2-1-வாயும் திரையுகளும்-பிரவேசம் –
முதற்பத்தால் பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்று அறுதியிட்டார் –சுடர் அடி தொழுது எழு என் மனனே ;
இரண்டாம் பத்தால் அந்த கைங்கர்யத்தில் களைகள் அறுக்கிறார் -தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே .
மூன்றாம் பத்தால் விரோதி கழிந்த கைங்கர்ய வேஷம் பாகவத சேஷ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்-பயிலும் சுடர் ஒளி
நாலாம் பத்தால் இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதி ஐஸ்வர்ய கைவல்யம் என்றார்-ஒரு நாயகம் இத்யாதி
அஞ்சாம் பத்தால் அந்த விரோதியைப் போக்குவானும் அவனே என்றார்-களைவாய் -துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் –
ஆறாம் பத்தால் விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளில் சரணம் புக்கார்-அகலகில்லேன் இறையும்–மிதுனத்தில் சரண்-
ஏழாம் பத்தால் இப்படிப் பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும் தக்த்த பட நியாயம் போலே
சம்சாரம் அனுவர்த்திக்கிற படியைக் கண்டு விஷண்ணரானார்-நண்ணிலா வகையே நலிவான் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தேயும் தக்த்த பட நியாயம் போலே நம்மை விடாதே அனுவர்த்திக்கிறது
நம்முடைய ஆத்மாத்மீயங்களில் நசை அறாத படியால் என்று பார்த்து அவற்றில் ஒரு நசை இல்லை என்கிறார்-
உங்களோடு எங்கள் இடை இல்லை பந்துக்களும் த்யாஜ்யம்
ஒன்பதாம் பத்தால் இப்படி நசை அற்ற பின்பும் ரஷியாது ஒழிவான் என் என்று அதிசங்கை பண்ண
நான் நாராயணன் -சர்வ சக்தி உக்தன் -உம்முடைய சர்வ அபேக்ஷிதங்களையும் செய்து முடிக்கிறோம் என்று அருளிச் செய்ய
அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் படுகிறார்– ஓர் ஆயிரமாய் -பேராயிரம் கொண்ட பீடு உடையான்-சீலத்தில் கால் தாழ்ந்த மாறன்
பத்தாம் பத்தில் ஆழ்வாருடைய பதற்றத்தைக் கண்டு -திரு மோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி –
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டி இவருடைய அபேக்ஷித சம்விதானம் பண்ணின படியை அருளிச் செய்தார் –
கீழில் திருவாய்மொழியில் ‘மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை’ என்று அவனுடைய ஸுலப்யத்தையும் மேன்மையினையும் வடிவழகினையும் அருளிச் செய்தார்.
மேல் விழப் பண்ணுகைக்கு இம் மூன்று குணங்களுள் ஓரொன்றே போதியதாம்.
இங்ஙனம் இருக்க, இறைவனிடத்தில் இம் மூன்று குணங்களும் நிறைந்து குறைவற்று இருக்குமேயாயின், அவனை அநுபவியாதிருக்கப் போகாதன்றே?
ஆதலால், ‘அவனை இப்பொழுதே அணைதல் வேண்டும்,’ என்னும் பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷை பிறந்தது –
நினைத்தவாறு அப்பொழுதே அணையப் பெறாமையாலே பிறந்த பெருந்துன்பத்தை ஸ்ரீ எம்பெருமானோடே கலந்து பிரிந்த ஆற்றாமையாலே நோவுபடுகிறாளாகிய ஒரு ஸ்ரீ பிராட்டி, ஆற்றாமை கை கொடுக்க, விளையாடும் பூஞ்சோலைக்குப் புறப்பட்டு,
அங்கே வாழ்கின்ற பொருள்களைக் கண்டு அவையுமெல்லாம் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம் நோவுபடுகிற பாசுரத்தால் பேசுகிறார்.
‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியைக் காட்டிலும் இத் திருவாய்மொழியில் ஆற்றாமை கரை புரண்டிருக்கும். ‘அதற்குக் காரணம் என்னை?’ எனில்,
‘பெருநிலம் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன்’ என்று அவதாரத்திலே அநுபவிக்கக் கோலிப் பெறாதது ஆகையாலே
‘அது ஒரு காலத்திலே நிகழ்ந்தது நாம் பிற்பாடரானோம்’ என்று ஆறலாம்;
இது அவ்வாறு அன்றி, ‘நம்பியைத் தென்குறுங்குடி நின்ற’ என்று உகந்தருளின நிலத்திலே அநுபவிக்க ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாகையாலே இது கனத்திருக்கும்.
அவதாரத்தில், பிற்பட்டார்க்கும் இழக்க வேண்டாதபடி முகங்கொடுக்கைக்கு நிற்கின்ற இடங்கள் அன்றோ உகந்தருளின நிலங்கள்?
மற்றும், ‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியில் தூது விடுகைக்குத் தரிப்பு உண்டாயிற்று:-இத் திருவாய்மொழியில் அங்குத் தூது விட்ட பொருள்களும் நோவு படுகின்றனவாக அவற்றுக்குமாகத் தாம் நோவு படுகிறார்.
மேலும், அனுபவிக்கிற இவ் வாழ்வாருடைய தன்மையாலும் இத் திருவாய்மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்;
-யாங்ஙனம்?’ எனின், திருவாய்மொழியிலுள்ள ஆற்றாமை ‘பத்துடையடியவர்’ என்ற அத் திருவாய்மொழிக்கு முன்பு இறைவனை அநுபவித்துப் பிரிந்த அளவாலுள்ள ஆற்றாமையே;
‘அஞ்சிறைய மடநாரை’க்குப் பின்பு இத் திருவாய்மொழியளவும் அவனுடைய குணங்களை அநுபவித்துப் பிரிந்த பிரிவு ஆகையாலே இத் திரூவாய் மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்; இறைவன் பயிலப் பயில இனியவனாய் இருப்பவன் அன்றோ?
நாரையாகில் வெளுத்திருக்கியும், அன்றிலாகில் வாயலகு நெகிழ்த்தவாறே கதறுகையும்,
கடலாகில் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி கூப்பிடுகையும், காற்றாகில் வேறுபாடின்றி எப்பொழுதும் திரிகையும்,
மேகமாகில் நீராய் இற்று இற்று விழுகையும், சந்திரனாகில் தேய்வது வளர்வதாகையும்,
தமஸ்ஸாகில் -இருளாகில்-பதார்த்த தர்சனம் – பொருள்களைக் காண ஒண்ணாது தடுக்கையும்,
கழியாகில் அலைவாய் முகமாய் ஏறுவதும் வடிவதுமாகையும், விளக்காகில் இற்று இற்று எரிகையும்,
இங்ஙனம் இவற்றிற்கு-நியத ஸ்வபாவம் – இத் தன்மைகள் எப்பொழுதும் உள்ளவை என்று அறியாமல்,
இவை யெல்லாம் தம்மைப் போன்று -பகவத் விஸ்லேஷத்தில் -இறைவனைப் பிரிந்த பிரிவால் நோவு படுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம்-அநு சோகிக்கிறார்-
இத் திருவாய்மொழியில், இளைய பெருமாளைக் காட்டிலும் இவர்க்கு உண்டான வேறுபாடு சொல்லப்படுகிறது. ‘யாங்ஙனம்?’ என்னில், ‘மீனுக்குத் தண்ணீரைத் தாரகமாக அறுதியிட்டார் அவர்;
இவர், அந்த மீனோடு மீனுக்குத் தாரகமான தண்ணீரோடு தம்மோடு வேற்றுமை யற,
பகவானுடைய குணங்களே தாரகம் என்றிருக்கிறார் ஆதலால்
துக்கத்தை யுடையவர்கள் தங்களோடு ஒத்த துக்கத்தை யுடையவர்களைக் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து கூப்பிட்டு ஆற்றாமைக்குப் போக்கு விட்டுத் தரிக்குமாறு போன்று,
இவளும் கண்ணுக்கு இலக்கான பொருள்கள் எல்லா வற்றோடும் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து,
‘நீ பட்டதோ, நான் பட்டதோ? என்று கூப்பிடுகிறாள்.
‘ஆயின், பறவை கடல் முதலான பொருள்கள் இறைவனைப் பிரியின், அப்பிரிவால் அவற்றிற்குத் துன்பம் உளதாமோ?’ எனில்,
அபி வ்ருஷ பரிம்லானா (‘வாரீர் சக்கரவர்த்தியே! உம்முடைய தேசத்தில் கழுத்தளவு தண்ணீரிலிருக்கிற மரங்களும் ஸ்ரீராம பிரானைப் பிரிந்த பிரிவால் உளதாய சோகத்தால் பீடிக்கப் பட்டனவாகி, அரும்பு போது மலர் இவைகளோடு வாடி உலர்ந்தன,’ )என்றும்,
உப தப்தோதகா நதியா பல்வலா நி சராம்சி ச (ஸ்ரீ ராம பிரானைப் பிரிந்த பிரிவின் வெம்மையால், ஆறுகள் கரையருகும் சென்று கிட்ட ஒண்ணாதபடி வெப்பங்கொண்டு கொதித்தன; வனத்திலுள்ள மரங்களும், சோலையிலுள்ள மரம் செடி கொடிகளும் உலர்ந்த இலைகளை யுடையன ஆயின்,’ என்றும்- )–ஸ்ரீ ராமாயணத்தில் பேசப்படுவது போன்று,
சேதன அசேதன விபாகம் அற – எல்லாப் பொருள்களையும் நோவு படுத்தக் கூடியவன், இவள் பிரிந்த இறைவன் என்க.
ஆக, ஸ்ரீ ராமபிரான் தந்தை இறந்த துக்கத்தால் மிக வருந்தி,-
சீதே ம்ருதஸ்தே ஸ்வசுர–பித்ரா ஹீநோ அஸி லஷ்மண ( முழுமதியினைப் போன்ற திரு முகத்தை யுடைய பிராட்டியருகிற்சென்று
அவளைப் பார்த்துச் ‘சீதாய்! உன்னுடைய மாமனார் இறந்தார்,’ என்றும், ‘இலக்குமணா! நீ தந்தை இல்லாதவன் ஆனாய்,’ )என்றும்,
கூறி, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு கிடந்து கூப்பிட்டாற் போன்று கூப்பிடுகிறார் இங்கு-
இரண்டாம் பத்தில் -இப்படி பரத்வாதி குணங்களால் பரம சேஷியான சர்வேஸ்வரனுடைய சர்வ ரக்ஷகத்வ ப்ரயுக்தமான உபாயத்வத்தை ப்ரதிபாதித்து –
அநந்தரம் -இப்பத்தாலே உபேயத்வ உபயுக்தமான அவனுடைய நிரதிசய போக்யதையை அருளிச் செய்வதாக 1-அந்த போக்யத அதிசய ஸூசகமான –
அல்ப கால விஸ்லேஷத்திலும் அதி கிலேச அவஹத்வத்தையும் –
2–ஆச்சர்ய ரூபமான -உத்துங்க லலிதத்வத்தையும் –
3–சர்வ சாரஸ்ய சமவாய ரூப திவ்ய போக்யத்தையும் –
4–போக அலாபத்தில் வந்த ஆர்த்தியைப் போக்கி ரஷிப்பான் அவனே -என்னும் இடத்தையும் –
5–ஆர்த்தி தீரும்படி கிட்டினவனுடைய ஹர்ஷ காரிதமான ஸுந்தர்ய அதிசயத்தையும் –
6–ஆஸ்ரித சம்ச்லேஷ ப்ரீதனுடைய தத் விஸ்லேஷ பீருத்வத்தையும் –
7–சமஸ்ரித சம்பந்தி குல சந்தான பயந்த சம்ரக்ஷணத்தையும் –
8–ரக்ஷண காஷ்டையான மோக்ஷ பிரதத்வத்தையும் –
9–மோக்ஷ தாத்பர்யமான பாரதந்தர்யத்தையும் –
10–போக பிரதிசம்பந்திதயா சாந்நித்யத்தையும் –
அருளிச் செய்து போக்யதையை உபபாதித்து அருளுகிறார் –
அதில் முதல் திருவாய் மொழியில் -க்ஷண விளம்பத்திலும் கிலேச அதிசய ஜனகமான ஈஸ்வரனுடைய போக்யதையை அருளிச் செய்வதாக –
1–தத் உபபாதகமான அவனுடைய ஸ்ரீ யபதித்வத்தையும் –
2–சேஷ சாயித்வத்தையும் –
3–அநிஷ்ட நிவர்த்த கத்வத்தையும்-
4–நிவர்த்தக பரிகர வத்தையும் –
5–சக்தி யோகத்தையும்
6–சத்யவாதித் வத்தையும்
7–சம்பந்த விசேஷத்வத்த்வத்தையும்
8–காருணிகத்வத்தையும்-
9–கமநீய விக்ரஹ யோகத்தையும் –
10–காரணத்வத்தையும் —
அனுசந்தித்து -ஏவம் வித போக்ய பூதனுடைய அல்ப கால விளம்பத்தில் ஆற்றாமையாலே அசேஷ பதார்த்தங்களும் தம்மைப் போலே அவனைப் பிரிந்து
நோவு படுகிறனவாக -அபிசந்தி பண்ணும்படி கலங்கின பிரகாரத்தை -நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்தாள் ஒரு நாயகி சகல பதார்த்தங்களும் தன்னைப் போலே
தத் விரஹ துக்கத்தாலே ஈடுபடுகின்றனவாக நினைத்துப் போலிமைக்கு இரங்கி யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
இத்திருவாய்மொழியில், முதற்பாட்டிலே தொடங்கி,
நாரை தொடக்கமாக, அன்றில், கடல், காற்று, மேகம், சந்திரன், இருள், கழி, விளக்கு ஆகிய
இப்பொருள்களைக் குறித்துச் சோகித்து
மிகவும் தளர்ந்த அளவிலே அவன் வந்து முகங்காட்ட,
‘இனி என்னை விடா தொழிய வேண்டும்’ என்று கூறி,
இத்திருவாய் மொழி கற்றார்க்குப் பலத்தைச் சொல்லித் தலைக் கட்டினார்.
—————
2-2-திண்ணன் வீடு -பிரவேசம் –
கீழ் திருவாய்மொழியில், இவருக்குப் பிறந்த ஆற்றாமை, பேச்சுக்கு நிலம் இல்லாததாய் இருந்தமையின்,
‘கடல் வெதும்பினால் விளாவ நீரில்லை’ என்னுமாறு போன்று, ஆற்றாமையோட முடிந்து போமித்தனை என்று இருந்தார்.
பின்னர், அவன் வந்து முகங்காட்டினவாறே ஆற்றாமை புக்க இடம் கண்டிலர்;
‘இதற்கு அடி என்?’ என்று பார்த்து ஆராய்ந்தவாறே,
இதர – மற்றைப் பொருள்களினுடைய பேறு இழவுகளில் அளவு அல்லாத-விஷய வை லக்ஷண்யம் –
இறைவனுடைய வேறுபட்ட சிறப்பாய் இருந்தது;
அதாவது, பிரிந்த போது தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதபடியாய்,
கலந்து போதும் தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதபடியான இறைவனுடைய வைலக்ஷண்யமாய் இருந்தது என்றபடி.
‘இது தனக்கு அடி என்?’ என்று பார்த்தவாறே,
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாகையாலே -எல்லா நற்குணங்களையும் உருவமாக உடையவனாகையாலேயாய் இருந்தது;
இது தனக்கு அடி என்?’ என்று பார்த்தவாறே, சர்வேஸ்வரன் ஆகையாலே இருந்தது.
‘ஆயின், சமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருப்பின், சர்வேஸ்வரனாயும், இருத்தல் வேண்டுமோ?’ எனின்,
‘உயர்வற உயர் நலம் உடையவன்’ என்றால், ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்றே தோன்றுமாதலின்,
எல்லா நலமும் உடையவனே அமரர்கள் அதிபதியாயும் இருத்தல் வேண்டும்.
ஆக, இவ்வகையில் ஒன்றைப்பற்றி ஒன்றாக-அத்விதீயமான – இடத்திற்கு ஏற்பத் தோன்றிய -பரத்வத்தை
இறைமைத் தன்மையினை அருளிச் செய்கிறார்.இத்திருவாய்மொழியில்.
இது வரை ப்ராசங்கிக சங்கதி -இனி சாஷாத் சங்கதி –
ஈஸ்வரன் சாத்ம்ய போக ப்ரதனாகையாலே-முதலில் தன்னுடைய ஈச்வரத்வத்தை அனுபவிப்பித்து
மேலே -2-3-ஊனில் வாழ் உயிரிலே தன்னை அனுபவிப்பிக்கிறான்
வைலக்ஷண்யத்துக்கு அடி குணங்கள் என்ற இடத்து -தாந்தைஸ் சர்வ பிரஜா காந்தை ப்ரீதி சஞ்சநைந பிதுர் குணைர்
விருருசே ராமோ தீப்தஸ் ஸூர்ய இவாம்ஸூபி -என்றது சம்வாதமாகக் கண்டு கொள்வது
இத்யாதிகளால் பெருமாள் குணங்களைச் சொல்லிக் கொடு போந்து-
ச ஹி தேவைர் உதீர்ணஸ்ய ராவணஸ்ய வாதார்த்திபி -அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஜே
விஷ்ணுஸ் சனாதன -இத்யாதியாலே ஈஸ்வரத்வம் சொல்லிற்றே
இனி, ‘கீழ் திருவாய்மொழியின் ஈற்றில், ‘மூவா முதல்வா’ என்றார்;
அங்கு ‘முதல்வா’ என்றதனால் தோன்றிய முதன்மையினை – காரணத்வத்தை –
இத்திருவாய்மொழியில் விரித்து அருளிச்செய்கிறார்,’ என்று பணிப்பர் திருக்குருகைப்பிரான் பிள்ளான்.
‘ஆயின், முதல் திருவாய்மொழியிலும் சர்வேஸ்வரனாந் தன்மையினை அருளிச் செய்தனரே?’ எனின்,
‘ஒருகால் சொன்னோம்’ என்று கைவாங்கி இருக்க வல்லர் அல்லர் இவர்;
ஒருகால் சொல்லிற்று என்று கைவாங்கி இருக்கலாம் விஷயம் அல்லன் அவன்,
இனி, பகவத் விஷயத்தில் கூறியது -புநர் யுக்தி தோஷம் -கூறல் என்ற குற்றமும் ஆகாது.
‘யாங்ஙனம்?’ எனின், ஒரு குணத்தையே எல்லாக்காலமும் அநுபவிக்க வல்லார் ஒருவர் இவர்;
ஒரு குணந்தன்னையே ‘இதற்கு முன்பு அநுபவிப்பித்தது இக்குணம்’ என்று தோன்றாதபடி
ஷணந்தோறும் புதுமை பிறப்பித்து அநுபவிப்பிக்க வல்லான் ஒருவன் அவன்.
‘ஆயின் ‘ஷணந்தோறும் புதுமை தோன்றுமோ?’ எனின்,
பயிலா நிற்கச் செய்தே ‘பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் யாம் என்றே பயில்கின்றாளால்’ என்றார் திருமங்கை மன்னன்;
‘எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதொறும், அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம்’ என்றார் இவர் தாமும்.
ஆகையாலே அன்றோ, ஒரு பொருளே நித்தியப் பிராப்யம் ஆகிறது?
ப்ரஸம்ஸாயாம் ப்ரதிஞ்ஞாயாம் ப்ரலாபே தர்ஜனே அபி வா பயே ச விஸ்மயே சைவ பவ்ன புந்ய மலங்க்ருதி -என்றபடி
பகவத் பரத்வ ப்ரதிஞ்ஜை யாகையாலே புநர் யுக்தி தோஷம் இல்லை
அனுபாவ்யத்தினுடைய ரஸ்யதையாலே
-அனுபவ ஜெனித ப்ரீதியாலே – பின்னையும் பின்னையும் சொல்லப் பண்ணும் இறே
இவர் ஆராத காதலை யுடையவர் ஆகையால் -2-1-11–கை வாங்கி இருக்குமவர் அல்லர்
ஆக உபதேஷ்ட்ரு ஸ்வபாவத்தாலும் உபதேஸ்ய ஸ்வபாவத்தாலும் -அனுபாவ்ய ஸ்வபாவத்தாலும் -அனுபவித்ரு ஸ்வபாவத்தாலும் –
அனுபாவயித்ரு ஸ்வபாவத்தாலும் புநர் யுக்தி தோஷாவாயன்று -என்கிறார்
நித்ய அபூர்வமான விஷயம் -பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -வர்த்தமான அர்த்தம்
ஆயினும், முதல் திருவாய்மொழிக்கும், இத்திருவாய் மொழிக்கும் வேற்றுமையும் உண்டு;
1-முதல் திருவாய்மொழியில் கூறிய பரத்துவம், ஸ்வாநுபவமாய் இருக்கும்;
இங்கு, அந்தப் பரத்துவந்தன்னை எல்லாரும் அநுபவிக்கலாம்படி பிறர் நெஞ்சிலே படுத்துகிறார் ஆகையாலே பரோபதேசமாய் இருக்கும்.
2-அங்கு அன்வய – விதி முகத்தால் பரத்துவத்தை அருளிச்செய்தார்;
இங்கு அன்வய -விதிமுகம்-வ்யதிரேக – மறைமுகம் என்னும் இரண்டாலும் பரத்துவம் சொல்லுகிறார்.
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே —
3-அங்கு, சுருதிச் சாயையாலே பரத்துவஞ் சொன்னார்; இங்கு, இதிகாச புராணங்கள் மூலமாகப் பரத்துவஞ்சொல்லுகிறார்.
கிருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத்பத்திர் அபி சாப்யய -என்றும் –
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்-என்றும் உண்டே
4-அங்கு, பரத்வத்திலே பரத்வம் -முதன்மையில் முதன்மை; இங்கு அவதாரங்களில் பரத்வம் -முதன்மை
இரண்டாம் திருவாய் மொழியில் -கீழ் யுக்தமான போக்யத்வத்தினுடைய நிரதிசயத்தவாபாதகமாய் –மா வாய் பிளந்து –2–1–10-என்று தொடங்கி –
1-கீழ் ப்ரக்ருதமான ஸுலபயத்துக்கும் ஸ்வாமித்வத்துக்கும் ப்ரகாசகமான மனுஷ்யத்வே பரத்வத்துக்கு உபபாதகமான அவதார தசையிலும் அவனுடைய சர்வ நிர்வாஹகத்வத்தையும் —
2-அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி ஹேதுத்வத்தையும் -3-சர்வாதிகாத்தவத்தையும் -4-சர்வ பிரகார சமாராத்யதையும்–5-ஆதிக்ய ஸூசகமான புண்டரீகாக்ஷத்வத்தையும் –
6-ஆஸ்ரித ரேஷன் அர்த்தமான அர்ணவ ஸாயித்வத்தையும் -7-அகடிதகடநா சாமர்த்யத்தையும் -8-சர்வ பிரகார ரக்ஷகத்வத்தையும் -9-ஜெகஜ் ஜென்மாதி ஹேதுத்வத்தையும் –
10-சர்வ தேவதா ஸமாச்ரயணீயத்வத்தையும் –
அருளிச் செய்து -சர்வ ஸ்மாத் பரனாய் -சர்வ ஸூலபனான் ஈஸ்வரனுடைய போக்யத்வ வர்த்தமான உத்துங்க லலிதத்வத்தை உபபாதிக்கிறார் –
முதற்பாட்டில், மேல் பரக்க அருளிச் செய்கிற இத்திருவாய் மொழியின் அர்த்தத்தைத் தொகுத்து -ஸங்க்ரஹேன -அருளிச்செய்தார்.
இரண்டாம் பாசுரம் முதல்,
துக்கத்தைப் போக்குமவன்-நிவர்த்தகன் – ஆதலானும்,
சீலவான் ஆதலானும்,
ஸூகுமாரன் ஆதலானும், புண்டரீகாக்ஷன் -தாமரைக்கண்ணன் ஆதலானும்,
ஆபத்சகன் ஆகையானும்,
அகடிதகடநா சமர்த்தன் ஆதலானும், ஸ்ருஷ்ட்டி ஸ்திதிகளை -படைத்தல் காத்தல்களைச் செய்கையாலும், அழித்தலைச் செய்கையாலும்,
ஈஸ்வர அபிமானிகளாய் இருக்கிறவர்களுடைய ஸ்துதிகள் முதலியவைகளாலும்,
இப்படிப் பல வகைகளாலே அவனுடைய பரத்துவத்தை அருளிச் செய்து, இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.
———
2-3-ஊனில் வாழ் உயிர் -பிரவேசம் –
வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான துன்பமெல்லாம் தீரும்படி வந்து-
ஸம்ஸ்லேஷித்த சம்ச்லேஷத்தை – கலந்த கலவியினை அருளிச் செய்கிறார்.
இத்திருவாய்மொழியில்.
‘ஆயின், இது, ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியினைச் சார்ந்தன்றோ இருத்தல் வேண்டும்?’ எனின்,
ஆம்; முதல் திருவாய்மொழியின் ஈற்றுப் பாசுரத்தில் இறைவனுடைய முதன்மையினை அருளிச் செய்தாராயின்,
அது சம்பந்தமாகத் தோன்றிய -ஈஸ்வரத்வம் -அம் முதன்மையினை இரண்டாந்திருவாய்மொழியில் அருளிச் செய்தார்;
பின்னர், துன்பம் எல்லாம் தீரும்படி வந்து கலந்த கலவியினை அருளிச்செய்கிறார் இத் திருவாய்மொழியில்.
ஆக, இரண்டாந்திருவாய்மொழி, நடுவில் தாம் பெற்ற பேற்றின் கனத்தைப் பார்த்தார்;
அது அளவு இறந்ததாய் இருந்தது; தமது முயற்சி காரணமாக வந்ததாயின் அளவுபட்டு இருக்கும்;
எல்லாம் வல்ல இறைவன் காரணமாக வந்த தாகலின் அவ்வின்பம் கனத்திருந்தது.
மற்றும், தாம் அநுபவித்த அநுவபத்துக்குள்ளே எல்லா ரசங்களும் உண்டாய் ஒப்பும் உயர்வும் அற்றதாய் இருந்தது;
‘இத்தகைய பேற்றுக்கு உசாத் துணையாவார் யார்?’ என்று பார்த்த இடத்தில் சம்சாரத்திலே ஆள் இல்லாமையாலே,
அவன் தன்னோடு ஒக்கப் பிராப்யருமாய் அவனை நித்தியாநுபவம் பண்ணா நிற்பாருமாய்,
பகவானுடைய அநுபவத்துக்குத் தேசிகருமாய் இருக்கிற நித்திய ஸூரிகள் திரளிலே சென்று புக்கு –
போதயந்த பரஸ்பரம் -ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக் கொண்டு அநுபவிக்கப் பெறுவது எப்பொழுதோ?’ என்னும்
அநவாப்தியோடே இத்திருவாய் மொழியினைத் தலைக் கட்டுகிறார்.
வாயும் திரையுக்களில் ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளையும் அசேதனங்களையும் சேர்ந்தார்
சம்ச்லேஷத்தால் வந்த ப்ரீதிக்கு அறிவு நைசர்க்கிகமான நித்ய ஸூ ரிகளை உசாத் துணையாகத் தேடுகிறார் –
‘ஆயின், ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியிற்கூறியது போன்று,
பிரீதிக்கும் பறவை முதலியவற்றைத் தேடாது, ஈண்டு நித்திய ஸூரிகளைத் தேடுவதற்குக் காரணம் என்னை?’ எனின்,
‘வாயும் திரை உக’ளில் ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திரியக்குகளையும் அசேதநங்களையும் சேர்த்தார்;
ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளையும் அசேதனங்களையும் -காற்றையும் கழியையும் கட்டி அழுதார்
இங்கு, கலவியால் வந்த பிரீதிக்கு-அறிவு நைசர்க்கிகமான- இயற்கை அறிவையுடைய நித்திய ஸூரிகளைத் தேடுகிறார்.
இறைவன் ஆழ்வாரோடு கலந்த கலவி,
பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி கலந்த கலவியைப் போன்று இருந்தது.–ஜாதி குணங்கள் திரவியத்துப் பிரகாரமாய்ப் பிரிக்க ஒண்ணாதபடியாய்
இருக்குமா போலே, பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி.-‘அப் பெரியவன் இப்படித் தாழ விடுவதே!’ என்று அச் செயலிலே தன் நெஞ்சு துவக்குப்பட்டு ‘அது அது’ என்று கிடக்கு மாயிற்று. -அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவிதான்.
இப்படி உத்துங்க லலிதனான இவனுடைய ஸர்வவித சாரஸ்ய அதிசய ப்ரயுக்தமான திவ்ய போக்யதையை அருளிச் செய்வதாக –
1–அவனுடைய சர்வ ரசாத்மத்வத்தையும் -2-சர்வ ரஸ்ய யுக்தனான அவன் விஷயத்தில் தம்முடைய உபகார ஸ்ம்ருதியையும் —
3–ஸ்வ விஷயத்தில் தம்மை அவன் அபி நிவேசிப்பித்த படியையும் -4-அவ்வுபாஜகாரத்துக்கு பிரதியுபகாரம் இல்லாத படியையும் —
5–தன்னுடைய அப்ராக்ருத போக்யத்தையும் -பிரகாசிப்பித்துச் சேர்த்துக் கொண்ட படியையும் 6-இந்த சம்ச்லேஷம் ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே அநாதி ஸித்தமான படியையும் –
7–போக்யதா அதிசயத்தாலே வ்யதிரேகத்தில் தரிக்க அருமையையும் -8-அவ்வனுபவம் தமக்குக் கைப் புகுந்தமையையும் –
9–சர்வ பிரகார அனுபவத்தால் பிறந்த ஆனந்த விசேஷத்தையும் –
இப்படி அனுபவித்து ஆனந்திகளான ஸூரி களோடு தாம் கூடி அனுபவிக்கையில் யுண்டான ஆசையையும் –
அருளிச் செய்து கீழ்ச் சொன்ன சர்வ பிரகார சாரஸ்யம் ஸூரி போக்யம் என்னும் இடத்தையும் உபபாதித்து அருளுகிறார் –
———
2-4-ஆடியாடி -பிரவேசம் –
கீழில் திருவாய் மொழியில் –பருகிக் களித்தேனே -என்று ஹ்ருஷ்டராய் –
அது தன்னை பாகவதர்களோடே உசாவி தரிக்க வேணும் என்று பாரித்து
அதுக்கு இவ்விபூதியில் ஆள் இல்லாமையாலே
நித்ய விபூதியிலே நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணி அனுபவிக்கக் கோலி-
நினைத்த போதே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே மிகவும் அவசன்னராய்
தம்முடைய தசையை ஸ்வகீயரான
ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிறபடியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
தாயாராகிறவள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று ஸ்வாபதேசம்
ஆச்சார்ய ஹ்ருதயத்தில்
மாதா அஞ்சி முறைப்பட்டு முறையிடுகிற ஏழில் அத்யாவசாயமும் -என்று திருத்தாயார்
பாசுரமாகச் சொன்ன இடங்கள் எல்லாம் உபாய அத்யவசாய தசையிலே நின்று
சொன்னவைகள் என்றே நாயனாரும் நிர்வஹித்தது
இவரும் கடல் ஞாலத்திலே இப்படி அருளிச் செய்தாராகையாலும் அதுவும் ஒரு நிர்வாஹம் கிடக்கச் செய்தே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிற படி என்று இங்கனே இப்படி
அருளிச் செய்கையாலே இந்த ஸ்வாபதேசமும் யோஜனாந்தர அபிப்ராயம் – )
முன் அஞ்சிறைய மட நாரையில்-தூது விட ஷமரானார்
வாயும் திரையுகளில் கண்ணால் கண்ட பதார்த்தங்கள் அடைய பகவத் அலாபத்தாலே நோவு படுகிறவாகக் கொண்டு
அவற்றுக்குமாக நோவு பட ஷமரானார்
அவ்வளவு அன்றிக்கே –
ஆற்றாமை கரை புரண்டு –தாமான தன்மை இழந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய்
அது தன்னிலும் தன் தசை தான் வாய் விட்டுப் பேச மாட்டாதே பார்ச்வஸ்தர் அறிவிக்க வேண்டும்படியாய்-
ஸ்திதி கமன சயநாதிகளிலே ஒரு நியதி இன்றியிலே அரதியாய் –
விச்லேஷத்தில் துக்கத்தில் நோவு பட –இப்பெண் பிள்ளை தசையை அனுசந்தித்த தாயார்
ராம கிருஷ்ண்யாத் யவதாரங்களைப் பண்ணி –
(அரக்கன் இலங்கை செற்றீருக்கே -3-பாசுரம்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் -2-பாசுரம்
ஆதி ஸப்தத்தால் -நரஸிம்ஹ ஷீராப்தி நாதாதி அவதாரங்கள் )
ஆர்த்தரானார் ஆர்த்தி எல்லாம் பரிஹரிக்கக் கடவ ஸ்வபாவரான நீர்
(கிளர் வாழ்வை வேவ-10-பாசுரம் )
உம்மை ஆசைப்பட்ட இவள் நோவு படப் பார்த்து இருப்பதே -என்று
எல்லா அளவிலும் அவனையிட்டு பரிஹரித்து கொள்ளும் குடி யாகையாலே
அவன் திருவடிகளிலே பொகட்டு-இவளிடை யாட்டத்தில் நீர் செய்ய இருக்கிறது என் என்று
கேட்கிற பாசுரத்தாலே தம்முடைய தசையை அருளிச் செய்கிறார்
(எல்லா அளவிலும் என்றது
ஆடியாடி -வாடி வாடும் -1-
உம்மைக்காணும் ஆசையில் நைகின்றாள் –2-
எரி யணை யரக்கும் மெழுகும் ஒக்கும் இவள் -3 –
உள்ளம் மலங்க வெவ்வுர்க்கும் கலங்கிக் கை தொழும் -4-
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் –5–
இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே -10-
போன்ற தஸா விசேஷங்களுக்கு பரிஹாரம் நுமது இட்டம் என் கொல் -9-என்பதைப்பற்ற )
(நீர் செய்ய நினைத்து இருக்கிறது என் என்று கேட்கிற
இரக்கம் எழீர் –3-
உம்மைக்காணும் ஆசை –2-
தண்ணம் துழாய் கொடீர் –5-
உம்மைக்காண -2- என்பதை பற்ற )
காசை இழந்தவனுக்கும் -பொன்னை இழந்தவனுக்கும் -ரத்னத்தை இழந்தவனுக்கும் ஒத்து இராது இறே கிலேசம் –
காசு -விபவம் —காசினை மணியைச் சென்று நாடி -பெரிய திருமொழி –7-10-4-
தங்கம் -அர்ச்சாவதாரம் –செம்பொனே திகழும் -நம்பியை -1-10-7-
இரத்தினம் – அடியவர்கள் குழாம் —செழு மா மணிகள் சேரும் -5-8-9-
1-அவதாரத்திலே பெரு நிலம் நல்லடிப்போதை -1-3-10-அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே
வந்த ஆற்றாமை –அஞ்சிறைய மடநாரையிலே-
2-நம்பியத் தென் குறுங்குடி நின்ற –1-10-9-என்று அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப்பட்டு
கிடையாமையாலே வந்த ஆற்றாமை –வாயும் திரைகளில்-2-1-
3-இதில் -2-4–அவன் தனக்கும் பிராண பூதரான-அறிவார் உயிரான – நித்ய ஸூரிகளை -அனுபவிக்க
ஆசைப்பட்டு கிடையாமையாலே வந்த ஆற்றாமையாலே-அவற்றிலும் அதுக்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும் –
அறிவார் ஆத்மாவில் அவன் மதம் தோற்றும் -ஞானி து ஆத்மைவ மே மதம்
நந்தன் தோல் காசு வழங்கினால் போலே -பிரசித்தம் –அத்யல்ப காலீயத்வம் -காசு –காசானாம் கால பேதாநாம்-சாமான்யம் –
அந்ய கால உபாதேய யோக்யதை அர்ஹம் இல்லையே -திருவிக்கிரம அவதாரம் -காலாந்தரம்
சர்வ கால அனுபவத்யம் -ஸ்வர்ண ஸ்தானம் – திருக்குறுங்குடி நம்பி அச் செம்பொன்னே திகழும்
செழு மா மணிகள்- ஸ்ரீ வைஷ்ணவர்கள் ரத்னங்கள் -திரு மழிசை ஆழ்வார் போல்வார் -சக்ராம்சம் -நித்ய சூரி தானே
நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே நோவு படுகிறதாகில்-
பின்னை அவர்களைச் சொல்லிக் கூப்பிடாதே
அவனைச் சொல்லிக் கூப்பிடுவான் என் என்னில் –
எங்கேனும் ஒரு காட்டில் ரத்னங்கள் பறி யுண்டாலும் நாட்டில் ராஜாவின் வாசலில்
அவன் பேர் சொல்லி இறே கூப்பிடுவது –
அவர்களோட்டை சம்ச்லேஷத்துக்கும் கடவன் அவனாகையாலே அவனைச் சொல்லிக் கூப்பிடுகிறது
பகவத் விச்லேஷத்தில் உட்புக நின்றால் இறே பாகவத விச்லேஷம் தான் தெரிவது
பாகவத விஸ்லேஷ அதிசயம் -தெரிவது பெற்ற பகவத் சம்ச்லேஷம் –பூமா -வேறு ஒன்றும் கண்ணில் காட்டாதே –
மற்று ஒன்றை காணா நிலை அன்றோ –
அது இழந்து பிரார்த்திக்கும் பொழுது தானே கண்ணில் படும் –
பகவத் சம்ச்லேஷம் இருக்கும் வரை பாகவத விச்லேஷத்தில் நெஞ்சு போகாதே –
பாகவத விச்லேஷத்தில் உள்ளே நின்றால் பகவத் விச்லேஷம் தெரிய வரும் –
அவர்கள் இருந்தால் தான் புருஷகாரம் பெறுவோம் –
(உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ
வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும்
தண்ணம் துழாய் கொடீர்
சுவர் வட்டவாய் நுதி நேமியீர்
அந்தாமத்து அன்பு செய்து
இவர் பாகவத விஸ்லேஷத்தில் உட்ப்புக நின்றவர் ஆகையாலே
அது இவருக்குப் பகவத் விஸ்லேஷ பர்யந்தமாய் அவன் தன்னையே அடிபிடித்துக் கூப்பிடுகிறார் என்றபடி )
கதான்வஹம் சமேஷ்யாமி பரதேன மஹாத்மநா சத்ருநேன ச வீரேண த்வயா ச ரகு நந்தன –
ஸ்ரீ பரத ஆழ்வானோடும் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வானோடும் கூடப் பெறாத கிழிக் குறையாலே-மனக்குறையாலே –
கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய் தோற்றிற்று இல்லை இறே பெருமாளுக்கு
பணப்பை -கிழி-
குஹேன சஹிதோ ராம லஷ்மணேந ச சீதயா -கூடப் போன இளைய பெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய் தோற்றிற்று
ஸ்ரீ குஹப் பெருமாள் உடன் கூடின பின்பு இறே
இப்படி இறே அவன் தனக்கும் அந்வய வ்யதிரேகங்கள் இருக்கும் படி
ததீய சம்ச்லேஷத்தை ஆசைப்பட்டு பெறாமையாலே வந்த இழவு-
பெற்ற பகவத் சம்ச்லேஷம் இழந்து அடியே பிடித்து பிரார்த்திக்க வேண்டும்படியாய் வந்து விழுந்தது
வாயும் திரையுகளில் ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்த சம்ச்லேஷம் முற்றுவதற்கு முன்னே
வந்த பிரிவாகையாலும் ஆற்ற ஒண்ணாது இறே –
நாலாம் திருவாய் மொழியில் -இப்படி தாம் ஆசைப்பட்ட படியை அனுபவிக்கப் பெறாமையால் அவசன்னராய் –
தமக்குப் பிறந்த ஆர்த்தி அதிசயத்தை சமிப்பிக்கைக்கு -சர்வ ரக்ஷகனாய் போக்ய பூதனான அவனை ஒழிய இல்லை -என்று அறுதியிட்டு —
1-அவன் ஆஸ்ரிதனான ப்ரஹ்லாதனுக்கு உதவினைப்படியையும்—2-அநிருத்னனுக்கு உதவினபடியையும்–
-3-அபிமதையான பிராட்டிக்கு உதவினபடியையும்–4 – -நாட்டுக்கு உதவின படியையும் –5 –ஸூத்த பாவத்தையும் –6-நிரதிசய போக்யதையும்-
7- ரக்ஷண அர்த்தமான ஆசத்தியையும் –8-ஆஸன்ன ஜனங்களுக்கு அனுபவ விரோதிகளை போக்கினை படியையும்-
9- ரக்ஷண உபகரணவத்தையும் —-10-விரோதி மிகுந்தால் வெந்து விழப் பண்ணும் வீரப் பாட்டையும் –
அனுசந்தித்து -தம்முடைய ஆர்த்தியைப் பரிவர் முகத்தால் அவனுக்கு அறிவித்த படியை –
பிரிந்த தலைமகள் ஆற்றாமைக்கு நல் தாய் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
முதற்பாட்டில், ‘அடியார்களுடைய ஆபத்தே செப்பேடாக உதவும் தன்மையினை உடையவன், இவளுடைய ஆபத்துக்கு வந்து உதவுகின்றிலன்,’ என்றாள்;
இரண்டாம் பாட்டில், ‘‘விரோதி உண்டே’ என்பது இறைவனுக்கு நினைவாக, ‘வாணனுடைய பாஹு தோள் வனத்திலும் வலிதோ இவளுடைய விரோதி?’ என்றாள்;
மூன்றாம் பாட்டில், ‘இப்படிச் செய்ய நினைத்த நீர், முன்பு அச் செயலை எதற்காகச் செய்தீர்?’ என்றாள்;
நான்காம் பாட்டில், ‘அது பொறுக்க மாட்டாமல் அது தன்னையே உபகாரமாகச் சொல்லா நின்றாள்,’ என்றாள்;
ஐந்தாம் பாட்டில், ‘அவ்வளவிலும் வாராமையாலே, -நிர்த்தயன் -அருள் இல்லாதவன்’ என்றாள் திருத்தாய்;
ஆறாம் பாட்டில், அது பொறுக்கமாட்டாமல், ‘கெடுவாய்! ஆகரத்தில் தகவு மறுக்குமோ? அது நம் குறைகாண் என்கிறாள்,’ என்றாள்;
ஏழாம் பாட்டில், ‘அவன் குணம் ஹானியை -இன்மை தன்னையே குணமாகக் கொள்ளும்படி இவளை வஞ்சித்தான்,’ என்றாள்;
எட்டாம் பாட்டில், ‘உம்மைத் தஞ்சமாகப் பற்றின-அபாஸ்ரயமாகப் பற்றின – இவள் படும் பாடே இது?’ என்றாள்;
ஒன்பதாம் பாட்டில், ‘இவள் பேற்றில் நீர் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்றாள்;
பத்தாம் பாட்டில்,சேஷித்தது -‘எஞ்சி நிற்பது நோக்கு ஒன்றுமேயாயிற்று; இஃது ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்,’ என்றாள்;
நிகமத்தில் , இத் திருவாய் மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.
———
2-5-அந்தாமத்து அன்பு -பிரவேசம் –
கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே ‘கஜேந்திரன் என்னும் யானையானது, கரையில் இழுக்கிறது;
முதலையானது, தண்ணீருக்குள் இழுக்கிறது,’என்றதனைப் போன்றது ஒன்றாம்,
கீழ் ‘ஆடிஆடி’ என்ற திருவாய்மொழியில் ஆழ்வார்க்குப் பிறந்த வ்யஸனம் -துக்கம்;
அது எல்லாம் ஆறும்படியாக,
அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் ‘சேனை முதலியாரால் கொடுக்கப்பட்ட கைலாகை ஏற்றுக் கொள்ளாமலும்’
என இவ்வாறாகக் கூறியுள்ளபடியே,
பெரிய த்வரையோடே – மிகுந்த விரைவோடே ஆயுதங்களையும் ஆபரணங்களையும் -அக்ரமமாக -முறைபிறழத் தரித்துக் கொண்டு,
மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து உள்ளே போய்ப் புக்கு,
யானையை ஒரு கையாலும் முதலையை ஒரு கையாலும் அணைத்து எடுத்துக்கொண்டு கரையிலே ஏறி,
க்ராஹம் சக்ரேனை மாதவ ‘திருவாழியாலே முதலையைப் பிளந்தார்’ என்கிறபடியே,
பிரஜையின் – குழந்தையின் வாயில் முலையைக் கொடுத்துக் கிரந்தியைச் சிகிச்சை செய்வது போன்று,
பெரிய பிராட்டியாரும் தானுமாக, இரண்டுக்கும் நலிவு வாராமல் திரு ஆழியாலே விடுவித்துச் சாத்தியருளின
திருப்பரியட்டத்தின் தலையைச் சுருட்டித் தன் வாயிலே வைத்து
அவ்யானையின் புண் வாயை வேதுகொண்டு திருக்கையாலே குளிரத் தீண்டிக்கொண்டு நின்றாற்போலே,
இவ்வாழ்வாரும் ’வலங்கொள் புள் உயர்த்தாய்’என்று கூப்பிட்ட-ஆர்த்த நாதம் – துக்க ஒலியானது செவிப்பட,
‘அழகிதாக நாம் உலகத்தைப் பாதுகாத்தோம்! நாம் ஆரானோம்!’ என்று,
பிற்பட்டதனால் உண்டாகும் -லஜ்ஜா பயங்களினால் -நாணத்தாலும் பயத்தாலும்-விஹ்வலனாய் கலங்கினவனாய்,
தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்கள் ஒப்பனை, திவ்ய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தி, இவை எல்லாவற்றோடும்
வந்து ஸம்ஸ்லேஷித்து – கலந்து- அத்தாலே ஹ்ருஷ்டானாய் -மகிழ்ந்தவனாய்,
தான் -க்ருதக்ருத்யனாய் -செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்து முடித்தவனாய்
இருக்கிற இருப்பை அனுபவித்து, -அவ்வனுபவ ஜெனித ஹர்ஷ ப்ரகரஷத்தாலே –
அவ்வனுபவத்தால் உண்டான மகிழ்ச்சியின் மிகுதியால் தாம் பெற்ற பேற்றைப் பேசி அனுபவிக்கிறார்.
அஞ்சாம் திருவாய் மொழியிலே – இப்படி இவருடைய ஆர்த்தியைக் கண்டு த்வரிதனாய் ஸம்ஸலேஷித்த சர்வேஸ்வரனுக்கு ப்ரீதியாலே வந்த ஸுந்தர்யாதிசயத்தை
அருளிச் செய்கிறதாக -பிரதமத்திலே –
-1-சங்க்ரஹேண-பூஷண அவயவ -ஆயுத சோபா விசிஷ்டமான வடிவு அழகையும் –2-அத்தோடு கூடின விபூதி உன்மேஷத்தையும்
-3-சம்ச்லேஷ காரிதமான ரக்ஷகத்வ உன்மேஷத்தையும் –4-ஸ்திர உஜ்ஜ்வல்யத்தையும் –
-5-உபமான ராஹித்யத்தையும் –6-அபர்யந்த பூஷணாதி யோகத்தையும் –
-7- தர்ச நீய சேஷ்டிதத்வத்தையும் —-8-சம்ச்லேஷ வைலக்ஷண்யத்தினுடைய வாசா மகோசாரதையையும்–
–9-சொல்லுகைக்கு அதிகாரிகள் இல்லை என்னும் இடத்தையும் -10-சொல்லுகை அரிது என்னும் இடத்தையும் –
அருளிச் செய்து -தம்முடைய சம்ச்லேஷ ப்ரீதிகாரித ஸுந்தர்ய பாரம்யத்தை அருளிச் செய்கிறார் –
முதற்பாட்டில், இவர் ஆசைப்பட்ட படியே அடியார்கள் குழாங்களோடே வந்து கலந்தபடி சொன்னார்;
இரண்டாம் பாட்டில், தம்மோடு கலந்த பின்பு திருமேனியும் திவ்விய அவயவங்களும் திவ்விய ஆயுதங்களும் நிறம் பெற்றன என்றார்;
மூன்றாம் பாட்டில், தம்மோடே கலந்து தன் சத்தை பெறுதல். இன்றேல், இல்லையாம் படியாய் வந்து கலந்தான் என்றார்;
நான்காம் பாட்டில், மேல் உவமையாகச் சொன்ன பொருள்கள் நேர் நில்லாமையாலே, அவற்றைச் சிக்ஷித்துச் சேர்த்துக் கூறி அனுபவித்தார்;
ஐந்தாம் பாட்டில், அவைதாமும் உவமையாக நேர் நில்லாமையாலே, அவற்றைக் கழித்து உபமேயந்தன்னையே அனுபவித்தார்.
ஆறாம் பாட்டில், ‘இப்படி எல்லாரைக்காட்டிலும் வேறுபட்ட தன்மையினையுடைய இவன், முத்தன் தன்னை
அனுபவிக்குமாறு போன்று, தான் என்னை அனுபவித்தான்’ என்றார்;
ஏழாம் பாட்டில், தமக்காக இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தான் என்றார்;
எட்டாம் பாட்டில், ‘அவனை என்னால் பேச முடியாது’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், துணை தேடிக் கொண்டு மீண்டும் பேசுவதற்குத் தொடங்கினார்;
‘பத்தாம் பாட்டில்’, ‘இப்படிகளால் என்னோடே கலந்து இம்மகாகுண ஒன்றையும் பேச என்றால் சால மிறுக்குடைத்து’ என்றார்;
நிகமத்தில் , இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.
———-
2-6-வைகுந்தா-பிரவேசம் –
ஆடி ஆடி’ என்னும் திருவாய்மொழியில் ஆர்த்தி -உண்டான துன்பம் தீர வந்து-ஸம்ஸ்லேஷித்த- கலந்த-படியை
‘அந்தாமத்து அன்பு’ என்ற திருவாய்மொழியில் அருளிச் செய்தார்;
அச் சேர்க்கையால் பிறந்த பிரீதி அவனது என்னுமிடத்தைச் சொல்லுகிறார் இத் திருவாய் மொழியில்.
‘பிரணயி பிரீதி அநுசந்தானங்காண் இது’ என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்வர்.
அதாவது, ஆழ்வார் விஷயமாகச் சர்வேஸ்வரனுக்கு உண்டான பிரீதி சொல்லுகிறது இத் திருவாய்மொழியில் என்றபடி.
இனி, ‘ஊனில் வாழ்’ என்ற திருவாய்மொழியில், ‘ஆழ்வார், தாம் பகவானை அனுபவித்துத்
தமக்கு அவன் பக்கலுண்டான பிரேமம் அவன் அளவில் முடிவு பெறாது,
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று அவன் அடியார் அளவும் சென்றபடியை அருளிச்செய்தார்;
இத்திருவாய்மொழியில், ‘சர்வேஸ்வரன் ஆழ்வார் பக்கல செய்த பிரேமம் இவர் ஒருவர் அளவில் நில்லாது,
சம்பந்திகள் அளவும் வெள்ளம் இடுகிறபடியை அருளிச்செய்கிறார்’ என்று இயைபு கூறலுமாம்.
இரண்டு தலைக்கும் ரசம் மிகுந்தால் சம்பந்தி சம்பந்திகள் அளவும் செல்லும் அன்றே?
‘எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினர்’ என்பது இவருடைய திருவாக்கு.
(உன்னை நான் பிடித்தேன், கொள் சிக்கெனவே’என்ற பாசுரப் பகுதியை நோக்கி, ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹம்.
இனி, ‘ஊனில் வாழ்’என்றது முதல் ‘வெள்ளம் இடுகிறபடியை அருளிச்செய்கிறார்’ என்றது முடிய, ‘எமர் கீழ்
மேல் எழு பிறப்பும். விடியா வெந்நகரத்து என்றும் சேர்தல் மாறினரே’ என்ற பாசுரப்பகுதியை நோக்கிய வேறு நிர்வாஹம்.)
உபய விபுதிகளை யுடையவனாய், ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும்
உருவமாக உடையவனாய்,-சர்வ பிரகார பரிபூர்ணனான – எல்லா வகையாலும் நிறைந்தவனான தான்,
தன் படிகளுள் ஒன்றும் குறையாதபடி வந்து இவரோடே ஸம்ஸ்லேஷித்து கலந்து,-அச் சம்ச்லேஷம் தான் – அக் கலவிதான் –
தன் பேறு என்னுமிடம் தோன்ற மகிழ்ச்சியுடையவனாய்,
அநாதி காலம் -பல காலம் எதிர்சூழல் புக்குத் திரிந்த வஸ்துவை பொருளை ஒருபடியாக பிராபிக்கப் பெற்றோமே அடைந்தோமே!’
இவர்தாம் இனி நம்மை விடின் செய்வது என்?’ என்று அதி சங்கை பண்ணி -ஐயங்கொண்டு,
அவன் அலமாக்கிற படியைக் கண்டு, ‘நீ இங்ஙனம் படவேண்டா’ என்று அவன் -அதி சங்கையைப் பரிஹரித்து -ஐயத்தை நீக்கி,
அவனை உளன் ஆக்குகிறார்.
வைதேஹி ரமஸ கச்சித் சித்ரகூடே மயா ஸஹ ‘விதேக குலத்தில் பிறந்த சீதாய்! சித்திரகூட மலையில் என்னோடு கூட
இன்பத்தினை அனுபவிக்கிறாயா?’ என்றால் போலே ஆயிற்று இதில் ரசமும் -சுவையும்;
‘மைதிலி, உன்னை அறிந்தாயே- நம்மை அறிந்தாயே,- கலக்கிற தேசம் அறிந்தாயே! என்றார் இறே பெருமாள் –
——————
ஆறாம் திருவாய் மொழியில் -தம்மோடு ஸம்ஸலேஷித்த ப்ரீதி அதிசயத்தாலே -அத்யந்தம் ஹ்ருஷ்டனான சர்வேஸ்வரன் –
இவர் நிகர்ஷ அனுசந்தானத்தாலே அகலாத தேடி இத்தைக் குலைக்கில் செய்வது என் -என்கிற அதிசங்கை பண்ணி –
தன் விஸ்லேஷ பீருத்வத்தை இவருடைய திருள்ளத்திலே பிரகாசிப்பிக்க -நம்முடைய அளவில் இவன் அபி நிவேசம் இருந்தபடி என் என்று
அத்யந்த ஹ்ருஷ்டராய் -இவனுடைய அதி சங்கா நிவ்ருத்தி அர்த்தமாக —
–1-தாம் அவனைச் சிக்கெனைப் பற்றினமையையும் –2-அவன் தான் அநந்ய பரனாய்த் தம்மோடு கலந்த படியையும் –
-3-ஸ்வ அனுபவத்தைக் கொடுத்த உதார குண அதிசயத்தையும் -4-அந்த உதார குணம் அடியாகத் தாம் விட மாட்டாமையையும் —
-5-லப்த போகரான தமக்கு விட யக்யத்தை இல்லை என்னும் இடத்தையும் -6-இவ்வநுப சித்தியால் தமக்கு வந்த பூர்த்தியையும் –
-7-அந்த லாபம் தன்னளவில் நில்லாமல் சம்பந்தி சம்பந்தி பர்யந்தமான படியையும் –8-இதுக்கு விஸ்லேஷம் பிறவாமையில் தமக்கு உண்டான அபேக்ஷையையும் —
-9-கிருஷி பண்ணினவன் தான் இத்தைக் குலையான் -என்னும் இடத்தையும் -10-அவன் குலைக்கில் தாம் விட ஷமர் அல்லர் என்னும் இடத்தையும்
அருளிச் செய்து அவனுடைய விஸ்லேஷ அதி சங்கையை நிஸ் சேஷமாக நிவர்ப்பித்து அருளுகிறார்-
முதல் பாட்டில் எம்பெருமான் இவர் நம்மை விடில் செய்வது என் -என்கிற அதி சங்கையைப் போக்கினார்
இரண்டாம் பாட்டில் –அது போன பின்பு அவனுக்குப் பிறந்த புது கணிப்பை சொன்னார்
மூன்றாம் பாட்டில் தமக்கு அவன் பண்ணின ஔதார்யத்தை அனுசந்தித்து வித்தரானார்
நாலாம் பாட்டில் அவன் உமக்குப் பண்ணின ஔதார்யம் ஏது என்ன இதர விஷய வைராக்கியம் என்றார்
அஞ்சாம் பாட்டில் இதர விஷய வைராக்ய பூர்வகமாக ஆத்மானந்த தாச்யத்திலே அதிகரித்த நான் இனி ஒரு நாளும் விடேன் -என்றார்
ஆறாம் பாட்டில் ஆஸ்ரிதற்கு உதவுவாயான பின்பு எனக்கு ஒரு குறையுண்டோ என்றார் –
ஏழாம் பாட்டில் என்னுடைய சம்பந்தி சம்பந்திகளுக்கும் ஒரு குறையில்லை என்றார்
எட்டாம் பாட்டில் இதுக்குத் தாம் அனுஷ்டித்த உபாயம் இன்னது என்றார்-
ஒன்பதாம் பாட்டில் இவர் அகவாய் அறிய வேணும் என்று ஓர் அடி பேர நிற்க இனிப் போக ஒண்ணாது என்கிறார்
பத்தாம் பாட்டில் –நாம் போகாது ஒழிகிறோம் நீர் தாம் போகாது ஒழிய வேணுமே என்ன-கால த்ரயத்தாலும் சர்வவித பந்துவுமான
உன்னை விட சம்பாவனை இல்லை என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –
————-
2-7-கேசவன் தமர் -பிரவேசம் –
ஆடியாடியிலே -வாடி வாடும் -என்கையாலே ஒரு நீர்ச் சாவியாய் வாடினபடி சொல்லிற்று –
அந்த ஒரு நீர்ச் சாவியானது தீர காரார் கருமுகில் கலந்து வர்ஷித்த படி சொல்லிற்று –அந்தாமத்து அன்பில் –
அப்படி வர்ஷித்த படியாலே –ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்-என்று வெள்ளமிட்டு பெருகின படி சொல்லிற்று வைகுந்தா மணி வண்ணனில்
எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் மா சரிது பெற்று -என்கையாலே அவ்வெள்ளம் இரு கரையும் புரண்ட படி சொல்லுகிறது கேசவன் தமரில்-
இவர் ஆடியாடியில் பட்ட ஆர்த்தி தீர வந்து கலந்த படி சொல்லிற்று அந்தாமத் தன்பு
அக்கலவியால் பிறந்த ப்ரீதி அவனதானபடி சொல்லிற்று -வைகுண்ட மணி வண்ணன் –
அந்த ப்ரீதி தான் ஆழ்வார் ஒருவர் அளவிலும் அன்றிக்கே நம்மோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும்
வெள்ளமிட்டுப் பெருகின படியைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில்
சர்வேஸ்வரன் ஆழ்வாரோடு வந்து சம்ச்லேஷித்து அத்தாலே பிறந்த ப்ரீதி தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே தம்மோடு
பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் பெருகின படியை –மா சதிர் இது பெற்று -கண்டு -இது இவன் என் பக்கல்
பண்ணின பஷபாத அதிசயம் இறே-என்று இனியராய் தம்மை விஷயீகரிக்கைக்கு ஈடான குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து
அவற்றுக்கு வாசகமான திருத் த்வாதச நாமத்தாலே அவனைப் பேசி அனுபவிக்கிறார்
சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீகரித்தால்-அது பின்னை அவன் அளவிலே நில்லாது இறே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் ஓரம் ராவணன் அளவும் சென்றது இறே-மகாரஜர்க்கு சத்ரு என்று வாலியை நிரசித்து வைத்து மகா ராஜர் கண்ண நீர் பொறுக்க மாட்டாதே தாமும் கண்ண நீர் விழ விட்டார் இறே-ஸ்ரீ கண்டா கர்ணன் பக்கல் பண்ணின விஷயீ காரம் அவன் தம்பி யளவும் சென்று -நீ அவனுக்கு நல்லையாகில் அவன் முன்னாகப் போ -என்று அருளிச் செய்தான் இறே-
குபேரன் கண்டா கர்ணனுக்கு திரு அஷ்டாஷர மந்த்ரமும் த்வாதச அஷர மந்தரத்தையும் உபதேசித்து த்வாரகை சென்று ஸ்ரீ கிருஷ்ணனை ஆஸ்ரயிக்க உபதேசித்தார் –
எம்பார் இத் திருவாய் மொழியை அருளிச் செய்யப் புக்கால் -ஸ்ரீ வைஷ்ணவன் ஆனேன் என்கிறார் என்பாராம்-வைஷ்ணத்வ சிஹ்னம் இறே திரு த்வாதச திரு நாமம் –
ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும் -எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும்- இரண்டாயிற்று நெடுமாற்கு அடிமை –அதில் எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத் திருவாய் மொழி –
முதல் பாட்டில் தம்மோடு சம்பந்தி சம்பந்திகளும் எல்லாரும் தம்மைப் போலே விஷயீ க்ருதரானார்கள் -என்றார்
இரண்டாம் பாட்டில் அதுக்கு அடி நாராயணன் ஆகையாலே என்றும் அந் நாராயண சப்தார்த்தத்தையும் அருளிச் செய்தார் –
மூன்றாம் பாட்டில் இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது சொன்னார் –
நாலாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படி பண்ணினான் என்றார்
அஞ்சாம் பாட்டில் இப்படி தன்னை அனுபவித்ததனாலே அவன் வடிவில் வந்த புகரைச் சொன்னார்
ஆறாம் பாட்டில் இப்படி என்னை விஷயீ கரிக்கைக்கு அடி நிர்ஹேதுக கிருபை என்றார்
ஏழாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படியான நெஞ்சைத் தந்தான் என்றார்
எட்டாம் பாட்டில் தந்த அளவன்றிக்கே விரோதியான நெஞ்சையும் போக்கினான் என்றார்
ஒன்பதாம் பாட்டில் தன்னுடைய கல்யாண குணங்களையே நான் அனுபவிக்கும் படி என் ஹிருதயத்திலே புகுந்தான் -என்றார்
பத்தாம் பாட்டில் அனுபவ விரோதியான இந்த்ரியங்களையும் தன் வழி யாக்கிக் கொண்டான் என்றார்
பதினோராம் பாட்டில் ஏவம் பூதனானவன் என்னை அல்லாது அறியானானான் என்றார்
பன்னிரண்டாம் பாட்டில் என்னைப் போலே காண்பார்க்கு காணலாம் அது ஒழிய ஸ்வ யத்னத்தால் அறியப் போகாது என்றார் –
நிகமத்தில் பலம் சொல்லித் தலைக் கட்டினார் –
————–
2-8-அணைவது அரவணை மேல் -பிரவேசம் –
சர்வேஸ்வரன் தம் பக்கல் பண்ணின வ்யாமோஹம் தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே -தம்மோடு சம்பந்தம்
உடையார் அளவிலும் வெள்ளம் இட்ட படியை சொன்னார் கீழ் –
இத் திருவாய் மொழியில் -தம்மோட்டை சம்பந்தமே ஹேதுவான அவன் இப்படி விஷயீ கரிப்பானான பின்பு –சம்சாரிகளுக்கும் நம்மோட்டை
ஒரு சம்பந்தத்தை உண்டாக்கி அவன் கிருபைக்கு விஷயம் ஆக்குவோம் -என்று அவர்களுக்கு மோஷ பிரதத்வத்தை அருளிச் செய்கிறார் –
இத் திருவாய் மொழி தன்னை –ஈஸ்வரத்வம் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு –
இருவரவர் முதலும் தானே -2-8-1- என்றும் தீர்த்தன் உலகளந்த -2-8-6-என்பததைக் கொண்டு –
மோஷ ப்ரதத்வம் சொல்லுகிறது -என்று பட்டர் அருளிச் செய்யும் படி –பிறவிக்கடல் நீந்துவார்க்கு புணைவன் -2-8-1- என்பதைக் கொண்டு –
இவை தான் ஒன்றை ஓன்று விட்டிராது –ஈஸ்வரன் யாயிற்று மோஷ பிரதானவன் -மோஷ பிரதானாம் போது ஈஸ்வரனாக வேணும் –
சங்க்ரஹ சங்கதி அருளிச் செய்து அத்தை விஸ்தரிக்கிறார் மேல் –
இது தன்னில் செய்ததாகிறது என்-என்னில் –
ஆழ்வாருக்கு முதல் தன்னில்-1- அத்வேஷத்தைப் பிறப்பித்து –2–ஆபிமுக்யத்தைப் பிறப்பித்து–3- ருசியை உண்டாக்கி
யாதானும் பற்றி நீங்கும் வ்ரதத்தை நல்வீடு செய்யும் -திரு விருத்தம் -95—மயர்வற மதி நலம் அருளினான் -1-1-1—
யானொட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் -1-7-7- அடிமைக் கண் அன்பு செய்வித்து –2-3-3-
இசைவித்து -என்னை -5-8-9–நின்னலால் இல்லை காண் -2-3-7-
4-இவர் விடிலும் தாம் விடாதே விரும்பி–5- இது தான் இவர் தம்மளவில் இன்றிக்கே தம்மோடு சம்பந்தம் உடையார் அளவும்-இப்படியே பெருகிக் கரை புரளுகிறபடியை அனுசந்தித்து –
சர்வேஸ்வரன் ஸ்வபாவம் இதுவான பின்பு –நாம் பெற்ற பேறு எல்லாரும் பெறும்படி பண்ணுவோம் என்று சம்சாரிகளை அடையப் பார்த்து
-அவர்களுக்கு மோஷ ப்ரதன்-என்னும் இடத்தை அருளிச் செய்கிறார்-
பரத்வம் முதல் பத்தில் அருளி -இரண்டாம் -பத்தில் காரணத்வம் -த்யாநித்தால் மோஷம் கிட்டும் –முக்த பிராப்த போகம் -அருளிச் செய்கிறார் –
இதில்
உபகார பரம்பரைகள் –
யாதானும் பற்றி நீங்கும் விரதம் -மாற்றி –அத்வேஷம்
இசைவித்து உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்
ஆபி முக்கியம் -மயர்வற மதி நலம் அருளினன்
தீ மனம் கெடுத்தாய் -மருவித் தொழும் மனமே தந்தாய்
அடிமைக் கண் அன்பு செய்வித்து -ருசியை விளைத்து –
நின் அலால் இலேன் -தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து -கேசவன் தமர் –சம்பந்தி அளவும் -வளர்ந்ததே
ஷீணே புண்யே மர்த்ய லோகம் – -ந புன ஆவர்த்தந்தே -இருள் அகற்றும் -வைகுந்த லோகம் ஏற்றி வைத்து ஏணி வாங்கி –புணை கொடுக்கிலும் போக ஒட்டாரே –
மாம் உபேத்ய -புனர் ஜன்ம -துக்க ஆலயம் -அசாஸ்வதம் சம்சாரம் -கர்மத்தால் திரும்ப திரும்ப பிறப்பானே –
அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் -சாஸ்திரம் -எழுதா மறை ஏழு முறை சொல்லி –
இவர் தாம் பெற்றதாய் -பிறருக்கு உபதேசிக்கிற பேறு தான் -பிராட்டி- திருவடி திரு வநந்த ஆழ்வானை- பரிகரமாக யுடைத்தாய் -பெருமானை-
விஷயமாகக் கொண்ட –முக்த பிராப்ய போகம் -அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது -யானை இடர் கடிந்த -பெரிய திருவடி அங்கே –
எத்தனை யேனும் அளவுடையார்க்கும் ஸ்வ யத்னத்தாலே ப்ராபிக்க அரிதாய் அவனாலே பெறப் பார்ப்பார்க்கு வருத்தம் அறப் பெறலாய்-
புணைவன் -தெப்பம் -அவனை உபாயமாகக் கொண்டு அடையப் பார்ப்பார்க்கு –நாயாமாத்மா -தேர்ந்து எடுத்து அருளுவான் –
நலம் அந்தமில்லதோர் நாடு புகப் பெறுவீர் -துயரில்லா வீடு-
சம்சாரத்தில் போகங்கள் போலே அஸ்திரமாய் இருக்கை யன்றிக்கே – நித்தியமாய் –அவிசதமாய் இருக்கை யன்றிக்கே அத்யந்தம் ஸ்புடமாய்-
துக்க மிஸ்ரமாய் இருக்கை யன்றிக்கே ஸூககைதாநமாய்-மங்களமாய் -உத்தமமாய்- அபரிச்சின்னமாய் –
இப்படி இருக்கிற முக்த பிராப்ய போகத்தை தமக்கும் தம் பரிகரத்துக்கும் அவன் கொடுப்பானாக பாரிக்கிற படியைக் கண்டு
சம்சாரிகளையும் ஈத்ருச போகிகளாம் படி பண்ண வேணும் என்று பார்த்து அவர்களைக் குறித்து ஹிதம் அருளிச் செய்ய
அது கேட்ட பின்பும் அவர்கள் பழைய நிலையில் நின்றும் குலையாதே மால்யமான் தொடக்கமானார் ராவணனுக்கு சொன்ன ஹிதம் போலே
அவர்கள் இத்தை அநாதரித்து இருக்க
மால்யமான் -மாதா மகன் -காலச்ய வசப்பட்டு ஏற்க வில்லை -மாரீசன் –பலியோ நமுசியோ ராமர் முடிப்பார் -வீரன் சூரன் -மஹா தேஜஸ்வி –
விபீஷணன் -துஸ் ஸ்வப்னம் -கருடன் பாம்பை பிடித்தால் போலே -சீதையை ஒப்படைக்கா விடில் கோரம் –குருஷ்வ மம வசனம் -குல பாம்சினி
நாம் நம்முடைய அனுபவத்தை விட்டு இவர்களோடு துவக்குண்கிற இதுக்கு பிரயோஜனம் என் என்று-
வழி பறிக்கும் நிலத்தில் தம் கைப்பொருள் கொண்டு தப்பினார் ஹ்ருஷ்டராமா போலே –நாம் முந்துற முன்னம் இவர்களைப் போலே ஆகாது
ஒழியப் பெற்றோம் இறே-என்று ஸ்வ லாபத்தை அனுசந்தித்து இனியராகிறார் –
மேவும் தன்மையமாக்கினான் -2–7–4-என்று ஸ்வ சம்பந்தி ஜனங்களுக்கும் பிராப்தி பர்யந்த பல ரூப மோக்ஷ பிரதனாய்க கொண்டு ஈஸ்வரன் நிற்கிற நிலையையும் –
அதுக்கு அடியான பரத்வத்தையும் அனுசந்தித்து -இத்தை சம்சாரிகள் இழக்க ஒண்ணாது -என்று உபதேசிப்பாராய்க கோலி –
1–அவனுடைய சர்வ நிர்வாஹகத்வத்தையும் –2-சம்சார நிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷ பிரதத்வத்தையும் —
3—அதுக்கு உறுப்பான சேஷடித்த வை லக்ஷண்யத்தையும் –4-இந்த வியாபார பிரகாசித்தமான ஸுலப்யாதி குணங்கள் நித்ய அனுபாவ்யம் என்னும் இடத்தையும் –
5–அந்த குண ப்ரகாசகமான அவதார பாஹுள்யத்தையும் –6-அவதார திசையிலும் பரத்வம் அதி பிரசித்தம் என்னும் இடத்தையும் –
7–அவ தீர்ணனானவன் ரக்ஷண வ்யாமோஹத்தால் பண்ணும் வியாபாரம் அநேகம் என்னும் இடத்தையும் –
8-அவதீர்ணனனுடைய பரத்வ உபயுக்தமான அதிசயித ஆகாரங்கள் அறிய வல்லார் இல்லை என்னும் இடத்தையும்
9– அவனுடைய ஆஸ்ரித ஸுலப்யம் அபரிச்சின்னம் என்னும் இடத்தையும் -10-ஏவம் விதனைத் தாம் அனுபவிக்கப் பெற்றமையும் –
அருளிச் செய்து -உபதேச அந் நிவ்ருத்தராய் -ஸ்வ லாபத்தோடே தலைக் கட்டுகிறார் –
இதில் சொல்லுகிற பரத்வம் -முதல் திருவாய் மொழி போலே ஸ்வரூப கதமாய் அன்றியே –
திண்ணன் வீட்டிலே-2–2- போலே -மனுஷ்யத்தவே பரத்வமும் அன்றியே
மோக்ஷ பிரதத்வ உபயுக்தமாய் இருக்கிறது –
முதல் பாட்டில் இத் திருவாய் மொழியில் பரக்கச் சொல்லுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்யா நின்று கொண்டு
சம்சாரம் ஆகிற இக்கடலைக் கடக்க வேணும் என்று இருப்பவர்களுக்குக் கடத்திக் கொடுக்கும் என்றார்
இரண்டாம் பாட்டில் -அவன் வேணுமோ அவனோட்டை சம்பந்தமே கடத்தும் என்றார்
மூன்றாம் பாட்டில் அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் பிரத்யஷிக்கலாம் என்றார்
நாலாம் பாட்டில் –அந்தமில் பேரின்பத்தைப் பெற வேணும் என்று இருப்பார் அவனை ஆஸ்ரயிங்கோள் என்றார்
அஞ்சாம் பாட்டில் -கீழ் இணைவனாம் எப்பொருட்கும் என்றத்தை விவரித்தார்
ஆறாம் பாட்டில் இவ் உத்கர்ஷம் எல்லாம் அவனுக்கு உண்டோ என்ன நாம் ஆராய வேண்டாதபடி அர்ஜுனன் பண்டே தெரிந்து அறுதியிட்டான் என்றார்
ஏழாம் பாட்டில் -ஒருவன் அநுவர்த்தனம் கொண்டு அறிய வேணுமோ –அவனுக்கு இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாய் அன்றோ ஜகத்து இருக்கிறது என்றார்
எட்டாம் பாட்டில் வ்யாப்தி தொடக்கமான அவனுடைய அபதானங்கள் ஒருவரால் பரிச்சேதிக்க முடியாது என்றார்-
ஒன்பதாம் பாட்டில் –அவனுடைய வ்யாப்தியை இசையாதார் ஹிரண்யன் பட்டது படுவர் -என்றார்
பத்தாம் பாட்டில் –ஏவம் பூதனானவனை நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –
———
2-9-எம்மா வீடு பிரவேசம் –
கீழில் திருவாய் மொழியில் –நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர் -என்று இவர் தாமும் அருளிச் செய்து
சர்வேஸ்வரனும் இவருக்கும் இவர் பரிகரத்துக்கும் மோஷம் கொடுப்பானாகப் பாரிக்க -அத்தைக் கண்டு –
தேவரீர் எனக்கு மோஷம் தந்து அருளப் பார்த்ததாகில் இங்கனே தரப் பார்ப்பது –
அதாகிறது -உனக்கு மோஷம் கொள் -என்று எனக்காகத் தருகை அன்றிக்கே –நமக்காகக் கொள் -என்று தேவர்க்கே
யாம் படியாகத் தர வேணும் –என்று -தாம் நினைத்து இருந்தபடியை அவன் திரு முன்பே பிரார்த்திக்கிறார் –
கைங்கர்யம் பண்ணியே பொழுது போக்க வேண்டும் –கைங்கர்யம் தூண்டவே அருளிச் செயல்களும் அவற்றுக்கு வியாக்யானங்களும் –
இந்த புருஷார்த்த நிர்ணயம் இதில் -அத்தை பிரார்த்தித்தது ஒழிவில் காலம் எல்லாம் -3-3–வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்றாரே –மேல் –
ஸ்ரீ ராம சிகாமணி -நம்பிள்ளைக்கு- தொட்ட இடம் எல்லாம் ஸ்ரீ ராம திருஷ்டாந்தம் கொண்டு விளக்குவாறே –
தொழுது எழு-என்று தாம் நினைத்து இருந்து –தொழுது எழுகையே-அவன் திரு முன்பே அருளிச் செய்கிறார் –
ஸ்வதந்த்ரம் பாரதந்த்ரம் / ச்வார்த்ததா -பரார்த்ததா /அசித்வத் பரதந்த்ரம் -பிறருக்காகவே இருக்கும் -புஷ்பம் சந்தனம்-போலே
–அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -நின் செம்மா பாதம் -தலை மேல் ஒல்லை -என்றே முன் நிலையாக அருளிச் செய்கிறார் –
ஆனால் இது தான் பின்னை இத்தனை நாள் நிஷ்கர்ஷியாது ஒழிவான் என்-என்னில் -அவன் மேன்மேல் என குண அனுபவத்தை
பண்ணுவிக்கையாலே-அதுக்குக் காலம் போந்தது அத்தனை அல்லது இது நிஷ்கர்ஷிக்க அவகாசம் பெற்றிலர் –
ஆனாலும் இப்போது குண அனுபவமே அன்றோ பண்ணுகிறது என்னில் -அது அப்படியே
அவன் தம் பக்கலிலே மேன்மேல் எனப் பண்ணுகிற விருப்பத்தைக் கண்டு -இவனுக்கு இந்த வ்யாமோஹம் முடிய அநுவர்த்திப்பது ஒன்றாய் இருந்தது
நாம் இவனை மீட்டாகிலும் நம்முடைய பிராப்யத்தை நிஷ்கர்ஷிப்போம் என்று பார்த்து
நீ இங்கனே நில் -என்று அவனை நிறுத்தி வைத்து ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிறார் –இரண்டாவது சங்கதி –
எம்பார் -இத் திருவாய்மொழி அருளிச் செய்யப் புக்கால் இருந்தவர்களை யார் என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து
குஹ்யமாகவும் அருளிச் செய்வது –
ப்ராப்யமாகில் இப்படி அன்றோ இருப்பது இவர் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் -என்னில்
சர்வேஸ்வரன் இவ்வாத்மாவுக்கு சேஷியாய்-இவனும் சேஷ பூதனுமாய் -அவனுடைய உபாய பாவமும் நித்தியமாய் இருக்கச் செய்தே
யன்றோ இவனுக்கு இன்று ச்வீகாரம் வேண்டுகிறது –சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக –
அப்படியே அவன் ஸ்வ தந்த்ரன் ஆகையாலே நினைத்த போது நினைத்த படி கொள்வான் ஒருவன் ஆகையால் பிராப்தி சமயத்தில்
அனுபவம் இருக்கும் படியையும் நிஷ்கர்ஷித்துப் பெற வேணும் இறே-
உத்தரார்த்தத்திலும் இவ்வர்த்தத்தை சொல்லா நின்றது இறே
-த்வயம் தன்னில் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் என்னில் பூர்வார்த்தத்தில் சொன்ன சாதனம் சர்வ பல ப்ரதமாகையாலே
-பிரயோஜனாந்த பரராய் சரணம் புகுவாருக்கும் அவற்றைக் கொடுத்து விடுவான் ஒருவன் இறே சர்வேஸ்வரன்
இது தன்னில் ஓடுகிறது என் என்னில்-1- -முக்தனாய் நிரதிசய ஸூக அனுபவத்தை பண்ணவுமாம் -2–ஆத்மா பிராப்தியைப் பெறவுமாம் –
3–ஆத்மா வி நாசமே யாகவுமாம் -4– நரக அனுபவத்தை பண்ணவுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை-(இவை எல்லாம் அதிசய யுக்தி -பிராப்யத்தில் நோக்கு )
–உனக்காய் வரும் அன்று இவை இத்தனையும் வரவுமாம் -எனக்காய் வருமன்று இவை இத்தனையும் வேண்டா–
ஆன பின்பு —தேவருக்கு உறுப்பாம் இதுவே எனக்கு வடிவாம் படி பண்ணி அருள வேணும்–என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார் –
சேஷத்வ பலம் -ஸூ பிரயோஜன நிவ்ருத்தி/-பாரதந்த்ர பலம் -ஸூ பிரயத்ன நிவ்ருத்தி –
இப்படிப் பட்ட பரிமாற்றம் தான் லோகத்தில் பரிமாறுகிறது ஓன்று அல்ல -17 லஷம் ஆண்டு களுக்கு முன்பே —
இவ்வாழ்வார் பக்கலிலே காணுதல் -இராமாயண புருஷர்களில் ஸ்ரீ பரத ஆழ்வான்-இளைய பெருமாள்
இவர்கள் பக்கலிலே காணுதல் செய்யும் அத்தனை –
பகவத் ஏக பாரதந்த்ர தயா -சேஷி க்கு அத்யந்த பிரிய -கைங்கர்ய கரணம் மாத்ரம் -ஸ்வார்த்த கர்த்ருத்வ-போக்த்ருத்வ -ரஹித -பாரதந்த்ர்யா அனுகுண குணம் -இப்படிப் பட்ட பரிமாற்றம்-
கைகேயி ராஜன் -என்ற சொல் பொறுக்க மாட்டாமே திரளிலே வந்து கூப்பிட்டான் இறே
தஸ் ஸ்ருத்வா—விலலாப சபா மத்யே -ஒரு திரளாக இருந்து என்னுடைய சேஷத்வத்தை அபஹரிப்பதே -திருட்டுக் கூட்டமாக இருந்து –
தஸ்யபிர் முஷி தே நேவா யுகத மாக் ரந்திதம் ப்ருசம் -என்னும்படி இழந்த வஸ்துவுக்கு தக்கபடியாய் இருக்கும் இறே கூப்பீடும்-
பெருமாளையும் பாரதந்த்ர்யத்தையும் அன்றோ இழந்தான் –
ஜ கர்ஹே ச -சந்த்யாவந்தனத்துக்கு பிற்பாடரை சிஷ்ட கர்ஹை பண்ணுவாரைப் போலே கர்ஹித்தான்
புரோஹிதம் -அழகியதாக இக்குடிக்கு முன்னாடி ஹிதம் பார்த்தாய் –-புரஹா ஹிதம் பஸ்யதி புரோஹிதம் –
சபா மத்யே புரோஹிதம் ஜ கர் ஹே -நியமாதி க்ரமம் ரஹசி போதயேத்-என்கிற நிலையும் பார்த்திலன் –
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -ஒருவனுக்கு இரண்டு வஸ்து சேஷமானால் ஒன்றை ஓன்று நிர்வஹிக்குமோ –
ஆனால் ராஜ்ஜியம் தான் என்னை ஆண்டாலோ-தர்மம் வக்தும் இஹ அர்ஹசி–பெருமாள் காடேறப் போனார் -சக்கரவர்த்தி துஞ்சினான்
-நாடு அராஜமாகக் கிடக்க ஒண்ணாது -நின்றாரில் பிரதானர் தலையிலே முடியை வைக்க வேணும் என்று பார்த்தாய் அத்தனை போக்கி
இதுக்கு விஷய பூதனான என்னைப் பார்த்து வார்த்தை சொல்லிற்று இல்லை
கதம் தசரதாஜ்ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரக –அவர் பொகட்டுப் போன ராஜ்யத்தை அபஹரித்து அவரைப் பிரித்து
அனந்தரத்திலே முடிந்தவன் வயிற்றிலே பிறந்தேனாம் படி எங்கனே நான் –
பெருமாள் உள்ளப்படி தான் இருப்பதாக -ஆளுவதோ மீளுவதோ எதுவாக இருந்தாலும் -இதுவே ஸ்ரீ பரத ஆழ்வான் நிலை
அசித்வத் பாரதந்த்ரம் படி ராஜ்யமும் என்னை ஆளலாமே –
ஸ்வரூபம் பார்க்க வேண்டாமோ -ராஜ்யம் அபஹரிப்பவன் சக்கரவர்த்தி பிள்ளை யாவாரோ –
இளைய பெருமாள் நில் என்ன குருஷ்வ என்றார் இறே –
அன்வயத்தாலே தரிக்கக் கடவ வஸ்துவை வ்யதிரேகத்து நிற்கச் சொல்லுகையாவது அழிக்கை இறே
குரு என்னாதே குருஷ்வ என்றார் இறே —ஆத்மைநிவ பதம் –
ஆருடைய பிரயோஜனத்துக்கு ஆர் தான் இருக்கிறார்
உம்முடைய இழவுக்கு நீர் பதறாது இருக்கிறது என்
அநு சரம் பண்ணும் பிரகாரத்தை விதிக்கிறார்
நீர் தாம் நில் என்று அருளிச் செய்தது -நான் நிற்கச் சொல்லுகைக்கு யோக்யனாம் படி இருக்கை இறே
உம்முடைய சாயையை நில் -என்று சொல்லிற்று இலீரே -தனி சைதன்யம் -ஜீவன் -என்று நினைத்தது உம் குற்றம் –
சாயையோபாதி உம்மைப் பின் செல்வேனாக வேணும் –
நீரும் நிழலும் வாய்ந்து இருப்பதொரு பிரதேசத்தைப் பார்த்து பர்ண சாலையை அமையும் -என்ன நம் தலையில்
ஸ்வா தந்த்ர்யத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கை விட்டார் -என்று வேறு பட்டார்
ஏவ முக்தஸ்து ராமேண-இதுக்கு முன்பு எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம் -இவர் தாமே நம் ஸ்வரூபம்
அழியக் கார்யம் பார்த்தார் -இனி நம் ஸ்வரூபம் என்று ஓன்று உண்டோ என்று வேறுபட்டார் –
முன் நம் குறையாலே இழந்தோம் -இப்பொழுது இவராலே இழக்கிறோமே -ஸ்வரூபம் அழிக்கப் பார்க்கிறார் –
லஷ்மண -பாரதந்த்ர்யத்தை நிரூபகமாக உடையவர் -லஷ்மி சம்பன்ன –அடையாளம் கொண்டவர் -பாரதந்த்ர்யமே நிரூபகம்
சமய தாஞ்ஜலி-நாம் நம் ஸ்வரூபத்தை அழித்துக் கொண்ட வன்று நோக்குகை யன்றிக்கே சேஷி தானே அழித்த வன்றும்
ஸ்வரூபத்தை தர வாயிற்று அஞ்சலி -சர்வ அபிமத சாதனம் ஆயிற்று
லீதா சமஷாம்-பண்ணின அஞ்சலிக்கு அந்ய பரதை பாவிக்க ஒண்ணாதவன் சந்நிதியிலே
காகுத்சம் -பிராட்டி சந்நிதியும் மிகையாம் படியான குடிப்பிறப்பை உடையவரை –
ககுஸ்த வம்சே விமுகே -கை கூப்பி வந்தால் ஏமாந்து போகமாட்டானே –
இதம் வசனம் பிரவீத் -இவ்வார்த்தையை சொல்லுவானே என்று கொண்டாடுகிறார் ருஷி
பரவா நஸ்மி -உம்முடைய அஸ்மிதை போலே அல்ல காணும் என்னுடைய அஸ்மிதை
தேவரீர் உடையவனாக உள்ளேன் நான் -உம்முடைய-அஸ்மிதை -ஸ்வா தந்த்ர்யம் வேற -நான் ஸ்வ தந்த்ரன் அல்லேன் என்று சொல்லும் ஸ்வ தாந்த்ரம் உண்டே –
இப்படிக்கொத்த பார தந்த்ர்யத்தை யாயிற்று இவர் ஆசைப்படுகிறது-
இது தான் ஒருவர் அபேஷிக்குமதுவும் அல்ல – அபேஷிப்பார் இல்லாமையாலே நாம் கொடுத்துப் போருமதுவும் அல்ல -17 லஷம் வருஷமாக —
அவ்வழி புல் எழுந்து போயிற்று காணும் -என்று அவன் அநாதரித்து இருக்க –
புருஷன் அர்த்திக்க வருமது இறே புருஷார்த்தம் ஆவது
இப் பேறு இத்தனையும் நாம் பெற்றேனாக வேணும் என்று இவர் அபேஷிக்க-அவனும் தலை துலுக்கப் பெற்றாராய்த் தலைக் கட்டுகிறார்
வகுள பூஷண பாஸ்கரர் உதயம் ஆன பொழுதே இத்தை மீண்டும் கேட்கப் பெற்றான் –
ஒன்பதாம் திருவாயமொழியிலே -ஈசுவரனுடைய மோக்ஷ பிரதத்வத்தை அனுபவித்தவர் -அந்த மோக்ஷ பிரகாரங்கள்
எல்லாவற்றுக்கும் தாத்பர்ய பூமியாவது-பகவத் பாரதந்தர்யமே என்று நிஷ்கர்ஷித்து –
1–அவன் திருவடிகளோட்டை சம்பந்தமே உத்தேச்யம் என்னும் இடத்தையும் –
2–தத் விஷய ஞானத்தில் அபேக்ஷையையும்
3–ஞான அனுரூபமான ஸ்துத் அனுபவத்தில் ஸ்ரத்தையையும்
-4-அனுபாவ்யம் ததேக பாரதந்தர்யம் என்னும் இடத்தையும்
5–அதனுடைய அவிஸ்மரணம் ஆனந்த ஜனகம் என்னும் இடத்தையும்
6—அந்த ஸ்ம்ருதி காரிதமான பாஹ்ய அனுபவ அபேக்ஷையையும்
7—நிரந்தரமான ஆந்திர அனுபவம் அதிருப்தி கரம் என்னும் இடத்தையும்
8—அல்ப கால அனுபவத்திலும் அதிசயித்த அபி நிவேசத்தையும்
9—அனுபாவ்ய விஷயத்தோடு உண்டான அபிருத்தாக் சித்தி சம்பந்தத்தையும்
10—அந்த சம்பந்தத்தைக் குலையாமையில் உண்டான அபேக்ஷையையும்
அருளிச் செய்து -மோக்ஷ பிரதனான ஈஸ்வரன் சந்நிதியில் மோக்ஷ தாத்பர்யத்தை நிஷ்கர்ஷித்து அபேக்ஷித்து அருளுகிறார் –
முதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்
இரண்டாம் பாட்டில் மானசமான பேற்றை அபேஷித்தார்
மூன்றாம் பாட்டில் வாசிகமான பேற்றை அபேஷித்தார்
நாலாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமான பிராப்யத்தை நிஷ்கர்ஷித்தார்
அஞ்சாம் பாட்டில் நீர் ஆராக இருந்து இப் பேற்றை அபேஷித்தீர் என்ன -நான் ஆராயினும் ஆயிடுக –உன்னை அனுபவித்து மகிழும்படி பண்ணி யருள வேணும் என்றார்
ஆறாம் பாட்டில் த்ரிவித கரணங்களாலும் உன்னை ப்ரீதி புரஸ் சரமாக அனுபவிக்கும் படி பண்ணி யருள வேணும் என்றார் –
ஏழாம் பாட்டில் அப்படிச் சடக்கென செய்யாமையாலே இன்னாதானார்
எட்டாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமாக நீ ஷண காலம் என்னோடு அனுபவிக்கப் பெறில் பின்புள்ள காலம் எல்லாம் வேண்டேன் -என்றார்
ஒன்பதாம் பாட்டில் உன்னை அனுபவிக்க இட்டுப் பிறந்து வைத்து அது கிடையாதபடி நானே அனர்த்தத்தை சூழ்த்துக் கொண்டேன் -என்றார்
பத்தாம் பாட்டில் எனக்கு ஒரு நாளும் ஜ்ஞான விசேஷத்தைப் பண்ணித் தந்தோம் இறே என்று என்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –
——————————
2-10-கிளரொளி பிரவேசம்
கீழ் எம்மா வீட்டில் நிஷ்கர்ஷித்த ப்ராப்யம் –தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -2-9-4-பெறுகைக்கு திருமலையை –
திருமால் இரும் சோலையை -ஆஸ்ரயிக்கிறார்—சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் –2-10-5-என்று ஆளவந்தார் என்று
அருளிச் செய்தாராக திருமாலை யாண்டான் பணிக்கும் படி –
எம்பெருமானார் -அங்கன் அல்ல -இவர் பாட்டுத் தோறும் –ஒல்லை 2-9-1–ஒல்லை -2-9-10-என்றும் 2-9-2–காலக் கழிவு செய்யேல்
-என்றும் த்வரிக்கப் புக்கவாறே –நமக்கும் அறிவித்து நாமும் இவர் கார்யம் செய்வதாக அறுதி இட்டால் -சரீர சம நந்தரம் பேறு தப்பாது –
என்று அறுதி இட்டு இருக்கலாய் இருக்க இவர் இப்படி த்வரிக்கிறது -இச் சரீரத்தோடு நாம் அடிமை கொள்ள வேணும் -என்று
போலே இருந்தது -இனி இவருக்கு நாம் நினைத்தபடி பரிமாறுகைக்கு ஏகாந்தமான தேசம் ஏதோ என்று
ஞாலத்தூடே நடந்து உழக்கி பார்த்து -10-7-4-வரச் செய்தே -இவ்விடம் சால ஏகாந்த ஸ்தலமாய்
இருந்தது என்று – திருமலையிலே சந்நிதி பண்ணி யருளி -நாம் உமக்கு முகம் தருகைக்காக வந்து நிற்கிறோம் –நீர் இங்கே வந்து
நினைத்த வகைகளில் எல்லாம் பரிமாறி அனுபவியும் என்று தெற்குத் திருமலையில் நிற்கும் நிலையை காட்டிக் கொடுக்க இவரும்
அத்தை அனுசந்தித்து பகவான் பிராப்யனானால் அவன் வர்த்திக்கும் தேசமும் பிராப்யமாகக் கடவது இறே
அத்தாலே திருமலையோடு-
அத்தோடு சேர்ந்த அயன் மலையோடு
புற மலையோடு
திருப்பதியோடு
போம் வழியோடு
போகக் கடவோம் என்று துணியும் துணிவோடு வாசியற பிராப்ய அந்தர்கதமாய் அனுபவித்து இனியராகிறார் –என்று -(அதனாலே பர உபதேசத்தில் இழிகிறார் )
தெற்குத் திரு மலை -சுந்தர தோளுடையான்-முதல் திவ்ய தேசம் இதில் மங்களா சாசனம் -மேலே வடக்குத் திருமலை மங்களா சாசனம்- (மூன்றாம் பத்தில் -தாம் அவதரித்த திருக் குருகூர் அடுத்த பத்தில் -இப்படி ஒவ் ஒன்றையே அனுபவம் 9
பிராபகமாக பற்றுகிறார் -திருமாலை ஆண்டான் நிர்வாகம் –கிறி-பதத்தில் நோக்கு
பிராப்யமாக பற்றுகிறார் -எம்பெருமானார் நிர்வாகம் –பயன் -பதத்தில் நோக்கு
ஸுவ அனுபவம் –ஐந்தும் பரோபதேசம் ஐந்துமாக அருளிச் செய்கிறார் –
முதல் இரண்டு பத்துக்கள் –பர ஸ்வரூபம் -என்றார் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்-அர்த்த பஞ்சகம் பரமாகவே பத்து பத்தும் –
அதில் 1-1-பர ரூபம் –வ்யூஹ –அஞ்சிறைய தூது -1-10- பெரு நிலம் கடந்த நல்லடிப்போது –-ஜகதாதிஜா -விஷ்ணு –திண்ணன் வீடு -விபவம்
நெஞ்சின் உள்ளே புகுந்து –என்னுள் மன்னி -தீ மனம் கெடுத்தாய் -அந்தர்யாமித்வம் –
இதில் அர்ச்சை -2-10-சொல்லி பர ஸ்வரூபம் நிகமிக்கிறார் –(ஆக பஞ்ச பிரகாரங்களும் அருளிச் செய்கிறார் )
கீழ் புருஷார்த்த தயா நீர்நீத்தமான அத்யந்த பாரதந்தர்ய யுக்தமாய் இருந்துள்ள கைங்கர்யத்தை இவர் அபேக்ஷித்த படியே -கால விளம்பம் பிறவாதபடி
இங்கே கொடுத்து அருளுகைக்காகத் தெற்கு திருமலையில் எழுந்து அருளி நிற்கிற படியை பிரகாசிப்பிக்கக் கண்டு அத்யந்த ஹ்ருஷ்டராய் –
1 -அழகருடைய ஓவ்ஜ்ஜ்வல்யத்தையும்
2–ஆபி ரூப்யத்தையும்
3–ஒவ்தார்யத்தையும்
4–ரக்ஷகத்வத்தையும்
5–ரக்ஷண உபகரண வத்தையும்
6–ஆஸ்ரித வ்யாமோஹத்தையும்
7–ஆபத் ஸகத்வத்தையும்
8–ஆஸ்ரித அனுகூலதையையும்
–விரோதி நிரசன சீலத்தையையும்
10–ஞான பிரதத்வத்தையும் —
அனுசந்தித்து -ஏவம் விதனான ப்ராப்ய பூதன் தானும் விரும்பும் படியான திருமலையே பிராப்யம் -என்று நிஷ்கர்ஷித்து
முதலிட்டு ஐந்து பாட்டாலே திரு உள்ளத்தையும்
மேலிட்டு ஐந்து பாட்டாலே லௌகிகரையும் குறித்து
அவன் போக்யதையை உபதேசித்து முடித்து அருளுகிறார் –
முதல் பாட்டில் -கடுகத் திருமலை யாழ்வாரை ஆஸ்ரயிங்கோள் என்றார்
இரண்டாம் பாட்டில் –திருமலையொடு சம்பந்தித்த ஸ்ரீயபதியை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
மூன்றாம் பாட்டில் அத்தோடு சேர்ந்த அயன் மலை அமையும் என்றார்
நாலாம் பாட்டில் திரி தந்தாகிலும் என்கிறபடி திரியவும் திருமலையை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
அஞ்சாம் பாட்டில் அத்தோடு சேர்த்த புற மலையை ஆஸ்ரயிங்கோள் என்றார்
ஆறாம் பாட்டில் திருமலைக்குப் போம் மார்க்க சிந்தை பண்ண அமையும் என்கிறார்
ஏழாம் பாட்டில் அவ்வழி யோடு சேர்ந்த திருமலையை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
எட்டாம் பாட்டில் நித்ய ஸூரிகளுக்கும் கூட ப்ராப்யம் ஆகையாலே திருமலையே பரம பிராப்யம் என்கிறார்
ஒன்பதாம் பாட்டில் திரு மலையைத் தொழக் கடவோம் என்ற துணிவே வேண்டுவது என்றார்
பத்தாம் பாட்டில் எல்லாப் படியாலும் திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயிக்கையே புருஷார்த்தம் என்று தலைக் கட்டினார் ‘
நிகமத்தில் இது கற்றாருக்கு பலம் அருளி தலைக் கட்டுகிறார் –
முதல் திருவாய் மொழியாலே மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை –என்று விலஷண விஷயம் ஆகையாலே
பிரிந்தார் கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் என்றார்
இரண்டாம் திருவாய் மொழியில் அவ்வோபாதி கூடினாலும் மறப்பிக்கும் என்றார்
மூன்றாம் திருவாய் மொழியாலே கூடின விஷயம் தானே ஸூக ரூபமாய் இருக்கும் என்றார்
நாலாம் திருவாய் மொழியாலே அவ்விஷயத்துக்கு தேசிகரோடே அனுபவிக்கப் பெறாமையாலே மோஹாங்கதரானார்
அஞ்சாம் திருவாய் மொழியிலே தாம் ஆசைப்பட்ட படியே வந்து கலந்தபடி சொன்னார்
ஆறாம் திருவாய் மொழியாலே தம் இழவுக்கும் அவன் அதி சங்கை பண்ணும் என்றார்
ஏழாம் திருவாய் மொழியாலே தம்முடைய சம்பந்தி சம்பந்திகளையும் விஷயீகரித்தபடி சொன்னார்
எட்டாம் திருவாய் மொழியிலே அவனுடைய மோஷ பிரதத்வத்தை அருளிச் செய்தார்
ஒன்பதாம் திருவாய் மொழியாலே பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினார்
பத்தாம் திருவாய் மொழியாலே நிஷ்கர்ஷித்த பிராப்யத்தை லபிக்கைக்கு திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
—————————–
திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
பூர்வ அனுபூத முரவைரி குண அபி வ்ருத்த
தத் பாஹ்ய சங்க மருசிஸ் தத் அலாப கிந்நக
சர்வா நபி ஸூ சம துக்கின ஏவ பாவா
நாஹக த்வீதிய சதகஸ்ய சடாரிர் ஆத்யே -(-2-1-)
பூர்வ அனுபூத -முன்னால் அனுபவித்த
முரவைரி குண அபி வ்ருத்த -பாஹ்ய சம்ச்லேஷம் -ஆசை கிளற
பாஹ்ய சங்கம ருசி (-1-10-) –தத் அலாப கின்னக -உடைந்து
சர்வா நபி -அனைத்தையும் –ஸூ சம துக்கின ஏவ பாவானாக
சடாரி -த்வீதிய சதகத்ய- ஆத்யே -(-2-1-)
ஸம்ஸ் லிஷ்ய துக்க சமநாத் முதித பிரசங்காத்
தந் மூலமப் ஜநயநஸ்ய மஹேஸ் வரத்வம்
ஆஹாந் வயாதி தாதோ அபி மநுஷ்ய பாவே
பவ் ராணி கோத்த நயதஸ் சடஜித் த்விதீயே–2-2-
ஸம்ஸ் லிஷ்ய —1-10-நம்பியை சேராத துக்கம்-
துக்க சமநாத் –2-1-வாயும் திரைஉகளும் -சமாஹிதர் ஆனாரே
முதித –ஆனந்தப்பட்டு
பிரசங்காத்
தந் மூலமப் ஜநயநஸ்ய மஹேஸ் வரத்வம் –சர்வேஸ்வரவேஸ்வர-
ஆஹாந் வயாதி தாதோ அபி மநுஷ்ய பாவே
பவ் ராணி கோத்த நயதஸ் -விபவத்வதில் -இதிகாச புராண பிரக்ரியை-
சடஜித் த்விதீயே
அந்தஸ்ஸ்த ஸர்வ ரஸ அம்புஜ லோசநஸ்ய
ஸம்யோக ரூபம் அவகாஹ்ய ஸூக அம்ருதாப்திம்
தத் தேஸிக ப்ரதம ஸூரி கணை கதா ஸ்யாத்
ஸங்கோ மமேத்ய கதயன் ஸ முனிஸ் த்ருதீயே —2-3-
அந்தஸ்ஸ்த ஸர்வ ரஸம் -தன்னுள்ளே
ஸம்யோக ரூபம் அவகாஹ்ய -முழுசி தழுவி -தன்னுள்ளே
ஸூக அம்ருதாப்திம் -கடல் படா அம்ருதம் -கலவி என்னும் அம்ருதக் கடலில் பிறந்த அனுபவம் –
தத் ப்ரார்த்திதா நதி கமேந ஸமுத்தி தார்த்தி
அக்ரே ஹரே பர முகேந யதா விதேயம்
ஆர்த்தேர் நிவேதநம் அபா கரணம் அர்த்த நஞ்ச
மூர்ச்சாம் ததா முனிரகாந் மஹதீம் சதுர்த்தே —2-4-
பர முகேந -மாற்றார் வாயால் -திருத்தாயார் பாசுரமாக
யதா விதேயம் –மடப்பம் மிக்க தலைமகள்
மஹதீம் மூர்ச்சாம்-பெரிய மயக்கம்
அபா கரணம் அர்த்த நஞ்ச -என் கொல் நுமது திரு உள்ளம் -பிரார்த்தனை –
ஆகம்ய ஸூரி ஸஹிதஸ் சம பாக்ருத ஆர்த்தி
அத் உஜ்வலன் மரகத அசல சன்னிப அங்க
ஈச பிரபுல்ல கமல அஷி கர அங்க்ரி ராஸீத்
தத் பஞ்சமே ஸ கதயன் முநிர் ஆனந்த –15-2-5-
சம பாக்ருத ஆர்த்தி -அபாக்ருதம் பண்ணி-ஆர்த்தியை போக்கி
நீசம் து மாம் அதி கதோ யமதி ஸ்வ ஸூ க்த்யா
ஜாதாம் ஹரேஸ் ஸுவ விரஹாக மனே அதி சங்காம்
ஷஷ்டே நிரஸ்ய த்ருட சங்க கிரா ஸடாரி
ஆத்மான் வயிஷ் வபி தத் ஆதாரதோ அப்ய நந்தத் –16-2-6-
நீசம் து மாம் -தாழ்ந்தவன்
த்ருட சங்க கிரா –வாக்காலே சிக்கென பிடித்தேன்
தே கேசவ அபிமத தாம பஜந்த ஹந்த
யே மாமகா இதி வதன் நதி ஸப்தமம் ச
தஸ்ய ஸ்வரூப குண சேஷ்டித வாசி நாம
பூதன் விஷட் க முகரோ முமுதே முதீந்த்ர–17-2-7-
ஹந்த —என்ன ஆச்சர்யம்
யே மாமகாகா இதி வதன் —திருதராஷ்ட்ரன் மாமகாகா கூட உள்ளோர் அனைவரையும் தொலையப் பண்ணிற்று —
இவரது மாமகாகா இவர் சம்பந்த சம்பந்திகள் அனைவரையும் உஜ்ஜீவித்தது
அதி சப்தமம் -சக —ஏழாவது பதிகம் -21 தலைமறை என்றுமாம்
ஆத்மான் வயிஷ்வபி ஹரே பிரியதாம வேஷ்ய
ஸர்வாத்மானஸ் ஸ்வ ஜனயந் முனிர் அஷ்டமேன
மோஷ பிரதத்வம் உபதிஸ்ய ததாபி முக்யா
லாபாத் ஸூவ லாபம் அதிகம் பஹுமன்ய தேஸ்ம –-18–2-8-
மோஷ ஆதரம் ஸ்புடம் அவேஷ்ய முநிர் முகுந்தே
மோஷம் பிரதாதும் அஸத்ருஷ பலம் ப்ரவ்ருத்தே
ஆத்மேஷ்ட மஸ்ய பத கிங்கரத ஏக ரூபம்
மோஷாக்ய வஸ்து நவமே நிரணாயி தேந –19-2-9-
ஏதந் நிஜ அர்த்தி தம் இஹைவ ஹரி பிரதாதும்
ஆ ஸேதிவாந் வந மஹீத ரமித்யவேஷ்ய
பிராப்யம் தமேவ ச தத் அன்வயி நஞ்ச சர்வம்
ப்ரா சீகஸத் ஸ தசமே தசகே முநீந்த்ரர்–20-2-19-
————–————————————————————————————
திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்
நித்ராதிச் சேதகத்வாத்- அரதி ஜநநதோ-அஜஸ்ர சங்ஷோப கத்வான்
அந்வேஷ்டும் பிரேரகத்வாத் விலய விதரணாத் கார்யஸ் யதைந்யாதி கிருதத்வாத்
சிந்தா ஷோபாத் வி சம்ஜ்ஜீகரணத உப சம்ஷோஷணா வர்ண வர்ஜநாப்யாம்
த்ருஷ்டாஸ் வாதஸ்ய சௌரே ஷண விரஹத சாதுஸ் சஹத்வம் ஜகாத–2-1-
நித்ராதிச் சேதகத்வாத்- மடநாராய்!ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்– எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட் பட்டாயே?–2-1 -1—தன்னைப் பிரிந்து இருக்கிற பேர்களுக்கு நித்ராதி நிவாரகனாகையாலும்
அரதி ஜநநதோ-கூர் வாய அன்றிலே! சேட் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்-2-1-2–ஒருகாலும் தரியாதபடி ஸைதில்யத்தை உண்டாக்குகையாலும்
அஜஸ்ர சங்ஷோப கத்வாத் -நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி ஏங்குதியால்-2-1-3–சர்வ காலமும் ஷோபத்தை உண்டாக்குகையாலும்
அந்வேஷ்டும் பிரேரகத்வாத்-கடலும் மலையும் விசும்பும் துழாய் எம்போல் சுடர் கொள் இராப் பகல் துஞ்சாயால் -2-1-4-திவாராத்ரி விபாகமற
எல்லா தேசத்திலும் தன்னை அந்வேஷிக்கைக்கு பிரேரகனாகையாலும்
விலய விதரணாத்-தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற–2-1-5–முடியும் அவஸ்தையைப் பண்ணுகையாலும்
கார்யஸ் யதைந்யாதி கிருதத்வாத் –நாண் மதியே! நீ இந்நாள் மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்-2-1-6–கார்ஸ்யதைந் யாதிகளைப் பண்ணுகையாலும்
சிந்தா ஷோபாத்–தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு-2-1—மனசைக் கொண்டு போது போக்க ஒண்ணாதபடி அபஹரிக்கையாலும்
வி சம்ஜ்ஜீகரணத்–மாநீர்க் கழியே! போய் மருளுற்று இராப் பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்-2-1-8–ஒன்றும் தெரியாதபடி மதி மயக்கத்தை உண்டாக்குகையாலும்
உப சம்ஷோஷணா வர்ண வர்ஜநாப்யாம்–காதல் நோய் மெல்லாவி உள் உலர்த்த /மாவாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த–
மிருதுவாய் இருக்கிற ஆத்மாவைக் குருத்துவற்ற உலர்த்துகையாலும்-
மறந்து பிழைக்க ஒண்ணாத படி விரோதி நிரசனாதி வசீகரண சேஷ்டிதங்களை உடையனாகையாலும்
த்ருஷ்டாஸ் வாதஸ்ய சௌரே ஷண விரஹத சாதுஸ் சஹத்வம் ஜகாத –நிரதிசய போக்யனான எம்பெருமானுடைய விஸ்லேஷம்
ஒரு க்ஷண மாத்ரமும் துஸ் சஹம் என்று வாயும் திரையுகளும் என்கிற தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்கிறார் என்கிறார்
நித்ராதி சேதகத்வாத்-வெவ்வேற துன்பம் -தூங்க விடாமல் –
அ ரதி ஜனனதக-சைதில்யம்
அஜச்ர -சர்வ காலத்தில் –சங்ஷோபகத்வம் -கலக்கும் தன்மை
அந்வேஷ்டும்-தேடி போக- பிரேரகத்வாத் -காரார் திருமேனி காணும் அளவும
விலய விதரநாத் –
கார்ய கார்ஷியா தைன்யாதி கிருத்வாத் -கிரிசமாகும் தன்மை -மதி கலை-
சித்த -ஆஷே பாதயாத் -போது போக்க ஒண்ணாத படி
விசம்கீ காரண -அறிய முடியாத படி
உப சம்ஷோஷனம் ஆர்ணவ ஜந்மாப்யாம் — உலர்த்த -மெல்லாவி
த்ருஷ்ட்வா ஸ்வாத சௌரெ – ஷண விரஹ தசா –துச்சஹத்வம்–ஜகாதா- அருளிச் செய்தார்
திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –
பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் பவ துரித ஹரம் வாமநத்வே மஹாந்தம்
நாபீ பத்மோத்த விஸ்வம் தத் அநு குண த்ருஸம் கல்ப தல்பீ க்ருதாப்திம்
ஸூப்தம் ந்யக்ரோத பத்ரே ஜகத வநதியம் ரக்ஷணா யாவ தீர்ணம்
ருத்ராதி ஸ்துத்யலீலம் வ்யவ்ருணுத லலித உத்துங்க பாவேந நாதம் —2-2-
பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் -விபவ பரத்வம்
பவ துரித ஹரம்-சம்சார துக்க –சிவன் துக்கம் -போக்கி/பவன் –சிவன் சம்சாரம்
வாமனத்வே மஹாந்தம்
நாபி பத்மோத்ப விச்வம்
தத் அணுகுண த்ருசம் –திருக்கண் படைத்து -தகும் கோல தாமரைக் கண்ணன்
கல்ப தல்பீ –ஆழியை படுக்கை யாக
ஸூக்தம்–பத்ரே –ஆலிலை
ஜகத் அவதீர்ணம்
ரஷணாய அவதீர்ண்யம்
ருத்ராதி துத்ய லீலம்
விவ்ருணத லலிதோத்துங்க பாவேனே நாதம் –
1-பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் -திண்ணன் வீடு -இத்யாதி -நம் கண்ணன் கண் அல்லையோர் கண்ணே –
பூர்ணமான ஐஸ்வர்யத்தோடே கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும்
2-பவ துரித ஹரம் -மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
ஹரனுடைய துரிதத்தைப் தீர்த்ததும்
3-வாமநத்வே மஹாந்தம் –மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
வாமனனாக தான் த்ரி விக்ரமனாய் வளர்ந்து பூமிப் பரப்பு எல்லாம் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டும் –
4-நாபீ பத்மோத்த விஸ்வம் -தேவும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த
தேவாதி பதார்த்தங்களை உண்டாக்குகைக்காகத் திரு நாபீ கமலத்தில் திசை முகனை ஸ்ருஷ்டித்தும்
5-தத் அநு குண த்ருஸம் -தாக்கும் கோலத் தாமரைக் கண்ணன்
அதுக்குத் தகுதியாய்த் தாமரைப் பூ போலே இருக்கிற திருக்கண் மலரை யுடையனாயும்
6-கல்ப தல்பீ க்ருதாப்திம் -எம் ஆழி யம் பள்ளியாரே
பிரளய காலத்தில் பயோ நிதியைப் படுக்கையாகக் கொண்டும்
7-ஸூப்தம் ந்யக்ரோத பத்ரே -பள்ளி ஆலிலை ஏழுலகும் கொள்ளும் வள்ளல்
அப்போது அகடி கடநா சாமர்த்தியத்தாலே ஸப்த லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்துக் கொண்டு
ஆலிலை மேல் கண் வளர்ந்து அருளியதும்
8-ஜகத வநதியம் -மூ உலகும் தம்முள் இருத்திக் காக்கும்
த்ரி லோகீ ரக்ஷணத்தை எப்போதும் சிந்தித்தும்
9-ரக்ஷணா யாவ தீர்ணம்-காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
தத் அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும்
10-ருத்ராதி ஸ்துத்யலீலம் -வெள்ளேறன் நான்முகன் இத்யாதி
பிரம்மா ருத்ராதிகளாலே ஸ்துதிக்கப் படுமவையான சேஷ்டிதங்களை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமானை
வ்யவ்ருணுத லலித உத்துங்க பாவேந நாதம் –மநுஷ்ய ஸஜாதீயனாய் அவதரிக்கச் செய்தேயும் பரத்வம் தோற்ற இருக்கும்
என்று திண்ணன் வீடு -என்கிற ஸதகத்திலே ஆழ்வார் தெளிவித்து அருளினார் என்கிறார் –
——
சித்ரா ஸ்வாத அநு பூதிம் ப்ரிய முப க்ருதிபிர் தாஸ்ய சாரஸ்ய ஹேதும்
ஸ்வாத் மன்யா ஸார்ஹ க்ருத்யம் பஜத அம்ருத ரஸம் பக்த சித்த ஏக போக்யம்
ஸர்வாஷ ப்ரீண நார்ஹம் ஸபதி பஹு பல ஸ்நேஹம் ஆஸ்வாத்ய ஸீலம்
ஸப்யைஸ் ஸாத்யைஸ் ஸமேதம் நிர விஸத நகாஸ் லேஷ நிர்வேஸ மீஸம் -2-3-
சித்ரா ஸ்வாத அநு பூதிம் –தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஓத்தே
மது ரங்களான மது ஷீராதி பதார்த்தங்களுடைய ரஸத்தை யுடைத்தான அனுபவத்தை யுடையனுமாய்
விசித்ரமான -சேர்ந்த -அனுபவம்
ப்ரிய முப க்ருதிபிர் –பெற்ற அத்தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா
மாதாவும் பிதாவும் ஆச்சார்யனும் பண்ணும் உபகாரங்களை எல்லாம் தானே பண்ணி -அத்தாலே ஆஸ்ரிதருக்கு பிரியனுமாய்
மகா உபாகரகம்-
தாஸ்ய சாரஸ்ய ஹேதும் -அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து –
அறிவு நடையாடாத காலத்திலே தாஸ்ய ரஸத்தை உண்டாக்கினவனுமாய்
ஸ்வாத் மன்யா ஸார்ஹ க்ருத்யம் -எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவிக் கைம்மாறு எனதாவி தந்து ஒழிந்தேன்
ஆத்மாவை சமர்ப்பிக்கும் படிக்கு ஈடாக ஆத்மாவினுள்ளே கலந்து இருந்த மஹா உபகாரத்தை உடையனுமாய்
பஜத அம்ருத ரஸம் -என் கடற்படா அமுதே!
ஆஸ்ரிதற்கு அமிர்தம் போலே போக்யனுமாய்
பக்த சித்த ஏக போக்யம் -தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது-
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் தானே என்று இருக்குமவர்கள் மனஸ்ஸை விட்டுப் பிரிய மாட்டாது இருக்குமவனாய்
ஸர்வாஷ ப்ரீண நார்ஹம் -யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் கவையே!பன்னலார் பயிலும் பரனே!பவித்திரனே!
கன்னலே!அமுதே!கார்முகிலே!
சஷுஸ் ஸ்ரோத்யாதி ஸர்வ இந்த்ரிய ப்ரீணந யோக்யதை யுடையனுமாய்
ஸபதி பஹு பல ஸ்நேஹம் -குறிக் கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும்
கிறிக் கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு இத்யாதிகளில் படியே சிரகால ஸாத்ய தபோ த்யான ஸமாதி பலமான
பக்தி யோகத்தைத் தனக்கு அபிமதர் இடத்திலே ஜடதி
சடக்கென -அருளி
ஆஸ்வாத்ய ஸீலம் -பவித்திரன் சீர்ச் செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே
அத்யந்தம் போக்யத்வேன அநு பாவ்யங்களான கல்யாண குணங்களை யுடையனுமாய்
ஆழ்ந்து அனுபவிக்க-
ஸப்யைஸ் ஸாத்யைஸ் ஸமேதம் -மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே-சேர்ந்து உள்ளவன்-
ஸ்வ யஸஸ்ஸூக்களான நித்ய ஸூரிகளோடே ஸஹிதனாய் இருக்கிற எம்பெருமானை
நிர விஸதநக அஸ்லேஷ நிர்வேஸ மீஸம்
மதுரங்களான ஸர்வ பதார்த்தங்களின் உடைய ரஸத்தை யுடைத்தான போக்யதை யுடையனாக
ஊனில் வாழ் உயிரே!-தசகத்திலே ஆழ்வார் அனுபவித்தார் என்கிறார்
—————
ப்ரஹ்லா தார்த்தே ந்ருஸிம்ஹம்
ஷபித விபது ஷா வல்லபம்
ஷிப்த லங்கம்
ஷ்வேள ப்ரத்யர்த்தி கேதும்
ஸ்ரமஹர துளஸீ மாலிநம்
தைர்ய ஹேதும்
த்ராணே தத்தா வதாநம்
ஸ்வ ரிபு ஹத க்ருத ஆஸ் வாஸனம்
தீப்த ஹேதிம்
சத் பிரேஷா ரஷிதாரம்
வியசன நிரசனம்-வியக்த கீர்த்திநம் ஜகாத-2-4-
1-ப்ரஹ்லா தார்த்தே ந்ருஸிம்ஹம் –நாடி நாடி நரசிங்கா என்று -பக்தனான ப்ரஹ்லாதன் நிமித்தமாக ஸ்ரீ ந்ருஸிம்ஹணாக ஆவிர்பவித்தும்
2-ஷபித விபது ஷா வல்லபம் -விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் -அநிருத்தருக்கு விரோதியான பாணாசூரனுடைய கரங்களைக் கழித்தும்
3-ஷிப்த லங்கம் -அரக்கன் இலங்கை செற்றீர் -எதிரியான ராவணனுடைய இலங்கையை அழித்தும்
4-ஷ்வேள ப்ரத்யர்த்தி கேதும் -வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் -விஷ விரோதியான வைனயதேயனை த்வஜமாகப் படைத்தும் –
5-ஸ்ரமஹர துளஸீ மாலிநம்-வண்டு திவளும் தண்ணம் துழாய்-மதுஸ்யந்தி யாகையாலே ஸ்ரமஹரமாய் இருக்கும் திருத்துழாய் மாலையைத் தரித்தும்
6-தைர்ய ஹேதும்—என தக வுயிர்க்கு அமுதே–விரஹ வியசனத்தாலே ஆத்ம வஸ்து அழியாதே அம்ருதமாய் இருந்து தரிப்பித்தும் –
7-த்ராணே தத்தா வதாநம்—வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும்—ரக்ஷணத்திலே அவஹிதனாயத் திருப்பாற் கடலிலே வந்து கண் வளர்ந்ததும் –
8-ஸ்வ ரிபு ஹத க்ருத ஆஸ் வாஸனம்—விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர்–மிடுக்கனான கஞ்சனை அழியச் செய்து தன் நிமித்தமான பயத்தைத் தீர்த்து ஆஸ்வாஸம் பண்ணியும்
9-தீப்த ஹேதிம் —சுடர் வட்ட வாய் நுதி நேமியீர்-தேஜிஷ்டமான திருவாழியைத் திருக்கையிலே தரித்தும்
10-சத் பிரேஷா ரஷிதாரம்–மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே–ஆஸ்ரிதருடைய ப்ரேக்ஷையைப் போக்காதே ரஷித்தும்
வியசன நிரசனம்-வியக்த கீர்த்திநம் ஜகாத
இப்படி பிரசித்த வைபவனான எம்பெருமானை ஆஸ்ரிதருடைய வியசனம் எல்லாம் நிரஸித்து அருளுபவனாக
ஆடி யாடி தசகத்திலே ஆழ்வார் அனுசந்தித்தார் -என்கிறார்
———
ஸ்வ பிராப்த்யா சித்த காந்திம் ஸூகடித தயிதம் விஸ் புரத் துங்க மூர்த்திம்
ப்ரீத் உன்மேஷாதி போக்யம் நவ கன ரஸம் ந ஏக பூஷாதி த்ருஸ்யம்
பிரத்யாத ப்ரீதி லீலம் துரபி லபரசம் சத் குண ஆமோத ஹ்ருத்யம்
விஸ்வ வியாவ்ருத்த சித்ரம் விரஜ யுவதி கண க்யாத ரீத்யா அனுபவ புங்க்த –2-5-
1-ஸ்வ பிராப்த்யா சித்த காந்திம் -அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு-
ஆஸ்ரிதரோடே ஸம்ஸலேஷிக்கை யாலே நிரதிசய தீப்தி யுக்தனுமாய்
2-ஸூகடித தயிதம் –திருவிடமே மார்வம்–பெரிய பிராட்டிக்கு வாஸஸ் ஸ்தானமான திரு மார்பை யுடையவனுமாய் –
3-விஸ் புரத் துங்க மூர்த்திம்–மின்னும் சுடர் மலைக்கு–தேஜிஷ்டமாய் மலை போலே வளர்ந்த திரு மேனியை யுடையவனுமாய் –
4-ப்ரீத் உன்மேஷாதி போக்யம் –அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே -ப்ரீதி அதிசயத்தாலே பிரதி க்ஷணம் அபூர்வவத் போக்யனுமாய்
5-நவ கன ஸரஸம் –காரார் கரு முகில் போல் என்னம்மான்–வர்ஷுக வலாஹகம் போலே காருண்ய ரஸத்தை வர்ஷிக்கும் ஸ்வபாவனுமாய்
6-ந ஏக பூஷாதி த்ருஸ்யம் –பலபலவே யாபரணம் பேரும் பலபலவே-பஹு வித பூஷண நாமதே யாதிகளாலே பூஷிதனுமாய்
7-பிரத்யாத ப்ரீதி லீலம் –பாம்பணை மேல் இத்யாதி -ப்ரஸித்தமாய் -ப்ரீதி ரூபமாண -வ்ருஷ கண தமந –
ஸப்த சாலை பஞ்ச நாதி லீலா வியாபாரங்களை யுடையவனுமாய்
8-துரபி லப ரசம் -என்னுள் கலந்தானை சொல் முடிவு காணேன்–ஆஸ்ரித விஷயத்தில் அநிர் வச நீயமான பிரமத்தை யுடையனுமாய் –
9-சத் குண ஆமோத ஹ்ருத்யம்–எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை-அஸந்கயேய கல்யாண குணங்களை
யுடைத்தவனாகையாலே நிகர் இல்லாத நீல ரத்னம் போலே ஹ்ருத்யனுமாய் –
10-விஸ்வ வியாவ்ருத்த சித்ரம் –ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்-லோகத்தில் காணப்படுகிற
ஸ்த்ரீ புருஷாதி விலக்ஷண -அத்தியாச்சார்யா ரூபனுமாய் இருக்கிற எம்பெருமானை
விரஜ யுவதி கண க்யாத ரீத்யா அனுபவ புங்க்த —அந்தாமத்து அன்பு செய்த -என்னும் தசகத்திலே ஆழ்வார் –
தம்மோடு வந்து கலக்கையாலே புதுக்கணித்த திவ்ய ஆயுத திவ்ய ஆபரணங்களை யுடையவன் ஆனான் -என்று அத்பரீதியோடே –
கோபால குலத்திலே வந்து பிறந்து தங்களோடு கலக்கையாலே மிகவும் நிறம் பெற்ற குண விக்ரஹாதிகளை யுடைய
ஸ்ரீ கிருஷ்ணனை ஸ்ரீ கோபிமார் அதி ப்ரீதியோடே அனுபவித்தால் போலே அனுபவித்து அருளினார் என்கிறார் –
—————
ஸ்வ ஆஸ்வாத ஆஹ்யா பகத்வாத் ஆஸ்ரித நியத த்ருஸே ந ஏக போக பிரதாநாத்
தியாக அநர்ஹ பிரகாசாத் ஸ்திர பரிசரண ஸ்தாபநாத் பாப பங்காத்
துஸ் ஸாதார்த் தஸ்ய சித்தே விரஹ பய க்ருதே துர் விபேத ஆத்ம யோகாத்
நித்ய அநேக உபகாராத் ஸ்வ விரஹ சகிதம் ப்ரைஷதாம் போரு ஹாஷம் –2-6-
1-ஸ்வ ஆஸ்வாத ஆஹ்யா பகத்வாத் —வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே–
தன்னுடைய நிரதிசய போக்யதையை க்யாபனம் பண்ணுகையாலும் –
2–ஆஸ்ரித நியத த்ருஸே–எங்கும்
பக்க நோக்கு அறியான் -ஆஸ்ரித ஜனத்தை விட்டு அந்யத்ர கண் வைக்க மாட்டாமையாலும்
3-ந ஏக போக பிரதாநாத் –நா மருவி நன்கேத்தி இத்யாதி —
ஆஸ்ரிதர் தன்னைக் கிட்டி ஸ்தோத்ரம் பண்ணி -மனஸ்ஸிலே சிந்தித்து -நிர்மமராய் வணங்கி –
ஹ்ருஷ்டராய் கூத்தாடும் படி -அநேக வித அனுபவத்தைக் கொடுக்கையாலும்
4-தியாக அநர்ஹ பிரகாசாத் —-உன்னை எங்கனம் விடுகேன்–தன்னை விடுகைக்கு ஸம்பாவனை இல்லாதபடி பிரகாசிக்கையாலும்
5-ஸ்திர பரிசரண ஸ்தாபநாத் —உனது
அந்தமில் அடிமை அடைந்தேன்–ஆத்மாந்த தாஸ்யத்தை நிலை நிறுத்துகையாலும்
6-பாப பங்காத்—-என் முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்–விரோதிகளான பாபங்களை ஸ வாசனமாகப் போக்குகையாலும்
7-துஸ் ஸாதார்த் தஸ்ய சித்தே –முடியாதது என் எனக்கேல் இனி- -சம்பந்த சம்பந்திகளும் உத்தீர்ணராம் படி துஸ் சாதனமான காரியத்தை சாதிக்கையாலும் –
8-விரஹ பய க்ருதே —-உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்–விட்டுப் பிரியப் போகிறான் -என்கிற அதி சங்கையை விளைக்கையாலும்
9-துர் விபேத ஆத்ம யோகாத் —உன்னை என்னுள்ளே குழைந்த வெம் மைந்தா—ஆத்மாவோடு ஏக தத்வம் என்னலாம் படி கலந்து இருக்கையாலும்
10-நித்ய அநேக உபகாராத் —போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள்-கால த்ரயத்தாலும்
மாதா பிதாக்கள் பண்ணும் உபகாரங்களையும் தான் தனக்குப் பண்ணும் உபகாரங்க ளையும் பண்ணுகையாலும்
ஸ்வ விரஹ சகிதம் ப்ரைஷதாம் போரு ஹாஷம் —எம்பெருமானை -வைகுந்தா மணி வண்ணனே -சதகத்திலே –
ஆஸ்ரிதர் நம்மை விடில் செய்வது என் -என்ற அதி சங்கையை யுடையனாக ஆழ்வார் அத்யவசித்து அருளினார் -என்கிறார் –
——
ஸர்வாதிஸ் ஸர்வ நாதஸ் த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் ஸுவ ஆஸ்ரிரார்த்தி
விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ விமத நிரசனஸ் ஸுவ அங்க்ரி சத் பக்தி தாயீ
விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – ஸுவ விபவ ரஸதஸ் ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய
ஸ்வார்த்தேஹோ பந்த மோக்தா ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே –2-7-
1-ஸர்வாதிஸ் –கேசவன் தமர் இத்யாதி -க இதி ப்ரஹ்மணோ நாம -இத்யாதிகள் படியே ஸர்வ காரணமாய்
2-ஸர்வ நாதஸ் —நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–ஸர்வ ஸ்வாமியுமாய்
3-த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் –மாதவன் என்றதே கொண்டு–பெரிய பிராட்டிக்கு வல்லபனுமாய் –
4-ஸுவ ஆஸ்ரிரார்த்தி–எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான்—
பஹு வாக ஆஸ்ரிதர் உண்டாக வேணும் என்று பிரார்த்திக்குமவனாய் –
5-விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ —விட்டிலங்கு கருஞ்சுடர் இத்யாதி –நிரவதிக தேஜோ ரூபனுமாய்
6-விமத நிரசனஸ் —மது சூதனை யன்றி மற்றிலேன்—விரோதி நிராசனனுமாய் –
7-ஸுவ அங்க்ரி சத் பக்தி தாயீ —நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய்—தன் திருவடிகளிலே அநந்ய ப்ரயோஜனையான பக்தியை ஆஸ்ரிதற்குக் கொடுக்குமவனாய் –
8–விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – -வாமனன் என் மரகத வண்ணன்—மஹா பலி யாலே அபஹ்ருதமான வாமன யுடையவனுமாய் –
9–ஸுவ விபவ ரஸதஸ் –சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்–
தன்னுடைய ஸ்ரீ யபதிவத்தையும்-புண்டரீகாக்ஷதை-போன்ற ஐஸ்வர்யத்தை ஸர்வ காலமும் சொல்லி அலற்றும்படி பண்ணுமவனாய் –
10–ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய—இருடீகேசம் எம்பிரான் இத்யாதி –ஹ்ருஷீகேசன் ஆகையால் மனசை
தன் திருவடிகளில் நின்றும் பேராதபடி நிர்வஹிக்க வல்லவனுமாய் –
11–ஸ்வார்த்தேஹோ –எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்–
ஸ்வார்த்தமாகச் சேதனரை அர்த்திகள் ஆக்கித் தன்னை அனுபவிக்கக் கொடுக்குமவனை
12-பந்த மோக்தா—-தாமோதரனைத் தனி முதல்வனை–தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே பந்த கதருக்கு
மோக்ஷ ஹேதுவான தாமோதரத்வத்தை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமான் –
நியாய சாஸ்திரம் வெட்கி காட்டில் ஒழியும் படி பண்ணினார்
எதோ உபாசனம் ததோ பலம் -பொய்த்ததே
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றியவன் -கர்மங்கள் விலங்கு பட்டன படும்
ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே -ஆஸ்ரிதருடைய சம்பந்த சம்பந்திகளுக்கும் ரக்ஷகன் என்று –
கேசவன் தமர் -என்கிற துவாதச நாம காதையிலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –
———
பிராப்த்யாகார உபபத்யா ஜனி பரிஹரணாத் விஸ்வ ஸ்ருஷ்ட்யாதி சக்தே
நிஸ் ஸீம ஆனந்த தேசான்வயத உப ஜகவ் ரஷணார்த்த அவதாராத்
ஸூ பிரக்யாத அனுபாவாத் விவித விஹரணாத் -வியாப்தி வைசித்ர்ய வத்த்வாத்
பக்தைர் த்ராக் த்ருஸ்ய பாவாத் அகில பல க்ருதேர் முக்தி ஸுவ்க்யம் முகுந்தே –2-8–
1-பிராப்த்யாகார உபபத்யா —அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்—
திரு அனந்தாழ்வான் மேலே பெரிய பிராட்டியாரோடே கூட எழுந்து இருகையாலும்
2-ஜனி பரிஹரணாத் —நீந்தும் துயர்ப் பிறவி–இத்யாதி -கடக்க அரிதான துக்கத்தை உண்டாக்கும்
ஜென்மம் தொடக்கமான மற்றும் உண்டான அபஷய விநாசாதிகளையும் கடத்துகையாலும் –
3-விஸ்வ ஸ்ருஷ்ட்யாதி சக்தே -புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு
அந்தராத்மாவாய் நின்று ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸம்ஹாரதிகளைப் பண்ணுகையாலும்
4-நிஸ் ஸீம ஆனந்த தேசான்வயத உப ஜகவ்-நலமந்த மில்லதோர் நாடு-நிரவதிக ஆனந்தத்தை உடைத்தான
பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கையாலும்
5-ரஷணார்த்த அவதாராத் –மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்-லோக ரக்ஷண அர்த்தமாக
ஹயக்ரீவ கூர்ம மத்ஸ்ய ராம கிருஷ்ணாதி ரூபேண அவதரிக்கையாலும்
6-ஸூ பிரக்யாத அனுபாவாத் விவித -தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி யவையே
சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்து ஒழிந்த-அர்ஜுனன் தன் திருவடிகளில் இட்ட திருமலையை
சிவனுடைய சிரஸ்ஸிலே கண்டு -இவனே சர்வாதிகன் என்று தெளிந்து -அறுதி இடும்படியான ப்ரபாவத்தை யுடைத்தாகையாலும்
7–விஹரணாத் –கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்-
திருப்பாற் கடலிலே கிடந்தும் -பரமபதத்தில் இருந்தும் -திருமலையில் நின்றும் –
அதவா
பிரதி ஸிஸ்யே மஹோ ததே -என்றும்
உடஜே ராமம் ஆஸீ நம் என்றும்
அவஷ்டப்ய ச திஷ்டந்தம் –என்றும் சொல்லுகிறபடியே
கடல் கரையிலே சாய்ந்தும் -பர்ண சாலையிலே இருந்தும் -வாலி வத அநந்தரம் நின்றும்
அதவா
மணல் குன்றிலே ஸ்ரீ கோபிமார் மடியிலே சாய்ந்தும்
வத்ஸ மத்யத்திலே கோப குமாரர்களோடே இருந்தும்
கோவர்த்தன உத்தரணம் பண்ணி நின்றும்
த்ரிவிக்ரமனாய் பூமியை அளந்தும்
வராஹனாய உத்தரித்தும் –
பூமா தேவி மால் செய்யும் மால்-
இப்படி பஹு வித விஹரணங்களைப் பண்ணுகையாலும்
8-வியாப்தி வைசித்ர்ய வத்த்வாத் -எண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே-ஒரு குறைவின்றிக்கே எட்டு திக்கிலும் வியாபித்து நிற்கையாலும்
9-பக்தைர் த்ராக் த்ருஸ்ய பாவாத் -அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப்பிரான் –
ஆஸ்ரிதர் நினைத்த இடத்திலே அப்பொழுதே ஆவிர்பவித்துக் காணப்படுமவனாகையாலும்
10-அகில பல க்ருதேர் -சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற-மோக்ஷ ஸ்வர்க்காதி ஸகல புருஷார்த்தங்களுக்கும் காரணமாகையாலும்
முக்தி ஸுவ்க்யம் முகுந்தே –எம்பெருமான் ஒருவனே மோக்ஷ ஸூக பிரதன்-என்று —
அணைவது அரவணை மேல்–தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் —
—————
ஸ்ரத்தேய ஸ்வ அங்க்ரி யோகம் ஸூபம் அதி கரதம் ஸ்தோத்ர சாமர்த்ய ஹேதும்
ஸ்வ ஆர்த்தி கர உபகாரம் ஸ்ம்ருதி ரஸம் சமிதா அன்யாதரம் ப்ரீதி வஸ்யம்
பிராப்தௌ காலா ஷமத்வ ப்ரதம் அம்ருத ரஸ தியானம் ஆத்ம அர்ப்பண அர்ஹம்
வைமுக்யா த்வார யந்தம் வ்ருத பரி சரணம் சக்ர பாணிம் ஜகாத–2-9-
1-ஸ்ரத்தேய ஸ்வ அங்க்ரி யோகம் —நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து—ப்ரார்த்த நீயமான தன் திருவடிகள் சம்பந்தத்தை யுடையனுமாய் —
2-ஸூபம் அதி கரதம் —-நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா –தன் திருவடிகளைப் பிராபிக்கும் படிக்கு ஈடான ஞானம் ஆகிற கையைக் கொடுக்குமவனாய் –
3-ஸ்தோத்ர சாமர்த்ய ஹேதும்—-நின் கழல் எய்யாது ஏத்த அருளிச் செய்–தன் திருவடிகளையே
ஸர்வ காலத்திலும் ஏத்துகைக்கு சாமர்த்தியத்தை உண்டாக்குமவனாய் –
4-ஸ்வ ஆர்த்தி கர உபகாரம் —-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே–ஸ்வார்த்தமாகவே உபகரிக்குமவனாய் —
5-ஸ்ம்ருதி ரஸம் சமிதா அன்யாதரம் –மறப்பு ஓன்று இன்றி என்றும்—ஸ்வ விஷய ஸ்ம்ருதியாலேயே
அந்நிய விஷய ஆதாரத்தை சமிப்பிக்குமவனாய்
6-ப்ரீதி வஸ்யம் —என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க–ஸ்வ விஷயத்தில் ப்ரீதி உடைய பேர்களுக்கு வஸம் வதனுமாய் –
7-பிராப்தௌ காலா ஷமத்வ ப்ரதம் —வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்பேராதே நான் வந்தடையும் படி தாராதாய்—
ஸ்வ ப்ராப்தியில் கால ஷேப ஷமன் ஆகாதபடி பண்ணுமவனாய் –
8-அம்ருத ரஸ தியானம் —-வேத விமலர் விழுங்கும் என் அக்காரக் கனியே–அம்ருதம் போலே அத்யந்தம் போக்யமாகப் பிரகாசிக்குமவனாய் —
9-ஆத்ம அர்ப்பண அர்ஹம்—யானே நீ என்னுடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே—
நானும் என் உடைமையும் உன்னது -என்று ஸூ ரிகளாலும் ஏத்தப் படுக்கையாலே ஆத்மாத்மீயங்களை சமர்ப்பண யோக்யமானவனுமாய் –
10-வைமுக்யா த்வார யந்தம் —என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை வேறே போக எஞ்ஞான்றும் விடலே—
ஆஸ்ரிதரைத் தன் திருவடிகளில் நின்றும் விமுகராயப் போகாதபடி பண்ணுமவனாய் இருக்கிற – எம்பெருமானை
11-வ்ருத பரி சரணம் சக்ர பாணிம் ஜகாத–எம்மா வீட்டு திருவாய் மொழியிலே
கைங்கர்ய உத்தேச்ய பூதனாக ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –
——–
தீப்த ஆச்சர்ய ஸ்வபாவம் முகரித ஜலஜம் வர்ஷு காம்போத வர்ணம்
சைலஸ் சத்ராபி குப்தா ஸ்ரீ த மதி விலசத்தே திமாபீத கவ்யம்
சம்ப்ராம்போத் ஷிப்த பூமிம் பிரணத மத் அனுகுணம் பூதனா சேதனாந்தம்
பூர்வாச்சார்யம் ஸ்ருதீ நாம் ஸூப ஸவித கிரி ஸ்தாநநோ நிர் விஸேஸ –2-10-
1-தீப்த ஆச்சர்ய ஸ்வபாவம் –வளர் ஒளி மாயோன்- -நிரவதிக தேஜஸ்ஸை யுடையவனுமாய் -ஆச்சார்ய சக்தி யுக்தனுமாய் –
2-முகரித ஜலஜம் —அதிர்குரல் சங்கத்து அழகர்–முழங்கா நிற்கிற திருச்சங்கை யுடையனுமாய் –
3-வர்ஷு காம்போத வர்ணம் -புயல் மழை வண்ணர்–நீல மேக ஸ்யாமளனுமாய் –
4-சைலஸ் சத்ராபி குப்த ஆஸ்ரிதம் –பெருமலை எடுத்தான்—கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையாலே கோ கோப ஜாதிகளை ரஷித்தவனுமாய் –
5-அதி விலசத்தே திம் —-அற முயலாழிப் படையவன்–ஆஸ்ரித விரோதி நிரஸனத்தில் அத்யந்தம் முயலா நிற்கிற திரு ஆழியை யுடையனுமாய் –
6–ஆபீத கவ்யம்—-உறியமர் வெண்ணெய் யுண்டவன்–உறியில் அமைந்து இருக்கிற வெண்ணெயை யுண்டவனுமாய் –
7-சம்ப்ராம்போத் ஷிப்த பூமிம்–நிலமுன மிடந்தான்– -பூமியை உத்தரித்தவனுமாய்
8-பிரணத மத் அனுகுணம் –வலம் செய்யும் ஆய மாயவன்–ஆஸ்ரிதற்கு ப்ரதக்ஷிண பிரணாமாதிகளாலே சக்தியைக் கொடுத்து
அவர்களுக்கு அனுரூபனுமாய் –தன்னையும் சக்தியையும் கொடுப்பவனுமாய் –
9-பூதனா சேதனாந்தம்—-அழக்கொடி யட்டான் –பூதனையை முடித்தவனுமாய்
10-பூர்வாச்சார்யம் ஸ்ருதீ நாம் –வேத முன் விரித்தான்– வேதங்களுக்கு எல்லாம் முந்தின ப்ரவர்தகனுமாய் இருக்கிற எம்பெருமானை
ஸூப ஸவித கிரி ஸ்தாநநோ நிர் விஸேஸ –கிளர் ஒளி இளமை என்னும் தசகத்திலே அதி ஸமீப வர்த்தியாய்
அதி மநோ ஹரமான திருமாலிருஞ்சோலையிலே கண்டு ஆழ்வார் அனுபவித்து அருளினார் -என்கிறார் –
———
இத்யப்ரூதாத்ய ஸஹ்ய ஷண விரஹதயா மானுஷத்வே பரத்வாத்
சர்வாத் ஆஸ்வாதத்வ பூம்நா வியசன ஹர தயா ஸ்வாப்தி ஸம்ப்ரதீ மத்த்வாத்
வைமுக்ய த்ராஸ யோகாத் நிஜ ஸூஹ்ருத வ நாத் முக்தி சாரஸ்ய தாநாத்
கைங்கர்ய உத்தேஸ்ய பாவாத் ஸூப நிலயதயா சாதி போக்யம் த்வதீயே–2-11-
த்வதீய சதகத்தில்
பத்து தசகங்களாலும் ப்ரதிபாதிதங்களான அர்த்தங்களை ஸங்க்ரஹித்துக் காட்டி அருளுகிறார் –
1-இத்யப்ரூதாத்ய ஸஹ்ய ஷண விரஹதயா –க்ஷண மாத்ரமும் துஸ் ஸஹமாம்படியான தன் விரஹத்தை யுடைத்தாகையாலும்
2-மானுஷத்வே பரத்வாத் –மனுஷ்ய ஸஜாதீயனாய் அவதரிக்கச் செய்தே பரனாய் இருகையாலும்
3-சர்வாஸ் வாதத்வ பூம்நா -ஸமஸ்த மதுர பதார்த்தங்களுடைய ரஸத்தை யுடைத்தான போக்யதையை யுடையனாகையாலும்
4-வியசன ஹர தயா –ஆஸ்ரிதருடைய வியசனத்தை ஹரிக்குமவன் ஆகையால்
5-ஸ்வாப்தி ஸம்ப்ரதீ மத்த்வாத்–ஆஸ்ரிதரோடே ஸம்ஸ்லேஷித்து அத்தாலே அத்யந்த ப்ரீதன் ஆகையாலும்
6-வைமுக்ய த்ராஸ யோகாத் -ஆஸ்ரிதர் தன்னை விடில் செய்வது என் என்று மிகவும் பீதன் ஆகையாலும்
7-நிஜ ஸூஹ்ருதவநாத் -ஆஸ்ரிதருடைய சம்பந்த சம்பந்திகளையும் ரக்ஷிக்குமவன் ஆகையாலும்
8-முக்தி சாரஸ்ய தாநாத்-மோக்ஷ பிரதனாகையாலும்
9-கைங்கர்ய உத்தேஸ்ய பாவாத் -கைங்கர்ய உத்தேச்யன் ஆகையாலும் –
10-ஸூப நிலயதயா சாதி போக்யம் த்வதீயே–தர்ச நீயமான தெற்குத் திருமலையிலே நின்று அருளுகையாலும்
எம்பெருமான் அத்யந்த போக்யன் என்று த்விதீய சதகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –
அநிதர சாதாரணம்– திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளவனுக்கே மூன்றாம் பத்தில்-ஸூப ரூபம் ஸூபாஸ்ரயம் –
———————————————————————————-
திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 11-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–
வாயும் திரு மால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய
அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து ————11-
வாயும் -திரு மால் –
அடியார் அனுபவிக்கலாம்படி
அடியாரை கிட்டுகையே ஸ்வ பாவமாக யுடைய
ஸ்ரீ யபதி யானவன் –
ஆய அறியாதவற்றோடு –
அசேதனங்கள் ஆகையால்
தம்முடைய துக்கத்தை ஆராய
அறியாத வற்றை
செறிவாரை திணிந்து நோக்கும் –
ஆஸ்ரிதர்களை
த்ருடமாக
கடாஷித்து அருளுவார்-
—————————————————————
அவதாரிகை –
இதில் சகல பதார்த்தங்களையும் சம துக்கிகளாக எண்ணி
துக்கிக்கிற படியைப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன்
அலற்றுவன்
தழுவுவன்
வணங்குவன் -என்று
இவர் பாரித்த படியே அனுபவிக்கப் பெறாமையால்
ஷட் குண சாம்யத்தாலே-
1-அனன்யார்யக சேஷத்வம் -2–அநந்ய சரணத்வம் -3–அநந்ய போக்யத்வம் -4–ததேக நிர்வாகத்வ
5–சம்ச்லேஷத்தில் தரிக்கை -6–விச்லேஷத்தில் தரியாமை -கடி மா மலர்ப்பாவை யுடன் சாம்யம் உண்டே –
தாமான தன்மை குலைந்து
பிராட்டியான தன்மையைப் பஜித்து
தூது விட ஷமர் ஆனார் அஞ்சிறைய மட நாரையில்-
இங்கு நம்பியை தென் குறுங்குடி நின்ற -இத்யாதிப் படியே
மேன்மை நீர்மை வடிவழகு மூன்றும் குறைவற யுண்டாய்
அவதாரத்தில் பிற்பாடரும் இழக்க வேண்டாத படி
முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற ஸ்தலமான
அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப் பட்டு
கிடையாமையாலே கண்ணாஞ்சுழலை இட்டு-மயக்கம் உற்று –
நாரை
அன்றில்
கடல்
வாடை
வானம்
மதி
இருள்
கழி
விளக்கு
துடக்கமான லௌகிக பதார்த்தங்களுக்கும் தம்மைப் போலே
பகவத் விரஹத்தாலே நோவு படுகிறனவாகக் கொண்டு
அவற்றுக்குமாக தாம் நோவு பட்டு செல்லுகிற படியை
அன்யாபதேசத்தாலே பேசிச் சொல்லுகிற
வாயும் திரை யுகளில் அர்த்தத்தை
வாயும் திருமாலால் -இத்யாதி யாலே அருளிச் செய்கிறார் –
————————————————————————
வியாக்யானம்–
வாயும் திருமால் மறைய நிற்க –
அனுபவ யோக்யமாம்படி
கிட்டுகையே ஸ்வபாவமாக இருக்கிற
ஸ்ரீ யபதியானவன் –
போக சாத்ம்ய ஹேதுவாக விச்லேஷித்து
அத்ருச்யனாய் நிற்க –
கீழே -மைந்தனை மலராள் மணவாளனை -என்றத்தை அனுபாஷித்த படி
அன்றிக்கே
நீயும் திருமாலால் -என்றதாகவுமாம் –
மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை -என்று
மேன்மையையும் நீர்மையையும் வடிவு அழகையும் யுடையவன்
விச்லேஷிக்கையாலே –
ஆற்றாமை போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் –
ஆராத காதல் -என்னும்படி
விஸ்லேஷ வ்யசனம் ஆவது கை கழியப் போய் மிக்கு
சீதே ம்ருதஸ் தேஸ்வ ஸூர பித்ராஹீ நோசி லஷ்மண-என்னும்படி
எம்மே போலே நீயும் -என்று
பல காலும் சொல்லும்படி மிக்க பிரலாபமாய் –
ஆய அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன் –
அசேதனங்கள் ஆகையாலே
தம்முடைய துக்கத்தை
ஆராய அறியாத வற்றைக் கட்டிக் கொண்டு
ஆற்றாமை சொல்லி அழுவோமை -என்று
சம துக்கிகளாக அழுத ஆழ்வார் –
காற்றும் கழியும் கட்டி அழ -என்றார் இறே ஆழ்வார் -ஆச்சார்ய ஹிருதயம் -132
செறிவாரை நோக்கும் திணிந்து
அநந்ய பிரயோஜனராய்
அந்தரங்கமாக
ஆஸ்ரயிக்கும் அவர்களை
த்ருடமாக கடாஷிப்பர் –
தம்மைப் போலே அசேதனங்களைக் கட்டிக் கொண்டு அழாமல்
பகவத் சம்ச்லேஷம் யுண்டாய்
ஆநந்திக்கும் படி
கடாஷித்து அருளுவர் –
திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவரவர் அடிக்கே ஆங்கு அவர் பால்
உற்றாரை மேலிடா தூன் —-12-
ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான பரத்வத்திலே
அவதாரத்திலே அனுசந்தித்து
பரோபதேசம் பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
பிரிந்தாரை கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் அளவன்றிக்கே
கூடினாலும் பிரிவை மறக்கும்படி பண்ணவற்றான விஷய வைலஷண்யம்
அதுக்கு ஈடான குண வைலஷண்யம்
அதுக்கு அடியான சர்வேஸ்வரத்வம்
இவற்றை அனுவதித்து
இப்படி ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான சர்வேஸ்வரத்வத்தை
இதிஹாச புராண பிரக்ரியையாலே
பிறரைக் குறித்து உபதேசித்துச் செல்லுகிற
திண்ணன் வீட்டில் அர்த்தத்தை –
திண்ணிதாம் மாறன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
——————————————————————————
வியாக்யானம்-
திண்ணிதா மாறன் –
கீழே
மூவா முதல்வா இனி வெம்மைச் சோரேல் -2-1-10-
என்ற அநந்தரம் –
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி -2-1-11–என்கிற
காரணத்வத்தால் வந்த பரத்வத்தைக் காட்டி சமாதானம் பண்ண
அத்தாலே தரித்த தார்ட்ட்யத்தை யுடைய ஆழ்வார் -என்னுதல்
எல்லாருக்கும் ஸூ த்ருடமாம்படி பரத்வத்தை-அருளிச் செய்த ஆழ்வார் -என்னுதல் –
திருமால் பரத்துவத்தை –
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை
நீயும் திருமாலால் -என்று இறே அருளிச் செய்தது –
நண்ணி யவதாரத்தே நன்குரைத்த –
திருமால் பரத்வத்தை
அவதாரத்தே நண்ணி
நன்குரைத்த
முதல் திருவாய் மொழியிலே ஸ்ருதி சாயலிலே
பரத்வே பரத்வத்தை அருளிச் செய்தால் போல் அன்றிக்கே
இதிஹாச புராண பிரக்ரியை யாலே
அதி ஸூலபமான அவதாரத்திலே
பரத்வத்தை ஆஸ்ரயணீயமாம் படி நன்றாக அருளிச் செய்த
-அன்றிக்கே –
திருமால் பரத்வத்தை தாம் நண்ணி
அவதாரத்திலே நன்கு உரைத்த -என்றாகவுமாம்-
நன்கு உரைத்த வண்ணம் அறிந்து –
நன்கு உரைத்த வண்ணம் அறிகை யாவது –
இப்படி அவதாரே பரத்வத்தை
ஸூஸ்பஷ்டமாம்படி
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -என்றும்
கோபால கோளரி ஏறு அன்றி ஏழுலகும் ஈ பாவம் செய்து
அருளால் அளிப்பார் யார் -என்றும்
அருளிச் செய்த பிரகாரத்தை அறிகை –
மற்றும் தத் சேஷமாக-
தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே -என்றும்
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் மிகுஞ்சோதி மேல் அறிவார் எவரே -என்றும்
கள்வா -என்று துடங்கி –புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவர்
என்றும் அருளிச் செய்தவையும் உண்டு இறே –
இப்படி அருளிச் செய்யும் இடத்தில்
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்தி ரபி சாப்யாய -என்றும்
ஸ ஏஷ ப்ருது தீர்க்கா ஷச சம்பந்தி தேஜ நார்த்தன -என்றும்
அர்ச்சய மர்ச்சிதும் இச்சா மஸ்சர்வம் சம்மதம் து மர்ஹத -என்றும்
பாதேன கமலா பேன ப்ரஹ்ம ருத்ரார்சித நச -என்றும்–பேதைக் குழவி பிடித்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே -என்றும்
சொல்லுகிற பிரமாணங்களைப் பின் சென்று இறே அருளிச் செய்தது –
ராமா– கமலா பத்ராஷஸ் –சர்வ சத்வ மநோஹரா-என்றும்–படி எடுத்து உரைக்கும் படி யன்றே அவன் படி -மூவாறு மாசம் மோகித்து –
சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்று –முலை மேல் சோர்கின்றாளே -கல் எடுத்தது பெரியது இல்லை சொல் என்று –
லாவண்யம் சௌந்தர்யம் -இரண்டையும் சுருங்கச் சொல்லி –
பாவநஸ் சர்வ லோகா நாந்த்வமேவர ரகு நந்தன -இத்யாதி
பிரமாணங்களைப் பற்ற
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் -என்றும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் -என்றும் அருளிச் செய்தார் இறே
இப்படி பரோபதேச பிரகாரத்தை அறிந்து
பரத்வ ஸ்தாபகரான ஆழ்வார் இடத்திலே –
வண்ணம் அறிந்து -அற்றார்கள்யாவர் –
அற்றுத் தீர்ந்து
அனந்யார்ஹராய் இருப்பார் யாவர் சிலர் –
அவர் அடிக்கே ஆங்கு அவர் பால் உற்றாரை மேலிடா தூன்
அவர்கள் திருவடிகளுக்கு அனந்யார்ஹராய்
அவ்விடத்திலே அப்படியே
அவர்கள் விஷயத்தில் அந்தரங்கராய் கிட்டினவர்களை
மாம்ஸாஸ்ருகாதி மல ரூபமான தேஹம் அபி பவியாது-
இத்தால் தேக சம்பந்தம் மேலிடாது -என்றபடி-
ஊனம் அறவே வந்துள் கலந்த மாலினிமை
யானது அனுபவித்தற்காம் துணையா -வானில்
அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன்
அடியார் உடன் நெஞ்சே ஆடு–————-13-
———————————————————-
அவதாரிகை –
இதில் எம்பெருமான் ஏக தத்வம் என்னும் படி சம்ச்லேஷிக்க-ஆதி நாதர் ஆழ்வார் தேவஸ்தானம் அன்றோ –
தத் அனுபவ சஹகாரி சாபேஷராய்
அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இப்படி பிரசாங்கிகமான பரோபதேசத்தை –திண்ணன் வீடு -தலைக் கட்டின
அநந்தரம்
கீழ்
தம்முடைய ஆர்த்தி தீர வந்து கலந்த எம்பெருமான் உடைய
சம்ச்லேஷ ரசத்தை பேச ஒருப்பட்டு
எப்பேர்பட்ட இனிமையும் விளையும் படி
தம்முடனே அவன் வந்து
ராமஸ்து சீதயா ஸார்த்தம்-இத்யாதிப் படியே
ஏக தத்வம் என்னலாம் படி கலந்தபடியையும்
அந்த கல்வியால் வந்த ரசம் தம் ஒருவரால் உண்டு அறுக்க ஒண்ணாத படி
அளவிறந்து இருக்கிற படியையும் அனுசந்தித்து
தனித் தேட்டமான இதர விஷயங்கள் போல் அன்றிக்கே
துணைத் தேட்டமாய்
அதுக்கு இவ் விபூதியில் ஆள் இல்லாமையாலே
இவ் வனுபவத்தில் நிலை நின்ற நித்ய சூரிகள் திரளிலே
போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறுவது எப்போதோ
என்று பிரார்திக்கிற
ஊனில் வாழ் அர்த்தத்தை
ஊனம் அறவே வந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
—————————————————————————-
வியாக்யானம்–
ஊனம் அறவே வந்துள் கலந்த மாலினிமை யானது –
அதாவது
நித்ய சம்சாரி என்று சங்கோசியாமல்
சங்கோசம் அற சர்வேஸ்வரன் வந்து
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே -என்றும்
என தாவியுள் கலந்த பெரு நல் உதவி -என்றும்
கனிவார் வீட்டின்பமே -என்றும்
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே -என்றும்
இப்படி சர்வ ரசங்களும் உண்டாம்படி
அந்தரங்கமாகக் கலந்த கலவியின் இனிமையானது
ச ஹிருதயமாக சம்ச்லேஷித்த சாரஸ்யம் ஆனது
அனுபவித்தற்காம் துணையா –
ஏவம் வித ரச்யதையை அனுபவிக்கைக்கு
அடியார்கள் குழாம்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று
அனுகூல சஹவாசம் அபேஷிதமாய்
வானில் அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன் அடியார் உடன் நெஞ்சே யாடு –
வையத்து அடியவர்கள் அன்றிக்கே
அனுபவத்துக்கு தேசிகராய்
வானில் அடியார்கள் குழாம்களுடன் கூட வேணும் என்று
அபி நிவேசத்திலே ஊன்றின
ஆழ்வார் அடியாரான இங்குத்தை ஸ்ரீ வைஷ்ணவர்களோடே
நெஞ்சே கூடி யாடு
அன்றிக்கே –
அக் குழாத்தில் முழுகி அனுபவிக்கப் பார் -என்றுமாம்
அடியீருடன் கூடி நின்று ஆடுமினோ -என்றார் இறே–
ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக
அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து
துன்புற்றான் மாறன் அந்தோ —————-14-
————————————————————————
அவதாரிகை –
இதில் ததீயரையும் அவனையும் பிரிகையாலே
மிகவும் தளர்ந்து
தாய் பேச்சாலே பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
எங்கனே என்னில் –
எம்பெருமானைப் பிரிந்த அளவன்றிக்கே அவனுக்கு பிராண பூதரான
நித்ய சூரிகளையும் கூடப் பிரிகையாலே
தம் தசையை அறியாதபடி மோஹிதராய் கிடக்கிற தம் படியை
பார்ஸ்வச்தரான பரிவர் அவனுக்கு விண்ணப்பம் செய்கிற பிரகாரத்தை
கலந்து பிரிந்து மோஹங்கதையான பிராட்டி உடைய
விரஹ பரவச வியாபார உக்திகளை அனுகரித்து
அவனுக்கு அறிவிக்கிற திருத் தாயார் பேச்சாலே
அருளிச் செய்கிற -ஆடி யாடியில் அர்த்தத்தை –
ஆடி மகிழ் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
————————————————————————
வியாக்யானம்-
ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன் கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக –
ஆடி மகிழ் வானில் –
பகவத் அனுபவத்தில் அவஹாகித்து
ஹிருஷ்டர் ஆகிற -என்னுதல் –
அன்றிக்கே
பகவத் அனுபவ பிரகர்ஷத்தாலே
ந்ருத்யந்தி கேசித் -என்னும் படியாக –
அத்தாலே ஹ்ருஷ்டராக -என்னுதல் –
இப்படியான வானில் அடியார் உண்டு
வைகுண்ட வாசிகளான நித்ய சூரிகள்
அவர்கள் சங்கத்திலே சங்கதராய்
ஆனந்தத்தை அடையாத அபூர்த்தியாலே
வாடி வாடும் -என்று மிகவும் வாடி –
அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க –
முயல்கின்றேன் அவன் தன் மொய் கழற்கு அன்பை -என்று
நிரவதிக சிநேக உக்தரான
மதுரகவி ப்ரப்ருதி ப்ரயுக்த ஸூக்ருத்துக்கள்-
இவர் வ்யாமோஹத்தை எம்பெருமானுக்கு நிரூபித்து
தன் முகேன இது தேவர் கிருபா சாத்தியம் -என்று
விஞ்ஞாபிக்கிற படியை
தன் திறத்திலே பரிவுடைய திருத் தாயார்
தன் ஸ்வ பாவத்தை அறிந்து பேசும்படியாக –
மோகித்து துன்புற்றான் மாறன் அந்தோ –
தாம் தம் தசையைப் பேச மாட்டாமல்
பிறர் பேசும்படி மோஹித்து துக்கத்தைப் பிராப்தர் ஆனார் ஆழ்வார் –
ஐயோ -மமா பிவ்யதிதம் மன -என்று
அற்ற பற்றர்க்கும் இரங்க வேண்டும் படியாய் இறே இவர் தசை இருப்பது –
அற்ற பற்றார் -மதுரகவி போல்வார் –
அன்புற்றார் தன்னிலைமை யாய்ந்து உரைக்கை யாவது –
சாதியர் கூர்த்தவஞ்ச -இத்யாதிப் படியே
எங்கும் நாடி நாடி நரசிங்கா வென்று வாடி வாடும் -என்றும்
உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் -உம்மைக் காண நீர் இரக்கம் இலீரே –என்றும்
வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர் என தவள வண்ணர் தகவுகளே -என்றும்
உம்மைத் தஞ்சம் என இவள் பட்டனவே –என்றும்
நுமது இட்டம் என் கொலோ இவ் ஏழைக்கு -என்றும்
இவள் மாழை நோக்கு ஒன்றும் மாட்டேன்மினே -என்றும்
இப்புடைகளிலே அருளிச் செய்தவை-என்கை –
இப்படி தம் தசை தமக்கும் வாசோ மகோசரமாய்
கண்டார் எல்லாரும் இரங்க வேண்டும்படியாய்
இருக்கும் ஆயிற்று –
——————
அந்தாமத்து அன்பால் அடியார்களோடு இறைவன்
வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் -சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே
வாய்ந்த வன்பை நாடோறும் வை–———–15-
—————————————————————-
அவதாரிகை –
இதில் ஆடியாடியில் -விடாய் தீர
அடியார்கள் குழாங்களுடனே வந்து கலந்த படியைப் பேசின
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
இவருடைய ஆர்த்தி தீரக் கலந்து
வாட்டமில் புகழ் வாமனனாவன் –
ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே அகப்பட்டு இடர் பட்ட ஆனையின் இடரைச்
சடக்கென வந்து போக்கினால் போலே
ஆடியாடி யிலே தாம் பட்ட இடர் எல்லாம் போம்படி
ஆசைப் பட்டபடியே அடியார் குழாங்கள் உடன் கூடி வந்து
சம்ச்லேஷித்து அருளக் கண்டு
தம்மோட்டைக் கலவியாலே
அவன் வடிவிலே பிறந்த புதுக் கணிப்பை
மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற
அந்தாமத்து அன்பில் அர்த்தத்தை
அந்தாமத்து அன்பாலே -அருளிச் செய்கிறார் –
————————————————————————————–
வியாக்யானம்–
அந்தாமத்து அன்பால் –
அழகிய ஸ்ரீ வைகுண்ட தாமத்தில் பண்ணும் விருப்பத்தாலே –
அத்தேசத்திலும்
அத்தேசிகர் இடத்திலும் உண்டான அதி ச்நேஹத்தாலே –
அடியார்களோடு இறைவன் –
அடியார்கள் உண்டு –
அஸ்த்ர பூஷன பிரமுகராய் உள்ள நித்ய சூரிகள் –
அவர்களோடு கூட சர்வேஸ்வரன்
சபரிகரனாய் உளனாம் படி சம்ஸ்லிஷ்டனாய்-
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்காழி நூலாரமுள-என்றத்தை நினைக்கிறது –
வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் –
சர்வ ஸ்மாத் பரனான தான்
பரமபதத்தின் நின்றும்
பரமா பதமாபன்னரான–பெரிய ஆபத்தில் இருந்த -இவர் இருந்த இடத்து அளவும் வந்து
பரிபூர்ணமாக சம்ச்லேஷித்த ஔதார்யத்தாலே –
சந்தாபம் தீர்ந்த –
விசோதித ஜடஸ் ஸநாத-தஸ்தௌ தத்ர ஸ்ரியாஜ்வலன் -என்றும்
அதிவ ராமஸ் ஸூஸூபே-என்றும்
செந்தாமரை தடங்கண் செங்கனிவாய் செங்கமலம் செந்தாமரை அடிக்கள் செம்பொன் திரு உடம்பே -என்றும்
திரு உடம்பு வான் சுடர் –என்னுள் கலந்தானுக்கே -என்றும்
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம் மின்னும்
சுடர் மலைக்கு கண் பாதம் கை கமலம் -என்றும்
எப்பொருளும் தானாய் மரகத குன்றம் ஒக்கும் -என்றும்
வாட்டமில் புகழ் வாமனன் மலை போலே பெருத்து
அவயவ சௌந்தர்யாதி களையும் யுடையனாய்
இருக்கிற படியை அனுபவித்து
சந்தாபம் ஆனது சவாசனமாக நிவ்ருத்தமான –
சந்தாபம் ஆவது
ஆடியாடி யில்
வாடுதல்
இரக்கம் இல்லாமல் தவித்து
வெவ்வுயிர்த்தல்
வாய் வெருவுதல்
உள்ளம் உக உருகுதல்
உள்ளுள் ஆவி உலருதல்
தன் நெஞ்சம் வேதல் துடக்கமானவை –
உள்ளுள் ஆவி உலர்ந்து -தீர -என்றும்
அல்லாவியுள் கலந்த -என்றும்
என் முடிவு காணாதே என்னுள் கலந்தான் -என்றும்
என்னுள் கலந்தவன் -என்றும் இறே இவர் அருளிச் செய்தது –
சந்தாபம் தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே வாய்ந்த வன்பை நாடோறும் வை –
வானோர் தனித் தலைவன்
அந்தாமத்து அன்பு செய்யும் படியான
ஆழ்வார் திருவடிகளிலே
உன் தன் மொய் கழற்கு அன்பை முயல்கின்றேன் -என்கிறபடியே
மனசே ஸூசங்கதமான சங்கத்தை நித்யமாக நிஷிப்தம் ஆக்கு
நிதியை அடியிலே இட்டு வைப்பாரைப் போலே
அன்பை அடியிலே இட்டு வை-
————
வைகுந்தன் வந்து கலந்ததற் பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து -நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க
வன்மை யடைந்தான் கேசவன்—————-16-
பித்தின் அடியாக -கர்மத்தால் அல்ல-ஆஸ்ரிதர் வியாஹோமம் அடியாக –
2-5- வந்து கலந்த –வைகுந்தன் –என்பதால் அந்தாமத்து அன்பில் –
செய்கின்ற நைச்ச்யம் -சிந்தித்து -1-5- பழைய நினைவு வர –
பகவான் நைகின்ற தன்மைதனை ஆழ்வார் கண்டு
உன்னை விடேன் -என்று ஆழ்வார் உரைக்க
சத்ய சங்கல்பர் சத்ய வாக்யர் இவர் என்று விஸ்வசித்து
இழந்த வன்மையை மீட்டுக் கொண்டான் –
மேலும் மீளும் -பின்னும் தீருவார் -இப்படி பண்ணி அருளி -பிறந்து படைத்த ஐஸ்வர்யம் அல்லவோ இது –
—————————————————————————————
அவதாரிகை –
இதில்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் -என்று
அனுபவிக்கிற இவர்
அயோக்யன் என்று அகலில் செய்வது என் -என்று
ஈஸ்வரன் அதி சங்கை பண்ண –
இவர் சமாதானம் பண்ணி தேற்றின படியைப் பேசுகிற
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில் –
சர்வேஸ்வரன் உடன் சம்ச்லேஷித்த இவர்
அல்லாவியுள் கலந்த -என்று
தம் சிறுமையைப் பார்த்து அனுசந்திக்கையாலே
வள வேழ் உலகு -தலை எடுத்து
இன்னமும் இவர் நம்மை விடில் செய்வது என் –என்று
அதி சங்கை பண்ணி
அலமருகிற படியைக் கண்டு
இவனுக்கு நம் பக்கல் பாரதந்த்ர்ய வாத்சல்யங்கள் இருந்த படி என் –என்று விஸ்மிதராய்
அல்லாவி –குணமாக கொண்ட திருக் கல்யாண குணமே வாத்சல்யம் –
தான் அகலாமைக்கு உறுப்பாக பலவற்றையும் சொல்லி
அவன் அதி சங்கையையும் தீர்த்து
அவனைத் தரிப்பிக்கிற –வைகுண்ட மணி வண்ண -னில் அர்த்தத்தை
வைகுந்தன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ பாஷ்யத்தை ஒருகால் -திருவாய்மொழியை சதா காலம் அனுபவிக்க -திருவாய்மொழிப் பிள்ளை
மணவாள மா முனிகளுக்கு ஆஜ்ஞ்ஞை செய்து அருளினாரே
————————————————————————————
வியாக்யானம்–
வைகுந்தன் வந்து கலந்ததற் பின் –
நித்ய விபூதி உக்தன்
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான் -என்னும்படி
ஒரு நீராக கலந்த பின்பு –
வாழ் மாறன் –
அத்தாலே சத்தை பெற்று
சம்பன்னரான ஆழ்வார் –
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து –
இவர் -அல்லாவி -என்று அகல நினைக்கிற
நைச்சய அனுசந்தானத்தைக் கண்டு
இது என்னாக விளையக் கடவது -என்று
ஈஸ்வரன் விசாரித்து –
பாலாழி கண் வளரும் பண்பை கேட்டே யும் கால் ஆளும் -ஆழ்வாருக்கு -இங்கே -நைகின்ற தன்மையைக் கண்டு பெருமாள் –
நைகின்ற தன்மைதனைக் கண்டு –
அவன் சிதிலனாகிற பிரகாரத்தை தர்சித்து –
உன்னைத் தான் விடேன் என்று உரைக்க –
இப்படி என் விச்லேஷத்தில் அதி பீருவாய் இருக்கிற
உன்னை தான் விடேன் என்று –
உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே -என்றும்
உன்னை எங்கனம் விடுகேன் -என்றும்
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ -என்றும்
உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ -என்றும்
ஈஸ்வரனைக் குறித்து அருளிச் செய்ய –
வன்மை யடைந்தான் கேசவன் –
விஜ்வர ப்ரமுமோதஹா-என்னும்படி
துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியாதே – என்றும்
என் மரகத மலையே -என்னும்படி
ஸ்தர்யத்தைப் பிராபித்தான் –பிரசக்த கேசவன் ஆனவன் -மரகத மலை –
விஜ்ஜுர ப்ரமோதாக –அநிஷ்ட நிவ்ருத்த இஷ்ட பிராப்தி -வன்மை அடைந்தார் -இங்கே -விடேன் சொன்னதுமே
—————
கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை——–——17-
———————————————————————–
அவதாரிகை –
இதில்
கீழ் மேல் உண்டானவர்கள் எல்லாரும்
தம்முடைய சம்பந்தத்தாலே
பகவத் தாஸ்ய லாபத்தை லபித்தார்கள் என்று
ஹ்ருஷ்டராய்ப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்
தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும்
சுவறி விடுகை அன்றிக்கே
தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற
விரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே
பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –
மமாப்யேஷ யதாதவ -என்னும்படி
ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய்
தம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான
அவன் குண சேஷ்டிதங்களை
திருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற
கேசவன் தமரில் -அர்த்தத்தை
கேசவனால் எந்தமார்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —
———————————————————————————
வியாக்யானம்–
கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும் தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த –
எம்பிரான் எம்மான் நாராயணனாலே-
எமர் -கீழ் மேல் ஏழ் பிறப்பும் –
கேசவன் தமர் -ஆனார்கள்
மாசரிது பெற்று –
அத்தாலே –நம்முடைய வாழ்வு வாய்க்கின்ற வா –
என்றத்தை நினைக்கிறது –
கேசவனால் எந்தமர்கள் –
ஜகத் காரண பூதனாய்
விரோதி நிரசனம் பண்ணுமவனாய் –
பிரசஸ்த கேசவனான
அவனாலே
மதீயர் தேசு அடைந்தார் என்று
தேஜஸ் சைப் பிராபித்தார்கள் என்று –
கேசவன் தமராகை இறே இவர்களுக்கு தேஜஸ்
தாஸ்யம் இறே ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாவது –
அத்தை தம்மோட்டை சம்பந்தத்தாலே
கீழ் மேல் உண்டான சம்பந்தி பரம்பரையில் உள்ளவர்கள் எல்லாரும்
லபித்தார்கள் என்று
அந்த யுபகார கௌரவத்தாலே
அவன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய்
வைஷ்ணத்வ சிஹ்னமாய்
கேசவன்
நாரணன்
மாதவன்
கோவிந்தன்
விட்டு
மது சூதனன்
திரி விக்ரமன்
வாமனன்
சிரீதரன்
இருடீகேசன்
பற்ப நாபன்
தாமோதரன் –
என்கிற திரு த்வாதச திரு நாமங்களை பேசி அனுபவித்து
ஹ்ருஷ்டராய்
அத்தை இப்படி நன்றாக அருளிச் செய்த –
சிறப்பு -நன்று –
வீசு புகழ் மாறன்-
சம்பந்த சம்பந்திகள் அளவும்
வைஷ்ணத்வம் ஏறிப் பாயும் படியான
வைபவத்தால்
வந்த பிரசுரமான யசஸ்சை உடைய
ஆழ்வார் உடைய-
மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று –
புஷ்பம் போன்ற திருவடிகளே
நித்தியமான ஆத்மாக்களுக்கு எல்லாம்
உஜ்ஜீவிக்கைக்கு
உசித உபாயம் என்று –
நெஞ்சே அணை-
அவர்களிலே ஒருவனாய்
அம்சம் பெறும்படியான எனக்கு உபகரணமாய்
சௌமனச்யம் உள்ள மனசே
பிரஸூன சமமான திருவடிகளை நீயும் சமாஸ்ரயணம் பண்ணு–
நாராயணனாலே -என்று –
அவனுடைய ச்வீகாரமே நிரபேஷ உபாயம் என்றதின்
அனுவாதமான
கேசவனால் என்கிற இப்பதத்திலே -தத் விவரணமாக
மாதவன் என்றதே கொண்டு -என்றும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் மேவும் தன் மயமாக்கினான் -என்றும்
என்னைக் கொண்டு -என்றும்
தன் பேறு ஆனமைக்கு –விட்டிலங்கு செஞ்சோதி -என்றும்
அம்மான் திரிவிக்ரமனை எனக்கே அருள் செய்ய –எனக்கு என்ன –விதி சூழ்ந்தது –என்றும்
தொழும் மனமே தந்தாய் -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
உன்னை என்னுள் வைத்தேன் என் இருடீகேசனே -என்றும்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்றும்
தாமோதரனை -என்றும்
அருளிச் செய்த சந்தைகளும் அனுசந்தேயங்கள்-
——————
அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம்
குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட -இணங்கி மிக
மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே
வீசு புகழ் எம்மா வீடு–—————18-
மாறன் மலர் அடியே–வீசு புகழ்– எம்மா வீடு –
மாசில் உபதேசம் செய்-கியாதி லாப பூஜைக்காக இல்லாத
——————————————————-
அவதாரிகை –
இதில்
மோஷ பிரதத்வத்தை உபதேசித்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இப்படி ஈஸ்வரன் சபரிகரமாக விஷயீ கரித்து விடுகிற மாத்ரம் அன்றிக்கே
முக்த ப்ராப்யமான போகத்தை
தமக்கும் தம் பரிகரத்துக்கும் தருவானாகப் பாரிக்கிற படியைக் கண்டு
எல்லாருக்கும் தம்மோடு ஒரு சம்பந்தம் சித்திக்கும் படி
சம்சாரிகளுக்கு அவனுடைய மோஷ பிரதத்வத்தை உபதேசிக்க
அவர்கள் அத்தைக் காற்கடைக் கொள்ள ஸ்வ லாபத்தைப் பேசி த்ருப்தராகிற
அணைவது அரவணை மேல் அர்த்தத்தை
அணைவர்கள் தம்முடனே -என்று அருளிச் செய்கிறார் என்கை-
———————————————————————-
வியாக்யானம்–
அணைந்தவர்கள் தம்முடனே –
அணைவது அரவணை -யில்படியே-
ஸ்ரீ பூமி நீளா நாயகனாய்
அநந்த போக பர்யங்களில் எழுந்து அருளி இருக்கிற
சர்வேஸ்வரனை கிட்டி அடிமை செய்கிற
அநந்த பரிமுகரான சூரி சங்கங்களோடு கூட்ட -என்னுதல்
அன்றிக்கே
கேசவன் தமர் -என்னும்படி
கீழ் அந்தரங்கர் ஆனவர்கள் தங்களோடு கூட்டுதல் என்னுதல்
தம்முடனே -என்கிறது
ஆழ்வார் தம்முடனே -என்றதாகவுமாம் –
தம்முடனே அணைந்தவர்கள் –
எமர் -என்று தாம் அபிமாநிக்கும் படியாக
தம்மோடு அன்வயம் உண்டாம்படி யானவர்கள் -என்னுதல்
ஆயன் அருட்காளாம் குணம் தனையே கொண்டு –
எப்பொருட்கும் –இணைவனாம் -என்று –
ஆஸ்ரித ஸூலபனாய் அவதரித்த கிருஷ்ணன் உடைய கிருபைக்கு விஷயமாம் படியாக –
மேலும் –என் கண்ணனை நான் கண்டனே –என்றார் இறே –
ஏவம் விதனானவனுடைய மோஷப் பிரதத்வம் ஆகிற
குணம் ஒன்றையுமே கொண்டு என்னுதல் –
அன்றிக்கே –
குணங்களையே கொண்டு -என்ற பாடம் ஆனபோது
வீடு முதலாம் -என்கிற மோஷ பிரதத்வாதி குணங்களையே
உபாயாந்தர நிரபேஷமாக
திருத்துகைக்கு பரிகரமாகக் கொண்டு -என்னுதல்
அவ் வவதாரத்திலே இறே
இடைச்சி
இடையன்
தயிர்த் தாழி
கூனி
மாலாகாரர்
பிணவிருந்து
வேண்டி அடிசில் இட்டவருக்கு எல்லாம் மோஷம் கொடுத்தது
இணைவனாம் யெப்பொருட்க்கும் வீடு முதலாம் –என்று அவதார சாமான்யமாய் –
வேடன்
வேடுவச்சி
பஷி
குரங்குகள்
சரா சரங்களுக்கும்
மோஷம் கொடுத்தமை யுண்டாய் இருக்கவும்
ஆயனருக்கு -என்றத்தைப் பற்ற
கிருஷ்ணாவதாரத்திலே ஊன்றி சொல்லிற்று –
கச்ச லோகன் அநுத்தமான் -என்று இறே
பெருமாள் பெரிய உடையாருக்கு பிரசாதித்தது –
இப்படி அவதாரத்திலே மோஷ பிரதத்வாதி குணங்களைக் கொண்டு திருத்தி –
உலகைக் கூட்ட -இணங்கி மிக –
நித்ய சம்சாரிகளை
நித்ய சூரிகளோடு கூட்ட
மிகவும் இணங்கி -மிகவும் பொருந்தி
அவர்கள் துர்க் கதியை சஹிக்க மாட்டாமல் அவர்களோடு
இணக்குப் பார்வை போல்-(மிருகத்தை மிருகம் வைத்து கண்ணி வைத்து பிடிப்பாரை போலே இணங்கி தாழ நின்று )-சஜாதீயராய் இணங்கி –
ஆயன் அருட்கு ஆளாம் குணங்களையே கொண்டு
உலகை அணைந்தவர்கள்
தம்முடனே கூட்ட மிகவும் இணங்கி -என்று அந்வயம் –
மிக இணங்கி மாசில் உபதேசம் செய் மாறன்-
க்யாதி லாப பூஜாதி தோஷ ரஹிதமாய் இருக்கும் –
ஸூத்த உபதேசத்தை மிகவும் அடுத்து அடுத்துப் பண்ணும்
பரிசுத்த ஞானரான ஆழ்வார் –
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம் -என்றும்
பிறவிக் கடல் நீந்துவார்க்கு புணைவன் -என்றும்
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர்–என்றும்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே -என்று இறே உபதேசித்து அருளிற்று –
மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே –
ஏவம் வித உபதேஷ்டாவான ஆழ்வார் உடைய-புஷ்ப ஹாச ஸூகுமாரமான திருவடிகளே –
வீசு புகழ் எம்மா வீடு –
பரமே வ்யோமன் -என்று விக்யாதமான யசஸ்சை உடைய
சர்வ பிரகார விலஷண மோஷம் –
ஆழ்வாருக்கு –செம்மா பாதம் -இறே எம்மா வீடு-–பொசிந்து காட்டும் இங்கே
இவருக்கு மாறன் மலர் அடியே யாயிற்று
விபூதிஸ் சர்வம்- ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் இறே-
—————
எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த -நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி
கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –————–19-
—————————————————————————————–
அவதாரிகை –
இதில்
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணின பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
பிறர்க்கு அவன் மோஷ பரதன் -என்னுமத்தை உபதேசிக்கிற அளவில்-2-8-
முதல்
நடுவு
இறுதி
இவர் மோஷத்தை ஸ்லாகித்துக் கொண்டு பேசுகையாலே
இவருக்கு மோஷத்தில் அபேஷையாய் இருந்தது -என்று
ஈஸ்வரன் அத்தைக் கொடுக்கப் புக –
தமக்கு உகப்பாகத் தரும் மோஷமும்
அஹங்கார கர்ப்பம் ஆகையாலே அபுருஷார்த்தம் -என்று அத்தை கழித்து –
பரமபதஸ்தனாய் ஸூகிக்கவுமாம்
சம்சாரஸ்தனாய் துக்கிக்கவுமாம்
எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை
தேவர்க்கு உறுப்பாம் அதுவே எனக்கு வடிவாம்படி பண்ணி அருள வேணும்
என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிற
எம்மா வீட்டில் அர்த்தத்தை –
எம்மா வீடும் வேண்டா –-என்று துடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-
———————————————————————————————
வியாக்யானம்–
எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த –
எவ்வகையாலும் விலஷணமான மோஷமும் வேண்டா –
சேஷ பூதனான எனக்கு
யாவந்ன சரனௌ சிரஸா தாரயிஷ்யாமி -என்னும்படி
சேஷியான தேவருடைய அங்க்ரி யுகளமே அமையும் என்று
உபய அனுகுணமாக முக்தியை ஆராய்ந்து தலை சேர
நிஷ்கர்ஷித்து அருளிச் செய்த –
வாய்ந்து- என்று
இவ்வர்த்தத்திலே பொருந்தி என்றுமாம் –
இது –எம்மா வீட்டை -அடியே துடங்கி அடி ஒத்தின படி –
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து –என்று துடங்கி
உன் பொன்னடிச் சேர்த்து -என்று இறே தலைக் கட்டுத் தான் இருப்பது –
தலைக்கு கட்டு -தலைக்கட்டினார் -சாடு
தாளிணையே -என்கையாலே
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்றது ஸூசிதம்-
திருமுடியை திருவடிகளுக்கு பாத பீடம் ஆக்குகிறது
அத்யந்த பாரதந்த்ர்யம் இறே –
நம்முடைய வாழ் முதலாம் மாறன் –
நம்முடைய ஸ்வரூப அனுரூபமான சம்பத்துக்கு அடியாம் ஆழ்வார்
ஆழ்வார் உடைய வாழ்வுக்கு அடி –தனியேன் வாழ் முதலே -2-3-5–என்கிற ஈச்வரனாய் இருக்கும்
இவருடைய வாழ்வுக்கு அடி ஆழ்வாராய் இருக்கும் –
மலர்த் தாளிணை சூடி –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -4-3-6–என்றும்
பாத பற்புத் தலை சேர்த்து -என்கிறபடியே
செவ்விப் பூ சூடுவாரைப்போலே
பூ போன்ற அடி இணையைச் சூடி –
கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –
தத் இதர சேவை ஆகிற தாழ்ச்சி அற்று-தேவு மற்று அறியேன் -என்று அவனையும் தவிர்க்கிறார் -(தாழ்ச்சி எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் வாழ்ச்சி என்றார் ஆழ்வார் -இவர் அதையும் தவிர்ந்து –கீழ்மை அற்று ஆழ்வார் மலர் தாளிணை சூடி இருப்பதே நம்முடைய வாழ் முதல் என்று அருளிச் செய்கிறார் )
ஆழ்வார் சேவையாலே
சத்தை பெற்று மனசே மயங்காமல்
மேன்மேல் எனக் கிளர்ந்து போரு –
——————
இதில் சர்வ பிரகாரத்தாலும் ஸ்ரீ திருமலையை ஆஸ்ரயிக்கையே புருஷார்த்த சாதனம் என்று பரோபதேசம்
பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –
ஸ்வயம் புருஷார்த்தமாக வனுபவிக்கிற பிரகாரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் -என்று ஆகவுமாம் –
இது எங்கனே என்னில்
எம்மா வீட்டில் ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷத்த அளவில்-ஒல்லை ஒல்லை -என்று இவர் த்வரிக்கப் புக்கவாறே
இவர் த்வரிக்கைக்கு அனுகுணமாக
இங்கேயே
இவ்வுடம்போடேயே
கிட்டி அடிமை செய்யலாம் படி தெற்கு ஸ்ரீ திருமலையிலே தான் நிற்கிற படியை இவருக்குக் காட்டிக் கொடுக்க
அத்தை அனுசந்தித்து
அவனிலும் அவன் உகந்து வர்த்திக்கிற தேசமே பிராப்யம் என்று நினைத்து
ஸ்ரீ திருமலை ஆழ்வாரை பெரிய ஆதாரத்தோடு அனுபவித்து ப்ரீதராய்
சம்சாரிகளையும் அங்கே ஆஸ்ரயிக்கும் படி பரோபதேசம் பண்ணுகிற கிளர் ஒளியின் அர்த்தத்தை
கிளர் ஒளி சேர் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —
கிளர் ஒளிசேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க
வளர் ஒளி மால் சோலை மலைக்கே -தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம்முடி—-20-
கிளர் ஒளி சேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க –
அதிசயமான ஒஜ்வல்யத்தை யுடைத்தாய் கீழ் உக்தமான எம்மா வீட்டில் பிராப்யமானது லபிக்கைக்காக –
வளர் ஒளி மால் சோலை மலைக்கே –
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை -என்னும்படி கிளர் ஒளி மாயோனாய்
நாள் செல்ல செல்ல வளர்ந்து வாரா நின்றுள்ள ஒளியை யுடைய சர்வேஸ்வரன் வர்த்திக்கிற
ஸ்ரீ திருமால் இரும் சோலை மலைக்கே –
தளர்வறவே நெஞ்சை வைத்துச் சேரும் எனும்-
பகவத் ஸ்மரண ராஹித்யம் ஆகிற அநர்த்தம் இன்றிக்கே அவன் வர்த்திக்கிற ஸ்ரீ திருமலையில்
மனஸை வைத்து ஆஸ்ரயிங்கோள் என்று அருளிச் செய்யும் –
தளர்வு –
மநோ தௌர்ப்பல்யம்-ஜீவ ஸ்வா தந்த்ர்யம் -நின்றவா நில்லா நெஞ்சு
அறவே –
அது இன்றிக்கே -என்றபடி
கீழ் பிராப்யம்மான பாத பற்புக்கு தென்னன் உயர் பொருப்பை பிராப்யமாக விதித்த படி –
இது வன்றாட்சி மயமாகையாலே -திரு விருத்தம் -ஆஸ்ரயிக்கைக்கு அடி உடைத்து -சிமயம் -சிகரம் –
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே –
இப்படி நெஞ்சை வைத்து சேரும் எனும் –
நெஞ்சை வைத்துச் சேரும் என்கிறதுக்கு மூலம் -கிளர் ஒளி இளமை -என்கிற பாட்டு
மானஸ ஸ்ரத்தை மாறுவதற்கு முன்னே -என்று இறே இதுக்கு அர்த்தம் அருளிச் செய்தது –
உய்த்து உணர்வு எனும் ஒளி விளக்கு –என்னக் கடவது இறே
சேரும் என்றது -கிளர் ஒளி இளமை கெடுவதம் முன்னம் என்கிற முதல் பாட்டு பிரதானமாய்
போதவிழ் மலையே புகுவது பொருளே –என்னும் அளவும் அருளிச் செய்தவை –
அதாவது
சார்வது சதிரே -என்றும்
ஏத்தி எழுவது பயனே -என்றும்
அயன் மலையை அடைவது கருமமே -என்றும்
திருமலை யதுவே அடைவது திறமே -என்றும்
நெறி பட வதுவே நினைவது நலமே -என்றும்
பிரதஷிணஞ்ச குர்வாணஸ் சித்ர கூடம் மஹா கிரிம் -என்னும்படி
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -என்றும்
தொழக் கருதுவது துணிவது சூதே -என்றும்
போதவிழ் மலையே புகுவது பொருளே -என்றும்
ஸ்ரீ திருமலையோடு
அத்தைச் சேர்ந்த அயன்மலையோடு
புற மலையோடு
ஸ்ரீ திருப்பதியோடு
போம் வழியோடு
போகக் கடவோம் -என்று துணிந்த துணிவோடு
வாசி அற பிராப்யாந்தர்க்கதமாய்-ஸ்வ அனுபவ கர்ப்ப பரோபதேச முகேன
அனுபவித்து இனியராகிற பிரகாரமும் இவர்க்கு இப்பாட்டிலே விவஷிதம் –
அந்தர்கத குணா உபாசனத்தை மதித்து பெருக்கி மூழ்கி அழுந்து கீழ்மை
வலம் சூது செய்து இளமை கெடாமல் செய்யும் ஷேத்திர வாசம்
சங்கீர்த்தனம் அஞ்சலி பிரதஷிண கதி சிந்தநாத்யங்க உக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில் –
என்று இறே-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -220-உபாய பரமாக ஸ்ரீ நாயனார் அருளிச் செய்கிறார்
ஸ்ரீ நாயனார் உபாய பரமாக அருளிச் செய்தது-ஆகையால் ஸ்ரீ திருமலையை பிராப்யதயாவும் ப்ராபகதயாவும்
ஆஸ்ரயிக்கும் படி அருளிச் செய்யக் குறை இல்லை இறே
நெஞ்சை வைத்து சேரும் எனும் -நீடு புகழ் மாறன் தாள் –
இப்படி பர அநர்த்தம் கண்டு பரோபதேசம் பண்ணுகையாலே நெடுகிப் போருமதாய்
அத்தாலே நித்தியமான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே –
முன் செலுத்துவோம் எம்முடி –
அவர் திருவடிகளின் முன்பே நம்முடைய தலை சேரும்படி நடத்துவோம்
ஸ்ரீ மத தத் அங்கரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்னக் கடவது இறே
இனி அவர் அடி அறியவே இறே வேண்டுவது
அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் நம் சென்னியிலே சேருவதற்கு முன்னமே-நாம் முற்பாடராய்
முடியைச் செலுத்துவோம் -என்றாகவுமாம் –—————————————————————
ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -சூர்ணிகை –220–
இரண்டாம் பத்தால்
சர்வ காரண பூதனான சர்வேஸ்வரன் கீழில் பத்திலே தமக்கு அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ண –
அவனாலே தத்வ ஞானரான இவர் -அந்த ஞானத்துக்கு பலமான மோஷத்தை-அப்போதே பெற வேண்டும் என்று
ஆசைப் பட்டுப் பெறாமையாலே –
( அந்தமில் பேர் இன்பத்துக்கு அடியாரோடு இருந்தமையை இவருக்கு ப்ராப்யம் ) அவசன்னராக (2-4-)
இவருடைய அவஸாதம் எல்லாம் தீரும் படி –
அவன் வந்து சம்ஸ்லேஷித்து -(2-5 -அந்தாமத்து அன்பு )–அந்த சம்ஸ்லேஷத்தினால் வந்த ப்ரீதியை உடையவனாய் –
(உடையவராய் என்று ஆழ்வாரைச் சொல்ல வில்லை –உடையவனாய் -என்று இவர் சிக்கெனப் பிடித்தேன் -என்று
சொல்ல அதனால் அவனும் ப்ரீதனாய் )
அந்த ப்ரீதி இவர் ஒருவர் அளவிலே பர்யவசியாதே -இவரோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் வெள்ளம் இட்டு –
அந்த ப்ரீதியாலே பரம புருஷார்த்த லஷண மோஷத்தை -இவர்க்கு அவன் கொடுக்கத் தேட –(அணைவது அரவணை மேல் -2-8-)
அந்த மோஷத்தை -அவனுடைய சேஷித்வத்துக்கும் தம்முடைய சேஷத்வத்துக்கும் அனுகுணமாம் படி நிஷ்கரிஷித்தவர் –
ஆஸ்ரயணீயான அவனுக்கு கீழ் உக்தமான பரத்வத்தை நிலை பெறுத்துவனான லக்ஷணங்களை வெளி இட்டு –
தத் அனுகுணமான வசன பிரத்யஷங்களையும் தர்சிப்பித்து –ஆஸ்ரயிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக-
த்யாஜ்யமான சம்சாரத்தின் துக்கமும்
பிராப்யமான மோஷத்தின் ஆனந்ததமும்
சம்சார நிவ்ருத்தி பூர்வக-மோஷ பிராப்திக்கு உறுப்பான -சாதனத்தின் உடைய ரசமும் –
முன்னாக விதிக்கிற ச குண ப்ரஹ்ம உபாசனத்தை –
நிஷித்த அனுஷ்டானங்களினுடைய த்யாக பூர்வகமாக ஷேத்திர வாஸாத் யங்கங்களோடே கூட்டுகிறார் -என்கிறார் —
(உபாசனத்தை -அங்க யுக்தம் ஆக்குகிறார்
கீழே அவனுடைய சேவைக்கு பக்திக்கு -எளிமையும் இனிமையும் உண்டு –பஜனத்தில் சேர்க்கிறார் -என்றார் –
இங்கு குண உபாசனம் -பக்தி சேவை -பர்யாயம் -சேவை -கைங்கர்யம் -பக்தியை கைங்கர்யம் நமக்கு –
கண்ணன் சொல்லும் கர்மயோகம் போல இல்லாமல் –ஷேத்ரவாச சங்கீர்த்தன அஞ்சலி ப்ரதக்ஷிண கதி சிந்தனாதி –
ரசமான -காலைப்பிடிக்க பாலைக் கொடுப்பது போலே அருளிச் செய்கிறார்
குண அனுபவ கைங்கர்யமே பொழுது போக்காக கொள்ளுகை-பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்வது போலவே இங்கும் -)
(முகம் காட்டாமல் இருக்க -சிதிலமாகி – –காற்றும் கழியும் கட்டி அழுது -2-1-பெருமாள் பரத்வத்தை காட்ட –
கொஞ்சம் ஸைதில்யம் நீங்கி- ப்ராசங்கிகமாக-அடுத்த பத்து -2-2-விபவ அவதாரத்தில் பரத்வம் -திண்ணன் வீடு –
எல்லாம் தன்னுள்ளே கலந்து தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஒத்து-ஸந்தோஷம்-
அடியார்கள் உடன் கூட ஆசைப் பிறந்து கிடைக்காமல் வியசனம் மிக்கு ஆடி ஆடி –துடிக்க –
அடுத்து -தன் பக்தர் உடன் ஆழ்வார் உடன் சேர –அந்தாமத்து அன்பு-2-5-இது தான் மா முனிகள் கலந்தான் என்கிறார் –
2-3-கலந்தாலும் –எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தான்– இந்த சம்ச்லேஷத்தாலும் ஆழ்வாருக்கு திருப்தி பிறக்க வில்லையே
மேலே ஆனந்தம் -ஆழ்வாருக்கு -2-6-உன்னைப் பிடித்தேன் சிக்கனவே -பின்பு கேசவன் தமர்–2 7–
இவன் தானே மோக்ஷ பிரதன் உபதேசம் –அணைவது அரவணை மேல் -2-8–
அவன் கொடுக்க வர புருஷார்த்த நிர்தேசம்-எம்மா வீட்டு –ப்ராப்ய நிஷ்கர்ஷம்–2-9-கைங்கர்யம் தெற்குத் திருமலையில் -2-10-
பராங்குச பயோதி-கடல் அன்றோ -வியாக்யானம் மூலம் கடல் கரையில் இருந்து அனுபவிக்கத் தான் முடியும் )
1-சோராத மூவா வேர் முதலாய் உலகம் படைத்தவன் என்கிற
சித் அசித் த்ரய திரிவித காரணமானவன் அறியாதன அறிவிக்க
உள்ளம் தேறித் தூ மனம் மருளில் என்னும் ஜ்ஞான பலமான
ஒளிக் கொண்ட மோஷம் தேடி வாட
2-உலராமல் ஆவி சேர்ந்து சிக்கெனப் புகுந்து
சம்பந்திகளும் சேர்தல் மாறினர் என்ன
வாழ்வித்து உபகரிக்கிற நீந்தும் கெடலில்
எம்மா வீட்டை உபய (சேஷ சேஷி இருவருக்கும் ) அனுகுணம் ஆக்கினவர்
3-ஆச்ரயணீயனுக்கு பூர்வோக்த பரத்வத்தை
ஸ்தாபிக்கிற சகல பல ப்ரதத்வ காரணத்வ
சேஷ சாயித்வ ஸ்ரீ யபதித்வ சௌலப் யாதிகளை
திண்ணன் அணைவது என்று வெளி இட்டு
4-கள்வா தீர்த்தன் என்று வசன
பிரத்யஷங்களும் காட்டிப்
5-புலன் ஐந்து என்று சம்சார மோஷ
சாதன துக்க ஆனந்த ரசம் முன்னாக விதிக்கிற
அந்தர் கத குண உபாசனத்தை
6-மதித்துப் பெருக்கி மூழ்கி அழுந்திக்
கீழ்மை வலம் சூதும் செய்து
இளமை கெடாமல் செய்யும்
ஷேத்திர வாஸ சங்கீர்த்தன அஞ்சலி
பிரதஷிணகதி சிந்தநாத் அங்க
உக்தம் ஆக்குகிறார்
இரண்டாம் பத்தில்-
( 2-10-பாசுரங்களில் விவரித்தவை )
1-சோராத மூவா வேர் முதலாய் உலகம் படைத்தவன் என்கிற சித் அசித் த்ரய திரிவித காரணமானவன்
அதாவது
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி-2-1-11 -என்றும் ,
மூவாத் தனி முதலாய் -2-8-5–என்றும் ,
எப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய் -2-8-10–என்றும் ,
பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் -2-10-11-என்றும்–
லீலா விபூதியில்
சங்கல்ப விசிஷ்ட வேஷத்தால் நிமித்தமாயும் –
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட வேஷத்தால் உபாதானமாயும் —
ஞான சக்தி யாதி குண விசிஷ்ட வேஷத்தாலே சஹ காரியாயும் —
நித்ய விபூதியில் -அப்ராக்ருதம் -கார்யத்வம் இல்லாமல் ஸூஷ்மம் நாம ரூபம் இல்லாமல் இருக்காதே -அங்கு
சர்வ காரணம் அவன் -லீலா விபூதிக்கும் நித்ய விபூதிக்கும் –
இச்சா விசிஷ்ட ரூப (சங்கல்ப-இங்கு -அங்கு இச்சையால் ) வேஷத்தால் நிமித்தமாயும் –
அப்ராக்ருத அசித் ஜீவ விசிஷ்ட வேஷத்தால் உபாதானம் -லீலா விபூதியில் இங்கும் ஜீவன் அப்ராக்ருதம் தானே –
உபாதானம் -மாறுவது -ச ஏகதா பவதி-இத்யாதி -இமான் லோகான் காமான் நீ காம ரூப்யான் ஸஞ்சரன்-அங்கும் உண்டு –
அதுவே ஸ்ருஷ்ட்டி அங்கு -கைங்கர்யத்துக்கு அனுரூபமான திரு மேனி
விநியோக உபயோகி ஞானாதி வேஷத்தாலே சஹகாரி அங்கு –
இப்படி பக்த -முக்த -நித்ய ரூபமான சித் த்ரயத்துக்கும்
ப்ராக்ருத அப்ராக்ருத கால ரூபமான அசித் த்ரயத்துக்கும்
திரிவித காரணமும் தானே யான சர்வேஸ்வரன்
(நித்ய இச்சையால் அது நித்ய விபூதி -அவர்கள் நித்யர்கள் –
நியதி பூர்வ க்ஷண வ்ருத்தித்வமே காரணம்–அது இங்கு -மாறக்கூடிய அசித் –
எது சத்வே-முதல் வினாடியில் இது இருந்ததால் அது இருக்கும் – சங்கல்பம் காரணம் –
அங்கு -இவை நித்தியமாக இருக்கட்டும் என்பதால் அவை நித்யம் -இதுவே நியாயம் –
சங்கல்பம் மாற்ற மாட்டான் -ஸ்வதந்த்ரன்
அப்ரக்ருத அசித் ஜீவ சரீரம் அங்கும் உண்டே அவனுக்கு -ப்ரதிஜ்ஜைக்கு ஹானி வராது
ப்ரஹ்மத்தை விட வேறு இல்லையே -2-3-5-ப்ரஹ்ம ஸூத்ரம்-
ப்ரஹ்ம கார்யத்வேன-ஆகாசம் -ப்ரஹ்மாத்மகம் –
நித்ய விபூதியில் -நித்ய சித்த -ப்ரஹ்ம சரீரத்வேன-கார்ய காரண அபாவம் –
சரீரமாக இருப்பதால் ப்ரஹ்மாத்மகம் அங்கு சுருதி பிரகாசர் -விளக்கம் –
இத்தை மா முனிகள் திரு உள்ளத்தில் கொண்டு -இப்படி பிரித்து அருளுகிறார் இரண்டையும் –
காலத்துக்கு குணத்ரயம் இல்லை -அபிமானி தேவதைக்கு குணத்ரய வஸ்யம் இருப்பதால் -கலியுகம் படுத்துகிறது என்பர் –
த்ரிவித சேதன த்ரிவித அசேதன-இதனாலே -)
(ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்-ஓன்று விடாமல்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்– மூவா -கலங்காமல் – -காரணந்து த்யேயா
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-
காரணத்வம் நியந்த்ருத்வம் வியாபகத்வம் காருணிக்கத்வம்
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் 2-10-11–மீண்டும் மேம்படும் -படைக்கிறான் –
கீழே மூவா வருத்தப்படாமல் இருப்பதை சொல்லி -)
அறியாதன அறிவிக்க உள்ளம் தேறி
அறியாதன அறிவித்த அத்தா-2-3-2- -என்று இவருக்கு அஜ்ஞாதமான தத்வ ஹித புருஷார்த்தங்களை
விசத தமமாக அறிவிக்க —
அடியை அடைந்து உள்ளம் தேறி -2-6-8–என்று அத்தாலே இவரும் அவனைக் கிட்டி
நெஞ்ளில் தெளிவை உடையவராய்-(மனோ பூர்வ வாக் உத்தர க்ரமம் இல்லையே அவன் மூலம் பெற்றதால் )
தூ மனம் மருளில் என்னும் ஜ்ஞான பலமான ஒளிக் கொண்ட மோஷம் தேடி வாட
தூ மனத்தனனாய் –2-7-8-
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்-2-10-11 -என்று
மோஷ ஏக ஹேது தயா பரிசுத்தமான அந்த கரணத்தை உடையராய் –
அவனுடைய கல்யாண குண விஷயமான அஞ்ஞான கந்தம் இல்லாதபடி –
கீழில் பத்தில் பிறந்த தம்முடைய ஞானத்துக்கு (தத்வ வேதன மறப்பற்று ) பலம் மோஷம் ஆகையாலே –
களிப்பும் கவர்வும் அற்று பிறப்பு பிணி மூப்பு இறப்பு அற்று ஒளிக் கொண்ட சோதி மயமாய் –
அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –2-3-10–என்று
பிராக்ருத விஷய லாப அலாபங்களால் வரும் கர்வ க்லேசங்களும் -ஷட் பாவ விகாரங்களும் போய் –
சுத்த சத்வம் ஆகையாலே –நிரவதிக தேஜோ ரூபமான விக்ரகத்தை உடையோமாய் –
நித்ய சூரிகள் திரளிலே கூடப் பெறுவது எப்போதோ என்று
அந்த மோஷத்தை பெறுகையில் ஆசையாலே தேடி
அப்போதே கிடையாமல்
வாடி விடும் -2-4-1-என்று
ஆஸ்ரயித்தை இழந்த தளிர் போல் வாடி
2-உலராமல் ஆவி சேர்ந்து
உள்ளுள் ஆவி உலர்ந்து உலர்ந்து-2-4-7- -என்கிற தாபம் ஆறும் படி
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு-2-5-1- -என்கிறபடியே
பரம பதத்தில் பண்ணுகிற வியாமோகத்தை இவர் பக்கலிலே செய்து —
கமர் பிளந்த தரையிலே நீர் பாய்ச்சுவாரைப் போலே -இவரோடு நிரவதிக சம்ஸ்லேஷத்தைப் பண்ணி –
சிக்கெனப் புகுந்து-
சிறிதோர் இடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கி சிக்கனே புகுந்தான்-2-6-2- -என்று
அத் அல்பமாய் இருப்பதோர் பதார்த்தமும் தன் பக்கல் நின்று பிரி கதிர் பட்டு நோவு படாதபடி
தன் சங்கல்ப சஹஸ்ரைக தேசத்தில் சர்வ லோகங்களையும் ஒருக் காலே வைத்து இனி போராதபடி புகுந்து
சம்பந்திகளும் சேர்தல் மாறினர் என்ன வாழ்வித்து
எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வென் நரகத்து என்றும் சேர்த்தல் மாறினர்-2-6-7- -என்று
இவருடைய சம்பந்த சம்பந்திகளும் -சம்சாரான் முக்தராம் படி பண்ணி -அத்தாலே –
எமர் ஏழு பிறப்பும் –கேசவன் தமர் –மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா -2-7-1–என்று
என்னோடு பரம்பரயா சம்பந்தம் உடையாரும் என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக பகவத் அதீயரானார்கள் –
நிர்ஹேதுக பகவத் கிருபையாகிற பெரும் சதிரைப் பெற்று
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்தானது ஊற்று மாறாமல் பெருகிகிற படியே ! என்றிவர்
தாமே ஆச்சர்யம் படும் படி இவரை வாழ்வித்து –
(இளிம்பு-பகவத் கிருபை பெறாமல் / சதிர்-கிருபையை உபாஸனாதிகளால் பெற்று / மா சதிர் -நிர்ஹேதுகமாக பெற்று )
உபகரிக்கிற நீந்தும் கெடலில் எம்மா வீட்டை உபய அனுகுணம் ஆக்கினவர்
இப்படி தம்முடைய ( சம்பந்தி ) பரம்பரை அளவும் வெள்ளம் இடுகிற தன் ப்ரீதியாலே
தமக்கு அவனுபகரித்து இடுகிற
நீந்தும் துயர் இல்லா வீடு –2-8-2-
கெடலில் வீடு-2-9-11-
எம்மா வீட்டுத் திறமும் -2-9-1–என்றும்
துக்க கந்த ரஹிதமாய்–அநர்த்த கந்தம் இல்லாததாய் -எவ் வகையிலும் விலஷணமான மோஷத்தை எனக்கு என்று தரில் –
(மூன்று வீட்டு சப்த அர்த்தங்கள் இத்தால் -துயர் இல்லா வீடு -ஸ்வார்த்ததா-அநர்த்தம் இல்லா வீடு – கெடலில் வீடு–எம்மா வீடு – )
அந்த மோஷம் அஹங்கார கர்ப்பம் ஆகையாலே ஐஸ்வர்யகளோபாதி ஸ்வரூப விருத்தம் ஆகையாலே –
அதனுடைய பிரசங்கமும் எனக்கு அசஹ்யமான பின்பு எனக்கு மோஷம் தரப் பார்த்தது ஆகில் –
நின் செம்மா பாத பற்ப்பு தலை சேர் தொல்லை –அம்மா அடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-
என்று சேஷியான உன்னுடைய அகவாய் சிவந்து புறவாய் ஸ்யாமமாய் -பரம பூஜ்யமாய் –
பரம போக்யமான திரு அடிகளை -சேஷ பூதனான என் தலையிலே –
கொக்கு வாயும் படி கண்ணியும் போலே சடக்கென சேர்க்க வேணும் —
சேஷியான உன் பக்கல் சேஷ பூதனான நான் அபேஷித்து பெறுவது இதுவே என்றும் –
தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4–என்று
உபய ( சேஷ சேஷி இருவருக்கும் ) ஸ்வரூபத்துக்கும் அனுகுணமாக நிஷ்கரிஷித்தார்-
3-ஆச்ரயணீயனுக்குப் பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற
ஆஸ்ரயணீயான அவனுக்கு -முதல் பத்தில் சொல்லப் பட்ட -சர்வ ஸ்மாத் பரத்வத்தை –நிலை பெருத்துவனான
சகல பல ப்ரதத்வ காரணத்வ சேஷ சாயித்வ ஸ்ரீ யபதித்வ சௌலப் யாதிகளை திண்ணன் அணைவது என்று வெளி இட்டு
வீடு முதல் முழுதுமாய் -2-2-1-–என்று சகல பல பரதத்வம் –
தேவும் எல்லா பொருளும் 2-2-8-—கருத்தில் –வருத்தித்த மாயப் பிரான் -என்றும் –
(வர்த்தித்து -வளர்த்து என்ற அர்த்தம் )
ஆக்கினான் தெய்வ வுலகுகள்-2-2-9- -என்று சர்வ காரணத்வம் –
ஆழி அம் பள்ளியாரே -2-2-6–என்ற லக்ஷணையாலே சேஷ சாயித்வம் –
(பாற் கடலில் -ஆதி சேஷன் மேல் படுத்த -என்று கூட்டி லக்ஷணை-என்றவாறு -அஸ்வாரஸ்யம் )
பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து -2-2-3-– என்று ஸ்ரீயபதித்வம் –
கண்ணன் கண் –2-2-1- கோபால கோள் அரி ஏறு-2-2-2- -என்று அவதார சௌலப்யம் –
(ஸுவ்லப்யமும் பரத்வத்தை விளக்க வந்தது தானே
ஐந்தும் இரண்டு திருவாய் மொழியிலும் –என்றும்
இரண்டு மட்டும் திண்ணன் -மீதி மூன்றும் அணைவது -என்று இரண்டு நிர்வாகங்கள் )
ஆதி -சப்தத்தாலே
தகும் கோலத் தாமரைக் கண்ணன் -2-2-5–என்று புண்டரீகாஷத்வம் –
ஏழு உலகும் கொள்ளும் – வள்ளல் வல் வயிற்று பெருமான் -2-2-7–என்று அகடி தகடனா சாமர்த்தியம் –
என்கிறவற்றை – திண்ணன் வீட்டிலும் —பிரகாசிப்பித்தது
(இவை இரண்டும் பரத்வத்தை விளக்கும்)
அணைவது அரவணை மேல்-2-8-என்று சேஷ சாயித்வம் –
பூம் பாவை ஆகம் புணர்வது -என்று ஸ்ரீ யபதி த்வம் –
இருவர் அவர் முதலும் தானே -என்று காரணத்வம் –
இணைவனாம் எப்பொருட்கும் -என்று அவதார பிர யுக்த சௌலப்யம் –
வீடு முதலாம் -சகல பல ப்ரதத்வம்-
(மோக்ஷத்துக்கு காரணம் –ஈட்டில் -மோக்ஷம் தொடக்கமான-என்று கொண்டு அஸ்வாரஸ்யம் –
கீழே திண்ணன் வீடு முதல் முழுதுமாய் -)
ஆதி -சப்தத்தாலே
பிறவி கடல் நீந்துவார்க்கு புணைவன் – என்று மோஷ உபாயத்வம் –
ஆனை இடர் கடிந்த -என்று ஆபத்ஸஹத்வம் –
மூ உலகும் காவலோன் -சர்வ ரஷகத்வம்
ஆகியவற்றை -அணைவது அரவணையிலும் -பிரகாசிப்பித்தது –
அன்றிக்கே –
வீடு முதல் முழுவதுமாய் -என்று மோஷ ப்ரப்ருதய அசேஷ புருஷார்த்த
பிரதன் என்கையாலே சகல பல பிரதத்வத்தையும் –
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க –
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும் வருத்தித்த –
தன் உந்தி உள்ளே வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் ஆக்கினான் -என்று
காரணத்வத்தையும் – திண்ணன் வீட்டிலும் –
அணைவது அரவணை மேலிலும் -என்றும் –
பூம் பாவை யாகம் புணர்வது- என்றும் –
இணைவனாம் எப்பொருட்கும் -என்றும்
அடைவே சேஷ சாயித்வ ஸ்ரீ ய பதித்தவ சௌலப்யங்களையும் —
ஆதி சப்ததாலே -வீடு முதலாம் -என்று மோஷ பிரதத்வத்தையும் –
நலம் அந்தமிலதோர் நாடு புகுவீர் -பலமுந்து சீரில் படிமின் -என்று
முமுஷ பாஷ்யத்வத்தையும்
அணைவது அரவணை -யிலும் வெளி இட்டு என்னவுமாம் —
இந்த யோஜனை இதன் பட்டோலையான க்ரந்தத்தில் இவர் அருளிச் செய்ததுவுக்கு சேருவது ..
முற்பட்ட யோஜனையில் –
ஆழி அம் பள்ளியாரே -என்று சேஷ சாயித்வம் லக்ஷணை யாலே கொள்ள வேண்டுகையும் –
வீடு முதலாம் -என்று மோஷத்துக்கு ஹேதுவாம் என்கிறதை பிரகரண விருத்தமாம் படி –
மோஷாதி புருஷார்த்த பிரதத்வமாக சொல்லுகையும் –
சகல பல பரதத்வம் என்று தொடங்கி இவர் எண்ணின அடைவுக்குச் சேர இரண்டு திருவாய் மொழியிலும்
சொல்லப் போகாமையும் ஆகிற அஸ்வாரஸ்யங்களும் உண்டு
4-கள்வா தீர்த்தன் என்று வசன பிரத்யஷங்களும் காட்டி
கள்வா-2-2-10–என்கிற பாட்டிலே –
அவதரித்து உன் பரத்வம் தெரியாதபடி நின்றாயே ஆகிலும்
எங்களுக்கு காரண பூதனான சேஷி நீயே -என்று தேவதாந்த்ரங்களில் தலைவரான
பிரம ருத்ராதிகளே தங்களுக்கு காட்சி கொடுக்கைக்கு -பெரிய திரு வடியை மேல் கொண்டு புறப்பட்டால் –
அவனுடைய திருவடிகளில் விழுந்து கூப்பிடா நிற்ப்பார்கள் என்று
அவனே சர்வ ஸ்மாத் பரன் என்னும் இவ் அர்த்தத்துக்கு தேவதாந்த்ரங்கள் வசனத்தையும் –
தீர்த்தனுலகு அளந்த -2-8-6-–என்கிற பாட்டிலே –
ஓர் அஸ்த்ர லாபத்துக்காக புஷ்பாதிகளும் கொண்டு ருத்ர சமாராதானம் பண்ணப் புகுகிற அர்ஜுனனைப் பார்த்து –
அந்த புஷ்பங்களை நம் காலிலே பொகடு – என்று கிருஷ்ணன் அருளிச் செய்ய –
அவனும் தீர்த்த பூதனான அவனுடைய -திரு உலகு அளந்த திரு அடிகளிலே -அப்பூவை பரிமாற —
பார்த்தோ விஜேதா மதுசூதனச்ய பாதாரா விந்தார்ப்பித்த சித்ர புஷ்பம்
ததர்ச கங்காதர மௌலி மத்யே பபூவ வீர க்ருத நிச்சி தார்த்த – என்கிறபடி
தன் திருவடிகளிலே சாத்தின புஷ்பங்களோடு –
சஜாதீயமான வற்றை அன்றிக்கே – அவை தன்னையே
பாடே பக்கே அன்றிக்கே -ருத்ரன் தலை மேலே -ஆப்த வாக்யத்தால் அன்றிக்கே –
தானே பிரத்யஷித்து -சது பார்த்தோ மகாமனா-ஸ்ரீ கீதா பாஷ்யம் -என்கிறபடியே –
பேரளவு உடையவனான அவன் நிர்ணயித்த பரத்வம் மந்த மதிகளால் இன்று ஆராயும் படி இருந்ததோ என்று
பிரத்யஷைத்தையும் காட்டி-
(மிலேச்சனும் பக்தன் ஆனால் சூத்ரம் -வசன அனுஷ்டானங்கள் முன்பு -பார்த்தோம் இங்கு வசன ப்ரத்யக்ஷங்கள் )
5-புலன் ஐந்து என்று சம்சார மோஷ சாதன துக்க ஆனந்த ரசம் முன்னாக விதிக்கிற அந்தர் கத குண உபாசனத்தை
(சம்சார துக்கம் மோக்ஷ ஆனந்தம் சாதன ரசம்-என்று பிரித்து )
புலன் ஐந்து -2-8-4-என்கிற பாட்டில் –
ஆஸ்ரயணத்தில் இழிகிறவர்களுக்கு
த்யாஜ்யத்தில் -ஜிகாசையும் –
பிராப்யத்தில் பிராவண்யமும் –
சாதனத்தில் ருசியும் -விளையும் படி –
புலன் ஐந்து மேவும் பொறி ஐந்து நீங்கி- என்று
பரிச்சின வஸ்துக் க்ராஹமான -இந்த்ரிய வஸ்யராகை தவிர்ந்தது என்கையாலே –
அல்ப அஸ்திரஸ்வாதி தோஷ துஷ்டமான சப்தாதி போகங்களை
அனுபவித்து இருக்கும் சம்சாராத்தினுடைய துக்கமும் –
நலம் அந்தமிலதோர் நாடு புகுவீர் –2-8-4-என்று
நன்மைக்கு முடிவு இல்லாத திரு நாட்டிலே புகுவீர் என்கையாலே -மோஷத்தினுடைய ஆனந்தமும்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே -2-8-4-என்று -ஸூசகம் கர்த்தும் -என்கிறபடி ( சீரில் படிமின் குண உபாசனம் )
ஸ்மர்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே-பல தசையில் போல சாதன தசையிலும் இனிதாய் இருக்கையாலே –
பலம் முற்பட்டு இருக்கிற கல்யாண குணங்களில் பிரவணர் ஆகுங்கோள் என்கையாலே –
சாதனத்தினுடைய ரசம் முன்னாக -சம்சார நிவ்ருத்தி பூர்வகமான -மோஷ பிராப்தி வேண்டி இருப்பார் –
(அலமந்து அசுரரை வீயச் செற்றவன் )அசூர வர்க்கத்தை தடுமாறி முடிந்து போம் படி செற்றவன் ஆகையாலே –
பிரபல பிரதி பந்தகங்களை அனாயசேன போக வல்லவனுடைய குணங்களிலே பிரவணர் ஆகுங்கோள் என்று விதிக்கிற –
தஸ்மின் யதந்தஸ் ததுபாசிதவ்யம் -என்று ப்ரஹ்ம ஸ்வரூப அந்தர்கதமான -அபஹத பாப்மத்வாதி
குண உபாசனத்தை
(அந்தர் கத குண உபாசனம் -அங்கி இவை அங்கங்கள்
தஹர வித்யை -உபாசனம் ப்ரஹ்ம புர-தஸ்மிந் யத் அந்த அன்வேஷ்டவ்யம் -தேடத்தக்கது -விசாரிக்கத்தக்கது –
ப்ரஹ்மத்துக்குள் காமம் -கல்யாண குணங்கள் இருக்கும் -தேடி உபாசிப்பாய்
என்ன குணங்கள் -அபஹத பாப்மாதி அஷ்ட குணங்கள் –
இந்திரன் மாம் ஏவ உபாஸ்வ–மாம் என்னை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை -உபேந்த்ரன் -உலகமாய் தோட்ட அவதாரம் –
கண்ணன் – மாம் சரணம் -இவனுக்குள்ளே என்று கொள்ளாமல் -அவனையே –
தஹர ஆகாசம் ஹ்ருதயத்துக்குள்ளே -நிறைந்த சோதி வெள்ளம் ஆகாசம் -அதற்குள் உள்ளதைத் தேடச் சொல்லி -சாந்தோக்யம் –
ஆழ்வார் அங்கங்கள் உடன் கூடிய உபாசனத்தை விதிப்பாரா -உபாயாந்தரங்கள் அன்றோ –
அஷ்டாங்க யோகம் -பக்தி –ஹிதம் ஷட்விதா சரணாகதி -பிரபத்தி நியாஸ பஞ்ச அங்கங்கள் கூடிய -ஹித தரம் –
சரணாகதி -அங்கங்கள் இல்லாமல் ஹித தமமாய் இருக்குமே –
தன்னடையே ஏற்கும் சம்பாவித ஸ்வ பாவம் -உத்தர க்ருத்யம் -அங்கங்கள் ஆகாதே –
அவகாத ஸ்வேதம் போலே ஆகுமே -பின் அங்கங்கள் என்று எதற்க்காக சொல்ல வேண்டும் –
நமக்கு சங்கை -போகும் இடம் உயர்ந்தது -பாபங்கள் பிரபலம் -செய்வது வெறும் சரணாகதி -உபாய பல்குத்வம்-
மூன்றாலும் விசுவாசம் குறையுமே
அந்தர் கத குண உபாசனம் சின்னதும் ஆசையுடன் கேட்க வருவோம் –கல்யாண குண அனுசந்தானம் -சொல்வது நம் சம்ப்ரதாயம்
அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் –
அங்கங்கள் எதற்கு -உபாசனத்துக்கு அங்கங்கள் இருப்பது போலே இதுக்கும் இவை உண்டே
அங்கங்கள் என்ற புத்தியோ அனுஷ்டானமோ இல்லை ஆழ்வாருக்கு -இங்கும் உண்டு -சம்பாவித ஸ்வ பாபம் –
குண உபாசனை பலன் குண அனுசந்தானத்துக்கும் உண்டு -அங்கங்களாக இல்லை சம்பாவிதம் என்றவாறு – )
6-மதித்து பெருக்கி மூழ்கி அழுந்தி கீழ்மை வலம் சூதும் செய்து இளமை கெடாமல்
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதித்து –
திறமுடை வலத்தால் தீவினை பெருக்கி –
வல்வினை மூழ்கி
நரகழுந்தி
கீழ்மை செய்து
வலம் கழித்து
சூது என்று களவும் சூதும் செய்து
கிளர் ஒளி இளைமை கெடுவதன் முன்னம் -என்று
உபாசன விரோதியான -இதர விஷய பிராவண்யத்தைப் பண்ணி –
அத்தாலே பாபங்களை கூடு பூரித்து -அவற்றிலே மறு நனைய மூழ்கி தரைப் பட்டு
தண்மையை செய்து– பலத்தை பாழ் போக்கி -பஸ்யதோகரனாய்-க்ரித்ரிமனாய்
பால்யத்தை பாழ் போக்காதே –
(க்ருத்யம் அக்ருத்ய விபாகம் பண்ணி-மதியாது -என்ற பாசுரத்தை மதித்து –
பெருக்காது -என்றதை பெருக்கி —
மூழ்காது -மூழ்கி / அழுந்தாதே -அழுந்தி இத்யாதி
கைங்கர்யம் பண்ணும் நாம் கிளர் ஒளி -கைங்கர்யம் கொள்ளும் அவன் ஒளி வளர் ஒளி மாயோன் –
திவ்ய தேசம் வளர் இளம் பொழில் சூழ் -ஆகவே நாம் தளர்விலராகிச் சார்வது சதிர்
இங்கு அக்ருத்யங்களைச் சொல்லி மேலே க்ருத்யங்களை விவரிக்கிறார் –
செய்யாதன செய்யோம் -செய்யும் கிரிசைகள் -திருப்பாவை போலே )
செய்யும் ஷேத்திர வாஸ சங்கீர்த்தன அஞ்சலி பிரதஷிண கதி சிந்தநாத் அங்க உக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில்
அதாவது
பால்ய ஏவ சரேத் தர்மம் -என்றும் ,
தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரயசே சதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-75–என்றும்
சொல்லுகிறபடியே
பால்யத்தில் கர்தவ்யமான –
மாலிரும் சோலை சார்வது சதிரே –2-1-
போது அவிழ் மலையே புகுவது பொருளே-2-10–என்கிற ஷேத்திர வாசம் –
பதியது ஏத்தி 2-10-2-என்கிற சங்கீர்த்தனம்
தொழக் கருதுவதே -2-10-9-என்கிற அஞ்சலி
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே-2-10-8- -என்கிற பிரதஷணம்
நெறிபட அதுவே நினைவது நலமே -2-10-6–என்கிற கதி சிந்தனை
ஆகிற இவை முதலான உபாசன அங்கத்தோடு சேர்க்கிறார்
இரண்டாம் பத்தில் என்கை–
(உபநிஷத் விதிக்கும் அங்கங்களை சம்பாவித ஸ்வ பாவங்களாக -தானே ஏற்படுவதைக் காட்டி அருளுகிறார் -என்றவாறு -)
(ஆக இரண்டாம் பத்தால்
காரணத்வத்தை வெளியிட்டு –
அவனாலே அறியாதது அறிவிக்கப் பெற்று உள்ளம் தேறினமையும்
ஞானத்தின் பலமாக மோக்ஷத்தைத் தேடி வாடினமையையும்
அந்த வாட்டம் தீர விசேஷ அனுக்ரஹம் செய்து அருளி மோக்ஷத்தைக் கொடுப்பதாக இருந்தமையையும்
அந்த மோக்ஷத்தின் தன்மையை ஆழ்வார் அறுதியிட்டு பேசினமையையும்
உலோகோருக்கு உபதேசிக்க ஒறுப்பட்டு ச குண ப்ரஹ்ம உபாசனத்தை அங்கத்தோடே விதித்தமையையும் தெரிவித்தபடி – )
———————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்—
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்