7-மன்னு குறுங்குடியாய் -பெரியாழ்வார் திரு மொழி -1-5-8-திருக்குருங்குடி -திருவெள்ளறை
திரு மால் இரும் சோலை திருக் கண்ணபுரம் -நான்கு திவ்ய தேசங்களையும் -ஒரு சேர அனுபவம்
தென்னானாய் –வடவானாய் -திரு நெடும் தாண்டகம் -10- திருமால் இரும் சோலை
திருவேங்கடம் திருவரங்கம் திருக்கண்ண புரம் –நான்கு திவ்ய தேசங்களையும் -ஒரு சேர அனுபவம் –
குணபால மதயானாய் -மன்னாரை -திருக் காட்டு மன்னர் கோவில் என்று உடையவர் அருளுவார்
நாத முனிகள் ஆள வந்தார் திரு அவதார ஸ்தலத்தில் உள்ள ஆதர அதிசயத்தாலே –
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும்
கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக்
கற்றவர் தெற்றி வரப் பெற்ற வெனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள் சூழ்
சோலை மலைக்கு அரசே கண்ண புரத் தமுதே
என் னவலம் களைவாய் ஆடுக செங்கீரை
யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே -1 5-8 –
மன்னு குறுங்குடியாய் –
திருக் குருங்குடியிலே நித்ய வாசம் பண்ணுகிறவனே –
நப்லாவயதி சாகர -என்னா நின்றது இறே –
(கடல் வசுதேவர் திருமாளிகையை அழிக்க வில்லை -புராண ஸ்லோகம் )
பிரளயத்தில் அழியாத திருக்குறுங்குடி என்றே உகப்பார் இவர்
அவ்வளவு இன்றிக்கே
திரு வெள்ளறையிலும் நித்ய வாசம் பண்ணுகிறவனே-
அரணாக போரும்படியான மதிளாலே சூழப் பட்ட திருமலைக்கு ராஜாவாக கொண்டு
ஈரரசு தவிர்த்து நின்றவனே –
சர்வ ஜன போக்யமாம்படி திருக் கண்ண புரத்திலே நிற்கிற அமிர்தமே –
பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என்னானாய் என்னானாய் என்னால் அல்லால்
என்னறிவேன் ஏழையேன் உலகமேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபாலனாய்
குணபால மதயானாய் இமையோர்க்கு என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே–10-
உலகமேத்தும் -இத்யாதி –
திருமங்கை மன்னன் கட்டின திக் விஜயங்கள் இருக்கிறபடி –
உலகமேத்தும் தென்னானாய் –
உபய விபூதியும் வந்து ஆஸ்ரயிக்கும் படி தெற்குத் திருமலையிலே நின்று அருளினவனே –
இருந்ததே குடியாக தெற்கு திக்கில் உள்ளார் வாழ்க்கை அன்றிக்கே –
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை -என்கிறபடியே –
நித்ய ஸூரிகளும் ஏற்று அங்கு அக்கம் உண்ண (சிறந்த விருந்து ஸுலப்யம் அனுபவிக்க )வரும் படி இறே திரு மலையிலே நின்று அருளிற்று
தெற்கு திக்கில் ஆனாய்
(வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-)
(உலகமேத்தும்) வடவானாய் –
அப்படியே இறே வடக்குத் திக்கிலும் நின்று அருளிற்று –
வானவர் வானவர் கோனுடன் சிந்து பூ மகிழும் திருவேங்கடம் –என்றும்
எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -என்றும் -சொல்லுகிறபடியே
நித்ய ஸூரிகளோடு -ப்ரஹ்மாதிகளோடு -மனுஷ்யர்களோடு வாசி அற வாழும் படி
இறே திருவேங்கடமுடையான் நின்று அருளிற்று –
(எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார் எழில் அண்ணலே.–3-3-2-)
(சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5-)
(உலகமேத்தும்)குடபாலனாய் –
கீழ்ச் சொன்ன ஆனைகளைப் போலே நிற்கை அன்றியே
மேலைத் திக்கிலே ஒரு மத ஹஸ்தி சாய்ந்தாப் போலே ஆய்த்து –
கோயிலிலே வந்து பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிறபடி –
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய -என்கிறபடியே
சகல லோகங்களும் அனுபவித்து சத்தை பெறும்படி இறே கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறது –
(வன் பெரு வானகம் உய்ய, அமரர் உய்ய, மண் உய்ய, மண்ணுலகில் மனிசர் உய்ய,
துன்ப மிகு துயர் அகல, அயர்வொன்றில்லாச் சுகம் வளர, அகமகிழுந் தொண்டர் வாழ,
அன்பொடு தென் திசை நோக்கிப் பள்ளி கொள்ளும் அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்,
இன்ப மிகு பெருங்குழுவு கண்டு யானும் இசைந்துடனே என்று கொலோ இருக்கு நாளே”-பெருமாள் திருமொழி )
———–
8-ஏலு மறைப் பொருளே -பெரியாழ்வார் திருமொழி -1-5-9
ஏலும் ஆடையும் அக்தே -4-3-5-
வேதத்துக்கும் வேத்யனுக்கும் உள்ள பொருத்தம்
வேதை ச சாவை அஹம் ஏவ வேத்யே -போலே –
வாசய வாசக ஐக்யம் -படிச்சோதி ஆடையோடும் -பல் கலனாய் நின் பைம் பொன் கடிச்சோதி
கலந்ததுவோ திருமாலே -3-1-1-
பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு செண்பகமும்
பங்கய நல்ல கருப்பூரமும் நாறி வர
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைக்
கோமள வெள்ளி முளைப் போல் சில பல் லிலக
நீல நிறத் தழகார் ஐம் படையின் நடுவே
நின் கனி வாயமுதமும் இற்று முறிந்து விழ
ஏலு மறைப் பொருளே ஆடுக செங்கீரை
யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே -1-5-9-
ஏலு மறைப் பொருளே–தகுதியான வேதார்த்தமானவனே-
வேதைஸ் சர்வை ரஹமேவ வேத்யே -என்கிறபடியே
வேதத்துக்கு அநு ரூபமான அர்த்தம் அவன் இறே-
(தேவம் கேசவன் -சாஸ்திரம் வேதம் -சர்வ உத்க்ருஷ்டம்
பிரமேய பிராமண சிறப்பு பொருந்தும் )
கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடி முதலா
எண்ணில் பல் கலன்களும்; ஏலும் ஆடை யும் அஃதே;
நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே;
கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.–4-3-5-
ஏலும் ஆடையும் அஃதே –
திரு அரைக்குத் தகுதியான திருப்பீதாம்பரமும் அந்த அன்பேயாம்.
ஒரு நாள் ஸ்ரீ வைஷ்ணவ வண்ணாத்தான், திருப் பரிவட்டங்களை அழகியதாக
வாட்டிக்கொண்டு வந்து எம்பெருமானார்க்குக் காட்ட,
மிக உவந்தாராய் அவனைப் பெருமாள் திருவடிகளிலே கைப்பிடித்துக்கொண்டு புக்கு,
‘நாயன்தே! இவன் திரு அரைக்குத் தகுதியாம்படி
வாட்டினபடி திருக்கண் சார்த்தி அருளவேண்டும்’ என்று இவற்றைக் காட்டியருள,
கண்டு உவந்தருளி, உடையவரை அருள்பாடு இட்டருளி,
‘இவனுக்காக ரஜகன், நம் திறத்தில் செய்த குற்றம் பொறுத்தோம்’ என்று திருவுள்ளமாயருளினார்.
அன்றிக்கே,
‘ஏலும் ஆடையும் அஃதே’ என்பதற்கு, ‘சிறந்த பொன்னாடை’ என்கிறபடியே,
அர்த்தவாதம் இல்லை -மகா ரஜதம்-தங்கமயம் -வெள்ளிப் பட்டைகள் -திருப் பரிவட்டம் -உபநிஷத் –
‘புருடோத்தமனுக்கு இலக்கணமான திருப்பீதாம்பரமும் அந்த அன்பேயாம்’ என்னலுமாம்.
இவர் பல காலம் கூடிப் பண்ணுகிற திரு ஆபரணமும் திருப்பரிவட்டமும் அன்றோ?
‘அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து’ என்கிறபடியே,
இவருடைய அன்பு அடியே தொடங்கியுள்ளது அன்றோ?
‘இது கூடுமோ?’ என்று சந்தேகிக்க வேண்டா; இவை ‘பொய்யில் பாடல்’ ஆகையாலே கூடும்.
முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
1-படி -திருமேனி–திருமேனி அழகு பல் கலனாய்க் கலந்ததுவோ -பல் கலன் படிச் சோதியாய்க் கலந்ததுவோ –
2–சோதியாடை கடிச் சோதியாய்க் கலந்ததுவோ -கடிச்சோதி சோதி யாடையாய்க் கலந்ததுவோ –
3–நின் பைம்பொன் கடிச்சோதி படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் கலந்ததுவோ
4–உன்னுடைய அழகியதாய் ஸ்ப்ருஹணீயமான திவ்ய கடி பிரதேசத்தில் உண்டான தேஜஸ்ஸானது ஸ்வாபாவிகமான தேஜஸ்சை உடைத்தான
திருப் பீதாம்பரம் தொடக்கமான பல திரு ஆபரணங்களாய் கொண்டு சேர்ந்ததுவோ-படிச்சோதி-ஸ்வாபாவிகமான தேஜஸ்
நீரிலே நீர் கலந்தால் போலே பேத க்ரஹணத்துக்கு அனுபபத்தியேயாய் இருக்கை
அன்றியே படிச் சோதி -படியாணியான ஒளி என்னவுமாம்
படி -இயல்பாகவே -திருமேனி -தங்கம் =ஆணிப்பொன் –மூன்று பொருளில் –
திரு மேனி –பல் கலன் –
சோதி யாடை -கடிச்சோதி -இடைப்பிரதேச சோபை –
நின் பைம்பொன் கடிச்சோதி படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் கலந்ததுவோ
நின் பைம்பொன் கடிச்சோதி -பரந்த அழகை உடைய -கடியின் சோதி யானது –
படிச்சோதி ஆடையொடும் -ஸ்வாபாவிக ஒளியை யுடைய திருப் பரியட்டத்துடன் சோதி யுடன் -கலந்தது தான் திரு ஆபரணமா –
பல திவ்ய ஆபரணங்களாய் மேலும் கீழும் கலைந்தனவோ -பல வண்ணங்கள் உண்டே -பல ஆபரணங்கள் உள்ளனவே
திருமாலே கட்டுரையே —
இதுவும் ஒரு சேர்த்தி அழகு இருக்கிறபடி
அகலகில்லேன் இறையும்-என்று பிரியமாட்டாமல் இருக்கிற பிராட்டியும் ஸ்வ தஸ் சர்வஜ்ஞனான நீயும்
கூட விசாரித்து இதுக்கு ஒரு போக்கடி அருளிச் செய்ய வேணும்
இன்று அனுபவிக்கப் புக்க இவர் -என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர் -என்பர்
நித்ய அனுபவம் பண்ணுமவர்கள் -பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் யாம் என்றே பயிலா நிற்பார்கள் -பரகால நாயகி -பிராட்டி சாம்யம் உண்டே-
ஸ்வதஸ் சர்வஜ்ஞனான தனக்கும் தன் தன்மை அறியவரியனாய் இருக்கும்
ஆக இப்படி இன்று அனுபவிக்கப் புக்க இவரோடும் நித்ய அனுபவம் பண்ணுபவர்களோடு அவன் தன்னோடு வாசியில்லை இச்சம்சயம் அனுவர்த்திக்கைக்கு
தமக்கு இந்த சம்சயம் அறுதியிட ஒண்ணாதாப் போலே அவர்களுக்கும் என்று இருக்கிறார்
கட்டுரையே -சொல்ல வேண்டும் என்றபடி -ஷேப உக்தி -சொல்ல முடியாது என்றபடி –
அறிந்தேன் என்பவன் அறியாதவன் ஆகிறான் –
————–
9-ஆங்கே வளர்ந்திட்டு -பெரியாழ்வார் திருமொழி 1-6-9-அத் தூணிலே அடித்த இடம் தன்னிலே
அங்கே நின்று -திருவாய் மொழி -5-10-9-திருவிக்ரமன் –
கடக்க நாலடி போனால் -கிருத்ரிமம் பண்ணினான் என்று வழக்கு பேசலாம் இறே
அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாள் உகிர் சிங்க உருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி -1 6-9 –
ஆங்கே –
அடித்த இடம் ஒழிய ஸ்தலாந்தரத்திலே தோன்றிலும் –
இவன் இங்கு இல்லை -என்று
பிரதிக்ஜை நிலை நின்றது ஆம் என்று –
அத் தூணிலே
அவன் அடித்த இடம் தன்னிலே –
வளர்ந்திட்டு –
பரிய இரணியன் -என்னும்படி
பருத்து வளர்ந்த வடிவை உடையனானவன் –
கீழ் படும்படியாக தான் வளர்ந்து –
அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்துகும்
கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.–5-10-9-
அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும் –த்ரை லோக்யத்தையும் அபேக்ஷியாதே
மூன்று அடியை தர வேணும் என்று அவன் மாறாத படி அபேக்ஷித்த பிரகாரமும் -அவன் இசைந்து உதகம் பண்ணின
யஜ்ஞ வாடம் தன்னிலே நின்றே அகாதமான சமுத்ரங்களையும் -சப்த த்வீபையான பூமியையும் ப்ரஹ்ம லோக பர்யந்தமான ஆகாசத்தையும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்–இரண்டு அடியால் முடியும்படியாக தன் நினைவு தலைக் கட்டிக் கொண்ட ப்ராதான்யமும் ஆகிற
அங்கே நின்று –
கடக்க நான்கு அடி போனானாகில், ‘வஞ்சனை செய்தான்’ என்று அவன் வழக்குப் பேசலாமன்றோ.
ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் ஈரடியால் முடிய முடித்துக் கொண்ட முக்கியமும் –
ஆழ் கடலும்-இவருடைய நெஞ்சினைக் கரைக்க அடி இட்டபடி.
பூமி ஆகாசம் முதலியவைகள் அடங்கலும் இரண்டு அடிகளிலே அடங்கும்படிக்குத் தகுதியாக அளந்து
தலைக் கட்டிக் கொண்டபடியும்.
முக்கியம் –
வேண்டற்பாடு. அதாவது, அடியார்கட்காகச் செய்த வஞ்சனையால் வந்த வேண்டற்பாடு இருக்கிறபடி.
அன்றிக்கே,
தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தன் திருவடிகளின் கீழே அகப்படுகையாலே
வந்த வேண்டற்பாடு என்னலுமாம்.
——————–
10-உளம் தொட்டு -பெரியாழ்வார் திருமொழி -1-6-9-
உகிர்த் தலத்தை ஊன்றினாய் -திரு சந்த விருத்தம் -25-
உளம் தொட்டு -ஹிருதயம் பரிஷை செய்து –
இவன் நலிவு பிரகலாதனுக்கு தட்டாமையாலே செருக்கு வாடி அநு கூலிக்கவுமாம் –
கீழ் நாளைய அபராதத்தை நினைத்து அனுதபித்து இனி யாகிலும் அஞ்சலி செய்யாய் என்று உபதேசித்ததால் அநு கூலிக்கவுமாம் —
நாஸ்தி என்கிற இடத்தில் அஸ்தி என்று தோன்றியபடியால் -அவன் வ்யாப்தியில் சத்பாவத்தை நினைத்து லஜ்ஜித்து அநு கூலிக்கவுமாம் —
உக்ரம் வீரம் என்று கொடிய வடிவைக் காண்கையாலே பீதியாலே அநு கூலிக்கவுமாம் —
ராவணன் வெறும் கை வீரன் ஆனது போல் தன் அசக்தியாலே அநு கூலிக்கவுமாம் —
உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த் தலத்தை ஊன்றினாய் -என்று பாவ க்ரமம் தோன்றுகையாலே வ்யசன பரம்பரைகளாலே அநு கூலிக்கவுமாம் –
இன்னமும் இப்புடைகளாலே இன்னமும் அநு கூலிக்குமோ என்று பார்த்து இறே
அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாள் உகிர் சிங்க உருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி -1 6-9 –
உளம் தொட்டு –
எங்கும் உளன் என்று பிரகலாதன் சொன்னபடியே –
தான் -இல்லை -என்று சொன்ன ஸ்தலம் தன்னிலே –
உண்டு -என்னும்படியாக தோற்றுகையாலும் –
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலற தெழித்தான்-என்கிறபடியே
ஒரொன்றே துச் சகமாம்படி – பண்ணின பீடா விசேஷங்களாலும்-
பீதியிலே நெஞ்சு இளகி அனுகூலிக்க கூடுமோ
என்று ஹிருதயத்தை பரிஷை பண்ணி –
வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ யிது என்ன பொய் யிரந்த மண் வயிற்றுளே
கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே –25-
உரத்தினில் –
துர் மாம்சம் இருந்த விடத்தை கொட்டம் இடுவாரைப் போலே துர்மானம் கிடந்த மார்விலே
கரத்தை வைத்து –
அப்யேஷ ப்ர்ஷ்டே மம ஹச்த பத்மம் கரிஷ்யதி -என்று அக்ரூராதிகளுக்கு ஜீவன ஹேதுவாய்
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -என்று ப்ரணயிநிக்கு போக்யமாய் இருக்கும்
திருக் கையை துஷ் பிரக்ருதியான அவனுடைய திண்ணிய மார்விலே வைத்து –
உகிர் தலத்தை ஊன்றினாய் –
வர பலத்துக்கு புறம்பான வத சாதனமாய் அத்யந்தம் ஸூகுமாரமான உகிராலே
அநாயாசேந கொன்றாய்
தலம் -நிலமும் இதழும்
————–
11-துரும்பால் கிளறிய சக்கரக் கையனே -பெரியாழ்வார் திரு மொழி -1-8-7-
அரவணையாய் ஆயர் ஏறே -பெரியாழ்வார் திரு மொழி -2-2-1-
திருச் செய்ய நேமியான் -பெரிய திருவந்தாதி -63
கருதுமிடம் பொரும் திருவாழி -பவித்ரமும் ஆழி
சென்றால் குடையாம் போலே திரு அனந்தாழ்வானும் பள்ளிகொள்ள திருப்படுக்கை வடிவை கொள்வான்
சூர்பணகை நாஸிகா சேதனத்தை தெரிவிக்கும் பாசுரம் -கூரார்ந்த வாளால் அரிந்தாலும் சக்கர அம்சம் உண்டே
மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில்
தக்கது அன்று என்று தானம் விளக்கிய
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய
சக்கரக் கையனே அச்சோ அச்சோ சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ -1-8-7-
குருவான சுக்ரன் –
இவன் வடிவும் வரத்தும் -சொன்ன வார்த்தையும் -அதி மானுஷமாய் இருக்கையாலே நிரூபித்து –
இவன் சர்வேஸ்வரன் -தேவ கார்யம் செய்ய வந்தான் –
உன் சர்வ ஸ்வத்தையும் அபஹரிக்க வந்தான் –
ஆன பின்பு நீ தானம் பண்ணுகிற இது தகுதி அன்று -என்று
தானத்தை நிரோதிக்க-
அவன் அது கேளாதே
உதகம் பண்ணப் புகுந்த அளவில் –
உதக பாத்திர த்வாரத்திலே சுக்ரன் ப்ரேவேசித்து உதகம் விழாதபடி தகைய –
அந்த த்வார சோதனம் பண்ணுவாரைப் போலே –
திருக் கையில் திருப் பவித்ரத்தின் உடைய அக்ரத்தாலே
அவன் கண்ணைக் கலக்கின திரு ஆழியைக் கையில் உடையவனே –
துரும்பால் கிளறிய சக்கரக் கையன் -என்கையாலே
அந்த பவித்ராக்ரமாய் புகுந்து அவன் கண்ணை கலக்கிற்று –
கருதும் இடம் பொரும் திரு ஆழி -என்று தோற்றுகிறது-
அரவு அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே
இரவும் உண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ
வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய
திரு உடைய வாய் மடுத்து திளைத்து உதைத்து பருகிடாயே -2 2-1 –
அரவு ஆணை இத்யாதி –
மென்மை குளிர்த்தி நாற்றம் தொடக்கமானவற்றை பிரகிருதியாக உடைய
திரு அனந்தாழ்வானைப் படுக்கையாய் உடையனாய் இருந்து வைத்து –
நாக பர்யங்கம் உத்சர்ஜ்ய ஹ்யாகத -என்கிறபடியே
அப் படுக்கையை விட்டு -போந்து -அவதீரணனாய்-
ஆயருக்கு பிரதானன் ஆனவனே –
அப் படுக்கை வாய்ப்பாலே பள்ளி கொண்டு போந்த வாசனையோ –
ஆயர் ஏறான இடத்திலும் படுக்கை விட்டு எழுந்து இராதே பள்ளி கொள்ளுகிறது –
அவன் தான் இதர சஜாதீயனாய் அவதரித்தால்-
சென்றால் குடையாம் (முதல் திருவந்தாதி )-என்கிறபடி -சந்தானுவர்த்தயாய்
அடிமை செய்யக் கடவ –திரு வனந்தாழ்வானும் அவனுடைய அவஸ்த அனுகுணமாக
பள்ளி கொள்வதொரு திருப் படுக்கையான வடிவைக் கொள்ளக் கூடும் இறே –
ஆகையால்-அங்கு உள்ள சுகம் எல்லாம் இங்கும் உண்டாய் இருக்கும் இறே கண் வளர்ந்து அருளுகிறவனுக்கு-
பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய்
வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று
திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும்
பருச் செவியும் ஈர்ந்த பரன்–63-
சூர்பணகை நாஸிகா சேதனத்தை தெரிவிக்கும் பாசுரம் -கூரார்ந்த வாளால் அரிந்தாலும் சக்கர அம்சம் உண்டே
————
12-பொறை உடை மன்னர் -பெரியாழ்வார் திருமொழி -2-1-1-
இதை ஒழிந்த சர்வ ஸ்வமும் க்ரித்ரிமத்தாலே அபஹரித்து கொள்ளும் இத்தனை
ஆழி அம் கை யம்மான் -பெரிய திருவந்தாதி -82
கைகேயி வரத்தில் அகப்படாது விட்டது பெருமாள் திருக் கையிலே அறு காழி ஒன்றுமே யாகாதே –
மெச்சூது சங்கம் இடத்தான் நல்வே யூதி
பொய் சூதில் தோற்ற பொறை உடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாத அன்று பாரதம் கை செய்த
அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2-1 1- –
பொறை உடை மன்னர்க்காய் –
அவர்கள் செய்தது க்ரித்ரிமம் என்று அறிந்து இருக்க செய்தேயும் –
க்ரோத விக்ரிதி இன்றிக்கே -ஷமையை உடையராய் இருந்த ராஜாக்களுக்காய் –
துரியோதநாதிகள் இவர்கள் சர்வஸ்வத்தையும் அபஹரிக்கும் இத்தனை அல்லது
இவர்கள் ஷமையை அபஹரிக்க மாட்டார்கள் இறே –
ஆகையாலே பொறை உடை மன்னர் என்று -பொறையை இவர்களுக்கு நிரூபகமாக சொல்லுகிறது –
தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-
கரந்த உருவின் அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
கைகேயி வாரத்தில் அகப்படா விட்டது திருக் கையில் அருகாழி ஒன்றுமே யாகாதே
வடிவைக் கரந்து வர்த்திக்கிற அம் மாய மானை
அன்று தொடர்ந்த
அருகாழியைக் கையிலே யுடைய ஸர்வேஸ்வரனை
இளைய பெருமாளும் உதவாத தசையில் ஏத்தப் பெறுவது
அறிவு கெட்டுக் கிடந்த நான் பழுதே போக்கினேன்
அம் மானை ஏத்தாது அயர்த்து
ஏத்துகை -அடிமையாய்
இப்படி அடிமை செய்யப் பெற்றிலேன் என்று இழவு பட்ட பேர் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –
————–
13- திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் அலவலை -பெரியாழ்வார் திருமொழி -2-1-2-
புகழ்ந்தாய் சினப் போர் சுவேதனை -நான் முகன் திருவந்தாதி -24
அவாக்யநாதர -என்று இருக்கக் கடவ -அவன் அது அடைய அழிந்து கல கல ஏத்தா நிற்கும் ஆயிற்று –
மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும்
பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழிய பார்த்தன்
சிலை வளைய திண் தேர் மேல் முன்னிற்ற செங்கண்
அலைவலை வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் – 2-1 2- –
திண் தேர் மேல் முன் நின்ற –
மகா ரதரான பீஷ்மாதிகள் விட்ட ஆக்நேய அஸ்த்ராதிகளாலே
தக்தமாய் விழாமல் -தன் திருவடிகளின் சம்பந்த்தாலே திண்மையை உடைத்தாய் நின்ற –
தேரின் மேலே –
உரஸா தாரயாமாச பார்த்தம் சஞ்சாத்ய மாதவ -( த்ரோண பர்வம் பாரதம் )-என்கிறபடியே
அர்ஜுனனால் பொறுக்க ஒண்ணாத அஸ்த்ர சஸ்த்ரங்கள் வந்தாலும்
தன் மேலே ஏற்றுக் கொள்ளும்படியாக சாரதியாய் முன்னின்ற –
செம் கண் அலை வலை –
தான் சாரத்தியம் பண்ணின சாமர்த்யத்தாலே –
பிரதி பஷத்தை வென்று –
அந்த விஜயத்தை அர்ஜுனன் மேல் ஏறிட்டு –
அவன் பக்கல் வாத்சல்யம் தோற்ற கடாஷித்து நின்று –
அவன் விஜயம் தோற்ற பலவற்றையும் சொல்லி புகழுமவன்-
அவாக்ய அநாதர என்று இருக்க கடவ –
அவன் அதடைய அழிந்து கல கல என ஏத்தா நிற்கும் ஆய்த்து –
புகழ்ந்தாய் சினப் போர் சுவேதனை சேனாபதியாய் மனப் போர் முடிக்கும் வகை (நான்முகன் )-என்கிறபடியே –
அதவா –
பார்த்தன் சிலை வளைய திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் அலைவலை என்கையாலே –
அஸ்தான சிநேக காருண்ய தர்ம அதர்ம அதியாகுலனாய் –
நகான்ஷே விஜயம் க்ருஷ்ண-இத்யாதிப்படியே –
விஜயமும் வேண்டா ராஜ்யாதிகளும் வேண்டா என்று உபேஷித்து-
ரதோபஸ்த உபாவிசத் -என்றும் –
விஸ்ர்ஜ்ய சசாஞ்சாபம் சோகசம் விக்ன மானச -என்கிறபடியே
சோகத்தாலே வெருவின மனசை உடையனாய் வில்லையும் பொகட்டு
யுத்தாந் நிவர்த்தனாய் தேர் தட்டிலே இருந்த அர்ஜுனன் தெளிந்து –
கரிஷ்யே வசனந் தவ-என்று
எழுந்து இருந்து வில் எடுத்து யுத்தம் பண்ணும்படியாக
பிரகிருதி ஆத்ம விபாகம் தொடக்கி
பரம ரகஸ்யமான பரபக்தி பர்யந்தமாக
உபதேசித்த அலை வலை தனத்தை சொல்லவுமாம்-
(நின்மலமாக வைத்தவர்
ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது
தத்வ விவேக
நித்யத்வாநித்யத்வ
நியந்த்ருத்வ
சௌலப்ய
சாம்ய
அஹங்கார இந்திரிய தோஷ பல
மன பிராதான்ய
கரண நியமன
ஸூஹ்ருதி பேத
தேவாஸூர விபாக
விபூதி யோக
விஸ்வரூப தர்சன
சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே
அன்றோதிய கீதா சமம் என்னும் –ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -189-)
அலை வலை என்பது
அர்த்த கௌரவமும் அதிகாரி கௌரவமும் பாராதே –
தன் நெஞ்சினில் பிரதி பன்னமானவற்றை சொல்லுமவன் இறே-
அது இங்கும் உண்டு ஆகையாலே இவனையும் அலைவலை என்னலாம் இறே –
இப்படி தான் அருளி செய்தது சரணாகதை யானவள் குழல் முடிப்பிக்கை ஆக இறே-
நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
இகழ்ந்தாய் இருவரையும் வீயப் புகழ்ந்தாய்
சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய்
மனப் போர் முடிக்கும் வகை-24-
புகழ்ந்தாய்-இத்யாதி –
கொடிதான யுத்தத்திலே அர்ஜூனனை நீ தானே சேனாபதியாய்
உன் திரு உள்ளத்தில் படியே யுத்தத்தைப் பண்ணும்படியாகப் புகழ்ந்தாய் –
புகழ்ந்தாய் சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய் மனப் போர் முடிக்கும் வகை –
சினப் போரை உடைய ஸ்வேத வாஹனான-அர்ஜுனன் சேனைக்கு நிர்வாஹகனாய்-
தர்ம புத்திரன் முடி சூடவும்-
த்ரௌபதி குழல் முடிக்கவும்-
துர்யோனாதிகள் முடியும்படியும்-
நினைத்த போரை முடிக்க வல்லனாய்ப்-புகழ்ந்தாய்-
(வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை முன்பு நின்று -பெரியாழ்வார்
ஆகவே ஸ்வேதன் -ஸ்வேத வாஹநன் –என்றவாறு )
அர்ஜுனன் சேனைக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
அடி யார்கள் கார்யம் முடித்து
ஹே அநக பாண்டவ கௌந்தேய பரந்தப இவன் அவனைக் கொண்டாடி
ஸ்த்வயன் ஸ்த்வ பிரியன் இவன் அவனைக் கொண்டாடுகிறார்
வெள்ளைக் குதிரை தேர் மிசை முன் நின்று
நாம ஏக தேச கிரஹணம் -ரெங்கநாதமுனி சத்யபாமா போல் இங்கும்
—————-
14-பண் பகர் வில்லி புத்தூர் பெரியாழ்வார் திருமொழி -2-7-10
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரம் -கலியன் -8-1-1-
உக்தி பிரதி உக்திகளும் -ஆதர அநாதர ரோகதிகளும் பண்ணிலே சேர்ந்தது போலே காணும்
உண்ண உடுக்க சொல்லும் வார்த்தைகளும் சாஸ்திரம் கற்ற வார்த்தைகள் போலே தெரியுமே –
செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி
எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை
பண்பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டார் பிரான் சொன்ன பத்தே – 2-7 10-
பண் பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டர்பிரான் சொன்ன இம்மாலை பத்தே
யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒன்றை சொல்லிலும் பண்ணிலே சேரும்படி சொல்லா நிற்கும்
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த
இம் மாலையும் ஒரு பத்தே -என்று
இதனுடைய ஸ்லாக்கியதையை சொல்லுகிறது
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருக்கின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானைக் கண்டாள் கொலோ 8-1-1-
கலை இலங்கு மொழியாளர்-
அவ் ஊரில் உள்ளார் லோக யாத்ரைக்கு உடலாக -உண்ண- உடுக்க -என்று சொல்லும் வார்த்தையிலே
இன்னதனை சாஸ்திரம் கற்றார்கள் -என்று கற்ற சாஸ்திரப் பரப்பு அடங்கலும்
தெரியும்படி வரிக் கொள்ளலாய் இருக்கும் –
(பத்து பாத்திரம் -பத்துடை அடியவர்க்கு எளியவன்
அரிசியில் கல் கரு மாணிக்க மலை ஒன்றுமே இல்லை பேசுவார்கள் போலும் )
கலை -என்கிறது வித்யா ஸ்தலங்களை அடைய -(4 வேதம் 6 அங்கம் 8 உப அங்கங்கள் 18 )
மொழியிலே கலை இலங்கா நிற்கும் –
கலை இலங்கும்படியான பேச்சை உடையராய் இருப்பார்கள்-
(பண் பகர் வில்லி புத்தூர் கோன் -பேசுவதே பாடலாக பண் மிக்கு இருக்குமா போல்
இவர்கள் திண்ணைப் பேச்சும் ஸாஸ்த்ரம் )
கண்ணுக்கு தோற்றாததும் தங்கள் வார்த்தையிலே அறியும்படி இருக்குமவர்கள்
நெடுநாள் பெற்று வளர்த்த என்னோட்டை சம்பந்தம் அற்று
அவ் ஊரில் சம்பந்தம் தோற்றி இரா நின்றது இவள் வார்த்தை இருக்கிறபடி –
த்ருஷ்டும் சக்யம் அயோத்யாயாம் நா வித்வான் ந ச நாஸ்திக
சர்வே நராஸ்ஸ நார்ய்ச்ச தர்ம சீலாஸ் ஸூ சம்யதா-பால காண்டம் –
அறுபதினாராயிரம் ஆண்டு வன்னியம் அறுத்து நன்மைகளை உண்டாக்கிப் போந்த சக்கரவர்த்திக்கும்
இரண்டு பொருள் உண்டாக்க போச்சுதில்லை –
ஒரு அவித்வானை யாதல்
வைதிக அர்த்தங்களை இல்லை என்பான் ஒரு நாஸ்திகனை யாதல் உண்டாக்கப் போச்சுதில்லை –
(கள்வர் இலாமை இத்யாதி -கம்பர் )
அப் படை வீட்டில் உள்ளார் -ராஜ புத்ரர்கள் ஆரேனும் ஒருவர் முடி சூட அமையாதோ
என்று இருக்குமவர்கள் அல்லர் –
பெருமாளே முடி சூடா விடில்
இஹைவ நித நம்யாமோ மகாப்ரச்த்தா நமேவவா
ராமேண ரஹிதா நாஞ்சகிமர்த்தம் ஜீவிதம் ஹின-என்று
பெருமாள் அபிஷேகம் பண்ணாத படை வீட்டில் இருப்பது இல்லை
விழுந்த இடமே சுடுகாடாக போக அமையும் என்று இருப்பார்கள் புருஷர்கள் –
ஸ்திரீகளும் –
ராமமேவா அநுகச்சதத்வம ஸ்ருதிம் வாபி கச்சத – என்று
பெருமாள் வழி மாறிப் போனார் என்று திறக்க அழைத்த பர்த்தாக்கள்
முகம் பிளக்கத் தள்ளிக் கதவு அடைத்துக் கொள்ளுவார்கள் –
தர்ம சீலா –
ராம அனுவர்த்தியே பரம தர்மம் என்று இருக்குமவர்கள் இறே
ஸூ சம்யதா -ஸுவ பிரயோஜனத்தில் நெஞ்சு செலுத்தாதவர்கள் யாயிற்று
அப்படி இருக்குமவர்கள் யாயிற்று இவ் ஊரில் உள்ளாறும் –
—————–
15-ஓடி அகம் புக்கு -பெரியாழ்வார் திருமொழி -2-10-1-
கண்கள் நீர் மல்கி –புகுமூர் -திருவாய் மொழி -6-7-10
தம் ஜீவனத்தில் ஒன்றும் குறை இன்றி கொண்டால் எங்கள் ஜீவனத்தையும்
கொண்டு போக வேணுமோ -எனபது ஆய்ச்சியர் திரு உள்ளம் -அவனுக்கு ஜீவனம் இவர்களுடைய
வளையல்களும் துகில்களும் -இவர்கள் ஜீவனம் அவன் வடிவு இறே
ஒருவன் பகவத் குண வித்தனாயக் கண்ணும் கண்ணீருமாய் இருக்க -அவனை
கண்டு கொண்டு இருக்காதே யடுப்பது –
அழு நீர் துளும்ப வலமருகின்றன வாழி யாரோ -திரு விருத்தம் -2-
என்று சேதனர் ஆகில் மங்களா சாசனம் பண்ணக் கடவது –
ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றால் எறிந்து வளை துகில் கைக் கொண்டு
காற்றில் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் -2 -10-1 – –
காற்றில் கடியனாய் ஓடி –
துடர அகப்படாதே காற்றிலும் காட்டிலும் கடியனாக ஓடி –
தன் ஜீவனத்தில் ஒன்றும் குறையாடதபடி கொண்டால் –
எங்கள் ஜீவனத்தையும் கொண்டு போக வேணுமோ –
அவனுக்கு ஜீவனம் -இவர்களுடைய வளையல்களும் துகில்களும் –
இவர்களுக்கு ஜீவனம் –அவன் தன்னுடைய வடிவு இறே
(திருக்கோளூர் பதிகம் -இதே போல் -தனது ஜீவனம் தேடித் போனாள் –
அவள் தானே திருத்தாயாருக்கு ஜீவனம் -முகத்தை வைத்து போகலாகாதோ )
அகம் புக்கு –
பின் தொடர்ந்து சென்றாலும் காணப் போகாதபடி தன் அகத்திலே சென்று புக்கு
வழி பறித்து அசாதாரண ஸ்தலத்திலே ஆய்த்து இருப்பது
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1-
கண்கள் நீர் மல்கி-
இவர்களுடைய உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் இருக்கிறபடி.
இவர்கள் -தோழி உடன் தாய் -ஊரும் நாடும் உலகமும் திருத்தி -அனைவரும் ஒரே கோஷ்டி –
இவள் முகத்தாலே காணும் இவர்களுக்கு ஜீவனம். -ஆழ்வார் த்வாரா -ஆழ்வார் திரு முக மண்டலம் –
தன் ஜீவனத்துக்குப் போகிறவள் எங்கள் ஜீவனத்தைக் கொண்டு போக வேணுமோ?
ஒருவன் பகவத் குணங்களிலே ஈடுபட்டவனாய்க் கண்ணும் கண்ண நீருமாயிருக்க,
அவனைக் கண்டு கொண்டிருக்க வன்றோ அடுப்பது.
‘அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ’ –திருவிருத்தம், பா. 2.-என்று
சேதனராகில் மங்களாசாசனம் செய்யக் கடவது.
நஞ்சீயர், ‘பிள்ளை திருநறையூர் அரையரோடே மூன்று திருவாய்மொழி கேட்டேன்.
அதில் எனக்கு ஒரு வார்த்தையும் போகாது;
ஒரு திருவாய்மொழியைச் சொன்ன அளவிலே அவர் சிதிலராய்க் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கும்
இருப்பை நினைத்திருப்பன்’ என்று அருளிச் செய்வர்.
“ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான்
ஸதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:”-என்பது, ஸ்ரீவிஷ்ணுதத்வம்.
ஆஹ்லாத ஸீதநே்த்ராம்பு:–விரகத்தாலே கொதித்துப் புறப்படும் துக்கக் கண்ணீர் போலன்றிக்கே,
பகவானை அநுபவிப்பதனால் உண்டான மிகுந்த உவகையினாலே குளிர்ந்த கண்ணீரை யுடையனாவது
புளகீக்ருத காத்ரவாந் – உடம்பு முழுதும் மயிர் எறிந்து இருப்பது.
பரகுணாவிஷ்ட:-பகவானுடைய குணங்களாலே ஏறப்பட்டிருப்பவனாவது, தெய்வம் ஏறினவரைப் போலே.
அவன், ஸர்வதேஹிபி:-த்ரஷ்டவ்ய:-அவன் தேகத்தை எடுத்தவர்கள் எல்லாருக்கும் பார்க்கத் தகுந்தவன்.
சரீரத்தை எடுத்ததற்குப் பயன் இவனைக் காண்கை யாயிற்று.
கண்ணன் பெருமாளும் இப்படிப் பட்ட பக்தனுக்கு அன்றோ ஆழ்ந்து போவார்கள் -தேக பரிக்ரகம் பண்ணினதால் –
ஸதா த்ரஷ்டவ்ய:-எப்பொழுதும் காண்கைக்கு ஒரு தேச விசேடம் தேடிப் போகவேணுமோ?
‘அனந்தாழ்வான் சோழ குலாந்தகனிலே பயிர்த் தொழில் செய்து கொண்டிருப்பவனான ஒரு ஸ்ரீவைஷ்ணவனைக் கண்டு,
உம்முடைய ஊர் எது’ என்று கேட்க, ‘என்னுடைய ஊர் திருக்கோளூர்’ என்ன,
‘அங்கு நின்றும் போந்தது என்?’ என்ன, ‘தேக யாத்திரை நடவாமே போந்தேன்’ என்ன,
அவ்வூரில் கழுதையை மேய்த்து ஜீவிக்க மாட்டிற்றிலையோ?
நிலை நின்ற ஜீவனத்தை விட்டுப் போந்தாயே யன்றோ! என்றானாம்.
கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி–
இந்த பாவனையின் மிகுதியினாலே பெற்றாற்போலே இருந்து ஆனந்தக் கண்ணீர் புறப்படுகிற படியாகவுமாம்;
இந்த அநுசந்தானத்தாலே கண்ணீர் மல்கி என்னவுமாம்.
செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2-
செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப -சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ –
(உவமை அணி -அலங்கார சாஸ்திரம் இதில் )
ஸூத்த ஜலமாய் இருக்கிற தடாகத்திலே-
ஒரு கயல் இடம் வலம் கொண்டால் போலே இருக்கை –
உபமானமே பிடித்து திருத்திக் கொண்டு சொல்ல வேண்டி இருக்கிறது –
உபமேயத்தின் உடைய வைலஷண்யம்
(சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனிக்கு ஒவ்வா
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம் போல்
உபமானத்துக்கு விசேஷங்கள் சொல்ல வேண்டுமே )
ஒப்ப -என்றது
சர்வதா சாம்யம் அன்று –
ஒருவகைக்கு ஒப்பாம் இத்தனை
சேயரிக் கண் அழுநீர் துளும்ப
அஸி தேஷணை-கண் கிடீர்
சேய் -அழகாய் -அரி -வண்டாய்
அன்றிக்கே
ஹரிக்கிற மநோ ஹாரி என்றுமாம்
அன்றிக்கே
சிவந்த அரியை உடைத்தான
அன்றிக்கே
சிவந்து மநோ ஹரிக்கும் கண்கள்-ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமி நிர்வாகம் –
கறும் கண்ணி தவிர்ந்து விஸ்லேஷத்தால் கரும் கண்ணி மாறி சிவந்து இருக்கை
அஸ்ரு பிரவஹிக்கிறது
என் கார்யம் தலைக் கட்டிற்று
இவள் கார்யம் தலைக் கட்டும் அத்தனை
பகவத் வ்யதிரேகத்தில் கண்ணும் கண்ணீருமாய் இருக்கும் இது இறே ஆத்மாவுக்கு ஸ்வரூபம்
(ஆஹ்லாத ஸர்வதேஹிபி; புலகீக்ருத காத்ரவாந், ஸதா பரகுணவிஷ்ட; பண்ணின கிருஷி பலித்ததே )
இத்தைக் காணும் அது இறே இவர்களுக்கு உத்தேச்யம்
இவ்விருப்பை இவனும் காணப் பெற்றதில்லை –
அசலிட்டுக் கேட்கும்-தோழி சொல்ல – இத்தனை இறே –
(அவனால் நேராகக் காண முடியாதே
மதுரா மதுரா லாப கிமாஹ பெருமாள் திருவடி மூலம் கேட்டு அருளினார் )
கிமர்த்தம் -இத்யாதி
ஆர் குடி வேர் பறிய இக்கண்ணும் கண்ண நீருமாய் இருக்கிறது
ஆரைச் சேதனராகக் கொண்டு -என்றுமாம் –
அவன் கண்டு உகக்கும் –
அலமருகின்றன -தடுமாறா நின்றன
வாழியரோ –
இவ் வவசதாம் நீண்டு ஜீவித்திடுக
(துன்பத்துக்கு நடுவில் வாழியரோ
ஜடாயு மஹாராஜர் -ஆயுஷ்மான் – பிரிந்த சீதையைப் பார்த்தேன் –
தானும் குற்று உயிராக இருக்கும் பொழுதும் )
———–
16-பார்க் கடல் வண்ணா -பெரியாழ்வார் திருமொழி -3-3-7-பார்க் கடல் பாற் கடல் இரண்டும் பொருள் இங்கே
பார்க் கடல் வண்ணனுக்கே -நாச்சியார் திருமொழி -1-9-பார்க் கடல் ஒன்றுமே பொருள் பட பாடம் –
பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற் கடல் வண்ணா உன் மேல்
கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த கள்ள வசுரர் தம்மை
சென்று பிடித்து சிறுக் கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும்
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே -3 -3-7 –
பாற் கடல் வண்ணா –
பாற் கடல் போலே வெளுத்து இருந்து உள்ள திருமேனி நிறத்தை உடையவனே –
இத்தால் -பாலின் நீர்மை (திரு மழிசை )-என்கிறபடியே
சத்வ ப்ரசுரமான கிருத யுக புருஷர்களுடைய
ருசி அனுகுணமான திருமேனி நிறத்தை உடையனாய் கொண்டு -அவர்களுக்கு
ஆஸ்ரயநீயனாய் ரஷித்த படியைச் சொல்லுகிறது –
பார்க்கடல் வண்ணா -என்ற பாடம் ஆகில் –
பார் சூழ்ந்த கடல் போல் இருக்கிற
திருமேனி நிறத்தை உடையவன் -என்கை
அப்போது இப்படி இருக்கிற திருவடியை இறே நீ அழிய மாறி -திர்யக் ரூபம் ஆக்கிக்
கொண்டு ஜகத் ரஷணம் பண்ணிற்று என்றபடி –
தொழுது முப்போது முன்னடி வணங்கித் தூ மலர் தூயத் தொழுது ஏத்துகின்றேன்
பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெறா விடில் நான்
அழுது அழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது வுனக்கு உறைக்கும் கண்டாய்
உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடுபாய்ந்து ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே—1-9-
பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெறா விடில் நான்-
பார் சூழ்ந்த கடல் போலே இருக்கிற வடிவை உடையவனுக்கே அடிமை செய்து வாழப் பெறாது ஒழியில்
—————-
17-இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை -பெரியாழ்வார் திருமொழி -3-5-3-
குன்று குடையா –குணம் –திருப்பாவை 24
இந்திரன் தலையை அறுத்து பொகட வல்ல பரிகரம் உண்டாய் இருக்க -ஆழியைச் சொல்லி –
உண்பது கொண்ட நாம் உயிரையும் கொள்ள ஒண்ணாது என்று -அநு கூலனுக்கு வந்த
கலக்கம் ஆகையாலே தானே தெளிந்து விடுகிறான் -ரஷ்ய வர்க்கத்துக்கு நலிவு வாராமல்
மலையை எடுத்து கொண்ட நீர்மையை சொல்லி -அநு கூலனுக்கு பிராமாதிகமாக
புகுந்தது அன்றோ -அனந்தரத்தில் வந்து கோவிந்த அபிஷேகம் பண்ண அன்றோ புகுகிறான் –
பெரும் பசியாலே வந்த கோபத்தாலே வர்ஷித்தான் ஆகில் கை நொந்தவாறே விடுகிறான் –
ஆந்ரு சமசயத்தாலே -அந்த குணத்துக்கு போற்றி –
அம் மை தடம் கண் மட வாய்ச்சியரும் ஆன் ஆயரும் ஆநிரையும் அலறி
எம்மைச் சரண் என்று கொள் என்று இரப்ப இலங்கு ஆழிக்கை எந்தை எடுத்த மலை
தம்மை சரண் என்ற தம் பாவையரை புன மேய்கின்ற மான் இனம் காண்மின் என்று
கொம்மை புயம் குன்றர் சிலை குனிக்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5- 3-
இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை –
கருதுமிடம் பொர வல்ல தேஜஸ்சை உடைய திரு ஆழியை திருக் கையிலே உடையனான
என் ஸ்வாமியானவன் இவற்றை ரஷிக்கைக்காக எடுத்த மலை –
இப்பொழுது திரு ஆழியை திருக் கையில் உடையனாமை சொன்னது –
இந்த்ரனை தலை அறுத்து பொகட வல்ல பரிகரம் உண்டாய் இருக்க –
உண்பது கொண்ட நாம் உயிரையும் கொள்ள ஒண்ணாது –
அனுகூலனுக்கு வந்த கலக்கம் ஆகையாலே தானே தெளிந்து விடுகிறான்-என்று
தன்னுடைய ரஷ்ய வர்க்கத்துக்கு ஒரு நலிவு வாராமல் மலையை எடுத்துக் கொண்டு
நின்ற நீர்மையைச் சொல்லுகைக்காக
அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி–இதுக்கு முன்பு இந்தரனுக்காக செய்த செயல் —
இப்போது அவன் தான் பகையான படி —மலையைக் குடையாக எடுத்து
பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தைப் போக்கின படி —
அனுகூலன் பிரதி கூலித்தால் செய்யலாவது இல்லை இறே-
குணம் போற்றி –
பசி க்ராஹத்தாலே கை ஓயும் தனையும் வர்ஷிக்க–மலை எடுத்துக் கொண்டு நின்ற ஆன்ரு சம்சய குணத்துக்கு
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
தன்னுடைய ரஷ்ய வர்க்கத்தை மலையை எடுத்து நோக்கின குணம் -உண்பது கொண்டால்
உகிர் கொண்டு தலையை அறுக்கவோ -என்று மலையை எடுத்த ஆந்ரு சமசய குணம்-
இந்த்ரன் சிலா வர்ஷம் வர்ஷித்த போது–பர்வதத்தை குடையாக கொண்டு–
கோ கோப ரஷணம் பண்ணினாப் போலே –
அஞ்ஞான கார்யமான அஹங்காரம்–இவ் வதிகாரிக்கு விஷய ப்ராவண்யத்தை உண்டாக்குவதற்கு-பிரதி கிரியையாக
வைதிகமாய் கைங்கர்ய ரூபமான–விஷய ப்ராவண்யத்தை உண்டாக்கி–
ஸ்வ பிரபன்ன ஜன ரஷகனாம்படியைச் சொல்லுகிறது –
ஆக இப்படி ஆஸ்ரித ரஷகன் ஆனவனே–உன்னுடைய சீல குணத்துக்கு பல்லாண்டு –
அனுகூலர்-அனந்தரம் கோவிந்த அபிஷேகம்-பெரும் பசியால்-உண்பது கொண்டால் உயிர் கொண்டு தலை அறுக்கவோ
கை சலிக்கும் வரையில் தடுப்போம்-தலை அழிக்காதே புகழ்-சபலை குழந்தைக்கு முதுகைக் கொடுக்கும் மாதா போலே
இன்று வந்த ஆயர் –மது சூதனன் எடுத்த-கருணை குணம் போற்றி –பனி மறுத்த பண்பாளா
கோலம் அழியாமல் வாடாமல்-கைக்கு மங்களா சாசனம்-நின்ற திருவடிக்கு-
என் தனக்கு குன்று எடுத்த மலையாளா –ஷமை குணம்
————–
18-தம்முடை குட்டன்களை குதி பயிற்றும் -பெரியாழ்வார் திருமொழி -3-5-9 –
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி -நாச்சியார் திருமொழி -14-1-
தம் தாமுடைய குட்டிகளை -முதுகிலே கட்டிக் கொண்டு போய் -கொம்பிலே ஏற்றி இருந்து –
ஒரு கொம்பில் நின்றும் ஒரு கொம்பில் குதிக்கும் படியை -தான் முந்துற குதித்திக் காட்டி
அப்யசிப்பியா நிற்கும் -அவற்றுக்கு தண்ணீர் பருகுகை அபேஷிதம் ஆனால் –
தான் அரைமட்டு நீரிலே இழிந்து -பின்னை கையைக் கட்டி குனிந்து நின்று –
தண்ணீர் பருக காட்டும் ஆயிற்று -தடம் பருகும் கரு முகில் -கலியன் -2-5-3-இ றே
ச யத் பிரமாணம் குருதே லோக சதத் அநு வர்த்ததே -காரயித்ருத்வம் இருக்கிற படி –
வன் பேய் முலை உண்டதோர் வாயுடையன் வன் தூண் என நின்றதோர் வன் பரத்தை
தன் பேரிட்டுக் கொண்டு தரணி தன்னில் தாமோதரன் தாங்கு தடவரை தான்
முன்பே வழி காட்ட முசுக் கணங்கள் முதுகில் பெய்து தம்முடைக் குட்டங்களைக்
கொம்பேற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-9- –
முன்பே வழி காட்ட முசுக் கணங்கள் முதுகில் பெய்து தம்முடைக் குட்டங்களைக் கொம்பேற்றி இருந்து குதி பயிற்றும் –
முசுக்கணங்கள் ஆனவை (கோலாங்குலம் -என்னும் வகை ) ஏற்கவே
பணையோடு பணை பாயும் வழி காட்டுகைக்காக
தம் தாமுடைய குட்டிகளை முதுகிலே கட்டிக் கொண்டு போய் –
கொம்பிலே ஏறி இருந்து
ஒரு கொம்பில் நின்றும் ஒரு கொம்பிலே குதிக்கும் படியை –
தான் முந்துற குதித்துக் காட்டி அப்யசிப்பியா நிற்கும்
பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-1-
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
யுவாக்களானவர் அபிமத விஷயத்திலும் கடகரை விரும்பி இருக்குமா போலே
இவனும் பசுக்களை யாய்த்து விரும்புவது
ஆகள் போக விட்டு குழலூத வேணுமே
நீ தாழ்த்தது என் என்று மாதா பிதாக்கள் கேட்டால்
பசுக்களின் பின்னே போனேன் என்று சொல்லலாம் படி
தனக்கு ஒதுங்க நிழலாய் இருக்கும் இறே அவை –
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே -திருவாய் -6-2-2-
இட்டமான பசுக்களை –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -செங்கனிவாய் எங்கள் ஆயர்தேவே -திருவாய் -10-3-10-என்கிறபடியே
பரம பதத்தில் காட்டிலும் பசுக்களை மேய்க்குமத்தை யாய்த்து விரும்பி இருப்பது
அவ்விருப்பிலும் -வாய் வெருவிக் கிடப்பதுவும்
கனாக் காண்பதுவும் இப்பசுக்களை வாய்த்து –
இனிது மறித்து –
இருவராக கலந்து பரிமாறா நின்றால்-
எதிர்த் தலையினுடைய நாம க்ரஹணம் பண்ணினால் அது ப்ரீதியாய் இருக்குமா போலே யாய்த்து
இவற்றின் பேரைச் சொல்லி அழைத்தால் அவற்றுக்கு பிரியமாய் இருக்கும் படி
லோகத்தில் சேதனர் அசங்கேயரராய் இருக்கச் செய்தேயும்
எல்லாருடையவும் நாம ரூப வியாகரணம் பண்ணுமா போலே-
நீரூட்டி
அவற்றுக்குத் தண்ணீர் பருகுகை அபேஷிதமானால் தான் அரை மட்ட நீரிலே இழிந்து
பின்னே கையைக் கட்டிக் குனிந்து நின்று தண்ணீர் பருகிக் காட்டுமாய்த்து —
இவன் பின்னை அவையும் கூடக் குடிக்கும்
தடம் பருகு கரு முகில் -பெரிய திருமொழி -2-5-3–
இவன் கரு முகில் இறே
ச யத் பிரமாணம் குருதே லோகஸ் தத் அனுவர்த்ததே -ஸ்ரீ கீதை -3-21—
காரயித்ருத்வம் இருக்கிற படி
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம் -16—
தடாகத்திலே ஒரு மேகம் படிந்தால் போலே இறே இருப்பது –
உடம்புருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய்
உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்று மேய்த்து
விளையாட வல்லானை வரை மீ கானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கோர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே —-2-5-3-
கண்டு கொண்டேன் -ஒவ் ஒன்றிலும் சேர்த்து
உலகுய்ய நின்றானை கண்டு கொண்டேன்
விளையாட வல்லானை கண்டு கொண்டேன்
தடம்பருகு கருமுகிலை கண்டு கொண்டேன்
தஞ்சைக் கோயில் தவ நெறிக்கோர் பெரு நெறியை கண்டு கொண்டேன்
வையம் காக்கும் கடும்பரி மேல் கற்கியை கண்டு கொண்டேன்
சர்வஸ்ய ஜகத பாலௌ த்ஸபாலௌ பபூவது -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
வரை மீ கானில் -தடம்பருகு கருமுகிலை-
இவ்விடத்துக்கு பட்டர் அருளிச் செய்தார் என்று பிரசித்தம் இறே
இவ்விடத்துக்கு ஜீயர் அருளிச் செய்யா நிற்க
பிள்ளை அழகிய மணவாள பெருமாள் அரையர் ஸ்மரிப்பித்து அருளின வார்த்தை யாயிற்று
மலை மேல்
காட்டிலே உண்டான தடாகங்களிலே கன்றுகள் பின்னே போய்
இளைத்து வந்து தண்ணீர் குடிக்கப் புக்கால்
இளம் கன்றுகள் ஆகையாலே நீரிலே முன்னே இறங்கி குடிக்கப் பயப்படுமே –
அத்தை நீரூட்டுக்கைகாக தான் பின்னே கையைக் கட்டி
கவிழ்ந்து நின்று தண்ணீர் அமுது செய்யும் ஆயிற்று –
ஜாதி பிரயுக்தமான ஸ்வபாவத்தை சொன்னபடி –
(இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி-கன்று மேய்த்து இனிது உகந்த காளை அன்றோ )
19-செங்கண் மால் -பெரியாழ்வார் திரு மொழி -3-8-4-
செய்ய —கண்ணன் -திருவாய் மொழி -4-5-2-
செங்கண் மால் தான் கொண்டு போனான் -யதா கப்யாசம் -புண்டரீகம் -என்கிறபடியே
ஸ்வாபாவிகமான சிகப்புக்கு மேலே -பக்க நோக்கம் அறியாமல் இவளைப் பார்த்து கொண்டு இருக்கும்
வ்யாமோகத்தாலும் சிவந்த திருக் கண்களை உடையவன் -அவளை ஒருபடியே
கடாஷித்துக் கொண்டு இருக்கையாலே -அவள் திரு மேனியின் சிகப்பு ஏறி
இவன் புண்டரீகாஷனாய் இருக்கும் -செய்யாள் திரு மார்பினில் சேர் திருமால் இறே –
ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போலே வளர்த்தேன் செம்கண் மால் தான் கொண்டு போனான்
பெரு மகளாய் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற யசோதை
மருமகளை கண்டு உகந்து மணாட்டுப் புறம் செய்யும் கொலோ -3-8-4-
செம்கண் மால் தான் கொண்டு போனான் –
யதா கப்யாசம் புண்டரீகம் -என்கிறபடியே
ஸ்வாபாவிகமான சிவப்புக்கு மேலே
பக்க நோக்கு அறியாமல் -இவளை பார்த்து கொண்டு இருக்கும் வ்யாமோகத்தாலும்
சிவந்த திருக் கண்களை உடையவனாய் –
இந்த வ்யாமோகமே தனக்கு நிரூபகமாம் படி இருக்குமவன் –
ஆதி வாஹிகரை வரக் காட்டி யாதல்-
பெரிய திருவடியை வரக் காட்டி யாதல் -கொடு போகை அன்றிக்கே –
கள்வன் கொல் -லில் பிராட்டியைக் கொண்டு போனால் போல் –
தானே கொண்டு போனான் –
ஆழ்வான் திரு நாட்டுக்கு எழுந்து அருளும் போது – உடையவர் -விஸ்லேஷம் பொறுக்க மாட்டாமல் –
ஒரு மகள் தன்னை உடையேன் -என்றும் –
உலகம் நிறைந்த புகழால் திரு மகள் போலே வளர்த்தேன் -என்றும் –
செம்கண் மால் தான் கொண்டு போனான் -என்று அருளிச் செய்தார் -என்று பிரசித்தம் இறே
உபமாநம சேஷானாம் சாதூனாம் யச் சதா பவத்-என்கிறபடியே
சாதுக்களுக்கு எல்லாம் உபமான பூமியாக சொல்லலாம் படி இருக்கையாலே –
உலகம் நிறைந்த புகழ் உள்ளது ஆழ்வானுக்கே இறே
(ஸ்ரீ மத் கூர -அக்ரியம் யதீந்த்ர சிஷ்யானாம் ஆத்யாம் வேதாந்த வேதினாம்
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் )
மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-
மைய கண்ணாள் –
‘கறுத்த கண்களையுடையவள்’ -அஸி தேஷிணா-ஸ்ரீராமா. சுந். 16 : 5.-என்னக் கடவதன்றோ?
அன்றிக்கே, பெரிய பிராட்டியார் திருக்கண்களாலே ஒருகால் பார்த்தால்
ஒருபாட்டம் மழை விழுந்தாற்போலே சர்வேசுவரன் திருமேனி குளிரும்படி யாயிற்று இருப்பது;
ஆதலால், ‘மைய கண்ணாள்’ என்கிறார் என்னுதல். ‘மழைக்கண் மடந்தை’-திருவிருத்தம், 52.- என்னப்படுமவளன்றோ அவள்?’
இவள் திருவருள் இல்லாமையேயன்றோ அல்லாதார் விரூபாக்ஷர் ஆகிறது? ‘இந்த உலகமானது எந்தப் பிராட்டியின் புருவங்களினுடைய
செயல்களின் விசேடத்தால் நியமிக்கும் பொருளாயும், நியமிக்கப்படுகின்ற பொருளாயும் ஆகுகையாகிற தாரதம்மியத்தாலே
மேடு பள்ளமுள்ளதாக ஆகின்றதோ, அந்த ஸ்ரீரங்கநாயகியின்பொருட்டு நமஸ்காரம்,’ என்கிறபடியே,
அவள் உண்மையாலும் இன்மையாலுமே யன்றோ ஒருவன் அழகிய மணவாளப் பிள்ளையாயிருக்கிறதும்,
ஒருவன் பிச்சையேற்பானுமாயிருக்கிறதும்?
பட்டர் தானே இப்படி தைர்யமாக நாம் நாமவதற்கும் அழகிய மணவாளன் அப்படி ஆவதற்கும் இவள் கடாஷமே காரணம் என்கிறார் –
(பரம/ அபரம /அப ரம- சம்பந்தம் /இல்லாமல் -திரு இல்லா தேவர் )
மலர்மேல் உறைவாள் –
செவ்வித்தாமரை மலரின் வாசனை வடிவு எடுத்தாற்போன்று பிறந்தவள். அவயவ சோபை அது; சௌகுமார்யம் இது.
உறை மார்பினன் –
பூவிலும் கூசி அடியிடுமவள் பொருந்தி வசிக்கும் மார்வு படைத்தவன். ‘ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் பெருமாளைக் கை பிடித்த பின்பு
ஸ்ரீ மிதிலையை நினையாதது போன்று, இவளும் இவன் மார்வில் இனிமை அறிந்த பின்பு தாமரையை நினையாதவள்’ என்பார்,
‘உறை மார்பினன்’ என்கிறார். ‘மக்களின் அண்மையில் இருக்கிற தன் சரீரத்தை முத்தன் நினைப்பது இல்லை,’ என்கிறபடியே,
முத்தர்கள் இல்லறவாழ்வினை நினையாதது போன்று இவளும் தாமரை மலரை நினையாதபடி.
இப்பாசுரத்தில் ‘மையகண்ணாள் மலர்மேலுறைவாள் உறை மார்பினன்’(ஸ்ரீயபதித்வம்) என்று
கூறுவதற்கு நான்கு வகையில் கருத்துஅருளிச்செய்கிறார்:
‘இம்மஹத்தான ஜஸ்வர்யத்துக்கு அடியான திருமகள்கேள்வனாம்படியை அருளிச்செய்கிறார்’ என்பது, முதல் கருத்து.
‘இம்மஹத்தான ஐஸ்வரியம்’ என்றது, முதற்பாசுரத்தின் முன்னிரண்டு அடிகளையும் திருவுள்ளம் பற்றி.
‘சர்வேசுவரன் திருவருளாலே’ என்றது முதல் ‘இப்பிரபந்தங்கள் பிறந்தன’ என்றது முடிய, இரண்டாவது கருத்து.
இந்த இரண்டாவது கருத்தால், ஸ்ரீராமாயணத்தைக்காட்டிலும்
திருவாய்மொழிக்கு ஏற்றத்தையும் ஏற்றத்திற்குரிய காரணத்தையும் அருளிச்செய்கிறார்.
இங்கு,‘நாரணன் விளையாட் டெல்லாம் நாரத முனிவன் கூற ஆரணக் கவிதை
செய்தா னறிந்த வான்மீகி என்பான்’-கம்பராமாயணத் தனியன்
‘சீதாயாஸ் சரிதம்’ என்றது முதல், ‘என்றாரேயன்றோ இவரும்’ என்றது முடிய,
மூன்றாவது கருத்து. கவிக்கு விஷயம் பிராட்டியும் அவனும் என்கிற இது,
ஸ்ரீராமாயணத்திற்கும் இப்பிரபந்தத்திற்கும் ஒக்கும் என்பது மூன்றாவதன் கருத்து.
‘அவன் பாடித் தனியே’ என்றது முதல் ‘ஆயிற்றுக்கவி பாடிற்று’ என்றது முடிய, நான்காவது கருத்து,
‘அவன்’ என்றது, ஸ்ரீவால்மீகி பகவானை.ஆக, ஸ்ரீராமாயணத்துக்கும் பிரபந்தத்துக்கும் இரண்டு ஆகாரத்தாலே
வேறுபாடும், ஓர் ஆகாரத்தாலே ஒப்புமையும் கூறியபடி.
செய்ய கோலத் தடம் கண்ணன் –
சிவந்து காட்சிக்கு இனியனவாய்ப் பரப்பையுடையனவான திருக்கண்களையுடையவன்.
ஓர் இடத்திலே மேகம் மழை பெய்யாநின்றால்
அவ்விடம் குளிர்ந்திருக்குமாறு போலே, ‘மைப்படி மேனி’ என்கிறபடியே, சர்வேசுவரனுடைய கரிய மேனியை ஒருபடியே
பார்த்துக்கொண்டிருப்பாளே அன்றோ இவள்? இவள் திருக்கண்களிலே
அவன் திருமேனியின் நிறம் ஊறி இவள் மைய கண்ணாளாயிருக்கும்;
‘செய்யாள் திருமார்வினில் சேர் திருமால்’–9-4-1- என்கிறபடியே, மார்பில் இருக்கின்ற
அவளை ஒருபடியே பார்த்துக் கொண்டிருக்கையாலே
அவள் திருமேனியில் சிவப்பு ஊறி இவன் தாமரைக் கண்ணனாய் இருக்கும்;
‘இருவர் படியும் இருவர் கண்களிலே காணலாம்;
அவன் படி இவள் கண்களிலே காணலாம்; இவள் படி அவன் கண்களிலே காணலாம்.
இவர்களுடைய கண் கலவி இருக்கும்படியிறே இது.
கண்ணோடு கண்ணினை கவ்வி கம்பர் –
இவர் கவி விண்ணப்பம் செய்யக் கேட்டு அத்தாலே வந்த பிரீதிக்குப் போக்கு விட்டு
அவன் பிராட்டியைப் பார்க்க, அவள்,அந்ய பரதை பண்ணாமல் –
‘வேறு ஒன்றிலே நோக்கில்லாமல் -என்னைப் பார்க்காமல் –அத்தைக் கேட்கலாகாதோ?’
என்று சொல்ல, இப்படிக் காணும் கேட்டது.
மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-
மையார் கருங்கண்ணி –
அவனைப் பெற வேண்டும் என்று இருப்பார் ஆசைப்படுவதும் அவள் முன்னாகவாய் பெற்றால்-
உபாயமாக பிரார்த்தித்து -பூர்வ கண்டம் -புருஷகாரமாக இவளை பற்றி –
பின்னை கைங்கர்யம் செய்வதும் இருவருமான சேர்த்தியிலேயாய் இருக்கும் அன்றோ –
மையார் கருங்கண்ணி –
வேறு ஒரு பொருளைக் கொண்டு அழகு செய்ய வேண்டாதபடி-இயல்பான அழகினை உடையதாய்-
ஆயிற்றுத் திருக் கண்கள் இருப்பன –
இனி மங்களத்தின் பொருட்டு தரிக்கும் இத்தனையேயாம் அஞ்சனம்-
கருங்கண்ணி -என்னா நிற்கச் செய்தே -மையார் -என்னும் போது-மங்களத்தின் பொருட்டு தரிக்கப் படுத்தல் எனபது தானே போதரும் அன்றோ –
கமல மலர்மேல் செய்யாள் –
இது ஆயிற்று மிருதுத் தன்மை இருக்கும்படி –
கீழே அழகைச் சொல்லி -மற்றை இடம் பொறாத -மலர் மேல் இருக்கையே-பொருந்தும் படியான மிருதுத் தன்மை –
திரு மார்வினில் சேர் திருமாலே –
தாமரைப் பூவில் வாசனையும் தாதும் அடிக் கொதித்தால்-
உன் மார்வில் அடி மாறி இட வேண்டும்படி-மார்வு படைத்தவனே-
இவள் இவ்வேற்றம் எல்லாம் கொண்டும் அம்மார்வுக்கு அவ்வருகே போக மாட்டாள்-
அவ்வகலம் எல்லாம் இனிமையாக இருக்கையாலே-அவ்வருகு போக வேண்டாவே-
அகலம் மார்வு -விரிந்து இருத்தல் சிலேடை-
திருமாலே
இவள் -மார்பில் படும் பாட்டினை –
இவளுடைய எல்லா உறுப்புகளிலும் பிச்சு ஏறி இருக்குமாயிற்று அவனும் –
அவனுடைய திருக் கண்கள் சிவந்தனவாய் அன்றோ இருப்பன
அவன் இவளை எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பதனால் –-
அவன் கண்களின் சிவப்பு இவள் மேல் ஊறி இவள் திருமேனி சிவந்து இருக்கும் –
இவள் அவனை எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கையாலே-
இவள் கண்களின் கருமை அவன் திருமேனியில் பரந்து-அவன் திருமேனி கருமையாய் இருக்கும் –
இவளுக்கு திருக் கண்கள் குளிர்ந்து இருக்கும் -கருமை -குளிர்ச்சி கிருபை-அவனுக்கு வாத்சல்யம் விஞ்சி இருக்கும்
அவனுடைய சேர்க்கையால் ஆயிற்று இவளுக்கு தண்ணளி விஞ்சி இருப்பது
இவளுடைய சேர்க்கையால் ஆயிற்று அவனுக்கு வாத்சல்யம் விஞ்சி இருப்பது-
உபாதி நித்யம் -தயையும் வாத்சல்யமும் வேணுமே -இவையும் நித்யம்
மாயாவதி -அவித்யாதி ப்ரஹ்ம சத்யம் ஜகத் மித்யா -உபாதி வசம் என்பர் -வாக்ய ஜென்ம வாக்யார்த்தம் -ஐக்கியம் வந்து சித்தி
சப்தவித்த அனுபவத்தில் லகு மகா சித்தாந்தம்
உபாதி வசத்தால் பொருந்தாது -உபாதி உண்மையா இல்லையா -உண்மை என்றால் ப்ரஹ்மம் அசத்தியம் –
அசத்தியம் மேல் எப்படி உபாதி ஏற்றுவது -உபாதி சத்யம் ஆனால் நித்யம் -ஆகும் அவித்யா போகாதே –
ஆக
காதலாலே இருவருக்கும் இரண்டும் குறை அற்று இருக்கும்
வரவிட்ட ஆள் -மாருதி -அழியச் செய்யப் புக
பாபாநாம் வா சுபாநாம் வா வதார்ஹானாம் ப்லவங்கம்-கார்யம் கருணம் ஆர்யென ந கச்சித் ந அபராத்யதி -யுத்தம் -116-45
யார் குற்றம் செய்யாதவர் -என்னும் இவள்
என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-
என்று இவளோடு மறுதலிக்கும் படி ஆயிற்று அவன் இருப்பது
ஆகையாலே
இருவருமான சேர்த்தியிலே இவை இருவருக்கும் குறை அற்று இருக்கும் -என்றுமாம் –
பிரிந்து இருக்கும் காலத்திலும் தனித் தனியே குறைவு அற்று-இருக்கும் என்றுமாம்-
அவதார த்தால் பிரிவு -இருந்தாலும் வாத்சல்யமும் தயையும் குறையாதே –
திரு மார்வினில் சேர் -என்றதனால்
எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு இருக்கச் செய்தேயும்
அகலகில்லேன் இறையும்-என்று இன்று வந்து கிட்டின புதியார்-படுவதனை எல்லாம் படா நிற்பாள்-என்பதனைத் தெரிவித்தபடி
சேர் திருமாலே -என்ற நிகழ்கால வினைத் தொகை இதனைக் காட்டுகிறது-
யாமி -போகப் போகிறேன் -வளையல்கள் உடைய
நயாமி -போக மாட்டேன் -உன்னை கூட்டிப் போகிறேன் -மீது வளையல்கள் ஓடிய
சங்கு தங்கு முங்கை நங்கை -வளையல்கள் தங்கும் பிரிவே இல்லையாம் –
மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்ட மாதவா -திருவாய்மொழி -1-5-5-
வெருவும் ஆலமும் பிறையும் வெவ் விடையவற்கு ஈந்து
தருவும் வேறுள தகைமையும் சதமகற்கு அருளி
மருவு தொல் பெரு வளங்களும் வேறுற வழங்கி
திருவும் ஆரமும் அணிந்தனன் சீதர மூர்த்தி -கம்பர் -பால -அகலிகைப் படலம் -26
————-
20- நங்காய் -பெரியாழ்வார் திருமொழி 3-8-8-
தொழுது எழு -திருவாய் மொழி -1-1-1-
இப்பதிகத்தில் எங்குத்தைக்கும் முன்னிலை தொழுது எழு -அவன் துயரறு சுடரடி தொழுது எழு
என்கிற இது பத்துப் பாட்டிலும் அந்வயமாக கடவது போலே –
நங்காய் -பெரியாழ்வார் திருமொழி 3-8-8—(பந்துக்கள் சொல்லியும் கேளாமல் தனது வீட்டிலே வைக்க
அதி த்வரையுடன் அவன் வந்து கூட்டுப் போக
ஸ்வாமி சொத்தை எடுத்துக் போக
அங்கே இவளுக்கு என்னாகுமோ என்று
கிலேசித்த தாயார் பாசுரமாகச் செல்கிறது இத்திருமொழி )
அவதாரிகை
கீழில் திரு மொழியிலே -தன் பிள்ளைக்கு அவன் பக்கலிலே செல்லுகிற
ப்ராவண்யத்தைக் கண்ட திருத் தாயார் – கோவிந்தனோடி வளை சங்கையாகி – என்று அவனோடு
இவளுக்கு கலவி உண்டாய்த்தோ என்று
முந்துற சங்கித்து
பின்பு பல ஹேதுக்களாலும் சம்ஸ்லேஷம் ப்ரவர்த்தம் ஆனமையை தானும் அறிந்து –
இவளுடைய ப்ராவண்யத்திலே -முறுகுதலை-முதிர்ச்சி – -கண்ட பந்துக்களும்
மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன்
ஒருப்படுத்திடும் இனி இவளை உலகு அளந்தான் இடைக்கே -என்று சொல்லி இருக்கச் செய்தேயும் –
சடக்கென விரைந்து கொடாது ஒழிகையாலே
அவன் முற்பாடனாய் வந்து –
கள்வன் கொல் யான் அறியேன் -பெரிய திருமொழி
ஸ்ரீ பரகால நாயகி திருத் தாயார் அருளியது போல் – ஸ்ரீ பிராட்டியைக் கொண்டு போனால் போலே –
இவளை அத்தவாளத் தலையாலே -முந்தானையாலே -மறைத்துக் கொண்டு
தன்னுடைய திவ்ய நகரியான ஸ்ரீ திரு ஆய்ப்பாடியிலே கொண்டு போக –
அந்தரங்கமாக காத்துக் கொண்டு கிடந்த திருத் தாயார் -படுக்கையிலே பெண் பிள்ளையை காணாமையாலே –
1-இவனை ஒழிய கொண்டு போவார் இல்லை -என்றும்
2-இவன் கொண்டு போவது தான் ஸ்ரீ திரு ஆய்ப்பாடியிலே -என்றும் அறுதி இட்டு
இவள் போகையாலே தன் திரு மாளிகை எல்லாம் அழகு அழிந்து வெறியோடிற்று என்றும் –
3-இவள் இப்படி அடைவு கேடாகக் கொண்டு போன இது இக் குடிக்கு ஏச்சாமோ குணமோ -என்றும்
4-இவளுக்கு பாணி கிரஹண அர்த்தமான உத்சவம் இப்படி நடக்குமோ -என்றும்
5-மாமியாரான ஸ்ரீ யசோதை பிராட்டி -இவளைக் கண்டு உகந்து -மணவாட்டுப் பெண் பிள்ளை என்று சத்கரிக்கிமோ -என்றும்
6-மாமனாரான ஸ்ரீ நந்தகோபர் உகந்து அணைத்து கொண்டு இவள் வை லஷண்யத்தை கண்டு
இவளைப் பெற்ற தாயார் இனி தரிக்க மாட்டார் என்பரோ என்றும்
7-அவன் தான் நிஹீன குலத்தில் உள்ளாரைப் போலே என் மகளைப் புணர்ந்து உடன் போகைக்கு
ஹேதுவாகக் கொண்டு குடி வாழுமோ -என்றும்
8-நாடு எல்லாம் அறியும் படி நன்றாக கண்ணாலம் செய்து கைப் பிடிக்குமோ -என்றும் –
9-தன் பெருமையாலே அவன் இவளுக்கு -ரூப குண தோஷங்களைச் சொல்லி வரிசை அறுத்து ஆண்டிடுமோ -என்றும்
10-தனக்கு ஜாதி உசிதமான மகிஷியாக பட்டம் கட்டி -பூர்வ மகிஷிகள் முன்னே -வைபவம் தோற்ற வைக்குமோ -என்றும்
11-இவள் தான் தயிர் கடைகை முதலான வன் தொழில்கள் செய்து குடி வாழ்க்கை வாழ வல்லளோ-என்றும்
இப்படி க்லேசித்தும்
மநோ ரதித்தும்
சென்ற பிரகாரத்தை சொல்லுகிறது -இத் திருமொழியில் –
முதல் பாட்டிலே –கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் –விக்ரஹ வை லஷண்யத்தையும் சொல்லி
இரண்டாம் பாட்டில் -இவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபம் சேதன அசேதன விலஷணம் என்று சொல்லி
மூன்றாம் பாட்டிலே -நித்ய விபூதியோபாதி -ததீயத்வாகாரத்தாலே அவனுக்கு அந்தரங்கமாகத் தோற்றுகிற லீலா விபூதி யோகத்தை அனுபவித்தார்
நாலாம் பாட்டில் -அந்த லீலா விபூதியினுடைய ஸ்வரூபம் அவன் அதீனம் -என்றார்
அஞ்சாம் பாட்டிலே -அதினுடைய ஸ்திதியும் அவன் அதீனம் என்றார்
ஆறாம் பாட்டிலே -அதினுடைய பிரவ்ருத்தி நிவ்ருத்தி யும் பகவத் அதீனம் என்றார் –
ஏழாம் பாட்டிலே -சரீர சரீரிகளுக்கு உண்டான லஷணம் ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டாகையாலே
இதுக்கும் அவனுக்கும் சொன்ன -ஐக்யத்துக்கு நிபந்தனம் சரீராத்மா பாவம் என்றார்
எட்டாம் பாட்டிலே குத்ருஷ்டிகளை நிரசித்தார்
ஒன்பதாம் பாட்டிலே ஸூ ந்யவாதியை நிரசித்தார்
பத்தாம் பாட்டில் வ்யாப்தி சௌகர்யத்தை அருளிச் செய்தார்
இப்படிகளாலே அவனுடைய பரத்வத்தை நிஷ்கரிஷித்தாராய் நின்றார் கீழ்
இத் திரு வாய் மொழி யில் அன்வயித்தவர்களுக்கு தாம் பெற்ற பேறே பேறு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –
பகவத் பிரசாதத்தாலே தமக்கு பரத்வ ஜ்ஞானம் பிறந்த படியையும்
அந்த ஜ்ஞானத்துக்கு பலம் மோஷம் என்னும் இடத்தையும் -முதல் பாட்டுடன் இத்தை சேர்த்து -அந்வயித்து அருளிச் செய்கிறார் –
இப்பிரபந்தத்தில் ஏதேனும் ஒரு படி அந்வயம் உடையார்க்கும் பலம் நம்முடைய பலம் என்னும் இடத்தையும் அருளிச் செய்கிறார் –
துயர் அறு சுடர் அடி தொழுது எழுவதே பலன்
தத் விஷ்ணோ பரமம் பதம் -நணுகினம் நாமே -கிட்டப் பெற்றோம் -ஞானத்துக்கு பலம் மோஷம் என்றவாறு –
————-
21-என்னாதன் தேவிக்கு -பெரியாழ்வார் திருமொழி -3-9-1
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை -திருவாய்மொழி -4-5-8-
இன்று ஆஸ்ரயித்த நமக்கும் -நித்யசம்சாரிகளுக்கும் இவ்வருகாய் இருக்கும் நமக்கும் –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -பூவின் மிசை நங்கைக்கும் -நித்ய சூரிகளுக்கும் அவ்வருகாய்
ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் பூர்ணை யாய் இருக்கிற அவளுக்கும் இன்பனை –
இன்பனாய் இருக்கும் இடத்தில் முற்பாடு இங்கே யாய் பின்பாயிற்று அவளுக்கு
த்வயி கிஞ்சித் சமாபந்னே கிம் கார்யம் சீதயா மம -இறே
என் நாதன் தேவிக்கு அன்று இன்பப் பூ ஈயாதாள்
தன் நாதன் காணவே தண் பூ மரத்தினை
வன்னாத புள்ளால் வலியப் பறித்திட்ட
என் நாதன் வன்மையை பாடிப் பற
எம்பிரான் வன்மையை பாடிப் பற – 3-9-1-
என் நாதன் தேவிக்கு
என்னுடைய நாதனாவனுடைய தேவிக்கு நாதன் -என்கிறது –
சேஷி என்றபடி
ஸ்வரூபத்தை உணர்ந்தால் எல்லார்க்கும் தனித் தனியே -என் நாதன் என் நாதன் –
என்னலாம் படி இறே வஸ்துவோட்டை ப்ராப்தி இருக்கும் படி –
இவ் வாத்மாவினுடைய சேஷத்வம் தான் -கேவலம் அவன் அளவு அன்றிக்கே
மிதுன விஷயமாய் இறே இருப்பது
ஆகையால் இறே -என்னாதன் தேவிக்கு -என்றது –
விஷ்ணு பத்நீம் -என்கிறபடியே
இவளுக்கு நிரூபகம் -அவனுடைய தேவி -என்னும் அது இறே
தேவி-என்கையாலே
சத்ய பாமை பிராட்டி உடைய வால்லப்யம் சொல்லுகிறது
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-
நமக்கும் –
இன்று தன் திருவடிகளைப் பற்றிய நமக்கும்.
அன்றிக்கே, பிறந்து இறந்து பிறிவிகளிலே உழன்று திரிகின்றவர்கட்கும் இவ்வருகாயிருக்கிற நமக்கும்;
‘நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன்’ என்றாரே அன்றோ தம்மை?
பூவின்மிசை நங்கைக்கும் –
நித்திய சூரிகளுக்கும் அவ்வருகாய், ரூப குணத்தாலும் ஆத்தும குணத்தாலும் நிறைந்திருக்கிற பெரிய பிராட்டியார்க்கும்.
மலரில் மணத்தை வகுத்தாற் போலே இருந்துள்ள மிருதுத் தன்மையையும் இனிமையையும் உடையவளாதலின்,
‘பூவின் மிசை நங்கை’ என்கிறது.
‘இத்தலை நிறைவு இன்றியே இருக்கிறாப் போலே யாயிற்று அத்தலை குறைவு அற்றிருக்கிறபடி’ என்பார், ‘நங்கை’ என்கிறார்.
இன்பனை –
இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பு ஆயிற்று அவளிடத்தில் அன்பு செலுத்தியிருப்பது.
இலங்கையிலேயுள்ள சுவேல மலையிலே பெருமாள் எழுந்தருளி நிற்கச் செய்தே இராவணன் கோபுர சிகரத்தே வந்து தோன்றினவாறே,
‘இராஜத் துரோகியான பையல் திரு முன்பே நிற்கையாவது என்?’ என்று மஹாராஜர் அவன்மேலே எழப் பாய்ந்து வென்று வந்த போது
பெருமாள் அவரைப் பார்த்து, ‘இராஜாக்கள் இப்படிப்பட்ட சாகஸ காரியங்களைத் தாங்களே செய்யமாட்டார்கள்,’ என்றார்; என்றது,
‘சிலர்மேல் விழ வேண்டினால், சேனைத் தலைவர்கள் நிற்க அரசரோ மேல் விழுவார்?’ என்கிறார் என்றபடி.
‘ஸ்ரீராமபிரான் உலகங்கட்கெல்லாம் நாதனாய் இருந்தும் சுக்கிரீவனை நாதனாக இச்சிக்கிறார்,’ என்னா நின்றதே அன்றோ?
கிடைப்பது கிடையாதொழிவது இச்சியா நின்றார்.
‘அத்தகைய இந்த ஸ்ரீராமபிரான் சுக்கிரீவனைச் சரணமாக அடைந்தார்,’ என்னா நின்றதே அன்றோ?
நீர் மஹாராஜரான தரம் குலைய அவன் ஒரு வார்த்தை சொல்லுமாகில்,
நீர் தேடிப் போகிற சரக்குதான் நமக்கு என்ன செய்ய?’ என்றாரே அன்றோ?
இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பாயிற்று அவளிடத்தில் அன்பு செலுத்தியிருப்பது,’ என்பதற்குப் பிரமாணங் காட்டுகிறார்,
‘நீர்மஹாராஜரான தரம் குலைய’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. யுத். 41 :4.
‘நீர் தேடிப்போகிற சரக்கு’ என்றது, சீதாபிராட்டியை.
பரிகரம் இருக்க அரசனா முன்னால் போவது என்றாரே பெருமாள் –
தாமே இவனுக்கு பரிகரம் என்ற நினைவால் அர்ஜுனனுக்கு இவன் தான் முன்னே இன்று பார்த்த சாரதி பெயர் வாங்கிக் கொண்டார் –
அன்று ஈன்ற கன்றின் மேல் உள்ள வாத்சல்ய அதிசயம் –
இச் சுலோகப்பொருளோடு,
‘இந்நிலை விரைவின் எய்தா தித்துணை தாழ்த்தி யாயின் நன்னுதற் சீதை யாலென்? ஞாலத்தாற் பயனென்? நம்பி!
உன்னையான் தொடர்வன்; என்னைத் தொடருமிவ் வுலக மெல்லாம்; பின்னை என்?
இதனை நோக்கி விளையாடிப் பிழைப்ப செய்தாய்.’என்ற கம்பராமாயணச் செய்யுளை ஒப்பு நோக்குக.
————-
22-பெரும் தேவீ கேட்டருளாய் -பெரியாழ்வார் திருமொழி -3-10-4
என் சிறுத் தேவி போய் -திருவாய் மொழி -6-7-5-
பெருமைக்கு தகுதியான தேவி -பெரும் தேவி -துல்ய சீல வயோ வ்ருத்தாம் –
தன் திருமால் என்று பெரும் தேவியைச் சொல்லுகையாலே சிறுத் தேவி என்று விசேஷிக்கிறாள்
வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –3-10-4-
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ
தேர்களால் அலங்க்ருதமான திரு அயோத்யையில் உள்ளவருக்கு நிர்வாஹகரான
பெருமாளுடைய பெருமைக்குத் தகுதியான தேவீ
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணாம்
ராகவோ அர்ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா-என்னக் கடவது இறே
அல்லது ஒரு சிறு தேவி யுண்டாய் பெரும் தேவி என்கிறது அன்று இறே –
பெருமாள் ஏக தார வ்ரதராகையாலே
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5-
என் சிறுத் தேவி –
தன் ‘திருமால்’ என்று மேலே பெரிய தேவியைச் சொல்லுகையாலே, ‘சிறுத் தேவி’ என்று விசேடிக்கிறாள்.
அன்றிக்கே,
பருவம் நிரம்பாதிருக்கச் செய்தேயும் பட்டம் கட்டின பெருந்தேவிகளோடு
ஒக்கச் சொல்லலாயிருக்கையாலே ‘சிறுத் தேவி’ என்கிறாள் என்னுதல்,
‘என் பெண் பிள்ளை’ என்கிற நினைவு இல்லை காணும் இவளுக்கு.
“பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே” –, பெரிய திருமொழி.8. 2 : 9.—
—————
23-அமரர் தம் கோனார் -பெரியாழ்வார் திருமொழி -4-2-4-இந்த்ரன்
திரு வல்ல வாழ் உறையும் கோனார் -திருவாய்மொழி -5-9-1-ஸ்ரீ மன் நாராயணன்-
ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம்
கோனார்க்கு ஒழிய கோவர்த்தனத்துச் செய்தான் மலை
வான் நாட்டில் நின்று மா மலர் கற்பகத்து ஒத்து இழி
தேனாறு பாயம் தென் திரு மால் இரும் சோலையே – 4 -2-4 –
ஆனாயர் -இத்யாதி
கோ தநரான இடையர் -வர்ஷார்த்தமாக வத்சரம் தோறும்
ஒரு திவசம் இந்த்ரனை ஆராதித்து போரக் கடவர்களாய்-
அதுக்கு உடலாக அவர்கள் -வாசல்கள் தோறும் ஆக்கி எடுத்து செல்லுகிற படியை –
நீங்கள் செய்கிறது என்-என்று கேட்க –
வர்ஷார்த்தமாக இந்தரனுக்கு சோறு இடுகையாய் இருக்கும் -என்ன
நாம் பிறந்து வளருகிற ஊரிலே ஒரு த்ரவ்யத்தை ஒரு தேவதாந்த்ரம் கொள்ளுகை யாவது என் -என்று
நினைத்து அத்தை விலக்குகைக்காக
இந்த்ரன் ஆகிறவன் எவன் -அவனை நீங்கள் கண்டு அறிவது உண்டோ -அவன் தான் நீங்கள் இட்ட
சோற்றை உண்ணக் கண்டு அறிவீர்களோ
ஒன்றும் அறியிகோளாய் இருந்திகோள்-
ஆன பின்பு மேகங்களும் வந்து படிந்து வர்த்திக்கும் ஸ்தானமாய்
என்றும் ஒக்கும் பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உண்டாய்-
நமக்கு மழைக்கும் காற்றுக்கும் ஒதுங்கும் இடமாய்
கோக்களை வர்திப்பிக்கையாலே-
கோவர்த்தனம் -என்னும் பேரை உடைத்தாய் இருக்கிற
இம் மலை யன்றோ நமக்கு தெய்வம் –
இதின் முன்னே நீங்கள் சமைத்தவை எல்லாம் கொண்டு வந்து இடும் கோள் -என்ன
பஞ்ச லஷம் குடியில் உள்ள இடையர் எல்லாரும் திரண்டு
இந்த்ரார்தமாக கல்பித்த உத்சவத்தை –
முப்பத்து முக்கோடி தேவர்களையும் கும்பீடு கொள்ளும் ஏற்றத்தை உடையராய்
தம்மை போரப் பொலிய நினைத்து இருக்கும் அவர்க்கு ஒழிய
அசேதனமாய் இருபத்தொரு பர்வதமான ஸ்ரீ கோவர்த்தனத்துக்கு ஆம்படி செய்தவனுடைய மலை
அப்படி தன் அபிமானத்திலே ஒதுங்கினவர்களை அந்ய சேஷம் ஆகாத படி நோக்கி (காத்து)
ஸ்ரீ திரு மலை ஆழ்வாருக்கு சேஷம் ஆக்குகைக்கு
அவன் எழுந்து அருளி இருக்கிற தேசம்-என்கை
மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-
இருவராய்க் கொண்டு பரிமாற வேண்டும் தேசத்திலே தனியே நிற்கின்றான் காண் என்பாள்
‘தேனார் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை’ -என்கிறாள்.
அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதித்தொழியாது தங்கியிருத்தலின் ‘உறையும் கோனாரை’ என்கிறாள்.
நாராயண சப்தத்திலும்
பிரணவத்திலும் போலே,
‘கோனாரை அடியேன்’ என்கிறாள்.
அவனைச் சொல்லும் போது தம்மையிட்டல்லது சொல்லப் போகாது;
தம்மைச் சொல்லும் போதும் அவனையிட்டல்லது சொல்லப்போகாது.
‘கோனாரை’ என்ற இடம், நாராயண சப்தார்த்தம்;
‘அடியேன்’ என்ற இடம், பிரணவார்த்தம்.
பிரணவம், ஜீவப் பிரதானம்; நாராயண பதம், ஈஸ்வரப் பிரதானம்.
‘நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும்’ என்று மேலே கூறியதனை விவரிக்கிறார் ‘கோனாரை’ என்று தொடங்கி.
‘நான்காம் வேற்றுமை’என்றது, ‘நாராயணாய’ என்ற பதத்திலேயுள்ள ‘ஆய’ என்னும் உருபினை.
‘அடி கூடுவது என்று கொலோ’ என்ற இடம்,
நான்காம் வேற்றுமையின் பொருள்; ‘என்று கொலோ’ என்று பிரார்த்தனையோடு தலைக் கட்டுகிறதன்றோ.
கோனாரை அடியேன் – நாயகன் தைரியத்தையுடைய நாயகன்–இவள் தைரியம் இல்லாதவள்.
அடியேன் அடி கூடுவது என்று கொலோ – ஸ்வரூபத்துக்குத் தகுதியாக
வேற்றுமையின் பொருளோடே-விபக்தி உடன் – தலைக் கட்டுகிறபடி.
எல்லா அளவிலும் ஸ்வரூபம் அழியாதன்றோ.
தாமாகவுமாம்,
பிராட்டிமார் தசையை அடைந்தவராகவுமாம்,
அதற்கும் அவ்வருகே சில அவஸ்தைகளை யுடையராகவுமாம்,
எல்லாக் காலத்திலும் ஸ்வரூபம் மாறாது;
பிண்டத்வ கடத்வ கபாலத்வ சூர்ணத்வங்களாகிற நிலை வேறுபாடுகளை அடைந்தாலும் மண்ணான வடிவுக்கு அழிவில்லை யன்றோ.
தாமான தன்மையில் “அடி தொழுது எழு”-திருவாய். 1. 1 : 1.-என்பர்;
பரோப தேசத்தில் “திண்கழல் சேர்” – திருவாய். 1. 2 : 10.-என்பர்;
தூது விடப் புக்கால் “திருவடிக் கீழ்க் குற்றேவல்”- திருவாய். 1. 4 : 2.– என்பர்;
பிறரைச் சொல்லப் புக்கால் “தாட் பட்ட தண்துழாய்த் தாமம் காமிற்றாயே” திருவாய். 2. 1 : 2.-என்பர்;
கலங்கி மடல் எடுக்குமளவானாலும் “தலையில் வணங்கவுமாங்கொலோ” –திருவாய். 5. 3 : 7.-என்பர்;
பித்தேறிச் சொல்லும் போதும் “கண்ணன் கழல்கள் விரும்புமே” – திருவாய். 4. 4 : 8.-என்னுதல்,
“ஏறிய பித்தினொடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு” -திருவாய். 4. 4 : 7.-என்னுதல் சொல்வார் இத்தனை.
———–
24- தாமரை யாள் யாகிலும் சிதகுரைக்குமேல் -பெரியாழ்வார் திரு மொழி -4-9-2-
திருமாலே நெடியானே -பெருமாள் திருமொழி -4-9-
என் அடியார் அது செய்யார் -ஆஸ்ரித விஷயத்தில் அவன் இருக்கும் இருப்பு
தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே – 4-9 -2-
பிராட்டி சிதகுரைத்தாலும் –
குணத்தை தோஷமாக பிரமித்தாயோ -என்று இறே அவன் பாசுரம்
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஆஸ்ரித பஷ பாத அதிசயம் சொல்லுகிறது
இருவரும் -இசலி -ஸ்பர்த்தித்து -( பொய்ச் சண்டை இட்டு )-ஆஸ்ரிதரை நோக்கும்படி சொல்லுகிறது –
என் அடியார் அது செய்யார் -என்பதிலும் -சிதகுரைக்கும் -என்கிறது இறே உத்தேச்யம்
கைக் கொள்ளுகைக்கு சொல்லும் வார்த்தை போல் அன்றிக்கே கை விடாமைக்கு சொல்லும் வார்த்தை
அடியார் -என்று ஸ்வா தந்த்ரய நிவர்த்தி
தன்னடியார் -என்று அந்ய சேஷ நிவர்த்தி
அடியார் என்பது சேஷியும் உபாயமும் உபேயமும் தானாக பற்றினவர்களை –
அடியார் -என்று நிரூபகம் இவர்களுக்கு –
குல சரண கோத்ராதிகள் நிரூபகம் மற்றையார்க்கு
ஒவ்பாதிகமுமாய் அநித்யமுமாய் இருக்கும் அது –
நிருபாதிகமுமாய் நித்யமுமாய் இருக்கும் இது
பல சதுப் பேதிமார் -என்று நிரூபகம் அவர்களுக்கு
திரு நாரணன் தொண்டர் -என்று இறே இவர்களுக்கு நிரூபகம்
ஒரு மிதுனம் சேஷி ஆனால் –
தம் அடியார் என்ன வேண்டாவோ என்னில் –
தன் என்கிறதுக்கு உள்ளே தானும் அந்தர்பூதை ஆகையாலே
அவன் ஸ்வரூப ரூப குண விபூதி இத்தனையும் இவள் தோயல் வாசி இறே என்னுதல் –
(தோயல் வாசி-இவளை இட்டே நிரூபிக்க வேண்டும் )
அடியார் -என்பதுக்கு உள்ளே
அடிமையில் அந்தர்பாவம் தனக்கும் உண்டாகையாலே என்னுதல் –
(அஹம் -அஹந்தா -ஸ்வரூப நிரூபக தர்மம் -அநந்யார்ஹதவத்தாலே தன் -என்றாலே
இவளையும் சேர்த்தே குறிக்கும்
கடி மா மலர்ப் பாவையோடே சாம்ய ஷட்கம் –
அடியார் சப்தகத்துக்குள் பிராட்டியும் சேர்ந்த பின்பு நம் அடியார் சொல்ல முடியாதே )
இத்தால்-நார கோடி கடிதை என்கை-
மித்ர பாவேன -என்றும் –
உகந்த தோழன் -என்றும் –
அவன் நினைவு ஆகையாலே அவன் முன்னே -நம் அடியார் -என்ன மாட்டாளே
தானும் -மித்ர மௌபிகம் -என்றாளே -அத்தாலே என்னுதல் –
அடியார் -என்ற பஹூ வசனம் –
ஊர் இரண்டிட்டவாறே (நித்ய விபூதியும் லீலா விபூதியும் -)
அடியாரும் இரண்டிட்டதே மேலாத் தேவர்களும் -நிலத் தேவரும் -என்று
இந் நிலத் தேவர் விஷயமாக இறே சிதகுரைப்பது
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது
இருள் தெரிந்து நோக்கின அடியார் விஷயம் இறே இது -(பூதத்தாழ்வார் )
திறத்தகத்து -அவர் விஷயமாக
தாமரையாள் ஆகிலும் –
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆகிலும்
அபி சப்தம் –
ஆஸ்ரித விச்லேஷம் பொறுக்க மாட்டாத மார்த்த்வ பரம்
தன்னடியார் -என்னும்படி
காட்டிக் கொடுக்கையாலும் சொல்லக் கூடாது
வெந்நீரை குளிர் நீராக ஆக்கும் அத்தனை அல்லது தான் சுடக் கூடாது இறே –
அப்படியே இவள் சிதைகுரைக்கக் கூடுமோ –
தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வன் (நாச்சியார் )-என்று
தான் சத்தை பெற இறே அவள் அனுபவிப்பது
இப்படி சத்தை பெரும்படியான போகத்திலே -புருஷகாரமாம் போது தெளிவு உண்டாக வேணும்
அப்போது பிரணயித்வதுக்கு நமஸ்காரம் இறே
ஆனால் புருஷகாரமும் போகமும் சேரும்படி என் என்னில் –
இவளைப் போலே அவன் தானும் -பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -என்று
இவள் விஷயத்தில் பிரேமம் கனத்து இருக்கும்
இருவருக்கும் உண்டான ப்ரேமம் இவர்கள் பாசுரத்தில் தெரியும் இறே
ந ஜீவேயம் ஷணம் அபி -என்னும் ஒருதலை
இறையும் அகலகில்லேன் -என்னும் ஒரு தலை
அவன் விஸ்வரூபம் எல்லாம் கொண்டு இவளை அனுபவிக்க இழிந்தாலும்
தன் குண ரூப சேஷ்டிதங்களாலே குமிழ் நீருண்ணப் பண்ணும்
இவ் அனுபவ ஜனித ப்ரீதிக்கு போக்கு வீடாக -உனக்கு என் செய்கேன் -என்று
ஓன்று கொடுத்து அல்லது தரிக்க மாட்டாத அளவிலே –
நாம் இவன் பக்கலிலே ஓன்று கொள்ளாத போது இவன் முடியும் -என்று பார்த்து
அவன் -உனக்கு வேண்டுவது என் -என்ற அளவிலே
சேதனர் அபராதத்தை பொறுக்க வேணும் -என்ன
தன் ஸ்வா தந்த்ர்யத்தையும் –
இவர்கள் அபராதத்தையும் —
சாஸ்திர மரியாதையையும்–மறந்து பொறுத்தேன் -என்ன-
இவன் பொறுத்தது
நமக்காகவா –
இவர்களுக்காகவா —
நம் போகத்துக்காகவா -என்று
ஆராய்க்கைகாக சிதகுரைக்க தொடங்கினாள் ஆனால்
என் அடியார் அது செய்யார் -என்னும் அவன்
நீ சிதகுரைக்க கூடாதப் போலே அவர்கள் செய்யவும் கூடாது
(மென்மையான நீர் ஆஸ்ரிதர் பாக்கள் அன்பு கொண்ட நீர் -குற்றம் சொல்வது பொருந்தாது போலே
எனது அடியார் குற்றம் செய்வதும் பொருந்தாதே -என்றபடி )
சாஷி உண்டு என்னிலும்
(வால்மீகி போல்வார் விபீஷணன் நான் வந்ததால் இலங்கை சீர் அழிந்தது
என்று சொல்லி வைத்த சாக்ஷி உண்டே என்னில் )
அவர்கள் செய்யக் கூடாது- உன் பிரமமாம் இத்தனை
என் அடியார் அது செய்யார் –
ஸ்வதந்தரும் அந்ய சேஷ பூதரும் செய்யும் அத்தை என் அடியார்களும் செய்வார்களோ
செய்தார்கள் என்று நிர்பந்த்தாய் ஆகில் –
அவர்கள் என் அடியார் ஆகிறார் -உன் அடியார் அன்றே- நீ செல்ல நில்லு
அது செய்யார்
ஆஸ்ரயணத்துக்கு முன்பு இவள் மன்றாடும் –
பின்பு அவன் மன்றாடும்
செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9-
செடியாய வல் வினைகள் தீர்க்கும் –
தன திருவடிகளிலே தலை சாய்த்தாருடைய பாப பலமான சம்சார சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்குமவன் யாய்த்து –
செடி -பாபம் –
திரு மாலே!
அதுக்கு நிபந்தனம் கூட இருந்து செய்விப்பார் உண்டாகை
நெடியானே!
அவளாலும் -என்னாலும் பொறுக்கப் போகாது -என்ற போது –
என்னடியார் அது செய்யார் -என்று ஆஸ்ரித விஷயத்தில்
ஓரம் எல்லை காண ஒண்ணாதவன் –
—————
25-தன்னடியார் திறம் –மன்னுடைய விபீடணருக்காய் -பெரியாழ்வார் திரு மொழி -4-9-2-
ஆமையாய் —சேமமுடை நாரதனார் –பெரியாழ்வார் திரு மொழி -4-9-5-
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் -எல்லா பொருளும் விரித்தான் திருவாய் மொழி -4-5-5-
தன் அடியார் பூர்வரார்த்தத்திலே கூறப்பட்டதை மூதலிக்கிறார் உத்தரார்த்தத்திலே –
சிதகுரைக்கும் -என்றது மகாராஜர் கோடி
என் அடியார் அது செய்யார் -என்றது திருவடி இளைய பெருமாள் கோடி
இவை அனைத்தையும் பூர்வ பஷமாக்கி -குற்றம் உண்டு நான் கைக் கொள்ளக் கடவேன்
நன்று செய்தார் என்றார் இறே சரண்யரான பெருமாள் –
ஆமை என்று தொடங்கி நாரதர் என்று முடித்து ஹரி வம்ச 159 அத்யாயத்தில் கூறிய கதையை ஸங்க்ரஹேண அருளிச் செய்கிறார்
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் -என்றத்தை மூதலிக்கிறார் எல்லா பொருளும் விரித்தானை -என்று
தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே – 4-9 -2-
மன்னுடைய விபீடணருக்காய்
கீழ் அருளிச் செய்த அர்த்தத்தை மூதலிக்கிறார்-
ஐஸ்வர்யம் மாறாத ஸ்ரீ விபீஷணர்க்காக
(கிம் கார்ய சீதையா மம என்றாரே ) ஸ்ரீ பிராட்டியையும் விட்டுப்
பற்ற வேண்டும்படியான ஸ்ரீ மகாராஜரையும் விட்டு
விபீடணற்கு வேறாக நல்லானை -என்னும்படி இறே
ஸ்ரீ விபீஷண பஷ பாதம்
ஆகையால் சேர்க்கைக்கு ஈடான பாசுரம் கேட்கும் இத்தனை ஒழிய
பிரிப்பார் பாசுரம் கேளான் -என்கிறது
குற்றம் உண்டு என்ற ஸ்ரீ மகா ராஜரையும்
குற்றம் இல்லை -என்ற ஸ்ரீ திருவடி ஸ்ரீ இளைய பெருமாளையும்- பூர்வ பஷம் ஆக்கி –
குற்றம் உண்டு நான் கொள்ளக் கடவன் -என்றார் இறே ஸ்ரீ பெருமாள் –
சிதகுரைக்கும் -என்றது ஸ்ரீ மகாராஜர் கோடி
என் அடியார் அது செய்யார் -என்றது ஸ்ரீ திருவடி -ஸ்ரீ இளைய பெருமாள் கோடி
சிதகுரைக்கை -புருஷகார க்ருத்யம்
அடியார் அது செய்யார் -என்றது சரணாகத க்ருத்யம்
நன்று செய்தார் -என்றது சரண்ய க்ருத்யம்
ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய்
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய் தக்கணையாய் தானும் ஆனான்
சேமமுடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்
பூ மருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே -4 9-5 –
துர் யோநதிகளுடைய யாகத்தில் வந்த ராஜாக்கள் எல்லாரும் –
ஸ்ரீமத் த்வாரகை யாகிற திருப் படை வீட்டில் உண்டான அரணும் – அதில் உண்டான ஸ்ம்ரத்தியும்-
அங்கு ஸ்ரீ கிருஷ்ணன் எழுந்து அருளி இருக்கிற மதிப்பு எல்லாம் துர்யோநாதிகள் சொல்லக் கேட்டு –
ஸ்ரீ கிருஷ்ணன் உடன் நாம் உறவு செய்து கொண்டு இருக்க வேணும் -என்னுமத்தைப் பற்ற
துர்யோநாதிகளும் பாண்டவர்களும் -தாங்களும் எல்லாரும் தம் தாமுடைய பரிவாரங்களோடு கூட வந்து
ரைவதகம் -என்கிற பர்வதத்தை சூழ விட்டு இருந்து –
தாங்கள் சேவார்த்தமாக வந்த செய்தியை ஸ்ரீ கிருஷ்ணனுக்கு விண்ணப்பம் செய்து போக விட –
ஸ்ரீ கிருஷ்ணனும் இவர்கள் சபரிகரராய் திரள வருகைக்கு ஹேது என் -என்று சிந்தித்து
ஸ்ரீ நம்பி மூத்த பிரான் -சாத்விகி ஆழ்வான்-இவர்கள் முன்னாக ச பரிகரராய் சா யுதராய்க் கொண்டு
இவர்கள் இருக்கிற இடத்தில் எழுந்து அருளி
எல்லாரையும் குசல பிரஸ்னம் பண்ணி
அவர்களுடைய வயஸ்சுகளுக்கும் -பலன்களுக்கும் -மதிப்புகளுக்கும் -அனுகுணமாக
ஆசனம் இட வேண்டுவோர்க்கு எல்லாம் ஆசனம் இடுவித்து
தாமும் தமக்கு அனுகுணமான தொரு திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்து அருளி இரா நிற்கச் செய்தே –
ஸ்ரீ நாரத பகவான் வந்து சேவித்து –
ஆச்சர்ய கலு தேவானாம் ஏகஸ்த்வம் புருஷோத்தம –
தன்யச் சாசி மஹாபாஹோ லோகே நான்யோஸ்தி கச்சன-என்று விண்ணப்பம் செய்ய –
ஏவமுக்தஸ் ஸ்மிதம் க்ர்த்வா பிரத்யுவாச முநிம் பிரபு ஆச்சர்யச் சைவ தன்யச்ச தஷிணா பிச்சஹெரித -என்று
இப்படி மகரிஷி சொன்னதைக் கேட்டு ஸ்மிதம் பண்ணி மகரிஷியைப் பார்த்து
தஷிணைகளோடு கூட நான் ஆச்சர்யனாகவும் த்யேனனாகவும் சொல்லப் பட்டவன் – என்று அருளிச் செய்ய –
இத்தை கேட்டு சந்தோஷித்து –
ஏவ முக்தோ முனி ஸ்ரேஷ்ட ப்ராஹ மத்யே மஹீஷிதாம்
கிருஷ்ண பர்யாப்த வாக்யோஸ்மி கமிஷ்யாமி யதாகதம் -என்று
இருக்கிற ராஜாக்களுடைய மத்யத்திலே தேவரீர் அருளிச் செய்த வாக்யத்தினால் நான் பர்யாப்தனாகா நின்றேன் –
இனி வந்த வழியே போகிறேன் -என்று விண்ணப்பம் செய்து போகப் புக –
இப்படி போக தேடுகிற நாரத பகவானைக் கண்டு –
அவராலே சொல்லப்பட்ட இந்த ரகஸ்யத்தை தாங்கள் அறியாமையாலே
ஸ்ரீ கிருஷ்ணனுடைய திரு முக மண்டலத்தைப் பார்த்து –
ஆச்சர்யராகா நின்றீர த்யேனராகா நின்றீர் -என்று மகரிஷி சொன்ன அளவிலே
தஷிணைகளோடே இப்படியே -என்று
தேவரீர் அருளிச் செய்த இந்த மகா ரகசியம் எங்களுக்குத் தெரிகிறது இல்லை –
இத்தை அருளிச் செய்ய வேணும் -என்ன
மகரிஷி தன்னை கேளும் கோள்-அவர் உங்களுக்கு சொல்லக் கடவர் -என்று அருளிச் செய்து
அவரையும் -நீர் இவர்களுக்குச் சொல்லும் -என்ன
அவரும் இவர்களைப் பார்த்து –
ஆனால் கேட்கலாகாதோ – என்று சொல்லி
அஹம் கதாசித் கங்கா யா ஸ்தீரே த்ரிஷவணாதிபி -என்று தொடங்கி
நான் ஒரு கால் கங்கை கரையிலே த்ரிஷ வண ஸ்நாநாதிகளைப் பண்ணி வர்த்தியா நிற்கச் செய்தே –
ஒரு நாள் ராத்திரி போய் ஆதித்யன் உதித்த அளவிலே –
கூப்பீடு வழி அகலமும் -அதிலிரட்டி நீளமுமாய்
நீருக்குள்ளே நனைந்து உடம்பு எங்கும் பாசி பற்றி -கண்ணுக்கு பிரியமாய் இருப்பதொரு கூர்மத்தை கண்டு –
த்வம் ஆச்சர்ய சரீரோணி கூர்ம தன்யோசி மே மத
யஸ் த்வமேவ மகோத்வாப்யாம் கபாலாப்யாம் சமாவர்த -என்று அந்த கூர்மத்தைப் பார்த்து –
யாதொரு இப்படி கபால த்வய வர்த்தனாய் கொண்டு –
இந்த ஜலத்துக்கு உள்ளே ஒன்றும் சிந்தியாமல்-நிச்சங்கனாய் கொண்டு சஞ்சரியா நின்றாய் –
இப்படி இருக்கிற நீ ஆச்சார சரீரத்தை உடையனாகா நின்றாய் -த்யேனாகா நின்றாய் –
என்று எனக்கு மதம்-என்று நான் சொல்ல
அந்த கூர்மம் தான் -என்னை பார்த்து ஒரு மனுஷ்யன் சொல்லுமா போலே
வாராய் மகரிஷியே என் பக்கல் ஆச்சர்யம் ஏது
நான் எங்கனே தன்யனாகா நின்றேன்
யாதொன்றிலே என்னைப் போலே பதினாயிரம் சத்வங்கள் எல்லாம் சஞ்சரியா நின்றன
அப்படி இருக்கிற கங்கை ஆகிற கங்கை அன்றோ ஆச்சர்யையும் தன்யனாகாயும் -என்று சொல்ல
அந்த கங்கையை குறித்து நான் -ஆச்சர்யையாகா நின்றாய் தன்யையாகா நின்றாய் -என்று சொல்ல
அந்த கங்கையும் ஒரு வடிவு கொண்டு நின்று –
நான் ஆச்சர்யையும் இல்லை தன்யையையும் இல்லை
யாதொன்ற்றிலே என்னைப் போலே அநேக நதிகள் எல்லாம் சென்று புகுரா நின்றன
அப்படி இருந்துள்ள சமுத்ரம் தான் ஆச்சர்யையும் தன்யையையும் என்று சொல்ல
அநந்தரம் அந்த சமுத்ரத்தைப் பார்த்து -இது போல் சொல்ல
அந்த சமுத்ரமும் யாதொன்றின் மேலே வசியா நின்றேன் அந்த பூமியைக் காட்ட
அதுவும் லஜ்ஜித்து எனக்கு ஆதாரமாய் இருந்துள்ள பர்வதங்கள் என்ன –
அவை பிரஜாபதி பிரம்மாவைக் காட்ட நானும் அவர் இடம் கேட்க
பிரம்மாவும் -என்னை ஸ்துதிக்கிறது என்
ரிக் யஜுர் சாம அதர்வண ரூபங்களாய் -தத்வார்த்த தர்சனங்களாய் -லோகங்களையும் என்னையும்
தரியா நின்றன -யாவை சில வேதங்கள் -அவற்றுக்கன்றோ இவை இரண்டும் உள்ளது -என்ன
அநந்தரம் அந்த வேதங்களைக் கிட்டி –
அவை யஜ்ஞார்த்த யாக ஸ்ருஷ்டங்கள் -புகல் இவை என்று சொல்ல
அந்த யக்ஜ்ஞங்கள் -என்னைப் பார்த்து
ஆச்சர்ய சப்தோ நாச்மாசூ தனய சப்தோபி வாமுனே
ஆச்சர்யம் பரமம் விஷ்ணு ச்சஹ்ய ஸ்மாகம் பராகதி
யதாஜ்யம் வயமஸ் நீமோ ஹூத மக்னிஷூ பாவனம்
தத் சர்வம் புண்டரீகாஷோ லோக மூர்த்தி ப்ரயச்சதி -என்று
ஆச்சர்ய சப்தமும் தன்ய சப்தமும் எங்கள் பக்கல் இல்லை
விஷ்ணுவாய் இருக்கும் பரமமான ஆச்சர்யம்
அவனேயாய் இருக்கும் -எங்களுக்கு பரமமான கதி
அக்நிகளில் ஹூதமாய் இருந்துள்ள யாதொரு ஆஜ்யத்தை நாங்கள் புசியா நின்றோம்
அதன் உடைய பரத்தை-பலத்தை – எல்லா வற்றையும்
புண்டரீ காஷனாய் லோக மூர்த்தியான அவன் அன்றோ கொடுக்கிறான் -என்ன
நான் இத்தைக் கேட்டு -நான் பூமியிலே வந்து
உங்கள் திரளுக்கு நடுவே வீற்று இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணனைக் கண்டு சேவித்து விண்ணப்பம் செய்ய
அதுக்கு பிரதி உத்தரமாக –
தஷிணாபி ச் சகேரித -என்று கொண்டு
ஸ்ரீ கிருஷ்ணன் அருளிச் செய்த வார்த்தை எனக்கு பர்யாப்தமான வசனம்- எங்கனே என்னில்
யக்ஜானாம்ஹி கதிர் விஷ்ணு சர்வேஷாஞ்ச ச தஷிணா
தஷிணா பிஸ் சஹே த்வேயம் பிரஸ்ச்னோ மம சமாப்தவான் -என்று
எல்லா யக்ஜங்களும் தஷிணைகளோடு கூட இருந்துள்ள சர்வேஸ்வரன் கதி ஆகையாலே –
தஷிண பிஸ் சகேத்யவம் -என்கிற இதனாலே
என்னுடைய பிரஸ்னமானது பரி சமாப்தம் ஆய்த்து என்று சொல்லி –
கூர்மேன பி அஹிதம் பூர்வம் பரம் பர்யாதி ஹா கதம்
ச தஷினேச்மின் புருஷே தத் வாக்யம் பிரதிபாதினம் -என்று
கூர்மத்தாலே முன்பு சொல்லப் பட்டதாய் –
பராம்பர்யத்தால இவ்வளவும் வந்து இருப்பதாய் –
ஆச்சர்யனாகா நின்றாய் – தன்யனாகா நின்றாய் -என்கிற வாக்யம்-
ச தஷிணனான ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிற இந்த புருஷன் பக்கலிலே என்னாலே பிரதிபாதிக்க பட்டது –
யன்மாம் பவந்த பச்யந்தி வாக்யஸ் யாச்யச நிர்ணயம்
ததேதத் சர்வ மாக்யாதம் சாதயாமி யதாகதம் -என்று
இந்த வாக்யத்தின் உடைய யாதொரு நிர்ணயத்தை
நாங்கள் பிரச்னம் பண்ணினி கோள்-அது எல்லாம் என்னாலே சொல்லப் பட்டது –
இனி நான்வந்த வழியே போகிறேன் -என்று
ஸ்ரீ நாரத பகவான் சொன்னதாக
ஸ்ரீ ஹரி வம்சத்திலே -159 அத்யாயத்திலே சொல்லப் பட்ட கதையை ஸங்க்ரஹேண அருளிச் செய்கிறார்
ஆமை இத்யாதி –
ஸ்ரீ நாரத பகவானுக்கு தன்னுடைய சர்வாகதித்வத்தை பிரகாசிப்பைக்காக
ப்ரதமம் கங்கா ஜலத்திலே ப்ருஹுத் ரூபமாய் ப்ரியகரமாய் ஆச்சர்யமாய் இருப்பதொரு ஆமையாய்
அநந்தரம்-அந்த ஆமைக்கும் அநேகம் அநேகம் சத்வங்களுக்கும் வாசஸ்தலமாம் படியான பெருமையை உடைய கங்கையாய்
அந்த கங்கைக்கும் மற்ற அநேக நதிகளுக்கும் புகலிடமாய் கொண்டு அகாதமாய் இருக்கும் பெருமையை உடைய சமுத்ரமாய்
அநந்தரம் -அந்த சமுத்ரம் தனக்கும் தன்னுள்ளே வாசஸ்தானமாம் படியான பெருமையை உடைய பூமியாய்
அநந்தரம் -அந்த பூமிக்கும் ஆதாரங்களான பெருமையை உடைய பர்வதங்களாய்
அநந்தரம் -சதுர்தச புவன ஸ்ரேஷ்டாவான பெருமையை உடைய சதுர்முகனாய்
அநந்தரம் அவன் தனக்கும் அந்த பத சித்தி முதலான வற்றுக்கு அடியான பெருமையை உடைய சதுர வேதங்களாய்
அநந்தரம் அந்த வேதங்களே தன்னை பற்றி ஸ்ரஷ்டங்கள் ஆயத்தன என்னும்படியாய் –
சகலருக்கும் பல சாதனமாக உடைய யாகங்கள் ஆகி
அநந்தரம் அவற்றுக்கும் வீர்யத்தை கொடுக்கும் பெருமை யுடைய தஷிணைகளாகி
அநந்தரம் அந்த தஷினைகள் உடைய த்வாரா சர்வருக்கும் தத் தத் அபேஷா அனுகுணமாக
சர்வ அபீஷ்டங்களையும் கொடுக்கும் பெருமை உடையவனான
அசாதாரண விக்ரக விசிஷ்டனான தானும் ஆனான்
இதில் பிரதமம் உக்தமான கூர்மம்
இவன் தன்னுடைய ஆவிர்பாவ விசேஷம் ஆகையாலே இவன் தானாகவே சொல்லிற்று
நடுவே சொன்ன எல்லாவற்றுக்கும் ஒன்றுக்கு ஓன்று அதிகமான சொன்ன மகாத்மயம்
இவனுடைய புத்திய ஆதீனம் ஆகையாலே –
தந் நிர்வாஹ்ய நிர்வாஹக சம்பந்த நிபந்தனமான சாமா நாதி கரண்யத்தாலே-
அவற்றை எல்லாம் இவனாக சொல்லிக் கொடு போந்தது
சேமமுடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சி –
இது கீழோடும் மேலோடும் அந்வயித்து கிடக்கிறது
சேமம் -ரஷை
சேமம் உடையன் ஆகையாவது –
கர்ம பாவனை அன்றிக்கே பிரம பாவனா நிஷ்டனாய் இருக்கை
நாரதனார் -என்றது –
சர்வ சம்சய நிர்முக்தோ -நாரதஸ் சர்வ தர்ம வித் -என்று ஞான ஆதிக்யத்தாலும் –
பகவத் சன்னதியிலே வந்தவாறே பாடுவது ஆடுவது ஆக நிற்கும் பிரேம அதிசயத்தால் உண்டான
கௌரவ அதிசயத்தாலே –
சென்று சென்று துதித்து இறைஞ்சி -என்றது
கீழோடு அந்வித ஆன போது –
கூர்மாதிகளான வ்யக்திகள் தோறும் சென்று
அவற்றினுடைய ஆச்சர்ய தந்யதைகளை சொல்லி- ஸ்துதித்து-அன்வர்தித்துப் போந்த படியை சொல்லுகிறது –
மேலோடு அந்வயித்த போது –
சென்று சென்று -என்ற வீப்சை
பல காலும் வந்து சேவிக்கும் படியை சொல்கிறது –
இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த -என்றும்
தும்புரு நாரதர் புகுந்தனர் -என்று
இந்த ஸ்தலத்திலே பல காலும் வந்து சேவிக்கும் படியைச் சொல்லிற்று இறே
துதிக்கை யாவது –
வீணையும் கையுமாக சன்னதியிலே வந்தது -கான முகேன ஸ்தோத்ரம் பண்ணுகை
இறைஞ்சுகை யாவது
தன்னுடைய சேஷத்வத்துக்கும்-
எதிர் தலையில் சேஷித்வத்துக்கும்
அனுகுணமாக
திருவடிகளில் ப்ராணாமாதிகளைப் பண்ணுகை
கிடந்தான் கோயில்
இப்படி ஸ்ரீ நாரத பகவான் சேவிக்கும் படியாகவும் –
ருசி உடையார்க்கு எல்லாம் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கைகும் அனுபவிக்கைக்கும் உடலாகவும்
கிடந்தோர் கிடக்கை -என்கிறபடியே
கிடை அழகால் வந்த மினுக்கம் தோற்றும்படியாக-கண் வளர்ந்து அருளுகிறவனுடைய தேசம்
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5-
ஆற்ற –
அமைய : பொறுக்கப் பொறுக்க என்றது, ‘குளப்படியிலே கடலை மடுத்தாற் போலே யன்றிக்கே,
பொறுக்கப் பொறுக்க ஆயிற்றுத் தன் கல்யாண குணங்களை அனுபவிப்பித்தது’ என்றபடி.
‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்றதன் பின்
‘வீற்றிருந்து ஏழ் உலகு’ என்ற திருவாய்மொழியின் அனுபவத்தை அனுபவிப்பித்தானாகில்,
நான் உளேன் ஆகேன் ஆன்றோ?’ என்கிறார் என்றவாறு.
நல்ல வகை காட்டும் –
தன்னுடைய குணங்களையும் செயல்களையும் அனுபவிப்பிக்கின்ற.
அம்மானை –
உடையவன் உடைமையின் நிலை அறிந்தன்றோ நடத்துவான்?
அமரர் தம் ஏற்றை –
சிறிய விஷயங்களையும் உண்டறுக்க மாட்டாதே போந்த என்னை அன்றோ நித்தியசூரிகள் எப்பொழுதும் அனுபவம்
பண்ணுகிற தன்னை அனுபவிப்பித்தான்?
அன்றிக்கே,
‘தனக்கு ஒரு குறை உண்டாய் அன்று;
அனுபவிக்கின்றவர்கள் பக்கல் குறை உண்டாய் அன்று;
தான் சர்வேசுவரனாய் இருந்து வைத்தும், தன் படிகளை அனுபவிக்கும் நித்திய சூரிகளையுடையனாய் இருந்து வைத்தும்
என்னை அனுபவிப்பித்தான்,’ என்கிறார் என்னுதல்.
————–
26-செஞ்சொல் மறை -பெரியாழ்வார் திருமொழி -4-10-7-
இரும் தமிழ் நூல் புலவன் -கலியன் -1-7-10-
செஞ்சொல் பரன் -திருவாய் மொழி நூற்று அந்தாதி -97
செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகன் -என்கிற படியே செவ்விய சொல்லான
செவிக்கினிய செஞ்சொல் இறே திருவாய்மொழி –
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து -திருவாய் மொழி -10-6-4-
இரும் தமிழ் நூல் -திருவாய் மொழி அதில் புலவன் -கலியன்
செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகனே எம்மானே
எஞ்சல் இல் என்னுடை இன்னமுதே ஏழ் உலகும் உடையாய் என்னப்பா
வஞ்ச வுருவில் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது
அஞ்சலம் என்று என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே – 4-10- 7-
செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற-
செவ்விய சொல்லை உடைத்தான வேதத்தின் உடைய
அர்த்த பூதனாய் நின்ற –
சொல்லுக்கு செவ்வையாவது –
யதா பூதவாதித்வம்
நாஸ்திகராய் இருப்பார்க்கு ஸ்வ அர்த்தத்தை மறைக்கையாலே –
இத்தை -மறை -என்கிறது –
இது தான் பூர்வ பாகம் -உத்தர பாகம் -என்றும் இரண்டு கூறாய் –
அதில் பூர்வ பாகம் –
கர்ம பிரதிபாதகமாய் –
உத்தர பாகம்
ப்ரஹ்ம பிரதிபாதகமாய் -இருந்ததே ஆகிலும் –
ஆராதன ஸ்வரூபத்தையும் –
ஆராத்ய ஸ்வரூபத்தையும் -சொல்லுகிறதாகையாலே-
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்கிறபடியே
எல்லா வேதங்களும் இவனே பிரதிபாத்யன் என்னத் தட்டில்லை இறே –
சர்வே வேதா யத்பதமா மநந்தி -என்னக் கடவது இறே –
பூர்வ பாகத்தில் இவனை சத்வாரமாக (இந்த்ராதிகள் மூலமாக )பிரதிபாதியா நிற்கும் –
உத்தர பாகத்தில் அத்வாரமாக பிரதிபாதியா நிற்கும் –
அத்தை பற்ற இறே –
சுருதி சிரஸி விதீப்தே -என்று அருளி செய்தது
செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10-
இரும் தமிழ் நூல் புலவன் –
ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற
தமிழ் சாஸ்திர உக்தமான படியைக் கரை கண்ட
ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் –
செஞ்சொல் பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக்
கண்டவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
திண் திறல் மாறன் நம் திரு—97-
செஞ்சொல் பரன் –
செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகன் -என்கிறபடியே
செவ்விய சொல்லால் ஆன இத் திருவாய் மொழியால்-பிரதிபாதிக்கப் படுகிற
சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
இது தான் செவிக்கு இனிய செஞ்சொல் இறே –
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-
என் நெஞ்சத்து உள் இருந்து-
பல காலம் இவ் உலகத்திலே தன்னை ஒழிந்த ஐம் புலன்-இன்பங்களை உகந்து போந்தது என்றாயிற்று-
இவர் என் நெஞ்சு -என்று இறாய்க்கிறது
இதில் குணமும் குற்றமும் கிடந்தபடி கிடக்க இவர் -என்னது -என்றதுவே காரணமாக-அவன் மேல் விழா நின்றான்-
இவர் -என் நெஞ்சு -என்று புறம்பே கால் வாங்கா நின்றார்-
அவன் அதுவே காரணமாக உள்ளே போக அடி இடா நின்றான் –
விடாயர் மேலில் நீரை நீக்கி உள்ளே ஆழ முழுகிக் கிடக்குமாறு போலே-நெஞ்சின் உள்ளே புகுந்தார் என்பார்-
-உள் என்கிறார் –
இருந்து –
தனக்கு அவ்வருகு ஒரு விபூதி உண்டாகவும் -அங்கே போவானாகவும் நினைக்கின்றிலன் –
நிலையியல் பொருள் போலே இருந்து –
இங்கு –
அங்கே இல்லாத செல்வத்தையும் இங்கே உண்டாக்கினான் –திருவாய் மொழி உண்டாக்கி –
இருந்தமிழ் –
அந்த பரமபதத்துக்கும் அடங்காதபடி ஆயிற்று இவற்றின் பெருமை –
கேட்டு ஆரார் -10-6-11-என்னக் கடவது அன்றோ –
நூல் –
பின்பு உள்ளார்க்கும் இது கொண்டு இலக்கணம் கட்டலாம்படி ஆயிற்று இவை இருப்பது –
இவர் ஆற்றாமையால் சொல்லச் செய்தேயும் -அது எல்லா இலக்கணங்கள் உடன் கூடும்படி சொல்லுவித்தான் ஆயிற்று –
இவை –
இன்னது செய்தான் என்னப் புக்கு-
நடுவே -இவை -என்று அனுபவிக்கிறார் -ஆயிற்று –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி -பேர் முக்கியம் போலே -இங்கும் – இவை -என்று அனுபவிக்கிறார் –
என்ன ஏற்றம் என்று அனுசந்திக்கிறார் இவை என்று –
மொழிந்து –
ஒருவன் பாடின கவியை கற்றுச் சொன்னவனும்-தனக்கு அதிலே குவாளாக சம்பந்தம் உண்டாக தருக்கி இருப்பன் –
அதுவும் நினைத்து இருக்கின்றிலர் காணும் இவர் –
என் முன் சொல்லும் -7-9-2-என்றவற்றையும் ஒன்றாக நினைக்கின்றிலர்-அதனால் மொழிவித்து என்னாமல் மொழிந்து என்கிறார் –
———
27- நாக்கு நின்னை யல்லால் அறியாது –நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று -பெரியாழ்வார் திருமொழி -5-1-1-
என் மனம் ஏத்தி யன்று ஆற்ற கில்லாது -இராமானுஜ நூற்றந்தாதி -89
மூர்க்கு பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும் என் நாவினுக்கு ஆற்றேன் -என்று பீதனாகா நின்றேன் –
வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும் என் நாவி னுக்காற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே -5-1- 1-
நாக்கு நின்னை அல்லால் அறியாது-
ரசம் அறிந்தார்க்கு -சர்வ ரசனான உன்னை அல்லால் அறியாது –
(ரசம் சுவை என்றும் –
ரஸோவைக -சர்வரஸ ஸர்வ கந்தனான அவனும் என்றுமாம் )
அத்தால் வரும் குற்றமும் உம்மதன்றோ -என்ன –
அது விஷய தோஷம் –
அகலகில்லேன் -என்றது -மார்வின் குற்றமானால் போலே –
ஆனால்
நீரும் நாக்கோடு கூடச் சொல்லும் என்ன –
நான் (அது )அஞ்சுவன்-
நாக்கின் தோஷம் அனுசந்தித்து அஞ்சா நின்றேன் –
அது ரசஜஞம் ஆகையாலே -மேலே விழா நின்றது –
கரணியான உம்முடைய வசம் ஆக்கினால் என்ன –
அது -என் வசம் அன்று –
உன் வசம் –
நாக்கு நின்னை அல்லால் அறியாது -என்பது –
நான் அது அஞ்சுவன் -என்பது ஆகா நின்றீர் –
இது மூர்க்கர் சொல்லும் பாசுரமாய் நின்றதீ -என்ன –
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும்-
என் பாசுரத்தை பார்த்தால் மூர்க்கர் சொல்லும் பாசுரம் போலே தோற்றி –
முநிகைக்கு யோக்யதை உண்டு -ஆகிலும் –
என் நாவி னுக்காற்றேன்-
உன் முனிவுக்கு ஆற்றலாம் –
என் நாவுக்கு ஆற்றப் போகாது –
போற்றரும் சீலத்து இராமானுச நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேலது தாழ்வது தீரில் உன் சீர் தனக்கோர்
எற்றமென்றே கொண்டிருக்கிலும் என் மனம் ஏத்தி யன்றி
ஆற்ற கில்லாது இதற்கென்னினைவா என்றிட்டஞ்சுவனே – – -89 –
என் மனம் ஏத்தி யன்று ஆற்ற கில்லாது –
சஞ்சலம் ஹி மன -என்றும் –
நின்றவா நில்லா நெஞ்சு -என்றும் சொல்லுகிறபடியே
அதி சஞ்சலமாய் அதி சபலமாய் -தேவரீர் உடைய பிரபாவத்தை உள்ள படி அறிய மாட்டாத என் மனசானது –
நாம் இவ்விஷயத்தை புகழுகை -உபசாரா பதேசெனப் பண்ணும் அபசாரம் என்று அறிய மாட்டாதே –
தேவரீர் உடைய குணங்களை அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணி ஒழிய தரிக்க மாட்டுகிறது இல்லை –
என் மனம் –ஆற்றகில்லாது
நான் துதிப்பதை விட்டு விட்டாலும் என் மனம் துதிக்காமல் இருப்புக் கொள்ள மாட்டாதாய் உள்ளது .
தேவரீர் இடம் ஈடுபட்டு -துதிக்க முற்படும் என் மனத்தை என்னாலேயே கட்டுப் படுத்த முடியவில்லை –
அத்தகைய முறையில் -பள்ள மேடையில் நீர் பாய்வது போலே -என் மனம் தேவரீர் விஷயத்தில் பாய்கிறது என்பது கருத்து .
குணங்களுக்கு ஏற்படும் இழிவு கருதி துதியினின்றும் மீளுகிறேன் –
துதித்தால் அன்றித் தரியாத மனம் என்னால் அடக்க ஒண்ணாமையின் மீண்டும் துதியில் மூளுகிறேன்
என் கருவி மனம் -என் வசத்தில் இல்லை –
கருவியின் வசத்திலேயே நான் உள்ளேன் என்கிறார் .
இதற்க்கு என் நினைவாய் என்று இட்டு –
இப்படிப்பட்ட என்னுடைய சாஹாச உத்தியோகத்துக்கு தேவரீர் திரு உள்ளத்தில் என்னதாக நினைப்பு இடுகிறதோ என்று கருத்து –
அஞ்சுவனே –
தேவரீர் உடைய மேன்மையையும் -என்னுடைய தண்மையையும் அடைவே பார்த்து அஞ்சா நின்றேன் –
மூர்க்கு பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும் என் நாவினுக்கு ஆற்றேன் – என்னுமா போலே இரா நின்றது
என்னுடைய தசை –
இதுக்கு தேவரீர் ஏது திரு உள்ளம் பற்றுகிறதோ என்று பீதனாக நின்றேன் என்றது ஆய்த்து –
இதற்கு என் நினைவாய் –அஞ்சுவனே
வேண்டாம் என்று இருப்பினும் மனம் கட்டுக்கு அடங்காமையாலே நான் பேச முற்படுவதான உண்மை நிலை நெஞ்சில் படாது –
சாற்றுவனேல் அது தாழ்வு -என்பதும் –
ஏத்தி இன்றி என் மனம் ஆற்ற கில்லாது -என்பதும் முரண்பட்ட பேச்சுக்கள்
இவை மூர்க்கத் தனத்தினால் பேசுபவை என்று கருதி முனிதரோ என்று பயபடுகின்றேன் என்றபடி –
ஸ்ரீ பெரியாழ்வார் வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்-
நாக்கு நின்னை யல்லால் லறியாது நனதஞ்சுவன் என் வசமன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் யேலும் என் நாவினுக்கு ஆற்றேன் — 5-1 1-என்று
அருளிச் செய்தது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது —
சிறகுகின் கீழ் அடங்காத பெண்ணை பெற்றேன்-ஸ்ரீ பராங்குச நாயகி தாயார் புலம்ப -பெண் அவன் பின்னே போனாள் அங்கு-
ஸ்ரீ ராமன் பின் சென்றது ஸ்ரீ தசரதன் கண்களும்
அது போலே ஸ்ரீ அமுதனாரும் மனமும் போனது ஸ்ரீ எம்பெருமானார் சீல குணங்களின் பின்னே–
போற்ற அரியவனே-மூவர் அனுபவம் -பெண் / கண் / மனஸ் பின்னே போனதே–
———–
28-ஏதங்கள் ஆயின -பெரியாழ்வார் திருமொழி -5-2-8
அல் வழக்கு ஒன்றுமில்லா -திருப்பல்லாண்டு -11
தேகாத்ம அபிமானம் -ஸ்வா தந்த்ர்யம் -அந்ய சேஷத்வம் -ஸ்வ ரஷணம் -ஸ்வ பிரயோஜனம் –
பூர்வ ராகம் -உத்தர ராகம் -ப்ராபர்ப்தம் -போன்றவை குற்றங்கள் -ஏதம் -அல் வழக்கு
வழக்கு ஆவது மங்களாசாசனம் பண்ணுகை
ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -5- 2-8 –
ஏதங்கள்-ஏதம் -குற்றம்
ஏதங்கள் ஆனவை எல்லாம் –
1-தேகாத்ம அபிமானமும்
2-ஸ்வா தந்த்ர்யமும்
3-அந்ய சேஷத்வமும்
4-ஸ்வ ரஷணமும்
5-ஸ்வ பிரயோஜனமும் -ஆகியவை
பூர்வாகமும்
உத்தராகமும்
ப்ராரப்தமும் -என்னவுமாம்
நிஷ்க்ர்தி (பிராயச்சித்தம் ) இல்லாதவையும்
நிஷ்க்ர்தி உள்ளவையும் என்னவுமாம்
கோக்நேசைவ சூராபேச -(பசுவைக் கொன்றதும் கள்ளைக் குடித்ததும் )
ஆர்த்ரமானவையும்
சுஷ்கமானவையும் –என்னவுமாம்
அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11–
அல் வழக்கு ஒன்றும் இல்லா
வழக்கு அல்லாதவை அநேகம் இறே
1-தேகத்தில் ஆத்மபுத்தி பண்ணுகை வழக்கு அல்ல
2-ப்ரக்ருதே பரமான ஆத்மவஸ்துவை ஸ்வ தந்த்ரன் என்று அனுசந்திகை வழக்கு அல்ல -3தேவதாந்த்ரங்களில் பரத்வ புத்தி பண்ணுகை வழக்கு அல்ல –
4-பகவத் பஜனத்துக்கு பலம் பிரயோஜனான்தரம் என்று இருக்கை வழக்கு அல்ல –
5-அநந்ய பிரயோஜனம் ஆனாலும் உபாயாந்தர சாதனம் என்று இருக்கை வழக்கு அல்ல -6-பகவத் அனுபவத்தை -மமேதம் -என்று இருக்ககை வழக்கு அல்ல –
இனி –வழக்கு -ஆவது –
சேஷிக்கு மங்களா சாசனம் பண்ணுகை என்று இறே இவர் இருப்பது
————
29-நெய்க்குடம் -பெரியாழ்வார் திருமொழி -5-2-1- இதில் ஈஸ்வரன் இவருக்கு காப்பு
உறகல் உறகல் -பெரியாழ்வார் திருமொழி -5-2-9-இதில் இவர் அவனுக்கு காப்பு-
நெய்க் குடத்தை பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்யப் போமின்
மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார்
பைக் கொண்ட பாம்பணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே – 5-2-1-
நெய்க்குடத்தை பற்றி ஏறும் எறும்புகள் போல்-
அக்நி ஹோத்ர சமாராதன யோக்யமாய் -போக்யமுமான பதார்த்தம் இருக்கிற கடத்தை
ஸ்பர்சித்துக் கொண்டு -ஏறுகிற சூத்திர ஜந்துக்களை போலே –
பட்டினம் காப்பே-
பட்டினம் -என்கிறது -பத்தனம் -என்கிறபடி –
அதாவது நிதி கிடக்கிற இடம் -ராஜதானி
இங்கு ஈஸ்வரனுக்கு நிதி யாவது ஆத்மா இறே
காப்பே –
ஆளிட்டுக் காவாதே தானே காத்துக் கொண்டு கிடைக்கையாலே பண்டன்று
அவன் இவரைக் காத்துக் கொண்டு கிடைக்கையாலே பண்டன்று
அவன் இவரை காத்துக் கொண்டு கிடக்குமா போலே -இவரும் –
வைத்த மா நிதியை இறே காப்பது –
(அந்தர்யாமியாய் நின்று காத்தாலும் நோய் இருந்தாலும்
ஆழ்வார் பரிந்து இருக்க அவன் உள்ள இடமான சரீரம் ஆத்மாவில் நோய்கள் இருக்க ஒட்டாரே
அத்தைப் பார்த்து அவன் என் செய்தோம் ஆனோம் என்று நினைத்து கொண்டு
இனி நோய்களை இருக்க ஓட்டார் )
உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே
அறவெறி நாந்தக வாளே யழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள்
பறவை அரையா உறகல் பள்ளி யறை குறிக் கொள்மின் -5 -2-9 –
உறகல் உறகல்
அவர்கள் புத்தி பண்ணி நோக்குகைக்காக பல காலும் அருளி செய்கிறார் –
ஆரைத் தான் உறங்காது இருக்கச் சொல்லுகிறது என்னில் –
அநிமிஷரையும் ஆய்த்து-
பிரயோஜனாந்த பரரான மகா ராஜரும் அகப்பட பரியும் விஷயத்துக்கு
நித்யர் பரிய கேட்க வேண்டா இறே –
அவர்களையும் அகப்பட உறங்காதே கொள்ளுங்கோள் என்னும் படி இவர் பரிவு –
(அவர்களையும்-அஸ்தான ஸ்நேஹ ரஷா )
இவர்களுக்கு உறக்கம் ஆவது –
குண வித்தராய் -நஞ்சு உண்டாரைப் போலே
தம் தாமை அறியாது இருத்தல் –
அனுபவத்திலே இழிந்து கைங்கர்ய பரராய் இருத்தல் –
————–
30-பரவைத் திரை பல மோத -பெரியாழ்வார் திருமொழி -5-2-10-இதில் கடலோசை
புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் -திருவாய் மொழி -7-3-1-இதில் கருட குரகோஷம்
அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவல் பொருட்டே -5- 2-10 –
பரவை திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற பிரானை –
தான் இவர் திரு உள்ளத்திலே கண் வளர்ந்து அருளுகிற படிக்கு ஸ்மாகரமாக
அலை கேட்கும் படி கண் வளர்ந்து அருளுகிற உபகாரத்துக்குக் தோற்று
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித்
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த
வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-
என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்-
‘இவர்க்கு மயர்வு அற மதிநலம் அருளி
‘நெஞ்சமே நீள் நகர்’ திருவாய்மொழி-3. 8:2. -என்னும்படி யன்றோ திருத்திற்று?’
ஒரு திரிபாத் விபூதியிலும் இடம் உடைத்தாயிருக்கை. -விசுவஸ்ய ஆய தனம் மஹத் –
திருவடி திருத் தோளில் ஏறி அங்கு உள்ளார்க்கு உஜ்ஜீவனமாகச் சாரிகை வந்து காட்டுமாறு போலே,
இவர் நெஞ்சினுள்ளே தடை இல்லாமல் அழகு செண்டு -விளையாட்டு வையாளி -ஏறுகிறபடி.
நெஞ்சினூடே-‘அகவாயில் உள்ளது கண்களுக்குத் தெரியாதோ?’ என்று இருக்கிறார்கள் ஆயிற்று இவர்கள்.
‘குற்றம் அற்றவனான அந்தப் பரமாத்துமாவானவன் உன்னுடைய உடலில் நிறைந்து நிற்கின்றான்,’ என்னுமாறு போலே.
நிர்குண: பரமாத்மாஸென தேஹம் தே வ்யாப்ய திஷ்ட்டதி’-என்பது, பாரதம், ஆரண்
‘நெஞ்சில் இல்லையாகில் நானும் இல்லை என்று நினைத்து இருக்கலாயிற்றுக் காண்’ என்று இருக்கிறாள் இவள்.
ஒரு வாசத் தடத்தில் அன்னங்கள் சக்கர வாகங்களை போன்ற ஆழ்வார்களும்,
காடு பட அலர்ந்த தாமரை போலே இருக்கிற திவ்விய அவயவங்களும்,
அத் தடாகத்தில் நீரும் இலையும் போலே இருக்கிற திருமேனியுமாய்,
அதனைக் கினிய -கபளீகரிக்க.-ஒரு மேரு தாங்கினாற்போலே இருக்கிற பெரிய திருவடியோடே கூட
இவர் திருவுள்ளத்தே உலாவுகிறபடி.
இப்படியே அன்றோ அநுகூலரோடு பரிமாறும்படி?
‘மாயக் கூத்தா! வாமனா! வினையேன் கண்ணா! கண்கைகால்
தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாய் முகிழதாகச்
சாயல் சாமத் திருமேனித் தண்பா சடையா தாமரைநீள்
வாசத் தடம் போல் வருவானே ! ஒருநாள் காண வாராயே.’என்பது, திருவாய். 8. 5;1.
கரு முகில் தாமரைக் காடு பூத்து நீடு
இரு சுடர் இரு புறத் தேந்தி ஏடலர்த்
திரு வொடும் பொலிய வொர் செம் பொற் குன்றின் மேல்
வருவ போற் கழலுன் மேல் வந்து தோன்றினான்.-என்பது, கம்பராமா. திருவவதாரப். 13.
நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கண்டு
‘‘ஈஸ்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ, விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க,
பாஷ்யகாரர் தோற்ற அருளிச் செய்து கொண்டு போந்தது, ஸ்வரூப வியாப்தியாய் இருக்கும்;
ஆகிலும், எம்பார் ஒரு நாள் ‘உபாசகர்கட்கு அநுக்கிரஹம் செய்தற்பொருட்டு அடியார்களுடைய நெஞ்சிலே
விக்கிரஹத்தோட வியாபித்திருக்கும்’ என்று அருளிச் செய்யக் கேட்டேன்’ என்று பணித்தான்;’
‘மனமாகிய குகையில் வசிப்பவர்’ என்றும்,
‘மனத்தில் இருப்பவரும் புராண புருஷரும்’ என்றும்
,குஹாயம்’ தைத். ஆரண். கஹ்வரேஷ்டம் புராணம்’, கடோபநிஷத்.
‘அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி
வந்து புகுந்து’ பெரியாழ்வார் திருமொழி, 5. 2:10.-என்றும்,
‘எவர்களுடைய மனத்தில் கரு நெய்தல் போன்ற நிறத்தை யுடைய பகவான் நன்கு எழுந்தருளி இருக்கிறாரோ’ என்றும்,
‘ஏஷாம் இந்தீவர ஸ்யாம: ஹ்ருதயே ஸூப்ரதிஷ்டித;’என்பது, ஸ்ரீராமா.-
‘என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற’ என்றும் வருவனவற்றைக் காண்க.
தியானத்திற்குப் பற்றுக்கோடு தெரிவிக்கும் இடங்களிலும் ‘தன்னால் விரும்பப்படுகிறவனுக்கு
இந்தப் பரமாத்துமா தன் ஸ்வரூபத்தைக் காட்டுகிறான்’ என்கிறபடியே
தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்’-என்பது, முண்டகோபிநிடதம்.. 3. 2:3.
அவ்வடிவே ஆயிற்றுத் தியானிக்கத் தக்கதாகச் சொல்லுகிறது;
பின்பு ‘இந்த ஆலிங்கமானது எல்லாப் பொருளுக்கும் சமானமாகக் கடவது,’ என்று கொடுப்பது அவ்வடிவே யாயிற்று
ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத:’-என்பது, ஸ்ரீராமா.யுத். 1:13.
புறம்புள்ளார் சொன்னபடி சொல்லுகிறார்கள்; நம் ஆழ்வார்கள் போன வழி இதற்கு மேற்பட இல்லை:
‘இதற்கும் உள்ளே ஒன்று உண்டு’ என்று சொல்லுகிறவர்கள்,
ஸ்வரூபத்தின் உண்மை சொல்லுகிறார்களித்தனை;
விக்கிரஹம் இல்லை என்று அன்று.
புள்ளைக் கடா நின்ற-
‘அகவாயில் நின்று சுழிக்கு மத்தனையோ?’ என்று அவன் விரைந்து வடிம்பு இட்டுத் தாக்க
‘ஓம் காண்! நீ அறிந்தாயோ?’ என்று தூண்டி மீளா நிற்கும்;
‘அறிவுள்ளவனுடைய’ என்கிறபடியே, பக்ஷபாதத்தோடே சேர்க்கையிலே அன்றோ அவனுக்கும் பணி? –
ஆழ்வார் கட்சியில் சேர்ந்து -ஸ்வ தந்த்ரன் கட்சியில் இல்லை என்றபடி
கடாகின்ற –
நடந்து போனதாய் மறக்கிறீர்கள் அன்று; இனி வருவதனை உபதேசிக்கிறது அன்று;
இப்பொழுது நடப்பதற்கு உபதேசம் வேணுமோ? -பூத பவ்ய இல்லை வர்த்தமானம் –
காணீர் –
காண்கின்றிலீர். இப்பொழுது நடக்கிறதும் காணாமலே ஒழிகிறது தடுக்கின்ற நிர்பந்தத்தாலே அன்றோ?
உங்களுக்குக் குர கோஷம் கேட்கிறது இல்லையோ? பிரசித்தமான பொருளை உபதேசிக்க வேண்டுவதே.
காணீர்-
உங்களுக்குக் கண்களும் செவிகளும் இன்றிக்கே இருந்தோ தடுக்கிறது?
என்னைப் போலே உட் கண்ணாலே காணீர்கோள்!
———–
31-சக்ரபாணீ சாரங்க வில் சேவகனே -பெரியாழ்வார் திரு மொழி -5-4-4-
பூம்கொள் சங்கொலி -நாண் ஒலி -நாச்சியார் திருமொழி -9-9-
ஆழ்வானை ஏவியும் அம்பையும் ஏவியும் இறே முடிப்பது -தூரஸ்தரை நெட்டம்பாலே உருட்டும் –
கிட்டே நின்றவர்களை கையில் திரு ஆழியாலே கொல்லும்
பிரதி கூலருக்கு இரண்டும் பாதகம்
இவளுக்கு இரண்டும் தாரகம் ஆய்த்து
ருக்மிணி பிராட்டியை தரிப்பித்தது ஸ்ரீ பாஞ்ச ஜன்ய கோஷத்தாலே
ஸ்ரீ சார்ங்கத்தின் ஜ்யாகோஷம் ஜனக ராஜ திருமகளுக்கு தாரகம் ஆனது
ஆண்டாளுக்கு இரண்டுமே வேண்டும்படி ஆய்த்து -அவர்கள் அளவு அல்லது இவள் ஆற்றாமை –
கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல்
உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா
தடவரைத் தோள் சக்கரபாணீ சாரங்க வில் சேவகனே -5 -4-4 –
தடவரைத் தோள் சக்கரபாணீ சாரங்க வில் சேவகனே
தூரஸ்தரை நெட்டம்பாலே உருட்டும்
கிட்ட நின்றவர்களை கையிலே திரு ஆழியாலே கொல்லும்
ஆழ்வானை ஏவியும் –
அம்பையும் ஏவி இறே முடிப்பது –
தடவரைத் தோள் –
பெரிய மலை போலே உள்ள தோள்
மலை போலே பெரிய தோள் என்னவுமாம்
தடம் -பெருமை
தடம் போலேயும்
வரை போலேயும் என்னவுமாம்
தடம் -சமுத்ரம்-
கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும் சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ —
இரண்டாவது அவதாரத்தில் பிராட்டிமார்க்கு உதவினது தனக்கு ஒருத்திக்குமே வேண்டும்படி யாய்த்து இவள் தசை
சிஸூ பாலன் ஸ்வயம் வரார்த்தமாக ஒருப்பட்ட சமயத்தில் புறச் சோலையிலே
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானது கோஷமானது-வந்து செவிப்பட்டு தரிப்பித்தது-ஸ்ரீ ருக்மிணி பிராட்டியை
ராவணன் மாயா சிரசைக் காட்டின போது ஸ்ரீ சார்ங்கத்தின் ஜய கோஷமானது வந்து செவிப்பட்டு
தரிப்பித்தது ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை
இரண்டு அவதாரத்தில் உள்ளவையும் மடுத்து ஒலிக்க வேண்டும் படி யாய்த்து இவள் விடாய்-
அவர்கள் அளவல்ல வாய்த்து இவள் ஆற்றாமை –
————
32-அனந்தன் பாலும் ஐது நொய்தாக –என் மனம் தன்னுள்ளே வந்து வைகி -பெரியாழ்வார் திரு மொழி -5-4-8
ஈசன் வானவருக்கு –என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதி -திருவாய் மொழி -3-3-4-
பிரதம விவாஹத்துக்கு செங்கற் கீரை கட்டி கூப்பிடாமைக்கு சோறு வைப்பாரைப் போலே
த்வதீய விவாஹத்தில் இறே போக்கியம் -உள்ளது
பலிக்கு ஜீவனம் அங்கே -நெஞ்சும் உடம்பும் தந்தது எனக்கு-
அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8-
அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என் மனந்தனுள்ளே வந்து வைகி
த்ரிபாத் விபூதியில் உள்ளார் எல்லாரும் ஒத்து இருக்கச் செய்தே -இவர்களுக்கு ஓர் ஏற்றம்
சர்வ காலமும் திரு மேனியோடே ஸ்பர்சிக்கையும்
தர்சநீயத்தின் இனிமையாலே மோம் பழம் போலே முன்னே வைத்து கொண்டு இருக்கும் இறே –
இப்படிக்கு ஒத்த இவர்கள் பக்கலிலே சிநேகத்தை அல்பமாக வைத்து –
இவ்வளவு தான் வைக்கிறது -இவர்கள் பக்கல் வரும் போதைக்கு
சென்றால் குடையாம் -இருந்தால் சிங்காசனமாய்-நின்றால் மரவடியாகைக்கும்
மணி விளக்காய் ஆகைக்கும்-
பூம் பட்டாகைக்கும் –
பொறு சிறைப் புள்ளு வந்தேறி இவர் பக்கல் வரும் போதைக்கு வாஹநம் ஆகைக்கும்
சேர விடுகைக்கு ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் வேணும் இறே
(திருமாற்கு அரவு
பூ மகளார் தனிக்கேள்வன் இருப்பதால் பெரிய பிராட்டியாரும் உண்டு
இவர்கள் பக்கலிலும் அல்பம் ஆதரம் –
ஆழ்வாருக்காகாவே இவ்வாறு )
அதுக்கு உறுப்பாக ஆய்த்து அவர்களை விஷயீகரித்தது
இவர்களை விஷயீகரித்தது தான்
இவர்க்கு உறுப்பானால் மற்று உள்ளாரைச் சொல்ல வேண்டாவே
என் மனந்தனுள்ளே –
அநாதி காலம் இதர விஷயங்களிலே மண்டின என் மனசிலே
வந்து –
அஹேதுகமாக வந்து
வைகி
அவசரித்து-
பொருத்தி என்னவுமாம்
வந்தாய் என் மனம் புகுந்து இருந்தாய் மன்னி நின்றாய் –
போய் அறியாய் -என்று இறே ஈடுபடுவது
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-
வானவர்க்கு ஈசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதி –
1–‘நித்தியசூரிகளுக்கு ஈசனாயிருந்தான்; என் பக்கலிலே பற்றை வைத்தான்.
2-அவர்களுக்கு இருப்பு உண்டாகைக்காக அவர்களோடே கலந்தான்: தன் இருப்பைப் பெறுகைக்காக என்னோடே வந்து கலந்தான்;
3-பிராதம்யத்துக்கும் பழிக்கும் செங்கல் சீரைக்கும் ஜீவனம் வைப்பாரைப் போன்று அவர்கள் பக்கல்; நெஞ்சும் உடம்பும் தந்தது எனக்கு’ என்கிறார்.
இனி,என்கண் பாசம் வைத்த’ என்பதற்கு, ‘என்னிடத்தில் தன் சம்பந்தமான அன்பை உண்டாக்கினான்’ என்று பொருள் கூறுவாருமுளர்.
மதி நலம் அருளினான் -பாசம் -பக்தி -அவன் இடம் சங்கமே பக்தி அன்றோ –
இனி, மனத்தொடுபடாமலிருக்கவும் மனசுக்காகக் கலந்தானாயிருத்தலன்றி, மனம் முன்னாகக் கலந்தானென்னுமிடத்தை
வடிவிற்பிறந்த புகர் காட்டாநின்றதாதலின், ‘சுடர்ச்சோதி’ என்றும், கலந்த பின்னர் முன்பில்லாத புகரெல்லாம் வடிவிலே
உண்டாயிராநின்றதாதலின், ‘பரஞ்சுடர்’ என்றும் அருளிச்செய்கிறார் என்னுதலுமாம்.
‘பிராட்டியோடே கலந்தாற் போலே பேரொளிப் பிழம்பாய் இராநின்றான்’ என்றபடி.
‘வானவர்க்கு ஈசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ என்று கூட்டி இதற்கு மூன்று வகையாக பாவம் அருளிச்செய்கிறார்.
முதல் வகை,‘நித்தியசூரிகளுக்கு’ என்று தொடங்குவது.
இரண்டாம் வகை, ‘அவர்களுக்கு இருப்பு’ என்று தொடங்குவது.
மூன்றாம் வகை, ‘பிராதம்யத்துக்கும்’ என்று தொடங்குவது. பிராதம்யம் – முதன்மை. செங்கல் சீரை – காஷாயம்.
‘பிராதம்யத்துக்கும்’ என்று தொடங்கும் வாக்கியத்தின் கருத்து, முதன்முதல்விவாகம் செய்துகொள்ளப்பட்டவள் என்பதற்காகவும்
‘முதல் மனைவிக்குஜீவனம் கொடுக்கவில்லை’ என்று உலகத்தார் கூறும் பழிச்சொற்களுக்காகவும்,
காஷாய வஸ்திரம் தரித்துப் பிச்சை புக்காளாகில் தனக்கு மானக்கேடுஉண்டாகுமே என்ற எண்ணத்தாலும் முதல் மனைவிக்கு ஜீவனோபாயத்துக்குச்
சிறிது பொருள் கொடுப்பாரைப் போன்று என்பது. ‘பாசம் வைத்த’ என்றதனால் நெஞ்சு கொடுத்தமை சொல்லிற்று; ‘பரஞ்சுடர்ச் சோதி’
என்றதனால் உடம்பு தந்தது சொல்லிற்று.
என்னிடத்தில் தன் சம்பந்தமான அன்பையுண்டாக்கினான்’ என்றதன் கருத்து,ஆழ்வார்க்குத் தன் மாட்டு அன்பை உண்டாக்கினான் என்பது.
முதற்பொருளில், இறையவன் ஆழ்வாரிடத்தில் அன்பை வைத்தான் என்பது கருத்து.
இரண்டாவது பொருளில் இறைவனாகிய தன்னிடத்தில் ஆழ்வார்க்கு அன்பை உண்டாக்கினான் என்பது கருத்து.
————
33-சாயை போல பாட வல்லார் -பெரியாழ்வார் திருமொழி -5-4-11
நிச்சலும் விண்ணப்பம் -திருவாய் மொழி -1-9-11
வைகல் பாட -திருவாய்மொழி -5-7-11-
பாட வல்லார் தாமும் சாயை போலே அணுக்கர்களே -என்று அந்வயம்
எம்பிராற்கு விண்ணப்பம் செய்ய –நிச்சமும் நீள் கழல் சென்னி பொருமே -என்று அந்வயம்
வைகலும் வானோர்க்கு ஆரா அமுதே-என்று அந்வயம்
காலதத்வம் உள்ளதனையும் நித்ய சூரிகளுக்கு போக்ய பூதர் –
வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 -4-11 –
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே-
ஸ்ரீ எம்பாரை சிலர் -இப் பத்துக்கு பொருள் என் -என்று கேட்க –
நான் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்தில் இது கேட்டிலேன் –
ஆகிலும் நீங்கள் கேட்ட இவ் அர்த்தம் போராது என்ன ஒண்ணாது –
இப்பொழுதே கேட்டு உங்களுக்கு சொல்ல ஒண்ணாதபடி
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தேற எழுந்து அருளினார் –
ஆகிலும் இப்பொழுதே உங்களுக்கு சொன்னேன் ஆக வேணும் -என்று
ஸ்ரீ உடையவர் திருவடி நிலைகளை எடுத்து தம் திரு முடியிலே வைத்துக் கொண்டு –
இப்பொழுது ஸ்ரீ உடையவர் எனக்கு அருளிச் செய்தார் கேட்கல் ஆகாதோ -என்று
பாட வல்லார் -சாயை போலே -தாமும் -அணுக்கர்களே -என்று அருளிச் செய்தார் –
(ராமானுஜ பதச்சாயை தாமே இவ்வர்த்தம் அருளிச் செய்யும் படி ஆய்த்தே )
தாமும் -என்கைக்கு அடி –
அவர்கள் ஏற்றதை நினைத்து
அதாவது –
பிரயோஜனாந்தரங்களையும் -உபாயாந்தரங்களையும் -கணிசித்து –
மங்களா சாசனம் பண்ணுகை அன்றிக்கே –
தத் காலத்துக்கு மங்களா சாசனம் பண்ணுகை அன்றிக்கே –
கழிந்த காலத்துக்கும் மங்களா சாசனம் பண்ணுகை இறே ஏற்றம் –
(அன்று உலகு அளந்தாய் அடி போற்றி –இன்று யாம் வந்தோம் ஆண்டாள் போல் )
இப்படிக்கொத்த தம்மை தம்முடைய வம்சத்தில் ஏழு படி கால் இல்லை என்னும் இடத்தை
ஏழாட் காலம் பழிப்பிலோம் -என்று அருளிச் செய்தார் இறே –
பாடுகை யாவது –
உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்கை
சாயை போலே என்றது –
புருஷனுடைய சாயை அவன் புக்க இடத்தே புக்கு –
புறப்பட்ட இடத்தே புறப்பட்டு –
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி அவன் இட்ட வழக்கமா போலே –
இத் திரு மொழி கற்றார்க்கும்
தங்களுக்கு என்ன ஒரு பிரவ்ருத்தி நிவ்ருதிகள் இன்றிக்கே
ஈஸ்வரனுக்கு அந்தரங்கர் ஆகப் பெறுவார்கள் –
செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்று பாட வல்லார்
நிழலும் அடி தாறுமாகப் பெறுவார்கள்
அடி தாறு -திருவடிகளில் ரேகைகள்
சாயை போலே பாட வல்லார் –
நிழல் உண்டாக பாட வல்லார்
நிழல் ஆவது -குளிர்த்தி
குளிரப் பாட வல்லார் என்றும் சொல்லுவார்கள்
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11-
உடன் பாட வல்லார் –
அபிப்பிராயத்தோடு பாட வல்லார். என்றது, இவருடைய உபாய சூந்யதையை நினைத்துப் பாடவல்லார் என்றபடி.
வைகலும் வானோர்க்கு ஆராவமுதே –
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நித்திய சூரிகளுக்கு இனியபொருளாகப் பெறுவர்.
தேவசாதிகள் அமுதம் பெற்றுக் கிருதார்த்தராமாறு போலே,
நித்திய சூரிகள் ‘இவர்களைப் பெற்றோம்’ என்று கிருதார்த்தராவர் என்பார் ‘அமுதே’ என்கிறார்.
வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் பகவத் ருசியை யுடைய அவர்கள்,
வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் பகவத் ருசியையுடைய இவரை விரும்பி இருக்கையாலே,
வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாதவராய் இதனை அனுபவிக்க வல்லரானவர்கள் நித்திய சூரிகளுக்கு அமுதாவர்.
உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11-
எம்பிராற்கு நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –கண்ண பிரான் -எம் பிரான் -இரண்டு உபகாரகன்
எம்பிராற்கு விண்ணப்பம் செய்ய நிச்சலும் நீள் கழல் சென்னி பொரும்-
தனக்கு பாங்கான சமயத்தில் ஒரு கால் விண்ணப்பம் செய்ய -நாள்தோறும் ஆசாலேசம் உடையார் இருந்த இடத்திலே செல்ல வளரும் திருவடிகள் சென்னியோடே சேரும்
விண்ணப்பம் செய்ய -நிச்சலும் நீள் கழல் சென்னி பொரும்- -சப்தம் மாற்றி -எப்பொழுதாவது விண்ணப்பம் செய்ய -அவன் எப்பொழுதும் பொருந்தி
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -சாயை பாடாதே -பாட வல்லார் தாமும் சாயை போலே அணுக்கர்களே –
எம்பிரான் -என்றது -இப்படி சாத்மிக்க சாத்மிக்கவும் -இழவு மறக்கவும் -(-அனுபவிப்பித்த உபகாரகன் என்றபடி-
ஆழ்வார் க்ரமத்திலே உச்சி உளானே -என்ற பெற்ற பேறு-இது கற்றாற்கு முதல் அடியிலே உண்டாம்
பொரு -என்று ஒப்பாய் -ஒப்பாவது சேருகையாய்-சேரும் என்றபடி –
உச்சியுள்ளே நிற்கும் என்று இவர் பெற்றதுவே பேறாகக் கடவது –
இழந்த நாளில் -இழந்ததை அனுசந்திக்க -துக்கம் வருமே -இழந்தோம் என்கிற நினைவே இல்லாமல் -பழுதே —
பல காலும் போயின -அழுதேன் -என்ற நினைவும் இல்லாமல்
அஞ்சிறைய மடநாராய் பிரிந்த நினைவும் இல்லாமல் –
கற்று விண்ணப்பம் செய்வார் முதலிலே சென்னியில் பெறுவார் –பாகவத் சேஷத்வம் பலத்தை சடக்கென கிட்டுமே
சென்னி பொரும்- -ஏக மேவ பலம் -ஆச்சார்யருக்கும் சிஷ்யருக்கும் ரே பலன்
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11-
உடன் பாட வல்லார் –
அபிப்பிராயத்தோடு பாட வல்லார். என்றது, இவருடைய உபாய சூந்யதையை நினைத்துப் பாடவல்லார் என்றபடி.
வைகலும் வானோர்க்கு ஆராவமுதே –
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நித்திய சூரிகளுக்கு இனியபொருளாகப் பெறுவர்.
தேவசாதிகள் அமுதம் பெற்றுக் கிருதார்த்தராமாறு போலே,
நித்திய சூரிகள் ‘இவர்களைப் பெற்றோம்’ என்று கிருதார்த்தராவர் என்பார் ‘அமுதே’ என்கிறார்.
வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் பகவத் ருசியை யுடைய அவர்கள்,
வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் பகவத் ருசியையுடைய இவரை விரும்பி இருக்கையாலே,
வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாதவராய் இதனை அனுபவிக்க வல்லரானவர்கள் நித்திய சூரிகளுக்கு அமுதாவர்.
————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .