Archive for the ‘Abimana Desam’ Category

ஸ்ரீ வீரகேரளம்புதூர்-ஸ்ரீ நவநீதகிருட்டிணன் கலம்பகம்–ஸ்ரீ புலவர் கோமான் தண்டபாணி ஸ்வாமிகள்–

May 24, 2026

தண்ணார் தமிழ் வளர்க்கும் தனிப் புகழாளர் பலர் தோன்றிய திருநெல்வேலிச் சீமையில், தென்காசிக் கருகில் அமைத்த வீர கேரளம் புதூரில் குடிக் கொண்ட நவநீத கிருட்டிணப் பெருமாளைக் கலம்பக
இலக்கியத்தாற் புலவர் கோமான் தண்டபாணி சுவாமிகள் வனப்புறப் பாடி மகிழ்கிறார்-ுமார்நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பெற்ற இம் மூலநூல் இப்பொழுதுதான் உரையுடன் வெளிவருகின்றது.

ஸ்ரீ திருவரங்க திருவாயிரம் -ஸ்ரீ திருமால் ஆயிரம் -போன்ற கிரந்தங்களையும் அருளிச் செய்துள்ளார்-இவர் திருமால் மீது ஈடுபாடு கொண்டு பாடிய பாடல்கள் பலவாம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மீது திருஎழுகூற்றிருக்கை, திருவரங்கன் பேரில் திருவரங்கத் திருவாயிரம், திருவயிந்திரபுரம் பெருமாள் பதிகம் திருவனந்தபுரம் யமக அந்தாதி, திருக்கண்ணபுரம் பெருமாள் பதிகம். விஷ்ணுபுரம் ஒருபது கூற்றிருக்கை, அரி ஏகபாதத்தந் தாதி, திருமாலந்தாதி, திருமகளந்தாதி எனப் பல அரிய இலக்கியங்களை இவர் படைத்தளித்துள்ளார். இவையேயன்றி திருமால் திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று அங்கு எழுந் தருளியுள்ள பெருமாள், இலக்குமி, அனுமார் ஆகியோர் பெயரில் பதிகம், திருப்புகழ், வெண்பா, அந்தாதி, வகுப்பு போன்றவற்றையும் பாடியுள்ளார்.

மண்ணினிற் பிறந்த பயன் மிகப் பெற்றே மதி யுடன் வாழ்ந்திடற் காக
வண்ண நற் றமிழில் எண்ணரு பனுவல் வழங்கிய தண்டணி சாமி
கண்ணனைப் போற்றிக் கழறிய வீரைக் கலம்பக நூற்குரை வகுத்து,
கண்ணினைக் கருத்தைக் கவர்ந்திடு மாறு கவின் மிகு புத்தகம் பதித்தான்
–எழுசீர் ஆசிரிய விருத்தம்-சிறப்புப் பாயிரம் –

அன்னவன் யாரோ என்றிடிற் புகழ்வேன். அறிவுசால் கலைபல வல்லோன்;
என்னவன் என்றே நல்லவர் நாடும் இனியநற் பண்புள சீலன்;
முன்னமும் பலவா முத்தமிழ் நூல்கள் முறையுடன் பதித்தவன்; நாளும்
பொன்னவிர் வேலூர் மாதவன் என்னப் புகழ்நிலை பெற்றவன் தானே.

கலம்பகப் பாக்கள் கருதிய பொருளைக் கற்பவர் எளிதினில் உணர்ந்தே
நலம்பெற, சீர்த்த உரையினைத் தருங்கால் நயமொடு தக்கமேற் கோள்கள்
நிலம்புகழ் நாலா யிரத்தினிற் காட்டி நெஞ்சினில் நிலைக்கவைத் திட்டான்-
வலம்படை ஐந்து வயங்கெழிற் பாணி- மாலருள் பெற்றுவா ழியவே!

திவ்வியப் பிரபந்தத்தின் திருப்பள்ளியெழுச்சியில் ‘கலம்பகம் புனைந்த விலங்கலத்தொடையல்’ எனும் தொடர் இச் சொல்லின் முதல் ஆட்சியைத் தருகின்றது. தொண்டரடிப்பொடியாழ்வாரின் இவ்வாட்சி, பல்வகை மலரும் கலந்து தொடுக்கப்பட்ட மலர்மாலையைச் குறித்தலால், கலவை எனும் அடிப்படைப் பொருண்மையின் சார்புடன் கலம்பகம் அமைந்தமை விளங்கும்.-தமிழில் முதன்முதலாக வைணவக் கடவுள்மீது எழுந்த முதற்கலம்பகம் திருவரங்கக் கலம்பகமே.-ி.பி.17ஆம் நூற்றாண்டில் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய இலக்கலம்பகத்தின் தொடர்ச்சியாகத் தமிழில் பல கவம்பசு நூல்கள்
எழுந்துள்ளன.

சமய நூல்களைக் கற்குமிடத்து நம்மாழ் வாரின் திருவாய்மொழியின் சிறப்பைப் படித்தறிந்த பின்பே வைணவ சமயத்தின் பெருமையை உணர்ந்தார் எனக் கூறுவர் .
இவருடைய குருபர தத்துவம் என்னும் நூலில் இருபத்து நான்காம் சருக்கமாகிய விட்டுணு தரிசனச் சருக்கத்தில் இதை இவரே கூறக் காணலாம்.
விண்டு தூடணைக் கொடியரில் ஒருவனா விளங்கிய எனை அன்னோன்
பண்டு செய்தவப் பயனகொடோ அல்லது பழுதில்தன் ணருளாலோ
தொண்டு செய்பவர் அடியவர்க் காளெனும் துணிவுடைக் குருகூரான்
கண்டு கூறிய தமிழ்மறைப் பொருள்கொடு களிப்புறப் புரிந்தானே.
(1)எனத் திருவாய்மொழியின் சிறப்பை எடுத்துக் கூறித் திருமால் வடிவமே செப்பும் எத் தெய்வமும் எனத்தாம் தெளிவுற்றதையும் பின் வருமாறு கூறுகின்றார்-
சேய வார்சடைச் சிவனென, அயனெத் தேவர்கோன் எனமற்றும்
ஆய பல்பொரு ளெனத்திரு மால்உறும் அதிரக சியந்தன்னைத்
தூய சீர்ச்சடகோபன் முன் வெளிப்படச் சொல்லியும்.துயரெய்தித்
தீயர் பால்இது பரம்அது பரம்எனச் செயும் சமர்க் கிசையேனே. (
3) என்னும் பாடலால் தம்முடைய மனத் தெளிவைப் புலப்படுத்துகிறார். காக்கும் கடவுளாகிய திருமாலே வாழ்நாளில் பரம் என்பதைத் தாம் உணர்ந்தவாறு தெளிவு படுத்துகின்றார்.

வியாச மா முனி சங்கர மா முனி ஆகிய மேலோரும்
தயா நிதித் திரு மால்பதம் போற்றிய சாத்தியம் தெரிந்து அப்பாற்
கயானனற் தொழும் ஒளவை சொல்லிய விதி கண்டு, நாரணற்கன்பு
செயார்கள் வீடு பெற்றுய்ந்திடா ரென மிகச் செப்பிடத் துணிந்தேனே. (8)

நவநீதகிருட்டிணன் கலம்பகம் காப்புச் செய்யுள் இரண்டு,-அவையடக்கம் ஒன்று, நூல் 100 பாடல்கள், நூற்பயன் ஒரு பாடல் ஆக மொத்தம் 104 செய்யுட்களானியன்றது. நூல், ‘திருமகள் பூமகளொடு’ எனத்தொடங்கி அந்தாதித் தொடை பெற்று நடந்து இறுதிப்பாடல் ‘திருமாலே’ என மண்டலித்து
முற்றுப்பெறுகிறது. இது பொருள்தொடர் நிலைச் செய்யுள், சொல்தொடர் நிலைச் செய்யுள் என்னும் இரு வகைகளில் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
-இந்நூலில், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பாக்களும் பாவினங்களுமாக முப்பத்தைந்திற்கும் மேற் பட்ட தமிழ் யாப்பு வகைகள் இடம்பெற்றுள்ளன.

நந்தமிழ் நாட்டின் ஒண்முகமே போன்று ஒருக்கால் உற்றார்க்கும் தீவினை தீர்த்து ஒழுகு புனற் பெயருக்கு ஓவாச் சிற்றாற்றின் வட பாலில் திகழ் வீரை நகர் என முதற்பாடலிலேயே இத்தலத்தின் இருப்பிடத்தை விவரிக்கும் ஆசிரியர், இத்தலத்தின் இயற்கை எழிற்சிறப்பைப் பலபடப் பாராட்டுவர்.

இத்தலத் திறைவனாம் கண்ணபிரானின் திருப் பெயர்களை ஆசிரியர் பலவாறு எடுத்துரைக்கின்றார். எடுத்துக் காட்டாக, அஞ்சனன்-26.
அச்சுதநாதன்- 100,
அட்டாக்கரன்- 5, 63,
அண்டர் நண்பன்- 26,
அப்பன் – 50,
அம்மான்-94.
ஆதிமால்- 26.
எம்பெருமான்கா. 3, 20.
ஐயன்- 50.
ஒய்யாரன்-39,
கண்ண பிரான்-75,82,
கண்ணன்- கா. 1,18, 28, 30, 33. 54, 55,56,
67, 69, 84,
கரியவன்- 53.
கள்ளன்-29,
காகுத்தன்-55,
கிட்டிணன்-63,
கிரி-69.
குழகன்- 88,
கொண்டல்-23,

கோபாலன்-6,
சீதரன்- 12,
சீலன் 69,
சூதன்-19,25,
ஞானகுருபரன்- 16,
திருமால்-24, 45, 100,
தீரன்-69,
தொல்லோன்- 21,
நவநீதகிட்டிணன்-16,16,100,
நாரணன் -14, 16, 32, 38, 43, 49.
நெடுமால் -22, 27,
நெடியோன் 7,3, 89,
நேமியான்-95.
பவபயங்கரன்- 26
பிரான்-96,
புண்ணியன்- 36,81,
புருடோத்தமன்- 10, 66,
புனிதன்-23,
பெருமாள்- 19, 84.
மணிவண்ணன் -69,
மறைமூலன் -69,
மாதவன் – 25, 70,
மாயன்- 57,
முகுந்தன்-44,
முதல்வன்-17,
முதற்தேவு- 97.
வரதன்-97,
வள்ளல்-29,
விகிர்தன்-41 எனத் திருமாலின் திருப் பெயர்கள் பலவும் கூறக் காணலாம்.

கண்ணபிரானின் திருவுருவச் சிறப்பு, குணநலன்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுமிடங்கள் பலவாகும்.
காசைமென்பூந்துணர் வண்ணன்- 55, காயாமலர்த் துணர் போல் நின்றெறிக்கும் கண்ணபிரான் -75, பொன்னிகர் பூவான்-85. மணிக்குன்ற வண்ணன்-28, கொண்டல் மேனியன்-49, கருமுகில்-16. புயல் புரையும் நெடுமேனிப் புனிதன்-67.
புயல்நேரு மேனிப் புருடோத்தமன்-11,வானேய்த்த மேனி
முகுந்தன்-76, மைக்கனமே நிகர் கிட்டிணன்-33, நீலமால்
வரை-7, பச்சை நெடுமேனி அம்மான் -94. காரமர் நெடியமேனிக் கருணை மால்வரை -40, தளஞ்செறிபூங் கண்ணன் 2,
செங்கண்நெடுமால் – 30. மலர்ச்செங் கண்ணன்-94,மலர்க்கண்
அமுது- 41. பூ அனைய திருத்தாளன்-59, நான்முகனைப் பயந்த வுந்தி நளினத்தான்- 43, அந்தணன் குடிகொள் உந்தி கொண்ட
முகில்- 26, ஆரணஞ் செப்புநர் பலர்வரலான நாபியன் – 58.
செந்திருவை மார்பினிடத் தமைத்தோன்-93, ஐம்பெரும் படை கொள் ஆதிமால்- 26, சங்காழிப் படைக்கை மால்- 43.
சுகம் ஒன்று ஊர்ந்து விண்வழி வரும் நாரணன்- 32.

என இவ்வாறு சுண்ணபிரானின் திருவுருவைப் பலவாறு விளக்கும் ஆசிரியர் அக் கண்ணபிரானின் குணநலன்களைச் சுட்டியும் அவரை விளிக்கின்றார்.

திருமறு மார்பன் திகழ்சரிதந் தன்னைத் தெளிந்தாய்ந்த
மருளறு ஆழ்வார் மொழிதமிழா மென்றே மதித்தந்நாள்
குருவருள் பெற்றுயர் தண்டபாணிப் பாவலன் கூறுஞ்சீர்
அருள்நவ நீதன் கலம்பகத் திற்குரை யான்தரலே.–
1-கட்டளைக் கலித்துறை

பொய்கை பூதம் பேய்உரைத்த பொருளில் தமிழும், புத்தூரில்
ஐயன் விஷ்ணு சித்தன்முனம் அறைந்த தமிழும், கலிகன்றி
செய்ததமிழும், மழிசைக்கோன் செப்பும் தமிழும், ஒப்பிலா
மெய்யன்தொண்ட ரடிப்பொடிமுன் விரித்த தமிழும்,
கொல்லிக் கோன் செப்பும் தமிழும், திருப்பாணன் செய்ததமிழும், புதுவைநகர்
ஒப்பில் கோதை அன்புரையால் ஓதும் தமிழும்,அவரவரைத்
தப்பொன் றின்றிப் பதிகத்துச் சாற்றும் பெயரும் தாமோதித்
தெப்பம் பிறவிக் கடற்கென்னத் தாம் செய்தசெழுந்தமிழ்கள் (ஸ்ரீராமானுஜ வைபவம் 1:57,58-வடிவழகிய நம்பிதாச
ர்)

பொய்யில் பரம கவிகளால் புகலப்பட்ட தமிழிவைகள்
ஐய தெய்வ நன்மாலை அதனால் இதனை நாமெல்லாம்
தெய்வ கானத் தியலிசையில் சேர்த்துக் கலியால் தீதுற்று
நையும் உலகில் பரத்தியிட வேண்டும் என்றான் நாதமுனி. (ஸ்ரீ ராமானுஜ வைபவம் 1-67)

கழறிடு மன்பர்க் கருளுங் கருணைமால் காப்பதுவாய்க்
குழறிடு மென்னுரைப் புன்மையுங் காக்கும் குறையிலவே:
பழமறை யாதியாம் மாதவன் சேய்மகிழ்ப் பாமகளே!
தொழவருள் வாணியே! சொற்பொருள் வாக்கருள் சொல்மகளே! 2
மாதவன் சேய்-என்றது திருமாலின் குழந்தை யான பிரமனைக் குறித்தது. மாதவன் என்றது உரையாசிரியர் பெயரையும் குறித்தது.

சீரைத் திருவைச் செழிப்பைப் பொழிற்பெருக்கைக்
காரைப் பொருந்திக் களிகாட்டும்- வீரைக்
கலம்பகம்பு கன்றுகண்ணன் கான்மலரிற் சூட்ட
அலம்பகம்பு கானைதுணை யாம்.–1
-காப்பு-நேரிசை வெண்பா

சீரை திருவை செழிப்பைப் பொழிற்பெருக்கை- பேரழகும்.தெய்வீகமும்,செல்வச் செழிப்பும், மிகுதியான பொழில்களும் நிறைந்து
காரைப் பொருந்தி களி காட்டும்- எப்பொழுதும் நீர் கொண்டமேகங்கள் சூழ்ந்து மகிழ்ச்சியைத் தருகின்ற
வீரைக் கலம்பகம் புகன்று – வீரை என்னும் வீரகேரளம்புதூரில் கோவில் கொண்டெழுந்தருளியுள்ள நவநீத கிருட்டிணன் மீது இக்கலம்பக நூலை மொழிந்து
கண்ணன் கால்மலரில் சூட்ட- கண்ண பெருமானின் திருவடித் தாமரையில் சேர்ப்பிக்க
அலம்பு அகம் புகு ஆனை துணை ஆம் – -அலம்பு அகம்- (அன்பால்) கழுவப்பட்ட உள்ளம்; தூய
உள்ளம்.-தூய உள்ளங்களில் குடி யிருக்கும் விநாயகர் துணையாவார்.

நிலம்பகச் சம்மதி யாதார் நெருங்கும் நெடுங்களத்தில்
இலம்பகம் ஈரொன்ப தால்தன்னில் வேறில்லை என்றுணர்த்தி
வலம்பகப் பார்த்தனை யாண்டானை வீரையில் வாழ்த்துதமிழ்க்
கலம்பக நூற்குநம் மாழ்வார்முன் னாம்பலர்காவலுண்டே.
2-கட்டளைக் கலித்துறை

நிலம்பகச் சம்மதியாதார்-பாண்டவர்களுக்குச் சேரவேண்டிய நாட்டைப் பகிர்ந்தளிக்க மறுத்த துரியோதனாதிகள்
நெருங்கும் நெடுங்களத்தில்- நெருங்கியிருக்கும் பெரிய போர்க் களத்தில்
இலம்பகம் ஈரொன்பதால்- பதினெட்டு அத்தியாயங்களை யுடைய கீதையை உபதேசித்து
தன்னில் வேறு இல்லை என்று உணர்த்தி- உலகத்தில் இறைவனாகிய தன்னைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை என்பதை எடுத்துக்காட்டி
வல் அம்பு அக பார்த்தனை ஆண்டானை – வெற்றிச் சிறப்பும் வலிமையுமிக்க அம்பு எய்வதில் பெருமிதம் கொண்ட அருச்சுனனைக் காத்தருளிய கண்ணபெருமானை
வீரையில் வாழ்த்து தமிழ்க் கலம்பக நூற்கு- வீரகேரளம்புதூரில் வாழ்த்தி வணங்கும் இத் தீந்தமிழ்க் கலம்பகமாகிய இலக்கி யத்திற்கு
நம்மாழ்வார்முன்னாம்பலர் காவல் உண்டே- சடகோபராகிய நம்மாழ்வாரும் மற்ற ஆழ்வார்களும் ஆசாரியர் அனைவரும் காவலாக இருப்பார்கள் என்பது உறுதி. ஏகாரம்-தேற்றம்.

நம்மாழ்வாரை முதலிற் கூறியது, திருத்துழாய் அங்குரிக்கும் போதே பரிமளத்தோடு தோற்றுதல் போல ஞானமாகிய பரிமளத்தோடு திருவவதரித்து மற்றை ஆழ்வார்களினும் மேம்படுதலாலென்க. பலர் என்றது ஆழ்வார்களைத் தொடர்ந்து வந்த வைணவ ஆசாரியர் பலரும் என்னும் பொருளிலாகும்.
ஆழ்வார்-பகவானுடைய மங்கள குணங்களாகிய அமுத வெள்ளத்திலே முழுகி மிகவும் ஈடுபட்டு நன்றாக ஆழ்ந்திடுபவர்.

எம்பெருமான் அருளாலோ, திருவுந்தித் தாமரைமீ திருப்பான் சேர்வென்
கொம்பெழிற்கட் கடையாலோ, எனதுமனக்களிப்பாலோ, கொடியார் கூட்டத்து
அம்பெயுங்கைச் சிலைஇருத யாலயப்பேர்மகிபாலன் அதிட்டத் தாலோ
கம்பெகினத் தொடுமயங்கும் வயல்வீரைக் கலம்பகநூல் கலிக்கு மாறே. 3
–(அவையடக்கம்) அறுசீர் ஆசிரிய விருத்தம்-
எம்பெருமான் அருளாலோ -திருமாலின் திருவருள் காரண மாகவோ
திரு உந்தித் தாமரை மீதிருப்பான்சேர்வெண்கொம்பு எழில்கண் கடையாலோ-திருமாலின் திருவுந்தித் தாமரையில் வீற்றிருக்கும் நான்முகனின் தேவியாகிய கலைமகளின் அழகிய கடைக்கண்பார்வையின் காரணமாகவோ.
எனது மனக் களிப்பாலோ-(கண்ணன் திருஅவதாரச் சிறப்பையும் பேரருளையும் நினைந்து நினைந்து அகம்மிக மகிழ்ந்த) அடியேனுடைய உள்ள மகிழ்ச்சியின் காரண மாகவோ
கொடியார் கூட்டத்து அம்பு எய்யும் கைச்சிலை இருதயலாயப் பேர் மகிபாலன் – (நீதியும் நேர்மையும் தவறிய) தீயோர் கூட்டத்தின்மீது அம்புகளைப் பொழியும் வில்லினைக் கையிலேந்திய இருதயாலய மகிபாலன் என்னும் மன்னனின்

அதிட்டத்தாலோ- நல்வினையின் காரணமாகவோ.
கம்புஎகினத்தொடு மயங்கும் வயல் வீரை- சங்கும் அன்னமும் அருகருகே பொருந்தி வாழும் வயல்கள் நிறைந்த
வீரகேரளம்புதூர் (மாநகரில் கோவில் கொண்டுள்கண்ணபெருமானுக்குரிய)
கலம்பக நூல்-இக் கலம்பக இலக்கியம்
கலிக்குமாறே- ஒலிக்கத் தொடங்குகிறது

விண்டுதூடனைக் கொடியரின் ஒருவனா விளங்கியஎனை, அன்னோன்
பண்டு செய்தவப் பயன்கொடோ அல்லது பழுதில் தண் அருளாலோ,
தொண்டு செய்பவர் அடியவர்க் காளெனும் துணிவுடைக் குருகூரான்
கண்டு கூறிய தமிழ்மறைப் பொருள்கொடு களிப்புறப் புரிந்தானே.

திருமகள்பூ மகளொடுதன் சேவடிப்பூக் களைத் தமது
மருமலர்க் கையால் வருட மாசுணப்பாயலின் மீது
பாற்கடலிற் பொய்த் துயில் கூர் பான்மையைப் பல் வானவரும் தோற்க அடர் வார்க்கறுவும் தொழில்நிமித்தம் விடுத்தெழுந்து
தேவகி தன் மகவாகித் தீதில் அருட் தாதை கையால் பாவமும் கண்டு ஒல்க மிகப் பழுத்த இருட் பா நாளில்
ஆயர் தம் ஊ ரிடை எய்தி. யசோதை யென்னும் அருந்தவத்து ஓர் தாயகமிக் குவப்பெய்தத் தவழ்ந்தினீதுஆடிய பருவத்து
இருமருதுஅட்ட டமைகருதி எண்ணின்மருது ஏற்று அவற்றின் திரு நிழல் வேட் டுற்றஅரன் சிந்தைநைதல் தீர்க்கினன்றி
முன்னாள் பிச் சொழித்தாண்ட முதுக்குறைக்கோர் குறையென்ன
உன்னாநந் தமிழ்நாட்டின் ஓண் முகமே போன்று ஒருக்கால்
உற்றார்க்கும் தீவினை தீர்த்து ஒழுகுபுனற் பெருக்கு ஓவாச்
சிற்றாற்றின் வடபாலில் திகழ்விரை நகர்நாப்பண்
அருள்மலி கண் ஆதியவாம் அவயவம் தோய் தருமருதின்
பெருநிழற்பால் நின்றருள் எம் பெருமானே பேசக்கேள்!
–மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

திருமகள் பூமகளொடு – பெரிய பிராட்டியாகிய இலக்குமி மற்றும் பூமிப்பிராட்டியாரோடு
தன் சேவடிப் பூக்களை-செந்தா மரை மலர் போன்ற சிவந்த திருவடிகளை
தமது மருமலர்க் கையால் வருட தமது மணம் மிக்க மலர் போன்ற திருக்கைகளால் தடவும்படி
மாசுணப்பாயலின் மீது – ஆதிசேடனாகிய படுக்கையின் மேலே
பாற்கடலில் பொய்த்துயில் கூர் பான்மையை – திருப்பாற்கடலின் நடுவிலே அறிதுயிலாகிய யோசு நித்திரை கொள்ளும் தன்மையை
பல்வானவரும் தோற்க அடர்வார் -தேவர்கள் பலரும் தோற்கும்படியாக நெருங்கும் அசுரர்களை
கறுவும் தொழில் நிமித்தம் – அழியச் செய்வதற்காக விடுத்தெழுந்து விட்டு எழுந்து
தேவகி தன் மகவாகி- தேவகியின் பிள்ளையாகத் தோன்றி
தீதில் அருட் தாதை கையால்-குற்றமற்ற மெய்ஞ்ஞான முடையவராகிய வசுதேவர் கையால் ஏந்த
பாவமும் கண்டு ஒல்க மிகப்பழுத்த இருட்பா நாளில்- மகா பாவங்களும் சுண்டு நாணமுறும்படி மிகக் கருமையான இருள்சூழ்ந்த இரவில்
ஆயர்தம் ஊரிடை எய்தி- இடையர்கள் வாழும் ஆயர்பாடி யாகிய கோகுலத்தை அடைந்து
யசோதை யென்னும் அருந்தவத்து ஓர் தாய் அகம் மிக்குவப் பெய்த- (இடையர் தலைவனாகிய நந்தகோபனுடைய மனைவியாகிய) யசோதை என்னும் அருமைத்தாயின் உள்ளம் மகிழும்படியாக
தவழ்ந்தினிது ஆடிய பருவத்து – அவளிடையே தவழ்ந்து விளையாடிய காலத்தில் (உரலில் கட்டியபொழுது )
இருமருது அட்டமை கருதி-இரண்டு மருத மரங்களை ஒடித்து வீழ்த்தியதைக் கருத்தில்கொண்டு
எண்ணின் மந்து ஏற்று பல தலங்களில் மருதமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டு
அவற்றின் திருநிழல் வேட்டுற்ற அரன்- அவற்றின் நிழலில் விரும்பித் தங்குகின்ற சிவ பெருமான்
சிந்தை நைதல் தீர்க்கினன்றி- தன் மனவருத்தத்தைத் தீர்க்காவிடில்
முன்னாள் பிச்சொழித்தாண்டமுதுக்குறைக்கோர் குறை என்ன உன்னா- முற்காலத்தில் இரந்துண்ட இழிநிலையை நீக்கிய பேரறிவின் அருளிற்குக் குறைவு உண்டாகும் என நினைத்து
நம் தமிழ்நாட்டின் ஒண்முகமே போன்று- நம்முடைய தமிழ கத்தின் ஒளிமிக்க முகமே போல
ஒருக்கால் உற்றார்க்கும் தீவினை தீர்த்து- ஒருமுறை வந்து அடைந்தவர்க்கும் பாவங்களை ஒழித்து
ஒழுகுபுனல் பெருக்கு ஓவாச் சிற்றாற்றின்-வற்றாத நீர்ப் பெருக்கினை எப்பொழுதுமுடைய சிற்றாற்றுக்கு (சித்ராநதிக்கு)
வடபாலில் திகழ் வீரை நகர் நாப்பண்-வடக்கே திகழும் வீரைஎன்னும் நகரத்தின் நடுவே
அருள்மலி கண் ஆதியவாம் அவயவம் தோய்தரு மருதின் பெரு நிழற்பால் நின்றருள் -அருள் நிறைந்தும், கணு முதலிய உறுப்புக்கள் பெற்றும் விளங்கும் மருத மரத்தின் பெரிய நிழலிலே எழுந்தருளியுள்ள
எம்பெருமானே- எங்கள் இறைவரே!
பேசக்கேள்- அடியேன் விண்ணப்பிப்பதைக் கேட்டருள்வீராக

அருமறை முதலிய பலகலை நுவலென அயனைமுன் அலர்மகள் அயர்வுற அருளினை,
தெருள்மலி தருசிவன் முதலிய கடவுளர் செயசெய எனவழி படமிக நிலவினை,
ஒருபொருள் இருபொருள் பலபொருள் எனஇக லுறுபல சமயமும் அருள்பொது நிலையினை,
கருமுகில் மிசைவரு மகபதி முதலினர் கடலமு துணமகள் உருவமும் மருவினை
–இவை நான்கும் ஈரடி அராகங்கள்-

அருமறை முதலிய பலகலை நுவலென-கற்பதற்கு அரிய வேதம் முதலான பல கலைகளையும் சொல் என்று
அயனை முன் அலர்மகள் அயர்வுற அருளினை – முற்காலத்தில் திருமகள் தன் வழியாகப் பிள்ளைப்பேறு வாய்க்க வில்லையே என வருத்தமுறும்படி பிரமனைப் பெற்
றெடுத்தீர்
தெருள்மாலிதரு சிவன் முதலிய கடவுளர்- தெளிவு மிக்க சிவபெருமான் முதலான கடவுளர் யாவரும்
செயசெய என வழிபட மிக நிலவினை- வெற்றி வெற்றி என (உம்மைத் துதித்து) வழிபடும்படியாகப் புகழ் பெற்று விளங்குகின்றீர்
ஒருபொருள் இருபொருள் பலபொருள் என இகலுறு பல சமயமும்- உள்பொருள் ஒன்று. இரண்டு,பல எனத் தமக்குள்ளே வாக்குவாதம் செய்யும் பல சமயங்களையும்
அருள்பொது நிலையினை-அடியவர்களின் பக்குவநிலைக் கேற்ப வழங்குகின்ற பொது நிலையை உடையவராக விளங்குகின்றீர்
கருமுகில் மிசைவரு மகபதி முதலினர் – மேகத்தை வாகனமாக உடைய இந்திரன் முதலான தேவர்கள்
கடல் அமுது உண – திருப்பாற்கடலிலே கடைந்த அமுதத்தை அடையும்படியாக
மகள் உருவமும் மருவினை-மோகினி என்னும் பெண்ணுருவமும் கொண்டருளினீர்.

ஆனையொன்று மூலமென அந்நாள் அழைத்திடப்போய்
ஏனை விண்ணோர் நாண இடங்கர்நெடு நாவறுத்தாய்!
தந்தைசெய்யுந் தீமையிடைத் தட்டழிந்த தானவச்சேய்
சிந்தைகளி கூரவொரு சீயமாச்சென் றளித்தாய்!
பொல்லார்தம் புன்சபையிற் புண்படும்ஓர் பூவைஉய்ய
எல்லாரும் கண்டுமெச்சும் எண்ணில்கலைப் பேறீந்தாய்!
கார்கடல்நீர் முற்றும்அறக் கைச்சிலைஒன் றாற்கணக்கில்
வார்கணைமா மாரிபெய்தும் வல்லரக்கர் வாழ்வழித்தாய்!
ஆன்அனந்தம் இன்பமுற அந்தரத்து ஆர்த் துப்பொழிந்த
வானமுற்றும் நாணமெய்த மாமலையொன் றேந்திநின்றாய்!
மீனாமை ஏனமுதல் வெவ்வே றுருச்சமைந்துற்று
ஆனாத கீர்த்தி அளவிறந்த கோடிகொண்டாய்!

ஆனை யொன்று மூலமென அந்நாள் அழைத்திடப் போய்-கஜேந்திரனாகிய ஒப்பற்ற யானை ‘ஆதி மூலமே’ என ழிஅழைக்க அன்று உடனே சென்று
ஏனை விண்ணோர் நாண- மற்றுமுள்ள தேவர்கள் எல்லாம் நாணமுறும்படியாக
இடங்கர் நெடுநாவறுத்தாய் முதலையினுடைய நீண்ட வாயை அறுத்தெறித்தீர்
தந்தை செய்யுந் தீமையிடை -இரணியகசிபன் என்னும் தகப்பன் செய்யும் கொடுமைகளால்
தட்டழிந்த நிலை குலைந்த
தானவச் சேய்-அசுரர்குலக் கொழுந்தான பிரகலாதன்-
சிந்தைகளிகூர -மனம் மகிழும்படியாக
ஒரு சீயமாச் சென்று அளித்தாய்- நரசிங்கத் திரு வுருவாய்ச் சென்று ஆட் கொண்டருளினீர்
பொல்லார் தம் புன் சபையிற்-துரியோதனன் முதலிய பொல்லாதவர்கள் நிறைந்த குற்றம் நிறைந்த சபையில்
புண்படும் ஓர் பூவை உய்ய – ஆடை குலைந்து அவமானத்நால் நெஞ்சம் புண்பட்ட திரெளபதி என்னும் ஒருபெண் தப்பும் படியாக
எல்லாரும் கண்டு மெச்சும்- அங்கிருந்த சபையோரே அன்றி விண்ணொரும் மற்ற எல்லாரும் கண்டு போற்றும்படியாக
எண்ணில் கலைப்பேறு ஈந்தாய்-கணக்கற்ற ஆடைகளை யளித்து அருளுனீர்
கார்கடல்நீர் முற்றும் அற – கரிய கடல் நீர் அனைத்தும் வற்றும் படியாக
கைச்சிலை ஒன்றால்- கையிலேந்திய ஒற்றை வில்லால்
கணக்கில் வார் கணைமா மாரி பெய்தும் கணக்கற்ற அம்புகளைப் பெருமழை போல் பொழிந்தும்
வல்லரக்கர் வாழ்வழித்தாய் – இராவணன் முதலான வலிய அரக்கர்களின் உயிரினைப் போக்கினாய்
ஆன் அனந்தம் இன்பமுற பசுக்களின் கூட்டம் எல்லாம் மகிழ்ச்சி கொள்ளும் படியாகவும்
அந்தரத்து ஆர்த்துப் பொழிந்த -ஆகாயத்தில் பேரொலியுடன் பொழிந்த
வாணம் முற்றும் நானமெய்து- -மேகக் கூட்டங்கள் முழுவதும் தோற்று நாணும்படி
மாமலை பொன்றேந்தி நின்றாய் கோவர்ந்தன கிரி என்னும் பெரு மலையை ஒரு விரலால் ஏந்தி நின்றீர்
மீன் ஆமை ஏனம் முதல் வெவ்வேறு உருவச் சமைந்து உற்று- மச்சாவதாரம் கூர்மாவதாரம் வராக அவநாரம் என வேறு வேறு உருவங்களைக் கொண்டு
ஆனாத கீர்த்தி அளவிறந்த கோடி கொண்டாய்- குறையாத பெரும் புகழை அளவில்லாது பெற்றீர்.

இராகவன் என்னும் உழவன் கடலாகிய வனத்தைப் பாணமாகிய அழலினாலே திருத்தி, வயல் உண்டாக-அதனிடத்துச் சேதுவாகிய வரம்யையும் கூட்டி, இராக்கதர் இரத்தமாகிய ஏரிநீரை நிறைவித்து, இலங்கையாகிய பெரிய வயலைச் செறிந்து, இராவணனுடைய பல முடிகளாகிய
களைகளைப் பறித்து விபீடணன் என்றும் பயிரையுண்டாக்கி அப்பபிருக்கு நல்லருள் ஆகிய நீரைவிட்டு, சூரியன் முதலான பல கதிர்கள் முற்றும்படி விளைவித்தான்

பொதுவமி னார்தரு போகம் ஆர்ந்தனை!
கதுமென மாதொடுகாடு சேர்ந்தனை!
அதுஇதுஎ னாதவர் ஆவி ஆர்ந்தனை!
மதுமுத லோர்நெடு மார்பு வார்ந்தனை!
–நாற்சீர் அம்போதரங்கம்

பொதுவமினார் தரு போகம் ஆர்த்தனை- -பொதுவ மினார் – பொதுவர் மின்னார்-ஆயர்பாடியிலுள்ள கோபியர்கள் கொடுத்த இன்பத்தைத் துய்த்தீர்
கதும் என மாதொடு காடு சேர்ந்தனை-கைகேயி கேட்ட வரத்திற்கு வாக்களித்த தந்தையின் சொல்லைக் காப்பதற்காக- சீதையுடன் விரைந்து காட்டைச் சென்று அடைந்தீர்
அது இது எனா தவர் ஆவி ஆர்த்தனை-(இறைவன்மீது பக்தி இல்லாமல்) பரம் பொருள் அத்தகையது, இத்தகையது என்று வீணே அரற்றித் திரியாமல் உண்மையாகத் தவத்தில் ஈடுபடும் அடியார்களுடைய உயிரையே தமக்கு இடமாகப் பொருந்தி இருக்கிறீர்கள்
மது முதலோர் நெடு மார்பு வார்ந்தனை- மது, கைடபன் போன்ற பல அசுரர்களின் வலிமை பொருந்திய பெரிய மார்புகளைக் கிழித்தீர்

ஆர ணத்தொகை நாட்டினை;
கார ணத்தனி வீட்டினை;
அன்பர் தம்புடை மேயினை;
இன்ப துன்பமும் ஆயினை;
–முச்சீர் அம்போதரங்கம்

ஆரணத் தொகை நாட்டினை-பற்பல வேதங்களை உலகில் நிலை நிறுத்தினீர்
காரணத் தனி வீட்டினை- மூலமாகிய பரமபதமென்னும் தனியான இன்பப்பெரு வீட்டினைக் கொண்டீர்
அன்பர் தம் புடை மேயினை – பரம பாகவதர்களாகிய அடியவர் பக்கமாகவே சேர்ந்தீர்
இன்ப துன்பமும் ஆயினை – உலகிலுள்ள எல்லா உயிர்களிடத்தும் இன்ப துன்பங்களுக்கெல்லாம் காரணமாக உள்ளீர்

உளவ றிந்தனை;
துளவ ணிந்தனை;
உண்மை உற்றனை;
திண்மை பெற்றனை.-
-இருசீர் அம்போதரங்கம்

உளவறிந்தனை-மாற்றாரின் உட் கருத்தை அறிந்தீர்
துளவு அணிந்தனை-பரிசுத்தமான துளசி மாலையை எப்பொழுதும் சூடியுள்ளீர்
உண்மை உற்றனை- எப்பொழுதும் சத்தியத்தின் பக்கமே சார்ந்திருப்பீர்
திண்மை பெற்றனை-(இத்தனைக் காரணங்களால் எப்பொழுதும்) மெய்ம்மையாகிய வண்மையை யுடையீர்.

எனலால்–தனிச்சொல்

(“அருமறை முதலிய’ என்பது தொடங்கி திண்மை பெற்றனை என்பது முடிய) இதுகாறும் பலவாறாகக் கூறப் பட்டவாறு.)

நின்மாட் டொன்று நெடிதுஇரக் கின்றேன்
என்மாட் டுன்னருள் இன்றுகொல்? உண்டுகொல்?
உன்னுருக் கொண்டென் உள்ளகத்து ஒருபொருள்
பன்னும் மாற்றம் பல உள ஆயினும்
ஒன்றும்இவ் வுலகத்து ஒளிரக் காண்கிலன்;
என்றும்அன் னவைபொய்த்து ஏகினும் ஏகுக!
மாதவப் பயிர்பொதி வன்களை யென்ன
ஏதமிக்காற்றும் இருங்கலிக் கஞ்சிப்
பரந்தநீர்ப் புணரிப்பார்மிசை பலவாறு
இரந்தலைந் தேங்கி இடையா வண்ணம்
பன்முனை வயிரப் படையான் பயந்த-
வின்மகன் ஆளென வெள்காது ஓதி
நின்ற ஊரில் நீயும் நானும்
நன்றறிந் துய்ந்த நடுவர்பற் பலரும்
அறிதர நிகழ்ந்தபோராடல்
நெறிவழி பிழையா நிசப்பட விளக்கே.-
-ஆசிரியச் சுரிதகம்

நின்மாட்டு ஒன்று நெடிது இரக்கின்றேன் – உம்மிடத்தில்(அடியேன்) ஒரு வரத்தைப் பெரிதும் வேண்டுகிறேன்
என் மாட்டு உன்னருள் இன்று கொல்? உண்டு கொல்?- அடியேனிடத்தில் உம்முடைய அருள் உண்டா? இல்லையா?
உன் உருக்கொண்டு என் உள்ளகத்து ஒரு பொருள் பன்னும் மாற்றம் பல உள- உம்முடைய திருவுருவத்தை ஏற்று
அடியேனுடைய தியானத்தில் பரம் பொருள் கூறி யருளிய சொற்கள் பலவாகும்.
ஆயினும் -இருப்பினும்
ஒன்றும் இவ்வுலகத்து ஒளிரக் காண்கிலன்-இந்த உலகத்தில் அவ் வுரைகள் எதுவும் பலிக்கக் காணவில்லை.
என்றும் அன்னவை பொய்த்து ஏகினும் ஏகுக-ஒருநாளும் நிறைவேறாமல் அவை பொய்யாகிப் போனாலும் போகட்டும்
மாதவப் பயிர் பொதி வன்களை என்ன- பெருந்தவமாகியபயிரிடையே மறைந்திருக்கும் கொடிய களை போன்று
ஏதம் மிக்கு ஆற்றும் இருங்கலிக்கு அஞ்சி- கொடுமை மிகப்புரியும் வறுமைக்கு அஞ்சி
பரந்த நீர்ப் புணரிப் பார்மிசை-பரந்து பட்ட அலை கடலால் சூழப்பட்ட இப் பூமியில்
பலவாறு இரந்து அலைந்து ஏங்கி இடையா வண்ணம்-பலவிதமாகக் கையேந்தி அலைந்து அடியேன் வசங்கெடாதவாறு
பன்முனை வயிரப்படையான் பயந்த- பல முனைகளைக் கொண்ட வச்சிராயுதப் படையுடைய இந்திரனின் மகனாகிய
வில் மகன் ஆள்என வில்லுக்குரிய அருச்சுனனின் அம்சமாகிய அருணகிரி நாதரின் அடியான் இவன் என்று
வெள்காது ஓதி நின்ற ஊரில்- சற்றும் வெட்கப்படாமல்(அடியேன்) சொல்லி நின்ற நகரில் நீயும் நானும் நன்று அறிந்து உய்ந்த நடுவர் பலரும் -தேவரீரும் அடியேனும் ஐயந் திரிபற நன்கு கற்றறிந்த நடு நிலையாளர்கள் பலரும்
அறிதர நிகழ்ந்த பேராடல்- நேரில் அறியும்படியாக நடை பெற்ற திருவிளையாடலை
நெறிவழி பிழையா நிசப்பட விளக்கே- உண்மைக்குப் புறம் பாகாதவாறு உடன் (அனைவருக்கும்) தெரிவிப்பீராக!

இவர் முற்பிறப்பில் அருணகிரியாக யிருந்ததை வேறு பல நூல்களிலும் குறிப்பர். இப்பிறப்பில் சைவக்கோலம் பூண்டவராயினும் திருமால் பக்தி மிக்கவர் என்பதால் இவர் திருவரங்கத்
திருவாயிரம் போன்ற நூல்களை அக்கோயிலிலேயே பலர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தபொழுது, திருமாலே நேரில் வந்து திருவிளையாடல் புரிந்ததை இவர்தம் வரலாற்றில் காணலாம்.

விளங்கனிமேற் கன்றெறிந்தாய்! விண்ணுமண்ணும் தாளால்
அளந்தறிந்தாய்! யாவையுந்தா னானாய்!- தளஞ்செறிபூங்
கண்ணா! தென் வீரைநகர்க் காவலா! கத்தும் என் சொல்
நண்ணாதென் கொல்லோ நவில்–2-நேரிசை வெண்பா-
2-இது, மலர்என்னும் வாய்பாட்டால் முடிந்த இருவிகற்ப நேரிசை வெண்பா.

விளங்கனிமேற் கன்றெறிந்தாய்- உம்மைக் கொல்லும் பொருட்டுக் கன்றின் வடிவங் கொண்டு வந்து வத்சாசுரனைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச்சுழற்றி, விளாமரத்தின் மேல் எறிந்து, அம் மரவடிவாய் வந்த கபித்தாசுரனையும் கொன்றீர்
விண்ணும் மண்ணும் தாளால் அளந்தறிந்தாய்-திருவிக்கிரமாவதாரமாய்த் தோன்றிய போது நின் திருவடி கொண்டு விண்ணையும் மண்ணையும் அளந்தறிந்தீர்
யாவையும் தான் ஆனாய்-எல்லாம் நீரே ஆனீர்
தளஞ்செறிபூங்கண்ணா – அழகிய இதழ்கள் செறிந்து தாமரையை யொத்த கண்களை உடையவரே
தென் வீரை நகர்க் காவலா -அழகிய தெற்கே யுள்ள வீரைநகரின் தலைவரே!
கத்தும் என் சொல் நண்ணாது என் கொல்லோ நவில்- ஓயாமல் பாடிக் கதறும் அடியேன் சொற்கள் நின் செவிகளை வந்து அடைய வில்லையா? சொல்வீராக.

நவில்பூம் புளிநிழல் ஆழ்வானை நாடிமுன் நான்பகர்ந்த
கவிவாஞ்சை யாலவன் சொன்னசொற் போற்பயன் காண்பதென்றோ
செவிதூங்கும் வேழம் பலஆர்க்கும் வீரைத் திருநகரில்
புவிமான் களிப்பும் மலர்மான் சிறப்பும் பொலிதெய்வமே.
–3-கட்டளை கலித்துறை

செவி தூங்கும் வேழம் பல ஆர்க்கும்-தொங்குகின்ற செவிகளையுடைய பல யானைகள் பேரொலி செய்கின்ற
வீரைத் திரு நகரில்-(வளமை மிக்க) வீர கேரளம்புநூரில்
புவிமான் களிப்பும் மலர்மான் சிறப்பும் பொலி தெய்வமே -பூதேவியின் உவகையும் திருமகளின் அன்பும் பெற்று விளங்கும் பெருமாளே-புவிமான்- பூதேவி. மலர்மான்- திருமகள்-
நவில் பூம் புளிநிழல் ஆழ்வானை நாடி -திருப்புளியமர நிழலில் எழுந்தருளியுள்ள நம்மாழ்வாரைப் போற்றி
முன் நான் பகர்ந்த கவி வாஞ்சையால் அவன் சொன்ன சொல் போல் பயன் காண்பது என்றோ – முன்னர் அடியேன் ஆசையுடன் பாடிய பாடல்கள் எல்லாம், அவ்வாழ்வார் பாசுரங்களை நீவிர் சூடியது போன்று சூடும் பெருமையை அடியேன் எப்பொழுது அடைவேனோ அறியேன்.

தெய்யஎன்னும் இடைச்சொல்லின் திருட்டறியாப் புலவோரும்
வையஎன்னைத் துயர்செய்தாய் மனமிரங்கும் கணம்யாதோ?
பையரவின் மிசையாடிப் பசியமயில் இறகணிந்து
செய்யநிறத் தமிழ்வீரைத் திருக்கோயி லமர்வானே.
–4-கொச்சகக் கலிப்பா-

பையரவின் மிசை ஆடி–காளிங்கன் என்னும் கொடிய பாம்பின் மீது நடனம் ஆடியும்
பசிய மயில் இறகு அணிந்து -பச்சைநிற மயிலின் இறகினைச்சூடியும்
செய்யநிறத் தமிழ்வீரைத் திருக்கோயில் அமர்வானே-செந்தமிழ் வளங்கொழிக்கும் வீரகேரளம்புதூரில் கோயில் கொண்டெழுந்தருளியிருப்போரே!
தெய்ய என்னும் இடைச்சொல்லின் திருட்டறியாப் புல வோரும்- தெய்ய என்னும் இடைச்சொல்லின் திருட்டு அறியாது இளம்புலவர்களும்
வைய என்னைத் துயர் செய்தாய்-அடியேனை ஏசும்படியாகத் துன்புறுத்துகின்றாய்
மனம் இரங்கும் கணம் யாதோ(அடியேனின் துயர் தீரும்படி )உள்ளம் இரங்கும் காலம் எப்பொழுது வருமோ? (கூறுவீராக)

அமர ருந்தெரி யாதவ ரோதையா ஆன்பு ரக்கும்மெ யாதவ ரோதை பா
சமர சத்தர் மதிக்குமட் டாக்கரா சலதி தன்னைம திக்குமட் டாக்கரா
விமல ஞானக் குருகைய னையனே வெள்ளை மாதுக் குருகை யனையனே
கமல வாவிகொள் வீரையின் மாயனே காத்தி யேல்மயல் வீரையின் மாயனே.–
5-கட்டளைக் கலிப்பா-மடக்கு-

அமரரும் தெரியாத வரோதயர்-தேவர்களாலும் அறிய முடியாதபடி மிகச் சிறந்த அவதாரங்களை எடுத்தவரே!-வர + உதயா = வரோதயா வடமொழி குணசந்தி
ஆன் புரக்கும் மெய் யாதவர் ஓது ஐயா- பசுக் குலங்களைப் பாதுகாக்கின்றவர்களும் பொய்மை யற்றவர்களுமாகிய முல்லைநில மக்களால் புகழப் படுகின்ற தலைவரே!
சமரசத்தர் மதிக்கும் அட்டாக்கரா -சமய பேதமற்ற ஞானி களால் போற்றப்படுகின்ற திருவெட்டெழுத்தின் மெய்ப் பொருளாக விளங்குபவரே!
சலதி தன்னை மதிக்கும் மட்டாக்கரா –திருப்பாற்கடலைக் கடைகின்ற (வலிமையில்) குறையாத திருக்கரங்களை உடையவரே!-பாற்கடலைக் கடைந்த தேவர், அசுரர் ஆகிய ஒவ்வொருவருள்ளும் அந்தர்யாமியாக நின்று அச்செயல் புரிந்ததும் திருமாலே ஆதலின் “மட்டாக்கரா’ என்பதற்கு அளவற்ற கைகளை உடையவரே’-

விமல ஞான குருகையன் ஐயனே- குற்றமற்ற மெய் ஞானியாகியவரும் திருக்குருகூரருமாகிய நம்மாழ்வாரால் வணங்கப் பெறும் தெய்வமே!
வெள்ளை மாதுக்கு உருகு ஐயன் ஐயனே- வெண்மை நிறத்தினளாகிய கலைமகளின் மேல் அன்பு கொண்டுள்ள பிரம தேவனின் தந்தையே!
கமல வாவிகொள் வீரையின் மாயனே- தாமரைத் தடாகங்கள் நிறைந்த வீரகேரளம்புதூரில் எழுந்தருளியுள்ள திருமாலே!
காத்தியேல் மயல் வீரையில் மாயனே- (தேவரீர் அருள் கூர்ந்து அடியேனை) பாதுகாத்தருளுவீராகில் நான் மாயையாகிய கடலில் வீழ்ந்து வீணே இறக்க மாட்டேன். உமது ஒப்பற்ற திருவடிகளை அடைந்து உய்வேன் என்றபடி.

மாயவுல கிடைநிகழும் மனிதர்விலங்கு ஆதியபல் வகைக்கும் வேண்டும்
நேயவழி உணவூட்டும் நீயெனைஏன் அதிற்பெரிதும் நிர்ப்பந் தித்தாய்?
தீயவரைச் செகுக்கமுயன் றுள்ளேன்மீது உன்றன்உளத் திருத்தி யின்றோ?
வேயணிகைக் கோபாலா! வியன்வீரைப் பதிபுரக்கும் விகிர்த மாலே
.–6-அறுசீர் ஆசிரிய விருத்தம்

வேய் அணி கைக்கோபாலா -குழலினைக் கையிலேந்திய இடையர் குலத்தரசே!
வியன் வீரைப்பதி புரக்கும் விகிர்த மாலே-பெருமை மிக்க வீர கேரளம்புதூரைக் காக்கும் நட்புடைய திருமாலே!
மாய உலகிடை நிகழும் மனிதர் விலங்கு ஆதிய பல்வகைக்கும்-தேவரீரின் மாயத்தின் விளைவாகிய இப் பூமியில் தோன்றும் மக்கள், விலங்குகள் முதலான பற்பல உயிரினங்களுக்கும்
நேய வழி வேண்டும் உணவு ஊட்டும் நீ அன்பு வழியிலே அவற்றிற்கு இன்றியமையாததாகிய போகப் பொருள்களை வழங்கிக் காப்பாற்றுகின்ற தாங்கள்
எனை ஏன் அதில் பெரிதும் நிர்ப்பந்தித்தாய்- அடியேனை ஏனோ அப் போகப் பொருள்கள் பெறுவதற்காகவே அலையுமாறு விட்டீர்
தீயவரைச் செகுக்க முயன்றுள்ளேன் மீது உன்றன் உளத்திருத்தி இன்றோ (உயிர்க் கொலை போன்ற பாவங்களைச் செய்யும்) கொடியவரை அழித்து ஓடுக்க முயன்றுவரும் அடியேன் செயல் கண்டும் இன்னும் உம் உள்ளம் நிறைவு அடைய வில்லையா? கூறியருளுவீராக.

மால லாற்பிறிது ஒருபரம் இன்றெனும் வயிணவ நெறிசார்ந்த
சீலர் தங்களிற் பிரிந்திகல் கொடிதறத் தீர்ப்பதே விழைகின்றேன்;
கால வாதனைக் கடற்சுழி கடந்துயக் கடைக்கணித் தருளாயோ?
நீல மால்வரை யெனத்தமிழ் வீரையில் நிலவிய நெடியோனே.–7
-எழுசீர் ஆசிரிய விருத்தம்

நீல மால்வரை எனத் தமிழ் வீரையில் நிலவிய நெடியோனே–நீல நிறமுடைய பெரிய மலை போன்று, தமிழ்ச் சான்றோர் நிரம்பிய வீர கேரளம்புதூரில் கீர்த்தி பெற நிற்கும் திரிவிக்கிரமனானவரே!
மால் அல்லால் பிறிது ஒருபரம் இன்று எனும் வயிணவ நெறி சார்ந்த சீலர் – திருமால் ஒருவரைத் தவிர வேறொரு பரம் பொருள் இல்லை என்னும் நெறியைக் கொண்ட நற்குணச் சான்றோர்களாகிய வைணவப் பெருமக்கள்
தங்களில் பிரிந்து இகல் கொடிது அறத் தீர்ப்பதே விழை கின்றேன்-தங்களுக்குள்ளேயே (வடகலை, தென்கலை)இரு பிரிவினராகப் பிரிந்து நின்று வாதஞ் செய்யும் கொடுமையை முற்றிலும் தேவரீர் நீக்கி யருள வேண்டுமென அடியேன் விரும்புகின்றேன்
கால வாதனைக் கடற்சுழி கடந்து உய்யக் கடைக் கணித்து அருளாயோ-கலி காலமாகிய துன்பந் தருகின்ற கடற் சுழற்சியிலிருந்து விடுபட்டு உலகம் ஈடேறும்படியாக நீவீர் கிருபை செய்து அருள்புரிய மாட்டீரோ? அருள்வீராக.

நெடியவனைச் செஞ்சிறைப்புட் பரிமேற் செம்பொன் நேரிழையோடு உன்னியுன்னி நிகம கோடி)
முடிவில்நுவல் எட்டெழுத்தும் மொழிந்தெட் டான முறையுணர்ந்து மெய்ஞானம் முழுகும் மேலோர்
அடியவர்தம் வேடமொரு சிறிதும் இல்லாரானாலும் அவர்பதத்தூள் அணிவேன் கண்டீர்!
கடிமதிற் தென் வீரைநகர்ப் புலவீர்! உள்ளக் கருத்தறிவான் வள்ளல்என்சொல் கடைப்பாற் றன்றே.
–8-எண்சீர் ஆசிரிய விருத்தம்

கடிமதில் தென்வீரைநகர்ப் புலவீர்- காவற் சிறப்புள்ள மதில்களையுடைய தென் வீரை நகரத்து அறிஞர்களே!
நெடியவனைச் செஞ்சிறைப் புட்பரிமேல் செம்பொன் நேரிழையோடு உன்னி உன்னி-சிவந்த இறகுகளையுடைய கருட வாகனத்தின் மேலே திருமகளுடன் வீற்றிருக்கும் நெடுமாலின் திருக் கோலத்தை இடைவிடாது தியானித்தும்
நிகம் கோடி முடிவில் நுவல் எட்டெழுத்தும் மொழிந்து -பல வேதங்களும் தமது முடிந்த முடிபாகச் சொல்லுகின்ற அட்டாட்சரமாகிய விஷ்ணு மந்திரத்தையே ஜபித்தும்
எட்டான முறை உணர்ந்து- அட்டமா சித்திகள் கை வரப்பெற்று
மெஞ்ஞானம் முழுகும் மேலோர் – உண்மையான ஆன்ம ஞானம் அடையப் பெற்ற பெரியோர்கள்
அடியவர் தம் வேடம் ஒரு சிறிதும் இல்லார் ஆனாலும் – (வெளித் தோற்றத்தில்) திருமாலடியார்கள் போன்று கோலங்கள் கொண்டிருக்காவிடினும்
அவர் பதத்தூள் அணிவேன் கண்டீர்- அவர்களுடைய திருவடி பட்ட மண்ணையும் திருமண் ஆக அடியேன் அணிவேன்; இது உறுதி!
உள்ளக் கருத்தறிவான் வள்ளல்- அடியேன் உள்ளத்தே உறைந்திருக்கும் இவ் வுண்மையை அந்தக் கண்ணனும் அறிவார்
என் சொல் கடைப்பாற் றன்றே- அடியேன் மொழிகள் வீணானவை யல்ல என்பதை அறிவீராக.

(இக் கலம்பக நூலில் ஆறு, ஏழு. எட்டு ஆகிய செய்யுட் களை முறையே ஆறுசீர், ஏழுசீர், எண்சீர் ஆசிரிய விருத்தங்க ளாலேயே அமைத்திருப்பதும் ஒரு சிறப்பாகும்.)

அன்று வந்தென்மன மாம்வெளி யிடைநீ அஞ்சல் அஞ்சலென ஓதிய அருள்நீர்
இன்று குன்றியது போல்வதென்? அடியேன் இந்த வெந்துயரில் மூழ்குதல் முறையோ?
மன்றுள் ஒன்றுபல காவலர் எதிரே வம்பு விண்டவனும் வாழ்வுறல் படிறோ!
கன்று டன்பசுவெ லாமகிழ் வுறுசீர் கண்ட பைம்பொழில்கொள் வீரையின் அரசே.-
-9—தந்த தந்ததன தானன தனனா’ என்னும் சந்தஸ்ஸித்தில் அமைந்த எண்சீர் வண்ண விருத்தம்.

கன்றுடன் பசுவெலாம் மகிழ்வுறு சீர்கண்ட பொழில்கொள் வீரையின் அரசே – (அன்று) ஆயர்பாடியில் கன்றுடன் பசுக் கூட்டமெல்லாம் மகிழும்படியாகக் காத்தருளி இன்று இந்தச் சோலைகள் நிறைந்த வீரை நகருக்குத் தலைவராக வீற்றிருப்பவரே!
அன்று வந்த என் மனமாம் வெளியிடை- முன்பொரு நாள் வந்து என் மனக் காட்சியில் தோன்றி
நீ அஞ்சல் அஞ்சல் என ஓதிய அருள்நீர் – நீ அச்சமடையாதே அச்சமடையாதே என்று கூறிக் கிருபை செய்த நீவிர்
இன்று குன்றியது போல்வது என்- இப்பொழுது பாராதிருப்பது ஏனோ?
அடியேன் இந்த வெந்துயரில் மூழ்குதல் முறையோ? – அடியவனாகிய நான் இவ்வாறு துன்பத்தில் அழுந்தியிருப்பது முறைமை தானா?
மன்றுள்ஒன்று பல காவலர் எதிரே வம்பு விண்டவனும் வாழ்வுறல் படிறோ? -சபையில் பல காவலர் முன்பு தீச் சொல் சொல்லியவனும் பிழைத்திருப்பது வஞ்சகம் தானோ? கூறுவீராக.(நீதிமன்றத்தில் பொய்ச் சாட்சி சொல்பவரும் இக் காலத்தே நன்றாக வாழ்கின்றனரே, இது உம் ஆட்சியின் குறையோ எனினுமாம்.)

அரசாளு மிக்கதிரு வுடையாரில் நற்குணர்தம் அரணாமெ னப்பெரிது சுற்றிப் புரந்தவே;
அரவேறு கத்திகையன் நிகர்பாத கத்தர்குடை அழிவாகி டத்தகும்வி தத்தைச் செய்கின்றவே;
அனல்போல்வி ழித்துநெடு மலைபோலு றுக்கிவரும் அடல்வேழம் ஒற்றையின்ம ருப்பைக் கவர்ந்தவே;
அனையோடு தித்தகொடி யவன்ஏவ லிற்தொடரும் அசுராதி யர்க்கொலைசெய் மற்பெற் றெழுந்தவே;

இரவேயெ னக்ககன நிறைவாய்அ றற்பொழியும் எழுமேகம் வெட்குறஓர் வெற்பைச்சு மந்தவே;
இடிநேர்தொ னிந்தவள வளையோடு சக்கரமும் இசைவாய்என் உட்கனவில் உறறுக் கவீன்றவே
எமகால னைச்சடையின் மிசைமோ தருச்சுனன்இரதமாவி னைக்கடவும் நட்பிற் பொலிந்தவே;
இடைநோவு றப்பலபல் கிரிபோல் எழுச்சியுறும் எழில்மாமு லைத்தொகுதி முட்டக் கிடந்தவே;

பரலோக நட்பர் உணர் புகழ்மாறன் முற்பதின்மர் பகர்பாடல் கட்டுளவம் ஓக்கப் புனைந்தவே;
பனிநீர்ம கட்கினிய மகன்ஆர்வ மிக்குறஓர் படையேவு தற்பொருதி ருட்டைப் புரிந்தவே;
பலவாம்உ றித்தயிர்கொள் விளையாட லைச்சொல்பவர் பகைபாவ முற்றறஓ ழிக்கத் துணிந்தவே;
பணிவான்உ யிர்க்கிறுதி மருவாது அருக்கன்உறு பகலூடி ருட்டைவரு விக்கத் தெரிந்தவே;

நரகாதி பத்தியம்எய்து ஒருபாவி முத்திபெற நகுபாசி லைச்சிறிய தட்டிட் டெறிந்தவே;
நலமேமி குத்தபசு வினம்வாழ் வுறத்திகிரி நடுவேது ளைத்தகுழல் வைத்துப் பயின்றவே;
நகர்மாசு ணத்திறைவர் பலர்வாய் உரைத்திடினும் நசையார்பு கழ்க்குமுடி வற்றுப் படர்ந்தவே;
நளிர்வீரை யிற்குலவும் இதயா லயற்கினிய நவநீத கிட்டிணர்தம் வெற்றிப் புயங்களே.(பதினாறு கலைகளைக் கொண்ட புய வகுப்புப் பாடல்–தனதான தத்ததன தனதான தத்ததன தனதான தத்ததன தத்தத் தனந்தனா)

இப்பாடலுள், பதினாறாங்கலையில் உள்ள வெற்றிப் புயங்கள்’ என்னும் எழுவாய் முதற்கலையில் உள்ள புரந்தவே முதல் பதினைந்தாங் கலையிலுள்ள படர்ந்தவே’ முடிய உள்ள பதினைந்து பயனிலைகளைத் தனித்தனியே பெற்று முடிந்தது. இதனை இறுதிநிலைத் தீபக அணி என்பர்

நளிர் விரையில் குலவும் இதயாலயற்கு இனிய- பெருமை மிக்க வீரை நகரில் மகிழ்வுடன் வீற்றிருக்கும் இருதயாலய மருதப்ப தேவர் என்றும் இன்பமுடன் போற்றி வணங்குகின்ற,
நவநீத கிட்டிணர் தம் வெற்றிப் புயங்கள்- நவநீத கிருட்டிணனுடைய வெற்றி மிகுந்த திருத் தோள்கள்.
அரசாளும் மிக்க திருவுடையாரில்-அரசாட்சி செய்யும் மேன்மை மிக்கோருள்,
நற்குணர் தம் அரண் ஆம் என-(பாண்டவர்கள் போன்ற நல்ல குணங்களை உடையவர்களுக்குக் காவலாகும் என்னும் படியாக
பெரிது சுற்றிப் புரந்தவே – அவர்களைச் சுற்றியிருந்து காப்பாற்றுவன;
அரவு ஏறு கத்திகையன் நிகர் பாதகத்தர் -பாம்புக் கொடியை யுடைய துரியோதனன் போன்ற தீயவர்கள்,
குடை அழிவாகிடத்தகும் விதத்தைச் செய்கின்றவே – குடை(ஆட்சி) ஒழியும் படியான செயல்களைப் புரிந்தன;
அனல்போல் விழித்து நெடுமலைபோல் உறுக்கிவரும்-நெருப்பைப் போன்ற கண்களுடன் பெரிய மலை போன்று குதித்துக்கொண்டு மிக்க கோபத்துடன் வருகின்ற,
அடல்வேழம் ஒற்றையின் மருப்பைக் கவர்ந்தவே- வலிமை பொருந்திய குவலயாபீடமென்னும் மதயானையின் தந்தங்களைப் பறித்து எறிந்தன;
அனையோடு உதித்த கொடியவன் ஏவலில் தொடரும் – தன் தாயொடு பிறந்த மிகக் கொடியவனான கம்சன் தூண்டி அனுப்பியதால் தொடர்ந்து வருகின்ற,
அசுராதியர்க் கொலைசெய்மற்பெற்று எழுந்தவே-(சாணூரன்,முஷ்டிகன் ஆகிய) அசுரர்கள் பெரு மல்லர்களாக வந்து பெரும் போர் செய்த போது அவர்களை அப்பொழுதே கொன்று வெற்றி பெற்றன ;
இரவே எனக் ககனம் நிறைவாய் அறற் பொழியும் – சூரிய ஒளியே தெரியாதவாறும் இரவு என்று சொல்லும்படியாகவும் இருள் சூழ்ந்து, ஆகாயம் முழுவதும் நீர் நிறைந்து, கல் மழையாகப் பொழிகின்ற,
எழுமேகம் வெட்குற ஓர் வெற்பைச் சுமந்தவே- புஷ்கலா வர்த்தகம் முதலிய ஏழு மேகங்களும் வெட்கப்படும்படியாகக்
கோவர்த்தனம் என்னும் மலையைக் குடையாகப் பிடித்து ஏழுநாள் சுமந்தன
இடிநேர் தொனித்த வள வளையோடு சக்கரமும் – இடியோசை போன்று ஒலிக்கும் மாட்சிமை கொண்ட சங்கும் சக்கரமும்
இசைவாய் என் உட்கனவில் உற்றுக் கவின்றவே – திருக்கரங்களில் பொருந்தி அடியேனுடைய உள்மனத்துள் அழகுற நிறைந்தன;
எமகாலனைச் சடையின் மிசைமோதும் அருச்சுனன்-கால காலனாகிய சிவபெருமானை வெல்லும் அருச்சுனனுடைய
இரத மாவினைக் கடவும் நட்பிற் பொலிந்தவே -தேரின் குதிரைகளைச் செலுத்தும் செயலினைக் கொண்டு பொலிவடைந்தன;
இடைநோவுறப் பலபல் கிரிபோல் எழுச்சியுறும்- (ஆயர் குலப்பெண்களின்) மெல்லிய இடுப்பு வருந்தும்படியாக உயர்ந்த மலைகளைப் போலப் பூரித்துக் கிடக்கும்.
எழில்மா முலைத்தொகுதி முட்டக் கிடந்தவே- இளமையும் அழகும் மிக்க மார்பகங்கள் யாவும் நெருங்கி அணையுமாறு விளங்கின,
பரலோக நட்பர் உணர் புகழ்மாறன் முற்பதின்மர்- வைகுந்தத்தை விரும்புபவர்களாலேயே உணரத் தகும் பெரும் புகழ் படைத்த சடகோபாழ்வார் முதலான பத்து ஆழ்வார்கள்,
பகர் பாடல்கள் துளவம் ஒக்கப் புனைந்தவே-சொல்லுகின்ற திவ்வியப் பாசுரங்களையெல்லாம் துளசி மாலையை மகிழ்ந்து அணிவது போன்று அணிந்தன;
பனிநீர் மகட்கு இனிய மகன் ஆர்வம் மிக்குற – கங்கையின் மைந்தனாகிய பீமர் மனம் மகிழ்ச்சியடையும்படி,
ஓர் படை ஏவுதற் பொருதிட்டைப் புரிந்தவே- ஒப்பற்ற சக்ராயு தத்தை ஏவுவதைப் போலப் பாசாங்கு செய்தன;
பலவாம் உறித்தயிர்கொள் விளையாடலைச் சொல்பவர்–(ஆயர்பாடியில்) பல இல்லங்களிலும் மகளிர் உறிகளில் வைத்திருந்த தயிர், வெண்ணெய் ஆகியவற்றைத் திருடி உண்டதைப் புகழ்ந்து துதிப்போரின் (கண்ணனின் பால லீலைகளைக் கூறுவோருக்கு)
பகை பாவம் முற்றற ஒழிக்கத் துணிந்தவே – இன்னல்களை யெல்லாம் அழிக்க முற்பட்டன;
பணிவான் உயிர்க்கு இறுதி மருவாது-தன்னை எப்போதும் வணங்குபவனாகிய அருச்சுனன் உயிர்க்குத் தீங்கு ஏற் படாதவாறு.
அருக்கன்உறு பகலூடு இருட்டை வருவிக்கத் தெரிந்தவே- சூரியன் பிரகாசிக்கின்ற பகற்பொழுதிலேயே (தன் சக்கரப் படை கொண்டு மறைத்து)போர்க்களத்தில் இருளை வரவழைத்துக் காட்டின
நரகாதிபத்தியம் எய்து ஒருபாவி முத்திபெற -நரர்களுக்குத் தலைமை ஏற்றுத் துன்புறுத்தி வந்த தீயோன் ஒருவன் முத்தி அடையும்படி
நகு பாசிலைச் சிறிய தட்டிட்டு எறிந்தவே – பச் சிலையைச் சிறிய தட்டிலிட்டு வீசின;
நலமே மிகுந்த பசுவினம் வாழ்வுற – மன்னுயிர்கட்கெல்லாம் பயன் மிக அளிக்கும் பசுக்கூட்டங்கள் மகிழும்படியாக ;
திகிரி நடுவே துளைத்த குழல் வைத்துப் பயின்றவே – மேலே துளை செய்யப்பட்டுள்ள இசையெழும் மூங்கிற் குழலைத் தாங்கின;
நகர் மாசுணத் திறைவர் பலர் வாய் உரைத்திடினும் ஊர்ந்து செல்கின்ற பாம்புகளின் தலைவனாகிய ஆதிசேடன் போல ஆயிரம் வாய் படைத்தவர்கள் பலர் கூடிப் போற்றிப் புகழ்ந்திடினும்;
நசை ஆர் புகழ்க்கு முடிவற்றுப் படர்ந்தவே – விருப்பம் மிக்க கீர்த்திக்கு எல்லையே இல்லாமல் நிறைந்தன.

புயல்நேரு மேனிப் புருடோத் தமனைக்
கயல்நீர்க் கழனிவளங் காணும் -வியனார்ந்த
வீரைப் பதியில் விரும்புநலம் பெற்றபின்மற்
றாரைப் பொருட்படுத்தலாம்?–11-நேரிசை வெண்பா

புயல் நேரும் மேனிப் புருடோத்தமனை–நீல மேகம் போன்ற நிறத்துடன் கூடிய மேனி கொண்ட திருமாலை,
கயல் நீர்க் கழனி வளம் காணும் கயல் மீன்கள் நிறைந்து காணும் நீர்வளம் மிக்க வயல்களை யுடைய,
வியனார்ந்த வீரைப்பதியில்- பெருமை மிக்க வீரகேரளம் புதூரில் (கோயில் கொண்டு எழுந்தருளி யுள்ளவாறு),
விரும்பு நலம் பெற்றபின் – யான் விரும்பிய வண்ணம் கண்டு களித்ததன் பின்பு,
மற்று ஆரைப் பொருட் படுத்தலாம்- அடியேன் இனி யாரை ஒரு பொருட்டாகக் கருதுவேன்? (கருத மாட்டேன் என்பதாம்)

ஆம்பலன் றோலிடச் சென்றளித் தாய்என் றறைதலினால்
நோம்பல வாதனை யுந்தவிர்ப்பாய்என்ன நோக்குகின்றேன்|
வேம்பல என்சொல் அறிந்தே மிகவும் விரும்புகின்றாய்
தேம்பலம் தீர்த்தருள் வாய்வீரை மேவிய சீதரனே-
-12-கட்டளைக் கலித்துறை

வீரை மேவிய சீதரனே-வீர கேரளம் புதூரினை வந்தமர்ந்திருக்கும் திருமகள் மகிழ் மார்பா,
விரும்பி ஆம்பல் அன்று ஒலிடச் சென்று அளித்தாய்என்று அறைதலினால்- கசேந்திராழ்வான் அன்று முதலை வாயினில் அகப்பட்ட பொழுது ஆதிமூலமே என்று கூவி அபயமிட்டு அழைத்தவுடன் சென்று காத்தீர் எனப் பலரும் கூறுவதால்,
நோம்பல வாதனையும் தவிர்ப்பாய் என்ன நோக்குகின்றேன்- அடியேனுக்குற்ற பல பெருந் துன்பங்களை யெல்லாம் தீர்த்தருள்வீர் என்றே உம்மை நோக்கி யுள்ளேன்.
வேம்பல என்சொல் அறிந்தே மிகவும் விரும்புகின்றாய்- என்னுடைய பாடல்கள் அனைத்தும் இனியவை என்பதையும் மிகுதியாகவே தெரிந்து வைத்துள்ளீர்!
தேம்பு அலம் தீர்த்து அருள்வாய்-மெலிதலைத் தருகின்ற சஞ்சல மெல்லாம் ஒழித்துக் காப்பீராக!

சீதளநீர்ப் பதத்தானே சீதளநீர்ப் பதத்தானே
நாதருக்கார் தம்மானே நாதருக்கார் தம்மானே
காதலறத் தடுப்பானே காதலறத் தடுப்பானே
வீதனையூர் வீரையனே வீதனையூர் வீரையனே.–13-கொச்சகக் கலிப்பா-அடிமடக்கு
-இப்பாடலில் பாடகமடக்கு என்னுஞ் சொல்லணி பயின்றது.

சீதள நீர் பதத்தானே – தாமரையின் தன்மையைப் பெற்ற திருவடிகளை உடையவரே!
சீதள நீர் பதத்தானே-குளிர்ச்சி மிக்க பாற்கடலாகிய இடத்தை உடையவரே!
நாத ருக்கார் தம்மானே-ஒலிச்சிறப்பு மிக்க வேதங்களை ஓதும் அந்தணர்களின் தலைவரே!
நாதருக்கு ஆர்த்து அம்மானே-ஞானிகளுக்குத் தம்மையே அநுபவிக்கும்படி அருளும் தலைவரே!
காது அல் அற தடுப்பானே -கொல்வதைப்போல் துன்புறுத்துகின்ற அறியாமையாகிய இருட்டு நெருங்காதபடித் தூரத்தே விலகச் செய்பவரே!
காதல் அறத்து அடுப்பானே- விரும்பத்தக்க தரும நெறியில் ஒழுகுபவர் மாட்டுத் தாமே வந்து பொருந்துபவரே!
வீதனை ஊர் வீர ஐயனே – கருடனாகிய பறவையைச் செலுத்துகின்ற வீரமிக்க தலைவரே!
வீதல் நை ஊர் வீரையனே – வறுமையை வருத்துகின்ற ஊராகிய வீரகேரளம்புதூரின் இறைவனே!

ஐயமுற்றுத் தவமெதுவோ என்றேங்கித் தடுமாறும் அறிவி வீர்காள்
செய்யநிறப் புட்பரிமேல் திருவொடுநாரணனிருந்த தீர்க்கம் நாடிக்
கையறவில் லார்வளர்சீர் வீரைமுதல் ஊர்தோறும்போய்க் கவிகள் பாடித்
துய்யருக்குஆ ருயிராகித் துட்டருக்கோர் எமனாகித் துணிதல் தானே.–14-அறுசீர் ஆசிரிய விருத்தம்

ஐயமுற்றுத் தவம் எதுவோ என்று ஏங்கி- இறைவனைச் சென்றடைய முடியுமோ முடியாதோ என உள்ளத்தில் மிக்க சந்தேகத்துடன், உலக பந்தங்களை யெல்லாம் நீக்கியும் அவை நீங்காது தவம் என்பது எதுவாக யிருக்கும் என்று பலவாறு ஏக்கமுற்று,
தடுமாறும் அறிவிலீர்காள் – மனங்கலங்கும் அறிவற்ற மூடர்களே!
செய்ய நிறப் புட்பரிமேல் திருவொடு நாரணன் இருந்த தீர்க்கம் நாடி-சிவந்த வண்ண இறகுகளுடன் கூடிய கருட வாகனத்தின் மேலே இலக்குமி தேவியுடன் நாராயணன் வீற்றிருக்கும் பரிபூரண கோலத்தை மனத்தில் விரும்பி யிருந்து,
கையறவு இல்லார் வளர் சீர்வீரைமுதல் -ஒழுக்கமின்மை என்பதே இல்லாத செயலோங்கு தன்மை மிக்க பல பெரியோர்கள் வாழ்கின்ற பெருமையுடன் கூடிய வீரகேரளம்புதூர் முதலான, ஊர்தோறும் போய்க் கவிகள் பாடி- திருமால் உறையும் திவ்வியத் தலங்களுக்கெல்லாம் சென்று பாசுரங்களை இசைத்து மகிழ்ந்து,
துய்யருக்கு ஆருபிர் ஆகி – மனம் மொழி மெய்யினில் மிகவும் பரிசுத்தமான வர்கட்கெல்லாம் பெருந்துணையாக இருந்து,
துட்டருக்கோர் எமன் ஆகித் துணிதல் தானே – தீயவர்கட்கெல்லாம் ஒரு காலனைப் போல அழிக்கும் துணிச்சலுடன் செயல்படுவதே பெருந் தவமாம்

துணிவொரு கோடி பொருந்தினும், முதுநூல் சொல்லற முழுதியற் றிடினும்
அணி நகைத் துவர்வாய் அரம்பையர் வலிதுற்று அணைதலா தியநலம் பெறினும்
பணியணைத் திருப்பாற் கடல்விடுத் தெழுந்து பார்புகழ் வீரையம் பதியில்
மணிமுகில் எனநின் றருள்செய்வான் மலர்த்தாள் மறந்தவர் பிறந்துழல் வாரே
.–15-எழுசீர் ஆசிரிய விருத்தம்

துணிவு ஒருகோடி பொருந்தினும்-இவ் வுலகச் செயல்களில் முழுவதுமாக ஈடுபட்டுப் பொருந்தினாலும்
முது நூல் சொல்லற முழுது இயற்றிடினும்-பழமையான நன் மொழிகள் நிறைந்த நூல் பல எழுதினாலும்
அணி நகைத் துவர்வாய் அரம்பையர் வலிது உற்று அணைதல் ஆதிய நலம் பெறினும் – அழகு மிக்கதும் செம் பவள நிறத்துடனும் விளங்கும் புன்னகை யிதழ்களை யுடைய தேவலோகக் கன்னியர் வலிய வந்து அணைக்கும் சுகமே அடைந்தாலும்
பணி அணைத் திருப்பாற்கடல் விடுத்து எழுந்து – திருப்பாற் கடலில் ஆதிசேடன் மீது அறி துயில் கொண்டிருப்பதை விட்டு எழுந்து
பார்புகழ் வீரையம் பதியில்- இப்பூவுலகே போற்றி செய்யும் வீரகேரளம்புதூர் என்னும் திருத்தலத்தில்
மணிமுகில் என நின்று அருள் செய்வான் – அழகுமிக்க கருமேகம் போன்று கோலங்கொண்டு காத்தருள்கின்ற கண்ண பெருமானின்
மலர்த் தாள் மறந்தவர் பிறந்து உழல்வாரே-தாமரையை யொத்த திருவடிகளைத் தொழுது போற்றி செய்யாதவர் இவ் வுலகில் மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் துன்பமே பெறுவர்.

வாரணமும் இரணியன்தன் மதலையும்பாண் டவரோர் மனைவியும்போற் தாம்வாழ்வான் வருத்திடினும் அருள்நீ
ஆரணத்தேர டாகமங்கட்கு உயிராய பசுமுற்று அலமராவா றயர்வேற்கு அருள்புரியா தேனோ?
பாரணங்கும் சீரணங்கும் பரிசுகுன்றி லாரோ? பரிதிமதி ஒளியுமட்கப் பாவமிகல் படிறோ?
நாரணப்பேர்க் கருமுகிலே! வீரைநகர்க் கோயில் நவநீத கிருட்டிணனாம் ஞானகுரு பரனே.–16-எண்சீர் ஆசிரிய விருத்தம்

நாரணப்பேர்க் கருமுகிலே-எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாகிய நீரையே இடமாகக் கொண்டு நாராயணன் என்ற திருநாமத்துடன் விளங்கும் நீலமேக வண்ண முடையோரே!
வீரைநகர்க் கோயில் நவநீதகிருட்டிணன்ஆம் ஞான குரு பரனே – வீரகேரளம்புதூரிலே கோயில் கொண்டெழுந் தருளியுள்ள நவநீத கிருட்டிணன் கோலத்துப் பரமகுருவே
வாரணமும் இரணியன் தன் மதலையும் பாண்டவர் ஓர் மனைவி யும் போல்- கசேந்திரனும் பிரகலாதனும் திரௌபதையும் போன்று
தாம் வாழ்வான் வருத்திடினும் அருள்நீ- உள்ளத்தால் நினைத்து வருந்தி யழைத்தவுடனே சென்றருளும் நீவீர்
ஆரணத்தோடு ஆகமங்கட்கு உயிர்ஆய பசு முற்று அலமராவாறு அயர்வேற்கு- வேதாகம சாத்திரங்களுக்கெல்லாம் ஆதார நிலை போல்வதான பசுக்கள் கொலை யுண்டு துன்பப் படாதவாறு தடுக்க முயன்று வாடி வருந்தும் அடியேனுக்கு
அருள் புரியாதது ஏனோ?- (உலகில் பசுக் கொலைகளைத்nதடுத்து) இன்னும் கிருபை செய்யாதிருப்பது ஏன் என்று கூறுவீராக!
பார் அணங்கும் சீர் அணங்கும் பரிசு குன்றிலாரோ – பூமி தேவியும் சீதேவியும் நீவீர் அருளுவதைத் தடுக்கின்றார்களோ?
பரிதி மதி ஒளியும் மட்கப் பாவம் மிகல் படிறோ- சூரியனும் சந்திரனும் மறைய ஒளி மழுங்கி இருளே பரவும் என்பது பொய்யோ? கூறுவீராக.

ஞான குருவென நிற்கும்நின் நிலைதேர் வீரகேரளம்புதூர் ஞாய மருவியும் இப்படி யடியேன்
மான மறதியு றத்தகு சிறியோர் வாயும் நகமெலி வுற்றிடல் முறையோ?
கான மலிகுழல் வைத்தகை அமுதே! காம னுடன்அய னைத்தரு முதல்வா!
மீன உருவொட ளக்கரும் அளைவாய் வீரை நகர்மரு தற்கினி யவனே.–17-(தான் தனதன தத்தன தன்னா)எண்சீர் வண்ண விருத்தம்

கானம் மலி குழல் வைத்த கை அமுதே – இனிய இசையைப் பொழியும் குழலினைக் கையில் ஏந்தியிருக்கும் அமுத மயமானவரே!
காமனுடன் அயனைத் தரும் முதல்வா-எல்லா வுயிர்களுக்கும் பொதுவான மன்மதனையும் எல்லாவுயிர்களையும் படைத் தருளும் பிரமனையும் படைத்தளித்த முழுமுதற் கடவுளே!
மீன உருவொடு அளக்கரும் அளைவாய்- மச்சாவதாரத்தில் கடலைக் கலக்கியவரே, அளவிடவியலாத வெண்ணெய் உண்ட வாயனாய் விளங்கும் நவநீதகிருட்டிணரே!
வீரைநகர் மருதற்கு இனியவனே – வீரகேரளம்புதூரினை விளங்க வைக்கும் மருதப்பனாகிய இருதயலாயருக்கு இன்பம் அளிப்பவரே!
ஞான குரு என நிற்கும் நின் நிலை தேர் ஞாயம் மருவியும்- அன்று அருச்சுனனுக்காகப் போரில் பகவத்கீதையை அருளி அனைவருக்கும் ஞான குருவாய் நின்ற உம்முடைய பேரருளை நன்குணர்ந்து தெளிந்த பின்பும்,
இப்படி அடியேன் மானம் மறதி உறத்தகு சிறியோர் வாயும் நக மெலிவுற்றிடல் முறையோ- எளியேனாகிய நான், அவமானத்திற்கெல்லாம் அஞ்சாத கீழ்மக்களின் ஏளனத்திற்கு ஆளாகித் தவிப்பது நியாயந்தானோ? கூறுவீராக.

இனியுனக் கொருகுறையும் இல்லைமுக் காலும்நிம் என்றுநம் புன்றன் ஆணை
இப்பொழுது தான்மலைவி டுத்துவந் தோம்முன்னம் எண்ணில்கல கத்தி ருந்தோம்
பனிமலர்க் கொம்பைக்கொ ணர்ந்துன துகையிற் பளிச்செனத் தரவும் வல்லோம்
பன்னீரண் டாயசம யத்தும்க லந்துரிமை பலபேசி உறவு செய்வோம்
நனிவருந் தாதுவகை ஐந்துமறி வோம்பெருக நல்லரச மும்கு டிப்போம்
நாகங்க ளைந்தரித் தகமொடு புறத்துமிக நடமாடு வோம்ந மக்குக்
கனிகிழங் கன்றிஉண வெய்தவிலை, இன்றுநாம் கழறுணவு முழுதும் அருள்வாய் |
கண்ணனைத் தென்அளகை நிகர்வீரை நகரூடு கருதும்ஒரு சித்தர் யாமே-
-18–இரட்டையாசிரிய விருத்தம்-

இனி உனக்கு ஒரு குறையும் இல்லை–இதன் பிறகு உங்களுக்கு எவ்விதமான குறையும் இருக்காது
முக்காலும் நிசம் என்று நம்பு- இறப்பு எதிர் நிகழ்வு ஆகிய மூன்று காலங்களிலும் உண்மை என்றே நம்புவீராக!
உன்றன் ஆணை- உம்மீதே இது சத்தியம்!
இப்பொழுதுதான் மலை விடுத்து வந்தோம்-சிறிது முன்புதான் நாங்கள் எங்கள் இருப்பிடமாகிய மலையை விட்டுக் கீழே வந்தோம்
முன்னம் எண்ணில் கல் அகத்து இருந்தோம்-இதற்கு முன்பு பல்வேறு மலையிடங்களிலும் குகைகளிலும் வாழ்ந்திருந் தோம்
பனிமலர்க் கொம்பைக்கொணர்ந்து உனது கையில் பளிச்செனத் தரவும் வல்லோம்- பனிப்பூக் கொம்பைக் (பார்வதியைக்) கொண்டு வந்து உம் கைபிசில் விரைவில் தருவதில் யாம் வல்லமை யுடையோம்
பன்னிரண்டு ஆய சமயத்தும் கலந்து உரிமை பல பேசி உறவு செய்வோம் -சொல்லப் பெறும் பன்னிரு சமயங்களிடத்தும் கலந்து அவற்றின் பொதுவானவற்றைக் கூறி அவற்றிடையே இணக்கம் ஏற்படுத்துவோம்
நனி வருந்தாது வகை ஐந்தும் அறிவோம் – பொன் முதலான ஐந்து வகைத் தாதுக்களையும் மாற்ற வல்லோம்
பெருக நல்ல ரசமும் குடிப்போம்-அத்தகைய உயரிய இரசவாதங்களையும் செய்வோம்
நாகங்களைத் தரித்து அகமொடு புறத்தும் மிக நடமாடுவோம்-உடலெங்கும் நாகங்களை ஆபரணமாகப் பூண்டு உள்ளும் வெளியேயும் உலா வருவோம்
நமக்குக் கனி கிழங்கு அன்றி உணவு எய்தவில்லை–எங்களுக்குப் பழங்கள் கிழங்குகள் தவிர வேறு உணவு கிடைக்கப் பெறவில்லை
இன்று நாம் கழறு உணவு முழுதும் அருள்வாய் – இன்று நாங்கள் கேட்கும் உணவு வகைகளையெல்லாம் கொடுத்து மகிழ்விப்பீராக!
கண்ணனைத் தென் அளகை நிகர் வீரைநகர் ஊடு கருதும் ஒரு சித்தர் யாமே-தெற்குப் பகுதியில், குபேரனுடைய ஊர் போல விளங்கும் வீரகேரளம்புதூரில் வீற்றிருக்கும் கண்ண பிரானையே அநு தினமும் போற்றி வாழும் சித்தர் நாங்களே!

சித்தம் அறிய விளையாடல் செயும்நீ உலகத் தினர் காணச் சிறியேன் நிமித்தம் செயில் அமரர் சிரிப்பார் என நா ணுதியோ முன்
பத்தர் விடும் ஓர் தூதாகிப் பரிதூண்டிடும்சூ தனும்ஆன பழைய மொழிஈ ரேழுலகும் பரந்து முழங்கல் படிறாமோ?
சுத்த வெளிற்றுக் கவியொன்று சொன்னா னுடன்போய் மீண்டுவரும் தொன்மைக் குணம்இன் றிலைகொல்லோ, துயர்மிக் குழன்றேன் அருள்சுரந்துஆள்
சத்த மறைஓ லிடும்வீரைத் தலத்தில் அடியார் பலர்போற்றத் தமிழும் தனமும் கனமுமலர்ச் சரணுந்தரும்ஓர் பெருமாளே–19-தாழிசை-

சத்த மறை ஒலிடும் வீரைத்தலத்தில்-வேத ஒலிகள் எப்பொழுதும் முழங்கிக் கொண்டிருக்கும் வீரகேரளம்பு தூர் என்னும் திருநகரில்
அடியார் பலர் போற்றத் தமிழும் தனமும் கனமும் மலர்ச் சரணும் தரும் ஓர் பெருமாளே -தொண்டர்களெல்லாம் போற்றும்படியாக நல்ல தமிழ்ப் புலமையையும், செல்வத்தையும், பெருமையையும் நாடினோருக்கெல்லாம் அடைக்கலமாகத் திருமலரடிகளையும் அளித்துதவுகின்ற ஒப்பற்ற பரம்பொருளே!
சித்தம் அறிய விளையாடல் செய்யும் நீ – அடியேன் உள்ளம் உணரும்படியாகத் திருவிளையாடல்களைப் புரியும் நீவிர் உலகத்தினர் காணச் சிறியேன் நிமித்தம் செய்யில் அமரர் சிரிப்பார் என நாணுதியோ?-இவ்வுலக மக்களெல்லாம் பார்க்கும்படியாக, எளியவனான அடியேன் பொருட்டு நேரில் வந்து ஆடல் புரிந்தால் தேவர்கள் ஏளனம் செய்வார்கள் என்று வெட்கப்படுகிறீரோ?
முன் பத்தர் விடும் ஓர் தூதாகி-முன்பு தொண்டர் அனுப்பும் ஒரு தூதனுமாகி
பரி தூண்டிடும் சூதனும் ஆன – (அருச்சுனனின்) தேர்க் குதிரைகளைச் செலுத்தும் பார்த்தசாரதியும் ஆனீர்
என்னும் பழையமொழி ஈரேழு உலகும் பரந்து முழங்கல் படிறாமோ- தொன்மை வரலாறுகள் பதினான்கு உலகெங்கும் பேசப் பெறுதல் பொய்யாகுமோ?
சுத்த வெளிற்றுக் கவி ஒன்று சொன்னான் உடன்போய் மீண்டுவரும் தொன்மைக் குணம் இன்று இல்லை கொல்லோ-ஒரே ஒரு வெண்பாப் பாடல் புகன்ற திருமழிசையாழ்வார்பின் போய் வந்த அந்தப்பழைய இயல்புகூட இப்பொழுது தேவரீரிடம் இல்லை போலும்!
துயர் மிக்கு உழன்றேன், அருள் சுரந்து ஆள்-துன்பமே மிகுந்து மனம் கலங்கி வாடுகின்றேன், காத்தருள்வீராக.

பெருமலர்ப் பொகுட்டுப் பீடம் நீத்துக் கருமணி வரையெனக் காண்குநர் கருத
வீரை நகரில் மிளிரும்எம் பெருமான் மாரை நீங்கா வாழ்வுறு மங்காய்!
நின்னருட் துளியால் நிலவணி சடையான் அன்ன வாகனன் அம்பொனூர்க் கிழவன்
ஆதிய கடவுளர் அகமிக மகிழ்ந்தனர் மாதிரம் புகழ்வாள் மருதன் ஆதிய
காவலர் தாமும் களிமிகப் பெருகினர் நாவலந் தீவின் நரர்சிலர் செருக்கினர் அன்னர்வாழ்வு அடியேற்கு அருளினும் அணியேன் இன்னல் கூர்ந்து இராவது ஏற்பவர்வேட்கை அருள்நலம் பொருத்தின் அதுமதி; அருளாது இருள்கலிப் பேயால் இடர்படக் கண்டாய் கொண்கன்ஆங் கியற்றக் கூறிய பின்அவ்
வண்கவின் தரச்செயல் மாண்பன்று, அவன்நின் தகையறிபொருட்டே சாற்றிலன் போலும்
மிகைபடும் உரித்தென் மீதுஅவன் கொளல்சான்று அன்றிசை முனிமுதல் அரனார் அறியத்
தன்திருக் கரத்தாற் தமனியச் சிமிழுள் காட்டிய பொருளைக் கடைய னேன்தலை| சூட்டிய வாறாம் சுடரறிந் துளதே.–20-நிலைமண்டில ஆசிரியப்பா

பெருமலர்ப் பொகுட்டுப் பீடம் நீத்து- சிறப்பு மிக்க தாமரை மலர் இருக்கையை விட்டு எழுந்து
கருமணி வரை எனக் காண்குநர் கருத -நீல மணிக்குன்றோ எனப் பார்ப்பவர்களெல்லாம் வியக்கும்படியாக
வீரைநகரில் மிளிரும் எம்பெருமான் மாரை நீங்கா வாழ்வுறு மங்காய்- வீரகேரளம்புதூரில் ஒளிவீசி நிற்கும் எங்கள் தலைவராகிய திருமாலின் மார்பகத்தை அடைந்து. எப்பொழுதும் நீங்காது இருக்கும் இலக்குமியே!
நின்னருட் துளியால்- உம்முடைய கிருபையின் காரணமாக
நிலவு அணி சடையான் அன்ன வாகனன் அம்பொனூர்க்கிழவன் ஆதிய கடவுளர் அகம்மிக மகிழ்ந்தனர் – பிறைச் சந்திரனைத் தலையிலே சூடிய சிவபெருமானும், அன்னப் பறவையை வாகனமாகக் கொண்ட பிரமனும், தேவ லோகத்திற்குத் தலைவனான இந்திரனும், மற்றுமுள்ள கடவுளர் அனைவரும் உள்ளம் நிறைய இன்புற்றனர்
மாதிரம் புகழ் வாள் மருதன் ஆதிய காவலர் தாமும் களி மிகப் பெருகினர்- வெற்றிச் சிறப்பும் வீரமும் பொருந்திய மருதப்பன் முதலான மன்னர் பலரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.
நாவலந் தீவின் நரர் சிலர் செருக்கினர்- நாவலந்தீவிலுள்ள சில மக்களும் களிப்புற்றனர்
அன்னர் வாழ்வு அடியேற்கு அருளினும் அணியேன் – அவர்களுடைய இன்ப வாழ்க்கையெல்லாம் எனக்கு அளித்தாலும் நான் ஏற்பதாகயில்லை
இன்னல் கூர்ந்து இரவாது-துன்பப்பட்டு யாசிக்காமல்
ஏற்பவர் வேட்கை அருள்நலம் பொருத்தின்- பெறுவோரின் தேவை யறிந்து கொடுக்கும் நன்மையை அடியேனுக்குக் கூட்டினால்
அது மதி -அதுவே போதுமானது
அருளாது – இந்த வரத்தை வழங்காமல்
இருள்கலிப் பேயால் இடர் படக் கண்டாய்-கொடிய வறுமை யென்னும் பேயால் அடியேன் துன்பமடைய விட்டீர்
கொண்கன் ஆங்கு இயற்றக் கூறிய பின்-உம்முடைய கணவ ராகிய திருமால் அவ்விடத்து நின்னருளைக் காட்டுமாறு சொல்லிய பிறகு
அவ்வண் கவின் தரச்செயல் மாண்பு அன்று- அவ்வாறு நல்குவது ஒன்றும் பெருமையல்ல
அவன் நின் தகை அறிபொருட்டே சாற்றிலன் போலும்- அவரும் உம்முடைய ஈகைத் தன்மையை நன்கு அறிந்ததனாலேயே இன்னும் அவ்வாறு கூறியருளவில்லை என எண்ணுகிறேன்
மிகைப்படும் உரித்து என் மீது கொளல் சான்று- அடியேன் மேல் அவர் கொண்டுள்ள பேரன்பிற்குச் சாட்சியமும் உள்ளது
அன்று இசைமுனி முதல் அரனார் அறிய- அன்றொருநாள் இசைமுனி முதலாக சிவபெருமானும் அறியும்படியாக
தன் திருக்கரத்தால் தமனியச் சிமிழுள் காட்டிய பொருளை- தம்முடைய திருக்கைகளால் பொற்சிமிழுள் காட்டிய பொருளை
கடையனேன் தலை சூட்டிய வாறாம் – எளியேனாகிய அடியேன் தலையில் அணிவித்தபடியாம்
சுடர் அறிந்துளதே விளக்கம்-பெற்றதென்பதை அறிவீராக.

சுடர்போமுன் வீரைநகர்த் தொல்லோன்முன் போயென்
இடர்யாவும் நன்றா யியம்பிப் படர்மார்பிற்
பூண்டதுழாய் வாங்கிவரப் போதாய்; புதுப்பூந்தேன்
வேண்டளியே நொந்தேன் மிக.–21-வண்டுவிடுதூது–நேரிசை வெண்பா-

புதுப்பூந்தேன் வேண்டு அளியே – புத்தம் புதிதாக மலர்ந்திருக்கும் மலரையே நாடித் திரிந்து மயக்கந்தரும் மதுவை அருந்தும் வண்டே!
நொந்தேன் மிக – நான் என் தலைவனைப் பிரிந்த வேதனையால்மிக வாடுகிறேன்
சுடர் போம்முன் வீரைநகர்த்தொல்லோன் முன்போய்- சூரியன் மறைவதற்கு முன்பாக வீரகேரளம்புதூரில் கோயில் கொண்டுள்ள கண்ணபிரான் முன்னே சென்று
என் இடர் யாவும் நன்றாய் இயம்பி-நான் அவரைப் பிரிந்து வாடும் துன்பங்களை யெல்லாம் எடுத்துச் சொல்லி
படர்மார்பில் பூண்ட துழாய் வாங்கி வரப்போதாய் -பரந்து விரிந்த அவர்தம் மார்பகத்தே அணிந்திருக்கும் துளப மாலை வாங்கி வரச் செல்வாயாக!

மிகநொந்த மங்கையர் சொற்றூது போதற்கு மேகமும்சில்
ககமும் கழிவென்னத் தேர்ந்து அனை யாரையும்கைத்துஎனதுள்
அகமென்ற பாவியை விட்டேன் அதுவும் அருட்புலவோர்
புகழும்தென் வீரை நெடுமால்முன் போயது போயதுவே.–22-இதுவுந்தூது–கட்டளைக்கலித்துறை,-

மிக நொந்த மங்கையர் சொல் தூது போதற்கு-கண்ணபிரானுடைய பிரிவுத் துயரத்தால் மிக வாடும் அடியேனுடைய துன்பத்தை எடுத்துக் கூறுமாறு தூது அனுப்புவதற்கு
மேகமும் சில் ககமும் கழிவு என்னத் தேர்ந்து -முகிலும் வண்டும் பறவையும் பொருத்தமற்றவை என்பதை அறிந்துணர்ந்து
எனது உள் அகம் என்ற பாவியை விட்டேன்- எப்பொழுதும் வாராத தலைவனுக்காக வருந்தித் தவிக்கும் அடியேனுடைய உள்ளமாகிய நெஞ்சத்தை அவர்பால் தூதாக விடுத்தேன்-
அதுவும் அருட்புலவோர் புகழும் வீரை நெடுமால் மூன்போயது போயதுவே- (அடியேன் முன்பு அவர் பாலனுப்பிய மேகமும் வண்டும் பறவையும் போலவே) அந்நெஞ்சமும் பாகவதர் போற்றும் வீரைநகர் நெடியோனாகிய கண்ண பிரானிடம் போய்ச் சேர்ந்தது சேர்ந்தது தான்! இன்னும் திரும்பவே
யில்லை.

அதுலன்பன் மறையுஞ்சொல் புனிதன்தண் அருள்விஞ்சும் அகநீர்மையோன்
மதுரங்கு லவுசெஞ்சொல் வனைதொண்டரொடு சென்று வரநாணிடான் |
விதுரன்தன் மனையுண்டி யினிதென்று நுகர்கொண்டல் மிகவாழும்ஊர்
எதுஎன்கில் மருதன்தன் மரபென்றும் வளர்துங்கம் இசைவீரையே.–23-கலிநிலை வண்ணத்துறை-( தனதந்த தனதந்த தனதந்த தனதந்த தனதானனா)

அதுலன்- ஒப்பில்லாதவர்
பன்மறையும் சொல் புனிதன் – வேதங்கள் பலவற்றையும் அருளும் பரிசுத்த மானவர்,-பல வேதங்களாலும் புகழப்படும் தூயவர் எனினுமாம்
தண்அருள் விஞ்சும் அக நீர்மையோன்-எப்பொழுதும் உள்ளங்குளிர்ந்த அருளையே மிகுதியாகக் கொண்டிருக்கும் குணம் பொருந்தியவர்
மதுரம் குலவு செஞ்சொல் வனை தொண்டரொடு சென்று வர நாணிடான்- இனிமை நலம் பொருந்திய மதுர கானம் தரும் திருமழிசையாழ்வார் பின் சென்று வரவும் தயங்காதவர்
விதுரன் தன் மனை உண்டி இனிது என்று நுகர் கொண்டல்-பாண்டவருக்குத் துணையான விதுரன் இல்லத்துச் சென்று அவனளித்த உணவை இனிதென உண்டு களிப்புற்ற மேக வண்ணர்
மிக வாழும் ஊர் எது என்கில்- உளம் மகிழ்ந்து விருப்பமுடன் வாசம் செய்கின்ற தலம் எங்குள்ளது என்று கேட்பீராயின்
மருதன்தன் மரபு என்றும் வளர் துங்கம் இசை வீரையே -மருதப்பனுடைய குலத்தினர் எபபொழுதும் சிறப்புடன் வாழ்ந்து பெருமை மிகக் கூடி நிற்கும் வீரகேரளம்புதூரே ஆம் –

இசைப்பார் இசைக்கும் நலமு ழுதும் இயங்கும் வீரைப் பதித்திருமால்
நசைப்பால் அரங்கம் திருவயிந்தை நாகை வடவேங் கடம்குடந்தை
கசைப்பாங் கவிரூர் கண்ணபுரம் காஞ்சி அனந்தை முதற்பலவூர்
திசைப்பா லனரும் தொழவுளவாம் சேட னாலும் செப்பரிதே.–24-இதுவுமது-அறுசீர் ஆசிரிய விருத்தம்

இசைப்பார் இசைக்கும் நலம் முழுதும் இயங்கும்- எம்பெருமானுடைய திவ்ய நாமங்களையே பாடும் பரம பாகவதர்கள் விரும்பிக் கேட்கும் நன்மைகளை யெல்லாம் கொடுத்தருளுகின்ற
வீரைப்பதித் திருமால் நசைப்பால்- வீரகேரளம்புதூரில் உறைகின்ற எம்பெருமான் விரும்பும் திருப்பதிகள்
அரங்கம் திருவயிந்தை நாகை வடவேங்கடம் – திருவரங்கம், திருவகிந்திரபுரம், நாகப்பட்டினம், வேங்கடமாமலை
குடந்தை கசைப்பு ஆங்கு அவிர் ஊர்-கும்பகோணம்,திருவல்லிக்கேணி|கண்ணபுரம், காஞ்சி, அனந்தை முதற் பல ஊர்- திருக்கண்ணபுரம், காஞ்சிபுரம்,திருவனந்தபுரம் முதலான பல தலங்கள்
திசைப்பாலனரும் தொழ உளவாம் – ஆட்டதிக்குப் பாலகர்களும் வணங்கும் படியாகச் சிறப்புற்றுள்ளன
சேடனாலும் செப்ப அரிதே- (அத்திருத்தலங்களின் பெருமைகளை யெல்லாம்) ஆதிசேடனாலும் விளக்குவது அருமையாம்.-

செப்ப மார்புகழ் மிக்குளான் நலம்
செப்ப மார்பிடை சிந்தியான்
தீய தானவர் வேர்கெல்வான் மதி
தீய தாம்நவை தீர்க்கிலான்
கைப்ப ருங்கதை ஒன்றினான் அனம்
கைப்ப ருங்களி செய்கிலான்
காம ராயனை நல்கினான் என்மெய்க்
காம ராய விழைந்திலான்
துப்ப லங்கிதழ் தந்திலான் பலர்
துப்ப லங்கமென் றேவினான்
சூத னாப்பரி தூண்டினான் கொடுஞ்
சூத னாஎனை மால்செய்தான்
மைப்ப கட்டைவ தைத்துளான் விழி
மைப்ப கட்டைம திக்கிலான்
மாத வன்தமிழ் வீரைமா நகர்
மாத வன்தனி வஞ்சனே .–25-மடக்கு–இரங்கல் தாழிசை

செப்பம் ஆர் புகழ் மிக்குளான் -சிறப்புப் பொருந்திய கீர்த்தி மிக்கவர் (ஆனால்)
நலம் செப்ப மார்பிடைச் சிந்தியான்- (அவர் பிரிவால் வருந்தும் எனக்கு) இன்சொல்சொல்லி, ஆட்கொள்ள நெஞ்சாலும் நினைக்காதவராக இருக்கிறார்
தீய தானவர் வேர் கெல்வான்—கொடிய அரக்கரை அடியோடு இல்லாமல் ஒழித்தருளுவார் (ஆனால்)
தீ அது ஆம் நவை தீர்க்கிலான்-(துன்புறுத்துவதில்)நெருப்பைப் போன்று விளங்கும் (பிரிவுத் துயராகிய) குற்றத்தைப் போக்கியருள மறுக்கிறார்
கை பரும் கதை ஒன்றினான்- தன் திருக்கரத்தில் பெரிய கதாயுதம் ஒன்றைத் தாங்கியுள்ளவர் (ஆனால்)
அனக் கைப்பு அறும் களி செய்கிலான்- உணவை வெறுக்கச் செய்யும் பிரிவுத்துயரை இல்லாமற் செய்யும் மகிழ்ச்சியை அளிக்காமலிருக்கிறார்
காம ராயனை நல்கினான்- மன்மதனைப் பெற்றேடுத்தார் (ஆனால்)
என் மெய் காமர் ஆய விழைந்திலான்-என்னுடைய உடலின் அழகை ஆராய்ந்து துய்க்க விருப்பமில்லாதவராக இருக்கிறார்
துப்பு அலங்கு இதழ் தந்திலான்- பவளத்தைப் போல ஒளிரும் இதழ்களை முத்தமிடத் தந்தருள மாட்டார் (ஆனால்)
பலர் துப்பு அலம் கம் என்று ஏவினான்-பலராலும் இகழப்படுகின்ற துன்பத்தை மேகத்தைப் போன்று (என்மாட்டு உண்டாக்கினார்
சூதனா பரி தூண்டினான்-அருச்சுனனுக்குத் தேர்ப்பாகனாகக் குதிரைகளைச் செலுத்தினார்.(ஆனால்)
கொடும் சூதனா எனை மால் செய்தான்- தீமை மிக்க வஞ்சகராகி என்னை மயங்க வைத்தார் ( ஆனால். என்மீது அன்பு காட்டவில்லை)
மை பகட்டை வதைத்துளான் கரிய குவலயாபீடமாகிய-யானையைக் கொன்றிருக்கிறார் (ஆனால்)
விழிமை பகட்டை மதிக்கிலான் – (என்) கண்களின் அஞ்சனப் பூச்சின் கவர்ச்சிக்கு ஆளாகமலிருக்கிறார்

ஓதருஞ்சீர் வீரைநகர் உற்றநெடு மால்ஒருவன்
வேதனரன் இந்திரற்கும் மேலானான் அம்மானை
வேதனரன் இந்திரற்கு மேலானான் ஆமாகில்
பூதலத்துஏ னத்திற் புகுவானேன் அம்மானை
போதகனா வைத்துப் புரந்தான்காண் அம்மானை.–27-(கலித்தாழிசை)

ஓத அருஞ்சீர் வீரை நகர் உற்ற நெடுமால் ஒருவன்- சொற்களால் சொல்லுதற்கு அரிதான சிறப்புடைய வீரகேரளம்பு தூரினை அலங்கரிக்கின்ற விட்டுணு ஒருவரே
வேதன் அரன் இந்திரற்கும் மேல் ஆனான்- பிரமன், சிவபெருமான், இந்திரன்ஆகியோர்களுக்கெல்லாம் மேலான கடவுள் ஆவார் (இது. முதற்பெண் கூற்று)
வேதன் அரன் இந்தி அரற்கும் -கடவுள், எப்பொருட்கு மிறைவன், இலக்குமி. அநந்தன் போன்றவர் ஏவல் ஆனான் ஆமாகில்- பணிவிடை செய்ய ஏற்பவர் என்றால்
பூ தலத்து ஏனத்தில் புகுவான் ஏன்- நிலவுலகில் பன்றியின் உருவம் பெற்றது எதற்காக? (இது. இரண்டாவது பெண்ணின் வினா)
போதகனா வைத்துப் புரத்தான் காண்-குழந்தையை எடுத்துக் காப்பது போன்று காப்பாற்றினார் என்பதை அறிவாயாக (இது மூன்றாம் பெண் இருவர் கொண்ட பொருளுக்கும் பொருந்துமாறு விடை கூறுவது- இறுதிப் பகுதி)

அம்மானை யைப்பொற் கழங்கைத்தொடாள்முச்சி லதைநாடிடாள்
அவிர்தூசு குருகாழி அமையப்பெறாள்பாலொடு அமுதுண்டிடாள்
மெய்ம்மானு டைத்திங்கள் வருமென்றுயிர்ப்பாள்மை விழிமூடிடாள்
வீரைப்பி ரான்என் றிரங்குங்கொலோ என்றும் விள்வாள்ஐயோ!
இம்மாதி னைப்பெற்றே டுக்கச்செய்தவமுற்றும் அறியாய்கொலோ
இன்னம்து ழாய்நல்கி டாதுற்றி|டேல்கொச்சை இடைமாதர்தம்
கைம்மாமு லைப்போர்வி ழைந்தெண்ணில்வடிவிற்க ணந்தோறும்வாழ்
கண்ணா! மணிக்குன்ற வண்ணா!பழுத்துள்ள கள்ளத்தனே!
–28-(நற்றாயிரங்கல்)தாழிசை

அம்மானையைப் பொன் கழங்கைத் தொடாள்- (என் மகள் தான் காதலிக்கும் உம்மையே நினைந்து நினைந்து) அம்மானை, பொன்னாலான கழங்கு ஆகியவற்றைக் கையில் எடுப்பதுமில்லை
முச்சிலதை நாடிடாள் அவிர்தூசு குருகு ஆழி அமையப் பெறாள்- அவிழ்ந்த கூந்தலையும் முடிவதில்லை, ஒளிவீசும் ஆடை,கைவளை, மோதிரம் ஆகிய அணிகலன்களையும் அவள் அணிவதில்லை
பாலொடு அமுது உண்டிடாள் -பாலும் சோறும் அவள் உண்பதேயில்லை
மெய்ம் மானுடைத் திங்கள் வரும் என்று உயிர்ப்பாள்-தலைவன் வரும் காலம் வருமென்றே நம்பிஉயிர் வாழ்ந்திருக்கின்றாள்
மை விழி மூடிடாள் – கண் உறங்குவதுமில்லை
வீரைப் பிரான் என்று இரங்கும் கொலோ என்றும் விள்வாள்- வீரகேரளம்புதூர்த் தலைவராகிய நீவிர் எப்பொழுது மனமிரங்குவீரோ என அடிக்கடிப் பெருமூச்சுவிடுவாள்
ஐயோ, இம் மாதினைப் பெற்றெடுக்கச் செய்த தவம் முற்றும் அறியாய் கொலோ -இப்படிப்பட்ட பெண்ணை நான் ஈன்றெடுக்க என்ன தவம் செய்தேனோ தெரியவில்லையே!
இன்னும் துழாய் நல்கிடாது உற்றிடேல் – (என் மகளைப் பற்றி இவ்வளவு கூறியும்) இப்பொழுதும் கூட உம் திருமாலையை அளித்தருளாமல் இருக்காதீர்
கொச்சை இடை மாதர்தம் கைம்மா முலைப்போர் விழைந்து -ஆயர்குலப் பெண்களை மருவி அவர்களுடைய மார்பில் அணைய விரும்பி
எண்ணில் வடிவில் கணந்தோறும் வாழ்கண்ணா -(கோபியர் இல்லந்தோறும்) கணக்கற்ற உருவங்களை (அவர்கள் விரும்பிய பொழுதெல்லாம்) எல்லாக் காலங்களிலும் பெற்று வாழும் கண்ணனே!
மணிக்குன்றவண்ணா! பழுத்துள்ள கள்ளத்தனே!- நீலமலை போன்ற நிறத்தவரே! தீர்ந்த திருட்டுத்தன முடையவரே! (என் மகளின் பிரிவுத் துயரைத் தீர்த்தருள்வீராக)

கள்ளன்என ஏசினர்க்கும் காதலறத்தீர்த்தருளும் வள்ளல் ஒருவன்றி மற்றில்லை-அள்ளற்
கடல்வளை துவரைக் காவல் நீத்து மிடலினர் பலர்புகழ் வீரைத் தடமதிற்கோயிற் தங்கினன் அவனே.-
-29-மருட்பா

கள்ளன் என ஏசினர்க்கும் (ஆயர்பாடியில்) பல இல்லங்களில் திருடியவன் என்று பழிபடத் தூற்றினவர்க்கும்
காதலறத் தீர்த்து அருளும் வள்ளல் ஒருவன் அன்றி மற்று இல்லை-ஆசை தீர அவர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் கொடையாளி அக் கண்ணன் அல்லது வேறு யாருமில்லை
அள்ளல் கடல் வளை துவரைக் காவல் நீத்து- நெருங்கிய அலைகளோடு கூடிய திருப்பாற் கடலிடத்தையும், துவாரகாபுரி அரண்மனையையும் விட்டுவிட்டு,
மிடலினர் பலர்புகழ் வீரைத் தடமதில் கோயில் தங்கினன் அவனே- வலிமை மிக்கோர் பலருடைய போற்றுதலுக்குக் காரணமான மலை போன்ற அரண்களையுடைய வீரகேரளம்புதூர்க் கோயிலில் வந்து தங்கியுள்ள எம்பெருமான் அவரே.

தங்கம்வெள்ளி யாதியவே தஞ்சமென்பார் போற்தமியேன்
பங்கமுற இன்னம் படுத்தா தருள்புரிவாய்;
செங்கணெடு மாலே! திருவீரைக் கோயிலிடத்
தெங்கள்குரு வானகண்ண னே!
–30-இன்னிசை வெண்பா-

செங்கண் நெடு மாலே-சிவந்த தாமரை மலர் போன்ற கண்களையுடைய நெடியோனாகிய திருமாலே!
திருவீரைக் கோயிலிடத்து எங்கள் குரு ஆன கண்ணனே-செல்வமகள் குடி கொண்டிருக்கும் வீரகேரளம்புதூர்க் கோயிலில் எங்களுக்கெல்லாம் ஞானாசிரியனாக அருளுகின்ற கண்ண பெருமானே!
தங்கம் வெள்ளி ஆதியவே தஞ்சம் என்பார் போல்- பொன்னாபரணங்கள், வெள்ளியாலான பொருள்கள் போன்ற வற்றையே செல்வமெனத் விழைவார்கள் போல.துணையாகக் கொள்ள
தமியேன் பங்கம் உற இன்னம் படுத்தாது அருள்புரிவாய்- வறியவனாகிய அடியேன் ஈனமடையும்படித் துன்புறாமல் கிருபை செய்வீராக.-

கண்ணும்கருத் தும்கொடுத் துன்உருக் காணுமாறே
எண்ணும்துணி வும்கொடுத் தாய்பிறி தென்செய் வேன்யான்?
விண்ணும்புவி யும்துணைத் தாள்கவர் வென்றி யோர்ந்தே
நண்ணும்பெரி யோர்மலி வீரை நகர்ப்பி ரானே.–31-கலிநிலைத்துறை-

விண்ணும் புவியும் துணைத்தாள் கவர் வென்றி ஓர்ந்தே-தேவ லோகமும் பூலோகமும் எம்பெருமானாகிய உம் மலரடிகளால் அ ள ந்து திரிவிக்கிரமனாய் நின்ற காரணத்தை நன்கு ஆராய்ந்தே!
நண்ணும் பெரியோர் மலி வீரைநகர்ப் பிரானே – (உம்மிடம் விரும்பி வந்து) சேரும் ஆன்றோர்கள் நிறைந்த வீரகேரளம்புதூர் வாழ் இறைவரே!
கண்ணும் கருத்தும் கொடுத்து உன் உருக்காணுமாறே-காணும் விழியிரண்டும் ஆழ்ந்துணரும் உள்ளமும் அளித்து உம்முடைய பேரெழிலைக் காணும் வண்ணம்!
எண்ணும் துணிவும் கொடுத்தாய்-நினைக்கும் தெளிவினையும் அளித்துள்ளீர்!
பிறிது என்செய்வேன் யான்- (இப்படி உம்மையே எண்ணிப் பாடாமல்) நான் வேறு என்ன செய்வேன் கூறுவீராக.-அவனருளால் அவன்தாள் வணங்கும் பேறும் பெற்றபின் அவனையே பாடிப் பரவுவதே அடியார் தொழிலாம். அதையே அடியேனும் செய்கின்றேன். பிறிதென் செய்வோன் யான் என்கிறார்

நகமன் றேந்தியும் ஆனனம் புரந்தநீ நல்லோர்
இகழ்பொல் லார்அவற் றினைக்கொலப் பார்ப்பதென் றிழப்பாய்?
ககம் ஒன் றூர்ந்துவிண் வழிவரும் நாரணா! கமல
மகள்கொண்கா ! வள வீரையில் மருவுவா னவனே.
-32-கலித்துறை-

ககம் ஒன்று ஊர்ந்து விண்வழிவரும் நாரணா -கருடப் பறவை மீதேறி ஆகாய மார்க்கமாக வந்தருளும் நாராயணரே!
கமலமகள் கொண்கா-தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் கணவரே!
வள வீரையில் மருவு வானவனே- எல்லாச் செல்வங்களும் பொருந்திய வீரகேரளம்பு தூரில் வாழ்கின்ற தேவபிரானே!
நகம் அன்று ஏந்தியே ஆன்இனம் புரந்தநீ -(கோவர்த்தன) மலையை அன்றொருநாள் ஒரு விரலால் தூக்கிப் பிடித்துப் பசுக் கூட்டங்களை யெல்லாம் காத்த நீவிர்.
நல்லோர் இதழ் பொல்லார் அவற்றினைக் கொல்லப் பார்ப்பது என்று இழப்பாய்- உயிர்களிடத்து அன்பு கொண்ட நல்லவர்கள் தூற்றும் படியாக உயிர்க்கொலை புரிவோர் அப் பசுக்களைக் கொல்வதைப் பார்த்துக் கொண்டிருப்பதை என்று நிறுத்துவீரோ? (தெரிய வில்லையே) விரைந்து வந்து காப்பீராக.

வான கத்துமென் தேவ ரல்லர்யாம் மலையில் உற்றவன் மறவர் காண்மகத்து
ஊன ருந்தியும் பெண்கள் நல்கிடேம் உயிரின் மானமிக்கு உயர வைத்துளேம்
ஆன தன்மைநின் அரச றித்திடா ததும ணஞ்செயற்கு ஆதல் நிம்பமே
கான வேயிசைக் கண்ணன் வீரையூர் கருதும் வீரவேல் மருதன் ஆணையே.–33
-எண்சீர்த் தாழிசை-

வானகத்து மென் தேவர் அல்லர் யாம் (தூதனே!) விண்ணுல கிலிருக்கும் வலிமை யில்லாத தேவர்கள் அல்ல நாங்கள்
மலையில் உற்ற வன்மறவர் காண்- குன்றுகளையே இருப்பிடமாகக் கொண்ட வலிமை மிக்க வேடர்கள் என்பதை அறிவாயாக
மகத்து ஊன் அருந்தியும் பெண்கள் நல்கிடேம் -பெரிய இறைச்சி உணவினை உண்போமானாலும் மகளிரை (உன் மன்னனுக்கு) அளிக்க மாட்டோம்
உயிரின் மானம் மிக்கு உயர வைத்துளேம்- உயிரை விட மானத்தையே பெரிதாகக் கருதுபவர்கள் நாங்கள் ஆன தன்மை நின் அரசு அறிந்திடாதது-(என்னும்) இக்குலப் பெருமையை உன் மன்னன் அறிய மாட்டான்
மணம் செயற்கு ஆதல் நிம்பமே- அரசு (மரம்) மணக்க வேண்டியது வேம்பையே
கானவேய் இசைக் கண்ணன் வீரையூர் கருதும் வீரவேல் மருதன் ஆணையே -குழலூதும் புகழ் மிக்க நெடுமால் வாழும் வீர கேளம்புதூரில் வெற்றிச் சிறப்புடன் விளங்கும் மருதப்பன் ஆணை இது என்பதை நீயும் அறிவாயாக.

ஆண்மகனே! உனைத்தூதிங் கனுப்பு மன்ன னானால்வந்து அமர்புரிந்துஎம் அயிலால் மாய்ந்து சேண் மடவார் முலைபுணர்வான்; எங்கள் பெண்கள் சிவனிடத்தும் குகன்வலத்துந் திகழ்கின் றார்பார்! மாண்மலிகங் கையும்மகவான் மகளும் அஞ்சி வாழ்க்கைகுன்றிப் படும்பாடு மதித்தோர் முன்னைக் கோண்மறைத்தான் தனைவீரை நகரிற் பல்கால் கும்பிட்டெம் குலராயே கொண்டார் அன்றே.–34-எண்சீர் ஆசிரிய விருத்தம்-

உன்னைத் தூது இங்கு அனுப்பும் மன்னன் ஆண்பிள்ளை யானால்- உன்னை இவ் விடத்தில் (பெண் கேட்டுத்)தூதாக அனுப்பி யிருக்கும் அரசனானவன் உண்மையிலேயே வலியவனானால்
வந்து அமர் புரிந்து எம் அயிலால் மாய்ந்து- வேண்டுமானால் இங்கு வந்து எம்முடன் போரிட்டு, எம்முடைய வேலால் உயிர் துறந்து
சேண் மடவார் முலை புணர்வான்- வீர சுவர்க்கம் புகுந்து தேவ லோகப் பெண்களை அடைவானாக
எங்கள் பெண்கள் சிவன் இடத்தும் குகன் வலத்தும் திகழ்கின்றார் பார்- எங்கள் வேடர் குலப் பெண்கள் சிவ பெருமானின் இடப் பக்கத்திலும் அறுமுகப் பெருமானின் வலப் பக்கத்திலும் சிறப்புற்று விளங்குவதைக் காண்பாயாக
மாண்மலி கங்கையும் மகவான் மகளும் அஞ்சி- மாட்சிமை நிறைந்த கங்கா தேவியும் இந்திரன் மகளும் பயந்து
வாழ்க்கை குன்றிப் படும்பாடு மதித்தோர்- தம் வாழ்வு குலைந்து படுகின்ற நிலையை யுணர்ந்தவர்கள் (அவர்கள் படும் பாட்டினை ஆராய்வாயாக)
முன்னைக் கோள் மறைத்தான் தன்னை-முன்பு சூரியனைச் சக்கரத்தால் மறைத்தவரை
வீரை நகரில் பலகால் கும்பிட்டு எம் குலராயே கொண்டார் அன்றே- வீர கேரளம்புதூரில் பல காலங்களிலும் வணங்கி எங்களுடைய குடும்ப விளக்கே எனக் கொண்டாடினர் காண்.-

கொண்டல் வண்ண மேனியும் குவிந்த பொற்கி ரீடமும் கோவை வாயும் முண்டகம் குலாவு கண்க ளும்திருத்
துண்ட மும்செவிக் கணிந்த குண்ட லங்க ளும்கையிற் சோதி ஆழி சங்கமுற் சொலும்பல் சீரும் என்னுளே
அண்ட ரும்பொ றாமைஎய்த வந்த துண்டு பொய்சொனால் ஆயி ரம்பி றப்பில்நீசம் ஆவ துண்டு அவர்வரக்
கண்ட தில்லை எத்தவத்தில் என்ன பாவ முற்றதோ? காமர் வீரை யூரிலென் கவிக்க வாவும் நேயரே!–
35-பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்-

கொண்டல் வண்ண மேனியும் குவிந்த பொற்கிரீடமும்-கார்மேகம் போன்ற உடலும் அழகு மிக்க பொன்னாலான திருமுடியும்
கோவை வாயும் முண்டகம் குலாவு கண்களும் -கோவைப் பழம் போன்று சிவந்த வாயும், தாமரை மலரை யொத்த விழிகளும்
திருத் துண்டமும் செவிக்கு அணிந்த குண்டலங்களும்-(ஒளி வீசுகின்ற) திருமுகமும், காதில் பூண்ட குண்டலங்களும்
கையில் சோதி ஆழி சங்கம் முதற் சொல்லும் பல்சீரும்- திருக்கரங்களில் ஒளி பரப்பும் சக்கரமும் சங்கும் எனச் சொல்லப்பட்ட சிறப்பியல்புகளை
என்னுளே அண்டரும் பொறாமை எய்த வந்தது உண்டு-(ஒருங்கே காட்டி யருளும் திருக் கோலமுடன்) தேவர்கள் எல்லாம் பொறாமையால் எரிச்சலடையும்படியாக
அடியேன் அகத்தில் (கண்ணன் அன்றொருநாள்) வருகை புரிந்தது உண்மை பொய் சொன்னால் ஆயிரம் பிறப்பில் நீசம் ஆவது உண்டு-(அவ்வாறு அவர் வந்தாரில்லை எனப்) பொய் பேசினால் ஆயிரம் பிறவிகளிலும் ஈனமே உண்டாகும்
அவர் வரக்கண்டது இல்லை- (அன்று வந்தவர்) இன்னும் அத்தகையவர் அடியேன் முன் பலரறியத் தோன்ற வில்லை
எத்தவத்தில் என்ன பாவம் உற்றதோ – அடியேன் முற்பிறப்பில் செய்த தவத்தில் எப்படிப்பட்ட குறை சேர்ந்ததோ?(தெரியவில்லை)
காமர் வீரை ஊரில் என் கவிக்கு அவாவும் நேயரே- அலங்கார அழகு மிக்க வீரகேரளம்புதூரில் என்னுடைய பாடலை விரும்பும் அன்பரே! ( அவர் நேரில் வந்து காட்சியளித் தருளுவாரென்றே காத்திருக்கிறேன் என்பதாம்)-

நேயமோர் சிறிதும் நெஞ்சிற் குறியார்
வாயல் கண்டு மறுகுறப் படுத்தும்
பாழ்த்ததீவினைப் படுதுயர் களைந்திட்டு
ஆழ்த்தமெய் உணர்வார் அடியரிற் கூட்டிப்
பார்த்தன் தன்பாற் படிநலங் குறிக்கும்
நீர்த்தவர் பெருமை நிகழ்த்திய மாற்றம்
மெய்ப்படக் காட்டி விடாய்அற மாற்றிப்
பொய்ப்படா நினது பூம்பதம் புகுத்தாய்!
நின்னிறை வுணரார் நெறியிடைப் பழகி
அன்னியம் வகுத்திட்டு அகமிகச் செருக்கி
அந்த வண்ணம் அயர்தரும் என்னை
இந்த வண்ணம் இயக்கிய கருணை
உலகமுற் றுணராது ஒழிதல்நன் றல்ல
திலக வாணுதற் சேயிழை மடவார்
ஆதி யேடணைக்காட்டு அலையினும் அருட்பெரு
நீதிவேட் டுளஎன் நெஞ்சமுற் றறிவாய்!
எவ்வகைப் பொருளும் இயலும்எட் டெழுத்தில்
தவ்வரு முதலைத் தணவுந ரேனும்
ஆருயிர்க் கோறல் அழிதசை யருந்தல்
தீருமாண் பினரேல் சிதடர்அன் றென்னக்
கோடல்மட் டாண்டும் கொழிதமிழ்ப் பனுவல்
பாடல்மிக் கேற்றும் பரிசுநல் கிலையே!
விண்மரு புளிக்கீழ் வீற்றிருந் தானும்
மண்மகள் தன்னை வளர்த்தளித் தானும்
வருதமிழ்ப் பாண்டி வதனம் போலும்
திருமலி வீரையில் தேவரும் பிறரும்
வழிபடக் கருமுகில் மானப்
பொழியருள் விளக்கிப் பொலிந்தபுண் ணியனே.–36-நேரிசை ஆசிரியப்பா-

விண்மரு புளிக்கீழ் வீற்றிருந்தானும்-விண்ணோர் புகழும் புளிய மரத்தடியில் அமர்ந்திருந்த சடகோபாழ்வாரும்
மண்மகள் தன்னை வளர்த்து அளித்தானும்-(இப்பூவுலகில் தோன்றி யருளிய ) பூமாதேவியாகிய ஆண்டாளைக் கண்டெடுத்து வளர்த்து ஆளாக்கி (கண்ணபிரானுக்கு)அர்ப்பணம் செய்த பெரியாழ்வாரும்
வருதமிழ்ப் பாண்டி வதனம் போலும் திருமலி வீரையில்–வாழ்ந்து புகழ் பெற்றுவரும் செந்தமிழ் நாடாகிய தென் பாண்டியின் முகமே போன்று செல்வங் கொழிக்கும் வீரகேரளம்பு தூரில்
தேவரும் பிறரும் வழிபடக் விண்ணுலகத்தவர்களும் மண்ணுல கத்தவரும் போற்றிசைக்கும்படியாக
கருமுகில் மானப்பொழியருள் விளக்கிப் பொலிந்த புண்ணியனே–நீர்கொண்ட மேகம் போன்று கருணையைப் பொழிவித் தருளும் பரிசுத்தமானவரே!
நேயம் ஓர் சிறிதும் நெஞ்சில் குறியார் வாயல் கண்டு-1 (அடியேன் உள்ளத்தே யிருக்கும்) அன்பினைப் பற்றிக் கொஞ்சமும் நினைக்கத் தெரியாதவர்கள் மூலமாக
மறுக்குறப்படுத்தும் பாழ்த்த தீவினைப் படும்துயர் களைந்திட்டு- மனங்குழம்பச் செய்யும் கொடுமைகளை யெல்லாம் விலக்கி விட்டு
ஆழ்த்த மெய் உணர்வார் அடியரில் கூட்டி- ஆழமான உண்மைகளை அறிந்தவர்களாசிய பாகவதர்களுடன் சேர்த்து
பார்த்தன் தன்பால் படிநலம் குறிக்கும் – (பாரதப் போரில்) அருச்சுனன் பக்கம் அறவழி நிற்சின்ற
நீர்த்தவர் பெருமை நிகழ்த்திய மாற்றம் -குற்றமற்ற குணங்களையுடைய பெரியோர்களின் சிறப்புகளை (எடுத்துக்காட்டிச்) செய்த மாறுபாடுகளை
மெய்ப்படக் காட்டி விடாய்அற மாற்றி- உண்மை விளங்கும்படி (இப்போது) செய்தளித்து, ஆசை அற்றுப் போகும்படி மாறுதல் செய்து
பொய்ப்படா நினது பூம்பதம் புகுத்தாய்- (எக்காலத்தும்) பூரண நிலை பெற்று விளங்கும் உமது திருமலரடிகளை அடையச் செய்வீராக!
நின் நிறை உணரார் நெறியிடை பழகி- உம்முடைய பூரண நிலையை அறியாதவர்களாகிய பிறசமயத்து வழிகளிலேயே சென்று பழக்கப்பட்டு
அன்னியம் வகுத்திட்டு அகம் மிகச் செருக்கி-வேற்றுமை பாராட்டி, உள்ளத்தில் அகங்காரம் கொண்டு
அந்த வண்ணம் அயர்தரும் என்னை- அவ்வாறே வருத்தம் கொள்ளும் அடியேனை
இந்த வண்ணம் இயக்கிய கருணை உலகம் முற்றும் உணராது ஒழிதல் நன்று அல்ல- இப்படி ஆட்கொண்ட விதத்தை உலகமக்கள் எல்லோரும் அறியும்படியாகச் செய்யாது(அவர் முன்தோன்றாது) இருப்பது நல்லதல்ல
திலக வாள்நுதல் சேயிழை மடவார் ஆதி ஏடணைக் காட்டும் அலையினும் – திலகமுடன் ஒளிவீசும் நெற்றியினையுடைய பெண்கள் முதலான ஆசைகளையே (திரும்பத் திரும்ப) காண்பிக்கும் (இவ்வுலக வாழ்க்கையாகிய துன்பக் கடல்) அலைகளைக் காட்டிலும்
அருட்பெரு நீதி வேட்டுள என் நெஞ்சம் முற்றும் அறிவாய்— (உம்முடை திவ்விய அவதார) அருளிச் செயலென்னும் உண்மை நிலையையே வேட்கை கொண்டுள்ள அடியேனுடைய உள்ளத்தை முழுவதுமாக உணர்வீராக!
எவ்வகைப் பொருளும் இயலும் எட்டெழுத்தில்- (வேதத்தி|னுடைய) எல்லாப் பொருள்களும் கூடியதான விட்டுணு மந்திரத்தில்
தவ்வரு முதலைத் தணவுநரேனும் -தோன்றும் முதல்நிலையை நீங்கியவராலும்
ஆருயிர்க் கோறல் அழிதசை அருந்தல் தீரும் மாண்பினரேல்- பசுக்கொலை ஊண் உண்ணல் இவற்றைத் தீர்க்கும் மாட்சிமை யுடையவரானால்
சிதடர் அன்று என்னக் கோடல் மட்டு ஆண்டும் -அறிவில்லாத வர்கள் அல்லர் என உணரும் அளவில் ஆட்கொண்டும் –கொழிதமிழ்ப் பனுவல் பாடல் மிக்கு ஏற்றும் பரிசு நல்கிலையே-(சொற்பொருள்வளம்) கொழிக்கும் பாசுரங்களை அளவில்லாது யான் பாடி நீவிர் ஏற்று அருள்புரியவில்வையே (ஏனென்று கூறி யருள்வீராக)-

புண்ணருந்தச் சம்மதியோம் போதப் புதுமலர்த்தீம்
கண்ணசையுள் ளோம்பொய் கழிறிடோம்- விண்ணவரில்
சூரனிடம் வீரையில் மால் தொட்டவளை விட்டதன்றோ
பாரதம்நன் றாயுணர்ந்து பார்.–37-நேரிசை வெண்பா-

புண்அருந்தச் சம்மதியோம் – பிற உடல்களின் புண் ஆகிய புலாலை உண்ண ஒருப்பட மாட்டோம்
புதுமலர் தீம் கள் நசை போது உள்ளோம் – அன்றலர்ந்த பூக்களில் உள்ள இனிய தேனின் மேல் நிரம்பிய விருப்பம் உடையேம்
பொய் கழறிடோம் – நாங்கள் இல்லாத ஒன்றைக் கூற மாட்டோம்
விண்ணவரில் சூரனிடம்-தேவர்களுக்குள்ளே ஒருவனாகிய சூரியனின் பால்
வீரையில் மால் தொட்ட வளை -வீரையில் எழுந்தருளியுள்ள நவநீத கிருட்டிணப்பெருமாள் தான் ஏந்தியுள்ள சக்ராயுதத்தை
விட்டதன்றோ பாரதம்- (சயத்திரதனை விசயன் கொல்ல வாய்ப்பாகச் சூரியனை மறைக்குமாறு) செலுத்திய வரலாறு பாரதம் அல்லவா?
நன்றாய் உணர்ந்து பார் – சொல்லையும் பொருளையும் நன்கு சிந்தித்துப் பார்ப்பாயாக.

பாரணைந் தான்திங்கள் என்றூழ்பைங் கிள்ளைப் பறவைநட்டான்
காரமுற்றாள்கம லத்திரு மாதெண்கரப்பிரமன்
ஊரன்னத் தாசைவைத் தான்மதன் கால்வையம் ஒன்றச்சென்றான்
நாரணன் வீரைப் புலவீர்பொய் யன்று மெய் நம்மொழியே.
–38-

திங்கள் பார் அணைந்தான்- சந்திரன் உரோகிணியை (மிக விரும்பிப்) புல்லினான்
என்றூழ் பைங்கிள்ளைப் பறவை நட்டான்- சூரியன் பசிய குதிரைகள் (கட்டிய தேரில்) பறப்பதை மிக விரும்பினான்;
கமலத் திருமாது காரம் உற்றாள்-தாமரையில் உள்ள இலக்குமி பொன் எனப் பெற்றாள்
எண்கரப் பிரமன் ஊர் அன்னத்து ஆசை வைத்தான்- எட்டுக் கைகளை உடைய பிரமதேவன் தான் இவர்ந்து செல்லும் அன்னப் புள்ளை மிக நேசித்தான்
மதன் கால் வையம் ஒன்றச் சென்றான்- மன்மதன் (தென்றல்) காற்றாகிய தேரில் மனமொத்து உலாவினான்
நாரணன் வீரைப் புலவீர்-திருமால் எழுந்தருளியுள்ள வீர கேரளம்பு தூரில் வாழும் அறிஞர்களே!
நம்மொழி பொய்யன்று, மெய்யே.-

மொழியொ ணாத முதற்பதம் நல்கும்நீ
பழியில் ஆண்மைப் பயன்தரல் பாவமோ?
பொழில்வ ளம்பொலி புண்ணிய வீரையூர்
உழியொர் புள்ளில் உலாவும் ஓய் யாரனே!–39-கலிவிருத்தம்-

பொழில் வளம் பொலி புண்ணிய வீரையூர்உழி – சோலைகள் நிறைந்து அழகு மிக்கு விளங்கும் மங்களகரமான வீர கேரளம்புதூரில்-
புள்ளில் உலாவும் ஓய்யாரனே- கருடப் பறவையின் மேலேறிப் பொழுதினைக் கழிக்கும் அலங்கார மோகம் கொண்டவரே!
மொழி ஒணாத முதல் பதம் நல்கும் நீ-(உம்மை அடைந்தவர்க்கு) சொல்லுவதற்கு அரிதான வீடு பேற்றினை அளிக்கும் நீவிர்
பழிஇல் ஆண்மைப் பயன் தரல் பாவமோ- (இம்மையில்)குற்றமற்ற மெய்ம்மைப் பயன் அளித்தால் குறை யுண்டாகுமோ? கூறுவீராக.

ஆரணம் பயந்த துண்டேல் அவன்விதி பழுதா னாலும்
தீரம்நன் றருள வல்லாய் என்னவே சிந்திக் கின்றேன்
காரமர் நெடிய மேனிக் கருணைமால் வரையே காமர்
மாரனைப் பழியார் வீரை வளநகர் வாழ்வன் னானே.–
40-அறுசீர் அசிரிய விருத்தம்-

காரமர் நெடிய மேனிக் கருணை மால் வரையே -நீர் மேகம் போன்ற உடல் வண்ணமும் நெடுங்குன்றம் போன்ற உருவமும் கருணையுள்ளமும் கொண்ட திருமாலே!
காமர் மாரனைப் பழியார் வீரை வளநகர் வாழ்வு அன்னானே-பேரழகு மிக்க மன்மதனைப் போன்ற அழகு மிக்கோர் வாழ்கின்ற வீரகேரளம்புதூரில் இருப்பவரே!
ஆரணர் பயந்தது உண்டேல் -(தாமோதரனாகிய உமது கொப்பூழ்க் கொடியில்) பிரமனைப் பெற்றது என்பது உண்மையானால்
அவன் விதி பழுது ஆனாலும் – அப் பிரமனுடைய எழுத்தில் (அடியேன் தலையெழுத்தில்) குற்றம் ஏற்பட்டாலும் –தீரம் நன்று அருள வல்லாய் எனவே சிந்திக்கிறேன்- மனத்திடமும் அறிவும் வலிமையும் (அடியேனுக்கு) அருளுவீர் என்றே எண்ணியிருக்கின்றேன் காத்தருள்வீராக.

நானென் றெழுந்த இருளைத் தடிந்துன்| நளினப் பதங்கள் கருதித்
தேனென் றினித்த அருளின் பம்உண்டு திகழ்கின்ற நாளும் வருமோ?
மீனென் றளக்கரிடை சென்றும் அன்று வேதம் புரந்த விகிர்தா!
ஆனென் றும்இன்பம் உறும்வீரை யாளும் அரசே! மலர்க்கண் அமுதே!
–41-எழுசீர் ஆசிரிய விருத்தம்

மீன் என்று அளக்கர் இடை சென்றும் அன்று வேதம் புரிந்த விகிர்தா (அசுரன் வேதங்களை ஒளித்த பொழுது) மீன் உருவம் எடுத்துக் கடலிடத்தே போய் வேதங்களை மீட்டுmவந்த தலைவரே!
ஆன்என்றும் இன்பம் உறும் வீரை ஆளும் அரசே- பசுக்கூட்டங்கள் எப்பொழுதும் (உம் கிருபையால்) மகிழ்ச்சியுடன் உலாவும் வீரகேரளம்புதூரினை ஆட்சி புரிகின்ற மன்னவரே!
மலர்க்கண் அமுதே – தாமரை மலர் போன்ற அழகிய விழிகளை யுடைய அமுத மயமானவரே!
நான் என்று எழுந்த இருளைத் தடிந்து-யான், எனது என்னும் அஹங்கார மமகாரமாகிய மயக்கத்தை (அடியேனிடமிருந்து) அறுத்து
உன் நளினப் பதங்கள் கருதி உமது தாமரைத் திருவடிகளையே நினைந்திருந்து
தேன் என்று இனித்த அருள் இன்பம் உண்டு- தித்திக்கும் தெவிட்டாத அமுதம் என்னும்படியான உமது கிருபையைப் பெற்று விளங்கும்
திகழ்கின்ற நாளும் வருமோ -ஒளி பொருந்திய காலமும் (அடியேனுக்கு) வரக் கூடுமோ? கூறுவீராக.

அமுதமுன் அமரர்க் களித்த வானவனே அளவறக் களித்த வானவனே
அம்புயப் பொகுட்டா தனத்திரு வினனே ஆன்செய் வந்தனத் திருவினனே
குமுதம்நேர் வாயாற் சங்கம் ஆர்த்தவனே கோபியர் சங்கம் ஆர்த்தவனே
குஞ்சரம் புரப்பவி ரைந்தமா திரனே கோவென விரைந்த மாதிரனே
சமுசயம் அறுக்கு மந்திரத் தவனே தாழ்வில்எண் மந்திரத் தவனே
தானவர்க் கஞ்சா தரித்தவம் மானே சட்டுவந்தரித்தவம் மானே
திமுதநீர்க் கரந்து மீண்டுவந் தானே சீரற மீண்டுவந் தானே
திரைமலி தவளவீ ரைநா ரணனே செழும்பொழில் வீரைநா ரணனே.–42-பதினான்கு சீர்த் தாழிசை-மடக்கு-
இது, ஒவ்வோர் அரையடியிலும் வந்த சொற்களே மீண்டும் வந்து இருபொருள் தரும் மடக்கணியின்பாற்படும்.

அமுதம் முன் அமரர்க்கு அளித்த வானவனே- (பாற்கடலில் தோன்றிய) அமுதத்தை முற் காலத்தில் தேவர்கட்கு (மட்டும்) பங்கிட்டுக் கொடுத்த பெருமையை உடையவரே!
அளவு அற களித்த வானவனே-கணக்கற்ற (பகைவர்களாகிய அசுரர்களை ஒழித்ததால்) பெருமிதங்கொண்ட தேவரே!
அம்புயப் பொகுட்டு ஆதனத் திருவினனே-செந்தாமரை மலரின் நடுப்பாகமாகிய இருக்கையை உடைய இலக்குமியைத் தேவியாகப் பெற்றவரே!
ஆன் செய் வந்தனத் திருவினனே -பசுக் கூட்டங்களால் (கோவர்த்தன கிரி கொண்டு காத்ததால்) செய்யப்படுகின்ற வணக்கங்களாகிய மேன்மையை உடையவரே!
குமுதம் நேர் வாயால் சங்கம் ஆர்த்தவனே-அல்லி மலரைப் போன்ற வாயில் பாஞ்சசன்னியமாகிய சங்கை வைத்து முழங்கியவரே!
கோபியர் சங்கம் ஆர்த்தவனே-ஆயர் மகளிர் கூட்டத்தால் நன்கு அனுபவிக்கப் பெற்றவரே! (கோபியர் ஆடைகளை ஒளித்து வைத்தவரே! எனினும் ஆம்)
குஞ்சரம் புரப்ப விரைந்த மா திரனே – (ஆதி மூலமே எனக் கூவியழைத்த) கசேந்திரனைக் காக்க வேகமாகச் சென்ற வலிமையை உடையவரே!
கோ என இரைந்த மாது இரனே -கோவிந்தா! கோபாலா! என்று ( துரியோதனன் சபையில்) அரற்றி ஒலித்து அழைத்த திரௌபதியின் வேண்டுகோளை ஏற்றவரே!(ஏற்று அவளுக்கு ஆடை நல்கி மானங்காத்தவரே!)
சமுசயம் அறுக்கும் அம் திரத்தவனே- (ஆன்மாக்களுக்கு உய்யும் நெறியில் ஏற்படும்) ஐயங்களைப் போக்கியருளும் அழகையும் நிலை பேற்றையும் உடைய பரம் பொருளே!
தாழ்வு இல் எண் மந்திரத்தவனே- குறைவற்ற திருவெட்டெழுத்தாகிய அருமறையின் பொருளாயிருப்பவரே!
தானவர்க்கு அஞ்சாது அரித்த அம்மானே- அசுரர்களுக்குப் பயப்படாமல் அவர்களை ஒழித்தருளிய தலைவரே!
சட்டுவம் தரித்த அம் மானே(திருப்பாற் கடலில் தோன்றிய அமுதத்தைத் தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்க) அகப்பையை ஏந்திய அழகிய (மான் போன்றவளாகிய) மோகினி யானவரே!
திமுதநீர்க் கரந்து மீண்டு வந்தானே- (சோமுகனென்னும்அசுரன் வேதங்களைந் திருடிக் கடலில் ஒளித்துப் போக, தேவலோகத்தளவுஞ் சென்று கடல் வெள்ளம் பரந்த காலத்தில்) கடல் வெள்ளம் முழுவதையும் தமது உடலின் ஒருபுறத்திலே அடக்கவல்ல மிடுக்கையுடைய மீன் வடிவம் எடுத்து அசுரனைத் தேடிக் கொண்டு வேதங்களை மீட்டுக் கொணர்ந்தவரே!
சீர் அறம்ஈண்டு உவந்தானே சிறப்புப் பொருந்திய தருமத்தை இவ் வுலகில் நிலைநிறுத்த விரும்புபவரே!
திரைமலி தவள வீரை நார் அண் அனே-அலைகள் நிறைந்ததும் வெண்மை நிறமுடையதுமாகிய (திருப்பாற்) கடலினிடத்து விருப்பம் பொருந்திய தாயனையவரே!
செழும் பொழில் வீரை நாரணனே- வளமை மிக்க சோலைகளால் சூழப்பட்டுள்ள வீர கேரளம்புதூரில் திருக்கோயில் கொண்டுள்ள திருமாலே!

நாரணனே! சங்காழிப் படைக்கை மாலே!
நான்முகனைப் பயந்தவுந்தி நளினத் தானே!
வாரணமுன் சென்றாங்குஎன் முன்னும் இன்னே
வருகவெனச் செந்தமிழால் வாழ்த்து வார்க்குச்
சீரணம் தவிர்நலம் திகழ்ந்த வீரையிற்
பூரணத் திருவருட் பொலிவுண் டாகுமே.–43-வேற்றொலி வெண்டுறை

நாரணனே சங்கு ஆழிப் படைக்கைமாலே- நாராயணா!-சங்கமும் சக்கரமும் (தீமையை யழிக்கக்) கையில் ஏந்தியிருக்கும் திருமாலே! (சங்கு சக்கர தாரியே!)
நான்முகனைப் பயந்த உந்தி நளினத்தானே – பிரமனைப் பெற்றெடுத்த தாமோதரனே!
வாரணம் முன் சென்றாங்கு என் முன்னும் இன்னே வருக எனச் செந்தமிழால் வாழ்த்துவார்க்கு- (ஆதிமூலமே என அழைத்த) கசேந்திரன் முன்பு சென்று காத்தது போல,(எமது துன்பங்களைப் போக்க) எங்கள் முன்னாலும் இப்பொழுதே வந்துகாத்தருள்வீராக என்று சிறப்பு மிக்க பாசுரங்களால் போற்றுபவர்கட்கு
சீரணம் தவிர் நலம் திகழ்ந்த வீரையில்-பழ வினைகளை யெல்லாம் போக்கும் சிறப்பு மிக்க வீரகேரளம்புதூரில் பூரணத் திருவருள் பொலிவு உண்டாகுமே (கோயில் கொண்டு விளங்கும் கண்ணபிரானின், முழுமையான கருணை யழகு தோற்றமாகும்.

உண்டுண் டுறங்கி உறங்கி ஒளிவளையார்
தொண்டுண்ட ணைந்தணைந்து சோர்ந்தாலும் வண்டுண்ட
செங்கமலத் தாள் முகுந்ததற் தென்வீரை யூரினீற்கண்டு
அங்கமலத் தாழ்வொழிக்கலாம்–44-நேரிசை வெண்பா-

உண்டு உண்டு உறங்கி உறங்கி – இவ் வுடலைப் பாதுகாப்பதற்காக இதுவரையில் தினமும்) திரும்பத் திரும்ப உணவு அருந்தியும், பெரும்பாலும் தூக்கத்திலேயே காலம் கழித்தும்
ஒளிவளையார் தொண்டு உண்டு அணைந்து அணைந்து சோர்ந்தாலும் – மின்னுகின்ற வளையல்களை அணிந்த பெண்களின் பணிவிடைகளை ஏற்று அவர்களை அடிக்கடி மருவிப் புணர்ந்தும் (இவ்வுடலும் வாழ்க்கையும் கசந்து) சாலிப்படைந்து மெலிந்தாலும் (பரவாயில்லை. இனி)
வண்டு உண்ட செங்கமலத்தாள் முகுந்தரைத் தென் வீரை ஊரினில் கண்டு-(எப்பொழுதும் அடியார் கூட்டம் போன்று) வண்டுகள் மொய்த்திருக்கும் சிவந்த தாமரை மலரைப் போன்ற திருவடிகளை யுடைய திருமாலைத் தென் தமிழகத்திலுள்ள வீரகேரளம்புதூரில் வந்து தரிசித்தால்
அங்கம் மலத் தாழ்வு ஒழிக்கலாம் –இவ் வுடலால் ஏற்படுகின்ற குற்றங்களையும் கீழ்மையான இழிவுத் தன்மைகளையும் அறவே தீர்க்கலாம்.

ஒழிக்கரும் ஆணவப் பேய்தலைக் கேறலின் ஓகைமிஞ்சிக்
கழிக்கரு வாதனைக் காளா யுளீர்சகம் காக்குமலர்
விழிக்கரு ணைத்திரு மாலென்னும் வாழ்வெற்றி வீரைநகர்
உழிக்கரு டப்பரிச் சேவைகண் டேத்தி உருகுமினே.–45-கட்டளைக் கலித்துறை

ஒழிக்க அரும் ஆணவப்பேய் தலைக்கு ஏறலின்- (எத்தனை முறை யுணர்ந்து தவிர்த்தும்) அழிப்பதற்கு அரிதான (நான் பெரியன் என்கிற) அஹங்கார குணம் உச்சிவரை நிறைந்திருப்பதால்
ஓகை மிஞ்சி- நெஞ்சம் முழுவதும்) உவகை மிகுதியாகி
கழிக்க அரும் வாதனைக்கு ஆளாய் உள்ளீர்-போக்கு தற்கரிய துன்பத்திற்கு ஆட்பட்டு இருக்கின்றீர்கள் (மீண்டும் மீண்டும் கருவில் பிறந்திறக்கும் துன்பத்திற்கு ஆளாக இருக்கின்றீர்கள்)
சகம் காக்கும் மலர்விழிக் கருணைத் திருமால் என்றும் வாழ் வெற்றி வீரை நகர் உழி – உலகத்தையே (தம் அருட் பார்வையால் காத்தருளும் தாமரைக் கண்ணனாகிய எம்பெருமான் அனு தினமும் கோலங் கொண்டிருக்கின்ற வீரச் சிறப்பு மிக்க வீரகேரளம்பு தூரினிடத்தே
கருடப் பரிச்சேவை கண்டு ஏத்தி உருகுமினே- திருமால் கருடன் மீது உலா வரும் அற்புதக் காட்சியைத் தரிசித்துப் போற்றி அகம் மகிழ்வீராக.-

உருவென் றருவென்று உழல்புன் சமயத்து
இருள்துன் றியிடைந்து அழும்ஏழ் மையீர்!
விருதொன் றுதென்வீ ரையின்மால் ஒருதூண்
வருபண் பைமதிக் கின்மயக் கறுமே.–46-கலிவிருத்தம்-

உரு என்றும் அரு என்றும் உழல் புன் சமயத்து இருள் துன்றிஇடைந்து அழும் ஏழ்மையீர் – இறைவனுக்கு உருவம் உண்டு என்றும் (அரு சமயம் என்றும்), இறைவன் உருவம் இல்லாதவன் என்றும் (சமணம் போன்றதென்றும் ) உலைந்து திரிந்து, அற்பமான கொள்கைகளை யுடைய சமயங்களின் மயக்கங்கள் நெருங்கித் தம் வசங்கெட்டுப் புலம்பும் பேதைமை யுடையோரே!
விருது ஒன்று தென் வீரையின்மால் ஒருதூண் வரும் பண்பை மதிக்கின் மயக்கு அறுமே -வெற்றிச் சிறப்பு மிக்க வீரகேரளம்புதூரில் கோயில் கொண்டிருக்கும் திருமால்
(அன்றொருநாள் பிரகலாதனுக்காக) ஒரு தூணிலிருந்து வெளிப்பட்டு (நரசிங்கமாய்) காட்சியளித்தருளிய இறை குணத்தை உணர்வீராயின் (சமயங்கள் என்று வேறுபாடு காட்டும்) மயக்கநிலை ஒழியுமே (காண்பீராக)

மயன் வியக்கும் மணிமாட மறுநார்தண் டமிழ்வீரைப்
புயல்புரையும் நெடுமேனி ப் புனிதா நீ புளி நிழல்
இயல் முநிவன் ஒரு பதிகம் இசைத்தானும் கினிதருளும்
பயனெனக்கேன் அருள்கில்லாய் பல பாடல் நேர்ந்தேநே .–47-கொச்சகல் கலிப்பா-

மயன் வியக்கும் மணிமாட மறுநார்தண் டமிழ்வீரை–(சிற்பக்கலையில் வல்லவனான) மயன் என்னும் தேவ லோகச் சிற்பி வியக்கும்படியான (உயர்ந்த சிறந்த) மணிமாடங்களும் தெருக்களும் நிறைந்து, தமிழ்ச்சிறப்பு மிக்க வீர கேரளம்புதூரில்

வலியம் யாம் எனச் செருக்குபுன் குணத்தோர் வான நாட்டிடை வாழ்துந ரேனும்
புலிமுற் போய மான் கன்றெனத் தகாரப் புரிந்துன் மெய்யருட் புகழ் சொலல் விழைந்தேன்
கலியிற் புண்படக் காண்பது முறையோ?கருத்துள் வந்து அந்நாள் கழறல் பொய் மொழியோ-
குலிசன் ஊரிளை நகத்தகும் வீரைக் கொற்ற வாசினைக் கொண்டல் மேனியனே–
49-எண் சீர் ஆசிரிய விருத்தம்-

குலிசன் ஊரிளை நகத்தகும் வீரைக் கொற்ற வாசினைக் கொண்டல் மேனியனே–இந்திரனுடைய தேவ லோகத்தை விஞ்சப்படியான அழகும் வளமும் மிக்க வீரகேரளம்புதூரின் வீரத் தலைவரெ! இத் திருத்தலத்தில் வாசஞ் செய்யும் கார்மேக வண்ணா!
வலியம் யாம் எனச் செருக்குபுன் குணத்தோர் வான நாட்டிடை வாழ்துந ரேனும்-எல்லோரையும் காட்டிலும் வல்லமை மிக்கவன் என்று இறுமாப்புடைய இழி யுள்ளம் கொண்டவர்கள் தேவ லோகத்தில் வசிப்பவர்களே யாயினும் -அவர்கள் –
புலிமுற் போய மான் கன்றெனத் தகாரப் புரிந்துன் மெய்யருட் புகழ் சொலல் விழைந்தேன்– புலியின் எதிரே சென்ற மான் கன்று போல நடுக்கமுறுமாறு செய்து உம்முடைய உண்மையான அருளிச் செயல்களைப் பாட ஆவல் கொண்டேன்.
கலியிற் புண்படக் காண்பது முறையோ?- (அடியேன்) வறுமையிலும் சிறுமையிலும் உழன்று வேதனைப்படுதல் முறையாகுமோ?
கருத்துள் வந்து அந்நாள் கழறல் பொய் மொழியோ- அடியேன் மனக்காட்சியில் அன்றொரு நாள் தோன்றி யுரைத்த மொழிகளெல்லாம் உண்மையில்லையோ ? (எல்லாம் பொய் தானோ? மொழிந்தருள்வீராக)

மேனி முற்றும் நீற ணிந்து உருத்தி ரக்கணங் கள்போல் |
மின்னு மென்னை நின்ன ருட்கண் வேட்கை யெய்த விட்ட
நானி லத்தோர் எட்பொ ரப்பு னைந்து லாவுவார் கள்தம்
நாறல் வாயும் ஏசல் காணல் ஞாய மென்க லாகுமோ?
வேனில் வேள்வி ழாவ றாத வீரை யூரில் நாரணா!
வேலை சுற்று பார ளந்து விண்ண ளந்துமா வலிக்கு
ஆனி யற்ற மெய்ப்ப தம்கொடுத்த ளித்த ஐயனே!
அஞ்சல் அஞ்சல் என்ற நாள்ர் ஆனை முன்செல் அப்பனே!–50-பதினான்குசீர்த் தாழிசை-

மேனி முற்றும் நீறு அணிந்து – உடல் முழுவதும் திருநீறு பூசி உருத்திரக் கணங்கள் போல் மின்னும் என்னை-சிவகணங்களைப் போல ஒளி வீசும் அடியேனை
நின் அருட்கண் வேட்கை எய்த விட்ட நீ – உம்முடைய திருவருள் பார்வையைப் பெற வேண்டுமென்ற தீராத விருப்பத்தை(அடியேனுள்ளே ) ஏற்படுத்தி யிருக்கும் நீவீர்
நால் நிலத்தோர் எட்பொரப் புனைந்து உலாவுவார்கள்தம்-இவ் வுலகத்தவர்கள் அனைவரும் இகழும்படியாகக் கற்பனை செய்துரைத்துத் திரிவார்களுடைய
நாறல் வாயும் ஏசல்காணல் ஞாயம் என்கல் ஆகுமோ -(கூடுசொற்களே பேசும்) தீ மணம் வீசும் வாய்கள் பழிப்பதைப் பார்த்து வாளாயிருப்பது முறையாகுமோ?
வேனில் வேள் ‘விழா அறாத வீரையூரில் நாரணா-வேனில்விழா, வேள் விழா போன்று பல விழாக்கள் மலிந்த வீர கேரளம்புதூரில் கோலஞ் செய்யும் நாராயணரே!
வேலை சுற்று பார் அளந்து விண் அளந்து மாவலிக்கு ஆனி அற்ற மெய்ப்பதம் கொடுத்து அளித்த ஐயனே!- (வாமன அவதாரமெடுத்து)உம் திருவடியால் இக்கடல்சூழ் மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் அளந்து எல்லையில்லாத இன்பம் நல்கும் (உம் திருவடிகளை யுடையும்)
வீடு பேற்றினை மாபலிச் சக்கரவர்த்திக்கு அருளிய இறைவரே!
அஞ்சல் அஞ்சல் என்று அந்நாள் ஓர் ஆனைமுன் செல் அப்பனே-(ஆதி மூலமே என ஓலமிட்டழைத்த போது) பயங்கொள்ளாதே என (இதோ வந்தேன் என) அன்றொரு நாள் கசேந்திராழ்வார் முன்னே சென்ற எந்தையே! (அடியேனுக்கும் காட்சி தந்து அவ் வண்ணம் மொழிந்தருள்வீராக.)

அப்பணி சென்னியன்அனையார் பத்தி ஓர்கால் அம்புயப்பூ வினன்போல்வார் கருமம் ஓர்கால்
முப்பழச் சாறுஒல்குதமிழ்ச் சடகோ பாழ்வான் முதலினர்மெய் ஞானம்விட்டம் மொழியா மோன
மெய்ப்பல கைஎட்டெழுத்தும் உடங்க ளாக வீரைநகர் வாழ்பெருமாள் ஆடீர் ஊசல்
செப்பரும் சீர்த்திருவும் நிலமகளும் சேரத் தேவகியார் செல்வர்இருந்து ஆடீர் ஊசல்–51-எண்சீர் ஆசிரிய விருத்தம்-

அப்பு அணி சென்னியன் அனையார் பத்தி ஓர்கால்–கங்கையாதிய நீரினைத் தலையிலே சூடிக் கொண்டிருக்கும் சிவபெருமான் போன்ற தேவர்களின் அன்பு வழிபாடு ஒரு காலாகவும்
அம்புயப் பூவினன் போல்வார் கருமடம் ஓர்கால்- (உம்முடைய உந்திக் கமலத்தில் வீற்றிருக்கும் பிரமம் போன்றவர்களின்ஆக்கல் போனற தொழில்கள் ) ஒரு காலாகவும்
முப்பழச் சாறு ஒல்கு தமிழ்ச் சடகோபாழ்வான் முதலினர் மெய்ஞானம் விட்டம் – மா.பலா,வாழை என்னும் பழங்களைக் குழைத்துச் செய்யப் பெற்ற மதுரம் போன்ற பாசுரங்களை இசைக்கும் சடகோபாழ்வார் ஆகிய பெரியோரின் மெய்ஞானமே உத்திரமாக
மொழியா மோனம் மெய்ப்பலகை சொல்லு தற்கரிய மௌனமே மெய்ப் பலகையாக
எட்டெழுத்தும் வடங்கள் ஆக- நாராயணாய என்னும் விட்டுணு மந்திரமே கயிறு ஆக (அமைத்து ஊஞ்சலாக்கி அதில்)
வீரை நகர் வாழ் பெருமாள் ஆடீர் ஊசல் – வீரகேரளம்புதூரில் வாசஞ்செய்கின்ற கண்ண பெருமானே! ஊசலாடுவீராக
செப்ப அரும் சீர்த் திருவும் நிலமகளும் சேரத் தேவகியார் செல்வர் இருந்து ஆடீர் ஊசல்-தேவகி மைந்தரே!-சொல்லுதற்கு அரிதான சிறப்புகளுடன் கூடிய பெரிய பிராட்டியாரோடும் பூமிப் பிராட்டியாரோடும் சேர்ந்திருந்து ஊசல் ஆடுவீராக!

ஊசலென வேதிரியும் உள்ளத்தேன் ஓர்மையின்றிப்
பேசலும் கேட் டின்பம் பெருக்குமோ-வாசத்
துளவனணி வீரையர்கோன் தொல்லாயர் பாடிக்
களவனணி தண்டைக் கழல்.–54-நேரிசை வெண்பா

ஊசல் எனவே திரியும் உள்ளத்தேன்-(அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டு) ஊஞ்சலைப் போலவே அலைந்து திரியும் நெஞ்சத்தை யுடையேன் (அடியேன்)
ஓர்மை இன்றிப் பேசலும் கேட்டு இன்பம் பெருக்குமோ-துணிவில்லாமல் பிதற்றுவதைச் செவியுற்ற பின்பு (உம் உள்ளத்தில்) மகிழ்ச்சி மேலிடுமோ?
வாசத் துளவன் அணி வீரையர்கோன் தொல்லாயர் பாடிக் களவன் அணி தண்டைக் கழல்- நறமணம் பொருந்திய திருத்துழாய் மாலையை அணிந்தவரே! பெருமை மிக்க வீரையூரின் தலைவரே! தொன்மைச் சிறப்பு மிக்க ஆயர் பாடியிலுள்ள கோபியர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவரே! (வெண்ணெய் திருடியவரே) அழகு பொருந்திய தண்டையைத் திருவடிகளிலே அணிந்தவரே!
(என அனைவரும் புகழத் தக்கவரே அடியேன் மீது இரக்கம் கொள்ளலாகாதோ? அருள்வீராக-

கழல்வேட்டுன் மெய்ப்புக ழேபகராதருங் கானகத்தில்
விழல்வாய்ப்ப நீ இறைப் பாரென்னவேபைம்பொன் வெஃகி நொந்தேன்
அழல்வாட்டு மென்மெழு காகாமுன்ஆண்டருள் அங்கையில்வேய்ங்
குழல்கேட்கும் மால்மிக்கு ளாய்வீரை மேவும் குணக்கொண்டலே.–53-கட்டளைக் கலித்துறை

அங்கையில் வேய் குழல் கேட்கும் மால் மிக்குளாய் வீரை மேவும் குணக் கொண்டலே – அழகிய கையில் புல்லாங்குழலை மிக்க விருப்பமுடன் இசைப்பவரே! வீரகேரளம்புதூரில் விரும்பி வாழும் பெருங்குணமுடைய மேகம் வண்ணமுடையவரே!
கழல் வேட்டு உன் மெய்ப்புகழே பகராது -(அழியாப் பேரின்ப வீட்டை நல்கும் உம்முடைய) திருவடிகளை வேண்டி உம்முடைய திருப்புகழை ஓதாமல்
அருங் கானத்தில் விழல் வாய்ப்ப நீர் இறைப்பர் என்னவே பைம்பொன்வெஃகி நொந்தேன்–அருமையான குறிஞ்சி நிலத்தில் புன்மையான புற்கள் வளரும்படியாகத் தண்ணீரை இறைத்துக் கொட்டுபவர்களைப் போலவே (அடியேனும்) பசும் பொன் போன்ற செல்வத்தையே விரும்பியிருந்து (இதுகாறும்) துன்பப்பட்டேன்
அழல் வாட்டும் மென் மெழுகு ஆகா முன் ஆண்டு அருள்– (அடியேன்) தீயினால் உருகும் மெழுகாய்க் கரைந்து அழியும் முன்பாக வந்து ஆட்கொள்வீராக!

குணங்கும் மாதர்தம் குயத்துமால்கொளும்
சுணங்கல் போலுமென் தொழும்பும் கொள்வையோ?
அணங்கு மாய்அமு தளித்து வானவர்
கணங்கொள் வாய்திரு வீரையிற் கண்ணனே.–54-கலி விருத்தம்

அணங்குமாய் அமுது அளித்து வானவர் கணம்கொள் வாய் திருவீரையில் கண்ணனே-மோகினியாக வந்து தேவர்களுக்கு அமுது அளித்து. செல்வச் சிறப்பு மிக்க வீரகேரளம்புதூரில்வாழும் கண்ணபிரானே!
குணங்கும் மாதர் தம் குயத்து மால் கொளும் (வயது செல்லச்செல்ல இயற்கையில்) வளைந்து மெலிந்து வற்றிப் போகும் பெண்களுடைய நகில்கள் மீது விருப்பம் கொள்கின்ற
சுணங்கல் போலும் என் தொழும்பும் கொள்வையோ-மெலிந்தவனாகிய அடியேனுடைய அடிமைப் பணியையும் (உம் திருவுள்ளத்தில்) ஏற்று அருள்வீர்களோ? கூறுவீராக.

கண்ண னைக்கரு ணைக்கட லேநிகர் காகுத்தன்தனைக் காசைமென் பூந்துண
வெண்ண னைத்தனீ வீரையில் மேவிய மாய னைத்தினம் வாழ்த்தெடுக் கின்றவர்
எண்ண முற்றுப் பெறாதெனச் சொல்லன் ஏழை மானீடர் காள்ஒரு பாடலால்
அண்ண லம்திருக் கச்சியிற் செய்தபேராடல் பாரில் அனேகர் சொல் வார்களே.–55-கட்டளைக் கலிப்பா

ஏழை மானிடர்காள்- அறியாமையை உடைய மாந்தர்களே!
கண்ணனை, கருணை கடலே நிகர் காகுத்தன் தன்னை-கண்ணபெருமானை, கருணைக் கடல் போன்ற இராமனை
காசை மென் பூந்துணர் வண்ணனை, தனி வீரையில் மேவிய மாயனை – காயா மலர்ப்பூங்கொத்து போன்ற நீல வண்ணரை, சிறப்பு மிக்க வீரையூரினில் விரும்பி வாழும் மாயோனை
தினம் வாழ்த்தெடுக்கின்றவர் எண்ணம் முற்றுப் பெற தென சொல்லன்மின் -நாள் தோறும் ஸ்திதித்துப் போற்றி செய்பவர் விண்ணப்பங்கள் நிறைவேறாது எனக்கூறாதீர்
ஒரு பாடலால் அண்ணலம் திருக்சச்சியில் செய்து பேராடல் பாரில் அனேகர் சொல்வார்களே – திருமழிசையாழ்வார் மணி கண்ணன் போகின்றான் ‘ என்னும் ஒரு வெண்பாவால் காஞ்சி வரதர் சொன்ன வண்ணம் செய்த பெருமாளாக திருவிளையாடலைப் பலரும் கூறுவார்களே. (அவற்றையெல்லாம் கேட்டறிந்தாலும் உம்முடைய இழி குணத்தை விட்டொழிப்பீராக.)

களங்கமற்ற மெய்ஞ்ஞானக் கண்ஈந் தாளும் கண்ணனைத்தென் வீரைநகர்க் கண்ணே கண்டு
விளங்கனியிற் கன்றெறிந்த தாதி யான விளையாடல் களைத்தமிழால் விளம்பப் பெற்றேன்
அளங்கருதிப் பானையினை வியந்து பேசா தனவாய பொருளைவிளித்து அகம்ஓல் காமல்
இளங்கவிஞர் மதிப்பதெண்ணிப் புலம்ப மாட்டேன் யானடைந்தஅநுபூதிக்கு எண் இன்றாமே.–56-எண்சீர் ஆசிரிய விருத்தம்

களங்கம் அற்ற மெய் ஞானக்கண் ஈந்து ஆளும் கண்ணனை-குற்றமில்லாத மெய்ஞானவுணர்வு நல்கி (அடியேனை )ஆட்டுவிக்கின்ற கண்ணபெருமானை
தென்வீரை நகர்க் கண்ணே கண்டு-தென்திருப்பதியாம் வீரகேரளம்புதூரிலே தரிசித்து
விளங்கனியில் கன்று எறிந்தது ஆதியான விளையாடல்களைத் தமிழால் விளம்பப் பெற்றேன் – கண்ணன் விளவெறிந்தது முதலான பேராடல்களை (திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களாகிய ஆழ்வார்களின்) தமிழ்ப் பாடல்களால் சொல்லக் கேட்டு அடியேனும் பாடினேன்-
அளம் கருதி பானையினை வியந்து பேசாது-(கண்ணனின் பேராடல்களின் பெருக்கம் காரணமாக (ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என) முழுவதையும் விளக்கிச் சொல்லாது
அனவாய பொருளை விளித்து அகம் ஒல்காமல் -அத்தகைய உட்பொருள்களை மட்டுமே கூறி, மனம் தளராமல்
இளம் கவிஞர் மதிப்பது எண்ணிப் புலம்பமாட்டேன் – சிறு புலவர்கள் (அடியேனை)பாராட்ட வேண்டுமென்பதற்காக வீணாகப் பாடமாட்டேன்
யான் அடைந்த அநுபூதிக்கு எண் இன்று ஆமே-(கண்ணால் ஆட்கொள்ளப் பெற்று)அடியேன் பெற்ற பேரின்பத்திற்கு (தானே கண்டறிந்ததும் பிறர்க்குச் சொல்ல இயலாததுமான பேரின்பத்திற்கு) அளவே கிடையாது.

இன்றுடன் போன நாள்களும் வந்திடுந்தேதி யோடுசொல்1 என்றும்நின் பாரம் நானென நாடும்நீர்
ஒன்றுதந் தாய்பொ லார்உதி ரந்திரண் டாழிதோயஓருங்கடுந் தீரா! வீரமும் ஈவதேன்?
நன்றுபண்பி யாவும் நீதரல் என்கைவம் போதென்வீரையில்நந்துதண் டாழி வாள்சிலை யோடுளாய்!
மன்றுள்நின் றாடி னான்அயன் இந்திரன் தேவர் மானிடர்மண்கலுழ்ந்தான்எ னாநிகழ் மாயனே!–57-பதின்சீர் வண்ண விருத்தம்
–( தந்தனந் தான தானன தந்தனந் தான தானன
தந்தனந்தான தான்ன தானனா)

இன்றுடன் போன நாள்களும் வந்திடும் தேதி யோடுசொல்-(அடியேன் பலவாறு போற்றிப் பாடியும் ) இந்நாள் வரையும் இனி வரப் போகும் நாள்களையும் கூட்டியுரைப்பீராக
என்றும் நின் பாரம் நான் என நாடும் நீர் ஒன்று தந்தாய்-எக் காலத்தும் உன்னுடைய துன்பச் சுமைகளை யெல்லாம் நானே சுமப்பேன் என்று அடியேனை நாடி வந்த நீவீர் எல்லாம் ஒன்று என அருளினீர்கள்
பொலார் உதிரம் திரண்டு ஆழி தோய ஒருங்கு அடும் தீரா-தீக்குணமுடைய அசுராதிகள் ( முற்றிலும் அழிந்ததால் அவர்களுடைய ) இரத்த ஆறு பெருகி கடலைச் சென்றடையுமாறு போரிட்டழிக்கும் வெற்றிச் செல்வரே!
வீரமும் ஈவது ஏன்- (அடியேனுக்கு) வலிமையை அளிப்பது எதற்காகவோ?
நன்று பண்பு யாவும் நீ தரல் என்கை வம்போ-நல்லவை எல்லா வற்றையும் நீரே அருளுகிறீர் எனக் கூறுதல் பொய்யோ
தென் வீரையில் தந்து துண்டு ஆழி வாள் சிலையோடு உள்ளாய் வீரகேரளம்புதூரில் சங்கு, தண்டம், சக்கரம், வாள். வில் என்னும் பஞ்சாயுதபாணியாய் விளங்குகின்றவரே!.
மன்றுள் நினறு ஆடினான் அயன் இந்திரன் தேவர் மானிடர் மண்கலுழ்ந்தால்ஏனை நிதழ் மாயனே- சபைகள் தோறும் காலைத் தூக்கி நின்று ஆடும் சிவபெருமான், பிரமன்,தேவேந்திரன், தேவலோகத்தவர் மற்றும் மண்ணுலக மக்கள் எல்லாம் (நீவீர்) மண்ணுலகில் வந்து கலங்கி அழுதீர் என்று சொல்லும்படியாகக் கண்ணன் அவதாரமாய் நின்ற மாயக் கண்ணபிரானே! (திருவாய் மலர்ந்தருளுவீராக.)

மாயன் ஆரணஞ் செப்புநர் பலர்வரலான நாபியந் தக்கரி யவன் அடல்
வாணன் ஆணமைகுன் றப்பொரு சிலைவலி யுற்றோன் ஓர்
பாய வானவெங் கட்கடு அரவணைஓவி வீரையின் கட்குடி கொளும்அரி
பாலெ னாதுநெஞ் சத்துயர் முழுதும்உரைப்பாரார்?
கார னானமுன் ஒஞ் சத்தகு தகையதுநாரை மீன்அருந் தித்திரி பிழையது
காமர் ஓதிமம் தத்தைஅ னவன்மகன் நட்டூர்ஆன்ஈர மீறிஅங் குற்றுள மகிழ்வன
தோழி மார்மயங் கிப்புணர் பவர்அனை ஏகி டாள்சினர் தெட்டுணை யுரிமையும் விட்டாளே
.–58-பதின்மூன்றுசீர் வண்ண விருத்தம்)-(தான தந்தனந் தத்தன தனதன தான தானனந் தத்தன தனதன
தான தானனந் தத்தன தனதன தத்தானா)

மாயன் ஆரணம் செப்புநர் பலர் வரல் ஆன நாபி- மாயவன்,வேதத்தைச் சொல்பவர்கள் பல பேர் தோன்றுவதற்குக் காரணமான (பிரமனை உந்திக் கமலத்திலே தோற்றுவித்த )பத்மநாபன்
அந்தக் கரியவன் அடல் வாணன் ஆண்மை குன்றப் பொருசிலை வலி உற்றோன்- நீலமேக வண்ணன், போரிட வந்த வாணாசுரனின் ஆண்மை கெடும்படியாகச் சண்டையிட்ட வில் வலிமை யுடையோன்
ஓர் பாயல் ஆன வெம்கண் கடு அரவணை ஓவி- வெம்மையான நஞ்சினையுடைய (ஆதிசேடன் என்னும்) பாம்பாகிய படுக்கையை விட்டு (எழுந்து வந்து)
வீரையின் கண் குடி கொள்ளும் அரி பால்-வீரகேளம்புதூர் கோயிலிலே வாசங்கொண்டிலங்கும் (என் தலைவனாகிய) திருமாலினிடத்தே எனது நெஞ்சத்துயர் முழுதும் உரைப்பார் யார்-(தலைவனை
விட்டுப் பிரிந்துழலும்) என்னுடைய உள்ளத்துத் துன்பத்தை யெல்லாம் சென்று சொல்லி வருவார் யார் இருக்கிறார்கள்? (யாரும் இல்லையே)
கார் அனான் முன் ஒஞ்சத் தகு தகையது- மேகமானது (என் தலைவனாகிய நீலமேக வண்ணனின் மேனி நிறத்தைக் கண்டு) அன்னவர் முன்னே செல்லவும் வெட்கப்படும் தன்மை யுடையது
நாரைமீன் அருந்தித் திரி பிழையது-நாரையானது மீன்களை நீரில் பிடித்துத் தின்னும் குற்றமுடையது (என் தலைவன் மீன் அவதாரம் செய்தவன், நாரைக்கு அவனுருவம் மீன் போன்றே தோன்றும் ஆகையால் அதுவும் பொருந்தாது)
காமர் ஓதிமம் தத்தை அனவன் மகன் நட்டு ஊர் ஆன் உற்று உளம் மகிழ்வன – அழகிய அன்னமும் கிளியும் அத்தகையவரின் (என் தலைவனின்) மக்களாகிய பிரமனும் ஏறச் செலுத்தும் ஊர்திகள்; மேலும், வீர கேரளம்புதூரின் சோலையின் வனப்பைக் கண்டு அங்கேயே தங்கி நெஞ்சம்
நிறைவன (ஆகையால் அவையும் பொருத்தமில்லை)
தோழிமார் மயங்கிப் புணர்பவர்- (என்னைச் சுற்றி யிருக்கும் என்னுடைய)தோழிப் பெண்களோ (என் தலைவனைப் போன்ற ஆண்மை மிக்கவர்களைக் கண்டாலே) மயக்கம் கொண்டு அணையும் இயல்பினர் (எனவே அவர்களும் தூதாகச் செல்லத் தகுதியற்றவர்)
அனை ஏகிடாள் சினந்து எத்துணை உரிமையும் விட்டாளே- அன்னையோ (நான் சொன்னாலும் ) போக மாட்டாள்.-என் மீதும் கோபங்கொண்டு எள்ளளவு கூட அன்பில்லாதவளாக மாறிவிட்டாள்!
இது, தலைவனிடம் தூது அனுப்பத்தக்க தூதுப் பொருள் அமையாது வருந்தும் தலைவி இரங்கிக் கூறியதாகும்.

ஆளாவார் சென்னி அணிபூ வனையதிருத்
தாளா! நம் வீரைநகர்த் தாடாளா!
தேளாம் மிடியொழித்துச் சித்தியெட்டும் நல்கியென்றும்
மீளாக்கதியில் விடு.–59-சவலை வெண்பா-

ஆளாவார் சென்னி அணி பூ அனைய திருத்தாளா -தேவரீருக்கு அடியாரான பாகவதர்கள் தலையில் சூடும் தாமரை போன்ற திருவடிகளை உடையவரே!
நம் வீரை நகர்த் தாடாளா -எங்கள் வீரகேரளம்புதூரில் வாழுபவரே!
தேள்ஆம் மிடி ஒழித்து சித்தி எட்டும் நல்கி என்றும் மீளாக் கதியில் விடு-தேன் போன்று துன்பத்தைத் தரும் என் வறுமையை நீக்கி அட்டமாசித்தி என்பன வற்றை யெல்லாம் தந்து, எப்பொழுதும் நீங்காத பேரின்ப வீட்டை அருளுவீராக!

விடுக்கும் தழையன்றி மாலையொன் றீயும்பொய் வேட்கையன்அன்று
எடுக்கும்குன் றாற்பசுக் காத்தான்தென் வீரை யிடத்தினிது
கொடுக்கும் துழாயலங் கற்சீர் இரண்டும் குலாவுவதால்
‘படுக்கும் கொடுமை யலார்க்கரு ளோகைபப் பாதியன்றே
.–60-கட்டளைக் கலித்துறை-

விடுக்கும் தழை அன்றி மாலை ஒன்றுஈயும் பொய் வேட்கையன் அன்று- (உம்முடைய தலைவர்) கையுறையாகத் தந்தனுப்பியுள்ள இத் தழை மட்டுமல்லாமல் மாலை ஒன்றையும் அளித்துள்ளார் என்பதால் அவர் விருப்பத்தில் ஐயங்கொள்ளாதே. அவர் பொய் வேடதாரி அல்லர்
அன்று எடுக்கும் குன்றால் பசுக்காத்தான்- கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆயர்பாடியிலுள்ள பசுக் கூட்டங்களை யெல்லாம் காப்பாற்றியவர் அவர்
தென் வீரை இடத்து இனிது கொடுக்கும் துழாய் அலங்கல் சீர் இரண்டும் குலாவுவதால் படுக்கும் கொடுமை – வீரைநகரில் மகிழ்ந்து கொடுத்த இத் திருத்துழாய் மாலையில் தளிராகிய தழை என்பதும் உண்டு, அதுவே பூமாலையாக ஆவதும் உண்டு. இவ்விரண்டு சிறப்புகளை உடையதாகையால் இதைப் பெற்றவர் துன்பங்கள் எல்லாம் தீரும்
அயலார்க்கு அருள் ஓகை பப்பாதி அன்றே-(தீமை புரியும் கொடுஞ்செயல் புரிபவர் அல்லாத) நல்லோருக்கெல்லாம் அவர் அருளும் உவகை பாதிபாதி என்று தவறாக எண்ணாதே. (அவர் அருள் முழுமையானதே) இதை ஏற்றுக் கொள்வாயாக.-

பாதிக் கலைவாண் மதிநுதற்பொற் பாவை யனையீர் எனதுமகள்
பலவா மகளிர் விளையாட்டிற் பழகும் வீரைப் பதிமாலை
வீதிக் கருடன் மிசைகண்டே மெலிந்து பலகோ ரணிசெய்து
வீழ்ந்தே கிடந்தாள் அன்றொருநல் விறலி கொணர்ந்த விரைத்துளவால்
சோதிக்கமல முகமலர்ந்து சொற்சோர் வின்றி ஆன்பாலும்
சோறும் அருந்தி வளைகலன்பொற் சுண்ணம் களபம் தொடுத்தணிந்து
மாதிக்கறிய இன்றென்பால் வருவான் கலக்கஎ னச்செருக்கி
மலரால் அரங்கும் அலங்கரித்து வளஞ்சேர் துதிசொற்றிருந்தாளே
.–61-பன்னிருசீர்த்தாழிசை-இதுவுமது-

பாதிக் கலை வாள் மதி நுதல் பொற்பாவை அனையீர்-பிறைச் சந்திரனைப் போலவும் ஒளி வீசுவதுமான நெற்றியையுடைய தங்கப் பதுமையைப் போன்ற பெண்களே!
எனது மகள் பல ஆம் மகளிர் விளையாட்டில் பழகும் வீரைப்பதி மாலை-என்னுடைய பெண்ணானவள் (அன்று ஆயர்பாடியில்) எண்ணற்ற கோபியர்கள் இடையே பற்பல ஆடல்களில் மூழ்கித் திளைத்த வீரகேரளம்புதூர்த் தலைவரான திருமாலானவர்
வீதிக் கருடன் மிசை கண்டேமெலிந்து பல கோரணி செய்து வீழ்ந்தே கிடந்தாள்-தெருவில் கருடப்பறவை மீது அமர்ந்து வந்ததைப் (கருட சேவையினை) பார்த்து (அவர் மீது காதல் கொண்டு) உடல் மெலிவுற்று, சொல்லு தற்கரிய பலவித நோய்கள் பெற்று (பேச்சு மூச்சின்றி) தரையில் படுத்திருந்தாள்-
அன்று ஒரு நல் விறலி கொணர்ந்த விரைத் துளவால் சோதிக் கமல முகம் மலர்ந்து- அத்தகைய ஒருநாளில் இளம் பருவத் தோழி ஒருத்தி (தலைவரிடத்திருந்து) கொண்டு வந்த
நறுமணம் கமழும் திருத்துழாயால் (அவள் மயக்கம் தீரும்படியாக) அவள் நிலையை ஆராய்ந்த பொழுது (அது வரையில் சோர்ந்து காணப்பட்ட அவள்) அத் துழாயால் ஒளி வீசும் தாமரை மலர் போன்று முகமலர்ச்சி யுண்டாகி
சொல் சோர்வு இன்றி ஆன் பாலும் சோறும் அருந்தி-(ஆனந்த மேலீட்டினால், வாயில் படபடவென சொற்கள் தடுமாற்றமின்றி வெளி வரவும், பசுவின் பாலும் சோறும் உண்டு
வளை கலன் பொற்சுண்ணம் களபம் தொடுத்து அணிந்து- கையில் வளையல்களையும் உடல் முழுவதும் ஆடை அணி கலன்களையும் பொற் கண்ணமும் நறுமண மிக்க சாந்தினையும் மிகப் பலவாக அணிந்து கொண்டு
மா திக்கு அறிய இன்று என்பால் வருவான் கலக்க எனச் செருக்கி- ( அழகும் சிறப்பும் பொருந்திய) தாயே! எல்லாத் திசை யிலுள்ளவர்களும் அறியும்படியாக (என் இறைவர்) இன்றைய தினம் என்னிடம் வருவார், வந்து என்னை அணைப்பார் என்று மிக்க களிப்புடன்
மலரால் அரங்கும் அலங்கரித்து வளம்சேர் துதி சொற்றிருந் தாளே- பூக்களால் சபையைச் சிங்காரித்த வண்ணம்,
(நலம் தருகின்ற நாராயணா என்னும் படியான) பல போற்றிப் பாசுரங்களை அவள் வாயில் சொல்லிக் கொண்டே யிருந்தாள் (என்னே அவள் மகிழ்ச்சி!)-

இருந்தமிழ்ச்சொல் மழைபொழியும் புலவீர்! செஞ்சொல் ஏற்றமெல்லாம் மருதனைப்போல் இனிது தேறும்
அருந்தகைய மன்னர்களே! வயிரம் குன்றா அன்பர்காள்! வீரையின்மால் அடியார்பாதம்
தருந்தரும வடிவான துகளைச் சென்னி தாங்கியபின் என்மனத்திற் தானாத் தோன்றும்
பெருந்தனத்துப் பனுவல்கள் எத்தனையோ சற்றே பேசுகின்றேன் இதுபகர்தல் பெருமைக் கன்றே.
–62-எண்சீர் ஆசிரிய விருத்தம்-

இருந்தமிழ்ச் சொல் மழை பொழியும் புலவீர்-(பல்லாயிரம் ஆண்டுகளாகியும் இன்னும் இளமையோடு இருக்கும்)சிறந்த தமிழ் மொழியால் எண்ணற்ற பாசுரங்களைப் பாடும் புலமையுடையோரே!
செஞ்சொல் ஏற்றம் எல்லாம் மருதனைப் போல் இனிது தேறும்- (நீவிர் சொல்லும்) செம்மை மொழியின் பெருமை யனைத்தும் மருதப்பனைப் போன்றே ஏற்றம் பல பெறும்
அருந்தகைய மன்னர்களே வயிரம் குன்றா அன்பர்காள்-நற்குணமும் பெருமையும் மேன்மையும் மிக்க அரசர் பெரு மக்களே! வலிமை மிகப் பெற்ற அன்புடையவர்களே!
வீரையின் மால் அடியார் பாதம் தரும் தரும வடிவான துகளைச் சென்னி தாங்கிய பின்- வீர கேரளம்புதூரில் கோயில் கொண்டுள்ள கண்ணபெருமானின் தொண்டர்தம் காலடிகள் அளிக்கும் அறத்தின் சின்னமான துகங்களை(அடியேனுடைய) தலையில் அணிந்த பின்பு என் மனத்தில் தானாத் தோன்றும் பெருந்தனத்துப் பனுவல்கள் எத்தனையோ – அடியேனுடைய உள்ளத்தில் இயல்பாக உண்டாகும் சிறப்புடைய பாடல்கள் கணக்கற்றன-
சற்றே பேசுகின்றேன் இது பகர்தல் பெருமைக்கு அன்றே(அப் பனுவல்களில்) சிலவற்றை மட்டுமே இப்பொழுது பாடுகின்றேன். இவ்வாறு பாடுவது அடியேன் புலமைச் சிறப்பைக் காட்டுவதற்காக அல்ல என்பதை அறிவீராக.(எம்பெருமானின் திருப் புகழைப் பரப்பவே அடியேன் பாடுகிறேன்.)

மைக்கன மேநிகர் கிட்டிணன் வானவர் மட்குமுன் வாழ்வருள் பெட்பினான்
அக்கர மாவன எட்டுடை யான்அரு மைத்திரு வாய்மொழி கற்றுளார்
பக்கம்வி டாதவி ருப்பினன் வீரையர் பற்பல நாளும்வ ழுத்துகோ
செக்கரை நேர்சிவன் முற்சில ரேயுணர் சித்துடை யானெனல் மெய்ச்சொலே.–63
-எழுசீர் வண்ண விருத்தம்-( தத்தன தானன தத்தன தானனதத்தன தானன தத்தனா )

மைக்கனமே நிகர் கிட்டிணன் வானவர் மட்கும் முன் வாழ்வு அருள் பெட்பினான்- (அடர்ந்த மை போன்ற கருமேகமே போன்ற கண்ண பெருமானானவர் தேவர்கள் அழியும் முன்பாக அவர்களுக்கு அபயம் அருளிய பெருமைக்குரியவர்
அக்கரம் ஆவன எட்டு உடையான்- (ஓம் நாராயணாய நம என்னும்) திருமந்திரவெழுத்து எட்டின் வடிவாக இருப்பவர்
அருமைத் திருவாய்மொழி கற்று உளார் பக்கம் விடாத விருப்பினன்- (ஆழ்வார்களிற் சிறந்தோராகிய) நம்மாழ்வார் இயற்றியருளிய திருவாய்மொழியைப் படித்துணர்ந்தோர் அருகேயே தங்கியிருக்கும் ஆவலுடையவர்
வீரையர் பற்பல நாளும் வழுத்தும் கோ- வீரைநகர அன்பர்கள்-அனு தினமும் போற்றிப் பரவும் தலைவர்!
செக்கரை நேர் சிவன் முதல் சிலரே உணர் சித்து உடையான் எனல் மெய்ச் சொல்லே-செவ்வானம் போன்று செம்மை நிறமான சிவபெருமானை யொத்த ஒரு சிலர் மட்டுமே அறியக் கூடிய மாயவித்தைகளை யெல்லாம் (சித்து விளையாடல்களை யெல்லாம்) செய்ய வல்லவர் என்று பலரும்
கூறுவது உண்மையே யாகும் (அடியேனும் கண்டு கொண்டேன்).

சொலபமல ஓர்பெரிய தவமுளது லோகரெதிர் சொலினுமதி யார்களிது சரதமெழில் வீரையூர்
நலமருவ ஓர்கையிடை புனையும்வ நீதமிக நகநிலைகொள் வானை அவன் அடியவர்கள் பாடலால்
மலநிகள மானதடை முறியநனி பேசிஇகல் வலியதகு வேசர்முடி இடறலும்அ வாவியே
தலமகள்அ கோவெனம னியகொடிதெ லாமும்அழிதலின்முயல் ஓர்பாகவ தனதுபிறகு போதலே.-
-64-எண்சீர் வண்ண விருத்தம்-(தனனதன தான தன் தனன தன தானதன தனனதன் தானதன் தனனதன தானனா)

லோகர் எதிர் சொல்லினும் மதியார்கள் -மெய்யறிவு இல்லாத உலக மக்கள் எம்பெருமானே நேரில் வந்து வாக்கருளினாலும் உணர மாட்டார்கள் (அத்தகைய அஞ்ஞானம் மிக்கவர்கள் அவர்கள்)
இது சரதம்- இதுவே உண்மை நிலையாகும்
எழில் வீரையூர் நலம் மருவ ஓர் கையிடை புனையும் நவநீதம் மிக நகம் நிலைகொள்வானை-அழகுமிக்க வீரகேரளம்புதூர் என்னும் நகர் சிறக்கும்படியாக, தம்முடைய ஒரு கரத்திலே வெண்ணெயை ஏந்தி இப்பூமியில் வந்து தங்கிய எம்பெருமானாகிய கண்ணபிரானை
அவன் அடியவர்கள் பாடலால் மலம் நிகளமான தடை முறிய நனிபேசி- அவருடைய திருவருள் பெற்ற அடியவர்களாகிய ஆழ்வார்கள் போன்றோரின் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களால். அறியாமை,வினைகள் ஆகிய விலங்குகள் அகலும்படியாகப் போற்றியும்-
இகல் வலிய தகுவேசர் முடி இடறலும் அவாவியே -பகை யுணர்ச்சி மிக்க கொடிய அரக்கர்களின் தலைகள் கவிழும் படியாக விரும்பியும்
தலமகள் அகோ என மன்னிய கொடிது எல்லாமும் அழிதலில் முயல்- பூமாதேவி வருந்தும்படியாக நிலைபெற்ற கொடுமைகள் அனைத்தும் ஒழியும் படியாகவும் அரும் பணியாற்றுகின்ற
ஓர் பாகவதனது பிறகு போதலே – ஒப்பற்றதொரு அடியாரது நெறியைப் பின்பற்றுகின்ற ஓர் பெரிய தவம் உளது -ஓர் உன்னதமான தவம் இருக்கின்றது(இதை உணர்வீர்களாக)
சொல்அபம் அல- (அடியேனுடைய மொழியில் வேறுபாடு எதுவுமில்லை (அறவீர்களாக.)

போதனைப் பலகோடி புவனமொடு தரவுந்தி பூத்தநெடு மால்புரக்கும்
புனிதவீ ரைப்பதிப் புலவீர்என் மொழிகளிற் பொய்யின்று, சிறிதுகேண்மோ
ஆதவர்க ளொடுகூடி விளையாடினேன் செறுவில் அண்டாரைவேர்கெல்லினேன்
அம்புயம் தடமலை யசைத்திடக் கண்டேன் அரக்கர் உருளச்சிரித்தேன்
காதகத்தொழிலோரை மிகமதித்தேன் சிறிது கடலைக் கடைந்தும் உண்டேன்
கன்னியரை அன்னைய ரென த்தக்கபே ரொடும் கலகங்கள் பெரிதுசெய்தேன்
பூதம்ஒன் றைப்பதத்தால் மிதித்தேன்; பெரும் புற்றினைக் கொண்டுவந்தேன்.
புண்ணியம் பேசினேன் அகளங் கரச புஞ்சபூர ணத்துற வெய்தியே.–65-
இரட்டையாசிரிய விருத்தம் )சம்பிர தம்-இது இருபொருள் பயப்பதாக அமையும்.

போதனைப் பல கோடி புவனமொடு தர உந்தி பூத்த நெடுமால் புரக்கும் புனித வீரைப்பதிப் புலவீர் -எண்ணற்ற அண்டங்களைப் படைப்பதற்காகத் தம்முடைய உந்திக் கமலத்தில் பிரமனைத் தோற்றுவித்த திருமால் ஆகிய கண்ணபிரான் காத்தருளும் புண்ணிய நகராகிய வீரகேரளம்புதூரில் விளங்கும் சான்றோர்களே!
என்மொழிகளில் பொய் இன்று சிறிது கேண்மோ- அடியேனுடைய கூற்றுகளில் பொய் ஒன்றுமில்லை (எல்லாம் மெய்யே) சற்றுச் செவி மடுத்துக் கேட்பீராக!
சம்பிரதப் பொருள்-
ஆதவர்களோடு கூடி விளையாடினேன் – பல ஸூரியங்களுடன் சேர்ந்து ஆடல் புரிந்தேன்
செருவில் அண்டாரை வேர் கெல்லினேன்- போரிட வந்த பகைவர்களை வேரோடு கிள்ளி (தோண்டி) எறிந்தேன்
அம்புயம் தடமலை அசைத்திடக் கண்டேன்-வலிமை மிக்க தோள்கள் பெருங் குன்றுகளை அசைப்பதைப்பார்த்தேன்
அரக்கர் உருளச் சிரித்தேன்- அசுரர்கள் தோல்வி யுற்று மடிந்து உருண்டு விழுமாறு அவர்களைப் பார்த்து நகைத்தேன்
காதகத் தொழிலோரை மிக மதித்தேன்-கொலைகள் செய்வோரை நன்கு போற்றினேன்
சிறிது கடலைக் கடைந்தும் உண்டேன் -சிறிதளவு கடல் நீரைக் கடைந்தும் சாப்பிட்டேன்.
கன்னியரை அன்னையர் எனத் தக்க பேரோடும் கலகங்கள் பெரிது செய்தேன் – மணமாகாத பெண்களைத் தாயானார்கள் எனச் சொல்லுமாறு குழப்பம் பல புரிந்தேன்
பூதம் ஒன்றைப் பதத்தால் மிதித்தேன்- கொல்ல வந்த பூகம் ஒன்றைக் காலால் நசுக்கிக் கொன்றேன்
பெரும் புற்றினைக் கொண்டு வந்தேன் – பெரிய பாம்பினைக் கொணர்ந்தேன்
புண்ணியம் பேசினேன்- வேதங்களிலும் மேலான ஞானத்தைப் பற்றியே எடுத்துரைத்தேன்
அகளங்க ரச புஞ்ச பூரணத் துறவு எய்தியே- அகளங்க அரச புஞ்ச பூரணத் துறவு எய்தியே (இவற்றை யெல்லாம் செய்தேன்)
இயற்கைப்பொருள்
ஆதவர்களோடு கூடி விளையாடினேன் – இடையர்களாகிய யாதவர்களுடன் சேர்ந்து ஆடல் புரிந்தேன்
செருவில் அண்டு ஆரை வேர் கெல்லினேன்- வயலில் முளைத்த ஆரைச் செடியின் வேர் எடுத்தேன்.-
அம்புயம் தடமலை அசைத்திடக் கண்டேன்- தாமரையைத் தண்ணீர் அலைகள் அசைத்திடக் கண்டேன்
அரக்கர் உருளச் சிரித்தேன்- சாராயம் குடித்தவர்கள் புரண்ட போது நகைத்தேன்
காதகத் தொழிலோரை மிக மதித்தேன்- காத்தல் தொழில் புரியும் (அதகரை) மருத்துவரை மிகவும் மதித்தேன்
சிறிது கடலைக் கடைந்தும் உண்டேன்- கொஞ்சம் கடலைப்பருப்பைக் கீரையோடு சேர்த்துக் கடைந்தும் சாப்பிட்டேன்.
கன்னியரை அன்னையர் எனத்தக்க பேரொடும் கலகங்கள் பெரிது செயதேன்- இளம்பெண்கள், ஆயர்குலத் தாய்மார்கள் ஆகியோருடன் கூடி விளையாடி பேரொலி எழுப்பினேன்
பூதம் ஒன்றைப் பதத்தால் மிதித்தேன்-பூமியைக் காலால் மிதித்துக் கொண்டே இருக்கிறேன்
பெரும் புற்றினைக் கொண்டு வந்தேன்- பெரிய புல்லை உடைய தினையை எடுத்து வந்தேன்
புண்ணியம் பேசினேன்- தூய்மையே பேசினேன்
அகளங்க ரச புஞ்ச பூரணத்து உறவு எய்தியே – குற்ற மற்றதும் இனிமையின் திரட்சியினதுமாகிய முழு முதற் பொருளான இறைவனின் துணை கொண்டே-

துறவாது வேடமிட்டுத் தொண்டரொடு கூடி
அறமலிதற் காவனசெய் யாமல் பிறவிப்
பிணிமலிதற் கான பிழையனந்தம் செய்தேன்
அணிதமிழ்க்கும் வேட்கையுற்றா யன்றோ!-பணிலமொடு
சக்கரமும் ஏந்தித் தமியேன் மனவெளியூடு
அக்கனவில் வந்ததுபொய் யாகாமே- திக்கறியப்
பட்டப் பகலிற் பறவையர சேறிவந்தென்|
இட்டப் படியருட்பே றீந்தருள்வாய்-துட்டர்களைக்
கொல்வதஞ்சிப் பேடிக் குணங்காட்டி னற்றிருத்தி
வில்வலிமைக் கீர்த்தி மிகக்கொடுத்தாய்-கல்வரை ஒன்று
ஏந்திப் பசுக்காத்திட்டு இந்திரனும் வானவரும்
காந்தியநெஞ் சேங்கி ஒல்கக் கண்டுவந்தாய்-நீந்திக்
கரையேற வல்லார் கருத்துங் கலங்கத்
திரைவீசும் வாவியிலோர் தீக்கண்- வரைபோலும்
பாம்பிற்கும் அம்பொற் பதஞ்சூட்டி னாய்எனையோர்
வேம்பிற் கசந்து வெறுத்துவிடேல்-கோம்பிக்கு
உருகும யில்போற்பொன் உள்ளவரை நாடி
அருகுமிழி வாற்தளர்ந்தேன் அந்தோ ஒருகுறையும்
இல்லாத ருள்வதனுக் கேதேனும் ஓர்தடைநின்
கூத்துள் அடக்கமெனக் கோடாநு கோடிமறை
ஏத்தும் உலவா இசைபொய்யோ- ஆத்துமப்பேர்
ஆனந்தத் தாசை அணுவுமரு வாக்கவிஞர்
போனதற் கஞ்சிப் புழுங்குகின்றேன்- தானம்
தராவிடினும் என்சொற்தமிழ்விலைப் பொன்தந்தால்
கராசலம்போன் றுய்ந்துகொள்வேன் கண்டாய்- குராவினையும்
கையாற் தழுவக் கருத்தொவ்வாக் கற்பினர்தம்
ஓய்யாரத் துப்பால் உயர்வீரை- எய்யாப்
புகழ்பொருந்தக் காக்கும் புருடோத் தமனே
இகழ்சிலர்க்கும் பேறளித்தோனே.–66
-நேரிசைப் பஃறொடை வெண்பா-

குராவினையும் கையால் தழுவக் கருத்து ஒவ்வாக் கற்பினர் தம் ஓய்யாரத் துப்பால் உயர் வீரை எய்யாப் புகழ் பொருந்தக் காக்கும் புருடோத்தமனே-குரா மரத்தினையும் தம் கரங்களால் தொட விரும்பாத கற்பு நலம் மிக்கவர்கள்
வாழும் அழகும் மேன்மையும் மிக்க வீரை நகரை(இதுகாறும் எந்த நகரும் அடையாத )பெருஞ்சிறப்புடன் வாழ்வித்தருளும் ஆண்மையில் சிறந்த அரசரே!
இகழ் சிலருக்கும் பேறு அளித்தோனே- (உம்மை) வெறுத்துப் பேசியவர்களுக்கும் வீடுபேறு நல்கியவரே!
துறவாது வேடம் இட்டுத் தொண்டரோடு கூடி – மண், பெண்.பொன் என இவ்வுலக ஆசைகள் ) எதையும் துறக்காமல், வெறும் வேடதாரியாகி, அடியார் கூட்டத்தில் சேர்ந்து
அறம் மலிதற்கு ஆவன செய்யாமல் பிறவிப்பிணி மலிதற்கான பிழை அனந்தம் செய்தேன்-தருமம் தழைப்பதற்கு வேண்டியதைச் செய்யாது, (மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து உழலும்) பிறவி நோய் உண்டாவதற்கான குற்றங்களை யெல்லாம் அளவில்லாமல் புரிந்தேன்
அணி தமிழ்க்கும் வேட்கை உற்றாய் அன்றோ-(ஆழ்வார்களின்) பெருமை மிக்க திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களுக்கு ஆசை கொண்டீர் அல்லவா?
பணிலமொடு சக்கரமும் ஏந்தி தமியேன் மனவெளி ஊடு அக்கனவில் வந்தது பொய் ஆகாமே – சங்குடன் சக்கரமும் கையில் ஏந்திக் கொண்டு வறியவனாகிய அடியேனுடைய உள்ளத்தின் கண்ணே அன்றொரு நாள் கனவில் (நீவிர்) வந்து காட்சியருளியது பொய்யாகி விடாமல்
திக்கு அறியப் பட்டப் பகலில் பறவை அரசு ஏறி வந்து என் இட்டப்படி அருள் பேறு ஈந்து அருள்வாய்-எல்லாத் திசைகளும் பார்க்கும்படியாக, ஸூரியன் ஒளி வீசும் பகற் பொழுதில் கருடன் மீதமர்ந்து எழுந்தருளி அடியேனுடைய விருப்பத்திற்கேற்பப் பெறுதற்கரிய பேரின்ப வீட்டினை அளிப்பீராக!
துட்டர்களைக் கொல்வது-அஞ்சிபேடிக்குணம் காட்டிநர் திருத்தி வில் வலிமைக் கீர்த்தி மிகக் கொடுத்தாய்-கொடியவர்களைக் கொல்லப் பயந்து ஆண்மையின்மையைக் காட்டியவனைத் (அருச்சுனனைத்) திருத்தி அவனுடைய கை வில்லின் பேராற்றலைக் காட்டினீர்)
கல் வரை ஒன்று ஏந்திப் பசு காத்திட்டு இந்திரனும் வானவரும் காந்திய நெஞ்சு ஏங்கி ஒல்கக் கண்டு உவந்தாய் (கோவர்த்தன கிரி என்னும்) பெருங்கல் மலையை ஒரு விரலால் தாங்கி நின்று பசுக் கூட்டங்களைக் காப்பாற்றி,) இந்திரனும் தேவர்களும் பொறாமையால் மனம் வெதும்பி ஏக்கமுற்று மெலிவதைப் பார்த்து மகிழ்ந்தீர்-
நீந்திக் கரை ஏற வல்லார் கருத்தும் கலங்கத் திரை வீசும் வாவியில் ஓர் தீக்கண் வரை போலும் பாம்பிற்கும்
அம்பொற் பதம் சூட்டினாய்- (பாவங்களே நிறைந்த பிறவியாகிய துன்பக் கடலை) நீந்திக் கடக்க வல்லவர்களின் (ஞானிகளின்) நெஞ்சமும் நடுக்கும்படியாக (தீமையே நிறைந்த) அலைகள் வீசும் நீர்ப் பரப்பில் தோன்றிய பெருந்தீப்பிழம்பைக் கண்களால் பொழிந்து கொண்டுடிருக்கும் மலை போன்ற (காளிங்கன் என்னும்) பாம்புக்கும் (அதன் தலை மீது ஏறி நடனம் செய்து) உம்முடைய திருவடிகளை அளித்தீர்கள்!என்னை ஓர் வேம்பில் கசந்து வெறுத்து விடேல்-அடியேனை வெறுக்கத் தக்க ஒருவனாக எண்ணத் தள்ளிவிட வேண்டாம்
கோம்பிக்கு உருகும் மயில் போல் பொன் உள்ளவரை நாடி அருளும் இழிவால் தளர்ந்தேன் அந்தோ- பச்சோந்திக்காக மயக்கம் கொள்ளும் மயிலைப் போன்று, செல்வம் உடையவர்களைத் தேடிச் சேர்ந்து இரந்து இழிந்து மெலிந்தேன், என்னே என் நிலை!
ஒரு குறையும் இல்லாது அருள்வதனுக்கு ஏதேனும் ஓர் தடை நின் வல்லாண்மையில் பெரிதாய் வந்து உள்ளதோ-(துன்பப்பட்டு வருந்திச் சரணடைவோருக்கு உடன்அருளாமல்) உம்முடைய குறைவில்லாத கிருபையை நல்கும் வல்லாண்மையில் என்ன தடை ஏற்பட்டதோ அறியேன்! (ஏதாகிலும் தடை உள்ளதா எனத் தெரிவிப்பீராக) எல்லாம் நின் கூத்துள் அடக்கம் எனக் கோடாநு கோடி மறை ஏத்தும் உலவா இசை பொய்யோ -அண்ட சராசரங்கள் அனைத்தும் இயங்கும் இயக்கம் எல்லாம் உம்முடைய பேராடலில் அடங்கும் என்று வேதங்களெல்லாம் புகழ்ந்து ஏத்துவது பொய்யாகுமோ?
ஆத்துமப் பேரானந்தத்து ஆசை அணுவும் மருவாக் கவிஞர்|-போனதற்கு அஞ்சிப் புழுங்குகின்றேன்- இவ்வுலகில் புழங்கும் சீவாத்துமாக்கள் பரமாத்மாவாகிய உம்மைச் சரணடைதல் வேண்டும் என்னும் பேரவாவை ஒரு சிறிதும் கருதிக் கைவரப் பெறாத போலிப் புலவர்களின் இழி தன்மைக்கு அஞ்சி மனம் வெதும்புகின்றேன்–தானம் தரா விடினும் என் சொல் தமிழ் விலைப் பொன் தந்தால் கராசலம் போன்று உய்ந்து கொள்வேன் கண்டாய்-(நீவீர்) தருமமாக எதையும் அடியேனுக்கு அளிக்க வேண்டாம்.(உம்மைப் புகழ்ந்து பாடும் பாடலுக்கேற்ப) அடியேனுடைய மொழிக்குத் தக்க மதிப்பாகப் (பேரின்பத்தினை)பொன்னை அளித்தால் போதும்.யானையைப் (கசேந்திரனைப்) போன்று அடியேனும் பேறு பெற்றவனாவேன்.காண்பீராக.

அளிக்கொந் தளகமின் னார்தம்மை நாடி அகம்பெரிது
களிக்குங் தமியனை ஆண்டால்நின் மெய்ப்புகழ்க் காமர்குன்றாது
ஒளிக்கும்ப மென்முலைக் கோபியர் கூட்டம் ஒருங்கணைந்தாய்
துளிக்குஞ்செர் தேன்பொழில் சூழ்வீரை காக்கும் தொழிற்கண்ணனே
.–67-கட்டளைக் கலித்துறை-

ஒளிக்கும்ப மென்முலைக் கோபியர் கூட்டம் ஒருங்கு அணைந்தாய்- அழகிய கச்சினகத்தே யானையின் மத்தகம் போன்று குவிந்ததும் மென்மை யானதுமான நகில்களையுடைய ஆயர்குலப் பெண்கள் எல்லோரையும் ஒரே நேரத்தில் கூடியின்புற்று இருந்தவரே!
துளிக்கும் செந்தேன் பொழில் சூழ் வீரை காக்கும் தொழில் கண்ணனே – இனிக்கும் தேனைத் தம்மகத்தே கொண்ட பூக்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பெற்ற வீரைநகரை காப்பதே தொழிலாகக் கொண்ட கண்ண பெருமானே!
அளிக்கொந்தளகம் மின்னார் தம்மை நாடி அகம் பெரிது களிக்கும் தமியனை ஆண்டால் நின் மெய்ப்புகழ்க்காமர் குன்றாது – வண்டுகள் மொய்க்கும் மணம் மிக்க அழகிய கூந்தலை யுடைய மகளிரை விரும்பிச் சேர்ந்து களித்திருக்கும் அடியேனை ஆட்கொள்வதால் உம்முடைய
பெரும் புகழுக்கு இழுக்கு ஒன்றும் ஏற்படாது (அதனால் விரைந்து வந்து அருள் புரிவீராக )

தொழிலற் றொருதுன் பமும்இன்ப மும்அற்று
அழிவற் றபதத்து உறுமா றருள்வான்
விழியிற் றமிழ்நா டுணர்வீ ரையின்மேய
வழிபட் டனர்வாழ் வுறழ்மா யவனே.–68-
கலிவிருத்தம்-

தொழில் அற்று ஒரு துன்பமும் இன்பமும் அற்று அழிவு அற்ற பதத்து உறுமாறு அருள்வான்- (இவ்வுலகப் பற்றுக்களினாலுண்டாகும்) செயல்களெல்லாம் ஒழித்து எவ்வகைத் துயரமோ மகிழ்ச்சியோ நம்மை அண்டாமல், என்றும் அழிவில்லாத திருவடிப் பேற்றினை அடையுமாறு அருள்பவர்(யார் என வினவு வீராயின்)
வழியில் தமிழ்நாடு உணர் வீரையின் மேய வழிபட்டவர் வாழ்வு உறழ் மாயனே-(ஞான நூலோர்களில்) குறைவற்ற தமிழ் நாட்டினர் நன்குணர்ந்த வீரைநகரின் கண் கோயில் கொண்டுள்ள இறைவரைப் போற்றிச் செய்தவர்களைக் காத்தருளும் மாயோனாகிய திருமாலே ஆவார்!

அவமேயுழல் பவவேர்கெலும் அட்டாக்க ரம்நட்டாய்
அவனானபின் அவளானதென் றரியாரு ணர்கிரியே
கவலைக்கடல் சுவறப்பொரு கண்ணாமணி வண்ணா
கவளங்கொள்ஓர் குவடன்றடர் கையா அருள்மெய்யா
சிவனா தியர்தவ நாடியசீலா மலைமூலா
திவவூடிருள் நவலீலைசெய் தீரா முதல்வீரா
உவரிப்பொருள் கவர்வீரையில் உற்றாய் பலநற்றாய்
உவலைப்பழி நுவலாதெனை ஒருவேளை யில்மருவே.–69-
எண்சீர்க்கட்டுத் தாழிசை-

அவமே உழல் பவ வேர் கெல்லும் அட்டாக்கரம் நட்டாய்-இவ் வுலகத்தில் வீண் செயல்களிலேயே சிக்கித் தவிப்பவர்களின் பாவங்களை அடியோடு போக்குவிக்கும் விட்டுணு மந்திரமாகிய என் எழுத்துக்களின் விளக்கமானவரே!
அவன் ஆன பின் அவள் ஆனது என்று அறியார் உணர் கிரியே -ஆண் பெண் ஆனது (தேவகி மைந்தனாகப் பிறந்து யசோதையின் பெண் குழந்தை யிடத்தில் மாறிச் சென்று வளர்ந்தது) என்பதைத் தெளிந்து அறியாதவரும் உணருமாறு (கம்சன் உணருமாறு)செய்த மலையோனே!
கவலைக் கடல் சுவறப்பொரு கண்ணா! மணிவண்ணா!- பிறவித்துன்பமாகிய கடலை வற்றச் செய்யும்படிப் போரிடும் கண்ண பெருமானே! நீல நிறத்தவரே!
கவளம் கொள் ஓர் குவடு அன்று அடர் கையா! அருள்மெய்யா! குவலயாபீடமாகிய யானையைக் கொன்ற கரத்தரே!-மெய்யருளை நல்கும் இறைவரே!
சிவன் ஆதியர் தவம் நாடிய சீலா! மறை மூலா- (முப்புரங்களை வென்ற) சிவபெருமான் முதலானவர்கள் தவம் இருந்து அருள் பெற விழையும்படியான பெருமை பெற்ற நற்குண நலம் மிக்கவரே! வேதங்களுக்கெல்லாம் மூலகாரண மானவரே!
திவம் ஊடு இருள் நவ லீலை செய்தீரா! முதல் வீரா!-(பாரதப் போரில் அருச்சுனனைக் காப்பாற்ற) பகலிலேயே இரவை உண்டாக்கி (சக்கராயுதத்தால் ஸூரியனை மறைத்து)புதியதோர் பேராடலைப் புரிந்த வலியவரே! தலை சிறந்த வெற்றி யுடையவரே!
உவரிப் பொருள் கவர் வீரையில் உற்றாய்-பல கடல் பொருள்கள் பல விளங்கும் வீரகேரளம்புதூரில் பல விளையாடல்கள் புரிந்து விளங்குபவரே!
நற்றாய் உவலைப் பழி நுவலாது என்னை ஒருவேளையில் மருவே-(என்னைக் காக்கும்) நற்றாய் முதலானவர்கள் அலர் கூறாதவாறு ஒரு பொழுதாகிலும் வந்து என்னை அணைப்பீராக!

மருமலிபூங் குழல்மதங்கி ஒருத்தி வீரை மாதவன்சீர் வீணைதொட்டு வாசித் திட்டாள்
அருகிலுற்றார் அனைவரும்ஓ வியமே போன்றார் அணிநார தாதியர்மிக் கழுக்கா றுற்றார்
பொருவில்கலை மகள்உவகைப் பொலிவு கொண்டாள் பூதரம்புள் விலங்குமுதற் புகல்வ எல்லாம்
உருகினதோற் பறையறைந்திட்டு அசுணம் கொல்வார் உலோபிகள்போற் துயர்மிகப் பெற்றொடுங்கினாரே.–70-
எண்சீர் ஆசிரிய விருத்தம்-இக் கலம்பக உறுப்பு மதங்கு என்றும்,
மதங்க மென்றும், மதங்கியா ரென்றும் வழங்கப்பெறும்.

மரு மலி பூங்குழல் மதங்கி ஒருத்தி வீரை மாதவன் சீர் வீணை தொட்டு வாசித்திட்டாள்- நறுமணம் மிக்க பல மலர்களைத் தன் கூந்தலிலே சூடிய மதங்கி என்னும் இளம் பெண்,வீரகேரளம்புதூரில் வாசம் செய்யும் கண்ணன் திருப் புகழைச் சொல்லி வீணையையும் சேர்த்து இசைத்தாள்
அருகில் உற்றார் அனைவரும் ஓவியமே போன்றார்- (அவளுடைய இசையைக் கேட்ட) அருகிலிருந்தோர் எல்லாம் தம்மை மறந்து (ஆடாமல் அசையாமல்) சித்திரத்தை யொத்துக் காணப்பட்டனர்
அணி நாரத ஆதியர் மிக்க அழுக்காறு உற்றார் – (இசைக்கலையில் வல்லவரான) சிறப்புடைய நாரதர் முதலானவர்களும்(அம்மதங்கி மீது) பொறாமை அடைந்தனர்
பொருவு இல் கலைமகள் உவகைப் பொலிவு கொண்டாள்-(இசைக் கலைக்குத்தெய்வமான ) ஒப்பற்ற சரசுவதி தேவி மகிழ்ச்சியால் பூரிப்படைந்தாள்
பூதரம் புள் விலங்கு முதல் புகல்வன எல்லாம் உருகினமண்ணுலகிலுள்ள மலைகள், பறவைகள், மிருகங்கள் ஆகிய சொல்லப்பெறுவன அனைத்தும் (அவள் இசைத்த இசையினைக் கேட்டு) மயக்கம் கொண்டன
தோல் பறை அறைந்திட்டு அசுணம் கொல்வார் உலோபிகள் போலத் துயர் மிகப் பெற்று ஒடுங்கினாரே-(பசு போன்றவிலங்குகளின்) தோலால் செய்யப்பட்ட பறைகளை ஒலித்து அசுணம் முதலானவற்றைக் கொலை செய்கின்றவர் அவை கிடைக்காது வருந்தி, பொய் வேடதாரிகளைப் போன்று துன்பமுற்றுச் செயலற்றுப் போனார்கள்.-

நாரியர்க்கெ லாமும்வெட்கம் நல்குபொற்பொ டுற்றஇந் நன்மதங்கி வீரை மேவும் நாரணற்பு கழ்ந்துளாள்|
ஆரியன் தன் நாவிலுற்ற மங்கையோ! அவன்கையால் அன்றுதான வர்ச்செகுத்தி டப்படைத்த பெண்கொலோ!
காரினங்கள் சென்றுகண்டு ணப்படாத பாற்கடற் கண்பிறந்த நங்கைமார்க ளிற்சிறந்த யாவளோ?
பாரினிற்சொல் ஓசைபாவ ராகதாளம் ஓர்கிலார் பஞ்சமத்தி என்னவும் பழிக்க அஞ்சி லார்களே!
–71–எண்சீர்த் தாழிசை-இதுவுமது-

நாரியர்களுக்கு எல்லாமும் வெட்கம் நல்கு பொற்போடு உற்ற இந்த நல்ல மதங்கி வீரை மேவும் நாரணரைப் புகழ்ந்து உள்ளாள்- (தேவலோகப்) பெண்கள் அனைவரும் வெட்கித் தலை குனியும் படியான அழகோடு விளங்கும் இச்சிறப்பு மிக்க மதங்கியானவள் வீரைநகரை விரும்பி வாழும் கண்ண பெருமானைப் போற்றி யிசைத்து இருக்கின்றாள்
ஆரியன் தன் நாவில் உற்ற மங்கையோ -(அம் மதங்கி) நான்முகன் நாக்கில் வாழும் கலைமகளோ!
அவன் கையால் அன்று தானவர் செகுத் திடப் படைத்த பெண் கொல்லோ- சந்தோப சந்தவர்களை அழிப்பதற்காகப் பிரமனால் உண்டாக்கப்பட்டதிலோத்தமையோ!
கார் இனங்கள் சென்று கண்டு உண்ணப்படாத பாற்கடல் கண்ணே பிறந்த நங்கைமார்களில் சிறந்த யாவளோ-
கருமேகங்கள் அலைந்து திரிந்தும் வற்றாத திருப்பாற் கடலிலே தோன்றிய அரம்பையர்களுள் ஒருத்தி ஆவாளோ இவள்!
பாரினில்சொல் ஓசை பாவம் ராகம் தாளம் ஓர்கிலார் பஞ்சமத்தி எனவும் பழிக்க அஞ்சி இலார்களே-இவ்வுலகில், பாடலாகிய (அவளுடைய) மொழியையும் அதன் ஒசையையும், பாவத்தையும், அதற்குரிய ராகம், தாளம் ஆகிய ஐந்தினையும் ஆராயாதவர்கள் கூட (அவளை) பஞ்சமத்தி வல்லபம் மிக்கவள் எனத் துதிக்க அஞ்ச மாட்டார்கள்-

அஞ்சி லம்பணி வார்தரு மாலினான் அஞ்சி லம்பணி வார்தரு மாலினான்
நஞ்சி றைக்கும் பலவாய வார்வனே நஞ்சி றைக்கும் பலவாய வார்வனே
கஞ்சி யாதிய கோவில னேகத்தே கஞ்சி யாதிய கோவில னேகத்தே
வஞ்சி யொல்குதென் வீரையின் மன்னனே வஞ்சி யொல்குதென் வீரையின் மன்னனே
.–72-கட்டளைக் கலிப்பா–அடிமடக்கு-

அம் சிலம்பு அணிவார் தரும் மாலினான்- அழகிய சிலம்பு புனைகின்ற கோபியர் அளிக்கும் மயக்கத்தை யுடையவர்
அஞ்சி அலம் பணிவார் தரும் மாலினான்- தீமையைக் கண்டு அஞ்சி, சஞ்சலத்தோடு தஞ்சமடையும் அடியவர்களுக்குத் தம்முடைய இன்னருளைத் தந்தருளும் பெருமையை உடையவர்
நம் சிறைக்கும் பலவாய வார்வனே- நமக்குண்டாகும் காமம் போன்ற தடைகளை முறியடிக்கத் தக்க வலிமையைத் தரும் அன்புடையவர்
நஞ்சு இறைக்கும் பலவாய வார்வனே- விடத்தைப் பொழியும் பல வாயையுடைய ஆதிசேடனுக்கும் நாயகர்
கஞ்சி ஆதிய கோவில் அனேகத்தே-காஞ்சிபுரம் முதலான திருத்தலங்கள் பலவற்றிலும் எழுந்தருளியிருப்பவர்
கம்சி யாதிய கோவிலான் ஏகத்தே- கம்சன் போன்ற கொடியவர்களைத் தனியொருவராயிருந்து வென்ற இடையனானவர் (ஆகிய இவர் யாரெனின்)
வஞ்சி ஒல்கு தென் வீரையின் மன்னனே-வஞ்சிக் கொடி போன்ற மெல்லியலார் நிறைந்த வீரகேரளம்பு தூரின் தலைவரே
வஞ்சி ஒல்கு தென் வீரையின் மன்னனே- தரும தேவதையானவள் அகங்குழைந்து வீற்றிருக்கும் வீரகேரளம்புதூரின் தலைவரே ஆவார் (அவரைப் பணிவீராக.)-

மன்னர் மன்னவர் போற்றுசீர் மருதன் வீரையின் மாயவன்
பன்னகப் பகையேறியேறியே பவனி வந்ததைப் பார்த்ததால்
இன்ன மையல்இத் தையல்கொண் டேங்கு கின்றனள் பாங்குளீர்
அன்ன வன்துளவ னுப்புவான் அப்போதென் குறி அவிருமே.–73
-அறுசீர்த் தாழிசை-

பாங்கு உள்ளீர் – அழகு பொருந்திய தாயே (குறி கூறக் கேட்பீராக)
மன்னர் போற்று சீர் மருதன் வீரையில்- அரசர் களுக்கெல்லாம் அரசராக விளங்குபவர் பாராட்டும் மேன்மையைப் பெற்ற மருதப்பன் அரசாட்சி செய்யும் வீரகேரளம்புதூரில்
மாயவன் பன்னகப்பகை ஏறி ஏறியே பவனி வந்ததைப் பார்த்ததால் இன்ன மையல் இத்தையல் கொண்டு ஏங்குகின்றனள்-கண்ணபிரானானவர் பாம்புக்குப் பகையாகிய கருட வாகனத்தில் ஆடம்பரமாக உலா வந்ததை இப் பெண்ணானவள் நேரில் கண்டதாலேயே இத்தகைய மயக்கத்தை அடைந்து ஏக்கமிட்டுள்ளாள்
அன்னவன் துளவம் அனுப்புவான் அப்போது என் குறி அவிருமே – (அவ்வாறு உலா வந்து தலைவியின் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்ட அத்தலைவன்) அத்தகைய கண்ணபிரானே விரைவில் தம் திருத்துழாய் மாலையைக் கையுறையாக அனுப்பி வைப்பார். அவ்வேளையில் நான் சொன்ன குறி எத்தகையது என்பதை நீங்களே நன்கு புரிந்து கொள்வீர்கள்-

என்குறியை ஈனமென்று தள்ளிடாதே கையில் எழுநெற்கை ஒன்றியதில் ஏது சூதே
நின்குணத்தை நானறிவேன் என்னையறிவாய் வீரை நீலவண்ணன் ஆள்வானென்று நெஞ்சிற் குறியாய்
புன்குலத்தர் நிந்தைநாளைத் தீரும்பாரம்மே வேண்டும் பொன்னும் நெல்லும் தந்துகஞ்சி போத வாரம்மே
வன்குறப்பெண் ஆனநான் பொய்விண்டிடேனே எங்கள் வள்ளிகண்முன் வந்துசெவ்வேள் கொண்டு ளானே.–74-
எண்சீர்க் கட்டுத்தாழிசை-இதுவுமது-

என் குறியை ஈனம் என்று தள்ளிடாதே- குறத்தியாகிய நான் சொல்லும் குறிச் சொல்லை இழிவு என எண்ணி விலக்கா திருப்பாயாக (தாயே!)
கையில் ஏழு நெல்கை ஒன்றியதில் ஏது சூதே – என்னுடைய கையில் ஏழு நெல் இருந்தது. அதில் கை பொருந்தி யிருந்ததில் சூழ்ச்சி எதுவும் இல்லை-
நின் குணத்தை நான் அறிவேன். என்னை அறிவாய்- உம்முடைய (தலைவிக்காக ஏங்கும்) நல்ல உள்ளத்தை நான் நன்கு உணர்ந்தவள். அவ்வாறே (நானும் உண்மையானவள் என்பதை) நீங்களும் என்னை நன்கு உணர்வீர்கள்
வீரை நீலவண்ணன் ஆள்வான் என்று நெஞ்சில் கு றியாய்- வீர கேரளம்புதூரில் விரும்பி வாழ்கின்ற மணி நிறத்து மாயவனாகிய கண்ணன் வந்து (உம் மகளை மணம் புரிவார்) ஆட் கொள்வார் என்பதை உள்ளங்கொள்வீராக
புன்குலத்தர் நிந்தை நாளை தீரும் பார் அம்மே தாயே!-(அலர் பரப்பு) இழிகுணத்தோரின் இகழ்ச்சியான பேச்சுக்களெல்லாம் நாளையே ஒழியும் காண்பீராக
வேண்டும் பொன்னும் நெல்லும் தந்து கஞ்சி போத வார் அம்மோ -தாயே! எனக்கு நிறையத் தங்கமும், சோறாக்கத் தானியங்களும், இப்பொழுது குடிப்பதற்குக் கஞ்சியும் கொடுத்து உதவுவீராக
வன் குறப்பெண் ஆன நான் பொய் விண்டிடேனே – வலிமை பொருந்திய குறவர் மரபில் வந்தவளான நான் ஒரு நாளும் பொய் சொல்ல மாட்டேன்
எங்கள் வள்ளி கண்முன் வந்து செவ்வேள் கொண்டு உள்ளானே -எங்களுடைய குறக்குலப் பெண்ணான வள்ளி என்பவளுக்கும் (என்னைப் போன்ற குறப்பெண் தான் குறி கூறினாள்) குறத்தி குறி சொன்னவாறே அவள் காதலித்த முருகப்பெருமான் அவள் எதிரில் தோன்றி அவளை மணந்துகொண்டு இப்பொழுதும் கொலு வீற்றிருக்கிறான் என்பதை அறிவீராக. (எனவே. உங்கள் மகளையும் விரைவில் கண்ணன் மணம் முடிப்பான் என மகிழ்வீராக.)

உளங்கலந்த காட்சிதந்தாய் ஊரறிய ஓர்சீர்
களங்கமற நல்கக் கருதாய்விளங்கனியிற்
கன்றெறிந்த வீரையினிற் காயா மலர்த் துணர்போல்
நின்றெறிக்கும் கண்ணபிரானே.–75-
நேரிசை வெண்பா-

விளங்கனியில் கன்றெறிந்த வீரையினில் காயாமலர்த்துணர்போல் நின்று எறிக்கும் கண்ணபிரானே – (கம்சனால் ஏவப்பட்ட கபித்தாசுரன் மற்றும் வத்சாசுரன் ஆகிய இருவரையும் கொல்ல அவர்கள் கொண்ட உருவமாகிய) விளா மரத்தினையும் கன்று வடிவத்தினையும் ஒருசேரஅடித்து எறிந்து கொன்றவரும் வீரகேரளம்புதூரில் காயா பூங்கொத்தினைப் போன்ற நீல நிறத்துடன் காட்சி நல்கிடும் தீமையெல்லாம் அறுத்தெறிகின்ற கண்ண பெருமானே!
உளம் கலந்த காட்சி தந்தாய்- (அன்று அடியேன் மனம் மகிழும்படியாக சங்கு சக்கரதாரியாய்) கனவில் வந்து காட்சி யருளினீர்!
ஊர் அறிய ஓர் சீர் களங்கம் அற நல்கக் கருதாய்- (அவ்வாறு நீர் காட்சி தந்தது பொய் என்று பிறர் நகைக்காமல் )அத்தகைய பெருமைக்குப் பங்கம் ஏற்படாதவாறு ஊரார் அறியும்படி இப்பொழுது நேரில் பலர் அறிய வந்து அருள்வீராக.-

ஆனேங் குறுங்கொடுங் காலத்தில் முற்றும் அதைமறந்து
தானேற்றம் எய்த முயலாமல் ஆண்டமின் தண்ணருளுக்கு
ஏனேனித் தாமதம் ஈதுநின் பாரமன் றென்குதியோ
வானேய்த்த மேனி முகுந்தாதென் வீரையில் வாழண்ணலே,
–76-கட்டளைக் கலித்துறை-

வான் ஏய்த்த மேனி முகுந்தா! தென் வீரையில் வாழ் அண்ணலே- நீலமேக வானம் போன்ற நிறங்கொண்ட முகுந்தா ! வீரைநகரில் கோயில் கொண்டுள்ள அன்பிற் சிறந்தவரே!
ஆன் ஏங்குறும் கொடுங் காலத்தில் முற்றும் அதை மறந்து தான் ஏற்றம் எய்த முயலாமல்-(ஆயர்பாடியில் இந்திரன் கோபத்தினால் கல் மழை மொழிந்த போது) பசுக்கூட்டங்கள் உம்மை நாடிக் காப்பாற்ற அழைத்த பொழுது, அவற்றை அசட்டை செய்யாமல் (நாம் எல்லாவற்றினும் மேலானவர் எனக் கருதி வாளா இருக்காமல்) நம்முடைய நலமே பெரிதென எண்ணாது
ஆண்ட நின் தண் அருளுக்கு ஏன் இனி இத்தாமதம் -(உடனே கோவர்த்தனகிரியைக் கையால் குடையெனத் தாங்கிப்பிடித்து) அப் பசுக் கூட்டங்களைக் காத்த உம்முடைய அகங்குளிர்ந்த அன்பு (இப்பொழுது அடியேன் அழைக்கவும் வாராதிருக்க) ஏனோ இன்னும் அடியேனுக்குக் கிட்ட விடாமல் தாமதம் செய்கின்றீர்?ஈது நின்பாரம் அன்று என்குதியோ – (அடியேனுக்கு அருளுவது) இது உம்முடைய கடமையல்ல என்று சொல்லுகின்றீரோ! (அதையும் நேரில் வந்துரைப்பீராக!)


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமானுசனர் அமைத்த ஸ்ரீ சோழங்கநல்லூர் கிருஷ்ணர் கோயில்–

May 1, 2026

சோழங்கநல்லூர் – திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறு கிராமம். ஶ்ரீரங்கத்த்திற்கு வடக்கே கொள்ளிடத்திற்கு எதிர் கரையில் ( திருச்சி – நாமக்கல் ரோட்டில்) சிறுகாம்பூர் என்னும் இடம் உள்ளது. அங்கிருந்து 5 km தொலைவில் இந்த கோவில் உள்ளது. இந்த கிராமத்திற்கும் ஸ்ரீராமானுஜருக்கும் ஒரு தொடர்பு உள்ளது.-இந்த கிராமத்தில் வயற்காட்டில் நடுவில் ஒரு கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கிருஷ்ணர் தனது ஆஸ்தானத்திலிருந்து இருந்து வெளியே ஒரு அறையில் பாலாலயமாகி 50 ஆண்டுகாலமாக கோவில் திருப்பணி நடக்க காத்துக்கொண்டிருக்கிறார்.சேவிக்க யாரும் வராமல் தினமும் வரும் அர்ச்சகரை மட்டும் கடாக்க்ஷித்து நிற்கிறார். 85 வயது முதியவர் எந்த சம்பளமும் இல்லாமல் எந்த பக்தர்களும் வராமலும் கடந்த 20 ஆண்டுகளாய் ஆராதனம் செய்து வருகிறார். இந்த கோவில் அருகே தண்ணீர் இல்லாமையால் தினமும் தனது வீட்டில் இருந்து பிரசாதமும் வழியில் ஒரு இடத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிலியநல்லூர் எனும் கிராமத்திலிருந்து (மொத்தம் 14 கிலோமீட்டர் இருவழி) சிரத்தையுடன் ஆராதனம் செய்கிறார். எப்போதாவது பெருமாள் சேவிக்க இவரை குலதெய்வமாக கொண்ட ஒரு குடும்பத்தாரோ ஒரு சில உள்ளூர் மக்களோ வருவர்.

ஶ்ரீரங்கம் கோவிலுக்கு ஒரு கோசாலையை #சோழங்கநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 கிராமங்களை சேர்த்து பிருந்தாவனம் காடுபோல் இராமானுசர் அமைத்தார் என்பது ஶ்ரீரங்கம் கோயிலொழுகு கூறும் செய்தி. இந்த இடத்தில் ஆநிரைகாத்த பெருமாள் – கண்ணன் பிரதிஷ்டை செய்தார் என்பதும் கோயிலொழுகில் கூறப்பட்டுள்ளது.இப்போதும் அந்த கிருஷ்ணர் சோழிங்கநல்லூரில் ஒரு அறையில் இந்து சமய அறநிலை துறை திருப்பணி அனுமதி உத்தரவை எதிர்பார்த்து 50 ஆண்டுக்கு மேல் சிதிலமடைந்த கோவிலுக்கு வெளியே உள்ளார்.அந்த பசுக்களை கடாக்க்ஷிக்க இராமானுசர் தானே வந்து சில நாட்கள் இங்கே தங்குவார். திருவரங்கன் விக்ரஹத்தை பிரதிக்ஷ்டை செய்து அதற்கு வைகானச நம்பிமாரையும் திருவாராதனம் செய்ய பணித்தார் என்பதும் கோவிலொழுகில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய நிலை:
1. புன்சிரிப்புடன் கிருஷ்ணர் (ஆநிரைகாத்த்த பெருமாள்) கையில் வெண்ணெய்யுடன் சேவை சாதிக்கிறார்.
2. அருகே நம்மாழ்வார், இராமானுசர் மற்றும் சேனைமுதல்வன் விக்ரஹங்கள் உள்ளன.
3. த்வஜஸ்தம்பம் முன்பும் பலிபீடம் பின்பும் உள்ளதால் தற்போது பாஞ்சராத்ர ஆகம முறையில் கோவில் உள்ளது
4. கோவிலொழுகில் குறிப்பிட்ட அரங்கன் இங்கே இல்லை. கோவிலைத் தெரிந்த எவருக்கும் இங்கு இருந்த அரங்கன் பற்றிய தகவல்கள் இல்லை.
5. கோவிலுக்கு பல ஏக்கர் நிலங்கள் இருந்தும் எந்த வருமானமும் இல்லை.
6. கோவிலுக்கு தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் இல்லை. கிணறு தண்ணீர் இல்லாமல் பாழ்பட்டு உள்ளது

கோவில் தொடர்பிற்கு: ஆறுமுகம் Ph: +91 93455193555

தொடருபுக்கு: வெங்கடேசன் Ph: +91 9841348374

கோவில் அர்ச்சகர்: சேதுராமன் Ph: ‭+91 97875 72556‬

கோவிலுக்கு செல்லும் வழி:
திருச்சியில் நாமக்கல் ரோட்டில் முக்கொம்புக்கு அணைக்கு 2 km முன்னால் சிறுகாம்பூர் உள்ளது.

சிறுகாம்பூர் மெயின் ரோட்டில் வலது புறம் திரும்பி 5 kms உள்ளே சென்றால் சோழங்கநல்லூர் மேல்நிலைப் பள்ளி வரும். அதைத் தாண்டி வலது பக்கத்தில் வரும் சிறு ரோட்டில் திரும்பி மீண்டும் வலது புறம் திரும்பினால் கோவில் தெரியும்.ஶ்ரீரங்கங்கத்தில் இருந்து 20 km மற்றும் திருவெள்ளறை கோவிலிலிருந்து 10 km தொலைவில் உள்ளது.

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேத நாராயணப்பெருமாள் -ஸ்ரீ மன்னார் கோயில்-

April 10, 2026

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பழையது
மன்னார் கோவில் வேதநாராயணசுவாமி கோவில் (ராஜகோபால சுவாமி கோவில்)பெருமாள், லட்சுமண சன்னதி, குலசேகர ஆழ்வார் அவதார தலம் என 3 நிலைகளில் பிரசித்தி பெற்றது-வேதநாராயணர் மூன்று நிலைகளில் (நின்ற நிலை, அமர்ந்த நிலை மற்றும் படுத்த நிலை) ஆசி வழங்குகிறார்.-இங்கு பண்டைய தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன-அம்பாசமுத்திரத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில்.-இவ்விடம் வேதபுரி (வேத நாராயண பெருமாளின் பெயரால்) மற்றும் ராஜேந்திர விண்ணகரம் (இக்கோயிலைக் கட்டிய/புதுப்பித்த மாபெரும் சோழ மன்னன்) ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.பெரிய நம்பி வம்சாவளியைச் சேர்ந்த திரு. நரசிம்ம கோபாலன் ஆச்சார்யாவின் தனி ஒரு கை முயற்சியால், ஒரு காலத்தில் சிதிலமடைந்திருந்த கோயில் தற்போது மிகுந்த பாராட்டுக்குரிய, உண்மையிலேயே குறிப்பிடத்தக்க புனரமைப்பைக் கண்டு வருகிறது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த முயற்சிக்கு இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்து இதுவரை மிகக் குறைந்த ஆதரவே கிடைத்துள்ளது.-இருப்பினும், ஸ்ரீ நரசிம்ம கோபாலன் ஆதரவின்மையால் மனம் தளர்ந்துவிடுபவர் அல்லர். விஷ்ணு பகவானின் எட்டு விருப்பமான மலர்களில் ஒன்றாகக் கருதப்படும் செண்பகப் பூக்களை விதைத்து வளர்ப்பதில் அவர் காட்டிய உறுதி, கடந்த 3-4 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பலன்களைத் தந்துள்ளது; தற்போது கோயிலின் வடக்குப் பகுதி முழுவதும் செண்பக மரங்களால் நிறைந்துள்ளது. இங்கு காணப்படும் செண்பகப் பூக்களின் எண்ணிக்கையை வேறு எந்த திவ்ய தேசத்திலும் காண முடியாது என்பதே, ஸ்ரீ நரசிம்ம கோபாலன் ஆற்றிய பேரார்வமிக்க சேவைக்குச் சான்றாகும்.-நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் விஷ்ணு பகவானைப் போற்றும் குலசேகர ஆழ்வார், செண்பகப் பூக்களை மட்டுமே குறிப்பிடுவதால், இப்பூ மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

கோலார்ந்த நெடுஞ் சார்ங்கம் கூனர்ச் சங்கம் கொலை யாழி கொடுந்தண்டு கொற்ற ஒள்வாள்
கால் ஆர்ந்த கதிக்கருடன் என்னும் வென்றிக் கடும்பரவை இவை அனைத்தும் புறஞ் சூழ் காப்ப
சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத்து அரவணியிர் பள்ளி கொள்ளும்
மாலோனைக் கண்டு இன்பக்கலவி எய்தி வல்லினையேன் என்றுகொலோ வாழும் நாளே –

விஷ்ணு பகவான் மீதான அவரது பக்தி, அதிகாரத்தைத் துறந்து வைணவ இறைவனைப் போற்றும் பாதையில் அவரை வழிநடத்தியது. பல விஷ்ணு கோவில்களுக்குச் சென்று வந்த பிறகு, குலசேகர ஆழ்வார் இறுதியாக மன்னார் கோயிலை அடைந்தார். அங்கு, ஸ்ரீரங்கத்தின் ரங்கநாதப் பெருமானைக் கண்ட வேதநாராயணனின் அழகில் அவர் கவரப்பட்டார். ஸ்ரீரங்கத்தைப் போலவே, மன்னார் கோயிலும் தெற்குப் பக்கத்தில் தாமரை பரணி மற்றும் வடக்குப் பக்கத்தில் கருணா ஆறு என இரண்டு ஆறுகளால் சூழப்பட்டுள்ளது.-மன்னார் கோயிலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கியிருந்த குலசேகர ஆழ்வார், தனது அபிஷேக தெய்வமான ராமரைத் தினமும் பூஜை செய்து, இறுதியில் இந்த இடத்திலேயே மோட்சம் அடைந்தார். இன்றுவரை, இந்த அபிஷேக மூர்த்தியின் சிலைகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. மன்னார் கோயிலில் அவர் ஆற்றிய முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக, இக்கோயில் குலசேகர பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இதுவே, நேரடியாக ஆழ்வார் பெருமாள் கோயில் என்று பெயரிடப்பட்ட ஒரே வரலாற்றுப் பெருமாள் கோயிலாகும். மேலும், குலசேகர ஆழ்வார் சன்னதியும், அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட புனிதக் கொடிமரமும் (கொடிமரம்) இங்கு காணப்படுகின்றன. இது (ஆழ்வார்களுக்கு) ஒரு சிறப்பு அம்சமாகும், 

வரலாற்று கல்வெட்டுகள்-சோழர் மற்றும் சேரர் கால ஆட்சியாளர்கள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் தொடர்பான பல கல்வெட்டுகளைக் காணலாம். கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழர் இக்கோயிலுக்குப் பெரும் பங்களிப்புகளைச் செய்தார்; அந்த அளவிற்கு இவ்விடம் ராஜேந்திர விண்ணகரம் என்று குறிப்பிடப்பட்டது. பின்னர், சேர மன்னன் ராஜசிம்மன் இக்கோயிலுக்குப் பல நிலத்துண்டுகளைத் தானமாக வழங்கினார். ஜடவர்ம சோழப் பாண்டியர் மற்றும் நாயக்க மன்னர்களும் மன்னார் கோயிலுக்குப் பங்களிப்புகளைச் செய்துள்ளனர். கோயிலின் நுழைவாயிலுக்கு அருகிலேயே தரையிலும் சுவாரஸ்யமான கல்வெட்டுகள் உள்ளன.

அழகிய மணவாள ஜீரின் அவதார ஸ்தலம் ‘பன்னீராயிர பாடி’ எனப்படும் திவ்ய பிரபந்தத்தின் விரிவான வியாக்யானம் (விளக்கம்/விளக்கம்) வழங்கிய வாதி கேசரி ஆழ்வாகிய மணவாள ஜீயர் பிறந்தது இது.

மன்னார் கோயிலுக்கு ஒரு சுவாரஸ்யமான மற்றும் மிகவும் சாதகமான நிகழ்வு என்னவென்றால், திருக்குறுங்குடி கைசிக ஏகாதசி நிகழ்விற்கான கைசிக புராணத்தின் முன்னோட்டப் பயிற்சி அமர்வு, வரும் சனிக்கிழமை, 21 நவம்பர் 2009 அன்று இங்கு நடை பெற்றது-கடந்த சில ஆண்டுகளாக இக்கோயிலில் தெப்போத்ஸவம் புத்துயிர் பெற்று, மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்களை ஈர்த்துள்ளது.

தற்செயலாக, விபீஷணனும், மன்னார் கோயிலின் வேதநாராயணனிடம் ஈர்க்கப்பட்டான்.

மூலவர் : வேத நாராயணப் பெருமாள் கிழக்கு நோக்கி
உற்சவர் : கருட உடனுறை ராஜகோபாலசுவாமி
வேதவல்லி தாயார் மற்றும் புவனவல்லி தாயார்

மூலஸ்தானம் அஷ்டாங்க விமானமாக அமைந்துள்ளது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. மதுரை கூடலழகர் கோவில், உத்திரமேரூர் கோவில் இரண்டிலும் இதே போன்ற அஷ்டாங்க அமைப்பு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.-இக்கோவிலில் மூன்று நிலைகள் உள்ளன. மூன்று நிலைகளிலும் பெருமாள் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார்.-கீழே உள்ள மூலஸ்தானத்தில் வேத நாராயணர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.-அடுத்து நிலையில் அமர்ந்து, பரமபத நாதனாக காட்சியளிக்கிறார்.-மூன்றாம் நிலையில் பள்ளிகொண்ட பெருமாள் ரங்கநாதர் காட்சி தருகிறார்–யானை தொண்டு ,பூனை தொண்டு என்று மேல உள்ள சுற்று பாதைகள் ஒரு கோட்டை அமைப்பில் உள்ளது -.-தலமரம் பலா செண்பகம். இங்குள்ள தீர்த்தத்தின் பெயர் பிருகு தீர்த்தம்.

தொடர்புக்கு : PS. நரசிம்ம கோபாலன் ஆச்சார்யா@ 04634 252874 / 318408

புதுப்பிப்பு: சம்ப்ரோக்ஷணம் 2010 ஆகஸ்ட் 23 அன்று நடைபெற்றது. கோயில் இப்போது புதிய மற்றும் தூய்மையான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.

மன்னார் கோயில், தென்காசி – குற்றாலம் நெடுஞ்சாலையை ஒட்டி, அம்பாசமுத்திரத்திற்கு மேற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அம்பாசமுத்திரம், திருநெல்வேலிக்கு மேற்கே 35 கி.மீ. தொலைவில் உள்ளது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அம்பாசமுத்திரம்/பாப்பநாசத்திற்கு ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் பேருந்துகள் உள்ளன. திருநெல்வேலியிலிருந்து ஒரு மணி நேரத்தில் கோயிலை அடையலாம். திருநெல்வேலியிலிருந்து அம்பைக்கு தினமும் பயணிகள் ரயில் உள்ளது (திருவேலியிலிருந்து காலை 9:15 மணிக்கு புறப்பட்டு, நெல்லையில் இணைப்பு ரயில் வரும்; அம்பையில் காலை 10:00 மணிக்கு வந்து சேரும்; மாலை 4:25 மணிக்கு புறப்பட்டு, திருவேலியில் மாலை 5:30 மணிக்கு வந்து சேரும் – நெல்லை இணைப்பு ரயில்).திருநெல்வேலியிலிருந்து மன்னார் கோயிலுக்கு காரில் சென்று வர சுமார் ரூ.500-600 செலவாகும். அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மன்னார் கோயிலுக்கு ஆட்டோவில் செல்ல ரூ.60/- செலவாகும். உள்ளூர் பேருந்துகள் / மினி பேருந்து சேவை மூலமாகவும் கோயிலை அடையலாம்.-மணிமுத்தாறு அணை இங்கிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. பேச்சிப்பாரை அணை இங்கிருந்து தெற்கு நோக்கி சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது.குற்றாலம் அருவி மன்னார் கோயிலிலிருந்து 50 கி.மீ. மேற்கே அமைந்துள்ளது.

அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பு அவாய மூப்பிவை
வைத்த சிந்தை வைத்த ஆக்கை மாற்றி வானில் ஏற்றுவான்
அச்சுதன் அநந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன்
நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேத கீதனே –

பிருகு மகரிஷி க்யாதி என்பவள் அசுரர்களுக்கு அடைக்கலம் கொடுக்க -அவர்கள் வலிமை மிக்கு தேவர்களைத் துன்புறுத்த -அவர்கள் ஸ்ரீ மன் நாராயணனை சரணம் புக -அங்கு அவ் வானவர்களுக்கு ஆகுலம் தீர -கருதிடம் பொருதும் சக்கரத்தாழ்வான் அவளை சேதிக்க -பிருகு கோபத்தால் -நீயும் பூவுலகில் பிறந்து மனைவியை இழந்து பரிதபிக்கக் கடவாய் என்று-சாபம் கொடுத்து பின்பு-அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யாமார் -என்று உணர்வது மன்னிப்பு கேப்பதற்காக தவம் இருந்து -சாஷாத்காரித்து -கோபத்தால் தபோ பலத்தை வீணாக்கி கேட்டை விளைவித்துக் கொண்டேன் -மன்னித்து அருள என்று வேண்ட -எம்பெருமானும் கவலை கொள்ளாதீர் -உமது வாக்குக்குள்ளும் புகுந்து சொல்வித்தவனும் நானே -சக்ரவர்த்தி திருமகனாய் அவதரித்து நம் அடியவனான விபீஷணாழ்வானை கடாஷித்து அருளுவேன் -நம் தேவியரான பிராட்டியைப் பிரிந்து உம் திருவாக்கையும் உண்மையாக்குவேன் -என்று அருளிச் செய்தார் -முக்காலமும் உணர்ந்த பிருகு மகரிஷி -இராவண வதத்தின் பின்பும் பிராட்டியுடன் இலங்கையில் இருந்து திரும்பி எழுந்து அருளும் பொழுது-அகத்தியர் எழுந்து அருளி இருக்கும் மருள் நீக்கும் மலையான மலையாசலத்தின் அடிவாரத்தில் எழுந்து அருளி இருக்க-புஷ்பக விமானத்தில் இருந்து ஸேவை ஸாதித்தார் -சாபம் நீங்கிய பிருகு ரிஷி -தனது கொள்ளுப்பேரனான மார்கண்டேயருடன் வேதங்களைப் போதித்துக் கொண்டு வேத நாராயணனை உலகறியச் செய்து -வேத புரி-ப்ரஹ்ம தேசமாக்கி உலகை வாழ்வித்தருளினார் -பிருகு மார்க்கண்டேயர் இரு சித்தர்களும் ப்ரதிஷ்டை செய்ததாலே சைத்த ஸ்தலம் -என்பர்

கலியுகம் பிறந்து 8 வருஷம் பராபவ வருஷம் மாசி புனர்வசு -சுக்ல பஷ துவாதசி வியாழக்கிழமை -கௌஸ்துப அம்சமாக குலசேகரப்பெருமாள் திருவவதாரம்-பிரபன்ன குலத்துக்கே ஸீரோ பூஷணம் -என்பதாலே இத் திருநாமம் – கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக்கோன் -கொங்கர் கோன் -குலசேகரன் -பிருதுகளைப் பெற்றவர்-இளை என்னும் திருக் குமாரத்தியும் -த்ருடவ்ரதன் என்னும் திருக் குமாரரையும் பெற்றவர் -ஸ்ரீ ராமபிரானையும் ஸ்ரீ ராஜகோபாலனையும் திருவாராதனப் பெருமாளாகக் கொண்டவர்
ஆரம் கெடப்பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே
வாரம் கொடு குடப்பாம்பில் கையிட்டவன் மாற்றலரை
வீரம் கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர் கோன்
சேரன் குலசேகரன் முடிவேந்தர் ஸிகா மணியே –

தாமிரபரணி நதிக்கும் கருணா நதிக்கும் நடுவிலே சமந்தா ப்ரஹ்ம தேசம் -வேத நாராயண புரம் வேதபுரி திவ்ய ஷேத்ரத்தில் நீண்ட காலம் தங்கி இருந்து திருவித்துவக்கோடு பதிகம் இப்பெருமானுக்கே மங்களா ஸாஸனம் என்பர்

இவரது திருவாராதன பெருமாள்களும் கோயிலுக்குள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்டு வேத விமானம் அஷ்டாங்க வேத விமானமாயிற்று-அம்பாசமுத்திரம் வடமேற்கில் மூன்று மைல் தூரம் -ஐந்து மைல் தூரத்திலே பாபநாசம் உள்ளது -பத்து மைல் தூரத்திலே மணிமுத்தாறு அணை உள்ளது -மலை அடிவாரத்தில் உள்ள புராதான க்ஷேத்ரம் இது-

மூலவர் -வேத நாராயணன் -நின்ற திருக்கோலம் -இரு மருங்கிலும் ஸ்ரீ தேவி பூ தேவி -வலப்பக்க சுவரில் பிரமனும் இடப்பக்க சுவரில் சிவனும் பெருமாள் திருவடியின் பிருகு மகரிஷியும் மார்க்கண்டேய மகரிஷியும் சின் முத்ரையுடன் ஸேவை ஸாதிக்கிறார்கள்
உத்சவர் -வேத நாராயணப்பெருமாள் -இரு பக்கமும் வேதவல்லித்தாயார் புவனவல்லித்தாயார் அமர்ந்த திருக்கோலம் -இருவருக்கும் தனிக் கோயில்களும் உண்டு-

கர்ப்ப க்ரஹத்துக்கு வெளியே அர்த்த மண்டபமும் -அதன் நடுவே ஓர் மண்டபமும் வேதிகையும் இருக்கின்றன -அந்த வேதிகையில் குலசேகரப் பெருமாளுடைய திருவாராதனப் பெருமாள்களான இளைய பெருமாள் பிராட்டி ஸஹிதமான சக்ரவர்த்தி திருமகனும் எழுந்தருளி உள்ளார்கள் -இம்மண்டபத்தின் மேல்பக்கமும் வடபக்கமும் உள்ள திண்ணை களிலே -காட்டுமன்னார் கண்ணன் ஆழ்வாராதிகள் ராமானுஜர் மா முனிகளும் எழுந்தருளி உள்ளனர் -இந்த மண்டபத்திலிருந்து வேத நாராயணனைச் சுற்றி ப்ரதக்ஷிணமாக வர ஒரு வழி உண்டு -அத்தை அடைத்துள்ளனர் -இந்த மண்டபத்துக்கு தென் கிழக்கு மூலையில் மேலே போக படிக்கட்டுகளும் உண்டு -அதையும் அடைத்துள்ளனர் -இந்த மண்டபத்துக்கு வெளியே ஒரு பெரிய மண்டபம் உள்ளது -அதற்கு மற்ற தேசங்களில் மஹா மண்டபம் என்பர் -இங்கு இதற்கு குலசேகர மண்டபம் என்று பெயர் -இதிலும் ஓர் உள் மண்டபமும் வேதிகையும் உள்ளன -இந்த வேதிகைக்கு விஸ்வநாத நாயக்கன் பீடம் என்று பெயர் -இதில் குலசேகரப் பெருமாளுடைய திருவாராதனப் பெருமாள்களான ஸ்ரீ ராஜகோபாலன் ஆண்டாள் பெரியதிருவடி எழுந்தருளி உள்ளனர் -ஸ்ரீ ராஜகோபாலனுக்கு அருகில் ஒரு மேடையில் குலசேகரப் பெருமாள் உத்சவர் எழுந்தருளி உள்ளார் –

இம் மண்டபத்திற்கு வெளியே உள்ள கிளிக் குறடும் மண்டபமும் மணி மண்டபம் என்றும் பெயர் பெறும் – இக் குறட்டிலிருந்து வலப் பக்கத்து படிகளில் இறங்கிச் சென்றால் தென் கிழக்கு மூலையில் பெரிய மடப்பள்ளி உள்ளது -பின் தெற்கு பிரதக்ஷிணத்தில் மேற்கு நோக்கிப் போகும் பொழுது நடுவிலே சாந்தமே உருவெடுத்த யோக நரஸிம்ஹர் ஸந்நிதி இருக்கிறது -அவரை சேவித்து விட்டு வேதவல்லித் தாயார் ஸந்நிதிக்குப் படிக் கட்டுகளில் ஏறிச் செல்ல வேண்டும் -தாயாரை சேவித்து வலமாக சந்நிதியைச் சுற்றி வலப் பக்கமுள்ள படிகளில் இறங்கி வந்து தெற்கு ப்ரதக்ஷிணத்தில் நடுவிலே உள்ள படிகளில் ஏறி மாடிக்குச் சென்று வேத நாராயணன் பரமபத நாதன் போல் வீற்று இருந்து சேவை சாதிக்க சேவித்து -யானை முடுக்கு என்றும் சொல்லப்படும் அந்தப் பெருமாள் வல ப்ரதக்ஷிணத்தில் சென்று கிழக்குப் பக்கமுள்ள படிகள் வாழியே மேலே சென்று அரங்கன் போல் பள்ளி கொண்டருளும் வேத நாராயணனை சேவிக்க வேண்டும் -இங்கு திரு நாபி கமலத்தில் நான்முகனும் ஸ்ரீ பூமி நீளைகளுடன் அநந்த சயன சேவை -இங்கும் வலப் பக்க சுவரில் பிரமனும் இடப் பக்க சுவரில் சிவனும் சேவை ஸாதிக்கிறார்கள் -பெருமாளைத் தவிர வலப் பக்கம் கருடனும் இடப் பக்கம் விபீஷணனும் மாலியவானும் எழுந்தருளி உள்ளனர் -கீழே பிருகு மார்க்கண்டேயர் ரிஷிகளும் எழுந்தருளி உள்ளனர் -இப் பள்ளி கொண்டருளும் பெருமாளை சுற்றி பூனை முடிக்கும் எனப்படும் ப்ரதக்ஷிணம் உள்ளது -இங்கும் ஸ்ரீ ரெங்கம் போல் ஸப்த பிரகாரம் உள்ளது –

இப் பெருமானையும் வலம் வந்து படிகளில் கீழ் இறங்கிச்சென்று தெற்கு ப்ரதக்ஷிணத்தை அடைந்து மேற்கு ப்ரதக்ஷிணம் வழியாக வடக்கு ப்ரதக்ஷிணம் போய் அங்கு பரமபத வாசலுக்கு மேற்கு உள்ள படிகளில் ஏறி வடக்கு நாச்சியார் சந்நிதியை அடைய வேண்டும் -அங்கு எழுந்தருளி இருக்கும் புவனவல்லித் தாயாரை சேவித்து வலம் வந்து கிழக்கே உள்ள படிகளில் இறங்கி வடகீழ் மூலைக்குச் சென்று தெற்கு நோக்கி இருக்கும் விஷ்வக்சேனரை சேவித்துக் கொண்டு சின்னக்கோபுர வாசல் வழியே கொடி மர மண்டபத்துக்கு வந்து அங்கு பலம் நோக்கிச் சென்று கோயிலை ப்ரதக்ஷிணம் செய்தால் வெளி வடக்கு ப்ரதக்ஷிணத்தில் இராப்பத்து உத்சவம் மண்டபமும் அதற்கு கிழக்கே தெற்கு நோக்கி குலசேகரப்பெருமாள் சந்நிதியும் உள்ளது -இவருக்கு தனி கோயிலே கொடிமரம் தேர் உள்ளன -மாசிப் புனர்பூசம் உத்சவம் முன்பு சிறப்பாகக் கொண்டாடில் வந்தனர்

இங்கு ஆழ்வார் கூப்பிய திருக்கரங்களுடன் எழுந்தருளி உள்ளார் -அவரைச் சுற்றி சுவரில் மற்றைய ஆழ்வார்களும் ஓவிய வடிவில் எழுந்தருளி உள்ளனர் -இங்கு ஆழ்வாரைச் சேவித்து வலம்வந்தால் கிழக்கே உடையவருக்கு பெரிய சந்நிதி உள்ளது -நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது -குமார கிருஷ்ணப்ப நாயக்கர் சிலையும் பிரதானமாக இங்கு உள்ளது -செண்டலங்கார மகா முனிவர் சிலையும் பராங்குசதாசர் சிலையும் இங்கு வெகு அழகாக இலங்குகின்றன -மா முனிகளின் ஸந்நிதியும் பெரியதாக உள்ளது –
வித்துவக்கோடு பதிகமும்
உன்னித்து மற்றறொரு தெய்வம் தொழாள் பாசுரம் நித்ய அனுசந்தேயம்

ப்ரபந்நாம்ருத நூலில் ஆந்திர பூர்ணர் என்னும் அனந்தார்யார் -குலசேகரப்பெருமாள் வேத நாராயண புரத்தில் எழுந்தருளி பெருமாள் கைங்கர்யத்தில் ஈடுபடு 67 திரு நக்ஷத்திரத்தில் ஸ்ரீ மன் நாராயணன் திருவடிகளை அடைந்தார் -என்று அருளிச் செய்துள்ளார்
இது வைகானஸ ஆகம திருக்கோயில்
ப்ரஹ்ம தேசமே வித்வான்கள் நிறைந்த திரு வித்துவக்கோடு ஆயிற்று என்பர்
ஸ்ரீ ராஜகோபாலன் பேசும் தெய்வமாக இருப்பதால் இந்த ப்ரஹ்ம தேசமே அழகிய மன்னனார் கோயில் -மன்னார் கோயிலாயிற்று –
அன்றிக்கே குலசேகர ராஜா என்பதால் மன்னார் கோயிலே என்று பெயராயிற்று என்னவும் கொள்ளலாம்

———————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அகத்தியர் மலை: பொதிகை சுற்றுலா

October 24, 2025

அகத்தியர் வாழ்ந்து வரும், தென்றல் தவழ்ந்தோடும் பொதிகை மலையை, அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர்.

தமிழ் இலக்கணம், சித்த மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைப் படைத்து, சித்தர்களுக்கெல்லாம், தலையாய சித்தராக விளங்கும் தமிழ் முனிவர் அகத்தியரை, இறைவனாகவே சித்தர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் வணங்கி வருகின்றனர் என்றால் அது மிகையாகாது. வழிபாடு என்பது நம்பிக்கையும், உளவியல்பூர்வமான உணர்வுமாகும்.

அது போலவே சித்தர் வழிபாடும். ஆம், சித்தர்களை யாராவது கண்டுள்ளார்களா என்றால் அதை விவரிக்க முடியாது. அது உளப்பூர்வமான உணர்வே.

அகத்தியர் வாழும் இப் பொதிகை மலையில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரத்திலுள்ள அகத்தியரை தரிசிக்கச் செல்வதை புனித பயணம் என்றும் சாகச பயணம் என்றும் கூறலாம்.

ஆபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும் அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள், எங்கு காணினும் இயற்கைக் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள், பசுமையான புல்வெளிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இப் பொதிகை மலை இயற்கை நமக்கு அளித்த கொடை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த அடர்ந்த காட்டில் சிறு அட்டை முதல் மான், மிளா, காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி, யானை, செந்நாய், பாம்பு, உடும்பு மற்றும் காடுகளில் உள்ள ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து வனவாழ் உயிரினங்களும் உள்ளன (அச்சம் கொள்ள வேண்டாம், அகத்தியர் துணை இருக்கிறார்).

தமிழ் முனிவரைத் தரிசிக்க கேரளத் தலைநகரான திருவனந்தபுரம் பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் முலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது.

போணக்காடு பிக்கெட் ஸ்டேசனிலிருந்து நடக்கத் தொடங்கிய அரை மணி நேர பயணத்தில் முதலில் அடைவது, முழு முதல் கடவுளான விநாயகர் கோவிலை. அங்கு அவரை வணங்கி, அவரது துணையுடன் (வழியில் யானைகளால் நமக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கு வேண்டுமென்றாலும் சரி, நாம் எந்தச் செயலைத் தொடங்கினாலும் விநாயகரை வழிபட்டுத்தான் தொடங்குவோம் என்ற நிலையில் எடுத்து கொள்ளலாம்) நடைப்பயணம் மீண்டும் தொடங்குகிறது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் கரமனையாறு என்ற பகுதியை அடைகிறோம். இங்கிருந்துதான் அடர்ந்த வனப்பகுதி தொடங்குகிறது. ஒருவர்பின் ஒருவராக நடந்து செல்ல வேண்டும். சில இடங்களில் கொஞ்சம் அகலமான பாதையும் உண்டு.

இவ்வாறு மலை ஏற்றம், இறக்கம், சிற்றாறு, அருவிகள், புல்வெளி, அடர்ந்த வனம் ஆகிய வழிகளில் நடந்து, சுமார் 6 மணி நேர பயணத்தில் (நன்றாக நடைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரம் ஆகலாம்) அதிருமலை எஸ்டேட் என்ற இடத்தை அடைகிறோம். அங்கு கேரள வனத் துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்குகிறோம்.

குறுமுனிவரின் வழிபாட்டுக்குக் கொண்டு செல்லும் பூஜைப் பொருள்களை எடுத்துக் கொண்டு, அதிருமலையில் காவல் தெய்வமாக உள்ள தெய்வத்தை (கருப்பசாமி என்றுóம், வனதேவதை என்றும் கூறுகின்றனர்) வணங்கிவிட்டு நடைப்பயணம் தொடங்குகிறது.

சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் மிகவும் அடர்த்தியான வனப் பகுதியைக் கடந்து (இப் பகுதி முழுவதும் யானைகள் வாழ்விடமாகும்) பொதிகை மலையின் அடிவாரத்தை அடைகிறோம். அங்கு சிறிது நேரம் ஓய்வு, அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு (இது முற்றிலும் மூலிகை நீரைக் கொண்டது) மீண்டும் நடைப்பயணம் தொடங்குகிறது. 15 நிமிட நடைப்பயணத்தில் தமிழக வனப் பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடத்தை அடைகிறோம்.

இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது.(இப் பகுதி சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர் வந்துள்ளது என்கின்றனர்) கேரளத்தினர் இப் பகுதியை பொங்காலைப்பாறை என்று கூறுகின்றனர். (இப் பகுதியில் உள்ள பாறைகளில் நமது வீடுகளில் உள்ள மாவு அரைக்கும் ஆட்டுக்கல் குழி போன்று உள்ளது. இதில் சித்தர்கள் மூலிகைகள் அரைக்க பயன்படுத்துகின்றனர் என்ற செவிவழிச் செய்தியும் உள்ளது) கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது.

இச் சங்கு முத்திரை பகுதியின் மற்றொரு பள்ளத்தாக்கில் நமது வற்றாத ஜீவநதியாம், பொருநை என்று அழைக்கப்படும் தாமிரவருணி உற்பத்தி இடமான பூங்குளம் சுனை உள்ளது.

இந்த சங்கு முத்திரை பகுதியிலிருந்துதான் பொதிகை மலையை நோக்கிய மிகவும் செங்குத்தான பாதை தொடங்குகிறது. இப் பாதையில் பெரும் பகுதி பாறைகளாகவே காணப்படுகிறது. இச் சிகரத்தின் பாதி உயரம் வரை, இடது புறத்தின் மரங்கள் நிறைந்த மழைநீர் வழியும் சாய்வான பகுதி வழியே ஏறி சென்று, பின் வழித்தடங்கள் அற்ற பாறைகள் வழியே துன்பத்தைப் பொருள்படுத்தாது, காலும், கையும் ஊன்றி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி, நாக்கு வறண்டு, பின் செங்குத்தான பகுதியில் கயிறு மற்றும் இரும்புக் கயிறு (ரோப்) பிடித்து கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம்.

(சுமார் 2,000 அடி உயரம் கொண்ட இச் செங்குத்தான பகுதியை நாம் கடந்து செல்லும்போது நமது உடலில் உள்ள அனைத்து அவயங்களும் வேலை செய்யும், இப்படி ஒரு பயணம் நமக்குத் தேவைதானா என்றுகூட சிலருக்கு எண்ணம் ஏற்படலாம்.)

அங்கு குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறு முனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையைத் தரிசிக்கும்போது, அந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்தத் தரிசனத்துக்குத்தான் நாம் இப்பிறவி எடுத்தோமோ என்ற நிலை நமக்கு ஏற்படும். அந்த உணர்வில் நம்மில் எத்தனை ஆனந்தம், எத்தனை உள்ளப் பூரிப்பு, வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. கண்களில் ஆனந்த நீர் மல்கி நம்மை நாம் மறக்கும் பரவச நிலையை என்னவென்று சொல்வது!

இந்த உச்சிப் பகுதியில் திடீர், திடீரென சீதோஷ்ண நிலை மாறும், சில நேரங்களில் திடீரென வெயில் ஏற்படும், சில நேரம் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர் காற்றும், சில நேரம் மழையும், சாரலும் ஏற்படும்.

மேலும் மூடுபனியுடன் பலத்த காற்று வீசும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். அப்போது அருகில் இருப்பவர் யார் என்று பகல் பொழுதில்கூட சில நேரங்களில் தெரியாது.

இப்படி ஆனந்த அனுபவத்துடன், கொண்டு சென்ற பூஜைப் பொருள்களால், குறு முனிவருக்கு அபிஷேக, ஆராதனை செய்து, கூட்டு வழிபாடு நடைபெறும். வழிபாட்டின் நிறைவில் அனைவரது வேண்டுதலும், மீண்டும் எங்களுக்கு இந்தத் தரிசன வாய்ப்பைத் தாருங்கள் என்பதாகத்தான் இருக்கும்.

தொடர்ந்து மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, மூன்று மணி நேரப் பயணத்தில் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடைந்து அங்கு உணவருந்தி விட்டு, சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் இரவு 7 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். அதன் பின் இரவு பொழுதை அங்கு கழித்துவிட்டு, மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு பயணம் தொடங்கி, சுமார் 5 மணி நேர நடைப்பயணத்துக்கு பின் போணக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பயணம் நிறைவு பெறுகிறது.

இந்த மூன்று நாள் பயணத்தின்போது சுத்தமான காற்று, மூலிகை கலந்த நீர், செல்போன் தொந்தரவு இல்லாத வெளி உலகத் தொடர்பின்மை, பார்க்கும் இடங்கள் எல்லாம் மனதைக் கவரும் பசுமை வெளி ஆகியவற்றால் நமது உடலும், உள்ளமும் புத்துணர்வு பெற்றது என்றால் அது மிகையாகது.

இந்தப் பயணத்தின்போது காட்டு மிருகங்களின் தொந்தரவு ஏற்படாமல் இருக்கவும், பயணக் களைப்பு தெரியாமல் இருக்கவும் அனைவரும் “கும்ப முனிக்கு அரோகரா, குறுமுனிக்கு அரோகரா’ என்று உச்சரித்தவாறே சென்று வருவர்.

பொதிகை மலைப் பயண அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சென்று வந்தால் மட்டுமே உணர்வுப்பூர்வமாக அறிய முடியும்.

இந்தப் பயணத்தில் விரதமிருந்து சென்று வந்தால் அகத்தியர் அருளைப் பெறலாம். ஜாதி,மதங்களுக்கு அப்பாற்பட்டு விரதமிருந்து சென்று வரும் இப்பொதிகை மலை யாத்திரையில், அகத்திய பெருமான் பக்தர்களுக்கு, ஓளி வடிவில் அவ்வப்போது காட்சி அருள்வதையும் அறியமுடிகிறது.

தமிழ் முனிவரைத் தரிசிக்க ஆண்டுதோறும் ஜனவரி 15 முதல் சிவராத்தரி வரை கேரளத்தவர்கள் தினமும் குழுவாக (நாள் ஒன்று சுமார் 200 பேர்) சென்று வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல் மாதம் முதல் சென்று வருகின்றனர். வனத்தில் அதிக மழை உள்ள நேரங்களில் பாதுகாப்பு கருதி பக்தர்களை வனத்துக்குள் செல்ல அனுமதிப்பதில்லை.

தமிழ் முனிவரைத் தரிசிக்க கேரள வனத் துறை செய்துள்ள ஏற்பாடு மற்றும் நடவடிக்கையை கேரள அரசையும், கேரள வனத் துறையையும் தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். குறிப்பாக பக்தர்களை வனத்துக்குள் அழைத்துச் செல்ல வழிகாட்டியை ஏற்படுத்தியுள்ளதைக் குறிப்பிடலாம்.

வனத்தில் ஆங்காங்கே குப்பைகள் போட, கூடைகள் வைத்து அவற்றை அவ்வப்போது எரிப்பது, முற்றிலும் விலங்குகள் நடமாட்டமுள்ள பகுதியில் பக்தர்கள் பாதுகாப்புடன் தங்கவும், அங்கு குளியலறை மற்றும் கழிப்பறைகள் ஏற்படுத்தி அவற்றை சுத்தமாகப் பராமரிப்பது உள்ளிட்ட செயல்களை பாராட்டாமல் இருக்க முடியாது. இதைத் தமிழக வனத் துறையினர் பின்பற்றுவார்களா?

தமிழ் முனிவரை தரிசிக்க, தமிழகம் அனுமதிக்க வேண்டும்: பொதிகை மலை உச்சியில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பொதிகை அடியைச் சேர்ந்த எம்.எஸ்.சுந்தரம்பிள்ளை என்பவர்தான் முதன் முதலில் 1970-ல் அகத்தியர் சிலையை நிறுவியுள்ளார் (தற்போது உள்ளது மூன்றாவது அகத்தியர் சிலை என்றும். இது கேரள அரசால் நிறுவப்பட்டது என்றும் கூறுகின்றனர்). அதுமுதல் அவரது குடும்பத்தினரும், பாபாநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், திருச்செந்தூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தமிழக வனத் துறை மற்றும் கேரள வனத் துறை அனுமதி பெற்று காரையாறு அணையிலிருந்து படகில் அக்கரைக்குச் சென்று துலக்கர் மொட்டை, உள்ளாறு, சிற்றாறு, கன்னிகட்டி வனத்துறை ஓய்வு விடுதி, பேயாறு, காட்டாறு, சங்குமுத்திரை வழியாக பொதிகை மலைக்குச் சென்று வந்தனர்.

1998-ம் ஆண்டு தமிழக வனத் துறை பொதிகை மலை செல்ல அனுமதி மறுத்து விட்டது. பின் பொதிகை மலை புனித யாத்திரைக் குழுவினர் மற்றும் பக்தர்களின் முயற்சியால், வனத் துறை சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999-ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது.

இந்நிலையில், 2009-ல் தமிழக வனத் துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல அனுமதி மறுத்ததுடன், கேரளம் வழியாக செல்ல அறிவுறுத்தியது. தற்போது தமிழக பக்தர்கள் கேரளம் வழியாகச் சென்று வருகின்றனர். இதனால் பக்தர்களுக்கு கூடுதல் வழிப் பயணம் மற்றும் பயணச் செலவு ஏற்படுகிறது.

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ புருஷோத்தம வித்யா -ஸ்ரீ புரீ ஜகந்நாத யாத்ரா- ஸ்ரீ க்ஷேத்ர மஹாத்ம்யங்கள் -ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள்-

October 9, 2025

” ஸ்ரீரங்கம் வேங்கடாத்ரிச்ச ஸ்ரீமுஷ்ணம் தோதபர்வதம்
ஸாளக்ராமம் புஷ்கரம் நரநாராயணாச்ரமம் நைமிஷம்
சேதி மே ஸ்தானானி அஸெள முக்தி ப்ரதானி வையே து
அஷ்டாக்ஷர ஏகைக : வர்ணமூர்த்தி: வஸாமி அஹம்”

1. ஸ்ரீரங்கம்
2. திருப்பதி
3.ஸ்ரீமுஷ்ணம்
4.நாங்குநேரி
5.முக்திநாத்
6.புஷ்கரம்
7.பத்ரிநாத்
8.நைமிசாரண்யம்

இறைவன் தானாக விக்கிரகமாக ஒரு இடத்தில் தோன்றினால் அதை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்கிறோம். வியக்தம் என்ற சொல்லுக்கு வெளிப்படுதல் என்று பொருள். இறைவன் தாமாக விரும்பி வெளிப்பட்ட தலத்தை ஸ்வயம் வியக்தம் என சொல்கிறோம்.

தைவிகம் – பிரம்மா, இந்தியன், சூரியன் உள்ளிட்ட தேவர்கள் பெருமாளை ஒரு கோவிலில் பிரதிஷ்டை செய்தால் அதற்கு தைவிகப் பிரதிஷ்டை என்று பெயர்.

ஆர்ஷம் – முனிவர்கள் மற்றும் ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்கள் ஆகும்.

மானுஷம் – அரசர்கள், பக்தர்கள் போன்ற மனிதர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்கள்.

இவ்வாறு நான்கு ஷேத்ரங்களிலும் க்ரோசம் -கால் யோஜனை /அரை யோஜனை /யோஜனை /2 யோஜனை வாழ்பவர்கள் பாபங்கள் போக்கப்படுமாம்

  ஸ்ரீரங்கம் கரிஸைலம் அஞ்ஜநகி ரிம் தார்க்ஷயாத்ரி ஸிம்ஹாசலௌ ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமம் ச பதரீ நாராயணம் நைமிசம் ஸ்ரீமத் த்வாராவதீ ப்ரயாக மதுரா அயோத்யா க யா புஷ்கரம் சாலக்ராம கிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனி:

பகவத் ராமானுஜர், திருவரங்கம், திரூவேங்கடம், அஹோபிலம், -ஸிம்ஹாசலம், ஸ்ரீ கூர்மாம் புரி ஜகந்நாதம் , பதரீ, நைமிசாரண்யம், த்வாரகா , ப்ரயாகம்,  ,மதுரா , அயோத்யா, கயா , புஷ்கரம், ஸாளக்ராமம் , ஆகிய தேசங்களுக்குச் சென்று மங்களாசாசனம் செய்து இன்புறுகிறார்.-மேற்கண்ட ஸ்லோகப் பொருளில் அடிக்கோடிடப்பட்ட முக்யமான திவ்ய க்ஷேத்ரங்கள் மற்றும் மங்களகிரி, பத்ராசலம் ஆகிய திவ்ய க்ஷேத்ரங்களை தரிசிப்பதற்காக புருஷோத்தம வித்யா எனும் யாத்ரை ஏற்பாடாகியுள்ளது. அதைப் பயனுள்ளதாக்க நாம் அறிந்து கொள்ள வேண்டியவற்றையும், ஒவ்வொரு க்ஷேத்ரத்தின் பெருமைகளையும் இனிப்பார்ப்போம்.

மங்களகிரி

இம்மலையின் பெயரிலேயே மங்களம் உள்ளது. அனைத்து மங்களங்களையும் கொடுக்க வல்ல மலை-என்பது இதன் பொருள். ஒரு யானையின் வடிவத்தில் அமைந்திருக்கும் இம்மலையின் பின்னணியில் ஒரு சுவையான வரலாறும் உள்ளது.

பரியாத்ரா எனும் மன்னனின் மகன் ஹ்ரஸ்வ ஸ்ருங்கி என்பவன், அவனது உடல் குள்ளமாக இருந்தது. தன உடலின் அழகைத் திரும்பப் பெற இவன் பல இடங்களில் தவம் புரிந்து இறுதியில் இம்மலையில் எழுந்தருளியிருக்கும் பாநகால நரசிம்ஹ ஸ்வாமியை சுமார் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து வேண்டினான். தந்தை இவனை வற்புறுத்தித் தன நாட்டிற்குத் திரும்ப அழைத்துப் போக முற்பட்டபோது , இவன் பகவானை வேண்டி யானை வடிவம் பெற்று அவனையே எப்போதும் வணங்கி வருகிறான். ” எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே!” என்று குலசேகர ஆழ்வார் வேண்டினார். ஆனால் இவனோ பகவானை எப்போதும் வணங்குவதற்காக மலையாகவே ஆகி, இருந்து அனைவருக்கும் மங்களங்களையும் நல்குகிறான்.

இவ்வூரில் மூன்று நரஸிம்ஹர்கள் எழுந்தருளியுள்ளனர் . மலையடிவாரத்தில்
ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹஸ்வாமி,  மலையில் பாநகால நரசிம்ஹஸ்வாமி , இன்னம் மேலே கண்டால நரஸிம்ஹஸ்வாமி  ( கண்டால நரஸிம்ஹஸ்வாமி  சன்னிதியில் இப்போது விளக்கு மட்டும் ஏற்றப்படுகிறது) படிக்கட்டுகள் ஏறி மலைக்குச் செல்லும் வழியில் ஸ்ரீ சைதன்ய மகாப்ரபுவின் பாதச்சுவடுகள் காணப்படுகின்றன. மலையில் நரஸிம்ஹஸ்வாமி கோயிலின் பின்புறம் லக்ஷ்மி தேவியின் கோயில் உள்ளது. அங்கிருந்து ஒரு குகைப்பாதை” உண்டால் ” மலைக்குச் செல்லுகிறது. முன்னாட்களில் இங்கு தவம் புரிந்த ரிஷிகள் இக்குகை வழியே கிருஷ்ணா நதிக்கு நீராடச் செல்வாராம்.

நரஸிம்ஹர் இங்கு எழுந்தருளிய சரித்ரம்

க்ருத யுகத்தில் நமுதி எனும் அரக்கன் கடும் தவம் புரிந்து , தன்னை நனைந்தோ, உலர்ந்தோ உள்ள எந்த ஆயுதமும் கொல்லககூடாது என்று வேண்டி சாகாவரம் பெற்றான். செருக்கின் மிகுதியால் தேவர்களை துன்புறுத்தத் தொடங்கிய அவன் தனக்கு, எப்போது ஆபத்து வந்தாலும் தன ஸ்தூல உடலைத் துறந்து நுண்ணிய உடலோடு இம்மலையில் மறைந்து கொள்வான். இந்திரன் இவனை அழிக்க எண்ணி இம்மலையில் வந்து தவம் செய்தான். அப்போது தோன்றிய சிங்கப்பிரான் தன ஸுதர்சந சக்ரத்தை கடல் நுரையில் தோய்த்து, சக்ரத்தின் நடுவே தானும் அமர்ந்து கொண்டு குஹைக்குள் சென்றார். உள்ளே நரசிம்ஹர் பெருமூச்சுக் காற்று விட அது கடல் நுரையை அள்ளிக்கொண்டு போய் நுண்ணிய வடிவில் இருந்த அரக்கனைக் கொன்றது. பின்னர் நரஹரிப்பெருமானை ஸாந்தமடையச் செய்ய இந்திரன் அமுதத்தை அன்புடன் அர்ப்பணம் செய்தான். இதனை அனுசரித்து த்ரேதா யுகத்த்டில் நெய் , த்வாபர யுகத்தில் பால், கலி யுகத்தில் பானகம் ஆகியவற்றை ஸமர்ப்பித்தால் பெருமாள் குளிர்ந்திருப்பார்- என்பதால் இக்கலியுகத்தில் இவ்வேம்பெருமானுக்கு பானகமே ஸமர்ப்பிக்கப்படுகிறது.

இப்பெருமானை இன்றுள்ள நிலையில் பாண்டவர்களில் மூத்தவரான தர்ம புத்திரரே ஸ்தாபித்தார். இன்றும் அவரே ப்ரகுமொத்ஸவத்தை நடுத்துவதாகக் கருதப்படுகிறது.

பானகப் ப்ரஸாதம்

இம்மலையிலேயே நரசிம்ஹரின் திருமுகம் உள்ளது. புராணத்தின்படி இன்றும் நரசிம்ஹருக்கு அவர் திருவாயிலேயே பானகம் ஸமர்ப்பிக்கபடுகிறது. எவ்வளவு ஸமர்பபித்தாலும்  அதில் பாதியை அருந்தி விட்டு , மீதியை ப்ரசாதமாகக் கொடுக்கிறார். இத்தனை பானகம் இருந்தாலும் இக்கோயிலில் இனிப்பினை மொய்க்கும் ஒரு எறும்பு கூட இல்லாதது வியப்பாக உள்ளது.

காலி கோபுரம்

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் ராஜா வாசி ரெட்டி வெங்கடாத்ரி நாயுடு என்பவர், 153 அடி உயரமுள்ள 11 நிலைகளுள்ள இக்கோபுரத்தைக் கட்டினார்.

க்ஷீர வ்ருக்ஷம்

மங்களகிரியில் , பால் மரம் என்று பெண்டிரால் போற்றப்படும் இம்மரம் வேறு யாருமல்ல – தேவ ரிஷியான நாரதரே ஸஸபந்தி எனும் மன்னனைக் குறித்து , அவன் தன மனைவி மக்களைத்துறந்து க்ஷேத்ராடனம் போக நாரதர் உபதேசித்தார். மன்னனும் அப்படியே செய்ய , இது கண்டு கோபாமுற்ற ராணி, நாரதரை இம்மலையில் ஒரு பால் மரமாக இருக்கும்படி ஸபித்தாள் . நாரதர் இதனையே ஒரு வரமாக ஏற்று , இங்கு மக்கட்பேறு வேண்டி வரும் பெண்களுக்கு ஸந்தான ப்ராப்தி வரத்தினை அருளுகிறார்.

ஸிம்ஹாசலம்

பிரஹ்லாதனை ரக்ஷிப்பதர்காக ஸ்ரீ மன்நாராயணனை ஸிம்ஹாசலத்தில் வராஹ நரசிம்ஹனாக அவதரித்தார். பிரஹ்லாதனை ஹிரண்யன் ஸிம்ஹாச்சலத்தின் அருகிலிருக்கும் கடலில் தள்ளிவிட ப்ரஹ்லாதன்               ” த்ராஹி, த்ராஹி ” என்று பகவானைச் சரணம் புக ஸ்ரீமந்நாராயணன்  கஜேந்த்ராழ்வானை ரக்ஷிப்பதற்க்கு வந்த வேகத்தை விட ஸீக்ரமாகக் குதித்து அவிழும் பீதாம்பரத்தை முடிச்சிட்டால்  நேரம் கடந்து விடும் என்று ஒரு திருக்கையில் பீதாம்பரத்தைப் பிடித்துக்கொண்டு மற்றொரு திருக்கையிலுள்ள கட்டை விரலால் கருடனுக்கு வாயில் அம்ருதத்தைக் கொடுத்துக்கொண்டு குதித்தார். குதித்த அந்த வேகம் தாளாமல் பூமி பிளந்து பகவான் திருவடிகள் பாதாளம் வரை சென்றன. அப்படிக் குதித்த பெருமாள் ஹிரண்யனுடன் (ஹிரன்யகசிபுவுடன்) த்வாத்ரிம்ஸத் (32) ரூபங்கள் எடுத்து யுத்தம் செய்தார். அதில் ஒன்று தான் வராஹந்ருஸிம்ஹாவதாரம் . ப்ரஹ்லாதனுக்காக எடுத்த அதே திருவுருவத்துடன் அர்ச்சாமூர்த்தியாக எல்லாருக்கும் ஸேவை ஸாதிக்கிறார் . சிறிது காலம் ப்ரஹ்லாதன் எவரை ஆராதித்தார். பிறகு தன ராஜ்யத்துக்குத் திரும்பினார். அந்த சமயம் பெருமானுக்கு திருவாராதநம் இல்லாமல் போய் பெருமானை வல்மீகம் (புற்று) மூடிக்கொண்டது .  இந்த இடம் காடாக மாறியது.

காலக்ரமத்தில்  புரூரவஸ் சக்ரவர்த்தி இந்த இடத்தைக் கடக்கும்போது அவரது விமானம் இந்த இடத்தைத் தாண்ட முடியவில்லை. வியந்த புரூரவஸ் கீழே இறங்க பகவான் கனவில் தோன்றி “நான் இங்கு இருக்கிறேன்” என்று சொல்ல புரூரவஸ் எம்பெருமானை வேண்ட இங்கிருக்கும் “காங்க தாரா” என்ற தீர்த்தத்தின்  அருகிலிருக்கும் புற்றில் தான் இருப்பதாக எம்பெருமான் அருளினார்.

காங்க தாரா ஸாமம்தீர்த்தம் க்ஷேத்ரம் ஸிம்ஹாத்ரிநாஸமம்

நாரசிம்ஹ ஸமோ தேவ: த்ரைலோக்யே நாஸ்தி நிச்சய:

என்ற சிலாசாஸனம் க்ஷேத்திர மாஹாத்ம்யத்தில் உள்ளது.
எம்பெருமானைப் புற்றிலிருந்து வெளியே எழுந்தருளப் பண்ணி காங்க தாரா தீர்த்தத்தில் திருமஞ்சனம் செய்து பிரதிஷ்டை செய்தான். பிரதிஷ்டை செய்த நாள் வைசாக சுக்ல த்ருதீயையாகும். இது அக்ஷயத்ருதீயை என்று கொண்டாடப்படுகிறது. அன்று சந்தநோத்ஸவம் என்ற உத்சவம் நடக்கிறது. அன்று எம்பெருமானின் நிஜரூபதர்ஸநம் எல்லாருக்கும் கிட்டுகிறது. அதாவது அன்று சந்தனக்காப்பு இல்லாமல் ஸேவை ஸாதிக்கிறார் .

3 மணுகு சந்தனம் என்றால் சுமார் 125 கிலோ  சந்தனமாகும்.
வைசாக சுக்ல திருதீயையன்று 3  மணுகு சந்தனம் சாற்றுகிறார்கள் .

வைசாக பௌர்ணமியன்று 3  மணுகு சந்தனம் சாற்றுகிறார்கள் .

ஜ்யேஷ்ட பௌர்ணமி  ஆணி பௌர்ணமி யன்று 3 மணுகு சந்தனம் சாற்றுகிறார்கள்

ஆஷாட பௌர்ணமி  ஆடி பௌர்ணமியன்று  3 மணுகு சந்தனம் சாற்றுகிறார்கள்

ஆகா 12 மணுகு ( சுமார் 500 கிலோ) சந்தனத்துடன் எம்பெருமான் எப்பொழுதும் ஸேவை ஸாதிக்கிறான் .

பெருமானுக்கு திருமஞ்சனம் மற்றும் ப்ராசாதத்துக்காக இன்றும் காங்க தாரா தீர்த்தம் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது.

ஸ்ரீ ஸிம்ஹாசல க்ஷேத்திர மாஹாத்ம்யம் முற்றிற்று .

ஸ்ரீ வராஹ நரஸிம்ஹ ஸ்வாமியின் த்வாத்ரிம்ஸத்  ( 32 ) திருநாமங்கள்

ஸ்தம்போத்பவ  நரஸிம்ஹர்                 காரஞ்ச நரஸிம்ஹர்

பாவன                    நரஸிம்ஹர்                 கருடாரூப நரஸிம்ஹர்

பஞ்சமுகி             நரஸிம்ஹர்                  கண்டபோண்ட நரஸிம்ஹர்

ப்ரஹ்லாதவரத நரஸிம்ஹர்                 வராஹ  நரஸிம்ஹர்

ஜ்வாலா உக்ர     நரஸிம்ஹர்                  அஹோபில நரஸிம்ஹர்

யோகா ஸ்ரீ            நரஸிம்ஹர்                   ஸ்ரீ வித்யா நரஸிம்ஹர்

சாளக்ராம           நரஸிம்ஹர்                   யோகபட  நரஸிம்ஹர்

யோகானந்த       நரஸிம்ஹர்                    மாலோல நரஸிம்ஹர்

வீர                          நரஸிம்ஹர்                     க்ரோட நரஸிம்ஹர்

ஸர்வதோமுக நரஸிம்ஹர்                      அபய நரஸிம்ஹர்

ஸ்ரீ மஹாவிஷ்ணு நரஸிம்ஹர்                லக்ஷ்மி நரஸிம்ஹர்

சாத்ரவட            நரஸிம்ஹர்                        ஸ்ரீ வித்யாசக்ர நரஸிம்ஹர்

ராஜ்யலக்ஷ்மி நரஸிம்ஹர்                யோகவட லக்ஷ்மி நரஸிம்ஹ நரஸிம்ஹர்

ஸ்ரீ பார்கவ        நரஸிம்ஹர்                          கிரிஜா நரஸிம்ஹர்

ஸ்ரீ ஸுதர்ஸந நரஸிம்ஹர்                          கல்யாண நரஸிம்ஹர்

வ்யாக்ர             நரஸிம்ஹர்                          வராஹலக்ஷ்மி நரஸிம்ஹர்

ஸ்ரீ கூர்மம்

ஸ்ரீ கூர்மக்ஷேத்ரமாஹாத்ம்யமானது அஷ்டாதஸ புராணங்களில் ஒன்றான ப்ரஹ்மாண்ட புராணந்தர்கதமான பத்ம புராணத்தில் சொல்லப்பட்டது. இந்த கூர்மக்ஷேத்ரத்திளிருந்து 12 கி.மீ. தொலைவில் காரா என்ற பிராந்தியத்தில் “சாலிஹுண்டா ” என்ற இடம் உள்ளது. இவ்விடங்களை ஸ்வேதசக்ரவர்த்தி ஆண்டு வந்தார்.அவருடைய கோட்டைதான் “சாலிஹுண்டா “. வம்ஸ தாரா என்ற நதியல் சூழப்பட்டிருக்கின்றன இவ்விடங்கள் . ராணியின் பெயர் ஹரிப்ப்ரியா . ராணி பீஷ்ம ஏகாதஸிவ்ரதம் இருக்கும்போது காமத்துக்கு வசப்பட்ட ராஜா , ராணியிடம் செல்ல , வ்ரதத்திலிருக்கும் ராணி பகவானை வேண்ட இருவருக்கும் இடையில் ஒரு பெரிய ஊற்று பிறந்தது. அது தான் வம்ஸ தாரா . ராஜா ஏமாற்ற்றத்துடன் கோட்டைக்குத் திரும்பினார். வருத்தத்தில் இருந்த அவரைப்பார்த்த நாரதர் அவருக்கு ( ராஜாவுக்கு) கூர்ம மந்திரத்தை உபதேசித்து இங்கிருக்கும் எட்டு புண்ய தீர்த்தங்களில் நீராடி தவம் புரியும்படி சொன்னார். அரசனும் அவ்வாறே கடுந்தவம் புரிந்தான். ஸ்ரீ மஹாவிஷ்ணு ப்ரத்யக்ஷமாகி என்ன வரம் வேண்டும் ? என்று கேட்டார். ஸ்வேத சக்ரவர்த்தியும் எம்பெருமானை கூர்மாவதாரத்தில் எல்லாருக்கும் ஸேவை ஸாதிக்க வேணுமென்று பிரார்த்தித்தார். மற்ற அவதாரங்களை அந்தந்த காலத்தில் இருப்பவர்கள் தான் ஸேவித்திருப்பார்கள் . ஆனால் மந்தரமலை கடலுக்குள் அழுந்திவிடாமல் இருப்பதற்காக பண்ணின கூர்மாவதாரத்தை தேவர்களும் தானவர்கல்ம் கூட ஸேவிக்காமல் விட்டார்கள். அமுதத்தை மட்டும் அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்ததால் அந்த அவதாரகாலத்தில் அவர்கள் இருந்தும் கூட ஸேவிக்காமல் இருந்தார்கள்.அந்த குறை தீர உலகில் எல்லாருக்கும் ஸேவை ஸாதிக்க கூர்ம ரூபியாக இங்கு எழுந்தருலவேனுமென்று பிரார்த்தித்தான் அரசன். பகவானும் இசைந்து ராஜாவின் பெயரிலேயே மலையை ஏற்படுத்தினார்.

“ஸ்வேதாசல நிவாஸாய கூர்மநாதாய மங்களம்” என்பது இந்த திவ்ய தேசத்து எம்பெருமானுக்கான மங்கலஸ்லோகம் . இந்த ஆலயத்தைப் பிரமன் ஏற்படுத்தினார். இங்கே நூற்றெட்டு  ( 108 ) விதமான தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தீர்த்தம் கிடைக்காமல் போக பகவானே தன சக்ரத்தால் குளத்தை ஏற்படுத்த “சக்ர தீர்த்தம்” இங்கு உண்டாயிற்று. அக்குளத்திளிருந்துதான் “தாயார்” அவதரித்தார். க்ருத யுகத்தில் பிரமன் , த்ரேதா யுகத்தில் லவ குசர்கள் , த்வாபர யுகத்தில் பலராமன் ஆகியவர்கள் இந்த பகவானுக்கு ஆராதநம் செய்திருந்தார்கள். கலியுகத்தில் எம்பெருமானார் எழுந்தருளி மங்களாஸாஸநம் செய்தார்.

ஸ்ரீ கூர்ம க்ஷேத்திர மாஹாத்ம்யம் முற்றிற்று .

புரி ஜகந்நாத க்ஷேத்ரம்

வர்ஷாணாம் பாரத ஸ்ரேஷ்ட: தேஸாநாம் உத்கல: ஸ்ம்ருத:

உத்கலஸ்ய ஸமோ தேஸ : தேஸோ நாஸ்தி மஹீதலே

வர்ஷங்களுக்குள் பாரதமும் , தேசங்களில் உத்கலமும் ( ஓடிஷா ) ஒப்பு உயர்வற்றவை .

இந்த உத்கல க்ஷேத்ரம் என்பது சங்க க்ஷேத்ரம் (புரி ), பத்ம க்ஷேத்ரம்
 ( கோனார்க் ) , சக்ர க்ஷேத்ரம் ( புவனேஸ்வர்), கதா க்ஷேத்ரம் (ஜாஜபுரா )

ஆகியவற்றை உள்ளடக்கியது. இவை அனைத்தும் சேர்த்து சுமார் 100 சதுர மைல் பரப்பளவு உள்ளது. இவற்ற்றுள் 5 க்ரோசங்கள் ( ( 10 மைல்கள்) உள்ள புரி க்ஷேத்ரம் சாலச் சிறந்தது.. திருமாலின் சங்க வடிவத்தில் இருக்கும் இத்தலத்தின் 6 மைல்கள் கடலுக்குள்ளும் , 4 மைல்கள் நிலத்திலும் உள்ளன.
சுமார் 20 கி.மீ. சுற்றளவு உள்ள இத்தளத்தை பகவானின் சங்கம் தோன்றிய நாளான மார்கழி மாதத்து தேய்பிறையின் பஞ்சமி அன்று வலம் வருவது மரபு.
இத்தளத்தின் மஹாத்ம்யத்தை பத்ம புராணம், பிரம்ம புராணம் , ஸ்கந்த புராணம் ஆகியவற்றில் கூறியபடி இங்கு பார்ப்போம்.

சார் ( நான்கு ) தாம் – பதரீ , புரி, ஸ்ரீரங்கம் , த்வாரகா ஆகியவை பாரதத்தின் நான்கு எல்லைகளில் இருக்கும் புன்யக்ஷேத்ரங்கள். இந்த நான்கு க்ஷேத்ரங்களுக்கும் யாத்ரை செல்வது பரம பாவநமாகக் கருதப்படுகிறது. ஸ்ரீமன் நாராயாணன், விடியற்காலையில் பாதரியில் நீராடி, த்வரகாவில் வஸ்த்ரம் தரித்து, புரியில் அமுது செய்து திருவரங்கத்தில் சயனிக்கிறார்.

இதில் புரி ஜகந்நாதம் கீழ்கண்ட பெயர்களில் விளங்குகிறது.

ஸ்ரீ க்ஷேத்ரம் : ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கேள்வனே புருஷோத்தமன் என்று வேதாந்தம் கூறுகிறது. ஆகவே புருஷோத்தமன்  உறையும் இவ்விடம் ஸ்ரீ க்ஷேத்ரம்.

சங்க க்ஷேத்ரம்: இவ்விடம் திருமாலின் சங்க வடிவத்தில் இருப்பதால் இப்பெயர்.

புருஷோத்தம க்ஷேத்ரம் : அபுருஷன் என்று அறிவற்ற ஜடமான அசேதனப் பொருள்களையும், என்று   பந்த ( உலகியற்கட்டுண்ட ) ஜீவர்களையும், உத்புருஷன் என்று முக்த ஜீவர்களையும் , உத்தர புருஷன் என்று நித்ய ஸூரிகைகளையும் சொல்வர். இவர்கள் அனைவரையும் விட மிகவும் உயர்ந்தவனான பகவான் உத்தம புருஷன் எனப்படுகிறான். இதக் கண்ணன் கீதை பதினைந்தாம் அத்தியாத்தில் விளக்குகிறார். அந்த புருஷோத்தமன் கோயில் கொண்டிருக்கும் இவ்விடம் புருஷோதமக்ஷேத்ரம் .

நீலாசலம் : இவ்விடம் நீல மலையில் உள்ளபடியால் இப்பெயர். இதுவே இவ்விடத்தின்  புராதனப்பெயர்.

பூஸ்வர்கம் : சுவர்க்கத்தில் உள்ள மிதமான தட்பவெப்பமும் , இன்பமும் இங்கு எப்போதும் இருக்கிறபடியால் இது பூலோகத்தில் உள்ள சுவர்க்கம் எனப்படுகிறது.

நரசிம்ஹ க்ஷேத்ரம் : இத்திருக்கோயில் கட்டி முடிக்கப்பட்டவுடன் பர்மா ஒரு யாகம் செய்ய அதிலிருந்து ஸ்ரீ நரசிம்ஹர் உக்ர வடிவத்துடன் தோன்றி, பின் சாந்தமடைந்தார். ஆகவே இவ்விடத்திற்கு இப்பெயர்.

ஸ்தலபுராணம்

க்ருத யுகத்தில் , சிறந்த விஷ்ணு பக்தனான இந்த்ரத்யும்ணன் எனும் அரசன் அவந்தி நகரத்தைத் தலைநகரமாகக் கொண்ட மலாயா தேசத்தை ஆண்டு வந்தான். அவன் ஒரு நாள் தன குல குருவினிடம் ” பகவானை நேருக்கு நேரே தரிசிக்கும் பெருமையுடைய புன்யக்ஷேத்ரத்தைக் கண்டுபிடித்துக் கூறுங்கள்” என்றான்.

குருவும் க்ஷேத்ராடனம் போய் வரும் யாத்ரிகர்களிடம் வினவ, அதில் ஒருவர் ” நான் அனைத்துப் புன்யக்ஷேத்ரங்களையும் தரிசிக்கும் பாக்யம் பெற்றவன்.பாரத வர்ஷத்தில் உத்கலதேசத்தில்  ( ஓடிஷா ) கடலுக்கு வடக்கே இருப்பது புருஷோத்தமா க்ஷேத்ரம். அங்கு அடர்ந்த கானகத்தின் நடுவே கம்பீரமான நீலமலை உள்ளது. அங்கிருக்கும் கல்பவடம் எனும் ஆலமரத்தின் மேற்கே ரோகிணி குண்டம் எனும் புண்ய தீர்த்தம் உள்ளது. அதன் கிழக்கே, ஒளி விடும் நீல மணியாலான வாசுதேவர் கோயில் கொண்டுள்ளார். தீர்த்தத்துக்கு மேற்கே சபர் தீபக் எனும் ஆச்ரமத்திலிருந்து சற்றுத் தொலைவில் பகவான் ஜகந்நாதர் கோயில் கொண்டுள்ளார்.
 ஒரு முழு ஆண்டு அவருக்குத் தொண்டு செய்யும் பாக்கியம் இந்த ஏழைக்குக்
கிடைத்தது.
 மன்னா ! தாங்கள் உடனே அங்கு சென்றால் பகவானை நேரே தரிசிக்கலாம்” என்று கூறி மறைந்தார்..

உடனே அரசன் குல குருவிடம் நீலாசலம் சென்று ஜகந்நாதனை தரிசித்து மோக்ஷம் பெற உதவ வேண்டினான். குருவும் தன தம்பி வித்யபதியை முதலில் அங்கு சென்று விவரம் அறிந்து வரச் சொன்னார்.

வித்யாபதி ஒரு சுபமுஹுர்த்த தினத்தில்  சில பக்தர்களோடு நேரில் நீலாசலத்தை நோக்கிப் புறப்பட்டான். விரைவில் மகாநதியை அடைந்து அனுஷ்டானங்களை முடித்து ஏகாம்பர கானனம் என்ற புவநேஸ்வரத்தைத் தாண்டி தூரத்தில் நீலாத்ரியை கண்டார். தீர்த்த யாத்ரிகர் வர்நித்தபடியே மலை உச்சியில் கல்ப வடத்தைத் தரிசித்தார். உடனே பெருமாளை தரிசிக்க நினைத்தாலும் இரவாகிவிட்டபடியால் இருட்டில் அடர்ந்த காட்டில் செல்வதற்கு வழி காட்ட ஆளில்லாமல் அங்கேயே தங்கினார். அப்போது சிலரின் குரல் கேட்டுத் தொடர்ந்து சென்றபோது சபர் ( மலைவாசி )  தீபக் ஆஸ்ரமத்தை அடைந்தார். அங்கு பல வைஷ்ணவர்களோடு இருந்த விஸ்வாசு  இவரை வரவேட்ட்று பிரசாதம் அளித்து ஓய்வெடுக்கச் சொன்னார். ஆனால் வித்யாபதி  ” நான் நல்ல செய்தியோடு போனால் தான் எங்கள் மன்னர் உபவாசத்தை முடிப்பார். ஆகவே உடனடியாக மலைமேல் போகவேண்டும்” என்று சொல்ல விச்வாசுவும்  : இந்த்ரத்யும்ணன் எனும் மன்னன் இங்கு வந்து தங்குவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். போவோம் வாருங்கள்” என்று இருளில் வழி கட்டினார். போகப்போக பதை குகியும் முள் நிறைந்ததாயும் இருந்தது. விடியலில் புன்யமான ரோஹிணி குண்டத்தை தர்சித்தனர். பின் கல்ப வடத்த வணங்கி , இவ்விரண்டுக்கும் நடுவே உள்ள தோப்பின் உள்ளே சென்று பேரொளியோடு எழுந்தருளியிருந்த பகவானை வியந்து வணகினார்.
பின் வேகமாக மலையிறங்கி ஆஸ்ரமத்தை அடைந்து விஸ்வாசு கொடுத்த அமானுஷ்யமான சுவை உடைய மஹாப்ரசாதத்தை உண்டார்.
” இந்திரன் சமைத்து ஜகந்நாதனை ஆராதித்து அதன் சேஷமான இந்த பிரசாதத்தை உண்டால் பாபமெல்லாம் தொலையும் ” என்று ஜகந்நாத பிரசாதத்தின் பெருமையை உரைத்தார். விஸ்வாசு. உடனே வித்யாபதி
 ” எங்கள் மன்னர் இங்கு வந்து நீல மாதவனை தரிசித்து ஒரு பெரிய கிளை எழுப்பி சிறப்பான பூஜை முறைகளையும் ஏற்படுத்துவார்” என்றார். ஆனால்  விஸ்வாசு “மன்னர் வருவார். ஆனால் இப்போது இருக்கும் பெருமான் அவர் கண்ணுக்குப் படாமல் மறைந்து விடுவார். மன்னன் உபவாசம் இருக்க, பகவான் வேறு மாற உருவத்தில் தோன்றி , பிரம்மாவால் ஸ்தாபிக்கப்பட்டு, பின் நெடுங்காலம் காட்சி கொடுப்பார். ஆனால் இவ்வுண்மைகளை மன்னனிடம் வெளிடவேண்டாம்” என்று வேண்டினார். வித்யாபதி விடை பெற்றுக்கொண்டு புருஷோத்தம க்ஷேமத்தை ப்ரதட்சிணம் செய்து மீளவும் அவந்தி புரியை அடைந்தார்.

திரும்பிய வித்யாபதியின் உத்ஸாகத்தைக் கண்ட மன்னன் போன கார்யம் ஸித்தித்தது என்று உவந்து அவரை உபசரித்தான். குலகுருவின் தம்பி தன அனுபவத்தை மன்னனிடம் விளக்கி ஜகந்நாத பிரசாதத்தைகே கொடுத்தார்.  நீல மாதவனின் சொல்லொனா வடிவழகைக் கேட்ட இந்த்ரத்யும்ணன் உடன் அங்கு செல்ல விருப்பம் கொண்டான்.அப்போது தெய்வ சங்கல்பத்தால் நாரத ரிஷி அங்கு வந்து ” மன்னனின் விருப்பம் ஈடேரும்” என்று ஆசிர்வதித்தார். ஜ்யேஷ்ட மாத்த்தின் பஞ்சமி திதியன்று அவர், நாரதர், ராணி, ப்ரஜைகள்  ஆகியோர் புடை சூழ , தேரில் புறப்பட்டு அன்றிரவே மஹாநதியின்  க்ஸ்ர்சிய்சி ச்ட்சிந்து தங்கினர். உண்டு மடித்து, நாரதர் புருஷோத்தம வைபவம் கூறிக்கொண்டிருந்தபோது வாயிற்காபோன்  வந்து உத்கல தேசத்து மன்னன் வந்திருப்பதாக தெரிவித்தான்.

இரு மன்னர்களும் ஒருவரை ஒருவர் நமச்கரித்தனர். உத்கல மன்னன் , ” தங்கள் வரவு நல்வரவு ஆகுக. ஆயின் தற்போது ஒரு சூறாவளியால் தாங்கள் தரிசிக்க நினைக்கும் நீல மாதவன் மண்ணால் மூடப்பட்டுள்ளார். நாட்டைப் பல ஆபத்துக்கள் சூழ்ந்துள்ளன. உங்கள் வரவு அவற்றைத தீர்க்கும் என நம்புகின்றேன் ” என்று கூறினார். இந்த்ரத்யும்ணனின் கவலையைத் தீர்ப்பதற்காக நாரதர் , “அனைத்தும் ப்ரஹ்மா கூறியபடி நடக்கிறது. பகவான் நான்கு உருவங்களோடு உனக்குத் தோன்றுவார். என்னோடு வா! நல்லதே நடக்கும்” என்றார். அனைவரும் நீலாசலத்தை நெருங்கும்போது ஓர் உக்ரமான நரசிம்ஹ விக்ரஹத்தைக் கண்டனர். மேலும் நீல மாதவன் மண்ணால் மூடப்பட்டிருப்பதையும் கண்டனர். நாரதர் கூறியபடி நரசிம்ஹப் பெருமானை மேற்கு முகமாக எழுந்தருளப் பண்ணி அருகே யஞ்ஞ சாலை அமைத்து ஆயிரம் அஸ்வமேத யாகங்களை செய்யத் தொடங்கினான். அனைத்தும் முறைப்படி நடந்து முடியும் தருவாயில் மன்னன் தினத்தில் ஸ்வேத த்வீபத்தைக் கண்டான்  அது ஸ்படிகக்கல்லால் ஆக்கப்பட்டு பார்கடள்ள சூழப்பட்டு இருந்தது. அங்கு ஆதி சேஷ பீடத்தில் ஸ்ரீ மன்நாராயணன் சதுர்புஜனாய் எழுந்தருளியிருந்தார். இக்கனவை மன்னன் கூற நாரதர் ,
 ” பெருமாள் எழுந்தருளும் தருணம் நெருங்கிவிட்டது. அவர் மறக்கட்டியாக (தாரு ) உருவேடுக்கவிருக்கிறார் . வா! கடற்கரைக்குச் செல்வோம்”  என்றார்.
கிழக்குக் கடலில் வெண் படலம் உருவாகி ஒரு மரம் உருவாகி மிதந்து வந்தது. அவ்விடம் “சக்ரதீர்த்தம்” எனப்படுகிறது. அந்த மரக்கட்டையை பக்தியோடு ராஜாவும் ராணியும் பெட்ட்ருக்கொண்டனர். உடன் ஓர் அசரீரி வாக்கு “இம்மரத்தை வஸ்த்ரத்தில் சுற்றி வையுங்கள். சில நாட்கள் கழித்து ஒரு தச்சன் வந்து செதுக்குவார். அப்படிச் செதுக்கும் பொது யாரும் உள்ளே செல்லக்கூடாது. செதுக்கும் ஒலி  வெளியில் கேட்காதபடி வாத்யம் வாசிக்கவும் ”  என்று ஒலித்தது. அரசர் அதன்படியே செய்தார். தச்சன் வந்து செதுக்கத்தொடங்கினார். பதினைந்து நாட்கள் சென்றன. செதுக்கும் ஒழி நின்றது. ராணி குண்டிச்சா கதவைத் திறந்து பார்க்க விரும்பினாள் . அரசன் தடுத்தும் கேளாமல் ராணி அறையைத் திறக்க ஆணையிட்டாள் . திறந்த பொது தச்சன் அங்கு இல்லை. விக்ரகங்கள் பத்தி முடிந்த நிலையில் இருந்தது கண்டு அனைவரும் திகைத்தனர். ஆனால் அசரீரி வாக்கு ” பகவான் இந்த எளிய நிலையிலேயே இங்கு தரிசனம் கொடுப்பார்” என்று கூறவே, அன்று முதல் ஜகந்நாதப் பெருமான் அவ்வண்ணமே இங்கு கோயில் கொண்டுள்ளார்.

புருஷோத்தமன் இவ்வுருவத்தில் இருக்கும் ரஹஸ்யம்

கண்ணன் ட்வரகையில் தன அஷ்ட மகிஷிகளுடன் ஆனந்தமாக ராஜ்யத்தை ஆண்டபோதும் , அவர் நினைவில் கோகுலப்பெண்டிரே நிறைந்து இருந்தனர். இதன் காரணத்தை அறிய முற்பட்ட எட்டு ராணிகளும் ரோகிணி தேவியை வினவினர். ரோஹிணி தேவி ” கோகுலத்தில் நடந்த ரஸமான லீலைகள் போல் வேறெங்கும் நடந்தது இல்லை. அதுவே காரணம்”  என்று சொல்ல , கோகுல லீலைகளை மகிஷிகள் கேட்க விருப்பம் கொண்டனர். ரோகினி மாதா, கூறுகிறேன்: ஆனால் கண்ம்ணனும் பலராமனும் வராமல் பார்த்துக்க் கொள்ளுங்கள்” என்றார். காவலுக்கு சுபாத்ராவை நிறுத்திவிட்டு அனைவரும் கதை கேட்கத் தொடங்கினர். கதையில் லயித்துத் தன்னையே மறந்த சுபத்ரா, அருகில் இரு புறத்திலும் ராம கிருஷ்ணர்கள் வந்து நின்றதை கவனிக்கவில்லை. கதை கேட்டு , மூவரும் மெய் மறந்து, கை கால்கள் சுருங்கி, விழிகள் விரிய நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நாரதர் அவ்வரிய சேவையைக் கண்டு ஆனந்தக்கூத்தாடினார். மூவரும் தம் நிலையினை உணர்ந்து , இயல்பு நிலையை அடைய முயன்றனர். நாரதர் அதைத் தடுத்து , ” தேவரீர் ஆனந்தத்தில் மயங்கி நிற்கும் இந்நிலையை தரிசித்தால் பக்தர்கள் அனைவரும் பாப்பம் தொலைந்து முக்தி அடைவார்கள். ஆகவே தயை கூர்ந்து இந்த விநிதமான எளிய திருக்கோலத்தோடு இங்கு எப்போதும் கோயில் கொண்டருளவேனும் ” என்று கேட்டுக் கொள்ள அதன்படியே இன்றும் எழுந்தருளியுள்ளார் “பத்துடையடியவர்க்கு எளியனான ” எம்பெருமான்!

கடைத்தலை சீய்த்த அரசன்

கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை கலையலாமென்ற உபதேசத்தால்  சுவாமி நம்மாழ்வார் , திருவனந்தபுரம் ஆனந்தபத்மனபா ஸ்வாமி சந்நிதியில் குப்பை போகப் பெருக்கினால் நம் பாபங்களும் தொலையும் என்கிறார். ஆனால் க்ஷேத்ரத்தில் ஜகந்நாதனின் ரத யாத்ரைக்கு முன் பெருக்கிய அத்தேசத்து அரசன் புருஷோத்தமனுக்கு கல்யாணமே நடந்தது. ( ஆண்டு தோறும் அரசன் ரத யாத்ரைக்கு  முன் தங்கத் துடைப்பத்தால் பெருக்குவது மரபு) மன்னன் ஒரு முறை காஞ்சிபுரம் சென்று வரதராஜப்பெருமானை தரிசித்தான். காஞ்சி மன்னனின் மகளைக் கண்டு மையம் கொண்டான். இரு மன்னர்களும் சம்மதித்தனர். புருஷோத்தமன் புரி திரும்பினான். காஞ்சி மன்னன் முறையாகப் பேசி முடிப்பதற்காக தன மந்திரியை புரி அனுப்பினான். அவ்வமயம் ரத யாத்ரை நாளாக இருக்கவே , மன்னன் ரதம் வரும் பாதையை துப்புரவு செய்தான். மன்னன் தாழ்ந்த செயலில் ஈடுபட்டதாகக் கருதி , அது பொறுக்காத மந்திரி காஞ்சி திரும்பி மன்னனிடம் கூற , பெண் பெண் கொடுப்பதில் தடை ஏற்பட்டது. இதனைத் தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதிய புரி அரசன் காஞ்சி நகரின் மேல் படைஎடுத்தான். ஆனால் அவன் படை சிறியது. இரு மன்னர்களும்-  புரி படை  தோற்றதால் ஜகந்நாதர் பலபத்ரர் ஸுபத்ரா மற்றும் ஸுதர்சனர் விக்ரஹங்களை காஞ்சிக்குக் கொடுத்து விட வேண்டும் என்றும், காஞ்சி படை தோற்றால் அவர்கள் ஆராதிக்கும் விநாயகர் விக்ரஹத்தை புரிக்கு கொடுத்து விட வேண்டும் என்றும் சபதம்செய்தனர். புருஷோத்தமன் ஜகந்நாதரிடம் ” தேவரீரது அருளால் அடியேனது சிறிய படை வெற்றி பெற வேணும்” என்று வேண்டினான்.அரசன் புறப்பட்டபோது ஜகந்நாதர் கறுப்புப் புரவியிலும் , பலராமர் வெள்ளைக் குதிரையிலும் அரொஹனித்து யாரோ இரு வீரர்கள் போல் கஞ்சி நோக்கிச் சென்றனர்.வழியில் ஒரு கிராமத்தில் தாகத்துக்காக ஒரு முதிய இடைப் பெண்ணிடம் மோர் வாங்கிக் குடித்தனர். கையில் காசில்லாததால் மோதிரத்தைக் கொடுத்து, அவ்வழியே வரப்போகும் மன்னரிடம் லோதிரத்தைக் காட்டி பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள். புருஷோத்தமன் தன படையோடு அவ்வழி வர , முதியவள் கொடுத்த மோதிரத்தைக் கண்டு வியந்து பகவானே தனக்காகப் போரிடுவதை நினத்து உருகினான். இரு வீரர்களின் உதவியால் போர் முடிந்து புரி மன்னன் வெற்றி பெற்றான்.காஞ்சி இளவரசியைச் சிறையெடுத்து வந்து புரியில் மந்திரியிடம் “இவளை தெருவைத் துப்புரவு செய்யும் ஒருவனுக்கு மனம் முடியுங்கள்” என்று பழி தீர்க்கும் வகையில் ஆணையிட்டான். பக்தரான மந்திரி இளவரசியிடம் தனிமையில் பேசி , அவளின் பக்தியையும் மன்னனிடம் அவள் கொண்ட காதலையும் அறிந்து அவர்களை சேர்த்து வைக்கும் தக்க தருணத்திற்குக் காத்திருந்தான். அடுத்த ரத யாத்ரையினபோது , இளவரசியை மணக்கோலத்தில் தயார் செய்தான். மன்னன் தங்கத்துடைப்பத்தால் பெருக்கத் துவங்கியவுடன் மந்திரி இளவரசியை அருகே அழைத்தப் போய் ” மன்ன! இவளுக்கு எற்ற தெருப்பெருக்கும் மணமகனைத் தேடினேன். அப்படிப்பட்டவர் நீர் ஒருவரே! எனக்கண்டு கொண்டேன். ஆகவே இவளை இப்போதே ஸ்ரீ ஜகந்நாதப பெருமாளின் முன் திருமணம் செய்து கொள்ளும்” என்று வேண்டினான். அரசனும் மந்திரியின் சமயோசித புத்தியைப் பாராட்டி இளவரசியைக் கல்யாணம் செய்து கொண்டான். ஆகவே கடைத்தலை சீய்க்கப் பெற்றால் க்டுவினையும் களையலாம்: கல்யாணமும் செய்யலாம்.

புண்ய தீர்த்தங்கள்

மஹாநதி

மகாநதி – (கிழக்கு சமுத்ரம் ) – கண்ணன் கீதையில் :ஸரஸம் அஸ்மி ஸாகர: ” அதாவது – நீர் நிலைகளுள் நான் கடலாக இருக்கிறேன்) என்கிறார். அதன்படி இங்குள்ள கிழக்குக் கடலே மிக புன்யமான ‘சக்ர தீர்த்தம்’ என்று கொண்டாடப்படுகிறது. இங்கு தான் ” தாரு ப்ரஹ்மம் ” (மரக்கட்டை வடிவில் வந்த பரம்பொருள்)  சக்ர முத்ரையோடு தோன்றினார். கருத யுகத்தில் பார்கவி எனும் நதி கடலில் கலக்கும் இவ்விடத்தில்தான் (பாங்கி முஹானா) பங்குனி சுக்ல த்வாதசியன்று தாறு ப்ரஹ்மன் தோன்றினார். கடலில் இவ்விடத்தில் தான் இந்த்ரத்யும்ந மகாராஜாவும் மகாராணியும் தாறு பிரமத்தைப் பெற்று , பெருமானின் பிம்பத்தை வடிவமைக்க வேண்டினார். பாரத தேசத்தின் முக்ய நதிகளான கங்கா, யமுனா,கோதாவரி, காவேரி, தாமரபரணி ஆகியவை இக்கடலிலேயே கலக்கின்றன.

இந்த்ரத்யும்ந ஸரோவரம் – இந்த்ரத்யும்ந மன்னன் பகவானை பிரதிஷ்டை செய்தபோது ஆயிரம் பசுக்களை தானம் செய்தார்.  அவற்றின் குளம்பு பட்டுப்  பள்ளம் ஏற்பட்டு மன்னன் தானம் கொடுத்தபோது விழுந்த தீர்த்தத்தால் அது நிரம்பி இந்தக் குளம் ஏற்பட்டது

 மார்க்கண்டேய ஸரோவரம் –  ரிஷியின் வேண்டுகோளின்படி பகவான், தான் ப்ரளயக்கடலின் ஆளிலைத்தளிரில் சயநித்திருப்பதைக் காட்ட , அன்று முதல் இவ்வூரில் ஏற்பட்ட அந்த தீர்த்தத்தின் கரையிலிலேயே ரிஷி தவம் புரிந்து வந்தார்.

ஸ்வேத கங்கா : இங்கு ஸ்வேத மாதவன் மற்றும் மத்ஸ்ய மூர்த்தியின் கோயில் உள்ளது. இது த்ரேதா யுகத்தில் வாழ்ந்த ஸ்வேத மன்னரால் தோற்றுவிக்கப்பட்டது.

ரோகினி குண்டம் – இது கோயிலுக்குள் உள்ளது. கடந்த ப்ரளயத்தின் சிறிதளவு தீர்த்தம் இதில் உள்ளது. அடுத்த ப்ரளயமும்  இந்த தீர்த்தத்தில் இருந்தே உருவாகும் எனப்படுகிறது. ப்ரஹ்மா இங்கு வந்த பொது ஒரு காக்கை இதில் விழுந்து நான்கு கைகளோடு விஷ்ணு ஸ்வரூபம் பெட்டரு முக்தி அடைந்ததைக் கண்டார்.

ஜகந்நாத் புரி  திருக்கோயிலின் அமைப்பு

இப்போது இருக்கும் இத்திருக்கோயில் சோட கங்க தேவனால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு அநங்க பீமா தேவனால் ஆங்கில ஆண்டு 1200 ல் முடிக்கப்பட்டது. இத்திருக்கோயில் நிலா மட்டத்திலிருந்து 214 அடி உயரத்தில் நீலாசலம் எனும் மலையில் உள்ளது. 10.7 ஏக்கர் நிலப்பரப்பில் இருபது அடி உயரமுள்ள செவ்வக வடிவில் , 15 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, இரண்டு நீண்ட மதிள் சுவர்களால் சூழப்பட்டு உள்ளது. வெளி மதிள் மற்றும் ப்ராகாரத்திற்கு மேகனந்த ப்ராசீரம் (665 x 640 அடி)   என்றும் உல் சுற்றுக்கு கூர்ம பேதம் ( 420 x 315 அடி) என்றும் பெயர்கள்.

திருக்கோயிலின் ப்ராதான கிழக்கு வாசல் ஸிம்ஹ (சிங்கம்) த்வாரம் என்றும், தெற்கு வாசல் அஸ்வ ( குதிரை) த்வாரம், மேற்கு வாசல் வயாக்ரா (புலி) த்வாரம், வடக்கு வாசல் ஹஸ்தி (யானை) த்வாரம் என்றும் பெயர்களைப்பெற்றுள்ளன. அந்தந்த வாசல்களில் அவ்வவ்வற்றின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கிழக்கு வாசலுக்கு வெளியே 36 அடி உயர அருணஸ்தம்பம் உள்ளது. 18 ம் நூற்றாண்டில் கொனாரக்கிலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட இதன் உச்சியில் ஸூரியனின் தேரோட்டியான அருணன் அமர்ந்துள்ளார்.

இக்கோயில் நான்கு பகுதிகளாக உள்ளது.

1. போக மண்டபம் – ஜகந்நாதருக்கு ப்ரசாதம் கண்டருளப்பன்னும் மண்டபம் பெரிய மண்டபம் ( 60 x 57 அடி ). இதில் கிருஷ்ணா லீலைகள் அழகான சித்திரங்காக வரையப்பட்டுள்ளன.

2. நட மண்டபம் –   ஜகந்நாதரை உசிப்பிக்க இசை மற்றும் நாட்டியம் நடக்கும்
 ( 70 x 67 அடி) மண்டபம்.

3. ஜகந்மோகன மண்டபம் ( முக ஸாலா ) – இது தான் பக்தர்கள் நின்று கொண்டு பகவானை தர்சிக்கும் இடம். இதில் கருட ஸ்தம்பம் உள்ளது.

4. விமான மண்டபம் – இதுவே கர்பக்ரகாம். இதில் ரத்ன சிம்ஹாசனத்தில்
 ( 16 x 13 x  4 அடி)  பல தேவர் ( 6 அடி உயரம் – வெள்ளை நிறம்) ஸுபாத்ரா (4 அடி – மஞ்சள் நிறம்) ஜகந்நாதர்  ( 5 அடி கருப்பு நிறம்) ஸுதர்சனர் , லக்ஷ்மி, நீல மாதவர், ஸரஸ்வதி  ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் ( ரத்ன வேதிகையில் ஏறி) இவ்வனைவரையும் வளம் வரலாம்.

திருக்கோயில் பூஜாரிகள் ( ஸேவகர்கள்) – சுமார் ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் 36 வகையான கைங்கர்யங்களைச் செய்கின்றனர்.

  கோயிலுக்குள் இருக்கும் மட்டற்ற தர்ஸன ஸ்தலங்கள்

பைஸாபஹாஸா : கிழக்கு வாசலிலிருந்து உள்ளே ஏறிச் செல்லும் 22 படிகள் பக்தர்களின் பாத தூளிபட்டுப் புனிதமானது. இப்படிக்கட்டு யமதர்மராஜனும் கூட ஸாஷ்டாங்கமாக ப்ரணாமம் செய்யும் பெருமை பெற்றது.

கல்பவடம் : பல நூற்றாண்டுகளாக நம் விருப்பங்களை நிறைவேற்றும் ஆலமரம் .

முக்தி மண்டபம் : வேத விற்பன்னர்கள் கூடி ப்ரமத்தைப் பற்றி ஆலோசித்து த்யானிக்கும் 16 கால் மண்டபம். பிரம்மா ஸபா என்றும் இது அழைக்கப்படுகிறது.

நரசிம்ஹர் ஸந்நிதி : முக்தி மண்டபத்துக்கு அருகே உள்ளது.

ஸ்ரீ தேவி பூதேவி ஸந்நிதி : இங்கிருக்கும் மூலிகைச் சாற்றினால் வரையப்பெற்ற சித்திரங்களில் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் பகவத் ராமானுஜர் ஆகியோர் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

கோய்லா  மண்டபம் : ஜகந்நாதரின் திருமேனி சுமார் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புது தாருவால் செய்யப்படும். இந்த உத்ஸவத்திற்க்கு நவ களேவரம் ( புது திருமேனி) என்று பெயர்.  பழைய திருமேனி இவ்விடத்தில் பூமிக்குக் கீழே எழுந்தருளப் பண்ணப்படும்.

ஆனந்தபஜார் : ஜகந்நாதரின் மஹாப்ரஸாதம் விநியோகிக்கப்படும் இடம் இது.

கோயிலுக்கு வெளியே இருக்கும் சந்நிதிகள்

குண்டிசா  மந்திர் : இக்கோயில் ராணி குண்டிசாவின் பெயரில் உள்ளது.
படாதாண்டா சாலையின் (க்ராண்ட் ரோட்) ஒரு கோடியில் ஜகந்நாதர் கோயிலும், மறுமுனையில் குண்டிசா மந்திரும் உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சாலை இது தான். இக்கோயிலில் தான் முதலில் தாரு ப்ரஹ்மத்திலிருந்து ஜகந்நாதர் முதலான விக்ரஹங்கள் செதுக்கப்பட்டன. ஆகவே பகவானின் பிறப்பிடம் இதுவே. இவ்வளாகத்தில் தான் அரசன் ஆயிரம் அஸ்வமேத செய்தார். ரதோத்ஸவத்தின் போது ஜகந்நாதர், பலதேவர், ஸுபத்ரா , ஸுதர்ஸனர் ஆகியோர் இங்கு தான் எழுந்தருளியிருப்பார்.

யக்ஞ நரசிம்ஹ தேவர் : இப்பெருமான் குண்டிசா மந்திரிலிருந்து இந்த்ரத்யும்ந ஸரோவர் போகும் வழியில் மஹாவேதி எனும் இடத்தில் எழுந்தருளியுள்ளார்.  இந்த்ரத்யும்ந மன்னன் இவ்வூருக்கு வந்தபோது இவரை முதலில் ப்ரதிஷ்டை செய்து ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்து பின்பே ஜகந்நாதர் தோன்றினார். இவருடைய திருமுகம் முன்னால் தர்சிக்க சாந்தமாகவும் , மற்றொரு புறம் உக்ரமாகவும் இருக்கும்.

அலர்னாத் : இங்கிருந்து சுமார் இருபது மைல் தள்ளி உள்ளது. ஆலாலனாதன் என்ற பெயருடைய இவர் உண்மையில் ” ஆழ்வர் நாதன்” . அதாவது ஆழங்கால் பட்டோர்க்கு ஆட்படுபவர் . ஸ்ரீகேதன் என்பவர் தனது மகனான மது என்னும் சிறுவனிடம் கொதிக்கும் சர்க்கரைப் பொங்கலைத் தந்து அதனை உண்மையான அன்புடன் பெருமானுக்கு அமுது செய்யச் சொல்ல , அச்சிறுவனும் உண்மையாகவே அமுது செய்வித்தார். பொங்கலின் சூடு பட்டு பெருமாளின் திருவிரல்கள் சிவந்திருப்பதை இன்றும் காணலாம். இங்கு சைதன்ய மஹாப்ரபு தருசிக்க வந்தபோது பெருமானின் ஆச்ரித பாரதந்த்ர்யத்தைக் கேட்டு உருகி பூமியில் மயங்கி வோழுந்து கிடந்ததன் சிவடை இன்றும் காணலாம்.

சாக்ஷி கோபால் : மேற்க்கே 15 மைல்  தொலைவில் உள்ள சந்நிதி இது. கண்ணனின் பேரன் வஜ்ரானாபரால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டவர்கள் ஐவரும், வ்ருந்தாவனத்தில் இருக்கும் மதன மோகனரும் , இவர் முதலில் புரியில் ப்ரதான கோயிலில் தான் இருந்தார். ஆனால் அனைத்து ப்ரசாதங்களையும்ஜகந்நாதருக்கு முன்னமேயே உண்டு முடித்து விடுவார். ஆகையால் இருவருக்கும் லீலா ரஸமாக ஓர் பிணைப்பு ஏற்பட்டுப் பின் ஒரு முடிவுக்கு வந்து , அதனால் இவர் ஊருக்கு வெளியே கோயில் கொண்டுள்ளதாக ஐதீஹம். ஒரு அந்தண இளைஞனுக்குப் பெண் கொடுக்க இசைந்த முதியவர் ஒருவர், பின் பண வ்யவஹாரத்தால் மறுக்க, அப்போது தன பக்தனுக்காக மக்கள் மன்றத்தில் ஸாக்ஷி சொல்லிக் கல்யாணத்தை நடத்தி வைத்தபடியால் அன்று முதல் இவர் ஸாக்ஷி கோபால் என்று அழிக்கபடுவதாகவும் வரலாறு.

ராமானுஜ ஸம்பந்தம் : பகவத் ராமானுஜர் புரி ஜகந்நாதனை தருசிக்க வந்தபோது இங்கிருக்கும் பூஜை முறை ஆகமத்தின்படி , இல்லாததைக் கண்டு தனை சரிபடுத்த எண்ணினார். அதனால் பள்ளண்டுகலாகத்தொண்டு புரிந்து வரும் பூசாரிகளை விட்டுக் கொடுக்க மனமில்லாத ஜகந்நாதர் , அன்று இரவு துயில் கொண்டிருந்த ராமானுஜரை அவரே அறியாவண்ணம் ஸ்ரீ கூர்மத்தில் கொண்டு போய்விட்டார். விடியற்காலை எழுந்து பார்த்த ராமானுஜர், தான் வேறு இடத்தில் இருப்பதைக் கண்டு ஜகந்நாதரின் ஆச்ரித பக்ஷபாதத்தை உணர்ந்து பல்லாண்டு பாடினார். இன்றும் புரியில் ராமானுஜர் தங்கியிருந்த மேடம், மற்றும் எம்பார் மேடம் ஆகியவை உள்ளன. இம்மாதத்தில் இருக்கும் சன்யாசிகளுக்கு இத்திருக்கோயிலில் பரம்பரையாகப் பெறப்பட்ட கைங்கர்யமும் உள்ளது.

ஜகந்நாதரின் மஹாப்ரசாத மகிமை.:
உலகின் ஜகந்நாதருக்கு நைவேத்யம் பண்ணப்பட்ட ப்ரஸாதம் யாருக்கும் கிடைக்காமலே இருந்தது. தினமும் அதனைச் சமைத்து கண்டருளப் பண்ணும் ஸ்ரீ மகாலக்ஷ்மியிடம் நாரதர் தனக்கு ப்ரஸாதம் வேண்டும் என்று வெகு நாட்களாக வேண்டி வந்தார். இறுதியில் ஒரு நாள் , லக்ஷ்மிதேவி பெருமாளிடம் மன்றாடி நாரதருக்குச் சிறிதளவு ப்ரஸாதம் பெற்றுக் கொடுத்தாள். அதனை உண்ட நாரதர் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று கூத்தாடினார். இதனைக் கண்ட பரமசிவன் தனக்கு ப்ரஸாதம் வேண்டினார். நல்லவேளையாக ப்ரஸாதம் சிறிது மீந்து இருக்கவே, பெட்டரு, உண்டு ஆனந்த நர்தனம் ஆட , அதனால் மேருவும் கைலாஸமும் நடுங்கின. உடனே பார்வதி தேவி தனக்கும் ப்ரஸாதம் வேண்டும் எனக் கேட்க , ஆனால் சிறிதும் ப்ரஸாதம் மீதம் இல்லாதபடியால் கோபப்பட்டு , ” இன்று சபதம் செய்கிறேன். இனி உலகில் அனைவருக்கும் ஜகந்நாத ப்ரஸாதம் எப்போதும் கிடைக்கும்படி செய்வேன்” என்று சூளுரைத்தாள். அவளது பக்தியை மெச்சிய பகவானும் ” புரி ஜகந்நாதத்தில்  இனி அன்ன பிராமமாகவே இருப்பேன்” என்று அருளினார். மட்டற்ற க்ஷேத்ரங்களில் பெருமானை தரிசித்தாலோ, த்யநித்தாலோ, வலம் வந்தாலோ, சங்கீர்த்தனம் செய்தாலோதான் புண்யம் கிட்டும்: ஆனால் புரியில் ஜகந்நாத பிரசாதத்தை உண்பதாலேயே பாபங்கள் அனைதும்விலகி நமைகளே விளையும்.
புரியி பிரசாதத்தை உன்ன சில முறைகள் உண்டு : பூமியில் அமர்ந்தே உண்ணவேண்டும்: விநியோகம் செய்ய கரண்டி முதலானவைகளை உபயோகப்படுத்தக் கூடாது. இலைகளை உபயோகபடுத்தலாம்: ஜகந்நாதரை நினைத்துக் கொண்டே உண்ணவேண்டும்: உண்டு முடித்தவுடன் வாய் கொப்பளிக்கும்போது முதல் வாய் தண்ணீரைத் துப்பாமல் விழுங்கவேண்டும். அடுத்த வாய் நீரினை மண்ணில்தான் துப்பவேண்டும். சாப்பிட்ட இடத்தைக் கைகளால் தான் சுத்தம் செய்யவேண்டும். இத்தனை பெருமை உடைய மஹாப்ரஸாதத்தை எங்கு எப்படிச் சமைக்கிறார்கள் என்று பார்ப்போம்.

திருமடைப்பள்ளி மாஹாத்ம்யம் : உலகிலேயே மிகப்பெரிய சமையல் கூடம் இதுவே. கோயிலின் தென்கிழக்கு மூலையில் ஒரு ஏக்கர் பரப்பில் திருமடைப்பள்ளி அமைந்துள்ளது. 3 x 4 அளவு கொண்ட 752 மண் அடுப்புகள் கொண்டது. விறகுக்கட்டைகள் , சட்டிப்பானைகள் தவிர அந்தவிதமான யந்த்ரமோ உலோகமோ கிடையாது.   மடப்பள்ளியிலிருந்து சுமார் 20 படிக்கட்டுகள் இறங்கினால் இருக்கும் பெரிய கேணியிலிருந்து ராட்டினம் இல்லாமல் தாம்புக் கயிற்றால் கைகளாலேயே இழுக்கப்பட்ட சுத்தமான தண்ணீரை 30 தொண்டர்கள் இடைவிடாமல் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இங்கு மிளகாய், வெங்காயம், பூண்டு, காரட், உருளை, தக்காளி போன்ற நிஷித்தமான பல காய்கறிகள் உபயோகபடுத்தப்படுவதில்லை. திருமடப்பள்ளியில் சுமார் 400 முக்ய கைங்கர்யபரர்களும் மேலும் 400 உதவியாளர்களும் உள்ளனர். காய்கறி  திருத்தவும், தேங்காய் திருகவும் சுமார் 100 பேர் உள்ளனர். வேற்று  மனிதர் யாருக்கும் ப்ரவேச அனுமதி இல்லை.  பொதுவாக ஒரு நாளைக்கு 72 குவின்டல்  ( சுமார் 500 படி) ப்ரசாதமும் , விசேஷ நாட்களில் 900 குவின்டல் ( சுமார் 6000 படி) ப்ரசாதமும் சமைக்கபடுகின்றன. அனைத்து பிரசாதங்களும் பானைகளில் ஏற்றப்பட்டு , சிறு உரிகளில் கட்டி, மூங்கில் கம்புகளின் இருபுறமும் தொங்கவிட்டுக்கொண்டு கைங்கர்யபரர்கள் தொழில் சுமந்து போய் பெருமான் முன்னே அவை படைக்கப்படுகின்றன. இத்தொண்டை சுமார் 60 பேர் செய்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் 56 வகையான பிரசாதங்கள் ( சப்பான் போகி) செய்யப்படுகின்றன. அவை 9 வகையான சித்ரான்னம், 14 வகைக் கறியமுது,மற்றும் கூட்டு, 9 வகை பால் பாயசம், 11 வகை இனிப்புகள், 13 வகையான திருப்பநியாரங்கள். போகத்தின் பெயர்கள் மற்றும் நேரம்:

காலை 8 மணி                     : கோபால் வல்லப போகம்

காலை 10 மணி                   :  ஸகல போகம்

பகல் 11 மணி                        :  போக மண்டப விநியோக போகம்

மதியம் 12:30 மணி              :   மத்யாஹ்ந  போகம்

மாலை 7 மணி                     :   ஸயன போகம்

இரவு 11:15 மணி                  :    மகாஸ்ருங்கார போகம்

தினமும் நிகழும் கொடி எற்றம் :  ஜகந்நாதரின் விமான கோபுரம் 214 அடி உயரம். அதன் மேல் நீல சக்ரம் அன்று பெயர் பெற்ற ஸுதர்ஸன சக்ரம் பொருத்தப்பட்டுள்ளது. எட்டு உலோகங்களால் செய்யப்பட இது 36 அடி சுற்றளவு உள்ளது. இதன் மேல் சிகப்பு வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறம் கொண்ட கொடிகள் தினமும் மாலை 6:30 மணி அளவில் ஏற்றப்படுகின்றன . கருட சேவகர்கள் அன்று அழைக்கப்படும் தொண்டர்களில் ஒருவர், பரம்பரையாக தினமும் அனைத்துக் கொடிகளையும் சுமந்த் கொண்டு இக்கோபுரத்தின் 214 அடி உயரத்தையும் 15 நிடங்களில் எந்த யந்த்ரத்தின் உதவியும் இல்லாமல் சர சர வென ஏறி அடுத்த 10 நிடங்களில் கொடிகளைக் கட்டுகிறார். கனத்த மழை, சூறாவளி அடித்தாலும் கோடி காட்டப்படும். இப்பரம்பரையில் வந்தவர்களுக்கு கருட பகவானின் அருளால் 8 வயது முதல் இத்தொண்டில் பழக்கம் ஏற்படுகிறது.

நவ கலேவர ( புது திருமேனி) உத்ஸவம் :

ஜகந்நாதர் , பலதேவர், ஸுபத்ரா , ஸுதர்சனர் ஆகியோரின் திருமேனி சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட்டு புது தாருவால் செய்யப்படும். எந்த ஆண்டில் அதிக மாஸமாய் ஆணி மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வருமோ அந்த ஆண்டு. இவ்வுத்ஸவத்திற்கென்றே நியமனம் பெற்று இருக்கும் பூஜாரிகள் சுமார் 40 மைல் தூரத்தில் ப்ராசீ  நதிக்கரையில் இருக்கும் காகாத்பூர் எனும் ஊரின்  காடுகளில் தகுந்த வெப்ப மரங்களைத் தேடுவர். சில விசேஷ அடையாளங்களோடு இருக்கும் ஒரு மரத்தை எடுத்து வந்து பூசித்து, அதடின கோய்லா வைகுண்டத்தில இருக்கும் மண்டபத்தில் தச்சர்கள் பகவானின் திருவுருவங்கலாகச் செதுக்குவார்கள். புதுத் திருமேனிகள் உருவானவுடன், அமாவாசை இரவு அவர்களை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து கர்பக்ரஹத்தில் உள்ள பழைய திருமேனிகளுக்கு அருகே வைப்பார். ( அன்று ஊர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படும். பூஜாரிகளுள் மூத்தவர் கண்களைக் கட்டிக் கொண்டு , கைகளிலும் துணி சுற்றிக் கொள்வார். பின் பழைய மற்றும் புதுத் திருமேனிகளுக்கு இடையே நின்று கொண்டு, பழிய திருமேனியின் நாபியில் இருக்கும் ப்ரஹ்மபதார்த்தத்தை எடுத்து புதுத் திருமேனியில் பொருத்துவார். பின் பழைய திருமேனிகள் கோய்லா வைகுண்டத்தில் பூமிக்கு கீழே எழுந்தருளப் பண்ணப்படுவர். சுமார் நான்கு மாதங்கள் நடக்கும் இவ்வுத்ஸவம் முழுவதும் பரம ரஹஅச்யமாக நடத்தப்படும். பழிய திருமேனிக்காக , தாயாதிகள் ( தயிதர்கள்) எனும் வர்கத்தினர் 13 நாள்கள் துக்கம் அனுஷ்டிப்பார். கடந்த நவகலேவர உத்ஸவம்
நடந்த சில ஆண்டுகள் 1912, 1931, 1950, 1969, 1977, 1996 ஆகியவை.

ஜகம் புகழும் ரத யாத்ரை :  ராணி குண்டிசாவின் வேண்டுகோளுக்கிணங்க பல்லாயிரம் ஆஅண்டுகலாக மூன்று மூர்த்திகளும் மூன்று தேர்களில் தங்கள் கோயில்களிலிருந்து புறப்பட்டு 2 மைல்கள் உள்ள க்ராண்ட் வீதியில் பவனி வந்து குண்டிசா மந்திர் அடைவர். ஆணி மாதம் பௌர்ணமியில் (நீலாத்ரிபிஜே ) முடியும். இத்தேர்த்திருவிழாவை தரிசிக்க உலகமெங்கும் இருந்து பல லக்ஷம் மக்கள் திரண்டு வருவர். ரத யாத்ரா குண்டிசா யாத்ரா கோஷா யாத்ரா என்று அழைக்கப்படும்  10 , கண்ணன்  கோகுலத்திலிருந்து தன பிறந்த ஊரான மதுராவிற்கு     வந்ததை நினைவு கூர்கிறது.ஆகவே தான் ஜகந்நாதர் தன பிறந்தகமான குண்டிசாவிற்க்குச் செல்கிறார்.

தேர்களின் அமைப்பு :

மூன்று தேர்கலுமே முழுவதும் மரத்தால், கைகளாலேயே செய்யப்பட்டவை. ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவிற்கு இரண்டு மாதங்களுக்கு முன் புதியதாகவே 125 தச்சர்கள் 2188 மரத்துண்டுகளை இணைத்து இத்தேர்களைச் செய்வர். ஜகந்நாதரின் தேரின் பெயர் நந்தி கோஷ், 7 அடி உயரமுள்ள 16 சக்ரங்கள் ( கலைகள்) பொருத்தப்பட்ட இதன் உயரம் 45 அடி. தேர்ச்சீலைகளின் வர்ணம் மஞ்சள், சங்கிகா, ரேசிகா, மொசிகா மற்றும் த்வாலினி எனும் பெயருடைய நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். இதற்க்கு தாருகன் தேரோட்டி: சங்கசூடன் தேர்க்கயிராக (250 அடி நீளம்) உள்ளான்.

பாலராமரின் தேரின் பெயர் தாலத்வஜம், 14 சக்ரங்கள் (மன்வந்தரங்கள்) பொருத்தப்பட்ட இதன் உயரம் 44 அடி, தேர்ச்சீளைகளின் வர்ணம் மீளம். ருக், யஜுஸ், ஸாம மற்றும் அதர்வணம் எனும் பெயருடைய நான்கு குதிரைகள்: மாதவி தேரோட்டி: வாசுகி தேர்க்கயிறு:

ஸுபாட்ராவின் தேரின் பெயர் பத்மத்வஜம்: தேவதாலனம்: ஓராண்டில் பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கும் வண்ணம் 12 சக்ரங்கள் பொருத்தப்பட்ட இதன் உயரம் 43 அடி. தெர்ச்சீலைஒகலின் வர்ணம் சிவப்பு. ப்ரஜ்ஞா , அனுஷா, கோஷா, மற்றும் அக்ரி என்று பெயருடைய நாண்டு குதிரைகள்: அர்ஜுனன் தேரோட்டி: ஸ்வர்ணசூடன்  தேர்க்கயிறு: இத்தேரில் தான் ஸுதர்ஸனர் எழுந்தருளியிருப்பார்.

விழாவுன் முக்யமான நாட்கள் :

ஆணி பௌர்ணமி – ஸ்நான யாத்ரா – தாரு பிரமத்திலிருந்து ஜகந்நாதர் தோன்றிய நாள்.இன்று பகவானை 108 குடம் பன்னீரால் நீராட்டுவர். ஆகையால் அவருக்கு ஜலதோஷம் பிடித்து அடுத்த பதினைந்து நாட்கள் தனிமையில் இருப்பதாக பக்தர்கள் நம்பிக்கை. அதனால் அந்நாட்களில் தரிசனம் கிடையாது.

ஆணி சுக்ல த்வீதியை – முதலில் பலராமர் அடுத்து ஸுபாத்ரா கடைசியாக ஜகந்நாதர் சிறந்த அலங்காரத்தோடு ஒவ்வொருவராக நகர்ந்து  நகர்ந்து வெளியே வந்து தேரில் எழுந்தருளுவர்/அரசன் தங்கத் துடைப்பத்தால்  பெருக்கியவுடன் தேர்கள் புறப்பட்டு மாலையில் குண்டிசா மந்திர் சென்றடையும். மூர்த்திகள் உள்ளே சென்று அடுத்த ஒன்பது நாள்கள் இங்கேயே எழுந்தருளியிருப்பர். அனநிது பிரஸாதங்களும் இங்கேயே தளிகை பண்ணப்படும்.

ஆணி சுக்ல பஞ்சமி – ஹேரா பஞ்சமி – தன்னை விட்டுச் சென்றதற்காகக் கோபம் கொண்ட லக்ஷ்மி பிரதான கோயிலிலிருந்து பல்லக்கில் குண்டிசா மந்திர் வந்து ஜகந்நாதர் தேரில் ஒரு சிறு பகுதியை உடைப்பதாக ஒரு லீலா ரஸமும் உண்டு.

ஆணி சுக்ல தசமி – உல்டா  ரதம் – மூர்த்திகள் அனைவரும் திரும்ப எழுந்தருள்வர். லக்ஷ்மியின் கோபத்தால் (ப்ரணய கலஹமாகிற மட்டையடி உத்ஸவம்) பிரதான கோயில் மூடப்பட்டு பெருமாள் வாசலிலேயே காத்திருப்பார்.

ஆணி சுக்ல ஈகடசி – ஸுனா வேஷ தர்ஸனம் – இன்றிரவு பல கிலோக்கள் ஸ்வர்ண திருவாபரணங்களை மூர்த்திகள் அணிவர். இதை தரிசிக்க ஒரிய மாநிலத்தின் மூலை முடுக்குகளிருந்து மக்கள் வெள்ளமெனப் பெருகி வருவர்.

ஆணி சுக்ல த்வாதசி – இன்றிரவு பெருமாள் உள்ளே எழுந்தறுள்வார். வீதியில் தேரில் இருக்கும்போது மட்டும் பக்தர்கள் அனைவரும் தேரில் ஏறி பெருமானைத் தொட்டு தரிசிக்கலாம்.

இன்னமும் , ஜகன் பகழும் ஜகந்நாதன் உறையும் புரி க்ஷேத்ரத்தின் மாஹாத்ம்யத்தை சொல்லிக் கொண்டே போகலாம்.   ஆயின் அறிவின் வரையறைக்குட்பட்டு இத்துடன் நிற்கிறேன். அனைத்துக்கும் மேலாக, அவனருளையே நாடி நாம் அனைவரும் முழங்கிடுவோம்.

 ”  ஜய்  ஜகந்நாத் ! புரி புருஷோத்தம் தாம் கீ – ஜய்

நீலசால நிவாஸாய நித்யாய பரமாத்மநே

ஸுபத்ரா பிராண நாதாய ஜகந்நாதாய மங்களம்

பத்ராசலம் ராமதாஸர் கோயில்

அயோத்யையை ஆண்ட தசரதனின் ஆணைப்படி ஸ்ரீ ராமன் ஸீதையுடனும் , இலக்குவனுடனும் காட்டுக்குப் புறப்பட்டான். நாடே துயரத்தில் ஆழ்ந்தது. அப்பிரிவைத்தான் தேவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இது எளியோரைக் காப்பதற்காக பகவான் செய்த லீலையாகும். இந்தப் பிரிவே ஸ்ரீ ராமபிரான் தன் திருவடிப்படும்படி பாரதநாடு முழுவதும் நடப்பதற்கும் காரணமாயிற்று. பத்ராசலம் போன்ற பல க்ஷேத்ரங்கள் உருவாகவும் காரணமாயிற்று. பல்வேறு நதிகள் காடுகளைக் கடந்து தண்டகாரண்யம்  அடைந்தனர். ஸ்ரீ ராமன் அகஸ்த்யர், ஸரபங்கர், ஸுதீஷ்ணர் , மதங்கர் போன்ற ரிஷிகள் நிறைந்த தண்டகாரண்யத்தில் தான் கரன், தூஷணன் , த்ரிஸிரஸ் போன்ற ராக்ஷஸர்களும் இருந்தார்கள். எனவே அவர்களின் தவத்துக்கு மிகுந்த இடைஞ்சல் உண்டாயிற்று. தம்மை ஸேவித்த ராமபிரானுக்கு திவ்யமான வைஷனவவில், அஸ்தரம் (மந்தரத்தால் புனிதப்பட்ட பாணம் ) ஆகியவற்றைப் பரிசாக வழங்கினார் அகஸ்த்யர். இயற்க்கை அழகால் சூழப்பட்டு கோதாவரி சலசலத்து ஓடும் பஞ்சவடியில் ஸ்ரீ ராமபிரான் தங்குவதற்கு அகஸ்த்யர் வழி காட்டினார்.

ஸூர்ய ஒளியைக் கண்டிராத ஸீதை அயோத்யையிளிருந்து இவ்வளவு தூரம் கடந்து வந்ததால் இளைப்பாற வேண்டியிருந்தது.

  அதை அறிந்து கொண்ட ராமபிரான் ஒரு சரியான இடத்தைத் தேடும்போது , ஒரு சிறிய குன்று நன்றாக விரிந்து இளைப்பாற எற்றதாகவிருந்தது. மனமுவந்த ஸ்ரீ ராமபிரான் இந்தக் குன்று அடுத்த ஜன்மத்தில் தன பக்தனாகப் பிறந்து உலகில் விஷ்ணு பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குவான் என்று ஆசிர்வதித்தார். அந்தக் குன்றே ராமபத்ரனின் அருளால் பதற மஹர்ஷியாய் மேருமளைக்கும் – மேருதேவிக்கும் மகனாய்ப் பிறந்தார். சிறு வயது முதலே ப்ரஹ்லாதன், தருவன், போன்ற விஷ்ணு பக்தியில் ஆழ்ந்திருந்த பத்ரனுக்கு நாரதர் ஸ்ரீராமதாரக மந்த்ரத்தை உபதேசித்தார். நாரதரின் மூலமாகத்தன்னுடய  முற்பிறவியின் ரஹஸ்யத்தை அறிந்த பத்ரன் தாய் தந்தையரின் ஆசியோடு பகவானை நோக்கித் தவம் செய்வதற்காக தண்டகாரண்யத்துக்குப்  புறப்பட்டான். அங்கே புனிதமான கௌதமி நதிக் கரையை அடைந்து தவம் புரியத் தொடங்கினான்.
பத்ரனின் தவ வலிமை தாங்காத இந்த்ராதி தேவர்கள் ப்ரஹ்மனிடம் முறையிட்டனர். அனைவரும் பார்கடலுக்குச் சென்று பகவானை வேண்டினார்கள். எம்பெருமானும் கஜேந்த்ரனை ரக்ஷிப்பதற்க்கு எந்த வேகத்துடன் இறங்கினாரோ அதே வேகத்துடன் இப்பொழுதும் பத்ரனுக்கு ஸேவை ஸாதிப்பதற்க்காக இறங்கினார். அவரைத் தொடர்ந்து பிராட்டி கருடன், ஆதிசேஷன், விஸ்வக்சேனர், நாரதர் முதலான ரிஷிகள் இறங்கினர்.

இதையறிந்த அனுமனும் அவரை வரவேற்பதற்கு கந்த மாதந மலையிலிருந்து விரைந்தார்.ஸ்ரீமந்நாராயணன் பிராட்டியுடன் இதுவரையாரும் ஸேவித்திராத திருக்கோலத்தில் பாஞ்சஜன்யம், மேல் இடது கரத்தில் ஸ்ரீஸுதர்ஸந சக்ரம்,கீழ் இடது கரத்தில் வில், கீழ் வலது கரத்தில் அபாய ஹஸ்தத்துடன் கூடிய அம்புடன் ஸேவை ஸாதித்ததை அனைவரும்  ஸேவித்து “வைகுண்ட ராமன்” என்று போற்றிப பாராட்டினர். பிராட்டி ஸீதையாக ஆதிசேஷன், வில் மற்றும் அமுகளுடன் லக்ஷ்மனனாகச் சேர அனைவரும் “வைகுண்ட ராமன்” என்றும் , ஸ்ரீராமநாராயணன்  என்றும், அகார உகார மகாரங்களுக்கு வாச்யர்கலான பெருமாளும் பிராட்டியும் ஆதி செஷனும் ஒரு சேர ஸேவை ஸாதித்தபடியால் “ஓங்கார ராமன்” என்றும் போற்றினர் . இதே திருக்கோலத்தில் பத்ரனுக்கு ஸேவை ஸாதித்தார்.இடது தொடை மேல் வீற்றிருந்த பிராட்டியுடனும் இலக்குவனுடனும் ஸேவை ஸாதித்த ஸ்ரீராமனின் திருவடியைத் தன தலை மேல் தாங்கவேனும் என்று பிரார்த்தித்தார். இந்த ஸேவை எல்லாருக்கும் கிடைக்கவேணும் என்றும் தானும் பகவானைத் தாங்கும் மலை யாக இருக்கவேணும் என்றும் வேண்டினார். இப்படியாக பத்ரன் பத்ராச்சலமாக உருவெடுத்தார்.

இப்படி அவதரித்த பகவானுக்கு முதன் முதலில் பாஞ்சராத்ர ஆகமப்படி நாரதர் திருவாராதநம் செய்தார். நடந்தவற்றை அறிந்து கொண்ட மேரு தம்பதிகள் தம் குமாரனான பத்ரன் மழையாகி பகவானைத் தாங்குவத வந்து ஸேவித்து ஆனந்தமடைந்தனர். தேவ் சிற்பி விஸ்வகர்மா  ஆலயத்தைத் தங்கமயமாகக் கட்டி முடித்தார். நாரதரும் நித்யதிருவாராதநம் செய்து கொண்டிருந்தார். இவை யாவும் த்வாபர யுகத்தில் நடந்தன.

த்வாபர யுகம் முடிந்து கலி யுகம் ஆரம்பித்த வேளையில் பத்ரன் பகவானிடம் “கலியின் கொடுமையால் மக்கள் துன்பத்துக்கு ஆளாவார்கள்.அவர்களுக்கு கலியின் பிடியிலிருந்து விடுதலை கொடுத்து ஸேவை ஸாதிக்கவேனும்” என்று பிரார்த்தித்தார். காலப்போக்கில் தேவர்களால் கட்டப்பட்ட திருக்கோயில் மறைந்து போயிற்று. அவ்விடத்தில் மற்றொரு திருக்கோயில் தோன்றியது.மகார்ஷிகளாலும் அரசர்களாலும் அத்திருக்கோயிலில் உள்ள ராமபிரான் ஆராதிக்கப்பட்டு வந்தார். திருமங்கையழ்வரும் இப்பெருமானை ஸேவித்ததாகச சான்று உள்ளது. ஆகையால் பெரிய திருவாய்மொழியிலுருந்து இன்றும் சில பாசுரங்கள் இங்கு ஸேவிக்கப்படுகின்றன.

மீண்டும் பதராசலத் திருக்கோயில்  மறைந்தது. பத்நேழாம் நூற்றாண்டில் இவ்விடத்துக்கு அருகில் ‘போகல தம்மக்க’ என்னும் பெண் வசித்து வந்தாள். மலைஜாதியைச் சேர்ந்த இவளுக்கு பத்ராசலராமன்  கனவில் ஸேவை ஸாதித்து ‘நான் அருகில் இருக்கிறேன்’ என்றான். இரண்டு நாட்கள் தேடியும் அவளுக்கு பத்ராசல ராமன் கிடைக்கவில்லை. மீண்டும் அவள் கனவில் தோன்றி , தானிருக்கும் இடத்தைக் காட்டினார்.  அவள் அடுத்தநாள் மலையேறி ஒரு புட்ட்ருக்குள் எம்பெருமான் இருப்பதை அறிந்து அவரை வெளியே எடுத்து கோதாவரி தீர்த்தத்தால் திருமஞ்சனம் செய்வித்தாள். ஸ்ரீராமபிரான் வெளியே எழுந்தருளினார். வேடுவச்சியான தம்மக்க பனை ஓலைகளாலான ஒரு மேற்கூரை அமைத்து அதற்குள் பெருமானை எழுந்தருளப் பண்ணினாள். த்ச்ன்ச்க்கு கிட்சிக்கும் காய்கனிகளை அவருக்கு ஸமர்பித்து அங்கேயே வசித்து வந்தாள்.

அக்காலத்தில் தானிஷா என்ற பெயருடைய ஒரு துருஷ்கராஜாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது இந்த இடம். அவருக்கு முக்ய மந்திரிகளாக அக்கன்னா, மாதன்னா என்ற இருவர் இருந்தனர். அந்த இருவருக்கும் உறவினர் ‘ கஞ்சொல் கோபண்ணா’ என்பவர் . அவரைஇந்த இடத்துக்கு வரி வசூலிப்பதற்காக நியமித்தான் ராஜ. கிராமத்துக்கு வந்த கோபண்ணா விஷயத்தைக் கேட்டறிந்து மலை மேல் வீற்றிருக்கும் ராமபிரானை ஸேவிப்பதற்க்கு விரைந்தார். வந்த அதிகாரியைப் பார்த்த மூதாட்டியான தம்மக்கா , “ராமபிரான் இப்படி வெயிலிலும் மழையிலும் இருப்பது சரியன்று: உடனே திருக்கோயில் கட்டவேணும்” என்று வேண்டினாள். ராமபக்தரான கோபன்னாவும் ஸ்ரீராமபிரானை ஸேவித்து மெய்மறந்து ‘தாசரதி ஸதகம் ‘ என்ற நூலை இங்கேயே இயற்றிக் கோயிலும் கட்ட இசைந்தார். தம்முடைய ஆசார்யரான ஸ்ரீ ரகு நாத பட்டறை வரவழைத்தார். பிரம்மா புராணத்தில் கௌதமி மாஹாத்ம்ய கண்டத்தில் பத்ராசல மாஹாத்ம்யம் கண்டறியப்பட்டது. இந்தப் பெருமாள் ஸ்வயம் வ்யக்தர்  என்றும் இந்த மலை தான் பத்ரன் என்றும் தெரிந்து கொண்டு இதற்க்கு பத்ராச்சலமென்று பெயரிட்டார். எம்பெருமானை பத்ராத்ரிராமன் என்றும் பத்ராத்ரிநாதன் என்றும் கொண்டாடினார். திருக்கோயிலின்  நிர்மாணம் கோபண்ணாவின் தலைமையில் வேகமாக நடைபெற்றது. பெருமானுக்கு வேண்டிய திருவாபரணங்கள் ஸித்தமாயின. ராஜ கோபுரங்கள், ப்ரகாரங்கள் , கட்டி முடிக்கப்பட்டு ஆலயப் ப்ரதிஷ்டைக்கு நாள் குறித்தாகிவிட்டது. நித்யப்படி திருவாராதநத்துக்கு மட்டுமின்றி நாம சந்கீர்த்தநத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருவரங்கத்திலிருந்து வந்து பாஞ்சராத்ர ஆகம வித்வான்கள் எம்பெருமானின் நித்யப்படி திருவாராதநத்துக்காக வரவழைக்கப்பட்டார்கள். விசித்ரமான பகவத் ஸங்கல்பத்தால்  ஆலயத்தின் ,எல் வைக்கப்படவேண்டிய ஸ்ரீ ஸுதர்ஸந சக்ரம் காணாமல் போயிட்ற்று. கோபண்ணா தம் மேல் தான் குற்றம் என்று தீர்மானித்து கோதாவரி நதியில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். நதியில் விழுந்தவர் தலையில் ஏதோ ஒரு வஸ்து பட , பார்த்த கோபண்ணா அதி ஸ்ரீ ஸுதர்ஸந சக்ரம் என்று அறிந்து கொண்டார்.. யாரோஒருவர் தம்மைக் கரைக்கு இழுத்துச் செல்வதையும் உணர்ந்தார். கரையில் ஒதுங்கிய கோபண்ணாவைக் கண்டு  யாவரும் வியந்து அவரை ‘ராமதாசர்’ என்று போற்றினார்கள். அன்று முதல் கோபண்ணா, பக்த ராமதாஸராகவே பகழ் பெற்றார். ஆலய ஸம்ரோக்ஷனம் இனிதே நிறைவேறியது.பக்தர்கள் தினமும் பெருந்திரளாக வந்து பகவானை ஸேவித்தார்கள். தினமும் எம்பெருமானின் பிரஸாதமாக அன்னதாநம்  நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பாடல்களை ராமதாசர் ஸ்ரீராமபிரானின் மேல் இயற்றினார். ஸ்ரீராமபிரானின் குணங்களை விளக்கும் இவற்றில் நாமஸங்கீர்த்தநமஹிமை,
 ஸரணாகதிததத்வம் , தாயாரின் பெருமை, அடியார்களின் பெருமை ஆகியவை உள்ளன.

ஒரு நாள் திடீரென்று ராமதாஸரின் மகன் குளத்தில் தவறி விழுந்ததில் உயிர் பிரிந்தது. அறிந்த ராமதாஸர்  கோயிலிலிருந்து ஓடி வந்து ராமபிரானைப் பிரார்த்தித்தார். ராமபிரானுடைய அபயஹஸ்தம் ஆகாயத்தில் தோன்றியது. அதிலிருந்து ஒளிகற்றையொன்று குழைந்தையின் மேல் பட்டது. குழைந்தை உயிர் பெட்டரு எழுந்தது. ராமதாஸரின் புகழ் மேலும் பரவியது.

இதையறிந்த சில விஷமிகள் தானிஷா நவாபிடம்புரம் கூறினார்கள். ராமதாஸரைச் சிறைப்பிடித்து அரண்மனைக்கு வரவழைத்தான் நவாப். அவரும் மன்னரின் ஆணைப்படி அரசவைக்கு வந்து திருக்கோயில் முழுவதும் மக்களிடமிருந்து திரட்டப்பட்ட பணத்தால் கட்டப்பட்டது என்றும், தாம் செளுத்தவேண்டிய வரியை இன்னும் சிறிது காலத்தில் கட்டுவேன் என்றும் சொன்னார். அதற்க்கு செவி சாய்க்காத நவாப் அவருக்கு பன்னிரண்டு வருடம் சிறைவாஸம் விதித்தான். கடினமான தண்டனைகளை அனுபவித்துக் கொண்டு சிரையிலிருந்தபோதும் பெருமாளையும் பிராட்டியையும் குறித்தே பாடினார். பத்ராசலத்தில் நடக்கும் ஸ்ரீராமபிரானின் நித்யோத்ஸவங்களை சிறையிலிருந்து கொண்டு மனஸ்ஸாலேயே அனுபவித்தார்.

ஒரு நாள் இரவு ஓர் அற்புதம் நடந்தது. ஸ்ரீராமபிரானும் இலக்குவனும் காவலாளிகள் வேடத்தில் தானிஷாவின் கோட்டைக்கு வந்து ராமதாஸர் திருக்கோயில் கட்டுவதற்க்குச் செலவழித்த ஆறு லக்ஷம் வெள்ளிக்காசுகளுக்காக அந்த அளவுக்கான தன்காகாசுகளைக் கொடுத்தார்கள். அதில் ஒவ்வொரு காசிலும்  பட்ராச்சலராமனின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருந்தது. இன்றும் அந்தக் காசுகளில் இரண்டு காசுகள் இருக்கின்றன. அவர்கள் தங்களது பெயர் ராமோஜி, லக்ஷ்மோஜி என்று கூறி ” உடனே ராமடாஸரை  விடுதலை செய்யவேணும்” என ஆணையிட்டனர்.
நாணயங்களைப் பார்த்த நவாப் அதில் ராமபிரானின் உருவத்தைப் பார்த்து ராமதாஸரின் பக்தியை உணர்ந்து அவரை விடுவித்து அவரிடம் மன்னிப்பு வேண்டினான். “பத்ராசலம் முதலிய இடங்கள் இனி உங்கள் வசமாகட்டும், அவட்ட்ருக்கு இனி நீங்கள் கப்பம் கட்டத்தேவைஇல்லை”, என்றும் கூறினான்.

ஆககவியான ராமதாஸர் இருபத்துநாலு (24) எழுத்துக்கள் கொண்ட காயத்ரி மந்த்ரத்தைப் போல இருபத்து நாலாயிரம் (24000) ஸ்லோகங்கள் கொண்ட ஸ்ரீராமாயனத்தை இருபத்து நாலு (24) சுலோகங்களில் சுருக்கமாகப் பாடினார்.
தமது இறுதிக்காலம் வரை பத்ராசலராமனுக்கு கைங்கர்யம் செய்து பரமபுருஷனுடைய திருவடியடைந்தார் ராமதாஸர்.

பத்ராசல க்ஷேத்திர மாஹாத்ம்யம் முற்றிற்று

.
ஸ்ரீ அஹோபிலம்

அஹோ வீர்யம் அஹொசௌர்யம் அஹோபாஹுபராக்ரம:

நாரஸிம்ஹம் பரம் தைவம் அஹோபலம் அஹோபலம்

எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற  ஆழ்வார்களது மங்களாசாஸனம் பெற்ற நூற்றெட்டு திவ்யதேசங்களில், ஆந்திரப்ப்ரதேசத்தில் அமைந்துள்ள நரசிம்ஹ க்ஷேத்ரமான ஸ்ரீ அஹோபிலம்
திருமங்கையாழ்வாரது  பெரிய திருமொழி முதற்பத்து- ஏழாம் திருமொழிப் பாசுரங்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்று “திருச்சிங்கவேள் குன்றம் “
என்று போற்றப்படுகிறது.

பகவானது திருவதாரங்கள் பலவற்றில் நரசிம்ஹ அவதாரத்திற்கு ஒப்பட்ட்ரதோர் தனிச் சிறப்பு உண்டு. ஒரே சமயத்தில் மனித உருவையும் சிங்க உருவையும் இணைத்துக் காட்டியது போல், தனது ஸர்வாந்தர்யாமித்வத்தையும் , ஸர்வ வியாபகத் தன்மையையும் இவ்வதாரத்தில் ஒரு சேரக் காட்டியருளினான் எம்பெருமான். ஒரே சமயத்தில் பக்தனான ப்ரஹ்லாதன் மீது கருணைப் பார்வையினைப் பொழிந்தும், அசுர வேந்தனான இறநியனைத் தன உக்ரமான பார்வை ஒன்றாலேயே உருக்குலைய வைத்ததும் இந்த அவதாரத்தில் தான்.

நல்லோரை நலியும் தீயோரை அழித்தொழிக்க வெளிப்படுத்திய அளப்பரிய ஆற்றல் ! பக்தனான ஒரு பாலகன் தன கையால் காட்டிய இடத்திலிருந்தும் விரைந்து வந்து காத்தருளும் பேரன்பு! எங்கும் நிறைந்து உறையும் தன்மை! ‘அக டித கலனா ஸாமார்த்யம் ‘ எனப்படும் செராதவட்ட்ரையும் சேர்த்துவைக்கும் திறல்! இது போன்ற தன மகிமைகள் பலவற்றைப் பிரகடனப்படுத்திய சிங்கப்பிரானின் சீர்மை குறித்து நம்மாழ்வார் , ‘எங்கும் நாடி நாடி, நரசிங்க!’ என்றழைத்து உருகுகிறார். ‘ஸத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்’ என்று ஸ்ரீஸுகரும் ஸ்ரீமத் பாகவதத்தில் இந்த வைபவத்தைக் கொண்டாடுகிறார்.

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ‘நாரசிம்ஹ வபு: ஸ்ரீமான்’ என்ற திருநாமம் ஸ்ரீ லக்ஷ்மீ நருசிம்ஹனை அழகியசிங்கப்பெருமாளாக எடுத்துக் காட்டுகிறது. இதனையே திருமழிசைப்பிரானும், ‘அழகியான்தானே! அறியுருவம்தானே!’ என்று அறுதியிடுகிறார். வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதையும் ‘கோளரி மாதவன் ‘ என்றும் ‘அரிமுகன் அச்சுதன்’ என்றும் கல்யாணக் கனவில் தான் கண்ட கண்ணனின் அழகை சிங்கத்திருவுருவுடன் சேர்த்து அனுபவிக்கிறாள்.

ஸ்ரீ ருக்மணிப் பிராட்டியாரும் கண்ணனுக்கு அனுப்பிய தன் சரணாகதிக் கடிதத்தில் ‘காலே ந்ருசிம்ஹ!’ என்றழைத்து, “பக்தனுக்காக சடக்கென நரசிங்கமாய்த் தோன்றிக் காத்தருளியது போல என்னையும் காலம் தாழ்த்தாது கடிதொடிவந்து கைக்கொள்ளவேனும்!” என்று பிரார்த்திக்கிறாள். அப்போது அவள் சிந்தையுள்ளே சிங்கப்பிரானே திகழ்கின்றான்.

உக்கிரமான அவனது அறியுருவம்கூட பக்தநிடத்தில் அவன் கொண்ட பேரன்பின் வெளிப்படன்றோ!

வெட்வேத்யனான ஸர்வேஸ்வரனின் வுஹமூர்தியான ஸங்கர்ஷண ஸ்வரூபமே நரஸிம்ஹனாய்த் தோன்றியதை ஸ்ரீந்ருஸிம்ஹபூர்வதாபிநீ
உபநிஷத் பரக்க உரைக்கின்றது.திருமால் தன் நாபிக்கமலத்தில் நான்முகனைப் படைத்தபின் அவன் முன்னே தனது திவ்யமான நரசிம்ஹ ரூபத்தில் தோன்றி ,
” உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் மருத்யு – ம்ருத்யும் நமாம்யஹம் “

என்ற நரஸிம்ஹ அனுஷ்டுப் மந்த்ரத்தைக் கொண்டு, தன்னைக் குறித்துத் தவம் செய்து உலக சிருஷ்டிக்கு ஆதாரமான நான்மரைகளைப் பெரும் திறலடைய உபதேசித்தார்.

இந்த நரஸிம்ஹ அனுஷ்டுப் மந்திரம் எம்பெருமானுடைய எண்ணிறந்த திருக்கல்யானகுனங்களில் ஒன்பது மஹா குணங்களை உணர்த்தும் வண்ணம் 1. உக்ர நரஸிம்ஹர் ,  2. வீர நரஸிம்ஹர்,  3.  ஸர்வ வ்யாபக நரஸிம்ஹர்,  4. ஜ்வாலா நரஸிம்ஹர்,  5. ஸர்வஜ்ஞ நரஸிம்ஹர்,  6. ஸ்ரீலக்ஷ்மீ நரஸிம்ஹர்,  7. பீஷண நரஸிம்ஹர், 8. மங்கள நரஸிம்ஹர், 9.ஸம்ஸார நரஸிம்ஹர் ஆகிய நவ நரஸிம்ஹர்கலை நம் கண்முன்னே எழுந்தருளச் செய்கிறது.

ஞானக் கண்ணுக்கு இலக்காகும் இந்த நரஸிம்ஹர்களும் நம் ஊனக்கண்ணுக்கும் இலக்காயின்  எத்தனை இனிது! அதற்காகவே, பின்னானார் வணங்கும் ஜோதியாய் – அர்ச்சாமூர்தியாய் – இந்த நவ நரஸிம்ஹர்களும் ‘ஸ்ரீ அஹோபிலம்’ என்ற திவ்யதேசத்தில் சேவை ஸாதித்தருல்கின்றனர்.

மார்க்கம் : மிகப்புராதனமான இந்த நரஸிம்ம திவ்யக்ஷேத்ரம் ஆந்திராவில் நந்தியால் ரயில்வே நிலையத்திலிருந்து 68 கி.மீ. தூரத்திலும், அர்லகட்டா தாலுக்கா தலைமையிடத்திலிருந்து 24 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. நந்தியாலிலிருந்து அர்லகட்டா வழியாகவோ அல்லது சென்னை – மும்பை மார்கத்தில் உள்ள கடப்பா ரயில் நிலையத்திலிருந்து 64 கி.மீ. தூரத்தில் உள்ள அர்லகட்டாவிர்க்கு வந்தோ அங்கிருன்துன் 32 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீ அஹோபிலத்தினை பேருந்துப் பயணத்தின் வாயிலாக வந்தடையலாம். தான் (Dhone )ரயில் நிலையத்திலிருந்து பங்கனபள்ளி, கொஇல்குண்ட வழியாகவும் இந்த திவ்யதேசத்தை அடையலாம்.

பெயர்க்காரணம் : இந்த திவ்ய தேசம் அஹோபிலம், அஹோபலம், சிங்கவேள்  குன்றம், நவ நரஸிம்ஹ க்ஷேத்ரம், பஞ்சக்ரோஸ  க்ஷேத்ரம் (பத்து மைல் / 16 கி.மீ. சுற்றளவுப்ப்ரதேசம் )  வேதாசலம், கருடாச்சலம், வீரக்ஷேத்ரம் என்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் ‘ அஹோபலம்’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஹோ வீர்யம் அஹோ சௌர்யம் அஹொபாஹூ பராக்கிரம

நாரஸிம்ஹம் பரம் தைவம் அஹோபலம் அஹோபலம்

என்ற நரஸிம்ஹ ப்ரபத்தி ஸ்லோகத்தில் தேவர்கள் சிங்கப்பெருமானது வலிமையைக் குறித்து ‘அஹோபலம்’ (என்னவொரு வலிமை) என்று வியந்து துதித்த அச்சொல்லே இந்தக்ஷேத்ரத்திர்க்குப பெயராகியது என்பர்.

தன்னைக் குறித்துத் தவம் செய்த கருட பகவானுக்கு இந்த மலையின் அகன்ற (அஹோ) குகையில் (பிலத்தில்)  பகவான் நரஸிம்ஹ திவ்ய மங்கள ரூபங்களில் ஸேவை ஸாதித்ததால் இதற்க்கு “அஹோபிலம்” என்ற பெயர் ஏற்பட்டதாகவும் வரலாறு.

புராணப் பெருமைகள் :

   ஆந்திரப்பிரதேசம் கர்நூலில் தொடங்கி சித்தூர் மாவட்டம் வரை நெடுகவிரிந்த ‘நல்லமலா’ என்றழைக்கப்படும் நல்லமளைத்தொடர் ஆதிசேஷா வடிவாய் திருமலை திருப்பதியைத் தன தலைப்பகுதியாகவும் ஸ்ரீ அஹோபிலத்தைத் தன மையப்பபகுதியாகவும் , ஸ்ரீ சைலத்தைத் தன வாழ் பகுதியாகவும் கொண்டது என்ற புராணப் பிரசித்திபெட்ட்றது.

‘ஸிம்ஹாச்ச்ள மஹாத்ம்யம் ‘ என்கிற ஸிம்ஹாச்ச்ள ஸ்தலபுராணமும் இப்பூவுலகில்  மிகுந்த முக்யத்வம்  வாய்ந்த நான்கு திவ்ய க்ஷேத்ரங்களில் அஹோபிலமும் ஒன்று என அறுதியிடுகிறது. இந்த திவ்யதேசத்தின் ஸ்தலபுராணம் பதிநேன்புரானங்களில் ஒன்றான ப்ரஹ்மாண்ட புராணத்தின் பத்து அத்தியாயங்களில் விளக்கப் பெட்ட்ருள்ளது. அவையாவன : 1. இந்த திவ்ய தேசத்தின் மேன்மை 2. பகவத் தரிசனத்திற்காக கருடன் செய்த தவம் 3. க்ஷேத்ரத்தில் உள்ள தீர்த்தங்களைப் பற்றிய விவரங்கள் 4. இந்த நரஸிம்ஹ க்ஷேத்ரத்தில் பர்மா, பரத்வாஜ – கோபில ரிஷிகள், பரசுராமர் ஆகியோர் செய்த தவம் 5. ஜெயா- விஜயர்கள் ஹிரண்யாக்ஷ – ஹிரன்யகசிபுக்கலாக அசுரப்பிரவிஎடுத்த வரலாறு, 6. ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானின் பிறப்பு , தந்தையான இரணியன் அவனுக்கிழைத்த துன்பங்கள் 7. பாலகன் ப்ரஹ்லாதனுடைய  உறுதியான பகவத்பக்தி, அவனுக்காகத் தூணிலிருந்து வெளிப்பட்ட சிங்கப்பிராநிரனியன் மார்வம் கீண்டாமை 8. சிவனுடைய சரபரூபத்தை சிங்கப்பெருமான் அழித்ஹோழித்தமை , 9. பனாசினி என்ற புண்ய நதியினை இந்த திவ்யக்ஷேத்ரத்திற்குகே கொண்டுவர கடும் முயற்ச்சிகள் செய்த பைரவமூர்த்தி இந்த ஸ்தளத்திற்குக் காவல் தெய்வமாக அனா சரித்திரம் , 10. சாஸ்திர விதிகளைக் கடைபிடிக்க இயலாத ஒரு பாமரனும் கூட பக்தியுடன் இங்குள்ள ஸ்ரீலக்ஷ்மீ நரஸிம்ஹனை வழிபட அதனால் மோக்ஷ உலகினையே அடையமுடியும் என்கிற பேருண்மை ஆகியவற்றை விரிவாக விளக்குகிறது ப்ரஹ்மாண்டபுரானம் .

ஸந்நிதியின் அமைப்பு :

ஸ்ரீ அஹோபில டியதேசத்தை அடைந்தஉடன் மலையடிவாரத்தில் உள்ள கோயிலில் ப்ரஹ்லாத வரத நரஸிம்ஹப் பெருமானின் ஸந்நிதி அமைந்துள்ளது. இது ‘சின்ன அஹோபிலம்’ என்றும் ‘திகுவ திருப்பதி’ என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் மேல அஹோபிலம் எனப்படும் மலை மேல் உள்ள கோயிலுக்கு வாகனம்களில் செல்லமுடியும். கடல் மட்டத்திலிருந்து 2800 அடிக்கு மேல் உள்ள இந்த மேல் அஹோபிலத்திற்க்குச் செல்லும் வழியெங்கும் இயற்கை எழில் கொஞ்சம் பசுமையான வனப் பிரதேசங்களும் , மனங்கவர் மலைகளும், அவற்றின் சுனைகளிலிருந்து பொங்கிப்பாயும் அருவிகளும் நம்மை வியக்கவைக்கின்றன. ஆங்கே, செழுமையும் வனப்பும் மிக்க வேதாத்ரி, கருடாத்ரி என்ற இருமலைச் சிகரங்களின் இடையே பவநாசினி என்ற புன்யதீர்த்தம் அந்தர்வாகினியாகப் பாய்கிறது.

மேல அஹோபிலம் ‘நகரி நிதினி’, ஏகுவ திருப்பதி’, பெத்த (பெரிய) அஹோபிலம்’ என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பெரிய திருவடி, விநதாசுதன் , வைனதேயன், பக்ஷிராஜன், கருத்மான் என்றெல்லாம் போட்ட்ரப்படும் கருடன் தனது நாதனான பகவான் ஸ்ரீ மன்நாராயணனது ஆவேச அவதாரத்தை – பக்தவாக்ய பரிபாலகனாய், பர்மா இரணியனுக்குக் கொடுத்தவரம் பழுதாகாவண்ணம்  அவதரித்தருளிய நரஸிம்ஹ ரூபத்தைத் தரிசிக்கும் வேட்கையுடன் இந்த மலையில் நெடிய தவம் புரிய, அவருக்கு இங்குள்ள பெரிய மலைக்குகையொன்றில் ச்வயம்புமூர்த்தியாக ஸ்ரீ அஹோபில நரஸிம்ஹப பெருமான்  காட்சிகொடுத்து, பிற்காலத்தவரான நம்போல்வாரும் கண்ணாரக் கண்டு உருகும் வண்ணனம் எழுந்தருளியிருக்கிறார்.

பின்னும், கருடனுக்குத் தன ஒலியுருவைக் காட்டியருல்வதர்க்காக ஸத்ஸ்வரூப மகாபுருஷ்ணாகிற பகவான் அவரை அன்புடன் அழைக்க, அங்கிருந்து பத்துக்கல் தொலைவில் உள்ள மலைக்குகைக்கு மகிழ்வுடன் சென்ற கருடாழ்வானுக்கு ஜ்வாலா நரஸிம்ஹனாகக் காட்சி தந்தருளினார். :அஹோபிலமே அஹோபலம் அடியேனுக்கு!” என்று குதூஹலத்துடன் துதித்தான் ‘வினைதைதன் சிறுவனான’ வைநதேயன். ‘தெய்வமல்லால் சொல்லவொன்னா சிங்கவேள் குன்றமே!’ என்ற மங்கை மன்னன் பாசுரவரிக்கு எடுத்த்க்கட்டி அமைந்துள்ளது இந்த பவித்ரச்தலம்.

ஸத்யமும் தர்மமும் எங்கும் நிறைந்திருந்த மிகப்பழங்காலத்தில் இந்த அஹோபிலம்க் குகையின் ஒரு பகுதியிலிருந்து, பசும்புல் கூடப்பற்றி அறியும்படியான உக்ரமான பெருவெப்பம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது என்றும், அதனால் இக்குகையின் அந்த வாயில் பெரும் கற்பாறையினால் அடைக்கப்பட்டது என்பதும் கர்ண பரம்பரைச் செய்தி.

கருடன் தவம் புரிந்ததால் கருடாச்சலம் என்ற பெயர் பெற்ற இம்மலைக்கு வேதாசலம் என்ற பெயரும் உண்டு. ஸோமகன் என்ற அரசன் ப்ரஹ்மனிடமிருந்து நான்மரைகளைக் கவர்ந்து செல்ல அவற்றை மீட்க வேண்டி நான்முகன் இத்தளத்தில் எழுந்தருளியிருக்கும் நரஸிம்ஹப பெருமானை வேண்ட, அவர் அவ்வசுறனைக் கொன்று வேதங்கள பிரமனுக்கு மீட்டுக் கொடுத்ததால் இம்மலைக்கு /வேதாசலம்’ என்ற பெயரும் ஏற்பட்டது என்பர். ப்ரஹ்மாண்ட புராணத்தைத் தவிர கூர்மபுராணம், பாத்மபுராணம், விஷ்ணுபுராணம்-ஏன் -ஐந்தாவது வேதம் எனப்போற்றப்படும் இதிகாசமான மகாபாரதத்திளும்கூட இந்த அஹோபில க்ஷேத்ரத்தின் வைபவமும் இங்கு எழுந்தருளியிருக்கும் நரஸிம்ஹப பெருமானின் மகிமைகளும் பரக்க உரைக்கப்பெற்றுள்ளன.

ஸ்ரீ ப்ரகுலாதாழ்வானின் பக்திச் சரித்தரமும், அவனிடத்து அபசாரப்பட்ட அவனது தந்தையான வாளெயிற்று அவுணன் ஆணவத்தால் தூன்புடைப்ப ஆங்கோர் ஆளுகிர்ச்சிங்கவுருவாய் சிந்தி பறக்கச் சீறிவந்து அந்தியம்போதில், அரண்மனைப்படியில் , கோளரி தன மடி மேல் இட்டு கூர்ணகன்கொண்டு அவன் மார்வகம் கீண்ட வரலாறும் அனைவரும் அறிந்ததே!

அந்த ஈரானிய வதைக் காட்சியினை தத்ரூபமாக இன்று நாமும் கண்டு மெய் சிலிர்க்கும்படியாக கீழ் அஹோபிலத்தில் எழுந்தருளியிருக்கும் உக்ர நரஸிம்ம  உத்ஸவமூர்த்தி பத்துத் திருக்கரங்களுடன் ஸம்ஹாரமூர்த்தியாகக் காட்சி தருகிறார்.

அகன்ற விழிகளில் கோபம் கொப்பளிக்க , அனலாய்க் கிளர்ந்தெழும் ஆவேசத்துடன் தனது மடியில் இரணியனைக் கிடத்தி ஒரு கரத்தால் அவனது தலையையும், மறு கரத்தால் இரு கால்களையும் நெருக்கிப்பிடிக்க, மட்டற்ற இரு கரங்கள் அவன் வயிற்றினைக் கிழிக்க, அடுத்த இரு கரங்கள் குருதியைக் குடிக்க, மேலெழுந்த இரு கரங்கள் துஷ்டனிக்ரஹ திவ்யாய்தங்கள் தரித்திருக்கும் கட்சி தந்து நம்மிடத்தேயுல் அநாதிகால பாபவாசனைகலாக்கி அசுரனை ஒழித்தருள்கிறார்.

நல்லோரை நலியும் வலியோரை நடிங்கவைப்பதாய்த் தனது ரௌத்ர ரூபம் இருப்பினும், அது ஆறாத காதல் கொண்ட அடியார்களது கண்களில் படாமலிருக்க, தனது திருமேனியை அலங்கரிக்கும் திவ்ய வஸ்த்ர-ஆபரனங்களுக்கிடையே அதனை மறைத்தக் கொண்டு ஸேவை ஸாதிக்கிறேன் போலும் அழகிய சிங்கப்பெருமான்.

ஸ்ரீ அஹோபில திவ்ய தேச ஸ்தலபுராணம் காட்டும் நரஸிம்ஹர்கலை வரிசையாக நாம் இங்கு அனுபவிப்போம் இனி.

1. ஸ்ரீ ப்ரஹ்லாத வரத நரஸிம்ஹப பெருமான்

அஹோபில மலையடிவாரத்தில் உள்ள கோயிலில் ப்ரஹ்லாத வரதனான ஸ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹர் கிழக்கு நோக்கிய திருமுகமண்டல்த்துடன் ஸேவை ஸாதிக்கிறார். மூலமூர்த்தியின் இடப்புரத்தில்பாவன நரஸிம்ஹரம், அவருக்கு முன் புறத்தே உபய நாச்சிமார்களுடன்  கூடிய ப்ரகுலாதவரதப் பெருமானும் உத்சவமூர்த்திகளாக எழுந்தருளியிருக்கின்றனர். அவர்களுக்கு முன்புறம் புறப்பட்டு கண்டருளும் மூர்த்தியாக பத்துத் திருக்கரங்களுடன் கூடிய ஜ்வாலா நரஸிம்ஹப பெருமான் ஸ்ரீதேவி,பூதேவி ஸமேதராக எழுந்தருளியிருக்கிறார். ஸ்ரீ அஹோபில மடத்தினை ஸ்தாபித்தருளிய ஒன்றான ஸ்ரீ ஆதிவன்சடகோப ஜீயர் ஸ்வாமியும் அருகிலிருந்து பெருமாளை ஸேவிக்கும் திருக்கோலத்தில் தெற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் அர்ச்சா திருமேனியில் ஸேவை ஸாதிக்கிறார்.

2. ஸ்ரீ பார்கவ நரஸிம்ஹப பெருமான்

 இங்கு முதலில் ஸேவித்த கீழ் அஹோபிலம் ப்ரஹ்லாத வரத நரஸிம்ஹப பெருமான் ஸந்நிதி இலிருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இந்த பார்கவ
நரஸிம்ஹப பெருமான் ஸந்நிதி . அஹோபில க்ஷேத்திர மலையொன்றில் ‘பார்கவராமர்’ எனப்படும் பரசுராமர், நரஸிம்ஹ பகவானைக் கானத்தவம் செய்த இடத்தில் அவரது பெயரால் ‘பார்கவா தீர்த்தம்’ என்றழைக்கப்படும் பவித்ரமான நீர்நிலை உள்ளது. அதனருகே அமைந்துள்ள இந்த ஸந்நிதியில் பார்கவராமனாகிய பரசுராமனுக்குக் காட்சி அளித்த சிங்கப்பிரான் பார்கவா நரஸிம்ஹன் என்ற திருநாமத்துடனே ஸேவை ஸாதிக்கிறார்.

3. ஸ்ரீ யோகானந்த நரஸிம்ஹப் பெருமான்

கீழ் அஹோபிலத்திலிருந்து தென்கிழக்கே 2 1/2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஸந்நிதி . ஹிரன்ய ஸம்ஹாரத்திற்க்குப் பிற நரஸிம்ஹர்கு தன பக்தனாகிய பாலகன் ப்ரகுலாதனுக்கு, பல்வேறு யோக நிலைகளிலிருந்து கொண்டு, தன்னை எப்போதும் நெஞ்சில்நிலை நிறுத்தி ஆனந்தமாகத்யநிக்கும் முறைகளைக் கற்பித்த நரஸிம்ஹப பெருமானாக ஸேவை ஸாதித்தருள்கிறார்.

4. மேல அஹோபில நரஸிம்ஹப் பெருமான்

கீழ் அஹோபிலத்திளிருந்து 8 கி.மீ. தொலைவில் மேல் அஹோபிலத்தில் உழல கோயிலில் நரஸிம்ஹப பெருமான் ஸ்வயம்பு மூர்த்தியாக மழைக் குகையின் உட்பாறையில் புடைப்புச் சிற்ப வடிவில் ஸேவை ஸாதித்தருள்கிறார். மலைக் குகையின் உட்புறமே இங்கே கர்பக்ரஹமாக அமைந்துள்ளது. சக்கரத்தாழ்வாரும் இங்கு எழுந்தருளியுள்ளார். வேடுவர்களின் குலதேய்வமான ஸ்ரீ மஹாலக்ஷ்மி , ‘ஸ்ரீ செஞ்சுலக்ஷ்மி ‘ என்ற திருநாமத்துடன் கர்பக்ரஹத்தின் அருகே உள்ள இடைக்கழியின் அறையில் கோயில் கொண்டுள்ளார். அருகில் காலியான அரை ஒன்றுள்ளது. ஸ்ரீ வைகுண்டபதியான ஸ்ரீ மகாவிஷ்ணுவை அனைத்து அவதார காலத்திலும் ‘அகலகில்லேன் இரையும்!’ என்று உலகோர்க்கு உணர்த்தும் வண்ணம் ஜகந்மாதாவான ஸ்ரீ மஹாலக்ஷ்மி இங்கு ஸாந்நித்யம் செய்தருல்வதாக ஐதிஹ்யம் .

இந்த மேல அஹோபிலக் குகைகொஇலில் எழுந்தருளியிருக்கும் நரஸிம்ஹப் பெருமானே இந்த திவ்யதேசத்தின் ப்ரதான மூர்த்தியாவார். இவருடைய உத்ஸவமூர்த்த்தி கீழ் அஹோபில லக்ஷ்மீ நரஸிம்ஹப் பெருமானின் ஸந்நிதியில் எழுந்தருலிஉள்ளார்.

5. ஸ்ரீக்ரோடகர நரஸிம்ஹப் பெருமாள் :

மேல அஹொபிலத்தின் பிரதானக் கோவிலிலிருந்து 1  கி.மீ.தூரத்தில் மலையில் உள்ள நரஸிம்ஹ க்ஷேத்ற்றத்தில் கரோடகார நரஸிம்ஹப் பெருமாள் எழுந்தருலிஉல்லார். ‘க்ரோட’ என்ற சொல் வராஹத்தைக் குறிக்கிறது. எனவே வராஹ வதனத்துலன் எழுந்தருளியிருந்து கொண்டு பெரிய ப்ராட்டியாருலன் ஸேவை ஸாதித்தருளும் இந்த சிங்கப்பிரானுக்கு ‘க்ரோடகர’ நரஸிம்ஹர்’ என்றே திருநாமம்.
வராஹ காண்டத்தில் உள்ள நாராயண ஷடாக்ஷர ஜபபாராயனத்தை இந்த கோவிலில் தொடர்ந்து மூன்று நாள்கள் செய்து வர ஆத்மக்ஷேமத்திற்க்கான நற்பலன்கள் பெருகுவது இக்கோவிலின் தனிச் சிறப்பு என்பர்.

6. ஸ்ரீ காரஞ்ச நரஸிம்ஹப் பெருமான்

மேல அஹோபிலத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு திருத்தலம் ஸ்ரீ காரஞ்ச நரஸிம்ஹப் பெருமான் ஸந்நிதி . இது கீழ் அஹொபிலத்திர்க்குச் செல்லும் பாதையிலிருந்து ஒரு பர்லாங்க் தூரத்தில் அமைந்துள்ளது. காரஞ்ச வ்ருக்ஷத்தின் கீழ் எழுந்தருளியிருப்பதால் இங்கு எம்பருமானுக்கு ‘நரஸிம்ஹர் ‘ என்று திருநாமம். இங்கு சிங்கப்பெருமான் ஒரு திருக்கரத்தில் ‘ஸார்ங்கம் ‘ எனும் வில்லினையும், மற்றொரு திருக்கரத்தில் ஸுதர்ஸன சக்ரத்தையும் தரித்துக்கொண்டு , வீற்றிருந்த திருக்கோலத்தில் ஸேவை ஸாதிக்கிறார்.

இங்குள்ள புன்யதீர்த்தம் ‘பைரவகுண்டம்’ என்று அழைக்கப்படுகிறது. துர்வாஸ மகரிஷியால் சபிக்கப்பட்ட கோபிலரிஷி என்ற முனிவர் இங்கு வந்து பெருமானைக்குரித்து பக்தியுடன் தவம் செய்து பிரார்த்திக்க, இந்தக் காரஞ்ச மரத்தின் கீழ் அவருக்கு எம்பெருமான் நரசிம்ஹ வடிவில் தரிசனம் கொடுக்க, அதனால் சாபம் நீங்கப் பெட்டரு உய்வடைந்தார் என்பது இத்திருத்தலத்தின் வரலாறு.

7. ஸ்ரீ மாலோல் நரஸிம்ஹப் பெருமான்

மேல் அஹோபிலம் பிரதான ஸந்நிதியான சென்ச்லக்ஷ்மித் தாயாருடன் ஸேவை ஸாதிக்கும் நரஸிம்ஹப் பெருமான் கோவிலிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மற்றொரு முக்யமான ஸந்நிதி ஸ்ரீ மலோலப் பெருமான் ஸநிதி.சிங்கப்பிரான் கருணையே உருவான் ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் கூடியவனாய் பக்தர்களைக் குளிரக் கடாக்ஷித்தருல்கிறான் இங்கே! ‘மா’ என்பது பெரிய பிராட்டியாருக்குத் திருநாமம். ‘லோலன்’ என்ற சொல்லுக்கு லீலாரசம் அனுபவிப்பவன் என்பது பொருள். ‘அலகிலா விளையாட்டுடையனான’  அவன் இந்த லீலாவிபூதியின் தனது பக்தர்களைப் பக்குவப்படுத்தி இன்புறும் விளையாட்டினை ஸ்ரீ மகாலக்ஷ்மித் தாயாருடன் சேர்ந்து அனுபவிப்பதற்காக ‘ மாலோலன்’ என்ற திருநாமத்துடன் இங்கு ஸேவை ஸாதித்தறுலள்கிறான் என்பதை உணர்கையில் உள்ளம் உருகுகிறது.

இந்தப் பெருமானின் உத்சவமூர்த்தியான ஸ்ரீ நரஸிம்ஹப் பெருமான் ஸ்ரீ மத அஹோபிலமடத்தினை ஸ்தாபித்தருளிய ஒன்றான ஸ்ரீ ஆதிவண்சடகோப ஜீயர் ஸ்வாமியின் நித்ய திருவாராதனத்தில் எழுந்தருளியிருந்த காலம் தொடங்கி அந்த ஆசார்ய பரம்பரையில் தொடர்ந்து வரும் ஸ்ரீமத் அழகியஸ்ருங்கர்கள்  அனைவரது நித்ய திருவாராதனத்திலும் எழுந்தருளியிருந்து கொண்டு , விசேஷமாக இன்றளவும் அவர்களது சிஷ்யபரிபாலன மங்களாசாஸன யாத்திரைகளிலும் கூடவே எழுந்தருளி ‘ ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி , வழுவிலா அடிமைகளைப் பெற்று’ செல்லுமிடமெல்லாம் திவ்ய \தேசமாக்கியருளும் பெருமை பெற்றவர்!.

8. ஸ்ரீ ஜ்வாலா நரஸிம்ஹப் பெருமான்

ஸ்ரீ மாலோல நரஸிம்ஹப் பெருமான் கோயில் கொண்டிருக்கும் மேல அஹொபிலதிலிருந்து 4 கி.மீ.தூரத்திற்கு மேல் நோக்கிச் செல்லும் மலைமுகட்டில் அமைந்துள்ள ஆச்சர்யகரமான இந்த ஸந்நிதியில் எழுதருளியுள்ளார் ஸ்ரீ ஜ்வாலா நரஸிம்ஹப் பெருமான். ‘அசசாயா மேருமலை’ என்றழைக்கப்படும் இந்த மலையில் தான் வெஞ்சினம் அனலாய்க் கிளர்ந்தெழ எம்பெருமான் ஆளரியாய்த் தோன்றி அசுர வேந்தன் இரணியனைக் கிழித்தெறிந்த சரிதம் நடந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு உக்ர நரஸிம்ஹப் பெருமான் மூன்றடி உயர மூர்த்தியாக ‘ஜ்வாலா நரசஸிம்ஹன்’      என்ற திருநாமத்துடன் பத்துத் திருக்கரங்களுடன் ஸேவை ஸாதிக்கிறார்.

மேர்கரங்கள் சங்கசக்ரங்களை தரித்திருக்க, இரு கைகள் இராணியனைத்தன்
மடியில் கிடத்தி நெருக்கிப் பிடித்திருக்க இரு கரங்கள் ஆவேசமாய் அவனது குதலி பிரித்தெறிய, மற்ற திருக்கரங்கள் துஷ்டநிக்ரஹ திவ்யாயுதங்களை ஏந்தியிருக்க, இடது திருவடியை மடித்தும் வலது திருவடியைத் தொங்கவிட்டுக் கொண்டும் ஸுகாஸனத்தில் வீற்றிருந்தருள்கிறார்.

அருகிலேயே வலப்புறத்தில் ஸ்ரீப்ரஹலாதாழ்வான் கூப்பிய கரங்களுடன் பாலகனாய்ச் சிறு உருவில் வணகி நிற்க, நரஸிம்ஹப் பெருமாநின் ஸநிவேசம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

9. ஸ்ரீ பாவனா நரஸிம்ஹப் பெருமான்

மேல அஹஹோபிலத்திளிருந்து 6 கி.மீ. தொலைவில் பாவனா நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஸந்நிதியில் அந்த நதியின் பெயரையே தன திருநாமத்துடன் இணைத்தக் கொண்டு பாவனா நரஸிம்ஹராய் ஸே வை ஸாதித்து நம்மை பவித்ரமடையச் செய்கிறான் எம்பெருமான்.

உக்ர ஸ்தம்பம் :

மேற்சொன்ன ஒன்பது திருத்தலங்களைத் தவிர, மேல அஹோபிலத்திளிருந்து 8 கி.மீ. தொலைவில் தூண் போன்ற பெரும்பாறை அம்மளையையே இரண்டாகப் பிளப்பது போல் அமைந்துள்ளது. இந்தப் பாறைத் தூநிளிருந்துதான் சிங்கப்பிரான் வெளிப்பட்டார் என்பது நெடுங்கால நம்பிக்கை. சங்கம், சக்ரம், திருமண்காப்பு ஆககியவை இந்தப் பாரைத்தூணில் பொரறிக்கப்பெற்றுல்லன.

ப்ரஹ்லாத மேடு:

உக்ர ச்தம்பத்திர்க்கும் மேல் அஹோபிலத்துக்கும் இடையே அமைந்துள்ள குகையொன்றில் உள்ள ப்ரஹ்லாத நரஸிம்ஹப் பெருமாநின் சிறு ஸந்நிதி ப்ரஹ்லாத மேடு என்றழைக்கப்படுகின்றது . இந்தச் சிறுகுகையில் ஸ்ரீ ப்ரகுலாதாழவான் எழுந்தருளியுள்ளான்.

அஹோபில க்ஷேத்ரத்தின் தீர்த்தங்கள் :

1. ரக்தகுண்டம் :

இந்த திவ்யக்ஷேத்ரத்தில் உள்ள பல புண்ய தீர்த்தங்களில் ரக்தகுண்டம் என்கின்ற தடாகம் மிகவும் முக்யத்வம் வாய்ந்தது.சிங்கப்பிரான் இரணியனைக் கொன்றழித்த பின்னர் தன திருக்கரங்களை இத்தடாகத்தில் அமிழ்த்தி சுத்தம் செய்து கொண்டதாய்க் கருதப்படுகிறது.

2. லாஞ்ச கோனேரி :

பார்கவா நரஸிம்ஹப் பெருமான் ஸந்நிதிக்கு வடகிழக்கில் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தீர்த்தம் லாஞ்ச கோனேரி என்றழைக்கப்படுகிறது. முற்காலத்தில் ராஜசபை நடனமாது ஒருத்தி அஹோபில திவ்யதேசத்தில் நரஸிம்ஹப் பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து, தனதுபாவங்களை மன்னிக்க வேண்டி மன்றாடிப் பிரார்த்தித்தாள். அப்போது எம்பெருமானது ஆணைப்படி இத்தடகத்தினை ஏற்படுத்தி, அதனால் தன பாபங்கள் நீங்கப்பெற்றாள் என்பது வரலாறு.

3. ராம தீர்த்தம் :

கீழ அஹோபிலத்திளிருந்து 8 கி.மீ. தொலைவில் ராமதீர்த்தம் என்கின்ற திவ்யதடாகம் அமைந்துள்ளது. சக்ரவர்த்தித் திருமகனான ஸ்ரீராமன் இந்த திவ்ய தடாகத்தில் நீராடி அனுஷ்டானங்களைச் செய்ததால் இந்தத தீர்த்தம் அவரது திருப் பெயராலேயே வழங்கப்படுகிறது.

4. பவானி தீர்த்தம் :

ஸ்ரீ அஹோபில திவ்யதேசத்தின் பிரதானமான தீர்த்தம் பவநாசினி ஆகும். ஸம்ஸாரமாகிறது பவத்தை நாசம் செய்து முக்தி அடைவதர்க்கான தகுதியை
உண்டாக்குவதால் இதற்க்கு பவநாசினி என்று பெயர். இந்தத தீர்த்தத்தில் பதிமூன்று புன்யதீர்த்தங்களும் கலந்துள்ளன.அவை நரஸிம்ஹ தீர்த்தம், ராம தீர்த்தம், லக்ஷ்மண தீர்த்தம், பீம தீர்த்தம், சங்க தீர்த்தம், வராஹ தீர்த்தம், ஸுதா தீர்த்தம், தொர தீர்த்தம், கஜ குண்டம், விநாயக தீர்த்தம், பிரவ தீர்த்தம், ராஜாத குண்டம் ஆகியன. இவையனைத்தும் பவ நாசினியின் பெருமைக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

இத்திஉத்தலத்தின் மற்றைய  சிறப்புக்கள் :

ஸ்ரீ அஹோபிலமடத்தின் ஏழாவது ஜீயராக எழுந்தருளியிருந்த ஸ்ரீமத் அழகிய ச்ருங்கர் இங்குள்ள வேடுவர்களின் குலதெய்வமான சென்சுலக்ஷ்மித்தாயாருக்கும் எம்பெருமானுக்கும் நடந்த திருக்கல்யாணத்தை ‘வாசந்திகா பரிணயம்’ என்கிற தமது ஸம்ஸ்க்ருத நாடகத்தில் விவரித்துள்ளார்.

இத்திருத்தலத்து எம்பெருமான் ப்ரகுமாவாலும், ஸாக்ஷாத் பகவானது திருவவதாரங்களான ஸ்ரீ ராமபிரானாலும், ஸ்ரீ வேங்கடீப் பெருமானாலும் வானகப் பெற்றவர் என்ற பெருமை முக்யத்வம் வாய்ந்தது.

ஸ்ரீ அஹோபிலேசனான ஸ்ரீந்ருஸிம்ஹப் பெருமானை வழிபட்டதன் பலனாக திருவேங்கடமுடையான் ஸ்ரீபட்மாவதித்தாயாரை திருக்கல்யாணம் செய்து கொண்டான் எனும் மங்கள வைபவம் இத்துத்தலத்திர்கேயான மேன்மை!

அது போலவே, ஸ்ரீராமன் இந்தப் பெருமானின் புகழை ஐந்து ஸ்லோகங்களால் துதிக்க , அது ‘நரசிம்ஹ பஞ்சம்ருதம்’ என்று பிரசித்தி பெட்ட்ருள்ளது. இந்த ஸ்தோத்ரங்களும், வரலாறும் பரம ப்ரமாணமான நூல்களான ஹரி வம்சம், மோக்ஷ தர்மம் ஆகியவற்றில் பீஷ்ம- யுதிஷ்டிரர்களுக்கிடையே உரையாடலில் குறிப்ப்டப்பெற்றுள்ளன. இந்த திவ்யதேசத்து எம்பெருமானது அருளால், சிறையிலிருந்த சீதாப்பிராட்டியாரை பற்றிய விபரங்கள் ஸ்ரீராமபிரானுக்குக் கிடைக்க, அதனால் அவர் ராவணனைக் கொன்றொழித்து ஜகந்மாதாவான ஜானகியை மீட்டெடுத்தான் என்பர்.

இந்த திவ்யதேசத்தின் வைபவமும், ஸ்ரீமத் அஹோபில மடத்தின் திவ்யச்சரித்ரமும் பிரிக்கமுடியாதபடி ஒன்றினைந்தவை. பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் மேல்கோட்டை எனப்படும் திருநாராயனபுரத்தில் கிடாம்பி கேசவாச்சாரியார் ஸ்வாமியின் திருக்குமாரராக அவதரித்த ஸ்ரீநிவாசாச்சார்யர் இளம்பிராயத்திலேயே ஸகல ஸாஸ்த்ர

த திகழ்ந்து விஜயநகரப்பேரரசரான கிருஷ்ணதேவராயரது  ராஜசபை வாத ஸதஸ்ஸில் விசிஷ்டாத்வைத தர்சனத்தை நிலைநாட்டியப புகழ்ப் பெற்றார்.
பின்னர், ஒரு நன்னாளில் திருச்சிங்கவேள்குன்றத்து எம்பிரானே ஒரு அந்தன வடிவில் வந்து அவருக்கு சந்யாச தீக்ஷை அளிக்க, அன்று முதல் ஸ்ரீ ஆதிவண்சடகோப ஜீயர் என்ற திருநாமத்துடன் ஸ்ரீ அஹோபிலத்து சிங்கப்பெருமானுக்கு ஒழிவில் காலமெல்லாம் உடனே மன்னி வழுவிலா அடிமை செய்து கொண்டு எம்பெருமானார் தரிசனத்த எங்கும் பரவச் செய்ய ஸ்ரீமத் அஹோபில மடத்தை நிறுவினார். அவர் அன்று தொடங்கி வைத்த கைங்கர்யஸ்ரீயானது அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பெருகி, இன்றளவும் செழி[ப்புற நடந்து வருவது கண்கூடு.
பெரும்புலவர்களால் கொண்டாடப்பெற்ற ப்ரதாபருத்ரன் என்ற காகதீய மன்னனை ( ஆட்ச்க்காலம் கி.பி. 1295 – 1323 ) . இத்திருத்தலத்து சிங்கப்பிரான் தடுத்தாட்கொண்டு இந்த திவ்யதேசத்திற்க்கான பற்ப்பல திருப்பணிகளையும் அவனைக் கொண்டு செய்வித்தான் எனும் வரலாட்ட்ருப்பின்னணி கண்டு உய்த்துனரத்தக்கது .

விஜய நகரப் பேரரசர்கள் அனைவரும் இந்தப் பெருமானின் பரமபக்தர்கள் , ஹரிஹரர் தொடங்கி கிருஷ்ண தேவராயர், அச்சுத தேவராயர் போன்ற விஜய நகரப பேரரசர்கள் அனைவரும் இந்த திவ்யதேசத்து எம்பெருமாங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் வழிபாட்டு வந்தனர் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது.

அஹோபில க்ஷேத்திர மாஹாத்ம்யம் முற்றிற்று

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்லோகம்-

October 7, 2025

ஸ்ரீ குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்லோகம்
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

ஸ்ரீ குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்லோகம்
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

குருவாயூரப்பா! கருணாமிருதஸாகரா! மங்களகரமான திருமேனியைக் கொண்டவரும், கலியில் பக்தர்களுக்கு மங்களத்தை வாரி அருள்பவரும், சங்கம் முதலிய திவ்ய ஆயுதங்களைக் கைகளில் தரித்தவருமான தங்களுக்கு நமஸ்காரங்கள்!

நாராயணேத்யாதி ஜபத்பிருச்சை:
பக்தைஸ்ஸதா பூர்ணமஹாலயாய
ஸ்வதீர்த்த காங்கோபம வாரிமக்ன
நிவர்த்திதா ஸேஷரூஜே நமஸ்தே

நாராயணா… குருவாயூரப்பா… கோவிந்தா… முதலிய திருநாமங்களை உரத்த குரலில் ஜபிக்கின்ற பக்தர்களால் எப்போதும் நிரம்பிய கோயிலைக் கொண்டவரும், தங்களின் தீர்த்தமான கங்கை நீருக்கு ஒப்பான தண்ணீரில் ஸ்நானம் செய்தவர்களின் ஸமஸ்த ரோகங்களையும் போக்குபவருமான தங்களுக்கு நமஸ்காரம்!

ப்ராஹ்மேமுஹூர்த்தே பரிதஸ்வபக்தை:
ஸந்த்ருஷ்ட ஸர்வோத்தம விஸ்வரூப
ஸ்வதைல ஸம்ஸேவக ரோகஹர்த்ரே
வாதாலயாதீஸ நமோ நமஸ்தே

விடியற்காலையில் நான்கு பக்கத்தில் இருந்தும் வந்த பக்தர்கள் நன்கு தரிசனம் செய்யுமாறு விஸ்வரூப தரிசனத்தை அளிப்பவரே! தங்களுக்கு அபிஷேகம் செய்த நல்லெண்ணெய்யை உள்ளுக்கும் மேலுக்கும் உபயோகப்படுத்திக் கொள்பவர்களின் ரோகத்தைப் போக்கும் தங்களுக்கு நமஸ்காரம்!

பாலான் ஸ்வகீயான் தவ ஸன்னிதானே
திவ்யான்னதானாத் பரிபாலயத்பி:
ஸதா படத்பிஸ்ச புராண ரத்னம்
ஸம்ஸேவிதாயாஸ்து நமோ ஹரே தே

தங்கள் சந்நிதானத்தில், தங்களின் குழந்தைகளுக்கு அன்னப்ராசனம் செய்து வைத்து, அந்தக் குழந்தைகளை நன்கு காப்பாற்றுகிறவர்களாலும், புராணங்களுக்குள் சிறந்த ஸ்ரீமத் பாகவதத்தை நன்கு படிக்கின்ற பக்தர்களாலும் நன்கு ஸேவிக்கப்படும் தங்களுக்கு நமஸ்காரம்!

நித்யான்னதாத்ரே ச மஹீஸுரேப்ய:
நித்யம் திவிஸ்த்தைர்நிஸிபூஜிதாய
மாத்ரா ச பித்ரா ச ததோத்தவேன
ஸம்பூஜிதாயாஸ்து நமோ நமஸ்தே

வஸுதேவர், உத்தவர்- இவர்களால் பூஜிக்கப்பட்டு, ஸ்ரீபகவான் வைகுண்டம் போனதும், சமுத்திரத்தினால் துவாரகை மூழ்கியது. இந்த விக்ரஹம் மட்டும் சமுத்திரத்தின் அலையினால் மிதந்து மேற்கு சமுத்திரம் வந்து சேர்ந்தது. குருவும் (ப்ரஹஸ்பதியும்), வாயுவும் எடுத்து அங்கு பிரதிஷ்டை செய்தனர். அதுவே குருவாயூர் என்று பிரசித்திபெற்றது.)

குருவாதபுரீஸ பஞ்சகாக்யம்
ஸ்துதிரத்னம் படதாம் ஸுமங்கலம் ஸ்யாத்
ஹ்ருதிசாபி விஸேத் ஹரிஸ்வயம் து
ரதிநாதாயுத துல்யதேஹ காந்தி

குருவாயூரப்பனைப் பற்றிய 5 ஸ்லோகங்கள் உள்ள இந்த உயர்ந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர்களுக்கு உயர்ந்த மங்களம் உண்டாகும். பதினாயிரம் மன்மதனுக்கு ஒப்பான தேஹ காந்தியுள்ள ஸ்ரீமந் நாராயணனும் இதயத்தில் பிரவேசித்து தரிசனம் அளிப்பார்.

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வித்யா ஸ்ரீ இராஜ மன்னார் குடி -பங்குனி ப்ரஹ்மோத்ஸவம்-

April 10, 2025

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி.

பங்குனி ப்ரும்மோத்ஸவ முதல் திருநாள் இரவு பேரிதாடகம் ருக்மினி ஸத்யபாமா ஸமேதராய் ஸ்ரீ பெருமாள் கல்யாண அவசர திருக்கோலத்தில் தங்க திருச்சிவிகையில் புறப்பாடு கொடிச்சப்பரம்-

On The Night Of Panguni Brahmotsavam’s First Day, Sri Perumal With His Consorts Rukmini And Satyabhama, Graced The Occasion In Kalyana Avasara Thirukolam. The Grand Perithadagam Was Performed, And The Divine Procession In Golden Thiruchivigai Proceeded To Yanai Vahana Mandapam. Followed By The Deities Being Seated In A Chapparam And Taken In A Procession From Panthaladi Through Mela Raja Veedhi And Gopalasamudram Mada Veethi.

பங்குனி ப்ரும்மோத்ஸவ இரண்டாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு

On The Second Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion In The Attire Of Krishna Alankaram, Seated In A Golden Palanquin And The Procession Proceeded To Punnai Vahana Mandapam.

கோபாலன் காவேரியில் இறங்குதல் 👑😍

பங்குனி ப்ரும்மோத்ஸவ இரண்டாம் திருநாள் இரவு புன்னைமர வாகனம் கண்ணன் திருக்கோலம்.

On The Night Of Panguni Brahmotsavam’s Second Day, Sri Perumal Graced The Occasion In The Attire Of Kannan Thirukolam, Mounted On Punnai Vahanam.

புன்னைமர கிளையில் குழலூதும் கண்ணாக…! 😍

பங்குனி ப்ரும்மோத்ஸவ மூன்றாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு

On The Third Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion With Regal Embellishments, Seated In A Golden Palanquin And The Procession Proceeded To Yanai Vahana Mandapam.

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி ப்ரும்மோத்ஸவம் தினமும் வாகனங்கள் புறப்படும் இடம் 💫

பங்குனி ப்ரும்மோத்ஸவ மூன்றாம் திருநாள் இரவு வெள்ளி ஹம்ச வாகனம் இராஜ அலங்காரம்

On The Night Of Panguni Brahmotsavam’s Third Day, Sri Perumal Graced The Occasion Mounted On Silver Hamsa Vahanam With Regal Embellishments.

பங்குனி ப்ரும்மோத்ஸவ நான்காம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு

On The Fourth Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion Adorned With Divine Ornaments And A Rathinam-Studded Crown, Seated In A Golden Palanquin And The Procession Proceeded To Vanamamalai Mandapam.

உருவச் செஞ்சுடராழிவல்லானே!
உலகுண்டஒருவா! திருமார்பா ! 🥹♥️

பங்குனி ப்ரும்மோத்ஸவ நான்காம் திருநாள் இரவு தங்க கோவர்த்தனகிரி கண்ணன் திருக்கோலம் திருப்பாவாடை கோவிந்த பட்டாபிஷேகம்-குன்றெடுத்து ஆநிரை மேய்த்த பிரான் 🥹❤️

On The Night Of Panguni Brahmotsavam’s Fourth Day, Sri Perumal Graced The Occasion In The Attire Of Krishnan Thirukolam. The Offering Of Thirupavadai Govindha Pattabishegam, Followed By Sri Perumal Mounted On Golden Govardhanagiri Vahana

பங்குனி ப்ரும்மோத்ஸவ ஐந்தாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு-On The Fifth Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion In The Incarnated As Ramar Thirukolam, Seated In A Golden Palanquin, And The Procession Proceeded To Yanai Vahana Mandapam.

பங்குனி ப்ரும்மோத்ஸவ ஐந்தாம் திருநாள் இரவு பஞ்சமுக ஹனுமார் மரவுரி இராமர் திருக்கோலம்—இன்னமுதே இராகவனே 🥹♥️-On The Night Of Panguni Brahmotsavam’s Fifth Day, Sri Perumal Graced The Occasion In The Incarnated As Maravuri Ramar Thirukolam, Carried On Panchamukha Hanuman.

பங்குனி ப்ரும்மோத்ஸவ ஆறாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு சிக்கு தாடை

Sri Vidhya Rajagopalaswamy Temple, Rajamannargudi.

On The Sixth Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion In Sikkuthadai Alankaram, Seated In A Golden Palanquin And The Procession Proceeded To Yanai Vahana Mandapam.
பங்குனி ப்ரும்மோத்ஸவ ஆறாம் திருநாள் இரவு கண்ட பேரன்ட பக்ஷி வாகனம் இராஜ அலங்காரம்.

வாகனத்தின் சிறப்பு : அனைத்து திவ்ய தேசங்களிலும் இந்த பறவை பெருமாள்களுக்கு திருவாபரணங்களாகளே காணப்படுகிறது. கோபாலனுக்கு மட்டுமே வாகனமாக அமைந்திருப்பது பெருமைக்கு கூறியதாகும்.

Sri Vidhya Rajagopalaswamy Temple, Rajamannargudi. 

   On The Night Of Panguni Brahmotsavam's Sixth Day, Sri Perumal Graced The Occasion Mounted On Kanda Peranda Pakshi Vahana With Regal Embellishments. 

Glory Of The Vahanam: In All Divya Desams, This Sacred Celestial Bird Is Revered As An Ornament Of Sri Perumal. It Attains The Unique Honor Of Being The Exclusive Divine Vahanam Of Sri Rajagopalan.

பங்குனி ப்ரும்மோத்ஸவ ஏழாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு நாயக்கர் திருக்கோலம்—கண்ணே கண்மணியே 🥹🙇🏻‍♂️-திருவடி திருமஞ்சனம் 😍-On The Seventh Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion In The Attire Of Nayakkar Thirukolam, Seated In A Golden Palanquin And The Procession Proceeded To Yanai Vahana Mandapam.

பங்குனி ப்ருமோத்ஸவ ஏழாம் திருநாள் இரவு புஷ்ப பல்லக்கு இராஜ அலங்காரம்-வண்துவராபதி மன்னன் 👑😍-On The Night Of Panguni Brahmotsavam’s Seventh Day, Sri Perumal Graced The Occasion With Regal Embellishments, Mounted On The Grand Floral Palanquin.

பங்குனி ப்ரும்மோத்ஸவ எட்டாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு இராமர் திருக்கோலம்-On The Eighth Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion In The Incarnated As Ramar Thirukolam, Seated In A Golden Palanquin And The Procession Proceeded To Yanai Vahana Mandapam.

பங்குனி ப்ரும்மோத்ஸவ எட்டாம் திருநாள் இரவு ரிஷியமுகபர்வதம் பட்டாபிராமர் திருக்கோலம்–இனிதமர்ந்த அம்மானை இராமன்றன்னை ஏத்துவாரிணையடியே ஏத்தினேனே 😍-On The Night Of Panguni Brahmotsavam’s Eighth Day, Sri Perumal Graced The Occasion In The Incarnated As Pattabhiraman Thirukolam, Mounted On Rishyamukha Parvatham.

பங்குனி ப்ரும்மோத்ஸவ ஒன்பதாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு இராஜ அலங்காரம்-On The Ninth Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion With Regal Embellishments, Seated In A Golden Palanquin And The Procession Proceeded To Yanai Vahana Mandapam.

பங்குனி ப்ரும்மோத்ஸவ ஒன்பதாம் திருநாள் இரவு சிம்ம வாகனம் இராஜ அலங்காரம்–எங்கும் நாடி நாடி நரசிங்காவென்று வாடி வாடும் இவ்வாணுதலே 🦁👑-On The Night Of Panguni Brahmotsavam’s Ninth Day, Sri Perumal Graced The Occasion Mounted On Simha Vahanam With Regal Embellishments.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பத்தாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு கிளி கண்ணன் திருக்கோலம்-On The Tenth Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion In The Attire Of Krishna Alankaram, Seated In A Golden Palanquin, And The Procession Proceeded To Yanai Vahana Mandapam.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பத்தாம் திருநாள் இரவு தங்க சூரிய பிரபை வேணுகோபாலன் திருக்கோலம்-On The Night Of Panguni Brahmotsavam’s Tenth Day, Sri Perumal Graced The Occasion In The Attire Of Venugopalan Thirukolam, Mounted On The Golden Surya Prabhai Vahanam.

பெரிய திருநாள் ஆரம்பம் 🔥👑கோபிகளின் நாதனே 😍

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதினொன்றாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு ரத்ன கிரீடம்-On The Eleventh Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion, Adorned With Divine Ornaments And A Rathinam-Studded Crown, Seated In A Golden Palanquin And The Procession Proceeded To Gopinatha Swamy Temple.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதினொன்றாம் திருநாள் இரவு வெள்ளி சேஷ வாகனம் பரமபதநாதன் திருக்கோலம்–பரமபத நாதனே..! 😍-On The Night Of Panguni Brahmotsavam’s Eleventh Day, Sri Perumal Graced The Occasion In The Attire Of Paramapadanathan Thirukolam, Carried On Silver Sesha Vahanam.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பன்னிரெண்டாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு வைரமுடி சேவை–செண்டலங்கார மன்னா..! 👑😍–On The Morning Of The Panguni Brahmotsavam’s Twelfth Day, Sri Perumal Graced The Occasion, Adorned With Divine Ornaments And A Vairamudi Diamond Crown, Seated In A Golden Palanquin And Was Taken In A Divine Procession around Gopalasamudram Mada Veethi.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பன்னிரெண்டாம் திருநாள் இரவு தங்க கருட சேவை வைகுண்டநாதன் திருக்கோலம் இரட்டை குடை சேவை—நால் திசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி 🦅-On The Night Of Panguni Brahmotsavam’s Twelfth Day, A Spectacular Procession Of Sri Perumal, Seated On The Golden Garuda Vahanam, Graced The Occasion In The Attire Of Vaikunthanathan Thirukolam. Accompanied By The Traditional Twin Umbrellas Sevai, The Procession Proceeded To Garuda Vahana Mandapam.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பன்னிரெண்டாம் திருநாள் இரவு தங்க கருட சேவை சப்பரம்-பறவையேறும் பரம்புருடா…! 🦅😍

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதிமூன்றாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு காளிங்கநர்த்தனம்—கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் 😍–On The Thirteenth Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion In The Attire Of Kalinga Narthanam Thirukolam, Seated In A Golden Palanquin And The Procession Proceeded To Yaanaimal Thotta Mandapam.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதிமூன்றாம் திருநாள் இரவு வெள்ளி ஹனுமந்த வாகனம் ராமர் திருக்கோலம்—இன்னமுதே இராகவனே 😍-On The Night Of Panguni Brahmotsavam’s Thirteenth Day, Sri Perumal Graced The Occasion In The Incarnated As Ramar Thirukolam, Carried On Silver Hanuman Vahanam.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதிநான்காம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸத்யபாமா நாச்சியாருடன் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு இராஜ அலங்காரம்-ஆயர் ஏறு அமர்கோ அந்தணர் தம் அமுதே..! 😍-On The Fourteenth Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal With His Consort Satyabhama, Graced The Occasion In A Golden Palanquin With Regal Embellishments, And The Procession Proceeded To Yanai Vahana Mandapam.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதிநான்காம் திருநாள் இரவு யானை வாகனம் ஸத்யபாமா நாச்சியாருடன் இராஜ அலங்காரம்-செண்பகவல்லி மன்னா 👑-On The Night Of Panguni Brahmotsavam’s Fourteenth Day, Sri Perumal With His Consort Satyabhama Graced The Occasion, Mounted On Yanai Vahanam With Regal Embellishments.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதினைந்தாம் திருநாள் காலை பள்ளியறை சேவை ஶ்ரீ ருக்மினி ஸத்யபாமா ஸமேதராய் ஸ்ரீ பெருமாள் க்ருஷ்ண திருக்கோலம்–ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே…! 🥰😍-On The Fifteenth Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal With His Consorts Rukmini And Sathyabhama, Graced The Palliyarai Sevai In The Attire Of Krishna Alankaram, Adorned With Divine Ornaments.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதினைந்தாம் திருநாள் மாலை சூர்ணோத்ஸவம் நெல் அளவை கோரதம் ஶ்ரீ ருக்மினி ஸத்யபாமா ஸமேதராய் ஸ்ரீ பெருமாள் கல்யாண அவசர திருக்கோலம்-On The Evening Of Panguni Brahmotsavam’s Fifteenth Day, Sri Perumal With His Consorts Rukmini And Satyabhama, Graced The Occasion In The Kalyana Avatara Thirukolam. The Soornabhishekam Was Performed, Followed By The Offering Of Paddy Measures

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதினாறாம் திருநாள் காலை வெள்ளி பல்லக்கு வெண்ணைத்தாழி உத்ஸவம் நவநீத சேவை–கண்ணன் வருகின்ற நேரம் 😍-வெண்ணைத்தாழி மஹோத்ஸவம்💫🥳–இந்த வெண்ணெய் அடி எவ்வளவோ பரவாயில்லை யசோதையிடம் பட்ட அடையை விட…!–வைகலும் வெண்ணை கலந்துண்டான் பொய் கலவாது என் மெய்கலந்தான் 😍–On The Sixteenth Day Morning Of Panguni Brahmotsavam, On The Auspicious Occasion Of The Divine Vennaithazli Uthsavam, Sri Perumal Graced The Occasion In The Attire Of Navaneetha Sevai, Adorned In Divine Ornaments And Seated In A Silver Palanquin With A Pot Of Butter. Devotees Offered Butter In A Traditional Gesture Of Devotion.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதினாறாம் திருநாள் மாலை செட்டி திருக்கோலம்–சேயன் அணியன் என் சிந்தையுள் நின்ற மாயன் 😍-On The Sixteenth Day Evening Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion In The Attire Of Chetty Thirukolam

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதினாறாம் திருநாள் இரவு தங்க குதிரை வாகனம் வையாளி சேவை இராஜ அலங்காரம்—இராஜமன்னை மாமன்னன்…! 👑😍—On The Night Of Panguni Brahmotsavam’s Sixteenth Day, Sri Perumal Graced The Occasion Mounted On The Golden Kuthirai Vahanam With Regal Embellishments, Accompanied By The Viyali Sevai.

பங்குனி ரோகிணியில் அவதரித்தான் வாழியே…! 😍பங்குனி ரோகிணி நக்ஷத்திரம் ஸ்ரீ வித்யா இராஜகோபால திருநக்ஷத்திரம் 👑♥️Happy birthday Gopala 💫🥳-பங்குனி ப்ரும்மோத்ஸவ பதினேழாம் திருநாள் பங்குனி ரோகிணி கோபாலன் திருநக்ஷத்திரம் திருத்தேர்—-உன்னைக் காண்பான் நான் அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே…🥹🙇🏻‍♂️–பங்குனி ரோஹிணி திருத்தேர் மஹோத்ஸவம் 😍–On The Auspicious Day Of Panguni Rohini Nakshatram, The Seventeenth Day Of Panguni Brahmotsavam, Sri Perumal Thirunakshatram Was Celebrated. Sri Perumal With His Consorts Rukmini And Satyabhama, Graced The Occasion In Kalyana Avatara Thirukolam, Seated In A Chariot, And Was Taken In A Chariot Procession

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதினெழாம் திருநாள் இரவு ஹரித்ரா நதியில் ஸ்ரீ தீர்த்த பேரர் திருமஞ்சனம் தீர்த்தவாரி.–

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதினெட்டாம் திருநாள் ஸப்தாவர்ணம் புஷ்பயாகம் த்வாதஸாராதனம்–நித்ய ஶ்ரீ நித்ய மங்களம்-நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்…! 😍–On The Night Of The Eighteenth Day Of The Panguni Brahmotsavam, Sri Perumal, With His Consorts Rukmini And Satyabhama, Graced The Occasion Adorned With Divine Ornaments And A Swarna Vairamudi Crown. Followed By Dwadasaradhanam And Pushpayagam Performed As The Part Of Sapthavarnam. Sri Perumal, Taken In A Procession In Around Gopalasamudram Mada Veethi. Nithyasri Nithya Mangalam!

பங்குனி ப்ருமாமோத்ஸவ விடையாற்றி முதல் திருநாள் மாலை சேதுபாவாசத்திரத்தில் ஆண்டாள் திருக்கோலம் ஹரித்ராநதி படித்துறை—என்னை களிதீர்த்தே…! 🥺-On The Evening Of Panguni Brahmotsavam Vidayatri Vizha First Day, Sri Perumal Graced The Occasion In The Andal Thirukolam HarithraNadhi North Mandapam.

பங்குனி ப்ரும்மோத்ஸவ விடையாற்றி முதல் திருநாள் இரவு இராமர் திருக்கோலம் பல்லக்கு சேவை—புன்னகை தவழும் இராம கோபாலன் ♥️-On The Night Of Panguni Brahmotsavam Vidayatri Vizha First Day, Sri Perumal Graced The Occasion In The Incarnated As Ramar Thirukolam, Seated In A Golden Palanquin, And The Procession Proceeded To The Temple.

பங்குனி ப்ரும்மோத்ஸவ விடையாற்றி இரண்டாம் திருநாள் இரவு ராயர் தோட்டத்தில் கிளி கண்ணன் திருக்கோலம்—ஆறா அன்பில் அடியேன் உன் அடிசேர் வண்ணம் அருளாயே 🥹🙇🏻-On The Night Of The Second Day Of Panguni Brahmotsavam Vidayatri Vizha, Sri Perumal Graced The Occasion In The Attire Of Kili Kannan Thirukolam At Rayar Thottam, And The Procession Proceeded To The Temple.

பங்குனி ப்ரும்மோத்ஸவ விடையாற்றி மூன்றாம் திருநாள் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு–On The Night Of The Third Day Of Panguni Brahmotsavam Vidayatri Vizha, Sri Perumal Graced The Occasion With A Divine Procession Within The Temple Precincts.

பங்குனி ப்ரும்மோத்ஸவ விடையாற்றி நான்காம் திருநாள் ஆண்டாள் திருக்கோலம் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு–On The Night Of The Fourth Day Of Panguni Brahmotsavam Vidayatri Vizha, Sri Perumal Graced The Occasion In The Attire Of Andal Thirukolam With A Divine Procession Within The Temple Precincts.

பங்குனி ப்ரும்மோத்ஸவ விடையாற்றி ஐந்தாம் திருநாள் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு-On The Night Of The Fifth Day Of Panguni Brahmotsavam Vidayatri Vizha, Sri Perumal Graced The Occasion With A Divine Procession Within The Temple Precincts.

இவ்வாரு 12 நாள்கள் விடையாற்றி உத்சவம் நடைபெறும் -12நாள் இரவில் கிருஷ்ண தெப்பம் கண்டு அருளுவார்

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ செண்பக வல்லித் தாயார் ஸமேத ராஜ கோபால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஜெகன் மோஹன -மத்யம ரெங்கம் -காவேரி -சிவ சமுத்திரம் –

April 10, 2025

அது கருநாடக மாநிலத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கருநாடகத்தில் குடகு, ஆசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ஊரகம், சாமராசநகர் மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.[3]
காவிரி ஆறு தான் செல்லுமிடமெல்லாம் சோலைகளை விரித்துச் செல்லுவதால் காவிரி எனப்பெயர் பெற்றது.

(கா- காடு, சோலை. பூ+ கா= பூங்கா- பூக்கள் நிறைந்த சோலை) [4]. தமிழ் இலக்கியங்களில் பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பிற பகுதிகள் போலவே தமிழகத்திலும் ஆறுகளின் பெயர்கள் பெண்பால் பெயர்களாக இருக்கின்றன. அவை காரணமாகவே ‘பொன்னி’ என்ற பெயர் காவிரிக்கு வந்திருக்கக்கூடும் எனலாம். அந்த ஆறு சோழ நாட்டை செழிக்கச் செய்கிறது.. பொன்படு நெடுவரையில் (குடகு மலை) தோன்றிப் பாய்வதாலும் பொன்னி என்னும் பெயர் வந்தது.
கருநாடக மாநிலத்தில் சிரீரங்கப்பட்டணம், சிவசமுத்திரம் ஆகிய இரு தீவுகளையும் தமிழகத்தில் சிரீரங்கம் (திருவரங்கம்) தீவையும் காவிரி ஆறு கொண்டுள்ளது. இந்த மூன்றில் சிரீரங்கப்பட்டணம் தீவானது மிகப்பெரியது, இது திப்பு சுல்தானின் தலைநகராக விளங்கியது. இம்மூன்று தீவுகளிலும் அரங்கநாத சுவாமிக்குக் கோயில் உள்ளது மற்றொரு சிறப்பு. சிரீரங்கப்பட்டணத்தில் உள்ள அரங்கனை ஆதிரங்கன் என்றும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் என்றும் திருவரங்கத்தில் (சிரீரங்கம்) உள்ள அரங்கனை அந்தரங்கன் என்றும் அழைப்பர்.
குடகு மாவட்டத்திலுள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி உற்பத்தியாகிறது. ஆரங்கி ஆறானது குடகு மாவட்டத்தில் காவிரியுடன் இணைந்து மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருட்டிணராசசாகர் அணையை அடைகிறது. கிருட்டிணராச சாகர் அணை மைசூருக்கு அருகில் உள்ளது. ஏமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருட்டிணராச சாகர் அணையால் ஏற்பட்ட நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன. கிருட்டிணராச சாகர் அணையிலிருந்து வெளிவரும் காவிரி சிரீரங்கப்பட்டணம் தீவை உண்டாக்குகிறது. பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியுடன் இணைகின்றன. பின் காவிரி சிவசமுத்திரம் தீவை உண்டாக்குகிறது. இங்கு இரு பிரிவுகளாகப் பிரியும் காவிரி ஒரு புறம் ககனசுக்கி (Gaganachukki) அருவியாகவும் மறுபுறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது. வலப்புறம் அமைந்த ககனசுக்கி அருவியில் 1902 இல் ஆசியாவின் முதல்[சான்று தேவை] நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. பின் காவிரியுடன் சிம்சா, அர்க்கவதி ஆறுகள் இணைகின்றன. அர்க்கவதி ஆறு இணைந்தவுடன் காவிரியானது ஆழமான குறுகிய பாறைகளின் வழியாகப் பாய்ந்து தமிழகத்தை அடைகிறது. பழங்கதையில் ஒரு ஆடு இவ்விடத்தில் காவிரியைத் தாண்டிக் குதித்து ஓடியதால், இதை ஆடு தாண்டும் காவிரி என்று அழைப்பர். (கன்னட மொழியில் மேகேதாட்டு (Mekedatu) என்று பெயர்). ஆனால் இன்றுள்ள நிலையில் அஃது இயலாததாகும்.
மிகக் குறுகிய அகலமுடைய, ஆனால் மிக ஆழமான ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து சிடான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழகக் காவிரிப் பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானி என்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது. ஈரோடு நகரைக் கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறு கலக்கிறது. அமராவதி ஆறானது கரூர் அருகேயுள்ள திருமுக்கூடலூர் என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கரூர், திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்குப் பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர். முசிறி, குளித்தலை நகரங்களைத் தாண்டிச்செல்லும் காவிரி முக்கொம்பு என்னும் இடத்தில் மேலணையை அடைகிறது. இங்குக் காவிரி இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. வடகிளை கொள்ளிடம் என்றும் தென்கிளை தொடர்ந்து காவிரி என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளக் காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம், காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே சிரீரங்கம் (திருவரங்கம்) தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது. கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாகப் பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது. காவிரி டெல்டாவில் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை நாகப்பட்டிணம் மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை [5] சேர்ந்தவை.
கருநாடகாவில் காவிரியின் நீளம் = 320 கிமீ
தமிழ்நாட்டில் காவிரியின் நீளம் = 416 கிமீ
கருநாடக தமிழக எல்லையில் காவிரியின் நீளம் = 64 கிமீ
வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்குஏகினும்

தற்பாடிய தளியுணவின் புள்தேம்பப் புயல்மாறி வான்பொய்ப்பினும்

தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி”

— (பட்டினப்பாலை:1-6)
“அலங்கு கதிர்க் கனலி நால்வையின் தோன்றினும்

இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்

அநதண் காவிரி வந்து கவர்ப்பு ஊட்ட்த்

ஆடுகண் கரும்பின் வெண்பு நுடங்கும்…”

— புறநானூறு (பாடல் 35)
“விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்

கால்பெரு நிவப்பில் கடுங்குரல் ஏற்றொடும்

சூன்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்ப

குடமலை பிறந்த கொழும்பல் தாரமொடு

கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்

காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை”

— சிலப்பதிகாரம் (காதை 10:103-108)
“கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தன்நிலை திரியாத் தந்தமிழ்ப் பாவை”

— மணிமேகலை (பதிகம்:24-25)
“வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாய்ஆகி

ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாய் வாழி காவேரி.

ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும்

ஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி”

— சிலப்பதிகாரம் கானல்வரி 152-55
“மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூஆடை அதுபோர்த்துக்

கருங்கயல்கண் விழித்து நடந்தாய் வாழி காவேரி

கருங்கயல்கன் விழித்து ஒல்கி நடந்தவையெல்லாம் நின்கணவன்

திருத்த செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி”

— கானவரி,கட்டுரை 25
“உழவர்ஓதை மதகுஓதை உடைநீர்ஓதை தண்பதம்கொள்

விழவர்ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி

வாய்காவா மழவர்ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி”

— கானல்வரி,கட்டுரை 4
ஸ்ரீ வரபுரம்
சிவன சமுத்திரம்
காவேரியை சிவன் சமுத்திரம் போல் அகன்று பரந்து இருப்பதால் சொன்னானாம்
மத்யம ரெங்கம்
ஜெகன் மோஹன ரெங்கன்
சிவனசமுத்திரம் மாண்டியாவிற்கு அருகில் உள்ள சாமராஜனரா மாவட்டத்தில் காவேரி ஆற்றில் உள்ள புகழ்பெற்ற நீர்வீழ்ச்சியாகும்
ஷிவனசமுத்ரம் அல்லது ஷிவசமுத்ரம் கர்நாடகா மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலாத் தலம் ஆகும். ஷிவசமுத்ரம் என்பதற்கு ‘ சிவனுடைய சமுத்திரம்’ என்பது பொருளாகும். இது காவிரி ஆற்றில் உள்ள புராதனமான தீவு நகரமாகும்.
ககன -ஆகாச அருவி -பெரிய அருவி –
திருவரங்கன் இங்கு சிறிய வடிவம் மயக்கும் திருமேனி இளைஞ்ஞான் ரூபம்
ஆதி சேஷனுக்கு ஏழு தலைகள் இங்கு -ஸ்ரீ ரெங்கம் ஆதி ரெங்கம் ஐந்து தலைகள் –

காவிரியின் கரையில் அமைந்துள்ள சத்யகலாவில் உள்ள ரங்கநாத சுவாமி கோயில், மதய் ரங்கம் என்று குறிப்பிடப்படுகிறது, இது கிரேத யுகத்திற்கு முந்தைய புராணக்கதை கொண்ட கோயிலாகும். காவிரிக் கரையில் அமைந்துள்ள மூன்று பழமையான ரங்கநாதசுவாமி கோயில்களான ஸ்ரீரங்கப்பட்டணம் (ஆதி ரங்கம்), சத்தியகலா (மத்திய ரங்கம்) மற்றும் ஸ்ரீரங்கம் (அந்தி ரங்கம்) ஆகிய மூன்று கோயில்களையும் ஒரே நாளில் தரிசித்தால், ஒருவரின் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கர்நாடகாவில் உள்ள பக்தர்களின் நீண்ட காலமாக வழக்கம் என்னவென்றால், காலை 730 மணிக்கு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் விஷ்ரூப சேவையையும், காலை 9 மணிக்கு சத்தியகலாவையும், மாலையில் ஸ்ரீரங்கத்தில் மூன்றாவது தரிசனத்தையும் மேற்கொள்வதுதான்.

மகிமையான காலங்கள்

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை , ரங்கநாத சுவாமி கோயில் மைசூர் அரண்மனையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது, அது கோயிலுக்கும் அதன் பணியாளர்களுக்கும் மகிமை நிறைந்த நாட்களாக இருந்தது. சத்தியகலையைச் சுற்றியுள்ள பல கிராமங்கள் கோயிலின் பராமரிப்பு மற்றும் உற்சவங்களை நடத்துவதற்காக அரண்மனையால் நன்கொடையாக வழங்கப்பட்டன. 800 ஏக்கர் நிலத்திலிருந்து கிடைக்கும் வருமானம், இங்கு வசித்து, வருடத்தின் ஒவ்வொரு நாளும் வேதங்களை ஓதும் 100க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்களைப் பராமரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.

உடையார் காலத்தில், ராஜாவின் பிரதிநிதியான ராமசாமி முதலியார், கோயிலுக்கு அதிக அளவில் நெல் கிடைப்பதையும், தினசரி பூஜைகள் மற்றும் உற்சவங்களை நடத்துவதற்குத் தேவையான எதற்கும் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்தார். முந்தைய நூற்றாண்டின் நடுப்பகுதியில், இறைவனுக்கு நைவேத்தியமாக முந்திரி பையில் நிரப்பி காணிக்கையாக வழங்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு 96 வயதில் காலமான டி.எஸ். கிருஷ்ண பட்டர், இந்தப் பகுதியில் மிகவும் மதிக்கப்படும் பாதிரியார்களில் ஒருவர். 12 வயதில் சேவையைத் தொடங்கிய அவர் 84 ஆண்டுகளாக கோயிலில் ஆராதனை செய்து வந்தார். தனது பக்தி அர்ப்பணிப்பு மூலம் சத்தியகலாவில் மட்டுமல்ல, கர்நாடகா முழுவதும் உள்ள மக்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

அவர் ஒரு மதிப்பிற்குரிய ஆகம பயிற்சியாளராக இருந்தார் மற்றும் கர்நாடகாவில் உள்ள சமஸ்கிருத நிறுவனங்களின் குழுவில் இருந்தார். அவரது சேவையின் பல தசாப்தங்களில், சத்தியகலா மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 கோயில்களில் ஆராதனை செய்தார். வயதான காலத்திலும் கூட, மத்திய ரங்கத்தில் உள்ள ரங்கநாத சுவாமி கோவிலில் முழுநேர சேவை செய்வதோடு, இந்தக் கோயில்களில் தினசரி ஆராதனை செய்ய அவர் ஒரு பழைய சுழற்சியில் சுற்றி வருவார்.

கிருஷ்ண பட்டர் ரங்கநாதரிடம் மிகவும் பக்தி கொண்டிருந்தார், மேலும் நிதி எண்ணங்கள் அவருக்கு அரிதாகவே தோன்றின. தனது வாழ்நாள் முழுவதும், தனது அனைத்து மகன்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர் கூறிய செய்தி, இறைவனிடம் பக்தியுடன் அர்ப்பணிப்புடன் இருப்பதன் மூலம் கோவிலைப் பாதுகாக்க வேண்டும் என்பதாகும். 

வரலாற்று ரீதியாக, ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற திருவிழாக்கள் இருந்தன. ஜனவரி மாத இறுதியில்/பிப்ரவரி மாத தொடக்கத்தில் பிரம்மோற்சவம் கொண்டாடப்படும் ஒரு பிரமாண்டமான நிகழ்வாகும், தீர்த்தவாரி உற்சவத்திற்காக இறைவன் காவிரிக்கு வருகை தருகிறார்.

1970கள் மற்றும் பொருளாதார மந்தநிலை

‘நிலம் உழுபவர் உரிமையாளராகிறார்’ சட்டம் அமலுக்கு வந்தபோது, ​​கோயிலுக்குச் சொந்தமான 800 ஏக்கர் நிலம் போகத் தொடங்கியது. HR & CE-ஆல் கோயில் கையகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கோயிலுக்கான பொருட்களில் வியத்தகு சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு தசாப்தங்கள் பரம்பரை பூசாரிகளுக்கு சவாலான காலங்களாக இருந்தன.

புதுப்பித்தல் பணிகள் நிறைவடைய உள்ளன.

இந்தப் பத்தாண்டு வரை கிழக்கு நுழைவாயில் ஒரு மொட்டை கோபுரமாக மட்டுமே இருந்தது. இப்போது புதிதாக கட்டப்பட்ட ராஜ கோபுரத்தின் கீழ் லட்சுமி நாராயணன், யோக நரசிம்மர், கோபால கிருஷ்ணன் மற்றும் லட்சுமி ஹயக்ரீவர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கோயிலின் பல பகுதிகளில் சுவர்களில் பல விரிசல்களைக் காண்கிறோம். பழுதுபார்க்கும் பணிகளுக்கான திட்டம் HRCE க்கு அனுப்பப்பட்டுள்ளது, மேலும் கோயில் தற்போது ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. இந்தக் கோயில் நகரத்தில் குளியலறை அல்லது கழிப்பறை வசதிகள் இல்லை. கோயிலுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்து வசதிகளும் இல்லை. ஆனால் கிருஷ்ண பட்டரின் மகன் ஸ்ரீதர் பட்டர், விரைவில் இந்தக் கோயில் அதன் வரலாற்றுப் பெருமையைப் பெறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார். 

புராணக்கதை

எந்த ஆயுதத்தாலும் தன்னைக் கொல்ல முடியாது என்ற பிரம்மம்மாவின் வரத்தைத் தொடர்ந்து, விருத்திராசுரன் ரிஷிகளின் தவத்தைத் தொடர்ந்து தொந்தரவு செய்து அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தினான். சப்த ரிஷிகள் ஒரு தீர்வுக்காக சிவனை அணுகியபோது, ​​அவர்கள் பிரம்மம்மாவிடம் திரும்பினர், ஏனெனில் அவரே வெல்ல முடியாத வரத்தை வழங்கியவர். வரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என்ற அடிப்படையில், பிரம்மம்மா அவர்களை விஷ்ணுவிடம் அனுப்பினார், அவர் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இந்திரனைத் தேடும்படி கேட்டார்.

அவர்கள் இந்திர லோகத்தை அடைந்து, தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களை விவரித்தபோது, ​​திரி மூர்த்திகளால் தீர்வு காண முடியாதபோது, ​​அவரால் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடிந்ததைக் கண்டு இந்திரன் ஆச்சரியப்பட்டான். ஆனால் விஷ்ணு ரிஷிகளின் பிரச்சினையைத் தீர்க்க பரிந்துரைத்ததால், இந்திரன் ததீச்சி ரிஷியை அணுகினார், அவர் தனது தவத்தின் அசாதாரண சக்திகளால் ஆணவம் கொண்டு, ரிஷிகளைப் பாதுகாப்பதற்காக தனது உயிரைத் தியாகம் செய்யும்படி கேட்டார். இந்திரன் தனது உடலை தியாகம் செய்தபோது, ​​இறந்த ரிஷியின் முதுகு எலும்பிலிருந்து ஒரு புதிய வஜ்ராயுதத்தை உருவாக்கினார். ரிஷிக்கு இறுதிச் சடங்குகளைச் செய்த பிறகு, இந்திரன் புதிய ஆயுதத்தை எடுத்து அசுரனைக் கொன்றான்.

இருப்பினும், தாதிச்சி ரிஷியைப் போன்ற ஒரு தபஸ்வியின் உயிரைப் பறித்ததால் இந்திரன் பிரம்ம ஹதி தோஷத்தால் பாதிக்கப்பட்டார். விஷ்ணு அவரை ஆற்றில் நீராடி, ரங்கநாத சுவாமியின் ஆசிகளைப் பெற்று தக்ஷக க்ஷேத்திரத்தில் (இந்த இடத்தின் வரலாற்றுப் பெயர்) தவம் செய்யச் சொன்னார். அவர் கட்டிடக் கலைஞரான விஸ்வகர்மாவை அழைத்து, ரங்கநாதரின் சாலிகிராம சிலையை வைகுண்டத்தில் காணப்படுவது போல் தூங்கும் நிலையில் நிறுவினார், தலைப்பாகை அணிந்த பாம்பின் மேல், அனைத்தும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டில் ஆதிசேஷனின் பரம எதிரியான கருடன் இருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும், இது இந்தப் பகுதி மக்களின் ஒற்றுமையைக் குறிக்கிறது. வரலாற்று ரீதியாக, வடகலையர்களும் தென்கலையர்களும் இந்த இடத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கோயில் காலை 730 மணி முதல் மதியம் 1230 மணி வரையிலும், மாலை 430 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஸ்ரீதர் பட்டரை @ 99012 72621 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

எப்படி அடைவது

மத்தூருக்கு தெற்கே சுமார் 40 கி.மீ தொலைவில் மாலவள்ளி – கொல்லேகால் நெடுஞ்சாலையில் சத்தியகலா உள்ளது. மத்தூர்/மாலவள்ளியிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மைசூருவிலிருந்து மைசூரு-கொல்லேகல் சாலை (NH766) அல்லது மைசூரு-திருச்சி சாலை – டி.நரசிபூர் சாலை வழியாக 70 கிலோமீட்டர் தொலைவில்.

இங்கு வரும்போது, ​​மத்திய ரங்கத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள வேதாந்த தேசிகர் கோட்டே வரதராஜர் கோயிலுக்கும் செல்லுங்கள்.

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஜடாயு பூமியின் மையம் இயற்கை பூங்கா/ஸ்ரீ குருவாயூரில் யானை ஸமூஹம்

September 4, 2024

ஸ்ரீ ஜடாயு பூமி மையம் , 
ஜடாயு இயற்கை பூங்கா அல்லது 
ஜடாயு பாறை என்றும் அழைக்கப்படுகிறது , 
இது இந்தியாவின் கேரளாவின் 
கொல்லம் மாவட்டத்தில் உள்ள 
சடையமங்கலத்தில் 
உள்ள ஒரு 
பூங்கா மற்றும் சுற்றுலா மையமாகும் 

SRI JADAYU PARA sti KODHANDA RAMA KSHETHRA Trust–Jadayu (sadaayu)MANGALAM -KOLLAM 691534–REGno 56/10/IV-PH-91-8590912137-Email-jadayutemple@gmail.com

இது சராசரி கடல் மட்டத்திலிருந்து 350 மீ (1200 அடி) உயரத்தில் உள்ளது. ஜடாயு நேச்சர் பார்க், உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது,

இந்த சிற்பம் 200 அடி (61 மீ) நீளம், 150 அடி (46 மீ) அகலம், 70 அடி (21 மீ) உயரம் மற்றும் 15,000 சதுர அடி (1,400 மீ 2 ) பரப்பளவைக் கொண்டுள்ளது. ராஜீவ் அஞ்சல் அவர்களால் செதுக்கப்பட்டது . 

இந்த ராக்-தீம் இயற்கை பூங்கா, BOT மாதிரியின் கீழ் கேரள மாநிலத்தில் முதல் பொது-தனியார் கூட்டாண்மை சுற்றுலா முயற்சியாகும் . இந்த பூங்கா கொல்லம் நகரத்திலிருந்து சுமார் 38 கிமீ (24 மைல்) தொலைவிலும், மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 46 கிமீ (29 மைல்) தொலைவிலும் உள்ளது .

முடிந்ததும், இது 17 ஆகஸ்ட் 2018 அன்று பார்வையாளர்களுக்கு அணுகக்கூடியதாக மாறியது

ஜடாயுவின் பெயரால் அழைக்கப்பட்ட சடையமங்கலம் (ஜடாயுமங்கலம்) நகருக்கு அருகில் அமைந்துள்ள பூங்கா . ஜடாயு இராமாயணத்தில் (ஒரு இந்து இதிகாசம்) ஒரு தெய்வீகக் கடவுள், அவர் கழுகு வடிவத்தைக் கொண்டிருந்தார்.

இதிகாசத்தின் படி, ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்த முயன்ற போது , ​​ஜடாயு அவளை மீட்க முயன்றார். ஜடாயு ராவணனுடன் வீரத்துடன் போரிட்டார், ஆனால் ஜடாயு மிகவும் வயதானவராக இருந்ததால், ராவணன் விரைவில் அவரை தோற்கடித்து, அவரது இறக்கைகளை வெட்டினார், ஜடாயு சடையமங்கலத்தில் உள்ள பாறைகளில் விழுந்தார். ராமனும் லக்ஷ்மணனும் சீதையைத் தேடும் போது, ​​தாக்கப்பட்டு இறக்கும் நிலையில் இருந்த ஜடாயுவை நேரில் பார்த்தனர், அவர் ராவணனுடனான போரை அவர்களுக்கு அறிவித்து, ராவணன் தெற்கு நோக்கிச் சென்றதைக் கூறினார் 

பரிமாணங்கள்

அம்சம்
உயரம்21 மீ
மாடி பகுதி1,400 மீ 2
நீளம்61 மீ
அகலம்46 மீ
இறக்கை மற்றும் வால் இறகுகளின் எண்ணிக்கை52
காது முதல் காது வரை தலையின் தடிமன்
தலையின் உயரம்
கண்ணிலிருந்து கண்ணுக்கு தூரம்
சிலையின் மொத்த எடை
ஒவ்வொரு கோலின் நீளம்
கொக்கின் நீளம்
கொக்கின் உயரம்
கொக்கின் அகலம்
கண்ணின் உயரம்

அட்வென்ச்சர் ராக் மலையில் உள்ள பூங்கா, 5 டிசம்பர் 2017 அன்று திறக்கப்பட்டது.

ஜடாயு ராவணனுடனான போருக்குப் பிறகு ஒரு குகையில் தஞ்சம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு ஆயுர்வேத மற்றும் சித்த குகை ரிசார்ட் கட்டுமானத்தில் உள்ளது மற்றும் ஜடாயுவின் கதைகளுடன் இணைந்து ஆயுர்வேத சிகிச்சை அளிக்கும். 

இந்த பூங்கா 4 ஜூலை 2018 அன்று பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயனால் திறந்து வைக்கப்பட்டது . பூங்காவின் முதல் கட்டம் ₹ 100 கோடி (US$12 மில்லியன்) மதிப்புடையது மற்றும் சாகச மண்டலம் 3 கிமீ (1.9 மைல்) சுற்றளவு கொண்டது

இந்த பூங்கா கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் மலை உச்சியில் அமைந்துள்ளது . பூங்காவிற்குள் செல்ல சிறப்பு போக்குவரத்து தேவையில்லை.

ஜடாயுவின் சிற்பம் இருக்கும் உச்சியை அடைய, பார்வையாளர்கள் மலையின் மீது 826 படிகள் நடைபாதையில் செல்லலாம் அல்லது கேபிள் காரில் செல்லலாம்.

கேபிள் கார் வழிக்கு கூடுதல் கட்டண டிக்கெட் தேவை.

மேலே செல்லும் வழியில் ஒரு பாதுகாப்பு திரையிடல் செயல்முறை உள்ளது.

கேமராக்கள் மற்றும் பைகள் அனுமதிக்கப்படுகின்றன. உணவு அனுமதிக்கப்படவில்லை. தண்ணீர் அனுமதிக்கப்படுகிறது, ஆனால் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் இல்லை.

மேலே வடிகட்டப்பட்ட தண்ணீர் இலவசம். வழி முழுவதும் பல கஃபேக்கள் உள்ளன.

அருங்காட்சியகத்திற்கு வெளியே உள்ள ஜடாயுவுக்கு அஞ்சலி செலுத்தும் தகடு, கே. ஜெயக்குமார் மொழிபெயர்த்த கவிதையில், கேரள முதல்வர் பினராயி விஜயனால் அர்ப்பணிக்கப்பட்டது

ஜடாயு இயற்கை பூங்காவில் உள்ள தகடு, ஸ்ரீ பினராயி விஜயனால் அர்ப்பணிக்கப்பட்டது
ஜடாயு இயற்கை பூங்காவில் உள்ள தகடு, ஸ்ரீ பினராயி விஜயனால் அர்ப்பணிக்கப்பட்டது

“இந்த மலையின் உச்சியில் சிறிது நேரம் நின்று சிந்தித்துப் பாருங்கள், இங்கே ஜடாயு விழுந்துவிட்டார். தன் கொக்குகளாலும், கொக்காலும் தடுக்க முயன்றார், வஞ்சகத்தால் கைப்பற்றிய அன்னிய குட்டிச் சின்னம் ஒரு மகளின் விலைமதிப்பற்ற முத்து…

கொல்லத்தின் சமீபத்திய சுற்றுலாத்தலமான ஜடாயு பூமியின் மையத்தில் உலகின் மிகப்பெரிய பறவை சிற்பத்தை நீங்கள் நிச்சயமாகக் கண்டு மயங்குவீர்கள். நான்கு மலைகள் முழுவதும் 65 ஏக்கர் பரப்பளவில், இதுவே மாநிலத்தின் முதல் BOT (கட்டமைத்து இயக்குதல்-பரிமாற்றம்) சுற்றுலா ஆகும்.

கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலம் செல்லும் வழியில், மலையின் உச்சியில் தங்கியிருக்கும் ஜடாயுவின் நினைவுச்சின்னம் உங்கள் கவனத்தை வெகு தொலைவில் இருந்து கூட ஈர்க்கிறது. ஜடாயு இந்திய இதிகாசமான ராமாயணத்தில் இருந்து ஒரு பழம்பெரும் பறவை.

உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் ஜடாயு பூமியின் மையத்தின் மையப்பகுதி ஜடாயுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரமிக்க வைக்கும் ‘ உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம்’ ஆகும். இந்த நினைவுச்சின்னம் 200 அடி நீளம், 150 அடி அகலம் மற்றும் 70 அடி உயரம் கொண்டது, பரந்த 15,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும் கலைஞருமான ராஜீவ் அஞ்சால் வடிவமைத்து செதுக்கப்பட்ட இந்த தலைசிறந்த படைப்பு ஒரு காட்சி அற்புதம் மட்டுமல்ல, பெண்களின் பாதுகாப்பு, மரியாதை மற்றும் பாதுகாப்பைக் குறிக்கிறது. சிற்பத்திற்குள், ஜடாயுவின் அற்புதமான கதையையும், கேரளாவின் துடிப்பான கலாச்சாரத்தையும் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகத்தைக் காணலாம்.

கேபிள் கார் மூலம் மலை உச்சியை அடையலாம். ஜடாயு பாறையில் பயணிப்பவருக்கு பல அனுபவங்கள் காத்திருக்கின்றன. அத்தகைய ஒரு அருங்காட்சியகம் மற்றும் சிற்பத்தின் உள்ளே 6D தியேட்டர் உள்ளது. நீங்கள் இங்கிருந்து ஹெலி-டாக்ஸி அனுபவத்தைப் பெறலாம்!

அனைத்து சாகச ஆர்வலர்களே, இது உங்களுக்கான சரியான வார இறுதிப் பயணம்! இயற்கையின் மூச்சடைக்கக்கூடிய காட்சிகளின் பின்னணியில் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். அது பர்மா பிரிட்ஜ்கள், கமாண்டோ வலைகள், லாக் வாக், செங்குத்து ஏணி, புகைபோக்கி ஏறுதல் அல்லது பக்க ஜூலா என எதுவாக இருந்தாலும், உங்கள் தேர்வைத் தேர்ந்தெடுத்து, அட்ரினலின் உடல் முழுவதும் விரைந்து செல்லட்டும்.

இப்போது த்ரில் கூட்டுவது பெயின்ட்பால் மண்டலம்!

இந்த பிரத்தியேக அனுபவங்களைத் தவிர, இந்த இடத்தில் ஆயுர்வேதம், முகாம், மலையேற்றம், நேரலை சமையலறை மற்றும் உங்கள் பயணத்தை சிறப்பானதாக மாற்றும் வசதிகள் உள்ளன.

கேரளாவில் உள்ள வேறு எந்த சுற்றுலா மையங்களும் வழங்க முடியாத தனித்துவமான அனுபவத்தைப் பெற இந்த இடத்திற்குச் செல்லுங்கள்!

பார்வையிடும் நேரம்: 10:00 முதல் 17:00 மணி வரை

தொடர்பு விவரங்கள்:
ஜடாயு பூமியின் மையம்
சடையமங்கலம் PO
கொல்லம், கேரளா – 691534
தொலைபேசி : +91 474 2477077
Mob: +91 9778414178
மின்னஞ்சல். enquiry@jatayuearthscenter.in, info@jatayuearthscenter.in
இணையதளம் : http://www.jatayuearthscenter.in

அங்கு செல்வது:
அங்கமாலி (எர்ணாகுளம் மாவட்டம்) மற்றும் கேசவதாசபுரம் (திருவனந்தபுரம் மாவட்டம்) ஆகியவற்றை இணைக்கும் பிரதான மத்திய (எம்சி) சாலையில் சடையமங்கலம் அமைந்துள்ளது. மாநிலத்தின் முக்கிய பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் உள்ளன.

அருகிலுள்ள விமான நிலையம்: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் சுமார் 52 கிமீ தொலைவில் உள்ளது
அருகிலுள்ள ரயில் நிலையங்கள்: கொல்லம் சந்திப்பு, சுமார் 35 கிமீ மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் சுமார் 55 கிமீ

ஜடாயு பூமியின் மையத்தின் மையப்பகுதி ஜடாயுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரமிக்க வைக்கும் ‘ உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம்’ ஆகும். இந்த நினைவுச்சின்னம் 200 அடி நீளம், 150 அடி அகலம் மற்றும் 70 அடி உயரம் கொண்டது, பரந்த 15,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும் கலைஞருமான ராஜீவ் அஞ்சால் வடிவமைத்து செதுக்கப்பட்ட இந்த தலைசிறந்த படைப்பு ஒரு காட்சி அற்புதம் மட்டுமல்ல, பெண்களின் பாதுகாப்பு, மரியாதை மற்றும் பாதுகாப்பைக் குறிக்கிறது. சிற்பத்திற்குள், ஜடாயுவின் அற்புதமான கதையையும், கேரளாவின் துடிப்பான கலாச்சாரத்தையும் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகத்தைக் காணலாம்

அட்வென்ச்சர் ராக் ஹில்லில் த்ரில்ஸ் த்ரில் தேடுபவர்களுக்கும் அட்ரினலின் பிரியர்களுக்கும், அட்வென்ச்சர் ராக் ஹில் ஒரு முழுமையான மகிழ்ச்சி. இந்த உற்சாகமான ஈர்ப்பு பெயிண்ட்பால், லேசர் டேக், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், பாறை ஏறுதல், ராப்பல்லிங், போல்டரிங் மற்றும் பல செயல்பாடுகளை வழங்குகிறது . 6D திரையரங்கில் ஜடாயுவுடன் பறக்கும் அனுபவத்தில் மூழ்குங்கள் . 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அட்வென்ச்சர் ராக் ஹில் டிசம்பர் 5, 2017 அன்று திறக்கப்பட்டது, முடிவில்லாத உற்சாகத்தையும் சாகசத்தையும் வழங்குகிறது. பயணிகள் ரோப்வேயில் ஒரு அழகிய பயணம் ஜடாயு பூமியின் மையத்தின் மூச்சடைக்கக்கூடிய அழகை ரசிக்க, தென்னிந்தியாவின் முதல் அதிநவீன ரோப்வேயான பயணிகள் ரோப்வேயில் வசீகரிக்கும் பயணத்தைத் தொடங்குங்கள். ஒரு மணி நேரத்திற்கு 400 பயணிகள் வரை பயணிக்கும் திறன் கொண்ட இந்த ரோப்வே 560 மீட்டர் தூரத்தை உள்ளடக்கி, அடிப்படை நிலையத்திலிருந்து மேல் நிலையத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது. அங்கிருந்து, அற்புதமான பறவை சிற்பம் மற்றும் சாகச மண்டலத்தை நீங்கள் ஆராயலாம், சுற்றியுள்ள மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் காடுகளின் பரந்த காட்சிகளை ரசிக்கலாம்.

கேவ் ரிசார்ட்டில் புத்துணர்ச்சி உற்சாகம் நிறைந்த ஒரு நாளுக்குப் பிறகு, ராவணனுடனான போரைத் தொடர்ந்து ஜடாயு தஞ்சம் அடைந்த குகையால் ஈர்க்கப்பட்ட மயக்கும் குகை ரிசார்ட்டில் தளர்வு காத்திருக்கிறது. பண்டைய குணப்படுத்தும் மரபுகளில் ஆழமாக வேரூன்றிய ஆயுர்வேத மற்றும் சித்த சிகிச்சைகளை புத்துயிர் பெறுவதில் ஈடுபடுங்கள் . ஒவ்வொரு திருப்பத்திலும் அமைதியைத் தழுவி, இயற்கையின் அமைதியான அழகின் மத்தியில் ஓய்வெடுங்கள். கட்டிடக்கலை அற்புதங்கள் ஜடாயு பூமியின் மையம் ஒரு சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அசாதாரண கட்டிடக்கலைக்கு சான்றாகவும் உள்ளது . பறவை சிற்பம், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சிரத்தையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இறகுகள், கண்கள், கொக்கு மற்றும் தாளன்கள் உள்ளிட்ட சிக்கலான விவரங்களைக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் கான்கிரீட் மற்றும் ஃபைபர் மூலம் கட்டப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடியது மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புடன் கூடிய சிற்பம் ஒரு உண்மையான அற்புதம். பூங்கா இயற்கை நிலப்பரப்புடன் தடையின்றி ஒருங்கிணைக்கிறது, அதன் கட்டுமானத்தில் மூங்கில், மண் மற்றும் கல் போன்ற சுற்றுச்சூழல் நட்பு பொருட்களைப் பயன்படுத்துகிறது. கூடுதலாக, சூரிய ஆற்றல் பூங்காவின் தேவைகளை ஆற்றுகிறது, மேலும் ஒரு விரிவான கழிவு மேலாண்மை அமைப்பு கரிம கழிவுகளை மதிப்புமிக்க உரமாக மாற்றுகிறது. ஜடாயு பூமியின் மையம் கலை, கலாச்சாரம், இயற்கை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் இணைவுக்கு ஒரு சான்றாகும், பார்வையாளர்களுக்கு ஒரு அசாதாரண அனுபவத்தை வழங்குகிறது. ராஜீவ் அஞ்சல் மற்றும் அவரது குழுவினரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் படைப்பாற்றலுக்கு இது ஒரு சான்றாக உள்ளது, அவர்கள் ஒரு சாதாரண மலையை மகிழ்ச்சியின் அதிசய பூமியாக மாற்றியுள்ளனர்.

ஸ்ரீ குருவாயூரில் யானை ஸமூஹம்
38 யானைகள் உண்டு
4 பெண் யானைகள் –
லஷ்மி-55வயசு
நந்தினி 70
ரஷ்மி -55
தேவி -50
33 ஆண் யானைகள் .-எல்லாம் 50 வயசு
ராதாகிருஷ்ணா லஷ்மி நாராயணா
செந்தாமரை ரவுசல்
பாலு
பலராமன்
சித்தார்த்தன்
அனந்த நாராயணன்
விநாயகன்
பாலகிருஷ்ணன்
காய் கிருஷ்ணன்
பீதாம்பரம்
கோபாலகிருஷ்ணா
கோபீ கிருஷ்ணா
ஸ்ரீ கிருஷ்ணா –27 வயஸில்
நவநீத கிருஷ்ணா
கோகுல் கிருஷ்ணா–32வயசு
ஐயப்பன் குட்டி–24 வயசு
தேவதா
தாமோதரன்
கீர்த்தி

1 -மக்நா யானை -தந்தம் இல்லா யானை -சிறிய துஷஸ் கொண்டது –

சராசரியாக ஒவ்வொரு யானையும் 5000 kg எடை கொண்டது
ஒவ்வொரு வேளையும் 2 kg உண்ணும்


ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ குருவாயூர் மணி மங்கள ஸ்தவம் -ஸ்ரீ ஆசு கவி வில்லூர் ஸ்வாமிகள்–

June 27, 2024

ஸ்ரீ குருவாயூர் மங்கள ஸ்தவம் –
ஸ்ரீ குருவாயூர் மணி மங்கள ஸ்தவம் –
என்று இரண்டு ஸ்தவங்கள் அருளிச் செய்துள்ளார் ஸ்ரீ ஆசு கவி வில்லூர் ஸ்வாமிகள்–

கோதை -மணி பாதுகை ஆகிய இரண்டு பெண்களுக்குத் திருமணம் நடக்க பிரார்த்தனை

———–

குரு வாயூர் புரி வாஸா குரு க்ஷேத்ர சாரதே
குரு சித்த ஹ்ருதா வாஸா குரு கிஞ்சித் கிருபா மயி
-1-

ஆச்சார்யர் திரு உள்ளம் விரும்பி -அனைத்தையும் செய்து அருள்கிறான் அன்றோ -இதுவே சரம பரம புருஷார்த்தம் அவனுக்கு
கருணா சாகரம் -அருள் மா கடல்-அடியேனுக்கு லவ லேச கிருபையை அளித்து அருள்வாய் என்கிறார்-

———-

குருர் யூத குண குரு வாயூர் ஆஞ்சநேய குரு குண வாயு போஜன வா
குரு மண்டலம் குண கதனம் ந அலம் குரு தவ அதி கதா அஹம்
–2-

உன்னை அடியேனால் ஸ்துதிக்க முடியுமோ –
வாசஸ் பதியாலும் -திருவடியாலும் -சொல்லின் செல்வனாலும்
2000 நாக்குகள் கொண்ட ஆதி சேஷனாலும் –
வாக்கு வன்மை ஸாமர்த்யம் அளவு இருந்தாலும் முடியாதே
உனது அருளை வாங்கிக் கொண்டு உன்னையே ஸ்துதிப்பேன்
நீயே பாடிக்கொள்ள வேண்டும்
சின் முத்ரை -கட்டை விரல் பரமாத்மா இறங்கி வந்து தொடலாமே

———–

குரு ததா கதி பத்தந நாயகம் குரு ததா கதி
மறு புகீவ பவே பகவான் ஆவி குரு ஸூகவே ஸதாம்
–3-

பாலை வனத்தில் கிடைத்த அமுதம் அன்றோ நீ
பிரம்மன் தபஸ் -தொடங்கி உத்தவர் குருவும் வாயுவும் -பல பக்தர்கள் தபஸ் செய்து பெற்ற அமுதம்
கண்களால் பேருக்கு உள்ளத்துக்குள் க்ஷேமமாக வைக்க வேண்டிய அமுதம்

———

வாசஸ்பதி சந் ஸததம் க்ருஹஸ்த ஸதாம் கதி குரு
வாசஸ்பதி சா அபி ஸூவ பக்தனாக்ய கதம் ஆகநோதி
–4-

பேசவும் உழைக்கும் ஆற்றலையும் அளிப்பவன் -சொல் வீரனாகவும் -செயல் வீரனாக்கி அருள்பவன்
வாசஸ்பதி-பேச்சாற்றல் உள்ள ப்ருஹஸ்பதி
ஸதாகதி-வாயு

————-

தாப ஜால பாப ஜால சாப ஜால பீடித -ஜீவ ராஸி அத்ர நாம
ஜீவ வாயு பத்த நேந்த்ர பாத ஸேவனம் விநா தஸ்ய வித்யதே கதிம்
–5-

சாமரம் சந்தஸ் பாடி குருவாயூரப்பனுக்கு சாமரம் வீசுவதை அனுபவிக்கிறார்
தாபத்த்ரயங்கள் -பாபக் கூட்டங்கள் –சாபங்களால் பீடிக்கப்பட்டு
குருவாயு ஜீவ வாயு -oxyjen
அஹல்யை சாபம் மஹாபலி அர்ஜுனன் மரம் மதுகைடபர் ருத்ரன் தேவர்களின் துர்வாச சாபம் போக்கி அருளியவன்

——-

குருவத் மாம் பாபினம் குருவத் நிரய குரு அக்னி மித்ர புர நாதன் விநா பவந்தம் ந ஆலம்பனம் சரணம் அபி —6-

ஒரே புகலிடம் –குரு அக்னி மித்ரன் வாயு –
குரு பூஜை -அக்னி பூஜை-அக்னி ஹோத்ரம் -மித்ர ஸூர்ய பூஜை -சந்தியாவந்தனம் -ஸூர்ய மண்டல மத்யவர்த்தி வந்தனம்
மூன்றுமே செய்யாமல்

——

ஜீவ சமீரந நகர வராந்தக ஜீவனம் ஏகம் ஜகதாம்
ஜீவ ததேக குரு க்ஷேத்ர ஜீவனம் அத்ர பரத்ர சே அபி ஸ்யாத்
-7-

உள்ளூத்துக்கு உள்ளே வைக்க இம்மை மறுமை பலன் பெறுவோம்

———–

சேஷாசலே ஸர்வேஷாம் சகலம்–8-

திருமலை அப்பனே குருவாயூரப்பன்
ஆதி சேஷன் வாயு -பல பரீஷை -மேரு மலை -பிடித்து பறக்க வைக்க
மேல் பகுதி பறக்க -அதுவே ஏழுமலை சேஷாசலம் -சேஷாத்ரி -சேஷ கிரி
மருதா -காற்றால் வந்தது
வேகமாக வீசும் வாயு குரு வாயு
நிலத்தில் இருந்து வரங்களை அளிக்க இங்கு
ப்ரஹஸ்பதி வாயு இருவர் மூலம் -இங்கு நித்ய வாஸம்

———

ஹநுமதி ப்ரீதி உபாகதம் ஸத் ஸ்வேதா பர ஸூ
இத்யாதியாத் ஸர்வான் அநுக்ரஹான் பரிபாலயன்-
-9-

திருவடிக்கு விசேஷ அனுக்ரஹம்
அவர் பெற்றோர்களுக்கு கௌரவம்
அஞ்சனா தேவி ஒரு வடிவம் அங்கு
குருவாயூர் அப்பன் இங்கு

————

விஷய சமீரந பட்டன நாயகா தாமக சோபன பாத பயோஜம் வசதி
மனஸ கதாசிக தத் குரு தத் குரு சகலம் –1
0-

திருவடிகளை நெஞ்சு தாமரையில் வைத்து இருக்க நீயே அருள வேண்டும் -இதுவே சகலத்துக்கும் போதுமே

——–

கருணாகரதா தவ கில மஹிதா
மயி அபி பாபி
கருணா கர ஸூத முக
கவிதா லீலை
–11-

இதில் தான் இயற்றிய காரணம்
ஆகாரம் சுரங்கம்
பாபிக்கும் அனுக்ரஹம் செய்தால் உலகம் அறியுமே
உன்னைப்போல் பெயர் கொண்ட மகன் சொல்ல ஸ்துதிக்கிறேன்

———-

மணி பாதுகையா மதுரம் பகவான் சன்யோஜத்வம் பாத சரோஜம்
மணி பாதுகையா மம ஹ்ருதயே மம கில அன்யே தன்யம் மம ஆத்மாஜம்
–12

மணி பாதுகையுடன் திரு உள்ளத்தில் பதிக்க பிரார்த்தனை
ஆழ்வாருடன் அவன் வந்து லீலைகளை பண்ணி அருள் என்கிறார்

மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு -பாதுகையை அணிந்து நாச்சியாரும் பிரார்த்தித்தார் அன்றோ

——–

மணி பாதுகையே மம கன்யகை மாத்திரம் சம்யோஜிய வரம்
மம குரு நந்தன ரெங்கம் மாநஸம் அம்புஜ லோசன
சீக்ரம் –13

உனது திருவடியுடன் சேர்த்து வைப்பது போல் நல்ல மாப்பிள்ளை லௌகிக வைதிக ஸ்ரேஷ்டராக -திருவடி ஸ்தானம் போல்

——–

கோதாயாம் அஸ்யா ஸஹஜா பூர்வம் தயையா ஏவம்
பிரார்த்தனை வர்ணா தேவம் வாசயதீபம்
–14-

பிரார்த்தனை -சக்தி வாய்ந்தது
லீலை செய்து காட்டுகிறாய் -என்னைக் குறித்து ஸ்துதி செய்து கொள்கிறாய்

———

உத்தவ நயனே நந்த ஸூ பாஷ்பம் ஜலயதி யஸ்தே ஸூந்தர வர்ஷமா
தன் மம நயன த்வந்த கதா ரஷ்யதி பகவன் தத் பத
–15-

உத்தவர் தரிசித்து மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் வந்தது போல்
அடியேனுக்கு கண்ண நீர் வந்து நீ எப்பொழுது கண்டு மகிழப் போகிறாய்

———-

பிரார்த்தனையின் விளைவால்
பாகவதர் -வந்து -கூட்டிச் செல்லும் பொழுது
நோவு சாத்த
மீண்டும் திரும்பி

பகவான் பவதோ மங்கள மங்கள விக்ரஹ ஸேவா
ஆகா மத்யே மார்க்கம் தேன விருத்தம்
–16-

ஸேவிக்காமல் திரும்பி
கல்யாணம் நடந்த பின்பே ஸேவை பெற்றார் 1984-
இருந்த இடத்திலேயே பாட பேற்றைப் பெற்றார்

—–

கடயதி வாஞ்சித பக்த
தர்சனம் ஏவது
–17

கேட்டவுடன் அருளும் ஸ்வ பாவம்
நம்பிக்கை உள்ளது -பின்பு தருவாய் மஹா விசுவாசம் உள்ளது
தர்சனம் பண்ணாமலேயே பேற்றை அருளுவாய் என்று காட்டவே செய்கிறாய்

———

பிரதி க்ருஹ பகவான் நமத கிஞ்சித் வாஹம் –தத்ர விதாய –18

பக்தர் கொடுத்த படம் பார்த்து -கண்ணனுக்கு ஆனந்தம் உள்ளத்துக்கு ஆனந்தம்
தர்சிக்க முடியாத வருத்தம் நீங்குகிறது

———

நலாஸ்ய மூலம் -சரணாம் பத்ம ப்ரூஸம் கர பங்க –ஹ்ருதாயாம்புஜ–19-

பேசுகிறான் –
வலது திருக்கரம் -தண்டு திருவடியில் கவ்வி -திருக்கையில் ஏந்தி
தத்வம் உணர்த்துகிறார்
உள்ளத் தாமரை பிடித்து -கவ்விக் கொள்ளும் கள்வன் நீ –

யுக்தம் –விஷய லோலா –ஸ்வயமேவ அனுக்ரஹம் –20-

நாமாக அவனிடம் போகாமல் திரும்பி இருக்க -அனுக்ரஹத்தால் ஸ்வயமேவ -ஸ்வாமி சொத்தைக் கொள்ளுவது போல்
செய்து அருளுகிறாய்

——–

ஸ்வயம் ஹ்ருதயாம்புஜ –மஹிமா
ஆதார விதா –ஸ்பர்ச
–21-

இனி அல்ப சிந்தனை உள்ளத்தில் வராதே -திருவடியால் அமுக்கி – திருக்கையில் பிடித்து அருளி
மனதை நீ இயக்க -தூய்மை ஆனதே

——–

ஸ்ரீ நிதி –22

படிப்பாருக்கும் கேட்ப்பார்க்கும் செல்வங்கள் கிட்டும் பலன் பிரார்த்தனை கிட்டும் -குரு பெரிய பக்தியும் கிட்டும் –

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –