Archive for the ‘Sri Bhashyam’ Category

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-மூன்றாம் அத்யாயம்-ஸாதந அத்யாயம் – முதல் பாதம்-வைராக்₃ய பாதம்–ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

June 13, 2026

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

ஸித்த த்விகம் பார்த்துள்ளோம் -ஸாத்ய த்விகம் பார்க்கப் போகிறோம் –

3-1-1-தத₃ந்தரப்ரதிபத்த்யதி₄கரணம் –மூன்றாம் அத்யாயத்தின் அறிமுகம் -ஸங்கதி –
ப்ரஹ்ம ஸூத்ரங்கள் என்ற நூலில் 4 அத்யாயங்கள் உள்ளன –ஸமந்வய, அவிரோத, ஸாதந, பல அத்யாயங்கள் என்று. அதில் முதல் இரண்டு அத்யாயங்களும் சேர்த்து ஸித்₃த₄ த்₃விகம் என்று அழைக்கப் படுகின்றன, ஸித்தமான (தயாரான) பொருளான ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தையும், அவர் தான் ஜகத் காரணம் என்பதையும், மோக்ஷம் அடைவதற்கு அவரைத் தான் உபாஸிக்க வேண்டும் என்பதையும் சொல்வதால். இனி மேலுள்ள இரண்டு அத்யாயங்களும் சேர்த்து ஸாத்₄ய த்₃விகம் என்று அழைக்கப் படுகின்றன–ஸாதிக்கப் பட வேண்டிய(செய்யப் பட வேண்டிய) பொருள்களைப் பற்றிப் பேசுகிற படியால். அதில் மூன்றாம் அத்யாயத்தில் மோக்ஷம் அடைவதற்கான உபாயமான (வழியான) உபாஸநம் என்பதைப் பற்றிஆராய்கிறார் வ்யாஸர். நான்காம் அத்யாயத்தில் அடையப்படுகிற மோக்ஷத்தின் தன்மைகளை ஆராய்கிறார்–
இந்த மூன்றாம் அத்யாயத்தில் 4 பாதங்கள் உள்ளன–வைராக்₃ய பாதம், உப₄யலிங்க₃ பாதம், குண உப ஸம்ஹார பாதம் மற்றும் அங்க₃பாதம். இந்த நான்கு பாதங்களின் பொருளையும் சுருக்கமாக ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகார ஸாரா வலீ என்னும் நூலில் காட்டுகிறார்

பாதா₃ப்₄யாம் அத்ர பூர்வம் ஜநயதி ப₄விநாம் ப்₃ரஹ்ம வித்₃யாதி₄காரம்
பஶ்சாத் தேஷாம் உபா₄ப்₄யாம் வத₃தி ப₃ஹுவித₄தாம் தாம் அசேஷ꞉ ஸஹாங்கை ₃꞉ ।
ஐஶ்வர்யாதௌ விரக்திம் நிரவதி₄விப₄வே புருஷே சாபி₄லாஷம்
வித்₃யா பே₄தா₃வலம்ப₃ம் தது₃பகரண மப்யாஹ பாதை ₃꞉ க்ரமேண ॥

உபாஸநம் செய்வதற்கு அடிப்படைத் தகுதி–உலக விஷயங்களில் வைராக்யம் (பற்றின்மை ) மற்றும் பரமாத்மாவிடம் மிகுந்த ஆசை (பக்தி). இவை இரண்டையும் ஏற்படுத்துவதற்காகத் தான் முதல் பாதத்தில் ஸம்ஸாரத்தில் இருக்கும் ஜீவாத்மா வெவ்வேறு நிலைகளில் படக் கூடிய துன்பங்களையும், இரண்டாவது பாதத்தில் பகவானுடைய பெருமைகளையும் வ்யாஸர் கூறுகிறார். அதற்கு மேல் மூன்றாவது பாதத்தில் உபாஸநம் செய்வதில் உள்ள வெவ்வேறு முறைகளையும் நான்காவது பாதத்தில் உபாஸநத்துக்குத் தேவையான அங்கங்களையும் விவரிக்கிறார்.

3-1-1-தத₃ந்தர ப்ரதிபத்த் யதி₄கரணம் -அதிகரணத்தின் பின்புலம் ––இந்த அதிகரணத்தில் ஓர் ஆத்மா ஓர் உடலை விட்டு, வேறொரு உடலுக்குச் செல்லும் நிலம் ஆராயப் படுகிறது.
ஸந்தேஹம்– உடல் என்பது ஐம் பூதங்களால் ஆக்கப் பட்டது. பூத ஸூக்ஷ்மங்கள் அதாவது ஐம் பூதங்களில் நுண்ணிய பகுதிகளால் தான் அது உண்டாக்கப் பட வேண்டும். எனவே , ஜீவாத்மா ஓருடலிலிருந்து மற்றொரு உடலுக்குச் செல்லும் போது, அந்த உடலை உண்டாக்கத் தேவையான பூத ஸூக்ஷ்மங்களைத் தன்னோடு எடுத்துச் செல்கிறாரா? அல்லவா? என்பது தான் இந்த அதிகரணத்தில் உள்ள ஸந்தேஹம்-

பூர்வ பக்ஷம்– பூத ஸூக்ஷ்மங்கள் இல்லாமல் தனியாகத் தான் செல்கிறார் ஜீவாத்மா. ஏனெனில், அவர் எந்த இடத்தில் போய் சேருகிறாரோ , அங்கேயே பூத ஸூக்ஷ்மங்கள் இருக்கப் போகின்றன, அவற்றைக் கொண்டே புது உடலை உண்டாக்கி விடலாம்.அதனால் முன் உடலிலிருந்து பூத ஸூக்ஷ்மங்களைச் சுமந்து செல்லத் தேவை யில்லை

ஸித்தாந்தம்– ஜீவாத்மா பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துக் கொண்டு தான் செல்கிறார் என்று இந்த அதிகரணத்தில்உள்ள 7 ஸூத்ரங்களால் வ்யாஸர் நிரூபிக்கிறார்.
1–தத₃ந்தர ப்ரதி பத்தௌ ரம்ஹதி ஸம் பரிஷ்வக்த: ப்ரச்ந ப்ரதிவசநாப்₄யாம்
தத₃ந்தர ப்ரதி பத்ததௌ
–வெவ்வேறு உடலை அடையும் பொழுது–தத் என்றால்’அது’ என்று பொருள்.
முன் அதிகரணத்தில் ’ஸம்ஜ்ஞா மூர்தி க்லிப்தி’ என்ற ஸூத்ரத்தில் மூர்த்தி என்ற சொல்லால் ’உடல்’ குறிக்கப்பட்டது. அதைத் தான் இவ் விடத்தில் அது என்று நினைவு கூறுகிறார். ஆகவே , தத்= உடல்; ததந்தரம்= வெவ்வேறு உடல்; பிரதிபத்தி= அடைதல். அப்பொழுது–
ஸம் பரிஷ்வக்த:
– பூத ஸூக்ஷ்மங்களை அழைத்துக் கொண்டு (எடுத்துக் கொண்டு) ரம்ஹதி–(ஜீவாத்மா) செல்கிறார்
ப்ரச்ந ப்ரதிவசநாப்₄யாம் – கேள்வி பதில்களால் –

பஞ்ச அக்நி வித்யை – சாந்தோக்ய உபநிஷத்தின் 5 ஆவது அத்யாயத்தில் பஞ்சோக்₃நி வித்₃யா என்பது வருணிக்கப் பட்டுள்ளது. அதிலிருக்கும் கேள்வி பதில்களைத் தான் இங்கு வ்யாஸர் குறிப்பிடுகிறார்
ச்வேத கேது என்பவன் பாஞ்சால தேசத்து அரசனான ப்ரவாஹணனுக்குச் சில வைதிக கர்மங்களைச் செய்து வைப்பதற்காகச் சென்ற போது அவர் இவனிடம் 5 கேள்விகள் கேட்டார். அவனுக்குப் பதில் தெரியாததால் தன் தந்தையிடம் வந்து அவன் கேட்க, அவரும் பதில் தெரியாமல் ப்ரவாஹணரிடமே சென்று விடை கேட்டார். அப்போது பஞ்சோக்₃நி வித்₃யா என்பதை ப்ரவாஹணர் உபதேசித்தார். அந்த ஐந்து கேள்விகள்-
1-வைதிக கர்மங்களைச் செய்பவர்கள் எந்தப் பாதையால் ஸ்வர்கத்தை அடைகிறார்கள்?
2-அவர்கள் எந்தப் பாதையால் திரும்பவும் பூ லோகத்தில் வந்து பிறக்கிறார்கள்?
3–தேவ யானம் பித்ரு யானம் என்ற இரண்டு பாதைகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
4-யாரெல்லாம் ஸ்வர்க லோகத்தை அடைவதில்லை ?
5–ஜலமானது ஐந்து ஆஹுதிகளுக்குப் பிறகு எப்படி ’மனிதன்’ என்றழைக்கப்படும் உடலாக மாறுகிறது?
இதில் ஐந்தாவது கேள்வியும் அதற்கான பதிலும் தான் நமக்கு இப்போது தேவையானவை

அக்நி என்ற உருவகப் படுத்தப்பட்ட ஐந்து பொருள்களில் ஜலத்தை ஆஹுதியாகக் கொடுக்கக் கொடுக்க அது பல மாறுபாடுகளை அடைந்து இறுதியில் மனிதஉடலான கர்பமாக மாறுகிறது என்று ப்ரவாஹணர்பதில் கூறினார். இது தான் பஞ்சோக்₃நி வித்₃யா என்று அழைக்கப் படுகிறது. இறுதியில் மனித உடல் உண்டாகிற படியால், அதற்குத் தேவையான பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துக் கொண்டு தான் ஜீவாத்மா இந்த ஐந்து நிலைகளையும் கடக்கிறார் என்று கேள்வி-பதில்களைக் கொண்டு நாம் அறிய முடிகிறது.

ஹோமப் பொருள் -அக்னி -ஸ்வர்க்கம் -மாற்றம் -ஸோமராஜா -அழகிய உடல்
ஹோமப் பொருள் -சோமராஜா -அக்னி -மேகம் -மாற்றம் -மழை –
ஹோமப் பொருள் -மழை -அக்னி -பூமி – -மாற்றம் -அன்னம் -சோறு
ஹோமப் பொருள் –அன்னம் -அக்னி -ஆண் -மாற்றம் -ரேதஸ் விந்து –
ஹோமப் பொருள் -ரேதஸ் -அக்னி -பெண் -மாற்றம் -கர்ப்பம் -மனித உடல் –

ஜீவாத்மா அடுத்த உடலுக்குப் பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துச் செல்கிறாா்–புலன்களும் பூத ஸூக்ஷ்மங்களும் செல்கின்றன -ஒரு ஜீவாத்மா ஓரு உடலை விட்டு வேறொரு உடலுக்குச் செல்லும் போது, அந்த உடலை உண்டாக்கத் தேவையான பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துக் கொண்டு செல்கிறாரா? இல்லையா ? என்கிற ஆராய்ச்சி செய்யப் படுகிறது. சாந்தோக்ய உபநிஷத்திலுள்ள பஞ்ச அக்நி வித்யையில் ப்ரவாஹணர் ஸ்வேத கேதுவுக்கும் அவருடைய தந்தைக்கும் உபதேசிக்க்கும் போது, இந்த உடலிலிருந்து பிரிந்த ஜீவாத்மா ஸ்வர்கம்,மேகம், பூமி, ஆண், பெண் என்ற ஐந்து அக்நிகளில் ஆஹுதியாகக் கொடுக்கப்பட்டதும் மனித உடலை அடைகிறார் என்று கூறுவதால், கண்டிப்பாக அந்த உடலை உண்டாக்கத் தேவையான பூத ஸூக்ஷ்மங்களையும் எடுத்துக் கொண்டு தான் அவர் சென்றிருக்க வேண்டும் என்று முதல் ஸூத்ரத்தில் வ்யாஸர் நிரூபித்தார். இனி மேலுள்ள ஸூத்ரங்களைப் பார்ப்போம்.

பூர்வ பக்ஷியின் கேள்வி–ப்ரவாஹணரின் கேள்வியில் “ஜலம் ஐந்து ஆஹுதிகளுக்குப் பிறகு எப்படி மனிதனாக மாறுகிறது என்று தெரியுமா?” என்று தானே உள்ளது. ஜலத்தை மட்டும் தானே குறிப்பிட்டு்கிறார். பிறகு எப்படி எல்லாப் பூத ஸூக்ஷ்மங்களையும் எடுத்துச் செல்வதாகக் கொள்ள முடியும்?
வ்யாஸரின் பதில் அடுத்த ஸூத்ரத்தில்–2-திரியாத் மகத் வாத் து பூ₄யஸ்த்வாத்
–“மூன்றின் வடிவமானதால்; அதிகமானதால்”
முன் அதிகரணத்தில் சொன்ன படிக்கு, ஐம்பூதங்களையும் படைத்த பிறகு பகவான் அவற்றைக் கலந்து பஞ்சீகரணம் என்ற செயலைச் செய்கிறார். அதனால் ஒவ்வொரு பூதமுமே ஐம் பூதங்களின் வடிவமாகத் தான் உள்ளது. எனவே இங்கு ஜலம் என்று குறிப்பிடப் பட்டதும் ஐம் பூதங்களின் பூத ஸூக்ஷ்மங்களும் தான்.
பிறகு ஏன் அதை மற்ற பெயர்களால் குறிப்பிடாமல் ’ஜலம்’ என்று குறிப்பிடுகிறார்? அதிகமான பகுதி ஜலமான படியால். உண்டாக்கப்படும் மனித உடலிலும் ஜலம் தானே பெரும்பாலும் உள்ளது

3– ப்ராண க₃தே : ச – “ப்ராணன்கள் (புலன்கள்) செல்வதாலும்”;
இதில் வேறொரு காரணம் காட்டுகிறார். -ஜீவன் உடலிலிருந்து புறப்படும் பொழுது மூச்சுக் காற்றையும் புலன்களையும் எடுத்துச் செல்கிறார் எனப்படுகிறது. புலன்களை மட்டும் எடுத்துச் செல்ல இயலாதாகையால், அவற்றுக்கு இருப்பிடமான பூத ஸூக்ஷ்மங்களையும் சேர்த்துத் தான் எடுத்துச் செல்ல வேண்டும், காற்று புஷ்பத்தின் துகள் களோடு மணத்தை எடுத்துச் செல்வது போல்.

புலன்கள் அழிகின்றனவா? செல்கின்றனவா?
கேள்வி
–வேதத்தில், ஒருவன் மரணமடையும் பொழுது புலன்கள் அழிந்து போகின்றன என்று தான் சொல்லப் படுகிறது. (யத்ர அஸ்ய புருஷஸ்ய ம்ருதஸ்ய அக்₃நிம் வாக்அப்யேதி, வாதம் ப்ராண :, ச ஷுஸ் : ஆதி₃த்யம்) அதாவது“ஒரு மனிதன் மரணம் அடையும் பொழுது அவனுடைய வாக்(பேச்சுப் புலன்) நெருப்பில் லயம் அடைகிறது (அழிந்து போகிறது), மூச்சு காற்றில் சேர்கிறது, கண் ஸூர்யனிடம் லயம் அடைகிறது” என்றுள்ளது. எனவே , ஜீவாத்மா வேறொரு உடலுக்குச் செல்லும் பொழுது புலன்கலளையும் எடுத்துச் செல்கிறார் என்பது தவறு.

வ்யாஸரின் பதில்–அடுத்த ஸூத்ரத்தில்
4–அக்₃ந்யாதி₃ க₃தி ச்ருதே : இதி சேத் ந பா₄க்தத்வாத்
அக்₃ந்யாதி₃க₃திச்ருதே
: – புலன்கள் அக்நி முதலானவற்றில் லயம் அடைவதாக வேதம் சொல்வதால்
இதி சேத் ந–என்று நீங்கள் கூ₂றினால், அது தவறானது
பா₄க்தத்வாத்– இந்த வாக்யம் நேரடிப் பொருளைக் குறிக்காமல் வேறொரு அர்த்தத்தில் சொல்லப் பட்டு்ள்ளபடியால்.

இதே இடத்தில் (ஓஷதீ₄: லோமாநி, வநஸ்பதீந் கேசா 🙂 அதாவது “உடலிலிருக்கும் முடிகள் செடி கொடிகளைச் சென்றடைகிறது, தலையிலிருக்கும் முடிகள் மரங்களில் லயம் அடைகின்றன” என்றும் கூறப்பட்டு்ள்ளது. அது கண்டிப்பாக நேரடியான பொருளில் கூறப் பட்டிருக்க முடியாது, அப்படி எதுவும் நடக்காத்தால். எனவே , இந்தப் பகுதி முழுவதுமே அதி₄ஷ்டா₂த்ரு தே₃வதா அபக்ரமணம் என்ற பொருளில் தான் உள்ளது. -அதாவது, உடலிலிருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் வலுவூட்டக் கூடிய தெய்வங்கள் உள்ளார்கள் . நெருப்புக்கான கடவுள் பேச்சுப் புலனையும், காற்றுத் தேவதை மூச்சுக் காற்றையும் , ஸூர்யனுக்கான தேவதை கண்ணையும், செடி கொடிகளின் தேவதை உடல் முடிகளையும், மரங்களுக்கான அபிமாநிநீ தேவதை தலை முடியையும் பாதுகாக்கிறார்கள் ஒருவன் மரணமணடயும் போது, பேச்சுப் புலனை இதுவரை காத்து வந்த தெய்வம், இனி அதற்குத் தேவை இல்லாதலால், அக்நிக்கு மட்டும் தெய்வமாக இருக்கும். அதைத் தான்“பேச்சுப் புலன் அக்நியில் சேர்கிறது” என்று வேதம் கூறுகிறது. அதே போல் தான் மற்ற இடங்களிலும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே , புலன்கள் அழிவதில்லை , ஜீவாத்மாவால் தான் அடுத்த உடலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்.

ஸ்ரத்தா என்றால் என்ன?
கேள்வி
–ப்ரவாஹணரின் கேள்வியில்-’ஜலம் ஐந்து ஆஹுதிகளுக்குப் பிறகு எப்படி மனித உடலாக ஆகிறது?’ என்று ஜலத்தை (பூத ஸூக்ஷ்மங்களை ) பற்றின பேச்சு இருந்தாலும், ஆஹுதிகணை ஒவ்வொன்றாகச் சொல்லும் பொழுது, முதல் ஆஹுதியில் ’ஸ்ரத்₃தா₄’ என்ற பொருள் தான் ஸ்வர்கம் என்ற அக்நியில் ஆஹுதியாகக் கொடுக்கப் படுவதாகச் சொல்லப் பட்டு்ள்ளது. ஸ்ரத்தா என்றால் ஈடுபாடு-நம்பிக்கை என்கிற எண்ணம் தான் -ஆகவே , ஜீவாத்மா பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துச் செல்வதாக எப்படிச் சொல்ல முடியும்? வியாஸரின் பதில்–அடுத்தஸூத்ரத்தில்

5– ப்ரத₂மே அஶ்ரவணத் இதி சேத் நதா: ஏவ ஹி உபபத்தே :
ப்ரத₂மே அஶ்ரவணத்
-முதல் ஆஹுதியில், ஜலம் (பூத ஸூக்ஷ்மங்கள் )வேதத்தில் சொல்லப்படாதபடியால்
இதி சேத் ந–என்று நீங்கள் சொன்னால், அது தவறு
தா: ஏவ ஹி–அந்த பூத ஸூஷமங்கள் தானன்றோ (ஸ்ரத்₃தா₄ என்ற சொல்லால் குறிக்கப் படுகின்றன)
உபபத்தே :– (அப்போது தான் கேள்வியும் பதிலும்) பொருந்துகிற படியால்
முதலில் ப்ரவாஹணரின் கேள்வியில் ’ஜலம் மனித உடலாக மாறுகிறது’ என்றுள்ளது. பதிலின் முடிவிலும் ’இவ்வாறு ஜலம் மனித உடலாக மாறுகிறது’ என்றுள்ளது. எனவே நடுவில்’ ஸ்ரத்தா என்ற பொருள் ஐந்து ஆஹுதிகளைத் தாண்டி மனித உடலாக மாறுகிறது’ என்று சொல்லப்பட்டாலும், அந்த ஸ்ரத்தா என்பது ஜலம் (பூத ஸூக்ஷ்மங்கள் ) என்று தான் கொள்ள வேண்டும். இல்லா விட்டால், கேள்விக்கும் பதிலுக்கும் பொருத்தமே இல்லாமல் போய் விடும்.
மேலும் வேதத்தில் வேறொரு இடத்தில்“ஸ்ரத்₃தா₄ வை ஆப:” அதாவது ’ஜலம் அன்றோ ஸ்ரத்தா என்று சொல்லப் படுகிறது’ என்று தெளிவாகவே சொல்லப்பட்டு்ள்ளது. எனவே இங்கும் அதுவே பொருள் –

ஜீவாத்மா எங்கே சொல்லப் பட்டு்ள்ளார்? கேள்வி–ஸ்ரத்தா-ஜலம் என்று பூத ஸூக்ஷ்மங்கள் சொல்லப் பட்டு்ள்ளன. அவை ஐந்து ஆஹுதிகளைக் கடந்து மனித உடல் ஆகின்றன. ஆனால் இங்கு ஜீவாத்மாவைப் பற்றின பேச்சே இல்லையே ? பிறகு இதைக் கொண்டு எப்படி ஜீவாத்மா பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துச் செல்கிறார் என்று கூற முடியும்? வ்யாஸரின் பதில்-
6-அஸ்ருத்த்வாத் இதி சேத் ந இஷ்டாதி₃காரிணாம் ப்ரதீதே : •
அஸ்ருத்த்வாத்
–ஜீவாத்மா இங்கு சொல்லப் படாதபடியால் இதைக் கொண்டு முடிவு செய்ய இயலாது
இதி சேத் ந–என்று நீங்கள் சொன்னால் அது தவறானது
இஷ்டாதி₃காரிணாம் ப்ரதீதே :-யாகம் முதலானவற்றைச் செய்பவர்கள் சொல்லப் படுகிற படியால்

இதே பஞ்சாக்நி வித்யையில்(அத₂ ய இமே க்₃ராமே இஷ்டா பூர்தேத₃த்தம் இத் யுபாஸதே தே தூ₄மமேவ அபி₄ஸம்ப₄வந்தி… ஆகாசாத் சந்த்₃ரமஸம், ஏஷ ஸோமோ ராஜா) அதாவது “யாரெல்லாம் உலகத்தில் இஷ்டம்(தேவர்களுக்குச் செய்யும் யாகம் ஹோமம் முதலானவை ), பூர்தம் (மனிதர்களுக்காகச் செய்யும் மரம் நடுதல், குளம் வெட்டுதல் முதலானவை ), த₃த்தம் (தானம் செய்தல்) முதலானவற்றைத் தொடர்ந்து செய்கிறார்களோ அவர்கள் இந்த உடலை விட்டு ஆகாசம், சந்த்ரன் மூலமாக ஸ்வர்கத்தை அடைந்து ஸோம ராஜாவாக(அழகான உடலை உடையவராக) ஆகிறார்” என்றுள்ளது.

ஒரு இடத்தில் “ ஸ்ரத்தா என்பது ஸ்வர்கத்தில் ஆஹுதியாகக் கொடுக்கப்பட்டு ஸோமராஜாவாக ஆகிறது” என்றும், மற்றொரு இடத்தில் “யாகம் முதலானவற்றைச் செய்த ஜீவாத்மா ஸ்வர்கத்தை அடைந்து ஸோம ராஜாவாக ஆகிறார்” என்றும் சொல்லப் பட்டு்ள்ளபடியால், இங்கு ஸ்ரத்தா எனப்படுவதும் வெறும் பூத ஸூக்ஷ்மங்களை அல்ல, அவற்றோடு கூடின ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

ஸ்ரத்தா, ஸோமராஜா, மழை , அந்நம், ரேதஸ், கர்பம் என்று ஒவ்வொரு நிலையிலும் வெறும் பூத ஸூக்ஷ்மங்கள் சொல்லப் பட வில்லை , அந்தந்த நிலையில் உள்ள பூத ஸூக்ஷ்மங்களை உடலாகக் கொண்ட ஜீவாத்மா தான் சொல்லப் படுகிறார்.

ஸ்வர்கம் செல்லும் ஜீவாத்மாவின் நிலை கேள்வி–இங்கு ஸோம ராஜா என்று சொல்லப்பட்டவர் ஜீவாத்மாவாக இருக்க முடியாது. ஏனெனில் (ஏஷ ஸோமோ ராஜா, தத் தே₃வாநாம் அந்நம், தம் தே₃வா: ப₄க்ஷயந்தி) அதாவது “ஸோம ராஜா என்பது தேவர்களின் அந்நம்(உணவு), அதை தேவர்கள் உண்ணுகிறார்கள் ” என்று ப்ரவாஹணர் உபதேசிக்கிறார். ஜீவாத்மாவை உண்ண முடியாதே ?வ்யாஸரின் பதில்–அடுத்த(கடைசி) ஸூத்ரத்தில்

7–பா₄க்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா₂ ஹி த₃ர்ஸயதி
பா₄க்தம்வா
–“உருவகம் தான்”. உணவு- உண்கிறார்கள் என்றது நேரடியான பொருளிலல்ல, உருவகமாக. உணவு எப்படி ஒருவனுக்குத் திருப்தியை அளிக்குமோ அது போல் ஸ்வர்கத்தை அடைந்த இந்த ஜீவாத்மா தேவர்களுக்குத் திருப்தி அளிக்கிறான் என்று தான் பொருள்
(ந வை தே ₃வா: அச்நந்திம் ந பிப₃ந்தி, ஏத்தே₃வ அம்ருதம் த்₃ருஷ்ட்வா த்ருப்யந்தி) அதாவது “தேவர்கள் உண்பதில்லை , பருகுவதில்லை , இதைப் பார்த்தே த்ருப்தி அடைகிறார்கள் ” என்று வேதமே காட்டுகிறது. அதனால், இங்கு நேரடியாக உண்பது சொல்லப் படாதபடியால் ஸோம ராஜா என்பது பூத ஸூக்ஷ்மங்களோடு கூடின ஜீவாத்மா தான்

அநாத்ம வித்த்வாத்–“ஆத்ம ஜ்ஞாநி அல்லாத படியால்”. ஸ்வர்கத்தை அடையும் இந்த ஜீவாத்மா சிறந்த ஆத்ம ஜ்ஞாநியோ ,பரமாத்மாவை உபாஸிப்பவனோ அல்ல. உலகத்தில் இஷ்டம் பூர்தம் த₃த்தம் முதலானவற்றைச் செய்தவன் தான். அதனால் அவன் ஸ்வர்கத்தை அடைந்து, அங்கு தேவர்களுக்கு ஒரு கருவி போல்உதவியாளனாக இருந்து தொண்டு செய்து த்ருப்தியை ஏற்படுத்துகிறான் என்று சொல்வதில் எந்த முரண்பாடும் இல்லை-
ததா₂ ஹி த₃ர்ஸயதி–“அவ்வாறு அன்றோ வேதம் காட்டுிறாது”.
(யதா₂பசு: ஏவம் ஸ: தேவாநாம்₃) அதாவது “எப்படி ஒரு விலங்கோ அது போல் தான் அவன் தேவர்களுக்கு” என்று இவன் தேவர்களுக்கு ஒரு கருவியாக இருப்பதை வேதமே காட்டுகிறது. அதனால் இந்தப் பொருள் பொருத்த முடையதே .-

ஆக, பஞ்சாக்நி வித்யையில் உள்ள கேள்வி பதில்களின் மூலம், ஒ்ரு உடலை விட்டு வேறொரு உடலுக்குச் செல்லும் ஜீவாத்மா, பூத ஸூக்ஷ்மங்களையும் எடுத்துக் கொண்டு தான் செல்கிறாா் என்பது நிரூபிக்கப் பட்டது.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

இரண்டாம் அத்யாயம் -மூன்றாம் பாதம்-ஆறாம் அதிகரணம் –பரா யத்த அதிகரணம்-

June 8, 2026

ஜீவாத்மாவுக்கு -ஜானாமி அறிவு நிலை -ஆசைப்படும் நிலை -முயற்சி செய்யும் நிலை -மூன்றும் உண்டு –

தூண்டுபவன் ப்ரஹ்மம் -நாம் பரதந்த்ரன் எல்லா அவஸ்தையிலும் -தூண்டுவது –
ஸாமான்ய காரணம் -விசேஷ காரணம் -விதை வயல்
முதல் பிரவிருத்திக்கு விசேஷ காரணத்தை ப்ரஹ்மம் கொஞ்சம் தானாகவே நிறுத்தி கர்மம் அடியாக செய்விக்கிறான் –

அந்த செயலுக்கு விசேஷ காரணமாக இருப்பதை விட்டுக் கொடுக்கிறான்–அதுவும் அவனது இன்னருளே-நாமும் ஆடுகள் அல்லவே -அவன் ஆட்டு இடையன் அல்லனே -ததாமி புத்தி யோகம் ஷிபாமி -அடக்குவார் இல்லாத ஸ்வா தந்திரம் உண்டே –

ஸ்ருஷ்டியாதி முகங்களாலே க்ருஷீ பண்ணினவன் அவனே –
அவன் அருளிய ஸாஸ்த்ர முகத்தாலும் -ஆச்சார்யர் உபதேச கடாக்ஷம் மூலமாகவும் -ஆத்ம ஞானம் பெற்று ஆத்ம குணங்களை வளர்த்து
இவ்வாறு இருவரும் சேர்ந்தே வியாபாரிக்கிறோம்

நானும் கர்த்தா அவனும் கர்த்தா -என்னை எதிர்பார்த்து இருக்கும் கர்த்தா -நான் கொடுத்த கரண களேபரங்களைக் கொண்டு -சேர்ந்து செய்வதையே பஞ்ச ஹேது –
இத்தையே வேதங்கள் விதிப்பது வீணாகாமல் போக ‘
மங்க ஒட்டு உன் மா மாயை -அவனுக்கும் உபதேசிக்கிறார்

ஸ்ருதி ப்ரகாசகர் நிர்வாகம் இப்படி இருந்தாலும்
வாதி கேசரி ஜீயர் -பாபம் கர்மம் செய்பவரை அனுமதிப்பதும் தூண்டுவதும் அவனுக்கு கொத்தை ஆகும் என்பதால் ‘பாப கர்ம விஷயத்தில் உதாசீனனாகவே உள்ளார் என்று நிர்வஹிப்பர்

நடாதூர் அம்மாள் -தத்வ சாரம் ஸ்லோகம் அடிப்படையில் வாதி கேசரி ஜீயர் தீப பிரகாசம் கிரந்தத்தில்
ஆதவ் ஈஸ்வர தத்தவ் புருஷ ஸ்வா தந்தர்ய சக்தியால் ஸ்வயம் அந்த அந்த ஞானம் -விருப்பம் பிரயத்தனம் மூன்றையும் வளர்த்துக் கொண்டு இருக்கிறான்
தத்ர உபேஷ்ய -ததோ அநு மஸ்ய -பெருமான் இருக்க-

தடுக்க சாமர்த்தியம் இருக்க செய்யாமல் இருந்தால் வைஷம்யம் நைர் க்ருண்யம் வருமே என்னில்

பாபம் வழியில் செல்பவனுக்கு நிக்ரஹம் புண்ய வழியில் செல்பவனுக்கு அனுக்ரஹம் அளிக்கிறான்
குற்றம் தட்டாது –
பகவான் தூண்டுவது அவனவன் கர்மம் அடிப்படையிலே தான் –
யோஜனா பேதங்கள் உண்டு இதில் -விசேஷ காரணத்வம் -மூன்றிலும் ப்ரஹ்மமே -இல்லை முதலில் ஸாமான்ய காரணத்தவம் என்பது பற்றியே யோஜனா பேதம்

பல நீ காட்டிப் படுக்காதே நெறி காட்டி நீக்காதே என்டர் சொல்லாமே

கிடாம்பி அப்புள்ளார் -புருஷார்த்தம் அளிப்பவன் -இவன் தாழ்ந்த ஒன்றை அர்த்திக்க- அத்தையே தானே அவன் அளிக்க வேண்டும் -ஆகவே குறை வராதே

அதிகரண சாராவளியில் தேசிகன் -இது ரீதி பங்கம் -முதல் முயற்சியிலும் தூண்டுகிறான் -கர்மாதீனம் என்பதால் குறை இல்லை

——–

தத் இதம் ஆஹ —

அதிஷ்டாநம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம்–
விவிதாஸ்ச ப்ருதக் சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம்–৷৷18.14৷৷

அத்ர அதிஷ்டாநம் ச-அவை இடமும்,
கர்தா ச-செயலை செய்பவன்,
ப்ருதக்விதம் கரணம் ச-பலவிதக் கரணங்கள்,-கர்ம இந்திரியங்கள்
விவிதா: ப்ருதக் சேஷ்டா ச-வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள்,
தைவம் ச பஞ்சமம்-இயற்கை என ஐந்து (காரணங்கள்).

ஸரீர வாங்மநோபிர்யத்கர்ம ப்ராரபதே நர–
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ—৷৷18.15৷৷

நர: ஸரீர வாக் ‌மநோபி:-மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும்,
யத் கர்ம ப்ராரபதே-எந்தச் செயலைத் தொடங்கினாலும்,
ந்யாய்யம் வா விபரீதம் வா-அது நியாயமாயினும் விபரீதமாயினும்,
தஸ்ய ஏதே பஞ்ச ஹேதவ:-அதற்கு இந்த ஐந்துமே காரணங்கள்.

சாஸ்திரத்தில் சித்திப்பதாகவோ -சாஸ்திரத்தில் தடுக்கப்பட்டதாகவோ உலா யாதொரு கர்மத்தை
உடலாலும் வாக்காலும் மனதாலும் மனிதன் தொடங்குகிறானோ அந்தக் கர்மத்துக்கு இந்த ஐந்தும் காரணங்கள் ஆகின்றன –
அவை யாவன – சரீரம் -அடுத்தபடியாக ஜீவாத்மா -அது போலவே பலவிதமான செயல்களை யுடைய
மனத்தோடு கூடிய ஐந்து கர்ம இந்திரியங்கள் -அவ்வண்ணமே ஐந்து வகைப்பட்ட செயல்களை யுடைய ப்ராணன்கள் –
இக்கர்மங்களுக்கு காரணமானவற்றில் ஐந்தாவதாயும் முக்கியமான காரணமாயும் இருக்கும் பரமாத்மாவுமேயாகும்
சரீரம் ஜீவாத்மா பற்றுக் கொம்பாக – ஜீவாத்மா – கருவிகள் இந்திரியங்கள் –ஐந்து வகை உண்டே -சேஷ்டை செய்யும் ஐவர்
பஞ்ச பிராணங்கள்-வேறே வேறே வேலை இவற்றுக்கு பிராணன் அபானன் சாமான வாயு இவற்றுக்கு வேலை வேறே வேறே
தெய்வம் பரமாத்மா -ஐந்து பெரும் சேர்ந்தே கார்யம்
தெய்வம் முக்கியம் மற்றை நாலையும் தூண்டுவித்து கார்யம் -கட்டை விரலை போலே –

சாஸ்திரம் சம்மதித்த கர்மம் -தொடங்கும் பொழுது -சரீர வாக் மனஸ் மூவகை பட்ட கர்மாக்கள் –
சம்மதிக்காதவையும் உண்டே – இந்த ஐந்தும் இருந்தால் தான் –
முக்கிய அர்த்தம் -கர்த்தா சாஸ்த்ரார்த்தவாத் –ஜீவாத்மா தான் கர்த்தா -விதிக்கிற படியால் -பரமாத்மாவை விதிக்காதே
சாஸ்திரம் அர்த்தம் ஆக வேண்டுமே
ஸ்வ தந்த்ர கர்த்தா இல்லை –
அடுத்து -பரார்த்த் து -ஈஸ்வராதீனம் —
ஈஸ்வர ஆணைக்கு உட்பட செய்தால் கர்ம பலன் ஜீவாத்மாவுக்கு சேரலாமோ -சங்கை வருமே
க்ருத ப்ரத்யநா அபேஷாத் -பிரயத்தனம் எதிர்பார்த்து –
உதாசீனம் அனுமந்தா -தூண்டி விடும் மூன்று நிலைகள்
முதல் நிலை உதாசீனம் -சாஸ்திரம் கொடுத்து ஞானம் கொடுத்து -முதல் முடிவு ஜீவாத்மா –
அனுமதி அளிக்கும் இரண்டாம் நிலை -நல்ல செயலோ தீய நிலையோ -அதிலேயே தூண்டி விடுகிறான் -குற்றம் வருமோ என்னில் –
தாய் குழந்தை விழும் பொழுது தடுக்காமல் -குற்றம் வருமோ -என்னில் –
ஸ்வாதந்திரம் கொடுத்ததால் -இவன் ஆட்டு வாணியன் இல்லையே -ஞானமும் கொடுத்தானே-
ஆழ்வார் நீ தான் சம்சாரத்தில் -தூராக் குழி தூர்த்து வைத்தாய் -என்றது -பரதந்த்ர நிலையில் இருந்தே -சொன்னார்கள் –
எல்லா பொறுப்பும் அவன் இடமே
சர்வாத்மனா ஸ்வாதந்தர்யம் விட வேண்டுமே -அந்த நிஷ்டை வந்தால் நாமும் இப்படி சொல்லலாம் –

உமிழ்தல் கண் சிமிட்டல் கொட்டாவி விடுதல் -பஞ்ச வ்ருத்தி பிராணன் செயல்கள்
காமம் சங்கம் நினைத்தல் உறுதி சங்கல்பம் சிந்தனை -மனசின் செயல்கள்

தைவம் -பகவான் -என்று கொள்ளாமல் -கர்மங்கள் கொள்ளலாமோ என்னில் அறிவற்ற இவை அறிவுள்ள ஜீவனைக் கட்டுப்படுத்தாதே -நாராயணனே தெய்வம் -கேசவன் கச்சதி-

ஆத்ய ப்ரவ்ருத்தி முதல் செயலில் உதாசீனம் -ஜீவன் செய்வதில் அனுமதி–தனது நியமனம் இதுக்கு வேண்டாம் என்று தானே தவிர்ந்து –
நீயே வியாபாரிக்கலாம் என்று ஏற்படுத்தி -கர்த்ருத்வம் வந்தால் தானே சாஸ்திரம் விதிகள் வீணாகாது -பரமாத்மாவின் ஆயத்தமே இதுக்கும் காரணம்
பின்பு அனுமந்தா -பின்பு தூண்டி -இப்படி மூன்று நிலைகள் -அவன் சாமான்ய காரணம் நாம்-நமது கர்மாக்கள் – விசேஷ காரணம் -வயலில் விதைக்குத் தக்க பயிர் போல்-இவற்றுக்கு மூன்று ஸூ த்ரங்கள்-உதங்க ப்ரஸ்னத்துக்கு உத்தரம் இல்லையே-

ஆறாம் அதிகரணம் –பரா யத்த அதிகரணம்-ஸூத்ரம் –252–பராத்து தத் ஸ்ருதே –2-3-40–

து ஸப்தம் சங்கையை விலக்குகிறது
பராத் -பரம புருஷ ஸங்கல்பத்தாலே
தத் -கர்த்ருத்வம் ஏற்படுகிறது
ஸ்ருதே-அந்தப் பிரவிஷ்டச் ஸாஸ்தா ஜனானாம் ஸர்வாத்மா ய ஆத்மாநம் அந்தரோ யமயதி -என்று
பரமாத்மாவுக்கு அதீனமான கர்த்ருத்வம் ஸ்ருதியில் கூறப்படுவதால்
இப்படி ஜீவன் பராதீன கர்த்தா என்றால் -ஈஸ்வரனே எல்லாரையும் தூண்டுவதால்
ப்ரயோஜக கர்த்தா ஆதலின் கர்மாவின் பலம் கர்த்தாவையே சாரும் என்பதால்
அவனுக்கே விதி நிஷேத வாக்யங்களுக்கு வச்யத்வம் ஏற்படும் என்ற சங்கையை நிரசிக்கிறார் –

ஸூத்ரம் –253–க்ருத ப்ரயத்ன அபேக்ஷஸ் து விஹித பிரதி ஷித்த அவையர்த் யாதிப்ய –2-3-41-

து -ஸப்தம் சங்கையை விலக்குகிறது
முதல் ப்ரவ்ருத்தியிலே ஜீவன் செய்யும் ப்ரயத்னத்தை அபேக்ஷித்துப் பரம புருஷன் ஜீவனை ப்ரவர்த்திப்பிக்கிறான்
ஏன் எனில்
விஹித பிரதி ஷித்த அவையர்த் யாதிப்ய–ஜீவனுக்கு முதல் பிரவிருத்தியில் ஸ்வ தந்தர்ய தன்மையை அங்கீ கரிக்கா விட்டால்
இதைச் செய் செய்யாதே என்னும் விதி நிஷேத ஸாஸ்த்ரங்களுக்கு வியர்த்தத் தன்மை வரும் –
ஜீவன் தண்டனைக்கோ அனுக்ரஹத்துக்கோ ஆளாகாமல் போவான்
அக் குறைகள் வாராமைக்காக ஜீவனின் முதல் முயற்சியை எதிர்பார்த்தே பகவான் இவனைப் பிரவர்த்திப்பிக்கிறான் –
அந்த முதல் முயற்சியிலும் ஸ்வா தந்தர்யம் ஈஸ்வரனால் கொடுக்கப் பட்டது-அதுவும் முன் பின் கர்மாக்களின் பலம் அளிப்பதாகக் கருதப்படுகிறது –

1-ஈஸ்வரன் ஸ்வதந்த்ரனான படியால் கர்த்ருத்வம்
2-ப்ரயோஜ்ய கர்த்தாவான ஜீவன் மூலம் செய்விப்பதால் ப்ரேரகத்வம்
3-ப்ரவர்த்தனான சேதனனை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டுவதால் அனுமந்த்ருத்வம்
4-முளைகளுக்கு ஜலம் போலே சர்வத்திற்கும் பொதுக் காரணம் ஆதலின் உதா சீனத்தவம்
5- எப்போதும் எல்லாவற்றையும் காண்கையாலே ஸாஷித்வம்
6-அவனவன் கர்மத்துக்கு ஏற்றவாறு செய்விப்பதால் சஹகாரித்வம்
7- சர்வ ஸ்வாமியாய் ஆஸ்ரித ரக்ஷண பலத்தைத் தானே ஏற்பதால் பலித்தவம்
8-பலமதே உப பத்தே என்பதால் ஸர்வ கர்ம பல பிரதத்வம்
என்ற இவை அனைத்தும் ஓர் ஓர் காலத்தில் இன்றியிலே சர்வ காலத்திலும் இருப்பதால் ஒன்றுக்கு ஓன்று விரோதம் இல்லை

ஆகையால் ஜீவனுடைய கர்மத்தை அபேக்ஷித்து ஸ்ருஷ்டியாதிகளைச் செய்வதால்
ஈஸ்வரனுக்கு வைஷம்யமும் நைர் க்ருண்யமும் கிடையாது என்பது கருத்து –

———–

தத் இதம் ஆஹ —

৷৷18.14৷৷ந்யாய்யே ஷாஸ்த்ர ஸித்தே விபரீதே ப்ரதிஷித்தே வா ஸர்வஸ்மிந் கர்மணி- ஷாரீரே வாசிகே மாநஸே ச பஞ்ச ஏதே ஹேதவஃ. -அதிஷ்டாநஂ ஷரீரம்? அதிஷ்டீயதே ஜீவாத்மநா இதி மஹா பூத ஸஂகாத ரூபஂ ஷரீரம் அதிஷ்டாநம். ததா கர்தா ஜீவாத்மா; அஸ்ய ஜீவாத்மநஃ ஜ்ஞாதரித்வஂ கர்தரித்வஂ ச — ‘ஜ்ஞோத ஏவ’ (ப்ர0 ஸூ0 2.3.18)’கர்தா ஷாஸ்த்ர அர்தவத்த்வாத்’ (ப்ர0 ஸூ0 2.3.33) இதி ச ஸூத்ர உபபாதிதம். கரணஂ ச பரிதக் விதம் வாக் பாணி பாதாதி பஞ்சகஂ ஸ மநஸ்கஂ கர்மேந்த்ரியம்? பரிதக் விதஂ கர்ம நிஷ்பத்தௌ பரிதக் வ்யாபாரம். விவிதாஃ ச பரிதக் சேஷ்டாஃ — சேஷ்டா ஷப்தேந பஞ்சாத்மா வாயுஃ அபிதீயதே? தத் வரித்தி வாசிநா? ஷரீர இந்த்ரிய தாரகஸ்ய ப்ராணா பாநாதி பேத பிந்நஸ்ய வாயோஃ பஞ்சாத்மநோ விவிதா ச சேஷ்டா விவிதா வரித்திஃ. தைவஂ ச ஏவ அத்ர பஞ்சமம்? அத்ர கர்ம ஹேது கலாபே தைவஂ பஞ்சமம் -பரமாத்மா அந்தர்யாமீ கர்ம நிஷ்பத்தௌ ப்ரதாந ஹேதுஃ இதி அர்தஃ- உக்தஂ ஹி’ஸர்வஸ்ய சாஹஂ ஹரிதி ஸந்நிவிஷ்டோ மத்தஃ ஸ்மரிதிர் விஜ்ஞாநம் அபோஹநஂ ச.’ (கீதா 15.15) இதி. வக்ஷ்யதி ச — ‘ஈஷ்வரஃ ஸர்வ பூதாநாஂ ஹரித்தேஷேர்ஜுந திஷ்டதி. ப்ராமயந் ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா৷৷’ (கீதா 18.61) இதி.(தைவம் -பகவான் -என்று கொள்ளாமல் -கர்மங்கள் கொள்ளலாமோ என்னில் அறிவற்ற இவை அறிவுள்ள ஜீவனைக் கட்டுப்படுத்தாதே -நாராயணனே தெய்வம் -கேசவன் கச்சதி )

பரமாத்ம ஆயத்தஂ ச ஜீவாத்மநஃ கர்தரித்வம் — ‘பராத்து தச் ச்ருதேஃ’ (ப்ர0 ஸூ0 2.3.41) இதி உபபாதிதம்.நநு ஏவஂ பரமாத்ம ஆயத்தே ஜீவாத்மநஃ கர்தரித்வே ஜீவாத்மா கர்மணி அநியோஜ்யோ பவதி இதி விதி நிஷேத ஷாஸ்த்ராணி அநர்தகாநி ஸ்யுஃ.

இதம் அபி சோத்யஂ ஸூத்ர காரேண ஏவ பரிஹரிதம்.’கரித ப்ரயத்ந அபேக்ஷஸ்து விஹித ப்ரதிஷித்த அவையர்த்யாதிப்யஃ’ (ப்ர0 ஸூ0 2.3.42)

இதி.ஏதத் உக்தஂ பவதி — இத்தால் சொல்லிற்று ஆயிற்று -பரமாத்மநா தத்தைஃ ததாதாரைஃ ச கரண கலேவராதிபிஃ ததாஹித ஷக்திபிஃ ஸ்வயஂ ச ஜீவாத்மா ததாதாரஃ ததா ஹித ஷக்திஃ ஸந் கர்ம நிஷ்பத்தயே ஸ்வேச்சயா கரணாத் யதிஷ்டாநாகாரஂ ப்ரயத்நஂ ச ஆரபதே; ததந்தஃ அவஸ்திதஃ பரமாத்மா ஸ்வாநுமதி தாநேந தஂ ப்ரவர்தயதி இதி ஜீவஸ்ய அபி ஸ்வபுத்த்யா ஏவ ப்ரவரித்தி ஹேதுத்வம் அஸ்தி. யதா குருதர ஷிலா மஹீருஹாதி சலநாதி-(பெரிய பாறை தள்ள பலரும் செய்வது போல்) பல ப்ரவரித்திஷு பஹுபுருஷஸாத்யாஸு பஹூநாஂ ஹேதுத்வஂ விதி நிஷேத பாக்த்வஂ ச இதி.

৷৷18.14৷৷உக்தவிவரணதயா ஷ்லோகத்வயஸ்யாபுநருக்திஂ பரமதே விரோதஂ சாபிப்ரேத்யாஹ — ‘ததிதமாஹேதி’. தத் ஷ்ருதிஸித்தம்? இதஂ விவக்ஷிதமித்யர்தஃ. ந்யாய்யஂ ந்யாயாதாநபேதஂ’தர்மபத்யர்தந்யாயாதநபேதே’ [அஷ்டா.4.4.92] இத்யநுஷாஸநாத். ந்யாயஷப்தஷ்சாத்ர அர்தாந்தராநௌசித்யாத்வ்யுத்பத்த்யநுரோதாச்ச ஷாஸ்த்ரமேவாநுஸந்தத்த,இத்யபிப்ராயேணாஹ — ‘ஷாஸ்த்ரஸித்த’ இதி. ஷாஸ்த்ரஸித்தேந ஸஹ லௌகிகவிவக்ஷாயாஂ ததந்யத்வேதி வக்தவ்யம். விஹிதே நிர்திஷ்டே விபரீதஷப்தஷ்ச நிஷித்தே ஸ்வரஸஃ; கைமுத்யேந ச லௌகிகஂ லப்யமித்யபிப்ராயேணாஹ — ‘ப்ரதிஷித்தே வேதி’.’ஸர்வஸ்மிந் கர்மணீதி’ பலிதோக்திஃ. யதா ஷாரீரமாநஸவாசிகேஷு கர்மஸு ஷரீராதீநாஂ ப்ராதாந்யேந ப்ரதிநியததா; ந ததாமீ பஞ்ச ஹேதவஃ; அபிது ப்ரதிகர்ம பஞ்சாப்யபேக்ஷிதா இத்யபிப்ராயேண ஷாரீரத்வாத்யுக்திஃ. பஞ்சஹேதுகேஷு ஸர்வேஷு கர்மஸு ப்ராதாந்யாதேவ ஹி ஷாரீரத்வாதிவிபாகஃ. யத்யபி ஜகத்ஸரிஷ்ட்யாதிஷு பரமாத்மைவ காரணஂ? ததாபி க்ஷேத்ரஜ்ஞகர்தரிகேஷு பரமாத்மநா ஸ்வேச்சயைவமுபகரணீகரிதாந்யேதாநீத்யபிப்ராயேண ஹேத்வந்தரோக்திஃ.

‘அதிஷ்டாநஂ க்ஷேத்ரமாஹுஃ’ [ம.பா.12.307.14] இதி கராலாயாஹ வஸிஷ்டஃ; ததநுஸாரேணாஹ — ‘அதிஷ்டாநஂ ஷரீரமிதி’. ஷ்ருதிஷ்ச — “மகவந்மர்த்யஂ வா இதஂ ஷரீரமாத்தஂ மரித்யுநா ததேத-(ததஸ்யா)-தமரிதஸ்யாஷரீரஸ்யாத்மநோதிஷ்டாநம்” [சாஂ.உ.8.12.1] இதி ஷரீரேதிஷ்டாநஷப்தஂ ப்ரயுங்க்தே.’கரித்யல்யுடோ பஹுலம்’ [அஷ்டா.3.3.113] இதி கர்மார்ததயா ஷரீரேதிஷ்டாநஷப்தஂ வ்யுத்பாதயதி — ‘அதிஷ்டீயத’ இதி. அதிஷ்டாதுர்ஜீவஸ்யாபி பரமாத்மாதிஷ்டேயத்வாத்தத்வ்யவச்சேதாய’ஜீவாத்மநேதி’ விஷேஷிதம். ஜீவாதிஷ்டேயஸ்யாபி கரணாதேஃ பரிதங்நிர்தேஷாத்தத்ஸங்கோசாயாஹ’மஹாபூதஸங்காதரூபமிதி’.

விஷ்வகர்துரிஹ தைவஷப்தேந பரிதக்க்ரஹணாத் கர்தரிஷப்தஸ்ய சாத்ர’ஷாஸ்த்ரபலஂ ப்ரயோக்தரி’ [பூ.மீ.3.7.18] இதி ந்யாயஸூசநார்தத்வாச்ச’கர்தா ஜீவாத்மேத்யுக்தம்’. நநு கர்தரித்வஂ ஹி ஜ்ஞாநசிகீர்ஷாபூர்வகப்ரயத்நயோகித்வஂ; ஜ்ஞாநமாத்ரஸ்யாத்மநோ ஜ்ஞாதரித்வாஸம்பவாத்தந்மூலஂ கர்தரித்வமபி ந ஸ்யாதேவேத்யத ஆஹ — ‘அஸ்ய ஜீவாத்மநோ ஜ்ஞாதரித்வஂ கர்தரித்வஂ சேதி’.’ஜ்ஞோத ஏவ’ [ப்ர.ஸூ.2.3.18] இத்யாதிஸூத்ரக்ரஹணஂ? ஷ்ருத்யாதேரபி தத ஏவாகர்ஷணாத்.

கர்மோத்பத்திஹேதூபந்யாஸாத்கரணஷப்தோத்ர கர்மேந்த்ரியமாத்ரபர இத்யபிப்ராயேணாஹ’வாகிதி’. யத்யபி ஜ்ஞாநேந்த்ரியாணாஂ தத்தத்விஷயஜ்ஞாநோத்பாதநத்வாரா பரம்பரயா கர்மணி ஹேதுத்வமஸ்தி? ததாபி வஸ்துமாத்ரேஷ்வாலோசிதேஷு மநஸா ஸங்கல்ப்யைவ கர்மகரணாந்மநஸஷ்சாந்யவ்யாபாரவ்யவதாநாபாவாத் — ‘ஸமநஸ்கமித்யுக்தம்’. ஜ்ஞாநேந்த்ரியஸ்யாபி மநஸஃ கர்மேந்த்ரியப்ரவரித்திஷ்வபி ஸாதாரண்யாத்கர்மேந்த்ரியத்வோக்திஃ.’ஷரீரவாங்மநோபிஃ’ இத்யத்ரைவோக்தேஃ மநஸஃ ஸங்கல்பாதிகர்மாபேக்ஷயா வா கர்மேந்த்ரியத்வவாதஃ. ஸாங்க்யைரப்யேவமேவோக்தஂ — ‘புத்தீந்த்ரியாணி சக்ஷுஷ்ஷ்ரோத்ரக்ராணரஸநத்வகாக்யாநி (ஸ்பர்ஷநகாநி). வாக்பாணிபாதபாயூபஸ்தாந்கர்மேந்த்ரியாண்யாஹுஃ. உபயாத்மகமத்ர மநஃ ஸங்கல்பகமிந்த்ரியஂ ச ஸாதர்ம்யாத்’ [ஸாஂ.கா.26;27] இதி.கர்மஹேதுஷூபாதீயமாநேஷு’பரிதக்விதம்’ இதி விஷேஷணஂ ததுபயுக்தவ்யாபாராக்யவிதாபரமித்யாஹ’கர்மநிஷ்பத்தௌ பரிதக்வ்யாபாரமிதி’. வாகாதிஷ்வேகைகஸ்ய வசநாதாநவிஹரணோத்ஸர்காநந்தஸங்கல்பாதிக்ரியாவ்யாபாரோ ஹி மிதோ விலக்ஷணஃ. ப்ரயத்நமூலா ஷரீராதிக்ரியைவ ஹி சேஷ்டேத்யுச்யதே; அதோத்ர கர்மணஸ்ததேவ காரணமித்யாத்மாஷ்ரயஃ ஸ்யாத்; தத்ராஹ — ‘சேஷ்டாஷப்தேந பஞ்சாத்மா வாயுரிதி’.’அபிதீயத’ இதி ஷப்தேந ப்ரதிபாதநமாத்ரஂ விவக்ஷிதம். அத்ர தத்தேதாவந்யஸ்மிந் லக்ஷயிதவ்யே வாகாதீநாஂ கரணாதிஷப்தைருபாத்தத்வாத்ப்ராணஸஂவாதாதிஷு கரணாநாஂ ஷரீரஸ்ய ச ஸ்திதிப்ரவரித்தேஃ ப்ராணாயத்தத்வஷ்ருதேஃ ப்ராணப்ரவரித்திநிமித்தசேஷ்டாவாசிநா ஷப்தேந ப்ராணலக்ஷணாத்ர யுக்தேத்யபிப்ராயேணாஹ — ‘தத்வரித்திவாசிநேதி’. சேஷ்டாஷப்தேநேதி பூர்வேணாந்வயஃ.

ப்ராணஸஂவாதாதிஸ்மாரணேந ப்ராணலக்ஷணாயா ஔசித்யஂ வரித்தேர்வைவித்யஂ ச விவரிணோதி — ‘ஷரீரேந்த்ரியேதி’. பரிதக்சப்தவிவிதஷப்தயோஃ பௌநருக்த்யபரிஹாராயாஹ’ஷரீரேந்த்ரியதாரகஸ்ய ப்ராணாபாநாதிபேதபிந்நஸ்யேதி’. அதிஷ்டாநகர்தரிகரணவ்யாபாராபேக்ஷயா ஷரீரேந்த்ரியவர்கரூபவிஷயபேதேந ச பரிதக்த்வஂ ப்ராணாதிவரித்திபேதப்ரதிநியதோச்ச்வாஸநிமேஷோந்மேஷாதிவ்யாபாரைர்வைவித்யஂ சேதி பாவஃ. பஞ்சாத்மஷப்தோத்ர பஞ்சவரித்தித்வபரஃ; ததா ச ஸூத்ரஂ — ‘பஞ்சவரித்திர்மநோவத்வ்யபதிஷ்யதே’ [ப்ர.ஸூ.2.4.12] இதி. பஞ்சவரித்தித்வோக்திஷ்ச நாககூர்மகரிகரதேவதத்ததநஞ்ஜயரூபவரித்த்யந்தரபஞ்சகஸ்யாபி ப்ரதர்ஷிகா. ‘தைவஂ சைவாத்ர பஞ்சமம்’ இத்யத்ர தைவாக்யப்ரதாநநிர்தாரணார்தமத்ரேத்யநுவாத இத்யாஹ — ‘அத்ர கர்மஹேதுகலாப’ இதி. பரமாத்மநஃ பஞ்சமதயா பரிகணநே ஷ்ருத்யர்தபாடாதிக்ரமாஸம்பவாத்வாசஃ க்ரமவர்தித்வேந யதாஸம்பவஂ பரிகணநேபி’பஞ்சமம்’ இதி பூரணே நிர்தேஷே ப்ரயோஜநாபாவாத் யதா கடவல்ல்யாம் — “இந்த்ரியேப்யஃ பரா ஹ்யர்தாஃ” இத்யுபக்ரம்ய “மஹதஃ பரமவ்யக்தமவ்யக்தாத்புருஷஃ பரஃ. புருஷாந்ந பரஂ கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பரா கதிஃ’ [1.3.10;11] இதீந்த்ரியாதிஸமஸ்தப்ரவரித்தௌ ப்ரதாநஹேதுஃ பரமபுருஷோ வஷீகரணீயகாஷ்டாத்வேந நிர்திஷ்டஃ? தத்வதிஹாபீத்யபிப்ராயேணாஹ — ‘பரமாத்மாந்தர்யாமீதி’. நநு’தைவஂ புராகரிதஂ கர்ம”தைவஂ திஷ்டஂ பாகதேயம்’ [அமரஃ1.4.28] இத்யாதிஷு ப்ராசீநகர்மரூபபோக்யபர்யாயதயா தைவஷப்தஂ படந்தி; தஸ்ய ச ஹேதுத்வமுபபந்நம்; அதஃ கதமத்ர பரமாத்மேத்யுச்யதே இத்தஂ ந ஹி ப்ராகேவ விநஷ்டாநாஂ கர்மணாஂ ஸ்வரூபேண ஹேதுத்வஂ ஸம்பவதி; அதஃ கர்மஜந்யாதரிஷ்டரூபபரமபுருஷஸங்கல்பஸ்யைவ ஹேதுத்வஂ வக்தவ்யஂ; ததோ வரஂ தஸ்யைவ தைவஷப்தேந ப்ரதிபாதநம்; அஸ்தி ச தைவஷப்தஸ்ய தைவதபர்யாயதயாபி லோகவேதயோஃ ப்ரஸித்திஃ; யதா — ‘ஸத்யஂ ஸத்யஂ புநஃ ஸத்யமுத்தரித்ய புஜமுச்யதே. வேதஷாஸ்த்ராத்பரஂ நாஸ்தி ந தைவஂ கேஷவாத்பரம்’ [நரி.பு.18.33] இதி. நஹ்யத்ரார்தாந்தரஂ ஸம்பவதி. ஏவஂ ஷ்ரீமத்ராமாயணேபி — ‘ஸ்வாதீநஂ ஸமதிக்ரம்ய மாதரஂ பிதரஂ குரும். அஸ்வாதீநஂ கதஂ தைவஂ ப்ரகாரைரபிராத்யதே’ [வா.ரா.2] இதி. ததா ஸபாபர்வணி — ‘ஷ்ரூயதாஂ பரமஂ தைவஂ துர்விஜ்ஞேயஂ மயாபி ச. நாராயணஸ்து புருஷோ விஷ்வரூபோ மஹாத்யுதிஃ’ இதி. ததா யாஜ்ஞவல்க்யப்ரணீதே யோகஷாஸ்த்ரே — ‘ஆர்ஷஂ சந்தஷ்ச மந்த்ராணாஂ தைவதஂ ப்ராஹ்மணஂ ததா’ இதி. உக்த ஏவார்தஃ புநஃ’ஆர்ஷஂ சந்தஷ்ச தைவஂ ச’ இத்யாதிநாபி நிர்திஷ்யதே. தத்ரைவ தைத்யமோஹநார்தே ப்ரஜாபத்யுபதேஷாநுவாதே’ஆத்மாநஂ பூஜயேந்நித்யஂ பூஷணாச்சாதநாதிபிஃ. ஸ்வதேஹ ஏவ தைவஂ ஸ்யாதந்யத்தைவஂ ந வித்யதே’ [யோ.யா.] இதி. ததா — ‘தைவாதீநஂ ஜகத்ஸர்வஂ மந்த்ராதீநஂ ச தைவதம். தந்மந்த்ரஂ ப்ராஹ்மணாதீநஂ தஸ்மாத்விப்ரா ஹி தைவதம்’. [வி.ஸஂ.22] இதி. அஸ்மிந்நபி ஷாஸ்த்ரே’ஸாதிபூதாதிதேவஂ மாம்’ [7.30] இதி ப்ரஸ்தாவ்ய’அதிதைவஂ கிமுச்யதே’ [8.1] இதி பரிஷ்டமர்தஂ’புருஷஷ்சாதிதைவதம்’ [8.4] இதி ப்ரதிவக்தி. சாந்தோக்யே () ச ஆதித்யாக்யதைவதவர்திநஃ புருஷஸ்யாதிதைவதமிதி நாமோச்யதே — “தஸ்யோபநிஷதஹஃ” [பரி.உ.5.5.3] இத்யதிதைவதஂ “தஸ்யோபநிஷதஹஂ” [பரி.உ.5.5.4] இத்யத்யாத்மம். இதி. ஏவமந்யத்ராபி த்ரஷ்டவ்யம். அந்யைரபி சாத்ர தைவஷப்தஷ்சக்ஷுராத்யநுக்ராஹகாதித்யாதிவிஷயதயா வ்யாக்யாதஃ. வயஂ த்வாதித்யாதீநாமப்யநுக்ராஹகஂ பரமாத்மாநமிஹ தைவஂ ப்ரூம இதி விஷேஷஃ. ப்ரயுக்தஂ ச ஸ்தோத்ரே’ப்ரக்யாததைவபரமார்தவிதாஂ மதைஷ்ச’ [ஸ்தோ.ர.15] இதி. லக்ஷ்மீகல்யாணே ச — ‘தர்மே ப்ரமாணஂ ஸமயஸ்ததீயோ வேதாஷ்ச தத்த்வஂ ச ததிஷ்டதைவம்’ இதி. தஸ்மாத்தேவஷப்தோத்ர தேவதாபர்யாயஃ. ஸ சாத்ர ஸர்வப்ரவர்தகஹேதுபரத்வாத்விஷேஷகாபாவாச்ச பரதேவதாவிஷய உசித இதி’பரமாத்மாந்தர்யாமீ கர்மநிஷ்பத்தௌ ப்ரதாநஹேதுரித்யுக்தம்’. யதாஸௌ ஸர்வேஷாமாத்மா? ந ததாஸ்ய கஷ்சிதித்யதஃ பரமாத்மா. ததா ஷரீராதேஃ ப்ரவரித்தௌ ஜீவஃ ப்ரதாநஹேதுஃ? ததா தஸ்யாப்யஸாவித்யபிப்ராயேணாந்தர்யாமித்வோக்திஃ. தத்விவக்ஷாமத்ர பூர்வாபராப்யாஂ ஸ்தாபயதி — ‘உக்தஂ ஹீத்யாதிநா’. நநு’ஸ்வதந்த்ரஃ கர்தா’ [அஷ்டா.1.3.5] இதி கர்தரிலக்ஷணமநுஷிஷ்டம்; இஹ ச கர்தேதி க்ஷேத்ரஜ்ஞ ஏவ நிர்திஷ்டஃ; அதஃ காரகாந்தரப்ரயோக்தரித்வஂ காரகாந்தராப்ரயோஜ்யத்வஂ ச தஸ்யாங்கீகர்தவ்யம். தஸ்மாத்தைவமப்யத்ராதிஷ்டாநாதிவத்ததபேக்ஷயா குணீபூதஂ வக்தவ்யமித்யத்ராஹ — ‘பரமாத்மாயத்தஂ சேதி’. உத்பந்நஜ்ஞாநசிகீர்ஷாப்ரயத்நஸ்ய ஹி புருஷஸ்ய காரகாந்தரப்ரயோக்தரித்வாதிகம்; ஜ்ஞாநாத்யுத்பத்திரேவ து பரமாத்மாயத்தேதி ஷ்ருதிஸித்தத்வாத்? ஜீவஸ்ய பராயத்தகர்தரித்வஂ ஸ்வாதந்த்ர்யஂ சாவிருத்தமிதி ஷாரீரகே ஸ்தாபிதமிதி பாவஃ.இமமபிப்ராயமஜாநந்வாயூதகாதிவத்பரமாத்மநஃ ப்ரேரகத்வாச்சோதயதி — ‘நந்வேவமிதி’. ஜ்யோதிஷ்டோமாதிஷு யதி பரமாத்மா ப்ரேரயதி? ததா ந ஜீவஸ்ய கிஞ்சித்விதேயஂ; ந ஹி ப்ரபலேந ஹ்ரியமாணஸ்ய கமநவிதிஃ; அத நிருந்தே? ததாபி ந விதேயஂ; ந ஹி துர்பலஸ்ய ப்ரபலேந நிருத்தஸ்ய கமநவிதிஃ; ஏவஂ யத்ர பரமாத்மா ப்ரவர்தயதி? தத்ர நிவரித்தேரஷக்யத்வாந்நிஷேதோ நிஷ்பலஃ; யத்ர து ந ப்ரவர்தயேத்? தத்ர து ப்ரவரித்தேரேவாஷக்யத்வாந்ந நிஷேதாபேக்ஷேதி பாவஃ. இயமத்ர சார்வாகேதரஸமஸ்தஸித்தாந்தாவலம்பிநீ சோத்யகாஷ்டா — ‘நிக்ரஹாநுக்ரஹாம்நாதபூர்வாதரிஷ்டப்ரசோதிதஃ. நிக்ரஹாநுக்ரஹாத்யர்ஹ இதீதஂ கடதே கதம்’ இதி. ஜீவஸ்ய ஜ்ஞாதரித்வகர்தரித்வபாரதந்த்ர்யாபாவசோத்யவத் பாரதந்த்ர்யேபி விதிநிஷேதவையர்த்யப்ரஸங்கசோத்யமபி பஞ்சமவேதததுபந்ஷிதோர்த்ரஷ்டா பகவாந்பாதராயணஃ ஸ்வயமேவ பரிஜஹாரேத்யாஹ — ‘இதமபீதி’. விஹிதப்ரதிஷித்தாவையர்த்யாதிஹேதுப்ய ஏவ சேதநேந கரிதஂ ப்ரயத்நமபேக்ஷ்ய பரமாத்மா உத்தரோத்தரேஷு ப்ரவர்தயதீதி ஸூத்ரார்தஃ. தத்ர ஸர்வப்ரவரித்திஷு பரமாத்மாதீநாஸு கதஂ கரிதப்ரயத்நாபேக்ஷத்வமுச்யதே வையர்த்யசோத்யஸ்ய சாவையர்த்யாஸித்த்யர்ததயா பரிஹாரே ஸாத்யாவிஷேஷஷ்ச ஸ்யாதிதி ஷங்காயாஂ ஸூத்ரஸ்யாபிப்ராயிகமர்தமாஹ — ‘ஏததுக்தமிதி’.’அயமபிப்ராயஃ’ — யத்தாவதீஷ்வரஸ்ய யந்த்ராதிவத்த்வஸங்கல்பகல்பிதப்ரவரிக்திஷக்தீநாஂ கரணகலேவராணாஂ ஸமர்பணஂ? யச்ச பூதலாதிவத்ஸர்வப்ரவரித்திநிவரித்த்யாநுகுண்யேந ஸ்வரூபதஃ ஸங்கல்பதஷ்ச ஸர்வாதாரதயாவஸ்தாநஂ? யதபி கரணகலேவராத்யதிஷ்டாநஷக்திப்ரதாநஂ? யச்ச ப்ரவரித்த்யாலம்பநபாஹ்யவிஷயபுரஸ்கரணஂ? தத்ஸர்வஂ ஜீவஸ்ய கர்தரித்வாநுகுணஂ ஸர்வப்ரவரித்திநிவரித்திஸாதாரணஂ சேதி ந தத்ர சோத்யாவகாஷஃ. ஏதாவதைவ ஸர்வப்ரவரித்திநிவரித்திஸாதாரணமுதாஸீநத்வஂ பகவத உச்யதே. ஏவஂ லப்தஷக்தேஃ புருஷஸ்ய ப்ரவரித்திகாலே யத்கார்யநிஷ்பத்த்யர்தமீஷ்வரஸ்யாநுமந்தரித்வஂ? ததபி ந ஜீவஸ்ய கர்தரிதாஂ வாரயதி; அபிதூத்தம்நாதீதி ந ததோபி விதிநிஷேதவையர்த்யம். நசைகஸ்மிந்நேவ கர்மணி பரமாத்மாக்யகர்த்ரந்தரஸாஹசர்யஂ ஜீவஸ்யாநியோஜ்யதாகாரணஂ? ப்ரத்யேகமஷக்யேஷு ஸம்பூய பஹுபிரநுஷ்டீயமாநேஷ்வபி லோகே விதிநிஷேததத்பலாதிதர்ஷநாத்ப்ரவரித்திஷக்தஸ்யேச்சாயாமந்யைரநிவார்யத்வேந ஸ்வாதந்த்ர்யாதிஸித்தேஃ. ஏவஂ’கார்யதே ஹ்யவஷஃ கர்ம ஸர்வஃ ப்ரகரிதிஜைர்குணைஃ’ [3.5] இத்யாதிஷ்வபி ஜ்ஞாநேச்சாபுரஸ்காரேண ப்ரவர்தநாதிச்சாவிஷேஷாதேஷ்ச ஸ்வவாஸநாதிவிஷேஷமூலத்வாஜ்ஜீவஸ்ய கர்தரித்வஂ ஸுஸ்திதம். அத ஏவ ஹ்யத்ர ஹேதுபஞ்சகே கர்தேதி ஸமாக்யாஸமாதிநா கர்தரித்வேநைவ ஜீவோ நிரூப்யதே; யத்து கரணகலேவரஷக்திஜ்ஞாநவாஞ்சாதிஷு விஷமப்ரதாநமஹிதப்ரவரித்தாவநிவாரணமநுமநநஂ ப்ரத்யவாயஜநநஂ ச? ததப்யநாதிபூர்வகர்மவைஷம்யோபாதிகதயா நேஷ்வரஸ்ய வைஷம்யநைர்கரிண்யாபாதகம். ப்ரவரித்திவைஷம்யஸ்யாதரிஷ்டவைஷம்யமூலத்வேபி ததேவாதரிஷ்டஂ ஷாஸ்த்ரபுரஸ்காரேணாஸ்ய தரிஷ்டாதிகமாரபதே. ததப்யேவமிதி விதிநிஷேதாவகாஷலாபஃ. ந ஹி பூர்வஂ யஜ்ஞாதிகாரணமதரிஷ்டஂ கரிதமிதி தேநைவேதாநீஂ யஜ்ஞாதிகஂ நிஷ்பத்யதே? ஷாஸ்த்ரஜந்யபுத்த்யாதிஸாபேக்ஷத்வாத்தஸ்ய. ஏவஂ பாபஹேதுபூதமப்யதரிஷ்டஂ ஸ்வபுத்த்யைவ நிவரித்தியோக்யதயா ஷாஸநாநர்ஹதஷாமாபாத்ய பாபே ப்ரவர்தயதி; ததபி ததேதி? அந்யதாதரிஷ்டமூலத்வாத்திதாஹிதப்ரவரித்த்யோர்ந ஷாஸ்த்ராபேக்ஷேதி வாதிநஃ பூர்வாதரிஷ்டேபி ததா ப்ரஸங்காத்ஸ்வவசநவிரோதஃ. அதாதரிஷ்டமூலத்வே ஷாஸ்த்ரவையர்த்யப்ரஸங்கஃ; ஸார்தகஂ ச ஷாஸ்த்ரஂ பரைரப்யுபகம்யத இத்யதரிஷ்டமூலத்வமேவ நோபபத்யேதேதி மந்யஸே; ததபி ந? லௌகிகவிதிநிஷேதயோரபி ததா ப்ரஸங்காத். தத்ராபி ஹி ஸாமக்ரீவைசித்ர்யமூலத்வே ப்ரவரித்திநிவரித்த்யாதிவைசித்ர்யஸ்ய கிஂ’காமாநய’ இத்யாதிநியோகேந அத ஸோபி நியோகஃ ஸ்வஸாமக்ர்யோபநீதஃ ப்ரவரித்திநிவரித்திஸாமக்ரீமத்யமத்யாஸ்த இதி பஷ்யஸி? ஏவஂ வைதிகநியோகோபீதி ஸம்பஷ்யேதாஃ. தர்ஹி லௌகிகமபி நியோகஂ பரித்யஜாம இதி சேத் — ஹந்த பரஸ்பரஸஂவ்யவஹாரவ்யுத்த்பத்த்யாத்யஸம்பவாத்விலீநஂ லோகாயதேநாபீதி மூகீபவ. ஏவஂ ஸாமாந்யதஃ ஸர்வேஷு அதரிஷ்டவைஷம்யமூலேஷ்வபி கர்மஸு ஷாஸ்த்ரே ஸாவகாஷே ததேவ ஷாஸ்த்ரமீஷ்வரபுத்திவிஷேஷஂ சேததரிஷ்டமுபதிஷதி? ததாவிதோயமீஷ்வரஃ ப்ரமாணபலாதகவத இதி ந தத்ர பரிசோதநாவகாஷஃ. ந சைஷ தோஷஃ — ‘யதோக்தமாசார்யைர்வாதிஹஂஸாம்புவாஹைஃ’ — ‘வைஷம்யே ஸதி கர்மணாமவிஷமஃ கிஂ நாம குர்யாத்கரிதீ கிஂவோதாரதயா ததீத வரதோ வாஞ்சந்தி சேத்துர்கதிம்’ இதி.ததயஂ சார்வாகேதரஸமஸ்தஸித்தாந்தநிஷ்டாநாஂ ஸாதாரணபரிஹாரஸாரஃ — ‘தத்ததிஷ்டாதரிஷ்டமூலஷாஸ்த்ரவஷ்யதஷாந்வயாத். புநஸ்ததாததா தரிஷ்டஸம்பத்திருபபத்யதே৷৷புமர்தஸாதநத்வேந ப்ரதீதேஃ ஸ்வேச்சயா புமாந். ப்ரவர்தேதேதி தாதர்த்யாத்ஸாவகாஷாத்ர சோதநா৷৷’ இதி. அத்ர கரணகலேவரப்ரதாநாதிஸாதாரணோபகாரஸாபேக்ஷதயா ஜீவகர்தரித்வஸ்ய பராபேக்ஷத்வஂ’ஸந்நித்யந்தேநோக்தம்’.’கர்மநிஷ்பத்தயே’ இத்யாதிநா து ப்ரவரித்திவிஷேஷே ஜீவஸ்ய ஸ்வாதந்த்ர்யஂ தர்ஷிதம். தத்ராபி பரஸ்ய கிஞ்சித்காரஃ’ததந்தரவஸ்தித’ இத்யாதிநோக்தஃ.’தஂ’ — கரிதப்ரயத்நமித்யர்தஃ.

———————-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ பாஷ்யம்–ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-ஆரம்பணாதி அதிகரணம் : 2-1-6 –ஸூத்ரங்கள் -(2-1-15–2-1-20)

June 8, 2026

ப்ரஹ்மமும் சித்துக்கள் அசித்துக்கள் சேர்ந்த பிரபஞ்சம் –
காரண கார்ய பாவத்தால் ஒன்றே என்று முன்பு –2-1-7- பார்த்தோம்
இதில் உள்ள பிரதிபக்ஷ வாதங்களைக் காட்டி சித்தாந்தம் இதில் காட்டுகிறார் –

பேத -அபேத =பேதமும் அபேதமும் இல்லாமல் ச விசேஷ ப்ரஹ்மம் நம் சம்ப்ரதாயம்

ஸ்ரீ பாஷ்யம் —ஆரம்பணா அதிகரண பிரவேசம்

சங்கதி – விலக்ஷணத்வாதிகரணத்தோடே. –
அஸ்ய (ஜகத்) விலக்ஷணத்வாத் (பிரஹ்ம காரிய பாவம்)
ந -அங்கு சொல்லப் பட்டது பிரஹ்மமும் ஜகத்தும் விலக்ஷணத்தையோடே கூடினது.
ஆகிலும் பிரஹ்மம் தான் ஜகத் காரணம் என்பது வேதாந்த பக்ஷம்.

சூத்ரம் 2-1-15 : ததனனயத்வம் ஆரம்பண ஸப்தாதிப்ய :

ததனன யத்வம்–பரமார்த்த தயா வஸ்து ந அஸ்தி

கடத்துக்கும் படத்துக்கும் வேறுபாடு -மண்ணுக்கும் குடத்துக்கும் வேறுபாடு இருந்தாலும் –
அனைத்துக்கும் விலக்ஷணமான ப்ரஹ்மமே காரணம் –
கேவல பேத வாதம்–நிர்விசேஷ பேத வாதம்-பேத அபேத வாதம் -இவற்றை நிரஸித்து
விசிஷ்டாத்வைத சரீர சரீரீ பாவம் -வேதார்த்த ஸங்க்ரஹம் -காட்டி அருளினார்
ச விசேஷமமே விசிஷ்டம்
சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஏகம் -அத்விதீயம்
ச விசேஷ ஐக்ய வாதம்
அந்நிய சப்தம் வேறே பின்ன சப்தம் வேறே அன்றோ

முயல் உண்டு- கொம்பு உண்டு- முயல் கொம்பு இல்லை என்றால் -சம்பந்தம் இல்லை என்றே அர்த்தம்
வைசேஷிக வாதம் –
1-நாம பேதாத் -மண் -குடம்
2-கார்ய பேதாத் -வேறே வேறே பயனுக்காக
3-வேறே வேறே காலத்தில் இருப்பதால்
4-ஆகார பேதம் -ரூப பேதம்
5-ஒரே உருண்டை -பல குடங்கள் -சங்க்யா
6-ஒன்றாக இருந்தால் உருவாக்குபவர் எதற்க்காக
நான்யத்வம் நாம சங்க்யா ஆகார இத்யாதி -தத்வ முக்த கலாபம் அடக்கி தேசிகன்
அத்யந்த பேதம்

சாங்க்யர் -பூர்வ பக்ஷம்
அஸத் கார்ய வாதம்
உபாதான காரணத்தில் கார்யம் ஸூஷ்ம ரூபத்தில் பூர்வமேவ இருக்கும்
எள்ளில் தானே எண்ணெய் -மணலில் இல்லையே
வியக்தமாக வெளிப்படையாக தெரிய வைப்பதே கர்த்தாவின் கர்தவ்யம்

அத்வைதிகள் -சாங்க்யர் சொல்வதும் தப்பு -வைசேஷிகர் சொல்வதும் தப்பு -ஒன்றே உள்ளது –
மாயை பிரமம் -கார்யம் மித்யை -காரணம் ஒன்றே பரமார்த்தம் உண்மை
காரண வியதிரிக்த வஸ்துவே இல்லையே -என்பர்
அனுவார்த்தமானம் நித்யம்
எப்போது தோன்றி மறையுமது மாயை
கயிறு பாம்பு -பாம்பு ஞானம் தொடராதே
உண்டாவது எல்லாம் அழிந்து காரண வஸ்துவாகுமே

உண்டாகும் சேதனர்களும் அசேதனர்களும் அழிந்து ப்ரஹ்மைவ-ஒன்றாக பவதி-என்பர்
நாமோ ப்ரஹ்ம இவ -போல் ஆவோம் –
ஆதிப்பரனோடு ஒன்றாம் என்ற வாதம் ஒழித்தார் பாஷ்யகாரர்
சாஸ்திரம் வேறே சம்ப்ரதாயம் வேறே
புநரா வ்ருத்தி மோக்ஷம் என்பதே சாஸ்திரம்
பகவத் அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யமே புருஷார்த்தம் சம்ப்ரதாயம்

அநிர் வசநீயம் -கயிற்றைப் பார்த்து பாம்பு என்று தான் பிரமை
யானை என்று பிரமிக்க வில்லையே
ஸர்வதா அசத்தாக இருந்தால் தோன்றாதே
பாம்பு இருக்குமோ என்றும் இல்லையே என்றும் சொல்வதால் -அநிர் வசநீயம்-
உபமானம் உபமேயம் -இரண்டு இல்லையே அவர்களுக்கு
ப்ரஹ்மமே சத்தியமும் ஞானமும் -சஜாதீய விஜாதீய ஸ்வதீய விபாக ரஹிதம்
ப்ரஹ்மம் நித்யம் ஜகத் மித்யா -விருத்தமானவை சேராதே -ஆகவே அநிர்வசனீயம்
ப்ரஹ்மம் அநந்யம் பேதம் அற்றது -என்று
அபேத ஸ்ருதிகளை பிரமாணமாக அத்வைதிகள் காட்டுகிறார்கள்
நேராக அத்வைத நிரஸனம் பண்ணாமல் வைசேஷிகர் வாதத்தால் இவற்றை நிரஸித்து
மேல் சித்தாந்தம் இந்த அதிகரணத்தில் அருளிச் செய்கிறார்

ப்ரஹ்மமே ஜீவன் -என்றால் பல ஜீவர்கள் -ஒருவர் துக்கம் பட ஒருவர் சுகம் பட
உடம்பில் காலில் வலி கண்ணுக்கு நல்ல காட்சி போல் இதுவும் கூடுமே என்பர் அத்வைதி
அநேக ஜீவன அநு பிரவேசாத்
ஏகோ தேவ போன்ற சுருதிகள் உண்டே

ப்ரத்யக்ஷம் -கயிற்றை பாம்பு போல் பார்த்து
ஒருவர் அது பாம்பு இல்லை -சப்த பிரமாணம் கொண்டு உணராமல்
நேராக சென்று தானே பிடித்துப் பார்த்து -பிரயத்தனம் பண்ணி -உணர்ந்து
பிரபஞ்சம் மித்யா என்றால் பிரத்யக்ஷ விருத்தம்
என்னைத் தவிர வேறே ஜீவர்கள் உண்டு அநுமேயம் -infer -பண்ணி
ஸாஸ்த்ர பிரமாணம் பிரசித்தம்

இங்கு வாசாரம்பண சப்தாதிப்ய -என்று கூறாமல் ஆரம் சப்தாதிப்ய-என்று ஸூத்ரம் செய்யப்பட்டமையால்
வாசாரம்பண-என்பதை ஒரே பதமாகக் கூறிய ஸ்ரீ சங்கர மதம் தவறு என்பது காட்டப்பட்டது

அநந்யத்வம் -மண் பானை போல்-ப்ரஹ்மமும் ஜகத்தும் வேறே ஓன்று அல்ல
அத்யந்த பேதம் வைசேஷிகர் -நிரசித்து அநந்யத்வம் சாதித்து –
மாத்வ மதத்தில் விஷ்ணு பாரதம்யம் ஒத்துக் கொண்டாலும் பரமாத்மா நிமித்த காரணம் மட்டும் -ப்ரக்ருதி உபாதான காரணம்
ப்ரஹ்ம ஜகத் இரண்டுக்கும் அத்யந்த பேதம் -என்பர்
கார்யங்கள் எல்லாமே மித்யையே என்றால் முயற்சியே செய்ய மாட்டோமே
ஸத் -இருக்கும் வஸ்து என்றால் நித்தியமாக இருக்க வேண்டும்
அஸத் -நேற்றும் இன்றும் நாளையும் இல்லாதது முயல் கொம்பு போல்
குடம் என்றோ ஒரு நாள் உடையும் ஸத் என்றும் அஸத் என்றும் சொல்ல முடியாது
ஆகையால் -அநிர்வசனீயம் -ஆகவே மித்யை
நாமோ இது அநித்தியம் பொய்யான வாஸ்து இல்லை என்கிறோம் -வஸ்துவே பொய் இல்லையே

ச குண ப்ரஹ்மம் நிர்குண ப்ரஹ்மம் இரண்டு சொல்லி
பார்ப்பது அனுக்ரஹம் போன்றவை ச குண ப்ரஹ்ம கார்யம் என்றும்
அதுக்கும் மேல் நிர்குண ப்ரஹ்மம் –
நிர்விசேஷ பர ப்ரஹ்மம் சாஷாத்காரிக்க முடியாதவர் மந்தர்கள் -தே அனுகம்பா ச விசேஷ ப்ரஹ்மம்

இரண்டே இல்லை என்றால் உங்கள் மதமும் எங்கள் மதமும் ஒன்றே ஆகுமே -வைசேஷிகர் வாதம்

தேசாந்தர காலாந்தர வஸ்தாந்தர பேதங்கள் இருந்தே ஆகவேண்டும்
காரண கார்ய பேதங்கள் இருந்தே ஆக வேண்டும்
நான் நாளை அங்கு வரப் போகிறேன் -இறந்த காலம் வேறே இடம் போன்ற பேதங்கள் உண்டே

காரணமும் காரியமும் ஸத்யமே
போஜநம் காரணம் – பசி அடங்குவது கார்யம்
சித்தாந்தம்
தத் அநந்யத்வம்-ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் –
ஸதேவ சோம்ய ஏகம் -போன்ற ஸ்ருதி வாக்கியங்கள் அந்யத்வம் சொல்ல வந்தவையே

பிரஸ்தான த்ரயம் நம் சம்ரதாயத்தில் இல்லை -உபநிஷத் ப்ரஹ்ம ஸூத்ரம் கீதை -மூன்றும் ஏக கண்டம்

ஞான ஜனக சப்த பிரயோகம் தானே விவகாரம் –
தேவதத்தன் பால்ய யுவா முக்த அவஸ்தைகள் மாறினாலும் தேவதத்தன் வ்யக்தி மாறாதே –
ப்ரஹ்மத்திடம் இருந்து சேதன அசேதனங்கள் தோன்றி ப்ரஹ்மத்திடம் லயம்
நாநா ரூபம்-நாம ரூப விபாகம் – ஜகத்
ஸத் என்றே பெயர் ஸூஷ்ம அவஸ்தையில் ப்ரஹ்மம் என்ற பெயரும் இல்லையே
தத் ஈஷதே
பஹுஸ்யாம் ப்ரஜாயேய
சர்வ ஸப்த வாச்யன் ப்ரஹ்மமே -பர்யவசானம் ஆகுமே -அனைத்துமே ப்ரஹ்மாத்மகமே –

ஸர்வதா இல்லை என்பதே இல்லையே
ஸத் மட்டுமே இருந்தது என்றால் சேதன அசேதன ஸூஷ்ம விசிஷ்டா ப்ரஹ்மம் இருந்தது என்றே கொள்ள வேண்டும்
அதுவே பின்பு சேதன அசேதன ப்ரஹ்மம்-போக்யம் போக்தா ப்ரேரிதா -மூன்றாக பரிணாமம்

ஸூத்ரம் –149–தத் அந்நயத்வம் ஆரம்பண சப்தாதிப்ய –2-1-15-

ப்ரஹ்மத்தின் கார்யமான ஜகத் ப்ரஹ்மத்தை விட வேறானதா -ஓன்று பட்ட்டதா -என்று சம்சயம்
வேறானதே என்று பூர்வ பக்ஷம்
ஏன் என்றால்
மண் முதலியவற்றுக்கும் குடம் முதலியவற்றுக்கும்
அறியப்படும் தன்மை
கூறப்படும் தன்மை
முதலியவற்றால் பிற இடங்களில் கார்ய காரணங்களுக்குப் பிற இடங்களில் பேதம் கங்கையாலும்
மண் குடம் முதலியவற்றைப் போல் ப்ரஹ்மத்துக்கும் ஜகத்துக்கும் பேதம் ஒப்ப வேண்டும்
ஆகையால் அபேத ஸ்ருதிகள் லக்ஷண தயா வேறே தாத்பர்யம் கொண்டவை என்னும்
பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார் –

தத் அந்நயத்வம் ஆரம்பண சப்தாதிப்ய

தத் அந்நயத்வம் -அந்த ப்ரஹ்மத்தின் இடம் வேறுபாடு இன்மை -ஜகத்துக்குச் ஸித்திக்கிறது என்று பொருள்
ஆரம்பண சப்த ஆதி –ஏஷாம் தாநி -ஆரம்பண சப்தாதீநி தேப்ய –
வாசாரம்பணம் -விகாரோ -நாமதேயம் –
ம்ருத்தி கேத்யேவ ஸத்யம்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -முதலிய
ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் அபேதம் கூறும்
வாக்யங்களாலே
ஜகத்துக்கு ப்ரஹ்மத்தை விட வேறுபாடு இன்மை ஸித்தித்தது
அதாவது
விகாரம் -குடம் முதலிய அவஸ்தைகளும்
நாம தேயம் -குடம் முதலிய பேர்களும்
வாசாரம்பணம் -குடத்தால் தண்ணீர் கொண்டு வா என்ற சொற்களை உச்சரித்து
ஒன்றை ஏற்பது
மற்ற ஒன்றை விடுவது
முதலிய ப்ரவ்ருத்தி நடைபெற ஏற்பட்டவை
ஆரம்பணம் -கொள்ளுதல் மண் என்ற பொருளாலே விகாரமும் நாமதேயமும் கொள்ளப்படுகின்றன
குடம் என்ற நிலையும் பெயரும் ஏற்கப்படுகின்றன

ஸூத்ரம் –150–பாவே சோப லப்தே –2-1-16-

குடம் முதலிய கார்ய அவஸ்தையிலும் அந்த மண் காணப்படுவதால்
அந்த மண்ணே இந்தக்கூடமாய் மாறி இருக்கிறது என்று
காரணம் காரியம் பாவம் தோன்றுவதால் கார்யம் வேறானது அன்று
பால்யம் யுவா கிழவன் போன்ற அவஸ்தைகள் மாறினாலும்
தேவ தத்தன் ஒருவனே அன்றி வேறே ஒருவன் அல்ல
அதே போல் ஜகத்தும் ப்ரஹ்மமும் ஒன்றே அன்றி வேறு அல்ல –

——–

ஸூத்ரம் –151-ஸத்வாச் ச அபரஸ்ய –2-1-17-

அபரஸ்ய–காரியத்துக்கு
ஸத்வாச் ச –காரணத்தில் இருப்பு தோன்றுவதால்
காரணத்தை விட கார்யம் வேறு அன்று
இந்தக் குடம் இத்யாதி எல்லாம் நேற்று மண்ணாகவே இருந்தன என்று காரண கார்ய பாவம் தோன்றுகிறது
இப்போது குடம் முதலிய உருவங்களில் தோன்றும் மண்
முன் பிண்ட வடிவமாய் இருந்தது என்பது உறுதியான கருத்து

——–

ஸூத்ரம் –152-அஸத் வ்யபதேசான் நேதி சேந்ந தர்மாந்தரேண வாக்ய சேஷாத் யுக்தேச் சப்தாந் தராச்ச–2-1-18-

ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் என்று
காரண அவஸ்தையில் கார்யம் -அஸத்- இல்லை என்று பேசுவதால்
காரணத்தில் கார்யம் இல்லை என்றால் அது சரி அன்று
தர்மாந்தரேண–அஸத் என்ற வழக்கிற்குக் காரணமான ஸூஷ்ம அவஸ்தை வேறு தர்மத்தாலே
அஸத் ஏவ இதம் -என்ற வழக்கு ஏற்படுகிறது
அதற்கு ஹேது எது என்றால்
வாக்ய சேஷாத் யுக்தேச் சப்தாந் தராச்ச–தத் அஸத் ஏவ சந் மநோ குரு தஸ்யாம் இதி
அஸத் என்று சொல்லப்பட்ட வஸ்து தானே ஸத்ஸ்யாம் என்று ஸங்கல்பம் பண்ணியது என்று
வாக்ய சேஷத்தில் சொல்லுகையாலே
அஸத் என்று வழங்குவது ஸூஷ்ம அவஸ்தை என்று வேறு தர்மத்தின் சம்பந்தத்தால் ஏற்பட்டது –
ஒன்றும் இல்லாதது -துச்சம் -என்ற பொருளில் இல்லை
யுக்தேச் ச -குடம் இருக்கிறது குடம் இல்லை என்ற இருவகை வழக்குகளும் ஒன்றுக்கு ஓன்று முரணான
குடத்தன்மை கபாலத்தன்மை என்னும் இவை தவிர தோன்றாதான
துச்சத்வத்தை-அஸத் -வ்யபதேசத்துக்கு ஹேதுவாகக் கற்பித்தல் அடியோடு தவறானது
சப்தாந்தராச்ச
இதம் வா அக்ரே நைவ கிஞ்சனாஸீத் -முதலிய
காரண வாக்யங்களுக்குச் சமமான
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்-என்பது முதலான காரண வாக்கியத்தில்
ஸச் ஸப்தத்தாலே காரணத்தைச் சொல்வதால்
அந்த அஸத் ஸப்தத்துக்கும் ஸூஷ்ம அவஸ்தா விசிஷ்டமான ப்ரஹ்மமே அர்த்தம் என்று தோன்றுகிறது
ஸத் -என்றால் பிராமண சித்தம் என்று பொருள் –

—————

இரண்டு த்ருஷ்டாந்தங்கள் காட்டுகிறார் இரண்டு சூத்ரங்களால்

ஸூத்ரம் –153–ஸூ பட வச்ச –2-1-19-

நூல்கள் விசேஷ சம்பந்தத்தைப் பெற்று வஸ்திரம் என்று
பெயர் -தோற்றம் -கார்யாந்தரங்கள் -முதலியவற்றை அடைகின்றனவே
அதே போல்
ப்ரஹ்மமும் நாம ரூப விபாகங்களைப் பெற்றமையால் கார்யம் என்னும் தன்மையை அடைகிறது

——————

ஸூத்ரம் –154–யதா ச ப்ராணாதி –2-1-20-

ஒரே வாயு எவ்வாறு உடலிலே வெவ்வேறு வியாபாரத்தைப் பெற்று
பிராணன் அபானம் முதலிய பெயர்களைப் பெறுகிறதோ
அது போலவே
ப்ரஹ்மமும் நாம ரூப விபாகத்தால் கார்ய பாவத்தை அடைகிறது என்பதாம்

—————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–நான்காம் பாதம் –ஐந்தாம் அதிகரணம்— காரணத்வாதிகரணம் -1-4-5-

June 8, 2026

விஷயம்
கௌஷீதகீ உபநிஷத்தில் அறியத்தக்கவனாக உபதேசிக்கப்படுபவன் பரமாத்மாவே ஆவான் -என்கிறது

1-4-16-ஜகத் வாசித்வாத்

உலகத்தைக் கூறுவதால் இங்கு கூறப்படுவது பரமாத்மாவே

பூர்வ பக்ஷம்
சாங்க்யர்கள் மீண்டும் ஒரு ஆஷேபம்
வேதாந்தங்களில் சேதனனே ஜகத் காரணம் என்று கூறப்பட்டாலும் கபில தந்திரத்தின் மூலம் வெளிப்படுவதாக
பிரதானம் மற்றும் புருஷன் இவற்றை விட வேறே வஸ்து ஜகத்காரணமாக உள்ளது என்றால்
அதை நம்மால் அறிய முடியவில்லை
கௌஷீதகீ உபநிஷத்தில் -பாலாகி -அஜாத சத்ரு -சம்வாதம் -அனுபவிக்கும் புருஷனே -ஜீவாத்மாவே -ஜகத் காரணம் என்று அறியப்பட வேண்டும் என்கிறது –
அதில் தொடக்கத்தில் பாலாகியால்-அறியப்பட வேண்டிய ப்ரஹ்மம் குறித்து கேட்ட போது அதற்கு விடையாக-ப்ரஹ்மதே பிரவாணி -4-1-ப்ரஹ்மத்தைக் குறித்து உபதேசிக்கிறேன் என்று தொடங்கி- 4-18-யோவை பாலாகே ஏதேஷாம் புருஷணாம் கர்த்தா யஸ்ய ச ஏதத் கர்ம ச வை வேதி தவ்ய-என்று யார் இந்த புருஷர்களுக்கு கர்த்தாவாக உள்ளானோ -யாருக்கு இந்த புண்ய பாப ரூபமான கர்மா உள்ளதோ-அவனே அறியாத தக்கவன் என்று நிகமிக்கப்படுகிறது

பாலாகி என்ற அந்தணன் அஜாத சத்ரு அரசன் இடம் தன்னுடைய ப்ரஹ்ம ஞானம் வெளிப்படுத்த ஸூர்ய மண்டலம் சந்த்ர மண்டலம் மின்னல் ஆகாசம் என்று ஒவ் ஒன்றாக உரைத்து அங்கே உள்ள ஆத்மாவை – ஜீவாத்மாவே ப்ரஹ்மம் -என்று உரைக்க –
அரசன் ஏற்க மறுக்க –
பாலாகி பணிந்து அரசன் இடம் ப்ரஹ்மத்தை பற்றி உபதேசிக்க பிரார்த்திக்க –
இதுவே இந்த பகுதியின் அறிமுகம்

பாலாகியால் தொடக்கத்தில் எந்த ஒரு ப்ரஹ்மம் அறியப்பட வேண்டியதாகக் கூறப்பட்டதோ-அந்த ப்ரஹ்மமே – அஜாத சத்ருவால் –ச வேதி தவ்ய -அவனே அறியப்பட வேண்டியவன் -என்று உபதேசிக்கப்பட்டதில் உள்ள ப்ரஹ்மம் ஆகும்
அந்த வரியில் உள்ள –யஸ்ய ச ஏதத் கர்ம -இது யாருடைய கர்மமோ -என்ற பகுதி அறியப்பட வேண்டிய வஸ்துவை கர்மத்துடன் சம்பந்தப்படுத்துவதாக உள்ளது-ஆகவே இங்கே கூறப்படும் ப்ரஹ்மம் என்பது ப்ரக்ருதியை நியமிக்க வல்லவனும் அனுபவிப்பவனும் ஆகிய புருஷன் – ஜீவாத்மா -என்று நிச்சயிக்கப் படுகிறது அல்லாமல் வேறே ஏதும் இல்லை -ஏன் என்றால் வேறு ஏதும் கர்மத்துடன் சம்பந்தம் கொள்வது இல்லை – கர்மங்கள் ஷேத்திரஞ்ஞனுக்கே-ஜீவாத்மாவுக்கே -சம்பவிக்கும்

இதுக்கு சித்தாந்தி –
எது செய்யப்படுகிறதோ அதுவே கர்மம் என்ற சொல்லுக்கான பொருளாகும்
இங்குள்ள ஏதத் கர்ம -என்பதன் மூலம் ப்ரத்யக்ஷம் முதலான ப்ரமாணங்களால் ஸ்தாபிக்கப்பட்ட ஜகத்தே கூறப்படுகிறது-ஆகவே ஷேத்ரஞ்ஞனைக் காட்டிலும் வேறாக உள்ளவனும் யாருடைய கர்மம் -செயல் -என்பதே இந்த ஜகத்தாக உள்ளதோ –
என்று கூறப்படும் ஒருவனே அறியப்பட வேண்டியவன் -என்று கூறக் கூடும்

இத்தை பூர்வ பக்ஷி மறுப்பான்
நீங்கள் கூறுவது போன்று வைத்துக் கொண்டால்
யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய -கௌஷீகீ -4-18-என்று தனித்தனியாக இரண்டையும் உரைப்பது அவசியம் இல்லையே
கர்மம் பொதுவாக லோகத்திலும் வேதத்திலும் புண்ய பாப ரூபமாகவே உள்ள செயல்களைக் குறிக்கும்
ஆக புருஷணாம் கர்த்தா -என்பது கர்மங்களை அனுபவிப்பவர்களுக்கே பொருந்தும்
மேலும் கௌஷீதகீ –4-18–தவ் ஹ ஸூப்தம் புருஷமீயது ஜூ தம் யஷ்டயா சிஷேபா -என்று
உறங்கும் அவன் இடம் செல்லுதல் -அவனைத் தடியால் அடித்தல் -அவனை எழுப்புதல் -இவை புருஷனை வெளிப்படுத்தும் அடையாளங்களே

இதைத் தொடர்ந்து –கௌஷீதகீ -4-20-தத் யதா ஸ்ரேஷ்டீ ஸ்வைர் புங்க்தே யதா ஸ்வா ஸ்ரேஷ்ட்டிநம் புஞ்ஜந்தி ஏவம் ஏவ ஏஷ பிரஞ்ஜாத்மா ஏதைராத்மபிர் புங்க்தே ஏவம் ஏத ஏவ ஆத்மாந ஏநம் புஞ்ஜந்தி –என்று எவ்விதம் இந்த செல்வந்த வைசியன் தனது வேலையாட்களுடன் இன்பமாக உள்ளானோ -எவ்விதம் அந்த வேலையாட்கள் இவனுடன் சேர்ந்து இன்பமாக உள்ளார்களா-அதே போன்று புருஷன் -மற்ற புருஷர்களை -இந்த பிராணன் -முதலானவற்றை அனுபவிக்கிறான் –அவர்களும் இந்த புருஷனை அனுபவிக்கிறார்கள் என்பதுவும் அனுபவிப்பவனையே -ஜீவாத்மாவையே கூறுவதாக உள்ளது –

யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய –
பாலாகி என்னும் ஒருவன் அஜாத சத்ரு என்ற அரசன் இடம் வந்து ப்ரஹ்மத்தை குறித்து கூறுவதாக சொல்லி
ப்ரஹ்ம தே ப்ருவாணி யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய – யஸ்யா வா ஏதத் கர்ம -யாருக்கு இது கர்மமோ -இது என்றது உலகம் -கர்மம் -உலகை உருவாக்கும் செயலையும் சொல்லி
பர ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் என்றதாயிற்று

இது போன்றே கௌஷீ –4-18-க்வா ஏஷ பாலாகே புருஷோ சயிஷ்ட -க்வா ஏதத் அபூத் -குத ஏதத் ஆகாத்–என்ற கேள்விகளை அஜாத சத்ரு கேட்க பாலாகி மௌனமாக இருக்க தானே பதில் கூறத் தொடங்கினான்
கௌஷீ -4-19-ஹிதா நாம ஹ்ருதயஸ்ய நாட்ய தாஸூ ததா பவதி யதா ஸூப்த–ஸ்வப்னம் ந கதஞ்சன பச்யதி
அதாஸ்மின் பிராண ஏவைகதா பவதி ததைநம் வாக் சர்வைர்நாமபி சஹாப்யேதி மந சர்வைர்த்யாநை சஹாப்யேதி
ச யதா பிரதிபத்யதே யதா அக்நோஜ் வலந்த சர்வாதிசோ விஸ்பு லிங்கா வி பிரதிஷ்டேரந் ஏவம் ஏவ ஏதஸ்மாத் ஆத்மந
பிராணா யதாயதநம் வி ப்ரதிஷ்டந்தே ப்ராணேப்யோ தேவா தேவேப்யோ லோகா -என்று
இதயத்தில் ஹிதா என்னும் நாடியில் இருந்தான் -ஆழ்ந்த உறக்கத்தில் கனவு காண்பதில்லை –
மனம் இந்திரியங்கள் ப்ராணனுடன் கலந்து ஒன்றாக உள்ளன -விழித்துக் கொள்ளும் போது
அக்னியில் இருந்து தீ பொறிகள் சிதறுவது போலே ஆத்மாவில் இருந்து இந்திரியங்கள் புறப்பட்டு
தங்கள் இருப்பிடங்களை அடைந்து இந்திரியங்கள் இந்திரிய விஷயங்களை அடைகின்றன
உபநிஷத்தில் தேவ பதம் இந்திரியங்களும் லோக பதம் இந்திரிய விஷயங்களையும் குறிக்கும் –

அஸ்மின் -ஜீவாத்மாவை சொல்லி -அதாஸ்மின் பிராண ஏவைகதா பவதி -பிராண என்று பிராணனைத் தாங்கும் ஜீவாத்மா –
இப்படியாக இந்த பகுதியின் தொடக்கத்தில் கூறப்பட்ட ப்ரஹ்மம் ஜீவாத்மாவே –
ஈஷம் -பார்த்தல் போன்றவை ஜீவாத்மாவுக்கே பொருந்தும்
எனவே ஜீவாத்மாவால் நியமிக்கப்படும் பிரதானமே ஜகத் காரணம் ஆகும் என்பர் பூர்வ பக்ஷி

சித்தாந்தம்
புருஷோத்தமனே கூறப்படுகிறான் -யஸ்ய ச ஏதத் கர்ம -என்பதில் ஏதத் -இந்த என்பதுடன் சம்பந்தம் கொண்டுள்ள
கர்ம -பரம புருஷனின் கார்யமான ஜகத்தைக் கூறுவதாகும் –
ப்ரத்யக்ஷம் முதலான ப்ரமாணங்களால் அறியப்படுவதும் சித் அசித் வஸ்துக்கள் கலந்த ஜகத் என்பதே கூறப்படுகிறது –
அல்லது புண்ய பாப செயல்களைக் கூற வில்லை
கௌஷீ -4-1-ப்ரஹ்ம தே பிரவாணி –என்று சொல்லத் னத்தொடங்கிய பாலாகி ஆதித்ய மண்டலத்தில் வசிக்கும்
புருஷர்கள் போன்ற ப்ரஹ்மம் அல்லாதவர்கள் குறித்து பேசிய பாலாகி இடம்
கௌஷீ -4-18- ம்ருஷா வை கலு மா ஸம்வ திஷ்டா —என்று தவறாக வாதாடாதே என்று அஜாதசத்ரு உரைத்தான் —
யோ வை பாலாகி –என்று கூறத் தொடங்கினான்

இங்கே கர்ம -என்னும் சொல் அவன் அறியாத ப்ரஹ்மத்தை உணர்த்த குறிக்க வந்ததால் இங்கு ஜகத்தையே குறிக்கும்
யஸ்ய கர்ம ச வேதி தவ்ய–யாருக்கு கர்மம் உள்ளதோ அவனே அறியப்பட வேண்டியவன் என்று இல்லாமல்
யஸ்ய வா ஏதத் கர்ம -இது யாருடைய கர்மமோ என்று இருப்பதால் -ஏதத் இது என்ற சொல்லுக்கு பயன் வேண்டுமே
அந்த உபநிஷத் வரியில் -யா ஏத்த ஏஷாம் கர்த்தா -யார் இவர்களுக்கு கர்த்தாவோ —
மற்றும் யஸ்ய வா ஏதத் கர்ம -இது யாருடைய கர்மமோ என்று தனித்தனியாக உபதேசிக்கப்பட்டதின்
அபிப்ராயம் ஏது என்றால் -நீ எந்த புருஷர்களை ப்ரஹ்மம் என்று உபதேசித்தாயோ
உண்மையில் அந்த ப்ரஹ்மமே அவர்களுடைய கர்த்தாவாகும்-அவர்கள் அந்த ப்ரஹ்மத்தின் கார்ய பூதங்கள்
ஆகவே புருஷர்களை -ஆதித்யன் போன்றவர்களைப் படைக்கும் சக்தி ஜீவாத்மாவுக்குப் பொருந்தாது –
எனவே இங்குள்ள உபநிஷத் வரியில் -அனைத்து வேதாந்தங்களிலும் அனைத்துக்கும் காரணம் என்று
வெளிப்படுத்தப்படுகின்ற பர ப்ரஹ்மமே அறியப்பட வேண்டியதாகும் என்பதே உபதேசிக்கப் படுகிறது –

——————

1-4-17-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத தத் வ்யாக்யாதம் –

இங்கு ஜீவன் மற்றும் முக்கிய பிராணன் ஆகிய அடையாளங்கள் காணப்படுவதால் பரமாத்மா அல்லன்-என்றால்
முன்பு சொன்னபடியே அது பொருந்தாது

பிரதர்சன வித்யை -1-1-31–முன்பே இதன் விளக்கம் பார்த்தோம்
அதாஸ்மின் பிராண ஏவ ஏகதாபவதி-என்றும்
தத்யதா ச்ரெஷ்டீ ஸ்வைர்ப்புங்க்தே யதா ஸ்வா ஸ்ரேஷ்டி நம் புஞ்ஜந்தி
ஏவமேவைஷா பிரஜ்ஞாத்மா ஏதைராத்மயிர் புங்க்தே
ஏவமேவைத ஆத்மான எனம் புஞ்ஜந்தி -என்றும்
ப்ரஹ்மேதே பிரவாணி -என்றும்
உனக்கு நான் ப்ரஹ்மத்தைக் குறித்து உபதேசிக்கிறேன் -என்று ப்ரஹ்மத்தைக் குறித்தே உள்ளது

நடுவில் உள்ள பகுதியில் -யஸ்ய வா ஏதத் கர்ம –இது யாருடைய கர்மமோ என்பதிலும் ஜீவாத்மா கூறப்படவில்லை
அனைத்து ஜகத்துக்கும் ஒரே காரணமான ப்ரஹ்மமே கூறப்பட்டது என்றும் பார்த்தோம்

இறுதியிலும்
சர்வான் பாப்மநோப ஹத்ய சர்வேஷாம் பூதானாம் ஸ்ரைஷ்ட்யம் ஸ்வா ராஜ்ய மாதிபத்யம் பர்யேதி யா ஏவம் வேத -என்று
இதனை அறிபவன் தனது அனைத்து பாபங்களையும் நீக்கிக் கொண்டவனாக -அனைத்து ஜீவ ராசிகளில் உயர்ந்தவனாக –
அவற்றின் தலைவனாக -கர்ம வசப்படாதவனாக உள்ளான் என்பதன் மூலம்
பிராணனை உடலாக உடைய ப்ரஹ்மத்தை உபாசனை செய்ய வேண்டும் என்றதாயிற்று –
ப்ரஹ்ம உபாசனம் பலன் உடன் கூடியதாக உள்ள அனைத்துப் பாபங்களில் நின்றும் நீங்கப் பெற்ற மோக்ஷ சாம்ராஜ்யம்
பெறுவதை சொல்வதால் ப்ரஹ்ம விஷயமாகவே அனைத்தும் உள்ளன

பிரதர்சன வித்யையில் கூறப்படும் மூன்று வகை ப்ரஹ்ம உபாசனையில் உள்ள
ஜீவாத்மா முக்கிய பிராணன் போன்ற அடையாளங்கள் ப்ரஹ்மத்தைக் குறித்தே உள்ளன
அஸ்மிந் பிராணன் -என்றும்
அதாஸ்மிந் பிராண ஏவ ஏகதா பவதி –கௌஷீகீ -4-19-உறங்கும் போது பிராணன் உடன் சேர்ந்து ஒன்றாகிறான் –
என்பதில் உள்ள அஸ்மிந் பிராண சொற்கள் சாமா நாதி கரண்யத்தில்
பிராணனை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்ம உபாசனம் என்று சொல்லவே பிராண சப்தம்
ஜீவாத்மாவைக் குறித்து சொல்லும் அடையாளங்கள் எவ்வாறு ப்ரஹ்மத்தைக் குறிக்கும் என்பது அடுத்த ஸூத்ரம்

——————–307

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-இரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் –நான்காம் பாதம் – பிராண பாதம்-ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

May 16, 2026

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

நான்காம் பாதம் -பிராண பாதம் -எட்டு அதிகரணங்கள்-

2-4-1-ப்ராண உத்பத்த்யதி₄கரணம் –புலன்களும் படைக்கப்படுபடுபவையே

பூர்வ பக்ஷிகளின் வாதம்- 2ஆவது அத்யாயத்தின்-3ஆவது பாதத்தில் ஐம்பூதங்களும் ஆத்மாக்களும் கூட ப்ர்ஹமத்தின் கார்யங்கள் தான், அதாவது படைக்கப் பட்டவை தான் என்று நிரூபித்தார் வ்யாஸர். அதைத் தொடர்ந்து –4ஆம் பாதத்தில் ஜீவாத்மாவுக்கு உதவும் கருவிகளான இந்திரியங்களும் ப்ராண வாயுவையும் பற்றி ஆராய்ச்சி செய்யப்படுகிறது -அவற்றுக்கு ஆகாஸம் முதலான அசேதனப் பொருள்களைப் போல் உருவ மாறுபாடு ஏற்படுகிறதா? அல்லது ஜீவாத்மாவைப் போல் நித்யமான படியால் பண்புகளில் மட்டும் மாறுபாடு ஏற்படுகிறதா? என்று.
இந்தப் பாதத்தில் மொத்தம் 8 அதிகரணங்கள்உள்ளன. அதில் முதல் மற்றும் கடைசி அதிகரணங்களில் தான் நேரடியாக புலன்கள் மற்றும் ப்ராண வாயுவின் உண்டாக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யப்படுகிறது. நடுவில் உள்ள 6 அதிகரணங்கள் ப்ரஸங்காத்(நினைவு வந்தபடியால்) புலன்கள் மற்றும் ப்ராண வாயுவின் தன்மைகளைச் சொல்பவையாக உள்ளன

(பிராணாதிகரணம் -முதல் அத்யாயம் முதல் பாதத்தில் பார்த்தோம் -இங்கு பிராண உத்பத்தி அதிகரணம் -இதில் மூன்று ஸூத்ரங்கள் உள்ளன -முதல் ஸூத்ரம் பூர்வபக்ஷம் ஸ்பஷ்டமாக சொல்லி ஸித்தாந்தம் மறைந்த உள்ளுரைப்பொருளாக -உத் ஸூத்ரமாக உள்ளது –இறுதியான எட்டாவது அதிகரணத்தில் புலன்கள் நேரடியாக ஸ்ருஷ்டிக்கப் படுவதை காட்டி அருளுகிறார்)

2-4-1-ப்ராண உத்பத்த்தி₄கரணம்–இந்த அதிகரணத்தில் ப்ராணன் என்று அழைக்கப் படும் புலன்கள்(இந்த்ரியங்கள்) உண்டாகின்றனவா இல்லையா என்று ஆராயப்படுகிறது. இதில் மொத்தம் 3 ஸூத்ரங்கள் உள்ளன. முதல் ஸூத்ரம் பூர்வ பக்ஷத்தைக் காட்டுகிறது. அதிலேயே உத் ஸூத்ரமாக(ஸூத்ரத்திலியே நேரடியாக சொல்லப்படாமல் மறை முகமாக)ஸித்தாந்தமும் சொல்லப்படுகிறது. அதற்குப் பின்-2 ஸூத்ரங்கள் ஸித்தாந்தி கூறும் வேறு சில யுக்திகளைச் சொல்கின்றன

பூர்வ பக்ஷம்–1-ததா ₂ ப்ராணா :-“அவ்வாறே ப்ராணங்கள்”
அவ்வாறு-2-3-3-ஆத்மாதிகரணத்தில் ஆத்மா எப்படிப் பட்டவராகச் சொல்லப்பட்டாவரோ அப்படிப் பட்டவை தான் ப்ராணங்களும் என்று பொருள். அதாவது, 2.3.3 ஆத்மாதிகரணத்தின் முதல் ஸூத்ரம் “ந ஆத்மா ச்ருதே .” என்பது. அதன் பொருள் – “ஆத்மா உண்டாவதில்லை ; வேதம் சொல்கிற படியால்” என்பதாகும். “ப்ராணங்கள் அவ்வாறே ” என்றால் “ப்ராணங்கள் உண்டா வதில்லை ; வேதம் சொல்கிற படியால்”என்று பொருள். எனவே ப்ராணங்கள் எனப்படும் புலன்கள் நித்யமானவை என்பதே இவர்கள் வாதம்

அஸத்₃வா இத₃மக்₃ர ஆஸீத் … ரிஷயோ வாவ தே அக்₃ரே ஸதா₃ஸீத் । ததா₃ஹு: கே தே ரிஷய இதி । ப்ராணா வாவ ரிஷய: ஸ்ருஷ்டிக்கு முன்னால் இவ் வுலகம் அனைத்தும் அஸத்தாக(இல்லாததாக) இருந்தது. அப்போது ரிஷிகள் மட்டும் தான் இருந்தன. ரிஷிகள் எனப்படுபவை ப்ராணங்கள்(புலன்கள்-இந்த்ரியங்கள்) தான்–ப்ரளயத்தின் போதும் புலன்கள் இருந்தன என்று வேதம் சொல்கிறபடியால் அவற்றுக்கு உண்டாக்கமில்லை என்று அவர்கள் வாதம்.

வேத வ்யாஸரின் மறுப்பு– ஸித்தாந்தம் –ஸூத்ரத்தில் வெளிப்படையாகச் சொற்களால் சொல்லப் படாமல், உள்ளுரைப் பொருளாக ஸித்தாந்தம் கூறப்படுகிறது.-ஆகமம் முதலானவை எப்படி உண்டாக்கப் படுகின்றனவோ அது போல் புலன்களும் உண்டாக்கப் படுகின்றன,ஏனெனில்
1–“ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத் ஏகமேவ அதி₃விதீயம்”,
“ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்₃ர ஆஸீத்
” முதலான வாக்கியங்களில் ஸ்ருஷ்டிக்கு முன்னால், ப்ரளய காலத்தில், ஒரே ஒரு பொருள் தான் இருந்தது எனப்படுகிறது. எனவே புலன்கள் அப்போது இல்லை
2- ஏதஸ்மாத் ஜாயதே ப்ராணா : மந: ஸர்வேந்த்₃ரியாணி ச -அதாவது “இந்த ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராண வாயுவும் மனதும் எல்லாப் புலன்களும் உண்டாகின்றன-என்று ஸ்பஷ்டமாக உள்ளது. ஆக, ப்ரளயத்தில் அவை இல்லை

கேள்வி –ஆத்மவுக்குச் சில வாக்கியங்களில் பிறப்புண்டு என்று சொல்லப்பட்டிருந்தாலும் அது உண்டாக்கமல்ல, நித்யமான ஆத்மா ஓர் உடலை எடுத்துக் கொள்வது தான் சொல்லப் படுகிறது என்று கூறினீர்கள். அது போல் இங்கும் புலன்கள் உண்டாகின்றன என்று கொள்ளாமல். நித்யமான புலன்கள் வெளிப்படுகின்றன என்று கொள்ளலாமே ?
பதில்–
(ந ஜாயதே ம்ரியதே இத்யாதி )ஆத்மாக்கள் உண்டாகுவதில்லை என்றும், ஆத்மாக்கள் நித்யமானவை என்றும் கூறும் வேத வாக்கியங்கள் பல உள்ள படியால், “ஆத்மா பிறக்கிறார்” என்று கூறும் ஒரு வாக்கியத்துக்கு வேறு மாதிரி பொருள் கொண்டோம். ஆனால் புலன்கள் நித்யமானவை என்று கூறும் எந்த வேத வாக்கியமும் இல்லை – எனவே இந்த வாக்கியத்துக்கு நேரடியான பொருளைத் தான் ஏற்க வேண்டும்.

அஸத்₃வா இத₃மக்₃ர ஆஸீத்” என்று முன்னால் காட்டப்பட்ட வாக்கியத்திலும்,ப்ரளய காலத்தில் புலன்கள் இருந்தன என்று கூறப்பட வில்லை –அந்த வாக்கியத்தில் ரிஷி என்றும் ப்ராணன் என்றும் சொல்லப்படுபவர் பரமாத்மா தான். ஏனெனில்
1-ப்ராணன் என்கிற சொல் வேதத்தில் பல இடங்களில் பரமாத்மாவைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. பரமாத்மா நம்மை வாழ வைப்பதால், அவரைப் ப்ராணன் என்று கூறுவது பொருத்தமானதே —
2- ரிஷி என்ற சொல்லுக்கு“சிறந்த ஜ்ஞாந முடையவர்” என்று பொருள். அறிவற்ற புலன்களை ரிஷிகள் என்று அழைப்பது பொருந்தாது. ஸர்வஜ்ஞனான பரமாத்மாவையே ரிஷி என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

ஆக,புலன்களும் கூட ப்ரஹ்மத்தால் படைக்கத் தான் படுகின்றன என்று வேத வ்யாஸர் தன் ஸித்தாந்தத்தைக் கூறுகிறார்.

ஸித்தாந்தியின் வாதங்கள் -கேள்வி–ரிஷி ப்ராணன் என்ற சொற்கள் ஒருமையில் பயன் படுத்தப் பட்டிருந்தால் பரமாத்மா என்று பொருள் கூறலாம். ஆனால் வேதத்தில்“ரிஷிகள்”, “ப்ராணங்கள்” என்று ப₃ஹு வசனம்(பன்மை விகுதி) உள்ள படியால் பரமாத்மாவாக இருக்க முடியாதே ?
பதில்-2-கௌ₃ணீ அஸம்ப₄வாத் தத் ப்ராக் ச்ருதே : ச

கௌ₃ணீ–இவ் விடத்தில் உள்ள பன்மை விகுதி கௌ₃ணமானது– அதாவது பன்மை என்ற பொருள் இல்லாமல் வேறொரு இரண்டாம் பக்ஷமான பொருளை உடையது
அஸம்ப₄வத்–இயலாதபடியால்-ஸ்ருஷ்டிக்கு முன் பல பொருள்கள் இருக்க முடியாத படியால்”. இதற்குக் காரணம்
தத் ப்ராக் ச்ருதே : ச – பரமாத்மா மட்டுமே ஸ்ருஷ்டிக்கு முன் இருந்தார் என்று வேதம் சொல்கிறபடியால்.

(நாங்கள் போய் வருகிறோம் கௌசல்யை இடம் பெருமாள் சொன்னதை காட்டி லஷ்மணன் பன்மை பிரயோகத்தால் -ஒருமை இருமை பிரயோகம் இல்லாமல் -பன்மையாகவே அருளிச் செய்ததால் -தன்னையும் பிராட்டியாரையும் சேர்த்தே சொன்னதாக காட்டி கூடச் சென்றானே)

கேள்வி–ஸ்ருஷ்டிக்கு முன் புலன்கள் இருந்தன என்று வேதம் சொல்லா விட்டாலும் நாமே யுக்திகளைக் கொண்டு அவ்வாறு கல்பிக்கலாமே ? ப்ரளயத்தில் ஜீவாத்மா இருந்தார் என்று ஏற்பது போல் புலன்களும் இருந்தன என்றால் என்ன தவறு?

பதில்-3–தத் பூர்வ கத்வாத் வாச :– சொற்கள் பொருள்களை முன்னிட்டுக் கொண்டவை யான படியால்”
ப்ரளயத்திலும் ஆத்மாக்கள் இருந்தார்கள் என்று ஏற்பதற்குக் காரணம் உள்ளது -ப்ரளயத்துக்குப் பின் அந்தந்த ஜீவாத்மா அடையும் பிறவியானது, ப்ரளயத்துக்கு முன் அந்தந்த ஜீவாத்மா செய்த பாப புண்யங்களின் விளைவாகத் தான் இருக்க வேண்டும். எனவே இடைப்பட்ட ப்ரளய காலத்திலும் ஜீவாத்மாவும் அவரிடம் பாப புண்யங்களும் தொடர்ந்து இருந்தன என்று ஏற்க வேண்டும்.–அது போல் புலன்களும் ப்ரளயத்தின் போது இருந்தன என்று ஏற்க வேண்டுமென்றால், ப்ரளயத்திலும் புலன்களுக்குச் செயல்பாடு இருந்தது என்று காட்ட வேண்டும். ஆனால் அது பொருந்தாது. எடுத்துக் காட்டுக்கு–பேச்சுக்கான இந்த்ரியம் -சொற்களைப் பேச வேண்டும் என்றால் அதற்குச் சொற்கள் இருக்க வேண்டும். ஆனால், உலகச் சொற்கள் அனைத்துமே உலகம் படைக்கப் பட்ட பிறகு தான் உண்டாயின என்று வேதம் கூறுகிறது
தத்₃தே₄த₃ம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் । தந் நாம ரூபாப்₄யாம் வ்யாக்ரியதே என்று. ஆகையால், ப்ரளய காலத்தில் பொருள்கள் இல்லாத போது சொற்களும் இருந்திருக்க முடியாது. எனவே பேச்சுக்கான இந்த்ரியம் செயல் பட்டிருக்க முடியாது. எனவே அப் புலன் ப்ரளத்தின் போது இருந்தது என்று கல்பிப்பதற்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லை

ஆகவே ப்ராணங்கள் எனப்படும் புலன்களும் ப்ரஹ்மத்தால் படைக்கப் படுபவை தான் என்று நிரூபிக்கப்பட்டது.

2-4-2-ஸப்த க₃த்யதி₄கரணம்-புலன்கள் பதினொன்று -பூர்வ பக்ஷியின் வாதம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் ப்ராணங்கள் எனப்படும் புலன்களும் உண்டாக்கப்படுபவையே என்று நிரூபிக்கப்பட்டது. புலன்களைப் பற்றின பேச்சு எழுந்தமையால் ப்ரஸங்காத் (நினைவுக்கு வந்தபடியால்) புலன்களின் எண்ணிக்கை , அளவு, தன்மைகள் முதலானவற்றை அடுத்த சில
அதிகரணங்களால் வ்யாஸர் நிரூபிக்கிறார். அதில் இவ் வதிகரணத்தில் புலன்களின் எண்ணிக்கை ஆராயப் படுகிறது.

ஸம்சயம் – வேதத்தில் முரண் பட்டவை போல் தோன்றும் சில வாக்கியங்கள் உள்ள படியால் புலன்கள் ஏழு உள்ளனவா? அல்லது பதினொன்றா ? என்று ஸந்தேஹம் எழுகிறது.
பூர்வ பக்ஷம் – ஏழு புலன்கள் தான் என்ற பூர்வ பக்ஷம் இவ் வதிகரணத்தின் முதல் ஸூத்ரத்தால் சொல்லப்படுகிறது.
1-ஸப்த க₃தே : விசேஷி தத்வாச்ச – “(புலன்கள்) ஏழு, சொல்வதாலும் சிறப்பிக்கப்பட்ட தாலும்”
க₃தி (செல்வது) – ஜீவாத்மா ஓருடலை விட்டு மற்றோர் உடலுக்குச் செல்லும் போது அவரோடு கூடச் செல்வது தான்
இங்கு க₃தி’ (செல்வது) என்று குறிப்பிடப் படுகிறது. அந்த க₃தி ஏழு புலன்களுக்கு தான் உண்டு என்கிறது வேதம் –
(ஸப்த இமே லோகா : யேஷு சரந்தி ப்ரணா : கு₃ஹா ஶயா : நிஹிதா 🙂
லோகங்கள் எனப்படும் புலன்கள் ஏழு உள்ளன -அவை உறக்கத்தின் போது இதயத்தில் சுற்றி வருகின்றன.
விசேஷிதத்வம் (சிறப்பிக்கப்படுதல்) – ப்ராணங்களை சிறப்பித்துச் சொல்லும் போது ஏழு தான் சொல்லப்படுகின்றன –
யதா ₃ பஞ்சா வதிஷ்ட₂ந்தே ஜ்ஞாநாநி மநஸா ஸஹ । பு₃த்₃தி₄ஶ்ச ந விசேஷ்டேத தாமாஹு꞉ பரமாம் க₃திம் ॥
“கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்ற ஐந்து ஜ்ஞாந இந்த்ரியங்களும் மனதும் புத்தியும் எப்போது செயல்படாமல் அடங்கி இருக்கின்றனவோ , அப்போது மோக்ஷத்துக்கு வழி வகுக்கும் யோகம் கை கூடுகிறது”
ஆகவே , ஜ்ஞாந இந்த்ரியங்கள் 5, மனது, புத்தி – இந்த ஏழும் தான் இந்த்ரியங்கள் என்கிறார்கள் பூர்வ பக்ஷிகள்.
சில இடங்களில் பேச்சுப்புலன், கைகள், கால்கள், மலம் மற்றும் கழிக்கும் புலன்கள், அஹங்காரம், சித்தம் என்று மேலும் 7 சொல்லப் பட்டிருந்தாலும், அவை ப்ராணன் என்று அழைக்கப்படும் புலன்கள் அல்ல , ஆத்மாவுக்கு உதவாத படியால்.

ஸித்தாந்தியின் வாதம்-ஸித்தாந்தம் –2-ஹஸ்தாத₃ய: து ஸ்தி₂தே அத: ந ஏவம்
ஹஸ்தாத₃ய: து
– கை முதலானவையும் (இந்த்ரியங்கள் தான்) அன்றோ
ஸ்தி₂தே அத: – (உடலில் ஜீவாத்மா ) இருக்கும் பொழுது (இன்ப துன்பங்களை அநுபவிக்கக்) கருவிகளான படியால்
(அத:) ந ஏவம்– ஆகையால் அவ்வாறு (கை கால்கள் முதலானவை புலன்கள் அல்ல என்பது அல்ல

கண் மூக்கு காது முதலானவை உடலிலிருக்கும் ஜீவாத்மாவுக்கு இன்ப துன்பங்களை அநுபவிக்கக் கருவிகளாக இருப்பதால் தான் அவற்றைப் புலன்கள் என்கிறோம். அதே போல் பேச்சுப் புலன், கைகள், கால்கள், மலம் மற்றும் ஜலம் கழிக்கும் இந்த்ரியங்கள் என்று இந்த ஐந்து கர்ம -இந்த்ரியங்களும் கூட ஜீவாத்மாவுக்குக் கருவிகளான படியால் அவையும் புலன்கள் (இந்த்ரியங்கள்) தான். ஆகவே 5 ஜ்ஞாந இந்த்ரியங்கள், 5 கர்ம இந்த்ரியங்கள், 1 மனது – ஆக மொத்தம் 11 இந்த்ரியங்கள் (ப்ராணங்கள் -புலன்கள்) உள்ளன என்று தெளிவாகிறது.

சில இடங்களில் இந்த 11 இந்த்ரியங்களோடு கூட புத்தி, அஹங்காரம், சித்தம் என்ற மூன்றையும் சேர்த்து,மொத்தம் 14 இந்த்ரியங்கள் என்கிறார்கள். ஆனால் உண்மையில் புத்தி, அஹங்காரம், சித்தம் என்பவை யெல்லாம் மனதினுணடய வெவ்வேறு பெயர்கள் தான். ஒரே மனது மனனம் (ஆராய்ச்சி) செய்யும் போது மனது என்றும் , கர்வம் கொள்ளும் போது அஹங்காரம் என்றும், உறுதியோடு இருக்கும் பொழுது புத்தி என்றும்,கவலை கொண்ட போது சித்தம் என்றும் கூறப்படுகிறது. எனவே அம் மூன்றும் தனித்தனி புலன்கள் அல்ல. -மொத்தம் 11 புலன்கள் தான் உள்ளன.
வேதம் முதலானவற்றிலும் (த₃ ச இமே புருஷே பரணா : ஆத்மா ஏகாதா₃ ஸ )
அதாவது இந்த ஆத்மாவுக்குப் பத்து ப்ராணங்கள் (வெளிப் புலன்களும்) ஒரு மனதும் உள்ளன” என்று கூறப் பட்டுள்ளது.
ஆக இவ்வாறு புலன்கள் மொத்தம் 11 தான் என்று வ்யாஸர் நிரூபித்தார்.

(அந்தகரணம் -மனஸ்ஸூ –சித்தம் -சிந்தனை பண்ண -புத்தி -உறுதி கொள்ள -அபிமானம் -அஹங்காரம் கர்வம் -ஒன்றுக்கே பல நிலைகள்-வைகாரிக -ஸாத்விக அஹங்காரத்தில் இருந்து பிறந்த இந்த்ரியங்கள் 11- ‘)

2-4-3- ப்ராணாணுத்வாதி₄கரணம்-புலன்கள் அணுவானவை -புலன்களின் அளவு – ஸங்கதி –
புலன்களின் எண்ணிக்கையை முடிவு செய்த பின்பு புலன்களின் அளவு என்ன என்று இவ்வதிகரணத்தில் ஆராய்கிறார் வேத வ்யாஸர்.
பூர்வ பக்ஷம் – புலன்கள் எல்லாம் விபு₄வானவை , அதாவது உலகெங்கம் நீக்கமற நிறைந்திருப்பவை என்பது பூர்வ பக்ஷம்

வேதத்தில் -(தே ஏதே ஸர்வே ஏவ ஸமா: ஸர்வே அநந்தா🙂 அதாவது-அந்த ப்ராணங்கள் (புலன்கள்)
அனைத்துமே ஸமமானவை , அனைத்துமே அநந்தமானவை ” என்று கூறப் படுகிறது. அந்தம் என்றால் முடிவு. அநந்தம் என்றால் முடிவற்றது, எல்லை யற்றது என்று பொருள். ஆக, புலன்கள் எல்லை யற்றவை என்று சொல்லப் படுவதால் அவை ஆகாசம் போல் விபு₄க்களாகத் தான் இருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்.

(மூல ப்ரக்ருதி லீலா விபூதியில் தான் உள்ளது -அதில் இருந்து உண்டான ஆகாயம் நித்ய விபூதியில் இருக்காதே –நம் ஸித்தாந்தத்தில் ஆகாசம் விபு இல்லை -இங்கும் -அதைச் சுத்தி அஹங்காரம் மஹான் மூல பிரகிருதி உண்டே -)

(இதில் இரண்டு ஸூத்ரங்கள் உள்ளன –முதல் ஸூத்ரம் இதை விவரித்து அடுத்த ஸூத்ரம் மூச்சிக்காற்றின் அறிமுகம் -மேல் அதைப் பற்றி ஆராய்ச்சி உள்ளதால்)

ஸித்தாந்தம் – 1- அணவ: ச – “(ப்ராணங்கள் எனப்படும் புலன்கள்) அணுவானவையும் கூட
வேதத்தில் –(ப்ராணம் அநூத்க்ராமந்தம் ஸர்வே ப்ராணா : அநூத்க்ராமந்தி) அதாவது–ஓர் உடலிலிருந்து ஜீவாத்மா புறப்படும் பொழுது அவரைத் தொடர்ந்து ப்ராண வாயு (மூச்சுக் காற்று) புறப்படுகிறது, மூச்சுக் காற்று புறப்படும் பொழுது எல்லாப் புலன்களும் பின் தொடர்ந்து புறப்படுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது. புலன்கள் ஓரிடத்திலிருந்து புறப்பட வேண்டும் அவை விபு₄வாக (எங்கும் நீக்க மற நிறைந்து) இருக்க முடியாது.அளவு பட்டவையாகத் தான் இருக்க வேண்டும்.

(இதே போல் உத் க்ராந்தி என்பதால் ஆத்மாவும் அணுவே என்று முன்னமே பார்த்தோம்)

புலன்கள் உடலிலிருந்து புறப்பட்டுச் செல்லும் பொழுது யார் கண்ணுக்கும் தெரியாதபடியால், அவை அணுக்களாக (மிக நுண்ணியவையாக) தான் இருக்க வேண்டும், குடம் கட்டை போல் நடுத்தர அளவோடு இருக்க முடியாது.-“புலன்கள் அநந்தங்கள் (அளவற்றவை )” என்று வேதம் சொன்னது அளவின் அடிப்படையில் அல்ல. எண்ணிறந்த செயல்களை இந்தப் புலன்கள் செய்கிற படியால், செயலின் அடிப்படையில் எல்லை யற்றவை என்று தான் பொருள்.
ஆகவே , ப்ராணங்கள் (புலன்கள்) எல்லாம் அணுவானவை தான் என்று நாம் முடிவு செய்யலாம்.

இந்த அதிகரணத்தில் புலன்களைப் பற்றிச் செய்ய வேண்டிய ஆராய்ச்சியை முதல் ஸூத்ரத்திலேயே வ்யாஸர் முடித்து விட்டார். இரண்டாவது ஸூத்ரத்தால் ப்ராண வாயு எனப்படும் மூச்சுக் காற்றும் ப்ரஹ்மத்தால் உண்டாக்கப்படுவதே என்று நிரூபிக்கிறார்.

ப்ராண வாயுவும் உண்டாக்கப் படுவதே
இதற்கு எந்த புதிய யுக்திகளையும் அவர் காட்ட வில்லை , முன்னால் புலன்கள் உண்டாக்கப் படுபவை என்று நிரூபிக்க என்ன வாதங்களை முன் வைத்தாரோ , அதே வாதங்களால் தான் மூச்சுக் காற்று உண்டாக்கப்படுவதே என்று நிரூபிக்கிறார். அதனால் தான் இதை ஒரு தனி அதிகரணமாக ஆக்காமல் இவ் வதிகரணத்திலேயே சேர்த்துள்ளார்.
இதை ஏன் இப்போது கூறுகிறார்?அடுத்த அதிகரணத்திலிருந்து மூச்சுக் காற்றைப் பற்றின ஆராய்ச்சியைச் செய்ய இருப்பதால், அதற்கு அறிமுகமாக மூச்சுக் காற்றும் உண்டாக்கப்படுவதே என்று இவ் வதிகரணத்தில் கூறுகிறார்.
2-:ஸ்ரேஷ்ட ச – “
ஸ்ரேஷ்டமானதும் – சிறந்ததும் (உண்டாக்கப் படுவதே )”
உபநிஷத்தில் ப்ராண ஸம்வாதம் (ப்ராணங்களின் உரை யாடல்) என்றொரு கதை . ஒரு முறை புலன்களும் மூச்சுக் காற்றும் தங்களுக்குள் யார் சிறந்தவர் (ஸ்ரேஷ்டமானவர்) என்ற விவாதத்தில் ஈடுபட்டன. ப்ரஹ்மா கூறினார் – “
எது உடலை விட்டுப் புறப்படும் பொழுது மற்றவர்கள் எல்லாம் செயலிழந்து போகிறார்களோ அதுவே சிறந்தது” என்று. கண், காது,மூக்கு முதலானவை புறப்பட்ட போதும் மற்ற புலன்களுக்கோ உடலுக்கோ பாதிப்பு இருக்க வில்லை . ஆனால் மூச்சுக் காற்று புறப்படத் தொடங்கும் பொழுதே புலன்களனைத்தும் வலுவிழந்து போயின. அதனால் ப்ராண வாயு தான் தங்களுக்குள் சிறந்தது (ஸ்ரேஷ்டமானது) என்று முடிவு செய்தார்கள். அதனால் ’ஸ்ரேஷ்டம்’ (சிறந்தது) என்று வ்யாஸர் இங்கு குறிப்பிடுவது ப்ராண வாயுவைத் தான். ப்ராணன் என்ற சொல் புலன்களையும் மூச்சுக் காற்றையும் குறிக்கும் பொதுவான சொல். ஸ்ரேஷ்ட ப்ராணன் (சிறந்த ப்ராணன்) என்ற சொல் மூச்சுக் காற்றுக்கு மட்டும் தனிப்பட்ட பெயர்.

(கீழ் பிராண -புலன்களை சொல்லி இங்கு மூச்சுக்காற்று -என்பதே பொருள் -ஆத்மா -உள்ளே புகுந்து இயக்கம் ஒன்றைக்குறிக்கும் –பரமாத்மா -மிகவும் உயர்ந்த ஸ்ரேஷ்டரான ஆத்மா –
அதே போல் ஸ்ரேஷ்ட பிராணன் என்று மூச்சுக் காற்றைக் காட்டும் -முக்கிய பிராணன்
-பிராண ஸம்வாதம் சாந்தோக்கிய உபநிடதம் மற்றும் பிருகதாரண்யக உபநிடதம் ஆகிய நூல்களில் முக்கியமாக விவரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆற்றல்களுக்கும் (இந்திரியங்கள்) மேலானது உயிர் சக்தி (பிராணன்) என்பதை இது உணர்த்துகிறது.-)

பூர்வபக்ஷம் – வேதத்தில் (ஆநீத் அவாதம் ஸ்வத₄யா ததே₃கம்) என்று ப்ரளயத்திலும்
மூச்சுக் காற்று ஜீவ ராசிகளை ரக்ஷிப்பது சொல்லப் படுவதால் மூச்சுக் காற்று நித்யமானது, உண்டாக்கப்படுவதல்ல.
ஸித்தாந்தம் – ஸ்ருஷ்டிக்கு முன் ஒரே பொருள் (பரமாத்மா) தான் இருந்தது என்று வேதம் சொல்வதாலும்,-(ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண: ) அதாவது-ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராண வாயு உண்டாகிறது” என்று தெளிவாகச் சொல்கிற படியாலும் ப்ராண வாயு உண்டாக்கப் படுவது தான். “ஆநீத் அவாதம்” என்ற வாக்கியம் ’ஸ்வதா₄-என்றழைக்கப் படும் மஹா லக்ஷ்மி யோடு கூட பரமாத்மா உலகை ரக்ஷிக்கிறார் என்று தான் கூறுகிறது.

(ஸ்வதயா லோக பாலிநீ -ஸ்ருதி -ஸ்ரீ யபதியையே குறிக்கும்)

2-4-4-வாயுக்ரியாதி₄கரணம்-ப்ராண வாயு என்பது யாது? ப்ராணன் என்றால் என்ன? – ஸங்கதி – முன் அதிகரணத்தில் ப்ராண வாயுவும் உண்டாக்கத் தான் படுகிறது என்று நிரூபிக்கப்பட்டது. ப்ராண வாயு என்றால் என்ன என்று இவ் வதிகரணத்தில் ஆராய்கிறார்.
பூர்வ பக்ஷம் -1- – ப்ராண வாயு என்பது வாயு அதாவது காற்று மட்டுமே , வேறொன்றும் இல்லை –

வேதத்திலேயே (ய: ப்ராண: ஸ: வாயு:)-அதாவது-“ப்ராணன் என்பது வாயுவே தான்” என்று கூறப்பட்டு்ள்ளது.
பூர்வ பக்ஷம் -2- – வெறும் வாயுவே தான் ப்ராணன் என்றால், உலகத்தில் எங்கு காற்றைப் பற்றிச் சொல்வதற்கும் ப்ராணன் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் அப்படிக் காணப்பட வில்லை . எனவே ப்ராணன் என்பது வெறும் காற்று அல்ல -காற்றினுடைய ஒரு செயல் (க்ரியை ) தான் ப்ராணன் எனப்படுகிறது. உலகத்தில் உச்வாஸம் (மூச்சை இழுப்பது) மற்றும் நிச்வாஸம் (மூச்சை வெளியே விடுவது) என்ற செயல்கள் இருக்கும் போது தான் ப்ராணன் உ்ள்ளது என்று சொல்லப் படுகிறது. எனவே ப்ராண வாயு என்பது காற்றினுடைய ஒரு செயல் தான்.

ஸித்தாந்தம் – 4 ஸூத்ரங்களால் இந்த இரண்டு பூர்வ பக்ஷங்களையும் நிரஸித்து தன் பக்ஷத்தைக் காட்டுகிறார் வ்யாஸர்.
1– ந् வாயு க்ரியே ப்ருத₂க் உபதே ₃ஸாத் –
“வாயுவும் செயலும் அல்ல, தனித்த உபதேஸத்தால்”
வாயு மட்டுமே ப்ராணன் என்று சொல்வது பொருந்தாது, ஏனெனில் -(ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண : மந: ஸர்வேந்த்ரியாணி ச கம் வாயு –தேஜோ அதிகரணத்திலேயே பார்த்தோம்-த்ரவ்யங்களைப் பற்றியே சொல்லும் சுருதி -கிரியை செயல்பாடு சொல்லவே இல்லையே- ) அதாவது-ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராணன், மனது, புலன்கள் ,ஆகாசம், வாயு முதலானவை உண்டாகின்றன” என்று வேதம் சொல்கிறது. இதில், வாயு என்று சொல்வதைத் தவிற ப்ராணன் என்று தனித்து ஒரு முறை கூறப் பட்டு்ள்ளது. வாயுவே தான் ப்ராணன் என்றால் இது தேவை யில்லை –

வாயுவின் செயல் (க்ரியை ) தான் ப்ராணன் என்பதும் பொருந்தாது, ஏனெனில் இந்த வாக்கியத்தில் நிலம் நீர் தீ ஆகாயம் என்ற த்ரவ்யங்கள் (பொருள்கள் ) தான் பட்டியலிடப் பட்டு்ள்ளனவே தவிற, அப்பொருள்களின் செயல்கள் எதுவும் சொல்லப் படவில்லை எனவே , தனித்து சொல்லப் பட்ட ப்ராணனும் ஒரு த்ரவ்யமாகத் தான் இருக்க வேண்டுமே தவிற செயலாக இருக்க முடியாது.
ஆகவே , ப்ராணன் என்பது ஒரு சிறப்பான வாயு -ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட செயலைச் செய்யும் வாயு.

(பஞ்ச பிராணன் –அவஸ்தா விசேஷமே பிராணன் -ஹ்ருதி பிராணன் -புதி அபான– சபான- நாபி உதாந – கழுத்து -விதாந – உடல் முழுவதும்)

ப்ராணன் என்பது ஆறாவது பூதமா?
கேள்வி
– ஆகாசத்திலிருந்து வாயு, வாயுவிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து ஜலம் என்று அடுத்தடுத்த பூதங்கள் உண்டாகின்றன. அதுபோல் ப்ராணன் என்பதும் வாயுவிலிருந்து பிறந்த ஒரு
மாறுபாடு என்றால் அது வேறு பூதமா?

பதில் – 2- ச க்ஷுராதி₃வத் து தத் ஸஹ சிஷ்ட்யாதி₃ப்₄ய:
சக்ஷு ராதி₃வத் து –
சக்ஷுஸ் முதலான புலன்களைப் போல் (ஆத்மாவுக்கு ஒரு கருவி) தான், (வேறு
பூதம் அல்ல )
தத் ஸஹ சிஷ்ட்யாதி₃ப்₄ய: – அவற்றோடு கூட உபதேசிக்கப் படுதல் -முதலான வற்றால்
ப்ராண வாயு என்பது ஒரு தனி ஆறாவது பூதம் அல்ல – கண் காது மூக்கு முதலான புலன்கள் எல்லாம் எப்படி ஜீவாத்மாவுக்குக் கருவிகளாக இருக்கின்றனவோ , அதுபோல் ப்ராண வாயுவும் ஒரு கருவி
மட்டுமே –

(ஆதி –முதலானவற்றால் -புலன்களுக்கும் மூச்சுக் காற்றுக்கும் ஒரே சொல் -பிராணன் -புலன்களைப் போலவே மூச்சுக் காற்று என்றவாறு)

ஏனெனில் –
1–ப்ராண வாயுவைப் பற்றின உபதேசங்களில் அது புலன்களோடு கூடத் தான் பேசப் படுகிறது-உதாஹரணத்துக்கு ப்ராண ஸம்வாதம் என்று புலன்களுக்கும் ப்ராண வாயுவுக்குமான உரையாடலைக் கடந்த அதிகரணத்தில் பார்த்தோம். அவற்றோடு கூட ஒற்றுமை இருப்பதால் தானே அவற்றோடு சேர்ந்து பேசப் பட்டிருக்க வேண்டும்.

2-ப்ராணங்கள் என்ற சொல் புலன்களுக்கும் ப்ராண வாயுவுக்கும் பொதுவாக உள்ளது.
ப்ராண வாயுவை ’ஸ்ரேஷ்ட ப்ராணன்’-அதாவது-’சிறந்த ப்ராணன்’ என்று வேதம் கூறுகிறது.-எனவே , அவற்றோடு ஒற்றுமை இருக்க வேண்டும்.

ப்ராணன் ஒன்றா? ஐந்தா?
கேள்வி
– கண் காது முதலானவை தங்கள் செயல்களின் மூலம் ஜீவாத்மாவுக்கு உதவுகிறபடியால் கருவிகள் ஆகின்றன.-அப்படி எந்த ஒரு உதவியும் ப்ராண வாயுவால் செய்யப் படாத போது அது எப்படி கருவியாக இருக்க முடியும்?

3-அகரணத்வாத் ச ந தோ₃ஷ: ததா₂ ஹி த₃ர்சயதி
அகரணத்வாத் –
“ஆத்மாவுக்கு உதவக் கூடிய செயல் இல்லாத படியால் [கரணம் என்றால் க்ரியை (செயல்)]
தோ₃ஷ: ந ச – கருவியாக இருக்க முடியாது” என்ற தோஷம் இல்லை .
ததா₂ ஹி த₃ர்சயதி – ப்ராணன் ஜீவாத்மாவுக்குச் செய்யக் கூடிய உதவிச் செயலை வேதமே காட்டுகிற படியால்.
(யஸ்மிந் உத்க்ராந்தே இத₃ம் சரீரம் பாபிஷ்ட தரம் இவ த்₃ருச்யதே ஸ: வ: ச்ரேஷ்ட₂:) அதாவது-“எந்த ஒரு ப்ராண வாயு புறப்படும் பொழுது உடலை மிகத் தாழ்ந்ததாக ஆகிறதோ , அது தான் நமக்குள் சிறந்தவன்” என்று புலன்கள் கூறுவதாக வேதம் காட்டுகிறது. எனவே , சரீரம் மற்றும் புலன்களைத் தாங்குதல் என்கிற முக்கியமான உதவியை ஜீவாத்மாவுக்கு ப்ராண வாயு தான் செய்கிறது. எனவே அது கருவியாகத் தட்டில்லை

கேள்வி – ப்ராணம் அபானன் வ்யானன் உதா₃னன் ஸமானன் என்று தனித் தனி பெயர்கள் இருப்பதாலும், அவற்றுக்குத் உடலில் தனித் தனி இடங்களும் செயல்களும் இருக்கிற படியாலும் 5 ப்ராண வாயுக்களும் வெவ்வேறானவையா?

பதில் – 4-பஞ்ச வ்ருத்தி: மநோ வத் வ்யபதி₃ச்யதே
பஞ்ச வ்ருத்தி:
– ஒரே ப்ராண வாயு தான் ஐந்து விதமான செயல்பாடுகளை உடைய படியால்
வ்யபதி₃ச்யதே – ஐந்தாகக் கூறப்படுகிறது
மநோவத் – (காம: ஸங்கல்போ விசிகித்ஸா
ஶ்ரத்₃தா₄ அஶ்ரத்₃தா₄ த்₄ருதி: அத்₄ருதி: ஹ்ரீ: தீ₄: பீ₄: இத்யே தத் ஸர்வம் மந ஏவ- என்கிற வேத வாக்கியத்தின் படி மனதுக்கு ஆசை , எண்ணம், ஆராய்ச்சி, ஈடுபாடு, ஈடுபாடின்மை , தைர்யம், தைர்யமின்மை, வெட்கம், பயம் என்று பல செயல்பாடுகள் இருந்தாலும் மனது ஒன்று தானே . அதே போல் ப்ராண வாயுவும் ஒன்று தான்.

(பிராணன் – மார்புப் பகுதியில் செயல்படும் இது, சுவாசம், இதயத் துடிப்பு மற்றும் ஒட்டு மொத்த உயிர் ஆற்றலையும் நிர்வகிக்கிறது.
அபானன் -தொப்புளுக்குக் கீழே அடி வயிற்றில் இயங்கும் இது, கழிவு நீக்கம் மற்றும் இனப் பெருக்க மண்டலத்தின் செயல்பாடுகளைக் கட்டுப் படுத்துகிறது.
வியானன் – உடல் முழுவதும் பரவி யிருந்து, ரத்த ஓட்டம், நரம்பு மண்டலம் மற்றும் தசைகளின் இயக்கங்களை ஒருங்கிணைக்கிறது.
உதானன் – தொண்டை மற்றும் தலைப் பகுதியில் இயங்குகிறது. பேச்சு, சிந்தனை, மற்றும் நரம்பு மண்டலத்தின் மேல் நோக்கிய இயக்கங்களைச் செயல் படுத்துகிறது.
சமானன் – தொப்புள் மற்றும் வயிற்றுப் பகுதியில் இயங்கும் இது, உணவு செரிமானம் மற்றும் சத்துக்களைப் பிரித்தளிக்கும் பணியைச் செய்கிறது.)

(பஞ்ச பிராண வாயு அல்லது ஐந்து சக்தி ஓட்டங்கள், உடலையும் அதன் உறுப்புகளையும் செயல்பட வைக்கின்றன. அடிப்படையில்,  மனித உடலின் ஒட்டுமொத்த உடலியலுக்கும்  பஞ்ச பிராண வாயுக்களே பொறுப்பாகும்.-நாம் நமது உடல் ஆற்றலை உணவிலிருந்து உருவாக்குகிறோம். அந்த உணவு குளுக்கோஸாக மாற்றப்பட்டு, அது செல்களில் சிதைக்கப்பட்டு ஆற்றலை உற்பத்தி செய்கிறது.  இந்த ஆற்றலை உள்வாங்குவதிலும், விநியோகிப்பதிலும், மற்றும் உடல் இயங்குவதற்குத் தேவையானவற்றை நிர்வகிப்பதிலும் ஐந்து  பிராண வாயுக்கள் ஈடுபட்டுள்ளன. )

ஆக ப்ராணன் என்பது ஒரு சிறப்பான வாயு -ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட செயலைச் செய்யும் வாயு –

2-4-5-ஸ்ரேஷ்டாணுத்வாதி₄கரணம்-ப்ராண வாயு அணுவானது -ப்ராண வாயுவின் அளவு-ஸங்கதி – ப்ராண வாயு என்றால் என்ன என்று முன் அதிகரணத்தில் நிரூபிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து இவ் வதிகரணத்தில் ப்ராண வாயுவின் அளவு ஆராயப்படுகிறது.
ஸித்தாந்தம் – 1-:அணு ச –“
அணுவானதும் கூட”
புலன்கள் அணுவானவை என்று சொல்வதற்கு எந்த எந்த யுக்திகள் சொல்லப்பட்டனவோ , அதே யுக்திகளால் ப்ராண வாயுவும் அணுவானது என்று நிரூபிக்கலாம். அதாவது – “ஜீவாத்மா உடலிலிருந்து புறப்படும் பொழுது ப்ராண வாயு கூடப் புறப்படுகிறது” என்று வேதம் சொல்கிற படியால், ப்ராண வாயு ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குச் செல்கிறது என்று தெரிகிறது. எனவே கண்டிப்பாக ப்ராண வாயு விபுவாக (எங்கும் நீக்கமற நிறைந்த்தாக) இருக்க முடியாது, அளவுபட்டதாகத்தான் இருக்க வேண்டும். அது புறப்படும் பொழுது கண்ணுக்கும் தெரிவதில்லை ,-எனவே அணுவாகத் தான் இருக்க வேண்டும்.

கேள்வி – புது யுக்திகள் இல்லாத போது ஏன் இதற்குத் தனி அதிகரணம்? ப்ராணணுத்வ-அதிகரணத்திலேயே இதையும் சேர்த்துச் சொல்லி யிருக்கலாமே ?
பதில் – இங்கு அதிகப்படியான ஒரு கேள்வி உள்ளது. வேதத்தில் (ஸம: ஏபி₄: த்ரிபி₄:
லோகை : ஸம: அநேந ஸர்வேண )
-அதாவது-“ப்ராண வாயு மூன்று உலகங்களுக்கும் ஸமமானது, அனைத்துப் பொருள்களுக்கும் ஸமமானது” என்றும்,
(ப்ராணே ஸர்வம் ப்ரதிஷ்டி₂தம்) அதாவது “ப்ராண வாயுவில் அனைத்தும் நிலை பெற்றுள்ளது” என்றும்,
(ஸர்வம் ஹி இத₃ம் ப்ராணேண ஆவ்ருதம்) அதாவது-“இந்த உலகனைத்தும் ப்ராண வாயுவால் சூழப் பட்டுள்ளது” என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால், ப்ராண வாயு விபுவானதாக இருக்குமோ ? என்கிற ஸந்தேஹம் ஏற்படுகிறது. அதைத் தீர்ப்பதற்காகத் தான் இவ்வதிகரணம் தனியாக ஊள்ளது.
ஸமாதானம் ப்ராண வாயு புறப்படுவது சொல்லப் படுவதால், அது அணுவானது தான். அனைத்துப் பொருள்களும் தங்கள் தங்கள் ப்ராண வாயுவை அண்டியே வாழ்கிறபடியால் ப்ராண வாயுவில் நிலை பெற்றுள்ளன என்றும் ப்ராணன் அனைத்தையும் சூழ்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இதைக் கொண்டு ப்ராண வாயு விபு என்று கூற முடியாது

2-4-6-ஜ்யோதிராத்₃யதி₄ஷ்டா₂நாதி₄கரணம்-ஜீவாத்மா புலன்களை இயக்குவது
பரமாத்மாவின் ஆணையாலேயே –
புலன்களின் அதிஷ்டாநம் -ஸங்கதி
– கண் காது முதலான 11 புலன்களும் ப்ராண வாயு என்னும் மூச்சுக் காற்றும் ப்ரஹ்மத்தால் படைக்கப் படுகின்றன என்று நிரூபிக்கப்பட்டது. புலன்களைப் பயன்படுத்துவதற்காக ஜீவாத்மா அவற்றை அதி₄ஷ்டா₂நம் செய்கிறார் (தன் ஜ்ஞாநத்தால் ஏற்று இயக்குகிறார்) என்றும் வேதத்தில் கூறப்படுகிறது. அதே போல், அந்தப் புலன்களுக்கு சக்தி யளிப்பதற்காக அக்நி ஸூர்யன் முதலான தேவர்களும் அவற்றை அதி₄ஷ்டா₂நம் செய்கிறார்கள் என்றும் கூறப் பட்டுள்ளது. (2-1-3-2-கீழ் விலக்ஷண அதிகரணத்தில் இந்திரியங்களை தேவர்கள் அதிஷ்டானம் -இயக்குவது -தேவதைகள் என்று பார்த்தோம் )இப்போது, ஜீவாத்மாக்களும் அக்நி முதலான தேவர்களும் இந்த்ரியங்களை அதிஷ்டாநம் செய்வது தாங்களாகவா? அல்லது பரமாத்மாவின் இயக்கத்தாலா? என்று ஆராய்கிறார்.

பூர்வ பக்ஷம் – ஜீவாத்மாக்களும் அக்நி முதலான தேவர்களும் இந்த்ரியங்களை அதிஷ்டாநம் செய்யும் போது யாரையும் எதிர்பார்க்கத் தேவை யில்லை , அவர்கள் தாங்களாகவே இயங்கும் வல்லமை படைத்தவர்கள் என்பது பூர்வ பக்ஷம்

ஸித்தாந்தம் – இவ் வதிகரணத்தில் இரண்டு ஸூத்ரங்களால் வ்யாஸர் தன் பக்ஷத்தைக் கூறுகிறார்.
1–ஜ்யோதிராத் ₃யதி₄ஷ்டா₂நம் து தத் ஆ₃மநநாத் ப்ராண வதா சப்₃தா₃த்
ப்ராண வதா
– ப்ராணன் எனும் மூச்சுக் காற்றை உடையவரான ஜீவாத்மாவோடு கூட(சஹ யோகி த்ரியதாய் -மூன்றாம் வேற்றுமை உருபுடன் கூடி)
ஜ்யோதிராத்₃யதி₄ஷ்டா₂நம் து – ஜ்யோதிஸ் (அக்நி) முதலான தேவர்கள் புலன்களை அதிஷ்டாநம் செய்வது
ததா₃மநநாத் தத் ஆ₃மநநாத்– அந்த பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் (ஆமநநம் – -ஆபி முக்யேனான மனனம்–ஒன்றை நோக்கி சிந்தித்தல் – ஸங்கல்பம்)
சப்₃தா₃த் – அவர்கள் தங்கள் செயல்பாடுகளில் பரமாத்மாவால் இயக்கப்படுகிறார்கள் என்று வேதம் கூறுகிறபடியால்

அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில் கண் காது முதலான புலன்களுக்கும், ஜீவாத்மாக்களுக்கும், அக்நி வாயு ஸூர்யன் முதலான தேவர்களுக்கும் அந்தர்யாமியாக இருந்து இயக்குபவர் பரமாத்மா தான் என்று கூறப்பட்டுள்ளது.
தைத்திரீய உபநிஷத்தில் (பீ₄ஷா அஸ்மாத் வாத: பவதே பீ₄ஷா உதே₃தி ஸூர்ய:…)
அதாவது-“அந்த பரமாத்மாவுக்கு பயந்து தான் காற்று வீசுகிறது, ஸூர்யன் உதிக்கிறது” என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆகவே , ஜீவாத்மாக்களும் தேவர்களும் புலன்களை அதிஷ்டாநம் செய்வதும் பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான்.

இருப்பே பரமாத்மாவால் தான்-கேள்வி – தேவர்களும், நம்மைப் போன்ற ஸாதாரண ஜீவாத்மாக்களும் செய்யும் செயல்பாடுகள் எல்லாம் பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் இருக்கட்டும், ஆனால் அந்த தேவர்களும் ஜீவாத்மாக்களும் இருப்பது (அவர்களின் ஸத்தை – இருப்பு) பரமாத்மாவால் அல்ல, சுயமானதே .
பதில் – (2- தஸ்ய ச நித்யத்வாத் –
“அந்த அதி₄ஷ்டா₂நம் நித்யமானதால்”
பரமாத்மா தேவர்களையும் ஜீவாத்மாக்களையும் செய்யும் அதிஷ்டாநம் (உள்ளே புகுந்து இயக்குதல்)
அவர்களுடைய செயல்பாட்டுக்காக மட்டுமல்ல, செயல்படும் காலத்தில் மட்டும் அல்ல. என்றுமே இயற்கையாகவே அதிஷ்டானம் செய்து தான் இருக்கிறார். எனவே அந்த தேவர்கள் மற்றும்
ஜீவாத்மாக்களின் ஸத்தை அதாவது இருப்பு (existence) கூட, பரமாத்மாவால் தான்.
பொருள்களின் இருப்பே அவரால் என்றால், செயல்பாடுகளும் அவரால் தான் என்று சொல்லத் தேவையே இல்லை . தானாகவே தேறுகிறது.

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

தைத்திரீய உபநிஷத்தில் -(ததே₃வாநுப்ராவிசத் தத₃நுப்ரவிச்ய ஸத் ச த்யத் ச அப₄வத்) அதாவது-“அந்த பரமாத்மா உலகப் பொருள்களைப் படைத்துவிட்டு, அவற்றுக்குள் புகுந்தார், அவர் புகுந்ததால் தான் சேதனர்களான ஜீவாத்மாக்களும் அசேதனப் பொருள்களும் உள்ளவை ஆயின” என்று தெளிவாக கூறப்படுகிறது.
ஆக, அனைத்துப் பொருள்களின் இருப்பும் செயல் பாடுகளும் பரமாத்மாவால் தான் என்று நிரூபிக்கப் பட்ட படியால், தேவர்களும் ஜீவாத்மாக்களும் புலன்களை அதிஷ்டானம் செய்வதும்
பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான் என்று தெளிவாகிறது.

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

2-4-7-இந்த்₃ரியாதி₄கரணம்-இந்திரியங்கள் எவை?–புலன்கள் 11 மட்டுமே –ஸங்கதி – இது வரை இந்தப் பாதத்தில் ப்ராணன்கள் எனப்படும் 12 தத்துவங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யப் பட்டது. அவையாவன – சக்ஷுஸ் (கண்ணிலிருப்பது), ஸ்ரோ த்ரம் (காதிலிருப்பது), க்₄ராண ம் (மூக்கில்), ரஸநம் (நாக்கில்), த்வக் (தோல்), வாக் (நாக்கில்), பாணி (கைகள்), பாதம் (கால்கள்), பாயு (மலம் கழிக்க), உபஸ்தம் (ஜலம் கழிக்க), மநஸ் (மனது), ஸ்ரேஷ்டப்ராணன் -ப்ராண வாயு (மூச்சுக் காற்று). இப்போது, இந்த 12 தத்துவங்களில் எவை இந்த்ரியங்கள் (புலன்கள்) என்று இந்த அதிகரணத்தில் ஆராயப்படுகிறது.

பூர்வ பக்ஷம் – இவை பன்னிரண்டுமே இந்த்ரியங்கள் தான். ப்ராணன்கள் என்கிற பெயர் இவை அனைத்துக்கும் பொதுவாக இருக்கிறது, அவற்றில் வேறுபாடுகளும் ஒன்றும் தெரியவில்லை . எனவே அனைத்துமே புலன்கள் தான். மேலும், இவை அனைத்துமே ஜீவாத்மாவுக்கு ஏதோ ஒரு விதத்தில் கருவிகளாகத் தான் இயங்குகின்றன. எனவே அனைத்துமே இந்த்ரியங்கள் தான்.

ஸித்தாந்தம் – 1–தே இந்த்₃ரியாணி தத்₃வ்யபதே ₃சாத் அந்யத்ர ஸ்ரேஷ்டா₂த்
தே இந்த்₃ரியாணி
– அவை – 11 தான் இந்த்ரியங்கள்
அந்யத்ர ஸ்ரேஷ்டா₂த் – ஸ்ரேஷ்ட₂ ப்ராணன் என்றழைக்கப்படும் மூச்சுக் காற்றைத் தவிற மற்றவற்றில்
தத்₃வ்யபதே ₃சாத் – இந்த்ரியம் என்ற பெயர் பயன்படுத்தப்படுவதால்
இந்த ஸூத்ரத்தில் ’-அவை ’ என்று பொதுவாகச் சொல்லப் பட்டிருந்தாலும், அச் சொல் முன் பேசப்பட்ட 12 தத்துவங்களையும் குறிக்க வில்லை . ’-அவை ’ என்று பன்மை ப்ரயோகம் உள்ள படியால், இதற்கு முன் பன்மையில் பேசப்பட்டதைத் தான் நினைவு கூற வேண்டும். இதற்கு முன் ப்ராணணுத்வாதிகரணத்தில் ’ அணவ: ச ’ என்ற-ஸூத்ரத்தில் தான் கண் முதலான 11 தத்துவங்களும் அணுவானவை என்று சொல்லும் போது பன்மை ப்ரயோகம் உள்ளது. மூச்சுக் காற்றை ஒருமை யில் தான் அழைத்துள்ளார். எனவே இங்கு ’ அவை ’ என்ற சொல் மூச்சுக் காற்றைத் தவிர்ந்த மற்ற ப்ராணன்களைத் தான் குறிக்கிறது.

(இந்த்₃ரியாணி த₃ச ஏகம் ச ) அதாவது “இந்த்ரியங்கள் பத்தும் ஒன்றும்” என்று தெளிவாக உபநிஷத்துக்களில் கூறப்படுகிறது. எனவே , ப்ராண வாயுவைத் தவிர்ந்த மற்ற 11 ப்ராணன்களும் தான் இந்த்ரியங்கள்

புலன்களை ஏன் ப்ராணன் என்றழைக்கிறோம்?
பூர்வபக்ஷி 12 ப்ராணன்களுக்கும் எதுவும் வேறுபாடுகளே இல்லை என்று கூறியிருந்தார். அதை அடுத்த ஸூத்ரத்தால் தகர்க்கிறர் –
2–பே₄த₃ஸ்ருதே : வைலக்ஷண்யாத் ச –
“தனித்துக் கூறும் வேதத்தாலும் வேறுபாட்டாலும்”

பே₄த₃ஸ்ருதி: (தனித்துக் கூறும் வேத வாக்கியம்) –
(ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண :, மந:, ஸர்வேந்த்ரியாணி ச )
அதாவது
“ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராண வாயு உண்டாகிறது, மனது உண்டாகிறது, எல்லாப் புலன்களும் உண்டாகின்றன” என்று வேதம் கூறுகிறது. இங்கு இந்த்ரியங்களைக் காட்டிலும் ப்ராண வாயு தனித்துச் சொல்லப் பட்டுள்ளதால், அது இந்த்ரியங்களுக்குள் ஒன்று அல்ல என்று தெரிகிறது. மனதும் இவ்விடத்தில் தனித்துச் சொல்லப் பட்டிருந்தாலும், மற்ற பல ப்ரமாணங்களில் மனதும் புலன் தான் என்று கூறப்பட்டுள்ளது.
எடுத்துக் காட்டுக்கு பகவத்கீதையில் கண்ணன் (மந:ஷ்ஷ்டாநி இந்த்₃ரியாணி) அதாவது (மனது உள்பட ஆறு இந்த்ரியங்களையும்) என்று ஓரிடத்தில் கூறுகிறார். எனவே மனது ஓர் இந்த்ரியம் தான் என்று ஏற்கப் படுகிறது.-ஆனால் ப்ராண வாயு புலன் அல்ல

வைலக்ஷண்யம் (வேறுபாடு) – ப்ராண வாயுவுக்கும் கண் முதலானவற்றுக்கும் பல விதமான வேறுபாடுகள் உள்ளன –
1-நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது நம் புலன்கள் இயங்குவதில்லை . ஆனால் ப்ராண வாயு இயங்குகிறது
2-கண் முதலானவை ஜீவாத்மாவுக்குச் செய்யும் உதவி – மற்ற பொருள்களையும் அறியவும் பயன்படுத்தவும் உதவுதல்.
ப்ராண வாயு செய்யும் உதவி – சரீரம் புலன்கள் முதலானவற்றைத் தாங்குதல்.
(தே ஏதஸ்யைவ ஸர்வே ரூபம் அப₄வன், தஸ்மாத் ஏதே ஏதேந ஆக்₂யாயதே )
அதாவது–பிராண அதீன தாரணத்வாத்--“புலன்கள் ப்ராண வாயுவை நம்பியே இயங்குவதால் ப்ராணன் என்றே அழைக்கப் படுகின்றன” என்று வேதம் கூறுகிறது. ஆகவே , இந்த 12 தத்துவங்களுமே ப்ராணன் என்று அழைக்கப் பட்டாலும் அவற்றில் ப்ராண வாயுவைத் தவிற மற்ற 11 மட்டும் தான் இந்த்ரியங்கள் (புலன்கள்) என்று நிரூபிக்கப் படுகிறது.

2-4-8-ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லிப்த் யதி₄கரணம் –வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்வது யார்?–ஸங்கதி– இந்த அத்யாயத்தின் தொடக்கத்திலிருந்து இது வரை ஸமஷ்டி ஸ்ருஷ்டி ப்ரஹ்மத்தால் தான் செய்யப் படுகிறது என்று நிரூபிக்கப்பட்டது. இந்தக் கடைசி அதிகரணத்தில் வ்யஷ்டி ஸ்ருஷ்டியும் ப்ரஹ்மத்தால் தான் செய்யப் பட்டுகிறது என்று நிரூபிக்கிறார் வேத வ்யாஸர்.(ஸம்ஜ்ஞா= பெயர்; மூர்தி= உருவம்; க்லிப்தி= ஸ்ருஷ்டித்தல்)
ப்ரஹ்மம் உலகை ஸ்ருஷ்டிப்பதில் இரண்டு பகுதிகள் உள்ளன –
1-ஸமஷ்டி ஸ்ருஷ்டி
2-வ்யஷ்டி ஸ்ருஷ்டி

(ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லாஅன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே”– பஹுஸ்யாம் ப்ரஜாயேய–ஊழி முதல்வன்-ஸமஷ்டி ஸ்ருஷ்டி-
தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த தேவனே –நாராயணன் நான்முகனைப் படைத்தான் –வ்யஷ்டி ஸ்ருஷ்டி
)

(ஸமஷ்டி ஜீவன் ஹிரண்ய கர்ப்பன் -நான்முகனுக்கு பெயர்கள்)

ஸமஷ்டி ஸ்ருஷ்டி
பிரளயத்தில் உலகங்களனைத்தும் அழிந்து, மூலப் பொருளான ப்ரதானம் என்பதோடு ஒன்றாகிறது.– இப் பூதங்களோ , அவற்றிலிருந்து உண்டான பொருள்களோ எதுவும் கிடையாது. ஜீவாத்மாக்கள் அனைவரும் உடலில்லாமல் ப்ரக்ருதியோடு சேர்ந்து இருப்பார்கள். இவை அனைத்துக்கும் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மா, ஸ்ருஷ்டிக்கான காலம் வந்தவுடன்,தனக்கு உடலான மூல ப்ரக்ருதி என்கிற அசேதனப் பொருளிலிருந்து வரிசையாக மஹாந், அஹம்காரம், 11 புலன்கள், 5 தன் மாத்ரங்கள், 5 பூதங்கள்(நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்) ஆகியவற்றை உண்டாக்கி, அதற்குப் பின் ஐம் பூதங்களைக் கொண்டு14 உலகங்களைக் கொண்ட எண்ணிலடங்காத அண்டங்களைப் படைக்கிறார். அதற்குப் பின், அந்த அண்டத்துக்குள் அடியிலிருக்கும் தண்ணீரில் ஆதிசேஷன் படுக்கையில் சயனித்து, தன் உந்தித் தாமரை யிலிருந்து ப்ரஹ்மா என்னும் நான்முகனைப் படைக்கிறார். இதுவரை நடக்கும் ஸ்ருஷ்டிக்கு ஸமஷ்டி ஸ்ருஷ்டி (பொதுவான ஸ்ருஷ்டி) என்று பெயர், ஏனென்றால் இதுவரை நடப்பது ஜீவாத்மாக்களின் தனிப்பட்ட புண்ய-பாபங்களுக்குப் பொருத்து அல்ல. இதை ப்ரஹ்மமே நேரடியாகச் தெய்கிறார்

வ்யஷ்டி ஸ்ருஷ்டி–
வ்யஷ்டி என்றால் தனித் தனியான என்று பொருள். நான்முகன்உண்டாக்கப் பட்ட பிறகு நடக்கும் ஸ்ருஷ்டிக்கு வ்யஷ்டி ஸ்ருஷ்டி என்று பெயர், ஏனென்றால் அந்தந்த ஜீவாத்மாவின் பாப-புண்யங்களின் கணக்கைப் பார்த்து அதற்குத் தகுந்த படி ஓர் உடலை ஸ்ருஷ்டித்து, அதற்குள் அந்த ஜீவாத்மாவைப் புகுத்தி பிறப்பை ஏற்படுத்துவது தான் இந்த ஸ்ருஷ்டி. இதைத் தான் நான்முகன் செய்கிறார்–

கேள்வி –வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்வது நான்முகனேவா? அல்லது அவருக்கு அந்தர்யாமியான பரமாத்மாவா? –

பூர்வ பக்ஷமும் ஸித்தாந்தமும்–
பூர்வ பக்ஷம்
–நான்முகன் தானாகவே தான் செய்கிறார். வேதத்தில் ஸ்ருஷ்டியை வருணிக்கும் போது, பரமாத்மா ஸமஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்யும் முறையைக் கூறி விட்டு, அதற்குப் பின் வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் சொலும் போது
(அநேந ஜீவேந ஆத்மநா அநு ப்ரவிச்ய நாம ரூபே வ்யாகரவாணி)-அதாவது “நான் இந்த ஜீவன் மூலமாக உள்ளே புகுந்து இந்த அசேதனப் பொருள்களின் பெயர்களையும் உருவங்களையும் பிரிக்கப் போகிறேன்” என்று பரமாத்மா ஸங்கல்பம் எடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் நாம-ரூப வ்யாகரணம்–அதாவது–பெயர் மற்றும் உருவங்களைப் பிரிப்பது என்பது தான் வ்யஷ்டி ஸ்ருஷ்டி ஆகும். அதைப் பரமாத்மா தானாகச் செய்யாமல், ஜீவாத்மா மூலம் தான் செய்கிறார் என்று இந்த வாக்கியம் கூறுகிறபடியால், வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்வது ஒரு ஜீவாத்மாவான நான்முகனாகத் தான் இருக்க வேண்டும்.
மேலும், ஸ்ம்ருதிகளிலும் நான்முகன் செய்யும் ஸ்ருஷ்டியை வருணிக்கும் போது தான் நாம-ரூப-வ்யாகரணம்–அதாவது பெயர்-உருவ பிரிவினை என்பது சொல்லப்படுகிறது. அதனால் அவரே செய்கிறார்.(நாம ரூப பூதானாம் க்ருத்யானாம் பிரபஞ்சனம்)

ஸித்தாந்தம்-1– ஸம்ஜ்ஞா மூர்தி க்லிப்தி: து த்ரிவித் குர்வத: உபதே ₃சாத் ஸம்ஜ்ஞா மூர்தி க்லிப்தி: து–பெயர்-உருவ-ஸ்ருஷ்டி(ஸம்ஜ்ஞா= பெயர்; மூர்தி= உருவம்; க்லிப்தி= ஸ்ருஷ்டித்தல்)
த்ரிவித் குர்வத: -த்ரிவித் கரணம் என்ற செயலைச் செய்பவரான பரமாத்மாவினுடையதே
உபதே ₃சாத்–த்ரிவித்கரணம் செய்பவர் தான் பெயர்-உருவ-பிரிவினையைச் செய்கிறார் என்கிற உபதேசத்தால்

பூர்வபக்ஷி காட்டின வாக்கியத்தில் பிற்பகுதி உள்ளது–(அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிச்ய நாம ரூபே வ்யாகர வாணி,தாஸாம் த்ரிவ்ரிதம் த்ரிவ்ரிதம் ஏகைகாம் கரவாணி)-அதாவது“இந்த ஜீவனாகிற நான் உள்ளே புகுந்து இந்த அசேதனப் பொருள்களுக்குப் பெயர்-உருவ-பிரிவைச் செய்யப் போகிறேன், அதற்காக அவை ஒவ்வொன்றையும் மும் மூன்றாக ஆக்கப் போகிறேன்” என்று பரமாத்மா ஸங்கல்பம் எடுத்துக் கொள்கிறார். முற் பாதியில் சொல்லப்பட்ட வ்யஷ்டி ஸ்ருஷ்டி யையும் பிற் பாதியில் சொல்லப்பட்ட த்ரிவித் கரணம்(ஒவ்வொன்றையும் மும் மூன்றாக ஆக்குதல்) என்னும் செயலையும் ஒருவரே செய்கிறார் என்று இதிலிருந்து தெரிகிற படியால் அதைச் செய்பவர் பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

த்ரிவித்கரணம் அல்லது பஞ்சீகரணம் –உபநிஷத்தில் த்ரிவித் கரணம் என்று ஒரு செயல் குறிப்பிடப் பட்டுள்ளது. அக்நி, ஜலம், நிலம் என்ற மூன்று பூதங்களைப் படைத்த பிறகு த்ரிவித் கரணம் அதாவது -ஒவ்வொன்றையும் மூன்றாக ஆக்கும் செயல் நடக்கிறது. உண்மையில் ஐந்து பூதங்களைப் படைத்து, பஞ்சீகரணம் அதாவது ஒவ்வொன்றையும் ஐந்தாக ஆக்கும் செயல் செய்யப் படுகிறது என்று புராணங்களிலிருந்து நாம் அறியலாம். சாந்தோக்ய உபநிஷத்தில் அதன் ஒரு பகுதியாக த்ரிவித் கரணம் கூறப்பட்டுள்ளது — முதலில் பூதங்கள் படைக்கப்படும் பொழுது, தூய்மையான ஆகாசம், காற்று,நெருப்பு, ஜலம் மற்றும் நிலம் என்று இருக்கும். ஆனால் இப்படித் தனித் தனியான பூதங்களைக் கொண்டு அண்டங்களை ஸ்ருஷ்டி செய்ய இயலாது என்பதால் இவற்றை ஒன்றோடு ஒன்றாகக் கலக்க வேண்டும். ஒவ்வொரு பூதத்தின்12.5% எடுத்து மற்ற நான்கு பூதங்களோடு கலக்குவது தான் பஞ்சீகரணம். இதன் இறுதியில் ஆகாசம் என்ற பூதத்தில் 50% ஆகாசமும், தலா 12.5% காற்று, நெருப்பு, ஜலம் மற்றும் நிலம் இருக்கும். இதே போல் மற்ற பூதங்களிலும். இவற்றைக் கொண்டு தான் அண்டங்கள் படைக்கப் படுகின்றன

நான்முகன் படைக்கப் படுவது அண்டம் உண்டான பிறகு அதற்குள் சயனித்திருக்கும் நாராயணனின் உந்தித் தாமரையில் தான். எனவே அண்டம் உண்டாவதற்கு முன் நடக்க வேண்டிய பஞ்சீகரணத்தை அவர் செய்திருக்க முடியாது, அவரே அப்போது உண்டாகாதபடியால். அதனால் பரமாத்மா தான் பஞ்சீகரணத்தைச் செய்திருக்க வேண்டும். பஞ்சீகரணம் செய்பவர் தான் வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்கிறார் என்கிறது உபநிஷத். எனவே பரமாத்மா தான் வ்யஷ்டி ஸ்ருஷ்டியையும் செய்பவராக இருக்க வேண்டும்.

அநேந ஜீவேந ஆத்மநா’ என்ற இடத்தில் ஜீவன் மூலமாக என்று பொருள் அல்ல, ஜீவனை உடலாகக் கொண்ட நானாகிய பரமாத்மா உள்ளே புகுந்து பெயர்-உருவ-பாகுபாட்டைச் செய்யப் போகிறேன் என்று தான் பொருள்.

(தத் தேஜஸ் ஐஷத–தேஜஸ்ஸை உடலாகக்கொண்ட ப்ரஹ்மமே ஸங்கல்பித்தது போல் இங்கும் ஜீவனை சரீரமாகக் கொண்ட– —சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன் புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே-1-1-8–)

வேறொரு த்ரிவித்கரணம் உள்ளதா? கேள்வி-இங்கு த்ரிவித்கரணம் என்பது நீங்கள் சொல்லும்படி அண்டம் உண்டாவதற்கு முன் நடக்கும் செயல் அல்ல. சாந்தோக்ய உபநிஷத்தில் இதே ப்ரகரணத்தில் வேறொரு த்ரிவித்கரணம் (ஒவ்வொன்றும் மும்மூன்றாக ஆவது) சொல்லப்பட்டுள்ளது. அதாவது

இமா: திஸ்ரோ தே ₃வதா: புருஷம் ப்ராப்ய த்ரிவ்ரித் த்ரிவ்ரித் ஏகைகா ப₄வந்தி —
அக்நி, ஜலம், நிலம் ஆகிய மூன்றும் மனிதனால் உண்ணப் பட்டதும் மும் மூன்றாகஆகின்றன
பூதம் –நிலம் நீர் தீ
கெட்டிப் பகுதி –மலம் மூத்திரம் அஸ்தி-எலும்பு
நடுத்தரப் பகுதி –மாம்சம் ரத்தம் மஜ்ஜை
நுண்ணிய பகுதி –மனது -பிராணன் -வாக்

(நிலம் -மலம் -மாம்சம் -மனது
நீர் -மூத்திரம் -ரத்தம் -பிராணன்
தீ-அஸ்தி-எலும்பு-மஜ்ஜை-வாக்)

இவ்வாறு ஒவ்வொரு பூதமும் மும்மூன்று பூதங்களாக மாறுவது தான் த்ரிவ்ரித்கரணம் எனப்படுகிறது. இதெல்லாம் நான்முகனால் தான் நம் உடலில் நடப்படுகிறது. எனவே வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்பவரும் அவர் தான்.

ஸித்தாந்தியின் பதில்
2–மாம்ஸாதி பௌமம் யதா சப்தம் இதரயோ ச
மாம்ஸாதி₃
ப்ருதி₂வியிலிருந்து உண்டாகும் மாம்ஸம், மனது ஆகியவையும்
ச பௌ₄மம்–ப்ருதி₂வி தான், மற்ற பூதங்கள் அல்ல.
இதரயோ : ச – நீர் -நெருப்பிலிருந்தும் உண்டாகும் மூத்ரம் ப்ராணன் எலும்பு மஜ்ஜை ஆகியவையும்
யதா₂சப்₃த₃ம்– அந்தந்த தொற்களின் படி நீரும் நெருப்பும் தான், மற்ற பூதங்கள் அல்ல.

அது த்ரிவ்ரித் கரணமே அல்ல
ஒரு பூதம் மூன்றாக ஆகும் த்ரிவ்ரித் கரணம் இது தான் என்றால், உண்ணப் பட்ட நிலம்,மலம், மாம்ஸம், மனது என்று மூன்றாக மாறும் பொழுது, அதில் ஒன்று நிலம், ஒன்று நீர், ஒன்று நெருப்பு என்று கூற வேண்டும். பொதுவாக கெட்டியாக இருப்பது நிலம், நடுத் தரமானது நீர், மிக நுண்ணியது நெருப்பு. எனவே , கீழுள்ள அட்டவணையின்படி தான் ஒவ்வொரு பூதமும் மும் மூன்றாக ஆகிறது, இது தான் த்ரிவ்ரித்கரணம் என்கிறார் பூர்வபக்ஷீ. ஆனால், இப்படிக் கூறுவது தவறானது–நிலத்திலிருந்து வரும் மலம், மாம்ஸம், மனது என்ற மூன்றுமே நிலம் தான். அதே போல், நீரிலிருந்து வரும் மூத்ரம், ரத்தம், ப்ராணன் மூன்றுமே நீர் தான். அதே போல் எலும்பு, மஜ்ணஜ, வாக் மூன்றுமே நெருப்பு தான் என்கிறார் வேத வ்யாஸர்

பூதம் –நிலம் நீர் தீ
கெட்டிப் பகுதி –மலம் -நிலம் –மூத்திரம் -நிலம் -எலும்பு -நிலம்
நடுத்தரப் பகுதி –மாம்சம் -நீர் –ரத்தம் -நீர் -மஜ்ஜை -நீர்
நுண்ணிய பகுதி –மனது -நெருப்பு –பிராணன் -நெருப்பு –வாக் -நெருப்பு –

இதற்குக் காரணம்–இதே பகுதியில்(அந்ந மயம் ஹி ஸோம்ய மந:, ஆபோ மய: ப்ராண தேஜோ மயீ வாக்) அதாவது மனது நிலத்தாலானது, ப்ராணன் நீராலானது, வாக் நெருப்பாலானது –என்று வேதம் கூறுகிறது. இது பூர்வ பக்ஷியின் வாதத்தோடு முரண்படுகிறது, ஏனென்றால் அவர் கூறிய படி மனது நெருப்பாலானது, நிலமல்ல;ப்ராணன் நெருப்பாலானது, நீரல்ல; ஆகவே பூர்வ பக்ஷீ கூறியது தவறானது.
ஆக, இங்கு ஒவ்வொரு பூதமும் மூன்று மூன்று பூதங்களாக மாறுவது சொல்லப்பட வில்லை , அதே விதமான மூன்று பொருள்களாக மாறுவது தான் சொல்லப் படுகிறது. எனவே இது த்ரிவ்ரித்கரணமே அல்ல. அண்டம் உண்டவதற்கு முன் நடப்பது தான் த்ரிவ்ரித்கரணம்; அதைச் செய்பவர் பரமாத்மா; எனவே வ்யஷ்டி ஸ்ருஷ்டியைச் செய்பவரும் பரமாத்மாவே

கேள்வி– நிலம் நீர் தீ ஆகியவை யெல்லாம் ஒவ்வொன்றும் மும் மூன்று பூதங்களாகக் கலந்து தான் உள்ளன என்றால், அவற்றை ஏன் நிலம் நீர் தீ என்றும்குறிக்கிறோம்? மாற்றி, எந்தச் சொல்லைக் கொண்டும் குறிக்கலாமே
பதில்– 3-வைசேஷ்யாத் து தத்₃வாத₃: தத்₃வாத₃: – “சிறப்பாக (அதிகமாக) இருப்பதால் –அப்படிக் குறிக்கப் படுகிறது”. எந்த பூதத்தின் பகுதி எதில்அதிகமாக(50%) உள்ளதோ ,அச் சொல்லால் அதைக் குறிப்பிடுகிறோம்
ஸூத்ரத்தில்’தத்₃வாத₃:’ என்ற சொல்லின் இரட்டிப்பு, இதோடு இந்த அத்யாயம் முடிகிறது என்பதைக் காட்டவே —

(இங்கு ஸ்வாமி தேசிகன்
அநேந ஜீவேந ஆத்மனா அனு ப்ரவேஸ்ய-என்ற ஸ்ருதியும்
அந்தராத்மா வேறு என்றும்
மற்றவன் சரீரம் என்றும் பேதத்தைக் ஊறி இருப்பதால் ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யத்தைக் கூறவில்லை-ஆகையால் எம்பெருமான் சேதன அசேதன சரீர விசிஷ்ட ஸ்வ பாவனாய் அனு ப்ரவேசத்திலும் கர்த்தா ஆகிறான்-அனு ப்ரவேசத்தில் கர்த்தா பின்னர் ஆவதால் த்வா ப்ரத்யயம் ஜீவனுக்கு கர்த்ருத்வத்தைக் காட்டாது என்று அருளினார்
ஒருவன் அனு பிரவேசம் செய்வதாயும் மற்றவன் வியாகரணம் செய்வதாயும் கர்த்தா வேறான -சமான கர்த்ருகத்வம் இல்லாமையாலே த்வா ப்ரத்யயம் வாராது என்பதாகும்
–)

இப்பாதத்தில் எட்டு அதிகரணங்களால் கூறப்பட்ட கருத்துக்கள்

1-பிராண அதிகரணத்தில் இந்திரியங்களின் உத்பத்தியும்
2-ஸப்த கத் யதிகரணத்தில் அவற்றுக்கு பதினோரு எண்ணிக்கையும்
3-பிராணஅணவ-அதிகரணத்தில் -அவற்றின் பரிமாணமும்
4-வாயு க்ரியா அதிகரணத்தில் பிராண வாயு ஸ்வரூபமும்
5-அணுச்ச அதிகரணத்தில் -பிராணனின் ஸூஷ்மத்வமும்
6-ஜ்யோதிராத் அதிகரணம் –அக்னி தேவதைகளின் வாக் யாதி அதிஷ்டானத்தில் பகவத் பாரதந்தர்யத்வமும்
7-த இந்த்ரிய அதிகரணம் -ப்ராணனுக்கு அதீந்த்ரத்வமும்
8-ஸம்ஞா மூர்த்தி க்லுப்த் யதி கரணம் -தன் நாபியில் தோன்றிய சதுர்முக சரீரகனாய் ஆத்யனாய்
பஞ்சீ கரண கர்த்தாவான பரம புருஷனிடம் சித் அசித் என்னும் வ்யஷ்டி நாம ரூப உத்பத்தியும்
என்பவை எட்டு அதிகரணங்களால் விளக்கப்பட்டன –

ஸித்த த்விகம் பார்த்துள்ளோம் -ஸாத்ய த்விகம் பார்க்கப் போகிறோம் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-இரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் –மூன்றாம் பாதம் – வியத் பாதம்-ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

April 16, 2026

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

அவிரோத அத்யாயம் -பர ப்ரஹ்மமே நிகில ஜகத் ஏக காரணம் -இந்தப் பொருளோடு எந்த முரண்பாடும் இல்லை என்றும் இதில் நிரூபணம் -எந்த விதத்தாலும் அசைக்க முடியாதது-ஸர்வ பிரகார துர் தர்ஷணம் –

2-3-1-வியத₃தி₄கரணம்-ப்ரஹ்மம் தவிர அனைத்தும் படைக்கப் படுவதே

பாதத்தின் ஸங்கதி
முதல் அத்யாயத்தில் “-அகில ஜகத் ஏக காரணம்-உலகம் அனைத்துக்கும் ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்கிற முடிவு எட்டப்பட்டது. இரண்டாவது அத்யாயத்தில் அந்த முடிவை எதிர்த்து எழக் கூடிய ஆஷேபங்களுக்கெல்லாம் வேத வ்யாசர் பதில் கூறுகிறார்.-உலகம் அனைத்துக்கும் ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்பதில் இரண்டு பகுதிகள் உள்ளன. “ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்பது ஒரு பகுதி, “உலகம் அனைத்துக்கும் காரணம்” என்பது இரண்டாவது பகுதி.-அதில் முதல் பகுதியைத் தாக்குவதற்காக ப்ரஹ்மம் காரணமாக இருக்க முடியாது என்று பலரும் செய்த ஆஷேபங்கள் அனைத்துக்கும் இரண்டாவது அத்யாயத்தின் முதல் பாதத்தில் வேத வியாசர் பதிலுரைத்தார். அதற்கு மேல் இரண்டாவது பாதத்தில் மற்ற மதங்களில் உலகத்துக்கு காரணமாக மற்ற பொருள்கள் சொல்லப் படுகின்றனவே , அவை எதுவும் ஜகத் காரணமாக இருக்க முடியாது. அந்த மதங்கள் அனைத்துமே தவறானவை என்பதை வேத வியாசர் நிரூபித்தார். ஆக இரண்டு பாதங்களால் “ப்ரஹ்மம் ஒரே காரணம்” என்பது நிலை நாட்டப்பட்டது.
இனி அடுத்த இரண்டு பாதங்களில் நாம் எடுத்த முடிவின் இரண்டாவது பகுதியான “உலக அனைத்துக்கும் காரணம்” என்கிற பகுதியைத் தாக்குவதற்காக பல விதமான ஆஷேபங்களை மற்றவர்கள் எழுப்புகிறார்கள். ப்ரஹ்மம் ஒரு சில பொருட்களுக்குக் காரணமாக இருக்கட்டும், உலகில் அனைத்தும் ப்ரஹ்மத்தால் படைக்கப்பட்டதல்ல, என்ற கேள்விகளை எழுப்புகிறார்கள். அதற்கு பதில் சொல்லி “உலகம் அனைத்துக்கும் ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்கிற முடிவை மறுபடியும் நிலை நாட்டுகிறார் வேத வியாசர் அடுத்த இரண்டு பாதங்களால்.

இந்த அத்யாயத்தின் முதல் பாதத்துக்கு ஸ்ம்ருதி பாதம் என்று பெயர்,ஸ்ம்ருதிகளைக் கொண்டு பூர்வ பக்ஷிகள் ஆஷேபங்களை எழுப்பிய படியால். இரண்டாவது பதத்துக்கு தர்க்க பாதம் என்று பேயர், தர்க்கத்தின் அடிப்படையில், அதாவது யுக்திகளைக் கொண்டு மற்ற மதங்கள் எல்லாம் தவறானவை என்று வியாசர் நிரூபித்த படியால். இந்த மூன்றாவது பதத்துக்கு வியத் பாதம் என்று பெயர். வியத் என்றால் ஆகாசம். ஆகாசம் முதலான பொருள்களும் கூட ப்ரஹ்மத்தால் தான் படைக்கப் படுகின்றன என்று இதில் நிரூபிக்கிற படியால். அடுத்தது நான்காவது பதத்துக்கு ப்ராண பாதம் என்று பெயர், ப்ராணன், இந்திரியங்கள் முதலானவையும் பகவானால் தான் படைக்கப் படுகின்றன என்று அந்த பாதத்தில் நிரூபிக்கப் போகிறார். இது தான் இந்த பாதத்திற்கும் முன் பின் பாதங்களுடன் இருக்கும் ஸங்கதியாகும்.

ஆகாசம் உண்டாக முடியுமா?
2-3-1-வியத₃தி₄கரணம் – பூர்வ பக்ஷம் – ஆகாசம் உண்டாக்கப் படுவதில்லை , அது நித்யமானது என்கிறார் பூர்வ பக்ஷீ
1-ந வியத் அஸ்ருதத:
– “ஆகாசம் உண்டாவதில்லை , அப்படிச் சொல்லும் ஸ்ருதி இல்லாதபடியால்”
பூர்வ பக்ஷி சொல்வது – உலகத்தில் நாம் புலன்களால் அறிந்ததோடு முரண்பட்ட ஒரு விஷயத்தை வேதமாகவே இருந்தாலும் போதிக்க முடியாது. வேதமே கூட “நெருப்பு குளிர்ந்தது” என்று சொன்னால், அதை அப்படியே ஏற்க முடியாது, புலன்களால் ’நெருப்பு சூடானது’ என்று நாம் அறிந்திருக்கிற படியால். எனவே , அச் சொல் தொடருக்கு வேறு மாதிரி தான் பொருள் கொள்ள வேண்டும்.
அதே போல், ஆகாசம் உண்டாவது என்பது நடக்க முடியாத ஒன்று. எனவே , வேதத்தால் கூட “ஆகாசம் உண்டாக்கப் படுகிறது” என்று போதிக்க முடியாது.

ஆகாசம் உண்டாக்கப் படமுடியாது என்பதற்கு இரண்டு காரணங்கள்
(1) உலகில் உண்டாக்கப்படும் பொருள்கள் அனைத்துமே பகுதிகளோடு கூடியவை தான். ஆனால் ஆகாசத்துக்குப் பகுதிகள் இல்லை . எனவே ஆகாசம் உண்டாக்கப் படமுடியாதது
(2) உலகில் உண்டாக்கப்படும் பொருள்கள் அனைத்துமே நடுத்தர அளவோடு (பரிமாணத்தோடு) தான் இருக்கும்.-ஆனால் ஆகாசமோ எல்லா இடத்திலும் பரந்துள்ளது. எனவே ஆகாசம் உண்டாக்கப் படமுடியாது.

மேலும், சாந்தோக்ய உபநிஷத்தில் ப்ரஹ்மம் உலகத்தைப் படைக்கும் முறையை வருணிக்கும் போது “(ததை ₃ஷத ப₃ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி, தத்வதஜ: அஸ்ருஜத) அதாவது ’அந்த ப்ரஹ்மம் ஸங்கல்பம் செய்தது – “நான் பலவாக ஆகக் கடவேன், அதற்காக ஸ்ருஷ்டிக்கக் கடவேன்” என்று. (ஈஷத் அதிகரணம் -1-1-5 முன்பே பார்த்துள்ளோம்-நெருப்பு ஜலம் பிருத்வி மூன்றும் இங்கு சொல்லப்பட்டுள்ளது -ஆகாசம் வாயு இவை பற்றி சொல்லப் பட வில்லை இங்கு -)அந்த ப்ரஹ்மம் தேஜஸ் என்ற நெருப்பைப் படைத்தது’ எனப்படுகிறது. எனவே , ஸ்ருஷ்டியைச் சொல்லும் போது முதன் முதலில் ஐம்பூதங்களுக்குள் தேஜஸ் தான் உண்டாக்கப் படுகிறது என்று கூறி, அதற்குப் பிறகும் ஜலம் பூமி ஆகியவற்றின் ஸ்ருஷ்டி மட்டும் தான் சொல்லப்படுகிற படியால் ஆகாசம் உண்டாக்கப் படுவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆக இவ்வாறு ஆகாசம் ப்ரஹ்மத்தால் படைக்கப் படாதபடியால் “உலகமனைத்தும் ப்ரஹ்மம் காரணம்” என்று நீங்கள் சொல்வது தவறானது என்று வாதிடுகிறார் பூர்வ பஷி

ஆகாசமும் உண்டாக்கப்படுவதே
ஸித்தாந்தம் – 2-அஸ்தி து
– “ (ஆகாசம் உண்டாவதைச் சொல்லும் வேத வாக்யம்) இருக்கிறது அ்ன்றோ ”
தைத்திரீய உபநிஷத்தில் (ஆத்மந: ஆகாச: ஸம்பூ₄த: ) அதாவது “பரமாத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டானது” என்று ஸ்பஷ்டமாக ஆகாசத்தின் ஸ்ருஷ்டி சொல்லப்படுவதால் ஆகாசமும் படைக்கப்படுவதே .(ஆனந்தாதி அதிகரணம் -முன்பே இது பற்றி பார்த்துள்ளோம்)
புலன்களால் அறியப்பட்ட விஷயங்களோடு முரண்பட்ட ஒரு விஷயத்தை வேதமாகவே இருந்தாலும் போதிக்க முடியாது என்று நீங்கள் சொன்னதை ஏற்கிறோம். ஆனால் வேதத்துக்கு ஒரு சிறப்பு உள்ளது, புலன்களோடு முரண் படாமல் ஆனால் புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை வேதத்தால் போதிக்க முடியும். இவ் விடத்திலும் ஆகாசத்தின் உத்பத்தி என்பது நம்முடைய புலன்களுக்கு அப்பாற்பட்டது. அப்படிப்பட்ட ஸ்ருஷ்டி உண்டு என்று வேதம் சொல்லும் போது அது புலன்களுக்கு முரண் பட்டதே அல்ல. “ஆகாசம் உண்டாவதில்லை ” என்று நாம் புலன்களால் அறிந்தது கிடையாது. “ஆகாசம் உண்டாகிறது” என்று தெரிந்து கொண்டதில்லை , அவ்வளவே . ஆகையால் புலன்களுக்கு முரண் படாமல், ஆனால் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆகாசத்தின் உத்பத்தியை வேதம் சொல்வதில் எந்த முரண்பாடும் இல்லை

மேலும் பகுதிகள் இல்லாத்படியால் ஆகாசம் உண்டாக்கப் படவே முடியாது என்று சொல்லியிருந்தீர்கள். அதுவும் தவறானது. ஏன் என்றால் ஆகாசத்துக்கு பகுதிகள் கண்டிப்பாக உள்ளன. வேதத்திலும் புராணங்களிலும் த்ரிவித் கரணம் என்றும்
பஞ்சீகரணம் எ
ன்ற ஒரு செயல் சொல்லப்படுகிறது. ஐம் பூதங்களையும் படைத்த பிறகு பரமாத்மா இந்த ஐந்து பூதங்களையும் ஒன்றோடு ஒன்று கலக்கிறாராம். கலந்த பிறகு பார்த்தோ மென்றால் ஆகாசம் என்பதில் 50% ஆகாசமும் தலா 12.5% நிலம், நீர், தீ, காற்று ஆகிய மற்ற நான்கு பூதங்களும் உள்ளன என்று சாஸ்த்ரம் கூறுகிறது. ஆகாசத்திற்கு பகுதிகளே இல்லை என்றால் எப்படி இப்படி பிரித்து கலக்க முடியும்? அதனால் பகுதிகளில்லை என்று நீங்கள் சொல்வதும் தவறானது.
ஆகவே , இந்த வேத வாக்கியம் ஆகாசத்தின் உண்டாக்கத்தைச் சொல்லுகிறபடியால் ஆகாசமும் உண்டாக்கப் படுவது தான் என்பது வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்.

பூர்வ பக்ஷியின் கேள்வி
3-கௌ₃ணீ அஸம்ப₄வாத் சப்₃தா₃த் ச –
“இரண்டாம் பக்ஷம், முடியாத படியாலும் சொல்லாலும்”
இங்கு பூர்வபக்ஷீ ஆஷேபம் செய்கிறார் –கௌ₃ணீ- “ஆத்மந: ஆகாச: ஸம்பூ₄த:” என்ற வாக்கியத்தில் உள்ள ’ஸம்பூ₄த:’(உண்டானது) என்ற சொல்லுக்கு நேரடியாக உண்டாக்கம் என்ற பொருள் கொள்ள முடியாது. இரண்டாம் பஷமாக-கௌணமாக) தோற்றம் -வெளிப்பாடு என்று பொருள் கொள்ள வேண்டும். ஒரு வீரனை ’இவன் சிங்கம்’ என்று சொல்வது எப்படி Figurative (உருவகம்) என்று சொல்லப்படுகிறதோ அது போல் இங்கும் முதன்மையான பொருளல்ல.
அஸம்ப₄வாத் – முடியாத படியால் – தேஜஸ்ஸே முதலில் தோன்றுகிறது என்று வேதம் சொல்வதால் ஆகாசம் உண்டாக்கப்பட முடியாதபடியால்
சப்₃தா₃த் ச – சொல்லாலும் – வேதத்திலேயே (्வாயு: ச அந்தரிஷம் ச ஏதத் அம்ருதம்) அதாவது
’வாயுவும் ஆகாசமும் நித்யமானவை ’ என்று சொல்கிற படியாலும் ஆகாசத்துக்கு உண்டாக்கம் கிடையாது.

4-ஸ்யாத் ् ச ஏகஸ்ய ப்₃ரஹ்ம சப்₃த₃வத் – “ஒ்ன்றுக்கு இருக்கலாம், ப்ரஹ்மம் என்ற சொல் போல்”
இங்கு ஒரு கேள்வி எழுகிறது. அதற்கான விடையை இந்த ஸூத்ரத்தில் பூர்வ பஷி கூறுகிறார்.
கேள்வி – “பரமாத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டானது” என்று சொன்ன பிறகு “வாயுவிலிருந்து நெருப்பு”,“நெருப்பிலிருந்து ஜலம்” முதலான வாக்கியங்கள் உள்ளன. முதல் வாக்யத்தில் இருக்கும் ’உண்டானது’ (ஸம்பூ₄த: ) என்ற சொல்லை பின் வாக்கியங்களிலும் சேர்க்க வேண்டும்.இதை அனு க்ஷங்கம் என்பர் – அப்போது, முதல் வாக்கியத்தில் ஆகாசம் உண்டாக முடியாததால் ’உண்டாகிறது’ என்ற சொல்லுக்கு ’வெளிப்படுகிறது’ என்று பொருள் கொண்டு விட்டு, பின்னால் உள்ள வாக்கியங்களில் தேஜஸ் முதலானவை உண்மை யாகவே உண்டாகிற படியால் ’உண்டாகிறது’ என்ற சொல்லுக்கு ’உண்டாக்கம்’ என்ற பொருளை எப்படிக் கொள்ள முடியும்?-பதில் – ஒரே சொல்லுக்கு வேறு இடங்களில் வேறு பொருள்கள் இருக்கலாம். உபநிஷத்தில் ஒரே இடத்தில் ஒரு முறை ப்ரஹ்மம் என்ற சொல்லுக்கு மூல ப்ரக்ருதி என்றும் இரண்டாம் முறை பரமாத்மா என்று பொருள் கொள்வது போல்.

வ்யாஸரின் பதில்
5-ப்ரதிஜ்ஞ அஹாநி அவ்யதிரேகாத் –
“ப்ரதிஜ்ஜைக்கு பாதிப்பில்லாமை வேறல்லாத படியால்”
பூர்வ பக்ஷியின் வாதத்துக்கு இந்த ஸூத்ரத்தில் வேத வ்யாஸர் பதில் அளிக்கிறார்.
சாந்தோக்ய உபநிஷத்தில் முதலில் தேஜஸ்ஸின் உண்டாக்கம் சொல்லப்படுவதைக் கொண்டு ’ஸம்பூ₄த:’ என்ற சொல்லுக்கு இரண்டாம் பஷமாகப் பொருள் கொள்ள இயலாது-சாந்தோக்யத்திலேயே ஆகாசத்தின் உத்பத்தி சொல்லப் பட்டுள்ள படியால் என்கிறார் வேத வ்யாஸர்.

சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாம் ப்ரபாடகத்தில் உள்ள ஸத்₃வித்யையில் தான் தேஜஸ்ஸின் உண்டாக்கம் சொல்லப் பட்டுள்ளது. ஆனால் அந்த ப்ரகரணத்தின் தோடக்கத்திலேயே உத்தாலகர் என்ற தந்தை ஸ்வேத கேது என்ற மகனைப் பார்த்து “எந்த ஒன்றை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகுமோ அதை உன் ஆசார்யர்களிடம் கேட்டாயா?” என்று வினவுகிறார். இதில் ஒரு ப்ரதிஜ்ஜை (அறிவிப்பு) உள்ளது – “ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்று. அந்த ப்ரதிஜ்ஜை உண்மையாக இருக்க வேண்டும், அதற்கு அஹாநி(பாதிப்பில்லாமை ) இருக்க வேண்டும் என்றால், ஆகாசமும் உண்டாக்கப் படுவது தான் என்று ஏற்கத் தான் வேண்டும்.

இவ் விடத்தில் உத்தாலகர் சொல்வது – ’உலகத்தில் ஒரு காரணப் பொருளை அறிந்தால் அதன் கார்யங்கள் அனைத்தையும் அறிந்ததாகும். எடுத்துக் காட்டுக்கு, ஒரு மண் கட்டியை அறிந்தால், அதிலிருந்து உண்டாகும் குடம், தட்டு, சுவர் முதலான அனைத்தையுமே நாம் ஒரு விதத்தில் ’மண்’ என்ற அளவிற்கு அறிந்ததாகத் தான் ஆகும். ஏனெனில் குடம் என்பது மண்ணைக் காட்டிலும் வேறு பொருள் அல்ல. அது போல் தான் இங்கும் ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகனைத்தையும் அறிந்ததாகும் என்கிறார். அதாவது, உலகில் அனைத்துமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாவதால், ப்ரஹ்மத்தைக் காட்டிலும்
வேறு பொருளல்ல. ஆகையால் ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும் என்கிறார். இது உண்மையாக இருக்க வேண்டுமென்றால் ஆகாசமும் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகி யிருக்கத் தான் வேண்டும். இல்லா விட்டால், ப்ரஹ்மத்தை அறிந்தாலும் ஆகாசத்தை அறிந்ததாக ஆகாதபடியால் உத்தாலகர் ’அனைத்தையும் அறிந்ததாகும்’ என்று சொன்னது பொய்யாகி விடும். எனவே சாந்தோக்யமே ஆகாசத்தின் உத்பத்தியைக் கூறுகிறது.

மேலும் சில யுக்திகள்
6–சப்₃தே₃ப்₄ய: –
“(ஆகாசம் உண்டாவதை மற்ற சில வாக்கியங்களிலிருந்து அறியலாம்”
ஸதே₃வ ஸோம்ய இத₃ம் அக்₃ரே ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்” –-ஸ்ருஷ்டிக்கு முன்னால் இந்த உலகனைத்தும் ஸத் என்ற ஒரே பொருளாக இருந்தது, வேறு எதுவுமில்லை –இவ்வாறு வேதம் சொல்வதால், ப்ரளயத்தின் போது ஸத் என்ற பரமாத்மா மட்டுமே இருந்தார் என்று தெரிகிற படியால், அப்போது ஆகாசமும் இல்லை , பிற்பாடு தான் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாயிற்று என்று தெரிகிறது.

(ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!
–4-10-1-)

“ஐததா₃த்ம்யம் இத₃ம் ஸர்வம்” – இது அனைத்தும் ப்ரஹ்மமே -குடம் தட்டு சுவர் முதலான பொருள்கள் எல்லாம் மண்ணிலிருந்து உண்டான படியால் ’இவை அனைத்தும் மண் தான்’ என்று சொல்வது போல் இங்கு வேதம் ’இவ் வுலகில் அனைத்துமே ப்ரஹ்மம் தான்’ என்று கூறுவதால், உலகில் ஒரு பகுதியான ஆகாசமும் ப்ரஹ்மத்திட மிருந்து தோன்றியது தான் என்று தெளிவாகிறது.

7– யாவத் ₃விகாரம் து விபா₄க₃: ஸ்யாத் லோகவத்
விகாரம்
என்றால் காரியப் பொருள். விபா₄க₃ம் என்றால் உண்டாக்கம். ஆகாசம் முதலானவை காரியப் பொருள்கள் தான் என்று சொல்வதாலேயே அவை ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகின்றன என்பது சொன்னதாகிறது
லோகவத் – உலகத்தில் போல் – உலகத்தில் ’இவர்கள் அனைவரும் தேவ தத்தனின் புதல்வர்கள்’ என்று சொல்லி விட்டு, ஒரு சிலர் அவனிடமிருந்து பிறந்தது விளக்கப் பட்டால், அனைவரும் அவனிடமிருந்து பிறந்தது சொல்லப்பட்டதாகும். -அது போல், ’உலகில் அனைத்தும் ப்ரஹ்மத்தின் காரியங்கள்’ என்று சொல்லி விட்டு, தேஜஸ் ஜலம் பூமி என்பவை உண்டாகும் முறையை வேதம் காட்டினால், அது மற்றவை உண்டாக வில்லை என்ற பொருளைத் தராது, அவை அனைத்தும் அதே போல் தான் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகி யுள்ளன என்பதையே குறிக்கும்-’வாயுவும் ஆகாசமும் நித்யமானவை ’ என்று வேதம் சொல்வது, முற்றிலுமாக உண்டாக்கமும் அழிவும் இல்லாததால் அல்ல, மற்ற பொருள்களை விட நீண்ட காலத்துக்கு இவை இரண்டும் அழியாமல் இருப்பதால் மட்டுமே –

அனைத்துமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறது
8–ஏதேந மாதரிச்வா வ்யாக்₂யத:
– “இத்தால் வாயு (உண்டாகக் கூடியதாக) விளக்கப் பட்டது”
இப்படி ஆகாசம் உண்டாகக் கூடியது தான் என்பதற்குச் சொன்ன யுக்திகளாலேயே வாயுவும் உண்டாகக் கூடியது தான் என்பது நிரூபமாகிறது.-இதை முன் ஸூத்ரத்திலேயே சேர்க்காமல், தனி ஸூத்ரமாக வ்யாஸர் வைத்தது, அடுத்த அதிகரணத்தில் வாயுவை மட்டும் நினைவு கூறுவதற்காக. இது அடுத்த அதிகரணத்தில் தெளிவாகும்

9-அஸம்ப₄வஸ்து ஸத: அநுபபத்தே :
(உண்டாக) முடியாமை ஸத் என்கிற பரமாத்மாவுக்கே , (மற்ற பொருள்களுக்கு உண்டாகாமை ) பொருந்தாத படியால்-இவ் வதிகரணத்தில் ஆகாசமும் வாயுவும் உண்டாகக் கூடியவை என்று சொன்னதோடு நிற்காமல், உலகில் அனைத்துமே உண்டாகக் கூடியது தான் என்று நிரூபிக்கிறார் இந்த ஸூத்ரத்தால். உலகில் உண்டாகாமை என்ற பண்பு பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும், மற்றப் பொருள்களுக்குப் பொருந்தாது. ஏன் என்றால், முன்னமே சொன்னபடி, சா₂ந்தோக்₃ய உபநிஷத்தின் 6ஆம் ப்ரபாடகத்தில் உள்ள ஸத் வித்யை என்ற பகுதியில் உத்தாலகர் என்ற தகப்பனார் ஸ்வேதகேது என்ற மகனிடம் ’ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்’ என்கிறார். இது உண்மையாக வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி தான் உள்ளது –உலகப் பொருள்களும் ப்ரஹ்மமும் ஒரே போருளாக இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி தான் உள்ளது – உலகப் பொருள்கள் அனைத்தும் ப்ரஹ்டமிருந்து உண்டாகி யிருக்க வேண்டும். ஆகையால், எந்தப் பொருளுமே உண்டாகாததாக
இருக்கவே முடியாது.

ஆக, இவ்வதிகரணத்தால், தன்னைத் தவிர்ந்த அனைத்துப் பொருள்களுக்கும் பரமாத்மாவான ப்ரஹ்மம் காரணமாக உள்ளது என்று நிரூபிக்கப் பட்டது. எனவே , முதல் அத்யாயத்தில் நாம் எட்டிய முடிவு சரியானதே என்று நிலை நாட்டப்படுகிறது.


2-3-2-தேஜோதி₄கரணம்-அனைத்தும் ப்ரஹ்மத்திடமிருந்தே உண்டாகிறதுபூர்வ பக்ஷியின் வாதம்-ஸங்கதி – முன் அதிகரணத்தில் ஆகாசமும் வாயுவும் உண்டாக்கப் படுகின்றன எனப்பட்டது.-அதற்கடுத்து உண்டாகக் கூடிய தேஜஸ், ஜலம், ப்ருதிவீ ஆகியவற்றைப் பற்றின ஆராய்ச்சி இங்கு செய்யப்படுகிறது
முன் அதிகரணத்தில் உலகப் பொருள்கள் அனைத்துமே உண்டாக்கப் படுகின்றன என்று சொல்லப் பட்டது. மூல ப்ரக்ருதியிலிருந்து அவ்யக்தம், மஹான், அஹங்காரம், புலன்கள், தன்மாத்ரங்கள், ஐம் பூதங்கள் என்பவை அனைத்தும் உண்டாகின்றன என்று வேதம் கூறுகிறது. அதில் ஒரு கேள்வி எழுகிறது – இவை ஒவ்வொன்றுமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகின்றனவா? அல்லது ப்ரஹ்மம் மூல ப்ரக்ருதியிலிருந்து அவ்யக்தம் என்பதை மட்டும் உண்டாக்கும், அதற்குப் பின் அந்தந்த அசேதனப் பொருள்களே அடுத்தடுத்த அசேதனப் பொருள்களை உண்டாக்குகின்றனவா? என்று.

பூர்வ பக்ஷம் – அந்தந்த அசேதனப் பொருள்களே அடுத்தடுத்த பொருள்களை உண்டாக்குகின்றன
1-தேஜ : அத: ததா ₂ஹிஆஹ
அத:
– அதிலிருந்து -முன் அதிகரணத்தின் 8ஆம் ஸூத்ரத்தில் சொல்லப்பட்ட மாதரிச்வா எனும் வாயுவிடமிருந்து
தேஜ : – தேஜஸ் என்ற நெருப்பு உண்டாகிறது
ததா₂ஹிஆஹ– அவ்வாறு அன்றோ (வேதம்) சொல்கிறது
தைத்திரீய உபநிஷத்தில் ஆத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டாயிற்று, ஆகாசத்திலிருந்து வாயு உண்டாயிற்று என்று சொன்ன பிறகு, (வாயோர் : அக்₃நி: ) அதாவது வாயுவிலிருந்து நெருப்பு உண்டாகிறது என்று தான் கூறப்பட்டுள்ளது. எனவே அசேதனப் பொருளே அடுத்த அசேதனப் பொருளை உண்டாக்குகிறது, ப்ரஹ்மம் அல்ல.

2-ஆப: – “(அதிலிருந்து அதாவது தேஜஸ்ஸிலிருந்து) ஜலம் (உண்டாகிறது, அவ்வாறு அன்றோ சொல்கிறது)”
தைத்திரீயத்தில் (அக்₃நே : ஆப: ) அதாவது “அக்₃நியிலிருந்து ஜலம் உண்டானது” என்றும், சாந்தோக்யத்தில்(தத் அப: அஸ்ருஜத) அதாவது “அந்த தேஜஸ் ஜலத்தைப் படைத்தது” என்றும் தான் சொல்லப்படுகிறது.

பூர்வபக்ஷியின் வாதம் தொடர்கிறது
3-ப்ருதி₂வீ –
(அதிலிருந்து அதாவது ஜலத்திலிருந்து) ப்ருதி₂வீ (உண்டாகிறது, அவ்வாறு அன்றோ சொல்கிறது)”
தைத்திரீயத்தில் (அத்₃ப்₄ய: ப்ருதி₂வீ ) அதாவது “ ஜலத்திலிருந்து ப்ருதிவீ உண்டானது” என்றும்,
சாந்தோக்யத்தில் (தா: அந்நம் அஸ்ருஜந்த) அதாவது “அந்த ஜலம் அந்நத்தைப் படைத்தது” என்று தான் சொல்லப்படுகிறது. எனவே அந்தந்த அசேதனப் பொருளே அடுத்த காரியத்தை உண்டாக்கி விடுகிறது.

4–அதி₄கார-ரூப- சப்₃தா₃ந்தரேப்₄ய: – அந்நம் எனப்படுவது ப்ருதி₂வீ தான் என்று நிரூபிக்கிறார்
அதி₄காரம் – இந்த ப்ரகரணத்தில் (வேதப் பகுதியில்) ஆகாசம் வாயு முதலான பூதங்களின் உண்டாக்கமே பேசப்படுகிற படியால் இங்கும் அந்நம் என்பது உணவல்ல, உணவுக்கெல்லாம் காரணமாக இருக்கும் ப்ருதிவீ தான்
ரூபம் – இதே வேதப் பகுதியில் “நெருப்பில் இருக்கும் சிவப்பு, வெண்மை மற்றும் கருமை ஆகிய வண்ணங்கள் தேஜஸ், ஜலம் மற்றும் அந்நத்திலிருந்து வந்தவை ” என்று கூறப் படுகிறது. இப்படி தேஜஸ்ஸுக்கும் ஜலத்துக்கும் ஸமமாகச் சொல்லப்படுவதால், அந்நம் என்பதும் ஐம் பூதங்களில் ஒன்றான ப்ருதிவியாகத் தான் இருக்க வேண்டும்.
சப்₃தா₃ந்தரம் – சாந்தோக்ய உபநிஷத்தில் அந்நம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டாலும் இதே போன்ற இடத்தில் தைத்திரீயத்தில் ப்ருதிவீ என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்நம் என்பது ப்ருதிவீ தான்.எனவே அந்நம் என்பது ப்ருதி₂வியே . ஆக, தேஜஸ் முதலான அசேதனங்களே அடுத்த பொருள்களை உண்டாக்குகின்றன

கேள்வி – வேதத்தில் ஓரிடத்தில் எல்லாப் பொருள்களும் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாவதாகச் சொல்லப்படுகிறதே ?-ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண: மந: ஸர்வேந்த்₃ரியாணி | க₂ம் வாயு: ஜ்யோதி: ஆப: ப்ருதி₂வீ விச்வவஸ்ய தா₄ரிணீ || ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராணன், மனது, புலன்கள், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருதி₂வீ ஆகியவை உண்டாகின்றன –

பதில் – இவை யெல்லாம் நேரடியாக ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகின்றன என்று வேதம் சொல்லவில்லை , அடுத் தடுத்து வரிசையாக இவை உண்டாகிற படியால், பரம்பரையாக எல்லாம் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டானது என்றே சொல்கிறது

ஸித்தாந்தியின் பதில்-ஸித்தாந்தம் –5–த₃பி₄த்₄யாநாத் ஏவ து தல்லிங்காத் ஸ:
ஸ: து
– (மஹான் முதலானவைக்கு காரணம்) அவரே = அவ்யக்தம் முதலானவற்றை சரீரமாகக் கொண்ட பரமாத்மாவே –
த₃பி₄த்₄யாநாத் ஏவ தல் லிங்காத் – அபி₄த்₄யாநம் (ஸங்கல்பம்) என்கிற தனிப்பட்ட லிங்கத்தால் (அடையாளத்தால்) தேஜஸ், ஜலம் முதலானவை அடுத்தடுத்த பொருளைப் படைப்பதற்கு முன் ஸங்கல்பம் (எண்ணம்) செய்கின்றன என்று வேதம் சொல்கிறது – தத் தேஜ ஐக்ஷத” தா ஆப ஐக்ஷந்த” என்று. அசேதனப் பொருள்களுக்கு இது பொருந்தாது, எனவே அந்தந்த அசேதநப் பொருளே சரீரமாகக் கொண்ட பரமாத்மா தான் அடுத்தடுத்த பொருளை உண்டாக்குகிறார் என்பதே பொருத்தமானது. பரமாத்மா அனைத்துக்கும் அந்தர்யாமியே –

(ஏ தஸ்மாத் ஜாயதே பிராணன் மனஸ் ஸர்வேந்த்ரியாணி கம் வாயு ஜ்யோதி ஆபோ பிருத்வீ -அனைத்துமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறது -என்றும் வேத வாக்கியம் உள்ளது)

6–விபர்யயேண து க்ரம: அத: உபபத்₃யதே ச –”மாறுபட்ட வரிசை இத்தால் பொருந்துகிறது”
விபர்யயேண து – (அவ்யக்தம் மஹான் அஹங்காரம் என்கிற ஸ்ருஷ்டி வரிசையிலிருந்து) மாறுபட்ட
க்ரம: – (எல்லாமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறது என்று சொல்லப்பட்ட) க்ரமம் அதாவது வரிசை
அத: – இதனால் (அதாவது அனைத்துமே பரமாத்மா விடமிருந்தே உண்டாகிற படியால்)
உபபத்₃யதே ச – பொருந்துகிறது-

“ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண :” என்ற வேத வாக்கியத்தில் பரமாத் மாவிடமிருந்து அவ்யக்தம், அதிலிருந்து மஹான்,-அதிலிருந்து அஹங்காரம், அதிலிருந்து ஐம் பூதங்கள் உண்டாகின்றன என்கிற வரிசையைச் சொல்லாமல் “எல்லாமே பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது” என்று சொல்லப்படுகிறது.
அதற்கு பூர்வ பஷி – எல்லாமே நேரடியாக பரமாத்மாவிமிருந்து உண்டாகா விட்டாலும், பரம்பரையாக உண்டாவதை இந்த வாக்கியம் சொல்கிறது என்றார்.
இப்போது ஸித்தாந்தத்தில் அந்தந்த அசேதனப் பொருள்களை சரீரமாகக் கொண்ட பரமாத்மாவிடமிருந்தே அனைத்தும் உண்டாகிற படியால், அனைத்துமே நேரடியாக பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது என்று சொல்வது கூடப் பொருத்தமானதே – அதனால் “ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண :” என்ற வாக்கியம் எங்கள் பக்ஷத்துக்கு ஸாதகமானது-

7-அந்தரா விஜ்ஞாந மநஸீ க்ரமேண தல் லிங்காத் இதி சேத் ந அவிசேஷாத்
பூர்வ பஷி கேள்வி கேட்கிறார்
– இந்த வேத வாக்கியம் அனைத்தும் நேரடியாக பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது என்று சொல்லவில்லை , ஒரு வரிசையில் தான் அடுத்தடுத்த பொருள்கள் உண்டாவதைச் சொல்கிறது என்று.
தல் லிங்காத் – (’ஆகாசம் வாயு தேஜஸ்’ என்ற வரிசையோடு சேர்த்துப் படிக்கப் படுதல் என்ற) அடையாளத்தால்
அந்தரா விஜ்ஞாந மநஸீ க்ரமேண – ப்ராணனுக்கும் பூதங்களுக்கும் நடுவில் புலன்களும் மனதும் உண்டாகின்றன
இதி சேத் ந – என்று நீங்கள் கூறினால் அது தவறானது
அவிசேஷாத் – வேறுபாடில்லாத படியால்

’ஏதஸ்மாத் ஜாயதே ’ அதாவது ’பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறாது’ என்ற சொற்றொடர் ப்ராணனோடு மற்றும் சேரவில்லை , இங்கு சொல்லப்பட்ட அனைத்துப் பொருள்களோடும் சேர்கிறது. எனவே எல்லாமே பரமாத்மாவிடமிருந்து நேரடியாக உண்டகிறது என்று தான் கொள்ள வேண்டும்.
மேலும், இங்கு ஒரு குறிப்பிட்ட வரிசை சொல்லபடுகிறது என்று கூறுவது உங்கள் வேதத்திலும் பொருந்தாது. ஏனென்றால் இந்த வாக்கியத்தில் முதலில் ப்ராணன் உண்டாகிறது என்று கூறி, அதற்குப் பிறகு தான் ஆகாசத்திலிருந்து வாயு உண்டாகிறது என்று சொல்லப்படுகிறது. இது பொருந்தாது. ப்ராணன் (மூச்சுக் காற்று) என்பது வாயுவின் குறிப்பிட்ட வகையானபடியால் அது வாயுவுக்கு முன் உண்டாக முடியாது. எனவே இங்கு க்ரமம் (வரிசை ) சொல்லப்படவில்லை , எல்லாமே பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது என்று தான் சொல்லப் படுகிறது.

ஆக இந்த அதிகரணத்தில் ’தேஜஸ்’’ஜலம்’ முதலான சொற்கெல்லாம் அந்தந்த அசேதனப் பொருளை மட்டும் குறிப்பிடவில்லை , அந்தந்த அசேதனப் பொருளை சரீரமாகக் கொண்ட பரமாமைவையே குறிக்கின்றன என்று கூறப்பட்டது. இதில் ஓர் ஆஷேபத்தை பூர்வபஷி எழுப்புகிறார் – எல்லாச் சொற்களும் ப்ரஹ்மத்தையே குறிக்கின்றன என்றால், உலகில் அனைவரும் தினமும் குடம் துணி மேஜை ஆடு மாடு முதலான பொருள்களைக் குறிக்க அந்தந்த சொற்களைப் பயன்படுத்துவது தவறாகி விடுமே ? பிறகு உலகப் பேச்சு வழக்கு என்பதே நின்று போய் விடுமே? என்று.-இதற்கு வேத வ்யாஸர் அடுத்த ஸூத்ரத்தில் விடை அளிக்கிறார்.

8-சராசர வ்யபாஸ்ர யஸ்து ஸ்யாத் தத் வ்யபதேசோ பாக்த தத் பாவ பாவாத்
சராசர வ்யபாஸ்ர யஸ்து-
-அசையும் மற்றும் அசையாத உலகப் பொருள்களைப் பற்றி
தத்₃வ்யபதே₃ ச : – அந்தந்த சொற்களின் ப்ரயோகமானது (பயன்பாடானது)
பா₄க்த: ஸ்யாத் – உடைக்கப்பட்டதாக – இரண்டாம் பக்ஷமாக இருக்கும்
தத்₃பா₄வ பா₄வித்வாத் – அனைத்துச் சொற்களும் பரமாத்வையே சொல்கின்றன என்று தெரிந்து கொண்ட பிறகு மட்டுமே எல்லாச் சொற்களும் பரமாத்வையே போதிக்கிறபடியால்.

அதாவது, உலகத்தில் பொதுவாகக் காணப்படும் சொற்களின் பயன்பாடு தவறானது அல்ல, ஆனால் முழுமையானதும் அல்ல. ஒவ்வொரு சொல்லுக்கும் பரமாத்மா வரை போதிக்கும் சக்தி இருந்தாலும், அது தெரியாமல் மக்கள் அந்தந்தச் சொற்களைப் பயன்படுத்துவதால், அக் காலத்தில் குடம் துணி முதலான பொருள்களை மட்டும் அந்தந்தச் சொற்கள் குறிக்கின்றன. எப்போது வேதாந்தம் கற்று, ’எல்லாச் சொற்களும் பரமாத்வையே கூறுகின்றன’ என்று உணர்கிறார்களோ அப்போது அந்தந்தச் சொற்களின் முழுமையான சக்தியை உணர்ந்த படியால் அதற்குப் பின் அவர்களுக்கு அந்தந்தச் சொற்கள் பரமாத்மா வரை போதிக்கின்றன.

(அனைத்து சொற்களும் அவனைக் குறிக்கும் என்றும் அறிந்த பின்பு –புகழும் நல் ஒருவன் என்கோ –இத்யாதிகண்ணனைக் கூவுமாறு அறியேன்–குன்றங்கள் அனைத்தும் என்கோ -ஆழ்வார் –)

ஆக, இந்த அதிகரணத்தில், அனைத்துப் பொருள்களும் ப்ரஹ்மத்திடமிருந்து தான் உண்டாகின்றன என்று நிரூபித்தார்.

2-3-3-ஆத்மாதி₄கரணம்–ஜீவாத்மாவும் உண்டாக்கப்படுகிறாரா?—-ஸங்கதி – இந்த பாதத்தின் முதல் அதிகரணத்தில் ப்ரஹ்மத்தைத் தவிர்ந்த மஹான், அஹங்காரம், ஆகாசம், வாயு முதலான அனைத்துப் பொருள்களுமே உண்டாக்கப் படுகின்றன என்று நிரூபிக்கப் பட்டது. அதற்கு மேல் இரண்டாவது அதிகரணத்தில் அவை அனைத்துமே பரமாத்மாவிடம் இருந்து தான் உண்டாகின்றன என்றும் சொல்லப்பட்டது. இப்படி அசேதன பொருள்களின் உண்டாக்கத்தைச் சொன்ன பிறகு சேதனனான ஜீவாத்மாவைப் பற்றி விசாரம் செய்யப்படுகிறது. ஜீவாத்மாவும் ஆகாசம் முதலானவற்றைப் போல் உண்டாக்கப் படுகிறாரா? இல்லையா? என்பது இந்த அதிகரணத்தில் செய்யப்படும் ஆராய்ச்சி.

(இதில் ஸித்தாந்தம் ஸூத்ரம் ஒன்றே உள்ளது)

பூர்வ பக்ஷியின் வாதம்–ப்ரஹ்மத்தைத் தவிர அனைத்தும் உண்டாக்கப்படுகிறது என்று முன் அதிகரணங்களில் நிரூபித்ததால், ஜீவாத்மாவும் உண்டாக்கப் படுகிறார் என்று பூர்வபக்ஷி வாதிடுகிறார். இதற்கு இரண்டு யுக்திகளைக் கூறுகிறார் –
1-ஏக விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாந பிரதிஜ்ஞா உபபத்தி –
அதாவது சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாவது ப்ரபாடகத்தில் ஸத் வித்யா என்கிற பிரகரணத்தில் உத்தாலகர் என்கிற தந்தை ஸ்வேதகேது என்கிற மகனைப் பார்த்து, “எந்த ஒன்றை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகுமோ , அதை உன் ஆசார்யர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டாயா?” என்று கேட்கிறார். அங்கு இருக்கும் பிரதிஜ்ஜை – “ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்பது. இது எப்படிப் பொருந்துமென்றால் – எப்படி ஒரு மண் கட்டியை அறிந்தால், அதிலிருந்து உண்டாகக் கூடிய குடம், தட்டு முதலானவற்றை அறிந்ததாகுமோ , அதே போல் உலகமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறபடியால் ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும் என்று உத்தாலகர் கூறுகிறார். இந்த ப்ரதிஜ்ஜை பொருந்த வேண்டும் என்றால் ஜீவாத்மாக்களும் ப்ரஹ்மத்திடம் இருந்து உண்டாகி யிருக்க வேண்டும். இல்லா விட்டால் ப்ரஹ்மத்தை அறிந்தால் ஆகாசம் முதலான அசேதனப் பொருள்களை மட்டுமே அறிந்ததாகுமே தவிர ஜீவாத்மாக்களை அறிந்ததாக ஆகாது. எனவே ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்று சொல்வது பொய்யாகி விடும். அதனால் ஜீவாத்மாக்களும் ப்ரஹ்மத்திடம் இருந்து உண்டாகிறார்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

(2) ப்ராக் ஸ்ருஷ்டே : ஏகத்வ அவதாரணம் – “ஸ்ருஷ்டிக்கு முன்னால் இந்த உலகமனைத்தும் ஒரே பொருளாகத் தான் இருந்தது” என்று வேதம் கூறுகிறது. இந்த வாக்கியம் சரியாக இருக்க வேண்டும் என்றால் ப்ரளய காலத்தில் ஆகாசம், வாயு முதலானவை எப்படி இல்லையோ , அதே போல் ஜீவாத்மாக்களும் தனித்து இல்லை . பரமாத்மா ஒருவரே இருந்தார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். ஆகையால் ப்ரளய காலத்தில் ஜீவாத்மாக்கள் இருக்க வில்லை . அதற்குப் பிறகு தான் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டானார்கள் என்று தான் ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஆகவே , ஜீவாத்மாவும் உண்டாக்கத் தான் படுகிறார். இதற்கு வேதத்திலும் சில வாக்கியங்கள் வலுவூட்டுகின்றன –
தோயேந ्ஜீவான் வ்யஸ்ஸர்ஜ பூ₄ம்யாம் –
தண்ணீரோடு ஜீவன்களைப் படைத்தார்
ப்ரஜாபதி: ப்ரஜா: அஸ்ருஜத – ப்ரஜாபதி உடலோடு கூடிய ஆத்மாக்களைப் படைத்தார்
யதோ வா இமாநி பூ₄தாநி ஜாயந்தே – இந்த ஜீவ ராசிகள் எதிலிருந்து உண்டாயினவோ
இந்த வாக்கியங்களில் எல்லாம் ஜீவனோடு கூடின உலகப் பொருட்கள் உண்டாக்கப் படுகின்றன என்று சொல்லப் படுகிறபடியால் ஜீவாத்மாவும் உண்டாக்கத் தான் படுகிறார்.

கேள்வி – ப்ரஹ்மம் நித்தியமானது என்று வேதம் சொல்கிறது. “தத் த்வம் அஸி”. “அஹம் ப்ரஹ்மாஸ்மி” முதலான வாக்கியங்கள் ஜீவாத்மாவும் ப்ரஹ்மமும் ஒன்று தான் என்று சொல்லுகின்றன. ஆகையால் ஜீவாத்மாவும் நித்தியமானவராக தானே இருக்க வேண்டும் என்று ஒரு சிலர் கேள்வி யெழுப்புகிறார்கள்.
பூர்வ பக்ஷியின் பதில் – அப்படிப் பார்த்தால் “ஸர்வம் க₂லு இத₃ம் ப்₃ரஹ்ம”, ”ஐததா₃த்ம்யம் இத₃ம் ஸர்வம்”-முதலான வாக்கியங்களில் அசேதனப் பொருட்கள் கூட ப்ரஹ்மமே தான். ஜகத்தே ப்ரஹ்மம் தான் என்று சொல்லப் படுகிறபடியால், ப்ரஹ்மம் நித்தியமான படியால் அசேதனப் பொருள்களும் நித்யமானவை என்று ஏற்க வேண்டி வரும். அது எப்படிப் பொருந்தாதோ , அதுவே போல் உங்கள் வாதமும் பொருந்தாது.
எனவே ஆகாசம் முதலானவற்றைப் போல் ஜீவாத்மாக்களுக்கும் உத்பத்தி உண்டு என்று பூர்வ பக்ஷி கூறுகிறார்.

ஸித்தாந்தியின் பதில்
ஸித்தாந்தம் – 1- ந ஆத்மா ச்ருதே : நித்யத்வாத் ச தாப்₄ய:
ஆத்மா ந –
ஜீவாத்மாக்கள் (உண்டாக்கப் படுவது) இல்லை
ச்ருதே : – வேதத்திலிருந்து (அவர்களுக்கு உண்டாக்கம் இல்லை என்று தெரிகிறபடியால்)
தாப்₄ய: – அந்த வேத வாக்கியங்களிலிருந்தே
நித்யத்வாத் ச – ஆத்மாக்கள் நித்யமானவை என்று அறிகிற படியாலும்
வேதத்தில் தெளிவாகவே ஆத்மாக்களுக்கு உண்டாக்கம் இல்லை என்று சில வாக்கியங்களில் சொல்லபடுகிறது.
ந ஜாயதே ம்ரியதே வா விபஶ்சித்-அனைத்தையும் அறியும் சக்தி கொண்ட ஜீவாத்மா உண்டாவதும் இல்லை, அழிவதும் இல்லை
ஜ்ஞாஜ்ஞௌ த்₃வௌ அஜௌ ஈசநீசௌ-முழுமையான ஜ்ஞாநம் கொண்ட பரமாத்மா, குறைந்த ஜ்ஞாநம் கொண்ட ஜீவாத்மா ஆகிய இருவருமே அஜர்கள்-அதாவது உண்டாக்கம் இல்லாதவர்கள்
அதே போல் சில வேத வாக்கியங்கள் ஜீவாத்மாக்கள் நித்யமானவர்கள், அதாவது அழிவற்றவர்கள் -எப்போதும் இருக்கக் கூடியவர்கள் என்று கூறுகின்றன –நித்யோ ् நித்யாைநாம் யோ வித₃தா₄தி காமாந்--நித்யமானவரான ஒரு பரமாத்மா நித்யமான எண்ணிறந்த ஜீவாத்மாக்களுக்கு ஆசைப்பட்டதைக் கொடுக்கிறார்-
அஜ: நித்ய: சாச்வத: அயம் புராண:-ஜீவாத்மா பிறப்பில்லாதவர், நித்யமானவர், மாறுபாடுகள் அற்றவர், மிகப் பழமையானவராய் இருந்தாலும் புதுப் பொருள் போல் ஆச்சர்யமூட்டுபவர்
ஆகவே , ஜீவாத்மாக்கள் உண்டாக்கப் படுவதில்லை என்று வேதத்திலிருந்து தெரிகிறது என்கிறார் வேத வ்யாஸர்.

ஸித்தாந்தியின் பதில் -இதற்கு மேல் பூர்வ பக்ஷி சொன்ன யுக்திகளுக்கு பதில் கூற வேண்டும்.
கேள்வி
– ஜீவாத்மாக்கள் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகவில்லை என்றால் “ப்ரஹ்மம் ஒன்றை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்று உத்தாலகர் கூறியது எப்படிப் பொருந்தும்?
பதில் – ஜீவாத்மாக்கள் உண்டாக்கப் படாவிட்டாலும் ப்ரஹ்மத்தினுடைய கார்யங்கள் தான் என்று ஏற்கப்படுகிறது. மண்ணை அறிந்தால் அதன் கார்யங்களை அறிந்ததாவது போல் ப்ரஹ்மத்தை அறிந்தால் ஜீவர்களை அறிந்ததாகும்.
கேள்வி – ஜீவாத்மாக்கள் கார்யம் தான், ஆனால் உண்டாவதில்லை என்று சொல்வது எப்படிப் பொருந்தும்?
பதில் – ’கார்யம்’ என்றால் ’வேறொரு நிலையை -மாறுபாட்டை அடைந்திருக்கும் பொருள்’அவஸ்தாந்தர ஆபபத்தி-. அந்த வேறொரு நிலை மாறுபாடு (Transformation) என்பது இரண்டு வகைப்படும்
1-ஸ்வரூப விகாரம் உருவ மாறுபாடு – இது தான் ஒரு பொருளின் உண்டாக்கம் என்று சொல்லப்படுகிறது.
2-ஸ்வபா₄ப விகாரம் – தன்மையில் மாறுபாடு – இது ஏற்படும் போது உண்டாக்கம் என்று சொல்வதில்லை .-அசேதனப் பொருள்களுக்கு மட்டும் தான் ஸ்வரூப விகாரம் (உருவ மாறுபாடு) என்பது உண்டு. ஒரே தங்கம் காசாகவும், மோதிரமாகவும், தோடாகவும், சங்கிலியாகவும் வெவ்வேறு வடிவங்களை அடைகிறது. அப்போது மோதிரம் உண்டாகிறது, சங்கிலி உண்டாகிறது என்று சொல்கிறோம்.
சேதனர்களான ஜீவாத்மாக்களுக்கு ஸ்ருஷ்டியின் போது உருவ மாறுபாடுகள் கிடையாது, ஆனால் தன்மைகளில் மாறுபாடுகள் உண்டு -– ஒரு ஸமயம் அறிவு குறைந்திருக்கும், ஒரு ஸமயம் மலர்ந்திருக்கும். இதற்கு ஸ்வபாவ விகாரம் என்று பெயர். இது ஏற்படும் போது அந்தப் பொருள் உண்டாகிறது என்று சொல்வது கிடையாது.
ஆக, அசேதனங்கள் சேதனர்கள் அனைத்துமே ப்ரஹ்மத்தால் மாறுபாடுகளை அடைகிறபடியால் ப்ரஹ்மத்தின் கார்யங்கள் தான், ஆனால் ஜீவாத்மா உண்டாகிறார் என்று கூற முடியாது என்று வ்யாஸர் கூறுகிறார்.-ஜீவாத்மாவைப் பற்றி பிறப்பு மரணம் முதலான சொல்லாலெல்லாம் ஓர் உடலை எடுத்துக் கொள்வதையும் அதை விடுவதையும் வைத்துச் சொல்லப்படுகின்றன. ஜீவாத்மா உண்டாவதுமில்லை அழிவதுமில்லை என்பதே உண்மை .

(சம பரதேவ ஏகி பவதி-நாம ரூப விபாகம் இல்லாமல் ஒன்றாகவே ப்ரஹ்மம் இருந்தது என்று சொல்லிற்று தவிர சேதன அசேதன பொருள்கள் இல்லை என்றதல்ல –தத்வ த்ரயங்களும் நித்யமானவையே தான்)

2-3-4-ஜ்ஞாதி₄கரணம்-ஜீவாத்மாவைப் பற்றின ஆராய்ச்சி-
முதல் பூர்வ பக்ஷம் -ஜ்ஞாதி₄கரணம் –ஸங்கதி
– இந்தப் பாதத்தின் முதல் மூன்று அதிகரணங்களால் உலகிலுள்ள அனைத்துமே ப்ரஹ்மத்தால் தான் படைக்கப் படுகிறது என்று நிரூபித்தார் வ்யாஸர். அதில் மூன்றாவது அதிகரணத்தில் ஜீவாத்மாவைப் பற்றிய பேச்சு வந்தபடியால், இனி அடுத்த நான்கு அதிகரணங்களால் ஜீவாத்மாவினுணடய ஸ்வரூபம் எப்படிப்பட்டது என்று ஆராய்கிறார்.
இந்த விவாதத்தில் மூன்று பக்ஷங்கள் இருக்கின்றன–2 பூர்வ பக்ஷங்கள், 1 வேதாந்தம் சொல்லும் ஸித்தாந்தம்.
1-பௌத்தர்கள், ஸாங்க்யர்கள் முதலானவர்களின் பக்ஷம்
– ஜீவாத்மா ஜ்ஞாநம் மட்டுமே
இந்த மதங்களில் ஆத்மாவை ’சிந் மாத்ரம்’ -’ஜ்ஞாந மயம்’ என்று கூறுவார்கள். இதற்கு “ஜ்ஞாநம் மட்டுமே ஆத்மா ”என்று பொருள். அதாவது, ஒரு குடம் மண்ணால் ஆனது, ஒரு மோதிரம் தங்கத்தால் ஆனது, அது போல் ஜீவாத்மா ஜ்ஞாநத்தாலேயே ஆனவர் என்று பொருள். “மாத்ரம்” சொல்லால் “ஜ்ஞாநம் மட்டுமே ” என்று சொல்வதால் ஆத்மா ஜ்ஞாநமுடையவர் (ஜ்ஞாதா) அல்ல, அதாவது அறிவாளி அல்ல, அறிவே தான் ஜீவாத்மா.

இதற்கு இவர்கள் சில வேத வாக்யங்களைச் சான்றாகக் காட்டுகிறார்கள் –
1–சுக்ல யஜுர் வேதத்தில் இரண்டு சாகைகள் (கிளைகள்) உள்ளன. ஒன்று மாத்யந்தின சாகை , மற்றொன்று காண்வ சாகை -இரண்டிலுமே அந்தர்யாமி ப்ராஹ்மணம் என்ற உபநிஷத் பகுதி உள்ளது. இப் பகுதியில், நிலம் நீர் தீ காற்று ஆகாயம் ப்ரக்ருதி மஹான் அஹங்காரம் புலன்கள் ஆத்மாக்கள் முதலான உலகிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் அந்தர்யாமி பரமாத்மாவே என்று கூறப்படுகிறது. அச் சமயத்தில், மாத்யந்தின சாகையில் (ய: ஆத்மநி திஷ்ட₂ன்) அதாவது ’யாரொருவர் ஆத்மாவில் இருக்கிறாரோ ’ என்று கூறப்படுகிறது. அதே இடத்தில் காண்வ சாகையில் (யோ விஜ்ஞாநே திஷ்ட₂ன்) அதாவது ’யாரொருவர் ஜ்ஞாநத்தில் இருக்கிறாரோ ’ என்று கூறப்படுகிறது. ஆகவே ,ஆத்மா என்பவரைத் தான் ஜ்ஞாநம் என்று வேதம் கூறுவதை நாம் உணரலாம். எனவே ஜ்ஞாநமே ஆத்மா .

2-தைத்திரூய உபநிஷத்தில் ஓரிடத்தில் (விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே ) அதாவது “அறிவு யாகம் செய்கிறது” என்றுள்ளது. ஆத்மா தானே யாகம் செய்ய முடியும். அதனால் ஆத்மா தான் இங்கு அறிவு எனப்படுகிறார்

இரண்டாவது பூர்வபக்ஷம்–வைஸேஷிகம்- ந்யாய மதம் முதலானவற்றின் பக்ஷம் – ஜடமான ஆத்மாவுக்கு அறிவு செயற்கையான பண்பு-இவர்கள் முன் சொன்ன பக்ஷத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறார்கள். ஆத்மா ஜ்ஞாநமே வடிவானவர் என்று முன் பக்ஷத்தில் சொல்லப்பட்டதை இவர்கள் ஏற்கவில்லை-ஆத்மா குடம் மேஜை புத்தகம் போன்ற ஒரு பொருள் தான்,அதாவது ஜடமான பொருள் தான், ஜ்ஞாந வடிவானவர் அல்ல என்கிறார்கள்.

இந்த ஸந்தர்பத்தில் ஜ்ஞாநம் என்றால் என்ன என்று பார்ப்போம். ஜ்ஞாநம் என்ற பொருளுக்கு இலக்கணமே-’ஸ்வயம் ப்ரகாஸத்வம்’ அதாவது ’தானாகத் தோற்றுவது – அறியப்படுவது’ என்ற பண்பு தான். உலகத்தில் குடம் மேஜை முதலான பொருள்கள் அறியப் படுவதற்கு அவை மட்டும் இருந்தால் போதாது, வெளிச்சம் வேண்டும், கண் வேண்டும், நமக்கு அறிவு வேண்டும்; இப்படி மற்ற பொருள்களின் உதவியால் அறியப்படும் பொருள்களை ஜடம் என்பார்கள். இவை அஸ்வயம் ப்ரகாஸம் -அதாவது தானாகத் தோற்றாத பொருள்கள்-ஆனால் ஜ்ஞாநம் என்பது அப்படி யல்ல, தான் இருந்தாலே தானாகத் தோற்றிவிடும், ஜ்ஞாநத்தை அறிவதற்கு வேறொரு ஜ்ஞாநம் கூடத் தேவை யில்லை – தானே அறியப் படுகிறது. எனவே அதை அஜடம் என்றும்ஸ்வயம் ப்ரகாஸம் என்று கூறுவார்கள். ந்யாய மதத்தவர்கள் சொல்வது ஆத்மா குடம் முதலானவற்றைப் போல் ஜடமான பொருள் தான் என்று.

அதே போல், முதல் பக்ஷத்தில் ஏற்கப்படாத ஒன்றை இவர்கள் ஏற்கிறார்கள் – ஆத்மா அறிவாளி (ஜ்ஞாதா) தான், அவருக்கு அறிவு (ஜ்ஞாநம்) என்ற பண்பு உள்ளது, ஆனால் அது இயற்கை யானதோ நிரந்தரமானதோ அல்ல, அவ்வப்போது செயற்கையாக வரக் கூடியது என்கிறார்கள். மோக்ஷம் அடையும் பொழுது ஜ்ஞாநம் முழுமையாக இல்லாமல் போய்விடும், எனவே ஆத்மா முழுமையாக ஒரு கல்லைப் போல் ஆவதே மோக்ஷம் என்கிறார்கள்.

இதற்கு இவர்கள் கூறும் யுக்திகணளப் பார்ப்போம் –முதலில், ஜீவாத்மா உலகெங்கும் வ்யாபித்து அதாவது நீக்கமற நிறைந்திருக்கிறார் என்று ஏற்க வேண்டும். ஏனென்றால்,ஒரு ஜீவாத்மா பயன்படுத்தப் போகும் பொருள்கள் உலகில் வெவ்வேறு இடங்களில் உண்டாகின்றன. அவற்றின்
உண்டாக்கத்துக்கு அந்த ஜீவாத்மாவின் பாபமும் புண்யமும் காரணம் என்று கண்டிப்பாக ஏற்க வேண்டும். (ஸர்வத்ர கார்ய உத்பத்யதே -பொருள்கள் உண்டாவதற்கு ஆத்மாவின் கர்மங்கள் காரணம் –
)ஆனால் பாப புண்யங்களை உடைய ஆத்மா ஓரிடத்தில் இருந்தால், வேறிடத்தில் உண்டாகும் பொருளுக்கு எப்படி காரணமாக முடியும்? எனவே ஆத்மா எங்கும் வ்யாபித்து இருக்கிறார் என்று ஏற்க வேண்டும்.

இப்படி வ்யாபித்திருக்கும் ஆத்மாவை ’ஜ்ஞாநமே வடிவானவர்’ என்று சொன்னாலோ ’இயற்கை யாகவே ஜ்ஞாநம் என்ற நிரந்தரமான பண்பை உடையவர்’ என்று சொன்னாலே கீழ்க் கண்ட குற்றங்கள் ஏற்படும் –
1-(ஸர்வத்ர உபலப்த பிரஸங்க)உலகெங்கும் இருக்கும் பொருள்களை எல்லாம் நாம் எப்போதும் அறிய முடிய வேண்டும். அப்படி ஏற்பட வில்லை
2-பொருள்களை அறிவதற்கு புலன்களின் தேவையே இல்லாமல் போய் விடும்.
3-ஆழ்ந்த உறக்கத்திலும் கூட ஆத்மாவுக்கு அறிவு ஏற்பட வேண்டும், ஆனால் அப்படி நாம் கண்டதில்லை

தங்கள் பக்ஷத்துக்குச் சான்றாக இவர்கள் காட்டும் வேத வாக்யங்கள் –
1-நாஹ க₂ல்வயம் ஸம்ப்ரதி ஆத்மானம் ஜானாதி-அயம் அஹம் அஸ்மி இதி, நோ ஏவ இமாநி பூதாநி–என்ற வாக்கியத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது இந்த ஜீவாத்மா தன்னையும் அறிவதில்லை , மற்றப் பொருள்களையும் அறிவதில்லை என்று கூறப் படுகிற படியால் உறக்கத்தில் ஆத்மாவுக்கு ஜ்ஞாநம் எதுவும் இல்லை என்று தெரிகிறது.

(ந ப்ரேத்ய ஸம்ஜ்ஞா அஸ்தி) என்ற வாக்கியத்தில் ’முக்திக்குப் பின் ஜ்ஞாநம் இல்லை ’ என்று சொல்லப்படுவதால், முக்தியில் ஆத்மா கல்லைப் போல் தான் இருக்கிறார். எனவே ஜ்ஞாநம் என்பது ஆத்மாவுக்கு இயற்கையான நிரந்தரமான பண்பல்ல, செயற்கையாக அவ்வப்போது வரக்கூடியது மட்டுமே என்கிறார்கள்.

வேதாந்தம் கூறும் ஸித்தாந்தம்
இந்த இரண்டு பூர்வ பக்ஷங்களையும் தகர்த்து, வேதாந்தம் கூறும் ஆத்மாவின் உண்மையான தன்மையை வேத வ்யாஸர் இந்த அதிகரணத்தில் காட்டுகிறார். முதலில் ஸித்தாந்தம் என்ன என்று பார்ப்போம், பிறகு ஸூத்ரங்களின் பொருளைப் பார்க்கலாம்.(இதில் 14 ஸூத்ரங்கள் உள்ளன )

உபநிஷத்துக்கள் கூறும் பக்ஷம் – ஜ்ஞாநமே வடிவான ஆத்மாவுக்கு ஜ்ஞாநம் என்ற இயற்கையான பண்பும் உள்ளது-உபநிஷத்துக்களை ஆராய்ந்தால், முன் சொன்ன இரண்டு பக்ஷங்களிலிருந்து வேறுபட்ட ஒரு பக்ஷம் சொல்லப்படுகிறது.-முதல் பக்ஷத்தில் சொன்னது போல் ஆத்மா ஜ்ஞானமே வடிவானவர் என்பதை நாமும் ஏற்கிறோம். எனவே ந்யாய மதத்தவர்கள் சொல்வது போல் ஆத்மா குடம் போல் ஜடமானவர் அல்ல, ஸ்வயம் ப்ரகாஸமான ஒரு பொருள் தான் என்றுnஆகிறது. ஆனால் முதல் பக்ஷத்தில் ஆத்மா அறிவாளி அல்ல, ஆத்மாவுக்கு அறிவு என்ற பண்பு கிடையாது என்றார்கள்,
அதை நாம் ஏற்க வில்லை . ஆத்மா ஜ்ஞானமே வடிவானவர், அதோடு கூட அவருக்கு ஜ்ஞாநம் என்ற பண்பும் உள்ளது என்று கூறுகிறோம். ஜ்ஞாந வடிவான ஆத்மாவுக்கு த₄ர்மி ஜ்ஞாநம் அதாவது பண்பாளனான ஜ்ஞாநம் என்று பெயர். ஆத்மாவிடம் இருக்கும் ஜ்ஞாநத்துக்கு த₄ர்ம ஜ்ஞாநம் – த₄ர்மபூ₄த ஜ்ஞாநம் – பண்பான ஜ்ஞாநம் என்று பெயர்.

ஒரு விளக்கு எரியும் பொழுது அதில் ஜ்வாலை என்ற ஒரு பொருள் உள்ளது. அது நெருப்பே வடிவானது. ஆனால் அது ஓரிடத்தில் மட்டும் தான் இருக்கும். அதற்கு மேல், அந்த ஜ்வாலையில் பண்பாக, அந்த ஜ்வாலையையே அண்டி இருக்கும் ’ஒளி’ – ’ப்ரபா₄’ என்ற ஒரு பொருள் உள்ளது. அது பல இடங்களுக்குப் பரவுகிறது. அதுவும் நெருப்பால் ஆனது தான். எப்படி தேஜஸ்ஸால் (நெருப்பால் ) ஆக்கப்பட்ட ஜ்வாலைக்கு நெருப்பால் ஆக்கப்பட்ட ஒளி என்பது பண்பாக இருக்கிறதோ , அதே போல் ஜ்ஞாநமே வடிவான ஜீவாத்மாவுக்கும் பண்பாக வேறொரு ஜ்ஞாநம் இருக்கிறது.

ஜீவாத்மா ’நான்’, ’நான்’ என்று தோற்றுவதெல்லாம் த₄ர்மி ஜ்ஞாநத்தின் தோற்றம். தன்னைத் தவிர்ந்த மற்ற பொருள்களை யெல்லாம் அறிவது தன்னுடைய த₄ர்ம ஜ்ஞாநத்தைக் கொண்டு தான். இந்த ஜ்ஞாநம் என்பது ஆத்மாவுக்கு இயற்கையானது, என்று ஆத்மாவோடு நிரந்தரமாக இருப்பது, உறக்கத்திலும் சரி மோக்ஷத்திலும் சரி இது ஒரு நாளும் ஆத்மாவை விட்டுச் செல்லாது, மோக்ஷத்தில் ஜ்ஞாநம் முழுமையாக மலர்கிறது என்பதே வேதாந்தத்தின் ஸித்தாந்தம்

2-3-4-ஜ்ஞாதி₄கரணம்-ஜீவாத்மா அறிவுடையவரே -ஜீவாத்மா இயற்க்கையாக அறிவுடையவரே – ஸித்தாந்தம் – முன் சொல்லப்பட்ட இரண்டு பூர்வ பக்ஷங்களையும் கண்டித்து வேதாந்தம் கூறும் ஸித்தாந்தத்தை வேத வ்யாஸர் இந்த அதிகரணத்தில் 14 ஸூத்ரங்களால் காட்டுகிறார்.

1– ஜ்ஞ: அத எவ – “(ஜீவாத்மா) அறிவுடையவர் தான், அதனாலேயே ”
ஜ்ஞ:என்றால் அறிபவர் -அறிவாளி-ஜ்ஞாதா என்று பொருள். (ஸர்வஞ்ஞன் -அனைத்துக்கும் அறிபவர் போல் )ஜீவாத்மா அறிவாளி தான் என்கிறார் வ்யாஸர். இத்தால், ஜீவாத்மா அறிவு மட்டுமே , அறிவாளி அல்ல என்ற ஸாங்க்யர்களின் மதத்தை மறுக்கிறார்.
அத ஏவ’ என்றால் அதனாலாயே -அந்தக் காரணத்தாலேயே என்று பொருள். முன் அதிகரணத்தில் ஆத்மா நித்யமானவர் என்று நிரூபிக்க ஸ்ருதி என்ற வேதத்தையே காரணமாகக் கூறி யிருந்தார் வ்யாஸர் – “நாத்மா ஸ்ருதே :” என்று. ஆகவே , ஸ்ருதி (வேதம்) என்ற அதே காரணத்தாலேயே ஜீவாத்மா அறிவுடையவர் என்றும் தெரிகிறது என்று ஸூத்ரத்தின் பொருள்.

வேதத்தில் பல இடங்களில் ஆத்மா அறிவுடையவர் என்று கூறப்படுகிறது –
அத₂ யோ வேத₃ ஜிக்₄ராணீதி ஸ ஆத்மா – “எவனொருவன் ’நான் முகர்கிறேன்’ என்று அறிகிறானோ அவன் தான் ஆத்மா
ஸத்ய ஸங்கல்ப: – “முக்தனான ஜீவாத்மா நினைப்பதெல்லாம் நடக்கிறது”
ய: அயம் விஜ்ஞாந மய: ப்ராணேஷு ஹ்ருதி₃ அந்தர் ஜ்யோதி: புருஷ: -“ஹ்ருதயத்தில் மூச்சுக் காற்றோடு இருக்கும் ஜீவாத்மா தான் ஜ்ஞாநமே வடிவானவர், ஜ்ஞாநத்தை உடையவரும் கூட”

ஞானாத்யேவ அயம் புருஷ போன்ற ஸ்ருதி வாக்கியங்களும் உண்டு

ஆத்மா மிக நுண்ணியவர் (அணு) ஆத்மா விபு₄வாக எங்கும் வ்யாபித்திருப்பதால், அவருக்கு ஜ்ஞாநம் இயற்கையான பண்பாக இருந்தால் அவர் எப்போதும் அனைத்தையும் அறிய வேண்டுமே ? அப்படி உலகில் காண்பதில்லை -.எனவே ஆத்மாவுக்கு இயற்கையாக ஜ்ஞாநம் கிடையாது – என்று பூர்வ பஷி கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதில் சொல்கிறார் வ்யாஸர் –
2–உத் க்ராந்தி ् க₃தி ஆக₃தீநாம் –
“புறப்படுதல், செல்லுதல் மற்றும் வருதல் (சொல்லப் படுவதால்)”
ஆத்மா எப்போதும் அனைத்தையும் அறியாததற்குக் காரணம் அவருக்கு இயற்கையாக ஜ்ஞாநம் இல்லாமை அல்ல.-அவர் விபு₄வாக இல்லாத படியால் தால். வேதத்தில் உத்க்ராந்தி (ஆத்மா உடலில் இருந்து புறப்படுதல்) க₃தி (ஆத்மா ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்குச் செல்லுதல்) மற்றும் ஆக₃தி (திரும்பவும் இவ் வுலகுக்கு வருதல்) சொல்லப்படுவதால் ஆத்மா சிறிய அளவுடையவர் தான் என்று நாம் அறியலாம். எங்கும் நிறைந்திருக்கும் பொருள் எப்படி ஓரிடத்திலிருந்து புறப்படவோ வேறிடம் செல்லவோ முடியும்?
உத்க்ராந்தி ஏஷ ஆத்மா நிஷ்க்ராமதி சக்ஷுஷோ வா மூர்த்₄நோ வா. –“இந்த ஆத்மா கண் மூலமோ தலை மூலமோ வேறொன்றாலோ உடலிலிருந்து புறப்படுகிறார்”
க₃தியே அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ர மஸமேவ ரத க₃ச்ச₂ந்தி -“யாரெல்லாம் இவ் வுலகத்திலிருந்து புறப்படுகிறார்களோ அவர்கள் சந்த்ரனையே அடைகிறார்கள்”
ஆக₃தி – தஸ்மாத் லோகாத் புந: ஏதி அஸ்மை லோகாய கர்மணே – “அவ் வுலகத்திலிருந்து திரும்பவும் இவ் வுலகத்துக்கு வருகிறார்கள், வினைப் பயன்கணை அநுபவிக்க”

3-ஸ்வாத்மநா ச உத்தரயோ : – “கடைசி இரண்டையும் தானாகவே தான் (செய்கிறார்)”
ஆஷேபம் – ஆத்மா உடலை விடுவது என்பது செல்வதல்ல, இருக்கும் இடத்திலேயே தொடர்பு அறுவது தான்
பதில் – அவ்வாறு இருந்தாலும் க₃தி (செல்லுதல்) ஆக₃தி (வருதல்) என்ற அடுத்த இரண்டையும் ஆத்மா தானாகவே தான் செய்ய வேண்டும், எனவே ஆத்மா சிறியவர் தான். நீக்கமற நிறைந்தவராக இருக்க முடியாது.

ஆத்மா மிக நுண்ணியவர் (அணு)
4- ந् அணு: அதச்ச்₂ருதே : இதி சேத் ந இதராதி₄காராத்
ந அணு:
– ஜீவாத்மா அணுவானவர் அல்ல
அதச்ச்₂ருதே : – அதற்கு நேர் எதிரான மஹத்த்வம் (பெரிய அளவு) அவருக்குச் சொல்லப்படுகிறபடியால்
இதி சேத் ந – என்று நீங்கள் கூறினால் அது தவறானது
இதராதி₄காராத் – வேறொருத்தரைப் பற்றின பேச்சுக்கு நடுவில் இருப்பதால்.

பூர்வ பக்ஷியின் கேள்வி – உபநிஷத்தில் “
ய: அயம் விஜ்ஞாந மய: ப்ராணேஷு ஹ்ருதி₃ அந்தர்ஜ்யோதி: புருஷ:
” என்று ஹ்ருதயத்தில் இருக்கும் ஜீவாத்மாவைப் பற்றிப் பேசத் துவங்கி விட்டு, (ஸ வா ஏஷ மஹாந் அஜ ஆத்மா) அதாவது “இந்த ஆத்மா பிறப்பில்லாதவரும் பெரியவரும் ஆவார்” என்று கூறப்படுகிறது. மஹாந் என்ற சொல்லுக்கு பெரிய அளவுடையவர் என்று பொருள். எனவே ஜீவாத்மா அணுவாக இருக்க முடியாது.
பதில் – ஜீவாத்மாவைப் பற்றிப் பேசி வரும் போது இந்த வாக்கியம் இடம் பெற வில்லை , இடையிலேயே பரமாத்மாவைப் பற்றி உபநிஷத் பேசத் துவங்கி விட்டு – “ (யஸ்ய அநுவித்த: ப்ரதிபு₃த்₃த₄: ஆத்மா) அதாவது “இந்த ஜீவாத்மாவால் உபாஸிக்கப்படுபவர் சிறந்த ஜ்ஞாநமுடைய பரமாத்மா” என்று. அதற்குப் பின்னால் தான் நீங்கள் காட்டிய வாக்கியம் உள்ளது. எனவே , அதில் மஹாந் என்று சொல்லப்படுபவர் பரமாத்மா தான், ஜீவாத்மா அல்ல.

5–ஸ்வ சப்₃த₃ உந்மாநாப்₄யாம் ச – “தன் சொல்லாலும், எடுத்து அளப்பதாலும் (ஆத்மா அணு தான்)”
ஸ்வ சப்₃த₃
: – நேரடியாகவே நுண்ணிய அளவைக் கூறும் ’
அணு’ என்ற சொல் ஜீவாத்மாணவப் பற்றிப் பயன் படுத்தப் படுகிறது உபநிஷத்தில் – (ஏஷ: அணு: ஆத்மா சேதஸா வேதி₃தவ்ய: )-அதாவது “இந்த அணுவான (நுண்ணிய) ஆத்மா மனதால் அறியப் பட வேண்டும்” என்று.
உந்மாநம் – ஒரு பொருளை அளவு கோலாக எடுத்து, அதைக் கொண்டு வேறொன்றை அளப்பது. வேதத்திலும்-(வாலாக்₃ர சத பா₄க₃ஸ்ய ததா₄ கல்பிதஸ்ய ச பா₄க₃: ஜீவஸ்ய விஞ்ஞஸ்ய:) அதாவது’ஒரு நெல் மணியின் நுனியில் நூற்றில் ஒரு பங்கில் நூற்றில் ஒரு பங்கு அளவு ஆத்மா இருப்பார்” எனப்படுகிறது –

ஓரிடத்திலிருந்து அனைத்தையும் அறிதல்
பூர்வ பக்ஷியின் கேள்வி –
ஆத்மா நுண்ணியவராக இருந்தால் உடல் முழுவதும் எப்படி உணர்ச்சி ஏற்படுகிறது? இதற்கு வேதவ்யாஸர் முதலில் வேறொருவரின் கண்ணோட்டத்தில் பதில் கூறுகிறார் அடுத்த 2 ஸூத்ரங்களால் –

6–அவிரோத சந்த₃நவத் – “முரண்பாடு இல்லை , சந்தநத்தைப் போல்”
சந்தனம் எப்படி உடலின் ஒரு பகுதியில் பூசப் பட்டாலும் உடல் முழுவதுக்கும் குளிர்ச்சி (ஆஹ்லாதம்) ஊட்டுகிறதோ , அதே போல் ஜீவாத்மாவும் உடலில் ஓரிடத்தில் மட்டும் இருந்தாலும் உடலெங்கும் ஏற்படும் வேதனையை அறிவதில் முரணில்லை –

7–அவஸ்தி₂தி வைஸேஷ்யாத் இதி சேத் ந அப்₄யுபக₃மாத், ஹ்ருதி₃ ஹி
மேற் சொன்ன பதிலில் பூர்வ பஷி கேட்கும் கேள்வியும் அதற்கு வ்யாஸரின் பதிலும் இந்த ஸூத்ரத்தில் உள்ளன.
அவஸ்தி₂தி வைஸேஷ்யாத் – “குறிப்பிட்ட (சிறப்பான) இடத்தில் இருப்பதால்” என்று பொருள். சந்தனம் உடலில் எங்கு பூசப் பட்டாலும் உடல் முழுவதுக்கும் குளிர்ச்சி ஏற்படுத்தாது. அதற்கென்று சில மர்மமான இடங்கள் உள்ளன –-நெஞ்சு, மூக்கு, கண், காது, என்பது போல். அங்கு பூசப் பட்டால் மட்டுமே உடலுக்குக் குளிர்ச்சி தரும். அதுபோல் ஆத்மாவுக்கு சிறப்பான ஸ்தா₂னம் (இருப்பிடம்) இல்லாத படியால் அவருக்கு உடல் முழுவதிலும் உணர்ச்சி வராது.
இதி சேத் ந – இவ்வாறு நீங்கள் கூறினால் அது தவறானது
அப்₄யுபக₃மாத் – ஆத்மாவுக்கும் உடலில் அதுபோல் குறிப்பிட்ட சிறப்பான இருப்பிடத்தை ஏற்கிறபடியால்
ஹ்ருதி₃ ஹி – ஹ்ருதயத்திலன்றோ (ஜீவாத்மா உணர்கிறார்)
(ஹ்ருதி₃ ஜி அயம் ஆத்மா தத்ர ஏக சதம் நாடீ₃நாம்) அதாவது உடலிலிருக்கும் 101 நாடிகளும் வந்து சேரக் கூடிய ஹ்ருதயத்திலன்றோ ஜீவாத்மா இருக்கிறார்” என்று வேதம் கூறுகிறது. எனவே நாடிகள் அனைத்தும் வந்து சேரக் கூடிய ஹ்ருதயம் என்கிற சிறப்பான இடத்தில் ஜீவாத்மா உள்ள படியால் அவரும் உடலெங்கும் ஏற்படும் இன்ப துன்பங்களை உணர்வதில் எந்த முரண்பாடும் இல்லை-

ஓரிடத்திலிருந்து அனைத்தையும் அறிதல்
-இவ்வாறு பூர்வபஷி எழுப்பிய கேள்விக்கு இரண்டு ஸூத்ரங்கைளால் வேறொருவர் கண்ணோட்டத்தில் பதிலளித்து விட்ட அநந்தரம் இனி தன்னுடைய பதிலைக் கூறுகிறார் வ்யாஸர் –

8– கு₃ணாத் வா ஆலோகவத் – “அல்லது (தன்னுடைய) குணத்தின் மூலம், ஒளியைப் போல்”
ஜீவாத்மா உடலில் ஓரிடத்தில் இருந்தாலும், உடலெங்கும் உணர்ச்சி ஏற்படுவதில் எந்த முரண்பாடும் இல்லை -ஏனென்றால், அந்த ஜீவாத்மா தன்னுடைய தனித் தன்மையான ஜ்ஞாநம் (அறிவு) என்ற குணத்தின் மூலம் இந்த உடல் முழுவதிலும் வ்யாபித்து (நிறைந்து) இருக்கிறார்.
ஒளியைப்போல் – தீபம் (சுடர் -ஜ்வாலை ) என்பது ஓரிடத்தில் இருந்தாலும், அதனுணடய ஒளி (ப்ரபா₄) என்பது அறை முழுவதும் நிறைந்திருப்பது போல், ஜீவாத்மாவும் தன் ஜ்ஞாநத்தால் உடலை வ்யாபித்து இருக்கிறார்-(ஸுவ்பரி ஆபாத விருத்திக்கு -50 சரீரங்களை எடுத்துக் கொண்டு ஞானத்தைக் கொண்டு இயக்கிய வ்ருத்தாந்தம் உண்டே-).
பூர்வ பக்ஷியின் கேள்வி – ஜ்ஞாநம் என்பது ஆத்மாவின் பண்பு என்று எப்படி அறிகிறீரர்கள்? ஜ்ஞாநமே தானே ஆத்மா?
வ்யாஸரின் பதில் – அடுத்த இரண்டு ஸூத்ரங்களால்

9– வ்யதிரேக: க₃ந்த₄வத் ததா₂ ச த₃ர்ஸயதி –“(ஜ்ஞாநத்துக்கு ஆத்மாவிடமிருந்து) வேறுபாடு மணத்தைப் போல், (வேதம்) அவ்வாறு காட்டுகிறது”
உலகில் “மணமுடைய புஷ்பம்” என்று அறிவதால், புஷ்பம் என்கிற பொருளுக்கு மணம் என்பது குணம் (பண்பு) ஆகிறது. அதனால் மணம் என்பது புஷ்பத்தைக் காட்டிலும் வேறுபட்டது என்று தெரிகிறது. அதே போல் வேதமும்- (ஜாநாத் யேவாயம் புருஷ:) அதாவது இந்த ஆத்மா அறிவுடையவரே ” என்று கூறுவதால், ஜ்ஞாநம் என்பது ஆத்மாவின் பண்பாகிறது, எனவே ஆத்மாவைக் காட்டிலும் ஜ்ஞாநம் வேறு என்று தெரிகிறது.

10-ப்ருத₂க் உபதே₃சாத் – “தனியானது என்கிற உபதேசத்தால் ”
வேதத்தில் (ந விஜ்ஞாது: விஜ்ஞாதே : விபரிலோபோ வித்₃யதே ) அதாவது “ஆத்மாவினுடைய ஜ்ஞாநத்துக்கு அழிவு இல்லை ” என்று தெளிவாக ஆத்மா வேறு ஜ்ஞாநம் வேறு என்று உள்ளது –

ஆத்மாவை எப்படி ஜ்ஞாநம் என்று அழைக்கலாம்?–பூர்வ பக்ஷியின் கேள்வி – ஜ்ஞாநம் ஆத்மாவின் பண்பு தான் என்றால், அந்தர்யாமி ப்ராஹ்மணத்திலும் தைத்திரீயத்திலும் ஏன் ஜீவாத்மா ’ஜ்ஞாநம்’ என்று குறிப்பிடப்படுகிறார்? ஜ்ஞாநமுடையவர் என்று தானே சொல்ல வேண்டும்?
பதில் –
11-தத் ₃கு₃ண ஸாரத்வாத் து தத்₃வ்யபதே ₃ச : ப்ராஜ்ஞவத்
தத்₃கு₃ண ஸாரத்வாத் து –
ஜ்ஞாநம் என்ற குணத்தையே ஸாரமாகக் (முக்கியமான அடையாளமாகக்) கொண்டபடியால்
தத்₃வ்யபதே ₃ச : – ஜீவாத்மா ’ஜ்ஞாநம்’ என்றே அழைக்கப்படுகிறார்
ப்ராஜ்ஞவத் – பரமாத்மாவைப் போல
ஒரு பொருளினுடைய ஸாரமான (ப்ரதானமான) பண்பு எதுவோ , அப் பண்பைக் குறிக்கும் சொல்லைக் கொண்டு அந்தப் பொருளையும் குறிக்கலாம் என்று உலகில் ஒரு வழக்கமுண்டு. நம்மாழ்வாரை ’க்ருஷ்ண த்ருஷ்ணா தத்த்வம்’அதாவது ’க்ருஷ்ண பக்தி’ என்றே அழைக்கிறோம், அவருக்கு க்ருஷ்ண பக்தியை முக்கியமான பண்பான படியால்.

(நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் தன்னைத் தாழ்ந்தவன் என்று கொள்ளாமல் -புன்மையாகக் கருத்துவர் -தாழ்ச்சி யாகவே-கருதுவர் என்கிறார்)

அதுபோல் ஜீவாத்மாவின் ப்ரதானமான குணம் ஜ்ஞாநம். அதனால் ஆத்மாவையே ஜ்ஞாநம் என்று சொல்லலாம். இதுபோல் பரமாத்மாவுக்கும் உள்ளது. பரமாத்மாவின் ஸாரமான குணம் எல்லை யற்ற ஆநந்தம்-(ஸ ஏகோ ப்₃ரஹ்மண ஆநந்த₃: ) முதலான இடங்களில் ஆநந்தம் பரமாத்மாவின் பண்பு எனபட்டிருந்தாலும், (ஆநந்தோ ₃ ப்₃ரஹ்மேதி வ்யஜாநாத்) முதலான இடங்களின் பரமாத்மாவை ஆநந்தம் என்றே குறிப்பிடப்படுகிறது வேதம். இதுவும் இதே வழக்கத்தை அடி யொற்றித்தான்.
12-யாவதா ₃த்ம பா₄வித்வாத் ச ந தோ₃ஷ: தத்₃த₃ர்ஸநாத்
ஜ்ஞாநத்தைக் குறிக்கும் சொல் ஆத்மாவைக் குறிப்பதில் எந்த தோஷமும் இல்லை , ஏனென்றால் ஜ்ஞாநம் என்பது ஆத்மாவின் இயற்கையான நிரந்தரமான பண்பு, ஆத்மா உள்ள வரை அதுவும் இருக்கும்.
இங்கு ’ ச ’ என்ற சொல்லால் ஆத்மாவை ஜ்ஞாநம் என்று அழைப்பதற்கு வேறொரு காரணமும் கூறப்படுகிறது – நம் மதத்தில் அறிவாளியான ஆத்மா தானும் ஜ்ஞாநமே வடிவமானவர் என்பதால் எந்த தோஷமும் இல்லை – என்று.

(ஸ்வரூப நிரூபக தர்மம் என்பதால் ஞானம் என்றே சொல்லலாம் –ச -அதனாலும் தோஷம் இல்லை என்றது மறைமுகமாக வேதாந்தப்படி ஞானமயமாயும் ஞானத்துடனும் இருப்பதால் -)

உறங்கும் போது ஏன் ஜ்ஞாநம் தோன்றவில்லை ?
பூர்வ பக்ஷியின் கேள்வி –
ஆத்மாவுக்கு ஜ்ஞாநம் இயற்கையாக என்றுமே இருக்கும் பண்பு என்றால் ஆழ்ந்த உறக்கத்தில் அது வெளிப்பட வேண்டுமே ? அப்படி காணப்படவில்லை . ஆக அப்போது ஆத்மாவுக்கு ஜ்ஞாநமே இல்லை – பதில் –
13–பும்ஸ்த்வாதி ₃வத் து அஸ்ய ஸத: அபி₄வ்யக்தி யோகா₃த்
அஸ்ய-
– இந்த ஜ்ஞாநத்துக்கு
ஸத: எப்போதும் இருப்பினும்
அபி₄வ்யக்தி யோகா₃த் –ஒரு காலத்தில் வெளிப்பாடு என்று ஏற்பட முடியுமான படியால்
பும்ஸ்த்வாதி₃வத் து – ஆண்மை முதலானவற்றைப் போல
ஒரு குழந்தை பிறக்கும் போதே ஆண் தன்மை அல்லது பெண் தன்மை யோடும், அதற்கான உருப்புகளோடும் தான் பிறக்கிறது.(சரீரம் ஏழு தாதுக்களுடன் பிறக்கிறது – ) ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வரை அப் பண்புகள் வெளிப்படுவதில்லை -, உருப்புகள் இயங்குவதில்லை -. அதற்காக அது வரை அந்தக் குழந்தைக்கு ஆண் தன்மையோ பெண்தன்மையோ இல்லவே இல்லை என்று சொல்லி விட முடியாது. அதே போல் தான் ஜ்ஞாநம் எப்போதுமே ஆத்வாவிடம் இருந்தாலும், விழித்திருக்கும் போது மட்டும் வெளிப்படுகிறது -தோற்றமளிக்கிறது என்று கொள்வதே பொருத்தமானது. ஜ்ஞாநமே இல்லை என்னக் கூடாது.
(ந ப்ரேத்ய ஸம்ஜ்ஞாஸ்தி) என்னும் வாக்யமும், முக்திக்குப் பின் ஜ்ஞாநமே இல்லை என்று சொல்லவில்லை – உடலையும் ஆத்மாவையும் ஒன்றாக நினைக்கும் மயக்கமில்லை என்று தான் கூறுகிறது.

14-நித்யோ பலப்₃தி₄ப்ரஸங்க₃: அந்ய தர நியமோ வா அந்யதா₂-
இப்படி வேதாந்தம் சொன்ன பக்ஷத்தை ஏற்காமல் எங்கும் நிறைந்த ஆத்மா ஜ்ஞாநம் மட்டுமே என்று கொண்டால் எப்போதுமே அறிவும் அறிவின்மையும் சேர்ந்தே இருக்க வேண்டும், அல்லது எப்போதுமே அறிவு மட்டும் தான் இருக்க முடியும், அல்லது எப்போதுமே அறிவின்மை தான் இருக்க முடியும். எனவே அது பொருந்தாது.

இவ்வாறு இவ்வதிகரணத்தில் ஜ்ஞாநமே வடிவான ஆத்மா ஜ்ஞாநத்தை உடையவரும் கூட என்று நிரூபிக்கப்பட்டது

2-3-5-கர்த்ரதி₄கரணம் –ஜீவாத்மா தான் செயல் படுபவர் -கர்த்ரதி₄கரணம்–ஸங்கதி – முன் அதிகரணத்தில் ஆத்மா ஜ்ஞாந முடையவர் தான் என்று நிரூபிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த அதிகரணத்தில் அந்த ஆத்மா ’கர்த்தா’ அதாவது செயல்படுபவரா? அல்லவா? என்கிற ஆராய்ச்சி செய்யப்படுகிறது.-
பூர்வ பக்ஷியின் வாதம்-– ஆத்மா ’கர்த்தா’ அல்ல, அதாவது அவர் எந்தச் செயல்களையும் செய்வதில்லை . ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களை உடைய ப்ரக்ருதி- ப்ரதானம் என்ற அசேதனப் பொருள் தான் எல்லாச் செயல்களையும் செய்கிறது. ஆத்மாவைப் பற்றிப் போதிக்கும் பல ஸாஸ்த்ரங்கள் இவ்வாறே கூறுகின்றன-

கடோபநிஷத்தில் -ஹந்தா சேத் மன்யதே ஹந்தும் ஹத: சேத் மந்யதே ஹதம்| உபௌ₄தௌ ந விஜாநீத: நாயம் ஹந்தி ந ஹந்யதே || “ஒருஜீவாத்மா தன்னைக் கொல்பவனாக நினைத்தால் அவன் தன்னை உணர வில்லை என்று பொருள். ஜீவாத்மா கொல்வதே இல்லை ”

பகவத்கீதையில்- ப்ரக்ருதே : க்ரியமாணாநி கு₃ணை : கர்மாணி ஸர்வச : | அஹங்கார விமூடா₄த்மா கர்த்தா அஹம் இதி மந்யதே || “ப்ரக்ருதியின் குணங்களான ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்பவை தான் அனைத்துச் செயல்களையும் செய்கின்றன. உடலும் தானும் ஒன்று என்னும் மயக்கத்தில் இருப்பவன் தான் தன்னையே கர்த்தா என்று தவறாக நினைத்துக் கொள்கிறான்.
ஆக இப்படி பல இடங்களில் ஆத்மா எந்தச் செயலையும் செய்வதில்லை என்று சொல்லப்பட்டுள்ளதால் ஆத்மா கர்த்தா அல்ல, ப்ரக்ருதி தான் செயல் படுகிறது என்று பூர்வ பஷி கூறுகிறார்.

வேதம் வீணாகக் கூடாது (இந்த பூர்வ பக்ஷத்தை 7 ஸூத்ரங்களால் கண்டித்து உபநிஷத் சொல்வதை நிரூபிக்கிறார் வ்யாஸர்)1–கர்த்தா ஸாஸ்த்ரார்த்த₂ வத்த்வாத்–“(ஜீவாத்மா தான்) செய்பவர்; ஸாஸ்த்ரம் பயனுள்ளதானபடியால்” • வேதங்களில் உள்ள கட்டளைகள் எல்லாம்-

(ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க₃காம: யஜேத) அதாவது “ஸ்வர்கத்தை ஆசைப் படுபவன்(அதை அடைவதற்காக) ஜ்யோதிஷ்டோமம் என்னும் யாகத்தைச் செய்யக் கடவன்” என்பது போல் தான் உள்ளன. எனவே , யார் பயனை அடையப் போகிறாரோ (போ₄க்தா) அவர் தான் செயல்களைச் செய்பவர் (கர்த்தா) என்று தெரிகிறது. எனவே , இன்ப துன்பங்களை அநுபவிக்கக் கூடியஜீவாத்மா தான் கர்த்தாவாக(செயல் படுபவராக) இருக்க முடியும், ப்ரக்ருதி அல்ல.
மேலும், இந்த ஸூத்ரத்தில் வேதத்தை ’ஸாஸ்த்ரம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் வ்யாஸர்.’ஸாஸ்த்ரம்’ என்ற சொல்லுக்கே ’ஸாஸநம் செய்வது – ஆணை யிடக் கூடியது-செயல் பட வைப்பது’ என்று பொருள். அதாவது, செயல் படாமல் இருப்பவனை செயல் பட வைக்கும் நூல் தான் ஸாஸ்த்ரம். ஒரு நூலானது அறிவை ஏற்படுத்துவதன் மூலம் தான் ஒருவனை செயல் பட வைக்க முடியும். எனவே , அறிவுடையவனான(ஜ்ஞாதா) ஜீவாத்மா தான் செயல்படுபவனாக(கர்த்தா) இருக்க முடியும், ப்ரக்ருதி அல்ல. –இதை ஏற்காமல், அறிவும் இல்லாத இன்ப துன்பங்களையும் அநுபவிக்காத ப்ரக்ருதி தான் செயல்படுகிறது என்றால், அப்போது ஸாஸ்த்ரத்தால் அந்த செயல்பாடு ஏற்பட முடியாத படியால் ஸாஸ்த்ரம் அனைத்தும் வீணாகி விடும்

(ஞாத்ருத்வம் கர்த்ருத்வம் போக்த்ருத்வம் -அறிவு செயல்பாடு அனுபவம் -மூன்றும் யாருக்கு யாரால் என்பதை சரியான அறிய வேண்டும்-ஆத்மா நித்யம் என்பதைக் காட்டவே கீழ்ச் சொன்ன வேத வாக்கியங்களும் கீதா ஸ்ம்ருதியும் – கொல்லவும் இல்லை கொலை பண்ணவும் இல்லை என்கிறது -கொல்லப்படுபவன் கொல்கிறேன் என்றும் நினைப்பவன் முட்டாள் என்கிறது -பிரக்ருதியுடன் தொடர்பால் வந்தவை செயற்கை -இயற்கையில் சுக வடிவம் -இங்கு குணங்களால் செய்விக்கப்படுகிறாய் என்பதைக் காட்டவே கீதா வசனம் –உடல் ஜீவாத்மா இந்திரியங்கள் மூச்சுக் காற்று பரமாத்மா ஐவரும் சேர்ந்து தான் செயல்களைச் செய்கிறார்கள் என்றும் கீதையில் உண்டே)

2–உபாதா₃நாத் விஹாரோ தே₃ஸாத் ச – “கைக் கொள்வதும் திரிவதும் சொல்லப்படுவதாலும்”
வேதத்தில்(ஏவமே வைஷ ஏதாந் ப்ராணாந் க்₃ருஹீத்வா ஸ்வே ஸரீரே யதா₂காமம் பரிவர்ததே )அதாவது “இந்த ஜீவாத்மா ஐந்து வகையான ப்ராண வாயுக்களையும் எடுத்துக் கொண்டு தன் ஆணைப்படி உடலுக்குள் திரிகிறார்” என்று சொல்லப் படுகிறது. இதில் தெளிவாக ப்ராணங்களை எடுத்தல்- கைக் கொள்ளுதல் என்ற செயலையும் திரிதல் என்ற செயலையும் செய்பவர் ஆத்மாவே என்று கூறப்படுள்ள படியாலும் எல்லாச் செயல்களிலுமே ஜீவாத்மா தான் கர்த்தாவாக இருக்க வேண்டும், ப்ரக்ருதி அல்ல.

ஸித்தாந்தியின் வாதங்கள் -தொடர்கிறது –
3) வ்யபதே ₃சாத் ச க்ரியாயாம், ந சேத் நிர்தே₃ச விபர்ய்ய:
க்ரியாயாம்
– எல்லாச் செயல்களிலும் வ்யபதே ₃சாத் (ஜீவாத்மாவையே செய்பவராக வேதம்) குறிப்பிடுகிற படியாலும்(அவரே கர்த்தா)
தைத்திரீய உபநிஷத்தில் (விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே கர்மாணி தநுதே அபி ச ) அதாவது “விஜ்ஞாநம் எனப்படும் ஜீவாத்மா யாகம் முதலான வைதிகச் செயல்களையும் ஸாதாரண உலகச் செயல்களையும் செய்கிறார்” என்று தெளிவாக ஜீவாத்மாவே கர்த்தா என்று சொல்லப்பட்டுள்ளது என்று காட்டுகிறார் வ்யாஸர்.
ந சேத்–(இவ்வாறு) இல்லை யென்றால்-(அதாவது இந்த வேத வாக்யத்தில் விஜ்ஞாநம் என்று சொல்லப்படுவது ஜீவாத்மாஅல்ல, புத்₃தி₄ எனப்படும் மனது தான்,-அது தான் செயல்களை யெல்லாம் செய்கிறது என்றால்)
நிர்தே ₃ச விபர்ய்ய:-குறிப்பிடுவதில் மாற்றம் இருந்திருக்க வேண்டும்–அதாவது, மனது என்பது கருவியான படியால் “விஜ்ஞாநத்தால் யாகம் செய்யப் படுகிறது” என்று சொல்லி யிருக்க வேண்டும், ஆனால் “விஜ்ஞாநம் யாகம் செய்கிறது” என்றே சொல்லப் பட்டுள்ளது. எனவே இங்கு விஜ்ஞாநம் என்பது மனது அல்ல, ஜீவாத்மாவே ; அவரே கர்த்தா.

4–உபலப்₃தி₄வத் அநியம:- “அறிவைப் போல் வரை யறை இல்லாமை ஏற்பட்டு விடும்”
முன் அதிகரணத்தில் “நித்யோபலப்₃த்₄யநுபலப்₃தி₄ப்ரஸங்க₃:…” என்ற கடைசி ஸூத்ரத்தில் இவ்வாறு கூறப்பட்டது– ஜீவாத்மா எங்கும் உள்ளார், அவர் ஜ்ஞாநமே வடிவமானவர் என்று பூர்வபக்ஷிகள் சொல்வது உண்மை யானால் ஒன்று எப்போதுமே நமக்கு அறிவு ஏற்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும், அல்லது எப்போதுமே ஏற்படாமலேயே இருக்க வேண்டும். ஒரு ஸமயத்தில் அறிவு, ஒரு ஸமயத்தில் அறிவின்மை என்கிற வரை யறை பொருந்தாது”.
அதே போல் ப்ரக்ருதி தான் செயல்படுகிறது என்றால், அது எல்லா ஜீவாத்மாக்களுக்கும் பொதுவானபடியால், ப்ரக்ருதி ஒரு செயலைச் செய்ததும் ஒரே ஸமயத்தில் எல்லா ஜீவாத்மாக்களும் அதே பயனை அடைந்து விட வேண்டும், ப்ரக்ருதி செய்யா விட்டால் எல்லாருமே பயனை அடையாமல் இருக்க வேண்டும். சிலர் அடைந்து சிலர் அடையாமலிருப்பது என்கிற நியமம்(வரை யறை ) ஏற்பட முடியாமல் போய் விடும். அதனால் ஜீவாத்மா தான் கர்த்தா.-

( ஸித்தாந்தியின் வாதங்கள் தொடர்கின்றன )
5-சக்தி விபர்யயாத்
– “(இன்ப துன்பங்களை அநுபவிக்கும்) சக்தி மாறி யிருக்க வேண்டும்”
புத்தி எனப்படும் மனது தான் செயல்படுகிறது என்றால், அப்போது அச் செயல்களின் பயனாய் ஏற்படும் இன்ப துன்பங்களையும் அந்த மனது தான் அநுபவிக்க வேண்டும். அப்படியானால் போ₄க்த்ருத்வம் (இன்ப துன்பங்களை அநுபவிக்கும் சக்தி) என்பதும் ஜீவாத்மாவிட மில்லை -மனதில் தான் உள்ளது என்று மாற்றி ஏற்க வேண்டும்.
ஆனால் உங்கள் மதத்தில்“(புருஷ: அஸ்தி போ₄க்த்ரு பா₄வாத்) அதாவது“இன்ப துன்பங்களை அனுபவிக்கும் தன்மை யிருப்பதால் தான் ஜீவாத்மா என்ற பொருளை ஏற்கிறோம்”என்று கூறுகிறீர்கள். அந்த போ₄க்த்ருத்வமும் மனதுக்குத் தான் உள்ளது என்றால், ஜீவாத்மா என்ற ஒரு பொருளே இல்லை என்றாகி விடும்.

6–ஸமாத்₄ யபா₄வாச் ச – “ஸமாதி₄ என்பதும் ஏற்ப முடியாமல் போய்விடும்”
உங்களுடைய(ஸாங்க்ய) மதத்தில் “அசேதனமான ப்ரக்ருதி வேறு, அறிவுடையவனான நான் வேறு” என்கிற த்யானம் தான் மோக்ஷத்தை அடையும் வழி ஆகும். இதற்கு ஸமாதி₄ என்று பெயர் (நிரீஸ்வர சாங்க்ய மதத்தில் ஈஸ்வரனே இல்லை -நாம் த்யானம் என்பதை பரமாத்மாவைப் பற்றியே-இது வாசி ). ப்ரக்ருதி தான் எல்லாச் செயல்களையும் செய்கிறது என்றால், அப்போது ஸமாதி எனும் த்யானத்தையும் ப்ரக்ருதி தான் செய்ய வேண்டும். ஆனால், ப்ரக்ருதி எப்படி “நான் ப்ரக்ருதி அல்ல” என்று த்யானிக்க முடியும்? எனவே உங்கள் மதத்தில் ஸமாதி என்பதே பொருந்தாது

பூர்வ பக்ஷியின் கேள்வி–ஜீவாத்மா தான் கர்த்தா என்றால், ஏன் எப்போதுமே செயல்பாடுகள் இருப்பதில்லை?
பதில் –7– யதா₂ ச தக்ஷா உப₄யதா₂-
“தச்சனைப் போல் இரண்டு விதமாகவும் (பொருந்தும்)”
ஒரு தச்சன், தன்னிடம் எல்லாக் கருவிகளும் இருந்தாலும், தான் சில ஸமயங்களில் வேலை செய்கிறான், சில ஸமயங்களில் ஓய்வெடுக்கிறான். அதே போல் புலன்கள் என்ற கருவிகளை உடைய ஜீவாத்மாவும் தன்னுடைய ஆணைப்படி சில ஸமயங்களில் மட்டும் செயல்படுகிறார் என்பது பொருத்தமானதே . உங்கள் மதத்தின் படி ப்ரக்ருதி செயல்படுகிறது என்றால் தான் அதற்கு அறிவு- ஆணை இல்லாத படியால் எபபோதுமே செயல்பாடு ஓயாது.

ஆக, இவ்வாறு அறிவுடையவரான ஜீவாத்மா தான் கர்த்தா (செயல்படுபவர்) என்று நிரூபித்தார் வ்யாஸர்.

ஆத்மாவுக்கும் உத்பத்தி உண்டா-மூன்றாம் அதிகரணத்தில் சொல்லி -மேல் நான்கு அதிகரணங்கள் ஆத்மாவைப் பற்றிய ஆராய்ச்சி செய்கிறார் அன்றோ -கீழே-ஞாத்ருத்வம் -சொல்லி -மேல் கர்த்ருத்வம் சொல்லி -இனி போக்த்ருத்வம் பற்றிச் சொல்ல வேண்டுமே -தானாக செய்கிறாரா பிறர் வசத்தால் செய்கிறாரா -என்கிற விசாரம் வேண்டுமே –

2-3-6-பராயத்தாதி₄கரணம்-பரமாத்மா எப்படி ஜீவாத்மாக்களை இயக்குகிறார்?
ஜீவாத்மா பரமாத்மாவால் இயக்கப்படுகிறார்–2-3-6-பராயத்தாதி₄கரணம் – ஸங்கதி
– ஜீவாத்மா தான் கர்த்தா (செயல்படுபவர்) என்று முன் அதிகரணத்தில் நிரூபிக்கப்பட்டது. அதில் ஒரு ஸந்தேகம் எழுகிறது – ஜீவாத்மா தன்னிச்சையாக ஸ்வ தந்த்ரனாகச் செயல் படுகிறாரா?அல்லது பரமாத்மாவை எதிர்பார்த்து, அவரால் இயக்கப்பட்டு செயல் படுகிறாரா? என்று. அந்த ஆராய்ச்சியைத் தான் இந்த அதிகரணத்தில் வ்யாஸர் செய்கிறார்.
பூர்வபக்ஷம் – ஜீவாத்மா ஸ்வ தந்த்ரமாகத் தான் செயல் படுகிறார், பரமாத்மாவை எவ் விதத்திலும் எதிர்பார்ப்பதில்லை , அவருக்கு வஸப்பட்டும் இல்லை . ஏனென்றால், இப்படி ஏற்கா விட்டால், வேதத்தில் உள்ள கட்டளைகள் எல்லாம் வீணாகப் போய்விடும்.

வேதத்தில் “இதைச் செய்” என்ற கட்டளைகளுக்கு ’விதிகள்’ என்று பெயர். “இதைச் செய்யாதே ” என்ற
கட்டளைகளுக்கு ’நிஷேதங்கள்’ என்று பெயர். இந்தக் கட்டளைகள் அனைத்துமே ஜீவாத்மாவை நோக்கித் தான் உள்ளன. ஒருவருக்குக் கட்டளையிட வேண்டுமென்றால் அவர் தன் புத்தியாலே சிந்தித்து, முடிவெடுத்து ஒரு செயலைச் செய்யவோ செய்யாமலிருக்கவோ சக்தி உடையவராக இருக்க வேண்டும். ஆகவே , ஜீவாத்மா ஸ்வதந்த்ரமாகச் செயல் படுபவராகத் தான் இருக்க வேண்டும். பரமாத்மாவால் இயக்கப்படுபவராக இருந்தால், அவரைக் குறித்து வேதம் கட்டளை யிடுவதே வீணானதாகும்.

ஸித்தாந்தம் – 1–பராத் து தத் ச்ருதே : – “அந்த கர்த்ருத்வம் பரமாத்மாவிடமிருந்து; வேதம் சொல்வதால்”
ஜீவாத்மா செயல் படுவதெல்லாம் பரமாத்மாவை எதிர் பார்த்து தான், ஸ்வ தந்த்ரமாக அல்ல என்று வேதம் கூறுகிறது –
(அந்த: ப்ரவிஷ்ட: ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா) –“எல்லா ஆத்மாக்களுக்கும் உள்ளே புகுந்து இயக்குபவர் பரமாத்மாவே ”
(யஸ்ய ஆத்மா ஸரீரம், ய ஆத்மாநம் அந்தரோ யமயதி) –“யாருக்கு இந்த ஜீவாத்மா உடலாக உள்ளாரோ , யார் இந்த ஜீவாத்மாவை இயக்குகிறாரோ ”-

பர ஆயத்தம் -அவனால் நியமிக்கப்பட்டே செய்கிறான் –பராத் து -து –அன்றோ -தத் -அது -கீழ் சொல்லப்பட்ட கர்த்ருத்வம் -செயல்படும் தன்மை -பரமாத்மாவால் –பர -மிக உயர்ந்த -அவனிடம் இருந்து அன்றோ –ஆகாஸம் போல் எங்கும் பரவி ராஜா போல் நியமித்த ஸ்தாபனம் செய்கிறார் -ஆத்மா என்றாலே உள்ளே இருந்து இயக்குபவர் -ஆத்மா தனது சரீரத்தை இயக்க -பரமாத்மா அனைத்துக்குள்ளும் -ஆத்மாக்கள் உள்ளும் இருந்து –ஈஸ்வரன் -ஈஸன ஸாமர்த்யம் -கீதையிலும் தானே –யந்த்ர ஆரூடனான -மாயையால் ஸங்கல்பத்தால் இயக்குகிறேன் -என்றானே –

ஜீவனுக்குப் பரமாத்மா கொடுக்கும் ஸ்வாதந்த்ரம்
இங்கு ஒரு கேள்வி எழும்
– ஜீவாத்மா பரமாத்மாவால் தான் இயக்கப்படுகிறார் என்றால் வேதத்தில் அவரைக் குறித்த கட்டளைகள் எல்லாம் வீணாக ஆகி விடாதா? என்று. அதற்கான விடையை அடுத்த ஸூத்ரத்தில் அளிக்கிறார் வ்யாஸர்
2-ः க்ருத ப்ரயத்ந அபேக்ஷஸ்து விஹித ப்ரதிஷித்₃த₄ அவையர்த்₂யாதி₃ப்₄ய:
விஹித ப்ரதிஷித்₃த₄ அவையர்த்₂யாதி₃ப்₄ய:
– வேதத்திலுள்ள விதிகளும் நிஷேதங்களும், அவற்றின் படி நடப்பவர்களுக்குக் கிடைக்கும் பகவானின் அநுக்ரஹமும் நிக்ரஹமும், அதன் விளைவான இன்ப துன்பங்கணளயும் வீணாகப் போகக் கூடாது என்பதற்காக
க்ருத ப்ரயத்ந அபேக்ஷ: து – ஜீவாத்மாவால் செய்யப்பட்ட முயற்சியை எதிர்பார்த்து அன்றோ (பரமாத்மா இயக்குகிறார்)
பரமாத்மா ஜீவாத்மாவை இயக்குவது என்பது, செயல் படாமலிருக்கும் ஜீவாத்மாவை ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய வைப்பதல்ல. ஒரு ஜீவாத்மா தானாகச் சிந்தித்து, முடிவெடுத்து, ஒரு செயலில் முதல் முயற்சியை எடுக்கும் வரை பரமாத்மா உதா₃ஸீனனாக (தலை யிடாமல்) இருக்கிறார். நாம் செய்வதைப் பார்த்துக் கொண்டு அத்₄யக்ஷராக மட்டும் உள்ளார்.(உதாசீனனாகவும் –அத்யக்ஷ —அனுமந்தா ச –நடப்பதைப் பார்த்துக் கொண்டும் -அனுமதி வழங்கியும் அருளுகிறவன் ) அதற்குப் பின், இரண்டாவது வினாடியில், அச் செயலுக்குத் தன் அநுமதியை வழங்குகிறார். அந்த அநுமதி இல்லாமல் போனால் ஜீவனால் அந்தச் செயலைத் தொடர்ந்து செய்ய இயலாது. எனவே அவருக்கு வஸப்பட்டவனே .
1-விதி நிஷேங்களும் வீணல்ல – வேதத்தில் ஜீவனைக் குறித்து உள்ள விதிகளும் நிஷேதங்களும் வீணாக மாட்டா; ஜீவாத்மா முதல் முயற்சியில் முழுவதுமாக ஸ்வ தந்த்ரனாக (தன்னிச்சையாகச்) செயல் படுகிற படியால்.
2-பகவான் முழு முதற் காரணமே – இவ்வாறு கொள்வதால் பரமாத்மா உலகத்தில் அனைத்துக்கும் காரணம் என்பதும் காக்கப்படுகிறது. ஜீவாத்மாவுக்கு உடல், புலன்கள், ஜ்ஞாநம், இயங்கும் சக்தி என்னும் அனைத்தையும் பரமாத்மாவே அளிக்கிற படியால், ஜீவாத்மாவின் எல்லா முயற்சிகளுக்குமே பகவான் கண்டிப்பாகப் பொதுவான காரணமாக ஆவார்,
வெவ்வேறு செடிகள் அதனதன் விதையிலிருந்து உண்டாவதற்கு நிலம்-மண் பொதுவான காரணமாக இருப்பது போல்-அந்தந்தச் செயலுக்கு இரண்டாவது வினாடி தொடங்கி தன்னுடைய அநுமதியையும் கொடுக்கிறபடியால், சிறப்புக் காரணமும் ஆவார். ஆக மொத்தம், உலகில் அனைத்து அஸைவுகளுக்கும் கூடப் பரமாத்மா காரணம் தான்

சிலரை மட்டும் சிறப்பாக இயக்குகிறார்
3-பயனில் வரை யறை
– இப்படி பரமாத்மாவை எதிர்பார்த்தே ஜீவாத்மா இயங்கினாலும், அந்தச் செயல்பாடுகளின் பயனாக வரும் இன்ப துன்பங்களை ஜீவாத்மா மட்டுமே அநுபவிக்கிறார். பரமாத்மா அதற்குக் காரணமாக இருந்திருந்தாலும், அநுமதி கொடுத்திருந்தாலும், அவருக்கு அந்தச் செயல்களின் பயன் சேராது. இதை உலகத்திலேயே காணலாம் – ஒரு தந்தை தன் இரண்டு குழந்தை களுக்குத் தன்னுடைய செல்வத்தைப் பிரித்துக் கொடுக்கிறார். அதைக் கொண்டு ஒருவன் நற் செயல்களையும் மற்றொருவன் தீய செயல்களையும் செய்கிறார். அதன் விளைவாக வரும் புண்ய பாபங்களையும் இன்ப துன்பங்களையும் அவரவர் தான் அநுபவிக்க வேண்டும், அந்த தந்தைக்கு அதில் பங்கு கிடையாது. அதுபோல் பரமாத்மா நம்மை இயக்கினாலும் அவருக்கு கர்ம வினைகளில் தொடர்பு கிடையாது.

4-தயை உடைமை – சக்தி இருந்த போதும் தீய செயலில் ஈடுபடும் ஜீவாத்மாவைத் தடுக்காமல் இருந்ததால் பகவானை தயை அற்றவர் என்று கூறி விட முடியாது. அவர் கொடுக்கும் அநுமதி தான் அவர் நம் முயற்சிக்குக் கொடுக்கும் பரிசும் தண்டனையும். -ஒருவன் தவறு செய்வதை நிறுத்தின வினாடியிலேயே அவனுடைய அனைத்துப் பாபங்களை பகவான் மன்னிப்பதால் அவர் கண்டிப்பாக தயை உடையவரே (தத் அபிஸந்தி விராம மாத்ராத் -தவறு செய்யும் எண்ணம் நிறுத்திய உடனே -அல்ப அனுகூல்யமானவாறே -தயையைக் காட்டி அருளுகிறவன் ).

கேள்வி – பரமாத்மா நேரடியாகவே செயல் பட வைக்கிறார் என்றன்றோ வேதம் சொல்கிறது? –
(ஏஷ ஹி ஏவ ஸாது₄ கர்ம காரயதி தம் யம் ஏப்₄ய: லோகேப்₄ய: உந்நிநீஷதி)-அதாவது“பரமாத்மா யாரை உயர்த்த நினைக்கிறாரோ அவரை நற் செயல்களைச் செய்ய வைக்கிறார்” என்றும் (ஏஷ ஏவ அஸாது₄ கர்ம காரயதி தம் யம் அதோ ₄ நிநீஷதி) அதாவது “பரமாத்மா யாரைக் கீழே தள்ள ஆசைப் படுகிறாரோ அவர்களைத் தீய செயல்களைச் செய்யும்படி இயக்குகிறார்” என்றும் வேதம் சொல்கிறதே ?
பதில் – இது அனைவருக்குமல்ல. பகவானிடம் மிகவும் நெருக்கமான பக்தர்களுக்குத் தானே சில நல்ல எண்ணங்களை ஏற்படுத்தி, சில நற் செயல்களைச் செய்ய வைக்கிறார். மிகவும் பகைமை பாராட்டும் தீயவர்களுக்குச் சில தீய எண்ணங்களை ஏற்படுத்தி, சில தீய செயல்களைச் செய்ய வைக்கிறார். இது ஒரு சிலருக்கு மட்டுமே-(அதிமாத்ர அனுகூல்யர் -அதிமாத்ர பிரதிகூல்யர் -போல்வாருக்கு பிரதம பிரவிருத்தியிலேயே பகவான் செய்யும் செயல்கள் இவை-ததாமி புத்தி யோகம் –ஷிபாமி ஆஸூரா யோனி -இரண்டும் செய்வதாக தானே அருளிச் செய்துள்ளான் அன்றோ ) .
ஆக, ஜீவாத்மாவின் கர்த்ருத்வம் பரமாத்மாவின் வசத்துக்கு உட்பட்டது தான், ஸ்வதந்த்ரமானது அல்ல.

2-3-7-அம்சாதி₄கரணம்-ஜீவாத்மா பரமாத்மாவின் உடல்-
பூர்வபக்ஷிகளின் வாதங்கள்
2-3-7-அம்சாதி₄கரணம் – ஸங்கதி –
முன் அதிகரணத்தில் ஜீவாத்மா பரமாத்மாவின் வசத்தில் இயங்குகிறார் என்று கூறப்பட்டது. அப்படியானால் அவர்கள் முற்றிலும் வேறுபட்டவர்களா? அல்லது ஒருவரே தானா? என்று ஸந்தேஹம்.
வேதத்திலேயே பரமாத்மா படைப்பவர், இயக்குபவர், ஸர்வஜ்ஞர், தூய்மையானவர், ஸ்வதந்த்ரர் என்றும், ஜீவாத்மா படைக்கப் படுபவர், இயக்கப்படுபவர், அல்பஜ்ஞர், கர்மங்களால் மாசு பட்டவர், பரதந்த்ரர் என்றும் அவர்களுக்குள் வேறு பாட்டைச் சொல்லும் பே₄த₃ ஸ்ருதிகள் உள்ளன. அதே போல் ’தத் த்வம் அஸி’, ’அஹம் ப்ரஹ்மாஸ்மி’ ’அயம் ஆத்மா ப்ரஹ்ம’ போன்ற அபே₄த₃ ஸ்ருதிகள் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று என்று கூறுகின்றன. அதனால் தான் இந்த ஸந்தேஹம் எழுகிறது. இதை இந்த அதிகரணத்தில் ஆராய்கிறார்.

பூர்வ பக்ஷம் 1 – ந்யாய மதம் முதலானவை – பரமாத்மாவும் ஜீவாத்மாவும் முற்றிலும் வேறு பட்டவர்கள், தொடர்பற்றவர்கள்-வேதத்தில் உள்ள பே₄த₃ ஸ்ருதிகள் அப்படியே உண்மை யானவை . எனவே இருவரும் வெவ்வேறு தான். அபே₄த₃ ஸ்ருதிகள் ஒரு புகழ்ச்சிக்காக ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்கின்றன – கோயிலை சிறப்பாக நிர்வாஹம் சேய்யும் தர்ம கர்த்தாவைப் புகழ “இந்தக் கோயிலே இவர் தான்” என்று சொல்வது போல்.

பூர்வ பக்ஷம் 2 – அத்வைதம் முதலானவை – பரமாத்மாவே தான் அவித்யையால் மயங்கி ஜீவாத்மாவாக ப்ரமிக்கிறார்-இவர்கள் வேதத்தில் உள்ள அபே₄த₃ ஸ்ருதிகளை அப்படியே உண்மை என்று ஏற்கிறார்கள் – அதனால் ஜீவனும் பரனும் ஒன்று தான் என்கிறார்கள். பே₄த₃ ஸ்ருதிகள் நாம் உலகத்தில் பார்க்கும் பொய்யான வேறுபாடுகளைத் தான் மறுபடியும் ஒரு முறை கூறுகின்றன, உலகமனைத்தும் பொய் என்ற உண்மையைப் பிறகு உபதேசிப்பதற்காக என்கிறார்கள்.

பூர்வ பக்ஷம் 3 – பா₄ஸ்கர மதம் முதலானவை – பரமாத்மாவே ஓர் உபாதியின் சேர்க்கையால் ஜீவனாக ஆகிறார்-இரண்டாவது பூர்வ பக்ஷத்தில் ஒரே பரமாத்மா தன்னை பல ஜீவர்களாக நினைத்தால், ஒரு ஜீவன் முக்தி அடைந்தால் அனைவரும் முக்தி அடைய வேண்டி வரும். அதனால் அப்படிச் சொல்லாமல், பரமாத்மாவின் ஒவ்வொரு பகுதியிலும் உபாதிகள் என்று சில பொருள்கள் போய் சேர்கின்றன; ஒவ்வொரு உபாதியோடு கூடின பரமாத்மாவின் பகுதி தான் ஒவ்வொரு ஜிவாத்மா. எனவே ஓர் உபாதி பிரிந்தால் அந்த ஜீவாத்மா முக்தி அடைந்து விட்டார், மற்றவர்கள் இன்னும் அடைய வில்லை எனக் கொள்ளலாம்.-ஆக, பரமாத்மாவே உபாதிகளின் சேர்க்கையால் ஜீவர்களாகிறார் என்கிறார்கள்.

பரமாத்மாவின் பகுதி ஜீவாத்மா-ஸித்தாந்தம் – இந்த அதிகரணத்தில் 11 ஸூத்ரங்களால் இந்த பக்ஷங்களை யெல்லாம் தவறென்று நிரூபிக்கிறார் வ்யாஸர். பே₄த₃ ஸ்ருதிகளும் உண்மை யானவை , அதனால் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வெவ்வேறு பொருள்கள் தான். அபே₄த₃ ஸ்ருதிகளும் உண்மை யானவை , எனவே பரமாத்மாவை விட்டுப் பிரியாத அம்சமாக (பகுதியாக) ஜீவாத்மா இருக்கிறார்.

1–அம்ச: நாநா வ்யபதே₃சாத் அந்யதா₂ ச அபி தா₃ச கிதவாதி₃த்வம் அதீ₄யத ஏகே
அம்ச:
– ஜீவாத்மா பரமாத்மாவின் அம்சம் (பகுதி) தான், முற்றிலும் தனிப்பட்டவரோ பரமாத்மாவேயோ அல்ல
நாநா வ்யபதே ₃சாத் – (பே₄த₃ ஸ்ருதிகளில்) வேறு பட்டவராகக் குறிப்பிடப் படுகிற படியால்
அந்யதா₂ ச – வேறு மாதிரியும் (அதாவது அபே₄த₃ ஸ்ருதிகளில் பரமாத்மாவோடு ஒன்றாகவும்) குறிப்பிடப் படுவதால்
அபி தா₃ச கித வாதி₃த்வம் அதீ₄யத ஏகே – மேலும் ஒரு சிலர் பரமாத்மாவே தாசன் கிதவன் முதலானவர் என்பதால்-(கிதவன்-ஏமாற்றுக்காரன்-வஞ்சகன்- பகைவன் கைதவம் கைடவன் கிதவன் தவன் கைவந்தவன் தகாதவன் -பர்யாய சொற்கள் )

முதல் பூர்வ பக்ஷத்தில், அபே₄த₃ ஸ்ருதிகள் எல்லாம் வெறும் புகழ்ச்சிக்காக, உண்மை யானவை அல்ல எனப்பட்டது-தவறு. அதர்வண வேதத்தில் (ப்₃ரஹ்ம தா₃சா: ப்₃ரஹ்ம தா₃ஸா: ப்₃ரஹ்ம இமே
கிதவா:)
அதாவது“ப்ரஹ்மமே தான் அடிமைகள், ப்ரஹ்மமே தான் ஏமாற்றுக்காரர்கள்” என்று பரமாத்மாவைத் தாழ்ந்தவர்களோடு ஒன்றாகச் சொல்வது எப்படி புகழ்ச்சிக்காக இருக்க முடியும்? எனவே அது உண்மையைத் தான் சொல்கிறது. பரமாத்மா அவர்களுக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறபடியால் அவர்களாகவே சொல்லப்படுகிறார்.

இரண்டாம் பூர்வ பக்ஷத்தில் பே₄த₃ ஸ்ருதிகள் உலகத்திலுள்ள பொய்யான வேறுபாடுகளையே நினைவு கூறுகின்றன என்றதும் தவறு. அப்படியானால் நமக்குத் தெரியாத பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் இந்த வேதப் பகுதி நமக்குள்ள மயக்கத்தை வளர்க்கிறது என்றாகி விடும். வேதம் மயக்கத்தைப் போக்க வந்தது– வளர்க்க வந்ததல்ல.

மூன்றாவது பூர்வ பக்ஷத்தில் சொன்னது போல் ஒரே ப்ரஹ்மமே வெவ்வேறு உபாதிகளின் சேர்க்கையால் வெவ்வேறு தன்மை களை உடைய ஜீவர்கள் ஆகிறது என்று கூறியதும் தவறு. ஒருவரே வெவ்வேறு உபாதிகளால் வெவ்வேறு இடங்களில் தானே இயக்குபவராகவும் இயக்கப்படுபவராகவும் முரண்பட்ட பண்புகளோடு இருக்க முடியாது.

வெவ்வேறு; ஆனால் ஒன்று
2-மந்த்ர வர்ணாத் ् –
“மந்த்ரத்திலும் சொல்லப்படுவதால்”
வேதத்தில் (பாத₃: அஸ்ய ஸர்வா பூ₄தாநி) அதாவது-இந்த உலகிலுள்ளவை அனைத்தும் பரமாத்மாவின் ஒரு பாதம்’ எனப்படுகிறது. பாதம் என்பதற்கு பகுதி – அம்சம் என்று தான் நேரடியான பொருள்.

(ஜீவாத்மாக்கள் பலர் –ஸர்வ -எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில-அனைவரும் அவனின் அம்சமே)

3-அபி ஸ்மர்யதே – “மேலும் ஸ்ம்ருதியிலும் கூறப்படுகிறது (ஜீவாத்மா பரமாத்மாவின் அம்சம் என்று)”
பகவத் கீதையில் –(மமைவ அம்ச: ஜீவலோகே ஜீவ பூ₄த: ஸநாதன: )அதாவது“இந்த ஸம்ஸாரத்தில் உள்ள ஜீவாத்மாக்கள் அனைவரும் என்னுடைய அம்சங்கள் தான்” என்று கண்ணனும் ஸ்பஷ்டமாக அம்சம் என்ற சொல்லால் ஜீவாத்மா பரமாத்மாவின் ஒரு பகுதி தான் என்கிறார்.

ஜீவாத்மா பரமாத்மவின் அம்சம் (பகுதி) என்றால் ஜீவாத்மாவுக்கு இருக்கும் அறிவின்மை , துன்பங்கள், களைப்பு முதலான தோஷங்கள் எல்லாம் பரமாத்மாவுக்கும் உண்டு என்றாகி விடாதா? அடுத்த ஸூத்ரத்தில் பதிலளிக்கிறார் –
4–ப்ரகாசாதி₃வத் து; ந ஏவம் பர: – ப்ரகாசம் முதலானவை போல் அன்றோ ; பரமாத்மா அப்படி யல்ல
தீபத்தில் உள்ள ஜ்வாலை (சுடர்) என்பது ஒரு பொருள். ஒளி (ப்ராகாசம்) என்பது மற்றொரு பொருள் தான், ஆனால் அது ஜ்வாலையை விட்டுப் பிரியாமல் அதனுடைய அம்சமாக (பகுதியாக) உள்ளது. ப்ரகாசத்தோடு கூடிய ஜ்வாலை என்பது ஒரே பொருள் தானே . அதுபோல் ஜீவாத்மாவும் சரீரமும் வெவ்வேறு தான், ஆனால் பிரிக்க முடியாதபடியால் சரீரத்தோடு கூடிய ஆத்மா ஒன்றாகவே பேசப் படுகிறார். அது போல் ஜீவாத்மாவோடு கூடிய பரமாத்மாவே ஒரு பொருள் ஆகிறார்.
ஜீவாத்மா தனிப் பொருளாக இருந்தாலும் பரமாத்மாவிடமிருந்து பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறார்.
ந ஏவம் பர:
– “ஜீவாத்மா எப்படியோ அப்படி பரமாத்மா இல்லை ” என்கிறார் வ்யாஸர். அதாவது, இப்படி பகுதியாக இருக்கும் பொழுது, ப்ரகாசத்துக்கு உள்ள ’பரவுகிற’ தன்மை ஜ்வாலைக்கு இல்லை , உடலுக்கு உள்ள வளரும் -அழியும் தன்மை ஆத்மாவுக்கு இல்லை . அதுபோல் தான் ஜீவாத்மா என்கிற பகுதிக்கு (அம்சத்துக்கு) இருக்கும் அறிவின்மை , துக்கம் முதலானவை பரமாத்மாவுக்கு வராது.
ஆக இவ்வாறு பே₄த₃ ஸ்ருதிகள் அபே₄த₃ ஸ்ருதிகள் இரண்டுமே உண்மை யாகின்றன. இதுவே சரியான பொருளாகும் –

(ஆதி -கோத்வம்-கோ –உடல் ஆத்மா வேறாக இருந்தாலும் நாய் என்றதும் இரண்டையும் குறிக்கும் அன்றோ -அம்சமாக விட்டுப் பிரியாமல் இருப்பவை இவையும் – அப்ருதக் ஸித்த விசேஷணம் -உடலை விட்டுப் பிரிந்தால் சரீரம் இருக்காதது போல் பரமாத்மாவை விட்டு பிரிந்தால் ஜீவாத்மாவுக்கு ஸத்தையே இருக்காது —ந ஏவம் பர:உடலில் உள்ள குறைபாடுகள் ஆத்மாவுக்குத் தட்டாதவை போல் ஆத்மாவுடைய தோஷங்கள் பரமாத்மாவுக்கும் தட்டாதே -அபஹத பாப்மா இத்யாதி-)

தகுதிகளும் இன்ப துன்பங்களும் வெவ்வேறு
5- ஸ்மரந்தி ச
– “ஸ்ம்ருதியிலும் சொல்லப்படுகிறது (ஜீவாத்மா பரமாத்மவின் சரீரமானதால் அம்சம் என்று)”பராசர மஹரிஷி தன் விஷ்ணு புராணத்தில் இந்த ஜீவாத்மா பரமாத்மாவுக்கு சரீரமாக உள்ளதால் அம்சம் என்கிறார்.
ஏகதே ₃சஸ் தி₂தஸ்ய அக்₃நே : ஜ்யோத்ஸ்நா விஸ்தாரிணீ யதா₂ | பரஸ்ய ப்₃ரஹ்மண: சக்தி: ததே₂த₃ம் அகி₂லம் ஜக₃த் ||
சுற்றும் விரிந்திருக்கும் ஒளியானது எப்படி ஓரிடத்தில் இருக்கும் நெருப்புக்கு (அம்சமாக) இருக்கிறதோ ,அது போல் தான் இந்த உலகமனைத்தும் பரமாத்மாவுக்கு (அம்சமாக) இருக்கிறது.
(தத் ஸர்வம் வை ஹரே : தநு: ) – “அந்த உலகனைத்தும் ஹரியின் தநு (உடல்) ஆகிறது

கேள்வி – ஜீவாத்மாக்கள் அனைவருமே பரத்மாவுக்கு உடல் என்றால் அவர்களுக்குள் எந்த வேறுபாடுகளும் இல்லை -பிறகு ஏன் வேதங்களில் சிலருக்கு மட்டும் சில செயல்களில் தகுதி உண்டு, சிலருக்கு இல்லை என்று கூறப் படுகிறது?
6-அநுஜ்ஞா பரிஹாதரௌ ् தே₃ஹ ஸம்ப₃ந்தா₄த் ஜ்யோதிராதி₃வத்
அநுஜ்ஞா பரிஹாதரௌ
– அநுஜ்ஞா அநுமதி. பரிஹாரம் அநுமதி யின்மை . வேதத்தில் சிலருக்கு மட்டும் சில செயல்களைச் செய்ய அநுமதியும், சிலருக்கு அது தவிர்க்கப் படுவதும்
தே₃ஹ ஸம்ப₃ந்தா₄த் – (அவனவன் முன் வினைகளின்படி வெவ்வேறு விதமான) உடலோடு உள்ள தொடர்பால்
ஜ்யோதிராதி₃வத் – நெருப்பு முதலானவற்றைப் போல.
நெருப்பு ஒன்றாக இருந்தாலும், ஒருவர் வீட்டிலிருந்து நெருப்பு வாங்கிக் கொள்வோம், மயானத்திலிருந்து வாங்கிக் கொள்ள மாட்டோம் – தாழ்ந்த பொருளோடு தொடர்பு பட்டதால்.

(ஆதி -அன்னம்-பெருமாள் அமுது செய்து அருளிய ஒன்றே கொள்ளுகிறோம் – –உச்சிஷ்டம் -சிலர் இடம் தான் கொள்ளுகிறோம் -சிலர் இடம் கொள்ள மாட்டோம் -)

கேள்வி – பல ஜீவாத்மாக்கள் உள்ளார்கள் என்றால் ஒருவர் இன்ப துன்பங்களை மற்றொருவர் ஏன் அநுபவிப்பதில்லை ?
பதில் – 7-அஸந்ததே : ச அவ்யதிகர: – “அணுவான படியாலும் வேறான படியாலும் கலப்பு இல்லை ”
பரமாத்மாவே தான் அனைத்து ஜீவாத்மாக்கள் என்றாலோ ஜீவாத்மாக்கள் அநைவரும் விபுக்கள் என்றாலோ தான் எல்லாரும் எல்லா உடல்களோடும் தொடர்புள்ளபடியால் இன்ப துன்பங்கள் அனைவருக்கும் வரும், எங்கள் மதத்தில் ஜீவாத்மாக்கள் தனித் தனியான படியாலும் அணுவானவரான படியாலும் இந்த தோஷம் வராது –

மற்ற மதங்களில் குற்றங்கள்
பூர்வபக்ஷீ 2 –
எங்கள் மதத்திலும் ப்ரஹ்மம் அவித்₃யை என்ற தோஷத்தால் ஏற்பட்ட மயக்கத்தால் தான் ஜீவாத்மா ஆகிறார் என்கிறபடியால், அந்தந்த ஜீவனுக்கு இன்ப துன்பங்கள் தனித் தனியாக இருக்கலாமே ?
பதில் – 8- ஆபா₄ஸ ஏவ ச – “அந்தக் காரணங்கள் எல்லாம் தவறானவை”
ப்ரகாசமே வடிவமான விளக்கை இருட்டு மூடுவது என்பது விளக்கின் அழிவு தான், வேறல்ல, அதுபோல் ஜ்நாநமே வடிவமான ப்ரஹ்மத்தை அவித்₃யை (அறிவின்மை ) மூடுகிறது என்று நீங்கள் சொல்வது ப்ரஹ்மமே அழிகிறது என்று சொல்வதாகும். அது தவறானது.(ச -ஸ்ருதி ஸ்ம்ருதிகளுக்கும் பொருந்தாது)

பூர்வபக்ஷீ -3 – எங்கள் மதத்தில் உண்மையான உபாதிகளால் பிரிக்கப்பட்ட பரமாத்மாவின் பகுதிகள் தான் ஜீவாத்மா. அதனால் அவர்களுக்கு தனித் தனியாக இன்ப துன்பங்கள் இருப்பது பொருந்துமே ?
பதில் – 9- அத் ₃ருஷ்ட அநியமாத் – “அத்₃ருஷ்டத்துக்கு வரை யறை இல்லாத படியால் (பொருந்தாது)”
வெவ்வேறு உபாதிகள் வந்து பிரிக்கைக்குக் காரணமாக அத்ருஷ்டம் ஒரே பரமாத்மாவிடம் தான் இருக்கிற படியால், அதன் விளைவாக வரும் இன்ப துன்பங்கள் அனைத்துமே ஒரே பரமாத்மவுக்குத் தான் வந்து சேரும் உங்கள் மதத்திலும்.

10-அபி् ₄ஸந்த்₄யாதி₃ஷு அபி ச ஏவம் – “ஸங்கல்பம் முதலானவற்றிலும் அப்படியே ”
உபாதிகள் வந்து ப்ரஹ்மத்தோடு சேர்வதற்குக் காரணமானது அத்ருஷ்டம் என்கிறீர்கள். அதற்கும் காரணமானது செயல், அதற்கு முயற்சி வேண்டும், அதற்கு முன் ஸங்கல்பம் (எண்ணம்) வேண்டும். இவை அனைத்தும் ப்ரஹ்மத்திடம் தான் இருக்க வேண்டும், ஏனென்றால் இன்னும் ஜீவன் என்று ஒருவர் ஏற்படவே இல்லை . ஆக ஸங்கல்பம் முதலானவை பொதுவாக ப்ரஹ்மத்திடம் இருந்தால் எல்லா இன்ப துன்பங்களும் அவருக்கே வரும்.

11-ப்ரதே ₃ச பே₄தா₃த் இதி சேத் ந அந்தர் பா₄வாத்
ப்ரதே ₃ச பே₄தா₃த் –
அந்தந்த உபாதி₄ ப்₃ரஹ்மத்தின் வெவ்வேறு இடத்தில் சேர்கிறபடியால் இன்ப துன்பங்கள் தனி
இதி சேத் ந அந்தர்பா₄வாத் – என்று சொல்வது தவறானது, எல்லாம் ப்ரஹ்மத்தின் ப்ரதேசமான படியால் இறுதியில் அந்தந்த ப்ரதேசத்தில் அநுபவிக்கும் இன்ப துன்பங்களும் எல்லாம் ப்ரஹ்மத்தினுடைய தாகத் தான் ஆகும்.

ஆம்னாய அன்யோன்ய பாதம் -வேத முரண்பட்ட ஸ்ருதிகளை சமன்வயப்படுத்தி -இந்த பாதத்தால் வேத வ்யாஸரும் பாஷ்யகாரரும் விளக்கி அருளுகிறார்கள் -தேசிகன்

அடுத்து நான்காம் பாதம் -பிராண பாதம் -எட்டு அதிகரணங்கள்-

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-முதல் அத்யாயம் – நான்காவது பாதம் -ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

July 3, 2025

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

——-

ஸமந்வய அத்யாயம் – வேத வாக்கியங்கள் எல்லாம் பரமாத்மாவையே ஜகத்துக்குக் காரணம் என்று சொல்லுகின்றன என்கிறார்

இயற்கையே -ப்ரக்ருத்தியே காரணம் என்பாரும்
ஜீவாத்மாவே காரணம் என்பாரும் உண்டே
ஆகவே ஆராய்ந்து ஸித்தாந்தம் நிரூபிக்க வேண்டுமே
வெவ்வேறு விதமான வேத வாக்யங்களைக் கொண்டு நிரூபிப்பதால் நான்கு பாதங்கள்

முதல் பாதம் – மிகவும் தெளிவற்ற அடையாளங்களால் ஜீவாத்மாவையையோ ப்ரக்ருதியையோ ஜகத் காரணம் என்று சொல்வது போல் தோன்றும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து, அவையும் பரமாத்மாவையே சொல்கின்றன என்னுதல்

இரண்டாம் பாதம் – சிறிது தெளிவற்ற அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

மூன்றாம் பாதம் – சிறிது தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

நான்காம் பாதம் – மிகவும் தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

——–

1-4-1-ஆநுமாநிகாதி₄கரணம்-ஸாங்க்ய மதம் சொல்வது போன்ற வாக்கியங்கள்

அதி₄கரணத்தின் பின்புலம்
முதல் அத்யாயத்தின் நான்காவது பாதத்தை அணடந்துள்ளோம். கீழ் பாதங்களுக்கும் இப்பாதத்துக்கும் ஸங்கதிகள் -முதல் பாதத்தில் பெரும்பாலும் செய்யப்பட்டது அயோக₃ வ்யவச்சே₂த₃ம் – ஜகத்துக்குக் காரணமாக இருக்கும் தன்மை பரமாத்மாவுக்குப் பொருந்தும் என்று காட்டுவது. மேலுள் மூன்று பாதங்களால் செய்யப்படுவது (ii) அந்ய யோக₃
வ்யவச்சே₂த₃ம்
– ஜகத்துக்குக் காரணமாக இருக்கும் தன்மை பரமாத்மாவைத் தவிற வேறு யாருக்கும் பொருந்தாது என்று காட்டுவது.
பூர்வபக்ஷீ உபயோகிக்கும் அடையாளங்களின் வலிமையைப் பொருத்து பாதங்களைப் பிரிக்கிறார் வ்யாஸர் – (i)முதல் பாதத்தில் மிகவும் தெளிவற்ற அடையாளங்கள் (ii) இரண்டாம் பாதத்தில் சற்று தெளிவற்ற அடையாளங்கள் (iii) மூன்றாம் பாதத்தில் தெளிவான அடையாளங்கள் (iv) நான்காம் பாதத்தில் சாயா அநுஸாரி வாக்யங்கள் என்று.
சா₂யா என்றால் நிழல். அநுஸாரி என்றால் பின் தொடர்வது. உபநிஷத்துக்களில் சில வாக்கியங்கள் ஸாங்க்ய மதத்தின் உபதேசங்களை நிழல் போல் பின் தொடர்பவை போல் காணப்படுகின்றன. ஸாங்க்ய மதத்தில் சொல்லும் கருத்துகள் இவ்விடங்களில் சொல்லப்படுகிறபடியால், ஸாங்க்ய மதத்தில் சொல்லப்பட்டபடி ப்ரதா₄நம் / மூல ப்ரக்ருதி என்ற அசேதனப் பொருள் தான் ஜகத்காரணம் என்று உபநிஷத்துக்களே ஏற்கின்றன என்று பூர்வபக்ஷீ வாதிடுகிறார். –அவ் வாதத்தை நிரஸிப்பதன் மூலம் பரமாத்மா தான் ஜகத்காரணம் என்னும் ஸித்தாந்தத்தை வலுப்படுத்துகிறார் வ்யாஸர்.

(ப்ரஹ்மாத்மகமான பிரதானம் பிரகிருதி என்று சொல்லாமல் -நிரீஸ்வர சாங்க்ய மதம் போல் உள்ள ஸ்ருதி வாக்கியங்கள் -எண்ணிக்கையில் சாம்யம் -24 அசேதனங்கள் -25 ஜீவாத்மா -மட்டுமே சாங்க்ய மதம் -காபில மத ஸித்த அப்ரஹ்மாத்மக அசேதனங்கள் -போல் உள்ள சில ஸ்ருதி வாக்கியங்கள் -இவற்றை சொல்லி நேராக பிரதானம் காரணம் சொல்லாமல் -இருப்பதால் பிரதானமும் ஜகத்காரணம் என்கிற வாதங்களை நிரஸித்து –ப்ரஹ்ம ஏக காரணம் என்னும் கருத்தை நன்றாக நிலைநாட்ட இப்பாதம் என்றவாறு)

ஆநுமாநிகதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் முக்தாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவர் பரமாத்மா என்று கூறப்பட்டது. அதற்குமேல் ஆஷேபம் எழுகிறது – ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்ட பரமாத்மா என்று ஒருவர் கிடையாது என்று ஸாங்க்ய மதம் சொல்வது போல் வேதமே சொல்லி யுள்ளதே என்று. அதற்கு பதிலளிக்க தான்
இந்த அதிகரணம் பிறக்கிறது.

(ஆகாசம் என்ற சொல் முக்தனைக் குறிக்காமல் அவ்வாக்கியத்தில் சொல்லப்படும்
ப்ரஹ்ம லோகத்தைச் சொல்லும் என்று கீழ் அதிகரணத்தில் கூறியது போலே -இங்கும்
அவ்யக்தாத் புருஷ பர -என்ற இடத்தில் அவ்யக்தம் என்ற சொல்லும் ப்ரஹ்மாத்மகம் அல்லாத பிரதானத்தைக் குறிக்கலாம் என்று சந்தேகித்து உருவகமாக வைத்து வர்ணிக்கும் வாக்யாந்தரத்தில் கூறப்பட்ட சரீரத்தைக் குறிப்பதாக ஸ்தாபிக்கப் படுகின்றது என்று சங்கதி –)

விஷய வாக்யம் – கடோ ₂பநிஷத்தின் முதல் அத்யாயத்தின் மூன்றாம் வல்லீ
இந்த்₃ரியேப்₄ ꞉ பராஹ் வர்தா ₂ அர்தே₂ப்₄யஶ் ச பரம் மந꞉ । மநஸஸ்து பரா பு₃த்₃தி₄ர் பு₃த்₃தே ₄ராத்மா மஹோந் பர꞉ ॥-இந்த்ரியங்களைக் காட்டிலும் உலகப்பொருள்கள் உயர்ந்தவை . பொருள்களை விட மனது உயர்ந்தது. மனதை விட புத்தி உயர்ந்தது. புத்தியை விட மஹாந் என்ற பொருள் உயர்ந்தது-மஹத꞉ பரம் அவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ꞉ பர꞉ । புருஷாந் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டோ₂ ஸா பரா க₃தி꞉ ॥-மஹாந் என்பதை விட அவ்யக்தம் உயர்ந்த்து. அவ்யக்தம் என்பதை விட புருஷன் உயர்ந்தவன். புருஷனைக் காட்டிலும் உயர்ந்தது எதுவுமில்லை , அதுவே எல்லை , அதுவே இறுதியான இலக்கு.

ஸந்தேஹம் – இங்கு அவ்யக்தம் என்ற சொல்லால் ஸாங்க்ய மதத்தில் சொல்லப்படும் (ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொள்ளாத) ப்ரதாநம் என்ற அசேதனப் பொருள் சொல்லப்படுகிறதா? அல்லவா?
பூர்வ பக்ஷம் – இங்கு மூல ப்ரக்ருதி எனப்படும் ப்ரதாநம் தான் சொல்லப்படுகிறது.
1-ஸாங்க்ய மதத்தில் தத்துவங்களின் எண்ணிக்கை சொல்லப்படுகிறது – 5 கர்ம இந்த்ரியங்கள், 5 ஜ்ஞாந இந்த்ரியங்கள், 1 மனது, 5 பூதங்கள், 5 தந்மாத்ரங்கள், அஹங்காரம், மஹாந், மூல ப்ரக்ருதி என்று 24 அசேதனப் பொருள்கள் மற்றும் அறிவுடையவனான ஜீவாத்மா 25ஆவது தத்துவம் என்று. இங்கு உபநிஷத்திலும்
இந்த்ரியங்கள், உலகப் பொருள்கள், மனது, புத்தி (அஹங்காரம் என்ற தத்துவம்), மஹாந், அவ்யக்தம், புருஷன் என்று சொல்லப்படுவதைப் பார்க்கும் போது ஸாங்க்ய மதத்தின் தத்துவ வரிசை நினைவுக்கு வருகிறது. எனவே இவ் விடத்தில் வேதமே ஸாங்க்ய மதத்தை உபதேசிக்கிற படியால் இங்கு அவ்யக்தம் என்ற பொருள் மூல ப்ரக்ருதியாகத் தான்
இருக்க வேண்டும். இப்படி தத்துவக் கணக்கில் ஸாங்க்ய மதத்தை வேதம் ஏற்பதால், ஸாங்க்யர்கள் சொல்லும்படி ப்ரதாநம் தான் ஜகத் காரணம் என்றும் வேதம் ஏற்கிறது என்று தான் ஆகும். அவர்கள் மதத்தின் படி அந்த ப்ரதாநம் என்ற பொருள் ஸ்வதந்த்ரமானது, அதற்கு உள்ளே ஆத்மாவாக பரமாத்மா கிடையாது

2-“புருஷாத் ந பரம் கிஞ்சித்” என்று 25ஆவது தத்துவமான ஜீவாத்மாவைக் காட்டிலும் உயர்ந்தவர் இல்லை என்று சொல்கிறபடியால், ஸாங்க்யர்கள் சொல்லும்படி பரமாத்மா என்று ஒருவரே கிடையாது என்றும் தெரிகிறது.

(தந்த்ர சித்த தத்வ ப்ரக்ரியை நினைவூட்டப் படுகிறதே -முதல் வாதம் -புருஷன் -ஜீவாத்மாவை விட -மேல் உள்ள தத்துவமே இல்லை நிரசிப்பது போல் உள்ளது -இரண்டாம் வாதம்)

இவ்விடத்தில் பூர்வபக்ஷீ ’ப்ரதாநம் மட்டுமே ஜகத்காரணம் என்று உபநிஷத் கூறுகிறது’ என்று சொல்லவில்லை , -ஏனெனில் கீழ் பல அதிகரணங்களில் பரமாத்மா ஜகத்காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ள து. எனவே , “உபநிஷத்தில் சில இடங்களில் ப்ரதாநமும் ஜகத் காரணமாகச் சொல்லப்படுகிறது” என்று தான் வாதிடுகிறார்.

வேதம் காட்டும் உருவகம்
ஸித்தாந்தம் – இங்கு 7 ஸூத்ரங்களாலே வ்யாஸர் ஸித்தாந்தத்தைக் காட்டுகிறார்.
1-ஆநுமாநிகம் அபி ஏகேஷோம், இதி சேத் ந, சரீர ரூபக விந்யஸ்த க்₃ருஹீதே :, த₃ர்சயதி ச
ஏகேஷோம் –
ஒரு சிலரால் படிக்கப்படும் வேதத்தில்
ஆநுமாநிகம் அபி – அநுமானத்தால் அறியப்படும் மூல ப்ரக்ருதியும் [ஜகத் காரணமாகச் சொல்லப்படுகிறது]
இதி சேத் ந – என்று கூறினால் அது தவறு
சரீர ரூபக விந்யஸ்த – ரூபகமாக (உவமையான தேராக) சொல்லப்பட்ட சரீரமே
க்₃ருஹீயத: – இங்கு எடுக்கப் படுகிறபடியால்
த₃ர்சயதி ச – காட்டவும் படுகிறது-

இவ்விடத்தில் உபநிஷத்தில் ஓர் உருவகம் காட்டப்படுகிறது. அது யாதெனில் –
ஆத்மாநம் ரதி₂நம் வித்₃தி₄ ஶரீரம் ரத₂மேவ து । பு₃த்₃தி₄ம் து ஸாரதி₂ம் வித்₃தி₄ மந꞉ ப்ரக்₃ரஹமேவ ச ॥இந்த்₃ரியாணி ஹயாநாஹு: விஷயாந் தேஷு கோ₃சரான்-இந்த சரீரம் ஒரு தேர் (ரத₂ம்), ஜீவாத்மா தான் அதற்கு ஸ்வாமீ (ரதீ), புத்தி (உறுதி) தான் தேரோட்டி (ஸாரதீ), மனது தான் கடிவாளம் (ப்ரக்₃ரஹம்), இந்த்₃ரியங்கள் தான் குதிரைகள், உலக விஷயங்கள் தான் குதிரைக்கு புல் போன்றவை-

விஜ்ஞாந ஸாரதி₂ர் யஸ்து மந꞉ ப்ரக்₃ரஹ வாந் நர꞉ । ஸ: அத்₄வந꞉ பார மாப்நோதி தத்₃விஷ்ணோ꞉ பரமம் பத₃ம் ||-புத்தி என்ற ஸாரதியையும் மனது என்ற கடிவாளத்தையும் எவன் கட்டுப் படுத்துகிறானோ , அவன் தான் பாதையின் இறுதியில் இருக்கும் விஷ்ணுவின் பரம பதத்தை அடைகிறான். -இப்படி தேர், ஸாரதீ, குதிரைகள் முதலானவற்றை அடக்க வேண்டும் என்று உபதேசித்த பிறகு தான், நாம் கீழே பார்த்த விஷய வாக்யம் உள்ளது. எனவே அந்த வாக்கியத்தில் புத்தி, மனது, இந்த்ரியங்கள், பொருள்கள் முதலானவற்றைக் கட்டுப் படுத்தும் போது, எதை விட எது முக்கியமானது என்று தான் சொல்லப்படுகிறது.

புலன்களை அடக்கும் முறை
இந்த்₃ரியேப்₄ யா ꞉ பரா ஹ்யர்தா ₂
– இந்த்ரியங்களைக் காட்டிலும் உலகப் பொருள்களை அடக்குவது முக்கியமானது – ஏனெனில் புலன்களை அடக்கி வைத்தாலும் உலகப் பொருள்கள் அறுகில் இருந்தால் அவை புலன்களை இழுத்து விடும்.
அர்தே₂ப்₄ யஶ்ச பரம் மந꞉ – பொருள்களை விட மனதை அடக்குவது முக்கியம் –-ஏனெனில் பொருள்களை விலக்கி வைத்திருந்தாலும் மனது அப்பொருள்களை நினைத்துக் கொண்டே இருந்தால் புலனடக்கம் ஸித்திக்காது.
மநஸஸ்து பரா பு₃த்₃தி₄: – மனதை விட புத்தி என்ற உறுதியை வசப்படுத்துவது முக்கியம் – ஏனெனில் ஓர் உறுதி இருந்தால் தான் மனது வழி தவறிப் போகும் போது அதைத் தடுத்து சரியான பாதைக்கு இழுத்து வர முடியும்.
பு₃த்₃தே ₄ராத்மா மஹோந் பர꞉ – புத்தியை விட உயர்ந்தவரான ஆத்மாவை வசப்படுத்துவது முக்கியம் –ஏனெனில் ஆத்மாவுக்கு அதீனமாகத் தான் கீழ் சொல்லபட்ட புலன்கள், மனது, உறுதி எல்லாம் உள்ளன.
மஹத꞉ பரம் அவ்யக்தம் – ஆத்மாவை விட அவ்யக்தம் என்ற பொருளை வசப்படுத்துவது முக்கியம் –-அவ்யக்தம் எனப்படுவது நம்முடைய சரீரம். சரீரம் ஆரோக்யமாக நம் வசத்தில் இருந்தால் தான் ஆத்மா எந்தச் செயலையும் செய்ய முடியும் என்பதால் அதை வசப்படுத்துவது முக்கியம்.
அவ்யக்தாத் புருஷ꞉ பர꞉ – சரீரத்தை விட புருஷன் என்ற பரமாத்மாவை வசப்படுத்துவது முக்கியமானது –ஏனெனில் இவ்வுலகில் அனைத்துமே அவருக்கு அதீனமாகத் தான் இயங்குகிறது.
புருஷாந் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டா ₂ ஸா பரா க₃தி꞉ – அந்த பரமாத்மாவை விட முக்கியமாக வசப்படுத்தப்பட வேண்டிய பொருள் வேறொன்று கிடையாது. அவரே எல்லை .
இது தான் விஷய வாக்கியத்தின் சரியான பொருள் ஆகும்.

ஸித்தாந்த யுக்திகள்
உருவகத்தில் தேர், ஸாரதீ, கடிவாளம் என்று சொல்லப்பட்ட அதே பொருள்கள் அதே சொற்களால் விஷய வாக்கியத்திலும் சொல்லப்படுகின்றன, ஒன்றைத் தவிற – சரீரம் என்ற சொல்லுக்கு பதிலாக அவ்யக்தம் என்ற சொல் காணப்படுகிறது. எனவே , ஸந்தர்பத்தை வைத்துப் பார்த்தால், இங்கு அவ்யக்தம் எனப்படுவது தேராக உருவகப் படுத்தப்பட்ட சரீரம் தான், மூல ப்ரக்ருதி அல்ல.-“புருஷாத் ந பரம் கிஞ்சித்” என்ற வாக்கியமும் ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்லவில்லை , வசப்படுத்தப் பட வேண்டிய பொருள்களுள் பரமாத்மாவை விட முக்கியமானது எதுவுமில்லை என்று தான் கூறப்படுகிறது.-பரமாத்மாவை வசப்படுத்துவதாவது, அவரிடம் சரணாகதி செய்து அவர் அநுக்ரஹத்தைப்
பெறுவது தான்.
த₃ர்சயதி ச – காட்டவும் படுகிறது – வேதமே இந்தப் பொருளைக் காட்டுகிறது –
ஏஷ ஸர்வேஷு பூ₄தேஷு கூ₃ட₄: ஆத்மா ந ப்ரகாஸதே । த்₃ருஶ் யதே த்வக்₃ர்யயா பு₃த்₃த்₄ யா ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்ம த₃ர்ஶிபி₄꞉ ||-இந்த புருஷன் எனப்படுபவர் எல்லா ஜீவ ராசிகளுக்குள்ளும் மறைந்து உறைகிறார். அவர் வெளிப்படையாகப் ப்ரகாசிப்பதில்லை . புலன்களை அடக்கி நுட்பாக ஆராயும் புத்தியால் மட்டுமே அவர் காணப்படுகிறார்.
இப்படி உபநிஷத்தே பரமாத்மாவைப் பற்றியும், புலன்களை வசப்படுத்துவதைப் பற்றியும் சொல்கிறபடியால் இதுவே சரியான பொருள். எனவே இங்கு மூல ப்ரக்ருதி சொல்லப்படவே இல்லை .-ஆகவே , இவ் விடத்தில் ஸாங்க்ய மதத்தில் சொல்லப்பட்ட தத்துவங்களின் வர்ணனையோ , ஜீவாத்மாவைக் காட்டிலும் உயர்ந்தவரே இல்லை என்றோ சொல்லப்படவே இல்லை -எனவே வேதம் ஸாங்க்ய மதத்தைத் தழுவி உபதேசிக்கிறது என்று கூற இயலாது. எனவே பரமாத்மாவை அந்தராத்மாவாகக் கொள்ளாத மூல ப்ரக்ருதியே ஜகத் காரணம் என்று உபநிஷத்துக்கள் எங்குமே ஏற்க வில்லை .-மேலும் பல யுக்திகளைக் கொண்டும் வ்யாஸர் இதை நிரூபிக்கிறார் மற்ற ஸூத்ரங்களால் -அவ்யக்தம் என்பதற்கு சரீரம் என்று எப்படி பொருள் வரும் என்பதை மேலே காட்டுகிறார் –

1.4.1-ஆநுமாநிகாதி₄கரணம்–ப்ரக்ருதியையும் இயக்குபவர் பரமாத்மாவே

சரீரமே முக்திக்கான கருவி
1-4-1-ஆநுமாநிகதி₄கரணத்தின் முதல் ஸூத்ரத்தால் இங்கு ’அவ்யக்தம்’ என்று சொல்லப்படுபடுவது மூலப்ரக்ருதி அல்ல, -இதற்கு முன் உருவகத்தில் தேராகச் சொல்லப்பட்ட சரீரம் தான் என்று காட்டினார் வேத வ்யாஸர். இனி அதைத் தொடர்ந்து மேலும் பல யுக்திகளைக் கூறுகிறார்.இங்கு ஒரு கேள்வி எழுகிறது – அவ்யக்தம் என்றால் ’வ்யக்தமாக வெளிப்படையாக இல்லாதது’ என்று பொருள்-எனவே இச் சொல் பொதுவாக மூல பிரக்ருதியைத் தான் குறிக்கும். சரீரமோ வ்யக்தமானது அதாவது வெளிப்படையானது.பிறகு அவ்யக்தம் என்ற சொல் எப்படி சரீரத்தைச் சொல்லமுடியும்? என்று. இதற்கு பதில் தான் அடுத்த ஸூத்ரம் -2-ஸூக்ஷ்மம் து தத₃ர்ஹத்வாத் –ஸூக்ஷ்மமான மூல ப்ரக்ருதி அன்றோ ; அதுக்கே தகுதி உள்ளபடியால் ஸூக்ஷ்மம் து – ஸூக்ஷ்மமான நிலையில் இருக்கும் மூல ப்ரக்ருதி தான் ஸ்ருஷ்டி நடக்கும் போது இந்த சரீரமாக மாறுகிறது. எனவே , பஞ்சின் விகாரம் (மாறுபாடான) துணியைப் பஞ்சு என்று சொல்வது போல், அவ்யக்தம் என்கிற மூல ப்ரக்ருதியின் விகாரம் (மாறுபாடான) சரீரத்தை அவ்யக்தம் என்ற சொல்லைக் கொண்டு சொல்லலாம், தவறில்லை-

விஷய வாக்கியத்தில் இருக்கும் அவ்யக்தம் என்ற சொல் சரீரத்தைச் சொல்கிறது என்று கொள்ளாமல், முதலில் உருவகத்தில் இருக்கும் சரீரம் என்ற மூல ப்ரக்ருதியைக் குறிக்கிறது என்று கொண்டால் என்ன? என்று பூர்வபக்ஷீ கேட்க, அதற்கு விடை தான் ஸூத்ரத்தின் அடுத்த பகுதி —தத₃ர்ஹத்வாத் – உருவகத்தின் இறுதியில் தேர், ஸாரதீ, கடிவாளம் முதலானவற்றை அடக்குபவன் தான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைகிறான் என்று சொல்கிறபடியால், இங்கு முக்தி அடைவதற்குக் கருவிகளானவை தான் தேராகவும், -ஸாரதியாகவும், கடிவாளமாகவும் உருவகப் படுத்தப்பட வேண்டும். மூல ப்ரக்ருதியோ புருஷார்த்தம் அடைவதற்குக் கருவியாக ஆகாது. அதைக்கொண்டு எந்தச் செயலையும் செய்ய இயலாது. எனவே அதைத் தேராக உருவகம் செய்வதுஇங்கு பொருத்தமாக இருக்காது. சரீரம் தான் ’அர்ஹம்’-அதாவது“தகுதி உடையது” அதாவது புருஷார்த்தம்
அடைவதற்குக் கருவியாக இருக்கும் தகுதி உடையது. எனவே அது தான் இங்கு உருவகத்தில் பொருத்தமானது.-எனவே , பின்னால் வரும் விஷய வாக்கியத்தில் உள்ள அவ்யக்தம் என்ற சொல் தான் சரீரத்தைக் குறிக்கிறது என்று கொள்ள வேண்டுமே தவிற, சரீரம் என்ற சொல் மூலப்ரக்ருதியைக் குறிக்கிறது என்று மாற்றிக் கொள்ள இயலாது.

ஸாங்க்ய மதத்தை ஏற்காததன் காரணம்
ஸாங்க்ய மதத்தவரின் கேள்வி
– நீங்களும் மூல ப்ரக்ருதி என்ற பொருளை ஏற்கிறீர்கள், அதிலிருந்து தான் சரீரம் உண்டாகிறது என்றும் ஏற்கிறீர்கள் என்றால் ஏன் எங்கள் ஸாங்க்ய மதத்தைக் குறை சொல்கிறீர்கள்? அதற்கு பதில் –
3-தத₃தீ₄நத்வாத் அர்த₂வத் – “அதற்குக் கீழ் படிந்தே பயனுள்ளது”
மூல ப்ரக்ருதியான ஸ்வதந்த்ரமான ஒரு பொருள், தானாக இயங்குகிறது என்று ஸாங்க்ய மதம் சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை , அதைத்தான் குறை சொல்கிறோம். தத₃தீ₄நத்வாத் பரமாத்மாவுக்கு அதீனமாக, அவருக்குக் கட்டுப்பட்டு,அவரை அந்தராத்மாவாகக் கொண்டு, அவராலே இயக்கப்பட்டு தான் மூல ப்ரக்ருதி அர்த₂வத் பயனுடையது, அதாவது-தன்னிடமிருந்து பஞ்ச பூதங்கள் முதலானவற்றை உண்டாக்குகிறது. மூல ப்ரக்ருதி இருப்பதும், நிலைப்பதும், செயல்படுவதும் கூட அந்த பரமாத்மாவால் தான். இதை ஸாங்க்ய மதம் ஏற்காதபடியால் அதைத் தவறு என்கிறோம்

(ஆகவே உபாசனம் கை கூடுவதற்கு வசப்படுத்த வேண்டிய இந்திரியாதிகளுக்கு எல்லை நிலனாயும்-பரம ப்ராப்யனாயும் இருக்கிறான் என்ற சொல் புருஷனைப் பற்றிக் கூறியது என்பது வேதாந்த தீபத்தின் விடை-ஸ்ரீ பாஷ்யத்திலோ பிரதானத்தை ஏற்பதும் மறுப்பதும் முரண் பட்டதாதலால் எப்படிக் கூடும் என்று சந்தேகித்து-ஸ்வ தந்திரமாக பிரதானத்தை ஏற்க வில்லை-பின் என் எனில் பரம புருஷன் பிரேரணனையால் ஸ்ருஷ்டியாதிகளில் ப்ரவர்த்திப்பதால் பிரயோஜனம் உள்ளது என்று விடை கூறப்படுகிறது –)

4-ஜ்ஜேயத்வ அவசநாத் ச – “அறியப்பட வேண்டியது என்று சொல்லப்படாத படியாலும்”-ஸாங்க்ய மதத்தின்படி ப்ரக்ருதி மற்றும் ஜீவாத்மா என்ற இரண்டு பொருள்களைப் பற்றின உண்மையான அறிவு தான் முக்திக்கு வழி ஆகும். எனவே , இங்கு அவ்யக்தம் என்ற சொல் மூல ப்ரக்ருதியைக் குறிப்பதாகக் கொண்டு,-உபநிஷத்தே ஸாங்க்ய மதத்தைத் தான் சொல்கிறது என்று கொண்டால், அந்த அவ்யக்தம் என்ற மூல ப்ரக்ருதியை’அறிய வேண்டும்’ என்று வேதம் கண்டிப்பாக சொல்லி யிருக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படி எந்த உபதேசமும் காணப்படவில்லை . எனவே இங்கு சொல்லப்படுவது மூல ப்ரக்ருதியாக இருக்க முடியாது.

(த்ருஷ்ட்வத் -கண்ணுக்குத்தெரிந்த புருஷார்த்தங்கள் போல் ஆனு ஸ்ரவணாத் -ஸ்வர்க்கம் போன்றவை கேட்டு அறிந்தவையும் –அவி ஸூத்தி -தூய்மை இல்லாமல் திரும்ப வேண்டிய குறை -துக்கம் கலந்து –ஷயம் -முடியும் –அதிசயம் -உலக இன்பங்களை விட சுவர்க்கம் மேலானது போல் இதற்கு மேலானவை உண்டே-தத் விபரீதமானவே ஸ்ரேயஸ் -அழியாத துக்கம் கலசாத முக்தி -சாங்க்யர் காரிகை ஸ்லோகம் –வ்யக்தம்-கண்ணால் காண்பவை – அவ்யக்தம் பிரகிருதி –அறிவாளி -மூன்றையும் தெளிவாக அறிந்து கொண்டு அடையலாம்
இங்கு அறியப்பட வேண்டியது என்ற வேத வாக்கியம் இல்லையே -)

5-வத₃தி இதி சேத் ந ப்ராஜ்ஞ: ஹி ப்ரகரணாத்
வத₃தி
– ’சொல்கிறது’ –அவ்யக்தம் என்ற மூல ப்ரக்ருதியை அறிய வேண்டும் என்று சொல்கிறது என்கிறார் பூர்வபக்ஷீ.
அஶப்₃த₃ம் அஸ்பர்ஶம் அரூபம் அவ்யயம் ததா₂ அரஸம் நித்யம் அக₃ந்த₄வச்ச யத் ।
அநாத்₃யநந்தம் மஹத꞉ பரம் த்₄ருவம் நிசாய்ய தம் ம்ருத்யுமுகா₂த் ப்ரமுச்யதே ||

ஒலி தொடுவுணர்ச்சி வண்ணம் சுவை மணம் இல்லாததாய், நித்யமானதாய், மஹான் என்பதைவிட உயர்ந்ததான பொருளை அறிபவன் மரணத்தின் வாயிலிருந்து விடுபடிகிறான்.-இவ்வாறு மூல ப்ரக்ருதியை அறிய வேண்டும் என்று வேதமே சொல்கிறபடியால் அவ்யக்தம் என்பது ப்ரக்ருதி தான்.

மூல ப்ரக்ருதியைப் பற்றின உபதேசமே இல்லை —இதி சேத் ந – இவ்வாறு நீ சொன்னால் அது தவறு–ப்ராஜ்ஞ: ஹி ப்ரகரணாத் – ப்ராஜ்ஞன் (மிகுந்த அறிவாளி) என்ற பரமாத்மாவின் ப்ரகரணம் அன்றோ இது-இந்த உபநிஷத்தில் தொடக்கத்திலிருந்தே பரமாத்மா தான் பேசப்பட்டு வருகிறார். முதலில் புலன்களை அடக்குபவன் தான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைய முடியும் என்று சொல்லி, பிறகு கூர்மையாகச் சிந்திக்கும் திறமை உள்ளவர்கள் தான் அந்த விஷ்ணுவை காண முடியும் என்று சொல்லி, தற்போது இந்த வாக்கியத்தில் ’ஒரு பொருளை’ அறிந்தால் முக்தி கிடைக்கும் என்று சொன்னால் அந்தப் ’பொருள்’ விஷ்ணுவாகத் தான் இருக்க முடியும், திடீரென்று தொடர்பே இல்லாத மூல ப்ரக்ருதியை இங்குச் சொல்வதாகக் கொள்ள முடியாது. எனவே , அவ்யக்தம் என்ற பொருள்’அறியப்பட வேண்டும்’ என்று இங்கு சொல்லாதபடியால் அது மூல ப்ரக்ருதியாக இருக்க முடியாது.

(இந்த வரிகளுக்கு முன்னால்-விஜ்ஞான சாரதி யஸ்து மன ப்ரக்ரஹ வான்னர
சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்
-என்றும்-அதற்கு கீழே –
ஏஷ சர்வேஷூ பூதேஷு கூடோத்மாந பிரகாசதே த்ருச்யதே த்வகர்யயா புத்த்யா ஸூ ஷ்மயா ஸூஷ்ம தர்சிபி – என்று இருப்பதால்-சாங்க்ய வாதம் புருஷர்களை விட மேல் இல்லை எனபது உடைக்கப்பட்டு-பரம் பொருள் யத்த தத்ரேச்யம் -முண்டகம் -என்றும் –புத்தரோத்மா மஹான் பர -என்றும்-மேலானவன் என்று உணர முடியலாம்-)

இவற்றால் பரம புருஷனே சொல்லப்படுகிறான் -பிரதானம் அன்று-பரம் ஆப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் என்று ப்ராஞ்ஞனுக்கு உரிய பிரகரணம் ஆகையாலே)

பூர்வபக்ஷீ கேட்கிறார் – இந்தப் ப்ரகரணத்தில் விஷ்ணுவும் சொல்லப்படுகிறார், ப்ரக்ருதியும் சொல்லப்படுகிறது என்று கொண்டால் என்ன? என்று. அதற்கு பதில் கூறுகிறார் வ்யாஸர் அடுத்த ஸூத்ரத்தில் -6-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபந்யாஸ: ப்ரஸ்ந: ச–த்ரயாணாம் ஏவ ச – உபேயம் உபாயம் உபேதா என்ற மூன்று பொருள்களுக்கு மட்டும் தான்–ஏவம் உபந்யாஸ: – இவ்வாறு அதாவது அறியப்பட வேண்டியவை என்று இங்கு உபந்யாஸம் உள்ளது-ப்ரஸ்ந: ச – கேள்வியும் கூட (அந்த மூன்றைப் பற்றித் தான் உள்ளது) நசிகேதஸ் தன் மூன்றாவது வரத்தால் முக்தி எப்படிப்பட்டது என்று கேட்கிறார். அந்தக் கேள்வியில் உபேயம் (அடையப்படும் இலக்கு), உபாயம் (முக்தி அடையும் வழி) மற்றும் உபேதா (அடைபவர்) என்ற மூவர் தான் அடங்கியுள்ளார்கள். (ந ஜாயதே ம்ரியதே வா -அணோர் அணீயான்–இத்தா வேத யத்ரச-துர்க்கம் பதஸ்தத் கவயோ வதந்தி-)யம தர்மனும் உபேயம் பரமாத்மாவே , உபாயம் பக்தி தான், உபேதா ஜீவாத்மா என்று அதனதன் தன்மைகளையே உபதேசிக்கிறார். எனவே இங்கு மூல ப்ரக்ருதியைப் பற்றிப் பேச்சே இல்லை .

(தம் துர்தர்சம்– கூடம் மறைக்கப்பட்டு அனுப்பிரவிஷ்டம் குஹாயம் புராணம் தேவம் -அவ்யாத்மயோகம் -ஆத்ம சாஷாத்காரம் வந்து த்யானம் செய்து ஹர்ஷ சோகம் தாண்டி இன்பமயமான விஷ்ணு பதம் அடைகிறான்-பிரிய தமனாக உள்ளவர்களையே தேர்ந்து எடுத்துக் தன்னைக் காட்டிக் கொடுக்கிறான்அன்பு பக்தியே அடையும் வழி)

7-மஹத்₃வத் ச – “மஹான் என்பதைப் போலே ” – (7-மஹத்₃வத் ச – “மஹான் என்பதைப் போலே ” –(புத்தேராத்மா மகான் பர –) புத்தியைக் காட்டிலும் உயர்ந்தது ’மஹான்’ என்ற இடத்தில்-மஹான் என்பது அசேதனப் பொருள் அல்ல, அதை ’ஆத்மா’ என்று சொல்கிறபடியால். அதே போல், ’மஹான் என்ற ஆத்மாவை விட அவ்யக்தம் உயர்ந்தது” என்று சொல்கிறபடியால், அந்த அவ்யக்தம் ப்ரக்ருதியாக இருக்க முடியாது,-ஜீவாத்மாவை விட மூல ப்ரக்ருதி உயர்ந்தது என்று ஸாங்க்ய மதத்தில் ஏற்காதபடியால்.)

1-4-2–சமஸாதி₄கரணம்-ப்ரக்ருதியும் படைக்கப்படுவதே

ஸாங்க்ய மதத்தின் விமர்சனம்
இந்தப் பாதத்தில், கபிலாசார்யரின் ஸாங்க்ய மதத்தைச் சொல்வது போல் இருக்கும் உபநிஷத் வாக்கியங்களை எடுத்து, அவையும் ஸாங்க்ய மதத்தைச் சொல்லவில்லை , பரமாத்மா ஜகத்காரணம் என்று தான் காட்டுகின்றன என்கிறார் வ்யாஸர். அதனால், முதலில் ஸாங்க்ய மதத்தை நன்கு புரிந்து கொள்வோம்-(தந்த்ர ப்ரக்ரியை -சாங்க்ய மதத்தை இப்படியும் சொல்வர்).மூல ப்ரக்ருதி’ என்பது தான் இந்த உலகத்தைப் படைக்கும் காரணப் பொருள். அதில் ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்று மூன்று குணங்கள் உள்ளன. ப்ரளய நிலையில் இம்மூன்று குணங்களும் ஸம நிலையில் இருக்கும்.-ஸ்ருஷ்டி ஏற்படும் போது அதில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுகின்றன. இந்த ப்ரக்ருதி என்பது நித்யமானது, என்றும் இருக்கும்.ஸ்ருஷ்டி நடக்கும் போது, ப்ரக்ருதியிலிருந்து ’மஹான்’ என்ற தத்துவமும், அதிலிருந்து அஹங்காரம் என்ற தத்துவமும் உண்டாகின்றன. பிறகு, தாமஸ அஹங்காரத்திலிருந்து சப்த தந்மாத்ரம், ஸ்பர்ச தந்மாத்ரம், ரூப தந்மாத்ரம், ரஸ தந்மாத்ரம் மற்றும் கந்த தந்மாத்ரம் என்ற 5 தந்மாத்ரங்களும், நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்ற 5 பூதங்களும் தோன்றுகின்றன. ஸாத்த்விக அஹங்காரத்தலிருந்து கண் காது மூக்கு நாக்கு தோல் என்ற 5 ஜ்ஞாந இந்த்ரியங்களும். பேச்சுப்புலன் கைகள் கால்கள் மற்றும் மலம் ஜலம் கழிக்கும் இந்த்ரியங்கள் என்ற 5 கர்ம இந்த்ரியங்களும், மனது என்ற உட்புலனும் தோன்றுகின்றன. ஆக மொத்தம் 24 விதமான அசேதனப் பொருள்கள் உள்ளன–இவற்றை யெல்லாம் விட உயர்ந்தவர், ஜ்ஞாநம் உடையவர் ஜீவாத்மா. அவர் 25ஆவது தத்துவம்.-இவற்றுக்கு மேல் பரமாத்மா, ஈச்வரன், ப்ரஹ்மம் என்று ஒரு தத்துவம் கிடையாது. இதுதான் ஸாங்க்ய மதம்-இதில் தத்துவங்களின் வரிசை , தன்மைகள் இவற்றை யெல்லாம் ஸித்தாந்தத்திலும் ஏற்றாலும், பரமாத்மா என்று 26ஆவது ஒரு தத்துவம் உள்ளது என்றும், அவர்தான் மற்ற சேதனங்கள் மற்றும் அசேதனங்களுக்கு அந்தர்யாமியாக இருந்து அவற்றை இயக்குகிறார் என்றும் சொல்கிறோம். இதுவே வேறுபாடு-இதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு அதிகரணத்திலும் ஸாங்க்ய மதம் தவறென்று காட்டப்படுகிறது.

(மந்த்ரிக உபநிஷத் -விகார ஜனணீம் அஞ்ஞானம் அஷ்ட ரூபாம் -கீதையிலும் இதே போல் பஞ்ச பூதங்கள் -மனஸ் -அஹங்காரம் மஹா -அஜாம் த்ருவாம் -அவரால் இயக்கப்பட்டு -மக்களுக்கு வேண்டிய பலன்களை அவன் இயக்கத்தால் உண்டாகிறது –
முக்குண -வெள்ளை கறுப்பு சிகப்பு -சத்வ ரஜஸ் தமஸ் -மயம் -ஸர்வகாம -நினைத்தபடி உண்டாக்கி-அஞ்ஞர்கள் இப்பிரக்ருதியைக் குடிக்கிறார்கள் -அனுபவிக்கிறார்கள் -உழன்று கொண்டு குமாரர் -சிறுபிள்ளைத்தனம் -தேவதேவன் வசத்தில் பிரகிருதி வசப்பட்டு -ஆசைப்பட்டபடி இத்தை உருவாக்குகிறார் -அந்த ஈஸ்வரன் -26/27 தத்வம் என்றும் சொல்கிறார்கள் -காலத்தையும் சேர்த்தது 27—ஸ்வேதாஸ்வரம் -அறிவுடையவர் அறிவில்லாதவர் -ஈசன் -அனீசன் -போக்த்ரு -போக்யம் -பத்யதே கட்டி வைக்கப்படுகிறான் -ஈஸ்வரனை அறிந்து விடுபடலாம் -ஷரம் பிரதானம் -மூலப்பிரக்ருதியை உருவம் மாறி -அம்ருதம் அக்ஷரம் -ஜீவாத்மா -இருவருக்கும் ஈசன் ஏக -அவனையே தியானித்து பூஜை செய்து மனஸால் சாஷாத்காரித்து -அனுக்ரஹத்தால் மோக்ஷம்-விஸ்வ மாயை -இல்லாத பொருள் அர்த்தம் இல்லை -ஆச்சர்யம் -மாயா அஸ்திரம் -பிரயோகம் -ஆச்சர்யமானது -)

வேதாந்தம் கூறும் ப்ரக்ருதி என்ற தத்துவம்
நம்முடைய ஸித்தாந்தத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது வேதத்திலிருக்கும் மந்த்ரங்களே .-அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
விகாரஜனனீம் அஜ்ஞாம் அஷ்டரூபாம் அஜாம் த்₄ருவாம் | த்₄யாயதே அத்₄யாஸிதா தேந தந்யதே ப்ரேர்யதே புந:-பல விதமான காரியப் பொருள்களை உண்டாக்குவதாய், அறிவற்றதாய், எட்டு வடிவங்கள் உடையதாய், உண்டாக்கப் படாததாய், அழியாததான இந்த ப்ரக்ருதி பரமாத்மாவாலே அதி₄ஷ்டா₂நம் செய்யப்பட்டு(இயக்கப்பட்டு) விரிவடைகிறது செயல்படுகிறது.

ஸிதா அஸிதா ச ரக்தா ச ஸர்வகாமது₃கா₄ விபோ ₄:| பிப₃ந்தி ஏநாம் அவிஷமாம் அவிஜ்ஞாதா : குமாரகா: || வெளுப்பு, கருப்பு, சிவப்பு என்ற மூன்று வண்ணங்கணை (ஸத்த்வம் தமஸ் ரஜஸ் என்ற முக்குணங்கணை) உடைய இந்த ப்ரக்ருதி ஈஸ்வரனின் ஆணைப்படி இயக்கப்படுகிறது. இதன் உண்மையை அறியாத குழந்தை போன்ற
ஜீவாத்மாக்கள் இதையே குடித்து (அநுபவித்து) அதில் ஈடுபடுகிறார்கள்.

ஏகஸ்து பிப₃தே தே₃வ: ஸ்வச்ச₂ந்த₃: வசாநுகா₃ம்| தம் ஷட்₃விம்சகம் ஆஹு: ஸப்த விம்சம் அத₂ அபதர ||-ஒரு தேவன் மட்டும் தான் இந்தப் ப்ரக்ருதியைத் தன் வசத்தில் வைத்துக் கொண்டு தான் ஆசைப்பட்டபடி இதை அநுபவிக்கிறார். அந்த பரமாத்மாவை 26ஆவது தத்துவம் என்றோ , (காலத்தையும் கணக்கிட்டால்) 27ஆவது தத்துவம் என்றோ கூறுகிறார்கள்.

வேதாந்தம் கூறும் ப்ரக்ருதி என்ற தத்துவம்
நம்முடைய ஸித்தாந்தத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது வேதத்திலிருக்கும் மந்த்ரங்களே . அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
ஜ்ஞாஞௌ த்₃வௌ அஜௌ ஈசநீசௌ அஜா ஹ்யேகா போ₄க்த்ரு போ₄கா₃ர்த₂ரூபா|
அநீசஶ்ச ஆத்மா ப₃த்₄யதே போ₄க்த்ருபா₄வாத் ஜ்ஞாத்வா தே₃வம் முச்யதே ஸர்வபாசை : ||-
ஜ்ஞாநீ மற்றும் அறிவிலியாக, இயக்குபவர் மற்றும் இயக்கப்படுவராக இரண்டு விதமான (பரமாத்மா மற்றும் ஜீவாத்மா) நித்யமான ஆத்மாக்கள் உள்ளார்கள். அவர்கள் அநுபவத்துக்காக ப்ரக்ருதி என்ற ஒரு அழியாத தத்துவம் உள்ளது. இயக்கப்படும் ஆத்மா தானே போ₄க்தா (ப்ரக்ருதியால் வரும் இன்ப துன்பங்களை அநுபவிப்பவன்) என்று
எண்ணி அந்தப் ப்ரக்ருதியில் கட்டுப்பட்டு விடுகிறார். எப்போது இயக்கும் பரமாத்மாவை உணர்கிறானோ அப்போது எல்லா கட்டுகளிலிருந்தும் விடுபடுகிறார்.

க்ஷரம் ப்ரதா₄நம் அம்ருதாக்ஷரம் ஹர: க்ஷராத்மநௌ ஈசதே தே₃வ ஏக: |
தஸ்ய அபி₄த்₄யாநாத் யோஜநாத் தத்த்வபா₄வாத் பூ₄யஶ்சாந்தே விஸ்வமாயா நிவ்ருத்தி: ||-
மாறிக்கொண்டே இருக்கும் ப்ரதானம், மாறாத ஜீவாத்மா எனும் இருவரையும் இயக்கும் தேவன் ஒருவனே . அவனை த்யானித்து, பூஜை செய்து, ஸாக்ஷாத்காரம் செய்தால் உலக மாயையிலிருந்து விடுபடலாம்.

மாயாம் து ப்ரக்ருதிம் வித்₃யாத் மாயிநம் து மஹேஸ்வரம்| அஸ்மாத் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்-மாயை (ஆச்சரியமானது) என்று ப்ரக்ருதியை அறிவாய். அதை இயக்கும் மாயாவியாக ஈஸ்வரனான பரமாத்மாவை அறிவாய். இந்த மாயை எனப்படும் ப்ரக்ருதியிலிருந்து தான் பகவான் உலகத்தை ஸ்ருஷ்டிக்கிறார்.-இப்படி ஸ்பஷ்டமாக வேதாந்தம் கூறுவதால், இதோடு முரண்பட்ட இடங்களில் ஸாங்க்ய மதத்தைக் கண்டிக்கிறோம்

அதிகரணத்தின் பின்புலம்
1-4-2-சமஸாதி₄கரணம் – ஸங்கதி
– முன் அதிகரணத்தில் அவ்யக்தம் என்ற சொல் பொதுவாக ப்ரக்ருதியைக் குறித்தாலும்,-இங்கு சரீரம் என்ற சொல் உள்ள படியால் சரீரத்தைத் தான் குறிக்கிறது என்று சொல்லப்பட்டது. அப்படியானால், சரீரம்
என்ற சொல் இல்லாத இடத்தில் மூல ப்ரக்ருதியைத் தானே பொருளாகக் கொள்ள வேண்டும் என்று ஸந்தேஹம்.
விஷய வாக்யம் – ஸ்வேதாஸ்வதர உபநிஷத்தில் உள்ள பின்வரும் வாக்கியம் –அஜாம் ஏகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம் ப₃ஹ்வீ: ப்ரஜா: ஸ்ருஜமாநாம் ஸரூபா: |
அஜோ ஹ்யேகோ ஜுஷமாந: அநுசேதே ஜஹாதி ஏநாம் பு₄க்த போ₄காம் அஜ: அந்ய: ||-
உண்டாக்கப்படாததாய், ஒன்றாய், சிவப்பு வெள்ணை கருப்பு என்ற வண்ணங்களை உடையதாய், தன்னைப் போன்றபல பொருள்களாய் உண்டாக்கக் கூடியதாய் இருக்கும் ப்ரக்ருதியை (அஜாம் -ப்ரக்ருதி பெண் பால் சொல்) உண்டாக்கப்படாத ஒருவன் (பத்₃த₄ ஜீவாத்மா) விரும்பி அநுபவிக்கிறான், மற்றொருவன் (முக்த ஜீவாத்மா) இதை அநுபவித்து முடித்து விட்டு விடுகிறான்.

ஸந்தேஹம் – இங்கு ஸாங்க்ய மதத்தின்படி ஸ்வதந்த்ரமாக உலகைப்படைக்கும் ப்ரக்ருதி சொல்லப்படுகிறதா? அல்லது பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொண்டு அவரால் இயக்கப்படும் ப்ரக்ருதி சொல்லப்படுகிறதா?
பூர்வ பக்ஷம் – ஸாங்க்ய மதத்தில் சொன்னபடி ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தான் இங்கு சொல்லப்படுகிறது. ஏனெனில் –
1- “அஜாம்” அதாவது’உண்டாக்கப்படாதது’ என்று இங்கு ப்ரக்ருதி சொல்லப்படுகிறது. ஸித்தாந்தத்தில் ப்ரக்ருதியும் ப்ரஹ்மத்தின் கார்யம் தான், அதாவது உண்டாக்கப்படுவது தான். ஸாங்க்யர்கள் தான் ப்ரக்ருதி உண்டாக்கப்படாதது என்று சொல்கிறார்கள். எனவே இங்கு ஸாங்க்ய மதம் தான் பேசப்படுகிறது.
2- “ஸ்ருஜமாநாம்”-அதாவது“படைப்பவள் ” என்று ப்ரக்ருதி சொல்லப்படுகிறது. “
படைப்பைச் செய்பவள் ”-“படைப்பின் கர்த்தா” என்று பொருள். கர்த்தா (செய்பவள்) என்று ஸ்வதந்த்ரமாகச் செயல்படுபவனைத் தான் சொல்ல முடியும் என்று பாணிநி மஹரிஷி தன் இலக்கண நூலில் கூறுகிறார். எனவே ப்ரக்ருதி ஸ்வதந்த்ரமாகத் தான் உலகைப் படைக்கிறது என்று வேதமே ஏற்றுக் கொண்டுள்ளது.-எனவே

அஜா என்ற சொல்லின் பொருள்
ஸித்தாந்தம் –
இந்த வாதத்தை மூன்று ஸூத்ரங்களால் கண்டிக்கிறார் வ்யாஸர்.
1-சமஸவத் அவிசேஷாத் – “சமஸத்தைப் போல்; குறிப்பிட்டுத் தோன்றாதபடியால்”
ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் (அர்வாக்₃பி₃ல: சமஸ: ஊர்த்₄வபு₃த்₄ந: ) என்று ஒரு வாக்கியம் உள்ளது. “கீழே ஓட்டை உடையதாய், மேலே பெரிதாக இருக்கும் சமஸம்” என்ற அதற்குப் பொருள்.-சமஸம் என்ற சொல் பொதுவாக யாகத்தில் உபயோகிக்கப்படும் பாத்திரத்தைக் குறிக்கும்.(சோமயாகத்தில் சோமரசம் வைக்கும் பாத்திரங்களுக்கு சமசம்-என்றும் க்ரஹம் சொல்வர் ) பாத்திரம் மேல்பக்கம் ஓட்டை யோடும் கீழே பெரிதாகவும் இருக்கும். ஆனால் இங்கு வேறுமாதிரி சொல்லப்படுகிறது. –சமஸம் என்ற சொல்லுக்கு “உண்ணும் கருவி” என்று தான் பொருள். (சமசம் –சமு பஷணே -உண்பதற்கான கருவி -பங்கஜம் -சேற்றிலே பிறந்தது உண்மையான பொருள் போல் )எனவே அச் சொல்லைக் கேட்டதும் உடனடியாக பாத்திரம் தான் குறிப்பிட்டு மனதில் தோன்றாது. உண்பதற்குப் பயன்படும் ஏதோ ஒரு கருவி சொல்லப்படுகிறது என்று மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும். எனவே , எந்த ஒரு பொருளும் சமஸம் என்ற சொல்லிலிருந்து குறிப்பிட்டுத் தோன்றாதபடியால், சுற்றியுள்ள வாக்கியங்களை வைத்துத் தான் இச்சொல் எதைக் குறிக்கிறது என்று அறிய முடியும்.-அருகிலேயே ’இத₃ம் தச்சி₂ர:’ (இதுதான் தலை ) என்கிற வாக்கியம் உள்ள படியால் இங்கு சமஸம் என்ற சொல் தலையைத் தான் குறிக்கிறது என்று முடிவு செய்யலாம். தலையும் உண்பதற்குப் பயன்படுகிறது, கீழே வாய் என்ற ஓட்டையை உடையது, மேலே பெரிதாய் இருக்கக் கூடியது. எனவே இவ் வர்த்தம் பொருத்தமானதே .-அதே போல் இங்கு “அஜா” என்ற சொல்லுக்கு “உண்டாக்கப்படாதது” என்று தான் பொருள். குறிப்பிட்டு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி மனதில் தோன்றாது. எனவே , மற்ற வாக்கியங்களைக் கொண்டுதான் இங்கு எந்தப் பொருள் கூறப்படுகிறது என்று முடிவு செய்ய வேண்டும். அந்த வாக்கியங்களில் முக்குணங்களை உடையதாய், உலகப் பொருள்களை உண்டாக்குவதாய், பரமாத்மாவால் இயக்கப்படும் ப்ரக்ருதி சொல்லப்படுகிறது. எனவே அதுவே அஜா.-“படைப்பவன் ” என்று சொன்னாலும் ஸ்வதந்த்ரமானது என்று பொருள் கிடைக்காது-(இதுவும் பொதுவான சொல் தானே ). “தேர் ஓடுகிறது” என்று சொல்கிறோம். அங்கு தேருக்கு ஸ்வதந்த்ரமாக இயங்கும் தன்மை இல்லா விட்டாலும் “ஓடுதலைச் செய்கிறது” என்று கூறுகிறோம். அதே போல் இங்கும், பரமாத்மாவால் இயக்கப்பட்டு ப்ரக்ருதி இத்தனைப் பொருள்களை உண்டாக்கினாலும், அதை “படைப்பவள் ” என்று சொல்வது தவறில்லை –

(உபநிஷத்தில் சமசம் -பதம் தெளிவாக கூறப்பட்டுள்ளது –
ஸ்வேதரா-4-5- அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் சரூபா-அஜோ ஹி ஏகோ ஜூஷமாண அநு சேதே ஜஹாத் யேநாம் புக்த போகாம் அஜ அன்ய-சமசம் எனபது யாகங்களில் உதவும் ஒரு பாத்ரம் –

பிருஹு –4-2-3–இதம் தச்சிர ஏஷ ஹி அர்வாக்பிலஸ் சமச ஊர்த்வ புத்ன–என்று-இப்படி மேலே பருத்து கீழே துளை உள்ளது-தலையே -மண்டை ஓடே -ஆகும் நமது தலையைக் குறிக்கும்
அஜா பிறப்பற்ற பிரக்ருதியைக் குறிக்கும்-)

உண்டக்கப்படாதது, ஆனால்-படைக்கப்பட்டது
2-ஜ்யோதி ருபக்ரமா து ததா ₂ ஹி அதீ₄யதே ஏகே
ஜ்யோதி ருபக்ரமா து
– ஜ்யோதிஸ் என்ற பரமாத்மாவிடமிருந்து பிறந்தது தான்
ஹி ஏனெனில்
ததா ₂ அவ்வாறு
ஏகே வேதாத்யயனம் செய்யும் ஒரு சிலர் அதீ₄யதே – ஓதுகிறார்கள்.
தைத்திரீய சாகையில் “அணோரணீயாந்” என்று பரமாத்மாவின் பெருமைகளை உபதேசித்து,“ஸப்த ப்ராணா: ப்ரப₄வந்தி தஸ்மாத்” என்று தொடங்கி ப்ராணன், மலை , கடல் முதலானாவை பரமாத்மாவால் படைக்கப்படுகின்றன என்று சொல்லி, அதற்கு இடையில் நாம் பார்த்த விஷய வாக்கியத்தைப் போலவே ஒரு வாக்யம் உள்ளது
“அஜாமேகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம் ப₃ஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ஸரூபாம்” என்று.(தைத்ரிய சாகையிலும் -ஸ்வேதரா-4-5- அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் போல் வாக்கியம் உண்டே) எனவே , பரமாத்மாவால் படைக்கப்படும் பொருள்களின் வரிசையில் ப்ரக்ருதியும் படிக்கப்பட்டபடியால், ப்ரக்ருதியும் பகவானால் படைக்கப்படுவது தான் என்று தெரிகிறது. எனவே ஸாங்க்யர்கள் சொல்லும் ப்ரக்ருதியை வேதம் ஏற்கவில்லை .-மேலும், “தே அபச்யந் தே₃வாத்ம சக்திம்” என்று பகவானுடைய சக்தி (விட்டுப் பிரியாத பண்பு) என்று ப்ரக்ருதி சொல்லப்படுகிறபடியால், அது ஸ்வதந்த்ரமானது அல்ல என்று தெரிகிறது.
கேள்வி – ப்ரக்ருதி அஜா (உண்டாக்கப்படாதது) என்றும் ஜ்யோதிருபக்ரமா (பரமாத்மாவிடமிருந்து உண்டானது) என்றும் எப்படிச் சொல்கிறீர்கள்? இவ் விரண்டு பண்புகளும் முரண்பட்டவை அன்றோ ? பதில் அடுத்த ஸூத்ரத்தில் –
3-கல்பதநாபதே₃சாத் ச மத்₄வாதி₃வத் அவிராேத₄:கல்பநோபதே₃சாத் ச – கல்பனம் (ஸ்ருஷ்டி) என்பதைப்பற்றின உபதேத்தால்
அவிராேத₄:— முரண்பாடு இல்லை
மத்₄வாதி₃வத் –-மது₄வித்₃யை முதலானவற்றில் போலே
மது₄ வித்₃யையில் உதயம் அஸ்தமனம் முதலானவற்றை உடைய ஸூர்யனுக்கும் அதில்லாத ஸூர்யனுக்கும் அந்தர்யாமியாக பரமாத்மா சொல்லப்பட்டார். இதில் முரண்பாடு இல்லை ஏனெனில் ஒன்று காரண நிலை (ஸ்ருஷ்டிக்கு முன்), மற்றொன்று கார்ய நிலை . அதே போல் இங்கும் முரண்பாடு இல்லை , இரண்டு நிலைகள் உள்ளன.-மூல ப்ரக்ருதி ப்ரளய காலத்தில் முக்குணங்களை ஸமமான நிலையில் கொண்டிருக்கும். அது படைக்கப்படாத்து, –அஜா. -அதற்குப் பின் அதுவே முக்குணங்களில் ஏற்றத் தாழ்வுகளோடு ஆகிறது. இது காரிய நிலை , உண்டாக்கப் படுகிறது. எனவே ப்ரக்ருதியை ஜ்யோதி ருபக்ரமா என்ற சொல்வதும் தவறல்ல.

(அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்–என்று ஸ்ருஷ்ட்டியை உபதேக்சிகையாலே
பிரளய சமயத்தில் இந்த ப்ரக்ருதியானது பரம புருஷனுக்கு சரீரமாய் ஸூஷ்மமாய் உள்ளது
அந்த அவஸ்தையைக் கருதியே பிரக்ருதியை அஜா எனப்படுகிறது-ஸ்ருஷ்டி சமயத்தில் ஸ்தூல அவஸ்தை ஏற்படுவதால் ஜ்யோதிர் ரூப க்ரமாத்வம் -பொருந்துமே)

—————

(இப்பாதத்தால் —நிரதிவதிக மஹிமை -ஸ்தாபிக்கப்படுகிறது -கீழ் மூன்று பாதங்களிலும் ஸ்ரஷ்டா -தேஹீ- ஸ்வ நிஷ்டா -பார்த்தோம்) 1-4-3-ஸங்க்₂யோபஸங்க்₃ரஹாதி₄கரணம்-தத்துவங்களின் எண்ணிக்கை

1.4.3 அதிகரத்தின் பின்புலம்
1-4-3-ஸங்க்₂யோபஸங்க்₃ரஹாதி₄கரணம் – ஸங்கதி
– முன் அதிகரணத்தில் ’
அஜா’ என்ற சொல்லிலிருந்து குறிப்பிட்டு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தோன்றாதபடியால், மற்ற வாக்கியங்களைக் கொண்டு அது பரமாத்மாவால் இயக்கப்படுவது தான் என்று முடிவு செய்தோம். இந்த அதிகரணத்தில், பரமாத்மா என்றொருவரை ஒப்புக் கொண்டால்
எண்ணிக்கையில் முரண்பாடு ஏற்படுகிறபடியால் குறிப்பிட்டு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தோன்றுகிறபடியால் அப்படியே ஏற்க வேண்டும் என்று ஆஷேபம் எழுகிறது.

விஷய வாக்யம் – சுக்ல யஜுர் வேதத்தில் உள்ள ஒரு வாக்கியம்- யஸ்மின் பஞ்ச பஞ்சஜநோ: ஆகாசஶ்ச ப்ரதிஷ்டி₂த: தமேவ மந்ய ஆத்மாநம்–எதில் ஐந்து ’பஞ் ஜந’ங்களும் ஆகாஸமும் நிலை பெற்றிருக்கின்றனவோ , அதுவே ஆத்மா
ஸந்தேஹம் – இங்கு ஸாங்க்ய மதம் சொல்லும் ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி சொல்லப்படுகிறதா? இல்லையா?
பூர்வபக்ஷம் – இங்கு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தான் சொல்லப்படுகிறது.
பஞ்ச ஜந: என்ற சொல்லுக்கு ’ஐந்து பொருள்களின் ஸமுதாயம்/கூட்டம்’ என்று பொருள். ’பஞ்ச ’ என்றால் ஐந்து.-எனவே , ஐந்து பொருள்களைக் கொண்ட ஸமுதாயங்கள் ஐந்து உள்ளன என்று தெரிகிறது. அந்த 25 பொருள்களும் ஆகாஸமும் ஜீவாத்மாவால் தாங்கப்படுகின்றன என்று தான் இந்த வாக்கியம் கூறுகிறது.
ஸாங்க்ய மதத்தில் மொத்தமே 25 பொருள்கள் தானே ? இங்கு 27 உள்ளனவே ? என்னில் – ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்பவற்றை ப்ரக்ருதி என்ற த்ரவ்யத்தின் குணங்களாகக் கொள்ளாமல் தனித் தனி த்ரவ்யங்களாகக் கொண்டால்-அசேதன தத்துவங்களே 26, அதற்கு மேல் ஜீவாத்மா 27ஆவது. எனவே அந்த எண்ணிக்கையும் பொருந்தும்.
பரமாத்மா என்று ஒரு பொருளை ஏற்றுக் கொண்டால், 28 தத்துவங்கள் இருக்க வேண்டும், ஆனால் இந்த வாக்கியத்தில் வேதம் 25 + 1 ஆகாஸம் + 1 ஆத்மா என்று 27 தத்துவங்களையே சொல்கிறது. எனவே பரமாத்மா என்றொருவர் கிடையாது. எனவே ப்ரக்ருதி அவரால் இயக்கப்படுவதல்ல, ஸ்வதந்த்ரமானது தான். எனவே அதுவே தான் ஜகத்காரணம், பரமாத்மா அல்ல – என்று பூர்வ பக்ஷியின் வாதம்.

உண்மையான தத்துவ எண்ணிக்கை
ஸித்தாந்தம் – 1-ந ஸங்க்₂யோப ஸங்க்₃ரஹாத₃பி நாநா பா₄வாத் அதிரேகாத் ச
ஸங்க்₂யோப ஸங்க்₃ரஹாத₃பி
– 25 என்ற எண்ணிக்கையை ஏற்றுக் கொண்டாலும் கூட
– (ஸாங்க்ய மதத்தில் சொல்லப்பட்ட ஸ்வதந்த்ரமான தத்துவங்கள் இங்கு சொல்லப்படுகின்றன என்பது) தவறு
நாநா பா₄வாத் – அவற்றைக் காட்டிலும் வேறுபட்ட படியால் (பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொண்டபடியால்)
அதிரேகாத் ச – எண்ணிக்கை அதிகமாக உள்ள படியாலும்

இங்கு ’பஞ்ச பஞ்ச ஜநா:’ என்று 25 தத்துவங்கள் சொல்லப்படுகின்றன என்று சொல்வதை ஏற்றுக் கொண்டாலும், அவை ஸாங்க்யர்கள் சொல்லும் பொருள்கள் என்று கொள்ள முடியாது, ஏனெனில் ’-நாநா பா₄வாத்’ – ஸாங்க்ய மதத்தில்-பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொள்ளாத தத்துவங்களே ஏற்கப் படுகின்றன ஆனால் இந்த வாக்கியத்தில் 25 பொருள்களுக்கும் அந்தர்யாமியாகவும் ஆதாரமாகவும் பரமாத்மாவே சொல்லப்படுகிறார். எனவே இவை வேறு.

இங்கு ஆதாரமாகச் சொல்லப்பட்டவர் ஜீவாத்மா என்று கொள்ளலாமே ? எனில் – “அதிரேகாத் ச”- இங்குள்ள-தத்துவங்களின் எண்ணிக்கை ஸாங்க்யர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. ஸாங்க்ய மதத்தில் மொத்தமே 24 அசித் + 1 ஜீவாத்மா = 25 தான். ஆனால் இங்கு 25 பொருள்கள் + 1 ஆகாஸம் + 1 ஆத்மா என்று 27
பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்று மூன்று த்ரவ்யங்கள் என்று சொன்னதும் தவறு, பல ப்ரமாணங்களில் அவை குணங்கள் என்றே சொல்லப்படுகிற படியால். எனவே காலம் என்பதையும் சேர்த்து, 26 தத்துவங்களுக்கு ஆதாரமானவர் 27ஆவது தத்துவமான பரமாத்மா என்று தான் கொள்ள வேண்டும்.

உண்மையில், ஸங்க்₂யோப ஸங்க்₃ரஹாத் அபி அதாவது-“25 என்ற எண்ணிக்கையை ஏற்றாலு ம்கூட” என்று ஸூத்ரம் உள்ள படியால், வேதவ்யாஸர் இதை ஏற்கவில்லை என்று தெரிகிறது. அதற்குக் காரணம் – ’பஞ்ச பஞ்ச ஜநா:’ என்று’ஐவரின் கூட்டங்கள் ஐந்து’ சொல்லப்பட வேண்டுமென்றால், ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு பொதுவான தன்மை
வேண்டும். அது இங்கு இல்லை . 5 கர்மேந்த்ரியங்கள், 5 ஜ்ஞாநேந்த்ரியங்கள், 5 தந்மாத்ரங்கள் என்று சொன்னாலும் 5 பூதங்கள் என்றொரு கூட்டத்தை அமைக்க முடியாது, ’ஆகாஸம்’ தனியாக எடுக்கப்பட்டபடியால். மேலும், ப்ரக்ருதி மஹான் அஹங்காரம் ஆத்மா மனஸ் என்னும் ஐந்தையும் ஒரு கூட்டமாகத் திரட்ட எந்தப் பொதுவான தன்மையும்
இல்லை . எனவே இங்கு 25 தத்துவங்கள் சொல்லப்படுகின்றன என்று சொன்னதே தவறு.

(ஆத்மாவுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யமும் -ய ஆத்மனி திஷ்டன் -இத்யாதி ஸ்ருதியோடு முரண் பட்டது என்று முன்பே கூறப்பட்டது)

வேத வ்யாஸரின் கருத்து
பிறகு ’பஞ்ச பஞ்ச ஜநா:
’ என்பதன் பொருள் என்ன? பஞ்ச ஜநங்கள் என்று சிலருக்குப் பெயர் வழங்கப்படுகிறது.-அவர்கள் ஐவர் எனப்படுகிறது,-’ஏழு ஸப்தரிஷிகள்’ என்பது போல். அவர்கள் யார் என்கிறது அடுத்த ஸூத்ரம் –
2- ப்ராணாதய ₃ : வாக்ய சேஷாத் – “ப்ராணன் முதலானவை , மீதமிருக்கும் வாக்கியத்தால்”
விஷய வாக்கியத்துக்கு அடுத்து வரும் வாக்கியத்தில் -(ப்ராணஸ்ய ப்ராணம் உத சஷுஷஸ் சஷுஸ்: ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம், அந்நஸ்ய அந்நம், மனஸோ யே மநோ விது₃:) அதாவது
“ப்ராணனுக்குப் ப்ராணனாக, கண்ணுக்குக் கண்ணாக, காதுக்குக் காதாக, அந்நத்துக்கு அந்நமாக, மனதுக்குமனதாக அவர் இருக்கிறார்” என்று உள்ளது. அங்கும் ஐவர் சொல்லப்படுகிறபடியால், அந்த ப்ராணன் கண் காது அந்நம் மனஸ் என்று ஐவர் தான் பஞ்ச ஜநங்கள் என்று தெரிகிறது.
கேள்வி – காண்வ சாகையில் இதே விஷய வாக்கியம் உள்ளது, ஆனால் அதற்கு மேல் வரும் ’ப்ராணஸ்ய ப்ராணம்’ என்ற வாக்கியத்தில் ’அந்நம்’ என்பது இடம் பெற வில்லை . எனவே 4 தான் அங்கு உள்ள படியால் ஐந்து பஞ்ச ஜனங்கள் வேறாகத்தானே இருக்க வேண்டும்? பதில் – அடுத்த ஸூத்ரத்தில் -3-ஜ்யோதிஷா ஏகேஷோம் அஸதி அந்நே
ஏகேஷோம்
ஒரு சிலர் ஓதும் காண்வ சாகையில்
அஸதி அந்நே – அந்நம் சொல்லப்படாவிட்டாலும்
ஜ்யோதிஷோ ஜ்யோதிஸ்-என்ற சொல்லைக் கொண்டு நிர்ணயம் செய்யலாம்
காண்வ சாகையில் விஷய வாக்கியத்துக்கு முன்னால் (தம் தே₃வா: ஜ்யோதிஷாம் ஜ்யோதி ஆயு: ஹ உபாஸதே அம்ருதம்” என்று ஓரு வேத வாக்யம்.: )என்று பரமாத்மாவை ஜ்யோதிஸ்ஸுக்களுக்கு (ப்ரகாஸம் கொடுக்கும் பொருள்களுக்கு) ஜ்யோதிஸ்ஸாக சொல்லப்படுகிறார். அவை எத்தனை என்றால்,
’பஞ்ச பஞ்ச ஜனா:’ என்று ஐவர் எனப்படுகிறது. ப்ரகாஸம் கொடுக்கும்
ஐவர் என்றால் எது ஜ்ஞாநத்தை ஏற்படுத்தும் இந்த்ரியங்களையே நினைவு படுத்துகிறது. -எனவே பஞ்ச ஜனர்கள் என்பவை இந்த்ரியங்களே -சஷுஸ் கண். ஸ்ரோத்ரம் காது. ப்ராணன் என்றால் வாயுவை அறியும் தோல் என்ற இந்த்ரியம். மனஸ் மனது-அந்நம் என்ற சொல் மூக்கு நாக்கு என்ற இரண்டையும் சொல்கிறது.
எனவே , இங்கு 25 என்ற எண்ணிக்கை சொல்லப்பட்டாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, ஸாங்க்ய மதம் சொல்லப்படவில்லை , பரமாத்மாவே சொல்லப்படுகிறார் என்பது வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்.

—————–

1-4-4-காரணத்வாதி₄கரணம் ஸத் அஸத் இரண்டுமே ப்ரஹ்மம் தான்

1-4-4-அதிகரணத்தின் பின்புலம்-1-4-4-காரணத்வாதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் ’பொருள்கள் எல்லாம் ஒன்றால் தாங்கப்படுகின்றன’ என்று
ஆதாரமாக ப்ரஹ்மம் சொல்லப்பட்டபடியால் ஸ்வதந்த்ரமான மூல ப்ரக்ருதி ஜகத்காரணம் அல்ல என்று நிரூபித்தார் வ்யாஸர். அப்போது வேதாந்தத்தில் எங்கு ஆதாரமாக ப்ரஹ்மம் சொல்லப்பட வில்லையோ அங்கு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி சொல்லப்படுகிறது என்று கொள்ளலாமே என்று பூர்வபக்ஷீ கேட்கிறார்.

(விஷய வாக்கியம் சொல்லி சந்தேகம் முன்பு எல்லாமே -இங்கு சந்தேகம் -பல ஜகத்காரண வாக்யங்களைக் பற்றிய சந்தேகம் -வேதாந்தமே குழப்புகிறது -என்பதே பூர்வ பக்ஷம்)

ஸந்தேஹம் – வேதாந்தத்தில் ஜகத்காரணமாகச் சொல்லப்படுவது ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதியா? அல்லது பரமாத்மாவா ?
பூர்வ பக்ஷம் – வேதாந்தத்தில் பல முரண்பட்ட வாக்கியங்கள் இருக்கிறபடியால் ’இதுதான் ஜகத்காரணம்’ என்று முடிவு செய்யவே முடியாது. எனவே ’ப்ரஹ்மமே ஜகத்காரணம்’ என்று நீங்கள் சொல்வது தவறு.

சாந்தோக்ய உபநிஷத்தில் (्ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்) அதாவது-’இந்த உலகு அனைத்தும் ஸ்ருஷ்டிக்கு முன்னால் ஸத் என்ற ஒரே பொருளாகவே இருந்ததே ,-வேறு எந்தப் பொருளும் இல்லை ’ என்று சொல்லப்படுகிறது. ’இந்தக் குடங்கள் எல்லாம் முன்னால் மண் கட்டியாகவே இருந்தன’ என்று சொன்னால் குடங்களுக்கு மண் கட்டி தான் காரணம் என்று நாம் அறிவதுபோல் இந்த வாக்கியத்தால் ’இந்த உலகத்துக்கு ஸத் தான் காரணம்’ என்று அறியலாம். ஸத் என்றால் ’இருக்கும் பொருள்’ / ’உள்ள பொருள்’.

தைத்திரீய உபநிஷத்தில் (्அஸத்₃வா இத₃மக்₃ர ஆஸீத்) அதாவது அஸத்தாக அன்றோ இவ்வுலகம்-முன்னால் இருந்தது’ என்றுள்ள தால் அஸத் தான் ஜகத் காரணம் என்று தெரிகிறது. அஸத் என்றால் ’இல்லாதது’.

‘இருப்பது’,’இல்லாதது’ என்று மாற்றி மாற்றி ஜகத் காரணப் பொருள் சொல்லப்படுகிறபடியால் இதுதான் ஜகத்காரணப் பொருள் என்று வேதாந்தத்தைக் கொண்டு முடிவு செய்யவே முடியாது.-அப்படியே முடிவு செய்தாலும்,
(தத்₃தே₄த₃ம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத், தந்நாமரூபாப்₄யாம் வ்யாக்ரியதே ’ என்று இவ்வுலகம் ’அவ்யாக்ருதம்’ அதாவது பெயர் மற்றும் உருவத்தால் பிரித்து அறியப்பட முடியாதபடி இருந்தது, இப்போது பெயர் மற்றும் உருவத்தால் பிரிக்கப்படுகிறது’ என்றுள்ள தால் ஜகத்காரணம் =அவ்யாக்ருதம் = அவ்யக்தம் = மூலப்ரக்ருதி என்றுதான் முடிவு செய்யலாம்.-இந்த மூல ப்ரக்ருதியே நித்யமானபடியால் (எப்போதும் இருப்பதால்) ஸத் என்றும், வடிவங்களால் மாறிக் கொண்டே இருப்பதால் அஸத் என்றும் சொல்லப்படுகிறது. பரமாத்மாவை இப்படி ஸத் மற்றும் அஸத் என்று கூற முடியாது.

(ஈஷதே -முளை தயார் நிலையில் உள்ள விதை போல் பிரகிருதி -ப்ரஹ்மம் -பெரியது -ஆத்மா -எங்கும் வியாபித்து இருப்பதால் -என்று அர்த்தங்கள் கொண்டு ப்ரக்ருதியையே சொல்வதாகக் கொள்ளலாம் -பூர்வ பக்ஷம்)

வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்-(1) காரணத்வேந ச ஆகாசாதி₃ஷு யதா ₂வ்யபதி₃ஷ்டோக்தே:
ஜகத்காரணம் பரமாத்மாவே தான் என்று முடிவு செய்யலாம்,
யதா ₂வ்யபதி₃ஷ்டே — இது வரை ஸுத்ரங்களில் சொல்லப்பட்ட ஸர்வஜ்ஞனான பாபமற்றவரான (சர்வஞ்ஞன் சர்வசக்தன் ஸர்வேஸ்வரேஸ்வரன் சர்வ நியந்தா இத்யாதியாக இதுவரை சொல்லப்பட்ட )பரமாத்மாவை
ஆகாசாதி₃ஷு ச –-ஆகாசம் முதலானவற்றுக்கும் கூட
காரணத்வேந –காரணமாக
உக்தே: சொல்கிறபடியால்
’ஜகத்காரணம் இது தான்’ என்று சொல்வதற்கு முன்னவே அப் பொருளைப் பற்றி வேதம் பலவிதமான உபதேசங்களைச் செய்கிறது. அந்தப் பண்புகள் எல்லாம் ஒரு ஜ்ஞாநமுடைய பொருளுக்கே பொருந்தும்,-ப்ரக்ருதிக்குப் பொருந்தாது.

தைத்திரீய உபநிஷத்தில் – (ப்₃ரஹ்ம வித் ஆப்நோதி பரம்) அதாவது
’ப்ரஹ்மத்தை உணர்ந்தவன் முக்தி அடைகிறான்’ என்று சொல்லி, (ஸஹ ப்₃ரஹ்மணா விபஶ்சிதா) -அதாவது’முக்தியில் அந்த எல்லை யற்ற ஜ்ஞாநமுடைய ப்ரஹ்மத்தையே அடைகிறான்’ என்று சொல்லி, (ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் ப்₃ரஹ்ம ) அதாவது
’எப்போதும் மாறாமல் இருப்பதும்,-எல்லை யற்ற ஜ்ஞாநமுடையதும், அளக்க முடியாததுமாக இருப்பதே ப்ரஹ்மம்’ என்று மறுபடியும் அதற்கு-ஜ்ஞாநமிருப்பதையே அடையாளமாகக் கூறி, (தஸ்மாத்₃வா எதஸ்மாத் ஆத்மந ஆகாஸ : ஸம்பூ₄த:) அதாவது’அப்படிப்பட்ட இந்த ஆத்மாவிடமிருந்து தான் ஆகாஸம் தோன்றியது’ என்று ஸ்ருஷ்டியைச் சொல்லும் போது ஜ்ஞாநமுடைய பொருளை மட்டுமே குறிக்கக்கூடிய ’ஆத்மா ’ என்ற சொல்லாலே இப் பொருளைக் குறிக்கிறது.
இதே போல் சாந்தோக்ய உபநிஷத்திலுள்ள ஸத்₃வித்₃யையிலும் (த தை ₃க்ஷத ப₃ஹு
ஸ்யாம் ப்ரஜாயேயேதி)
என்று ’அந்த ஸத் என்ற பொருள் பார்த்தது (எண்ணியது) –-நான் பலவாக ஆகக் கடவேன், அதற்காக ஸ்ருஷ்டிக்கக் கடவேன் என்று’ என்று ஜ்ஞாநமிருப்பதைச் சொல்கிறது.-எனவே , ஸ்ருஷ்டியைச் சொல்லும் பகுதிகள் எல்லாம் ஜ்ஞாநமுடைய பரோத்மாவையே சொல்கின்றன.

அஸத்’ என்று ஜகத்காரணம் சொல்லப்பட்டதே ? எனில், அதுவும் பரமாத்மாவே என்கிறார் அடுத்த ஸூத்ரத்தில் -(2) ஸமாகர்ஷாத் – “ (ஸர்வஜ்ஞனான ப்ரஹ்மமே அந்த வாக்கியத்திலும்) இழுக்கப் படுகிறபடியால்”’அஸத்₃வா’ எனும் வாக்கியம் உள்ள ஸந்தர்பத்தைப் பார்த்தால் அதுவும் ப்ரஹ்மத்தைத் தான் சொல்லும். முதலில் (தஸ்மாத்₃வா எதஸ்மாத் விஜ்ஞாந மயாத் அந்ய: அந்தர ஆத்மா ஆநந்த₃மய:) அதாவது-’இந்த ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக இருப்பவர் எல்லையற்ற ஆநந்தம் உடையவர்’
என்றுள்ளதால் ஆத்மா என்ற சொல்லைக் கொண்டும் ஆநந்தம் இருப்பதைக் கொண்டும் இந்தப்பொருள் ஒரு சேதநன்(ஜ்ஞாநமுடையது) என்று அறியலாம்.

பிறகு (ஸ தபஸ்தப்த்வா இத₃ம் ஸர்வம் அஸ்ருகஜத) அதாவது
’அந்தப் பொருள் ஸங்கல்பம் செய்து கொண்டு உலகைப் படைத்தது’ என்று அந்தப் பொருளே ஜகத்காரணம் என்று சொல்லப்படுகிறது. அதற்கு மேல் (தத₃ப்யேஷ ஸ்லோகோ ப₄வதி) அதாவது’அந்தப் பொருளைப் பற்றி பின்வரும் ஸ்லோகம் உள்ளது’ என்று கூறிவிட்டு (्அஸத் ₃வா இத₃மக்₃ர ஆஸீத்) அதாவது’இந்த உலகம் எல்லாம் ஸ்ருஷ்டிக்கு முன் அஸத்தாகவே இருந்தது, அதாவது அஸத் தான் ஜகத்காரணம்’ என்று சொல்லப்படுகிறது. எனவே , இதற்கு முன் சொல்லப்பட்ட ஜ்ஞாநமுடைய, ஆநந்தமுடைய, ஜகத்காரணமான
பரமாத்மா தான் இந்த வாக்கியத்திலும் கண்டிப்பாக இழுக்கப்பட வேண்டும் (குறிக்கப்பட வேண்டும்), ப்ரக்ருதி அல்ல.-இதற்குப் பின்னாலும் (பீ₄ஷா அஸ்மாத் வாத: பவதே ) அதாவது
’இந்தப் பொருளின் கட்டளைக்கு பயந்து காற்று, ஸூர்யன், அக்நி, இந்த்ரன், ம்ருத்யு முதலானவர்கள் இயங்குகிறார்கள்’ என்றும் சொல்லப்படுகிறது.-

(ப்ருஹத் ஆரண்யாகாவில் –தத் ஏதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் என்றும்-அதே உபநிஷத் –ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய-என்றுஉள்ளே புகுந்து நகக் கண்கள் வரையில் உள்ளான் -என்கிறது-)-எனவே , அங்கும் இதே பரமாத்மா தான் இழுக்கப்பட வேண்டும், ப்ரக்ருதியால் யாரையும் ஆள முடியாதபடியால்.ப்ரஹ்மம் தான் ஜகத்காரணம். அது எல்லா சேதனங்கள் மற்றும் அசேதனங்களையும் சரீரமாகக் கொண்டது.-அப்படிப்பட்ட ப்ரஹ்மம் நித்யமாக இருக்கிறபடியால் அதுவே ஸத் எனப்படுகிறது. இப்போது சிங்கம், மனிதன், மலை , புத்தகம் என்று பல பெயர்களோடும் உருவங்களோடும் இருந்தாலும், ப்ரளய காலத்தில் இந்தப் பெயர் மற்றும் உருவ வேறுபாடுகளோடு இல்லாதபடியால் ’அஸத்’ (இல்லாதது) என்றும் சொல்லப்படுகிறது. எனவே அவ்யாக்ருதம் என்ற ப்ரக்ருதி தான் ஜகத்காரணம் என்று சொன்னாலும், ப்ரக்ருதியை சரீரமாகக் கொண்ட பரமாத்மா என்றே பொருள்.-எனவே வேதாந்தத்தைக் கொண்டு ப்ரஹ்மம் ஒன்றே ஜகத்காரணம் என்று நிச்சயிக்க முடியும் என்கிறார் வ்யாஸர்–

—————

1-4-5—ஜக₃த்₃வாசித்வாதி₄கரணம்-ஜீவனே ப்ரக்ருதியை இயக்க முடியாதா?

1-4-5-அதிகரணத்தின் பின்புலம் – ஸங்கதி – இதுவரை 4 அதிகரணங்களில் ப்ரதானமே ஸ்வதந்த்ரமான ஜகத்காரணம் என்று பூர்வபக்ஷீ சொன்னதை வ்யாஸர் கண்டித்தார் – ஒரு அறிவுடைய ஆத்மாவால் இயக்கப்பட்டால் மட்டுமே அறிவற்ற அசேதனப் பொருளான ப்ரக்ருதி இயங்க முடியும் என்று கூறி. இப்போது அதே ஸாங்க்யர்கள் மறுபடியும்
கேள்வி எழுப்புகிறார்கள் – சரி, ப்ரக்ருதி ஸ்வதந்த்ரமாகப் படைக்கவில்லை , ஜிவாத்மாவால் இயக்கப்பட்டு தான் படைக்கிறது என்று கொள்ளலாம், அப்போதும் பரமாத்மாவே ஜகத்காரணம் என்று நீங்கள் சொல்வது தவறு தான் என்று.
விஷய வாக்யம் – ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 4ஆம் அத்யாயத்தில் முதல் ப்ராஹ்மணம் – பா₃லாகி ப்₃ராஹ்மணம்-த்₃ருப்த பா₃லாகி: ஹ அநூசாநோ கா₃ர்க்₃ய ஆஸ । ஸ ஹோவாச அஜாத ஶத்ரும் காஶ்யம் – ப்₃ரஹ்ம தே ப்₃ரவாணீதி । ஸ ஹோவாச அஜாத ஶத்ரு꞉ ஸஹஸ்ர மேதஸ்யாம் வாசி த₃த்₃ம: இதி--கர்க கோத்ரத்தைச் சேர்ந்த பாலாகி என்பவன் வேதத்தின் அங்கங்களைக் கற்று- ஆனால் வேதத்தின் உண்மைப் பொருளை
ஆராய்ந்து அறியாமல், (ஸ்ரோத்ரியன் -வேதம் முழுவதும் அறிந்தவன் –அநூசாநன் -அங்கங்களை மட்டுமே அறிந்தவன்)ஆனால் மிகவும் கர்வம் உடையவனாய் இருந்தான். அவன் சிறந்த ஆத்ம ஜ்ஞாநியான காசீ தேசத்து அரசன் அஜாத சத்ருவிடம் சென்று கூறினான் – “உனக்கு ப்ரஹ்மத்தைப் பற்றிச் சொல்கிறேன்” என்று. அரசன் ப்ரஹ்மத்தை உணர்ந்திருந்தாலும் பாலாகியை ஊக்குவிப்பதற்காக உனக்கு ஆயிரம் மாடுகள் பரிசளிப்பேன் என்றான்.

ய ஏவ அஸஸௌ ஆதி₃த்யே புருஷ ஏதமே வ அஹம் ப்₃ரஹ்ம உபாஸ இதி । மா ஏதஸ்மிந் ஸம்வதி₃ஷ்டா₂ । அதிஷ்டா₂꞉ ஸர்வேஷாம் பூ₄தாநாம் மூர்தா₄ ராஜேதி வா அஹமேதமுபாஸ இதி-’ஸூர்ய மண்டலத்திற்குள் இருப்பவர் தான் ப்ரஹ்மம் ’ என்று பாலாகி கூற,
’அந்தப் புருஷனைப் பற்றி என்னிடம் பேசாதே , நான் அவனை ஜீவ ராசிகளுக்கும் சிறந்தவன் என்று அறிவேன், அவன் ப்ரஹ்மம் அல்ல’ என்றார் அரசன்.
இதே போல் சந்த்ரன் மின்னல் ஆகாஸம் வாயு அக்₃நி ஜலம் கண்ணாடி பிரதி த்வனி திசைகள் நிழல் உடல் முதலானவற்றுக்குள் இருப்பவர் தான் ப்ரஹ்மம் என்று பாலாகி சொல்ல, அது அனைத்தையுமே தவறு என்றார் அஜாத சத்ரு.

அஜாத சத்ருவின் உபதேசம்
ஸ ஹ தூஷ்ணீமாஸ கா₃ர்க்₃ய꞉| ஸ ஹோவாசா ஜாதஶத்ரு: – ஏதாவந்நூ இதி | ஏதாவத்₃தீ₄தி । நைதாவதா விதி₃தம் ப₄வதீதி । ஸ ஹோவாச கா₃ர்க்₃ய – உப த்வா யாநீதி
-இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் பாலாகி மவ்னமாக நின்றான். ’அவ்வளவு தானா?’ என்று அஜாத சத்ரு கேட்க,-’ஆம் நான் அவ்வளவு தான் அறிவேன்’ என்று பாலாகி சொல்ல,
’இத்தால் நீ ப்ரஹ்மத்தை அறிய முடியாது’ என்று அரசன் கூறினான். பாலாகி உடனே ’உம்மிடமே நான் ப்ரஹ்மத்தைப் பற்றி கற்கிறேன்’ என்றான்

யோ வை பா₃லாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வா ஏதத் கர்ம ஸ வை வேதி₃தவ்ய:-நீ சொன்ன புருஷர்களுக்கெல்லாம் யார் காரணமோ , இந்தக் கர்மம் யாருடையதோ , அவரே அறியப்பட வேண்டியவர் (இதுவே விஷய வாக்கியம் -நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் )
ஸந்தேகம் – ஜகத்காரணத்தைப் பற்றிச் சொல்லும் வேதாந்த வாக்கியங்களில் ப்ரக்ருதியை இயக்குபவராகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மாவா? அல்லது பரமாத்மாவா?அதை முடிவு செய்வதற்கான விசாரம் – இங்கு அறியப்பட வேண்டியவராகச் சொல்லப்படுபவர் ஜீவனா? பரனா?-அறியப்பட வேண்டியவர் ஜீவன் என்றால், பரமாத்மா என்ற ஓருவரே இல்லை என்றாகும், எனவே ஜீவன் தான் ப்ரக்ருதியை இயக்க வேண்டும். அறியப்பட வேண்டியவர் பரமாத்மா என்றால் அவரே ப்ரக்ருதியை இயக்குபவர்.
பூர்வபக்ஷம் – இங்கு அறியப்பட வேண்டியவராகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மா தான். ஏனெனில் –1- (’யஸ்ய வா ஏதத் கர்ம’) அதாவது-’இந்த கர்மம் யாருடையதோ ’ என்றுள்ளது. கர்ம என்ற சொல்லுக்குப் பொதுவாக பாபம் மற்றும் புண்ணியம் என்று தான் பொருள். எனவே , இங்கு அறியப்படுபவராகச் சொல்லப்படுபவருக்கு பாப புண்யங்கள் உள்ளன என்று அஜாத சத்ரு கூறுகிறபடியால் அவர் உலகில் இன்ப துன்பங்கணள அநுபவிக்கும் ஜீவாத்மாவாகத் தான் இருக்க முடியும். பரமாத்மாவை ஒப்புக் கொள்பவர்கள் அவருக்கு பாப புண்யங்கள் உண்டு என்று ஏற்பதில்லையே

(செயப்படும் பொருள் -கர்மம் -கர்த்தா -செய்பவன் -என்ற பொருள்களும் உண்டே-குடம் குயவன் போல்–ஸித்தாந்தி சொல்வர்-இந்தப் புருஷர்களை உண்டாக்கியவர் எவனோ -முதலில் சொல்லி -இப்பொருள்கள் கொண்டால் புனர் யுக்தி தோஷம் வருமே-ப்ரஸித்தி பாபபுண்யங்களையே சொல்லும் -பூர்வ பக்ஷம் )

பூர்வபக்ஷியின் யுக்திகள்
2-தௌ ஹ புருஷம் ஸுப்தம் ஆஜக்₃மது: | தம் ஏதை தாமபி₄: ஆமந்த்ரயாம்சக்ரே | ஸ உத்தஸ்தௌ₂ | தம் பாணினா ஆபேஷம் போ₃த₄யாம்சகார | ஸ ஹ உத்தஸ்தௌ₂–
அவர்களிருவரும் ஒரு தூங்கும் மனிதனிடம் சென்றார்கள். அவனை அஜாத சத்ரு பெயரால் அழைத்தும் அவன் எழ வில்லை . பிறகு கையால் அசைத்து எழுப்ப, அவன் எழுந்தான்.-இப்படி உபதேசம் உள்ளபடியால், தூக்கம் விழிப்பு முதலானவற்றை யுடைய ஜீவனே இங்கு சொல்லப்படுகிறார்.
3-தத்₃யதா₂ ச்ரேஷ்டீ₂ ஸ்வை : பு₄ங்க்தே யதா₂ ஸ்வா: ச்ரேஷ்டி₂னம் பு₄ங்ஜந்தி ஏவமேவ ஏஷ ப்ரஜ்ஞாத்மா ஏதை : ஆத்மபி₄: பு₄ங்க்தே ஏவமேவ ஏதே ஆத்மா : ஏநம் பு₄ஞ்ஜந்தி-எப்படி ஒரு சான்றோனை அவன் சுற்றத்தா ரெல்லாம் மகிழ்விப்பார்களோ அதுபோல் இந்த ஆத்மாவை நீ சொன்ன புருஷர்கள் எல்லாம் மகிழ்விக்கிறார்கள் -இப்படி உலகிலுள்ள ஜீவ ராசிகளால் மகிழ்பவராகச் சொல்லப்படும் ஆத்மா ஜீவாத்மாவாகத் தான் இருக்கமுடியும்.

4-க்வ ஏஷ ஏதத்₃பா₃லாகே புருஷ: அசயிஷ்ட? அத₂ அஸ்மிந் ப்ராணே ஏவ ஏகதா₄ ப₄வதி | ஸ யதா₃ ப்ரதிபு₃த்₄யதே ஆத்ம : ப்ராணா: யதா₂யததம் விப்ரதிஷ்ட₂ந்தே , ப்ராணேப்₄ய: தே₃வா:, தே₃வேப்₄ய: லோ கா:-இவன் தூங்கும் போது எங்கு சென்றான்? எங்கிருந்து வந்தான்? ப்ராணனோடு தொடர்புபட்ட ஆத்மாவிடம் அனைத்தும் ஒன்றாகிறது. விழிக்கும் போது அங்கிருந்து மூச்சுக் காற்று, புலன்கள் எல்லாம் பிரிந்து வருகின்றன.(ஹிதம் என்னும் நாடிகளில் இருக்கிறான் -இந்திரியங்கள் மனம் அனைத்தும் அடங்கி விடும் -இவரிடம் லயம் அடைகின்றன –இவர் விழிக்கும் பொழுது தங்கள் தங்கள் இடம் செல்கின்றன )-இங்கும் ப்ராணனோடு கூடிய ஆத்மா என்று சொல்லப்பட்டவர் ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.-எனவே ’ப்ரஹ்மத்தைக் கூறுகிறேன்’ என்று பாலாகி தொடங்கி, சொல்ல முடியாமல் திகைத்து, பதிலுக்கு அஜாத சத்ரு’ஜீவாத்மா தான் அறியப்பட வேண்டியவர்’ என்று உபதேசிக்கிறபடியால், ஜீவாத்மா தான் ப்ரஹ்மம், ஜகத்காரணம்.

1.4.5 ஜக₃த்₃வாசித்வாதி₄கரணம்-பரமாத்மா படைத்த உலகில் ஜீவாத்மா வாழ்கிறார்

கர்ம எனப்படுவது பாப-புண்யங்கள் அல்ல
ஜகத்வாசித்வாதிகரணம் – பூர்வபக்ஷம் (யோ வை பா₃லாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வா ஏதத் கர்ம ஸ வை வேதி₃தவ்ய: ) அதாவது“ஸூர்யன் சந்த்ரன் மின்னல் வானம் முதலான புருஷர்களுக்கெல்லாம் யார் காரணமோ , இந்தக் கர்மம் யாருடையதோ , அவரே அறியப்பட வேண்டியவர்” என்று அஜாத சத்ரு பாலாகிக்கு உபதேசித்தார். கர்ம என்றால் பாபமும் புண்ணியமும்.அவற்றைக் கொண்டவர் ஜிவாத்மாவே . எனவே ஜீவாத்மாவே ப்ரஹ்மம்-இங்கு ’அவர் அறியப்பட வேண்டியவர்’ என்றதுக்கு ’பாப புண்யங்களோடு கூடின ஸம்ஸாரத்திலிருக்கும் ஜிவாத்மா அறியப்பட வேண்டியவர்’ என்று பொருள் அல்ல. ’முக்தி அடைந்த நிலையில் இருக்கும் தூய்மையான ப்ரக்ருதி வியுக்த (ப்ரக்ருதியிலிருந்து விடுபட்ட) ஆத்ம ஸ்வரூபம் அறியப்பட வேண்டும்’ என்று தான் பொருள். அதை அறிந்தால் தான் முக்தி கிடைக்கும்.

ஸித்தாந்தம் – இந்த பூர்வ பக்ஷத்தை 3 ஸூத்ரங்களால் கண்டிக்கிறார் வ்யாஸர்.
1- ஜக ₃த்₃வாசித்வாத் –(கர்ம என்ற சொல்) உலகத்தைச் சொல்வதான படியால்”-விஷய வாக்யத்தில் உள்ள கர்ம என்ற சொல் இந்த உலகத்தைத் தான் குறிக்கிறது. ’கர்ம’ என்றால் ’செயப்படு பொருள்’. -பரமாத்மா செய்யும் படைத்தல் என்ற செயலில் செயப்படு பொருளாக உலகம் உள்ளது, அதாவது இவ்வுலகம் அவரால் படைக்கப்படுகிறது. எனவே அதுவே கர்ம. இச் சொல் பாப-புண்யங்கண பின்வரும் காரணங்களால் குறிக்க இயலாது

(ஜகத் வாசித்வாத்-பரம புருஷனே வேதி தவ்யன் -அறியத்தக்கவன் என்று வருவித்துக் கொள்ள வேண்டும்-ஏன் எனில்-கர்ம -என்று ஏதத் ஸப்தத்தோடு ஒரே வேற்றுமையில் உள்ள கர்ம ஸப்தம் – க்ரியதே இதி கர்ம என்ற வ்யுத்பத்தியால் ஜகத்தைச் சொல்லுவதால்
இது புண்ய அபுண்ய ரூப கர்மாவைக் குறிப்பதால் -ஏதத் என்ற ஸப்தம் வீணாகும் என்று கருத்து )

1- ’ஏதத் கர்ம யஸ்ய’ அதாவது-’இந்த கர்மம் யாருடையதோ ’ என்கிற இடத்தில் ’இந்த’ என்ற சொல் உள்ளது. அது கண் வட்டத்தில் அருகில் இருக்கும் பொருளைக் குறிக்கும். புலன்கள் முதலான ப்ரமாணங்களால் அறியப்படும் அருகிலுள்ள பொருள் இந்த ஜகத் (உலகம்) தான், பாப-புண்யங்கள் அல்ல.
2-இதற்கு முன் பாலாகி சொன்ன ஸூர்யன், சந்திரன், வானம், அக்நி முதலானவற்றில் இருக்கும் புருஷர்கள் எல்லாம் கர்மத்துக்கு வசப்பட்டவர்கள். அவர்களை யெல்லாம் ப்ரஹ்மமல்ல என்று நிராகரித்து விட்டு, அவர்களைக் காட்டிலும் வேறுபட்ட ஒருவரை உபதேசிக்கத் தொடங்கிய அஜாத சத்ரு மறுபடியும் பாப-புண்யங்களை உடைய ஒரு ஆத்மாவை ப்ரஹ்மம் என்று சொல்வது முற்றிலும் பொருந்தாது. எனவே இங்கு கர்ம என்ற சொல் பாப-புண்யங்களைக் குறிக்க இயலாது, உண்டாக்கப்படும் இந்த உலகத்தையே குறிக்க வேண்டும்.

பூர்வபக்ஷத்தைத் தகர்த்தல்
3-பூர்வபக்ஷத்தில் லக்ஷணா என்ற தோஷம் ஏற்படுகிறது. ஒரு பொருளைக் குறிக்கும் சொல், அந்தப் பொருள் பொருந்தாதபடியால் அதோடு தொடர்புடைய வேறொரு பொருளைக் குறிப்பதற்கு லக்ஷணா என்று பெயர்.-எடுத்துக்காட்டு – ’வகுப்பறை சத்தமிடுகிறது’ என்ற சொற்றொடரில் உள்ள ’வகுப்பறை ’ என்ற சொல்லுக்கு
முக்கியமான பொருள் ஓர் அறை . ஆனால் அறை சப்தமிட முடியாது. எனவே அப் பொருளை விட்டு, ’வகுப்பறையில் இருப்பவர்கள்’ என்று தொடர்புடைய மற்றொரு பொருளைக் கொள்கிறோம். அப்போது பொருள் பொருந்தும்.
அதே போல் இங்கும் ’கர்மம் யாருக்கு உள்ளதோ அவரை அறிய வேண்டும்’ என்று சொற்றொடர் உள்ளது. ஆனால் ’அவரை ’ என்ற சொல்லுக்கு ’கர்மங்களை உடையவரை ’ என்று பொருள் கொள்வது பொருந்தாது, ஏனெனில் ஸாங்க்ய மதத்தின்படி ஸம்ஸாரத்தில் இருக்கும் ஜீவாத்மாவின் நிலையை அறிவதால் முக்தி கிடைக்காது. எனவே அந்தச்
சொல்லுக்கு ’முக்திக்குப் பின் தூய்மையான நிலையில் இருக்கும் ஆத்மா’ என்று பொருள் கொள்ள வேண்டியுள்ளது. எனவே ’அவர்’ என்ற சொல்லில் லக்ஷணா என்ற தோஷம் ஏற்படும்.
4- மேலும், பூர்வ பக்ஷத்தில் ’இந்தக் கர்மம் யாருடையதோ ’ என்றவிடத்தில் உள்ள ’இந்த’ என்ற சொல் வீணானது.
5-ஸித்தாந்தத்தில் ’ஸூர்யன் முதலானவர்களைப் படைத்தவர் யாரோ , இந்த உலகத்தைப் படைத்தவர் யாரோ ’ என்று ஒரே பொருள் இரண்டு முறை கூறப்படுகிறபடியால் ’புநருக்தி’ (திரும்பச் சொல்லுதல்) என்ற குற்றம் ஏற்படுமே என்று கேள்வி எழுகிறது. ஆனால் அது வராது, இரண்டாவது வாக்கியம் பொதுப்படையாகச் சொல்கிறபடியால். ’இந்த
ஸூர்யன் முதலானவர்களைப் படைத்தவர் யாரோ , அவ்வளவு ஏன், இந்த உலகமே யாருடைய படைப்போ , அவரை அறிய வேண்டும்’ என்று அஜாதசத்ரு சொல்கிறபடியால் புநருக்தி இல்லை . ப்ரஹ்மத்தின் பெருமை சொல்லப்படுகிறது.
6-பூர்வ பக்ஷத்தில் ’இந்த ஸூர்யன் முதலானவர்களைப் படைத்தவர் யாரோ ’ என்றுள்ள வாக்கியம் ஜீவாத்மாவைப் பற்றினது என்று கூறுகிறார்கள். அது பொருந்தாது. ஜீவாத்மாவின் பாப-புண்யங்களுக்கு ஏற்ப இந்தப் பொருள்கள் எல்லாம் படைக்கப் பட்டாலும், ஜீவாத்மா இந்தப் பிறவிகளை அடைந்தாலும், அவர் இந்தப் பொருள்களை படைப்பதே இல்லை . ஜீவாத்மாவின் பாப-புண்யங்களுக்கு ஏற்ப பரமாத்மாவால் படைக்கப்பட்ட பொருள்களைத் தான் ஜீவாத்மா உபயோகிக்கிறார். எனவே அஸம்பவம் (பொருந்தாமை ) என்ற தோஷமும் வரும்.
இப்படி பல தோஷங்கள் பூர்வ பக்ஷத்தில் உள்ள படியால், ஸித்தாந்தத்தில் தோஷமில்லாதபடியால் இதுவே சரியானது.

மற்றவர்களைப் பற்றின பேச்சு எதற்கு?
கேள்வி –
அஜாதசத்ரு பரமாத்மாவைப் பற்றி தான் உபதேசிக்கிறார் என்றால் ஏன் இங்கு தூக்கம், விழிப்பு, உறவினர்களால் மகிழ்தல் முதலான ஜீவாத்மாவைப் பற்றின அடையாளங்களும், தூங்கும் போது புலன்கள் எல்லாம் ப்ராணனில் ஒன்றி விடுகின்றன என்று ப்ராண வாயுவைப் பற்றின பேச்சும் உள்ளது?
பதில் – அடுத்த ஸூத்ரத்தில்
2-–्ஜீவ முக்₂ய ப்ராண லிங்கா₃த் ந இதி சேத் ந தத்₃வ்யாக்₂யாதம்

ஜீவ முக்₂யப்ராண லிங்கா₃த் ந – ஜீவனின் அடையாளங்களும் மூச்சுக் காற்றைப் பற்றின பேச்சு என்கிற அடையாளமும்-இங்கு உள்ள படியால் இங்கு சொல்லப் படுபவர் பரமாத்மா அல்ல
இதி சேத் ந – என்று கூறினால் அது தவறு
தத்₃வ்யாக்₂யாதம் – அது முன்னமே விவரிக்கப்பட்டது
1-1-11-இந்த்ரப்ராணாதிகரணத்தில் இதே போல் ப்ரதர்தனனுக்கு இந்த்ரன் செய்த உபதேசத்தில் இந்த்ரன் என்ற ஜீவாத்மாவைப் பற்றியும் மூச்சுக் காற்றைப் பற்றியும் உபதேசமிருந்தது. ஆனால் அங்கு இவ்வாறு முடிவு செய்தோம் –உப க்ரமம் (தொடக்கம்) மற்றும் உப ஸம்ஹாரம் (முடிவு) என்ற இரண்டிலும் பரமாத்மாவே பேசப்படுகிறபடியால்
இந்தப் பகுதி அவரையே சொல்கிறது. எனவே இந்த்ரன் மற்றும் மூச்சுக் காற்று சொல்லப்படும் இடங்களிலும் அவற்றுக்கும் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மா தான் கொள்ளப் பட வேண்டும்.
அதே போல் இங்கும் தொடக்கத்தில் ’ப்₃ரஹ்ம தே ப்₃ரவாணி’ (உனக்கு ப்ரஹ்மத்தைப் பற்றி உபதேசிக்கிறேன்) என்று உள்ளது, நடுவில் ’யஸ்ய வா ஏதத் கர்ம’ (இந்த உலகமே யாரால் படைக்கப்பட்டதோ ) என்றுள்ளது, முடிவில் ’ஸர்வாந் பாப்மந: அபஹத்ய ஸர்வேஷாம் பூ₄தாநாம் ச்ரைஷ்ட்₂யம் ஸ்வாராஜ்யம் ஆதி₄பத்யம் பர்யேதி’ (இந்த ப்ரஹ்மத்தை
அறிபவன் பாபங்களிலிருந்து விடுபடுகிறான்) என்றுள்ளது. எனவே , இந்த உபதேசமே பரமாத்மாவைப் பற்றினது.
இந்த்ரன் மற்றும் ப்ராணனுக்கு அந்தர்யாமியாகப் பரமாத்மாவைச் சொல்வதன் பயன் என்ன என்ற கேள்விக்கு பதில் சொல்லபட்டது – பரமாத்மாவை தானாகவும், ஜீவனுக்கு அந்தர்யாமியாகவும், அசேதனத்துக்கு அந்தர்யாமியாகவும்-மூன்று விதத்தில் உபாஸநம் செய்ய வேண்டும் என்று இங்கு காட்டப்படுகிறது என்று. இங்கும் அதே போல் ப்ராண வாயுவைப் பற்றின பேச்சு, ப்ராணனை அந்தர்யாமியாகக் கொண்ட பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும் என்று சொல்வதற்காக வந்துள்ளது. எனவே , பூர்வ பக்ஷியின் கேள்விக்கு முன்னமே பதில் அளிக்கப்பட்டு விட்டது.

பரமாத்மாவின் அரவணைப்பு
கேள்வி
– ஜீவனைப் பற்றின பேச்சு இங்கு எதற்காக வருகிறது?
பதில் – அடுத்த ஸூத்ரத்தில்
3-அந்யார்த₂ம் து ஜைமிநி: ப்ரஸ்ந-வ்யாக்₂யாநாப்₄யாம் அபி சைவமேக
அந்யார்த₂ம் து
– (இங்கு ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்வது) வேறொரு ப்ரயோஜநத்துக்காக, அதாவது பரமாத்மாவைப் பற்றி உபதேசிப்பதற்காக, (ஜீவாத்மாவே அறியப்பட வேண்டிய ப்ரஹ்மம் என்று சொல்வதற்காக அல்ல)
ஜைமிநி: – என்று ஜைமிநி மஹரிஷி கூறுகிறார்
ப்ரஸ்ந-வ்யாக்₂யாநாப்₄யாம் – கேள்வியையும் பதிலையும் கொண்டு இதை அறியலாம்
அபி ஏவம் ஏகே – மேலும் ஒரு சிலர் இவ்வாறே ஓதுகிறார்கள்
இங்கு தூங்கிக் கொண்டிருக்கும் மனிதனை எழுப்புவதைப் பற்றின பேச்சு ஜீவாத்மாவைப் பற்றி உபதேசிப்பதற்காக அல்ல என்று அதற்குப் பின் வரும் கேள்வியையும் பதிலையும் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.
அஜாத சத்ருவின் ப்ரஸ்நம் (கேள்வி) இவ்வாறு உள்ளது – ’இதுவரை தூங்கும் போது இந்த ஜீவாத்மா எங்கு இருந்தான்?’
ஜீவாத்மாவைப் பற்றி உபதேசிப்பதாக இருந்தால் ’இவன் யார்’ என்று தான் கேட்க வேண்டும். இங்கு அவர் இருந்த இடத்தைப் பற்றித் தான் கேள்வி உள்ளது. எனவே ஜீவாத்மாவைப் பற்றின பேச்சு அவரைப் பற்றி உபதேசிக்க அல்ல.
அஜாத சத்ருதுவின் வ்யாக்யானம் (பதில்)
(யதா₃ ஸுப்த: ஸ்வப்நம் ந கத₂ஞ்சந பஸ்யதி அத₂ அஸ்மிந் ப்ராணே ஏவ ஏகதா₄ ப₄வதி,
ஏதஸ்மாத் ஆத்மந: ப்ராணா : யதா₂யதநம் விப்ரதிஷ்ட்₂ந்தே )
அதாவது
’ஜீவாத்மா தூங்கும் போது ப்ராணனில் ஒன்றி விட்டு, பிறகு அந்த ஆத்மாவிடமிருந்து எழுந்து வருகிறார்’ என்றுள்ளது. இங்கு ப்ராணன் என்றும் ஆத்மா என்றும் சொல்லப்படுபவர் பரமாத்மாவே , ஏனெனில் மற்ற உபநிஷத்துக்களிலும் ஜீவன் தூங்கும் போது பரமாத்மாவோடு ஒன்றி, தன் களைப்பை எல்லாம் போக்கிக் கொள்கிறான் என்று தான் சொல்லப்படுகிறது.
கடைசியாக, சுக்ல யஜுர் வேதத்தில் நேரடியாகவே (ஏஷ புருஷ: த்தா₃
ய ஏஷ அந்தர் ஹ்ருத₃ய ஆகாச: தஸ்மிந் சேதே )
அதாவது
’ஜீவாத்மா தூங்கும் போது இதயத்தில் இருக்கும் ஆகாசத்தில்-(பரமாத்மாவிடம்) சயனிக்கிறார்’ என்று ஓதப்படுகிறபடியாலும் இவ்வர்த்தத்ணத அறியலாம்.
எனவே இங்கு அறியப்பட வேண்டிய ப்ரஹ்மம் பரமாத்மாவே . அவரே ப்ரக்ருதியை இயக்கி உலகைப் படைக்கிறார்.

(பிராணன் பரமாத்மாவைச் சொல்லி அடுத்த பிராணன் ஜீவாத்மாவைச் சொல்லும் -உபநிஷத் இவ்வாறு குழப்பம் அடையும்படி இருப்பதாலேயே ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரமும் ஸ்ரீ பாஷ்யமும் வேண்டி இருக்கின்றன)

—————-

1.4.6-வாக்யாந்வயாதி₄கரணம்-நம் உறவினர்களைப் ப்ரியமாக ஆக்குபவர் பரமாத்மாவே

அதிகரணத்தின் பின்புலம்
1-4-6-வாக்யாந்வயாதி₄கரணம் – ஸங்கதி
– முன் அதிகரணத்தில் ’கர்மம் யாருடையதோ அவர் அறியப்படவேண்டும்’ என்று சொற்றொடர் இருந்தாலும், ’கர்மம் யாருடையதோ அந்த ஆத்மாவின் தூய்மையான முக்தி அடைந்த நிலையை அறிய வேண்டும்’ என்று கஷ்டப்பட்டு பொருளை உரைத்தார் பூர்வபக்ஷீ. இவ்வதிகரணத்தில் அப்படி எந்தக் கஷ்டமும் இல்லாமல் எளிமையாக ஜீவாத்மா தான் ப்ரக்ருதியை இயக்கிப் படைக்க வைக்கிறார் என்கிறார் பூர்வபக்ஷீ

விஷய வாக்யம் – மைத்ரேயீ ப்₃ராஹ்மணம் – ப்₃ருஹதா₃ரண்யக உபநிஷத் 2ஆம் அத்யாயம் 4ஆம் ப்ராஹ்மணம்-உத்₃யாஸ்யந்வா அரே அஹம் அஸ்மாத் ஸ்தா₂நாத் அஸ்மி । ஹந்த தே அநயா காத்யாயந்யா அந்தம் கரவாணி-யாஜ்ஞவல்க்யர் இல்லற வாழ்க்கையைத் துறக்க விரும்பி, மைத்ரேயீ காத்யாயநீ என்ற தனது இரண்டு மனைவிகளுக்கு இடையே மைத்ரேயியைப் பார்த்து இவ்வாறு கூறினார் – “மைத்ரேயீ! நான் இந்த க்ருஹஸ்த ஆஸ்ரமத்திலிருந்து விலகப் போகிறேன், எனவே உனக்கும் காத்யாயனிக்கும் செல்வத்தைப் பிரித்து முடிவு செய்கிறேன்” என்று.
யந்நு ம இயம் ப₄கோ ₃꞉ ஸர்வா ப்ருதி₂வீ வித்தேந பூர்ணா ஸ்யாத் கத₂ம் தேநாம்ருதா ஸ்யாமிதி । நேதி ஹோவாச யாஜ்ஞவல்க்யோ , அம்ருதத்வஸ்ய து ந ஆஶா அஸ்தி வித்தேந
மைத்ரேயீ கேட்டாள் – “பெரியவரே ! இந்த உலகத்தை யெல்லாம் செல்வத்தால் நிரப்பிக் கொடுத்தாலும் அதைக் கொண்டு நான் மரணமில்லாத நிலையை அடைய முடியுமா?” என்று. யாஜ்ஞவல்க்யர் கூறினார் – “முடியாது,செல்வத்தால் முக்தியை ஒருநாளும் அடைய முடியாது” என்று யேநாஹம் நாம்ருதா ஸ்யாம் கிமஹம் தேந குர்யாம் । யதே₃வ ப₄க₃வாந் வேத₃ ததே ₃வ மே ப்₃ரூஹீதி-மைத்ரேயீ கூறினாள் – “எதைக் கொண்டு என்னால் முக்தி அடைய இயலாதோ அது எனக்கு வேண்டாம். முக்தி அடைவதற்கு நீர் எந்த வழியை அறிந்திருக்கிறீரோ அதையே எனக்கும் சொல்ல வேண்டும்” என்று-ப்ரியா ந: ப்ரியம் பா₄ஷஸ ஏஹ்யாஸ்ஸ்வ வ்யாக்₂யாஸ்யாமி தே--யாஜ்ஞவல்க்யர் கூறினார் – “இவ்வாறு நீ கூறியதால் மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது. வா! அமர்வாய்! உபதேசிக்கிறேன்!”

பூர்வ பக்ஷியின் யுக்திகள்
ந வா அரே பத்யு꞉ காமாய பதி꞉ ப்ரியோ ப₄வத்யாத்மநஸ்து காமாய பதி꞉ ப்ரியோ ப₄வதி-
கணவன் தன்னுடைய எண்ணத்தால் தன் மனைவிக்குப் ப்ரியமானவனாக ஆவதில்லை , ஆத்மாவின் எண்ணத்தால் தான்-இதே போல் ஜாயா (மனைவி), புத்ரன் (மகன்), வித்தம் (செல்வம்), லோகங்கள், தேவர்கள், பூதங்கள், அனைத்துமே அதனதன் எண்ணத்தால் நமக்குப் ப்ரியமாக இருப்பதில்லை , ஆத்மாவின் எண்ணத்தால் தான் என்று உபதேசித்தார்.
ஆத்மா வா அரே த்₃ரஷ்டவ்ய꞉ ஶ்ரரோதவ்யோ மந்தவ்யோ நிதி₃த்₄யாஸிதவ்யோ । ஆத்மநோ வா அரே விஜ்ஞாநேந இத₃ம் ஸர்வம் விதி₃தம்-அந்த ஆத்மா தான் கேட்கப்பட வேண்டும், ஆராயப்பட வேண்டும், த்யானிக்கப்பட வேண்டும், காணப்பட வேண்டும்.-அந்த ஆத்மாவை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்.

ஸந்தேஹம் – இந்த அத்யாயத்திலேயே ஜகத்காரணம் யார் என்ற ஆராய்ச்சியே செய்யப் படுகிறபடியால், இங்கு முக்கியமான கேள்வி – “ஜீவாத்மாவால் இயக்கப் படும் ப்ரக்ருதி ஜகத் காரணமா? அல்லது பரமாத்மா ஜகத்காரணமா? என்று. அதற்காக இங்கு ஆராயப்படுவது – இந்த விஷய வாக்கியத்தில் கேட்டு, ஆராய்ந்து, த்யானித்து காணப்பட
வேண்டியவராகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மா பரமாத்மாத்வா என்று.
பூர்வ பக்ஷம் – ஜீவாத்மாவே , ஏனெனில் இங்கு தொடக்கத்திலும் நடுவிலும் முடிவிலும் அவரே சொல்லப்படுகிறார்.
தொடக்கத்தில் – கணவன் மனைவி குழந்தை செல்வம் முதலானவற்றோடு தொடர்புடைய ஆத்மா ஜீவாத்மாவே
நடுவில் -(விஜ்ஞாநக₄ந ஏவ ஏதேப்₄யோ பூ₄தேப்₄ய꞉ ஸமுத்தா₂ய தாந்யேவ அநுவிநஶ்யதி) அதாவது இந்த ஜ்ஞாந வடிவமான ஆத்மா உடலோடு தோன்றுகிறார், உடல் அழியும் போது
அழிகிறார் என்று சொல்லப் படுகிறபடியால் இங்கும் ஜீவாத்மாவே சொல்லப்படுகிறார்.
முடிவில் – (्விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத்) என்று அறிவுள்ள ஜீவாத்மாவே சொல்லப்படுகிறார்-முக்திக்கான வழியை அன்றோ மைத்ரேயீ கேட்டாள்? ஆம், ஜீவாத்மாவின் உண்மைத் தன்மையை அறிந்தாலே முக்தி -ஜீவாத்மாவை அறிந்தால் அனைத்தையும் எப்படி அறிந்ததாகும்? எல்லா ஜீவாத்மாக்களும் ஸமமாகவே உள்ள படியால்

வ்யாஸரின் பதில்
ஸித்தாந்தம் – 1-(வாக்யாந்வயாத் ्
– “இங்குள்ள வாக்கியங்களின் பகுதிகள் (நன்கு) அன்வயிப்பதற்காக”-யாஜ்ஞவல்க்யர் கூறும் வாக்கியப் பகுதிகளின் பொருள் ஒன்றொடொன்று பொருந்த வேண்டும், மேலும் அது மற்ற உபநிஷத்துகளில் சொல்லப்பட்ட பொருளோடும் பொருந்த வேண்டும். எனவே பரமாத்மாவே இங்கு கூறப்படுகிறார்.
(1)-முக்தி அடையும் வழியைக் கேட்ட மைத்ரேயிக்கு யாஜ்ஞவல்க்யர் இந்த ஆத்மாவைப் பற்றி உபதேசிக்கிறபடியால், இந்த ஆத்மா பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும், ஏனெனில் மற்ற உபநிஷத்துக்களில் எல்லாம் பரமாத்மாவை அறிந்து த்யானித்தால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
(2)-(அஸ்ய மஹத: பூ₄தஸ்ய நி:ச்வஸிதம் ஏதத் யத் ருக்₃வேத₃: ) அதாவது இந்த ஆத்மாவிடமிருந்து தான் உலகமெல்லாம் உண்டாயிற்று என்று சொல்கிறபடியால், அது பரமாத்மாவே .
(3)-ஆத்மாவை அறிந்தால் அனைத்தையும் அறிந்த்தாகும் என்று சொன்னதும் பரமாத்மாவுக்கே பொருந்தும், அவரே அனைத்துப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாகவும் அவற்றுக்குக் காரணமாகவும் இருக்கிறார். ஜீவாத்மாக்கள்அனைவரும் ஸமமாக இருப்பதால், ஒருவரை அறிந்தால் அனைவரையும் அறிந்ததாகும் என்றாலும், ஜீவாத்மாவை
அறிந்தால் அறிவற்ற அசேனப் பொருளை அறிந்ததாக ஆக முடியாது. அது பரமாத்மாவுக்கே பொருந்தும்.

(4)(्மஹத்₃பூ₄தம் அநந்தம் அபாரம்) அதாவது பெரியது, எல்லை யற்றது, கடக்க முடியாதது என்று சொல்லப்படும் குணங்கள் எல்லாம் பரமாத்மாவுக்கே பொருந்தக்கூடியவை .-ந வா அரே பத்யு: காமாய’ என்ற வாக்கியத்தின் பொருள் – “கணவன் மனைவி மகன் முதலானவர்கள் தங்கள் தங்கள் விருப்பத்தால் நமக்குப் ப்ரியமானவர்களாக ஆவதில்லை , பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான் ஆகிறார்கள்” என்று.
அதாவது, தன்னை உபாஸிக்கும் ஒரு பக்தனுக்கு பகவானே தன்னுடைய அருளால் கணவன் மனைவி குழந்தைகள் செல்வம் முதலானவற்ணற ப்ரியமாக ஆக்கி, அவற்றை வழங்குகிறார் என்று பொருள். எனவே கணவன் மனைவி செல்வம் முதலான சிறிய இன்பங்களைக் கை விட்டு, இவற்றுக்கெல்லாம் ஊற்றாக, எல்லை யற்ற ஆநந்தமே
வடிவானவரான பரமாத்மாவைத் தான் கேட்க வேண்டும், ஆராயவும், த்யானிகவும் வேண்டும் என்று கருத்து. இந்த உலகில் எந்த ஒரு பொருளும் இயற்கையாக நமக்குப் பிடித்ததாகவோ பிடிக்காத்தாகவோ இருப்பதில்லை , இடம் காலம் சூழ்நிலை பொருத்து தான். ஆனால் பரமாத்மா மட்டுமே மாறாமல் எப்போதும் ப்ரியமாகவே இருப்பவர்.

(தனது பக்தனுக்கு பிரியமாக இருக்க பகவானே ஸங்கல்பிக்கிறான் -என்கிறார் ராமானுஜர்)

ஜீவாத்மாவே பரமாத்மாவா?
இவ்வாறு இந்த உபதேசம் முழுவதுமே பரமாத்மாவைப் பற்றினது என்று நிரூபிக்கப் பட்டபடியால், இடையில் ஜீவாத்மாவைச் சொல்லும் சொற்களும் கூடப் பரமாத்மாவையே குறிக்கின்றது. அது எப்படி எனில் –
2-ப்ரதிஜ்ஞாஸித்₃தே ₄: லிங்க₃ம் ஆஸ்மாத்₂ய: – “இங்கு சொல்லப்பட்ட ப்ரதிஜ்ஜை ( சபதம்) நிறைவேறியதற்கு இது அடையாளம் என்கிறார் ஆச்மாத்யர் என்ற ரிஷி”-இந்த ஆத்மாவை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்று இங்கு ஒரு ப்ரதிஜ்ஜை ( சபதம்) உள்ளது. அது நிறைவேறியதற்கான அடையாளம் தான் இங்கு ஜீவாத்மாவைச் சொல்லும் சொல் பரமாத்மாவைக் குறிப்பது என்பது. -உலகில் காரணப் பொருளும் காரியப் பொருளும் ஒன்று என்று அறிவோம். குடம் என்ற பொருளை அதற்குக் காரணமான பொருளைக் குறிக்கும் மண் என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறோம். அதே போல், ஜீவாத்மா பரமாத்மாவிடமிருந்து உண்டாகி, அவரிடமே லயம் அடைகிறார்; அவர் பரமாத்மாவைக் காட்டிலும் வேறு அல்ல;ஜீவாத்மாவைக் குறிக்கும் சொல் பரமாத்மாவைக் குறிக்கும், பரமாத்மாவை அறிந்தால் அனைத்தும் அறியப்பட்டதே .

3-(உத்க்ரமிஷ்யத: ஏவம் பா₄வாத் இதி ஔடு₃லோமி:) – “புறப்படுபவர் இதுவே போல் ஆகிறபடியால் என்று ஔடுலோமி என்ற ரிஷி கூறுகிறார்”(உத்க்ரமிஷ்யத –ஸ்வநே ரூபேண அபி நிஷ் பத்யதே -சரீரத்தை விட்டுச் செல்லும் ஜீவனுக்கு-ஏவம் பாவாத் -முக்தியை ஐக்யம் ஏற்படுவதால்-இதி ஔடுலொமி-ஜீவ ஸப்தம் பரமாத்மாவைக் குறிக்கும் என்று அருளிச் செய்கிறார்) -ஜீவாத்மா உண்டாவதே இல்லை என்று வேதம் சொல்கிறபடியால் முன் பக்ஷம் தவறானது. எனவே ஔடுலோமி என்ற ரிஷி இவ்வாறு கூறுகிறார் – “இந்த உலகத்திலிருந்து விடுபட்டு முக்தி அடையும் ஜீவாத்மா பரமாத்மாவைப் போல் ஆகிறபடியால் இங்கு ஜீவாத்மாவைக் குறிக்கும் சொல் பரமாத்மாவைக் குறிக்கிறது” என்று-ஆனால் இதிலும் குறை உள்ளது – ஜீவாத்மா புதிதாக பரமாத்மாவைப் போல் ஆவதில்லை , இயற்கையான அத் தன்மையைத் திரும்பப் பெருகிறார். எனவே இந்தப் பக்ஷமும் தகுந்ததல்ல.

4-அவஸ்தி₂தே : இதி காச க்ருத்ஸ்ந: – “ஜீவாத்மாவுக்குள் அந்தர்யாமியாகப் பரமாத்மா உள்ள படியால் என்று காச க்ருத்ஸ்நர் என்ற ரிஷி கூறுகிறார்”-உலகத்தில் உடலைக் குறிக்கும் சொல் உள்ளிருக்கும் ஆத்மாவையும் குறிப்பதைப் பார்க்கிறோம். அதே போல் தான்
உடலான ஜீவாத்மாவைக் குறிக்கும் சொல் பரமாத்மாவைக் குறிக்கிறது. இதுவே வேத வ்யாஸரும் ஏற்கும் மதம்.ஆகவே , இங்கு பரமாத்மா தான் சொல்லப்படுகிறார், ஜீவன் அல்ல. எனவே பரமாத்மாவே ஜகத் காரணம்

(ய ஆத்மா நி திஷ்டன் யச்யாத்மா சரீரம் -போன்ற பல வாக்யங்கள் உண்டே – இதையே காசக்ருத்ச்னர் எடுத்துக் காட்டுகிறார்-ய ஆத்மனி திஷ்டன் -இத்யாதிகளில் ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக பரமாத்மாவின் ஸ்திதியைக் கூறுவதால் –விஞ்ஞான கன சப்தங்கள் பரமாத்மாவின் முடிவதால் பரமாத்ம வாசகங்கள் தான் -தேவன் மனுஷ்யன் ஸப்தங்கள் ஜீவாத்மாவைக் குறிப்பது போலவே சரீர வாசக ஸப்தங்கள் ஸர்வ சரீரிகனான பரமாத்மாவைக் குறிப்பவை என்று காசக்ருஸ்தனரின் திரு உள்ளம் –)

—————–

1.4.7 ப்ரக்ருத்யதி₄கரணம்-உலகின் உபாதாந காரணமும் பரமாத்மாவே

(வேர் முதல் வித்து -முதல் தனி வித்தேயோ -தானோர் விதிதாய் -அபின்ன நிமித்த உபாதானம் -நம் சித்தாந்தத்தில் அசாதாரணம்-ஸர்வம் கலு ப்ரஹ்மம் -நீராய் நிலனாய் -அயனாய் சிவனாய் – -இத்தை இதில் நிரூபிக்கிறார் -)

அதிகரணத்தின் பின்புலம்
1-4-7-ப்ரக்ருத்யதி₄கரணம் – ஸங்கதி
– இதுவரை ஈஸ்வரனே கிடையாது என்று சொல்லும் ஸாங்க்யர்களின் மதம் கண்டிக்கப்பட்டு. இப்போது ஈஸ்வரனை ஒப்புக் கொண்டு, ஆனால் அவர் உலகின் நிமித்த காரணம் (படைப்பாளி) மட்டும் தான், உபாதாந காரணம் அல்ல என்று சொல்லும் ஸாங்க்ய மதத்தைக் கண்டிக்கிறார் இவ்வதிகரணத்தில்.
பூர்வ பக்ஷம் – பரமாத்மா உலகின் படைப்பில் நிமித்த காரணம் மட்டும் தான், உபாதான காரணம் அல்ல-உலகில் எந்த ஒரு பொருள் உண்டாவதற்கும் மூன்று விதமான காரணங்கள் தேவை –
(1) உபாதான காரணம் – மூலப்பொருள் – குடத்துக்கு மண், துணிக்கு பஞ்சு முதலானவை போல்
(2) நிமித்த காரம் – அறிவுடைய ஆத்மா (படைப்பாளி) – குடத்துக்குக் குயவன், துணிக்கு நெசவாளி போல்
(3) ஸஹகாரி காரம் – துணை புரியும் கருவிகள் – குடத்துக்கு சக்கரம், துணிக்குத் தரி போல் வேதாந்த வாக்கியங்களில் பரமாத்மா ஜகத்காரணமாகச் சொல்லப்படுவது உண்மை -ஆனால், அவர் இந்த உலகத்தைப் படைப்பதற்கு நிமித்த காரணமாக மட்டும் தான் இருக்க முடியும். ஏனெனில்,“நிஷ்கலம் நிஷ்க்ரியம்” (பகுதிகள் இல்லாதவர், செயல்கள் இல்லாதவர்) முதலான வாக்யங்களால் பரமாத்மா எந்த விதமான விகாரங்கள் (மாறுபாடுகள்) இல்லாதவர் என்று தெரிகிறது. எனவே அவர் உபாதானமாக ஆக முடியாது; உபாதானம் உருமாறியே ஆக வேண்டும்.-உபநிஷத்துக்களிலேயே ’ஜநித்ரீ பூ₄தபா₄விநீ’ (ஜீவ ராசிகளைப் படைப்பது), ’அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்(இதிலிருந்து பரமாத்மா உலகத்தைப் படைக்கிறார்) என்று பல வாக்யங்களில் மூல ப்ரக்ருதி தான் உபாதான காரணமாகச் சொல்லப்படுகிறது-உலகில் இரண்டு நியமங்களைப் பார்க்கிறோம் – (1) உபாதான காரணமும் நிமித்த காரணமும் வெவ்வேறாகத் தான் இருக்கும் (2) பல காரணங்களின் சேர்க்கையால் தான் ஒரு பொருள் உண்டாகும். எனவே , சில இடங்களில் உபநிஷத் பரமாத்மாவே உபாதான காரணம் என்று சொல்வது போல் தோன்றினாலும், உலகில் பார்த்த்துக்கு முரணாக இப்படி ஒரு தத்துவத்தை வேதத்தால் போதிக்க இயலாது. ’நெருப்பால் நனைத்தார்’ என்று சொல்வது போல் தவறாகும்.-எனவே , பரமாத்மா நிமித்த காரணமாக இருந்து, மூல ப்ரக்ருதி என்ற பொருளைக் கொண்டு இந்த உலகைப் படைக்கிறார். அவர் உபாதான காரணம் அல்ல.

பரமாத்மாவிடமிருந்தே உலகம் உண்டாகிறது
ஸித்தாந்தம் – 1– ப்ரக்ருதி: ச ப்ரதிஜ்ஞா த்₃ருஷ்டாந்த அநுபரோதா₄த்

(உலகுக்கு) உபாதான காரணமும் (பரமாத்மாவே , அப்போது தான்) ப்ரதிஜ்ஜையும் எடுத்துக் காட்டும் -(அநுபரோதா₄த்-)தடை படாதபடியால்
சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாம் அத்யாயத்தில் உள்ள ஸத்₃வித்₃யா என்பது இங்கு கூறப்படுகிறது. வேதம் கற்று வந்து கர்வத்வதாடு நிற்கும் ஸவேதகேது என்ற தன் மகனைப் பார்த்து உத்தாலகர் என்ற தந்தை கேட்கிறார்.
ப்ரதிஜ்ஞா – (्உத தம ஆதே₃சம் அப்ராக்ஷ்ய:யேந அஸ்ருதம் ஸ்ருதம் பவதி அமதம் மதம் அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம்) அதாவது“எதை அறிந்தால் அனைத்தையும்அறிந்த தாகுமோ அந்த (ஆதேசம் -நியமனம் ஈசன் )ஸர்வேஸ்வரனைப் பற்றிக் கேட்டாயா”என்று. பரமாத்மாவை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும் என்பதே இங்கு ப்ரதிஜ்ஜை .
த்₃ருஷ்டாந்தம் –(्யதா₂ ஸோம்ய ஏகேந ம்ருத் பிண்டே₃ந ஸர்வம் ம்ருண் மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்) அதாவது “எப்படி ஒரு மண் கட்டியை அறிந்தால் மண்ணாலான எல்லாப்
பொருள்களையும் அறிந்ததாகுமோ அதுபோல்” என்று எடுத்துக் காட்டையும் அவரே உரைக்கிறார்.
இவை இரண்டாலும் நாம் அறிவது – (1) மண் மரம் முதலான உபாதான காரணமும் குடம் மேஜை முதலான காரியமும் வெவ்வேறு அல்ல, காரணப் பொருளே தான் வேறொரு வடிவத்தையும் பெயரையும் அடையும் போது காரியப் பொருள் என்று வழங்கப்படுகிறது (2) எனவே உபாதான காரணத்தை நாம் அறிந்து விட்டால் அதிலிருந்து உண்டாகும் எல்லாப் பொருள்களையும் ஒரு முறையில் அறிந்ததாக ஆகும்
(3) அதுபோல் பரமாத்மாவை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும்.
எனவே இந்த ப்ரதிஜ்ஜை மற்றும் த்₃ருஷ்டாந்தத்தைக் கொண்டு பார்த்தால், பரமாத்மா உபாதான காரணமாகத் தான் சொல்லப்படுகிறார் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அவரே ஸங்கல்பம் செய்து கொண்டு உலகைப் படைக்கிறார் என்று மேலே சொல்லப் படுகிறபடியால் நிமித்த காரணமும் அவரே ஆவார்.
ப்ரக்ருதி படைக்கிறது என்று சொல்லும் வாக்கியங்களில்’ ’ப்ரக்ருதிக்கு அந்தர்யாமியான பரமாத்மா’ என்றே பொருள்.-உலகில் மண்ணுக்கு ஜ்ஞான மில்லாமையாலும், குயவனுக்கு தன் உடலைக் குடமாக மாற்றும் சக்தி இல்லாததாலும் உபாதானமும் நிமித்தமும் வெவ்வேறாகக் காணப்படுகின்றன. பரமாத்மாவிடமோ இரண்டுமே பொருந்துகிறது.

(இதே போல் ஸதேவ ஸோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -இதம் இந்த பார்க்கிற லோகம் சத்தாகவே ஒன்றாகவே இருந்தது -இரண்டாவதே இல்லை-ப்ரக்ருதி படைக்கிறது என்னும் இடங்களிலே ப்ரஹ்மம் அந்தர் யாத்மாவாகக் கொண்ட பிரகிருதி என்றே பொருள் -மண்ணை உடலாக கொண்ட பரமாத்மா -குடத்தை உடலாக கொண்ட பரமாத்மாவாக மாறினார் -நான் குழந்தை -நான் யுவா -இந்த உடலுக்குள் இருந்த ஆத்மா ஓன்று தானே -அதே போல் கொள்ள வேண்டும் – -)

மூன்று விதமான காரணங்களும் பரமாத்மாவே
2–அபி₄த்₄யோபதே₃சாத் ச –
“ஸங்கல்பத்தின் உபதேசத்தாலும்” – ஸ்ருஷ்டிக்கும் போது பரமாத்மா எடுக்கும் ஸங்கல்பம் உபநிஷத்தில் (ப₃ஹு ஸ்யாம்) அதாவது
“நான் பலவாக ஆகக் கடவேன்” என்று காட்டப் பட்டுள்ளது.(ததைஷத பஹூஸ்யாம் -சாந்தோக்யம் என்றும் ஸோ காமயத பஹூஸ்யாம் -தைத்ரியம் -என்றும் சொல்லுவதால் உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று அறியலாம்-) உபாதான காரணம் தானே பல காரியப் பொருள்களாக ஆகும். எனவே இத்தால் பரமாத்மா நிமித்த காரணம் மட்டுமல்ல, உபாதானமும் அவரே என்று தெரிகிறது.

(
யானும் தானாய் ஒழிந்தானையாதும் எவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்அமுதும் ஆகித் தித்துத்து என்
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே)

3-ஸாக்ஷாத் ச உப₄யாம்நாநாத்
– “நேரடியாகவும் இரண்டும் ஓதப் படுகிறபடியால்”-உபநிஷத்தில் (्ப்₃ரஹ்ம வநம், ப்₃ரஹ்ம ஸ வ்ருக்ஷ ஆஸீத் யதோ த்₃யாவா ப்ருதி₂வீ நிஷ்ட₂தக்ஷு:, ப்₃ரஹ்ம அத்₄ய திஷ்ட₂த் பு₄வநாநி தா₄ரயன்) அதாவது
“உலகத்தை ப்ரஹ்மம் படைக்கும் போது, காடு போல் ஆதாரமாக இருப்பதும் ப்ரஹ்மம் தான், மரம் போல் உபாதானமாக இருப்பதும் ப்ரஹ்மம் தான், இயக்கப்படும் கருவிகளும் ப்ரஹ்மம் தான்” என்று ஸ்பஷ்டமாகவே ப்ரஹ்மம் உலகுக்கு நிமித்த காரணமும் உபாதான காரணமும் என்று சொல்லப்பட்டுள்ளது.

4–ஆத்ம க்ருதே : – “தன்னையே செய்கிறபடியால்”. உபநிஷத்தில் உலகத்தின் படைப்பைச் சொல்லும் போது(தத் ஆத்மாநம் ஸ்வயம் அகுருத) அதாவது அந்த ப்ரஹ்மம் தன்னைத் தானே செய்து கொண்டது” என்று கூறப்படுகிறது. தன்னைத் தானே பலவாக ஆக்குதலால் பரமாத்மா உபதானமும் தான்.

5–பரிணாமாத் ् – “மாறுபாட்டால்”. இப்படி பரமாத்மாவே உலகமாக மாறினால் அவருக்கு துன்பம், மாறுபாடு முதலான தோஷங்கள் ஏற்படுமே என்று ஸந்தேகம் எழும். அதற்கு பதிலளிக்கிறார் வ்யாஸர் – இங்கு பரமாத்மாவுக்கு ஒரு குறிப்பிட்ட விதமான மாறுபாடு சொல்லப்படுகிறபடியால் எந்தக் குற்றமும் வராது,(ஸூஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம் –ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -எப்பொழுதும் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ளது தோஷங்கள் தட்டாது-) -சொல்லப் போனால் தன் உடலையே உலகமாக மாற்றும் பெருமை தான் இதிலிருந்து தெரியும்.

6-யோநிஶ்ச ஹி கீ₃யதே – “யோநியாகவும் பாடப்படுகிறார் அன்றோ ”(யோனி ஸப்தம் உபாதான காரணம் என்னும் பொருளில் வந்தது ஹி -ஹேதுப் பொருளைக் காட்டும்-எக் காரணத்தால் யோனி என்று ப்ரஹ்மம் கூறப்படுகிறதோ அதே காரணத்தால் அது நிமித்தமும் உபாதானமும் என்று ஸித்திக்கிறது –)-வேதத்தில் பல இடங்களில்“கர்தாரம் ஈஸம் புருஷம் ப்₃ரஹ்ம யோநிம்”(படைப்பவனும் புருஷனும் யோநியும் ஆக உள்ள ப்ரஹ்மம்-கர்த்தா என்கிற பதம் நிமித்த காரணத்தையும்-யோநி என்கிற பதம் உபாதான காரணத்தையும் குறிக்கும்-)“யத்₃பூ₄த யோநிம் பரிபஸ்யந்தி தீ₄ரா:(-ஞானம் உடையவர்கள் பூதங்களின் யோனியாக காண்கின்றார்களோ )” என்றெல்லாம் பரமாத்மாவை யோநி என்று அழைக்கிறது வேதம். யோநி என்றால் உபாதான காரணமே . எனவே பரமாத்மாவே உபாதானம்.

இவ்வாறு பல காரணங்களால் உலகத்தைப் படைப்பதற்கு நிமித்தமாகவும் உபாதானமாகவும் ஸஹகாரியாகவும் பரமாத்மா ஒருவரே இருக்கிறார் என்னும் தத்துவத்தை வேதவ்யாஸர் நிரூபிக்கிறார் இவ்வதிகரணத்தில்.

(இவன் தானே ஐகத்தாய்ப் பரிணமிக்கையாலே உபாதானமமாயும் இருக்கும்-தத்வ த்ரயம்-சூர்ணிகை -165-)

ஏகமேவ அத்விதீயம் -என்றும்
ததா தமா நம ஸ்வயம் குருத -என்றும்
ஸ்ருஷ்டௌ சருஜதி சாதமானம் விஷ்ணு பால யஞ்ஞ பாதி ச -உப சம்ஹரியதே சாந்தே சம்ஹாததா ச ஸ்வயம் பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-12-67-அந்த நாராயணன் நான்முகனாக படைத்து தானாகவே காத்து சிவனாக இருந்து சம்ஹரிக்கவும் செய்கிறானோ -என்றும்
ச ஏவ ஸ்ருஜ்யதே ச ச சாகககா ததா ச ஏவ பாதயந்தி ச பாலயதேச ப்ரஹ்மா தயவ சத தாபி ரசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்ட்டோ வரதோ வரேண்ய-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-12-70-அவனே அனைத்தையுமே ஸ்ருஷ்டிப்பவனாகவும் அனைத்தும் வரங்களையும் அளிப்பவனாகவும் -அனைவராலும் அடையத்தக்கவனாகவும் உள்ளான் -படைப்பட்ட அனைத்தும் விஷ்ணுவே -காப்பவனும் அழிப்பவனும் அவனே-இத்யாதிகளால்
இந்த நிமித்த உபாதான யோர் ஐக்யத்தை ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஸூ வ்யக்தமாக சொல்லா நின்றது இறே –

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –10-

—————

1.4.8 ஸர்வ வ்யாக்₂யாநாதி₄கரணம்-பர ப்ரஹ்மம் நாராயணனே

வேதாந்தம் முழுவதுமே ப்ரஹ்மத்தைத் தான் சொல்கிறது-1-4-8-ஸர்வ வ்யாக்₂யாநாதி₄கரணம் – ஸங்கதி – இதுவரை ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் உபநிஷத் வாக்கியங்களுள் ஸந்தேஹத்துக்கு இடமளிக்கும் வாக்கியங்களை ஒவ்வொன்றாக எடுத்து, அதன் ஸந்தர்பத்தை ஆராய்ந்து, அவ் விடத்தில் ஜகத் காரணமாகச் சொல்லப்படுபவர் பரமாத்மாவே என்று நிரூபித்தார் வ்யாஸர். இந்த அதிகரணத்தில், இதுவரை எடுத்து ஆராயப்படாத எல்லா உபநிஷத் வாக்யங்களும் கூட பரமாத்மாவையே சொல்கின்றன என்று நிரூபிக்கிறார்.
விஷய வாக்யம் – உபநிஷத்துக்களில் ஸித்தமான (முன்னமே தயாராக உள்ள) ப்ரஹ்மத்தைப் பற்றிப் பேசும் வாக்கியங்கள் எல்லாம் 1.1.1-ஜிஜ்ஞாஸாதிகரணத்தாலும் 1.1.4-ஸமந்வயாதிகரணத்தாலும் பரமாத்மாவைப் பற்றியவை என்று நிரூபிக்கப்பட்டன. அதற்குப் பின் ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் சில குறிப்பிட்ட வாக்கியங்கள் ஒவ்வொரு அதிகரணத்திலும் ஆராயப் பட்டன. இந்த அதிகரணத்திற்கு விஷயம் –இது வரை எடுத்து ஆராயப்படாத வாக்யங்கள்.

(அதிதேச சங்கதி -கீழ் நிரூபிக்கப்பட்டவற்றையே ஏறிட்டுக் கொண்டு அனைத்து வேதாந்த வாக்யங்களுக்கும்-இதுவரை எடுத்துக்கொள்ளாத ஜகத் காரணமாக போதிக்கும் அனைத்து வேதாந்த வாக்யங்களுக்கும் பொருள் கொள்ள வேண்டும் -என்பதே இதற்கு சங்கதி)

ஸந்தேஹம் – இந்த வாக்கியங்கள் எல்லாம் முன் கூறப்பட்ட பர ப்ரஹ்மத்தையே குறிக்கின்றனவா? அல்லவா?
பூர்வ பக்ஷம் – இந்த வாக்கியங்கள் எல்லாம் பரமாத்மாவைச் சொல்லவில்லை முரண்பாடு உள்ள படியால்.
ஸித்தாந்தம் – 1-ஏதேந ஸர்வே வ்யாக்₂யாதா : வ்யாக்₂யாதா :
ஸர்வே
– இதுவரை தனித் தனியாக எடுத்து ஆராயப்படாத ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் உபநிஷத் வாக்யங்கள் அனைத்தும்
ஏதேந – இத்தால் -முதல் அத்யாயத்தில் 4 பாதங்களிலும் இதுவரை சொல்லப்பட்ட ந்யாயங்களால் (யுக்திகளால்)
வ்யாக்₂யாதா : – (பரமாத்மாவையே குறிப்பவையாக) விவரிக்கப்பட்டன -சொல்லப்பட்டன
“வ்யாக்₂யாதா:” என்று மறுபடியும் ஒரு முறை படிக்கப்படுவது, இந்தச் சொல்லோடு இந்த அத்யாயம் முடிகிறது என்று காட்டுவதற்காக.

(இதே போல-2அத்யாயத்தில் இறுதியில் கடைசி சொல்- இரண்டு தடவையும்-வைசேஷ்யாத் து தத் வாத தத் வாத –2-4-19–என்றும் 3-அத்யாயத்தில் இறுதியில் கடைசி சொல் இரண்டு தடவையும்ஏவம் முக்தி பலா நியம தத் அவஸ்தா வத்ருதே தத் அவஸ்தா வத்ருதே–3-4-51-என்றும் -4 அத்தியாயத்தில் முழு ஸூத்திரமே –545 -ஸூத்ரமே இரண்டு தடவை படிக்கப்படும் (அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் ) ப்ரஹ்ம ஸூத்ரம் முடிவடைவதால்)

இந்த அதிகரணத்தின் கருத்தை ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண ஸாராவளியில் கூறுகிறார்

குறிப்பட்ட ஸந்தேஹமும் அதன் தீர்வும்
அக்₃ரே ஸம்வர்தநம் பா₄தி அவித்த₂வசஸி க்வாபி ஹிரண்ய க₃ர்ப₄ம்
க்₃ரஸ்தா ஸேஷ ஸ்வ கார்யே தமஸி சிவ ஏவேதி கேசித் பட₂ந்தி |
ஏதாத்₃ருக்₃வாக்ய வர்க₃ ஸ்பு₂ட₂ ப₄வத் அதி₄கா சங்கந ஸ்தம்ப₄நார்த₂ம்
ப்ராகு₃க்தாந் நீதி பே₄தா₃ந் அதிதி₃ சதி பரம் சிஷ்ய சிஷைக சித்த: ||

பூர்வ பக்ஷம் –
வேதாந்தத்தில் ஓரிடத்தில்
(ஹிரண்ய க₃ர்ப₄: ஸம வர்தத அக்₃ரே பூ₄தஸ்ய ஜாத: பதிரேக ஆஸீத்) என்று “ஸ்ருஷ்டிக்கு முன்னால் ஹிரண்ய கர்பன் என்ற நான்முகக் கடவுள் மட்டுமே இருந்தார்” என்று சொல்லப்படுகிறது. மற்ற ஓரிடத்தில்
(யதா₃ தம: தந்ந தி₃வா ந ராத்ரி: ந ஸத் ந அஸத் சிவ ஏக கேவல:) அதாவது “ப்ரளயத்தில் பகலோ இரவோ அசித்தோ சித்தோ எதுவும் இல்லாத போது சிவன் மட்டுமே தனியே இருந்தார்” என்று சொல்லப்படுகிறது. எனவே பர ப்ரஹ்மம் யார் என்று முடிவெடுக்க இயலாது. இவர்களுள் ஒருவரா? மூவருமா? மூவரைத் தவிற வேறு ஓருவரா? தெரியாது.
ஸித்தாந்தம் –முன் சொல்லப்பட்ட ந்யாயங்களைக் கொண்டே இந்த விஷயத்திலும் நாம் முடிவை எட்டலாம்.
1.1.5 ஈஷத்யதி₄கரணத்தில் – “க₃தி ஸாமாந்யாத்”
என்ற ஸூத்ரத்தில் ஸத், ப்ரஹ்ம, ஆத்மா என்றெல்லாம் சொல்லப்படும் ஜகத் காரணப் பொருள் நாராயணன் தான் என்று நிரூபிக்கப்பட்டது.
1.1.6 ஆநந்த₃மயாதி₄கரணத்தில் – நான்முகனின் ஆநந்ததைக் காட்டிலும் நூறு நூறு மடங்கு உயர்ந்தது ப்ரஹ்மத்தின் ஆநந்தம் என்று சொன்னபடியால் நான்முகன் ப்ரஹ்மம் அல்ல என்று தெரிகிறது.
1.1.7 அந்தரதிகரணத்தில் – தாமரை போன்ற கண்ணுடையவன் ப்ரஹ்மம் என்று சொன்னபடியால் சிவன் ப்ரஹ்மமல்ல
1.1.10 ஜ்யோதிரதிகரணத்தில் – விண்ணுலகில் இருப்பவர் ப்ரஹ்மம் என்றுள்ள படியால், அங்குள்ள வாக்யங்கள் புருஷ ஸூக்தத்தை நினைவூட்டுகிற படியால், புருஷ ஸூக்தத்தில் ஶ்ரீதேவீ மற்றும் பூதேவியின் நாயகனே சொல்லப்படுகிறபடியால் ஶ்ரீமந் நாராயணனே பரமாத்மா, பர ப்ரஹ்மம், ஸர்வேஸ்வரன், எல்லாம் ஆவார்.
ஆக இப்படி ஸமந்வய அத்யாயத்தில் 11 + 6 + 10 + 8 = 35 அதிகரணங்களால் நாராயணனே ஜகத் காரணம் எனப்பட்டது

மஹா உபநிஷத் -ஏகோ ஹை வை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான
ஸ முனிர் பூத்வா சம சிந்தயத் த ஏத வ்யாஜ யந்த விச்வே ஹிரண்ய கர்ப்போ அக்னீர் யம
வருண ருத்ர இந்த்ரா விஷ்ணுஸ் ததா ஸீத் ஹரி ரேவ நிஷ்கள
-ருத்ராதிகளுக்கு கார்யத்வமும் கர்ம வஸ்யத்வமும் ஸ்ருதிகள் கோஷிக்குமே
ஸ்ரீ மன் நாராயணனே மோக்ஷ பிரதன் -அந்தர்யாமியானவனுக்கே -ஸஹஸ்ர சீர்ஷா புருஷன்-விஷ்ணுக்கும் உத்பத்தி உண்டே காரணத்வம் சொல்லலாகாதே என்னில்
ரஷார்த்தம் ஸர்வ பூதா நாம் விஷ்ணுத்வம் உப ஜஜ்ஜிவான் அஜாயமானோ பஹுதா விஜாயதே -என்று இச்சா பரிஹ்ருஹீதா திவ்ய மங்கள விக்ரஹம் –ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தவன்-இதம் பூர்ணம் –இத்யாதி-

இப்பாத அதிகரண அர்த்தங்களை

1-அனு மாதிக அதிகரணத்தில் –சாங்க்யர் கூறும் ப்ரக்ரியா பிரகாரங்களும்
2-சமஸ அதிகரணத்தில் -அவர்கள் ஏற்கும் ஸ்ருஷ்டி க்ரமமும்
3- சாங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணத்தில் -அந்த எண்ணிக்கை அமைப்பும்
4-காரணத்வ அதிகரணத்தில் -அவர்கள் கூறும் அவ்யாக்ருதத்துடன் ஐக்யமும்
5- ஜகத் வாசித்வ அதிகரணத்தில் -தன் பாபம் பற்றிய வசனமும்
6-வாக்ய அந்வய அதிகரணத்தில் -கர்ம பலமான தோஷ சம்பந்தமும்
7-ப்ரக்ருத் யதிகரணத்தில்-உபாதான நிமித்த பேதமும்
8-சர்வ வியாக்யான அதிகரணத்தில் -ப்ரஹ்மாதிகளுக்குக் காரணத்வமும் –

ஆக எட்டு பூர்வ பக்ஷ யுக்தி ஆபாஸ மூலகமான கருத்துக்களால் முன் மூன்று பாதங்களின் கருத்துக்கள் தாக்கப்படவே-ஸ்ருதி தாத்பர்யங்களை வெளிப்படுத்தி-அவற்றின் யதார்த்த அர்த்தங்களைக் காட்டி-ஸூத்ர காரர் ரக்ஷித்து அருளினார் என்று திரு உள்ளம் –

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -சம்பூர்ணம்

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

சாந்தோக்ய உபநிஷத்-அத்யாயம்-8-(பிரஜாபதி வித்யா – தகர வித்யா)

May 12, 2025

1.3.5 த₃ஹரதி₄கரணம்-பரமாத்மா கல்யாண குணங்களை உடையவரே –

10 ஸூத்ரங்களால் ஸித்தாந்தம்

(வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||-
-ஶ்லோகம் 18 –)

நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.

உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே
||-ஶ்லோகம் 19 –

வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து, உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று, சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,

1.3.5 த₃ஹராதிகரணத்தின் பின்புலம்
ஸங்கதி
– முன் அதிகரணத்தில் முக்தி அடைந்த ஒரு ஜீவாத்மா ஸ்ரீ வைகுந்தம் அடைந்து பரமாத்மாவைக் காண்கிறான் என்று சொல்லப்பட்டது. அந்தப் பரமாத்மாவை ’புரிசயம்’ அதாவது-’எல்லாப் ப்ராணிகளின் உடல்களிலும் (எல்லாப் பொருள்களிலும்) இருப்பவர்’ என்று சொல்லிற்று உபநிஷத்-அதற்கு மேல் ஆஷேபம் எழுகிறது – மற்ற ஓரு
உபநிஷத்தில் எல்லா ப்ராணிகளின் உடல்களிலும் இருப்பவராக வேறு ஓருவர் தானே சொல்லப்பட்டுள்ளார் – என்று.-(புரிசயம் -பட்டணத்தில் வாழ்பவர்)

விஷய வாக்யம் – ஸாந்தோக்ய உபநிஷத்தின் எட்டாவது ப்ரபாடகம்-(அத்யாயம்) – த₃ஹர வித்₃யா அத₂ யதி₃த₃ம் அஸ்மிந் ப்₃ரஹ்ம புரே த₃ஹரம் புண்ட₃ரீகம் வேஶ்ம த₃ஹர: அஸ்மிந் அந்தராகாஶ: தஸ்மிந் யத₃ந்த: தத₃ந்வேஷ்டவ்யம் தத்₃வாவ விஜிஜ்ஞாஸி தவ்யமிதி–ப்ரஹ்ம புரம் என்றழைக்கப் படும் இந்த உடலின் உள்ளே தாமரை வடிவில் நுண்ணியதான ஓரிடம்(ஹ்ருதயம்) உள்ளது. அதற்கும் மிக நுண்ணியதான ஆகாஸம் உள்ளது. அந்த ஆகாஸத்தில் எது உள்ளதோ அதைத் தேட வேண்டும், அதையே த்யானிக்க வேண்டும்.

(ஸத்வித்யை -6 ப்ரபாடகம் -பூம வித்யை -7 ப்ரபாடகம் -இது-தஹர வித்யை எட்டாவது ப்ரபாடகம் -வேஸ்ம -இருப்பிடம்)

ஸந்தேஹம் – ஹ்ருதயத்துக்குள் ஆகாஸம் என்று சொல்லப்படுவது பூ₄தாகாஸம் (ஐம் பூதங்களில் ஒன்றான ஆகாஸம்) என்ற அசேதனப் பொருளா ? அல்லது ஜீவாத்மாவா? அல்லது பரமாத்மாவா?

பூர்வ பக்ஷம் – பூ₄தாகாஸம் தான் இங்கு சொல்லப்படுகிறது என்று முதலில் பூர்வ பக்ஷீ வாதிடுகிறார். காரணம் –1-ஆகாஸம் என்ற சொல் உலகில் பெரும் பாலும் பூதாகாஸத்தைக் குறிக்கத் தான் பயன் படுத்தப் படுகிறது. எனவே அச் சொல்லைக் கேட்டதும் பூதாகாஸம் தான் நினைவுக்கு வருகிறது- 2-“இந்த ஆகாஸத்தில் எது இருக்கிறதோ அதைத் த்யானிக்க வேண்டும்” என்று உபநிஷத் சொல்கிறபடியால், இந்த ஆகாஸம் த்யானிக்கப்பட வேண்டிய பொருளுக்கு இருப்பிடம் மட்டுமே , இந்த ஆகாஸத்தை த்யானிக்கத் தேவை யில்லை என்று தெரிகிறது. இது பரமாத்மாவுக்குப் பொருந்தாது, ஏன் என்றால் அவர் தான் த்யானிக்கப்பட வேண்டியவர் என்ற மற்ற உபநிஷத்துக்கள் கூறுகின்றன. எனவே இங்கு ஆகாஸம் என்று சொல்லப்படுவது பூதாகாஸம் தான்

பரமாத்மாவே தஹராகாஸம்
ஸித்தாந்தம் –1-த₃ஹர உத்தரேப்₄ய
:-“தஹராகாஸாம் என்று சொல்லப்படுபவர் பரமாத்மாவே ,-பின்னால் வரும் வாக்கியங்களில் இருக்கும் காரணங்களால்”-ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜர: விம்ருத்யு: விஸோக: விஜிக₄த்ஸ: அபிபாஸ꞉ ஸத்ய காம꞉ ஸத்ய ஸங்க்ப:-“இந்த ஆத்மாவானவர் பாபங்களுக்கு அப்பாற் பட்டவர், மூப்பற்றவர், மரணமற்றவர், ஸோகமற்றவர், பசியற்றவர், தாகமற்றவர், அனைத்து ஆசைகளும் நிறை வேறியவர், நினைவாலேயே எதையும் நடத்தும் வல்லமை படைத்தவர்”-இங்கு ’ஆத்மா’ என்று பொதுவாகச் சொல்லப் படுகிறபடியால், இது அனைத்துப் பொருள்களுக்கும் ஆத்மாவான பரமாத்மாவையே குறிக்கும்-மேலும், இங்குச் சொல்லப்பட்ட குணங்களும் பரமாத்மாவுக்கே இயற்கை யானவை –

(கீழே -1-1-7- அந்தர் அதிகரணம் இதே உபநிஷத் வாக்கியம் பார்த்தோம்-ஆத்மா-அடைமொழி இல்லாமல் பொதுவாகச் சொன்னால் பரமாத்மாவாகத் தானே இருக்க வேண்டும் -மேலும் பல குணங்களும் பரமாத்மாவுக்கே இருந்தும் )

தத்₃யதே ₂ஹ கர்மசிதோ லோக꞉ க்ஷீயத ஏவமேவ அமுத்ர புண்ய சிதோ லோக꞉ க்ஷீயதே | ய இஹாத்மாந மநிவுத்₃ய வ்ரஜந்தி ஏதாம்ஶ்ச ஸத்யாந் காமாந் தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காம சாரோ ப₄வதி | ஸ யதி₃ பித்ரு லோக காமோ ப₄வதி ஸங்கல் பாதே₃வ அஸ்ய பிதர꞉ ஸமுத்திஷ்ட₂ந்தி தேந பித்ரு லோகேந ஸம்பந்நோ மஹீயதே -“உலகச் செயல்களால் அடையப்படும் பயன்கள் அழிவது போல் புண்ணியத்தால் அடையப் படும் உலகங்களும் அழியக் கூடியவை தான். எவன் ஓருவன் இந்த ஆத்மாவை த்யானித்து உயிர் இழக்கிறானோ அவன் எல்லா உலகங்களிலும் தன்னிச்சையாக நடக்கும் ஏற்றம் பெருகிறான். அவன் தன் பித்ருக்களைக் காண நினைத்தாலும் அவர்கள் அவன் ஸங்கல்பத்தாலேயே அங்கு தோன்றுகிறார்கள்”.-இந்த தஹராகாஸத்தைத் த்யானித்தவர் இவ்வாறு ஸ்வதந்த்ரனாக தன்னிச்சையாக எல்லா உலகங்களிலும் செயல்படலாம்,-அவன் ஸத்ய ஸங்கல்பனாக (தன் நினைவாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவனாக) ஆகிறான்-என்று கூறியுள்ளது. -இந்தப் பெருமைகள் எல்லாம் முக்தி அடைந்தவனுக்குத் தான் உண்டு. எனவே தஹராகாஸத்தை த்யானித்தவன் முக்தி அடைகிறான் என்று தெரிகிறது. எனவே இந்த தஹராகாஸம் என்பது பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

தஹராகாஸத்திற்குள் இருப்பது என்ன?-யாவாந்வா அயம் ஆகாஶ: தாவாந் ஏஷ: அந்தர் ஹ்ருத₃ய ஆகாஶ:“இந்த (வெளியில் காணப்படும்) ஆகாஸம் என்ற வானம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது இந்த தஹராகாஸம்”--இந்த வாக்கியத்தில் தஹராகாஸத்திற்கு உபமாநமாக (எடுத்துக் காட்டாக) பூதாகாஸம் என்ற வானம் சொல்லப் படுகிறது–எப்போதுமே உபமாநமும் உபமேயமும் வெவ்வேறாகத் தான் இருக்கும். எனவே இந்த தஹராகாஸம் என்பது பூதாகாஸமாக இருக்க இயலாது. அந்த பூதாகாஸம் போல் எங்கும் நிறைந்தவரான பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்–ஆகாஸத்தையே கற்பனையாகப் பிரிப்பது போல் இங்கும் இதயத்தில் உள்ள ஆகாஸம் தஹராகாஸம் என்று பிரித்து, அதற்கு எடுத்துக் காட்டாக வெளியே உள்ள ஆகாஸத்தைச் சொல்லி யிருக்கலாமே என்று கேள்வி எழலாம்-ஆனால், அப்படிக் கொண்டாலும், (யச்சாஸ்யேஹ அஸ்தி யச் நாஸ்தி ஸர்வம் தத₃ஸ்மிந் ஸமாஹிதம்) என்று “பூமி, விண்ணுலகம், ஸூர்யன், சந்த்ரன், நம்மிடம் இருக்கும் பொருள்கள், நாம் அடைய ஆசைப்படும் பொருள்கள் அனைத்தும் அந்த ஆகாஸத்தால் தாங்கப் படுகின்றன” என்று சொன்னது பொருந்தாது. ஹ்ருதயத்துக்குள் இருக்கும் சிறிய பூதாகாஸம் இவை யனைத்துக்கும் ஆதாரம் ஆக இயலாது. பரமாத்மாவுக்கே இது பொருந்தும்.

(மூன்றாம் பாதம் பகவான் தானே அனைத்தையுமே தாங்குபவர் என்ற அர்த்தம் தானே காட்டப்படுகிறது -)

கேள்வி – பரமாத்மா அளவு கடந்தவர் என்று தானே உபநிஷத் கூறுகிறது. அப்படி இருக்க, இங்கு பரமாத்மா தான் தஹராகாஸம் என்று கொண்டால் அவர் ’பூதாகாஸம் அளவு பெரியவர்’ என்று அளவு படுத்திச் சொல்வது எப்படிப் பொருந்தும்?
பதி்ல் – உலகத்தில் பொதுவாக –இஷுவத் கச்சதி ஸவிதா –’அம்பைப் போல் ஸூர்யன் செல்கிறார்’ என்கிறோம். உண்மையில் ஸூர்யன் அம்பை விட மிக வேகமாகச் செல்கிறார். ஸூர்யன் மெதுவாகச் செல்ல வில்லை என்று சொல்வதே இந்த வாக்கியத்தின் குறிக்கோள்-அதுபோல், பரமாத்மா ஹ்ருதயத்துக்குள் இருக்கிறார் என்று சொன்னால் அவர் அளவில் சிறியவரா என்று ஸந்தேஹம் வரக் கூடும் என்பதால், பூதாகாஸம் போல் பெரியவர் அவர்’ என்று சொல்லும் வாக்கியம் அவர் சிறியவரல்ல என்று சொல்கிறதே தவிற, அவர் பூதாகஸம் போல் அளவு பட்டவர் என்று சொல்ல வில்லை

கேள்வி – தஹராகாஸம் பரமாத்மா என்றால் அதற்குள் இருக்கும் த்யானிக்கப் பட வேண்டிய பாருள் எது?
பதி்ல் – ’அஸ்மிந் காமா: ஸமாஹிதா:’ என்று கல்யாண குணங்களே இவ்வாறு சொல்லப் படுகின்றன. தஹராகாஸம் என்ற பரமாத்மாவையும் அவருடைய ஒப்பற்ற கல்யாண குணங்களையும் த்யானிக்க வேண்டும் என்று சொல்லப் படுகிறது.-(காமா -ஆசைப்பட வைக்கும் கல்யாண குணங்களையே சொன்னவாறு -)

1.3.5 த₃ஹரதி₄கரணம்-ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல-

நாம் அறியாத செல்வம்
தஹராகாசம் பரமாத்மா தான் என்று நிரூபிக்க, பின் வரும் வாக்கியங்களில் உள்ள சில காரணங்கணளப் பயன் படுத்தினார் வேத வ்யாஸர் ’-த₃ஹர உத்தரேப்₄ய:’ என்ற முதல் ஸூத்ரத்தில். இனி, மேலும் சில காரணங்களக் காட்டுகிறார்.

(உயர்வற உயர் நலமுடையவன் -அபரிமித கல்யாண குணங்கள் உடையவன்-குணங்கள் விபூதிகள் இல்லாதவன் என்பவரை -மிடற்றைப் பிடிக்குமா போல் முதலடியிலே அருளிச் செய்கிறா)

றி2- க₃தி சப்₃தா₃ப்₄யாம் ததா₂ ஹி த்₃ருஷ்டம் லிங்க₃ம் ச
க₃தி சப்₃தா₃ப்₄யாம்
– “செல்வதாலும் சப்தத்தாலும் (தஹராகாசம் பரமாத்மா என்று தெரிகிறது)”
ததா₂ ஹி த்₃ருஷ்டம் – அவ்வாறு அன்றோ மற்ற உபநிஷத் வாக்கியங்களில் காணப்படுகிறது.
க₃தி--அதாவது செல்வது என்பதைப் பற்றி உபநிஷத்துக்களில் இரண்டு விதமான உபதேசங்கள் காணப்படுகின்றன –
(தத்₃யதா₂பி ஹிரண்ய நிதி₄ம் நிஹிதம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி ஸஞ்சரந்தோ ந விந்தே ₃யுரேவமேவேமா꞉ ஸர்வா꞉ ப்ரஜா: அஹரஹர்க₃ச் ச₂ந்த்ய ஏதம் ப்₃ரஹ்ம லோகம் ந விந்த₃ந்தி அந்ருதேந ஹி ப்ரத்யூடா₄꞉ )
“எப்படி பூமிக்குள் ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தை அறியாமல் மக்கள் அந்த பூமியின் மேல் சென்று வருகிறார்களோ-அது போல் இந்த ப்ரஹ்மம் என்ற தஹராகாசம் உள்ளே இருப்பதை அறியாமல் ஜீவாத்மாக்கள் மேலோட்டமாகச் சென்று வருகிறார்கள் (உடலில் வாழ்கிறார்கள்), ஏனெனில் அவர்கள் தங்கள் பாபங்களாலே திசை மாறிப் போகிறார்கள்”
இவ்வாறு புதைக்கப்பட்ட தங்கமாக தஹராகாசம் சொல்லப் படுவதால் அவர் பரமாத்மாவகத் தான் இருக்க வேண்டும்.
2-(ஸதி ஸம்பத்₃ய ந விது₃꞉ ஸதி ஸம்பத்₃யாமஹ இதி, ஸத ஆக₃ம்ய ந விது₃꞉ ஸத ஆக₃ச்சா₂மஹ இதி) – “ஜீவாத்மாக்கள் தூக்கத்தில் பரமாத்மாவோடு சேர்ந்து, உணரும் போத அவரிடமிருந்து பிரிந்து வந்தாலும் அவரை அறிவதில்லை ”. இப்படி ஸுஷுப்தி(ஆழ்ந்த உறக்கத்தில்) ஜீவாத்மாவால் அடையப் படுபவராக பரமாத்மா தான் இருக்க முடியும், பூதாகாசம் அல்ல.
சப்தம்” என்பது இங்கு ’ப்₃ரஹ்ம லோகம்’ என்ற சொல்லைக் குறிக்கிறது. அந்த ப்ரஹ்மம் என்ற சொல் மற்ற உபநிஷத்துக்களில் பரமாத்மாவைக் குறிக்கவே பயன்படுத்தப் படுகிறபடியால் அவரே தஹராகாசம் என்று காட்டுகிறது.(’ப்₃ரஹ்ம லோகம்-ப்ரஹ்மமாகிற லோகம் -என்று பொருள் )
லிங்க₃ம் ச – மற்ற உபநிஷத்துகளில் இது சொல்லப்படா விட்டாலும் இந்த அடையாளங்களே போதுமானவை .

உலகங்களைத் தாங்கும் ஆகாசம்
3-த்₃ருதே : ச மஹிம்ந: அஸ்ய அஸ்மிந் உபலப்₃தே ₄:
அஸ்ய-
இந்தப் பரமாத்மாவினுடைய மஹிம்ந: மஹிமையான
த்₃ருதே : உலகங்களை யெல்லாம் தாங்கும் சக்தி
அஸ்மிந்- இந்த தஹராகாசத்திடம் உபலப்₃தே ₄ ச காணப்படுகிற படியாலும் (தஹராகாசம் பரமாத்மாவே ).

இந்த தஹராகாசத்தைப் பற்றி வருணிக்கும் போது, (அத₂ ய ஆத்மா ஸ
ஸேதுர் த்₄ருதி ரேஷாம் லோகாநாம் அஸம்பே₄தா₃ய)
அதாவது
“இந்த தஹராகாசம் என்கிற ஆத்மா தான் அணை போல் இருந்து எல்லா உலகங்களையும் ஒன்றொடொன்று கலக்காமல் தாங்குகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

இப்படி உலகங்களை யெல்லாம் தாங்கும் தன்மை யானது உபநிஷத்துக்களில் பல இடங்களிலும் பரமாத்மாவுக்குத் தான் சொல்லப்பட்டுள்ளது – (ஏஷ ஸர்வேஶ்வர: ஏஷ பூ₄தாதி₄பதி: ஏஷ பூ₄தபால | ஏஷ ஸேதுர்வித₄ரண ஏஷாம் லோகாநாம் அஸம்பே₄தா₃ய) என்று ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் “இவர் தான் ஸர்வேஸ்வரன், இவர் தான் ஜீவ ராசிகளுக்கெல்லாம் தலைவர், இவர் தான் அனைவரையும் காப்பவர், இவர் தான் அணை போல் எல்லா உலகங்களும் ஒன்றொ டொன்று கலக்காமல் தாங்குகிறார்” என்று உள்ளது.-எனவே பரமாத்மாவுக்கே உரிய பெருமை தஹராகாசத்துக்குச் சொல்லப் பட்டுள்ளபடியால் தஹராகாசம் பரமாத்மாவே .

4- ப்ரஸித்₃தே ₄: ச – “(ஆகாசம் என்ற சொல் பரமாத்மாவைக் குறிக்கும் என்கிற) ப்ரஸித்தியாலும்” ஆகாசம் என்கிற சொல் உபநிஷத்துக்களில் பரமாத்மாவைக் குறிக்கப் பயன்படுவதைப் பல இடங்களில் காண்கிறபடியால் “ஆகாசம் என்றால் பரமாத்மா” என்று ப்ரஸித்தியும் உள்ளது. அத்தாலும் தஹரகாசம் பரமாத்மாவே .
தைத்திரீய உபநிஷத்தில் (கோ ஹ்யே வாந்யாத் க꞉ ப்ராண்யாத் । யதே ₃ஷ ஆகாஶ ஆநந்தோ ₃ ந ஸ்யாத்) அதாவது”ஆனந்தமே வடிவானவரான இந்த ஆகாசம் என்கிற பரமாத்மா இல்லா விட்டால் யார் இவ் வுலகத்திலும் மற்றை யுலகங்களிலும் ஜீவ ராசிகளை ரக்ஷிப்பார்கள்?”என்றுள்ளது.
சாந்தோக்ய உபநிஷத்தில் (ஸர்வாணி ஹ வா இமாநி பூ₄தாந் யாகாஶாதே ₃வ
ஸமுத்பத்₃யந்தே )
அதாவது-“ஆகாசம் என்ற ப்ரஹ்மத்திடமிருந்து தான் எல்லா பூதங்கள் உண்டாகின்றன” என்றுள்ளது-(தானும் பிரகாசமாய் இருந்து மற்றவற்றையும் பிரகாசப்படுத்துவதால் பரமாத்மாவே ஆகாசம்)

ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல
இது வரை ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாசமே தஹராகாசம் என்ற பூர்வபஷம் தவறென்று நிரூபிக்கப்பட்டது. இனி ஜீவாத்மாவே தஹராகாசம் என்ற பூர்வபஷம் முன் வைக்கப்படுகிறது. அதை வேத வ்யாஸர் கண்டிக்கிறார்.
5(्இதர பராமர்சாத் ஸ: இதி சேத் ந அஸம்ப₄வாத்)
இதர பராமர்சாத் ஸ:
-பரமாத்மாவைக் காட்டிலும் வேறு ஓருவர் நினைவு கூறப்படுகிற படியால் அவர் தான் (தஹராகாசம்)
இதி சேத் ந – என்று கூறினால் அது சரி அல்ல
அஸம்ப₄வாத் – பொருந்தாதபடியால்

பூர்வ பக்ஷம் – தஹராகாசத்தைப் பற்றி உபதேசித்துக் கொண்டு வரும் உபநிஷத் இடையில் (அத₂ ய ஏஷ ஸம்ப்ரஸாத₃: அஸ்மாத் சரீராத் ஸமுத்தா₂ய பரம்
ஜ்யோதி ருப ஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄நிஷ்பத்₃யதே
) அதாவது
“இந்த ஸம் ப்ரஸாதன் எனப்படுகிற ஜீவாத்மா இந்த சரீரத்திலிருந்து புறப்பட்டு பரஞ்ஜ்யோதிஸ்ஸான பரமாத்மாவை அடைந்து தன் இயற்கையான வடிவத்தோடு வெளிப்படுகிறார்” என்று கூறுகிறது.
தஹராகாசத்தைப் பற்றிப் பேசி வரும் போது “இந்த ஜீவாத்மா” என்று கூறப்படுகிற படியால், ’இந்த’ என்ற சொல்லால் நினை கூறப்படும் தஹராகாசம் ஜீவாத்மா தான் என்று தெரிகிறது. ’இதர’ பரமாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவரான ஜீவாத்மா ’பராமர்சாத்’ நினை கூறப்படுகிற படியால் ’ஸ:’ அந்த ஜீவாத்மா தான் தஹராகாசம்.
இந்தப் பூர்வ பஷத்தை கண்டிக்கிறார் வேத வ்யாஸர் – “இதி சேத் ந” – இவ்வாறு கூறினால் அது தவறு
அஸம்ப₄வாத் – முதல் 4 ஸூத்ரங்களில் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாம் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாதபடியால்.-பாபங்களற்றவராய் இருத்தல், ஸத்ய ஸங்கல்பம், அனைத்தையும் தாங்கும் சக்தி, இவரை அறிந்தால் முக்தி அடைவது என்னும் பண்புகள் எல்லாம் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாது. எனவே அவர் தஹராகாசமாக இருக்க முடியாது.

————–

1.3.5 த₃ஹரதி₄கரணம்-ஜீவாத்மாவின் உண்மையான தன்மை

(அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம:
I I -ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகம்–இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –)

ஜீவாத்மாவும் இயற்கையில் பாபமற்றவரே
1.3.5 தஹராதிகரணத்தின் 5ஆம் ஸூத்ரத்தில், தஹராகாசத்துக்குச் சொன்ன பாபங்களற்றிருத்தல் (அபஹத பாப்மத்வம்) முதலான பண்புகள் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாதபடியால், ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல என்று வ்யாஸர் கூறினார். அதற்கு மேல் எழும் ஓர் ஆஷேபத்தைச் சொல்லி அதற்கு பதில் அளிக்கிறார் அடுத்த ஸூத்ரத்தில்.
6-உத்தராத் சேத் ஆவிர்பூ₄த ஸ்வரூப: து
உத்தராத் சேத்
– “பின் வரும் வாக்கியத்தால் (ஜீவாத்மாவுக்கே அபஹத பாப்மத்வம் உள்ளதே ) என்றால்”
ஆவிர்பூ₄தஸ்வரூப: து – “ஆவிர்பாவம் அடைந்த ஸ்வரூபத்தை உடையவன் அன்றோ (அங்கு சொல்லப்படுகிறான்)”
ப்ரஜாபதியான நான்முகன் ஜீவாத்மாவைப் பற்றி செய்த உபதேசம் ஒன்று கதை வடிவத்தில் சொல்லப்பட்டுள்ளது.“எந்த ஆத்மா பாபங்களற்றவரோ , மூப்பு மரணம் சோகம் பசி தாகம் அற்றவவரோ , எல்லா ஆசைகளும் நிரம்பியவரோ ,ஸங்கல்பத்தாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவரோ அவரை அறிந்தால் எல்லா உலகங்களையும் ஜயிக்கலாம்” என்று நான்முகன் ஒருமுறை அறிவித்தார். தேவர்களுக்காக இந்த்ரனும், அஸுரர்களுக்காக விரோசனனும் அந்த ஆத்மாவை அறிவதற்காக நான்முகனிடம் வந்தனர். அவர் முதலில் தண்ணீரில் தெரியும் ப்ரதி பிம்பமே ஆத்மா என்று சொன்னார். விரோசனன் த்ருப்தி யடைந்து உடலே தான் ஆத்மா என்று நினைத்துக் கொண்டே திரும்பச் சென்றார். -ஆனால் இந்த்ரனுக்கு இது பொருத்தமாகப் படவில்லை , உடலில் பல குறைகள் காணப்படுகிறபடியால். எனவே அவருக்கு மட்டும் ப்ரஹ்மா வரிசை யாக கனவில் காணப்படுபவனும். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரும் ஆத்மா என்று கூறினார். அதையும் இந்த்ரன் ஏற்கவில்லை -கனவிலும் குறைகளைக் காண்கின்றோம் -ஆழ்ந்த உறக்கத்தில் தன்னையுமே அறியாதவனாய் இருப்பவன் எப்படிப் மேலானவனாக இருக்க முடியும் -இவ்வாறு ஒவ்வொரு நிலையையும் கழித்து -ஒவ்வொரு தடாவையும் 32 வர்ஷம் கைங்கர்யங்கள் செய்து அவனை மகிழ்வித்து இறுதியில் உண்மையான ஆத்ம உபதேசம் பெற்றான் – . எனவே இறுதியாக ஆத்மாவின் உண்மைத் தன்மையைக் கூறி அந்த ஆத்மா பாபங்களற்றிருத்தல் முதலான குணங்களை உடையவர் என்று நான்முகன் கூறினார்.இதைக் கொண்டு பூர்வபக்ஷீ ஆஷேபிக்கிறார் – ஜீவாத்மாவுக்கே அபஹதபாப்த்வம் பொருந்துமே ? என்று-ஆவிர்பூ₄த ஸ்வரூப: து – இது வ்யாஸரின் பதில். ஜீவாத்மாவுக்கு பாபமற்றிருத்தல் முதலான 8 குணங்கள் முக்தி அடைந்து, ஸ்வரூபம் முழுவதும் ஆவிர்பாவம் (விளக்கம்) அடைந்த பிறகு தான் சொல்லப்பட்டுள்ளது. தஹராகாசவமோ உடலிலிருக்கும் போதே அப் பண்புகளை உடையது என்று கூறப்பட்டுள்ளது. எனவே தஹராகாசம் ஜீவாத்மா அல்ல.

முக்தியில் பரமாத்மாவுக்கு நிகரானவர்
ஜீவாத்மா தஹராகாசம் அல்ல என்றால் எதற்காக “
ஏஷ ஸம்ப்ரஸாத₃: அஸ்மாத் சரீராத் ஸமுத்தா₂ய பரம்ஜ்வயாதி:
உபஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄”
அதாவது’இந்த ஜீவாத்மா இவ்வுடலை விட்டு பரமாத்மாவை அடைந்து தன்னுடைய இயற்கை நிலையை அடைகிறான்” என்று இங்கு கூறப்படுகிறது? அதற்கு பதில் அடுத்த ஸூத்ரத்தில் –
7-அந்யார்த₂: பராமர்ச : – “(ஜீவாத்மாவை ) நினைவு கூறியது வேறு பயனுக்காக”
இங்கு ஜீவனைப் பற்றிப் பேசியது, ஜீவாத்மா தான் தஹராகாசம் என்று சொல்வதற்காக அல்ல. தஹராகாசம் என்ற பரமாத்மாவுக்கு உள்ள மற்ற ஓரு சிறப்பை உணர்த்துவதற்காக – அதாவது அந்தப் பரமாத்மாவின் கருணை மற்றும் அநுக்ரஹத்தால் தான் ஜீவாத்மா முக்தியை அடைகிறார் என்று காட்டுவதற்காகவே .
8-அல்ப ஸ்ருதே : இதி சேத் தது₃க்தம்

அல்பஸ்ருதே : – தஹராகாசம் அல்பமானது (சிறியது) என்று சொல்லப் படுகிறபடியால் அது பரமாத்மாவாக இயலாதே
இதி சேத் – என்று கேட்டால்
தது₃க்தம் – அதற்கான விடை முன்னமே 1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணத்தில் “அர்ப₄கோகஸ்த்வாத் தத்₃ வ்யபதே ₃சாத் நேதி சேத் ந நிசாய்யத்வாதே₃வம் வ்யோமவச்ச” என்கிற ஸூத்ரத்தில் சொல்லப்பட்டது. பரமாத்மா அளவற்றவராய் இருந்தாலும், உபாஸகனுக்கு அனுக்ரஹிப்பதற்காக அவர் ஹ்ருதயத்துக்குள்ளும் சிறிய வடிவத்வதாடு இருக்கிறபடியால் இதில் பொருந்தாமை இல்லை.
9-அநுக்ருதே : தஸ்ய ச –
தஸ்ய அந்த தஹராகாசத்தோடு
அநுக்ருதே : ஸாம்யம் அடைகிறான் ஜீவாத்மா
என்று சொல்லப்படுகிறபடியாலும், ஜீவாத்மா வேறு தஹராகாசம் வேறு என்று தான் கொள்ள வேண்டும்.
10-அபி ஸ்மர்யதே – “மேலும் ஸ்ம்ருதியில் சொல்லப்படுகிறது” – ஸம்ஸாரத்திலிருக்கும் ஜீவாத்மாவுக்கு முக்தி யடையும் போது பரமாத்மாவோடு ஸாம்யம் ஏற்படுகிறது என்பது பகவத் கீதை என்ற ஸ்ம்ருதியிலும் (மம ஸாத₄ர்ம்யம் ஆக₃தா🙂 (14.2) என்று கூறப் பட்டுள்ளது.
ஆக இவ்வாறு தஹராகாசம் பரமாத்மாவே , பூதாகாசமுமல்ல ஜீவனுமல்ல என்று நிரூபிக்கப்பட்டது.

॥ அஷ்டமோঽத்⁴யாய: ॥
அத² யதி³த³மஸ்மிந்ப்³ரஹ்மபுரே த³ஹரம் புண்ட³ரீகம் வேஶ்ம
த³ஹரோঽஸ்மிந்நந்தராகாஶஸ்தஸ்மிந்யத³ந்தஸ்தத³ந்வேஷ்டவ்யம்
தத்³வாவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ॥ 8.1.1॥

தகர அதிகரணம் / பிரஜாபதி வித்யை –இதில்
ஹிருதய கமலம் தலை கீழ் பிடிக்கப்பட்ட தாமரை -ஹ்ருதய கமலம் கோலம் உண்டே –
அதற்குள் உள்ளதை உபாசிப்பாய் -கல்யாண குணங்களை -தேடி உபாசிப்பாய்
தகர -சிறிய இடைவெளி –

தம் சேத்³ப்³ரூயுர்யதி³த³மஸ்மிந்ப்³ரஹ்மபுரே த³ஹரம் புண்ட³ரீகம் வேஶ்ம
த³ஹரோঽஸ்மிந்நந்தராகாஶ: கிம் தத³த்ர வித்³யதே யத³ந்வேஷ்டவ்யம்
யத்³வாவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ஸ ப்³ரூயாத் ॥ 8.1.2॥

உள்ளே இருப்பதே ஆதாரம் -ஆகாசம் இடம் கொடுக்கும் -ப்ரஹ்மம் தானே இடமாக ஆகாசமாக இருக்கும்

யாவாந்வா அயமாகாஶஸ்தாவாநேஷோঽந்தர்ஹ்ருʼத³ய அகாஶ
உபே⁴ அஸ்மிந்த்³யாவாப்ருʼதி²வீ அந்தரேவ ஸமாஹிதே
உபா⁴வக்³நிஶ்ச வாயுஶ்ச ஸூர்யாசந்த்³ரமஸாவுபௌ⁴
வித்³யுந்நக்ஷத்ராணி யச்சாஸ்யேஹாஸ்தி யச்ச நாஸ்தி ஸர்வம்
தத³ஸ்மிந்ஸமாஹிதமிதி ॥ 8.1.3॥

தம் சேத்³ப்³ரூயுரஸ்மிꣳஶ்சேதி³த³ம் ப்³ரஹ்மபுரே ஸர்வꣳ ஸமாஹிதꣳ
ஸர்வாணி ச பூ⁴தாநி ஸர்வே ச காமா யதை³தஜ்ஜரா வாப்நோதி
ப்ரத்⁴வꣳஸதே வா கிம் ததோঽதிஶிஷ்யத இதி ॥ 8.1.4॥

ஸ ப்³ரூயாத்நாஸ்ய ஜரயைதஜ்ஜீர்யதி ந வதே⁴நாஸ்ய ஹந்யத
ஏதத்ஸத்யம் ப்³ரஹ்மபுரமஸ்மிகாமா: ஸமாஹிதா: ஏஷ
ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்போ யதா² ஹ்யேவேஹ
ப்ரஜா அந்வாவிஶந்தி யதா²நுஶாஸநம் யம் யமந்தமபி⁴காமா
ப⁴வந்தி யம் ஜநபத³ம் யம் க்ஷேத்ரபா⁴க³ம் தம் தமேவோபஜீவந்தி
॥ 8.1.5॥

அறிந்தவன் அஷ்ட குணங்களில் சாம்யா பத்தி -நீர் பூத்த நெருப்பு போலே இங்கு -ஸ்வரூப ஆவிர்பாவம் -அடைந்து
பாபம் தீண்டாமல் -மூப்பு இல்லாமல் –மரணம் இல்லாமல் -சோகம் இல்லாமல் -பசி இல்லாமல் –
தாகம் இல்லாமல் -நல்ல விருப்பங்கள் கொண்டு -செயல்களை முடிக்கும் சக்தன் -ஆகிய எட்டும்

தத்³யதே²ஹ கர்மஜிதோ லோக: க்ஷீயத ஏவமேவாமுத்ர புண்யஜிதோ
லோக: க்ஷீயதே தத்³ய இஹாத்மாநமநுவித்³ய வ்ரஜந்த்யேதாꣳஶ்ச
ஸத்யாந்காமாꣳஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷ்வகாமசாரோ
ப⁴வத்யத² ய இஹாத்மாநமநிவுத்³ய வ்ரஜந்த்யேதꣳஶ்ச
ஸத்யாந்காமாꣳஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி
॥ 8.1.6॥

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

—————————————

காண்டம்1

இதயத்துக்குள் உள்ள சிறிய வெற்றிடம், அதை ஆகாசம் என்று குறிக்கப்படுகிறது (தகராகாசம்) அந்த ஆகாசத்தில் ஈஸ்வரனை உபாஸிக்க வேண்டும். இது இருவகையாக பிரிக்கப்படுகிறது, அவை பேத உபாஸனம், அபேத உபாஸனம். இது உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் இது பிரம்மத்திற்கு அருகே எடுத்துச்செல்கிறது. இதில் ஆலம்பனம் தியானிப்பவன் இடத்தே இருக்கிறது. தன்னையே தியானிக்கிறான். சகுண பிரம்மமாக உபாஸிக்கப்படுகிறது. ஞான யோக அதிகாரத்துவத்தை வளர்ப்பதற்கு இந்த தியானமானது உபதேசிக்கப்படுகிறது. இதை அப்யாஸத்தின் மூலம் வளர்க்க வேண்டும். இங்கு ஈஸ்வரனை உபாஸன தேவதையாக உபாஸிக்கப்படுகிறது. ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்களை கொடுத்து உபாஸிக்க சொல்கிறது. இது அதிகாரத்துவத்தை வளர்த்து விட்டால் இங்கேயே ஞானத்தை அடையலாம், இல்லையென்றால் “கிரம்முக்தி” மூலமாகத்தான் பிரம்மலோகத்திற்கு சென்று பிறகு மோட்சம் அடையலாம்.பிரம்மம் வசிக்கும் சிறிய நகரமான நம் உடலில் உள்ள சிறிய தாமரை போன்ற ஒரு அரண்மனை இருக்கிறது அதுதான் இதயம்.  அதற்குள்ளே சிறிய ஆகாசம் இருக்கிறது. அந்த ஆகாசத்துக்குள்ளே ஒன்றை தேட வேண்டும். அதையையே அறிய வேண்டும், அதை தியானிக்க வேண்டும். அந்த ஆகாசம் ஈஸ்வரனை குறிக்கிறது.  அப்படி எடுத்துக்கொண்டு நம் இதயத்துக்குள் ஆகாசமாக ஈஸ்வரன் இருக்கிறார், அவரை சகுண பிரம்மமாக தியானிக்க வேண்டும்.

ஸ யதி³ பித்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய பிதர:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந பித்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.1॥

அத² யதி³ மாத்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய மாதர:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந மாத்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.2॥

அத² யதி³ ப்⁴ராத்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ப்⁴ராதர:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந ப்⁴ராத்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.3॥॥

அத² யதி³ ஸ்வஸ்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸ்வஸார:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸ்வஸ்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.4॥

அத² யதி³ ஸகி²லோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸகா²ய:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸகி²லோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.5॥

முக்த ஜீவன் -ஆனந்தத்தில் தாரதம்யம் இல்லை -பித்ரு லோகம் போகும் சக்தியும் உண்டு –
சங்கல்பத்தாலே அனைத்தும்
ஸ்ருஷ்டிக்கும் சக்தி உண்டு -ஆனால் ஸ்ருஷ்டிக்க மாட்டான் -அனைத்தும் அவனாகவே பார்ப்பதால்

அத² யதி³ க³ந்த⁴மால்யலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய
க³ந்த⁴மால்யே ஸமுத்திஷ்ட²தஸ்தேந க³ந்த⁴மால்யலோகேந ஸம்பந்நோ
மஹீயதே ॥ 8.2.6॥

அத² யத்³யந்நபாநலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்யாந்நபாநே
ஸமுத்திஷ்ட²தஸ்தேநாந்நபாநலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.7॥

அத² யதி³ கீ³தவாதி³த்ரலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய
கீ³தவாதி³த்ரே ஸமுத்திஷ்ட²தஸ்தேந கீ³தவாதி³த்ரலோகேந ஸம்பந்நோ
மஹீயதே ॥ 8.2.8॥

அத² யதி³ ஸ்த்ரீலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸ்த்ரிய:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸ்த்ரீலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.9॥

யம் யமந்தமபி⁴காமோ ப⁴வதி யம் காமம் காமயதே ஸோঽஸ்ய
ஸங்கல்பாதே³வ ஸமுத்திஷ்ட²தி தேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.10॥

ஹ்ருதி அயம் ஹிருதயத்தில் அமர்ந்து உள்ளான் -அடைந்து உள்ளான் -ஹிருதயம் –

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

—————

காண்டம்2

இந்த சிறிய இதயத்திற்குள் இருக்கும் சிறிய ஆகாசத்தில் எதை தேட வேண்டும்? அங்கு தேடுவதற்கு என்ன இருக்கிறது? பின்பு எதை தியானிக்க வேண்டும்?

ஆகாசம் என்பது எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு இருக்கிறது.  ஆகாசம் பிளவுபடாத்து. வெளியே தெரியும் ஆகாசம் எவ்வளவு பெரியதோ அதேப்போலத்தான் இதயத்துக்குள் இருக்கிற ஆகாசம். இதயம் சிறியதாக இருக்கலாம் ஆனால் ஆகாசம் பிளவுப்படாமல் அங்கே இருக்கிறது. சொர்க்கமும் பூமியும் இந்த ஆகாசத்துக்குள் இருக்கிறது. அந்த ஆகாசம் இதயத்துக்குள் இருக்கிறது. எனவே அனைத்தும் என்னுள்ளேதான் இருக்கிறது. மூன்று காலத்திலும் தோன்றி அழியும் அனைத்தும் இதனுள் இருக்கிறது.

உடல் அழிந்து விட்டால், அதனுள் இருக்கும் ஆகாசமும் அழிந்து விடும் அல்லவா?

உடல் அழிவால் ஆகாசத்திற்கு அழிவு கிடையாது. அது ஸத்யமானது, எங்கும் வியாபித்திருக்கிறது, அதுவே ஆத்மா, அதுவே பிரம்மம். உள்ளே இருக்கும் ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்கள் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

அவைகள் 1.       பாவமற்றது, 2.       வயதற்றது, 3.      மரணமற்றது, 4.       துயரமற்றது, 5.      பசியற்றது, 6.       தாகமற்றது, 7.       நிறைவேறுகின்ற ஆசை,8.       நிறைவேறுகின்ற சங்கல்பம்

ஆசையானது சங்கல்பத்திலிருந்து உருவாவது. நாம் பலவிதமான சங்கல்பங்கள் (இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று நினைப்பது) செய்வோம், ஆனால் அதில் ஒரு சிலதான் ஆசையாக மாறி அதை அடைய முயற்சி செய்யப்படுகிறது. ஆனால் ஈஸ்வரனது சங்கல்பம் உடனே நிறைவேறுகிறது.  இப்படிப்பட்ட ஈஸ்வரனைத் தான் இதய ஆகாசத்தில் வைத்து தியானிக்க வேண்டும். இதை புரிந்து விட்டால் ஞானம் அடைந்து விடலாம். இப்படி தியனத்தை செய்யாமலிருந்தால் எல்லாவற்றுக்கும் அடிமையாகி இருக்க வேண்டியதுதான்

இந்த உலகத்தில் நாம் அடையும் எதுவும் அழியக்கூடியது, அதுபோல் சொர்க்கலோகமும் நிலையற்றது. அதனால் இங்கேயே முயற்சி செய்து ஞானத்தை அடைந்து விட வேண்டும். இங்கு கர்மத்தினால் அடையப்பட்ட போகங்கள் அழிந்து விடுகிறது, அதுபோல எல்லா விஷயத்திலும் புண்ணியத்தினால் அடைந்த லோகங்களும் அழியக்கூடியவை. இந்த மனித ஜென்மத்தில் ஞானத்தை அடையாமல் இறந்து விட்டால், அவனது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப சுக துக்கத்தை அனுபவித்துக்கொண்டிருப்பான். அக்ஞானிக்கு ஆசைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சோகத்தை அனுபவிக்கிரான்.  ஞானிக்கு ஆசை வந்தாலே அது பூர்த்தியாகி விடும்.

யாரொருவர் இங்கேயே ஆத்மாவை அறிந்து கொள்கிறார்களோ அவர்கள் எல்லா உலகத்திலும் முக்தனாகவே இருப்பார்கள். எனவே இந்த மனித ஜென்மத்தை நாம் நன்கு பயன்படுத்திக்கொண்டு ஞானத்தை அடைவதற்கான முயற்சி செய்து அடைந்து விட வேண்டும்.

சங்கல்பம் என்பது ஆழ்மனதில் தோன்றும் ஆசை, அதாவது ஆசையின் விதை.  ஈஸ்வரனுக்கு எழும் சங்கல்பங்கள் யாவும் பூர்த்தியாகிவிடும். இப்படி ஈஸ்வரனை உபாஸித்தால், நமது சங்கல்பமும் நிறைவேறிவிடும். இதற்கு சத்ய சங்கல்பம் என்று பெயர். உதாரணமாக இறந்து போன தந்தையை பார்க்க நினைத்தால் கூட அது நிறைவேறி விடும். எந்தப்பொருளை அனுபவிக்க நினைத்தாலும், அந்த ஆசை நிறைவேறி விடும்.

த இமே ஸத்யா: காமா அந்ருʼதாபிதா⁴நாஸ்தேஷாꣳ ஸத்யாநாꣳ
ஸதாமந்ருʼதமபிதா⁴நம் யோ யோ ஹ்யஸ்யேத: ப்ரைதி ந தமிஹ
த³ர்ஶநாய லப⁴தே ॥ 8.3.1॥

அத² யே சாஸ்யேஹ ஜீவா யே ச ப்ரேதா யச்சாந்யதி³ச்ச²ந்ந
லப⁴தே ஸர்வம் தத³த்ர க³த்வா விந்த³தேঽத்ர ஹ்யஸ்யைதே ஸத்யா:
காமா அந்ருʼதாபிதா⁴நாஸ்தத்³யதா²பி ஹிரண்யநிதி⁴ம் நிஹிதமக்ஷேத்ரஜ்ஞா
உபர்யுபரி ஸஞ்சரந்தோ ந விந்தே³யுரேவமேவேமா: ஸர்வா: ப்ரஜா
அஹரஹர்க³ச்ச²ந்த்ய ஏதம் ப்³ரஹ்மலோகம் ந விந்த³ந்த்யந்ருʼதேந ஹி
ப்ரத்யூடா:⁴ ॥ 8.3.2॥

ஸ வா ஏஷ ஆத்மா ஹ்ருʼதி³ தஸ்யைததே³வ நிருக்தꣳ ஹ்ருʼத்³யயமிதி
தஸ்மாத்³த்⁴ருʼத³யமஹரஹர்வா ஏவம்வித்ஸ்வர்க³ம் லோகமேதி ॥ 8.3.3॥

அத² ய ஏஷ ஸம்ப்ரஸாதோ³ঽஸ்மாச்ச²ரீராத்ஸமுத்தா²ய பரம்
ஜ்யோதிருபஸம்பத்³ய ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யத ஏஷ ஆத்மேதி
ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி தஸ்ய ஹ வா ஏதஸ்ய
ப்³ரஹ்மணோ நாம ஸத்யமிதி ॥ 8.3.4॥

தாநி ஹ வா ஏதாநி த்ரீண்யக்ஷராணி ஸதீயமிதி
தத்³யத்ஸத்தத³ம்ருʼதமத² யத்தி தந்மர்த்யமத² யத்³யம் தேநோபே⁴
யச்ச²தி யத³நேநோபே⁴ யச்ச²தி தஸ்மாத்³யமஹரஹர்வா
ஏவம்வித்ஸ்வர்க³ம் லோகமேதி ॥ 8.3.5॥

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

———

காண்டம்-3

ஈஸ்வரனின் சத்ய சங்கல்பத்தைப்பற்றிய விளக்கம்:

நாம் அடைய நினைக்கும் அனைத்தையும் பொய்யான மறைப்பால் மறைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவை சத்யமாக இருக்கிறது. அந்தப்பொய் திரையை நீக்கினால் சத்ய சங்கல்பம் வந்து விடும். உடலுக்கு வெளியே உள்ள பொருட்களின் மீதுள்ள ஆசை, அதை அடைவதில் தீவிர முயற்சி. இதற்கு மித்யாஞானம்தான் காரணமாக இருக்கிறது. சிறிய ஆசைகளை பெரியதாக்கி அதை அடைவதில் முயற்சி, இவ்விதம்தான் அல்பமான விஷயங்களை நோக்கி இழுக்கப்பட்டு விடுவதால் நம்முள்ளே உள்ள உயர்ந்த விஷயங்களில் நாட்டமின்றி இருக்கிறோம்.

இந்த பகிர்முகத்துவம்தான் பொய்யான திரை.அன்ருத அபிதானம் – வெளி விஷயங்களை அடைவதில் ஆசை, மோட்சத்தை அடைய வேண்டும் என்ற இச்சை வராத்தற்கு காரணம் வெளிமுகமாயுள்ள மற்ற அல்ப ஆசையினால் மூடபட்டிருப்பதால், உள்முகமாயுள்ள சத்ய சங்கல்பத்தை அடைய முடியவில்லை.

ஈஸ்வரன் ஸ்வரூபம் (பெருமை)

ஹிரண்யநிதி: எல்லா நலனும் வளமும் உடையவர். எல்லாவித ஐஸ்வர்யமும் உடையவர், இப்படிப்பட்டவரை இதய ஆகாசத்துக்குள் வைத்து தியானித்தால் எல்லா ஐஸ்வர்யமும் நம்முள்ளே இருப்பதை உணரலாம். தங்கப்புதையல் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்தின் மீது வசிப்பவன் அல்லது அதன் மீது சென்று வந்து கொண்டிருப்பவனால் அவனுடைய அந்த புதையலைப் பற்றிய அறியாமையினால், அதை அடையாதவனாக இருக்கிறான்.

ஹ்ருதயம்: (ஹ்ருதி-இதயத்திற்குள் + அயம்-வீற்றிருப்பவன்)

ஈஸ்வரன் எல்லா ஜீவர்களின் இதயத்துக்குள்ளும் இருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்து உபாஸிப்பவர்கள் ஒவ்வொரு நாளும் அவரை பார்த்துக் கொணடே இருக்கிறார்கள். நிர்குண பிரம்மத்தை அறிந்த ஞானிகள் போல ஈஸ்வரனை உபாஸித்து அந்த நிலையை அடையலாம். இது ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை விளக்குகிறது.

ப்ராக்ஞன்-சம்பிரஸாதஹ – அறிவினால் பிரம்மத்துடன் ஒன்றானவன், ஐக்கியமானவன்

அஸ்மாத் சரீராத் ஸமுத்தாய – இந்த உலகத்தின் மீது இருக்கும் அபிமானத்தை விட்டு

பரம் ஜோதிஹி – ஞான ஸ்வரூபமாக

உபஸம்பத்ய – தன்னை தானாகவே உணர்ந்து

ஸ்வேனரூபேன – தன்னுடைய உண்மையான ஸ்வரூபமாகவே

அபினிஸ்வத்யதே – விளங்குகின்றான் (வெளிப்படுகிறான்)

அஸரீர தயாதிஷ்டதி – உடலற்றவனாக இருக்கின்றான், ஆத்மாவாகவே இருக்கின்றான்.

சத்யம் என்ற சொல்லுக்கு உள்ள அர்த்தங்கள்

சத்யம் – உண்மை பேசுதல்

சத்யம் – எல்லா காலத்திலும் இருப்பது – நிர்குண பிரம்மம்

சத்யம் – ஈஸ்வரனை விளக்குகின்ற சொல்

இந்த ஆத்மாதான் பிரம்மம் என்று கூறினார் குருவானவர். இந்த பிரம்மம் அம்ருதமாக (நித்தியமானது) இருக்கின்றது. எனவே பயமற்றவனாகிறான் (அபயம்). இப்படிபட்ட பிரம்மத்திற்கு ஸத்யம் என்று கூறப்படுகிறது.

சத்யம் – ச+த்+யம் (அம்ருதம்+அழியக்கூடியது+இந்த இரண்டையும் கட்டுப்படுத்துபவன்) மாயாவாகவும், அழியக்கூடியதாகவும், பிரம்ம ஸ்வரூபமாகவும் இருப்பவர்.

இவ்விதம் ஈஸ்வரனை யார் உபாஸிக்கிறார்களோ அவர்கள் பிரம்மத்தையடைகிறார்கள்.

அத² ய ஆத்மா ஸ ஸேதுர்த்⁴ருʼதிரேஷாம் லோகாநாமஸம்பே⁴தா³ய
நைதꣳ ஸேதுமஹோராத்ரே தரதோ ந ஜரா ந ம்ருʼத்யுர்ந ஶோகோ ந
ஸுக்ருʼதம் ந து³ஷ்க்ருʼதꣳ ஸர்வே பாப்மாநோঽதோ
நிவர்தந்தேঽபஹதபாப்மா ஹ்யேஷ ப்³ரஹ்மலோக: ॥ 8.4.1॥

தஸ்மாத்³வா ஏதꣳ ஸேதும் தீர்த்வாந்த:⁴ ஸந்நநந்தோ⁴ ப⁴வதி
வித்³த:⁴ ஸந்நவித்³தோ⁴ ப⁴வத்யுபதாபீ ஸந்நநுபதாபீ ப⁴வதி
தஸ்மாத்³வா ஏதꣳ ஸேதும் தீர்த்வாபி நக்தமஹரேவாபி⁴நிஷ்பத்³யதே
ஸக்ருʼத்³விபா⁴தோ ஹ்யேவைஷ ப்³ரஹ்மலோக: ॥ 8.4.2॥

தத்³ய ஏவைதம் ப்³ரஹ்மலோகம் ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³ந்தி
தேஷாமேவைஷ ப்³ரஹ்மலோகஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷு காமசாரோ
ப⁴வதி ॥ 8.4.3॥

சத் தி யம் அடக்கி ஆள்பவன் சித்தியும் அசித்தையும்
ப்ரஹ்மம் சேது -அங்கே கூட்டி செல்பவன்
இரண்டையும் கலக்காமல் பாதுகாப்பவன் –
ப்ரஹ்மசர்யம் -ப்ரஹ்மத்தை நோக்கி போவதில் உள்ள தடைகளை வெட்டி –
அவன் இடம் கூட்டிப்போவர்கள் உடன் தொடர்பு -சம்சாரிகள் இடம் பற்று அற்று

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

————

காண்டம்4

அபஹதபாப்மா –  பாமற்றவர்; ஸேது – பாலம், குளம், வரப்பு

ஹிருதயத்தில் உபாஸிக்கும் ஈஸ்வரன் (ஆத்மா என்று இந்த மந்திரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது) ஸேது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். இது நம்மை பாதுகாப்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த உலக மக்களுக்கு தீங்கு நேராமல் இருக்க பாதுகாப்பாக இருக்கிறார். உலகத்திலுள்ள எந்தப்பொருளுக்கும் நம்மை பாதுகாக்கும் தன்மை கிடையாது அது ஈஸ்வரனிடத்தில் மட்டும்தான் இருக்கிறது. இப்படி ஈஸ்வரனை வழிபட வேண்டும்.

இந்த ஈஸ்வரனை எதுவும் நெருங்க முடியாது, அழிக்க முடியாது. காலத்தின் அழிவுக்கும் உட்படமாட்டார், வயதற்றவர், மரணமற்றவர், துயரமற்றவர், பாவபுண்ணியமற்றவர். எல்லா பாவங்களும் ஈஸ்வரனை கண்டு ஓடி விடுகின்றது. ஆகவே இந்த ஈஸ்வரன் பாவத்தினால் தீண்டப்படாதவர். நமக்கு பாதுகாப்பளிப்பவர், என்றும் பாவமற்றவர் என்று தியானிக்க வேண்டும்.

இப்படி ஈஸ்வரனை உபாஸித்து அவனை அடைந்தவர்கள், கண் பார்வையற்றவர்களாக இருந்தாலும், பார்வை பெறுவார்கள், உடலில் எங்கேயாவது காயமடைந்திருந்தவர்களாக இருந்தால், காயமெல்லாம் நீங்கப்பெறுவார்கள். இருளாகிப்போன வாழ்க்கையிலும் ஒளி வீசும். இப்படிப்பட்ட ஈஸ்வரன் என்றும் ஒளி வீசிக்கொண்டிருப்பவர். 

சாதாரணமான மக்கள் இந்த பலனை ஆழ்ந்த உறக்கத்தில் அடைவார்கள். உபாஸகர்கள் இறந்தபின்தான் இந்த பலனை அடைவார்கள்.  ஞானிகள் எல்லா அவஸ்தைகளிலும் இந்த பலனை அடைவார்கள்

இப்படிப்பட்ட ஈஸ்வரனை அடைந்த உபாஸகர்கள் உபயோகித்த சாதனை பிரம்மச்சரியம். இந்த சாதனையை பின்பற்றி வெற்றி அடைந்தவர்கள் பிரம்மலோகத்தை அடைவார்கள். இவர்கள் எல்லா உலகத்திலும் விரும்பும்படி வாழ்க்கை அமைகிறது.

அத² யத்³யஜ்ஞ இத்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண
ஹ்யேவ யோ ஜ்ஞாதா தம் விந்த³தேঽத² யதி³ஷ்டமித்யாசக்ஷதே
ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண ஹ்யேவேஷ்ட்வாத்மாநமநுவிந்த³தே
॥ 8.5.1॥

அத² யத்ஸத்த்ராயணமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண
ஹ்யேவ ஸத ஆத்மநஸ்த்ராணம் விந்த³தேঽத² யந்மௌநமித்யாசக்ஷதே
ப்³ரஹ்மசர்யமேவ தப்³ப்³ரஹ்மசர்யேண ஹ்யேவாத்மாநமநுவித்³ய மநுதே ‘॥ 8.5.2॥

அத² யத³நாஶகாயநமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ ததே³ஷ
ஹ்யாத்மா ந நஶ்யதி யம் ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³தேঽத²
யத³ரண்யாயநமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத³ரஶ்ச ஹ வை
ண்யஶ்சார்ணவௌ ப்³ரஹ்மலோகே த்ருʼதீயஸ்யாமிதோ தி³வி ததை³ரம்
மதீ³யꣳ ஸரஸ்தத³ஶ்வத்த:² ஸோமஸவநஸ்தத³பராஜிதா
பூர்ப்³ரஹ்மண: ப்ரபு⁴விமிதꣳ ஹிரண்மயம் ॥ 8.5.3॥

தத்³ய ஏவைதவரம் ச ண்யம் சார்ணவௌ ப்³ரஹ்மலோகே
ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³ந்தி தேஷாமேவைஷ ப்³ரஹ்மலோகஸ்தேஷாꣳ
ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி ॥ 8.5.4॥

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

——————

காண்டம்5

பிரம்மசர்ய சாதனையின் பெருமை

  •        குருவுக்கு சேவை செய்தல்
  •          வேதங்களை படித்தல், மனனம் செய்தல்
  •          குருகுலத்தில் உணவு பரிமாறுதல்
  •          எளிமையான வாழ்க்கை வாழ்தல்
  •          சிற்றின்பத்தை துறத்தல்

இறைவனை வழிபடுவதனால் அடையும் பலனை பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான். பிறகு இங்கிருந்து பிரம்மலோகத்திற்கு சென்று கிரமமாக முக்தியாக பிரம்மத்தை அடைகிறான்

யக்ஞம்         – இறைவனை வழிபடுதல்

இஷ்டம்        – பிரம்மசர்யத்திலே அவன் ஆத்மாவை அடைகிறான்

ஸத்ராயண     – ஈஸ்வரனுடைய பாதுகாப்பு கிடைக்கிறது.

மௌனம்       – இதனால் அடையும் பலன்

அநாஸகாயனம் – உபவாசம்

அரண்யாயனம்  – வனத்தில் வாழ்தல்

இந்த ஆறு ஸாதனைகளின் மூலம் அடையும் பலன்கள் யாவும் பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான்

பிரம்மலோகத்தில் அரா, ந்யா என்ற இரண்டு கடல்கள் உள்ளன, அதில் இருக்கும் நீரை குடித்தால் மயக்கத்தை வரும். அஸ்வத்தா என்ற மரமானது போதை தரும் விஷயங்களை தரக்கூடியது.  யாராலும் வெல்லமுடியாத தங்கத்திலான் நகரத்தில் வசிக்கலாம்.

அத² யா ஏதா ஹ்ருʼத³யஸ்ய நாட்³யஸ்தா: பிங்க³லஸ்யாணிம்நஸ்திஷ்ட²ந்தி
ஶுக்லஸ்ய நீலஸ்ய பீதஸ்ய லோஹிதஸ்யேத்யஸௌ வா ஆதி³த்ய:
பிங்க³ல ஏஷ ஶுக்ல ஏஷ நீல ஏஷ பீத ஏஷ லோஹித:
॥ 8.6.1॥

அபராஜிதா அவித்யை ஸ்ரீ வைகுண்டம் -ப்ரஹ்ம லோகம்
சூர்ய கிரணங்கள் மூலம் போகிறான் –

தத்³யதா² மஹாபத² ஆதத உபௌ⁴ க்³ராமௌ க³ச்ச²தீமம் சாமும்
சைவமேவைதா ஆதி³த்யஸ்ய ரஶ்மய உபௌ⁴ லோகௌ க³ச்ச²ந்தீமம் சாமும்
சாமுஷ்மாதா³தி³த்யாத்ப்ரதாயந்தே தா ஆஸு நாடீ³ஷு ஸ்ருʼப்தா
ஆப்⁴யோ நாடீ³ப்⁴ய: ப்ரதாயந்தே தேঽமுஷ்மிந்நாதி³த்யே ஸ்ருʼப்தா:
॥ 8.6.2॥

தத்³யத்ரைதத்ஸுப்த: ஸமஸ்த்: ஸம்ப்ரஸந்ந: ஸ்வப்நம் ந விஜாநாத்யாஸு
ததா³ நாடீ³ஷு ஸ்ருʼப்தோ ப⁴வதி தம் ந கஶ்சந பாப்மா ஸ்ப்ருʼஶதி
தேஜஸா ஹி ததா³ ஸம்பந்நோ ப⁴வதி ॥ 8.6.3॥

அத² யத்ரைதத³ப³லிமாநம் நீதோ ப⁴வதி தமபி⁴த ஆஸீநா
ஆஹுர்ஜாநாஸி மாம் ஜாநாஸி மாமிதி ஸ
யாவத³ஸ்மாச்ச²ரீராத³நுத்க்ராந்தோ ப⁴வதி தாவஜ்ஜாநாதி
॥ 8.6.4॥

அத² யத்ரைதத³ஸ்மாச்ச²ரீராது³த்க்ராமத்யதை²தைரேவ
ரஶ்மிபி⁴ரூர்த்⁴வமாக்ரமதே ஸ ஓமிதி வா ஹோத்³வா மீயதே
ஸ யாவத்க்ஷிப்யேந்மநஸ்தாவதா³தி³த்யம் க³ச்ச²த்யேதத்³வை க²லு
லோகத்³வாரம் விது³ஷாம் ப்ரபத³நம் நிரோதோ⁴ঽவிது³ஷாம் ॥ 8.6.5॥

ததே³ஷ ஶ்லோக: । ஶதம் சைகா ச ஹ்ருʼத³யஸ்ய நாட்³யஸ்தாஸாம்
மூர்தா⁴நமபி⁴நி:ஸ்ருʼதைகா । தயோர்த்⁴வமாயந்நம்ருʼதத்வமேதி
விஷ்வங்ஙந்யா உத்க்ரமணே ப⁴வந்த்யுத்க்ரமணே ப⁴வந்தி ॥ 8.6.6॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

——————

காண்டம்6

சாதகன் பிரம்மலோகத்தை அடையும் வழி விளக்கப்படுகிறது.

நமது உடலிலுள்ள நாடிகள் வெள்ளை, நீலம், மஞ்சள், சிவப்பு என பல வர்ணங்களில் இருக்கின்றது. இதேப்போன்று சூரியனின் கதிர்களிலும் இந்த மாதிரி வர்ணங்கள் இருக்கிறது.  sUriyaninசூரியனில் உள்ள ஒளிக்கதிர்கள் சூரியமண்டலத்திலும் இருக்கிறது. உடலிலுள்ள நாடிகளிலும் பரவி இருக்கிறது. ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் இந்த நாடி வழியாக போகிறான். எல்லாவித்மான இந்திரிய விவகாரங்களிலிருந்து விடுபட்டு ஒன்றாகி அமைதியடைவான். கனவும் இல்லை. இந்த நாடிக்குள் செல்லும்போது இவனுக்கு கனவுகள் இல்லை, எந்த பாவமும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் அப்போது ஈஸ்வரனிடத்தில் ஐக்கியமாகி விடுகிறான்.

இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவன் எல்லா சக்தியையும் இழந்திருக்கிறான். அவனைச்சுற்றியிருப்பவர்கள் “என்னை தெரிகிறதா?” என்று கேட்கிறார்கள். இவன் சரீரத்தை விட்டு போகாதவரை அவர்களை அறிகிறான், அவன் நாடிக்குள் சென்று விட்டால் யாரையும் அடையாளம் கண்டு கொள்வதில்லை. உடலில் இருந்து உயிர் பிரியும்போது அந்த உபாஸகன் ஓம் என்று தியானித்துக்கொண்டிருந்தானேயானால் அவனது சூட்சும உடலானது சூரிய கிரணங்கள் வழியே பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தியடைவான்.  அப்படி இல்லையென்றால் அவன் எதை தியானித்துக் கொண்டிருந்தானோ அதற்கு தகுந்த பிறவியையெடுப்பான். இந்த பிரம்மலோகத்தை அடைவதற்கு அகும் நேரமானது ஒரு எண்ணத்திற்கும் அடுத்து வரும் எண்ணத்திற்கும் இடையே உள்ள நேரமேயாகும். அவ்வளவு விரைவாக சென்றடைந்து விடுவான். இவன் போதும் பாதை சூரியனின் ஒளிக்கதிர்கள், ஆனால் உபாஸனை செய்யாதவர்களுக்கு இந்தப்பாதை மூடியிருக்கும்.

நம் இதயத்திலிருந்து 101 நாடிகள் பிரிந்து செல்கின்றன. அதில் சுசும்னா நாடி தலையை பிளந்து சென்று கொண்டு இருக்கிறது. அதன் வழியாகத்தான் பிரம்மலோகத்தை அடைகிறான். மற்ற நாடிகள் வழியே செல்லும் உயிரானது மறுப்பிறப்பை அடைகிறது. இந்த பூமியிலே மறுஜென்மம் எடுக்கிறது.

ய ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்ப: ஸோঽந்வேஷ்டவ்ய:
ஸ விஜிஜ்ஞாஸிதவ்ய: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி
ஸர்வாꣳஶ்ச காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ஹ
ப்ரஜாபதிருவாச ॥ 8.7.1॥

பிரத்யாகாத்மா வித்யை — பிரஜாபதி வித்யை –நாம் என்கிற ஆத்மாவை பற்றி -ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் –
ப்ரஹ்மாவுக்கு சரீரம் சேஷம் பிரகாரம்
விரோசனன் அசுரர் அரசன் -இந்திரன் தேவ அரசன் -இருவருக்கும் அறிய ஆசை கொண்டு

தத்³தோ⁴ப⁴யே தே³வாஸுரா அநுபு³பு³தி⁴ரே தே ஹோசுர்ஹந்த
தமாத்மாநமந்வேச்சா²மோ யமாத்மாநமந்விஷ்ய ஸர்வாꣳஶ்ச
லோகாநாப்நோதி ஸர்வாꣳஶ்ச காமாநிதீந்த்³ரோ ஹைவ
தே³வாநாமபி⁴ப்ரவவ்ராஜ விரோசநோঽஸுராணாம் தௌ
ஹாஸம்விதா³நாவேவ ஸமித்பாணீ ப்ரஜாபதிஸகாஶமாஜக்³மது:
॥ 8.7.2॥

தௌ ஹ த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணி ப்³ரஹ்மசர்யமூஷதுஸ்தௌ ஹ
ப்ரஜாபதிருவாச கிமிச்ச²ந்தாவாஸ்தமிதி தௌ ஹோசதுர்ய
ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்ப: ஸோঽந்வேஷ்டவ்ய:
ஸ விஜிஜ்ஞாஸிதவ்ய: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி ஸர்வாꣳஶ்ச
காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ப⁴க³வதோ வசோ
வேத³யந்தே தமிச்ச²ந்தாவவாஸ்தமிதி ॥ 8.7.3॥

தௌ ஹ ப்ரஜாபதிருவாச ய ஏஷோঽக்ஷிணி புருஷோ த்³ருʼஶ்யத
ஏஷ ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேத்யத² யோঽயம்
ப⁴க³வோঽப்ஸு பரிக்²யாயதே யஶ்சாயமாத³ர்ஶே கதம ஏஷ
இத்யேஷ உ ஏவைஷு ஸர்வேஷ்வந்தேஷு பரிக்²யாயத இதி ஹோவாச
॥ 8.7.4॥

-32-வருஷம் ப்ரஹ்மசர்யம் இருந்து அதிகாரம் சம்பாதித்து கொண்டு வர சொல்ல
கண்ணுக்குள்ளே இருப்பவனே ஆத்மா அஷி புருஷன்
அம்ருதம் -அபயம் -தூக்கமே இல்லாமல் நிரதிசய சோக ரூபம் -வலக்கண்ணில் உள்ளான்

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

—————

காண்டம்-‍7 (பிரஜாபதி வித்யா)

         ஞானி என்பவர் யார்?

         எதன் மூலமாக இந்த ஞானம் கிடைக்கின்றது?

         ஞானத்துக்கு பொருளான ஆத்ம தத்துவம் என்றால் என்ன?

         எப்படி ஆத்மா சரீரமற்றது என்று விளக்கப்படுகிறது?

         ஆத்மாவை அறிவதன் மூலம் என்ன பலன் கிடைக்கும்?

ஸ்லோகம்-1

மூன்றுவிதமான கருத்துக்கள் இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டிருக்கிறது.

       ஆத்ம ஸ்வரூபம்

       ஞானத்தை அடையும் வழி

       ஆத்ம ஸ்வரூபத்தினை அறிந்தால் அடையும் பலன்

ஆத்மாவானது தர்ம, அதர்மங்களற்றது. கர்மம்தான் தர்ம-அதர்மங்களை உற்பத்தி செய்கிறது. இங்கே தர்ம-அதர்மம் என்பது பாவ-புண்ணீயத்தை குறிக்கிறது. இந்த பாவ-புண்ணியங்கள் சுக-துக்கத்தை கொடுத்துவிட்டு நீங்குகின்றன. பல ஜென்மங்களில் சேர்த்த பாவ-புண்ணியங்கள் காரண சரீரத்தில் இருக்கிறது. அதனால் ஆத்மாவுக்கு காரண சரீரம் இல்லை அல்லது போக்தாவாக இருப்பதில்லை, சுக துக்கங்களை அனுபவிக்காதது, வயதற்றது, அதாவது ஸ்தூல சரீரமற்றது. உடலுக்கு வரும் ஆறு விகாரங்களும் இல்லாதது.

அபஹதபாப்மா – ஆத்மா காரண சரீரமற்றது

விஜரஹ – ஸ்தூல சரீரமற்றது

விம்ருத்யு – மரணமற்றது, சாசுவதமானது, ஸத் ஸ்வரூபமானது

விஷோகஹ – துயரமற்றது, மனதில்தான் சுக துக்கங்கள் அனுபவிக்கப்படுகிறது. எனவே சூட்சும சரீரமற்றது

விஜிதாத்ய – பசியற்றது, பிராணமய கோசத்தில் நடைபெறுவது

அபிபாக – தாகமுமில்லை.

எனவே ஆத்மா காரண, ஸ்தூல, சூட்சும ஸரீரமற்றது என்று அதன் லட்சணமாக, நிர்குண ஸ்வரூபத்தை குறிக்கிறது.

இந்த ஆத்மாவானது மாயாவின் துணைக்கொண்டு ஈஸ்வரனது குணங்களாக கூறப்படுகிறது. அவை எட்டு குணங்களாக பிரிக்கப்படுகிறது. இது சகுண ஸ்வரூபத்தைக் குறிக்கிறது. இதை அடைய இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளன. அவைகள்

1. அன்வேஷனம் – ஞானத்வார பிராப்தம் இச்சேத் – அறிவின் மூலம் அடைவதற்கு ஆசைப்பட வேண்டும். உபநிஷத் மிகத் தெளிவாக சொல்கிறது, இந்த ஆத்மஞானத்தை கர்மங்களின் மூலமாகவோ, செல்வத்தாலோ, மற்ற எதனாலும் அடையமுடியாது. எனவே இவைகளெல்லாம் ஸாதனைகள் அல்ல அறிவின் மூலமாகத்தான் அடைய முடியும். ஆகவே அறிவின் மூலமாகத்தான் அடைய வேண்டும் என்று ஆசைக்கொள்ள வேண்டும். பிறகு சரியான குருவின் துணைக் கொண்டு உபநிஷத் மூலமாக ஞானத்தை அடைய வேண்டும்.

2. விஜிக்ஞாஸிதவ்ய – தனி ஸ்வரூபமாக்க வேண்டும். அதாவது ஞான நிஷ்டையை அடைய வேண்டும். சிஷ்ய பிரயத்தனம் – தன் உதவியையே நாட வேண்டும். இதனால் அடையும் பலன்கள் இரண்டு, ஒன்று அனைத்து உலகங்களிலும், தானே முழுவதுமாக வியாபித்து மனநிறைவை அடைகிறான்., இரண்டாவதாக எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்கிறான், எல்லா ஆசைகளும் அவனை விட்டு விலகுகின்றன பிறகு மனநிறைவை அடைகிறான்.

ஸ்லோகம்-2

வித்யாkk க்ரகணம், வித்யா சம்பிரதான, விநிபிரதஷனார்தம், பிரஜாபதியின் இந்த வார்த்தைகள் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் எட்டியது. ஞானத்தின் பலனாக எல்லா உலகங்களையும் அடையலாம், ஆசைகளெல்லாம் நிறைவேறும் என்ற பேராசையால் தேவர்களின் தலைவன் இந்திரனும், அசுரர்களின் தலைவனான விரோசனனும் தஙளுடைய பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு இந்த ஞானத்தை அடைய பிரஜாபதியிடம் சென்று அடைந்தார்கள்.

இவர்கள் இந்த அறிவை அடைய மிகப்பணிவுடன் குருவிடம் சென்றார்கள். இதன் மூலம் பணிவும், அறிவும் மற்ற செல்வங்களை விட உயர்ந்தது என்று உணர்த்தப்படுகிறது. இந்த ராஜாக்களும் மூன்று உலகங்களை ஆள்கின்ற மிகப்பெரிய பதவியும், செல்வாக்கையும், சுகபோக வாழ்க்கையையும் விட்டுவிட்டு குருவுக்கு சேவை செய்து அறிவை பெற வந்திருக்கிறார்கள். இவர்கள் இங்கு வருவதை ஒருத்தருக்கொருவர் தெரிவிக்காமலே வந்தடைந்து இருக்கின்றனர். இதற்கு இவர்களிடையே உள்ள பொறாமை குணத்தையே காட்டுகிறது. இருவரும் சமித் கட்டைகளுடன் பிரஜாபதியின் முன் நின்றார்கள்.

இவர்கள் வந்த நோக்கத்தை கேட்டறிந்த குருவானவர் அவர்களை 32 வருடங்கள் இந்த குருகுலத்தில் பிரம்மசாரியாக இருங்கள் என்று பணித்தார். பிறகு 32 வருடங்கள் கழிந்த பின்னர் அவர்களிடம், “நீங்கள் எதை அறிவதற்காக என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டார். அவர்களும் தாங்கள் கூறிய ஆத்ம தத்துவத்தை அறிய விரும்புகிறோம் என்று பதிலளித்தனர்.

பிரஜாபதி அவர்களுக்கு ஆத்ம தத்துவ உபதேசத்தை கூற ஆரம்பித்தார். கண்ணிலிருந்து ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் அவனை யாரொருவன் பார்க்கின்றானோ அதுதான் ஆத்மா, அழிவற்றது, பயமற்றது. அதை அறிந்தவன் எல்லாவற்றையும் அறிந்தவனாவான்

கண், காது போன்ற புலன்கள் அனைத்தும் ஜடம், அவைகளுக்குள்ளே ஆத்மாவானது அறிவு ஸ்வரூபமாக இருந்து கொண்டு பார்க்கிறது, கேட்கிறது. இந்த சிதாபாஸம் முதலில் அறிய வேண்டும். பிறகு இதையும் நீக்கி அதற்கு ஆதாரமாக இருக்கும் பிரம்மத்தை அறிய வேண்டும்.

கண்ணில் தெரியும் உருவமே ஆத்மா என்ற அறிவுடன் இருவரும் ஒருத்தரையொருத்தர் கண்களில் தெரிந்த தங்கள் உருவத்தை பார்த்து இந்த ஸ்தூல சரீரமே ஆத்மா என்று புரிந்துக் கொண்டார்கள். அதையே குருவிடம் கூறி இது சரியா என்று கேட்டார்கள். தெளிவான நீரில் நாம் பார்த்தால் அது காட்டும் உருவமும், நிலை கண்ணாடியின் முன் நின்று பார்த்தால் அது காட்டும் உருவமும் தன்னையேதான் எனவே இந்த ஸ்தூல உடலே ஆத்மாவா என்று கேட்டார்கள்.

குருவும் அதை ஆமோதித்தார், ’ஆமாம் அதைத்தான் உபதேசித்தேன், எந்தெந்தப் பொருட்களிலெல்லாம் உன் உருவத்தின் பிரதிபிம்பத்தை பார்க்கிறீர்களோ அதுதான் ஆத்மா என்று கூறினார். இவ்வாறு சிஷ்யர்களின் தவறான கருத்தை கொண்டிருந்தாலும் அதை அனுமதிக்கிறார்.

சங்கராச்சாரியார் இந்த இடத்தில் ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு பதிலும் கூறுகிறார். கேள்வி: குருவானவர் எப்படி தவறான அறிவை சரியென்று கூறி சிஷ்யர்களை அனுப்பலாம்?

பதில்: பொதுவாக யாருமே தான் கொண்ட கருத்துக்கு மறுப்பு சொல்வோர் மீது வெறுப்பு அடைவார்கள். மீண்டும் சந்தேகம் வரும்போது அவர்களிடம் செல்லமாட்டார்கள். அதுவும் அந்த இருவரும் நன்கு கற்றுத்தேர்ந்த அறிவாளிகள். இவர்களிடம், நீங்கள் நினைத்தது தவறு என்று கூறினால் குருவின் மீது வெறுப்படைந்து சென்று விடுவார்கள் திரும்பவும் வரமாட்டார்கள். எனவே அவர்களை இழக்க விரும்பாத பிரஜாபதி முதலில் அவர்கள் சொன்ன கருத்தை சரியென்று கூறிவிட்டார். பின்னால் இவர்கள் இதைப்பற்றி மேலும் சிந்தித்து தவறை உணர்ந்து தம்மிடம் வருவார்கள் என்ற எண்ணத்துடன்தான் தப்பான கருத்தை சரியென்று கூறி அனுப்பி விட்டார்.

உத³ஶராவ ஆத்மாநமவேக்ஷ்ய யதா³த்மநோ ந விஜாநீத²ஸ்தந்மே
ப்ரப்³ரூதமிதி தௌ ஹோத³ஶராவேঽவேக்ஷாஞ்சக்ராதே தௌ ஹ
ப்ரஜாபதிருவாச கிம் பஶ்யத² இதி தௌ ஹோசது:
ஸர்வமேவேத³மாவாம் ப⁴க³வ ஆத்மாநம் பஶ்யாவ ஆ லோமப்⁴ய: ஆ
நகே²ப்⁴ய: ப்ரதிரூபமிதி ॥ 8.8.1॥

பிம்பம் பார்த்து -எத்தை பார்க்கிறாயா ஆத்மா -உடம்பு செய்வதையே பிம்பம் செய்ய –

தௌ ஹ ப்ரஜாபதிருவாச ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ பரிஷ்க்ருʼதௌ
பூ⁴த்வோத³ஶராவேঽவேக்ஷேதா²மிதி தௌ ஹ ஸாத்⁴வலங்க்ருʼதௌ
ஸுவஸநௌ பரிஷ்க்ருʼதௌ பூ⁴த்வோத³ஶராவேঽவேக்ஷாஞ்சக்ராதே
தௌ ஹ ப்ரஜாபதிருவாச கிம் பஶ்யத² இதி ॥ 8.8.2॥

அசுரன் தேகமே ஆத்மா என்று தப்பாக புரிந்து -செல்ல -அசுரத்தன்மை வளர்ந்து –

தௌ ஹோசதுர்யதை²வேத³மாவாம் ப⁴க³வ: ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ
பரிஷ்க்ருʼதௌ ஸ்வ ஏவமேவேமௌ ப⁴க³வ: ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ
பரிஷ்க்ருʼதாவித்யேஷ ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி
தௌ ஹ ஶாந்தஹ்ருʼத³யௌ ப்ரவவ்ரஜது: ॥ 8.8.3॥

தௌ ஹாந்வீக்ஷ்ய ப்ரஜாபதிருவாசாநுபலப்⁴யாத்மாநமநநுவித்³ய
வ்ரஜதோ யதர ஏதது³பநிஷதோ³ ப⁴விஷ்யந்தி தே³வா வாஸுரா வா தே
பராப⁴விஷ்யந்தீதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய ஏவ
விரோசநோঽஸுராஞ்ஜகா³ம தேப்⁴யோ ஹைதாமுபநிஷத³ம்
ப்ரோவாசாத்மைவேஹ மஹய்ய ஆத்மா பரிசர்ய ஆத்மாநமேவேஹ
மஹயந்நாத்மாநம் பரிசரந்நுபௌ⁴ லோகாவவாப்நோதீமம் சாமும் சேதி
॥ 8.8.4॥

தஸ்மாத³ப்யத்³யேஹாத³தா³நமஶ்ரத்³த³தா⁴நமயஜமாநமாஹுராஸுரோ
ப³தேத்யஸுராணாꣳ ஹ்யேஷோபநிஷத்ப்ரேதஸ்ய ஶரீரம் பி⁴க்ஷயா
வஸநேநாலங்காரேணேதி ஸꣳஸ்குர்வந்த்யேதேந ஹ்யமும் லோகம்
ஜேஷ்யந்தோ மந்யந்தே ॥ 8.8.5॥

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

———————

காண்டம்-‍8

தவறாக ஆத்மாவை புரிந்துக் கொண்டிருக்கிற சிஷ்யர்களுக்கு அவர்களாகவே தங்கள் தவறை உணரச்செய்ய வேண்டும் என்று ஆதங்கத்துடன் குருவானவர், அவர்கள் இருவரையும் அழைத்து நீர் நிரப்பப்பட்ட ஒரு பெரிய பாத்திரத்தில் அவர்களை திரும்பவும் பார்க்கச் சொன்னார். பிறகு அப்படி பார்க்கும்போது எது புரியவில்லையோ அதை தம்மிடம் வந்து கேளுங்கள் என்று கூறினார். இருவரும் பார்த்துவிட்டு வந்து, “நாங்கள் எங்களையே பார்க்கிறோம், எங்களுடைய முடியும் நகங்களும்கூட தெளிவாக தெரிகிறது என்று கூறினர். குரு திரும்பவும், “உங்கள் உருவத்தை நீரில் பார்க்கும்போது உங்களுக்கு ஏதாவது புரியாமல் இருக்கிறது என்று தோன்றுகிறதா? என்று வினவினார். இருவரும் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக நின்று, எதுவும் எங்களுக்கு புரியாமல் இல்லை, எங்கள் பிரதிபிம்பம்தான் ஆத்மா என்று நாங்கள் உறுதியாக நினைக்கிறோம், எனவே தேடி வந்த ஞானம் கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் இருந்து விட்டார்கள்.

குருவானவர், இன்னொரு குறிப்புக் கொடுத்து அவர்களின் தவறான முடிவை உணர வைக்க முயன்றார். அவர்களிடம், “நீங்கள் உங்களை நன்றாக உடை அலங்காரம் செய்து கொள்ளுங்கள், தலைமுடி, நகங்களை வெட்டி அழகு படுத்திக்கொள்ளுங்கள். பிறகு திரும்பவும் உங்களை அந்த நீரில் சென்று பாருங்கள். அவர்களும் தங்களை நன்கு அழகுப்படுத்திக்கொண்டு நீரில் சென்று பார்த்தார்கள். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று குரு கேட்டார். குரு அதன் மூலம் என்ன உணர்த்த நினைத்தார் என்றால், அலங்காரம் செய்வதற்குமுன் தெரியாத ஆபரணங்கள் இப்பொழுது தெரியவரும், அதனால் இந்த ஆபரணங்களை உடலில் போடும்போது இதன் உருவமும் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது அதனால் இந்த உடம்புதான் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது, முடியும், நகமும் நீக்கியப்பின்னர் அவைகள் தெரியவில்லை. எப்படி நகமும், முடியும் அழியக்கூடியவை, மாற்றதிற்குட்பட்டவையாக இருக்கிறதோ அதேப்போன்று இந்த உடலும் மாறுதலுக்குட்பட்டவை அழிவை அடையக்கூடியவை, ஆனால் ஆத்மா நித்தியமானது என்று குரு கூறியிருப்பதை வைத்து நீரில் தெரியும் தங்கள் உருவம் ஆத்மா அல்ல என்று உணரவேண்டும் என்று குரு நினைத்தார். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.

இருவரும் முன்பு சொன்னபடியே, நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியேதான் நீரில் தெரியும் எங்களது உருவமும் இருக்கிறது என்று கூறினார்கள். அவர்கள் கொண்டிருந்த ஆத்மாவைப்பற்றிய தவறான அறிவிலேதான் இருக்கிறார்கள், புதியதாக கொடுக்கப்பட்ட குறிப்பினாலும் தங்கள் தவற்றை உணர்ந்து கொள்ளாமல ஆத்மாவை அறிந்துவிட்டோம் என்ற திருப்தியான மனதுடன் குருவிடம் விடைப்பெற்று சென்று விட்டார்கள். இனியும் குறிப்பு கொடுத்து அவர்களை கஷடப்படுத்த விரும்பாத பிரஜாபதி, அவர்கள தானாக தங்களது தவறை உணர்ந்தால்தான் அவர்களால் முழுமனதுடன் கவனிக்க முடியும் என்று எண்ணி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார். ஆத்மாவின் முதல் லட்சணத்தையே வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்து விட்டார்கள், மற்ற லட்சணங்களான நித்யமானது, பயமற்றது போன்றவற்றை சோதிக்காமல் விட்டு விட்டார்கள் என்று எண்ணினார்.

அனுபலப்யா – சரியாக புரிந்து கொள்ளாமல்

ப்ரோவாசா – உபதேசம் செய்தல்

பரிசர்ய – காக்கப்படவேண்டும்- to take care of

இப்படி தவறாக ஆத்மாவைப் பற்றி புரிந்து கொண்டு செல்கின்ற இருவரையும் பார்த்து, அவர்களில் காதுகளில் விழும்படி, “ஆத்மாவைப்பற்றி தவறாக புரிந்து கொண்டும், நான் கூறிய ஆத்மாவின் எல்லா லட்சணங்களையும் சோதிக்காமல், சரியாக புரிந்து கொள்ளாமல் இருவரும் செல்கின்றனர். இவ்வாறு தவறாக யார் புரிந்து கொண்டாலும் அவர்கள் ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளும் பாதையிலிருந்து விலகிச் செல்கிறார்கள் என்று கூறினார். அதை லட்சியம் செய்யாமல் இவர்கள் தங்கள் இருப்பிடத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள்.

விரோசனன் தன் இருப்பிடத்தை அடைந்தவுடனே எல்லோருக்கும் தான் புரிந்து கொண்ட தவறான ஆத்ம தத்துவத்தை உபதேசம் செய்யத் தொடங்கினான். அதாவது ஸரீரம்தான் ஆத்மா, அதைத்தான் வழிபட வேண்டும், நன்கு கவனிக்கப்பட வேண்டும், அதைத்தான் வணங்க வேண்டும். இப்படி செய்வதால் நாம் எல்லா உலகங்களையும் அடைந்து விடுவோம், எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று உபதேசித்தான்.

இப்பொழுதும் விரோசனனின் இந்த உபதேசத்தை பின்பற்றுவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் தான தர்மங்களை செய்ய மாட்டார்கள், நல்ல காரியங்களை செய்ய மாட்டார்கள், இறை வழிபாடு செய்ய மாட்டார்கள், எதையும் தியாகம் செய்ய மாட்டார்கள், இவர்களை அசுரர்கள் என்று சொல்லலாம் அல்லது அந்த பரம்பரையில் வந்தவர்கள் என்றும் சொல்லலாம். இந்த அசுரர்கள் பிணமாகப் போகும் இந்த உடலை நன்கு அலங்கரித்துக் கொள்வார்கள், நறுமணம் பூசி, ஆபரணங்கள் அணிந்துகொண்டு சுவையான உணவுப் பண்டங்களை உண்டு நன்கு பராமரித்து, அழகான ஆடைகளை அணிவித்து மகிழ்வார்கள். இப்படி செய்வதால் எல்லா உலகங்களையும் அடைந்து விடலாம் என்று எண்ணுவார்கள்.

அத² ஹேந்த்³ரோঽப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ யதை²வ
க²ல்வயமஸ்மிஞ்ச²ரீரே ஸாத்⁴வலங்க்ருʼதே ஸாத்⁴வலங்க்ருʼதோ ப⁴வதி
ஸுவஸநே ஸுவஸந: பரிஷ்க்ருʼதே பரிஷ்க்ருʼத
ஏவமேவாயமஸ்மிந்நந்தே⁴ঽந்தோ⁴ ப⁴வதி ஸ்ராமே ஸ்ராம: பரிவ்ருʼக்ணே
பரிவ்ருʼக்ணோঽஸ்யைவ ஶரீரஸ்ய நாஶமந்வேஷ நஶ்யதி
நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.9.1॥

ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: ஸார்த⁴ம் விரோசநேந
கிமிச்ச²ந்புநராக³ம இதி ஸ ஹோவாச யதை²வ க²ல்வயம்
ப⁴க³வோঽஸ்மிஞ்ச²ரீரே ஸாத்⁴வலங்க்ருʼதே ஸாத்⁴வலங்க்ருʼதோ ப⁴வதி
ஸுவஸநே ஸுவஸந: பரிஷ்க்ருʼதே பரிஷ்க்ருʼத
ஏவமேவாயமஸ்மிந்நந்தே⁴ঽந்தோ⁴ ப⁴வதி ஸ்ராமே ஸ்ராம:
பரிவ்ருʼக்ணே பரிவ்ருʼக்ணோঽஸ்யைவ ஶரீரஸ்ய நாஶமந்வேஷ
நஶ்யதி நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.9.2॥

இந்திரன் -ஆத்மா தேகம் வாசி சங்கை -வந்து திரும்பி வந்து சமித் பாணியாக —
மீண்டும் -32-வருஷம்
ஸ்வப்னத்தில் உன்னை பார்த்தாய் அது தான் ஆத்மா என்று சொல்ல –
கெட்டுப்போகாது உடம்பைக்காட்டி -அவனுக்கு வந்த சங்கை தீர்த்து –

ஏவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி வஸாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணீதி
ஸ ஹாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாண்யுவாஸ தஸ்மை ஹோவாச
॥ 8.9.3॥

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

——————

காண்டம்-‍9

ஆனால் தேவர்களின் தலைவன் இந்திரன் தன் இருப்பிடத்தை அடைவதற்கு முன்னே குருவின் உபதேசத்தை தீவிரமாக சிந்தித்து பார்க்கலானான். இயற்கையிலே அவனிடத்தில் உள்ள தெய்வீக குணங்களால் அவன் மனம் இவ்வாறு சிந்தித்தது. அவன் தீர்மானித்த ஆத்ம தத்துவத்தில் அதாவது இந்த உடல்தான் ஆத்மா என்று புரிந்து கொண்டதில் ஏதோ குறை இருப்பதாக உணர்ந்தான். நீரில் தெரிந்த தன் உருவத்தைப்பற்றி விசாரம் செய்ய சொன்ன குருவின் உபதேசன் அவனுக்கு கொஞ்ச கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. எப்படி நீரில் தெரிந்த தன் உருவம், தன் ஸரீரத்தை எப்படியெல்லாமோ மாற்றுகிறோமோ அப்படியே காட்சியளிக்கிறது. ஒரு கண் போனாலும் அல்லது கால் போனாலும் அதிலும் அப்படியே காட்சியளிக்கிறது, இந்த உடலே அழிந்து போனாலும் அந்த உருவமும் அழிந்துதான் போகும் என்று குழம்பிப்போனான். எனவே தான் கொண்ட முடிவில் ஏதோ குறை இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான். ஸ்தூல ஸரீரமே ஆத்மா என்ற விஷயத்தில் குறையைக் கண்டான்.

குண ஆதானம் – நற்குணத்தை சேர்க்கிறோம்

தோஷ அபனயனம் – குறைகளை நீக்குதல்

தோஷ தரிசனம் – குறையைக் கண்டு கொண்டால்

நிஷேதம் ஹேது – அதை நீக்கி விடுவோம்.

ஆத்மாவை மூன்று விதமான திரைகள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. அவைகள் ஸ்தூல, சூட்சும மற்றும் காரண ஸரீரம்.

மற்றவர்களிடம் குறையைக் காணலாம் ஆனால் அதைப்பற்றி மற்றவர்களிடத்திலே விமர்சிக்கக் கூடாது அல்லது அவரிடத்திலேயே கூறி அவரை அவமதிக்க கூடாது. எல்லாவற்றிலும் தோஷத்தைக் காண்பதில் தவறில்லை, குறையை கண்டால்தான் அதை நீக்க முடியும்.

குருவானவர் ஒரு நிலை வரைதான் உபதேசம் செய்வார். சிஷ்யன்தான் முயற்சி செய்து அவர் செய்த உபதேசத்தை விசாரித்து பின் அறிவை அடைய வேண்டும். குருவிடம் பெற்ற ஞானத்தை தானே சுயமாக மேலும் மேலும் சிந்தித்து அந்த ஞானத்தில் நிலை பெற வேண்டும்.

ஒவ்வொருவருடைய சித்தசுத்தியும், நற்குணங்களும் அவன் தவறாக ஒன்றை நினைக்கும் போது, அது தவறு என்று புத்தியைக் கொண்டு சரியான நேரத்தில் எச்சரிக்கும். சரியான அறிவை அடைய வேண்டுமென்றால் மற்றவர்களை ஹிம்சை பண்ணக்கூடாது. சித்தஸுத்திதான் நம் புத்தியை, ஸ்ம்ருதியை சரியான நேரத்தில் தூண்டுவதற்கு காரணமாக இருக்கும்

இந்திரனின் விசாரங்கள்:

இந்த உடலில் நல்லாடைகளை உடுத்தினால், நீரில் தெரியும் பிம்பத்திலும் அதேமாதிரி இருக்கிறது. ஆபரணங்களை அணிந்தாலும் அப்படியே காட்டுகிறது. இரண்டு கண்களை இழந்தாலும் அல்லது ஏதாவது அங்கங்களை இழந்தாலும் அப்படியே அதுவும் காட்டும். முதுகு வளைந்து இருந்தால் அதிலும் அப்படியே இருக்கும். இந்த உடல் அழிந்து போனால் அதிலும் அழிந்து போகும். இப்படி விசாரம் செய்து இரண்டு தோஷத்தை அவன் கண்டான்.

தோஷம்-1: இந்த பிரதிபிம்பம் சுதந்திரமாக இல்லை, அது உண்மைப்பொருளை சார்ந்திருக்கிறது.

தோஷம்-2: உடலில் ஏற்படும் மாற்றங்கள் (தேய்மானங்கள்)

தோஷம்-3: உடலின் அழிவையும் உணர்கின்றான்.

நான் இந்த அறிவில் போக்யத்தை பார்க்கவில்லை என்று இந்திரன் சிந்தித்தான்.

இந்த தோஷத்தை நீக்கிக்கொள்ள மீண்டும் சமித்பாணியுடன் குருவை சென்றடைந்தான். குரு அவனைப்பார்த்து, “நீங்கள் இருவரும் நன்றாக புரிந்து விட்டது என்று சென்று விட்டீர்கள், பின் எதை அறிவதற்காக திரும்பவும் வந்திருக்கிறாய்?” என்று கேட்டார். இந்திரன் தான் புரிந்து கொண்டதில் தோஷம் இருப்பதாகவும், அதை நீக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, தான் யோசித்ததையெல்லாம் அவரிடம் பகிர்ந்து கொண்டான். நான் இப்போது ஸ்தூல ஸரீரம் ஆத்மாவல்ல என்பதை உணர்ந்து கொண்டேன், ஆனால் அதை நீக்கும் வழி தெரியாமல் இருப்பதை எடுத்துரைத்தான்.

குருவும் இந்திரன் சொன்னதை சரிதான் என்று ஆமோதித்து, உன்னுடைய சரீரம் ஆத்மா அல்ல என்று நினைத்தது சரிதான், உனக்கு மேலும் உபதேசம் செய்கிறேன் ஆனால், “நீ ஸித்தசுத்தி உடையவனாக இருந்திருந்தால் நான் முன்பு உபதேசித்ததை உடனடியாக புரிந்து கொண்டிருப்பாய். எனவே உன்னிடத்தில் உள்ள குறைகளை நீக்கி மீண்டும் தெளிவான அறிவையடைய இன்னும் 32 வருஷங்கள் குருகுலத்தில் இருந்து சேவை செய்து கொண்டிரு” என்று கூறினார். 32 வருஷங்கள் கழிந்தது அவனது குறைகள் எல்லாம் நீங்கப்பெற்றது. குருவானவர் உபதேசத்தை ஆரம்பித்தார்.

ய ஏஷ ஸ்வப்நே மஹீயமாநஶ்சரத்யேஷ ஆத்மேதி
ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய:
ப்ரவவ்ராஜ ஸ ஹாப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ
தத்³யத்³யபீத³ꣳ ஶரீரமந்த⁴ம் ப⁴வத்யநந்த:⁴ ஸ ப⁴வதி யதி³
ஸ்ராமமஸ்ராமோ நைவைஷோঽஸ்ய தோ³ஷேண து³ஷ்யதி ॥ 8.10.1॥

ந வதே⁴நாஸ்ய ஹந்யதே நாஸ்ய ஸ்ராம்யேண ஸ்ராமோ க்⁴நந்தி த்வேவைநம்
விச்சா²த³யந்தீவாப்ரியவேத்தேவ ப⁴வத்யபி ரோதி³தீவ நாஹமத்ர
போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.10.2॥

ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: கிமிச்ச²ந்புநராக³ம
இதி ஸ ஹோவாச தத்³யத்³யபீத³ம் ப⁴க³வ: ஶரீரமந்த⁴ம் ப⁴வத்யநந்த:⁴
ஸ ப⁴வதி யதி³ ஸ்ராமமஸ்ராமோ நைவைஷோঽஸ்ய தோ³ஷேண து³ஷ்யதி
॥ 8.10.3॥

ந வதே⁴நாஸ்ய ஹந்யதே நாஸ்ய ஸ்ராம்யேண ஸ்ராமோ க்⁴நந்தி த்வேவைநம்
விச்சா²த³யந்தீவாப்ரியவேத்தேவ ப⁴வத்யபி ரோதி³தீவ நாஹமத்ர
போ⁴க்³யம் பஶ்யாமீத்யேவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி வஸாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணீதி
ஸ ஹாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாண்யுவாஸ தஸ்மை ஹோவாச
॥ 8.10.4॥

அதையும் பாம்பு கடிக்க -சங்கை –மேலும் -32–வருஷம்
ஆழ்ந்த நிலை உறக்கம் -தான் ஆத்மா
நான் தெரியாதே மேலும் சங்கை -5- வருஷம்
ஆக -101-வருஷம் இருந்து ஆத்மாவை அறிந்தான் இந்திரன் –

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

——————

காண்டம்-‍10

எதிலிருந்து துக்கமும், துயரமும் வருகிறது என்று ஆராய்ந்து பார்த்தால், நாம் எந்த கோசத்தில் இருக்கிறோம் என்று தெரிந்து விடும். எவனொருவன் கனவில் விவகாரங்களை செய்து கொண்டிருக்கிறானோ அவன்தான் ஆத்மா (தைஜஸன்), இந்த ஆத்மா மரணமற்றது, பயமற்றது. 

குரு உபதேசித்த கருத்து : தைஜஸனும், சூட்சும உலகின் அதிபதியாக இருக்கும் ஹிரன்யகர்ப்பனும் ஒன்றே என்று ஐக்கியப்படுத்துதல்.  

தைஜஸன் வாக்யார்த்தம்: அந்தப் பிரக்ஞன் – நம் ம்னதிற்குள் இருக்கும் எண்ணங்களை பார்த்துக்கொண்டிருப்பவன் – ஆத்மாவுடன் சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்து கொண்டு இருப்பவன்.

தைஜஸன் லட்சியார்த்தம்: ஸ்தூல பஞசபூதங்கள் ஜடமானது என்றால், சூட்சும பஞச பூதங்களும் ஜடமானதுதான். ஜடமான மனம் எதனால் அறிவை, உணர்வை அடைகிறது? ஜடமான மனதை பிரகாசிக்கச் செய்வது ஆத்மாதான். எனவே ஆத்ம வேறு மனம் வேறு. இங்கே அறிபவன் ஆத்மா, அறியப்படுவது மனது.

இந்திரன் புரிந்து கொண்டது: எந்த அறிவு ஸ்வரூபம் என் மனதை பிரகாசிக்கின்றதோ அதுதான் அனைத்து மனங்களையும் பிரகாசிக்கிறது. கனவில் விளங்கிக்கொண்டிருக்கும் சூட்சும ஸரீரம்தான், அதாவது மனம்தான் ஆத்மா என்று இந்திரன் தவறாக புரிந்து கொண்டான். எனவே தனக்கு நன்றாக புரிந்துவிட்டது என்று கூறிவிட்டு திரும்பவும் சென்றுவிட்டான்.

ஆனால் அவன் தேவலோகத்தை அடைவதற்கு முன், தான் புரிந்து கொண்ட ஆத்ம தத்துவத்தில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான். அவன் இவ்வாறாக எண்ணினான். ஸ்தூல சரீரத்தில் கண்கள் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் பார்வை இழப்பதில்லை.

ஸ்தூல சரீரத்தில் ஒரு கண் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் ஒரு கண் இழப்பதில்லை. ஸ்தூல சரீரத்திற்கு எந்த குறை வந்தாலும் அது சூட்சும சரீரத்தை பாதிப்பதில்லை. இவையெல்லாம் ஸ்தூல சரீரத்தின் மீதுள்ள அபிமானம் நீங்கினால் இப்படி தெரியவரும். ஸ்தூல சரீரம் இறந்தாலும் மனம் இறப்பதில்லை. அது வேறு ஜென்மத்தை எடுக்கிறது. இந்த மனமானது துயரப்படுகிறது, துரத்தப்படுகிறது. இது குருவின் உபதேசத்திற்கு எதிராக இருக்கிறது. எனவே புரிந்து கொண்டதில் எதோ தவறு இருக்கிறது என்று உணர்ந்த அவன் மீண்டும் சமித் பாணியுடன் குருவை வந்தடைந்தான்.

குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். இந்திரன் தான் புரிந்து கொண்ட சூட்சும சரீரத்தில் உள்ள தோஷத்தை சொல்ல ஆரம்பித்தான். இந்த ஸ்தூல சரீரம் அழிந்தாலும், சூட்சும சரீரம் அழிவதில்லை, இதற்கு நோய் வந்தால், அதற்கு வருவதில்லை, சூட்சும சரீரம் தாக்கப்படுகிறது, துயரப்படுகிறது, கஷ்டங்களை கண்டு அழுகிறது. ஆகவே நான் சூட்சும சரீரமே ஆத்மா என்று நினைத்ததில் குறை இருப்பதாக உணர்கிறேன் என்று கூறினான். குருவும் நீ நினைத்தது சரிதான் என்று ஆமோதித்தார். நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் நீ இன்னும் 32 வருஷங்கள் குருகுல வாசத்தில் இருந்து ஸித்தசுத்தி அடைவாயாக என்று கூறினார். 32 வருஷங்கள் முடிந்ததும் உபதேசத்தை ஆரம்பித்தார்.

தத்³யத்ரைதத்ஸுப்த: ஸமஸ்த: ஸம்ப்ரஸந்ந: ஸ்வப்நம் ந விஜாநாத்யேஷ
ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய:
ப்ரவவ்ராஜ ஸ ஹாப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ நாஹ
க²ல்வயமேவꣳ ஸம்ப்ரத்யாத்மாநம் ஜாநாத்யயமஹமஸ்மீதி
நோ ஏவேமாநி பூ⁴தாநி விநாஶமேவாபீதோ ப⁴வதி நாஹமத்ர
போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.11.1॥

ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: கிமிச்ச²ந்புநராக³ம இதி
ஸ ஹோவாச நாஹ க²ல்வயம் ப⁴க³வ ஏவꣳ ஸம்ப்ரத்யாத்மாநம்
ஜாநாத்யயமஹமஸ்மீதி நோ ஏவேமாநி பூ⁴தாநி
விநாஶமேவாபீதோ ப⁴வதி நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி
॥ 8.11.2॥

ஏவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி நோ ஏவாந்யத்ரைதஸ்மாத்³வஸாபராணி
பஞ்ச வர்ஷாணீதி ஸ ஹாபராணி பஞ்ச வர்ஷாண்யுவாஸ
தாந்யேகஶதꣳ ஸம்பேது³ரேதத்தத்³யதா³ஹுரேகஶதꣳ ஹ வை வர்ஷாணி
மக⁴வாந்ப்ரஜாபதௌ ப்³ரஹ்மசர்யமுவாஸ தஸ்மை ஹோவாச ॥ 8.11.3॥

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

—————

காண்டம்-‍11

எவனொருவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறானோ, இந்திரியங்களிலிருந்து விலகி இருக்கின்றானோ, சூட்சும சரீரத்திலிருந்து விலகியிருக்கின்றானோ, எப்பொழுதும் சாந்தமாக இருக்கிறானோ, கனவுகளில்லாதவனாக இருக்கிறானோ, உள் மற்றும் வெளி விஷயங்களின் சம்பந்தத்தினால் விக்ஷேபங்கள் இல்லாமல் இருக்கிறானோ, அவன்தான் ஆத்மா என்று அறிந்து கொள், அது நித்தியமானது, பயமற்றது, அதுவே பிரம்மம்.

காரண சரீரத்தை நீக்கி அதை பிரகாசிக்கிற சைதன்யத்தை எடுத்துக்கொண்டு காரண பிரபஞ்சம், மாயையே ஆதாரமாக கொண்டிருக்கிற சைதன்யமும் ஒன்று என்று புரிந்து கொண்டால் அது மஹா வாக்கியமாகும்.

இப்பொழுது இந்திரன் காரண சரீரத்தை ஆத்மா என்று புரிந்து கொண்டு திருப்தியாக சென்று விட்டான். ஆனால் தேவலோகத்தை அடைவதற்கு முன் தான் கொண்ட முடிவில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான்.

அறியாமையால் துக்கம் இல்லை, ஆனால் துக்கத்தின் விதை இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையே அறியாதவனாக இருக்கிறான், இந்த உலகத்தையே அறியாதானாக இருக்கிறான். எனவே தன்னையே இழந்து விட்டவனாக இருக்கிறான். இவன் நாசத்தையே கொடுப்பது போல இருப்பதால், நான் எடுத்த முடிவில் எந்த பயனும் இல்லை. சங்கரர் கூறுகிறார், “அறிவு இருக்கும்போது அறிபவனுடைய இருப்பு அறியப்படுகிறது, அறிவற்று இருக்கும்போது அறிபவனுடைய இருப்பை அறிய முடியாது”

இவ்வாறு காரண சரீரத்திலும் குறையைக் கண்டு திரும்பவும் சமித்பாணியுடன் குருவிடம் திரும்பவும் வந்தான். குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். இந்திரன் தான் தவறாக புரிந்து கொண்டதில் உள்ள குறையைக அவரிடம் கூறினான். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையும் அறியவில்லை, தன்னை சுற்றியுள்ள உலகத்தையும் அறியவில்லை. இந்த அறியாமை அழிவிற்குத்தான் கொண்டு செல்லும் எனவே அவன் எடுத்த முடிவில் குறையிருப்பதாக கூறி மேலும் உபதேசிக்குமாறு வேண்டினான்.

உன்னுடைய சிந்தனை சரிதான், நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் உன்னிடத்தில் இன்னும் கொஞ்சம் குறை இருப்பதால் மறுபடியும் ஐந்து வருடங்கள் குருகுலவாசம் செய்யும்படி பணித்தார். ஐந்து வருடங்கள் கழிந்ததும் மீண்டும் அவர் உபதேசத்தை ஆரம்பித்தார். இந்திரன் இதைச் சேர்த்து மொத்தம் 101 வருடங்கள் குருகுலத்தில் கழித்தான்.

மக⁴வந்மர்த்யம் வா இத³ꣳ ஶரீரமாத்தம் ம்ருʼத்யுநா
தத³ஸ்யாம்ருʼதஸ்யாஶரீரஸ்யாத்மநோঽதி⁴ஷ்டா²நமாத்தோ வை
ஸஶரீர: ப்ரியாப்ரியாப்⁴யாம் ந வை ஸஶரீரஸ்ய ஸத:
ப்ரியாப்ரியயோரபஹதிரஸ்த்யஶரீரம் வாவ ஸந்தம் ந
ப்ரியாப்ரியே ஸ்ப்ருʼஶத: ॥ 8.12.1॥

அஶரீரோ வாயுரப்⁴ரம் வித்³யுத்ஸ்தநயித்நுரஶரீராண்யேதாநி
தத்³யதை²தாந்யமுஷ்மாதா³காஶாத்ஸமுத்தா²ய பரம் ஜ்யோதிருபஸம்பத்³ய
ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யந்தே ॥ 8.12.2॥।

ஏவமேவைஷ ஸம்ப்ரஸாதோ³ঽஸ்மாச்ச²ரீராத்ஸமுத்தா²ய பரம்
ஜ்யோதிருபஸம்பத்³ய ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யதே ஸ உத்தமபுருஷ:
ஸ தத்ர பர்யேதி ஜக்ஷத்க்ரீட³ந்ரமமாண: ஸ்த்ரீபி⁴ர்வா யாநைர்வா
ஜ்ஞாதிபி⁴ர்வா நோபஜநꣳ ஸ்மரந்நித³ꣳ ஶரீரꣳ ஸ யதா²
ப்ரயோக்³ய ஆசரணே யுக்த ஏவமேவாயமஸ்மிஞ்ச²ரீரே
ப்ராணோ யுக்த: ॥ 8.12.3॥

அத² யத்ரைததா³காஶமநுவிஷண்ணம் சக்ஷு: ஸ சாக்ஷுஷ:
புருஷோ த³ர்ஶநாய சக்ஷுரத² யோ வேதே³த³ம் ஜிக்⁴ராணீதி ஸ ஆத்மா
க³ந்தா⁴ய க்⁴ராணமத² யோ வேதே³த³மபி⁴வ்யாஹராணீதி ஸ
ஆத்மாபி⁴வ்யாஹாராய வாக³த² யோ வேதே³த³ꣳ ஶ்ருʼணவாநீதி
ஸ ஆத்மா ஶ்ரவணாய ஶ்ரோத்ரம் ॥ 8.12.4॥

பார்க்கிறான் கண்ணால் அல்ல -அனைத்தும் சங்கல்பத்தால் -சங்கல்ப ரூப ஞானம்

அத² யோ வேதே³த³ம் மந்வாநீதி ஸாத்மா மநோঽஸ்ய தை³வம் சக்ஷு:
ஸ வா ஏஷ ஏதேந தை³வேந சக்ஷுஷா மநஸைதாந்காமாந்பஶ்யந்ரமதே
ய ஏதே ப்³ரஹ்மலோகே ॥ 8.12.5॥

தம் வா ஏதம் தே³வா ஆத்மாநமுபாஸதே தஸ்மாத்தேஷாꣳ ஸர்வே ச
லோகா ஆத்தா: ஸர்வே ச காமா: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி
ஸர்வாꣳஶ்ச காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ஹ
ப்ர்ஜாபதிருவாச ப்ரஜாபதிருவாச ॥ 8.12.6॥

தேகம் ஸ்வப்னம் ஆழ் நிலை-எதுவும் இல்லை -உடம்பில் விட்டு கிளம்பினவன் தான் ஆத்மா
செயற்கை கர்மாவால் சிக்கி உள்ளான்

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

————

காண்டம்-‍12

சரீரமே சம்சாரம்: சம்சார அனுபவம் விஸ்வனுக்கும், தைஜஸனுக்கும் இருக்கிறது. காரண சரீரத்தில் சம்சாரம் இல்லை, மோட்சமும் இல்லை. ஆனால் சம்சாரத்தின் விதை இருக்கிறது.

இந்த மந்திரத்தில் மூன்று சரீரங்களை நிஷேதம் செய்யப்படுகிறது. அதுவும் நேரிடையாக நீக்குகிறார். சரீரமற்ற நிலை மோக்ஷம், சரீரத்துடன் இருப்பது சம்சாரம். சரீர ஸ்வரூபம், ஆத்ம ஸ்வரூபம், ஆத்மாவுக்கும் சரீரத்திற்கும் உள்ள சம்பந்தம், சரீர அபிமான பலன், எப்பொழுது ஆத்ம சரீரமற்றதாக இருக்கிறது இவைகளெல்லாம் விளக்கப்படுகிறது.

சரீர ஸ்வரூபம்: இந்த உடலானது மரணத்திற்குட்பட்டது. இது மரணத்தால் வியாபிக்கப்பட்டிருக்கிறது. எல்லா நேரத்திலேயும் மரணம் அடைந்துக்கொண்டே இருக்கிறது. இதைத்தெரிந்து கொண்டால்தான நமக்கு வைராக்யம் வரும். பிறகு சரீரத்தின் மேல் உள்ள அபிமானம் சென்று விடும். இறப்பை ஒவ்வொருக்ஷணமும் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்துகொண்டால் நாம் மரணத்தைக் கண்டு பயப்படமாட்டோம். சரீரம் மாற்றத்தை அடைந்துக் கொண்டேயிருப்பது, இதை ஆழ்ந்துணர்ந்து கொண்டால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் வரும். சரீரம் துயரத்துக்குட்பட்டது, சுக-துக்கங்களுக்கு உட்பட்டது இதன் சுபாவமே அப்படி இருப்பதுதான். எனவே சரீர அபிமானம் தான் அதன் இருப்பு. இந்த சரீரத்தின் தோற்றம் நாம் செய்த தர்ம-அதர்மத்தின் மூலமாக அடைவது.

ஆத்ம ஸ்வரூபம்: இது மரணமற்றது, சரீரமற்றது, சரீரத்திற்கு அதிஷ்டானமாக விளங்குவது, பயமற்றது, துக்கமற்றது, மாற்றத்திற்குட்படாதது, சுக-துக்கங்களுக்கு அப்பாற்பட்டது, நித்தியானந்த ஸ்வரூபம்

ஆத்ம-சரீர சம்பந்தம்:

இது சத்யமான பொருளுக்கும், மித்யாவான பொருளுக்கும் உள்ள உறவை போன்றது. சரீரம் மாற்றத்தையடைந்து பின் அழிகிறது. ஆனால் ஆத்மா நித்யமானது, மாற்றத்திற்குட்படாதது. இந்த சம்பந்தத்தை அதிஷ்டானம் என்ற சொல்லால் விளக்கப்படுகிறது. இந்த சொல்லுக்கு மூன்று பொருள்களை சஙராச்சாரியார் கூறியிருக்கிறார்.

1. ஆத்மாவின் போகத்திற்காக இருக்கும் இடமாக சரீரம் உள்ளது. ஸ்தூல சரீரம் ஜடமாக இருப்பதால் அது எதையும் அனுபவிக்காது. எனவே ஆத்மா சூக்ஷ்ம சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும் உலக விஷயங்களை அனுபவிப்பதற்கு கருவியாக பயன்படுத்திக்கொள்கிறது. ஆத்மா சிதாபாஸ ரூபத்தில் இருந்து இந்த உலகத்தை அனுபவிக்கின்றது.

2. ஜீவ ரூபமாக இந்த உடலில் பிரவேசித்து தலைவனாக இருக்க இருப்பிடமாக உடலை பயன்படுத்திக்கொள்கிறது.

3. ஆத்மாவிடமிருந்து தோன்றியதுதான் சரீரம். (உ-ம்) கயிற்றில் தோன்றிய பாம்பு போல்.

சரீர அபிமான பலன்:

சரீரத்தில் அபிமானம் வைப்பதால் அடையும் பிரயோஜனம் அல்லது ஏற்படும் விளைவு சம்சாரம், சுக-துக்கங்களை அனுபவித்தல். சரீரத்தில் அபிமானம் இல்லாதிருப்பதால் அடையும் விளைவு மோக்ஷம். நான், என்னுடையது என்ற சரீர அபிமானத்தை உடையவன் ராக-துவேஷத்தால் ஆட்கொள்ளப்படுகிறான், விருப்பு-வெறுப்புக்களால் பிடிபட்டவனாக இருப்பான். தேகத்தில் அபிமானம் வைத்துக்கொண்டிருக்கும்வரை விருப்பு-வெறுப்புகளிலிருந்து விடுதலை கிடையாது.

தினமும் நமக்கு சுக-துக்க அனுபவங்கள் வருகிறது. சம்சாரம் எதைக் குறிக்கிறது என்றால், உடல் அனுபவிக்கும் இந்த சுக-துக்கங்கள்தான். இதை நீக்கும் உபாயத்தை உபநிஷத் கூறவில்லை. நாம் இதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். வெளியில் இருந்து வரும் துக்கத்திலும் சுகத்தைக்காணலாம், சுகத்திலும் துக்கத்தைக் காணலாம். எனவே இந்த சுக-துக்கங்களிலிருந்து விடுதலையடைவது மோக்ஷமல்ல, சம்சாரமும் அல்ல.

நாம்தான் இது எனக்குப்பிடித்தது, பிடிக்காத்து என்று பிரித்து வைக்கிறோம். பிடிக்காததை அனுபவிக்கும்போது மனதில் ஏற்படும் தாக்கம்தான் சம்சாரம் என்று கூறப்படுகிறது, எனவே வெளியில் இருக்கும் சுக-துக்கங்களை கொடுக்கக்கூடிய பொருட்கள் சம்சாரம் இல்லை என்று உறுதியாகிறது. ஒருவர் நம் மனத்தை புண்படுத்தும் சொற்களைக் கொண்டு திட்டினால் அவைகள் நமக்கு புரியாத விஷயமாக இருக்கும் போது நமக்கு கோபமோ, வெறுப்போ வருவதில்லை. இந்திரியங்கள் ஒரு விஷயத்தோடு சேர்ந்து சுகத்தை அனுபவிக்கலாம். ஆனால் அது துக்கதிற்கான விதை என்று அறிந்து கொள்ள வேண்டும். நாம் அந்தப்பொருளை இழக்கும் போது அதுவே நமக்கு துக்கத்தை கொடுக்கும்.

இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரக்காரணம் என்ன? அதை எப்படி நீக்குவது?

சரீரத்தில் அபிமானம் வைக்கும்போதுதான் பிரியம்-அபிரியம் நமக்கு தோன்றும். இந்த அபிமானம் நீங்கினால் இதுவும் விலகி விடும்.

கேள்வி-1

ஆழ்ந்த உறக்கத்தில் இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரவில்லையே, துரியனாக் இருந்து ஏன் இதை அடைய வேண்டும்?

பிரியம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது, அவைகள் சம்சாரப்பிரியம், ஞானியின்பிரியம். சம்சாரம் பிரியமானது விஷயமாகவும் அனுபவிப்பவன் விஷயி என்ற நிலையை உடையவனாகவும் இருக்கிறான். இங்கே பிரியம் வஸ்துவாக இருக்கிறது, வந்து போகும் தன்மையுடையது. ஞானியின் பிரியம் பேதமற்றது, இங்கே அவனே பிரியமாக இருக்கிறான் எனவே பிரியம் நிரந்தரமானது.

கேள்வி-2

ஆத்மாவை அறிந்தால், எல்லா உலகங்களையும் அடையலாம். எல்லா ஆசைகளும் நிறைவேறும் என்று பிரஜாபதி முதலில் கூறினார், ஆனால் எல்லா ஸ்தூல வஸ்துவையும் விட்டுவிட வேண்டும் என்பது இந்திரனை ஏமாற்றுவது போல இருக்கிறதே?

குருவானவர் இந்திரனின் சித்தஸுத்தியைப் பார்த்துவிட்டு அவனுக்கு மோட்சத்தை அடைய உதவி செய்வதின்மூலம் அவனுக்கு மிகப்பெரிய நன்மையை செய்ய நினைத்தார். எனவே அவன் எதிர்பார்த்த ஆசையை நிறைவேற்றவில்லை. சரீரத்தில் அபிமானம் இல்லாமல் இருந்து கொண்டேயிருப்பவன் இந்த விருப்பும் வெறுப்பும் அவனை தொடுவதில்லை, பாதிக்காது.

வேண்டும், வேண்டாமை இரண்டுமே ஆசையை குறிக்கும். எந்த ஆசையானது பூர்த்தியாக வேண்டும் என்று நிபந்தனையுள்ளதாக இருக்கிறதோ அதற்கு பந்த ஆசை என்று பெயர். மற்றொன்று நிபந்தனையற்ற ஆசை, பந்தமற்ற ஆசை அதுதான் ஞானியின் ஆசை.

அறிவினால் மட்டுமே சரீரத்தின் மீதுள்ள அபிமானத்தை விடமுடியும். இந்த நிலையில் நம்மை விருப்பு வெறுப்பு தாக்காது. ஏனென்றால் அது நிபந்தனைக்குட்பட்டதாக இல்லை.

ஆத்மா சரீரத்துடன் சேர்ந்து உருவமற்று இருக்கிறது. பின்பு சரீரத்தை விட்டு பிரிந்தவுடன் தன் சொந்த ஸ்வரூபத்துடன் ஆகாசத்தில் கலந்து விடுகிறது. சரீரமற்ற வாயு, ஆகாசம், இடி மின்னல் யாவும் சூரியனின் சக்தியால் தன் சுய ரூபத்துடன் வெளிப்படுகிறது.

விஸ்வன் – வியாக்ருத புருஷ – வெளிதோற்றத்துக்கு வந்து விவகாரத்தில் இருப்பவன்

ப்ராக்ஞன் – அவ்யாக்ருத புருஷ- வெளிதோற்றத்துக்கு வராமல் விவகாரம் இல்லாது இருப்பான். இந்த இரண்டு விதமான புருஷர்களை தவிர்த்து, உத்தம புருஷனான சம்சாரமற்றவன் ஞானி என்று அழைக்கப்படுவான். இந்த உத்தம புருஷன் உடலில் மீது உள்ள அபிமானத்தை விட்டுவிட்டு பரஞ்சோதியில் கலந்து,தன் சொந்த ஸ்வரூபமாகத் தோன்றுகிறான். அவன் மரணமடைவதில்லை, பிராரப்த கர்ம்ம் இருக்கும்வரை இந்த உடலில் இருந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறான்.

அக்ஞானி சரீரத்துடன் எல்லாவற்றையும் அனுபவிக்கின்றவனாக இருக்கிறான். ஞானியானவன் சரீர அபிமானமேயில்லாமல் அனுபவிப்பான். ஞானி எல்லோரையும் போல விளையாடுவான், மகிழ்ச்சியோடு இருப்பான், பெண்கள், குழந்தைகள், வாகனங்கள், உறவினர்கள் இவர்களோடும் விளையாடுவான் ஆனால் உடல் மீதுள்ள அபிமானம் முழுவதுமாக விட்டுவிட்ட நிலையில் இருப்பான். எந்தப்பொருட்களெல்லாம் நமக்கு போகப் பொருட்களாக இருந்ததோ அவைகளெல்லாம் ஞானமடைந்தவுடன் அப்படியிருக்காது. எப்படி குதிரையானது வண்டியோடு இணைக்கப்பட்டிருக்கிறதோ அதுபோல இந்த ஆத்மா சரீரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஞானியானவன் தன்னுடல் என்ற அபிமானம் இல்லாமல் உலக விவகாரங்களில் ஈடுபடுகிறான் ஆனால் பந்தப்படுவதில்லை. இது ஜீவன் முக்தன் நிலையென்று விளக்கியிருக்கிறது உபநிஷத்.

ஆத்மா உடல், உடலிலுள்ள இந்திரியங்களிலிருந்து வேறுபட்டது, அறிபவனை அறிவது, எது இந்த உலகத்தை அறிந்து கொண்டிருக்கிறதோ அதை அறிவது, இங்கு ஒரு நியதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல சிறிய விதவிதமான பொருட்களை கொண்டு ஒரு பொருள் உருவாகிறது, இதற்கு சம்ஹதம் என்று பெயர் அதாவது பல உறுப்புக்களின் சேர்க்கையாலான ஒரு பொருள். இந்த முழுப்பொருள் (Finished Product) பயன்பாடு அதனை உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அதுபோல உடல் பல அங்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இவைகள் இதற்கு வேறான ஆத்மாவுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.

[ஸ்வ-விலக்ஷணம் – தனக்கு வேறான உள்ள ஒன்றுக்காக உருவாக்குவது ]

இந்திரியங்கள் அறிவுடையதாக இருந்தாலும், இந்த இந்திரியங்களை அறிபவன் நான்-ஆத்மா. இந்திரியங்கள் உலக விஷயங்களை அனுபவிக்கத்தான் படைக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளை அறிய மனம் இந்திரியங்கள் வழியாக அந்த பொருளை முழுவதுமாக வியாபித்து மாறுதலடைந்து அறிவைக்கொடுக்கின்றது. ஆனால், ஆத்மா எந்தவித மாறுதலடையாமல் மனதை அறிகிறது.

கண்கள் என்ற ஆகாசம் வழியாக பார்க்கும் சக்தி, வெளி விஷயங்களை பார்ப்பதறகாக படைக்கப்பட்டிருக்கிறது. அந்த கண்களை யார் அறிகிறாரோ அதுதான் ஆத்மா என்று கூறப்படுகிறது. எந்த ஆத்மா சாட்சியாக நின்று நான் வாசனையை நுகர்கிறேன் என்று அறிபவனை அறிகிறது. இதேப்போன்று இதை நான் உச்சரிக்கிறேன் என்று யார் நினைக்கிறாரோ அவரை அறிவது ஆத்மா நான் கேட்கிறேன் என்று சொல்லாமல் அறிபவனை அறிபவன் ஆத்மா…

ஆத்மா – நிர்விகாரவேதா – மாற்றமடையாமல் அறிபவன்

மனது – சவிகாரவேதா – மாற்றமடைந்து அறிபவன்.

யார் நான் இதை நினைக்கிறேன் என்று அறிகிறானோ அவனை அறிபவன் ஆத்மா. மனமானது தெய்வீக கண் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்திரியங்கள் இப்பொழுது இருக்கும் பொருளை மட்டும் காட்டும். மனமானது மூன்று கால விஷயங்களை மனக்கண் மூலமாக பார்ப்பது இயல்பு. இந்த மனதையும் அறிபவன் ஆத்மா. இந்த தெய்வீக கண்ணாக விளங்குகின்ற மனதாலே இங்கே இருக்கின்ற பொருட்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டே அனுபவிக்கிறான், மகிழ்ச்சியுடன் இருக்கின்றான்.

பிரஜாபதியின் உபதேசத்தை நன்கு புரிந்து கொண்ட தேவேந்திரன் அந்த ஆத்ம தத்துவத்தை தேவலோகத்திலுள்ள எல்லா தேவர்களுக்கும் உபதேசித்தான். அனைவரும் ஆத்மாவை தியானித்து உணர்ந்து கொண்டார்கள். அதனால் எல்லா உலகத்தையும் அடைந்தாற் போன்றும், எல்லா ஆசைகளையும் அடைந்தாற் போலவும் உணர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். நானே எல்லாமுமாக இருக்கிறேன் என்ற உணர்வானது எல்லாவற்றையும் அடைந்ததற்கு ஈடாக கூறப்படுகிறது. இப்படி யாரொருவர் ஆத்மாவை அறிந்து உணர்கிறார்களோ அவர்களும் இந்திரனைப்போன்று எல்லா உலகத்தையும் அடைந்தது போலவும் மனதிருப்தியுடன் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். பொதுவாக இது மனிதர்களாகிய நமக்கும் பொருந்தும் என்று பிரஜாபதி முடிக்கிறார்.

ஶ்யாமாச்ச²ப³லம் ப்ரபத்³யே ஶப³லாச்ச்²யாமம் ப்ரபத்³யேঽஶ்வ
இவ ரோமாணி விதூ⁴ய பாபம் சந்த்³ர இவ ராஹோர்முகா²த்ப்ரமுச்ய
தூ⁴த்வா ஶரீரமக்ருʼதம் க்ருʼதாத்மா
ப்³ரஹ்மலோகமபி⁴ஸம்ப⁴வாமீத்யபி⁴ஸம்ப⁴வாமீதி ॥ 8.13.1॥

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥
ஆகாஶோ வை நாம நாமரூபயோர்நிர்வஹிதா தே யத³ந்தரா
தத்³ப்³ரஹ்ம தத³ம்ருʼதꣳ ஸ ஆத்மா ப்ரஜாபதே: ஸபா⁴ம் வேஶ்ம ப்ரபத்³யே
யஶோঽஹம் ப⁴வாமி ப்³ராஹ்மணாநாம் யஶோ ராஜ்ஞாம் யஶோவிஶாம்
யஶோঽஹமநுப்ராபத்ஸி ஸ ஹாஹம் யஶஸாம் யஶ:
ஶ்யேதமத³த்கமத³த்கꣳ ஶ்யேதம் லிந்து³ மாபி⁴கா³ம் லிந்து³
மாபி⁴கா³ம் ॥ 8.14.1॥

கர்மங்களை போக்கி -ஸ்ரீ வைகுண்டம் புகுந்து -யசஸ்வியாக சாம்யா பத்தி -உணர்ந்தவன் பிறப்பது இல்லை

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

———————

காண்டம்-‍13 (பிரார்த்தனை)

ஒளிப்பொருந்திய பிரம்மலோகத்திலிருந்து இருளாக உள்ள இதயம் என்கிற பிரம்மலோகத்தை வந்தடைந்து விட்டேன். இப்பொழுது நான் இருக்கும் இருள் பொருந்திய இருதய ஆகாசமான பிரம்மலோகத்திலிருந்து மீண்டும் ஒளிபொருந்திய பிரம்மலோகத்திற்கு செல்ல விரும்புகிறேன். என்னிடத்திலிருக்கிற எல்லா பாவங்களும் நீங்கிவிட வேண்டும், களைப்படைந்த குதிரை உடலை குலுக்கும்போது சில ரோமங்கள் உதிர்வதை போல என் பாவங்களும் நீங்கி விட வேண்டும். ராகு என்ற பாம்பின் வாயிலிருந்து சந்திரன் விடுதலையடைந்ததை போன்று என் பாவங்களும் நீங்கி விட வேண்டும். பிறகு நான் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் செய்து முடித்து விட்டு சரீரத்தை துறந்து பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தி அடைய வேண்டும்.

காண்டம்-‍14

ஆகாஶோ வை நாம நாமரூபயோர்நிர்வஹிதா தே யத³ந்தரா
தத்³ப்³ரஹ்ம தத³ம்ருʼதꣳ ஸ ஆத்மா ப்ரஜாபதே: ஸபா⁴ம் வேஶ்ம ப்ரபத்³யே
யஶோঽஹம் ப⁴வாமி ப்³ராஹ்மணாநாம் யஶோ ராஜ்ஞாம் யஶோவிஶாம்
யஶோঽஹமநுப்ராபத்ஸி ஸ ஹாஹம் யஶஸாம் யஶ:
ஶ்யேதமத³த்கமத³த்கꣳ ஶ்யேதம் லிந்து³ மாபி⁴கா³ம் லிந்து³
மாபி⁴கா³ம் ॥ 8.14.1॥

கர்மங்களை போக்கி -ஸ்ரீ வைகுண்டம் புகுந்து -யசஸ்வியாக சாம்யா பத்தி -உணர்ந்தவன் பிறப்பது இல்லை

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

————————

இந்த பகுதியில் மூன்று விஷயங்களான பிரம்ம லக்ஷணம், எல்லா பெருமைகளையும் அடைதல், மீண்டும் பிறவாமை பற்றி பேசப்படுகிறது.

ஆகாசம் என்று அழைக்கப்படுகின்ற பரபிரம்மம் நாம ரூபங்களை (சிருஷ்டியை) தோற்றுவிக்கிறது. இந்த நாம ரூபங்கள் எதில் இருக்கிறதோ அது பிரம்மம். இது சத்ய ஸ்வரூபம், நித்தியமானது. இதுவே ஆத்மாவாக இருக்கிறது. பிரம்மன்-ஹிரன்யகர்ப்பன் பிரஜாபதியின் இருப்பிடத்தை அடைவேனாக. பிராமணர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். வைசியர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். எனக்கு மறுஜென்மம் வேண்டாம். நான் மீண்டும் பிறப்பை அடைய வேண்டாம்.

ததை⁴தத்³ப்³ரஹ்மா ப்ரஜாபதயை உவாச ப்ரஜாபதிர்மநவே மநு:
ப்ரஜாப்⁴ய: ஆசார்யகுலாத்³வேத³மதீ⁴த்ய யதா²விதா⁴நம் கு³ரோ:
கர்மாதிஶேஷேணாபி⁴ஸமாவ்ருʼத்ய குடும்பே³ ஶுசௌ தே³ஶே
ஸ்வாத்⁴யாயமதீ⁴யாநோ த⁴ர்மிகாந்வித³த⁴தா³த்மநி ஸர்வைந்த்³ரியாணி
ஸம்ப்ரதிஷ்டா²ப்யாஹிꣳஸந்ஸர்வ பூ⁴தாந்யந்யத்ர தீர்தே²ப்⁴ய:
ஸ க²ல்வேவம் வர்தயந்யாவதா³யுஷம் ப்³ரஹ்மலோகமபி⁴ஸம்பத்³யதே
ந ச புநராவர்ததே ந ச புநராவர்ததே ॥ 8.15.1॥

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥
॥ இதி அஷ்டமோঽத்⁴யாய: ॥

——————————————-

காண்டம்-‍15

பிரம்மாவானவர் ஆத்ம வித்யாவையும், அதனை அடையும் சாதனத்தையும் பிரஜாபதிக்கும் கற்றுக் கொடுத்தார். விசார ஞானம், எந்த மனதினால் இந்த விசாரத்தை செய்ய முடியும் என்ற அறிவையும் கொடுத்தார். பிரஜாபதி – விராட் தத்துவத்தை குறிக்கிறது. பிரஜாபதி மனுவுக்கு உபதேசித்தார், மனு மற்றவர்களுக்கு உபதேசித்தார். இவ்விதம் இந்த உபதேசம் பரம்பரையாக வந்துள்ளது.

1. ஆசிரியரிடமிருந்து வேதத்தை படித்தல்

2. முறைப்படி ஆசிரியருக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்துக் கொண்டே படிக்க வேண்டும்

3. சேவை செய்து விட்டு மீதி இருக்கும் நேரத்தில் வேதத்தை படிக்க வேண்டும்.

4. இல்லறத்திற்கு சென்று படித்தறிந்த தர்ம சாஸ்திரப்படி வாழ்க்கையை நடத்த வேண்டும். தூய்மையானதாக வீட்டை வைத்திருக்க வேண்டும். மேலும் சாஸ்திர படிப்பை தொடர வேண்டும். தர்மப்படி வாழ்கின்ற குழந்தைகளையும், சிஷ்யர்களையும் உருவாக்க வேண்டும்.

5. அனைத்து இந்திரியங்களை விஷயங்களிலிருந்து விலக்கி (சம, தம போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்) மனக்கட்டுப்பாடு, புலன்களில் கட்டுப்டுத்தி வாழ வேண்டும். பிறகு மன அமைதிக்கான தியானம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

6. எந்த ஜீவராசிகளையும் ஹிம்சை செய்யாமல் இருக்க வேண்டும். சாஸ்திரம் அனுமதித்த ஹிம்சையை தவிர வேறெதுக்காகவும் மற்ற உயிர்களை கஷ்டபடுத்தக் கூடாது.

ஒருவன் இவ்விதம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அவன் இறந்த பின் பிரம்மலோகத்திற்கு சென்ற பின் அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.

ௐ ஆப்யாயந்து மமாங்கா³நி வாக்ப்ராணஶ்ச்க்ஷு:
ஶ்ரோத்ரமதோ² ப³லமிந்த்³ரியாணி ச ஸர்வாணி ।
ஸர்வம் ப்³ரஹ்மௌபநிஷத³ம் மாஹம் ப்³ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்³ரஹ்ம
நிராகரோத³நிகாரணமஸ்த்வநிகாரணம் மேঽஸ்து ।
ததா³த்மநி நிரதே ய உபநிஷத்ஸு த⁴ர்மாஸ்தே
மயி ஸந்து தே மயி ஸந்து ॥

॥ ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥

॥ இதி சா²ந்தோ³க்³யோঽபநிஷத்³ ॥

ஓம் தத் ஸத்

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம் —ஸமுதாயா அதிகரணம் (2-2-3)-ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

March 9, 2025

சூத். 2-2-17 :: ஸமுதாய உபய ஹேதுகே அபி ததப்ராப்தி ::

புத்தாவதாராம் பகவதவதாரம் ஆன்படியாலே அவனும் ஸர்வஜ்ஞன்தான். அவனுக்கு கிஞ்சித்தும் மோகம் கிடையாது.
இல்லை மற்றவர்களை மோகிப்பனோ என்னில் அவனும் தான் ஸர்வலோக ஸுக்ருது, தயாவான் ஆனபடியாலே
விப்ரலிப்சை கிஞ்சித்தும் கிடையாதே. ஆகையாலே பாஞ்சராத்ர சாஸ்த்திரத்தைப் போலே புத்தாகமத்தையும்
பிரமாணமாக கொள்ளவேண்டும் என்று பூர்வ பக்ஷம் வருமேல் , அப்படி அன்று. புத்தாகமாம் நமக்கு பிரமாணம் ஆகாது.

வேதாபஹாரிணம் தைத்யம் மீன ரூபே நிராகரோது
ததர்த்தாபகாரோ தைத்யாம் வியாஸ ரூபி நிராகரோது

என்று புத்தாவதாரம் எடுத்து பிரவர்த்தனம் பண்ணின பிரக்ரியைகளை எல்லாம் வியாஸாவதாரம் எடுத்து நிராகரித்தார் என்பது பார்க்கத்தக்கது.
பகவானே சொன்னானாகிலும், வேத விரோதமானால் அதை நிரசிக்க வேண்டியது தான். பௌத்தர்களுடைய ஆசார பிரக்ரியைகளை
ஜைமினி பூர்வ காண்டத்தைக் கொண்டு நிரசிக்க, அவருடைய ஆசாரியரான வியாசர் அவர்களுடய தத்வங்களை நிராசனம் பண்ணுகிறார் இங்கு.

பகவான் தான் இட்ட கட்டளைகளை யார் பாலனம் பண்ணுகிறார்களோ அவர்களுக்கு எதிரானவர்களை
தண்கடல் வட்டத் துள்ளே திண்கழல் அசுரர்களை தடிந்துண்ணும் –என்றபடி அவர்களுடைய மோகன சாஸ்த்திர
நிரசனம் பண்ண பகவான் எடுத்த ஆவேசாவதாரம்தான் வியாஸாவதாரம்.

இப்படிப் பட்டதான புத்தாவதாரத்தில் என்னவெல்லாம் சொன்னாரோ, அதை பின்பற்றி இந்த கலியுகத்தில்
மாத்யமிகன்
வைபாஷிகன்
சௌத்ராந்த்ரன்
யோகோசாரன்
என்று நால்வகை பௌத்த சாகைகள் ஏற்பட அவர்களில் , முதல் முன்னம்
யோகாசாரனும், சௌத்திராந்திகனும் நிராசனம் பணப் படுகிறார்கள் இந்த அதிகரணத்தில்.

இவர்கள் நால்வருமே க்ஷணிக வாதிகள். இவர்கள் சித்தாந்தத்தில் காலம், ஆகாசம், திக்கு, விதிக்கு எதுவும் கிடையாது.
இவர்கள் மதத்தில் ஜ்ஞானம் ஒன்றுதான் ஒப்புக்கொள்ளப் படுகிறது. ஜ்ஞாத்ரு ஞேயங்கள் ஒப்புக்கொள்ளப் படவில்லை.
அந்த ஜ்ஞானமும் எப்படி இருக்கிறது என்றால் அது க்ஷணிகம் என்கிறான்.
அவ்வோ க்ஷணம் என்பதும் தோன்றும் போதே மறைவது. க்ஷணிக கடபடாதிகள் இருப்பால், க்ஷணம் என்கிற காலம்
ஆனுமானித்து அறியலாவது. அதை கடக்ஷண : என்கிறார்கள்.
இமை கொட்டும்போது, இமையோடு இமை சேரும் கால பரிமாண அளவே ஆகும் அது.
வைசேஷிகனோ ஒரு பொருள் உண்டாகும்போது உற்பத்தி, ஸ்திதி, விநாசம் என்று 3 கால அளவைகளையாவது ஒத்துக் கொள்கிறான்,
ஆனால் பௌத்தன் உற்பத்தி ஸ்திதியிலேயே விநாசம் என்பததாக அத்யந்த அல்பமாக அதை கணக்கிட்டு,
இல்லாமைக்கு ஈடாக சொல்லிவிடுகிறான்.

வைசேஷிகன் என்ன சொன்னான்? பாஷாணம்போல இருக்கிற பிரக்ருதி மேலே தர்மபூத ஜ்ஞானம் வந்தேறி என்கிறான்.
அத்வைதி ஸ்வரூபத்தில் தான் ஜ்ஞானம் உண்டு. அதற்கு சுடர், பிரகாசம், தர்மபூத ஜ்ஞானம் இவை எதுவும் கிடையாது என்றான்.
நம்முடைய சித்தாந்தத்தில் தீபம் போல ஸ்வரூப கத ஜ்ஞானம் உண்டு. தீப பிரபை போலே அத்தல் பரம்பி வருகிற
தர்ம பூத ஜ்ஞானம் என்ற இரண்டும் ஆத்மாவுக்கு உண்டு என்பதாகும்.

பௌத்தர்களின் மாதயமிகன் ஆத்மா சூன்யம் என்றான். மற்ற மூன்று பேரும் க்ஷணிக விஜ்ஞானம் ஆத்மா என்றனர்.
அதனுடைய உற்பத்தி விநாசம் எத்தனை வேகம் என்றால், அது நம்முடைய இந்த்ரியங்களால் கிரகிக்க முடியாத அளவுக்கு
க்ஷணிக பிரவிருத்தி என்றனர். அது உள்ளே இருந்தால் ஆலய விஜ்ஞானம். வெளியே வந்தது என்றால் பிரவிருத்தி விஜ்ஞானம் என்றனர்.
ஜ்ஞாத்ரு ஞேயங்கள் எல்லாம் பிரமம் என்றும் சொல்லி வைத்தார்கள்.

ஜகத் அபல பதி என்று முதல் முதலில் அத்வைத மதத்தைச் சொன்னவன் யோகாசாரன்.
இத்தால் அவர்களுக்கு அத்வைத விநாயகன் என்ற பெயரும் உண்டு. சங்கரருடைய ஆசாரியரான கௌடபாதர் அதை வாங்கி,
வைதிக மதத்தோடு பொருத்தி பிரஹ்ம ஏக வாதத்தை பிரவர்த்திப்பித்தார். இத்தால் இவர்களை ,
இந்த ஏக பிரஹ்ம காரண வாந்தியை பிரச்சன்ன பௌத்தன் என்று சொல்வதும் உண்டு.

சத்ருக்களை ஜெயிக்க அபிசார மார்க்கத்தை வேதமே சொல்வது போல, இந்த பௌத்தர்களை ஜெயிக்க அவர்களுடைய
ஏக விஜ்ஞான வாதத்தைக் கொண்டே பிரஹ்ம சத்ய வாதத்தை சித்திக்க வேண்டி வந்தது.
எப்படி கர்ம காண்டத்தை ஜைமினி பண்ணி ஜ்ஞான காண்டத்தை வியாஸர் பண்ணும்படி விட்டாரோ ,
அதே போல பௌத்தர்களுடைய ஜகன் மித்யா வாதத்தை ஒப்புக்கொண்டு சங்கரர் நிர்விசேஷ பிரஹ்ம ஸத்ய வாதத்தை செய்து போகவே ,
பகவத் ராமானுஜர் கிஞ்சித்து அதை திருத்தி, ஸவிசேஷ பிரஹ்மாத்வைதத்தை நிலை நாட்டலாயிற்று.
இல்லையாகில், பிரஹ்ம சத்யம் என்பதிலிருந்தே தொடங்க வேண்டி வந்திருக்கும் அல்லவா?

ஜகன் மித்யாவாதிகளான அத்வைதிகள் , போக்தா, போக்கியம், பிரேரிதா என்கிற த்ரிபுடியில்
போக்தா போக்கியம் இரண்டும் பிரகிருதி தர்மமாகையாலே அவை வியாவஹாரிகா சத்யம் என்று தள்ளி விட்டு,
பிரேரித்தாவாகிற பிரஹ்மம் ஒன்றே பாரமார்த்திகம் என்றனர். ,

வைபாஷிகனும், சௌத்திராந்தனும் ஞேயமான ஜகத்தை க்ஷணிகம் என்றாலும் அதை ஒத்துக் கொண்டவர்கள்.
அதிலும் வைபாஷிகன் அவை பிரத்யக்ஷ சித்தம் என்றான். சௌத்திராந்திகன் அனுமான சித்தம் என்றான்.
இது தான் இருவருக்குமான வித்யாசம். ஒப்புமை மூவருமே க்ஷணிக வாதிகள்.

ஜகத் காரண- காரிய வாதத்தில்
தார்கிகனுடையது — ஆரம்ப வாதம்.
வைபாஷிக, சௌத்திராந்திகன் – – ஸங்காத வாதம்
சாங்கியன் , விசிஷ்டாத்வைதி — பரிணாம வாதம்.
மாத்தியமிக்கான் — சூன்ய விவர்த்த வாதம்
(முத்துச் சிப்பியைப் பார்த்து வெள்ளி என்று பிரமித்து போல சூன்யத்தைப் பார்த்து இந்த அஹம் என்பதும்,
ஜகத்தும் வருகின்றன என்ற வாதம். )
யோகாசாரன் – விஜ்ஞான விவர்த்த வாதம்.
சங்கரர் — நிர்விசேஷ பிரஹ்ம விவர்த்த வாதம்
பர்த்ருஹரி – ஸப்த விவர்த்த வாதம் (ஸப்த விஸ்போட – Big Bang Theory)

ஸங்காத வாதிகளான வைபாஷிக, சௌதிராந்திகன் சொல்வது
நிலம், நீர், தீஎரி , கால் என்கிற நான்கும் கந்தம், ரஸம், ரூபம், ஸ்பர்சம் என்கிற தன்மைகளை அடைவே
நிலம் 4ம் , நீர் கந்தம் தவிர்ந்த 3ம், எரிதீ கடை 2ம், கால் ஸ்பர்ச தன்மை மட்டும் உடைய பரமாணுக்களின் சங்காதம் ஆகும்.
பல பூமி பரமாணுக்கள் சேர்ந்து பூமியும், பல ஜல பரமாணுக்கள் சேர்ந்து ஜலமும், பல தேஜஸ் பரமாணுக்கள் சேர்ந்து தேஜஸும்,
அவ்விதமே பல வாயு பரமாணுக்கள் சேர்ந்து வாயுவும் உண்டாக, இந்த 4பூதங்களும் சேர்ந்து
தேஹம், இந்த்ரியங்களாகிற பௌதிக பொருள்கள் உண்டாகின்றன.
இந்த 4 தத்துவங்களின் அபாவமே ஆகாசம் என்றும் சொல்கிறான்.

அதில் அஹம் என்கிற ஆத்ம விஷயம்,
தேஹத்தின் உள்ளிருக்கிற பொருள்களின் ஜ்ஞானத்தின் ஸந்தானமே/சமூகமே ஆகும் .
இதை அனுமானத்தால் அறியலாம் என்கின்றனர்.
ஸௌத்ராந்திகன் பாஹ்ய பதார்த்தங்களான ஞேயங்களும் அனுமானிகமே என்கிறான் அவன்.
யோகாசாரன் பாஹ்ய பதார்த்தங்களை சொப்ன துல்யம் என்று சொல்லி மித்யா என்கிறான்.

உபயஹேதுகே ஸமுதாயே அபி — ஸ்பர்ச,ரூப, ரஸ, கந்த தன்மாத்திரங்களின் சமுதாயமான
காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய 4 பூதங்களும், அவைகளை காரணமாகக் கொண்ட தேக, இந்திரிய சமுதாயத்திலும்
ததப்ராபதி – ஸங்காதமாகும் தன்மை ஒவ்வாது, ஸர்வ க்ஷணிக வாதத்தாலே..

———–

சூத். 2-2-18 :: இதரேதர பிரத்யயத்வாத் உபபந்நம் இதி சேத் ந, ஸங்காதபாவா நிமித்ததவாத் ::

இதரேதர பிரத்யயத்வாத் -இந்த சுழச்சியில் ஒன்றுக்கொன்று காரணமாக இருப்பதால்
உபபந்நம் – சமுதாயமாகும் தன்மை பொருத்தும்.
இதிசேத் ந – என்று இப்படி சொல்வது பொருந்தாது
ஸங்காத அபாவா நிமித்வத்வாத் – அவித்யை முதலானவை பூத சமுதாயத்துக்கு காரணம் ஆகமாட்டாது –

பாஹ்யார்த்த அஸ்தித்வ வாதிகளான வைபாஷிக, ஸௌத்ராந்திகன் இருவரில் ஒருத்தன் ஜகத்து பிரத்யக்ஷ பரம் என்றான்.
மற்றோருத்தன் அனுமானிக பரம் என்றான். ஸ்பர்ச, ரஸ ரூப கந்தம் இவைகளின் பரமாணுக்களின் ஸங்காதம் 4 பூதங்களாய்,
அப்படியே இந்த 4 பூதங்களின் ஸங்காத்தம் பௌதிகமான தேஹேந்திரிய மாகும் என்றும்,
இந்த ஸங்காத்தமும் க்ஷணிகம் ஆனபடியால், இவைகளின் தோற்றம் மித்யையாய் ஸத்யமன்று.
அண்டத்தில் உள்ளபடியே பிண்டத்தில் என்ற வகையில், தேகத்தின் உள்ள பொருள்களின் ஜ்ஞான ஸந்தான பரம்பரையே ஆத்மா
ஆன படியாலே கார்யா காரணம் அனைத்தும் க்ஷணிகம் என்கிறான்.

நாம் சொல்லுகிற அவித்யா, கர்ம, வாசனா, ருசி , பிரகிருதி ஸம்பந்தமாகிற 5 – பஞ்ச ஆராதி (spokes ) கர்ம பிரவாக
சக்கரத்தால் வந்த ஷாட்பாவ விகாரம் சுக துக்க ஹேது போல
இவர்களும் க்ஷணிக பொருள்களை ஸ்திரமானவைகளாக நினைப்பிடும் விபரீத ஜ்ஞானத்தால் பந்தமும்,
அதனால் ராக துவேஷமும் உண்டாகி ஜனனமரண சக்ரம் சுழல்கிறது என்கின்றனர்.

இதெல்லாம் நடக்க நாம் ஆத்மா என்பது ஸ்திரமாக உண்டு. புண்ய பாபங்கள் என்பன உண்டு.
பகவான் தான் இதை எல்லாம் நடத்துகிறான் என்று ஒத்துக் கொள்கிறோம்.
ஆனால் இவர்கள் இவை எதுவும் ஸ்திரம் என்பதை ஒத்துக்க கொள்ளாமல் அவித்யா-பிரகிருதி சம்பந்த சக்ரத்தைத் பற்றி விவரிக்கிறார்கள்.
அவர்கள் சொல்லுகிற அவித்யா என்பது
அவித்யா, விஜ்ஞானம் ஸம்ஸ்கார: நாமரூபம் ஷடாயதனம் ஸ்பர்ஸ: வேதநா திருஷ்ணா உபாதானம் பவா ஜாதி
ஜரா மரண சோக : பரிவேதனம் துக்கம் துர்மனஸ்தா என்கிற ஆரங்களைக் கொண்டதாய்
ஒன்றுக்கு கொன்று காரணமாக இருந்து லோக யாத்திரை நடக்கிறது என்கின்றனர்.
இதற்கு ஸுத்திகையில் ராஜத புத்தி பண்ணுகையாகிற அதஸ்மிந் தத் புத்தி – காரணமாகிறது என்கின்றனர்.
இவன் சொல்லுகிற ஆவித்யை பிரமத்துக்குக் காரணமாகலாம் ஒழிய, ஸங்காதத்துக்கு காரணமா முடியாது என்பது கேள்வி.

ஸர்வம் யதார்த்தம் பிரமா என்று அவன் சொல்லுகிறான்.
ஸர்வம் யதார்த்தம் ஜ்ஞானம் என்று நாம் சொல்லுகிறோம்.
சித்தம் என்பது க்ஷணிக விஜ்ஞான ஆத்மாவைக் குறிக்கும்.
சைத்யம் ஸ்ரத்தை வீர்யம் ஸ்ம்ருதி ப்ரீத்தி இத்தோடு பூத தாதுக்கள் சேர்வதால் தேஹேந்த்ரிய பிராணன் சம்பவிக்கின்றன என்கிறான்.

ஜ்ஞாநாதி -இச்சேதி- யததே-கரோதி- அநுபவதி- ஸுக்யதி என்று இவை அனைத்தும் எத்தனை சுருக்கமாக நடந்தாலும்
அவை நடப்பதற்கு அத்யல்ப காலமாவது வேண்டாவோ ?
அதற்குள்ளாகவே தோன்றும் பூத பௌதிகங்கள் நசிந்து விடுகின்றன என்கிற க்ஷணிக விஜ்ஞானத்தால்
சமுதாய உத்பன்னத்துக்கு அவகாசமே கிட்டாது என்பதால் இவர்கள் சொல்வது பொருந்தாது.

ஸ்திரத்தில் அஸ்திரத்தவ புத்தி பண்ணுகிற ஜீவன் அவனும் அஸ்திரம் என்றான போது,
அஸ்திரமான ஜ்ஞானத்தால், அஸ்திரமான ஜீவன் ஸ்திரத்தவ புத்தி பண்ணுகிறான் என்பது எங்கனம் பொருந்தும் ?
காரணமான அந்த பிரமாத்மக ஜீவனும் அஸ்திரமேயாய் ஸங்காதம் யாரைக் கொண்டு உண்டாகும் ?
உத்தர க்ஷணம் உண்டாக்குவதற்கு முன்பாக, பூர்வ க்ஷணம் நஷ்டமானால், பதார்த்தங்களின் உற்பத்தி எப்படி சாத்தியம் ?
இங்கு க்ஷணம் என்பது பதார்த்தங்களைக் குறிக்குமல்லது காலத்தைக் குறிக்காது.
காரணம் பௌத்தன் காலம். ஆகாசம். திக்கு இவைகளை ஒத்துக் கொள்வதில்லை என்பதை முன்பே பார்த்தோம்.
ஸதி குட்யேது சித்ர கர்ம : ? சுவர் இருந்தால்தானே சித்திரம் எழுத?
கந்தர்வ லோக சலா – என்று கூடிக் கலைகிற மேகக் கூட்டம் – ஜலதர படலம் – போல உள்ள இவர்களுடைய
க்ஷணிக வாதத்தால் இதரேயிதர பிரத்யய உத்பந்நம் அஸம்பவம்.

————–

சூத். 2-2-19 :: உத்தரோத்பாதே ச பூர்வ நிரோதாத் ::

உத்ரோத்பாதே – பின் க்ஷணம் உண்டாகும் வேளையில்,
பூர்வநிரோதாத் ச — முன் க்ஷணம் அழிந்து விடுவதால் , இவர்கள் வாதம் பொருந்தாது.

உங்களைப் போல் ஸத் காரிய வாதம் என்றால் நீங்கள் சொல்வது ஏற்புடைத்து. ஆனால் அஸத்தே காரியமாகிறது
காரணம் அஸது என்பது எங்களுடைய வாதம்.
இல்லாததனின்றும் (5ஆம் வேற்றுமை உறுபு) இருப்பு உண்டாகி நசிகிறது என்பதாக சொன்னான்.
நையாயிகன் இல்லாததால் (6ஆம் வேற்றுமை) – காரியம் அஸதாகையால் – புதிதாக உண்டாகிறது என்பதாக அவர்கள் வாதம்.

இதற்கு மறுப்பு என்ன வென்றால் – இல்லாத தின்றும் பொருள்கள் உண்டாவதானால், எப்போதுமே சிருஷ்டி நடக்கலாமே ?
காரணம் என்ற நிமித்தம் இருக்க வேண்டாவே ? என்றால் அதற்கு அவர்கள் சமாதானம் இப்படி உள்ளது.
அதாவது ஒரு பொருள் உண்டாகி நசியும் போது அந்த பொருளின் அபாவம் ஏற்படுகிறதே,
அந்த அபாவத்தால் அப்பொருளின் உற்பத்தி அடுத்தடுத்து நடப்பதற்கு காரணமாகிறது என்கிறான்.

அபாவம் ஒன்று இருந்தால் பொருள் உண்டாகும் என்றால், கட அபாவத்தால் கடம் தான் ஏன் உண்டாக வேண்டும்?
கடம். படம். அஸ்வம். சிம்மம் இவை ஏன் உண்டாக்க கூடாது என்பதற்கு அவர்கள் சொல்வதாவது
கட அபாவத்தில் இருந்து கட ஜாதிதான் உண்டாகும் வேறு பொருள் உண்டாகாது என்கிறான்.
அதாவது காரண காரியத்துக்கு விசஜாதியத்தை ஒத்துக் கொள்வதில்லை. ஸஜாதீயத்தைத்தான் ஒத்துக் கொள்வதாகச் சொல்கிறான்.

ஆக, அதை வாதத்திற்காக ஏற்றாலும், , ஒருகடத்தினுடைய அபாவத்தால்
நானா வர்த்தித – வேறு வேறு இடத்தில், தேசத்தில் உள்ள கடங்களின் உத்பன்னம் – சாத்தியமோ என்ன? இல்லை
எந்த இடத்தில் எந்த கடத்தின் அபாவம் உண்டாச்சுதோ அந்த இடத்தில் அந்த கடஜாதி உத்பன்னமே சாத்தியம் என்றான்.
தேச காலங்களை இவர்கள் ஒத்துக் கொள்ளாததால் , கிரகிக்கிற ஆலய விஜ்ஞானமோ, பிரவர்த்தக விஜ்ஞானமோ
எதுவும் ஸ்த்ரமில்லாதபோது இவர்களுடைய இந்த வாதம் தள்ளத் தக்கது.

இவர்கள் சொல்லுகிற அவித்தையைக் காட்டிலும் நாம் சொல்லுகிற அவித்யை வேறுபட்டது.
அநஹத்தில் அஹம் புத்தி பண்ணுகை அஹங்காரம்– சரீரமே ஆத்மா என்று நினைக்கை அஹங்காரம்.
இந்த பாவ பந்தம் பாரமார்த்திகம் . அத்வைதிகள் சொல்வது போல் அபாரமார்த்திகம் – ஸ்வப்ன துல்யம்.
வாக்யார்த்த ஜ்ஞானத்தால் போக்க வல்லது என்பது அல்ல. அது பகவத் கேவல கிருபையால் மட்டும் போக்க வல்லது.
பகவத் கிருபா பிரசாத லப்த ஜ்ஞாநாந் மோக்ஷ : என்பது நம்முடைய சம்பிரதாயம்.

தர்மி கல்பனார்த்தோ வரம் தர்ம கல்பனா – தர்மி ஸப்த வாச்சயமான ஆத்மா என்பது க்ஷிணிகம் தான்.
அது க்ஷணிக விஜ்ஞான சந்தானமே. அதுவே சரீரகதமாக இருக்கும் போது ஆலய விஜ்ஞானம் என்றும்,
அந்த ஆலய விஜ்ஞானம் பாஹ்ய பதார்த்தங்களோடு சையோகம் கொண்டு பாஹ்ய பதார்த்தங்களை விநிவேசனம் பண்ணிக் கொண்டால்
அதுதான் பிரவிருத்தி விஜ்ஞானம் (அ ) சித்த விஜ்ஞானம் – என்கின்றனர்.
இத்தாலே தர்மத்தையே (ஆலய விஜ்ஞானத்தையே), தர்மியாக அதாவது புத்தியையே ஆத்மா என்று சொல்வது தவறு ,
யஸ்யாநுபவ தஸ்யேவ ஸ்மிருதி : என்று ஸ்ம்ருதி, பிரத்யபிக்ஞா வியவகாரங்கள் உண்டாக.
ஸ்திரமான ஆத்மா (அ ) தர்மி இருந்தால் அல்லது மறுபடி நினைத்துப் பார்க்கை, நினைவு இவை எல்லாம் ஏற்படவழி இல்லை.

கடக்ஷணிக வாதத்தில் பலாபலன்கள் மாறிப்போவது குற்றம் என்று நாம் சொல்ல,
குற்றமாகாது என்பதற்கு அந்யதீய பாலார்த்தஸ்ய அந்யஸ்ய பிரவிருத்தி : குழந்தை பிறந்த போது தகப்பனார் செய்கிற ஜாத கர்ம,
நாம கரண ஹோமத்தில் பலன் செய்கிறவனுக்கன்றி, அவன் குழந்தைக்கு என்று வேத கர்ம காண்டத்தில் நீங்களும்
ஒத்துக் கொண்டிருக்கிற போது, எங்களுடைய வாதம் குற்றமாகாது. எங்கள் க்ஷணிக வாதத்தாலே
உற்பத்தி விரோதங்கள் உண்டாகாது என்று மறுதலிக்க;

இதற்கு உத்தரமாக, விசேஷ சாஸ்திரத்தில் சொல்லப் பட்ட ஒன்றை சாமான்ய சாஸ்திரத்துக்கு பயன் படுத்தக் கூடாது.
அர்த்தார்த்தி ராஜகுலம் கச்சேத் . போஜனார்த்தி போஜனசாலா கச்சேத் – என்பதாக சாமான்ய சாஸ்திரத்துக்கு
சாமான்ய சாஸ்திரத்தில் இருந்தே உதாகரிக்க வேண்டும் என்று அவன் வாதத்தை தள்ளிப் போட்டனர்.

————

சூத். 2-2-20 :: அஸதி ப்ரதிஜ்ஞோபரோத : யௌகபத்யம் அந்யதா ::

உற்பத்தியும் அஸத்தாலே லீனமும் அசத்தாகவே என்கிற இவர்களுடைய ஸித்தாந்தம் அதார்மிகமானது.
ஜைனனும் நைராத்மா பாவத்தை ஆதரிப்பதில்லை.
குமாரில பட்டர்
அகளங்க தேவன்
சங்கரர்
ஞாயகுஸுமாஞ்சாலி உத்யநாச்சார் என்ன
இவர்கள் எல்லோரும் கூட பௌத்த சித்தாந்தத்தை கண்டனம் பண்ணுகின்றனர்.
ஆகவே தான் இவர்களுக்கு பின்பு வந்த எம்பெருமானாருக்கு ஜகத் ஸத்யத்தை நிலைநாட்டல் எளிதாயிற்று.

அஸதி – காரணம் நசிந்த உத்தர க்ஷணம் காரியம் உண்டாகிறது –
ஒரு உத்தர கடக்ஷணத்திற்கு ஒரு பூர்வ கடக்ஷணம் அபாவம் காரணம் என்றால்
ப்ரதிஜ்ஞோபரோத — அதிபதி (இந்திரியங்கள்) ஸஹகாரி (தீபம்) ஆலம்பந (பாஹ்ய பதார்த்தங்கள்)
ஸமநந்தர ப்ரத்யயா: ( முன் க்ஷணத்தில் ஏற்பட்ட ஜ்ஞானம்) சத்வாரா விஜ்ஞாந :
உத்பத்தௌ ஹேதவ : என்கிற ஜ்ஞானம் உண்டாக காரணமாக இருக்கின்ற பௌத்த மத பிரதிஞையை அதுக்கு விரோதம்.வரும்.
அந்யதா – இந்த அவர்களுடய கொள்கையை விரோதிக்காமல் இருக்கவே காரணம் இருக்கும் போதே காரியம் உண்டாகிறது என்றால்
யௌகபத்யம் -இருந்தது (காரணம்) அழியும் முன்பே காரியம் உத்பன்னமாகிறது –
த்வி சந்திர ஜ்ஞானம் போலே காரியம் காரணம் இரண்டும் தோற்றமளிப்பதான –
காரண கடம், காரிய கடம் இரண்டும் ஒரே சமயத்தில் காணப்பட வேண்டும்.
உண்மையில் அப்படிக் காண்பதில்லை யாகையால் பௌத்த மதம் பொருந்தாது.

ஜ்ஞானம் ஏற்படுவதும் , மனப் – பிராணன் – இந்திரியம் – பாஹ்ய வஸ்து பிரதர்சனமாகிற
சுவை, ஒளி, ஒலி, நாற்றம் இவை அதே பிரகாரம் உள்வாங்கப்பட்டு புத்திக்கு அறிவிக்கப்பட்டு,
பிறகு அது நினைவுப் படிவமாக மனதில் நிறுத்தப்பட, ஆத்மாவுக்கு அவை பிரதர்சனமாகிறன.
இத்தனைப் படிகளில் எத்தனை வேகமாக நடந்தாலும், அதற்கும் ஒரு கால இடைவெளி அவசியம்.
இதனை மறுக்கும் விதமாக செய்கிற க்ஷணிக வாதத்தால், இந்திரிங்களால் விஷயங்கள் அறியப் படுதலும்,
அதனை ஆத்மா உணர்வதான ஜ்ஞான உற்பத்தியும் ஒரே க்ஷணத்தில் நிகழ்வது போலாகிவிடும். இது உண்மைக்குப் புறம்பானது.

—————-

சூத். 2-2-21 :: ப்ரதி ஸங்கியா அப்ரதி ஸங்கியா விரோத அப்ராப்தி : அவிச்சேதாத் ::

கீழ் சூத்திரங்களால் உற்பத்தி க்ஷிணிகத்தல் உண்டாகிறது என்பது நிராகரிக்கப் பட்டன்.
இப்போது அவன் சொல்லுகிற விநாசம் (அ ) பிரளய பிரகாரமும் சரியில்லை என்பது பேசப்படுகிறது. .
நம்முடைய சித்தாந்தத்தில்
லீன் = ஸ்லேஷ்ணே என்று காரணத்தில் காரியம் போய் ஸூக்ஷ்மாவஸ்தையில் ஒட்டிக் கொள்வதையே லயம் என்கிறோம்.
திருமழிசை ஆழ்வாரும்
தன்னுளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந்து அடங்குகின்ற தன்மைபோல் (திருச்சந்த விருத்தம்-10) இதையே காட்டிக் கொடுக்கிறார்.
நச அதர்ஷணே என்பதாக அவன் சொல்லுகிறான்.

ப்ரதி ஸங்கியா அப்ரதி ஸங்கியா விரோத– பார்க்கப்படுகிற ஸ்தூல வஸ்த்துக்களின் விநாசமும்,
கண்ணுக்கு புலப்படாத சூக்ஷ்ம வஸ்து விநாசமும் ஜகத்துக்கு ஏற்படாது. காரணம்
அவிச்சேதாத் – உள்ள பொருள் அடியோடு அழியும் என்பது சேராதாகையாலே.

ருதிர் = ஆவரணே என்று பிரளயத்துக்குப் பெயர். இங்கு விநாசத்தைக் குறிக்கும்.
ஸாங்கிய = கியா = பிரகடனே பிரகடனே அனைய இதி = புத்தியில் இருப்பதையே சொல்லப் போகுமாகையால், இங்கு புத்தியைக் குறிக்கும்.
ஸங்கியாம் பிரதி விரோதம் = இந்திரியங்களுக்கு கோசாரமாகக் கூடிய விநாசம். பாஹ்யமான பதார்த்தங்களுக்கு ஏற்படுகிற ஸ்தூல விநாசம்
அப்பிரதி ஸங்கியா விரோதம் என்பது பௌத்தன் சொல்லுகிற புலன்களால் ஊகிக்க முடியாத கடக்ஷண விநாசம்.
பிரளயத்தில் வஸ்துக்கள் நாசமடைந்து கண்ணுக்குப் புலப்படாதபடி மாயமாகி விடுகின்றன.
க்ஷிணிகம் – தீப ஜ்வாலா பேத அநுமானம் = சுடர் ஒரு ஜுவாலைப் போல தோற்றினாலும், உண்மையில் அது பிரதிக்ஷணமும்,
அணு அணுவாக எண்ணை உறிஞ்சி திரி எரிவதன் தொடர்ச்சியாகும். அதுபோல
ஜோதி நிர்வாணம் = என்பது அணைந்த விளக்கின் ஜோதி மாயம் ஆவது போல என்கிறான். இதுவே நிரண்மய விநாசம் என்பது.
இப்படி அசத்தால் உண்டாவது அசத்தையே போய்ச் சேருகிறது என்று ஸ்ருஷ்டி பிரளயங்களைப் பற்றிச் சொல்கிறான்.
நாம் சொல்வது பிரஹ்மதிடத்தினின்று உண்டாகி, பிரம்ஹத்திடத்தில் போய்ச சேருகின்றது என்பதற்கு எதிர்மறையானது இவர்கள் வாதம்.
இதை வைதிகனும், ஸாங்க்யனும் கூட ஒத்துக் கொள்வதில்லை.
பௌத்தர்களும், அத்வைதிகளும் கூட பிரத்யக்ஷத்துக்கு விரோதமாக பேசுகிறார்கள் என்பதே உண்மை.

நிரந்வய விநாசம் என்பது கிடையாது. பொருள்கள் நாசமாகும்போது அவை அவஸ்தாந்திர பேதத்தை அடைகின்றனவே ஒழிய,
பதார்த்தம் இல்லாமலே போவதில்லை. பானை உடைந்தால் சில்லு. சில்லு மண்ணில் கரைந்தால் பாம்சு.
பாம்சு பிண்டமாகி மீண்டும் கடாவாஸ்தாயைப் பெறலாம்.
தார்கிகன் இப்படி மாறி உண்டாகிற திரவ்யமே வேறு என்றான்.
சாங்கியன் எள்ளுக்குள் எண்ணை இருப்பது போல் காரியம் காரணத்தில் இருக்கிறது என்றான்.
நாம் சொல்வது திரவியம் ஒன்றாய், காரண அவஸ்தையில் இருந்து காரிய அவஸ்தைக்கு மாறுகிறது என்பதாக.

திரவியம் என்றால் என்ன? எது உபாதான காரணமோ அதுதான் திரவியம்.
உபாதான காரணம் என்றால் என்ன? அவஸ்தாஸ்ரயமாக எது உள்ளதோ அதுதான் திரவியம்.
அவஸ்தா என்றால்? அபிரதக் ஸித்த ஸம்பந்தமாய், காகாசித்தமாய் இருப்பது. விட்டுப் பிரியாததாய்
பரிணமிக்கக் கூடியதாய் இருப்பது என்று பொருள்.

எரிகிற தீபம் அணைந்த பிறகு, தீபம் பிரகாசம் மாயமாவதுபோல் நிரந்வய விநாசத்தால் அஸத்தோடு சங்கமிக்கிறது என்றான்.
இதுவும் சரியில்லை. காரணம் கரி எரியும்போது ஜுவாலையோடு தூமம் வெளியேறுகிறது. அது சற்று கரிப்புகையாக இருக்கும்.
விறகு எரியும்போது புகை அம்சம் நலிந்து ஜுவாலை அதிகம் காணலாம்.
அதுபோல் தீபம் எரியும்போது தூமம் வெளுத்து கண்ணுக்குப் புலளப் படாமல் இருக்கலாம்.
விளக்கு அணையும் போது, அது புகையாக வாயு மண்டலத்தில், கலந்து அது மலினமாகி பரிணாமத்தை அடைவதே அவஸ்தா பேதம்.
எனவே நிரந்வய விநாசம் என்பது கிடையாது. எல்லாம் ஸாந்வய விநாசமாகத்தான் இருக்கிறது என்பது சித்தாந்தம்.

—————-

சூத். 2-2-22 :: உபயதா ச தோஷாத் ::

உபயதா – இல்லாத வஸ்துவிலிருந்து உள்ள பொருள் உண்டாதல், இருக்கிற பொருள் இல்லாது போவதும் ஆன இரண்டும்
தோஷாத் ச – தோஷம் உடைத்தால் , பௌத்த மதம் பொருத்தாது.

பதார்த்தங்கள் ஜாதி, ஆகாரம், வியக்தி மூன்றும் கூடிய வஸ்துவாகும்.
ஆகாரத்தையே குறிக்கும் ஜாதியானது திரவ்யத்தையே ஆஸ்ரயித்து இருப்பதாகும்.
கடத்தவம், படத்துவம், மனுஷ்யத்வம் இவை ஜாதி போல்
அஸ்வத்வம் என்பது 4 கால், குளம்பு, பிடரி மயிர், கற்றை வால் உடைய விலங்கின் ஆகாரத்துக்குள்ளே அடக்கம்.
தார்கிகன் சொல்வதுபோல் கடத்வ படத்வங்கள் அஸ்வத்தம் என்று பிரதக்காக தனித்த பதார்த்தம் இல்லை.
இன்னும் நீல கடம் என்றால், கருமை என்கிற குணம் குடத்தினுடைய அவினா பாகம்.
அதே போல அபாவம் என்பதும் அவஸ்தாந்தரமே ஒழிய தனித்து பதார்த்தம் இல்லை .

ஸது ஏவ சௌம்யா! இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
ஏகம் — துவைதிகள் சொல்லுகிற 5 விதமான பேதம் இங்கு சொல்லப்பட வில்லை.
பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறுபட்டதான ஸ்வகத குணம் கிடையாது. விகத ஜீவாத்மா கிடையாது. விஜாதீயமான அசித்து கிடையாது என்பதால்.
அநேந ஆத்மநா அநுபிரவிஸ்ய நாம ரூபே வியாகரவாணி – பஹுஸ்யாம் பிரஜாஏய – ஸதபோ தப்பியத – தப ஆலோசநே என்று சங்கல்ப மாத்ரேண
மயி ஸர்வ இதம் ப்ரோதம் சூத்ரே மணிகணா இவ -என்று பகவான் தானும் சொல்லி இருக்கிற படியே
இந்த ஜகத்து அவனால் படைக்கப்பட்டு, தரிக்கப்பட்டு, அந்தராத்மாவாய் ஸத பத்ர கோச ஸூஜி நியாயத்தாலே
அன்னமய கோசம்
பிராணமய கோசம்
மனோமய கோசம்
விஜ்ஞானமய கோசம்
ஆனந்தமய கோசம்
வரை அநுபிரவேசம் செய்து , நியமிப்பதை வைத்துப் பார்க்கும் போது இந்த அத்விதீய ஸப்தமெல்லாம்
சரீராத்மா பாவத்தை இட்டே சொல்லப் பட்டதாக பொருள்படும்..

அவனுக்கு ஒரு ஆத்மா உண்டோ? என்றால் இல்லை,
பதிம் விஸ்வ – விஸ்வபதியாய்
ஸ்வரகும் ஈஸ்வரம் – தனக்கொரு பதி இல்லையாய்
அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வியாப்ய ஸ்தித நாராயண : ஸதைக ரூப ரூபாய என்று அவனுடைய ஸ்வரூபத்தில் விகாரம் இல்லையாய்
விசேஷணாம்சமான அசித்தில் ஸ்வரூபதயா விகாரமும்; சித்தில் ஸ்வபாவதயா விகாரமும் ஏற்று
பரிணமிக்கையாகிற இது மாயையால் வந்ததோ – சங்கரர்
உபாதியால் வந்ததோ – பாஸ்கரர்
சக்தியால் வந்ததோ – யாதவபிரகாசர்
அல்லாமல் பகவத் சங்கல்பத்தால் வருவது என்கிற
திரவியா-அதிரவ்ய விபாகம் அனைத்தும் சத்யம் நித்யம் பகவத் ஆஸ்ரய ஆஸ்ரயணீயம்.

உபநிஷத் சித்தமான இதை எல்லாம் இல்லை செய்து வஸ்துக்கள் துச்சத்தில் உண்டாகி, துச்சத்தில் போய் சேருகிறது.
இடையில் க்ஷணிகமாய் இருக்கிறது என்று இவர்கள் சொல்ல அது பொருந்தாது
உள் இருக்கிற ஆலய விஜ்ஞானம் என்ன, வெளியில் இருக்கிற பிரவ்ருத்தி விஜ்ஞானம் என்ன இரண்டுமே ஸ்திரமானது தான்.
இல்லாததிலிருந்து இந்த ஜகத்து உண்டானால் , இதுவும் துச்சமாய் காணப்பட வேண்டும்.
மாத்யமிகனைப் போல் இவர்கள் உலகம் சூன்யம் என்று ஒப்புக் கொள்கிறார்கள் இல்லை.
ஆன பின்பு, ஜகத் இருப்பை ஒப்புக்கொள்ளுகிற வைபாஷிகர்களின் இந்த வாதம், அவர்களுடைய
உற்பத்தி கிரமம், பிரளய கிரமம் இரண்டும் துச்சம் என்பதற்கு சேராது.

—————

சூத். 2-2-23 :: ஆகாஸே ச அவிசேஷாத் ::

ஆகாஸே ச – ஆகாச விஷயத்திலும் வைசேஷிகர் சொல்கிற சூன்ய வாதம் பொருந்தாது.
அவிசேஷாத் – பிரத்யக்ஷமாக பார்க்கப் படுகிற பூமி முதலானவற்றிற்கும், ஆகாசத்துக்கும் வேற்றுமை கிடையாதாகையால்.

வைபாஷிகன் ஆகாசத்தை நிருபாக்யா என்று வாங்மனஸா அகோசரம் என்பதுபோலே சொல்கிறான்.
அது 4 விதமான அபாவத்தோடே இருக்கிறது என்கிறான்.
1. ப்ராகபாவம் – பொருள் உண்டாவதற்கு முன்னும் இருப்பது – கடத்துக்கு மண்கட்டி
2. ப்ரத்வம்ஸாபாவம் – அது அழிந்ததற்கு பின்னும் இருப்பது – கடம் நஷ்டமாக இருக்கும் சில்லு
3. அந்யோந்யாபாவம் – கடத்வோ படத்துவம் ந ; படத்தவே கடத்வம் ந – ஒன்றின் தன்மை இன்னொன்றில் இல்லாது இருப்பது.
4. அத்யந்தாபாவம் – கடம் அடியோடு இல்லை என்கிற துச்சமான நிலை.

நிலம், நீர், தீ, வளியாகிற 4 பூதங்களின் அபாவமே ஆகாசம் என்கிற போதும் அது பிரத்யக்ஷ கோசரமாகவே இருக்க வேண்டும்.
கடாபாவம் பூதலமாக காண்கையாலே, ஆகாஸாபாவம் பாவாந்தர ஸித்தமாய் துச்சம் என்னவாகாது.
இந்த வகையில் பூமிக்கும் ஆகாசத்துக்கும் வாசி இல்லையாதலால், ஆகாசம் சூன்யமாக மாட்டாது.
நீலமாக காண்கிற ககன இடைவெளி தான் ஆகாசம் என்று காட்ட, அருகில் உள்ள ஆகாசம் நீலமாக காண்பதில்லையே
எனவே அது தோற்றம் (ஆபாஸம் ) என்று தள்ளிவிட, கிணற்றின் வீழ்சியிலும், ஊசி புகும் துளையிலும்,
பக்ஷி பறக்கும்போது ஆஸ்ரயமாயும் இருப்பதுவும் ஆகாசம் என்று விளக்கப்பட்டது.

சங்கரர் ஆகாசத்தை ஆவரணா அபாவம் என்றார்.
த்ரிவ்ருத்கரணம், பஞ்சீகரணம் ஆனபோது, ஆகாசத்தில், பிருத்வி முதலான மற்ற பூதங்களின் அம்சமும் கலந்து இருப்பதால்,
அது பிரத்யக்ஷ கம்யம் என்பது சித்தம் என்பதாக பகவத் ராமானுஜர் காட்டினார்.
ஆகாசம் பரமாணு ஸங்காத ரூபமாய் . நிரவயவம் என்பதால் அகோசரம். ஸப்தமும் அநித்யம் என்று நிராகரணம் பண்ணுகிறான்.
அப்படியானால் சப்த தன்மாத்திரத்தை எப்படி நிர்வகிப்பது? என்றால்
சப்தத்துக்கும் பொருளுக்கும் சம்பந்தம் நித்தியமாய், அவை முக்கியார்த்தத்தையே குறிக்கும்.
இதையும் பௌத்தன் ஏற்பதில்லை.

வியாச சித்தாந்தத்தில் விஷ்ணு பாரம்யத்தையே சொல்லி இருக்கிறார்.
சங்கரரும் கூட நாராயண: நாராயண: என்று விஷ்ணு பாரம்யத்தையே பல இடங்களில் சொல்லி இருக்கிறார்.
ஸ்ருஷ்டி ஸ்திதி லயம் வருமிடத்து திரிமூர்த்தி சாம்யம் சொல்வது போல் பிரமை ஏற்படலாம்.

ஸத் பிரஹ்மத்துக்கு பிரகிருதி சம்பந்தமே கிடையாது. அவித்யா சம்பந்தம் வந்த போது, அதனுடைய ஸத்வ, ரஜஸ், தமஸ் காரணமாக
மூன்று வித காரண சரீரம் ஏற்பட்டு, அவரே பிரஹ்மா, விஷ்ணு, சிவன் என்றாகி ஸ்ருஷ்டி, ஸ்திதி. சம்ஹாரங்களை செய்வதாகவும்,
இவர்களுக்கு ஆத்மா ஒன்றாய், சரீரம் மூன்றாய் த்ரிமூர்த்தி ஐக்கியம், சாம்யம் சொல்லகின்றனர் அத்வைதிகள்.
இது தவறான வாதம்.

மத்யே விரிஞ்சி கிரீஸ : விஷ்ணுரேவ அவதரிதி – என்று நாராயணனே ஸ்வயம் விஷ்ணுவாகவும்,
பிரம்ம, ருத்ராதிகளில் அந்தர்யாமியாகவும் நின்று சிருஷ்டி ஸ்திதி லயங்களை செய்கிறான் —
மச்ச, கூர்மாதி ஆதாரங்களுக்கு முன்னம், இந்த த்ரி மூர்த்திகள் நடுவே விஷ்ணுவாக அவதாரம் பண்ணினது தான்
அவனுடைய முதல் அவதாரம் என்பது நம்முடைய ஸித்தாந்தம். அதுவே வியாஸ சித்தாந்தமும் கூட.
வியாசர் இதை எங்கே சொன்னார் ? என்றால்

ஜன்மாதி அஸ்ய யத : என்று பிரஹ்மா ஸூத்ரத்தில் வியாசர் ஆதி சம்பதத்தால்
ஸ்ருஷ்டி, ஸ்திதி, பிரளயம் இந்த மூன்றையும் செய்ப்பவன் எவனோ அவன் தான் பர பிரஹ்மம் என்று சொன்னதோடு,
உத்தவ கீதை பிரகரணத்தில், பகவான் கிருஷ்ணன் திருவாக்காக

ஆத்மந : பித்ரு புத்தராப்யாம் அநுமேயோ மம பவாப்யயௌ
ந பவாப்யே வஸ்தூணாம் அவிக்ஞோ அத்வய லக்ஷ்ண :

பவா = உற்பத்தி
அவ்யயௌ = விநாசம்
ஜீவாத்மா = ந ஜாயதே ம்ரியதே வா என்று இரண்டும் அறியாதவன். இந்த அத்வைத லக்ஷ்ணத்தை உடைய ஜீவாத்மா.
இந்த உற்பத்தி விநாசத்தை யாரும் சரியாக அறிந்தார் இல்லை. காரணம் இந்த ஜீவாத்மா அத்வைத லக்ஷணமானவன்.
அவனுக்கு உற்பத்தியும் விநாசமும் கிடையாது. பிரகிருதி சம்பந்தத்தால் வந்த ஜனன மரண துவயத்தை அறியாதவன்.
பரமாத்மா அறியானோ என்னில் ?
பஹுனிமே வியதீதாநி ஜன்மநா நான்யஹம் வேத்தி தவஸார்ஜுணா – என்று அவன் அறிவான் –
ஸ்வேச்சா க்ருஹீத அபிமத உரு தேஹம் ஆனபடியாலே–ஆனால் அவன் அறிந்தபடி நாம் அறிவதில்லை.
நித்யர்களோ என்னில் , அவர்களும் இன்னொரு ஜீவாத்மாவை இட்டே அறியலாம் தாங்கள் ஸ்வத :பிறவாதவர்கள் என்பதால்.
நம் பிறப் இறப்பை நாம் அறிவதும் தனக்கொரு குழந்தை பிறப்பதைப் பார்த்தும், தன் தந்தை இறப்பதைப் பார்த்துமே யாகும்.

வைபாஷிகன் இதற்கு எதிர் தட்டாக வஸ்துக்கள் அஸத்தாலே உண்டாகிறது, அஸத்திலே போய் சேருகிறது என்பதை
இங்கு நிராகரணம் பண்ணி, சரீராத்மா பாவத்தை இட்டு சமர்த்தனம் பண்ணவேண்டி இருக்க
நீங்கள் சொல்லுகிற பஞ்ச ஸ்கந்தம் என்ன, மூலா ஜ்ஞானம் என்ன, அவித்யா நிவிர்த்தி என்ன இதுகளால் அல்ல என்பதே வியாச சித்தாந்தம் .
இதைக் கொண்டே கிரியா, தேவதா, யோகம் சூன்யம் என்பதான 4 வகைப் பட்டவரான பௌத்தர்களையும்
இந்த சமுதாயாதிகாரணத்தில் வியாசர் நிரஸனம் பண்ணுகிறார்.

இத்தால், ஸர்வ சித்தாந்த சங்கிரகத்தில் வியாஸ பாரத தர்ஸனமாக
சங்கரரால் சொல்லப்பட்ட பஞ்சவிம்சதி தத்வ விமர்சனமோ, திரிமூர்த்தி சாம்யா வாதமோ கண்டு மயங்க வேண்டாம் .
வியாஸ சித்தாந்தமும், அவருடைய சரீரக ஸித்தாந்தமும் இரண்டும் ஒன்றே அல்லது வேறு அல்ல.

—————–

ஸூத். 2-2-24 :: ஆநுஸ்ம்ருதேஸ்ச ::

பிரத்யபிஜஜ்ஞை என்பதைக் கொண்டு இரு வேறு காலங்களில் உள்ள பொருள் ஒன்றே என்று சொல்ல வேண்டுமானால்,
அந்த பொருள் ஸ்திரமானதாக இருக்க வேண்டும். பொருள்கள் க்ஷணிகமானால், இருவேறு காலங்களில்
உள்ள பொருள் ஒன்றே என்கிற இந்த பிரத்யபிஜ்ஞா ஒட்டாது.

அநுஸ்ம்ருதே : முன் அனுபவிக்கப் பட்ட பொருள் அனைத்தும் மீண்டும் அனுபவத்துக்கு வருவதால் ,
வஸ்துக்களுக்கு க்ஷணிகத்வம் செல்லுபடியாகாது என்றதற்கு
அநுஸ்மரணமாகிற பிரத்யபிக்ஞா – ஜ்வாலாபேத வியாமோகம் போலே பிராந்தியால் வந்தது என்கிறான்.

எதை வைத்து இப்படிச் சொல்கிறான் என்றால் இரண்டு விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
1. அர்த்த க்ரியா காரித்வம்
2. ஸத்வம்
யது ஸது க்ஷணிகம் – எதெல்லாம் இருக்கிறதோ, அதெல்லாம் க்ஷணிகம், யதா ஜலதர படலம்–என்பது அவன் வாதம்.
அதற்கு ஸித்தாந்தி பிரத்யபிக்ஞா ஸோ அயம் தேவதத்த –என்ற வார்த்தை பாடில் 3 சொற்கள் உள்ளன.
இவை அனைத்தும் பிரதமா விபத்தியில் சாமான்யாதிகாரணத்தில் ( முன்நிலை படர்க்கையில் .} அமைந்துள்ளாதால்
அவை ஒரு வியக்தியையே உணர்த்தும்.
பூத காலத்தில் இருந்தவரும் இப்போது காட்சியளிக்கிற இவரும் ஆனா தேவதத்தன் என்று தானே இந்த வார்த்தைப் பாட்டுக்கு பொருள்.
எனவே சித்ரத்வம் உண்டு. யது ஸது க்ஷணிகம் என்கிற உங்கள் வாதம் பொருந்தாது- எனறாக

எதெல்லாம் ஸம்ஸ்கார பலமாக இருக்கிறதோ அதெல்லாம் பிரமம் – என்றான்.
வெள்ளியை – ராஜதம் – முன்பே பார்த்திருந்த படியால் அதனுடைய நினைவு – சம்ஸ்காரம் புத்தியில் இருக்க,
முத்து சிப்பியைப் – சுத்திகை – பார்க்கும்போது வெள்ளி என்கிற பிரமிக்கிறான்.
ஆகவே இதெல்லாம் சம்ஸ்காராதீனமாக இருக்கிறதோ அதெல்லாம் பிரமாத்மகம் என்று சொல்லி விட்டான்.
எனவே இந்த தேவதத்தன் விஷயமான பிரத்யபிக்ஞையும் சுத்திகா ரஜத பிரமம்போலே அன்று
பார்த்த தேவதத்தன் வேறு, இவர் வேறு என்று சொல்லி விட்டான்.

அதற்கு சித்தாந்தி துஷ்ட காரண ஜன்ய ஜ்ஞானமானால் அப்படி, எல்லா பிரத்யபிக்ஞா ஜ்ஞானமும் பிரமம் ஆகாது.
எதுபோல் என்றால்
சந்தன கொட்டடியில் மணம் வீசுவதை அறிந்த ஒருவன், மலையில் சந்தன மரத்தைப் பார்த்ததும் இதற்கு மணம் உண்டு
என்று நினைவு படுத்துவது போல –
நிர்துஷ்ட காரண ஜன்ய ஜ்ஞானம் சத்யம் என்று சொல்ல ;
இப்போது அவன் சத்வத்தை விடுத்து, அர்த்த கிரியா வாதத்துக்கு வந்தான்.

பாய்சல் நிலத்தில் உள்ள நெல் விளைகிறது. தானிய கிடங்கில் – க்ருஸூலத்தில் – வைத்த நெல் விளைகிறதோ?
சாமர்தியா அசாமார்தியம் இரண்டுக்கும் வேறுபட காண்கையால் – விருத்த தருமம் ஒரு ஆச்ரயத்தில் இருக்க வழியில்லை ஆதலால் –
இந்த நெல் இரண்டும் வேறு வேறு தான் – என்றான்.
ஆல் விதைக்க மா முளைக்குமா? அசமர்த்தமான கடம் என்றும் அசமர்த்தமே. சமர்த்தமான பீஜம் என்றும் சமர்த்தமே.
அதற்கு வேண்டியது ஸஹகாரி சையோகமே.
தரணி-ஜல சையோக ஸாகார அபாவத்தாலே நெல் க்ருசூலத்திலே முளைப்பத் தில்லை , அன்றி அசாமர்த்தியதால் அன்று –

அநுஸ்மரணம் –பூர்வாநுபூதி வஸ்து விஷய ஜ்ஞானம் பிரத்யபிஜ்ஞானம் இத்யர்த்த :
ஆகவே எதுவும் க்ஷணிகமில்லை. எல்லாம் ஸ்திரம் தான். என்று விளக்கப்பட்டது.

யஸ்யாநுபவ தஸ்யைஹி ஸ்ம்ருதி : ஸ்ம்ருதி வியதீத விஷய: மதி ஆகாமி நிர்மிதா. புத்தி தாற்காலிகா புரோக்தா
பிராஜ்ஞா த்ரைகாரிகா மதா – என்று காவ்யப் பிரகாசத்தில் உம்மதப்பட்டன சொன்னபடி
பிரத்யபிஜ்ஞா உண்டாக ஆத்மா ஸ்திரமானதாக இருக்க வேண்டும்.
ஜ்வாலாபேத வியாமோகமும் ஸ்திரமான ஆத்மா விடத்திலேயாய் , இவர்கள் சொல்லுகிற க்ஷணிக விஜ்ஞான ஆத்மாவுக்கு சொல்லப் போகாது
மேலும் வியாமோகம் ஜ்வாலைக்கு வேண்டுமானால் பொருந்தலாம், கடம் போன்ற பொருள்கள் நசிந்தபோது வியாமோகம் ஏற்பட வழியில்லை ,
வஸ்து மொத்தமாக மாயமாவ தில்லையால்–என்று விஷ்யாதர முகமாகவும் இவர்கள் வாதத்தை தள்ளிவிட

இதுவரை பிரத்யக்ஷத்தைக் காட்டி பேசியவன், இப்போது அனுமானத்தை இட்டுப் பேசு, அந்த அனுமானத்தை அவனுக்கே திருபாலாவது. .
யது ஸது தது ஸ்தாஷ்னு . யது துச்ச : ததேவ அநர்த்த கிரியாகாரி யதத்யத் ஸது தது அர்த்த கிரியா காரிரேவ .
எனவே அர்த்த கிரியா வாதம் அக்ஷணிகத்துத்வதையே காட்டும்.
தவிர, ஸ்தைர்யம் இருந்தால் தான் அனுமானத்தையே பண்ண முடியும். 5 வாக்கியங்களைச் சொல்லி அனுமானத்தை
ஸ்தாபிக்குமளவாக ஆத்மா இருக்க வேண்டுமே? க்ஷணிக விஜ்ஞானத்தால் அது ஆகாது.

இதுவரை வைபாஷிகன், சௌத்திராந்திகன் ஆகிய இரண்டு பேருக்கும் பொதுவான விஷய சூத்ர விமர்சனம் பார்த்தோம்.
வைபாஷிகன் ஜகத்தை பிரயக்க்ஷ சித்தம் என்றான்.
சௌதாந்த்ரிகன் அதை ஆனுமானிகம் என்கிறான்.
இதனை அடுத்த சூத்திரத்தில் நிராசனம் பண்ணுகிறார் சூத்ரகாரர்.

https://srivasanesa24d.blogspot.com/–33/34-july 4th

இது சர்வம் சமஞ்சஸ்த்வம் -ஆறு இடங்களில் வரும் -2-3-3-ஆத்ம அதிகாரணத்திலும் வரும்
ஜிம்பகமான அவதாரமாக இருந்தாலும் அஜிம்பகமான வாக்கு அன்றோ ஸ்ரீ பாஷ்யகார வாக்குக்கள்
ஜிம்பாகம் -அரவுபாம்பு -அஜிம்பாகம் -அம்பு -நேராக உண்மைப் பொருளை உள்ளபடி காட்டி அருளும் ஸ்ரீ ஸூக்திகள்
இரண்டு நாக்குகள் இவருக்கும் -வேத அங்கங்களையும் அருளிச் செயல்களையும் ஐக கண்டமாக கொண்டவர்

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் மூலமும் தமிழ் அர்த்தமும் -இரண்டாம் பகுதி –72-112-ஸ்வ மத விஸ்தாரம்-

August 13, 2024

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I
 I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ஸ்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

—————-

(நிர்விசேஷ அத்வைதம் அவர்கள் நம்மது ச விசேஷ அத்வைதம் -)

72–ய ப்ருதிவ்யாம் திஷ்டந் ப்ருதிவ்யாந்த ரோயம் பிருதிவி ந வேத யஸ்ய ப்ருதிவீ சரீரம்
ய ப்ருத்வீன் அந்தரோ யமயதி ஏஷத ஆத்மாந்தர் யாம்ருத –
ஸூக்ல யஜுர் ப்ரு -கண்வ

ய ஆத்ம திஷ்டந் ஆத்மநோ யந்த ரோயம் ஆத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம் ய ஆத்மந அந்தரோ யமயதி
ச த ஆத்மாந்தர் யாம்ருத
–ஸூக்ல மாந்யந்திந

(தத்வ அதிகரணம் அடுத்து பர தேவதா அதிகரணம் -பரமை காந்தி ஆவதற்கு தத்வத்துக்கும் மேல் ஸ்வரூபம் ரூபம் இத்யாதிகளை அறிய வேண்டுமே)

ய -ப்ருத்வீ மந்தரே சஞ்சரன் யஸ்யப் ப்ருத்வீ சரீரம் யாம் ப்ருத்வீ ந வேத இத்யாதி யோஷர மாந்தரே சஞ்சரன்
யஸ்யாஷரம் சரீரம் யமக்ஷரம் ந வேத யோ ம்ருத் யுமந்தரே சஞ்சரன் யஸ்ய ம்ருத்யு சரீரம் யம் ம்ருத்யுர் ந வேத
ஏஷ சர்வ பூத அந்தராத்ம அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண –ஸூபாலோபநிஷத்

த்வா ஸூபர்ணா சாயுஜா சகாயா சமாநம் வ்ருஷம் பரிஷஸ்வ ஜாதி தயோர் அந்ய பிப்பலம்
ஸ்வா த்வத்ய நஸ்ரந் அநந்யோ அபிசாக ஸீதி
–முண்டக-3-1-1-

அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜநாநாம் சர்வாத்மா தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிசது தத் அநு ப்ரவிஸ்ய-
ஸச் ஸத்யச் சா பவது இத்யாதி ஸத்யந்சாந்ரு தந் சாசத்யம பவது
–தைத்ரியம்

அநேந ஜீவேநாத்மநா –இத்யாதி -சாந்தோக்யம்

ப்ருதக் ஆத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வா ஜூஷ்டஸ் ததஸ் தேந அம்ருதத்வமேதி போக்தா போக்யம் ப்ரேரிதாரம்
ச மத்வா சர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் ப்ரஹ்ம ஏதத்
–மந்திரிகோ

நித்யோ நித்யாநாம் சேதநஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமாந் –கடவல்லி

பிரதான ஷேத்ரஞ்ஞ பதிர் குணேச(பதி சேஷி -நியாந்தா குணங்கள் தேவையான பொழுது காட்டி )

ஞாஜெவ் த்வாவ் அஜவ் வீசனீசவ் இத்யாதி ஸ்ருதி சதை –மந்த்ரிகா

தத் உப ப்ரஹ்மண

ஜகத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யாம் தேவ ஸூதா தலம்–ஸ்ரீ ராமாயணம் -அதிதி தேவி ஸ்துதி

யத் கிஞ்சித் ஸ்ருஜ்யதே யேந சத்வாஜா தேநவை த்விஜ தஸ்ய ஸ்ருஜ்யஸ்ய ஸம்பூதவ்
தத் சர்வம் வை ஹரேஸ்தநு
–ஸ்ரீ விஷ்ணு புராணம்

அஹமாத்மா குடா கேச சர்வ பூதாசய ஸ்திதி -ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்த ஸ்ம்ருதிர்
ஞாநம் அபோஹநம் ச
–ஸ்ரீ கீதா

இத்யாதி வேத வித் அக்ரேஸர வால்மீகி–பராசர -த்வைபாயன -வாசோபிஸ் ச
பரஸ்ய ப்ரஹ்மண ஸர்வஸ்ய ஆத்மத்வா வகமாத்-சித் அசித் ஆத்ம கசிய வஸ்து ந தச் சரீரத்வாவகமாச் ச சரீரஸ்ய ச சரீரிணம்
பிரதி பிரகார தயைவ பதார்த்ததவாத் சரீர சரீரிணஸ் ச தர்ம பேதே அபிதயோர சங்கராத் சர்வ சரீரம் ப்ரஹ் மேதி
ப்ரஹ்மணோ வைபவம் ப்ரதிபாதயத்யபி சாமாநாதி கரண்யாதிபுபி முக்ய வ்ருத்தை –
சர்வ சேதந அசேதன பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அபி தீயதே

(இப்படி வேதங்களை நன்கு அறிந்த சான்றோர்களில் தலையாயவர்களானparaasaraபராசரர் த்வைபாயனர் -வ்யாஸர் -ஆகியோர்
பரப்ரஹ்மத்துக்கு எல்லாப் பொருள்களுக்கும் உயிராய் இருக்கும் தன்மையும் சேதன அசேதனப் பொருள்களுக்கு அதன் உடலாய் இருக்கும் தன்மையும்
உயிரும் உடலும் மாறுபட்ட நிலை நெறிகளை உடையவையாயினும் ஒன்றை விட்டு ஓன்று பிரிக்க முடியாத தொடர்புடைய ப்ரகாரத்துவமும் இருத்தலால்
ஸாமாநாதி கரணத்தால் திரண்ட பொருளாக ப்ரஹ்மத்து எல்லாப் பொருள்களுக்கு உயிராய் உறையும் தன்மை உணர்த்தப்பட்டது -)

(அஹம் கச்சாமி -அஹம் ஆத்மாவைக் காட்டாது -தேகத்துடன் சேர்ந்த ஆத்மாவையே காட்டும்)

(கார்யம் செய்ய சரீரம் சுகம் துக்கம் அனுபவிக்க ஆத்மா -ஞானம் இதுக்குத் தானே -ஆகவே இரண்டும் சேர்ந்ததும் அஹம்
அனுகூலமாக இருக்கும் பொழுது பேத வியவஹாரமும் -பிரதிகூலமாக இருக்கும் பொழுது அபேத வியவஹாரமும் செய்கிறோம்)

(சாமானாதி கரண்யம் -ஏகார்த்த ப்ரதிபாதிதம் -விசேஷண விசேஷ்ய கொள்ளாமல் சங்கரர்)

(பின்ன பிரவ்ருத்தி நிமித்த ஏகஸ்மின் அர்த்தே ப்ரதிபாதிதம் -பர்யாய சப்தங்கள் இல்லாமல் -ஒரே பதார்த்தத்தை வெவ்வேறே பிரகாரம்
ஸ்யாமோ யுவ தேவதத்தன் -இவனை வியாவ்ருத்திக்க இரண்டு பிரகாரங்கள்)

சாமா நாதி கரண்யம் ஹி த்வயோ பதயோ பிரகார த்வய முகேந ஏகார்த்தநிஷ் டத்வம்
தஸ்ய ச ஏதஸ்மிந் பக்ஷே முக்யதா ததாஹி -தது த்வம்-இதி சாமாநாதி கரண்யே –
தது-இத்யேந ஜகத் காரணம் சர்வ கல்யாண குணாகரம் நிரவத்யம் ப்ரஹ்ம உச்யதே
த்வம் இதி ச சேதன சாமாநாதி கரண வ்ருத்தேந ஜீவ அந்தர்யாமி ரூபி -தச் சரீரம் ததாத்மதயா அவஸ்திதம்
தத் பிரகாரம் ப்ரஹ்ம உச்யதே
இதரேஷு பக்ஷேஷு சாமாநாதி காரண்ய ஹாநி ப்ரஹ்மண ச தோஷதாச ஸ்யாத் –

ஸாமா நாதி கரணம் என்பது இரண்டு சொற்களால் குறிக்கப்படும் இரு வெவ்வேறு பொருள்கள் ஒன்றை விட்டு ஓன்று பிரிக்க முடியாத தன்மையினால் ஒரே பொருளைக் காட்டுதல் ஆகும்
வேதச் சொற்களுக்கு இவ்வாறு பொருள் கொள்வதே -அதாவது எல்லா வேத வாக்யங்களும் பொருள் உள்ளவை என்று கொள்வதே -எங்கள் தலையாய கொள்கை
அப்படியே ததுவம் என்ற வாக்யத்துக்கு ஸாமாநாதி கரணத்தின் படி
தது -அந்த -என்பதால் எல்லாவற்றுக்கும் முழு முதல் காரணமாயும்
எல்லையில்லா நன்னலம் உடையோனாகவும்
குற்றங்கள் சிறிதும் அற்றோனாகவும்
உள்ள ப்ரஹ்மமே -த்வம் -நீ என்ற சொல்லால் குறிப்பிடப்படும்
சேதனனுடன் பிரிக்க முடியாத தொடர்புடையதாய் ஜீவாத்மாவின் உள்ளுறைவதாய் -அதை உடலாக உடையதாய் -அதன் ஆத்மாவாக உறையும் ப்ரஹ்மத்தைக் காட்டுகிறது
மற்றை அத்வைதக் கொள்கைகளில் இரு மெய்ப் பொருள்கள்-ப்ரஹ்மம் தவிர்த்து இன்மையால் ஸாமா நாதி கரணம் வர வாய்ப்பில்லை
எனவே மற்றைக் கொள்கைகளில் இந்த சாமாநாதி கரண்யம் அழிகிறது
அதனால் ப்ரஹ்மத்துக்கு குற்றங்களின் தொடர்புடைமை வரும்)

—————

73–ஏதத் யுக்தம் பவதி
ப்ரஹ்ம ஏவ ஏவமவஸ்திதம் -இத்யத்ர -ஏவம் -சப்தார்த்த பூத பிரகார தயைவ விசித்ர சேதன அசேதநாத்மக
பிரபஞ்சஸ்ய ஸ்தூலஸ்ய ஸூஷ்மஸ்ய சத் பாவ -ததாச பஹுஸ்யாம் ப்ரஜாயேய -இதி அயமர்த்த ஸம்பந்நோ பவதி –
தஸ்யைவ ஈஸ்வரஸ்ய கார்ய தயா காரண தயா ச சமஸ்தான சமஸ்தி தஸ்ய சமஸ்தான தயா சித் அசித் வஸ்து ஜாதம வஸ்திதமிதி –

(பஹு -பல மட்டும் அல்ல -பரஸ்பர பின்னமான எல்லாமாகக் கொள்ள வேண்டும் நானே(ப்ரஹ்ம சரீரத்துக்கு -நானே )-ஸமஸ்த பதார்த்தமாக ஆகிறேன்)

இதை இவ்வாறு விளக்கலாம்
ப்ரஹ்மமே இவ்வாறு விளங்குகிறது -என்ற வேத வாக்யத்தில் -இவ்வாறு என்ற சொல்லின் கருப்பொருள் புலன்களால் உணரப்படும் உணரப்படாமலும் சேதன அசேதனப் பொருள்களால் பல படியாக நிறைக்கப்பட்டு இருக்கும் ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்துடன் பிரிவற்ற தொடர்புடையதாக இருத்தல் என்பது
அதனாலேயே -நான் பலவாக ஆவேன் மக்களைப் படைப்பேன் என்ற வாக்யம் பொருளுடையதாக ஆகும் –
பலபடித்தான உருவ அமைப்புள்ள சேதன அசேதன பொருள்களை தனது உடலாகக் கொண்டு அவை யாவற்றிலும் அந்த ஈஸ்வரனே கட் புலனாகும் கார்யமாகவும் கட் புலனாகாத காரணமாகவும் வஹிக்கிறான்

———

74 —நநு ச -சமஸ்தான ரூபேண ப்ரகாரதயா-ஏவம் -சப்தார்த்தத்வம் ஜாதி குணயோ ரேவ த்ருஷ்டம் –
ந த்ரவ்யஸ்ய ஸ்வ தந்த்ர ஸித்தியோக் யஸ்ய பதார்த்தஸ்ய ஏவம் சப்தார்த்ததயா ஈஸ்வரஸ்ய பிரகார மாத்ரத்வம யுக்தம்
இதி சேத்ப உச்யதே த்ரவ்யஸ்யாபி தண்ட குண்டலாதே த்ரவ்யாந்தர பிரகாரத்வம் த்ருஷ்டமேவ —

அவ்வாறு ஆகாது
உருவ அமைப்பால் பிரிவற்ற நிலை உடைமையால் இவ்வாறு என்ற சொற் பொருள் கொள்வதானால்
அதாவது-சேதனம் அசேதனம் ஆகியவை பொருள்களே -அவ்வாறு இருக்க அவை ஒன்றுக்கு ஓன்று பிரிவற்ற நிலையை அடைதல் எவ்வாறு என்பது கேள்வி –
ஒரு பொருளுக்கு அடையாக அதன் ஜாதியையோ அல்லது குணத்தையோ தான் கொள்ள முடியும்
மாறாக மற்ற ஒரு பொருளை அதற்க்கு பிரிவற்ற நிலையை உடைய அடையாகக் கொள்ள வியலாது
இங்கு தனித்து இயங்கும் தன்மையுடைய சேதன அசேதன பொருள்களை ஈஸ்வரன் என்னும் பொருளுக்கு அடையாகக் கொள்ளுதல் பொருந்தாது என்பீராகில்
சில சமயங்களில் ஒரு பொருளும் மற்ற ஒரு பொருளுக்கு -அதை மற்றதனின்றும் பிரித்துக் காட்டும் அடையாக -தடியை உடையவன் தடிக்காரன் குண்டலம் அணிந்தோன் என்பது போல் வழங்கி வருவதைக் காண்கிறோம்

————————-

75–நநுச தண்டாதே ஸ்வ தந்த்ரஸ்ய த்ரவ்யாந்தர பிரகாரத்வே மத்வர்த்தீய ப்ரத்யயோ த்ருஷ்ட –
யதா தண்டி குண்டலீ இதி அத கோத்வாதி துல்ய தயா சேதன அசேதநஸ்ய த்ரவ்ய பூதஸ்ய வஸ்துந ஈஸ்வர பிரகார தயா
சாமாநாதி கரண்யே ந ப்ரதிபாதநம் ந யுச்யதே அத்ரோச்யதே –கவ்ரஸ்வோ மனுஷ்யோ தேவ இதி பூத சங்காதா ரூபாணாம்
த்ரவ்யாணாமேவ -தேவ தத்தோ மனுஷ்யோ ஜாத புண்ய விசேஷேண யஜ்ஜ தத்தோ கவ்ர் ஜாத பாபேந கர்மணா
அந்யஸ் சேதந புண்யாதிரேகேண தேவோ ஜாத இத்யாதி தேவாதி சரீராணாம் சேதன பிரகார தயா லோக
வேதயோ சாமாநாதி கரண்யே ப்ரதிபாதனம் திருஷ்டம்

அப்படி யல்ல -தடி போன்றவை தாங்கள் ஒரு பொருளாக இருந்து கொண்டே மற்ற ஒரு பொருளுக்கு -மனிதனுக்கு -த்வர்த்தீய ப்ரத்யயத் -vilankuவிளங்க முடியும்
உதாரணம் -தண்டி குண்டலீ –
மேலும் பசுத்தன்மை -பேசுவாய் இருத்தல் -போன்றவற்றுக்கு இணையாக சேதன அசேதன பொருள்கள் நிறைந்த ப்ரபஞ்சம் ஈசனுக்கு பிரிவற்ற நிலையில் உள்ளதால் ஸாமா நாதி கரண்யம் பொருந்தாது எனில்
பசு குதிரை மனிதன் தேவன் போன்ற உருவ அமைப்புக்கள் பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் ஆகின்றன
தனது நல் வினையின் பயனாக தேவ தத்தன் மனிதனாகப் பிறந்தான் -தன் தீ வினைகளின் விளைவாய் யஜ்ஜ தத்தன் பசுவாய் ஆனான்
வேறொரு உயிர் மிகுந்த நல்ல வினையின் பயனாய் தேவனாகப் பிறந்தான் என்றெல்லாம் மறை எல்லாம் உலக வழக்குகளில் உள்ளது
தேவன் முதலான உடல்களில் உயிரின் பிரிவற்ற நிலை உள்ளதையும் காண்கிறோம் -ஸாமாநாதி கரணம்
இங்கு உடலும் உயிரும் தனித் தனியான பொருள்கள் ஆயினும் ஒன்றுக்கு ஓன்று பிரிவற்ற நிலையுள்ளவை

(த்ரவ்யம் த்ரயம் சம்யோகம்-யுவா ஸ்யாம தேவ தத்தன் அப்ருதக் சமஸ்தானம்
குண்டலி தேவதத்தன் ப்ருதக் ஸம்ஸ்தானம்-ஜீவன் அசேதனன் ப்ரஹ்மம் -மூன்றும் த்ரவ்யம் -அப்ருதக் ஆக பிரகாரங்கள் ஆக வேண்டுமே )

த்வர்த்தீய ப்ரத்யயம் -புவநாநி விஷ்ணு -விஷ்ணு இன்றி தனித்து இயங்காத புவனம்
மத்வர்த்தீய ப்ரத்யயம் –அப்ருதக் சித்தம் –இனிச் மான் வான் -பிரிவற்ற நிலை -ஸ்ரீ மந் -ஸ்ரீ மதே

——————————

76–அயமர்த்த -ஜாதிர் வா குணோ வா ந தத்ர ஆதரந-கஞ்சன த்ரவ்ய விசேஷம் பிரதி விசேஷண தயைவ
யஸ்ய சத் பாவ -தஸ்ய தத் அப்ருதக் சித்தே தத் ப்ரகாரதயா தத் சாமாநாதி கரண்யேந ப்ரதிபாதநம் யுக்தம்
யஸ்ய புந த்ரவ்யஸ்ய ப்ருதக் சித்தஸ்யைவ கதாசித் க்வசித் த்ரவ்யாந்தரப் பிரகாரத்வ மிஷ்யதே
தத்ர மத்வர்த்தீய ப்ரத்யய -இதி விசேஷ

இதன் பொருள் –ஒரு பொருளுடன் பிரிவற்ற நிலையில் அடையாக இருப்பதற்கு -ஜாதியோ பொருளோ குணமோ முக்யமாகக் கொள்ளப் பட வேண்டாம்
எந்த ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் தொடர்பு அதற்கு பிரிவற்ற பண்பை ஏற்குமோ -அவற்றின் பிரித்து இயங்காத தன்மையால் அவ்விரு பொருள்களுக்கும் சாமா நாதி கரணம் உள்ளது என்று கொள்வதே பொருந்தும்
மீண்டும் எந்த பொருள் சாதாரணமாகத் தனித்தே இயங்கிக் கொண்டு எப்பொழுதாவது மற்ற ஒன்றிற்கு பிரிவற்ற அடையாக ஆகிறதோ அப்பொழுது அதற்கு மத்வர்த்தி ப்ரத்யயம் வர வேண்டும் என்பது சிறப்பு விதி –

—————

77–ஏவமேவ ஸ்தாவர ஜங்கமாத்மகஸ்ய ஸர்வஸ்ய வஸ்துந ஈஸ்வர சரீரத்வேந தத் பிரகார தயைவ ஸ்வரூப சத் பாவ இதி
தத் பிரகாரீ ஈஸ்வர ஏவ தத் தத் சப்தேந அபிதீயதே இதி தத் சாமாநாதி கரண்யேந ப்ரதிபாத நம் யுக்தம்
ததே தத் பூர்வமேவ நாம ரூப வியாகரண ஸ்ருதி விவரனே பிரபஞ்சிதம் —

மேற்கூறிய படியே அனைத்து அசையும் அசையாப் பொருள்களும் ஈஸ்வரனுக்கு உடலாய் இருப்பதனால் அப் பிரிவற்ற பண்பினாலேயே அவற்றுக்கு இருப்பு ஏற்படுகிறது என்பதால் அவற்றிற்கு உரிமையானவன் ஈஸ்வரன் தத் என்று குறிப்பிடப் படுகிறான் என்று சாமா நாதி கரணத்தை அறுதியிடல் பொருந்தும்
இவையாவும் முன்பே நாம ரூப விளக்கத்தில் விரிவாகச் சொல்லப்பட்டன

———-

78–அத ப்ரக்ருதி புருஷ மஹத் அஹங்கார தந் மாத்ர பூதேந்த்ரிய -ததாரப்த-சதுர்தச புவநாத்மக ப்ரஹ்மாண்ட தத் அந்தர்வர்த்தி
தேவ திரியக் மனுஷ்ய ஸ்தாவராதி சர்வ பிரகார சமஸ்தாந ஸம்ஸ்திதம் கார்யமபி சர்வம் ப்ரஹ்ம ஏவ இதி காரண பூத
ப்ரஹ்ம விஞ்ஞாநாதேவ சர்வம் விஞ்ஞாதம், பவதீதி ஏக விஞ்ஞானம் உப பந்நதரம்-ததேவம் கார்ய காரண பாவாதி முகேந
க்ருஸ்த்ரஸ்ய சித் அசித் வஸ்துந பர ப்ரஹ்ம பிரகார தயா ததாத்மகத்வம் யுக்தம் –

மேலும் ப்ரக்ருதி புருஷன் மஹத் அஹங்காரம் தன் மாத்ரைகள் பஞ்ச பூதங்கள் பதினோரு புலன்கள் -அவைகளான பதினான்கு உலகங்கள் ப்ரஹ்மாண்டங்கள் அவற்றின் உள்ளுறையும் தேவ மனித விலங்கு ஸ்தாவரம் முதலான பலவகை அமைப்புடைய பொருள்களுக்கு -விளைவுகளுக்கு -காரணமாக ப்ரஹ்மம் இருத்தலால் -அந்த ஒன்றை அறிவதன் மூலம் மற்ற யாவையும் அறிந்ததாக ஆகும் என்பதே மிகப் பொருந்தும்
இவ்வாறு காரண காரியத் தொடர்பால் சேதன அசேதன பொருள்களுக்கு உள்ளுறை ஆத்மாவாய் இருக்கும் தன்மை ப்ரஹ்மத்திற்குச் சொல்லப்பட்டது –

————-

79–நநு ச பரஸ்ய ப்ராஹ்மண ஸ்வரூபேண பரிணாம ஆஸ்பதத்வம்-நிர்விகார நிரவத்ய ஸ்ருதி வ்யாகோப ப்ரசங்கேந நிவாரிதம்-
ப்ரக்ருதிஸ் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் இதி ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிஞ்ஞா
ம்ருத் தத் கார்ய த்ருஷ்டாந்தாப்யாம் பரம புருஷஸ்ய ஜகாத் உபாதான காரணத்வம் ச ப்ரதிபாதிதம்
உபாதான காரணத்வம் ச பரிணாம ஆஸ்பதத்வ மேவ கத மிதமுபபத்யதே அத்ரோஸ்யதே -ச ஜீவஸ்ய பிரபஞ்சஸ்ய
அவிசேக்ஷண காரணத்வம் யுக்தம் தத்ர ஈஸ்வரஸ்ய ஜீவ ரூப பரிணாமாப் யுபகமே
நாத்மாஸ்ருதேர் நித்யத்வாச் ச தாப்ய–ப்ரஹ்ம சூத்ரம் -2-3-3-
இதி விருத்யதே-வைஷம்ய நைர் க்ருண்ய பரிகாரஸ் ச ஜீவாநாமநாதித் வாப்யுகமேன
தத் கர்ம நிமித்தயா ப்ரதிபாதித -வைஷம்ய நைர்க்ருண்யே ந சா பேஷத்வாத் -2-1 -34—
ந கர்ம விபாகதிதி சேண்ந அநாதித்வாது ப பத்யதே சாப்யு பலப்யதேச -2-1-35-இதி
அக்ருதாப்யாகம க்ருத் விபிரணாச பிரசங்கஸ் ச அநித்யத்வே அபிஹித

மாறாகப் பர ப்ரஹ்மத்திற்கு தன்னிலையில் நின்றும் மாறுபாடு அடைதல் ஒரு பொழுதும் இல்லை என்று சாற்றப்படும் -மாறுதல் அடையாத்தன்மை -குற்றங்கள் அற்ற நிலை போன்ற மறை மொழிகளால் அறுதியிடுதல் எவ்வாறு பொருந்தும் என்பதற்கு
ப்ரக்ருதிஸ் ச பிரதிக் நாத் ருஷ்டாந்தநு பரோதாத் –ப்ரஹ்ம ஸூத்தரம் -1-4-
ஒன்றை அறிதலால் எல்லாவற்றையும் அறிந்ததாகும் என மறை மொழியில் மறை மற்றும் அதை விளை பொருளை எடுத்துக் காட்டி பரம புருஷன் உலகின் கருப்பொருளாகும் தன்மை விளக்கம் தரப்படுகிறது
கருப்பொருள்கள் யாவும் மாறுதலுக்கு உட்பட்டவை என்பதால் இது எவ்வாறு பொருந்தும்
இதற்கு விடையாக
இந்த ஜீவன் ப்ரபஞ்சம் இவற்றுடன் ப்ரஹ்மத்துக்குள் பொதுப்படையான காரணம் கூறப்படுகிறது –
ஈஸ்வரன் ஜீவனாக மாறுகின்றான் எனக் கொண்டால்
மறை மொழிகளின் படி ஆத்மா உண்டாவது இல்லை -என்றும் உள்ளவன் எனத் தேறுகிறபடியால் –2-3-3-ஈசனுக்கு ஏற்றத்தாழ்வு -அருளின்மை -2-1-34-ஆகியவை ஏற்படாது –
ஜீவனுடைய பன்னெடுங்கால வினைப்பதொடர்பின் அடியாகப் படைப்பதால் ப்ரஹ்ம ஸூத்ரத்திலும் படைப்புக் காலத்தில் ப்ரஹ்மம் தவிர்த்த வேறில்லை என்பதால் வினையும் ஜீவனும் இல்லை என்று கொள்ள முடியாது
ஏன் எனில் ஜீவன் ஆரம்பம் அற்றது என்று கூறப்பட்டு இருப்பதால் -ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது என்பதே பொருந்தும் -ஜீவர்கள் நாம ரூபங்கள் இல்லாமல் ப்ரஹ்மத்தோடே ஒன்றி இருந்தனர் -என்பதால்
ஆரம்பம் இல்லாத அநாதியான ஜீவர்களின் வினைகளும் பன்னெடும் காலமாகவே தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால் பொருந்தும்
இதுவே வேதத்தாலும் அறுதியிடப்பட்டது
வினைகள் படைப்புக்கு முன் இல்லை எனக் கொள்ளில் ஜீவர்கள் காரணம் இன்றித் துயர் உறுதலும் செய்யும் தீயச் செயல்கள் பலன் அளிக்காது போலும் ஏற்படும்

ததா ப்ரக்ருதே ரப்யநாதிதா ஸ்ருதிபி ப்ரதிபாதிதா –
அஜாமேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் வஹ்நீம் ப்ரஜாம் ஜன யந்தீம் ச ரூபாம் அஜோ ஹ்யேகோ ஜூஷமானே நுசேதே
ஜஹாத்யேநாம் புக்த போகாம ஜோந்ய இதி ப்ரக்ருதி புருஷயோரஜத்வம் தர்சயதி–

இப்படியே ப்ரக்ருதியும் ஆரம்பம் அற்றது -அநாதி என்று வேதங்களால் அறுதிப்படுகிறது
பிறப்பு அற்றதும் -கருப்பு சிவப்பு வெளுப்பு நிறங்கள் கலந்ததுமான ப்ரக்ருதியை பிறப்பற்ற ஒருவன் அனுபவித்துக் கொண்டு அதன் வழி செல்கிறான்
பிறப்பற்ற மற்ற ஒருவன் அதை அனுபவிப்பதில்லை -என்று ப்ரக்ருதி புருஷர் -ஜீவர்களின் பிறப்பின்மை காட்டப்படுகிறது –

——————

80–அஸ்மாந் மாயி ஸ்ருஜதே விஸ்வமேதத் தஸ்மிந் சாந்யோ மாயயா சந்நிருத்த -மாயம் து ப்ரக்ருதிம் வித்யாந் மாயி நந்து மஹேஸ்வரம்
இதி ப்ரக்ருதிரேவ ஸ்வரூபேண விகாராஸ்பத மிதிச தர்சயதி-கௌரநாத் யந்தவதி ச ஜநித்ரி பூத பாவிநீ இதிசா

ப்ரக்ருதியை -மாயாவை -ஏவல் கொள்ளும் பரமாத்மா -மாயி -அந்தப் பிரக்ருதியைக் கொண்டு உலகைப் படைக்கிறான்
வேறொருவன் -ஜீவாத்மா அதில் அடைபடுகிறான்
மாயா என்பது பிரக்ருதியாகவும் மாயி என்பது சர்வேஸ்வரனாகவும் அறியப்படுகிறது
இவ்வாறு பிரக்ருதி தனது நிலை மாறுபாடு அடையக் கூடியதாகக் காணப்படுகிறது
ஸ்ருஷ்டியின் பசுவான மூலப்ப்ரக்ருதி -சமஷ்டி -ஆரம்பமும் முடிவும் அற்றது -ஸ்ருஷ்டியின் பூதங்களை வ்யஷ்டி உண்டாக்குகிறது என அறியப்படுகிறது


ஸ்ம்ருதிஸ் ச
ப்ரக்ருதிம் புருஷஞ்ச ஏவ வித்யாநாதி உபாவபி -பூமிர் ஆபோ அநலோ வாயு கம் -மநோந் புத்தி ரேவச அஹங்கார
இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிர் அஷ்டதா -அபரேயமிதஸ் த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்திமே பராம் –
ஜீவ பூதாம் மஹா பாஹோ யாயேதம் தார்யதே ஜகத்
பிரக்ருதிம் ஸ்வாம் அவஷ்டப்ய விஸ்ருஜாமி புந புந மாயா த்யஷேண ப்ரக்ருதி ஸூயதே ச சராசரம் இத்யாதிகா
ஏவம் ச ப்ரக்ருதேரபி ஈஸ்வர சரீரவத் ப்ரக்ருதி சப்தோ அபி ததாத்ம பூதஸ்ய ஈஸ்வரஸ்ய தத் பிரகார சமஸ்திதஸ்ய வாசக
புருஷ சப்தோ அபி தத் ஆத்மக பூதஸ்ய ஈஸ்வரஸ்ய புருஷ பிரகார சமஸ்திதஸ்ய வாசக –
அத தத் விகாராணமபி தயைவ ஈஸ்வர -ஆத்மா -ததாக வ்யக்தம் விஷ்ணுஸ் ததா அவ்யக்தம் புருஷ கால ஏவச
ச ஏவ ஷோபகோ ப்ரஹ்மந் ஷோப்யஸ் ச பரமேஸ்வர -இதி அத ப்ரக்ருதி பிரகார சமஸ்திதே பரமாத்மநி பிரகார பூத
ப்ரக்ருதி அம்சே விகார பிரகார்யம்ஸோ நியாந்தா நிரவத்ய சகல கல்யாண குணாஸ்ரய ஸத்யஸங்கல்ப
ஏவ ததாச சதி காரண அவஸ்தோபி ச ஏவேதி கார்ய காரணயோர் அநந்யத்வம் சர்வ ஸ்ருதி விரோதஸ் ச பவதி-

ஸ்ம்ருதியும்
ப்ரக்ருதி புருஷன் ஆகியவைகள் ஆரம்பம் அற்றவை என அறிந்து கொள்
நிலம் நீர் நெருப்பு வளி வெளி மனம் புத்தி -மஹான் -அஹங்காரம் பத்து இந்திரியங்கள் ஆகிய எட்டு வகையாகி எனக்கு படைப்பில் துணை நிற்கின்றன
இவற்றின் நின்றும் வேறுபட்டதான ஜீவன் -அதனால் உலகு தாங்கப்படுகிறது என்று உயர்ந்த தோளாய் அறிவாயாக
என்னுடைமையான மூலப் பிரக்ருதியை எட்டு வித வேறுபாட்டை அடைவித்து பலவிதமாக உலகை மீண்டும் மீண்டும் படைக்கிறேன் –
அழியாத வினைத் திட்ப்பமுள்ள என்னால் ப்ரக்ருதியும் -அதிலுள்ள அசையும் அசையாய் பொருள்களும் நிறைக்கப்படுகின்றன என்று சொல்கிறது
இவ்வாறு மூலப்பிரக்ருதி ஈஸ்வரனின் உடலாய் இருக்கும் பண்பால் ப்ரக்ருதி என்னும் சொல்லும் -அதைக்குறிக்கும் சொற்கள் யாவும் -அதின் உயிர்நிலையான ஈஸ்வரனுடைய பிரிவற்ற நிலையைக் குறிக்கும்
அவ்வாறே ஆத்மா புருஷன் -என்ற சொல்லும் அதன் உயிர் நிலையாகவும் அதனுடன் பிரிக்க இயலா நிலை யுடையவனாயும் இருக்கும் ஈஸ்வரனையே குறிக்கும்
அவ்வாறே மஹான் மூலப்ப்ரக்ருதி காலம் ஆத்மா -யாவையும் விஷ்ணுவே -அவரே படைக்க முனபவர் படைப்படுவதும் -அவற்றில் உள்ளுறைபவரும் அவரே
பரமாத்மாவுக்கு அங்கமான ப்ரக்ருதியில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன
ப்ரக்ருதியை அங்கமாக வுடைய பரமாத்மாவின் மாறுபாடு ஏற்படுவதில்லை
இவ்வாறே ஜீவாத்மாவை அங்கமாக உடையனாதலின் அதில் ஏற்படும் குறைபாடுகள் உள்ளிருப்பவனாகவும் அங்கியாகவும் ஏவுவோனாகவும் விளங்கும் குறைபாடற்ற எல்லா நலன்களுக்கும் இருப்பிடமான வழுவாத முனைப்புடைய பரமாத்மாவிற்கு இல்லை
அங்கி-அங்கங்களை யுடையவன்

அதனாலேயே கட் புலனாகாத காரண நிலையாவோனும் அதைக் கருப்பொருளாய்க் கொண்டு கட் புலனாகும் காரியப் பொருளான உலகு முதலியவையாக ஆகுபவனும் ஈஸ்வரனே
இப்படிக் கொள்வதாலேயே காரண காரியப் பொருள்களில் வேறுபாடின்மை மறைக் கொள்கைகளுக்கு உள்ள உடன்பாடு கிடைக்கிறது –

——————–

81–ததேவம் நாம ரூப விபாக அநர்ஹ ஸூஷ்மத சாபந்ந பிரகிருதி புருஷ சரீரம் ப்ரஹ்ம காரணாவஸ்தம் –
ஜகத ததாபத்திரேவ ச ப்ரலய நாம ரூப விபாக விபக்த ஸ்தூல சிதசித் வஸ்து சரீரம் ப்ரஹ்ம கார்யாவஸ்தம் ப்ராஹ்மண
ததாவித ஸ்தூல பாவ ஏவ ஸ்ருஷ்ட்டி இத்யுச்யதே –

கட் புலனாகாத நிலையில் பெயர் உருவ மாறுபாடற்றசேதன அசேதன பொருட்களை தன் உடலாக உடைய ப்ரஹ்மம் காரணம்இவ்வாறு இருக்கும் நிலைக்கே ப்ரளயம் என்று பெயர்இதினின்றும் தோன்றும் கட் புலனாகும் அசேதன பொருட்களை தன் உடலாக உடைய ப்ரஹ்மம் காரியம்இந்தக் கட் புலனாகும் நிலை படைப்பு எனப்படும் –
யதோக்தம் பகவதா பராசரேண-பிரதான பும்ஸோரஜயோ -காரணம் கார்ய பூதயோ-இதி

இதை ஒட்டியே பகவான் பராசரரும் -பிறப்பற்ற மூல பிரகிருதி புருஷர்கள்-இவை காரண கார்யங்களாக ஆகின்றன -என்றார்

தஸ்மாத் ஈஸ்வர பிரகார பூத
சர்வாவஸ்த ப்ரக்ருதி புருஷ வாஸிந ஸப்தா தத் பிரகார விஸிஷ்ட தயா அவஸ்திதே பரமாத்மநி முக்ய தயா வர்த்தந்தே
ஜீவாத்மவாஸி தேவ மனுஷ்யாதி சப்தவத் யதா தேவ மனுஷ்யாதி ஸப்தா தேவ மனுஷ்யாதி ப்ரக்ருதி பரிணாம விசேஷணாம்
ஜீவாத்ம பிரகார தயைவ பதார்த்தத்வாத் பிரகாரிணி ஜீவாத்மநி முக்ய தயா வர்த்தந்தே தஸ்மாத் ஸர்வஸ்ய
சிதசித் வஸ்துந பரமாத்ம சரீரதயா தத் பிரகாரத்வாத் பரமாத்மநி முக்ய தயா வர்த்தந்தே சர்வே தத் வாசகா ஸப்தா —

அவை ஈஸ்வரனுடன் பிரிவற்ற நிலை உடையவையாதலால் இவைகளைக் குறிக்கும் சொற்கள் யாவும் இவ்விருப்பினால் பரமாத்மாவையே உள்ளுறை பொருளாகக் காட்டுகின்றன-தேவ மனிதர்களின் பெயரும் உருவமும் அவற்றின் உள்ளுறையும் ஜீவாத்மாவைக் குறிப்பது போலே
அங்க -அங்கி நிலையினால் எல்லா சேதன அசேதன வஸ்துக்களும் அவற்றின் பெயர் உருவங்களும் ஈஸ்வரனுக்கு உடலாய் இருக்கும் தன்மையால் ஈஸ்வரனையே குறிக்கும் –

————-

82–அயமேவச ஆத்ம சரீர பாவ -ப்ருதக் சித்யநர்ஹ தாராதேய பாவ -நியந்த்ரு நியாமய பாவ -சேஷ சேஷி பாவஸ் ச
சர்வாத்மநா ஆதார தயா நியந்தரு தயா -சேஷி தயா ச ஆப்நோதீதி -ஆத்மா சர்வாத்மநா ஆதேய தயா நியாம்ய தயா சேஷ தயா ச
அப்ருதக் சித்த பிரகாரத்வாத்-அப்ருதக் சித்தம் -ஆகார சரீரம் ஏவமேவஹி ஜீவாத்மந-
ஸ்வ சரீர சம்பந்த ஏவமேவ பரமாத்மந-சர்வ சரீரத்வேந சர்வ சப்த வாச்யத்வம் —

இதுவே உடல் -உயிர்த் தொடர்பு uஎன்பது -தனித்து இயங்கும் தன்மையற்று மற்ற ஒன்றினால் தாங்கப்படும் நிலையுற்று
அதனால் இயக்குவோர் நிலையம் தொடர்பும் பெற்று இருப்பது
எல்லா விதத்தாலும் தாங்குவதாகவும் ஏவுவதாகவும் பணி கொள்வதாகவும் அதின் நின்றும் பிரித்து நிலை யற்றதாகவும் உயிர் உடலுடன் பொருந்தி இருக்கிறது இவ்வாறே பரமாத்மாவும் எல்லாவற்றையும் தனக்கு உடலாகக் கொண்டு இருப்பதால் எல்லாச் சொற்களும் சுட்டிக் காட்டப்படுபவனாகவும் இருக்கிறான்

சேஷன் -இயக்கப்படுவோன் -தன்னை இயக்குவோனுக்காக மகிழ்வுடன் செயல் புரிவோன்
சேஷி -சேஷனைத் தன் விருப்பப்படி இயக்குபவன்-

(சரீராத்ம பாவம்-சர்வாத்மனா ஆப்நோதி -விசேஷ வியாப்தி -தேச கால அவஸ்தா வாசி இல்லாமல் -ஆதாரம் நியாம்யம் சேஷி அப்ருதக் சித்தம் -பிரகாரம்-சர்வ ஸப்த வாஸ்யன் இதனாலேயே-பர்யவசான வ்ருத்தி )

——————

83–ததாஹ ஸ்ருதி கண–சர்வே வேதா யத்பதமாமநந்தி -சர்வே வேதாயத்ரைகம் பவந்தி –(இந்த கட உபநிஷத் ஸ்ருதி -கீதை 2-8 அத்யாயத்திலும் ஸ்லோகம் இவற்றைக் கொண்டே உண்டே )

(ஆபூர்யமாணம சல ப்ரதிஷ்டம் -ஸமுத்ரமாப ப்ரவிஸந்தி யத்வத்.–
தத்வத் காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே-ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ—
৷৷2.70৷৷

எப்படி தானே நிறைந்து இருப்பதாய் ஒரே நிலையில் உள்ள கடலை நதி நீர் அடைகின்றனவோ
அப்படியே சப்தாதி விஷயங்கள் அனைத்தும் இந்திரியங்களை அடக்கிய எவனை அடைகின்றனவோ
அவனே சாந்தியை அடைகிறான் -சப்தாதி விஷயங்களை விரும்புவான் சாந்தி அடைவது இல்லை)

(புருஷ ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா.–
யஸ்ய அந்தஸ் தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்
—-৷৷8.22৷৷

நாரங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமே -அயனமே நாராயணன் -சர்வ ஆராதத்வம் தாரகன் –
எங்கும் வியாபித்து -உள்ளும் புறமும் -ஸர்வ வியாபகத்வம் -ஸர்வ அந்தர்யாத்மா-சரீர ஆத்மா -அந்தர்யாமி -நியமனம்)

இதி தஸ்ய ஏகஸ்ய வாஸ்யத்வா தேகார்த்த வாஸிநோ பவந்தி-இத் யர்த்த
ஏகோ தேவா பஹுதா சந்நிவிஷ்ட
சஹைவ சந்தம் நவிஜாநந்தி தேவா –இத்யாதி
தேவா இந்திரியாணி தேவ மனுஷ்யாதி நாமாந்தாயா மித்யா ஆத்மத்வேந நிவிஸ்ய -சஹைவ சந்தம் –
தேஷாம் இந்திரியாணி மந பர்யந்தாணி ந விஜாநந்தி இத்யர்த்த

(மனஸ் -ஏக ஆஸ்ரயம் அவனுக்கும் இந்திரியங்களுக்கும் -இருந்தாலும் இவை அறிய வில்லையே)

இப் பொருளையே வேதங்களும் கீழ்க் கண்டவாறு பகர்கின்றன
எல்லா வேதங்களும் அடையப்படும் இலக்காக எதை திரும்பத் திரும்ப பறைகின்றனவோ-எல்லா வேதங்களும் எந்த ஒருவனிடம் ஓன்று படுகின்றனவோ
அந்தப் ப்ரஹ்மம் ஒன்றே மெய்ப்பொருளாக விளங்குவதால் சொற்கள் யாவும் ஒரே பொருளை யுடையவை யாகின்றன என்பது பொருள்
ஒரே தேவன் பலவாக உள்ளுறைகிறான் -அவனை உடலுறையும் அறி புலன்கள் அறிவதில்லை
இங்கு தேவா என்பது மனத்துடன் சேர்ந்த ஞான இந்திரியங்கள்
தேவன் மனிதன் முதலிய சேதனப் பொருள்களில் உள்ளுறைவோனாக ஆத்மாவினுள் இருக்கும் அவனை அந்த ஆறு புலன்களும் அறிவதில்லை என்பது பொருள்

ததா ச பவ்ராணிகாநி வசாம்சி
நதா ஸ்ம சர்வ வசஸாம் பிரதிஷ்டா யத்ர ஸாஸ்வதீ (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-வாஸ்யேஹி வசச பிரதிஷ்டா காரணம் பூர்வம் வசஸாம் வாஸ்ய முத்தமும் -(ஜிதந்தே )
வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வித்யா –இத்யாதீ நி ஸர்வாணி ஹி வாஸாம்சி ச சரீராத்ம விஸிஷ்ட -மாந்தர்யாமிணமேவ ஆசஷதே–
ஹந்த ஹபீமா திஸ் ரோதேவதா அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி இதி ஹி ஸ்ருதி –

அவ்வாறே புராணம் உரைப்பவர்களும் -எல்லாச் சொற்களுக்கும் பொருளாய் -அதன் மெய்ப்பொருளாய் நிலையாக விளங்குவோனை நாங்கள் வணங்குகிறோம் -என்றார்கள்
சொற்களின் முடிவு பொருளால் ஆகிறது -செயல்களுக்கு எல்லாம் முதல் காரணமும் -சொற்களுக்கு எல்லாம் பொருள் முடிவும்
வேதங்கள் யாவற்றாலும் அறியப்படுபவன் யானே என்றவாறு சொற்கள் யாவும் உருவ அமைப்பொடு கூடிய உயிரைக் காட்டி அவ்வாத்மாவில் உள்ளுறையும் பரமாத்மாவைக் காட்டி பொருள் முடிவு பெறுகின்றன
என்னே தானே நிலம் நீர் தீ இவற்றின் உட் புகுந்து பொருள்களுக்கு பெயர் உருவங்களைக் கொடுக்கிறேன் என்று வேதம் கூறுகிறது-

ததா ச மாநவம் வச–பிரசாசிதாரம் ஸர்வேஷா மணீயாம் ச மணீயசாம் ருக்மாபம்-ஸ்வப்ந தீ கம்யம் வித்யாத் து புருஷன் பரம்
அந்த பிரவிஸ்ய-அந்தர்யாமிதயா ஸர்வேஷாம் பிரசாசிதாரம் -நியந்தாரம் அணீயாம் ச ஆத்மாந க்ருத்ஸ்ரஸ்யா சேதநஸ்ய வ்யாபகதயா
ஸூஷ்ம பூதா தேஷாம் அபி வ்யாபகத்வாத் தேப்யோபி ஸூஷ்ம தர இத்யர்த்த ருக்மாப-ஆதித்ய வர்ண –
ஸ்வப்ந தீ கம்யம் ஸ்வப்ந கல்ப புத்தி ப்ராப்யம் விசத தம ப்ரத்யக்ஷதாபந்ந அநு த்யாநை கல்ப்ய-இத்யர்த்த –
ஏநமே கே வதந்த் யக்நிம் மருதோநய ப்ரஜாபதிம் இந்திரமேக பரே ப்ராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம் இதி ஏகே வேதா இத்யர்த்த
உக்தரீத்யா பரஸ்யைவ ப்ரஹ்மண-சர்வஸ்ய ப்ரசாசித்ருத்வேந சர்வ அந்தராத்மதயா ப்ரவிஸ்ய அவஸ்திதத்தவாத்
அஞ்ஞாய தயோபி ஸப்தா சாஸ்வத ப்ரஹ்ம சப்தவத் தஸ்யைவ வாசகா பவந்தி இத்யர்த்த –

பிறகு மனுவின் வாக்யமும்
பொருள்கள் யாவற்றினுள்ளும் நிலை பெற்று ஆள்பவனாகவும்
அணு அளவிலான பொருள்களையும் விட அணுவாய் இருப்பவனும்
பொன்னென ஒளிர்பவனும்
ஞானம் என்னும் உட் கண்ணால் -நம்மால் -கனவில் காண்பது போல் காணப்படக் கூடியவனுமான
பரம புருஷன் உள்ளுறைந்து
எல்லாவற்றையும் ஆள்பவன் -என்று கூறுகிறது –

பிராணிகளுக்கு உடல் முழுவதும் நீக்கமற உயிர் நிறைந்து இருப்பதால் ஆத்மா அணு அளவினன்
அவ்வாத்மாவின் உள்ளும் பரம புருஷன் புகுந்து நிறைவதால் சேதன அசேதன பொருட்களை விட அணுவள வினன் என்பது பொருள் –
கதிர் ஒளி கனவில் மனத்திற்குக் காணப் படுவது போல்
தெள்ளத் தெளிவாக நேரில் காண்பது போல் த்யானத்தில் காணத் தக்கவன் என்பது பொருள்
இவனை நெருப்பு என்றும் காற்று என்றும் பிரமன் என்றும் இந்திரன் என்றும் உயிர் மூச்சு என்றும் கூறப்படுபவனான
நிலையான மேலான ப்ரஹ்மம் என்று வேதங்கள் கூறுகின்றன -என்று பொருள்

பர ப்ரஹ்மம் எல்லாப் பொருட்களிலும் உள்ளுறைந்து அவற்றை ஆட்சி செய்வதால் தீ முதலிய சொற்கள் அவற்றுள் நிலை பெற்று இருக்கும் ப்ரஹ்மத்தையே குறிக்கும் சொற்களே என்பது இங்கு பொருள்

ததாச ஸ்ம்ருத் யந்தரம்
யே யஜந்தி பித்ருந் தேவாந் ப்ராஹ்மணாந் சஹு தாசநாந் சர்வ பூத அந்தராத்மநாம் விஷ்ணுமே வ யஜந்தி தே இதி
பித்ரு தேவ ப்ராம்ஹண ஹுதாசநாதி ஸப்தா தந் முகேந ததந்தராத்ம பூதஸ்ய விஷ்ணோ ரேவ வாசகா இத்யுக்தம் பவதி —

அவ்வாறே ஸ்ம்ருதிகளிலும்
பித்ருக்களை தேவர்களை அக்னியுடன் சேர்ந்த அந்தணர்களைக் குறித்து யாகம் செய்பவர்கள் எல்லாப் பொருட்களுக்கும் உள்ளுறை பவனாகிய விஷ்ணுவையே குறித்து யாகம் செய்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது
பித்ருக்கள் அந்தணர் அக்னி ஆகிய சொற்கள் தத் தத் முகமாக தமக்கு உள்ளுறைபவனான விஷ்ணுவையே குறிக்கும் சொற்கள் என்பதே சரியான கொள்கை –

—————————

84–அத்ரேதம் சர்வ ஸாஸ்த்ர ஹ்ருதயம் -ஜீவாத்மாந ஸ்வயம் அங்குசித அபரிச்சின்ன நிர்மல ஞான ஸ்வரூபா சந்த-
கர்ம ரூப அவித்யா வேஷ்ட்டிதா-தத் காம அநு ரூப ஞான சங்கோச மாபந்நா ப்ரஹ்மாதி ச தம்ப பர்யந்த விவித விசித்ர
தேஹேஷு ப்ரவிஷ்டா தத் தத் தேஹோசித லப்த ஞான பிரசரா தத் தத் தேஹாத்ம அபிமாந தத் உசித கர்மாணி குர்வாணா-
தத் அநு குண ஸூக துக்கோப போக ரூப சம்சார ப்ரவாஹம் பிரதிபத்யந்தே -ஏதேஷாம் சம்சார மோசனம்
பகவத் பிரபத்தி மந்தரேண நோபபத்யதே இதி –

(கர்மாவும் அவித்யாவும் பகவத் நிக்ரஹ ரூபமே-வேஷ்ட்டிதா-மூடப்பட்டு)

ஸாஸ்த்ரங்கள் யாவும் கூறும் மையக் கருத்துப் பொருள் இதுவேயாகும்
ஜீவாத்மாக்கள் தன்னடையே குறைவற்ற அளவு கடந்த அப்பழுக்கு அற்ற ஞானத்தை யுடையவைகள்
தன் செயல்களினால் ஏற்பட்ட வினைப் பயனால் அறியாமை சூழப்பட்டு அவ் வினைகளுக்கு ஏற்ப ஞானக் குறைவின் பலனாக
பிரமன் முதல் புல் ஈறான பலவிதமான உருவமுடைய உடல்களில் நுழைந்து அவ் வமைப்புகளில் விருப்பம் கொண்டு அதற்கேற்ற செயல்களைச் செய்து கொண்டு அதனடியாய் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டு முடிவற்ற பிறவிச் சுழலில் தடுமாறுகிறது
இப்படிப்பட்ட ஜீவன்களுக்கு பிறவிச் சுழலில் நின்றும் விடுபட பகவானிடம் சரண் அடைவது தவிர வேறு வழி இல்லை –

——————-

85–ததர்த்தம் பிரதம மேஷாம் தேவாதி பேத ரஹித ஞாநைக ஆகார தயா ஸர்வேஷாம் சாம்யம் ப்ரதிபாத்ய –
தஸ்யாபி ஸ்வ ரூபஸ்ய பகவச் சேஷதைக -ஸ்வரூபைக ரசதயா பகவதாத் மகதாமபி ப்ரதிபாத்ய -பகவத் ஸ்வரூபம்
ச ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதாந தயா சகல இதர விஸஜாதீயம் -அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண ஆஸ்ரயம் –
ஸ்வ சங்கல்ப ப்ரவ்ருத்த ஸமஸ்த சித் அசித் வஸ்து ஜாத தயா ஸர்வஸ்ய ஆத்ம பூதம் ப்ரதிபாத்ய
தத் உபாஸநம் சாங்கம் தத் ப்ராபகம் ப்ரதிபாத யந்தி சாஸ்த்ராணீதி —

அதன் பொருட்டு -முதற் கண் தேவன் முதலான வேறுபாடுகளுள்ள ஜீவன்கள் அனைத்தும் ஞானத்தளவில் ஒரே படிப்பட்டவையாய் இருத்தலைக் கூறி
அந்த ஞான உருவிற்கு இறைவனுக்கு அடிமைப்பட்டு இருத்தலே இயல்பான பண்பு என்றும்
இறைவனையே தன் ஆத்மாவாக உடையவை என்றும் கூறி
இறைத் தன்மை தீயக் குணங்கள் யாவற்றுக்கும் எதிர்த்தட்டாய் இருத்தலையும் நற் பண்புகள் யாவற்றுக்கும் உறைவிடமாய் இருத்தலையும்
தன்னை ஒழிந்த மற்றை யாவற்றின் நின்றும் மாறுபட்டு இருத்தலையும்
உயர்வற உயர் நலமுடையதாய் இருத்தலையும்
தன் வழுவாத வினைத் திட்பத்தால் சேதன அசேதன பொருட்கள் யாவினுள்ளும் ஆத்மாவாய் விளங்குவதையும் விளக்கி
அவனைக் குறித்த தியானத்தை அதன் அங்கங்களுடன் செய்தலே அவனை அடையும் நெறி என்பதையே சாஸ்திரங்கள் பகர்கின்றன

ஸத்ய ஸங்கல்பம் -ஸத்ய காமம் –மாறா விருப்பம் நிறைவேற்றுவதற்கான வினைத் திடபம்

———————

86–யதோக்தம் -நிர்வாணமய ஏவாயமாத்மா ஞாநமய அமல -துக்க அஞ்ஞான மலா தர்மா ப்ரக்ருதேஸ்தே நசாத்மந
ப்ரக்ருதி சம்சர்க்கக் க்ருத கர்ம மூலத்வாத் ந ஆத்ம ஸ்வரூப ப்ரயுக்தா தர்மா
இத்யர்த்த ப்ராப்த அப்ராப்த விவேகேந ப்ரக்ருதி ரேவ தர்மா இத்யுக்தம் –

அவ்வாறே இந்த ஆத்மா வினைகளின் தொடர்பு அற்றவன் -ஆனந்த மயமானவன் -ஞான மயமானவன் தூய்மை யானவன் -துன்பம் அறியாமை ஆகிய கறைகள் உடல் தொடர்பால் மட்டுமே ஏற்படுகின்றன
இவை ஆத்மாவிற்குக் கிடையாது -உலகின் உடல் தொடர்பால் செய்யப்பட வினை விளைவாகவே இவை ஏற்படுகின்றன -ஆத்மாவின் இயல்பினால் அன்று -என்று பொருளாடும்
இதற்கு ஏற்படும் விளைவுகள் உலகின் இயல்பு என்பது வெளிப்படை –

—————————

87–வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணேகவி ஹஸ்திநி ஸூநி ஸைவ ஸ்வ பாகே ச பண்டித சம தர்சிந –ஸ்ரீ கீதை -5–18-இதி
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூப ப்ரக்ருதி ஸம் ஸ்ருஷ்டஸ்ய ஆத்மந ஸ்வரூப விவேசநீ புத்தி ஏஷாம் தே பண்டிதா-
தத் ப்ரக்ருதி விசேஷ வி யுக்த ஆத்ம யாதாத்ம ஞான வந்த -தத்ர தத்ர அத்யந்த விஷம ஆகாரே வர்த்த மாநம் ஆத்மாநம்
சமாநா காரம் பஸ்யன்தீதி சம தர்சிந இத்யுக்தம்
ததிதமாஹ-இஹைவ தைர்ஜித ஸ்வர்க்கோ ஏஷாம் சாம்யே ஸ்திதம் மந நிர்தோஷம் ஹி சமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தேஸ்திதா –
இதி நிர்தோஷம் தேவாதி ப்ரக்ருதி விசேஷ ரூப சம்சர்க்க தோஷ ரஹிதம் ஸ்வரூபேணா வஸ்திதம் சர்வம் ஆத்ம வஸ்து
நிர்வாண ரூப ஞான ஏக ஆகாரதயா சமம் இத்யர்த்த —

கல்வியும் அடக்கமும் நிறைந்த அந்தணன் பசு யானை நாய் அதை தின்னும் சண்டாளன் -இவர்களிடம் -ஆத்மாக்களிடம் -கற்றறிந்தோர் சமமான நோக்குடையவர்களாய் இருப்பார்கள்
தேவ விலங்கு மனித தாவர உடல்களால் உலகுடன் பிணைக்கப்பட்டு இருக்கும் ஆத்மாக்களை அவ்வுடல்களில் நின்றும் பகுத்து அறியும் இயல்புடையவர்களே பண்டிதர் -கற்றறிந்தோர் -சம நோக்குடையவர் -எனப்படுவர்
உலகியலின் தாழ்மை நீக்கி ஆத்மாவின் மெய்யியல் யறிந்து பலவகையான ஏற்றத் தாழ்வுகளுடன் கூடியிருக்கும் ஆத்மாக்களை ஓரு படிப்பட்டவர் என்று அறிவோரே சம நோக்குடையவர் எனப்படுவர்

எந்த ஞானிகள் மனத்தில் ஆத்மாக்கள் யாவும் சமம் என்ற எண்ணம் நிறைந்து இருக்கிறதோ அவர்கள் இவ்வுலகிலேயே துறக்கத்துக்கு ஈடான நிலையை அடைகின்றனர்
தேவன் முதலான உடல்களில் நின்றும் நீங்கிய ஆத்மா குற்றம் அற்றது
ஆத்மாக்கள் யாவும் தம் மெய்யுருவில் ஆனந்தத்தையும் ஞானத்தையும் சமமாக யுடையவர்கள் என்பது தெளிவு

சண்டாளன் -பிறவி செயல் இவற்றால் இழிந்து கொடூரமான செயல்களையே செய்பவன்

—————-

88–தஸ்யைவம் பூதஸ்ய ஆத்மந பகவஸ் சேஷதகை ரஸதா தந் நியாம்யதா ததேக ஆதாரதா ச தத் தத் சரீர –
தத் தநு ப்ரப்ருதிபிஸ் சப்தை-தத் சாமாநாதி கரண்யேந ச ஸ்ருதி ஸ்ம்ருதி இதிகாச புராணாதிஷு
ப்ரதிபாத்யதே இதி பூர்வமேவ யுக்தம் —

இந்நிலையை யுடைய ஆத்மா பகவானுக்கு அடிமைப்பட்டு இருப்பவனாகவும் -அவனால் ஏவப்படுபவனாகவும் -அவனையே பற்றுக்கோடாக யுடையவனாயும் இருத்தலால்
அவ்வுடல் அமைப்புக்கள் அந்த ஸாமா நாதி கரணத்தால் பகவானையே காட்டுகின்றன என்பது
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களால் அறுதியிடப்பட்டு இருக்கிறது என்பது முன்பே விளப்பட்டு விட்டது

———

89–தைவிஹ்யேஷா குணமயி மம மாயா துரத்யயா
மாமேவயே பிரபந்த்யந்தே மாயா மேதாம் தரந்திதே –ஸ்ரீ கீதை -7-14–இதி
தஸ்யை தஸ்ய ஆத்மந கர்ம க்ருத விசித்ர குண மய ப்ரக்ருதி ஸம் சேர்க்க ரூபாத் சம்சாராத் மோக்ஷ
பகவத் பிரபத்தி மந்தரேண நோபபத்யதே
இத்யுக்தம் பவதி நாந்யப் பந்தா அயநாய வித்யதே –இத்யாதிபி ஸ்ருதி பிஸ் ச —

என்னுடைய அலகிலா விளையாட்டால் விளைந்த -முக் குணம் நிரம்பிய இந்தப் பிரக்ருதி மாயா -கடத்தற்கு அரியது
எவர்கள் என்னயே சரணம் அடைகிறார்களோ -பிரபத்தி செய்கிறார்களோ -அவர்கள் இந்தப் பிரக்ருதியைக் கடக்கின்றனர்
செய்த வினைகள் முக்குணத் தொடர்பு அவற்றின் நின்றும் கிட்டும் பல படித்தான பிரகிருதியின் தொடர்பு ஆகிய பிறவிச் சுழலில் இருந்து விடுதலை பகவானைச் சரண் அடைவதால் அன்றி -பிரபத்தி செய்வதால் அன்றி-மற்ற ஒன்றால் கிட்டாது எனக் கூறப்படுகிறது
மறை மொழியும் பரமாத்மாவை அடைய வேறு வழி கிடையாது எனப் பகர்கிறது-

————

90—மயாததமிதம் சர்வம் ஜகதவ்யக்த மூர்த்திநா
மத்ஸ்தாநி சர்வ பூதாநி ந சாஹம் தேஷ்வ வஸ்திதா –ஸ்ரீ கீதை
ந ச மத் ஸ்தாநி பூதாநி பாஷ்யமே யோகம் ஐஸ்வர்யம்
இதி சர்வ சக்தி யோகாத் ஸ்வ ஐஸ்வர்ய வை சித்ரியமுத்தம்
ததாஹ-விஷ்டப்யாஹமீதம் க்ருத்ஸனமேகாம் சேந ஸ்திதோ ஜகத் இதி
அநந்த விசித்ர மஹா ஆச்சர்ய ரூபம் ஜகத் மம அயுதாம் சாம்சேந ஆத்ம தயா பிரவிஸ்ய
சர்வம் மத் சங்கல்பேந விஷ்டப்ய அநேந ரூபேண அநந்த மஹா விபூதி அபரிமிதோதோர குண சாகர
நிரதிசய ஆச்சர்ய பூத ஸ்தித அஹம் -இத்யர்த்த –

கட் புலனாகாத என்னால் வியாபிக்கப் பட்ட இவ்வுலகும் பிராணிகளும் என்னிடத்தில் இருக்கின்றன -என்னால் தாங்கப்படுகின்றன -நான் அவைகளால் தாங்கப்படுவதில்லை –
மேலும் இயற்கையாகவே வருகின்ற அளவற்ற செல்வமுடைய என்னை இந்தப் பிராணிகள் அறிவதில்லை
இவ்வாறு ஈஸ்வரனின் எல்லா வல்லமையும் எல்லா ஐஸ்வர்யமும் பெற்றுள்ள ஆச்சர்யமான தன்மை விவரிக்கப் பட்டன
அவ்வாறு இவ்வுலகு முழுவதையும் என்னுடைய ஒரு சிறு பகுதியாலேயே தாங்குகிறேன்
முடிவற்ற ஆச்சர்யமான உருவுடைய இவ்வுலகு எனது சக்தியின் பத்தாயிரத்தின் ஒரு பகுதியின் ஒரு சிறு பகுதியாலேயே உயிரின் உயிராய் நிறைக்கப்பட்டு யாவும் எனது வழுவாத வினைத் திட்பத்தினாலே தாங்கப்படுகின்றன
எல்லை யற்ற ஆச்சர்யமுடைய இவ்வுலகையும் உயிர்களையும் எல்லையற்ற வள்ளன்மை யுடைய நான் செல்வமாகக் கொண்டிருக்கிறேன் என்பது பொருளாகும் –
ஐஸ்வர்யம் -செல்வம்
யோகேஸ்வரம் -இயற்கையாகவே செல்வங்களை உடையனாய் இருத்தல் –

————

91–ததிதமாஹ-ஏகத்வே சதி நாநாத்வம் நாநாத்வே சதி ஸைகதா -அசிந்த்யம் ப்ரஹ்மணோ ரூபம் கஸ்தத் வேதிதும் அர்ஹதி –
இதி பிரசாசி த்ருதவேந ஏக ஏவ சந் விசித்ர சித்சித் வஸ்துஷு அந்தராத்மதயா பிரவிஸ்ய–தத் தத் ரூபேண
விசித்ர பிரகார விசித்ர கர்ம காரயந் நாநா ரூபதாம் பஜதே-
ஏவம் ஸ்வ அல்பாம்சேந து ஸர்வாஸ்சர்யமயம் நாநா ரூபம் ஜகத் தத் அந்தராத்மதயா பிரவிஸ்ய
விஷ்டப்ய நாநாத்வேநா வஸ்திதோபி சந்
அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண -ஸர்வேச்வரேச்வர பர ப்ரஹ்ம பூத புருஷோத்தம நாராயண
நிரதிசய ஆச்சர்ய பூத நீல தோய்த்த சங்காச புண்டரீக தல அமலாய தேஷண-சஹஸ்ராம்ஸூ சஹஸ்ர கிரண
பரம வ்யோம்நி தத் அக்ஷரே பரமே வ்யோமந் -இத்யாதி ஸ்ருதி சித்த ஏக ஏவ அதிஷ்டதே —

ஒன்றாய் இருந்தும் பலவாகவும் பலவாறு இருந்தும் ஒன்றாகவும் திகழ்வதான சிந்தனைக்கு எட்டாததுமான ப்ரஹ்மத்தின் வடிவை யாரே அறியத்தக்கவர் –
ஆச்சர்யமான சேதன அசேதன பொருள்களில் உள் நுழைந்து அந்தந்த ஆச்சர்யமான உருவங்களைக் கொண்டு விசித்ரமான செய்கைகளை செய்வித்துத் கொண்டு ஒன்றாகவே இருந்து கொண்டு பலபடி பட்டதாகத் தோன்றும் யாவற்றையும் ஆள்கின்றனனாக -ப்ரஹ்மம் -விளங்குகிறான்-தனது அற்ப ஒரு சிறு பகுதியால் பல ஆச்சர்யங்கள் நிறைந்த பலபடிப் பட்ட உலகை உள்ளுறைந்து தாங்கிக் கொண்டு இருப்பவனாய்
எல்லையற்ற நற் குணங்களுடையவனாய் -ஈஸ்வரர்கள் யாவருக்கும் ஈஸ்வரனாய் -தேவாதி தேவனாய் பர ப்ரஹ்மமாய் எல்லையற்ற ஆச்சர்யங்கள் யுடையவனாய் அளவற்ற ஒளியுடையோனாய் நீருண்ட மேகம் போன்ற மேனியனாய் தாமரை இதழ் ஒத்த கண்களை உடையவனாய் புருஷோத்தமனான நாராயணன் பரமபதத்தில் ஏகாந்தமாக உளுந்து அருளியிருக்கிறான்
வேதங்களில் ஆழ்ந்த கருத்தாய் விளங்குபவன் -மறைந்த முழைகளில் இருப்பவன் பரம பதத்தில் இருக்கிறான் –
அழிவற்ற அவன் பரமபதத்தில் விளங்குகிறான் -இவ்வாறு ஸ்ருதிகளால் தேறிய பொருளாய் விளங்குவோன் ஒருவனே –

ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்ய கஸ்ய சித் பி வஸ்துந ஏக ஸ்வபாவஸ்ய -ஏக கார்ய சக்தி யுக்தஸ்ய –
ரூபாந்தரயோக ஸ்வ பாவாந்தர யோக -சக்தி யந்திர யோகஸ் ச நகடதே தஸ்ய ஏதஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண-
சர்வ வஸ்து விஸாஜாதீய தயா சர்வ ஸ்வாபவத்வம் சர்வ சக்தி யோகஸ் சேதி ஏகஸ்யைவ விசித்ர அநந்த நாநா ரூபதா
ச புநரபி அநந்த அபரிபித ஆச்சர்ய யோகேந ஏக ரூபதா ச ந விருத்தா இதி வஸ்து மாத்ர சாம்யாத்
விரோத சிந்தந யுக்தா இத்யர்த்த –

ப்ரஹ்மம் தவிர்த்த மற்ற எப்பொருளுக்கும் ஒரு படிப் பட்ட பண்பு -ஒரு முகமான செயல் திறன் ஒரே உரு மட்டும் உண்டு -மாறாக மற்றோர் உருமாறு தன்மையும் மாறுபட்ட பண்புகளும் வேறு பட்ட செயல் திறனும் ஏற்படுதல் இல்லை தம்முள் மாறுபட்ட பல படிப்பட்ட பொருள்களின் பண்புடையவனாயும் செயல் திறன் யாவையும் யுடைய ஒன்றாய் எல்லை யற்ற பற்பல ஆச்சர்யமான உருக்கள் உள்ளதாய்
இப்படிப்பட்ட பண்புகள் அனைத்தையும் தன் எல்லையற்ற ஆச்சார்யமான இருப்பு நிலையால் தன் யோக சக்தியால் ப்ரஹ்மம் பெற்று இருத்தல் மாறுபாடு உடையது அல்ல –
பொருட்களில் மாறுபாட்டால் மட்டும் ப்ரஹ்மம் மாறுபாடு உடையது எனக் கொள்ளத் தகாது –

யதோக்தம்
சக்த்ய சர்வ பாவாநாம் அசிந்ய ஞான கோஸரா யாதோதோ ப்ரஹ்மணஸ் தாஸ்து சர்காத்யா பாவ சக்தய பவந்தி
தபாதாம் ஸ்ரேஷ்ட பாவ கஸ்ய யதோஷ்ணதா–ஸ்ரீ விஷ்ணு புராணம் –
இதி -ஏதத் யுக்தம் பவதி -ஸர்வேஷாம் அக்னி ஜலாதீநாம் பாவாநாம் ஏகஸ்மின்நபி பாவே த்ரஷ்டைவ சக்தி தத் விஸாஜாதீய
பாவாந்தரேபி இதி ந சிந்தயிதும் யுக்தா ஜலாதவ் அத்ருஷ்டாபி தத் விசாஜாதீயே பாவகே பாஸ்வரத்வ உஷ்ணத்வாதி சக்தி
யாதாருச்யதே ஏவமேவ சர்வ வஸ்து விஸாஜாதீயே ப்ரஹ்மணி சர்வ சாம்யம் நாநு மாதும் யுக்தம்
இதி அத விசித்ர அநந்த சக்தி யுக்தம் ப்ரஹ்ம இத்யர்த்த ததாஹ
ஜெகதே தந் மஹா ஆச்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத் மந தேநாஸ்சர்ய வரேணாஹம் பவதா கிருஷ்ண சங்கத்தை இதி –ஸ்ரீ பாகவதம் –

மேலும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்
தவசிகளில் சிறந்தவரே -மைத்ரேயரே -தீ நீர் போன்றவற்றில் அவற்றுக்கு என சிறப்பான பண்புகள் இருப்பது போல் நம் மனதிற்கு எட்டாத திறமைகள் யாவும் உடையதாயும் -அவ்வாறே ஆக்கல் அளித்தல் அழித்தல் திறன்களை யுடையதாயும் இருத்தல் ப்ரஹ்மத்திற்கே உரிய பண்பு -என்று கூறப்பட்டு உள்ளது
தீ நீர் போன்றவற்றிற்கு ஒவ்வொரு சிறப்புத் தன்மைகள் இருக்கின்றன
ஆயின் அவற்றின் நின்றும் வேறுபட்ட பொருள்களின் பண்புகள் அவற்றில் காணக் கிடைப்பதில்லை
நீருக்கு அதன் பண்பின் நின்றும் ஒளி விடும் திறன்
இல்லை -அவ்வாறே ஒளிர்தல் வெப்பமடைதல் எனும் பண்புகளை யுடைய தீயில் நீரின் பண்பு காணப்படுவதில்லை
ஆயின் ப்ரஹ்மம் ஒன்றில் மட்டும் இது போன்ற எல்லாப் பொருள்களின் பண்புகளும் திறன்களும் காணப்படும்
அதாவது -விசித்ரமான பண்புகளை யுடையது ப்ரஹ்மம் என்பது விளங்கும்
அவ்வாறே அக்ரூரரும் நம்பி மூத்த பிரானையும் கிருஷ்ணனையும் கோகுலத்தில் நின்றும் அழைத்துச் செல்லுகையில் -ஸ்ரீ மத் பாகவதம் -பல ஆச்சர்யமான உருக்களுடைய இவ்வுலகு உன் உரு -அந்த ஆச்சர்யமான உன் உருவில் கண்ணா நான் கலந்தேன் -என்றார்

————-

92-ததே தத் நாநாவித அநந்த ஸ்ருதி நிகர -சிஷ்ட பரிக்ருஹீத தத் வ்யாக்யான பரிஸ் ஸ்ரமாத் அவதாரிதம்
ததாஹி -பிரமாணாந்தரா பரி த்ருஷ்ட -அபரிமித பரிணாம-அநேக தத்வ நியத க்ரம விஸிஷ்டவ்
ஸ்ருஷ்ட்டி ப்ரலயவ் ப்ராஹ்மண அநேக விதா ஸ்ருதயோ வதந்தி

அப்படிப்பட்ட இது -ப்ரஹ்மம் -சான்றோர் களால் கைக் கொள்ளப் பட்ட எல்லை யற்ற பலபடிப்பட்ட வேதங்களின் திரள் கருத்தாய் அவர்களுடைய உரை நன்கு ஆராய்ந்து நிறுவப் பெற்றதுஅவ்வாறே வேதங்கள் தவிர்த்த மற்ற மெய்யுரைகளால் அறியப்பட முடியாததாயும் -எல்லையற்ற பரிணாமம் யுடையதாயும் பல தத்வங்களின் ஒழுங்கான விதி முறைகள் நிறைந்ததாயும் உள்ள ஆக்கல் அளித்தல் அழித்தல் தொழில்களைச் செய்யும் ப்ரஹ்மம் பலவிதமாக பல வேதங்களில் சொல்லப்படுகிறது –


நிரவத்யம் -நிரஞ்சனம் -விஞ்ஞானம் -ஆனந்தம் -நிர்விகாரம் -நிஷ்க்ரியம் -சாந்தம் -நிர்குணம் -இத்யாதிகா
நிர்குணம் ஞான ஸ்வரூபம் ப்ரஹமேதி காஸ்சந ஸ்ருதயோ அபி ததபி

குற்றமின்மை –தனித்தன்மை நிறைந்த அறிவுடைமை ஆனந்தமுடைமை மாறுபாடின்மை பிளவு படாமை செயலின்மை அமைதியுடைமை தீய பண்புகள் அற்ற தன்மை ஆகிய தீய குணங்கள் அற்ற அறிவுருவானது ப்ரஹ்மம் என்று சில வேதங்கள் மொழிகின்றன

நேஹ நாநாஸ்தி கிஞ்சன ம்ருத்யோஸ் ச ம்ருத்யு மாப்நோதி ய இஹ நாநேவ பஸ்யதி
யத்ரத்வஸ்ய ஸர்வாத்மைவாபூத் தத்கேந கம்பஸ்யேத் தத்கேந கம் விஜாநீயாத்–இத்யாதிகா
நாநாத்வ நிஷேதவாதிந்ய சாந்தி காஸ்சந ஸ்ருதய

(நிரவத்யம் –கர்ம சம்பந்தம் அற்றது –நிரஞ்சனம்-கர்ம பல சம்பந்தம் அற்றது-நிஷ்க்ரிய-அதனால் நிர் அயவவம் )

(ஸாஸ்த்ர ஞானமும் ஞான பலனும் ஷாந்திக்கு ஹேது -கிரியைகளும் கிரியைகளின் பலமும் அஷாந்திக்கு ஹேது)

பலவாகத் தோன்றும் எதுவும் இல்லை -இதைப் பலவாகக் காண்பவன் அழிவின் நின்று மீண்டும் அழிவையே அடைகிறான்
இங்கு உள்ள பொரு ட் கள் யாவும் அவனே -அதுவே என்று இருக்கையில் அதை எவ்வாறு பிரித்துப் பார்க்க முடியும் எவ்வாறு பிரித்து உணர -அறிய முடியும் -என்று மறுத்துக் கூறும் பல சொற்களும் சில வேதங்களில் இருக்கின்றன –

யஸ் சர்வஞ்ஞ சர்வவித் யஸ்ய ஞான மயம் தப ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமாநி க்ருத்வாபி வதந் யதாஸ்தே –
சர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத் புருஷா ததி-

எல்லாம் அறிந்தவன் -எல்லாவற்றிற்கும் அறிவானவன் -அறிவையே தவமாக -நெறியாக -உடையவன் -பொருட்கள் யாவற்றிற்கும் பெயர் உருவங்களைக் கொடுப்பவன் -மின்னொளி பெற்ற பரம புருஷனிடம் இருந்து -கால அளவுகள் -நிமிடங்கள் -தோன்றின

அபஹத பாப்மா விஜரோ வி மிருத்யு விசோகோ விஜிகத்ஸ்ஸோபிபாச சத்யகாம ஸத்யஸங்கல்ப இதி சர்வஸ்மிந்
ஜகதி ஹேய தயா அவகதம் சர்வம் குணம் ப்ரதிஷித்ய-நிரதிசய கல்யாண குண அநந்த்யாம்
சர்வஞ்ஞதாம் சர்வ சக்தி யோகம் சர்வ நாம ரூப வியாகரணம் ஸர்வஸ்ய ஆதாரதாம் காஸ்சந ஸ்ருதய ப்ருவதே

பாபங்கள் அற்றது -கிழத்தன்மை அற்றது அழி வற்று துயர மற்று பசியற்று தாகமற்று நிலை பெற்ற வினைத் திட்பம் யுடையவனாய் -அடைய வேண்டிய தேவைகள் ஏதும் அற்றவனாய்என்றும் உலகின் தீய குணங்களுக்கு எதிர்த்தட்டாய் -நற் குணங்கள் யாவும் நிறைந்தவனாய் -அளவற்ற நற் குணக் கடலாய் -யாவும் நிறைந்தவனாய் -யாவும் அறிந்தவனாய் -எல்லாம் அறிந்தவனாய் எல்லாவற்றிற்கும் பெயர் உருவம் கொடுப்பவனாய் -யாவற்றிற்க்கும் பற்றுக் கோடனாய் என்று சில வேத வாக்யங்கள் கூறுகின்றன –

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலாநி-
ஐததாத் மியமிதம் சர்வம் ஏகஸ்மிந் பஹுதாவிஜாரா இத்யாதிகா
ப்ரஹ்ம ஸ்ருஷ்டம் ஜகத் நாநாகாரேம் ப்ரதிபாத்ய தத் ஐக்யம் ச ப்ரதிபாத யந்தி காஸ்சந ஸ்ருதய

இவை யாவும் ப்ரஹ்மமேஅது இவற்றைப் படைத்து அழித்து காத்தலைச் செய்வதால் இவை யாவும் ஆதாரமாக உடையது -இவ்வாறு ப்ரஹ்மத்தால் படைக்கப்பட்ட இவ்வுலகு பலவிதமாக இருக்கிறது போன்றசில வேத மொழிகள் ப்ரஹ்மத்தின் படைப்பின் பல படித்தான் தன்மையைப் பேசி அதனுடன் ப்ரஹ்மம் ஒன்றி இருத்தலைச் சொல்கின்றன

ப்ருதக் ஆத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வ
போக்தா போக்யம் பிரேரிதாரம் ச மத்வா
பிரஜாபதிரகாம யாத பிரஜா ஸ்ருஜயேதி
பதிம் விஸ்வ ஸ்யாத் மேஸ்வரம் சாஸ்வதம் சிவமச்யுதம்
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதாநாம் பரமம் ச தைவதம்
ஸர்வஸ்ய வசீ சர்வஸ் யேசாந இத்யாதிகா ப்ரஹ்மண சர்வஸ்மாத யந்யத்வம் ஸர்வஸ்ய ஈஸி தத் யத்வம் ஈஸ்வரத்வம்
ச ப்ரஹ்மண -ஸர்வஸ்ய சேஷதாம் பதித்வம் ச ஈஸ்வரஸ்ய காஸ்சந் ப்ரதிபாத யந்தி
அந்தப் ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜெநாநாம் சர்வாத்மா -ஏஷத ஆத்மா அந்தர்யாம் அம்ருத
ஆத்மாவையும் அதைத் தூண்டுவோனையும் தனித் தனியானவை என்று அறிவாயாக –
துய்ப்பவன் துய்க்கப்படும் பொருள் துய்க்கச் செய்பவன் இருப்பதை அறிவாயாக
ப்ரஜாபதி ப்ரஜைகளைப் படைக்க விரும்பினான்
உலகிற்கும் தனக்கும் தனிப் பெரும் தலைவன் -நிலையானவன் -மங்களமானவன் -அண்டினாரை நழுவ விடாதவன் –
ஈஸ்வரர்கள் என்று கூறப்படுபவர்களின் நின்றும் வேறுபட்ட மஹேஸ்வரன்
தேவர்கள் எனப்படுவோரிலும் வேறுthevanதேவன்
எல்லோரையும் தன் வசப்படுத்துவோன்-எல்லாருக்கும் தான் வசப்படாதவன் எல்லோருக்கும் ஆள்பவனாய் இருப்பவன் -எல்லாவற்றையும் தன் செல்வமாக உடைyentruyellaameஎல்லாம்
ப்ரஹ்மம் எல்லாவற்றிலும் உட் புகுந்து இருத்தலையும்
எல்லாவற்றுக்கும் தலைவனாக இருத்தலையும்
இவை யாவற்றையும் தன் செல்வமாக அடைந்து இருத்தலையும் விளக்கி ப்ரஹ்மத்தின் எல்லாவற்றையும் ஆளுதல்
எல்லாவற்றையும் செல்வமாக உடைமை
எல்லாவற்றுக்கும் தலைமை
ஆகிய சிறப்புக்களை சில மறை மொழிகள் பறை சாற்றுகின்றன
இந்த ஆத்மா எல்லாவற்றிற்கும் நிலை பெற்று இருப்பவன்
இந்த ஆத்மா உள் இருப்பவன் அமுதமானவன் அழிவற்றவன்

யஸ்ய ப்ருதிவீ சரீரம் யஸ்ய ஆப சரீரம் யஸ்ய தேஜஸ் சரீரம் இத்யாதி
யஸ்ய அவ்யக்தம் சரீரம் யஸ்ய அக்ஷரம் சரீரம் யஸ்ய ம்ருத்யு சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம் இதி
ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்ய ஸர்வஸ்ய வஸ்துந ப்ரஹ்மணஸ் ச சரீராத்ம பாவம் தர்சயந்தி காஸ்சந இதி
நாநா ரூபாணாம் வாக்யாநாம் அ விரோத முக்யார்த்த பரித்யாகஸ் ச யதா சம்பவதி ததைவ வர்ணனீயம் –

எவனுக்கு நிலம் உடலோ -எவனுக்கு நீர் உடலோ -எவனுக்கு தீ உடலோ -என்றும்
எவனுக்கு மூலப் ப்ரக்ருதி -கட் புலனாகாதது -உடலோ -எவனுக்கு ஆத்மா உடலோ -எவனுக்கு அழியும் ம்ருத்யு யமன் -உடலோ -எவனுக்கு உலகு உடலோ -என்று
ப்ரஹ்மம் தவிர்த்த மற்றை யாவும் அதற்கு உடலாகவும் அது அவற்றுக்கு உயிராகாவும் உறையும் தன்மையை சில வேத வாக்யங்கள் காட்டுகின்றன –
இவ்வாறு பலவாறு ப்ரஹ்மத்தின் நிலை கூறும் மொழிகளில் ஒன்றுக்கு ஓன்று கருத்து மாறுபடாது -முக்யமான பொருளைக் கை -விடாது எவ்வாறு அதன் நிலை தேறுகிறதோ
அதை ஆராய்வோம் –

வர்ணிதம் ச -அதிகார ஸ்ருதய ஸ்வரூப பரிணாம பரிஹாரா தேவ முக்யார்த்தா–நிர்க்குண வாதாஸ் ச பிராகிருத ஹேய குண நிஷேத
விஷய தயா வ்யவஸ்திதா நாநாத்வ நிஷேத வாதாஸ் ச ஏகஸ்யைவ ப்ரஹ்மண சரீர தயா பிரகார பூதம் சர்வம் சேதன அசேதனம் வஸ்த்விதி
சர்வஸ்யாத் மதயா சர்வ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அவஸ்திதமிதி ஸூ ரஷிதா-சர்வ விலக்ஷணத்வ பதித்தவ ஈஸ்வரத்வ-கல்யாண குணாகரத்வ –
ஸத்ய ஸங்கல்பத்வாதி வாக்யம் ததப்யுபகமாதேவ ஸூ ரஷிதாம் ஞான ஆனந்த மாத்ர வாதிச -ச்ரவஸ்மாதந் யஸ்ய சர்வ கல்யாண
குணாஸ்ரயஸ்ய சர்வேஸ்வரஸ்ய சர்வ சேஷிணே -சர்வ ஆதாரஸ்ய சர்வ உத்பத்தி ஸ்திதி ப்ரலய ஹேது பூதஸ்ய
நிரவத்யஸ்ய நிர்விகாரஸ்ய சர்வாத்ம பூதஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண ஸ்வரூபநி ரூபக தர்ம -மல ப்ரத்யநீக அநந்த ரூப
ஞானமேவேதி ஸ்வ பிரகாச தயா ஸ்வரூபமபி ஞானமேவேதி ச ப்ரதிபாதநாத் அநு பாலிதம் ஐக்ய வாதாஸ் ச
சரீராத்ம பாவேந சாமாநாதி கரண்ய -முக்யார்த்ததோப பாதநாதேவ ஸூஸ்திதா —

(இரண்டுமே சம ப்ராதான்யம் என்பதால் அபஹத பாப்மாதகாதிகளையும் சொல்லி ஸத்ய காமத்வம் ஸத்ய சங்கல்பத்துவம் ஒரே வாக்கியத்தில் சொல்லிற்று)

இது இவ்வாறு விவரிக்கப் படுகிறது
ப்ரஹ்மம் மாறுபாடு அற்றது என்னும் மொழிகளால் அதன் உள்ளுரு -ஆத்ம ஸ்வரூபம் -மாறு படாது இருத்தல் கருப் பொருளாய்க் கொள்ளப் படுகிறது
குணம் அற்றது என்று வாதிக்கும் மொழிகள் உலகியலின் இழி குணங்கள் சிறிதும் இன்மையைப் பேசுகின்றன
பலப்படிப் பட்டதாய் இருத்தலை மறுக்கும் வாக்கியங்களில் ஒரே ப்ரஹ்மம் மற்ற சேதன அசேதனப் பொருட்கள் நிலை பெற்று
அவற்றுள் நுழைந்து வதிதல் ஒத்துக் கொள்ளப் படுகின்றன
மற்றவற்றின் நின்றும் மாறுபட்டு அவை யாவற்றுக்கும் தலைவனாய் -அவற்றைத் தன் உடைமைகளாய்க் கொண்டு நற் பண்புகளின் கடல் எனத் திகழ்தல் -பிழை படா வினைத் திட்பம் உடைமை போன்ற சொற்களால் அதன் பண்புகள் ஒத்துக் கொள்ளப் படுகின்றன
ப்ரஹ்மம் மற்ற சேதன அசேதன பொருட்களைக் காட்டிலும் மாறு பட்டது -நற் குணங்கள் யாவற்றுக்கும் இருப்பிடமானது -எப்பொருளையும் தன் உடைமையாய்க் கொண்டது -எதனையும் தன் அடிமை கொள்ள வல்லது – யாவற்றிக்கும் பற்றுக் கோடானது -யாவற்றிற்கும் ஆக்கல் அளித்தல் அழித்தலுக்கு காரணமானது குற்றங்கள் அற்றது -மாறு பாடு அற்றது -எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய் இருப்பது -என்றும்
தனது அறுதியிடும் பண்பாக மலங்கள் அற்றதும் -ஞான ஆனந்தமே உரு வெடுத்ததாய் -தானே ஒளிர்வதாய் -ஞான மயமாய் இருக்கும் தன்மையைக் கொண்டதாய் ஞான ஆனந்தம் உள்ளது என்றும் -ஞான ஆனந்தம் மட்டுமே ப்ரஹ்மம் என்று அறுதியிடும் சொற்களும் உறுதி செய்கின்றன
ஐக்ய வாதத்தால் -ஒன்றே உண்டு எனக் கொள்வதால் -உடல் உயிர் தொடர்பால் -ஸாமா நாதி கரணம் -ஆகுபெயர் திரள் பொருளாய் நன்கு விளங்குகிறது

—————–

93–ஏவம் ச சதி அபேதா வா போதோ வா வ்யாத்யாத்ம கதாயா வா -வேதாந்த வேத்ய-கோயம் அர்த்த சர்மர்த்திதோ பவதி ?<br>ஸர்வஸ்ய வேத வேத்யத்வாத் சாவம் சமர்த்திதம் -சர்வ சரீரதயா சர்வ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அவஸ்த்திதம் இதி -அபேத சமர்த்தித-<br>ஏகமேவ ப்ரஹ்ம நாநா பூத சித் அசித் வஸ்துப் பிரகாரம் நாநாத் வேந அவஸ்திதம் இதி பேதா பேதவ்<br>அசித் வஸ்து நஸ் ச சித் வஸ்து நஸ் ச ஈஸ்வரஸ்ய ச ஸ்வரூப ஸ்வபாவ வை லஷண்யாத் அசம்காராஸ் ச பேத சமர்த்திதா

இக் கூற்றுக்களால் ஓரே படித்தாய் இருத்தலா அபேதமா -பல படித்தாய் இருத்தலா பேதமா -இரண்டும் கலந்ததா -எது வேதாந்தத்தால் இங்கு நிறுவப்படுகிறது -என்று கேட்டால்
இவை யாவும் மறை மொழிகளாதலால் இவை aயாவுமே கொள்ளப் பட வேண்டும் எதுவும் தள்ளப்பட லாகாது –
எல்லாவற்றையும் உடலாகக் கொண்டு அவற்றின் நின்றும் பிரிவற்ற நிலையில் ப்ரஹ்மம் ஒன்றே உறைகிறது என்பதால் பேதமின்மையும் ஒரே ப்ரஹ்மம் பல உருவங்களுடைய சேதன அசேதன பொருள்களில் பலவகையாக உறைந்து விளங்குகிறது -என்பதால்
பேதா பேதமும்
சேதன அசேதன பொருட்களைக் காட்டிலும் வேறுபட்டு அவற்றுக்கு உடமைகாரனாய் விளங்கி அவற்றின் நின்றும் உருவாலும் உயிராலும் வேறுபட்டு இருப்பதால் பேத வாதமும் ஒத்துக் கொள்ளப் படுகிறது

———–

94–நநு ச -தத்வமஸி ஸ்வேத கேதோ -தஸ்யதா தேவ சிரம் -இதி ஐக்ய ஞான மேவ பரம புருஷார்த்த லேசான மோக்ஷ சாதனம்
இதி கம்யதே நைத தேவம் -ப்ருதகாத்மாநம் பிரேரிதாரம் சமதவா ஜூஷ்டஸ்தஸ்தே நாம்ருதத்வமேதி
இதி ஆத்மாநம் பிரேரிதாரம் ச அந்தர்யாமிணம் ப்ருதக்மத்வா தத ப்ருதக்த்வ ஞானத்தோதோ தேந பரமாத்மநா ஜூஷ்ட அம்ருதத்வமேதி
இதி சாஷாத் அம்ருதத்வ பிராப்தி சாதனம் ஆத்மந நியந்துஸ் ச ப்ருதக்பாவ ஜினாமம் இத்யவகம்யதே
ஐக்ய வாக்ய விரோதாத் ஏதத் ஏதத் அபரமார்த்த ச குண ப்ரஹ்ம பிராப்தி விஷயமிதி அப்யுப கந்தவ்யம்
இதி சேத் ப்ருதக் ஞானஸ்யைவ சாஷாத் அம்ருதத்வப் பிராப்தி சாதனத்தவ ஸ்ராவணாத் விபரீதம் கஸ்மாத் ந பவதி –

அவ்வாறு இல்லை -நீயே அதுவாகிறாய் ஸ்வேத கேது -உபாஸிப்பவனுக்கு -அதுவரை hடான் -ஐக்ய ஞானம் அடையும் வரை தான் -கால விளம்பம் -உடலை நீத்தவுடன் ப்ரஹ்மமாகவே ஆகி விடுகிறான் என்று –
ஒன்றேனும் அறிவே பெறற்கு அரிய பேர் ஆனந்த மோக்ஷத்தை அடைவிக்கும் ஸாதனமாகிறது -என்று கூறுவீர்களாகில் -அத்வைதிகள்-அவ்வாறும் இல்லை –
ஆத்மாவையும் அதை ஆள்பவனையும் தனித் தனியானவர்கள் என அறிந்து -அவன் அருளுக்கு இலக்காகி -மோக்ஷம் அடைகிறான் -என்று ஆத்மாவின் உள்ளுறைவோனாய் -அதை ஆள்பவன் வேறுபட்டு விளங்குகிறான் என்பதை உணர்ந்து அந்த வேறுபட்ட ஞானத்தாலேயே அந்தப் பரமாத்மாவை அடைகிறான் என்று வெளிப்படையாகக் கூறப்பட்டு இருக்கிறது
ஆயினும் உலகம் ஒருபடித்தானது என்ற அபேத ஞானத்தாலே மேலான மோக்ஷத்தை அடைகிறான் என்றும்
அதற்கு மாறாக உலகம் பல படித்தானது என்னும் பேத ஞானத்தாலே தாழ்ந்த குணங்கள் நிறைந்த ப்ரஹ்மத்தை அடைதலாகும் என்பீராகில்
பேத ஞானத்தால் மோக்ஷத்தை அடைகிறான் என்று வெளிப்படையாகக் கூறப்பட்டு இருப்பதால் -அபேத ஞானத்தால் அவ்வாறு கூறப்படவில்லை -அதற்கு aமாறுபாடான கருத்துக் கொள்வது விபரீதமாகும் ஆகையால் ஐக்ய ஞானத்தால் கிடைப்பது தாழ்ந்த மோக்ஷம் என்று ஏன் கொள்ளக் கூடாது –

ஏதத் யுக்தம் பவதி -த்வயோ துல்யயோ விரோதே சதி அவிரோதந தயோ விஷய விவேச நீய -இதி கதம விரோத இதி சேத்
அந்தர்யாமி ரூபேண அவஸ்தித தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண சரீர தயா பிரகாரத்வாத் ஜீவாத்மந-தத் பிரகாரம் ப்ரஹ்ம ஏவ தவம்
இதி சப்தேந அபி தீயதே ததைவ ஞாதவ்யம் இதி தஸ்ய வாக்யஸ்ய அர்த்த ஏவம் பூதாத் ஜீவாத் ததாத்மதயா அவஸ்தி தஸ்ய
பரமாத்மநோ நிகில தோஷ ரஹிததயா ஸத்யஸங்கல்பத்வாத் யநவதிக யதிசய அஸங்க்யேய கல்யாண குணாகரத்தவே
ந ச ய ப்ருதக்பாவ ஸோநுசந்தேய இதி அஸ்ய வாக்யஸ்ய விஷய இத்யயமர்த்த பூர்வமேவ அஸக்ருத் யுக்த –

இதை விளக்குவோம் -ஒத்த பலமுடைய இரு கருத்துக்கள் ஒன்றுக்கு ஓன்று மாறுபாடாகத் தோன்று மாகில் -அவற்றின் மாறுபாடுகளை விலக்கி -இரு கருத்துக்களுக்கும் ஏற்பப் பொருள் கொள்ளுதலே தகுந்தது –
மாறு பாடு எங்கே தோன்றுகிறது எனில்
ஆத்மாவில் உள்ளுறைவோனாக பர ப்ரஹ்மம் இருக்கிறது -அதற்கு உடல் என்னும் நிலையில் அதின் நின்றும் பிரிவற்றதாக ஆத்மா விளங்குகிறது
இது முறையே -தத் -அது -த்வம் -நீ என்ற சொற்களால் கூறப்படுகிறது-இதை அறிவதே மெய் ஞானம் என்பதே பொருள் -இவ்வாறு பிராணிகளின் உயிர்களுக்கும் அதன் உள்ளுறைவோனாகவும் குற்றங்களுக்கு எதிர்த்தட்டாயும் -மெய்யான வினைத் திட்பம் உடையோனாகவும் -எல்லையற்ற அதிசயமான நற் குணங்களை யுடையோனாகவும் -தனித்தன்மை இங்கு கொள்ளத் தக்கது –
இதுவே இவ் வாக்கியத்தின் பொருள் -இது முன்பே பலதடவை வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது –

———–

95–போக்தா போக்யம் பிரேரிதாரம் ச மத்வா-இதி போக்ய பூதஸ்ய வஸ்துந அசேதனத்வம் பரார் தத்வம்-சதத விகாராஸ்ப தத்வம் –
இத்யாதய ஸ்வபாவா போக்து ஜீவாத்மநஸ் ச அமல அபரிச்சின்ன ஞான ஆனந்த ஸ்வ பாவஸ்யைவ அநாதி கர்ம ரூபா வித்யாக்ருத
நாநாவித ஞான சங்கோச விகாசவ் போக்ய பூதா சித் வஸ்து சம்சர்க்கஸ் ச பரமாத்மா உபாஸநாத் மேஷஸ் ச இத்யாதய
ஸ்வ பாவா ஏவம் பூத போக்த்ரு போக்யயோ அந்தர்யாமி ரூபேண அவஸ்தாநம் ஸ்வரூபேண
ச அபரிமித குணவ்க ஆஸ்ரயத்வேந அவஸ்தானம் இதி பரஸ்ய ப்ரும்ஹண த்ரிவிதா வஸ்தாநம் ஞாதவ்யம் இத்யர்த்த —

துய்ப்பவன்- துய்க்கப்படுவது -இவற்றைத் துய்க்கச் செய்பவன் -என்பதை அறிந்து என்பதால் துய்க்கப்படும் பொருட்கள் அறிவற்றவையாகவும் -பிறருக்கே யாகவும் -எப்பொழுதும் மாறுபாடு அடைந்து கொண்டு இருப்பவை யாகவும் இருத்தலே அவற்றின் பண்புகள் ஆகின்றன –
துய்ப்பவன் -ஜீவாத்மா -குற்றமற்று அளவற்ற ஞானத்தையும் -ஆனந்தத்தையும் -பண்புகளாய்க் கொண்டவனாய் -துவக்கற்ற வினையின் அடியாகப் பிறந்த -பல படித்தான ஞானச் சுருக்கையும் விரிவையும் உடையோனாய் அசேதன பொருட்களைத் துய்ப்போனாய் பரமாத்மாவை உபாஸித்து வீடு பேறு அடைதலைத் தன் செயல்களாக உடையவனாய் இருக்கிறான்
இவ்வாறு துய்ப்பவன் -துய்க்கப் படுவதற்கு உள்ளுறைவோனாக இருந்து கொண்டு -தன் மெய்யுருவில் அளவற்ற நற் குணங்களுக்கு இருப்பிடமாய் இருத்தல் ப்ரஹ்மத்தின் பண்பு -இவ்வாறு மூன்று படிப்பட்ட பொருள்கள் அறியத் தக்கவை என்பது பொருள்-

—————-

96 —தத்வமஸி -இதி சத் வித்யாயாம் உபாஸ்யம் ப்ரஹ்ம ச குணம் ச குண ப்ரஹ்ம பிராப்திஸ் ச பலம் –
இத்யபியுக்தை பூர்வாசார்யை வ்யாக்யாதம்

அது நீயாகிறாய் -தத்வமஸி -என்ற வாக்யத்திற்கு பண்புகளுடன் கூடிய உபாஸனையால் -பண்புகள் நிறைந்த ப்ரஹ்மத்தை இடையறாது தியானித்து உயர்வற உயர் நலம் உடைய ப்ரஹ்மத்தையே அடைதல் என்று முந்தையோர் உரைகளில் விளக்கம் தரப்பட்டு இருக்கிறது –
யதோக்தம் வாக்யகாரேன-யுக்தம் தத் குணக உபாஸநாத் -இதி வ்யாக்யாதம் ச த்ரமிட ஆச்சார்யேனே வித்ய விகல்பம் வததா-
யத்யபி சச்சித்தோ ந நிர்புக்ண தைவதம் குண கணம் மனசா அநுதாவேத் தாதாபி அந்தர் குணாமேவ தேவதாம் பஜதே
இதி தத்ரபி ச குண ஏவதா ப்ராப்யதே -இதி சச்சித்த ஸத்வித்யா நிஷ்ட –
ந நிர் நிர்புக்ணதைவதம் குண கணம் மனசாநுதா வேத்-
அபஹத பாப்மத்வாதி கல்யாண குண கணம் தைவதாத் விபக்தம் யத்யபி தஹர வித்யா நிஷ்ட இவ
சச்சித்தோ நஸ்மரேத் ததாபி அந்தர் குணாமேவ தேவதாம் பஜதே-தேவ ஸ்வரூப அநு பந்தித்வாத்-
சகல கல்யாண குண கணஸ்ய கேநசித் பரதேவதா அசாதாரண்யேந நிகில ஜகாத் காரணத்வாதிந குணேன உபாஸ்யமாநோபி
தேவதா வஸ்துந ஸ்வரூப அநு பந்தி சர்வ கல்யாண குண விஸிஷ்ட ஏவ உபாஸ்யதே அத ச குணம் ஏவ ப்ரஹ்ம
தத்ராபி ப்ராப்யம் இதி ஸத்வித்யா தஹர வித்யயோ விகல்ப இத்யர்த்த –

இதை ஒட்டியே வாக்யகாரரும் -அந்த குணங்கள் இடையறாது தியானிப்பதே தகுந்தது -எனக் கூறி யுள்ளார் –
உரையாசிரியர்களான த்ரமிடாச்சார்யரும் இதையே இடையறாத த்யான நெறிகளில் -வித்யைகளில் -மாறுபாடுகள் இல்லை என்கிறார் –
உபநிஷத்துக்களில் 32 ப்ரஹ்ம வித்யைகள் உண்டு -அவற்றில் ஸத் வித்யையும் தஹர வித்யையும் அடங்கும் –
ஸத் வித்யையில் ஊற்றமுடையவர்கள் ப்ரஹ்மத்தின் செயல்பாட்டுப் பண்புகளை மனத்தில் கொள்கிறார்கள்
அவ்வாறே தஹர வித்யையில் ஊற்றமுடையவர்கள்ப்ரஹ்மத்தின் வெளிப்படையான பண்புகளை நினைக்கிறார்கள் –
ஸத் வித்யையில் ஊற்றமுடையவர்கள் பாபம் சிறிதும் அற்றல் போன்ற நற் குணங்கள் நிறைந்த ப்ரஹ்மத்தை பக்தி செய்கிறார்கள் –
அவ்வாறே தஹர வித்யையில் ஊற்றமுடையவர்கள் இந்த பண்புகளை நினைக்காமல் ப்ரஹ்மத்தின் உள்ளுறை பண்புகளை ஸ்துதிக்கிறார்கள் –
தேவனுடைய உள்ளுரு நற் குணங்கள் யாவும் நிறைந்தது என்பதால் அதன் சிறப்புக் குணங்களான உலகின் காரணப் பொருளாய் இருப்பது போன்றவைகளும் உள்ளுருவிற்கு எப்பொழுதும் யுடைய நற் குணங்கள் யாவும் இடையறாது த்யானிக்கப் படுகின்றன –
ஆகையால் எந்த விதமாக இடையறாத த்யானம் அமைந்தாலும் அதனால் உபாஸிக்கப் படுவதும் அவ்வாறு த்யானிக்கப் படுவதும் அதனால் அவர்கள் இறுதியில் அடைவதும் உயர்வற உயர்நலம் உடைய ப்ரஹ்மத்தையே நெறிகளில் மட்டும் மாறுபாடு உள்ளது என்பதே பொருள் –

————-

97–நநு ச ஸர்வஸ்ய ஐந்தோ பரமாத்மா அந்தர்யாமி தந் நியாம்யம் ச சர்வம் -இத்யுக்தம் –
ஏவம் ச சதி விதி நிஷேத சாஸ்த்ராணாம் அதிகாரி ந த்ருச்யதே ய ஸ்வ புத்யைவ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸக்த-
ச ஏவம் குர்யாத் ந குர்யாதிதி விதி நிஷேத யோக்ய ந ஸைஷ த்ருச்யதே -சர்வஸ்மிந் ப்ரவ்ருத்தி ஜாதி
ஸர்வஸ்ய பிரேரக பரமாத்மா காரயிதா -இதி தஸ்ய சர்வ நியமனம் ப்ரதிபாதிதம் ஸ்ரூயதே ச ஏஷ ஏவ சாதுகர்ம காராயதி
தம்யமேப்யோ லோகேப்யே உந்நிநீஷதி ஏஷ ஏவ அசாது கர்ம காராயதி தம் யமதோ நிநீஷதி
இதி சாத்வ சாது கர்ம காரயித்ருத்வாத் நைர் க்ருண்யம் ச –

பிராணிகள் யாவற்றிலும் உள்ளுறைந்து அவற்றை ஏவல் கொள்கிறான் -என்பதால்
விதித்தல் தடுத்தல் ஆகிய வற்றைச் செய்பவர் என்று ஒருவரும் காணப்படுவதில்லை
பரமாத்மா தானே ஒருவரை ஒன்றில் ஈடுபடுத்தலும் விலக்கலும் செய்வதால் சில செயல்களைச் செய்விப்பவதும் செயல்களில் நின்றும் விலக்குதலும் ஆகிய விதித்தல் தடுத்தல் இங்கு காணப்படுவதில்லை ஏன் எனில் யாவற்றையும் செயல் படத் தூண்டுபவன் பரமாத்மாவே யாதலால் யாவும் அவன் செயல் என்று கொள்ளப்படும் –
வேதத்திலும் இப்படிப்பட்ட நற் கருமங்கள் செய்பவன் உலகில் உயர்த்தப் படுகிறான் -இப்படிப் பட்ட தீய செயல்களைச் செய்பவன் தாழ்த்தப் படுகிறான் என்று கூறப்பட்டுள்ளது -இவ்வாறு ஒருவரை நற் செயல்களும் மற்ற ஒருவரை தீய செயல்களைச் செய்யத் தூண்டுவதால் ஈஸ்வரனுக்கு நடு நிலைமை தவறுதல் ஏற்படும்

அதிர உச்யதே -ஸர்வேஷாமேவ சேதநாநாம் சிச் சக்தி யோக ப்ரவ்ருத்தி சக்தி யோக -இத்யாதி
சர்வம் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பரிகரம் சாமாந்யேந சம்பவித்தாய தந் நிர்வஹணாய-தத் ஆதாரோ பூத்வா அந்தப் பிரவிஸ்ய
அநுமந்த்ரு தயா ச நியமனம் குர்வந் -சேஷித்வேந அவஸ்தித பரமாத்மா ஏததாஹித சக்திஸ் ஸந் ப்ரவ்ருத்தி நிவ்ருத்யாதி
ஸ்வயமேவ குருதே-ஏவம் குர்வாண மீஷமாண பரமாத்மா உதாசீந ஆஸ்தே அத சர்வம் உபபந்நம் –

அது அவ்வாறு அல்ல -எல்லாச் சேதனப் பொருள்களுக்கும் உயிர் எனும் ஞானப்பொருள் காணப்படுவதால் அவற்றுக்கு -உடல் புலன்களைக் கொண்டு -ஒரு செயலை செய்வதற்கு திறமை ஏற்படுகிறது –
ஒரு செயலில் ஈடுபடுவதற்கும் அதினின்று விலகுவதற்கும் ஆன அறிவு ஏற்படுகிறது -இவற்றை அளித்த ஸர்வேஸ்வரன் உள்ளிருந்து கொண்டு ஆத்மா விரும்பிய செயலைச் செய்ய அனுமதி அளித்து தான் நடு நிலையுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறான் –
இதனால் அவன் அளித்த உடல் புலன்கள் அறிவு இவை பலனுடையவை ஆகின்றன-

சாத்வ சாது கர்ம காரயித்ருத்வம் து வ்யவஸ்தித விஷயம் ந சர்வ சாதாரணம் –
யஸ்து பூர்வம் ஸ்வயமேவ அதி மாத்ரம் ஆநு கூல்யே ப்ரவ்ருத்த தம் பிரதி ப்ரீதி -ஸ்வயமேவ பகவான்
கல்யாண புத்தி யோகதானம் குர்வந் கல்யாணே ப்ரவர்த்தயதி
ய புந அதி மாத்ரம் பிராதி கூல்யே ப்ரவ்ருத்த தஸ்ய து க்ரூராம் புத்திம் ததந் ஸ்வயமேவ க்ரூரேஷ் வேவ கர்மஸூ பரேரயதி பகவாந்
நற் செயல்களைப் புரிதல் என்பது எல்லோருக்கும் ஏற்படுவது இல்லை
எவர் முற் பிறப்பில் ஸாஸ்த்ரங்களில் கூறியபடி-விதிக்கப்பட்டவற்றை பெரும் அளவில் செய்து இருக்கிறாரோ -அவருக்கு நற் புத்தியையும் -நற் செயல்களில் விருப்பத்தையும் ஏற்படுத்துகிறான் –
அப்படியே எவர் அதிக அளவில் தீயச் செயல்கள் செய்திருக்கிறாரோ அவருக்கு கொடுமையான புத்தியைக் கொடுத்து -தானே கொடுமையான செயல்களிலே ஈடுபடுத்துகிறான் –

யதோக்தம் பகவதா-தேஷாம் சதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் தாதாமி புத்தி யோகம் தம் யேந மாம் உபயாந்தி தே
தேஷாமேவாநுகம் பார்த்தம் அஹம் அஞ்ஞானஜம் தமஸ் நாஸாயாம் யாத்ம பாவஸ்தோ ஞான தீபேந பாஸ்வதா
தா நஹம் த்விஷத க்ரூராந் சம்சாரேஷு நராதமாந் ஷிபாம் யஜஸ்ரம ஸூபாந் ஆஸூரீஷ் வேவ யோநிஷு இதி –

அவ்வாறே பகவத் கீதையில்
என்னிடம் எப்பொழுதுமே சேர்ந்து இருக்க விரும்புகிறவர்களுக்கும் பக்தி செலுத்துவோருக்கும் என்னை அடைவதற்கு வழி காட்டியான பரமாத்மா பற்றிய ஞானத்தை -பர ஞானத்தை -விருப்புடன் அளிக்கிறேன்
அப்படிப்பட்ட பக்தியில் ஒன்றி இருப்பவர்களிடம் என் அருளினாலேயே அவர்கள் மனதுக்கு உகப்பானவனாய் எனது ஞானமாகிற ஒளி விளக்கால் பண்டை வினைகளால் உண்டான அஞ்ஞானமாகிற அந்தகாரத்தை அழிக்கிறேன்
என்னை வெறுப்பவர்களை கொடியவர்களாய் மாந்தரில் கடையராய் அமங்கலமானவர்களாய் ஆகும்படி தொடர்ந்து பிறப்பு இறப்புகளைக் கொடுத்து அசுரப் பிறவிகளில் தள்ளுகிறேன் என்று தெளிவாகக் கூறப்பட்டு இருக்கிறது

———————

98–சோயம் பரப் ப்ரஹ்ம பூத புருஷோத்தம நிரதிசய புண்ய சஞ்சயஷீண -அசேஷ ஜென்ம உபசித பாபராஸே
பரம புருஷ சரணாரவிந்த -சரணாகதி ஜெநித ததாபி முக்யஸ்ய -தத் ஆச்சார்ய உபதேச உப ப்ரும்ஹிதா சாஸ்த்ராதி கத
தத்வ யாதாத்ம்ய அவ போத பூர்வக -அஹர் அஹர் ரூப சீயமாந -சம தம தப ஸுவ்ஸ-ஷம-ஆர்ஜவ -பய அபய ஸ்தாந விவேக தயா –
அஹிம் சாத்யாத்ம குணா பேதஸ்ய-வர்ணாஸ்ரம உசித பரம புருஷ ஆராதன வேஷ-நித்ய நைமித்திக கர்ம உப சங்ஹ்ருதி –
நிஷித்த பரிகார நிஷ்டஸ்ய-பரம புருஷ சரணார விந்தை யுகள ந்யஸ்தா
ஆத்மாத்மீயஸ்ய தத் பக்தி காரிதா நவரதஸ்துதி -ஸ்ம்ருதி -நமஸ் கிருதி யதந கீர்த்தன குண ஸ்ரவண -வசந-த்யான –
அர்ச்சன பிரணாமாதி ப்ரீதி பரம காருணிக புருஷோத்தம பிரசாத வித்வஸ்தஸ்வாந் தஸ்ய அநந்ய ப்ரயோஜன
அநவரத நிரதிசயப் பிரிய விசத தம ப்ரத்யக்ஷதா பந்ந அநு த்யான ரூபக்த்யைக லப்ய —

இப்படிப்பட்ட பர ப்ரஹ்மமான புருஷோத்மன் -எல்லையற்ற நற் செயல்களைச் செய்தவனாய் -பிறப்பினால் வந்த வினைத்தொடர் சிறிதும் அற்றவனாய் -பரம புருஷனுடைய திருவடித் தாமரைகளையே சரணம் அடைந்தவனாய் -அதில் ஊற்றம் உடையோனாய் அதனால் தூண்டப்பட்டு ஓர் நல்லாசிரியனை அடைந்து அவனால் உபதேசிக்கப் பட்ட ஸாஸ்த்ரங்களின் அடியாக மெய்ப் பொருளை உணர்ந்தவனாய் தினம்தோறும் வளர்கின்ற புலன் அடக்கம் -புலன்களை தன் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுதல் -ஸாஸ்த்ரங்களில் கூறப்பட்ட விரதங்களை மேற் கொண்டு மனத் தூய்மை யாதல் -உடல் சொல் செயலால் தூய்மையாய் இருத்தல் -மனம் மொழி மெய்களால் ஒருப்பட்டு இருத்தல் – அஞ்சுவது அஞ்சாமை பகுத்து அறிதல் -இரக்கம் பிறருக்குத் துன்பம் நினையாது இருத்தல் பொறை ஆகிய நற் குணங்கள் கைவரப் பெற்றவனாய் -தனக்கு ஏற்ப வர்ணாஸ்ரம நெறிகளைக் கடைப் பிடிப்பவனாய் பரம புருஷனை ஆராதிப்பவனாய் -நாள் தோறும் மற்றும் சிறப்பான நாட்களிலும் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காகச் செய்பவனாய் -விலக்கப்பட்ட செயல்களின் நின்றும் விலகியவனாய் -பரமபுருஷனுடைய திருவடித் தாமரைகளில் தனது உடல் உயிர்ச் சுமைகள் யாவையும் வைத்தவனாய் -அந்த பக்தி மேலீட்டில் இடைவிடாது ஸ்துதித்தல் -நினைத்தல் -வணங்குதல் -அதற்கான முயற்சிகளைச் செய்தல் -அவன் புகழ் பாடுதல் -அவன் பண்புகளைக் கேட்டல் -அவனைப் பற்றியே பேசல் -இடைவிடாது மனத்திருத்தல் அர்ச்சித்தல் தண்டன் இடுதல் -இவற்றால் மனம் உகந்து ஈசனால் தன் மன இருள் நீங்கியவனாய் -வேறு பலன்களை எதிர் நோக்காது -என்றும் எல்லாவற்றிலும் அன்புடையவனாய் -அவனுடைய திரு உருவை -மிகத் தெளிவாக நேரே காண்பது போன்ற நிலையை பக்தியுடன் கூடிய தியானத்தால் அடைய முடியும்-

————–

99–ததுக்கதம் பரம குருபிஸ் பகவத் யாமுனாச்சார்ய பாதவ் –
உபய பரிகர்மித ஸ்வாந் தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக லப்ய -இதி ஞான யோக கர்ம யோக
ஸம்ஸ்க்ருத அந்தக் கரணஸ்ய–இத்யர்த்த –

அதை ஒட்டியே பரம ஆச்சார்யனும் மதிப்புக்கு உரியவரான யமுனாச்சார்யரும் -கர்ம ஞாந யோகங்களைச் செய்து -அதனால் தூய்மை யடைந்த மனத்துடன் ஒரே நினைவாக -நிலை நிற்கிறவராலேயே எம்பெருமான் அடையத் தக்கவன் -என்று கூறி இருக்கிறார் -ஞான கர்ம யோகங்களால் நன்கு பண் படுத்தப்பட்ட மனம் -என்று பொருள் –
ததாச ஸ்ருதி —
வித்யாஞ்ச அவித்யாஞ்ச யஸ் தத்வே தோபயம் ஸஹ அவித்யயா ம்ருத்யும் தீர்த்வா வித்யயா அம்ருதம் அஸ்நுதே –இதி –
அத்ர அவித்யா சப்தேந வித்ய இதரத் வர்ணாஸ்ரம ஆசாராதி பூர்வோக்தம் கர்ம உச்யதே
வித்யா சப்தேந பக்தி ரூபாபந்ந த்யானம் உச்யதே —

அவ்வாறே வேதமும் -ஞானம் கர்மம் இரண்டும் ஒன்று என்று அறிபவர் கர்மத்தினால் பிறவிச் சூழலைக் கடந்து ஞானத்தால் அழிவற்ற நிலை எய்துகிறார் –
இங்கு அவித்யை என்ற சொல்லால் வித்யையாகிற ஞானத்தின் நின்றும் வேறுபட்ட வர்ணாஸ்ரம தர்மங்களுக்கு ஏற்ற செயல்கள் சுட்டிக் காட்டப் படுகிறது
வித்யை என்பது பக்தியே உருவெடுத்த ஞானம் என்று சொல்லப்பட்டது –

யதோக்தம் -இயாஜஸோபி ஸூ பஷந் யஞ்ஞாந் ஞாந வ்யாபாஸ்ரய –
ப்ரஹ்ம வித்யாம் அதிஷ்டாய தர்த்தும் ம்ருத்யும் அவித்யயா இதி
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -நாந்யப் பந்தா அயநாயா வித்யதே
ய ஏநம் விதுரம்ருதாஸ்தி பவந்தி –
ப்ரஹ்ம விதாப்நோதி பரம்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மை பவதி -இத்யாதி வேதந சப்தேந த்யானமேவா பிஹிதம்
நிதித்யாசி தவ்ய-இத்யாதிநா ஐக அர்த்யாத்-ததேவ த்யானம் புநரபி விசிநஷ்டி –
நாயமாத்மா ப்ரவசனேந லப்ய -நமேதயா ந பஹுநா ஸ்ருதேந யமேவைஷா வ்ருணுதே தேந லப்ய-
தஸ்யைஷா ஆத்மா விவ்ருணுதே தநும் ஸ்வாம் -இதி பக்தி ரூபா பந்ந அநு த்யாநேநைவ லப்யதே
ந கேவல வேதேந மாத்ரேண நமேதயா-இதி கேவலஸ்ய நிஷித்தத்வாத் ஏததுக்தம் பவதி –
யோயாம் முமுஷு வேதாந்த விஹித வேதந ரூப த்யாநாதி நிஷ்ட-யதா தஸ்ய தஸ்மிந் நேவ அநு த்யாநே
நிரவதிக அதிசயா ப்ரீதி ஜாயதே ததைவ தேந லப்யதே பர புருஷ இதி –

(தத்வமஸி-மோக்ஷ சாதனா உபதேசம் -அத்வைதிகள் ஞான மாத்திரம் -ஐக்ய ஞான விசேஷம் உண்டான அனந்தரம் மோக்ஷம்
உபாஸனமே மோக்ஷ சாதனம் -பக்தி ஒன்றிய பக்தி -உடன் சேர்ந்து- துஷ்ட -குண அனுபவம்-பிராட்டி போல பிரிக்க முடியாமல் -)

யதோக்தம் பகவதா புருஷஸ்ய பரப் பார்த்தா பக்த்யா லப்யஸ் த்வந் அநந்யயா -பக்த்யாத்வ நந்யயா ஸக்ய
அஹமேத்வம் விதோர்ஜூந ஞானம் த்ருஷ்டும் ச தத்வேந பிரவேஷ்டும் ச பரந்தப பக்த்யாம் மாம் அபி ஜாநாதி

அதற்கு ஏற்ப தத்வ த்ரய ஞானத்தால் -ப்ரஹ்ம ஞானம் ஏறிடப்பட்டு கடமைகளை ஆற்றுவதாலே அழிவை விலக்கி ஞானம் நிரம்பியவராய் ஸுபமான யாகங்கள் பலவற்றை இறை வழிபாடாக செய்தார்அப் பரமாத்மாவை இவ்வாறு அறிபவன் இவ்வுலகிலேயே மோக்ஷம் அடைந்தவனாகிறான் -பரமாத்மாவை அடைவதற்கு வேறு வழிகள் ஏதும் இல்லை -எவர்கள் இந்தப் பரமாத்மாவை அறிகின்றனரோ அவர்கள் மோக்ஷம் அடைகின்றனர்ப்ரஹ்மத்தை அறிந்தவன் பர உலகை அடைகிறான் -ப்ரஹ்மத்தை அறிந்தவன் அந்தப் ப்ரஹ்மம் போன்றே ஆகிறான் -என்று கூறப் பட்டு இருக்கிறது -வேதனம் என்ற சொல் தியானம் செய்தல் இடைவிடாது நினைத்தல் இவற்றுடன் ஒத்த பொருள் கொண்டதாகிறது -இந்தப் பரமாத்மா நினைவிலே மட்டும் அடையப்படுவது இல்லை -தெளிந்த அறிவினாலும் அடையப்படுவதில்லை -பல கேள்வியிலும் அல்ல -எவனை பரமாத்மா விரும்புகிறானோ அவனாலேயே அடையப்படுகிறான் -அப்படிப்பட்ட ஆத்மாவிற்கு தன் திருமேனியை -இந்தப் பிரபஞ்சத்தை தானே காட்டிக் கொடுக்கிறான் -பக்தியே உருவெடுத்த ஞானத்தால் மட்டும் அடையப்படுகிறான் -வறட்டு தியானத்தால் அடையப்படுபவன் அல்ல -தெளிந்த அறிவினால் அல்ல என்பது அறிவு ஒன்றையே உடைய தியானத்தால் அல்ல -என்று விலக்குகிறது -இது கீழ் வருமாறு விளக்கப்படுகிறது -வீடு பேறு வேண்டி வேதாந்தத்தால் ஏற்பட்டு இருக்கும் தெளிவான ஞானத்தால் அதில் ஊற்றம் உடையவனாய் இருப்போன் அந்த தியானத்திலேயே எல்லையற்ற விருப்பம் கொண்டவனாகி அதனடியாகவே பரம புருஷனை அடைகிறான்அவ்வாறே பகவத் கீதையிலும்பார்த்தனே பரம புருஷனாகிய நான் -மற்றவைகளால் அல்லாது என்னிடமே செலுத்தப்படும் பக்தியால் மட்டுமே அடையத் தக்கவன் -எதிரிகளை வாட்டுபவனே அர்ஜுனா என்னைப் பற்றி மெய்யறிவு கொள்வதற்கும் -என்னைப் பார்ப்பதற்கும் என்னைத் துய்ப்பதற்கும் வேறொரு இடத்தில் அன்றி என்னிடமே செலுத்தப்படும் பக்தியாலே மட்டுமே இயலும் -11-54-
யாவாந் யஸ் சாஸ்மி தத்வத-ததோ மாம் தத்வதோ ஞாத்வா விசதே ததந்தரம் -இதி ததனந்தரம் மாம் தத ஏவ பக்கத்தே விசாதே
இத்யர்த்த பக்திர் அபி நிரதிசய ப்ரிய அநந்ய ப்ரயோஜன ஸ்வ இதர வை த்ருஷ்ண்யாவஹ ஞான விசேஷ
ஏவேதி தத் யுக்த ஏவ தேந பரேண ஆத்மநா வரநீயோ பவதீதி தேந லப்யதே இதி ஸ்ருதி யர்த்த

உள்ளுருவாலும் பண்புகளாலும் குணங்களாலும் செல்வத்தாலும் நான் எப்படிப்பட்டவன் என்பதை பரம் பொருள் மீதான பக்தியாலே உள்ளபடி அறிந்து பிறகு அந்த பரபக்தியாலேயே என்னை முழுமையாக அடைகிறான் -என்று கூறப்படுகிறது -பிறகு இப்படிப்பட்ட பக்தியாலேயே என்னை நன்கு துய்க்கிறான் -என்பது பொருள்-பக்தி என்பது -எல்லையற்ற விருப்புடன் வேறு பயன் கருதாது மற்றைய விருப்பங்கள் யாவும் நீங்கியதாய் இருப்பது -வைராக்யம் -இதற்கேற்ப ஒழுகுபவர் பரமாத்மாவால் தன்னுடையவன் என்று கருதப்பட்டு அவனாலேயே தன்னிடம் சேர்த்துக் கொள்ளப் படுகிறார் என்பதே மறையின் பொருள்
ஏவம் வித பயபக்தி ரூப ஞான விசேஷஸ்ய உத்பாதாக -பூர்வ யுக்த அஹர் அஹர் ரூப ஸீயமாந ஞான பூர்வக –
கர்ம அநு க்ருஹீத பக்தி யோக ஏவ –

யதோக்தம் பகவதா பராசரேன
வர்ணாஸ்ரம ஆசாரவதா புருஷேண பர புமாந்
விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நாணய தத் தோஷகாரக -( ஸ்ரீ விஷ்ணு புராணம் -காண்டிக்ய கேசித்வஜ உபாக்யானம் -)

இப்படிப் பட்ட ஞானத்தால் தூண்டப்பட்டு முன்பே விளக்கிய தினம் தோறும் வளரும் ஞானத்திற்கு தான் கைக் கொண்ட வர்ணாஸ்ரம தர்மங்கள் வழியாகப் பெற்ற பக்தியாலே ஜீவனிடம் பக்தி யோகம் உண்டாகும்

அப்படியே பராசரரும் -மனிதர்கள் வர்ணாஸ்ரம தர்மங்கள் செய்வதன் மூலமாக விஷ்ணுவை ஆராதித்தே பரமபுருஷனை அடைய இதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்கிறார் –
இதி நிகில ஜகத் உத்தாரணாய அவநிதளே அவதீர்ண பர ப்ரஹ்ம பூத புருஷோத்தம ஸ்வயமேவ ஏதத் உக்தவாந்
ஸ்வ கர்ம நிரதஸ் சித்தம் யதா விந்ததி தச் ச்ருணு -யத ப்ரவ்ருத்தி பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்
ஸ்வ கர்மணா தமப்யர்ச்ய சித்திம் விந்ததி மாநவ –இதி யதோதித க்ரம பரிணத பக்த்யேக லப்ய ஏவ —

இவ் வுலகை மேம்படுத்துவதற்காக அவதரித்த பர ப்ரஹ்மமான புருஷோத்தமனே இதைச் சொல்கிறான்
தன் கடமைகளைச் செய்பவன் எவ்வாறு வீடு பேறு அடைகிறான் என்பதைக் கேட்ப்பாயாக
எவனிடமிருந்து இப் பொருட்கள் யாவற்றிக்கும் தோற்றம் முதலியவை ஏற்படுகின்றதோ -எவனாலே இவை யாவும் நிறைக்கப்பட்டுள்ளதோ -அவனைத் தனக்குரிய வர்ணாஸ்ரமப்படி -கடைமைப்படி -ஆராதனையைச் செய்து மனிதன் மேலான வீடு பேற்றை அடைகிறான் –
இவ்வாறு தனக்கு உரிய கடைமைகளை முறையாகச் செய்து அதனால் தூண்டப்பட்ட பக்தியாலேயே பகவான் அடையப் படுகிறான்

—————-

100-பகவத் போதாயன -டங்க-த்ரமிட -குஹதேவ-கபர்தி -பாருசிப்ரபிருதி -அவிகீத-சிஷ்ட பரிக்ருஹீத –
புராதன வேத வேதாந்த வ்யாக்யான ஸூவ்யக் தார்த்த ஸ்ருதி நிகர நிதர்சிதோயம் பந்தா —
அநேந -சார்வாக -சாக்ய-ஓவ்லூக்ய -அஷபாத -ஷபனிக-கபில -பதஞ்சலி -மத அநு ஸாரினோ
வேத பாஹ்யா வேதா வலம்பி குத்ருஷ்ட்டி பிஸ் ஸஹ நிரஸ்தா –

போதாயன பகவான் -டங்கர் -த்ரமிடர் -குஹ தேவர் -கபர்தி -பாருசி -முதலான சிறந்த சான்றோர்களால் கைக் கொள்ளப் பட்ட பழமையான வேத வேதாந்த விரிவுரைகளில் வேதக்கூட்டங்களின் திரண்ட கருத்துக்கள் தெளிவாகக் காட்டப்பட்டு இருக்கின்றனஇதற்கு மாறான -ஸார்வாக -நாஸ்திக – சாக்ய -புத்த -ஓவ்லுக்ய-நியாய தர்க்க வாதிகள் அக்ஷ பாத-வைசேஷிகம் சமண கபில -சாங்க்ய – பதஞ்சலி-யோகம் ஆகியோருடைய கொள்கைகளைப் பின் பற்றுவோர் வேதங்களுக்குப் புறம்பானவர்கள் என்றும்அவைகளுக்கு உட்பட்ட பொருளைத் திரித்து கூறுவோர்கள் என்றும் விலக்கப் படுகின்றனர்
வேதா வலம்பிநாம் அபி யதா வஸ்தித வஸ்து விபர்யஸ்த த்ருஸாம் பாஹ்ய சாம்யம் மநுநைவ யுக்தம்
யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய யஸ்ஸ காஸ் ஸ குத்ருஷ்டய
சர்வஸ்தா நிஷ்பல ப்ரேத்ய தமோந் நிஷ்டா ஹி தா சம்ருதா இதி
ரஜஸ் தமோப்யாம ஸ்ப்ருஷ்டம் உத்தமம் சத்வமேவ ஏஷாம் ஸ்வாபாவிகோ குண தேஷாமேவ வைதிகீ ருசி –
வேதார்த்த யாதாத்ம்ய அவபோதஸ் ச இத்யர்த்த –

வேதங்களை மறுத்தோரும் -அவற்றுக்கு அவப்பொருள் கொள்வோரும் ஒரே படித்தானவர்கள் -என்று மநு கூறுகிறார்
வேதங்களையும் ஸ்ம்ருதிகளையும் மறுப்போரும் அவப்பொருள் கொள்வோரும் தமோ குணம் நிறைந்தவர்கள் என்றும்
அவர்களுடைய கருத்துக்கள் உடலை விட்டோடும் உயிருக்கு நற் பலன்களைத் தராதவைகள் என்பதும் பெரியோர்கள் கொள்கை –
ரஜஸ் தமஸ் இவைகளால் தீண்டப்படாத ஸத்வ குணம் நிறைந்த உத்தமர்களே வேதப் பொருளில் உண்மையான விருப்பம் கொண்டு அதனடியாக அவற்றின் மெய்ப் பொருளை அறிய முடியும் என்பது பொருள்

யதோக்தம் மாத்ஸ்யே —

ஸங்கீர்ணா சாத்விகாஸ் ஸைவ ராஜசா தமஸாஸ் தயா இதி கேசித் ப்ரஹ்ம கல்பா ஸங்கீர்ணா –
கேசித் சத்வ பிராயா -கேசித் ரஜஸ் பிராயா -கேசித் தமஸ் பிராயா -இதி கல்ப விபாக முத்தகா சத்வ ரஜஸ் தமோ மாயாநாம்
தத்வாநாம் மஹாத்ம்ய வர்ணனஞ்ச தத் தத் கல்ப ப்ரோக்த புராணே ஷு சத்வாதி குண மயேந ப்ரஹ்மணா க்ரியதே இதி ச யுக்தம் –
யஸ்மின் கல்பேது யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா புரா-தஸ்ய தஸ்ய து மஹாத்ம்யம் தத் ஸ்வரூபேண வர்ணயதே இதி

அவ்வாறே மத்ஸ்ய புராணத்தில்கலப்படமான ஸாத்விக ராஜஸ தாமஸ குணங்கள் மேலிட்ட படைப்புக் கால அளவுகள் ப்ரஹ்ம கல்பங்கள் உள்ளனபடைப்புக் கால அளவுகளில் சில கலந்த குணமுடையவை -சில aஸ்த்வ குணமுடையவை -சில ரஜஸ்ஸையும் சில தமஸ்ஸையும் கொண்டவைஅவைகளுக்கு ஏற்ப ஸத்வ ரஜ தமோ குணங்கள் நிறைந்த தேவதைகளின் பெருமை விவரிக்கப் படுகிறதுஅந்தந்த கல்பங்களில் தோன்றிய புராணங்களை ஸத்வ முதலான குணங்கள் நிறைந்ததாக ப்ரம்மா செய்தார் என்பது பொருள் -முன்பு எந்த எந்தக் கல்பங்களில் எந்த எந்தப் புராணங்கள் ப்ரம்மாவினால் சொல்லப் பட்டதோ அவைகள் அந்தந்த குண மேலீட்டான தேவதைகளைப் பரக்கப் பேசுகிறது –
விசேஷ தஸ் ச யுக்தம்
அக்ரேஸ் சிவஸ்ய மஹாத்ம்யம் தமசேஷு ப்ரகீர்த்யதே
ரஜஸே ஷு ச மஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மணோ வித்து
சாத்விகேஷ்வத கல்ப்பேஷு மஹாத்ம்யம் அதிகம் ஹரே
தேஷ்வேவ யோக சம்சித்தா கமிஷ்யந்தி பராம் கதிம்
சங்கீர்ணேஷு சரஸ்வத்யா பித்ரூணாஞ்ச நிகத்யதே–இத்யாதி
ஏதத் யுக்தம் பவதி–ஆதி ஷேத்ரஞ்ஞத்வாத் ப்ரஹ்மண தஸ்யாபி கேஷுசிதஹஸ் ஸூ சத்வம் உத்ரிக்தம் கேஷுசித் ரஜஸ் கேஷுசித் தமஸ்–

யதோ யுக்தம் பகவதா
ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வாதிவிதேவே ஷு வா புந
சத்வம் ப்ரக்ருதி ஜைர் முக்தம் யதேபி ஸ்யாத்ரிபிர் குணை இதி –ஸ்ரீ கீதை
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச ச ப்ரஹினோதி தஸ்மை -இதி ஸ்ருதே
ப்ரஹ்மணோபி ஸ்ருஜ்யத்வேந ஸாஸ்த்ர வஸ்யத் வேந ச ஷேத்ரஞ்ஞத்வம் கம்யதே சத்வ ப்ராயேஷு அஹஸ் ஸூ தததிரோஷூ
ச யாநி புராணாநி ப்ரஹ்மணா ப்ரோக்தாநி தேஷாம் பரஸ்பர விரோதி சாதி சாத்விகாஹஸ் ப்ரோக்தம் புராணமேவ யதார்த்தம்
தத் விரோதி அந்யத் அத்யர்த்தம் -இதி புராண நிர்ணயாயைவ இதம் சத்வ நிஷ்டேந ப்ரஹ்மணா அபிஹிதமிதி விஞ்ஞாயதே இதி –

இதில் சிறப்பாகக் கூறப்படுவதாவது
அக்நி சிவன் பெருமை தமஸ் கல்பத்திலும்
ப்ரம்மாவின் புகழ் ராஜஸ கல்பத்திலும்
ஹரியின் பெருமை ஸத்வ கல்பத்திலும்
இவை கலந்த இடத்தில் ஸரஸ்வதி பித்ருக்கள் பெருமையும் சொல்லப்படுகின்றன என்று பெரியோர்கள் தெளிந்து அறிவித்து இருக்கிறார்கள் –
இது மேலும் முதல் ஜீவனான பிரம்மாவிற்கு சில காலங்களில் ஸத்வமும் சில ஸமயம் ரஜஸ்ஸும் சில பொழுது தமஸ்ஸும் தலை தூக்கியும் இருக்கும் -அவற்றுக்கு ஏற்ப புராணம் அமையும்
அவ்வாறே கீதையிலும்
பூமியிலும் வானிலும் இருக்கும் பொருள்கள் யாவும் மூலப் பிரக்ருதியின் தொடர்பின்றி விடுபட்டவை அல்ல என்று சொல்லப் பட்டுள்ளது –
வேதத்திலும் யார் பிரமனை முன்னதாகப் படைத்து அவனுக்கு வேதங்களை ஓதுவித்தாரோ என்று இருப்பதால் பிரமனும் படைக்கப்படும் ஸாஸ்த்ரங்களுக்கு உட்பட்டும் ஜீவாத்மாவாகிறான் –
ஸத்வ குணம் மேலோங்கிய நாட்களிலும் அதற்கு மாறுபட்ட நாட்களிலும் எந்த எந்தப் புராணங்களை ஓதுகிறானோ அவைகள் முறையே நற் குணங்களையும் அதற்கு முற்றிலும் மாறுபட்ட பண்புகளையும் கொண்டிருக்கும் புராணங்களின் கருத்துக்களில் மாறுபாடு தோன்றுமாயின் ஸத்வ புராணங்களின் பொருளே கொள்ளத் தக்கது என்றும் மற்றவை தள்ளத் தக்கது என்றும் அறுதியிடப் பட்டு இருக்கிறது –

———-

101–சத்வாதிநாம் கார்யஞ்ச ச பகவதைவ யுக்தம்
சத்வாத் சஞ்ஜாயதே ஞானம் -ரஜசோ லோப ஏவ ச பிரமாதமவ் ஹவ் தாமச பகவதோ ஞான மேவ ச

ஸத்வம் முதலான குணங்களின் செயல்களை aபகவானே விவரிக்கிறார்ஸத்வத்தினால் -ஆத்ம யாதாத்ம ஞானமும் -ராஜஸத்தினால் பேராசையும் தமஸ்ஸினால் கவனக் குறைவு மயக்கம் அஞ்ஞானம் ஆகியவையும் ஏற்படுகின்றன
ப்ரவ்ருத்திஞ்ச நிவ்ருத்திஞ்ச கார்ய அகார்யே பய அபயே பந்தம் மோக்ஷம் ச யோ வேத்தி புத்திஸ் சா பார்த்த சாத்விகீ –
யயா தர்மம் அதர்மஞ்ச கார்யஞ்ச அகார்யமே வச-அயதாவத் பிரஜாநாதி புத்திஸ் சா பார்த்த ராஜஸீ
அதர்மம் தர்மம் இதியா மந்யதே தமஸா ஆவ்ருதா சார்வார்த்தாந் விபரீதாம்ஸ்
ச புத்திஸ் சா பார்த்ததாமஸீ இதி–ஸ்ரீ கீதை -18-30-/31-/32—

ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே–
பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்திஸ் ஸா பார்த்த ஸாத்த்விகீ–৷৷18.30৷৷

பார்த்த –குந்தீ புத்ரனே
ப்ரவ்ருத்திம் ச –இவ் வுலகச் செல்வங்களுக்கு சாதனமான தர்மத்தையும்
நிவ்ருத்திம் ச –மோக்ஷத்திற்கு சாதனமான தர்மத்தையும்
கார்யாகார்யே –இந்தக் கர்மங்களில் ஊன்றி நிற்பவர்களுக்குச் செய்யத் தக்கவையும் செய்யத் தகாதவையும்(அடிப்படை தர்ம நெறி -ஆச்சாரம் -கார்யம்-உடல் பலம் வயசு ஆயுசு பொறுத்து கார்யம்)
பயாபயே–பயத்திற்கும் பயமின்மைக்கும் இடமாய் இருப்பவற்றையும்(பய ஸ்தானம் அபய ஸ்தானம் -எத்தைக் கண்டு அஞ்சுவோமோ அஞ்ச மாட்டாமோ அவற்றைச் சொன்னவாறு-ஸாஸ்த்ரம் பற்றி நடப்பது-அபயம் கொடுக்கும் மீறு நடப்பதும் கோரமானது முன்பே சொன்னானே)
பந்தம் மோக்ஷம் ச –சம்சாரத்தில் கட்டுப்படுவது அதில் இருந்து விடுபடுவது ஆகியவற்றைப் பற்றிய உண்மையையும்
யா வேத்தி –எந்த அறிவு அறிகிறதோ
புத்திஸ் ஸா ஸாத்த்விகீ–அந்த அறிவு ஸத்வ குணத்தால் உண்டானதாகும்

குந்தீ புத்திரனே -இவ் வுலகச் செல்வங்களுக்கு சாதனமான தர்மத்தையும் மோக்ஷத்திற்கு சாதனமான தர்மத்தையும் –
இந்த தர்மங்களில் ஊன்றி நிற்பவர்களுக்குச் செய்யத் தக்கவையும் செய்யத் தகாதவையும் பயத்துக்கும் பயமின்மைக்கும்
இடமாய் இருப்பவற்றையும் சம்சாரத்தில் கட்டுப்படுவது -அதிலிருந்து விடுபடுவது -ஆகியவை பற்றிய உண்மையையும்
எந்த அறிவு அறிகிறதோ -அந்த அறிவு சத்வ குணத்தால் உண்டானதாகும்

பயக்ருத் பய நாஸன -அவனை அனுசந்திக்க அபயம்-நம் தோஷம் ஸம்ஸார தோஷம் அனுசந்திக்க பயம் –

சாத்விக புத்தி -பிரவ்ருத்தி மார்க்கம் இவ்வுலக இன்பம் ஸ்வர்க்கம் வரை -நிவ்ருத்தி மோக்ஷம் விஷயம் –
பயப்பட- வேண்டாதது -பந்தம் எது மோக்ஷம் -என்ற உறுதியான புத்தி –
இதனால் சாத்விக ஞானம் -அதனால் சாத்விக கர்மா -அதனால் சாத்விக பலன்

புத்தி அறிந்து கொள்கிறது தப்பு -நான் அறிந்து கொள்கிறேன் என்றே கொள்ள வேண்டும் -புத்தி உள்ளபடி உண்மையாக்க காட்டிக்கொடுக்கும் –

—————

யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச–
அயதாவத் ப்ரஜாநாதி புத்திஸ் ஸா பார்த்த ராஜஸீ--৷৷18.31৷৷

பார்த்த–அர்ஜுனா
யயா -எந்த அறிவால்
தர்மமதர்மம் ச -தர்மத்தையும் அதர்மத்தையும் –கீழ் சொன்ன ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தர்மங்களைக் கொள்ள வேண்டும் –
கார்யம் சாகார்யமேவ ச–கார்யத்தையும் செய்யத் தக்கவையும் -செய்யத் தகாதவையும் -அடிப்படை ஆசாரம் பற்றியவை
அயதாவத் ப்ரஜாநாதி -தவறாக அறிகிறானோ -கீழே யதாவத் ஸ்பஷ்டமாக இல்லை -இங்கு இருப்பதால் அந்த அர்த்தம் தானாகவே கிட்டுமே -உள்ளபடி அறிந்து கொள்ளாமல் இருப்பவன் இங்கு
புத்திஸ் ஸா ராஜஸீ-அதுவே ராஜஸ புத்தி யாகும்

குந்தீ புத்திரனே – எந்த அறிவாலே தர்மத்தையும் அதர்மத்தையும் -செய்யத் தக்கத்தையும்-செய்யத் தகாததையும் –
தவறாக ஒருவன் அறிகிறானோ -அந்த அறிவு ரஜோ குணத்தால் உண்டானது –
தர்மம் அதர்மம் மயங்கி -ராக்ஷஸ புத்தி -செய்யத் தக்கவை தகாதவை தெரியாமல் மயங்கி –
புத்தி -உறுதி -தர்ம பூத ஞானம் தான் புத்தி என்பர் –

தர்மியில் மாறாட்டம் விபரீத ஞானம் தாமசம் -தர்மத்தில் மாறாட்டம் அந்யதா ஞானம் ராக்ஷஸம்

—————–

அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸா வ்ருதா–
ஸர்வார்தாந் விபரீதாம்ஸ்ச புத்திஸ் ஸா பார்த்த தாமஸீ–৷৷18.32৷৷

பார்த்த -குந்தீ புத்ரனே
யா -எந்த புத்தி
தமஸ ஆவ்ருதா–தமஸ்ஸால் -மூடப்பட்டு -ஞான பரப்பைத் தடுக்கப்பட்டு –
அதர்மம் தர்மமிதி -இது ஓன்று எடுத்துக்காட்டு -அதர்மத்தைத் தர்மம் என்று நினைக்கிறதோ-இருப்பதை இல்லாததாகவும் உயர்ந்த ஒன்றை தாழ்ந்ததாகவும் மாற்றி அறிபவன்-
ஸர்வார்தாந் –எல்லா அர்த்தங்களையும்
விபரீதாம்ஸ் ச மந்யதே-நேர் மாறாக அறிகிறதோ
புத்திஸ் ஸா தாமஸீ-தாமஸ புத்தி எனப்படும்

குந்தீ புத்திரனே – எந்த அறிவானது தமோ குணத்தால் சூழப் பட்டதாய் – அதர்மத்தை தர்மம் என்று அறிகிறதோ –
சித்தமாயும் சாத்யமாயும் இருக்கும் எல்லாப் பொருள்களையும் நேர் மாறாக அறிகிறதோ –
அந்த அறிவு தமோ குணத்தால் உண்டாகும் புத்தியாகும் –
தாமஸ புத்தி -அதர்மமே தர்மம் என்று உறுதி -கீழே மயக்கம் தான் -இங்கு அதர்மமே தர்மம் -என்று திட புத்தி —
எத்தனை அழிந்தாலும் மாற்றிக் கொள்ளாத புத்தி -தமோ குணத்தால் சூழ்ந்து -விபரீதமாக –
சித்தம் சாத்தியம் தப்பாக புரிந்து பூதம் பிரேத குணம் சாத்தியம் என்று கொண்டு -சூழல்

ஆவ்ருதா இங்கு மட்டும் -அப்பொழுது அப்பொழுது தமஸாலே சூழப்பட்டவனாய் என்றபடி

மனு -வேதத்தால் சொல்வதை மாற்றி அறியும் புற சமயிகள்-தமோ குணத்தால் சூழப்பட்டவர்கள்

————
சர்வான் புராணார்த்தாந் ப்ரஹ்மணஸ் ச காசாத் அதிகம் யைவ ஸர்வாணி புராணாநி புராண காரா சக்ரு யதோக்தம்
கதயாமி யதா பூர்வம் தஷாத்யை முநி சத்தமை பிருஷ்ட ப்ரோவாச பகவான் அப்ஜ யோநி பிதாக–இதி ஸ்ரீ விஷ்ணு புராணம்
அபவ்ருஷேயேஷு வேத வாக்யேஷூ பரஸ்பர விருத்தேஷு கதமிதிசேத் தாத்பர்ய நிஸ்சயாத் அவிரோத பூர்வமேவ யுக்த —

புராணங்கள் யாவும் பிரம்மனிடம் இருந்தே பெறப்பட்டதாக புராணக்காரர்கள் கூறி இருக்கின்றன
அதற்கு ஏற்ப ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் தக்ஷர் முதலான முனிவர் தலைவர்கள் தாமரைப்பூவில் உதித்த பிரமனிடம் இருந்து கேட்க்கப்பட்டவைகளை உள்ளபடியே சொன்னார்கள் என்று கூறப்பட்டுள்ளது –
யாராலும் செய்யப்படாத வேத வாக்கியங்களில் ஒன்றுக்கு ஓன்று tமாறுபட்ட கருத்துக்கள் வருமாகில் அவற்றின் உண்மையான ஆழ் பொருள் அறிந்தால் அம் மாறுபாடு நீங்கும் -என்பது முன்பே சொல்லப்பட்டது-

————————-

102– யதபிசேதம் விருத்தமிவ த்ருஸ்சதே
ப்ராணம் மனசை ஸஹ கரணை நாதாந்தே பராத்மநி ஸம்ப்ரதிஷ்டாப்ய த்யாயீத ஈஸாநாம் ப்ரத்யாயீத ஏவம் ஸர்வமிதம்–அதர்வண சிகா
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ராஸ் தே சர்வே ஸம்ப்ரா ஸூயந்தே ந கரணம்—
காரணம் து த்யேய–
சர்வைஸ்வர்ய சம்பன்ன சர்வேஸ்வர சம்பு
ஆகாச மத்யே த்யேய –அதர்வண சிகா
யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ் மாந் நாணீயோ ந ஜ்யாயோ ஸ்திகஸ் சித் விருக்ஷ ஏவஸ் தப்தோ திவி திஷ்டத்
ஏக தேநேதம் பூர்ணம் புருஷேண சர்வம் ததோ யதுத்ர தரம் ததுரூப மநா மயம் ய ஏதத் விதுர ம்ருதாஸ்தே பவந்தி
அதேதர து ஸ்வ மேவாபி யந்தி சர்வாணன சிரோக்ரீவ சர்வ பூத குஹாஸய சர்வ வ்யாபிச பகவான் தஸ்மாத் சர்வ ததஸ் சிவ –அதர்வ சிகா
யதா தமஸ் தன்னாதிவா ந ராத்ரி ந சந் ந சாசச் சிவ ஏக கேவல ததஷரம் தத் ஸவிது வரேண்யம்
பிரஞ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ –ஸ்வேதாசவதரா-
இத்யாதி -நாராயண பரம் ப்ருஹ்ம இதி ச பூர்வமேவ ப்ரதிபாதிதம் தேநாஸ்ய கதம விரோத —

ஒன்றுக்கு ஓன்று மாறுபாடான கருத்துக்களைக் கொண்ட வாக்யங்கள் பின் வருமாறு
1- உயிர் மூச்சை மனம் புலன்களுடன் niruththuநிறுத்தி பரமாத்மாவான ஈசானனை தியானிக்கக் கடவன்
2-ப்ரம்மா விஷ்ணு ருத்ரன் இந்திரன் ஆகியவர்கள் படைக்கப்படுகிறார்கள் அவர்கள் காரணமாக மாட்டார்கள்
எது காரணமோ அதுவே த்யானிக்கப்பட வேண்டும்
செல்வங்கள் யாவும் நிறைந்து எல்லோருக்கும் தலைவனாய் இருக்கும் சம்புவை ஹ்ருத யாகாச நடுவில் தியானிக்க வேண்டும்
3- எவரைக் காட்டிலும் மேம்பட்டோர் சிறிதும் இல்லையோ எவரைக் காட்டிலும் சிறியவர் பெரியவர் இல்லையோ
எவர் விண்ணில் உணர்வுகள் இன்றி மரம் போல் இருக்கிறாரோ அவரால் இவ்வுலகு நிறைந்து இருக்கிறது
அவருக்கு மேம்பட்டோர் யாருமில்லை
அவர் உருவம் அவயவம் அற்றவர்
இதை அறிபவர்கள் அழிவது இல்லை -அறியாதவர்கள் துயரம் அடைகிறார்கள் –
எல்லாப் பிராணிகளின் தலையிலும் கழுத்திலும் ஹிருதயக் குகையிலும் நிறைந்து இருப்பவர்
எல்லா வற்றிற்கும் கதியானவர் -அவரே சிவன்
4-எப்பொழுது தமஸ் பகல் இரவு சேதன அசேதனப் பொருள்கள் முதலியவை இல்லையோ அப்பொழுது சிவன் மட்டும் இருந்தான்
அவனே அழிவற்றவன்
ஞாயிற்றின் ஒளி யாவும் அறிந்தவன்
பழமையானவன்
இதற்கு நாராயணனே பர ப்ரஹ்மம் என்று முன்பே கூறப்பட்டு விளக்கப் பட்டு இருக்கிறது
அதற்கு இக் கூற்றுக்கள் மாறுபாடானவை அல்ல

———–

103–அத்யல்பமேதத்
வேதவித் ப்ரவரப்ரோக்த வாக்ய அந்யய உப ப்ரும்ஹிதா வேதாஸ் சாங்கா ஹரிம் பிராஹு ஜகாத் ஜென்மாதி காரணம்
ஜன்மாத்யஸ்ய யதஸ்
யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதாநி ஜீவந்தி -யத் பிரயந்த்ய அபி சம்விசந்தி தத் விஞ்ஞாசஸ்வ தத் ப்ரஹ்மா இதி
ஜகத் ஜென்மாதி காரணம் ப்ரஹமேத்யவ கம்யதே-தச்ச ஜகத் ஸ்ருஷ்ட்டி ப்ரலய ப்ரகரனேஷ் ஏவ அவ கந்தவ்யம்
ச தேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
இதி ஜகத் உபாதானதா ஜகந் நிமித்ததா ஜகாத் அந்தர்யாமிதாதி முகேந பரம காரணம் சச் சப்தேந ப்ரதிபாதிதம் –

இது மிகவும் அற்பமானது
ஹரியே உலகின் படைப்பு முதலியவற்றிற்குக் காரணம் என்று அங்கங்களோடு கூடிய வேதம் அறுதியிடுவதாக வேதம் அறிந்தோர்களில் தலையாயவர்கள் தங்கள் மொழிகளால் நிறுவியிருக்கின்றனர் –
இவ்வுலகிற்கு பிறப்பு முதலியவை எம்பெருமான் இடமிருந்தே உண்டாவதால் அந்த ப்ரஹ்மமே காரணம் –
எவனிடமிருந்து இந்த உயிர்கள் யாவும் உண்டாயினவோ அவ்வாறு உண்டானவை யாரால் வாழ்கின்றனவோ -எவரிடத்தில் அவை ஓடுகின்றனவோ -அதுவே அறியத்தக்கது -அதுவே ப்ரஹ்மம் என அறிவாயாக -என்று
உலகின் பிறப்பு முதலானவற்றிற்கான
காரணம் அறுதியிடப்பட்டுள்ளது
எங்கு உலகின் பிறப்புsoolappattசொல்லப்பட்டு இருக்கிறதோ அங்கிருந்தே ப்ரஹ்மமானது அறியப்பட வேண்டும்
குழந்தாய் ஸத் ஒன்றே முதலில் இருந்தது
ஒன்றாகவே பிரிது ஓன்று இல்லால் இருந்தது என்று
ஜகத்தின் பிறப்புக்கு மூலப்பொருள் செய்வோன் கருவி என உபாதான நிமித்த அதன் உள்ளுறைந்து இயக்கம் ஸஹகாரி -முகமாக எல்லாக் காரணமாகவும் ஸத் ஒன்றே சொல்லப்பட்டு இருக்கிறது –

அயமேவார்த்த-
ப்ரஹ்ம வா இதமே கமே வாக்ர ஆஸீத் -இதி சாகாந்தரே ப்ரஹ்ம சப்தேந ப்ரதிபாதித
அநேந சச் சப்தாபி ஹிதம் ப்ரஹமேத் யவகதம்
அயமேவார்த்த சாகாந்தரே
ஆத்மா வா இதமேக ஏவாக்ரா ஆஸீத் -நாந்யத் கிஞ்சந மிஷத்-இதி
ததா -சத் -ப்ரஹ்ம -சப்தாப்யாம்-ஆத்மைவ அபிஹித -இதயவ கம்யதே-
ததாச சாகாந்தரே
ஏகோ ஹவை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மா நேசாந நேமேத்யா வா ப்ருத்வீ -இத்யாதிநா
சத் ப்ரஹ்ம ஆத்மதி பரம காரண வாஸிபி சப்தை நாராயண ஏவ அபிதீயதே இதி நிஸ் ஸீயதே —

வேறொரு வேத சாகையில்
ப்ரஹ்மம் மட்டுமே இங்கு முதலில் இருந்தது -என்று ப்ரஹ்மம் காரணமாக் கூறப்பட்டு இருக்கிறது –
அதனால் ஸத் என்று கூறப்பட்டது ப்ரஹ்மம் என்றே தெரிகிறது –
மற்றொரு சாகையில்
முதலில் ஆத்மா ஓன்று மட்டுமே இருந்தது -மற்ற எதுவும் சிறிதும் இல்லை -என்று கூறப்பட்டு இருக்கிறது –
ஆகவே ஸத் -ப்ரஹ்மம் -ஆத்மா -என்ற சொற்கள் ஒரே பொருளைக் கொண்டவை எனத் தேறுகிறது –
அவ்வாறே நாராயணன் ஒருவனே இருந்தான் -பிரம்மாவும் இல்லை ஈசானனும் இல்லை வானமோ பூமியோ இல்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது
இவைகளால் ஸத் -ப்ரஹ்மம் -ஆத்மா போன்ற முதல் காரணத்தைக் குறிக்கும் சொற்கள் -நாராயணன் -என்று மட்டுமே குறிக்கும் என அறுதியிடப்படுகிறது

—————-

104–ய மந்தஸ் சமுத்ரே கவயோ வயந்தி இத்யாரப்ய-நைந மூர்த்வம் நதிர் யஞ்சம் ந மத்யே பறி ஜக்ரபது –
ந தஸ்யேசே கஸ்சன் தஸ்ய நாம மஹாத் யசஸ்
ந சந்த்ருசே திஷ்டதி ரூப மஸ்ய ந சஷூஷா பச்யதி கஸ்ச நைநம் -ஹ்ருதா மநீஷா மனசா அபிக்லுப்தோ
ய ஏனம் விதுரம் ருதாஸ்தி பவந்தி -இதை சர்வ ஸ்மாத் பரத்வம் அசய ப்ரதிபாத்ய -நதஸ் யேசே கஸ்சன-
இதி தஸ்மாத் பரம் கிமபி ந வித்யதே இதி ச ப்ரதிஷித்ய
அத்ப்ய ஸம்பூதோ ஹிரண்ய கர்ப இத்யஷ்டவ இதி தேந ஏக வாக்யதாம் கமயதி தச்ச மஹா புருஷ பிரகரணம்-
ஹரீஸ் சதே லஷ்மீஸ் ச பத்ந்யவ இதி நாராயண எவேதி த்யோதயதி-

எவன் கடலில் இருப்பதாக ஞானிகள் கூறுகின்றனரோ என்று துவங்கி மேல் பக்கத்திலும்-கீழப் பக்கத்திலும் -இடைப் பக்கத்திலும் அறியப்படாதவன் –
அவனை யாரும் உள்ளிருந்தோ வெளியிருந்தோ ஏக முடியாது -மிகவும் புகழுடையவன் -அவனுடைய உருவம் கட் புலனாகாதது -அவனை யாரும் கண்களால் காண்பதில்லை -ஞான பக்திகளுடன் கூடியவர் மனத்தால் இருதயத்தில் காணப்படுபவன் -இவனை அறிபவர் சாகா நிலை அடைகின்றனர் -என்று யாவும் அறிபவனை இவ்வாறு விளக்கி
அவனுக்கு மேற்பட்டவன் யாருமில்லை என்று அவனுக்கு மேற்பட்டு அவனை ஏவக்கூடியவன் ஒருவரும் இல்லை என்பதைக் கூறி –
அத்ப்ய ஸம் பூததோ ஹிரண்ய கர்ப்ப -என்று தொடங்கும் எட்டு வாக்கியங்கள் முதலில் சொன்னதோடு சேர்த்துப் படிக்கப்பட வேண்டியவை –
ஒரே கருத்து உடையவை என்பது விளங்கும் –
அவை பரம் பொருளை காரண மஹா புருஷனைக் குறிப்பவை இதன் தொடர்பில் பூமி தேவி முதலானோரும் லஷ்மியும் உனக்கு மனைவிகள் என்று மிகத் தெளிவாக நாராயணனையே குறிக்கின்றன

—————-

105-அயமர்த்த-
நாராயண அநுவாகே பிரபஞ்சித -சஹஸ்ர சீர்ஷம் தேவம் -இத்யாரப்ய-ச ப்ரஹ்ம ரஸசீவ சேந்த்ர ச அஷரா பரம் ஸ்வராட்
இதி சர்வ சாகாசூ பரதவ ப்ரதிபாதந பராந் அக்ஷர-சிவ -சம்பு -பர ப்ரஹ்ம பரஞ்சோதி -பரதத்வ -பாராயண -பரமாத்மாதி –
சர்வ சப்தாந் தத் குண யோகிந நாராயண ஏவ ப்ரயுஜ்ய தத் வ்யதிரிக்தஸ்ய சமஸ்தஸ்ய ததா யத்ததாம் —
தத் வ்யாப்யதாம் -தத் ஆதாரதாம்-தந் நியாம்யதாம்-தத் சேஷதாம் -ததாத்மகதாம்-ச ப்ரதிபாத்ய ப்ரஹ்ம சிவயோர் அபி
இந்திராதி சமாந ஆகார தயா தத் விபூதித்வம் ச ப்ரதிபாதிதம்
இதம் ச வாக்யம் கேவல பாதத்வ ப்ரதிபாதந பரம் அந்யத் கிஞ்சிதபி அத்ர நவிதீயதே-அஸ்மின் வாக்யே ப்ரதிபாதி தஸ்ய
சர்வஸ்மாத் பரத்வேந அவஸ்திதஸ்ய ப்ரஹ்மண வாக்யாந்த்ரேஷு ப்ரஹ்ம விதாப் நோதி பரம் இத்யாதிஷு உபாஸநாதி விதீயதே —

இதன் பொருள் நாராயண அநுவாகத்திலே நன்கு விளக்கப்பட்டு இருக்கிறது
பல தலைகளை யுடையவன் என்று ஆரம்பித்து -அவனே பிரமன் இந்திரன் அழிவற்றவன் பரமாத்மா என்று எல்லா சாகைகளிலும் பரத்வத்தைச் சொல்லிய பிறகு அழிவற்றவன் சிவன் சம்பு பர ப்ரஹ்மம் பர தத்வ பராயண பரமாத்மா போன்ற சொற்களால் அந்தந்த பண்புகளால் நாராயணன் ஒருவனே காட்டப்பட்டு
அவனை ஒழிந்த மற்றவை rயாவும் அவனாலேயே படைக்கப்பட்டு-அவனாலே நிறைக்கப் பட்டு -அவனையே பற்றுக் கோடாகக் கொண்டு -அவனாலே ஏவப்பட்டு -அவனுக்கு கீழ்ப்பட்டு அவனையே ஆத்மாவாக யுடையதாகக் கூறப்பட்டு -ப்ரம்மா சிவன் முதலியோர் இந்திரனைப் போலவே அவனுடைய செல்வங்களாக கருதப் பட்டுள்ளனர்
இங்கு எடுக்கப்பட்ட வாக்யம் -நாராயணனின் மற்றப் பண்புகளையோ செல்வங்களையோ கூறாமல் அவனது ஒப்பில்லா உயர்ந்த பரத்வ நிலையை மட்டுமே விதிக்கிறது -இங்கு கூறப்பட்ட அவனுடைய யாவற்றுக்கும் மேம்பட்ட தன்மையை உடையதான ப்ரஹ்மத்தை இடையறாது தியானிப்பதன் மூலம் பரநிலையை அடையலாம் என்று இடையறாத் தியானத்தை விதிக்கிறது –

————

106–அத -ப்ராணம் மனசை ஸஹ கரணை -இத்யாதி வாக்கியம் சர்வ காரணே பரமாத்மநி காரண
பிராணாதி சர்வம் விகார ஜாதம் உப ஸம்ஹ்ருத்ய -தமேவ பரமாத்மாநாம் ஸர்வஸ்ய ஈஸாநாம் த்யாயீத இதி
பர ப்ரஹ்ம பூத நாராயணஸ்யை வத்யாநம் விதாதி-

பிறகு -உயிர் மூச்சையும் புலன் களுடன் கூடிய மனத்தையும் என்ற -வாக்யத்தால் -எல்லாவற்றிற்கும் காரணமான பரமாத்மாவை உயிர் மூச்சு புலன்கள் ஆகிய மாறுபடுபவைகளில் நின்று விலக்கி ஒரு முகப்படுத்தி அந்தப் பரமாத்மாவையே எல்லாவற்றிற்கும் ஈசன் என்று த்யானிக்கப் படவேண்டும் என்று பர ப்ரஹ்மமான நாராயணனையே தியானிக்க விதிக்கிறது-
பதிம் விஸ்வஸ்ய
ந தஸ்யேஹ கஸ்சந-இதி தஸ்யைவ சர்வேசாநதா ப்ரதிபாதிதா–அத ஏவ சர்வ ஐஸ்வர்ய சம்பந்ந
சர்வேஸ்வர சம்பு ஆகாச மத்யே த்யேய -இதி
நாராயணஸ்யைவ பரம காரணஸ்ய சம்பு சப்த வாஸ்யஸ்ய த்யானம் விதீயதே -கஸ்ச த்யேய -இத்யாரப்ய-காரணம் து த்யேய –
இதி கார்யஸ்ய அத்யே யதா பூர்வக காரணைக த்யேயதா பரத்வாத் வாக்யஸ்ய –
தஸ்யைவ நாராயணஸ்ய பரம காரணதா சம்பு சப்த வாச்யதா ச பரம காரண பிரதி பாதனைக பரே நாராயண
அநு வாக ஏவ பிரதி பந்நா இதி தத் விரோதி அர்த்தாந்தர பரி கல்பனம் காரணஸ்யைவ த்யேயத்வ விதி வாக்யே ந யுஜ்யதே –

உலகைக் காப்போன்
அவனுக்கு மேம்பட்டோன் யாரும் இல்லை -என்று அவனுடைய தனிப் பெரும் தலைமை பேசப்படுகிறது
மேலும் செல்வங்கள் யாவும் நிறைந்தவன்-எல்லாவற்றுக்கும் தலைவன் சம்பு -வானிடை விளங்குவோன் தியானிக்கப்படத் தக்கவன் -வேண்டும் என்று
நாராயணனையே பரம காரணமாக சம்பு என்னும் சொல்லால் தியானம் செய்ய விதிக்கிறது
எவன் த்யானிக்கப்பட வேண்டும் எனத் துவங்கி காரணமானவனே த்யானிக்கத் தக்கவன் -என்று காரியப் பொருட்களைத் த்யானிப்பதை விலக்கி காரணப் பொருளையே தியானிக்க வேண்டும் என விதிக்கிறது

அதனால் நாராயணனுடைய முதல் காரணத் தன்மையினால் சம்பு என்ற சொல்லுக்குப் பொருளாக முதல் காரணத் தன்மையைக் கூறி பிறகு நாராயண அநுவாகத்தில் கூறியதை விளக்கி அதற்கு மாறுபட்ட பொருள்களை விலக்கி காரணமே த்யானிக்கத் தக்கது என்று விதிக்கிறது –

——————-

107–யதபி–ததோ யதுத் தர தரம் -இத்யத்ர புருஷாதந் யஸ்ய பரதர தத்வம் பிரதீயதே -இத்யப்யதாயி -ததபி
யஸ்மாத் பரந் ந அபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாந் நாணீயோ ந ஜ்யாயோ ஸ்தி கஸ்சித்–இத்யத்ர
யஸ்மாத் அபரம்-
யஸ்மாத் அந்யத் கிஞ்சித் அபி பரம் நாஸ்தி கேநாபி பிரகாரேண புருஷ வ்யதிரிக்தஸ்ய பரத்வம் நாஸ்தி -இத்யர்த்த
அணீயஸ்த்வம் -ஸூஷ்மத்வம்-ஜ்யாயத்வம் -ஸர்வேஸ்வரத்வம் -சர்வ வ்யாபித்வாத் -சர்வேஸ்வரத்வாத்-அஸ்ய
ஏதத் வ்யதிரிக்தஸ்ய கஸ்யாபி அணீயஸ்த்வம் ஜ்யாயஸ்த்வம் ச நாஸ்தி இத்யர்த்த
யஸ் மாந் நாணீயோ ந ஜ்யாயோஸ்தி கஸ்சித்-இதி புருஷா தந்யஸ்ய கஸ்யாபி ஜ்யாயஸ்த்வம் நிஷித்தம் இதி –
தஸ்மாதந் யஸ்ய பரத்வம் ந யுஜ்யதே இதி ப்ரத்யுக்தம் –

இங்கு அதினின்றும் மேம்பட்டது -என்று பரம புருஷனை விட மேம் பட்ட உயர் நிலை கூறப்படுவது போல் காணப்படுகிறது –
யஸ்மாத் பரந்நா பர மஸ்தி கிஞ்சித் யஸ்மாந்நாணீயோ ந ஜ்யா யோஸ்தி கஸ்சித் -என்ற மந்திரத்துக்கு கீழ் வருமாறு பொருள் கொள்ள வேண்டும் –
யஸ்மாத் அபரம் -எதினின்றும் வேறுபட்ட து ஓன்று சிறிது அளவும் பெரியதல்லவோ –
அதாவது -எவ் வழியிலும் புருஷனை விடப் பெரியது எதுவும் இல்லை என்று பொருள் –
அணீயஸ் த்வம் –நுண்ணியதாய் இருத்தல்
ஜ்யாயஸ்த்வம் -எல்லாவற்றிற்கும் தலைமை
எங்கும் நிறைந்து இருப்பதால் -எல்லாவற்றிற்கும் தலைமையாய் இருப்பதால் அவனின்றும் வேறுபட்ட எதற்கும் நுண்மை முதன்மை ஆகியவை இல்லை என்பது பொருள் –
யஸ்மாந் நாணீயோ நா ஜ்யோஸ்தி கஸ்சித்-என்று புருக்ஷனைத் தவிர்த்து வேறு எதற்கும் முதன்மையாய் இருத்தல் மறுக்கப் படுகிறது
இதனால் புருஷனின்றும் வேறுபட்டது எதுவும் இல்லை என்பது வெளிப்படை –

கஸ்தர் ஹி அஸ்ய வாக்யஸ்ய அர்த்த ?
அஸ்ய பிரகரணஸ்யோபக்ரமே-தமேவ விதித்வாதி ம்ருத்யு மீதி -நாந்ய பந்தா வித்யதேயநாய -இதி
புருஷ வேதநஸ்ய அம்ருதத்வ ஹேதுதாம் -தத் வ்யதிரிக்தஸ்ய அபததாம் ச ப்ரதிஞ்ஞாய -யஸ்மாத் பரம் ந அபரமஸ்தி கிஞ்சித் —
தே நேதம் பூர்ணம் புருஷேண சர்வம் –இத் யேததந்தேந புருஷஸ்ய சர்வ ஸ்மாத் பரத்வம் ப்ரதிபாதிதம்-
யத புருஷ தத்வமேவ உத்தர தரம் -ததோ யதுத் தரதரம் -புருஷ தத்வம் ததேவ அரூபாம் -அநாமயம்-ய ஏதத் விதுரம்ருதாஸ்தே பவந்தி–
அதே தர துக்கமே வாபி யந்தி இதி புருஷ வேதநஸ்ய அம்ருதத்வ ஹேதுத்வம் ததிதரஸ்ய ச அபதத்வம்
ப்ரதிஞ்ஞாதம் ச ஹேதுகமுப ஸம்ஹ்ருதம் -அந்யதா உப க்ரமகத ப்ரதிஞ்ஞாப்யாம் விரூத்யேத

அப்படி என்றால் இந்த வாக்கியத்தின் பொருள் என்ன –இவ் வாக்கியத்தின் இடத்தையும் தொடர்பையும் ஆராய்வோமானால் துவக்கத்தில்அந்தப் பரம புருஷனையே இடையறாது தியானித்து பிறவிச் சுழல் எனும் கடலைத் தாண்ட வேண்டும் -வேறு வழி ஏதுமில்லை -என்று புருஷனை இடையறாது தியானித்து மோக்ஷம் அடையத் தகுந்த வழி -அதனினும் வேறு வழி ஏதுமில்லை என்று அறுதியிட்டு எவனைவிட மேம்பொருள் ஏதும் இல்லையோ அவனே முழுமையாவான் – எல்லோருக்கும் மேலான புருஷன் என்று புருஷ பரத்வம் கூறியது -அப்படியே அந்த புருஷத்வமே மிக உயர்ந்தது என்று விளக்கி பிறகு அதனினும் சிறந்த புருஷத்வம் வினைகளால் வரும் உருவம் அற்றது -செயலால் வரும் இன்ப துன்பங்கள் அற்றது -என்பதை அறிபவன் மோஷத்தை அடைகிறான் -அறியாதவன் துக்கத்தை அடைகிறான் -என்று புருஷத்வமே மோக்ஷ காரணம் என்றும் மற்றவை தாழ்ந்தவைகள் என்றும் கூறி துவக்கத்தில் கூறிய கருத்து அறுதியிடப் பெறுகிறதுஇதை மாறுபட்டு பொருள் கொண்டால் துவக்கமும் முடிவும் தொடர்பு அற்றவை யாகும் –
புருஷஸ் யைவ ஸூத்தி குண யோகே சிவ சப் தாபி -தே யத்வம் சாஸ்வதம் சிவமச்யுதம்–இத்யாதிநா
ஞாதமேவ புருஷ ஏவ சிவ சப்தாபி ஹித-இதி அநந்தரமேவ வததி–மஹாந் ப்ரபுர்வை புருஷ சத்வஸ்யைஷ ப்ரவர்த்தக இதி –

புருஷனுடைய தூய்மைப் பண்பாக சிவன் என்ற பதம் உபயோகப்படுத்தப் படுகிறது–நிலை பெற்றவன் -தூய்மையானவன் -அடியார்களை நழுவ விடாதவன் -என்பதும் நோக்கத் தக்கது -சிவ என்னும் பதத்தால் புருஷனே கடைசியிலும் கூறப்படுகிறான் -மேலும் அதனால் மஹா புருஷன் ஸத்வ குணத்தை நிதியாக உடையவன் என்று இக்கருத்தையே உறுதி செய்கிறது –

———————-

108–உக்த்தேநைவ ந்யாயேந -ந சந்ந சா சச் சிவ ஏவ கேவல –இத்யர்த்த சர்வம் நேயம்
கிஞ்ச-
அம்பஸ்ய பாரே –இத்யனு வாகே -ந தஸ்யேசே கஸ்சந இதி நிரஸ்த சாமாப்யதிக சம்பவாநஸ்ய புருஷஸ்ய –
அணோர் அணீயாந் -இத்யஸ் மிந்நதுவாகே வேத -ஆந்யந்தா ரூபதயா வேத பீஜ பூத ப்ரணவஸ்ய ப்ரக்ருதி பூத
அகார வாச்யதயா மஹேச்வரத்வம் ப்ரதிபாத்ய தஹர புண்டரீக மத்யஸ்தாகாச வர்த்திதயா உபாஸ்யத்வம் யுக்தம் –

இவ்வாறு விளக்கப்பட்ட aநியாயங்களால் ந ஸந்ந சாஸச் சிவ ஏவ கேவல-nஎனும் aவாக்யத்திலுள்ள சிவ என்னும் சொல் சிவனைக் குறிப்பதல்ல என்பது எவரும் அறிந்ததேமேலும் -அம்பஸ்ய பாரே -என்ற அநுவாகத்தில் -அவனுக்கு மேம்பட்டவன் யாருமில்லை -என்று மற்றவர்களை மறுத்து நிறுவப்பட்ட புருஷன் என்பவன் அணுவிலும் அணுவாக இருப்பவன் எனக் கூறப்பட்டு இருக்கிறதுஇந்த அநுவாகத்தில் வேதத்தை ஒதத் தொடங்கும் போதும் முடிக்கும் போதும் ஓம் என்று சொல்லப்பட வேண்டும் -என்று விதித்துஅதன் பகுதியான அ என்னும் எழுத்தால் யாவருக்கும் மேன்மையான தன்மை கூறப்பட்டு அவனை ஹ்ருதயத் தாமரையில் உள்ள தஹர ஆகாசத்தில் இருப்பவனாகத் தியானிக்க விதிக்கிறது –
அயமர்த்த
சர்வஸ்ய வேத ஜாதஸ்ய ப்ரக்ருதி பிரணவ யுக்த -ப்ரணவஸ்ய ச ப்ரக்ருதி அகார -பிரணவ விகாரோ வேத ஸ்வ ப்ரக்ருதி பூதே
பிரணவ லீன -ப்ரணவோபி அகார விகார பூத ஸ்வ பிரகிருதவ்-அகாரே லீன -தஸ்ய பிரணவ ப்ரக்ருதி பூதஸ்ய-
அகாரஸ்ய-ய பர வாஸ்ய ச ஏவ மஹேஸ்வர இதி சர்வ வாசக ஜாத ப்ரக்ருதி பூத அகார வாஸ்ய சர்வ வாஸ்ய ஜாத
ப்ரக்ருதி பூத நாராயணோ ய ச மஹேஸ்வர -இத்யர்த்த –

இதன் பொருளாவது
எல்லா வேதங்களுக்கும் பிறப்பிடம் ஓம் எனும் ப்ரணவம்
அந்தப் ப்ரணவத்தின் பகுதி -வேர்ச்சொல் அ காரம் ப்ரணவத்தின் விரிவே வேதம் -ப்ரணவம் அகாரத்தின் விரிவு -அவ்வாறே அவைகள் முடியும் இடமும் லயம் -முறையே ப்ரணவம் அகாரம் ஆகின்றன –
இந்த அகாரத்தினால் அறுதியிடப் படுபவன் -எனவே அவனே மஹேஸ்வரன்
இதனால் சொற்கள் யாவற்றுக்கும் வேராக அகாரமும் அவைகளால் சுட்டப்படும் பொருள்கள் யாவற்றுக்கும் வேராக இருக்கும் -நாராயணனே மஹேஸ்வரன் -என்று தேறுகிறது

யதோக்தம் பகவதோ –
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகாத்தை பிரபவ ப்ரலயஸ் ததா மத்தப் பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்சய —
அக்ஷராணாம் அகாரோஸ்மி-ஸ்ரீ கீதை –

இக் கருத்தையே கீதையில் பகவான்-நான் இவ்வுலகு அனைத்துக்கும் உத்பத்தி இடமாகவும் முடிவு இடமாகவும் இருக்கிறேன்அர்ஜுனா என்னிலும் வேறுபட்ட எப் பொருளும் என்னை விட மேலானதாக இல்லை என்றும்எழுத்துக்களில் அகாரம் ஆகிறேன் என்றும் திருவாய் மலர்ந்து அருளி இருக்கிறான் –
இதி அ இதி ப்ரஹ்ம இதி ஸ்ருதே –
அகாரேவை சர்வ வாக் -இதி ச வாசக ஜாதஸ்ய அகார ப்ரக்ருதித்வம் வாஸ்ய ஜாதஸ்ய ப்ரஹ்ம ப்ரக்ருதித்வம் ச ஸூ ஸ்பஷ்டம்

அ -என்பது ப்ரஹ்மம் என வேதம் கூறுகிறதுஅகாரத்தின் நின்றும் சொற்கள் யாவும் தோன்றுகின்றனசொற்கள் தோன்றுவதற்கு அ காரணமாக இருப்பது போலே அச் சொற்களின் பொருள்கள் யாவற்றிற்கும் அ காரத்தின் பொருளான ப்ரஹ்மம் என்பது வெள்ளிடை மலை
அத -ப்ரஹ்மண-அகார வாச்யதா ப்ரதிபாதநாத் அகார வாஸ்யோ நாராயண ஏவ மஹேஸ்வர -இதி சித்தம் –
தஸ்யைவ -சஹஸ்ர சீர்ஷம் தேவம் -இதி கேவல பரதத்வ விசேஷ ப்ரதிபாதந பரேண-நாராயண அநு வாகேந சர்வ ஸ்மாத் பரத்வம் பிரபஞ்சிதம் –
அநேந அநந்ய பரேண ப்ரதிபாதிதமேவ பரதத்வம் -அந்ய பரேஷு சர்வேஷு வாக்யேஷு கேநாபி சப்தேந ப்ரதீயமாநம்
ததேவேதி அவகம்யதே-இதி -ஸாஸ்த்ர த்ருஷ்டயாதூபதேசோ வாமதேவ வைத்த –இதி ஸூத்ரா காரேண நீர்ணீதம்

பிறகு ப்ரஹ்மத்தை அகாரத்தால் கூறி -அதன் பொருளான நாராயணனே மஹேஸ்வரன் என்பது தன்னடையே கிடைக்கிறது -அவனையே ஆயிரம் தலைகள் உடையவன் -என்று பரத்வத்தை விளக்கிய பிறகு நாராயண அநுவாகத்தில் யாவற்றையும் விஞ்சினவாகக் கூறிஇவ்வாறு தனக்கு உவமை இல்லாதவன் -எனும் நிலையே பரத்வம் என்று நிறுவுகிறதுஇவ்வாறு தனக்கு உவமை மேலானவன் இன்மையைக் கூறி -தன்னிலும் வேறுபட்ட சொற்கள் யாவற்றிற்கும் மேம்பட்டு இருப்பது போல் அவனும் இருக்கிறான் என விளக்குகிறதுமற்றையோர் தனக்கு தனிப் பெரும் முதன்மை கூறிக் கொள்வது -ஸாஸ்த்ரங்கள் நன்கு அறிந்த வாம தேவர் -அவன் தன்னுள்ளும் இருப்பதை அறிந்து அவனே யாவும் செய்வதாகக் கூறிக் கொள்வது போன்றதுஇது ப்ரஹ்ம ஸூத்ரத்தில் நன்கு விளக்கப் பட்டு இருக்கிறது
ததேதத்க்வ பரம் ப்ரஹ்ம சித் ப்ரஹ்ம சிவாதி சப்தாவகதமிதி கேவல ப்ரஹ்ம சிவயோ ந பரத்வ பிரசங்க –
அஸ்மின் அநந்ய பரே னுவாகே தயோர் இந்திராதி துல்ய தயா தத் விபூதித்வ ப்ரதிபாதநாத் கசித் ஆகாய பிராணாதி சப்தேந
பரம் ப்ரஹ்மாபிஹிதம் இதி பூதாகாச பிராணாதே யதா ந பரத்வம் –

இவன் ஒருவனே பர ப்ரஹ்மமாய் இருக்க பிரம்மா சிவன் போன்ற சொற்களால் குறிக்கப் படுவோருக்கு பர ப்ரஹ்மத்வம் கிடையாது என்பது அதே நூலில்
வேறொரு இடத்தில் இந்திரன் போன்றோரும் இவ்வாறு கூறிக் கொள்ளுகையால் ஆகாயம் போன்ற சொற்கள் எவ்வாறு உத்பத்திக்குக் காரணமாகச் சொல்லப்பட்டு இருந்தாலும் அவை பர ப்ரஹ்ம்ம் அல்லவோ -அது போன்று இங்கும் சிவனுக்கு பர ப்ரஹ்மத்வம் கிடையாது என்று சொல்லப் படுகிறது –

———————-

109–யத் புநர் இதமா சங்கிதம்-
அதயதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம -தஹரோஸ்மிந் நந்தராகாச -தஸ்மிந் யதந்தஸ் தந்வேஷ்டவ்யம்
ததுவாத விஜிஞ்ஞாசித்வயம்-இத்யத்ர ஆகாச சப்தேன ஜகதுபாதாந காரணம் ப்ரதிபாத்ய தத் அந்தரவர்த்திந –
கஸ்யசித்த தத்வ விசேஷஸ்ய அந்வேஷ்டவ்யதா ப்ரதிபாத்யதே அஸ்ய ஆகாசஸ்ய நாம ரூபயோ நிர்வஹகத்வ ஸ்ரவணாத்
புருஷ ஸூக்தே புருஷஸ்ய நாம ரூபயோ கர்த்ருத்வ தர்சநாஸ்ச-ஆகாச பர்யாய பூதாத் புருஷாத் அந் யஸ்ய அந் வேஷ்டவ்யதயா
உபாஸ்யத்வம் பிரதீயதே இதி

இது மற்ற ஒரு ஐயத்தைத் தோற்றுவிக்கிறதுபர ப்ரஹ்மத்திற்கு இருப்பிடமான இவ் வுடலில் ஹ்ருதயத்திலுள்ள தாமரை மலர் போன்ற இடத்திலுள்ள மிகச் சிறிய வெளியானது தேடி அறியத் தக்கது -அதுவே இடையறாது த்யானிக்கத் தக்கது -என்று உடலிலுள்ள ஆகாயம் குறிப்பிடப் படுகிறது -மேலும் அதனுள் உறைவதாயும் தன்னுடைய தொடர்பால் அதற்குச் சிறப்பளிப்பதாயும் -உலகிற்கு பருப்பொருள் காரணமானதாயும் வேறொன்று குறிக்கப்பிடப் பட்டு அது அந்த ஆகாசத்திற்கு பெயர் உருவம் அளிப்பதாயும் -அதற்கு மேலாண்மை யுடையதாயும் -புருஷ ஸூக்தத்தில் ஓதப்பட்டு இருக்கிறது -அதனால் ஆகாசத்தில் நின்றும் வேறுபட்டு புருஷன் என்ற பெயரும் உருவமுமுடைய ஒருவனே உபாஸிக்கத் தக்கவன் எனக் கொள்ளல் வேண்டும் -என முற் கூற்று கூறப்படுகிறது –
அநாதிதா வேதாநாம் அதிருஷ்ட ஸாஸ்த்ர விதாம் இதம் சோத்யம் -யத தத்ர ஸ்ருதிரேவ அஸ்ய பரிகார மஹா வாக்யகாரஸ் ச –

இக் கூற்றை தோற்றம் நிர்ணயிக்க முடியாத மறைகளாலும் ஸாஸ்த்ரங்களாலும் நுணுகி ஆராய்ந்தால் அவைகளில் இருந்தே தக்க விடையளிக்கும் மொழிகள் காணக் கிடைக்கின்றன –

தஹரோ அஸ்மின் நந்தர் ஆகாச -கிம் தத்ர வித்யதே யத் அந்வேஷ்டவ்யம் யத் வாவ விஜிஞ்ஞாசிதவ்யம் இதி சோதிதே-
யாவான் வா அயம் ஆகாச தாவநேஷோந்தர் ஹ்ருதய ஆகாச -இத்யாதிநா -அஸ்ய அகார சப்த வாஸ்யஸ்ய -பரம புருஷஸ்ய –
அநவதிக மஹத்வம் சகல ஜகத் காரணத்தயா -சகல ஜகத் ஆதாரத்வம் ப்ரதிபாத்ய -அஸ்மின் காமா ஸமாஹிதா
ஏஷ ஆத்மா அபஹதபாப்மா விஜரோ வி மிருத்யு ஸத்யஸங்கல்ப -இதி
அபஹதபாப்மத்வாதி -ஸத்யஸங்கல்பத்வ பயந்த குண அஷ்டகம் தஸ்மிந் நிஹிதம் இதி பரம புருஷவத்-பரம புருஷ குண அஷ்டகஸ்யாமி
ப்ருதக் விஜிஞ்ஞாசி தவ்யதா ப்ரதிபாதித யிஷயா தஸ்மிந் யதந்தஸ்ய தன்வேஷ்டவ்யம் இதயுக்தம் இதி ஸ்ருதியைவ சர்வம் பரிஹ்ருதம் —

ஏதத் யுக்தம் பவதி -கிம் ததத்ர வித்யதே யதந் வேஷ்டயம் இத்யஸ்ய சோத்யஸ்ய -தஸ்மிந் ஸர்வஸ்ய ஜகத ஸ்ரஷ்டத்வம்-ஆதாரத்வம் –
நியந்த்ருத்வம் -சேஷித்வம் -அபஹத பாப்மாதயோ குணாஸ் ச வித்யந்தே-இதி பரிகார இதி
தஹரம் என்பது ஹிருதயக் குகை -உள்ளுறை வெளி -அதனால் எது அறியப்படுகிறது -எது அறியத்தக்கது -எது ஆராயப்பட வேண்டியது என ஆராயின் கட் புலனாகும் வெளி எவ்வளவு பரந்ததோ அவ்வளவு இவ்வெளியும் பரந்ததே -என்று பரமபுருஷனுக்கு உரிய அளவற்ற விரிவும் -அவன் உலகிற்கு காரணமாதலும் -யாவற்றிற்கும் பற்றுக்கோடாக இருத்தலும் விளக்கப்பட்டு -இவனிடத்தில் விரும்பத் தக்கவை யாவும் நிறைந்து இருக்கின்றன
இந்தப் பரமாத்மா பாபம் அற்றவன் -மூப்பற்றவன் -அழிவற்றவன் – துயரமற்றவன் -பசியற்றவன் -தாகமற்றவன் -விருப்பங்கள் யாவும் அடையப் பெற்றவன் -தவறாத வினைத்திட்பம் உடையவன் -என எட்டுப் பண்புகளை உடையவன்
அவனையும் அவனுடைய இப் பண்புகளையும் தனித் தனியாக தியானிக்க வேண்டும்
அதுவே தஹராகாசம் என்று பரமாத்மாவையே தஹராகாசம் என்று நிலை நிறுத்துகிறது
இதன் விளக்கம்
இதில் என்ன உள்ளது -அது எவ்வாறுள்ளது என்று ஆராய்கையில் அகில உலகினையும் படைத்தல் -அவற்றிற்கு பற்றுக் கோடாதல் -அவற்றை அடக்கி ஆளுதல் -அவற்றைப் பணி கொள்ளுதல் -மேற் கூறிய எட்டுப் பண்புகள் இந்த ஆகாசத்தில் விளங்குகின்றன -என்பது தெளிவு –

ததாச வாக்யகார வசனம்–தஸ்மிந் யதந்த-இதி காம வ்யபதேச -இதி காம்யந்தே இதி காமா அபஹத பாப்மத் வாதயோ குணா இத்யர்த்த

அவ்வாறே ப்ரஹ்ம ஸூத்ரத்திலும்தஸ்மிந் யதந்த -என்ற இடத்தில் எல்லோரும் விரும்பும் குணங்களைக் குறிப்பிட்டு இருக்கிறதுஅதாவது பாபமற்று இருத்தல் முதலான எட்டுக் குணங்கள்
ஏதத் யுக்தம் பவதி -யத் ஏதத் தஹர ஆகாச சப்தாபி தேயம் -நிகில ஜகத் உதய விபவ லய லீலம்-பரம் ப்ரஹ்ம
தஸ்மிந்யத் அந்தர் நிஹிதம் அநவதிக அதிசயம் அபஹத பாப்மத்வாதி குண அஷ்டகம் தத் உபயமபி அன்வேஷ்டயம் விஜிஞ்ஞாசி தவ்யம் இதி
யதா ஆஹ-அதய இஹாத்மாந மனு வித்யா வ்ரஜயந்த்யே தாம்சச சத்யாந் காமாம் ஸ்தேஷாம் சர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி -இதி –

இதை மேலும் விளக்குவோம்
எது தஹாராகாஸம் எனப் படுகிறதோ அதுவே உலகு யாவையும் படைத்து காத்து அழித்து வினை புரியும் ப்ரஹ்மம்
அதனுடைய பாபமற்று இருத்தல் முதலான எட்டுக் குணங்கள் ஆகிய இரண்டையும் தேட வேண்டும் -மனத்தில் நிலை நிறுத்த வேண்டும் -எனக் கூறுகிறது
பிறகு எவர்கள் பரமாத்மாவையும் அவனுடைய இந்த எட்டுக் குணங்களையும் அறிந்து பரமபதம் செல்லத் தகுதியானவர்களோ அவர்களுக்குத் தாங்கள் விரும்பும் உலகுகளுக்குச் செல்லும் திறன் தன்னடையே ஏற்படுகிறது -எனக் கூறுகிறது –

——————

110–ய புந -காரணஸ்யைவ த்யேயதா ப்ரதிபாதந பரே வாக்யே-விஷ்ணோ அநந்ய பரவாக்ய ப்ரதிபாதித பரதத்வ பூதஸ்ய
கார்ய மத்யே நிவேச ச -ஸ்வ கார்ய பூதத்வ சங்க்யாபூரணம் குர்வத-ஸ்வ லீலயா ஜகத் உபகாராய ஸ்வ இச்சாவதார இத்யவ
கந்தவ்ய யதா லீலயா தேவ சங்க்யா பூரணம் குர்வத-உபேந்த்ரத்வம் பரஸ்யைவ யதாச ஸூர்ய வம்சோத்பாவ
ராஜ சங்க்யா பூரணம் குர்வதா -பரஸ்யைவ ப்ரஹ்மணோ தாஸாதி ரூபேண ஸ்வ இச்சாவதார –
யதா ச ஸோம வம்சங்க்யா பூரணம் குர்வதோ பகவத-பூ பாராவ் தரணாய
ஸ்வ இச்சயா வஸூ தேவ க்ருஹேவதாரா ஸ்ருஷ்ட்டிப் பிரளய ப்ரகாரனோஷு நாராயண ஏவ
பரம காரண தயா ப்ரதிபாத்யதே இதி பூர்வமே வோக்தம் —

மீண்டும் –
காரணம் ஒன்றே த்யானிக்கத் தக்கது என்று கூறி இருப்பதால் -அந்தக் காரணம் என்பது யாது என ஆராய்ந்தால்-மற்றை தேவதைகளைப் பற்றிக் குறிப்பிடாத நாராயண அநுவாகத்தில் பர தத்வமான காரணம் –
ஆயினும் அவன் கார்யமான மற்ற தேவதைகளுக்கும் ஏற்றத்தைக் கொடுக்க தன் விருப்பத்தாலேயே கீழ் இழிந்து -அவர்களில் ஒருவராக எண்ணப்படும் படி தன்னைத் தாழ விடுகிறான்
தன் அந்த எண்ணத்தின் படியே உபேந்த்ரன் போன்ற பிறப்புகளை எடுக்கிறான் -அவ்வாறே தன் இச்சையால் ஸூர்ய வம்ஸத்தில் தாஸரதியாகத் தோன்றுகிறான்
பூமி பாரம் நீக்க வாஸூ தேவன் வீட்டில் அவதரித்து சந்த்ர வம்சத்தில் வைத்து எண்ணப்படுகிறான்
படைப்பு பிரளய காலங்களில் பரம காரணமாக நாராயணனாக தன் நிலையில் இருக்கிறான்
இவ்வாறு கொள்வதால் மட்டுமே வேத வாக்யங்கள் ஓன்று படுகின்றன –

——–

111–யத் புந -அதர்வ சிரஸ் -ருத்ரேண ஸ்வ சர்வ ஐஸ்வர்யம் பிரபஞ்சிதம் தது-
சோ அந்தராதந்தரம் ப்ராவிசது-இதி பரமாத்ம பிரவேசாதுக்தம் -இதி ஸ்ருதியைவ வ்யக்தம் –
ஸாஸ்த்ர த்ருஷ்ட்யாதூபதேசா வாம தேவவத் -இதி ஸூத்ர காரேண ஏவமாதீநாம் அர்த்த ப்ரதிபாதித

மீண்டும் -அதர்வ ஸிரஸ் என்னும் வேதப் பகுதியில் ருத்ரனால் தனது செல்வங்கள் என்று பரக்கத் பேசப் படுபவைகள்நான் அகத்தின் அகத்தையும் நிறைப்பவன் -என்று பரமாத்மாவால் அவன் நிறைக்கப் பட்டு இருத்தலால் வேதக் கருத்துக்களுக்கு இசையும்வாம தேவர் போன்று ஸாஸ்திரம் நன்கு அறிந்தோர் செய்யும் உபதேசம் -என்று இது போன்ற சொற்களுக்கு பொருள் கொள்ள வேண்டும் என்று ப்ரஹ்ம ஸூத்ரத்தில் நிறுவப் பட்டு இருக்கிறது-
யதோக்தம் ப்ரஹ்லாதேநாபி –
சர்வ கத்வாதநந் தஸ்ய ச ஏவாஹ மவஸ்திதித–ஏரவாஹ மத்தஸ் சர்வம் மஹம் சர்வம் மயி சர்வம் சநாதநே–இத்யாதி

அவ்வாறே ப்ரஹ்லாதனும்எப்பொருளிலும் ப்ரஹ்மம் நிறைந்து இருப்பதால் அதாக நான் இருக்கிறேன் -என்னிடம் இருந்தே யாவும் தோன்று கின்றன – நானே யாவுமாய் ஆகிறேன் அழிவற்று இருக்கிறேன் -என்று சொல்கிறார்
அத்ர சர்வகத்வாத நந்தஸ்ய இதி ஹேதுருத்த ஸ்வ சரீர பூதஸ்ய ஸர்வஸ்ய சிதசித் வஸ்துந ஆத்மத்வேந சர்வகத பரமாத்மா
இதி சர்வே சப்தா சர்வ சரீரம் பரமாத்மாநாமே அபிதத தீத் யுக்தம் அத காம் இதி சப்த ஸ்வாத்ம பிரகாரிணம் பரமாத்மநமேவ ஆசஷ்டே
அத இதம் உச்யதே
ஆத்மேத்யேவ து க்ருஹ்ணீயாத் ஸர்வஸ்ய தன்னிஷ்பதே இத்யாதிநா காம் க்ருஹண உபாஸநம் வாக்ய காரேண –
கார்யாவஸ்த காரணாவஸ்தாஸ் ச ஸ்தூல ஸூஷ்ம அசித் சித்த வாஸ்து சரீர பரமாத்மைவ இதி -ஸர்வஸ்ய தந்நிஷ் பத்தே -இத்யுக்தம்–
ஆதமேதி தூப கச்சந்தி க்ராஹயந்நி ச-இதி ஸூத்ரா காரேண ச —

இதற்குக் காரணம்
ப்ரஹ்மம் எல்லை யற்று யாவற்றின் உள்ளும் நுழைந்து இருத்தல் என விளக்கப் பட்டு இருக்கிறது –
ப்ரஹ்மம் சேதன அசேதன பொருட்களை தன் உடலாகக் கொண்டு ஆத்மாவாகக் கொண்டு நிறைந்து இருப்பதால்
எல்லாச் சொற்களும் யாவற்றையும் உடலாக யுடைய பரமாத்மாவையே குறிக்கும் என்பதே பொருள்
பிறகு நான் என்ற சொல்லும் தன் ஆத்மாவைக் காட்டி அதைத் தன் உடலாகக் கொண்டு அதனுள் விளங்கும் பரமாத்மாவையே குறிக்கிறது

பிறகு த்யானிக்கையில் நம் ஆத்மாவிற்குள் பரமாத்மா இருக்கிறான் என்றே தியானிக்க வேண்டும் -என்றும் சொல்லப்படுகிறது -ஏன் என்றால்
அவனே யாவற்றிற்கும் தோற்றக் காரணமாய் இருக்கிறான் என்றும் விளக்கப் படுகிறது
அவன் காரண நிலையில் கட் புலனாகாத சேதனத்துக்குள் இருக்கும் அசேதன பொருள்களையும் சேதனங்களையும் கார்ய நிலையில் கட் புலனாகிற சேதனத்துக்குள் இருக்கும் அசேதன பொருள்களையும் தனக்கு உடலாகக் கொண்டு இருப்பதால் அவனிடமிருந்து யாவும் உண்டாகின்றன என்று கொள்வதே முறை
அவனை ஆத்மா உயிர் -என்றே உபாஸகர்கள் யாவரும் இடையறாது த்யானிக்கிறார்கள் –
ஸாஸ்த்ரங்களும் அவ்வாறே நமக்குக் காட்டிக் கொடுக்கின்றன என்பதே ப்ரஹ்ம ஸூத்ரகாரரின் கொள்கை –

———

112–மஹா பாரதே ச ப்ரஹ்ம ருத்ர சம்வாதே ப்ரஹ்மா ருத்ரம் ப்ரத்யாஹ-
தவாந் தராத்மா மம ச யே சாந்யே தேஹி சம்தா–இதி ருத்ரஸ்ய ப்ரஹ்மணஸ் ச-அந்யே ஷாஞ்ச தேஹினாம்
பரமேஸ்வரோ நாராயண அந்தராத்மதயா வஸ்தித -இதி-
ததாதத் ரைவ -விஷ்ணுர் ஆத்மா பகவதோ பவஸ்யாமித தேஜச-தஸ்மாத் தனுர்ஜ்யா சம்ஸ்பர்சம் ச விஷேஹே மஹேஸ்வர –
இதி தத்ரைவை -ஏதவ் த்வவ் விபுதஸ்ரேஷ்டவ் பிரசாத க்ரேதஜவ் ஸ்ம்ருதவ் ததா தர்சித பந்தாநவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார காரகவ் –
இதி அந்தராத்மதயா அவஸ்தித நாராயண தர்சித பதவ் ப்ரஹ்ம ருத்ரவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார கார்யகரவ்–இத்யர்த்த –

மஹா பாரதத்தில் -பிரம ருத்ர உரையாடலில் பிரம்மா உனக்கும் எனக்கும் உடல் படைத்த யாவருக்கும் அந்த பர ப்ரஹ்மமே அந்தராத்மா வாகிறான் என்று கூறுகிறார் –
ருத்ரனுக்கும் பிரம்மாவுக்கும் மற்றைய உடல் படைத்தோர் யாவருக்கும் பரமேஸ்வரனாய் இருப்பவன் நாராயணனே –
அவனே அந்தராத்மாவாக நிலை பெற்று இருக்கிறான்-என்று இதற்குப் பொருள்

அதிலேயே மேலும் -அளவற்ற தேஜஸ்ஸை யுடைய பவனுக்கு சிவனுக்கு -விஷ்ணுவே ஆத்மா என்றும்
தொடர்ந்து -இப்படிப் பட்ட தேவர்களில் சிறந்த ப்ரம்மா சிவன் ஆகியோர் நாராயணன் மகிழ்ச்சியுடனும் கோபத்துடனும் இருக்கையில் முறையே படைக்கப் பட்டார்கள் என்றும்
அவனால் வழி காட்டப்பட்டு படைத்தலையும் அழித்தலையும் செய்கின்றனர் என்றும் சொல்லப் படுகிறது –

அந்தராத்மாவில் இருந்து கொண்டு நிலை பெற்ற நாராயணனால் தூண்டப் பட்டே ப்ரம்ம ருத்ரர்கள் படைத்தலையும் அழித்தலையும் செய்கின்றனர் என்பது இதன் பொருள்

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –