திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-3-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

இனியார் ஞானங்களால் எடுக்கல்எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என்கடற்படா அமுதே!
தனியேன் வாழ்முதலே!! பொழில்ஏழும் ஏனம்ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! 1நுனபாதம் சேர்ந்தேனே.

    பொ – ரை : எத்தகைய பெரியோர்களுடைய ஞானங்களாலும் அளவிட்டு அறிய முடியாதபடி இருக்கின்ற என் நாயனே! பத்தி நிறைந்து அதனால் கனிந்த மனம் உடையவர்களுக்கு மோக்ஷ சுகமானவனே! எனக்குக் கடலில் உண்டாகாத அமிர்தம் போன்றவனே! யான் பெற்ற இப் பேற்றுக்கு மூல காரணம் ஆனவனே! உலகங்கள் ஏழனையும் ஒப்பற்ற வராக அவதாரமாகிக் கூர்மை மிக்க தந்தத்தில் வைத்துத் தூக்கி வந்தவனே! இப்பொழுது உன்னுடைய திருவடிகைளைச் சேர்ந்ததேனே அன்றோ?

    வி-கு  : இப்பாசுரம் பூட்டுவிற்பொருள்கோள். ‘இனி, சேர்ந்தேனே’ எனக் கூட்டுக. அன்றி, ‘இனியார்’ என்பதனை ஒரு சொல்லாகக் கொண்டு, இனியார் – இனியர் அல்லாதார்; அதாவது, அன்பு இல்லாதார் என்று பொருள் கூறலுமாம். ஞானம் பல வகைப்படுதலின், ‘ஞானங்களால்’ என்கிறார். கனிவார் – வினையாலணையும் பெயர். முதல் – காரணம். சேர்ந்தேனே – ஏகாரம் தோற்றப்பொருளது.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 2‘ஞான லாபமே அமையுமோ? பேறு வேண்டாவோ?’ என்ன, ‘எனக்குப் 3பிரதம சுக்ருதமும் நீயேயாய், என்னைச் சமுசாரிகளில் வேறுபட்டவன்ஆக்கின அன்றே பெற்றேனே அன்றோ?’ என்கிறார்.

1அதாவது துரியோதனனால் அளவிட்டு அறிதல், 2இராவணனாலே எடுக்கலாய் இருத்தல் செய்ய அரிதாய் இருக்கை. கனிவார் வீட்டு இன்பமே – நீ என்றால் உள்கனிந்து பக்குவமாய் இருக்குமவர்களுக்கு மோக்ஷசுகம் ஆனவனே! அன்றி, ‘நீ என்றால் இனியராய் இருக்குமவர்கள் இருப்பிடத்திலே வந்து அவர்களுக்கு ஆனந்தத்தை விளைவிக்குமவனே!’ என்று கோடலுமாம்.  ‘அப்படி எங்கே கண்டோம்?’ என்னில், யசோதைப்பிராட்டி, 3தொல்லை இன்பத்து இறுதி கண்டாள் அன்றோ? என் கடல் படா அமுதே – பகை, பத்தி என்ற இவ்விரண்டின் எல்லையிலே உள்ள இரு திறத்தாரிலும் எண்ண ஒண்ணாதபடி இருக்கிற எனக்கு, முயற்சி இன்றிக் கிடைத்த அமுதம் போன்றவனே தனியேன் வாழ் முதலே – தனியேனான என்னுடைய அனுபவத்துக்குப் பிரதம சுக்ருதம் ஆனவனே! பிராட்டி ஒற்றைக் கண்ணள், ஒற்றைக் காதள் முதலியவர்கள் நடுவே இருந்தாற் போன்று, இவரும் இவ்வுலக மக்களின் நடுவே இருந்தாராயினும், அவர்களோடு ஒட்டு இன்றி இருத்தலின், 4தனியேன்’ என்கிறார். பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனியார் கோட்டில் வைத்தாய் – தனக்கு ஒத்தது வேறு ஒன்று இல்லாததான மஹாவராகத்தின் யார் ஞானங்களால் எடுக்கல் எழாது எந்தாய் – தன் முயற்சியால் அறியப் பார்க்குமன்று எத்துணை மேம்பட்டவர்களுடையவடிவை மேற்கொண்டு, பிரளயம்கொண்ட உலகங்கள் ஏழனையும் எடுத்து கூர்மை மிக்க கோட்டில் வைத்தைவனே! இதனால், தனிமையில் வந்து உதவினபடியையும், பாதுகாக்கப் படுகின்ற பொருள்களின் அளவு அல்லாத பாதுகாக்கின்றவனுடைய பாரிப்பையும் அருளிச்செய்தபடி இனி நுன பாதம் சேர்ந்ததேனே – பிரளயம் கொண்ட பூமியை எடுத்தது போன்று, பிறவிப் பெருங்கடலால் கொள்ளப்பட்ட என்னை எடுத்த போதே தேவர் திருவடிகளை நான் கிட்டினேனே அன்றோ?’ அன்றி, 1‘இமையோர் தலைவா ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்னும்படி, அறிவைத் தந்த போதே உன் திருவடிகளைப் பெற்றேனே அன்றோ?’ என்று பொருள் கோடலுமாம்.

3. ‘முழுதும் வெண்ணெய் அளைந்துதொட் டுண்ணும்
முகிழ்இ ளஞ்சிறுத் தாமரைக் கையும்
எழில்கொள் தாம்புகொண்டு அடிப்பதற்கு எள்கும்
நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும்
அழுகை யும்அஞ்சி நோக்கும்அந் நோக்கும்
அணிகொள் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும்
தொழுகை யும்இவை கண்டஅ சோதை
தொல்லை இன்பத்து இறுதிகண் டாளே.1

(பெருமாள் திருமொழி)

4. ‘பந்துக்கள் நடுவே இருக்கிறவர் ‘தனியேன்’ என்கிறாரிறே; வழிப்பறிக்காரர் நடுவே
நின்றால் அவர்கள் துணையாகாரிறே; எனக்கு என்றிருப்பார் நடுவே இருக்கியிறே
இவர்க்குத் தனிமை. தம்மை அத்தலைக்கு ஆக்கிவைக்கையிறே இவர்க்கு வாழ்வு,’
என்பது இருபத்து நாலாயிரப்படி வியாக்கியானம்.

ஞான விசேடங்களாலும் பெயர்க்கப் பெயராது இருக்கின்ற என் நாயனே!

ஞான லாபமே அமையுமே அடைந்து விட்டால் போன்ற அனுபவம்
பிராப்தி வேண்டாமா -எம்பெருமான் -பிரதம சுக்ரதமாய் நீயே -அன்றே நான் உன்னை பெற்று விட்டேன்
இனி -சப்தம் விட்டு அந்வயம்
எப்பேர்பட்ட ஞானிகளாலும்  அறிய முடியாதே
வீட்டு இன்பம்மோஷம் போல் சுகமாய்
கடல் படா அமுதம் -உப்புசாறு போல் இல்லை சுத்த சித்த அமுதம்
தனியேன் வாழ்முதல் -எனக்கு தாரகம்
பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனியார்  கோட்டில் வைத்தாய்
இனி உன பாதம் சேர்ந்தேனே
அதிசயத்த ஞானியர் -ஆருடைய ஞானத்தாலும் -சுய யத்னத்தால் அறிய முடியாது
பேர்க்க பேராத-சர்வேஸ்வரன்
துரி யோதனன் கட்ட முடிய வில்லை –சகாதேவன் கட்டி
ராவணன் எடுக்க முடியாமல் -திருவடி -கருமுகை மாலை எடுப்பது போல்
எடுக்கல் முடியாமல் –
கனிவார் வீட்டு இன்பம் -உள் கனிந்து பக்குவமாய் உருகி போகும்
நினைத்தவாறே -கால் ஆளும் நெஞ்சு அழியும் -வீட்டு இன்பம் மோஷ சுகம்
அந்தமில் பேர் இன்பம் தொல்லை இன்பம்
நீ -இருப்பிடத்தில் வந்து ஆனந்தம்கொடுக்கும்
வீட்டு இன்ப பாக்களில் -குளம்  ஆராய கூடாது ஆசார்ய ஹிருதயம் –
அர்ச்சா- வீட்டு இன்ப -இன்ப பா த்ரவ்ய பாஷா ஆராய கூடாது –
தாறு ரூபம் -மூலவர்
தேவ பெருமாள் முன்பு தாறு இப்பொழுது சிலா
திரு வெள்ளரை தாறு திரு மேனி
சுதா திருவரங்கம் பெரிய பெருமாள் –
சாந்நித்யம் ஆனா பின்பு வீட்டு இன்பத்தில் த்ரவ்ய நிரூபணம்
இன்ப பாவை பச்சை தேனை எம்பெருமானை குறிக்கும் ஆழ்வார் பாசுரத்தில்
இன்ப பாவில் பாஷா நிரூபணம் கூடாது
இன்ப மாரியே அடியார்க்கு இன்ப மாரி-ஆழ்வாரை குறிக்கிறார்  நாயனார் ஆசார்ய ஹிருதயம்

 

எங்கே கண்டோம் யசோதை பிராட்டி தொல்லை இன்பம் இறுதி கண்டாள்
அந்த அனுபவம் காட்டினான்
என் கடல் படா அமுதமே
என் -எனக்கு -கனிவார் -இனி யார் ஞானங்கள் -அங்கு எல்லாம் சொல்லி இரண்டு கோடியிலும் இல்லாத நான்
நைச்யானுசந்தானம் பண்ணி கொள்கிறார் –
முழுதும் வெண்ணெய் -அரும்பதம் பாசுர வியாக்யானம் காட்டி –
கடல் படா -அயத்தன சித்த அமுதம்-
அங்கு பெரிய யத்னம் -செய்ய வேண்டுமே
தனியேன் -என்னுடைய அனுபவத்துக்கு பிரதம  சுக்ருதம் நீ தானே மயர்வற மதி நலம் அருளி –
பந்துக்கள் நடுவில் இருக்கும் -வழி பரிகாரார் நடுவில் இருந்தால் தனியேன் தானே
நாசம் உண்டாக்கும் -துணை யாகாதவர்
எனக்கு என்று இருப்பார் நடுவே இருப்பது தனிமை இறே ஆழ்வாருக்கு
ஏகாஷி ஏக கரணி நடுவே பிராட்டி இருந்தால் போல் சம்சாரத்தில் ஆழ்வார் இருப்பு –
பந்துக்களை கண்டால் சர்ப்பங்களை கண்டால் போலேயும் –
ராவணன் சொல்படி கேள் -எம்பெருமான் இடம் ஈடுபாடு சகிக்காத சம்சாரிகள் -ஏகாஷி செய்யும் கார்யம் -தானே
அதிலே போக  ஊக்கம் செய்பவர் ஆத்மா பந்து
வாழ் முதல் -தாரகம் -வாழ்வுக்கு முதல்
வராக அவதாரம் தனிமையில் வந்து உதவியதை
அத்விதீய மகா வராகம்
பொழில் லோகம் எடுத்தான் –
ஏனம் ஒன்றாய் -ஒப்பற்ற
நுனி கூர்மை நுனியார் மிகுந்த கூர்மை
ரஷ வர்க்கத்தின் அளவு  இல்லாத  ரஷ்கத்தில் பாரிப்பு
அன்றே திருவடி பெற்றேன் ஞானம் கொடுத்த அன்றே சேர்ந்தேன் -என்கிறார் ஆழ்வார் –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading