Archive for October, 2023

ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள் — ஸ்லோகம் –7–

October 31, 2023
  1. அக்ராஹ்ய: ஶாஶ்வத: க்ருஶ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தன:|

ப்ரபூதஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் ||

இந்த ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

56-அக்ராஹ்ய:, 57. ஶாஶ்வத:, 58. க்ருஷ்ண:, 59. லோஹிதாக்ஷ:, 60. ப்ரதர்தன:|

61.ப்ரபூத:, 62.த்ரிககுப்தாம:, 63.பவித்ர:, 64. மங்களம் பரம் ||

இறைவன் பிறர் கைக்கு அப்பாற்பட்டவன், சாதாரண புலன்களால் அடைய முடியாது. அவர் நித்தியமானவர் மற்றும் நிரந்தரமான பேரின்ப நிலையில் இருக்கிறார், அவருக்குப் படைப்பே விளையாட்டு. அவருடைய கண்கள் தாமரை மலரைப் போல சிவந்திருக்கும். அவர் பிரபஞ்சத்தை அழிப்பவர் மற்றும் பிரளயம் அல்லது பிரளயத்தின் போது உலகத்தை அவருக்குள் அடக்குகிறார். அவர் செல்வச் செழிப்பும், மகத்துவமும் உடையவர். அவர் மூன்று உணர்வு நிலைகளிலும் பாதுகாவலராக இருப்பவர், தூய்மையானவர் மற்றும் மிகவும் மங்களகரமானவர்.

அக்ராஹ்ய: – எவ்விதத்திலும் எந்தக் கரணத்தினாலும் சிக்காதவர் என்னும்படி அனைத்துக்கும் முதற்காரணமாகவும் நிமித்த காரணமாகவும் இருப்பவர்.
சாச்வத: – மாறி மாறி வரும் படைப்பு ஒடுக்கம் ஆகியவைகளில் ஓய்வின்றி ஒரே படித்தாய் இருப்பவர்.
க்ருஷ்ண: – தம் லீலையாகிய சிருஷ்டி ஸ்திதி லயம் ஆகியவைகளில் மாறாத ஆனந்த மூர்த்தியாய் இருப்பவர்.
லோஹிதாக்ஷ: – தம் மாறாத மகிழ்ச்சிக்கு அடையாளமாகச் செந்தாமரை நிறமான கண்களைப் படைத்தவர்.
ப்ரதர்தன: – பிரளயகாலத்தில் அனைத்தையும் நாம ரூபங்களை நீக்கி ஸம்ஹரிப்பவர்.
ப்ரபூத: – பிரபஞ்சத்தில் அனைத்தும் ஸம்ஹரிக்கப்பட்டாலும் மாற்றமும் அளவும் அற்ற போக ஸ்தானமாகப் பரமபதத்தை உடையவர்.
த்ரிககுப்தாமா – மும்மடங்கு பிரபஞ்சத்தினும் பெரிது என்னும் அளவிலாத பெருக்கம் உடைய த்ரிபாத் விபூதி என்னும் பரமபதத்தை உடையவர்.
பவித்ரம் – தோஷங்கள் அனைத்துக்கும் எதிர்த்தட்டான பரிசுத்த ஸ்வரூபம் உடையவர்.
மங்களம்பரம் – தம்மைத் தியானிப்பவர்களுக்கு அனைத்து மங்களங்களையும் அருளும் பரம்பொருளாய் இருப்பவர்.

(புலன்களாலோ, மனத்தாலோ) பற்றப்பட முடியாதவன் {அக்ராஹ்யன்},
நித்தியமானவன் {சாஸ்வதன்},
கிருஷ்ணன், சிவந்த கண்களைக் கொண்டவன் {லோஹிதாக்ஷன்},
அண்ட அழிவின் போது அனைத்து உயிரினங்களையும் கொல்பவன் {ப்ரதர்த்தநன்},
அறிவு, வலிமை மற்றும் பிறவகைக் குணங்களில் பெரியவன் {பரப்பூதன்},
ஒவ்வொரு உயிரினத்தின் (மேல், நடு மற்றும் கீழ் என) மூன்று பகுதிகளில் வசிப்பவன் {த்ரிககுப்தாமா},
தூய்மைப்படுத்துபவன் {பவித்ரம்},
மங்கலம் நிறைந்த உயர்ந்தவன் {மங்களம்பரம்};(20)

அனைத்தும் தானே –ஆனால் அவற்றிலும் உயர்ந்தவன் –

56-அக்ராஹ்ய -யாருடைய உணர்த்தலுக்கும் அப்பால் பட்டவர் -புத்தியால் பிடிக்க முடியாதவர் –
57-சாஸ்வத -படைத்தல் காத்தல் அழித்தல் ஆகியவை விடாமல் தொடர்வதால் ஒய்வில்லாதவர்
58-கிருஷ்ண -முத் தொழில் விளையாட்டாலேயே இன்புறுவர்
59-லோஹிதாஷா–இவ் விளையாட்டாலாயே சிவந்த மலர்ந்த கண் உடையவர் –
60-பிரதர்தன -பிரளயத்தின் போது அனைத்தையும் அழித்து தன்னுள் ஒடுக்குபவர் –

61-ப்ரபூத -உலகமே அழிந்த போதும் நிலையான வைகுந்தச் செல்வத்தால் நிரம்பியவர்
62-த்ரிககுத்தாமா –லீலா விபூதியை விட மூன்று மடங்கு பெரிய நித்ய விபூதி –
63-பவித்ரம் -குற்றம் அற்ற தூய்மை உடையவன் –
64-மங்களம் பரம் -தீமைகளுக்கு எதிரான சிறந்த மங்களங்களின் இருப்பிடம் –

———————-

56-அக்ராஹ்ய –
க்ரஹிக்க முடியாதவன் –

ம்ருத் தந்த்வாதிரிவ குலால குவிந்தாதிநா அநதிஷ்டேய: அக்ராஹ்ய:

புத்தியால் மனத்தால் என்று சொல்ல வந்தது இல்லை -காரணத்வம் பிரகரணம்
மண் நூல் பொருள்களைக் கொண்டு குயவன் நெசவாளி பண்ணுவது போல் அல்லவே
கர்த்தா கார்யம் காரணம் வேறே வேறே இங்கு
இவனே த்ரிவித காரணம்
*ஹலோயத் இதி ண்யதந்த : । ஏவம் வேத்ய, மாந்ய:, இத்யாதயயோ அபி । யதா
* நைநமூர்த்வம் ந திர்யஞ்சம் ந மத்தய பரிஜக்ரபத், தைத்ரியம்
* ப்ரஹ்மாத்ய திஷ்டத்
* அதி திஷ்டத் யேக:-ஸ்வேதாஸ்வர, (அனைத்தையும் அதிஷ்டானம் செய்பவன் இவன் ஒருவனே )இத்யாதி ॥ 56 ॥

தானே காரணமாயும் கர்த்தாவாகவும்

வளவேழு உலகின் முதலாய வானோர் இறை -1-5-1-
ஆர்ந்த ஞானச் சுடராகி கீழ் மேல் அளவிறந்து -1-5-10-

மண் நூல் போன்ற காரணங்கள் குயவன் சேணியன் போன்றோரால் கையாளப் படுவது போலே
மற்று ஒருவரால் கையாளப் படாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கர்ம இந்த்ரியங்களால் அறிய முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

முழுவதுமாக எவராலும் அறியப்பட முடியாதவர் -அவாப்த சமஸ்த காமர் -எவராலும் எளிதில் அடைய முடியாதவர் –
குணங்களால் வியாபித்து இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

ஓம் அக்ராஹ்ய நம
கிரஹிக்க முடியாதவன்

—————

ஓம் அக்ராஹ்யாய நம:

கர்மேந்த்ரியைர் ந க்ருஹ்யதே இதி அக்ராஹ்ய:

கர்மேந்த்ரியைர் வாக்கு, கை, கால் முதலிய செயற்புலன்களால் ந க்ருஹ்யதே அறிந்துகொள்ளவோ (உணரவோ) இயலாததால் இதி அக்ராஹ்ய: பகவான் ‘அக்ராஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வாக்கு, கை, கால் முதலிய செயற்புலன்களால் அறியமுடியாதவராய் இருப்பதால் பகவான் ‘அக்ராஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ’ (தைத்ரீய உபநிஶத் 2.9)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

எதனிடமிருந்து மனதுடன் சொற்கள் அடைய முடியாமல் திரும்புகின்றனவோ…

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

——–

ஆக்ராஹ்யா – எளிதில் கிரகிக்க முடியாதவர்

ஆக்ராஹ்யாஹ் என்றால் ‘கர்மேந்திரியிஹி ந க்ரிஹ்யதே இதி ஆக்ராஹ்யாஹ்‘ என்று ஸ்ரீ ஆதி சங்கரர் சொல்வது போல் செயல் உறுப்புகளால் ‘பிடிக்க முடியாதவர்’ என்று பொருள். தைத்ரிய உபநிஷத் ‘யதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மனஸா சஹ – அவரை பேச்சின் மூலம் விவரிக்க முடியாது, மனத்தால் கருத்தரிக்க முடியாது’ என்று கூறுகிறது

யத் சக்ஷுஷா ந பஷ்யதி யேன சக்ஷூம்ஸி பஶ்யந்தி ததேவ ப்ரஹ்ம த்வம் வித்தி’ 


57-சாஸ்வத
நிரந்தரமாய் இருப்பவன்(கீழே ஸ்தவிர -த்ருவ -பார்த்தோம் -காலத்தால் மாறாமல் -ஸ்வரூபத்தில் உறுதி )

ஏவம்
ஸாஶ்வத : ।
அநவரத ஜகத் வ்யாபார ப்ரவாஹத்வேந நித்ய: ; யதா
* அப்யுச் சிந்நா ததஸ்து ஏதே சர்க்க(ஸ்ருஷ்டி )ஸ்தித் யந்தஸம்யமா–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-26- :, இத்யாதி ॥57 ॥

சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்கள்-தடை இன்றி லீலையாக
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே -ஸ்ரீ பாஷ்யம்
என்றுமோர் இயல்வோடு நின்ற என் திடரே -1-1-6-
நிலையான வேத பிரதிபாத்யன்

தாதா யதா பூர்வம் கல்பமதி –ப்ரஹ்ம ஸூத்ரம்

படைத்தல் -காத்தல் -அழித்தல்-இடையறாமல் செய்து ஒய்வில்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாக் காலங்களிலும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

எப்போதும் மாறாத ரூபத்தை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

ஓம் ஸாஸ்வதா நம
நித்யமானவன்

————

ஓம் ஶாஶ்வதாய நம:

ஶஷ்வத் ஸர்வேஶு காலேஶு பவதீதி ஶாஶ்வத:

ஶஷ்வத் ஸர்வேஶு காலேஶு ‘ஶஷ்வத்’ என்றால் அனைத்து காலங்களிலும் பவதீதி தோன்றுவதால் (அல்லது, இருப்பதால்) ஶாஶ்வத: பகவான் ‘ஶாஶ்வத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்துக் காலங்களிலும் தோன்றுவதால் (அல்லது, இருப்பதால்) பகவான் ‘ஶாஶ்வத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஶாஶ்வதம் ஶிவம் அச்யுதம்’ (நாராயண உபநிஶத் 13.1)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

எக்காலத்திலும் உள்ளவர், மங்களமானவர், தன்னிலையினின்று வழுவாதவர்…

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———–

ஷாஸ்வதா – அவர் நிரந்தரமானவர்

சாஸ்வதா என்றால் வற்றாத மற்றும் நிரந்தரமான ஒருவர் என்று பொருள். ஸ்ரீ ஆதி சங்கரரின் வார்த்தைகளில் ‘ஷாஷ்வத் ஸர்வேஷு காலேஷு பவதி இதி ஷாஷ்வதா – அவர் எல்லா நேரங்களிலும் இருக்கிறார்’.

மஹா நாராயண உபநிஷத் ( 13 வசனம் 3) கூறுகிறது–‘பதிம் விஸ்வஸ்யாத்மேஸ்வரம் ஷாஷ்வதம் சிவம் அச்யுதம்
நாராயணம் மஹாக்யேயம் விஸ்வாத்மானம் பராயணம்’ — அவர் பிரபஞ்சத்தின் பாதுகாவலர் மற்றும் தனிப்பட்ட ஆத்மாக்களின் ஆட்சியாளர்; நிரந்தரமான மற்றும் உயர்ந்த மங்களகரமான மற்றும் மாறாதவர். அவர் அறியப்படுவதற்கு மிகவும் தகுதியானவர், பிரபஞ்சத்தின் அவதாரம் மற்றும் உயர்ந்த இலக்காக இருப்பவர்.

‘நித்யம் ச ஷாஷ்வதம்சுத்தம் த்ருவம் அக்ஷரம் அவ்யயம்‘ என்கிறது 


58- கிருஷ்ண –
ஆனந்தம் அடைபவன் -சிருஷ்டி யாதிகளால்

ஏவம் வித(கீழ் சொன்ன அனைத்தாலும் )லீலா ரஸேந நிதாந்த நிர் வ்ருத :
க்ருஷ்ண: ।
ஆர்ஷம் நிருக்தம் க்ருஷி பூர்வாசகஶ் ஸப்தோ ணஶ்ச நிர்வ்ருதி வாசக: ।
க்ருஷ்ணஸ் தத் பாவ யோகாச்ச இதி –உத்யோக பர்வம்-॥ 58 ॥

இன்புறும் இவ்விளையாட்டு உடையானைப் பெற்று -3-10-9
கன்று மேய்த்து இனிது உகக்கும் காளை-

பூ இருப்பிடம் தான் மகிழ்ச்சிக்கு இருப்பிடம்
பூ பூமிக்கு ஆனந்தம் கொடுப்பவன் என்றுமாம்

இந்த ஸ்ருஷ்டி முதலிய லீலைகளின் ரசத்தினால் எப்போதும் மகிழ்ந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பெருமாள் அழுத இடங்கள் உண்டு
இவன் பெருமை அறியாத மூடர்கள் இருந்தாலும் சிரித்துக் கொண்டே இருப்பவன்
ஆனந்த பாவம் கூடியே
லீலையாலும் போக்கத்தாலும் ஆனந்தம்-நாம் லீலா ரஸத்துக்கு விஷயமாகால் போக ரஸத்துக்கு விஷயம் ஆக வேண்டும்

சச்சிதானந்த ரூபமாக இருப்பவர் -கருமை நிறம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

தனது கட்டளையிடும் சாமர்த்தியத்தினால் உலகை ஈர்ப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

ஓம் க்ருஷ்ணா நம
கரியான் ஒரு காளை
ஆனந்தமயன் -நீல மேக ஸ்யாமளன்
லீலா ரசம் அனுபவிப்பவன் -கார் முகில் வண்ணன்

—————

ஓம் க்ருஶ்ணாய நம:

க்ருஶிர்பூவாசக: ஶப்தோ ணஸ்ச நிர்வ்ருதிவாசக: |

விஶ்ணுஸ்தத்பாவயோகாஸ்ச க்ருஶ்ணோ பவதி ஶாஶ்வத: || (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.5)

மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:

“க்ருஶி” என்றால் இருத்தல் (என்றும் இருத்தல்) என்று பொருள்,  ‘ண’ ஆனந்தத்தைக் குறிக்கும். பகவான் விஶ்ணுவிடம் இந்த இரண்டு குணங்களும் ஒருங்கிணைந்து இருப்பதால் அவர் ‘க்ருஶ்ணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி வ்யாஸ வசனாத் ஸச்சிதானந்தாத்மக: க்ருஶ்ண:

இதி வ்யாஸ வசனாத் ஸ்ரீவ்யாஸரின் இந்தக் (மஹாபாரதத்தில் உள்ள) கூற்றின்படி ஸச்சிதானந்தாத்மக: ஸச்சிதானந்த சொரூபனான (அறிவும், இன்பமும் என்றும் நிலைபெற்றுள்ள) பகவான் விஶ்ணுவே க்ருஶ்ண: ‘க்ருஶ்ண’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் என்றும் ஆனந்தத்துடன் கூடியுள்ளார்; ஆனந்தத்துடன் என்றும் நிலைபெற்றுள்ளார். எனவே, அவர் ‘க்ருஶ்ணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் க்ருஶ்ணரின் திருநாமமே ஆனந்தம்; அவரது திருநாமத்தை உச்சரிப்பதும் ஆனந்தம்; அதை அன்றாடம் உச்சரிப்போரின் வாழ்க்கையிலும் ஆனந்தமே; அவரது சரித்திரமும், லீலைகளும் அவரது பெயருக்கேற்ப ஆனந்தமே உருவாக உள்ளது. அவரது சரித்திரமே ஆனந்தம், படிப்பவருக்கும் ஆனந்தம், கேட்பவருக்கும் ஆனந்தம். க்ருஶ்ணனே ‘ஆனந்த மயன்’ என்றால் அது மிகையாகாது.

க்ருஶ்ணவர்ணாத்மகத்வாத்வா க்ருஶ்ண:

க்ருஶ்ணவர்ணாத்மகத்வாத்வா பகவான் கருமை நிறமானத் திருமேனியை உடையவராதலால் க்ருஶ்ண: ‘க்ருஷ்ண’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(அல்லது) கருமை நிறமானத் திருமேனியை உடையவராதலால் பகவான் ‘க்ருஶ்ண’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘க்ருஶாமி ப்ருதிவீம் பார்த்த பூத்வா கார்ஶ்ணாயஸோ ஹல: |

க்ருஶ்ணோ வர்ணஸ்ச மே யஸ்மாத்தஸ்மாத் க்ருஶ்ணோSஹமர்ஜுன’ || (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.79)

மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் பகவான் கூறுகிறார்:

ஒ அர்ஜுனனே (பார்த்தனே)!!! நான் கரிய நுனி கொண்ட கலப்பையைப் போல பூமியை உழுகிறேன். மற்றும், கருமையான திருமேனியைக் கொண்டிருக்கிறேன். எனவே, நான் ‘க்ருஶ்ணன்’ என்று அழைக்கப்படுகிறேன்.

இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

————

கிருஷ்ணா – எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர்

எப்பொழுதும் பேரின்ப நிலையில் இருப்பவர் (அவரது படைப்பு போன்றவற்றுடன்)

ஸ்ரீ ஆதி சங்கரரின் கூற்றுப்படி, ‘கிருஷ்‘ என்பது இருப்பு அல்லது சத் மற்றும் ‘ந‘ என்பது ஆனந்தம் அல்லது ஆனந்தத்தைக் குறிக்கிறது. எனவே கிருஷ்ணர் சச்சிதானந்த ஸ்வரூபியை அல்லது நிரந்தரமாக பேரின்ப நிலையில் உள்ளவரைக் குறிக்கிறது.

ஸ்ரீ பராசர பட்டர் ‘கிருஷி‘ என்பது ஒரு பாத்திரம் அல்லது கொள்கலன் அல்லது நிலம் (பூ அல்லது பூமி அதாவது நிலம்) மற்றும் ‘ந‘ என்பது பேரின்பத்தைக் குறிக்கிறது. எனவே கிருஷ்ணர் என்பது படைப்பின் விளையாட்டில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதால் மகிழ்ச்சியை அடைவதாக பொருள்படும்.

துன்பமும்இன்பமும்ஆகியசெய்வினை ஆய், உலகங்களும்ஆய்
இன்பம்இல்வெம்நரகுஆகிஇனியநல் வான்சுவர்க்கங்களும்ஆய்,
மன்பல்உயிர்களும்ஆகிபலபல மாயமயக்குகளால்
இன்புறும்இவ்விளையாட்டுஉடயானைப்பெற்று ஏதும் அல்லல்இலனே.–நம்மாழ்வார் திருவாய் மொழி 3.10.7ல் இறைவனின் படைப்பின் செயலை விளையாட்டாக விவரிக்கிறார்.

 கிருஷ்ணா ‘ என்ற சொல்லுக்கு அடர் நிறம் என்று பொருள். தியான ஸ்லோகங்களில் இறைவனை ‘மேக ஷ்யாமம் அல்லது மேக வர்ணம் அல்லது அம்புதா ஷ்யாமம் – மழை பொழியும் மேகம் போன்ற கருநீலம்’ என்று வர்ணிப்பதைப் பார்த்தோம். ஆண்டாள் தனது திருப்பாவையில் தனது முதல் பாசுரத்தில் இறைவனை ‘கார் மேனி செங்கண் கதிர் மத்தியம் போல் முகத்தான்’ என்று வர்ணிக்கிறாள் – கருமேகம் போன்ற நிறமும், தாமரை சிவந்த கண்களும், சூரியனைப் போல பிரகாசிக்கும், சந்திரனைப் போல அமைதியான பளபளப்பான முகமும் கொண்டவள்.

‘கிருஷ்ணா’ என்ற நாமத்தை ‘ஆகர்ஷனா’ அல்லது காந்த ஈர்ப்பு உள்ளவர் என்றும் பொருள் கொள்ளலாம்!


59-லோஹிதாஷா –
சிவந்த கண்களை யுடையவன் –

மே ராம ராஜீவ லோசனன் –
வராஹ புட பத்ர லோசனன்

ஈத்ருந் (இதுபோன்று)நிர்வ்ருதிபி ஸூ நரம்ய ராஜீவதாம் ரநயந:
லோஹிதாக்ஷ: ॥ 59 ॥

ஐஸ்வர்ய செருக்கு –ஸமஸ்த காரணத்தால் -சேஷித்வத்தால் -வாத்சல்யத்தால் -சிவந்த -செங்கண் மால்
அநலோசித அசேஷ விசேஷ லோக சரண்யன்
சிக்கென பிடித்தேன் செங்கண் மால் -ஸ்ருஷ்ட்டி பிரயோஜனமானாலும் சிவக்கும்
கண்கள் சிவந்து
செய்ய கோலத்தடம் கண்ணன்

ஸ்வாபாவிக செந்தாமாரைக் கண்ணன் -முன் சொல்லிய ஆனந்தத்தால் மேலும் சிவக்கும்
கண்கள் சிவந்து பெரியவை -8-8-1-
வாத்சல்யத்தாலும் கண்கள் சிவக்கும்-

இந்த மகிழ்ச்சிக்கு அடையாளமாக சிவந்த தாமரைக் கண்களை யுடையவர்-ரக்த ராஜீவ லோசனன் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிவந்த கண்களை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

விரோதிகளிடத்தில் கோபத்தினால் சிவந்த கண்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

ஓம் லோகிதாஷா நம
செந்தாமரைக் கண்ணன் -புண்டரீகாக்ஷன்

——————–

ஓம் லோஹிதாக்ஷாய நம:

லோஹிதே அக்ஷிணீ யஸ்யேதி லோஹிதாக்ஷ: 

லோஹிதே சிவந்த அக்ஷிணீ திருக்கண்கள் யஸ்யேதி உடையவர் ஆதலால் லோஹிதாக்ஷ: பகவான் ‘லோஹிதாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

சிவந்த திருக்கண்களைக் கொண்டிருப்பதால் பகவான் ‘லோஹிதாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அஸாவ்ருஶபௌ லோஹிதாக்ஷ:

அவர் உயர்ந்தவர்; சிவந்த திருக்கண்களை உடையவர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———–

லோஹிதாக்ஷா – கண்கள் சிவந்திருக்கும்

லோஹிதா என்றால் சிவப்பு மற்றும் அக்ஷ என்றால் கண், எனவே லோஹிதாக்ஷ என்றால் தாமரை மலரில் உள்ள கண்கள் சிவப்பாக இருக்கும். ஸ்ரீ ஆதி சங்கரர் சொல்வது போல், ‘லோஹிதே அக்ஷிணீ யஸ்ய இதி லோஹிதாக்ஷ: கண்கள் சிவந்திருக்கும்’.

தைத்ரிய ஆரண்யம் கூறுகிறது ‘ஸமா விருஷபோ லோஹிதாக்ஷஹ் – அவர் உயர்ந்தவர் மற்றும் சிவந்த கண்களை உடையவர்.’

ஸ்ரீ பராசர பட்டர் இரண்டு அர்த்தங்களைக் கூறுகிறார், ஒன்று அதீத மகிழ்ச்சியின் விளைவாக அவரது கண்கள் சிவந்தன, மற்றொன்று தீயவர்கள் மீதான கோபத்தின் விளைவாக.

இதற்கு முன் ஸ்லோகம் 5 இல் இதே அர்த்தத்துடன் ‘புஷ்கரக்ஷ‘ என்ற பெயரை ஏற்கனவே பார்த்தோம்.


60-ப்ரதர்தந-
சம்ஹரிப்பவன் -பிரளய காலத்தில் எல்லா வற்றையும் அழிப்பவன்-

ஸர்வேஷாம் ஸம்ஹத்ருத்வ ச ஆஹ
ப்ரதர்தந: ।
தர்திர் ஹிம்ஸா கர்மா । யதா
* யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் (ப்ராஹ்மணன் க்ஷத்ரியர் நான்கும் உப லக்ஷணம் )ஸ உபே பவத ஓதந-கட -2-24-:,
* அத்தா சராசர க்ரஹணாத்-1-2-9- இதி ॥ 60 ||

யாவகை உலகமும் யாவரும் அகப்பட -ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுதும் அகப்படக் கரந்து
ஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயன் -திரு வாசிரியம் -7-

பிரளய காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிரளய காலத்தில் பூதங்களை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

சத்ருக்களைத் துன்புறுத்துவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

ஓம் ப்ரதர்தன நம
பிரளய காலத்திலும் அனைத்தையும் திரு வயிற்றிலே வைத்து ரக்ஷிப்பவன்

ஸம்ஹாரமும் ரக்ஷணத்தில் ஒரு வகையே கரந்து –

——————

ஓம் ப்ரதர்தனாய நம:

ப்ரளயே பூதானி ப்ரதர்தயதி ஹினஸ்தீதி ப்ரதர்தன: 

ப்ரளயே ப்ரபஞ்சத்தின் அழிவுக் காலத்தில் (ப்ரளயம்) பூதானி ஜீவராசிகளை ப்ரதர்தயதி ஹினஸ்தீதி அழிப்பதால் (ப்ரதர்தன என்றால் அழிப்பது என்று பொருள்) ப்ரதர்தன: பகவான் ‘ப்ரதர்தன’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் அனைத்தும் (நான்முகரின் நாள் முடிவிலும், அவரது ஆயுள் முடிவிலும்) அழிக்கப்படும் காலத்தில் பகவான் அனைத்து ஜீவராசிகளையும் அழிப்பதால் அவர் ‘ப்ரதர்தன’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


பிரதர்தனா – பிரபஞ்சம் கரையும் நேரத்தில் உலகை அழிப்பவர்

அடிப்படையில் இந்த வார்த்தைக்கு ‘அழிப்பவர்’ என்று பொருள். இந்த நாமம் ‘தார்திஹ்‘ என்ற மூலச் சொல்லிலிருந்து உருவானது – அழிவை உண்டாக்கும். பிரதர்தா என்றால் மொத்த அழிவு.

ஸ்ரீ பட்டர், கதா உபநிஷத்தில் இருந்து பின்வருவனவற்றைத் தருகிறார் – ‘யஸ்ய பிரம்ம ச க்ஷத்ரம் ச உபே பவதா ஓதனா‘ – மகா பிரளயத்தின் போது (பிரளய) பிராமணர்களையும் க்ஷத்திரியர்களையும் (அதாவது பிரபஞ்சத்தின் அனைத்து உயிரினங்களையும்) உணவாகக் கொண்டவர். .


61-ப்ரபூத –
சம்ருத்தன் -நிரம்பியவன் -போக்ய போக ஸ்தான போக உபகரணங்களால் நிரம்பிய -பரமபதம் உடையவன் –
அழியாத சம்பத்தை உடையவன்

ஸர்வ ஸம்ஹாரே அபி
ப்ரபூத : – –
ஸம்ருத்த :, நித்ய நிர் மர்யாத (அளவிறந்த )போக உபகரண பரம பதத்வாத் ॥ 61 ||

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்

கொள்ளக் கொள்ளக் கோதிலா மணி வண்ணன்

அழியாதவையும் அளவற்றவையுமான போக சாதனங்கள் நிரம்பிய பரமபதத்தை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஞானம் ஐஸ்வர்யாதி குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

மேலான ஆகாசாதி பூதங்களைப் படைத்தவர் -உயர்ந்தவன் -குணங்களால் பரவியிருப்பவன்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் ப்ரபூத நம
ஸமஸ்த கல்யாண குணங்களை உடையவன்

——————

ஓம் ப்ரபூதாய நம:

ஞான ஐஶ்வர்யாதி குணை: ஸம்பன்ன: ப்ரபூத: 

ஞான ஐஶ்வர்யாதி குணை: ஞானம், செல்வம் முதலிய குணங்கள் ஸம்பன்ன: நிரம்பியவராதலால் ப்ரபூத: பகவான் ‘ப்ரபூத’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஞானம், செல்வம் முதலிய குணங்கள் நிரம்பியவர். எனவே, அவர் ‘ப்ரபூத’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

பிரபூதா – மகத்துவம் கொண்டவர்

ஐசுவரியமும், எப்பொழுதும் நிறைந்தவர், ஞானம், மகத்துவம் மற்றும் பிற குணங்கள் கொண்டவர்.

உண்மையில் இதன் பொருள் ‘முழுமையாக அல்லது நிறைவாக பிறந்தது’ அல்லது ‘சூப்பர்-பீயிங்’. ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுகிறார் ‘ஞான ஐஸ்வர்யாதிபிஹ் குணைஹி ஸம்பன்னஹ் பிரபூதா – ஞானம் மற்றும் தெய்வீகம் போன்ற தெய்வீக பண்புகளால் வளப்படுத்தப்பட்டவர்’. அவர் ஞானம், ஐஸ்வர்யம், பலா, வீர்யம், சக்தி மற்றும் தேஜஸ், அதாவது ஷட்-குணங்கள், பிரபஞ்சம் கலைக்கும் நேரத்தில் கூட அனைத்தையும் அப்படியே பெற்றுள்ளார்.


62-த்ரி ககுத தாமா –த்ரிக குப்தாமா –
த்ரிபாத் விபூதியான -பரம பதத்தை இருப்பிடமாக உடையவன்

மூன்று மடங்கு -அளவிறந்த என்ற அர்த்தத்தில் -‘ த்ரி ககுப் தாமா-பாட பேதம்

தத்ர பரமாணு மாத்ரம் ஹி ஸ்ருஷ்டி ஸம்ஹார கோசர மிதம் விஶ்வம் । ததேவத் ஸ்பஷ்டயதி
த்ரிககுத்தாமா இதி । ‘ த்ரி ககுப் தாமா ” இதி கேசித் ।
உபய தாப்ய வயவா லக்ஷ்யந்தே । த்ரிககுத் த்ரிபாத் விபூதி லக்ஷணம்
பரமம் தாம யஸ்ய ஸ த்ரிககுத்தாமா ।

ஆம்நாயதே ஹி
* பாத அஸ்ய விஸ்வா பூதாநி த்ரிபதாஸ் யாம்ருதம் திவி -புருஷ ஸூக்தம்  இதி ।
த்ரிபாத் பாத இதி பரம மஹத் பரமாணு பரிமாணௌ வ்யாக்யா தவ் ।
* யஸ்ய அயுதாயுத (பத்தாயிரத்தில் பத்தாயிரத்தில் ஒரு லேசம் )அம்சாம்ஸோ விஸ்வ சக்திர் இயம் ஸ்திதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-53- ,
* மேரோரி வாணுர் யஸ்யை தத் இதி ।

அதவா
த்ரி ககுச் சந்தோ ஜ்ஞாநாதி குண ஷட்க யுகல த்ரி கல க்ஷக(மூன்று இரட்டைகள் ):, தஸ்ய தாம தர்மீ, பூர்ண ஷாட் குண்ய இத்யர்த : ।
அதோ ஹ்யேநம் த்ரியுக மாஹு: ।

யத்வா, ஆர்ஷ நிருக்தம் த்ரிககுத் (மூன்று திமில் கொம்புகள் )। யதா மோக்ஷ தர்மே ஸ்வயம்
*ததை வார்ஸ த்ரி ககுதோ வாராஹம் ரூப மாஸ்தித : ।
த்ரி ககுத்தேந விக்யாதஶ் ஸரீரஸ்ய ப்ரமா பணாத் இதி । அஸ்மிந் பஷே தாமேதி நா மாந்தரம், ஜ்யோதிரிதி சார்த : (இந்த பக்ஷத்தில் தாமம் ஒளி என்று பிரித்து அர்த்தம் கொள்ள வேண்டும் )॥ 62 ||

தனிமாத் தெய்வம் -அமரர்கள் அதிபதி -விண்ணவர் பெருமான் –
த்ரி யுகம் மூன்று இரட்டைகள் ஞான பல -ஐஸ்வர்ய வீர்யம் -சக்தி தேஜஸ் –
க்குத் -கெட்டியான முகப்பு -மூன்று முகப்புகள் உள்ள மஹா வராஹம்
த்ரிக குப்தாம ஒளி உடைய -பெரும் கேழலார் -திருவிருத்தம் -45
கோல வராஹம் ஒன்றாய் -10-10-7-

த்ரிபாத் விபூதி என்னும் பரம பதத்தை உடையவர் -த்ரிககுத் -மூன்று கொண்டைகளுடன் கூடிய வராகமாக அவதரித்தவர்-
தாம -ஒளியுள்ளவர்-என்று இரண்டு திரு நாமம் ஆகவுமாம் –
இப்படி ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் எல்லாம் அவனுடைய விபூதியிலே அணு அளவேயான லீலா விபூதியை அன்றோ –
த்ரிககுத்தாமா என்றும் த்ரிககுப்தாமா என்றும் சொல்வர் -இரண்டாலும் அவயவங்கள் குறிக்கப் படுகின்றன –
அன்றிக்கே -த்ரிககுப் -எனபது ஞானம் பலம் -ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் -என்று மூவிரண்டுகளாய்-அதற்குத் தர்மியானவன் –
ஆறு குணங்களால் பூரணமானவன் -அதனாகே த்ரி யுகம் என்று கூறப்படுகிறான் -ஸ்ரீ பராசர பட்டர் –

மேரோர் இவ அணு யஸ்யைத்
ததைவ ஆஸம் த்ரி ககுதோ வாராஹம் ரூபம் ஆஸ்தித த்ரிக குத தேந விக்யாத சரீரஸ்ய பிரமாண பாத் –என்று தேஜஸ்ஸையும் சொல்லும்

மேல் கீழ் நடு ஆகிய மூவுலகங்களுக்கும் இருப்பிடமானவர் த்ரிககுப்த்தாம -என்று பாடம் -ஸ்ரீ சங்கரர் —

த்ரிககுப்தாம -மூன்று உலகங்களை உடையவர் -த்ரி க்குத் தாம -க்குத் -திமில் –இரு தோள்கள் ஆகியவற்றுடன் கூடிய
வராஹமாக அவதரித்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் –த்ரிக குப்தாமா நம
ஸ்ரீ மஹா வராஹ திருவவதாரம் எடுத்தவன்
மூன்று கொம்புகள்
திரிபாத் விபூதி உடையவன்

——————

61.ஓம் த்ரிககுப்தாம்னே நம:

ஊர்த்வாதோமத்யபேதேன திஸ்ருணாம் ககுபாமபி தாமேதி த்ரிககுப்தாம இத்யேகமிதம் நாம

ஊர்த்வாதோமத்யபேதேன மேல், நடு, கீழ் என்று பிரிக்கப்படும் திஸ்ருணாம் மூன்று ககுபாமபி இடங்களையும் தாமேதி தமது இருப்பிடமாகக் கொண்டிருப்பதால் த்ரிககுப்தாம பகவான் ‘த்ரிககுப்தாம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் இத்யேகமிதம் நாம (த்ரிககுப், தாம என்று இரண்டாகப் பிரிக்காமல் ‘த்ரிககுப்தாம’ என்ற) இது ஒரே திருநாமமாகும்.

ஸ்வர்க்கம் முதலான மேல் உலகங்களையும், பூமி முதலான மத்திய உலகங்களையும், அதலம் முதலான கீழ் உலகங்களையும், ஆகிய இந்த மூன்று உலகங்களையும் தனக்கு இருப்பிடமாகக் கொண்டிருப்பதால் பகவான் ‘த்ரிககுப்தாம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

திரிககுப்தாமா – அவர் உணர்வு மூன்று நிலைகளின் ஆதரவாளர்

  • திரி என்றால் மூன்று;
  • ககுப் என்றால் திசை அல்லது ககுட் என்றால் கூம்பு (காளை, ஒட்டகம் அல்லது சிகரம் அல்லது மலையின் முதுகில் உள்ள கூம்பு போன்றவை) அல்லது விலங்கின் கொம்பு; அல்லது kakub மற்றும் kakut ஆகியவை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன
  • தாமா என்பது தங்குமிடம் அல்லது குடியிருப்பு, மேலும் ஒளி அல்லது பிரகாசத்தின் கதிர்

ஜாக்ரத், ஸ்வப்னா மற்றும் சுஷுப்தி (விழிப்பவர், கனவு காண்பவர் மற்றும் உறங்குபவர்) ஆகிய மூன்று உணர்வு நிலைகளுக்கும் அவர் அடிப்படை அல்லது ஆதரவு

த்ரி-ககுப்-தாமா என்றால், இந்த பிரபஞ்சத்தைப் போல் மூன்று மடங்கு பெரிய பரம-பதமாகத் தன் இருப்பிடத்தைக் கொண்டவன் என்று ஸ்ரீ பட்டர் விளக்கம் தருகிறார்

த்ரி-ககுத் என்பது பகவானின் அவதாரமான வராஹா, மூன்று கொம்புகள் கொண்ட பன்றி என்று குறிப்பிடுகிறது. த்ரி-ககுத்துக்கான இந்த விளக்கத்தை மஹாபாரதத்தில் உள்ள மோக்ஷ தர்மத்திலிருந்து பின்வரும் ஸ்லோகம் ஆதரிக்கிறது –
ததைவ ஆசம் த்ரி-ககுடோ வராஹம் ரூபம் ஆஸ்திதா |
த்ரிககுத் தேன விக்யாதஹ் ஷரீரஸ்ய பிரமாபனாத் || (மோட்ச தர்மம் 343-63)’  “பின்னர் நான் மூன்று கொம்புகள் கொண்ட ஒரு பன்றியின் வடிவத்தை எடுத்தேன். அதனால் நான் ‘திரி-ககுட்‘ என்று அறியப்பட்டேன். அந்த வடிவில் நான் ராட்சசனை (ஹிரண்யாக்ஷனை) கொன்றேன்.


63-பவித்ரம் –
பரிஸூத்த ஸ்வரூபம்-பவித்ரமான இருந்து பவித்ரத் தன்மை அளித்து அருளுபவர்
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -புனிதன் 

ஈத்ருக் குண விபவ ரூப நிரூபக ஸோபாநேந தந் நிரூப்யம்
ஸ்வரூப மநுப்ரவிஸதிம்
பவித்ரம் । புவ :
* அஶித்ராதிப்ய இத்ரோத்ரவ், இதீத்ர ப்ரத்யய:,
*கர்தரி சர்ஷி தேவேதயோ :, இதி வா ॥ 63 ॥

இவ்வாறு குணங்கள் சேஷி ப்ராப்யம் ப்ராபகம் -சொல்லி -வைபவம் விபவம் -ரூபம் சொல்லி
படிக்கட்டில் ஏறி ஸ்வரூபம் விளக்கம் தொடக்கம்

பன்னலார் பயிலும் பவித்ரனே -நித்யர் அனுபவம் அழுக்கு உள்ளம் கொண்ட நமக்கும் அருளும்
அமலங்களாக விளிக்கும்
பூதராக்கும் –
தீர்த்தன்

அமலன் விமலன் நிமலன் நின்மலன் -அரங்கத்தம்மான் –
பவித்ராணாம் பவித்ரம் -மங்களா நாஞ்ச மங்களம்
தீர்த்தன் -உலகு அளந்த -2-8-6-
பன்னலார் பயிலும் பரனே பவித்ரனே -2-3-7-
அனுபவ விரோதி போக்கும் சுத்தி
விண்ணவர் பெருமான் படிவானமிறந்த பவித்ரன் -2-3-9-
அமலங்களாக விழிக்கும் -1-9-9-
ச்ரமணீ விதுர ரிஷி பத்நிகளை பூதராக்கின புண்டரீ காஷன்

குணங்கள் -மகிமைகள் -ரூபம் இவைகளைப் படிகளாகக் கொண்ட பரிசுத்த ஸ்வரூபத்தை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

குணங்கள் ஐஸ்வர்யம் ரூபம் இவற்றை விளக்கி இது முதல் ஸ்வரூபத்தை விளக்கத் தொடங்குகிறார்

பரிசுத்தப் படுத்துபவர் -பரிசுத்தப் படுத்தும் ரிஷி -தேவதை -வஜ்ராயுதத்திலிருந்து-இடியில் இருந்து – காப்பவர் -ஸ்ரீ சங்கரர் —

புனிதமாக்குபவர் -வஜ்ராயுதத்தைப் போலே காப்பவர் -சக்ராயுதத்தை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் பவித்ரம் நம
பவானத்தவமே உரு எடுத்தவன் -சர்வத்தையும் பரிசுத்தம் ஆக்கி அருளுபவர்

—————

ஓம் பவித்ரே நம:

யேன புனாதி யோ வா புனாதி ரிஶிர்தேவதா வா தத் பவித்ரம் 

யேன புனாதி எவர் மூலமாக (அனைத்தும், அனைவரும்) தூய்மை படுத்தப்படுகின்றனரோ யோ வா புனாதி (அல்லது) எவர் அனைத்தையும் தூய்மையாக்க வல்லவரோ ரிஶிர்தேவதா வா தத் அந்த முனிவரையோ, தேவதையையோ பவித்ரம் ’பவித்ரம்’ என்று அழைப்பர். பகவான் தானும் தூய்மையாய் இருந்து, அனைவரையும் தூய்மையாக்குவதால் அவர் ‘பவித்ர’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புவ: சம்ஞாயாம்’ (பாணினி சூத்ரம் 3.2.185)

பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:

‘பூ’ (புனிதம்) என்ற வேர்ச்சொல்லுடன் ‘இத்ர’ என்ற விகுதி சேர்ந்து, தூய்மையாக்கவல்ல என்ற பொருளில் (அந்த செயலின் காரணியைக் குறிக்கும் வகையில்), பவித்ர என்ற சொல்லாக உருவெடுக்கிறது.

கர்தரி சர்ஶிதேவதயோ’ (பாணினி ஸூத்ரம் 3.2.186)

பாணினி ஸூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:

‘பூ’ (புனிதம்) என்ற வேர்ச்சொல்லுடன் ‘இத்ர’ என்ற விகுதி சேர்ந்து, தூய்மையாக்கவல்ல ஒரு ரிஷியையோ அல்லது தேவதையையோ குறிக்கும் வகையில், பவித்ர என்ற சொல்லாக உருவெடுக்கிறது.

இதி பகவத்பாணினிஸ்மரணாத் இத்ரப்ரத்யய: | இந்த பாணினி சூத்திரங்களின் படி ‘பூ’ (புனிதம்) என்ற சொல்லுடன் இத்ர என்ற விகுதி சேர்ந்து ‘பவித்ர’ என்ற சொல்லாக உருவெடுக்கிறது.

இந்த இரு சூத்திரங்களின் படியும், பவித்ர என்ற சொல் பகவானைக் குறிக்கும். அவர் தூய்மைபடுத்தும் காரணியாகவும் இருக்கிறார், தானே அனைவரையும் தூய்மை படுத்துபவராகவும் இருக்கிறார்.

பகவான் தானும் தூய்மையாய் இருந்து, அனைவரையும் தூய்மையாக்குவதால் அவர் ‘பவித்ர’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————

பவித்ரம் – அவர் தூயவர்

பவித்ரம் என்றால் முழுமையான தூய்மை. அவர் தூய்மையானவர் மற்றும் அவரது பக்தர்களை தூய்மையாக்குகிறார். இங்குக் குறிப்பிடப்படும் தூய்மை என்பது, அவர் கொண்ட மனத்தூய்மையே, அவரைத் தியானிப்பவர்களுக்குத் தருகிறது. அதனால்தான் ‘கோவிந்தேதி சதா ஸ்நானம், கோவிந்தேதி சதா ஜபம் – கோவிந்தைக் குறிப்பிடுவது குளிப்பதைப் போல தூய்மைப்படுத்துகிறது. கோவிந்தனைப் பற்றிய எண்ணம் ஒரு நிலையான தியானம் போன்றது

இந்திரனின் (பாவி) இடியிலிருந்து பாதுகாப்பை (த்ராயதே) வழங்குபவர். வேதாந்தத்தில் இந்திரன் என்பது மனதை (இந்திரியாணாம் ராஜா இந்த்ரா – மனம்) குறிக்கிறது என்றும், மனதின் இடிமுழக்கம் ஒரு சாதகனின் அனைத்து சாதனைகளையும் அழிக்கும் என்றும், ஸ்ரீ விஷ்ணுவின் இடைவிடாத தியானம் மட்டுமே இத்தகைய கவனச்சிதறல்களிலிருந்து பாதுகாப்பை அளிக்கும்

பரீக்ஷித்தை உயிர்ப்பிப்பதன் மூலம், கிருஷ்ணர் தனது தூய்மையை வெளிப்படுத்துகிறார்.


64-மங்களம் பரம் –
சிறந்த மங்களம் –தோஷங்களுக்கு எதிர் தட்டாய் உள்ளவன் –

பவித்ரம் சொல்லி மங்களம் பரம் சேர்ந்தே -தூய்மைக்கும் மங்களத்துக்கும் -தீர்த்தம் விளக்கு –

ஸமஸ்த ஹேய ப்ரத்ய நீகம்
மங்கலம் பரம் ।
மங்கிர் கத் யர்த(சென்று அடைதல் பொருளில் ):, *மங்கேரலச ।

ஸ்வயம் ப்ரபா நந்த தயா கல்யாணைக தாநம் (உயர் நலம் உடையவன் இடம் நமக்கு
உணர் முழு நலம் -முழுமையான பக்தியும் ஞானமும் -பூர்த்தி யாக ஏற்படும் )। பரமித்ய அநந்த்ய பரம் (எல்லை அற்ற )।

ஸத்யபி நைஸர்கிக நித்ய நிரவதிக நிஸ்ஸீம
நிஸ் ஸம்க்ய ஸ்வ குண விபவாநுபவ வைபவே ஸதாதநே , ஸ்வத ஏவா ஸேஷ பரிபந்தி ஸாந்த அநந்த அநுபமாநுகூலதம
ஸ்வயம் ப்ரபாத்மாநுபவ நிபந்தந நிரங்குஸ அநந்தந்யக் க்ருத நிஸ் தரங்க: ஸ்திமிதாம்ருத மஹாேததிந்
யாயயா பராவஸ் தயைவ ஸர்வ நிரபேக்ஷா நித்ய த்ருப்ஶ்சேதி
ஸக்ய நிரூபணோ பகவாந் । ந்யரூபி ச

ஸக்ய நிரூபணோ பகவாந்–இவ்வாறு நிரூபணம்
ஸர்வ நிரபேக்ஷா –வேறே எதையும் எதிர்பார்க்காமல்
ஸத்யபி -இப்படி இருக்கும் போதும்
நைஸர்கிக -இயற்கையாக
நித்ய –முடிவில்லாத
நிரவதிக –அளவில்லாததாய்
நிஸ்ஸீம-எல்லை இல்லாததாய்
நிஸ் ஸம்க்ய -எண்ணிக்கை இல்லாததாய்
ஸ்வ குண விபவாநுபவ வைபவே ஸதாதநே , ஸ்வத ஏவா -தானே தன்னை அனுபவித்திக் கொண்டு பரம திருப்த்தி
அஸேஷ தோஷ பரிபந்தி
ஸாந்த
அநந்த
அநுபமாநுகூலதம
ஸ்வயம் ப்ரப ஆத்மாநுபவ நிபந்தந
நிரங்குஸ -அளவிட முடியாத
அநந்த
ந்யக் க்ருத -ஆர்பரிப்பே இல்லாமல்
நிஸ் தரங்க: -அலையே இல்லாத
ஸ்திமித
அம்ருத
மஹாேததிந் யாயயா
பராவஸ் தயைவ–நித்ய சாந்தோதித தசை -இரண்டுமே உண்டே –பர அவஸ்தையில் தன்னுடைய ஸ்வரூப குண அனுபவம்
வரதராஜ ஸ்த்வம் -13 கூரத்தாழ்வான்
நித்ய த்ருப்ஶ்சேதி-நித்தியமாக திருப்தி

ஆனந்த மயோ அப்யாஸத்-1-1-13-
ஆனந்தாதய பிரதானஸ்ய -3-3-11 —
அக்ஷராதி யாம் த்வவரோத-3-3-33-, இத்யாதவ் ।

அவாதி ச
* ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் ஆநந்தோ ப்ரஹ்ம
*ஸாந்தி ஸம்ருத்தம் அம்ருதம் ,
* யத்ர லக்ஷயேச் சாந்த மநுத்வா தம தரங்க
த்ருப்தம் அம்ருதம் பரம் ப்ரஹ்ம தத்ர தாரயேதித்யேஷா நைஷ்டிகீ தாரணா;
* அதரங்கம நிர்தேஶ்ய மபதா நந்த லக்ஷணம் இத்யாதிபி: ।

ஞானம் தர்மம் இதுக்கு பிரமாணம் –மேல் ஞானி ஆனந்தம் உடையவன் எண்பதுக்கும் பிரமாணங்கள்
ஜ்ஞப்தி மாத்ர ஏக ரஸ வாதஸ்து, அகண்டகண்டநே ஸதஸ கண்டித (இதற்கு மேல் கண்டிக்க முடியாத நூல் ): ।
ஸம்விதா நந்த (ஸச்சிதானந்த )ஸக்த்யைஶ்வர்யாதி குணகோ அபி, அதிவேலம் ஆநகூல்யேந ஸ்வயம் ஸ்வஸ்மை ப்ரகாஸத இத்யஸ்ய ஜ்ஞாநாநந்த வ்யபதேஸ :;
ந து ஜ்ஞப்தி ஸுக மாத்ர தயா । யதா மணிதரணி தீபாதிகம் ஸ்வ ப்ரபா விஷயம் ப்ரகாஸயதி, ஸ்வயம் ச ததநபேக்ஷம் ப்ரகாஸதே,
ததஸ் தேஜஸ் தேஜஸ் வீதி ச வ்யபதிஶ்யதே ।
ஏவம், அயம் ஸ்வ குணேந ஜ்ஞாநேந ஸர்வம் அபரோக்ஷயதி, ததந பேக்ஷஶ்ச ஸ்வயம் ப்ரகாஸதே,
ஜ்ஞாநம் ஜ்ஞாதேதி ச வ்யபதிஶ்யதே (ஆனந்தப்படுகிறார் என்றாலே ஞானம் ஞானி இரண்டும் உண்டே )।

ச குண நிர் குண ஸ்ருதி போல் இங்கும் சமன்வயப்படுத்த வேண்டும்
ஒளியாகவும் ஒளியுடையவையாகவும் மணி ஸூர்யன் தீபம் இருப்பது போல்

* தத் குண ஸாரத்வாத் தத்யபதேஸ : ப்ராஜ்ஞவத், இதி ந்யாயேந வா ஜ்ஞாநாதி வ்யபதேஸ : ।
ஏவம் ச ஸத்யம் ஜ்ஞாநம்

விஞ்ஞானமே யாகம் பண்ணுகிறது சொல்வது போல் -குண சாரமாகவே இருப்பதால் விஞ்ஞாதாவையே விஞ்ஞானம் என்னுமா போல்
* யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வ வித் இத்யாதயோ ந பரஸ்பர முபருந்த்யு: (விரோதிக்காத ஸ்ருதி வாக்கியங்கள் )। ததா வார்ஷ்ணே யாத்யாத்மே ஜீவ ப்ரஸங்கே
* யதா ஜீவ: ப்ரஸாந்தாத்மா ஹ்ரஸ்வோ வா யதி வா மஹாந் ।
ஜ்ஞாநாத் மாநம் ததா வித்யாத் புருஷம் ஸர்வ ஜந்துஷு । ஸோ அத்ர வேத யதே வேத்யம் இதி ॥ 64 ॥

ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் –
உயர்வற உயர் நலம் உடையவன்
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம
ஆனந்தோ ப்ரஹ்ம சாந்தி சம்ருத்தம் அம்ருதம்
உணர் முழு நலம் -1-1-2–கட்டடங்க ஞானமும் ஆனந்தமாய் இருக்கும்

தோஷம் அனைத்திற்கும் எதிர்தட்டாய் எல்லையற்ற கல்யாண குணங்களை யுடையவர் –
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கத -அவாப்த சமஸ்த காமன் -பர அவஸ்தை -நித்ய த்ருப்தன்-
ஞான மாத்ர ரசம் வாதம் கண்டனம் –
ஞான ஸ்வரூபம் ஆனந்த ஸ்வரூபம் -ஞானத்தாலும் குணத்தாலும் பிரத்யஷமாகப் பார்க்கிறான் -அபேஷிக்காமல் பிரகாசிக்கிறான் –
அதனால் ஞானம் என்றும் ஞானம் உடையவன் என்றும் சொல்லுகிறது –
அவனது கல்யாண குணங்களில் ஞானம் சாரம் என்பதால் ஞான ஸ்வரூபம் என்னவுமாம் –ஸ்ரீ பராசர பட்டர் —

தத் குணா சாரத்வாத் தத் வியபதேச பிரஞ்ஞவத் -2-3-29-
ய ஸர்வஞ்ஞ சர்வவித்
யதா ஜீவஸ் ப்ரசாந்த்தாத்மா ஹ்ருஸ்வே வா எதி வா மஹான் ஞானாத்மானம் ததா வித்யாத் புருஷம்
சர்வ ஐந்துஷு ச அதிர தேவயேத் வேத்யம்

சத்யம் ஞானம் அநந்தம்–தைத்ரியம்
ஆனந்தோ ப்ரஹ்ம –தைத்ரியம்
சாந்தி சம்ருத்தம் அம்ருதம் –தைத்ரியம்
யத்ர லக்ஷயேத் சாந்தம் அநுத்வாதம் அந்தரங்கம் திருப்தம் அம்ருதம் பரம் ப்ரஹ்ம தத்ர தாரயேத்
இதி ஏஷா நைஷ்டிகீ தாரணா –யோக ஸூத்ரம்
அந்தரங்கம் அநிர் தேஸ்யம் அபதாநந்த லக்ஷணம்
அவன் ஞான மயன் மட்டும் இல்லவே -ஞானம் சக்தி ஆனந்தம் ஐஸ்வர்யம் இத்யாதி ஸமஸ்த கல்யாண குணமயன்

எல்லா பூதங்களைக் காட்டிலும் உயர்ந்த மங்கள ரூபமானவர் -ஸ்ரீ சங்கரர் —

மங்களம் -கல்யாண ரூபம் உடையவர் -பரம் -அனைத்திலும் சிறந்தவர் -என்று இரண்டு திரு நாமங்கள்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் மங்களம் பரம்
மங்கள குணங்கள் நிறைந்தவன் -மங்களப் பொருள்களுக்கு எல்லாம் மங்களத் தன்மை அளிப்பவன்

———————

ஓம் மங்களாய பரஸ்மை நம:

அஶுபானி நிராசஷ்டே தனோதி ஶுபஸந்ததிம் |

ஸ்ம்ருதிமாத்ரேன யத் பும்ஸாம் ப்ரஹ்ம தன்மங்களம் விது: || (ஸ்ரீ விஶ்ணு புராணம்)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

எவரொருவரை நினைத்த மாத்திரத்திலேயே (தன்னை நினைக்கும்) மனிதனின் அல்லனவற்றை நீக்கி, நல்லனவற்றை அதிகரிக்கிறாரோ, அந்த பரப்ரஹ்மத்தை “மங்களம்” என்று அழைக்கின்றனர்.

இதி விஶ்ணு புராண வசனாத் கல்யாணரூபத்வாத்வா மங்களம் பரம் ஸர்வபூதேப்ய: உத்க்ருஷ்டம் ப்ரஹ்ம மங்களம் பரம் இத்யேகமிதம் நாம ஸவிஶேஶணம்

இதி விஶ்ணுபுராண வசனாத் இந்த ஸ்ரீ விஶ்ணுபுராண வாக்கியத்தின்படி கல்யாணரூபத்வாத்வா அனைத்து நற்குணங்களும் நிறைந்திருப்பதால் மங்களம் பகவான் ‘மங்களம்’ என்று அழைக்கப்படுகிறார். பரம் ‘பரம்’ என்றால் ஸர்வபூதேப்ய: அனைத்து ஜீவராசிகளைக் காட்டிலும் உத்க்ருஷ்டம் ப்ரஹ்ம ப்ரஹ்மம் (பகவான்) உயர்ந்தவர் என்பதைக் குறிக்கிறது. மங்களம் பரம் ‘மங்களம் பரம்’ என்ற இத்யேகமிதம் நாம ஒரே திருநாமம் ஸவிஶேஶணம் இந்த இரண்டு கருத்தையும் ஒன்றிணைத்த சிறப்பான திருநாமமாகும்.

பகவான் விஶ்ணு தன்னை நினைத்த மாத்திரத்திலேயே, நினைப்பவர்களின் துன்பங்களைப் போக்கி, அவர்களுக்கு நன்மைகளையும், நல்லனவற்றையும் அதிகரிக்கிறார். இத்தகைய மங்களமான அனைவருக்குள்ளும் சிறந்தவராகவும் இருக்கிறார். எனவே, பகவான் ‘மங்களம் பரம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


மங்களம் பரம் – அவர் மிகவும் மங்களகரமானவர்

இவை இரண்டு வார்த்தைகள் ஆனால் ஒரே நாமமாக கணக்கிடப்பட வேண்டும் ‘ஏகம் நாம சவிஷேஷணம் – உள்ளமைக்கப்பட்ட உரிச்சொல்லுடன் ஒரே பெயர்’. பரம் என்றால் மிகை அல்லது உயர்ந்த வரிசை என்று பொருள். மங்களம் என்றால் மங்களம்.

ஸ்ரீ ஆதி சங்கரர் விஷ்ணு புராணத்திலிருந்து பின்வருவனவற்றை மேற்கோள் காட்டுகிறார் –
‘அசுபாநி நிராச்சஷ்டே தனோதி சுபசந்ததிம் |
ஸ்ம்ருதி-மாத்ரேண யத் பும்ஸாம் ப்ரஹ்ம தன்மங்கலம் விதுஹ் ||’  பிராமணன் நன்மை என்று அறியப்படுகிறான், ஏனென்றால் அவன் எல்லாத் தீமைகளையும் விலக்கி, மனிதர்களால் நினைவுகூரப்படுவதால் அவர்களுக்கு தொடர்ச்சியான பலன்களைத் தருகிறான்.

நல்ல பலன்களை வழங்குவதில் அவரே உயர்ந்தவர் என்பதையே பரம் வலியுறுத்துகிறது.


56-அக்ராஹ்ய –
மண் நூல் போன்ற காரணங்கள் குயவன் சேணியன் போன்றோரால் கையாளப் படுவது போலே
மற்று ஒருவரால் கையாளப் படாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கர்ம இந்த்ரியங்களால் அறிய முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

முழுவதுமாக எவராலும் அறியப்பட முடியாதவர் -அவாப்த சமஸ்த காமர் -எவராலும் எளிதில் அடைய முடியாதவர் –
குணங்களால் வியாபித்து இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

———————————————————————————

57-சாஸ்வத –
படைத்தல் -காத்தல் -அழித்தல்-இடையறாமல் செய்து ஒய்வில்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாக் காலங்களிலும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

எப்போதும் மாறாத ரூபத்தை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

—————————————————————————–

58-கிருஷ்ண –
இந்த ஸ்ருஷ்டி முதலிய லீலைகளின்  ரசத்தினால் எப்போதும் மகிழ்ந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சச்சிதானந்த ரூபமாக இருப்பவர் -கருமை நிறம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

தனது கட்டளையிடும் சாமர்த்தியத்தினால் உலகை ஈர்ப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

————————————————————————————-

59-லோஹிதாஷா –
இந்த மகிழ்ச்சிக்கு அடையாளமாக சிவந்த தாமரைக் கண்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிவந்த கண்களை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

விரோதிகளிடத்தில் கோபத்தினால் சிவந்த கண்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

—————————————————————————————–

60-ப்ரதர்தந-
பிரளய காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிரளய காலத்தில் பூதங்களை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

சத்ருக்களைத் துன்புறுத்துவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

———————————————————————–

61-ப்ரபூத –
அழியாதவையும் அளவற்றவையுமான போக சாதனங்கள் நிரம்பிய பரமபதத்தை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஞானம் ஐஸ்வர்யாதி குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

மேலான ஆகாசாதி பூதங்களைப் படைத்தவர் -உயர்ந்தவன் -குணங்களால் பரவியிருப்பவன்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————————————————————————–

62-த்ரிககுத்தாமா –
த்ரிபாத் விபூதி என்னும் பரம பதத்தை உடையவர் -த்ரிககுத் -மூன்று கொண்டைகளுடன் கூடிய வராகமாக அவதரித்தவர்-
–தாம -ஒளியுள்ளவர்-என்று இரண்டு திரு நாமம் ஆகவுமாம் –
இப்படி ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் எல்லாம் அவனுடைய விபூதியிலே அணு அளவேயான லீலா விபூதியை அன்றோ –
த்ரிககுத்தாமா என்றும் த்ரிககுப்தாமா என்றும் சொல்வர் -இரண்டாலும் அவயவங்கள் குறிக்கப் படுகின்றன –
அன்றிக்கே -த்ரிககுப் -எனபது ஞானம் பலம் -ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் -என்று மூவிரண்டுகளாய்-அதற்குத் தர்மியானவன் –
ஆறு குணங்களால் பூரணமானவன் -அதனாகே த்ரி யுகம் என்று கூறப்படுகிறான் -ஸ்ரீ பராசர பட்டர் –

மேல் கீழ் நடு ஆகிய மூவுலகங்களுக்கும் இருப்பிடமானவர் த்ரிககுப்த்தாம -என்று பாடம் -ஸ்ரீ சங்கரர் —

த்ரிககுப்தாம -மூன்று உலகங்களை உடையவர் -த்ரி க்குத் தாம -க்குத் -திமில் –இரு தோள்கள் ஆகியவற்றுடன் கூடிய
வராஹமாக அவதரித்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————————————————————————————

63-பவித்ரம் –
குணங்கள் -மகிமைகள் -ரூபம் இவைகளைப் படிகளாகக் கொண்ட பரிசுத்த ஸ்வரூபத்தை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

பரிசுத்தப் படுத்துபவர் -பரிசுத்தப் படுத்தும் ரிஷி -தேவதை -வஜ்ராயுதத்திலிருந்து-இடியில் இருந்து – காப்பவர் -ஸ்ரீ சங்கரர் —

புனிதமாக்குபவர் -வஜ்ராயுதத்தைப் போலே காப்பவர் -சக்ராயுதத்தை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————————————————————————————-

64-மங்களம் பரம் –
தோஷம் அனைத்திற்கும் எதிர்தட்டாய் எல்லையற்ற கல்யாண குணங்களை யுடையவர் –
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கத -அவாப்த சமஸ்த காமன் -பர அவஸ்தை -நித்ய த்ருப்தன்-
ஞான மாத்ர ரசம் வாதம் கண்டனம் –
ஞான ஸ்வரூபம் ஆனந்த ஸ்வரூபம் -ஞானத்தாலும் குணத்தாலும் பிரத்யஷமாகப் பார்க்கிறான் -அபேஷிக்காமல் பிரகாசிக்கிறான் –
அதனால் ஞானம் என்றும் ஞானம் உடையவன் என்றும் சொல்லுகிறது –
அவனது கல்யாண குணங்களில் ஞானம் சாரம் என்பதால் ஞான ஸ்வரூபம் என்னவுமாம் –ஸ்ரீ பராசர பட்டர் —

எல்லா பூதங்களைக் காட்டிலும் உயர்ந்த மங்கள ரூபமானவர் -ஸ்ரீ சங்கரர் —

மங்களம் -கல்யாண ரூபம் உடையவர் -பரம் -அனைத்திலும் சிறந்தவர் -என்று இரண்டு திரு நாமங்கள்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———-

அவன் மனம் வைத்தாலன்றி அவனைச் சிந்தையால் அறியவே முடியாது.
அதனால் தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் அவனை ‘அக்ராஹ்ய:’ என்றழைக்கிறது.
“அக்ராஹ்யாய நமஹ” என்ற 56-வது திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால், எட்டாத பொருட்களும்
நமக்கு எட்டும்படி எட்டெழுத்தின் நாயகனான எம்பெருமான் அருள்புரிவான்.

திருமால் பலப்பல அவதாரங்கள் எடுத்து, பூமியில் பிறந்து
அடியார்களையும் தர்மத்தையும் காத்துக் கொண்டே இருக்கிறார். இத்தகைய அவதாரங்களை நீரோட்டம் போலத் தொடர்ந்து
எடுத்துக் கொண்டே வருவதால் திருமால் ‘சாச்வதஹ’ என்றழைக்கப்படுகிறார்!” என்று விடையளித்தார்.
அந்த ‘சாச்வதஹ’ என்பது தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 57-வது திருநாமமாக அமைந்துள்ளது.
பிறப்பில் பல்பிறவிப் பெருமானை வணங்கி “சாச்வதாய நமஹ” என்று தினமும் சொல்லி வந்தால்,
நம்முடைய வார்த்தைகளையும் திருமால் மெய்ப்பிப்பார்.

கண்ணன் தானும் ஆனந்தமாக இருந்து தன் அடியார்களுக்கும் அதே ஆனந்தத்தைத் தருகிறான்.
‘கிருஷி’ என்றால் பூமி என்று பொருள். ‘ண’ என்றால் ஆனந்தம்.
பூமிக்கு ஆனந்தம் தருவதால் அவன் ‘கிருஷ்ணஹ’ என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 58-வது திருநாமமாக அமைந்துள்ளது.
“க்ருஷ்ணாய நமஹ” என்று தினமும் சொல்லி வருவோரின் துன்பங்களை எல்லாம் கோபிகைகளின் குடங்களை
உடைத்தது போல உடைத்து பேரானந்தத்தைக் கண்ணன் தருவான் என்பதில் ஐயமில்லை.

நாம் ஒருவரை அன்போடு பார்த்தால் நம் கண்கள் செவ்வரி ஓடியிருக்கும்.
செங்கண்ணான் போன்ற அடியார்களை அன்புடன் நோக்கி அவர்களைக் குளிரக் கடாட்சிப்பதால்
எப்போதும் திருமாலின் கண்கள் சிவந்திருக்கின்றன.
‘லோஹிதம்’ என்றால் சிவப்பு. ‘லோஹிதாக்ஷஹ’ என்றால் சிவந்த கண்களை உடையவன் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 59-வது திருநாமம்.
“லோஹிதாக்ஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை நாச்சியார்கோவில்
ஸ்ரீநிவாசன் தன் சிவந்த கண்களால் கடாட்சிப்பார்.

‘தர்தனம்’ என்றால் அழித்தல். ‘ப்ரதர்தன:’ என்றால் அழிப்பவன் என்று பொருள்.
அனைத்துலகங்களையும் உயிர்களையும் அவற்றுக்கு மரணத்தைத் தரும் யமனையும் சேர்த்துப்
பிரளயக்காலத்தில் அழிப்பதால் திருமால் ‘ப்ரதர்தனஹ’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 60-வது திருநாமம்.
அழிப்பதுகூட ஒருவிதத்தில் திருமாலின் காக்கும் தொழில்தான். ஏனெனில் பிரளயத்தில் எந்தப் பொருளையும்
அவர் அழித்து, இல்லாமல் செய்து விடுவதில்லை.
அனைத்தையும் உண்டு தன் வயிற்றுக்குள் வைத்துக் காக்கிறார். மீண்டும் படைப்புக் காலம் வருகையில்
வயிற்றினுள் உள்ளதை உமிழ்ந்து உலகைப் படைக்கிறார்.
“ப்ரதர்தனாய நமஹ” என்று தினமும் சொல்லி வந்தால், வாழ்வில் ஏற்படும்
அபாயங்களிலிருந்தெல்லாம் திருமால் நம்மைக் காத்தருள்வார்.

பிரளய காலத்தில் அனைத்து உலகங்களும் அழிந்தாலும்,
வைகுந்த லோகம் அழியாமல் எப்போதும் இருக்கும்.
அவ்வாறு நிரந்தரமாக நிலைத்திருக்கக் கூடிய இருப்பிடத்தை உடையதால் திருமால் ‘ப்ரபூதஹ:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 61வது திருநாமம். “ப்ரபூதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும்
அடியவர்களையும் அவர்களது இருப்பிடங்களையும் வெள்ளம், புயல், ஆழிப்பேரலை உள்ளிட்ட ஆபத்துகளிலிருந்து கண்ணன் காப்பான்.

வைகுந்தமும் பூமியைவிட மும்மடங்கு பெரிதாக ‘த்ரிககுத்’ ஆக விளங்குகிறது.
அந்த வைகுந்தத்தைத் தனக்கு இருப்பிடமாக உடைய திருமால் ‘த்ரிககுத்தாமா’ என்றழைக்கப்படுகிறார்.
‘த்ரிககுத்தாமா’ என்பது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 62வது திருநாமமாக விளங்குகிறது.
“த்ரிககுத்தாம்நே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களை முக்காலத்திலும் எம்பெருமான் காத்தருள்வான்.

வேதம் தூய்மையானதாக இருப்பதைப் போலவே அந்த வேதங்களால் போற்றப்படும் திருமாலும் அசுத்தங்கள், பாபங்கள்
முதலியவற்றால் தீண்டப்படாத தூயவராக இருந்துகொண்டு, தன்னைச் சார்ந்தவற்றையும் தூய்மையாக்குகிறார்.
அதனால் அவர் ‘பவித்ர:’ என்றழைக்கப்படுகிறார். பவித்ரம் என்றால் தூய்மை என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 63வது திருநாமம்.
“பவித்ராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் உள்ளங்களைத் திருமால் தூய்மை யாக்கி யருளுவார்.

‘சனி உஷஸ்’ எனப்படும் சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மங்களமானதாகவும்,
அனைத்து சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு உகந்த நாட்களாகவும் விளங்குகின்றன.
இவ்வாறு அமங்களமானவனாகக் கருதப்பட்ட சனீஸ்வரனுக்கே மங்களத்தைத் தந்தமையால்,
திருமால் ‘பரம் மங்களம்’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 64வது திருநாமமாக விளங்குகின்றது.
“பரஸ்மை மங்களாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அனைத்து மங்களங்களையும் திருமால் அருளுவார்.
அதுமட்டுமின்றி சனிக்கிழமையன்று திருமலையப்பனைத் தரிசித்த பலனும் அவர்களுக்குக் கிட்டும்.

——————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள் — ஸ்லோகம் –6–

October 31, 2023
  1. அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

  1. அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:, 49. அமரப்ரபு: |
  2. விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா, 53. ஸ்தவிஶ்: 54. ஸ்தவிரோ த்ருவ: ||

இறைவன் அளவிட முடியாதவன், வரையறுக்க முடியாதவன்; அவர் அனைத்து இந்திரியங்களையும் கட்டுப்படுத்துபவர், மேலும் அவர் பிரபஞ்சத்தை நிலைநிறுத்துகிறார், மேலும் அவர் அனைத்து தேவர்களுக்கும் இறைவன். அவர் உலகை சிலாகித்து உருவாக்கினார், அனைத்தும் அவரது சிந்தனையால் மட்டுமே உருவாக்கப்பட்டது; அவர் மாறாதவர் மற்றும் நேரம் மற்றும் இடம் முழுவதும் முழுமையாக இருக்கிறார்; மேலும் கால் சக்ராவால் பாதிக்கப்படாத வயதுடையவர்.

அப்ரமேய: — அறிவதற்கு அரியர்
ஹ்ருஷீகேச: — புலன்களுக்குப் புகலிடமானவர்
பத்மநாப: — படைப்பு மலரும் நாபியை உடையவர்
அமரப்ரபு: — அமரர்க்கெல்லாம் அவரே ப்ரபு
விச்வகர்மா — நான்முகன் தோன்றுவதற்கு முன்னமே தத்துவங்களைப் படைப்பவர்
மனு: — படைப்பைக் குறித்துச் சிந்திப்பவர்
த்வஷ்டா — படைப்பு நிகழும் சூழலைப் படைப்பவர்
ஸ்தவிஷ்ட: — அனைத்திற்கும் அற உயர்ந்த பெரியோன்
ஸ்தவிர: — எல்லாக் காலத்திலும் இருப்பவர்
த்ருவ: — ஏது நிகழினும் எந்த மாற்றமும் அண்டாதவர்

அளவற்றவன் {அப்ரமேயன்},
புலன்களின் தலைவன் (அல்லது சுருள் மயிர்க் கொண்டவன்) {ஹ்ருஷீகேசன்},
தொடக்கக் காலத் தாமரை உதித்த உந்தி கொண்டவன் {பத்மநாபன்},
தேவர்கள் அனைவரின் தலைவன் {அமரப்ரபு},
அண்டத் தச்சன் {விஸ்வகர்மா},
மந்திரமாக இருப்பவன் {மநு},
அனைத்துப் பொருட்களையும் பலவீனப்படுத்துபவன், அல்லது மெலியச் செய்பவன் {த்வஷ்டா},
மிகப் பெரியவன் {ஸ்தவிஷ்டன்},
புராதனமானவன் {ஸ்தவிரன்},
தாங்கி நிலைத்திருப்பவன் {த்ருவன்/துருவன்} ;(19)

———

அனைத்தும் தானே –ஆனால் அவற்றிலும் உயர்ந்தவன் –

46-அப்ரமேய -புலன்களுக்கு அளவிட முடியாதவர் -தெய்வங்களுக்கும் அரியவர் –
47-ஹ்ருஷீகேச -அனைவருடைய புலன்களையும் ஆளும் தலைவர் -இன்பமும் நலமும் செல்வமும் பொருந்தியவர் –
48-பத்ம நாப -நான்முகனின் பிறப்பிடமான தாமரையை உந்தியில் உடையவர் –
49-அமரப் ப்ரபு -தெய்வங்களுக்கும் ஸ்வாமியாய் -அவர்களை சிருஷ்டி சம்ஹார தொழில்களில் நடத்துபவர் –
50-விஸ்வ கர்மா -பிரமனைப் படைப்பதற்கு முன்னும் பின்னும் அனைத்து செயல்களையும் செய்பவர் –

51-மநு -சங்கல்ப்பிப்பவர் -தன் நினைவின் சிறு பகுதியாலேயே பிரபஞ்சத்தைப் படைப்பவர் –
52-த்வஷ்டா -பிராணிகளை பெயரோடும் உருவத்தோடும் செதுக்குபவர் –
53-ஸ்தவிஷ்ட-விரிவானவர் -பிரளயத்தின் போது சூஷ்மமாக இருந்த சித் அசித் களான தனது உடலை படைப்பின் போது விவரிப்பவர்
54-ஸ்தவிர-எக்காலத்திலும் நிலைத்து இருப்பவர் -மாறுதல் இல்லாதவர் –
55-த்ருவ -தன் உடலையே படைப்பின் போது பிரபஞ்சமாக விரித்தலும் -இயற்க்கை நிலையில் மாறுதல் அற்றவர் –

———–

46-அப்ரமேய-
அறிவுக்கு எட்டாத பெருமைகளை உடையவன் –அதீந்த்ரியன் –தேச கால வஸ்து அபரிச்சேத்யன் 

தேஷாம் கரணை : ப்ரமாதுமஸக்ய:
அப்ரமேய: ।
* ஈர்த்யதி இதீகார: । யதா
* யந் நாயம் பகவாந் ப்ரஹ்மா ஜாநாதி புருதஷாத்தமம் । ஸ்வயம் ச ப்ரஹ்மா
* ந ஹ்யாதி மத்ய அந்தம் அஜஸ்ய யஸ்ய வித்மோ வயம் ஸர்வ மயஸ்ய தாதோ: ।

அறியத் தொடங்கலாம் முழுவதுமாக அறிய முடியாதே -அனைத்துமாக உள்ளான் -ந சிந்தய–அத்புத -பார்த்த அம்சம் இருக்குமே -நான்முகன் சிவன் ஸம்வாதம் உண்டே

ந ச ஸ்வரூப ந பர ப்ரபாவம் ந ஸைவ ஸாரம் பரமேஶ்வரஸ்ய ॥
ப்ரஹ்ம ஸம்வாதே ச ” “ந ஸ ஸக்யஸ் த்வயா த்ரஷ்டும் மயா அந்யைர்வா அபி ஸத்தம ।
ஸ குணோ நிர் குணோ விஶ்வோ ஜ்ஞாந த்ருஶ்யோ ஹ்யஸௌ ஸ்ம்ருத : ॥
* தவாந்த ராத்மா மம ச அந்யே சாந்தய தேஹி ஸம்ஜ்ஞிதா : (அவன் தேஹி நாம் எல்லாம் தேஹங்கள்)।
ஸர்வேஷாம் ஸாக்ஷி பூதோ அஸௌ ந க்ராஹ்ய: கேந சித் க்வசித் (யாராலும் எங்கும் க்ரஹிக்க முடியாது -பரம பதத்தில் நித்யர்களாலும் கூட-அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் இருப்பானே -அனுபவிக்க முடியும் -முழுவதும் அறிய முடியாதே )॥ இதி ।
அதீந்த்ரியத்வாத் அகத்ஸ்ரக்ரஹணத் வாச் ச அப்ரமேயத்வ மேஷ்வேவ வசநேஷு ஸ்புடம் ॥ 46 ॥

யதோ வாஸோ நிவர்த்தந்தே –தனக்கும் தன் தன்மை அறியாதவன் -ஸகல மனுஷ நயன விஷயதாங்கனாக ஸேவை சாதிக்கிறான்
மள்ளூர் –தவழ்ந்த கண்ணன் அப்ரமேயன் இரண்டு சேவை மேல் கோட்டைக்குப் போகும் வழியில் இரண்டும் சேவிக்கிறோம்

அறிவில் சிறந்த பிரமனை
நேரே கடிக் கமலத்து உள்ளிருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் -முதல் திரு -56
யம் நாயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி புருஷோத்தமம்
அப்ரமேயம் ஹிதத்தேஜ

ப்ரஹ்மாதிகளாலும் இந்த்ரியங்களால் அறிய முடியாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-
சாஸ்திரம் முதலிய எந்தப் பிரமாணங்களுக்கும் எட்டாதவர் -சப்தம் முதலிய எந்த குணங்களும் இல்லாதவர் ஆகையால்
பிரத்யஷ பிரமாணத்துக்கு விஷயமல்லர் –
அடையாளங்கள் இல்லாதவர் ஆகையால் அனுமானத்துக்கும் விஷயம் அல்லர்
பாகங்கள் இல்லாமை பற்றி சாத்ருச்யம் இல்லாமையாலே உபமானத்தாலும் அறிய முடியாதவர்
ஒன்றும் சம்பவிக்க மாட்டாதாகையாலே அர்த்தா பத்திக்கும் விஷயம் அல்லர்
பாவ ரூபமாக இருப்பதால் அபாவத்துக்கும் விஷயம் அல்லர்
பிரமாண அதிசயம் ஒன்றும் இல்லாதவர் ஆகையாலே சாஸ்திர பிரமாணத்துகும் விஷயம் அல்லர்
பின் சாஸ்திர யோநித்வம் எப்படிக் கூடும் என்னில் பிரமாண பிரமேயங்களுக்கு சாஷியாக இருப்பதால்

யம் நாமம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி புருஷோத்தமம்
ந ஹி அதிமத்யாந்தம் அஜஸ்ய யஸ்ய வித்மோ வயம் சர்வ மயஸ்ய தாதோ ந ச ஸ்வரூபம்
ந பர பிரபாவம் ந சைவ சாரம் பரமேஸ்வரஸ்ய
ந ச ஸக்ய த்வயா த்ரஷ்டும் மயா அந்யைர் வா அபி சத்தம ச குணோ நிர் குணோ விஸ்வ ஞான
த்ருஸ்யோ ஹி அசவ் ஸ்ம்ருத–மவ்ல பர்வம்
த்வாந்தராத்மா மம ச யே சாந்யே தேஹி சம்ஹிதா ஸர்வேஷாம் சாக்ஷி பூத அசவ் ந பிராஹ்ய கேநசித் கூசித் —
அனைவருக்கும் அந்தராத்மாவாக இருந்தும் எளிதில் ஸ்வ யத்னத்தால் அறிய இயலாதே

வத்ஸாபஹரணம் அபசாரம் பட்டு பின்பு பெருமையை அறிந்து கொண்டான் அன்றோ நான்முகன்

பிரமாணத்திற்கு விஷயம் ஆகாமல் இருக்கச் செய்தேயும்
பிரமாணத்திற்கு விஷயமாக நினைக்கும் பிரமத்தை நிவர்த்தி பண்ணுகிற விஷயத்தில் சாஸ்திரம் பிரமாணம் ஆகின்ற படியால்
சாஸ்திரம் பிரம்மத்தில் பிரமாணம் என்கிறது -ஸ்ரீ சங்கரர்—

அறிந்து கொள்ள முடியாத அளவற்ற குணங்களை யுடையவர் –
சர்வஞ்ஞன் ஆதலால் தாம் தெரிந்து கொள்ள வேண்டியவை எவையும் இல்லாதவர்
பக்தர்களால் அறிய வேண்டிய பொருத்தமான குணங்கள் உள்ளவர்-
உயர்ந்தவளான லஷ்மி தேவிக்கு ஆச்சர்யத்தை யுண்டாக்குபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் அப்ரமேயோ நம
அபரிச்சேத்யன் –
நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை
இந்திரிய கோசாரம் அல்லன் .
ப்ரத்யக்ஷம் அனுமானம் உபமானம் வாக்ய சப்த பிரமாணங்களை எட்டாதவன்
வேதைக சமையன்

தாரை -அப்ரமேயச் ச-நேராகக் கண்ட பின்பும்
பார்க்காதவற்றையும் மனசால் உணரலாம் லௌகிகம்
இங்கு கண்ணுக்கே நேரே -த்வம் -பதார்த்த நிர்தேசம்
புத்திக்குத் தோற்றாதவன்

——————

  1. ஓம் அப்ரமேயாய நம:

ஶப்தாதிரஹிதத்வான் ந ப்ரத்யக்ஷ கம்ய: நாப்யனுமானவிஶய: தத்வ்யாப்தலிங்காபவாத் நாப்யுபமான ஸித்த: நிர்பாகத்வேன ஸாத்ருஶ்யாபாவாத் | நாப்யர்தாபத்திக்ராஹ்ய: தத்வினானுபபத்யமானஸ்யா(அ)ஸம்பவாத் | நாப்யபாவகோசரோ பாவத்வேன ஸம்மதத்வாத் | அபாவஸாக்ஷித்வாச்ய ந ஶஶ்டப்ரமாணஸ்ய | நாபி ஸாஸ்த்ரப்ரமாணவேத்ய: ப்ரமாணஜன்யாதிஶயாபாவாத் | யத்யேவம் ஸாஸ்திரயோனித்வம் கதம்? | உச்யதே ப்ரமாணாதிஸாக்ஷித்வேன ப்ரகாஶஸ்வரூபஸ்ய ப்ரமாணா-விஶ்யத்வேSபி அத்யஸ்தாதத்ரூபநிவர்தகத்வேன ஸாஸ்த்ர-ப்ரமாணகத்வமிதி அப்ரமேய: ஸாக்ஷி ரூபத்வாத் வா |

ஶப்தாதி ரஹிதத்வான் ந ப்ரத்யக்ஷ கம்யபரம்பொருள் நம் புலன்களுக்கு அப்பாற்பட்டவர்.  எனவே, ஒலி முதலியவற்றை அறிய உதவும் நமது புலனுறுப்புக்களால் அவரை அறிய இயலாது | நாப்யனுமானவிஶயதத்வ்யாப்த லிங்காபவாத் எவ்வித குறியீடோ, குறிப்பிட்டதொரு உருவமோ இல்லாததால் அவரை அனுமானித்தும் அறிந்துகொள்ள முடியாது (உதாரணமாகநேரடியாக தெரியாவிடினும் புகை இருப்பதன் மூலம் நெருப்பை நாம் அனுமானிக்கலாம்பரம்பொருளை அவ்வாறும் அறிய முடியாது) | நாப்யுபமான ஸித்த:, நிர்பாகத்வேன ஸாத்ருஶ்யாபாவாத் அவரை பிரிக்க (பகுக்க) முடியாது, (அவருக்கு) வேறொரு ஒப்புமை இல்லை. எனவே, எடுத்துக்காட்டின் மூலமும் அவரை அறிய முடியாது | நாப்யர்தாபத்திக்ராஹ்ய: தத்வினானுபபத்யமானஸ்யா(அ)ஸம்பவாத் அவரை சில சூழ்நிலைகளைக் (காரணங்களைக்) கொண்டும் அறிய முடியாது, ஏனெனில், அவரைத் தவிர வேறொன்றைக் கொண்டும் அந்த சூழ்நிலைகளுக்கு விளக்கம் அளிக்க இயலாது (அவரைக் கொண்டே விளக்கம் அளிக்க வேண்டுமெனில், அவற்றால் அவரை எவ்வாறு அறிய முடியும்?) | நாப்யபாவகோசரோ பாவத்வேன ஸம்மதத்வாத் அவர் அனைத்திலும் உள்ளார் என்று ஏற்றுக்கொள்வதால், அவரை (இவை அனைத்துமில்லை) என்ற நீக்க வாதத்தாலும் வர்ணிக்க இயலாது (பரப்ரஹ்மம் இது இல்லை, இது இல்லை என்று அனைத்தையும் நீக்கி, முடிவில் எது உள்ளதோ அதுவே என்று விவரிப்பது நீக்க வாதம்) | அபாவஸாக்ஷித்வாச்ய ந ஶஶ்டப்ரமாணஸ்ய எனவே, அவரை (நாம் காணும், அறியும்) எதுவும் இல்லை என்ற நீக்க வாதத்தை விளக்கும் ஆறு சான்றுகளாலும் விளக்க இயலாது | நாபி ஸாஸ்த்ரப்ரமாணவேத்ய: ப்ரமாணஜன்யாதியாபாவாத் அவரை, சாத்திரங்களைக் கொண்டும் முழுவதுமாகத் தெரிந்துகொள்ள இயலாது. ஏனெனில், அவர் சாத்திர விளக்கங்களுக்கும் அப்பாற்பட்டும், அவற்றிலிருந்து மேம்பட்டும் இருப்பவர் | யத்யேவம் ஸாஸ்திரயோனித்வம் கதம்? உண்மை இவ்வாறிருக்க, அவரை சாத்திரங்களைக் கொண்டே அறிய இயலும் என்று கூறுவது ஏன்? | உச்யதே ப்ரமாணாதிஸாக்ஷித்வேன ப்ரகாஸ்வரூபஸ்ய ப்ரமாணா-விஶ்யத்வேSபி அத்யஸ்தாதத்ரூபநிவர்தகத்வேன ஸாஸ்த்ர-ப்ரமாணகத்வமிதி அப்ரமேய: ஸாக்ஷி ரூபத்வாத் வா ஒளிமயமான அவர் (வேதம் முதலிய) சான்றுகளுக்கு அப்பாற்பட்டு இருப்பினும், (புலன்களுக்கு அறியமுடியாத வகையில்) இந்த உலகனைத்தையும் (அதன் உள்ளிருக்கும் ஆத்மாவாக) கட்டுக்குள் வைத்திருப்பதால், அவர் (மறைமுகமாக) சாத்திரங்களில் (அவரைப்பற்றிக்) கூறியள்ளதற்கு சாட்சியாக இருக்கிறார். எனவே, மற்ற எவ்வகையிலும் அவரை அறிய முடியாது, அத்தகைய சாட்சியாக மட்டுமே அவரை அறியமுடியமாதலால் அவர் ‘அப்ரமேயர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானை நாம் நமது புலன்களைக் கொண்டோ, வேறு எடுத்துக்காட்டுகளைக் கொண்டோ, நாம் காணும் நிகழ்வுகளின் மூலம் ஊகித்து அறிந்து கொள்ளவோ, மற்ற எவற்றின் மூலமோ முழுவதுமாக அறிந்துகொள்ள முடியாது. சாத்திரங்களைக் கொண்டும் அவரை தெரிந்து கொண்டு விடமுடியாது. எனினும், அவர் இந்த உலகனைத்தும் மறைமுகமாக உள்ளுறை ஆன்மாவாக நிறைந்து, அதை தன் கட்டுக்குள் வைத்திருப்பதால், சாத்திரக் கூறுகளுக்கு சாட்சியாக விளங்குகிறார். எனவே, பகவான் ‘அப்ரமேய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

அப்ரமேயா – அளவிட முடியாதவர்

அப்ரமேயா என்றால் வரையறுக்கவோ, விளக்கவோ, அளவிடவோ முடியாதவர்.

நான் மறைகள் தேடி என்றும் காணமாட்டா செல்வன்–கட உபநிஷதம் சொல்வது போல், ‘அஷப்தம் அஸ்பர்ஷம் அரூபம் அவ்யயம் ததா அரசம் நித்யம் அகந்தவத் ச யத் – சப்தம் இல்லாதது, தொடுதல் இல்லாதது, வடிவம் இல்லாதது, சிதைவு இல்லாதது, சுவை இல்லாதது, வாசனை இல்லாதது, ஆரம்பம் மற்றும் முடிவு இல்லாதது.– ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிர்


47-ஹ்ருஷீ கேச
இந்த்ரியங்களுக்கு நியாமகன்

அந்தக் கரணங்களுக்கும் அவனே ஈசன் -நமது இந்திரியங்களுக்கு -கருவி -கரணாம் -இவற்றை அடக்கி ஆள்பவன்
கேசவன் தமர் 2-7-ஹ்ருடீகேசன் எம்பிரான்

தத் கரணாநாமபி நியாமகத்வாத் ஹ்ருஷீகேஸ : । யதா
ஶ்ரீஹரிவம்ஸே *ஹ்ருஷீகா ணீந்த்ரியாண் யாஹுஸ் தேஷாமீஸோ யதோ பவாந் ।
ஹ்ருஷீகேஸஸ் ததோ விஷ்ணு: க்யாதோ தேவேஷு கேஸவ: இதி ।
* ஹர்ஷாத் ஸௌக்யாத் ஸுக ஐஶ்வர்யாத் ருஷீ கேஸத்வ- மஶ்நுதே இதி வா ॥ 47 ॥

அன்றிக்கே
ஹர்ஷ ஆனந்தம் க ஸூ கம் இரண்டையும் கொண்டு இரண்டுக்கும் ஈசன் என்றுமாம்
ஆனந்தம் ஐஸ்வர்யம் இரண்டுக்கும் என்றும்
ஆனந்தமாகிய ஐஸ்வர்யம் என்றுமாம்

ஹர்ஷம் சந்தோசம் இவற்றுடன் ஈசனாய் இருப்பவன்
உத்சாஹம் ஆனந்தம் ஐஸ்வர்யம் பொருந்தி
இருடீ கேசன் எம்பிரான் -2-7-10–

இந்த்ரியங்களையும் நியமிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-

ஹ்ருஷீ காணி இந்த்ரியான்யாஹு தேஷாம் ஈசோ யதோ பவான் ஹ்ருஷீகேஷ ததோ விஷ்ணு
க்யாதோ தேவேஷு கேசவ –ஸ்ரீ ஹரி வம்சம்
ஹர்ஷாத் சவ்க்யாத் ஸூக ஐஸ்வர்யாத் ஹ்ருஷீ கேஸத்வம் அஸ்னுதே

இந்த்ரியங்களுக்குத் தலைவரான ஜீவ ஸ்வரூபர்-உலகு அனைத்துக்கும் மகிழ்ச்சியை யுண்டாக்கும்
கேசங்கள் என்கிற கிரணங்களை யுடைய சூரிய சந்திர ரூபர் -ஸ்ரீ சங்கரர்—

திரு மகளுக்கும் நான்முகனுக்கும் தலைவர் -லஷ்மீ ப்ரஹ்ம ருத்ராதிகளை யுண்டாக்கியவர் –
இந்த்ரியங்களுக்கு ஈஸ்வரர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் ஹ்ருஷீகேசா நம
நமது இந்திரியங்களை ஆள்பவன்

திருமேனி ஸூ பாஸ்ரயம்
பகவத் த்யான சோபானம்
அமலன் ஆதி பிரான் -படிக்கட்டுக்கள்

————————

  1. ஓம் ஹ்ருஶீகேஶாய நம:

ஹ்ருஶீகாணிந்த்ரியாணி தேஶாம் ஈஶ: ஹ்ருஶீகேஶ:

ஹ்ருஶீகாணிந்த்ரியாணி ‘ஹ்ருஷீகம்’ என்றால் இந்த்ரியங்கள் தேஶாம் : அவற்றை அடக்கி ஆள்கிறார் க்ஷேத்ரஞ ரூபபாக் (அனைத்திலும் உள்ளுறைந்து) அனைத்தையும் உள்ளபடி அறிவதால் ஹ்ருஶீகேஶ: அவர் ‘ஹ்ருஶீகேஶன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உடல்களுக்குள்ளும் உள்ளுறைந்து, அனைத்து உடல்களையும் உள்ளபடி அறிவதால் அவர் புலன்களை ஆள்கிறார். எனவே, பகவான் ‘ஹ்ருஶீகேஶன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா இந்த்ரியாணி யஸ்ய வஶே வர்த்தந்தே ஸ ஹ்ருஶீகேஶ:

யத்வா அல்லது இந்த்ரியாணி புலன்கள் யஸ்ய எவரின் வஶே கட்டுப்பாட்டுக்குள் வர்த்தந்தே உள்ளதோ ஸ பரமாத்மா அந்தப் பரம்பொருள் ஹ்ருஶீகேஶ:  ‘ஹ்ருஶீகேஶன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, புலன்கள் எவரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோ அந்தப் பரம்பொருள் ‘ஹ்ருஶீகேஶன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யஸ்ய வா ஸூர்யரூபஸ்ய சந்த்ரரூபஸ்ய ச ஜகத்ப்ரீதிகரா ஹ்ருஶ்டா: கேஶா ரஶ்மய:  ஸ ஹ்ருஶீகேஶ:

யஸ்ய வா அல்லது ஸூர்யரூபஸ்ய கதிரவனின் வடிவிலும் சந்த்ரரூபஸ்ய  குளிர்நிலவின் வடிவிலும் ஜகத்ப்ரீதிகரா உலகத்தவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவதால் ஹ்ருஶ்டா: ஹ்ருஷ்டா என்றால் மகிழ்ச்சி கேஶா தனது கிரணங்களால் ரஶ்மய: ‘ரஶ்மி’ என்றால் கிரணங்கள்  அவர் ஹ்ருஶீகேஶ: அவர் ‘ஹ்ருஶீகேஶன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவனின் வடிவிலும் குளிர்நிலவின் வடிவிலும், தனது கிரணங்களால் உலகத்தவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவதால் பகவான் ‘ஹ்ருஷீகேஷன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸூர்ய ரஸ்மிர் ஹரிகேஶ: புரஸ்தாத்’

கதிரவனின் முன்னே பகவான் ஹரியின் ஒளிக்கிரணங்கள் (கேஶ) உள்ளன.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (ஹ்ருஶ்டகேஶம் என்னும் இடத்தில்) ஹ்ருஶீகேஶன் என்ற பெயர் ப்ருஶோதராதி ஸூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.

ப்ருஶோதராதி ஸூத்ரம்: எவரேனும் பெரியவர் ஒருவர் ஒரு பெயரையோ, சொல்லையோ குறிப்பிட்ட பொருளில் பயன்படுத்தி இருந்தால், அந்த சொல் இலக்கண முறைப்படி அமையாது இருப்பினும், முன்னோர் கூறிய வடிவிலும், பொருளிலுமேயே நாம் பயன்படுத்த வேண்டும்.

யதோக்தம் மோக்ஷ தர்மே | எவ்வாறு மோக்ஷ தர்மத்தில் முன்பே கூறப்பட்டுள்ளதோ,

ஸூர்யா சந்த்ரமஸௌ சஷ்வதம் ஶுபி: கேஶஸம்ஞிதை: |

போதயன் ஸ்வாபயம்ஸ்சைவ ஜகதுத்திஶ்டதே ப்ருதக் ||-(மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.66)

மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது: கதிரவனும், திங்களும் தங்களுடைய “கேஶ” என்னும் கிரணங்களால் இந்த உலக மக்களை துயில் எழுப்பியும், துயிலுறச் செய்தும் (அந்தக் கிரணங்களிலிருந்து) வேறுபட்டு உதிக்கின்றன.

போதனாத்ஸ்வாபனாஸ்சைவ ஜகதோ ஹர்ஶணம் பவேத் |

அக்னிஶோமக்ருதைரேவம் கர்மபி: பாண்டுநந்தன ||

ஹ்ருஶீகேஶோ மஹேஶானோ வரதோ லோகபாவன: ||-(மஹாபாரதம் சாந்தி பர்வம் 342.67)

மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது: மக்களைத் துயிலெழுப்பியும், துயிலுறச்செய்தும் அவர்களை (கதிரவனும், திங்களும்) மகிழச் செய்கின்றனர். ஒ பாண்டுவின் மைந்தனே!!! இவ்வாறு, தீயையும் (இது கதிரவனுக்கு அடைமொழி), திங்களையும் தத்தம் கடமைகளைச் செய்விப்பதால் இந்தப் பிரபஞ்சத்தின் காரணமாய், அனைவருக்கும் வரங்களை வழங்குபவரான அந்த பரம்பொருளை ‘ஹ்ருஷீகேஷன்’ என்று அழைக்கின்றனர்.

இதி | இவ்வாறு (பகவான் ஹ்ருஶீகேஶன் என்று அழைக்கப்படுகிறார்).

————————

ஹிருஷீகேஷா – புலன்களின் மாஸ்டர்

இந்த நாமத்தை 2 விதமாக விளக்கலாம்.

அ) ஹிருஷீகா என்றால் இந்திரியங்கள் மற்றும் ஈஷா என்றால் இறைவன், எனவே ஹ்ரிஷீகேஷா என்றால் இந்திரியங்களின் இறைவன் அல்லது புலன்கள் அவை செய்யும் விதத்தில் செயல்படும் சக்தி. ஐந்து ஞானேந்திரியங்களும் (கண்கள் – பார்த்தல், காதுகள் – கேட்டல், மூக்கு – வாசனை, வாய் – பேச்சு மற்றும் தோல் – தொடுதல்) மற்றும் ஐந்து கர்மேந்திரியங்கள் (கைகள், கால்கள், நாக்கு, வெளியேற்றம் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள்) இறைவனின் கட்டுப்பாட்டில் உள்ளன.

b) ஹ்ரிஷீகேஷாவை ஹ்ரிஷீ + கேஷா என்று பிரிக்கலாம். இந்த விளக்கத்தில் ஹ்ரிஷீ என்றால் மகிழ்ச்சியைத் தரும் ஒன்று மற்றும் கேஷா என்றால் கதிர்கள் என்று பொருள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பகவான் சூரியன் மற்றும் சந்திரன் வடிவத்தில் மகிழ்ச்சியின் கதிர்களை பரப்புகிறார்

———-

48-பத்ம நாப –

வ்யூஹமாய் இருந்தாலும் பர பிரகரணம் இது -ஜகாத் காரண பிரகரணம் இது –
மூலப் பிரக்ருதியை வியாபிக்க தானே -இதில் தத்வ த்வயம் தான் தத்வ த்ரயம் இல்லையே
க்ருபாதீனமாக இந்த ஸ்ருஷ்ட்டி -அனுக்ரஹம் அடியாகவே இது
வைஷம்யம் நைர்க்ருண்யம் இல்லையே இதில்
சமஷ்டி ஸ்ருஷ்டிக்குப் பின் அத்வாராக ஸ்ருஷ்டிக்கு அடி இடுகிறான் -வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டிக்கு -நான்முகன் வேண்டுமே
திருவட்டாறு -நாபியில் கமலம் இல்லை -திருவனந்த புரம் உண்டே
கர்மாதீனம் இதிலே தானே –
பிரம ஈசன் மத்திய கணநாக இருந்தாலும் -மஹா விஷ்ணு பிரதம அவதாரம் எண்ணிக்கைக்கு அப்பால் -எண்ண நினைக்க முடியாதவன்
இந்திரன் தம்பி அதிதி பிள்ளை வாமனன் -கூரத்தாழ்வான்

உக்தம் ஹி ஸர்வம் வ்யநக்தி
பத்மநாப:;
பத்ம புவ: ப்ரபவ: பத்மமே நாபாவ் அஸ்யேதி ।
* அச் ப்ரத்ய ந்வவ பூர்வாத் இத் யத்ர யோக விபாகாதச் ।யதா
* ததோத்தாநஸ் ஸம்விஸதி பஞ்ச வர்ஷ ஸதாநி து
* தாதுர் நாப்யாம் புஷ்கரம் ப்ராதுர் பவதி –புஷ்கரம் புண்டரீகஞ்ச பத்மம் –சக்ரமித்யேஷ கால:,(காலம் உணர்த்தி படைக்கிறார் -காலமும் இவனுக்கே உடைமை )
* அஜஸ்ய நாபாவ் அவ்யேக மர்பிதம்,
* அஜஸ்ய நாபாவத்யேகம் யஸ்மிந் விஶ்வம் ப்ரதிஷ்டிதம் இத்யாதி ॥ 48 ||

கொப்பூழில் எழு கமலப் பூ வழகன் -நாச் -11-2-
பூவில் நான் முகனைப் படைத்த தேவன் எம்பெருமான் -2-2-4-
மீண்டும் 198-348- வரும்
தாமரை உந்தி தனிப் பெரும் நாயகன் -திருவாசிரியம்
அயனைப் படைத்த எழில் உந்தி -அமலனாதி –

நான்முகனுக்குப் பிறப்பிடமான தாமரையைத் தம் திரு நாபியிலே யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-

தாதோத்தாந சம்விசதி பஞ்ச வர்ஷ ச தாநி து
தாதுர் நாப்யாம் புஷ்கரம் ப்ராதுர் பவதி புஷ்கரம் புண்டரீகம் ச பத்மம் சக்ரம் இத்யேஷ கால
அஜஸ்ய நாபா வத்யேகம் அர்ப்பிதம்
அஜஸ்ய நாபா வத்யேகம் யஸ்மின் விஸ்வம் ப்ரதிஷ்டிதம்

உலகுக்கு எல்லாம் காரணமான தாமரையைத் தன் உந்தியிலே உடையவர் -ஸ்ரீ சங்கரர்—

தாமரையை அலர்த்துகின்ற ஸூர்யனைப் போன்ற ஒளி உள்ளவர் -நாபியில் தாமரையை யுடையவர் –
திருவடியில் திரு மகளை யுடையவர் -ஒளி யுள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் பத்ம நாபோ நம
கொப்பூழில் எழு கமலப்பூவால் நான்முகனைப் படைத்து
தொப்பூள் கொடியால் குழந்தைக்கு போஷகம் ஆகுமா போலே ஸ்ருஷ்டித்த உலகங்களைப் போஷிப்பவன்

—————

48.ஓம் பத்ம நாபாய நம:

ஸர்வஜகத்காரணம் பத்மம் நாபௌ யஸ்ய ஸ பத்மநாப:

ஸர்வ ஜகத் காரணம் அனைத்துலகின் தோன்றுமிடமாக பத்மம் தாமரை நாபௌ யஸ்ய எவருடைய தொப்புளில் இருக்கிறதோ  பத்மநாப: அவர் ‘பத்மநாபன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்துலகின் பிறப்பிடமாகவும், தோற்றுவாயாகவும் உள்ளத் தாமரை எவருடைய தொப்புளிலிருந்து எழுகிறதோ, அந்த பகவான் ‘பத்மநாபன்’ என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அஜஸ்ய நாபாவத்யேகமர்பிதம்’

பிறப்பற்ற (அந்தப் பரம்பொருளின்) தொப்புளில் ஒன்று (ஒரு தாமரை) உள்ளது.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (பத்மநாபி என்னும் இடத்தில்) பத்மநாபன் என்ற பெயர் ப்ருஶோதராதி சூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.

—————

பத்மநாபா – பிரபஞ்சத்தின் ஆதாரமாக இருப்பவர்

பத்மா என்றால் தாமரை மற்றும் நாபி என்றால் தொப்புள், எனவே பத்மநாபா என்றால் தொப்புளில் தாமரை உள்ளது. ஸ்ரீ ஆதி சங்கரர் சொல்வது போல், இது ஒரு சாதாரண தாமரை அல்ல, ஆனால் ‘சர்வஜகத் காரணம் பத்மம் – அனைத்து படைப்புகளுக்கும் அடிப்படைக் காரணம் பிரம்மா படைப்பாளரின் இருப்பிடம்’. தாமரை யுகத்தின் காலச் சக்கரம் அல்லது சுழற்சியைக் குறிக்கிறது.


49-அமரப் பிரபு-
இறப்பில்லாத தேவர்களுக்கு நிர்வாஹகன்

தேஷாம் அமராணாம் ஸ்ருஷ்ட்யாத் யதிகார தாநேந நிர்வாஹகஶ்ச
அமர ப்ரபு:।
ஶ்ரீ மதி ராமாயணே ப்ரஹ்மா * மஹார்ணவே ஸாயாநோ அப்ஸு மாம் த்வம் பூர்வம் அஜீஜந:
* ப்ராஜாபத்யம் த்வயா கர்ம ஸர்வம் மயி நிவேஶிதம் ।
மஹாபாரதே * ஏதவ் த்வௌ விபுத ஶ்தரஷ்டௌ ப்ரஸாதக் க்ரோதவ் ஜௌ ஸ்ம்ருதவ் ।
ததா தர்ஶித பந்தாநௌ ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகவ் இத்யாதி॥ 49॥

ப்ரஜாபத்யம் த்வயா கர்ம சர்வம் மயி நிவேசிதம் –
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே -5-2-8-

அமரப்ரபு –
அந்த நான்முகன் முதலிய தேவர்களுக்கும் படைத்தல் முதலிய அதிகாரங்களைக் கொடுத்து நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-

மஹார்ணவே சயாநவ் அப்ஸூ மா த்வம் பூர்வம் அஜீஜன ப்ரஜாபத்யம் த்வயா கர்ம சர்வம் மயி நிவேசிதம் –உத்தர -104-4-
ஏதவ் த்வவ் விபூத ஸ்ரேஷ்டவ் பிரசாத க்ரோத ஜீ ஸ்ம்ருதவ் ததா தர்சித பந்தாநவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார காரகவ் –மவ்சல பர்வம்

அமரர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர்—

ஞானத்தை மிகக் கொடுக்கும் பிரபு -அளவில்லா மகிழ்ச்சியை யுடையவர் –
தன்னை அறிந்த மேதைகளைப் பிரகாசிக்கச் செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் அமரப்பிரபு நம
தேவர்களுக்கும் தேவன் -தேவாதி ராஜன்
அவரவர் தேவரைப் படைத்து நியமிப்பவன்

—————

49.ஓம் அமரப்ரபவே நம:

அமரானாம் ப்ரபு: அமரப்ரபு:

அமரானாம் தேவர்களின் ப்ரபு: தலைவர் அமர ப்ரபு: பகவான் ‘அமர ப்ரபு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து தேவர்களின் தலைவராக இருப்பதால், பகவான் ‘அமர ப்ரபு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————

அமரபிரபு – தேவர்களின் தலைவன்

அமர என்றால் தேவர்கள் அல்லது அக்னி (நெருப்பு), வருணன் (நீர்) மற்றும் வாயு (காற்று) போன்ற தேவர்கள். பிரபு என்றால் இறைவன் என்று பொருள். எனவே அமரபிரபு என்றால் தேவர்களின் இறைவன் என்று பொருள். வெவ்வேறு தேவர்களை உருவாக்கி, காற்று, நெருப்பு, நீர் போன்ற செயல்பாட்டு அடையாளங்களை அவர்களுக்கு ஒப்படைத்து, அவர்களின் செயல்பாடுகளால் அவர்களை அழியாதவர்களாக ஆக்கி, அவர்களின் செயல்பாடுகளில் வழிநடத்துவதால், இறைவன் அமரபிரபு.


50-விஸ்வ கர்மா –
ஜகத் வியாபாரங்களைத் தானே செய்பவன் -அந்தராத்மாவாக இருந்து செய்விப்பவன் 

அதோ
விஶ்வ கர்மா ,
ப்ரஹ்ம ஸ்ருஷ்டே : ப்ராக் ஊர்த்வஞ்ச (முன்னும் பின்னும் )வித்ய மாநம்
விஶ்வம் கர்ம ஜகத் வ்யாபாரோ ऽஅஸ்யை வேதி । யதா
* விஶ்வ கர்மணஸ் ஸம வர்ததாதி, புருஷம் விஶ்வ கர்மாணம் ஆதி தேவ மஜம் விபும் । ஸர்வஞ்ச தத்
* ய இமா விஶ்வா புவநாநி நுஹ்வத இத் யுபக்ரமே
விஶ்வ கர்ம ஸூக்தே ஸ்பஷ்டம் த்ரஷ்டவ்யமிதி ॥ 50 ॥

பஹு புவன ஸ்ருஷ்டிக்கு சங்கல்பம் -பஹுஸ் யாம் -வ்யஷ்டி ஸ்ருஷ்டிக்குத்தானே
அதுக்கு மூலப்பொருள்களை வேண்டுமே -ஆகவே சமஷ்டி ஸ்ருஷ்டிக்கும் வேண்டுமே

இவை மேல் வரும் மனு திருநாமத்துக்கும் விளக்கமாகும்

விஶ்வ கர்மத்வம் ச
*ததைஷத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி,
* ஸ ஈக்ஷத லோகாந்நு ஸ்ருஜா இதி,
* ஸோ அகாம யத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி,
* அத புநரேவ நாராயண: ஸோ அந்யம் காமம் மநஸா த்யாயீத ,
* தத்ஸதேவ ஸந் மநோ குருத ஸ்யாமிதி,
* ஸோ அபித்யாய ஸரீராத் ஸ்வாத்ஸ்ஸி ஸ்ருக்ஷுர் விவிதா: ப்ரஜா:
*ஸ ஸிஸ்ருக்ஷுஸ் ஸஹஸ்ராம்ஸாத ஸ்ருஜத் புருஷம் த்விதா ,
* காமாச்ச நாநு மாநாபேக்ஷா இதி

பஹூஸ்யாம் ப்ரஜாயேய
சமஷ்டி சிருஷ்டி இவனது
பின்னது வ்யஷ்டி சிருஷ்டி
பார் உருவில் விசும்பாகிப் பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற -திரு நெடு -2-

முக்தர்களுக்கும் நித்யாருக்கும் ஜகத் வியாபார வர்ஜனம் இதனால் தானே

பிரமனைப் படைப்பதற்கு முன்னும் பின்னும் உள்ள உலக வியாபாரங்கள் எல்லாம் தமது செய்கைகளாகவே யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-

விஸ்வ கர்மண சமவர்த்ததாதி
புருஷம் விஸ்வ கர்மாணம் ஆதி தேவம் அஜம் விபும்
ய இமா விச்வா புவ நாநி ஜூஹ்வதே
ததைஷத பஹு ஸ்யாம் ப்ரஜாயதே -சாந்தோக்யம்
ச ஐஷத லோகாந் னு ஸ்ருஜா –ஐதரேய
ச ஆகாமயத பஹு ஸ்யாம் ப்ரஜாயதே –தைத்ரியம்
அத புந ரேவ நாராயண ச அந்யம் காமம் மனசா த்யாஸீத
ததசதேச சத் மநஸ் அகுருத அஸ்யாம்
ச அபித்யாய சரீராத் ஸ்வாத் சிச்ருஷி விவிதா பிரஜா
ச சிச்ருஷு சஹஸ்த்ராம்சாத் அஸ்ருஜத் புருஷம் த்விதா
காமாச்ச நானுமாநா பேஷா –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் –1-1-19-

உலகங்களைப் படைக்கும் செயலை யுடையவர் -படைக்கப் படுவதால் உலகம் கர்மம் உலகமாகிய கர்மத்தை யுடையவர் –
விசித்தரமாக நிர்மாணிக்கும் சக்தியை உடைய விச்வகர்மாவைப் போன்றவர் -ஸ்ரீ சங்கரர்—

கருடன் மீது அமர்ந்து செல்பருமாய் -கர்மங்களால் கட்டுப் படாதவருமாய் இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் விஸ்வ கர்மா நம
விச்வங்களை நியமித்து ஆள்பவன்

——————

50.ஓம் விஶ்வ கர்மணே நம:

விஶ்வம் கர்மம் க்ரியா யஸ்ய ஸ விஶ்வகர்மா

விஶ்வம் அனைத்து ஜீவராசிகளும் கர்மம் க்ரியா கர்ம என்றால் செயல் யஸ்ய எவருடையதோ  விஶ்வ கர்மா அந்த பகவான் ‘விஶ்வ கர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களும் அந்தப் பரம் பொருளின் செயலினால் உருவாக்கப்பட்டதால், பகவான் ‘விஸ்வ கர்மா’ என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

க்ரியத இதி ஜகத்கர்ம விஶ்வம் கர்ம யஸ்யேதி  வா விஶ்வகர்மா

க்ரியத இதி ஜகத் கர்ம உருவாக்கப் படுவதால் இந்தப் பிரபஞ்சத்தையே ‘கர்மம்’ என்று கூறலாம் விஶ்வம் கர்ம இந்தப் பிரபஞ்சமெனும் செயல் யஸ்யேதி  எவருடையதோ வா விஶ்வகர்மா அந்த பகவான் ‘விஶ்வகர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் பிரபஞ்சத்தையே படைத்து உருவாக்குவதால், பகவான் ‘விஸ்வ கர்மா’ என்றத் திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

விசித்ர நிர்மாணஶக்திமத்வாத்வா விஶ்வகர்மா 

விசித்ர ஆச்சரியமான நிர்மாண க்திமத்வாத்வா படைக்கும் வல்லமையைக் கொண்டுள்ளதால் விஶ்வகர்மா பகவான் ‘விஶ்வகர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆச்சரியமான படைக்கும் வல்லமையைக் கொண்டுள்ளதால் பகவான் ‘விஶ்வகர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமக்கு ஆச்சரியமான பலவற்றையும் மிக சாதாரணமாகவே அவர் படைக்கிறார்.

த்வஶ்ட்ரா ஸாத்ருஶ்யாத்வா விஶ்வகர்மா 

த்வஶ்ட்ரா த்வஶ்டா எனப்படும் தேவர்களுக்கு ஸாத்ருஶ்யாத்வா சமானமானவராக இருப்பதால் விஶ்வகர்மா பகவான் ‘விஶ்வகர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்வஶ்ட்ரா எனப்படும் தேவர்களுக்கு சமானமானவராக இருப்பதால் பகவான் ‘விஸ்வகர்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

த்வஶ்டா எனும் தேவர்களை விஸ்வ கர்மா என்றும் அழைப்பதுண்டு.

————

விஸ்வகர்மா – எவருடைய படைப்பாற்றல் தனித்துவமானது

ஸ்ரீ ஆதிசங்கரர் விஸ்வகர்மா என்பதற்கு 4 அர்த்தங்களைக் கூறுகிறார்:

அ) பிரபஞ்சத்தை உருவாக்கியவர்.
b) பிரபஞ்சம் யாருடைய செயல்.
c) படைப்பின் அற்புதமான சக்திகளைக் கொண்ட ஒருவர்.
ஈ) அதே பெயரின் வான கட்டிடக் கலைஞரின் பின்னால் உள்ள சக்தி.

பிரம்மாவின் படைப்புக்கு முன்னும் பின்னும் பிரபஞ்சத்தின் அனைத்து விவகாரங்களும் அவனுடையது மட்டுமே என்பதை இந்த நாமம் குறிக்கிறது என்று ஸ்ரீ பராசர பட்டர் குறிப்பிடுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் பிரபஞ்சத்தின் இயக்குனர் மற்றும் கட்டுப்பாட்டாளர்.


51- மனு
சங்கல்பிப்பவன் -மனனம் பண்ணுமவன் மனு

பஹு புவன ஸ்ருஷ்டிக்கு சங்கல்பம் -பஹுஸ் யாம் -வ்யஷ்டி ஸ்ருஷ்டிக்குத்தானே
அதுக்கு மூலப்பொருள்களை வேண்டுமே -ஆகவே சமஷ்டி ஸ்ருஷ்டிக்கும் வேண்டுமே

இவை மேல் வரும் மனு திருநாமத்துக்கும் விளக்கமாகும்

விஶ்வ கர்மத்வம் ச
*ததைஷத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி,
* ஸ ஈக்ஷத லோகாந்நு ஸ்ருஜா இதி,
* ஸோ அகாம யத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி,
* அத புநரேவ நாராயண: ஸோ அந்யம் காமம் மநஸா த்யாயீத ,
* தத்ஸதேவ ஸந் மநோ குருத ஸ்யாமிதி,
* ஸோ அபித்யாய ஸரீராத் ஸ்வாத்ஸ்ஸி ஸ்ருக்ஷுர் விவிதா: ப்ரஜா:
*ஸ ஸிஸ்ருக்ஷுஸ் ஸஹஸ்ராம்ஸாத் அஸ்ருஜத் புருஷம் த்விதா , (ஆயிரத்தில் ஒரு துளியில் இருந்து இரண்டு புருஷ)* காமாச்ச ந அநு மாந அபேக்ஷா (தானாகேவ ஸஹ காரி இல்லாமல் )இதி

ப்ரஸித்தாத் ஸங்கல்ப லப மாத்ராத் மநநாதேவ இதி மநு: । மந ஜ்ஞாநே ,
* ஶ்ரு ஸ்வ்ருஸ்த்ரிஹி த்ரப்யஸிவ ஸிஹநிக்லிதிபந்தி -மநிப்ய உ: ॥ 51 ॥

உன்னி உன்னி உலகம் படைத்தான்

உலக வியாபாரங்களையும் தம் சங்கல்ப லேசத்தினாலே செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் நினைப்பவர் -மந்திர ரூபி -மனு என்னும் சிருஷ்டி கர்த்தா -ஸ்ரீ சங்கரர் –

ஞான ஸ்வரூபியானவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் மனு நம
சங்கல்ப லேசத்தாலே அனைத்தையும் செய்து முடிப்பவர் -ஸத்யஸங்கல்பன்

————

51.ஓம் மனவே நம:

மனனாத் மனு:

மனனாத் நினைப்பதால் (எண்ணுவதால்) மனு: பகவான் ‘மனு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(அனைத்தையும்) நினைப்பதால் (மனனம் செய்வதால்) பகவான் மனு என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்துமே அந்த பகவான் ஒருவரே (அத்வைத தத்துவம்). அவரின்றி வேறொன்றுமில்லை. எனவே, நினைப்பவரும் அவரே, நினைக்கப்படுபவரும் அவரே.

‘நான்யோSதோSஸ்தி மந்தா’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.23)-ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:-(பரப்ரஹ்மத்தைத் தவிர) நினைப்பவர் வேறொருவர் இல்லை.

மந்த்ரோ வா மனு:

மந்த்ரோ வா மந்திரங்களின் வடிவில் இருப்பதால் மனு: பகவான் ‘மனு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மந்திரங்களின் வடிவில் இருப்பதால் பகவான் ‘மனு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஜாபதிர் வா மனு:

ப்ரஜாபதிர் வா (இந்த மனித குலத்தை) நான்முகக் கடவுள் பிரமனின் வடிவில் இருந்துப் படிப்பதால் மனு: பகவான் ‘மனு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மனிதக் குலத்தைப் (நான்முகனின் வடிவில்) படைப்பதால் பகவான் ‘மனு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————

51. மனுஹ் – நினைப்பவன்

மனுஹ் என்றால் சிறந்த சிந்தனையாளர். ‘மனனாத் மனுஹ் – மனனத்தின் சிறந்த சிந்தனைத் திறனால் அவர் மனுஹ் என்று அழைக்கப்படுகிறார்’. பிருஹதாரண்யக உபநிஷத் ‘நாண்யோதோ அஸ்தி மந்தா – அவரைத் தவிர வேறு சிந்தனையாளர் இல்லை’ என்கிறது.

ஒரு செயலுக்கு முன் ஒரு செயலை மனதளவில் காட்சிப்படுத்துவது மனனம். பகவான் தான் நினைத்ததை அடைய நினைக்க வேண்டும். பிரபஞ்சத்தின் உருவாக்கம் அவரது விருப்பத்தின் ஒரு நிமிட பகுதி மட்டுமே. ஸ்ரீ பட்டர் இதை விளக்குவதற்கு சங்கல்ப லவ மாத்ராத் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

ஸ்ரீ ஆதிசங்கரர் மனுவுக்கு வேறு 2 அர்த்தங்களைத் தருகிறார், அதாவது:

1. ஒரு மந்திரத்தின் பெயர்.

2. பூமியின் முதல் மனிதர் யாரிடமிருந்து பிறர் தோன்றினார்.


52-த்வஷ்டா –
பாகுபாடு செய்பவன் -த்வஷ்டா -செதுக்குமவன்

நாம ரூபாணி வ்யாகரவாணி

ஏவம் நிர்மிதம் நாம ரூப வ்யாகரணேந -ஸுர நராதி வைசித்ர்ய விபக்தம் வ்யநக்தி; அத :
ஸ்வஷ்டா ।
த்வக்ஷதேஸ் தநுகரண கர்மணஸ்த்ருச்,
* ஸ்கோஸ் ஸம் யோகாத் த்யோரந்தே ச இதி ககார லோப: ।
தநூகரணம் (தநூ-சரீரம் அவயவங்கள் பிரித்து )வ்யக்த அவயவீ கரணம் ।

த்வஷ்டாரம் ரூபாணி விகுர்வந்தம் விபச்சிதம்
வேதந ரூபே வியகரோத் சதாசதீ பிரஜாபதி
சர்வாணி ரூபாணி விசித்திர தீர
நாம ரூபம் ச பூதா நாம் க்ருத்யா நாம் ச ப்ரபஞ்சனம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-5-63-

த்விஷேர்வா தீப்திகர்மண: (த்வி தாது ஒளி விடுதல் )
* நப்த்ருநேஷ்ட இத்யாதிநா த்ருந் உபதாயா அத்வம்ச நிபாத்யதே ।
* த்விஷைர் தேவதாயா மகாரஶ் ஸோபதாயா அநிட்த்வம்ச இதி வா நிபாத : ।
தீபந் ப்ரகாஸநம், அவயவோந் மீலநமித் யர்த :, யதா
* த்வஷ்டாரம் ரூபாணி விகுர்வந்த விபஶ்சிதம்
* வேதேந ரூபே வ்யகரோத் ஸதா ஸதீ ப்ரஜாபதி:,
* ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர:,
* நாம ரூபம் ச பூதாநாம் க்ருத்யாநாம் ச ப்ரபஞ்சநம் இத்யாதி ॥ 52 ॥

நாம ரூபாணி வ்யாகரவாணி
தேவ மனுஷ்ய திர்யக் ஜங்கமம்-ரூபம் குணம் செயல் பெயர் வ்யவஸ்தை பண்ணுமவன்
பல்வேறு சமயமுமாய் -இத்தையே சொல்லும்-

உலகங்களை தேவர் மனிதர் முதலிய பெயர் உருவங்கள் உள்ளவைகளாக வகுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சம்ஹார காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

ஒளியுடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

ஓம் த்வஷ்டா நம
நாம ரூபங்களை அளித்து அருளுபவர்

———

52-ஓம் த்வஶ்ட்ரே நம:

ஸம்ஹாரஸமயே ஸர்வபூத தனூகாரணத்வாத் த்வஶ்டா: 

ஸம்ஹாரஸமயே அழிக்கும் காலத்தில் ஸர்வபூத அனைத்து ஜீவராசிகளையும் தனூகாரணத்வாத் குன்றச் செய்வதால் (அழியச் செய்வதால்) த்வஶ்டா: பகவான் ‘த்வஶ்டா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் அனைத்தும் அழியப்படும் காலத்தில், அனைத்து ஜீவராசிகளையும் (அழிப்பதன் மூலம்) குன்றச் செய்வதால், பகவான் ‘த்வஶ்டா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

த்வக்ஷதேஸ் இங்கு, ‘த்வக்ஷ்’ எனும் வேர்ச்சொல் தனூகரண குன்ற செய்வது அல்லது அழிப்பது அர்தாத் என்ற பொருளில் வருகிறது த்ருச் ப்ரத்யய: அதனுடன் ‘த்ருச்’ என்ற விகுதி சேர்ந்து ‘த்வஷ்டா’ என்ற திருநாமம் அமைகிறது.

————

52. த்வஷ்டா – பிரளய காலத்தில் (அல்லது பிரளய) சுருங்குபவர்

இந்த நாமம் ‘த்வக்ஷ் – பரே, குறைப்பது, உளி’ என்ற மூல வார்த்தையிலிருந்து உருவானது. ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த நாமத்தை பகவான் அனைத்து உயிர்களையும் அண்டம் கலைக்கும் நேரத்தில் அல்லது பிரளயத்தின் போது சுருக்கிவிடுகிறார் என்பதைக் குறிக்கும் வகையில் விளக்குகிறார்.

ஸ்ரீ பராசர பட்டர் இந்த நாமத்தை விளக்குவதற்கு இந்த அர்த்தத்தைப் பயன்படுத்துகிறார், பகவான் பலவிதமான வடிவங்கள், தேவர்கள், மனிதர்கள், பறவைகள், தாவரங்கள், பூச்சிகள் போன்றவற்றை “உளித்து” இருக்கிறார், இதனால் அவர் த்வஷ்டா ஆவார். அவர் தனது விளக்கத்திற்கு ஆதரவாக தைத்திரிய ஆரண்யகத்தை (3-11) தருகிறார் – ‘த்வாஷ்டாரம் ரூபாணி விகுர்வந்தம் விபச்சிதம் – பலவிதமான வடிவங்களையும் பல்வேறு பொருட்களையும் வடிவமைப்பவர்’.


53-ஸ்தவிஷ்ட –
மிகவும் ஸ்தூலமானவன் -பெரியவன்- பரப்பு உடையவன்

ப்ரஹ்மத்துக்கு விசேஷணமான சேதன அசேதனங்கள் பரிணாமம் அடைந்து
அவன் மாறாமல் -ப்ரஹ்மமாகவே இருக்கும்-எப்பொழுதும் விபுவாகவே இருப்பான் –

அத : ஸ்தவிஷ்ட: –
ஸ்தூல தம : (ஸ்தூல ஸ்தூல தர ஸ்தூல தம)। ஸ்தூல ஸப்தா திஷ்டந் ।
* ஸ்தூல தூர இத்யாதிநா யணாதி பரலோப: பூர்வஸ்ய ச குண: ।
* பஹு ஸ்யாம், இதி யதா ஸங்கல்பம் பஹூ பவந ஸூக்ஷ்ம அவ்யக்த ஸமஷ்டி காரண பர்வணோ போக்த்ரு
ஸுர நர திர்ய ஸ்தாவர -கரண கலேபர தத் கோசர- ஸப்த ஸ்பர்ஸாதி ததாஸ்பத சதுர் தச புவந கர்ப ப்ரஹ்மாண்ட (இமையோர் வாழ் தனி முட்டை )-ததா வரண ரூப ஸ்தூல
வ்யக்த வ்யஷ்டி கார்ய (கீழ் ஸூக்ஷ்ம அவ்யக்த ஸமஷ்டி காரண- இதில் ஸ்தூல
வ்யக்த வ்யஷ்டி கார்ய -சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் )விஸ்தாரவாந் ஜாயத இத்யர்த : ।

யதா நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே
* வ்யோ மாம்பு வாய் வக்நி மஹீ ஸ்வரூபைர் விஸ்தாரவாந் யோ அணுதரோ அணுபாவாத்,
* விஸ்தாரஸ் ஸர்வ பூதஸ்ய விஷ்ணோஸ் ஸர்வமிதம் ஜகத்,
* த்வத் விஸ்தரோ யதோ தேவ, இத்யாதி ॥ 53 ॥

வேர் முதல் வித்தாய் சமஷ்டி ஸ்ருஷ்ட்டி
பரந்து நின்ற வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி

ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -பஹூஸ்யாம் -சங்கல்பித்து
ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -பலவாக விரிந்து சிருஷ்டி
வேர் முதல் வித்தாய்ப் பரந்து தனி நின்ற -2-8-10
மீண்டும் -437-வரும் –
செல்வர் பெரியர் -நாச்சியார் -10-10-

மிக்க ஸ்தூலமாக இருப்பவர் -ஸ்தூல ரூபமாகக் காணும் பொருள்கள் எல்லாம் தாமாயிருப்பவர் –
பஹூஸ்யாம்-சங்கல்ப்பித்துக் கொண்டு -ஸூஷ்மமான அவயகதம் முதலிய க்ரமத்தாலே தேவாதி யோனிகள்
ஸ்பர்சாதி குணங்கள் ஈரேழு லோகங்கள் உட்கொண்ட பிரம்மாண்டம் அதற்கு ஆவரனமான ஸ்தூல வ்யக்தமான
வியஷ்டி கார்யம் என்று விஸ்தாரமாகப் பரந்தவன்-ஸ்ரீ பராசர பட்டர் –

தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொண்டான்
நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே –ஸ்ரீ கீதை 10-19–
வ்யோம அம்பு வாயு அக்னி மஹீ ஸ்வரூபை விஸ்தாரவாந்யோ அணுதாரா அணுபாவாத்–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -4-3-6-
விஸ்தார சர்வ பூதஸ்ய விஷ்ணோ சர்வம் இதம் ஜகத் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-7-84-
த்வத் விஸ்தாரோ யதோ தேவ

மிகப் பருத்தவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகவும் பருத்தவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

ஓம் ஸ்தவிஷ்டா நம
சங்கல்பத்தாலே ப்ரஹ்மாண்டங்களை -உருவாக்கியவன்
பஞ்ச பூதங்கள் -கர்ம ஞான இந்திரியங்கள் இத்யாதிகளை சதுர்வித லோகங்களையும்
சஹஸ்ர அண்டங்களையும் சதுர் முகங்களையும் சங்கல்பத்தால் ஸ்ருஷ்டித்தவன்

—————-

  1. ஓம் ஸ்தவிஶ்டாய நம:

அதிஶயேன ஸ்தூல ஸ்தவிஶ்ட: 

அதிஶயேன மிகுந்த ஸ்தூல பருத்திருப்பதால் ஸ்தவிஶ்ட: பகவான் ‘ஸ்தவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகவும் பருத்துப் பெருத்திருப்பதால் பகவான் ‘ஸ்தவிஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்தும் அவரே, அனைத்தையும் உள்ளடக்கி வைத்திருப்பவரும் அவரே. அவரைக் காட்டிலும் பருத்தப் பொருள் வேறொன்றுமில்லை என்ற கருத்தில் இந்த திருநாமம் அமைக்கப்பட்டுள்ளது.

—————

53.    ஸ்தவிஷ்டா – 

இந்த நாமம் ஸ்தூல மற்றும் இஷ்தா என்ற இரண்டு வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது – தேவைப்படும் போது (திரிவிக்ரமா அவதாரத்தில் உள்ளது போல) தன்னைப் பிரமாண்டமாக விரும்பிக்கொண்டவர்.

ஸ்ரீ பராசர பட்டர், பகவான் பிரம்மாண்டமாக (முட்டை வடிவ பிரபஞ்சம்) பதினான்கு உலகங்களுடன் காட்சியளிப்பதாக ஸ்ரீ பராசர பட்டர் குறிப்பிடுகிறார்.


54-ஸ்தவிர
நிலைத்து இருப்பவன்-தத்வ த்ரயமும் நித்யம் -இவன் இருப்பவர் -ஸ்வரூபமும் ஸ்வ பாவமும் மாறாமல் இருப்பவர் -சதத விகாரம் அசேதனத்துக்கு -பத்த ஜீவனுக்கு ஸ்வ பாவம் மாறும் –
நித்யாருக்கு அவன் அனுக்ரஹத்தால் மாறாமல் இருப்பர் -இவனுக்கே இயற்கையாக ஸ்வ பாவிகமாக இருக்கும் 

ஏவம் ஸம்கல்ப மூல காரணத்வே அபி ( ஸகல மூல காரணத்வே அபி ) லௌகிக ம்ருதாதி காரண வைலக்ஷண்யம் விவக்ஷதி
ஸ்தவிர: । திஷ்டதே: (நிற்பவர் )
*அஜிரஶிஶிர இத்யாதிநா கிரச் ப்ரத்யயோ ஹ்ரஸ் வத்வம் வுகாக மஶ்ச நிபாத்யதே ।
ஸகலம் காலம் ஸ்வாஸ்நு லீலயா கால மபேக்ஷ மாணோ அப்ய தத்தந்த்ர: ।
அநேந கால விஸேஷ அபேக்ஷ பரிணாம துக்த தத்யாதி வைலக்ஷண்யம் விவக்ஷிதம் ; (காலமும் இவனது சொத்து -ஆகவே குறையில்லையே )காலஸ்யாபி ஸர்வாத்மநா தாததீந்யாத் । யதா
* காலஸ்ய ச ஹி ம்ருத்யோஶ்ச ஜங்கம ஸ்தாவரஸ்ய ச ।
ஈஶிதா மம்கவாநே கஸ் ஸத்ய மேதத் ப்ரவீமி தே
* கால சக்ரம் ஜகச் சக்ரம் யுக சக்ரம் ச கேஸவ: (கர்மமும் காலமும் தேவதைகளும் அவன் அதீனமே )। ஆத்ம யோகேந பகவாந் பரிவர்தயதே அநிஸம் ॥
* காலம் ஸ பசதே தத்ர ந காலஸ் தத்ரவை ப்ரபு:, இத்யாதி ॥ 54

விஸ்வகர்மா -ஜகத் வியாபாரம் சொல்லி
மனு -சங்கல்ப்பத்தால் சிருஷ்டி சொல்லி
ஸ்தவிர -பெரிதாக பரிணப்பிதால் வரும் பெருமை சொல்லும்
காலமும் அவன் வசத்தில் இருந்தாலும் சிருஷ்டி காலத்தை அனுசரித்து லீலா வியாபாரம்
எக்காலத்து எந்தையாய் -2-9-8-பூத பவ்ய பவிஷ்யத் பிரபு -4 கீழேயே பார்த்தோம்
கால சக்கரத்தாய் -7-2-7-

காலத்தை எதிர்பார்ப்பதை லீலையாக மட்டும் கொண்டு நினைத்த போது படைக்கும் ஸ்வ தந்த்ரர் –
சங்கல்ப மூலமாக காரணம் என்றாலும் விலஷணன் -காலமும் இவனுக்கு வசப்பட்டதே -ஸ்ரீ பராசர பட்டர் –

காலஸ்ய ச ஹி ம்ருத்யோச்ச ஜங்கம ஸ்தாவரஸ்ய ச ஈசிதா பகவான் ஏக தஸ்யமேதத் ப்ரவீமி தே -உத்யோக பர்வம்
கால சக்ரம் ஜகத் சக்ரம் யுக சக்ரம் ச கேசவ ஆத்ம யோகேன பகவான் பரிவர்த்தயதே அநிசம்
காலம் ச பசதே தத்ர ந காலஸ் தத்ரவை பிரபு

தொன்மையானவர் -நிலையானவர் – த்ருவ-தொன்மையான நிலையானவர் -என்று ஒரே திரு நாமம் -ஸ்ரீ சங்கரர் –

முதியவர்–ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்

ஓம் ஸ்தவிர நம
கால வசப்படாதவன்

—————

ஸ்தாவிரா – அவர் பண்டைய அல்லது நித்தியமானவர்

ஸ்தாவிரா என்றால் மிகவும் பழமையானது அல்லது பழையதை விட பழமையானது. பகவான் பிரபஞ்சத்தை மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இருக்கச் செய்யும் போது, ​​அவரே காலமற்றவர், வயது மற்றும் மாறாதவர் என்று அர்த்தம். ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்தாவிரோ த்ருவஹாவை ஒரு கூட்டு வார்த்தையாக எடுத்துக்கொள்கிறார் – ‘சவிஷேஷணம் ஏகம் நாமம் – பெயரடையில் கட்டப்பட்ட ஒரே நாமம்’.

ஸ்ரீ பராசர பட்டர் அவற்றை இரண்டு தனித்தனி நாமங்களாக எடுத்துக்கொள்கிறார், ஒன்று காலத்தில் நிலையானது மற்றும் மற்றொன்று விண்வெளியில் நிலையானது.

இரண்டு வர்ணனையாளர்களுக்கும் கூட்டுப் பொருள் ஒன்றுதான்.

————

55- த்ருவ-
மாறாமல் நிலை நிற்பவன் -ஸ்வரூபத்தில் நின்றும் நழுவாமல் –

அநந்த பரிணாமாதப் யவிகுர்வாண தயா ஸ்வரூபாத் அப்ரஸ்யாவ்ய:
த்ருவ: ।
* த்ரு கதிஸ் தைர்யயோ :,
* நுதாதிப்யோ ணல்கௌ இதி க: ।
ஏவம் குஹ:, வ்ருஷ:, நிமிஷ:, இத்யாதயோ அபி க ப்ரத்யயாந்தோ : । யதா
* அஜய்யஶ் ஸாஶ்வதோ த்ருவ:, (யுத்த -114-15-மண்டோதரி வார்த்தை )
* அவிகாராய ஸூத்தாய, நித்யாய பரமாத்மனே
* அபக்ஷய விநாஸாப்யாம் இதி ॥ 55 ॥

உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து -திரு நெடும் -23-பிரிவுத் துயரை எனக்கே தந்தாய்

எனக்கே தந்து -தான் விகாரம் அற்று மற்றவர்க்கு விகாரம் கொடுப்பவன்
இதுவே வீர்யம் –
வீர ஸுர்ய பராக்ரமம் உண்டே

இப்படிப் பலவகை உலகங்களாக மாறியும் ஸ்வரூபம் மாறாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மாறாத ஸ்வரூபம் -அவதாரங்கள் எல்லை அற்று இருந்தாலும் மாறாமல் இருப்பவன்

நிலையானவர்—ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

ஓம் த்ருவாய நம
அவிகாராய -ஸ்வரூப ஸ்வ பாவங்கள் யுகங்கள் தோறும் கொண்டவன்-

————

54.ஓம் ஸ்தவிராய த்ருவாய நம:

புராண: ஸ்தவிர: வயோவசனோ வா ஸ்திரத்வாத் த்ருவ: ஸ்தவிரோ த்ருவ இத்யேகமிதம் நாம ஸவிஶேஶணம்

புராண: ஸ்தவிர: ‘ஸ்தவிர:’ என்றால் மிகப்பழமையானது என்று பொருள்.

‘த்வேகம் ஹ்யஸ்ய ஸ்தவிரஸ்ய நாம’ இதி பஹ்வ்ருசா

பஹ்வ்ருசரின் கூற்றின்படி: இந்தப் பழமையானதற்கு ஒரே திருநாமம் உள்ளது.

வயோவசனோ வா (அல்லது ஸ்தவிர என்றால்) வயது முதிர்ந்த என்ற பொருளும் கொள்ளலாம் ஸ்திரத்வாத் த்ருவ: நிலைபெற்றுள்ளதால் ‘த்ருவ:’ ஸ்தவிரோ த்ருவ இத்யேகமிதம் நாம ஸவிஶேஶணம் பகவானின் இவ்விரு பண்புகளையும் ஒன்று சேர்த்து ‘ஸ்தவிரோ த்ருவ:’ என்று ஒரே திருநாமமாக வழங்கப்படுகிறது.

மிகவும் பழமையானவரும் (வயதானவரும்), அதே சமயம் எக்காலத்திலும் நிலையானவராய் இருத்தலாலும் பகவான் ‘ஸ்தவிரோ த்ருவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———————

துருவா – அவர் நிலையானவர் அல்லது நித்தியமானவர்

துருவா என்றால் நிலையானது, நிலையானது மற்றும் அசையாதது என்று பொருள். எத்தனையோ உயிர்களையும், பொருட்களையும், பொருட்களையும் படைத்த பிறகும், பகவான் முழுமையாய், நிலையாக, மாறாமல் இருக்கிறார். களிமண் பானையாக மாறி அதன் வடிவத்தை மாற்றினாலும், பகவான் தனது அனைத்து படைப்புகளுக்கும் தனது சக்தியைப் பயன்படுத்திய பிறகும் அப்படியே இருக்கிறார். அவரது வடிவத்தில் ஒரு சிறு தேய்மானம் கூட இல்லை.

————

46-அப்ரமேய
ப்ரஹ்மாதிகளாலும் இந்த்ரியங்க ளால்  அறிய முடியாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-
சாஸ்திரம் முதலிய எந்தப் பிரமாணங்களுக்கும் எட்டாதவர் -சப்தம் முதலிய எந்த குணங்களும் இல்லாதவர் ஆகையால் பிரத்யஷ
பிரமாணத்துக்கு விஷயமல்லர் –
அடையாளங்கள் இல்லாதவர் ஆகையால் அனுமானத்துக்கும் விஷயம் அல்லர்
பாகங்கள் இல்லாமை பற்றி சாத்ருச்யம் இல்லாமையாலே உபமானத்தாலும் அறிய முடியாதவர்
ஒன்றும் சம்பவிக்க மாட்டாதாகையாலே அர்த்தா பத்திக்கும் விஷயம் அல்லர்
பாவ ரூபமாக இருப்பதால் அபாவத்துக்கும் விஷயம் அல்லர்
பிரமாண அதிசயம் ஒன்றும் இல்லாதவர் ஆகையாலே சாஸ்திர பிரமாணத்துகும் விஷயம் அல்லர்
பின் சாஸ்திர யோநித்வம் எப்படிக் கூடும் என்னில் பிரமாண பிரமேயங்களுக்கு சாஷியாக இருப்பதால்

பிரமாணத்திற்கு விஷயம் ஆகாமல் இருக்கச் செய்தேயும்
பிரமாணத்திற்கு விஷயமாக நினைக்கும் பிரமத்தை நிவர்த்தி பண்ணுகிற விஷயத்தில் சாஸ்திரம் பிரமாணம் ஆகின்ற படியால்
சாஸ்திரம் பிரம்மத்தில் பிரமாணம் என்கிறது -ஸ்ரீ சங்கரர்—

அறிந்து கொள்ள முடியாத அளவற்ற குணங்களை யுடையவர் –
சர்வஞ்ஞன் ஆதலால் தாம் தெரிந்து கொள்ள வேண்டியவை எவையும் இல்லாதவர்
பக்தர்களால் அறிய வேண்டிய பொருத்தமான குணங்கள் உள்ளவர்-
உயர்ந்தவளான லஷ்மி தேவிக்கு ஆச்சர்யத்தை யுண்டாக்குபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————-

47-ஹ்ருஷிகேச –
இந்த்ரியங்களையும் நியமிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-

இந்த்ரியங்களுக்குத் தலைவரான ஜீவா ஸ்வரூபர்-உலகு அனைத்துக்கும் மகிழ்ச்சியை யுண்டாக்கும்
கேசங்கள் என்கிற கிரணங்களை யுடைய சூரிய சந்திர ரூபர் -ஸ்ரீ சங்கரர்—

திரு மகளுக்கும் நான்முகனுக்கும் தலைவர்  -லஷ்மீ ப்ரஹ்ம ருத்ராதிகளை   யுண்டாக்கியவர் –
இந்த்ரியங்களுக்கு ஈஸ்வரர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

—————————————————————————————————–

48- பத்ம நாப –
நான்முகனுக்குப் பிறப்பிடமான தாமரையைத் தம் திரு நாபியிலே யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-

உலக்குக்கு எல்லாம் காரணமான தாமரைய்த் தன் உந்தியிலே உடையவர் -ஸ்ரீ சங்கரர்—

தாமரையை அலர்த்துகின்ற சூர்யனைப் போன்ற  ஒளி உள்ளவர் -நாபியில் தாமரையை யுடையவர் –
திருவடியில் திரு மகளை யுடையவர் -ஒளி யுள்ளவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

—————————————————————————————————–

49-அமரப்ரபு –
அந்த நான்முகன் முதலிய தேவர்களுக்கும் படைத்தல் முதலிய அதிகாரங்களைக் கொடுத்து நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-

அமரர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர்—

ஞானத்தை மிகக் கொடுக்கும்  பிரபு -அளவில்லா மகிழ்ச்சியை யுடையவர் –
தன்னை அறிந்த மேதைகளைப் பிரகாசிக்கச் செய்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

—————————————————————————————————–

50-விஸ்வ கர்மா –
பிரமனைப் படைப்பதற்கு முன்னும் பின்னும் உள்ள உலக வியாபாரங்கள் எல்லாம் தமது செய்கைகளாகவே யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-

உலகங்களைப் படைக்கும் செயலை யுடையவர் -படைக்கப் படுவதால் உலகம் கர்மம் உலகமாகிய கர்மத்தை யுடையவர் –
விசித்தரமாக நிர்மாணிக்கும் சக்தியை உடைய விச்வகர்மாவைப் போன்றவர் -ஸ்ரீ சங்கரர்—

கருடன் மீது அமர்ந்து செல்பருமாய் -கர்மங்களால் கட்டுப் படாதவருமாய் இருப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

————————————————————————

51-மநு –
உலக வியாபாரங்களையும் தம் சங்கல்ப லேசத்தினாலே செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் நினைப்பவர் -மந்திர ரூபி -மனு என்னும் சிருஷ்டிகர்த்தா -ஸ்ரீ சங்கரர் –

ஞான ஸ்வரூபியானவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————————————————————

52-த்வஷ்டா –
உலகங்களை தேவர் மனிதர் முதலிய பெயர் உருவங்கள் உள்ளவைகளாக வகுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சம்ஹார காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

ஒளியுடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

————————————————————————-

53- ஸ்தவிஷ்டா-
மிக்க ஸ்தூலமாக இருப்பவர் -ஸ்தூல ரூபமாகக் காணும் பொருள்கள் எல்லாம் தாமாயிருப்பவர் –
பஹூச்யாம்-சங்கல்ப்பித்துக் கொண்டு -ஸூ ஷ்மமானஅவயகதம் முதலிய க்ரமத்தாலே தேவாதி யோனிகள் ஸ்பர்சாதி குணங்கள்
ஈரேழு லோகங்கள் உட்கொண்ட பிரம்மாண்டம் அதற்கு ஆவரனமான ஸ்தூல வ்யக்தமான
வியஷ்டி கார்யம் என்று விஸ்தாரமாகப் பரந்தவன்-ஸ்ரீ பராசர பட்டர் –

மிகப் பருத்தவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகவும் பருத்தவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

———————————————————

54-ஸ்தவிர-
காலத்தை எதிர்பார்ப்பதை லீலையாக மட்டும் கொண்டு நினைத்த போது படைக்கும் ஸ்வ தந்த்ரர் –
சங்கல்ப மூலமாக காரணம் என்றாலும் விலஷணன் -காலமும் இவனுக்கு வசப்பட்டதே -ஸ்ரீ பராசர பட்டர் –

தொன்மையானவர் -நிலையானவர் – த்ருவ-தொன்மையான நிலையானவர் -என்று ஒரே திரு நாமம் -ஸ்ரீ சங்கரர் –

முதியவர்–ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

——————

நவநீதகிருஷ்ணனைக் குறித்துதான் புரந்தரதாசர் “ஜகதோத்தாரணா” என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடினார்.
இன்றும் பெங்களூர் – மைசூர் சாலையில் அமைந்துள்ள மல்லூர் கோயிலிலுள்ள அந்த நவநீத கிருஷ்ணனை வந்து தரிசிக்கும்
தம்பதிகளுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டுகிறது. இவ்வாறு பிரம்மாதி தேவர்களின் புரிதலுக்கும் அப்பாற்பட்டவனாக
விளங்கும் எம்பெருமான் அப்ரமேய என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் 46-வது திருநாமம்.
“அப்ரமேயாய நம: என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நவநீதகிருஷ்ணனைப் போன்ற அழகான குழந்தை பிறக்கும்.

புலன்களுக்கு ‘ஹ்ருஷீகங்கள்’ என்று பெயர். தன்னுடைய பக்தர்களின் புலன்களை அடக்கி ஆண்டு அவற்றை
நல்வழியில் கொண்டு செல்வதால் ‘ஹ்ருஷீகேச:’ என்று அழைக்கப்படுகிறார் திருமால்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 47-வது திருநாமம்!” என்றார் பரமசிவன்.
“ஹ்ருஷீகேசாய நம:” என்று தினமும் சொல்லி வந்தால், நம்மால் அடக்க முடியாத நம் புலன்களை
எம்பெருமான் அடக்கி நம்மை நல்வழியில் செலுத்துவான்.

அனந்தபத்மநாப ஸ்வாமியின் உந்தியில் இருந்து தோன்றும் தாமரையில்
பிரம்மா வீற்றிருக்கிறார். காலச்சக்கரமாக அவரது உந்தித் தாமரை விளங்குவது போல், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எனும்
முக்காலங்களையும் குறிக்கும் விதமாக அங்கே மூன்று வாசல்கள் உள்ளன.
இவ்வாறு நாபியில் பத்மத்தை உடைய எம்பெருமான் ‘பத்மநாப:’ என்றழைக்கப்படுகிறான்.
திருவனந்தபுரம் அனந்தபத்மநாபஸ்வாமியைத் தியானித்தபடி “பத்மநாபாய நம:” என்று ஜபம் செய்பவர்கள்
நன்மக்களைப் பெற்று மகிழ்வார்கள்.

அமரர் என்றால் நீண்ட ஆயுள் பெற்றவர் என்று பொருள். அந்த அமரர்களை உருவாக்கி, அவரவர்க்குரிய பதவிகளில் அமர்த்தி,
அவர்களுக்குத் துன்பம் வரும் போதெல்லாம் காக்கும் பிரபுவாகவும் திருமால் விளங்குவதால் அவருக்கு ‘அமரப்ரபு:’ என்று திருநாமம்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 49-வது திருநாமம்.-அயர்வறும் அமரர்களுக்கும் அதிபதியான அனந்தபத்மநாபனாத் தியானித்தபடி
“அமரப்ரபவே நம:” என்று தினமும் சொல்லி வந்தால், நமக்கும் வாழ்வில் பல பதவி உயர்வுகளை அளித்து
அமரப்ரபு காத்தருள்வார்.

உலகின் படைப்புக்கும் செயல்பாடுகளுக்கும் அதிபதியான திருமாலைப் போற்றி
“விச்வகர்மணே நம:” என்ற ஸஹஸ்ரநாமத்தின் 50-வது திருநாமத்தை ஜபித்தால்,
காயத்திரி தேவர்களுக்கு அருளிய ஆறு செல்வங்களும் நமக்கும் கிட்டும்.

நொடிப் பொழுதில் தன் திருவுள்ளத்தால், சங்கல்பத்தால் விளையாட்டாகவே
உலகைப் படைக்கும் எம்பெருமான் மநு என்றழைக்கப்படுகிறான்.-“மநவே நமஹ” என்று தினமும் சொல்லி வந்தால், நாம் வாழ்க்கையில் மேன்மைகள் அடைவதற்கு அவன் திருவுள்ளம் கொள்வான்.

த்வஷ்டா’ என்றால் சிற்பி என்று பொருள். இவ்வுலகையே செதுக்கி வடிவமைத்த சிற்பியானபடியால்
திருமால் த்வஷ்டா என்றழைக்கப் படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 52வது திருநாமம்.
“த்வஷ்ட்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வந்தால், நம் வாழ்வையும் நல்ல முறையில் எம்பெருமான் செதுக்கித் தருவான்.

நினைத்த நேரத்தில் விஸ்வரூபம் எடுக்கவல்ல ஆற்றல் திருமாலுக்கு இருப்பதை உணர்த்தும்
திருநாமமான ‘ஸ்தவிஷ்ட:’ என்பது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 53-வது திருநாமமாக அமைந்துள்ளது.
தினமும் “ஸ்தவிஷ்டாய நமஹ” என்று சொல்லி வந்தால், எந்தத் தீய சக்தியும் நம்மை அண்டாமல் திருமால் காத்தருள்வார்.

காலத்துக்கும் அதனால் ஏற்படும் மாறுதல்களுக்கு அப்பாற்பட்டு விளங்குவதால் திருமாலுக்கு ‘ஸ்தவிர:’ என்று திருநாமம்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 54வது திருநாமமாக அமைந்துள்ளது.
“ஸ்தவிராய நமஹ” என்று தினமும் சொல்லி வந்தால், நம்முடைய பணிகளைச் சரியான காலத்தில்
பூர்த்தி செய்ய எம்பெருமான் அருள்புரிவான்.

த்ருவ:’ என்றால் மாறாத திருமேனியை உடையவன் என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 55வது திருநாமம்.
“த்ருவாய நமஹ” என்று தினமும் சொல்லி வருபவர்கள் திருக்கண்ணங்குடி தாமோதர நாராயணப் பெருமாளின்
மாறாத அருளுக்குப் பாத்திரமாவார்கள்.

குறிப்பு: ஸ்தவிஷ்ட: என்ற 53-வது திருநாமம் எம்பெருமான் மிகப்பெரிய வடிவங்களை எடுக்க வல்லவன் என்பதைக் காட்டியது.
ஸ்தவிர: என்ற 54-வது திருநாமம் அவன் அவ்வாறு எடுக்கும் வடிவங்கள் காலத்துக்குக் கட்டுப்படாதவை என்று காட்டியது.
த்ருவ: என்ற 55-வது திருநாமம் அவனது வடிவங்கள் மாறாமல் இருப்பவை என்பதைக் காட்டுகிறது.

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள் — ஸ்லோகம் –5–

October 31, 2023
  1. ஸ்வயம்பூ: ஶம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
    அனாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: ||

    இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

    37. ஸ்வயம்பூ: 38. ஶம்பு: 39. ஆதித்ய: 40. புஷ்கராக்ஷ: 41. மஹாஸ்வன: |
    42. அநாதிநிதன: 43. தாதா 44. விதாதா 45. தாதுருத்தம: |

பகவான் ஸ்வயம்பூஹ், அதாவது தன்னால் இருப்பவர். அவர் மற்றவர்களைச் சார்ந்து இருக்கவில்லை, அவர்  தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் தருகிறார். அவர்  சூரியனில் உள்ள அனைத்து பிரகாசம் மற்றும் பிரகாசத்தின் ஆற்றல் மற்றும் ஆதாரமாக இருக்கிறார். அவரது கண்கள் தாமரை மலரைப் போன்றது, அதன் மகிமை வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பிறப்பு, சிதைவு அல்லது இறப்பு இல்லை, மேலும் அவர் இந்த பிரபஞ்சத்தை ஆதரிக்கிறார். அவர் செயல்களின் பலனை உருவாக்குகிறார், முழு பிரபஞ்சத்தையும் நிலைநிறுத்துகிறார் மற்றும் அதன் உச்ச கட்டுப்பாட்டாளராக இருக்கிறார்

ஸ்வயம்பூ: — கருணையால் பிறந்து அருள்பவர்
சம்பு: — ஆனந்தம் அளிப்பவர்
ஆதித்ய: – ஸூர்ய மண்டலத்தில் உறைபவர்
புஷ்கராக்ஷ: — மலர்ந்த தாமரைக் கண்ணினர்
மஹாஸ்வன: — வேதமெங்கும் பெருக ஒலிக்கும் புகழினர்
அநாதிநிதந: — அவதரித்தாலும் ஆதியோ அந்தமோ அற்ற உருவினர்
தாதா — இயற்கைக்கு உயிர் நல்கும் பிரான்
விதாதா — உயிர்களை முக்தியை நோக்கிப் போற்றி வளர்ப்பவர்
தாதுருத்தம: — படைக்கும் நான்முகர்க்கும் பெரியவர்

தானாகத் தோன்றியவன் {ஸ்வயம்பூ},
தன்னை வழிபடுபவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன் {சம்பு},
சூரிய வட்டிலுக்கு மத்தியில் (பொன்வடிவில் உள்ள) தலைமை மேதை {ஆதித்யன்},
தாமரைக்கண்ணன் {புஷ்கராக்ஷன்},
உரத்த குரல் கொண்டவன் {மஹஸ்வநன்},
தொடக்கமும் முடிவுமற்றவன் {அநாதிநிதநன்},
(அனந்தன் மற்றும் பிறரின் வடிவில்) அண்டத்தைத் தாங்கிப் பிடிப்பவன் {தாதா},
செயல்கள் மற்றும் அவற்றின் கனிகள் அனைத்தையும் விதிப்பவன் {விதாதா},
பெரும்பாட்டனான பிரம்மனையும் விட மேன்மையானவன் {தாதுருத்தமன்};(18)

அனைத்தும் தானே –ஆனால் அவற்றிலும் உயர்ந்தவன் –

37-ஸ்வயம்பூ -வினைகளின் பயனாகப் பிறவாமல் தன் கருணை மற்றும் விருப்பத்தினால் பிறப்பவர் –
38-சம்பு -தன் அழகாலும் பண்புகளாலும் அடியார்களுக்குப் பெருக்கு எடுக்கும் இன்பத்தை அளிப்பவர் –
39-ஆதித்ய -சூர்ய மண்டலத்தின் நடுவே இருப்பவர் -உருக்கிய தங்கம் போலத் திகழ்பவர் –
40-புஷ்கராஷ-தாமரைக் கண்ணன் -இதுவே முழு முதல் கடவுளுக்கு அடையாளம் –

41-மஹாஸ் வன -உயர்ந்த ஒலியை உடையவர் -அதாவது வேதங்களால் போற்றப் படுபவர் –
42-அநாதி நிதன-முதலும் முடிவும் அற்றவர் –
43-தாதா- -உலகைப் படைக்க முதலில் நான்முகனை தன் கர்ப்பமாகப் படைத்தவர் –
44-விதாதா -பிரமனாகிய கர்ப்பத்தை வளர்த்து உத்பத்தி செய்பவர் –
45-தாதுருத்தம -நான்முகனைக் காட்டிலும் உயர்ந்தவர் –

—————

37-ஸ்வயம்பூ –
தானே பிறப்பவன் –

குத இதம் ஸர்வம் வைபவம் ? யத : ஸ்வயம்பூ: ।(இந்த வைபவம் தானே இச்சையால் தோன்றுவதால் )
* புவஸ் ஸம்ஜ்ஞாந்தஶ்யோ : இதி க்கிப் । ஸ்வ லீலாதி ப்ரயோஜநாய
ஸ்வேச்சயா ஸ்வ அஸாதாரணீம் (தனக்கே உரித்தான )பரம ஸத்த்வ மயீம் ப்ரக்ருதிமேவ
ஸுர நர ஸஜாதீய ஸந்நிவேஸாம் அதிஷ்டாய, ஸ்வயமேவ பவதீதி;
ந சதுர்முகாதிவத் ஈஶ்வராந்தரேண (நாராயனானால் படைக்கப்பட்டது போல் இவன் அல்லவே )கர்மாதிபிர்வா (கர்ம வசத்தாலும் அல்லவே )பரவத்தயேத்யர்த : ।யதா ,
* ஸ்வயம்பு ப்ரஹ்ம பரமம் கவீநாம்
* ப்ரக்ருதிம் ஸ்வா மதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா । த்ரி குண ஜீவ ப்ரக்ருத்யோரபி ஸ்வத்வே அபி (ஸூ த்த ஸத்வ மிஸ்ர தத்வ இரண்டு பிரக்ருதியும் இவனதே )ஸ்வ போக விபூதித்வ அஸாதாரண்ய த்விஶிநஷ்டி ப்ரக்ருதிம், ஸ்வாமிதி ।

ததா ச
ஸ்ரீ ஹரி வம்சே – வைதிக புத்ராநயநே லீலோபகரண ப்ரக்ருதித்வ யோபந்யாஸோபரி — ப்ரஹ்ம தேஜோ மயம் திவ்யம் ஆஶ்சர்யம் த்ருஷ்டவாநஸி ।
அஹம் ஸ (நான் அவனே )பரத ஶ்ரேஷ்ட மத் தேஜஸ் தத் ஸநாதநம் ॥
ப்ரக்ருதிஸ் ஸா மம பரா வ்யக்தா அவ்யக்தா ச —பாரத ।
தாம் ப்ரவிஶ்ய பவந்தீஹ முக்தா பரத ஸத்தம ॥ இதி । வ்யக்தம் ஹி

ஶ்ரீவிஷ்ணுதத்வே பஞ்ச சக்தி முக்த்வா,
*மத்ஸ்ய கூர்ம வராஹாணாம் ஆவிர்பாவோ மஹாத்மந: ।
அநயைவ த்விஜ ஶ்ரேஷ்ட ந அந்யதா தத் விரோதத : ॥ இதி ।

(வ்ருத்த விபூதி -பரஞ்சுடர் சோதி உடம்பாய் அழுக்கு பதித்த உடம்பாய்
அவன் இனி சரீரம் நாம் -இந்த அழுக்கே தீண்டாதே அவனுக்கு)

வைஷ்ணவே —* ஸமஸ்தாஸ் ஸக்தயஶ் சைதா :,இத்யாதிநா ப்ராதுர்பாவ ப்ரயோஜந நிமித்தே-
உபாதாந கால சங்க்யாதி வைலக்ஷண்யம் ஸுவ் யஞ்ஜிதம் ।

ஶ்ரீமதி ராமாயணே , ஸர்வ- லோகேஶ்வரஸ் ஸாக்ஷால் லோகாநாம் ஹித காம்யயா,
* ஸ ஹி தேவை ருதீர்ணஸ்ய ராவணஸ் வதார்திபி: ।
அர்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஜே விஷ்ணுஸ் ஸநாதந:॥
ஸ ஏக ஸ்வயமுத்பபௌ, இத்யாதவ் ச ॥ 37 ॥

ப்ரக்ருதிம் ஸ்வாம திஷ்டாய சம்பவாமி ஆத்மமாயயா
பிதரம் ரோசயமாச–தசரதம்
தானே தனித் தோன்றல் -பெரிய திரு -24
ஆதி அம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவன்

தம் மகிழ்ச்சிக்காக தம் இச்சையினால் தமக்கே சிறப்பாக உள்ள சத்வ திருமேனியை தேவாதி யோனிகளில் அமைத்துக் கொண்டு அவதரிப்பவர் –
ப்ரஹ்மாதிகள் இவரது வசம் -பிரகிருதி ஜீவன் இவரது யுடைமையாக இருந்தாலும் சுத்த சத்வம் அசாதாரணம் –
அனைத்தும் அவனுடைய போகத்திற்காக இருப்பதால் என்னுடைய பிரகிருதி -என்று அவனால் கூறப்பட்டது -ஸ்ரீ பராசர பட்டர் —
ஸ்வ லீலாபரம –பிரயோஜனாதி ஸ்வேச்சாயா ஸ்வ சாதாரணீம் பரம சத்வ மயம் பிரக்ருதிமீவ
ஸூர நர ஜாதீய சந்நிவேசாம் அதிஷ்டாய ஸ்வயமேவ பவதி –

ஸ்வயம்பூ ப்ரஹ்ம பரமம் கவீ நாம் –தைத்ரியம் -6-11–
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாமி ஆத்மமாயயா –ஸ்ரீ கீதை -4-6-
ப்ரஹ்ம தேஜோ மயம் திவ்யம் ஆச்சர்யம் த்ருஷ்ட்வான் அஸி அஹம் ச பரத ஸ்ரேஷ்ட மத் தேஜஸ் தத் சனாதனம் ப்ரக்ருதி
சா மம பரா வ்யக்த அவ்யக்த ச பாரத தாம் பிரவிஸ்ய பவந்தீஹ முக்தா பரம சத்தம
மத்ஸ்ய கூர்மம் வராஹானாம் அவிர்பாவோ மஹாத்மன அநந் யைவ த்விஜ ஸ்ரேஷ்ட நாந் யதா தத் விரோதித
சமஸ்த்தா சக்தயச்ச ஏதா –ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஐந்து சக்திகள் -தோற்றம் -காரணம் -காரியம் -காலம் -எண்ணிக்கை -இவற்றால் மேன்மை
சர்வ லோகேஸ்வர சாஷாத் லோகா நாம் ஹித காம்யயா –யுத்த -144-17-
ச ஹி தேவை உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஜே விஷ்ணு சனாதன –அயோத்யா -1-7-
ச ஏவ ஸ்வயம் உத்பபவ் –அவன் தன்னை வெளிப்படுத்துகிறான் –அஷ்டாத்யாயி

தாமே யுண்டானவர் -எல்லாவற்றுக்கும் மேலாக தாமே இருப்பவர் -ஸ்வ தந்த்ரர் -பரதந்த்ரர் அல்ல –
எல்லாவுமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்—-

தாமே யுண்டாகுபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

ஓம் ஸ்வயம்புவே நம
தானே இச்சையால் -காருண்யம் அடியாக அவதரிப்பவர்

அவதாரங்கள் பற்றிய திருநாமங்கள் போல் இருந்தாலும் -இது பரத்வ மஹிமை சொல்லும் ப்ரகரணம்
நாரஸிம்ஹ வபுஸ் -இதுவும் விபவம் சொல்ல வந்தது அல்ல -அழகு எவ்வாறு செல்வமாக இருக்கும் என்பதுக்கு த்ருஷ்டாந்தம்
அதே போல் இங்கும் –122-திரு நாமங்கள் வரையிலும் ஸ்ரீ வைகுண்டநாதன் பெருமைக்கு குறைவில்லை என்று சொல்ல வந்தவையே

————

  1. ஓம் ஸ்வயம்புவே நம:

ஸ்வயமேவ பவதீதி ஸ்வயம்பூ: |

ஸ்வயமேவ (தான் மட்டும்) தனியொருவராய் பவதீதி இருப்பதால் ஸ்வயம்பூ: அவர் ‘ஸ்வயம்பூ’ என்று அழைக்கப்படுகிறார்.

(வேறொரு காரணமின்றிதான் மட்டும்) தனியொருவராய் இருப்பதால், பகவான் ‘ஸ்வயம்பூ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸ ஏவ ஸ்வயமுத்பபௌ’ (மனு ஸ்ம்ரிதி 1.7)

மனுஸ்ம்ரிதியில் மனு பகவான் கூறுகிறார்அவர் தானே (தன்னிச்சையாலே) வெளிப்பட்டார்

இதி இவ்வாறு மானவம் வசனம் மனு மனுஸ்ம்ரிதியில் கூறியுள்ளார் |

ஸர்வேஶாமுபரி பவதி ஸ்வயம் பவதீதி வா ஸ்வயம்பூ: |

ஸர்வேஶாமுபரி அனைவருக்கும் மேலே பவதி இருப்பதாலும் ஸ்வயம் பவதீதி வா தன்னிச்சையால் தோன்றுவதாலும் ஸ்வயம்பூ: அவர் ‘ஸ்வயம்பூ’ என்று அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் மேலே இருப்பதாலும், தன்னிச்சையால் தோன்றுவதாலும் பகவான் ‘ஸ்வயம்பூ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யேஶாமுபரி பவதி யஸ்சோபரி பவதி ததுபயாத்மனா ஸ்வயமேவ பவதீதி வா ஸ்வயம்பூ: |

யேஶாமுபரி பவதி எவருக்கு மேலானவரோ (ஜீவாத்மா) யஸ்சோபரி பவதி எவர் மேலானவரோ (பரமாத்மா) ததுபயாத்மனா இப்படி இருவாறாகவும் ஸ்வயமேவ அவரே பவதீதி வா தோன்றுவதால் ஸ்வயம்பூ: அவர் ‘ ஸ்வயம்பூ’ என்று அழைக்கப்படுகிறார்.

எவருக்கு மேலானவரோ (ஜீவாத்மாவும் அவரே), எவர் மேலானவரோ (ஜீவாத்மாவிற்கு மேலானவரும் அவரே), இப்படி இருவாறாகவும் அவரே தோன்றுவதால் பகவான் ‘ஸ்வயம்பூ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரிபூ: ஸ்வயம்பூ: (ஈசாவாஸ்ய உபநிஶத் 8)

ஈசாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளதுஎல்லாமாக இருப்பவர்; தானே தோன்றியவர்.

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி அதவா அல்லது ஸ்வயம்பூ: ஸ்வயம்பூ என்றால் பரமேஶ்வரஅந்த பரம்பொருள் ஸ்வயமேவ தன்னிச்சையாலே ஸ்வதந்த்ரோ சுதந்திரமாக பவதி இருப்பவர் ந பரதந்த்ர(என்றுமே) பிறருக்கு அடங்கி இருப்பவரல்ல.

‘பராஞ்சி கானி வ்யத்ருணத் ஸ்வயம்பூ:’ (கதோபநிஶத் 2.1.1)

கதோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளதுஈஸ்வரன் இந்த்ரியங்களை வெளிநோக்கு உடையனவாக (படைத்திருப்பதன் மூலம்) நாசப்படுத்திவிட்டார்.

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படியும் (மேலே கூறப்பட்ட ஈசாவாஸ்ய உபநிஶத் மந்த்ரத்தின் படியும் பகவான் ஸ்வயம்பூ என்று அழைக்கப்படுகிறார்).

————

ஸ்வயம்பூஹ் – சொந்தமாக வெளிப்படுபவர்

ஸ்வயம்பூஹ் என்றால் சுயமாக பிறந்தவர் என்று பொருள். ஸ்வயம் ஏவ பவதி இதி ஸ்வயம்பூஹ் – வெளிக் காரணமின்றித் தானே வெளிப்படுபவர்’. மனு ஸ்மிருதி ( 1, 7) ‘ஸ ஏவ ஸ்வயம் உத்வபௌ – அவர் மட்டுமே சொந்தமாக பிறந்தார்’ என்று கூறுகிறது.


38-சம்பு –
இன்பம் உண்டாக்குமவன்

இங்கும் பர்யவசாய வ்ருத்தி இல்லாமல் ஸாஷாத்தாக -இவனுக்கே பொருந்தும்

ஏவம் ஸ்வ ஸௌந்தர்ய ஸௌஶீல்யாதி குணாவிஷ்காரேண -ஸம்– ஸுகம் பாவயதீதி
ஸம்பு: । டுப்ரகரணே
* மிதத்வாதிப்ய உபஸம்க்யாநம் இதி டு: । யதா
* விச்வாஷம் விஸ்வ சம்புவம் –தைத்ரியம் ।

அழகையும் எளிமையையும் காட்டு ஸூகம் நன்கு அளிப்பவன்

உப ப்ரும்ஹிதம் ச
ரூப ஒவ்தார்ய குணை : பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம் -அயோத்யா -3-29-।
சந்த்ர காந்தாநநம் இராமம் அதீவ பிரிய தர்சனம் -அயோத்யா -3-28- । இத்யாதிபி: ॥ 38 ॥

புழுதி அளைந்த பொன் மேனி காணப் பெரிதும் உகப்பன் -பெரியாழ்வார் -2-4-9-

அழகு எளிமை குணங்களை வெளிப்படுத்தி பேரின்பத்தை விளைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஏவம் ஸ்வ சௌந்தர்யாதி சௌசீல்யாதி குணாவிஷ்காரேண் ஸூ கம் பாவயதியாதி –

பக்தர்களுக்கு இன்பத்தைத் தருபவர் -ஸ்ரீ சங்கரர்—

சுகத்தை அளிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

ஓம் சம்புவே நம
தனது கல்யாண குணங்களால் நிரவதிக அந்தமில் பேர் இன்பம் அளிப்பவன்

————-

ஓம் ஶம்பவே நம:

ஶம் ஸுகம் பக்தனாம் பாவயதீதி ஶம்பு: |

ஶம் ‘ஶம்’ என்றால் ஸுகம் சுகம் அல்லது இன்பம் பக்தனாம் தனது அடியவர்களுக்கு பாவயதீதி உருவாக்குவதால் (அளிப்பதால்) ஶம்பு: அவர் ‘ ஶம்பு:’ என்று அழைக்கப்படுகிறார் |

தனது அடியவர்களுக்கு இன்பத்தை அளிப்பதால் (சுகத்தை உருவாக்குவதால்) பகவான் ‘ஶம்பு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

ஷம்பு – தன் பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவர்

‘ஷாம்’ என்றால் மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சி மற்றும் ‘புஹ்’ என்பது படைப்பவர். எனவே ஷம்பு என்றால் பக்தர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவர் என்று பொருள். ‘ஷாம் பக்தானாம் பாவயதி இதி ஷம்புஹ். பக்தர்களை மகிழ்விப்பவர்


39-ஆதித்ய-ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி -ஸூர்யனில் இருக்கும் புருஷோத்தமன் 

அதைஷாம் ப்ராதுர் பாவாநா முதாஹரணம் பூஷ்ணி புருஷமாஹ –
ஆதித்ய: |
ஆதித்யோ அஸ்ய நிவாஸ இதி; வாழுமிடம் -இடத்தின் பெயரே இவனுக்கும் 
* தித்யதித் யாதித்ய இத்யாதிநா ண்ய: ।

ஏவம் ஹி ப்ரஹ்ம மீமாம்ஸிதம்,*அந்தஸ் தத் தர்மோபதேஸாத் இதி ।(பர ப்ரஹ்மம் அடையாளங்கள் இவனுக்கும் சொல்லி இருப்பதால் )
* ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ த்ருச்யதே தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ —
* த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்தீ இத்யுதா ஹ்ருத்ய, ஆதித்யாந்தரஸ்ய
* தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவ மக்ஷிணீ இத்யாம்நாதம் ॥ 39 ॥

தஸ்ய உதிதி நாமா -சாந்தோக்யம்
உத் -என்று அவன் திரு நாமம்

த்யேய: ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தி
நாராயண: ஸரஸிஜாஸன ஸன்னிவிஷ்ட: I
கேயூரவான் மகர குண்டலவான் கிரீடி
ஹாரீ ஹிரண்யவபு: த்ருத சங்க சக்ர: II

நீள் சுடர் இரண்டும் என்கோ -3-4-1-

568-ஆதித்ய-மீண்டும் வரும் தேவகி புத்திரன் –
அதிதியே தேவகியாக பிறந்தபடியால் அவள் கர்ப்பத்தில் உண்டானவனை ஆதித்யன்
ஆ- அஷரத்தினால் உபாசிக்கத் தகுந்தவன்
தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன் -பெரியாழ்வார் -1-2-6
தேவகி சிங்கமே -பெரியாழ்வார் -1-3-4-

ஸூர்ய மண்டலத்தில் வசிப்பவர் -அவதாரங்களுக்கு எல்லாம் உதாரணமாக ஸூர்ய மண்டலத்தில் உள்ள
புருஷனைக் கூறுகிறார் -ஸ்ரீ பராசர பட்டர் —

அந்தஸ்த தர்ம உபதேசாத்-1-1-21-
ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே –சாந்தோக்யம்
ச யச்சாயம் புருஷே யச்சா சா வாதித்யே ச ஏக –தைத்ரியம்
த்யேய யதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணி–சாந்தோக்யம்

பக்தர்களுக்கு இன்பத்தைத் தருபவர் -ஸ்ரீ சங்கரர்—
சூர்ய மண்டலத்தில் இருப்பவர் -ஒரே ஸூர்யன் பிரதிபலிப்பது போலே பரமாத்மா ஒருவரே
பல உடல்களில் தோற்றுவதால் ஸூர்யன் போன்றவர் –
பன்னிரண்டு ஆதித்தியர்களில் விஷ்ணுவாக இருப்பவர் -அதிதியாகிய பூமிக்கு பதியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்—

ஸூர்ய மண்டலத்தில் இருப்பவர் -அங்கே இருந்து கொண்டு பூமியின் நீரை ஆவியாக வற்றச் செய்பவர்-
உபேந்திர ரூபத்துடன் அதிதிக்கு மைந்தனாக அவதரித்தவர் -க்ரஹிப்பவர் -செல்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் ஆதித்யாய நம
ஸவித்ரு மண்டல மத்திய வர்த்தி

—————–

  1. ஓம் ஆதித்யாய நம:

ஆதித்யமண்டலாந்த:ஸ்தோ ஹிரண்மய: புருஶ: ஆதித்ய: |

ஆதித்யமண்டலாந்த:ஸ்தோ சூர்யமண்டலத்தின் நடுவே ஹிரண்மயதங்கமயமான புருஶபுருஶராய் வீற்றிருப்பதால் ஆதித்ய: அவர் ‘ஆதித்யன்’ என்று அழைக்கப்படுகிறார் |

சூர்யமண்டலத்தின் நடுவே தங்கமயமான புருஶராய் வீற்றிருப்பதால் பகவான் ‘ஆதித்யன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அன்றாட சந்த்யா வந்தனத்தில் வரும் ஒரு பகுதி: த்யேயஸ்ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தி நாராயண ஸரஸிஜாஸன ஸந்நிவிஷ்ட.

த்வாதஸாதித்யேஶூ விஶ்ணுர்வா ஆதித்ய: |

த்வாதஸாதித்யேஶூ பன்னிரண்டு ஆதித்யர்களுக்குள் விஶ்ணுர்வா ‘விஶ்ணு’ என்ற பெயருடைய ஆதித்யனாக பகவான் இருப்பதால் ஆதித்ய: அவர் ‘ஆதித்யன்’ என்று அழைக்கப்படுகிறார் |

பன்னிரண்டு ஆதித்யர்களுக்குள் விஶ்ணு என்ற பெயருடைய பகவான் இருப்பதால் பகவான் ‘ஆதித்யன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஆதித்யானாமஹம் விஶ்ணு:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.21)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:

ஆதித்யர்களில் நான் விஶ்ணு.

இத்யுக்தே இவ்வாறு பகவான் கூறியுள்ளார்.

பன்னிரண்டு ஆதித்யர்களின் பெயர்கள்: சக்ர, அர்யமா, தாதா, த்வஷ்டா, பூஶா, விவஸ்வான், சவிதா, மித்ர, வருண, அம்சுமான், பக மற்றும் விஶ்ணு.

அதிதேர் அகண்டிதாயா மஹ்யா அயம் பதிரிதி வா ஆதித்ய: |

அதிதேர் ‘அதிதி’ என்றால் அகண்டிதாயா மஹ்யா பரந்து விரிந்துள்ள இந்த பூமி அயம் அந்த நிலமகளின் பதிரிதி வா கணவன் ஆதலால் ஆதித்ய: அவர் ‘ஆதித்யன்’ என்று அழைக்கப்படுகிறார் |

‘அதிதி’ என்றால் பரந்து விரிந்துள்ள இந்த பூமியைக் குறிக்கும். அந்த நிலமகளின் கணவன் ஆதலால், பகவான் ‘ஆதித்யன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘இயம் வா அதிதி:’ ‘மஹீம் தேவீம் விஶ்ணுபத்னீம்’

‘இது (இந்த பூமி) அதிதி’

‘இந்த பூமிதேவியானவள் விஶ்ணுவின் மனைவியாவாள்’

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

யதா ஆதித்ய ஏக ஏவாநேகேஶூ ஜலபாஜனேஶூ அனேகவத் ப்ரதிபாஸதே ஏவமனேகேஶூ ஶரீரேஶூ ஏக ஏவாத்மானேகவத் ப்ரதிபாஸத இதி ஆதித்ய ஸாதர்ம்யதா ஆதித்ய: |

யதா எவ்வாறு ஆதித்ய சூரியன் ஏக ஏவாநேகேஶூ ஒன்றாக இருப்பினும் ஜலபாஜனேஶூ வெவ்வேறு நீர்நிலைகளில் அனேகவத் பலவாறாக ப்ரதிபாஸதே பிரதிபலிக்கின்றதோ, ஏவமனேகேஶூ தான் ஒருவர் மட்டுமே இருப்பினும் ஶரீரேஶூ பல்வேறு உடல்களில் ஏக ஏவாத்மானேகவத் ஒரே ஆத்மாவானது பல ஆத்மாக்களாக ப்ரதிபாஸத பிரதிபலிப்பதால் இதி ஆதித்ய ஸாதர்ம்யதா இவ்வாறு (பிரதிபலிப்பதில்) சூரியனை ஒத்து இருப்பதால் ஆதித்ய: அவர் ‘ஆதித்யன்’ என்று அழைக்கப்படுகிறார் |

ஒரே சூரியன், பல நீர்நிலைகளில் பலவாக பிரதிபலிக்கிறது. அது போன்றே, ஒரே பரமாத்மா பல்வேறு உடல்களில் பற்பல ஜீவாத்மாக்களாக தோன்றுகிறார். இவ்வாறு, சூரியனைப் போன்ற தன்மை உடையவராதலால் பகவான் ‘ஆதித்யன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

ஆதித்யா – சூரியனின் கோளத்தில் தங்க நிறத்தில் இருப்பவர்

இந்த நாமத்தை 3 விதமாக விளக்கலாம்.

அ) சூரியனில் உள்ள புருஷன் – மகாவிஷ்ணு சூரியனின் மைய ஆற்றல். ஆதிசங்கரர் இதை விளக்குகிறார் “’ஆதித்ய மண்டலாந்தஸ்தா ஹிரண்மய புருஷா – சூரியனின் சுற்றுப்பாதையின் மையத்தில் இருக்கும் தங்க நபர்”;

ஆ) பன்னிரண்டு ஆதித்யர்களில் ஒருவர். காஷ்யப முனிவரின் மனைவி அதிதிக்கு ஆதித்யஸ் என்ற 12 மகன்கள் இருந்தனர். அவை விவஸ்வான், ஆர்யமா, பூஷா, த்வஷ்டா, சவிதா, பக, தாதா, விதாதா, வருணா, மித்ரா, ஷக்ரா மற்றும் உருக்ரமா. இவற்றில் கடைசியாக பெயரிடப்பட்ட உருக்ரமா விஷ்ணுவின் அவதாரம்.

பகவத் கீதை, அத்தியாயம் 10 வது வசனம் 21 இல், பகவான் ” ஆதித்யானாம் அஹம் விஷ்ணுஹ்” – ஆதித்யாக்களில் நான் விஷ்ணு (உருக்ரம்) என்று கூறுகிறார்.

c) சூரியனைப் போல அனைத்தையும் தாங்கி வளர்த்தவர்.


40-புஷ்கராஷ –
தாமரைக் கண்ணன்

ஸர்வ ஐஶ்வர்ய அஸாதாரண லக்ஷணம் புண்டரீகாக்ஷத்வம் ஸம்கமயதி-
புஷ்கராக்ஷ: |
* அக்ஷ்ணோ அதர்ஸநாத் இத்யச் ஸமா ஸாந்த(பார்வை பொருளில் வராமல் அச் சேர்ந்து வந்துள்ளது )॥ 40 ॥

புருஷ -புஷ்கரேஷண-ராம கமல பத்ராஷ -மகா வராஹ ஸ்புட பத்ம லோசன –
பெரும் கேழலார் தன் பெரும் தண் மலர்ப் புண்டரீகம் -திரு விருத்தம் -45
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே -திருநெடும் தாண்டகம் -21
மீண்டும் -561-வரும் புஷ்டி அளிக்கும் கண்ணை உடையவன்
அனுக்ரகம் வர்ஷிக்கும் கண்களை உடையவன் –
மீன் கண்ணாலே குஞ்சுகளை வளர்ப்பது போலே
அல்லிக் கமலக் கண்ணனை -8-10-11
செய்ய தாமரைக் கண்ணன் -3-6-

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||–ஸ்தோத்ர ரத்னம் 12

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

இது திவ்ய ரூப திரு நாமம் -மற்றவை ஸ்வரூப பாரமான திருநாமங்கள்

புஷ்கராஷா-
சர்வேஸ்வரனுக்கு உரிய இலக்கணமான தாமரை கண்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
சர்வ ஐஸ்வர்ய அசாதாராண லஷணம் புண்டரீகாஷத்வம் சங்கமயதி

தாமரையை ஒத்த திரு கண்களை யுடையவர் -ஸ்ரீ சங்கரர்—

தாமரை போன்ற இரு கண்களை யுடையவர் -எண்ணற்ற கண்களை யுடையவர் –
புஷ்டியைத் தருபவர் -அழிவில்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் புஷ்காராஷாய நம
செந்தாமரைக் கண்ணன்

—————

  1. ஓம் புஶ்கராக்ஷாய நம:

புஶ்கரேண உபமிதே அக்ஷிணீ யஸ்யேதி புஶ்கராக்ஷ: |

புஶ்கரேண தாமரை இதழ்களை உபமிதே ஒத்த அக்ஷிணீ கண்களை யஸ்யேதி உடையவராதலால் புஶ்கராக்ஷ: அவர் ‘புஷ்கராக்ஷ’ என்று அழைக்கப்படுகிறார் |

தாமரை இதழ்களை ஒத்த கண்களை உடையவராதலால் பகவான் ‘புஷ்கராக்ஷ’ (தாமரைக்கண்ணன்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

புஷ்கராக்ஷ – தாமரை மலரைப் போன்ற அழகிய கண்களை உடையவர்

புஷ்கரம் என்றால் தாமரை என்றும் அக்ஷ என்றால் கண் என்றும் பொருள். எனவே தாமரை மலரைப் போன்ற அழகிய கண்களை உடையவர் என்பது இதன் பொருள். இந்த யோசனையை நாம் ஏற்கனவே தியான ஸ்லோகங்களில் பார்த்தோம், உதாரணமாக “புண்யோபேதம் புண்டரீகாயதாக்ஷம்”.

நம்மாழ்வார் இறைவனின் கண்களை விவரிக்கும் போது
“தாமரை மலர்கள் போல இருக்கும் பெருமாளின் இரண்டு கண்களும் நம் உயிரை குடிக்க வந்த இரண்டு யமன்களோ?” என்கிறார்.


41-மகாஸ்வந-
பூஜிக்கத் தக்க ஸ்வந -சப்தம் திரு நாமம் உடையவன்

தஸ்யைவ சிஹ்நாந்தரம் ச ஸூசயதி –
மஹாஸ்வந: ।
மஹாந் – பூஜ்ய: ஸ்வந: – ஸப்தோ யஸ்யேதி; ஆந் மஹத : இத்யாதிநா ஆத்த்வம் ।

(ஒரே வேற்றுமையில் மஹாந் ஸ்வந இருந்ததால்)

ஆமநந்தி ஹி,
*தஸ்யோதிதி நாம இதி । தஸ்யை தஸ்ய நாம ரூபம் ஸைப்தம், (நாமம் ரூபம் இவற்றுக்கு பிரமணம் வேதமே -அவரே வேதம் -வேதத்தால் விளக்கப்பட்டு- வேத ஒலியாகவே உள்ளவன் )
* ஸைஷா த்ரய்யேவ வித்யா தபதி
ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண் மய: புருஷ: இதி த்ரயீரூபம் வா;
பூஜ்யதமம் ஸாவித்ரீ ப்ரதிபாத்யதயா வா ।

அதோ ஹி மோக்ஷ தர்மேஷு
* வித்யாஸஹாயவந்தம் மாமிதித்யஸ்தம் ஸநாதநம் இதி ॥ 41 ॥

வித்யை விட்டு விலகாமல் -ஆதித்ய மண்டலத்தில் இருந்து -சனாதனமாக
ஊற்றம் உடையாய்
பன்னலார் பயிலும் பவித்ரன்
வேதைக சமைதி கம்யன்

தஸ்ய உதிதி நாம -உத் –
உயர்வற -உ வில் தொடங்கி–உயர்ந்தே -தே யில் முடியும் திருவாய்மொழி யான மஹா சப்த வாச்யன்
சப்தம் -வேதம் -காயத்ரியால் சொல்லப்படும் பூஜ்யன் –

மிகவும் உயர்ந்த சப்தங்களை திரு நாமமாக யுடையவர் -வேத சப்தத்தை யுடையவன் -பூஜ்யமான சாவித்ரி
மந்தரத்தால் பிரதிபாதிக்கப் படுபவன் -ஸ்ரீ பராசர பட்டர் —-மஹா பூஜ்யான ஸ்வ நக சப்த யச்யேதி-மஹாஸ்வந-

தஸ்ய உத் இதி நாம –சாந்தோக்யம் -அவனது பெயரும் ரூபமும் சப்தத்தை -வேதத்தை அடிப்படையாகக் கொண்டவை
சாஷா த்ரயீ ஏவ வித்யா தபதி ய ஏஷ அந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷ –
வித்யா ஸஹாயவந்தம் மாம் ஆதித்யஸ்தம் சநாதநம் –மோக்ஷ தர்மம்

மிகவும் உயர்ந்த சப்தமாகிய வேதத்தை லஷணமாக யுடையவர் -ஸ்ரீ சங்கரர்—

ஆதரவற்ற நல்லோரை தம்மிடத்துக்கு அழைத்துச் செல்லும் மேன்மை யுடையவர் –
மேன்மை கொண்ட வாயுவைத் தூண்டுபவர் –
கம்பீரமான குரலுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் மஹா ஸ்வாந நம
சிறந்த வேத ஒலி உடையவன்

———————-

  1. ஓம் மஹாஸ்வனாய நம:

மஹான் ஊர்ஜித: ஸ்வனோ நாதோ வா ஶ்ருதிலக்ஷணோ யஸ்ய ஸ மஹாஸ்வன: |

மஹான் ஊர்ஜித‘ மஹத்’ என்றால் மிக உயர்ந்த ஸ்வனோ நாதோ வா ‘ஸ்வனம்’ என்றால் ஒலி ஷ்ருதிலக்ஷணோ வேதங்களாகிய யஸ்ய எவருக்கு உள்ளதோ  மஹாஸ்வன: அவர் ‘ மஹாஸ்வன:’ என்று அழைக்கப்படுகிறார் |

வேதங்களாகிய மிக உயர்ந்த ஒலியை உடையவராதலால் பகவான் ‘மஹாஸ்வன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, மிக உயர்ந்த வேதங்களையே தனக்கு ஒலியாகக் கொண்டிருப்பதால் பகவான் ‘மஹாஸ்வன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸன்மஹத்’ (பாணினி ஸூத்ரம் 2.1.61)

இந்த பாணினி ஸூத்ரத்தின் படி ஸத், மஹத் (மஹான்) போன்ற வார்த்தைகள் தனிப்பட்ட ஒருவரைக் குறிக்கும் பொழுது அவரது மேன்மையை சுட்டிக் காட்டுகிறது.

‘ஆன்மஹத: ஸமானாதிகரணஜாதீயயோ:’ (பாணினி ஸூத்ரம் 6.3.46)

இந்த பாணினி ஸூத்ரத்தின் படி: மஹத் என்ற சொல்லின் பின்னே, ஒன்றை மற்றொண்டுடன் தொடர்பு படுத்தும் சொல் வந்தால், மஹத் என்னும் சொல்லில் உள்ள ‘த’காரம் ‘ஆ’காரமாக மாறுகிறது.

எனவேதான், மஹத்+ஸ்வன: = மகாஸ்வன என்று (த், ஆவாக மாறி) உருவாகிறது.

இத்யாத்வம் | இவ்வாறு, மஹத்+ஸ்வன: = மஹாஸ்வன என்று (த், ஆவாக மாறி) உருவாகிறது.

‘அஸ்ய மஹதோ பூதோ நி:ஸ்வஸிதமேதத் ரிக்வேதோ யஜுர்வேத:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.10)

அந்த பரப்ரஹ்மம் (தனது) மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல், மற்றும் வெளியிடுதலே ரிக்வேதம் மற்றும் யஜுர்வேதமாகும்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

 மஹாஸ்வனா – யாரிடமிருந்து பெரிய ஒலி வருகிறது

இந்த நாமத்தை 2 விதமாக விளக்கலாம்.

அ) ஆழமான மற்றும் எதிரொலிக்கும் குரல் கொண்ட நபர். “மஹாநூர்ஜிதா ஸ்வானா நாதா – அவருக்கு ஆழ்ந்த குரல் உள்ளது”;

b) வேதங்களின் உருவகம். பிருஹதாரண்யக உபநிஷதம் கூறுகிறது “அஸ்ய மஹதோ பூதஸ்ய நிஷ்வசிதம் ஏதத் ரிக்வேதோ யஜுர்வேதா – வேதங்கள் பகவானிடமிருந்து வெளிப்படும் சுவாசங்கள்”; வேதங்கள் இறைவனின் பிரகாசத்தையும் பிரகாசத்தையும் விவரிக்கின்றன; காயத்ரி மந்திரம் சூரியனுக்கான முக்கிய சக்தியான விஷ்ணுவை அழைக்கிறது.


42- அநாதி நிதந –
ஆதியும் அந்தமும் இல்லாதவன் –

புஷ்காராஷன்-திவ்ய  ரூப-இதிலும் முதலும் முடிவும் இல்லாதவன்
மஹாஸ்வானா-திவ்ய நாம  -இதிலும் முதலும் முடிவும் இல்லாதவன்
பச்சை மா மலை போல் மேனி -இதில் அச்யுதன் -நழுவுதல் இல்லாதவன்-

இதுவும் திருமேனி பரமான திரு நாமம்

ஏதத் திவ்ய நாம ரூப விஶிஷ்ட ஏவ
அநாதிநிதந: ।
நித்ய யௌவந தயா ஜநி ஜராதித துரித தூர நித்ய விக்ரஹ: ।
ந தத்க ஸ்வரூப நித்யத்வ பரமே தத், தஸ்ய சதுர்முகாதீநா மபி துல்யத்வாத் ।
* பாரூபஸ் ஸத்ய ஸங்கல்ப:, (ரூபத்துக்கும் ஸ்வரூபத்துக்கும் இரண்டாக உள்ள பிரமாணங்கள் )
* ஹிரண் மய:, புருஷ:,
* வித்யுத : புருஷாததி,
* ஆதித்ய வர்ணம் தபஸஸ் : பரஸ்தாத்
* ஸர்வ கர்மா ஸர்வ கந்தஸ் ஸர்வ ரஸ:,

* ருக்நாபம் ஸ்வப்ந தீ கம்யம் வித்யாத் து புருஷம் பரம்,
* புருஷ: புண்டரீகாக்ஷ:
*இத்யாதி ஶ்ருதி ஸ்ம்ருதி ஸஹஸ்ரை :,

அமல நீலோஜ்ஜ்வல மத்யஸ்த நீல தோயத வித்யுல்லேகா ப்ரக்யம்
அதி ஸௌந்ர்ய லாவண்ய யௌவநாத் யபிமத குண கதயா ஸ்வஸ்யாபி நித்யமிச்சா க்ருஹீதம் ரூபம் தாவத் ஸமர்த்யதே ।

மின்னல் வரிசைக்குள் உள்ள கருப்பு மேகம் போல் ப்ரஹ்மம்
நாம் பார்க்கும் கருத்த மேகத்தில் உள்ள மின்னல் போல் அல்லவே

அத்ய ச
* ஸதைக ரூப ரூபாய, (நித்ய ஸ்வரூபத்துக்கும் ரூபத்துக்கும் இரண்டு பதங்கள் )
* ஶ்ரீவத்ஸ வக்ஷா நித்யஶ்ரீ:;(மண்டோதரி சதுஸ் ஸ்லோகம் )

பாராஶர்வய
* ஸ ஏவ பகவாந் காலஸ் ஸர்வ மாத்ம வஸம் நயேத்,
*நாஸ்தி விஷ்ணோ : பரம் தத்த்வம் தஸ்ய காலாத்வரா தநு:, இத்யாதி கண்டோக்தே(ஒரு மிடறாக ):,

ஸம்ஸாரமும் பிரவாஹாத்வேன நித்யம்-திவ்ய மங்களம் ஸ்வரூபம் போல் நித்யம் -பல ஹேதுக்கள்

1-ஸதா காரணத்வாத் -2-ஜ்ஞாநாதிவத் ஸ்வரூப நிரூபண அநு ப்ரவேஸாத்,
3-தமஸ: பரத்வேந (அப்ராக்ருதம் )ஜந்மாதி விகார அநிவர்தித்வாத்,
4-அக்ஷரத்வ காலாதீ தத்வாதி விஸேஷணாத் –தத் க்ரது ந்யாயாச்ச, (யதோ உபாஸனம் ததோ பலம் )நித்யத்வம் ச ஸுத்ருடம் ।

ஈத்ருக் பலவத் ஆகம ந்யாய விராேத தோஷ மூஷிகாக்ரா தமஸ்ய ரூபஸ்ய கால்ப நிக ஆகந்துகத்வ அநு மாநம் ந ப்ரரோஹேத் ।
அத ஏவ நீரூபவாதா அபி (ரூபம் இல்லை என்ற வாதிகள் )பௌதிக ஹயதேஹ நிஷேதகா நேதவ்யா: (பஞ்சபூத மய ரூபம் இல்லை -என்று சொல்ல வந்தவை -ஸூ த்த ஸத்வ மாயம் அப்ராக்ருதம் )।

நீதாஶ்ச (அதற்குப் பிரமாணங்கள் )
* ந பூத ஸம்க ஸம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்ம ந:;
* ந தஸ்ய ப்ராக்ருதா மூர்திர் மாம்ஸமே தோஸ்தி ஸம்பவா । இத்யாதி பிரஶ் ஸாஸ்த்ரைரவ–(நீதாஶ்ச )।

ஸூத்ர காரவத் வாக்ய தத் பாஷ்யகாராப்யா மபி ஆதித்யாந்தரம் பரம் ப்ரஹ்ம நித்ய ரூபம் ந்யரூபி
* ரூபம் வா அதீந்த்ரயம் அந்த :கரண ப்ரத்யக்ஷ நிர்தேஸாத், (போதாயனர் ஸ்ரீ ஸூக்தி )
* அஞ்ஜஸைவ விஶ்வ ஸ்ருஜோ ரூபம், இதி (த்ரமிடர்  ஸ்ரீ ஸூக்தி)।

அத்ர, அவதாரேஷு ச நாஸ்யாத் யந்தவ் யதா லௌகிகம், கிந்து யவநிகாயா
இவ பரம வ்யோம்நோ நிர்கம ப்ரவேஸ மாத்ர மேவ(திரைக்குப்பின் இருந்து போவது போல் அவதாரங்கள் )।
* புஜைஶ் சதுர்பி ஸமுபேதம் மமேதம் ரூபம் விஶிஷ்டம் திவி ஸம்ஸ்திதம் ச।
பூமவ் கதம் பூஜயதா ப்ரமேயம் ஸதா அபி தஸ்மிந் நிவஸாமி தேவா: (பாரதத்தில் பகவானே சொல்வது )॥
* ஸ்வர்லோகம் ஆகச்ச கத ஜ்வரஶ் சிரம் ஸுரேந்த்ர குப்தம் கத தோஷ கில்பிஷம்,
* விவேஸ வைஷ்ணவம் தேஜஸ் ஸ ஸரீரஸ் ஸஹாநுக:,இதி ஹி முநி குஹ்யம் (அன்று சராசரங்களுடன் திரு மேனியுடன் ஸ்ரீ வைஷ்ணவ தேஜஸ் அடைந்தார் பெருமாள் )॥ 42 ॥

பரமாத்மா ஸ்வரூபம் ரூபம் நித்யம்
அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மனே சதைக ரூபா ரூபாயா
ஆதி அம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறக்கிறான்
தோற்றக் கேடவை இல்லவன் -3-6-6-

நித்ய யுவா -ஷட்பாவம் இல்லாத திருமேனி யுடையவர் -ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லுவது அல்ல –
சகல ஆத்மாக்களும் நித்யம் ஆகையாலே –
திவ்ய மங்கள விக்ரஹ ஸ்வரூபத்தை சொல்கிறது -தோஷமற்ற -நீலக் கடலில் உள்ள மின்னல் போன்ற
அழகிய இளமை பொருந்திய -எல்லாக் காலத்திலும் காரணமாக இருப்பதாலும்
ஞானத்தைப் போலே அவன் ஸ்வரூபத்தை காட்டும் அடையாளமாக இருப்பதாலும்
தமஸ் ஸூக்கு அப்பால் -அஷரம் -கால அதீதம் அப்பால் பட்டு –
உபாசிப்பவர் பெரும் நித்யமான சாரூப்யம் -நித்யமாக விளங்கும் திரு மேனி –
உருவம் இல்லை என்கிற சுருதி வாக்யங்கள் உலகோர் போல தாழ்ந்த உருவம் இல்லை -என்பதைச் சொல்ல வந்ததே –
ப்ரஹ்ம ஸூத்ரகாரர் வாக்யகாரர் பாஷ்யகாரர்கள் நித்தியமான சரீரம் காட்டி அருளி யுள்ளார்கள் –
அவதாரங்களிலும் தோற்றம் முடிவு இல்லை -திரைக்குள் இருந்து வெளியே வந்து உள்ளே போவதைப் போலே
பரம பதத்தில் இருந்து வந்து மீண்டும் தன்னுடைச் சோதி எழுந்து அருளுகிறான் -ஸ்ரீ பராசர பட்டர் —

பா ரூப ஸத்ய சங்கல்ப –சாந்தோக்யம்
ஹிரண்மய புருஷ –தைத்ரியம் -சாந்தோக்யம் –
வித்யுத் புருஷாததி –தைத்ரியம்
ஆதித்யவர்ண தமச புரஸ்தாத் -புருஷ ஸூக்தம்
சர்வ காமாந் சர்வ கந்த சர்வ ரஸ –சாந்தோக்யம்
ருக்மாபம் ஸ்வப்நதீ கம்யம் வித்யாத் து புருஷம் பரம் –மனு ஸ்ம்ருதி
புருஷ புண்டரீகாக்ஷ -ஸ்ரீ வராஹ புராணம்
சவைக ரூப ரூபாய –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-1-
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ –யுத்த -114-15-
ச ஏவ பகவான் கால சர்வம் ஆத்மவாசம் நயேத்
நாஸ்தி விஷ்ணு பரம் தத்வம் தஸ்ய காலாத் பரா தனு
ஆக திருமேனி இல்லை என்பது பிறர்களைப் போலே ப்ரக்ரிதி சம்பந்த திரு மேனி இல்லை –
அப்ராக்ருதம் -ஆதி யம் சோதி உரு

ந பூத சந்த சமஸ்தாநோ தேஹ அஸ்ய பரமாத்மன–சாந்தி பர்வம்
ந தஸ்ய பிராக்ருதா மூர்த்தி மாம்ஸ மேதி அஸ்தி ஸம்பவா–ஸ்ரீ வராஹ புராணம்
ரூபம் வா அதீந்த்ரியம் அந்தக்கரண ப்ரத்யக்ஷ நிர்தேசாத் –த்ரமிட பாஷ்யம்
அஞ்ஞசைவ விஸ்வஸ்ருஜோ ரூபம்
பூஜை சதுர்ப்பிஸ் சமுபேதம் மம இதம் ரூபம் விசிஷ்டம் திவி ஸம்ஸ்திதம் ச பூமை கதம்
பூஜயத அப்ரமேயம் –மவ்சல பர்வம்
ஸ்வர்கலோகம் ஆகச்ச கதஜ்வர சிரம் ஸூரேந்த்ர குப்தம் கத தோஷ கில்பிஷம் –பால -15-33-
விவேச வைஷ்ணவம் தேஜஸ் ச சரீர சஹானுக –உத்தர -110-12-

பிறப்பு இறப்பு இரண்டும் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர்—
பிறப்பு இறப்பு அற்றவர் -முக்ய பிராணனைத் தூண்டுபவர்-
ருத்ரனின் அந்தர்யாமி ந்ருசிம்மனாக இருந்து மன்மதனை எரித்தவர்

தம்மைப் பற்றிய கானத்தைக் செய்பவர்களை அழிக்காதவர் -வாழ்விப்பவர் –
கானத்தில் பிரியம் யுடையவர் ஆதலால் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் அநாதி நிதந –
ஆதியும் அந்தமும் இல்லா நித்ய யுவாயாய் இருப்பவன் -யுவா குமாரா

தோற்றம் கேடு அவை இல்லாதவன்

————————

  1. ஓம் அநாதிநிதனாய நம:

ஆதிர்ஜன்ம: நிதனம் விநாஶ: தத்த்வயம் யஸ்ய ந வித்யதே ஸ அநாதிநிதன: |

ஆதிர்ஜன்ம‘ஆதி’ என்றால் பிறப்பு நிதனம் விநாஶ‘நிதனம்’ என்றால் அழிவு தத்த்வயம் இந்த இரண்டும் யஸ்ய ந வித்யதே எவருக்கு இல்லையோ  அநாதிநிதன: அவர் ‘அநாதிநிதன’ என்று அழைக்கப்படுகிறார் |

எவருக்கு பிறப்பு மற்றும் இறப்பு இல்லையோ அந்த பகவான் ‘அநாதிநிதன’ (பிறப்பு, இறப்பு அற்றவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

42.   அனாதிநிதானா – நித்தியமானவர்

ஆதி ஆரம்பம் நிதானம். எனவே இந்த நாமம் என்பது தொடக்கமும் முடிவும் இல்லாதவர் என்று பொருள்படும். அவனே அனாதி அவனே அனந்தன். அவர் நித்தியமானவர் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டவர். மகாபாரத யுத்தத்தின் முடிவில், பீஷ்மர் யுதிஷ்டிரனிடம், விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முன்னுரையில், ‘அனாதிநிதானம் விஷ்ணும் சர்வலோக மஹேஸ்வரம்’ என்று பகவான் விஷ்ணுவை ஆரம்பமும் முடிவும் இல்லாத ஒருவராகவும், உயர்ந்தவராகவும் விவரிக்கிறார்.


43-தாதா –
சிருஷ்டிப்பவன் –

இது காரணத்வம்
சேஷித்வம் 4திரு நாமம்
ப்ராப்யம் 12திரு நாமம்
பிராபகம் 18திரு நாமம் சொல்லி–இனி காரணத்வம்
முதல் திருவாய் மொழியில் பரத்வம் சொல்லி காரணத்வம் அடுத்த திருவாய் மொழி

அநிருத்தவ ரூப விளக்கம் இங்கு இல்லை
காரணத்வம் சொல்லும் பிரகரணம்

காரணத்வே நாபி ப்ரஹ் மாதிப்யோ வைலக்ஷண்ய மாஹ –தாதா । த்ருந் । ஏவம் பர்தேத்யாதய: ।
அநிருத்வ ஸ்வரூப: ஸர்வ யோநாவ
சித் ஸமஷ்டி பூதாயாம் ப்ரக்ருதவ் சித் ஸமஷ்டி பூதம் விரிஞ்சாத் மகம் கர்பம் ததாதீதி;

யதா
* மம யோநிர் மஹத் ப்ரஹ்ம தஸ்மிந் கர்பம்
ததாம் யஹம் । மௌல ஸம்ஹிதாயாம்
* தாதா ஷேத்ரே கர்ம பீஜ பூதம் கர்பம் ததாதி, இதி ।
* அப ஏவ ஸ ஸர்ஜ ஆதவ் தாஸு வர்ய மபா ஸ்ருஜத் இத்யாதி ॥ 43 ॥

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா வன்று நான் முகன் தன்னோடு
தேவர் உலகோடு உயிர் படைத்தான் -4-10-1
தஸ்மின் கர்பம் ததாம் யஹம் –
மீண்டும் -951-தாதா -தர்மத்தை உபதேசிப்பவன்
உலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -பெரிய திருமொழி -10-6-1-

எல்லா அசேதனங்களின் தொகுதியும் -எல்லாவற்றுக்கும் விளைநிலமான மூல பிரக்ருதியில்
சேதனர்களின் தொகுதியாகிய பிரமன் எனும் கர்பத்தைத் தாங்குபவர் –
காரணமாக இருக்கும் போதும் பிரம்மா முதலியவர்களைக் காட்டிலும் வேறுபட்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-
அநிருத்த ஸ்வரூபேண் சர்வ யோனௌ அசித் சமஷ்டி பூதானாம் பிரக்ருதௌ சித் சமஷ்டி பூதம்
பீஞ்சாத்மகம் கர்ப்பம் ததாதி –
அநிருத்தன் வடிவு எடுக்கும் பகவான் நான்முகனை அனைத்துக்கும் இருப்பிடமான ப்ரக்ருதியில்
கருவாக விதைத்து அசேதனம் தோன்ற காரணம்
மம யோநி மஹத் ப்ரஹ்ம தஸ்மிந் கர்ப்பம் ததாம்யஹம் –ஸ்ரீ கீதை -14-3-
தாதா க்ஷேத்ரே கர்ம பீஜ பூதம் கர்ப்பம் ததாதி –மவ்ல சம்ஹிதை
அத ஏவ ச சர்ஜ ஆதவ் தாஸூ வீர்யம் அபாஸ்ருஜத் –மனு ஸ்ம்ருதி

ஆதிசேஷன் முதலிய உருவங்களால் உலகத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—

அனைத்து உலகங்களையும் தரித்துக் காப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் தாதா நம
நான்முகனை சரீரமாகக் கொண்டவன்

—————

  1. ஓம் தாத்ரே நம:

ஆனந்தாதிரூபேண விஶ்வம் பிபர்தீதி தாதா |

ஆனந்தாதிரூபேண ஆதிசேஷன் முதலான உருவங்களைக்கொண்டு விஶ்வம் இந்த பிரபஞ்சத்தைத் பிபர்தீதி தாங்குவதால் தாதா அவர் ‘தாதா’ என்று அழைக்கப்படுகிறார்.

ஆதிசேஷன் முதலான உருவங்களைக்கொண்டு இந்த பிரபஞ்சத்தைத் தாங்குவதால் பகவான் ‘தாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

தாதா – பிரபஞ்சத்தை உருவாக்கியவர்

தாதா என்பதற்கு கீழே பல அர்த்தங்கள் உள்ளன:

அ) பிரபஞ்சத்தை உருவாக்கியவர் (தா – உற்பத்தி செய்ய, அல்லது தா – மீது வைக்க).

b) ஆதரிப்பவர் மற்றும் நிலைநிறுத்துபவர் (தா – தாரன் போஷணயோய்ச்ச).

c) தன்னைத் தவிர வேறு ஆதரவு இல்லாதவர். இங்கே அடிப்படைப் பெயர் தாதா என்பதை விட அதாதா என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது.

யாருடைய உதவியும் தேவைப்படாத படைப்பாளி அவர் என்பதால், அவர் தாதா.

————–

44-விதாதா –
கர்ப்பத்தை போஷித்து உற்பத்தி செய்பவன்

படைத்து விட்டு விடாமல் -உந்தி சொல்லி உடனே சங்கு சக்ரம் பாலநத்துக்கு –
லீலா பத்மம் தேன் சொட்டி -பிறந்த நான்முகன் குழந்தைக்கு –
பாலாடை மூலம் பிராட்டி போஷணம்

தம் கர்பம் பரிணமய்ய ஆவிர்பாவயதீதி ச
விதாதா । (விவிதமாக பாலநம் )
* யோ ப்ரஹ் மாணம் விததாதி பூர்வம், இதி;
* அத புநரேவ நாராயண: இத்யுபக்மே ,
* தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ அஜாயே,
* ஹிரண்ய கர்பம் பஶ்யே ஜாயமாநம்,
*தஸ்மாத் விராட ஜாயத,
* தஸ்மிஞ் ஜஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா ஸர்வ லோக பிதாமஹ:, இத்யாதி வசநேப்ய: ॥ 44 ॥

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
தஸ்மாத் விராட் அஜாயத
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில் உந்தி
தாமரை யுந்தி தனிப் பெரு நாயக -திருவாசிரியம் -1
மீண்டும் -485-வரும் விதிப்பவன் -அடக்கி ஆள்பவன்
சாதுவராய்ப் போதுமின்கள் என் தான் நமனும் தந் தூதுவரைக் கூவிச் செவிக்கு -நான் முகன் -68
பரிஹர மது ஸூதன பிரபன்னான் பிரபுர ஹ மன்யன்ருணாம் ந வைஷ்ணவாநாம் –
எம் கோன் அவன் தமர் நமன் தமரால் ஆராயப் பட்டறியார் கண்டீர் –
நமன் தமர் பாசம் விட்டால் அலைப் பூண் உண்ணும் அவ்வவை எல்லாம் அகல கலைப் பல் ஞானத்து என் கண்ணன் -3-2-1-

அந்த கர்ப்பத்தை முதிர வைத்து உற்பத்தி செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-

தம் கர்ப்பம் பரிணமய ஆவிபாவாவயதிச்ச –

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –ஸ்வேதாஸ்வர
அத புநரேவ நாராயண –தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ அஜாயத்–மஹா உபநிஷத்
ஹிரண்ய கர்ப்பம் பஸ்யத் ஜாய மானம்–தைத்ரியம்
தஸ்மாத் விராட் அஜாயத் -புருஷ ஸூக்தம்
தஸ்மிந் ஜஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா சர்வ லோக பிதா மஹ–மனு ஸ்ம்ருதி

ஆதி சேஷன் முதலிய உருவங்களால் உலகத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—
கர்மங்களையும் அவற்றின் பலன்களையும் உண்டாக்குபவர் –
பூமியைத் தாங்கும் அனந்தன் முதலானோரையும் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—

கருடனால் தரிக்கப்படுபவர் -தமக்கு ஒரு தாரக போஷகர்கள் இல்லாதவர் -முக்தர்களைத் தாங்குபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் விதாதா நம
நான்முகனையும் படைத்து அவன் மூலம் உலகைப் படைத்தவன்

—————

  1. ஓம் விதாத்ரே நம:

கர்மணாம் தத்ஃபலானாம் ச கர்த்தா விதாதா |

கர்மணாம் செயல்களையும் தத்ஃபலானாம் அதன் பலன்களையும் ச கர்த்தா உருவாக்குவதால் விதாதா அவர் ‘விதாதா’ என்று அழைக்கப்படுகிறார் |

செயல்களையும், அவற்றின் பலன்களையும் உருவாக்குவதால் பகவான் ‘விதாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

விதாதா – அவர் உச்ச கட்டுப்பாட்டாளர்

விதாதா என்றால் உச்ச கட்டுப்பாட்டாளர். அவர் பிரபஞ்சத்தின் விதிகளை வகுத்தார். அவனே விதிகளை வகுத்து ஒருவனுடைய செயலின் பலனை வழங்குபவன். அவர் எல்லோருடைய தலைவிதியையும் ஆள்பவர்.


45-தாதுருத்தம
பிரமனில் சிறந்தவன் –

அதோ
தாதுருத்ம : –
ஸ்ரஷ்டு ருத்க்ருஷ்ட தம :, தண்டா பூபிகயா
தத் ஸ்ருஷ்டேப்ய: ப்ரஜாபதி ப்ரப்ருதிப்யஶ்ச

ப்ரஹ்மாவிட உயர்ந்தவன் தக்ஷனை விட உயர்ந்தவன் சொல்லவும் வேண்டுமோ –
குச்சியை போனபின்பு வடை இருக்குமோ

யதா
* தத்த்வம் நாராயண: பர:,
* ஏதேஷாம் கதமோம் தேவ: பர: கோ வா அதவா அபர:; இதி ப்ருஷ்டே
*பரோ நாராயணோ தேவஸ் தஸ்மாஜ் ஜாதஶ் சதுர்முக: இத்யாதி। ப்ரஹ்ம ருத்ர ஸம்வாத யஜ்ஞ  அக்ரஹணாதாவிதம் ஸ்பஷ்டம் ॥ 45 ॥

பிதா தெய்வக் குழாங்கள் கை தொழக் கிடந்த தாமரை யுந்தி தனிப் பெரு நாயகன் -திருவாசிரியம் -1
தத்வம் நாராயண பர பரோ நாராயணோ ததேவ தஸ்மாத் ஜஜ்ஞே சதுர்முக
நான்முகனை நாராயணன் படைத்தான்
நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த -பெரிய திருமொழி -1-7-8-

உயர்ந்த படைப்பாளி -நான்முகனில் காட்டிலும் முகச் சிறந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-

ஸ்ரஷ்டு உத்க்ருஷ்ட தம தண்டா பூபிகா தத் ஸ்ருஷ்டப்ய க பிரஜாபதி
பூமி முதலிய தாதுக்களைக் காட்டிலும் சிறந்த ஞான வஸ்து –
விசேஷணத்துடன் கூடிய ஒரே நாமம் -சாமாநாதிகரண்யத்தால் -பிரமன் முதலியவர்களில் காட்டிலும் மேம்பட்டவர்
அல்லது -வையதிகரண்யத்தால் இரண்டு நாமமாகவும் கொள்ளலாம் –
கார்யம் காரணம் இரண்டுமாக இருக்கின்ற பிரபஞ்சத்தை தாங்கும்

தத்வம் நாராயண பர –தைத்ரியம்
ஏதேஷாம் கதமோ தேவ பர கோ வா அதவா அபரா –பரோ நாராயண தேவ தஸ்மாத் ஜாத சதுர்முக -ஸ்ரீ வராஹ புராணம்

சித்த ஸ்வரூபி -ஸ்ரீ சங்கரர்—
நான்முகனை விட மிக உயர்ந்தவர் -வினையடியை யுடைய சொற்களுக்கு பொருளாக உள்ளவர்களில் மிக உயர்ந்தவர் –

வினைச் சொற்கள் பெயர்ச் சொற்கள் முதலியவற்றைப் பயன்படுத்துவதில் வல்லவரான
ஸ்ரீ ஹனுமானால் விரும்பப் படுபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் தாதுருத்தம நம
அந்த நான்முகனைக் காட்டிலும் உயர்ந்தவன்

————-

  1. ஓம் தாதவ உத்தமாய நம:

அனந்தாதீனாமபி தாரகத்வாத் விஶேஶேண ததாதீதி வா தாதுருத்தம இதி நாமைகம் ஸமானாதிகரண்யேன ஸர்வதாதுப்ய: ப்ருதிவ்யாதிப்ய: உத்க்ருஷ்டஸ்சித்தாதுரித்யர்த்த: |

அனந்தாதீனாமபி ஆதிசேஷன் முதலானவர்களையும் தாரகத்வாத் தாங்குபவர் விஶேஶேண குறிப்பாக, அவர்களுக்குத் தாங்கும் சக்தியைத் ததாதீதி வா தருபவர் தாதுருத்தம இதி ‘தாதுருத்தம’ என்று அழைக்கப்படுகிறார் நாமைகம் இது ஒரே திருநாமமாகும் விஶேஶேணம் பகவானின் தனிப்பட்ட சக்தியால் ஸமானாதிகரண்யேன முன்னர் கூறப்பட்ட (தாதா என்ற) திருநாமத்துடன் தொடர்புடையதாகப் பொருள் கொள்ளவேண்டும்.

ஸர்வதாதுப்ய: (இந்த ப்ரபஞ்சத்தையும், அதிலுள்ளவைகளையும் தாங்கும் ஆதிசேஷன் முதலான) அனைத்துத் தாதுக்களைக் (தாங்குபவர்களைக்) காட்டிலும் ப்ருதிவ்யாதிப்ய: பூமி முதலானவைகளைக் காட்டிலும் உத்க்ருஷ்டஸ்சித்தாதுரித்யர்த்த: சிறந்தவர் என்பதே இந்த திருநாமத்தின் தேர்ந்த பொருளாகும்.

(முன்னர் தாதா என்ற திருநாமத்தில் கூறப்பட்டுள்ள) ஆதிசேஷன் முதலானோருக்கும் (பிரபஞ்சத்தை) தாங்கும் சக்தியை அளித்து, அவர்களையும் (அந்த சக்தியை அளிப்பதன் மூலம்) தாங்குவதால் பகவான் ‘தாதுருத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆதிசேஷன், பூமி முதலானோர் ‘தாதா’; அவர்களையும் தாங்குவதால் பகவான் தாதுக்களில் சிறந்தவர், ‘தாதுருத்தம:’.

தாதுர் விரிஞ்சேருத்க்ருஶ்ட (விரிஞ்சேர் உத்க்ருஶ்ட) (தாதுருத்தம:) இதி வா வையதிகரண்யேன |

தாதுர் அனைத்தையும் படைக்கும் விரிஞ்சேருத்க்ருஶ்ட (விரிஞ்சேர் உத்க்ருஶ்ட) (நான்முகக்கடவுள்) ப்ரஹ்மாவை விட மேலானவர் (தாதுருத்தம:) இதி வா வையதிகரண்யேன இவ்வாறு, மேலே கூறப்பட்ட (தாதா என்ற) திருநாமத்துடன் தொடர்பு கொள்ளாமல், இந்த திருநாமத்திற்கு இவ்வாறும் பொருள் கொள்ளலாம்.

(முன்னர் கூறப்பட்ட தாதா என்ற திருநாமத்துடன் சேர்க்காமல் தனித்துப் பொருள் கொண்டால்): அனைத்தையும் படைக்கும் (இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் மூல காரணமாய் இருக்கும்) நான்முகக் கடவுளாகிய ப்ரஹ்மாவைக் காட்டிலும் உயர்ந்தவர் என்பதால் பகவான் ‘தாதுருத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நாமத்வயம் வா அல்லது (தாது, உத்தம என்று) இரண்டு திருநாமங்களாகக் கொண்டால்;

கார்யகாரணப்ரபஞ்சதாரணாச்சிதேவ இந்த ப்ரபஞ்சம் அனைத்திற்கும் காரணமாகவும், அதில் நடைபெறும் செயல்களாகவும் உள்ள அறிவாக இருப்பதால் தாது: அவர் தாது (அனைத்திற்கும் காரணம்) என்று அழைக்கப்படுகிறார்.

இந்த ப்ரபஞ்சத்தின் காரணமாகவும் அதில் நடைபெறும் அனைத்துக் காரியங்களாகவும் அறிவின் வடிவாக பகவானே இருப்பதால் அவர் தாது என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத்வைதத்தின் படி பரப்ரஹ்மம் ஒன்றே தத்துவம். இந்த ப்ரபஞ்சம் அனைத்துமே அந்த ப்ரஹ்மம் மாயையில் பட்டு ப்ரதிபலிப்பதால் உருவாகிறது. இந்த ப்ரஹ்மம் சின்மயமாக (அறிவு வடிவாக) உள்ளது.

உத்தம: ஸர்வேஷாம் அனைத்து உத்கதானாம் சிறப்புடையவர்கள் மற்றும் சிறந்த பதார்த்தங்களைக் காட்டிலும் அதிஶயேனோத்கதத்வாத் மிகச்சிறந்தவரானபடியால் உத்தம: அவர் ‘உத்தமர்’ என்று அழைக்கப்படுகிறார்.

அனைவரையும், அனைத்தையும் காட்டிலும் சிறந்தவரானபடியால் பகவான் ‘ உத்தமர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

தாதுருத்தமா – ஒவ்வொரு விஷயத்திற்கும் இறுதி ஆதரவு

அ) பிரம்மத்தை விட மிக உயர்ந்தவர் (தாதர்)

b) அனைத்து அடிப்படைக் கூறுகளிலும் சிறந்தது

முதல் விளக்கம் சுய விளக்கமளிக்கும் மற்றும் இது முந்தைய இரண்டு நமஸ் தாதா மற்றும் விதாதாவின் நீட்டிப்பு மட்டுமே. மற்ற விளக்கம் தாது என்ற வார்த்தையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது – அடிப்படை உறுப்பு அல்லது அடிப்படைக் கூறு. அவர் எல்லாவற்றின் இறுதியான அங்கமாக இருக்கிறார், எனவே அவர் தாதுருத்தமாவார்.

ஸ்ரீ ஆதி சங்கரர் இதை 2 வெவ்வேறு நாமங்களாகக் கருதுகிறார் – தாது மற்றும் உத்தமா. தாது என்பது பிரபஞ்சத்தின் அடிப்படை கட்டுமானப் பொருள். உத்தமம் என்றால் பிரபஞ்சத்தின் மிக உயர்ந்த சக்தி என்று பொருள்.


37-ஸ்வயம்பூ –
தம் மகிழ்ச்சிக்காக தம் இச்சையினால் தமக்கே சிறப்பாக உள்ள சத்வ திருமேனியை தேவாதி யோனிகளில் அமைத்துக் கொண்டு அவதரிப்பவர் –
ப்ரஹ்மாதிகள் இவரது வசம் -பிரகிருதி ஜீவன் இவரது யுடைமையாக இருந்தாலும் சுத்த சத்வம் அசாதாரணம் –
அனைத்தும் அவனுடைய போகத்திற்காக இருப்பதால் என்னுடைய பிரகிருதி -என்று அவனால் கூறப்பட்டது -ஸ்ரீ பராசர பட்டர் —
ஸ்வ லீலாபரம –பிரயோஜனாதி ஸ்வேச்சாயா ஸ்வ சாதாரணீம் பரம சத்வ மயம் பிரக்ருதிமீவ
ஸூ ர நர ஜாதீய சந்நிவேசாம் அதிஷ்டாய ஸ்வயமேவ பவதி –

தாமே யுண்டானவர் -எல்லாவற்றுக்கும் மேலாக தாமே இருப்பவர் -ஸ்வ தந்த்ரர் -பரதந்த்ரர் அல்ல -எல்லாவுமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்—-

தாமே யுண்டாகுபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————

38-சம்பு –
அழகு எளிமை குணங்களை வெளிப்படுத்தி பேரின்பத்தை விளைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஏவம் ஸ்வ சௌந்தர்யாதி சௌசீல்யாதி குணாவிஷ்காரேண் ஸூ கம் பாவயதியாதி –

பக்தர்களுக்கு இன்பத்தைத் தருபவர் -ஸ்ரீ சங்கரர்—

சிகத்தை அளிப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————-

39-ஆதித்ய –
சூர்ய மண்டலத்தில் வசிப்பவர் -அவதாரங்களுக்கு எல்லாம் உதாரணமாக சூர்ய மண்டலத்தில் உள்ள புருஷனைக் கூறுகிறார் -ஸ்ரீ பராசர பட்டர் —

பக்தர்களுக்கு இன்பத்தைத் தருபவர் -ஸ்ரீ சங்கரர்—
சூர்ய மண்டலத்தில் இருப்பவர் -ஒரேசூர்யன் பிரதிபலிப்பது போலே  பரமாத்மா ஒருவரே பல உடல்களில் தோற்றுவதால் சூர்யன் போன்றவர் –
பன்னிரண்டு ஆதித்தியர்களில் விஷ்ணுவாக இருப்பவர் -அதிதியாகிய  பூமிக்கு பதியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்—

சூர்ய மண்டலத்தில் இருப்பவர் -அங்கே இருந்து கொண்டு பூமியின் நீரை ஆவியாக வற்றச் செய்பவர்-
உபேந்திர ரூபத்துடன் அதிதிக்கு மைந்தனாக அவதரித்தவர் -க்ரஹிப்பவர் -செல்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

—————————————————————————————————————-

40-புஷ்கராஷா-
சர்வேஸ்வரனுக்கு உரிய இலக்கணமான தாமரை கண்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
-சர்வ ஐஸ்வர்ய அசாதாராண லஷணம் புண்டரீகாஷத்வம் சங்கமயதி

தாமரையை ஒத்த திரு கண்களை யுடையவர் -ஸ்ரீ சங்கரர்—

தாமரை போன்ற இரு கண்களை யுடையவர் -எண்ணற்ற கண்களை யுடையவர் –
புஷ்டியைத் தருபவர் -அழிவில்லாதவர்  -ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————

41- மஹாஸ்வந-
மிகவும் உயர்ந்த சப்தங்களை திரு நாமமாக யுடையவர் -வேத சப்தத்தை யுடையவன் -பூஜ்யமான சாவித்ரி
மந்தரத்தால் பிரதிபாதிக்கப் படுபவன் -ஸ்ரீ பராசர பட்டர் —-மஹா பூஜ்யான ஸ்வ நக சப்த யச்யேதி-மஹாஸ்வந-

மிகவும் உயர்ந்த சப்தமாகிய வேதத்தை லஷணமாக யுடையவர் -ஸ்ரீ சங்கரர்—

ஆதரவற்ற நல்லோரை தம்மிடத்துக்கு அழைத்துச் செல்லும் மேன்மை யுடையவர் -மேன்மை கொண்ட வாயுவைத் தூண்டுபவர் –
கம்பீரமான குரலுடையவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————-

42-அநாதி நிதந –
நித்ய யுவா -ஷட்பாவம் இல்லாத திருமேனி யுடையவர் -ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லுவது அல்ல -சகல ஆத்மாக்களும் நித்யம் ஆகையாலே –
திவ்ய மங்கள விக்ரஹ ஸ்வரூபத்தை சொல்கிறது -தோஷமற்ற -நீலக் கடலில் உள்ள மின்னல் போன்ற
அழகிய இளமை பொருந்திய -எல்லாக் காலத்திலும் காரணமாக  இருப்பதாலும்
ஞானத்தைப் போலே அவன் ஸ்வரூபத்தை காட்டும் அடையாளமாக இருப்பதாலும்
தமஸ் ஸூக்கு அப்பால் -அஷரம் -கால அதீதம் அப்பால் பட்டு -உபாசிப்பவர் பெரும் நித்யமான சாரூப்யம் -நித்யமாக விளங்கும் திரு மேனி –
உருவம் இல்லை என்கிற சுருதி வாக்யங்கள் உலகோர் போல தாழ்ந்த உருவம் இல்லை -என்பதைச் சொல்ல வந்ததே –
ப்ரஹ்ம  ஸூத்ரகாரர் வாக்யகாரர் பாஷ்யகாரர்கள் நித்தியமான சரீரம் காட்டி அருளி யுள்ளார்கள் –
அவதாரங்களிலும் தோற்றம் முடிவு இல்லை -திரைக்குள் இருந்து வெளியே வந்து உள்ளே போவதைப் போலே
பரம பதத்தில் இருந்து வந்து மீண்டும் தன்னுடைச் சோதி எழுந்து அருளுகிறான் -ஸ்ரீ பராசர பட்டர் —-

பிறப்பு இறப்பு இரண்டும் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர்—
பிறப்பு இறப்பு அற்றவர் -முக்ய பிராணனைத் தூண்டுபவர்-ருத்ரனின் அந்தர்யாமி நருசிம்மனாக இருந்து மன்மதனை எரித்தவர்

தம்மைப் பற்றிய கானத்தைக் செய்பவர்களை அழிக்காதவர் -வாழ்விப்பவர் -கானத்தில் பிரியம் யுடையவர் ஆதலால் -ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

——————————————————————————————————————

43- தாதா-
எல்லா அசேதனங்களின் தொகுதியும் -எல்லாவற்றுக்கும் விளைநிலமான மூல பிரக்ருதியில் சேதனர்களின் தொகுதியாகிய
பிரமன் எனும் கர்பத்தைத் தாங்குபவர் –
காரணமாக இருக்கும் போதும் பிரம்மா முதலியவர்களைக் காட்டிலும் வேறுபட்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-
அநிருத்த ஸ்வரூபேண் சர்வ யோனௌ அசித் சமஷ்டி பூதானாம் பிரக்ருதௌ சித் சமஷ்டி பூதம் பீஞ்சாத்மகம் கர்ப்பம் ததாதி –

ஆதிசேஷன் முதலிய உருவங்களால் உலகத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—

அனைத்து உலகங்களையும் தரித்துக் காப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————–

44-விதாதா –
அந்த கர்ப்பத்தை முதிர வைத்து உற்பத்தி செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-தம் கர்ப்பம் பரிணமய ஆவிபாவாவயதிச்ச –

ஆதி சேஷன் முதலிய உருவங்களால் உலகத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—
கர்மங்களையும் அவற்றின் பலன்களையும் உண்டாக்குபவர் -பூமியைத் தாங்கும் அனந்தன் முதலானோரையும் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—

கருடனால் தரிக்கப்படுபவர் -தமக்கு ஒரு தாரக போஷகர்கள்  இல்லாதவர் -முக்தர்களைத் தாங்குபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

——————————————————————————————————-

45-தாதுருத்தம –
உயர்ந்த படைப்பாளி -நான்முகனில் காட்டிலும் முகச் சிறந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-
ஸ்ரஷ்டு உத்க்ருஷ்ட தம தண்டா பூபிகா தத் ஸ்ருஷ்டப்ய க பிரஜாபதி
பூமி முதலிய தாதுக்களைக் காட்டிலும் சிறந்த ஞான வஸ்து -விசேஷணத்துடன் கூடிய ஒரே நாமம் -சாமாநாதிகரண்யத்தால் -பிரமன்
முதலியவர்களில் காட்டிலும் மேம்பட்டவர்
அல்லது -வையதிகரண்யத்தால் இரண்டு நாமமாகவும் கொள்ளலாம் -கார்யம் காரணம் இரண்டுமாக இருக்கின்ற பிரபஞ்சத்தை தாங்கும்

சித்த ஸ்வரூபி -ஸ்ரீ சங்கரர்—
நான்முகனை விட மிக உயர்ந்தவர் -வினையடியை யுடைய சொற்களுக்கு பொருளாக உள்ளவர்களில் மிக உயர்ந்தவர் –

வினைச் சொற்கள் பெயர்ச் சொற்கள் முதலியவற்றைப் பயன்படுத்துவதில் வல்லவரான
ஸ்ரீ ஹனுமானால் விரும்பப் படுபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

——–

மனித உடலைப் போலல்லாத திவ்ய மங்களத் திருமேனியைத்
தனது விருப்பப்படி தானே எம்பெருமான் உருவாக்கிக்கொண்டதால், அவன் ‘ஸ்வயம்பூ:’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 37-வது திருநாமம்.
“ஸ்வயம்புவே நமஹ:” என்று தினமும் ஜபம் செய்பவர்கள் குன்றாத இளமையோடும் ஆரோக்கியத்தோடும் திகழ்வார்கள்.

தன் அழகாலும் குணங்களாலும் அடியார்களுக்கு ஆனந்தம் தரும் எம்பெருமான் ‘சம்பு:’ என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 38-வது திருநாமம்.
“சம்பவே நமஹ:” என்று தினமும் சொல்லி வந்தால், நமக்கும் நீங்காத ஆனந்தம் வாழ்வில் கிட்டும்.

உலகில் துன்பத்தால் வாடும் அடியவர்கள் ஒவ்வொருவரையும் காப்பதற்காக
சூரிய மண்டலத்தின் மத்தியில் நாராயணன் எழுந்தருளியுள்ளான்.
தினமும் சந்தியாவந்தனம் செய்யும் போது “த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டஸ மத்யவர்த்தி நாராயண:” என்று
இந்த எம்பெருமானை தியானிக்கச் சொல்கிறது வேதம். ஆதித்தியனுக்குள்ளே (சூரியனுக்குள்ளே) எழுந்தருளியிருப்பதால்
அவ்வெம்பெருமான் ‘ஆதித்ய:’ என்று அழைக்கப்படுகிறான்.
“ஆதித்யாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களை ஆபத்திலிருந்து அவன் காத்தருள்வான்.

ஆளுமை செலுத்தும் அசாதாரணமான தாமரைக் கண்களை உடைய ‘அண்ணல் கண்ணனாக’ விளங்குவதால்
எம்பெருமானுக்கு ‘புஷ்கராக்ஷ:’ என்று திருநாமம்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 40-வது திருநாமம்.
“புஷ்கராக்ஷாய நமஹ:” என்று தினமும் சொல்லி வந்தால், அவனது தாமரைக் கண்களின் நோக்குக்கு நாமும் இலக்காகலாம்.

தன்னுடைய கனைப்பு ஒலியினுள்ளே வேத மந்திரங்களைப் பொதித்து வைத்திருக்கும்
ஹயக்ரீவப் பெருமாள் ‘மஹாஸ்வன:’ என்றழைக்கப்படுகிறார்.
‘ஸ்வன:’ என்றால் ஒலி என்று பொருள். வேத ஒலிகளைத் தன்னுள் ஒளித்து வைத்துள்ள ஒளிமிக்க திருமேனியை உடைய
ஹயக்ரீவரைத் தியானித்தபடி “மஹாஸ்வனாய நம:” என்று தினமும் ஜபித்துவரும் மாணவ மாணவிகள்
பரிமுகப் பெருமாளின் பரமானுக்கிரகத்துக்குப் பாத்திரமாகிக் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

ஆதியந்தம் இல்லாத மாறாத திருமேனியோடு விளங்குவதால் எம்பெருமான் ‘அனாதிநிதன:’ என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 42-வது திருநாமம்.

நாமும் உடலாலும் உள்ளத்தாலும் இளைஞர்களாக வாழ ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மரின் மறுவடிவமாகவே விளங்கிய
முக்கூர் ஸ்ரீமத் அழகிய சிங்கரையும், கண்ணபிரானையும் எண்ணியபடி, “அனாதிநிதனாய நம:” என்று தினமும் சொல்வோம்.

உலகுக்கு மூலப்பொருளான மூலப்பிரகிருதியில் நான்முகனைக் கருவாக விதைத்து அதன் மூலம் உலகையே
படைக்கும் திருமால் ‘தாதா’ (Dhaathaa) என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 43-வது திருநாமம்.
“தாத்ரே நம:” என்று தினமும் சொல்லி வருபவர்களுக்கு விதுரரைப் போன்ற நல்ல பிள்ளைகளும், பேரன்களும் பிறப்பார்கள்.

“மூலப் பிரகிருதியில் பிரம்மாவைக் கருவாகத் திருமால் விதைப்பதால் அவர் ‘தாதா’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 43-வது திருநாமம்.
தான் விதைத்த கருவை நான்கு முகங்கள் கொண்ட பிரம்மதேவராகத் தன் அருட்பார்வையால் வளரச் செய்கிறார்.
அவ்வாறு கருவை வளரச்செய்வதால் ‘விதாதா’ என்று ஸஹஸ்ரநாமத்தின் 44-வது திருநாமத்தால் போற்றப்படுகிறார்.
கருவை விதைப்பவர் தாதா, விதைத்த கருவை வளர்ப்பவர் விதாதா.
காந்தாரியின் கருவிலிருந்து வந்த மாமிசத் துண்டுகளைக் குழந்தைகளாக வளரச் செய்ய வேண்டுமென்று திருமாலைப் பிரார்த்தித்து
“விதாத்ரே நமஹ:” என்று ஜபித்தார் வியாசர். அவ்வாறே அவையும் குழந்தைகளாக உருவெடுத்து வந்தன.”
“விதாத்ரே நம:” என்று சொல்லிவரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியமான பிள்ளைகள் பிறப்பார்கள்.

படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு “தாத்ரு” (Dhaathru) என்று பெயருண்டு.
அந்த தாத்ருவான பிரம்மாவைக் காட்டிலும் உயர்ந்தவனாக இருந்துகொண்டு, அவர் நம் தலைகளில் எழுதும் தலையெழுத்தையே
மாற்றவல்லவனாக விளங்கும் எம்பெருமான் ‘தாதுருத்தம:’ –
பிரம்மாவைக் காட்டிலும் உயர்ந்த படைப்பாளி என்று போற்றப்படுகிறான். நம் தலையெழுத்தையும் நல்ல விதமாக மாற்றி அமைக்க
ஸ்ரீராமனையும் அவனது பாதுகைகளையும் வேண்டிக் கொண்டு “தாதுருத்தமாய நம:” என்று தினமும் சொல்வோம்.

———————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள் — ஸ்லோகம் –4–

October 31, 2023

ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யய: |

ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபு ரீஶ்வர: ||

இந்த நான்காவது ஸ்லோகத்தில் மொத்தம் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. ஸர்வ: 26.ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதி: அவ்யய: |
  2. ஸம்பவ: 32.பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||

அவர் பிரபஞ்சத்திற்கும், அதன் வாழ்வாதாரத்திற்கும், அழிவிற்கும் இறுதிக் காரணம், மேலும் அவர் தர்மத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறார். அவர் தூய்மையானவர், தனது பக்தர்களிடம் எப்போதும் கருணை காட்டுபவர், பிரபஞ்சத்தை ஆதரிப்பவர் மற்றும் மிகவும் சக்தி வாய்ந்தவர், எவருடைய உதவியும் இல்லாமல் தான் விரும்பியதைச் செய்யக் கூடியவர்.

ஸர்வ: — ஒவ்வொன்றும் அவரே
சர்வ: — பாபம் அனைத்தையும் அழிப்பவர்
சிவ: — மங்களம் அனைத்தின் உறைவிடம்
ஸ்தாணு: — நிலையாக நமக்கு மங்களத்தை அருள்பவர்
பூதாதி: — பூதங்கள் அனைத்தின் முதல்
நிதிரவ்யய: — அழியாப் பெருநிதியம்
ஸம்பவ: — அவதாரங்கள் எடுத்து அருள்பவர்
பாவன: — சாதுக்களைக் காப்பவர்
பர்த்தா — அனைத்தையும் தாங்கி வளர்ப்பவர்
ப்ரபவ: — ஒளிமிகும் பிறப்பு உடையவர்
ப்ரபு: — மனிதராய்ப் பிறந்தும் முக்தி தரும் பிரபு அவர்
ஈச்வர: — அவதாரத்தால் மிகுந்து விளங்கும் ஈச்வரர் அவரே

அனைத்துப் பொருட்களின் உடல் வடிவமாக இருப்பவன் {ஸர்வன்},
அனைத்தையும் அழிப்பவன் {சர்வன்},
சத்வம், ரஜஸ் மற்றும் தமோ குணங்கள் மூன்றையும் கடந்திருப்பவன் {சிவன்},
அசைவற்றவன் {ஸ்தாணு},
அனைத்தின் தொடக்கமாக இருப்பவன் {பூதாதி},
அண்ட அழிவின்போது அனைத்தும் மூழ்கும் கொள்ளிடமாக இருப்பவன் {நிதிரவ்யயன்},
மாற்றமில்லாதவன் {ஸம்பவன்},
விரும்பியது போலப் பிறப்பவன் {பாவநன்},
உயிரினங்கள் அனைத்தின் செயல்களையும் (மகிழ்ச்சி அல்லது துன்பத்தின் வடிவில்)
கனியச் செய்பவன் {பர்த்தா},
அனைத்துப் பொருட்களையும் தாங்கிப் பிடிப்பவன் {ப்ரபவன்},
அடிப்படை பூதங்கள் அனைத்தும் உண்டாகும் மூலமாக இருப்பவன், பலமிக்கவன் {ப்ரபு/பிரபு},
அனைத்தின் மீதும் கட்டற்ற தலைமையைக் கொண்டவன் {ஈஸ்வரன்};(17)

அனைத்தும் தானே –ஆனால் அவற்றிலும் உயர்ந்தவன் –

25-சர்வ -அனைத்துப் பொருள்களையும் தன் உடலாகக் கொண்டு அவற்றை நடத்துபவர் –
26-சர்வ -தன் உடலாக இருக்கும் அனைத்தின் தீமைகளையும் விலக்குபவர்-
27-ஸிவ -மங்களமாக இருப்பவர் –
28-ஸ்தாணு -அடியவர்களுக்கு நிலை நின்ற பயனைக் கொடுப்பதில் ஸ்திரமானவர் –
29-பூதாதி -அனைத்து பிராணிகளாலும் இறுதியான பயனாக அடையப் படுபவர் –
30-நிதிரவ்யய–எத்தனை பயன்படுத்தினாலும் அழியாத செல்வம் –

31-சம்பவ -புதையல் போலே மறைந்து இருந்து சரியான நேரத்தில் அடியார்களுக்காக அவதரிப்பவர் –
32-பாவன -அவதரிக்கும் போது அடியார்கள் துன்பங்களை நீக்கிக் காப்பவர் –
33-பர்த்தா -தன்னையே அழித்து தாங்குபவர்
34-பிரபவ -அவனை நினைந்தாலே பாபங்களைப் போக்கும் குற்றமற்ற சிறந்த பிறப்பை உடையவர் –
35-ப்ரபு -மனிதனான எளிய பிறப்பிலும் சிந்தயந்தி சிசூபாலன் போன்றோருக்கு முக்தி கொடுத்த மேன்மை உடையவர்
36-ஈஸ்வர -எளியவராக பிறந்த போதும் அனைவரையும் ஆள்பவர் –

————-

25-சர்வ –எல்லாமும் எல்லாரும் அவனே 
கரந்து எங்கும் பரந்து உளன் -1-1-10-

தன்னில் வேறுபட்டவன் அல்லயே -யாரையும் விட்டுக் கொடுக்காமல் -ஆத்மா சரீரம் ரக்ஷணம் போல் சர்வரையும் ரக்ஷித்து அருளுகிறான்

ஏவம் ஸர்வ நிர் வ்யபேஷோ அப்யநுபேக்ஷமாண:
ஸர்வம் ஸ்வரூப ஸ்தித்யா திபி:
ஸ்வ நிர்வாஹ்ய தயா ஸரீரமிவாத் மாநுஸம்தத்தே; அத :
ஸர்வ: ।
ஸரதே:
*இண்ஶீப்யாம் வந்
* ஸர்வ நிக்ருஷ்வ, இத்யாதிநா ஸரத்ய வயவாநித் யர்தே வந் ப்ரத்யய: ।
ஸ ரதி: கத்யர் தத்வாத்  அத்ர புத்யர்த : ।
* அஸ தஶ்ச ஸதஶ்ஸைவ ஸர்வஸ்ய ப்ரபவாப்யய: ।(உத்பத்தியும் வி நாசமும் இவனால் )
ஸர்வஸ்ய ச ஸதா ஜ்ஞாநாத் (புத்யர்த)ஸர்வ மேநம் ப்ரசக்ஷதே–மஹா பாரதம் ॥ இதி நிர்வசநாத் ।

ஈத்ருஶீ வ்யாப்திரேவ ஸர்வ ஸாமாநாதி கரண்ய நிபந்தந முக்தம்
* யேந ஸர்வமிதம் ப்ராேதம், இத்யாரப்ய
* ஸ வை ஸர்வமிதம், இதி ஶ்ருதே: ;
* ச வை ஸர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி ஸர்வ:(ஸ்ரீ கீதை11-40)’ இதி ச ॥ 25 ॥

சராசரங்களையும் உடலாக நினைத்து -ஆத்மாகவே வியாபித்து -அவற்றைத் தாமாகவே நினைத்து நடத்துபவர் –
நிர்ஹேதுகமாக -அபிமானித்து இருப்பவன் -ஸ்ரீ பராசர பட்டர் —
சர்வ -சரீரம் தானே சேதன அசேதனங்கள் -அவனுக்கு –
ஸ்வரூப ஸ்தித்யாதி பிஹி ஸ்வ நிர்வாஹதய சரீரிவ ஆத்மாநுசந்ததே அதக

அசதச்ச சதச்சைவ ஸர்வஸ்ய பிரபவாப்யய ஸர்வஸ்ய ச சதா ஞானாத் சர்வம் ஏனம் ப்ரசக்ஷதே –மஹா பாரதம்
தேந சர்வம் இதம் க்ரோதம் –தைத்ரியம்
ச வை சர்வம் இதம் சர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி சர்வ –ஸ்ரீ கீதை -11-40-

அனைத்து உத்பத்தி நாசங்களுக்கும் காரணமே இருப்பதாலும் -எல்லாவற்றையும் எப்பொழுதும் அறிவதானாலும்
எல்லாமுமாய் இருப்பவன் -ஸ்ரீ சங்கரர்—

வேதத்தில் அனைத்து சொற்களாலும் அறியப்படுபவர் -எங்கும் வியாபித்திருப்பவர் -எல்லாவற்றையும் அடைந்து –
எல்லோரையும் படைப்பவர்–ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

ஓம் சர்வ நம
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் அனைத்துக்கும் த்ரிவித காரணமும் இவனே
சர்வ ஞ்ஞன் சர்வ வித்

——————–

  1. ஓம் ஸர்வஸ்மை நம:

அஸதஸ்ச ஸதஸ்சைவ ஸர்வஸ்ய ப்ரபவாப்யயாத் |

ஸர்வஸ்ய ஸர்வதா ஞானாத் ஸர்வமேன ப்ரசக்ஷதே || (மஹா பாரதம் உத்தியோக பர்வம் 7.11)

மஹா பாரதம் உத்யோக பர்வத்தில் பகவான் வியாசர் கூறுகிறார்:

அல்லதும், உள்ளதும் ஆகிய அனைத்தின் பிறப்பிடமாகவும், அவை நிலை பெற்றிருக்கும் இடமாகவும், அழியும் காலத்தில் சென்றும் லயமடையும் இடமாக இருப்பதாலும், அனைத்தையும் (அனைவரையும்) அனைத்து காலங்களிலும் உள்ளபடி அறிவதாலும் அவரை ‘ஸர்வ’ என்று அழைக்கின்றனர்.

இதி இந்த பகவத் வ்யாஸ வசனாத் வ்யாஸ பகவானின் கூற்றின்படி ஸர்வ: பகவான் ‘ஸர்வ’ என்று அழைக்கப் படுகிறார் |

மஹா பாரதத்தில் உள்ள இந்த வ்யாஸ பகவானின் கூற்றின் படி, அனைத்தின் பிறப்பிடமாகவும், அனைத்தையும் அறிவதாலும், பகவான் ‘ஸர்வ’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

———

ஸர்வா – அவர் சர்வ ஞானி

சர்வா என்றால் அனைத்தும் அல்லது அனைத்தும். அவர் எங்கும் நிறைந்தவர், எல்லாவற்றுக்கும் காரணமானவர். ரத்தினங்களையும் முத்துக்களையும் ஒரு கழுத்தில் இணைக்கும் சரம் போல, விஷ்ணு அனைத்து ஜீவாத்மாக்களையும் ஒரு கழுத்தில் உள்ள சரம் போல வைத்திருக்கிறார்.

மகாபாரதத்தில் “அசதச்ச சதச்சைவ ஸர்வஸ்ய ப்ரபாவாப்யாயாத் ஸர்வஸ்ய ஸர்வதா ஞானாத் ஸர்வமேனாம் பிரசக்ஷதே – அவனே எல்லாவற்றின் தோற்றமும் முடிவும். அவர் எல்லா விஷயங்களையும் எல்லா நேரங்களிலும் அறிந்திருக்கிறார். எனவே அவர் சர்வா என்று அழைக்கப்படுகிறார்.

அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஹ் ஸர்வம் ப்ரவர்ததே
இதி மத்வா பஜந்தே மாம் புத பவ-ஸமன்விதா–10-8-
நான் எல்லா படைப்புகளுக்கும் ஆதாரமாக இருக்கிறேன், எல்லாமே என்னிடமிருந்து வெளிப்படுகிறது. இதைப் பூரணமாக அறிந்த ஞானிகள், என்னுடைய பக்தித் தொண்டில் ஈடுபட்டு, முழு மனதுடன் என்னை வணங்குகிறார்கள்.

———

26-சர்வ –

ஸ்வ ஸரீர பூதாநாம் அ ஸூபமபி ஶ்ருணாதீதி -ஸர்வ: பூர்வவத் வந் ॥26॥

அழிப்பவன்-சர்வ சிவ ஸ்தாணு -இவை எல்லாமும் விஷ்ணோர் நாம சஹஸ்ராணி –கௌணாநி –
ச ப்ரஹ்மா சசிவ சேந்தர-
அசுபத்தை நீக்கி சுபத்தை -மங்களத்தை தருமவன் –
வைகுந்தா மணி வண்ணனே செய்குந்தா வரும் தீமைகள் உன்னடியார்க்குத் தீர்த்து -2-6-1-

தமது சரீரங்களாக உள்ளவற்றின் விரோதிகளை சிதறச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
திருக் கண்டியூர் -அரன் சாபம் தீர்த்து –

ஸாஷாத் பர திரு நாமம் பட்டர் –சிவன் குற்றமும் போக்குபவர் இவரே
சங்கரர் -அவனே அவனும் அவனும் அவனும் அந்தராத்மா -ஆத்மா அளவில் பர்யவசிக்கும்

சம்ஹார காலத்தில் எல்லா பிராணிகளையும் அழிப்பவர் -அழிப்பிப்பவர்-ஸ்ரீ சங்கரர்—

அனைவரையும் -அயோக்யருக்கு சுகம் கிட்டாமல் செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

ஓம் சர்வ நம
சரீர மாக உள்ள ஸமஸ்த த்ரிவித சேதன அசேதனங்களின் பிரதிபந்தகங்களை போக்கி அருளுபவர்

எனது உடம்பின் அழுக்கை நானே போக்கிக் கொள்வேன் -அனைவரும் அவனுக்கு சரீர பூதர்

——————–

  1. ஓம் ஶர்வாய நம:

ஶ்ருணாதி ஸம்ஹார ஸமயே ஸம்ஹரதி ஸகலா: ப்ரஜா: இதி ஶர்வ:

ஶ்ருணாதி ‘ஶ்ருணாதி’ என்றால் ஸம்ஹார ஸமயே பிரளய (அழிக்கும்) காலத்தில் ஸம்ஹரதி கொல்வதால் ஸகலாப்ரஜாஅனைத்து உயிர்களையும் இதி ஶர்வ:’ பகவான் ‘ஶர்வ:’ என்று அழைக்கப் படுகிறார்.

பிரளய (அழிக்கும்) காலத்தில் அனைத்து உயிர்களையும் கொல்வதால் பகவான் ‘ஶர்வ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

—————

ஷர்வா – அவர் அழிப்பவர்

எல்லா உயிர்களையும் உரிய நேரத்தில் அழிப்பவர். ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுகிறார் ” ஷ்ருணாதி சம்ஹாரஸமயே சம்ஹாரதி ஸம்ஹாரயதி ஸகலாஹ் ப்ரஜா இதி – அழிவுக்கான நேரம் வரும்போது அவர் எல்லா உயிரினங்களையும் தன்னிடம் திரும்பப் பெறுகிறார்”.

“சர்வ பூதானி கவுந்தேய ப்ரகிருதிம் யாந்தி மாமிகாம்,
கல்பக்ஷயே புனஸ்தானி கல்பாதௌ விஸ்ரிஜாம்யஹம்”–9-7-
அனைத்து உயிரினங்களும், அர்ஜுனா, படைப்பின் இறுதிச் சுழற்சியில் என் பிரக்ருதிக்குச் செல்கின்றன. மீண்டும், (அடுத்த) சுழற்சியின் தொடக்கத்தில், நான் அவற்றை உருவாக்குகிறேன்.

ஸ்ரீ பராசர பட்டரின் வியாக்யானம், உடலால் உண்டாகும் தீமைகளை நீக்குவதால், இறைவன் ஷர்வா என்று அழைக்கப்படுகிறார் என்று கூறுகிறது (ஸ்வ ஷரீர பூதாநாம் அசுபமபி ஶ்ரீணாதி இதி ஷர்வா). பகவான் தனது பக்தர்களின் அனைத்து பாவங்களையும் அழிப்பதால் ஷர்வா என்று அழைக்கப்படுகிறார் என்பது இதன் பொருள்.

———

27-சிவ-
மங்களங்களை அளிப்பவன்-(இஷ்டப் பிராப்தி இது கீழ் அநிஷ்ட நிவ்ருத்தி )

ஸூபாவஹஶ் ச ஶிவ:, ஶீங: ஸூபார்தத்வாத் ।
* ஸர்வ நிக்ருஷ் வரிப்வ லப்வ ஶிவ, இத்யாதிநா வந்ப்ரத்யய:, ஹரஸ்வத்வம், குண அபாவஶ்ச நிபாத்யதே । யதா
* ஸாஶ்வதம் ஶிவம் அச்யுதம்,
* ஸ்ம்ருதே ஸகல கல்யாண பாஜநம், (நினைத்தாலே மங்களகரமாக இருக்கும் )
* மங்கலம் பகவாந் விஷ்ணு:
*மங்கலாயதநம் ஹரி:
* மங்கலாநாம் ச மங்கலம்
* மங்கல்யம் மங்கலம் விஷ்ணும் இத்யாதிநா(மங்களமாகவும் மங்கள காரியங்களுக்கு விஷயமாகவும் இவனே )॥ 27 ॥

ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும் -3-6-11

607–சிவ -மங்கள பிரதன் மீண்டும் வரும் -சரீர சம்பந்தம் போக்கி –
அருளொடு பெரு நிலம் அளிக்கும் நாரணன் -பெரிய திரு மொழி -1-1-9-
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமால் -1-5-7-

நன்மைகளைச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –சுபாவஹா தத் சிவா –

சாஸ்வதம் சிவம் அச்யுதம்–தைத்ரியம்
ஸ்ம்ருதி சகல கல்யாண பாஜநம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம்
மங்களம் பகவான் விஷ்ணு
மங்களாய தநம் ஹரி
மங்களா நாஞ்ச மங்களம்-மஹா பாரதம்
மங்கல்யம் மங்களம் விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு தர்மம்

ஸாஷாத் இவனே என்று பட்டரும் -அந்தராத்மாவாகையால் இவன் என்றும் சங்கரரும் வியாக்யானம்

முக் குணங்கள் இல்லாமையால் பரிசுத்தர் -சிவன் முதலிய நாமங்களாலும் விஷ்ணுவே ஸ்துதிக்கப் படுபவர் -ஸ்ரீ சங்கரர்—

மங்களமாக இருப்பவர் -மங்களைத்தையும் செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

ஓம் சிவா நம
அனைத்து மங்களங்களும் அளிப்பவர்

—————-

  1. ஓம் ஶிவாய நம:

நிஸ் த்ரை குண்ய தயா ஶுத்தத்வாத் ஶிவ:

நிஸ் த்ரை குண்ய தயா முக்குணங்களின் சேர்க்கை இன்றி ஶுத்தத்வாத் தூய்மையானவராக இருப்பதால் ஶிவ: பகவான் ‘ஶிவ:’ என்று அழைக்கப் படுகிறார்.

முக் குணங்களின் சேர்க்கை இன்றி தூய்மையானவராக இருப்பதால் பகவான் ‘ஶிவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

ஶிவ என்றால் தூய்மை என்று ஒரு பொருள் உண்டு

‘ஸ ப்ரஹ்மா ஸ ஶிவ:’ (கைவல்ய உபநிஶத் 8)

கைவல்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:-அவரே ப்ரஹ்மா (நான்முகக்கடவுள்), அவரே சிவன்…

இதி இங்கு அபேத (அனைத்தும் ஒன்றே என்ற) அத்வைத உபதேஶா தத்துவத்தின் படி ஶிவா ‘ஶிவ’ ஆதி முதலிய நாமபிர் நாமங்களாலும் ஹரிரேவ பகவான் ஹரி ஒருவரே ஸ்தூயதே துதிக்கப்படுகிறார் |

கைவல்ய உபநிஶத்தில் சிவபெருமானைப் போற்றிக் கூறும் வாக்கியமே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. சிவனை போற்றும் அனைத்தும் பகவான் ஹரியையே போற்றும் என்பது அத்வைதத் தத்துவம். இதை ஆசார்யர் தொடக்கத்திலேயே விளக்கி யுள்ளார். எனவே, சிவ முதலிய திருநாமங்களும் பகவான் ஹரியையே போற்றுவதாகக் கொள்ள வேண்டும்.

————

சிவா – தூய்மையானவர்

இந்த பெயரை 2 வழிகளில் விளக்கலாம்.

  •  அவர் தூயவர் மற்றும் ரஜஸ், தமஸ் மற்றும் சத்வ ஆகிய 3 குணங்களிலிருந்து விடுபட்டவர். ஸ்ரீ ஆதி சங்கரர் கூறுகிறார் “நிஸ்த்ரைகுண்யாதயா சுத்தத்வாத் சிவா – அவர் தூய்மையானவர் மற்றும் மூன்று குணங்கள் (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய இயற்கையான குணங்கள்) இல்லாததால் அவர் சிவன் என்று அழைக்கப்படுகிறார்.
  •  அனைவருக்கும் ஐஸ்வர்யத்தை அளிப்பவர். மகாபாரதத்தில், “தன் பக்தர்களால் விரும்பிய அனைத்தையும் அருளுபவர் சிவன் என்று அழைக்கப்படுகிறார்” என்று ஒரு வசனம் உள்ளது.

இந்தப் பெயரின் பின்னணியில், நாராயண உபநிஷத் கூறுகிறது:

  •  “சாஸ்வதம் சிவம் அச்யுதம்” – நித்தியமானவர், மங்களகரமானவர், மற்றும் தம் பக்தர்களை ஒருபோதும் விழ விடாதவர்.
  • ச ப்ரஹ்ம ச சிவஹ் சென்ரஹ் ஸோக்ஷரஹ பரம ஸ்வராட்” – அவனே பிரம்மா, அவனே சிவன், அவனே இந்திரன், அவனே நித்தியமானவன், அவனே உன்னதமானவன், அனைத்திற்கும் இறைவன்.

———

28-ஸ்தாணு
நிலையானவன் –அனுக்ரஹம் அளிப்பதில் ஸ்திரமானவன் –

தத்ர ச ஸ்தாணு:। திஷ்டதே:,
* ஸ்தோணுரிதி ணு; த்ருடாநுக்ரஹ இதி பாவ: । நஹி பகவத : ஸ்பர்ஸ :(கேசவா என்ன கெடும் இடராய வெல்லாம் )
ப்ராயஶ்சித்தாதி ஸாமாந்ய தர்ம வத் உபாத்த துரித ஷேபேண காரீரீ–
சித்ரா -தர்ஸ பூர்ண மாஸாதி வத் தேவதாந்தரவத்வா காம்யமாந ஏக காம
ப்ரதாநேந வா அந்ருதகோ விரமதி, ப்ரபலைர் வா அந்தராயை : ப்ரதிபத்யேத ஹீயேத , அவஹ்நியேத வா ।
கிம்து அஸேஷமஶிவம் ஸம்ஸ மய்ய
அகில மபிலஷிதம் ச பஹுமுக விஶ்ராண்யாபி, ந ஜாதுசித் விஶ்ராம்யதி ।யதா

* ஏகோ பஹூநாம் யோ வித தாதி காமாந்;
* ஏதத்த்யேவாக்ஷரம் ஜ்ஞாத்வா யோ யதிச்சதி தஸ்ய தத்,
* தஸ்மிந் ப்ரஸந்நே கிமிஹ அஸ்த்யலப்யம்,
* ஸகல பல ப்ரதோ ஹி விஷ்ணு:,
*ரத்ந பர்வத மாருஹ்ய யதா ரத்நம் நரோ முநே ।
ஸத்த்வாநுரூப மாதத்தே ததா க்ருஷ்ணாந் மநோ ரதாந் ॥
* பௌமம் மநோரதம் ஸ்வர்கே ஸ்வர்கி வந்த்யம் ச யத் பதம் । ப்ராப்நோத்யாராதிதே விஷ்ணௌ முக்தி மப்யதி துர்லபாம் ॥
* யத் துர்லபம் யத் அப்ராப்யம் மநஸோ யதகோசரம் । ததப்ய ப்ரார்திதிம் த்யாதோ ததாதி மதுஸூதந: ॥ இதி ॥ 28 ॥

மாதவன் என்று ஓத வல்லீரேல் தீதொன்றும் அடையா –ஏதம் சாராவே -10-5-7-
அடியார்க்கு இன்னும் என் செய்வன் என்றே இருத்தி –
428-ஸ்தாவர ஸ்தாணு -மீண்டும் வரும்
வன்மை யுடைய வரக்கர் அசுரரை மாளப் படை பொருத நன்மை யுடையவன் -3-10-1-

நிலைத்து நிற்பர் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி செய்து அருளி மேன்மேலும் அருளுபவர் –
பகவத் சம்ச்லேஷம் குறிப்பிட்ட பாவங்களைப் போக்குவிக்கும் பிரயச்சித்தம் போலே இல்லை
காரீரீ சித்ரம் தார்ச பூர்ண மாசம் போன்ற யாகங்கள் போலேயோ தேவ தாந்த்ரங்களைப் போலேயோ
குறிப்பிட்ட பலன்களை மட்டும் கொடுத்து நிற்பது இல்லை –
பலமான தடைகளால் தடுக்கப் படுவது இல்லை -அழிவதில்லை -மாறாக மேன்மேலும் அருளுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
திஷ்டதே -அசேஷமவ சிவம் சம்ஷமய்ய -அகிலம் அகில பஹூ முகம் விஸ்ரான்யபி -ந ஜாது சிதது – விஸ்ராம்யதி –ஸ்திரமாக அருளுபவன்
யாதவ பிரகாசர் திருந்தி எம்பெருமானார் திருவடி சேர்ந்து -கோவிந்த நாதர் -திரு நாமம் பெற்று எதி தர்ம சமுச்சயம் கிரந்தம் -அருளி உள்ளார் –

ஏகோ பஹு நாம் யோ விததாதி காமாந் -ஸ்வேதாஸ்வர -கட உபநிஷத்
ஏதத்தி ஏவ அக்ஷரம் ஞாத்வா யோ யாதிச்சதி தஸ்ய தத் –கட உபநிஷத்
தஸ்மிந் ப்ரசன்னே கிமிஹாஸ்தி அலப்யம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-91-
சகல பல ப்ரதோ ஹி விஷ்ணு –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -42-47-
ரத்ன பர்வதம் ஆருஹ்ய யதா ரத்னம் நரோ முனே சத்தவானு ரூபம் ஆதத்தே ததா கிருஷ்ணாத் மநோ ரதாம்-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -7-3-
பீமம் மநோ ரதம் ஸ்வர்க்கம் ஸ்வர்க்கி வந்த்யம் ச யத் பதம் ப்ராப்நோதி ஆராதிதே விஷ்ணவ் முக்திம்
அபி அதி துர்லபாம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-8-6–
யத் துர்லபம் யத் அப்ராப்யம் மனசோ யத் அகோசரம் ததாபி அபிரார்த்திதம்
த்யாதோ தாதாபி மது ஸூதந

ஸ்திரமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்—

எங்கும் பரவி இருப்பவர் -அணு அளவுள்ளவர் -சிவனுக்கு அந்தர்யாமியாய் இருப்பவர் –
சிவ ஸ்தாணு -ஒரே பதமாக கொண்டு-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்

ஓம் ஸ்தாணு நம
ஊற்றமுடையவன்.–அடியவரை ரக்ஷிப்பதிலே விரதம் கொண்டவன்

——————

  1. ஓம் ஸ்தாணவே நம:

ஸ்திரத்வாத் ஸ்தாணு:

ஸ்திரத்வாத் (நிரந்தரமாக) நிலையாக இருப்பதால் ஸ்தாணு: பகவான் ‘ஸ்தாணு:’ என்று அழைக்கப் படுகிறார்.

(நிரந்தரமாக) நிலையாக இருப்பதால் பகவான் ‘ஸ்தாணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

———

ஸ்தாநுஹ் – நிலையான மற்றும் மாறாதவர்

இதன் பொருள் உறுதியான மற்றும் அசையாதவர். இந்த பெயர் ஸ்தா-திஷ்டதி என்ற மூல வார்த்தையிலிருந்து உருவானது, இது உறுதியான தன்மை அல்லது நிலைத்தன்மையைக் குறிக்கிறது. சுவாரஸ்யமாக, இது பொதுவாக சிவபெருமானுக்குச் சொல்லப்படும் மற்றொரு பெயர்.-இறைவன் தன் பக்தர்களுக்கு அளவற்ற நன்மைகளை வழங்குகிறான் என்பதும் இதன் பொருள்.

———

29-பூதாதி –

அபி ச ஸ்ப்ருஹணீய தமத்வாத் பூதை ருபாதீயதே இதி
பூதாதி: । (ஸ்ப்ருஹணீய –ஸ்ப்ருஹணீய தர -ஸ்ப்ருஹணீய தம-ஆதி -காரண த்வம் சொல்லும் பிரகரணம் அல்லவே -ஆதரிக்கப் படுபவர் என்றவாறு )
*உபஸர்கேகோ : கி: । ஏவம் ஸர்வாதிர் நிதிரித்யாதய: । (இதே போல் ப்ரத்யயம் வந்த திரு நாமங்களையும் காட்டி அருளுகிறார் )
* கிம் ப்ரஜயா கரிஷ்யாமோ யேஷாம் நோ அயமாத்மா , உபபம்ஹ்யதே ச
* ஏதே வயம் ஸர்வ ஸம்ருத்த காமா யேஷாமயம் நோ பவிதா ப்ரஸாஸ்தா , இத்யாதிபி: ॥ 29

சர்வ தோஷங்கள் போக்கி -சுபங்களை அளித்து –சிவ -இவற்றை நிலைத்து ஸ்தாணு -இதனால் சர்வராலும் ஆதரிக்கப் படுபவன்
எல்லா யுலகு முடையான் தனை நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே -4-5-7-

மிகவும் விரும்பப்படும் தன்மை உள்ளவராதளால் பிராணிகளால் அடையப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஸ்ப்ருஹணீயது -மத்வாது —பூதைகி உபாதீயது –

கிம் ப்ரஜயா கரிஷ்யாமோ யேஷாம் ந அயம் ஆத்மா –பிருஹத்
ஏதே வயம் சர்வ சம்ருத்த காமா ஏஷா மயம் நோ பவிதா பிரசாஸ்தா –அயோத்யா -16-49-

எல்லா பொருள்களுக்கும் காரணமாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்—

எல்லா பூதங்களுக்கும் காரணமானவர் -சம்ஹார காலத்தில் யுண்பவர்-
பூதங்களால் ஏற்க அடையப் படுபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

ஓம் பூதாதி நம
அனைவராலும் வேண்டப்படுபவன் -அனைத்து புருஷார்த்தங்களையும் வேண்டியவர்க்கு வேண்டியதை அளிப்பவன்
பஞ்ச பூதங்களுக்கு காரண பூதன்

———————

  1. ஓம் பூதாதயே நம:

பூதானாம் ஆதி காரணத்வாத் பூதாதி: 

பூதானாம் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதி காரணத்வாத் மூல காரணமாய் இருப்பதால் பூதாதி: பகவான் ‘பூதாதி:’ என்று அழைக்கப் படுகிறார்.

அனைத்து ஜீவ ராசிகளுக்கும் மூல காரணமாய் இருப்பதால் பகவான் ‘பூதாதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

——

பூதாதிஹ் – எல்லா காரணங்களுக்கும் அவரே ஆதாரம்

ஸ்ரீ பராசர பட்டர், “பூதைஹி ஸ்ப்ர்ஹநீயதனதாயா ஆதீயதே – எல்லா உயிர்களாலும் ஆவலுடன் தேடப்படுபவர்” என்று விளக்கம் தருகிறார்.

ஸ்ரீ ஆதிசங்கரர் “பூதாநாம் ஆதி காரணத்வாத் பூதாதிஹ் – எல்லா உயிர்களுக்கும் முதல் காரணகர்த்தாவாக இருப்பதால் பகவான் பூதாதி என்று அழைக்கப்படுகிறார்” என்று விளக்கம் தருகிறார்.பூதானாம் ஆதிஹ் – பஞ்ச பூதங்கள் – விண்வெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி.”

———

30-நிதிரவ்யய –

அத: (விரும்பப்படும் பிரகரணம் -ஆகையால் )
நிதிரவ்யய:;
மாஹா லோபேந ஆபத் தநவந் நிதேயத்வாத் । யதா ச
*தத் யதா ஹிரண்ய நிதிம் நிஹிதம், இத்யாதி ।
ஸர்வதா ஸர்வதோபஜீவ்ய மாநம் த்வே அபி கலயா அப்யநுபக்ஷயாத் அவ்யய: ।
நிதி விஸேஷண மேதத், ந ஸ்வதந்த்ரம் நாம । அந்யதா அவ்யய: புருஷ: இதி பௌநருக்தயாத் ॥ 30 ॥॥

அழிவற்ற நிதி -ஆபத் தனம் –அவ்யய -13 திரு நாமம் பார்த்தோம் முன்பு
வைத்த மா நிதியம் மது சூதனன் -4-7-11
தனம் மதியம் தவ பாத பங்கஜம்
நிதியினைப் பவளத் தூணை -திருக் குறு-1-

எல்லா காலமும் எல்லா வகைகளாலும் அனுபவித்தாலும் குறையாத ஆபத்துக்கு உதவும் வைத்த மா நிதி –
நிதி என்பது அவ்யய என்பதற்கு விசேஷணம்-தனித் திரு நாமம் அல்ல –
இல்லா விடில் அவ்யய புருஷ -சொல்லப் பட்டதே மீண்டும் சொன்ன குற்றம் வரும் -ஸ்ரீ பராசர பட்டர் —-
மகா லோபேன ஆபத்வத் நிதியேத்வாத் சர்வதா சர்வதோப ஜீவா மானத் அபிகலயாபி அனுபஷயாதி

தத் யதா ஹிரண்ய நிதிம் நிஹிதம் –சாந்தோக்யம்
அவ்யய -என்றது நிதிக்கு விசேஷணம் -தனியான திரு நாமம் இல்லை

பிரளய காலத்தில் எல்லாம் தம்மிடம் வைப்பதால் நிதியாக இருப்பவர் -அவ்யய நிதி -அழியாத நிதி –ஸ்ரீ சங்கரர்—-

நல்லோர்களால் இதயத்தில் வைக்கப் படுபவர் -நிதி –ஞானிகளால் அன்புடன் நோக்கிச் செல்லப்படுபவர் –
அவ்யய -இரண்டு திருநாமங்கள்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

ஓம் நிதிரவ்யயா நம
வைத்த மா நிதி அன்றோ
சாஸ்வத நிதி

—————–

  1. ஓம் நிதயேSவ்யயாய நம:

ப்ரளய காலேஸ்மின் ஸர்வம் நிதீயத இதி நிதி: அவ்யய: அவினஶ்வரோ  நிதிரித்யர்த்த:

ப்ரளய காலேஸ்மின் அழிக்கும் (ப்ரளய) காலத்தில் ஸர்வம் அனைத்தும் நிதீயத (அவருக்குள்) சென்று உள்ளடங்குவதால் இதி அவர் நிதி: ‘நிதி:’ என்று அழைக்கப் படுகிறார்.

‘கர்மண்யதிகரணே ச’ (பாணினி ஸூத்ரம் 3.3.93)

இதி கி ப்ரத்யய:-இந்த பாணினி ஸூத்ரத்தின் படி இங்கு ‘கி’ விகுதி கூட்டப் பட்டுள்ளது.

ஸ ஏவ இப்பொழுது நிதிர்விஶேஶ்யதே ‘நிதி’யை மேலும் ப்ரத்யேகமாக அடையாளப் படுத்திக் காட்டுகிறார்.

அவ்யய: அவினஶ்வரோ எக்காலத்திலும் அழிவே இல்லாத நிதிரித்யர்த்தநிதி என்று இதற்குப் பொருள்.

அழிக்கும் (ப்ரளய) காலத்தில் அனைத்தும் (அவருக்குள்) சென்று உள்ளடங்குவதா லும், எக்காலத்திலும் அழிவே இல்லாததாலும், பகவான் “நிதி: அவ்யய:” என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

————

நிதிஹ் அவ்யயா – அவர் மாறாதவர் மற்றும் நித்தியமானவர்

இது ஒற்றைப் பெயராகக் கொள்ளப்படுகிறது. நிதி என்றால் பொக்கிஷம் என்றும், அவ்யயா என்றால் அழியாதது அல்லது என்றும் என்றும் பொருள். அவர் பக்தர்களுக்கு நிரந்தரமான மற்றும் வற்றாத பொக்கிஷம். பௌதிகப் பொக்கிஷங்கள் வரம்புக்குட்பட்டவை மற்றும் காலப்போக்கில் தீர்ந்துவிடும். பகவான் என்றும் அழியாத பொக்கிஷம்.

பரஸ் தஸ்மாத் து பவோ ‘நியோ வ்யக்தோ’ வ்யக்தாத் சநாதனஹ்
யஹ் ச ஸர்வேஷு பூதேஷு நஸ்யாத்ஸு ந வினஸ்யதி :–8-20-

இன்னும் இன்னுமொரு இயல்பு உள்ளது, இது நித்தியமானது மற்றும் இந்த வெளிப்படும் மற்றும் வெளிப்படுத்தப்படாத விஷயத்திற்கு அப்பாற்பட்டது. அது உன்னதமானது மற்றும் அழியாதது. இவ்வுலகில் உள்ள அனைத்தும் அழிந்தால், அந்த பகுதி அப்படியே இருக்கும். எல்லா உயிர்களும் அழிந்தாலும் தெய்வீகப் பொருள் அழியாது”

———–

31- சம்பவ –
அவதாரம் செய்பவன் -ஸம் யக் பவதி–நன்றாகக் பிறந்து தனது பெருமைகளை வெளிப்படுத்தி அருளுபவர் -ப்ரகாஸயந்-

நிதியினை பவளத் தூணை -எங்கும் எப்போதும் அங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றி -சமந்தாத் -வேண்டித் தேவர் இரக்க வந்து தோன்றியதும்

என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் ஸம்பவ

ஏவம் நிஹித அப்யாத்மாநம் தத் ஸம்ஶ்லேஷ த்வரயா அர்திப்ய: ப்ரகாஸயந்
ஸம்பவ:।
ஸமந்தாத் பவோ யஸ்யேதி; தத்ர தத்ர
ஸர்வ தேச காலாதிஷு மத்ஸ்ய, கூர்ம , வராஹ, ந்ருஸிம்ஹ, வாமந, ராம , க்ருஷ்ணாதிபீ
ரூபைர் ஏகைக புநருக்தைர் அஸங்க்யேயைர் அபீக்ஷ்ண மாவிர்பவதீத்யர்த : ।யதா பஹுதா விஜாயதே,
* பஹூநி மே வ்யதீதாநி, ஜன்மாநி –
* யதா யதா ஹி தர்மஸ்ய, இத்யாதி ॥ 31 ॥

நிதியாக பொக்கிஷமாக அடியார் காப்பாற்றினாலும்
பவித்ராணாம் –தர்ம சம்ஸ்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே –
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே -3-1-9-
பஹூநிமே வ்யதீதாநி ஜன்மாநி –
ஒருத்தி மகனாய் பிறந்து –

அப்படி மறைத்து வைத்து இருந்த போதும் தம்மை அனுபவிக்க ஆவல் கொண்டு பிரார்த்திக்குமவர்களுக்கு
அவதாரங்களினால் வெளிப்படுத்துபவர் –
சம்பவாமி யுகே யுகே -மத்ஸ்ய கூர்ம வராஹ நரசிம்ஹ வாமன ராம கிருஷ்ணாதி அவதாரங்களால் பல முறையால்
எல்லா இடங்களிலும் எல்லா காலத்திலும் அவதரிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-
ஏவம் லிகிதமபி ஆத்மானம் தம் சம்ச்லேஷத் தவரையா அர்தித்த்வய கதாசயத் சம்பவ

பஹுதா விஜாயதே -புருஷ ஸூக்தம்
பஹுநி மே வியதீதாநி –ஸ்ரீ கீதை -4-5-
யதா யதா ஹி தர்மஸ்ய –ஸ்ரீ கீதை -4-7–

தமது இச்சையின் படி பிறக்கும் வல்லமை உடையவர் -ஸ்ரீ சங்கரர்—-

நஷத்ரங்களை நடத்துபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—–

ஓம் சம்பவாய நம
திருவவதாரம் -யுகம் தரும் செய்து அருளுபவர் -சம்பவாமி யுகே யுகே
தேவாதி ரூபமாக எந்த காலத்திலும் எங்கும் திரு அவதரித்து அருளுபவர்
மத்ஸ்யாதி தசாவதாரம் பிரசித்தம்

————-

  1. ஓம் ஸம்பவாய நம:

ஸ்வேச்சயா ஸமீசீனம் பவனமஸ்யேதி ஸம்பவ:

ஸ்வேச்சயா (கர்மாதீனமாக இல்லாமல்) தனது சுய விருப்பத்தால் ஸமீசீனம் புகழோடு பவனமஸ்யேதி பிறப்பதால் (அவதாரம் எடுப்பதால்) ஸம்பவ: அவர் ‘சம்பவ:’ என்று அழைக்கப் படுகிறார்.

(நம்மை போன்று கர்மாதீனமாக இல்லாமல்) தனது சுய விருப்பத்தால் புகழோடு பிறப்பதால் (அவதாரம் எடுப்பதால்) பகவான் ‘ஸம்பவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

‘தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே’ (ஸ்ரீமத் பகவத்கீதை 4.8)

ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்:…அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

இதி பகவத் வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறியுள்ளார்.

அத துஶ்ட விநாஶாய ஸாதூனாம் ரக்ஷணாய ச |

ஸ்வேச்சயா ஸம்பவாம் யேவம் கர்ப துக்க விவர்ஜித: ||’

தீயன செய்வோரை அழிக்கவும், நல்லோரைக் காக்கவும், நான் எனது விருப்பத்தின் படி கர்ப்பமும் அதைச் சார்ந்த துன்பங்களும் இன்றி பிறக்கிறேன்.

இதி  | இவ்வாறு, பகவானின் மற்றொரு வாக்கும் உள்ளது.

மேற்கண்ட ஸ்லோகம் எந்த இதிஹாஸ, புராணத்தில் உள்ளது என்ற குறிப்பு இல்லை. ஆனால், இதன் பொருள் பகவத் கீதையிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஸ்லோகத்தை ஒத்தே உள்ளது.

———

சாம்பவா – தன் விருப்பப்படி வெளிப்படுபவன்

அவர் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த வடிவத்திலும் தன்னை வெளிப்படுத்துபவர்.

பரித்ராணாய சாதூநாம் வினாஷாய ச துஷ்கிருதம்
தர்மம் ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே :–4-8-

துஷ்டர்களின் பாதுகாப்புக்காகவும், தீயவர்களை அழிப்பதற்காகவும், தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காகவும், நான் ஆயிரமாண்டுக்குப் பிறகு ஆயிரமாண்டு பிறக்கிறேன். அவரது அனைத்து அவதாரங்களும் தர்மத்தை மீட்டெடுக்கவும், தீமையை அழிக்கவும் அவரது வழக்கமான வெளிப்பாட்டின் சான்றுகள்.

———–

32-பாவந –
உய்விப்பவன் –

நானும் பிறந்த பின்பு நீ மேலும் பிறக்க வேண்டுமோ-

ஏவம் ஸம்பூய  அநிஷ்ட நிவாரணாதிநா உஜ்ஜீவயதீதி
பாவந: । யதா ,
* பரித்ராணாய ஸாதூநாம், இத்யாதி ॥ 32 ॥

பக்தியை உண்டாக்கி வளரச் செய்து பூர்ண பக்தனாக்கி உஜ்ஜீவிப்பவன்
அடியவர் வினை கெடுக்கும் நச்சு மா மருந்தம் நலம் கடல் அமுதம் -3-4-5-

சம்பவாமி கீழ்
எதற்க்காக –பாவன -பரித்ராணாயா இத்யாதி -அடியவர் வினை கெடுக்கும் நச்சு மா மருந்து -நச்சு விரும்பப்படுபவன்

உன் சுடர் சோதி மறையாதே –தொழும் காதல் களிறு அளிப்பான் -அவதரித்து ரக்ஷணம்
மூன்று பரீஷை இவனுக்கு திரௌபதி -பிரகலாதன் -கஜேந்திரன் -இவனுக்கு
ரக்ஷமாம் -அவள் -தோன்ற பிரகலாதனுக்கு கஜேந்த்ரனும் -பிரார்த்திக்க –

திருவவதரித்து துன்பங்களை போக்கி உய்விப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-
ஏவம் சம்பூய அநிஷ்ட நிவாரண ஆதினாம் உஜ்ஜீவன யதீனாம் –

பரித்ராணாய ஸாதூ நாம் –ஸ்ரீ கீதை -4-8-

எல்லாருக்கும் எல்லாப் பலன்களையும் அளிப்பவர்-ஸ்ரீ சங்கரர்—-

மங்களங்களைச் செலுத்துபவர் -அபாவன -என்று கொண்டு பிறப்பு இல்லாதவர் –
சூர்யன் ஒளியால் பொருள்களை காட்டுபவர் -ஒளிகள் அடையும் இடமாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—–

ஓம் பாவந நம
திருவவதரித்து அனைவரையும் வாழ்விப்பவன்
கர்ம பலன்களை அளித்து அருளுபவர்


ஓம் பாவனாய நம:

ஸர்வேஶாம் போக்த்ருணாம் ஃபலானி பாவயதீதி பாவன:

ஸர்வேஶாம் அனைத்து போக்த்ருணாம் அனுபவிப்பவர்களுக்கு ஃபலானி (அவர்களின் விருப்பம், மற்றும் கர்மத்திற்குத் தக்கவாறு) பலன்களை பாவயதீதி உருவாக்குவதால் பாவன: அவர் ‘பாவன:’ என்று அழைக்கப்படுகிறார்.

அனைத்து வகையான சுகங்களையும் அனுபவிப்பவர்களுக்கு, (அவர்களின் விருப்பம்மற்றும் கர்மத்திற்குத் தக்கவாறு) பலன்களை உருவாக்குவதால் பகவான் ‘பாவன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

ஸர்வஃபலதாத்ருத்வம் பகவானே அனைத்துப் பலன்களையும் வழங்குகிறார் என்பது,

‘ஃபலமத உபபத்தே:’ (ப்ரஹ்ம ஸூத்ரம் 3.2.38)-அனைத்துப் பலன்களும் ப்ரஹ்மத்தினிடத்தினின்றே தோன்றுகின்றன.

இத்யத்ர ப்ரதிபாதிதம் இதனால் (மேற்கண்ட ப்ரஹ்ம ஸூத்ரத்தினால்) நிரூபிக்கப்பட்டுள்ளது.

————

பாவனா – செயல்களின் பலனைத் தருபவர்

எல்லா உயிர்களுக்கும் செயல்களின் பலனைத் தருபவர். இதை ஆதிசங்கரர், “சர்வேஷாம் போக்த்ருணாம் ফலாநி பாவயதீதி பாவனঃ – செய்பவர்கள் அனைவருக்கும் செயல்களின் பலனை வழங்குகிறார்” என்று விளக்குகிறார்.

நாம் செயலைச் செய்ய முடியும் ஆனால் பலதாதா பகவான், அவர் மட்டுமே செயலின் பலனை வழங்க முடியும்.

“கர்து ராஜ்ஞாயா காரியதே பலம் கர்ம கிம் பரம் கர்ம தஜ்ஜதம் – வெறும் செயல் மட்டுமே வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்காது, பலன் உண்மையில் பகவானின் கட்டளையால் ஏற்படுகிறது”

ஸ்ரீ பராசர பட்டரின் விளக்கம், “யோ ஜனித்வா ஜனான் உஜ்ஜீவயாதி ஸஹ பாவனா – தன்னை வெளிப்படுத்திய பிறகு (சம்பவ – மேலே பார்க்க), அனைவரையும் மீண்டும் உயிர்ப்பிப்பவர்.”

——-

33-பர்த்தா –
பரிப்பவன் -ஆதரிப்பவன் -போஷிப்பவன்

கிம்ச, தாந் ஆத்ம தாநேந தச் சீல: புஷ்ணாதீதி பர்தா அயம் ॥33॥

தன்னையே அனுபவிக்கும்படி தந்து போஷிப்பவன் –
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -2-7-11-

தம்மையே தமருக்கு நல்கும் தனிப்பெரும் பதம் -ராம

மும்மை சால் உலகுக்கு எல்லாம்   மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்  பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்  மருந்தினை, ‘இராமன்’ என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக்  கண்களின் தெரியக் கண்டான்.

தம்மைத் தருவதன் மூலம் அவர்களைப் போஷிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-

பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர்—-

எல்லோரையும் போஷிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—–

ஓம் பர்த்தா நம
அனைத்தையும் தாங்குபவர் -அனைத்தையும் அருளுபவர் –
தன்னையும் அருளி போஷிப்பவர்

—————-

  1. ஓம் பர்த்ரே நம:

ப்ரபஞ்சஸ்ய அதிஶ்டானத்வேன பரணாத் பர்தா

ப்ரபஞ்சஸ்ய இந்த ப்ரபஞ்சத்தை அதிஶ்டானத்வேன தனது சக்தியால் பரணாத் தாங்குவதால் பர்தா பகவான் ‘பர்தா’ என்று அழைக்கப்படுகிறார்.

இந்த ப்ரபஞ்சத்தை தனது சக்தியால் தாங்குவதால் பகவான் ‘பர்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

———

பர்தா – பிரபஞ்சத்தை நிலைநிறுத்துபவர்

அடிப்படையில் இது பிரபஞ்சத்தை பராமரிப்பவர் என்று பொருள்.

ஆதி சங்கரர் பின்வரும் விளக்கத்தை அளிக்கிறார் – “பிரபஞ்சஸ்ய அதிஷ்டானத்வேன பரணாத் பர்தா – பகவான் பிரபஞ்சத்தை அதன் இறைவனாக நிலைநிறுத்துவதால் அவர் பரதாவாக இருக்கிறார்.

யஸ்மாத் புஷ்ணாதி ஆத்மதானாத் தான் என்பதால், தன் பக்தர்களுக்குத் தம்மையே அளித்து பக்தர்களுக்கு ஊட்டமளிக்கிறார் என்று ஸ்ரீ பராசர பட்டர் குறிப்பிடுகிறார்.

—–

34-ப்ரபவ-
பிரக்ருஷ்டமாக -சிறப்பாக ஜனிப்பவன் –இச்சையால் –

அயம் அஸ்ய பவ: ப்ரக்ருஷ்ட இதி
ப்ரபவ: । (உயர்ந்தே பிறந்தார் அவன்
நாம் பிறந்து ஆழ்வார் திருவடி பலத்தால் உயர்வோம் )

ப்ரகர்ஷஶ் ச ஜந்மநோ அநாக்ராத
தோஷ கந்தத்வேந, (க்ரஹனம் நுகரப்படும் தோஷம் கந்தம் வாசனையே நுகரப்படாமல் )

ஸ்வேதந மாத்ரேண (அவதார ஜென்ம ரஹஸ்யம் அறிந்தாலேயே )ஸகல ஜந்ம நிகல நிர்மூலந ஹேதுத்வேந ச தேவாதி ஜந்ம வைஜாத்யாத்।
*யதா , அஜாய மாந:, தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்(பிறப்பில் பல் பிறவி பிறப்பான் கர்மாதீபம் இல்லாமல் இச்சையால் )
* நைஷ கர்பத்வ மாபேதே ந யோந்யாமவ ஸத் ப்ரபு: । ஆத்மநஸ் தேஜஸா க்ருஷ்ணஸ் ஸர்வேஷாம்
குருதே கதிம் ।
* அப்ரமேய மநாத்யந்தம் காமாஜ் ஜாத மஜம் ந்ருஷு |
பாண்டவஸ் தர்கயா மாஸ கர்மபிர் தேவ ஸம்மிதை : ॥
* ஜந்ம கர்ம ச மே திவ்யமேவ யோ வேத்தி தத்த்வத : । த்யக்த் வா தேஹம் புநர் ஜந்ம நைதி மா மேதி ஸோ அர்ஜுந ॥ இத்யாதி ॥ 34 ||

ஜன்மம் சேஷ்டிதம் மே திவ்யம் –
தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம்-
பிறந்தவாறும் -வளர்ந்த வாறும் -இச் சிறந்த வான் சுடரே -5-10-1-

பிரபவ –
மிகவும் சிறந்த பிறப்பு உடையவர் -தோஷத்தின் தொடர்பு இல்லாத மேன்மை -அவதார ரகஸ்யம் அறிந்த மாத்ரத்தில்
விலங்கு போன்ற வலிய அனைத்து பிறவிகளும் நிர்மூலமாகுமே –ஸ்ரீ பராசர பட்டர் —-

அஜாயமான
தஸ்ய தீரா பரிஜாநந்தி யோனிம்
நைஷ கர்பத்வம் ஆபதே ந யோந்யாம் அவஸத் பிரபு ஆத்மநஸ் தேஜஸா கிருஷ்ண ஸர்வேஷாம் குருதி கீதம் –சபா பர்வம்
அப்ரமேயம் அநாத் யந்தம் காமத் ஜாதம் அஜம் ந்ருஷு பாண்டவ தர்க்கயாமாச கர்மபி தேவ ஸம்மிதை-
ஜென்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத த்யக்த்வா தேகம் புநர் ஜென்ம சைதி மாமேதி ச அர்ஜுனா –ஸ்ரீ கீதை -4-9-

தேவாதி பிறவிகளைக் காட்டிலும் வேறுபட்ட மேன்மை யுண்டே அவதாரங்களுக்கு
எல்லா பூதங்களுக்கும் விசேஷ காரணமானவர் -உயர்ந்த பிறப்புகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர்—-

சிறந்த ஒளியுள்ள சூர்ய சந்த்ரர்களை நடத்துபவர் -உயர்ந்த பிறப்புள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

ஓம் பிரபவ நம
பிறந்தும் ஒளி பெற்று சம்சாரத்தை தாண்டுவிப்பவர்

——————-

ஓம் ப்ரபவாய நம:

ப்ரகர்ஶேண மஹாபூதானி அஸ்மாஜ் ஜாயந்த இதி ப்ரபவ:

ப்ரகர்ஶேண மிகச் சிறந்த மஹாபூதானி அனைத்து பொருட்களும்உயிரினங்களும் அஸ்மாஜ் ஜாயந்த எவரிடமிருந்து தோன்றுகின்றனவோ இதி அவர் ப்ரபவ: ‘ப்ரபவ’ என்று அழைக்கப்படுகிறார்.

மிகச்சிறந்த (அல்லது ஆச்சர்யப்படும் வகையில்) அனைத்து பொருட்களும், உயிரினங்களும் அவரிடமிருந்து தோன்றுகின்றபடியால் பகவான் ‘ப்ரபவ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பவோ ஜன்மாஸ்யேதி வா ப்ரபவ: 

ப்ரக்ருஶ்டோ (அல்லது) மிகப் பெருமையான பவோ ஜன்மாஸ்யேதி வா பிறவிகள் (அவதாரங்கள்) எடுப்பதால் அவர் ‘ப்ரபவ’ என்று அழைக்கப் படுகிறார்.

அல்லது, அவரது பிறவிகள் (அவதாரங்கள்) மிகவும் பெருமை பெற்று விளங்குவதால் பகவான் ‘ப்ரபவ’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

————

பிரபாவா – அவதாரங்களில் இருப்பவர் மகத்துவத்தின் செயல்கள்

இந்த நாமத்தை இரண்டு விதமாக விளக்கலாம். ஸ்ரீ ஆதி சங்கரரின் கூற்றுப்படி:

  • பிரகர்ஷேண மஹாபூதானி அஸ்மாஜ்ஜாயந்தே இதி ப்ரபவஹ் – உலகில் உள்ள அனைத்து பெரிய மனிதர்களும் அவரிடமிருந்து பிறந்தவர்கள்.”
  • பிரகிருஷ்டோ பவோ ஜன்மாஸ்ய இதி – அவனது பிறப்புகள் மகத்துவத்தின் செயல்கள்.”

———-

35-பிரபு –
சமர்த்தன் –

ஏவம் அமந்த பரதந்த்ர மநுஷ்யாதி ஸாம்யேந அவதரந்நபி ப்ரபு: ।
பவதே:
* பஹுல வசநா தந்யே அபி க்ருத : ப்ராப்த மபிதேயம் வ்யபிசரந்தி இதி ஸம்ஜ்ஞாயாமபி டு: । (பெயர்ச்சொல்லால் இருந்தால் டு ப்ரத்யயம் கூடாது விதி விலக்கு இங்கு )
தேவாத்ய ஸுகர பதைஶ்வர்யாநுகுண
போக அபவர்காதி பல ஸமர்பண ஸமர்த : ।
ஸ்பஷ்டம் சைதத பதாநம்– சிந்த யந்தீ ஶிஸூ பால ஸாயுஜ்யாதிஷு ॥ 35 ॥

தோஷம் தீண்டாமல் மேன்மை குறையாமல் -மோஷம் அளிக்க வல்ல சக்தி அவதரித்தும்
ஜடாயு மோஷம் -சிந்தயந்தி -சேட்பால் பழம் பகைவன் சிசுபாலனுக்கும் மோஷம் –
உயிர் அளிப்பான் என் நின்ற யோநியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா -திரு விருத்தம் -1-

பிறர் கஷ்டம் அறியாத பெருமாள் -திருவடி
சீதாபிராட்டி பிரிந்த சோகத்தால் அழியாமல் இருக்கிறாரே
தூஷகரம் க்ருதவான் பிரபு
பெண்ணின் வருத்தம் அறியாதவன் கண்ணன் ஆண்டாள்

நந்தகோபன் குமரன் -சக்ரவர்த்தி திருமகன் என்பதையே ஏற்றமாகக் கொள்ளுபவன் -அஜோபி சான் சம்பவாமி இத்யாதி -அஜஹத் ஸ்வ பாவாத்

மனிதனாகப் பிறந்தும் ப்ரஹ்மாதிகளுக்கு நன்மை செய்து துன்பம் போக்கி அருளும் பிரபு 

மனிதன் போன்ற அவதாரங்களிலும் தேவர்களுக்கும் கிடைக்க அரிய போகம் மோஷம் முதலிய் சிறந்த பலன்களை அளிக்கும் ஆற்றல் பெற்றவர் –
சிந்தயந்தீ சிசுபாலன் முதலியவர்களுக்கு சாயுஜ்ய மோஷம் அளித்த விருத்தாந்தங்களில் இது மிகவும் ஸ்பஷ்டம் —ஸ்ரீ பராசர பட்டர் —-
ஏவம் மனுஷ்யாதி சாமான்ய அவதாராதி அபி பிரபு பவதி -தேவாதி சுகர போக அபவர்க்காதி பல சமர்ப்பண சமர்த்த-

எல்லா செய்கைகளிலும் மிக்க சாமர்த்தியம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர்—-

எல்லாவற்றிலும் சிறந்தவராக உள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—–

ஓம் பிரபுவே நம
சர்வசக்தன் -சர்வேஸ்வர ஈஸ்வரன் -பரமபதத்தை அருளுபவர்

—————–

  1. ஓம் ப்ரபவே நம:

ஸர்வாஸு க்ரியாஸு ஸாமர்த்த்ய அதிஶயாத் ப்ரபு: 

ஸர்வாஸு அனைத்து க்ரியாஸு செயல்களிலும் ஸாமர்த்த்ய திறமை அதியாத் மிகுந்து இருப்பதால் ப்ரபு: அவர் ‘ப்ரபு’ என்று அழைக்கப்படுகிறார்.

அனைத்து செயல்களிலும் அவரது திறமை மிகுந்து இருப்பதால் பகவான் ‘ப்ரபு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

பிரபு – அவர் எல்லா சடங்குகளிலும் வல்லவர்

அவரது அனைத்து செயல்களிலும் மிகவும் சக்திவாய்ந்த நிரூபணம்.

ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுகிறார் – “சர்வாஸு க்ரியாஸு சாமர்த்ய அதிசயவான் பிரபு: மிகவும் சக்தி வாய்ந்தவர், தனது எல்லா செயல்களிலும் அதை வெளிப்படுத்துகிறார்.”

ஸ்ரீ பராசர பட்டர் அவர் பிரபு – மிகவும் சக்தி வாய்ந்தவர் – ஏனெனில் அவர் பிரம்மாவின் மற்றும் மோட்சத்துடன் தொடர்புடைய இன்பங்களை அனுபவிக்கும் பலன்களை வழங்க முடியும்.

———-

36-ஈஸ்வர –
ஆளும் ஈசன் –

அத : பாரமேஷ்டயாதபி ஜந்மஸ் வதிகதம ப்ரயோஜநைஶ்வர்யாத்
ஈஶ்வர:। யதா ,
*மாநுஷீம் தநும் ஆஶ்ரிதம் பரம்  பாவம் அஜா நந்த –ஸ்ரீ கீதை -9-11-
* பூதா நாம் ஈஸ்வர அபி சந் –ஸ்ரீ கீதை -4-6- இத்யாதி ॥ 36 ॥–31 ஸம்பவ -இங்கு ஈஸ்வர 

பரமேஷ்டி -பரம பத நாதன் –
பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியை –
அஜோபிசன் நவ்யயாத்மா பூதாநாம் ஈச்வரோபிசன் -ஸ்ரீ கீதை
தாள் பரப்பி மண் தாவிய ஈசன் -3-4-1- ‘
மீண்டும் 75-சர்வ ஸ்வாமி
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசனே -3-3-3-
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமான் -1-5-4-

சுத்த ஸ்வரூபத்தில் இருப்பதைக் காட்டிலும் அவதாரங்களில் ஈஸ்வரத் தன்மை முகவும் பயன்படும் படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
அதக ஜன்மஸூ அதிகதம பிரயோஜன ஐஸ்வர் யாதி –

நீதி வானவர் -ஈஸ்வரத்தன்மை காட்ட வேண்டிய அவஸ்யம் இல்லையே அங்கு-த்வம் மே அஹம் மே –வேத மூலம் பிரமாணம் -காட்டியும் -உணராமல் -இங்கு 

இயற்கையான ஐஸ்வர்யம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர்—-

கட்டளை இடுபவர் -ஈசர்களில் சிறந்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் ஈஸ்வரயா நம
அவதாரங்களில் ஈஸ்வரத் தன்மை குன்றாமல் ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவர்
சஹகாரி நிரபேஷமாக அனைவரையும் நியமிப்பவர்


  1. ஓம் ஈஶ்வராய நம:

நிரூபாதிகம் ஐஶ்வர்யம் அஸ்யேதி ஈஶ்வர: 

நிரூபாதிகம் பண்பு, மற்றும் குணங்கள் அற்று இருத்தலை ஶ்வர்யம் தனக்கு செல்வமாக அஸ்யேதி கொண்டிருப்பதால் ஈஶ்வர: அவர் ‘ஈஶ்வர:’ என்று அழைக்கப்படுகிறார்.

(நிர்குண ப்ரஹ்மமாக) பண்பு, மற்றும் குணங்கள் அற்று இருத்தலை தனக்கு செல்வமாக கொண்டிருப்பதால் பகவான் ‘ஈஶ்வர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

ஈஸ்வர – அவர் உயர்ந்தவர்

பகவான் ஈஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார்:

  • அனைத்து உயிரினங்களையும் கட்டுப்படுத்தும் உயர்ந்த சக்தியைக் கொண்டவர்;
  •  பிற உயிரினங்கள் அல்லது பொருட்களின் உதவியின்றி எதையும் செய்யும் திறன் கொண்டவர்.

முதல் பொருள் ஐஸ்வர்யா என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது – நிருபாதிகம் ஐஸ்வர்யம் அஸ்ய இதி ஈஷ்வரஹ் – அவர் ஈஸ்வரர், ஏனென்றால் அவருக்கு எல்லையற்ற வலிமை அல்லது சக்தி உள்ளது.

இரண்டாவது பொருள் இஷ்டே இதி ஈஸ்வரஹ் என்பதிலிருந்து பெறப்பட்டது – எதன் உதவியும் அல்லது யாருடைய உதவியும் இல்லாமல் தான் விரும்பியதைச் செய்யக்கூடியவர்.


26-சர்வ –
தமது சரீரங்களாக உள்ளவற்றின் விரோதிகளை சிதறச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
திருக் கண்டியூர் -அரன் சாபம் தீர்த்து –ஸ்வ சர்வ பூதானாம் அஸூபவதி ஸ்ருணாதீதி

சம்ஹார காலத்தில் எல்லா பிராணிகளையும் அழிப்பவர் -அழிப்பிப்பவர்-ஸ்ரீ சங்கரர்—

அனைவரையும் -அயோக்யருக்கு சுகம் கிட்டாமல் செய்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

————————————————————————————————————

27-சிவ-
நன்மைகளைச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –சுபாவஹா தத் சிவா –

முக் குணங்கள் இல்லாமையால் பரிசுத்தர் -சிவன் முதலிய  நாமங்களாலும் விஷ்ணுவே ஸ்துதிக்கப் படுபவர் -ஸ்ரீ சங்கரர்—

மங்களமாக இருப்பவர் -மங்களைத்தையும்  செய்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

————————————————————————————————————–

28-ஸ்தாணு –
நிலைத்து நிற்ப்பர் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி செய்து அருளி மேன்மேலும் அருளுபவர் –
பகவத் சம்ச்லேஷம் குறிப்பிட்ட பாவங்களைப் போக்குவிக்கும்   பிரயாச்சித்தம் போலே இல்லை
காரீரீ சித்ரம் தார்ச பூர்ண மாசம் போன்ற யாகங்கள் போலேயோ தேவ தாந்த்ரங்களைப் போலேயோ
குறிப்பிட்ட பலன்களை மட்டும் கொடுத்து நிற்பது இல்லை –
பலமான தடைகளால் தடுக்கப் படுவது இல்லை -அழிவதில்லை -மாறாக மேன்மேலும் அருளுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
திஷ்டதே -அசேஷமவ சிவம் சம்ஷமய்ய -அகிலம் அகில பஹூ முகம் விஸ்ரான்யபி -ந ஜாது சிதது – விஸ்ராம்யதி –ஸ்திரமாக அருளுபவன்
-யாதவ பிரகாசர் திருந்தி எம்பெருமானார் திருவடி சேர்ந்து -கோவிந்த நாதர் -திரு நாமம் பெற்று எதி தர்ம சமுச்சயம் கிரந்தம் -அருளி உள்ளார் –

ஸ்திரமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்—

எங்கும் பரவி இருப்பவர் -அணு அளவுள்ளவர் -சிவனுக்கு அந்தர்யாமியாய் இருப்பவர் –
சிவ ஸ்தாணு -ஒரே பதமாக கொண்டு-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

———————————————————————————————————–

29-பூதாதி
மிகவும் விரும்பப்படும் தன்மை உள்ளவராதளால் பிராணிகளால் அடையப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
பிரஹனீயது -மத்வாது —பூதைகி உபாதீயது –

எல்லா பொருள்களுக்கும் காரணமாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்—

எல்லா பூதங்களுக்கும் காரணமானவர் -சம்ஹார காலத்தில் யுண்பவர்-பூதங்களால் ஏற்க அடையப் படுபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

————————————————————————————————————-

30-நிதிரவ்யய-
எல்லா காலமும் எல்லா வகைகளாலும் அனுபவித்தாலும் குறையாத ஆபத்துக்கு உதவும் வைத்த மா நிதி –
நிதி எனபது அவ்யய என்பதற்கு விசேஷணம்-தனித் திரு நாமம் அல்ல –
இல்லா விடில் அவ்யய புருஷ -சொல்லப் பட்டதே மீண்டும் சொன்ன குற்றம் வரும் -ஸ்ரீ பராசர பட்டர் —-
மகா லோபேன ஆபத்வத் நிதியேத்வாத் சர்வதா சர்வதோப ஜீவா மானத் அபிகலயாபி அனுபஷயாதி

பிரளய காலத்தில் எல்லாம் தம்மிடம் வைப்பதால் நிதியாக இருப்பவர் -அவ்யய நிதி -அழியாத நிதி –ஸ்ரீ சங்கரர்—-

நல்லோர்களால் இதயத்தில் வைக்கப் படுபவர் -நிதி /ஞானிகளால் அன்புடன் நோக்கிச் செல்லப்படுபவர் –
அவ்யய -இரண்டு திருநாமங்கள்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

————————————————————————————————————–

31-சம்பவ –
அப்படி மறைத்து வைத்து இருந்த போதும் தம்மை அனுபவிக்க ஆவல் கொண்டு பிரார்த்திக்க்குமவர்களுக்கு அவதாரங்களினால் வெளிப்படுத்துபவர் –
சம்பவாமி யுகே யுகே -மத்ஸ்ய கூர்ம வராஹ நரசிம்ஹ வாமன ராம கிருஷ்ணாதி அவதாரங்களால் பல முறையால்
எல்லா இடங்களிலும் எல்லா காலத்திலும் அவதரிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-
ஏவம் லிகிதமபி ஆத்மானம் தம் சம்ச்லேஷத் தவரையா அர்தித்த்வய கதாசயத் சம்பவ

தமது இச்சையின் படி பிறக்கும் வல்லமை உடையவர் -ஸ்ரீ சங்கரர்—-

நஷத்ரங்களை நடத்துபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—–

32-பாவன-
திருவவதரித்து துன்பங்களை போக்கி உய்விப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-
ஏவம் சம்பூய அநிஷ்ட நிவாரண ஆதினாம் உஜ்ஜீவன யதீனாம் –

எல்லாருக்கும் எல்லாப் பலன்களையும் அளிப்பவர்-ஸ்ரீ சங்கரர்—-

மனங்களைச் செலுத்துபவர்  -அபாவன -என்று கொண்டு பிறப்பு இல்லாதவர்  –
சூர்யன் ஒளியால் பொருள்களை காட்டுபவர் -ஒளிகள் அடையும் இடமாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—–

—————————————————————————————————————–

33-பர்த்தா-
தம்மைத் தருவதன் மூலம் அவர்களைப் போஷிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-

பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர்—-

எல்லோரையும் போஷிப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—–

—————————————————————————————————————-

34-பிரபவ –
மிகவும் சிறந்த பிறப்பு உடையவர் -தோஷத்தின் தொடர்பு இல்லாத மேன்மை -அவதார ரகஸ்யம் அறிந்த மாதரத்தில்
விலங்கு போன்ற வலிய அனைத்து பிறவிகளும் நிர்மூலமாகுமே –ஸ்ரீ பராசர பட்டர் —-

தேவாதி பிறவிகளைக் காட்டிலும் வேறுபட்ட மேன்மை யுண்டே அவதாரங்களுக்கு எல்லா பூதங்களுக்கும்
விசேஷ காரணமானவர் -உயர்ந்த பிறப்புகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர்—-

சிறந்த ஒளியுள்ள சூர்ய சந்த்ரர்களை நடத்துபவர் -உயர்ந்த பிறப்புள்ளவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—–

——————————————————————————————————————-

35-பிரபு –
மனிதன் போன்ற அவதாரங்களிலும் தேவர்களுக்கும் கிடைக்க அரிய போகம் மோஷம் முதலிய் சிறந்த பலன்களை அளிக்கும் ஆற்றல் பெற்றவர் –
சிந்தயந்தீ சிசுபாலன்  முதலியவர்களுக்கு சாயுஜ்ய மோஷம் அளித்த விருத்தாந்தங்களில் இது மிகவும் ஸ்பஷ்டம் —ஸ்ரீ பராசர பட்டர் —-
ஏவம் மனுஷ்யாதி சாமான்ய அவதாராதி அபி பிரபு பவதி -தேவாதி சுகர போக அபவர்க்காதி பல சமர்ப்பண சமர்த்த-

எல்லா செய்கைகளிலும் மிக்க சாமர்த்தியம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர்—-

எல்லாவற்றிலும் சிறந்தவராக உள்ளவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—–

———————————————————-——————————————————————————————————–

36-ஈஸ்வர –
சுத்த ஸ்வரூபத்தில் இருப்பதைக் காட்டிலும் அவதாரங்களில் ஈஸ்வரத் தன்மை முகவும் பயன்படும் படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
அதக ஜன்மசூ அதிகதம பிரயோஜன ஐஸ்வர் யாதி –

இயற்கையான ஐஸ்வர்யம்  உள்ளவர் -ஸ்ரீ சங்கரர்—-

கட்டளை இடுபவர் -ஈசர்களில் சிறந்தவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

———-

சர்வ உலகங்களையும் தன் உடலாகக் கொண்டு, சர்வத்துக்கும் உயிராக விளங்கும்
எம்பெருமான், ‘ஸர்வன்’ என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் இருபத்தைந்தாவது திருநாமம்.

“ஸர்வாய நம:” என்று தினமும் ஜபம் செய்யும் அடியார்கள் வாழ்வில் எப்போதும்
நிம்மதியோடும் திருப்தியோடும் வாழ்வார்கள்.

உலகையும் உயிர்களையும் தனக்கு உடலாகக் கொண்டு நமக்கு நேரும் துன்பங்களை எல்லாம் தனக்கு
நேர்வதாகக் கருதிப் போக்கும் திருமால் “சர்வ:” என்றழைக்கப்படுகிறார்.
‘சர்வ:’ என்றால் துன்பங்களைப் போக்குபவர் என்று பொருள்.
“சர்வாய நம:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு வாழ்வில் துன்பம் நேராமல் எம்பெருமான் காத்தருள்வான்.

அமங்களங்களைப் போக்கி மங்களங்களை அருளும் திருமால் “சிவ:” என்று அழைக்கப்படுகிறார்.
“சிவாய நம:” என்று தினமும் சொல்லி வருவோர்க்கு வாழ்வில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.

எல்லையில்லாத, அழிவில்லாத தன் அருட்பார்வையால் ஈ, எறும்பு முதலிய உயிரினங்களுக்குக் கூட கருணை புரிந்து
அவற்றை ஜனன-மரண சுழற்சியிலிருந்து விடுவிப்பவனான எம்பெருமான் ‘ஸ்தாணு:’ என்றழைக்கப்படுகிறான்.
“ஸ்தாணவே நம:” என்று தினமும் சொல்லி வந்தால் நாமும் திருமாலின் எல்லையற்ற கருணையை அநுபவிக்கலாம்.

உலகிலுள்ள அனைவரையும் ஈர்ப்பவனாக எம்பெருமான் விளங்குவதால் அவன் ‘பூதாதி:’ என்றழைக்கப்படுகிறான்.
அனைவரையும் ஈர்க்கும் திறமையைப் பெறுவதற்கு “பூதாதயே நம:” என்ற
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 29-வது திருநாமத்தைத் தினமும் சொல்லி வருவோம்.

அடியார்களுக்குக் குறையாத செல்வமாக எம்பெருமான் விளங்குவதால் “அவ்யய நிதி:” என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 30-வது திருநாமம். “அவ்யயநிதயே நம:” என்று தினமும் சொல்லி
வருபவர்களுக்கு நீங்காத செல்வம் நிறையும்.

திரேதா யுகத்தில் ராமனாகவும், துவாபர யுகத்தில் கண்ணனாகவும் வந்த இறைவன், கலியுகத்தில் பாலாஜியாக வந்து
அடியார்களைக் காக்கிறான். இவ்வாறு யுகம்தோறும் தன் அடியார்களுக்கு அருள்புரிவதற்காக வெவ்வேறு வடிவங்களில்
எம்பெருமான் அவதரிப்பதால் அவன் ‘ஸம்பவ:’ என்றழைக்கப்படுகிறான்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 31-வது திருநாமம்.
“ஸம்பவாய நம:” என்று தினமும் சொல்லி வருபவர்களின் மேல் சிலுக்கூர் விஸா பாலாஜி பெருமாள்
தன் அருள் பார்வையைச் செலுத்துவார்.

தன் பக்தனின் தியானம் கலையாதிருக்க, தானே அந்த பக்தனின் வடிவில் தோன்றினான் எம்பெருமான்.
இவ்வாறு தன் அடியார்களுக்கு நேரும் துன்பங்களிலிருந்து அவர்களைக் காக்கப் பல வடிவங்கள்
எடுத்துக் கொண்டு வருவதால் ‘பாவ:’ என்றழைக்கப்படுகிறான் எம்பெருமான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 32-வது திருநாமம்.
“பாவாய நம:” என்று தினமும் சொல்லி வந்தால், ஏதோ ஒரு வடிவில் வந்து நம்மையும் இறைவன் காத்தருள்வான்.

தன் அடியார்களுக்கு வசப்பட்டு, காந்தத்துடன் இரும்பு ஒட்டிக் கொள்வது போல அடியார்களை விட்டுப்
பிரியாதிருக்கும் எம்பெருமான் ‘பர்தா’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 33-வது திருநாமம்.
“பர்த்ரே நம:” என்று தினமும் சொல்லி வருபவர்களை இறைவன் என்றும் விட்டுப் பிரியவே மாட்டான்.

பிற மனிதர்கள், தேவர்கள் முதலியோரைக் காட்டிலும் வேறுபட்டதான, சிறப்பான, உயர்ந்ததான பிறப்பை எம்பெருமான்
தன் கருணையால் எடுப்பதால் அவன் ‘ப்ரபவ:’ என்று அழைக்கப்படுகிறான். அதனால் தான் 60 வருடங்களில் முதல் வருடத்துக்கு
‘ப்ரபவ’ என்று நம் முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளார்கள். ‘ப்ரபவ’ என்றால் உயர்ந்த பிறப்பு என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 34-வது திருநாமம்.
“ப்ரபவாய நம:” என்று தினமும் சொல்லி வந்தால், நம்மையும் வாழ்வில் எம்பெருமான் உயர்த்துவான்.

நினைத்த நேரத்தில் நினைத்த செயலைச் செய்வதால் எம்பெருமானுக்கு ‘ப்ரபு:’ என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 35-வது திருநாமம்.
‘ப்ரபு:’ என்றால் அறம், பொருள், இன்பம், வீடு என அனைத்தையும் நினைத்த நேரத்தில் அருளவல்லவன் என்று பொருள்.
“ப்ரபவே நம:” என்று தினமும் சொல்லி வந்தால் சரியான நேரத்தில் நமக்குத் தேவையானதை எம்பெருமான் அருளுவான்.

மனிதனாய் அவதரிக்கும் காலத்திலும் இயற்கையாகத் தனக்கு உள்ள ஆளுமையோடு
ஈஸ்வரனாக விளங்குவதால் ‘ஈஸ்வர:’ என்று அவனுக்குப் பெயர்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 36-வது திருநாமம். “ஈஸ்வராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள்
ஆளுமைத் திறனோடும், தலைமைப் பண்புகளோடும் விளங்குவார்கள்.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள் — ஸ்லோகம் –3–

October 31, 2023

யோகோ யோகவிதாம் நேதா ப்ரதானபுருஶேஶ்வர: |நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான் கேஶவ: புருஶோத்தம:  || 3 ||

இந்த ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. யோக: 19.யோகவிதாம் நேதா  20. ப்ரதானபுருஶேஶ்வர: |
  2. நாரஸிம்ஹவபு: 22.ஸ்ரீமான்  23. கேஶவ: 24. புருஶோத்தம: ||

யோக தியானத்தின் போது மனம் ஓயும் இடமாக இருப்பவன் {யோகன்},
யோகம் அறிந்தோர் அனைவருக்குமான வழிகாட்டி அல்லது தலைவன் {யோகவிதாம்நேதா},
பிரதானம் (அல்லது பிரகிருதி) மற்றும் புருஷன் ஆகிய இரண்டின் தலைவன் {ப்ரதாநபுருஷேஸ்வரன்},
சிங்கத்தலையுடன் கூடிய மனித வடிவினன் {நாரஸிம்மவபு},
அழகிய சிறப்புக் கூறுகளையும், செய் கருவிகளையும் கொண்டவன் {ஸ்ரீமாந்},
அழகுமயிர் படைத்தவன்{கேசவன்},
புருஷர்களில் முதன்மையானவன் {புருஷோத்தமன்};(16)

யோக: — தம்மை அடையத் தாமே வழியானவர்
யோகவிதாம் நேதா — தம்மை அடைய வழியறிந்து நடத்தும் தலைவர்
ப்ரதாநபுருஷேச்வர: — உலகமும் உயிர்களும் தாமேயாளும் ஈச்வரர்
நார‌ஸிம்ஹவபு: — நரம் கலந்த சிங்கமாய் அடியார்களைக் காப்பாற்றுபவர்
ஸ்ரீமாந் — திருமகள் எப்பொழுதும் உறையும் வடிவினர்
கேசவ: — அழகிய கேசம் திகழும் உருவம்
புருஷோத்தம: — ஜீவர்கள் அனைவரை விடவும் மிகவுயர்ந்தவர்

முக்திக்கு வழி –

18-யோக -முக்தியை அடையும் வழி உபாயமாகவும் இருப்பவர்
19-யோக -வேறு உபாயம் ஆகிற பக்தி யோகத்தை செய்பவர்களை வழி நடத்துபவர்
20-பிரதான புருஷேச்வர -மூல பிரக்ருதிக்கும் அதில் கட்டுண்ட ஜீவர்களுக்கும் ஸ்வாமி –

அனைத்தும் தானே –ஆனால் அவற்றிலும் உயர்ந்தவன் –

21-நாரசிம்ஹ வபு -நிகர் அற்ற நரம் கலந்த சிங்க உருவமாய்ப் பிறந்தவர் –
22-ஸ்ரீ மான் -ஒளி மிக்க -மனித -சிங்க உருவங்கள் பொருந்திய அழகிய திருமேனி உடையவர் –
23-கேசவ –இவ் வுருவில் அழகிய திருக் குழலும் பிடாரியும் உடையவர் –
24-புருஷோத்தம -பத்தர் முக்தர் நித்யர் -ஆகிய மூவகை ஆத்மாக்களை விட உயர்ந்தவர்

———

1-5-பரத்வம்- முக்திக்கு உபாயமாய் உள்ளவை -18/19-

18-யோக –

அஸ்யைவ நிருபாதிக முக்த்யுபாயத்வமபி வக்தி —
யோக:
* யுஜ்யதே ப்ராப்யதே அநேநேதி ।(இவனால் அடைகிறான் -கருவி)

(இவனால் அடைகிறேன் மூன்றாம் வேற்றுமை உருபு பிராபகம்
இவனை அடைந்தேன் மூன்றாம் வேற்றுமை ப்ராப்யம்)

(யோகம் உபாயம் மார்க்கமும் கூடி இருத்தல் மூன்று அர்த்தங்கள்
கர்ம யோகாதிகள் அசேதனம்
இங்கு அவனே உபாயம் -வழியாகவும் தானேயாய் இருக்கிறார் )

* அகர்தரி ச காரகே ஸம்ஜ்ஞாயாம் இதி கஞ் । ஏவம் அமோக : ஸர்க: இத்யாதீநி கஞந்நாநி । ஸ
ஸாயுஜ்யஸ்ய அநந்யாபேக்ஷ:, ஸாக்ஷாத் ஹேதுரித்யர்த : ।
* ஏஷ ஹ்யேவாநந்த யாதி –தத் தேது வ்யபதேஸாச்ச,(2-1-15)
* அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி இதி ॥18 ॥

மோஷ சாயுஜ்யத்துக்கு தானே உபாயம் -நிருபாதிக
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
தனியேன் வாழ் முதலே கனிவார் வீட்டின்பமே-2-3-5-
கடுவினை நஞ்சே என்னுடை அமுதே சேர்ந்தார் தீ வினைகட்கு
அரு நஞ்சைத் தண் மதியை தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவர் உயிராய் அடியேன் அடைந்தேன் -2-3-6-
பக்தி உழவன் –

யோக –
சாயுஜ்யமாகிய முக்திக்கு வேறோர் உபாயம் வேண்டாதபடி தானே உபாயமாக இருப்பவர் –
முக்திக்கு உபாயமும் முக்தர்களுக்கு உபேயமும் அவனே -ஸ்ரீ பராசர பட்டர் —

ததி பாண்டத்துக்கும் கூட முக்தி அளித்தானே –
சேவிக்க சாமர்த்தியம் இல்லா இடங்களுக்கும் -தானே காட்டக் கண்டு அனுபவிக்கலாம்
யுஜ்யதே பிராப்யதே –அநேநேதி சாயுஜ்ய -நான்யாபேஷ -சாஷாத் ஹேது இத்யர்த்த

யோக -யுஜ்யதே -யாருடைய உதவியால் குறிக்கோள் அடையப்படுகிறது –
மோக்ஷம் அடைய தானே நிருபாதிக சஹகாரி நிரபேஷ உபாயம்
ஏஷ ஹி ஏவ ஆனந்தயாதி –தைத்ரியம்
தத் தே து வியபதேசாத் ச -1-1-15-
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி –ஸ்ரீ கீதை -18-66–

ஐக்ய சிந்தனையாகிற யோகத்தினால் அடையத் தக்கவர் –ஸ்ரீ சங்கரர்—

யோகிகளால் தம் இதயத்தில் த்யானம் செய்யப்படுபவர் -அனைத்து குணங்களும் சேர்ந்து இருப்பவர் –
பக்தர்களுக்கு உலகைக் கடக்க வழியாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

ஓம் யோகாய நம
தன்னை அடைய தானே ஒரே உபாயமாக இருப்பவன் –
யோகிகளால் அடையத் தக்கவன்

———–

  1. ஓம் யோகாய நம:

‘ஞானேந்த்ரியாணி ஸர்வாணி நிருத்ய மனஸா ஸஹ |

ஏகத்வபாவனா யோகா: க்ஷேத்ரஞ்யபரமாத்மனோ: ||’

மனம் உட்பட அனைத்து அறிவுப்புலன்களையும் (ஞானேந்த்ரியங்கள்) ஒடுக்கி, க்ஷேத்ரஞ்யான ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றி இருத்தலே யோகம் எனப்படும்.

தத் இவ்வாறு (மனம், புலன்களை அடக்கி யோகத்தில் ஒன்றுவதன் மூலம்) அவாப்யதயா அடையப்படுவதால் யோக: அவர் ‘யோக:’ என்று அழைக்கப்படுகிறார் |

மனம், மற்றும் அறிவுப்புலன்களை அடக்கி, அவருடன் ஒன்றுபடுதலே யோகமாகும். இத்தகைய யோகத்தால் அடையப்படுவதால், பகவான் “யோக:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————–

யோகம் – யோகாவின் மூலம் அடையக்கூடியவர்

சமஸ்கிருதத்தில் யோகா என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன: அதாவது, தியானம், தொழிற்சங்கம், உடற்பயிற்சி, பரிகாரம் போன்றவை.

ஸ்ரீ பராசர பட்டர் இதை ‘ஒரு முடிவுக்கு அல்லது வெறுமனே ஒரு செயல்முறை’ என்று விளக்குகிறார். அவரைப் பொறுத்தவரை, இந்த நாமம் என்பது முக்தி அல்லது முக்தியை அடைவதற்கான ஒரே வழி பகவானைத் தியானிப்பதாகும்

ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த நாமத்தை ‘ஒற்றுமை’ அல்லது ‘ஒருமை’ என்பதை உணர்த்துவதற்காக விளக்குகிறார். இந்திரியங்களையும் மனதையும் கட்டுப்படுத்துவதன் மூலம் பகவான் யோகம் என்று அழைக்கப் படுகிறார். இந்த செயல் முறையின் மூலம் நாம் பரமாத்மா மற்றும் க்ஷேத்ரஞ- அதாவது ஜீவாத்மாவின் ஒருமையை உணர்கிறோம்.

—————-

19-யோக விதாம் நேதா –

வ்யவஹித உபாயநிஷ்டாநாம் அபி  யோக விதாம் நேதா । நயதேஸ் த்ருச் ।(இங்கு யோக -உபாயாந்தரங்கள் -அவர்களுக்கும் பல பிரதன் இவனே-வ்யவஹித உபாயம் கீழே இடையில் ஒன்றும் இல்லாமல் அவனே உபாயம் )

பர்தா தாதா இத்யாேதயோ அபி த்ருஜந்தா : । பல பர்யந்த நிர்வாஹக: ।
* தேஷாமேவா அநுகம்பார்தம், (ஸ்ரீ கீதை 10-11)
* தேஷா மஹம் ஸமுத்தர்தா (ஸ்ரீ கீதை-12-7-)
* ஸம்ஸார பாரம் பரமீப்ஸ மாநை ராராதநீயோ ஹரிரேக ஏவ, (ஸ்ரீ விஷ்ணு தர்மம் )
* பராம்ருதத் பரிமுச்யந்தி ஸர்வே ,
* ஜுஷ்டஸ் ததஸ்தே- நாம்ருதத்வமேதி இதி ॥ 19॥

மற்ற உபாயங்களை பற்றியவர்களையும் பல பர்யந்தம் -நடத்திச் செல்பவன்
பக்தி யோக நிஷ்டனையும் பலனை அடையச் செல்பவன்
ப்ரீதி பூர்வகம் புத்தி யோகம் ததாமி-

யோக விதாம் நேதா
வேறு உபாயம் ஆகிய பக்தி யோகத்தைப் பற்றியவர்களுக்கும் பலன் யு ண்டாம்படி நிர்வகிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

நயதி வினை உடன் த்ருச் சேர்ந்து நேதா –இதே போலே பர்த்தா -33-/ தாதா -43–/951-
யோகத்தை அனுஷ்டிப்பவர்களை வழி நடத்துபவன்
தேஷாம் ஏவ அநு கம்பார்த்தம் –ஸ்ரீ கீதை -10-11–
தேஷாம் அஹம் சமுத்தர்த்தா –ஸ்ரீ கீதை-12-7-
சம்சாரம் பார்ம பரம் ஈப்சமானை ஆராதநீயோ ஹரி ஏக ஏவம் -ஸ்வேதாஸ்வர
பரம் அம்ருதாத் பரிமுச்சந்தி சர்வே -தைத்ரியம்
ஜுஷ்டஸ் ததஸ்தேந அம்ருதத்வம் ஏதி –ஸ்வேதாஸ்வர

ஞானிகளின் யோக ஷேமங்களை வகுத்து நடத்துபவர் -யோகத்தை விசாரிப்பவர்கள் –
அறிபவர்கள்-அடைபவர்கள் யோக வித்துக்கள் -ஸ்ரீ சங்கரர்—

த்யான யோகம் அறிந்த பக்தர்கள் மோஷ பலத்தை அடையும்படி செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

ஓம் யோக விதாம் நேதாய நம
உபாசகர்களை வழி நடத்தி தன்னை அடையும் படி செய்பவன்
பக்தர்களுக்கும் நசபுநராவ்ருத்தி மோக்ஷம் அடையச் செய்பவன்

———————————————————————————

  1. ஓம் யோகவிதாம் நேத்ரே நம:

யோகம் விதந்தி விசாரயந்தி லபந்த இதி வா யோகவிதஸ்தேஶாம் நேதா ஞாநினாம் யோகக்ஷேமவஹனாதிநேதி யோகவிதாம் நேதா |

யோகம் யோகத்தை விதந்தி கற்று விசாரயந்தி ஆராய்ந்து ஜானந்தி அறிந்து லபந்த இதி வா அதை அடைந்த யோகவிதஸ்தேஶாம் யோகத்தை உள்ளபடி உணர்ந்த சிறந்த யோகிகளின் நேதா தலைவர் ஞாநினாம் (அத்தகைய) அறிவிற்சிறந்த யோகிகளின் யோகக்ஷேமவஹனாதிநேதி நன்மை, தீமைகளுக்குப் பொறுப்பேற்று அவற்றை நிர்வகித்து அவர்களை வழிநடத்துவதால் யோகவிதாம் நேதா அவர் “யோகவிதாம் நேதா” என்று அழைக்கப்படுகிறார் |

யோகத்தை கற்று, ஆராய்ந்து, உள்ளபடி உணர்ந்த சிறந்த யோகிகளிக்கு, அவர்களின் நன்மை, தீமைகள் ஆகிய அனைத்திற்கும் பொறுப்பேற்று அவர்களை வழிநடத்துவதால் பகவான் “யோகவிதாம் நேதா” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேஶாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 9.22)

ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது:

அந்த நித்திய யோகிகளின் நன்மை, தீமைகளை நான் பொறுப்பேன்.

இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.

————

யோகவிதம் நேதா – யோகாவில் நிலைநிறுத்தப்பட்டவர்களின் தலைவன்

யோகவித் என்பது யோகாவை விசாரிப்பவர், பெற்றவர் அல்லது உணர்ந்தவர் மற்றும் நேதா ஒரு தலைவர். பகவான் ‘யோகவிடாம்நேதா’ என்று அழைக்கப்படுகிறார், ஏனென்றால் அவர் யோகா பயிற்சியாளர்களை அவர்களின் இலக்கை அடைய வழி நடத்துகிறார்.

அனன்யாஷ் சிந்தயந்தோ மாம் யே ஜனாஹா பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோக க்ஷேமம் வஹாம் யஹம்–9-22-

என்ற ஒற்றை முனை தியானத்தால், தொடர்ந்து எனது வழிபாட்டில் ஈடுபடுபவர்கள், அவர்களின் தேவைகளைப் பெறுதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றின் சுமையை நான் சுமக்கிறேன்.

———————-

1-6-பரத்வம்-நியாமகன்

20-ப்ரதாந புருஷேஶ்வர: –
பிரகிருதி -ஆத்மா -அனைத்தையும் நியமித்து நடத்துபவன் –

இத மேவோப பாத்யதே (இவனே யோகம் யோக விதம் நேதா செலுத்துபவன் என்பதையே விவரிக்கிறார் )- ப்ரதாந புருஷேஶ்வர: ; ப்ரதாநஸ்ய பந்த ஹேதோ: புருஷாணாம் ச பத்ய மாநாநாம்- ஸர்வதா நியாமக: ।
* ஸ்தேஸ பாஸ இத்யாதிநா வரச் । ஏவம் ஸ்தாவர: ।  (ஸ இருப்பது பாஸ் -விளங்குவது ஈஸ் நியமிப்பது இவற்றுடன் வரஸ் சேர்ந்து இயல்பாக கொண்டவன் -ஏவம் ஸ்தாவர)
யதா* ஸம்யுக்த மேதத் க்ஷர க்ஷரம் ச வ்யக்த அவ்யக்த பரதே விஶ்வமீஸ :।
அநீஸஶ்சாத்மா பத்யதே போக்த்ரு பாவாத் ஜ்ஞாத்வா தேவம் முச்யதே ஸர்வபாஸை : ॥ (அனுபவித்து கட்டுப்படுகிறான் -அறிந்தாலே விடுதலை )
* ப்ரதாந ஷேத்ரஜ்ஞ பதிர்குணேஸ :,
* க்ஷராத்மா நாவீஸதே தேவ ஏக:, இதி । ஏவமீஶ்வரோஹி ஸ்வ மாயயா ஜீவாந் அபராத்யதோ பத்நந் ப்ரபத்ய மாநாம்ஶ்ச முஞ்சந் க்ரீடிதும் ப்ரபவதி ।(இன்புறும் இவ்விளையாட்டுடையவன் )

*ஈஶ்வரஸ் ஸர்வ பூதாநாம்
* தைவீ ஹ்யேஷா குண மயீ,
* தைவீ தேவஸ்ய க்ரீடத :,
* க்ரீடநகம்,
* ஸம்ஸார மோக்ஷ ஸ்திதி பந்த ஹேது:

ஶ்ரீவிஷ்ணுதத்வே * தத் க்ருதா யாஸ்து மாயாயாஸ் தத் ப்ரஸதாம் விநா க்வசித் ।
நாஸ்தி நிர்ணாஸதந ஹேது: ஸம் க்ஷிப்யை தத் ப்ரபாஷிதம் ॥ இதி।

(அவனால் செய்யப்பட இந்த ப்ரக்ருதியை அவன் அருளாலே தான் விடுவித்துக் கொள்ள வேண்டும்-சுருக்கமாக இதைச் சொல்கிறேன் )
*பராமித்யாநாத் (உன் மனத்தினால் என் நினைந்து இருந்தாய் )து திரோஹிதம் ததோ ஹ்யஸ்ய பந்த விபர்யயௌ,
* தேஹ யோகாத் வா ஸோ அபி இதி ச ஸூத்தர ।(தேஹம் ஸ்ருஷ்டியில் கட்டுப்படுத்தும் பிரளயத்தில் பிரக்ருதியால் கட்டுப்படுத்தி உள்ளான்)

தாச் சீல்ய விஷயேண வரசா தத்த்வ த்ரய பேத ஈஶ்வரே ஶிதவ்ய பாவஶ்சா நௌபாதிகோ ஜ்ஞாப்யதே ॥ 20 ॥(வரஸ் ப்ரத்யயம் இயற்க்கை- உபாதியால் அல்ல )

ஈச்வரஸ் சர்வ பூதாநாம் -ஸ்ரீ கீதை
உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலாய் முற்றுமாய் அடல் ஆழி யம்மான் -1-4-10-

பிரதான புருஷேஶ்வர –
ஜீவர்களைக் கட்டுப் படுத்தும் பிரக்ருதியையும் அதில் கட்டுண்ட ஜீவர்களையும் நடத்துபவர் –
தனது மாயையினால் அபராதம் செய்பவர்களை சம்சாரத்தில் கட்டி வைத்தும் சரணம் =அடைந்தவர்களை விடுவித்தும் விளையாடுகிறான்
ஈஸ்வர -வரச் பிரத்யயத்தால் இத் தன்மை இயற்கை என்பதும் -சித் அசித் ஈஸ்வரன் தத்வ த்ரய பேதமும் கூறப்படுகிறது
நியமிப்பவன் ஒருவன் -நியமிக்கப்படுபவை இரண்டும் -இயற்கையாக செய்பவன் -ஸ்ரீ பராசர பட்டர் —

வ்ரச் என்கிற எச்சம் ஸ்தா தாது உடன் சேர்ந்து ஈஸ்வர / இதே போல் ஸ்தாவர -428-திரு நாமம்
சம்யுக்தம் ஏதத் அக்ஷரம் அக்ஷரம் ச வ்யக்த அவ்யக்தம் பரதே விஸ்வம் ஈஸா அநீசச் சாத்மா பத்யதே
போக்த்ர பாவாத் ஞாத்வா தேவம் முச்யதே சர்வ பாஸை-ஸ்வேதாஸ்வர
பிரதான ஷேத்ரஞ்ஞ பதி குணேச -ஸ்வேதாஸ்வர
ஷராத்மாநவ் ஈஸதே தேவ ஏக -ஸ்வேதாஸ்வர
தைவீ தேவஸ்ய க்ரீடத
கிரீட நகம்
சம்சார மோக்ஷ ஸ்திதி பந்த ஹேது
தத் க்ருதா யாஸ்தி மாயாயா தத் பிரசாதம் விநா க்வசித் நாஸ்தி நிர்ணாசநே ஹேது சங்க்ஷிப்யேதத் பிரபாஷிதம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம்
பராபித்யாநாத் து திரோஹிதம் ததா ஹி அஸ்ய பந்த விபர்யயவ் -3-2-4-
தேஹ யோகாத் வா ஸோ அபி -3-2-5–

ஈஸ்வர சர்வ பூதாநாம்
தைவீ ஹி ஏஷா குணமயீ–ஸ்ரீ கீதை -7-14-

பிரதானம் ஆகிய மாயைக்கும்- புருஷனாகிய ஜீவனுக்கும் ஈஸ்வரர் –ஸ்ரீ சங்கரர்—

பிரதானமாகிய பிரக்ருதிக்கும் புருஷர்களாகிய ஜீவர்களுக்கும் ஈஸ்வரர்
எல்லாருக்கும் தாரண போஷணங்களைத் தருபவர் –
நான்முகனுக்கு ஹயக்ரீவராக இருந்து வேதங்களை அருளுபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

ஓம் பிரதான புருஷேஸ்வராஹ நம
பிரகிருதி ஜீவர்கள் இருவருக்கும் ஒரே ஈஸ்வரன்

———————-

  1. ஓம் ப்ரதானபுருஶேஶ்வராய நம:

ப்ரதானம் ப்ரக்ருதிர்மாயா புருஶோ ஜீவஸ் தயோரீஶ்வர: ப்ரதானபுருஶேஶ்வர: |

ப்ரதானம் ‘ப்ரதானம்’ என்றால் ப்ரக்ருதிர்மாயா ‘ப்ரக்ருதி’ அல்லது மாயையைக் குறிக்கும்; புருஶோ ‘புருஶ’ என்றால் ஜீவஸ் ஜீவாத்மாவைக் குறிக்கும் தயோரீஶ்வரஇவை இரண்டையும் தனது ஆளுகைக்குள் வைத்திருப்பதால் ப்ரதானபுருஶேஶ்வர: அவர் ‘ப்ரதானபுருஶேஶ்வர:’ என்று அழைக்கப்படுகிறார் |

ப்ரக்ருதி எனும் ப்ரதானத்தையும், ஜீவாத்மாவாகிய புருஶனையும் தனது ஆளுகைக்குள் வைத்திருப்பதால் (இவை இரண்டிற்கும் ஈஸ்வரனாக இருப்பதால்), பகவான் “ப்ரதானபுருஶேஶ்வர:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உயிரினங்களின் உடல்களும் ப்ரக்ருதி, மஹான், அஹங்காரம், பஞ்ச பூதங்கள், பஞ்ச தன்மாத்திரைகள், ஐந்து அறிவுப்புலன்கள், ஐந்து செயல் புலன்கள், மனம் ஆகிய 24 தத்துவங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த உடலின் உள்ளே உறையும் ஜீவாத்மா 25வது தத்துவமாவார். மனம் உட்பட, முதல் 24 தத்துவங்களும் அசித் (அறிவற்றவை). ஜீவாத்மா மட்டுமே அறிவுடையவர். இந்த சித் (ஜீவாத்மா), மற்றும் அசித் ஆகிய இரண்டிற்கும் ஈஸ்வரன் பகவான்.

————–

ப்ரதானபுருஷேஸ்வரா – அவர் பிரகிருதி மற்றும் புருஷர்களின் அதிபதி

பிரதானா என்பது முதன்மையான இயற்கை அதாவது பிரகிருதி அல்லது நமது புலன்களால் உணரப்படும் நம்மைச் சுற்றியுள்ள உலகம். இது மாயா அல்லது வெளிப்படையான உண்மை என்றும் அழைக்கப்படுகிறது. புருஷன் க்ஷேத்ரக்னா அல்லது ஜீவாத்மா.

ஈஸ்வரன் இறைவன் மற்றும் எஜமானர் மற்றும் பிரதானபுருஷேஸ்வரா என்றால் பிரகிருதி மற்றும் புருஷன் இரண்டிற்கும் இறைவன் மற்றும் எஜமானர் அதாவது மகா விஷ்ணு.


21- நார சிம்ஹ வபு –

ஸ்வ பக்த் யந்தராய நிவாரண மபி ப்ரதர்ஸயதி –
நாரஸிம்ஹ வபுஸ் :;
பக்த பயா பஹ தத பேக்ஷாஸம க்ஷண ப்ரதிபந்நயதா காம
திவ்ய மஹா ந்ருஸிம்ஹ ஸம்ஹநந: ॥ 21 ॥

தானவன் மார்வகலம் இரு கூறா நகந்தாய் நரசிங்கமதாய உருவே -3-4-7-

யாருக்கு அருளினாலும் தனக்காகப் பண்ணியதாகவே ஆழ்வார்கள் திரு உள்ளம்-

அழகியான் தானே சொல்லி அரி உருவம் தானே போல் இங்கும் இந்த திரு நாமமும் ஸ்ரீ மான் திரு நாமமும் அடுத்து

பக்தனுடைய பயத்தைப் போக்க அவன் விரும்பிய காலத்திலே திவ்ய நரசிம்ஹ உருவத்தைக் கொண்டவன் –
பக்தர்களின்-அந்தராயம் -தடங்கல் உபாய – காலத்தில்- தசையில் – தடைகளைப் போக்கி அருளுபவன்–அதுக்கு த்ருஷ்டாந்தம் இந்தத் திரு நாமம் -ஸ்ரீ பராசர பட்டர் —

மனித சிம்ம லஷணங்களும் ஒரே தேகத்தில் பொருந்தி இருந்தவர் –ஸ்ரீ சங்கரர்—

மனிதன் சிம்கம் இரு உருவங்களையும் சேர்த்து தரித்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

ஓம் நரஸிம்ஹ வபுஷே நம
பாலும் சக்கரையும் போலே மனுஷ்ய ஸிம்ஹ உரு கொண்டு
அப்பொழுதே அவன் வீயத் தோன்றி
சிறுக்கனுக்கு அருளி ஹிரண்யன் மேலே சீறினவன்
திருத் தூணே இவனை ஈன்ற திருத் தாயார்

———–

  1. ஓம் நாரஸிம்ஹவபுஶேநம:

நரஸ்ய ஸிம்ஹஸ்ய சாவயவா யஸ்மின் லக்ஷ்யந்தே தத்வபுர்யஸ்ய ஸ நாரஸிம்ஹவபு:|

நரஸ்ய மனிதர் ஸிம்ஹஸ்ய சிங்கம் சாவயவா ஆகிய இந்த இரண்டின் உடலுறுப்புகளும் யஸ்மின் எங்கு லக்ஷ்யந்தே சேர்ந்து உள்ளதோ தத்வபுர்யஸ்ய ஸ அத்தகைய உடல் உள்ளவர் நாரஸிம்ஹவபு: ‘நாரஸிம்ஹவபு:’ என்று அழைக்கப்படுகிறார் |

(நரசிம்ம அவதாரத்தின் பொழுது) அவருடைய உடலில் மனிதர் மற்றும் சிங்கத்தின் உறுப்புகள் ஒன்று சேர்ந்து இருப்பதால் பகவான் ‘நாரஸிம்ஹவபு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————–

நரசிம்மவபு – மனிதனும் சிங்கமும் இணைந்திருப்பவர்.

வபு என்றால் உடல், நரசிம்மம் என்றால் மனிதனும் சிங்கமும் சேர்ந்தது; எனவே நரசிம்மவபு மனிதனையும் சிங்கத்தையும் இணைக்கும் உடலை உடையவர். இது பகவானின் நரசிம்ம அவதாரத்தைக் குறிக்கிறது.

—————

22-ஸ்ரீ மான் –
அழகியவன் –

அத : பரஸ்பர துர்கட|பூர்வ விக்ருத ரூப பரிக்ரஹாதபி-
ஶ்ரீ மாந்,
ஸௌந்தர்ய லாவண்ய அதி பிரதி மநோ ஹர திவ்ய ரூப: ।
தத்ர ந்ருஸிம்ஹ த்வயோ : ஸுகடிதத்வம் பஶ்யதாம் ஸூத்தி மத் அந்யந் ந்ரு மாத்ரம்
ஸிம்ஹ மாத்ரம் வா த்ருஷ்ட்வா ஜுகுப்ஸா ஜாயேதாபி, தாத் ரும்ரா பரிக்ரஹ மாத்ரே ணைவ ஹி ஜகத் த்ராதாம் ।
* தம்ஷ்ட்ராகரால ஸுர பீதி நாஸநம் க்ருத்வா வபுர் திவ்ய ந்ருஸிம்ஹ ரூபிணா । த்ராதம் ஜகத்யேந, இதி -(ஸ்ரீ விஷ்ணு தர்மம் )॥ 22 ॥

இமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு -நான் திரு -21
அழகியான் தானே அரி யுருவன் தானே -நான் -திரு 22-அரியும் மானிடமும் உடனாயத் தோன்றி -கலியன்

180-222 மேலும் இதே திரு நாமம் வரும் –
180-திவ்ய ஆபரண செல்வம்
உள்ளே வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன் கொண்டல் வண்ணன்
சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவனே -8-8-1-

222-தாமரைக் கண்ணன் -மத்ஸ்ய கமல லோஷண
மீனாய் ஆமையாய் –கார் வண்ணனே –கமலத் தடம் கண்ணன் -5-1-11
மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தன் -2-8-5-

ஒன்றுக்கு ஓன்று முரண்பட்ட வடிவங்களைச் சேர்த்துக் கொண்ட போதும் அழகு மிக்க மநோ ஹரமான வடிவை யுடையவர்
அப்போது கலந்த அழகைக் கண்டவர்கள் பிறகு மனிதனை மட்டுமோ சிங்கத்தை மட்டுமோ
கண்டால் அருவெறுப்பு யுண்டாகும் படி அழகன் –
அப்படிப்பட்ட ரூபத்தைக் கொண்டதால் மட்டுமே யன்றோ உலகம் காக்கப்பட்டது -ஸ்ரீ பராசர பட்டர் —
ஸ்ரீ மான் –பரஸ்பர -துர்கடா பூர்வ விக்ருத ரூப பரிக்ருத சௌந்தர்ய லாவண்ய அதிபி மநோஹர திவ்ய ரூப

தம்ஷ்ட்ரா கராளம் ஸூர பீதி நாசநம் க்ருத்வா வபூஸ் திவ்ய நரஸிம்ம ரூபிணா த்ராதம் ஜகத் யேந — ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-21-

திருமார்பில் திரு மகள் நித்யமாக பொருந்தி இருக்கப் பெற்றவர் —ஸ்ரீ சங்கரர்—

சாந்த ரூபனான வாயுவினிடம் பற்றுள்ளவர் -ஸ்ரீ லஷ்மி தேவிக்கு பதி –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

ஓம் ஸ்ரீ மான் நம
அழகியான்–ஸுவ்ந்தர்ய லாவண்ய சாகரம் –
திருமகள் கேள்வன் -ஸ்ரீ யபதி

————-

  1. ஓம் ஸ்ரீமதே நம:

யஸ்ய வக்ஷஸி நித்யம் வஸதி ஸ்ரீ: ஸ ஸ்ரீமான் |யஸ்ய எவருடைய வக்ஷஸி திருமார்பில் நித்யம் எப்பொழுதும் வஸதி வாழ்கின்றாளோ ஸ்ரீ: திருமகள் ஸ அவர் ஸ்ரீமான் ‘ஸ்ரீமான்’ என்று அழைக்கப்படுகிறார் |

பகவானுடைய திருமார்பில் திருமகள் எப்பொழுதும் நிரந்தரமாக வாழ்வதால் அவர் ‘ஸ்ரீமான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மற்றவர்களுக்கு ‘ஸ்ரீமான்’ என்பது ஒரு அடைமொழி மட்டுமே. பகவானுக்குத்தான் அது பொருத்தமான திருநாமமாகும். திருவண்பரிசாரம் என்னும் திவ்யதேசத்தில் பகவான், இந்தத் திருநாமத்தின் தூய தமிழாக்கமான ‘திருவாழ்மார்பர்’ என்ற பெயருடனேயே சேவை சாதிக்கிறார்.

—————

ஸ்ரீமான் – யாருடைய மார்பில் லட்சுமி தேவி வசிக்கிறார்

ஸ்ரீ லக்ஷ்மி தேவி மற்றும் அவள் பகவானின் மார்பில் நித்தியமாக வாசம் செய்கிறாள். ஸ்ரீ என்றால் அழகு என்று பொருள் மற்றும் ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீமானை “மிக அழகான மற்றும் வசீகரமான ஆளுமை” என்று விளக்குகிறார்.

——————

23-கேசவ –

ஏவம் வித ஐஶ்வர்ய ஸௌந்ர்ய ஐகாந்த லக்ஷணாந் யுப லக்ஷயதி
கேஸவ:,
ப்ரஸஸ்த ஸ்நிக்த நீல குடில குந்தல: ।
*கேஸாத்வோ அந்ய தரஸ்யாம், இதி ப்ரஸம்ஸாயாம் வ: ॥ 23 ॥

அழகிய கேசாபாசங்களை உடையவன் -இங்கு திரு மேனியின் அழகிலே நோக்கு
கொள்கின்ற கோளிருளைச் சுகிர்ந்திட்ட கொழும் சுருளின் உள் கொண்ட நீல நன்னூல் தழை கொல் அன்று மாயன் குழல் -7-7-9-
பிரமனுக்கும் ஈசனுக்கும் நிர்வாஹகன்
கேசி -அசுரனைக் கொன்றவன்
கேசவ -654- க்லேச நாசன -க்லேசங்களைப் போக்கும் கண்ணன்

ஸ்வரூப குணங்கள் சொல்லி திரு மேனி குணங்களைச் சொல்லும் பிரகரணம்
பார்த்தவன் -அழகன் -ஐஸ்வர்யமும் சவுந்தர்யமும் லாவண்யமும் சொல்லி –
இங்கு ஸுந்தர்யம் -அவயவ சோபை குழல் அழகன்-கேஸ பாஸம் -தனித் தனியாகவும் கூட்டமாகவும் குழல் அழகு

திருவடி பெருமாள் குழல் வர்ணனையில் பத்து விசேஷணங்கள் அருளிச் செய்கிறார்

செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரி யுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே.-7-5-8-

கறுத்துச் சுருண்டு சேர்ந்து இணங்கி இருக்கும் கூந்தலை யுடையவர் –
இப்படிப்பட்ட அழகுக்கு யுரிய தனிப்பட்ட அடையாளம் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிரசஸ்த மிக நீள குடில குந்தள –

க-எனப்படும் பிரம்மா-அ எனப்படும் விஷ்ணு -ஈசன் எனப்படும் ருத்ரன் மூவரையும் தம் வசத்தில் யுடையவர் –
அழகிய கேசத்தை யுடையவர் -கேசியை வதம் செய்தவர் -ஸ்ரீ சங்கரர்—

பிரமன் ருத்ரன் ஆகியோரை படைத்தல் அழித்தல் செய்யும் படி தூண்டுபவர் –
அழகிய கேசங்களை யுடையவர் -கேசியை அழித்தவர் –
அம்சுமானாக இருப்பவர்–ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

ஓம் கேசவா நம
ப்ரசஸ்த கேச பாசன் -கேசி ஹந்தா

—————-

  1. ஓம் கேஶவாய நம:

அபிரூபா: கேஶா யஸ்ய ஸ கேஶவ: |

அபிரூபாமிகவும் அழகியதான கேஶா தலைமுடியுடன் யஸ்ய இருப்பதால்  அவர் கேஶவ: ‘கேசவன்’ என்று அழைக்கப்படுகிறார்|

மிகவும் அழகிய தலைமுடியுடன் இருப்பதால் பகவான் ‘கேசவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘கேஶாத்வோSன்யதரஸ்யாம்’ (பாணினி ஸூத்ரம் 5.2.109)

பாணினி ஸூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:-“கேச” என்ற சொல்லின் பின்னே வரும் “வ:” என்ற விகுதி, புகழ்ச்சியைக் குறிக்கிறது.

யத்வா கஸ்ச அஸ்ச ஈஶஸ்ச த்ரிமூர்த்தய: யத்வஶேன வர்தந்தே ஸ கேஶவ|

யத்வா அல்லது கஸ்ச ‘க’ என்று அழைக்கப்படும் ப்ரஹ்மா அஸ்ச ‘அ’ என்று அழைக்கப்படும் விஶ்ணு ஶஸ்ச ‘ஈசன்’ என்று அழைக்கப்படும் சிவன் த்ரிமூர்த்தய: ஆகிய இந்த மும்மூர்த்திகளும் யத்வஶேன எவருடைய ஆணைக்குட்பட்டு வர்தந்தே இருக்கின்றனரோ  அவர் கேஶவ: கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மா, விஶ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் எவருடைய ஆணைக்குட்பட்டு இருக்கின்றனரோ அந்த பரம்பொருள் ‘கேசவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. அத்வைதத்தின்படி மும்மூர்த்திகளும் ஞானமே வடிவான பரப்ரஹ்மத்தின் உருவங்களாகும்.
  2. க+அ+ஈஶ+வ (வஷேன, வர்தந்தே) = கேஶவ:

கேஶிவதாத்வா ‘கேசி’ என்ற அசுரனைக் கொன்றபடியால் கேஶவ: பகவான் கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.

‘கேசி’ என்ற அசுரனைக் கொன்றபடியால் பகவான் கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.

கேசி என்பவன் பகவான் கிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சனால் ஏவப்பட்ட ஒரு அசுரன். இவன், குதிரை வடிவில் வந்து பிருந்தாவனத்தில் மக்களை துன்புறுத்த, பகவான் தனது கைகளை அவன் வாயினுள் நுழைத்து, கழுத்தை நெரித்துக் கொன்றார்.

யஸ்மாத்வயை துஶ்டாத்மா ஹதகேசீ ஜனார்தன |

தஸ்மாத்கேஶவநாம்னா த்வம் லோகே க்யாதோ பவிஶ்யஸி ||’ (ஸ்ரீ விஶ்ணு புராணம் 5.16.23)

இதி விஶ்ணுபுராணே ஸ்ரீக்ருஶ்ணம் ப்ரதி நாரதவசனம் |

ஸ்ரீ விஶ்ணுபுராணத்தில் நாரத முனிவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கூறுகிறார்:

ஒ ஜனார்தனா!!! தங்களுடைய கரங்களால் இந்த தீய எண்ணம் கொண்ட கேசி கொல்லப்பட்டான். எனவே, நீங்கள் உலகில் கேசவன் என்ற திருநாமத்தால் புகழ்பெற்று விளங்குவீர்கள்.

ப்ருஶோதராதித்வாச்சப்தசாதுத்வகல்பனா | (பாணினி சூத்திரம் 6.3.109)

பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:

ப்ருஷோதரா வர்க்கத்தை சேர்ந்த சொற்கள் இலக்கணப் புணர்ச்சி விதிகளின்படி பொருந்தாது இருப்பினும், முனிவர்களும், பெரியோர்களும் இந்த பெயரை உச்சரித்திருந்தால் அதை (இலக்கண விதிகளின்படி ஆராயாமல்) அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புணர்ச்சி விதிகளின்படி கேசி + வ, கேசவ என்ற சொல்லாக உருவாகாது. எனினும், நாரதர் முதலிய முனிவர்கள் இவ்வாறு கூறியிருப்பதால் இந்த நாமத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விதிவிலக்கை மேற்கண்ட பாணினி சூத்திரம் நமக்கு அளிக்கிறது.

——————

கேசவா – திரித்துவத்தை கட்டுப்படுத்துபவர்

கேசவா என்பதற்குப் பல அர்த்தங்கள் உள்ளன:

  1.  “அபிரூபா கேஷா யஸ்ய சஹ் – வசீகரிக்கும் முடியைப் பெற்றவர்”
  2. கேஷி என்ற அரக்கனைக் கொன்றவன். இது விஷ்ணு புராணத்தில் (5.16.23) வருகிறது. நாரதர் கிருஷ்ணரிடம் கூறுகிறார், நீ துரோகியான கேசியைக் கொன்றதால், நீ உலகில் ‘கேசவா’ என்ற பெயரால் அறியப்படுவாய்.
  3. திரிமூர்த்திகளைக் கட்டுப்படுத்துபவர். இதை ஸ்ரீ ஆதி சங்கரர் இவ்வாறு விளக்குகிறார்: “கச்ச அச்ச ஈஷஸ்ச த்ரிமூர்த்தயாஹ் கேஷா, யத்வஷேன வர்தந்தே ச கேசவா”.

‘க’ என்றால் பிரம்மா, ‘அ’ என்றால் விஷ்ணு, ‘இசா’ என்றால் ருத்ரன்; எனவே ‘கேசா’ என்பது திரிமூர்த்தியின் (மூன்று உருவங்கள்) அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் அதாவது ‘வாச’ என்பதைக் குறிக்கிறது.

எனவே படைப்பாளர், பாதுகாவலர் மற்றும் அழிப்பவர் ஆகிய 3 செயல்பாட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்துபவர் கேசவா.

—————

24-புருஷோத்தம –

ஸா லக்ஷண்ய ப்ரஸக்த்யா (குணங்கள் அடையாளம் லக்ஷண்யம் சொல்லி-இங்கு ஞானம் ஆனந்தம் லக்ஷணம் பேசும் இடத்தில் )
பரமம் வைலக்ஷண்ய மாஹ—
புருஷோத்தம : ; புருஷேப்ய உத்க்ருஷ்ட தம : ।
புருஷ ஸப்தேந சேதந வாசிநா -(சைதன்யம் உடையவர்களைக் குறிக்கும் புருஷ பதம் )அசேதய மாநா வ்யக்த
அவ்யக்த ரூபா ப்ரக்ருதிர் வ்யாவர்த்யதே;
உதித் யுத்க்ருஷ்ட வாசிதயா பத்தா: ; ஸாமர்த்ய ப்ராப்தேந தரபா முக்தா:,
தமபா நித்ய முக்தா ]: ஸூரயோ அநந்த வைநதேயாதய: ।

(புருஷ -அசேதன வ்யாவ்ருத்தி வேறு பாடும் -வை லக்ஷண்யமும் சிறந்ததாயும்
உத் –பத்த புருஷ -வ்யாவ்ருத்தி வேறு பாடும் -வை லக்ஷண்யமும் சிறந்ததாயும்
உத்தர -முக்த புருஷ -வ்யாவ்ருத்தி வேறு பாடும் -வை லக்ஷண்யமும் சிறந்ததாயும்
உத்தம நித்யர்களைக் காட்டிலும் வ்யாவ்ருத்தி வேறு பாடும் -வை லக்ஷண்யமும் சிறந்ததாயும் )

இதம் ச தேப்யோ வைலக்ஷண்யம் அவத்ய ப்ரதிபட தயா (குற்றங்களுக்கு எதிர்த்தட்டாயும் )வ்யாபந (மற்றவை வியாப்பியம் )பரணாத் யுபகாரை : ஸ்வாம்யேந ச ஸ்வபாவத ஏவ உத்கர்ஷாத் ।
இதம் ஹி பஹுபிஸ் தாத்பர்ய லிங்கைஸ் : பரமம் குஹ்ய மகீயத ,
* த்வாவிமவ் புருஷௌ லோகே இத்யத்ர(ஸ்ரீ கீதை -15-16-புருஷௌ–பத்தாத்மாவையும் முக்த்தாத்மாவையும் சொன்னபடி ) ।
* பூமிர் ஆபோ அநலோ வாயு:,( ஸ்ரீ கீதை -7-4-)
* யோ மாம் அஜம் அநாதிம் ச,( ஸ்ரீ கீதை -10-3-)
* அவிகாராய ஸூத்தாய (அவிகாராய அசித் விலக்ஷணன் –ஸூத்தாய பக்த விலக்ஷணன் நித்யாய முக்த விலஷணன் பரமாத்மா நித்ய விலக்ஷணன் )
* பர: பராணாம் பரம :,–இத்யாதி பஹிம்த பரம் த்ரஷ்டவ்யம் ।
அத்ராபி போக்த்ரு போக்ய நியத்ருந்ணாம் அத்யந்த பேத ஸ்பஷ்ட: ।
அதோ ப்ர்ஹ்ம பரிணாம பக்ஷஶ்ச ப்ரதி க்ஷிப்த। (நானே சேதன அசேதனமாக உருவானால் நான் உயர்ந்தவன் என்று சொல்ல முடியாதே )

ப்ரஹ்மண: ஸர்வ விகாரஸ்ய ப்ரஹ்ம ஸம்ஸாரஸ்(ப்ரஹ்மதுக்கு பிரமம் வாதம் நிரஸனம் )

யேஶ்வராதிரிக்த முக்தேஶ்வராணாம் ப்ரஹ்மணி ப்ரலயோத் வாதயோஶ் சாப்யுபகமோ ஹி யதோக்த புருதஷாத்த மத்வேந ஸர்வேண வேத ஸித்தாந்தேந ச விருத்யதே ॥ 24 ॥

ஷரன் -சம்சாரி அஷரன்-முக்த நித்யர்
மலர்ந்து எழுந்து அணவி மணிவண்ண உருவின் மால் புருடோத்தமன் -பெரியாழ்வார் -4-7-2-

ஜீவாத்மாக்களைக் காட்டிலும் உயர்ந்தவன் -புருஷர்களுக்குள் என்பது அல்ல
நஷத்ரங்களைக் காட்டிலும் சந்திரனாக நான் -தலைவன் -27 நக்ஷத்ரங்களை மணம் புரிந்த ஏற்றம் போல் இங்கும்

பக்தர் முக்தர் நித்யர் ஆகிய மூவகைப் புருஷர்களிலும் உயர்ந்தவர் -லஷணம் கூறத் தொடங்கி
புருஷ -என்று அசேதனத்தை காட்டிலும் சிறப்பு கூறி
உத் -என்ற சொல்லால் சேதனர்களை விட சிறப்பு கூறி
தர -என்பதால் முக்தர்களைக் காட்டிலும் சிறப்பு சொல்லி
உத்தம -என்று நித்யர்களை விட ஏற்றம் சொல்கிறது

இத்தால் போக்யமான அசேதனமும் -போக்தாவான சேதனனும் -நியமிப்பவன்மான பகவானும்
ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டமை தெளிவு
இத்தால் ப்ரஹ்மமே வேறுபாடு அடைகின்றது என்ற கொள்கை மறுக்கப் பட்டு
ப்ரஹ்மம் மாறுபாட்டை அடைகின்றது -ப்ரஹ்மம் சம்சாரத்தை அடைகிறது -நாராயணனைக் காட்டிலும் யாதொரு தன்மையும் இல்லாத
மற்ற ஓன்று ப்ரஹ்மம் என்றும் அவ்யக்தமும் அதில் இருந்து விடுபட்ட முக்தரும் ப்ரஹ்மத்தில் லயித்து
அதில் இருந்து யுண்டாகுகிறார்கள் என்று இப்படி எல்லாம் கூறப்படும் கொள்கைகள் அனைத்தும்
இந்த புருஷோத்தமத்வத்தோடும் சகல வேதாந்த சித்தத்தோடும் மறுக்கப் படுகின்றன -ஸ்ரீ பராசர பட்டர் —

த்வா விமவ் புருஷவ் லோகே –ஸ்ரீ கீதை -15-16-
பூமிர் ஆபவ் அநலோ வாயு –ஸ்ரீ கீதை -7-4-
யோமாம் அஜம் அநாதிம் ச –ஸ்ரீ கீதை -10-3-
அவிகாராய ஸூத் தாய
பர பராணம் பரம –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-10-

புருஷர்களுக்குள் உயர்ந்தவர் -ஸ்ரீ சங்கரர்—

புருஷர்களுக்குள் உயர்ந்தவர் -புருஷர்களைக் காட்டிலும் -ஐந்தாம் வேற்றுமையில் -உயர்ந்தவர்–ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

ஓம் புருஷோத்தம நம
பரம புருஷன் -பக்த முக்த நித்யர்கள் அனைவருக்கும் சர்வேஸ்வரன்

———————————–

  1. ஓம் புருஶோத்தமாய நம:

புருஶானாம் உத்தம: புருஶோத்தம: |

புருஶானாம் புருஶர்களில் உத்தமதலைசிறந்தவர் புருஶோத்தம: ‘புருஷோத்தம:’ என்று அழைக்கப்படுகிறார் |

புருஶர்களில் உயர்ந்தவர் என்பதால் பகவான் ‘புருஶோத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தில் புருஶ என்ற பெயர்ச்சொல்லும், உத்தம என்ற பெயர்ச்சொல்லும் இணைந்து புருஶோத்தம: என்று உருவாகியுள்ளது. பொதுவாக, ஒரு சமூகத்திலிருந்து ஒன்றை மட்டும் உயர்த்திக் கூறும்பொழுது (புருஶர்களில் உத்தமன்) இவ்வாறு இணைக்கக்கூடாது என்பது பாணினி ஸூத்ரத்தில் உள்ள ஒரு விதியாகும். அந்த விதி இங்கு பொருந்தாது என்று ஆதிசங்கரர் ‘ந நிர்த்தாரணே’ (பாணினி ஸூத்ரம் 2.2.10) என்ற பாணினி ஸூத்திரத்தின் விளக்குகிறார்.

ததா ச இதை விளக்கும் வண்ணம் பகவத் வசனம் ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறியுள்ளார்.

யஸ்மாத்க்ஷரமதீதோSஹமக்ஷராதபி சோத்தம: |

அதோSஸ்மி லோகே வேதே ச ப்ரதிதபுருஶோத்தம: || (ஸ்ரீமத் பகவத்கீதை 15.18)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:

நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஶனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும், வேதங்களாலும் புருஷோத்தமனென்று கூறப்படுகிறேன்.

இந்த விளக்கத்தின் தேர்ந்த பொருளாவது: பகவான் புருஶர்களைக் காட்டிலும் உயர்ந்தவர், புருஶர்களில் உத்தமர் என்று கூறுவது பிறப்பாலோ, பண்பாலோ அல்லது செயலாலோ அல்ல. அவரது இயற்கையான வல்லமையாலேயே அவர் புருஶர்களுக்குள் உத்தமாராக இருக்கிறார்.

————————

புருஷோத்தம – எல்லா புருஷர்களிலும் பெரியவர்

இது ‘புருஷானாம் உத்தம’ அல்லது ‘புருஷேஷு உத்தம’ அல்லது ‘புருஷேப்யோ உத்தம’ என்று விளக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் வடிவத்தைப் பொறுத்து, இதை ‘புருஷர்களில் (ஜீவாக்கள்) உயர்ந்தவர்’ அல்லது ‘புருஷர்களை விட உயர்ந்தவர்’ என்று விளக்கலாம்.

‘யஸ்மாத் க்ஷரம் அதீதோஹம் அக்ஷராதாபி சோத்தமஹ
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புருஷோத்தம:–15-18-

நான் விஷயத்தை விட உயர்ந்தவன் மற்றும் தனிப்பட்ட ஆத்மாவை விட உயர்ந்தவன்; அதனால் உலகத்திலும் வேதங்களிலும் நான் புருஷோத்தமன் என்று அழைக்கப்படுகிறேன்.

—————————

18-யோக –
சாயுஜ்யமாகிய முக்திக்கு வேறோர் உபாயம் வேண்டாதபடி தானே உபாயமாக இருப்பவர் –
முக்திக்கு உபாயமும் முதர்களுக்கு உபேயமும் அவனே -ஸ்ரீ பராசர பட்டர் —
ததி பாண்டத்துக்கும் கூட முக்தி அளித்தானே –சேவிக்க சாமர்த்தியம் இல்லா இடங்களுக்கும் -தானே காட்டக் கண்டு அனுபவிக்கலாம்
-யுஜ்யதே பிராப்யதே –அநேநேதி சாயுஜ்ய -நான்யாபேஷ -சாஷாத் ஹேது இத்யர்த்த

ஐக்ய சிந்தனை யாகிற யோகத்தினால் அடையத் தக்கவர் –ஸ்ரீ சங்கரர்—

யோகிகளால் தம் இதயத்தில் த்யானம் செய்யப்படுபவர் -அனைத்து குணங்களும் சேர்ந்து இருப்பவர் –
பக்தர்களுக்கு உலகைக் கடக்க வழியாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

——————————————————————————————————-

19-யோக விதாம் நேதா
வேறு உபாயம் ஆகிய பக்தி யோகத்தைப் பற்றியவர்களுக்கும் பலன் யுன்டாம்படி நிர்வகிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ஞானிகளின் யோக ஷேமங்களை  வகுத்து நடத்துபவர் -யோகத்தை விசாரிப்பவர்கள் –
அறிபவர்கள்-அடைபவர்கள் யோக வித்துக்கள் -ஸ்ரீ சங்கரர்—

த்யான யோகம் அறிந்த பக்தர்கள் மோஷ பலத்தை அடையும்படி செய்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்–

———————————————————————————————————

20-பிரதான புருஷேச்வர –
ஜீவர்களைக் கட்டுப் படுத்தும் பிரக்ருதியையும் அதில் கட்டுண்ட ஜீவர்களையும் நடத்துபவர் –
தனது மாயையினால் அபராதம் செய்பவர்களை சம்சாரத்தில் கட்டி வைத்தும்  சரணம் அடைந்தவர்களை விடுவித்தும் விளையாடுகிறான்
ஈஸ்வர -வரச் பிரத்யயத்தால் இத் தன்மை இயற்கை என்பதும் -சித் அசித் ஈஸ்வரன் தத்வத்ரய பேதமும் கூறப்படுகிறது
நியமிப்பவன் ஒருவன் -நியமிக்கப்படுபவை இரண்டும் -இயற்கையாக செய்பவன் -ஸ்ரீ பராசர பட்டர் —

பிரதானம் ஆகிய மாயைக்கும் புருஷனாகிய ஜீவனுக்கும் ஈஸ்வரர் –ஸ்ரீ சங்கரர்—

பிரதானமாகிய பிரக்ருதிக்கும் புருஷர்களாகிய ஜீவர்களுக்கும் ஈஸ்வரர்
எல்லாருக்கும் தாரண போஷணங்களைத் தருபவர் -நான்முகனுக்கு ஹயக்ரீவராக இருந்து வேதங்களை அருளுபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

———————————————————————————————————

21-நாரசிம்ஹவபு –
பக்தனுடைய பயத்தைப் போக்க அவன் விரும்பிய   காலத்திலே திவ்ய நரசிம்ஹ உருவத்தைக் கொண்டவன் –
பக்தர்களின் தடைகளைப் போக்கி அருளுபவன் -ஸ்ரீ பராசர பட்டர் —

மனித சிம்ம லஷணங்களும் ஒரே தேகத்தில் பொருந்தி இருந்தவர் –ஸ்ரீ சங்கரர்—

மனிதன் சிம்கம் இரு உருவங்களையும் சேர்த்து தரித்தவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

————————————————————————————————————–

22-ஸ்ரீ மான் –
ஒன்றுக்கு ஓன்று முரண்பட்ட வடிவங்களைச் சேர்த்துக் கொண்ட போதும் அழகு மிக்க மநோஹரமான வடிவை யுடையவர்
அப்போது கலந்த அழகைக் கண்டவர்கள் பிறகு மனிதனை மட்டுமோ சிங்கத்தை   மட்டுமோ கண்டால் அருவெறுப்பு   யுண்டாகும்  படி அழகன் –
அப்படிப்பட்ட ரூபத்தைக் கொண்டதால் மட்டுமே யன்றோ உலகம் காக்கப்பட்டது -ஸ்ரீ பராசர பட்டர் —
ஸ்ரீ மான் –பரஸ்பர -துர்கடா பூர்வ விக்ருத ரூப பரிக்ருத சௌந்தர்ய லாவண்ய அதிபி மநோஹர திவ்ய ரூப

திருமார்பில் திரு மகள் நித்யமாக பொருந்தி இருக்கப் பெற்றவர் —ஸ்ரீ சங்கரர்—

சாந்த ரூபனான வாயுவினிடம் பற்றுள்ளவர் -ஸ்ரீ லஷ்மி தேவிக்கு பதி –ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

————————————————————————————————————

23-கேசவ –
கறுத்துச் சுருண்டு சேர்ந்து இணங்கி இருக்கும் கூந்தலை யுடையவர் –
இப்படிப்பட்ட அழகுக்கு யுரிய தனிப்பட்ட அடையாளம் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிரசஸ்த மிக நீள குடில குந்தள –

க-எனப்படும் பிரம்மா-அ எனப்படும் விஷ்ணு -ஈசன் எனப்படும் ருத்ரன் மூவரையும் தம் வசத்தில் யுடையவர் –
அழகிய கேசத்தை யுடையவர் -கேசியை வதம் செய்தவர் -ஸ்ரீ சங்கரர்—

பிரமன் ருத்ரன் ஆகியோரை படைத்தல் அழித்தல் செய்யும் படி தூண்டுபவர்  -அழகிய கேசங்களை யுடையவர் -கேசியை அழித்தவர் –
அம்சுமானாக இருப்பவர்–ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

———————————————————————————————————–

24- புருஷோத்தம –
பக்தர் முக்தர் நித்யர் ஆகிய மூவகைப் புருஷர்களிலும் உயர்ந்தவர் -லஷணம் கூறத் தொடங்கி
புருஷ -என்று அசேதனத்தை காட்டிலும் சிறப்பு கூறி
உத்  -என்ற சொல்லால் சேதனர்களை விட சிறப்பு கூறி
தர -என்பதால் முக்தர்களைக் காட்டிலும் சிறப்பு சொல்லி
உத்தம -என்று நித்யர்களை விட ஏற்றம் சொல்கிறது
இத்தால் போக்யமான   அசேதனமும் -போக்தாவான   அசேதனனும் -நியமிப்பவன்மான பகவானும் ஒன்றுக்கு ஓன்று வேருபட்டமை தெளிவு
இத்தால் ப்ரஹ்மமே வேறுபாடு அடைகின்றது என்ற கொள்கை மறுக்கப் பட்டு
ப்ரஹ்மம் மாறுபாட்டை அடைகின்றது -ப்ரஹ்மம் சம்சாரத்தை அடைகிறது -நாராயணனைக் காட்டிலும் யாதொரு தன்மையும் இல்லாத
மற்ற ஓன்று ப்ரஹ்மம் என்றும் அவ்யக்தமும் அதில் இருந்து விடுபட்ட முக்தரும் ப்ரஹ்மத்தில் லயித்து
அதில் இருந்து யுண்டாகு கிறார்கள்  என்று இப்படி எல்லாம் கூறப்படும் கொள்கைகள்  அனைத்தும்
இந்த புருஷோத்தமத்வத்தோடும் சகல வேதாந்த சித்தத்தோடும் மறுக்கப் படுகின்றன -ஸ்ரீ பராசர பட்டர் —

புருஷர்களுக்குள் உயர்ந்தவர் -ஸ்ரீ சங்கரர்—

புருஷர்களுக்குள் உயர்ந்தவர் -புருஷர்களைக் காட்டிலும் -ஐந்தாம்  வேற்றுமையில் -உயர்ந்தவர்–ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

———–———————–

முக்தியடையும் மார்க்கத்தை ‘யோகம்’ என்று சொல்கிறோம்.

முக்திக்கான பிற மார்க்கங்களை அநுஷ்டிக்க இயலாத ததிபாண்டன் போன்றோர்க்கும், நம் போன்றோர்க்கும்
முக்தியடையும் மார்க்கமாக – யோகமாக – எம்பெருமான் தானே இருந்து, முக்தி அளிப்பதால்
எம்பெருமானுக்கு “யோக:” என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பதினெட்டாவது திருநாமம்.
மின்படிக்கட்டில் நிற்பவர்கள் படி ஏறத் தேவையில்லை. அந்த மின்படிக்கட்டே அவர்களை மேலே உயர்த்தி விடுகிறது.
அவ்வாறே “யோகாய நம:” என்று தினமும் சொல்லிக் கண்ணனின் கழல்களைப் பற்றும் அன்பர்களுக்குக் கண்ணனே
மின்படிக்கட்டாக இருந்து அவர்களை வாழ்வில் உயர்த்துவான்.

முக்தியடைவதற்கான சரியான வழியைக் காட்டி அவ்வழியில் நம்மை இயக்கி வழி நடத்திச் செல்வதால்
‘யோகவிதாம் நேதா’ என்று எம்பெருமான் அழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பத்தொன்பதாவது திருநாமம்.
“யோகவிதாம் நேதாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களுக்கு எம்பெருமானே வழிகாட்டியாக இருந்து
நல்வழியில் அவர்களை நடத்திச் செல்வான்.

உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் தலைவனாக இருந்து அவற்றை இயக்கும்
எம்பெருமான் ‘ப்ரதானபுருஷேச்வர:’ என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் இருபதாவது திருநாமம்.
“ப்ரதாநபுருஷேச்வராய நம:” என்று தினமும் சொல்லி வரும் வாசகர்களின் சுற்றமும் நட்பும் அவர்களுக்கு
அனுகூலமாக அமையும்படி எம்பெருமான் அருள்புரிவான்.

ஆபத்தில் தவிக்கும் அடியார்களைக் காப்பதற்கு உரிய
வடிவத்தை உடனே எடுத்துக் கொண்டு ஓடோடி வந்து காப்பதால் எம்பெருமான் ‘நாரஸிம்ஹவபு:’ என்றழைக்கப்படுகிறான்.
‘நாரஸிம்ஹவபு:’ என்றால் மனித வடிவமோ, மிருக வடிவமோ எந்த வடிவம் அடியார்களைக் காப்பதற்கு ஏற்றதோ,
அந்த வடிவை எடுத்துக்கொண்டு ஓடிவந்து காப்பவன் என்று பொருள். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 21-வது திருநாமம்.

“நாரஸிம்ஹவபுஷே நம:” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களின் வாழ்வில் எதிர்ப் படும் தடைக்கற்களை எல்லாம்
படிக்கற்களாக நரசிம்மப் பெருமாள் மாற்றி அருள்வார்.

அழகிய ராமன், அழகிய கண்ணன் முதலிய பெயர்களை நாம் கேள்விப்பட்டதில்லை.
ஆனால், நரசிம்மர் மட்டும் ‘அழகிய சிங்கர்’ என்று அழைக்கப்படுகிறார்.
அத்தகைய அழகனாக விளங்குவதால், நரசிம்மருக்கு ‘ஸ்ரீமான்’ என்ற திருநாமமும் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீமான் என்றால் அழகானவன் என்று பொருள்.

மற்ற அனைத்துப் பெருமாள்களுக்கும் மகாலட்சுமி திருமார்பில் அமர்ந்திருக்க, நரசிம்மருக்கு மட்டும் ஏன் மடியில் அமர்ந்திருக்கிறாள்?
ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய முகத்தைக் கண்டு களிக்க வேண்டுமெனில் திருமார்பில் இருந்தபடி காண முடியாது.
மடியில் அமர்ந்தால்தானே காண முடியும்? அதனால் தான் ஸ்ரீமானின் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள்.

அந்த அழகிய சிங்கரைத் தியானித்தபடி ஸஹஸ்ரநாமத்தின் 22-வது திருநாமத்தை “ஸ்ரீமதே நம:” என்று ஜபம் செய்தால்,
அழகிய சிங்கர் நம் உடலையும் உள்ளத்தையும் அழகாக்கி அருள்வார்.

அழகான கேசத்தோடு விளங்கும் எம்பெருமான் ‘கேசவன்’ என்று அழைக்கப்படுகிறான்.
கேசவன் என்றால் அழகிய கேசத்தை உடையவன் என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 23-வது திருநாமம்.
“கேசவாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அடியார்கள் சௌரிராஜப் பெருமாளின் திருவருளுக்கு இலக்காவார்கள்.

உலகில் பந்தப்பட்டிருக்கும் ஜீவாத்மாவுக்குப் ‘புருஷன்’ என்று பெயர்.
புருஷர்களை விட உயர்ந்த, முக்தியடைந்த ஜீவாத்மாவுக்குப் ‘புருஷோத்’ என்று பெயர்.
உலக வாழ்க்கைக்கே வராமல் எப்போதும் முக்தர்களாக வைகுந்தத்திலேயே இருக்கும் கருடன், விஷ்வக்ஸேனர், ஆதிசேஷன்
முதலியோர் ‘புருஷோத்தரர்’ ஆவர்.

ஸ்ரீபுருஷோத்தரர்களான கருடன் முதலியோரைவிட உயர்ந்தவனாக விளங்கும்
எம்பெருமான் ‘புருஷோத்தமன்’ என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 24-வது திருநாமம்.
“புருஷோத்தமாய நம:” என்று தினமும் சொல்லி வந்தால், நாமும் உத்தமமான குணங்கள் பெற்று வாழ்வில் மேலும் உயரலாம்.

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள் — ஸ்லோகம் –2-

October 31, 2023
  1. பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமா கதி:  |அவ்யய: புருஶ: சாக்ஷீ க்ஷேத்ரஞ்யோSக்ஷர ஏவ ச || 2 ||

இந்த இரண்டாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

  1. பூதாத்மா 11. பரமாத்மா 12. முக்தானாம் பரமா கதி😐
  2. அவ்யய: 14.புருஶ: 15.சாக்ஷீ 16. க்ஷேத்ரஞ்ய: 17. அக்ஷர ஏவ ச |

இறைவன் தூய்மையானவர், அவர் வசிக்கும் உடலின் (ஜீவாத்மா) செயல்களால் கறைபடாதவர்; அறிபவன், பார்ப்பவன், பராமரிப்பவன், அனுபவிப்பவன், தன் எண்ணங்களில் மூழ்கியிருப்பவர்கள் பரமகதி அல்லது மோட்சத்தை அடைந்து, எல்லையற்ற நித்திய பேரின்பத்தை அனுபவிப்பவரே, அவர் இறுதி உணர்வு.

பூதாத்மா — உள்ளுயிராயிருந்தும் உடல்களுடைய களங்கம் தொடாத தூயர்
பரமாத்மா ச — தமக்கு உள்ளுயிராய்ப் பிறிதொன்று இல்லாது தாமே அனைத்தின் உயிராய் நிற்பவர்
முக்தானாம் பரமா கதி: — முக்தர்களுக்கான அறுதியான கதி அவர்
அவ்யய: — தாம் மாறாதவர், தம்மை அடைந்தாரையும் மாறாநிலையில் உய்ப்பவர்
புருஷ: – தம்மை அடைந்தாரை என்றும் புதிதாய் ஆனந்திப்பவர்
சாக்ஷீ – முக்தர்களின் ஆனந்தத்திற்கு சாக்ஷியாய் என்றும் ஆனந்திப்பவர்
க்ஷேத்ரக்ஞ: — அறிவுக்கு அறிவாய் நின்று உயர்நிலையை அறிபவர்
அக்ஷர: — மாற்றமும் எல்லையும் அற்றவர்
ஏவ ச — இவ்வண்ணமே என்றும் இருப்பவர்.

தூய ஆன்மா கொண்டவன் {பூதாத்மா},
உச்சமான உயர்ந்த ஆன்மா {பரமாத்மா},
விடுதலையடைந்த {முக்தியடைந்த} மனிதர்கள் அனைவரின் உயர்ந்த புகலிடமாக இருப்பவன் {முக்தாநாம்பரமாகதி},
மாற்றமற்றவன் {அவ்யயன்}, உறைக்குள் மறைந்து கிடப்பவன் {புருஷன்},
சான்றாளன் {ஸாக்ஷீ},
தான் வசிக்கும் உடல் உறையை அறிந்தவன் {க்ஷேத்ரஜ்ஞன்},
அழிவற்றவன் {அக்ஷரன்};(15)

குற்றம் அற்றவன் -ஒப்பிலி அப்பன்

10-பூதாத்மா -தூய்மையானவர் –தமக்கு உடலாய் இருக்கும் சித் அசித் இவற்றின் குற்றங்கள் தீண்டாதவர்
11-பரமாத்மா -அனைவருக்கும் ஆத்மாவாக இருப்பவர் -தனக்கு ஒரு ஆத்மா இல்லாதவர் –

முக்தர்களால் அடையத் தக்கவன் –

12-முக்தாநாம் பரமாம் கதி -முக்தர்கள் அடையும் இடமாய் இருப்பவர்
13-அவ்யய-யாரும் தம்மை விட்டு விலகாமல் இருப்பவர் –வைகுந்தம் அடைந்து திரும்புவது இல்லையே
14-புருஷ -முக்தர்களுக்கு தன்னையும் தன் குணங்களையும் பேர் ஆனந்தத்தோடு அனுபவிக்கக் கொடுப்பவர்
15-சாஷீ-மகிழும் முக்தர்களை நேரே கண்டு மகிழ்பவன் –
16-ஷேத்ரஜ்ஞ -முக்தர்கள் தம்மோடு மகிழும் நிலமான வைகுந்தத்தை அறிந்து இருப்பவர்
17-அஷர -முக்தர்கள் எத்தனை அனுபவித்தாலும் குணங்களால் குறையாதவன் –

——————

10-பூதாத்மா -பரிசுத்த ஸ்வாபம் உடையவன் –
பூதாத்மா–8 th -திரு நாமம் -அந்தர்யாமித்வம் சொல்லிற்று
அநச்நன் அந்ய அபிசாகதீதி -கனி புசிக்காமல் பிரகாசித்து கொண்டு இருக்கும் பறவை
ஏஷ சர்வ பூதாந்தராத்மா அபஹதபாப்மா –
அமலன் -ஆதிபிரான் –

ஆத் மத்வே அபி ஸம்ஸாரிவத் அஸ்ய ஸரீர பூத சித் அசித் தோஷ அநநுஷங்காத்
பூதாத்மா –
ஸூத்த ஸ்வபாவ:|
பராவரயோ: துல்யத்வே அபி ஸரீர ஸம்பந்தே அவர ஏவாத்மா கர்ம பலாநி புஞ்ஜாந: க்லிஶ்யதே (பராவரயோ: துல்யத்வே அபி-சரீர சம்பந்தம் பொதுவாக இருந்தாலும் -ஜீவாத்மா துன்பப்படுகிறார்-கர்ம வஸமாக இருப்பதால் )
|

“ஜஹாத்யேநாம் புக்த போகாம் அஜோ அந்ய:”; போஜயிதா து பர: ஸ்வா தந்த்ர்யேண ந புங்க்தே, சகாஸ்தி ச பரம் |
யதா ஶிஷ்யோஸித்தரா: விஶிஷ்டே அபி கஸாஸ்பர்ஸே கர்ம கர்த்ரு பாவ பேதேந ஶிஷ்ய ஏக ஏவ கஸயா பீட்யதே, ந ஸாஸிதா |

பிரம்பால் அடித்தாலும் -பிரம்பு தொடர்பு வாத்தியாருக்கு பிள்ளைக்கும் போல் -அரையன் சிறையன் இருவரும் போல்

விஜ்ஞாயதே ச “அநஶ்நந் நந்தயா அபிசாகஶீதி”,(முண்டக-பழம் உண்டு ஒளி குறைந்து -உண்ணாமல் ஒளி விஞ்சி )
“ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா ”,(சங்கை போக்க)
“ந மாம் கர்மாணி லிம்பந்தி”,-4-14-
“பஶ்ய தேவஸ்ய மஹாத்ம்யம் மஹி மாநம் ச நாரத |
ஸூப அஸூபை : கர்ம பிர்யோ ந லிப்யதி கதாசந ||” இத்யாதி |(சாந்தி பர்வம்)
ஸூத்ரிதம் ச “ஸம் போக ப்ராப்திரிதி சேந் ந வைசேஷ்யாத்” இதி || 10 ||(ஸ்வ இதர ஸமஸ்த விலக்ஷணன் -யாவையும் எவரும் தானாய் –தோய்விலன்-அந்தரத்தில் அந்தணன் -விலகி பரிஸூத்தன் )


தாம் ஆத்மாவாக இருந்தாலும் தோஷங்கள் தட்டாதவன் -பரிசுத்த ஸ்வ பாவம் யுடையவன் -ஜீவாத்மா மட்டும்
கர்ம பலன்களை அனுபவிப்பான் -கசை தொடர்பு ஆசிரியருக்கும் மாணவனுக்கும் யுண்டே -ஸ்ரீ பராசர பட்டர் —
உப்பில்லா பண்டமும் ஒப்பில்லாமல் ஆக்குமவன் -மட்டமான வஸ்துவையும் பெருமை படுத்துமவன்
ஆத்மீத்யவ சம்சாரித்வாதி அஸ்ய சரீரவத் -சித் அசித் சுத்த ஸ்வபாவ –

ஜஹாத் யேநாம் முக்த போகாம் அஜஸ் அந்யஸ் –தைத்ரிய நாராயண வல்லீ -10-5-பிறப்பற்ற ஜீவன் அனுபவித்து கிளம்ப
பரமாத்மா அனுபவிப்பதுடன் நிற்காமல் ஒளி வீசுகிறான்
அநஸ்நந் அந்யோ அபிசாக ஸீதி முண்டக -3-1-1-
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா –ஸூபால
ந மாம் கர்மாணி லிம்பந்தீ –ஸ்ரீ கீதை -4-11–
பஸ்ய தேவஸ்ய மஹாத்ம்யம் மஹிமாநம் ச நாரத சுப அசுபை கர்மபிரியோ ந லிப்யதே கதாசந –சாந்தி பர்வம் -340-26–
சம்போக பிராப்தி இதி சேத்ந வைசேஷ்யாத் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -1-2-8-அவன் இயல்பாகவே அனைவரையும் விட உயர்ந்தவன்

பரிசுத்தமான ஆத்மாவை யுடையவர் -நிர்குணர்-பூத க்ருத் போன்ற திரு நாமங்களால் சொன்ன குணங்கள்
இவன் இச்சையினால் கற்ப்பிக்கப் பட்டன -ஸ்ரீ சங்கரர்-

ஜீவாத்மாக்கள் பரிசுத்த  தன்மை எவன்  இடம் இருந்து பெறுகின்றனவோ அவன் பூதாத்மா –
புனிதமானவர்களின்  ஆத்மா -புனித ஆத்மா-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

ஓம் பூதாத்மா நம
பரிசுத்த ஆத்மா –வ்யாப்த கத தோஷம் தட்டாதவன்
உபாத்யார் கை பிரம்பு கொண்டு பிழையை திருத்துவது போலே
ஒரே சிறைக்குள்ளே கைதியும் தண்டிக்கும் அதிகாரியும் இருக்குமா போலே

————

  1. ஓம் பூதாத்மனே நம:

பூத ஆத்மா யஸ்ய பூதாத்மா கர்மதாராயோ வா 

ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு ஜீவராசிகளைப் படைப்பவர் போன்ற திருநாமங்களைக் கூறும்பொழுது அந்த பரம்பொருளுக்கு முக்குணங்களுக்குக் கீழ்படிந்தவரோ என்ற ஐயத்தை தூய்மையான ஆத்மா (என்ற இந்தத் திருநாமத்தினால் பீஷ்மாச்சார்யார்) போக்குகிறார். பகவான் ஸ்ரீ விஶ்ணு தூய்மையானவர், அனைவருக்கும் உள்ளுறையும் ஆத்மாவானவர்.  அவர் படைப்பது முதலான அனைத்து செயல்களையும் தம் கடமையாகக் கருதிச் செய்கிறார். எந்த குணத்திற்கு வசப்பட்டும் செய்வதில்லை, எனவே அந்த குணங்களினால் வரும் குற்றங்கள் அவரைத் தீண்டுவதில்லை. எனவே, பகவான் ‘பூதாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. ஓம் பூதாத்மனே நம:

எட்டாவது திருநாமம் பூதாத்மா (வடமொழியில் வரும் நான்காவது ப, “பாஸ்கரன்” என்ற சொல்லில் வருவது போல உச்சரிக்க வேண்டும்). இந்த திருநாமம் பூதாத்மா (வடமொழியில் வரும் முதல் ப, “பூ” என்ற சொல்லில் வருவது போல உச்சரிக்க வேண்டும்).

பூதக்ருதாதிபிர்குணதந்த்ரத்வம் பூதக்ருத் (ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு ஜீவராசிகளைப் படைப்பவர்) போன்ற திருநாமங்களில் அந்த பரம்பொருளுக்கு முக்குணங்களுக்குக் கீழ்படிந்தவர் ப்ராப்தம் என்ற குற்றம் ஏற்படுமா என்ற ஐயத்தை ப்ரதிஷித்யதே போக்குகிறார் பூதாத்மா இதி தூய்மையான ஆத்மா (என்ற இந்தத் திருநாமத்தினால்).

பூத தூய்மையான ஆத்மா ஆத்மா யஸ்ய யவரோ பூதாத்மா அவரே “பூதாத்மா”கர்மதாராயோ வா (படைப்பது முதலான அனைத்து செயல்களையும்) கடமையாகச் செய்கிறார் (எந்த குணத்திற்கு வசப்பட்டும் செய்வதில்லை, எனவே அந்த குணங்களினால் வரும் குற்றங்கள் அவரைத் தீண்டுவதில்லை).

“கேவலோ நிர்குணஸ்ச” (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.11)

(அவர்) தனிப்பட்டவர், முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவர்.

இதி ஶ்ருதே | இவ்வாறு, ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

குணோபராகச்வேச்சாதபுருஶஸ்யேதி கல்ப்யதே |

அந்த புருஶருக்கு (ஆத்மாவிற்கு), குணங்களுடன் தொடர்பு அவரது இச்சையால் உருவாகிறது என்றே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

——————

10. பூதாத்மா – தூய்மையானவர்–பூதாத்மா என்பது தூய்மையான அல்லது கறையற்ற ஆத்மா . பூதா ஆத்மா யஸ்ய ச பூதாத்மா – ஆத்மாவாக இருப்பவர் முற்றிலும் தூய்மையானவர்-தாமரை இலையில் உள்ள நீர்த் துளிகள் இலையில் ஒட்டாமல் இருப்பது போல, பகவானும் தான் இருக்கும் உடல்களின் செயல்களுடன் இணைந்திருந்தாலும் கறைபடாமல் இருக்கிறார்

ந மா கர்மா ஐ லிம்பந்தி ந மே கர்மா  – பலே ஸ்பி ঃ ஹ இதி மா யோ யோ  பீஜானாதி கர்மபிர் ந ச பத்யதே _4-14-
என்னைப் பாதிக்கும் எந்த வேலையும் இல்லை; செயல்களின் பலன்களுக்காக நான் ஆசைப்படுவதில்லை. என்னைப் பற்றிய இந்த உண்மையைப் புரிந்துகொள்பவன் வேலையின் பலன் வினைகளில் சிக்கிக் கொள்வதில்லை.

ந ச மாம் தாநி கர்மாணி நிபத்நந்தி தனஞ்ஜய
உதாசிநவதாஸிநம் அஸக்தঃ தேஷு கர்மஸு–9-9-

ஓ’தனஞ்சயா (அர்ஜுனா), இந்த உலகளாவிய நடவடிக்கைகள் என்னை ஒருபோதும் பிணைப்பதில்லை. இந்தச் செயல்கள் அனைத்திலும் நான் நடுநிலையாக, தொடர்பில்லாதவன்.

ஸ்வேதாஷ்வதார உபநிஷத் (6.11) கூறுகிறது, அவர் ‘கேவலோ நிர்குணாஷ்ச – அவர் தூய்மையானவர் மற்றும் குணங்களால் கறைபடாதவர்’.

——————————-

11-பரமாத்மா –
பரம புருஷன் நாராயணன் –

யதா ஸர்வாணி பூதாநி அநேந ஆத்ம வந்தி நைவம் அயம் அந்யேந கேநசித் ;
அத : பரமாத்மா |
பரோ மா அஸ்யேதி பரம :,
ப்ருஷாேதராதித்வேந ஸாதுத்வம்; பரமஶ்ச அஸௌ ஆத்மா சேதி |அநந்யேஶ்வர: |யதா “ஆத்மேஶ்வரம்”,
“தஸ்மாத் தாந்யத் ந பர: கிஞ்சநாஸ”,
“ந தத் ஸமஶ்ச அப்யதிகஶ்ச த்ருஶ்யதே”,
“யஸ்மாத் பரம் நா பரம ஸ்தி கிம்சித்”,ஸ்வேதார
“ந பரம் புண்டரீகாக்ஷாத் த்ருஶ்யதே பரதர்ஷப”,தைத்ரியம் 
“பரம் புண்டரீகாக்ஷாந்ந பூதம் ந பவிஷ்யதி”,
“ந தைவம் கேஸவாத் பரம்”,
“யஸ்மாத் பரஸ்மாத் புருஷாத் அநந்தாத் அநாதி மத்யாத் அதிகம் ந கிம்சித்”,
“ மத்த : பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி”,-(7-7)
“பரம் ஹ்யம்ருதம் ஏதஸ்மாத் விஶ்வரூபாந்ந வித்யதே”,
“பர: பராணாம் பரம : பரமாத்மா ” இதி|| 11 ||

பரோ மா அஸ்ய இதி பரம –
பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரம்
ஒத்தார் மிக்காரை இலையாய மா மாயன் -2-3-2-
நதத் சமச்ச அப்யதி கச்சத்ருயதே
மத்த பரதரம் நாந்யத் கிஞ்சி தஸ்தி -ஸ்ரீ கீதை
பர பராணாம் பரம பரமாத்மா -ஸ்ரீ விஷ்ணு புராணம்

எல்லாவற்றுக்கும் தாம் ஆத்மாவாக இருப்பது போலே தமக்கே மேல் ஓர் ஆத்மா இல்லாதவர் –
மேம்பட்டவர் இல்லாதவராய் ஆத்மாவாகவும் இருப்பவர் -தமக்கு மேம்பட்ட ஈஸ்வரர் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

பெருமாள் ஆராதனம் செய்த பெரிய பெருமாள் —
யதா சர்வாணி – பூதான் அந்யேன ஆத்மா பந்தி நைவம் அன்யேன கேன சிது அநகா பரமாத்மா –

ஆத்மேஸ்வரம்–தைத்ரியம்
தஸ்மாத் ஹ அந் யத்ர பர கிஞ்சநா ச –தைத்ரியம் -2-8-9-
ந தத் சமச்ச அப்யதிகச்ச த்ருச்யதே -ஸ்வேதாஸ்வர
யஸ்மாத் பரம் ந அபரம் அஸ்தி கிஞ்சித் -ஸ்வேதாஸ்வர
ந பரம் புண்டரீகாஷாத் த்ருச்யதே பரதர்ஷப–பீஷ்ம பர்வம் -62-2-
பரம் ஹி புண்டரீகாஷாத் ந பூதம் ந பவிஷ்யதி –பீஷ்ம பர்வம் -67-18-
ந தேவம் கேஸவாத் பரம்
யஸ்மாத் பரஸ்மாத் புருஷாத் அநந்தாத் அநாதி மத்யாத் அதிகம் ந கிஞ்சித்
மத்த பரதரம் ந அந்யத் கிஞ்சித் அஸ்தி -ஸ்ரீ கீதா -7-7-
பரம் ஹி அம்ருதம் ஏதஸ்மாத் விஸ்வரூபாத் ந வித்யதே —
பர பராணம் பரம பரமாத்மா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-10-

உயர்ந்தவராகவும் ஆத்மாவாகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

மிகவும் மேம்பட்டவர் -விரோதிகளை அழிப்பவர்-லஷ்மி பதி-அடியவர்களைக் காப்பவர் –
ஞானம் யுடையவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

“ஓம் பரமாத்மா நம
கேசவ பரம் நாஸ்தி –

—————

  1. ஓம் பரமாத்மனே நம:

பரமஸ்சாஸாவாத்மா சேதி பரமாத்மா  கார்ய காரண விலக்ஷணோ நித்ய சுத்த முக்த ஸ்வபாவ:

அனைத்திற்கும் மேம்பட்ட ஆத்மாவாக இருப்பதனால் பகவான் ‘பரமாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். செயல் மற்றும் விளைவுகளுக்கு அப்பாற்பட்டு எப்பொழுதும் தூய்மையாகவும், அறிவுடையவராகவும், பற்றுதலின்றியும் இருப்பதை தமக்கு இயற்கையாக உடையவர்.

பரமஸ்சாஸாவாத்மா சேதி எவரொருவர் அனைத்திற்கும் மேம்பட்டவரோ மற்றும் ஆத்மாவானவரோ பரமாத்மா அவரே பரமாத்மா. கார்யகாரணவிலக்ஷணோ செயல் மற்றும் விளைவுகளுக்கு அப்பாற்பட்டு நித்ய எப்பொழுதும் சுத்த தூய்மையாகவும் புத்த அறிவுடையவராகவும் முக்த பற்றுதலின்றியும் ஸ்வபாவ: இயற்கையாக உடையவர் |

———–

11. பரமாத்மா – உயர்ந்தவர்

பரமாத்மா என்றால் உயர்ந்தவர் அல்லது உயர்ந்தவர் இல்லாத இறுதி ஆத்மா. இந்த வார்த்தையை ‘பரம சாஸௌ ஆத்மா ச பரமாத்மா‘ அல்லது ‘பரோ மா அஸ்ய ச ஆத்மா பரமாத்மா–

உபத்ராஷ்டானுமந்தா ச பர்தா போக்தா மகேஸ்வரா
பரமாத்மேதி சாப்யுக்தா தேஹேஸ்மின் புருஷஹ் பரஹ்ம–13-23-
உடலுக்குள், தனி மனித உணர்வுக்கு உயர்ந்தவர், வசிப்பவர், கவனிப்பவர், பாதுகாப்பவர் மற்றும் உண்மையில் இறுதி கட்டுப்படுத்தி அத்துடன் இறுதி உணர்வு என விவரிக்கப்படுகிறது. அவர் சாட்சியாக இருந்து, ‘உபத்ராஷ்டா‘ மற்றும் ஒரே மாதிரியான ஞானம் ‘உன்மந்த‘ மற்றும் அனைத்தையும் பராமரிக்கும் பொறுப்பு ‘போக்தா‘, மேலும் படைப்பாளராக இருப்பது ‘மகேஸ்வரா’.

————

12-முக்தாநாம் பரமா கதி –

கல்யாண குணங்களால் நிறைந்தவன்
நீக்கமற நிறைந்த வியாபகம்
நியமிக்கிறவன்
முக் காலமும் ஸ்வாமி சேஷி
விவரித்து -ஐந்து -ஜகத் படைத்து -தாங்கி -விட்டுப் பிரியாமல் இருந்து –
ஜீவ ராசிகள் சத்தைக்காக ஆத்மாவாகவும் -நன்றாக வளர்த்து அருளி –சேஷத்வம் விளக்கம்
இதில் சங்கை -தோஷம் தட்டாது
பூதாத்மா -வ்யாப்த கத தோஷம் தட்டாமல்
தனக்கு வேறே அந்தராத்மா இல்லாமல் பரமாத்மா –
இதுவரை சேஷி விளக்கம்
இவனே பரம ப்ராப்யம் என்று இதில் –

கதி -இடம்
பரமா கதி -சிறப்பான கதி -அபர கதி -தாழ்ந்தது கைவல்யம்
இருவரும் முமுஷுக்கள் –
ரஹஸ்ய த்ரயம் அறிய வேண்டியது பகவத் லாபார்த்திகள்
அதே போல் முக்தர்களும் இரண்டு வகை –
முக்தாநாம் -பன்மை -பலர் உண்டே -அநேகர் இருப்பதால்
ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும்
ஜீவ பர பேதமும் உண்டே –

12-முக்தாநாம் பரமா கதி –

ஏவம் ஸர்வ ஸேஷிணமேவ பரம ப்ராப்யமாஹ –
முக்தாநாம் பரமா கதி: |
ப்ரக்ருதி பந்த அவித்யா கர்ம ஸம்ஸ்கார (வாசனைக்கு இந்தப் பத பிரயோகம் )ருசி விபாகேப்ய: ஆவரணேப்ய(ஆறும் ஆவரணம் )
ஏகாந்தோ அத்யந்த தஶ்ச விஶ்லிஷ்டா: முக்தா : |(ஒரே அடியாகவும் முழுகவும் போக வேண்டுமே)
ஆம்நாயதே ஹி (வேதாந்தம் )“தத் ஸுக்ருத துஷ்க்ருதே விதூநுதே”,
“அஶ்வ இவ ரோமாணி விதூய பாபம்”,
“நாம ரூப விஹாய”,(முண்டகம்-நதிகள் கடலில் கலந்த பின்பு பெயர் ரூபம் இருக்காதே-அம்ருத சாகரத்தில் நிமக்னம் ஆவோம் )
“ததா வித்வாந் புண்ய பாபாத் விமுக்த :”,
“ஜ்ஞாத்வா தேவம் முச்யதே ஸர்வ பாஸை :”,
“பித்யதே ஹ்ருேய க்ரந்தி:”,(முண்டகம்-த்ருஷ்டே பராவர -அவனைக்கண்டதும் ஸதா பஸ்யந்தி )
“ மாயா மேதாம் தரந்தி தே”;(7-சரண் அடைந்து முக்தர் )

ஶ்ரீநாராயணீயே(மஹா பாரதத்தை -நாராயண கதை என்று தொடங்கி )“யே ஹீநாஸ் ஸப்த தசபிர் : குணை : கர்மபிரேவ ச |
கலா: பஞ்ச தச த்யக்த்வா தே முக்தோ இதி நிஶ்சய:||” இத்யாதி |(ஸப்த தசபிர் -17 விஷயங்கள் தொலைத்து பஞ்ச பூதங்கள் இந்திரியங்கள் அஹங்காரம் மஹான்)

முக்தி -விட்டதும் தாண்டியதும் சொல்லி -மேல்-கதி -அடைந்த இன்பம் பற்றி  சொல்ல பிரமாணங்கள்

ஏவம் ஸ்ரஸ்த (அழிக்கப்பட்ட )ஸமஸ்த ஸம்ஸார நிகலாநாம் அநந்த ஸம்வித ஆநந்த கநேந (உப்புக் கட்டி போல் ஆனந்த மயம் )ஸ்வரூபேண அபஹத பாப்மத்வாதி ஸத்ய ஸங்கல்பத்வ அவதிநா குண அஷ்டகேந போகேந ச (குணங்களிலும் ஆனந்தத்தில் சாம்யா பத்தி) பரேண ஆத்மநா ஸாம்யம் ச ஸித்தாந்திதம்
“திவ்யேந சக்ஷுஷா மனஸ ஏதாந் காமாந் பஶ்யந் ரமதே”,
“நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதி”,(முண்டகம்)
“ மம ஸாதர்ம்யம் ஆகதா :”,(14-2-ஒத்த தர்மம் அடைகிறான் -மாலே –ஆலின் இலையாய் அருள் -ஒன்றாம் என்னும் அல்லல் எல்லாம் தவிர்த்தான் )
“ஏவ மப் யுபந்யாஸாத் பூர்வ பாவாத் அவிராேதம் பாதராயண:” (ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-4-7-)இத்யத்ர |

“ஏவ மப் யுபந்யாஸாத் பூர்வ பாவாத் அவிராேதம் பாதராயண:” இத்யத்ர |
முன்னால் உபந்யாஸம் -ஆனந்தத்தில் சாம்யா பத்தி
இப்பொழுது எட்டு குணங்களில் சாம்யா பத்தி
இரண்டிலும் விரோதம் இல்லையே
ஆகவே பட்டர் இரண்டையும் சேர்த்தே முன்பே அருளிச் செய்துள்ளார்

ஸாயுஜ்யம் மட்டும் அல்லவே
ஸாரூப்யம்
ஸாமீப்யம்
ஸாலோக்யம்
எல்லாம் உண்டே

ப்ரக்ருஷ்ட ஸத்த்வ உபாதாநேந ரூபேண ஸாம்யம் ச “ஸ ஏகதா பவதி த்விதா பவதி”,
“ஜக்ஷத் க்ரீடந் ரம மாண:”,(சாந்தோக்யம் -நன்றாக உண்டு-குணங்களை அனுபவித்து – ஆனந்தித்து இருப்பார்)
“காமாந்நீ காம ரூப் யநு ஸம்சரந்”,
“தம் ப்ரஹ்ம கந்த : ப்ரவிஸதி”,(கௌஷீகதி)
“தம் ப்ரஹ்ம ரஸ: ப்ரவிஸதி”,
தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி”,
“த்வாதஸாஹவத் உபயவிதம் பாதராயண:” (ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-4-12-)இதி |

(ஒரு எஜமான் பல எஜமானர் -பலத்துக்காகவும் பலம் இல்லாமலும் 12 நாள் செய்யும் யாகம் போல் -சரீரம் கொண்டும் அசரீரியாகவும் கைங்கர்யம் இங்கும் உண்டே)

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வாவன வெல்லாம் தொழுவார்கள் -8-3-10-

மாமுபேத்ய புநர்ஜந்ம துக்காலயமஷாஷ்வதம்.–நாப்நுவந்தி மஹாத்மாந ஸம் ஸித்திம் பரமாம் கதா—৷৷8.15৷৷
மூன்றையும் சொல்லி -இதில் பகவல் லாபார்த்தி உடைய ஏற்றம் -சித்தி மூவருக்கும் -சம்சித்தி இவருக்கே –
யாதாம்யா ஸ்வரூப ஞானம் பெற்று -விஸ்லேஷத்தில் தரிக்காமல் -சம்ஸ்லேஷத்தில் நித்ய மநோ ரதம் கொண்டு –
என்னை அடைந்து பரம ப்ராப்யம் பெறுகிறார்கள் –

மகாத்மாக்கள் இவர்கள் -மற்ற இருவர் கூட சேர்ந்து நினைக்க கூடாதே –
ஜென்மம் தேகம் இனிமேல் இல்லை –கைவல்யார்த்தி மாம் உபாத்தியே இல்லையே-அல்பம் -அவனும் சித்தி -இவர் சம்சித்தி –
தேகம் -துக்கத்துக்கு ஆலயம் -சாஸ்வதம் இல்லாதது —நித்யம் அல்லாதது -புறம் சுவர் ஓட்டை மாடம் -புரளும் பொழுது அறிய மாட்டீர் –
வியன் மூ உலகு பெறினும் தானே தானே ஆனாலும் – சயமே அடிமை -பகவல் லாபம் விட்டு -அடியார் அடியார் -ஆழ்வார்கள் நிலைமை –
புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி

எல்லாருக்கும் தலைவரான தாமே – -அவித்யை கர்மம் சம்ஸ்காரம் ஆசை விபாகம் போன்ற தடைகளை முற்றும் துறந்த
முக்தர்கள் முடிவாக அடையும் இடமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
ஏவம் சர்வ சேஷிணமேவ பராமாத்மா பிராப்யத்வம் முக்தாநாம் பரமாத்மா கதி –

தத் ஸூஹ்ருத துஷ்க்ருதே தூனுதே -கௌஷீதகீ -உபாசகன் புண்ய பாபங்களை உதறுகிறான்
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம்–சந்தோக்யம் -8-13-1-
புண்ய பாபே விதூய –முண்டகம் -3-1-3-
ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த –முண்டக -3-2-1-
ஞாத்வா தேவம் முச்யதே ஸர்வபாசை -ஸ்வேதாஸ்வரம்
பித்யதே ஹ்ருதய கிரந்தி –முண்டகம் -2-2-8-
மாயா மேதாம் தரந்தி தே –ஸ்ரீ கீதை -7-14–
ஏ ஹீநா சப்த தசாபி குணை கர்ம அபிரேவ ச கலா பஞ்ச தசா த்யக்த்வா தே முக்தா இதி நிச்சய –சாந்தி பர்வம்

திவ்யேன சஷுஷா மனசா ஏதாந் காமாந் பஸ்யந் ரமதே–சாந்தோக்யம் -8-12-5-
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -முண்டகம்
மம சாதரம்யம் ஆகதா
ஏவம் அபி உந்யாசாத் பூர்வ பாவாத் அவிரோதம் பாதராயண –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-4-7-
ச ஏகதா பவதி -சாந்தோக்யம்
ஐஷத் க்ரீடந் ரம மாண–சாந்தோக்யம்
காமாந் நீ காம ரூப்ய அநு ஸஞ்சரன்–தைத்ரியம்
தம் ப்ரஹ்ம கந்த ப்ரவிசதி தம் ப்ரஹ்ம ரஸ ப்ரவிசதி –கௌஷீதகீ
தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -கௌஷீதகீ
த்வா தசா ஹவத் உபயவீதம் பாதாரயாண –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-4-12-

அத்ர முக்தா நாமிதி பஹு வசநேந தேஷாம் பேதோ பஹுத்வம் ச ஸ்பஷ்டம் (ஈறில-ஒண் பொருள் -ஈறில வண் புகழ்) | ததா ச “பராம்ருதாத் பரிமுச்யந்தி ஸர்வே ”,(அவன் அருளால் அனைவரும் முக்தி அடைகிறார்கள்)
“ மஹி மாநஸ் ஸ சந்தே”,
“ஸாதர்ம்யம் ஆகதா :”,
“மாமுபயாந்தி தே” இத்யாதி ச|

ஸாக்ஷீ,(15-மேல் வரும் திரு நாமம் -பார்ப்பவன் இவன் பார்க்கப்படும் ஜீவர்கள் வேறே ) முக்தாநாம் கதி: இத்யுக்த்யா பகவதா ச பேத : |
ததா ச “ஜுஷ்டம் யதா பஶ்யதி அந்யம் ஈஸம் அஸ்ய மஹிமாநமிதி வீத ஸோக:”,(முண்டக -சோகம் தீரப் பெற்ற-அவன் தீர்க்கிறான் -பேதம் ஸ்பஷ்டம் )
“ப்ருத காத் மாநம் ப்ரேரிதாரம் ச மத்வா”,(ஸ்வேதார-வேறே வேறே என்று அறிந்து முக்தி அடைகிறான் )
“புருஷமுபைதி திவ்யம்”,
“ஸஹ ப்ரஹ்மணா விபஶ்சிதா ”,(ஸஹ-கூடி என்றாலே பேதம் ஸ்பஷ்டம்)
“பரம் ஜ்யோதி ருப ஸம்பத்ய”,
“முக்தோப ஸ்ருப்ய வ்யபதேஸாச்ச” (1-3-2)இத்யாதி |(ஸாம்ய ஸ்ருதிகள் -ஸஹ ஸ்ருதிகள் -ஸா தர்மய ஸ்ருதிகள் -மூன்றுமே உண்டே)

ஸ்பஷ்டம் ச மோக்ஷதர்மே
“ஸ ஹி நாராயணோ ஜ்ஜேயஸ் ஸர்வாத்மா புருஷோ ஹி ஸ: |
ந லிப்யதே மலைஶ்சாபி பத்ம பத்ரமிவாம்பஸா ||(தாமரை இலைத் தண்ணீர் போல் கர்மவஸம் அற்று இருக்கிறார்)
கர்மாத்மா த்வபரோ யோ அஸௌ மோக்ஷ பந்தைஸ் ஸ யுஜ்யதே |
ஸ ஸப்த தசகே நாபி ராஶிநா யுஜ்யதே து ஸ: ||” இதி |
அத : தத்யேந, மித்யா பூதேந வா உபாதிநா, கும்பாதிநேவ நப:, அவச்சிந்நம் ப்ரஹ்மைவ ஸம்ஸரதி, முக்தவ் து பேத ஏவ நாஸ்தீதி மதம் ஸாஸ்த்ரேணைவ பர்யுதஸ்தம் |

உபாதி மறைக்க -பிரமித்து பலவாக தோன்றி -ஐக்ய ஞானம் வந்தால் ஜீவ முக்தி -நிரஸனம்
உபாதி பொய்யா மெய்யா -இரண்டாகவும் இருந்தாலும் -கடாகாசம் -கடம் உடைத்தால் ஓன்று தானே -கடம் உபாதி
அதே போல் ப்ரஹ்மம் உபாதியால் மறைக்கப் பட்டு
பர ப்ரஹ்மத்துக்கு பிரமை -போன்றவை நிரஸனம்

தேஷாம் -அஞ்ஞானம் நீங்கியவர்களுக்கு ஆதித்யன் போல் பளிச்சிடும் -கீதை
அஞ்ஞானம் நீங்கிய பின்பும் பன்மை -அபேதம் நிரஸனம்-நத்யவாஹம் இத்யாதி -2- 12- உபக்ரமம் -நித்யம் தத்வ த்ரயமும் –

உயிர்கள் மெய் விட்டு ஆதிப் பரனோடு ஒன்றாம் என்னும் அல்லல் எல்லாம் ஒழித்தான் ராமானுஜன் மெய் மதிக்கடல் –

முக்தா நாம் -பன்மை -பலர் உண்டே
பராம்ருதாத் பரி முச்ச யந்தி சர்வே –முண்டக
மஹிமாநஸ் ச சந்தே
சா தர்ம்யம் ஆகதா –ஸ்ரீ கீதை -14-2-
மாம் உபாயந்தி தே –ஸ்ரீ கீதை -10-10-
இங்கு திரு நாமங்கள் -15-517-மூலம் அவனே சாக்ஷி என்றும் அவனே இலக்கு என்றும் சொல்லி
எம்பெருமானுக்கு முக்தர்களுக்கும் உள்ள வேறுபாட்டையும் காட்டுகிறார்

ஜுஷ்டம் யதா பஸ்யத்யந்யம் ஈசம் அஸ்ய மஹிமாநம் இதி வீத சோக –முண்டகம் -3-1-2-
ப்ருதக் ஆத்மா நம் ப்ரேரிதாரம் ச மத்வா–ஸ்வேதாஸ்வரம்
புருஷம் உபைதி திவ்யம் –முண்டகம்
ஸஹ ப்ராஹ்மணா விபச்சிதா -தைத்ரியம்
பரம் ஜ்யோதி ரூப சம்பத்யா -சாந்தோக்யம்
முக்த உபஸ் ருப்ய வ்யபதேசாத் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூதரம் -1-3-2-
ச ஹி நாராயனோ ஜேய சர்வாத்மா புருஷோ ஹி ச ந லிப்யதே மலைச்சாபி பதமபத்ரம் இவ அம்பசா கர்மாத்மா
து அபரோ யஸ் அசவ் மோக்ஷ பந்தே ச யுஜ்யதே ச சப்த தசகே நாபி ராசிநா யுஜ்யதே து ச –சாந்தி பர்வம் -352-14-/15-

ப்ரஹ்ம வேத ப்ரஹ்ம ஏவ பவதி –முண்டக
தத் பாவ பாவம் ஆபந்ந ததா அசவ் பரமாத்மநா பவதி அ பேதீ–ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-95-வேறுபாடு இல்லை என்றும்
தேவாதி பேதோ அபத்வஸ்தே நாஸ்த்யே வா வரேண ஹி ஸஹ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -திரை விலகுவதைச் சொல்லும்

தர்சனம் பேத ஏவ -பேர் அருளாளன் வார்த்தை-வேதம் முழுவதுமே பிரமாணம் –உடையவன் நாராயணன் -என்றுஉணர்த்தவே -வந்து தோன்றினார் உடையவர் –

ப்ரஹ்ம வேத ப்ரஹ்மை பவதி” இ” (இவ போல் ஆகிறான் )இத் யபேத வாதஶ்ச முக்யா ஏவ | யதா ஸோ அயம் கௌரிதி கண்ட முண்டாதிஷு |(கண்டம்-கொம்பு பாதி – முண்டம் -கொம்பு இல்லை -வேறே ஓன்று -வெவ்வேறே காலம்-பேத வாக்யத்துக்கும் சாம்யா பத்தி வாக்யங்களுக்கும் அர்த்தம் சொல்ல முடியாதே )
அத பேத வாதிநாம் து முக்தி விஷயா பேத ஸாம்யா வாதா பஜ்யேரந் |
ஔபாதிக பேத வாதிநாம் (யாதவ பாஸ்கர மதம் -உபாதியால் பேதம் -முக்தி ஆனால் பேதம் போகும் என்று சொல்லுவார்கள் )ச முக்தி ஸ்வரூப பயாங்கோபகமாத் முக்தே: அபுருஷார்தத்வம், பேத வாத அஸாமஞ்ஜஸ்யம் ச ஸ்யாேதாம் |

(முக்தி ஆனவுடன் ஸ்வரூபமே போகும் ப்ரஹ்மமே முக்தி என்றால் முன்பு ப்ரஹ்மம் பந்தப்பட்டு இருக்குமோ-அத்வைதி படி உபதேசம் பொருந்தாதே
அர்ஜுனன் உண்மையா கீதாச்சார்யன் உண்மையா –
இருவருமே உண்மையாகவே இருந்தால் தானே உபதேசம் பொருந்தும் -இயற்கையால் தாச பூதர் என்பதை இயற்கையில் அபேதம் என்று தப்பாக சொல்வார் )

இத மேவ ஸாம்யம் முக்தா வபேதோ வ்யாக்யாத :, “தத் பாவ பாவம் ஆபந்ந ததா அஸௌ பரமாத்மநா, பவத் யபேதீ” இதி |
தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண: பாவா: ஜ்ஞாந சக்த்யாதய: ஸ்வபாவா:, தேஷாம் பாவ: – ஆவிர்பாவ:, குணைஸ் ஸாத்ருஶ்யம் |(விஷ்ணு புராணம் -)

அவனுடைய பாவனை இவன் இடம் உத்பத்தி ஆவதால்
இடை பேச்சு -தன்வீ பாவம் -ஆண்டாளுக்கு வந்தது -ஆகவே மாமான் மகளே கூப்பிட வேறே ஒருத்தி உண்டே
நம்மாழ்வார் கடல் ஞாலம் செய்தேனும் நானே என்னும் —
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ-
அது வேறே
கூடிற்றால் நல் உறைப்பு -அது அதுவே –
என்னுள் கலந்தான் -யானும் தானும் –கலந்து ஒழிந்தோம்

அந்யேஷாம் த்விதீயோ பாவ ஸப்தோ வ்யர்த : |(அவன் இவன் ஆனான் இல்லை -அவன் பாவம் இவன்  அடைந்தான் என்று அன்றோ சொல்கிறது )
முக்தவ் பேத நிஷே தஶ்ச தேவாத் யுபாதி விஷயோ வ்யஞ்ஜித :
“தேவாதி பேதே அபத்வஸ்தே நாஸ்த்யேவ ஆவரணோ ஹி ஸ:” இதி |(விஷ்ணு புராணம் -)

கதி ஸப்தஶ் ஸைஷ: கர் மணி க்திந்நந்தே |
கதி: ப்ராப்தி: | ஈப்ஸித தமம் கர்மோத்தேஶ்யம் |
ஏதேந முக்தி தத் ப்ராப்யயோ : ஸேஷ ஸேஷி பாவோ தர்ஶித : |

நான் பழத்தை நறுக்கினேன் -செயப்படு பொருள் -இரண்டாம் வேற்றுமை
முக்தா நாம் பரமாம் கதி -அத்தை அடைந்து -பிராப்தி
கர்ம உத்தேச்யம் -செய்யப்படும் பொருள்

ஶ்ரூயதே ச “ஏதம் ஆநந்த மய ஆத்மாநம் உப ஸம்க்ரம்ய”,(அடைந்து )
“அநுஸஞ்சரந்”,(தொடர்ந்து சென்று)
“யேந யேந ததா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி, தத்யதா தருண வத்ஸா வத்ஸம் வத்ஸோ வா மாதரம்”,
“சாயா வா ஸத்த்வம் அநு கச்சேத்”, “ததா ப்ரகாரம்” இதி |

முக்தனுக்கும் அவனுக்கும் சேஷ சேஷி பாவம் என்பதை
ஏதம் ஆனந்த மயம் ஆத்மாநம் உப சங்க்ரம்ய–தைத்ரியம் –ஆனந்த மயமான ப்ரஹ்மத்தை அடைந்த பின்
அநு ஸஞ்சரன் -தைத்ரியம் -முக்தன் பரமாத்மாவை பின் செல்கிறான்
ஏந ஏந காதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி தத் யதா தருண வத்சா வத்சம் வத்சோ வா மாதரம் -பசு கன்று போலே
சாயா வா சத்வம் அநு கச்சேத் –நிழல் போலே
பிரதிபந்தகங்கள் நீங்கி சேஷத்வம் பிரகாசிக்குமே

தர்மி க்ராஹக ப்ரமாண ஸித்தம் ச அவரஸ்ய ஆத்மந: ஸ்வாபாவிகம் ஸேஷத்வம் ஜ்ஞாநாதிவந் மோஷே ந திரஸ் க்ரியதே |(முக்த திசையிலும் சேஷத்வம் போகாதே-ஞானம் இங்கும் அங்கும் உண்டாமோ போல் -அதே பிரமாணம் சேஷத்வம் அங்கும் உண்டே என்றே சொல்லும் நீதி வானவர் -சேஷத்வம் அறிந்து இருக்கும் நித்ய முக்தர் )
கிம் து நிவாரக வாரணாத் ஆவிர்பவதி (தடுப்பு நீங்கி சேஷத்வம் நன்றாக புரியும் அங்கு )| உக்தம் ஹி
“ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யதே”;

வைஷ்ணவே தர்மே “யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா மல ப்ரக்ஷாலநாந்மணே : |
(ஒளி புதிதாக ஏற்படுத்த வேண்டாம் )ததா ஹேய குணத்வம்ஸாத் அவ போதாதயோ குணா: ||
ப்ரகாஶ்யந்தே ந ஜந்யந்தே நித்யா ஏவ ஆத்மநோ ஹி தே ||
ஜ்ஞாநம் வைராக்யம் ஐஶ்வர்யம் தர்மஶ் ச மநுஜேஶ்வர|
ஆத்மநோ ப்ரஹ்ம பூதஸ்ய நித்யம் ஏதச் சதுஷ்டயம் ||”,
“ஸம்பத்ய ஆவிர்பாவ: ஸ்வேநே ஸப்தாத்”(ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-4-1)இதி ச |

ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே–சாந்தோக்யம்
யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா பல ப்ரஷால நாத்மனே ததா ஹேய குணத்வம்சாத் அவபோதா தயோ குணா ப்ரகாசயந்தே
ந ஜந்த்யந்தே நித்யா ஏவ ஆத்மநோ ஹி தே ஞானம் வைராக்யம் ஐஸ்வர்யம் தர்மம்ச் ச மனுஜேஸ்வர
ஆத்மநோ ப்ரஹ்ம பூதஸ்ய நித்யாமேதத் சதுஷ்டயம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -104-55-/56–
சம்பத்ய ஆவிர்பாவ ஸ்வேந சப்தாத் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-4-1-

நநு “ஆப்நோதி ஸ்வா ராஜ்யம் ஸ ஸ்வராட் பவதி” (தைத்ரியம் சீஷா வல்லி -சொல்லுமே -சங்கை எழுப்பி சமாதானம் காட்டி அருளுகிறார் )இத்யுதாஹ்ருத்ய,
“அத ஏவ ச அநந்யாதிபதி:(ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-4-9-)” இதி ஸ்வாதந்த்ர்யம் நிர்ணீதம் |

கதமஸ்ய பரைதமர்த்யம் அபுருஷார்தத்வம் ச பரதந்த்ரஸ்ய ஸ்யாத்?

மந்த !மைவம் பரிபூ: | ஆத்மாதிபதிம் பகவந்தம் அந்தரேண அந்யேந க்லேஸ கர்மாதிநா பரவத்த்வ நிவ்ருத்தி: அநந்யாதிபதித்வம்; ந புநரநாதத்வம் |
ததா ஸதி அநதிபதி: இத்யே தாவத் உச்யேத ; ந து அநந்யாதிபதி: இதி |
(அநந்யாதிபதித்வம்-வேறே ஒரு அதிபதி இல்லாதவர் என்றே சொல்லும் -அதிபதியே இல்லை என்று சொல்ல வில்லை
இவனைத் தவிர வேறே ஒருவருக்கு அடிமைப்பட்டு உழல மாட்டானே )

ந ச ப்ரிய தமஸ்வபதி பாரதந்த்ர்யம் அபுருஷார்த்த :,
ராஜ்ஜோ தாராதவ் ப்ரியம் கர தமத்வோ பலம்பாத் |

(மேல் அன்பால் கணவனுக்கு பரதந்த்ரமாய் இருப்பது புருஷார்த்தம் இல்லை என்று சொல்ல மாட்டோம்
ஸேவா -நாய் தொழில் விட்டு விடு -என்றால்
சேஷத்வம் துக்க ரூபமாய் அன்றோ என்னில்-அபிமத விஷயத்தில் உகக்குமே
காளிதாஸன் கும்ப தாஸன் -)

ஸூசிதஶ்ச பஹுதா குண ப்ரதாந பாவ:
“ஜகத் வ்யாபார வர்ஜம்”,(ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-4-4-17-)
“போக மாத்ர ஸாம்ய லிங்காச்ச” ,(ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-4-4-21-)
இதி ஈஶ்வரேஶிதவ்ய பாவ வர்ஜம் போக மாத்ரேண தயோஸ் ஸாம்யமிதி ।

ஸ்ரீ விஷ்ணு தத்த்வே -பார தந்த்ர்யம் பரே பும்ஸி ப்ராப்ய நிர்கத பந்தந: ।
ஸ்வாதந்த்ர்ய மதுலம் லப்த்வா தேநைவ ஸஹ மோததே ॥

தத்ரை வாந்யத்ர-ஸ்ரீ விஷ்ணு தத்த்வே-
* ஸ்வத்வ மாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் ।
உபயோரேஷ ஸம்பந்தோ ந பரோ அபி மதோ ॥மம

ஶ்ரீ நாராயணீயே *
வ்ரதா வஸாதே ஸுஸூபாந் நராந் தத்ருஶிமோ வயம் ।
ஶ்வேதாம்ஶ் சந்த்ர ப்ரதீகாஸாந் ஸர்வ லக்ஷண லக்ஷிதாந்।
நித்யாஞ்ஜலி க்ருதாந் ப்ரஹ்ம ஜபதஸ் : ப்ராகுதங்முகாந் ॥(ப்ராகுதங்முகாந்-வடகிழக்கு திசை நோக்கி கைகூப்பி )

* க்ருதாஞ்ஜலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந:, *
அதீந்த்ரியா(இந்திரிய வசம் இல்லாமல் )அநாஹாரா அநிஷ்யந்தா – ஸ்ஸுகந்திந: இத்யாதிநா ஶ்தவே த்வீப வாஸிநாம்
திவ்ய ரூபாத்யுபேதத்வம் பகவத் தாஸ்ய- பரிசரணைக ப்ரியத்வம் ச ப்ரபஞ்சய ததேவ முக்தாநாம் லக்ஷண முக்தம்
*யே அபி -முக்தா பவந்தீஹ நரா பரம ஸத்தம । தேஷாம் லக்ஷண மேதத்தி யச்ச்வே தத்வீப- வாஸிநாம் । இதி ।(இவர்களை விளக்கி இவர்கள் போல் முக்தர் என்கிறது )

மேல் பரம கதி-என்பதால் கைவல்ய லக்ஷணம் -தாழ்ந்த முக்தன் பற்றி-ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் -இத்யாதி

பரமேதி விஸேஷணேந முக்தா நாமேவ கேஷாம் சிதர்வாசீநாம் கதிர்கம்யதே ।
க்ருஹ்யதே ச நிர்முக்த ஜரா மரணாத்மக கைவல்ய லக்ஷணா
*ஜரா மரண மோக்ஷாய மாம் ஆஶ்ரித்ய யதந்தி யே இதி ।-(7-29)

ஸம்ஸார பரம பதயோர் மத்யே தேஷாம் ஸ்தாநம் ச(கைவல்யர் ஸ்தானம்)
* யோகிநாம் அம்ருதம் ஸ்தாநம் காத்ம ஸந்தோஷ காரிணாம் இதி । ஏவம் முக்தாநாம் பரமா கதி:,-(1-16-38-அப ரமா கதி –மஹா லஷ்மி கேள்வன் இல்லாத -திரு வில்லாத்தேவர் )

* ஸா காஷ்டா ஸா பரா கதி:(கட உபநிஷத்)
* விஶ்வாத்மாநம் பராயணம்,
*மாமேவ அநுத்தமம் கதிம்,
* ஸோ அத்வந: பாரமாப்நோதி *
ஆத்ம லாபாந்ந பரம் வித்யதே இத்யாதி ஸுலபம் ॥ 12 ॥

இங்கு ஒரு ஆஷேபம் –
ஆப் நோதி ஸ்வா ராஜ்யம்-தைத்ரியம்
ஸ்வ ராட் பவதி -சாந்தோக்யம்
அத ஏவ ச அநந்ய அதிபதி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-4-9-
என்றும் உள்ளதே -முக்தன் எப்படி பரமாத்மாவுக்கு வசப்பட்டது என்றும் அவனுக்காகவே உள்ளார்கள் என்றும் எவ்வாறு கூறலாம்

இதுக்கு பட்டர் சமாதானம் -அநாதி பதி என்று சொல்லாமல் -அநந்ய அதிபதி-
ஆனந்த மயமாகும் தன்மையில் மட்டும் சாம்யம்
ஜகத் வியாபார வர்ஜம் –4-4-17-
போக மாத்ர சாம்யா லிங்காச்ச -4-4-21–
பாரதந்தர்யம் பரே பூம்சி ப்ராப்ய நிர்கத பந்தன ஸ்வா தந்தர்யம் அதுலம் லப்த்வா தேநேவ ஸஹ மோததே –ஸ்ரீ விஷ்ணு தத்வம்
ஸ்வத்வம் ஆத்மநி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மநி ஸ்திதம் உபயோர் ஏஷ சம்பந்தோ ந பரோ அபிமதோ மம –ஸ்ரீ விஷ்ணு தத்வம்
பிரதாவசாநே ஸூசுபாந் நராந் தத்ரு சீமோ வயம் ஸ்வேதாந் சந்த்ர பிரதீகாசாந் சர்வ லக்ஷண லஷிதாந்
நித்யாஞ்சலி க்ருதாந் ப்ரஹ்ம ஜபத பிராகுதங்க முகாந் –மவ்சல பர்வம்
க்ருத அஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிநா —மவ்சல பர்வம்
அதீந்திரியா அநாஹார அநிஷ் யந்த ஸூ கந்திந-
யே அபி முக்தா பவந்தீஹ நரா பரத சத்தம தேஷாம் லக்ஷணாம் ஏதத்தி யஸ் ஸ்வேத த்வீப வாசி நாம் –ஸ்ரீ கீதை -7-29–

கதி என்ற பதத்துக்கு பரமா -சிறப்பு விசேஷணம் இருப்பதால் ஒரு சிலர் கைவல்யம்
ஜரா மரண மோஷாயா மாம் அஸ்ரித்ய யதந்தி யே –ஸ்ரீ கீதை -7-29–
யோகி நாம் அம்ருதம் ஸ்தானம் ஸ்வ ஆத்மா சந்தோஷ காரிணாம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-6-38–
சா காஷ்டா ச பரா கதி –கட -3-11-
மாம் ஏவ அநுத்தமாம் கதிம்–ஸ்ரீ கீதை -7-18-
சோ அத்வந பாரம் ஆப்னோதி –கட -3-9-
ஆத்ம லாபாத் ந பரம் வித்யதே –என்று பரமாத்மாவை விட உயர்ந்த குறிக்கோள் கதி ஏதும் இல்லை என்றதே

இவ்வாறு பாஷ்யம் குத்ருஷ்ட்டி நிரசனம் செய்யும் பொருட்டு விஸ்தாரம் இதில்

முக்தானாம் பன்மை -ஜீவர்கள் பலர்
ஜீவ ஈஸ்வர பேத அபேத விஷய சர்ச்சை செய்து ஸித்தாந்தம் நிரூபணம்
பரமா கதி -என்று கேவல ஆத்ம அனுபவமாகிய கைவல்யம் சொன்னவாறு-

முக்தர்களுக்கு உயர்ந்த கதி -அவரைத் தவிர வேறு தேவதைகளை அடைய வேண்டியது இல்லை –
அவரை அடைந்தவர் திரும்புவது இல்லை -ஸ்ரீ சங்கரர்–

மிக உயர்ந்தவர்களான முக்தர்களால் மட்டுமே அடையத் தக்கவர் -ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

ஓம் முக்தானாம் பரமாம் கதி
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்

—————-

12-ஓம் முக்தானாம் பரமாகதயே நம:

முக்தானாம் முக்தி அடைந்தவர்களுக்கு பரமா ப்ரக்ருஷ்டா (பரமா என்றால்) மிகவும் மேலான கதிர்கந்த்வ்யா (கதி என்றால்) அடையக்கூடிய இலக்கு தேவதா எந்த தெய்வமோ புனராவ்ருத்த்யசம்பவாத்தத்கதஸ்யேதி எவரை ஒருமுறை சென்று அடைந்தால் மீண்டு வருவதென்பது இல்லையோ முக்தானாம் பரமா கதி: அவரே “முக்தானாம் பரமா கதி” |

எந்த தெய்வம் முக்தி அடைந்தவர்கள் அடையக்கூடிய மிகவும் மேலான இலக்காக இருப்பவரோ எவரை ஒருமுறை சென்று அடைந்தால் பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சார சுழற்சிக்கு மீண்டும் வருவதென்பது இல்லையோ அந்த பகவான் (ஸ்ரீ விஶ்ணு) ‘முக்தானாம் பரமா கதி’ (முக்தி அடைபவர்களின் மேலான இலக்கு) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘மாமுபேத்ய து கௌந்தேய புனர்ஜன்ம ந வித்யதே ||’ (ஸ்ரீமத் பகவத்கீதை 8.16)

குந்தி மகனே!!! என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை.

இதி பகவத்வசனம் | இவ்வாறு, பகவான் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறுகிறார்.

—————-

12. முக்தானம் பரம கதிஹி – அவர் அனைத்து விடுதலை பெற்ற ஆத்மாக்களின் இறுதி இலக்கு

 பஹூனாம் ஜன்மநாமந்தே ஞானவான்மாம் ப்ரபத்யதே
வாசுதேவா ஸர்வம் இதி ச மஹாத்மா ஸுதுர்லபா–7-9-
: பல பிறவிகளின் முடிவில், ‘வாசுதேவரே எல்லாம்’ என்ற அறிவைப் பெற்றவர், என்னை அடைகிறார். இப்படிப்பட்ட ஞானமுள்ளவர் மிகவும் அரிது

மாம் உபேத்ய து கௌந்தேய புனர்ஜன்ம ந வித்யதே –8-16-அதாவது என்னை நாடுகிற எவரும் மீண்டும் மீண்டும் ஏற்படும் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.
பரம் என்றால் இறுதி மற்றும் கதி என்றால் இலக்கு அல்லது இலக்கு; எனவே பரமகதி என்பது இலக்கு, அதை அடைந்த பிறகு நீங்கள் வேறு எதையும் விரும்ப மாட்டீர்கள். பொதுவாக, எந்தவொரு குறிக்கோளின் தன்மையும் நீங்கள் அந்த இலக்கை அடைந்தவுடன், அடுத்த உயர்ந்த இலக்கை அமைக்க விரும்புவீர்கள். இது பரமகதியின் நிலை அல்ல, இதுவே இறுதி இலக்கு –

————–

13-அவ்யய -விலக்காதவன் –

இது முதல் ஐந்து திரு நாமங்கள் -12 திரு நாமம் விவரணம்
இதில் யாரும் தம்மை விட்டு விலகாமல் இருப்பவர் -முக்தர்கள் நஸ புநர் ஆவர்த்ததே -மீளா வைகுந்தம் என்றபடி-

இத மேவ பஞ்சபிர் நாமபிர் உப பாதயதி । ந வீயதே (விலகுவது இல்லை )ந வ்யபகம்யதே (திரும்ப வருவதும் இல்லை )அஸ்மாதித்யவ்யய: ।
ஏரச் । ஏவம் ப்ரத்யய: விநய: ஜய: இத்யேவ மாதய : ।
ந ஹி பகவாந் கதம்சித் ஸம்ஸார மஹார்ணவ அதுத்தீர்ண (தாண்டியவனை )
ஸ்வ சரணார விந்தம் ப்ராப்த வந்தம் புநராவர்தயதி ।(நல்கி என்னை விடான் நம்பி நம்பியே-திண்ணன் வீடு முதல் -பலிஷ்டமான மோக்ஷம்)

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காளமேகத்தை கதியாக்கி – மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக எண்ணும் மாறன் என
கேதம் உள்ளதெல்லாம் கெடும்ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி–91-

அத ஏவாம்நாஸிஷு: –
* ஏதேந ப்ரதிபத்ய மாநா இமம் மாநவம் ஆவர்தம் நாவர்தந்தே
* ந ச புநராவர்ததே ந ச புநராவர்ததே(சாந்தோக்யம் )
* அநாவ்ருத்திஸ் ஶ்ப்தாதாத் நாவ்ருத்திஶ் ஸப்தாத் இதி ।

யம ஸ்ம்ருதவ் ஸத்வம் வஹதி
ஸூக்ஷ்மத்வாத் பரம் நாராயணம் ப்ரபும் ।
பரமாத்மாநம் ஆஸாத்ய பரம் வைகுண்டமீஶ்வரம் ॥
அம்ருதத்வாய கல்பேந ந நிவர்ததே வை புந: । இதி ।

ஹாரீதே யதி தர்மே
* யதி தர்ம கதஶ் ஸாந்த: ஸர்வ பூத ஸமோ வஶீ ।
ப்ராப்நோதி பரமம் ஸ்தாநம் யத் ப்ராப்ய ந நிவர்ததே ॥ இதி ச ॥ 13 ॥

நச புனராவர்த்தததே-நச புனராவர்த்தததே
அநாவ்ருத்திச்சப்தாத் -அநாவ்ருத்திச்சப்தாத் -ப்ரஹ்ம ஸூத்ரம்
திண்ணன் வீடு முதல் முழுதுமாய் –நம் கண்ணன் கண்ணல்லது இல்லையோர் கண்ணே -2-2-1-

அவ்யய-
தம்மை விட்டு ஒருவரும் அகலாமல் இருப்பவர் -சம்சார பெரும் கடலை கடந்து தன்னை அடைந்தார்
மீளாத படி அருளுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ந ச புன ஆவர்த்ததே -ஸ்ரீ பாஷ்யம்-தன்னைப் போலே ஆக்கி பிரியாமல் வைத்து கொள்பவன் அன்றோ —
ந வீயதே ந வீயகம்யதே அஸ்மாத் இதி –

அவன் இடம் இருந்து யாரும் திரும்ப அனுப்படுவது இல்லை என்பதால் அவ்யய –
இதே போலே ப்ரத்யய -94-/ விநய -510-/ ஜய -511-திரு நாமங்களும் உண்டே
ஏதேந பிரதிபத்யமாநா இமம் மாநவம் ஆவர்த்த ந ஆவர்த்தந்தே –சாந்தோக்யம் –4-15-6-
ந ச புந ராவர்த்ததே -ந ச புந ராவர்த்ததே —சாந்தோக்யம் -8-15-1-
அநா வ்ருத்தி சப்தாத் அநா வ்ருத்தி சப்தாத் -4-4-4-
சத்வம் வஹதி ஸூஷ்மத்வாத் பரம் நாராயணம் ப்ரபும் பரமாத்மாநம் ஆ ஸாத்ய பரம் வைகுண்டம் ஈஸ்வரம்
அம்ருதத்வாய கல்பதே ந நிவர்த்ததே வை புந –எம ஸ்ம்ருதி
யதி தர்ம கதி சாந்த சர்வ பூத சமோ வசீ ப்ராப் நோதி பரமம் ஸ்தானம் யத் ப்ராப்ய ந நிவர்த்ததே

நாசம் அற்றவர் -விகாரம் அற்றவர் -ஸ்ரீ சங்கரர்–

சூர்யன் ஆகாயத்தில் சஞ்சரிக்க நியமனம் தந்தவர்-ஆட்டைப் போலே எதிரிகளை எதிர்க்கச் செல்பவர் -ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

ஓம் அவ்யய நம
நச புநராவ்ருத்தி லக்ஷணம் -யதா -நிகில ஹேய ப்ரத்ய நீக –கல்யாணை கதான–
ஜகஜ் ஜன்மாதிகாரணம் -சமஸ்த வஸ்து விலஷணம் — சர்வஜ்ஞ– சத்யசங்கல்ப –ஆஸ்ரித வாத்சல்யை கஜலதி–
நிரஸ்த சமாப்யதிக –சம்பாவன பரம காருணிக –பர ப்ரஹ்ம அபிதான –பரம புருஷ
அனாவ்ருத்திச் சப்தாத் அனாவ்ருத்திச் சப்தாத்
நச பரமபுருஷ சத்யசங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஜஞாநினம் லப்த்வா கதாசிதாவர்த்தயிஷ்யதி

சேதன லாபம் எம்பெருமானுக்கு பரம புருஷார்தம் அன்றோ
வாரிக் கொண்டு என்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்து தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் காட்கரை யப்பான் கடியனே -9-6-10-

——————-

  1. ஓம் அவ்யயாய நம:

ந வ்யேதி நாஸ்ய வ்யயோ விநாஶோ விகாரோ வா வித்யத இதி அவ்யய:

ந வ்யேதி பகவானைப் பகுத்துப் பிரிக்க முடியாததாலும் நாஸ்ய வ்யயோ விநாஷோ விகாரோ அவருக்கு அழிதல், மாற்றங்கள் இல்லாததாலும் வா வித்யத இதி அவ்யய: அவர் அவ்யயர் (அழிவற்றவர்) என்று அழைக்கப்படுகிறார் |

பகவானைப் பகுத்துப் பிரிக்க முடியாததாலும் அவருக்கு அழிதல், மாற்றங்கள் இல்லாததாலும் அவர் அவ்யயர் (அழிவற்றவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘அஜரோSமரோSவ்யய:’–“மூப்பற்றவர், இறவாதவர், அழிவில்லாதவர்”–இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் கூறுகின்றன.

—————

13. அவ்யயா – அழியாதவர்

‘வியா’ இல்லாதவன், அதாவது எந்த விதமான மாற்றத்தையும், சிதைவையும், சீரழிவையும் அனுபவிக்காதவன் என்பதே அடிப்படைப் பொருள். பிருஹதாரண்யக உபநிஷத் (4.4.25) பகவானைப் பற்றி கூறுகிறது ‘ அஜரோ அமரோ அவ்யயயா– அவருக்கு முதுமையோ, சிதைவோ அல்லது எந்த மாற்றமும் இல்லை’.

மூதோயம் நாபிஜானாதி லோகோ மாம் அஜம் அவ்யயம் அர்த்தம் – 7-25-அறிவில்லாதவன் என்னைப் பிறக்காதவனாகவும், மாறாதவனாகவும் உணர்வதில்லை-

நாராயண ஸூக்தம் பகவானைப் பற்றி ‘அனந்தம் அவ்யாயம் கவிம் – அழியாத மற்றும் அழியாத பார்ப்பான்’ என்று கூறுகிறது.

ஸ்ரீ பராசர பட்டர் – விளக்குகிறார், ‘தன்னை நாடுபவர்களை (பிறப்பும் இறப்பும் திரும்பத் திரும்ப வரும் சுழற்சி) சம்சாரத்திற்கு அவர் திருப்பி அனுப்புவதில்லை

————

14-புருஷ -மிகுதியாகக் கொடுப்பவர்

புரு பஹு ஸநோ தீதி புருஷ: । ஸநோதே: தாந கர்மண:
* அந்யேஷ்வபி த்ருஶ்யதே இதி ட:।
முக்தேப்யோ அபி வாங் மநஸ அபரிச்சேத்ய குண விபவ ஸ்வாநுபவம் ததாதி ஹி பகவாந் ।(தன்னை அனுபவம் கொடுக்கிறார்)

தன்னைக் கொடுத்து ஆனந்திப்பிக்கிறார்
தூமணி-பாசுரம் இவன் அனுபவிக்கிறான் -நோற்று -அவன் அனுபவப்பிக்கிறான்
இரண்டுமே தூக்கம்
இரண்டாவது ஆற்ற அனந்தல்

தம்மையே தமக்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை
இம்மைக்கும் எளிமை நோய்க்கும் மறுத்தும் அவனே
தன்னையே தரும் கற்பகம் அன்றோ

யதா
* ஏஷ ஹ்யேவாநந்த யாதி
*ஸோ ऽஶ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ, ப்ரஹ் மணா விபஶ்சிதா ,
* திவ்யேந சக்ஷுஷா,
* மநஸைதாந் காமாந் பஶ்யந் ரமதே,
* ஜக்ஷத் க்ரீடந் ரமமாண:,
* ஸ தத்ர பர்யேதி,
* காமாந்நீ காம ரூபீ
* ரஸோ வை ஸ:, ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா ஆநந்தீ பவதி
அஸ்மின் தஸ்ய ச தத் யோகம் ஸாஸ்தி,
* தத் தேது வ்யபதே ஸாச்ச இதி ॥ 1-1-5-॥

வேண்டிற்று எல்லாம் தரும் என் வள்ளல் -3-9-5-
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -2-7-1
தம்மையே ஒக்க அருள் செய்வர்
ஸோஅச்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மனா விபச்சிதா
ரசோவை ச ரசக்குஹ்யேவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி
புருஷ -407- ஸ்ரீ ராம பரமான திருநாமம் –

புருஷ –
மிகுதியாகக் கொடுப்பவர் -முக்தர்களுக்கு தம் குண விபவ அனுபவங்களை கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
தன்னையே தன் பக்தர்களுக்கு அர்ப்பணிப்பவன் –தன்னையே எனக்குத் தந்த கற்பகம் -செல்லப்பிள்ளை -வந்தானே –

புரு -மிகுதி / ஸநோதி–அளிக்கும் செயல்-முக்தர்கள் மீது தன்னை அனுபவிக்கும் ஆனந்தம் குணங்கள் மேன்மைகள்
அனைத்தும் நெஞ்சாலும் நினைக்க முடியாத அளவு வாரி வழங்குகிறான்
ஏஷ ப்ரஹ்ம ஏவ ஆனந்த்யாதி –தைத்ரியம் -1-2-
ஸோ அஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா –சாந்தோக்யம்
திவ்யேந சஷுஷா மனசா ஏதாந் காமாந் பஸ்யன் ரமதே -சாந்தோக்யம்
ச தத்ர பர் யேதி ஐஷத் க்ரீடந் ரமமாணா –தைத்ரியம்
காமாந்தி காமரூபீ –தைத்ர்யம்
ரஸோ வை ச ஹி ஏவம் அயம் லப்தவா ஆனந்தீ பவதி –தைத்ரியம்
அஸ்மின் அஸ்ய ச தத் யோகம் அஸ்தி -4-4-12-
தத்தே து வ்யபதேசாத் ச -1-1-5-

புரம் என்னும் யுடலில் இருப்பவர் -உயர்ந்த பொருள்களில் இருப்பவர் -முன்பே இருந்தவர் –
பலன்களைக்   கொடுப்பவர் -சர்வ வியாபி -சம்ஹாரம் செய்பவர்  -ஸ்ரீ சங்கரர்–

மோஷ ரூபம் ஆகிய முழுப் பலத்தையும் பூர்ணனான தன்னைத் தருபவன் -முன்பே உள்ளவர் –
பல செயல்களை யுடையவர் -அசுரர்களை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

ஓம் புருஷாய நம
முக்தர்களுக்கு நிரவதிக ஆனந்தம் -சாயுஜ்யம் அளிப்பவன் -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –

———————-

  1. ஓம் புருஶாய நம:

‘புருஶ:’ என்ற இந்த திருநாமத்திற்கு ஆச்சார்யாள் 6 விளக்க உரைகளை அளித்துள்ளார். முன்பே கூறியிருந்தபடி சில திருநாமங்களுக்கு ஆச்சார்யாள் பல விளக்க உரைகளை அளிக்கிறார். அவை மீண்டும் வருமிடத்தில் அந்த பற்பல விளக்கங்களிலிருந்து சிலவற்றை மீண்டும் உரைக்கிறார். இவற்றை “புனருக்தி” தோஷமாக கருத இயலாது.

புரம் ஶரீரம் தஸ்மின் ஶேதே புருஶ:

புரம் ஶரீரம் “புரம்” என்றால் உடல் தஸ்மின் அதற்குள் ஶேதே (அந்தராத்மாவாக) சயனித்திருப்பதால் புருஶ: அவர் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |

பகவான் அனைத்து ஜீவராசிகளின் உடலுக்குள்ளும் அந்தராத்மாவாக சயனித்து இருப்பதால் அவர் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘நவத்வாரம் புரம் புண்யமேதைர்பாவை: ஸமன்விதம் |

வ்யாப்ய ஶேதே மஹாத்மா யஸ்தஸ்மாத் புருஶ உச்யதே ||’ (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 210|37)

அந்த மஹாத்மாவானவர் ஒன்பது ஓட்டைகளை உடைய இந்த உடலெங்கும் நிறைந்து, சயனித்திருக்கிறார். எனவே, அவர் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார்.

இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

யத்வா அஸ்தேவ்யர்த்யஸ்தாக்ஷரயோகாத் ஆஸீத் புரா பூர்வமேவேதி விக்ரஹம் க்ருத்வா வ்யுத்பாதித: புருஶ:

யத்வா அல்லது அஸ்தேவ்யர்த்யஸ்தாக்ஷரயோகாத் அஸ் என்ற வேர் சொல்லை பின்னின்று முன்னாக எடுத்துக்கொண்டு ஆஸீத் இருத்தல் புரா பூர்வமேவேதி ‘புரா’ என்றால் அனைத்திற்கும் முன்னமிருந்தே விக்ரஹம் க்ருத்வா இணைத்துப் பார்த்தால் வ்யுத்பாதித: கிடைக்கும் புருஶ: அவர் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |

அல்லது, அஸ் என்ற வேர் சொல்லை பின்னின்று முன்னாக எடுத்துக்கொண்டு, புரா என்ற சொல்லோடு இணைத்துப் பார்த்தால் ‘புருஶ’ என்ற சொல் கிடைக்கும். இதன் பொருள், அனைத்திற்கும் முன்னமிருந்தே பகவான் இருப்பதனால் அவர் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பூர்வமேவாஹமிஹாஸமிதி தத் புருஶஸ்ய புருஶத்வம்’

நான் இங்கு முன்னமிருந்தே இருக்கிறேன். இதுவே, அந்த “புருஶரின்” இயல்பாகும்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் கூறுகின்றன.

அதவா புருஶு பூரிஶு உத்கர்ஶஶாலிஶு ஸத்வேஶு ஸீததீதி புருஶ:

அதவா அல்லது புருஶு புருஶு என்றால் பூரிஶு பல்வேறு உத்கர்ஶஶாலிஶு உயர்ந்த குணமுடைய ஸத்வேஶு ஜீவாத்மாக்களினுள்ளே ஸீததீதி இருப்பதால் புருஶ: பகவான் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |

அல்லது புரு என்றால் பல்வேறு என்று பொருள் கொண்டு, பல்வேறு உயர்ந்த குணமுடைய ஜீவாத்மாக்களினுள்ளே இருப்பதால் பகவான் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புரூனி ஃபலானி ஸனோதி ததாதீதி வா புருஶ:

புரூனி புரு என்ற வேர்சொல்லிற்கு ஃபலானி (கேட்பவர்க்குத் தகுந்தபடி) வெவ்வேறு பலன்களை ஸனோதி ததாதீதி சனோதி, அதாவது வாரி வழங்குபவர் வா என்பதால் புருஶ: பகவான் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |

புரூனி + நோதி = புருஶ:

புரு என்றால் பலன்கள் என்ற பொருள் கொண்டு, கேட்பவர்க்குத் தகுந்தபடி வெவ்வேறு பலன்களை வாரி வழங்குவதால் பகவான் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

புரூனி புவனானி ஸம்ஹாரஸமயே ஸ்யதி அந்தம் க்ரோதீதி வா

புரூனி புரு என்ற வேர்சொல்லிற்கு புவனானி உலகம் ஸம்ஹாரஸமயே (அவற்றை) அழிக்க வேண்டிய காலத்தில் ஸ்யதி அந்தம் க்ரோதீதி வா அவற்றை அழிப்பதால் புருஶ: பகவான் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |

புரூனி + ஸ்யதி = புருஶ:

புரு என்றால் உலகம் என்ற பொருள் கொண்டு, அழிக்க வேண்டிய காலத்தில் அவற்றை அழிப்பதால் பகவான் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பூர்ணத்வாத் பூரணாத்வா ஸதனாத்வா புருஶ:

பூர்ணத்வாத் தான் (எவ்வித குறையுமின்றி) நிறைவானவராகவும் பூரணாத்வா (அடியவரின் குறைகளை போக்கி அவர்களை) நிறைவுபெறச் செய்வதினாலும் தனாத்வா நிலைத்து நிற்பதனாலும் புருஶ: பகவான் ‘புருஶ’ என்று அழைக்கப்படுகிறார் |

தான் (எவ்வித குறையுமின்றி) நிறைவானவராகவும், (அடியவரின் குறைகளை போக்கி அவர்களை) நிறைவுபெறச் செய்வதினாலும், நிலைத்து நிற்பதனாலும் பகவான் “புருஶ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘பூரணாத்ஸதனாச்சைவ ததோSஸௌ புருஷோத்தம:’ (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.11)

நிறைவுபெறச் செய்வதினாலும், நிலைத்து நிற்பதனாலும் அவரே புருஷோத்தமராவார்.

இதி பஞ்சமவேதே | இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

———————-

14. புருஷா – எல்லா உயிர்களிலும் வசிப்பவர்

இந்த நாமத்தை பல வழிகளில் விளக்கலாம்.

  • புரு சநோதி இதி புருஷ – தன் பக்தர்களுக்கு ஏராளமாகக் கொடுப்பவர். புரு என்றால் போதுமான அளவு மற்றும் சனோதி என்றால் அருளுவது.
  • புரம் ஷரீரம், தஸ்மிந் ஷேதே இதி புருஷஹ் – நமது உடல் ஒரு வசிப்பிடமாகக் கருதப்படுகிறது, அவர் அங்கே வசிக்கிறார். இந்த கருத்து மகாபாரதத்தில் ‘நவத்வாரம் புரம் புண்யம் எதையும்ர்பாவைஸ் சமன்விதம் வ்யாப்ய ஷேதே மஹாத்மா யஸ் தஸ்மாத் புருஷ உச்யதே – இந்த உடல் ஒன்பது நுழை வாயில்கள் கொண்ட கோட்டை (புரம்) மற்றும் அவர் அங்கு தங்கியிருப்பதால் அவர் புருஷன் என்று அழைக்கப்படுகிறார்’ என்று விவரிக்கப்பட்டுள்ளது.
  • புரா ஆஸீத் இதி புருஷா – எதுவும் இருப்பதற்கு முன்பே அவர் அங்கே இருந்தார். தைத்ரிய சம்ஹிதை (1.23) ‘பூர்வமேவ அஹம் இஹ ஆஸம் இதி தத் புருஷஸ்ய புருஷத்வம் – பழங்காலத்திலிருந்தே நான் இங்கு இருக்கிறேன், அதனால் நான் புருஷஹ் என்று அழைக்கப்படுகிறேன்’ என்று கூறுகிறது.
  • பூரயதி இதி புருஷ – எங்கும் இருப்பதை நிறைவு செய்து நிறைவைத் தருபவர்.

————-

15-சாஷீ

ஏவம் தாந் ஆநந்தயந், ஸ்வய மபி த்ருப்யந் (ஆனந்தம் கொடுத்து பார்த்து தானும் ஆனந்தித்து )ஸாக்ஷாத் கரோதீதி ஸாக்ஷீ ।
* ஸாக்ஷாத் த்த்ரஷ்டரி ஸம்ஜ்ஞாயாம் இதி இநி: । விஶிநஷ்டி ஹி முக்த ப்ராப்யம்
* ப்ரஹ் மணா விபஶ்சிதா இதி ।
விவிதம் பஶ்யச்சித்த்வம் ஹி விபஶ்சித்த்வம் ॥15॥

பார்த்து இருப்பவன் –தனை அனுபவிப்பித்து மகிழும் முக்தர்களை பார்த்து மகிழுமவன்-
சர்வஞ்ஞன் –
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார் குழாங்களையே -2-3-10-

விபஶ்சித்த்வம் –விவிதம் பஸ்யச்சித்தம் -வெவ்வேறே விதங்களில் பார்க்கும் அறிவு -அறியும் தன்மை

சாஷீ-
முக்தர்களை மகிழ்வித்து தாமும் மகிழ்ந்து பார்த்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஏவம் தாநு ஆனந்தாயன்னு ஸ்வயம் அபி த்ருப்தாயன்னு சாஷாத் கரோதி –

முக்தர்கள் தன்னால் அளிக்கப்பட ஆனந்தத்தை அனுபவிப்பதை நேரடியாக காண்கிறான்
ப்ரஹ்மணா விபச்சிதா –ஆனந்த வல்லி –அனைத்தையும் ஒரே நேரத்தில் காண்கிறான்

விமுகனாய் இருக்கும் திசையிலும் தான் ஏற நாள் பார்த்து இருக்கும்
சம்சாரி பக்கல் உள்ளம் குடி போய்
இருக்கும் வியந்து –என் தன் கருத்தை –கண்டு கொண்டே
மூன்று தத்துக்கு பிழைத்த ஆழ்வாரையே பார்த்துக் கொண்டே
ஸுக்ரீவனையே பார்த்து கண்டு கொண்டே இருந்தவன் ஆழ்வாரைக் கண்டு கொண்டே இருக்கக் கேட்க வேண்டுமோ

சஹகாரி இல்லாமல் எல்லாவற்றையும் நேரில் பார்ப்பவர் -ஸ்ரீ சங்கரர்—

நேரில் பார்ப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்–

ஓம் சாக்ஷி நம
சர்வஞ்ஞன்–முக் காலத்தில் நடப்பதை யுகபத் நேராக காண்பவன் அன்றோ -சர்வவித்
ஸூர்யன் தேஜஸ்ஸால் அனைத்தையும் காட்டி -எதனாலும் தான் பாதிக்காமல் இருப்பானே –
முக்தர் நித்யர் சதா பஸ்யந்தி காண்பதை காண்பவன்

—————

  1. ஓம் ஸாக்ஷிணே நம:

ஸாஷாத் அவ்யவதானேன ஸ்வரூப  போதேன ஈக்ஷதே பஶ்யதி ஸர்வமிதி ஸாக்ஷி 

ஸாக்ஷாதவ்யவதானேன “ஸாக்ஷாத்” என்றால் வேறு எவற்றின் துணையுமின்றி ஸ்வரூப போதேன தன்னுடைய இயற்கையான ஞானத்தால் (அறிவால்) ஈக்ஷதே பஶ்யதி உள்ளதை உள்ளவாறு காண்கிறார் ஸர்வமிதி அனைத்தையும் (அனைவரையும்) ஸாக்ஷி அவர் ‘ஸாக்ஷி’ என்று அழைக்கப்படுகிறார் |

வேறு உபகரணங்களின் துணையுமின்றி தன்னுடைய இயற்கையான ஞானத்தாலேயே (அறிவாலேயே) அனைத்தையும் (அனைவரையும்) உள்ளதை உள்ளவாறு காண்பதால் (அறிவதால்) பகவான் “ஸாக்ஷி” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமக்கு காண்பதற்கு கண்களின் துணை வேண்டும், கேட்பதற்கு காதுகள் வேண்டும். பகவானுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. இதனால், அவருக்கு கண்களே இல்லையென்றோ, காதுகளே இல்லையென்றோ பொருள் அல்ல. அவர் ஞானத்தாலேயே அனைத்தையும் அறிவதால் அவருக்கு இவற்றின் துணை கொண்டு தான் காண வேண்டும் என்ற நியதி கிடையாது.

ஸாக்ஷாத்த்ரஶ்டரி ஸம்ஞாயாம்’ (பாணினி சூத்ரம் 5.2.91)

பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:

“ஸாக்ஷாத்” என்ற சொல், ஒரு வ்யக்தியைக் குறிக்கும் பொழுது, ‘இணி’ என்ற விகுதியுடன் கூட்டவேண்டும்.

எனவே இந்த திருநாமத்தை நாமாவளியாகக் கூறும்பொழுது “ஓம் சாக்ஷிணே நம:” என்று “இணி” என்ற விகுதியுடன் கூட்டி உச்சரிக்கப்படுகிறது.

——————————–

16-ஷேத்ரஜ்ஞ-

இடத்தை அறிபவன் -நித்ய விபூதியை அறிந்தவன் –
பரமே வ்யோமன் ஸோஅச்நுதே
அயோத்யை-அபராஜிதா ஸ்ரீ வைகுண்டம்

இத்தம் தேப்ய: ஸ்வாநுபவம் தாதும் ததேகாந்தம் ஷேத்ரம் ஜாநாதீதி-
ஷேத்ரஜ்ஞ: ।

கீழ் மூன்று திரு நாமங்களை முக்தானாம் பரமாம் கதி -திரு நாமம் விளக்கம்
இது -அனுபவம் கொடுக்கும் க்ஷேத்ரம் அறிந்து -ஏகாந்தமான க்ஷேத்ரம் அறிந்தவன் ஷேத்ரஞ்ஞன்
கீதையில் ஜீவாத்மாவை ஷேத்ரஞ்ஞன்
நல்ல குணம் விளைவிக்க அறிந்தவன்
க்ஷேத்ரம் ஷேத்ரஞ்ஞன் -இருவரையும் சரீரமாகக் கொண்ட என்னை நினை -தத்வ த்ரயமும் சொல்லும் ஸ்லோகம்

* ஆதோ அநுபஸர்கே க: இதி க: ।
ஸ்வ போக ஸம்ருத்தி ஸமுத்பவ பூமித்வாத் ஷேத்ரம் பரம வ்யோம –தாத்ருஸ (அப்படிப்பட்ட மிகச் சிறந்த )ஸரீரத்வாத்வா, யதா(ஸ்ரீ வைகுண்டம் என்றும் தனது திரு மேனியையும் இங்கே சொன்னவாறு-ஷேத்ரஞ்ஞனாகவும் என்னை அறிவாய் கீதை உம்மைத்தொகை ஷேத்ரமும் நானே
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம )

* ஆகாஸ ஸரீரம் ப்ரஹ்ம இதி ।(தைத்ரியம் சீஷா வல்லி )
ததா ச ஶ்ரீநாராயணீயே முக்த ப்ராப்ய: ஷேத்ரஜ்ஞ தயா விஸேஷ்யதே
* முக்தா நாம் து கதிர் ப்ரஹ்மந் ஷேத்ரஜ்ஞ இதி கல்ப்யதே இதி ।

தத்தி முக்தா நாம் பகவத் அநுபவ ஸ்தாநம்
* பரமே வ்யோமந், ஸோ அஶ்நுதே
* தேஹ நாகம் மஹிமாநஸ் ஸ சந்தே, (அனுபவம் மஹிமை அடையும் இடம் )
* நாக ப்ருஷ்டே விராஜதி
* ஸ மோதேந த்ரிவிஷ்டபே ; (மூன்று மடங்கு த்ரிபாத் விபூதி )

ததா , அபுநர் புபூஷோர்  ஆஶீ மந்த்ர: (திரும்ப வராமல் இருக்க ஆசைப்படுவோர் சொல்லும் மந்த்ரம் )
* ராத்ரி: ஸ்வ மேதத் புஷ்பாந்தம்
* யத் புராணம் ஆகாஸம் தத்ர மே ஸ்தாநம் குர்வந் ந புநர்பவாய,(நக்ஷத்ரம் இல்லாமல் ஆகாசம் பார்க்க தக்கது அல்லது அல்ல -அது ஸ்வயம் போக்யம்)
* யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம் ;மம(மனம் வைக்க என்னைத் திருத்தி பின்பு வீடு திறுத்துவான் –ஆழ்வார் வரும் முன்பு -)
மோக்ஷ தர்மே * ஶ்ருதி ப்ரமாண ஆகம -மங்கலைஸ்து யுக்தே ஜரா ம்ருத் யுபயாத தீத : । ததோ நிமித்தே ச பலே விநஷ்டே (கர்மங்களும் அதன் பலமான சரீரமும் நஷ்டமான பின்பு )அலிங்கம் ஆகாஸ அலிங்க ஏஷ: ॥(இங்கு போல் கர்ம வசப்பட்ட சரீரம் அடையாளம் இல்லாதவர் ) வைஷ்ணவே

* ஏகாந்தி நஸ் ஸதா ப்ரஹ்ம த்யாயந்தே யோகிநோ ஹி யே ।
தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத்வை பஶ்யந்தி ஸூரய: ॥

ப்ராஹ்மே (ப்ரஹ்ம புராணத்தில் )* யத் தந் ந கிம்சிதித் யுக்தம் மஹா வ்யோம யதுச்யதே, இத்யாதி பஹூக்த்வா (இவ்வாறு பலவாகச் சொல்லி )
* தந் மோக்ஷஸ் தத் பரம் தேஜோ விஷ்ணோ ரிதி விநிஶ்சய: ॥

ஶ்ரீவாராஹே அகஸ்த்யம் ப்ரதி பகவாந் (அகஸ்தியர் இடம் அவனே அருளிச் செய்தது )— * பஶ்ய லோக மிமம் மஹ்யம் யோ ந வேதைஸ்து த்ருஶ்யதே । த்வத் ப்ரியார்தமயம் லோகோ தர்ஶி தஸ்தே த்விஜோத்தம ।

வாராஹோ அகஸ்த்ய:, * பகவம் ஸ்த்வந் மயோ லோக: ஸர்வ லோக வரோத்தம : । ஸர்வ லோகா மயா த்ருஷ்டா: ப்ரஹ்ம சக்ராதிநாம் முநே ॥
அயம் த்வ பூர்வ லோகோ மே ப்ரதிபாதி தபாேதந ।(தபோதனர் -சிஷ்யருக்கு அகஸ்தியர் சொல்லுவது )
ஸம்பத் ஐஶ்வர்ய தேஜோபிர் ஹயை ரத்ந மயைஸ் ததா ॥
அத்யாபி தம் லோக வரம் த்யாயஸ் திஷ்டாமி ஸுவ்ரத ।
கதா ப்ராப்ஸ்யே த்வஸௌ லோக: ஸர்வ லோக வரோத்தமே : । இதி, வாராஹோ
* இதி சிந்தா பரோ அபவம் இத்யாதி

ருக்விதௌ, * கார்யாணாம் காரணம் பூர்வ வசஸாம் வாச்ய முத்தமம் | யோகாநாம் பரமாம் ஸித்திம் பரமம் தே பதம் விது: ॥ இதி ।

ஆரண்ய பர்வணி ஆர்ஷ்டி ஷேண:, * யமாஹு: ஸர்வ பூதாநாம் ப்ரக்ருதே: ப்ரகதிம் த்ருவாம் । அநாதி அநிதநம் தேவம் ப்ரபு நாராயணம் பரம் ।
ப்ரஹ்மண: ஸதநாத் தஸ்ய பரம் ஸ்தாநம் ப்ரகாஸதே ॥

இத்யாதிநா தத் பதம் பஹுதா விஸேஷ்ய,
* தத்ர கத்வா புநர்நமம் லோக மாயாந்தி பாரத ।
ஸ்தாந மேதந் மஹாராஜ த்ருவம் அக்ஷரம் அவ்யயம்(நித்யம் தேயாது அழியாமல் மூன்று பெருமைகள் )॥ ஈஶ்வரஸ்ய ஸதா ஹ்யேதத் ப்ராண மாத்ர யுதிஷ்டிர || இதி॥

ஸ்ரீ ஹரி வம்ஸே வைதிக புத்ராநயநே பகவாந், (உடலோடும் கொண்டு வந்தவனைப் பற்றி ஒன்றும் குறைவிலன் -கலியன் )
* ப்ரஹ்ம தேஜோ மயம் திவ்யம் ஆஶ்சர்யம் த்ருஷ்டவாநஸி । அஹம் ஸ பரத ஶ்ரேஷ்ட மத் தேஜஸ் தத் ஸநாதநம் ॥
ப்ரக்ருதிஸ் ஸா மம பரா வ்யக்த அவ்யக்தா ச பாரத । தாம் ப்ரவிஶ்ய பவந்தீஹ முக்தா பரம ஸத்தம ।
ஸா ஸாம்க்யாநாம் கதி: பார்த யோகிநாம் ச தபஸ்விநாம் । தத் பரம் பரமம் ப்ரஹ்ம ஸர்வம் விபஜதே ஜகத் –இத்யாதி –

ப்ரஹ்ம ஸம்ஹிதாயாம்– தத் வக்ர முக்த்வா * ஹ்ருத் பத்ம கர்ணி காந்தஸ்த : புருஷஸ் ஸர்வதோமுக: ।
ஸர்வஜ்ஞஸ் ஸர்வக: ஸர்வஸ் ஸர்வ மாவ்ருத்ய திஷ்டதி ।
தஸ் மாத்து பரமம் ஸூக்ஷ்மம் ஆகாஸம் பாதி நிர்மலம் ॥

ஸூத்த ஸ்படிக ஸங்காஸம் நிர்வாணம் பரமம் பதம் ॥
தத் பதம் ப்ராப்ய தத்த்வஜ்ஞா முச்யந்தே ச ஸூப அஸூபாத் । (பாப புண்ய ரூபமான கர்மங்களில் இருந்து விடுபட்டு )
த்ரஸரேணு ப்ரமாணாஸ்தே ரஶ்மி கோடி விபூஷிதா : । பூயஸ்தே “நைவ ஜாயந்தே ந லீயந்தே ச தே  க்வசித் ॥ இத்யாதி ப்ரஸித்தே: ।

அஸ்மிந் பரம பதே அயோத்யா அபராஜிதா புரீ, அபராஜிதம் ஆய தநம்,
ஸஹஸ்ர ஸ்தூணாதி பரிகரம் திவ்ய ஆஸ்தாந ரத்நம் । தத்ர பர்யங்கே ,
*ஶ்ரியாஸநாத இத்யாத்யநந்தம் முக்த போக்யம் சாந்தோக்ய தைத்திரீய கௌஷீதகீ ப்ரப்ருதி ப்ரஸித்தம் அநுஸந்தேயம் ॥ 16 ॥

ஷேத்ரஜ்ஞ-
தம்மை முக்தர்கள் அனுபவிக்க ஏகாந்தமான இடத்தை அறிந்தவர் –
போக சம்ருத்தி யுண்டாகும் பரம பதம் -அத்தை சரீரமாக யுடையவன் –ஸ்ரீ பராசர பட்டர் —
திருக் கண்ண புரம் வரச் சொல்லி நடந்து காட்டி அருளி பழையவற்றை ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு
நினைவு பட வைத்து அருளி –ஷேத்ரஜ்ஞ்ஞன்
இத்தம் தேப்யாக ஸ்வானுபவம் தாதும் ததேகாந்தம் ஷேத்ரம் ஜாநாதீதி –

எல்லை அற்ற ஆனந்தம் என்ற பயிர் ஓங்கி வளரும் வயல் தானே ஸ்ரீ வைகுண்டம் –
அன்றிக்கே அதே தன்மை கொண்ட திரு மேனி என்றுமாம்
ஆகாசா சரீரம் ப்ரஹ்ம -தைத்ரியம் -ப்ரஹ்மம் ஸ்ரீ வைகுண்டம் என்னும் ஆகாயத்தை சரீரமாகக் கொண்டது
முக்தாநாம் து கதி ப்ரஹ்மன் ஷேத்ரஞ்ஞ இதி கல்ப்யத–மோக்ஷ பர்வம்
பரமே வ்யோமன் ச அஸ்னுதே -தைத்ரியம் முக்தன் பகவானை ஸ்ரீ வைகுண்டத்தில் அனுபவிக்கிறான்
தே நாஹம் மஹிமாந ச சந்தே –புருஷ ஸூக்தம் –ஸ்ரீ வைகுண்டத்தில் முக்தர் அவன் மேன்மையை அனுபவிக்கிறார்கள்
நாக ப்ருஷ்டே விராஜதி–முக்தன் ஸ்ரீ வைகுண்டத்தில் ஒளிர்கிறான்
ச மோதேத த்ரி விஷ்டபே
ராத்திரி காமேதத் புஷ்பாந்தம் யத் புராணம் ஆகாசம் தத்ர மே ஸ்தானம் குர்வன் ந புந பவேயம்

யத் கத்வா ந நிவர்த்தந்தே தத்தாம் பரமம் மம –ஸ்ரீ கீதை -8-21-
சுருதி ப்ரமாணகம் மங்களைஸ்து யுக்தே ஜரா ம்ருத்யு பயாத் அதீத ததோ நிமித்தே ச பலே விநஷ்டேஹி
அலிங்கம் ஆகாஸே அலிங்க ஏஷ–மோக்ஷ தர்மம்
ஏகாந்திந சதா ப்ரஹ்ம த்யாயந்தே யோகிநோ ஹி யே தேஷாம் தத் பரமம் ஸ்தானம் யத்வை பஸ்யந்தி ஸூரய –ஸ்ரீ விஷ்ணு புராணம்
யத் தந்ந கிஞ்சித் இதி யுக்தம் மஹா வ்யோம தத் உச்யதே -ப்ரஹ்ம புராணம்
தந் மோக்ஷ தத் பரம் தேஜோ விஷ்ணோரிதி விநிச்சய
பஸ்ய லோகம் இமம் மஹ்யம் யோ ந வேதைஸ்து த்ருச்யதே த்வத் பிரியார்த்தம் அயம் லோக தர்சிதஸ்தே த்விஜோத்தம -ஸ்ரீ வராஹ புராணம் –

அகஸ்தியருக்கு காட்டிய ஸ்ரீ வைகுண்டம்
பகவன் த்வன் மயோ லோக சர்வ லோக வரோத்தம சர்வ லோகா மயா த்ருஷ்டா ப்ரஹ்ம சக்ராதி நாம் முநே அயம் த்வத் பூர்வ லோகோ
மே ப்ரதிபாதி தபோதந சம்பத் ஐஸ்வர்ய தேஜாபிர் ஹர்மயைர் ரத்ந மயைஸ் ததா அத்யாபி தம் லோகவரம் த்யாயந் திஷ்டாமி
ஸூ வ்ரத கதா ப்ராப்ஸ்யேத் து அசவ் லோக சர்வ லோக வரோத்தம இதி சிந்தாபர அபவந் –கண்டதை அகஸ்தியர் எம்பெருமான் இடம் சொல்வது
கார்யாணாம் காரணம் பூர்வ வசசாம் வாஸ்யம் உத்தமம் யோகாநாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -ருக் வேதம்
யமாஹு சர்வ பூதாநாம் ப்ரக்ருதே ப்ரக்ருதி த்ருவாம் அநாதி நிதனம் தேவம் ப்ரபும் நாராயணம் பரம் ப்ரஹ்மண
சதநாத் தஸ்ய பரம் ஸ்தானம் ப்ரகாஸதே -வன பர்வம்
தத்ர கத்வா புநர் நேமம் லோகம் ஆயாந்தி பாரத ஸ்தானம் ஏதத் மஹா ராஜ த்ருவம் அக்ஷரம் அவ்யயம்
ஈஸ்வரஸ்ய சதா ஹி ஏதத் பிராண மாத்ரம் யுதிஷ்ட்ர -வன பர்வம்

ப்ரஹ்ம தேஜோ மயம் திவ்யம் ஆச்சர்யம் த்ருஷ்டவாந் அஸி அஹம் ச பரத ஸ்ரேஷ்ட மத் தேஜஸ் தத் சனாதனம்
ப்ரக்ருதி சா மம பரா வ்யக்த அவ்யக்த ச பாரத தாம் பிரவிஸ்ய பவந்தீஹ முக்தா பரத சத்தம சா சாங்க்யானாம் கதி
பார்த்த யோகி நாம் ச தபஸ்வி நாம் தத் பரம் பரமம் ப்ரஹ்ம சர்வம் விபஜதே ஜகத் –ஸ்ரீ ஹரி வம்சம்
ஹ்ருத் பத்ம கர்ணி காந் தஸ்த புருஷ சர்வதோமுக ஸர்வஞ்ஞ சர்வக சர்வ சர்வம் ஆவ்ருத்ய திஷ்டதி தஸ்மாத்
து பரமம் ஸூஷ்மம் ஆகாசம் பாதி நிர்மலம் சுத்த ஸ்படிக ஸங்காசம் நிர்வாணம் பரமம் பதம் தத் பரம் ப்ராப்ய
தத்வஞ்ஞா முச்யந்தே ச சுபாசுபாத் த்ரசரேணு பிரமாணாஸ்தே ரஸ்மி கோடி விபூஷிதா பூயஸ்தே
நைவ ஜாயந்தே ந லீயந்தே ச தே க்வசித் –ப்ரஹ்ம சம்ஹிதை

ஷேத்ரம் ஆகிய சரீரத்தை அறிந்தவர் -ஸ்ரீ சங்கரர்—

ஷேத்ரம் என்று பரமான பிரசித்தமான அவ்யக்தம் முதலிய சரீரத்தை அறிந்தவர்  –
தம் சரீரத்தையும் அனைவருடைய சரீரத்தையும் அறிந்தவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்–

ஓம் ஷேத்ரஞ்ஞ நம
க்ஷேத்ரம் -சரீரம் -தத்வங்கள் அனைத்தையும் அறிந்தவன் -பக்த முக்த நித்யர் சரீரங்களை அறிந்தவன்

இருத்தும் வியந்து –வியந்து வியந்து தனது திருவடிக்கீழ் பொன்னடிக்கீழ் இருத்தும்
கண்டு கொண்டு இருந்ததையே சாஷீ இங்கு
விபச்சித –விவிதம் பஸ்யத் சித் வம் –ஏக காலத்தில் அனைத்தையும் பசர்த்து ஆனந்திக்கிறான்

———————-

  1. ஓம் க்ஷேத்ரஜ்ஞாய நம:

க்ஷேத்ரம் சரீரம் ஜானாதீதி க்ஷேத்ரஜ்ஞ்ய 

க்ஷேத்ரம் சரீரம் “க்ஷேத்ரம்” என்றால் இந்த உடலைக் குறிக்கும் ஜானாதீதி அறிகிறார் க்ஷேத்ரஜ்ஞ்ய அவர் ‘க்ஷேத்ரஜ்ஞ்ய’ என்று அழைக்கப்படுகிறார் |

இந்த உடலை உள்ளபடி அறிவதால் பகவான் “க்ஷேத்ரஜ்ஞ” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஆதோSனுபஸர்கே க:’ (பாணினி சூத்ரம் 3.2.3)

பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:

(ஒரு சொல்) அகாரத்தில் / ஆகாரத்தில் முடிந்து, அதற்கு ஒரு வினைச்சொல் முன்னே இல்லாவிடில், “க” என்ற விகுதியுடன் கூட்டவேண்டும்.

க்ஷேத்ர ஜானாதி: இந்த கூட்டலில், இடையில் க விகுதி சேர்வதால்தான் க்ஷேத்ரஞ்ய என்ற சொல் கிடைக்கிறது.

‘க்ஷேத்ரஞம் சாபி மாம் வித்தி’ (ஸ்ரீமத் பகவத் கீதை 13.2)

ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது:

க்ஷேத்ரஞ்யன் நானே என்றுணர்.

‘க்ஷேத்ராணி ஹி சரீராணி பீஜம் சாபி சுபாசுபம் |

தானி வேத்தி ச யோகாத்மா தத: க்ஷேத்ரஞ்ய உச்யதே ||’ (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 351.6)

மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:

இந்த உடலே ‘க்ஷேத்ரம்’ என்று அழைக்கப்படுகிறது (இங்கு, உடலை நிலம் என்றும் பொருள் கொள்ளலாம்). நற்செயல் மற்றும் தீச்செயல்கள் இதன் விதைகளாகும். யோகத்தில் நிலைபெற்ற ஆத்மா இதனை உள்ளபடி அறிகிறான், எனவே, அவன் “க்ஷேத்ரஞன்” என்று அறியப்படுகிறான்.

————

16. க்ஷேத்ரக்ஞா – களத்தை அறிந்தவன்

க்ஷேத்ரா என்பது ஒரு வயல் அல்லது பிரதேசத்தைக் குறிக்கிறது ஆனால் வேதாந்தத்தின் சூழலில் அது மனித உடலைக் குறிக்கிறது.

ஸ்ரீ பராசர பட்டரின் விளக்கம், ‘அறிந்தவர், முக்தர்கள் தேடும் உன்னதமான பேரின்பத்தைப் பெறக்கூடிய சரியான இடத்திற்கு முக்தர்களை அழைத்துச் செல்லக்கூடியவர்’ என்பதாகும். எனவே அவரது பார்வையில் க்ஷேத்திரமே உச்ச ஆனந்தத்தின் சரியான இடம்-
இடம் ஷரீரம் கவுந்தேய க்ஷேத்ரம் இத்யாபிதீயதே
ஏதத்யோ வெட்டி தம் ப்ராஹு க்ஷேத்ரஜ்ஞ இதி–13-2-
ஓ’கௌந்தேயா (அர்ஜுனா), ஜட உடல் செயல்பாட்டின் களம் என்று அறியப்படுகிறது. இதை அறிந்தவர்கள் இதை செயல்பாட்டுத் துறையை அறிந்தவர்கள் என்று விவரிக்கிறார்கள்

—————

17-அஷர –
குறையாதவன் –ந ஷர தீதி அக்ஷர 

தத்ர முக்தைஸ் ஸதா அநுபூய மாநோ அபி மதூத்ஸவந் நிஸ் ஸீம குணோந் மஜ்ஜநேந உபர்யுபரி
போக்யதயோ பசீயதே, ந து க்ஷரதீத் யக்ஷர: । பசாத்யச் । விக்ரம : ஸுராநந்த : இத்யா தயோ அஜந்தா : ।
* நிரவத்ய: பர: ப்ராப்தே: நிரதிஷ்தட அக்ஷர க்ரம : இதி ।(ஸ்ரீ விஷ்ணு புராணம் )

ஸாரீரகே சதுர்த அத்யாயே அநேநைவ க்ரமேண மோஷோ நிரணாயி । ந ஸைஷோ அபத்யாய: அர்வாசீந பல விஷய: கல்ப்ய:, தத் ஸாதநாதி விஷயாணாம் பூர்வேஷாம் அபி த்ரயாணாம் அத்யாயாநாம்
ததுதாஹ்ரு தாஹ நாநாம் உபநிஷதாம் ஸ்மதீதிஹாஸாதீநாம் ச
அர்வாசீந விஷயத்வேந பஹிஶ் ஸாஸ்த்ரம் மோக்ஷ
நிர்ணய ப்ரஸங்காத் ।
இத்தம் முக்தாநாம் பரமா கதி: ॥ 17-(பேடிகை நிகமனம் )

(ப்ரஹ்மம் ஜகத் காரணமே முதல் அத்யாயம்
ப்ரஹ்மமே ஜகத் காரணம் இரண்டாம் அத்யாயம்
சாதனம் -ப்ராபகம் மூன்றாம் அத்யாயம்
பலம் -ப்ராப்யம் -நான்காம் அத்யாயம்
மோக்ஷமே பரம ப்ராப்யம் உயர்ந்தது கல்பிக்க வேண்டாமே
கீழ் -உபநிஷத் -இத்யாதியில் -அர்வாசீன தாழ்ந்த-விஷயத்வேந பஹிஶ் ஸாஸ்த்ரம் -மோக்ஷ  நிர்ணய ப்ரஸங்காத் ।)

திவ்ய சௌந்தர்யம் கல்யாண குணங்கள் -எல்லை காண முடியாதவை –
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதில தந்திடும் என் வள்ளல் -4-7-2-
அதோஷஜ -416-
சத் அஷரம்-480
இதே அர்த்தங்களில் மேலே வரும்

அஷர-
முக்தர்களின் அனுபவ ஆனந்தம் முடிவு பெறாமல் மேலும் மேலும் வளரும்  படி
கல்யாண குணங்கள் நிறைந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
அழியாதவர் -அச் -வினை யடியால் அனுபவிப்பவர் – ஏவகாரம் -அஷரன் ஷேத்ரஜ்ஞன் -பேதம் இல்லை –
ஜ்ஞானத்துக்கு அடி -ஆதாரம் -அஷரம்-
ஜ்ஞானாந்த நிர்மல ஸ்படிகாக்ருதம் ஆதாரம் சர்வ வித்யாநாம் -ஹயக்ரீவர் உபாஸ்மகே அஷரமாக இருப்பவர் –
தத்ர முக்தைஸ் –ததானுபூயமான -அபி மது சத்வ நிச்சீம குண உன்மஜ்ஜன உபரி உபரி போக்யதயா உபசீததய நது ஷரதி அஷர –

அனுபவிக்க அனுபவிக்க அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் இருந்து
அனுபவ ஸூகம் முடிவு பெறாமல் விருத்தி யாகும் படி இருப்பவர் என்றவாறு

தத்த்வமஸி-சகாரம் பேதம் வ்யவஹாரத்தில் மட்டும் உள்ளத்தைக் காட்டுகிறது -ஸ்ரீ சங்கரர்—

அழியாமல் இருப்பவர் எங்கும் வியாபித்து இருப்பவர்
ஏவ ச -இரண்டு சொற்கள் அதிகம் உள்ளன
ஏவ என்பதால் அக்ஷரனான பரமாத்மாவுக்கும் ஷேத்ரஞ்ஞனான ஜீவாத்மாவுக்கும் உண்மையில் அபேதமும்
ச காரணத்தினால் வியவகாரத்தில் உண்டான பேதமும் குறிப்பிடப்பட்டு என்பர் சங்கரர்

அழிவற்ற வைகுண்டம் முதலியவற்றை அருளுபவர் -வைகுண்டம் முதலிய உலகங்களில் ரமிப்பவர் –
அளிவில்லாதவர் -இந்த்ரியங்களில் விளையாடுபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்–

ஓம் அக்ஷர நம
அழிவில்லா கீர்த்தி -ஆனந்தம் -பரமாகதிக்கு உரித்தான லக்ஷணம்

————–

  1. ஓம் அக்ஷராய நம:

ஸ ஏவ ந க்ஷரதி இதி அக்ஷர: பரமாத்மா

ஸ ஏவ ந எவர்க்கு இல்லை க்ஷரதி அழிவு (அல்லது தேய்வு) இதி அவர் அக்ஷர: அக்ஷர: என்று அழைக்கப்படுகிறார் பரமாத்மா அந்த பரமாத்மா |

எவருக்கு, ‘க்ஷரம்’ அதாவது அழிவு (அல்லது தேய்வு) இல்லையோ, அந்த பரமாத்மா “அக்ஷர:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அஷ்னாதேர் “அஷ்” என்ற சொல்லுடன் அஷ்னோதேர் வா அல்லது, “அஷு” என்ற சொல்லுடன் ஸரப்ரத்யய “ஸர” என்ற விகுதி அந்தஸ்ய கடைசியில் சேர்வதன் மூலம் ரூபமஷர இதி “அக்ஷர” என்ற சொல் பிறக்கிறது |

ஏவகாராத் இந்த ஸ்லோகத்தின் முடிவில் வரும் “ஏவ” என்ற சொல் க்ஷேத்ரஞ்யாக்ஷரயோரபேத: க்ஷேத்ரஞன் (பொது வழக்கில் க்ஷேத்ரஞன் என்றால் ஜீவாத்மாவைக் குறிக்கும்) மற்றும் அக்ஷர (பரமாத்மா) இவற்றுள் வேறுபாடுகள் இல்லை என்ற பரமார்த்தத: மிக உயர்ந்த அத்வைத உண்மையைக் குறிக்கிறது.

தத்வமஸி (சாந்தோக்ய உபநிஶத் 6.8)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த ப்ரஹ்மமே நீ.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

சகாராத்வ்யாவஹாரிகோ இந்த ஸ்லோகத்தின் முடிவில் வரும் “சகாரம்” பொது வழக்கில் ஜீவாத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் இடையே உள்ள பேதஸ்ச வேறுபாடுகளைக் குறிக்கிறது, ப்ரஸித்தேர் பொதுவழக்கில் பிரபலமாய் இருப்பதால் மட்டுமே அப்ரமாணத்வாத் இது ஆதாரமான உண்மையாகிவிடாது ||

இங்கு சங்கர பகவத்பாதர் “ஏவ ச” என்ற சொற்கள் ஜீவாத்மா, பரமாத்மாவிற்கும் இடையேயான ஒற்றுமை, வேற்றுமைகளைக் குறித்தாலும், முடிவில் அத்வைதமே ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை என்று குறிப்பிடுகிறார்.

————–

17. அக்ஷரஹ் (ஏவ ச) – அழிவில்லாதவன்

ஸ்ரீ ஆதி சங்கரரின் விளக்கம்: “ஸ ஏவ ந க்ஷரதி இதி அக்ஷரஹ் – அவர் ஒருவரே இறக்காமல் இருக்கிறார்”. ஜீவாத்மாவைக் குறிக்கும் க்ஷேத்ரக்ஞத்திற்கு எதிரான பரமாத்மாவைக் குறிக்கிறது என்பதே இதன் பொருள். மேலும் அவரது கூற்றுப்படி ‘ஏவ ச‘ என்பது க்ஷேத்ரக்னத்தையும் அக்ஷரத்தையும் இணைக்கும் குறிப்பிடத்தக்க இணைப்புகளாகும். இரண்டும் கொள்கையளவில் ஒரே மாதிரியானவை என்பதை ‘ஏவ‘ குறிக்கிறது. இருப்பினும் க்ஷேத்ரக்னத்திற்கும் (ஜீவாத்மா) அக்ஷரத்திற்கும் (பரமாத்மா) இடையே சில வெளிப்படையான வேறுபாடுகள் இருப்பதை ‘‘ குறிக்கிறது.

அக்ஷர என்பதற்கு மகிழ்வது என்றும் பொருள். தன் எண்ணங்களில் மூழ்கி இருப்பவர்களுக்கு அளவற்ற பேரின்பம் தருகிறார், அத்தகைய மகிழ்ச்சி எல்லை யற்றது. 

————-

10-பூதாத்மா
தாம் ஆத்மாவாக இருந்தாலும் தோஷங்கள் தட்டாதவன் -பரிசுத்த ஸ்வ பாவம் யுடையவன் -ஜீவாத்மா மட்டும்
கர்ம பலன்களை அனுபவிப்பான் -கசை தொடர்பு ஆசிரியருக்கும் மாணவனுக்கும் யுண்டே -ஸ்ரீ பராசர பட்டர் —
உப்பில்லா பண்டமும் ஒப்பில்லாமல் ஆக்குமவன் -மட்டமான வஸ்துவையும் பெருமை படுத்துமவன்
ஆத்மீத்யவ சம்சாரித்வாதி அஸ்ய சரீரவத் -சித் அசித் சுத்த ஸ்வபாவ –

பரிசுத்தமான ஆத்மாவை யுடையவர் -நிர்குணர்-பூதக்ருத் போன்ற திரு நாமங்களால் சொன்ன குணங்கள்
இவன் இச்சையினால் கற்ப்பிக்கப் பட்டன -ஸ்ரீ சங்கரர்-

ஜீவாத்மாக்கள் பரிசுத்த  தன்மை எவன்  இடம் இருந்து பெறுகின்றனவோ அவன் பூதாத்மா –
புனிதமானவர்களின்  ஆத்மா -புனித ஆத்மா-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

——————————————————————————————————

11-பரமாத்மா –
எல்லாவற்றுக்கும் தாம் ஆத்மாவே இருப்பது போலே தமக்கே மேல் ஓர் ஆத்மா இல்லாதவர் –
மேம்பட்டவர் இல்லாதவராய் ஆத்மாவாகவும் இருப்பவர் -தமக்கு மேம்பட்ட ஈஸ்வரர் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
பெருமாள் ஆராதனம் செய்த பெரிய பெருமாள் —
யதா சர்வாணி – பூதான் அந்யேன ஆத்மா பந்தி நைவம் அன்யேன கேன சிது அநகா பரமாத்மா –

உயர்ந்தவராகவும் ஆத்மாவாகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

மிகவும் மேம்பட்டவர் -விரோதிகளை அழிப்பவர்-லஷ்மி பதி-அடியவர்களைக் காப்பவர் –
ஞானம் யுடையவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

——————————————————————————————————–

12-முக்தா நாம் பரமாகதி –
எல்லாருக்கும் தலைவரான தாமே – -அவித்யை கர்மம் சம்ஸ்காரம் ஆசை விபாகம் போன்ற தடைகளை முற்றும் துறந்த
முக்தர்கள் முடிவாக அடையும் இடமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
ஏவம் சர்வ சேஷிணமேவ பராமாத்மா பிராப்யத்வம் முக்தாநாம் பரமாத்மா கதி –

முக்தர்களுக்கு உயர்ந்த கதி -அவரைத் தவிர வேறு தேவதைகளை அடைய வேண்டியது இல்லை –
அவரை அடைந்தவர் திரும்புவது இல்லை -ஸ்ரீ சங்கரர்–

மிக உயர்ந்தவர்களான முக்தர்களால் மட்டுமே அடையத் தக்கவர் -ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

——–13-அவ்யய-
தம்மை விட்டு ஒருவரும் அகலாமல் இருப்பவர் -சம்சார பெரும் கடலை கடந்து தன்னை அடைந்தார்
மீளாத படி அருளுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ந ச புன ஆவர்த்ததே -ஸ்ரீ பாஷ்யம்-தன்னைப் போலே ஆக்கி பிரியாமல் வைத்து கொள்பவன் அன்றோ —
ந வீயதே ந வீயகம்யதே அஸ்மாத் இதி –நாசம் அற்றவர் -விகாரம் அற்றவர் -ஸ்ரீ சங்கரர்–சூர்யன் ஆகாயத்தில் சஞ்சரிக்க நியமனம் தந்தவர்-ஆட்டைப் போலே எதிரிகளை எதிர்க்கச் செல்பவர் -ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

——————————————————————————————————

14-புருஷ –
மிகுதியாகக் கொடுப்பவர் -முக்தர்களுக்கு தம் குண விபவ அனுபவங்களை கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
தன்னையே தன பக்தர்களுக்கு அர்ப்பநிப்பவன் -தன்னையே எனக்குத் தந்த கற்பகம் -செல்லப்பிள்ளை -வந்தானே –

புரம் என்னும் யுடலில் இருப்பவர் -உயர்ந்த பொருள்களில் இருப்பவர் -முன்பே இருந்தவர் –
பலன்களைக்   கொடுப்பவர் -சர்வ வியாபி -சம்ஹாரம் செய்பவர்  -ஸ்ரீ சங்கரர்–

மோஷ ரூபம் ஆகிய முழுப் பலத்தையும் பூர்ணனான தன்னைத் தருபவன் -முன்பே உள்ளவர் –
பல செயல்களை யுடையவர் -அசுரர்களை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

—————————————————————————————————-

15-சாஷீ-
முக்தர்களை மகிழ்வித்து தாமும் மகிழ்ந்து பார்த்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஏவம் தாநு ஆனந்தாயன்னு ஸ்வயம் அபி த்ருப்தாயன்னு சாஷாத் கரோதி –

சஹகாரி இல்லாமல் எல்லாவற்றையும் நேரில் பார்ப்பவர் -ஸ்ரீ சங்கரர்—

நேரில் பார்ப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்–

—————————————————————————————————-

16- ஷேத்ரஜ்ஞ-
தம்மை முக்தர்கள் அனுபவிக்க ஏகாந்தமான இடத்தை அறிந்தவர் –
போக சம்ருத்தி யுண்டாகும் பரம பதம் -அத்தை சரீரமாக யுடையவன் –ஸ்ரீ பராசர பட்டர் —
திருக் கண்ண புரம் வரச் சொல்லி நடந்து காட்டி அருளி பழையவற்றை ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு
நினைவு பட வைத்து அருளி -ஷேத்ரஜ்ஞ்ஞன்
இத்தம் தேப்யாக ஸ்வானுபவம் தாதும் ததேகாந்தம் ஷேத்ரம் ஜாநாதீதி –

ஷேத்ரம் ஆகிய சரீரத்தை அறிந்தவர் -ஸ்ரீ சங்கரர்—

ஷேத்ரம் என்று பரமான பிரசித்தமான அவயகதம் முதலிய சரீரத்தை அறிந்தவர்  –
தம் சரீரத்தையும் அனைவருடைய சரீரத்தையும் அறிந்தவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்–

—————————————————————————————————–

17-அஷர-
முக்தர்களின் அனுபவ ஆனந்தம் முடிவு பெறாமல் மேலும் மேலும் வளரும்  படி
கல்யாண குணங்கள் நிறைந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
அழியாதவர் -அச் -வினை யடியால் அனுபவிப்பவர் – ஏவகாரம் -அஷரன் ஷேத்ரஜ்ஞன் -பேதம் இல்லை –
ஜ்ஞானத்துக்கு அடி -ஆதாரம் -அஷரம்-
ஜ்ஞானாந்த நிர்மல ஸ்படிகாக்ருதம் ஆதாரம் சர்வ வித்யாநாம் -ஹயக்ரீவர் உபாஸ்மகே அஷரமாக இருப்பவர் –
தத்ர முக்தைஸ் –ததானுபூயமான -அபி மது சத்வ நிச்சீம குண உன்மஜ்ஜன உபரி உபரி போக்யதயா உபசீததய நது ஷரதி அஷர –

தத்த்வமஸி-சகாரம் பேதம் வ்யவஹாரத்தில் மட்டும் உள்ளத்தைக் காட்டுகிறது -ஸ்ரீ சங்கரர்—

அழிவற்ற வைகுண்டம் முதலியவற்றை அருளுபவர் -வைகுண்டம் முதலிய உலகங்களில் ரமிப்பவர் –
அளிவில்லாதவர் -இந்த்ரியங்களில் விளையாடுபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்–


ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பத்தாவது திருநாமமாகிய ‘பூதாத்மநே நம:’ என்ற திருநாமத்தைத்
தினமும் சொல்லி வந்தால், தூயவனாகிய எம்பெருமான் நம்மையும் தூய்மைப் படுத்துவான்.

ஜீவாத்மாவுக்கு ஆத்மாவாக நாராயணன் விளங்குவதால்,
அவன் ‘பரமாத்மா’ என்று அழைக்கப்படுகிறான்,” என்றார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பதினொன்றாவது திருநாமமாக விளங்குகின்றது.

அனைவருக்குள்ளும் ஆத்மாவாக இருக்கும் பரமாத்மாவான பத்ரி நாராயணனைத் தியானித்தபடி,
“பரமாத்மநே நம:” என்று சொல்லும் அடியார்களுக்குத் தியானத்தில் விரைவில் சித்தி உண்டாகும்.

லக்ஷ்மணன் கூறியதுபோல் எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதே முக்தியடைபவர்களின் முடிவான இலக்காக இருப்பதால்
அவன் “முக்தாநாம் பரமா கதி:” என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பன்னிரண்டாவது திருநாமமாக அமைந்துள்ளது.
நாமும் “முக்தாநாம் பரமா கதயே நம:” என்று ஜபம் செய்தால், லக்ஷ்மணனைப் போல எம்பெருமானுக்குத்
தொண்டு செய்யும் பாக்கியம் நமக்கும் கிட்டும்.

தன்னை அடைந்த எந்த ஒரு ஜீவனையும் நழுவ விடாமல் காத்தருள்வதால் திருமால் “அவ்யய:” என்றழைக்கப்படுகிறான்.

தன்னை அடைந்த அடியார்களை நழுவாமல் காக்கும் எம்பெருமானின் ஆயிரம் நாமங்களில்
பதின்மூன்றாவது திருநாமமான “அவ்யயாய நம:” என்பதைத் தினமும் சொன்னால் நாமும்
வாழ்வில் வீழாமல் வெற்றி மேல் வெற்றி பெறலாம்.

இன்றும் மேலக்கோட்டை திருநாராயணப் பெருமாள் திருவடிவாரத்தில் ‘துலுக்க நாச்சியார்’ இருப்பதைக் காணலாம்.
அந்தத் துலுக்க நாச்சியார் போன்ற உயர்ந்த அன்பும் பக்தியும் கொண்ட அடியவர்களுக்குத் தன்னையே தந்து விடுவதால்
எம்பெருமான் ‘புருஷ:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘புருஷ:’ என்றால் பக்தர்களுக்குப் பரிசாகத் தன்னையே வழங்குபவன் என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பதினான்காவது திருநாமம். “புருஷாய நம:” என்று ஜபித்து வரும்
அடியார்களுக்கு வாழ்க்கையில் மிகச்சிறந்த பரிசுகள் கிட்டும்.

வாழ்க்கை என்னும் விளையாட்டில் நம்மை ஈடுபடுத்தி, அவன் இட்ட விதிகளின்படி நாம் அதை விளையாடுகிறோமா
என மேலிருந்து சாட்சி போலப் பார்வையிடும் எம்பெருமான் “ஸாக்ஷீ” என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பதினைந்தாவது திருநாமம்.
“ஸாக்ஷிநே நம:” எனத் தினமும் சொல்லி வரும் சிறுவர்களும் சிறுமிகளும் எதிர்காலத்தில் சிறந்த
விளையாட்டு வீரர்களாகவும் வீராங்கனைகளாகவும் விளங்கி நம் தேசத்துக்குப் பெருமை சேர்ப்பார்கள்.

இவ்வாறு தன் அடியார்களுக்குத் தரிசனம் தருவதற்குரிய சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்துத் தரிசனம் தந்து,
அடியார்களை மகிழ்விப்பதால், எம்பெருமான் ‘க்ஷேத்ரக்ஞன்’ என்று அழைக்கப்படுகிறான்.
‘க்ஷேத்ரம்’ என்றால் முழுமையான ஆனந்தம் தரும் இடம் என்று பொருள்.
‘க்ஷேத்ரக்ஞன்’ என்றால் அத்தகைய இடங்களைச் சரியாக அறிந்து தேர்ந்தெடுப்பவன் என்று பொருள்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பதினாறாவது திருநாமமாக அமைந்துள்ளது.

க்ஷரம்’ என்றால் தேய்வது என்று பொருள்.
‘அக்ஷரம்’ என்றால் தேயாதது என்று பொருள். எப்போதும் அமுதைப் பொழியும் தேயாத நிலவைப் போன்ற ஒளியை உடையவனாக
எம்பெருமான் விளங்குவதால் அவன் ‘அக்ஷர:’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பதினேழாவது திருநாமமாக விளங்குகின்றது.
“அக்ஷராய நம:” என்று தினமும் ஜபம் செய்து வந்தால், தேயாத கல்வியும், செல்வமும், இன்பமும் நமக்குக் கிட்டும்.

————————————————————————–————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பீஷ்மாச்சார்யர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸூகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாஸ பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள் –முதல் ஸ்லோகம்–

October 31, 2023

விஶ்வம் விஷ்ணுர் வஷட் காரோ பூத பவ்ய பவத் ப்ரபு: |
பூத க்ருத் பூத ப்ருத் பாவோ பூதாத்மா பூத பாவந: || 1 ||

பகவான் பிரபஞ்சத்தைப் படைத்தவர் மற்றும் எல்லா இடங்களிலும் எங்கும் வியாபித்திருக்கிறார். அவர் பிரபஞ்சத்தை கட்டுப்படுத்துகிறார் மற்றும் அவர் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் எஜமானர். அவர் அனைத்து உயிரினங்களையும் உருவாக்குபவர், பராமரிப்பவர் மற்றும் அழிப்பவர். அவர் முழு மகிமையுடன் இருக்கிறார் மற்றும் அனைத்து உயிரினங்களின் சாரமாக இருக்கிறார் மற்றும் அனைத்து உயிரினங்களையும் வளர்க்கிறார்.

இந்த ஸ்லோகத்தில் பின்வரும் 9 நாமங்கள் உள்ளன:

  1. விஸ்வம்
  2. விஷ்ணு
  3. வஷட்காரஹ்
  4. பூத  பவ்ய பவத் ப்ரபுஹ்
  5. பூதகிருதம்
  6. பூதபிரித்
  7. பாவாஹ்
  8. பூதாத்மா
  9. பூதபாவன

 

 

விச்வம் – அனைத்தும் ஆனவர்
விஷ்ணு: — அனைத்தின் உள்ளும் உயிரானவர்
வஷட்கார: — அனைத்தையும் தன்பால் வசீகரிப்பவர்
பூத பவ்ய பவத் ப்ரபு: — சென்றது நின்றது வருவது அனைத்தின் பிரபுவும் அவரே
பூதக்ருத் – அனைத்தையும் உருவுடையதாய் ஆக்குபவர் அவரே
பூதப்ருத் — உண்டான அனைத்தையும் தாங்குபவர் அவரே
பாவ: — இருப்பது என்பதே அவர்தான்
பூதாத்மா — உயிர்களின் உள்ளுயிராய் இருப்பவர்
பூதபாவன: — உயிர்களை உருவு கொண்டவையாய் இலங்கச் செய்பவர்

அவை, ஓம்! தன்னையும் தவிர அனைத்துப் பொருட்களிலும் நுழைந்திருப்பவன் {விஸ்வம்},
அனைத்துப் பொருட்களையும் மறைப்பவன் {விஷ்ணு},
வேள்வி ஆகுதிகள் அனைத்தும் ஊற்றப்படும் இடமாக இருப்பவன் {வஷட்காரன்},
கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றின் தலைவன் {பூதபவ்யபவத்ப்ரபு},
இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களையும் படைத்து அழிப்பவன் {பூதக்ருத், பூதப்ருத்},
அனைத்துப் பொருட்களையும் நிலைநிறுத்துபவன் {பாவன்},
அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாக இருப்பவன் {பூதாத்மா},
அனைத்துப் பொருட்களையும் தோற்றுவித்தவன்{பூதபாவநன்};(14)

குணத்தால் நிறைந்தவன் -எங்கும் பரந்து ஆள்பவன் –

1- விஸ்வம் -மங்களமான குணங்களால் முழுதும் நிரம்பியவர் -all in one
2-விஷ்ணு -அனைத்துக்குள்ளும் நுழைந்து நீக்கமற நிறைந்து இருப்பவர் -one in all
3-வஷட்கார -அனைத்தையும் தாம் நினைத்தபடி நடத்தி தன் வசத்தில் வைத்து இருப்பவர் –
4-பூத பவ்ய பவத் ப்ரபு–முக்காலங்களில் உள்ளவர்களுக்கு எல்லாம் தலைவர் -ஸ்வாமி –

தானே உலகு எல்லாம் –தானே படைத்து அழித்துக் காப்பவன்

5-பூதக்ருத் -தன் நினைவாலே அனைத்தையும் படைப்பவர் –
6-பூதப்ருத்–படைத்த அனைத்தையும் தானே தாங்குபவர் –
7-பாவ -பிரபஞ்சத்தையே தன்னை விட்டுப் பிரியாமல் சார்ந்து இருப்பதாகக் கொண்டவர் -மயிலுக்குத் தோகை போலே
8-பூதாத்மா -அனைத்துக்கும் ஆத்மாவாக இருப்பவர் -அனைத்தும் அவருக்கு உடல்
9-பூத பாவன-அனைத்தையும் பேணி வளர்ப்பவர் -ஆகையால் அவரே ஸ்வாமி

————

இத் யுபோத்தாத ப்ரகரணம்
அத பஞ்ச ஸித்தாந்த நிஷ்டா நிர்ணயேந, பர வ்யூஹ விவிஸேஷேஷு ஸ்வ நாம -பவ அர்த ப்ரகரண ஒவ்சித்ய-அபௌந ருக்த்ய-ப்ரப்ருதிபி:
ந்யாயைஸ் : வ்யவஸ்தாப்ய, வ்யாகரண-நிருக்த -ஆர்ஷ நிர்வசந ப்ரஸ்தா நேந நாமாநி நிருச்யந்தே |

பாஞ்சராத்ரம் அருளிய –
விண் மேல் இருப்பாய் இத்யாதி

முதல் 122-பரத்வம் -அந்தர்யாமியும் இதில் சேரும்
அடுத்த 24-வ்யூஹம்
மேல் 147-1000 விபவம்-அர்ச்சையும் இதில் சேரும்

அர்த ப்ரகரண ஒவ்சித்ய-அபௌந ருக்த்ய-ப்ரப்ருதிபி:
ந்யாயைஸ் –பொருள் –
இடம் சுட்டி பொருள் -பிரகரணம்
பொருத்தம் -உசிதமான
புனர் யுக்தி இல்லாமல்

வ்யாகரண-
நிருக்த -யவ்வ்கிகம் ரூடி இரண்டும்
ஆர்ஷ நிர்வசந-ரிஷிகள் பிரயோகம்

இனி பஞ்ச ஸித்தாந்த நிஷ்டா நிர்ணயப்படி
பரம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமி அர்ச்சை என்பவற்றுள்
ஸ்ருதி
லிங்கம்
பிரகரணம் தகுதி
கூறியது கூறாமை
முதலிய நியாயங்களைக் கொண்டு வியவஸ்தை செய்து
வியாகரணம்
நிருத்தம்
ரிஷிகளுடைய நிர்வசனம்
ஆகிய இவற்றின் முறையாக பகவன் நாமங்களுக்குப் பொருள் கூறப்படும்
என்று ப்ரதிஜ்ஜை செய்து அருளுகிறார் –

1-1- வ்யாப்தி -சர்வேஸ்வரத்வம்—முதல் நான்கு திரு நாமங்கள்

தத்ர பூர்வம் ஸர்வதோமுகம் பகவத : பூர்ணத்வமாஹ – விஶ்வமிதி (எல்லா வகையிலும் பூர்ணம்) |
விஸதி (அவர் நுழைகிறார் -கரந்து எங்கும் பரந்துளன் விஷ்ணு மேல் -)அவயவாந் இத்யர்தே “அஸூ ப்ருஷி லடி கணி கடி விஶிப்ய: க்வந்” இதி கவந் ப்ரத்யய: |
யதா மோக்ஷ தர்மே ஸம்யமாய பஞ்சஶிக: –
“வேஸநாத் விஶ்வம் இத்யாஹு: லோகாநாம் காஶி ஸத்தமே |
லோகாம்ஶ்ச விஶ்வ மேவேதி ப்ரவதந்தி நராதிப ||” இதி |
ஸ்வபாவிக-அநவதிக அதிஸய- மாங்கல்யை கதாநை : ஸ்வரூப ரூப குண விபவை : பரிபூர்ண இத்யர்த :;

பரம் வ்யூஹம் விபவம் என்னும் அவதாரங்களினால் ஏற்பட்ட நாமங்களில்
பர ஸ்வரூப நாமங்கள் முதலில் சொல்லப்படுகின்றன

எல்லாவற்றிலும் பிரவேசித்து
எங்கும் நிரம்பி இருப்பவர்
இயற்கையாகவே மங்கள ரூபங்களாகவே உள்ளவையும்
தமது சிறப்புக்கு மேல் வரை அற்றவையுமான
திவ்ய ஆத்ம ஸ்வரூபம்
திவ்ய மங்கள விக்ரஹம்
கல்யாண குணங்கள் மஹிமை
ஆகிய இவை பரிபூர்ணமாக நிரம்பி இருப்பவர்

இந்த நாமத்தால் பூர்ணர் என்பது ஏற்படுகிறது
இதுவே மற்ற நாமங்களினால் சிறப்பிக்கப் படுகின்றது

அளவற்ற பெரு விபூதிகளை யுடையவராய் இருப்பதால்
இது முதலில் சொல்லப்பட்டது –

இந்த நாமத்துக்கு நான்காம் வேற்றுமையில்
விஸ்வாய-என்றும்
விஸ்வஸ்மை நம -என்றும்
இரண்டு ரூபங்கள் வழங்கி வருகின்றன –
பாணினி மஹரிஷி -ஸர்வாதீநி ஸர்வ நாமானி -என்று பெரும் பேர் வைத்து இருத்தலாலும்

அந்தப்பேருக்குத் தக்கபடி உசிதமான ஸப்தங்களையே அந்த வகையில் சேர்த்து இருத்தலாலும்
விஸ்வம் என்னும் இந்த ஸப்தமும்
இதே போல் மேலே வரும் ஸர்வ நாம ஸப்தங்களும்
இந்நூலில் ஸம் ஜ்ஜை யாதலாலும்
ஸம் ஜ்ஜைகள் ஸர்வ நாம ஸப்தங்கள் அல்லவாகையாலும்
இவை ஸர்வ நாமங்களில் சேரா
ஆகையால் இவை ஸர்வ நாம ஸப்தம் போலே நான்காம் வேற்றுமையில்
விஸ்வஸ்மை -முதலியன ஆகாமல்
விஸ்வாய முதலியவையாகவே யாகும் என்பதே பட்டர் பாஷ்யத்தில் நிர்வசனத்தின் கொள்கை

விஸ்வம் முதலிய ஸப்தங்கள் பகவான் ஒருவருக்கே பேர்கள் ஆயினும்
அவை ஸம்ஜ்ஜா நாமங்கள் ஆகா என்றும்
ஸம் ஜ்ஜை -அநாதி ஸம் ஜ்ஜை-என்றும் ஆதுநிக ஸம் ஜ்ஜை என்றும் இருவகைப்படும் என்றும்
ஆதுநிக ஸம் ஜ்ஜையே –ஸம் ஜ்ஜையில் சேரும் என்றும்
அநாதி ஸம் ஜ்ஜை ஸம் ஜ்ஜை வகையில் சேராது என்றும்
ஆகையால் விஸ்வஸ்மை -முதலிய ரூபங்கள் கொள்ளப்பட வேண்டும் என்றும் மாத்வ பாஷ்யம் கூறும்

சங்கர பாஷ்யத்தில் விசேஷ விதி ஒன்றும் சொல்லப்படாமையால் இந்த நாமங்களை ஸர்வ நாம ஸப்தங்களாகவே கொள்வது வழக்கத்தில் இருக்கிறது –

நீக்கமற நிறைந்த வ்யாப்தி அடுத்த விஷ்ணு
இங்கு குணங்களால் நிறைந்த -இயற்கையாகவே -மேம்பட்டதாக வேறே எங்கும் இல்லை –
மங்கள குணங்களுக்கு இருப்பிடம்
ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி உடைமை விபவம் பெருமை-இவற்றால் பூர்ணம்

இந்த பூர்ணம் -விளக்கம் மேல்-உயர்வற உயர் நலம் உடையவன் -விஸ்வம் -மேல் எல்லாம் இதன் விளக்கம் -பொய் நின்ற -முதல் பாட்டு திரு விருத்த சுருக்கம் போல் –

கார்த்ஸ்ந்ய வசநத்வாதஸ்ய, ஆதவ் அநவச்சேத்ய மஹா விபூதி த்வஸ்ய ஸம்கீர்தந யோக்யத்வாச்ச |
“தத ஶிஷ்யம் ஸம்ஜ்ஞா ப்ரமாணத்வாத்” இதி, யதோபலம்பம் ஸர்வத்ர லிங்க நியம : |(நபும்ஸக லிங்கம் புருஷோத்தமனை விஸ்வம்-ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் -லிங்கம்- வசனம்- விபக்தி வேற்றுமை உருபு -விசேஷ்யம் பொறுத்தே சமஸ்க்ருதம் படி
மேக வர்ணம் உடையவராய் –இருக்கும் விஷ்ணுவை வணங்குகிறேன்
விஸ்வம் -உலகம் -நபும்ஸக லிங்கம்
ஓம் விஸ்வாயா நம )

கார்ய வாசி விஶ்வ ஸப்த : காரணே வர்தத இதி கேசித் |
தத்வாரத்தம் ; (ஜகத்தானவர் -ஜகத்தும் இவரும் வேறே அல்ல -கார்யம் விஸ்வம் -காரணத்துக்கு பிரயோகம் -சங்கரர் )

ஸர்வேஷாம் நாம்நாம் யோக ரூடிப்யாம் பகவதி ஸ்வ ஸப்தத்தவ உபபாதநாத் ஜகந்யவ்ருத்தே: அயுக்தத்வாச்ச |

அந்யே , விஶ்வமிதி ப்ரஹ்ம ப்ரபஞ்சயோ : அபேத பரம் ப்ரபஞ்சித வந்த :, தத் வஞ்சந மாத்ரம் |

அபேத வாதம் -ஸர்வம் கல் இதம் ப்ரஹ்மம் –
ஆனால் மேல் தத் ஜலான் -அவனிடம் பிறந்து அவனால் காக்கப்பட்டு அவன் இடம் லயம் -நினைந்து சாந்தி அடைவாய் –
ஆகவோ உண்மையில் வேறே வேறே ஜகத்தும் ப்ரஹ்மமும்

ததா ஹி ந ஸாவத் விஶ்வ பதம் அபேத வாசி (நுழைதல் என்றாலும் யார் எங்கு பலவும் உண்டாகும் -ஆகவே பேதம் ஸித்தம்) |

ந ச தத்த்வ மஸ்யாதி வத் ஸாமாநாதி கரண்யேந ஐக்ய பரம், ஸம்ஜ்ஞாநாம்
ஸ்வாேந்த்ர்யேண ஐக்ய பரத்வ அவிவக்ஷணாத்; அத ஏவ ஹி விஶ்வம் விஷ்ணு: இதி அவிஸேஷ்ய லிங்கத்வம் |
நிரஸ்தஶ்ச அயம் அர்வாகேவ பக்ஷ:; அந்யத்ர ச அநேகத்ர | இத மேவ பூர்ணத்வம் ஸர்வைர் நாமபி: விஷ்ணு: இத்யாதிபி: விஶிஷ்யதே || 1 ||

ஒன்றை அறிந்தால் கார்யம் எல்லாம் அறிந்ததாகும் -மற்றவை இல்லை என்பது அல்லவே
மண் குடம் -பொற் குடம் –
பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம் –-சாமானாதி கரண்யம் –
நான் புத்தகம் சொல்ல மாட்டோம் -என்னுடைய புத்தகம் வேற்றுமை உறுப்புடன் சொல்வோம்
தத்வ மஸி ஸ்வேத கேதோ –
நேக நா நாஸ்தி –
ஏகமேவ அத்விதீயம்
தனி முதல் வித்து
உபாதானம் நிமித்தம் ஸஹகாரி -வேதாந்த கால ஷேபம் உண்டே
தத் -அது தவம் நீயாகவே இருக்கிறாய்
ஜகத்துக்கு அந்தர்யாத்மாவாய் இருப்பவனே உனக்கும் அந்தர்யாமி -காரணம் என்று சொல்ல வந்தது
அந்த ப்ரஹ்மமே நீ -தப்பாக -லக்ஷணம் விட்டு அர்த்தம் சொல்லக் கூடாதே
ஓம் -சாதர்த்த சதுர்த்தி இல்லாமல் -அகாரம் -ஏவ உகாரம் -மகாரம் -பரமாத்மாவே ஜீவாத்மா
ஸ்தான ப்ரமாணத்தாலே -ஆய -மேல் இருப்பதால் லுப்த சதுர்த்தி வரவழைத்துக் கொண்டு
அகாரத்துக்கே ஜீவாத்மா சேஷ பூதன் என்று கொள்ளுகிறோம்

1-விச்வம் –
ஸ்வரூபம் ரூபம் குணம் அனைத்திலும் பூரணன்
உயர்வற உயர் நலம் உடையவன் –1-1-1-
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதுமாய் அவையவை தொறும் உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-

செய்ய தாமரைக் கண்ணனாய் -3-6-1-
உலகமுண்ட -தடம் கடல் கிடந்தான் தன்னை -வ்யூஹம்
இலங்கை -செற்ற வில்லி -விபவம்
நாராயணனே பாற் கடலில் பையத் துயின்ற பரமன் -ஓங்கி உலகு அளந்த உத்தமன்
ஏஷ நாராயணன் -ஷீராப்தி நிகேதன் -ஆகதோ மதுராம் புரிம்
பூர்ணம் –இதம் -அர்ச்சை –அது பூர்ணம் –இதுவே முதல் திரு நாமம்

விஸ்வம்-
ஸ்வரூபம் ரூபம் குணம் மகிமை ஆகியவற்றால் பரிபூர்ணர்-ஸ்வா பாவிக-சர்வ வித பூரணத்வம் –
அசங்க்யேய உயர்வற -மங்களங்களுக்கு எல்லாம் ஒரே இருப்பிடம் –
ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் முதலியவற்றால் பூர்ணர்–ஸ்ரீ பராசர பட்டர் -all in one
விஸ்வம் -ஸ்வரூப ரூப குண விபைவைகி பரி பூர்ண இத்யர்த்த -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்பதைப் பின்பற்றி

வேச நாத் விஸ்வம் இத்யாஹு லோகாநாம் காசி சத்தம லோகம்ச்ச விஸ்வம் ஏவ இதி ப்ரவதந்தி நராதிப -மோக்ஷ தர்மம்

மங்களகரமான ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் இவற்றை ஸ்வா பாவிகமாக கொண்டவன் என்று முதலில் மங்களகரமாக திரு நாமம்

உலகுக்குக் காரணமாக இருப்பவர் -யதஸ் சர்வாணி பூதாணி-கார்யமாகவும் காரணமாகவும் -உலகம் ப்ரஹ்மம் விட வேறு அல்லாமையாலே –
விசதி-உலகைப் படைத்து பிரவேசிக்கிறான்
விசந்தி -சம்ஹார காலத்தில் சகல பூதங்களும் இவன் இடம் பிரவேசிக்கின்றன
விச்வம் -ஓம் என்கிற பிரணவம் -சொல்லுக்கும் பொருளுக்கும் வேறுபாடு இல்லை -ஓங்காரமான ப்ரஹ்மத்தையே குறிக்கும்–ஸ்ரீ சங்கரர்

1-விஸ்வம்
சங்கர பாஷ்யம் -உலகம் அனைத்தும் தாமாகவே இருப்பவர்
எல்லாப் பொருள்களுக்கும் காரணமும்
எல்லாவுமாய் இருக்கிறதும்
எல்லாப் பொருள்களுக்கும் முடிவில் ஒடுங்கும் இடமானதும்
எல்லாவற்றிலும் பிரவேசித்து இருப்பதும்
ஸப்த பிரபஞ்சம் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு இருக்கும் ப்ரணவத்தால் சொல்லப் படுவதும்
எல்லாவுமாகவுமாய் இருப்பது பற்றி விருப்பு வெறுப்பு முதலியவற்றை விடுத்து
எதையும் ஹிம்ஸியாது
ஸ்துதி நமஸ்காராதிகளால் கொண்டாடத் தக்கதும்
எவ்வித நன்மைக்கும் ஸ்ரத்தையே காரணம் ஆகின்றது பற்றி எல்லாவித நன்மையையும் அளிக்கும்
ஸ்ரத்தை யுடன் பூஜிக்கத் தக்கதாயும்
ப்ரஹ்மம் என்பது பொருள்

ஆகவே பதினான்கு வித்யா ஸ்தானங்களாலும் சொல்லப்படும் ஒரே தெய்வம் எது என்பது முதல்
எதை ஜெபிப்பவன் முக்தியைப் பெறுவான் என்பது வரையில் வினவிய ஆறு வினாக்களுக்கும் விடையாக
எல்லாப் பொருளுக்கும் காரணமும் -என்பது முதலியவற்றால் கூறப்பட்ட ப்ரஹ்ம வஸ்துவே
இங்கு உள்ள விஸ்வம்
என்றதால் கூறப்பட்டது என்பது ஏற்பட்டது

கார்ய வாசகமாகிய விஸ்வ சப்தத்தால்
காரணமான ப்ரஹ்மத்தைச் சொல்லியதனால்
மற்றக் காரிய வாசகங்களாகிய
பிரமாதி சப்தங்களும்
ஸர்வேஸ்வரனையே குறிப்பது ஆகும் –

எல்லா இடத்திலும் உட் புகுந்து இருப்பவர் -கருடாரூடன் -சர்வ வியாபி -விசேஷமாக வளர்பவர் -வாயுவுக்கு அந்தர்யாமியாக நடத்துபவர்
உலகை நடத்துபவர் -உலகிற்குக் காரணமானவர் -ஜீவர்களை நியமிப்பவர்
விசேஷமான ஸூக ஜ்ஞான ரூபமாக இருப்பவர் -விசேஷமான ஸூகமே பல ரூபமாக இருப்பவர் -ஜ்ஞான ஸ்வரூபர் -ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்

ஸ்ரீ நரஸிம்ஹனையே சொல்ல வந்தது – -ஆதி மத்யம் அந்தம் -சொல்வதால்
விச்வம்-
நகமும் ஆயுதம்
நடுவிலும் அவனைச் சொல்ல வந்தது
விச்வம்-ஓம் விசவாய நம ஆதி சங்கரர் ஓம் விச்வச்மை நம –
புள்ளின் வாய் கீண்டானை- பகாசுரனை
சீதை -பொல்லா அரக்கன்- கம்சன்-கிள்ளிக் களைந்தவன் — கண்ணன்
நாமம் ஆயிரமுடைய நம்பி நாராயணன் ஸ்ரீ கண்ணன்-
ஸ்ரீ ராமன் -சொல்லும் ஸ்ரீ ராம ராமேதி
ஸ்ரீ ராமனும் இல்லை -ஸ்ரீ கிருஷ்ணனும் இல்லை –ஸ்ரீ நரஸிம்ஹனையே இல்லை நாராயணன் தானே அனைவரும் –
கிள்ளுவது நகம் கார்யம்
புள் ஜடாயு-கோபம் வர காரணம் -கச்ச லோகா -மயா–ஸ்ரீ லஷ்மி நியமனம் –
சரப பஷி கிளித்த ஸ்ரீ நரஸிம்ஹன்-தப்பான பிரசாரம் – மேட்டு அழகிய சிங்கன்-
ஹிரண்ய கசிபு -ஹிரண்ய ரஷன் -ராகவ ஸிம்ஹன்- யாதவ ஸிம்ஹன் – -மூன்று தடவை ஜெய விஜயரை
சிசுபாலன் தந்தவத்திரன்- காலே சடக்கென ஸ்ரீ நரஸிம்ஹன் போல் வர வேண்டும் ஸ்ரீ ருக்மிணி எழுதி அனுப்பிய —
அழகியான் தான் அரி உருவம் தான்-
நர லோக மனோபிராமம்
ராஜ சூய யாகம்- சிசுபாலன்-கோப சரிகள் காமத்தால் சிசு பாலன் த்வேஷத்தால்-
ஸ்ரீ நரசிம்மர் விருத்தாந்தம் பரிஷித் நாரதர் அருளுகிறார் பத்தாவது ஸ்கந்தம்
மனத்துக்கு இனியன்
விச்வம்-வியாப்தி -குணங்களால் உயர்ந்த வள்ளல்
காரணமான பிர பஞ்சம்-காரியம் பிரமத்தை -குறிக்கும் சங்கரர்
அவதாரம் பூர்ணம் -மத்வர்

விஸ்வம் –
விஸ் –நுழைதல்
விஸ்வம் -விஸ்வம் அனைத்துக்கும் த்ரிவித காரணன்
விஸ்வம் –ஸமஸ்த கல்யாண குண பூர்ணன் –
பர வாஸூ தேவன்
ஓம் விஸ்வாய நம –மந்த்ரம்

1. விஸ்வம் – பிரபஞ்சம்

விஸ்வம் என்பது பிரபஞ்சம் மற்றும் படைப்பின் மொத்தத்தை குறிக்கிறது. இது ‘விஷ்‘ என்ற மூல வார்த்தையிலிருந்து வந்தது, அதாவது ‘உள்ளே’ அல்லது ‘ஊடுருவல்’. பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பதால் விஸ்வம் என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இல்லாத எதுவும் நம்மைச் சுற்றி இல்லை. விஷ்ணு பகவான் விஸ்வத்தின் மூலகாரணமாக இருப்பதால், அவரே விஸ்வம் என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீஆதிசங்கரரின் வார்த்தைகளில் ‘விஷ்வஸ்ய ஜகதஹ் காரணத்வேன விஷ்வமித்யுச்யதே ப்ரஹ்ம – பிரபஞ்சத்தின் காரணமாயிருப்பதால், பரமாத்மா பிரபஞ்சம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.

விஸ்வம் என்றால் எங்கும் என்று பொருள். புருஷ ஸூக்தம் இறைவனைப் பற்றி கூறுகிறது ‘ஸ பூமிம் விஷ்வதோ விருத்வா அத்யதிஷ்டத்தஷாங்குலம் – அவர் உலகம் எங்கும் ஊடுருவி, உடல் அளவீடுகளுக்கு அப்பாற்பட்டவர்’

நாராயண ஸூக்தத்தில் நமக்கு உள்ளது:-ஸஹஸ்ரஷீஷம் தேவம் விஸ்வக்ஷம் விஸ்வஸம்புவம் விஸ்வம் நாராயணம் தேவம் அக்ஷரம் பரமம் பதம்‘  : எண்ணற்ற தலைகளை உடையவனும், எங்கும் கண்களை உடையவனும், பிரபஞ்சம் முழுவதையும் ஆசீர்வதிப்பவனும், பிரபஞ்சமாகத் திகழ்பவனுமான நாராயணனை நான் வணங்குகிறேன்.

ஸ்ரீ பராசர பட்டர், விஷ்ணுவின் முதல் நாமமே அவனது மகத்தான மகிமையையும், இயற்கையான, அசாத்தியமான, மங்களகரமான, மேன்மையான அவனுடைய அத்தியாவசிய இயல்பு, வடிவம், குணங்கள் போன்றவற்றின் விளிம்பிற்கு முழுமையையும் எடுத்துரைப்பது மிகவும் பொருத்தமானது என்று குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ விஷ்ணு புராணம் – ‘ஸ ஏவ ஸர்வ பூதாத்மா விஷ்வ ரூபோ யதோ அவயயா’ – அவர் இருக்கும் அனைத்திற்கும் ஆன்மா, மற்றும் அனைத்தும் அவரது உடல்.

“விஸ்வேஸ்வரம் அஜம் தேவம் ஜகதஹ் பிரபுமவ்யயம் – அவர் பிரபஞ்சத்தின் இறைவன் ஆனால் அவர் தோற்றமும் முடிவும் இல்லாதவர்” என்று பல ஸ்ருதி குறிப்பிடுகிறது.

———–

அத ஸஹஸ்ரநாம

(இனி) சஹஸ்ரநாம உரை தொடங்குகிறது

அத்ர நாமஸஹஸ்ரே இந்த ஆயிரம் திருநாமங்களில் ஆதித்யாதி ஶப்தாநாமர்தாந்தரே ஆதித்ய முதலான நாமங்கள் ப்ரஸித்தானாமாதித்யாத்யர்த்தானாம் சூரியன் போன்ற வேறு பெயர்களில் ப்ரஸித்தி அடைந்திருந்தாலும் தத்விபூதித்வேன அந்த ஒரே பரம்பொருளின் அதிசய சக்தியின் ஒரு வெளிப்பாடு ஆனதாலும் ததபேதாத்அந்த பரம்பொருளினின்று வேறானதில்லையாதலாலும் (ப்ரஹ்மம் ஒன்றே என்பது அத்வைதக் கொள்கையாகும்எனவேஅந்தப் பரம்பொருளினின்று வேறானது எதுவுமில்லை) தஸ்யைவ ஸ்துதிரிதி ப்ரஸித்தார்த்தக்ரஹனேSபி தத்ஸ்துதித்வம் அந்த திருநாமங்களின் ப்ரஸித்தி பெற்ற அர்த்தங்களை ஏற்கும் பொழுதும் அந்த பரம்பொருளின் பெருமையே போற்றப்படுகிறது |

இந்த ஆயிரம் திருநாமங்களில் ஆதித்ய முதலான நாமங்கள் சூரியன் போன்ற வேறு பெயர்களில் ப்ரஸித்தி அடைந்திருந்தாலும், அவையும் (அந்த சூரியன் முதலானவையும்) அந்த ஒரே பரம்பொருளின் அதிசய சக்தியின் (விபூதியின்) வெளிப்பாடேயாகும். பரம்பொருளுக்கும், இந்த உலகில் நாம் காணும் மற்ற பொருள்களுக்கும் வேறுபாடு எதுவும் இல்லாததால், அந்த (ஆதித்ய முதலான) திருநாமங்களின் (சூரியன் முதலான) ப்ரஸித்தி பெற்ற அர்த்தங்களை ஏற்கும் பொழுதும் அந்த பரம்பொருளின் பெருமையே போற்றப்படுகிறது.

பூதாத்மா சேந்தரியாத்மா ச ப்ரதானாத்மா ததா பவான் | ஆத்மா ச பரமாத்மா ச த்வமேக: பஞ்சதா ஸ்தித: || (விஶ்ணு புராணம் 5.18.50)

ஸ்ரீ விஶ்ணு  புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-பஞ்ச பூதங்கள், இந்த்ரியங்கள், பருப்பொருள், ஜீவாத்மா மற்றும் பரமாத்மா ஆகிய ஐந்து வடிவங்களாகவும் தாங்களே இருக்கிறீர்.

ஜ்யோதீம்ஶி விஶ்ணுர்புவனானி விஶ்ணுர்வனானி விஶ்ணுர்கிரயோ திஶஸ்ச | நத்ய: ஸமுத்ராஸ்ச ஸ ஏவ ஸர்வம் யதஸ்தி யன்னாஸ்தி ச விப்ரவர்ய || (விஶ்ணு புராணம் 2.12.38)

ஸ்ரீ விஶ்ணு  புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-நக்ஷத்திரங்கள் விஶ்ணு, உலகம் விஶ்ணு, வனம், மலைகள், திசைகள், ஆறுகள், கடல்கள் அனைத்தும் விஶ்ணுவேயாகும். ஹே அந்தணரில் சிறந்தோரே! இங்கு உள்ளவை, அல்லவை அனைத்தும் அந்த ஒரே பரம்பொருளே ஆகும்.

இதி விஶ்ணு புராணே இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆதித்யானாம் அஹம் விஶ்ணு: (ஸ்ரீமத் பகவத்கீதை 10.21) ஆதித்தியர்களில் நான் விஶ்ணு

இத்யாரப்ய இது தொடக்கமாக

அதவா பஹுனைதேன கிம் ஞாதேன தவார்ஜுன |-விஶ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்னமேகாம்ஷேன ஸ்திதோ ஜகத் || (ஸ்ரீமத் பகவத்கீதை 10.42)

அன்றி, இதைப் பலவாறாகத் தெரிவதில் உனக்கு பயன் யாது அர்ஜுனா? எனது கலையொன்றால் இவ்வையகத்தை நிலை நிறுத்தியுள்ளேன்.

இதி பர்யந்தம் கீதாயாம் இது (1௦.42 ஸ்லோகம்) ஈறாக, ஸ்ரீமத் பகவத்கீதையிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளது.

ப்ரஹ்மைவேதம் விஶ்வமிதம் வரிஷ்டம் (முண்டக உபநிஶத் 2.2.12) இந்த உலகம் மேலான இந்த ப்ரஹ்மனாகவே உள்ளது.

புருஶ ஏவேதம் விஶ்வம் (முண்டக உபநிஶத் 2.1.10) இந்த உலகம் (புருஶனான) ப்ரஹ்மனாகவே உள்ளது.

இதி ஸ்ருதிஸ்ச இவ்வாறு ஸ்ருதியிலும் (வேதங்களிலும்) கூறப்பட்டுள்ளது.

புனருக்தி தோஷம்: ஸஹஸ்ரநாமம் எனும்போது ஆயிரம் நாமங்களை கூறவேண்டும். ஒரே நாமத்தை ஆயிரம் முறை கூறலாகாது. ஆனால், ஸஹஸ்ரநாமத்தில் சில திருநாமங்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன (உதாரணத்திற்கு விஶ்ணு). அவற்றிற்கு உரை எழுதும் பொழுது அர்த்தத்தில் வேறுபாடு காண்பிக்க வேண்டும். இல்லையேல் அவை தனித்த திருநாமமாக ஏற்றுக்கொள்ள படமாட்டாது (ஆயிரம் எண்ணிக்கையும் வராது). இதை புனருக்தி தோஷம் என்பர். எனவே, இங்கு ஆதிசங்கர பகவத்பாதர், தமது சஹஸ்ரநாம உரையில் அவ்வாறு புனருக்தி தோஷங்கள் இல்லை என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் தெளிவு படுத்துகிறார்.

மேலும், இவ்வாறு பலமுறை வரும் திருநாமங்களுக்கு உரை எழுதுகையில், முதன் முறை வரும்பொழுதே அதன் மற்ற பொருள்களையும் கொடுத்துள்ளார். அந்த பொருட்களில் ஒரு சிலவற்றை அதே திருநாமம் பின்னர் வரும்பொழுது எடுத்தாள்கிறார். இதை புனருக்தி தோஷமாக கருத இயலாது. முதன் முறை வரும் திருநாமத்திற்கு (அவர் கூறியுள்ள பல பொருட்களில்) முதல் பொருளையும், மற்ற பொருள்களை பின்வரும் இடங்களுக்குமாக நாம் கருதவேண்டும். 

விஷ்ண்வாதிஷப்தானாம் புனருக்தானாமபி வ்ருத்திபேதே-நார்த்தபேதான்ன பௌனருக்த்யம் |

விஶ்ணு முதலிய திருநாமங்கள் மீண்டும் மீண்டும் வரும்போதும், அந்த திருநாமத்தின் பொருளில் (ஒவ்வொரு இடத்திலும்) வேறுபாடுகள் உள்ளதால் புனருக்தி தோஷம் இல்லை.

ஸ்ரீபதிர்மாதவ இத்யாதீனாம் வ்ருத்யேகத்வேSபி ஶப்தபேதான்ன பௌனருக்த்யம் |

ஸ்ரீபதி, மாதவ முதலிய திருநாமங்களின் பொருள் ஒன்றை இருப்பினும் அந்த நாமங்கள் வெவ்வேறாய் இருப்பதனால் புனருக்தி தோஷம் இல்லை.

அர்த்தைகத்வேSபி ந பௌனருக்த்யம் தோஷாய, நாம்னாம் ஸஹஸ்ரஸ்ய கிமேகம் தைவதமிதி ப்ருஶ்டேரேக-தைவதவிஶயத்வாத்|

இந்த விஶ்ணு சஹஸ்ரநாமமே, “உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?” என்ற கேள்வியிலிருந்து ஒரே பரம்பொருளின் விஷயமாகப் பிறந்தது. எனவே, பல திருநாமங்களின் பொருள் ஒன்றாய் இருப்பினும் புனருக்தி தோஷம் வருவதில்லை.

யத்ர ஃபுல்லிங்கஶப்தப்ரயோகஸ்தத்ர விஶ்ணுர்விஶேஶ்ய:

(இந்த சஹஸ்ரநாமத்தில்) ஆண்பால் திருநாமங்கள் பரப்ரஹ்மத்தின் விஶ்ணு ஸ்வரூபத்தையும்

யத்ர ஸ்திரீலிங்கஶப்தஸ்தத்ர தேவதா விஶேஶ்யதே

பெண்பால் திருநாமங்கள் மற்ற பரப்ரஹ்மத்தின் மற்ற தேவதை ஸ்வரூபத்தையும்

யத்ர நபும்ஸகலிங்கஶப்தஸ்தத்ர ப்ரஹ்மேதி விஶேஶ்யதே |

(ஆண்பாலும் இல்லாமல் பெண்பாலும் இல்லாமல்) பொதுவான திருநாமங்கள் (நேரடியாக) பரப்ரஹ்மத்தை குறிப்பிடுவதாகக் கொள்ளவேண்டும்.

யத: ஸர்வாணி பூதானி (ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாமம் 11) எவரிடமிருந்து, கல்பத்தின் தொடக்கத்தில் ஜீவராசிகள் தோன்றினவோ…

இத்யாரப்ய ஜகதுத்பத்தி ஸ்திதிலயகாரணஸ்ய ப்ரஹ்மண ஏக தைவதத்வேனாபிஹிதத்வாதாதாவுபயவிதம் ப்ரஹ்ம விஶ்வஶப்தே-நோச்யதே

(ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகம் 11) இது தொடக்கமாக இந்த உலகின் தோற்றம், காத்தல் மற்றும் அழிவின் காரணமாய் உள்ள ப்ரஹ்மமே ஒரே முழுமுதற் கடவுளாக (ஸ்ரீ பீஷ்மாச்சார்யரால்) கூறப்பட்டுள்ளது. எனவே (காரண  மற்றும் காரிய) ப்ரஹ்மம் முதலில் “விஶ்வ” எனும் திருநாமத்தால் (ஸ்ரீ பீஷ்மாச்சார்யரால்) அழைக்கப் படுகிறார்.

ஓம் விஶ்வஸ்மை நம:

விஶ்வம் என்ற இந்த முதல் திருநாமத்திற்கு ஆதிசங்கரர் கீழ்கண்ட 5 விளக்கங்களை அளித்துள்ளார்.

ஜகத: காரணத்வேனவிஶ்வம்இத்யுச்யதே ப்ரஹ்ம |

(விஶ்வம் எனும்) இந்த பிரபஞ்சத்தின் காரணமாய் இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

1. விஶ்வஸ்ய ஜகத: காரணத்வேன விஶ்வம் இத்யுச்யதே ப்ரஹ்ம ஆதௌ து விஶ்வமிதி கார்யஶப்தேன காரணக்ரஹனம் கார்யபூத-விரிஞ்ச்யாதிநாமபிரபி உபபன்னா ஸ்துதிர்விஶ்ணோரிதி தர்ஶயிதும்

(விஶ்வம் எனும்) இந்த பிரபஞ்சத்தின் காரணமாய் இருப்பதால் பரப்ரஹ்மமான பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். விஶ்வம் எனும் காரியத்தால் (வினைப்பயனால்), முழுமுதல் காரணத்தை (பிரபஞ்ச உற்பத்தி எனும் வினை புரிபவரை) அறிந்து கொள்ளலாம். இந்த உலகின் உற்பத்திக்கு நேரடி (ப்ரத்யக்ஷ) காரணமாய் இருக்கும் ப்ரஹ்மா முதலிய திருநாமங்களும் பகவான் ஸ்ரீவிஶ்ணுவின் புகழையேப் பாடுகின்றன (ஏனெனில், ப்ரஹ்மாவும் பரப்ரஹ்மமான விஶ்ணுவே)

விஶ்வஸ்ய ஜகத: விஶ்வம்என்றுஅழைக்கப்படும்இந்தபிரபஞ்சத்தின்காரணத்வேனகாரணமாய்இருப்பதால்விஶ்வம் இத்யுச்யதே ப்ரஹ்ம பரப்ரஹ்மத்தைவிஶ்வம்என்றுஅழைக்கின்றனர் |

(விஶ்வம் எனும்) இந்த பிரபஞ்சத்தின் காரணமாய் இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆதௌ து முழுமுதல் விஶ்வமிதி கார்யஶப்தேன விஶ்வம் எனும் காரியத்தால் (வினைப்பயனால்காரணக்ரஹனம் காரணத்தை (பிரபஞ்ச உற்பத்தி எனும் வினை புரிபவரை) அறிந்து கொள்ளலாம் கார்யபூத-விரிஞ்ச்யாதிநாமபிரபி இந்த உலகின் உற்பத்திக்கு நேரடி (ப்ரத்யக்ஷ) காரணமாய் இருக்கும் ப்ரஹ்மா முதலிய திருநாமங்களும் உபபன்னா ஸ்துதிர்விஷ்ணோரிதி தர்ஶயிதும் பகவான் ஸ்ரீவிஶ்ணுவின் புகழையேப் பாடுகின்றன |

  1. யத்வாபரஸ்மாத் புருஶான்ன(அ)பின்னமிதம் விஶ்வம்பரமார்த்த தஸ்தேன விஶ்வம் இத்யபிதீயதே ப்ரஹ்ம|

அல்லது, இந்த பிரபஞ்சமானது உண்மையில் பரமபுருஶனான பரமாத்மா பரப்ரஹ்மத்தினிடம் ஒன்றியே (அதனின்று வேறுபடாது) இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா,அல்லது பரஸ்மாத் புருஶான்னபரமபுருஶனான பரமாத்மா பரப்ரஹ்மத்தினிடம் (அ)பின்னமிதம்ஒன்றியே (அதனின்று வேறுபடாதுவிஶ்வம்இந்த பிரபஞ்சமானது இருப்பதால் பரமார்த்ததஸ்தேன விஶ்வம் இத்யபிதீயதே ப்ரஹ்மவிஶ்வம் என்று பரப்ரஹ்மத்தை அழைக்கின்றனர் |

  1. அதவா விஶதீதி விஶ்வம்ப்ரஹ்ம |

அல்லது, இந்த ப்ரபஞ்சத்தினுள் புகுவதனால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மைவேதம் விஷ்வமிதம் வரிஷ்டம் (முண்டக உபநிஶத் 2.2.12)

முண்டக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த உலகம் மேலான இந்த ப்ரஹ்மனாகவே உள்ளது.

புருஶ ஏவேதம் விஷ்வம் (முண்டக உபநிஶத் 2.1.1௦)

முண்டக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த உலகம் (புருஶனான) ப்ரஹ்மனாகவே உள்ளது.

இத்யாதி ஸ்ருதிப்யஸ்தத்பின்னம் ந கிஞ்சித் பரமார்த்தத: சதஸ்தி |

இந்த (முண்டகோபனிஷத்) ஸ்ருதி வாக்கியங்களின் மூலம், ப்ரஹ்மத்தைத் தவிர்த்து (இந்த பிரபஞ்சத்தில்) வேறொன்றும் இல்லை என்பது விளங்கும்.

அதவா அல்லது விஶதீதி புகுவதனால் விஶ்வம்இந்த ப்ரபஞ்சத்தினுள் ப்ரஹ்ம பரப்ரஹ்மமான பகவானை “விஶ்வம்” என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

அல்லது, இந்த ப்ரபஞ்சத்தினுள் புகுவதனால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தத் ஸ்ருஶ்டா ததேவானுப்ராவிஶத்’ (தைத்ரீய உபநிஶத் 2.6)

தைத்ரீய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது:​ (பரப்ரஹ்மம்) அவற்றைப் படைத்து அதிலேயே நுழைந்தார்.

இதி ஶ்ருதே இவ்வாறு (தைத்ரீய உபநிஶத்) வாக்கியம் கூறுகின்றது.

  1. கிஞ்ச ஸம்ஹ்ருதௌ விஶந்தி ஸர்வாணி பூதான்யஸ்மின் இதி விஶ்வம்ப்ரஹ்ம |

பிரளய காலத்தில் இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அந்த ப்ரஹ்மத்தை சென்று லயமடைவதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கிஞ்ச ஸம்ஹ்ருதௌ பிரளய காலத்தில் விஶந்தி சென்று லயமடைவதால் ஸர்வாணி பூதான்யஸ்மின்னிதி இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் விஶ்வம் ப்ரஹ்ம பரப்ரஹ்மமான பகவானை “விஶ்வம்” என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

‘யத் ப்ரயந்த்யபிஸம்விஶந்தி’ (தைத்ரீய உபநிஶத் 3.1)

தைத்ரீய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது:​ இறப்பவை அனைத்தும் எதை (எந்த ப்ரஹ்மத்தை) சென்றடைகின்றனவோ…

இதி ஶ்ருதே இவ்வாறு (தைத்ரீய உபநிஶத்) ஸ்ருதி வாக்கியம் கூறுகின்றது.

  1. ததா ஹி ஸகலம் ஜகத்கார்யபூதமேவிஶத்யத்ர ச அகிலம் விஶதீத்யுபயதாபி விஶ்வம் ப்ரஹ்ம இதி |

மேலும், அதனுள் பிரவேசித்து பிரபஞ்சத்தை உருவாக்கியும், பிரளய காலத்தில் அனைத்து பிரபஞ்சத்தையும் தன்னுள்ளே லயமடையச் செய்வதாலும், இவ்வாறு, பல வழிகளாலும் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ததா ஹி ஸகலம் ஜகத் அனைத்து பிரபஞ்சத்தையும் கார்யபூதமே விஶத்யத்ர சாகிலம் அதனுள் பிரவேசித்து பிரபஞ்சத்தை உருவாக்கியும் விஶதீத்யுபயதாபி பிரளய காலத்தில் அனைத்து பிரபஞ்சத்தையும் தன்னுள்ளே லயமடையச் செய்வதாலும்விஶ்வம் ப்ரஹ்ம இதி பரப்ரஹ்மமான பகவானை “விஶ்வம்” என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

  1. யத்வாபரஸ்மாத் புருஶான்ன(அ)பின்னமிதம்விஶ்வம்பரமார்த்த தஸ்தேன விஶ்வம் இத்யபிதீயதே ப்ரஹ்ம|

அல்லது, இந்த பிரபஞ்சமானது உண்மையில் பரமபுருஶனான பரமாத்மா பரப்ரஹ்மத்தினிடம் ஒன்றியே (அதனின்று வேறுபடாது) இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. அதவா விஶதீதி விஶ்வம்ப்ரஹ்ம |

அல்லது, இந்த ப்ரபஞ்சத்தினுள் புகுவதனால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. கிஞ்ச ஸம்ஹ்ருதௌ விஶந்தி ஸர்வாணி பூதான்யஸ்மின் இதி விஶ்வம்ப்ரஹ்ம |

பிரளய காலத்தில் இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அந்த ப்ரஹ்மத்தை சென்று லயமடைவதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. ததா ஹி ஸகலம் ஜகத்கார்யபூதமேவிஶத்யத்ர ச அகிலம் விஶதீத்யுபயதாபி விஶ்வம் ப்ரஹ்ம இதி |

மேலும், அதனுள் பிரவேசித்து பிரபஞ்சத்தை உருவாக்கியும், பிரளய காலத்தில் அனைத்து பிரபஞ்சத்தையும் தன்னுள்ளே லயமடையச் செய்வதாலும், இவ்வாறு, பல வழிகளாலும் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

‘அன்யத்ர தர்மாதன்யத்ராதர்மாத்’ (கடோபநிஶத் 1.2.14) இத்யாரப்ய கடோபநிஷத்தில் (அந்த ப்ரஹ்மானது) தர்மத்திற்கும் வேறான, அதர்மத்திற்கும் வேறான என்று (ப்ரஹ்மத்தை) விவரிக்கத் தொடங்குமிடத்து,

‘ஸர்வே வேதா யத்பதமாமனந்தி

தபாம்ஸி ஸர்வாணி ச யத் வதந்தி |

யதிச்சந்தோ ப்ரஹ்மச்சர்யம் சரந்தி

தத்தே பதம் ஸங்க்ரஹேன ப்ரவீம்யோமித்யேதத்’ || (கடோபநிஶத் 1.2.15)

கடோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

எல்லா வேதங்களும் எந்த இலக்கைப் பற்றி பேசுகின்றனவோ, எதற்காக அனைத்து தவங்களையும் கூறுகின்றனவோ, எதை அடைவதற்கு ஆசை கொண்டு ஸாதகர்கள் ப்ரஹ்மச்சர்யத்தை அனுஷ்டிக்கிறார்களோ, அந்த இலக்கை உனக்கு சுருக்கமாக உரைக்கிறேன்: அது “ஓம்” என்பதே ஆகும்.

‘ஏதத்த்யேவாக்ஷரம் ப்ரஹ்ம ஏதத்த்யேவாக்ஷரம் பரம் |

ஏதத்த்யேவாக்ஷரம் ஞாத்வா யோ எதிச்சதி தஸ்ய தத்’ || (கடோபநிஶத் 1.2.16)

கடோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

(ஓம்) என்ற இந்த ஒரு எழுத்தே சகுணப்ரஹ்மம், இந்த எழுத்தே நிர்குண ப்ரஹ்மம். இந்த எழுத்தையே த்யானித்து ஒருவன் எதை விரும்புகிறானோ, அவனுக்கு அது அமைகிறது (கிடைக்கிறது).

இதி காடகே இவ்வாறு கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஏதத்வை சத்யகாம பரம் சாபரம் ச ப்ரஹ்ம யதோங்கார’ (ப்ரஶ்ன உபநிஶத் 5.2) 

ப்ரஶ்ன உபநிஶத் கூறப்பட்டுள்ளது: ‘ஹே சத்யகாமனே!! இந்த ஓம்காரமே பர (நிர்குண) மற்றும் அபர (ஸகுண) ப்ரஹ்மமாகும்’.

இத்யுபக்ரம்ய இவ்வாறு தொடங்கி,

‘ய: புனரேதம் த்ரிமாத்ரேனோமித்யேதேனைவாக்ஷரேன பரம் புருஶமபித்யாயீத’ (ப்ரஶ்ன உபநிஶத் 5.5)

எவரொருவர் மூன்று மாத்திரை அளவுள்ள இந்த ஓம் எனும் அக்ஷரத்தால் பரம புருஶனை த்யானிக்கின்றனரோ (அவர்கள் முக்தியை அடைகின்றனர்).

இதி ப்ரஶ்னோபநிஶதி இவ்வாறு  ப்ரஶ்னோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஒமிதி ப்ரஹ்ம | ஒமிதீதம் ஸர்வம் |’ (தைத்ரீய உபநிஶத் 1.8)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது ‘ஓம் என்ற ப்ரணவமே ப்ரஹ்மமாகும். ஓம் என்ற ப்ரணவமே அனைத்துமாகும்’.

இதி யஜுர்வேதாரண்யகே இவ்வாறு யஜுர் வேத ஆரண்யகத்தில் (தைத்ரீய உபநிஶத்தில்) கூறப்பட்டுள்ளது.

‘தத்யதா ஷங்குனா ஸர்வாணி பர்னாணி ஸந்த்ருண்ணான் யேவமோங்காரேன ஸர்வா வாக் ஸந்த்ருணா | ஓம்கார ஏவேதம் ஸர்வம்’ (சாந்தோக்ய உபநிஶத் 2.23.3)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது ‘எவ்வாறு இலைகள் அதன் மத்தியில் உள்ள காம்பால் தாங்கப்படுகின்றனவோ, அவ்வாறே அனைத்து ஒலிகளும், வார்த்தைகளும் தாங்கப்படுகின்றன. எனவே, இங்கு அனைத்தும் ஓம்காரமே!!’

இதி சாந்தோக்யே இவ்வாறு சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒமித்யேததக்ஷரமிதம் ஸர்வம் (மாண்டுக்ய உபநிஶத் 1)

மாண்டுக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது ‘ஓம் என்கின்ற இந்த எழுத்து இவை அனைத்துமாக உள்ளது’

ஒமித்யேததக்ஷரமிதம் ஸர்வம் (மாண்டுக்ய உபநிஶத் 1)

மாண்டுக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது ‘ஓம் என்கின்ற இந்த எழுத்து இவை அனைத்துமாக உள்ளது’

இத்யுபக்ரம்ய இவ்வாறு தொடங்கி,

‘ப்ரணவோ ஹ்யபரம் ப்ரஹ்ம ப்ரணவச்ச பர: ஸ்ம்ருத: |

அபூர்வோSனந்தரோSபாஹ்யோSநபர: ப்ரணவோSவ்யய’ || (மாண்டுக்ய காரிகா 1 | 26)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:

(ஓம் என்னும்) ப்ரணவமே அபர (சகுண) மற்றும் பர (நிர்குண) ப்ரஹ்மம் ஆகும். ஓம் என்ற இந்த ப்ரணவத்திற்கு தொடக்கம் (காரணம்) இல்லை, அது தனித்தன்மை வாய்ந்தது, அதனின்றி வேறொன்றும் இல்லை, எந்த காரண காரியங்களுடனும் தொடர்பு அற்றது.

‘ஸர்வஸ்ய ப்ரணவோ ஹ்யாதிர்மத்யமந்தஸ்தததைவ ச |

ஏவம் ஹி ப்ரணவம் ஞ்யாத்வா வ்யஶ்னுதே ததனந்தரம்’ || (மாண்டுக்ய காரிகா 1 | 27)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:

(ஓம் என்னும்) ப்ரணவமே அனைத்தின் தொடக்கம், இடை மற்றும் முடிவுமாகும். இந்த பிரணவத்தை இவ்வாறு அறிபவர் ஐயமின்றி அதையே (அந்த பிரணவமாகிய பரப்ரஹ்மத்தையே) அடைவர்.

‘ப்ரணவம் ஹீஶ்வரம் வித்யாத் ஸர்வஸ்ய ஹ்ருதயே ஸ்திதம் |

ஸர்வவ்யாபினமோங்காரம் மத்வா தீரோ ந ஶோஶதி’ || (மாண்டுக்ய காரிகா 1 | 28)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:

(ஓம் என்னும்) ப்ரணவமே அனைவரின் இதயத்தினுள்ளிருக்கும் இறைவனாக அறிவாய். இதை இவ்வாறு உணரும் பகுத்தறிவுடையவர் எக்காலத்திலும் வருத்தமுறுவதில்லை.

‘அமாத்ரோSனந்தமாத்ரஸ்ச த்வைதஸ்யோபஷம: ஶிவ: |

ஒம்காரோ விதிதோ யேன ஸ முனிர்நேதரோ ஜன:’ || (மாண்டுக்ய காரிகா 1 | 29)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:

ஒலியற்றதும், அனைத்து ஒலியாக இருப்பதையும், இருமைகள் அற்றதாயும், மங்களகரமானதாயும் (ஓம் என்னும்) இந்த ப்ரணவத்தை அறிபவரே முனிவராவர். மற்றையோர் (முனிவர்) அல்ல.

இத்யந்தா மாண்டூக்யோபநித் இது ஈறாக மண்டுக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஓம் தத்ப்ரஹ்ம | ஓம் தத்வாயு: | ஓம் ததாத்மா | ஓம் தத்ஸத்யம் | ஓம் தத்ஸர்வம் | (நாராயண உபநிஶத் 68)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (ஓம் என்னும்) ப்ரணவமே ப்ரஹ்மம், ப்ரணவமே வாயு (காற்று), ப்ரணவமே ஆத்மா, ப்ரணவமே உண்மைப்பொருள், ப்ரணவமே அனைத்துமாகும்.

இத்யாதி ஶ்ருதிபி: இவ்வாறு ஸ்ருதிகளான வேதத்திலும் கூறப்பட்டுள்ளது.

‘ஒமித்யேகாக்ஷரம் ப்ரஹம வ்யாஹரன் மாமனுஸ்மரன் |

ய: ப்ரயாதி த்யஜன் தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 8.13)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

‘ஓம்’ என்ற ப்ரஹ்ம எழுத்து ஒன்றையே ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய், உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகிறான்.

‘யதக்ஷரம் வேதவிதோ வதந்தி விந்தி யத்யதயோ வீதராகா: |

யதிச்சந்தோ ப்ரஹ்மச்சர்யம் சரந்தி தத்தே பதம் ஸங்க்ரஹேன’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 8.11)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

எந்த நிலையை (ஓம் என்னும் அக்ஷரத்தை) வேதமுணர்ந்தோர் அழிவற்றதென்பர், (மற்ற உலகியல் விஷயங்களில்) விருப்பமற்ற முனிவர் எதனுட் புகுவர், எதை விரும்பி ப்ரஹ்மச்சர்ய விரதம் காக்கப்படும், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.

‘ரஸோSஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஶஶிஸூர்யயோ: |

ப்ரணவ: ஸர்வவேதேஶுப்த: கே பௌரும் ந்ருஶு’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 7.8)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

நான் நீரில் சுவை; குந்தி மகனே, நான் ஞாயிறிலும் திங்களிலும் ஒளி; எல்லா வேதங்களிலும் நான் ப்ரணவம்; வானில் ஒலி நான்; ஆண்களிடத்து நான் ஆண்மை.

‘மஹர்ஶீனாம் ப்ருகுரஹம் கிராமஸ்ம்யேகமக்ஷரம் |

யக்ஞானாம் ஜபயக்ஞோSஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய:’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 10.25)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

மஹரிஷிகளில் நான் ப்ருகு; வாக்குகளில் நான் ‘ஓம்’ என்ற ஓரெழுத்து; யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம்; ஸ்தாவரங்களில் நான் ஹிமாலயம்.

‘ஆத்யம் ச த்ரயக்ஷரம் ப்ரஹ்ம த்ரயீ யஸ்மின் ப்ரதிஶ்டிதா |

ஏகாக்ஷரம் பரம் ப்ரஹ்ம ப்ராணாயாம: பரம் தப:’ || (அத்ரி ஸ்ம்ரிதி 1.11)

அத்ரி ஸ்ம்ரிதியில் கூறப்பட்டுள்ளது:

மூன்றெழுத்துடைய ப்ரஹ்மமே (ப்ரணவமாகிய ஓம்காரமே) ஆதியில் இருந்தது; இதில் (இந்த ப்ரணவத்தில்) மூன்று வேதங்களும் நிலைபெற்றிருந்தன. ஓரெழுத்தான ஓம்காரமே பரப்ரஹ்மம், ப்ராணாயாமமே சிறந்த தவமாகும்.

‘ப்ரணவாத்யாஸ்த்ரயோ வேதா: ப்ரணவே பர்யவஸ்திதா: |

வாங்க்மயம் ப்ரணவம் ஸர்வம் தஸ்மாத்ப்ரணவமப்யஸேத்’ || (அத்ரி ஸ்ம்ரிதி 1.9)

அத்ரி ஸ்ம்ரிதியில் கூறப்பட்டுள்ளது:

மூன்று வேதங்களும் ப்ரணவத்தில் தொடங்கி ப்ரணவத்துடனே முடிகின்றன. அனைத்து சொற்களும் ப்ரணவ ரூபமேயாகும், எனவே ப்ரணவத்தையே நாம் உபாசிக்க வேண்டும்.

இத்யாதிஸ்ம்ருதேஶ்ச்ச விஶ்வஶப்தேனோங்காரோSபிதீயதே வாச்யவாசகயோரத்யந்தபேதாபாவாத் விஶ்வமித்யோங்கார ஏவ ப்ரஹ்மோத்யர்த்த: |

இவ்வாறு ஸ்ம்ருதிகளிலிருந்தும் ‘விஶ்வ’ எனும் நாமத்திற்கு ஓம்காரம் என்ற பொருளே நிரூபிக்கப்பட்டுள்ளது. சொல்லும், பொருளும் இணைபிரியாது இருத்தல்லால், விஶ்வம் அல்லது ஓம்காரமே ப்ரஹ்மம் என்பதே இதன் தேர்ந்த கருத்தாகும்.

‘ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலானிதி சாந்த உபாஸீத’ || (சாந்தோக்ய உபநிஶத் 3.14.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

ஐயமின்றி இங்கு அனைத்தும் ப்ரஹ்மமேயாகும்; அனைத்தும் அதனின்றே உருவாகி, அதனுள்ளேயே லயமடைந்து, அதிலேயே செயல்புரிகின்றன, எனவே, அனைத்தும் ப்ரஹ்மமேயாகும். இவ்வாறு, அமைதியான மனத்துடன் ப்ரஹ்மத்தை உபாஸிப்போமாக!!

இதி ஏததுக்தம் பவதி யஸ்மாத் ஸர்வமிதம் விகாரஜாதம் ப்ரஹ்ம தஜ்ஜத்வாத்தல்லயத்வாத்ததனத்வாச்ச | ந ச ஸர்வஸ்யைகாத்-மத்வே ராகாதய: ஸம்பவந்தி | தஸ்மாச்சாந்த உபாசீத இதி ஶ்ருதே: |

இந்த ஸ்ருதி வாக்கியத்திலிருந்து, “இங்குள்ள அனைத்தும் மாற்றங்களும் ப்ரஹ்மத்தில் இருந்தே உருவாவதாலும், ப்ரஹ்மத்திலேயே லயமடைவதாலும், ப்ரஹ்மத்திலேயே அனைத்து செயல்களையும் புரிவதாலும், (இங்குள்ள) அனைத்தும் ப்ரஹ்மமேயாகும். இங்கு அனைத்தும் (இரண்டின்றி) ஒன்றாகவே இருப்பதால், இதில் (ப்ரஹ்மத்தில்) விருப்பு, வெறுப்பாகிய தோஷங்கள் இல்லை. எனவே, அமைதியான உள்ளத்துடன் இந்த ப்ரஹ்மத்தை உபாசிப்பாயாக.” என்ற கருத்து புலனாகிறது.

ஶ்ரூயதாம் தர்மஸர்வஸ்வம் ஶ்ருத்வா சைவாவதார்யதாம் |

ஆத்மன: ப்ரதிகூலானி பரேஶாம் ந ஸமாசரேத்’ || (விஶ்ணுதர்மம் 3.255.44)

விஶ்ணுதர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

அனைவரும் தர்மத்தின் சாரத்தை கேளுங்கள்; கேட்டதை உங்கள் உள்ளத்தில் நன்கு நிலைநிறுத்துங்கள் – எந்த செயல் நமக்கு விரோதமானதோ, எதிரிடையானதோ, அதை (அந்த செயலை) மற்றவருக்கு எதிராக நாம் செய்தல் கூடாது.

‘ஆத்மௌபம்யேன ஸர்வத்ர ஸமம் பஶ்யதி யோSர்ஜுன |

ஸுகம் வா யதி வா துக்கம் ஸ யோகி பரமோ மத:’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 6.32)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்மசமத்துவம் பற்றி சம பார்வை செலுத்துவானாயின், அவன் பரம யோகியாகக் கருதப்படுவான்.

‘நிர்குண: பரமாத்மாத்ர தேஹே வ்யாப்ய வ்யவஸ்தித: |

தமஹம் ஞானவிஞ்யேயம் நாவமன்யே ந லங்கயே’ || (மஹாபாரதம் வன பர்வம் 146 | 8)

மஹாபாரதம் வன பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:

குணங்களற்ற பரமாத்மா உடல் முழுவதிலும் இருக்கிறான். ஞானத்தால் அறியத்தக்க அவனை என்னால் அவமதிக்க இயலாது. எனவே, நான் உன்னைத் தாண்டிச் செல்ல மாட்டேன்.

‘யத்யாகமைர்ன விந்தேயம் தமஹம் பூதபாவனம் |

க்ரமேயம் த்வாம் கிரிம் சேமம் ஹனூமானிவ சாகரம்’ || (மஹாபாரதம் வன பர்வம் 146 | 9)

மஹாபாரதம் வன பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:

அனைத்து உயிர்களிலும் உறைந்திருக்கும் அவனை (பரமாத்மாவை) நான் அறியாதிருந்தால், கடலைத் தாண்டிய ஹனுமானைப்போல, உன்னையும் இந்த மலையையும் நான் தாண்டி இருப்பேன்.

‘பத்தவைராணி பூதானி த்வேஶம் குர்வந்தி சேத்தத: |

ஶோச்யான்யஹோSதிமோஹேன வ்யாப்தானீதி மநீஶிணாம் ||

ஏதே பின்னத்ருஶா தைத்யா விகல்பா: கதிதா மயா |

க்ருத்வாSப்யுபகமம் தத்ர சக்ஷேப ஶ்ரூயதா மம ||

விஸ்தார: ஸர்வபூதஸ்ய விஶ்ணோ: ஸர்வமிதம் ஜகத் |

த்ரஶ்டவ்யமாத்மவத்தஸ்மாதபேதேன விசக்ஷணை: ||

ஸமுத்ஸ்ருஜ்யாஸுரம் பாவம் தஸ்மாத்யூயம் ததா வயம் |

ததா யத்னம் கரிஶ்யாமோ யதா ப்ராப்ஸ்யாம நிர்வ்ருதிம் ||’ (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.17.82 – 85)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

(ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் ப்ரஹலாதன் அஸுர குழந்தைகளிடம் கூறினான்): பிறருடன் பகைமை பாராட்டி அவரை வெறுக்கும் மனிதரைக்கண்டு அறிஞர்கள் “ஒ!! இவர்கள் இவ்வாறு மோக வசப்பட்டுள்ளனரே!” என்று வருந்துவர். ஹே தைத்யர்களே (அஸுர குழந்தைகளே)! தன்னிலிருந்து பிறரை வேறொன்றாகப் பார்ப்பவரே வெறுப்பையும், பகைமையையும் அடைகின்றனர். எனவே, அவற்றை (வெறுப்பையும், பகைமையையும்) விட்டொழிக்க வேண்டும். நானறிந்த நல்லனவற்றை உங்களுக்குக் கூறுகின்றேன், கேளுங்கள். இந்த உலகம் அனைத்தும் பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் விரிவாக்கமாகும். இங்கு அவரைத்தவிர வேறொன்றும் இல்லை.  அறிவுடையோர் இங்கு அனைத்தையும் தமது ஆத்மாவின் வெளிப்பாடாகவே, வேறுபாடின்றி காண முயல வேண்டும். எனவே, நாம் நமது அஸுர தன்மையை விட்டொழித்து, இவ்வாறு (வேறுபாடின்றி காண்பதற்கு) முயற்சி செய்ய வேண்டும். இதுவே, நமக்கு அமைதியையும் நிம்மதியையும் அளிக்கும்.

ஸர்வத்ர தைத்யா: ஸமதாமுபேத ஸமத்வமாராதனமச்யுதஸ்ய|| (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.17.90)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

(ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் ப்ரஹலாதன் அஸுர குழந்தைகளிடம் கூறினான்): ஹே தைத்யர்களே (அஸுர குழந்தைகளே)!! அனைத்தையும் ஒன்றாகவே (வேறுபாடுகள், வெறுப்புக்கள் இன்றி) பார்க்கப் பழகுங்கள். இதுவே பகவான் ஸ்ரீ அச்யுதருக்கு நாம் செய்யும் ஆராதனையாகும்.

ந மந்த்ராதிக்ருதம் தாத ந ச நைஸர்கிகோ மம |

ப்ரபாவ ஏ ஸாமான்யோ யஸ்ய யஸ்யாச்யுதோ ஹ்ருதி || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.4)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

(ப்ரஹலாதன் தனது தந்தை ஹிரண்யகசிபுவிடம் கூறினான்) தந்தையே!! இது (தன்னைக் கொல்ல தன் தந்தை ஹிரண்யகசிபு எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தது) மந்திர சக்தியினாலும் நிகழவில்லை. இது என்னிடமுள்ள இயற்கையான சக்தியினாலும் அல்ல. பகவான் ஸ்ரீ அச்யுதரிடம் மனதை நிலைநிறுத்தியவருக்கு இவை அனைத்தும் மிக எளிதானதாகும்.

அன்யேஶாம் யோ ந பாபானி சிந்தயத்யாத்மனோ யதா |

தஸ்ய பாபாகமஸ்தாத ஹேத்வபாவான்ன வித்யதே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.5)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

தன்னைப் போலவே பிறரையும் நேசித்து, அவர்களுக்குக் கேடொன்றும் நினைக்காதவனைப் பாவங்கள் தீண்டுவதில்லை. (துன்பத்தை விளைவிக்கும்) மூல காரணம் இல்லாததால் அவனுக்குத் துன்பங்களும் விளைவதில்லை.

கர்மணா மனஸா வாசா பரபீடாம் கரோதி ய: |

தத்பீஜம் ஜன்ம ஃபலதி ப்ரபூதம் தஸ்ய சாஶுபம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.6)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

மனதாலும், செயலாலும், வாக்காலும் பிறருக்குத் துன்பம் இழைப்பவன், அந்த பாபமென்னும் விதையின் பயனாய் மறுபிறப்பு மற்றும் பெருந்துன்பன்களைப் பயனாய் (பழமாய்) அடைகிறான்.

சோஹம் ந பாபமிச்சாமி ந கரோமி வதாமி வா |

சிந்தயன்ஸர்வபூதஸ்தமாத்மன்யபி ச கேவம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.7)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

நான் எவருக்கும் துன்பம் இழைப்பதில்லை. அவ்வாறு பேசுவது கூட கிடையாது. நான் எப்பொழுதும், என் நெஞ்சினுள்ளும் அனைத்துயிர்களுக்குள்ளும்  வீற்றிருக்கும் பகவான் ஸ்ரீ கேசவனைத் த்யானிக்கின்றேன்.

ரீரம் மானஸம் துக்கம் தைவம் பூதபவம் ததா |

ஸர்வத்ர ஸுபசித்தஸ்ய தஸ்ய மே ஜாயேத குத: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.8)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

இவ்வாறு அனைத்தையும் சமநோக்குடன் பார்க்கும் எனக்கு சரீரம், மனம், வாக்கு ஆகியவற்றுக்கு தெய்வங்களாலோ, இயற்கையாலோ என்ன துன்பம் வரக்கூடும்?

இந்த உலகில் பிறக்கும் அனைவரும் மூவகைத் துன்பங்களுக்கு உட்படுத்தப் படுகிறோம்இவை தாபத் த்ரயங்கள் என்று அழைக்கப்படும்அவையாவன ஆதி தைவிகம் (தேவர்களால் வரும் துன்பங்கள்), ஆதி பௌதிகம் (இயற்கை உபாதைகள்), ஆத்யாத்மிகம் (நமது பூர்வ கர்ம வினைகளால் ஏற்படுவன).

ஏவம் ஸர்வேஶு பூதேஶு பக்திரவ்யபிசாரிணீ |

கர்தவ்யா பண்டிதைர்ஞாத்வா ஸர்வபூதமயம் ஹரிம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.9)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

இவ்வாறு, பகவான் ஸ்ரீ ஹரியானவர் எவ்வுயிரிலும் நிறைந்துள்ளார் என்பதை உணர்ந்து கற்றறிந்தோர் அனைத்துயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும்.

சாம சோபப்ரதானம் ச பேததண்டௌ ததாபரௌ |

உபாயா: கதிதா: ஸர்வே மித்ராதினாம் ச ஸாதனே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.35)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

நண்பர்களையும், எதிரிகளையும் அடக்கியாள்வதற்கு (எனது குருமார்கள்) நான்கு உபாயங்களைக் கூறினார்கள். அவையாவன – சாம (நயம்பட பேசுதல்), பேத (இருவரிடையே கலகத்தை உண்டாக்குதல்), தான (பொருள், பணம் முதலியவற்றால் வசப்படுத்துதல்), தண்டம் (வலிமையால் அடக்குதல்).

தானேவாஹம் ந பஶ்யாமி மித்ராதீம்ஸ்தாத மா க்ருத: |

ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதனை: கிம் பிரயோஜனம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.36)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

ஆனால் தந்தையே, தாங்கள் சினமடையாது கேட்கவேண்டுகிறேன். எனக்கு நண்பர்கள் என்றோ எதிரிகள் என்றோ யாரும் தெரிவதில்லை (எந்தபாகுபாடும்இல்லைஎன்றுபொருள்). ஹே பெருந்தோளுடையோரே!! எப்பொழுது (நண்பனையும்பகைவனையும்அடக்கியாளவேண்டும்என்ற) அடையவேண்டியது ஒன்றும் இல்லையோ, அப்பொழுது அத்தகைய முயற்சியால் என்ன பயன்?

ஸர்வபூதாத்மகே தாத ஜகன்னாதே ஜகன்மயே |

பரமாத்மனி கோவிந்தே மித்ராமித்ரகதா குத: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.37)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

தந்தையே!! ஜகன்னாதனான பகவான் ஸ்ரீ கோவிந்தன் அனைத்துயிர்களுக்குள்ளும் நீக்கமற நிறைந்தும், இந்த பிரபஞ்சமாகவே வ்யாபித்தும் இருக்கையில், (சிலரை) நண்பனென்றும், (சிலரை) பகைவரென்றும் கருதுவது பயனற்றது.

ஜடானாமவிவேகானாமஸுரானாமபி ப்ரபோ |

பாக்யபோஜ்யானி ராஜ்யானி சந்த்யனீதிமதாமபி ||

தஸ்மாத்யதேத புண்யேஶு ய இச்சேன்மஹதீம் ஶ்ரியம் |

யதிதவ்யம் ஸமத்வே ச நிர்வாணமபி சேச்சதா || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.44-45)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

பிரபுவே (தந்தையே)!!! அரசாளும் பேறு அறிவிலிகளுக்கும், கோழைகளுக்கும், அரசாளத் தகுதியற்றவருக்கும் கூட அவர்களின் முன்ஜென்ம கர்மவினைக்கேற்பக் கிடைக்கக் காண்கிறோம். எனவே, புகழையும், பேற்றையும் விழைபவர்கள் நற்செயல்களைப் புரியவேண்டும். (இந்த சம்ஸாரத் தளையிலிருந்து) முக்தியை விழைபவர்கள் அனைத்துயிர்களையும் (தன்னுயிர்போல) சமநோக்குடன் பார்க்க வேண்டும்.

தேவா மனுஷ்யா: பவ: பக்ஷிவ்ருக்ஷசரீஸ்ருபா:|

ரூபமேததனந்தஸ்ய விஶ்ணோர்பின்னமிவ ஸ்திதம் ||

ஏதத் விஜானதா ஸர்வம் ஜகத் ஸ்தாவரஜங்கமம் |

த்ரஶ்டவ்யமாத்மவத் விஶ்ணுர்யதோSயம் விஶ்வரூபத்ருக் ||

ஏவம் ஞாதே ஸ பகவானனாதி: பரமேஶ்வர: |

ப்ரஸீதத்யச்யுதஸ்தஸ்மின் ப்ரஸன்னே க்லேஶஸம்க்ஷய: ||

(ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.46-48)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

தேவர்கள், மனிதர், மிருகங்கள், பறவைகள் மற்றும் பாம்பு முதலான அனைத்தும் எல்லையற்ற பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் உருவமாகும். அதுவே (அந்த பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் உருவமே) இங்கு வெவ்வேறாகத் தெரிகின்றது என்பதை அறிபவன் இங்குள்ள அசையும், மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தையும் தனக்கு நிகராகவே பார்க்கவேண்டும். ஏனெனில், இவை அனைத்தும் பிரபஞ்சத்தையே தன் உருவமாகக் கொண்டுள்ள பகவான் ஸ்ரீ விஶ்ணுவேயாகும். இவ்வாறு அறிவதன் மூலம் தனக்கொரு தொடக்கம் இல்லாதவரும், அழிவற்றவருமான பரமேஸ்வரன் மனமகிழ்கிறார். அவர் மனமகிழ்ந்தால் நமது அனைத்துத் துன்பங்களும் அழிந்துவிடும்.

பஹூனாம் ஜன்மனாமந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே |

       வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: || (ஸ்ரீ பகவத்கீதை 7.19)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:–பல பிறவிகளின் இறுதியில் ஞானவான், ‘எல்லாம் வாசுதேவனே’ என்று கருதி என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான். அவ்வித மஹாத்மா கிடைத்தற்கரியவன்.

இத்யாதிவசனைச்ச | இத்தகைய வாக்கியங்களால் இதுவே (பகவான் விஶ்வம் என்று அழைக்கப்படுகிறார்) என்பது புலனாகிறது

ஹிம்ஸாதிரஹிதேன ஸ்துதிநமஸ்காராதி கர்தவ்யமிதி தர்யிதும் விஷ்வஶப்தேன ப்ரஹமாபிதீயத இதி வா |

அல்லது, மற்ற உயிர்களுக்குத் துன்பமின்றி விஷ்வமாகிய இந்த பிரபஞ்சத்திற்கு நமது போற்றுதலும், வணக்கங்களும் உரித்தாக வேண்டும். இதைக் குறிப்பதற்காகவே, பரப்ரஹ்மத்தை “விஶ்வம்” என்று அழைக்கின்றனர்.

மத்கர்மக்ருன்மத்பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜித: |

நிர்வைர: ஸர்வபூதேஶு ய: ஸ மாமேதி பாண்டவ || (ஸ்ரீ பகவத்கீதை 11.55)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:-என்தொழில் செய்வான், எனைத் தலைக்கொண்டோன், என்னுடைய அடியான், பற்றெலாம் இற்றான், எவ்வுயிரிடத்தும் பகைமை யிலாதான், யாவன், பாண்டவா, அவனென்னை எய்துவான்!!!

இதி | இவ்வாறுக் கூறப்பட்டுள்ளது.

ந சலதி நிஜவர்ணதர்மதோ ய:

ஸமமதிராத்மஸுஹ்ருத்விபக்ஷபக்ஷே |

ந ஹரதி ந ச ஹந்தி கிஞ்சித்துச்சை:

ஸ்திதமனஸம் தமவேஹி விஶ்ணுபக்தம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.2௦)

ஸ்ரீ விஶ்ணுபுராணத்தில் கூறப்பட்டுள்ளது:

(யமதர்மராஜன் தனது யமதூதர்களிடம் கூறினார்) எவரொருவர் தமது வர்ணத்தின் கடமைகளிலிருந்து பிறழாதவரோ, எவர் தமது நண்பர் மற்றும் பகைவரிடத்தில் சமனோக்குடையவரோ, எவர் எதையும் (மற்றவரிடமிருந்து களவு வழியில்) பறிக்காமலும், மற்றுயிரைத் துன்புறுத்தாமலும், (இன்பமாயினும், துன்பமாயினும்) எல்லா காலங்களிலும் நிலையான அறிவு படைத்தவரோ, அவரை பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் பக்தனாக அறிவீர்களாக.

விமலமதிராமத்ஸர பிரஶாந்த:

ஸுசிசரிதோSகிலஸத்த்வமித்ரபூத: |

ப்ரியஹிதவசனோSஸ்தமானமாயோ வஸதி

ஸதா ஹ்ருதி தஸ்ய வாஸுதேவ: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.24)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-(யமதர்மராஜன் தனது யம தூதர்களிடம் கூறினார்) எவரொருவர் தூய்மையான மனதுடையவரோ, வன்மம் அற்றவரோ, அமைதியான உள்ளம் கொண்டவரோ, அப்பழுக்கற்ற குணமுடையவரோ, அனைத்துயிர்களுக்கும் நண்பரோ, அனைத்துயிர்களுக்கும் இன்பமும், நன்மையையும் தரும் மொழிகளை கூறுபவரோ, அகந்தையும், மமதையும், மாயையும் அற்றவரோ அவரது உள்ளத்தில் பகவான் ஸ்ரீ வாசுதேவர் வசிக்கின்றார்.

வஸதி ஹ்ருதி ஸநாதனே ச தஸ்மின்

பவதி புமாஜ்ஜகதோSஸ்ய ஸௌம்யரூப: |

க்ஷிதிரஸமதிரம்யமாத்மனோSந்த

கதயதி சாருதயைவ சாலபோத || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.25)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-எவ்வாறு சால மரத்தின் இளமையானது அதனுள்ளே நிரம்பியிருக்கும் சாற்றினை பறைசாற்றுகின்றதோ, அதைப்போலவே அனைவருக்கும் பிரியமான ஒருவர், தனது மனத்தினுள் நித்தியமான பகவான் ஸ்ரீ விஶ்ணு வசிப்பதை பறைசாற்றுகிறார்.

சகலமிதமஹம் ச வாஸுதேவ

பரமபுமான்பரமேஸ்வர: ஸ ஏக |

இதி மதிரசலா பவத்யனந்தே

ஹ்ருதயகதே வ்ரஜ தான்விஹாய தூராத் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.32)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-எவரொருவர் பரமபுருஶரும், அனைத்தையும் ஆள்பவருமான பகவான் ஸ்ரீ வாசுதேவரே இந்த உலகம் அனைத்துமாக இருப்பதை தமது தூய அறிவால் உணர்ந்து, தமது உள்ளத்தில் பகவான் ஸ்ரீ அனந்தரை நிலைநிறுத்தியவரோ அவரை விட்டு நீங்கள் விலகிச் செல்லுங்கள்.

யமநியமவிதூதகல்மஶானாமனுதினமச்யுதஸக்தமானஸானாம் |

அபகதமதமானமத்ஸரானாம் வ்ரஜ பட தூரதரேன மானவானாம் ||–(ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.26)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-ஒ (யம) தூதர்களே!!! எவரொருவரின் குற்றங்கள் மனம் மற்றும் புலனடக்கத்தின் மூலம் நீங்கிவிட்டனவோ, எவரொருவர் எப்பொழுதும் பகவான் ஸ்ரீ அச்யுதரிடம் மனதை நிலை நிறுத்தியவரோ, எவரொருவர் மமதை, அகந்தை மற்றும் வன்மங்கள் அழியபெற்றவரோ அத்தகைய மனிதரிடமிருந்து விலகியே இருங்கள்.

இத்யாதிவசனைர்வைஷ்ணவலக்ஷணஸ்யைவம்பிரகாரத்வாச்ச ஹிம்ஸாதிரஹிதேன விஶ்ணோ: ஸ்துதிநமஸ்காராதி கர்தவ்யமிதி |

இந்த புராண வாக்கியங்களிலிருந்து, மற்ற உயிர்களுக்குத் துன்பம் விளைவித்தல் போன்ற குற்றங்கள் இல்லாமல் இருத்தலும், பகவான் ஸ்ரீ விஶ்ணுவை போற்றுவது, தொழுவது போன்ற  நற்செயல்களைப் புரிவதுமே ஒரு வைணவனுக்கு (பகவான்ஸ்ரீவிஶ்ணுவின்பக்தனுக்கு) அடையாளம் என்பது விளங்கும்.

ஶ்ரத்தயா தேயம் அஶ்ரத்தயா (அ)தேயம் (தைத்ரீய உபநிஶத் 1.11.3)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எந்த ஒரு தானத்தையும் ஈடுபாட்டுடன் கொடுக்கவேண்டும். ஈடுபாடு இல்லாமல் எந்த தானத்தையும் கொடுக்கக்கூடாது.

ஶ்ரத்தயாக்னி ஸமித்த்யதே அர்ப்பணிப்பாலேயே (ஈடுபாட்டாலேயே) நெருப்பானது சுடர்விடுகின்றது

இத்யாதிஸ்ருதேஇது போன்ற வேத வாக்கியங்களாலும்,

ஶ்ரத்தாபூதம் வதான்யஸ்ய ஹதமஶ்ரத்தயேதரத் |

கொடையளிப்பவர் (கொடையளிப்பதில் உள்ள) ஈடுபாட்டாலேயே தூய்மையடைகிறார். ஈடுபாடில்லாமல் (கொடையளித்தால், அதனால் நற்பயன்கள் ஏதும் கிட்டாமல்) நஷ்டமடைகிறார்.

இமம் ஸ்தவமதீயான ஶ்ரத்தா பக்தி ஸமன்வித: (ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாமம் 132)

ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாமத்தின் ஃபல ஸ்ருதியில் கூறப்பட்டுள்ளது:

(ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாமமென்னும்) இந்த துதியை ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் படிப்பவர் (ஆத்ம சுகம்மன அமைதிதிருமகளின் கருணைதைரியம்வேத அறிவு மற்றும் மேன்மையை அடைகின்றனர்)

ஶ்ரோத்ரியம் ஶ்ராத்தமதீதமவ்ரதமதக்ஷிணம் யஞ்யமன்ரித்விஜாஹுதம் |

ஶ்ரத்தயா தத்தமஸம்ஸ்க்ருதம் ஹவிர்பாகாடேதே தவ தைத்யஸத்தம ||

ஹே அசுரர்களின் தலைவனே!!! தகுந்த வேத மந்திரங்கள் இன்றி நிறைவேற்றப்படும் நீத்தார் கடனும், தவமின்றி கற்கப்படும் கல்வியும், தக்க காணிக்கையின்றி நிறைவேற்றப்படும் வேள்வியும், தகுந்த ரிக் வேத வல்லுனர்கள் இன்றி உண்டாக்கப்படும் வேள்வித்தீயும், ஈடுபாடின்றிக் கொடுக்கப்படும் கொடையும், தூய்மையின்றி வேள்வித்தீயில் அர்ப்பணிக்கப்படும் பொருட்களும், ஆகிய இந்த ஆறும் உன்னைச் சேர்ந்தவையாகும்.

புண்யம் மத்த்வேஶிணா யச்ச மத்பக்தத்வேஶிணாம் ததா |

க்ரயவிக்ரயஸக்தானா புண்ய யச்சாக்னிஹோத்ரிணாம் ||

 ஶரத்தயா ச யத்தான யஜதாம் தததா ததா |

தத்ஸர்வம் தவ தைத்யேந்தர மத்ப்ரஸாதாத்பவிஶ்யதி ||

ஓ அசுரர்களின் தலைவனே!!! என்னையும், எனது பக்தர்களையும் வெறுப்போர் செய்யும் நற்செயல்களின் பலனும், செய்முறையின்றித் தவறுதலாகச் செய்யப்படும் அக்னிஹோத்ரத்தின் பலனும், ஈடுபாடின்றி செய்யப்படும் வேள்வி மற்றும் தானத்தின் பலனும் எனது அருளால் உன்னை வந்து அடையும்.

(மேற்கண்டமூன்றுஸ்லோகங்களின்தேர்ந்தபொருள்:மேற்கூறியசெயல்கள்யாவும்அசுரத்தன்மைவாய்ந்தவையாகும்இவ்வாறுதவறாகச்செய்வதால்நமக்குநற்பயன்எதுவும்கிட்டாது)

ஶ்ராத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்த க்ருதம் ச யத் |

அஸதித்யுச்யதே பார்த்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ || (ஸ்ரீ பகவத்கீதை 17.28)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:-எவ்வித ஈடுபாடுமின்றி (அசிரத்தையுடன்) செய்யும் வேள்வியும், தானமும், தவமும், கர்மமும், ‘அஸத்’ எனப்படும். பார்த்தா, அவை மறுமையிலும் பயன்படா, இம்மையிலும் பயன்படா.

இத்யாதிஸ்ம்ருதிபிஸ்ச ஶ்ரத்தயா ஸ்துதிநமஸ்காராதி கர்த்தவ்யம் அஶ்ரத்தயா ந கர்த்தவ்யம் |

மேற்கண்ட ஸ்ம்ருதி வாக்கியங்களிலிருந்து (நாம் அறியவேண்டியது என்னவெனில், பகவான் ஸ்ரீ விஶ்ணுவை) போற்றுவதும், தொழுவதும் ஈடுபாட்டுடன் செய்யப்படவேண்டும். ஈடுபாடின்றி செய்வது கூடாது.

ஓம்தத்ஸதிதி நிர்தேஶோ ப்ரஹ்மணஸ்த்ரிவித: ஸ்ம்ருத: | (ஸ்ரீ பகவத்கீதை 17.23)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

“ஓம் தத் ஸத்” என்ற மும்மைப் பெயர் ப்ரஹ்மத்தைக் குறிப்பதென்பர்.

இதி பகவத்வசனாத் ஸ்துதிநமஸ்காராதிகம் கர்மாஸாத்விகம் விகுநமபி ஶ்ரத்தாபூர்வகம் ப்ரஹ்மனோSபிதானத்ரயப்ரயோகேன ஸகுணம் ஸாத்விகம் ஸம்பாதிதம் பவதி |

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த கீதை ஸ்லோகத்திலிருந்து, “பகவானைப் போற்றுவது, திருவடித்தொழுவது போன்ற செயல்களை தூய்மையற்ற மனதுடனோ, அல்லது குறைபாடுகளுடனோ செய்தாலும், ப்ரஹ்மத்தின் இந்த (ஓம், தத், ஸத் என்ற) மூன்று பெயர்களை ஈடுபாட்டுடன் ஓதுவதன் மூலம் ஒருவர் நற்குணங்களை அடைகிறார்” என்பது புலனாகிறது.

ஆத்மானம் விஶ்ணும் த்யாத்வாS(அ)ர்ச்சன ஸ்துதி நமஸ்காராதி கர்த்தவ்யம் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவிற்கு, போற்றுதல்களும், வழிபாடும், திருவடித்தொழுதலும் ஆத்மார்த்தமாகவே (அவரை நமது ஆத்மாவின் உருவமாகவே எண்ணிப்) புரிதல் வேண்டும்.

நாவிஶ்ணு: கீர்த்தயேத்விஶ்ணும் நாவிஶ்ணும் விஶ்ணுமர்ச்சயேத் |

நாவிஶ்ணு: ஸம்ஸ்மரேத் விஶ்ணு நாவிஶ்ணுர்விஶ்ணுமாப்னுயாத் ||–(ஸ்ரீ மஹாபாரதம்)

இதி மஹாபாரதே கர்மகாண்டே |-ஸ்ரீ மஹாபாரதம் கர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ளது:

நாம் விஶ்ணுவாக மாறாது (நமக்குள் இருக்கும் ஆத்மா, பரமாத்மாவான விஶ்ணுவே என்று உணராது) பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் புகழ் மாலைகளைப் பாடவேண்டாம், அவருக்கு வழிபாடுகள் செய்யவேண்டாம், நாமே விஶ்ணு என்று உணராது அவரைப் பற்றி நினைக்கவேண்டாம். நாம் விஶ்ணுவாக நம்மை உணராவிடில், நாம் பகவான் ஸ்ரீ விஶ்ணுவை அடைய முடியாது.

ஸர்வான்யேதானி நாமானி பரஸ்ய ப்ரஹ்மனோSநக | (ஸ்ரீ விஶ்ணு தர்மம் 1.123.13)

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

ஒ தூய்மையானவரே!!! இந்த அனைத்துத் நாமங்களும் பரப்ரஹ்மத்தின் திருநாமங்களே ஆகும்.

யம் யம் காமமபித்யாயேத்தம் தமாப்னோத்யஸம்யம் |

ஸர்வகாமானவாப்னோதி ஸமாராத்ய ஜகத்குரும் || (ஸ்ரீ விஶ்ணு தர்மம்)

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

ஒரு அடியவர், எந்தெந்தப் பொருளை அடைய விழைகிறாரோ, ஐயமின்றி அப்பொருளையே அடைகிறார். அந்த உலகிற்கு குருவான (பகவான் ஸ்ரீ விஶ்ணுவை) வழிபடுவதன் மூலம் (அடியவரது) அனைத்து விருப்பங்களும் நிறைவேறுகின்றன.

தன்மயத்வேன கோவிந்தமேத்யேதத் தால்ப்ய நான்யதா |

தன்மயோ வாஞ்சிதான் காமான் யதவாப்னோதி மானவ: || (ஸ்ரீ விஶ்ணு தர்மம்)

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

ஒ தால்ப்யரே!!! (பரமாத்மா) ஸ்ரீ கோவிந்தருடன் ஐக்கியமடைந்து, அவர் மயமாக மாறுவதன் மூலமே ஒருவரால் அவரை அடையமுடியும். எவரொருவர் பரமாத்மாவுடன் ஐக்கியமாகிறாரோ அவரால் அனைத்துப் பொருட்களையும் அடையமுடியும். இதில் மாற்றுக்கருத்து ஒன்றும் இல்லை.

இதி விஶ்ணுதர்மே | இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது,

ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித: |

ஸர்வதா வர்த்தமானோSபி ஸ யோகி மயி வர்த்ததே || (ஸ்ரீமத் பகவத்கீதை 6.31)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

ஒருமையில் நிலைகொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னைத் தொழுவோன், யாங்கணும் சென்றபோதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான்.

இதி பகவத்கீதாயாம் | இவ்வாறு ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது,

அஹம் ஹரி: ஸர்வமிதம் ஜனார்தனோ நான்யத்தத: காரணகார்யஜாதம் |

ஈத்ருங் மனோ யஸ்ய ந தஸ்ய பூயோ பவோத்பவா த்வந்த்வகதா பவந்தி || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.22.87)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

“நானே ஸ்ரீ ஹரியாவேன். இந்த உலகனைத்தும் பகவான் ஜனார்தனரே!! அந்த பரமாத்மாவைத் தவிர்த்து இங்கு எதுவும் செயலோ, காரணமோ இல்லை”. இவ்வாறான அறிவு படைத்தவரை பிறப்பு, இறப்பினால் உண்டாகும் இருமைகள் என்ற நோய் பற்றுவதில்லை.

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது,

குரோர்யத்ர பரீவாதோ நிந்தா வாபி ப்ரவர்த்ததே |

கர்ணௌ தத்ர பிதாதவ்யௌ கந்தவ்யம் வா ததோSன்யத ||

தஸ்மாத் ப்ரஹ்மைவாசார்யஸ்வரூபேணாவதிஷ்டே ||

(ஸ்ரீ விஶ்ணு தர்மம் 3.233.92)

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

எங்கு குருவின் (ஆசார்யரின்) நிந்தை மற்றும் அவமதிப்பு நிகழ்கிறதோ அங்கு நமது காதுகளை மூடிக்கொள்ளவேண்டும். அல்லது, அங்கிருந்து வெகு தொலைவு சென்றுவிட வேண்டும். ஏனெனில், அங்கு ப்ரஹ்மமே குருவின் (ஆசார்யரின்) வடிவில் இருக்கிறது.

இதி ஸ்ம்ருதே | இவ்வாறு ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டுள்ளது,

வரம் ஹுதவஹஜ்வாலாபுஞ்சஸ்யாந்தர்வ்யவஸ்திதி: |

ந செளரிசிந்தாவிமுகஜனஸம்வாஸவைஷஸம் ||

எங்கு பகவான் ஸ்ரீ ஹரியை நினைக்காத மக்கள் உள்ளனரோ, அங்கு வசிப்பதைக் காட்டிலும், கொழுந்து விட்டெரியும் தீயின் சுடர்களுக்குள் வசிப்பது மேலானதாகும்.

இதி காத்யாயனவசனாத் ‘யத்ர தேஶே வாஸுதேவநிந்தா தத்ர வாசோ ந கர்தவ்ய: | இந்த காத்யாயனரின் வாக்கின் மூலம், எங்கெங்கெல்லாம் பகவான் ஸ்ரீ வாசுதேவரின் நிந்தனை நடக்கிறதோ, அங்கெங்கெல்லாம் வசிப்பதை தவிர்க்க வேண்டும்.

யஸ்ய தேவே பரா பக்தி: யதா தேவே ததா குரௌ |

தஸ்யைதே கதிதா ஹ்யர்தா: ப்ரகாந்தே மஹாத்மன: ||

எவர் பகவானிடத்திலும், (அந்த பகவானிடம் பக்தி புரிவது போன்றே) தனது குருவினிடத்திலும் பக்தி உடையவரோ, அவருக்கே மேற்கூறிய அர்த்தங்கள் அனைத்தும் தெளிவாகப் புரியும்.

இதி ஶ்வேதாஶ்வதரோபநிஶன்மந்த்ரவர்ணாத் ஹரௌ குரௌ ச பரா பக்தி: கார்யேதி | இந்த ஶ்வேதாஶ்வதரோபநிஶத் வாக்கியத்தின் மூலம், பகவான் ஸ்ரீ ஹரியினிடத்திலும், அந்த பகவானுக்கு சமமாக குருவினிடத்திலும் பக்தி கொள்ளுதல் வேண்டும் (என்று புலனாகிறது).

அவஶேனாபி யன்நாம்னி கீர்த்திதே ஸர்வபாதகை: |

புமான் விமுச்யதே ஸத்ய: ஸிம்ஹத்ரைஸ்தைர்வ்ருகைரிவ||

(ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.19)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அவரது திருநாமங்களை (நாம சங்கீர்த்தனம் செய்கிறோம் என்ற நினைவில்லாமலேயே) அனிச்சையாக கூறுபவனுக்குக் கூட அவனது சகல பாவங்களும் அவனைவிட்டு சிங்கத்தைக் கண்டு ஓநாய்கள் பயந்து ஓடுவதைப்போல ஓடிவிடுகின்றன.

ஞானதோ(அஞ்)ஞானதோ வாபி வாஸுதேவஸ்ய கீர்த்தனாத் |

தத் ஸர்வம் விலயம் யாதி தோயஸ்தம் லவணம் யதா ||

எவ்வாறு நீரில் இட்ட உப்பானது (அந்த நீரில்) கரைந்து விடுகின்றதோ, அவ்வாறே, அறிந்தோ அறியாமலோ பகவான் ஸ்ரீ வாசுதேவரை நாம சங்கீர்த்தனம் செய்வதால் அனைத்து பாவங்களும் கரைந்துவிடுகின்றன.

கலிகல்மஶமத்யுக்ரம் நரகார்த்திப்ரதம் ந்ருணாம் |

ப்ரயாதி விலயம் ஸத்ய: ஸக்ருத் க்ருஷ்ணஸ்ய ஸம்ஸ்ம்ருதே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.21)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த கலியுகத்தில் நரகத்தை அடைவிக்கவல்ல எப்பேர்பட்ட கொடிய தோஷங்களும், பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரை      ஒரு முறை நினைப்பதன் (த்யானிப்பதன்) மூலம் அழிந்துவிடுகின்றன.

ஸக்ருத்ஸ்ம்ருதோSபி கோவிந்தோ ந்ருணாம் ஜன்மதை: க்ருதம் |

பாபராஶிம் தஹத்யாஶு தூலராஶிமிவானல: ||

எவ்வாறு நெருப்பானது பஞ்சுப்பொதிகளை உடனே எரித்து விடுமோ, அவ்வாறே நூற்றுக்கணக்கான ஜன்மங்களாய் சேர்த்துவைத்த பாபக்கூட்டங்கள் பகவான் ஸ்ரீ கோவிந்தனை ஒரு முறை நினைப்பதன் (த்யானிப்பதன்) மூலம் எரிக்கப்படுகின்றன.

சேயம் வதனவல்மீகவாஸினி ரசனோரகீ |

யா ந கோவிந்த கோவிந்த கோவிந்தேதி ப்ரபாஶதே ||

எவரது நாக்கு ‘கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!’ என்று கூறுவதில்லையோ அந்த நாக்கு வாயென்னும் புற்றுக்குள் வாழும் பாம்பாகும்.

பாபவல்லி முகே தஸ்ய ஜிஹ்வாரூபேன திஷ்டதி |

யா ந வக்தி திவா ராத்ரௌ குணான் கோவிந்தஸம்பவான் ||

எந்த நாக்கு பகலும், இரவும் பகவான் ஸ்ரீ கோவிந்தரின் குணங்களைப் போற்றப்பாடவில்லையோ, அது (அந்த) மனிதனின் வாயினுள் நாக்கின் வடிவத்தில் இருக்கும் பாவக்குவியலாகும்.

ஸக்ருதுச்சரிதம் யேன ஹரிரித்யக்ஷரத்வயம் |

பத்த: பரிகரஸ்தேன மோக்ஷாய கமனம் ப்ரதி ||

எவரொருவர் ஒருமுறையேனும் “ஹரி” என்ற இந்த இரு அக்ஷரங்களை (எழுத்துக்களை) உச்சரிக்கின்றாரோ அவர் மோக்ஷத்தை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டார் என்றே கொள்ளவேண்டும்.

ஏகோSபி க்ருஷ்ணஸ்ய க்ருத: ப்ரணாமோ தசாஶ்வமேதாவப்ருதேன துல்ய: |

தசாஶ்வமேதி புனரேதி ஜன்ம கிருஷ்ணப்ரணாமி ந புனர்பவாய ||

(மஹா பாரதம், ஶாந்தி பர்வம் 47.90)

மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் கூறப்பட்டுள்ளது: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு முறை வணங்குதல், பத்து அஸ்வமேத யாகங்கள் புரிந்து, முடிவில் (அந்த யாகத்தின் முடிவில் அவப்ருத ஸ்நானமாக) குளிப்பதற்கு சமமானது. அதிலும் பத்து அஸ்வமேத யாகங்களில் (அந்த யாகத்தின் முடிவில் அவப்ருத ஸ்நானமாக) குளிப்பவனுக்குக்கூட மறுஜென்மம் உண்டு; ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குபவர்களுக்கு மறுஜென்மம் இல்லை.

ஏவமாதிவசனைஶ்ரத்தாபக்த்யோரபாவேSபி நாமஸங்கீர்த்தனம் ஸமஸ்தம் துரிதம் நாசயதீத்யுக்தம் கிமுத ஶ்ராத்தாதிபூர்வகம் ஸஹஸ்ரநாமஸங்கீர்த்தனம் நாசயதீதி |

மேற்கண்ட (இதிஹாஸபுராண) வாக்கியங்களிலிருந்து ஈடுபாடு மற்றும் பக்தி இன்றி செய்யப்படும் நாம சங்கீர்த்தனமே அனைத்துப் பாவங்களையும் ஒழித்துவிடும் என்று புலனாகிறது. எனில், ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் கூறப்படும் சஹஸ்ரநாமசங்கீர்த்தனம் அவற்றை (அந்தப் பாபக்குவியல்களை) அழித்துவிடும் என்று கூறவும் வேண்டுமா?

மனஸா வா அக்ரே ஸங்கல்ப்யத்யத வாசா வ்யாஹரதி

முதலில் மனதிற்குள் முடிவெடுக்கிறார். பின்னர் வாக்கினால் (அதையே) பேசுகிறார்

யத்தி மனஸா த்யாயதி தத்வாசா வததி

மனம் எதை நினைக்கின்றதோ, வாக்கு அதையே பேசுகின்றது

இதி ஸ்ருதிப்யாம் ஸ்மரணம் த்யானம் ச நாமஸங்கீர்த்தனேSந்தர்பூதம் |

மேற்கண்ட இந்த இரு வேதவாக்கியங்களால் (மனதால்) நினைத்தல், மற்றும் த்யானித்தல் ஆகிய இரண்டும் நாம சங்கீர்த்தனத்திற்குள் அடங்கும் என்பது புலனாகிறது.

யஸ்மின்ன்யஸ்தமதிர்ன யாதி நரகம் ஸ்வர்கோSபி யச்சிந்தனே

விக்னோ யத்ர நிவேஶிதாத்மமனஸோ ப்ராஹ்மோSபி லோகோSல்பக: |

முக்திம் சேதஸி ய: ஸ்திதோSமலதியாம் பும்ஸாம் ததாத்யவ்யய:

கிம் சித்தம் யதகம் ப்ரயாதி விலயம் தத்ராச்யுதே கீர்த்திதே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.56)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

எவரிடம் தங்கள் மனதை லயித்தவர்களுக்கு, நரகவாசம் இல்லையோ, சுவர்க்கத்தைப் பற்றிய நினைவுகளும் (அவர்களது முக்திப்பாதைக்குத்) தடைக்கற்களோ, அந்த ப்ரஹ்மாவின் ஸத்யலோகமும் துச்சமானதோ, எந்த அழிவற்றக் கடவுளானவர் தனது அடியவர்களின் தூய்மையான மனதிற்குள் வசித்து அவர்களுக்கு முக்தியை அளிப்பவரோ, அந்த பகவான் ஸ்ரீ அச்யுதரை நாம சங்கீர்த்தனம் செய்வதால் நமது பாவங்கள் அழிவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? (முக்தியையே அளிக்க வல்லவரால் பாவங்களை அழிக்கப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை).

இதி விஶ்ணுபுராணாந்தே ஸ்ரீபராஶரேணோபஸம்ஹ்ருதம் |

இவ்வாறு ஸ்ரீவிஶ்ணுபுராணத்தின் முடிவில் ஸ்ரீபராசர மஹரிஷி (அந்தப் புராணத்தின் மூலக்கருத்தாக) முடிவுரையாகக் கூறுகிறார்.

ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி விசார்ய ச புன: புன: |

இதமேகம் ஸுனிஷ்பன்னம் த்யேயோ நாராயண: ஸதா ||

ஸ்ரீ மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது:

அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தையும் கடைந்தெடுத்து, அதை மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பார்த்தால் முடிவில் பகவான் ஸ்ரீமன் நாராயணரையே த்யானிக்க வேண்டும் என்பதே (அனைத்து சாஸ்திரங்களின் முடிவான கருத்தாகப்) புலனாகும்.

இதி ஸ்ரீமஹாபாரதாந்தே பகவதா ஸ்ரீவேதவ்யாஸேண உப ஸம்ஹ்ருதம் |

இவ்வாறு ஸ்ரீமஹாபாரதத்தின் முடிவில் ஸ்ரீவேதவ்யாஸர் கூறுகிறார்.

ஹரிரேக: ஸதா த்யேயோ பவத்பி: ஸத்வஸம்ஸ்திதை: |

ஒமித்யேவம் ஸதா விப்ரா: படத த்யாத கேஶவம் || (ஹரிவம்ஶம் 3.89.9)

ஸ்ரீஹரிவம்சத்தில் கூறப்பட்டுள்ளது:

நீங்கள் அனைவரும் ஸத்வ குணத்தில் நிலைநின்று, எப்பொழுதும் பகவான் ஸ்ரீ ஹரியையே த்யானியுங்கள். ஒ அந்தணர்களே!!! ‘ஓம்’ என்று உச்சரித்து, பகவான் ஸ்ரீ கேசவரைத் த்யானிப்பீர்களாக.

கைலாசயாத்ராயாம் ஹரிரேகோ த்யாதவ்ய இத்யுக்தம் மகேஸ்வரேணாபி |

இவ்வாறு ஸ்ரீஹரிவம்சம் கைலாச யாத்திரை பகுதியில் பகவான் சிவனும் ‘பகவான் ஸ்ரீ ஹரி ஒருவரையே த்யானிக்க வேண்டும்’ என்று கூறுகிறார்.

ஏதத்ஸர்வமபிப்ரேத்ய ‘ஏஷ மே ஸர்வ தர்மானாம் தர்மோSதிகதமோ மத:’ இத்யாதிக்யமுக்தம் |

இந்த வாக்கியங்களில் இருந்து “அனைத்து தர்மங்களிலும் பகவான் வாசுதேவரை பக்தியுடன் துதிகளாலும், அர்ச்சனைகளாலும் எப்பொழுதும் தொழுவதையே சிறந்த தர்மம் என்று நான் கருதுகிறேன்” என்பதே (என்னும் பீஷ்மரின் கருத்தே) அனைத்திலும் மேலானதாக கூறப்படுகிறது.

‘கிமேகம் தைவதம் லோகே’இத்யாரப்ய ‘கிம் ஜபன் முச்யதே ஜந்து:’இதி ட்ப்ரஶ்னேஶு‘யத: ஸர்வாணி’இதி ப்ரஶ்னோத்தராப்யாம்யத்ப்ரஹ்மோக்தம் தத்விஶ்ப்தேனோச்யத இதி வ்யாக்யாதம் |

‘உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?’ என்று தொடங்கி ‘யாரை நாம சங்கீர்த்தனம் செய்யவேண்டும்’ வரைக் (யுதிஷ்டிரனால்) கேட்கப்பட்ட ஆறு கேள்விகளுக்கு விடையாக ‘எவரிடமிருந்து, கல்பத்தின் தொடக்கத்தில் ஜீவராசிகள் தோன்றினவோ’ என்று (பீஷ்மாசார்யார்) எந்த ப்ரஹ்மத்தை பற்றி விவரித்தாரோ அந்த ப்ரஹ்மமே ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தினால் விரித்துரைக்கப்பட்டுள்ளது.

————–

1. விஸ்வம் – பிரபஞ்சம்

விஸ்வம் என்பது பிரபஞ்சம் மற்றும் படைப்பின் மொத்தத்தை குறிக்கிறது. இது ‘விஷ்‘ என்ற மூல வார்த்தையிலிருந்து வந்தது, அதாவது ‘உள்ளே’ அல்லது ‘ஊடுருவல்’. பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பதால் விஸ்வம் என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இல்லாத எதுவும் நம்மைச் சுற்றி இல்லை. விஷ்ணு பகவான் விஸ்வத்தின் மூலகாரணமாக இருப்பதால், அவரே விஸ்வம் என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீஆதிசங்கரரின் வார்த்தைகளில் ‘விஷ்வஸ்ய ஜகதஹ் காரணத்வேன விஷ்வமித்யுச்யதே ப்ரஹ்ம – பிரபஞ்சத்தின் காரணமாயிருப்பதால், பரமாத்மா பிரபஞ்சம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.

விஸ்வம் என்றால் எங்கும் என்று பொருள். புருஷ ஸூக்தம் இறைவனைப் பற்றி கூறுகிறது ‘ஸ பூமிம் விஷ்வதோ விருத்வா அத்யதிஷ்டத்தஷாங்குலம் – அவர் உலகம் எங்கும் ஊடுருவி, உடல் அளவீடுகளுக்கு அப்பாற்பட்டவர்’

நாராயண ஸூக்தத்தில் நமக்கு உள்ளது:-ஸஹஸ்ரஷீஷம் தேவம் விஸ்வக்ஷம் விஸ்வஸம்புவம் விஸ்வம் நாராயணம் தேவம் அக்ஷரம் பரமம் பதம்‘  : எண்ணற்ற தலைகளை உடையவனும், எங்கும் கண்களை உடையவனும், பிரபஞ்சம் முழுவதையும் ஆசீர்வதிப்பவனும், பிரபஞ்சமாகத் திகழ்பவனுமான நாராயணனை நான் வணங்குகிறேன்.

ஸ்ரீ பராசர பட்டர், விஷ்ணுவின் முதல் நாமமே அவனது மகத்தான மகிமையையும், இயற்கையான, அசாத்தியமான, மங்களகரமான, மேன்மையான அவனுடைய அத்தியாவசிய இயல்பு, வடிவம், குணங்கள் போன்றவற்றின் விளிம்பிற்கு முழுமையையும் எடுத்துரைப்பது மிகவும் பொருத்தமானது என்று குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ விஷ்ணு புராணம் – ‘ஸ ஏவ ஸர்வ பூதாத்மா விஷ்வ ரூபோ யதோ அவயயா’ – அவர் இருக்கும் அனைத்திற்கும் ஆன்மா, மற்றும் அனைத்தும் அவரது உடல்.

“விஸ்வேஸ்வரம் அஜம் தேவம் ஜகதஹ் பிரபுமவ்யயம் – அவர் பிரபஞ்சத்தின் இறைவன் ஆனால் அவர் தோற்றமும் முடிவும் இல்லாதவர்” என்று பல ஸ்ருதி குறிப்பிடுகிறது.

————————————–—————-

2-விஷ்ணு –

விபவ அநு ப்ரவேஸேந தாவத் விஶிநஷ்டி – விஷ்ணுரிதி | ஸ்வ விபூதி பூதம்சித் அசித் ஆத்மகம் ஸர்வம் விஸ தீதி |
யதா “விவேஸ பூதாநி சராசராணி”,(தைத்ரியம் நாராயண வல்லி )
“தத் ஏவ அநு ப்ராவிஸ (தைத்ரியம் ஆனந்த வல்லி) =த்” இத்யாதி |

கண்ணன் நெற்றி உளானே -உச்சி உளானே –
ஆகியும்-உபாதான ஆக்கியும் -நிமித்த -காக்கும் -தத் -அவையுள் -தனி -முதல் -எம்மான் -த்வம் அஸி
சுவையன் -திருமகள் கேள்வன்
திரு முடி சேவை ஆழ்வாருக்கு பொலிந்து நின்ற பிரான்

“வ்யாப்ய ஸர்வாந் ல்லோகாந் ஸ்திதஸ் : ஸர்வத்ர கேஸவ: |
ததஶ் ச விஷ்ணு நாமாஸி விஸேர் தாதோ: ப்ரவேஸநாத்(நுழைதல்)  ||”.
விஸ ப்ரவேஸ இதி தாது: | தத்ர வநுப்ரத்யயாத் விஷ்ணுரிதி |
ஶ்ரீவராஹே தாச் சீல்யாதி விஷயேண வநுப்ரத்யயேந அஸ்ய மஹிம்ந: ஸ்வாபாவிகத்வ முச்யதே(வந்தேறி அல்ல இயற்க்கை )| பூர்ணத்வ-வ்யாப்தி-விஷயத்வேந நாம்நோ : அபுநருக்தி: || 2 ||(கீழ் குணங்களால் பூர்ணன்- இங்கு இடத்தால் நிறைந்து வியாப்தி விஷயம் )

எங்கும் வியாபித்து உள்ளவன்
ஸ்வ விபூதி பூதி பூதம் சித் அசிதாத்மகம் சர்வம் விசதி இதி
யாவையும் யாவரும் தானாய்-
விச்வம் -பூர்த்தியில் நோக்கு
விஷ்ணு – வ்யாப்தியில் நோக்கு
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென -1-1-10-

தம் உடைமைகளான சேதன அசேதனங்கள் எல்லாவற்றிலும் உட்புகுந்து இருப்பவர் —
விஷ்ணு திருவவதாரத்தில்-one in all
அனுபிரவேசித்து இருப்பவர் -விச்வம் பூரணத்வம் விஷ்ணு வ்யாதியையும் சொல்வதால்
கூறியது கூறல் குறை ஆகாது -ஸ்ரீ பராசர பட்டர் –

விவேச பூதாநி சராசராணி —-தைத்ரியம் நாராயண வல்லி
ததேவா னு ப்ரவிஸத்
வியாப்ய சர்வான் இமான் லோகான் ஸ்தித ஸர்வத்ர கேசவ ததச்ச விஷ்ணு நாமா அஸி விசேர்த்தாதோ பிரவேச நாத்

முதலில் விபவமான பிரபஞ்சத்தில் அநு பிரவேசித்து இருப்பது கூறப்படுகிறது
விஷ்ணு என்னும் அவதாரத்தில்
விபூதிகளான சேதன அசேதனங்களில் அந்தர்யாமியாய் பிரவேசித்து இருப்பவர்
இதனால் விஷ்ணு என்னும் அவதாரம் கூறப்படுகிறது

எங்கும் வியாபித்து இருப்பவர் -தேச கால வஸ்து பரிச்சேத ரஹிதர்-ஸ்ரீ சங்கரர்

சர்வ வியாபி -ஓங்கி உலகளந்த உத்தமர் –ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

ஓம் விஷ்ணவே நம
கரந்து எங்கும் பரந்துளன்

மீண்டும் 259/663 விஷ்ணு திருநாமம் உண்டு
மீண்டும் -259- நாமாவளியாக —ஐஸ்வர்ய பூர்த்தி -எங்கும் தானாய் -நங்கள் நாதனே -1-9-9-
நமக்கும் அவனுக்கும் நெருப்புக்கும் புகைக்கும் உள்ள சம்பந்தம் போலே -விட்டுப் பிரியாமல் -அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே
புகை இருந்தால் நெருப்பு இருக்கும் -சூடான இரும்பு இருந்தால் புகை இருக்காதே
உள்ளே புகுந்து நியமிக்கிறான்-நிரவதிக ஸுவ்சீல்யம் தயா குணம் அடியாகவே உகந்து அருளின நிலங்களை
சாதனமாக கொண்டு நம் ஹ்ருதயத்துக்குள் வருவதை சாத்தியமாக கொள்கிறான்
இளங்கோவில் கைவிடேல் என்று பிரார்த்திக்க வேண்டுமே
நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதுமுவை அவை அவை தொறும் உடல் மிசை உயிர்
எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-
பஞ்ச பூதங்களையும் படைத்து அவை உள்ளும் புகுந்து

மீண்டும் -663-நாமாவளியாக வரும் –சர்வ சகதீசன்
மூவடி இரந்து இரண்டடியால் அளந்தவன்
என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பறக்கைத்து எமர் ஏழு ஏழு பிறப்பும் மேவும்
தன் மயம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் -2-7-4-
முதல் திருநாமம் – விஸ்வம் -பூர்த்தியைச் சொல்லி இதில் -விஷ்ணு -வியாப்தியைச் சொல்லிற்று
சாத்விகர்கள் அனைத்தும் விஷ்ணு மயம் என்று உணர்வார்கள்

————–

  1. ஓம் விஶ்ணவே நம:

தத்கிமித்யாகாங்க்ஷாயாமாஹ விஶ்ணு:’ இதி |

பிறகு, ‘அந்த விஶ்வம் யார்?’ என்று அறிய முற்படும்பொழுது (அந்த விஶ்வமே) ‘விஶ்ணு’ என்று (பீஷ்மாசார்யார்) கூறுகிறார்.

ததா ச ரிக்வேதே – ரிக் வேதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தமு ஸ்தோதாரபூர்வ்யம் யதாவித ரிதஸ்ய கர்ப்பம் ஜனுஶா பிபர்தன ஆஸ்ய ஜானந்தோ நாம சித்விவக்தன மஹஸ்தே விஶ்ணோ ஸுமதிம் பஜாமஹே

இத்யாதிஶ்ருதிபி: விஶ்ணோ: நாமஸங்கீர்த்தனம்ஸம்யக்ஞானப்ராப்தயேவிஹிதம் |

மேற்கண்ட ஸ்ருதி வாக்கியங்களில் பூரண ஞானத்தைப் பெற பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் நாமசங்கீர்த்தனமே வழிமுறையாக கூறப்பட்டுள்ளது.

தமேவஸ்தோதாரபுராணம்யதாஞானேனஸத்யஸ்யகர்ப்பம்ஜன்மஸமாப்திம்குருத |

ஒ துதிகள் செய்வோரே!!! உண்மையே உருவமாம் அந்த பழம்பெரும் கடவுளின் (பகவான்ஸ்ரீவிஶ்ணுவின்) உண்மைத் தன்மையை உள்ளவாறு அறிந்து கொண்டு பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சார சுழற்சியை முடித்து விடுங்கள் (அதனின்றுவிடுதலைப்பெறுங்கள்).

ஜானந்தஆஅஸ்யவிஶ்ணோநாமாபிஆவததஅன்யேவதந்துமாவாஹேவிஶ்ணோவயம்தேஸுமதிம்சோபனம்மஹபஜாமஹேஇதிஶ்ருதேர் அபிப்ராய: |

ஒ துதிகள் செய்வோரே!!! இந்த விஶ்ணுவின் நாமங்களை அறிந்துகொண்டு அதை உச்சரிப்பீராக. ஒ விஶ்ணுவே!!! மற்றவர்கள் இதை (இந்த நாமங்களை) ஓதினும், ஒதாவிடினும், நாங்கள் உங்களது அழகு, ஒளி மற்றும் பேரறிவைப் போற்றி பாடுவோம். இதுவே மேற்கண்ட வேத வாக்கியத்தின் உள்ளுறைப் பொருளாகும்.

வேவேஶ்டி வ்யாப்னோதீதி ‘வேவேஷ்டி’ அதாவது எங்கும் பரவியிருப்பவரின் விஶ்ணு:திருநாமம் “விஶ்ணு” வாகும்விஶ்வ்யாப்யத்யபிதாயினோ‘விஶ்’ என்ற வேர்சொல்லின் பொருள் “எங்கும் பரவியிருத்தலாகும்” நுக்ப்ரத்யயான்தஸ்யஅதனுடன் “நுக்” என்ற விகுதி சேர்ந்து ரூபம் விஶ்ணுரிதி‘விஶ்ணு’ என்ற பெயர் உருவாகிறது. |

‘வேவேஶ்டி’ அதாவது எங்கும் பரவியிருப்பதால், பகவான் விஶ்ணு என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேகாலவஸ்துபரிச்சேத ஶூன்ய இத்யர்த்த: |

இடம், தன்மை, காலம் போன்ற எல்லைகள் இல்லாதவர் என்று பொருள்.

வ்யாப்தே மே ரோதஸி பார்த்த க்ராந்திஸ்சாப்யதிகா ஸ்திதா |

ஒ பார்த்தனே!!! இந்த பூமியும், ஆகாயமும் என்னுள் நிலைபெற்றுள்ளது, அவை எனது விரிவாக்கமாகும்.

க்ரமணாச்சாப்யஹம் பார்த்த விஶ்ணுரித்யபிசம்ஞித: ||

ஒ பார்த்தனே!!! இவ்வாறு பரந்து, விரிந்திருப்பதனால் நான் விஶ்ணு என்று அழைக்கப்படுகிறேன்.

இதி மஹாபாரதே (ஶாந்தி பர்வம் 342.42-43)

இவ்வாறு மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருஷ்யதேஶ்ரூயதேSபி வா |

அந்தர்பஹிச்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித: ||

நாம் கண்ணால் கண்டும், காதால் கேட்டும் அறிந்து கொள்ள முடிந்த எத்தனை உலகங்களும், பிரபஞ்சங்களும் உள்ளனவோ, அவற்றுள் எல்லாம் பகவான் ஸ்ரீமன் நாராயணர் உள்ளும், புறமும் நீக்கமற பரவியுள்ளார்.

இத்யாதிஶ்ருதேர்ப்ருஹண்நாராயணே (13.1.2) 

இவ்வாறு ப்ருஹண்நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஸர்வபூதஸ்தமேகம் நாராயணம் காரணபுருஶமகாரணம் பரம் ப்ரஹ்ம சோகமோஹவினிர்முக்தம் விஶ்ணும் த்யாயன்ன ஸீததி’

அனைத்திற்கும் காரணமாகவும், தனக்கு ஒரு காரணமின்றியும், எவ்வித துயரமும், பற்றுதலுமின்றியும், அனைத்து ஜீவராசிகளிலும் நீக்கமற பரந்து, நிறைந்துள்ள பரப்ரஹ்மமான ஸ்ரீமன்நாராயணனாகிய, விஶ்ணுவைத் த்யானிப்பவர் துயருறுவதில்லை.

இத்யாத்மபோதோபநிதி (1)

இவ்வாறு ஆத்மபோத உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

விஶதேர்வா‘விஶ்’ என்ற வேர்சொல்லின் மற்றொரு பொருள் “உட்புகுதலாகும்” நுக்ப்ரத்யயாந்தஸ்யஅதனுடன் “நுக்” என்ற விகுதி ரூபம் விஶ்ணுர்இதி ‘விஶ்ணு’ என்ற பெயர் உருவாகிறது|

அனைத்துப் பொருட்களிலும் உட்புகுந்து இருப்பதால், பகவான் ‘விஶ்ணு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யஸ்மாத்விஶ்டமிதம் ஸர்வம் தஸ்யஶ  க்த்யா மஹாத்மன: |

தஸ்மாதேவோச்யதே விஶ்ணோர்விஶேர்தாதோப்ரவேநாத் || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 3.1.54)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

அந்த பரமாத்மாவின் சக்தியானது இந்த பிரபஞ்சம் அனைத்திலும் உட்புகுந்துள்ளது. ‘விஶ்’ என்ற வேர்சொல்லிற்கு ‘உட்புகுதல்’ என்று பொருள். எனவே, அவர் விஶ்ணு என்று அழைக்கப்படுகிறார்.

இதிஸ்ரீவிஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

—————–

2. விஷ்ணு – அவர் அனைத்தையும் வியாபித்திருக்கிறார்

விஸ்வம் போன்ற விஷ்ணுவும் ‘விஷ்‘ என்ற மூல வார்த்தையிலிருந்து வந்தது, அதாவது ‘நுழைவது’ அல்லது ‘ஊடுருவுவது’. விஷ்ணு எல்லா இடங்களிலும் ஊடுருவி எல்லா இடத்தையும் ஆக்கிரமித்துள்ளார். அவர் ‘சர்வ வியாபி‘ மற்றும் ‘சர்வ அந்தர்யாமி’. ‘யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ரிஷ்யதே ஷ்ரூயதேபி வா அந்தர்பஹிஶ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயணஸ்திதா – பிரபஞ்சத்தின் எந்தப் பகுதியைப் பார்த்தாலும், கேட்டாலும், இறைவன் உள்ளேயும் வெளியேயும் ஊடுருவிச் செல்கிறான்’ என்று நாராயணசூக்தம் கூறுகிறது. அவருக்கு இடம், நேரம் அல்லது பொருள் வரம்பு இல்லை

“ஏகோ விஷ்ணுர் மஹாத் பூதம் ப்ரிதக் பூதானி அநேகாஷா : ஒரே சர்வவல்லமையுள்ள அனைத்தையும் தழுவிய விஷ்ணு தன்னை எண்ணற்ற தனிப்பட்ட பொருட்களாக வெளிப்படுத்துகிறார்”.

—————————

3-வஷட்க்காரா

அனைத்தையும் நிர்வகித்து ஆட்சி செய்பவர் -ஆகாசம் அரசன் -வியாபித்து நியமித்து –

ஆகாஸாதி வை லக்ஷண்யேந ஏதத் வ்யாப்தே: ப்ரயோஜநமுச்யதே –
வஷட்கார: |
ஸர்வம் வஸம் —ஸ்வ இச்சா அநுவர்தி- கரோதீதி கரோதே: கர்மணி அண் |(அனைத்தும் தன் வஸம் -விருப்பப்படி நடக்கும் படி செய்கிறார்)
வஸ காந்தவ் இத்யஸ்மாத் தாதோ:,
“ப்ரச்சி”,
“தம்ஸே :” இதி,
அத்ர பாஹுலகா அநு வ்ருத்தே: அட் ப்ரத்யய:, வஸேஷ் ஷாதேதஶ்ச |
“ஸர்வஸ்ய வஶீ ஸர்வஸ் யேஸாந:”,
“ஜகத் வஸே வர்ததே இதம்” இதி || 3|

எல்லாப் பொருள்களையும் தனது நினைவின்படி நடக்குமாறு வசப்படுத்தி இருப்பவர் –
ஆகாசம் போலன்றி வியாபித்து இருப்பதன் பயன் கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –
the charming inner controller

ஜகத் வஸே வர்த்தேதம்-மஹா பாரதம்

ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -ஆளுகைக்கு உட்பட்டவை

தேவர்களை மகிழ்விக்கும் வஷட்காரம் முதலிய மந்த்ரமாய் இருப்பவர் –
வஷட்காரம் சமர்ப்பிக்கப் படுபவர் -வஷட்காரம் சமர்ப்பிக்கப்படும் யாகமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

ஐஸ்வர்யம் வீர்யம் புகழ் செல்வம் ஞானம் வைராக்கியம் -ஷட் குணங்களை யுடையவர் –
ஆறு குணங்களோடு கூடி வஷட் என்று கூறப்படுபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

ஓம் வஷட்க்காரா நம

சர்வச்ய வசீ சர்வச்ய ஈசான -பிருஹத் –6-4-22
வ்யாப்தியின் பிரயோஜனம் -நியமித்தல்
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை வரனவில் திறல் வழி யளி பொறையாய் நின்ற பரன் -1-1-11-

————

  1. ஓம் வஶட்காராய நம:

யதுத்தேஶேனாத்வரே எவரைக்குறித்துஶட் வேள்விகளில் “வஶட்” என்று சொல்லி க்ரியதே ஆகுதி செய்யப்படுகிறதோ ஸ ஶட்கார:அவரே “வஶட்காரர்” ஆவார்|

அனைத்து வேள்விகளிலும் பகவானைக் குறித்தே ‘வஶட்’ என்று சொல்லி ஆகுதி செய்யப்படுகிறது. எனவே, பகவான் ‘வஶட்கார:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யக்ஞ்யோ வை விஶ்ணு: | (தைத்ரிய சம்ஹிதை 1.7.4)-வேள்விகள் விஶ்ணுவேயாகும்.

இதி ஸ்ருதேர்யக்ஞ்யோ வஶட்கார: | இந்த ஸ்ருதி வாக்கியத்தின் படி எந்த வேள்வியில் “வஶட்” என்று சொல்லி ஆகுதி செய்யப்படுகிறதோ அந்த வேள்வியே வஶட்காரமாகும் (வேள்விகள்விஶ்ணுவேஎன்பதால்விஶ்ணுஶட்காரர்எனப்படுகிறார்).

யேன வஶட்காராதிமந்த்ராத்மனா வா தேவான்ப்ரீனயதி ஸ வஶட்கார: | தேவதாவா‘ப்ரஜாபதிஸ்ச வஶட்காரஸ்ச’ இதிஸ்ருதே: |

மேற்கண்ட ஸ்ருதி வாக்கியங்களின்படி, வஶட்கார மந்திர உருவமாக எந்த தெய்வத்தை திருப்தி செய்கிறார்களோ அவர் (அந்ததெய்வமே) வஶட்காரர்.

சதுர்பிஸ்ச சதுர்பிஸ்ச த்வாப்யாம் பஞ்சபிரேவ ச |

ஹூயதே ச புனர்த்வாப்யாம் ஸ மே விஶ்ணு: ப்ரஸீதது ||

நான்கு (ஒஶ்ராவய), நான்கு (அஸ்து ஸ்ரௌஶட்), இரண்டு (யஜ), ஐந்து (யே யஜாமஹே) மற்றும் இரண்டு (வஶட்) எழுத்துக்கள் கொண்ட மந்திரங்களினால் எவரைக் குறித்து வேள்விகள் செய்கின்றோமோ அந்த பகவான் ஸ்ரீ விஶ்ணு என்னிடம் மகிழ்ச்சி அடையட்டும்.

இத்யாதிஸ்ம்ருதேஸ்ச |-இத்தகைய ஸ்ம்ருதி வாக்கியங்களின் படியும் பகவான் ஸ்ரீ விஶ்ணு ‘வஶட்கார’ என்று அழைக்கப்படுகிறார்.

———————-

3. வஷட்கார – பிரபஞ்சத்தை கட்டுப்படுத்துபவர்

வஷட்காரா என்பது கட்டுப்படுத்துவதற்காக ‘வஷ்’ என்ற மூலத்திலிருந்து பெறப்பட்டது. எனவே வஷட்காரர் என்பவர் பிரபஞ்சத்தை அவர் விரும்பியபடி கட்டுப்படுத்துபவர்.

வஷட்காரம் என்பது பகவானின் ஆறு குணங்களைக் குறிக்கிறது, அதாவது ஞானம் (அறிவு), பலம் (வலிமை), ஐஸ்வர்யம் (செல்வம்), வீர்யம் (வீரம்), சக்தி  மற்றும் தேஜஸ் (பிரகாசம்).

———

32 எழுத்துக்கள் அனுஷ்டுப் ஸ்லோகம்
முதல் ஸ்லோகம் -முதல் வரியில் 4 திரு நாமங்கள் –
முதல் திருநாமம் விளக்கம் -அடுத்த மூன்றும்
இத்தை விவரிக்க 5-11
12 விவரிக்க மேல் 13-17-
அடுத்த வரியில் ஐந்து திரு நாமங்கள்
அடுத்த ஸ்லோகம் 8 திரு நாமங்கள்
விஸ்வம் பூர்ணன் -விவரிக்க விஷ்ணு- வஷட்க்கார -பூத பவ்ய பவத் பிரபு
பரத்வம் முதலில் சொல்லி
காரணத்வம்
வியாபகத்வம்
நியந்த்ருத்வம் -அடுத்த மூன்றில் -இந்த குணங்களால் பரத்வம் ஸ்தாபனம்
கல்யாண குணங்களால் பூர்ணன் வியாபித்து -அனைத்தையும் வசத்தில் வைக்கும் நியந்தா –
இத்தை முக்காலத்திலும் செய்பவன் -அடுத்த நாமம் -சேஷித்வம் நிலை நாட்டி –
இத்தை விளக்கி
பூத க்ருத் -படைத்து தாங்கி பாவ -கூடவே இருந்து -உண்ணும் சோறு –இத்யாதி -ஐந்தும் -அவன் க்ருத்யம்
வியாப்தி கத தோஷம் தட்டாதவன் என்பதைக் காட்டவே அடுத்த இரண்டு திரு நாமங்கள்
பூதாத்மா பரமாத்மா –
இவனுக்கு வேறே ஆத்மா இல்லை என்பதையும் காட்டி –
முகம் அறிந்தவர் கோக்குமா போல் –
பீஷ்மர் கருத்தை -கண்ணன் திரு உள்ளம் அறிந்தே -பட்டர் -ஆழ்வார் அருளிச் செயல்களில் ஆழ்ந்து இப்படி சங்கதி காட்டி அருளுகிறார் –
பரத்வம் சேஷித்வம் -1-11-வரை –
12-யார் சேஷியோ அவனே ப்ராப்யம் –
முக்தா நாம் பரமாம் கதி -ப்ராப்யத்வம் சொல்லி
அத்தை விவரிக்க மேல் ஐந்து திரு நாமங்கள்
மூன்றாம் ஸ்லோகம் -யோக இத்யாதி – -உபாயமும் இவனே –
இதுவே திரு மந்த்ரார்த்தம் –
இந்த பேடிகை அறிந்தால் ரஸமே அதி அத்புதம் –

———————

4-பூத பவ்ய பவத் பிரபு

அத : (அதனால் -இவ்வாறு சங்கதி காட்டி அருளுகிறார் பட்டர் )பூத பவ்ய பவத் ப்ரபு:, கால த்ரய வர்திநாம்
ப்ரபு: – ஸ்வாமீ, ஸேஷீதி யாவத் |

ஸ்வாமி -சொத்து நாம் ஆத்மனி ஸஞ்சாதம் -தாஸ பாவம் –
சேஷீ -சேஷ பாவம் பரகத அதிசய ஆதேய இத்யாதி –

“விப்ர ஸம்ப்யோ ங்வ ஸம்ஜ்ஞாயாம்” இதி டு: |
ஸமுதாயஸ்ய ஸம் ஜ்ஞாத்வாத் ப்ரத்யய அவிராேத : |(பெயரின் பகுதி பிரபு இருப்பதால்-டு ப்ரத்யயம் வந்தது விரோதம் இல்லை -)
குஷ்யந்தி ஹி ஸாஸ்த்ராணி “பதிம் விஶ்வஸ்ய”, “பதிம் பதீநாம்”(திக் பாலர்கள் போல்வாருக்கும் இவனே பதி ,) “பூதஸ்ய ஜாத : பதிரேக ஆஸீத்”,
“தத் புருஷஸ்ய விஶ்வம்”,
“யஸ்யேமா : ப்ரதிஸ :”, “க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூத மிதம் விஶ்வம் சராசரம்”,(பாரதம்)
“பூத பவ்ய பவந் நாத:(பாரதம்)
கேஸவ: கேஶி ஸூதந:”,
“ஜகந் நாதஸ்ய பூபதே” இத்யாதீநி || 4 ||

பதிம் விச்வச்ய -பூத பவ்ய பவன்நாத கேசவ கேசி ஸூத ராஜ்யஞ்சா அஹஞ்சா ச ராமஸ்ய –

வருங்காலம் நிகழ்காலம் கழி காலமாய் உலகை ஒருங்கா அளிப்பாய் -3-1-5-
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -திருப்பாவை –

கால சக்கரத்தாய் -முக்காலத்திலும் உள்ள அனைத்துக்கும் அனைவருக்கும் சேஷீ
ஆதி அந்தம் இல்லா நித்யன்
ஒன்றும் தேவும் –மற்றும் யாதும் இல்லா அன்றும் சத்தாக இருந்து -அனைத்தும் ஸூஷ்ம ரூபமாக அவன் இடம் இருக்குமே

வரும் காலம் நிகழ் காலம் கழி காலமும் உலகம் ஒருங்காக அளிப்பாய் –ஆழ்வார்

முக் காலங்களுக்கும் இறைவர் -கால வேறுபாடு இன்றி என்றும் இருப்பவர் -கால பேதத்தை எதிர்பாராமல்
சத்தா மாத்ரமாக இருக்கும் ஐஸ்வர்யம் ஆக  இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பதிம் பதீ நாம்
பூதஸ்ய ஜாத பதிரேக ஆஸீத்
தத் புருஷஸ்ய விஸ்வம்
யஸ் யேமா ப்ரதிஸ
கிருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதம் இதம் விஸ்வம் சராசரம் –சபா பர்வம்
பூத பவ்ய பவந் நாத கேசவ கேசி ஸூதந
ஜெகந்நாதஸ்ய பூ பதே

முக் காலங்களிலும் உள்ள பொருள்கள் அனைத்திற்கும் தலைவர் -ஸ்ரீ சங்கரர்

முக் காலத்திலும் மங்களங்களை யுண்டாக்குபவர் –
முக் காலத்திலும் உள்ளவற்றுக்குத் தலைவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

—————————————————

  1. ஓம் பூதபவ்யபவத்ப்ரபவே நம:

பூதம்  கடந்த காலம் பவ்யம்  எதிர் காலம் பூதபவ்யபவந்தி (நிகழ்காலமும் சேர்ந்து) முக்காலங்களிலும் தேஶாம் ப்ரபுஎவரொருவர் தலைவரோ (ப்ரபுவோ பூதபவ்யபவத்ப்ரபு: அவர் “பூதபவ்யபவத்ப்ரபு” ஆவார்.

முக்காலங்களிலும் ஆட்சி செலுத்துபவராக இருப்பதால் பகவான் “பூதபவ்யபவத்ப்ரபு:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காலபேதமனாத்ருத்ய ஸன்மாத்ர ப்ரதி யோகிக மைஶ்வர்ய மஸ்யேதி ப்ரபுத்வம் |

(ஏன் அவருக்கு மட்டும் இந்த) ப்ரபுத்வம்? அவர் முக்காலங்களையும் கடந்து, என்று நிரந்தரமாக இருக்கிறார். அதுவே அவரது ஐஸ்வர்யமாகும். எனவே, அவர் முக்காலங்களுக்கும் (முக்காலங்களிலும்) ப்ரபு ஆவார்.

——————

4-பூத பவ்ய பவத் பிரபு – கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர் காலத்தின் தலைவன்

கடந்த, நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அனைத்திற்கும் அவர் இறைவனாக இருப்பதற்காக, அவர் எதுவும் இருப்பதற்கு முன்பு இருந்தார், இப்போது இருக்கிறார், எதிர்காலத்தில் என்றென்றும் இருக்கிறார். அவர் தொடக்கமும் முடிவும் இல்லாதவர்.


1-2-சர்வ சேஷித்வம் -சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் நிர்வஹிக்கை -5-9 -ஸ்வாமித்வம் – சொல்லும் திரு நாமங்கள்

5–பூத க்ருத் –
எல்லாவற்றையும் படைப்பவன் –

புந: ஸேஷித்வ உபபாதகாநி பஞ்ச நாமாநி |
ஸர்வாணி ஸ்வதந்த்ர: ஸ்ருஜதீதி -பூத க்ருத் |
யதா “ஸர்வம் ஹ்யேதம் ப்ரஹ்மணா ஹைவ ஸ்ருஷ்டம்”,
“யதோ வா இமாநி” இத்யாதி || 5 ||

யாதேவா இமாநி பூதாநி ஜாயந்தே –தத் ப்ரஹ்ம-
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -3-2-1-

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-

வருணன் பிள்ளை பிருகு -ப்ரஹ்மம் யார் -யார் இடம் இருந்து படைக்கப்படுகிறதோ -காக்கப் படுகிறதோ -லயம் அடைகிறதோ -அவனே ப்ரஹ்மம்

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-

எல்லாப் பொருள்களையும் தம் சங்கல்பத்தினால் படைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சர்வானி பூதானி ஸ்வ தந்தரத ஸ்ருஜதி இதி பூதக்ருத் –

சர்வம் ஹி ஏதம் ப்ரஹ்மணா ஹி ஏவ ஸ்ருஷ்டம்
யாதோ வா இமாநி பூதாநி –தைத்ரியம்

ரஜோ குணத்தைக் கைக்கொண்டு பிரம்மா ரூபியாகப் படைப்பவர் –
தமோ குணத்தைக் கைக்கொண்டு ருத்ர ரூபியாக பூதங்களை அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர்-

எல்லாப் பிராணிகளையும் படைப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

ஓம் பூத க்ருத நம
சஹகார நிரபேஷமாக சகல ஸ்ருஷ்ட்டி செய்பவன்

————-

  1. ஓம் பூதக்ருதே நம:

ரஜோகுணம் ஸமாஶ்ரித்ய (அந்த விஶ்ணுவானவர்) ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு விரிஞ்சிரூபேண ப்ரஹ்மாவின் வடிவத்தில் பூதானி அனைத்து உயிர்களையும் கரோதீதி படைப்பதால் பூதக்ருத் ‘பூதக்ருத்’ என்று அழைக்கப்படுகிறார்.||

(அந்த விஶ்ணுவானவர்) ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு (நான்முகக் கடவுள்) ப்ரஹ்மாவின் வடிவத்தில் அனைத்து உயிர்களையும் படைப்பதால் பகவான் ‘பூதக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தமோகுணமாஸ்தாய  (அந்த விஶ்ணுவானவர்) தமோ குணத்தை ஏற்றுக்கொண்டு ருத்ராத்மனா ருத்ரனின் வடிவத்தில் பூதானி அனைத்து உயிர்களையும் க்ருந்ததி அழித்தும் க்ருணோதி கொன்றும் ஹிநஸ்தீதி துன்புறுத்துவதால் பூதக்ருத் ‘பூதக்ருத்’ என்று அழைக்கப்படுகிறார் |

அல்லது, (அந்த விஶ்ணுவானவர்) தமோ குணத்தை ஏற்றுக்கொண்டு (சம்ஹாரக் கடவுள்) ருத்ரனின் வடிவத்தில் அனைத்து உயிர்களையும் (பிரளய காலத்தில்) துன்புறுத்துவதால் பகவான் ‘பூதக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————-

6-பூத ப்ருத்—
எல்லாவற்றையும் தரிப்பவன் -தாங்குபவன்
விபர்தி அவ்யய ஈஸ்வர -ஸ்ரீ கீதை

பூதாநி பிபர்தி இதி பூத ப்ருத் |
“விஶ்வம் பிபர்தி புவநஸ்ய நாபி:”,(தைத்ரியம்-நாபி கொப்பூழ் ஆதாரம் )
“தத்யதா ரதஸ்ய அரேஷு நேமிரர்பிதா நாபாவரா அர்பிதா : ஏவமே வைதா பூத மாத்ரா: ப்ரஜ்ஞா மாத்ராஸு அர்பிதா ப்ரஜ்ஞா மாத்ரா: ப்ராணேஷு அர்பிதா :”,(கௌஷீகம் -சக்கரம் -மேல் வட்டம் -நேமி அரம் நாபி புருஷன் ஜ்வாலை -ஒன்றுக்கு ஓன்று ஆதாரம் -ஸுதர்சன சதகம் -பிரஞ்ஞா ஆத்மா பிராணா பரமாத்மா )
“ஸ தாதார ப்ருதிவீம்”,
“பிபர்தோ அவ்யய ஈஶ்வர:” இதி(ஸ்ரீ கீதை -15-17-) || 6

எல்லாப் பொருள்களையும் தாங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
பூதானி விபர்த்தாதி -அனைத்து சிருஷ்டிகளுக்கும் போஷணம் அளிப்பவன் –

விஸ்வம் பிபர்த்தி புவநஸ்யநாபி –தைத்ரியம் -உலகை தாங்குபவன் -நாபியாக உள்ளான்
தத் யதா ரதஸ்யா ரேஷு நேமிர்பிதா நாபாவரா அர்பிதா ஏவம் ஏவ ஏதா பூதமாத்ரா பிரஞ்ஞா மாத்ரா ஸூ அர்பிதா
ப்ராஞ்ஞா மாத்ரா ப்ராணேஷ் வர்ப்பிதா –கௌஷீதகீ –3-9-
தேர் சக்கரம் -குறுக்குக் கம்பி -சக்கரத்தின் அச்சு போலே உடலில் உள்ள பஞ்சபூதங்கள் ஜீவனால் தாங்கப்பட்டு-
ஜீவன் பிராணனான எம்பெருமானால் தாங்கப்படுகிறான்
ச தாதார ப்ருதிவீம் -தைத்ரியம்
பிபர்த்தி அவ்யய ஈஸ்வர –ஸ்ரீ கீதை -15-17-ஸ்வாமித்வம் -தரித்து -வியாபகம் -புருஷோத்தமன்

அசின் மிஸ்ராத் விஸூத்தாச்ச சேத நாத் புருஷோத்தம
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம் யாத் அந்ய பஞ்சத சோதித–ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –19-

அசின் மிஸ்ராத் சேதநாத்– அசித் உடன் கூடிய சேதனர்கள் -பத்தாத்மா
விஸூத்தாச்ச சேத நாத்—அசித் நீக்கி சுத்த -முக்தாத்மா சேதனர்கள் –
புருஷோத்தம –
வ்யாப நாத்-வியாபிக்கிற படியால்
பரணாத்-தரிக்கிற படியால்
ஸ்வாம் யாத்-நியமிக்கிறபடியால்
அந்ய-வேறுபட்ட புருஷோத்தமன் -ஸமஸ்த ஸூவ இதர விலக்ஷணன் –
வேறு பட்டு –உயர்ந்த — சம்பந்தம் கொண்டே –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஸ்திதிகள் –
ஆகாசம் -வியாபகம் மட்டும் -பூ தேனை தரிக்கும் -ராஜா சிலரை நியமிக்கலாம் -இவனோ சர்வரையும் சர்வத்தையும் –

சத்வ குணத்தைக் கொண்ட அனைத்தையும் தாங்குபவர் -போஷிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

எல்லாப் பொருள்களையும் தாங்குபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

ஓம் பூத ப்ருத் நம
அனைத்துக்கும் ஆதாரம் -சக்கரத்தின் அச்சு போலே
ஸ்ருஷ்டிக்கப்பட்ட அனைத்தையும் ரஷிக்கும் பொறுப்பையும் தானே கொள்பவன்
ஆதி கூர்மாவதாரம் போலவே அனைத்தையும் தாங்குபவன்

—————-

  1. ஓம் பூதப்ருதே நம:

ஸத்வகுணமதிஷ்டாய ஸத்வ குணத்தை ஏற்றுக்கொண்டு பூதானி அனைத்து உயிர்களையும் பிபர்த்தி வளர்த்துபாலயதி காத்துதாரயதி தாங்கி போஷயதீதி ஊட்டமளிப்பதால் வா பூதப்ருத் ‘பூதப்ருத்’ என்று அழைக்கப்படுகிறார் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் ஸத்வ குணத்தை ஏற்றுக்கொண்டு அனைத்து உயிர்களையும் வளர்த்து, காத்து, தாங்கி, ஊட்டமளிப்பதால் ‘பூதப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————-

5.    பூதக்ருத் – படைப்பாளி மற்றும் அழிப்பவர்

6. பூத ப்ருத் – பிரபஞ்சத்தை நிலைநிறுத்துபவர்

அவர் எல்லா உயிர்களையும் தாங்குபவர், தாங்குபவர், போஷிப்பவர் மற்றும் பாதுகாப்பவர். எல்லா உயிர்களுக்கும் பராமரிப்புப் பாத்திரத்தை ஆற்றுவதற்காக பகவான் விஷ்ணு சத்வ குணத்தை ஏற்றுக்கொள்கிறார் என்று ஸ்ரீ ஆதி சங்கரர் கூறுகிறார்.

ஸ்ரீ பராசர பட்டர், அவர் அளிக்கும் ஆதரவு ஒரு சக்கரம் மற்றும் அதன் ஸ்போக்குகளின் மையம் போன்றது என்று விளக்குகிறார். இந்த மைய ஆதரவு இல்லை என்றால், மீதமுள்ள ஸ்போக்குகள் மற்றும் சக்கரம் சரிந்துவிடும். எனவே, அவர் உருவாக்கும் அனைத்து பொருட்களின் இருப்புக்கான முக்கிய காரணமாக இந்த ஆதரவை ஒருவர் நினைக்கலாம்.

————

7-பாவ –
அனைத்துடன் கூடி -பிரிக்க முடியாத -பிரகாரங்கள் -ஐஸ்வர்யங்கள்
வண் புகழ் நாரணன் -1-2-10-

உக்த வக்ஷ்யமாண ஸர்வ விபூதிபி: கலாபீவ ப்ரசலாகேந விஶிஷ்ட தயா பவதீதி பாவ: |
“பவதேஶ் சேதி வக்தவ்யம்” இதி ண ப்ரத்யய: |
தஸ்மிந் பகவதி ப்ரகாரதயா அந்தர்பாவாதேவ (பிரகாரமாயும் அவனையே ஆதாரமாகவும் கொண்டு )ஹி ஸர்வஸ்ய தத் விபூதித்வ வ்யபதேஸே: || 7 ||||

நான் உன்னை அன்றி இலேன் நீயும் என்னை விட்டு இல்லையே
நாரங்கள் இருக்கவே நாராயணன்
விட்டுப் பிரியாமல் சார்ந்தே இருக்கும் –பாவ -அப்ருதக் ஸித்த விசேஷணம்

கலாபீவ ப்ரசலாகேந-விரிக்கப்பட்ட மயில் தோகை போல் -சுருங்கியது பிரளய -லயம் தசையில் ஒட்டியே இருப்பதை அறிவோம்
இங்கு ஸ்ருஷ்ட்டிக்கப் பட்ட நிலையிலும் பிரியாமல் இருப்பத்தைச் சொல்லும்

கடலும் கடல் அலைகளும் போல்-தன்னுள்ளே திரைத்து எழும் இத்யாதி -ஆழ்வார்

சிலந்தி பூச்சி -கூடு உதாஹரணம்

விபூதி 10 அத்யாயம் -அர்ஜுனன் கேட்டு அனைத்துமாய் பார்க்க ஆசை கொண்டு –
விபூதிமான் -திவ்ய சஷுஸ் கொடுத்துக் காட்டி அருளினான்

தோகையும் மயிலும் வேறே வேறே தான் -விட்டுப் பிரியாமல்
சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் -கூடியே இருப்பதால் இருக்கிறார் –

மஹாத்மா விரஹம் சஹியாத மார்த்வம் -களத்திலே கூடு பூரிக்கும் -நாயனார்-

எல்லாப் பொருள்களையும் மயிலுக்குத் தோகை போலே தமக்கு அணியாகக் கொண்டவர் –
பிரகாரி இவன் -பிரகாரம் அவை -விபூதிமான் -ஸ்ரீ பராசர பட்டர் –
உக்த வஷ்ய மான சர்வ –விபூதிஅபிகி கலாபீவ பிரசாரகேன விஷ்டதையா பவதீதி பாவகி
மயில் தோகை விரிக்குமா போலே -தன்னுள்ளே அடக்கி வைத்து இருக்கும் சேதன அசேதனங்களை ஸ்ருஷ்டிக்குமா போலே —

பவதேச்ச இதி வக்த்வயம்–அனைத்தும் அவனது பிரகாரம் விபூதிகள்

உலக ரூபமாக இருப்பவர் -தனித்தே இருப்பவர் -எல்லாவற்றிற்கும் இருப்பாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

உலகைப் படைப்பவர் -சந்தரன் -நஷத்ரங்கள் முதலியோருக்கு ஒளி தருபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்–

ஓம் பாவ நம
ஸ்வா பாவிக -அப்ரதிஹத — நிரவதிக தேஜோ மயன்

———–

  1. ஓம் பாவாய நம:

ப்ரபஞ்சரூபேண அனைத்துலகங்களின் வடிவாக பவதீதி வெளிப்படுவதால் கேவலம் முழுவதுமாக பவதீத்யேவ வா ப்ரபஞ்சமாகவே உருவாவதால் பாவ: “பாவ:” என்று அழைக்கப்படுகிறார் | பவனம் வெளிப்படுவது அல்லது உருவாவது பாவ: ‘பாவ:’ என்று அழைக்கப்படுவது (எதனால்) ஸத்தாத்மகோ வா அவரின்றி வேறுதுவுமில்லை என்பதால் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்துலகங்களின் வடிவாக, அவரின்றி வேறுதுவுமில்லை என்னும்படி ப்ரபஞ்சமாகவே உருவாவதால் “பாவ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

7.    பாவா – முழுச் சிறப்புடன் இருப்பவன்

ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த நாமத்திற்கு இரண்டு அர்த்தங்களைத் தருகிறார். :

1. பிரபஞ்சத்தின் வடிவில் சகல சிறப்புடனும் இருப்பவர். (‘பிரபஞ்ச ரூபேண பவதி’)

2. எப்போதும் இருப்பவர், எதையும் அல்லது யாரையும் சாராதவர். (‘கேவலம் பவதி’)

——–

8-பூதாத்மா –
உலகுக்கு உயிராய் இருப்பவன் –

இமம் விபூதி விபூதிமத் பாவம் ஸரீராத்ம பாவ லக்ஷணம் விஶிநஷ்டி –
பூதாத்மா இதி |
ஸர்வேஷாம் பூதாநாம் ஆத்மா |
அவ ராத்மநோ அபி இத மேவ ஸ்வ ஸரீரம் ப்ரதி ஆத் மத்வம் யத் வ்யாப்ய ஸாக்ஷாத் ப்ரவ்ருத்த்யாதிஷு நியச்சதி; ஏவம் பர: ஸர்வமிதி விஸேஷ: |
தாராகார கேதாராதி விலக்ஷணேந அத்யந்த பாரதந்த்ர்யேண அந்தரம் கோஹி தேஹஸ்ய ஆத்ம விபூதி பாவ: |

தேஹமே ஆத்மா -பிரமை -நமது ஆத்மாவும் தேகமும் வேறே வேறே தானே
ஆத்மாவே தேஹம் -அவனுக்கு சரீரம் -முற்றிய ஞானம்-ஏவம் பர: ஸர்வமிதி விஸேஷ-சர்வமும் அவனுக்கு தேஹமே

“ய: ப்ருதிவ்யாம் திஷ்டந்”,
“ய ஆத்மநி திஷ்டந்”,
“யஸ்ய ப்ருதிவீ ஸரீரம்”,
“யஸ்யாத்மா ஸரீரம்”,
“ஏஷ ஸர்வ பூத அந்ராத்மா ”,
“ஜகத் ஸர்வம் ஸரீரம் தே”,யுத்த காண்டம் 
“தாநி ஸர்வாணி தத் வபுஸ் :”,
“தத் ஸர்வம் வை ஹரேஸ் தநு:-விஷ்ணு புராணம் ” இத்யாதி உதாஹார்யம் || 8 ||

யஸ்ய ப்ருதிவீ சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம்
ஏஷ சர்வ பூதாந்தராத்மா –
உலகுக்கே ஓர் உயிருமானாய் -6-9-7-
ஒத்தாய் எப்பொருட்கும் உயிராய் -2-3-2-

எல்லாப் பொருள்களுக்கும் ஆத்மாவாக இருப்பவர் -ஸ்வம்-ஸ்வாமி சம்பந்தம்
ஜீவாத்மா சரீரத்தை -வியாபித்து நியமித்து -பிரவ்ருத்தி நிவ்ருத்தி செய்வது போலேவும் அந்தரங்கமாகவும் இருப்பது போலே –
சரீர சரீரி பாவம் -ஸ்ரீ பராசர பட்டர் -பூ பாத யஸ்ய நாபி -அந்தஸ்தம் —
உலகமே உடம்பு சர்வேஷாம் பூதானாம் ஆத்மா -அந்தர்யாமி -அனைத்தைக்கும்

ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ய ஆத்மநி திஷ்டன் -யஸ்ய ப்ருத்வீ சரீரம் -யஸ்ய ஆத்மா சரீரம் –பிருஹத்
ஏஷ சர்வ பூத அந்தராத்மா ஸூபால
ஜகத் சர்வம் தே -யுத்த -120-25–
தாநி சர்வாணி தத் வபூ –ஸ்ரீ விஷ்ணு புராணம் –
தத் சர்வம் வை ஹரேஸ் தனு -ஸ்ரீ விஷ்ணு புராணம் —

பிராணங்களுக்கு அந்தர்யாமியாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

பிராணிகளுக்கு கட்டளை இடுபவர் -உலகில் வியாபித்து ஆத்மாவாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

ஓம் பூதாத்ம நம

அனைத்துக்கும் ஆத்மா -அனைத்தும் ப்ரஹ்மத்துக்கு சரீரமே –
உள்ளே புகுந்து நியமித்து -ஸ்வரூப ஸ்திதி -பிரவ்ருத்தி நிவ்ருத்தி -அனைத்தும் தனது அதீனமாகக் கொண்டவன்

———————

  1. ஓம் பூதாத்மனே நம:

பூதானாமாத்மாந்தர்யாமீதி அனைத்து ஜீவராசிகளின் உள்ளுறை அந்தராத்மாவாக இருப்பதனால் பூதாத்மா பூதாத்மா” என்று அழைக்கப்படுகிறார் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்து ஜீவராசிகளின் உள்ளுறை அந்தராத்மாவாக இருப்பதனால் “பூதாத்மா” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஏஷ தா ஆத்மாந்தர்யாம்யம்ருத:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.3-22)

உனக்குள் உள்ளுறைந்திருக்கும் இந்த ஆத்மா அழிவற்றதாகும்.

இதி ஸ்ருதே: | இவ்வாறு வேதங்களில் (உபநிஶத்துக்களில்) கூறப்பட்டுள்ளது.


8.    பூதாத்மா – அனைத்து உயிரினங்களின் சாரம்

அவர் ஒவ்வொரு உயிரினத்திலும் பொதிந்துள்ள ஆத்மா அல்லது ஆத்மா. எல்லாப் பொருட்களும் அவருடைய உடல், அவர் எல்லாவற்றின் ஆத்மாவும் ஆவார். ஆன்மா உடல்களுக்குள் நுழைந்து, அவற்றின் அனைத்து செயல்பாடுகளையும் நேரடியாகக் கட்டுப்படுத்தி இயக்குகிறது.

பிருஹதாரண்யக உபநிஷத் கூறுகிறது ‘ஏஷா தா ஆத்மாந்தர்யாம்மிருத- அவர் ஆத்மாவின் ஆழமான இடைவெளியில் உள்ள அமிர்தம்.

———

9-பூத பாவன –
வ்ருத்தி அடையும் படி பரிபாலிப்பவன் –

தாநி தாரக போஷக போக்ய ப்ரதாநேந வர்தயதீதி
பூத பாவந: |(உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாமே கண்ணன் )
“நந்த்யாதிப்யோ ல்யு:” | “க்ருத்யல்யுதடா பஹுலம்” இதி வா கர்தரி ல்யுட்|
ஏவம் பாவந:, ப்ரதர்ந: இத்யாதயோ அபி ல்யுட் ப்ரத்யயாந்தா : |
யதா “பூதா பாவந பூதேஸ ”,
“ஏஷ பூத பால: இதி |ஸேஷித்வம் உபபாதிதம் |
உத்பாதந போஷணாதிபி: உபாதீய மாநம் ப்ரதி உத்தேஶ்யம் ஹி ஸேஷீதி
“ஸேஷ: பரார்தத்வாத்” இதி ஸ மர்திதம் || 9 ||

பூத பாவன பூதேச -ஸ்ரீ கீதை-10-15-
ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும் -9-1-1-

பார் இடந்து இத்யாதி –பேராளன் -அனைத்தும்

32-60 பாவன– ப்ரதர்ன அங்கும் பிரத்யயம் வரும்

நான் உன்னை அன்றி இலேன் நீ என்னை அன்றி இலை -நான் முகன் -7-
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா வன்று –
நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்-4-10-1

எல்லாப் பொருள்களையும் தாங்குவது -போஷிப்பது -போகங்களைக் கொடுப்பது -ஆகிய வற்றால்
வளர்ப்பவர் -ஸ்வரூபம் ஸ்திதி பாலனம் -செய்து அருளி -சேஷி -சேஷ பாவம் -ஸ்ரீ பராசர பட்டர் —
தாரக போஷாக போக்ய பிரதானேன வர்த்தயதி-

ஏஷ பூத பால –பிருஹத்
சேஷ பரார்த்தத்வாத்–பூர்வ மீமாம்சை -3-3-1-

பிராணிகளை உண்டாக்குபவர் -அவற்றை விருத்தி செய்பவர் -ஸ்ரீ சங்கரர்-

பிராணிகளின் மனங்களைத் தம் நினைவின்படி நடத்துபவர் -இருப்புக்கு காரணம் –
உலகில் பரவிய ஒளியானவராய்க் காப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

ஓம் பூத பாவந நம
ஸ்ருஷ்டித்த அனைத்தையும் வ்ருத்தி அடையச் செய்து பாலனம் பண்ணுபவன்

————————–

  1. ஓம் பூதபாவனாய நம:

பூதானி அனைத்து உயிர்களையும் பாவயதீதி உருவாக்குவதால் ஜனயதி பிறப்பித்து வர்த்தயதீதி வா வளர்ப்பதால் பூதபாவன: “பூதபாவன” என்று அழைக்கப்படுகிறார் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்து உயிர்களையும் உருவாக்குவதால், அதாவது பிறப்பித்து, வளர்ப்பதால் “பூதபாவன” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————————

 9.    பூத பாவனா – எல்லா உயிர்களையும் வளர்ப்பவன்

தான் படைத்த அனைத்து உயிரினங்களையும் போஷித்து வளர்த்தவர். பூதானி பாவயதி, ஜனயதி, வர்தயதி வா – எல்லா உயிர்களையும் படைத்து வளர்க்கிறார்’ என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கரர். எனவே வெறும் படைப்பு மட்டும் போதாது; அதை தொடர்ந்து வளர்த்து வளர்க்க வேண்டும்.


1- விஸ்வம்-
ஸ்வரூபம் ரூபம் குணம் மகிமை ஆகியவற்றால் பரிபூர்ணர்-ஸ்வா பாவிக-சர்வ வித பூரணத்வம் –
அசங்க்யேய உயர்வற -மங்களங்களுக்கு எல்லாம் ஒரே இருப்பிடம் –
ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் முதலியவற்றால் பூர்ணர்–ஸ்ரீ பராசர பட்டர் -all in one
விச்வம் -ஸ்வரூப ரூப குண விபைவைகி பரி பூர்ண இத்யர்த்த -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்பதை பின்பற்றி

உலகுக்குக் காரணமாக இருப்பவர் -யதஸ் சர்வாணி பூதாணி-கார்யமாகவும் காரணமாகவும் -உலகம் ப்ரஹ்மம் விட வேறு அல்லாமையாலே –
விசதி-உலகைப் படைத்து பிரவேசிக்கிறான்
விசந்தி -சம்ஹார காலத்தில் சகல பூதங்களும் இவன் இடம் பிரவேசிக்கின்றன
விச்வம் -ஓம் என்கிற பிரணவம் -சொல்லுக்கும் பொருளுக்கும் வேறுபாடு இல்லை -ஓங்காரமான பிராமத்தையே குறிக்கும்–ஸ்ரீ சங்கரர்

எல்லா இடத்திலும் உட் புகுந்து இருப்பவர் -கருடாரூடன் -சர்வ வியாபி -விசேஷமாக வளர்பவர் -வாயுவுக்கு அந்தர்யாமியாக நடத்துபவர்
உலகை நடத்துபவர் -உலகிற்குக் காரணமானவர் -ஜீவர்களை நியமிப்பவர்
விசேஷமான ஸூக ஜ்ஞான ரூபமாக இருப்பவர் -விசேஷமான ஸூகமே பல ரூபமாக இருப்பவர் -ஜ்ஞான ஸ்வரூபர் -ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

————————————————————————————————–

2- விஷ்ணு –

தம் உடைமைகளான சேதன அசேதனங்கள் எலாவற்றிலும் உட்புகுந்து இருப்பவர் –விஷ்ணு திருவவதாரத்தில்-one in all
அனுபிரவேசித்து இருப்பவர் -விச்வம் பூரணத்வம் விஷ்ணு வ்யாக்தியையும் சொல்வதால் கூறியது கூறல் குறை ஆகாது -ஸ்ரீ பராசர பட்டர் –

எங்கும் வியாபித்து இருப்பவர் -தேச கால வஸ்து பரிச்சேத ரஹிதர்-ஸ்ரீ சங்கரர்

சர்வ வியாபி -ஓங்கி உலகளந்த உத்தமர் –ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

———————————————————————————————————–

3- வஷட்கார

எல்லாப் பொருள்களையும் தனது நினைவின்படி நடக்குமாறு வசப்படுத்தி இருப்பவர் –
ஆகாசம் போலன்றி வியாபித்து இருப்பதன் பயன் கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் -the charming inner controller

தேவர்களை மகிழ்விக்கும் வஷட்காரம் முதலிய மந்த்ரமாய் இருப்பவர் –
வஷட்காரம் சமர்ப்பிக்கப் படுபவர் -வஷட்காரம் சமர்ப்பிக்கப்படும் யாகமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

ஐஸ்வர்யம் வீர்யம் புகழ் செல்வம் ஞானம் வைராக்கியம் -ஷட் குணங்களை யுடையவர் –
ஆறு குணங்களோடு கூடி வஷட் என்று கூறப்படுபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

—————————————————————————————————-

4-பூத பவ்ய பவத் ப்ரபு

முக் காலங்களுக்கும் இறைவர் -கால வேறுபாடு இன்றி என்றும் இருப்பவர் -கால பேதத்தை எதிர்பாராமல்
சத்தா மாத்ரமாக இருக்கும் ஐஸ்வர்யம் ஆக  இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

முக்காலங்களிலும் உள்ள பொருள்கள் அனைத்திற்கும் தலைவர் -ஸ்ரீ சங்கரர்

முக்காலத்திலும் மங்களங்களை யுண்டாக்குபவர் –
முக்காலத்திலும் உள்ளவற்றுக்குத் தலைவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

———————————————————————————————————–

5-பூதக்ருத் –

எல்லாப் பொருள்களையும் தம் சங்கல்பத்தினால் படைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சர்வானி பூதானி ஸ்வ தந்தரத ஸ்ருஜதி இதி பூதக்ருத –

ரஜோ குணத்தைக் கைக்கொண்டு பிரம்மா ரூபியாகப் படைப்பவர் –
தமோ குணத்தைக் கைக்கொண்டு ருத்ரரூபியாக பூதங்களை அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர்-

எல்லாப் பிராணிகளையும் படைப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

———————————————————————————————————

6- பூத ப்ருத்-
எல்லாப் பொருள்களையும் தாங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
பூதானி விபர்த்தாதி -அனைத்து சிருஷ்டிகளுக்கும் போஷணம் அளிப்பவன் –

சத்வ குனந்த்தைக் கொண்ட அனைத்தையும் தாங்குபவர் -போஷிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

எல்லாப் பொருள்களையும் தாங்குபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

———————————————————————————————————

7- பாவ –

எல்லாப் பொருள்களையும் மயிலுக்குத் தோகை போலே தமக்கு அணியாகக் கொண்டவர் –
பிரகாரி இவன் -பிரகாரம் அவை -விபூதிமான் -ஸ்ரீ பராசர பட்டர் –
-உகத வஷ்ய மான சர்வ –விபூதிஅபிகி கலாபீவ பிரசாரகேன விஷ்டதையா பவதீதி பாவகி
மயில் தோகை விரிக்குமா போலே -தன்னுள்ளே அடக்கி வைத்து இருக்கும் சேதன அசேதனங்களை ஸ்ருஷ்டிக்குமா போலே —

உலக ரூபமாக இருப்பவர் -தனித்தே இருப்பவர் -எல்லாவற்றிற்கும் இருப்பாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

உலகைப் படைப்பவர் -சந்தரன் -நஷத்ரங்கள் முதலியோருக்கு ஒளி தருபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்–

——————————————————————————————————-

8-பூதாத்மா

எல்லாப் பொருள்களுக்கும் ஆத்மாவாக இருப்பவர் -ஸ்வம்-ஸ்வாமி சம்பந்தம்
ஜீவாத்மா சரீரத்தை -வியாபித்து நியமித்து -பிரவ்ருத்தி நிவ்ருத்தி செய்வது போலேவும் அந்தரங்கமாகவும் இருப்பது போலே –
சரீர சரீரி பாவம் -ஸ்ரீ பராசர பட்டர் -பூ பாத யஸ்ய நாபி -அந்தஸ்தம் —
உலகமே உடம்பு சர்வேஷாம் பூதானாம் ஆத்மா -அந்தர்யாமி -அனைத்தைக்கும்

பிராணங்களுக்கு அந்தர்யாமியாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

பிராணிகளுக்கு கட்டளை இடுபவர் -உலகில் வியாபித்து ஆத்மாவாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

——————————————————————————————————-

9-பூத பாவந

எல்லாப் பொருள்களையும் தாங்குவது -போஷிப்பது -போகங்களைக் கொடுப்பது -ஆகிய வற்றால்
வளர்ப்பவர் -ஸ்வரூபம் ஸ்திதி பாலனம் -செய்து அருளி -சேஷி -சேஷ பாவம் -ஸ்ரீ பராசர பட்டர் —
தாரக போஷாக போகய பிரதானேன வர்த்தயதி-

பிராணிகளை உண்டாக்குபவர் -அவற்றை விருத்தி செய்பவர் -ஸ்ரீ சங்கரர்-

பிராணிகளின் மனங்களைத் தம் நினைவின்படி நடத்துபவர் -இருப்புக்கு காரணம் –
உலகில் பரவிய ஒளியானவராய்க் காப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-


1-விஸ்வம் -நற் செல்வன் -கைங்கர்ய நிஷ்டன்-கற்றுக் கறவை கன்றுக்கு இரங்கி -பால் வெள்ளம் –
பால் வழிந்தால் -செல்வம் வராதே -கார்க்காச்சார்யார் –
விஸ்வம் -பரிபூர்ணன் -ஸ்வரூபம் ரூபம் குணம் ஐஸ்வர்யம் இத்யாதிகளால் -சாம்யா பத்தி அருளி –
ஓம் விச்வாயா நம-ஓம் விஸ்வம் நம

விச்வம் என்றால் ஸ்வபாவம், வடிவம், குணங்கள், பெருமை என அனைத்திலும் முழுமையானவன், பரிபூர்ணமானவன் என்று பொருள்.

2-விஷ்ணு
பால் கறக்கும் போதே ஏலக்காய் பால் -புஷ்டிமதி -நறை கமழ் பால் -புண்ணாக்கு கூட ஏலக்காய் மாட்டுக்கு கொடுக்க
அடிக்கும் -பதினாலு உலகும் அடி பட்டவே -அவனது உடல் தானே -unuverse-
எங்கும் நிறைந்து -உள்ளே உயிராக இருப்பவன்
ஓம் விஷ்ணவே நம-விருப்புடன் அனைவருடன் இருப்போம்

எம்பெருமான் எங்கும் நிறைந்திருப்பதால்
ஸஹஸ்ரநாமத்தின் இரண்டாவது திருநாமத்தில் வ்யாஸர் அவனை ‘விஷ்ணு’ என்றழைக்கின்றார்.
எங்கும் நிறைந்த இறைவனின் திருவருளை எங்கும் என்றும் எப்போதும் பெறுவதற்கு
“விஷ்ணவே நம:” என்ற இந்த திருநாமத்தைச் சொல்லுவோம்!

3-வஷட்க்கார
பாண்டவர் தூதன் -எழுந்து நின்றானே துரியோதனனும் -சகுனி கர்ணன் இத்யாதிகளும்-
நியமிப்பவன் -internal-controlar –

இதற்கு “அனைவரையும் இயக்குபவன்” என்று பொருள்.

நாமும் “வஷட்காராய நம:” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால், எம்பெருமான்
நம் உள்ளங்களை நல்வழியில் இயக்கி வழிநடத்திச் செல்வான்.

4-பூத பவ்ய பவ பிரபு
ரோமசர் -ரோமங்களால் உடைய உடல் -ப்ரம்மா விட ஆயுஸ்-கேட்க -திவ்ய தேச அனுபவத்துக்காக -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம் -அன்றோ –
இந்த மந்த்ரம் சொல்லி பெருமாள் சாஷாத்காரம் -ஒரு ப்ரம்மா ஆயுஸ் காலம் முடிந்தால் ஒரு முடி
கலியன் -பாடல் உண்டே -ரோமசர் பற்றி

ஸஹஸ்ரநாமத்தின் நான்காவது திருநாமம் – பூத பவ்ய பவத் ப்ரபு:
இதன் பொருள் – கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலங்களிலும் வாழும் அனைவருக்கும் தலைவனாக எம்பெருமான் விளங்குகிறான்.
“பூத-பவ்ய-பவத்-ப்ரபவே நம:” என்ற இத்திருநாமத்தைச் சொல்லி எம்பெருமானைப் போற்றினால்,
நாமும் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழலாம்.

5-பூத க்ருத்
த்ரிவித காரணம் -உபாதான -நிமித்த -ஸஹ காரி –சிலந்தி வலை
மூல பிரகிருதி -படைப்பாளியும் இவனே -கருவிகளும் இவனே –
ஓம் பூத க்ருத் நம

உலகிற்கு மூன்று விதமான காரணங்களாகவும் தானே இருந்து உலகினைப் படைப்பதால்,
நாராயணன் “பூதக்ருத்” என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஐந்தாவது திருநாமமாக அமைந்துள்ளது.
“பூதக்ருதே நம:” என்ற திருநாமத்தைச் சொல்லி எம்பெருமானின் திருவடித் தாமரைகளைத் தூமலர் தூவித் தொழுதோமாகில்,
படைத்தவனான அவன் தரும் பாதுகாப்பை நாம் முழுமையாகப் பெறலாம்.

6-பூத ப்ருத்
ராமானுஜரின் சத்துணவு தட்டம் -குடும்பி பிரசாதம் -ஓம் பூத ப்ருத் நம-ரெங்கநாதன் சிஷ்யன் என்று சொல்லி வழங்கிய வ்ருத்தாந்தம்
படைத்த உயிர்களுக்கு தானே உணவு அளித்து ரஷிக்கிறான்

‘பூதப்ருத்’ என்ற திருநாமத்துக்கு எல்லா உயிர்களுக்கும் உணவளிப்பவன் என்று பொருள்

“பூதப்ருதே நம:” என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஆறாவது திருநாமத்தை ஜபிக்கும் அடியார்களுக்கெல்லாம்
அரங்கனே நல்ல உணவளித்து அவர்களைச் சத்துள்ளவர்களாக ஆக்கிடுவான். இதுவே ராமாநுஜர் காட்டிய சத்துணவுத் திட்டம்.

7-பாவ –
பாண்டவ தூதன் -ஆசனம் -பாண்டவர்கள் எனது உயிர் -விஸ்வரூபம் -அனைவரையும் துரியோதனன் பார்த்தான் –
அஞ்சி நடுங்கினான் -மயில் தோகை விரிப்பது போலே பிரபஞ்சம் ஸ்ருஷ்ட்டி -தன்னிடம் இருந்து விரிப்பவர்
ஓம் பாவாய் நம-நம் சிந்தனையும் பரந்து விரிவடைய சங்கீர்த்தனம் செய்வோம்

இப்படி உலகு மற்றும் அதன் மேன்மை, சீர்மை யாவையும் மயிலின் தோகை போல் தன்னகத்தே கொண்டிருக்கும் இறைவன்
“பாவ:” என்றழைக்கப்படுகிறான். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஏழாவது திருநாமமாக அமைந்துள்ளது.
நாமும் “பாவாய நம:” என்ற இத்திருநாமத்தைச் சொல்லிக் கண்ணபிரானை வணங்கினால்,
நம் வாழ்வில் மேன்மேலும் மேன்மையும் சீர்மையும் பெறலாம்

8-பூதாத்மா
ஜனகர் யாகம் -ஐநூறு மாடுகள் -தங்க குப்பி கொம்புகளில் -யாஜ்ஞ வர்க்யர் –
அனைத்துக்குள்ளும் உள்ளிருந்து தாங்கி இயக்குபவர் -பூமிக்குள் வானத்துக்குள்–ஜீவாத்மாக்குள் -அனைத்துக்குள்ளும்
இருந்து உடலாக நியமித்து -அவை அறியாமல் -இப்படி அனைத்துக்கும் ஆத்மா அவனே
ஓம் பூதாத்மா நம -வாக்கு வன்மை பெறுவோம்

உலகிலுள்ள அனைத்துப் பொருட்களையும் தனக்கு உடலாகக் கொண்டு,
அவைகளுக்குள் உயிராக விளங்கும் எம்பெருமான் “பூதாத்மா” என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் எட்டாவது திருநாமமாக அமைந்துள்ளது.
உயிர், உடலை இயக்குவது போல, எம்பெருமான் நம் உயிருக்கும் உயிராய் இருந்து நம்மை இயக்குகிறான்.
“பூதாத்மனே நம:” என்ற இத்திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால், யாக்ஞவல்கியர் போலச்
சிறந்த அறிவாளியாக நாம் விளங்கலாம்.

9-பூத பாவன
திரு மழிசை ஆழ்வார் -ஆராவமுதன் -அமுது செய்த பிரசாத சேஷம் -உடம்புக்கு பசிக்கு உணவு கொடுப்பது ஆத்மா தானே
ஜீவர்களுக்கும் உடலுக்கும் அந்தராத்மா அவன் தாமே -உடலுக்கும் உணவும்
ஜீவாத்மா உணவாக அழகையும் அனுபவிக்க
ஆராமுதாழ்வார் திரு மழிசைப் பிரான் -மாறி
ஓம் பூத பாவன நம -நோய் அற்ற வாழ்வு பெறுவோம்

தன் பக்தர்கள் உடல் ஆரோக்கியமும்
ஆன்மிக முன்னேற்றமும் பெறுவதற்காக அவர்களுக்கு உயிராக இருந்து உணவளிக்கும் எம்பெருமான் ‘பூதபாவந:’ என்றழைக்கப்படுகிறான்.
‘பூதபாவநாய நம:’ என விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஒன்பதாவது திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால்,
திருமழிசைப் பிரானின் பசியைப் போக்கியது போல, நமது வயிற்றுப்பசி, அறிவுப்பசி உள்ளிட்ட
அனைத்துப் பசிகளையும் எம்பெருமான் போக்கியருள்வான்.

———-—————————————-

விஸ்வம் விஷ்ணு வஷட்கரோ பூத பவ்ய பவத் ப்ரபோ
பூத க்ருத பூத ப்ருத் பாவ பூதாத்மா பூத பாவந
இந்த நவரத்ன நாமாவளி தொடர் அழகு அவனைப் போலே ஒப்பற்றதே

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பீஷ்மாச்சார்யர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸூகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாஸ பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–அவதாரிகை –

October 31, 2023

ஸ்ரீ பராசர பட்டார்ய ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீவத் ஸாங்க ஸூதா ஸ்ரீமான் ஸ்ரேயசே மே அஸ்து பூயஸே

ஸ்ரீ ரெங்க நாதனுக்குப் ப்ரோஹிதரும்
ஸ்ரீ வத்சாங்கர் எனப்படும் கூரத்தாழ்வானுடைய திருக் குமாரரும்
ஞான லஷ்மீ பொருந்தியவருமான
ஸ்ரீ பராசர பட்டர் எனப்படும் ஸ்வாமி
எனக்கு மேன்மேலும் ஸ்ரேயஸ்ஸைக் கொடுத்து அருளட்டும்

——–

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

—————

வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம்
த்யாயேயம் யாமுநார்யம் மம ஹ்ருதி தாநவை ராமமேவாபியாயாம்
பத்மாஷம் ப்ரேஷிஷீய ப்ரதமமபி முநிம் நாதமீடே சடாரிம்
ஸ்தௌமி ப்ரேஷேய லஷ்மீம் சரணம் சரண ஸ்ரீ தரம் சம்ஸ்ரயேயம்–ஸ்ரீ குரு பரம்பரா வணக்கம்

வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம் த்யாயேயம் –
ஆச்சார்யரான ஸ்ரீ கோவிந்தர் என்னும் ஸ்ரீ எம்பார் -தந்தையான ஸ்ரீ கூரத்தாழ்வான் –
த்வந்த ஸமாஸம் -சம பிரதானம் இல்லை -அர்த்த கௌரவத்தால் கோவிந்த முதலில்
இதிஹாச புராணம் -அத்தாலே அது முற்பட்டது -பிரபலம் போல் இங்கும்

ஸ்ரீ லஷ்மண முனியான ஸ்ரீ எம்பெருமானார் –இவர்களைத் த்யானிக்கிறேன்

யாமுநார்யம் மம ஹ்ருதி தாநவை
என் மனம் ஸ்ரீ யாமுனாச்சார்யர் எனப்படும் ஸ்ரீ ஆளவந்தாரால் நிறைந்து இருக்கட்டும் –

ராமமேவாபியாயாம் பத்மாஷம் ப்ரேஷிஷீய —
ஸ்ரீராம மிஸ்ரர் என்னும் ஸ்ரீ மணக்கால் நம்பியையும் ஸ்ரீ புண்டரீகாக்ஷர் எனும் ஸ்ரீ உய்யக் கொண்டாரையும்
நான் பணிவுடன் அணுகுகிறேன்

ப்ரதமமபி முநிம் நாதமீடே சடாரிம் ஸ்தௌமி -ப்ரேஷேய-லஷ்மீம் சரணம் சரண ஸ்ரீ தரம் சாம்ச்ரயேயம்-
நமது பிரதம ஆச்சார்யரான ஸ்ரீ மந் நாதமுனிகளை வணங்குகிறேன் –
ஸ்ரீ எம்பெருமானின் ஸ்ரீ சடாரி எனப்படும் ஸ்ரீ நம்மாழ்வாரை போற்றுகிறேன்
ஸ்ரீ பெரிய பிராட்டியாரின் திருக்கண் கடாக்ஷம் எனக்குக் கிட்ட வேணும்
அநந்ய கதியான அடியேன் ஸ்ரீதரனான ஸ்ரீ பெரிய பெருமாள் இடம் சரண் அடைகிறேன்

ஸ்ரீ கோவிந்த பட்டரையும்
என் பிதாவான ஸ்ரீ வத்ஸாங்க மிஸ்ரரையும்
வந்தனம் செய்கிறேன்
அதன் பிறகு ஸ்ரீ மத் ராமானுஜ முனிவரை எப்போதும் சிந்திக்கக் கடவேன்
பெரிய நம்பியை த்யானம் செய்வேன்
யாமுனாச்சார்யரை ஹ்ருதயத்தில் வைக்கக் கட வேன்
ராம மிஸ்ரரை அடையக் கடவேன்
புண்டரீகாக்ஷரைப் பார்க்கக் கடவேன்
சம்பிரதாயத்துக்கு பிரதம ஆச்சார்யரான ஸ்ரீ மன் நாதமுனிகளை ஸ்துதிக்கிறேன்
நம்மாழ்வாரைப் புகழ்கிறேன்
ஸ்ரீ மஹா லஷ்மியைத் தர்சிக்கக் கடவேன்
வேறு சரணம் இல்லாதவனாய் ஸ்ரீ யபதியை சரணம் அடைகிறேன் –

————–

அஸ்மத் குரு ஸமாரம்பாம் -தொடங்கி -ஸ்ரீயப்பதி பர்யந்தம் சொல்லி
ஸ்ரீ விஷ்வக் சேனருக்குத் தனியாக எடுத்து அருளிச் செய்கிறார்

———–

ஓம் நமோ கஜவக்த்ராத்யை பாரிஷத்யை ப்ரசாஸதே
ஸ்ரீ ரங்கராஜ ஸேநான்யே ஸூத்ரவத்யா ஸமே யுஷே–ஸ்ரீ விஷ்வக் சேனர் ஸ்துதி

கஜானன்
ஜயத்ஸேனன்
ஹரி வக்த்ரன்
கால ப்ரக்ருதி ஸம் ஜ்ஞகன்
என்னும் நான்கு பரிவாரங்களோடு கூடி ஆஜ்ஜையை செலுத்துபவரும்
ஸூத்ரவதி என்னும் பத்னியுடன் கூடியவரும்
ஸ்ரீ ரெங்கராஜருடைய சேனாபதியுமான-சேஷாசனர் -சேஷ அசனர் இவரே –
விஷ்வக் சேனருக்கு ஓம் என்று சொல்லி நமஸ்கரிக்கிறேன்

—————-

நமோ நாராயணாயேதம் கிருஷ்ண த்வைபாய நாத்மகே
யதாமுஷ்யாயணா வேதா மகா பாரத பஞ்சமா–ஸ்ரீ வேத வ்யாஸர் நமஸ்காரம்

ஸ்ரீ மஹா பாரதம் ஐந்தாவது வேதமாகச் சேர்ந்த நான்கு வேதங்களும்
எவரால் வெளிப்பட்டனவோ -எவருடைய வம்சத்தில் பிறந்தனவோ –
அந்த கிருஷ்ண த்வைபாயன ரூபமாக அவதரித்த நாராயணற்கு என்னுடைய நமஸ்காரங்கள்

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே பவுத்ர மகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதம்–

வசிஷ்டர் பிள்ளை சக்தி /அவர் பிள்ளை பராசரர்/ அவர் பிள்ளை வியாசர் ( கிருஷ்ண த்வைபாயனர் )/அவர் பிள்ளை சுகப் ப்ரஹ்மம்

க்ருஶ்ண த்வைபாயனம் வ்யாஸம் ஸர்வ லோக ஹிதே ரதம்|
வேதாப்ஜ பாஸ்கரம் வந்தே ஷமாதி நிலையம் முனிம்||

அனைத்து உலகிற்கும் (அனைத்துலக மக்களுக்கும்) நன்மையையே வேண்டுபவரே! வேதமெனும் தாமரைக்கு (அதை மலர்விக்கும்) கதிரவன் போன்றவரே! பற்றற்று தவ நெறியில் நிலைத்திருப்பவரே! க்ருஷ்ண த்வைபாயனர் என்ற வ்யாஸரே! உம்மை வணங்குகிறேன்!!

—————–

ஜாதோ லஷ்மண மிஸ்ர ஸம்ஸ்ரய தநாத் ஸ்ரீ வத்ஸ சிஹ்நாத் ருஷே
பூயோ பட்ட பராசரேதி பணித ஸ்ரீரங்க பர்த்ரா ஸ்வயம்
ஸ்ரீ ஸ்ரீரங்கபதி ப்ரஸாத த்ருஷயா ஸ்ரீ ரங்க நாதாஹ்வய
ஸ்ரீ ரங்கேஸ்வர காரிதோ விவ்ருணுதே நாம் நாம் ஸஹஸ்ரம் ஹரே–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யம் செய்து அருளியவர்

ஸ்ரீ மத் ராமானுஜ முனிவர் எனப்படும் யதிராஜரை அடுத்து இருப்பதே தனமாகப் பெற்ற
ஸ்ரீ வத்சாங்க மிஸ்ரர் என்னும் ரிஷியிடம் ஜெனித்தவரும்
ஸாஷாத் பெரிய பெருமாளாலேயே பராசர பட்டர் என்று திருநாமம் சாத்தப்பட்டவரும்
ஸ்ரீ ரெங்கநாதன் என்றும் பெயர் பெற்றவருமான இந்த பட்டர் (படர்கையாக தம்மையே சொல்லிக் கொள்கிறார் )
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யத்தை
ஸ்ரீ ரெங்கநாதனாலேயே செய்யப் பெற்று
ஸ்ரீ ரெங்கநாதனுடைய அனுக்ரஹத்தில் உள்ள பெரு அபி நிவேசத்தினால் செய்து அருளுகிறார் –

———–

சம்சாரோ அயம் அபண்டிதோ பகவதி ப்ராகேவ பூய கலௌ
பூர்ணம் மன்யதமே ஜானே ஸ்ருதி சிரோ குஹ்யம் ப்ருவே சாஹசாத்
தத்ர ஸ்தோத்ர மிதம் பிரகாசயதி யஸ் துத்யஸ்ஸ யஸ்தா வுபௌ
வியாச காருணிகோ ஹரிஸ்ஸ ததிதம் மௌர்க்யம் சஹேதாம் மம–அவை யடக்கம் -விநய யுக்தி

இந்த ஸம்ஸாரம் -பிறவியின் தொடர்ச்சி பகவத் ஸ்வரூப விஷயத்தில் முன்னமே அறிவில்லாதது –
கலியில் இன்னும் அதிகம்-எல்லாம் தெரிந்து நிரம்பினதாக நினைத்துக் கொண்டு இருக்கும் ஜனங்கள் இடத்தில்
வேதாந்த ரஹஸ்யத்தை நான் சொல்லுவது ஸாஹஸம்
இந்த விஷயத்தில் இந்த ஸ்தோத்ரத்தை வெளியிட்டவரும்-இதனால் ஸ்துதி செய்யப்படுபவருமாகிய
தயாளுக்களான ஸ்ரீ வியாஸ பகவானும் ஸ்ரீ மன் நாராயணனும்
இப்படிப்பட்ட என்னுடைய அறியாமையைப் பொறுக்கக் கடவர்

பாடின கண்ணனும் பாடப்பட்ட கண்ணனும் பொறுத்து அருளட்டும்

————

அர்த்தே ஹரௌ ததபிதாயிநி நாம வர்கே
தத் வ்யஞ்ஜகே மயி ச பந்த விசேஷ மேத்ய
ஸேவதவமேத தம்ருதம் ப்ரணிபத்ய யாசே
மத்யஸ்த மத் ஸரிஜநா இஹ மாச பூவன் –

ஸஹஸ்ர நாமத்தின் பொருளாகிய ஸ்ரீ யபதியினிடத்திலும்
அவரைச் சொல்லும் ஸஹஸ்ர நாமங்களினிடத்திலும்
அவற்றுக்கு உரை செய்யும் என்னிடத்தில் ஒரு வகையாக அன்பு வைத்து
இந்த அமுதத்தை உட்க் கொள்ளுங்கோள்-நமஸ்கரித்துப் பிரார்த்திக்கிறேன்

யாரும் இந்த விஷயத்தில் உதாசீனர்களாயும் விரோதம் உள்ளவர்களாயும் ஆக வேண்டாம்

———————

ஸஹஸ்ர மூர்த்தே: புருஶோத்தமஸ்ய ஸஹஸ்ர நேத்ரானன பாத பாஹோ:|
ஸஹஸ்ர நாம்னாம் ஸ்தவனம் ப்ரஶஸ்தம் நிருச்யதே ஜன்ம ஜராதி ஷாந்த்யை||

ஆயிரக்கணக்கான முகங்களும், ஆயிரக்கணக்கான கண்களும், ஆயிரக்கணக்கான கை கால்களும் ஆயிரக்கணக்கான உருவங்களும் கொண்ட புருஷோத்தமனான பகவானின் ஆயிரம் திருநாமங்கள் கொண்ட, புகழ் வாய்ந்த, (ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாமமெனும்) துதிக்கு, பிறப்பு மற்றும் மூப்பென்னும் பிணிகளைப் போக்க, இந்த விளக்கவுரை (பாஷ்யம்) எழுதப்படுகிறது.

—————–

மஹா பாரத ஸாரத்வாத் ரிஷிபி பரிகாநன
வேதாசார்ய ஸமா ஹாராத் பீஷ்மோத்க்ருஷ்ட மதத்வத
பரிக்ரஹாதிசயதோ கீதாதியைகார்த்தஸ்ஸ ந
ஸஹஸ்ர நாமாத்யாய உபாதேய தமோ மத–ஸ்ரீ ஸஹஸ்ர நாம அத்தியாயத்தின் சிறப்பு-

1-மகா பாரத சாரத்துவாத்–சாரமானது.

மதி மந்தாநம் ஆவித்ய யேநாஸௌ ஶ்ருதி ஸாகராத்| ஜகத்திதாய ஜநிதோ மஹா பாரத சந்த்ரமா: ||”

வ்யாஸ பகவான் தமது புத்தி என்னும் மத்தை வேதம் என்னும் கடலிலே செலுத்திக் கடைந்து
உலகோர் நன்மைக்காக மஹா பாரதம் என்னும் சந்திரனை எடுத்து அளித்தார்
என்று வாயு புராணம் சைவ புராணம் சொல்லும்

கிருஷ்ணனும் -கிருஷ்ண த்வைபாயனார் –கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -மூவரும் கடைந்து
அம்ருதம் -ப்ரஹ்ம ஸூத்ரம் -திருவாய் மொழி அருளினார்கள் அன்றோ

மறைப்பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பு அணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றி சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே

பவிஷ்யத் புராணே
“பிபேதி கஹநாத் சாஸ்த்ராத் நரஸ் தீவ்ராதி வௌஷதாத் |
பாரத: ஶாஸ்த்ர ஸாரோ அயமத: காவ்யாத்மநா க்ருத:||“

மனிதன் கடினமான ஸாஸ்த்ரத்தைக் கண்டு கடுமையான மருந்தைக் கண்டது போல் பயப்படுகிறான் -ஆதலால் எல்லா ஸாஸ்த்ரங்களின் ஸாரமாகிய இம் மஹா பாரதம் காவ்யா ரூபமாகச் செய்யப்பட்டுள்ளது -என்றும்

மாத்ஸ்யே
“யஸ்ய த்வை பாயந: புத்ர: ஸ்வயம் விஷ்ணு ரஜாயத |
ப்ரகாஸோ ஜநிதோ யேந மஹா பாரத சந்த்ரமா:||

மஹா பாரதம் என்னும் சந்த்ரனால் உலகத்துக்கு வெளிச்சம் கொடுத்தவராகிய த்வைபாயனர்-த்வீபத்தில் பிறந்தவர் என்னும்
புத்ரராக ஸாஷாத் விஷ்ணுவே பராசரருக்குப் பிறந்தார் என்று மத்ஸ்ய புராணத்திலும்-

“வைஷ்ணவே “
க்ருஷ்ண த்வை பாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் | கோ ஹ்யந்யோ புவி மைத்ரேய மஹா பாரத க்ருத் பகவத் ||“;மூன்றாம் அம்சம் 

மைத்ரேயர் கிருஷ்ண த்வை பாயனர் என்னப்படும் வியாஸரைப் பிரபுவான நாராயணர் என்றே அறி
பூமியில் வேறு எவன் மஹா பாரத்தத்தைச் செய்வான் ஆவான் -என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்-பாரசார்யர்-பராசரர் பிள்ளை -பராசரரே கொண்டாடிப் பேசுகிறார்

மார்கண்டேய
“வ்யாஸ வாக்ய ஜலௌகேந குதர்ம தரு ஹாரிணா |
வேத ஸைல அவதீர்ணேந நீரஜஸ்கா மஹீ க்ருதா||“ இத்யாதிபி:;

கெட்ட தர்மங்கள் ஆகிய மரங்களைக் களைவதும் வேதம் என்னும் மலையின் நின்றும் இறங்கியதுமாகிய
வ்யாஸர் வாக்யம் என்னும் ஜல ப்ரவாஹத்தால் பூமியானது
பாவம் இல்லாதாகச் செய்யப்பட்டது என்று மார்க்கண்டேய புராணத்திலும் சொல்லப்பட்டு இருப்பதாலும்

ஸ்வஸ்மிம்ஶ்ச“யோ வித்யாச் சதுரோ வேதாந் ஸாங்கே உபநிஷதாந் த்விஜ:|
ந சாக்யாநமிதம் வித்யாந் நைவ ஸ ஸ்யாத் விசக்ஷண:||“

நாலு வேதங்களையும்-வேதாந்தங்களையும் -உபநிஷத்துக்களையும் அறிந்தும் இம் மஹா பாரதத்தை அறியாத பிராமணன் எவனோ அவன் அறிவித்த தேற்றம் உள்ளவன் ஆகான் என்று ஸ்ரீ மஹா பாரதத்திலும் சொல்லப்படுவதாலும்

இதுவரை மஹா பாரத ஏற்றம் சாத்தி அருளி
அதில் சாரமான ஸஹஸ்ர நாம அத்யாயம் அருளிச் செய்கிறார்

தத்ராபி ஸ்வ ஹ்ருதய பூதே ஆநு ஶாஸநிகே பர்வணி தாந தர்மேஷு
ஸமஸ்த ஶாஸ்த்ரார்த்தே நிஷ் க்ருஷ்ய நிகம்யமாநே, ஸார ஸங்க்ரஹ  ரூபேண
கல்வயம் ஸஹஸ்ர நாம்நாமத்யாயோ அவதாரித: |

இம் மஹா பார்த்ததுக்கு உள்ளம் போன்றதாகிய சாந்தி பர்வத்தில்
தான தர்ம முதலிய எல்லா சாஸ்திரங்களின் பொருள்களையும் சாரமாக எடுத்து முடிக்கும் இடத்தில்
இந்த சஹஸ்ர நாம அத்யாயம் எல்லாவற்றினுடைய சார அம்சங்களின் ஸங்க்ரஹமாக அன்றோ நிச்சயிக்கப் பட்டு இருக்கிறது

—–

2-ரிஷிபி : பரிகாநதா:பரிகானன=வக்த்ரு வைலக்ஷண்யம்
சநகர்,சனநந்தர் சனத் குமாரர் ,சனத் சுஜாதர், நாரதர் போன்றோர் பாடிய திரு நாமங்களை வியாசர் தொகுத்து அளிக்கிறார்

ததா ருஷிபி: பரிகாநத: —
ருஷிபி: பரிகீதாநி இத்யேதத் விவரண அவஸர
ஏவைஷ ஹேது ருப உபாதயிஷ்யதே ||

ரிஷிகளினால் ஓதப்பட்டமை-seeyar -இயற்றுபவர் அல்லர் -கண்டு வெளியிட்டவர் ரிஷிகள்-
வேதார்த்த தமங்கள் எல்லாவற்றையும் நேராகக் கண்டு அறிந்த சனகர் சனத்குமாரர் நாரதர்
முதலான மஹரிஷிகளினால் இவ் வாயிர நாமங்கள் சொல் பொருள்களின் தத்துவங்களை அறிந்து கீர்த்தனம் செய்யப்பட்டவையே
இந்த நாமங்கள் வேத வ்யாஸ பகவானால் ஸ்தோத்ர ரூபமாகத் தொகுத்துக் கூறப்பட்டு
ஸம்ப்ரதாய வரிசையில் நமக்குக் கிடைத்து இருக்கின்றன –

———–

3-வேதாச்சர்யா சமா ஹாராத்–பரம ஆப்த தமர் வியாசர்..

கிஞ்ச, வேதாசார்ய ஸமாஹாராத்- பகவாந் ஹி வேதாசார்ய: க்ருஷ்ண த்வைபாயந: பரம ஆப்த தம:,
பகவந் நாராயண அவதாரத்வேந
நிரதிஶய ஜ்ஞாந ஐஶ்வர்யாதி கல்யாண குண கண தயா
நிரஸ்த ஸமஸ்த விப்ரலம்பாதி தோஷ ஸம்பாவநத்வாத்,

கலி பல மந்த அதிகாரி மநுஷ்ய அநு க்ரஹாய
வ்யஸ்த ஸமஸ்த வேதத்வாத்,

வேதார்தயோ :தத்த்வ அநுஷ்டாநயோ :
அஜ்ஞாந ஸம்ஶய விபர்யய பரிஜி ஹீர்ஷயா
ப்ரணீத பஞ்சம வேதத்வாத்,

வியாசர் பகவன் நாமங்களைத் தொகுத்தமை-(ஏழு பெருமைகள் அருளிச் செய்கிறார் )
ஸ்ரீ வேத வ்யாஸ பகவான் வேதாச்சார்யராக அவதரித்த மஹரிஷி யாதலின்
அவரது ஞானம் சக்தி முதலிய கல்யாண குணங்கள் எல்லாவற்றிலும் சிறந்தவை
மயக்கம் பிறரை மயங்கச் செய்வது ஊக்கம் இன்மை சொல்லும் திறமை இல்லாமை ஆகிய குற்றங்கள்
ஒரு சிறிதும் அவர் இடத்தில் இருக்கக் கூடும் என்று நினைப்பதற்கே இடம் இல்லாமையால்
அவர் சொல்வன எல்லாமே ப்ரமாணமே
கலி காலத்தில் சக்தி குறைந்த மனிதர்களின் மேல் அனுக்ரஹம் வைத்து வேதங்களை வகுத்து வேதங்களின் முக்கிய விஷயங்களாகிய
தத்வ ஞானம் அனுஷ்டானம் இவை இரண்டிலும் அஞ்ஞானம் சம்சயம் விபரீத ஞானம் இவற்றைப்
பரிகரிப்பதற்காக ஐந்தாம் வேதமாகிய மஹா பாரதத்தை அவர் இயற்றி அருளினார்

ஸ்வ வசநேந க்ஷத்த்ரியம் விஶ்வாமித்ரம்
ப்ராஹ்மணீ க்ருத வதோ பகவகதோ வஸிஷ்டஸ்ய நப்த்ருத்வாத்,

வஸிஷ்ட புலஸ்த்ய வர ப்ரதாந லப்த தேவதா பாரமார்த்ய ஜ்ஞாந புராண 
ஸம்ஹிதா கர்த்ருத்வாதி விஷய வர அதிஶயவத்தயா லைங்காதிஷ்வபி
புராணேஷு ப்ரஸித்தஸ்ய பகவத: பராஶரஸ்ய ச அப யத்வாத்,
அநந்ய ஸாதாரண தபஸ் ஸமாதி விஸேஷஶ்ச அஸேஷ பரமர்ஷி பரிஷத் பூஜிதத் வாச்ச| 

மேலும் அவர் ஷத்ரிய ஜாதியில் பிறந்த விச்வாமித்ரரை தமது சொல்லினால் ப்ராமணராகச் செய்த
வஸிஷ்ட பகவானது பிரபவ்வ்த்ரர் -பேரரின் குமாரர் -(வஸிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் )
வசிஷ்டரும் புலஸ்தியரும் வரம் அளித்ததனால் பர தேவதையின் உண்மை ஸ்வரூபத்தை அறிந்து
புராண ஸம்ஹிதை செய்வது முதலிய மகிமைகளை அடைந்தவர் என்று லிங்க புராணத்தில் சிறப்பித்துக் கூறப்பட்ட பராசரருடைய புதல்வர்–மற்றவர்களுக்கு இல்லாத தவம் தியானங்கள் சிறப்பால் மற்ற மஹ ரிஷி சபைகளால் பூஜிக்கப் பெற்றவர்

ஏவம் விதேந அநேந ருஷிபி: பரி கீதாநாமேவ
பகவந் நாம் நாம் அத்ர ஏதத் ஸ்தோத்ர ரூபேண ஸமாஹ்ருதத்வாச் ச அயம் உபாதேய தம:||

மேற்கூறிய ஸநகாதி மஹரிஷிகளால் ஓதப்பட்ட பகவத் திரு நாமங்களையே கொண்டு
ஸ்தோத்ர ரூபமாக இவர் தொகுத்து அருளி இருப்பதாலும் இந்த ஸஹஸ்ர நாம அத்யாயம்
அனுகூலமாகக் கொள்வதில் அனைத்திலும் மிகவும் -ஸ்ரேஷ்டம்

ஜனமேயன் பரீக்ஷித் திருக் குமாரர் -வைசம்பாயனர் இடம் கேட்டு அறிகிறார் -வேத வியாஸர் அருளிச் செய்தவற்றை உபதேசம்
பாகவதம் வேத வியாசர் அருளி -பரிக்ஷித்துக்கு ஸூகாச்சார்யார் உபதேசம்
அதையே மீண்டும் ஸூத பவ்ராணிகர் சனகாதிகளுக்கு உபதேசம் நைமிசாரண்யத்தில்-இப்படி ஒன்றுக்குள் ஓன்று சம்வாதம்

—————-

4-பீஷ்ம உத் க்ருஷ்ட மதத்வத:-அனைத்திலும் சிறந்த தர்மம் என்று பீஷ்மர் நினைத்து இருந்த சிறப்பு

அபி ச பீஷ்ம உத் க்ருஷ்ட மதத்வத:- பீஷ்மோ அபி ஹி (ப்ரத்யாயித) ப்ரதீத தம: |
ததா ஹி, ராஜ தர்மேஷு தர்ம ராஜாய பகவதா வ்யாஸேந

பீஷ்மர் தமது மதமாக ஒப்புக் கொண்டமை(பீஷ்ம வைபவத்துக்கு 10 பிரமாணங்கள் காட்டி அருளுகிறார் )
பீஷ்மாச்சார்யரும் மிகவும் ஆப்த தமர் -மிகவும் நம்பத் தக்கவர்
வேத வ்யாஸ பகவானே தர்ம புத்ரரை நோக்கி(ஆளவந்தார் பராசர மஹரிஷியைக் கொண்டாடினார்
-பராசரர் வ்யாசரைக் கொண்டாடினார் -அந்த வ்யாஸர் பீஷ்மரைக் கொண்டாடுகிறார் )

ஶ்ரோதும் இச்சஸி சேத் தர்மாந் நிகிலேந நராதிப |
ப்ரைஹி பீஷ்மம் மஹா பாஹோ வ்ருத்தம் குரு பிதா மஹம் ||
ஸ தே ஸர்வ ரஹஸ்யேஷு ஸம்ஶயாந் மநஸி ஸ்திதாந் |
சேத்தா பாகீரதீ புத்ர: ஸர்வஜ்ஞ: ஸர்வ தத்த்வ வித் ||
ஸாக்ஷாத் ததர்ஶ யோ தேவாந் ஸர்வாந் ஶக்ர புராேக மாந் ||“இத்யாததௌ,

சிறந்த பராக்ரமசாலியான அரசனே- தர்மங்கள் எல்லாவற்றையும் கேட்க விருப்பம் இருந்தால்
கௌரவர்களின் பிதாமஹரும் பெரியவருமான பீஷ்மரிடம் செல்
ஸர்வஞ்ஞரும் -எல்லாவற்றிலும் உண்மை தெரிந்த கங்கா புத்திரர் -ஸூஷ்ம விஷயங்கள்
எல்லாவற்றிலும் உனது மனத்தில் உள்ள சந்தேகங்களை எல்லாம் அறுத்து விடுவர்
அவர் இந்திராதி தேவர்களை நேராகவே கண்டவர்-
அவர் சபையில் பரிசுத்தரான ப்ரஹ்ம ரிஷிகள் எக் காலத்திலும் ச பிரியர்களாக இருந்தனர்

யஸ்ய ப்ரஹ்ம ர்ஷய: புண்யா நித்யமாஸந் ஸபாஸத:|
யஸ்ய ந அவிதிதம் கிம்சித் ஜ்ஞாநம் ஜ்ஜேயேஷு வித்யதே ||
ஸ தே வக்ஷ்யதி தர்மஜ்ஜோ தர்மாந் ஸூக்ஷ்மார்த்த தத்த்வ வித் ||இத்யாததௌ ச, “(சாந்தி பர்வம் )

ஸ்வயம் ச பேவதா
ஶர தல்பகதோ பீஷ்ம: ஶாம்யந்நிவ ஹுதாஶந:|
மாம் த்யாதி புருஷ வ்யாக்ர: ததோ மே தத் கதம் மந:||
திவ்யாஸ்த்ராணி மஹா தேஜா யோ தாரயதி புத்திமாந் |
ஸாங்காம்ஶ்ச சதுரோ வேதாம்ஸ் தமஸ்மி மநஸா கதா 😐
ஸ ஹி பூதம் பவிஷ்யச்ச பவச்ச பரதர்ஷப |
வேத்தி தர்ம ப்ருதாம் ஶ்ரேஷ்ட: ததோ மே தத்கதம் மந:||
தஸ்மிந் நஸ்தமிதே பீஷ்மே கௌரவாணாம் துரம்தரே |
ஜ்ஞாநாந்யல்பீ பவிஷ்யந்தி தஸ்மாத் த்வாம் சோதயாம் யஹம் ||“இத்யாததௌ ச,

கிருஷ்ண பகவானும்
பீஷ்மர் சர தல்பத்தில் படுத்து அக்னி ஆறுவது போல் இருக்கிறார்
புருஷ ஸ்ரேஷ்டரான இவர் இப்போது என்னையே த்யானம் செய்கிறார்
ஆதலால் என் மனம் அவர் இடம் சென்றது
சிறந்த சக்தி புத்தி உள்ளவரான அவர் நான்கு வேதங்களையும் வேதாந்தங்களை தம் மனத்தில் வைத்து இருக்கிறார்
நானும் என் மனத்தினால் அவரைச் சேர்ந்து இருக்கிறேன்
பரத ஸ்ரேஷ்டரே -தர்ம அனுஷ்டானம் செய்பவர்களில் சிறந்தவராகிய அவர்
முக்காலமும் அறிந்தவர் என்பதாலேயே அவர் இடம் எனது மனமும் சென்றது
குரு வம்ஸ தலைவராகிய அவர் அஸ்தனமாகி விட்டால் ஞானங்கள் குறைந்து போகும்
ஆதலால் நான் உம்மைத் தூண்டுகிறேன் -என்றும்

“யச்ச த்வம் வக்ஷ்யஸே பீஷ்ம பாண்டவாய அநுப்ருச்சதே |
வேத ப்ரலாபா இவ தே ஸ்தாஸ்யந்தி வஸுதாதலே || “ இத்யாததௌ,

பீஷ்மரைப் பார்த்து
ஓ பீஷ்மரே- அறிய வேண்டும் என்று கேட்க்கும் தர்மராஜருக்கு நீர் என்ன சொல்லப் போகிறீரோ
அவை எல்லாம் வேத வாக்கியங்களை போலவே பூமியிலே நிலை நிற்கப் போகின்றன -என்றும்

“யத்தி பூதம் பவிஷ்யச்ச பவச்ச பரதர்ஷப|
ஸர்வம் தத் ஜ்ஞாந வ்ருத்தஸ்ய தவ பாணாவிவாஹிதம் ||
அஹம் ச த்வா அபிஜாநாமி ஸ்வயம் புருஷ ஸத்தம ||
தபஸாஹி பவாந் ஶக்த: ஸ்ரஷ்டும் லாேகாம்ஶ் சராசராந்-“ இத்யாததௌ ச,

ஓ பரத ஸ்ரேஷ்டரே -பூத பவிஷ்யத் வர்த்தமானங்களை எல்லாம் அறிவில் முதிர்ந்தவராகிய உமக்கு
உள்ளங்கையில் வைக்கப்பட்ட நெல்லிக்கனி போல் இருக்கின்றன
புருஷர்களின் சிறந்தவரே -நானும் நேராகவே உம்மை அறிந்து இருக்கிறேன்
நீர் தவத்தினால் சராசரங்கள் அடங்கி இருக்கும் உலகங்களை படைக்கவும் வல்லீர்

“ந கத க்லாநிர் ந தே மூர்ச்சா” இத் யுபக்ரம்ய “ஸத்த்வஸ்தம் ச மநோ நித்யம் தவ பீஷ்ம பவிஷ்யதி |
ரஜஸ் தமோப்யாம் அஸ்ப்ருஷ்டம் கநைர் முக்த இவோடுராட் ||“இத்யாததௌ ச,

உமக்கு களைப்பும் இல்லை மூப்பும் இல்லை மூர்ச்சையும் இல்லை
உமது மனம் எப்போதும் ஸத்வ குணத்திலேயே நிலை பெற்று ரஜோ குணம் தமோ குணம் அற்று
மேகங்களால் விடுபட்ட சந்திரன் போல் இருக்கிறீர் என்றும் சொல்லி இருக்கிறார்

பகவதா நாரதேந ச “க்ருத்ஸ்நாந் ஹி விவிதாந்
தர்மாம்ஶ் சாதுர் வர்ண்யஸ்ய வேத்த்யயம் ||
தச் சீக்ர மநு யுஞ்ஜீத்வம் ஸம்ஶயாந் மநஸி ஸ்திதாந் ||“ இத்யாததௌ ச ப்ரபஞ்ச்ய,

நாரத பகவானும்-நான்கு வர்ணங்களுக்கும் உள்ள பல வகைத் தர்மங்களை எல்லாம் இவர் நன்கு அறிந்தவர்
ஆதலால் உள்ளத்தில் உள்ள சம்சயங்களை விரைவில் இவர் இடம் வினவுங்கோள் என்று தொடங்கி விரிவாகச் சொல்லி

ஏநம் பஹு மஹர்ஷி வ்ருத்த ஸேவா -தீர்க ப்ரஹ்ம சர்ய தபஸ் -ஸமாதி லப்த -ஸர்வ ஸாக்ஷாத் காராதி ப்ரபாவ விஸேஷவத்தயா ப்ரஶஸ்ய,
பர தத்த்வ தர்ம ப்ரவர்த கதயா வராந் விதீர்ய நியுக்தத்வாத், மாதா பித்ரு ஶுஶ்ரூஷண தத் ப்ரஸாத வர லாப ஸௌபாக்யாத், 

பர தத்துவத்தையும்
பர தத்வ ஞானத்தையும்
தர்ம அனுஷ்டானத்தையும்
வெளியிடும்படி வரம் அளித்தார்

பீஷ்மர் மாதா பிதாக்களுக்குப் பணிவிடை செய்து அவர்கள் மனம் மகிழ்ந்து அளித்த வரத்தையும் பெற்று இருக்கிறார்

ஸ்வயம் ச-தாஹோ மோஹ: ஶ்ரமஶ் ஸைவ க்லமோ க்லாநிஸ் ததா ருஜ:|
தவ ப்ரஸாதாத் கோவிந்த ஸத்யோ வ்யப கதாநி மே ||
யச்ச பூதம் பவிஷ்யச்ச பவஶ்ச்ச பரமச்யுத |
தத் ஸர்வம் அநு பஶ்யாமி பாணௌ பலமிவாஹிதம் ||
வேதா உக்தாஶ் ஸைவ யே தர்மா: வேதாந்த நியதாஶ்ச யே |
தாந் ஸர்வாந் ஸம் ப்ரபஶ்யாமி வரதாநாத் தவாச்யுத ||“ இத்யாததௌ,

அவர் -ஓ கோவிந்தரே உமது அனுக்ரஹத்தினாலே எனக்குத் தாபமும் மயக்கமும் மனச் சோர்வும் ஓய்வும் வாட்டமும் நோய்களுமாகிய எல்லாம் உடனே போய் விட்டன
அச்யுதரே -பூத பவிஷ்ய வர்த்தமானங்களை எல்லாம் அவற்றுக்கு மேம்பட்ட பரம் பொருளையும்
உள்ளங்கை நெல்லிக்கனி போல் பார்க்கிறேன்-இது தான் ஏக விஞ்ஞானம் ஸர்வ விஞ்ஞானம் ஆழ்வாரைப் போல் ப்ரஹ்மம் சாஷாத்கரித்த பலன்
வேதங்களில் சொல்லப்பட்ட ப்ரவ்ருத்தி தர்மங்களையும் வேதாந்தங்களில் மட்டும் உள்ள விஷயங்களையும்
உமது ப்ரஸாதத்தால் எனது கண் முன் இருக்கின்றன என்றும்
ஜனார்தனாரே -உம்மையே இடைவிடாது த்யானம் செய்ததன் பலனாக எப்போதுமே இளமைப் பருவத்திலேயே இருப்பவனாகி உள்ளேன்
என்றும் தாமே கூறி இருக்கிறார்

“யுவேவ சாஸ்மி ஸம் வ்ருத்த: த்வத் அநுத்யாந ப்ரும்ஹித:|
வக்தும் ஶ்ரேய: ஸமர்தோ அஸ்மி த்வத் ப்ரஸாதாஜ் ஜநார்தந ||“
இத்யாததௌ ச, ப்ரதி ஸம்ஹித யதோக்த ஸ்வ பரமார்த கத்வாச்ச |
ஏவம் விதஸ்ய பீஷ்மஸ்ய “ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோ அதி கதமோ மத:” இத்யாதிநா
அதிக தேய தம:||

இப்படி தத்வ ஞானத்தை யதாவாக அறிந்த பீஷ்மர்
இது தான் எல்லாத் தர்மங்களிலும் சிறந்த தர்மமாக யான் நினைப்பது என்று தொடங்கி
இந்த ஸஹஸ்ர நாம கீர்த்தனம் தமது மிகவும் சிறந்த தர்மமாகச் சொல்வதானால்
இந்த அத்யாயம் அனுகூலமாக கொள்ளும் அனைத்திலும் சாலச் சிறந்தது என்றதாயிற்று –

——————–

5-பரிகிரஹா திசயதோ-விலக்ஷணமான அங்கீ காரம் பெற்றது

பரிக்ரஹ அதிஶைத :-
பரிக்ரகஹோ ஹி ஸார்வ பௌமோ பகவந் நாம ஸஹஸ்ரஸ்ய |
ஶாஸ்த்ரேஷு தாவத் ஸபா பர்வணி-“தேவோ நாம ஸஹஸ்ரவாந்” இதி பகவாநபி நாம ஸஹஸ்ர ஸம்பந்தேந பூஷ்யதே |

பெரியோர் பலராலும் அங்கீ கரிக்கப் பட்டமை
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் எல்லாரும் அங்கீ கரிக்கப் பட்டுள்ளது
அன்றியும் ஸபா பர்வத்தில் -பகவான் ஆயிரம் நாமங்களை யுடையவர் -என்றும்

ஶ்ரீவிஷ்ணுதர்மே ச
ஸ்ரீ கஜேந்த்ர மோஷேண
“ஸஹஸ்ர ஶுப நாமா நம் ஆதி தேவம் அஜம் விபும்” இதி |

விஷ்ணு தர்மத்தில் கஜேந்திர மோக்ஷ ப்ரகரணத்தில்
ஆயிரம் மங்களகரமான நாமங்களை யுடையவரும் -ஆதி தேவரும் -ஜனநம் இல்லாதவருமான பிரபுவை என்றும்
ஆயிரம் நாமங்களை பற்றிய சிறப்பு கூறப்பட்டுள்ளது –

அத்ர ச உபோத்காத பல ஶ்ருத்யோ : குண ப்ரபஞ்சோ த்ருஶ்யதே |
ஆயுர் வேதாதிஷு ச த்ருஷ்டாத்ருஷ்ட ஶாஸ்த்ரேஷு, யதா சரக ஸம் ஹிதாயாம்
“விஷ்ணும் ஸஹஸ்ர மூர்தாநம் சராசர பதிம் விபும் |
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண ஜ்வராந் ஸர்வாந் வ்யபோஹதி ||

இந்த ஸ்தோத்ரத்தில் ஆரம்பம் முடிவிலும் பலன் சொல்லும் இடத்திலும் இதன் குணங்கள் மிக விரிவாக வெளியிடப்பட்டுள்ளன
வைத்திய ஸாஸ்த்ரம் முதலியவற்றிலும் இதன் விசேஷம் சொல்லப்பட்டுள்ளது –
வைத்திய சாஸ்திரமாகிய சரக ஸம்ஹிதையில்
ஆயிரம் தலைகளை யுடையவரும் -சராசரங்களுக்கு ஸ்வாமியும் ஸர்வ வ்யாபியான விஷ்ணுவை
இந்த ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் கொண்டு ஸ்துதிப்பதால் எல்லா வித ஜ்வரங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்று கூறப் பட்டுள்ளது

இதி| அத்யதேந ச நாநா விப்ர கீர்ண மூலே  மேஹஸ்ய ப்ராயஶ் சித்தே ,
“ஜப்யம் புருஷ ஸூக்தகம்” இத்யாரப்ய “ததைவ பகவந் நாம ஸஹஸ்ரம்
பாரதோதிதம்”, 

அவ்வாறே நவீனமான ஒரு வைத்திய நூலும் மேக ரோகத்துக்குப் பிராயச் சித்தம் செல்லுகையில்
புருஷ ஸூக்தம் ஜபிக்க வேண்டும் என்றும் சொல்லி மேல்
ஸஹஸ்ர நாமத்தையும் ஜபிக்க வேண்டும் என்றும் கூறுகிறது

யக்ஷ்மண:“ததைவ பகவந் நாம ஸஹஸ்ரம் பரிகீர்தயேத்”,
ஜ்வர விஸேஷஸ்ய,
“ஹோமஸ்து பூர்வ வஜ் ஜப்யம் விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்”,
க்ரஹாதே : “ஆஸத் மதம் மருத் ஸூக்தம் விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்
அந்யத்ர ஸ ஏ வம்விதம் அந்வேஷ்டவ்யம் | ப்ராக்ருதா:கவயோ அபீதம்
ஸர்வ ஜீவ ரக்ஷாத்வேந வர்ணயந்தி | யதாஸ் ஸஹ

க்ஷய ரோகத்துக்கு சிகித்சை சொல்லுவதிலும் ஸஹஸ்ர நாம கீர்த்தனம் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறது
கிரஹ சாந்தி சொல்லும் இடத்திலும் வாயு ஸூக்தமும் ஸஹஸ்ர நாம கீர்த்தனமும் செய்ய வேண்டும் என்றும்
இப்படி அநேக இடங்களில் சொல்லப்பட்டு இருப்பதைக் காணலாம்

பட்டபாண: ஸூதிகா க்ருஹ வர்ணநே அவிச்சிந்ந பட்ய மாந நாராயண நாம ஸஹஸ்ரம்” இதி |
லோகே ச க்ரஹண தாரண ஶ்ரவண ஜப ஸம் கீர்தந லேகந வ்யாக்யாந தந் நிஷ்ட பூஜந ப்ரப்ருதிபி:
விஷ-பிஶாச-வ்யாதி-க்ரஹ -து:ஸ்வப்ந-துர் நிமித்தாத் யஶிய உப ஶமநாய,
மஹா பாதகாதி ப்ராயஶ் சித்தாய,

ஐஹிக ஆமுஷ்மிக அப்யுதய ஸித்தயே , ஸம்ஸார॒ க்ரந்தி விஸ்ரம் ஸநாய,
வைஷ்ணவ பரமபத அவாப்தயே , தாதாத் விக பகவத்
குண ஸுதாஸ்வாத ஸுகாய ஆபால மூக மூர்க ஸ்த்ரீ நாஸ்திகைக பேஷஜம்

நிரதிஶய ஶ்ரத்தா பக்தி விஶ்வாஸ பூர்வகம் பரி க்ருஹ்யதே |
ந ஸ ஏவம் வித: பரிக்ரகஹோ வேதாநாமபி; தேஷாம் மூர்காதிபி: அபரிக்ரஹாத்,
குல சரண கோத்ராதி வ்யவஸ்தயா ப்ரதி ஶாகம் பரிக்ரஹ விபாகாச்ச |
ஏவம் பரிக்ரஹ அதிஶயாதப்யஸ்ய உபாதேய தமத்வம் ||

லௌகிகர்களான கவிகளிலும் பட்ட பாண கவி ப்ரஸவ க்ரஹத்தை வர்ணிக்கும் போது
நாராயணனுடைய ஸஹஸ்ர நாம கீர்த்தனம் இடைவிடாமல் செய்கிறார்கள் என்கிறார்

இப்போதும் உலகத்தில் அவ்விதமாக அநேகம் வியாதிகளுக்கும் பாபங்களும் பரிகாரமாக
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் பண்ணுவதைக் காண்கிறோம்
விஷம் பிசாசம் வியாதி க்ரஹம் தீய கனவு அப சகுனம் முதலான வற்றுக்கு சாந்தி செய்வதற்கும்
மஹா பாதகம் முதலான பாதங்களுக்கு ப்ராயச்சித்திக்கும்
இம்மையிலும் மறுமையிலும் மேன்மைகள் கிடைப்பதற்கும்
ஜனனம் மரணம் என்னும் சம்சார விலங்கை விடுவதற்கும்
அவ் விலங்கை விட்டுப் பரம பதம் அடைவதற்கும்
தத் காலத்தில் பகவத் குணங்கள் என்னும் அமுதை உண்டு ஸூகம் பெறுவதற்கும்
குழந்தைகள் ஊமைகள் பித்தர் பெண்கள் நாஸ்திகர் முதலியோரும் மிக்க சிரத்தை பக்தி நம்பிக்கைகளுடன் இத்தை அனுஷ்டிப்பதைக் காண்கிறோம்
இப்படி அங்கீ கரிப்பதற்கு வேதங்களும் இல்லை-மூர்க்கர் வேதங்களை எடுத்துக் கொள்வதும் இல்லை
அந்த அந்த குலம் கோத்ரம் முதலியவற்றுக்கு அந்த அந்த வேத சாகைகள் என்று பிரிக்கப்பட்டு இருப்பதினாலும்
ஒரு சாகையையும் யாவரும் இப்படி கிரகிப்பது இல்லையே

வாஸ்ய பிரபாவம் போல் அல்லவே வாசக பிரபாவம்-

இன்றும் சர்வாதிகாரமாக ஸஹஸ்ர நாம பாராயணம் அனைத்துக்கும் பரிகாரமாக செய்வதைக் கண் கூடாகவே காண்கிறோம்
வேத அத்யயனம் செய்யாதவர்களுக்கு இதுவே கை வந்த மருந்தாகக் காண்கிறோம்

——–

6-கீதாத்யை கார்த்தஸ்ஸ ந:-பகவத் கீதை போன்ற பல நூல்கள் உடன் பொருள் பொருத்தம் உடைய சிறப்பு

கீதாத்யைகார்த்தைஶ்ச –
பாரத ஸித்தாந்த பூத பகவத் கீதா நாராயணீய
யாந ஸந்தி அக்ர பூஜ உத்தம அநுஶாஸந ப்ரப்ருதி ப்ரதேஶாந்தர தாத்பர்ய
நிஷ்கர்ஷ ரூபத்வேந தத் ஏகத அர்தத்வாச்ச|

ஸ்ரீ மத் பகவத் கீதை முதலியவற்றுடன் பொருள் ஒற்றுமை
பகவத் கீதை
நாராயணீயம்
யான சந்தி பர்வம்
அக்ர பூஜை
உத்தம தர்ம அநு ஸாஸனம்
முதலான அநேக இடங்களிலும் தாத்பர்யத்தை இது சுருங்கக் கோருவதால் அவற்றோடு பொருள் ஒற்றுமை இதுக்கு உண்டு

—–

ஏவமேபி: ஷட்பிர் ஹேதுபி: ப்ரேக்ஷா பூர்வ காரிணாம்
பரம உபாதேய தயா நிர்ணீதம்,
வ்யாஸ தேவஶ்ரவோ தேவ ஸ்தாந நாரத
வாத்ஸ்ய அஶ்ம ஸுமந்து ப்ரப்ருதிபி:
ஸகல வித்யா தேஶிகை : ப்ரஹ்ம த்ருஶ்வபி: தேவ ப்ரஹ்ம ரிஷிபி:

ஸ்வயம் ச பகவதா ஸர்வேஶ்வரேண கீத உபநிஷதாசார்யேண பூர்வேஷாமபி குருணா
புண்டரீக விலோசநேந ஶ்ரோத்ரு கோடி நிவிஷ்டேந
பீஷ்மாத் ஸ்ருத்வா அநு மோதிதம் ஶ்ரீமந் நாம ஸஹஸ்ராத்யாயம் பகவத் குண தத்த்வ
ப்ரதி பத்தய வ்யாகுர்மஹே ||

இவ்விதம் ஆறு காரணங்களாலும்
விவேகத்தோடு கார்யங்களை அனுஷ்டிப்பார்களுக்கு இது எல்லாவற்றிலும் சிறந்ததாகவே நிச்சயிக்கப் பட்டு இருக்கிறது
எல்லா வித்யைகளுக்கும் ஆச்சார்யர்களும் ப்ரஹ்ம சாஷாத்காரம் பெற்றவருமான
வ்யாஸர் -தேவ வியாஸரஸ் -தேவ ஸ்தானர் -நாரதர் வாத்ஸ்யர் -அஸ்மர்-ஸூமந்து முதலான
தேவ ரிஷிகளாலும் -ப்ரஹ்ம ரிஷிகளாலும் சொல்லப்பட்டதும்-

பைலர் –வைசம்பாயனர் யஜ்ஜா வர்க்யர்- ஜைமினி போல்வாரைக் கொண்டே வேத பிரிவுகளை பிரசாரம் )

இனி ஏழாவது பெருமை -ஸர்வேஸ்வரனான கீதாச்சார்யனும் முன்னோரான குருக்களுக்கும் குருவான தாமரைக் கண்ணனுமான ஸாஷாத் பகவானே கேட்பவரோடே கூட உட்கார்ந்து கேட்டு அருளி-அங்கீ கரித்து அருளிய இந்த ஸஹஸ்ர நாம அத்யாயத்துக்கு
பகவத் குணங்களின் தத்வ ஞானம் உண்டாவதற்காக வியாக்யானம் செய்கிறோம்

மிதிலைச் செல்வி –தன் சரிதை கேட்டான் பெருமாள்
இன்பம் பயக்க எழில் மாதரும் தாமும் -மிதுனமாக திருவாறண் விளையிலே கேட்டு அருளினார்கள் அன்றோ

பகவத் குண தத்த்வ–பகவத் குண தர்ப்பணம் இதனாலே திரு நாமம்
தொண்டைமான் சக்கரவர்த்திக்கு அங்கு ஏழு நாழிகையில் ஏழு அர்த்தங்கள்
அஷ்ட ஸ்லோஹி யில் -ஆறு சொல்லி -ஏழாவது தனியாக
தேஹாத்ம பிரமம் நிவ்ருத்தி
ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி
அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி –மூன்றும் ஓங்காரம்
ஸ்வ யத்ன நிவ்ருத்தி -நமஸ்
அபந்து -ஆபாச பந்துக்கள் நிவ்ருத்தி நாராயண
விஷய நிவ்ருத்தி ஆய -கைங்கர்ய பிராத்தனை
இப்படி ஆறையும் சொல்லி
நமஸ்ஸில் ஆந்திர அர்த்தமான பாகவத சேஷத்வம் ஏழாவது
அதே போல் இங்கும் பிரதானமாக கண்ணன் தானே அமர்ந்து கேட்டது –

————

இந்த ஏழு காரணங்களால்-:சஹஸ்ர நாம அத்யாய உபாதேய தமோ மத :

உத் = தோஷம் அற்றவன் -தோஷங்களை போக்கடிப்பவன் –
வேதனம் உபாசனம் த்யானம்  தர்சனம்/ பஜனம் /சேவை  அனைத்துக்கும் விஷயம் அவனது சுபாஸ்ரியமான  பகவத் விக்ரகம் தான் —
குஹ்ய  தமம் ரஹஸ்யங்களில் உயர்ந்தது திரு நாம சங்கீர்த்தனம்

தேவோ நாம ஸஹஸ்ரவான் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய வப்பனே –திருவாய் 8-1-10-
தமர் உகந்தது எப்பேர் அப்பேர் –

—————————————————————

ஆறாவது கேள்விக்கு பீஷ்மர் பதில் முதலில்
ஜகத்ப்ரபும் தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம்
ஸ்துவன் நாம ஸ்ஹஸ்ரேண புருஷ ஸததோத்தித
பழுதே பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் –
அசந்நேவ ஸ் பவதி –

அடுத்து 3/4 கேள்விகளுக்கு பதில்
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –சர்வ துக்காதி கோ பவேத்
ஜப ஆலம்பனம்-ஸஹஸ்ர நாமம்
பக்த்யா அர்ச்சயன்
பக்த்யா த்யாயன்
பக்த்யா ஸ்துவன்
பக்த்யா நமஸ்யன்
அச்சுதா அமரர் ஏறே –என்னும் இச்சுவை
பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -திருவாய் -10-4-1-
வணக்குடை தவ நெறி -1-3-5-
ஸ்ததம் கீர்த்தயந்தோமாம் நமஸ் யந்தஸ் சமாம் பக்த்யா -ஸ்ரீ கீதை -9-14
மன்மநாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு -ஸ்ரீ கீதை -9-4
காரணந்து த்யேய
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே —
நாரணன் எம்மான் பாரணங்காளன் வாரணம் தொலைத்த காரணன் தானே –
தானே யுலகெல்லாம் -தானே படைத்திடந்து தானே யுண்டுமிழ்ந்து தானே யாள்வானே
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
ப்ரஹ்ம வித் ஆப்நோதி பரம்
யஜ்ஞென தானேன தபஸா நோசகேன-
வியாசரும் -ஆலோத்யா சர்வ சாஸ்த்ராணி விசார்யச புன புன
இதமேகம் ஸூ நிஷ்பந்தம் த்யேயோ நாராயணஸ் சதா –
ஆலம்பனம் -கூராழி வெண் சங்கேந்தி
வேர் சூடுமவர் மண் பற்று கழற்றாதாப் போலே
ஜ்ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும் –

தர்மரின் மூன்றாவது கேள்விக்கு -கம் ஸ்துவந்த –
பீஷ்மர் –
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –
அநாதிநிதனம் விஷ்ணும் சர்வலோக மகேஸ்வரம்
லோகாத் யஷம் ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் –
ப்ரஹ்மணயம் சர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்தநம்
லோகநாதம் மஹத் பூதம் சர்வ பூத பவோத் பவம் –
10 அடை மொழிகள்
1-அநாதிநிதனம் -ஆதி அந்தம் இல்லாதவன் -தேச கால வஸ்து பரிச்சேதன்
2-விஷ்ணும் -வ்யாப்தி
3-சர்வலோக மகேஸ்வரம்
4-லோகாத் யஷம் -அனைத்தையும் கண்களால் காண்பவன்

5-ப்ரஹ்மணயம் -வேத பிரதிபாத்யன்
6-சர்வ தர்மஜ்ஞம் –
7-லோகாநாதம்
8-மஹத் பூத்
9-கீர்த்தி வர்த்தநம்
10- சர்வ பூத பவோத் பவம் -ஆதி காரணன் –
ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் -ஸ்துவந்த கம் கேள்விக்கு இப்படி பீஷ்மர் பதில் அருளுகிறார்
யதாததாவபி குண சங்கீர்த்த்தனம் குர்வன்-ஏதோ ஒரு முறையில் திவ்ய நாம திருக் குணங்களைப் பாடுதல் –

இனி ஐந்தாம் கேள்விக்கு -கோ தர்ம சர்வ தர்மாணாம் -பதில்
ஏஷ மே சர்வ தர்மாணாம் தர்மோதி கதமோ மத ‘
யத் பக்த்யா புண்டரீ காஷம் ஸ்தவைரச் சேன்நரஸ் ஸதா –
ஏஷ -மேலே சொல்லப்பட்ட அர்ச்சன ஸ்தவ நாதிகளால்-அன்புடன் பூஜிக்கை –
அதிகதம -மிகச் சிறந்த தர்மம்
யத் பக்த்யா -ப்ரீதி உட் கொண்ட -ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் –
அர்ச்சேத் -ஆராதிப்பவன்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
சதா -கால தேச சுத்தி வேண்டா
அபஹத பாப்மா -அமலன் -விமலன் -நிமலன் -நின்மலன் –
அவன் திரு உள்ளம் உகந்து -விதி வாய்க்கின்று காப்பாரார் –
ஸ்வாராதன் –
கலௌ சங்கீர்த்ய கேசவம் –

அடுத்து கிம் வாப்யேகம் பராயணம் –உபேயம் பற்றி கேள்விக்கு பதில் –
1-பரமம் யோ மஹத் தேஜ–பரம் -மஹத் இரண்டு விசேஷணங்கள்-கோடி சூர்ய சம ப்ரப-
2- பரமம் மஹத் தப -தப -நியந்தா பொருளில்
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய
3-பரமம் மஹத் ப்ரஹ்ம -ஸ்வரூப ப்ருஹத்வம் குண ப்ருஹத்வம் –
ப்ரஹ்மணத்வம் -தன்னை கிட்டியவரை தன்னைப் போலே பெரிதாக்க வல்லவன் –
4-பரமம் பராயணம்
5-பவித்ரானாம் பவித்ரம்
மாதவன் என்று ஓத வல்லீரேல் தீதொன்றும் சாரா
வாயினால் பாடி -..போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்

ஹரிர் ஹரதி பாபானி
தத்யதா இஷீக தூல மக்நௌ ப்ரோதம் ப்ரதூயதே -சாந்தோக்யம்
பவித்ரங்களுக்கும் பவித்ரம் அவனே
6- மங்களா நாஞ்ச மங்களம் –

இனி கிமேகம் தைவதம் லோகே -முதல் கேள்விக்கு பதில் –

தைவதம் தேவதா நாம் ஸ -என்று தொடங்கி
மனிதர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ -திருவாய் -8-1-5-
லோக ப்ரதானச்ய – ஜகன்நாதச்ய
சர்வ பாபபயாபஹம் நாம சஹச்ரம்

ஸ்ருணுமே-கேள் -தர்மா -தட்டி எழுப்பி சொல்கிறார் பீஷ்மர்
கௌணாநி -குண சேஷ்டிதங்கள்
விக்யாதாநி -பிரசித்தமானவை
ரிஷிபி -சநகர் நாரதர் போல்வார்
பரிகதாநி -எல்லா திக்குகளிலும் அத்யந்த சிநேக பக்திகளுடன் பாடப்பட்டவை
பூதயே -வாழ்ச்சியின் பொருட்டு
பூ சத்தாயாம்
கடல் வண்ணன் பூதங்கள் -திருவாய் -5-2-1-
மஹாத்மநா-தனக்கும் தன் தன்மை அறிவரியான் –
அஹம் வேத்மி மகாத்மா
அப்ரமேயம் ஹி தத்தேஜ –

கிம் ஜபன் முச்ச்யதே உபோத்காதம்

பத்தோ முச்யேத பந்த நாத்யாதி ப்ரஹ்ம ஸநாதநம் -என்று
சம்சார பந்தம் நிவ்ருதியும்
ப்ரஹ்ம பிராப்தியும்
பலமாக சொல்லி முடிகிறது

யதோபாசனம் பலம்
சூழ்ந்து இருத்து ஏத்துவர் பல்லாண்டு -பல்லாண்டு இங்கே -அதே பலன் அங்கும்

———

ஸூபாஸ்ரியமான பகவத் விக்ரகம் தான் —
குக்ய தமம் ரஹச்யங்களில் உயர்ந்தது திரு நாம சங்கீர்த்தனம்

தேவோ நாம ஸஹஸ்ரவான் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –

தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய வப்பனே –திருவாய் 8-1-10-

தமர் உகந்தது எப்பேர் அப்பேர் –

அமரர் நன்னாட்டு அரசு ஆள பேர் ஆயிரமும் ஓதுமின்கள் -ஸ்ரீ பெரிய திருமொழி -1-5-10–

இனமலர் எட்டும் இட்டு இமையோர்கள் பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும்
பிரிதி சென்று அடை நெஞ்சே –ஸ்ரீ பெரிய திருமொழி –1-2-7-

ஓதி ஆயிர நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல் ஏதமின்றி நின்று அருளும்
நம் பெரும் தகை இருந்த நல் இமயத்து -1-2-9-

பேர் ஆயிரமுடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே -1-5-4-

பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவையாயினான் பேருமோர் ஆயிரம்
பேச நின்ற பிறப்பிலி பெருக்குமிடம் –திருவேங்கடம் -1-9-7–

வென்றி கொள் வாள் அவுணன் பகராத அவன் ஆயிர நாமம்-2-4-7-

வருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான்
திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர் -3-2-4-

அண்டரும் வானத்தவரும் ஆயிர நாமங்களோடே திண் திறல் பாட வருவான் சித்திர கூடத்துள்ளானே -3-3-3–

ஓதி ஆயிர நாமமும் பணிந்து ஏத்தி நின்னடைந்தேற்கு -3-5-9-

எண்ணில் பேராளன் பேர் அல்லால் பேசாள் -5-5-7-

ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலை கடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தான் -5-7-6–

தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளார் ஏத்த நின்ற பேராளன்
ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கும் மணவாளன் பெருமை -6-6-9-

அமுதம் கொண்ட பெருமான் திரு மார்பன் –நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-3–

தேனும் பாலும் அமுதமாய் திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே -6-10-6-

பேர் ஆயிரமுடைய பேராளன் பேராளன் என்கின்றாளால் -8-1-6-

திருக் கண்ணபுரத்து உறையும் பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே -8-3-9–

ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து –11-3-8-

பெற்றாரார் ஆயிரம் பேரானை பேர் பாடப் பெற்றான் கலியன் ஒலி செய் தமிழ் மாலை -11-3-10-

உலகு அளந்த யும்பர் கோமான் பேராளன் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே -11-6-5-

————————–

திருக் கோட்டியூர் கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா வென்று பேசுவார் அடியார்கள்
எந்தம்மை விற்கவும் பெறுவார்களே-பெரியாழ்வார் திருமொழி-4-4-19-

கேசவா புருடோத்தமா வென்றும் கேழலாகிய கேடிலீ என்றும் பேசுவார் எய்தும்
பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே -பெரியாழ்வார் திருமொழி-4-5-1–

—————————-

பேரும் ஓர் ஆயிரம் பிற பலவுடைய எம்பெருமான் பேரும் ஓர் உருவமும்
உளதில்லை இலதில்லை பிணக்கே -ஸ்ரீ திருவாய்மொழி-1-3-4-

பலபலவே யாபரணம் பேரும் பலபலவே பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில் பல பல -2-5-6–

நாமங்கள் ஆயிரமுடைய நம் பெருமான் -5-8-11-

ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற–6 -7 -2 –

ஓர் ஆயிரமாய் உலகு ஏழு அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையன் காராயின
காள நன்மேனியினன் நாராயணன் நங்கள் பிரானே -9-3-1-

ஆயிரம் பேருடை யம்மான் நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி அறியோமே-10-1-2–

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே -10-5-8–

——————–

நின்றதுவும் வேங்கடமே பேர் ஓத வண்ணர் பெரிது-ஸ்ரீ முதல் திருவந்தாதி -39-

நினைத்தற்கு அரியானைச் சேயானை ஆயிரம் பேர் செங்கண் கரியானைக் கை தொழுதக்கால் -65-

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர்– ஸ்ரீ இரண்டாம்-73-

நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே –ஸ்ரீ மூன்றாம் -8-

தேசம் திறலும் திருவும் உருவமும் மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத நலம் புரிந்து சென்று அடையும் நன்கு -10-

தான் ஒரு கை பற்றி அலையாமல் பீறக்கடைந்த பெருமான் திரு நாமம் கூறுவதே யாவர்க்கும் கூற்று–ஸ்ரீ நான்முகன் -49-

பேர் பாடி செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் -88-

—————–

திரைக் கண் வளரும் பேராளன் பேரோதச் சிந்திக்க -ஸ்ரீ பெரிய திருவந்தாதி–59-

—————

பேர் ஆயிரமுடையான் என்றாள்—பேர் ஆயிரமுடையான் பேய்ப்பெண்டீர் நும் மகளை தீரா நோய் செய்தான் என உரைத்தாள் —
செங்கண் நெடியானைத் தேன் துழாய்த் தாரானை தாமரை போல் கண்ணானை எண்ணரும் சீர்ப் பேர் ஆயிரமும் பிதற்றி
பெரும் தெருவே ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல் –ஸ்ரீ சிறிய திருமடல்

———————————————————————

கிமேகம் தைவதம் லோகே -பவத பரமோ மத –ஒப்பற்ற தெய்வம் யார்
கிம்வாபி ஏகம் பராயணம் -பவத பரமோ மத –அடையத் தக்க பிராப்யம் எது
ஆக பிராப்யம் பற்றி முதல் இரண்டு கேள்விகள் –

ஸ்துவந்த கம் -பவத பரமோ மத -யாரை குண சங்கீர்த்தனம் பண்ணி பூஜித்து
கம் அர்ச்சந்த மாநவா சுபம் ப்ராப்நுயு -பவத பரமோ மத -யாரை பக்தியுடன் உபாசித்து இஹ பர இன்பங்கள் அடைகிறார்கள் –
கோ தர்மஸ் சர்வ தர்மாணாம் -பவத பரமோ மத -தேவரீர் ஸ்வீகரித்த மேலான தர்மம் எது –

கிம் ஜபன் முச்யதே ஜந்து ஜன சம்சார பந்தநாத் -பவத பரமோ மத -எந்த மந்திர ஜபத்தால் பந்தம் அறும்
இவை உபாயம் பற்றிய நான்கு கேள்விகள்

பவத பரமோ மத -உமது அபிப்ராயத்தால் –ப்ரியதமமான பலனையும் ஹிததமமான உபாயத்தையும் கேட்கிறார்

ஆறாவது கேள்விக்கு பீஷ்மர் பதில் முதலில்
ஜகத்ப்ரபும் தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம்
ஸ்துவன் நாம ஸ்ஹஸ்ரேண புருஷ ஸததோத்தித
பழுதே பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் –
அசந்நேவ ஸ் பவதி –

அடுத்து 3/4 கேள்விகளுக்கு பதில்
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –சர்வ துக்காதி கோ பவேத்
ஜப ஆலம்பனம்-ஸஹஸ்ர நாமம்
பக்த்யா அர்ச்சயன்
பக்த்யா த்யாயன்
பக்த்யா ஸ்துவன்
பக்த்யா நமஸ்யன்
அச்சுதா அமரர் ஏறே –என்னும் இச்சுவை
பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -திருவாய் -10-4-1-
வணக்குடை தவ நெறி -1-3-5-
ஸ்ததம் கீர்த்தயந்தோமாம் நமஸ் யந்தஸ் சமாம் பக்த்யா -ஸ்ரீ கீதை -9-14
மன்மநாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு -ஸ்ரீ கீதை -9-4
காரணந்து த்யேய
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே —
நாரணன் எம்மான் பாரணங்காளன் வாரணம் தொலைத்த காரணன் தானே –
தானே யுலகெல்லாம் -தானே படைத்திடந்து தானே யுண்டுமிழ்ந்து தானே யாள்வானே
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
ப்ரஹ்ம வித் ஆப்நோதி பரம்
யஜ்ஞென தானேன தபஸா நோசகேன-
வியாசரும் -ஆலோத்யா சர்வ சாஸ்த்ராணி விசார்யச புன புன
இதமேகம் ஸூ நிஷ்பந்தம் த்யேயோ நாராயணஸ் சதா –
ஆலம்பனம் -கூராழி வெண் சங்கேந்தி
வேர் சூடுமவர் மண் பற்று கழற்றாதாப் போலே
ஜ்ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும் –

தர்மரின் மூன்றாவது கேள்விக்கு -கம் ஸ்துவந்த –
பீஷ்மர் –
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –
அநாதிநிதனம் விஷ்ணும் சர்வலோக மகேஸ்வரம்
லோகாத் யஷம் ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் –
ப்ரஹ்மணயம் சர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்தநம்
லோகநாதம் மஹத் பூதம் சர்வ பூத பவோத் பவம் –
10 அடை மொழிகள்
1-அநாதிநிதனம் -ஆதி அந்தம் இல்லாதவன் -தேச கால வஸ்து பரிச்சேதன்
2-விஷ்ணும் -வ்யாப்தி
3-சர்வலோக மகேஸ்வரம்
4-லோகாத் யஷம் -அனைத்தையும் கண்களால் காண்பவன்

5-ப்ரஹ்மணயம் -வேத பிரதிபாத்யன்
6-சர்வ தர்மஜ்ஞம் –
7-லோகாநாதம்
8-மஹத் பூத்
9-கீர்த்தி வர்த்தநம்
10- சர்வ பூத பவோத் பவம் -ஆதி காரணன் –
ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் -ஸ்துவந்த கம் கேள்விக்கு இப்படி பீஷ்மர் பதில் அருளுகிறார்
யதாததாவபி குண சங்கீர்த்த்தனம் குர்வன்-ஏதோ ஒரு முறையில் திவ்ய நாம திருக் குணங்களைப் பாடுதல் –

இனி ஐந்தாம் கேள்விக்கு -கோ தர்ம சர் தர்மாணாம் -பதில்
ஏஷ மே சர்வ தர்மாணாம் தர்மோதி கதமோ மத ‘
யத் பக்த்யா புண்டரீ காஷம் ஸ்தவைரச் சேன்நரஸ் ஸதா –
ஏஷ -மேலே சொல்லப்பட்ட அர்ச்சன ஸ்தவ நாதிகளால்-அன்புடன் பூஜிக்கை –
அதிகதம -மிகச் சிறந்த தர்மம்
யத் பக்த்யா -ப்ரீதி உட் கொண்ட -ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் –
அர்ச்சேத் -ஆராதிப்பவன்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
சதா -கால தேச சுத்தி வேண்டா
அபஹத பாப்மா -அமலன் -விமலன் -நிமலன் -நின்மலன் –
அவன் திரு உள்ளம் உகந்து -விதி வாய்க்கின்று காப்பாரார் –
ஸ்வாராதன் –
கலௌ சங்கீர்த்ய கேசவம் –

அடுத்து கிம் வாப்யேகம் பராயணம் –உபேயம் பற்றி கேள்விக்கு பதில் –
1-பரமம் யோ மஹத் தேஜ–பரம் -மஹத் இரண்டு விசெஷணங்கள்-கோடி சூர்ய சம ப்ரப-
2- பரமம் மஹத் தப -தப -நியந்தா பொருளில்
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய
3-பரமம் மஹத் ப்ரஹ்ம -ஸ்வரூப ப்ருஹத்வம் குண ப்ருஹத்வம் –
ப்ரஹ்மணத்வம் -தன்னை கிட்டியவரை தன்னைப் போலே பெரிதாக்க வல்லவன் –
4-பரமம் பராயணம்
5-பவித்ரானாம் பவித்ரம்
மாதவன் என்று ஓத வல்லீரேல் தீதொன்றும் சாரா
வாயினால் பாடி -..போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்

ஹரிர் ஹரதி பாபானி
தத்யதா இஷீக தூல மக்நௌ ப்ரோதம் ப்ரதூயதே -சாந்தோக்யம்
பவித்ரங்களுக்கும் பவித்ரம் அவனே
6- மங்களா நாஞ்ச மங்களம் –

இனி கிமேகம் தைவதம் லோகே -முதல் கேள்விக்கு பதில் –

தைவதம் தேவதா நாம் ஸ -என்று தொடங்கி
மனிதர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ -திருவாய் -8-1-5-
லோக ப்ரதானச்ய – ஜகன்நாதச்ய
சர்வ பாபபயாபஹம் நாம சஹச்ரம்
ஸ்ருணுமே-கேள் -தர்மா -தட்டி எழுப்பி சொல்கிறார் பீஷ்மர்
கௌணாநி -குண செஷ்டிதங்கள்
விக்யாதாநி -பிரசித்தமானவை
ரிஷிபி -சநகர் நாரதர் போல்வார்
பரிகதாநி -எல்லா திக்குகளிலும் அத்யந்த சிநேக பக்திகளுடன் பாடப்பட்டவை
பூதயே -வாழ்ச்சியின் பொருட்டு
பூ சத்தாயாம்
கடல் வண்ணன் பூதங்கள் -திருவாய் -5-2-1-
மஹாத்மநா-தனக்கும் தன தன்மை அறிவரியான் –
அஹம் வேதமி மகாத்மா
அப்ரமேயம் ஹி தத்தேஜ –
கிம் ஜபன் முச்ச்யதே உபோத்காதம்
பத்தோ முச்யேத பந்த நாத்யாதி ப்ரஹ்ம ஸநாதநம் -என்று
சம்சார பந்தம் நிவ்ருதியும்
ப்ரஹ்ம பிராப்தியும்
பலமாக சொல்லி முடிகிறது
யதோபாசனம் பலம்
சூழ்ந்து இருத்து ஏத்துவர் பல்லாண்டு -பல்லாண்டு இங்கே -அதே பலன் அங்கும்

அனுஷ்டுப் சந்தஸ் -32 உயிர் எழுத்துக்கள் கொண்ட ஸ்லோகங்கள்
தேவதை –தேவகி நந்தனன் ஸ்ரீ கிருஷ்ணன் -சக்தி
அம்ருதாம்சூத்பவோபாநு -சந்திர வம்சத்தில் உதித்த சூர்யன் -குல விளக்கு – பீஜம் -ஆதாரம் -மூல காரணம்
த்ரிசாமா -சாம ருக்குகளால் பாடப் பட்டவன் -எனபது ஹிருதயம்
சாந்தி அடைவது -பலன் -எல்லா தோஷ நிவாரணம் -ப்ரஹ்ம பிராப்தி –
உத்பவ ஷோபணோ தேவ -எனபது இதின் உயர்ந்த மந்த்ரம் –
சங்க ப்ருந் நந்தகீ சக்ரீ -இதுக்கு கீலகம் -அச்சாணி
இதின் கவசம் -காப்பு -த்ரிசாமாசாமக
யோநி கர்ப்பம் -ஆநந்தம் பரப்ரஹ்ம எனபது
ருதுஸ் ஸூதர்சன கால -எனபது திக்குகளை அடக்கிய பரப்பு
ஸ்ரீ விஸ்வ ரூபம் தான விஷயம்
ஸ்ரீ மஹா விஷ்ணு கைங்கர்ய ரூபே சஹஸ்ரநாம ஜபே விநியோக

———————————————————————————————————————-

82- திருநாமங்கள் இரண்டு முறையும்
15- திரு நாமங்கள் மூன்று முறையும்(அச்யுத-அஜ -பிராண-பத்ம நாப -மாதவ -வீரஹா-ஸ்ரீமான்-வாசு தேவ-விஷ்ணு-வீர:-சௌரி -பாவந-.போக்தா-வஸூ-சத்ய)
2 -திரு நாமங்கள் நான்கு முறையும் வரும்–(நிவ்ருத் தாத்மா–பிராணத)

பிரகரணம் படி இவற்றுக்கு அர்த்தங்களை சாதிக்கிறார்

———–

திரு நாமத் தொகுப்பு
1—பரத்வ பரமான திரு நாமங்கள் -1-122-

1-1-வ்யாப்தி -சர்வேஸ்வரத்வம்-1-4-குணத்தால் நிறைந்தவன் -எங்கும் பரந்து ஆள்பவன் –

1-2-சர்வ சேஷித்வம் -5-9-தானே உலகு எல்லாம் –தானே படைத்து அழித்துக் காப்பவன்

1-3-தோஷம் தட்டாத பரமாத்மா -10-11-குற்றம் அற்றவன் -ஒப்பிலி அப்பன் –

1-4-முக்தர்களுக்கு பரம கதி -12-17-முக்தர்களால் அடையத் தக்கவன் –

1-5-முக்திக்கு உபாயம்-18-19-முக்திக்கு வழி –

1-6-சேதன அசேதன நியாமகன் -20-முக்திக்கு வழி –

1-7-சமஸ்த இதர விலஷணன் -21-65-அனைத்தும் தானே –ஆனால் அவற்றிலும் உயர்ந்தவன் –

1-8-த்ரிவித சேதன வ்யதிரிக்தனும் நியாமகனும் 66-88-அனைத்தும் தானே –ஆனால் அவற்றிலும் உயர்ந்தவன் –

1-9-உபாய உபேய ஸ்வரூபி -89-100-ஆறும் பேறும் அவனே -மருந்தும் விருந்தும் அவனே –

1-10-ஆஸ்ரித வத்சலன் -101-122-ஆறும் பேறும் அவனே -மருந்தும் விருந்தும் அவனே –

————————

2—வ்யூஹ நிலை பரமான திரு நாமங்கள் -123-146-
123-128 -ஆறு குணங்கள் –129-138-மூவரின் முத் தொழில்கள் – 139-146-நால்வரின் நான்கு தன்மைகள் –

சங்கர்ஷணன் ——–123-124——–2 திரு நாமங்கள்
பிரத்யும்னன் ———125-126———2 திரு நாமங்கள்
அநிருத்தன் ———-127-146———20 திரு நாமங்கள்

—————————–

விஷ்ணு —————-147-170——–24 திரு நாமங்கள்
ஷாட்குண்யம் ———–171-187———17 திரு நாமங்கள்
ஹம்சாவதாரம் ———-188-194———-7 திரு நாமங்கள்
பத்ம நாபன் ————195-199———-5 திரு நாமங்கள் –
நரசிம்ஹ அவதாரம் ——200-210———11 திரு நாமங்கள்
மத்ஸ்யாவதாரம் ———–211-225——15 திரு நாமங்கள்
உபநிஷத் திரு நாமங்கள் —226–246—–21 திரு நாமங்கள்
நாராயணன் ————–247–271—–25 திரு நாமங்கள் –
விஸ்வரூபன் ———————272–300—–29 திரு நாமங்கள் –
வடபத்ரசாயீ —————301–313—–13 திரு நாமங்கள் –
பரசுராமாவதாரம் ———-314-321——-8 திரு நாமங்கள் –
கூர்மாவதாரம் ————-322–332—–11 திரு நாமங்கள் –
வாஸூ தேவன் ————333–344—–12 திரு நாமங்கள் –
திவ்ய மங்கள விக்ரஹம் —-345–350——6 திரு நாமங்கள் –
பகவானின் ஐஸ்வர்யம் ———-351–360——10 திரு நாமங்கள்
ஸ்ரீ லஷ்மீபதி ——————361–384——-24 திரு நாமங்கள்
த்ருவ நாராயணன் ————-385–389——–5 திரு நாமங்கள்
ஸ்ரீ ராமாவதாரம் —————380–421——-32 திரு நாமங்கள் –

———————————————————————-

3-1–விஷ்ணு அவதாரம் -147-152-ஸ்ரீ மஹா விஷ்ணு -முதல் அவதாரம் -முதலாம் திரு உருவம் –முதலாவான் ஒருவனே –

3-2- வாமன அவதாரம் -153-164-

3-3-துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் -165-170-அவதரித்துக் காப்பவன் -இனியவன் –

3-4-பர வ்யூஹ விபவ மூன்றுக்கும் பொதுவான ஞான பலாதி ஆறு குணங்கள் உள்ளமை சொல்வது -171-181-

3-5-குணங்களுக்கு ஏற்ற செயல்களைச் சொல்வது -182-186-குணங்களுக்கு ஏற்ற அவதாரச் செயல்கள் –

3-6- ஹம்சா அவதாரம் -187-194-

3-7- பத்ம நாப அவதாரம் -195-199- -உந்தித் தாமரை யான் –

3-8-ஸ்ரீ நரசிம்ம அவதாரம் -200-210-

3-9-ஸ்ரீ மத்ஸ்ய அவதாரம் -211-225-

3-10- உபநிஷத் பிரதிபாத்ய விராட் ஸ்வரூபம் -226-247-புருஷ சூக்தத்தில் விளக்கப்பட்ட திரு நாமங்கள் –

3-11-சித் அசித் இவைகளாலான ஐஸ்வர்ய பூர்த்தி -248-271-யானே நீ என்னுடைமையும் நீயே —

3-12-விஸ்வரூபம் -272-300-பெருமைகளை வெளிப்படுத்தும் விஸ்வரூபம் –

3-13-ஸ்ரீ வடபத்ர சாயி -301-313-ஆலமா மரத்தின் இல்லை மேல் ஒரு பாலகன் –

3-14-ஸ்ரீ பரசுராம ஆவேச சக்தி அவதாரம் -314-321-பரசுராமரா -அல்லது கோபத்தின் உருவமா –

3-15-ஸ்ரீ கூர்ம அவதாரம் -322-327-அனைத்தையும் தாங்கும் ஆமை –

3-16-ஸ்ரீ பர வாசுதேவன் -குண வாசகம் -333-344-ஸ்ரீ பர வாசூதேவனின் குணங்கள் –

3-17–ஸ்ரீ பர வாசுதேவன் -ரூப வாசகம் -345-350-ஸ்ரீ பர வாசூதேவனின் திருமேனி –

3-18-ஸ்ரீ பர வாசுதேவன் -விபூதி -351-360-ஸ்ரீ பர வாசூதேவனின் – செல்வம் –

3-19-ஸ்ரீ பர வாசுதேவன் -ஸ்ரீ லஷ்மி பதித்வம் -361-379-ஸ்ரீ பர வாசூதேவன் -ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் –

3-20-சேதனர் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை -380-384-கருவியும் காரணமும் இயக்குமவனும் செய்பவனும் அவனே-

3-22-ஸ்ரீ த்ருவ -385-389-ஸ்ரீ த்ருவனும் நஷத்ர மண்டலமும் –

3-23-ஸ்ரீ ராம அவதார -390-421-மாண்டவரையும் உயிர்ப்பிக்கும் ஸ்ரீ இராமன் –

————————–
ஸ்ரீ கல்கி அவதார——-422-435–13 திரு நாமங்கள்
ஸ்ரீ பகவானின் முயற்சி —-436–452—–17 திரு நாமங்கள் –
ஸ்ரீ நரன் —————–453-456——-4 திரு நாமங்கள் –
அம்ருத மதனம்———457–470—–14 திரு நாமங்கள் –
தர்ம ஸ்வரூபி ———471-528——58 திரு நாமங்கள் –

—————————–

3-24-ஸ்ரீ கல்கி -422-436-

3-25-ஜ்யோதிர் மண்டல பிரவ்ருத்தி தர்ம ப்ரவர்தகன் -437-445-நஷத்ரங்களும் சிம்சூமார சக்கரமும் –

3-26-யஞ்ஞ ஸ்வரூபன் 446-450-

3-27-ஸ்ரீ நர ஸ்ரீ நாராயண -451-457-

3-28- அலை கடல் கடைந்த -458-470-அலைகடல் கடைந்த ஆரமுதம் –

3-29-தர்ம சாஸ்திர -471-502-தர்மத்தின் வடிவம்

3-30-ஸ்ரீ ராம தர்ம ரஷகன் -503-513-தர்மத்தைக் காக்கும் ஸ்ரீ இராமன் –

3-31-பாகவத சாத்வத ரஷகன் -514-519-பாகவதர்களைக் காப்பவன் –

3-32-ஸ்ரீ கூர்ம -520-521-ஸ்ரீ ஆதி சேஷமும் ஸ்ரீ கூர்மமும் –

3-33-ஸ்ரீ அநந்த சாயி -522-523-

3-34-ஸ்ரீ பிரணவ ஸ்வரூபி -524-528-ஸ்ரீ பிரணவ ஓங்கார வடிவினன் –

——————————–

ஸ்ரீ கபில மூர்த்தி -529-543————————–15 திரு நாமங்கள்
சுத்த சத்வம் -544-562————————––19 திரு நாமங்கள்
மஹ நீய கல்யாண குணங்கள் -563-574—————————12 திரு நாமங்கள்
ஸ்ரீ வியாசர் -575-607——————————————————— 33 திரு நாமங்கள்
சுபத் தன்மை -608-625—————————— 18 திரு நாமங்கள்
ஸ்ரீ அர்ச்சாவதாரம் -626-643————————-18 திரு நாமங்கள்
புண்ய ஷேத்ரங்கள் -644-660——————17 திரு நாமங்கள்
சக்திபரம் -661-696—————————————–36 திரு நாமங்கள்

——————

3-35-ஸ்ரீ கபில -அம்ச அவதாரம் -529-538-

3-36- ஸ்ரீ வராஹ -539-543-

3-37-சுத்த சத்வ ஸ்வரூபி -544-568-மேன்மை சொல்லும் ரஹஸ்யமான திரு நாமங்கள் –

3-38-ஸ்ரீ நாராயண -569-574-

3-39-ஸ்ரீ வியாச -575-589-

3-40-தர்மப்படி பலன் அளிப்பவன் -590-606-

3-41-ஸ்ரீ சம்பந்த மங்கள ப்ரதன் -607-629-ஸ்ரீ யபதியே ஸ்ரீ பர ப்ரஹ்மம்-

3-42-ஸ்ரீ அர்ச்சாவதார -630-696–ஸ்ரீ அர்ச்சாவதாரம் -கண்களுக்கு புலப்படும் சௌலப்யம் /சகதீச அவதாரம்
ஸ்ரீ பர ப்ரஹ்மம் பூஜிக்கத் தக்க நற் பண்புகளை உடையவர் –
ஸ்தோத்ரத்தை ஏற்கும் தகுதி உடையவன் –

——————————————-

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -697-786———————90 திரு நாமங்கள்
ஸ்ரீ புத்தாவதாரம் -787-810———————————-24 திரு நாமங்கள்
சாஸ்திர வச்யர்களை அனுக்ரஹித்தல் -811-827——————17 திரு நாமங்கள்
பிற விபவங்கள் ————————————828-837—————–10 திரு நாமங்கள்
அஷ்ட சித்திகள்————————————-838-870—————33 திரு நாமங்கள்

————————————–

4-1-ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் -697-786-( 770-786-அவதாரத்துக்கு காரணமான ஸ்ரீ வ்யூஹம் -)

4-2-ஸ்ரீ புத்த அவதாரம் -787-810-ஸ்ரீ புத்த அவதாரம் -அசூர நிக்ரஹம் –

4-3-சிஷ்ட பரிபாலனம் -811-825-சாத்விகர்களுக்கு அருளுபவன் –

4-4-அனு பிரவேச ரஷணம் -826-838-எண்ணும் எழுத்தும் –

4-5-அஷ்ட ஐஸ்வர்யங்களை உடையவன் -839-848-ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்யங்களை அருளுபவன் –

——————————

அஷ்ட சித்திகள்———-838-870———33 திரு நாமங்கள்
மோஷ ப்ரதத்வம்——-871-911——–41 திரு நாமங்கள்
ஸ்ரீ கஜேந்திர வரதன் ——912-945——–34 திரு நாமங்கள்

———————————–

5-1-இமையோர் தலைவன் -849-850-

5-2-யோகியர் தலைவன் -851-854-

5-3-யோகத்தில் இருந்து நழுவியவரை உத்தரிப்பவன்–855-861-ஜீவர்களை ஆளுபவன் –

5-4-துஷ்டர்களை நிக்ரஹிப்பவன் -862-870–தீயவர்களுக்கு யமன்

5-5-சாத்விகர் தலைவன் -871-880–சத்வ குணத்தை வளர்ப்பவன் –

5-6-அர்ச்சிராதி -881-891-நெடும் கால ஆசை அர்ச்சிராதி மார்க்கம் –

5-7-மோஷ ஆநந்தம் தருபவன் -892-911-நலம் அந்தமில்லாத நாடு –

5-8-ஸ்ரீ கஜேந்திர மோஷம் -912-945-

———————————

ஜகத் வியாபாரம் ———————–946-992—————47 திரு நாமங்கள்
திவ்யாயூத தாரீ -993-1000———8- திரு நாமங்கள்

——————————–

6- பகவான் செய்யும் செயல்களின் பிரயோஜனம் -946-992-ஸ்ரீ அவதாரத்துக்கும் திரு விளையாடல்களுக்கும் பயன் –
( 971-982-வேள்வியும் பயனும் /983-9920ஸ்ரீ தேவகீ நந்தன் -)

7-திவ்ய ஆயுதங்கள் ஏந்திய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தன் -993-1000-திவ்ய ஆயுதமே திவ்ய ஆபரணம் -கண்ணுள் நின்று அகலாத திரு உருவம் –

——————————————————————————

1-பரத்வ நிலை–1-122

2–வியூக நிலை–123-144

3-விபவ நிலை-

3-1..ஸ்ரீ விஷ்ணு அவதாரம்–145- 152

3-2..ஸ்ரீ வாமன அவதாரம்–153-164

3-3..துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்–165-170

3-4–பகவத் குணங்கள் பேசும் திரு நாமங்கள்..

3-5..பரம் வியூகம் விபவம் மூன்றுக்கும் பொதுவான ஆறு குணங்கள் உள்ளமை சொல்வது–171-181

3-6– குணங்களுக்கு ஏற்ப அவதார செயல்களை சொல்வது–182-186

3-7 –ஸ்ரீ ஹம்ச அவதாரம்–187-194

3-8..ஸ்ரீ பத்ம நாப –ஸ்ரீ விஷ்ணு அவதாரம்-195-199

3-9. ஸ்ரீ நரசிம்ஹ அவதாரம்–200-210

3-10 -ஸ்ரீ மத்ஸ்ய அவதாரம்–211-225

3-11—புருஷ சுத்த உபநிஷத் பிரதி பாதித விராட் ஸ்வரூபம்–226-247

3-12.-சித் அசித் இவைகளால் ஆன ஐஸ்வர்ய பூர்த்தி–.248-271

3-13- எல்லை அற்ற பெருமை காட்டும் விஸ்வ ரூபம்-272-300

3-14–ஸ்ரீ வட பத்ர சாயி பிரளய ஆர்ணவத்தில் ஆல் இலை மேல் துயின்றவன்-301-313

3-15- ஸ்ரீ பரசு ராம -ஆவேச சக்த்ய -அவதாரம்–314-321

3-16—ஸ்ரீ கூர்ம அவதாரம்–322-332

3-17–ஸ்ரீ பர வாசுதேவன் -குண வாசகம்–333-344

3-18–ஸ்ரீ பர வாசுதேவன்-ரூப வாசகம்–345 -350

3-19–ஸ்ரீ பர வாசுதேவன்-விபூதி ( செல்வம் ) வாசகம்–351-360

3-20— ஸ்ரீ பர வாசுதேவன்- லக்ஷ்மி பதித்வம்–361 -379

3-21—சேதனர்கள் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை–380-384

3-22— நட்சத்திர மண்டலத்துக்கு ஆதாரமான துருவ மூர்த்தி-385-389

3-23— மிருத சஞ்சீவனமான ஸ்ரீ ராம அவதாரம்-390-405

3-24— மேலும் ஸ்ரீ ராம அவதாரம்–406-421-

3-25-1—தர்ம சொரூபி வேத விகித தர்மங்களை தானும் அனுஷ்டித்து பிறரையும் அனுஷ்டிக்க பண்ணுபவன்–423-502

3-25-2- ஸ்ரீ ராமனாய் தர்ம ரக்ஷகன்—503-513

3-25-3—பாகவத (சாத்வத ) ரட்சகன்-514-519-

3-25-4—ஸ்ரீ கூர்ம ரூபி–520-521

3-25-5– ஸ்ரீ அநந்த சாயி–522-523

3-25-6.-ஸ்ரீ பிரணவ ஸ்வரூபி–524-528

3-25-7—ஸ்ரீ கபில அவதாரமாய் ரட்ஷணம் ( அம்ச அவதாரம்)–529-538

3-25-8– ஸ்ரீ வராஹ அவதாரம்—539-543-

3-25-9- -சுத்த சத்வ சொரூபி பெரு மேன்மை–544 -568

3-25-10– ஸ்ரீ நாராயண விஷயம் அவதாரம்–569-574

3-26– -ஸ்ரீ வியாச அவதாரம் ( வேத சாஸ்திர பிரதாதா )–575-589

3-27- -தருமம் படி பலன் அளிப்பவன்–590-606

3-28-1 -மங்கள பிரதன்- ஸ்ரீ சம்பத்தால் வரும் பரத்வம்-607-625

3-28-2 –மங்கள பிரதன்- ஸ்ரீ சம்பத்தால் வரும் குண யோகம்-626-629

3-29-1-ஸ்ரீ அர்ச்சா அவதாரம் சேதனருக்கு தன்னை காட்டுவது-630-660

3-29-2.-சகதீசன் -.661-664

3-29-3 -எல்லை அற்ற குண விபூதிமான் -மனசினாலும் செய்கை யாலும் ஆராதிக்க படுகை -665-683

3-29-4- -வாத்சல்ய குண பெருக்கு வாக்காலே ஆராதிக்க படுகை–684-696

4-துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்

4-1–ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்-684-786

4-2..ஸ்ரீ புத்த அவதாரம் அசூர நிக்ரகம்-787-810

4-3–தைவ சம்பதுள்ள சிஷ்ட பரி பாலனம் 811-825

4-4–ஜீவன்களை அனுபிரவேசித்து சத் ரட்ஷனம்–826-838

4-5– அஷ்ட ஐஸ்வர்யங்களை உடையவன்/ அவற்றை தருபவன்–839-848

5–ஜீவாத்மாக்களை நிர்வகிக்கும் மேம்பாடு சொல்பவை

5-1-நல்லோர்களை வாழ்ச்சி பெரும் படி செய்யும் திரு நாமங்கள்

5-1-1..நித்யர்களை ஆளும் இமையோர் தலைவன் 849-850

5-1-2–யோகியர் தலைவன்–851-854

5-1-3–யோகத்தில் இருந்து நழுவியவரை உத்தரிப்பவன் 855-861

5-1-4-துஷ்டர்களை நிக்ரகிப்பவன் 862-870

5-2–சத்வ குணத்தை வளர்ப்பவன் -சாத்விகர் தலைவன்–871-880

5-3–ஸ்ரீஅர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் 881-891

5-4-முக்தருக்கு மோட்ஷா நந்தம் தரும் ஸ்ரீ வைகுண்ட நாதன் 892-911

5-5-ஆனைக்கு அன்று அருள் ஈந்தவன்- கஜேந்திர மோட்ஷம்-912-945

6-பகவான் செய்யும் செயல்களின் பிரயோஜனம் சொல்பவை -946-992

7-திவ்ய ஆயதங்கள் ஏந்திய திவ்ய மங்கள விக்ரக யுக்தன் -993 -1000

——————————-——————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள் —ஸ்ரீ தர்மரின் கேள்விகள் -ஸ்ரீ பீஷ்மரின் பதில்கள் –

October 31, 2023

ஸூக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே–1-

யஸ்ய த்விரத வக்த்ராயா பாரி ஷத்யா பரச் சதம்
விக்நம் நிக் நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம் தாமாஸ்ரயே–2-

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே பவுத்ர மகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதம்–3-

வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம-4

அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே-5

யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்த நாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணவே ப்ரப விஷ்ணவே-6-

ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே

—————

ஸூக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ந உப ஸாந்தயே –1

ஸர்வ விக்னம் உபசாந்தி அர்த்தத்துக்கு
வெண் பட்டாடை அணிந்து
எங்கும் நிறைந்து
சந்த்ர வர்ணன் -ஆஹ்லாத கரத்வம்
நான்கு திருத்தோள்கள் உடன் விளங்கி
பிரஸன்ன வதனம் -மதுர வீக்ஷணம் -பேசத் துடிக்கும் அதரம் –
த்யாயேத் -த்யானிப்பாய்
அதுக்கு ஏற்ற ஸூபாஸ்ரய திரு மேனியை வர்ணித்து –
வேப்பன்குடி நீரையோ குடிக்கச் சொல்கிறது
பாலைக் குடிக்கக் காலைப் பிடிக்கிறார்

——–

யஸ்ய த்விரத வக்த்ராய பாரி ஷத்யா பரச்சதம்
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம் தமாஸ்ரயே –2

யஸ்ய விரத -யானை முகம் -கஜேந்திர -மங்கள ஸ்லோகம் -விஷ்வக் சேனர் –
நூறு நூறு பிரதானர்கள் கொண்டவர்
வாசல் காப்பார் உடன் கூடிய விஷ்வக் சேனரை ஆஸ்ரயிப்போம்
விக்னங்கள் தொலையவே விஷ்வக் சேனர் ஆராதனம் தொடங்குகிறோம்
முதல் ஸ்ரீ வைஷ்ணவர் இவரே
நம்மாழ்வார் தொண்டர் தொண்டர் சடகோபன் பெருமை கொண்டவர்

———

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே பவுத்ரம் அகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதம்–3-

வ்யாஸம் -கிரந்த கர்த்தா பரம்பரை -வந்தே கிரியா பதம்
வசிஷ்ட நப்தாரம் -பேரனுக்குப் பிள்ளை
ப்ரஹ்மா வசிஷ்டர் தொடங்கி -சக்திக்கு பேரன்-அகல்மஷம் குற்றம் அற்ற -பராசர மகரிஷிக்கு பிள்ளை

———

வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம–4-

வ்யாஸாய –நமோ நம -மீண்டும் நமஸ்காரம்
வசிஷ்டர் குலம் -விஷ்ணு அவதாரம் -விஷ்ணு ரூபாயா நம
முக்ய அவதாரம் –
ஸ்வரூப ஆவேச -சக்தி ஆவேச அவதாரங்கள்
வ்யாஸ ரூபாய விஷ்ணுவே நம
ப்ரஹ்ம ஞானம் நிதி இவரே

———

அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே–5-

அவிகாராய -ஸ்வரூபத்தாலும் ஸ்வ பாவத்தாலும் -ரூபத்தாலும் விகாரம் இல்லையே
ஆத்மாவுக்கு ஸ்வரூப விகாரம் இல்லை –
தளிர் புரையும் -ஸ ஏகாகி ந ரமேத -கர்மாதீனம் இல்லை கிருபாதீனம் இவை
ஸூத்தாயா
நித்யாய –
பத்த முக்த நித்ய இதர ஸமஸ்த விலக்ஷணன்
பரமாத்மனே -இவன் ஒருவனே
நம
ஸதா ஏக ரூப ரூபாய -ஸ்வரூபம் உருவான -அந்தாம –கண்கள் சிவந்து -விஜூர ப்ரமோத -பக்தர் அதீனம்
விஷ்ணவே -சர்வ ஜிஷ்ணவே -எங்கும் வியாபித்து வெற்றி அளிப்பவன்

——–

யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தநாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணவே ப்ரப விஷ்ணவே–6-

யஸ்ய ஸ்மரணம் மாத்ரத்தால் ஜென்ம ஸம்ஸார பந்தம் விமுச்யதே
நமஸ் தஸ்மை விஷ்ணவே நம

இங்கும் ஆறு ஸ்லோகங்கள்
ஆறு பத்துக்களில் திருவாய் மொழியில் எல்லாம் உண்டே

——–

த்யானம்

ஷீரோ தந்வத் பிரதேச சுசி மணி விலஸத் ஸைகதே மௌக்தி நாம்
மாலா க்லுப்தாஸ நஸ்த ஸ்படிக மணி நிபைர் மௌக்திகைர் மண்டிதாங்க–

சுப்ரை ரதப்ரை ருபரி விரசிதைர் முக்த பீயூஷ வர்ஷை
ஆனந்தீ நஸ் புநீயாதரி நளின கதா சங்க பாணிர் முகுந்த–

1-ஷீரோ தந்வத் பிரதேச —முகுந்த-

பரிசுத்தமான ரத்னங்களாலே பிரகாசிக்கிற மணல் குன்றுகளை யுடைய திருப்பாற் கடலில்
முத்து மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட திவ்ய ஆஸனத்தில் எழுந்து அருளி இருப்பவரும்
ஸ்படிக மணி போல் விளங்குகிற முத்து மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட திரு மேனியை யுடையவரும்
மேலே ஸஞ்சரிக்கிற வெண்மையான அநேக மேகங்களால் வர்ஷிக்கப் பட்ட –பீயூஷ வர்ஷை-அம்ருத தாரைகளாலே ஸந்தோஷிப்பவரும்
சக்ரம் பத்மம் கதை சங்கம் ஆகிய இவைகளைத் திருக் கரங்களில் யுடையவரும்
பக்தர்களுக்கு முகுந்த-போக மோக்ஷங்களை அளிப்பவருமான
ஸ்ரீ மன் நாராயணன் நம்மைப் பரிசுத்தம் ஆக்க வேண்டும்

———

2-பூ பாதவ் யஸ்ய நாபிர் வியத ஸூரா நிலஸ் சந்த்ர ஸூர்யவ் ச நேத்ரே
கர்ணா வாஸாஸ் சிரோ த்யவ்ர் முகமபி தஹநோ யஸ்ய வாஸ்தேயமப்தி

அந்தஸ்தம் யஸ்ய விஸ்வம் ஸூர நரகககோ போகி கந்தர்வ தைத்யை
சித்ரம் ரம் ரம்யதே தம் த்ரி புவந வபுஷம் விஷ்ணும் ஈசம் நமாமி-

பூ பாதவ் யஸ்ய —விஷ்ணும் ஈஸம் நமாமி

யாருக்கு பூமி திருவடிகளோ
ஆகாசம் நாபியோ
வாயு பிராணனோ
சந்த்ர ஸூர்யர்கள் கண்களோ
திசைகள் காதுகளோ
ஸ்வர்க்கம் திருமுடியோ
அக்னி திரு முக மண்டலமோ
கடல் நாபியின் கீழ் பாகமோ –வாஸோயம் என்பது பதம் -இந்தக்கடல் யாருக்கு ஆடையோ
தேவர்கள் மனிதர்கள் பக்ஷிகள் பசுக்கள் பாம்புகள் கந்தர்வர்கள் அஸூரர்கள் இவர்களால்
பலதரப்பட்ட இந்த உலகு எவருடைய உதரத்தில் களிப்புடன் இருக்கின்றதோ
மூன்று புவனங்களையும் திருமேனியாக யுடையவரும்
ஸர்வ ரக்ஷகரான ஸ்ரீ விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

விராட் ஸ்வரூப வர்ணனை -தியானிக்க விஸ்வ ரூபம் -தெரியாத 14 லோகங்களைக் கொண்டு தியானிக்க முடியாதே
கோல மேனி -திவ்ய மங்கள விக்ரஹம் தியானிக்க -பரிக்ஷித்துக்கு ஸூகர்-

பவ்வ நீருடை யாடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா
செவ்வி மாதிரமெட்டும்  தோளா வண்டம் திரு முடியா நின்றான் பால் செல்ல கிற்பீர்
கவ்வை மா களிருந்தி விண்ணி ஏற்றிக் கழல்  மன்னர் மணி முடி மேல் காகமேறத்
தெய்வ வாள் வலங்கொண்ட சோழன்  சேர்ந்த திரு நறையூர் மணி மாடம், சேர்மின்களே –6-6-3-திருநறையூர் எம்பெருமானை மங்களாசாசனம்

திருமுடியா நின்றான் (6. 6: 3) (பவ்வம் – கடல்: உடை ஆடை – அரையில் உடுத்தும் பீதாம்பரம்; பார் அகலம்-பூமிப்பரப்பு; பவனம்-வாயு மெய்-திருமேனி, செவ்வி-அழகிய, மாதிரம்-திசை; தோள்-புயம்; அண்டம்-அண்ட பித்தி; திருமுடி-திருஅபிஷேகம்! என்று அவன் ஜகத்ஸ்வரூபியாய் இருக்கும் தன்மையை அழகிய உருவகத்தால் அநுபவித்து மகிழ்கின்றார். எங்கும் பரவி (விபு) நிற்கும் எம்பெருமானுக்குக் கடல் நீர் அரையில் உடுக்கும் பீதாம்பரமாகின்றது; பூமிப் பரப் பெல்லாம் திருவடியாகின்றது; வாயுவெல்லாம் திருமேனி யாகின்றது; எட்டுத் திசைகளும் திருத்தோள்களாகின் றன; அண்டகடாகம் திருமுடியாகின்றது. ஆக இவ் வகைகளினால் ஜகத்ரூபியாயிருக்கின்ற எம்பெருமான்

—————–

3-சாந்தாகாரம் புஜக சயனம் பத்ம நாபம் ஸூரேசம்
விஸ்வா தாரம் ககந ஸத்ருசம் மேக வர்ணம் ஸூப அங்கம்

லஷ்மீ காந்தம் கமல நயனம் யோகி ஹ்ருத் த்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவ பய ஹரம் ஸர்வ லோக ஏக நாதம்

சாந்தாகாரம் —–ஸர்வ லோக ஏக நாதம்
சாந்தமான ஆகாரத்தை யுடையவரும்
ஆதி சேஷன் மீது பள்ளி கொண்டவரும்
தாமரை பூத்த திரு நாபியை யுடையவரும்
தேவர்களுக்குத் தலைவரும்
விச்வா தாரம் -விஸ்வத்துக்கு ஆதாரமாக -விஸ்வமே வடிவாக யுடையவரும்
ஆகாசத்தைப் போல் எங்கும் நிரம்பி இருப்பவரும்
நீல மேகம் போன்ற வடிவம் யுடையவரும்
உத்தம லக்ஷணங்கள் பொருந்திய அங்கங்கள் யுடையவரும்
லஷ்மீ பதியும்
செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவரும்
யோகிபிர் த்யான கம்யம் -யோகிகளால் தியானத்தால் அடையப்படுபவரும் என்றும்
யோகிகளுடைய ஹ்ருதயத்தில் தியானத்தினால் அறியப்படுபவரும்
பிறவியின் பயத்தைப் போக்குபவரும்
ஸகல லோகங்களுக்கும் தலைவருமான
விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன்

———-

4– மேகஸ்யாமம் பீத கௌஸேயா வாஸம் ஸ்ரீ வத் சாங்கம் கௌஸ்துப உத்பாஸி தாங்கம்
புண்யோபேதம் புண்டரீகாய தாக்ஷம் விஷ்ணும் வந்தே ஸர்வ லோக ஏக நாதம் —

மேகஸ்யாமம் –ஸர்வ லோக ஏக நாதம்
நீல மேகம் போன்ற கரிய திரு மேனியை யுடையவரும்
பீதாம்பரத்தைத் தரித்தவரும்
ஸ்ரீ வத்ஸம் என்னும் மறுவை அடையாளமாக யுடையவரும்
கௌஸ்துபம் என்னும் மணியினால் பிரகாசிக்கின்ற அங்கத்தை யுடையவரும்
புண்ய புருஷர்களால் சூழப் பட்டவரும்
தாமரை மலர் போன்ற விசாலமான திருக் கண்களை யுடையவரும்
ஸர்வ லோகங்களுக்கும் ஒப்பற்ற தலைவருமான
ஸ்ரீ யபதியை நமஸ்கரிக்கிறேன் –

———–

ஸ சங்க சக்ரம் ஸ கிரீட குண்டலம் ஸ பீத வஸ்த்ரம் ஸராஸீ ருஹ ஈஷணம்
ஸ ஹார வக்ஷஸ்தல ஸோபி கௌஸ்துபம் நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்ப்புஜம்

திவ்ய ஆயுதங்கள்
திவ்ய ஆபரணங்கள்
மஞ்சள் பட்டாடை சாத்தி
ஸ்ரீ கௌஸ்துபம் சாத்தி
விஷ்ணுவை வணங்குவோம்

சாயாயாம் பாரி ஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸ நோபரி
ஆஸீ நமம் புதஸ் யாமம் ஆயாதாஷாம் அலங்க்ருதம்

சந்த்ராநநம் சதுர் பாஹும் ஸ்ரீ வத் ஸாங்கித வக்ஷஸம்
ருக்மிணீ ஸத்ய பாமாப்யம் ஸஹிதம் கிருஷ்ணம் ஆஸ்ரயே –

தங்க ஸிம்ஹாஸனம்
பாரிஜாத கொடிக்கு கீழே
மேக ஸ்யா மளன்
ஆயாதாஷா -நீண்ட அப் பெரிய வாய திருக் கண்கள்
நான்கு திருத்தோள்கள்
ஸ்ரீ வத்ஸவம் திரு மார்பில்
ருக்மிணி சத்ய பாமை பிராட்டிமார் ஸஹிதம்

————

தத்ர ப்ராகேவ பௌந:புந்யேந தத்ர தத்ர பர தத்த்வ பரேஷு
ப்ரதேஸேஷு அஸேஷார்த- நிர்ணய ஶ்ரவணாத் துஷ்டம் மந்ய தயா
ஸ்வயமப்ருச்சதே ஜநமேஜயாய பரம ஸௌஹார்தாத் அந்யத் குஹ்ய தமம் க்ராஹயந் ஸ்வயமேவ,

ஶ்ரீவைஶம்பாயந உவாச-

ஶ்ருத்வாதர்மாந ஸேஷேண பாவநாநி ச ஸர்வஶ:| யுதிஷ்டிர: ஶாந்தநவம் புநரே வாப்ய பாஷத || 1 ||

அதில் முதலிலேயே பலமுறை பரதத்வத்தைச் சொல்லுகிற பல இடங்களிலே விசேஷ அர்த்தங்களை
நிச்சயித்துக் கேட்டுத் திருப்தி யானதாக நினைத்துக் கொண்டு இருப்பதனால் வினவாமல் இருக்கும் ஜனமேஜயருக்கு
அவர் இடம் உள்ள பேர் அன்பினால் மற்றொரு மிக்க ரஹஸ்யத்தைத் தெரிவிப்பதற்காக வைசம்பாயனர் தாமாகவே சொல்லாத தொடங்குகிறார்
ஜனமேஜர் வினவினார் என்று இல்லாமல் வைசம்பாயனர் தானே சொல்லாத தொடங்கினார் என்று தொடங்கி இருப்பதைக் காணலாம்

பூமா வித்யை சனத்குமாரர் நாரதருக்கு உபதேசம் -இதே போல்
கண்ணன் -ஆறு அத்யாயம் சொல்லி பக்தி யோகம் பற்றி அர்ஜுனன் கேட்க்காமலேயே 7 அத்யாயம் சொல்லி
மீண்டும் 10 அத்யாயம் சொல்லத் தொடங்கியது போல்
மூவர் அனுபவம்

ஶ்ருத்வேத்யாதி|தர்மாந் ஶ்ருதி ஸ்ம்ருத்யாதி சோதநா லக்ஷணாப்யுதயநி:
ஶ்ரேயஸ பலாந் ராஜ மோஷ தாந தர்ம ரூபேண பஹூந் |
அஸேஷேண- கார்த்ஸ்ந்யேந,
யே ச யாவந்த: தாவதஶ்ச இத்யர்த:|
பாவ நாநிச தபஸ் தீர்த ஸேவாதீநி ஶுத்தி கராணி ச |
ஸர்வஶ:—–— ஸர்வ ப்ரகாரம்; பலத:அங்கத: ஸ்வரூபத: அதிகார தஶ்ச |ஶ்ருத்வா யுதிஷ்டிர:-
ஸாக்ஷாத் தர்ம ஸூநு:|ஶாந்தநவம் ஶந்தநோர் கங்காயாம் ஜாதத்வேந அபிஜாத தமம்|

ஸ்ரீ வைசம்பாயனர் உவாஸ –சொல்லலானார்
ஸ்ருத்வா தர்மான் –அப்ய பாஷத
யுதிஷ்ட்ரர் -ராஜ தர்மம் -மோக்ஷ தர்மம் -தான தர்மம் போன்ற ஸாஸ்த்ர விஹிதமான தர்மங்களையும்
தவம் தீர்த்த யாத்திரை முதலிய பாவனார்த்தமானவற்றையும்
அவற்றின் அங்கங்கள் செய்யும் முறை -அதிகாரி ஸ்வரூபம் எல்லாவற்றையும் கேட்டபிறகு
பீஷ்மரை நோக்கித் திரும்பவும் வினவலானார்
கேட்டவர் சாஷாத் தர்ம தேவதையின் புதல்வர்
சொன்னவர் சந்தனுவுக்கு கங்கையிடம் பிறந்தவர்
இருவரும் உத்தம குலத்தில் பிறந்தவர்கள்

புநரே வாப்ய பாஷத –
புநஶ்ச பப்ரச்ச | புந:ப்ருச்சா ச பீஷ்மேண
ஆத்மநீநதயா ஸ்வீக்ருதமதம் ஜ்ஞாதும்;
‘ கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:’ இத்யநந்தரோக்தே 😐
தச்ச ஸதாசார ப்ராவண்யாத் |
ஸந்தோ ஹ்யாசார்யநிஷ்டாம் அந்விஷ்ய தத் ருசி பரிக்ருஹீத மேவ
தத்த்வம் ஹிதம் ச ரோசயந்தே ; ந து ப்ராமாணிகத்வ மாத்கரண ||1 ||

சாதுக்கள் தம் ஆச்சார்யர் உகந்து அனுஷ்டிப்பதையே அனுஷ்டிப்பார்களே யல்லாமல் பிரமாணத்தை மாத்திரம் ஆதாரமாகக் கொள்வதை விரும்ப மாட்டார்கள்
ஆகையால் பீஷ்மர் தமக்கு ஹிதமாகக் கொண்டு இருக்கும் ஆசாரத்தை தெரிந்து கொள்ளும் விருப்பத்தினால் திரும்பவும் வினவலானார்-என்றார்-

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் -ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமாய் இருக்க வேண்டுமே
பவத பரமோ மத என்று மேலே வருவதால் இது நன்கு விளங்கும்
யுதிஷ்ட்ரர் சதாசார்யத்தில் ஈடுபட்டவர் ஆதலால் இங்கனம் கேட்கலானார் –

வைசம்பாயனோ ஜனமேஜயமுவாச:

ஶ்ருத்வா தர்மானஷேஷேன பாவனானி ச ஸர்வஶ: |

யுதிஷ்டிர: ஷாந்தனவம் புனரேவாப்யபாஷத||

பயிலும் சுடர் ஒளி மூர்த்தி- நெடுமாற்கு அடிமை கேட்டு- மதுரகவி நிஷ்டை
திரிபுரா தேவி -உடையவர் காட்டும் பரம் பொருளையே ஆஸ்ரயிப்போம்

தத்ரேதம் ஆதாமேவ உதைரிராம—ப்ரேக்ஷாவத்பிஸ் : ப்ரமாணேந பரிச்ச்த்ய
அநுகூலம் ப்ரமேயம் உபாதேயமிதி | தச்ச த்வைதம் வர்ததே உபாயா உபேயாத்மநா |

விவேகிகள் ப்ரமாணத்தைக் கொண்டு -ப்ரமேயத்தை -விஷயத்தை பகுத்து அறிந்து அதில்
அனுகூலமான ப்ரமேயத்தை ஆதரிப்பார்கள் என்று முன்னமே அவதாரிகையில் சொல்லப் பட்டது

தத்வம் ஹிதம் புருஷார்த்தம் மூன்றுமே அறிய வேண்டுவது-அதுவே உபாயம் உபேயம் இரண்டாகும்
அப்படிப்பட்ட ப்ரமேயம் உபாயம் உபேயம் என்று இரண்டு வகைப்படும்
உபாயம் -சாதனம் -காரியத்துக்கு இன்றியமையாதது
உபேயமாவது ஸாத்யம் -பயன் –

உபேயம் ச ப்ரிய ப்ரிய தர ப்ரிய தம ரூபேண த்ரைதம்|
உபாயஶ்ச ஹித ஹித தர ஹித தம ரூபேண|
தத்ர உபேயஸ்ய ஜந்ம ருத்தி பரிணாமா நித்யத்வாதய:, சேதந தர்மா: க்லேஶ கர்ம விபாகா ஆஶயாஶ்ச கதோஷா:;
குணாஶ்ச தோஷ அஸம்பேத ருசிரத்வ ஸ்தாவரத்வ பூயஸ்த்வ விஶிஷ்டா:
ஸம்வித ஆநந்வ ஐஶ்வர்ய விபூதி விஸேஷாதய:|
உபாயஸ்ய து வ்ய யாயாஸ பூயஸ்த்வ வ்யபிசாரித்வ பல்கு பலத்வாதகயா தோஷா:|
குணாஶ்ச நியத நிரபாய லகு தர பஹு பலேத்வாதய:|

உபாயம் -ஹிதம் ஹித தரம் ஹித தமம்-என்று மூன்று வகைப்படும்
உபேயம் -பிரியம் பிரிய தரம் பிரிய தமம்-என்று மூன்று வகைப்படும்
உபேயத்துக்கு பிறப்பு வளர்ச்சி மாறுபாடு அழிவு போன்ற தர்மங்களும்
கிலேசம் கர்மம் -விபாகம் -அதாவது கர்ம பலங்களான -ஜென்மம் ஆயுள் போகம் முதலியவையும்
ஆசயம் -மனத்தின் கண் உள்ள ஸம்ஸ்காரம் முதலிய சேதனர்களுக்கு உரிய தர்மங்களும் தோஷங்களாகும் –

குணங்களோ -தோஷம் கலவாமல் -ருசிரத்வ -அதாவது அழகு அமைந்து அழிவில்லாது மேம்பாடுடைய-பேர் அறிவு ஆனந்தம் ஐஸ்வர்யம் முதலிய விபூதி விசேஷங்களாம்

உபாயத்துக்கு -பெரும் செலவு செய்வதற்கு அருமை கருதிய பயனைப் பயவாமை- சிறு பயனுடைமை ஆகியவை தோஷங்களாகும்

குணங்களோ பயணித்த தவறாது அளித்தல் -அபாயம் இல்லாமை -செய்வதற்கு எளிமை -மிகு பயன் அளித்தல் போன்றவையும்

ஏவம் வித தோஷ ஹாந குணவத்த்வ தார தம்யேந உபாக உபேயயயோ : தர தம பாவ: உபயத்ராபி ஸம் பவதி |
உத்க்ருஷ்ட தமே உத்க்ருஷ்ட உத்க்ருஷ்ட தரயோ : நிக்ருஷ்டவத் வர்ஜநீயத்வமேவ |

உபாய உபேயங்களில் இப்படிப்பட்ட குண தோஷங்கள் ஏறக்குறைய இருப்பதால் தாரதம்யம் உண்டாகக் கூடும்
குணங்களைக் கொள்ளுதலில் மேல் உள்ளத்தை நோக்க கீழ் உள்ளவை குறைந்தவையாகத் தோன்றும்
ஆதலால் உத்க்ருஷ்ட தமத்தை நோக்க உத்க்ருஷ்ட தரமும் உத்க்ருஷ்டமும் நிஷ்க்ருஷ்டங்கள் போலவே விடத் தக்கவையே யாகும்

அசாரம் -அல்ப சாரஞ்ச -சாரம் -சார தரம்- தள்ளி -சார தமம் கொள்ள வேண்டுமே

தத்ர அநிஷ்டேப்ய: இஷ்டேப்யோ அபி நிக்ருஷ்டேப்ய: நிஷ் க்ருஷ்ய உத் க்ருடதமமுபாதாதும் உபாய உபேயௌ ஹை தாரதம்யேந ப்ரஷ்டவ்யௌ |
தௌ ச விவக்ஷாவஸேந ஷோடா விபஜ்ய ப்ருச்சந் யுதிஷ்டிர உவாச, கிமேகமிதி ஶ்லாேக த்வயேந |

ஆகையால் யுதிஷ்ட்ரர்
அநிஷ்டத்தையும்
இஷ்டத்தில் தாழ்ந்தவையையும் -விலக்கி
மிகச் சிறந்த இஷ்டத்தைக் கைக் கொள்ள விரும்பி
உபாய உபேயங்களைத் தாரதம்யப்படி நன்றாகக் கேட்டுத் தெளிய வேண்டும் என்னும் கருத்துடன்
அவற்றை ஆறு விதமாகப் பிரித்து
இரண்டு ஸ்லோகங்களாலே கேட்க்கிறார் –

கிமேகம் தைவதம் லோகே கிம் வாப் யேகம் பராயணம்
ஸ்துவந்த கம் கமர்ச்சந்த ப்ராப்யுனுயுர் மாநவா ஸூபம்

கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்ம ஸம்ஸார பந்தனாத் ||

இங்கு இரண்டு ஸ்லோகங்களில் ஆறு கேள்விகள்
நாலு ஸ்லோகங்களில் ஆறு அவதார ரஹஸ்யங்கள் கண்ணன் கீதையில்

ரஹஸ்ய சிகாமணி -வராஹ சரம ஸ்லோகம் -இரண்டு ஸ்லோகங்களில் ஐந்து அர்த்தங்கள் -மூவர் அனுபவம் இங்கும்

ஸ்வ ஞானம் -ப்ராப்ய ஞானம் -ப்ராபக ஞானம் -மூன்றுமே முமுஷுவுக்கு வேண்டுமே
ஆத்மாவைத் தெரிந்து கொள்வது என்றாலே தேகத்தை விட வேறுபட்டு -அவனுக்கு சேஷம் –
மற்ற இரண்டு தத்வங்களைக் காட்டிலும் வேறுபட்டு
அவனுக்கு பிரகாரமாய் -சரீரமாய் -சேஷமாய் இருப்பவன் என்று அறிய வேண்டுமே
இவற்றையே தத்வ ஹித புருஷார்த்த ஞானங்கள் என்பர் –

முமுஷுக்கு அறிய வேண்டும் ரஹஸ்யங்கள் மூன்று-அவற்றில் சொல்ல வந்ததும் இந்த மூன்றுக்கே
இவை ஒன்றுக்கு ஓன்று தொடர்பு கொண்டவை தானே
ஏதத் அந்யத -ஞானம் உதவாதே
தத்வம் பற்றி ஒரு கேள்வி–முதலில்
ப்ராப்யம் பற்றி ஒரு கேள்வி-அடுத்து –
உபாயம் பற்றி நான்கு கேள்விகள் -இதில் தானே பல வழிகளும் -சங்கைகளும் உண்டு -ஆகவே அநேகம்

ஸித்த ஸாத்ய ஸா ஆலம்பன மூன்று வகை உபாயங்கள் உண்டே -இவை பற்றி நான்கு கேள்விகள்

பவத: பரமோ மத: |லோகே-இவற்றை அனைத்திலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

கிமேகம் தைவதம் லோகே பவத: பரமோ மத: | –லோகே ஸாஸ்த்ரத்தில் தத்வம் பற்றிய கேள்வி -ஏகம் ஒப்பற்ற ஒப்பில்லா அப்பன் –
ஒத்தால் மிக்கார் இலையாய மா மாயன் -ஏக தைவதம்

லோகே -கிம் வாப் யேகம் பராயணம்-பவத: பரமோ மத: |-பரமமான உபேயம் -லோகே இங்கும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

லோகே-ஸ்துவந்த கம் -பவத: பரமோ மத: |-மூன்றாவது கேள்வி
லோகே-கம் அர்ச்சந்த-பவத: பரமோ மத: | -நான்காவது கேள்வி
ப்ராப்யுனுயுர் மாநவா ஸூபம்
கோ தர்ம: ஸர்வ தர்மானாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்ம ஸம்ஸார பந்தனாத் ||

இந்த ஆறு கேள்விகளுக்கும் -6-4-3-5-2-1–இந்த முறையில் பதில்கள்

———

அவதாரிகை

தத்ர உபாயஸ்ய உபேய அர்தத்வாத், ப்ரதாந பூதம் உபேயம் ப்ருச்சந்
தஸ்ய ச தத்த்வ ஶாஸ்த்ரேஷு பர தத்த்வ பரம ப்ராப்யாத்மநா த்வேதா உபதேஶ தர்ஶநாத்,
பர தத்த்வ ரூபம் ப்ருச்சதி –
யுதிஷ்டிர உவாச
கிமேகம் தைவதம் லோகே கிம் வாऽப்யேகம் பராயணம் |

உபாயத்தை அறிவது உபேயத்தை அடைவதற்கு ஆதலின்
காரணமான உபாயத்தை விட்டு
பிரதானமான உபேயத்தை முதலிலே கேட்கத் தொடங்குகிறார்
அது தத்வ சாஸ்திரங்களில்
பர தத்வம் என்றும்
பரம ப்ராப்யம் என்றும்
இரண்டு வகை யாகக் கூறப்படும்
அவற்றில் பர தத்வ ரூபமான உபேயத்தை முதலில் வினவுகிறார்
கிமேகம் தைவதம் லோகே

கிமேகமிதி|
லோகே இதி ப்ரதி ப்ரஶ்ந மநுஷஜ்யதே ;
பவத: பரமோ மத:
இதி ச ஸிம்ஹ அவலாேகந ந்யாயேந |
யதார்ஹம் ச விபக்தி: விபரிணமநீயா|
லோக்யதே அநேநேதி லாேகே :,
ஶ்ருதி ஸ்ம்ருத்யாதி ஶரீரம் ஶாஸ்த்ரம்|
ஏகம் –ப்ரதாநம் -ஸமாதிக ரஹிதம்,
’பரமம் யோ மஹத் தேஜ:’,
’தஸ்ய லாேக ப்ரதாநஸ்ய’ இதி ப்ரதி வசந அநு குண்யாத் |
ந ச அயம் ஸ்வரூப மாத்ர பர:
ஏகத்வ ஸம்க்யாபரோ வா ஏக ஶப்த:;
தைவதம் இதி ப்ராதிபதிகைக வசநாப்யாம் ஸித்தத்வாத், –தயோர் வ்யாவர்த்ய  அபாவாச்ச;

முதலாவது வினா -கிமேகம் தைவதம் லோகே -சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட ஒப்புயர் வற்ற கடவுள் யார்
லோகே -என்பது ஸாஸ்த்ரம்
இதனை எல்லாக் கேள்விகளிலும் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்
தைவதம் என்பது பிரகாசித்தல் முதலிய வேறே மற்று ஒன்றுக்கு இல்லாத பரமேஸ்வரத் தன்மையுடன் கூடியதும்
தத்வ சாஸ்த்ரங்களால் பிரதிபாதிக்கப்படுவதும்
உமக்கு மிக்க அபிமதமுமானது -என்பது கருத்து-பர தத்வம் பரஞ்சோதி பரமாத்மா பராயணம் -எல்லாமே நாராயணனே –
மேலே வரும் பவத பரமோ மத -என்பதையும் எல்லா வினாக்களில் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்
இது ஸிம்ஹ அவ லோகநம்-சிங்கத்தின் நோக்கு –
இடத்துக்கு ஏற்ப வேற்றுமை உருபை மாற்றிக் கொள்ள வேண்டும் –

ஏகம் -என்றது -எண்ணிக்கையும் தனித் தன்மையும் சொல்ல வரவில்லை -தைவதம் சொல்லவே இவை சித்தம்
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -தன்னிகர் அற்றவன் -தைவதம் -ஒளி- விளையாட்டு -பரம ஐஸ்வர்யம் -பல அர்த்தங்கள்
இத்தையே-ஏகத்வ ஸம்க்யாபரோ வா ஏக ஶப்த:;
தைவதம் இதி ப்ராதிபதிகைக வசநாப்யாம் ஸித்தத்வாத், –தயோர் வ்யாவர்த்ய அபாவாச்ச;–

மாம் ஏகம் -இங்கு ஸ்வீ காரத்தில் உபாய பாவம் தவிர்க்கிறது போல் இங்கும்-

ந ஹி கிம்சித் தைவதம் அஸ்வ ரூபம் அநேகம் வாஅஸ்தி, யேந கஸ்யசித் தைவ ஏகத்வம் விஸேஷ:; ததநுகுண ப்ரதி வசந அபாவாச்ச |
தைவதம்– த்யோதநாதி பரம ஐஶ்வர்ய அஸாதாரண குண சிஹ்நிதம் ,
தத்த்வ ஶாஸ்த்ரேஷு ப்ரதி பாத்யம் பவத:கிம் பரமம் மத மித்யர்த:|
அயம் ச ஶாஸ்த்ரேஷு ஸமயேஷு ச ஸர்வாதிகம் தத்த்வம் அப்யுபேயுஷாம் அபி மாயாத்த யௌபாதிக விவர்த பரிணாம விஸேஷ
நிர்வாஹ்ய ஜ்ஞாந ஶத்யாத்ய ஐஶ்வர்யத்வ ஸ்வாபாவிக ஸர்வ ஐஶ்வர்யத் வாததௌ ஸாமாந்யதோ விஸேஷ தஶ்ச
ஹரி ஹர ஹிரண்ய கர்பாதி தத்த்வ பராவர பாவேந விப்ரதிபத்தி தர்ஶநேந

ஸாஸ்த்ரங்களிலும்-ஸமயேஷு-சம்ப்ரதாயம் -அந்த அந்த மதங்களிலும்
அப்யுபேயுஷாம் அபி –பரதத்வம் ஓன்று உண்டு என்று ஒத்துக் கொள்பவர்களும்
ஸர்வேஸ்வரனுக்கு ஞான சக்தி முதலிய ஐஸ்வர்யங்கள்
மாயையின் சம்பந்தத்தால் என்றும்
இயற்கையால் என்றும்
சந்தேகப்படுவதோடு -விசேஷமாக
ஹரி
ஹர
ஹிரண்ய கர்ப்பாதி
தத்துவங்களில் ஏற்றத் தாழ்வு கருதப்படுதலாகிய சந்தேகமும் இருத்தலால்
இவ்விதம் வினவுதற்குக் காரணமும் ஏற்படுகிறது

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-பற்றிய நமஸ்கார ரூப மங்கள ஸ்லோகம் -வேதார்த்த ஸங்க்ரஹம்

இந்த ஸ்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.

அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்து கொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில்
அவரது பெரும் பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது.
வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க
ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தி த்ரயம் மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.

இந்த ஸ்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த
மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இம் மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.

சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்களை நிரசித்தும்
தம்மை ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அருளிய
ஸ்ரீ ஆளவந்தாரை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் இதில்

(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி

ப்ரஹ்மம் நிர்விசேஷ சின் மாத்திரம் -ஞான மயம் -ஸ்வயம் பிரகாசம் -மற்றவை அனைத்தும் மித்யா –
அந்த ப்ரஹ்மமே மாயையால் அஞ்ஞானத்தால் ஜகத்தாகத் தோற்றம் அளித்து
ஜென்ம ஜரா மரணாதி துக்கங்களை அடைகிறது என்பர் அத்வைதிகள்

அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.

“பரம்” எனும் சொல் எல்லா வகையிலும் மேன்மையைக் குறிக்கும்.
வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது.

ப்ரஹ்மம் எல்லா மங்களங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது.
ஆகவே தான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது,
அறியப்பட வேண்டியது என ஓதப்படுகிறது.
தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி,
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.

அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன –
(i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை
ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மை தான் யாது?
(ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?

”ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.
எப்பொழுதும் தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ப்ரஹ்மத்துக்கு தன்னை அறியாமையாகிய
அவித்யை எப்படி சம்பவிக்கும் -என்கிற விரோதமும்
ப்ரஹ்மமே சம்சாரம் அடைந்தால் மோக்ஷம் பெற வேதாந்த ஸ்ரவணாதிகள்
செய்ய வேண்டி இருக்கும் விரோதமும் உண்டாகுமே

தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது
(ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.

அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய
உணர்வு பூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும்.

ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை,
பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது.
ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின் பாற்பட்டனவே.

மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும்.

முதலில் தான் ஸ்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.
மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின் அம்மாயை முன்பே இருக்க வேண்டும்.
ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாக வேண்டும்.

(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்

ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.

இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது.
தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை-அவித்யை எவ்வாறோ குழப்புகிறது
என்பதை நிலை நிறுத்துவதில் உள்ள ஸ்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார்.

“பர” என்றதால்
இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது.
இவ் வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை.
இவற்றால் தளை யுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக் கொள்கிறது.

மேலும் இவ் விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும்
துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.

(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது

இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.

யாதவ ப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன-அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும்,
ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும் கருதினார்.

அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதாலும்,
நிலை நில்லாமையாலும் ஏற்படுகிறது.

அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிக் கொள்வதாலும்
அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது.

வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம்
“ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது
மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும்,
அவற்றின் அசுபங்கள்-அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது.

ஆனால், யாதவ ப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக,
ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.

”பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள் இம் மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும்.
அதாவது
எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும்
எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்
ஆனந்த ஸ்வரூபமானதும்
குறைகளே அற்றதும்
எல்லா வகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை
சங்கரர், பாஸ்கரர், யாதவ ப்ரகாசர் மூவருமே
அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.

(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:

ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ் விளக்கங்களால் அறிந்து கொள்வது
தவறான அறிவும், அறியாமையும் ஆகும்.

“இதம் தம:” என்றது இதையே.
இத்தகைய புரிந்து கொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது.
வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.

கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை,
வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?

விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன,
பலரும் இக் கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சி யுற்றும் உள்ளனர்.

அவ்வாறே இருக்கட்டுமே.
இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை
பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே!
நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?

விடை: ஏனெனில் இப் பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழி தவறிப் போவர்.
இக் கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை.
ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.

இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ் விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கி யருளுகிறார்.

வேதங்களுக்குத் தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார்.

ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப் படுத்துவது கடமையாகும்.

ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான
ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:

(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி:
இச் சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!

தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம்
ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார்.

தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜய கோஷம் இடுகிறார்.

வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும்.

தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக் க்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டி யுள்ளதாக்கி யுள்ளார்.

————————–

2- மோஷே தாவத்
ஸ்வரூப -அவித்யா விஸேஷ -வைஸேஷிேக குணாச்சேத -பரமாத்ம ஸாதர்ம்ய – தத் குண ஸம்க்ராந்தி -தச் சாயா பத்த்தி

ஆநந்தாதி ஸ்வரூப ஆவிர்பாவ மாத்ர –தத் கைஙகர்ய ஆவிர் பாவாதி லக்ஷண
விப்ரதி பத்தி தர்ஶநாத் ஸம்திஹாந: பரமம் உபேயம் ப்ருச்சதி– கிம் வாऽப்யேகம் பராயணமிதி|

பரம ப்ராப்யம் என்னும் உபேயத்தைப் பற்றிய வினா
அவதாரிகை
பலனைச் சொல்லும் சாஸ்திரங்களில் மோக்ஷ விஷயமாக பல சந்தேகங்கள் உண்டாகிற படியால்
எட்டுவித வேறுபாடுகள் -அந்த சந்தேகம் தெளிதல் பொருட்டு -பரம புருஷார்த்தம் எது என்று வினவுகிறார்
கிம் வா அபி ஏகம் பராயணம் -என்று

தைவதம் பராயணமித்யாதி கிம் அந்யதந்யத் உபதிஶ்ய கத,
உத தத்தத வஸ்தா மாத்ர பேதேந ஏகமேவேதி விவேக்தும் வா அபீதி நிபாத த்வயம்
ஏகம் இதி பூர்வ வத் |

பரம் நிர்தோஷ நிரதிஶய மங்கல ஸ்வபாவதயா உத்க்ருஷ்ட தமம் |
அயநம் ப்ராப்யம் |
ஐஹிக ஆமுஷ்மிகேஷு புருஷ அபி லஷணீ யேஷு கஸ்
பரம புருஷார்தோ பவதோ அபிமத இதி | ஏவமுபேயம் த்விதா ப்ருஷ்டம் |

குற்றம் அற்றுத் தன்னிலும் உயர்ந்தது இல்லாத மங்கள ஸ்வபாவமாய் இருப்பதால்
எல்லாவற்றுக்கும் மேலான பரம புருஷார்த்தம் எது
மனிதர்களால் விரும்பப்படுகிற ஐஹிகம் ஆமுஷ்மிகம் என்கிற இவற்றுள் மேலான பரம புருஷார்த்தம்
இன்னது தான் என்று நீர் கொண்டது எது என்பது கருத்து –

வா-விகற்பம் -இதுவோ அதுவோ
அபி -உம்மைத் தொகை இதுவும் அதுவும்-தத்துவமும் ப்ராப்யமும் ஒன்றா வேறா –

நின் கண் வேட்கை எழுவிப்பேன் -எளிமையாக்கி ஆழ்வார்கள் நமக்கு அருளிச் செய்துள்ளார்

இப்படி உபேயம்
பர தத்வம் என்றும்
பரம ப்ராப்யம் என்றும்
இரண்டு விதமாகப் பிரித்துக் கேட்கப்பட்டது

———–

ஸ்துவந்த: கம் இத்யர்தேந
கம் அர்சந்த:
ப்ராப்நுயு: மாநவாஶ் ஶுபம்
யாரை -ஸித்த உபாயத்தைப் பற்றிய கேள்வி
லகு உபாய -அலகு உபாய ஸித்த உபாயம் -இரண்டு வகை-ஸ்தோத்ரம் லகு -அர்ச்சனை அலகு உபாயம்
யாரை ஸ்தோத்ரம் பண்ணி-கீர்த்திமை பாடிப் போய் போல் –
ஸாத்ய பத பிரயோகம் இருந்தாலும் இது ஸித்த உபாயம் பற்றியே
ஸாத்ய உபாயம் -இரண்டு வகை -இதில் தர்மம் பற்றிக் கேள்வி -யார் இடத்தில் என்ற வினா இல்லையே
பரம ஸாத்ய உபாயம் என்றும்
வாசிக ஜப ஆலம்பனம் என்றும்–இரண்டு வகை

அதோபாய: தத் தச் சாஸ்த்ரேஷு கர்ம ஜ்ஞாந பக்தி யாேகா நாம்
விகல்ப ஸமுச்சய அங்காங்கி பாவாதி விவாதாத் ஸம்ஶயாநேந ப்ரஷ்டவ்ய:|
ஸ ச ஸித்த: ஸாத்ய: ஸாலம்பந ரூபஶ்ச | 
ஸித்தஸ்து–ஆராத்ய மாநதயா பல ப்ரதா தேவதா |
தாம் ச லகு அலகு உபாய ஸாத்ய தயா-த்வேதா விபஜ்ய ப்ருச்சதி–
ஸ்துவந்த: கம் இத்யர்தேந ஸ்துவந்த:கம்- கம் அர்சந்த: ப்ராப்நுயு: மாநவாஶ் ஶுபம் ||2||

உபாயத்தைப் பற்றிய வினா
அவதாரிகை
உபாயமாவது
அந்த அந்த சாஸ்திரங்களில் கர்ம யோகம் ஞான யோகம் பக்தி யோகம் என்று சொல்லப் பட்டு
அவை தனித் தனி உபாயம் என்றும்
சேர்ந்து உபாயம் என்றும்
ஒன்றுக்கு ஓன்று அங்க அங்கி முறையில் உபாயம் என்றும்
விவாதம் இருப்பதனால் பின்வரும் வினாக்கள் எழுவது அவஸ்யமாகிறது

உபாயம்

ஸித்த உபாயம்
ஸாத்ய உபாயம்
ஸ ஆலம்பன உபாயம் -என்று மூன்று வகைப்படும் –

அவற்றுள் ஸித்த உபாயமாவது -ஆராதனத்தால் பலனை அளிக்கும் தேவதை
அந்தத் தேவதையை லகு உபாயத்தாலும் குரு உபாயத்தாலும் சாதிக்க வேண்டும்
ஆகையால் ஸித்த உபாயம் லகு உபாய ஸாத்ய ஸித்த உபாயம் என்றும் (குண ஸங்கீர்த்தனம் லகு உபாயம் )
அலகு உபாய ஸாத்ய ஸித்த உபாயம் என்றும்(உபாஸன ரூபமான பக்தி அலகு உபாயம் ) இரு வகைப்படும் –
அந்தப்படி இரண்டு வகையாகப் பிரித்து வினவுகிறார் –

கம் ஸ்துவந்த: – குண ஸம்கீர்தந மாத்ரேண ஆராதயந்த:, கமர்சந்த:- உபாஸந ரூபயா பக்த்யா பரமம் பூஜநம் குர்வந்த:|
மாநவா:-மநுஷ்யத்வ மாத்ர பரிகரா:|ஶுபம் – த்விவிதம், அப்யுதயநி:ஶ்ரேயஸ ரூபம் |ப்ராப்நுயு:||

3- லகு உபாய ஸாத்ய ஸித்த உபாயத்தைப் பற்றிய வினா
(ஸ்துவந்த கம் –)
மூன்றாவது வினா
மனிதர்கள் யாரைத் ஸ்துதித்து -ஐஸ்வர்யம் -முக்தி -என்னும் இரு வகை நன்மைகளையும் பெறுவர்
ப்ராப்நுயர் மானவா ஸூபம் -என்பதை இங்கும் கூட்டுக

4- அலகு உபாய ஸாத்ய ஸித்த உபாயத்தைப் பற்றிய வினா
கமர்ச்சந்த –ஸூபம்
நான்காவது வினா
மனிதர்கள் யாரை அர்ச்சித்து ஐஸ்வர்யம் முக்தி என்னும் இரு வகை நன்மைகளையும் பெறுவர்
மானவா -மனிதத் தன்மையை யுடையவர் என்று பொருள்
பகவானை ஸ்துதிக்க மனிதத் தன்மையை போதுமானது என்று கருத்து
ஸூபம் என்பது இம்மைப் பயனையும் மறுமைப் பயனையும் குறிக்கும் –

————–

5- ஸாத்ய உபாயத்தைப் பற்றிய வினா
பரம ஸாத்ய உபாயம் -மிகச் சிறந்த உபாயம் என்றவாறு
அவதாரிகை
வாக்கினாலும் மனத்தினாலும் சரீரத்தாலும் முறையே செய்யப்படுகிற
ஜபம் த்யானம் அர்ச்சனை முதலியவற்றால் தேவதையை வசப்படுத்தும் முறை ஸாத்ய தர்மம் எனப்படும்
அவற்றுள் சிறந்தது எது என்று வினவுகிறார்
கோ தர்ம —பரமோ மத

அத ஸாத்ய: வாங் மந:காய நிஷ்பாத்ய ஜபத்யா நார்சந ப்ரப்ருதி:
தேவதா வர்ஜநாத்மகோ தர்ம: ; தத்ர பரமம் ப்ருச்சதி –
கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:|
கோ தர்ம இதி |
உக்த லக்ஷணாநாம் ஸர்வ தர்மாணாம் மத்யே பரம: –
நிஸ் துல்யாதிக :,
கோ பவத: அபிமத: – ஸுநிஶ்சித்ய ஆபத் தநவத் ஸ்வீக்ருத: ?

ஐந்தாவது வினா
எல்லாத் தர்மங்களிலும் சிறந்த தர்மமாக நீர் -நன்கு நிச்சயித்து -ஆபத்து தனம் போலே கொண்டு இருப்பது எது

———-

6- வாசிக ஜப ஆலம்பனத்தைப் பற்றிய வினா
அவதாரிகை ஸ ஆலம்பனம் -ஆலம்பனத்தோடே கூடியது –
ஆலம்பனம் -பற்றுக் கொம்பு -ஆதாரம் -பிடிப்பு
ஸ்தோத்ரம் -மந்த்ரம் -ஸூப ஆஸ்ரயம் -பகவத் திவ்ய மங்கள விக்ரஹம் போல்வன
கந்தம் புஷ்பம் முதலிய உபகரணங்களைக் கொண்டு செய்யப்படும் உபாயமாம்
அவற்றுள் வாசிகமான ஜபம் என்னும் ஸாலம்பன உபாயத்தைப் பற்றி வினவுகிறார்
ஜெபமாவது மந்த்ரம் முதலியவற்றை அதற்கு உரிய நியமங்களுடன் ஆவ்ருத்தி செய்வது

அத ஸாலம்பநேஷு
ஸ்தோத்ர மந்த்ர ஶுபாஶ்ரய கந்த புஷ்பாத் யுபகரணேஷு
வாசிக ஜப ஆலம்பநம் ப்ருச்சதி-
கிம் ஜபந் முச்யதே ஜந்து: ஜந்ம ஸம்ஸார பந்தநாத் ||3||

கிம் ஜபந்நிதி| நியம விஸேஷவந் மந்த்ராத் யாவர்தநம் ஜப:|
“ஜப்யே நைவது ஸம் ஸித்யேத் ப்ராஹ்மணோ நாத்ர ஸம்ஶய:|
குர்யாத் அந்யத் ந வா குர்யாத் மைத்ரோ ப்ராஹ்மண உச்யதே ||”,

பிராமணன் மற்றக் கர்மங்களை செய்தாலும் செய்யா விட்டாலும் ஜபம் செய்வதினாலேயே ஸித்தியை அடைகிறான்
இதில் சந்தேகம் இல்லை
இப்படிச் செய்பவன் மைத்ர பிராமணன் என்றும் சொல்லப்படுகிறான் -என்றும்

“த்ரவ்ய யஜ்ஞாத் ஜபோ யஜ்ஜோ விஶிஷ்டோ தஶபிர் குணை :|”,
“யஜ்ஞாநாம் ஜப யஜ்ஜோ அஸ்மி”(10-25)
இதி ஜப ஶ்ரைஷ்ட்யாத் மாநஸ காயிக விஷயௌ ந ப்ருச்ச்கயதே |

த்ரவ்ய யஜ்ஜத்தைக் காட்டிலும் ஜெப யஜ்ஜம் பத்து மடங்கு சிறந்தது என்றும்
மநு வசனம் இருத்தலாலும்-

யஜ்ஜங்களுக்குள் நான் ஜெப யஜ்ஜமாக இருக்கிறேன் -என்று பகவத் வசனம் இருத்தலாலும்
மானஸ
காயிகங்களான
மற்ற இரண்டையும் கேளாமல் வாசிகமான ஜெப யஜ்ஜத்தைப் பற்றிக் கேட்க்கிறார்
கிம் ஜபன்–பந்தநாத்

ஜந்து: – ஜநந தர்மா |
ஜந்ம ஸம்ஸார பந்தநாத்–ஜந்மேதி ஜரா மரண கர்ப நிரய யாதநாதி: ஸம்ஸாரஸ்ய கார்ய வர்க : ப்ரதர்ஶ்யதே |
ஸம்ஸார இதி ச அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி பந்த ரூப: காரண வர்க 😐
தாப்யாம் பந்தநம் பரம பத ப்ராப்தி ப்ரதிபந்த:, தஸ்மாத் முச்யதே த|
இதம் ச ஸர்வ பல உப லக்ஷணம், ஜபாதே : ஸகல பல ஸாதநத்வஸ்ய வக்ஷ்ய மாணத்வாத் |

ஆறாவது வினா
மனிதன் எதை ஜபம் செய்வதினால் ஜென்மம் சம்சாரம் ஆகிய இவற்றால் உண்டான
பந்தத்தில் நின்றும் விடுபடுவான்
ஜென்மம் -என்றதனால் –
ஜரை மரணம் கர்ப்ப வாஸம் நரக வாஸம் முதலிய கார்ய வர்க்கங்களும் கொள்ளப்படும்
சம்சாரம் என்றதனால்
அவித்யை பூர்வ கர்மம் அதனால் உண்டான வாஸனை அது பற்றி வரும் அவா
அதன் அடியாக வரும் பிரகிருதி சம்பந்தம் ஆகிய காரண வர்க்கங்களும் கொள்ளப்படும் –

அனந்த கிலேச பாஜனம் -நிரதிசய ஆனந்த ரூபத்துக்கு எதிர் தட்டு
இவை பரமபதம் அடைவதற்குத் தடையாக இருப்பது பற்றி பந்தனம் என்று சொல்லப்பட்டன
முஸ்யதே -என்பதனால்
மோக்ஷம் வரையில் உள்ள இதர பலன்களும் கொள்ளப்படும் –

தத்ர ‘அஸேஷேண, ஸர்வஶ:’ இத் யுபக்ரமேண
‘லோகே மாநவா: ஶுபம்’ இத்யாதி விஸேஷணைஶ்ச கால அதிகாரி
அங்க பல ப்ரகார விஸேஷா அபி ப்ரக்ருஷ்டா: ப்ரஷ்டவ்யதயா ஸூசிதா:||3||

அசேஷேண -எல்லாவற்றோடும் என்றும்
ஸர்வஸ -முழுவதும் -என்றும்
தொடங்கி இருப்பதாலும்
லோகே –ஸாஸ்த்ரங்களில் என்றும்
மானவா ஸூபம் -மனிதர்கள் நன்மைகளைப் பெறுவர் என்றும்
விசேஷித்து கூறி இருப்பதாலும்
காலம்
அங்கம்
பயன்
அதிகாரி –ஆகிய இவற்றுள் உத்தமமானவை எவை என்று கேட்டதாகவும் குறிப்பிக்கப் படுகிறது

இமாம் ஷட் ப்ரஸ்நீம் ப்ரதி ப்ருவாணோ பீஷ்ம உவாச |
அத்ர ப்ராயேண வ்யுத் க்ரமேண ப்ரதி வசநம் க்ரமி கோப நிபந்தநம் ச ப்ரதி வசநம் வக்ஷ்யதே |
தத்ர உபாய த்வார கத்வாத் உபேயஸ்ய ப்ரதமம் தம் ப்ரதி விவக்ஷந்
ஆநந்தர்யாத் தத்ரைவ ஆதராதிஶயாச்ச ஜபாலம்பநம் ப்ரதி வக்தி-

இப்படி உபாயம்
லகு உபாய ஸித்த உபாயம் என்றும்
குரு உபாய ஸித்த உபாயம் என்றும்
பரம ஸாத்ய உபாயம் என்றும்
வாசிக ஜப ஆலம்பனம் என்றும்
நான்கு வகையாகப் பிரித்து வினவப்பட்டமை காண்க

மேலே கூறிய ஆறு வினாக்களுக்கும் பீஷ்மர் விடை அளிக்கலானார்
கேட்ட முறை இல்லாமல் மாறி விடை அளிக்கப் படுகிறது –

இந்த ஆறு கேள்விகளுக்கும் -6-4-3-5-2-1–இந்த முறையில் பதில்கள்

நாராயணனே நமக்கே பறை தருவான் -உபதேசத்துக்காய் ஆசை வளர்க்க உபேயம் முன்னாக
அனுஷ்டானம் கறைவைகள் சொல்லி சரண் அடைந்து சிற்றம் சிறு காலை –
தருவான் பறை -இறைவா நீ தாராய் பறை போல் இங்கும்

ஸ்ரீபீஷ்ம உவாச:

ஜகத் ப்ரபும் தேவதேவம் அனந்தம் புருஶோத்தமம் |
ஸ்துவன் நாம ஸஹஸ்ரேணே புருஶ: ஸததோத்தித: ||–4-

தமேவ சார்ச்சயன் நித்யம் பக்த்யா புருஶமவ்யயம் |
த்யாயம் ஸ்துவன்னமஸ்யம்ச்ச யஜமானஸ்தமேவ ச ||-5-

ஸ்துவன்-ஜெபத்துக்கு அங்கமாக நாம சங்கீர்த்தனம்
ஸ்துவன் மேலும் வரும் அங்கே வேறே அர்த்தங்கள்

புருஶ:-புண்டரீகாக்ஷன் என்று பாஷ்யம் -தன்னையே நமக்கு நல்கும் கற்பகம் -உதார ஸ்வ பாவன்

———

கிமேகம் தைவதம் லோகே -பவத பரமோ மத –ஒப்பற்ற தெய்வம் யார்
கிம்வாபி ஏகம் பராயணம் -பவத பரமோ மத –அடையத் தக்க பிராப்யம் எது
ஆக பிராப்யம் பற்றி முதல் இரண்டு கேள்விகள் –

ஸ்துவந்த கம் -பவத பரமோ மத -யாரை குண சங்கீர்த்தனம் பண்ணி பூஜித்து
கம் அர்ச்சந்த மாநவா சுபம் ப்ராப்நுயு -பவத பரமோ மத -யாரை பக்தியுடன் உபாசித்து இஹ பர இன்பங்கள் அடைகிறார்கள் –
கோ தர்மஸ் சர்வ தர்மாணாம் -பவத பரமோ மத -தேவரீர் ஸ்வீகரித்த மேலான தர்மம் எது –

கிம் ஜபன் முச்யதே ஜந்து ஜன சம்சார பந்தநாத் -பவத பரமோ மத -எந்த மந்திர ஜபத்தால் பந்தம் அறும்
இவை உபாயம் பற்றிய நான்கு கேள்விகள்

பவத பரமோ மத -உமது அபிப்ராயத்தால் –ப்ரிய தமமான பலனையும் ஹித தமமான உபாயத்தையும் கேட்கிறார்

——————

1- வாசிக ஜப ஆலம்பந வினாவுக்கு விடை
உபாயத்தைக் கொண்டு உபேயத்தை அடைய வேண்டுமாகையாலே முதலில் உபாய விஷயமான கேள்விக்கு விடை அளிக்கிறார்
அந்த வினாக்களுக்குள் கடைசியில் கேட்ட ஜப ஆலம்பந வினா சமீபத்தில் இருக்கையாலும்
தமக்கும் அதில் மிக விருப்பம் இருக்கையாலும்
அதற்கு முதலில் விடை அளிக்கிறார்
பீஷ்மர் சொல்லலானார் –ஜகத் பிரபும் —-சததோத்தித–

பீஷ்ம உவாச –
ஜகத் ப்ரபும் தேவ தேவம் அநந்தம் புருஷோத்தமம் |
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ : ஸததோத்தித:||4||

ஜகத் ப்ரபுமிதி|
ஜகதோ ஜங்கம அஜங்கமஸ்ய ப்ரபும் ஸ்வாமிநம் |
யதா மநுஷ்யேப்யோ தேவா: ஐஶ்வர்ய பரிசர்யாப்யாம் அதிகா :
ஏவம் ஏதேஷாம் அபீதி தேவ தேவம் |
அநந்தம்—ஸர்வதோ அநவச்சேத்ய வைபவம் –புருஷோத்தமம்- பரம உதாரம், (அலம் புரிந்த நெடும் தடக்கை அமரர் வேந்தன் )
நாம ஸஹஸ்ரேண- ஜப ஆலம்பநீ க்ருதேந;

ஸ்துவந் ஸ்துவந்நிதி
“லக்ஷண ஹேத்வோ :” இதி ஹேதௌ ஶத்ரு ப்ரத்யய:|ஸர்வ து:காதிகோ பவேத் இத்யநேந ஸம்பந்த:|
ஸ்தவநம் ஸர்வ துக்க நிவர்தகம் இத்யர்த:|

க ஏவம் ஸ்யாத் ? புருஷ சேதந:|கதம் பூத:?ஸததோத்தித: – நிரந்தரம் உத்யுஞ்ஜாந:|
பகவத் ஸ்துதி சிந்தாத் யவிச்சே தஸ்ய பரம ப்ரிய ஹிதத்வாத்
தத் விச்சேதஸ்ய வைஶ ஸத்வாச்ச ஶ்ரூயதே ஹி –(பிரியமாயும் ஹிதமாயும் இருப்பதால் இடையூறு வந்தால் பெரும் துன்பம் வருமே -குதூகலமாக சொல்ல வேண்டுமே )

“யதா ஹ்யேவைஷ ஏதஸ்மிந் அத்ருஶ்யே
அநாத்ம்யே அநிருக்தே அநிலயநே அபயம் ப்ரதிஷ்டாம் விந்ததே |
அத ஸோ அபயம் கதோ பவதி |யதா ஹ்யே வைஷ ஏதஸ்மிந் உதர மந்தரம் குருகத |
அத தஸ்ய பயம் பவதி” இத்யாதி |

(அருகில் போக போக பயம் நீங்கி விலக விலக பயம் மிக்கு வருமே
ஆர்வம் தொழ குனிப்பார் அமரரால் தொழப்படுவாரே )

உபப்ருஹ்ம்பதே ச “யந் முஹூர்த க்ஷணம் வா அபி வாஸு தேவோ ந சிந்த்யதே |
ஸாஹாநி: தந் மஹச் சித்ரம் ஸா ப்ராந்தி: ஸா ச விக்ரியா ||”,

“வரம் ஹுதவஹ ஜ்வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்திதி:|
ந ஶௌரி சிந்தா விமுக ஜந ஸம்வாஸ வைஶஸம் ||”,

(அக்னி கூண்டுக்குள் இருந்தாலும் தேவலை -சவுரி நினைப்பார் உடன் கூட இருப்பது கடினம்)

“ஏகஸ்மிந் நப் யதி க்ராந்தே முஹூர்தே த்யாந வர்ஜிதே | தஸ் யுபிர் முஷி தேநேவ யுக்த மாக்ரந்தி தும் ப்ருஶம் ||” இதி ச | ஏவம் ஸாத்யேஷு
ஜபஸ் யாலம்பந முக்தம் ||


ஆறாவது கேள்வி ஜெபத்தைப் பற்றியதாகையாலும்
இது அதற்கு விடை யாகையாலும்
ஸ்துவன் என்பதற்கு -ஸா ஆலம்பந உபாயத்துக்கு அங்கமான ஸ்தோத்ரம் -ஜபம் -என்றே பொருள் கொள்ள வேண்டும்
ஸ்துவன் நாம ஸஹஸ்ரேண –என்று சேர்த்துச் சொன்னமையும்
நாம ஸஹஸ்ரேண என்பதற்கு ஜெபத்திற்கு ஆலம்பனமாக ச் செய்யப்பட்டவை என்று
பாஷ்யத்தில் விளக்கம் கூறி இருப்பதும்
ஸ்துவன் என்னும் சொற்களுக்கும் வேறு பொருள் கூறி இருப்பதும் இதனை நன்கு விளக்கும்
ஜபம் என்பது மந்த்ரம் முதலியவற்றை பலமுறை நியமத்துடன் சொல்லுவதாகையாலும்
பொதுவாகையால் ஸ்துதி செய்வது என்று இல்லாமல் இங்கே ஆயிரம் நாமங்களினால் ஸ்துதி செய்வது என்று இருப்பதாலும்
ஜப பரமாகவே பொருள் கொள்ள வேண்டும்

சங்கர பாஷ்யத்திலும் இதனை ஆறாவது வினாவிற்கு விடையாக
ஆயிரம் நாமங்களினால் ஸ்துதித்து என்றே கூறி இருப்பதும் காண்க –

மற்ற விடைகளில் கேள்விகளில் உள்ள சொற்களையே வைத்துக் கூறி இருத்தலாலும்
ஆறாவது கேள்வியில் உள்ள ஜபம் என்ற சொல்லை வைத்து விடை கூறப்படாமையாலும்
விடைகளில் முதலில் உள்ளது இன்ன கேள்விக்கு விடை என்று மூலத்தில் கூறப்படாமையாலும்
பாரிசேஷ நியாயமாக இதனை ஆறாவது கேள்விக்கு விடையாகக் கொண்டனர் போலும் –

எம்பெருமானைத் த்யானித்தலும் ஸ்துதி செய்தலும் இடையூறு இன்றி நடக்குமாகில்
அவை மிக்க பிரியமாகும் ஹிதமாயும் இருக்கும் என்றும்
நடுவில் இடையூறு நேர்ந்து தடைப்படுமாகில் மிக்க வருத்தத்தைத் தரும் என்றும் ஸாஸ்திரங்கள் சொல்லுகின்றன –

இவ்விதம் ஸாத்யமான உபாயங்களுள் ஜபம் என்னும் ஸா ஆலம்பன உபாயம் சொல்லப்பட்டது –

———-

4-சித்த உபாயத்தைப் பற்றிய விடை
அவதாரிகை

அர்சந ஸ்தவ நயோரேவ பரம தர்மத்வேந விவக்ஷி தத்வாத் தர்ம விஷயம்
பஞ்சமம் ப்ரஶ்ந முல்லங்கய ப்ரதமம் அர்சநீய ஸ்தோதவ்ய விஷயௌ
சதுர்த த்ருதீயௌ ப்ரதி வதந் அர்ச்ய தமம் தாவத் ஸ அர்சநா ப்ரகாரம் ஆஹ–

அர்ச்சனையும் ஸ்தோத்ரமுமே பரம தர்மம் என்று சொல்வது பீஷ்மருக்கு விருப்பமாகையாலே
தர்ம விஷயமான ஐந்தாவது கேள்விக்கு விடை கூறாமல்
அர்ச்சனை விஷயமாகவும் ஸ்தோத்ர விஷயமாகவும் உள்ள
நான்காது மூன்றாவது கேள்விகளுக்கு விடை கூறத் தொடங்கி
அர்ச்சிப்பதற்கு மிக்க தகுதி யுடையவன் எவனோ அவனை அர்ச்சிக்கும் முறையோடு சொல்கிறார்

தமேவ ச அர்சயந் நித்யம் பக்த்யா புருஷம் அவ்யயம் |
த்யாயம் ஸ்துவந் நமஸ் யம்ஶ்ச யஜமாநஸ்த மேவ ச ||5||

அலகு உபாய -ஸாத்ய ஸித்த வினாவிற்கு விடை
அவதாரிகை
கீழ்ச் சொன்ன ஜெபத்துக்கு எவன் விஷயமோ அவனே அர்ச்சிக்கத் தகுந்தவர்களுக்குள் சிறந்தவன்
என்பதை பல பிரமாணங்கள் காட்டி உறுதி செய்கிறார்
தமேவ அர்ச்சயன் –யஜமான -கிம் அர்ச்சயன் கேள்விக்குப் பதில்

யஜமாநஸ்-மதன் யாஜி -யஜிப்பவன் -என்ற அர்த்தம்
மன் மநா பவ மத் பக்தா மத் யாஜி மாம் நமஸ்குரு -அதே நாலும்
அலகு உபாய ஸாத்ய ஸித்த உபாயம் இங்கு –

தமேவேதி யஜமாந இத்யந்தேந | உக்த ஜப ஆலம்பந விஷய ஏவ
அர்ச்ய தமோ அபி இத்ய வதாரயதி – தமேவ சேதி|
யதாஹு: — “தமிமம் ஸர்வ ஸம்பந்நம் ஆசார்யம் பிதரம் குரும் |
அர்ச்யம் அர்சிதும் இச்சாம: ஸர்வே ஸம்மந்து மர்ஹத ||”,

(அக்ர பூஜை கண்ணனே அனைத்தும் நிரம்பியவர் -அர்ச்சிக்கத் தக்கவன் -ஸபா பர்வம்
சஹா தேவன் -இவனைத் தவிர வேறு யாருக்கும் தகுதி இல்லை)

“தஸ்மாத் பூஜ்ய தமம் நாந்யம் அஹம் மந்யே ஜநார்தநாத்”,
“ப்ரஹ்மாணம் ஶிதி கண்டம் ச யாஶ்சாந்யா தேவதா:ஸ்ம்ருதா:|
ப்ரதி புத்தாந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் ||” இத்யாதி;

(அல்ப அஸ்த்ர பலம் மற்றவர்)
“அந்தவத்து பலம் தேஷாம்” (7-23)இதி ச |

புருஷம் – புண்டரீகாக்ஷம்|
அவ்யயம் – ஸதா அநுபவேதி அபி அநுரூப அக்ஷய உத்தர உத்தர குண ஸம்ஸ்தவம் ;
அர்சயந்—தத் பரி சரண ரூபம் பக்தி யோகம் உபாததாந:அதிகாரீ
நித்யம் “மச் சித்தா மத் கத ப்ராணா:போதயந்த பரஸ்பரம் ”(10-9)(திருநெடும் தாண்டகம் மூன்று பத்துக்களும் இவற்றையே சொல்லும் )
இதி ப்ரக்ரியயா அந்யதா க்ஷணமபி ஸ்தாதுமஶக்நுவந் |

கதமர்சயந் ? பக்த்யா – ஸ்வாமிநி தாஸஸ்ய அநுராக மயீ ஸ்திதி: பக்தி:; தயா இத்தம் பூத:|
புநஶ் ச கதம் ?

த்யாயந்-மாநஸம்-அவிச்சிந்ந அம்ருத தாரா காரம் நிஸ் சேஷ ஸம்ஸார தாப த்ரய நிர்வாபண-பகவத் குண சிந்தநம் குர்வந் |

நான்காவது வினாவுக்கு விடை
செந்தாமரைக் கண்ணரும்-(புருஷன் என்பது மூலம் -புண்டரீகாக்ஷம் என்பது பாஷ்யம் -)
இடை விடாது அனுபவித்தாலும் குறைவு படாதவைகளும்
அவருக்கே உரியவைகளும்
மேன்மேலும் வளருகின்றவைகளுமான திருக் கல்யாண குணங்களை யுடையவருமான பரம புருஷரையே
எக்காலமும் அடிமை பூண்டு
தனக்கு ஸ்வாமி என்னும் ப்ரேமையுடன் பக்தி யோகத்தால் அர்ச்சயன் -உபாஸனை செய்தும்

மனத்தில் இடைவிடாமல் பெருகுகின்ற அம்ருத தாரை போலே ஸூகமாய் இருப்பதும்
சம்சாரத்தினால் யுண்டான ஆத்யாத்மீகம் முதலிய தாப த்ரயங்களையும் அடியோடு போக்குவதுமான பகவத் குணத்தை
த்யாயன் –த்யானம் செய்தும்-

மேலும் வாயாலும் ஸ்துவன் -மனத்தினால் சிந்திக்க -வாயினால் பாடி இங்கு

புநஶ்ச கதம் ? ஸ்துவந்– வாசிகம் ச தாத்ருஶம் ததநுபவ ஜந்ய ஹர்ஷ ப்ரகர்ஷ புலகித ஶரீரம்
பாஷ்ப கத்கத கண்டம் தத் குண ஸம்கீர்தநம் ஸமீம்ஹமாந:|

அந்த தியானத்தினால் யுண்டான சந்தோஷ மிகுதியால் சரீரத்தில் புளகம் அடைந்து
ஆனந்த பாஷ்பத்தால் சொல் எழாமல் தொண்டை தழு தழுத்து அந்தக் குணங்களையே
ஸ்துவன் -ஸங்கீர்த்தனம் செய்தும்

புநஶ்ச கதம்? நமஸ்யந் -அத்யந்தம் ப்ரஹ்வீ பவந் |
பக்தி பராதீநதயா பாஹ்யாந்தர ஸகல கரணை :
நிர் மமத்வாவ நம்ரை : ஆத்மீயை : ஶரீரேண வசஸா ச ஸஹ ஸர்வம் மதீயம்
த்வதீயம் த்வமேவ க்ருஹாணேதி பகவத் பாத பத்மயோ : ஆத்மாநம் அஹம் மாந மலீமஸம் ஸமர்பயந் இத்யர்த:|

ப்ரஹ்வீ பவந்-வணக்குடை தவநெறி -உள்ளே வணக்கம் எண்ணம் வேண்டுமே

பக்தி மேற் கொண்டு -வணக்கமுற்று -மமகாரத்தை ஒழித்து —
தேகம் இந்திரியங்கள் மனம் வாக்கு ஆத்மா ஆகிய என்னுடையவை எல்லாம் உம்முடையவையே தாம்
நீரே அங்கீ கரித்து அருளுக என்று
அஹங்காரத்தால் தோஷப்பட்டு இருந்த தன்னைப் பகவான் திருவடிகளிலே
நமஸ்யன் -சமர்ப்பணம் -செய்தும்

மாம் மதீயம் நிகிலம் சேதன அசேதனாத்மகம் -தேசிகன்
யானும் நீயே என்னுடைமையும் நீயே

புநஶ்ச கதம்? யஜமாந:- தேவ பூஜநமாசரந்;
ஸ்வ விஷயீகார மஹா உபகாரா அநுரூப ப்ரத் யுபகாரா தர்ஶந புவா ஸம்ப்ரமேண
அக்ருத்ரிம பக்த் யுபஹ்ருத ப்ரயத மநோஹர அர்க்ய புஷ்ப
மதுபர்க ப்ரபத்த யௌபசாரிக – ஸாம்ஸ்பர்ஶிக
ஆப்யவஹாரிக ரூப பாேக அநுரூப போக அநு பூர்வ்யா தேவ ஸமாராதநம்

அஸாதாரணம் அத்யந்தம் ஆதரேண குர்வாண இத்யர்த:|

ஏவம் வத்த:ஸர்வ து:காதிகோ பவேதிதி||5||

அவர் தன்னை அங்கீ கரித்த மஹா உபகாரத்துக்குத் தக்கபடி ப்ரத்யுபகாரம் ஒன்றும் காணாமையாலே உண்டான பரபரப்போடும்
பேர் உதவிக் கைம்மாறு செய்ய ஒன்றும் இல்லையே இங்கும் அங்கும் -முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –

உண்மையான பக்தியோடும்
சேகரிக்கப் பட்டனவும்
பரிசுத்தமும் ரம்யமுமான அர்க்யம் புஷ்ம் மது பர்க்கம் முதலிய
ஓவ்பசாரிகம் –உபசாரத்துக்கு ஆகவும் –
ஸாம் ஸ்பர்ஸிகம் -தொடுவதற்கு இனிமையான சந்தனம் புஷ் பாதிகள்
அப்யவஹாரிகம் –உள் கொள்ளத் தக்க உணவுப் பொருள்கள்
என்று சொல்லப் பட்டனவும் -அவருடைய போகத்துக்கு ஏற்றனவுமான போக உபகரணங்களைக் கொண்டு
முறைப்படி மிக்க ஆதரவோடு அவருக்குத் திரு வாராதனம் செய்பவன்
எல்லாத் துன்பங்களையும் கடந்தவன் ஆவான்

அயமேவ பக்தி யோக : முக்தி மஹாபத: த்ரய்யந்தேஷு சிந்த்யமாந: ப்ரத்யபிஜ்ஞாயதே |
ததா ஹி வர்ணாஶ்ரம தர்மை : ஆராதுபகாரகை :
ஶமதமாதிபி: ஆத்ம குணை : ஸந்நி பத்ய உபகாரகைஶ் ச அங்க ஜாதை :
அபிநிஷ்பாத்யம் வேதந த்யாந த்ருவாநுஸ்ம்ருதி
விகவே ஜாதி பத பர்யாய கோசர ஆந்தர ப்ரதீதி ஸந்ததிபி: சித்த வ்ருத்திபி:
அவ்யவஹித அநவரத ப்ரவாஹ அஸக்ருத் ஆவ்ருத்த ஸ ஆதர ப்ரத்யய ஸம்ஸ்கார ப்ரசய கடித படுதர ப்ரத்யக்ஷ
ஶிரஸ்கம், தத் தத் ஸதாநந்த புருஷ உபகோஸலாதி ஸம்ஜ்ஞக பர வித்யா வ்யவஸ்தித குண உப ஸம்ஹார மர்யாதம்
ப்ரஹ்ம உபாஸநம் பகவாந் பாதராயண:“

இந்த பக்தி யோகமே முக்திக்கு –மஹாபத-ராஜ மார்க்கம் என்று வேதாந்தங்களில் கூறப்படுவதாக் காணப்படுகிறது என்று கூறி
அதற்கு ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களில் இருந்தும் ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன
பக்தி உபாஸனை ஸேவை -ஒரே பொருள் சொற்கள் -ஸேவா பக்தி உபாஸ்த்தி -நிகண்டு

வர்ணாஸ்ரம தர்மம்
அதனால் ஷாந்தி தமம் சமம் வர வர
அதனால் த்யானம் கிட்டும்
அதனால் மேலே உபாஸனம் -பக்தி -படிக்கட்டு

இந்த உபாஸனம் அடிமையை ருசி யுள்ளதாய் இருக்கும் என்பதும்
பக்திக்கு நாம ஸங்கீர்த்தநாதிகள் சரீர ஸ்தானம் என்பதும்
இந்த பக்தியே சர்வ சாஸ்திர அர்த்தங்களிலும் ஸாரமானதாலும்
பரம ரஹஸ்யம் என்று விளக்கப் பட்டுள்ளன –

தமேவம் வித்வாந்”,“ப்ரஹ்ம விதாப்நோதி பரம்”,
“யஜ்ஜேந தாநேந தபஸா அநாஶகேந”,
“ஶாந்தோ தாந்த:”, இத்யாதி த்ரய்யந்த வசநாநி,

“ஸர்வ அபேக்ஷா யஜ்ஞாதி ஶ்ருதே : அஶ்வவத்”,
“ஶம தமாத்யுபேத: ஸ்யாத்”,
“ஆவ்ருத்திர் அஸக்ரு துபதேஶாத்”(ப்ரஹ்ம ஸூத்ர-4-1)
இத்யேவம் ப்ரகார ப்ரஹ்ம ஸூத்ர ந்யாயை : மதித்வா மோக்ஷ ஸாதநம் நிரணைஷீத் ||

வாக்ய காரஶ்ச “வேதநம் உபாஸநம் ஸ்யாத் தத் விஷயே ஶ்ரவணாத்” இதி |
இதமேவ உபாஸநம் விபக்த்ரிமம் பக்தி: இத்யுச்யதே ,நாந்யத் |

உபாஸனமும் பக்தியும் ஒன்றே -மூன்று காரணங்கள் மேல் காட்டுகிறார்

பலமும் -செய்யும் வடிவம் ரூபமும் -விதி வாக்கியம் சோதன வாக்கியம் ஒன்றாக இருப்பதால்

குத:?ஸம்யாேக ரூப சோதநாக்யா விஸேஷாத் | ஜ்ஞாப்யதே
ஹ்யுபாஸநஸ் யேவ பக்தேரபி மோக்ஷ லக்ஷணேந பலேந ஸம்யாேக:|

யதா– “ந ஸம் த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஶ்யதி கஶ்சநைநம்|
ஹ்ருதா மநீஷா மநஸா அபிக்லுப்தோ ய ஏநம் விதுரம் ருதாஸ்தே பவந்தி ||”
இதி |ஹ்ருத் இதி பக்தி:; ஶ்ருத் யந்தரேண ஸ்ம்ருதி பிஶ்ச “ந ஸம்த்ருஸே திஷ்டதி” இத்யுபக்ரம்ய
“பக்தயா ச த்ருத்யா ச ஸமாஹிதாத்மா ஜ்ஞாந ஸ்வரூபம் பரிபஶ்ய தீஹ” இதி ஹ்ருச் சப்த ஸ்தாநே பக்தி பத ப்ரயாேகாத் |

(கண்ணால் பார்க்க முடியாது -மனிதர் ஹ்ருதயத்தால் -பார்த்தவன் அம்ருதத் தன்மை அடைகிறான்
ஹ்ருதயம் -பக்தி உபாசனம் வேறே இடத்திலும் உண்டே)

யதா ச “புருஷஸ் ஸ பர: பார்த பக்தயா லப்யஸ் த்வநந்யயா”,(8-22)
“பக்தயா த்வநந்யயா ஶக்ய:”,
“பக்த்யா மாமபிஜாநாதி”,
“பக்த்யா அவிசிந்நயா முக்தி:” இதி ஆங்கிரஸ ஸ்ம்ருததௌ|

வைஷ்ணவே தர்ம“பரமாத்மநி கோவிந்தே பக்திரவ்யபி சாரிணீ |
ப்ரயச்சதி ந்ருணாம் முக்தி॒ம் மாதே அபூத்–அத்ர ஸம்ஶய:||”,

“யே த்வாம் தேவம் த்ருவம் பக்தா: புராணம் புருஷோத்தமம் |
ப்ராப்நுவந்தி ஸதா காமாநிஹ லோகே பரத்ர ச ||

அமாேகாஸ்தே பவிஷ்யந்தி பக்தி மந்தஶ்ச யே நரா:||” இதி ஶ்ரீமதி ராமாயணே |

ஶ்ரீவாமநே , “யேஷாம் விஷ்ணு: ப்ரியோ நித்யம் யே விஷ்ணோ : ஸததம் ப்ரியா:|
ந தே புந:ஸம்பவந்தி தத் பக்தாஸ் தத் பராயணா:||” இதி |

ரூபம் ஸ உபயத்ர புண்டரீகாக்ஷம் ப்ரஹ்மைவ|

ஸோதநா ச உபாஸ்ஸ்வ பஜஸ்வேதி |
உபாஸ்தி பஜதீ ஹி ஸேவா விஸேஷ விஷயௌ|
அத ஏவ நைகண்டுகா :“ஸேவா பக்தி: உபாஸ்தி:” இதி |

லைங்கமார் கண்டே யயோ
“பஜ இத்யேஷ தாதுர்வை ஸேவாயாம் பரிகீர்தித:|
தஸ்மாத் ஸேவா புதை : ப்ரோக்தா பக்தி ஶப்தேந பூயஸீ ||” இதி|

உபாஸ்யஸ்ய பகவதோ நிரவத்ய மஹா குணத்வாத் நிஸ் ஸீம ப்ரீதி ரூபம்
நிர் வ்யாஜ ஸ்வாம்யாத் தாஸ்ய ஏக ருசி கர்பம் ச இதமேவ உபாஸநம் விவிச்யத இதி பக்தித்வ வ்யபதேஶ:|

ஏவம் விதம் ப்ரியத்வம் ஆஶ்ரித்ய ஹி
“ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ அத் யர்தம்”,(7)
“பஜதாம் ப்ரீதி பூர்வகம்”,
“துஷ்யந்தி ச ரமந்தி ச”,
“நாத யோநி ஸஹஸ்ரேஷு”,(விஷ்ணு புராணம் -என்நின்ற யோனியில் பிறந்தாலும் இடைவிடாத பக்தி வேண்டும் )
“யா ப்ரீதி: அவி வேகநாம்”-(விஷயாந்தர பிராவண்யம் லோகம் வைப்பது போல் _-இதி ஶ்லாேக த்வயம்,(முதல் அம்சம் -18-19)

“தத் ஸ்ம்ருத்ய ஆஹ்லாத ஸம்ஸ்தித:”,
“தந் நாம ஸ்மரணோத் பூத புலகோ திதி புங்கவ:”(ப்ரஹ்லாதன் பிரார்த்தனை )

இதி ஶ்ரீவிஷ்ணுதத்த்வே
“ஸேவா பக்திஸ் ஸமாக்யாதா ஜ்ஞாந வாஸந யாக்ருதா | உத்பந்நாயாம் ததஸ் தஸ்யாம் ஸ்நேஹ பாவ: ஸ்வயம் பவேத் ||” இதி |
“பரமாத்மநி யோ ரக்கதா விரக்தோ அபரமாத்மநி |
ஸர்வேஷணா விநிர்முக்: ஸ்ஸ பைக்ஷம் போக்தும் அர்ஹதி” இதி |
“ஸ நோ தேவ: ஶுபயா ஸ்ம்ருத்யா ஸம்யுநக்து” (தைத்ரியம் )இத்யாத் யுபாஸந விதிஷு வசநாநி ப்ரவ்ருத்தாநி ||

தாஸ்யைக ருசி கர்ப ஜ்ஞாபகாநி ச “மாமநுஸ்மரந்”, “பார்த அநுசிந்தயந்”,
“க்ருஷ்ண அநுஸ்மரணம் பரம்” இத்யாதீநி |
அநுரித்யயம் நிஹீந அர்தோ ஹி ஜ்ஞாப்யதே தஜ்ஜ்ஜை 😐
நிஹீநத்வம் சாஸ்ய ஸ்வாபாவிகம் தாஸ்யம்,
தத் அநுஸந்தாந கர்பம் உபாஸநம் அநு ஸ்மரணம் |

ப்ரீதி சேவா அநு ஸ்ம்ருதி வர வர பிராயச்சித்தம் ஆகும்
அநு ஸ்மரணம் -தொடர்ந்து என்றும் -தாஸ பாவத்துடன் என்றும் இரண்டு அர்த்தங்கள்

பக்தேஶ்ச கீர்தநாதி ஶரீரத்வம்
“ஸததம் கீர்தயந்த:”,
“மந்மநா பவ” இத்யாதௌ வ்யக்தம் |

அஸ்யா ஏவ ஸகல ஶாஸ்த்ரார்த ஸாரத்வேந பரம குஹ்ய தமத்வம் ச
“இதம் து தே குஹ்ய தமம்”,(9)
“யஜ் ஜ்ஞாத்வா நேஹ பூயோ அந்யத்”,
“ஸர்வ குஹ்ய தமம் பூய:” இத்யாததௌ தர்ஶிதம் |
அலம் ப்ரஸஜ்ய ||

மேல் சொன்னால் விரிவடையும் என்று பிரமாணங்களை அருளிச் செய்வதை நிறுத்துகிறார்

————

அஞ்சாவது -அஞ்சும் படி உள்ளதே -மேல் எளிதான உபாயம்
லகு உபாய சித்த ஸாத்ய உபாயம் மேல் பார்ப்போம்

அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் -கீதாச்சார்யன் அருளாலே ஆழ்வார்கள் சரணாகதி சொன்னது போல்
கீதையில் அங்க பிரபத்தி மாம் ஏகம் –இத்யாதி அருளிச் செய்தானே

3- லகு உபாய –ஸாத்ய ஸித்த உபாய வினாவிற்கு விடை
இந்த பக்தியானது பல ஜென்மங்களுக்குப் பிறகு ஞானவானாகி என்னை அடைகிறான் என்பது முதலாக
ஸாஸ்த்ரங்களில் சொல்லியபடி அநேகம் ஆயிரம் ஜென்மங்களில் சம்பாதித்த புண்ய பரிபாகத்தால்
எல்லாப் பாபங்களையும் போக்கிக் கொண்டவர்களுக்கும்
நெடுநாள் இடைவிடாமல் உபாஸிப்பதால் மாத்திரம் உறுதிப்படுகிறது
அப்படியானால் ஸாஸ்த்ரத்தில் சொன்ன எந்த உபாயத்தையும் அனுஷ்ட்டிக்கத் திறமை இல்லாத பிராணிகளுக்கு என்ன கதி
என்கிற பயத்தைப் போக்குவதற்காக லகு உபாயத்தைக் காட்டக் கருதி
மூன்றாவது கேள்விக்கு விடை கூறுகிறார்
எல்லா விதத்தாலும் புருஷோத்தமனே ஸ்தோத்ரத்துக்குத் தகுந்தவன் என்கிற அபிப்ராயத்தால்
இதர தேவதைகளைக் காட்டிலும் இவனுக்கு உண்டான ஏற்றத்தை
அநாதி நிதனம்
விஷ்ணும்
ஸர்வ லோக மஹேஸ்வரம்
லோகாத்யக்ஷம்
ப்ரஹ்மண்யம்
ஸர்வ தர்மஞ்ஞம்
லோகாநாம் கீர்த்தி வர்த்தனம்
லோக நாதம்
மஹத் பூதம்
ஸர்வ பூத பவோத் பவம்
என்கிற பத்து குணங்களால் காட்டுகிறார்
தமேவச –அநாதி நிதனம் — –ஸர்வ துக்காதிகோ பவத்

ஹந்த! இயம் பக்தி:
“பஹூநாம் ஜந்ம நாம் அந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்யே ”,
“ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு” இத்யாதி ப்ரகாரேண(தபோ ஞான சதாப்தி நராணாம் ஷீண பாபேந-பக்தி ஆரம்ப விரோதி பாபங்கள் போகும் விஷ்ணு தர்மம் -பல்லாயிரம் பிறவிகளுக்குப் பின் )
பஹு தர ஜந்ம ஆர்ஜித ஸுக்ருத் பரிபக்வ ஷயாணாம்
தீர்க கால நைரந்தர்ய ஸேவிதா த்ருட பூமி:பவதீதி,
ஶாஸ்த்ரீய ஸர்வ உபாய தரித்ராணாம் ப்ராணிநாம் கா கதிர் இதி பயம் அபநேதும் லகூபாயம் தர்ஶயந்(இதில் இருந்து கீழ் அலகு உபாயத்துக்குப் பதில் -இது மூன்றாம் கேள்வியான லகு உபாயத்துப் பதில்-இயன்றவரை ஸ்தோத்ரம் போதுமே )

ஸ்துவந்ந: கம்’ இதி ததீயம் ப்ரஶ்நம் ப்ரதி வக்தி
தமேவ இத்யாதி ஸர்வ பூத பவோத் பவம் இத்யந்தேந|(ஆறாவது ஸ்லோகம் தொடங்கி ஏழாவது ஸ்லோகம் வரை )

அஸ்யைவ ஸர்வதோ முகம் ஸ்துதி யோக்யத்வம்
அபிப்ரயம் ஸ்தத் அபேக்ஷயாஸ்
அபேக்ஷிக க்ஷுத்ர தேவதாந்தராதி வ்யாவர்தகை : அநாதி நிதநத்வாதிபி: தஶபி: விஶிநஷ்டி –

——–

அநாதி நிதனம் விஶ்ணும் ஸர்வலோக மஹேஶ்வரம் |
லோகாத்யக்ஷம் ஸ்துவன் நித்யம் ஸர்வது:காதிகோபவேத் ||–6-

ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஞ்யம் லோகானாம் கீர்த்தி வர்த்தனம் |
லோக நாதம் மஹத் பூதம் ஸர்வபூத பவோத்பவம்||–7-(பத்து பெருமைகளைக் கொண்டவனை நித்தியமாக ஸ்தோத்ரம் பண்ணி )

அநாதி நிதநம் —தஸ்மாத் அகலா உபாதிகம் உபகாரிணம் |(முதல் முடிவும் இல்லாமல் காலத்தால் அபரிச்சேதம் )
விஷ்ணும்-அதேஸ உபாதிகம் |(தேசத்தால் பரிச்சேதம் இல்லாதவன்-கரந்து எங்கும் பரந்துளன் )
ஸர்வ லோக மஹேஶ்வரம் — ஸ்தோத்ரு-மநோரத பூரண பர்யாப்த மஹா விபூதிகம்|(நியமன ஸாமர்த்ய-அலம் புரிந்த நெடும் தடக்கை அமரர் வேந்தன் )
லோக அத் யக்ஷம்-தத் உசித நிருபாதிக அநு ஸந்தாநம் |(உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி )
ப்ரஹ்மண்யம் —-ப்ரஹ்மணோ அநந்த ஶாகாய வேதாய ப்ரபிபாத்ய தயா ஹிதம் ;அத ஏவ உத்காடித ஸ்துதி விஷயம்|(எளிமையாக ஸ்தோத்ரம் பண்ண விஷயம் ஆகிறான் )

ஸர்வ தர்மஜ்ஞம் —அத ஏவ ஸ்வ ஸ்துதி பரம தர்மஜ்ஞம்|
லோகாநாம் கீர்தி வர்தநம் —ஸர்வ லாேக ஆஶ்ரயிணாம் ஸ்தோத்ரு ப்ரப்ருதீநாம் ஆத்மந இவ “யம் ஸ்துவந் ஸ்தவ்ய தாமேதி”
இதி ப்ரகாரேண அஸேஷ லோக வேத ப்ரஶஸ்ய கீர்தி காரணம்|(தனக்கு நிகராக ஸ்தோத்ரம் பண்ணத் தகுதியாக்கி அருளுகிறார் )
லோக நாதம் —-லாேகா நாம் ஸ்வாமிநம்;-அத: ஸ்துத்யாதி ஸர்வ பரிசரண அர்ஹம் |
மஹத் பூதம் –-ஐஶ்வரேண பரம மஹத்த்வேந ஸ்வரூப அநுபந்திநா யுக்தம் ; அத: அக்லேஸேந ஸ்தோத்ர மாத்ரேண ஸ்வாராத்யம் |
மஹாந்தோ ஹி ஸ்வ அநுக்ரஹ ஸம்வாத ஸூசந மாத்ரேண ஹ்ருஷ்டா:, ந பஹு வாஞ்சந்தி |

மூன்றாவது வினாவிற்கு விடை
ஆதியும் அந்தமும் இல்லாதவரும்
எங்கும் வியாபித்து இருப்பவரும்
எல்லா உலகங்களுக்கும் முதல் கடவுளும்
எல்லா உலகங்களையும் பிரத்யக்ஷமாகப் பார்ப்பவரும்
வேதங்களால் உரைக்கப் படுபவரும்
எல்லாத் தர்மங்களையும் அறிந்தவரும்
தம்மை ஸ்துதிக்கும் உலகோருக்கு புகழைப் பெருகச் செய்பவரும்
உலகங்களுக்கு ஸ்வாமியும்
சிறந்த பொருளும்
எல்லாப் பொருள்களின் இருப்புக்கும் காரணமான
அந்தப் பகவானை எப்போதும் ஸ்துதிப்பதனால் எல்லாத் துன்பங்களையும் கடந்தவன் ஆவான்

ஆதியந்தம் இல்லாதவர் என்றதனால் -காலத்தால் அளவிடக் கூடாதவர் என்பதும்
எங்கும் வியாபித்தவர் என்பதனால் -தேசத்தால் அளவிடக் கூடாதவர் என்பதும்
எல்லா உலகங்களுக்கும் முதல் கடவுள் என்பதனால்
ஸ்துதிப்பவருக்கு வேண்டியவற்றை வேண்டியபடி அளிக்கும் ஐஸ்வர்யம் உடையவர் என்றும்
எல்லா உலகங்களையும் ப்ரத்யக்ஷமாகப் பார்ப்பவர் என்றதனால் ஸ்துதிப்பிவனுக்குத் தக்கது இன்னது என்று தாமாகவே சிந்திப்பவர் என்பதும்
வேதங்களால் உரைக்கப் படுபவர் என்பதால் ஸ்தோத்ரம் செய்ய வேண்டிய விஷயம் உள்ளவர் என்றும்
எல்லாத் தர்மங்களையும் அறிந்தவர் என்பதால் தம்மைத் ஸ்துதிப்பது பரம தர்மம் என்று அறிந்தவர் என்பதும்
தம்மை ஸ்துதிக்கும் உலகோருக்கு புகழைப் பெருகச் செய்பவர் என்பதால் எந்தப் பிராணியும் தன்னை ஸ்தோத்ரம் செய்வதால்
தன்னைப் போலவே இருக்க அருளி புகழச் செய்பவர் என்றும்
உலகங்களுக்கு ஸ்வாமி என்பதால் ஸகல பரிசரணைகளுக்கும் உரியவர் என்றும்
சிறந்த பொருளாக இருப்பவர் என்பதால் ஆராதனைக்கு எளியவர் என்றும்
எல்லாப் பொருள்களின் இருப்புக்கும் காரணமாக இருப்பவர் என்பதால் அவர்களை அனுக்ரஹிப்பவர் என்றும்
அந்தப் பகவானை எப்போதும் ஸ்துதிப்பதனால் எல்லாத் துன்பங்களையும் கடந்தவன் ஆவான் என்பதால் பரிபூர்ண பக்தி யோகம்
அனுஷ்ட்டிக்க இயலாமல் இயன்ற வரை குண சங்கீர்த்தனம் செய்பவன் தாப த்ரயங்கள் நீங்கப் பெற்று

சீதள மடுவைப் போல் இருக்கும் அவன் இடம் நீராடப் பெறுவார் என்பதும் சொல்லிற்று ஆயிற்று –

யத உத்யோகே
“அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதாவநே ஜநாத்|
அந்யத் குஶல ஸம் ப்ரஶ்நாத் ந சேச்சதி ஜநார்தந:||” இதி|

(தூய நீர் கொண்ட சொம்பு தீர்த்தத்துக்கு மேல் எதிர்பார்க்காமல்
மாலா காரர் –
ஜனங்கள் ஜனியையைப் போக்கும் ஜனார்த்தனன்)

ஸர்வ பூத பவ உத்பவம் – அஸத் வ்யாவ்ருத்தாநாம் ஸத்தா ஹேதும் ;
அத அவர்ஜநீயத்வாத் தேஷாம் அவஶ்யம் அநுக்ரஹீதாரம் ;

ஏவம் பூதம் ஸ்துவந் –(இப்படி பத்து பெருமைகளை யுடைய )
பரிபூர்ண பக்தி யாேகா ஸம்பவே அபி:யதா ததா வா அபி குண ஸம்கீர்தநம் குர்வந் |–

ஸர்வ து:காதிகோ பவேத்–
தாப த்ரய தவ தஹநம்-அதீத்ய நிரதிஶய அநந்த ஶீதல ஹருதம் பகவந்தம் கச்சேத்|(தயரதன் பெற்ற மரகத மணித்தடம் )

அஸ்ய ச யுக்தம் லகு தர ஸ்துதி மாத்ர விஷயத்வம்,(இது பழைய ஸ்துவன் அல்ல -கீழ் ஜபம் -பக்தி யோகம் இங்கு ஸ்துவன் மாத்திரம் )
“த்யாயம் ஸ்துவந் நமஸ்யந்” இத் யநந்த ரோக்த த்யாநாதி ஸஹ சர குரு தர ஸ்தவந வைலக்ஷண்ய ப்ரதீதே :,
அந்யதா புநருக்தி ப்ரஸங்காத், “ஸ்துவந்த: கம்” இதி
ஸ்வதந்த்ர ப்ரஶ்நாந்தர ப்ரயுக்தத்வாத், அநேக
ஶாஸ்த்ராந்தர ஸங்க தத் வாச்ச அவகம்யதே ||6, 7||

(ஸூத்த சத்வம் வேறே =மிஸ்ர தத்துவத்தில் இரண்டைக் கழித்து பெரும் ஸுத்த சத்வத்துக்கு நிகர் சொல்ல முடியாதே
அதே போல் ஸ்தவனம் -கீழ் இரண்டிலும் வேறே -இங்கு லகு ஸ்தோத்ரம் மாத்திரமே

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திரு நாமம் நாரணமே
இந்த நாராயணன் -நாராயணன் பரஞ்சோதி இத்யாதி நாராயணன் போல் அல்லவே )

கோ தர்ம இதி பஞ்சமம் ப்ரஶ்நம் பரிஹரதி-

ஸ்துவன் என்பதற்கு இங்கு இயன்றவரை ஸ்தோத்ரம் செய்வதே தகுதியான பொருள் -ஏன் எனில்
இதற்கு முன் ஸ்துவன் என்பது த்யானம் முதலியவற்றுடன் சேர்ந்தே கூறப்பட்டு இருப்பதால்
அத்தை பெரிய ஸ்தோத்ரம் என்றும்
இதனை லகுவான ஸ்தோத்ரம் என்றும் கொள்ள வேண்டும்
இல்லாவிடில் புனர் யுக்தி தோஷமாகும்
மேலும்
ஸ்துவந்த கம் என்பது தனித்த வினாவாகையாலும்
மற்றும் அநேக சாஸ்த்ரங்களோடே ஒத்து இருக்கையாலும் இதுவே பொருத்தமானது –

—————-

4- பரம ஸாத்ய உபாய வினாவிற்கு விடை
அவதாரிகை
தியானித்தல்
ஸ்துதித்தல்
நமஸ்கரித்தல்
முதலிய கைங்கர்யங்களே சிறந்த தர்மம் என்கிறார் –

ஏஶ மே ஸர்வ தர்மாம் தர்மோ அதி கதமோ மத: |
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைர் அர்சன நர: ஸதா||–8-(இதில் நாலாவது ஸ்தவன் )

ஏஷ மே இதி |ஏஷ-அநந்த ரோக்தோ பகவ தர்சந ஸ்தவநாதி ரூபோ
யதாதிகாரம் குரு லகு பாவேந வ்யவஸ்தித:|

ஸர்வ தர்மாணாம் மத்யே அதிகதமோ மத:| தர்மா: ஹி
1-ஐஹிகா : பஶு புத்ராத் யர்தா:,
2-ஆமுஷ்மிகா :–ஸ்வர்காத் யர்தா:, 3-அஸங்கை : பகவத் ஆராதந போத அநுஷ்டித
இஷ்டா பூர்த பரி கர்மித தத்த்வ ஜ்ஞாந ஸமாதி ஶரீரோ மோக்ஷார்த:,
4-ஸ அநுராக பகவத் ஸ்மரண கீர்தந ப்ரணாமாதி:, தத் அஸாதாரண பரி சரணாத்மா சேதி சதுர்விதா:|
தத்ர அதிக தம இதி தமபா த்ரிப்ய: சதுர்தம் உத்கர்ஷயதி |(அர்த்த பத பிரயோகம் இதில் மட்டும் இல்லையே-ஸ்வயம் பிரயோஜனம் -கைங்கர்ய ரூபமாக ஸ்தோத்ரம்-எனக்கே யாட் செய் -எக்காலத்தும் -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே   )

ஐந்தாவது வினாவிற்கு விடை
செந்தாமரைக் கண்ணரை ஒரு மனிதன் பக்தியுடன் எக் காலமும் ஸ்தோத்ரங்களால் அர்ச்சிப்பதே
எல்லாத் தர்மங்களிலும் மிகச் சிறந்த தர்மம் என்று நான் நினைத்து இருக்கிறேன்

1-தர்மங்கள் பசு புத்ரன் முதலான இம்மைப் பயனை அளிப்பதாகவும்
2-ஸ்வர்க்காதிகளான மறுமைப் பயன் அளிப்பதாகவும்
3-பயனையே எதிர்பாராமல் பகவத் ஆராதனம் என்னும் நினைப்புடன் அனுஷ்ட்டிக்கப் படும்
இஷ்டா பூர்த்தாதி -இஷ்டம் -யாகம் முதலியன செய்தல் -பூர்த்தம் -குளம் வெட்டுதல் -தோட்டம் வைத்தல் முதலியன
இவற்றைச் செய்வதால் பரிஷ்கரிக்கப்பட்ட ஸமாதி ரூபமாகிய மோக்ஷத்தை அளிப்பனவாயும்
4-எம்பெருமானை ப்ரீதியோடே நினைப்பது -அவன் குணங்களை ஸ்தோத்ரம் செய்வது -அவனை வணங்குவது
முதலிய ஏகாந்தமாக அவனுக்கு அடிமை செய்வதும்
ஆக நான்கு வகைப்பட்டு இருக்கும்
முதல் மூன்றைக் காட்டிலும் நான்காவதே மிகச் சிறந்தது –

இங்கே எல்லாத் தர்மங்களிலும் மிகச் சிறந்த தர்மம் என்று கூறுவதால் மற்ற மூன்றைக் காட்டிலும்
எம்பெருமானுக்கு ஏகாந்தமாக அடிமை செய்வதே மிகச் சிறந்தது என்று கூறப்பட்டதாகும் –

ததுப பாதயதி – யத் பக்த்யேதி| யஸ்மாத் பக்த்யாதி குணவாந் தஸ்மா ததிகதம இதி |
பக்த்யா இதி அநுஷ்டாந ஸமயே அபி ப்ரீதி கர்பத்வேந ஸுக உபாதாநத்வ பரம் |
கீதம் ஹி “ஸு ஸுகம் கர்தும்” (9-2)இதி | யுக்தம் ஸைதத் ப்ரிய தம பதிஸ்மரணம் ப்ரியமதி ஸ்மரணம் பிரியம் கரமதி

பக்தியுடன் என்றதால் ஸூ ஸூகம் கர்த்தும் -செய்வதற்கு இனியது -என்று கீதையில் அருளிச் செய்தபடி
அனுஷ்டான சமயத்திலும் பிரீதியுடன் இருத்தலால் இனிதாக அனுஷ்ட்டிக்கத்தக்கது என்கிறது
இதனால் இதற்கும் இதர தேவதைகளின் உபாசனத்துக்கும் வாஸி தெரிவிக்கப்படுகிறது –

ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷ அவாகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம் –9-2-

இந்த பக்தி யோகம் வித்யைகளுக்குள் சிறந்ததாய் ரஹஸ்யங்களுக்குள் சிறந்ததாய் –
பாபங்களைப் போக்கடிப்பவற்றுள் உயர்ந்ததாய் -என்னை -நேரில் காட்டுவதாய்
என்னை அடைவிக்கும் சாதனமாயும் இருப்பதாய் -அனுஷ்டிப்பதற்கு மிகவும் இனியதாய் –
பலத்தைக் கொடுத்த பின்பும் அழியாததாய் இருப்பது –

அநேந அஸ்வாமிஷு தேவதாந்தரேஷு
கஷாய பாநவத் விரஸத்வே அபி ஹித புத்த்யா அநுஷ்டீய மாநேப்யோ வ்யாவ்ருத்தி: க்ரியதே |

புண்டரீகாக்ஷம் இதி விஷய அபி ரூப்யேண விகத பயங்கர தத்த்வாந்தர பஜநேப்யோ வ்யாவ்ருத்தி:|
ஸ்வைவரிதி வாங் மாத்ர ஸாத்யத்வேந விஶ்வஜிச் சாந்த்ராயணாதிப்யோ வ்யய ஆயாஸ
பஹுலேப்கயோ வ்யாவ்ருத்தி:|(திருமாலிருஞ்சோலை என்ன–திருமால் வந்து நெஞ்சு நிறையப் புகுவானே )

புண்டரீகாக்ஷன் -செந்தாமரைக் கண்ணன் என்பதனால் சேவிக்கப்படுபவன் மிக அழகாக இருப்பவன் என்றும்
பயங்கர ரூபத்தை யுடைய தேவதாந்த்ரங்களை உபாசிப்பதை விட இங்கு உள்ள ஏற்றம் சொல்லிற்று
ஸ்தோத்ரங்களினால் -என்றதாலும்
ஸ்தோத்ரம் என்பது வாக்கினால் மாத்திரம் செய்யப்படுவது ஆகையால்
விஸ்வ ஜித் சந்த்ராயணம் முதலியவைகளை போல் பொருள் செலவும் மிக மெய் வருத்தமும் இதற்கு வேண்டுவது இல்லை என்பதும்
அர்ச்சிப்பது -என்றதால் ஒரு புருஷ விசேஷத்தை நேராக ஆராதனம் பண்ணுவதே போல் இருப்பதால்
கண்ணுக்கு விஷயமாகாமையால் உண்டாகும் வருத்தமும் இதில் இராது என்றும் தெரிவிக்கப்பட்டது

ததா ஹி பகவாந் வ்யாஸ:
“ஆர்தா விஷண்ணா: ஶிதிலாஶ்ச பீதா:
கோரேஷு ச வ்யாதிஷு வர்தமாநா:|
ஸம்கீர்த்ய நாராயண ஶப்த மாத்ரம்
விமுக து:க்காஸ் ஸுகிநோ பவந்தி||” இதி |

ஶ்ரீவிஷ்ணுபுராணே “அவஸே நாபி யந்நாம்நி” இத்யாதி |(6-8)

வைஷ்ணவே தர்மே “அஜ்ஞாநதோ ஜ்ஞாநதோ வா வாஸுதேவஸ்ய கீர்தநாத் | தத் ஸர்வம் விலயம் யாதி தோயஸ்தம் லவணம் யதா||”,

“ஶமாய அலம் ஜலம் வஹ்நே : தமஸோ பாஸ்கர உதய:|
ஶாந்தி: கலே : அகௌ கஸ்ய நாம ஸம்கீர்தநம் ஹரே :||”,

“யந் நாம ஸம்கீர்தந கதா விமுச்யதே ”,

“யந் நாம ஸம்கீர்தந கதா மஹா பயாத் விமோக்ஷமாப்நோதி”,

“ஸக்ருதுச் சரிதம் யேந ஹரிரித்ய க்ஷர த்வயம் |
பத்த: பரி கரஸ்தேந மோக்ஷாய கமநம் ப்ரதி ||”,

“யஸ்ய நாம்நி ஸ்ம்ருதே மர்த்ய: ஸமுத் க்ராந்தே : அநந்தரம் |
ப்ராப்நோதி வைஷ்ணவம் ஸ்தாநம் புநரா வ்ருத்தி வர்ஜிதம் ||”,

“அச்யுத அநந்த கோவிந்த நாமோச் சாரண பேஷஜாத் |
நஶ்யந்தி ஸகலா ரோகா : ஸத்யம் ஸத்யம் வதாம் யஹம் ||” இத்யாதி |

அந்யத்ர ச “ஸம்கீர்தயேத் ஜகந் நாதம் வேதம் வா அபி ஸமீரயேத்” இதி ச|

வைஷ்ணவே ஸூக்தே ”ஆஸ்ய ஜாநந்தோ நாம சித் விவக்தந”,

“த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜநாஸ:”|
அஸ்ய கீரய: – கீர்தயிதார:, த்ருவாஸ: – அபுநராவர்திநோ பவந்தி |

அர்சேதிதி- அஸ்ய தர்மஸ்ய புருஷ விஸேஷ ஸமாராதந ரூபாம் அநதி பரோக்ஷாம் ஹி ஸூசயதி |

கீதம் ச “ப்ரத்யக்ஷாவகமம்” இதி|
ந ஹ்யஸ்ய தபஸ் தீர்தாதிவத் புருஷ ப்ரீணநத்வம் ஶாஸ்த்ர ஆஸ்திக்யைக ஸாத்யம் |(ஸாஸ்த்ர ஆஸ்திக புத்தியால் தாபம் தீர்த்தம் பாவனம் இது அப்படி இல்லையே )

நர இதி ப்ராயேண
ஸர்வ சேதநா நாம் யதா ஸம்பவம் அதிகாரம் ஸூசயதி |

ஏக வசநம் ச மஹா யாேகாதி பஹு ஸஹகாரி நைரபேக்ஷ்ய பரம்

நிந்த்ய குண வ்ருத்த ஜந்ம நாமபி
பக்த்யபி ருசி மாத்ர மஹா குணேந அகுதோ பயம் பஜநீயோ ஹி பகவாந்–(நீசராலும் பக்தியில் விருப்ப மாத்திரத்தாலே பயமோ இல்லாமல் பஜனம் பண்ணலாம் என்று தானே அருளிச் செய்தானே
இந்த ஒரு குணமே போதுமே ஸ்தோத்ரம் பண்ண )

———–

உபநிஷத் -கீதை -அங்க பிரபத்தி -பக்தி ஆரம்ப விரோதியைப் போக்க
ஸ்வ தந்த்ர பிரபத்தி -கத்ய த்ரயம் -ராமானுஜர் அனுஷ்டானம் –
விஷ்ணு ஸஹஸ்ர நாமம் ஸாத்ய உபாயம் ஒன்றே
ஸித்த உபாயம் பற்றி முதல் இரண்டு கேள்விகள் -சொன்னாலும் நாலுமே ஸாத்ய உபாயத்தைப் பற்றியது தான்
ஓன்று நாம் பண்ணும் கிரியை
அதுக்குப் பலம் தரும் பகவான் -கிரியை பலம் தரட்டும் என்று சங்கல்பித்து
த்யானம் அர்ச்சனம் ஸ்தோத்ரம் இவை –
ஸங்கல்பம் பண்ணிய அவனுக்கு முக்யத்வம் கொடுத்து ஸித்த உபாயம்
எந்த செயல்களை செய்து முக்தி -அவற்றுக்கு முக்யத்வம் கொடுத்தால் ஸாத்ய உபாயம் ஆகும்
இந்த வாசியை உணர வேண்டும் –

ஜபம் ஒரு கிரியை
ஸ்தவனம் கிரியை
நான்கு இடங்களிலும் ஸ்துவன் –
ஆலம்பன உபாயம் ஜெபத்துக்கு அங்கம்
த்யாயன் ஸ்துவன் நமஸ்யந்த -இது பக்தி- சார்வே தவநெறி பக்தி யோகம் -மன் மநா பவ இத்யாதி
இவை இரண்டும் பகவானைப் பற்றியவை
அடுத்து
லகு உபாயம் த்யாயனம் நமஸ்காரம் -இல்லாமல் ஸ்தோத்ரம் மாத்திரம் -மூன்றாவது பதில்
அடுத்து நீர் அறிந்த தர்மங்களில்-உபாயங்களில் சிறந்த உபாயம் எது -கேள்வி -கோ தர்ம ஸர்வ தர்மாணாம் -பவத பரமோ மத
சொல்லப்பட்ட மூன்று தர்மங்களில் இல்லை
வேற்றுமை உறுப்புக்கு அர்த்தம் இங்கு -தர்மங்களுக்குள் என்பது இல்லை -தர்மங்களை விட என்று அர்த்தம் கொள்ள வேண்டும் –
கேள்வி ஆறாம் வேற்றுமை உருபில் இருந்தாலும் ஏஷாம் தர்ம -பதில் இருப்பதால் -இப்படியே கொள்ள வேண்டும் –
ப்ரீதி கர்ப்பத்த்வம் இதில் பூர்த்தியாக இருப்பதால் இது சிறப்பு
பக்தி என்றாலே ப்ரீதி தானே என்றால் -யமம் நியமம் தொடங்கி தாரணம் அப்புறம் தான் ப்ரீதி
இங்கு தொடக்கத்திலே ப்ரீதி
கீழ் எல்லாம் எந்தப் பலத்தைக் குறித்தும் பண்ணலாம்
பலம் இங்கு அவனைப் பற்றிய -ஸ்வயம் பிரயோஜனம் -கைங்கர்யமே பலம் -மிகச் சிறப்பு அதனால் தான் –

கதி த்ரய மூலத்வாத் –ஆர்த்தோ இத்யாதி –தேஷாம் பக்தி விசிஷ்யதே -அவர்களுக்குள் ஞானி நித்ய யுக்தாம் ஏக பக்தி விசிஷ்யதே போல்

—————

அத க்ஷிப்ரமேவ பாகீரதீ ப்ரவாஹ நேவ நிர்ணிக்த கல்மஷ ருசி:
பரம தார்மிகோ பவதீதி கீயதே |
குண விஷயே தாவத்
“ஸமோ அஹம் ஸர்வ பூதேஷு”;
வ்ருத்த விஷயேஷு ச “அபி சேத் ஸு துராசார:”;
ஜந்ம விஷயே அபி “மாம் ஹி பார்த வ்யபாஶ்ரித்ய யே அபி ஸ்யு: பாபயாேநய:” இத்யாதி |
ந சை தாவதா துராசாராதே : தர்மத்வம் |
“நா விரதோ துஶ் சரிதாத் நா ஶாந்தோ நா ஸமாஹித:”(கட உபநிஷத் ), “அப்ராப்ய: கேஶவோ
ராஜந் இந்த்ரியை : அஜிதை ந்ருணாம்” இத்யேவம் ப்ரகார வசநேப்ய: தஸ்ய
பகவத் அநிஷ்டத்வேந அதர்மத்வா வகமாத் |(இந்திரியங்களை ஜெயிக்காதவர்களால் கேசவனை அடைய முடியாது )

அத ஏவ அநந்தர மாஹ “க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ” இதி |
ஸர்வ ஆஶ்ரமிணாம் அநாஶ்ரமிணஶ்ச விதுராதே :-(3-4-27-மனைவியை இறந்தவனுக்கு அக்னி கார்ய யோக்யதை இல்லையே சங்கை -இருவருக்கும் உண்டே )
“ஶம தமாத் யுபேதஸ் ஸ்யாத்”,
“அந்தரா சாபி து தத் த்ருஷ்டே :” இத்யாதீநி ப்ரஹ்ம ஸூத்ராணி அதிகாரம் நிரணஷத

ஸமோஹம் ஸர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய–
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் —৷৷9.29৷৷

நான் பலவகைப் பட்டு இருக்கும் ஜீவ ராசிகள் விஷயத்திலும் -என்னை ஆஸ்ரயிக்கும் விஷயத்தில் சமமாய் இருப்பவன்
எனக்குத் தாழ்ந்தவன் என்னும் காரணத்தால் ஆஸ்ரயிக்கத் தகாதவன் எவனும் இல்லை
எவர்களோயெனில் -என்னிடம் பக்தியையே பலனாகக் கொண்டு அன்பு செய்கிறார்களோ
என்னிடத்தில் அவர்கள் வாழ்கிறார்கள் –
அவர்கள் இடத்தில் நானும் வாழ்கிறேன் -என்னிலும் உயர்ந்தவர்கள் இடத்தில் போல் பரிமாறுகிறேன்
தேவ மனுஷ திரியக் ஜங்கமங்கள் சர்வருக்கும் சமம் -யாரையும் த்வேஷிக்காதவன் –

அபி சேத் ஸு துராசாரோ பஜதே மாமநந்யபாக்.–
ஸாதுரேவ ஸ மந்தவ்யஸ் ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ—৷৷9.30৷৷

மிகவும் தாழ்ந்த ஒழுக்கைத்தை உடையவனாய் இருந்தாலும் -என்னிடம் வேறு பயனை விரும்பாதவனாய்
பக்தி செய்தானாகில் அவன் தலை சிறந்த ஞானிகளோடு சமமானவன் ஆவான் -கொண்டாடத் தக்கவனும் ஆவான் –
ஏன் எனில் அவன் அவன் நன்கு என்னிடத்தில் உறுதியான ஈடுபாடு உடையவன் அன்றோ –

க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச் சாந்திம் நிகச்சதி.–
கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த ப்ரணஸ்யதி—৷৷9.31৷৷

என் விஷயமான ஸ்வயம் பிரயோஜன பக்தியைச் செய்பவன் துராசாரம் உள்ளவனாயினும் விரைவிலேயே
தடை நீங்கப் பெற்ற பக்தி யோகத்திலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவன் ஆகிறான் –
நிலையான துராசார நிவ்ருத்தியை நன்கு அடைகிறான் –
குந்தீ புத்திரனே -என்னுடைய பக்தன் அழிய மாட்டான் என்னும் இந்த அர்த்தத்தை நீயே ப்ரதிஜ்ஜை செய்வாய் –

மனிதன் என்றதால் ஸகல சேதனரும் அதிகாரிகளே என்றும்
ஒரு மனிதன் -ஒருமையாகச் சொல்லுவதால் ஸஹ காரிகள் பலரும் தேவை உண்டோ என்னும் வருத்தமும் இராது என்பதும்
எக் காலமும் என்பதால் கால நிர்பந்தமும் இல்லை என்பதும் காட்டப்பட்டன
இதனால் அயனம் ருது மாசம் பக்ஷம் நக்ஷத்ரம் முஹூர்த்தம் என்னும் கால விசேஷத்தை அபேக்ஷிக்கும்
மற்றவற்றைக் காட்டிலும் இதுக்கு உண்டான வாசி தெரிவிக்கப்பட்டது

இனி ஜெபிப்பவனுடைய பரிசுத்தியைப் பற்றியும்
அதிகாரியினுடைய தாரதம்யத்தைப் பற்றியும்
ஸங்கீர்த்தனம் முதலிய லகுவாகச் செய்யக்கூடிய உபாயத்தைப் பற்றியும் விசாரித்து இருக்கிறது –

யுக்தஶ்ஸைஷ: ஸர்வ அவஸ்தேநாபி புருஷேண மாதுர் இவ புத்ரேண பரம வத்ஸலஸ்ய ஸர்வ பந்தோ :
நிஸ் ஸர்க ஸுஹ்ருதஶ்ச பகவதோ நாம க்ரஹணாதௌ அப்ரதிஷேத:;
த்ருஷ்டஶ்ச கஜேந்த்ர-க்ருத்ரராஜ வாயஸ-ராவணா வரஜ(ராவணனுக்குத் தம்பி )-கௌஸலே நாகர ஜாந பத(கோசல தேச சராசரங்கள் )-வல்லவீ- மாலாகார ப்ரமுகேஷு |(இப்படி அதிகாரம் இல்லாதவர்களுக்கு த்ருஷ்டாந்தங்கள் -முன் ஜென்ம புண்ய கர்ம வாசனை பதிவுகள் இவர்களுக்கு )
அப ஶூத்ராதி கரணே து அத்ரை வர்ணிகாநாம்
அநக்நி வித்யத்வாத் அக்நி வித்யாங்கேஷு குரூபஸதநாத்(அக்னி வித்யை அங்கமாகக் கொண்ட மஹா உபாசனம் )
யௌபநிஷத ஸம்ஸ்காரா பாவேந வேதாந்த வேத்ய பர வித்யோபார்ஜநே ச அநுபாயத்வாத் அநதிகாரோ ராத்தாந்தித: |
ததீயா பகவத் ஸமாஶ்ரயண அதிகார வ்யவஸ்தா அத்ரை வர்ணிகாநாம்
ஸமுத் ரிக்த ஸத்த்வ தயா முமுக்ஷூணாம அப்ரதிபத்தி ஶ்ரவண மநநாத் யௌபநிஷத ப்ரஹ்ம வித்யாே மஹா பதே ந ப்ரஸித்த அதிகார: |

(நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு அனைத்தும் உபதேசம்
பேயாழ்வார் திருமழிசை ஆழ்வாருக்கு உபதேசம்
இந்த இருவரும் மற்றவரை விட ஸ்ரேஷ்டம்)

தேஷ்வேவ  ரஜஸ் தமஸ் ஸம் பேத ஸிதாஸித ஸத்த்வ தயா பலகாம தயா விப்ர லப்தாநாம்
தாத்ருஸோ யதா யோக முபாஸநேஷு ஸ்த்ரீ ஶூத்ர திரஶ்சாம் ச ப்ராசீந
பவ பரம்பரா ப்ரசித ஸம்ஸ்கார படிம்நா ஸுப்த ப்ரபுத்த ந்யாயேந(தூங்கி எழுந்தவன் உணர்வது போல் முன் ஜென்ம புண்ய பலனால் )
ப்ரத் யுத் பந்ந ஜ்ஞாநாம் விதுர தர்ம வ்யாத ப்ரப்ருதீநாம்
ப்ராரப்த கர்ம அநுஶய லேஶ-(ப்ராரப்த கர்மத்தால் இப்பிறவி -பிறவி எடுத்ததுமே அது தொலைந்து போனதே முன் ஜென்ம பதிவால் இப்பொழுது கஜேந்திரன் ஜடாயு இவர்களுக்கு )அந்ருண்யா அநுஜ்ஞாத ஜுகுப்ஸித ஜாதி ஸம்ஸர்காணாம் அபி தத் தஜ் ஜாத்ய ப்ரதிஷித்த ஸாமாந்ய தர்மாங்கேஷு
உபாஸநேஷு துர்வாரோ அதிகார:, அநுத்பாத்ய வித்யத்வாத் |
ந்ய தர்ஶி ச பகவதா சவ்நகேந ”தர்ம வ்யாதா தயோ அப் யந்யே பூர்வாப் யாஸாஜ் ஜுகுப்ஸிதே |
வர்ண அவரத்வே ஸம் ப்ராப்தா: ஸம் ஸித்திம் ஶ்ரமணீ யதா” (சபரியைப் போல் )இதி ||

அநுத் பந்தஜ் ஞாநாநாமபி க்ரம பாவிந்யா முக்ய பக்தே :
உபக்ரம பூத ஸ்மரண-ஸம்கீர்தந -ஶ்ரவணாதி: அப்ரதிஷித்த: |
தர்ம ஸ்மர்தாரோ அபி ஹி அஹிம்ஸா-ஸத்ய-ஶௌச-பரோபகார-
மாதா பித்ரு ஶுஶ்ரூஷண-ஶ்ரேஷ்ட தேவத அநுகூல்யாதிகம் -ஸாமாந்ய தர்மம் ஆசண்டாலம் அநுமந் யந்தே |
ஸ்வயம் ஸம்கீர்தந நிஷதே அபி கீர்தயித்ரு புருஷ அநுவர்தந -அநுமோதந – அமர்ஷண-அவிரோத மாத்ரேண
ஸுதூரோ அபி ஸம்பந்த ஸம்பவ: |(கீர்த்தனம் பண்ணுபவரை அனுவர்த்தித்து-விரோதம் பண்ணாமல் இருந்தாலே -பலன் பெறலாமே )
ஸ்மர்யதே ஹி -”தர்ம : ஶ்ருதோ வா த்ருஷ்டோ வா கதிதோ வா க்ருதோ அபி வா | அநுமோதிதோ வா ராஜேந்த்ர! புநாதி புருஷம் ஸதா ||” இதி |
“ப்ரயோஜயிதா அநுமந்தா கர்தா இதி ச விஸேஷதோ பகவத் தர்மஸ்ய ஸ்பர்ஶ வேதித்வம் |
உத்கோஷித: பூஜிதோ வா த்ருஷ்டோ வா நமிதோ அபி வா | ப்ரஸஹ்ய ஹரதே நரமத பாபம் கோ ந ஸேவேத் ஹரிம் தத: ||”

“கீர்தித: ஸம்ஸ்ம்ருதோ த்யாத: பூஜித: ஸம்ஸ்க்ருதஸ் ததா |
ஐஹிக ஆமுஷ்மிகீம் ரக்ஷாம் கரோதி பகவாந் ஹரி: ||”,
“ஶ்ருண்வந்தி யே வை படதஸ் ததா அந்யே பஶ்யந்தி யே மாமீரயந்தி” இத்யாதி |(விஷ்ணு தர்மம் )
அபி ச இதிஹாஸ புராணாதிஷு ஶ்வபாகாதேரபி பகவத் பஜநாநுமதி: |
வைஷ்ணவே தர்மே – — “நம இத்யேவ யோ ப்ரூயாத் மத் பக்த: ஶ்ரத்தயா அந்வித: |
தஸ்ய அக்ஷயோ பவேல்லோக: ஶ்வபாகஸ்யாபி நாரத ||”
இத்யாதி வசநாநி தத் பஹு மந்தவ்யத்வ நிஶ் ஸ்ரேயஸ ப்ராப்த்யாதி-வ்ருத்தாந்தாஶ்ச ஸாலம்பநா : |
ஏவம் ந கிம்சிதபி ஶாஸ்த்ரம் குப்யேத், வ்யவஸ்தித விஷயத்வாத் |(அதிகாரிகள் வேறே வேறே -சாஸ்திரம் வீணாகாதே )

இனி தேச கால வாசி இல்லாமல் பலன் கிட்டும் என்பதற்கு பிரமாணங்கள் காட்டி அருளுகிறார்

நரன் ஸதா -அனைவருக்கும் அதிகாரம் -எப்பொழுதும் நாமங்களை சொல்லிக் கூப்பிட கால தேச அபேக்ஷை இல்லையே
ஸதா -தேசத்துக்கும் காலத்துக்கும் -உப லக்ஷணம்

ஸதேதி கால விஸேஷாந் அபேக்ஷத்வம் ;
தேச ஶௌசாதி விஸேஷாந் அபேக்ஷாயா அபி ப்ரதர்ஶந மேதத் |
தேந அயந ர்து மாஸ பஷ நக்ஷத்ர முஹுர்த விஸேஷஸவ்ய பேஷேப்ய: ப்ரகர்ஷ: |

அத்ர ச “சக்ராயுதஸ்ய நாமாநி ஸதா ஸர்வத்ர கீர்தயேத் |
நா ஶௌசம் கீர்தநே தஸ்ய பவித்ரம் பகவாந் ஹரி:||”,(விஷ்ணு தர்மம்)

“ப்ராதர் தேவேதி க்ருஷ்ணேதி கோவிந்தேதி ச ஜல்பதாம் |
மத்யாஹ்மே சாபராஹ்ணே ச யோ அவஸாத: ஸ உச்யதாம் ||(பிரகலாதன் ஜல்பிக்க உபதேசம் )
” இத்யேதாநி ருஷி வசநாநி த்ரஷ்டவ்யாநி |

ந ஹி பகவத: ப்ரயத அப்ரயத அதிகாரி ஸம்ஸர்காத் உபகாத:,
தச் சௌசாதி ஸஹ காரி விரஹாத் தத் அநுக்ரஹா ஸாமர்த்யம் வா;(தூய்மை சஹகரிக்காது -அழுக்கு பாதிக்காது )
ப்ரத்யுத ஸ்வ ஸம்பந்த அயோக்யமபி புநாந: ஸ்வோசிதம் விதாய ஸ்வீகரோதி, பரம பாவநத்வாத் |(தனக்குத் தகுதியாக்கி அழைத்துச் செல்வான் )

அதோ ஹீத முதீர்யதே “நா ஶௌசம் கீர்தநே ” இத்யாதி|(கீர்த்தனம் பண்ணுவதே சுத்தியைக் கொடுக்கும்)

ஸதஸததிகாரி தாரதம்ய ஶாஸ்த்ராணி து உச்சா வசநாம் அதிகாரிணாம் பரஸ்பர ஸங்கரேண தர்ம ஸம் ப்லவோ மா ப்ரஸாங்க்ஷீதிதி |
ஸ்வரூபதோ அல்பீய நாபி ஸங்கீர்தநாதி: பலதோ மஹீயாந் |
யதாஹ — ”ஸ்வல்பம் அப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்” (2-40)இதி |
ந சாஸ்ய தர்மாந்தர வத் அபிக்ரம நாஶ: “நேஹா அபி க்ரம நாஸோ அஸ்தி” இதி வசநாத் |(நாம சங்கீர்த்தனம் தொடங்கி வீணாகப் போகாதே -தப்பாக பண்ணும் பாபமும் இல்லையே )
“ந மே பக்த: ப்ரணஶ்யதி”,
“யம் ப்ரணம்ய ந ஸீததி”,
“ந வாஸு தேவம் ப்ரணிபத்ய ஸீததி”,
“ஜநார்தநம் ப்ரணிபதிதோ ந ஸீததி” |
ந ச அயதா வித்யநுஷ்டாநாத் ப்ரபல ப்ரதிபக்ஷாத் வா ப்ரத்யவாய:”,
“ப்ரத்யவாயோ ந வித்யதே ” இதி |(நானும் சொன்னேன் -நமரும் உரைமின் -நாராயணா -நாரண -திண்ணம் நாரணனே -சுருக்கிச் சொன்னாலும் பாபங்கள் கிட்டாவே )
ந ச ஏதேஷாம் அர்த வாதத்வம் ஶக்ய ஶங்கம்; அநதி வாதித்வாத் ||(புகழ்ந்து பேசினது இல்லை உண்மையே )

இஹ பகவத் தத்த்வஜ் ஞாந பக்தி ப்ரதிபந்தக பாப நிர்ஹரண ஸத்த்வ ஸம்ருத்த் யாதி க்ரமேண தத் ப்ராப்த் யுபக்ரே உச்யதே |(பக்தி ஆரம்ப விரோதிகளை ஸத்வ குணம் வளர இருக்கும் விரோதிகளை நாம சங்கீர்த்தனம் பண்ணிக் கொடுக்குமே )
“பத்த: பரிகரஸ்தேந மோக்ஷாய கமநம் ப்ரதி”,(விஷ்ணு தர்மம் -நாராயணா மணி வண்ணா சொன்னாலே மோக்ஷம் என்றது பகவத் பிரபாவம் சொல்ல வந்ததே )
“யஸ்மிந் ந்யஸ்த மதிர் நயாதி நரகம் ஸ்வர்கோ அபி யச் சிந்தநே விக்நோ யத்ர நிவேஶித தாத்ம மநஸோ
ப்ராஹ்மோ அபி லோகோ அல்பக: |(சத்ய லோகமும் இவனுக்கு அல்பமே )
முக்திம் சேதஸி யஸ் : ஸ்திதோ அமதியாம் பும்ஸாம் ததாதி அவ்யய: கிம் சித்ரம் யதகம் ப்ரயாதி விலயம் தத்ராச்யுதே கீர்திதே ||
” இத்யாததௌ ச |

ந ஸைஷ: பூர்ணாஹுதி ந்யாயஸ்ய விஷய:, தஸ்ய அதிவாத விஷயத்வாத்; ஸம்கீர்தநாதி ப்ரகரணேஷு
ப்ராயேண வாக்ய ஸேஷத்வ- ப்ரார்தநாத் யர்தவாத லிங்க அதர்ஶநாச்ச |
கிஞ்ச ப்ரபல ப்ரமாண விரோதா பாவே அர்தவாத பதாநாம் அபி ஸ்வத: ப்ராமாண்யத: ஸ்வார்த பரித்யாகஶ்ச ஸாஹஸம், அந்யாய்யத்வாத் |

(பூர்ணாஹுதியே பலம் கொடுக்கும்-என்றாலே முன் பலவும் செய்ய வேண்டும் போல் நாம சங்கீர்த்தனமே பலன் கொடுக்கும்
என்றாலும் வேறே ஒன்றும் வேண்டாம் -தொடக்கத்துக்கு வேறே வேண்டாம் –
உடனே முத்தி என்பது இல்லை–மேலே மேலே பக்தி வளர்ந்து முக்தி)

(மேல் பக்தியை விதிக்கும் வலிய உபாயங்களை விதிக்கும் ஸாஸ்த்ரம் வீணாகாது என்பதையும் விளக்குகிறார்)

நநு, குரு தீர்க துஷ்கர தபஸ் ஸமாதி விஸேஷ ரூப மஹா தர்ம ஸாத்ய தத்த்வ ஜ்ஞாந உபக்ரமஸ்ய
வாங்மாத்ர ஸாத்யத்வ வாதோ அப்யதிவாத:, குரு ஶாஸ்த்ர
வையர்த்ய ப்ரஸங்கேந ப்ரமாண விருத்தம் ச |

ததிதம் அவிதித பகவத் ப்ரபாவஸ்யச் சாந்தஸஸ்ய பைஶாசம் |(பகவத் பிரபாவம் அறியாதவன் பேச்சாகும்)
லகீயோ அபி பகவத் ஸங்கீர்தநம் துர் வஹாமபி துரம் தாரயத்யேவ |
குரு ஶாஸ்த்ர அநர்தக்யம், தஸ்ய ஸமர்த அதி காரத்வாத் |
அஸ்ய து ஸத்யஸதி வா ஸாமர்த்யே பகவத ஸாதாரண ருசி ஸமுசித பாக்யவத்  அதிகாரத் வாச்ச |

கரீயஸோ அபி பகவத் ப்ரஸாத ஏவ பலஹேது: லகீயஸி கிம் தண்டவாரித: ?(பலம் கொடுப்பவன் இவனே விதி வாய்க்கின்று காப்பார் யார் )
யதா ச கரீயஸி ப்ரயோக வைபுல்யாத் தேவ: ப்ரஸீததி, ததா லகீயஸ்யபி பாவ ஶுத்தி விஸேஷாத் ப்ரஸீதேத் |(உள்ளத்திலே பாவ ஸூத்தி – அன்பு -ஆசை உடையார்க்கும் உண்டே)

யதோக்தம் – “ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ:”,(9)
“பத்ரம் புஷ்பம் பலம் தோயம்”,
“யோ ந வித்தை : ந விபவை : ந வா ஸோபி: ந பூஷணை : |
தோஷ்யதே ஹ்ருதயேநைவ கஸ்தமீஶம் ந பூஜயேத்||”,

வ்யாஸ ஸ்ம்ருதௌ —“தத்யாத் புருஷ ஸூக்தேந ய: புஷ்பாண்யப ஏவ வா | அர்சிதம் ஸ்யாஜ் ஜகதிதம் தேந ஸர்வம் சராசரம் ||”,
வைஷ்ணவை தர்ம் “ப்ருதிவீம் ரத்ந ஸ பூர்ணாம் ய: க்ருஷ்ணாய ப்ரயச்சதி|
தஸ்யாப் யந்ய மநஸ் கஸ்ய ஸுலபோ ந ஜநார்தந : ||” இத்யாதி |

(எண்ணாயிரத்து எச்சன் -பணக்காரன் -அடியார்களை மதியாமல் இழந்தானே)

பாவ பேத ஏக ஹி தர்ம அதர்ம நிதாநம், ந க்ரியா விஸேஷ: |(எண்ணமே முக்கியம் -செயல்களின் பஹுத்வம் இல்லையே )
யதா ஶ்ரீவிஷ்ணு தத்த்வே “பாவ ஶுத்திர் மநுஷ்யாணாம் ப்ரமாணம் ஸர்வ வஸ்துஷு |
அந்யதாஸ் அலிங்க்யதே காந்தா ஸ்நேஹேநே துஹிதா அந்யதா||”.

ததா, “தபோ ந கல்கோ அத்யயேம் ந கல்க: ஸ்வாபாவிகோ வேத விதிர் ந கல்க: |
ப்ரஸஹ்ய சித்தாஹரணம் ந கல்க: தாந்யேவ பாவோ பஹிதாநி கல்க:||”.(ஆதி பர்வம்)
அந்யத்ர “கங்காதி தீர்தேஷு வஸந்தி
மத்ஸ்யா தேவாலயே பக்ஷி ஸங்காஶ்ச நித்யம் | பாவோஜ் ஜிதாஸ்தே ந பலம் லபந்தே தீர்தாநி புண்யாயதநாஶ் ச முக்யா:||” இதி |(மீன்கள் கங்கையில் -பறவைகள் கோயிலில் இருந்தாலும் பலன் இல்லையே )

உபபந்நம் ஸைதத் ஸர்வஜ்ஞஸ்ய அவாப்த ஸமஸ்த காமஸ்ய
அந பேக்ஷஸ்ய பகவதோ பாவ ஶுத்த்ய ஆராத்யத்வம், ந த்ரவிணகண அர்பணாதிநா ,
“யாதாதத்யேந பண்டித: (தம்)” இதி ந்யாயாத் |
தேஶ கால ஸஹ கார்யாதி வைகல்மய அபி ஸ்வல்பாதபி ஸமக்ராதிவ தேவ: ப்ரஸீதேத் |

ததுக்தம் – “த்யாயந் க்ருதே யஜந் யஜ்ஜை : த்ரேதாயாம்
த்வாபரே அர்சயந் | யதாப்நோதி ததாப்நோதி கலௌ ஸம்கீர்த்ய கேஶவம் ||” இதி |(விஷ்ணு புராணம்)

ததா- “விநிந்தாம் ப்ரதமே பாதே கரிஷ்யந்தி ஹரேர் நரா: (கலியுகத்தில் முதல் பாதத்தில்-90000 வருஷங்களில் ஹரியை நிந்திப்பார்கள்) | யுகாந்தே ச ஹரே நாம நைவ கஶ்சித் க்ரஹீஷ்யதி ||(இறுதியில் சொல்ல முயன்றால் -ஆசைப்பட்டால் -ஆசைப்பட முயன்றால் திருப்தி ஆவான்)
தந்யாஸ்தே புருஷ வ்யாக்ர பவாம் போதாவ மாயிந : |
யத்நே நாபி கலௌ விஷ்ணோ : க்ரஹீஷ்யந்தி
அக்ஷயாத்மந:”. யுஜ்யதே ஸைதத் |

ஸுஶீலோ ஹி ந்ருபதி: பிதராவிவ
க்ருச்ச்ரேஷு கிஞ்சிந் நயாய வ்ருத்தமபி பஹுபகாரிணமிவ அநுக்ருஹ்ணீதே |

அத ஏவ தைவ பித்ர்ய ப்ராயஶ் சித்தாதிஷு
தேஶ காலோபபத்த்யாதிவஶேந அதிநிம் நோந் நதாநாம் அபி ப்ரயோகாணாம்
துல்ய கக்ஷ்யத் வேந மவே விதிஸ் :, ஶிஷ்டைஸ் ததா அநுஷ்டாநம் ச |

(எட்டு வித ஸ்ரார்த்தம் சாஸ்திரத்தில் உண்டே-ஒரே பலன்-ஆபத்துக் காலத்தில்
கையைத் தூக்கி ஒன்றும் பண்ண முடியவில்லை என்று சொன்னாலே போதுமே)

அத ஏவ யதா ஸர்வ ஸ்வ ஸாத்ய ப்ரயோக விஸ்தாரஸ்ய ஸ்தாநே
ஸ்வ அநுபபத்தி க்யாபந மேவ ஆபதி ஶ்ராத்த ப்ரத்யாம் நாநம்,
யதா வா தத் தத் கர்ம தௌஷ் கர்யே தத் தந் மந்த்ர ஜப: இத்யாதி |

எட்டு காரணங்கள் –தர்மே அதிகமத: பீஷ்ம மத-நாம சங்கீர்தன மஹிமை மேல்

ததேவம் ப்ரிய தம விஷய தயா -1-ஸுக க்ரியத்வாத் -2-வ்யய ஆயாஸ ரஹித தயா ஸுகரத்வாத்,
3-அநதி பரோக்ஷ ஆத்ம நாத ப்ரீணந பாவேந ஆகர்ஷகத்வாத்,
4-அதி லாகவே அபி அதி குரு-துர்வஹ -பவ பயோந் மூல நமஹா பலத்வாத்,
5-அப்ரத்யவாய வத்த்வாத், 6-ஸுபிக்ஷாதிகாரி தயா விஶ்வ ஜநீநத்வாத்,
7-தேஶ கால தஶா விஸேஷாதி விஷேப வர்ஜநேந நிர் வ்யாஜத்வாத்,
8-விஷய (பகவத் )ப்ரபாவேந நிஷ் ப்ரத்யூஹத் வாச்ச இத்யேவம் ப்ரகாரேப்யோ ஹேதுப்ய:
பகவத் அஸாதாரண ஸம் கீர்தநாதி தர்மே அதிகமத: பீஷ்ம மத: |

அந்யேஷாம் அபி பரமர்ஷீணாம் “ஸர்வேஷாேம் அபி தர்மாணாம் உத்தமோ வைஷ்ணவோ விதி: |
ரக்ஷதே பகவாந் விஷ்ணு: பக்தாந் ஆத்ம ஶரீரவத்||”,
“கோவிந்த பக்த்யப்யதிகம் ஶ்ரேயஶ் ச அந்யத் ந வித்யதே ” இத்யாதி:தாஹார்ய: || 8 ||

சா ஆலம்பன -6-கேள்வி
அலகு உபாயம்-ஸாத்ய ஸித்த உபாயம் பற்றிய -பக்தி யோகம் பற்றிய -4-கேள்வி
லகு உபாயம் 3-கேள்வி-பத்து பெருமைகளை சொல்லி அவனை ஸ்தோத்ரம் பண்ண –
ஸித்த  உபாயம் -5-கேள்வி-நரன் -அனைவர்க்கும் யோக்யதை உண்டே
இதுவரை உபாய பரமான நான்கு கேள்விகளுக்கும் பதில் பார்த்தோம்

———–

5- பரம ப்ராப்யம் என்னும் உபேய விஷயமான வினாவிற்கு விடை
அவதாரிகை
இதற்கு விடை அளிக்கத் தொடங்கிப் பரம ப்ராப்யம் இன்னது என்பதை விளக்குகிறார்
இதில் சொல்லப்படும் விசேஷணங்கள் ஆறும் பகவத் ஸ்வரூபம் மிகவும் ஆசைப்படும்படி இருக்கும்
என்பதைக் காட்டுவதால் அதுவே பரம புருஷார்த்தம் என்பது விளங்குகின்றது

பரமம் யோ மஹத் தேஜ: பரமம் யோ மஹத் தப: |
பரமம் யோ மஹத் ப்ரஹ்ம பரமம் ய: பராயணம் ||–9-

பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாணாம் ச மங்களம் |

இரண்டாவது வினாவிற்கு விடை
எவர் ஒப்புயர் அற்ற பேர் ஒளியாய் இருப்பாரோ
எவர் தேவர்களையும் ஆள்வதால் சிறந்த பெரும் தவமோ –
தபஸ் -கட்டளை இடுதல் -மஹேஸ்வரன் -என்று பொருள் கூறி இதற்கு ஸ்ருதி ப்ரமாணங்களைக் காட்டி அருள்கிறார்
ஆஜ்ஜா பயதி-என்று கட்டளை இடுகிறார் ஸ்ருதி வாக்கியம் உண்டே –
எவர் அளவற்ற கல்யாண குணங்களாலும் எங்கும் வியாபித்து இருப்பதனாலும்
தம்மைச் சேர்ந்தவரைப் பெருகும்படி செய்வதாலும்
எல்லாவற்றுக்கும் சிறந்த பர ப்ரஹ்மமோ
எவர் பரிசுத்தம் செய்யும் அனைத்தையும் பரிசுத்தப்படுத்து கின்றாரோ
எவர் சிறந்த மங்களுக்கு எல்லாம் மங்களமோ
அவரே எல்லாவற்றுக்கும் முடிவான பரம புருஷார்த்தம்

அத உபேய ப்ரஶ்நம் ப்ரதிவதந் ஸ்ரீ மந் நாம ஸஹஸ்ர ஶ்ரவணாய தர்ம ராஜோ நியுஜ்யதே பரமம் ய: இதி சதுர்பி: |

நான்கு இடத்தில் பரமம் -உயர்வற உயர் நலம் உடையவன் –எவன் –எவன் எவன் -அவன் -துயர் அடி தொழ வேண்டும் போல் இங்கும் நான்கும் பிரஸித்தம்

யார் பேர் ஒளியோ -மிகச் சிறந்த -தன்னைக்காட்டிலும் மேம்பட்டது இல்லாத
தபஸ் -ஈஸ்வர சாமர்த்தியம் –
ப்ரஹ்ம -எங்கும் வியாபித்து பெரிய -தன்னை அண்டியவர்களையும் ப்ரஹ்மம் ஆக்கும்
சஹா பராயணம் -இருக்க ய பராயணம் -பிரசித்தம் அன்றோ

தர்ப்பம் கங்கா தீர்த்தம் பவித்ரம் -மஞ்சள் போல்வன மங்களப் பொருள்கள்

தத்ர ப்ரதமேந ஸார்தேந கிம் வா அப்யேகம் பராயணம் இதி த்விதீயம் ப்ரத்யாஹ |(இரண்டாம் கேள்விக்குப் பதில் )

தேஜ ஆதிபி: ந பும்ஸக லிங்கை : ய: இதி ஸமபி வ்யாஹாரேண லிங்க வைரூப்யம் ந ஶக்யம் |(பலர் வந்தனர் லிங்கம் -தேஜஸ் -நபும்ஸக லிங்கம் -சொல் -ய புல்லிங்க சொல் -தப்போ என்று நினைக்க வேண்டாம் -வியாகரணம் படி சரியே )
லிங்க ஸம்க்யாப்யாம் பூர்வம் விஸேஷி தஸ்ய பதஸ்ய
பதாந்தர ஸமபி வ்யாஹாராத், தல் லிங்க ஸம்க்யா விஸேஷேண
அவிஸேஷ்யத் வாச்ச விஸேஷ் யஸ்ய, “வேதா: ப்ரமாணம்“, “தத்த்வம் நாராயண: பர:” இதிவத் |

பரமம் அடைமொழி தேஜஸ்ஸுக்கு உண்டே -வேதா புல்லிங்க பஹு வசனம் பிரமாணம் நபுஸிம்ஹ ஏக வசனம் போல் இங்கும்

ஸர்வதா ஸ்ப்ருஹணீய தமத்வேந பரம புருஷார்த க்யாபகாநி பரம தேஜஸ் த்வாதீநி ஷட் விஸேஷணாநி |(ஆறு விசேஷணங்கள்)
தேஜ: – ஸ்வபாவத ஏவ பாஸ்வரம், அந்ய அவ பாஸகஞ்ச | (இவனுக்கே இயற்கையில் தேஜஸ் மற்ற தேஜஸ் பதார்த்தங்களை ஒளி உடையவையாய் ஆக்குகிறார் )“பரம் ஜ்யோதி ருப ஸம்பத்ய”,(சாந்தோக்யம் )
“தஸ்ய ஆதித்யோ பாம் உபயுஜ்ய பாதி” (ஒளியை இரவல் வாங்கிக் கொண்டு மினுக்கிக் கொண்டு இருக்கிறான் )இதி பாஸ்வரத்வஸ்ய நிஸ் ஸீமத்வம்

மஹதிதி |
பரம் இதி ச ஸம அதி ஶாய்ய ஸம்பவ: |(பரமம் மஹத்–மிகப் பெரியது என்றும் தன்னை விட பெரியது இல்லை என்றும் என்பதால் இரண்டு பத பிரயோகம் )
ஏவம் உத்தரத்ராபி யதா விஸேஷ்யம்  | (தபஸ் ப்ரஹ்மம் பராயணம் என்கிற இடங்களிலும் இதே அர்த்தம் கொள்ள வேண்டும் )

ஈஷ்டே ஸர்வஸ்யேதி தப: | யதா“யோ தேவேப்ய ஆதபதி”,
“தமீஶ்வராணாம் பரமம் மஹேஶ்வரம்”,-ஸ்வேதாஸ்வரம்
“ஏஷ ஸர்வேஶ்வர:” (ப்ரஹ்ம தாரண்யம் )இத்யாதி |

அநவச் சிந்ந கல்யாண ஸ்வரூப குணத்வேந -ப்ருஹத்த்வாத், ஸர்வ ஶக்தித்வேந -ஸர்வ ப்ரும்ஹணத்த்வாச்ச ப்ரஹ்ம |(தானும் ப்ரஹ்மம் அண்டினவர்களையும் ப்ரஹ்மம் ஆக்கி அருளுகிறவன் )

பவித்ராணாம் மத்யே பரமம் மஹத் பவித்ரம்;
பவித்ரம் –ஶுத்தி விஸேஷ ஹேது: |
ஶுத்திஶ்ச –தோஷ விஸேஷ நிர்மோக: |
தோஷஶ்ச–ரஜஸ் தமஸ் :ப்ராய பரிணாம பேத ஆஸ்பதத்வம் அசேதநஸ்ய;
சேதநஸ்ய து-தத் பரிரம்ப ஸம்பவ: அவித்யா பகவத் அபராத ராக த்வேஷாதி: |
தம் பகவாநேவ ஸமூலகாஷம் கஷதி (வேரோடு பிரதிபந்தகங்களைப் போக்கி அருளுபவர் இவனே )| தஸ்யைவ ஸர்வதா தத் விரோதி ஸ்வபாவத்வாத்|(அகில ஹேய ப்ரத்ய நீகன் இவனே )

பவித்ரமாவது சுத்திக்கு காரணம்
சுத்தி -தோஷ நிவ்ருத்தி
தோஷம் இரண்டு வகைப்படும் –
அவை ரஜோ தமோ குணங்களால் விகாரப்படும் அசேதனத்தின் தோஷமும்
அசேதன சேர்க்கையால் உண்டாகும் அஞ்ஞானம் பகவத் அபராதம் ராக த்வேஷம் முதலிய சேதன தோஷங்கள் ஆக இரண்டும்

ஏவம் பூத துக்கமும் சுகமும் இவனுக்கு உண்டாக ஹேது என்ன சொல்லுகிறது மேல்-அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது
மறந்தேன் அறியகிலாத உணர்விலேன் ஏணிலேன் அயர்த்து என்றும்
உய்யும் வகை நின்ற ஒன்றை நன்கு அறிந்தனன்
உணர்வினுள்ளே ஆம் பரிசு என்றும்
சொல்லுகிற ஞாதவ்ய பஞ்சக ஞான -அஞ்ஞானங்கள் –ஆதித்ய ஹ்ருதயம் -சூரணை-5-

க்ரோஶந்தி ச ஶாஸ்த்ராணி—”ஏதம் ஹ வா வந தபதி”,(தைத்ரியம் ஆனந்த வல்லி-அறிந்தவன் மோக்ஷம் பற்றி தபிக்க மாட்டான்)
“தத்யதா புஷ்கர பலாச ஆபோ ந ஶ்லிஷ்யந்தே (சாந்தோக்யம் )”“தத் யதா இஷீக தூலம் அக்நவ் ப்ரோதம் ப்ரதூயேத”,,(மெய் மேல் வினை முற்றவும் சாரா -தீயில் இட்ட பஞ்சு -தாமரை இலைத் தண்ணீர் போல் போய பிழையும் புகுதருவான் நின்றனவும்- பூர்வாகம் உத்தராகம் -)

“தத் ஸுக்ருத துஷ்க்ருதே தூநுதே ”,(கௌஷீகதம்)
“ததா வித்வாந் புண்ய பாபே விதூய”,(முண்டகம்)
“ஷேத்ரஜ்ஞஸ்ய ஈஶ்வரஜ்ஞாநாத் விஶுத்தி: பரமா மதா”,(வியாக்யவல்க ஸ்ம்ருதி)

“த்யாயேத் நாராயணம் தேவம் ஸ்நாநாதிஷு ச கர்மஸு |
ப்ராயஶ் சித்திர் ஹி ஸர்வஸ்ய துஷ் க்ருதஸ்யேதி வை ஶ்ருதி: ||”,(த்யானித்தே குளிக்க உள் அழுக்கு போகும்)

“யோ மாம் அஜம் அநாதிம் ச”,(10-3)
“பாவந : ஸர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தந ”,(சபரி வார்த்தை )
“ப்ராயஶ் சித்தாநி அஸேஷாணி” இத்யாதி ப்ராயஶ் சித்த ப்ரகரணம் கார்த்ஸ்ந்யேந |(விஷ்ணு புராணம்-முழுவதுமான இடங்களில் பகவத் சம்பந்தமே பராயணம் )
“யதா அக்நி ருத்த தஶிக: கஷம் தஹதி ஸாநில: | ததா
சித்தஸ்திதோ விஷ்ணு: யோகி நாம் ஸர்வகில்பிஷம்||” இதி |(நெருப்புடன் காற்று சம்பந்தம் போல் சித்தத்தில் பெருமாள் உடன் யோகி சேர அனைத்தும் போகுமே )

அந்யஸ்யாபி தீர்தாதே : பவித்ரத்வம் தத் ஸம்ஶ்லேஷ ஆயத்தம் தர்ஶயதி பரமம் மஹத் இதி விஸேஷணாப்யாம் |(இவன் சம்பந்தத்தால் கங்கா தீர்த்தாதிகள்; பாவனத்வம் -ஆகவே இவனே பரமமும் மஹத்தும் )
ந கலு ஸ்வபாவ மலிநா நாம்
(அ)சேதநா நாம் ததுபஹ தாநாம் வா தேவாதீநாம்
ஸ்வ ஸத்ருஶ வஸ்த்வந்தர ஸோதகத்வம் யுக்திமத் |
அத ஏவ பராஶர ஶௌந காதிபி: ஶுபாஶ்ரய ப்ரகரணாதிஷு தத் ஸம்ஶீலநம் நிஷித்யதே ,(பாபம் போக்குவது சுபம் -தியானத்துக்கு இருப்பிடம் ஆஸ்ரயம் -இவனது திருமேனியே ஸூபாஸ்ரயம் )

தத் அர்ச்சனம் பாத சேவா பாவனத்வம் பிரசித்தம்-மற்ற தேவதாந்த்ரங்கள் தள்ளுபடி ஆகுமே

“அஶுத்தாஸ்மத ஸமஸ்தாஸ்து தேவாத்யா: கர்ம யாேநய:”,க்மராஶந்தி ச ஶாஸ்த்ராணி—(விஷ்ணு புராணம் ஆறாம் அம்சம் -மற்றவர்களுக்கு கர்ம வஸ்யத்வம் உண்டே )

“ஆப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா: ஜகதந்தர் வ்யவஸ்திதா: | ப்ராணிநா : கர்ம ஜநித ஸம்ஸார வஶவர்திந : ||” இத்யாதிஷு |
தத்ர தேவதாநாம் பாவநத்வம் ததுபாஸந அர்ச்சன பாதோதக ஸேவாதிநா ப்ரஸித்தம்;(விஷ்ணு தர்மம் -தத் அர்ச்சனம் பாத சேவா பாவானத்வம் பிரசித்தம்-சரீர ஆத்ம மனஸ் சுத்திக்கு மூன்று தரம் அவன் சம்பந்த தீர்த்தம் )
தீர்த ஆய தநாத: தத் ஸாமீப்யாத்; யதா கங்காயா: வைஷ்ணவே
“விஷ்ணு வாம பதாங்குஷ்ட விநிஸ் ஸ்ருதஸ்ய ஜலஸ்ய எதந் மஹாத்ம்யம்”இதி;(விஷ்ணு புராணம் கங்கை கங்கை என்னும் வாசகத்தாலே பரம பாவனத்வம்-இடது திருவடிக்கட்டை விரல் சம்பந்த தீர்த்தமே கங்கை -)

விஷ்ணோர் ஆயதநம் ஹ் யாப: ஸ ஹ்யபாம் பதிருச்யதே “ இத”ஜல மாத்ரஸ்ய ச |(ஆப முதலில் ஸ்ருஷ்ட்டி பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து தீர்த்தம் -அபாம் பதி அவனுக்கு திரு நாமம் -மனத்துள்ளான் மா கடல் நீர் உள்ளான்)

காலஸ்ய ச ததவதார தத் தைவத்ய தச் சயநோத் தாநவத்த்வாத் த்வாதஶீ ஜயந்தீ ஶ்ரவணாதிவத் தத் ஸம்பந்தாத்|(ஏகாதசி திருவோணம்-நவமி -அஷ்டமி அவன் சம்பந்தத்தால் ஏற்றம் )
ஆத்ம குணாநாம் ஶமாதீநாம் தஜ் ஜ்ஞாந அநு குண்யாத் க்ரியாணாம் ச(சமதமாதி குணங்கள் அவனை அறிய உதவுவதால் ஏற்றம்)
யஜ்ஞ தாந தபஸ் :ஶ்ராத்த ப்ரப்ருதீ நாம ததாராதேத்வாத் |

ப்ராஹ்மணாதி ஜாதே :
தத் பரவேதாத் யயநாதௌ ஸாக்ஷாததிகாராத் ; யதா
“விஷ்ணும் காந்தம் வாஸு தேவம் விஜாநந் விப்ரோ விப்ரத்வ மாயாத் தத்த்வ தர்ஶீ” இதி |(ப்ராஹ்மணனுக்கு நேராக ஸாஷாத் அதிகாரம் -வேதம் கற்று கற்பிக்க வேண்டுமே )

ஶ்ருதி ஸ்ம்ருத்யாதே : தத் பரத்வாத் தச் சாஸநத் வாச்ச,
“நாராயண பரா வேதா:”,
“ஶ்ருதிஸ் மதீ மமை வாஜ்ஞா” இதி |(விஷ்ணு தர்மம்)
ஆரண்யகே தீர்த யாத்ராயாம், “புண்யா த்வாரவதீ” இத் யுபக்ரம்ய,
“ஆஸ்தே ஹரிர சிந்த்யாத்மா தத்ரைவ மது ஸூதந : | தத் புண்யம் தத் பரம் ப்ரஹ்ம தத் தீர்தம் தத் தபோவநம் ||(வன பர்வம் அவன் சம்பந்தத்தால் துவாரகைக்கு ஏற்றம் )

இதி தத் ஸம்பந்த ஹேதுகம் தேஶஸ்ய பாவநத்வ மபிதாய
“பவித்ரணாம் ஹி கோவிந்த: பவித்ரம் பரமுச்யமத |
புண்யாநாமபி புண்யோ அஸௌ” இத்யேவமேவ ஸ்பஷடம் நிகம்யதே ||

பவித்ராணாம் பவித்ரம் என்பதால் இந்த தோஷங்களை வேரோடு களைந்து எறியும் பரம பாவனன் என்கிறது
பரிசுத்தி செய்பவர் என்றதனால் பகவத் சம்பந்தத்தினாலேயே கங்காதி தீர்த்தங்களும் இதர தேவதைகளும் க்ஷேத்ர விசேஷங்கசளும்
கால விசேஷங்களும் பரிசுத்தி கரங்கள் ஆகின்றன
ஆதலால் அவனே பரம பாவனன் என்று பல ஸாஸ்த்ரங்களின் ஆதாரங்களால் விளங்கும்

பவித்ரம் விளக்கி இனி மங்கள விளக்கம்

ஸுரபிஸ் ரகங்கராக ஸுர ஸுந்தரீ ஸுதார ஸாதிப்யோ
நிரஸ்த ஸமஸ்த ஸம்ஸார நிர்மல நிர் மர்யாத ஸ்வ ரஸ
ஸம்வித ஆநந்த ஸாந்த்ராத் ப்ரத்ய காத்ம நஶ்ச அத்யந்தம்
அபிலஷணீ யத்வாத் மங்கலாநாம் ச மங்கலம் |

அத: பரமம் ய: பராயணம்- ப்ராப்யம் | ப்ரபஞ்சயிஷ்யதே சைதத் ||(பின்னால் மேலும் விளக்குவோம் )

ய: ஏவம் ஸ: பரமம் பராயணமிதி விதாய ப்ரதி வக்தவ்யே ய:
பராயணமிதி ஸித்தவதநுவாத: ஶாஸ்த்ர ப்ரஸித்த யதிஶய ப்ரதர்ஶ நார்த: || 9 ||

வாசனை மிகுந்த பூ மாலை சந்தனம் தேவ ஸ்த்ரீ அம்ருத ரசம் முதலியவைகளும்
சம்சார பந்தம் முழுவதும் நீங்கி அதி பரிசுத்தனாகி இயற்கையில் அளவற்ற ஞான ஆனந்த ரூபனாக விளங்கும்
ஜீவாத்மாவைக் காட்டிலும் பரமாத்மா மிகவும் ஆசைப்படும் படி இருத்தலால் அவனே மங்களங்களுக்கு எல்லாம்
சிறந்த மங்களம் என்கிறார்

பரமம் யஸ் பராயணம் என்பது மூலம்
ஸ பராயணம் என்று இல்லாமல் யஸ் பராயணம் என்றது
ஸகல ஸாஸ்த்ரங்களிலும் அவனே பரன் என்பது ப்ரஸித்தம் என்று தோற்றுதற்காகவே –

———————

யார் முழு முதல் கடவுள் கேள்விக்குப் பதில்-ஜகத் காரணத்வம் -அகில காரணம் அத்புத காரணம் நிஷ் காரணம் -ஆதியுகாகமே-ஆதி யுக ஆகமே முதல் யுக தொடக்கத்தில் -நிமித்தம் ஸ்ருஷ்ட்டி லயம் உபாதானம் -ச காரம் ஸஹ காரி-தானோர் வித்து தனி வித்து ஓர் வித்து சதேவ ஆஸீத் ஏக மேவ ஆஸீத் அத்விதீயம் ஆஸீத் -வேர் முதலாய் வித்தாய் -முதல் தனி வித்தேயோ –

பர தத்வ ரூபமான உபேய விஷயமான வினாவிற்கு விடை
(தைவதம் –பாப பயாபஹம் )

தைவதம் தேவதானாம் ச பூதானாம் ய அவ்யய: பிதா ||–10-

யத:, ஸர்வாணி, பூதானி, பவந்தி, ஆதியுகாகமே |
யஸ்மின், ச, ப்ரளயம், யாந்தி, புன:, ஏவ, யுகக்ஷயே ||–11-

தஸ்ய, லோக ப்ரதானஸ்ய, ஜகன்னாதஸ்ய, பூபதே |
விஶ்ணோ:, நாம ஸஹஸ்ரம், மே, ஶ்ருணு, பாபபயாபஹம் ||–12-

அத “கிமேகம் தைவதம்” இதி ப்ரதமம் ப்ரஶ்நம் ப்ரதி ப்ரூதே – தைவதமிதி ஸார்தேந |(10 ஸ்லோகம் 11 ஸ்லோகம் முதல் பாதியால்)

ஸ ஏவ தேவதாநாம் விதி ஶிவ ஶத மகாதீநாம் மஹா தைவதம் தத்த்வம் |

குத:? தேஷாமேவ பூதாநாம் ஸத்பாவ பாஜாம் பிதா,
யதஸ் தஸ்யா அர்வாசீந பித்ருப்யோ விஸேஷ: அவ்யய: இதி |(இவனே அழிவில்லா பிதா–பூதா இருப்பை உடையவை ஸத்பாவமே இவனாலேயே-கண்ண நீர் பாய்ச்ச வேண்டாதா தாய் தந்தை -எவ் உயிர்க்கும் தாய் தந்தை )

ந ஹி தேந ஸநாதநேந பித்ருமந்த: கதாசிதநாதா:|

பித்ருத்வம் உபபாதயதி யதஸ் ஸர்வாணீதி | யத: நிமித்த காரணாத்| ஸர்வாணி த்ருஹிண த்ருமாவதீநி |
பூதாநி பவந்தி – ஜாயந்தே | யத்யபி ப்ரஹ்ம ஸர்காதுபரி அவாந்தர ஸர்கே
ச ப்ரஹ்மாதி முகேந ஸ்ருஜதி, அதாபி ப்ரதம ஸ்ருஷ்டௌ ந ததேதி ஸூசயதி ஆதியுகாகம இதி |

உபாதான -சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம்
நிமித்த -ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம்
ஸஹ காரி- ஞான சக்தியாதி விஸிஷ்ட ப்ரஹ்மம் –

உபாதாந காரண அபி தமேவாஹ | அந்திமே (கடைசி யுகம் -இல்லாதவற்றைத் தருவித்துக் கொள்ள வேண்டும்) யுக க்ஷயே புந: யஸ்மிந் நேவ தாநி ப்ரலயம் யாந்தி – ப்ரலீயந்தே |
லய: கலு உபாதாநே ஏவ கார்யஸ்ய, யத ஊர்ண அபிதந்த்வாதே : லாலாதௌ |(கடல் அலை சிலந்தி மயில் தோகை –மூன்றும் ப்ரஹ்மம் ஸ்ருஷ்டிக்கு த்ருஷ்டாந்தங்கள்)
ஸ்திதி ப்ரவ்ருத்த்யாதி ஹேதுத்வம் ஸஹ காரி காரணத்வம் ச சகாரேண த்யோத்யதே |(ச காரம் -ரக்ஷணம் அர்த்தமும் -ஸஹ காரி காரணம் -இரண்டும் கொள்ள வேண்டும் -அகில ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே)

ஏவம் லக்ஷணகம் ஹி பர தத்த்வம் ஶ்ரூயதே
“யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே ” இத்யாததௌ |(தைத்ரியம் ப்ருகு வல்லி)
ஸூத்ர்யதே ச “ஜந்மாத் யஸ்ய யத:” இதி |

அஸ்ய ஸைவ த்ரிவித காரணத்வம் ச “ப்ரஹ்ம வநம் ப்ரஹ்ம ஸ வ்ருக்ஷ ஆஸீத்” இத்யுதாஹ்ருத்ய(அஷ்டகம்-காடாகவும் மரமாகவும் ப்ரஹ்மமே )
“ப்ரக்ருதிஶ் ச ப்ரதிஜ்ஞா த்ருஷ்டாந்தாநுபமராதாத்”(ப்ரஹ்ம ஸூத்ரம்-1-4-23-ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும் -ப்ரதிஜ்ஜைக்கு திருஷ்டாந்தம் இதுவே -ஸமஸ்த ஜகத்துக்கும் ப்ரஹ்மமே காரணம் )இத் யதிகரமண நிரணாயி |

ஏதேந “உபாதாநம் து பகவாந் நிமித்தம் து மஹேஶ்வர:” இதி காரண பேதேந அநபிமத மஹேஶ்வர வாதோ ந வைதிக: |(வேதத்துக்கு ஒத்துக்கொள்ளாத வாதம் )

ந ச ஜகதுபாதாநத்வாத் பகவதி விகாராதி தோஷ ப்ரஸக்தி: |
ஸ்வ ஶரீரதயா பரிக்ருஹீத ப்ரக்ருத் யாத் யேகதேஶ த்வாரகத்வம் பரிணாமாதே :
ஊர்ணநாபி த்ருஷ்டாந்த அவஷ்டம்பேந உபபாதயந்தீ தத்ர பவதீ ஶ்ருதிரேவ பர்யஹா ர்ஷீத் |

(உபாதானம் -மண் மாறி குடம் -இவனோ அவிகாராய -ஸ்வரூபம் மாறாது -பிரகிருதி சரீரம் மாறலாம்
சரீராத்மா பாவம் கொண்டே சமன்வயப் படுத்த வேண்டும்-சிலந்தி சிலந்தி கூடு த்ருஷ்டாந்தம் போல் )

அத்ராபி விதாதவ்யே யோ தைவதமித் யநுவாத: ஶாஸ்த்ர ப்ரஸித்தி ப்ரதர்ஶந பர: |(ஸஹ வர வேண்டும் இடத்தில் யஸ் எவன் என்று சொல்லி இருப்பது பிரஸித்தம் என்பதால்
இப்படி இருப்பவர் யாரோ -இருப்பது ஸாஸ்த்ர ப்ரஸித்தம் என்றவாறு)

ததா ஹி உபநிஷதாதிஷு பரதத்வஸ்ய லக்ஷண தத்வஸ்தித் யுபாஸந ப்ராப்தி
ப்ரதிபாதந இனம் பர்ய அபர்யவஸாயிஷு ஸதஸத் ப்ரஹ்ம அக்ஷர அதிபதை : நிருபபதை :(ஸத அஸத் ப்ரஹ்ம அக்ஷர அதிபதை–சொற்கள் பர்யவஸான பர்யந்தம் அர்த்தம் கொள்ள வேண்டுமே-உப பதம் கையில் வஜ்ராயுதம் பிடித்த இந்திரன் என்றாலும் ஸ்ரீ மன் நாராயணனே -இவன் அந்தர்யாமியாய் இருந்தால் தானே இவனுக்கு சத்தை -முக்கியமான வேதாந்த அர்த்தம் -)
பரமாத் யுபபத ஸநாதைஶ்ச ஸாமாந்ய வாசிபி:
நிர்திஶ்ய மாநஸ்ய விதி ஹரி ஶிவாதி விஸேஷ பர்யவஸித ஆ காங்க்ஷாயாம்

“நாராயண பரம் ப்ரஹ்ம தத்த்வம் நாராயண: பர:”,(தத்வம் ஆத்மா ப்ரஹ்மம் தேஜஸ் நான்குக்கும் நாராயண -வேறே யாருக்கும் இல்லை என்பதால் பரம் பத பிரயோகம்)
“த விஷ்ணோ : பரமம் பதம்”,(பிராப்தியும் அவனே)
“யஸ்மாத் பரம் நா பரம் அஸ்தி கிம்சித்”,(கட உபநிஷத் -இன்றும் என்றும் நேற்றும் நாளையும் இவனை விட மேம்பட்டது இல்லை)
“புருஷாந்த பரம் கிம்சித்”,(7-7)
“உத்தம : புருஷஸ் த்வந்ய:” (15)இத்யாதிபி: கண்டோக்திபி:,(சேநா தூளித –சாரத்ய வேஷமே மாம் ) ஸ்ருஷ்டி வாக்ய கதி ஸாமாந்யாத்,(வார்த்தைகளின் போக்கே -கதி சாமான்யம்)

(யன் மூல காரணம் –ஸ்ருஷ்டி வாக்கியம் -ப்ரஹ்மம் சத் ஆத்மா -நாராயண ஸ்திதி மஹா உபநிஷத்
ஸூ பால உபநிஷத்துக்கும் அத்தையே தொடர்ந்து சொல்லும்
திவ்யம் தேவன் ஏகம் நாராயணன்)

தத்த்வ பர புருஷ ஸூக்த- உத்தர நாராயண-ப்ரப்ருதி ப்ரபல ப்ரதேஶாந்தர தாத்பர்யாத்,
ஸுபால மைத்ராயணீய மஹா உபநிஷச் சாந்தோக்ய தைத்திரீய ஐதரேய கடவல்லீ ப்ரப்ருதி
பஹு உபநிஷதுத் கோஷோண

ஸாத்விக இதிஹாஸ  புராண ப்ராசுர்யேண தேவதா பாரமார்த்யஜ்ஞ பராஶர பாராஶர்ய ப்ராசேதஸாதி (வால்மீகி போன்றவர்களும்) பரமர்ஷிமதை :

அஸ்யைவ
வேத ஸித்தாந்தத்வே ஸ்வ பரம ஆகம ஸம் ப்ரதிபத்த்யா ரூப ஆயுத வாஹந சாரித்ர விஸேஷாதி ஸாமர்த்யதஶ்ச
கலு பகவதோ நிரங்குச ஐஶ்வர்யம் ததிதர நிகர்ஷஶ்ச புத்திமதாம் ஸ்வத்யவஸாநம் |
தஹர வைஶ்வாந ராத்யதிகரணை : ஸமந்வயாத்யாய ஏவ ஸைவம் அத்யவஸஸு: அஸ்மதாசார்யா இதி ந அதி விஸ்த்ருணீமஹே ||(நம் முன்னோர் ஆச்சார்யர்கள் பலவாறு விளக்கி உள்ளார்கள் -நான் விரிவுக்கு அஞ்சி நிற்கிறேன் )

ததா ச ஸம்சிக்ஷிபு: யாமுநா சார்யா:, “த்வாம் ஶீல ரூப சரிதை :”(15)இத்யாதிநா |

த்வாம் ஶீல ரூப சரிதை: பரம ப்ரக்ருஷ்ட
ஸத்வேந ஸாத்த்விகதயா ப்ரபலைஶ்ச ஶாஸ்த்ரை: |
ப்ரக்யாததைவ பரமார்த்த விதாம் மதைஶ்ச
நைவாஸுர ப்ரக்ருதய: ப்ரபவந்தி போத்தும் ||ஶ்லோகம் 15 –

[ஐயோ!] எல்லோரையும் விட உயர்ந்தவனான உன்னை அஸுரர்கள் அறிந்து கொள்ள முடியாது.
உன்னை அறிந்து கொள்ளும் வகைகள்:
உன்னுடைய சீல (எளிமை) குணம், வேதத்தில் கொண்டாடப்பட்ட ரூபங்கள் மற்றும் திவ்யமான லீலைகள்
சுத்த ஸத்வத்தால் நிறைந்திருக்கும் உன்னுடைய பரம பதம்
தன்னிடம் இருக்கும் நன்மையினால் திடமாக இருக்கும் சாஸ்த்ரம்
உன்னைப் பற்றிய உண்மையை அறிந்தவர்களின் அபிப்ராயத்தின் மூலம்

தாத பாதாஶ்ச (கூரத்தாழ்வானும்- )“தத்த்வார்த தத் பர பரஶ் ஶத வேத வாக்யை :ஸாமர்த்யத:ஸ்ம்ருதி பிரப்யத தாத்ருஶீபி: |
த்வாமேவ தத்த்வ பர ஸாத்விக ஸத் புராணை :  தைவஜ்ஞதீ பிரபி நிஶ்சிநும: பரேஶம்||”,
“ரூபஶ்ரியா பரமயா பரமேண தாம்நா சித்ரைஶ் ச கைஶ்சிதுசிசத: பவதஶ் சரித்ரை : |
சிஹ்நை : அநிஹ்நவபதை : அபரைஶ்ச கைஶ்சித் நிஶ்சிந்வதே த்வயி விபஶ்சித ஈஶித்ருத்வம் ||” இதி ||(ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -23)

சர்வ ஸ்ருதிஷு அநுகதம் ஸ்திரம் அப்ரகம்ப்யம்
நாராயணாஹ்வயதரம் த்வாம் இவ அந வத்யம்
ஸூக்தம் து பவ்ருஷம் அசேஷ ஜகத் பவித்ரம்
த்வாம் உத்தமம் புருஷம் ஈசம் உதா ஜஹார–23-

எம்பெருமானே -தேவரீர் போலவே சர்வ வேதங்களிலும் ஓதப்பட்டும் -ஸ்திரமானதும் –
குதர்க்கங்களால் அசைக்க ஒண்ணாததும்
நாராயண திரு நாமத்தை உடையதும் நிர் துஷ்டமானதும் சர்வ லோக பாவனமுமான புருஷ ஸூக்தமோ என்றால்
தேவரீரை புருஷோத்தமராகவும் சர்வேஸ்வரராகவும் ஓதி வைத்தது

யந் மூல காரணம் அபுத்த்யத ஸ்ருஷ்ட்டி வாக்யை
ப்ரஹ்ம இதி வா சதிதிவ ஆத்மகிரா தவ தத்
நாராயணஸ் த்விதி மஹா உபநிஷத் பிரவீதி
ஸுவ்பாலிகீ ப்ரப்ருதயோபி அநு ஜக்முர் ஏநாம் –25-

ஸ்ருஷ்ட்டி பிரகரணத்தில் உள்ள காரண வாக்யங்களாலே -சத் என்றோ -ப்ரஹ்ம -என்றோ -ஆத்மா -என்றோ
எந்த வஸ்துவானது மூல காரணமாக அறியப்பட்டு இருக்கின்றதோ –
அந்த வ்யக்தி நாராயணனே என்று மஹா உபநிஷத்து ஓதுகின்றது–
இந்த மஹா உபநிஷத்தை ஸூபால உபநிஷத் முதலானவைகளும் பின் செல்லுகின்றன –

—————

அடுத்த ஸ்லோகத்துக்கு அவதாரிகை

ஏவம் ஸுநிர்ணீதயோ : ஸர்வ பரயோ : தத்த்வ ஹிதயோ : ஸர்வ யோக்யம் ஹித விஸேஷம் அவதாரயந் ஶ்ரோதாரம் நிமந்த்ரயதே தஸ்யேதி –

தஸ்ய, லோக ப்ரதானஸ்ய, ஜகன்னாதஸ்ய, பூபதே |
விஶ்ணோ:, நாம ஸஹஸ்ரம், மே, ஶ்ருணு, பாபபயாபஹம் ||–12-

தஸ்ய யதோக்த மஹா மஹிம்ந: (கீழ் பரமமான தத்வம் மஹிமையை யுடைய )| லோக ப்ரதாநஸ்ய அஸேஷ ஸேஷிண: |
ஜகந் நாதஸ்ய ஸர்வ நியந்து: |
விஷ்ணோ : (நீக்கமில்லா நிறைந்து )ஸம்பந்திஷு ஸத் ஸ்வபி பஹுஷு ததா வர்ஜந உபாயாந்தரேஷு,
நாம ஸஹஸ்ர மேவ
ஸர்வ பாப பயாபஹம் ஸர்வ ப்ரகாரம் பாபம் தத்தேதுகம் பயம் ச ஸ மூலகாதம் ஹந்யயாத்  இத் ஶம்ஸநார்ஹம் யத்தத் மே மத்த: மதர்தம் வா ஶ்ருணு |(என்னிடத்தில் கேள் -என்றும் எனக்காக கேள் என்றும்-பாலைக் குடிக்கக் காலைப் பிடிக்கிறார் )
ஸ்வயமேத்ர ஶ்ருண்வத: புநஸ் : ஶ்ரவண நிமிந்த்ரணம் பூபதே இதி ஸம்போதநம் ச வக்து:
ஶ்ரோத்ரு லாபம் அஸ்மிந் விஷயே ஶ்லாக்யம் ஸூசயத: || 12 ||(ராஜா கேள் -ஸஹஸ்ர நாமம் பெருமை அறிந்து -கிடைக்கும் பாக்யம் சொல்ல ஒண்ணாதே) 

முதலாவது வினாவிற்கு விடை
எவர் ப்ரஹ்மாதி தேவர்களுக்கு எல்லாம் மகத்தான தேவதையோ
எவர் பிரம்மாதி பீபிலி வரை எல்லாப் பிராணிகளுக்கும் அழிவற்ற பிதாவோ
எவரிடம் இருந்து எல்லாப் பொருள்களும் யுக ஆரம்பத்தில் ஸ்ருஷ்டி காலத்தில் பிரம்மாவை முதலில் படைத்து அவரைக் கொண்டு
மற்றப் படைப்புகளை நடத்துகிற படியால் நான்முகனையும் நாராயணன் தானே படைக்கிறார் என்று தெரிவிக்கிறார்

இதனால் எம்பெருமான் நிமித்த காரணம் -பிதாவானமை விளக்கப்பட்டது
இவரிடத்தில் இருந்து திரும்பவும் பிரளய காலத்தில் லயம் ஆகின்றதோ
கார்யங்கள் எல்லாம் லயித்து உபாதான காரணத்திலே யாகையாலே இவனே உபாதான காரணம் என்கிறது

மூலத்தில் சகாரம் ஸஹ காரி காரணமும் அவனே என்கிறது –

இப்படிப்பட்ட லக்ஷணம் பொருந்தியவரையே பர தத்வமாக ஸ்ருதிகளும் ஸூத்ரங்களும் சொல்லுகின்றன
அப்படிப்பட்ட உலகங்களுக்கு எல்லாம் ஸ்வாமியும் உலகங்களை நடத்துபவருமாகிய விஷ்ணுவினுடைய ஆயிரம் நாமங்களும் பாவங்களையும் அவற்றினால் வரும் பயத்தையும் வேரோடு களைகின்றவை
அரசனே அவற்றை என்னிடம் அடுத்து கேள்

என் நன்மைக்காகக் கேள் என்னவுமாம்

இங்கே இந்தக் கொள்கைக்கும்
இதற்கு விரோதமான கொள்கைகளுக்கும் உள்ள வித்தியாசத்தையும்
பரத்வ நிர்ணயத்தைப் பற்றி விசாரித்து
பல ஆதாரங்கள் காட்டி நிச்சயம் செய்யப்பட்டு இருக்கிறது

இப்படி ஆறு வினாக்களுக்கும் விடை கூறப்பட்டமை காண்க –

  1. உச்ச தெய்வம் யார்? (“கிம் ஏகம் தெய்வம் லோகே”)
  2. வாழ்க்கையின் மிக உயர்ந்த குறிக்கோள் என்ன? (“கிம் வாப்யேகம் பராயணம்”)
  3. மனிதர்கள் எந்த தெய்வத்தின் அசுப குணங்களை ஜெபிக்க வேண்டும்? (“ஸ்துவந்த கம்“)
  4. எந்த தெய்வத்தை வழிபடுவதன் மூலம் மனிதர்கள் இம்மையில் சுபிட்சத்தையும் மறுமையில் சுகத்தையும் அடைவார்கள்? (“கமர்சந்தஹ் ப்ராப்னுயுர் மானவாஷ் ஷுபம்?”)
  5. உங்கள் கருத்துப்படி எந்த நடத்தை நெறிமுறை (தர்மம்) உயர்ந்த நடத்தை நெறிமுறை? (“கோ தர்மஸ் சர்வ தர்மானாம் பவந்த: பரமோ மதஹ்”)
  6. எந்த மந்திரம் அல்லது ஜபத்தை திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், ஒரு உயிரினம் பிறப்பு, வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட முடியுமா? (“கிம் ஜபம் முச்யதே ஜந்துர் ஜென்ம சம்சார பந்தநாத்”)

பீஷ்மரின் பதில்கள் யுதிஷ்டிரனின் கேள்விகளின் காலவரிசைப்படி அமைக்கப்படவில்லை,

இருப்பினும், யுதிஷ்டிரன் எழுப்பிய கேள்விகளின் வரிசையில் கீழே உள்ள பதில்களைக் கண்டறியவும்:

  1. புனிதமான அனைத்தையும் புனிதமாக்கும் புனிதமாக இருப்பவர்; மிகவும் மங்களகரமானவர்; தேவர்களின் கடவுளாக இருப்பவர்; எல்லா உயிரினங்களுக்கும் நித்திய தந்தையாக இருப்பவர் ஒரே கடவுள் – பகவான் விஷ்ணு. (“பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களஆனாம் ச மங்களம் தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோ அவ்யய பிதா.”)
  2. பெரும் பிரகாசமாக இருப்பவர்; பெரும் தவமுடையவர் ; பரம சத்யமாக இருப்பவர்; விஷ்ணுவை அடைவதற்கான மிக உயர்ந்த குறிக்கோள் அவர் தான். (“பரமம் யோ மஹத்-தேஜஹ் பரமம் யோ மஹத்-தபஹ், பரமம் யோ மஹத்-பிரம்ம பரமம் யஹ் பராயணம்.”)
  3. பரம புருஷர் (நபர்), தேவர்களின் கடவுள், எல்லாருடைய நலனுக்காகவும் எப்போதும் எழுச்சியுடன் இருப்பவர், உலகத்தின் இறைவன் மற்றும் அழிவில்லாதவர் – பகவான் விஷ்ணு. அவருடைய ஆயிரம் நாமங்களை உச்சரித்து தியானிக்கப்பட வேண்டியவர். (“ஜகத்-பிரபும் தேவ-தேவம் அனந்தம் புருஷோத்தமம் ஸ்துவன் நாம-ஸஹஸ்ரேண புருஷঃ ஸததோத்திதঃ.”)
  4. பக்தியுடன் வழிபடுவதன் மூலமும், புருஷனின் (விஷ்ணுவின்) ஆயிரம் நாமங்களை உச்சரிப்பதன் மூலமும், ஒரு மனிதன் உலக உறவுகளிலிருந்து உண்மையான விடுதலையை அடைய முடியும். (“தமேவ ச அர்ச்சயன் நித்யம் பக்தியா புருஷம் அவ்யயம் ஸ்துவன் நாம-ஸஹஸ்ரேண புருஷঃ ஸததோத்திதঃ.”)
  5. பகவான் விஷ்ணுவை வணங்குவது, தியானிப்பது மற்றும் வணங்குவது மற்ற எல்லா வாழ்க்கை முறைகளையும் விட உயர்ந்த நடத்தை நெறிமுறையாகும். (“த்யாயந் ஸ்துவன் நமஸ்யாம்ஶ்ச யஜமானஸ் தமேவ ச ஏஷ மே ஸர்வதர்மாநாம் பவதঃ பரமோ மதঃ”)
  6. மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் மனிதர்கள் உலக வாழ்வின் துன்பங்களில் இருந்து விடுதலை பெறுகிறார்கள். அவருக்கு ஆரம்பம் அல்லது முடிவு இல்லை, அவர் முழு பிரபஞ்சத்தின் மாபெரும் இறைவன் மற்றும் கட்டுப்படுத்துபவர் (“அனாதிநிதானம் விஷ்ணும் சர்வ லோக மஹேஷ்வரம் லோகாதிக்ஷம் ஸ்துவந் நித்யம் சர்வ துஹ்காதிகோ பவேத்”)
  1. அந்த பகவான் விஷ்ணுவே எல்லா வியாபித்திருக்கும் உண்மை.
  2. விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதன் மூலமும், பக்தியுடன் இறைவனை தியானிப்பதன் மூலமும் உலக பந்தத்திலிருந்து விடுபட்டு நித்திய சுகத்தை அதாவது மோட்சத்தைப் பெறலாம்.
  3. விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது விஷ்ணு பகவானை வழிபடுவதற்கும் தியானிப்பதற்கும் சிறந்த வழியாகும்.

யோ மாம் நாம ஸஹஸ்ரேண ஸ்தோதும் இச்சதி பாண்டவ
ஸோஹம் ஏகேன ஷ்லோகேன ஸ்துத ஏவ ந ஸம்ஷயஹ”–பகவான் விஷ்ணு கூறுகிறார்:

“யாராவது சஹஸ்ரநாமம் சொல்லி என்னை வழிபட விரும்பினாலும், ஒரே ஒரு ஸ்லோகத்தை (108-ல்) உச்சரிக்க முடிந்தால், அந்த வழிபாட்டை முழு சஹஸ்ரநாமத்தை ஜபிப்பதற்கு சமமாக நான் இன்னும் கருதுகிறேன்.”

இன்னும் ஒருபடி மேலே போய், சஹஸ்ரநாமத்தின் முழுப் பலனையும் கொடுக்க ஒரே ஒரு நாமத்தைக் கூட திரும்பத் திரும்பச் சொன்னாலே போதும் என்பது ஐதீகம்.

கேணோ பயனே லகுனா விஷ்ணோர் நாம சஹஸ்ரகம்
பத்யதே பண்டிதைர் நித்யம் ஷ்ரோதும் இச்சாமி அஹம் ப்ரபோ“-பார்வதி சிவபெருமானிடம் கேட்கிறாள்:

“விஷ்ணு சஹஸ்ரநாமம் தினமும் பாராயணம் செய்ய கற்றவர்கள் பின்பற்றும் எளிதான வழி என்ன?”

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராணனே”-சிவபெருமான் பதிலளிக்கிறார்:

பகவான் விஷ்ணு நாரத முனிவரிடம், “நாஹம் வாசமி வைகுந்தே யோகினாம் ஹ்ருதயே ந ச, மத்-பக்த யத்ர காயந்தி தத்ர திஷ்தமி நாரதா”, அதாவது, “நான் வைகுண்டத்திலோ அல்லது யோகிகளின் இதயத்திலோ வசிக்கவில்லை, ஆனால் என் பக்தர்கள் பாடும் இடத்தில் நான் வசிக்கிறேன்.  ஓ நாரதா. விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதை விட அவருடைய நாமத்தைப் பாடுவதற்கு என்ன சிறந்த வழி!

பராயணம்’ என்ற சொல் ‘பரா’ மற்றும் ‘அயனம்’ என்ற இரு சொற்களைக் கொண்டது .  பரா என்றால் எல்லை அல்லது முடிவு மற்றும் அயனம் என்றால் பயணம் என்று பொருள், எனவே சஹஸ்ரநாம பாராயணம் என்பது ஸ்தோத்திரத்தில் உள்ள 1000 பெயர்களின் இறுதி வரை செல்லுதல் என்று பொருள்

—————

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உலகில் ஒரே தேவன் என்று யாரைக் கூறலாம்?
நமது ஆன்மப் புகலிடமான ஒரே பொருளாக யாரைக் கூறலாம்?
எவனை வழிபடுவதன் மூலம், அல்லது எவனுடைய புகழைப் பாடுவதன் மூலம் மனிதர்கள் நன்மையை அடைவார்கள்?(2)
உமது தீர்மானத்தின்படி அறங்கள் அனைத்திலும் முதன்மையான அறம் எது?
எந்த மந்திரங்களை உரைப்பதன் மூலம் பிறவி மற்றும் வாழ்வின் கட்டுகளில் இருந்து ஓர் உயிரினத்தால் விடுபட முடியும்?” என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் தளர்வனைத்தையும் வீசி யெறிந்து விட்டு, அண்டத்தின் தலைவனும், எல்லை யற்றவனும்,
அனைத்திலும் முதன்மையானவனுமான தேவதேவனின் (வாசுதேவனின்) ஆயிரம் பெயர்களைச் சொல்லி
அவனுடைய புகழை உற்சாகமாகப் பாட வேண்டும்.(3)
மாற்றமில்லாதனான அவனை மதிப்புடனும், பக்தியுடனும் எப்போதும் வழிபடுவதன் மூலமும், அவனைத் தியானிப்பதன் மூலமும்,
அவனது புகழைப் பாடி, அவனுக்குத் தலைவணங்குவதன் மூலமும், அவனுக்காக வேள்வி செய்வதன் மூலமும்,
தொடக்கமும், முடிவும், அழிவும் இல்லாதவனும், உலகங்கள் அனைத்தின் பரமத் தலைவனும், அண்டத்தைக் கட்டுப்படுத்தி ஆள்பவனுமான
அந்த விஷ்ணுவைப் புகழ்வதன் மூலமும் ஒருவன் கவலைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்லலாம்.(6)
உண்மையில், பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும், கடமைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் அறிந்தவனாகவும்,
அனைவரின் புகழ் மற்றும் சாதனைகளைப் பெருக்குபவனாகவும், அனைத்து உலகங்களையும் ஆள்பவனாகவும், பேரற்புதம் நிறைந்தவனாகவும்,
அனைத்து உயிரினங்களின் தோற்றத்துக்கான அடிப்படைக் காரணமாகவும் அவனே இருக்கிறான்.(7)
என் தீர்மானத்தின்படி, தாமரைக்கண்ணனான வாசுதேவனிடம் பக்தியுடன் அவனது புகழைப் பாடி எப்போதும்
அவனை வழிபடுவதே ஒருவன் செய்யும் அறங்கள் அனைத்திலும் முதன்மையான அறமாகும்.(8)

உயர்ந்த சக்தி அவனே. உயர்ந்த தவம் அவனே. உயர்ந்த பிரம்மம் அவனே. உயர்ந்த புகலிடம் அவனே.(9)
புனிதங்கள் அனைத்திலும் மிகப் புனிதமானவன் அவனே. மங்கலப் பொருட்கள் அனைத்திலும் புனிதமிக்கவன் அவனே.
தேவர்கள் அனைவருக்கும் தேவன் அவனே, உயிரினங்கள் அனைத்திற்கும் மாற்றமில்லா நிலையான தந்தை அவனே.(10)
தொடக்க யுகம் தொடங்கியபோது உயிரினங்கள் அனைத்தும் அவனிடம் இருந்தே உண்டாகின.
யுகம் தீர்ந்ததும் அனைத்துப் பொருட்களும் அவனிலேயே மறைகின்றன[1].(11)
ஓ! மன்னா, உலகங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், அண்டத்தை ஆள்பவனுமான விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைக் கேட்பாயாக,
அவை பாவங்களை அழிப்பதில் பெருந்திறன் கொண்டவையாகும்.(12)
முனிவர்களால் பாடப்பட்ட உயரான்ம வாசுதேவனின் ரகசியமான மற்றும் நன்கறியப்பட்ட குணங்களில் இருந்து எடுக்கப்பட்ட
அவனுடைய பெயர்கள் அனைத்தையும் அனைவருடைய நன்மைக்காவும் உனக்குச் சொல்லப் போகிறேன்


கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:|
கிம் ஜபந் முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்ஸார பந்தநாத்||

தர்மங்கள் அனைத்தினும் உயர்ந்த தர்மம் என நீர் கருதும் தர்மம் எது?
பிறவிச் சுழற்சியெனும் பெருந்தளையினின்றும் எதை ஜபிப்பதால் மானிடர் விடுபடல் ஆகும்?

இவ்வாறு யுதிஷ்டிரன் கேட்க பீஷ்மன் உரைத்த பதில்தான் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்.
இதில் ஜந்து என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் அல்லவா? இதில் ஒரு விசேஷம் இருக்கிறது.
அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றபடிப் பிறந்த உயிர் அனைத்தும் குறிக்கப்படுகிறது.
இந்த விசேஷத்தைக் காட்டுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ஜந்து: என்றால் பிறவியெடுத்த அனைத்து உயிரும் என்ற பொருளில்
ஜந்து: – ஜனன தர்மா: என்கிறார். அது மட்டுமின்றி இன்னும் விளக்கமாக
‘அநேந ஜந்து சப்தேந ஜப அர்ச்சன ஸ்தவநாதிஷு யதாயோக்யம் ஸர்வப்ராணிநாம் அதிகாரம் ஸூசயதி’ என்று விளக்கம் அளிக்கிறார்.

பொருள் – இந்த ஜந்து சப்தத்தால் ஜபம், அர்ச்சனை, ஸ்தவம் ஆகியன செய்ய முடிந்த அனைத்து உயிர்களுக்கும்
அதிகாரம் இருப்பது குறிப்பிடப்படுகிறது. ஆண், பெண், இளையர், முதியோர், குழந்தைகள் என்று அனைவருக்குமான வழி இஃது.

ஸ்ரீ பராசர பட்டரும் இந்த ஜந்து எனும் சொல்லுக்கு அப்படியே
ஜனன தர்மா: பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்றுதான் பொருள் எழுதுகிறார்.

ஆறு கேள்விகள் கேட்டான் தருமன்.
மிக்குயர்ந்த பெருந்தெய்வம் எது?
அறுதியான இறுதி நிலையம் உயிர்களுக்கு எது?
சுபம் அடைய யாரைத் துதிப்பது?
யாரைப் பூஜை செய்வது?
தர்மங்களில் சிறந்த தர்மம் உங்கள் கருத்துப்படி எது?
எந்த ஜபத்தால் உயிர்கள் முத்தி அடைகின்றன?

ஆறாவது கேள்வி. ‘எதை ஜபித்தால் உயிர் முத்தி பெறலாகும்?’
அவன் அளித்த விடையை அருந்த நமக்கு அளிக்கிறார் ஆதிசங்கரர். —
“நிலைப்பன திரிவன என்று உருவான உலகத்திற்கு உடையவன்; படைப்பின் கடவுளருக்கும் படைக்கும் பெருங்கடவுள்;
இடம் காலம் பொருள் ஆகியவற்றால் அளவிட முடியாதவன்; புருஷோத்தமன், அவனையே சிறிதும் சோர்வில்லாமல்
அவன் விஷயத்திலேயே முயலும் மனிதர் எல்லாவிதத் துக்கத்திலிருந்தும் நீங்கியவர்கள் ஆகிறார்கள்”

பராசர பட்டரின் உரை பேசுகிறது —
“திரிவன நிலைத்தன என்னும் ஜகத் என்பதற்கு உடையவனாகிய ஸ்வாமி; தேவர்களுக்கும் பெருந்தேவன்;
அளவிடக்கூடாத பெருமையுள்ளவன்; தன்னையும் அளிக்கும் பரம வள்ளல் தன்மை கொண்டவன்;
அத்தகைய அவரை ஆயிர நாமங்களால் எக்காலமும் முயன்று துதி செய்வதனால் மனிதர் எல்லாத் துன்பங்களையும் கடந்தவர் ஆவர்.”

இந்த ஆயுதத்திற்கு யார் ரிஷி? சந்தஸ் என்ன? தேவதை எது? பீஜம் எது? சக்தி எது? இதயம் எது? பிரயோஜனம் எது? என்கிறாயா, சொல்கிறேன் கேள்.
வேத வியாசர்தாம் இதைக் கண்டறிந்த ரிஷி.
பாதம் ஒன்றுக்கு எட்டு உயிரெழுத்துக்களால் ஆன அனுஷ்டுப் என்னும் சந்தம் தான் இதற்குச் சந்தஸ்.
தேவதை யார் என்றால் பகவானான விஷ்ணு.
பீஜம் என்பது அம்ருதாம்சூத்பவ: என்பது.
தேவகீநந்தன: என்பது சக்தி.
திரிஸாமா என்பது இதயம்.
அனைத்துக் குற்றங்களையும் களைந்து ஆழ்ந்த நிலைத்த சாந்தி என்பது இதன் பிரயோஜனம்.
பாற்கடலில் பள்ளிகொண்ட மாய மணாள நம்பியைத் தியானித்தபடியே இந்த ஆயுதத்தை நீ நாவினால் ஏவினாலே போதும்,
போய பிழையும், புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்.
எனவே மனத்தால் ஓர்ந்து திடநம்பிக்கையுடன் செப்பு.’ என்கிறான் பீஷ்மன். மரணத்தின் வாயிற்படியில் அமர்ந்தபடி அவன் சொன்னவை இவை.

‘பாதம் ஒன்றுக்கு எட்டு உயிரெழுத்துக்கள் அடங்கிய அனுஷ்டுப் என்னும் சந்தஸில் இந்த ஸஹஸ்ரநாமம் இருக்கிறது.’

அவனுக்கு, அந்த முழுமைக்கு, அந்த நாராயண பரஞ்சோதிக்கு, நாராயண பரந்தாமத்திற்கு,
நாராயண பர தத்துவத்திற்கு ஓர் உருவம் தந்து பார்க்கிறது ஸ்ரீமத் பாகவதம்.
அவனுடைய பாதங்கள் இந்தப் பூமி.
விண்ணுலகம் அவன் சிரம்.
இடைப்பட்ட வானம் அவனுடைய நாபி.
ஞாயிறு அவன் கண்.
வாயு அவன் நாசி.
திசைகள் அவன் செவிகள்.
சந்திரன் அவன் மனம்.
மாயை அவன் முறுவல்
மரங்கள் அவன் ரோமங்கள்
மேகங்கள் அவன் குழல் கற்றை
அவன் மார்பில் இருக்கும் கௌஸ்துபம் சுத்த ஜீவ சைதன்யம்

இப்பொழுது நாம் யார்? எங்கிருக்கிறோம்? என்று தெரிகிறதா? அவன் மார்பில் திகழும் கௌஸ்துபம் நாம். ஜீவர்கள்.
ஜீவர்களின் கூட்டத் திகழ்ச்சி ஸ்ரீவத்ஸம்
வனமாலை மாயையின் விசித்ர குணங்கள்
அவனுடைய மஞ்சள் ஆடை வேதம்
அவன் அணிந்த முப்புரி நூல் மூன்று அக்ஷரங்கள் கொண்ட பிரணவம்.
அநந்தனாகிய ஆதிசேஷன் அவ்யாக்ருதம்.
அவன் அமரும் பத்மம், தர்மம் ஞானம் என்ற இதழ்கள் உடைய சுத்த ஸத்வம்
பிராணன் கதையாகிய கௌமோதகி
அப்பு தத்துவம் பாஞ்சஜன்யம்
அக்னி தத்துவம் சுதர்சனம்

அந்த முழுமையில் தான் அமிழ்ந்து போகும் போதுதான் கரையேற முடிகிறது.
வெறும் கடலில் விழுந்து அமிழ்ந்து போனால் கரை ஏறமுடியாது.
ஆனால் இந்தப் ‘பெரும் புறக்கடலில்’, ‘கிருபா சமுத்திரத்தில்’ அமிழ்ந்து போனால் தான் வாழ்வு.
அப்படி அமிழக் கற்றவர்கள்தாம் ஆழ்வார்கள்.

அந்தத் தத்துவத்தை அன்றோ தியானித்து இங்கே ஸ்ரீமஹாவிஷ்ணு என்று ஆயிர நாமங்களால்
ரீங்காரம் இட்டுலவும் வண்டாக ஆகச் சொல்கிறது பீஷ்மனின் ஜீவ நாதம்.
தியாயந் ஸ்துவந் நமஸ்யம்ச –தியானம் செய், தோற்றுப் போ!
துதி செய், தோற்றுப் போ! –அந்தத் தோல்விக்கு வெற்றிவாகை பாடு! –அதுதான் நமஸ்காரம்.

அரங்கன் திருமுற்றத்தில் உங்களை இடுகிறது தியான ச்லோகம். இப்படி ஓர் திருவின் மணாளன் வீற்ற கோலம்,
அந்த முகுந்தன் யார்? அவர் எப்படி இருப்பார்? அவரா?
அவருக்கு இந்த பூமிதான் பாதங்கள்.
அவருக்கு இந்த வானம் நாபி.
வாயு பிராணன்
சந்திரன் சூரியன் இருகண்கள்
திக்குகள் காதுகள்
திய: என்னும் விண்ணுலகு தலை
அக்கினி வாய்
சமுத்திரம் அடிவயிறு
எந்த வயிற்றில் தேவர், மனிதர், பறவைகள், மிருகங்கள்,
நாகர், கந்தருவர், அசுரர் என என என விரிந்த உலகு
விசித்திரமாக விளையாடிக் களிக்கிறதோ
அந்த மூவுலக வடிவினர்தாம் ஈசராகிய
இந்த விஷ்ணு
இந்த விஷ்ணுவாகிய ஈசரை நமஸ்கரிக்கிறேன்.
அந்தப் பரமாத்மாவாகிய வாஸுதேவருக்கு நமஸ்காரம்

———

ஆறாவது கேள்விக்கு பீஷ்மர் பதில் முதலில்
ஜகத்ப்ரபும் தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம்
ஸ்துவன் நாம ஸ்ஹஸ்ரேண புருஷ ஸததோத்தித
பழுதே பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் –
அசந்நேவ ஸ் பவதி –

அடுத்து 3/4 கேள்விகளுக்கு பதில்
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –சர்வ துக்காதி கோ பவேத்
ஜப ஆலம்பனம்-ஸஹஸ்ர நாமம்
பக்த்யா அர்ச்சயன்
பக்த்யா த்யாயன்
பக்த்யா ஸ்துவன்
பக்த்யா நமஸ்யன்
அச்சுதா அமரர் ஏறே –என்னும் இச்சுவை
பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -திருவாய் -10-4-1-
வணக்குடை தவ நெறி -1-3-5-
ஸ்ததம் கீர்த்தயந்தோமாம் நமஸ் யந்தஸ் சமாம் பக்த்யா -ஸ்ரீ கீதை -9-14
மன்மநாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு -ஸ்ரீ கீதை -9-4
காரணந்து த்யேய
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே —
நாரணன் எம்மான் பாரணங்காளன் வாரணம் தொலைத்த காரணன் தானே –
தானே யுலகெல்லாம் -தானே படைத்திடந்து தானே யுண்டுமிழ்ந்து தானே யாள்வானே
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
ப்ரஹ்ம வித் ஆப்நோதி பரம்
யஜ்ஞென தானேன தபஸா நோசகேன-
வியாசரும் -ஆலோத்யா சர்வ சாஸ்த்ராணி விசார்யச புன புன
இதமேகம் ஸூ நிஷ்பந்தம் த்யேயோ நாராயணஸ் சதா –
ஆலம்பனம் -கூராழி வெண் சங்கேந்தி
வேர் சூடுமவர் மண் பற்று கழற்றாதாப் போலே
ஜ்ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும் –

தர்மரின் மூன்றாவது கேள்விக்கு -கம் ஸ்துவந்த –
பீஷ்மர் –
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –
அநாதிநிதனம் விஷ்ணும் சர்வலோக மகேஸ்வரம்
லோகாத் யஷம் ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் –
ப்ரஹ்மணயம் சர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்தநம்
லோகநாதம் மஹத் பூதம் சர்வ பூத பவோத் பவம் –
10 அடை மொழிகள்
1-அநாதிநிதனம் -ஆதி அந்தம் இல்லாதவன் -தேச கால வஸ்து பரிச்சேதன்
2-விஷ்ணும் -வ்யாப்தி
3-சர்வலோக மகேஸ்வரம்
4-லோகாத் யஷம் -அனைத்தையும் கண்களால் காண்பவன்

5-ப்ரஹ்மணயம் -வேத பிரதிபாத்யன்
6-சர்வ தர்மஜ்ஞம் –
7-லோகாநாதம்
8-மஹத் பூத்
9-கீர்த்தி வர்த்தநம்
10- சர்வ பூத பவோத் பவம் -ஆதி காரணன் –
ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் -ஸ்துவந்த கம் கேள்விக்கு இப்படி பீஷ்மர் பதில் அருளுகிறார்
யதாததாவபி குண சங்கீர்த்த்தனம் குர்வன்-ஏதோ ஒரு முறையில் திவ்ய நாம திருக் குணங்களைப் பாடுதல் –

இனி ஐந்தாம் கேள்விக்கு -கோ தர்ம சர்வ தர்மாணாம் -பதில்
ஏஷ மே சர்வ தர்மாணாம் தர்மோதி கதமோ மத ‘
யத் பக்த்யா புண்டரீ காஷம் ஸ்தவைரச் சேன்நரஸ் ஸதா –
ஏஷ -மேலே சொல்லப்பட்ட அர்ச்சன ஸ்தவ நாதிகளால்-அன்புடன் பூஜிக்கை –
அதிகதம -மிகச் சிறந்த தர்மம்
யத் பக்த்யா -ப்ரீதி உட் கொண்ட -ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் –
அர்ச்சேத் -ஆராதிப்பவன்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
சதா -கால தேச சுத்தி வேண்டா
அபஹத பாப்மா -அமலன் -விமலன் -நிமலன் -நின்மலன் –
அவன் திரு உள்ளம் உகந்து -விதி வாய்க்கின்று காப்பாரார் –
ஸ்வாராதன் –
கலௌ சங்கீர்த்ய கேசவம் –

அடுத்து கிம் வாப்யேகம் பராயணம் –உபேயம் பற்றி கேள்விக்கு பதில் –
1-பரமம் யோ மஹத் தேஜ–பரம் -மஹத் இரண்டு விசேஷணங்கள்-கோடி சூர்ய சம ப்ரப-
2- பரமம் மஹத் தப -தப -நியந்தா பொருளில்
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய
3-பரமம் மஹத் ப்ரஹ்ம -ஸ்வரூப ப்ருஹத்வம் குண ப்ருஹத்வம் –
ப்ரஹ்மணத்வம் -தன்னை கிட்டியவரை தன்னைப் போலே பெரிதாக்க வல்லவன் –
4-பரமம் பராயணம்
5-பவித்ரானாம் பவித்ரம்
மாதவன் என்று ஓத வல்லீரேல் தீதொன்றும் சாரா
வாயினால் பாடி -..போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்

ஹரிர் ஹரதி பாபானி
தத்யதா இஷீக தூல மக்நௌ ப்ரோதம் ப்ரதூயதே -சாந்தோக்யம்
பவித்ரங்களுக்கும் பவித்ரம் அவனே
6- மங்களா நாஞ்ச மங்களம் –

இனி கிமேகம் தைவதம் லோகே -முதல் கேள்விக்கு பதில் –

தைவதம் தேவதா நாம் ஸ -என்று தொடங்கி
மனிதர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ -திருவாய் -8-1-5-
லோக ப்ரதானச்ய – ஜகன்நாதச்ய
சர்வ பாபபயாபஹம் நாம சஹச்ரம்

ஸ்ருணுமே-கேள் -தர்மா -தட்டி எழுப்பி சொல்கிறார் பீஷ்மர்
கௌணாநி -குண சேஷ்டிதங்கள்
விக்யாதாநி -பிரசித்தமானவை
ரிஷிபி -சநகர் நாரதர் போல்வார்
பரிகதாநி -எல்லா திக்குகளிலும் அத்யந்த சிநேக பக்திகளுடன் பாடப்பட்டவை
பூதயே -வாழ்ச்சியின் பொருட்டு
பூ சத்தாயாம்
கடல் வண்ணன் பூதங்கள் -திருவாய் -5-2-1-
மஹாத்மநா-தனக்கும் தன் தன்மை அறிவரியான் –
அஹம் வேத்மி மகாத்மா
அப்ரமேயம் ஹி தத்தேஜ –

கிம் ஜபன் முச்ச்யதே உபோத்காதம்

பத்தோ முச்யேத பந்த நாத்யாதி ப்ரஹ்ம ஸநாதநம் -என்று
சம்சார பந்தம் நிவ்ருதியும்
ப்ரஹ்ம பிராப்தியும்
பலமாக சொல்லி முடிகிறது

யதோபாசனம் பலம்
சூழ்ந்து இருத்து ஏத்துவர் பல்லாண்டு -பல்லாண்டு இங்கே -அதே பலன் அங்கும்

———————————————————-——————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள் -ஸ்ரீ த்யான ஸ்லோகங்கள் —

October 31, 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் – ஸ்ரீ மஹா பாரதம் அநுசாஸன பர்வம்-தான தர்ம பர்வம்- பகுதி – அத்யாயம் 149-

ஆன்மிகம் என்று மட்டும் இல்லாமல் மருத்துவத் துறையிலும் பழங்காலத்தில் தீர்க்கவியலா சில நோய்களுக்கு
இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் படித்தல் என்பதையே வைத்தியமாக விதித்துள்ளனர் என்பதைச் சரக ஸம்ஹிதை என்னும் பழங்காலப் பெரும் மருத்துவ கிரந்தத்தைப் பார்த்தாலே தெரியும்.
( ‘விஷ்ணும் ஸஹஸ்ரமூர்தானம் சராசரபதிம் விபும் | ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண ஜ்வராந் ஸர்வாந் அபோஹதி ||’ –சரக ஸம்ஹிதா, சிகித்ஸா ஸ்தானம், ஜ்வர சிகித்ஸா). மனோ வியாதிகள், தீய கனவுத் தொல்லைகள், பீதியினால் ஏற்படும் உள்ளக் கோளாறுகள் என்று பலவற்றிற்கும் கைகண்ட மருந்தாக வழிவழி மக்களின் அனுபவமாக இருப்பது
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம படனம்.
உலக ஆசைகள் என்னும் பவ நோயை விடக் கொடிய நோய் என்ன உண்டு?
அறியாமை இருளை விடப் பேய் பிசாசுகளின் பிறப்பிடம் வேறு என்ன வேண்டும்?
இந்த நோயை அகற்றும் உன்னத மருந்தும், இந்த இருளை ஓட்டும் உத்தம ஒளியும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்று நிச்சயம் சொல்லலாம்.

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கு Aufrecht அவர்களின் கணக்குப்படி 15 வியாக்கியானங்கள் பட்டியலிடப்படுகின்றன என்று தகவல் தருகிறார் ஸ்ரீ அநந்தகிருஷ்ண சாஸ்திரியார். அவை –

1) ப்ருஹத் பாஷ்யம்
2) விஷ்ணு வல்லபம்
3) ஆநந்த தீர்த்தரின் உரை
4) கிருஷ்ணாநந்தரின் உரை
5) கங்காதர யோகீந்திரரின் உரை
6) பாரசர பட்டரின் பாஷ்யம்
7) மஹாதேவ வேதாந்தியின் உரை
8) ரங்கநாதாசாரியரின் உரை
9) ராமாநந்த தீர்த்தரின் உரை
10) ஸ்ரீராமாநுஜரின் உரை
11) வித்யாரண்ய தீர்த்தரின் உரை
12) பிரஹ்மாநந்த பாரதியின் உரை
13) ஸ்ரீ சங்கராசாரியரின் உரை
14) சுதர்சன பட்டரின் உரை
15) கோவிந்த பட்டரின் உரை

இவையும் சிலவே. இவை தவிர சுலோக ரூபத்தில் நாமங்களை விளக்கிக் காரிகைகளாகச் செய்யப்பட்ட நூல்களும் உண்டு.

—————–

ஸ்ரீ பராசர பட்டார்ய ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீவத் ஸாங்க ஸூதா ஸ்ரீமான் ஸ்ரேயசே மே அஸ்து பூயஸே

வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம்
த்யாயேயம் யாமுநார்யம் மம ஹ்ருதி தாநவை ராமமேவாபியாயாம்
பத்மாஷம் ப்ரேஷிஷீய ப்ரதமமபி முநிம் நாதமீடே சடாரிம்
ஸ்தௌமி ப்ரேஷேய லஷ்மீம் சரணம் சரண ஸ்ரீ தரம் சம்ஸ்ரயேயம்–ஸ்ரீ குரு பரம்பரா வணக்கம்

ஓம் நமோ கஜ வக்த்ராத்யை பாரிஷத்யை ப்ரசாஸதே
ஸ்ரீ ரங்கராஜ ஸேநான்யே ஸூத்ரவத்யா ஸமே யுஷே–ஸ்ரீ விஷ்வக் சேனர் ஸ்துதி

நமோ நாராயணாயேதம் கிருஷ்ண த்வைபாய நாத்மகே
யதாமுஷ்யாயணா வேதா மகா பாரத பஞ்சமா–ஸ்ரீ வேத வ்யாஸர் நமஸ்காரம்

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே பவுத்ர மகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதம்–

க்ருஶ்ண த்வைபாயனம் வ்யாஸம் ஸர்வ லோக ஹிதே ரதம்|
வேதாப்ஜ பாஸ்கரம் வந்தே ஷமாதி நிலையம் முனிம்||

ஜாதோ லஷ்மண மிஸ்ர ஸம்ஸ்ரய தநாத் ஸ்ரீ வத்ஸ சிஹ்நாத் ருஷே
பூயோ பட்ட பராசரேதி பணித ஸ்ரீரங்க பர்த்ரா ஸ்வயம்
ஸ்ரீ ஸ்ரீரங்கபதி ப்ரஸாத த்ருஷயா ஸ்ரீ ரங்க நாதாஹ்வய
ஸ்ரீ ரங்கேஸ்வர காரிதோ விவ்ருணுதே நாம் நாம் ஸஹஸ்ரம் ஹரே–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யம் செய்து அருளியவர்

ஸஹஸ்ர மூர்த்தே: புருஶோத்தமஸ்ய ஸஹஸ்ர நேத்ரானன பாத பாஹோ:|
ஸஹஸ்ர நாம்னாம் ஸ்தவனம் ப்ரஶஸ்தம் நிருச்யதே ஜன்ம ஜராதி ஷாந்த்யை||

———–

ஸூக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே–1-

யஸ்ய த்விரத வக்த்ராயா பாரி ஷத்யா பரச் சதம்
விக்நம் நிக் நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம் தாமாஸ்ரயே–2-

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே பவுத்ர மகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதம்–3-

வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம-4

அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே-5

யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்த நாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணவே ப்ரப விஷ்ணவே-6-

ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே

இங்கும் ஆறு ஸ்லோகங்கள்
ஆறு பத்துக்களில் திருவாய் மொழியில் எல்லாம் உண்டே

—————

ஸூக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ந உப ஸாந்தயே –1

ஸர்வ விக்னம் உபசாந்தி அர்த்தத்துக்கு-வெண் பட்டாடை அணிந்து-எங்கும் நிறைந்து
சந்த்ர வர்ணன் -ஆஹ்லாத கரத்வம்-நான்கு திருத்தோள்கள் உடன் விளங்கி
பிரஸன்ன வதனம் -மதுர வீக்ஷணம் -பேசத் துடிக்கும் அதரம் –
த்யாயேத் -த்யானிப்பாய்
அதுக்கு ஏற்ற ஸூபாஸ்ரய திரு மேனியை வர்ணித்து –வேப்பங்குடி நீரையோ குடிக்கச் சொல்கிறது-பாலைக் குடிக்கக் காலைப் பிடிக்கிறார்

வெண்மையான (தூய்மையான) ஆடை தரித்தவரும், எங்கும் நிறைந்திருப்பவரும், வெண்மதியைப் போன்ற நிறமுடையவரும், நான்கு கரங்கள் உடையவரும், புன்சிரிப்புடன் கூடிய மலர்ந்த முகத்தை உடையவருமான பகவானை நமது துயர்களைத் தீர்க்க தியானிப்போம்.

——–

யஸ்ய த்விரத வக்த்ராய பாரி ஷத்யா பரச்சதம்
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம் தமாஸ்ரயே –2

யஸ்யத் விரத -யானை முகம் -கஜேந்திர -மங்கள ஸ்லோகம் -விஷ்வக் சேனர் –
நூறு நூறு பிரதானர்கள் கொண்டவர்
வாசல் காப்பார் உடன் கூடிய விஷ்வக் சேனரை ஆஸ்ரயிப்போம்
விக்னங்கள் தொலையவே விஷ்வக் சேனர் ஆராதனம் தொடங்குகிறோம்
முதல் ஸ்ரீ வைஷ்ணவர் இவரே
நம்மாழ்வார் தொண்டர் தொண்டர் சடகோபன் பெருமை கொண்டவர்

———

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே பவுத்ரம் அகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதம்–3-

வசிஷ்டர் பிள்ளை சக்தி /அவர் பிள்ளை பராசரர்/ அவர் பிள்ளை வியாசர் ( கிருஷ்ண த்வைபாயனர் )/அவர் பிள்ளை சுகப் ப்ரஹ்மம்

வ்யாஸம் -கிரந்த கர்த்தா பரம்பரை -வந்தே கிரியா பதம்
வசிஷ்ட நப்தாரம் -பேரனுக்குப் பிள்ளை
ப்ரஹ்மா வசிஷ்டர் தொடங்கி -சக்திக்கு பேரன்-அகல்மஷம் குற்றம் அற்ற -பராசர மகரிஷிக்கு பிள்ளை

வஶிஶ்டரின் கொள்ளுப் பேரரும், ஷக்தியின் பேரரும், பராஶரரின் புதல்வரும், சுகரின் தந்தையும், மாசுகளற்றவரும், தவத்தில் சிறந்தவருமான முனிவர் வியாசரை வணங்குகிறேன்.

———

வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம–4-

வ்யாஸாய –நமோ நம -மீண்டும் நமஸ்காரம்
வசிஷ்டர் குலம் -விஷ்ணு அவதாரம் -விஷ்ணு ரூபாயா நம
முக்ய அவதாரம் –
ஸ்வரூப ஆவேச -சக்தி ஆவேச அவதாரங்கள்
வ்யாஸ ரூபாய விஷ்ணுவே நம
ப்ரஹ்ம ஞானம் நிதி இவரே

வியாஸரே விஶ்ணு வடிவானவர்; அந்த பகவான் விஶ்ணுவே வ்யாஸராக அவதரித்தார். பர ப்ரஹ்மத்தை உள்ளபடி அறிந்தவரும், அந்த பர ப்ரஹ்மமே ஒரு நிதியாய் திரண்டார் போன்ற வடிவினரும், வஶிஶ்டரின் குலத்திலே தோன்றிய வியாஸரை நான் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

———

அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே–5-

அவிகாராய -ஸ்வரூபத்தாலும் ஸ்வ பாவத்தாலும் -ரூபத்தாலும் விகாரம் இல்லையே
ஆத்மாவுக்கு ஸ்வரூப விகாரம் இல்லை –
தளிர் புரையும் -ஸ ஏகாகி ந ரமேத -கர்மாதீனம் இல்லை கிருபாதீனம் இவை
ஸூத்தாயா
நித்யாய –
பத்த முக்த நித்ய இதர ஸமஸ்த விலக்ஷணன்
பரமாத்மனே -இவன் ஒருவனே
நம
ஸதா ஏக ரூப ரூபாய -ஸ்வரூபம் உருவான -அந்தாம –கண்கள் சிவந்து -விஜூர ப்ரமோத -பக்தர் அதீனம்
விஷ்ணவே -சர்வ ஜிஷ்ணவே -எங்கும் வியாபித்து வெற்றி அளிப்பவன்

எவ்வித மாறுபாடுகளும் அற்றவராய், தூய்மையானவராய், என்றும் (எக்காலத்தும்) நீங்காது இருப்பவராய், எப்பொழுதும் (மாறுபாடில்லாத) ஒரே வடிவத்தை உடையவராய், அனைத்தையும் வெல்பவரான அந்த பரமாத்மா விஶ்ணுவை (த்யானிக்கின்றேன்).

——–

யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தநாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணவே ப்ரப விஷ்ணவே–6-

ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே

யஸ்ய ஸ்மரணம் மாத்ரத்தால் ஜென்ம ஸம்ஸார பந்தம் விமுச்யதே
நமஸ் தஸ்மை விஷ்ணவே நம

இங்கும் ஆறு ஸ்லோகங்கள்
ஆறு பத்துக்களில் திருவாய் மொழியில் எல்லாம் உண்டே

——–

தத்ர ப்ராகேவ பௌந:புந்யேந தத்ர தத்ர பர தத்த்வ பரேஷு
ப்ரதேஸேஷு அஸேஷார்த- நிர்ணய ஶ்ரவணாத் துஷ்டம் மந்ய தயா
ஸ்வயமப்ருச்சதே ஜநமேஜயாய பரம ஸௌஹார்தாத் அந்யத் குஹ்ய தமம் க்ராஹயந் ஸ்வயமேவ,

ஶ்ரீவைஶம்பாயந உவாச-

ஶ்ருத்வாதர்மாந ஸேஷேண பாவநாநி ச ஸர்வஶ:| யுதிஷ்டிர: ஶாந்தநவம் புநரே வாப்ய பாஷத || 1 ||

அதில் முதலிலேயே பலமுறை பரதத்வத்தைச் சொல்லுகிற பல இடங்களிலே விசேஷ அர்த்தங்களை
நிச்சயித்துக் கேட்டுத் திருப்தி யானதாக நினைத்துக் கொண்டு இருப்பதனால் வினவாமல் இருக்கும் ஜனமேஜயருக்கு
அவர் இடம் உள்ள பேர் அன்பினால் மற்றொரு மிக்க ரஹஸ்யத்தைத் தெரிவிப்பதற்காக வைசம்பாயனர் தாமாகவே சொல்லாத தொடங்குகிறார்
ஜனமேஜர் வினவினார் என்று இல்லாமல் வைசம்பாயனர் தானே சொல்லாத தொடங்கினார் என்று தொடங்கி இருப்பதைக் காணலாம்

பூமா வித்யை சனத்குமாரர் நாரதருக்கு உபதேசம் -இதே போல்
கண்ணன் -ஆறு அத்யாயம் சொல்லி பக்தி யோகம் பற்றி அர்ஜுனன் கேட்க்காமலேயே 7 அத்யாயம் சொல்லி
மீண்டும் 10 அத்யாயம் சொல்லத் தொடங்கியது போல்
மூவர் அனுபவம்

ஶ்ருத்வேத்யாதி|தர்மாந் ஶ்ருதி ஸ்ம்ருத்யாதி சோதநா லக்ஷணாப்யுதயநி:
ஶ்ரேயஸ பலாந் ராஜ மோஷ தாந தர்ம ரூபேண பஹூந் |
அஸேஷேண- கார்த்ஸ்ந்யேந,
யே ச யாவந்த: தாவதஶ்ச இத்யர்த:|
பாவ நாநிச தபஸ் தீர்த ஸேவாதீநி ஶுத்தி கராணி ச |
ஸர்வஶ:—–— ஸர்வ ப்ரகாரம்; பலத:அங்கத: ஸ்வரூபத: அதிகார தஶ்ச |ஶ்ருத்வா யுதிஷ்டிர:-
ஸாக்ஷாத் தர்ம ஸூநு:|ஶாந்தநவம் ஶந்தநோர் கங்காயாம் ஜாதத்வேந அபிஜாத தமம்|

ஸ்ரீ வைசம்பாயனர் உவாஸ –சொல்லலானார்
ஸ்ருத்வா தர்மான் –அப்ய பாஷத
யுதிஷ்ட்ரர் -ராஜ தர்மம் -மோக்ஷ தர்மம் -தான தர்மம் போன்ற ஸாஸ்த்ர விஹிதமான தர்மங்களையும்
தவம் தீர்த்த யாத்திரை முதலிய பாவனார்த்தமானவற்றையும்
அவற்றின் அங்கங்கள் செய்யும் முறை -அதிகாரி ஸ்வரூபம் எல்லாவற்றையும் கேட்டபிறகு
பீஷ்மரை நோக்கித் திரும்பவும் வினவலானார்
கேட்டவர் சாஷாத் தர்ம தேவதையின் புதல்வர்
சொன்னவர் சந்தனுவுக்கு கங்கையிடம் பிறந்தவர்
இருவரும் உத்தம குலத்தில் பிறந்தவர்கள்

வைசம்பாயனோ ஜனமேஜயமுவாச:

ஶ்ருத்வா தர்மானஷேஷேன பாவனானி ச ஸர்வஶ: |

யுதிஷ்டிர: ஷாந்தனவம் புனரேவாப்யபாஷத||

தர்மான் அப்யுதய நி:ஷ்ரேயஸோத்பத்தி ஹேதுபூதான் சோதனாலக்ஷணான் -அனைத்து மங்களங்களையும் அதிகரிக்க வல்லதும்
அஷேஷேன கார்த்ஸ்ன்யேன முழுமையாக (ஒன்றும் குறைவின்றி)
பாவனானி பாபக்ஷயகரானி தர்மரஹஸ்யானி பவித்ரமானதும் பாவங்களை அழிக்க வல்லதுமான தர்ம ரஹஸ்யங்களை
ச ஸர்வஷ ஸர்வ ப்ரகாரை: அனைத்தும் ஷ்ருத்வா யுதிஷ்டிரோ தர்மபுத்ர: தர்மபுத்ரனான யுதிஷ்டிரன்
ஷாந்தனவ ஷந்தனுசுதம் பீஷ்மம் ஸகல புருஷார்த்த சாதனம் ஸுக ஸம்பாத்யம் அல்ப ப்ரயாசம் அனல்ப ஃபலம் அனுக்தமிதி க்ருத்வா –ஷந்தனு புத்திரரான பீஷ்மரிடம் கேட்டறிந்த பின்பும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அடையத்தகுந்த அனைத்தையும் அளிக்கவல்லதும்
(இவ்வுலக மற்றும் அவ்வுலக) இன்பத்தை தரவல்லதும் எளிமையானதும் ஆனால் மிகச்சிறந்த பலன்களை கொடுக்க வல்லதுமான எந்த ஒரு உபாயத்தையும்
பீஷ்மர் கூறவில்லை என்று கருதியதால் புன: பூய மறுபடியும் (யுதிஷ்டிரன்) ஏவ அப்ய பாஷத ப்ரஶ்னம் க்ருதவான் அவரிடம் (பீஷ்மரிடம்) கேள்விகள் கேட்டார் ||1||

வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் கூறுகிறார்:-கேட்பவரின் மனதை தூய்மை படுத்த வல்லதும், பாவங்களை போக்க வல்லதுமான
அனைத்து தர்மங்களையும் முழுமையாக (பீஷ்மரிடமிருந்து) கேட்டறிந்த பின்னரும், யுதிஷ்டிரர் மீண்டும்
ஷந்தனுவின் புதல்வரிடம் (பீஷ்மரிடம், பின்வருமாறு) கேள்விகளைக் கேட்டார்.

—————-

புநரே வாப்ய பாஷத –
புநஶ்ச பப்ரச்ச | புந:ப்ருச்சா ச பீஷ்மேண
ஆத்மநீநதயா ஸ்வீக்ருதமதம் ஜ்ஞாதும்;
‘ கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:’ இத்யநந்தரோக்தே 😐
தச்ச ஸதாசார ப்ராவண்யாத் |
ஸந்தோ ஹ்யாசார்யநிஷ்டாம் அந்விஷ்ய தத் ருசி பரிக்ருஹீத மேவ
தத்த்வம் ஹிதம் ச ரோசயந்தே ; ந து ப்ராமாணிகத்வ மாத்கரண ||1 ||

சாதுக்கள் தம் ஆச்சார்யர் உகந்து அனுஷ்டிப்பதையே அனுஷ்டிப்பார்களே யல்லாமல் பிரமாணத்தை மாத்திரம் ஆதாரமாகக் கொள்வதை விரும்ப மாட்டார்கள்
ஆகையால் பீஷ்மர் தமக்கு ஹிதமாகக் கொண்டு இருக்கும் ஆசாரத்தை தெரிந்து கொள்ளும் விருப்பத்தினால் திரும்பவும் வினவலானார்-என்றார்-

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் -ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமாய் இருக்க வேண்டுமே
பவத பரமோ மத என்று மேலே வருவதால் இது நன்கு விளங்கும்
யுதிஷ்ட்ரர் சதாசார்யத்தில் ஈடுபட்டவர் ஆதலால் இங்கனம் கேட்கலானார் –

வைசம்பாயனோ ஜனமேஜயமுவாச:

ஶ்ருத்வா தர்மானஷேஷேன பாவனானி ச ஸர்வஶ: |

யுதிஷ்டிர: ஷாந்தனவம் புனரேவாப்யபாஷத||

பயிலும் சுடர் ஒளி மூர்த்தி- நெடுமாற்கு அடிமை கேட்டு- மதுரகவி நிஷ்டை
திரிபுரா தேவி -உடையவர் காட்டும் பரம் பொருளையே ஆஸ்ரயிப்போம்

தர்மான் அப்யுதய நி:ஷ்ரேயஸோத்பத்தி ஹேதுபூதான் சோதனாலக்ஷணான் அனைத்து மங்களங்களையும் அதிகரிக்க வல்லதும்
அஷேஷேன கார்த்ஸ்ன்யேன முழுமையாக (ஒன்றும் குறைவின்றி)
பாவனானி பாபக்ஷயகரானி தர்மரஹஸ்யானி பவித்ரமானதும் பாவங்களை அழிக்க வல்லதுமான தர்ம ரஹஸ்யங்களை
ச ஸர்வஷ ஸர்வ ப்ரகாரை: அனைத்தும்
ஷ்ருத்வா யுதிஷ்டிரோ தர்மபுத்ர: தர்மபுத்ரனான யுதிஷ்டிரன்
ஷாந்தனவ ஷந்தனுசுதம் பீஷ்மம் ஸகல புருஷார்த்த சாதனம் ஸுக ஸம்பாத்யம்
அல்ப ப்ரயாசம் அனல்ப ஃபலம் அனுக்தமிதி க்ருத்வா ஷந்தனு புத்திரரான பீஷ்மரிடம் கேட்டறிந்த பின்பும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அடையத்தகுந்த அனைத்தையும் அளிக்கவல்லதும்
(இவ்வுலக மற்றும் அவ்வுலக) இன்பத்தை தரவல்லதும் எளிமையானதும் ஆனால் மிகச்சிறந்த பலன்களை கொடுக்க வல்லதுமான
எந்த ஒரு உபாயத்தையும் பீஷ்மர் கூறவில்லை என்று கருதியதால்
புன: பூய மறுபடியும் (யுதிஷ்டிரன்)
ஏவ அப்ய பாஷத ப்ரஶ்னம் க்ருதவான் அவரிடம் (பீஷ்மரிடம்) கேள்விகள் கேட்டார் ||1||

வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் கூறுகிறார்:-கேட்பவரின் மனதை தூய்மை படுத்த வல்லதும், பாவங்களை போக்க வல்லதுமான
அனைத்து தர்மங்களையும் முழுமையாக (பீஷ்மரிடமிருந்து) கேட்டறிந்த பின்னரும், யுதிஷ்டிரர் மீண்டும் ஷந்தனுவின் புதல்வரிடம் (பீஷ்மரிடம், பின்வருமாறு) கேள்விகளைக் கேட்டார்.

———–

தத்ரேதம் ஆதாமேவ உதைரிராம—ப்ரேக்ஷாவத்பிஸ் : ப்ரமாணேந பரிச்ச்த்ய
அநுகூலம் ப்ரமேயம் உபாதேயமிதி | தச்ச த்வைதம் வர்ததே உபாயா உபேயாத்மநா |

விவேகிகள் ப்ரமாணத்தைக் கொண்டு -ப்ரமேயத்தை -விஷயத்தை பகுத்து அறிந்து அதில்
அனுகூலமான ப்ரமேயத்தை ஆதரிப்பார்கள் என்று முன்னமே அவதாரிகையில் சொல்லப் பட்டது

தத்வம் ஹிதம் புருஷார்த்தம் மூன்றுமே அறிய வேண்டுவது-அதுவே உபாயம் உபேயம் இரண்டாகும்
அப்படிப்பட்ட ப்ரமேயம் உபாயம் உபேயம் என்று இரண்டு வகைப்படும்
உபாயம் -சாதனம் -காரியத்துக்கு இன்றியமையாதது
உபேயமாவது ஸாத்யம் -பயன் –

உபேயம் ச ப்ரிய ப்ரிய தர ப்ரிய தம ரூபேண த்ரைதம்|
உபாயஶ்ச ஹித ஹித தர ஹித தம ரூபேண|
தத்ர உபேயஸ்ய ஜந்ம ருத்தி பரிணாமா நித்யத்வாதய:, சேதந தர்மா: க்லேஶ கர்ம விபாகா ஆஶயாஶ்ச கதோஷா:;
குணாஶ்ச தோஷ அஸம்பேத ருசிரத்வ ஸ்தாவரத்வ பூயஸ்த்வ விஶிஷ்டா:
ஸம்வித ஆநந்வ ஐஶ்வர்ய விபூதி விஸேஷாதய:|
உபாயஸ்ய து வ்ய யாயாஸ பூயஸ்த்வ வ்யபிசாரித்வ பல்கு பலத்வாதகயா தோஷா:|
குணாஶ்ச நியத நிரபாய லகு தர பஹு பலேத்வாதய:|

உபாயம் -ஹிதம் ஹித தரம் ஹித தமம்-என்று மூன்று வகைப்படும்
உபேயம் -பிரியம் பிரிய தரம் பிரிய தமம்-என்று மூன்று வகைப்படும்
உபேயத்துக்கு பிறப்பு வளர்ச்சி மாறுபாடு அழிவு போன்ற தர்மங்களும்
கிலேசம் கர்மம் -விபாகம் -அதாவது கர்ம பலங்களான -ஜென்மம் ஆயுள் போகம் முதலியவையும்
ஆசயம் -மனத்தின் கண் உள்ள ஸம்ஸ்காரம் முதலிய சேதனர்களுக்கு உரிய தர்மங்களும் தோஷங்களாகும் –

குணங்களோ -தோஷம் கலவாமல் -ருசிரத்வ -அதாவது அழகு அமைந்து அழிவில்லாது மேம்பாடுடைய-பேர் அறிவு ஆனந்தம் ஐஸ்வர்யம் முதலிய விபூதி விசேஷங்களாம்

உபாயத்துக்கு -பெரும் செலவு செய்வதற்கு அருமை கருதிய பயனைப் பயவாமை- சிறு பயனுடைமை ஆகியவை தோஷங்களாகும்

குணங்களோ பயணித்த தவறாது அளித்தல் -அபாயம் இல்லாமை -செய்வதற்கு எளிமை -மிகு பயன் அளித்தல் போன்றவையும்

ஏவம் வித தோஷ ஹாந குணவத்த்வ தார தம்யேந உபாக உபேயயயோ : தர தம பாவ: உபயத்ராபி ஸம் பவதி |
உத்க்ருஷ்ட தமே உத்க்ருஷ்ட உத்க்ருஷ்ட தரயோ : நிக்ருஷ்டவத் வர்ஜநீயத்வமேவ |

உபாய உபேயங்களில் இப்படிப்பட்ட குண தோஷங்கள் ஏறக்குறைய இருப்பதால் தாரதம்யம் உண்டாகக் கூடும்
குணங்களைக் கொள்ளுதலில் மேல் உள்ளத்தை நோக்க கீழ் உள்ளவை குறைந்தவையாகத் தோன்றும்
ஆதலால் உத்க்ருஷ்ட தமத்தை நோக்க உத்க்ருஷ்ட தரமும் உத்க்ருஷ்டமும் நிஷ்க்ருஷ்டங்கள் போலவே விடத் தக்கவையே யாகும்

அசாரம் -அல்ப சாரஞ்ச -சாரம் -சார தரம்- தள்ளி -சார தமம் கொள்ள வேண்டுமே

தத்ர அநிஷ்டேப்ய: இஷ்டேப்யோ அபி நிக்ருஷ்டேப்ய: நிஷ் க்ருஷ்ய உத் க்ருடதமமுபாதாதும் உபாய உபேயௌ ஹை தாரதம்யேந ப்ரஷ்டவ்யௌ |
தௌ ச விவக்ஷாவஸேந ஷோடா விபஜ்ய ப்ருச்சந் யுதிஷ்டிர உவாச, கிமேகமிதி ஶ்லாேக த்வயேந |

ஆகையால் யுதிஷ்ட்ரர்
அநிஷ்டத்தையும்
இஷ்டத்தில் தாழ்ந்தவையையும் -விலக்கி
மிகச் சிறந்த இஷ்டத்தைக் கைக் கொள்ள விரும்பி
உபாய உபேயங்களைத் தாரதம்யப்படி நன்றாகக் கேட்டுத் தெளிய வேண்டும் என்னும் கருத்துடன்
அவற்றை ஆறு விதமாகப் பிரித்து
இரண்டு ஸ்லோகங்களாலே கேட்க்கிறார் –

கிமேகம் தைவதம் லோகே கிம் வாப் யேகம் பராயணம்
ஸ்துவந்த கம் கமர்ச்சந்த ப்ராப்யுனுயுர் மாநவா ஸூபம்

கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்ம ஸம்ஸார பந்தனாத் ||

இங்கு இரண்டு ஸ்லோகங்களில் ஆறு கேள்விகள்
நாலு ஸ்லோகங்களில் ஆறு அவதார ரஹஸ்யங்கள் கண்ணன் கீதையில்

ரஹஸ்ய சிகாமணி -வராஹ சரம ஸ்லோகம் -இரண்டு ஸ்லோகங்களில் ஐந்து அர்த்தங்கள் -மூவர் அனுபவம் இங்கும்

பீஷ்ம உவாச –
ஜகத் ப்ரபும் தேவ தேவம் அநந்தம் புருஷோத்தமம் |
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ : ஸததோத்தித:||4||

தமேவ ச அர்சயந் நித்யம் பக்த்யா புருஷம் அவ்யயம் |
த்யாயம் ஸ்துவந் நமஸ் யம்ஶ்ச யஜமாநஸ்த மேவ ச ||5||

அநாதி நிதனம் விஶ்ணும் ஸர்வலோக மஹேஶ்வரம் |
லோகாத்யக்ஷம் ஸ்துவன் நித்யம் ஸர்வது:காதிகோபவேத் ||–6-

ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஞ்யம் லோகானாம் கீர்த்தி வர்த்தனம் |
லோக நாதம் மஹத் பூதம் ஸர்வபூத பவோத்பவம்||–7-(பத்து பெருமைகளைக் கொண்டவனை நித்தியமாக ஸ்தோத்ரம் பண்ணி )

ஏஶ மே ஸர்வ தர்மாம் தர்மோ அதி கதமோ மத: |
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைர் அர்சன நர: ஸதா||–8-(இதில் நாலாவது ஸ்தவன் )

பரமம் யோ மஹத் தேஜ: பரமம் யோ மஹத் தப: |
பரமம் யோ மஹத் ப்ரஹ்ம பரமம் ய: பராயணம் ||–9-

பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாணாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் ய அவ்யய: பிதா ||–10-

யத:, ஸர்வாணி, பூதானி, பவந்தி, ஆதியுகாகமே |
யஸ்மின், ச, ப்ரளயம், யாந்தி, புன:, ஏவ, யுகக்ஷயே ||–11-

தஸ்ய, லோக ப்ரதானஸ்ய, ஜகன்னாதஸ்ய, பூபதே |
விஶ்ணோ:, நாம ஸஹஸ்ரம், மே, ஶ்ருணு, பாபபயாபஹம் ||–12-

தாமே விரும்பிக் கேட்டுக் கொண்டு இருக்கும் அரசரை நோக்கி பீஷ்மர்
அரசனே கேள் என்று மீண்டும் அழைத்தல்
இந்தப் பகவத் விஷயத்தைச் சொல்லுபவருக்கு கேட்பவர் கிடைத்த சிறப்பைச் சொல்கிறது

அத வக்தும் ப்ரதிஜாநீதே யாநீதி –

யாநி நாமானி கௌணானி விக்யாதானி மஹாத்மன: |
ரிஶிபி: பரிகீதானி தானி வக்ஷ்யாமி பூதயே || 13 ||(பூ பதே ஸ்ரு ணு -காது கொடுத்தால் போதும் -ஆசை ஒன்றே வேண்டும் -யானி –தானி )

இஹ சதுஷ்டயீ ஹி ஶப்தாநாம் ப்ரவத்தி: 1-த்ரவ்ய2-ஜாதி3- குண4-க்ரியா விஷய பேதேந (நான்கையும் குறிக்கும்) |
தத்ர [அ]த்ரவ்யோபாதித்வேந [அ]ஸாதாரண்யேந ச [அ]த்ரவ்ய ஜாதி நிமிதத்வாத் 
ப்ரக்ருஷ்ட குண கர்ம நிமித்தத்வமேவ பகவந் நாம்நாம் ப்ரவீதி கௌணாநி இதி |(த்ரவ்யம் ஜாதி இவற்றை விட குணம் கர்மம் இவற்றால் சிறப்பு)

குணேப்ய: கர்மப் யஶ்ச நிமித்த பூதேப்ய: ஆகதாநி; யௌகிகாநீத்யர்த:|
குண ஶப்த: கர்மணோ அபி ப்ரதர்ஶக: |

பதச் சேர்க்கையால் வந்த அர்த்தம் -யவ்விகிதம்
பங்கஜம் சேற்றில் பிறந்த செந்தாமரை
காளான் நாய் குடையையும் சொல்லலாமே
ரூடி அர்த்தம் -தாமரை பிரஸித்த அர்த்தம்

“[ப்ரஸந்நாத் மாத்மநோ ] ப்ரவதந் நாத்மநோ நாம்நாம் நிருக்தம் குண கர்மணாம்”;
பகவாந் “கௌணாநி மம நாமாநி கீர்திதாநி ச காநிசித்”,பாரதம் 
“நாம கர்மார் தவித் தாத”,பாரதம்-உத்யோக பர்வம் 
“நிருக்தம் கர்மஜாநாம் ச ஶ்ருணுஷ்வ ப்ரயதோ அநக” இத்யாதி வசநாத் |பாரதம்-சாந்தி பர்வம் 

ந ஸைஷாம் யத்ருச்சா ஶப்தத்வம்; விவக்ஷித அவயவ அர்தத்வாத் (அவயவங்கள் அர்த்தம் )ஸாங்கேதிகத்வாச்ச-(அடையாள அர்த்தம் )||(நமக்கு அவன் பெயர் சேஷத்வம் அடியாக கொண்டுள்ளோம் )
விக்யாதாநி(ப்ரஸித்தம் )சந்தோ பாஷயோ : ப்ரவ்ருத்த் யாதீநாம் ப்ரயோக பூயஸ்த்வாத்
தத் அஸாதாரண்யேந ப்ரஸித்தாநி; ரூடாநீத்யர்த: |

யோகாதிநா அர்தாந்தர வ்ருத்தி ஸம்பவே அபி ஏகத்ர நியதத்வம் ஹி நாமத்வம் |(கேசவன் ப்ரஸஸ்த கேஸ பாஸம் கொண்டவன் -சேராமல் திருமால் ஒருவன் இடமே சேரும் ரூடியாக பிரசித்தமாக இருப்பதால்)

ருஷிபிர் : அஸேஷ வேதார்த தர்ஶிபி: ஸநக ஸநத்குமார நாரத ப்ரப்ருதிபி:|

பரிகீதாநி ஏவம் ரூபாணி ஏவம் நிமித்தாநி ஏதத் வாசகாநீதி

பரித: துக்த தேநுவத் அபிநிவிஶ மாநை :(பால் கொடுக்கும் பசு காம்புகள் வழியாக பாலைக் கொடுக்குமா போல்)
ப்ரீத்யா ப்ரயுக்தாநி யாநி நாமாநி தேப்ய: ஏகைக ஸ்மாத் ஏகைகம் மது கரக்ரமேண (தேன் வண்டு போல் சேமித்து )ஸமா ஹ்ருத்ய பகவதா வ்யாஸேந
ஸ்தோத்ர ரூபேண கீர்திதாநி ஸம்ப்ரதாய பாரம்பர்யேண அஸ்மத் பர்யந்தம் ஸம் ப்ராப்தாநி துப்யம் வக்ஷ்யாமி |(ஸம்ப்ரதாய பரம்பரையாக வந்து உணர்ந்து- உனக்கு அறிய கூறுகிறேன்)

கிமர்தம்? பூதயே , பூதி: பவநம் ஸத்தா; அநாதி ஸம்ஸார த்ருஷ்டி விநாஷ்டாத்மந புநருஜ் ஜீவநா யேத்யர்த: ||

சத்தைக்காகவும் உஜ்ஜஜீவனத்துக்காகவும் -இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே உழன்று இருக்கும் நமக்காக

ஶ்ரூயதே ஹி ஏவம் ஆத்மந : ஸதஸத்பாவௌ

“அஸந்நேவ ஸ பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத், அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத ஸந்தமேநம் ததோ விது:” இதி |
அபரிமித மஹாத்ம்ய தயா அபரிமித அபிஜ்ஞத்வாத் பகவதோ யத்யபி க்ருத்ஸ்ந நாம க்ரஹண அஸம்பவ:;

பிரபாவம் மஹாத்ம்யம் -அவனைச் சொல்லி முடிக்க முடியாதே -முழுமையாக சொல்லா விட்டாலும் முடிந்த அளவு சொல்கிறேன்

“ஶ்ருதம் ஏதஸ்ய தேவஸ்ய நாம நிர்வசநம் ஶுபம்|
யாவத் தத்ர அபிஜாநேஹம் அப்ரமேயோ ஹி கேஶவ:||”(புரிந்து கொள்ள முடியாமல் -புத்திக்கு அப்பால் பட்டவன் என்று அறியவே சொல்கிறோம் கேட்க்கிறோம்)
இதி ப்ரகாரேண புபூஷதாம் (அறிய ஆசை ஒன்றே வேண்டும் )து விஷ்ணு நாம ஸஹஸ்ரேண ஆத்ம லாபோ பவதீதி த்வந யதி மஹாத்மந இதி |

ஏவ மேஷாம் குண[கர்ம ]நிமித்தத்வாத் ஏதததிகாரிபி: பகவத் குண தஸ்கரா ந வ்யவஹார்யா: |
“அஸ்த்வியம் ஸ குண ப்ரஹ்ம வித்யா அர்வாசீந பலாதிகாரிணாம், நிர்குண வித்யா து முமுக்ஷூணாமேவ ஹி” இதிசேத்,(தாழ்ந்த பலத்துக்கு ச குணம் சொல்லும் பக்ஷவாதிகள் வாதம் பலம் சொல்வதிலேயே நிரஸனம் )
திக் தவாம் பதிரம் ய: அஸ்யா ஏவ “முச்யதே ஜந்து:ஜந்ம ஸம்ஸார பந்தநாத்”,
“யாதி ப்ரஹ்ம ஸநாதநம்” இத்யுபாயத்வம் குஷ்யமாணம் ந ஶ்ருணோஷி |

கிம் ச ஸ குண நிர் குணே த்வே ப்ரஹ்மணீ ப்ரஸஜ்யே யாதாம் இத்யத்வைதம் விபத்யதே |(இரண்டு ப்ரஹ்மம் சொல்வதாலேயே அத்வைதம் நிரஸனம் -பொய்யான ச குண உபாஸனம் செய்வதால் பலன் கிட்டுமோ)

“பரமோ மத” இதி,
“அதிகதமோ மத” இதி ஸர்வ ஶாஸ்த்ரார்தாதிக தர ஸார ஸமுத்தார ஏக ப்ரயோஜநாதா அதிக்ருதஸ்ய
அர்வாசீந விஷய த்வோக்தௌ க்வ அந்யத்ர அநர்வாசீந ஸித்தி: அநயோ : வித்யயோ :?(|ச குண உபாசனம் தாழ்ந்த பலனைக் கொடுக்கும் என்றால் பீஷ்மர் அறிந்த வற்றில் இதுவே உயர்ந்தது -வேறே எந்த வித்யை கொடுக்கும் )

ஸ குணா நிர் குணார் தேதி மாச வாசால வோசதா: |
ந விருத்தார்தயோ : யஸ்மாத் உபாய உபேய தயா த்வயோ : ||(வார்த்தைப்பாடு பண்ணாதே -விருத்தமான இரண்டும் உபாயம் உபேயம் ஆகாதே )

மஹாத்மாவான பகவானுக்கு எந்த நாமங்கள் குணங்களாலும் செய்கைகளாலும்
குணம் என்றதால் செயகைகளையும் கொள்ள வேண்டுமே –
வந்தனவாகப் பிரஸித்தி பெற்றனவோ
ரிஷிகளால் நன்றாகக் கீர்த்தனம் செய்யப்பட்டவையோ
ப்ரஸித்தி -இந்த நாமங்கள் வேதங்களிலும் லோகத்திலும் மிகுதியாக வழங்கப் பெற்று பகவானையே குறிப்பன என்ற பிரசித்தி –
வேதார்த்தங்களை உள்ளபடி தரிசிக்க வல்ல ஸநக ஸனத் குமார நாரதாதி ரிஷிகள்
இன்ன திரு நாமம் இன்ன காரணத்தால் வந்தன-இன்ன அர்த்தங்களை சொல்லுகின்றன என்று
கறவைப் பசுக்கள் தம் கன்றுகளுக்கு பாலைத் தாமே விரும்பிக் கொடுப்பது போலே
மனம் உவந்து ஆங்காங்கு திரு நாமங்களை ஸங்கீர்த்தனம் செய்தார்கள்
அவற்றை ஒவ்வோர் இடங்களில் இருந்து ஒவ்வொன்றாக மதுரகர நியாயமாகச் சேர்த்து
ஸ்ரீ வ்யாஸ பகவான் இந்த ஸ்தோத்ர ரூபமாகச் செய்து அருள
அவரிடம் இருந்து பீஷ்மருக்கு கிடைக்கப் பெற்றன –

ஆத்ம உஜ்ஜீவனத்துக்காக என்றமையால்
அநாதி காலமாக ஸம்ஸாரத்தில் அகப்பட்டு அறிவு அழிந்து கிடக்கும் ஆத்மாக்கள் சத்தை பெற்று உஜ்ஜீவிப்பதற்காக உனக்குச் சொல்லுகிறேன் என்றும்
மஹாத்மா என்றதனால்
இப்படிப்பட்ட பரம புருஷனை அறிவதால் ஸத் பாவமும் அறியாமையினால் அஸத் பாவமும் உண்டாவதாக ஸ்ருதிகள் சொல்லுகின்றன
எம்பெருமான் அளவற்ற அறிவுடைய -ஸர்வஞ்ஞன் -யாகையாலும்
அளவற்ற மஹாத்ம்யம் யுடையவராகையாலும்
அவருக்குத் தக்கபடி அவனுடைய திரு நாமங்களை அளவற்ற மஹாத்ம்யம் யுடையவையாய் இருக்குமே
அவற்றை எல்லாம் அறிவது முடியாதாயினும் கேட்ட வரையிலும் தெரிந்து கொண்டு இருக்கிறேன்
அவனுடைய திரு நாமங்களைக் கேட்ட வரையில் ஆத்ம லாபம் யுண்டு -என்றும் கூறினார் என்க

மனஸில் அழுக்கு இருந்தால் -கலக்கம் உண்டாகி -பாதிப்பு ஏற்பட அறிகிறோம் –
உடம்புக்கு கவசம் போல் மனஸ்ஸுக்கு திரு நாம சங்கீர்த்தனம்-

தாய்க்கும் மகனுக்கும் இவருக்கும் –இவர் அடி பணிந்தாருக்கும்-பரம காருண்யத்தால் –
திருநாமங்களை பற்றிக் கேள்வி கேட்க்காமலேயே திரு நாமங்களையும் அருளிச் செய்கிறார்-

பிறகு ஸ குண நிர்க் குண வாதத்தைப் பற்றி விரிவாக விசாரித்து இருக்கிறது –

அபி ச நிர் குணஸ்ய கிம் மூலம் குண ப்ரதீதே:?(ஓன்று மற்று ஒன்றாகத் தோற்றுமா போல் -வெள்ளி முத்துச் சிப்பி -போல் நிர்குண ச குண ப்ரஹ்மம் )
ஸா அவித்யேதி சேத், ஜநி ம்ருதித மோஹாதி பவ தோஷ விஷ மூர்ச்சி தஸ்ய முமூர்ஷோ :
பரம பேஷஜம் ப்ரஹ்மைவ அவித்யா- ப்ர மாத்யதேஷ தோஷ ஆஸ்பதம் (ப்ரஹ்மத்துக்கே அவித்யாதி தோஷம் உண்டு என்பாய் ஆனால் )
அநாக்ராத குண கணிகம் சேதி மநோ ஹரம் இதம் வேத ரஹஸ்யம் |

ப்ரஹ்ம தோஷா ம்ருஷா சேத் (ப்ரஹ்ம தோஷம் பொய்யானால் )தே நைர் குண்யம் ச ம்ருஷா மதம் |
நைர் தோஷ்ய ஸ குணத்வே தே ஸத்யே ஸ்யாதாம் ந சேச்சஸி ||(ப்ரஹ்மத்துக்கு நிர் குணத்வம் என்றாலே நிர்குணத்வமும் பொய்யாகும் அன்றோ-ஸ குணத்வம் சித்தமாகுமே )

(ப்ரஹ்மம் மட்டுமே சத்யம் ஜகத் மித்யா- ஜீவனும் ப்ரஹ்மமும் ஒன்றே- ஞானமே ஓன்று- ஞானம் உடையவன் இல்லை என்பாய் ஆனால்
ப்ரஹ்மமே அவித்யா என்றால் ஸ்வரூபமே -போக்கவே முடியாதே
ப்ரஹ்மத்துக்கு அவித்யா என்றால் அத்வைதம் போகுமே)

கோ வா ப்ரஹ்ம அவித்யாம் இமம் உபஹந்யாத்?
அத்வைத வித்யா நிஷ்ட இதி சேத் , இதம் ததோ அபி மநோ ஹரம் யத் பரம் ப்ரஹ்ம பம் ப்ரமீதி
ஸம்ஸாரீ ததுத்தாரயதீதி |
ப்ரஹ்மத்துக்கு அவித்யை யார் போக்குவார் என்றால் அத்வைதம் அறிந்த ஜீவன் போக்குவான் என்பாய் என்றால் -இந்த வாதமும் மநோ ஹராமாய இருக்கும் ப்ரஹ்மம் உழன்று இருக்க ஜீவன் மீட்ப்பார் என்கிறாயே

அபி ச ஸ குண வாக்யம் கஸ்ய ஹேதோ: நிரர்தகம்?
நிர் குண வாக்ய பாத் யத்வாத் இதி சேத், விபரீதம் கஸ்மாந்ந ஸ்யாத்?
ஸம மேவ ஹ்யுபயோ : ப்ராமாண்யம் விராேதஶ்ச |

ஒன்றுக்கு மற்ற ஓன்று விரோதம் என்றால் இரண்டு வாதிகளும் சமமாகும்

அந்யச்ச குணாஶ்சேத் நிஷேத்தவ்யா:, கிம் தபஸ்விந்யா குண ஶ்ருத்யா?
ப்ரதிஷேத்ய குண ப்ரஸஞ்ஜிகா ஸேதி சேத், மா ச பூத் ப்ரதிஷேத்யம் |

குணம் உண்டு என்று ப்ரஸக்தி இருந்தால் தானே இல்லை என்று நிஷேதிக்க
பின்னால் சொன்னதே பிரபலம் -ஆகவே குணம் இல்லை என்பாய் ஆனால்

ந ஹ்ய ப்ரஸக்தம் ப்ரஸஜ்ய ததேவ ப்ரதிஷேதது ஸாஸ்த்ரமிதி காசித் லலாட பட்டே லிபி: |
ப்ரக்ஷால நாத்தி பங்கஸ்ய தூர தஸ் பர்ஸநம் வரம் |

சேறு இருந்தால் தானே நீரால் அலம்ப முடியும்
அதனால் சேற்றைப் பூசிக்கொள்வார் உண்டோ
தூரமாக தள்ளிப் போவதே உசிதம் அன்றோ

நச “பௌர்வாபர்யே பூர்வ தவ்ர்பல்யம் ப்ரக்ருதிவத்” இதி ஸார்வத்ரிகோ ந்யாய: |
ந ஹி ப்ராக்தநம் இஹ அஸ்தீதி ஜ்ஞாநம் ந அஸ்தீதி பரஸ்தாத்த ந ஸப்தோ ஹி நஸ்தி |

ப்ரக்ருதி ஷட்கம் விக்ருதி ஷட்கம் -ஆக 12 அத்தியாயங்கள் பூர்வ மீமாம்ஸை

இல்லை என்றால் இப்போது இல்லை -என்பதே தேறும் முன்பு இருந்தது என்பதை நிஷேதிக்காதே

பவமா நா அபச்சேதே ப்ராக்ருத தர்ம ப்ராப்தவ் ச பூர்வ தவ்ர்பல்ய, பூர்வம் அநுப ம்ருத்ய பரஸ்ய உத்பத்த்ய அஸம்பவாத் |
இஹ து ஸம்பவோ வக்ஷ்யதே |

கச்சம் விட்டால் பிராயச்சித்தம் சொல்லும்
உத்காதா விட்டால் கர்மாவை நிறுத்த வேண்டும் -முதலில் இருந்து பண்ண வேண்டும்
ப்ரதிஹத்தா விட்டால் யாகத்துக்கு உண்டான தக்ஷிணை முழுவதுமே கொடுக்க வேண்டும் –
இருவரும் விட்டால் -இரண்டும் பண்ண முடியாதே
எந்த விதி வாக்கியம் பிரபலம் -பின் சொன்ன வாக்யமே பிரபலம்
இந்த விதியை அத்வைதி கொள்கிறார் இங்கு
இது பொருந்தாது -அநியதம் -நியதம்-இரண்டும் உண்டே-வேதம் அநாதி -அனைத்து வாக்கியங்களும் நித்யம் -முன் பின் என்பதே வராதே

இங்கு விரோதமே இல்லை -ச குண வாக்கியமும் நிர் குண வாக்கியமும் விரோதம் இல்லாதவையே

யதி பரத்வாத் நிர் குண வசநம் குண அம்சம் நிஹ்நுதே, ப்ரஹ்ம ஸ்வரூப அம்சம் அபி
“ஸூந்ய மேவ தத்வம்” இதி வாக்யம் பாததாம், பரத்வாத் |
தத் புத்த ப்ர மூலத்வாத் ந வைதிகம் வஸ்து பாததே இதி சேத், ந, வேதோ அபி
ஹி தே ப்ரஹ்ம ப்ரமூல ஏவேதி கோ விசேஷோ அநயோ : ?

தத்வம் ப்ரஹ்மம் வேதம் முன் சொல்ல புத்தர் பின் சொல்ல -இது அத்தை அளிக்குமோ
ப்ரஹ்மத்தின் பிரமத்தால் வந்தது என்று நீ சொல்வதற்கும் இதுக்கும் வாசி இல்லையே

கிம் ச ப்ரத்யுதே குண ஸாஸ்த்ர மேவ பரம் த்ருஷ்டம்; தேஹாத்ம துர் குண நிதேஷே பர நிர் குண வசந பூர்வம் பகவதி ஹேய குணாந் ப்ரதிஷித்ய
கல்யாண குண விதி பரத்வஸ்ய “அபஹத பாப்மா விஜர:” இத்யாத வுபலம்பாத்|
அபி ச தத்ய- மித்யா விஷய வ்யவஸ்தயா ஸ குண நிர் குண ஶ்ருத்தயோ : பரித்ராணமிதி விப்ரலம்ப: |
பங்க ஏவ ஹி மித்யா விஷயத்வே ப்ரமாணஸ்ய, யதா அலீக கலதவ்க க்ரஹஸ்ய |
ஸ குண நிஷேதோ அபி மித்யா விஷய ஏவ த்வந் மதே இதி, தஸ்ய வா கதம் தத்த்வ விஷயத்வம் இத் யலம் அஸம்பாஷ்ய ஸம்பாஷணேந ||

நல்ல குணங்கள் உண்டு கெட்ட குணங்கள் இல்லை இரண்டுமே உண்மையாகும்-தேக குணம் ஆத்மாவைப் பாதிக்காதது போல் –

அத்ரேயம் தத்த்வ விதாம் வ்யவஸ்தா | ஜ்ஞாந சக்த்யாதி ஶ்ருதி: கல்யாண குண விஷயா, நிர் குண ஶ்ருதி: ராக த்வேஷாதி விஷயேதி;
“ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப:”(சாந்தோக்யம் )இத்யாதே: மங்கல விஷயத்வ தர்ஸநாத்,
நிர் குணமிதி ஸாமாந்ய நிஷேதஸ்ய ததந்ய விஷயத்வேந கார்தார்த்ய ஸம்பவாச்ச | (கெட்ட பண்புகள் இல்லை -என்று சுருக்கியே அர்த்தம் கொள்ள வேண்டும் )

ஏவமேவ பதாஹவநீய-ப்ராஹ்மண பரி வ்ராஜக – ப்ராஹ் மண கௌண்டிந்ய-கோபலீ வர்த -ப்ரப்ருதி ந்யாயோ நிரங்குஸ : |
ததா கலே பாதிகயா தோஷ விஷயோ நிஷேத : குண விஷயோ விதிஶ்வ ஏகஸ்மிந் வாக்யே “அபஹத பாப்மா ” இத்யாதி:,
“ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப:”இத்யந்த :;(ஒரே வாக்கியத்தில் ஆறு விஷயங்கள்-கெட்ட குணங்கள் இல்லை என்றும்- இரண்டு குணங்கள் உண்டு என்றும் சொல்லும்)

“யத் ததத் ரேஶ்யம்” இத்யாரப்ய “நித்யம் விபும் ஸர்வகதம்
ஸு ஸூக்ஷ்மம் ததவ்யயம் யத் பூதயோம் பரிபஶ்யந்தி தீரா:” இத்யந்தஶ்ச|(கோத்ரம் இல்லாதவர் அனைவரும் அவரே -எல்லாம் நிறைந்தவர்)

ந சைவம் விதே ந்யாய அபேக்ஷயா விஷய வ்யவஸ்தா , ஸ்தம்போ அஸ்தி கும்போ நாஸ்தீதிவத் |(ஸ்தம்பம் -தூண் இருக்கு -கும்பம் குடம் இல்லை -விருத்தம் இல்லையே-வாக்யங்களுக்கு விஷயங்களே வேறே வேறே தானே )

த்ருஶ்யத்வாதி நிஷேதம் தத் விருத்த மங்கல குண பரம் ஸூத்ர காரோ விவவ்ரே
“அத்ருஶ்யத்வாதி குணகக தர்மோக்தே:” இதி (1-2-22)|

குண உப ஸம்ஹார பாதே ச
சாண்டில்ய- உபகோஸல -தஹர-புருஷ-பர்யங்க வித்யா வேத்யாநாம்
குண ப்ரபந்தாநாம் புத்தி மாத்ர ஸாரத்வம் ஆசங்கய ச பர்ய ஹார்ஷீத்“ஆதராதலோப:” இதி |(ஒரு குணமும் விடக் கூடாது என்பதற்காகவே சொல்லிற்று)

ஸ்பஷ்டம் ச பகவாந் பராஸர: “ஸத்த்வாதயோ ந ஸந்தீஸே யத்ர ச ப்ராக்ரு தா குணா:”,
“ஸமஸ்த கல்யாண குணாத் மகோ அஸௌ”   இத் யாதவ் இமா மேவ ச வ்யவஸ்தாம் ஆதஸ்தே |(விஷ்ணு புராணம் )

அகில ஹேய ப்ரத்ய நீக
கல்யாணை ஏக குண தானத்வம்
உபய லிங்கமும் உபய விபூதியும் இவனுக்கு உண்டே

——————–

ததா ச
தோஷா வத்யுபதா ஸம்க்யா விருத்தை மங்கலை : குணை : |
பரிபூர்ணம் பரம் ப்ரஹ்ம சாஸ்த்ரை : ஜோகுஷ்ய தேதராம் ||

மங்களமான கல்யாண குணங்களால் நிறைந்து -தோஷங்கள் இல்லாமை -அளவு இல்லாமல் எண்ணிக்கை இல்லாமல் -கோஷிக்கும் இல்லை வாக்கியங்களும் உண்டே

“ஏதம் ஹி ஸர்வாணி வாமாநி அபி ஸம்விஸந்தி”,(வாமாநி-வாமனன் ஸூ கம் நல்ல குணங்கள்)

சீறி அருளாதே -அவன் இடம் எது இருந்தாலும் நல்ல குணமே -அவனை அடைந்து குணங்கள் நல்ல பண்பை அடைகின்றன

“ஸர்வஸ்ய வஶீ ஸர்வஸ் யேஸாந:”(ப்ரஹதாரண்யம் -அடக்கி ஆள்கிறான்)
“ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப:”,
“யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வ வித்”,(சாந்தோக்யம் -அனைத்தையும் அறிந்து புரிந்தவன்)
“பரா அஸ்ய ஸக்திர் விவிதைவ ஶ்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச”,(ஸ்வேதாஸ்ரம்)
“ மாதா பிதா ப்ராதா நிவாஸஶ் ஸரணம் ஸுஹ்ருத் கதி: நாராயண:”,(ஸூபால)
“ஸர்வ கர்மா ஸர்வ கந்தஸ் ஸர்வ ரஸ:”;(நின்றனர் இருந்தனர் –பிரவிருத்தி நிவ்ருத்தி இவன் அதீனம் )
ஆநந்த வல்லயாம் ச “ஜ்ஞாந பல யௌவநாதீநாம் இயத்தா ராஹித்யேந
தத் விஷய ஆநந்தாத் வாங் மநஸ நிவ்ருத்தி: மீமாம்ஸிதா ;

(மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி மேல் மேல் -உபரி உபரி -பிரம்மா ஆனந்தம் வரை சென்று -அவரை கீழே மனுஷ்ய ஆனந்தத்தில் வைத்து
மேல் மேல் சென்றாலும் எட்ட முடியாத ஆனந்தம் அவனது அன்றோ
உயர்வற உயர் நலம் உடையவன் அவன்)

வைஷ்ணவே ச–பகவச் சப்த நிர் வசந ப்ரகரணே “ஸூத்தே மஹா விபூத் யாக்தய” இத்யாதி ச ஸாகல்யேந;(விஷ்ணு புராணம் -ப க வ அன் -குணவான் -இயற்கையில் இவனுக்கே -சாகல்யேந முழுமை இவனுக்கே)
ஸபா பர்வணி பீஷ்ம : “ஜ்ஞாந வ்ருத்தா மயா ராஜந் பஹவ: பர்யுபாஸிதா 😐
தேஷாம் குண வதாம் ஸுவ்ரே : அஹம் குண வதோ குணாந் ||
ஸமா கதாநாம் அஶ் ரௌஷம் பஹூந் பஹு மதாந் ஸதாம்| குணைரந்யாந் அதிக்ரம்ய ஹரி: அர்ச்ய தமோ மத ||”;(அர்ச்சய தமம் இவனே )

கர்ண பர்வணி ஸ:
“வர்ஷாயுதைர் யஸ்ய குணா ந சக்யா வக்தும் ஸமேதைரபி ஸர்வ லோகை :|(ஏத்த ஏத்த எங்கு எய்தும் )
மஹாத்மந: சங்க சக்ர அஸி பாணே : விஷ்ணோர் ஜிஷ்ணோர் வஸுதேவாத்மஜஸ்ய||”;

ஶ்ரீவாராஹே
“சதுர்முகாயுர் யதி கோடி வக்த்ரோ பவேந்நர: காபி விஸூத்த சேசதா : |
ஸ தே குணா நாம யுதைகமம்ஸம் வதேந்ந வா தேவ வர ப்ரஸீத |”;(பெருமை சொல்ல முடியாது என்பதுக்கு கோடி வாய் சதுர்முகன் ஆயுஸ் ஸூத்த மனஸும் வேண்டும்-நீயே ப்ரசாதீத்து அருள வேண்டும் )

மாத்ஸ்யே
“யதா ரத்நாநி ஜலதேர ஸம்க்யேயாநி புத்ரக |
ததா குணா ஹ்யநந்தஸ்ய அஸம்க்யேயா மஹாத்மந: ||”;

வைஷ்ணவே தர்மே “ந ஹி தஸ்ய குணாஸ் ஸர்வே ஸர்வைர் முநி கணைரபி |
வக்தும் ஸக்யா வியுக்தஸ்ய ஸத்த்வாத்யை : அகிலைர் குணை : ||” இத்யாதிபி: |
ப்ராயேண ஶ்ரீமத் ராமாயண பாரதாப்யாம் ச |குப்யேயு: |(சங்கரர் பாஸ்கரர் இவரைப் பார்த்து கோபித்துக் கொள்ளும் )

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி தத்
பரோபாத்ய லீடம் விவசம் அசுபஸ் யாஸ் பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி —ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம்

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத் –பர ப்ரஹ்மம் அஞ்ஞானம் அந்தகாரத்தால் சூழப்பட்டு சம்சாரத்தில்
ஆழ்கின்றது என்கிற சங்கர மத அத்வைதிகளையும்
பரோபாத்ய லீடம் விவசம் -பர ப்ரஹ்மம் அசக்தன் -வேறே ஒருவரால் ஆட்டிப் படைக்கப் படுகிறது என்னும் பாசக்கார மதம்
அசுபஸ் யாஸ் பதமிதி -சித் அசித் போலே அசுபங்களால் வருந்து -யாதவ பிரகாசர் மதம் –
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம் -ஸ்ருதிகளில் இல்லாத வற்றையும் -நியாய சாஸ்திரங்களை ஒவ்வாத படியும்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி –தமஸ் -குணத்தால் வந்த அஞ்ஞானங்களை போக்கி அருளி
விசிஷ்டாத்வைத ஸ்தாபனம் பண்ணி அருளி வெற்றி கொண்ட ஸ்ரீ யாமுன முனிக்கு மங்களம் –

ந ச “யதோ வாசோ நிவர்தந்தே” இத்யாதி
ப்ரஹ்மணோ அப்ராமாணிகத்வ பரம்; தஸ்ய துச்சத்வ ப்ரஸங்காத்,
“யதோ வாச:”,
ஆநந்தம் ப்ரஹ்மண:” இத்யாதி தர்ம நிர்தேஸ விராேதாத், ததா வாங் மநஸ நிவ்ருத்தி வசநஸ்ய அநுபபத்தே:,
ப்ரஹ்ம ப்ரமாபக ஸாஸ்த்ர வையர்த்ய ப்ரஸக்தே:,

“அதாபதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா” இதி
ப்ரஹ்ம மீமாம்ஸ அந ஆரம்பணீயத்வ ப்ரஸங்காத்,

“வசஸாம் வாச்ய முத்தமம்”,
“ந அவேதவித் மநுதே தம் ப்ருஹந்தம்”,
“ஸாஸ்த்ர யோநித்வாத்” -(1-1-3 )இத்யாதி வாக்ய ந்யாய வ்யாத கோப ப்ரஸங்காத்,

“ஸைஷா அநந்தஸ்ய மீமாம்ஸா பவதி” இத் யுபக்ரமேண “தே தய சதம்” இத்யாதிநா
சதுர்முக ஆநந்த அநுக்ரம ஸம்ரம்ப விராேதாச்ச |

அத : “ப்ரக்ருதை தாவத்த்வம் ஹி” (3-2-21 )இதி ஸூத்ர ந்யாயேந
ஆநந்தே யத்தா ராஹித் பரமேவ மதம் ||(இருக்கும் ஆனந்தம் அளவிட முடியாது என்றே சொல்கிறது)

வ்யாஜஹ்நிரே ஸைவம் ஏதத் தாதபாத(தந்தை கூரத்தாழ்வானும் )“ஶ்ருதிஸ் தவாநந்த முகாந் ஹரேர் குணாநியத்தயா மாதுமிவோத்யதா ஸதீ |

உவாச வாஸோ மநஸா ஸஹோசிதாம் நிவ்ருத்தி மேவ த்வவதே: அஸம்பவாத்||” இதி |

அத : “ந யத்ர நாத வித்யந்தே நாம ஜாத்யாதி கல்பநா:” இத்யபி வ்யாக்யாநம் |(கல்பிக்க வேண்டாம் நாதனே -சொன்ன பின்பு நாமம் ஜாதி நிஜம் என்பதையே சொல்லிற்று)

கிம் ச, நாம ஜாத்யாதீநாம் கல்பநா நிஷேதே அகால்பநிக பாரமார்திக நாம ரூபம் ச
பகவத : ப்ரதிபாதிநம் ஸ்யாதிதி த்வம் நிகலபாஸம் த்வமேவ ப்ரயச்சஸி |

நிகலபாஸம்-காலுக்கு நீயே பாசக் கயிற்றை தேடிக்கொள்ளாதே

கதம் ச நாதேதி நாம க்ரஹணம் நாம ப்ரூயாத்| “அஸப்த கோசரஸ்யாபி”இத்யேதேந கதா |
அதோ விஶ்வ விலக்ஷண ஸ்வ அநுரூப நாம கதயா பரிமித வாச்ய வாசக ப்ரதி ஷேத பரம் |
ஸ்பஷ்டம் ப்ரதேஸாந்தரே
“நாம கர்ம ஸ்வரூபாணி ந பரிச்சேத கோசரே | யஸ்யாகில ப்ரமாணாநி ஸ விஷ்ணு: கர்பக: தவ||” இதி |(5 அம்சம்-அளவிட முடியாத அவன் உனது கர்ப்பத்தில் உள்ளான் )

ஆஹ — “நாம ஸு அவயவார்தாநாம் ந ப்ரவத்தி நிமித்தத்வம்,
நிமித்தத்வே அபி ந தத்ர ப்ராமாண்யம் தாத்பர்யாபாவாதிதி |
தததிஸ் தவீய:,ததர்த ப்ரதீதே: ஸ்வதஸ் : ப்ராமாண்யாத், அநபவாதத்வாத்,
“யாநி நாமாநி கௌணாநி”,
“ஆஸ்ய ஜாநந்தோ நாம சித்விவக்தந” இத்யாதிநா பகவத் குண ஜ்ஞாபந தாத்பர்யாவகமாச்ச

மந்த்ரவத் ஸாஸ்த்ராந்ர ப்ரமிதி பகவத் குண ஸ்மாரகத்தவ அபி ந குணாபஹார:, ஸுத்ருட ப்ரமாண ஸித்தத்வாத் |
அத ஏவஹ் யத்ர உபோத்கத நிமநயோ : குணாதி ப்ரகர்ஷம் ப்ரதிபாத்ய- ஸுத்ரடய்ய ச மத்யே தத் ஸ்மரணாய நாமாநி விதீயந்தே |
அமீஷு நாம ஸு அந்யதமமபி ஸர்வஸ்மை பலாய கல்பதே |

அவதாரிகையிலே குணங்களை சொல்லி –
மத்யத்தில் நாமங்களை பட்டியல் இட்டு
ஒவ்வொரு நாம சங்கீர்த்தனத்துக்கும் சர்வ பலனும் உண்டு என்று சொல்லி அமைத்துள்ளார்

ஏக தரஸ்ய பகவச் சாஸ்த்ராதிஷு த்வாதச அஷ்ட ஷட க்ஷராதிஷு மூலமூலி மந்த்ர ரூபேண பரிண மய்ய
ஸ்வாதந்த்ர்யேண ஸர்வார்தேஷு விநியோகாத் “நாம சித் விவக்தந” இத்யே கவசந ஸாஞ்ஜஸ்யாச்ச |
உச்சாரண மாத்ரேண உபகாரிணா மபி(சொன்னாலே -கேசவா என்ன இடர் ஆயன எல்லாம் போகுமே )
நிர்வசநேந குண ப்ரகாஸநே ஜடிதி மந:ப்ரஸாத நத்வம் பாவநத்வம் ச,(அர்த்தம் அறிந்து மனஸ்ஸு தூய்மை அடைந்து சாந்தியும் அடையும் )

நாம நிர் வசநாத் யாயேஷு “அஸ்தவ் ஷீத் நாமபி: வ்யாஸ: ஸைஶிஷ்யோ மதுஸூதநம் |
ஏஷாம் நிருக்தம் பகவந் பரமம் வக்து மர்ஹஸி ||
ஸூஶ்ரூஷோ : ஶ்ரத்ததா நஸ்ய ப்ரஜாபதிபதே: ஹரே : |
ஶ்ருத்வா பவேயம் யத் பூத : ஸ்ரச் சந்த்ர இவா மல: ||”.(சாந்தி பர்வம்)

த்ருத ராஷ்ட்ர: – “பூயோ மே புண்டரீகாக்ஷம் ஸம்ஜய ஆசக்ஷ்வ ப்ருச்சதே | நாம கர்மார்த வித்தாத
ப்ராப்நுயாம் புருஷோத்தமம் ||” இத்யாதவ் த்ரஷ்டவ்யம் |
விநியோகஶ்ச ஏஷாம் லிங்கத : உத்யோக- மோக்ஷ தர்மத வைஷ்ணவ தர்ம நிர் வசநாத் யாயேஷு தத் தந் மந்த்ர கல்பேஷு வசநேப்யஶ்ச அகவந்தவ்ய:|| 13 ||

————

உச்சாரண மாத்ரத்தாலேயே உபகரிப்பவைகளாகிலும் அவற்றின் அர்த்தங்களை ஆராய்ந்து குணங்களை வெளியிடுவதனால்
சீக்கிரம் மனம் தெளிவடைந்து பரம பரிசுத்தமாகும் என்பது
நாம நிர்வசன அத்தியாயங்களில் கண்டு கொள்க
இவற்றை உபயோகிக்கும் முறையை
ஸ்ரீ மஹா பாரதம்
உத்யோக பர்வத்திலும்
மோக்ஷ தர்மத்திலும்
வைஷ்ணவ தர்மத்திலும் உள்ள நிர்வசன அத்யாயங்களிலும்
அந்த அந்த மந்த்ர கல்பங்களிலும் உள்ள வசனங்களினால் தெரிந்து கொள்க

————

விஷ்ணோர் நாம ஸஹஸ்ரஸ்ய வேத வ்யாஸோ மஹான் ரிஷி
ஸந்தோ அனுஷ்டுப் ததா தேவோ பகவான் தேவகீ ஸூத-14-

அம்ருதாம் ஸூத் பவோ பீஜம் சக்திர் தேவகி நந்தன
த்ரி ஸாமா ஹ்ருதயம் தஸ்ய சாந்த்யர்த்தே விநி யுஜ்யதே–15-

இத் யுபோத்தாத ப்ரகரணம்
அத பஞ்ச ஸித்தாந்த நிஷ்டா நிர்ணயேந, பர வ்யூஹ விவிஸேஷேஷு ஸ்வ நாம -பவ அர்த ப்ரகரண ஒவ்சித்ய-அபௌந ருக்த்ய-ப்ரப்ருதிபி:
ந்யாயைஸ் : வ்யவஸ்தாப்ய, வ்யாகரண-நிருக்த -ஆர்ஷ நிர்வசந ப்ரஸ்தா நேந நாமாநி நிருச்யந்தே |

விஷ்ணும் ஜிஷ்ணும் மஹா விஷ்ணும் பிரப விஷ்ணும் மஹேஸ்வரம்
அநேக ரூப தைத்யாந்தம் நமாமி புருஷோத்தமம் —

ரிஷிர் நாம் நாம் –விநி யுஜ்யதே

வேத வ்யாஸர் ஸஹஸ்ர நாமத்தைக் கண்டு அறிந்த ரிஷி
பாதம் ஒன்றுக்கு எட்டு உயிர் எழுத்துக்கள் கொண்ட அனுஷ்டுப் சந்தஸ்ஸில் இது உள்ளது
இதுக்கு பகவான் விஷ்ணு தேவதை -உத்தேசியமான விசேஷம்
அம்ருதாம் ஸூத் பவ -என்பது இம்மந்திரத்துக்கு பீஜம் -ஆதாரம்
தேவகீ நந்தன -என்பது சக்தி –வன்மை
த்ரி ஸாமா -என்பது ஹ்ருதடம் -மையம்
ஸர்வ தோஷ நிவாரணம் என்னும் ப்ரயோஜனத்தில் இம்மந்திரத்துக்கு உபயோகம்

ஆயுதத்துக்கு எக்கு போன்றவை பீஜம்
முனை சக்தி
மையம் ஹ்ருதயம்
சத்ரு வாதம் போன்றவற்றுக்குப் ப்ரயோகம்
இதே போல் மந்திரங்களுக்கும் உண்டே

——————

யத: ஸர்வாணி பூதானி பவந்த்யாதியுகாகமே |
யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் யாந்தி புனரேவ யுகக்ஷயே || 11 ||

யத:, ஸர்வாணி, பூதானி, பவந்தி, ஆதியுகாகமே |

யஸ்மின், ச, ப்ரளயம், யாந்தி, புன:, ஏவ, யுகக்ஷயே ||

எவரிடமிருந்து, கல்பத்தின் தொடக்கத்தில் ஜீவராசிகள் தோன்றினவோ, அவரிடமே (அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீமன்நாராயணனிடமே) கல்பத்தின் முடிவில், மஹாபிரளயத்தில் சென்று லயமடைகின்றன.

யத: யஸ்மாத் எவரிடமிருந்து ஸர்வாணி பூதானி பவந்தி உத்பவந்தி அனைத்து ஜீவராசிகளும் தோன்றினவோ ஆதியுகாகமே கல்பாதௌ கல்பத்தின் தொடக்கத்தில் (அதாவது முதல் யுகமான க்ருத யுகத்தில்) கல்பத்தின் தொடக்கத்தில் முதல் யுகமான க்ருத யுகத்தில் யாரிடமிருந்து அனைத்து ஜீவராசிகளும் தோன்றினவோ |

யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் விலயம் (கல்பம், யுகம் முடிவில்) ப்ரளய காலத்தில் யாந்தி விநாஶம் கச்சந்தி அழிவை அடைகின்றனவோ புன: பூய:, மறுபடியும் ஏவ இத்யவதாரணார்த்த:, நான்யஸ்மின்னித்யர்த்த: இங்கு ஏவ என்பதன் அர்த்தம் எந்த ஒருவரிடமிருந்து அனைத்தும் தோன்றியதோ அந்த ஒருவரிடமே லயமடைகிறது, வேறொருவரிடம் இல்லை, யுகக்ஷயே மகாப்ரளையே மஹாப்ரளய காலத்தில் | மஹாப்ரளய காலத்தில் எவரிடம் (எவரிடமிருந்து தோன்றியதோ, அவரிடமே) அனைத்தும் சென்று லயமடைகிறதோ |

சகாரான்மத்யேSபி யஸ்மிம்ஸ்திஷ்டந்தி | (இந்த ஸ்லோகத்தில் வரும்) ‘ச’காரத்தின் அர்த்தம் என்னவெனில், (கல்ப, யுக தொடக்கம், மற்றும் ப்ரளயத்தின்) இடையினிலும் அவரிடமே நிலைபெற்று இருக்கின்றன என்பதாகும்.

யதோ வா இமானி பூதானி ஜாயந்தே யேன ஜாதானி ஜீவந்தி யத் ப்ரயந்த்யபிஸம்விஷந்தி|| (தைத்ரிய உபநிஶத் 3.1)

ஸ்ரீ தைத்ரிய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:-எதனிடமிருந்து இந்த ஜீவராசிகள் தோன்றுகின்றனவோ, எதனால் வாழ்கின்றனவோ, இறப்பவை எதனை சென்றடைகின்றனவோ…

தஸ்ய,  லோகப்ரதானஸ்ய, ஜகன்னாதஸ்ய, பூபதே |

விஶ்ணோ:, நாமஸஹஸ்ரம், மே, ஶ்ருணு, பாபபயாபஹம் ||

ஹே பூவுலகின் அரசனே (யுதிஷ்டிரனே)! மேற்சொன்ன இத்தகைய லக்ஷணங்களால் குறிப்பிடப்படும் அந்த ஒரே முழுமுதற் கடவுளும், அனைத்து உலகங்களும் தோன்றுவதற்குக் காரணமாகவும், ஞானத்தினால் அறியப்படுபவரும், அனைத்துலகின் ஸ்வாமியும், மாயைகள் அற்றவரும், எங்கும் நிறைந்துள்ளவருமான, பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் – “நமது தீவினையால் உருவான பாபங்களைப் போக்குவதும், சம்ஸார பயத்தைப் போக்குவதுமான” – ஆயிரம் திருநாமங்களை என்னிடமிருந்து கேட்பாயாக; (அவற்றை நீ) ஒருமித்த சிந்தையுடன் க்ரஹித்துக் கொள்வாயாக.

தஸ்ய ஏவம் லக்ஷணலக்ஷிதஸ்ய ஏகதைவஸ்ய மேற்சொன்ன இத்தகைய லக்ஷணங்களால் குறிப்பிடப்படும் அந்த ஒரே முழுமுதற் கடவுளும் 

லோகப்ரதானஸ்ய லோகனஹேதுபி: வித்யாஸ்ஸ்தானை: பிரதிபாத்யமானஸ்ய அனைத்து உலகங்களும் தோன்றுவதற்குக் காரணமாகவும், ஞானத்தினால் அறியப்படுபவரும்,

ஜகன்னாதஸ்ய ஜகதாம் நாத: ஸ்வாமி மாயாஷபல: பரமாத்மா நிர்லேபஸ்ச தஸ்ய அனைத்துலகின் ஸ்வாமியும், மாயைகள் அற்றவரும்,

பூபதே மஹிபால பூவுலகின் அரசனே

விஶ்ணோ: வ்யாபனஷீலஸ்ய எங்கும் நிறைந்துள்ளவருமான, பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் 

நாமஸஹஸ்ரம் நாம்னாம் ஸஹஸ்ரம் ஆயிரம் திருநாமங்களை 

பாபபயாபஹம் அஶுபகர்மக்ருதம் பாபம் ஸம்ஸாரலக்ஷணபயம் சாபஹந்தீதி, நமது தீவினையால் உருவான பாபங்களைப் போக்குவதும், சம்ஸார பயத்தைப் போக்குவதுமான

த்வம் மே மத்த: ஶ்ருணு என்னிடமிருந்துக் கேட்பாயாக ஏகாக்ராமணா பூத்வாவதாரயேத்யர்த்த: ஒருமித்த சிந்தையுடன் அதை நீ க்ரஹித்துக் கொள்வாயாக

ஏகஸ்யைவ ஸமஸ்தஸ்ய ப்ரஹ்ணோ த்விஜஸத்தம |  

நாம்னாம் பஹுத்வம் லோகானாமுபகாரகரம் ஶ்ருணு ||–ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

இருபிறப்புடையோரில் சிறந்தவனே (அந்தணனே)!! எங்கும் நிறைந்துள்ள அந்த ஒரே பரப்ரஹ்மத்தின் பல திருநாமங்கள் உலகிற்கு (உலக மக்களுக்கு) நன்மை தருவனவாகும். அவற்றை கேட்பாயாக!!

நிமித்தக்தயோ நாம்னாம் பேதின்யஸ்ததுதீரனாத் |

விபின்னான்யேவ சாத்யந்தே ஃபலானி த்விஜஸத்தம ||-ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

இருபிறப்புடையோரில் சிறந்தவனே (அந்தணனே)!! இந்த திருநாமங்களை வெவ்வேறாக உச்சரித்துத் த்யானிப்பதர்க்கு அவற்றின் (வெவ்வேறான) நிமித்த சக்திகளே காரணமாகும். எனவே, ஒவ்வொரு நாமத்திற்கும் அதன் நிமித்த சக்தியை பொறுத்தும், த்யானிப்பவரின் தன்மையை பொறுத்தும் வெவ்வேறான பலன்கள் கிடைக்கின்றன.

யச்சக்தி நாம யத்தஸ்ய தத்தஸ்மின்னேவ வஸ்துனி |

சாதகம் புருஶவயாக்ர சௌம்யே க்ரூரேஶு வஸ்துஶு ||

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

ஹே மனிதர்களில் புலி போன்றவனே!!! ஒவ்வொரு திருநாமத்திற்கும் உள்ள சக்தியானது, (த்யானிப்பவரின்) மன நிலையை பொறுத்து மென்மையான அல்லது கடினமான உருக்கொள்கிறது.

இதி விஶ்ணுதர்மவசனாத்யத்யபி பரஸ்ய ப்ரஹ்மண: ஶஶ்டிகுணக்ரியாஜாதிரூடீனாம் ப்தப்ரவ்ருத்திஹேதுபூதானாம் நிமித்தக்தினாம் ஸ அஸம்பவ:

இந்த விஶ்ணுதர்மோத்தர புராணத்தின் வாக்கியத்தின் படி, (நிர்குண, நிர்விஷேஷன) பரப்ரஹ்மத்தை உறவு, குணம், செயல், ஜாதி மற்றும் குறிப்பு சொற்கள் (போன்ற நாமங்களால்) மூலம் விவரிக்க இயலாது.

ததாபி ஸகுணே ப்ரஹ்மணி ஸவிகாரே ச ஸர்வாத்மகத்வாத்தேஶாம் ப்தப்ரவ்ருத்திஹேதூநாம் ஸம்பவாத் ஸர்வே ப்தா: பரஸ்மின் பும்ஸி வர்தந்தே ||

ஆயினும் பரப்ரஹ்மம் அனைத்துமாய் இருப்பதனால் சகுண ப்ரஹ்மத்தை இத்தகைய நாமங்களால் விவரிக்க இயலும். அனைத்தும் ப்ரஹ்மமேயாதலால், அனைத்தும் நாமங்களும் அந்த ஒப்பற்ற பரம்பொருளையே குறிக்கும்.

தத்ர அவற்றுள் எந்தெந்த திருநாமங்களை கூறுகிறார் என்பதை பீஶ்மாசார்யார் அடுத்த ஸ்லோகத்தில் விளக்குகிறார்.

யானி நாமானி கௌணானி விக்யாதானி மஹாத்மன: |

ரிஶிபி: பரிகீதானி தானி வக்ஷ்யாமி பூதயே || 13 ||

யானி, நாமானி, கௌணானி, விக்யாதானி, மஹாத்மன: |

ரிஶிபி:, பரிகீதானி, தானி, வக்ஷ்யாமி, பூதயே ||

(அந்த பரப்ரஹ்மத்தின் திருநாமங்களுள்) அவரது குணங்களினின்று தோன்றியதும், (அந்த குணங்களை வர்ணிக்கும் திருநாமங்களுள்) மிகவும் புகழ் பெற்றதும், (அவ்வாறு குணங்களை வர்ணித்தும், பிரசித்தி பெற்றதுமான திருநாமங்களுள்) மந்திர சித்தி பெற்ற முனிவர்களாலும் மற்றும் பகவானின் அவதாரங்களை வர்ணிக்கும் புராணக்கதைகளில் பாடபெற்றதும், நான்கு வித புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதான திருநாமங்களை, (அந்த புருஷார்த்தங்களை) அடைவிக்கும் பொருட்டு உனக்கு நான் உபதேசிக்கிறேன்.

யானி நாமானி கௌனானி குண ஸம்பந்தீனி குணயோகாத் ப்ரவ்ருத்தானி தேஶு ச யானி (அந்த பர ப்ரஹ்மத்தின்) குணங்களினின்று தோன்றியதும்

விக்யாதானி ப்ரஸித்தானி (அந்த குணங்களினின்று தோன்றிய திருநாமங்களில்) மிகவும் புகழ் பெற்றதும்,

ரிஶிபி: மந்த்ரைஸ்தத்தர்ஶிபிஶ்ஸ்ச (அவ்வாறு குணங்களை வர்ணித்தும், பிரசித்தி பெற்றதுமான திருநாமங்களுள்) மந்திர சித்தி பெற்ற முனிவர்களால்

பரிகீதானி பரித: ஸமந்தத: பரமேஶ்வராக்யானேஶு தத்ர தத்ர கீதானி மஹாம்ஸ்சாஸாவாத்மேதி பகவானின் அவதாரங்களை வர்ணிக்கும் புராணக்கதைகளில் பாடபெற்றதும் மஹாத்மா தஸ்யாசிந்த்யப்ரபாவஸ்ய அந்த மஹாத்மாவின் நினைத்தற்கரிய பெருமைகளை

தானி வக்ஷ்யாமி பூதயே புருஶார்த்தசதுஷ்ட்யஸித்யை பூதயே புருஶார்த்த சதுஷ்ட்யார்தினாமிதி நான்கு வித புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதான திருநாமங்களை, (அந்த புருஷார்த்தங்களை) அடைவிக்கும் பொருட்டு உனக்கு நான் உபதேசிக்கிறேன்.

மஹாத்மா

யச்சாப்னோதி யதாதத்தே யச்சாத்தி வியாநிஹ |

யச்சாஸ்தி சந்ததோ பாவஸ்தஸ்மாதாத்மேதி கீர்த்யதே || (லிங்க புராணம் 1.70.96)

ஸ்ரீ லிங்க புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-அந்த புருஶன் ஸுஷுப்தி தசையில் ப்ரஹ்மத்தை உணர்கிறான், ஸ்வப்ன தசையில் இந்த்ரியங்கள் இல்லாமலே விஷய சுகத்தை அனுபவிக்கிறான் மற்றும் ஜாக்ரத தசையில் (இந்த்ரியங்களோடு) விஷயங்களை அனுபவிக்கிறான், இவ்வாறு எப்பொழுதும் அவன் நிகழ் காலத்திலேயே இருப்பதால் அந்த புருஶனை ஆத்மா என்று அழைக்கிறார்கள்.

இதி வசனாதயமேவ மஹாநாத்மா இந்த லிங்க புராண வாக்யத்தின் மூலம் அந்த பரப்ரஹ்மமே மஹாத்மா என்று அறியப்படுகிறார்.

ரிஶிர் நாம்னாம் ஸஹஸ்ரஸ்ய வேத வ்யாஸோ மஹாமுனி: |
சந்தோனுஶ்டுப்  ததா தேவோ பகவான் தேவகி ஸுத: ||
இந்த ஸஹஸ்ரநாமத்தை நமக்கு அளித்தவர் மஹா முனிவரான (தபஸ்வியான) வேத வ்யாஸர். இதை (ஒரு ஸ்லோகத்திற்கு எட்டு பதங்களைக் கொண்ட) அனுஶ்டுப் சந்தத்தில் அமைத்துள்ளார். இந்த ஸ்தோத்ரத்திற்கு உரிய தெய்வம் தேவகி ஸுதனான பகவான் க்ருஶ்ண பரமாத்மா ஆவார்.
விஶ்ணு ஸஹஸ்ரநாமமாக இருப்பினும், இதை நேரடியாக கேட்டு, ஆமோதித்தவர் பகவான் ஸ்ரீக்ருஶ்ணன் ஆவார்.

அம்ருதாம்ஸூத்பவோ பீஜம் ஶக்திர் தேவகி நந்தன: |
த்ரிஸாமா ஹ்ருதயம் தஸ்ய ஶாந்த்யர்த்தே வினியுஜ்யதே || 
இந்த ஸ்லோகம் ந்யாஸத்தை விளக்குவதாக அமைந்துள்ளது. ஸஹஸ்ரநாமத்திலுள்ள சில திருநாமங்களை பீஜ ஆகியவற்றை குறிப்பதாக இந்த ஸ்லோகம் உரைக்கிறது. ந்யாஸம் மற்றும் இந்த ஸ்லோகங்களுக்கு பெரியவர்களிடம் அர்த்தத்தை கேட்டு தெரிந்து கொள்வோமாக.

விஷ்ணும் ஜிஷ்ணும் மஹா விஷ்ணும் பிரப விஷ்ணும் மஹேஸ்வரம்
அநேக ரூப தைத்யாந்தம் நமாமி புருஷோத்தமம் —

எங்கும் நிறைந்துள்ளவரும், அனைவரையும் வெல்பவரும், மஹேஸ்வரனும், பற்பல வடிவெடுத்து (அல்லது பற்பல வடிவம் கொண்ட) அஸுரர்களை அழிப்பவரும், புருஷோத்தமனுமான பகவான் மஹாவிஷ்ணுவை நான் வணங்குகிறேன்.

விஶ்ணும் – எங்கும் நிறைந்திருப்பவரே- பொதுவாக விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்துள்ளவர் அல்லது எங்கும் வியாபித்துள்ளவர் என்று பொருள்.

ஜிஶ்ணும் – அனைவரையும் வெல்பவரே. பகவான் அன்பு மற்றும் அழகினால் அடியவர்களையும், பராக்ரமத்தால் அசுரர்களையும் வெல்கிறார்

மஹாவிஶ்ணும் – மகாவிஷ்ணுவே!!

ப்ரபவிஶ்ணும் – அனைவரையும் அடக்கி ஆள்பவரே. (ப்ரபவிஷ்ணு என்றால் அனைவரின் மேலும் ஆதிக்கம் செலுத்துவது. பகவான் ப்ரஹ்மா முதலானோரையும் அடக்கி ஆள்கிறார்)

மஹேஶ்வரம் – ஒப்புயர்வற்ற இறைவனே. ஸஹஸ்ரநாமத்தில் ‘பூதமஹேஸ்வர:’ என்ற திருநாமத்தில், இந்த பதத்திற்கு  ‘மஹான்’ (ஒப்புயர்வற்ற, சிறந்த) ‘ஈஸ்வரன்’ (இறைவன் அல்லது ஆள்பவர்) என்று விளக்கம் அளித்துள்ளார்.

அனேக ரூப தைத்யாந்தம் – பற்பல வடிவெடுத்து (அவதரித்து) அசுரர்களை அழிப்பவரே. பகவான் வராஹ, நரசிம்மர் போன்ற பல்வேறு வடிவெடுத்து அசுரர்களை அழிக்கிறார். அல்லது, இதை வேறுவிதமாகவும் பொருள் கொள்ளலாம் – வண்டிக்குள் இருந்த அசுரன் (சகடாசுரன்), காற்று வடிவில் இருந்த அசுரன் (த்ருணாவர்த்தன்), காக்கை வடிவ அசுரன் (காகாசுரன்), பாம்பு வடிவெடுத்த அசுரன் (அகாசுரன்), கழுதை / நரி வடிவில் வந்த தேனுகாசுரன், கொக்கு வடிவில் வந்த பகாசுரன் என்று பல்வேறு வடிவெடுத்து வந்தாலும் அசுரர்களை பகவான் அழிக்கிறார்

நமாமி – உம்மை வணங்குகிறேன்

புவனேஶ்வரம் – இந்த பிரபஞ்சத்தின் தலைவரே!

எங்கும் நிறைந்திருப்பவரே, அனைவரையும் வெல்பவரே, அனைவரையும் அடக்கி ஆள்பவரே, ஒப்புயர்வற்ற இறைவனே, பற்பல வடிவெடுத்து (அவதரித்து) அசுரர்களை அழிப்பவரே, இந்த பிரபஞ்சத்தின் தலைவரே, மகாவிஷ்ணுவே!! உம்மை வணங்குகிறேன்.

————

அஸ்ய  ஸ்ரீ விஷ்ணோர் திவ்ய ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ஸ்ரீ வேத வ்யாஸோ பகவான் ரிஷி அனுஷ்டுப் சந்த

ஸ்ரீ மஹா விஷ்ணு பரமாத்மா ஸ்ரீ மன் நாராயணோ தேவதா

அம்ருதம் ஸூத்பவோ பாநுரிதி பீஜம்
தேவகீ நந்தனஸ் ஸ்ரஷ்டேதி சக்தி
உத்பவ ஷோபணோ தேவ இதி பரமோ மந்த்ர
சங்க ப்ருந் நந்தகீ சக்ரீதி கீலகம்
சார்ங்க தந்வா கதா தர இத்யஸ்த்ரம்
ரதாங்க பாணி ரஷோப்ய இதி நேத்ரம்
த்ரி ஸாமா ஸாமக ஸாமீதி கவசம்
ஆனந்தம் பர ப்ரஹ்மேதி யோநி
ருது ஸூ தர்சநஸ் கால இதி திக் பந்த
ஸ்ரீ விஸ்வரூப இதி த்யானம்
ஸ்ரீ மஹா விஷ்ணு கைங்கர்ய ரூபே ஸ்ரீ சஹஸ்ர நாம ஜபே விநியோக –

————————

த்யானம்

ஷீரோ தந்வத் பிரதேச சுசி மணி விலஸத் ஸைகதே மௌக்தி நாம்
மாலா க்லுப்தாஸ நஸ்த ஸ்படிக மணி நிபைர் மௌக்திகைர் மண்டிதாங்க–

சுப்ரை ரதப்ரை ருபரி விரசிதைர் முக்த பீயூஷ வர்ஷை
ஆனந்தீ நஸ் புநீயாதரி நளின கதா சங்க பாணிர் முகுந்த–

1-ஷீரோ தந்வத் பிரதேச —முகுந்த-

பரிசுத்தமான ரத்னங்களாலே பிரகாசிக்கிற மணல் குன்றுகளை யுடைய திருப்பாற் கடலில்
முத்து மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட திவ்ய ஆஸனத்தில் எழுந்து அருளி இருப்பவரும்
ஸ்படிக மணி போல் விளங்குகிற முத்து மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட திரு மேனியை யுடையவரும்
மேலே ஸஞ்சரிக்கிற வெண்மையான அநேக மேகங்களால் வர்ஷிக்கப் பட்ட –பீயூஷ வர்ஷை-அம்ருத தாரைகளாலே ஸந்தோஷிப்பவரும்
சக்ரம் பத்மம் கதை சங்கம் ஆகிய இவைகளைத் திருக் கரங்களில் யுடையவரும்
பக்தர்களுக்கு முகுந்த-போக மோக்ஷங்களை அளிப்பவருமான
ஸ்ரீ மன் நாராயணன் நம்மைப் பரிசுத்தம் ஆக்க வேண்டும்

க்ஷீரோ தன்வத் பிரதேஷே – திருப்பாற்கடலில்-பாற்கடலின் கரையில் அமர்ந்திருக்கிறது

சுசிமணி விலாசத் சைகதேர் – அழகிய மணிகளின் ஒளியால் (நிறைந்த)-வைரங்களைப் போல ஒளிரும் மணல் பரப்பு-ஸைகதே – மணற்பரப்பில் (பாற்கடலின் கரையில்)

மௌக்திகானாம் மாலா க்லுப்தாஸ னஸ்தா – முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட-முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில்

ஸ்படிகமணிநிபைர் மௌக்திகைர் மண்டிடாங்க – ஒளிரும் வெள்ளைப் படிகங்கள்-ஸ்படிகத்திற்கு ஒப்பான முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட-அவயவங்களை உடையவரும்

ஶுப்ர: – தூய (வெண்மையான)

அப்ர: – மேகங்கள்

அதப்ரை: – பொழியும்

முக்தபீயூஶ வர்ஶை: – அமுத மழையை

சுப்ரை ராப்ரை ராதாப்ராய் – பல வெள்ளை மேகங்களிலிருந்து

ரூபாரிவிராச்சிதைர் – ஒரு வளைவில் மேலே வட்டமிடுகிறது

முக்தா பீயூஷ வர்ஷைஹி – அமிர்தத்தை ஊற்றுகிறது

ஆனந்தீ – மகிழ்பவரும்

ந: புநீயாத் – என்னை புனிதமாக்கட்டும்

ஆனந்தீ நஹ் புனீயாத் – ஆனந்தமாக சுத்திகரிப்பு

தாரி நளினா கடா – வட்டு, தாமரை மற்றும் சூலாயுதம் ஆகியவற்றைப் பிடித்திருக்கும் கைகளால்

சங்கு பாணீர் முகுந்தா – முக்தியை அளிப்பவரான முகுந்த பகவான் வைத்திருக்கும் சங்கு

இந்த ஸ்லோகத்தில் அடிப்படைக் கருவானது ‘முகுந்த நஹ் புனீயாத்‘ அதாவது ‘முகுந்த பகவான் நம்மைத் தூய்மைப்படுத்தட்டும்’ என்பதாகும். முகுந்தா என்பது மகாவிஷ்ணுவின் பெயர், அதாவது ‘முக்தி அல்லது விடுதலை அளிப்பவர்’. முகுந்தாவை பாடமாக அடையாளம் கண்டுகொண்டதன் மூலம், மற்ற அனைத்து சொற்றொடர்களும் முகுந்தாவின் வெவ்வேறு அம்சங்களை விவரிக்கும் பெயரடைகள் மட்டுமே என்பதைக் காணலாம்.

முதல் விளக்கம் அவர் ‘ஆசனஸ்தா’ அல்லது ஒரு பீடத்தில் அமர்ந்திருக்கிறார்.

அவர் எங்கே அமர்ந்திருக்கிறார்? எந்த பீடத்தில்?

‘க்ஷீரோ தன்வத் பிரதேஷே’ – பாற்கடலின் கரையில்;

‘மௌக்திகானம் மாலா க்லுப்தா’ – இது முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது;

‘சுசிமணி விலாசத் சைகதே’ – தூய வைரங்கள் பதிக்கப்பட்ட பளபளக்கும் மணல் பரப்பில்; மற்ற பெருங்கடல்களில் மணலில் சிலிக்கா படிகங்கள் மட்டுமே உள்ளன ஆனால் பால் பெருங்கடலின் கரையில் மணலில் திகைப்பூட்டும் வைரங்கள் உள்ளன.

ஸ்ரீ மஹாவிஷ்ணு, பாற்கடலின் வைரம் பதிக்கப்பட்ட மணற்பரப்பில் முத்து மாலையுடன் கூடிய ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

அவரைப் பற்றி இன்னும் என்ன சொல்ல முடியும்?

 அவர் ‘மௌக்திகைர் மண்டித அங்கஹ்’. அவரது உடல் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளைப் படிகங்களைப் போல ஒளிரும் ‘ஸ்பத்திக மணி நிபைஹி’.

அவர் ஆனந்தி, ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சி.

வேறு எதனுடன்?

முக்தா பீயூஷ வர்ஷைஹி – அமிர்தத்தை ஊற்றுகிறது.

சுப்ரைரப்ரை ராதாபைஹி – பலதரப்பட்ட தூய வெள்ளை மேகங்களிலிருந்து.

உபரி விரச்சிதைஹி – அலங்கரித்த வளைவைப் போல கரையின் மேல் சுற்றிக்கொண்டு, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விதானம் போல கரையில் மிதக்கும் தூய வெண்மையான மேகங்களில் இருந்து பொழியும் அமிர்த மழையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் என்ன வைத்திருக்கிறார்?

தாரி நளினா கடா ஷங்க பாணிஹி – அவர் தனது கையில் தனது சக்ரா அல்லது டிஸ்கஸ், நளினா அல்லது தாமரை, கடா அல்லது மெஸ் மற்றும் சங்கு அல்லது சங்கு ஆகியவற்றைப் பிடித்துள்ளார். இவையே அவனுடைய தனித் தன்மைகள்!

“முகுந்தா, பாற்கடலின் கரையில் கம்பீரமாக அமர்ந்திருப்பவர், மேற்பரப்பு மணலை வைரங்களைப் போல மின்னும், பளபளப்பான முத்து மாலையை அலங்கரிக்கிறார்; தூய வெண்ணிற மேகங்கள் மேலே மிதந்து கொண்டு, அமிர்த மழை பொழியும் மகிழ்ச்சியிலும் பரவசத்திலும் இருக்கும் அவர். வட்டு (சுதர்சன சக்கரம்), கதாயுதம் (கௌமோதகி கதா), சங்கு (பாஞ்சஜன்ய சங்கமம்) மற்றும் தாமரை ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியிருக்கும் முகுந்தன், நம்மைத் தூய்மைப்படுத்தி விடுவிக்கட்டும்”.

வைரம் போன்று மின்னும் மணல் துகள்களைக் கொண்ட பாற்கடலின் கரைகளிலே, உயர்ந்த முத்து மலைகளால் அலங்கரிக்கப்பெற்றவரும், அவருக்கு மேலே சூழ்ந்துள்ள வெண்மேகங்கள் அமுத மழையைப் பொழியவும், ஆனந்தமே வடிவானவரும், தனது திருக்கரங்களில் கதை, சங்கு மற்றும் சக்கரங்களை ஏந்தியவரும், அனைவருக்கும் முக்தியை அளிப்பதால் முகுந்தன் என்று பெயருடையவருமான பகவான் (ஸ்ரீமந்நாராயணன்) நம்மை புனிதப்படுத்தட்டும்.

———

2-பூ பாதவ் யஸ்ய நாபிர் வியத ஸூரா நிலஸ் சந்த்ர ஸூர்யவ் ச நேத்ரே
கர்ணா வாஸாஸ் சிரோ த்யவ்ர் முகமபி தஹநோ யஸ்ய வாஸ்தேயமப்தி

அந்தஸ்தம் யஸ்ய விஸ்வம் ஸூர நரகககோ போகி கந்தர்வ தைத்யை
சித்ரம் ரம் ரம்யதே தம் த்ரி புவந வபுஷம் விஷ்ணும் ஈசம் நமாமி-

பூ பாதவ் யஸ்ய —விஷ்ணும் ஈஸம் நமாமி

யாருக்கு பூமி திருவடிகளோ
ஆகாசம் நாபியோ
வாயு பிராணனோ
சந்த்ர ஸூர்யர்கள் கண்களோ
திசைகள் காதுகளோ
ஸ்வர்க்கம் திருமுடியோ
அக்னி திரு முக மண்டலமோ
கடல் நாபியின் கீழ் பாகமோ –வாஸோயம் என்பது பதம் -இந்தக்கடல் யாருக்கு ஆடையோ
தேவர்கள் மனிதர்கள் பக்ஷிகள் பசுக்கள் பாம்புகள் கந்தர்வர்கள் அஸூரர்கள் இவர்களால்
பலதரப்பட்ட இந்த உலகு எவருடைய உதரத்தில் களிப்புடன் இருக்கின்றதோ
மூன்று புவனங்களையும் திருமேனியாக யுடையவரும்
ஸர்வ ரக்ஷகரான ஸ்ரீ விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

எங்கும் நிறை பரம்பொருளாம், அனைவர்க்கும் ஈசனாம் பகவான் விஷ்ணுவை மூவுலகின் வடிவிலே தியானிக்கின்றேன். (இந்த விராட் வடிவில்) பூமியே அவரது திருவடிகளாக, சுவர்க்கம் அல்லது ஆகாயமே அவரது நாபியாக (தொப்புள் பகுதி), திங்களும், கதிரவனும் அவரது இரு திருக்கண்களாக, திசையே அவரது காதுகளாக, சூரியமண்டலமே அவரது தலையாக, அக்னி அவர் வாயாக (அல்லது முகம் என்றும் கூறுவர்), கடல்கள் அவரது வயிறாக (உள்ளது). அவருக்குள் தேவர்கள் (ஸுரர்), மனிதர்கள் (நர), கக (பாம்புகள்), கோ (பசுக்கள், கால்நடைகள்), கந்தர்வர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய அனைவரும் சஞ்சரிக்கின்றனர்.

விராட் ஸ்வரூப வர்ணனை -தியானிக்க விஸ்வ ரூபம் -தெரியாத 14 லோகங்களைக் கொண்டு தியானிக்க முடியாதே
கோல மேனி -திவ்ய மங்கள விக்ரஹம் தியானிக்க -பரிக்ஷித்துக்கு ஸூகர்-

பவ்வ நீருடை யாடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா
செவ்வி மாதிரமெட்டும்  தோளா வண்டம் திரு முடியா நின்றான் பால் செல்ல கிற்பீர்
கவ்வை மா களிருந்தி விண்ணி ஏற்றிக் கழல்  மன்னர் மணி முடி மேல் காகமேறத்
தெய்வ வாள் வலங்கொண்ட சோழன்  சேர்ந்த திரு நறையூர் மணி மாடம், சேர்மின்களே –6-6-3-திருநறையூர் எம்பெருமானை மங்களாசாசனம்

திருமுடியா நின்றான் (6. 6: 3) (பவ்வம் – கடல்: உடை ஆடை – அரையில் உடுத்தும் பீதாம்பரம்; பார் அகலம்-பூமிப்பரப்பு; பவனம்-வாயு மெய்-திருமேனி, செவ்வி-அழகிய, மாதிரம்-திசை; தோள்-புயம்; அண்டம்-அண்ட பித்தி; திருமுடி-திருஅபிஷேகம்! என்று அவன் ஜகத்ஸ்வரூபியாய் இருக்கும் தன்மையை அழகிய உருவகத்தால் அநுபவித்து மகிழ்கின்றார். எங்கும் பரவி (விபு) நிற்கும் எம்பெருமானுக்குக் கடல் நீர் அரையில் உடுக்கும் பீதாம்பரமாகின்றது; பூமிப் பரப் பெல்லாம் திருவடியாகின்றது; வாயுவெல்லாம் திருமேனி யாகின்றது; எட்டுத் திசைகளும் திருத்தோள்களாகின் றன; அண்டகடாகம் திருமுடியாகின்றது. ஆக இவ் வகைகளினால் ஜகத்ரூபியாயிருக்கின்ற எம்பெருமான்

பூஹ் பதௌ யஸ்ய’ – அவருடைய பாதங்கள் பூமி கிரகம்–பூமியே அவரது திருவடிகள். இந்த பூமியில் வாழும் நாம் அனைவரும் ஏற்கனவே அவரது திருவடிகளில் தான் இருக்கிறோம். அதை உணர்ந்து தவறிழைக்காது வாழ்ந்தாலே போதும். அதுவே தவம். வேறொன்றும் வேண்டாம்.

‘நாபிர் வியட்’ஆசு அனிலா’ – அவரது தொப்புள் வானம்-‘ – அவரது சுவாசக் கருவி வாயு (காற்று)-எவருடைய (அவரது) தொப்புள் பகுதியே தேவர்கள் சஞ்சரிக்கும் ஆகாயம்

‘சந்திர சூர்யௌ ச நேத்ரே’ – அவருடைய கண்கள் சூரியனும் சந்திரனும்-பகலில் நம்மை காத்து, இரவில் நம்மை மகிழ்விக்கும் சந்திர, சூரியர்களே அவரது இரு கண்கள். இதன் தத்துவம் என்னவென்றால், பகவான் ஒரே நேரத்தில் சூரியன் போன்ற விழியால் நமது பாபங்களை எரிக்கிறார், சந்திரன் போன்ற விழியால் நமது துன்பங்களை போக்கி மகிழ்விக்கிறார் (கதிர்மதியம் போல் முகத்தான் – திருப்பாவை 1). மேலும், சந்திரன், சூரியன் என்ற இரு விழிகளின் மூலம் இரவு, பகல் ஆகிய இரு வேளைகளிலும் நாம் செய்யும் கர்மங்களை அவர் பார்த்துக்கொண்டே இருக்கிறார்.

‘கர்ணௌ ஆவாஷா’ – அவரது காதுகள் திசைகள்–அவரது செவிகளே திசைகள். அவருக்கு எல்லாம் கேட்கும். அவருக்குத் தெரியாத இரகசியம் இந்த பிரபஞ்சத்திலேயே கிடையாது

‘ஷிரோ த்யௌ’ – அவருடைய தலை தேவலோகம்-த்யௌ எனப்படும் சூரிய மண்டலமே அவரது தலை (சிலர் த்யௌ என்பதற்கு ஆகாயம் என்றும் கூறுவர். இரண்டும் ஏற்புடைய அர்த்தங்களே)

‘முகம் தகனா’ – அவரது வாய் நெருப்பு (அக்னி)-அக்னி அவரது வாயில் இருக்கிறார். தனது கிருஷ்ணாவதாரத்தில் ஒருமுறை பகவான் அக்னியை வாயினால் பருகி தமது இடையர் குல நண்பர்களை காத்தான். அக்னி அவனது வாய்க்குள் அடக்கம் என்பதை ஒரு திருவிளையாடலாகவே காட்டி அருளினான்.

‘வாஸ்தேயம் அப்திஹ்’ – அவரது வயிறு பெருங்கடல்–கடல்களே அவரது வயிறு

‘அந்தஸ்தம் யஸ்ய விஸ்வம்’ – முழுப் பிரபஞ்சமும் அவனில் உள்ளது.-அவருக்குள்ளே இந்த உலகமே அடங்கியுள்ளது

சூர-நர-கக-கந்தர்வ-தைத்யைஹி சித்ரம் ரம்ரம்யதே – பிரபஞ்சம், இது தேவர்கள், மனிதர்கள், பறவைகள், விலங்குகள், பாம்புகள், கந்தர்வர்கள் மற்றும் பேய்கள் போன்ற பலவிதமான வாழ்க்கை வடிவங்களின் மகிழ்ச்சியான விளையாட்டு மைதானமாகும்.-கக – பாம்புகள் (இங்கு பாம்புகள் என்பது ஊர்வனவற்றை குறிப்பது)கோ – மாடுகள் (இது அனைத்து மிருகங்களையும் குறிக்கும்-கந்தர்வ – கந்தர்வர்கள் (இது மனிதர்களை தவிர்த்த, தேவர்களுக்கும்-மனிதர்களுக்கும் இடையிலுள்ள மற்ற இனத்தவர்களை குறிக்கும்)

சித்ரம் – பல்வேறு (இவ்வாறு பல்வேறு வகையான ஜீவன்களும்)

ரம்ரம்யதேதம் – ரமிக்கின்றன (இன்புறுகின்றன)

 சித்ரம் ரம்ரம்யதே‘ என்பது ‘ரம்’ என்று மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறப்பட்ட ஒரு அழகான கட்டுமானமாகும்.

இறுதியாக ‘திரிபுவன வபுஷம்’ என்றால் ‘அவர் மூன்று உலகங்களின் உருவம்’.

இவை அனைத்தையும் ஒன்றாகக் கொண்டு, எங்களிடம் முழுமையான சட்டகம் உள்ளது:

த்ரிபுவன வபுஶம் – இத்தகைய மூவுலக வடிவினரான

விஶ்ணுமீஶம் – அனைவருக்கும் ஈஸ்வரனான பகவான் விஷ்ணுவை

நமாமி – அவரது இந்த விராட் ரூபத்தில் வணங்குகிறேன்.

பகவானை உள்ளபடி தியானிக்க வேண்டுமென்றால் இவ்வாறான விராட் ரூபத்தில் தான் தியானிக்க வேண்டும். ஆனால், இது அனைவராலும் இயலாத காரியம். எனவே தான் அந்த பரம்பொருள் “நமது உள்ளத்திற்கும்” விளங்குமாறு ஒரு எளிய வடிவை ஏற்கிறார்.

இது நற்றிணையில் கடவுள் வாழ்த்து. இந்த செய்யுளின் பொருளுக்கும், மேற்கண்ட தியான சுலோகத்திற்கும் உள்ள ஒற்றுமையை பாருங்கள்.

‘மா நிலம் சேவடி ஆக, தூ நீர் வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,

விசும்பு மெய் ஆக, திசை கை ஆக, பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக,

இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய வேத முதல்வன்’ – என்ப-

‘தீது அற விளங்கிய திகிரியோனே.’

நிலமே சேவடி, ஆகாயமே உடல், மதியும், கதிரவனுமே திருக்கண்கள் … அவனே வேத முதல்வன் என்று தெளிவுறக் கூறுகிறார் “பாரதம் பாடிய பெருந்தேவனார்”.

 மூவுலகையும் தன் உடலாகக் கொண்ட மகாவிஷ்ணுவை வணங்குகிறேன் பூமி அவருடைய பாதங்கள், வானம் அவருடைய தொப்புள். காற்று அவனுடைய மூச்சு, சூரியனும் சந்திரனும் அவனுடைய கண்கள். திசைகள் அவரது காதுகள் மற்றும் சொர்க்கம் அவரது தலை. நெருப்பு அவனுடைய முகம் மற்றும் பெருங்கடல் அவனுடைய வயிறு. பலவகையான தேவர்கள், மனிதர்கள், பறவைகள், கால்நடைகள், பாம்புகள், கந்தர்வர்கள் மற்றும் தைத்தியர்கள் (அசுரர்கள்) என பலவகையான தேவர்கள் கொண்ட பிரபஞ்சம் அவரில் அமைந்துள்ளது – அனைவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.

விஸ்வரூபம் அல்லது பிரபஞ்ச வடிவம் சாதாரண மனிதர்களுக்குக் காட்சிப்படுத்துவதும் சிந்திப்பதும் மிகவும் கடினம். கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவத்தை அனுபவிக்க அர்ஜுனனுக்கு தெய்வீக தரிசனம் (திவ்ய சஷுஸ்) வழங்கப்பட்டது. அர்ஜுனன் பார்த்தான்:

‘தத்ரைகஸ்தம் ஜகத்கৃத்ஸ்னம் ப்ரவிபக்தம் அநேகதா
அபஷ்யத் தேவதேவஸ்ய ஷரீரே பாண்டவஸ் ததா’

அர்ஜுனன், முழுப் பிரபஞ்சமும் அதன் பன்மடங்கு பிளவுகளுடன் ஒரே இடத்தில் ஒடுங்கியதைக் கண்டான்.

—————–

3-சாந்தாகாரம் புஜக சயனம் பத்ம நாபம் ஸூரேசம்
விஸ்வா தாரம் ககந ஸத்ருசம் மேக வர்ணம் ஸூப அங்கம்

லஷ்மீ காந்தம் கமல நயனம் யோகி ஹ்ருத் த்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவ பய ஹரம் ஸர்வ லோக ஏக நாதம்

சாந்தாகாரம் —–ஸர்வ லோக ஏக நாதம்
சாந்தமான ஆகாரத்தை யுடையவரும்
ஆதி சேஷன் மீது பள்ளி கொண்டவரும்
தாமரை பூத்த திரு நாபியை யுடையவரும்
தேவர்களுக்குத் தலைவரும்
விச்வா தாரம் -விஸ்வத்துக்கு ஆதாரமாக -விஸ்வமே வடிவாக யுடையவரும்
ஆகாசத்தைப் போல் எங்கும் நிரம்பி இருப்பவரும்
நீல மேகம் போன்ற வடிவம் யுடையவரும்
உத்தம லக்ஷணங்கள் பொருந்திய அங்கங்கள் யுடையவரும்
லஷ்மீ பதியும்
செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவரும்
யோகிபிர் த்யான கம்யம் -யோகிகளால் தியானத்தால் அடையப்படுபவரும் என்றும்
யோகிகளுடைய ஹ்ருதயத்தில் தியானத்தினால் அறியப்படுபவரும்
பிறவியின் பயத்தைப் போக்குபவரும்
ஸகல லோகங்களுக்கும் தலைவருமான
விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன்

சாந்தகாரம் – அமைதியான வடிவானவரும்-அவர் சாந்தத்தின் உருவம் அல்லது உருவகம் – பகவான் விஷ்ணு சாந்தம் மட்டும் அல்ல, அவர் தனது பக்தர்களுக்கு இந்த உயர்ந்த குணத்தை அருளுகிறார். அவருடைய பக்தர்களுக்கு எல்லாம் உண்டு, அவருடைய சாந்தத்தின் பேரின்பத்தை எப்போதும் அனுபவிக்கிறார்கள்.

புஜகஷயனம் புஜகா என்றால் பாம்பு என்றும், ஷயனம் என்றால் படுக்கை என்றும் பொருள். அவர் படுக்கையாக ஒரு பாம்பு உள்ளது-பாம்பணையில் பள்ளி கொண்டுள்ளவரும்–. ‘புஜைஹி கச்சதி‘ – தன் கரங்களில் நகர்வதால் பாம்பு புஜகா என்று அழைக்கப்படுகிறது.

பத்மநாபம் – ‘பத்மம் நாபௌ யஸ்ய சஹா‘ அதாவது தொப்புளில் தாமரையை உடையவர்.-கொப்பூழில் எழுகமல பூவழகர் (உந்தித் தாமரை படைத்தவரும்) விஷ்ணுவின் தொப்புளுடன் இணைக்கப்பட்ட தாமரையின் மீது படைப்பாளர் பிரம்மா அமர்ந்திருக்கிறார். முக்கிய சஹஸ்ரநாமத்தில் நாம பத்மநாபமும் மூன்று முறை தோன்றுகிறார்.

சுரேசம் – -சுரர்களுக்கு (தேவர்களுக்கு) ஈஸ்வரன், அதாவது தேவாதி தேவன்–‘சூரானாம் ஈஸ்வர‘ என்றால் தேவர்களின் இறைவன்.

விஸ்வாகரம் – அவர் விஸ்வா அல்லது பிரபஞ்சத்தின் உருவகம். -சென்ற சுலோகத்தில் அனுபவித்தார் போல இந்த பிரபஞ்சமே தனக்கு திருவுடலாக உடையவர்–சில பதிப்புகள் இதை ‘விஷ்வாதாரம்‘ என்று கொடுக்கின்றன, அதாவது பிரபஞ்சத்தின் அடித்தளம் அல்லது மூல காரணம்.-இந்த பிரபஞ்சத்திற்கு ஆதாரமாய் இருப்பவர்.

ககன சத்ருஷம்ககன என்பது ஆகாயம் மற்றும் சத்ருஷம் என்றால் ஒப்பிடத்தக்கது அல்லது அவர் வானத்தைப் போன்றவர். ஆகாயம் போன்றவர் (எங்கும் பரந்துள்ளவர்)-அவர் நீல நிறத்தில் இருக்கிறார். அவர் எங்கும் இருக்கிறார். அவர் வல்லமையுள்ளவர், அவர் பெரியவர். அனைத்தும் அவனில் வாழ்கின்றன.

மேகவர்ணம் – கார்மேக வண்ணத்தர் (கண்ணன் என்னும் கருந்தெய்வம்…)-இது ககன சத்ருஷத்தில் இருந்து மேலும் எடுக்கப்பட்டது. மேகம் என்பது மேகம், வர்ணம் என்பது நிறம். பகவான் மேகம் போன்ற கருநீல நிறத்தில் இருக்கிறார், குறிப்பாக மழை பொழியும் மேகம்.

சுப அங்கம் – அழகிய அவயவங்களை உடையவர் (என்னரங்கத் தின்னமுதர் குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில் எழுகமலப் பூவழகர்)சுப என்றால் அழகான மற்றும் மங்களகரமானது, அங்க என்றால் உடல் உறுப்புகள். விஷ்ணு பகவான் வசீகரிக்கும் வடிவம் கொண்டவர், அது பக்தர்களின் மீது தனது அருளைப் பொழிகிறது.

லக்ஷ்மிகாந்தம் – திருமகள் கேள்வன்!=இந்த நாமம் என்றால் அவர் லட்சுமி தேவியின் மனைவி என்று அர்த்தம். பாற்கடல் அமிர்தத்திற்காக சலசலக்கும் போது, ​​லட்சுமி தேவி கையில் மாலையுடன் வெளிப்பட்டபோது, ​​​​அவள் விஷ்ணுவின் மீது கண்களை வைத்து, மற்ற தேவர்களைப் புறக்கணிக்காமல் உடனடியாக மாலையை அவருக்கு வழங்கினாள். அன்றிலிருந்து விஷ்ணு லட்சுமிகாந்தன் ஆனார். லட்சுமி விஷ்ணுவின் மார்பில் வசிக்கும் ‘விஷ்ணுவக்ஷஸ்தலாலயா‘ என்று அழைக்கப்படுகிறார்.

கமல நயனம் – தாமரை இதழை ஒத்த திருக்கண்களை உடையவர்-கமல என்றால் தாமரை, நயனம் என்றால் கண். அவர் அழகான தாமரை போன்ற கண்களை உடையவர்.

யோகிஹ்ரித்யானகாம்யம் யோகி என்பது பகவானின் மீது முழு கவனம் செலுத்துபவர், ஹ்ரித் என்பது இதயம். தியானம் என்பது தியானம், கம்யா என்றால் அடையக்கூடியது. எனவே முழு அர்த்தம் என்னவென்றால், பகவான் விஷ்ணுவை யோகியின் இதயத்தில் தியானிப்பதன் மூலம் அடைய முடியும்.-தியானத்தில் திளைக்கும் யோகிகளின் உள்ளத் தாமரையில் வீற்றிருப்பவர்

‘தபஸ்விப்யோதிகோ யோகி ஞானநிப்யோபி மதோதிக:
கர்மிப்யஸ்சாதிகோ யோகி தஸ்மாத் யோகி பார்ஜுன‘- பகவத் கீதையின் 6வது அத்தியாயம் 46வது வசனத்தில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார் –

யோகியானவன் கேவல தபஸ்ஸை செய்பவர்களைக் காட்டிலும் சிறப்புற்றவனாக எண்ணப் படுகிறான் –
ஆத்ம ஞானம் தவிர்ந்த மற்ற அறிவுடையவர்களைக் காட்டிலும் சிறப்புற்றவனாக எண்ணப் படுகிறான் –
யோகியானவன் கேவல கர்மங்களைச் செய்பவர்களைக் காட்டிலும் சிறப்புற்றவனாக எண்ணப் படுகிறான் –-எனவே, ஓ அர்ஜுனா, எல்லாச் சூழ்நிலைகளிலும் நீ யோகி யாகு’. ஒரு  யோகி இறைவனை இதயத்தில் தியானிப்பதன் மூலம் அடைய முடியும்.

சில பதிப்புகளில் யோகி ஹிருத் தியான காம்யம் யோகிபிர் தியான காம்யம் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது. தியானத்தால் யோகிகளை அடையக் கூடியவர் என்பது இதன் பொருள்.

வந்தே விஷ்ணும் – நான் பகவான் விஷ்ணுவை வணங்குகிறேன்

பவபயஹரம் பவ என்றால் உலக இருப்பு. பய என்பது பயம். ஹரம் அழிப்பான். மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு என்ற இருத்தலின் பயத்தை இறைவன் அழிக்கிறான். அவர் மீண்டும் மீண்டும் வரும் சம்சார சுழற்சியிலிருந்து விடுதலை அளிக்கிறார்.  அவர் ‘முக்தானாம் பரமா கதிஹி’ என்று அழைக்கப்படுகிறார், இது முக்தி பெற்றவர்களின் இறுதி ரிசார்ட் ஆகும்.

சம்சார அச்சத்தை போக்குபவர்-இந்த சம்சாரத்தில் புல், பூண்டு முதற்கொண்டு தேவராய், அசுரராய், தாவர ஜங்கமமாய், எல்லா பிறப்பும் பிறந்து, நிலையில்லா இன்ப-துன்பங்களில் உழல்பவர்களுக்கு தமது திருவடி நிழல் அளித்து, மீளா இன்பமான முக்தியை நல்குகிறார்.

ஆ ப்ரஹ்ம புவநால் லோகா புநராவர்திநோர்ஜுந.–
மாமுபேத்ய து கௌந்தேய புநர் ஜந்ம ந வித்யதே–-৷৷8.16৷৷

அர்ஜுனா ப்ரஹ்மாண்டத்தினுள் இருக்கும் ப்ரஹ்ம லோகம் வரையில் உள்ள எல்லா உலகங்களும்
அழிவை உடையவை –ஆப்ரஹ்ம-அது உட்பட -அது வரை என்றபடி –

குந்தீ புத்திரனே என்னை அடைந்த பின்போ எனில் மறு பிறப்பு இல்லை

——————-

4– மேகஸ்யாமம் பீத கௌஸேயா வாஸம் ஸ்ரீ வத் சாங்கம் கௌஸ்துப உத்பாஸி தாங்கம்
புண்யோபேதம் புண்டரீகாய தாக்ஷம் விஷ்ணும் வந்தே ஸர்வ லோக ஏக நாதம் —

மேகஸ்யாமம் –ஸர்வ லோக ஏக நாதம்
நீல மேகம் போன்ற கரிய திரு மேனியை யுடையவரும்
பீதாம்பரத்தைத் தரித்தவரும்
ஸ்ரீ வத்ஸம் என்னும் மறுவை அடையாளமாக யுடையவரும்
கௌஸ்துபம் என்னும் மணியினால் பிரகாசிக்கின்ற அங்கத்தை யுடையவரும்
புண்ய புருஷர்களால் சூழப் பட்டவரும்
தாமரை மலர் போன்ற விசாலமான திருக் கண்களை யுடையவரும்
ஸர்வ லோகங்களுக்கும் ஒப்பற்ற தலைவருமான
ஸ்ரீ யபதியை நமஸ்கரிக்கிறேன் –

முந்தைய தியான ஸ்லோகத்தைப் போலவே, இதிலும் அடிப்படைக் கருவானது ‘விஷ்ணும் வந்தே’ அதாவது ‘நான் விஷ்ணுவை வணங்குகிறேன்’. முந்தைய ஸ்லோகத்தின் தொடர்ச்சியாக, நம் மனதில் பகவான் விஷ்ணுவின் தெளிவான உருவத்தை உருவாக்க வேத வியாசர் மேலும் ஒரு ஸ்லோகத்தை நாடினார்.

மேகஷ்யாமம் – -நீருண்ட கார்மேகம் போன்ற மேனி நிறம் கொண்டவரும்–முந்தைய ஸ்லோகத்தில், அவர் ‘மேக வர்ணம்’ என்று வர்ணிக்கப்பட்டார், அவரது நிறம் ஒரு மழை மேகத்தைப் போன்றது. இந்த ஸ்லோகத்தில் இந்த அம்சம் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது, அதில் அவர் மேகஷ்யாமாம் என்று வர்ணிக்கப்படுகிறார், அதாவது அவர் ஆழமான அடர் நீல நிறத்தில் இருக்கிறார், அது கருப்பு நிறத்திற்கு அருகில்  இருக்கிறார்

பீத கௌஷேயவாசம் பீத என்றால் மஞ்சள் மற்றும் கௌஷா என்பது பட்டுப் புழுவின் கூட்டு, எனவே கௌஷேயா என்றால் பட்டு, வாசம் என்றால் உடை என்று பொருள். அவர் மஞ்சள் பட்டு உடையில் (வஸ்திரம்) அலங்கரிக்கப்பட்டுள்ளார்.-உருக்கிய பொன்போன்ற மஞ்சள் பட்டாடையை உடுத்தியுள்ளவரும்

ஸ்ரீவத் சாங்கம் அங்கம் என்பது ஒரு குறி. அவர் லட்சுமி தேவியின் இருப்பைக் குறிக்கும் வகையில் அவரது மார்பின் வலது பக்கத்தில் ஸ்ரீவட்சம் என்ற முக்கிய அடையாளத்தை ஏந்தியுள்ளார். எனவே அவர் ஸ்ரீவத்ஸன் அல்லது ஸ்ரீவத்ஸம் தாங்குபவர் ஸ்ரீவத்ஸவாஸ் என்றும் அழைக்கப்படுகிறார்.

  1. அவரது மார்பின் வலது பக்கத்தில் ஒரு முடி பூட்டு.
  2. அவரது மார்பில் லட்சுமியின் இருக்கை.
  3. . மகரிஷி பிருகுவின் உதையின் பலனாகக் கிடைத்த குறி

கௌஸ்துபோத்பாசிதாங்கம் கௌஸ்துபம் என்பது ரத்தினம், உத்பாசிதா என்றால் அலங்கரிக்கப்பட்ட மற்றும் அங்க என்பது உடலின் ஒரு பகுதியாகும், இது இந்த நிகழ்வில் மார்பைக் குறிக்கிறது. அவரது மார்பில் அற்புதமான கௌஸ்துப ரத்தினம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெறுவதற்காகப் பாற்கடலைக் கலக்கியதால் தோன்றிய பதின்மூன்று பொக்கிஷங்களில் ஐந்தாவது பொக்கிஷம் கௌஸ்துபம். அது இறைவனின் மார்பை அலங்கரித்து அவரது உருவப்படத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

பகவானின் திருமார்பில் அவருக்கென்றே உள்ள இரு அடையாளங்கள், ஸ்ரீவத்ஸம் என்னும் மரு மற்றும் கௌஸ்துபம் என்ற மணி. கௌஸ்துப மணி திருப்பாற்கடலை கடையும் பொழுது அதிலிருந்து தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன

புண்யோபேதம் புண்யா என்பது ஆசீர்வதிக்கப்பட்ட நபர்களைக் குறிக்கிறது. உபேதம் என்றால் சூழப்பட்டுள்ளது. ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அல்லது நீதியான செயல்களைச் செய்து புண்ணியத்தைப் பெற்றவர்கள் அவரைச் சூழ்ந்துள்ளனர். பல பிறவிகளின் புண்ணியம் அல்லது நற்செயல்கள் உள்ளவர்கள் மட்டுமே அவரை அடைய முடியும் என்பது கருத்து.-புண்ணியமே ஒரு வடிவெடுத்தாற்போல உள்ளவரும் (அல்லது புண்ணியம் செய்தவர்களால் சூழப்பட்டுள்ளவரும்)

புண்டரீகாயாதாக்ஷம் – இது கடந்த ஸ்லோகத்தில் நாம் பார்த்த ‘கமலநயனம்’ என்ற சொல்லின் விரிவாக்கம். புண்டரீக என்றால் தாமரை, ஆயதா என்றால் நீளம் மற்றும் அகலம் மற்றும் அக்ஷ என்றால் கண். புண்டரீகாயடாக்ஷம் என்றால் – தாமரை மலரைப் போல கண்கள் நீளமாகவும் அகலமாகவும் அழகாக இருக்கின்றன.-“தஸ்ய யதா காப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி.“-தாமரை இதழ் போன்ற திருக்கண்களை உடையவரும்

வந்தே விஷ்ணும் – நான் பகவான் விஷ்ணுவை வணங்குகிறேன்.

சர்வலோகநாதம் – (ஸர்வ லோக ஏக நாதம்) – ஈரேழ் பதினான்கு உலகங்களுக்கும் ஒரே கடவுளான (கிமேகம் தைவதம் லோகே?)நாம் ஏற்கனவே கடந்த ஸ்லோகத்தில் பார்த்தது போல், சர்வ என்றால் அனைத்து; லோக என்றால் உலகம்; ஏகா என்றால் மட்டும் என்றும் நாதா என்றால் தலைவன் அல்லது தலை என்றும் பொருள். அவர் அனைத்து உலகங்களுக்கும் ஒரே தலைவர், அதாவது பிரபஞ்சத்தின் இறைவன்.

நான் மகா விஷ்ணுவை வணங்குகிறேன்:

  • மழை மேகங்களின் ஆழமான கருநீல நிறத்தை உடையவர்;
  • கவர்ச்சிகரமான மஞ்சள் நிற பட்டு உடையில் அலங்கரிக்கப்பட்டவர்;
  • மார்பில் அற்புதமான ஸ்ரீ வத்ச முத்திரையால் அலங்கரிக்கப்பட்டவர்;
  • தன் உடம்பில் கௌஸ்துப ரத்தினத்தின் பிரகாசத்தை ஒளிரச் செய்பவன்;
  • ஆசீர்வதிக்கப்பட்ட மக்களால் தொடர்ந்து கலந்துகொள்பவர்;
  • யாருடைய கண்கள் தாமரை மலரைப் போல நீளமாகவும் அகலமாகவும் அழகாகவும் இருக்கும்
  • பிரபஞ்சத்தின் மறுக்கமுடியாத இறைவன் யார்.

நீருண்ட கார்மேக வண்ணரும், மஞ்சள் பட்டாடை உடுத்தியவரும், ஸ்ரீவத்ஸம் என்னும் மருவை மார்பில் தாங்கியுள்ளவரும், மார்பில் கௌஸ்துப மணியை அணிந்துள்ளவரும், புண்ணியம் செய்தவர்களால் சூழப்பட்டுள்ளவரும், தாமரைக் கண்ணனும், அனைத்துலகின் ஒரே ஒப்பற்ற நாதனுமான பகவான் விஷ்ணுவை வணங்குகின்றேன்.

—————–

நம: ஸமஸ்த பூதானாம் ஆதி பூதாய பூப்ருதே |
அநேக ரூப ரூபாய விஶ்ணவே ப்ரபவிஶ்ணவே ||

நம: – வணங்குகிறேன்

ஸமஸ்த பூதானாம் ஆதிபூதாய – அனைத்து பருப்பொருட்களுக்கும் ஆதியானவராய் இருப்பவரும். இந்த ப்ரபஞ்சமாய் நமக்கு தெரியும் அனைத்துமே, மூல பிரகிருதி என்னும் சூக்ஷ்ம சக்தியிலிருந்து தோன்றியவை ஆகும். மூல பிரகிருதி பகவானிடமிருந்து தோன்றுகிறது. எனவே, நாம் காணும் அனைத்திற்கும் ஆதியானவர் பகவானே

பூப்ருதே – இந்த பிரபஞ்சத்தை தாங்குபவரும் (பகவான் ஆதிசேட வடிவில் தனது ஆயிரம் பணாமுடிகளால் இந்த ஈரேழு பதினான்கு உலகங்களையும் தாங்குகிறார். வராஹ அவதாரத்தில் பூமியை தாங்கினார்)

அநேகரூப ரூபாய – பல்வேறு வடிவங்களை ஏற்பவரும் (பகவான் நல்லோரை காக்கவும், தீயோரை தண்டிக்கவும், அறத்தை நிலைநாட்டவும் பகவான் பல்வேறு வடிவங்களில் தோன்றுகிறார்)

விஶ்ணவே – எங்கும் நிறை பரப்ரஹ்மமான விஷ்ணுவை

ப்ரப விஶ்ணவே – அனைவருக்கும் பிரபுவானவருமான (நான்முகன் முதலானோருக்கும் பிரபு பகவான்)

அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதியாய் (அவை உருவாவதற்குக் காரணமாய்), இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்குபவராய் (பூ என்ற சொல் பொதுவாக பூமியைக் குறித்தாலும், இங்கு பிரபஞ்சம் என்று பொருள் கொள்வதே தகும்) பற்பல வடிவங்களைத் தாங்குபவராய், எங்கும் நிறைந்தவரான பகவான் விஶ்ணுவை நான் வணங்குகிறேன்.

———–

ஸ சங்க சக்ரம் ஸ கிரீட குண்டலம் ஸ பீத வஸ்த்ரம் ஸராஸீ ருஹ ஈஷணம்
ஸ ஹார வக்ஷஸ்தல ஸோபி கௌஸ்துபம் நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்ப்புஜம்

திவ்ய ஆயுதங்கள்
திவ்ய ஆபரணங்கள்
மஞ்சள் பட்டாடை சாத்தி
ஸ்ரீ கௌஸ்துபம் சாத்தி
விஷ்ணுவை வணங்குவோம்

இந்த தியான ஸ்லோகத்தின் சாராம்சம்  ‘விஷ்ணும் நமாமி’ – ‘நான் விஷ்ணுவுக்கு வணக்கம் செலுத்துகிறேன்’.

சிரசா நமாமி – நான் அவருக்கு தலை குனிந்து வணங்குகிறேன். உடலின் அனைத்து உறுப்புகளிலும் தலை மிகவும் முக்கியமானது. இது கண், காது, மூக்கு மற்றும் வாய் ஆகிய ஐந்து புலன்களில் நான்கைக் கொண்டுள்ளது. தோலாகிய ஐந்தாம் அறிவு உறுப்பு கூட தலையில் உள்ளது. தலையில் இரண்டு முக்கியமான குண்டலினி ஆற்றல் மையங்களான ஆஜ்னா சக்கரம் மற்றும் சஹஸ்ரார சக்கரம் உள்ளன. எனவே, விஷ்ணுவுக்கு தலை வணங்குவதன் மூலம், பக்தன் தனது முழு சுயத்தையும் அவரிடம் திறம்படச் சமர்ப்பிக்கிறான்

சஷங்கச்சக்கரம் – ஒரு கையில் சங்கு (சங்கம்) மற்றும் மற்றொரு கையில் ஒரு வட்டு (சக்கரம்) ஏந்தி.-பாஞ்சசன்யம் என்னும் சங்கத்தையும், சுதர்சனம் என்னும் சக்கரத்தையும் இரு கைகளில் ஏந்தி

சகிரீடகுண்டலம் – -அழகிய கிரீடம் மற்றும் குண்டலங்களை தரித்துக்கொண்டு–தலையில் அழகான கிரீடத்தை ஏந்தி, காதுகளில் தொங்கும் பளபளப்பான மோதிரங்களை அணிந்திருப்பவர்.

சபீத வஸ்திரம் – அழகிய மஞ்சள் பட்டாடை உடுத்திக்கொண்டு–அழகான மஞ்சள் நிற பட்டு உடையை அணிந்தவர். தியான ஸ்லோகம் 4 இல் நாம் பார்த்த பீத கௌஷேயவாசம் போன்றதே இதுவாகும். அவர் தொடர்ந்து பீதாம்பரதாரி என்று குறிப்பிடப்படுகிறார். மிக உயர்ந்த தரமான துணியால் செய்யப்பட்ட மிகச்சிறந்த உடைகளில் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அவருக்கு விருப்பம் உள்ளது.

சரஸீருஹேக்ஷணம் – தாமரை இதழை ஒத்த இரு திருக்கண்களுடன்–சரஸீருஹா என்பது தாமரை, ஏனெனில் இது குளம் அல்லது நீர் குளமாகிய சரஸில் வளர்கிறது. ஈக்ஷணம் என்றால் கண் என்றும், இறைவனின் கண்கள் தாமரை மலரைப் போல அழகானவை என்றும் பொருள்படும்-‘கமலநயனம்‘ மற்றும் ‘புண்டரீகாயதாக்ஷம்‘-

சஹார வக்ஷஸ்தலஷோபிகௌஸ்துபம் – சஹாரா என்றால் மாலை அல்லது கழுத்தணி, வக்ஷஸ்தலம் என்றால் மார்பு, ஷோபி என்றால் ஜொலிக்கும் மற்றும் கௌஸ்துபம் என்பது அற்புதமான ரத்தினம். பளபளக்கும் கௌஸ்துபம் ரத்தினத்தின் சிறப்பை அதிகரிக்கும் மாலையை அவர் அணிந்துள்ளார்-திருமார்பில் அழகிய ஆரங்கள் (தங்க மாலைகள்) மற்றும் கௌஸ்துபம் என்னும் மணியை தரித்துக்கொண்டு-

சதுர்புஜம் – சதுர் என்பது நான்கு மற்றும் புஜம் என்பது விஷ்ணுவின் நான்கு கைகளை விவரிக்கிறது

“கேயூரவான் மகரகுண்டலவான் கிரீடி ஹாரீ
ஹிரண்மய வபுஹ் த்ரித சங்க சக்ரஹ்
சங்க சக்ர கதா பாணே துவாரகா நீலய ச்யுதா
கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷ மாம் சரணாகதம்திரௌபதி தனது துயரத்தின் தருணத்தை எதிர் கொள்ளும் போது கிருஷ்ணரை அழைக்கச் சொன்ன பிரார்த்தனையும் இதுதான்.

நான் என் தலையைக் குனிந்து என் விஷ்ணுவை வணங்குகிறேன், ஒருவருக்கு:

– ஒரு கையில் சங்கு (பாஞ்சஜன்ய சங்க) மற்றும் மற்றொரு கையில் வட்டு (சுதர்சன சக்ரா) ஏந்தியவர்.

– பளபளப்பான கிரீடம் மற்றும் அழகான காது வளையங்களை அணிந்தவர்

– மஞ்சள் பட்டு வஸ்திரத்தில் (உடை) அலங்கரிக்கப்பட்டவர்

– அழகான தாமரை போன்ற கண்களை உடையவர்

– பளபளப்பான கௌஸ்துப ரத்தினம் மற்றும் மார்பில் நகையை அணிந்தவர்

– நான்கு கைகளை உடையவர்.

கையில் நன்மையை பயக்கவல்ல சங்கும், சக்கரமும் ஏந்தியுள்ளவரும், அழகிய கிரீடம் மற்றும் குண்டலத்தை தரித்துள்ளவரும், மஞ்சள் பட்டாடை அணிந்துள்ளவரும், தாமரைக் கண்ணனும், அழகிய மாலைகளாலும், தனது திருமார்பில் கௌஸ்துபம் எனும் மணியாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளவரும், நான்கு திருக் கைகளை உடையவருமான பகவான் விஷ்ணுவை எனது தலையால் வணங்குகிறேன்.

——–

சாயாயாம் பாரி ஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸ நோபரி
ஆஸீநமம் புதஸ் யாமம் ஆயாதாஷாம் அலங்க்ருதம்

சந்த்ராநநம் சதுர் பாஹும் ஸ்ரீ வத் ஸாங்கித வக்ஷஸம்
ருக்மிணீ ஸத்ய பாமாப்யம் ஸஹிதம் கிருஷ்ணம் ஆஸ்ரயே –

தங்க ஸிம்ஹாஸனம்
பாரிஜாத கொடிக்கு கீழே
மேக ஸ்யாமளன்
ஆயாதாஷா -நீண்ட அப் பெரிய வாய திருக் கண்கள்
நான்கு திருத்தோள்கள்
ஸ்ரீ வத்ஸவம் திரு மார்பில்
ருக்மிணி சத்ய பாமை பிராட்டிமார் ஸஹிதம்

கிருஷ்ணம் ஆஸ்ரயே’ அதாவது “நான் கிருஷ்ணரிடம் தஞ்சம் அடைகிறேன்”

சாயாயாம் பாரிஜாதஸ்ய – பாரிஜாத மரத்தின் நிழலில்

பாரிஜாத மரத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. இது பனி வெள்ளை இதழ்கள் மற்றும் ஒரு சிவப்பு தண்டு கொண்ட அழகான மணம் பூக்கள் தாங்கி ஒரு சிறிய மரம். இந்த மலர் இரவில் மட்டுமே பூக்கும் மற்றும் ஸூரிய உதயத்திற்கு முன் மரத்தில் இருந்து விழும்.

ஹேம சிம்ஹாஸனோபரி – தூய தங்கத்தால் செய்யப்பட்ட சிம்மாசனத்தில்

ஆசீனம் – கம்பீரமாக வீற்றிருப்பவரும்

அம்புதாஷ்யாமம் – நீருண்ட கார்மேகம் போன்ற மேனி வண்ணம் கொண்டவரும்-அம்புதா என்றால் தண்ணீர் கொடுப்பவர், மேகம் என்று பொருள். எனவே அம்புதாஷ்யாமம் என்றால் மழை பொழியும் மேகத்தின் கருநீல நிறத்தை உடையவர் என்று பொருள். ‘மேக வர்ணம் மற்றும் ‘மேக ஸ்யாமம்‘ போன்ற சொற்றொடர்களை மற்ற ஸ்லோகங்களில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அம்புதாஷ்யாமம் இதே ஒளிக்கு இணையான மற்றொரு கவிதை.

ஆயதாக்ஷம்ஆயத என்றால் நீளமானது மற்றும் அகலமானது. அக்ஷ என்றால் கண். எனவே ஆயதாக்ஷா என்பது நீண்ட மற்றும் அகலமான அழகான கண்களை உடையவர். ‘கமல நயனம்’ மற்றும் ‘புண்டரீகாக்ஷம்’ போன்ற சொற்றொடர்கள் இதே போன்ற உணர்வை வெளிப்படுத்துவதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்-.நீண்ட திருக்கண்களை உடையவரும் (கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப்பெரியவாய கண்கள்)

ஆலம்கிருதம் – (அழகிய திருவாபரணங்கள் மற்றும் வனமாலை ஆகியவற்றால்) நன்கு அலங்கரிக்கப்பெற்றவரும்-பல்வேறு அலங்காரங்கள் அல்லது அலங்காரங்களை சுமந்தவர் என்று பொருள். விஷ்ணு பகவான் அலங்காரப்ரியா, ஒவ்வொரு வகை ஆபரணங்கள் மற்றும் அலங்காரங்கள், பட்டு ஆடைகள், நகைகள், மாலைகள், வாசனை திரவியங்கள் மற்றும் உடல் அடையாளங்கள் – இவை அனைத்தும் அலங்காரத்தின் ஒரு பகுதியாக இருப்பதைக் கண்டோம். பகவான் விஷ்ணு இவை அனைத்தையும் அனுபவிக்கிறார், எனவே அவர் ஆலம்கிருதராக இருக்கிறார்.

சந்திராநனம் – சந்திரனைப் போன்ற முகம் உடையவர். அவரது முகத்தை சந்திரனுடன் ஒப்பிடும் போது, ​​சந்திரனின் அழகு மட்டுமல்ல, சந்திரனில் இருந்து வெளிப்படும் குளிர்ச்சியான கதிர்களும் குறிப்பிடப்படுகின்றன. பக்தர் அவருடைய முகத்தைப் பார்க்கும்போது, ​​பக்தர்களின் கலக்கம் மறைந்து, அவர்கள் முகத்தில் ஒரு அமைதி தோன்றி, அவர்கள் மீண்டும் அமைதி பெறுகிறார்கள்.–முழுமதியை போன்ற குளிர்ந்த திருமுகத்தை உடையவரும் (நீருண்ட மேகத்தை மேனிநிறத்திற்கு ஒப்புமை கூறிவிட்டு படியால் இங்கு சந்திரனை அதன் குளிர்ந்த தன்மைக்கு ஒப்புமை கூறுவதே தகும்)

சதுர்பாஹும் – அவருக்கு நான்கு கைகள் உள்ளன–(சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரையை ஏந்திய) நான்கு திருக்கரங்களை உடையவரும்-. நமாமி விஷ்ணும் சிரசா சதுர்புஜம்’ என்பதை முந்தைய தியான ஸ்லோகத்தில் ஏற்கனவே பார்த்தோம் . முக்கிய சஹஸ்ரநாமத்தில், ‘சதுர்மூர்த்தி சதுர்பாஹஸ் சதுர்வ்யூஹஸ் சதுர் கதிஹி‘ என்ற வரியையும் காண்போம்.

ஶ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம் – அவருடைய மார்பில் ‘ஸ்ரீவத்ஸா’ என்ற அழகிய முத்திரை உள்ளது. விஷ்ணுவின் மார்பில் ஸ்ரீவத்ச முத்திரையின் தோற்றம் பற்றி ஏற்கனவே விரிவாகப் பார்த்தோம் (பிருகு முனிவர் கதை).ஸ்ரீவத்ஸம் என்னும் மருவுடன் கூடிய திருமார்புடையவரும்

ருக்மிணி சத்யபாமாப்யாம் ஸஹிதம் – இவருடன் அவரது இரு துணைவிகளான ருக்மிணி மற்றும் சத்யபாமா ஆகியோர் உள்ளனர்.-திருமகளாம் ருக்மிணியும், பூதேவியான ஸத்யபாமையுடனும் சேர்ந்து திருக்காட்சி தரும்

ஸ்ரீகிருஷ்ணம் ஆஶ்ரயே – நான் கிருஷ்ணரிடம் தஞ்சம் அடைகிறேன் -! இது விஷ்ணு ஸஹஸ்ரநாமமாய் இருப்பினும், இதை நேரடியாக கேட்டு மகிழ்ந்தவர் கண்ணன்–எனவே, இந்த சஹஸ்ர நாமத்திலுள்ள திருநாமங்களை அனுபவிப்பதற்கு முன்னர் கண்ணனின் கழலினைத் தொழுது, அவனையே சரணடைவோம்.

  • பாரிஜாத மரத்தின் நிழலில் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்
  • மழை பொழியும் மேகம் போன்ற கருநீல நிறத்தில் இருப்பவர்
  • நீண்ட அகலமான அழகிய கண்களை உடையவர்
  • ஒவ்வொரு விதமான அலங்காரங்களால் மூடப்பட்டவர்
  • சந்திரனைப் போல் அழகும் குளிர்ச்சியும் உடையவர் முகம்
  • நான்கு கரங்களை உடையவர்
  • யாருடைய மார்பில் ஸ்ரீவட்ச முத்திரை உள்ளது மற்றும்
  • அவனது அரசிகளான ருக்மிணி மற்றும் சத்யபாமா ஆகியோருடன் வந்தவர்
    பாரிஜாத மரத்தினடியில் உள்ளதொரு பொன்மயமான ஸிம்மாஸனத்தில் வீற்றுள்ளவரும், நீருண்ட கார்மேகத்தை ஒத்த திருமேனி வண்ணம் கொண்டவரும், நீண்ட, பெரிய திருக்கண்களை உடையவரும், திருமேனி எங்கும் தக்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பெற்றவரும், வெண்மதியைப் போன்ற குளிர்ந்த திருமுகம் உடையவரும், நான்கு திருக்கைகளை உடையவரும், ஸ்ரீவத்ஸம் எனும் மறுவால் அலங்கரிக்கப் பெற்ற திருமார்பை உடையவரும், ருக்மிணீ பிராட்டியாரும், ஸத்யபாமையும் உடனிருக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நான் சரணடைகிறேன்.
    ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாமமாய் இருப்பினும், இது ஸ்ரீகிருஶ்ணாவதாரத்தில் தான் நமக்கு  கிடைத்தது. எனவே, ஸஹஸ்ரநாமம் தொடங்கும் முன்பாக பகவான் ஸ்ரீகிருஶ்ணரின் திருவடி தொழுவது உசிதம்——————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்