய்

மதுரை புறம் உய்த்திடுமின் –கோவர்த்தனம் –யமுனை -ஸ்பர்சம் உள்ள அனைத்தும் உத்தேச்யம்
இட்டீறிட்டு விளையாட –இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி -திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவாத்தி

வாரணம் –திருக்கல்யாணம் -நடக்கின்றான் -காளை புகுதக் கனாக் கண்டேன் –புனிதன் –குளித்த புனிதன் –
மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து
இயம் கோதா –சூடிக் கொடுத்தவள் –மம ஸூ தா –ஆயனுக்காக தான் கண்ட கனா
அரங்கனே ஆயன் -கொண்டல் வண்ணன் கோவலன்

குருந்திடை கூறை பணியாய்

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயணம் சங்கத்தமிழ் இலக்கியங்களில்–

July 29, 2020

திருப்பாவையில் சங்கத்தமிழ் (30)என்றும்
திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் சங்கமலி தமிழ் (930), சங்கமுகத் தமிழ் (1187) என்றும்
கம்பரின் இராமாயணத்தில் தமிழ்ச் சங்கம் (4477) என்றும்
அவ்வையாரின் நல்வழியில் சங்கத் தமிழ் (கடவுள் வாழ்த்து) என்றும் கூறப்பெற்றுள்ளன.

திருமங்கை ஆழ்வார் பாடல்களில் சங்கமலி தமிழ், சங்கமுகத் தமிழ் என்னும் சொல்லாடல்கள் இடம் பெற்றுள்ளதை,

சங்கமலி தமிழ் மாலை பத்து இவை வல்லர்கள் (பெரியதிரு.930:7)

சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார் (பெரியதிரு.1187:7)

தமிழ்ச் சங்கம் என்ற சொல்லாடல்

தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல் (கம்பராமாயண-கிட். நாடு,31:1-2)

பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன் (அகம். 25: 20)-திதியன் என்பவனுக்கு உரியது பொதிகை மலை

கழல் தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் (குறுந். 84: 3)–கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ஆய் என்பவனுடையது பொதிகை மலை

திருந்துஇலை நெடுவேற் தென்னவன் – பொதியில் (அகம். 138: 7)-பாண்டியர்களின் சிறப்புப் பெயர் தென்னவன் என்பவனுடையது பொதிகை மலை

மழைசூழ் குடுமிப் பொதியிற் குன்றத்து (மணி.1:22)-குடுமி என்பது பாண்டியர்களின் சிறப்புப் பெயர்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத்தமிழ் மூன்றும் தா.’ அவ்வையார் தான் இயற்றிய நல்வழியில் ‘சங்கத் தமிழ் மூன்றும் தா’-இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும்

————–

சங்கத்தமிழ் இலக்கியங்களில் இராமாயணம்

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் பாடியது. காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு.
“அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்,
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்,
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே” – புறநானூறு 378

சோழ வேந்தன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி நாட்டை விரிவாக்கும் நோக்கத்தில் வஞ்சிப் பூச் சூடி, செருப்பாழி
என்னும் கோட்டையை அழித்துத் தனதாக்கிக்கொண்டான். அந்த வஞ்சிப் போரைப் புலவர் பாடினார். அது கேட்ட வேந்தன்
புலவர்க்கு அவர் அறிந்திராத அரிய அணிகலன்களை வழங்கிச் சிறப்பித்தான்.
அதனைப் பார்த்த புலவரின் பெருஞ் சுற்றத்தார் விரலில் அணிய வேண்டிய அணிகலனைக் காதில் மாட்டிக்கொண்டனர்.
காதில் அணியவேண்டியவற்றை விரலில் மாட்டிக்கொண்டனர். இடுப்பில் அணிய வேண்டியவற்றைக் கழுத்தில் மாட்டிக்கொண்டனர்.
கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டியனவற்றை இடுப்பில் கட்டிக்கொண்டனர்.
கடும் போர்த்திறம் கொண்ட இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை அரக்கன் இராவணன் தன் வலிமை மிக்க கைகளால்
தூக்கிக்கொண்டு சென்றபோது, சீதை தன் கணவன் அடையாளம் கண்டுகொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கே எறிந்துகொண்டு சென்ற
அணிகலன்களைக் கண்ட செம்முகக் குரங்குகள் அணியுமிடம் தெரியாமல் அணிந்து அழகுபார்த்துக் கொண்டது போல்
எனக்கு நகைப்பு விளைவிப்பதாக இருந்தது என்று உவமை கூறுகிறார்.

———–

வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே’– கடுவன் மள்ளனார் (அகம் 70 – வரிகள் 13 முதல் 17 வரை)

உவமை:
தோழி சொன்னாள், “ஆம் தலைவி. பாண்டியரின் தொல்முது கோடியான கடற்கரை ஊரில் பல விழுதுகளை உடைய ஆலமரம்
ஒன்று இருந்தது. காலம் காலமாய் அதில் வாழ்ந்து வந்த பறவைகளின் அடங்காத கீச்சொலியால் அந்த ஊரே அமைதியின்றி இருந்தது.
சீதையைத் தேடி அந்த ஊருக்கு வந்த போரில் வெற்றி கொள்ளும் பண்பினரான இராமன், தம் நண்பர்களுடன் கூடிச் சீதையைத் தேடும்
வழிமுறைகளை ஆராய முயன்ற போது பறவைகளின் அடங்காத ஒலி இடையூறாய் விளைந்தது.
பார்வையாலோ, இதழ் விரித்து எழுப்பிய ஓசையாலோ இராமர் அந்தப் பேரொலியை ஒரு நொடியில் அடங்கச் செய்தாராம்.
அதைப் போலத்தான் நம் பெற்றோர் உனக்கும் அவருக்கும் திருமணம் என்றதும் ஓயாது ஒலித்துக் கொண்டிருந்த ஊர் வாயும் அடக்கிவிட்டது”.
(கோடி = தனுஷ்கோடி – தொன் முது கோடி, கவுரியர் = பாண்டியர்) .

————

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல”– கபிலர் / திணை – குறிஞ்சி (கி.மு. 3ஆம் நூற்றாண்டு)

இமய மலையை வில்லாக்கி வளைத்தவர் சிவபெருமான், அவன் கங்கை ஆறு பாயும் ஈரச் சடையை உடையவன்.
அவன் தன் மனைவி உமையாளோடு சேர்ந்து இமயமலை மேல் அமர்ந்திருந்தான். 10 தலை கொண்டவனான அரக்கர் தலைவன்
இராவணன் தொடி அணிந்திருந்த தன் கையை இமய மலைக்கு அடியில் புகுத்தி அந்த மலையை எடுக்க முயன்றான்.

————-

திருப்பரங்குன்றத்து குகையில் வடிவமைக்கப்பட்டிருந்த ஓவியக் கலைகளில் அகலிகை பற்றிய குறிப்பு:

“என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்,
இரதி காமன், இவள் இவன்’ எனாஅ,
விரகியர் வினவ, வினா இறுப்போரும்;
‘இந்திரன், பூசை: இவள் அகலிகை;
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது’ என்று உரைசெய்வோரும்”

திருப்பரங்குன்றத்து முருகப் பெருமானை வணங்கிய பிறகு, மக்கள் இந்த ஓவிய மண்டபத்தில் சென்று அங்குள்ள ஓவியக் காட்சிகளைக்
கண்டு மகிழ்ந்தார்கள் என்றும், வரையப்பட்டிருந்த ஓவியங்களில் காமன், இரதி, அகலிகை, அவளிடம் சென்ற இந்திரன், கௌதம முனிவன்,
அவனைக் கண்ட இந்திரன் பூனையுருவங் கொண்டோடியது முதலிய ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன என்றும்,
அவற்றைக் கண்டவர் ‘இது என்ன, இது என்ன’ என்று அறிந்தவர்களைக் கேட்க, அவர்கள் இது இது இன்னின்ன ஓவியம் என்று
விளக்கிக் கூறினார்கள் என்றும் நப்பண்ணனார் கூறுகிறார்:-நப்பண்ணனார் (கி. பி. மூன்றாம் நூற்றாண்டு)

————

பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல் “
-பழமொழி நானூறு – பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று .

இலங்கை அரசன் இராவணனின் தம்பி வீடணன். இவன் இராமனை நண்பனாகப் பெற்று இலங்கை அரசனானான்
என்று அந்தப் பாடல் குறிப்பிடுகிறது.

———–

சிலப்பதிகாரத்தில் திருமால் அவதாரங்களில் இராமரும் துதிக்கப்படுகின்றார்.
கம்பர் (கி.பி. 12-ஆம் நூற்றாண்டு) தோன்றி ராமாயணத்தைத் தமிழில் எழுதுவதற்கு முன்பே
இளங்கோவடிகள்(கி. பி முதல் நூற்றாண்டு) சிலப்பதிகாரத்தை இயற்றிக் கொடுத்திருக்கிறார்.
அந்தச் சிலப்பதிகாரமும் ராமனைக் கடவுளாகவே கூறுகிறது

“மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் தான் போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!” – ஆய்ச்சியர் குரவைப் பாடல், மதுரைக்காண்டம்,

————-

“தாதை யேவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோன் என்பது
நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ” – ஊர்காண்காதை

என, கவுந்தியடிகள் ராமனைப் பற்றிக் கோவலனிடம் கூறுமிடத்து, ராமன் கடவுள் என்பது தமிழகத்தின் புது மொழியல்ல;
நெடுமொழி. அதாவது; நீண்ட காலமாகவே தமிழ் மக்களிடையே இருந்துவரும் நம்பிக்கை என்றும் கவுந்தியடிகள் கூறுகின்றார்.

————–

16 வார்த்தை ராமாயணம்
படித்ததில் பிடித்தது பகிர்ந்தேன்

“பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்
மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார்
இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார்
துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார்”

1-பிறந்தார்: ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.

2.வளர்ந்தார்: தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது

3.கற்றார்: வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.

4.பெற்றார்: வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து
பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.

5.மணந்தார்: ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.

6.சிறந்தார்: அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.

7.துறந்தார்: கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.

8-நெகிழ்ந்தார்:
*அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
*குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
*பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
*பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும்
தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
*அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
*சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
*விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
*எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, ‘கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை.
என்னால் முடிந்தது என்னையே தருவது’ எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.

9.இழந்தார்: மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது.

10.அலைந்தார்: அன்னை சீதையை தேடி அலைந்தது.

11.அழித்தார்: இலங்கையை அழித்தது.

12.செழித்தார்:
*சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது.
*ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.

13.துறந்தார்:
அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது.

14.துவண்டார்:
அன்னை சீதையை பிரிய நேர்ந்தது சீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.

15.ஆண்டார்:
என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து
மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.

16.மீண்டார்:
பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி
தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது”.

————

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.–ஏக ஸ்லோக இராமாயணம் காஞ்சி மகாபெரியவர் அருளியது

————

வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விடை அடர்த்த பக்தி உழவன் பழம் புனத்து –ஸ்ரீ திருமழிசைப் பிரான்

வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சல் மிசைவான் புனம் –திருக்குறள்

ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெரு செய்யுள் -ஸ்ரீ நம்மாழ்வார்

ஊரவர் கவ்வை எருவாக அன்னை சொல் நீராக நீளும் இந்நோய் –திருக்குறள் –

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியேனாகி நின்று தேடினேன் நாடிக் கொண்டேன்
உள்ளுவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்றே
வெள்கினேன் வெள்கி நானும் விலவற சிரித்திட்டேனே -அப்பர் –திருமாலை –பாசுர சாயல்

————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கோதா ஸ்லோகங்கள் —ஸ்ரீ மதி திருவேங்கடத்தம்மாள்

July 29, 2020

ஸ்ரீ கோதா பஞ்ச ரத்னம்,
ஸ்ரீ கோதா அஷ்டகம்,
ஸ்ரீ கோதா மதுர ஸ்தோத்திரம்,
ஸ்ரீ கோதா கோபால ஸ்தோத்திரம்
ஸ்ரீ கோதா த்யான ஸ்லோகம் − ஸ்ரீ மதி திருவேங்கடத்தம்மாள்–

————

ஸ்ரீ கோதா கோபால ஸ்தோத்ரம் –ஸ்ரீ மதி திருவேங்கடம் அம்மாள்

யது வம்ச ஸமுத்பூதம் த்விஜ வம்ச
வஸூ தேவ ச ஸத்புத்ரம் விஷ்ணுசித்தர் ச புத்ரீ
தேவகி கர்ப்ப ஸம்பூதம் துளஸீ கர்ப்ப ஸம்பூதம் காண உத்பவம்
யதுநாம் குலதீபம் பட்டார்ய குல தீபிகாம்
கார்க்காச்சார்யா விஷ்ணு சித்த மதம் அவரோ ரிஷி
இவர் ஆழ்வார் வாழ் முதல் வளர் முதல் மகிழ் முதல் எல்லாம் கண்ணன்
நீல ஜீமுத இந்திர நீல மணிப்ரபாம் இவள் யுவா குமார ரூபஞ்ச யுவதிசய குமாரிணி
மஞ்சு மஞ்சீரா பாதாம் நூபுரம் ஸ்நிக்த பீதாம்பரம் ரத்னா சிகப்பு வஸ்திரம்
சிங்க நடை அன்ன நடை
ஹரிசந்தன குங்குமப்பூ
மணிரத்ன விபூஷணம் திவ்ய மங்கல்ய பூஷணம்
யாஷிடி சாட்டை இவள் கிளி கையில்
சந்த்ர சூர்யா முகாம்புஜாம் சந்த்ர இவ
இந்தீவர கரு விழியாள் -அவனுக்கு செங்கண் சினந்து
கிரீடம் -பின்னல் இவளுக்கு
த்ரிபங்கி லலிதா இருவருக்கும்
சர்வ லோக விதாதா -அவனையும் சேர்ந்து தாங்குபவள் இவள் விஸ்வம் பரா இவள்
சரணாகத கோப்தா அவன் -வத்சலாம் இவள்
திவ்ய ஸிம்ஹாஸனம் ஆரூடம் திவ்ய அலங்கார சோபினாம் அன்யோன்ய காஷினாம்
த்ரைலோக்ய திவ்விய தம்பதி அன்யோன்யா சத்ருசம்
ஏகாசனம் அடியேனுடன் அருளி -திருவடி பண்ணாங்க மூவரையும் வணங்கி
வழு விலா அடிமை செய்ய நாமும் பிரார்த்தனை செய்வோம்

————-

ஸ்ரீ கோதா பஞ்ச ரத்னம்

ஸ்ரீ கமலாதாய நயனாம் -நத கரணாம்-வைகுந்தம் என்னும் தோனி
சசி வதனாம் மம சரணாம்
பய ஹரணாம்
வர பூஸூர தனயாம் -நிலத்தேவர் விஷ்ணு சித்தர் திருமகள்
நூதன நகரம் பஜ
நானே தான் ஆயிடுக -சேஷ பூதர் ஹ்ருதய தாமரை

இரண்டாம் ரத்னம் யதி சேகர ஸஹஜாம் சகோதரி
பர உபகார தூய்மை
ப்ரஹ்மாதிகள் தொழும் -பர்ஜன்ய தேவதைக்கு ஆணை ஆழி மழை பாசுரம்
கிளியையும் வணங்கி கோதாவையும் வணங்குவோம்

ரெங்க மன்னர் -ஸூ மணி நீல -கருணை ரசம் பொங்கும்
கண்கள் கடாக்ஷம் இது என்ன மாய மயக்குகள்
ஜன போஷணம்

சரணாகத ஜன ரக்ஷணம்
பிருந்தாவனம் -அயோத்யை இருக்க ஆசைப்படுகிறீர்
யமுனைக்கரையில் ஆசை
அநு காரம்
கழலாத வளைகள்
பந்தார்விரலி -சீரார் வளை
நீங்காத செல்வம் நிறைய

அத்புத சரிதாம் -கேசவ நம்பியைக் கால் பிடித்து

———-

ஸ்ரீ கோதா
ஸ்ரீ எதிராஜா சகோதரி
ஸ்ரீ ரெங்க நாத பிரியா–காந்தஸ்யே புருஷோத்தம
ஸ்ரீ நாச்சியார்
ஸ்ரீ சூடிக் கொடுத்த சுடர்க்கொடி

————
ஸ்ரீ கோதா அஷ்டகம்

த்ராஹி தவ தாச ஜனம் -ஸ்ரீ மத் அலங்க பரிபூர்ண சசி கோடி
ஸ்ரீதர பெருமாளாலே அலர்ந்த திரு முகம்
நூதன பூஸூர குமாரி
ஸ்ரீ ரெங்கபதி தேவி –மிருது வாணி -மம கோதா -மங்கள மநோ
கிங்கர -தேவர்கள்–பாத கமலா -வதனம் பாவனா பாதாப்ஜ -ஸமஸ்த ஜன ரக்ஷணம்
லலாடா மணி நூபுரம் ஸூ மாலா -பூஷித -உள்ளம் இருந்து தியானித்து பாபங்களைத் தொலைக்கும் படி அருள வேணும்
பட்டர் –
பூஷணம் -வல ஹஸ்தே –கிளி பூஷணம் போலே -யோகி ஹ்ருதய -திருவடிகள் -சிரஸ் நிகமானாம் –
உள்ளத்துக்கு கொண்டு முனிவர் களும் யோகிகளும்-லோக க்ஷேமம் நினைப்பவர் முனி -கைங்கர்யம் செய்பவர்கள்
பக்தியுடன் பெருமாளுடன் என்னைக் கட்டுவிப்பாய் ஹரி -ஏழு தடவை ஸ்ரீ சாஹி ஸூ தா சாஹி -மம பந்தய
திரு நாம சங்கீர்த்தனம் –சததம் கீர்த்தயந்த –
அந்ய சரணம் –சகலவித பந்து -சகல செல்வம் -பிள்ளாய் -நற்செல்வன் தேங்காய் -மாமான் மகளே –
பொற்கொடி -பல உறவுகள் பாகவத ஆத்ம பந்துத்வம் உத்தேச்யம்
அம்ப ஜகதம்ப
சரம தசையில் காஷ்ட -உன்னை மறக்காமல் இருக்க அருள வேணும் ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
ஹம்ஸ வாஹனம் -அவன் கருட வாஹனம் -ஜகத் அம்ப-
கைங்கர்ய ஸ்ரீ பலனாகச் சொல்லி நிகமிக்கிறார்

———————

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:
தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:

ஆண்டாள் அன்னையே, உம்மை வணங்குகின்றோம். சாத்திரங்கள் அனுமதிக்காத தவறுகள் பலவற்றை நெடுங்காலமாக
நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார்.
இவையெல்லாம் உன்னால் அன்னையே நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால் தான்.
அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய்.
அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார்.
அதற்காக ஆண்டாள் அன்னையே உம்மை மீண்டும் வணங்குகின்றோம்.

———-

ஸ்ரீ கோதா த்யான ஸ்லோகம்
காருண்ய ரூபை -நிழல் போல்வார் -சாயாம் இவ -இருவரும்
பெருமாள் சீதா -கண்ணன் நீளா தேவி நப்பின்னை -ஸ்ரீ வராஹ பூமா தேவி -ஆண்டாள்
ஆண்டாள் ஆழ்வாரா பிராட்டியா -தானே திருவடி அடைய பாசுரங்கள் -இந்த சங்கை மஹா லஷ்மி இடம் இல்லை
ருக்மிணி சந்தேசமும் உண்டே –
புருஷகார பூதை -தேவ தேவ திவ்ய மஹிஷி-வைகுண்ட மா நாடு இகழ்ந்து நமக்காக அன்றோ அவதாரம்
ஆழ்வார் அவஸ்தை நமக்காகவே -இரண்டு பெருமையும் இவளுக்கே

ஹே கோதே ஸூ பதே ஸமஸ்த ஜனனே -அபீஷ்ட ப்ரதே –ஸூந்தரி
சம்சார ஆர்ணவ ஸூ வ பாத பத்மம் ரசியதி மாம் சர்வம் சாஹி துளசி மூல க்ருத அவதாரே
ஸ்ரீ விஷ்ணு சித்த பால்ய பரிவ்ருதே ஸ்ரீ ரெங்க நாத பிரியே கோதே
யா கோ தேவி யாவாம் ஆஸ்ரித -ஸர்வ மாம் பாஹி சர்வம் சஹா –

இடது திருக்கையில் கிளி
ப்ரஹ்மாதிகள் வணங்கும் -சர்வ பூஷண -வர ரெங்கராஜன் அழகிய மணவாளன்

பாபம் செய்யாதவர்கள் யார் -ஸ்ரீ சீதாப் பிராட்டி -ராம தாசன்-திருவடியை சீதா ராம தாஸனாக –
அப்ரமேயம் -ச ஜனகாத்மஜா -மாரீசன் வார்த்தை
பூமா தேவி -ஆண்டாள் -குற்றம் செய்தவர் உலகில் உண்டா -அருளிச் செய்து நம்மை திருவடிகளில் சேர்த்துக் கொள்கிறாள்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மதி திருவேங்கடத்தம்மாள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு வாசிரியம் –வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 29, 2020

ஸ்ரீ திரு விருத்தம் ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் விளக்கும் ருக்வேத சாரம் என்றும்
ஸ்ரீ திருவாசிரியம் ஏழு காண்டங்கள் கொண்ட சார நாராயண அநுவாகம் கொண்ட யஜுர் வேத சாரம் என்றும் –
ஸ்ரீ பெரிய திருவந்தாதி முண்டக உபநிஷத் கொண்ட அதர்வண வேத சாரம் என்றும்
ஸ்ரீ திருவாய்மொழி ஆயிரம் சாகைகள் கொண்ட சாந்தோக்யம் உபநிஷத் கொண்ட சாம வேத சாரமாய் இருக்கும் என்றும் சொல்வர்கள்-

ஸ்ரீ திரு அஷ்டாரத்தில் பிரணவம் நமஸ் சப்தார்த்த விவரணம் ஸ்ரீ திரு விருத்தம் என்றும் –
ஸ்ரீ திரு அஷ்டாரத்தில் நாராயணாய சப்த்தார்த்த விவரணம் திரு வாசிரியம் என்றும் –
ஸ்ரீ சரம ஸ்லோக விவரணம் ஸ்ரீ பெரிய திருவந்தாதி என்றும் –
ஸ்ரீ த்வய விவரணம் ஸ்ரீ திருவாய் மொழி என்றும் சொல்வர்கள்-

வ்ருஷ பேது து விசாகாயாம் குருகா பூரி காரி ஜம்
பாண்டிய தேசே கலேர் ஆதவ் சடாரிம் ஸைனபம் பஜே —-ஸ்ரீ நம்மாழ்வார் தனியன்

சகல த்ராவிடாம்நாய சாரா வ்யாக்யான காரிணம்
ஸ்ராவணே ரோஹிணீ ஜாதம் க்ருஷ்ண சமஞ்ஞம் அஹம் பஜே –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தனியன்

——————

காசினியோர் தாம் வாழ கலி யுகத்தே வந்து உதித்து
ஆசிரியப் பா வதனால் அரு மறை நூல் விரித்தானை
தேசிகனை பராங்குசனை திகழ வகுளத் தாரானை
மாசடையா மனத்து வைத்து மறவாமல் வாழ்த்துதுமே-–அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளி செய்த தனியன்-

ஞானத்துக்கு அடைவு இல்லாத கலி காலத்தில்
யுக வர்ண க்ரம அவதாரம் என்னலாம் படி ஸ்ரீ ஆழ்வார் அவதரித்தார் யாயிற்று

க்ருத யுகம் -ப்ராஹ்மண வர்ணம்-தத்தாத்ரியன் —ஸ்ரீ பரசுராமன்
திரேதா யுகம் -ஷத்ரியன்–ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன்  –
துவாபர யுகம் -முடி உரிமை இல்லா வைஸ்ய பிராயர் ஸ்ரீ வாசுதேவ -சாஷாத் வைஸ்யரான ஸ்ரீ நந்த கோபன் இளம் குமாரனான ஸ்ரீ கிருஷ்ணனாகவும்-
கலி யுகம் -பராங்குசன்-சதுர்த்த வர்ணம் -காரியாருக்கும் உடைய நங்கையாரும் திருக் குமாரராக

(ஆதித்ய-ராம திவாகர-அச்யுத பானுக்களுக்கு போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-சூரணை -83-)

(யத் கோ ஸஹரஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸ சங்க சக்ர: |
யந்மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய ||-ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 4)

காசினியோர் தாம் வாழ –
நேரே கண்டத்துக்கு மேல் ஓன்று அறியாத பூமியில் உண்டான மனுஷ்யர் ஜீவிக்க –(கண்டதே காட்சி -லோகாயுத மதஸ்தர் மலிந்த )

திகழ வகுளத் தாரானை
விளங்கா நின்ற திரு மகிழ் மாலையைத் திரு மார்பிலே உடையவரை
தண் துளபத் தாரானை -என்னுமா போலே –

சேமம் குருகையோ செய்ய திருப்பாற்கடலோ
நாமம் பாராங்குசனோ நாரணனோ
தாமம் துளபமோ வகுளமோ
தோள் இரண்டோ நான்கு உளதோ பெருமான் உனக்கு –என்னக் கடவது இறே-

பராங்குசன் என்பதற்கு மாஞானிகள் சொல்லும் அர்த்தமும் ஒன்றுண்டு ;
பரர்கட்கு அங்குசம் (மாவட்டி) போன்றவர்,-
மதாந்தரஸ்தர்களை அடக்குகிறவர் என்கிற பொருள் ஒருபுறமிருக்கட்டும்.
பரன் என்று பரம புருஷனான எம்பெருமானைச் சொல்லுகிறது.
அவனைத் தம்முடைய ஸ்ரீஸுக்திகளாகிற மாவட்டியினால் வசப்படுத்திக்கொள்ளவல்லவர் என்கை. *

“வலக்கை யாழி இடக் கைச் சங்க மிவை யுடை மால் வண்ணனை,
மலக்கு நாவுடையேற்கு” என்று தாமே அருளிச் செய்தார்.

சில குத்ருஷ்டிகள் மறை குலையச் சாது சனங்களடங்கத் தருக்கச்
செருக்காலே எம்பெருமானுடைய பாத்வத்தை இல்லை செய்தவளவிலே
ஸர்வேஸ்வரன் அதுகண்டு நடுங்கி
“நான் பரதத்வமல்லேன், நான் பரதத்வமல்லேன்’ என்று பின் வாங்க,

ஆழ்வார், “ஒன்றுந்தேவுமுலகும்” என்கிற திருவாய்மொழி யாகிற மாவட்டியை யிட்டு
அவ் வெம்பெருமானாகிற களிற்றை ஓட வொட்டாதே நிலை நிறுத்திப்
பரத்வ ஸ்தாபனம் பண்ணின படியாலே பராங்குசரென்கிறது என்று கருத்து.

நாள் கமழ் மகிழ் மாலை மார்வினன் மாறன் சடகோபன் —திருவாய் -4-10-11-என்னும்படியான நம்மாழ்வாரை
சடகோபனைச் சிந்தையுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை –ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி -18-என்னும்படி
ஸூபாஸ்ரயமாகக் பாவித்து
பக்தி பண்ணி வைத்து விஸ்ம்ருதி இன்றிக்கே இவ்விருப்புக்கு மங்களா சாசனம் பண்ணுவோம்

அவரும் ஊழி தொரு ஊழி ஓவாது வாழிய வென்று யாம் தொழ இசையுங்கொல்–ஸ்ரீ திருவாசிரியம் -4-என்றார் இறே

இத்தால்
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹமே ஸூபாஸ்ரயம் என்னுமத்தையும்
மங்களாஸான விஷயம் என்னுமத்தையும் -சொல்லிற்று ஆயிற்று –

விஸ்ம்ருதி இன்றிக்கே இவ்விருப்புக்கு மங்களா சாசனம் பண்ணுவோம்-

மங்களமான புகல் இடம்-பவித்ரானாம் பவித்ரம் மங்களானாம் மங்களம் –சத்வ குணம் வளரும்-மறவாமல் மங்களா சாசனம் பண்ணுவோம்..

———-

ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு இவர் அபேக்ஷிதம் சடக்கெனச் செய்யப் போகாது -அதுக்கு அடி
சர தல்பத்திலே கிடந்த ஸ்ரீ பீஷ்மரைக் கொண்டு நாட்டுக்கு சிறிது வெளிச் சிறப்பைப் பண்ணிக் கொடுத்தால் போலே
இவரை இடுவித்து சில பிரபந்தங்களை பிரவர்த்திப்பித்து சம்சாரத்தைத் திருத்த நினைத்தவன் ஆகையால் –

இங்கே வைக்கலாம் படி அல்லவே இவருடைய த்வரை-
இவர் தாம் நிர்பந்தம் பண்ணுகிறதும்
அவ் வருகே போய் குண அனுபவம் பண்ணுகைக்காக இறே

இவை தன்னை அனுபவிப்போம் என்று பார்த்து-தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்க
தேஹத்தினுடைய தன்மையை அனுசந்திப்பதற்கு முன்பு காட்டிக் கொடுத்தது இவையே யாகிலும்
அவ் வருகே போய்-பரம பதத்தில் சென்று – அனுபவிப்பதும் ஓர் அனுபவம் உண்டு என்று தோற்றாதபடி
ஒரு வைஸ்யத்தைப் பிறப்பிக்க அவற்றிலே அந்ய பரராய் அனுபவிக்கிறார் –

அந்தமில் பேரின்பம் அடைய துடிப்பது-நமது குணாநுபவம் செய்ய என்று அறிந்து கொண்டு
அவை எல்லாம் இங்கேயே காட்டி அருள-இங்கேயே பண்ணிக் களித்தாராய்
அந்த அனுபவம் உள்ளடங்காமல்-புற வெள்ளம் இட்டுப் பெரு வெள்ளம் இட்டு பிரபந்தங்களாக  பெருகி
லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-தனது ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்க
அவனது
மேன்மையையும்
நீர்மையையும்
வடிவு அழகையும்
ஏழு பாசுரங்களாலே
அருளிச் செய்கிறார் –

ஆசிரியப் பாக்களினாலமைந்த இத்திவ்யப் பிரபந்த்த்திற்குத் திரு ஆசிரியம் எனத் திருநாமம் வழங்கலாயிற்று.

அடியொன்றுக்கு நான்கு சீராய் இயற்சீர் பயின்றும் வெண்சீர் விரவியும்
மூன்றாமடிக்குக் குறையாமல் பலவடிகளால் அகவலோசையுற்று
இறுதியில் ஏ யென்னும் அசையுடன் முடிவது ஆசிரயப்பாவாம்.

இது –நேரிசை யாசிரியப்பா, நிலை மண்டில வாசிரியப்பா முதலிய நான்கு வகைகளை யுடையது,

எல்லா வடிகளும் நாற்சீராய் ஈற்றயலடி முச்சீராய் முடிவது நேரிசை யாசிரியப்பா.

எல்லா வடிகளும் நான்கு சீராலேயே முடிவது நிலை மண்டில வாசிரியப்பா.

இப்பிரபந்தத்தில் 1,2,3,6-ஆம் பாசுரங்கள் நேரிசை யாசிரியப் பாக்கள்.

4,5,7-ஆம் பாசுரங்கள் நிலை மண்டில வாசிரியப் பாக்கள்.

அந்தத்தித் தொடையால் அமைந்ததாம் இப்பிரபந்தம்.

—————

ஆழ்வார், கீழ்ப்பிரபந்தமாகிய திருவிருத்தத்தின் முதற்பாட்டில் “அழுக்குடம்பும்” என்று
தம்முடைய சரீரத்தின் தண்மையைப் பேசினார்;
இந்த முதற் பாட்டில் எம்பெருமானுடைய திருமேனியின் வைலக்ஷண்யத்திலீடு பட்டுப் பேசுகிறார்.

ஸ்வரூப ரூப குணங்கள் என்று இறே அடைவு –
ஸ்வரூபத்தை விட்டு ரூபத்தில் இழிந்து அனுபவிக்க வேணும் என்கிறார் யாயிற்று –
தான் துவக்கு உண்டு இருப்பதும் இதிலே யாகையாலே –

இனி இவ் வஸ்து தான் நேர் கொடு நேரே அனுபவிக்க ஒண்ணாத படி -முகத்திலே அலை எறிகையாலே-
கிண்ணகத்தில் இழிவார் மிதப்பு -ஓடம் -கொண்டு இழிவாரைப் போலே –
இந்த ரூபத்தையும் -உபமான முகத்தால் இழிந்து அனுபவிக்க வேணும் என்று பார்த்தார் –
ஸர்வதா சாம்யம் இல்லாத தொரு வஸ்து யாகையாலே ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு உபமானமாகச் சொல்லுவது தான் இல்லை –

ஆனாலும் அல்ப ஸாத்ருஸ்யம் உள்ளது ஒன்றைப் பற்றி இழிய வேணும் இறே –
ஒரு மரகத கிரியை யாயிற்று உபமானமாகச் சொல்லுகிறது
அதின் பக்கல் நேர் கொடு நேர் கொள்ளலாவது ஓன்று இல்லாமையால் அது தன்னை சிஷித்திக் கொண்டு இழிகிறார்-

ஸ்வரூபத்தை விட்டு ரூபத்தைப் பற்றினவோ பாதி ரூபம் தன்னையும் விட்டு
உபமானத்திலே இழிந்து அது தனக்கு ஒப்பனை தேடி எடுத்துப் பேசுகிறார் –

செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1–

ஆனையைக் கண்டார் -ஆனை-ஆனை -என்னுமா போலே –
அனுபவ ஜனித ப்ரீதி உள் அடங்காமையாலே ஏத்துகிறார்-

செக்கர் மா முகில் உடுத்து-முகில்-மா முகில்-செக்கர் மா முகில்-

மிக்க செம் சுடர் பரிதி சூடி –சஹஸ்ர கிரணங்கள் என்றால் போலே ஒரு ஸங்க்யை உண்டு இறே ஆதித்யனுக்கு —

அப்படி பரிச்சின்ன கிரணன் அன்றிக்கே அநேக ஆயிரம் கிரணங்களை யுடையான் ஒரு ஆதித்யன் வந்து
உதித்தாலே போல் ஆயிற்று திரு அபிஷேகம் இருப்பது –

அம் சுடர் மதியம் பூண்டு
தன்னுடைய -ஸ்வா பாவிகமாய் இருந்துள்ள பிரதாபத்தாலே ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத படி இருக்கிற
ஆதித்யனைப் போலே அன்றிக்கே
சீதளமான கிரணங்களை யுடையவனாய் –
குறைதல் -நிறைதல்-மறு உண்டாதல் இன்றிக்கே -வைத்த கண் வாங்காதே கண்டு
இருக்க வேண்டும்படியான அழகை யுடைய சந்திரனைப் பூண்டு
(பச்சை மா மலை போன்ற திரு மேனிக்கு இது கழுத்துக்கு ஆபரணம் -கண்டிக ஆபரணம் )-

பல சுடர் புனைந்த
மற்றும் பல நக்ஷத்ரங்களையும் -( க்ரஹங்களையும் -போன்ற) ஜோதிகளையும்
ஆபரணங்களாகப் )பூண்டு

சாய்வது போல் என்ன அமைந்து இருக்க உபமானத்திலும் கூசி கண் வளர்வது போல் -என்கிறார் –
திருமலை நம்பி எம்பெருமானார்க்கு ஒருவரை அடையாளம் சொல்லுகிற இடத்தில்–
( மென்மையான காதை உடையவர் என்று சொல்லும் இடத்தில் ) பொன்னாலே தோடு பண்ணினால் இட
ஒண்ணாத படியான காதை யுடையராய் இருக்குமவரை அறிந்து இருக்கை யுண்டோ -என்றாராம் –
இங்கு உபமானத்தைச் சொல்லும் இடத்தில் உபமேயத்தைப் போலே
அங்கு உபமேயத்தைச் சொல்லும் பொது உபமானத்தை இட்டுச் சொன்னார் –

பல பலவே ஆபரணம் –திருவாய் -2-5-6—ஸ்ரீ பாஷ்யகாரர் அநேக பூஷணங்களை அருளிச் செய்து
பின்னையும்–நூபுராத் யபரிமித திவ்ய பூஷண–ஸ்ரீ சரணாகதி கத்யம் – ஆதி சப்தத்தால் தலைக் கட்டுமா போலே
இங்கும் பல் கலன்கள்-என்று தலைக் கட்டுகிறார்-

மேதகு
ஸ்வரூப அனுரூபம் என்னும்படியாய் இருக்கை –
மேன்மைக்குத் தக்கபடி என்றபடி –
மேவித் தகுதியாக என்றுமாம்-

இப்பாசுரத்தில் அபூதோபமை வருணிக்கப்படுகிறது.
எம்பெருமான் திரு வரையில் திருப் பீதாம்பரம் சாத்திக் கொண்டும்
திரு முடியில் திருவபிஷேகமணிந்து கொண்டும்
இப்படியே மற்றும் பலபல திருவாபரணங்களைப் பூண்டு கொண்டும்,
செந்தாமரை போன்ற திருவாயும் திருக்கண்களும் விளங்கவும்,
ஸ்யாமமான திருமேனி நிறமானது மற்ற சோபைகளெல்லாவற்றையுங்காட்டில் விவேக்ஷித்து விளங்கவும்
கடலினிடையே திருவனந்தாழ்வானெனும் திருவணையின் மீதேறித் திருக் கண் வளர்ந்தருளாகிறபடிக்கு
த்ருஷ்டாந்தமாக வருணிக்கப் பொருத்தமான பிரஸித்தோபமை ஒன்றில்லாமையால் அபூதோபமை அருளிச் செய்கிறார்.

மரகதப் பச்சை மயமான ஒரு மலையானது
செந்நிறமான மேகத்தைப் பீதக வாடையாக உடுத்துக் கொண்டும்,
கிரீடத்தின் ஸ்தானத்திலே ஸூர்யனை அணிந்து கொண்டும்,
கண்டிகை ஸ்தானத்திலே சந்திரனை அணிந்து கொண்டும்,
முத்து ஸரம் முதலான மற்றும் பல திருவாபரணங்களின் ஸ்தானத்திலே நக்ஷத்திரங்களைப் புனைந்து கொண்டும்
திரு அதரம் திருக் கண்களின் ஸ்தானத்திலே பவழ மயமான பிரதேசங்களை யுடைத்தாகியும்
ஒரு கடலிலே பள்ளி கொண்டிருந்தால் எப்படி யிருக்குமோ அப்படி யிரா நின்றது
தேவரீர் திருக்கோலமுந்தாமுமாகத் திருப்பள்ளி கொண்டருளுகின்றமை-என்றாராயிற்று.

எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்கு மரகதக் குன்றத்தை[-பச்சைமாமலையை] உவமை கூறினார்.
ஸாதாரண மலையானது எம்பெருமானுடைய துளக்கலாகா நிலைக்கும் வளர்த்திக்கும் ஒப்பாகுமே யன்றி,
காணப் புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து
அவர்களுடைய ஸம்ஸார பந்தங்களை யெல்லாம் போக்குந்தன்மையும்
எப்போதும் தியானஞ்செய்வதற்கு உரியதாயிருத்தலும்
பெருங்கருணைக்கு இருப்பிடமாயிருத்தலும் முதலிய குண விசேஷங்களில் ஒப்பாக மாட்டாமையால்,
திகழ் பசுஞ்சோதி மரகதம் என்று குன்றம் விசேஷிக்கப்பட்டது.

ஆக இப்படிப்பட்டதொரு குன்றம் உலகில் எங்குமில்லை;
இருந்தாலும் அது கடலோன் கை மிசைக் கண் வளர்வது அஸம்பாவிதம்;
ஆக இத்தனையும் ஸம்பாவிதமாகில் எம்பெருமான் படிக்குப் போலி சொல்லலாமாய்த்து.

செக்கர் மா என்று தொடங்கி, கண் வளர்வது என்னுமளவும் உபமானத்தை சிக்ஷித்து முடித்து,
இனி பீதக வாடை என்று தொடங்கி உபமேயமான எம்பெருமானுடைய அநுபவத்தில் இழிகிறார்.

மீதிட்டுப் பச்சை மேனி மிகப் பகைப்ப-
எம்பெருமானுடைய திருமேனியில் பீதக வாடையின் சோதி ஒரு நிறமாகவும்,
திருவபிஷேகத்தின் சோதி மற்றொரு நிறமாகவும்,
திவ்ய பூஷணங்களின் சோதி வேறொரு நிறமாகவும்
திருவாய் திருக்கண் முதலிய அவயவங்களின் சோதி மற்றுமோர் நிறமாகவும்
இப்படிப் பலவகை நிறச்சோதிகள் இருந்தாலும் திருமேனியின் நிறமாகிய
பாசியின் பசும் புறம் போன்ற மற்ற எல்லாச் சோபைகளோடும் போரிட்டு வெற்றி பெற்று விளங்குகின்றதாம்.

கவர் தலை-பல தலைகளை யுடைத்தாய் ஸ்வ ஸ்பர்சத்தாலே பணைத்து பிரஜையை மடியில் வைத்து இருக்கும் தாயைப் போலே
பெரிய பெருமாளை மடியிலே வைத்து இருக்கும் தாய் தானாம் –

ஸ்ரீ அனந்தாழ்வான் திருக்கோட்டியூருக்கு நடந்த இடத்தில்-( அகளங்கனோடே உண்டான மனஸ்தாபத்தாலே இவர் அங்கு
இருக்க மடியிலே அமர்த்தி ) ஸ்ரீ பட்டரைக் கண்டு அவர் திருமேனியில் இப்படிச் செய்தானாம் –

ஸ்ரீ ஆண்டாளுக்கு முந்துற ஒரு பிள்ளை உண்டாய் அவனை இழக்க –
அங்கனே செய்ய ஒண்ணாது இவன் ஜீவிக்க வேணும் என்று ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நீராட்டி
அந்த திருமஞ்சநீரைப் பிள்ளைக்குப் புகட்டி -மஞ்ச நீர் கொடுத்த பிள்ளையாய் வளர்க்க வேணும் -என்று
காட்டிக் கொடுத்து அருளினார் ஆயிற்று –
அந்த வாசனையாலேயே ஸ்ரீ பெரிய பிராட்டியார் திரு மகன் -என்று தான் ஸ்ரீ பட்டரை ஸ்ரீ அனந்தாழ்வான் சொல்வானாம் –

படுக்கையிலே ஏறுகிற இது தான் தம் பேறாக இருக்கையாலே –
ஸ்ரீ நம்பெருமாள் ஆறுகால் சிவிகையை சாதாரமாகப்
பார்த்து ஏறி அருளுமா போலே பெரிய ஆதாரத்தோடு யாயிற்று ஏறி அருளுகை –

தாமரை யுந்தி -தனி பெரும் -இவற்றால் –
நிமித்த -உபாதான -ஸஹகாரிகளும் தானே என்கை –

மூ வுலகு அளந்த -தன் பக்கல் வந்து அனுபவிக்க மாட்டாதாருக்கு அவர்கள் இருந்த இடத்திலே சென்று அனுபவிப்பிக்கும்

சேவடியோயே
இழந்த இழவை மீட்டு ரஷியாதே காதுகனனே யானாலும் விட ஒண்ணாதபடியே யாயிற்று
திருவடிகளின் போக்யதை இருக்கிறபடி-

திருமேனி யழகிலும் துயில் கொண்ட அழகிலும் இவ்வாழ்வார் நெஞ்சைப் பறி கொடுத்தாராகையாலே
ஒரு வினை முற்றோடே பாசுரத்தை முடிக்க மாட்டாமல்
“மூவுலகளந்த சேவடியோயே!” என்று கண்ணாஞ் சுழலை யிட்டுக் கிடக்கிறார்.

கண்ணழி வற்ற அழகையும் குணங்களையும் அனுபவித்தார் –

———

த்யேயமாகச் சொல்லுகிற வஸ்துவினுடைய விக்ரஹ வை லக்ஷண்யம் சொன்னார் முதல் பாட்டில் –
அந்த த்யேய வஸ்துவினுடைய பக்கல் பிறக்கும் பரபக்தி தொடங்கி ப்ராப்ய அந்தர் கதமாய் இருக்கையாலே
தத் விஷய பக்தியே அமையும் என்கிறது இரண்டாம் பாட்டில் –

முதல் பாட்டில் –வடிவு அழகும் மேன்மையும் நீர்மையும் சொல்லிற்று –அவை கர்ம ஞானங்களினுடைய ஸ்த்தாநேயாய் நிற்க –
அனந்தரம் பிறக்கும் பரபக்தி பர ஞான பரம பக்தியை இறே உத்தேச்யமாகச் சொல்லிற்று –
அந்த ஞான கர்மங்களினுடைய ஸ்த்தாநத்திலே நிற்கிறவற்றை அனுபாஷிக்கிறார் –உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை-என்கிற இவ்வளவாலே-

இப்படி பரம விலக்ஷணனான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைச் சென்னியிற் சூட வேணும் என்று
ஆவல் கொண்டிருப்பதே யன்றோ புருஷார்த்தம்;-பரம பக்தர்களுடைய அந்தரங்க வுறுதியைப் பேசி மகிழ்கிறார் இப் பாட்டில்.

உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
உயிர் உருகி யுக்க நேரிய காதல்
அன்பில் இன்பீன் தேறல் அமுத
வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு
அசைவோர் அசைக திரு வோடு மருவிய
இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?-2–

உருகி யுக்க அத் தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தவாறே அச்சேத்யமான ஆத்ம வஸ்து த்ரவ்ய த்ரவ்யமாய்
ஓர் அவயவி யாக்கிக் காண ஒண்ணாத படி மங்கிற்று ஆயிற்று –
பக்தி பரவசரான படியை அருளிச் செய்கிறார்

நேரிய காதல் -அந்த அவாவானது விலக்ஷணமான தொரு சங்கத்தையும் பிறப்பித்தது
அன்பில் இன்பு–பக்தியினால் உண்டான பரமபக்தி ரூபமான ப்ரீதியில் உள்ள இனிமை என்ன
ஈன் தேறல் அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு-
இவைகளில் உள்ள இனிமையின் வை லக்ஷண்யம் ஆகிற அமுதக் கடலில் மூழ்கி –
ஒரு ரஸ சாகரமாய் இருக்கும் இறே –

விலக்ஷண விஷயமாகையாலும் –
இவனுடைய ருசியாலும்
ஒரு கடலிலே ஏகாகி விழுந்தால் போலே இருக்கும் படியான மேன்மையை விட்டு-
மேலான புருஷார்த்தமான மோக்ஷத்தைப் பெறுகைக்கு நினைக்குமோ-

உலகு படைத்து
ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோஸ் ஸ்ருஜத–சாந்தோக்யம் –62-3–
(அந்தப் ப்ரஹ்மம் நானே பலவாக ஆகக் கடவேன் என்று சங்கல்பித்தது
அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்ட்டி செய்தது) என்கிற
சங்கல்ப மாத்திரத்தாலே ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களையும் உண்டாக்கி –

உண்ட
உண்டான இவற்றுக்கு பிரளய ஆபத்து வர –
இவற்றை அடைய திரு வயிற்றிலே வைத்து ரஷித்துப் பண்ணி அருளிய
வியாபாரத்தால் கண்ணழிவு அற்ற மேன்மை சொல்லுகிறது

எந்தை
ஸ்வாமித்வ ப்ரயுக்தமான மேன்மையை உடையனாய் இருந்து வைத்து –

மூ உலகு அளந்த
எத்தனை யேனும் தம்மைத் தாழ நினைத்து இருந்தபடியால்-தம்மை விஷயீ கரித்தவத்தால் வந்த நீர்மை சொல்லுகிறார்

மூ உலகு அளந்த –
இதனுடைய எல்லை தாமாக நினைத்து இருக்கிறார்

அறை கழல் சுடர் பூம் தாமரை
த்வனியா நின்றுள்ள வீரக் கழலை யுடைத்தாய் அத்யுஜ்ஜ்வலமாய்
நிரதிசய போக்யமாய் இருக்கிற திருவடிகளை
இத்தால் அழகு -சொல்லுகிறது

இம் மேன்மையாலும்
நீர்மையாலும்
வடிவு அழகாலும் விளைந்த-பரபக்தியாதிகளை மேலே விளக்கி அருளுகிறார் –

தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
தாமரை போலே இருக்கிற திருவடிகளை என்றவாறே
கதா புந சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்த அங்குச வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வத் சரணம் புஜ த்வயம் மதீய மூர்த்தாநாம் அலங்க்ருஷ்யதி –ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -31-
(திரிவிக்ரமனே சங்கு சக்கரம் கல்பக வ்ருக்ஷம் கொடி தாமரை அங்குசம் வஜ்ராயுதம்
இவைகளை அடையாளமாக யுடைய திருவடித் தாமரை இணை என் தலையை எப்போது தான்
அலங்கரிக்கப் போகிறதோ )–என்ன வேண்டி இருக்கும் இறே

சூடுதற்கு அவாவு ஆர் உயிர்-சூடுகையிலே அவாவி இருக்கிற -ஆசைப்படுகிற ஆத்ம வஸ்து –

உருகி யுக்க-அத்தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தால்
அவன் பக்கல் ருசி பண்ணி அல்லது நில்லான் இறே சேதனன்

அத்தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தவாறே
அச்சேத்யமான ஆத்ம வஸ்து த்ரவ்ய த்ரவ்யமாய்-ஓர் அவயவி யாக்கிக் காண ஒண்ணாத படி மங்கிற்று ஆயிற்று –

பக்தி பரவசரான படியை அருளிச் செய்கிறார்

நேரிய காதல்
அந்த அவாவானது விலக்ஷணமான தொரு சங்கத்தையும் பிறப்பித்தது

அன்பில் இன்பு
த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் சங்கஸ் தேஷுப ஜாயதே
சங்காத் சஞ்ஜாயதே காம -காமாத் க்ரோதோ அபி ஜாயதே –ஸ்ரீ கீதை -2-62-
(விஷயங்களை இடைவிடாமல் எண்ணும் மனிதனுக்கு அவற்றில் அதிகமான சேர்க்கை -சங்கம் -உண்டாகிறது
அந்த சங்கத்தினால் காமம் உண்டாகிறது காமத்தினால் கோபம் ஏற்படுகிறது) என்கிறபடியே
அந்த சங்கம் தான் ஓர் அன்பைப் பிறப்பித்தது

ஆகார ஸூத்தவ் சத்வ ஸூத்தி -சத்வ ஸூத்தவ் தருவா ஸ்ம்ருதி –சாந்தோக்யம் 7-26-2-
(உண்ணும் உணவு சுத்தமாக இருந்ததாகில் மனம் சுத்தி அடைகிறது
மனம் பரிசுத்தம் அடைந்த அளவிலே நிலை நின்ற நினைவு எனப்படும் பக்தி உண்டாகிறது)
இத்யாதிகளை நினைக்கிறது –
நிலை நின்ற நினைவு என்னும் பக்தி அவஸ்தை -என்றபடி –

ஸ்மர்த்தவ்ய விஷயத்தினுடைய ரஸ்யத்தையாலே இது தானே ரசிக்கும் இறே –
அது தான் என் போலே என்னில்

ஈன் தேறல்
அமுத சமுத்ரத்தில் கடைந்த அம்ருதம் போலே போக்யமாய் இருக்கும் –விஷயத்தினுடைய வை லக்ஷண்யத்தாலே –
விலக்ஷண விஷயமாகையாலும் -இவனுடைய ருசியாலும் ஒரு கடலிலே ஏகாகி விழுந்தால் போலே இருக்கும் இறே

அமுத வெள்ளத்தானாம்
இன்ப வெள்ளத்திலே உளனாகையாகிற-இன்பத்தில் திளைத்துத் திக்கித் திணற வைக்கும் அன்றோ என்றபடி –

சிறப்பு விட்டு
இந்த பரம பக்திகளை யுடையனாகை யாகிறது இறே ஐஸ்வர்யம் —-அத்தை விட்டு

ஒரு பொருள்க்கு
இத்தை விட்டால் இனிப் பெற நினைப்பது இவ்வருகே சிலவை இறே –
அவை யாகிறன– தர்ம அர்த்த காம மோக்ஷங்களில் சொல்லுகிறவை இறே –
அவற்றை ஒன்றாக நினைத்து இராத அநாதரம் தோற்ற ஒரு பதார்த்தம் என்கிறார் –

அசைவோர் அசைக
அவை தான் இது போல் ஸூலபமாய் இராது யத்னித்து பெற வேண்டுமதாய் –
பெற்றாலும் பிரயோஜனம் அல்பமாய் இருக்கும் – அவற்றுக்கு ஆசைப்படுவோர் அங்கனம் கிலேசப்படுக –

புத்திமான்கள் இவற்றை ஸ்வீ கரிப்பதாக மநோ ரதிப்பார்களோ

திரு வோடு மருவிய இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு
ஐஸ்வர்யம் நிலை நின்று அது தானே யாத்ரையாய் இருப்பது – இத்தாலும் பலம் இல்லை இறே
-இத்தோடு அடுத்து

நல் வீடு பெறினும்
நல் வீடு என்று உத்தம புருஷார்த்தத்தைச் சொல்லுகையாலே
நடுவில் கைவல்ய புருஷார்த்தத்தையும் சொல்லிற்று ஆயிற்று

பெறினும்
இது தான் பெறக் கடவது என்று இருக்கை அன்றிக்கே-இதிலே தோள் மாறும்படி யானாலும்
மநோ ரதமாக இல்லாமல் பெற்றே தீர்ந்தாலும்

கொள்வது எண்ணுமோ
இவை ஸ்வீ கரிக்கக் கடவதான மநோ ரத சமயத்திலே தான் உண்டோ
ஐஸ்வர்யம் அஸ்திரம் ஆகையால் கழி யுண்டது –
ஆத்ம லாபம் பரிச்சின்னம் ஆகையால் கழி யுண்டது –
பகவத் புருஷார்த்தம் ஆசைப்பட்ட உடம்பை ஒழிய வேறு ஒரு உடம்பைக் கொண்டு போய் அனுபவிக்குமதாகையாலே கழி யுண்டது

அவ்வுடம்போடே இருக்கச் செய்தே பெறக் கடவதான பரபக்தியாதிகளோடே
இவை ஒவ்வாதே நிற்கிற இடம் -(ஒவ்வாது என்ற இடம் )-விசார விஷயமோ –
ஆனாலும் சிலரும் நினையா நிற்கிறார்கள் என்னில்

தெள்ளியோர் குறிப்பு எண்ணுமோ
சார அசார விவேகம் பண்ணி இருப்பார்க்கு மநோ ரதத்துக்கு விஷயம் அல்ல
சார அசார விவேகஞ்ஞர் நல்லதுக்கு தீயத்துக்கும் தரமிட்டுப் -பிரித்து அறிந்து – இருப்பார்கள்

சார அசார விவேகஞ்ஞா காரீயம் சோ விமத்சரா
பிரமாண தந்த்ரா சந்தீதி க்ருதோ வேதார்த்த ஸங்க்ரஹம் –நிகமன ஸ்லோகம்
(சாரம் அசாரம் ஆகிய இவற்றை விவேகித்து அறிபவர்களும்
மிகுந்த கேள்வி ஞானத்தால் பெருமை பெற்று இருப்பவர்களும்
பிறர் இடம் மாத்சர்யம் மற்றவர்களும் -பிரமாணங்களுக்குக் கட்டுப் பட்டவர்களுமான மஹான்கள்
இக் காலத்திலும் உளர் என்னும் நிச்சயத்தாலே என்னால் வேதார்த்த ஸங்க்ரஹம் அருளிச் செய்யப்பட்டது) -என்றவாறு

கேடில் சீர் வரத்தானாம் கெடும் வரத்தயன் அரன்
நாடினோடு நாட்டமாயிரத் தன் நாடு நண்ணினும்
வீட தான போகம் எய்தி வீற்று இருந்த போதிலும்
கூடும் ஆசை யல்லது ஓன்று கொள்வனோ குறிப்பில் –ஸ்ரீ திருச்சந்த விருத்தம் -108- இத்யாதிகளை இங்கே அனுசந்திக்கத்தக்கவை –

எம்பெருமானைக் கிட்டி அநுபவிப்பதிலுங்காட்டில் அவ்வநுபவத்தைப் பற்றின மனோ ரதமே நித்யமாய்ச் செல்லுமாகில்
அதுவே சிறக்குமென்பது ஆழ்ந்த பக்தி யுடையவர்களுடைய ஸித்தாந்தம்,-

அனுபவ நிலைமையிற் காட்டிலும் அநுபவப் பாரிப்பு நிலைமையே சிறந்ததென்பது விளங்கும்.

இப்படிப்பட்ட ஆவல் பூண்டு
“என் கண்ணனை என்று கொலோ களிக்கும் நாளே“
“மாயோனை மணத் தூணே பற்றி நின்று என் வாயார என்று கொலோ வாழ்த்து நாளே”
“அங்கடியவரோடு என்று கொலோ அணுகு நாளே“
என் மலர்ச் சென்னி என்று கொலோ வணங்கு நாளே“
“அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் இன்ப மிகு பெருங்குழுவு கண்டு
யானுமிசைந்துடனே என்று கொலோ இருக்கு நாளே“ என்றிவை போல்வன பல பாசுரங்களை
வாய் வெருவிக் கொண்டு இதுவே ஒரு ஆனந்தமாகப் போது போக்குவதே பரம ப்ராப்யம் என்றாதாயிற்று –

அவாவாருயிருருகியுக்க“ என்று தொடங்கி “சிறப்பு விட்டு“ என்ற வரையில்
அவர் காதல் அன்பு இன்பு தேறல் அமுதம் என்று ஒரு பொருட் பன்மொழிகளை இனைத்துத் தொடுத்திருப்பதனால்
பகவானுடைய திருவடிகளை முடிமேலணிந்து கொள்வதை ஆசைப் படும் விஷயத்தில் ஆழ்வார்க்குண்டான
ஆதரம் அளவற்ற தென்பது நன்கு வெளிப்படும்.

எம்மா வீட்டுத் திறமும் செப்பம்“ என்றும்.
இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்“ என்றும்
(பாவோ நாத்யத்ர கச்சதி) (வைகுண்டவாஸேபி ந மேபிலாஷ) என்றும்
சொல்லுகிறபடி அந்த மோக்ஷந்தன்னையும் ஒரு பொருளாக மதியார்களென்கை.

தெள்ளியார் அனுபவம் இங்கேயே தானே-விண்ணுளாரிலும் சீரியர் இறே

ஆக இப் பாட்டால் –
ஸம்ஸாரி களைப் போலே க்ஷுத்ர பலன்களை விரும்பி அலையாமல்
விவேகங்களைப் போலே பகவத் விஷயத்தில் அநு ராகம் மிக்கியிருப்பதே நமக்கு ப்ராப்தம் என்றாராயிற்று.

————

முதல் பாட்டில் அவன் வடிவு அழகைப் பேசி அனுபவித்தார் –
இவன் தன்னைப் பெற்று அனுபவித்துக் கொண்டு இருக்கும் இருப்பில் அவன் விஷயமாகப் பண்ணும்
பக்தியே இனிது என்றார் இரண்டாம் பாட்டில்
இப்பாட்டில் பக்தி பண்ணும் விஷயத்துக்கு எல்லை எவ்வளவு என்னில் அவன் தொடங்கி
ததீய சேஷத்வ பர்யந்தமாக -என்கிறது –

குறிப்பில் கொண்டு நெறிப் பட உலகம்
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வனாகி சுடர் விளங்கு அகலத்து
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர
உருமு உரல் ஓலி மலி நளிர் கடல் படம் அரவு
அரசு உடல் தடவரை சுழற்றிய தனி மா
தெய்வத்து அடியவர்க்கு இனி நாமாள் ஆகவே
இசையும் கொல் ஊழி தோறு ஊழி ஓவாதே –3–

இவர்களும் தன்னோடு சமானருமாய்-அவனோ ஈஸ்வரன் -இவர்களோ ஈஸ்வரர்கள் -என்று கண்டவர்க்கு
இவர்கள் பக்கலிலேயும் ஈஸ்வரத்வ சங்கை பண்ணும்படி இறே தான் இவர்களுக்குக் கொடுத்து வைத்து இருக்கும் தரம்
அவர்களுடைய சரீரத்துக்கு ஆத்மாவுக்கும் நியாமகனாய் –
தன் அளவிலே அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹத்தோடே நின்று –
அதுக்கு நியாமகனாய் –
அவர்களுக்கும் காரண பூதன் என்றவாறு-

உலகம் மூன்று நெறிப்படக் குறிப்பில் கொண்டு உடன் வணங்கு தோன்று புகழ்–ஸ்ருதி பிரசித்தம் –-மூல பிரமாணத்தில் பறை சாற்றுவதாய் இருக்குமே

அகலம்-திரு மார்பு-சுடர் விளங்கு-கடையும் காலத்தில் திரு மார்பு ஆபரணம் அசைய அதற்க்கும் மங்களா ஸாஸனம்

வரை புரை-இத்யாதி–
அவன் ஆஸ்ரித அர்த்தமாகச் செய்யும் செயல்களில் இது ஒன்றும் அமையாதோ-இவனே ஆஸ்ரயணீயன் என்பதற்கு-

நளிர் கடல்-பொறி எழக் கடையச் செய்தேயும் அவனுடைய கடாக்ஷ மாத்திரத்தாலே கடல் குளிர்ந்த படி
கடந்த வேகத்தால் குமுறாதபடி நடுங்க என்னுதல்

நளிர் –குளிர்ச்சியையும்-நடுக்கத்தையும் காட்டும்

அடியவர்க்கு இனி நாமாள் ஆகவே
ப்ரயோஜனாந்தர பரரான தேவதைகளுக்காக தன் உடம்பு நோவ கடலைக் கடைந்து
அம்ருதத்தைக் கொடுத்த மஹா உபகாரத்தை அனுசந்தித்து
அவன் நீர்மையிலே தோற்று எழுதிக் கொடுத்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு--ஒப்பூண் உண்ணாமல்-

ள் ஆகவே-சேஷ பூதராக-சேஷத்வமே வடிவாக-

ஆளாகவே என்ற விடத்திலுள்ள ஏகாரத்தைப் பிரித்து–“அடியவர்க்கே“ என்று கூட்டிக் கொள்ளலாம்.–

ஓவாதே-ஒரு ஷணமும் இடை விடாதே யாக வேணும் –ஓவாது -ஒரு ஷணமும் விடாமல்
ஊழி தோறு ஊழி -சகல காலமும் என்றபடி –

ஆத்ம சத்தை உள்ளவன்று தொடங்கி பாகவத சேஷமாய்ப் போருவது பிராப்தமாய் இருக்க
கர்மத்தால் நான் என்றும் என்னது என்றும் போந்தோம்
இனி சேஷித்த காலமாகிலும் இவ்வஸ்து பாகவத சேஷம் என்னும் இடத்தை அவன் காட்ட –
அவன் பிரசாதத்தாலே கண்ட நாம் சேஷ பூதராக ஆளாகவே ஒரு ஷணமும் இடை விடாதே யாக வேணும் –

அவதரித்த சர்வேஸ்வரன் இதர சஜாதீயனாம் அன்று இறே இவர்களும் சம்சாரிகளோடே சஜாதீயர் ஆவது
இவ் வுலகில் இவ் வுண்மையை அறிவது அரிது அன்றோ என்றபடி-

————

கீழில் பாட்டில் பக்தி பண்ணும் விஷயத்துக்கு எல்லை எவ்வளவு என்னில் –
சர்வேஸ்வரன் தொடங்கி –ததீய சேஷத்வ பர்யந்தமாக அனுசந்திக்கை என்றது –
அப்படிப்பட்ட அனுசந்தானத்தை உடையாரானார் பரிமாறும் பரிமாற்றம் இருக்கும் படி என் என்னில்
ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய வென்று-அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு –என்று ஆயிற்று இருப்பது
ஸ்ரீ பெரியாழ்வார் பல்லாண்டு என்று ஆண்டாக்கி -அது தன்னைப் பலவாகி-ஆயிரமாக்கி –
அது தன்னைக் கோடியாகப் பெருக்கி மங்களா சாசனம் பண்ணுகிறார் –
இவர் அவ்வளவு அமையாமல் முதலிலே கல்பத்தை விவஷித்து அது தன்னை மேல் மேல் என்னப் பெருக்குகிறார் –

சர்வேஸ்வரனுடைய சேஷித்வத்தை உபக்ரமித்து
ததீய சேஷத்தளவும் செல்ல அனுசந்தித்து
அந்த சேஷத்வ காஷ்ட்டா ப்ராப்தியைக் கொண்டு அவன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறது
நித்தியமாகச் செல்ல வேணும்

ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய
வென்று யாம் தொழ இசையும் கொல்?
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல் வரும் பெரும் பாழ் காலத்து இரும் பொருள்க்கு
எல்லாம் அரும் பெறல் தனி வித்து ஒரு தான்
ஆகி தெய்வ நான் முக கொழு முளை
ஈன்று முக் கண் ஈசனோடு தேவு பல நுதலி
மூ உலகம் விளைத்த உந்தி
மாய கடவுள் மா முதல் அடியே -4-

தனி வித்து ஒரு தானாகிதான் ஒரு தனி வித்தாகி என்று அந்வயிப்பது.

தனி வித்து ஒரு தான் ஆகி–நிமித்த உபாதான சஹகாரி காரண த்ரயமும் தானே யாய்

வித்து -என்கையாலே –-காரண வஸ்து என்கை –

தனி -என்கையாலே —ஏஹோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சாந –மஹா உபநிஷத்-1-
(நாராயணன் ஒருவனே பிரளய காலத்தில் இருந்தான் பிரமனும் இல்லை சிவனும் இல்லை )- என்றபடி அத்விதீயன் -என்கை

ஒரு -என்கையாலே-இதுக்கு ஸஹ காரிகள் ஒருவரும் இல்லை என்கை –

தான் ஆகி –கார்ய ரூபமான பிரபஞ்சத்துக்கு எல்லாம் வேண்டும் காரண கணம் எல்லாம் தானேயாய்
இப்படி அண்ட ஸ்ருஷ்ட்டி அளவும் தானே உண்டாக்கி –இவ்வருகு உள்ளவற்றை உண்டாக்குகைக்காக-

வித்தாகி என்னாமல் ஒரு வித்தாகி என்னாமல் ஒரு தனி வித்தாகி என்றதனால் –
நிமித்த காரணம் ஸஹகாரி காரணம் உபாதான காரணம் என்கிற மூவகைக் காரணங்களும்
எம்பெருமான் தானே யாகிறான் என்று தெரிவிக்கப் பட்டதாயிற்று.

மேல் வரும் என்பதற்கு, கீழே கழிந்த என்று பொருள் கொள்ளுதல் விபரீத லக்ஷணை யினாலென்க.
மேலென்றது பண்டென்றபடி,-வருமென்றது போனவென்றபடி.

ஸ்ரீ கோயிலுக்கு ஸ்ரீ மதுர கவி தாசரை நிர்வாஹகராக விட்டால் போலே
ப்ரஹ்மாவை இப்பால் உள்ள ஸ்ருஷ்டிக்காக உண்டாக்கினான்
ஸ்ரீ ராமானுஜர் திவ்ய ஆஜ்ஜை அன்றோ அனைத்து ஸ்ரீ கோயில் நிர்வாகங்களும் -இது அதுக்கு த்ருஷ்டாந்தம்

மூ உலகம் விளைத்த உந்தி-கீழும் மேலும் நடுவுமான உண்டான லோகங்களை உண்டாக்கிற்று அவன் திரு உந்தி யாயிற்று
அவனை ஒழியவே தானே இவை அடைய உண்டாக்கிற்றாயிற்று திரு உந்தி
திரு உந்தி என்ற ஒரு பத்மமாய்-அது அடியாக ஆயிற்று லீலா விபூதி அடைய உண்டாக்கிற்று

மாய கடவுள் — ஆச்சர்ய சக்தி யுக்தனான பர தேவதை

மா முதல் அடியே -மா முதல் மாயக்கடவுள் என்று கூட்டி -பரம காரணமான மாயக்கடவுள் என்னுதல் –
மாயக் கடவுள் ஆனவனுடைய மா முதல் அடி என்னுதல்
ஆச்சர்ய சக்தி யுக்தனான பர தேவதையான பரம காரண பூதனானவனுடைய திருவடி என்னுதல் –
மாயக் கடவுள் என்று அவனுடைய பரம ப்ராப்யமான திருவடிகள் என்னுதல் –
திருவடி -திரு மேனிக்கும் உப லக்ஷணம் என்னுதல்
அடியே வாழிய என்று யாம் தொழ இசையும் கொல் -உன் சேவடி செவ்வி திருக்காப்பு –என்றபடி

அந்தத் திருவடிகளை ஸ்ரமப்டுத்திக் காரியங் கொண்டவர்களைப் போலே நாமும் ஆகாமல்
அவற்றுக்குப் பல்லாண்டு பாடப் பெற வேணும்–

——————–

மூ உலகம் விளைத்த உந்தி மாயக் கடவுள் மா முதல் அடியே ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய
வென்று யாம் தொழ இசையும் கொல்?-என்றார் கீழே
நமக்கு மங்களா சாசனம் பண்ணப் புக்க உமக்குக் கருத்து என் என்னில் –உனக்கு அன்றிக்கே மற்றையார்க்கோ
மங்களா சாசனம் பண்ண அடுப்பது-என்று இந்தப் பிரசங்கத்தில் திரு உலகு அளந்தபடி ப்ரஸ்துதமாக-
அத்தைப் பேசி அனுபவிக்கிறார்–

முதலிலே இவற்றை உண்டாக்கினோம் –
அநந்தரம் இவற்றுக்குக் காவலாக திக் பாலாதிகளைக் கை யடைப்பாக்கி நோக்கினோம் –
ஆகில் இவை பட்டது படுகின்றன -என்று கை வாங்கி இராதே –

ஸ்ரீ யபதியான உன்னை அழித்து இரப்பாளன் ஆக்கிக் கொடுத்து –
இட்டு வளர்ந்த கையைக் கொண்டு இரந்து- இந்திரன் கார்யம் செய்து –
தலைக் கட்டின செயல் ஒன்றையும் அனுசந்தித்தால்
உனக்கு அன்றிக்கே மற்றையார்க்கோ மங்களா சாசனம் பண்ண (வகுப்பது )அடுப்பது-என்று
இந்தப் பிரசங்கத்தில்-திரு உலகு அளந்தபடி ப்ரஸ்துதமாக-அத்தைப் பேசி அனுபவிக்கிறார்

மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி
மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது
ஓன்று விண் செலீ இ நான் முகப் புத்தேள்
நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை
வழி பட நெறீ இ தாமரை காடு
மலர்க் கண்ணொடு கனி வாய் உடையது
மாய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
கற்பகக காவு பற்பல வன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த
நெடியோய் கல்லது அடியதோ வுலகே ?–5-

ஆரேனுமாகத் தன் திருவடிகளில் தலை சாய்த்தார்க்குமாக தன்னை அழிய மாறியும் கார்யம் செய்வான் ஒருவன் என்று
உன் படியை அனுசந்தித்து ஆஸ்ரிதர் மார்விலே கை வைத்து உறங்குகைக்காகச் செய்த செயல் இறே இது
ஒரு செவ்வித் தாமரைப் பூவை கவிழ்த்து அலர்த்தினால் அதினுள் அல்லிக்கு உள்ள நெருக்கு இறே
திருவடியின் கீழ்ப் பட்ட பதார்த்தங்கள் உள்ளது-திருவடிகளுக்கு ஆகாதார் இல்லை யாகாதே
அவன் உளனாக்க நாம் அல்லோம் என்று அகலப் பார்த்தாலும் அகல விரகு இன்றிக்கே இருந்ததீ –
இது ஒரு அலாப்ய லாபம் இருந்தபடியே

மா முதல் அடிப் போது -என்று–பரம காரணமானவனுடைய திருவடி என்னுதல் –அன்றிக்கே
மா முதல் அடிப் போது -என்றது-திருவடி தனக்கேயாய்
சேஷ பூதர் அடைய வந்து சேருவது திருவடிகளில் ஆகையால்
அவர்களுக்குப் பரம ப்ராப்யமான திருவடி என்னுதல்

ஒண் சுடர் அடி போது ஓன்று
மநுஷ்யர்களுக்கு எல்லாருக்கும் உள்ள துர்மானம்-இந்த்ராதிகளில் ஓர் ஒருவருக்கும் உண்டாய் இருக்கும் –
அப்படிப்பட்டவர்களை அடைய பக்ந அபிமானர் ஆக்கிக் கொள்ளுகையாலே வந்த புகரை உடைத்தாய் இருக்கை –
அழகிய சுடரை உடைய செவ்விப் பூவாகிய ஒரு திருவடி –

அநேகம் கைகளை படைத்ததால் உள்ள பிரயோஜனம் பெறும்படி திருவடியை விளக்கப் பெற்றான்

தாமரை காடு மலர்க் கண்ணொடு கனி வாய் உடையதுமாய்
ஆரேனுமாகத் தன திருவடிகளைத் தலையிலே வைத்தால் ஆதித்ய சந்நிதியில் தாமரை போலே
திருக்கண் செவ்வி பெறுமாயிற்று-
தாமரைக் காடு அலர்ந்தால் போலே இருக்கிற திருக் கண்ணோடே கனிந்த வாயையும் யுடைத்தாய் இருப்பதுமாய் –

இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
நாம் இங்கு காண்கிற ஆதித்யனைப் போல் அன்றிக்கே
அநேக ஆயிரம் கிரணங்களையும் கீழ்ச் சொன்ன விசேஷங்களையும் உடையராய் இருப்பார்
ஆயிரம் ஆதித்யர்கள் -சேர உதித்தால் போலேயாய்

கற்பகக காவு பற்பல வன்ன
பலவான கற்பகச் சோலை -போலே –இப்படி இருக்கிறது எது என்னில்

முடி தோள் ஆயிரம் தழைத்த
ஞாயிறு ஆயிரம் மலர்ந்தால் போலே இருக்கிறது திரு அபிஷேகம்
பலவகைப்பட்ட கற்பகச் சோலை போலே இருக்கிறது –அநேகம் ஆயிரம் பணைத்த திருத் தோள்கள் –

நெடியோய் –இப்படி தன்னை அழிய மாறி இரந்து-அவன் கார்யம் செய்து -தலைக் கட்டச் செய்தேயும் -தன்னை விஸ்வசித்து –
உடனே கிடந்தவன் முடி அவிழ்த்தனைப் போலே அநு தப்பித்து -மஹா பலி போல்வார் நலிவதற்கு முன்னே
முற்கோலி நோக்கப் பெற்றிலோம் -பறி கொடுத்தோம் -பிற்பாடாரானோம் -என்று நோக்கி லஜ்ஜித்து ஒன்றும் செய்யாதானாய்த்
தன் குறையை நினைத்து இருக்குமவன் ஆயிற்று –செய்ய வேண்டிவற்றை நீள நினைப்பவன் -நெடியோன் –

நெடியோய்க் கல்லது அடியதோ வுலகே
இப்படி சர்வ ரக்ஷகனான தன்னை ஒழிய ஜகத்து மற்றும் சிலர் கால் கீழே கிடந்ததோ-மங்களா சாசனம் பண்ண

எல்லாரையும் ஆஸ்ரயிப்பித்துக் கொள்ளுகிறவர்கள் தலை மேலே காலை வைத்த
உனக்கு மங்களா சாணம் பண்ண அடுக்குமோ –
சிலர் கால் கீழே கிடந்தவர்களிலே சிலருக்கு மங்களா சாசனம் பண்ண அடுக்குமோ –
உன் காலின் கீழே துகை உண்டவர்களுக்கு மங்களா சாசனம் பண்ண அடுக்குமோ –சொல்லிக் காண்

நெடியோய்-நினைவிலே நெடியான்- திரு மேனியில் நெடியான்–திரு விக்ரமன் சர்வ ஸ்வாமி மனிசர்க்கு தேவர் போல் தேவர்க்கும் தேவன் –

நீ அன்றோ நெடியோன் –அனைவரிலும் சாலப் பெரியவனான திரிவிக்ரமன்-நீ அன்றோ என்றவாறு

———-

லௌகீகரைப் பார்த்தார் அவர்கள் வருந்திக் கை விடுவது இவன் ஒருவனையுமேயாய் –
விரும்புகைக்கும் இவனை ஒழிந்தவையாக அமைந்து –
நான் என்றும் என்னது என்றும் -பகவத் வ்யதிரிக்தரை ரக்ஷகராகத் தேடியும் போருகிறபடியைக் கண்டு
இது இருந்தபடி என்-
தங்கள் இழவுக்குக் கூப்பிட வேண்டி இருக்க -அவர்கள் அது தானும் அறியாது இருக்க
அவர்கள் இழவு பொறுக்க மாட்டாமை-தாம் ஓ என்று ஓ என்று கூப்பிடுகிறார்-

ஒ! ஒ! உலகினது இயலவே ஈன்றோள் இருக்க
மணை நீர் ஆட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப புடை பல தானறி
தெய்வம் பேணுதல் தனாது
புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து அழுந்து மா நளிர்ந்தே –6–

தன்னோடு ஒத்து இருப்பான் ஒருவனாய் -பவ உபகரண பூதனாய் –நித்ய சம்சாரியாய் இருப்பான் ஒருவனை
ஆஸ்ரயித்துப் பலம் பெறப் பார்த்த இது தான் நித்ய சம்சாரி யாக்கைக்கு கிருஷி பண்ணினான் ஆயிற்று

வகுத்த விஷயத்தைப் பற்றி நிஷ்க்ருஷ்ட ஸூ கத்தைப் பெறப் பாராதே
சேதனர் அப்ராப்த விஷயத்தை ஆஸ்ரயித்து
அனர்த்தத்தைப் பெறப் பார்ப்பதே –இது என்ன படு கொலை என்கிறார்-

ஈன்றோள் இருக்க மணை நீர் ஆட்டி-இரா நின்றார்கள்

உத்பத்திக்கு முன்னே உண்டாக்குகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ணி –
பின்னை கர்ப்பத்தில் தரித்து –
பிரசவ வேதனையை அனுபவித்து –
அநந்தரம் தண்ணிய இட்டுக் கொடு துவண்டு நோக்கினால்
அறிவு பிறந்து பண்ணின உபகாரத்தை ஸ்மரிக்கும் அளவானவாறே

அவளை விட்டு
ஒரு உபகாரமும் பண்ணவும் அறியாதே
இவன் பண்ணின உபகாரத்தையும் ஸ்மரிக்கவும் அறியாதே
இருபத்தொரு அசித் பதார்த்தத்தை கொண்டாடுவாரைப் போலே
வகுத்த விஷயத்தை விட்டு
அப்ராப்த விஷயத்தை ஆதரியா நின்றார்கள்

மணை என்றது அசேதந வஸ்துக்களை யெல்லாம் சொன்னபடி.
நீராட்டி என்றது உபசாரங்கள் பலவற்றையுஞ் சொன்னபடி.

மணைநீராட்டுமா போலே‘ என்று சொல்லவேண்டுமிடத்து (அவாய் நிலையாக) உவமையை உள்ளடக்கி
மணை நீராட்டி என்றே சொன்னதன் கருத்து யாதெனில், தேவதாந்தர பஜநம் பண்ணுவதோடு
மணை நீராட்டுவதோடு ஒரு வாசியில்லை,
இதுதான் அது, அதுதான் இது என்று இரண்டுக்கு முள்ள அபேதத்தைக் காட்டினபடியாம்.

உலகினது இயல்வே
வகுத்த விஷயத்தைப் பற்றி-நிஷ்க்ருஷ்ட ஸூகத்தைப் பெறப் பாராதே
சேதனர் அப்ராப்த விஷயத்தை ஆஸ்ரயித்து-அனர்த்தத்தைப் பெறப் பார்ப்பதே –
இது என்ன படு கொலை என்கிறார்

தேவதாந்தர பஜனம் பண்ணுவது நித்ய ஸம்ஸாரியா யொழிவதற்கு க்ருஷி பண்ணுவதே யன்றி
வேறில்லை யென்பதைக் கூறி முடிக்கிறார்
தொன் மா மாயப் பிறவியுள் நீங்காப் பன்மா மாய்த் தழுந்துமா நளிர்ந்தே என்று.

—————-

திரு மேனி மேன்மை எளிமை முதல் பாசுரம்
திரு அடி பக்தியே பிராப்தி இரண்டாம் பாசுரம்
ததீய சேஷத்வம் மூன்றாம் பாசுரம்
அடியார் யாத்ரை மங்களாசாசனம் நான்காம் பாசுரம்
திரு விக்ரமன் அடிக்கே மங்களா சாசனம் ஐந்தாம் பாசுரம்
உலோகர் இயற்கை நொந்து ஆறாம் பாசுரம்
தம்மை இப்படி விலஷணம் ஆக்கிய பேற்றை அருளுகிறார் இதில்-

அல்லாதார் செய்தபடி செய்கிறார்கள் -நாம் முந்துற முன்னம் இவ்வனர்த்தத்தைத் தப்பி
இவ்வர்த்தத்தைப் பெற்றோம் என்று உகக்கிறார் இதில்

நாட்டார் கண்டார் காலில் குனிந்து திரியா நிற்க
நமக்கு முந்துற முன்னம் தேவதாந்த்ர ஸ்பர்சம் இன்றிக்கே இருக்கப் பெற்றோமே –
இந்த லாபமே அமையாதோ-என்று-ஸ்வ லாபத்தைப் பேசி இனியர் ஆகிறார் –
இப் புன்மை இன்றிக்கே இன்றிக்கே ஒழியப் பெற்ற இதுவே அமையாதோ -என்று பிரீதராய்-
இத்தையும் அந்தாதி யாக அருளிச் செய்த போதிலும்-
திரு விருத்தம் பெரிய திருவந்தாதி திருவாய் மொழி மூன்றையும் போல்
உகப்பின் மிகுதியால் மண்டல அந்தாதியாக இல்லாமல் தலைக் கட்டுகிறார் –

யாவரும் அகப்பட வாயிற்று அவன் உண்டது –
தன்னோடு ஓக்கச் சிறை இருந்தவர்களில் சிலரை ஆஸ்ரயித்துப் பெறுவதொரு பலம் உண்டோ

நளிர் மதி சடையனும் நான் முக கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை வுலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும்
அகப் படக் கரந்து ஓர் ஆல் இலை சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–7-

நளிர் மதி சடையனும் நான் முக கடவுளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் —முக்யமாகவுள்ள மூன்று தேவர்களைச் சொல்லவே
மற்ற சேதநாசேதங்களை விவரித்துச் சொல்ல வேண்டாமை பற்றி- முதலா யாவகை வுலகமும் யாவரும் அகப்பட –என்றார்.

சுடர் இரு விசும்பும் -என்றது-உண்டாம் இடத்திலே மற்றை நாலுக்கும் முன்னே உண்டாமது ஆகையால்
அழியும் இடத்தில்-அவை அழிந்தாலும் தான் சிறிது காலம் நின்று அழியுமது ஆகையால் வந்த புகரைப் பற்ற

சிறிது டன் மயங்க என்பதற்குப் பலவகையும் பொருள் கொள்ளலாம்.
(கீழ்ச்சொன்ன வஸ்துக்களெல்லாம்)
சிறிது – மிகச்சிறிய வடிவத்தை உடையனவாய்க் கொண்டு,
உடன் – ஏக காலத்திலே,
மயங்க – உள்ளே யடங்கும்படியாக என்பது ஒரு வகை.

உடன் மயங்க என்றவிடத்து உடல்மயங்க என்று பதம் பிரித்து,சிறிதாகிய உடலிலே –
பேதைக் குழவியான எம்பெருமானது மிகச் சிறிய வுடலிலே மயங்க என்றல் மற்றொரு வகை.

நீ சர்வ ஆதார பூதனாம் அத்தனை போக்கி உன்னை ஒழிய புறம்பே ஒன்றுக்கு ஓன்று
ஆதாரமாக வல்லது ஓன்று உண்டோ –
அன்று அவன் சர்வ ஆதார பூதனாய் இருக்கிறபடியைக் கண்டு இது ஓர் ஆச்சர்யமே என்று விஸ்மிதர் ஆகிறார் -என்று–
ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று-இங்கு நம் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தார் –

பர்த்தாவின் பக்கல் ஆனுகூல்யம் அற்று இருக்க பர்த்ராந்தர பரிக்ரஹம் பண்ணாது ஒழிகை இறே
இவள் அவனுக்காகை யாகிறது –
பகவத் ப்ராவண்யம் க்ரமத்தில் பிறக்கவுமாம் – இவனுக்கு முந்துற வேண்டுவது தேவதாந்த்ர ஸ்பர்சம் அறுகை இறே –
இது உண்டானால் யோக்யதை கிடைக்கும் இறே
ஆகவே ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–என்று அருளிச் செய்து நிகமிக்கிறார்

இத் திவ்யப் பிரபந்தம் பெரும்பாலும் எம்பெருமானுடைய பரத்வ ஸ்தாபனத்திலே நோக்குடையதென்று உணரத்தக்கது.

இதில் ஆழ்வார் தமது திருநாமம் இதிலும் பெரிய திருவந்தாதியிலும் அருளிச் செய்ய வில்லை-இது மண்டல அந்தாதி பிரபந்தம் இல்லை-

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் -91-100–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 28, 2020

இங்கே கிடந்தது காலம் நெடுகா நின்றது -குறுகா நின்றது என்னா -ஆழம் கால் படா நில்லாதே-நாங்கள் கண்டீரே –
புறம்புள்ள விஷயங்களிலே தரித்து -காலம் குறுகுதல் நெடுகுதல் செய்தாலும்-சுகுத்து திரிகிறோம் –
அப்படியே நீரும் பகவத் விஷயத்திலே நின்றும் நெஞ்சை மாற வைக்கப் பாரத்தாலோ என்ன –
ஓம் அப்படி செய்யலாற்றிற்று இறே-அதுக்கு ஈடாய் இருப்பதோர் நெஞ்சு பெற்றோம் ஆகில் -என் நெஞ்சு அவனை ஒழிய
வேறு ஒன்றை அறியாது என்கிறார் -இந் நெஞ்சு தன்னையும் வைக்கல் ஆயிற்றே-அவன் ஸௌர்யம் பண்ணிற்று இலனாகில் –
தோழிக்கு தலைவி தன் கற்பு உணர்த்தி அறத்தொடு நிற்றல் —

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும்கிறி யானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91 –வார் கடா அருவி -8–4-

இத்தால் ஆஸ்ரித ஸ்பர்சமுள்ள -த்ரவ்யத்தாலே தரிக்கையும் –
ஜகத் ரஷணத்திலே பர்யாப்தம் இன்றிக்கே இருக்கும் படியையும் சொல்லிற்று –
இசைவிக்க கிருஷி பண்ணினவன் தானேயாய் -அவன் இசைவும் தன்னதீனமாம் படியாக-உடையனாய் –
ஆரேனும் வேண்டா என்னிலும் அவனும் இசைந்து கொடுக்கும் படியும் ஓர் மூவடி வேண்டிச் சென்ற -இரண்டு அடியை இரந்து –
இரண்டு அடியும் அளந்து விடாதே-ஓர் அடிக்கு சிறை இடும்படி மூன்று அடியை இரந்தவனை –
அடியேன் -மகா பலியைப் போலே ஓன்று கொடுக்க இருக்கிறார் அல்லர் -இந்த்ரனைப் போலே ஓன்று பெற இருக்கிறார் அல்லர் –
அச் செயலுக்கு தோற்று எழுதிக் கொடுக்குமவர் இறே இவர் – யானே என் தனதே என்று இருந்த என் நெஞ்சையும்
நான் அறியாதபடி அபஹரித்தான் –

இதில் பகவத் அலாபத்தாலே ஆழ்வார் படும் பாட்டைக் கண்ட சம்சாரிகள் நீர் இவ்விஷயத்தை விட்டு எங்களைப் போலே
சப்தாதி விஷயங்களிலே ப்ரவணராய் ஸூ கித்து இரும் என்று சொல்ல நான் அப்படி செய்யினும்
என் மனஸ்ஸூ அவனை விட்டு மற்று ஒன்றையும் விரும்பாதே என்கிறார் –

———–

பெரும் கிறியானை யல்லால் யடியேன் நெஞ்சம் பேணலதே -என்றாரே தாம் கீழே –
அளவுடையாராய் அதிகாரி புருஷர்களான தேவர்களுக்கும் இதுவும் அன்றிக்கே ஒழிவதே -என்கிறார் –
என் தான் அவர்களுக்கு வந்த குறை என் என்னில் -நாம் எல்லாவற்றையும் அழிய மாற பெற இருக்கிற வஸ்துவை –
அழிவுக்கு இட்டு வேறே சில பிரயோஜனங்களை கொள்ளா நின்றார்களே -என்கிறார் –
வேந்தற்கு உற்று உழிப் பிரிவில் தலைவனைக் குறித்துத் தலைவி இரங்குதல்–

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92- –ஆழி எழ -7–4-

இத்தால் –அநந்ய பிரயோஜனருக்கு நேர்த்தி அல்பமாய் -பலம் அதிகமாய்
பிரயோஜனாந்தர பரர்க்கு-நேர்த்தி அதிகமாய் பலம் அல்பமாய் -இருக்கும் என்றபடி
கீழ் அவதார குணங்களை அனுபவித்தார் -இதில் தேவர்கள் பிரார்த்தனையால் அன்றோ தன் சௌகுமார்யம் பாராமல்
இந்த கர்சகமான லோகத்தில் அவதரித்தது என்று அவர்களை வெறுக்கிறார் –
அவர்களுடைய பாஹ்ய ஹீனைக்கு நான் என் சொல்வேன் என்கிறார் –

—————-

தேவர்கள் தானோ ஓர் அபிமான விசேஷத்தாலே தவிருகிறார்கள் -அல்லாதாரோ தான் பகவத் பஜனம் பண்ணுகிறார்கள் –
அவர் இவர் என்று விசேஷிககிறது என் -எல்லார்க்கும்-புறம்பே அன்றோ போது போக்கு என்கிறார் –
இருள் கண்டு அஞ்சுகிற தலைவி தோழி செவிலியரை வெறுத்தல் —

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் வன்மைப்படியே – – -93 –ஒரு நாயகமாய் -4–1-

புறம்புத்தை ஜல்பங்களைத் தவிர்ந்து -பகவத் விஷயத்தை-பேசுவோம் என்றால் -அதுக்கு பாங்கான
நாவைப் படைத்து வைத்து -இவர்கள் புறம்பே போகிறது என்-என்கிறார்
வ்யாமோஹம் பண்ணாதே -த்வேஷத்தைப் பண்ணினாலும் விட ஒண்ணாத வடிவு அழகை நினைப்பார் இல்லை –

—————

துர்மானத்தாலே இழப்பாரும் அறிவு கேட்டாலே இழப்பாருமாகா நிற்பர்கள் -என்றார்
உமக்கு குறை இல்லையே -என்ன – எனக்கும் ஒரு குறை உண்டாக்கி வைத்தாயே –
முன்னாடி தோற்றாதபடி -மயர்வற மதி நலம் அருளினாயே -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை-இறே அருளிற்று –
அந்த பக்தி பாராவச்யத்தாலே சொல்ல மாட்டுகிறிலேன் என்னுதல் –
வள வேழ் உலகின் படியே அயோக்யா அனுசந்தானத்தாலே என்றும் சொல்ல மாட்டுகிறிலேன் என்னுதல் –
தலைவியைக் கண்ட பாங்கன் தலைவனைக் யடுத்து வியந்து கூறல் —

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — – 94- –இருத்தும் வியந்து -8-7-

மைப்படி மேனியும் -அஞ்சனத்தின் படியான திரு மேனியும் -கண்டார்கள் கண் குளிரும்படியான-வடிவும் –
மைப்படி -காதல் மையலை உண்டாக்கும் படியான திரு மேனி –பொன்னார் சார்ங்கம் உடைய யடிகளை இன்னார் என்று அறியேன் –
பட்டர் ஒருகால் இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க -பிள்ளை விழுப்பர் அரையரும் -அப்பான் திருவழுந்தூர் அரையரும் –
இருந்தார்களாய் –அனுசந்தித்தார் நெஞ்சில் இருள் படியும் படியான-திரு மேனியும் -என்று அருளிச் செய்ய –
நஞ்சீயர் -இன்னார் என்று அறியப் பண்ணுகை யாகாதே -என்று அருளிச் செய்து அருள -இவ்வார்த்தை சொன்னார் யார் -என்ன –
ஜீயர் -என்று அவர்கள் சொல்ல -நூற்றுப் பதின்காதத்து அவ்வருகே பிறந்து -இவ்வளவும் வந்து -இன்று
நமக்கு இத்தை உபகரிப்பதே -என்று கொண்டாடி அருளினாராம்

ஊருக்கு வரும் பசு கன்றைநினைத்து கத்துமா போலே குருட்டு பசுவும் கத்துவது போலே குருட்டுப்-பசுவும் சம்ப்ரமியா நிற்கும் இறே –
அப்படி யானும் சொன்னேன் -அளவுடையார் சொல்லும்-விஷயம் அன்றோ -நாம் என் -என்று பாராதே -நானும் பாசுரத்தை சொன்னேன் –
நீ அளித்த பக்தியால் உன் ஸ்வரூபாதிகளில் விழித்து மதி மயங்கி கிடக்கிற நான் உன்னை ஸ்மரித்து
ஸ்வ தந்த்ரித்து ஒன்றைச்சொல்ல வல்லேன் -என்கிறார் –
அன்றிக்கே அயோக்யா அனுசந்தானம் பண்ணி அகலுகிற நான் அங்குத்தைக்கு சத்ருசமாக ஒன்றைச் சொல்லித் தலைக் கட்ட வல்லேனோ –
நெஞ்சு பிச்சேரும்படியான விக்ரக வை லஷண்யம்-அயோக்யா அனுசந்தானமே ஸ்வ ரசமான தாத்பர்யம்

———-

பக்தி பாரவச்யத்தாலே யாதல் -அயோக்யா அனுசந்தானத்திலே யாதல் -ஏதேனும் ஒரு படி-கண் அழிவு சொல்லிக் கை வாங்காதே –
தன் பக்கலிலே பிராவண்யா அதிசயத்தை உடையேனாய் -இதர விஷயங்களிலே அருசியையும் உடையேனாய் –
பண்ணின மகோ உபகாரத்தை அனுசந்தித்து -அவன் திருவடிகளிலே விழுகிறேன் என்கிறார் –
இவ்விடத்தில் ஜீயர் குறியாக அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு –
திருக் கோட்டியூரிலே பட்டர் எழுந்து அருளி இருக்கச் செய்தே -அங்கே ராமானுஜ தாசர் என்கிற ஸ்ரீ வைஷ்ணவர் –
அடியேனுக்கு திரு விருத்தம் அருளிச் செய்ய வேணும் என்ன -பெருமாளைப் பிரிந்த சோகத்தாலே நான்-ஒன்றுக்கும் ஷமண் அல்ல –
ஜீயரே நீரே அருளிச் செய்யும் என்ன -ஜீயரும் அருளிச் செய்து கொடு போக்கு நிற்கச்-செய்தே –
வளவன் பல்லவதரையர் -என்று திருக் கோட்டியூர் நம்பி-ஸ்ரீ பாதத்தை உடையார் ஒருவர் அனுசந்தித்து கொடு போந்தராய் –
அவர் இப்பாட்டு-அளவிலே வந்தவாறே -கண்ணும் கண்ணநீருமாய் -புளகித காத்ரராய் -இருக்க -இத்தைக் கண்டு –
பாட்டுகளில் வார்த்தை சொல்லுவது -இனி பிரசங்கித்த மாத்ரத்திலே வித்தர் ஆனீரே என்ன –
நம்பி எனக்கு ஹிதம் அருளிச் செய்த அனந்தரத்திலே-எம்பெருமான்-திரு முன்பே இப்பாட்டை நாள் தோறும் விண்ணப்பம் செய் –
என்று அருளிச் செய்தார் -அத்தை-இப்போது ஸ்மரித்தேன் என்ன –
அவர் இதிலே அருளிச் செய்யும் வார்த்தைகளை நினைத்து-இருப்பது உண்டோ -என்ன -அது எனக்கு போகாது –
இப்பாசுர மாத்ரத்தை நினைத்து இருப்பேன் -என்றாராம் –
நம்பி ஆதரித்த பாட்டாகாதே என்று ஐந்தாறு நாழிகை போது இத்தையே கொண்டாடி அருளிச் செய்தார் –
தலைவி அறத்தொடு நிற்கத் துணிதல் –

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 – –திருமாலிருஞ்சோலை -10-8-

யாதானும் பற்றி -பகவத் வ்யதிரிக்த விஷயம் ஆகையே வேண்டுவது -பற்றுவது ஏதேனும் ஒன்றாக-அமையும் –
அவற்றில் குண தோஷங்கள் நிரூபிக்க வேண்டா –நீங்கும் -பகவத் விஷயம் இத்தனையே வேண்டுவது விடுக்கைக்கு-
சர்வேஸ்வரன்-ஏதத் வ்ரதம் மம -என்று ரஷிக்கைக்கு வ்ரதம் கொண்டு இருக்குமா போலே யாயிற்று-இவன் அவனை
விடுகைக்கு வ்ரதம் கொண்டு இருக்கும் படி –
த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம் -என்கிறபடியே இரண்டாக பிளக்கிலும் தலை சாயேன்-என்று ஆயிற்று இருப்பது –
மாதாவினைப் பிதுவை -சரீரத்துக்கு பாதகராய் -சம்சார வர்த்தகராய் இறே யல்லாத மாதா பிதாக்கள் இருப்பது –
இவன் அதில் நின்றும் விடுவித்து ரஷிக்குமவன் ஆயிற்று -இங்கன் இரண்டு ஆகாரமாய் சொல்ல வேண்டுவான்
என் என்னில் –திருமாலை -ஸ்ரீ ய பதி யாகையாலே -பிதாமாதா சமாதவ -என்னுமா போலே –
வணங்குவனே -இதர விஷயங்களில் அருசியைப் பிறப்பித்து -தன் பக்கலில் பிராவண்யத்தைப் பிறப்பித்த -இவ் உபகாரத்துக்கு
சத்ருசமாய் இருப்பதொரு பிரத்யு உபகாரம் நம்மால் பண்ண ஒண்ணாது இறே –
அவனதான வஸ்துவை அவன் பக்கலில் சமர்ப்பிக்கும் அத்தனை இறே –

———–

லபிக்கும் அம்சம் எல்லாம் இங்கு இல்லை என்கிறார் -நீ கை விட்டால் உன் கார்யம் செய்யப் போந்த நானும் கை விடவோ
லபிக்கும் அம்சம் இங்கு இல்லை என்று பூர்வ அர்த்தத்தை கடாஷித்துக் கொண்டு –
நீ இப்படி செய்த பின்பு உன்னை ஆஸ்ரயிக்கும் உபாயம் ஒன்றும் இல்லை என்று அருளிச் செய்கிறார் –
நீ கை விட்டால் உன் கார்யம் செய்ய போந்த நானும் கை விடவோ-என்று ஸ்வ சரண கமல சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாக –
கரண களேபரங்களைக் கொடுத்து-பிரவ்ருத்தி நிவ்ருத்தி சக்திகளையும் கொடுத்து -ஹிதைஷியாய் இருந்தேன் இத்தனை ஒழிய-
கை விட்டேனோ என்று அருளிச் செய்கிறார் –
இவை சம்சரிக்கைக்கு ஈடாக-ப்ரவர்த்தித்ததாய் நீ என்னலாம்படி விழுந்தது -கிணற்றின் கரையில் பிரஜையை வாங்காதே –
யாறி இருந்த தாயை தானே தள்ளினாள் என்னக் கடவது இறே –தலைவி வெறி விலக்கு வைக்க நினைத்தல் –

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – -96 – ஒன்றும் தேவும் -4-10-–

சூத்திர தேவதைகளை ஆஸ்ரயணீயர் என்று உபதேசிப்பாரையும் -அவர்களுக்கு உபதேசிக்கைக்கு-பாசுரமான
சாஸ்திரங்களையும் -அவ்வவோ தேவதைகளையும் உண்டாக்கி வைத்தாய்
நின் கண் வேட்கை எழுவிப்பனே-ஸ்வ தந்த்ர்யத்தையும் தவிர்த்து -அவர்கள் தங்கள் அறிவு கெட்டு-இன்பம் அனுபவியாதபடி
பண்ணி -எல்லாரும் என்னைப் போலே உன் பக்கிலே ஆசை-உடையராம்படி -பண்ணக் கடவேன் –
இது சம்சாரத்தில் இருக்கச் செய்தே பகவத் ஜ்ஞானம்-பிறக்கையால் வந்த கர்வோக்தி யிருந்தபடி இறே –
நீ கை விட்டாலும் நான் கை விடவோ -அனைவரையும் ஆஸ்ரிதர்-ஆக்குகிறேன் என்று ஈஸ்வரன் இடம் மார் தட்டுகிறார் –

————

பெரும் கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே -என்றும் –
நின்கண் வேட்கை எழுவிப்பனே -என்றும் -இவ்விஷயத்திலே இங்கனே கிடந்தது அலமாவா நின்றீர் –
இவ்விஷயத்தில் கை வைக்கில் உமக்காகவும் பிறர்க்காகவும் கிலேசந்தவிராதாய் இரா நின்றது -அல்லாதார் கண்டீரே –
புறம்புள்ள விஷயங்களிலே நெஞ்சை வைத்து -அவற்றாலே உண்டு உடுப்பது-கண் உறங்குவதாய் கொண்டு போது போக்குகிறபடி –
அப்படியே நீரும் நம் பக்கலிலே நின்றும்-நெஞ்சை புறம்பே மாற்றி போது போக்க வல்லீரே என்ன –
அவர்கள் உன்னை-அறியாமையாலே -என்கிறார் –தலைவன் பிரிவில் துயில் கொள்ளாத தலைவி இரங்குதல் —

எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – – 97–பரிவதில் ஈசனை -1-6-

நெஞ்சை வாங்கலாயோ -உன் படி இருப்பது-விலஷண விஷயமுமாய்-அதிலே பாவ பந்தம்-உண்டானால் ஆறி இருக்கப் போமோ –
எப்பொழுதும் நாள் திங்கள் –திருவாய் மொழி – 2-5 4- – இத்யாதி –ஸ்வ தந்த்ரனான பெருமாள் உறங்கினார் என்று
கேட்டோம் இத்தனை போக்கி-அவரை அனுவர்த்திதுப் போன இளைய பெருமாளுக்கு கண் உறங்கிற்றோ –
பகவத் விஷயத்தில் கை வைத்தார் இதுக்கு முன்பு கை உறங்கினார் உண்டு என்று யாரேனும்-கேட்டு அறிவார் உண்டோ –

————

இவ் விஷயத்திலே கை வைத்து அதில் உமக்கு உண்டான ஈடுபாட்டைச் சொல்லுவது –
பிறரை திருத்தப் பார்ப்பதாய்க் கொண்டு -க்லேசியாய் கிடவாதே -உம்முடைய துறை அன்றோ கிருஷ்ணாவதாரம் –
நவநீத ஸௌ ர்ய வ்ருத்தாந்தத்தை அனுபவித்து போது போக்க பார்த்தாலோ -என்றார்கள் சிலர் –
இவர்க்கு அது ஆழம் கால் என்று அறியார்களே -இவர் -எத்திறம் -என்று மோஹித்து கிடக்குமது இறே அது தான் –
அது நெஞ்சாலும் நினைக்கப் போகாது –
தலைவனது அருமை நினைந்து கவல்கிற தலைவிக்கு தோழி கூறல் —

துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன்சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 –கெடுமிடராய-10-2-

ப்ரஹ்மாதிகள் தங்கள் துக்க-நிவ்ருத்திக்கு உடலாக தன்னை ஆஸ்ரிக்கிறவோபாதி-தான் வேறு சிலரை ஆஸ்ரயநீயராக உடையன்
அன்றிக்கே இருக்குமவன்-ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யமே தனக்கு தாரகமாய் -அது தான் நேர் கொடு நேர் கிட்டப் பெறாதே –
இப்படி களவு கண்டாகிலும் புஜிக்க வேண்டி – அதுதான் தலைக்கட்ட பெறாதே -வாயதுகையதாக அகப்பட்டு -கட்டுண்டு –
அடியுண்டு -பிரதி க்ரியை அற்று –உடம்பு வெளுத்து பேகணித்து நின்ற நிலை சிலருக்கு நிலமோ –
அரையனுக்கு போகிற பாலை ஓர் இடையன் களவு கண்டான் -என்று கட்டி அடியா நிற்க –பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண்டு
பரவசராய் இருந்து -இத்தால் வந்ததுக்கு எல்லாம் நான் கடவன் -என்று விடுவித்துக் கொண்டாராம் –

—————

பகவத் விஷயத்தில் நீர் இன்ன போது மோஹித்து கிடப்புதீர் என்று அறிகிறிலோம்-உம்மை-விஸ்வசிக்க போகிறது இல்லை –
அத்ய ராஜ குலச்ய ஜீவிதம் த்வதீனம் ஹே புத்திர வியாதி தே சரீரம் பரிபாததே நச்சித் -அயோத்யாகாண்டம் -8 7-9 – –
ரசவாதம் கீழ்ப் போமாம் போலே ஸ்ரீ பரத ஆழ்வான் மோஹித்து கிடக்க -திருத் தாய்மார் வந்து சொல்கிறார்கள் –
இப்படை வீடாக-உன்னைக் கொண்டு அன்றோ ஜீவிக்கிறது -சக்கரவர்த்தி துஞ்சினான் -பெருமாள் பொகட்டுப் போனார் –
நீ இருந்தாய் என்கிறார்கள் அன்று-உன் முகத்தில் பையாப்பு கண்டால் அவர் மீளுவர் என்னும் அத்தாலே
அன்றோ இது ஜீவித்து கிடக்கிறது -நீ இல்லை என்று கேட்கில் இத் திக்கில் என்றும் நோக்குவரோ –
புத்ர வ்யாதிர் நுதே கச்சித் சரீரம் பரிபாதிதே -என்றும் -அபி வ்ருஷா -என்கிறபடிக்கே படை வீட்டில்-ஸ்தாவரங்கள் அடைபட
நோவோன்றாய் இருக்கச் செய்தே -பிள்ளாய் உனக்கு நோய் என் -என்று-கேட்கும்படி வேண்டி இறே சடக்கென மோஹித்து விழுந்தபடி –
அப்படி சத் பிரக்ருதிகளாய் இருக்கையாலே – இன்ன போது மோஹிப்புதீர் என்று தெரிகிறது இல்லை –
சௌலப்ய குணத்தை உபதேசிக்க புக்கு -எத்திறம் -என்று மோஹித்து கிடக்குமவர் இறே இவர் –

ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்க புக்கால் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண்ணும் கண்ணீருமாய்
அத்தை இத்தை பிரசங்கித்து சித்தராவார் -அத்தைக் கண்டு -கூரத் ஆழ்வானாய்-மகா பாஷ்யம் கற்று -சதுர் ஆஸ்ரமாக ஒன்றை
நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே -பகவத் குண பிரசங்கத்திலே சிதிலராகும்படி பிறந்த உம்முடைய ஜன்மம் ஒரு ஜன்மமே -என்றானாம் –

ஆழ்வான் தான் வீராணத்திலே ஒரு பெண் பிள்ளை புக்காளாய்-மடியிலே வைத்துக் கொண்டு-இருந்து –
கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து -என்று சந்தை சொல்லுவியா-நிற்க –
அந்த பெண் பிள்ளையில் பார்த்தா அவளை அழைத்துக் கொண்டு போக -மேற் சந்தை இட மாட்டாதே மோஹித்து விழுந்தான் –
இப்படி இருக்கிறவன் இறே தன்னை-வன் நெஞ்சனாக்கி வார்த்தை சொன்னான் –

ஸ்வாமிகள் திரு மழிசை தாசராய் – நஞ்சீயரை பட்டர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரியப்பித்தராய் -அர்த்தாத் -யாத்ருசிகமாக –
அவரும் தாமாக பகலிருக்கையில் போயிருந்து –அவரும் தாமுமாக திருவாய் மொழி ஓதா நிற்க -ஆண்டான் பின்னிட்டு சென்றானாய் –
அவனைக் கண்டு-ஜீயர் எழுந்து இருக்க புக -வேண்டா -என்று கை கவித்து கொடு வந்து –
நீங்கள் கோயில் கூழைத் தனம்-அடிக்கிற படி இதுவோ -தான் -என்ன -லௌகிகர் அன்ன பாநாதி நிமித்தமாக வ்யாபாரித்தது போலே –
உங்களுடைய யாத்ரை இதுவே யென்று வித்தரானாராம் ஆண்டான் –
திரு வாய் மொழி ஓதிற்று ஸ்ரீ பாதத்திலே யாயிற்று -என்றாராம் –

பகல் எல்லாம் பாஷ்யத்திலே அந்ய பரராய் இருப்பார் -இரவு அமுது செய்து பள்ளிக்கட்டில் எறி-அருளினால் –
சந்தை சொல்ல வாராயோ -என்று அழைப்பர் -முந்துற சந்தை சொன்னால்-புளகிதகாத்ரர் ஆவார் –
இரண்டாம் சந்தைக்கு சிதிலர் ஆவார் என்று-எங்கேனும் ஒரு கால் புக்கார் ஆகில் நாலிரண்டு ஒவியல் கொண்டு
பரிமாற்ற-வேண்டுபடியாய் ஆயிற்று கண்ணா நீர் வெள்ளமிட்ட படி –
பெருமாள் அமுது செய்யும் போது இன்னதனை கறியமுதும் நெய்யமுதும் என்று
கடக்கிட்டு அவை தன்னை அமுது செய்வதற்கு முன்னேயும் எனக்கு காட்டி அமுது
செய்தாலும் எனக்கு காட்டிக் கொடு போம் கோள்-என்றாரே -அவர்களும் திரு உள்ளத்தில் ஓடுவது-அறியாதாராய் –
அப்படியே செய்து கொடு போந்தார்களாய் -இப்படி ஆறு மாசம் சென்ற பின் -ஒரு நாள் பார்த்து -இத்தை ஒரு நாள்
குறி அழித்திட்டு வைத்தால் ஆகாதோ -என்று அருளிச் செய்தாராம் –

கிடாம்பி ஆச்சான் ஆழ்வான் உடன் திருவாய் மொழி கேட்கிற நாளிலே ஒருநாள் ஸ்ரீ பாதத்திலே-புகும் போதிலே தாழ்த்து புக –
ஏன் நீ வேகினாயீ -என்ன -ஆழ்வான் பாடே திருவாய் மொழி கேளா நின்றேன் -என்றானே –
இன்று என்ன திருவாய்மொழி நிர்வஹித்தான் -என்று கேட்டருள -பிறந்தவாறு -என்றானாய் -அதில் சொன்ன வார்த்தைகள் என் என்ன –
ஒரு வார்த்தையும் இல்லை -என்றானாய் -நீ கேட்ட படி என்
அவன் சொன்ன படி என்-என்ன -நிர்வஹிப்பதாக ஆரம்பித்து இயல் சொல்லி -அநந்தரம்-ஆழ்வாருடைய-பாரவச்யத்தை அனுசந்தித்து –
நெடும் போது கண்ணும் கண்ண நீருமாய் இருந்தது – இவ் ஆழ்வாரும் ஒருவரே –
இவர்க்கு ஓடுகிற பாவ வ்ருத்தி நாம் இருந்து பாசுரம் இடுகையாவது என் -இற்றைக்கு விடலாகாதோ -என்று விட்டான் -என்ன –
என்ன பரம சே தனனோ-என்று அருளிச் செய்தாராம் –

நீர் தெளிந்து இருக்கிறபோதே -உம்முடைய சித்தாந்தத்தை எங்களுக்கு அருளிச் செய்ய வேணும்-என்ன –
ஆகில் அத்தை கேட்கலாகாதோ -என்று தம்முடைய சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –
மித்ர பாவேன -என்கிற ஸ்லோகம் ராம சித்தாந்தமாய் இருக்கிறாப் போலே -இப்பாட்டு ஆழ்வாருடைய-சித்தாந்த்தமாய் இருக்கிறது –
தலைவி தனக்குத் தலைவன் இடத்து உள்ள அன்பு உறுதியைத் தோழிக்கு கூறல் —

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99- செஞ்சொல் கவிகாள் -10-7-

ஆசை உடைய நான் பேசாது இரேன் இறே-பரார்தமாக தன்னைப் பேணாதே -ரஷிப்பான் ஒருவனைப்-பற்ற வேண்டாமோ-
பிறர்க்காக தன்னை அழிய மாறுவான் ஒருவன் ஆகையாலே -ரஷ்யத்துக்காக தன்னைபாராதே-அழிய மாறுவான்-
உடைமை பெறுகைக்கு உடையவனே யத்நிக்கும் அத்தனை இறே –
உடைமை தான் யத்நிக்குமது இல்லை இறே -ஆகையாலும் அவனே வேணும் –ஷயியான பலத்தை அனுபவிக்கிறவர்கள்
தங்களுக்கே அன்றி -அநந்த ஸ்திர-பலத்தை அனுபவிக்கிற நித்ய சூரிகளுக்கும் அவன் வேணும் –
அவர்களுக்கும் அனுபவத்துக்கு தங்கள் சத்தை-வேணுமே பேற்றுக்கு இத்தலையில் ஜ்ஞானம் உண்டாக வேண்டாவோ என்ன –
உண்டாகவுமாம் இல்லையாகவுமாம் – அப்ரதிஷேதத்துக்கு வேண்டுவதே இவன் பக்கலில் வேண்டுவது –பேற்றுக்கு அடியான ஜ்ஞானம்
அவன் பக்கலிலே உண்டு என்கிறார்

ஒரு விசை திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு நடந்த இடத்தே இவ் அர்த்தத்தை அருளிச்-செய்வதாக
ஒரு ஏகாந்த ஸ்தலத்தை எம்பெருமானாரையும் கொண்டு புக்கராய் -திருப்பணி செய்வான் ஒருத்தன் அங்கே
உறங்கி குறட்டை விடா நிற்க -அவனைக் கண்டு அனர்த்தப் பட்டோம் -என்று-இவ்விசைவுக்கு தவிர்ந்து பிற்றை இசைவிலே
இத்தை நம்பி அருளிச் செய்ய கேட்டு அருளி ஆழ்வான் அகத்திலே அமுது செய்து இருக்கிற அளவிலே-உச்சி வெய்யிலிலே
வந்து புகுந்து நம்பி இவ்வர்த்தத்தை ஒருவருக்கும் சொல்லாதே கொள் என்று அருளிச் செய்தார் –
உனக்கு இது சொல்லாது இருக்க மாட்டேன் இறே -என்று சஹகாரி நைரபேஷ யத்தை அருளிச் செய்தார் இறே

பிறரை பிரமிப்பைக்கு சொல்லும் விப்ரலம்ப வாக்கியம் அன்றிக்கே பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையேனாய் –
அவ் வெளிச் செறிப்பு கொண்டு அறுதி இட்டு-சொன்ன வர்த்தம் இது தான் பிறர்க்கு சொல்ல வேணும் என்று சொல்லிற்றும் அல்ல –
என் அனுபவத்துக்கு போக்கு விட்டு சொன்ன பாசுரம் -என்கிறார் –
மதுரகவி பிரக்ருதிகள் அந்தரங்கர் கேட்க ஆழ்வார் அருளுகிறார் -தம்முடைய பரம சித்தாந்தத்தை
வெளி இடுகிறார் பரம ஔ தார்யத்தால் -இதில் –

————–

நீர் பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையீருமாய் -இப்படி அறுதி இட்டு காண்கைக்கு ஈடான-நன்மையை உடையீருமாய்
இருக்கையாலே நீர் இப் பேறு பெற்றீர் -உம்மைப் போலே ஜ்ஞானம்-இன்றிக்கே பாக்ய ஹீனருமாய்
பிற்பாடருமான சம்சாரிகள் செய்வது என் என்ன –
அவர்களுக்கு என் தன்னை ஜ்ஞானமில்லையே யாகிலும் -நான் சொன்ன இப் பாசுர மாத்ரத்தையே- சொல்ல –
அவர்களும் எல்லாம் நான் பெற்ற பேறு பெறுவார்கள் -என்கிறார் –

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100- –முனியே நான்முகன் -10-10-

மகா பாரதம் போலே பரந்து இருத்தல் -பிரணவம் போலே சுருங்கி இருத்தல் -செய்யாதே -நூறு பாட்டாய் –
ஜ்ஞாதவ்யாம்சம் அடைய உண்டாய் இருக்கை –பலத்தை முற்பட சொல்லுகிறார்
பொல்லாததுமாய்-அருவினையாய் – மாயமுமாய் -பொய் நிலமுமாய் இருக்கிற
பிறப்பாகிற வன் சேற்று அள்ளலில் அழுந்தார்-ஆவிர்பூத ஸ்வ ஸ்வரூபராய் வாழும் பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்-

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் -81-90–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 28, 2020

இருளும் போய் முடிகி இவளும் மோஹித்து கிடக்க -இவள் தசையையும் காணா நிற்கச் செய்தே பந்து வர்க்கத்தில் உள்ளார் –
க்ரமத்தில் பரிஹரிக்கிறோம் -என்று ஆறி இருக்க இத்தைக் கண்டு -இவளுடைய அவசாதம் இருந்த படி இது –
ஸ்லாக்யதை இருந்தபடி இது -இப்படி இருக்க இவர்கள் ஆறி இருக்கைக்கு இவர்கள் நேர் கொடு நேரே
இவளைப் பெற்றவர்கள்-அன்றோ -என்று இங்கனே ஒரு மூதறிவாட்டி சொல்லுகிறாளாய் இருக்கிறது –
வெறி விலக்குவிக்க நினைந்த தோழி இரங்கல் —

உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
இறுகின்ற தாலிவாளகம் மெல்லாவி எரி கொள்ளவே – – -81 –வீடுமின் முற்றவும் -1-2-

உறுகின்ற இவளை -என்கையால் ஸ்லாக்கியதை
தொல்லை -திருவேங்கடமுடையான் திருவடி சேர்க்கும் பிரபத்தி மார்க்கம்-
இவள் அருமை அறியாதவர்களாய் இருக்கிறார்களே –
இத்தனை க்ரமம் பொறுக்குமோ -இவள் பிரகிருதி -இற்றிற்று அழிந்து போகா நின்றது
மிருதுவான ஆத்மா விரக அக்னி கொளுத்தி வேவா நிற்க க்ரமம்-பார்த்து இருக்கக் கடவதோ –

ஸ்வா பதேசம் –
இப்பாட்டால் தரிப்பார்க்கும் ரஷகனுக்கும் இடமறும்படி இவர் பகவத் விஷயத்திலே
அவஹாகித்த படியாய் சொல்கிறது –

—————–

ஜீயர் –இப்பாட்டு சொல்ல வநபிமதமாய் இருக்கும் -என்று அருளிச் செய்வர் –
உரு வெளிப்பாட்டிலே சர்வேஸ்வரன் உடைய திருக் கண்கள் பாதகமாம் படியை சொல்லுகிறது இது இறே –
இவருடைய ஆற்றாமை உண்டாகில் இறே இப்பாசுரம் சொன்னால் நமக்கு சாத்மிப்பது –
தாயாய் அளிக்கின்ற தண் தாமரை கண்ணன் அன்றோ –
உரு வெளிப்பாடு கண்ட தலைவி தலைவன் கண் அழகுக்கு இரங்கல் —

எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே – – – 82- –உருகுமால் நெஞ்சு -9–6-

ஆதித்யர்கள் உடைய தேஜஸ்சிலே விழுந்து முடிந்து போகிற ஆசூரப் பிரக்ருதிகளைப் போலே ஆயிற்று என்
போல்வார்களுக்கும் இக்கண்கள் பாதகமாம் ஆகிறபடி –

————–

உரு வெளிப்பாட்டாவே நோவு படா நிற்கச் செய்தே -அதுக்கு மேலே -முற்றத்திலே ஒரு பனையாய் –அப்பனையில் தொங்கிற்று
ஒரு அன்றில் – தான் வாய் அலகை பேடையோடு கோத்து கொண்டு இருக்கிற இத்தை நெகிழ்ந்தவாறே கூப்பிட கடவதாய் –
அதனுடைய ஆர்த்த த்வனியில் இவள் மோஹித்து கிடக்க – இத்தைக் கண்டு -இதன் த்வனி இருக்கிற படி இது –
இவளுடைய ஆற்றாமை இருந்தபடி இது – இவளுடைய மார்த்வம் இருக்கிறபடி இது -இவை எல்லாம் இருந்தபடியாலே
இவள் உளளாக அபிமதங்கை புகுந்து -இவள் ப்ரீதையாய் இருக்க காண மாட்டோம் ஆகாதே -என்று
இங்கனே தாயார் உடைய வார்த்தையாய் இருக்கிறது -பட்டர் -இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க –
நஞ்சீயர் -ஸ்ரீ ராமாயணத்தில் இவ்விடத்துக்கு போலியாக சொல்லலாம் இடம் உண்டோ -என்று கேட்க –
இளைய பெருமாள் காட்டிலே கொண்டு போய் பிராட்டியை விட்டுப் போந்த அநந்தரம்-அவளுடைய ஆர்த்த த்வனி கேட்ட
ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு திருத் தாயார் படி உண்டாக சொல்லலாம் -என்று அருளிச் செய்தார் –
அன்றிலின் குரலுக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கல் —

விளரிக் குரலன்றில் மென்பெடைமேகின்ற முன்றிற் பெண்ணை
முளரிக் குரம்பையிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே – – -83 –உண்ணிலாய ஐவரால் -7–1-

முன்றில் என்று முற்றத்துக்கும் வாசலுக்கும் பெயர்-முற்றதுப்பனை கடவாமோ என்று இவ்விடத்துக்கு நிர்வஹியா நிற்கச் செய்தே
வங்கிபுரத்து நம்பியை சிலர் கேட்க – அதுவோ இவள் கார்யம் தளிரும் முறியுமாய் செல்லுகிறது-என்று பணித்தாராம் –
தூ நிலா முற்றத்தில் ஒரு பனை இருக்க பிரசக்தி உண்டோ -என்பதற்கு ஐதிகம் –
தளிரும் முறிவும் -நாயகன் அடிக்கடி வருகையும் முற்றத்தில் படுக்கையும் நிலவுமாய் போகம் நடக்கிறதோ-
இரவும் பகலும் பாதகமாய் செல்ல -அனைவரும் கிலேசித்து இருக்க — பனையை வெட்டி முற்றத்தை-அழகாய் பேணுவாரும் உண்டோ-
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்தீர் கின்ற வன்றிலின் கூட்டை-பிரிக்க கிற்பவர் யார் கொலோ -பெரிய திரு மொழி –11-2-1-
அவனை கொடு வருவர் யாரோ -என்கிறபடி இறே – அல்லது பிரிப்பன பிரித்து கூட்டுவன கூடி திரிகிறாள் அன்றே இவள்
இப் பெண் பிள்ளைக்கு ஜீவிக்கலாவது -இஜ் ஜல்பம் இன்றிக்கே ஒழியும்படி வரும் தளர்த்தி யாவது -முடிகை இறே –
முடியிலாகாதே -இவளுக்கு பிழைக்கல் ஆவது -அறிகிறிலேன்-

————-

இவள் மோஹித்த அநந்தரம் -அரத்தியாய் ஓர் இடத்தில் தரியாதே -பகவத் அலாபத்தாலே-அங்கே இங்கே
தடுமாறி கூப்பிட்டு கொண்டு திரிகிறபடியை சொல்கிறது –
தலைவி தலைவனைக் காண விரைதல் —

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – – – 84-மையார் கருங்கண்ணி -9–4-

இவ் வாழ்வாருக்கு மோஹம் ஆவது -எத்திறம் -என்ற இடத்தில் சௌலப்யம் குணம் மாத்ரம் அனுபவம்-
முகில் வண்ணன் விஷயத்தில் அழுந்தின அனுபவம் மாத்ரமே -அது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாதே-கிளப்பி விட –
தேடிக் கூப்பிடுகிறார் –அபரிச்சின்ன வைபாவனாய் இருக்கச் செய்தேயும் -ஆஸ்ரிதர்க்கு அத்யந்த சுலபனாய்
கண்டார் கண் குளிரும்படி -சம்சார தாபம் ஆறும்படி -அஞ்சன கிரி போன திரு மேனி உடைய-சௌலப்யம் அனுபவித்து –
அவனைக் காண வேணும் த்வரையில் அருளிச் செய்கிறார் –
சௌலப்யம் அழகையும் காட்டி -கோபிமார் திரளில் ராசக் கிரீடை பண்ணின படியையும்
தண்ட காரண்யத்தில் ருஷிகள் கோஷ்டியில் வீற்று இருந்த படியையும் -சகல திவ்ய ஆயுத சோபை உடன் –
காண ஆசை கொண்டு அருளுகிறார் .

————-

இருளினுடைய தோற்றரவுக்கு நொந்தாள் ஒரு தலைமகள் வார்த்தை யாதல் –
அன்றிக்கே -இவள் தசையை அனுசந்தித்த திருத் தாயார் வார்த்தை யாதல் –
மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்குதல் –

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே – – -85- –எம்மா வீடு -2-9-

அடியாவி -தலை மகள் வார்த்தை யானபோது -உனக்கு சேஷ பூதமான என்னுடைய ஆத்மா வஸ்து -என்கை –
ஆத்மா சமர்ப்பணம் பண்ணுகையும் மிகையாம்படி இறே -இவனுக்கு அத்யந்த சேஷமாய் இருக்கிறபடி –
பெண்பிள்ளை ஆவி என்னவுமாம் தாயார் வார்த்தையாக –
இரவுக்கு அஞ்சின நாயகியாய்க் கொண்டு அடிக்கடி இரவும் இருளும் வந்து என்னை நலியாதபடி ரஷித்து
அருள வேணும் என்று நாயகனான சர்வேஸ்வரனைச் சரணம் புகுகிறார் –

——————-

எத்தனை ஏனும் இருள் வந்து மேலிட்டு பாதகம் ஆனாலும் -அத்தலையில் ஒரு குறை சொல்ல ஒண்ணாத படி
இறே அவன் ஸ்வரூபத்தை நிரூபித்தால் இருக்கும்படி –தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கல் —

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும்
முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – – 86- – வள வேழ்வுலகு -1-5-

ஸ்ருஜ்யத்வ கர்மவச்ய த்வேஷத்ரஞ்சச த்வங்கள் இருவருக்கும் அவிசிஷ்டம் என்றபடி -ஒருவன் தலை அறுப்புண்டு நின்றான் –
ஒருவன் பாதகியாய் நின்றான் -இவன்-அவர்கள் இருவருக்கும் வந்த துக்கத்தைப் போக்கிக் கொண்டு நின்றான் –
தன்னுடைய விபூதி யில் ஏக தேசத்தில் -சில அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லாது செல்லாத –
அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிறவனுக்கு -ஓன்று குறையாய் அது தான் நேர் கொடு நேர் கிடையாதே களவு காணப் புக்கு-
வாயது கையாக அகப்பட்டு -அதுக்கு பிரதி கிரியை பண்ண மாட்டாதே நிற்கிறவனை –
அன்று -அவன் வந்து கட்டுண்டு எளியனாவது ஒரு நாள் உண்டே -அதுவும் ஒரு நாளே –
தானே வந்து கட்டுண்டு எளியனாய் இருக்கிற அன்று கிட்டப் பெறாதே –இன்று பெறுகைக்கு பிரார்த்தித்து இருப்பதே -நான் –

————

உன்னை பிரிந்த அளவிலே பாதக பதார்த்தங்கள் இவளை நலிந்து ஈடுபட்டது கண்டு – லோகமாக கூப்பிடும்படி பண்ணுவதே –
என்று திருத் தாயார் வார்த்தையாய் இருக்கிறது -அன்றிற்கும் ஆழிக்கும் ஆற்றாத தலைவிக்குத் தோழி இரங்குதல் –

புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும் பூம் கழி பாய்ந்து
அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும் ஆங்கவை நின்
வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இத்திருவினையே – — 87- பண்டை நாளாலே -9-2-

திருமால் -நீர் தான் பிரணயிகள் அல்லீராய் தான் இப்படி செய்கிறீரோ –
இத் திரு வினையே -உம்மை ஆசைபட்டவளில் குறைந்தாளோ-அவளோடு கூடின உம்மை ஆசைப்பட்டவள் –
உம்முடைய மகிஷி நோவு பட பார்த்து இருக்கை உமக்கு குறை யன்றோ -என்றபடி –

ஸ்வாபதேசம் –
இத்தால் -அத்தலையாலே வரக் கண்டார் ஆறி இருக்கை அன்றி -இவர் க்ரம ப்ராப்தி பற்றாமை பதறி மேல் விழ
நீர் தாழ்த்தீர் ஆவது உமக்கு குறை அன்றோ -என்று இவர் தசையை அனுசந்தித்தவர் பாசுரமாய் இருக்கிறது –
க்ஷிப்ரம் பவதி தர்மாத்மாச ஸ்வஸ் சாந்திம் நியச்சதி கௌந்தேய ப்ரதிஜா நீ ஹி நமே பக்த ப்ரணஸ் யதி–ஸ்ரீ கீதை –
இவை மறந்தீரோ -என்கிறார்கள் –

———-

இப்படி நாடு பழி சொல்லா நிற்கச் செய்தே -இத்தை சொல்லி பழி சொல்லும்படியாக பெற்ற நமக்கு இனி ஒரு குறை உண்டோ -என்கிறாள் –
இப்பாட்டில் சொல்லுகிறது என் என்னில் –
சர்வதா சத்ருசமாய் இருப்பதொரு வஸ்து -இல்லாதபடி இருக்கிற சர்வேஸ்வரன் -திரு மேனிக்கு-சேர்ந்து இருப்பதொரு
ரூபமானதைக் கண்டால் -உபமான ரஹீதமாய் இருப்பதொரு வஸ்துவுக்கு-கதிர் பொறுக்கி யாகிலும் இங்கனேயோ
ஒரு ரூபமாக உண்டாக பெற்றோம் -என்று -இது ஆஸுவாச-ஹேது வாகை யன்றிக்கே -அவ் உபமேயம் தன்னையே
காண வேணும் என்னும்படியான-விடாயை உடைய – நமக்கு இனி ஒரு குறை உண்டோ -என்றது -ஆதல் –
அன்றிக்கே-அவனுடைய ஜகதாகார தையை அனுசந்தித்தால் -அவ்வளவிலே பர்யசியாதே -அவனுடைய-அசாதாரண விக்ரகத்தை
காண வேணும் -என்னும் அபேஷை பிறக்கும்படியான -எனக்கு-ஒரு குறை உண்டோ -என்னுதல் –
போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் —

திருமாலுரு வொக்கும் மேரு அம்மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச் சக்கர மொக்கும் அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – – -88-புகழும் நல் ஒருவன் -3-4-

இப்படி பகவத் விஷயத்தில் அவகாஹித்த நம்மை-அவஸ்யம் அநு போக்யத்வம் -என்கிற வசனத்தைக் கொண்டு
நம் கர்மம் நம்மை வடிம்பிட வற்றோ -என்கிறார் –அவனை காண வேண்டும் என்ற உறுதிப்பட்டு நின்ற இவ் அபிநிவேசம்
நமக்கு பிறந்த பின்பு-பல ப்ராப்தியில் எவ்விதமான குறையும் நேரிடாது என்று நிச்சயித்து ஹ்ருஷ்டரானார் –

———

சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தராகப் பெற்றோம் -இனி அவனைப் பெற்று அனுபவிக்கிற வர்களோடு
நாம் சஜாதீயராக -பெறுவது என்றோ -என்கிறார் –-தலைவன் கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல்–

தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89- அங்கும் இங்கும் -8-3–

அவன் படிகள் இவை யான பின்பு-நான் இழவல்லது பொருள் இழவு இல்லை இறே –
அப் பேறு பெரும் நாள் என்றோ என்கிறார் –
அபீதா நீம் சகாலஸ் ஸ்யாத்-பதினாலு ஆண்டு கழிக்கால் வரக் கடவது இறே –
அந்நாள் இன்றாகப் பெறுவது -காண் -என்றாப் போலே –

—————

என் ஞான்று தலைப் பெய்வனே -என்று இறே கீழ் நின்றது -என்றாகில் என் -பகவத் ஸ்பர்சம்-பலத்தோடு சந்திப்பித்து விடும் –
என்று விஸ்வசித்து இருக்கும் அத்தனை அன்றோ -என்ன –
அப்படி செய்யலாய் இற்று இறே -சம்சாரிகளைப் போலே நிரபேஷன் ஆனேன் ஆகில்
எனக்கு உன்னை ஒழிய கால ஷேபம் பண்ணுகை அரிதாக நின்றது என்கிறார் –இப்பாட்டில் சொல்லுகிறது என் என்னில்-
உன் திருவடிகளை சமாஸ்ரயிக்கைக்கு ஈடாக-இருப்பதொரு சரீரத்தை பெற்ற படியையும் -அது தான் அஸ்த்ரமாய் இருக்கிறபடியையும் –
அனுசந்திக்கப் புக்கால் -அத்தாலே வந்த ஆற்றாமையாலே -காலம் நெடுகா நின்றது என்னுதல் –
அன்றிக்கே
உன்னை ஒழிய வேறு ஒன்றால் தரியாத படியான ஸ்வபாவத்தை பெற்றானபடியையும் -இது தான் பிரகிருதியோடு இருக்கச் செய்தே
வந்த ஸ்வபாவம் ஆகையாலே -இது தானே ஏக ரூபம்-அன்றிக்கே -இருக்கிற ஆஸ்ரயத்தை அனுசந்திக்கப் புக்கால்
இதுக்கு காலம் போருகிறது இல்லை-என்றது ஆதல் – தலைவனைப் பிரிந்த தலைவி கால நீட்டிப்புக்கு ஆற்றாது உரைத்தல் —

தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு அசுரர் குழாம்
தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே – – – 90-குரவை ஆய்ச்சியர் -6–4–

அசுரர் சமூகத்தை தொலையும்படி பண்ணின திரு ஆழியை உடையஎன் ஸ்வாமி யானவனே –இத்தால் -நீ –
அசக்தனாய் ஆதல் –அப்ராப்தனாய் ஆதல் –நாம் செய்தது நாம் பட்டோம் இத்தனை அன்றோ -என்று தான் ஆறி இருக்கிறேனா –
இப்படி சமர்த்தனான நீ ஸ்வாமியாக இருக்க எனக்கு இப்படி வீணாக காலம் கழிவது பொறுக்க-போகிறது இல்லை -என்று
சர்வேஸ்வரனைக் குறித்து முறை இடுகிறார் –

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் -71-80–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 28, 2020

களவிலே புணர்ந்து நீங்கின தலைமகன் -இவள் ஆற்றாமையை பரிகரிக்கைக்காக இவள் வர்த்திக்கிற தேசத்தில்
தன் நிறத்தோடு போலியான பழங்களை சிலர் விற்பர்களாக பண்ணி – இவளும் அத்தைக் கண்டு தரிக்க –
அத்தை தாயார் நிஷேதிக்கிறாள் -தாயார் சொல்லுகிற மிகையை தலைமகள் தோழி மாருக்கு சொல்லுகிறாள்-
செவிலி வெறுத்தலைத் தலைவி தோழியர்க்கு உரைத்தல் —

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு அக்தே கொண்டு அன்னை
நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே – – -71 –எங்கனேயோ அன்னைமீர்காள் -5-5-

சூழ்கின்ற -முத்துலை இட்டுக் கொண்டு இவள் நலியா நின்றாள்=
முத்துலை இட்டு -நீர் ஏற்ற ஒரு குழி கல்லி ஏற்றம் இட்டு அதிலே ஏற்றி மீண்டும் ஒரு குழி கல்லி
ஏற்றம் இட்டு ஏற்றுவாரை போலே -ஒன்றை சொல்லி அதுக்கு மேலே ஒன்றை கற்ப்பிக்கிறாள் –
மனைப் பாம்பு கடியா விட்டாலும் பயங்கரமாய் இருக்குமா போலே இவள் சொன்னது செய்யா விட்டாலும்-
பயங்கரமாய் இருக்கும் என்றபடி
முத்துலை ஒன்றுக்கு மூன்று சொல்லுகை
கடியன் கொடியன் -அப்படிப்பட்டவன் பிரளய காலத்திலேயே வந்து உதவினான் -என்று
வ்ருத்த கீர்த்தன முகேன உபகாரத்தை ஸ்த்ரீகரிக்கைக்காக-

ஸத்ருச வஸ்துக்களை ஆகிலும் கண்டால் ஒழிய ஜீவிக்கக் கூடாமையாகிய ப்ராவண்ய அதிசயத்தைக் கண்ட சில அன்பர்
சாதனாந்தர பரராக பிரமித்து இவரது ப்ராவண்யத்தை நிஷேதிக்க தம்முடைய அபிப்ராயத்தை மற்றும் சில
ஸூஹ்ருத்துக்களுக்கு ஆவிஷ்கரித்து அவர்களைக் கொண்டு இவர்கள் பிராந்தியைப் போக்கினை பாசுரத்தை
நாயகனுடன் ஒத்த பாதார்த்தங்களைக் கண்டு தரிக்க நினைத்த விரஹிணியான நாயகியை நிஷேதித்த தாயமார்க்கு
சகிகளைக் கொண்டு தன் அபிப்ராயத்தை அறிவித்து தெரிவித்த நாயகியின் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

ஸ்வா பதேசம் –
இத்தால் அவனோடு போலியாய் இருப்பது ஓன்று அல்லது தரியாதபடியையும் – பகவத் விஷயத்தில் உண்டான
பிராவண்ய அதிசயம் ஒருவராலும் மீட்க ஒண்ணாதபடி இருக்கிறதையும் சொல்லுகிறது –

——–

போலி கண்டு தரிக்க வேண்டும்படி ஆற்றாமை மிக்கு இருக்கிற சமயத்திலே -ராத்திரி வந்து இருளாலே நலிய –
இத்தால் வந்த நலிவைப் போக்கி நம்மை ரஷிப்பார் யாரோ -என்று இருக்கிற அளவில் சந்தரன் வந்து தோன்றினான் –
இவ்விடத்தே பிள்ளை அமுதனார் -ஒரு கதை சொல்லுவார் -ஒரு சாது பிராமணர் காட்டிலே தனி வழியே
போனானாய்-ஒரு பசு தொடர்ந்து வந்ததாய் – இத்தால் வந்த நலிவை போக்கி நம்மை ரஷிப்பார் யார் -என்று
இருக்கிற சமயத்தில் ஒரு புலி வந்து தோன்றி அப் பசுவையும் கொன்று -அதனுடைய ரத்த பானத்தை பண்ணி –
இவன் முன்னே வந்து தண்டையை முறுக்கி இட்டு இருந்ததாய் -அந்த பசுவையாகில் ஒருபடி பிராண ரணம் பண்ணி போகல் ஆயிற்று –
இனி இத்தைத் தப்பி நம் சத்தையை நோக்குகை என்று ஒரு பொருள் இல்லை ஆகாதே -என்று அது போலே இறே இதுக்கும் –
இருளுக்கு ஆற்றாத தலைவி இளம் பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் –

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே – – – 72 –சீலமில்லாச் சிறியன் -4-7-

அவன் தோளில் இட்ட திருத் துழாய் மாலையை பெற வேணும் என்று ஆசைப்பட்டு -அதிலே கால் தாழ்ந்து கிடக்கிற நெஞ்சை உடைய –
துழாய் மலர்க்கே தாழ்கின்ற -அதில் அருமை ஒன்றையும் புத்தி பண்ணாதே -ஒரு தமியாட்டியேன் -ஸ்ரீ ஜனக ராஜனின் திரு மகளும்
ஒப்பன்று காணும் இவளுடைய தனிமைக்கு -இருளுக்கும் நிலவுக்கும் நொந்து தனிமைப் பட்டாள் இவள் இறே –
ஒரு -என்கிற இத்தால் உபமான ராஹித்யம் சொல்லுகிறது –
இவள் ஹிருதயம் பத்ம கோசம் -போன்றது ஆகையாலே ஆதித்யனுக்கே அலரக் கடவது
ஆகையாலே -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –இருளுக்கும் சந்த்ரனுக்கும் மலராமையாலே
ஊர்த்வம் மாசான்ன ஜீவிஷ்யதே -பிரிந்த பத்து மாசங்களிலே ராத்ரியும் உண்டு இறே –

ஸ்வாபதேசம் –
இத்தால் -இருளன்ன மா மேனி -என்கிறபடியே -திரு நிறத்துக்கு போலியான இருள் -அதுக்கு ஸ்மாரகமாய் நலிகிற படியையும் –
அதுக்கு மேலே சந்திரனும் -திரு முகத்துக்கு ஆதல்-திருக் கையில் திரு பாஞ்ச ஜன்யத்துக்கு ஆதல் –
நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து -என்கிறபடியே திரு முகத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிற படியால் இவற்றைச் சொல்லுகிறது –
பால சந்தரன் ஆகையாலே இருளானது சந்திரனையும் கை தொட்டு நலியா நின்று-கொண்டு தன்னையும் நலிகிறது என்றபடி –
புலிக்கு பசுவும் பிராமணனும் எதிரி போல் –

—————

நிலவு போய் முடிய நின்று பாதகமாய் —போய் என்றது மிகுதியாய் – அத்தாலே இவளும் நோவு பட்டு -மோஹித்து கிடக்க –
இத்தைக் கண்ட திருத் தாயார் -தர்ம ஹானி கிடீர் -என்று கூப்பிடுகிறாள் –
பிறை யுடை மாலைக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சிக்குப் பாங்கி இரங்கல்-

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே – 73-வேய் மரு தோள் இணை -10 -3 –

அவனை ஒழிந்தார் அடங்கலும் கழுத்துக் கட்டி அவன் ஒருவனுமே துணை என்று இறே இவள் இருப்பது-
க்ரம ப்ராப்தி அமையும் என்று ஹிதம்-சொல்லுவார் பாதகராம் இத்தனை இறே –
தமியாட்டி -தமி -தனியாய் -அத்வதீயை —தனி -யாய் ஒருத்தி என்னுதல்–இப் பிரளயம் -இவளுடைய விரகம்-

ஸ்வா பதேசம் –
இத்தால் இவருடைய தசா விபாகத்தை கண்டார்க்கு அவனுடைய
ரஷகத்வத்தையும் அதி சங்கை பண்ண வேண்டும்படியான நிலையை சொல்லுகிறது-

————

ஒரு தென்றல் வந்து உலாவிற்றாய் -தென்றல் வந்தது -அவன் வரக் கண்டிலோம் -என்று தலைமகள் தளர -அத்தைக் கண்ட
தோழி யானவள் -இத்தை வெறும் தென்றல் என்று இருந்தாயோ –
மாளிகை சாந்து நாறா நின்றால்-ராஜ புத்திரன் -வரவணித்து – என்று இருக்க வேண்டாவோ –
இது அவன் வரவுக்கு ஸூ சகம் காண் -நீ சோகிக்க வேண்டா -என்று ஆஸ்வசிப்பிக்கிறாள்-ஆக இருக்கிறது –
தலைவனது தார் மணம் கொண்டு வரும் தென்றலைத் தலைவி மகிழ்ந்து உரைத்தல் —

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – – -74 –செய்ய தாமரை -3 -6 –

இவன் திரு அபிஷேகத்தில் சாத்தின-திருத் துழாயிலே புக்கு உழறி-அதிலே வாசனையைப் பண்ணி -நடுவிலே ஒன்றிலும் தங்காதே-
கலப்பற்று வருகிற மந்த மாருதம் அன்றோ வந்து உலாவுகிறது -இனி உனக்கு சோகிக்க அவகாசம் உண்டோ –
அவன் முடி சூடு துழாய் என்று அமைந்து இருக்ககீழ்ச் சொன்ன விசேஷணங்களுக்கு கருத்து என் என்னில் –
அவன் ஆஸ்ரித அர்த்தமாக வ்யாபரித்த-இடம் எங்கும் புக்கு ஸ்வேத கந்தத்தைக் கொண்டு வாரா நின்றது என்கை-

ஸ்வாபதேசம்
இத்தால் -அவன் ஆஸ்ரித அர்த்தமாக திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியும் –
பிரளய ஆபத்தில் ஜகத்தை வயற்றில் வைத்து நோக்கின இம் மகா குணமும் -கோவர்த்தனம்-உத்தரணம் பண்ணின படியும் –
ஆகிற அக்குணங்களைச் சொல்லி பார்ஸ்வஸ்தர் ஆஸ்வசிப்பிக்கிற படியை சொல்லுகிறது –
குண ஜ்ஞானத்தாலே ஜீவித்த படியை சொல்லுகிறது –

———–

கலந்து இருக்கிற தலைமகன் கொண்டாடுகிற படியிலே ஒரு வகை யாதல் – அன்றிக்கே இயற்கையிலே ஐயமாதல் –
ஒரு நாள் சம்ஸ்லேஷித்து -விஸ்லேஷித்து -பின்னையும் வந்து சம்ஸ்லேஷித்த நாயகன் நாயகி உடைய வைபவம் உபய விபூதியிலும்
அடங்காது என்று கொண்டாடுகிறான் என்னுதல் -அன்றிக்கே -யாத்ருசிகமாக பிரதமத்தில் சம்ஸ்லேஷித்து பரிச்சேதிக்க
மாட்டாதே சம்சயிக்கிறான் என்னுதல்- மதி யுடம்படுக்கலுற்ற தலைவன் தலைவிப் பற்றி தோழியரை வினாதல் —

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – -75 –சன்மம் பல பல -3 -10 –

நித்ய விபூதியிலே போது போக்கி ஓலக்கம் கொடுத்து இருக்கை அன்றிக்கே -தன் சந்நிதானத்தாலே கிளர்ந்து வருகிற
திருப்பாற் கடலிலே புகுந்து குடில் கட்டி நோக்கிக் கிடப்பாரைப்-போலே -இஜ் ஜகத் ரஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து
அருளுகிற -இந் நீர்மைக்கு-தோற்று இருக்கிற நித்ய சூரிகள் நித்ய வாசம் பண்ணுகிற ஸ்ரீ வைகுண்டாமோ
மானாவிச் சோலை போலே ஆவது அழிவதாய் -காதாசித்கமாக அவன் வந்து முகம் காட்டிப் போகும்-லீலா விபூதியோ
பிள்ளை திரு நறையூர் அரையர் -அடியார் நிலாகின்ற வைகுந்தமோ -அன்றிக்கே அவனதான வையமோ -என்று பணிப்பாராம் –
லீலா விபூதியை தானே ஆளுகின்றான் -சம்சாரிகள் கையில் கொடாத படி -அரையர் ஸ்ரீ ஸூக்தி –

ஸ்வாபதேசம்
இத்தால் ஆழ்வார் இருக்கிற இருப்பைக் கண்டாருக்கு -உபய விபூதியிலும் இவர் படிக்கு ஒப்பு இல்லை -என்று சொல்லும்படி
இருக்கிற படியை சொல்லுகிறது -அங்கு உள்ளார் நிரந்தர-பகவத் அனுபவமே யாய் இருப்பார்கள் –
இங்குள்ளார் இதர விஷயங்களின் உடைய வ்யாபாரங்களே யாய்-இருப்பார்கள் -இப்படி இவர் உபய வ்யாவ்ருத்தராய் இறே இருப்பது –
நிரந்தரமான பகவத் அனுபவமும் இன்றிக்கே -அன்ன பாநாதிகளால் தரித்து இருக்குமது அன்றிக்கே இறே இருக்கிறது –
இரண்டு-விபூதியிலும் கைக்கு அடங்காதபடி யாய் இருக்கிற இருப்பைச் சொல்லிற்று –
இங்கன் அன்றாகில்-இரண்டு இடத்திலும் அமையக் கூடாது இறே –

—————

சந்த்ரோதயத்தில் நோவு படுகிறாள் ஒரு பிராட்டி தன் நெஞ்சைக் குறித்து -சந்த்ரனுக்கு இங்கனே எளிய
செயல்கள் செய்கை ஸ்வ பாவம் காண்-நீ இதுக்கு சோகியாதே கொள் -என்று ஆஸ்வசிப்பிக்கிறாள் –
மாலை பெறாது வருந்தும் தலைவி மதிக்கு வருந்தி நெஞ்சோடு கூறுதல் —

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும் வெண் திங்களே – -76 –ஓராயிரமாய் -9 -3-

தம்தாமுக்கு பிராப்தியாய் உள்ள இடங்களிலே நலிகை முறை இறே –
தானும் வெண் திங்களாய் -இதுவும் வெள் வளை யாகையாலே -நிறத்திலே சாம்யம் கொண்டு -நலியலாம் இறே –

ஸ்வா பதேசம்
இத்தால் -திரு உலகு அளந்து அருளின போது -சாத்தின அச் செவ்வி மாலையை இப்போது பெற வேணும் என்று
ஆசைப்பட்டு பெறாமையாலே அனுகூல பதார்த்தங்கள் அடைய பாதகமாய் இருக்கிறபடியை சொல்லுகிறது –

——————

சந்த்யையில் நோவு படுகிறாள் ஒரு தலை மகள் வார்த்தையாய் இருக்கிறது –
தலைவி மாலைப் பொழுது கண்டு வருந்துதல் –

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – -77-தாள தாமரை -10-1-

ராவணன் பட்ட களத்திலே மண்டோதரி கூப்பிட்டாப் போலேயும் வாலி பட்ட களத்திலே தாரை அங்கத பெருமாளையும்
கொண்டு கூப்பிட்டாப் போலேயும் ஆயிற்று-இவ் ஆதித்யனை இழந்த சந்த்யையும் அப் பிரதேசத்தை பற்றி நின்று ஈடுபடுகிற படி –
இத்தால் வாயும் திரை யுகிளில் படியே -கண்டது அடங்க தம்மோடு சம துக்கிகளாய் தோற்றுகிறபடி –
பகல் கண்டேன் -என்கிற ஆதித்யனை இழந்து இறே இவள் நோவு படுகிறது –
தன் இழவுக்கு கூப்பிடுகை அன்றிக்கே – நம்மை நலிக்கைக்கு கூப்பிடுகிறதாய் இருந்தது இறே

ஸ்வா பதேசம்
கீழ் திரு உலகு அளந்து அருளின போது இட்ட மாலையை பெற வேணும் என்று ஆசைப் பட்டு பெறாமையாலே
நோவு பட்ட படி சொல்லிற்று –இதில் ராவண வத அநந்தரம்-இட்ட வெற்றி மாலையை பெற வேணும் என்று
ஆசைப் பட்டு வந்து கிடையாமையாலே-நோவு பட்ட படி சொல்லுகிறது –

—————–

இதில் கிருஷ்ண அவதாரத்தில் பரிமாற்றத்தை பெற வேண்டும் என்று ஆசைப் பட்டாள்
ஒரு பிராட்டி வார்த்தையாய் இருக்கிறது
பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலைக் கருதி நெஞ்சு அழிந்து இரங்கல் —

நலியும் நரகனை வீட்டிற்றும் வாணனை திண் தோள் துணித்த
வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல மைவரை போல்
பொலியும் உருவில் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே – – 78- –இன்பம் பயக்க-7-10-

நமக்கு சாத்மிக்கும் விஷயம் சாத்மியாத விஷயம் என்று ஆராயாதே
ஆசைப்பட்ட நம் நெஞ்சு தந்து போன ஐஸ்வர்யம் இறே இது எல்லாம் என்கிறார் –
அவர் சாத்தின அழகிய திருத் துழாய் மலர்க்கே சாத்மிக்கும் விஷயத்தில் ஆசைப்பட்டு கிடையா விட்டால் படும் அதைப்
பட்டு கிடையாது என்று இருந்தாலும் -பற்றிற்று விடாதே நிற்கிற நம் நெஞ்சு தந்து போன கிலேசம் இறே இது எல்லாம் –

————

பாவியேன் -பகவத் விஷயம் என்றால் தளராதே நின்று அனுபவிக்குமவர்களும் சிலரே -என்கிறார் –
தலைவனை பிரியாத மகளிரது சிறப்பைக் கூறித் தலைவி இரங்கல் –

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் நாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – – -79 –மெய்ம்மாம் பூம் பொழில் –3 –5–

குறைவற்றார் சிலர் கொண்டாட இருந்தோம் என்று மேன்மை பார்த்து இராதே -குறைவாளரான சம்சாரிகளை பிரளயம்
நலியாதபடி வயிற்றிலே-எடுத்து வையா நின்றால் -நீ இது செய்யக் கடவ இல்லை -என்று சிலரால் சொல்ல ஒண்ணாது
இருக்கிறவனை -அநாதனை -ஆத்மேஸ்வரம் -என்னுமா போலே தனக்கு ஒரு நியந்தா இல்லாதவன் ––
புழுக் குறித்த தெழுத் தாமா போலே -ஒருகால் ரஷித்து விடுகை அன்றிக்கே –
ஜகத்தை அடைய வளைந்து கொண்ட திருவடிகளை உடையவனை –
இதில் பகவத் அனுபவத்தில் தம்மைப் போல் தளராமல் திருட ஸித்தராய் இருந்து அவனை அனுபவிக்கும்
பாகவதரைக் கண்டு ஹ்ருஷ்டராகிறார்

————-

ஆதித்யனும் போய் அஸ்தமித்து -இருளும் வந்து பாதகமாக நோவு படுகிறாள் ஒரு பிராட்டி வார்த்தையாய் இருக்கிறது –
பிரிவாற்றாத தலைவி மாலைப் பொழுது கண்டு இரங்கல்-

சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீ இ க்கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – -80 – முடிச் சோதியாய் -3–1-

பார் அளந்த பேர் அரசே -இருளின் கையில் அகப்பட்ட ஆதித்யனை மீட்கும் போது -மகா பலி-கையிலே அகப்பட்ட
பூமியை மீட்டவனே வேணும் போலே காணும் –
அளந்த -பூமிப் பரப்படைய அளந்த திருவடிகளைக் கொண்டு இவ்விருளையும் அளந்தால் ஆகாதோ –
இருளார் வினை கெட இறே செங்கோல் நடத்துகிறது –
பேரரசே -எளிய செயல்கள் செய்யுமவன் அல்லனே -செய்யுமவை அடங்க பெருத்தாயிற்று இருப்பது –
எம் விசும்பரசே -பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் பிறந்த பின் சம்சாரத்தில் காட்டில் பரம பதம் அணித்தாய் காணும் இவருக்கு இருப்பது –
பொன் உலகு ஆளீரோ -என்று முதல்-அதுவே இறே கொடுத்தது –
எம்மை நீத்து வஞ்சித்து ஓரரசே -உபய விபூதிக்கும் தனித் தனியே கடவனோபாதி-என்னை அகற்றி-முடிக்கைக்கும்
தனி முடி சூடி இருக்கிறவனே -என்று பிள்ளான் –
என்னை அகற்றி -அது செய்கிற போது பிரியேன் என்று வைத்து பிரித்து -இஸ் ஸ்வபாவதுக்கு புறம்பு-என்னோடு ஒப்பார் யார் –
என்று இருக்கிறவன் ஆயிற்று –என்னால் அல்லது செல்லாதவரை பொகட-வல்லார் யார் – என்னோபாதி இல்லையே -என்று
இதுக்கும் தனி முடி சூடி இருக்கிறவன் ஆயிற்று-என்று பட்டர்

இருள் வந்து ஸ்பர்சிக்க புகா நின்றது -அதுக்கு முன்னே -இருளன்ன மா மேனியை-கொண்டு வந்து
இடை இட்டுக் கலக்க வேணும் என்கிறாள் –

ஸ்வாபதேசம் –
இத்தால் சம்சாரத்தில் இருப்பு அஞ்ஞானம் வந்து மேலிடும்படியாய் இருக்கையாலே கடுக இவ்விருப்பை
கழித்து தர வேணும் என்று அருளிச் செய்கிறார் –

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் -61-70–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 28, 2020

பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் -என்று இவள் சொன்ன அநந்தரம்-
திருத் தாயார் அத்தை அநுபாஷிக்கையாலே -அத்தைக் கேட்டு -பிராட்டியான தசை போய் –
தாமான தசையாம் படியாய் தரித்தார் -இவர் தம்மை தாம் உணர்ந்தால் இவர்க்குப் பாழி கிருஷ்ணாவதாரம் இறே –
அங்கே புக்கு -எத்திறம் -என்கிறார் –தோழி தலைவனது நீர்மையைத் தலைவிக்கு கூறல் —

வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –பிறந்தவாறும் -5-10-

பதவுரை

தொல்லை வானவர் தம் நாயகன்–பழமையான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்
நாயகர் எல்லாம் தொழுமவன்–ஈச்வரத்வம் பாராட்டுகிற (பிரமன் முதலியோர்) எல்லோரும் (தம் தம் தலைமைபெறும் பொருட்டு) வணங்கும்படியானவனும்
ஞாலம் முற்றும்–உலகம் முழுவதையும்
வேய் அகம் ஆயினும் சோரா வகை–ஒரு கோற்குத்து நிலமாயினும் தவறாதபடி (துளியிடமும் மிச்சமாகாதபடி)
இரண்டே அடியால் தாயவன்–(தனது இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவனுமாகிய
நம்மிறையே–நமது தலைவன்
ஆய் குலம் ஆய் வந்து தோன்றிற்று–இடையர் குலத்தை யுடையவனாய்க் கொண்டு அக்குலத்தில் வந்து வளர்ந்த எளிமையை
வாசகம் செய்வது–எடுத்துப் புகழ்ந்து கூறுவது
நம் பரமே–நம்மாலாகக் கடவதோ? (ஆகாது)

இவருக்குத் தானே எத்திறம் என்று மோஹித்து கிடக்கை பிரகிருதி இறே-
பிறவாதவராய் இருக்கிறவர்கள் இறே -பிறக்கிற ஈஸ்வரனை வந்து ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள் –
மனுஷ்யர் கண்ணுக்கும் கூட தோற்றாதவர்கள் -ராவண வத அனந்தரத்திலே-வந்து ஸ்தோத்ரம் பண்ணினார்கள் –
சர்வஞ்ஞனான தான் பரத்வத்தையும் கால்கடைக் கொண்டு இக்குல அபிமானத்துக்கு அவ்வருகு ஓன்று
அறியாதனாய் வந்து பிறந்தான்-தன்னைப் பற்றினாரும் பழையருமாய் பிறவாதருமாய் இருக்க அவன் வந்து பிறந்த
இதுக்கு பாசுரம் இடப்போமோ -வந்து தோன்றிற்று -ஆவிர்பூதம்-வேங்கடத்தாயன் படியில் ஈடுபடுகிறார் –

————

கீழ் கிருஷ்ண அவதார சௌலப்யம் இறே அனுசந்தித்தது -அந்த அவதார சம காலத்திலேயே-தாம் உளராக பெறாமையாலே
வந்த ஆற்றாமையாலே -கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை – பிராப்தரானார் -அவள் பிறிவாற்றாமைக்கே மேலே
கடலோசையும் பாதகமாக நின்றது என்று திருத் தாயார் சொல்லுகிறாளாய் இருக்கிறது-
தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்கு கூறுதல் –

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணைமேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – – – 62- –தேவிமார் ஆவார் -8-1-

பதவுரை

இரக்கினும்–எவ்வளவு வேண்டிக் கொண்டாலும்
ஓர் பெண்பால் எனவும் ஈங்கு இறை இரங்காது–இவள் ஒரு பெண் மகளென்று கருதியும் இவளிடத்திற் சிறிதும் இரக்கம் கொள்ளாமல்
கருங் கடல்–கரியகடலானது
அறையோ என நின்று அதிரும்–(இவளெதிரில்) அறை கூவுகிறதோ வென்று சொல்லும் நிலைநின்று (ஒரே விதமாக) கோஷஞ் செய்கின்றது;
ஓ–இஃது ஒரு கொடுமையே
அரவு அணைமேல்–சேஷ சயனத்தின் மீது
பள்ளி கொண்ட–சயனித்தருளா நின்ற
முகில் வண்ணனே–காளமேகம் போன்ற வடிவுடையவனே!
ஈங்கு–இவ்விடத்தில்
இவள்தன்–இவருளுடைய
நிறையோ–நிறைக் குணமோவென்னில்,
இனி–இனிமேல்
உன் திருஅருளால்–உனது கிருபையினாலல்லது (வேறொன்றாலும்)
அன்றி–பாதுகாத்து வைக்க முடியாது;காப்பு அரிது–
முறையோ–(இவளை நீ இங்ஙனம் உபேஷித்தல்) முறைமையோ?

உம்முடைய பிரணயித்வத்தால் நோக்கும் எல்லை கழிந்தது இறே -ஸ்வரூப பிரயுக்தமான கிருபையாலே -அல்லது
நோக்க ஒண்ணாதாய் வந்து விழுந்தது -ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்சி மீளும் எல்லையும் கழிந்தது
முறையோ -தத் தஸ்ய சத்ரு சம்பவேத் -என்று இருக்கும் நிலை கழிந்து கூப்பிட்டு பெற வேண்டும் தசை வந்து விழுந்தது
இவள் கடின ஸ்த்தலத்திலே கிடக்க-நீர் மெல்லிய படுக்கையை தேடிக் கிடக்கிறீரே –

ஒ ஸ்வாமி -இப்போது நீ இவள் இடம் அருள் செய்து -உன் வடிவு அழகை காட்டினால் அல்லது-
இவள் ஜீவிக்க உபாயம் இல்லை -ஆகையால் ஒருகால் நீ வந்து தோற்ற வேணும் என்கிறார்கள் –

முகில் வண்ணனே –இத்தை எம்பார் அருளிச் செய்கிற போது -இயலை சொல்லுகிறவரைப் பார்த்து -இவ்வளவிலே
முகம் காட்டாதே செங்கற்கீரை கட்ட இருக்கிறவர் -முதலிகளாய் இருப்பார் – தலையிலே பிரம்புகள் விழிலும்-
முகில் வண்ணரே -என்னீர் -என்று அருளிச் செய்தார் –
இருவருமான வன்று சேர நிற்கவும்-பிரிந்த வன்று தாய்க்கூற்றிலே நிற்குமவர் இறே இவர் –
முகில் வண்ணன் -என்று ஏக வசனமாக சொன்னால் -நம்மை ஏக வசனமாக உதாசீனமாக சொல்லுகிறது -என் -என்றபடி –
ஆகையால் முகில் வண்ணர் -என்று பூஜ்யமாக சொல்லீர் என்று அருளிச் செய்தார் -என்றபடி -மிதுனமே உத்தேச்யமாய் இருக்க –
எம்பார் பிராட்டி பஷமாய் இருந்து ஈஸ்வரனை வெறுக்கிறது என் என்ன என்று அருளிச் செய்கிறார் –

ஸ்வாபதேசம் –
இப்பாட்டால் ஸ்வரூபத்தாலே பெற இருக்கை அன்றிக்கே -ஸ்வரூபத்தை அழித்தாகிலும்
பெற வேண்டும்படி -ஆற்றாமை கரை புரண்டபடி சொல்லுகிறது –

—————–

முறையோ -என்று கூப்பிட்டால் ஆறி இரான் இறே -வந்து குளிர நோக்கினான்
தலைவனை இயல் பழித்த தோழிக்குத் தலைவி இயல் பட மொழிதல் –

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு யக்காலம் இருக்கின்றதே – – 63- –இவையும் அவையும் -1-9-

பதவுரை

வண்ணம் சிவந்துள–திருநிறம் சிவந்துள்ளவையும்
வான் நாடு அமரும் குளிர் வழிய–பரமபதம் ஆனந்த மடையும் படியான குளிர்ந்த பார்வையை யுடைவையும்
தண் மெல் கமலம் தடம் போல் பொலிந்தன–குளிர்ந்த மென்மையான தாமரைத் தடாகம் போல விளங்குகின்றவையுமாகிய
இவையோ தம்–இத்திருக்கண்களோ
கண்ணன்–கிருஷ்ணாவதாரஞ் செய்தவனும்
திருமால்–திருமகள் கணவனுமான பெருமானுடைய
திருமுகம் தன்னொடும்–திருமுக மண்டலத்திலே
காதல் செய்தேற்கு–வேட்கை கெண்டிருக்கிற என்னுடைய
எண்ணம்–மனத்திலே
புகுந்து–பிரவேசித்து
இ காலம்–இப்பொழுதும்
அடியேனோடு இருக்கின்ற–(விட்டு நீங்காமல்) என்னோடு இருக்கின்றன.

இப் பேற்றுக்கு வருமாறு முனை நாள் அறிந்திலேன் கிடீர் -இருக்கின்றனவே -நச புன ஆவர்த்ததே –
என்னும் பேற்றைப் பெற்றோம் என்று -தோன்றி இரா நின்றது -ஒரு நாளும் இனி பிரிக்கைக்கு –
சம்பாவனை இல்லை என்று தோற்றும்படி இரா நின்றது -பிரத்யஷ சாமாநகாரம் ஆகிலும் இவருக்கு
சாமானகாரமாக தோற்றாதே-பிரத்யஷம் என்று இறே தோற்றுவது –

———-

திருக் கண்களால் குளிர கடாஷித்தான் என்று இறே கீழ் நின்றது -அல்லாதார் மேல் வையாதே-தம்மேல் விசேஷ கடாஷம்
பண்ணுகைக்கு நிபந்தனம் என் -என்று ஆராய்ந்தார் -அஹ்ருதயமாக-திரு நாமத்தை சொன்னேனே என்ன –
அத்தாலே ஆகாதே -என்கிறார் –தலைவன் பேர் கூறித் தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்கு கூறி இரங்கல்-

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64 – –பாமுரு மூவுலகும் -7-6–

பதவுரை

நிலத் தேவர் –பூமி தேவர்களாகிய பிராமணர்கள்
இருக்கு ஆர் மொழியால்–வேதங்களிற் பொருந்தின மந்திரங்களைக் கொண்டு
நெறி இழக்காமை–முறைமை தவறாமல்
உலகு அளந்த திருதால் துணை வணங்குவர்–உலகங்களை அளவிட்ட (எம் பெருமானது) திருவடிகளை வணங்கி அனுபவிப்பார்கள்:
யாமும்–நாமும்
அவா ஒருக்கா–(எமது) ஆசையை அடக்க மாட்டாமல்
வினையொடும் எம்மொடும் நொந்து–(அப்படி அநுபவிப்பதற்கு விரோதியான எமது) பாவத்தையும் (அப்பாவத்திற்கு இடமான) எம்மையும் வெறுத்துக் கொண்டு
கனி இன்மையின் கருக்காய் நடிப்பவர்கள் போல–பழம் கிடைக்காமையாற் பிஞ்சைத் தின்பவர் போல
திருநாமம் சொல் கற்றனம்–(பூர்ணாநுபவம் கிடைக்காமையால் அதுவரையில் தரித்திருப்பதற்காக அவனது) திருநாமங்களாகிய சொற்களைச்சொல்லுதல் செய்கிறோம்.

என் உடம்பை நான் விடேன் -என்று ஸ்வீ கரிக்கும் ஸ்வா பாவனாய் உள்ளவனை -இவை அறியாது இருக்கச் செய்தே –
தானே எல்லை நடந்து-மீட்டுக் கொண்டான் இறே –பழம் இல்லாமையாலே பசும் காயைக் கடிப்பாரைப் போலே –
திரு நாமம் சொல் -இதில் அர்த்த அனுசந்தானம் எனக்கு இல்லை –அவனைக் கண்ணாலே கண்டு கையாலே அணைக்க
ஆசைப்பட்டாருக்கு அவன் பேரைக் கொண்டு என் செய்வார்-திரு நாமம் மாத்ரம் சொன்னேன் -இத்தை வ்யாஜ்யமாக்கி
நிர்ஹேதுகமாக கடாஷித்தான் -நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும் விஷயத்தை கிட்டி அவத்யத்தை விளைத்தேன்
என்றும் விஷாதத்திலே தாத்பர்யம் –

————-

தலை மகள் நோக்கி வீடுபட்ட தலைமகன் -அக் கண்கள் தனக்கு பாதகமானபடியை பாங்கனுக்கு சொல்லுகிறான் –
தலைவி நோக்கின் வாசி கண்டு தலைவன் குறிப்பறிந்து உரைத்தல் –

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோகரும
முற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே – – -65 –நோற்ற நோன்பு -5-7–

பதவுரை

கன்று பிணை–இளமையான பெண்மான்களுடைய
மலர் கண்ணின்–பரந்த கண்களின்
குலம்–சாதியை
வென்று–ஜயித்து
ஒரே கருமம் உற்று–ஒரு காரியத்திலே பொருந்தி
பயின்று–அக்காரியத்திலே பழகி
செவியோடு உசாவி–(அக்காரியத்தைக் ) காதுகளோடு வினாவி ஆலோசித்து,
உற்றும் உறாதும் மிளிர்ந்த–(எனக்கு) அனுகூலமாயும் பிரதிகூலமாயும் தடுமாறுகிற
கண் ஆய்–கண்களாய் (இவை)
உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திரு அடி கீழ்–எல்லா வுலகங்களையும் மிச்சமில்லாதபடி (பிரளயகாலத்தில்) வயிற்றினுட்கொண்டு (பின்பு) வெளியிட்ட எம்பெருமானது திருவடிகளின் கீழே (இவ்வுலகத்திலே)
எம்மை உணர்கின்ற–எம்மை (த் தமக்கு உள்ளாம்படி) கவர்ந்து கொள்கின்றன.

கண் என்கிற வ்யபதேசத்தாலே -ஒரு பாதக பதார்த்தம் என்னை நலியா நின்றது –
ஆழ்வாருடைய ஞான வைபவத்தில் ஈடுபட்ட அன்பர் பாசுரத்தை நாயகியின் நோக்கில் அகப்பட்டு உரைத்த
நாயகன் பேச்சாலே அருளிச் செய்கிறார்

ஸ்வா பதேசம்
இத்தால் ஆழ்வார் படியை கண்டவர்கள் இருக்கிற படி இறே இது –
கற்றுப் பிணை மலர்க்கண்ணின்-குலம் வென்று -என்கிற இத்தால் கார்ய புத்தி இல்லாத மௌக்த்யத்தை -நினைக்கிறது
ஒரோ கருமம்-உற்ற பயின்று -என்ற இத்தால் பிரபத்தியை சொன்னபடி இறே0இது பின்னை ஜ்ஞான கார்யம் அன்றோ –
கீழ் சொன்ன மௌக்த்யத்துக்கு சேர்ந்த படி எங்கனே என்னில் -அதில் கர்த்தவ்யாத புத்தி இன்றிக்கே-இருக்கையை நினைக்கிறது –
இது தன்னை செய்யா நிற்கச் செய்தே -சாதனத்தில் அன்வயியாதே-ஸ்வரூபத்தில் அந்தர்பவித்து இருக்கும் இறே
கண்ணா இத்யாதி -சொன்ன படியை உடையராய் இருக்கிற இருப்பு தான் கண்டவரை ஈடுபடுத்துகிற படியை சொல்லுகிறது –

———–

தலைமகள் கண் அழகில் ஈடுபட்ட தலைமகன் வார்த்தை இதுவும்
தலைவன் பாங்கனுக்கு கழற்றெதிர் மறுத்தல்-
இதுவும் ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயின் ல் ஈடுபட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் பாசுரத்தை
நாயகியின் கடாக்ஷத்தில் ஈடுபட்ட நாயகன் வார்த்தை

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே – -66 –ஆராவமுதே -5-8-

பதவுரை

எரி–அக்நியும்
நீர்–ஜலமும்
வளி–வாயுவும்
வான்–ஆகாசமும்
மண்–பூமியும்
ஆகிய–என்னும் பஞ்ச பூதங்களின் வடிவமான
எம்பெமான் தனது எம்பெருமானுடைய
காலிகள்–செங்கழுநீர்ப் பூக்காளனவை
உண்ணாது–உண்ணாமலும்
உறங்காது–தூங்காமலும்
உணர்வு உறும்–(எப்பொழுதும் த்யாக ரூபமான) ஞானத்திற் பொருந்தின
வைகுந்தம் அன்னான்–ஸ்ரீவைகுண்டத்தை யொத்து எப்பொழுதும் அநபவிக்கத் தக்கவளான தலைமகளினுடைய
கண் ஆய்–கண்களென்று பேராய்
அரு வினையேன் உயிர் ஆயின–தீர முடியாத தீவினைகளையுடைய எனக்கு உயிர் நிலையான
எத்தனை யோகியர்க்கும்–மிக்க யோக நிலையை யுடைய முனிவர்க ளெல்லோர்க்கும்
எண் ஆய்–(அந்த யோகத்தை விட்டு எப்பொழுதும்) நினைக்கத் தக்கவையாய்
மிளிரும்–பிறழ்ந்து தோன்றுகிற
இயல்வின் ஆம்–தன்மையை யுடையவையாம்.

அப்படிப் பட்டவள் பக்கலிலே வந்தவாறே – பிரதான அவயவகமாய் -என் பக்கலிலே வந்தவாறே –
அசேத்யமாய் -அதாஹ்யமாய் -அழியாதாய் இருந்துள்ள ஆத்மா வஸ்துவாய் -பாதகமாம் இடத்தில் ஸ்வதந்த்ரமாய் –
கண்ணுக்கு விஷயமாய் நின்று பாதகம் ஆகா நின்றன –-ரஷகம் ஆனவையே பாதகமாம் படி பாபத்தை பண்ணினேன் –
அவள் பக்கலிலே வந்தவாறே கண்ணாய் -என் பக்கலிலே வந்தவாறே உயிராய் –
இவை தான் நிரூபித்த வாறே வடிவு சில காவிகளாய் செங்கழு நீர்ப் புஷ்பங்களாய் இரா நின்றன

ஸ்வா பதேசம்
இத்தால் ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை கண்டு அனுபவிக்கும் பாகவதர்களுக்கு -தேவு மற்று அறியேன் –
என்னும் படி இறே இருப்பது -அவர்கள் அதை ஆதரிக்கிறது-பகவத் சம்பந்தத்தால் இறே -அதுக்கு அடியான பகவத் விஷயத்தை
அநாதரித்து -இவரை ஆதரிக்க-வேண்டும்படி இவருக்கு ஸ்ரீ வைஷ்ணத்வம் தலை நிரம்பின படியை சொல்கிறது –
சரம அவதியை-கண்டு அனுபவித்தவர்கள் பிரதம அவதியில் நில்லார்கள் இறே –

———-

இப்பாட்டும் -கண் அழகு தன்னையே தலைமகன் சொல்லுகிறான் –
தலைவன் பாங்கனுக்குத் தன் வலி யழிவு உரைத்தல்-

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு அசுரைச் செற்ற
மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – – 67- –உலகமுண்ட பெரு வாயா -6-10-

பதவுரை

அசுரை–அசுரர்களை
செற்ற–அழித்த
மா விய புள் வல்ல–பெரிய ஆச்சர்ய கரமான கருடப் பறவையை ஏறி நடத்துகிற
மாதவன்–திருமகன் கணவனும்
துணை மலர்–ஒன்றொடொன்று ஒத்த இரண்டு தாமரை மலர்கள்
காவியும்–செங்கழுநீர்ப் பூவையும்
நீலமும்–கருநெய்தற் பூவையும்
வேலும்–வேற்படையையும்
பலபல–(மற்றம் கண்ணுக்கு ஒப்பாகின்ற மான்விழி முதலிய) மிகப்பல பொருள்களையும்
கோவிந்தன்–பசுக்களைக் காப்பவனுமான பெருமானுடைய
வேங்கடம்–திருவேங்கடமாமலையிலே பொருந்தி வாழ்கிற
தூவி அம்பேடை அன்னான்–சிறகழகையுடைய அன்னப் பேடை போன்றவளது
கண்கள் ஆய்–கண்களாகிய
வென்று–தமக்கு ஒப்பாகாதபடி ஜயித்து
பாரிப்பு–என்னை வருத்துவதற்கு அடி கோலிய பரப்பு
ஆவியின் அல்ல–(எனது) உயிரின் தன்மைக்கு
அளவு அல்ல–ஏற்ற அளவல்ல.

சிவப்பாலே செங்கழு நீரை வென்று -கருமையாலே நெய்தலை வென்று -ஓர் ஆளும் ஓர் நோக்கும்
நேராய் இருக்கும் படியாலே -வேலை வென்று -மௌ க்த்யத்தாலே கயலை வென்று -மற்றும் ஒப்பாக
சொல்லும் அவற்றை அடைய புக்க விடம் புக்கு தன்னடையே அழியும் அவற்றை யழிக்கை வெற்றிக்கு உடலோ -வென்று
அழியாதான ஆத்ம வஸ்துவையும் -அழிப்பதாக கோலா நின்றது –

ஸ்வாபதேசம் –
இத்தால் -திருமலையிலே வந்து நிற்கிறவனுடைய சீல குணத்திலே வித்தராய் இருக்கிற ஆழ்வார் படி போக்தாக்கள்
அளவல்ல -என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லுகிற பாசுரத்தை பார்ஸ்வச்த்தர் பாசுரத்தால் தாம் அனுபவிக்கிறார் –

காவி –என்கிற நிறத்தாலே -ராகத்தை சொல்லி பக்தி நிஷ்டரையும் –
நீலம் -என்ற அஞ்ஞனத்தாலே -பிரகாசத்தை சொல்லி -ஞான நிஷ்டரையும் –
வேலும் கயலும் -என்ற சகாரத்தாலே -கர்ம நிஷ்டரையும் –
எல்லாரையும் ஜெயித்து இருக்கும் ஆழ்வார் உடைய ஞானம் என்றபடி –

கடைக் கண் சிகப்பினால் செங்கழு நீரையும்
கரு விழியின் கருமையினால் -கரு நெய்தலையும்
நோக்கின் கூர்மையினால் வேலாயுதத்தையும்
ஆகார சௌந்தர்யம் -கெண்டைகளையும் –
இப்படி மற்று உள்ள குணங்களினால் மற்ற வஸ்துக்களையும் – அதிசயித்து -என் ஆத்மாவையும் அபகரித்து –
எனக்கு ரஷகனான ஸ்ரீ ய பதியையும் வசீகரிப்பதாய் வியாபிக்கத் தொடங்கிற்று –
ஆகையால் நான் இதன் நின்றும் மீள சக்தன் ஆகிறிலேன்-

————–

கலந்து பிரிந்த தலைமகன் -கொன்றை பூக்கும் காலத்திலே வருகிறேன் -என்று காலம் குறித்துப் போனானாய் –
அக்காலம் வந்து அவையும் பூக்கச் செய்தே -அவன் வாராமையாலே தலை மகள் தளர -அத்தைக் கண்ட தோழியானவள் –
அக்காலம் அல்ல என்ன ஒண்ணாதபடி அது முடிகிக் கொடு நிற்கையாலே -இவை பூக்க உத்யோகிக்கிறன இத்தனை –
பூத்துச் சமைந்தன வில்லை காண் –ஆன பின்பு அவனும் வந்தானத்தனை –நீ அஞ்சாதே கொள் -என்று
அவளை யாஸ்வசிப்பிக்கிறாள்-

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர்கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – – 68- –கால மயக்கு–கொண்ட பெண்டிர் -9-1-

பதவுரை

பொரு கடல் சூழ்–அலை மோதுகிற கடலால் சூழப்பட்ட
நிலம்–பூலோகத்தை
தாவிய–அளந்தருளின
எம்பெருமான் தனது–எம்பெருமானுடைய
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டத்தை
அன்னாய்–ஒத்து விளங்குகிறவளே!
கலந்தார் வரவு எதிர் கொண்டு–(உன்னோடு) கலந்து பிரிந்து சென்றவருடைய வருகையை முந்தி எதிர்பார்த்து
வல் கொன்றைகள்–வலிய கொன்றை மரங்கள்
கார்த்தனவே–கருவடைந்து அரும்பின; (அதுவே தவிர)
மாலையும்–மாலைகளையும்
மாலை பொன் வாசிகையும்–பொன்னாலாகிய சுருள்மாலை வட்டத்தையும்
புலம் தோய் தழைபந்தர்–மநோஹரமான தழைகளர் சிறு பந்தலிலே
தண்டு–கொம்புகளிலே
உற–நெருங்க
நாற்றி–தொங்க விட்டுக் கொண்டு
மலர்ந்தே ஒழிந்தில–முற்றும் மலர்ந்து விட்டனவில்லை

அவனதான நித்ய விபூதியோடு ஒத்து இருந்துள்ளவள் அன்றோ நீ -அவ் விபூதியை விடில் அன்றோ உன்னை விடுவது –
உன்னை தளர விட்டு இருக்குமோ-உன் ஸ்வ ரூபத்தை அழியாது ஒழிந்தால் -அவன் தன் ஸ்வ ரூபத்தையும் அறியாது ஒழியுமோ –
உன்னோடு கலந்து சுவடி அறிந்தவன் – உன்னை விட்டு இருக்குமோ -கலந்தார் -என்றே காணும் அவனுக்கு நிரூபகம் –

ஸ்வா பதேசம் –
இத்தால் அவனுடைய குண ஜ்ஞானத்தாலும் -இத்தலையை அவன் அவஹாகித்த படியாலும்-போக யோக்யமான காலத்தில்
வாராது ஒழியான் என்று பார்ஸ்வச்தர் ஆஸ்வசிக்கிறபடியை சொல்லுகிறது –

————

அதுக்கு மேல் சந்த்யையும் வந்து நலிய -அநந்தரம்-போக யோக்யமான காலமாய் இருக்க – அவன் வந்து தோன்றாமையால்
தலை மகள் ஆற்றாளாக – இது கண்ட தோழி யானவள் -இது சந்த்யை அல்ல இரண்டு வ்ருஷபங்கள் தங்களிலே பொருகிறன
காண் -என்று காலம் மயக்கி அவளை தரிப்பிக்கிறாளாய் -இருக்கிறது – மாலைக்கு இரங்கிய தலைவியை தோழி ஆற்றுதல்-

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே – -69 – –கற்பார் இராம பிரானை -7-5-

பதவுரை

கார்–கருத்த
இருள்–இருளாகிய
ஏறு–எருதானது
செகில்–சிவந்த
சுடர்–ஸூர்யனாகிய
ஏற்றிற்கு–எருதுக்கு எதிரில்
உளைந்து–இளைத்து
வெல்வான்–(மீள) வெல்லும் பொருட்டு
போர் ஏற்று–போர் செய்வதை ஏற்றிக் கொண்டு
எதிர்த்தது–வந்து எதிரிட்டது.
நீர் ஏற்று–(மாவலி கையால் தாரை வார்த்துத் தத்தஞ்செய்த) நீரை (க் கையில்) ஏற்று
புவனி எல்லாம்–எல்லா வுலகங்களையும்
அளந்த–அளந்து கொண்ட
நெடிய–நீண்ட வடிவமுடைய
பிரான்–தலைவன்
புன்தலை மாலை–அற்புதமான தன்மையையுடைய மாலைப் பொழுதிலே
அருளாவிடுமே–(உனக்கு) அருள் செய்யாதொழிவனோ? (ஒழியான்.)
வார் ஏற்றும் இன முலையாம்–கச்சை மேலேறுவிக்கும்படி வளர்ந்த இளமை மாறாத தனங்களை யுடையவனே!
உன் வளை திறம்–உனது கைவளையின் நிமித்தமாக
வருந்தேன்–வருத்தப்படாதே.

அவன் படியை அறிந்தால் வரும் என்று இருக்க வேண்டாவோ -இந்த்ரன் வ்யாஜ்யமாக எல்லார்-தலையிலும் –
நிர்ஹேதுகமாக -அமரர் சென்னிப் பூவாய் இருக்கிற திருவடித் தாமரைகளை-வைக்குமவன் அன்றோ –
இப்படி எல்லாருக்கும் உபகாரகனாய் இருக்குமவன் -உன்னை விடுமோ –மண்ணுக்கு பதறி இரந்தவன்
பெண் ஒரு தலை யானால் ஆறி- இருக்குமோ –காடும் மேடுமான பூமியிலே காலை வைத்தவன்
உன் முலை மேலே காலை வையாது ஒழியுமோ இத்தால் அவனுடைய குண ஞானத்தாலும் -அவன் இத்தலையை அவஹாகித்த படியாலும்
தரிப்பித்த படியை சொல்லிற்று கீழ் -இதில் அது வேண்டாதே இருவருடையவும் தர்மிஹ்ராக பிரமாணமே அமையும் தரிக்கைக்கு என்கிறது –
அவனாகில் ரஷகனாய் -இத்தலையாகில் ரஷ்யகமாய் – இருக்கும் இறே
நெடிய பிரான் என்கையாலே ரஷகமும் –வாரேற்ற இள முலை -என்கையாலே ரஷ்யகமும் -தோற்றுகிறது

——–

ஸ்ரீ வைகுண்ட நாதன் சாத்தின மாலையை பெற வேணும் என்னும் அபேஷையால் உண்டான-த்வரையாலே –
காலம் செலுத்த உள்ள அருமை -சொல்லுகிறது –தலைவி இரவின் நெடுமைக்கு இரங்கல் —

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — 70- –பிறவித் துயரற -1-7-

பதவுரை

வளை வாய் திரு சக்கரத்து–வட்டமான நுனியையுடைய அழகிய சக்கராயுதத்தையுடைய
எங்கள் வானவனார்–எமக்குத் தலைவரும் பரமபதத்திலிருப்பவருமான பெருமானுடைய
முடிமேல்–திருமுடியிற் சாத்தியுள்ள
தளைவாய்–கட்டு வாய்ந்த
நறு–பரிமளமுள்ள
கண்ணி–மாலை வடிவமான
தண் அம்–குளிர்ந்து அழகிய
துழாய்க்கு–திருக்குழாய்க்கு (ஆசைப்பட்டு)
உண்ணம் பயலை விளைவான்–(எமது) மாயை நிறம் மாறிப் பாலை நிறம் விஞ்சம்.
மிக வந்து–அடாவந்து
நான் திங்கள் ஆண்டு வழி நிற்க–நாளாயும் மாதமாயும் வருடமாயும் கற்பமாயும் தோன்றினது தவிர
எம்மை உளைவான் புகுந்து–எம்மை முற்று மழிக்க நெருங்கி
இது ஓர் கங்குல்–இந்த ஒரு ராத்ரிதானே
ஆயிரம் ஊழிகளே-ஆயிரம் கற்பமாகா நின்றது.

முந்துற ஒரு ராத்திரி -ஒரு நாளாய் பெருகிற்று -அது போய் ஒரு மாசமாய் – அது போய் ஒரு வத்சரமாய் -அது போய்
ஒரு கல்பமாய் -பெருகும் படி ஒழிய என்னை நலிகைக்காக வந்து புகுந்து ஒரு ராத்திரி அநேகம் ஊழிகளாக நின்றது –
மிக வந்து -ஒன்றுக்கு ஓன்று மிகும் படி வந்து என்னுதல் -அநேகம் ராத்திரி எல்லாம் வந்தது இறே –
இது ஒரு ராத்திரி இருந்தபடி என்-

ஸ்வாபதேசம் –
இத்தால் பதி சம்மா நிதா சீதா -என்று அவதாரத்தில் பிராட்டி பெற்ற பேற்றை-ஸ்ரீ வைகுண்ட நாதன் பக்கலிலே
பெற வேணும் என்று ஆசைப்பட்டு -பெறாமையாலே காலம்- செல்ல அரிதான படி சொல்லிற்று –

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் -51-60–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 27, 2020

இவன் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு பாதகம் ஆகிற படியை சொல்கிறது –
பதினாலாண்டு கூடிப் போன வழியை ஒரு பகலே வாரா நிற்க செய்தே -க்ரம ப்ராப்தி பற்றாமை நடுவே
திருவடியை வரக் காட்டினார் இறே-அப்படியே இங்கு ஓர் ஆள் வராவிட்டால் கண்டதெல்லாம் பாதகமாம் இறே –

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கமிவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே -51 –நண்ணாதார் முறுவலிப்ப -4-9-

பதவுரை

கடல்–கடலானது
மலை–மந்தர பர்வதத்தை
மத்து ஆ கொண்டு-மத்தாகக்கொண்டு
அரவால்–வாஸுகிநாகமாகிய கடை கயிற்றால்
சுழற்றிய–(தன்னைக் கடைவதற்குச் சுழலச் செய்த
மாயம்–அற்புத சக்தி வாய்ந்த
பிரான்–எம்பெருமான்
அலை கண்டு–(தன்னை) அலைத்து
கொண்ட–(தன்னிடத்தினின்று) எடுத்துக் கொண்ட
அமுதம்–அமிர்தத்தை
கொள்ளாது–(மீண்டும்) வாங்கிக்கொள்ள மாட்டாமல்,
வேரி துழாய் துணை ஆ–பரிமளத்தையுடைய (எம்பெருமானது) திருத்துழாயைத் தனக்குத் துணையாகக் கொண்டு
துலை கொண்டு–ஒத்து எதிர்வந்து
தாயம் கிளர்ந்து–பங்காளி யுரிமை கொண்டாடுதல் போலே மேலெழுந்து
பரதர் விலை கொண்டு தந்த சங்கம் இவை கொள்வான் ஒத்து–நெய்தல் நிலமக்களான வலையம் (என்னிடத்தினின்று) விலை வாங்கிக் கொண்டு எனக்குக் கொடுத்த இச்சங்கு வளைகளை மீட்டும் வாங்கிக் கொள்வது போன்றது.
அழைக்கின்றது,–(சண்டைக்குக்) கூப்பிடுகின்றது.

சக்கரவர்த்தி திருமகனை அண்டை கொண்டு மகாராஜர் வாலியை அறை கூவினால் போலே-
திருத் துழையை அண்டை கொண்டு நலியத் தொடங்கிற்று –

———————

அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்
மழைக் கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியேன் என்று வார்கின்றதே – 52-கால மயக்கு –அந்தாமத் தன்பு -2-5-

பதவுரை

அழைக்கும்–(அன்போடு) அழைக்கிற
கரும் கடல்–(தன்னிடத்திற் பள்ளிகொண்டிருக்கிற எம்பெருமானது திருமேனியின் நிழலீட்டாலே) கறுத்துள்ள திருப்பாற்கடலானது.
வெண் திரை கை–(தன்னுடைய) வெளுத்த அலைகளாகிய கைகளாலே
கொண்டு போய்–எடுத்துக் கொண்டு போக,
விண்வாய்–ஆகாயத்திலே
புலம்பி அழைத்து–(மேக கர்ஜனை முகமாக அழுது கூப்பிட்டு
முலை மலை மேல் நின்றும்–(தனது) ஸ்தனங்களாகிய மலைகளின் மேல் நின்றும்.
அலர் வாய் மழை கண் மடந்தை–தாமரை மலரில் வாழ்பவளும் மழை போலக் குளிர்ந்த கண்களை யுடையவளுமான திருமகள்
அரவு அணை ஏற00(அப்பாற் கடலினிடையிற் பள்ளி கொண்டுள்ள எம் பெருமானது) ஆதிசேஷனாகிய சயனத்தின் மீது ஏற,
(அது கண்டு)
மண் நாதர்–பூமிப்பிராட்டி
ஆறுகள் ஆய்–ஆறுகளாக பெருக விட்ட
மழை கண்ண நீர்–மழையாகிய கண்ணீரானது
திருமால் கொடையான் என்று–திருமால் கொடியவனென்று வெளியிட்டு
வார்கின்றது–பெருகுகிறது.

திருமால் கொடியேன் என்று – இருவருமான சேர்த்தி பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –
அது நமக்கு இழவுக்கு உடல் ஆவதே -நீர்மைக்கு உடலானது -க்ரௌர்யத்துக்கு உடலாய் தலை கட்டுகிறதே –
இச் சோத்யத்துக்கு முன்புள்ள முதலிகள்-தானும் அவளுமான போகத்துக்கு நாம் ஸ்ரக் சந்தனாதிகளோ பாதியாய்
இருக்க என்ன அநாதரித்து போவதே என்று இன்னாதாய் அழுகிறாள் -என்று பரிகரித்தார்கள் –
இத்தை ஆளவந்தார் கேட்டருளி – வடிவிணை இல்லா மலர் மகளை இந்நீர் நடுங்க நடுங்கும்படி கடலிலே கொடு போவதே –
படுக்கையாக நான் கிடக்க செய்தே -என்று ஸ்ரீ பூமிப் பிராட்டி அழுகிறாள் காண் -என்று அருளி செய்தார்-
இத்தை ஸ்ரீ பட்டர் -கேட்டருளி -இது எல்லாம் வேண்டாம் காண்- அனுபபன்னமாய் இருப்பதோர் அர்த்தத்தை சொல்லவே –
இது எங்கனே கூடும்படி என்று தலைமகள் நெஞ்சிலே படும் –அவள் விசாரித்து நிர்ணயிக்கும் காட்டில் அவன் வந்து கொடு நிற்கும் –
என்னும் விஸ்ரம்பத்தாலே சொன்னார்களாக அமையும் காண் -என்று அருளி செய்தார்-

ஒரு ஆச்சார்யர் நம்பிள்ளை இடத்தில் குறைய நினைத்து தாமே திரு விருத்தத்தைப் பார்த்துக் கொண்டு போக
இப்பாட்டு அளவாக ஒரு வகையாக நிர்வகித்து இது தெரியாமையாலே ஒருத்தரும் அறியாதபடி அர்த்த ராத்திரியிலே வந்து
பிள்ளையை அழைக்க இப்பாட்டினுடையவும் இவருடையவும் ஸ்வ பாவம் அறியுமவர் ஆகையால்
அழைக்கும் கருங்கடலோ என்றாராம் என்று ஆத்தான் அருளிச் செய்வர்

ஸ்வாபதேசம்
பகவத் லாபத்தால் அல்லது கால ஷேபம் பண்ண இவர்க்கு அரிதாகையாலே பார்ஸ்த்வஸ்தர் அநுப பன்னங்களைச்
சொல்லியாகிலும் ஆஸ்வசிப்பிக்க வேண்டும்படியான தசை பிறந்தபடியைச் சொல்லுகிறது

————

இவள் இருந்து பகட்ட கேளாது இறே அது -காலமும் அதுவேயாய் -வர்ஷமும் மெய்யாய் நிலை நின்றவாறே
அவன் வரவு காணாமை -இவள் மோஹித்தாள் -இவளுடைய ஸ்லாக்யத்துக்கு அனுரூபமாக பந்துக்கள் கலங்கி –
வழி அல்லா வழியே பரிகரிக்க இழிய -இவள் பிரகிருதி அறிந்து இருப்பாள் ஒரு மூதறிவாட்டி –
நீங்கள் செய்கிறது பரிகாரம் அன்று –
இவள் பிழைக்க வேணும் ஆகில் நான் சொல்லுகிறபடியே இங்கனம் பரிகரிக்க பாருங்கோள்-என்கிறாள்-

வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல் நல் நோயிது தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -53 –வைகுந்தா மணி வண்ணனே -2-6-

பதவுரை

வாரா ஆயின முலையான–கச்சுப் பொருந்திய தனத்தை யுடையவளான
இவள்–இப்பராங்குச நாயகியினுடைய
இது–இந்த நோயானது
வானோர் கலைமகன் ஆம் சீர் ஆயின தெய்வம் நல்நோய்–தேவாதி தேவனான திருமாலினது தகுதியான திருக்கல்யாண குணவிஷயமாக வுண்டான சிறந்த நல்ல நோய்;
(இதற்குப் பரிஹாரமுறை யாதெனில்;)
தெய்வம்–திய்வமான
தண்–குளிர்ந்த
அம்–அழகிய
துழாய் தார் ஆயினும்–(அப்பெருமானது) திருத்துழாய் மாலையையாயினும்
தழை ஆயினும்–(அத்திருத்துழாயின்) ஓரிலையையாயினும்
தண் கொம்பு அது ஆயினும்–குளிச்சியான (அதன்) கிளையை யாயினும்
கீழ்வேர் ஆயினும்–கீழிலுள்ள (அதன்) வேரையாயினும்
நின்ற மண் ஆயினும்–(அதற்கு இருப்பிடமாய்) நின்ற மண்ணையாயினும்
கொண்டு வீசுமின் (நீங்கள்) கைக்கொண்டு (அதன் காற்று இவள் மேற்படும்படி) வீசுங்கள்

இதர ஸ்பர்சங்கள் தூரப் போந்ததும் பாதகமாம் போலே பகவத் விஷயத்தில்
தூரே உண்டான சம்பந்தமும் நோவுக்கு பரிகாரமாம் இறே –
ஸ்பர்ச வேதி ஆகையாலே -இவ்வருகே போர போர உறைத்து இருக்கும் -இறே-தம்மடியார் அடியார் -இத்யாதி –

ஸ்வாபதேசம்
இத்தால் இதர ஸ்பர்ச லேசமும் சத்தையினுடைய விநாசத்துக்கு ஹேதுவாய் -பகவத் விஷயத்தில் சம்பந்தம் உள்ள
ஏதேனும் ஒன்றாகிலும் சத்தா ஹேதுவாம் படியான பாவம் இவருக்குப் பிறந்த படி சொல்கிறது –

———

நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினே -என்றாளே – வீச வேண்டிற்று இல்லை-இவளுடைய உக்தி மாத்ரத்தாலே உணர்த்தாள்
உறங்கின போது பசி பொறுக்கலாம்-உணர்ந்தால் ஜீவித்து அல்லது நிற்க ஒண்ணாது இறே –
மோகம் தானே நன்றாம்படி யாய் இருந்தது-இனி அங்கு நின்றும் ஓர் ஆள் வந்து தரித்தல்-இங்கு நின்று ஆள் விட்டு
வரவு பார்த்து இருந்து தரித்தல் -செய்ய வேண்டும்படியாய் ஆயிற்று
இங்கு நின்றும் ஒருவர் வரக் கண்டது இல்லை -தன் பரிகாரத்தில் கால் நடை தருவார் இல்லையாய் ஆயிற்று-
இனித் தன் பரிசரத்தில் வர்த்திக்கிற வண்டுகளை தூது விடுகின்றாள் –

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே -54 –கேசவன் தமர் -2-7–

பதவுரை

நெய்–(திருவாய்ப்பாடியிலே) நெய்யை
தொடு உண்டு–கைதொட்டுக் கவர்ந்து அமுது செய்து
ஏசும்படி–(பலரும்) பரிஹஸிக்கும்படி
அன்ன செய்யும்–(மற்றும் பல) அப்படிப்பட்ட காரியங்களைச் செய்தருளிய
எம் ஈசர்–எமது தலைவரும்
விண்ணோர் பிரானார்–(மேலுலகிலுள்ளார்க்கு) தலைவருமாகிய எம்பெருமானுடைய
மாசு இல் மலர் அடி கீழ்–குற்றமில்லாத செந்தாமரை மலர்போன்ற திருவடிகளின் கீழ்
எம்மை சேர்விக்கும்–எம்மை அடைவிக்கவல்ல
வண்டுகளே–ஓ வண்டுகளே! (நீங்கள்)
வீசும் சிறகால் பறத்தீர்–வேகமாக வீசுகிற சிறகுகளாலே பறந்து செல்லவல்வீர்;
விண் நாடும் துங்கட்டு எளிது–(அவர் வீற்றிருக்கு மிடமான பரமபதமும் உங்களுக்குச் செல்ல) எளிது;
(எனக்காக நீங்கள் அவர் பக்கல் தூது செல்லுதற்குப் புறப்படும் பொழுது)
பேசும்படி அன்ன பேசியும் போவது (நீங்கள் எனக்காக அவரிடம் சொல்லும்படியான வார்த்தைகளை (எனக்கு) சொல்லியும் போகவேணும்.

ஒரு நீர் சாவியை யாய் இவை உறாவிக் கிடக்கிற படி-சிலர் பட்டினி விட சிலர் ஜீவித்தாவோபாதி –
விடாய்த்த விக் கரணங்களை கொண்டு முடிந்து போய்- வேறு ஒரு சரீர பரிகிரகம் பண்ணி இவரை அனுபவிக்க
இருக்கை அன்றிக்கே-விடாய்த்த இவற்றைக் கொண்டே ஸ்பர்சிக்கும்படி பண்ண வேணும்
சகாமாஹம்-அவரைப் போலே வரில் பொகடேன்-கெடல் தேடேன் – என்று இருக்கும் அளவு அல்லேன் நான் –
ததா குருதயாம்மயி -அவருடைய சக்தியில் குறை இன்றிக்கே இருக்க செய்தே -இவ்வளவாக கார்ய கரமாக கண்டிலோம் –
உன் கிருபையாலே அதுவும் பலிக்கும்படி பண்ணித் தர வேணும்-என்னை அங்கே சேர விடுகையே
நிரூபகமாக உடைய வண்டுகள் அன்றோ நீங்கள் –

ஸ்வாபதேசம்
இத்தால் தூத ப்ரேஷண வியாஜத்தாலே தம் ஆற்றாமையை அவன் திரு உள்ளத்தில் படுத்துகிறார்

———–

இவள் விட்ட தூதுக்கு வந்து கலந்து -பிரிய நினைத்து -பிரிந்தால் வரும் அளவும் -இவள் ஜீவித்து இருக்கைக்காக –
இப்படி இருக்கிற இவன் -பிரிந்தால் தாழான் -என்று அவள் நெஞ்சில்-படுகைக்காக -நலம் பாராட்டு என்பதோர் கிளவியாய் –
அவளைக் கொண்டாடுகிறான் – குலே மஹதி சம்பூதே -என்று பெருமாளும் கொண்டாடினார் இறே-

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55- சார்வே தவ நெறி -10-4-

பதவுரை

வண்டுகளோ–வண்டுகளே!
வம்மின்–வாருங்கள்;
நீர் பூ–நீரிலுண்டாகிற பூவும்
நிலம் பூ–நிலத்திலுண்டாகிற பூவும்
மரத்தின் ஒண்பூ–மரத்திலுண்டாகிற சிறந்த பூவும் என்கிற இவை யெல்லாவற்றிலும்
உண்டு–(தேனைக்) குடித்து
களித்து–களிப்படைந்து
உழல்வீர்க்கு–(எங்கும்) திரிகிற உங்களுக்கு
ஒன்று உரைக்கியம்–(யாம் இப்பொழுது) ஒரு புதுமையைச் சொல்லுவோம்.
ஏனம் ஒன்று ஆய்–ஒப்பற்ற வொரு வராஹமூர்த்தியாய்
நண் துகள் ஆடி–பூமியின் தூளியை அளைந்து எம்பெருமானுடைய
வைகுந்தம்–பரமபதத்தை
அன்னாள்–ஒத்திருக்கின்ற இப்பராங்குச நாயகியினுடைய
குழல்வாய்–கூந்தலிலே இயற்கையாய் அமைந்துள்ள
விரைபோல்–பரிமளம்போல
விண்டு–மலர்ந்து மணம் வீசி
கள் வாரும்–தேன் பெருகப்பெற்ற
மலர்–பூக்கள்
தும் வியல் இடத்து–உங்களாட்சிக்கு உட்பட்ட (நீங்கள் தடையின்றி ஸஞ்சரிக்கிற) விசாலமான இடத்திலே
உளவோ–இருக்கின்றனவோ?

ஸ்வாபதேசம்
இத்தால் பர வியூக விபவாதிகள் எங்கும் புக்கு பகவத் குணங்களை அனுபவித்து திரிகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
அக் குணங்களில் அவஹாகித்து இருக்கிற இவர் படி நீங்கள் அனுபவிக்கிற அவ்விஷயத்தில் தானுண்டோ -என்று
தம்மை அனுபவிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தையை -அவர்கள் பாசுரத்தாலே தாம் அனுபவிக்கிறார் –
அம்பஸ்யபாரே-புவனஸ்ய மத்யே -நாகஸ்யப்ருஷ்டே -என்னக் கடவது இறே –
அம்பஸ்ய -வியூகம் / புவனஸ்ய -விபவம் அர்ச்சை /நாகஸ்யப்ருஷ்டே -பரம்-
இவையே இங்கு மூன்று வித மலர்கள் என்று உரைக்கப்பட்டன –

—————-

லந்து பிரிந்த தலைமகன் வரவு தாழ்க்க -பிரிவாற்றா தலை மகளைக் கண்ட தோழி –இவளுடைய ஆற்றாமை
இருந்தபடி இதுவாய் இருந்தது – நாயகனையோ வரக் காண்கிறிலோம் -இனி இவள் ஜீவிக்கை என்று ஒரு பொருள் இல்லை –
இவளை இழந்தோம் ஆகாதே -என்று-நோவுபட – இத்தைக் கண்ட தலைமகள் -இவள் சன்னதியிலே யாத்ருச்சிகமாக
ஒரு சம்ச்லேஷம் வ்ருத்தம் ஆயிற்றாய்-அத்தை இவளை நோக்கி –
நீயும் அறியாதபடி இங்கனே ஒரு சம்ச்லேஷம் வ்ருத்தம் ஆயிற்று காண் -நீ அஞ்ச வேண்டா காண் – என்று
தலைமகள் தான் தோழிக்கு வ்ருத்தமான சம்ச்லேஷத்தை சொல்லுகிறாள் –
தலைவன் இரவிடை கலந்தமையைத் தலைவி தோழிக்கு உரைத்தல்-

வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்
உயலிடம் பெற்று உய்ந்தும் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே -56 –கண்கள் சிவந்து -8-8-

பதவுரை

வியல்–விசாலமான
இடம்–உலகங்களை
உண்ட–திருவயிற்றில் கொண்டருளிய
பிரானார்–பிரபுவாகிய எம்பெருமான்
விடுத்த–(எம்மிடத்துச்) செலுத்திய
திரு அருளால்–சிறந்த கருணையினால்
உயல் இடம்பெற்று–உஜ்ஜீவிப்பதற்கு இடம் பெற்று
உய்ந்தும்–வாழ்ந்திட்டோம்,
அஞ்சலம்–(இனி வாடை முதலியவற்றுக்கு) அஞ்சுவோமல்லோம்
தோழி–வாராய்தோழி!
ஓர் தண் தென்றல் வந்து–ஒரு குளிர்ந்த தென்றற் காற்று வந்து
அயிலிடை யாரும் அறிந்திலர்–அருகில் எவரும் அறியாதபடி
அம் பூ துழாயின் இன் தேன்–அழகிய பூக்களையுடைய திருக்துழாயின் இனிய தேன் துளிகளை
புயலுடை நீர்மையினால்–மழை துளித்தல் போலத் துளிக்குந் தன்மை யுடையதாய்
என்–என்னுடைய
புலன்–அவயவங்களிலும்
கலன்–ஆபரணங்களிலும்
தடவிற்று–ஸ்பர்சித்தது

பிரளய ஆபத்தில் தன் வயற்றில் வைத்து நோக்குகிற போது பூமிக்காகா ஏதேனும் ஒரு கைமுதல் உண்டோ
அவர் பண்ணும் கிருபைக்கு பாத்ரமாம் இத்தனையே இத்தலைக்கு வேண்டுவது –
அவர் பண்ணும் அருள் ஒரு சககாரியை அபேஷித்து இரா இறே

எம்பெருமானார் எழுந்து அருளி இருக்க செய்தே -ஸ்ரீ பாதத்தில் சேவித்து இருக்கிறவர்கள் –
நமக்கு தஞ்சமாக நினைத்து இருக்க அடுப்பது என் -என்ன
வங்கி புரத்து நம்பி இருந்தவர் -மூடோயமல்பமதி -என்ற ஷத்ர பந்துவினுடைய வாக்கியம் அன்றோ -அது ஒண்ணாது காண் –
பிரணதி -என்று ஓன்று உண்டு –அதிலே ஒரு சர்வஞ்ஞன் அறிய நிர் மமனாய் விழ வேணும் இறே –
நம் தலையிலே ஏதேனும் ஒரு அந்வயம் ஒதுங்கில் அது செய்து தலை கட்டுகையில் உள்ள அருமையாலே அது இழவோடே
தலைக் கட்டும்படி இருக்கும் காண் – இத் தலையில் ஏதேனும் ஒரு அம்சம் உண்டாகில் அது அப்ரதிஷேத்திலே புகும்
இத்தனை அல்லது -உபாய சக காரம் ஆகாது – நீ உபாயம் ஆக வேணும் -என்கிற ஸ்வீகாரம் அவஸ்ய அபேஷிதமாய்
இருக்க செய்தேயும்-அத் தலையிலே உபாய பாவமாம் படி இறே இருப்பது-இவன் பக்கலிலே பரம பக்தி பர்யந்தமாக விளைந்தாலும் –
அது ஸ்வரூப பிரயுக்தமான ருசியிலே-அந்வயிக்கும் இத்தனை போக்கி -ஸ்வ தந்தரமாக நின்று பல பிரதமாக மாட்டாதே இறே இருப்பது-
ஆனால் பின்னை நினைத்து இருக்க அடுப்பதென் -என்ன
காளியனுடைய வார்த்தையை-நினைத்து இருக்க அடுக்கும் -என்று அருளி செய்து அருளினார் –
கிருபை பண்ண வேணும் என்கிற உக்தி மாத்ரத்தை இறே-இப்போது பிரதிகூல்ய நிவ்ருத்தி யாக நினைக்கிறது –

ஸ்வாபதேசம்
குண ஞானத்தாலே தரித்த படி சொன்ன படி-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்ச ந
எம்மின் முன்னுக்கு அவனுக்கு மாய்வர் -என்று மோகித்து கிடக்கிற தோழி போலே –
தாமோதரன் உண்டும் உமிழ்ந்தும் கடாய மன்னேர் அன்ன என்ற பாசுரத்தை
உள் கொண்டு அந்த ஆபத்து இவளுக்கு உண்டு என்று அவதாரிகை

—————

சம்ச்லேஷித்து விச்லேஷமும் வ்ருத்தம் ஆயிற்று-ஒரு கார்ய புத்யா பிரிந்தான் ஆகிலும் -ந ஜீவேயம் ஷணம் அபி –
என்னும்படி இறே தலை மகன்-ஆற்றாமை இருப்பது -அவனுடைய ஆற்றாமையால் வந்த தளர்தியை கண்ட பாங்கானவன் –
லோக யாத்ரையில் ஒன்றுக்கு ஈடுபடாத நீ ஒரு விஷயத்துக்காக இப்பாடு படும் அது தலைமைக்கு போராது காண் -என்று
திருத்தப் பார்க்க –அவளுடைய நோக்குக்கு இலக்கானார் படுமது அறியாமை காண் நீ இப்படி சொல்லுகிறது –
நீயும் அவள் நோக்குக்கு இலக்கு ஆனாய் ஆகில் -இப்படி சொல்லாய் காண் -என்று அவன்-கழறினததை
மறுத்து வார்த்தை சொல்லுகிறான்–கழற்றெதிர் மறுத்தல் என்று கிளவி-தலைவன் பாங்கனுக்கு கழற்று எதிர் மறுத்தல்

புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே – -57–முடியானே மூவுலகும் -3-8-

பதவுரை

புலம் குண்டலம்–அழகிய குண்டலங்களையுடைய
புண்டரீகத்த–தாமரைமலர் போன்றதான தலைவியின் முகத்திலுள்ள
போர்கெண்டை–(தம்மில் ஒன்றோடொன்று எதிர்த்துப்) போர் செய்கிற இரண்டு கெண்டை மீன்கள் போன்ற கண்கள்
வல்லி ஒன்றால் விலக்குண்டு–(மூக்காகிய) ஒரு கொடியால் (குறிக்கிட்டு இடையில்) விலக்கப்பட்டு
உலாகின்று–(தனித்தனி சீற்றத்தோடு) உலாவிக் கொண்டு
வேல் வழிக்கின்றன–வேலாயுத்த்தைக் கொண்ட குத்தினாற்போல வருத்துவனவாய் நோக்குகின்றன.
கண்ணன்–எம்பெருமானுடைய
கையால்–திருக்கைகளால்
மலக்குண்டு–கடைந்து கலக்கப்பட்டு
அமுதம் சுரந்த–(தன்னிடத்திலுள்ள) அமிர்தத்தை வெளிப்படுத்தின
மறி கடல் போன்று–அலை கிளரப் பெற்ற கடல்போல
அவற்றால் கலக்குண்ட நான்று–அக்கண்களால் (யாம்), கலக்கப்பட்ட பொழுது
கண்டார்–(அக்கண்களின் நிலைமையை ப்ரத்யக்ஷமாகப்) பார்த்தவர்கள்
யாரும்–எவரும்
எம்மை–எம்மை
கழறலர்–(ஒருத்தியின் கண் பார்வையில் அகப்பட்டு இப்படி கலங்கினானென்று) குற்றஞ் சொல்லமாட்டார்கள்.

ஸ்வாபதேசம் –
இத்தால் ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யில் அகப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களை –
பகவத் விஷயத்தை காட்டியும் மீட்க ஒண்ணாத படியை சொல்லிற்று –
அவர்கள் -தேவு மற்று அறியேன் -என்று இருப்பவர்கள் காணும் –
பவத பரமோ மத -என்கிறபடி அவர் உகந்தது என்று இறே பின்னை பகவத் விஷயத்தை விரும்புவது –

—————

கீழ் பிறந்த அவசாதம் எல்லாம் நீங்கும் படிக்கு ஈடாக -ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றி
எல்லார் தலையிலும் பொருந்தும்படியான திருவடிகளைக் காட்டி -ஆன பின்பு நமக்கு
ஆகாதவர் இல்லை காணும் -என்று ஆஸ்வசிப்பித்து-இப்படி எல்லாம் செய்ய செய்தேயும் -ஒன்றும் செய்யாதானாய் –
அவன் நிற்கிறபடியை கண்டு அத்தை பேசுகிறார் –தோழி தலைவன் பெருமையை யுரைத்து தலைவியை ஆற்றுதல் –

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே – 58-திண்ணன் வீடு -2-2-

பதவுரை

ஒன்றே–ஒரு திருவடியிடமே
ஆயிற்று–பூமி முழுவதும் தானாய்ப் பரந்தது;
மற்றொரு திருவடி
முழுதாயிற்று–(பூமியிலே இடமில்லாமையாலே மேலே) போய்
உழறு அலர்–உலகுங்செல்ல வல்ல பரந்த
ஞானத்து சுடர் ஆய் விளக்காய்–ஞானமாகிய ஒளிக்கு இடமான விளக்குப் போன்றவனாய்
உயர்ந்தோரை இல்ல–(தன்னிலும்) மேற்பட்டவரை யுடையவனல்லாதவனும்
நிழல் தர–நிழலைச் செய்யும்படி
எல்லா விசும்பும்–ஆகாசாவகாம் முழுவதிலும்
நிறைந்தது–வியாபித்தது
நீண்ட அண்டத்து–அளிவிட வொண்ணாத பரமபதத்தில் எழுந்தருளியிருப்பனும்
அழறு அவர் தாமரைக் கண்ணன்–சேற்றில் மலர்ந்த செவ்வி மாறாத செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களை யுடையவனுமான திருமால்.
இங்கு அளக்கின்றது என்னோ–இந்த லீலாவிபூதியில் அளக்க வேண்டுவதுண்டோ?

வாஸூதேவ தருச்சாயா —எங்கும் ஒக்க வ்யாப்தமாய் இருப்பதொரு வ்ருஷத்தின் உடைய நிழல் ஆயிற்று –
நாதி சீதா -இத்யாதி -மிக வெப்பதும் செய்யாதே -மிக வவ்வ விடுவதும் செய்யாதே –
நரகம் ஆகிற பெரு நெருப்பையும் விலக்கவற்று
சாகிமர்த்தம் ந சேவ்யதே – -இந் நிழலுக்கு புறம்பாய் இருப்பதொரு நிழல் உண்டாய் அங்கே ஒதுங்கவோ –
இது நன்று அல்ல என்னவோ -இதின் உள்ளே இருந்த அநிச்சையை சொல்லும் இத்தனை –
பூ -போக்கியம் -பழம்- தாரகம் -நிழல் -போஷகம்-
திருமால் இரும் சோலை எந்தாய் -உன் பாத நிழல் அல்லால் மற்றோர் இருப்பிடம்
நான் எங்கும் காண்கின்றிலேன் –ஆஸ்ரித ரஷகனுமாய் -ஆஸ்ரித விரோதி நிரசகனுமாய் இருக்கையாலே –
உன் திருவடிகளின் நிழல் ஒழிய வேறு எனக்கு ஒதுங்கலாவது ஒரு நிழல் கண்டிலேன் –
நின்ற நிலையிலே நின்றாரை -அளந்தார் -என்ன ஒண்ணாது இறே-அடிமாறி இடில் இறே அளந்தது ஆவது –
மரக்கால் பெருத்து நெல் அல்பமானால் அளப்பார் உண்டோ- ரஷ்ய வர்க்கம் சுருங்கி ரஷகன் பாரிப்பே விஞ்சி இருக்கிறது
இப்படி சர்வஞ்ஞனாய் -பராத்பரனான புண்டரீ காஷன் -இவ் விபூதியிலே சேர்ந்த என்னையும்-முன்னமே அளந்து இருக்க
இப்போது அத் திரிவிக்கிரம அவதாரத்தை எனக்கு பிரகாசிப்பத்தது -மறுபடியும் எதை அளைக்கைக்காவோ தெரிய வில்லை –

—————

எட்டா நிலத்திலே ஸ்ரீ வைகுண்டத்திலே ஓலக்கம் கொடுத்து இருக்கை அன்றிக்கே -அவதரித்து இங்கே வந்து –
ஸூலபனானான் என்றவாறே -தாம் பெற்றால் போலே இருக்க ஹ்ருஷ்டரானார் -அங்கே இருந்து இழக்கை அன்றிக்கே –
இங்கே வந்து கிட்டச் செய்தே -பேரா விட்டவாறே அவசன்னரானார் -அவ் வஸாதம் ஒரு பிராட்டி தசையை விளைவித்து –
கலந்து பிரிந்து பிரிவாற்றாத் தலைமகள்-சம்பந்தம் உண்டாய் இருக்க -போக யோக்யமான காலத்தில் -வந்து
உதவக் காணாமையாலே-இருள் பாதகமாகா நின்றது என்று சொல்லா நின்றாள் -என்று அவள் பாசுரத்தை
திருத் தாயார்-சொல்லுகிறாளாய் இருக்கிறது –இரவு நீடுதற்கு ஆறாத தலைவியைப் பற்றி செவிலி இரங்குதல்

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல் அந் தண் அம் துழாய்க்கு
உளப் பெரும் காதலின் நீளிய வாயுள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன் மது சூதன் என்னும் வல்வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே -59 –முந்நீர் ஞாலம் -3-2-

பதவுரை

வல்வினையேன்–கொடிய தீவினையையுடைய எனது
தள பெரு நீள் முறுவல் செய்யவாய தடமுலை–முல்லை யரும்பினளவான பெருமையும் நீட்சியுமுள்ள பல் வரிசையை யுடைய
சிவந்த வாயுடையளாயிப் பெரிய தனங்களை யுடையவளாகிய இப்பெண்பிள்ளை
(என்ன சொல்லுகிறாளென்றால்)
அளப்பு அரு தன்மைய–“அளவிடுதற்கு அரியதான தன்மையையுடைய
ஊழி–கற்பங்களினும்
அம்–அழகிய (நீண்ட)
கங்குல்–இராப்பொழுதுகள்
அம் தண்ணம் துழாய்க்கு உளம் பெரு காதலின் நீளிய ஆய் உன்–அழகிய குளிர்ந்த திருத்துழாய் விஷயமாக (என்) உள்ளத்திலே வளர்கிற மிக்க வேட்கைபேலால் நீண்டனவாயுள்ளன.
ஓங்கு முந்நீர் வளம் பெரு நாடன்–உயர்ந்த கடல் சூழ்ந்த வளப்பமுள்ள பெரிய நாட்டையாளுபவன்
மதுசூதனன்-மதுவென்னும் அசுரனையழித்தவன்
என்னும்–என்று வாய்விட்டுச் சொல்லி யலற்றுகிறாள்.

அதனில் பெரிய என் அவா விறே–இதில் பெரிது என்னும் இத்தனை -பகவத் தத்துவத்தை விளாக்குலை
கொண்டது இறே இவர் அவா பகவத் ஆனந்தத்தை பரிசேதிக்க-புக்க வேதம் பட்டது படும் இத்தனை –
இத்தை பரிச்சேதிக்கப் புக்காலும் -நேதி நேதி -என்கிறபடியே இதன்று என்னும் இத்தனை போக்கி –
இப்படி என்று பாசுரம் இட ஒண்ணாது –

ஸ்வா பதேசம்
இத்தால் அனுபவ யோக்யமான சம்பந்தமும் ஸ்வரூப ஞானமும் (மது சூதனன் -என்கையாலே ஸ்வரூப ஞானம் –)உண்டாய் இருக்க
போக யோக்யமான காலமும் போகத்துடன் செல்லப் பெறாமையாலே வந்த ஆற்றாமையை-பார்ஸ்வத்தார் சொல்லுகிறார்கள்

————-

தளப் பெரும் நீண் முறுவல் செய்யவாய் தட முலை வளப் பெரும் நாடன் மது சூதன் என்னும் -என்றாளே –
ப்ராப்த யௌ வநையாய்-பருவம் நிரம்பின இன்று இவள் சொல்லுக்கு கேட்க-வேணுமோ –
பால்யமே பிடித்து இவளுக்கு இது அன்றோ யாத்ரை என்கிறாள் –தலைமகள் இளமைக்கு செவிலி இரங்கல்

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60- –அறுக்கும் வினையாயின -9-8-

பதவுரை

முலையோ–ஸதனங்களோ வென்னில்
முழு முற்றும் போந்தில–மிக முழுவதும் தோன்றினவில்லை;
மொய் பூ குழல்–அடர்ந்த மென்மையான தலை மயிர்கள்
குறிய–(முடிகூடாமல்) குட்டையாய் யுள்ளன;
கலையோ–ஆடையோ வென்னில்
அரை இல்லை–இடையிற் பொருந்த உடுக்கப்படுவதில்லை;
நாவோ–நாக்கோவென்னில்
குழறும்–(திருத்தமாக வார்த்தை சொல்ல மாட்டாமல்) குதலைச்சொல் பேசுகின்றது.
கண்–கண்களோ வென்னில்
கடல் மண் எல்லாம் விலையோ என–கடல் சூழ்ந்த உலகமுழுவதும் (இவற்றுக்கு) விலைப் பொருளோ வென்று சொல்லும்படி
மிளிரும்–(ஒரு நிலையில் நில்லாமல்) பிறழ்ந்து நோக்குகின்றன;
பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம்.–‘திருவேங்கடமலை எனது தலைவனது இருப்பிடமோ? என்று பலகாலுஞ் சொல்லிப் பயில்கிற வார்த்தை
இவள் பரமே–(இப்படி இளமைப் பருவமுடைய) இவளிடம் உண்டாகக் கடவதோ?.

கடல் இத்யாதி -இவ்விடத்தை பட்டர் அருளிச் செய்யா நிற்க -அல்லாத அவயவங்களினுடைய-நிரம்பாமையை
சொல்லி வைத்து இதனுடைய பெருமையை சொன்னால் விரூபமாகாதோ -என்று ஜீயர் கேட்க –
இதிலும் சிறுமையே காணும் சொல்கிறது -இங்கனே சொல்லலாவது தானும் இன்று – நாளை இது தானும் சொல்லப் போகாது –
என்று அருளிச் செய்தார்-ஆகையால் -இதுவும் பால்யத்துக்கு சூசகம் என்றபடி-
பர வ்யூஹாதிகளை விட்டு -திரு வேங்கடமுடையான்-பக்கலிலேயாய்-அவன் தன் அளவில் அன்றிக்கே
திருமலையே உத்தேச்யம் என்று சொல்லுகிற-பாசுரம்-
முலையோ முழு முற்றும் –மீ மிசை யாலே ஒன்றும் இல்லை என்கிறது
இவள் இப்படி கூப்பிடுவது பால்யம் தொடங்கி உள்ளதாகையால் இது ஸ்வத ஸித்தம்-என்கிறார் —

ஸ்வாபதேசம்
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த-என்றும் -அறியா காலத்துள்ளே என்றும் சொல்லுகிறபடியே-
இவருக்கு பகவத் விஷயத்தில் உண்டான ப்ராவண்யம் சத்தா பிரயுக்தமான படி சொல்லுகிறது

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் -41-50–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 27, 2020

எம்மை நோக்குவது என்று கொலோ -என்று எமக்கு ரஷகர் ஆவார் யாரோ என்று இருந்த இவளுக்கு
ஒரு காற்று வந்து ரஷிக்கிறபடி –என்று சத் ஆகாரமாகிய இவை பாதகம் ஆகிற படி-

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே–41–நீராய் நிலனாய் -6-9-

பதவுரை

என்றும்–எப்பொழுதும்
புன்–கொடுமை செய்கிற
வாடை இது–இந்த வாடையை
கண்டு அறிதும்–கண்டறிவோம்!
இ ஆறு வெம்மை உருவம்–இப்படிப்பட்ட (வாடையினுடைய) வெப்பத்தின் தன்மையையும்
சுவடும்–குறிப்பையும்
ஒன்றும்–ஒருவிதத்தாலும்
தெரியிலம்–அறிகின்றிலோம்;
ஓங்கு அசுரர்–வலிமையாற் கிளர்கின்ற அசுரர்கள்
பொன்னும் வகை–அழியும்படி
புள்ளை–கருடப் பறவையை
ஊர்வான்–ஏறி நடத்துகிற எம்பெருமான்
அருள் அருளாத–தனது கருணையால் என்னை வந்து காத்தருளாத
இ நாள்–இக் காலத்திலே
வன் காற்று–வலிய வாடையானது
என்னை–என்னை
மன்றில் நிறை பழி–வெளியிலே பரவி நிறைகிற பழிப்பை
தூற்றி–அயலாரை விட்டுத் தூற்றுவித்து
நின்று அடும்–அப்பாற் போகாமல் நிலை நின்று அழிக்கினறது

தாய் முலைப் பால் மறுத்த இந்நாள்-லோகம் அடங்க -ஒருத்தி பிரிந்த அளவிலே ஒரு காற்றுக்கு யீடு பட்டு துடிப்பதே -என்று
பழி சொல்லும் படி ஆயிற்று –நீர்மை கலவாத காற்று –ஸ்திரீ வதமே என்று பார்க்கிறது இல்லை-
ஸ்வாபதேசம்
இத்தால் நெடு நாள் பொருந்திப் போந்த சம்சாரம் தானே பகவத் ப்ராவண்யம் உறைக்க உறைக்க
இதில் பொருந்தாதபடியான நிலை பிறந்த படி சொல்லுகிறது

———–

வாடையின் கீழ் ஜீவிக்கை அரிது -இனி முடியும் அத்தனை -என்று வார்த்தை சொன்னவாறே
குளிர நோக்கினான் –

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒருத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே -42–பொரு மா நீள் படை -1-10-

பதவுரை

எம் பிரான்–எம்பெருமானுடைய
கட கண்கன்–பெரிய திருக்கண்களானவை (எங்ஙனம் விளங்குகின்றனவென்றால்.)
மண்ணும் விண்ணும்–மண்ணுலகமும் விண்ணுலகமுமாகிய விசாலமான இடமிரண்டும்
என் காற்கு–எனது இரண்டு பாதங்களின் அளவுக்கு
அளவு இன்னும் காண்மின்–இடம் போதாத அற்புதத்தை பாருங்கள்
என்பான் ஒத்து–என்று (அந்தந்த உலகங்களிலுள்ளார்க்குக் கூறி) ஒரு வித்தை காட்டுபவன் போன்று
வான் நிமிர்ந்த–மேலுலகை நோக்கி வளர்ந்த
தன்–தன்னுடைய
கால்–திருவடிகளை
பணிந்த–வணங்கின
என்பால்–என்னிடத்து.
வன் காற்று அறைய–பெருங்காற்று வீசுதலால்
ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த–ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்து மலர்ந்த
மென்கால்–மெல்லிய நாளத்தை யுடைய
கமலம் தடம்போல்–தாமரைத் தடாகம் போல
பொலிந்தன–அழகு மிக்கு விளங்கின–

இத்தால் சம்சாரிகளில் ஒருவன் ஓரடி வரா நின்றால் அவன் பக்கல் வைத்த கடாஷத்தை மாறிப்-
பெரிய பிராட்டியார் பக்கலிலே வைக்க என்றாலும் அது தான் அரிது ஆம் படி இருக்கை–
எங்கும் பக்கம் நோக்கு அறியான் -என்னக் கடவதிறே-
இத்தலையில் அபிமுக்யம் இன்றிக்கே இருக்க – தானே அவதரித்து வந்து மேல் விழுந்து எல்லார் தலையிலும்
திரு அடிகளை வைக்கும் அவன் இறே இவர்கள் பேற்றுக்கு தான் கிருஷி பண்ணுமவன் ஆயிற்று –
அனுகூல்யத்துக்கு அடியான மூல சுக்ருதமும் தானே என்கிறது-
பேறு தன்னது என்று தோற்றும் படி ஆயிற்று திரு கண்களில் விகாசம்–

மென் கால் கமலம் என்றது –
ஆபி முக்ய ஸூசகமான மானஸ ப்ரபத்தியையும் பொறாத அவனுடைய ஸுவ்ஹார்த்தம்–ஸூஹ்ருத் பாவம்
வன் காற்று -பூர்ண பிரபத்தி
அறைகை –ஆர்த்த பிரபத்தி

———————–

கண்ணும் செம் தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்தும் பரப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே -43—உயர்வற உயர் நலம் -1-1-

பதவுரை

கண்ணும்–திருக்கண்களும்
செந்தாமரை–செந்தாமரைப் பூவையொப்ப
கையும்–திருக்கைகளும்
அவை–அத்தாமரைப் பூவை யொப்ப
அடியோ–திருவடிகளும்
மதி விகற்பால்–ஞானத்தின் மிகுதியால்
விண்ணும் கடந்து–ஸ்வர்க்க லோகத்தாரை மேலிட்டு
உம்பர் அப்பால் மிக்கு–அதன் மேலிடத்துள்ள ஸத்ய லோகத்தார்க்கும் அப்பாற்சென்று.
அவையே–அத்தாமரைப் பூக்களையே யொப்ப.
எம்பிரானது–எம்பெருமானுடைய
எழில் நிறம்–அழகிய திருமேனி விளக்கம்
வண்ணம் கரியது ஓர் மால் வரைபோன்று–நிறத்தில் கறுத்ததான வொரு பெரிய மலையையொத்து
மற்ற எப்பால் யவர்க்கும்–அதன்மேல் பரமபதத்தில் எவ்விடத்துமுள்ள நித்ய ஸூரிகளுக்கெல்லோர்க்கும்
எண்ணும் இடத்துவோ–(இப்படிப்பட்டதென்று) அளவிடும்படியான தன்மையுடையதோ? (அன்று)

முற்பட குமுழி நீருண்டார் -இப்போது ஆயிற்று வாத்சல்யமும் செவ்வியும் அனுபவிக்கிறது –
பிரஜை முலையிலே வாய் வைத்து தாய் முகத்தை பார்க்குமா போலே -என்று பிள்ளை பிள்ளை ஆழ்வான்-
நித்யராலும் பரிச்சேதித்து அறிய முடியாத அவயவ சோபையையும் திருமேனியின் எழிலையும்
அவனது நிர்ஹேதுக கிருபையால் உள்ளபடி அறிந்து அனுபவித்தேன் என்கிறார் –

————

மனோ ரதத்துக்கு எட்டாது என்றீர் -அவன் விஷயம் எட்டாதோ என்ன –
அவன் அருளாலே காணலாம் அன்று காணலாம் என்கிறார் –

நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கு அங்கு எல்லாம்
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி யொன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையே -44-பத்துடை அடியவர் -1-3-

பதவுரை

நிறம்–திருமேனி நிறமும்
உயர் கோலமும்–சிறந்த அலங்காரமும்
பேரும்–திருநாமமும்
உருவும்–வடிவமும்
இவை இவை என்று இனனின்னவையென்று
அங்கு அங்கு எல்லாம்–கீழ்ச்சொன்ன நிறம் அலங்காரம் திருநாமம் வடிவம் இவையெல்லாவற்றிலும்
உற உயர் ஞானம் சுடர் விளக்கு ஆய் நின்றது அன்றி–மிகவுயர்ந்த (தமது) ஞானமாகிற தீபத்தால் சிறிது விளக்கத்தைப் பெற்று நின்ற தொழிய
அறம் முயல் ஞானம் சமயிகள் பேசிலும்–தரும மார்க்கத்தால் முயன்று பெற்ற ஞானத்தையுடைய வைதிக ஸம்ப்ரதாயஸ்தர்கள் (ஒருவாறு பிறர்க்குச்) சொன்னாலும். (அவர்கள்)
எம்பிரான் பெருமையை–எம்பெருமானுடைய (ஒப்புயர்வற்ற) மஹிமையை
ஒன்றும் பெற முயன்றார் இல்லை–ஒரு வகை யாலும் முற்றும் அளவிட்டுக் கூறப்பெறும்படி முயற்சி செய்தார்களில்லை.

நிறம் உயர் கோலம் -ஒப்பனையும் இவனைப் பற்றியே நிறம் பெரும் –
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் அன்றோ

திரு மலை நம்பி-பெரிய திரு மலை நம்பியின் திரு குமாரர் – அந்திம தசையில் கணியனூர் சிறியாத்தானை-
பிள்ளை தமக்கு தஞ்சமாக நினைத்திருக்கும் திரு நாமம் என் -அத்தை சொல்ல வேணும் -என்ன –
இவர் முன்னே நாம் எத்தை சொல்லுவது -என்று கூசி இரா நிற்க –
தாசரதீ பேசாது இருக்கும் அவஸ்தை அன்று காண் இது -என்ன
நாராயண ஆதி நாமங்களும் சொல்லிப் பொருவர் -ஆகிலும் விரும்பி இருப்பது
அழகிய மணவாள பெருமாள் -என்னும் திரு நாமத்தை -என்ன
பர்த்ரு நாமத்தோபாதியாய் இரா நின்றது -ஆகிலும் பிள்ளை நினைத்து இருந்தது
போக்கி தஞ்சம் இல்லை -என்று அழகிய மணவாள பெருமாளே சரணம் -என்று திரு நாட்டுக்கு நடந்தார் –

கூரத் ஆழ்வானோ பாதி யாகையாலே பட்டரை பிள்ளை என்பர் ஆச்சி மகன் அந்திம தசையிலே தன்னை அறியாதே கிடக்க
பட்டர் எழுந்து அருளி செவியி னில் ஊதி னாரை போலே -அழகிய மணவாள பெருமாளே சரணம் -என்ன
பூர்வ வாசனையாலே அறிவு குடி புகுந்து அத திரு நாமத்தை சொல்லி
திரு நாட்டுக்கு நடந்தார் –

ஆளவந்தார் மகனார் சொட்டை நம்பி அந்திம தசையில் முதலிகள் அடைய-புக்கிருந்து -நீர் நினைத்து கிடக்கிறது என் -என்ன
வைகுண்டத்திலே சென்றால் நம்பெருமாளுடைய குளிர்ந்த முகம் போலே ஸ்ரீ வைகுண்ட நாதன் முகம் குளிர்ந்து இல்லையாகில்
முறித்து கொண்டு இங்கு ஏற ஓடிப் போரும் இத்தனை என்று கிடக்கிறேன் -என்றார் –

பட்டர் பெருமாள் பாடு புக்கிருக்க -பெருமாள் திருமஞ்சனத்து ஏறி அருளுகிறவர் –
பட்டரை கண்டு -உனக்கு வேண்டுவது என் -என்று கேட்டு அருள –
சேலையை கடுக்கி திருவரையையும் துடைப்பற்றையும் ஒரு கால் காட்டி அருள வேணும் -என்றார் –
பெருமாள் -அஞ்சினாயோ -என்று கேட்டருள –
நாயந்தே -பரமபதம் என் சிறு முறிப்படி அழியும் -உம்முடைய குளிர்ந்த திரு முகமும் –
திரு நாம தழும்பும் இழக்கிறேனாக கருதி அஞ்சா நின்றேன் -என்றார்-

தன் அருளாலே எனக்கு விஷயமாக்கின உபகாரனுடைய பெருமையை ஒருத்தரும் கிட்டும்படி முயன்றார் இல்லை

————–

கீழே அவன் அருளால் தான் பெற்ற பேற்றை அருளிச் செய்து இதில் தம்முடைய சம்பந்தி சம்பந்திகளையும்
சம்சாரம் கிட்ட வற்றோ -விசேஷ கடாக்ஷ விஷயீ க்ருதரானார்கள் என்று களிக்கிறார்

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வர பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -45-ஊனில் வாழ் உயிரே -2-3-

பதவுரை

மட நெஞ்சமே–பேதை நெஞ்சமே!
பெரும் கேழலார்–(பிரள வெள்ளத்திலழுந்தின பூமியை யெடுப்பதற்கு) மஹா வராஹ ரூபியானவனர்
இ அகாலம்–(ரக்ஷிப்பதற்கு) எளியதல்லாத இக்காலத்தில்
தம்–தம்முடைய
பெரு கண் மலர் புண்டரீகம்–பெரிய செந்தாமரைப்பூப் போன்ற திருக்கண்களை
நம்மேல்–நம் பக்கலில்
ஒருங்கே பிறழ வைத்தார்–ஒரு படிப்பட மிளிரும்படி வைத்தார். (கடாக்ஷித்துக் காத்தருளினார்.
நம் போல் வரும் கேழ்பவர்–(அவரோடு) நம்மைப்போல் பொருந்திய ஸம்பந்தம் பெற்றவர்.
ஒருவர் உளரே–வேறொருத்தர் உண்டோ? (இல்லை)
தொல்லை வாழியம்–(அவரோடு பழமையான வாழ்க்கையும் யாமுடையோம்;
(அப்படிப்பட்ட நமக்கு)
சூழ் பிறப்பு–விடாது சூழ்கிற பிறப்புத் துன்பங்கள்
மருங்கே வர பெறுமே–அருகிலும் வரக்கூடுமோ?
சொல்லு–சொல்லாய்;
வாழி–(கலக்கந் தெளிந்து) வாழ்வாயாக.

ரஷ்யத்தின் அளவு அன்றிக்கே -ரஷகனுடைய பாரிப்பு இருக்கிற படி
ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கும் தேஜஸ் போராது இருக்கை –
என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதியை ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ
ஸ்ரீ பூமி பிராட்டி பக்கலிலும் பாலி பாயாதபடி பிறழவைத்தார் -மிக வைத்தார் -தம்மால் தரிக்க போகிறது இல்லை
இவ்வகாலம் -சருகாய் கிடக்கும் மரங்களும் ஒரோ காலத்தே தளிரும் முறியுமாய் நிற்குமது போலே –
சர்வேஸ்வரனுக்கு சேஷத்வ ரசம் இல்லாமையாலே இல்லை –
முக்தரும் நித்தியரும் அவ்வருகில் உள்ளார் ஆகையாலே அவர்களுக்கு இல்லை –
பக்தர் விஷய பிரவணர் ஆகையால் அவர்களுக்கு இல்லை –
நஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷனாம் -என்கிற வை லஷண்யத்தை உடையார் ஆகையாலே பிராட்டிமார்க்கு இல்லை –
இவரை போலே தாழ நின்று -இப்ப்பேறு பெற்றார் இல்லை -என்றபடி

————-

வாழி மட நெஞ்சே -என்று நெஞ்சை ஸ்துத்திவாறே-என்னை இப்படி ஸ்துத்திக்கிறது என் -நான் என் செய்தேன் -என்ன –
இந்நாள் வரை பந்த ஹேதுவாய் போன நீ -அவனுடைய கடாஷத்துக்கு இலக்காகி சஹகரித்திலையோ-உன்னாலே அன்றோ
நான் இது பெற்றது -என்று -கொண்டாடினார் கீழ் –
கொண்டாடின அநந்தரம் ஸ்வப்பனம் போலே முன்புற்றை அனுபவம் மாநசனமாய்-பாஹ்ய சம்ஸ்லேஷ-அபேஷை பிறந்து –
அது கை வராமையாலே கலங்கி -இவர் படுகிற வியசநத்தை கண்டு – திரு உள்ளம் -நான் இங்குற்றை செய்ய வேண்டுவது என் -என்ன –
அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் போய் என் தசையை அறிவி -என்று திரு உள்ளத்தை தூது விடுகிறார் –
அது மீண்டு வரக் காணாமையாலே நோவு படுகிறார் –
பெரும் கேழலார்-என்று ஸ்ரீ வராகமான அவதாரத்தை ஆசைப்பட்டு – ஸ்ரீ நரசிம்கமான இடத்தே தூது விடுவான் என் என்னில் –
இரண்டு அவதாரமும் ஆஸ்ரிதம் அர்த்தம் என்கையாலே விடுகிறார் –

மட நெஞ்சம் -என்று கீழே சர்வேஸ்வரன் மேல் விழுவதுக்கு-அல்லேன் -என்னாதே ஆபிமுக்யத்தை பண்ணி அதுக்கு உடன் பட்டது
என்று நெஞ்சைக் கொண்டாடினார் -இப்போது அந்நெஞ்சை இன்னாதாகிறார் -இப்போது இன்னாதாகிறது என் –
அப்போது கொண்டாடுகிறது என் -என்னில் -ஆசை கரை புரளும்படி -அதுக்கு தானே கிருஷி யைப் பண்ணி –
அவ்வாசைக்கு இரை இட்டு -இனி பிராப்தி அல்லது நடவாத சமயத்திலே -அதுக்கு தானே-சஹகரியாதே -தன்னைக் கொண்டு
அகல நின்றது என் என்று -இன்னாதாகிறார் –
இது சஹகரிக்கை ஆவது என் என்னில் -பந்த ஹேதுவானோ பாதி மோஷ ஹேது இதுவும் இறே-
ரஷதர் மேணபலேநசைவ -என்கிறபடியே ப்ராப்தி அளவும் செல்ல-தான் முகம் காட்டி -நீ பட்டது என்-என்ன வேணும் இறே-
அவனே உபாயம் என்கிறது -ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணி -நிஷ்கரிஷித்து சொல்லுகிற வார்த்தை -இறே –

அவனே உபாயமாக செய்தேயும் -இத்தலையாலேயும் வருவன-குவாலாயுண்டு இறே –
அவை தான் தனித்தே பேற்றுக்கு உடலாக மாட்டாமையாலே -ஒன்றாக சொல்லுகிற அத்தனை இறே –
இத்தலையால் வரும் அவை தான் -எவை என்னில் -பேற்றுக்கு சாதனன் தான் உளனாக வேணுமே –
தான் உளன் என்னா-உபாயத்தில் அநவ யியான் இறே -புருஷார்த்தத்தை அறிந்து -ருசித்து -சஹகரிக்கைக்கு நெஞ்சு வேணுமே –

ஈத்ருசங்கள் சில உண்டு இறே -இத் தலையால் வருவன -இவை தான் உண்டாக நிற்க செய்தேயும் -கரண சரீரத்தில் நிவேசியாதே –
சந்நிதி மாத்ரத்தாலே உபகாரங்களாய் நிற்க கடவது -அவனே உபாயமுமாய் -அவன் சித்த ஸ்வரூபமானுமாய்-இருக்கச் செய்தே –
சம்சாரமும் அனுவர்த்திக்கிற ஹேது -ஈத்ருசங்களில் இல்லாமை இறே –
ஆக -இப்படி ப்ராப்தி அளவும் நின்று -முகம் காட்டி தரிப்பிக்க வேண்டி இருக்க – அது செய்யாமையாலே -நெஞ்சை இன்னாதாகிறது –

மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அப் பொன் பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப் போய்
திட நெஞ்சமாய் எம்மை நீத்தன்று தாறும் திரிகின்றதே -46-அருள் பெறுவார் அடியார் -10-6-

பதவுரை

மடம் நெஞ்சம் என்றும்–பேதைமையை யுடைய மனமென்று எண்ணியும்
தமது என்றும்–நமக்கு அந்தரங்கமானதென்று எண்ணியும்
ஓர் கருமம் கருதி–ஒரு காரியத்தை யுத்தேசித்து
நெஞ்சைவிட உற்றார்–மனத்தைத் தூதுபோக விடத் துணிந்தவர்
விடவோ அமையும்–அத்துணிவை விட்டொழிதல் தகுதி;
(ஏனெனில்)
அ பொன் பெயரோன்–அந்த (கொடிய) இரணியனுடைய
தட நெஞ்சம்–பெரிய மார்பை
கீண்ட–எளிதிற் பிளந்தருளி
பிரானார் தமது–பராக்ரமசாலியான எமபெருமானுடைய
அடிக்கீழ்–திருவடிகளிலே
விட–(யாம் எமது நெஞ்சைத்) தூதுவிட (அது)
போய்–விரைவாகச் சென்று
திடம் நெஞ்சம் ஆய்–உறுதியான கருத்துள்ளதாய்
எம்மை நீத்து–(தூதுவிட்டவரும் தனக்கு உடையவருமான) எம்மை நினையாமற் கைவிட்டு
இன்று தாறும்–இன்று வரையில்
திரிகின்றது–(அப்பெருமானையே தொடர்ந்து உல்லாஸமாகத்) திரிந்து கொண்டிருக்கின்றது.

இத் தலையில் ஆற்றாமை கண்டு கண்ணும் கண்ண நீருமாய் -இத்தலை பட மாட்டாதோ என்னும் படி இறே போனபடி –
அங்கே புக்கவாறே -அவன் ஸ்வபாவத்தை பஜித்தது- பிராட்டி உடைய இரண்டாம் பிரிவு போலே —
நாம் அல்லது தஞ்சம் இல்லாதாரைப் பொகட்டு போந்தோம் என்னும் –
அனுதாபத் தோடு ஓரிடத்திலே விழுந்து கிடந்தது என்று கேட்கப் பெற்றோம்-

————

கலந்து பிரிந்து பிரிவாற்றாமை நோவுபடுகிற தலை மகளைக் கண்ட திருத் தாயார்-
பாதகங்களின் பெருமையையும் – இவள் ஆர்த்தவத்தையும் – அனுசந்தித்து -என்னை விளையக் கடவதோ -என்கிறாள் –

திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே –47–நாங்கள் வரி வளை -8-2-

பதவுரை

வட மாருதம்–வாடைக் காற்று
திரிகின்றது–உலாவுகிறது;
திங்கள்–(குளிர்ந்த இயல்பையுடைய) சந்திர மண்டலம்
வெம் தீ–கொடிய நெருப்பை
முகந்து சொரிகின்றது–வாரி யிறைக்கின்றது:
அதுவும் அது–முற்சொன்ன வாடைக் காற்றும் அப்படியே நெருப்பை வீசுகின்றது;
கண்ணன்–கண்ண பிரானுடைய
விண் ஊர்–பரமபதமாகிய வாஸஸ்தாநத்தை
தொழவே–இடைவிடாது தொழுது அநுபவிக்கவேணுமென்று ஆசைப்பட்டு அது கிடையாமையால் வந்த மெலிவாலே
சங்கம்–(கையிலணிந்துள்ள) சங்குவளை.
சரிகின்றது–கழன்று விழுகின்றது;
தண் அம் துழாய்க்கு–(அவனது) குளிர்ந்த அழகிய திருத்துழாயினிடத்தில் வைத்த ஆசையினால்
(ஆசைப்பட்டு அது கிடையாமையினாலே)
முழு மெய்யும்–உடம்பு முழுவதிலும்
வண்ணம் பயலை விரிகின்றது?–(இயற்கையான மாமை நிறம் நீங்கிப்) பசுப்பு நிறம்பரப்புகின்றது (இனி)
என் மெல்லியற்கு–மென்மையான தன்மையையுடைய என் மகளுக்கு
என் ஆம் கொல்–யாதாய் முடியுமோ.

ஒரு வாடையும் வை வர்ணயமும் வேண்டாதபடி –ம்ருது ச்வபாவையாய் இருக்கிற இவளுக்கு –
அதுக்கு மேலே இவையும் ஆனால் என்னாய் விளையக் கடவதோ –

ஸ்வாப தேசம்
இத்தால் ஆழ்வாருடைய ப்ரக்ருதியா உண்டான மார்த்வத்தையும் ஆற்றாமையையும் இவர் ஆசைப்பட்டது அந்தரங்க விருத்திகள்
ஆகையால் அது பெறாமையால் வரும் ஆற்றாமை பாடாற்றலாம் அல்லது என்னும் இடத்தையும் கேட்டவர்கள்-
இனி இவரைக் கிடைக்க மாட்டாதோ என்னும்படியான தம் தசையைப் பார்ஸ்வத்தவர்கள் பாசுரத்தால் தாம் அனுபவிக்கிறார் –

————

இஸ் சம்சாரத்தில் நம்மை வைத்த இதுக்கு ஹேது ஏதோ -என்று இறே இவர் நொந்தது –
இவருக்கு இவ்விருப்பு நிலம் கொதிப்பது -ஸ்வார்த்தமாக இருக்கிறோம் என்று இருக்கலில் இறே –
அங்கன் இன்றிக்கே -நமக்காக இருக்கிறீர்-என்னும் இடத்தை அறிவிக்கவே இவரை தரிப்பிக்கலாம் –
மேல் இவர் போய் பெற இருக்கிற ஸ்வரூபமும் இதுவே என்று பார்த்து –
வாரீர் நீர் உமக்கு இங்கு ஒரு-சம்பந்தம் உண்டாய் இருக்கிறீர் அல்லீர் -நமக்காக இருக்கிறீர் அத்தனை -நாமும் ரசித்து நம்முடையாரும்-
ரசிக்கும்படியாக உம்மை கொண்டு நம் சீல வ்ருத்தங்களை வெளி இடப் பார்த்தது -அதுக்காக வைத்தோம் இத்தனை காணும் -என்று
ஈஸ்வரன் அறிவிக்க -ஆனால் தட்டென்-நம் ஸ்வரூபத்தோடு சேர்ந்தததுவுமாய்-நாம் பெற இருக்கிறது இது வாகில் குறை என் -என்று
விஷயீகரித்த படியை கண்டு விஸ்மிதராய்-அவ் விஷயீ காரத்தை பேசுகிறார்-

மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 –என்றைக்கும் என்னை -7-9-

பதவுரை

மெல் இயல்–மென்மையான தன்மையையுடைய
ஆக்கை–உடம்பை யுடைத்தான
கிருமி–புழுவானது
குருவில்–புண்ணிலே
மிளிர் தந்து–வெளிப்பட்டு
அதுவே–அவ்விடத்திலேயே
செல்லிய–நடமாடும்படியான
செலதைத்து–ஸ்வபாவத்தையுடையது; (அது)
உலகை என காணும்–உலக நடத்தையை எங்ஙனம் அறியும்?
(அறியமாட்டாது; அதுபோல)
என்னாலும்–என்னைக் கொண்டும்.
தன்னைச் சொல்லிய–தன்னைப் பாடுவித்த
சூழல்–சூழ்ச்சியை யுடைய
திருமாலவன்–ச்ரிய பதியான அப்பெருமானுடைய
கவி–புகழுரையை
யாது கற்றேன்–(யான்) யாதென்று அறிவேன்?
பல்லியன் சொல்லும்–பல்லியின் வார்த்தையையும்
சொல் ஆ கொள்வதோ–(பின் நிகழ்ச்சியை முன்குறிக்குஞ்) சொல்லாகக் கொள்ளுதலோ
பண்டு பண்டே உண்டு–மிக வெகு காலமாகவுள்ளது

இப்படி அஞ்ஞான அசக்திகளுக்கு எல்லை நிலமான என்னைக் கொண்டு -தன்னை -உலகை என் காணும் -என்கிற
லோக வ்ருத்தாந்த்தத்திலே தான் ஒன்றை என்னைக் கொண்டு -சொல்லி வைத்தானோ-
அவனும் அவளுமான சேர்த்திக்கு தகுதியான கவி – இத்தால் -ஸ்ரீ ராமாயணத்தில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –
தாயாஸ் சரிதம் மகத்-என்று தொடங்க செய்தே அவளை ஒழிய தனியே இறே இருந்து கேட்டது –
அவன் முன்னே சந்தை இட –நான் பின்னே சொன்னேன் இத்தனை- பல்லியானது ஓர் அர்த்த பிரத்யாயகம் இல்லாதபடி –
தன்னுடைய ப்ரீத்திய ப்ரீதிகளாலே -நத்து நத்து -என்ன -அத்தை ஞானவான் களாய் இருப்பார் தம்தாமுடைய லாப அலாபங்களுக்கு
உடலாக்கி கோலா நிற்ப்பர்கள் இறே – அப்படியே நான் எனக்கு பிரதிபந்தங்களை சொல்ல -அத்தை தனக்கு ஈடாம் படி
நன்றாக தலைக் கட்டிக் கொண்டான் –

——————

சர்வேஸ்வரன் நம்மை விசேஷ கடாஷம் பண்ணிற்று இலனோ -என்று ஆறி இருந்தார் முன்பு -காதாசித்கமாய் அனுபவ விச்சேதத்தை
பண்ணுமதான சம்சாரத்திலே நம்மை வைப்பதே-என்னும் ஆற்றாமை ஒரு பிராட்டி திசையை விளைத்தது –
கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலை மகள் -தான் ராத்திரி வ்யாசனத்தாலே நோவு படுகிறபடியை தானே சொல்லுகிறாள் ஆதல் –
அன்றிக்கே தோழி வார்த்தை ஆதல் –

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண்ணேர் அன்ன ஒண்ணுதலே -49 –ஊரெல்லாம் துஞ்சி -5-4-

பதவுரை

காள வண்ணம்–கறுத்த திருநிறத்தையும்
வண்டு உண் துழாய்–வண்டுகள் தேனுண்ணப்பெற்ற திருத்துழாய் மாலையைமுடைய
பெருமான்–ஸர்வேச்வரனும்
மதுசூதனன் தாமோதரன்–மதுஸூதநனென்றும் தாமோதரனென்றும் திருநாமங்களை யுடையவனுமான திருமால்
உண்டும்–(பிரளயகாலத்திலே) வயிற்றினுட்கொண்டும்
உமிழ்ந்தும்–(பிரளயம் நீங்கின வளவிலே) வெளிப்படுத்தியும்
கடாய–பாதுகாக்கப் பெற்ற
மண்–பூமியினுடைய
ஏர்–அழகை
அன்ன–ஒத்த
ஒள் நுதலே–ஒளிபொருந்திய நெற்றியை யுடையவளே!
பண்டும்–முன்பும்
பலபல–மிகப்பலவான
வீங்கு இருள்–பெரிய இருட்பொழுதுகளை
காண்டும்–பார்த்திருக்கிறோம்;
இ பாய் இருள்போல்–இந்தப் பரந்த இருட்பொழுது போல
கண்டும் அறிவதும் கேட்பதும்யாம் இலம்–யாம் (வேறொரு பொருளைக்) கண்டறியவதும் கேட்டறிவதும் இல்லோம்.

போக யோக்யமான காலத்தில் -அவ்விருளோடு போலியான வடிவை கொண்டு –
வந்து அணையாமை ஆயிற்று இது பாதகமாம் ஆகைக்கு அடி –
மதுசூதனன் போக்யதையை அனுபவிப்பார்க்கு வரும் விரோதியை அம்மதுவை போக்கினால் போல் போக்குமவன் –
தாமோதரன் -உகப்பார்க்கு கட்டி வைக்கலாம்படி பவ்யனாய் இருக்கும் அவன் –
பிரளயத்தில் பூமியை அழிய விட்டு இராதோபாதி உன்னை ராத்திரி வியசனத்திலே விட்டு இரான் காண்-
மண்ணேர் அன்ன ஒண் நுதலே -அவன் உடைமை என்கைக்கு ஒரு திருஷ்டாந்தம் சொன்னோம் இத்தனை அன்றோ –
உனக்கு ஒப்போ அம் மண் -அவனுக்கு ஆகர்ஷமான வடிவு அழகு உள்ளது உனக்கு அன்றோ –

——————–

இதுக்கு முன்பு இங்கன் இருப்பதொரு ராத்ரி வ்யசனம் அனுபவித்து அறியோம் என்னும்படி-அவசாதம் மிக்கவாறே –
போத யந்த பரஸ்பரம் -பண்ணி இவரை ஆஸ்வசிப்பிக்கைக்காக தலை மகன் வருகிறான் –
வினை முற்றி மீண்ட தலைமகன் -பதினாலாம் ஆண்டு போன வழியை ஸ்ரீ பரதாழ்வான் ப்ரக்ருதியை அறிகையாலே –
பெருமாள் ஒரு பகலே மீண்டால் போல் -த்வரித்து வருகிறானாய்-இருக்கிறது -தலைமகன் சாரதியை பார்த்து சொல்லுகிறான் –

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – 50-கிளரொளி இளைமை -2-10–

பதவுரை

வலவ–பாகனே!
ஒண் நுதல்–அழகிய நெற்றியையுடையவளான நாயகியின்
மாமை ஒளி–மேனி நல் நிறத்தின் விளக்கம்
பயவாமை–பசப்பு அடையாதபடி (அதற்கு முன்னமே!)
நம் தேர்–நமது தேர்
விரைந்து நண்ணுதல் வேண்டும்–துரிதமாகச் சென்று சேர வேண்டும்;
(எவ்வித்திற்கு? என்றால்)
தேன் நவின்ற–வண்டுகள் பாடப் பெற்ற
விண் முதல் நாயகன் நீள் முடி–பரமபதநாதனான பெருமானது நீண்ட திருமடியில் தரித்த
வெள் முத்தம் வாசிகைத்து ஆய்–வெண்ணிறமான முத்துமாலையின் தன்மையதாய்
மண் முதல் சேர்வுற்ற–(முடிதொடங்கி) அடிவாரத்து நிலத்திலே சேரும்படியான
அருவி–நீர்ப்பெருக்கை
செய்யா நிற்கும்–செய்து நிற்கிற
மா மலைக்கு–பெரிய திருமலைக்கு
இன்று கடாக–இப்பொழுது (தேரை)நடத்துவாயாக

ஸ்வாபதேசம்-
இத்தால் ஆழ்வாருடைய ஆற்றாமையை கண்ட பாகவதர்கள் இவரை ஆஸ்வசிப்பிக்கைக்காக வருகிறபடியை சொல்லுகிறது –
திரு மலையிலே -நிற்கிறவன் சீலத்திலே அகப்பட்டு -திரு அருவிகளின் நடுவே பெருமாளை கை பிடித்த பின் –
பிராட்டி மிதிலையை நினையாதால் போலே -திரு நகரியையும் மறந்து ஆழ்வார் எழுந்து அருளி இருந்த இருப்பை
அனுபவிக்க வேணும் என்று -அனுகூலர் அடைய த்வரித்துக் கொண்டு வருகிற படியை சொல்லுகிறது –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .