Archive for the ‘வார்த்தா மாலை’ Category

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-4–

May 21, 2026

ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)

மற்றுமொரு நாள்‌ கந்தாடை யணணனை அழைத்தருளி, பெரிய கந்தாடை யப்பன்‌, திருக் கோபுரத்து நாயனார் பட்டர்‌, சுத்த ஸத்வமண்ணன்‌, ஆண்ட பெருமாள்‌ நாயனார்‌, அய்யனப்பா இவர்களுக்கு
பகவத் விஷயம்‌ ப்ரஸாதிக்கும்படிக்கு நியமித்தருளி ”பகவத்ஸம்‌பத்தாசாரியர்‌” என்று திருநாமம்‌ ஸாதித்தருளி ஆசார்ய ஸிம்‌ஹாஸநத்திலே அபிஷேகம்‌ செய்தருளினார்‌.
சுத்த ஸத்வமண்ணனுடைய வ்யாக்யாந சாதுர்யத்தைக் கண்டு போரவுகந்தருளி அவருக்குத்‌ ‘திருவாய்மொழியாசாரியர்‌” என்று திருநாமஞ் சாத்தி பகவத் விஷய ஸிம்ஹாஸனத்திலே அபிஷேகஞ் செய்தருளினார்‌.

ஒரு நாள்‌ ராத்திரி கந்தாடை நாயனும்‌ ஜீயர் நாயனாரும்‌ பகவத் விஷயத்திலே கூடமான வாக்யங்களுக்கு அர்த்த விசாரம்‌ செய்ய,நாயன்‌ ஸம்ஸ்க்ருதமாக அர்த்தோபந்யாஸம்‌ செய்யக் கண்டு
பகவத் விஷயத்திற்கு ஸம்ஸ்க்ருதத்தில்‌ அரும் பத விளக்கம்‌ பண்ண நியமித்தளி உபலாளித்தருளினார்‌.

முதலிகளை ஆசார்ய ஸிம்ஹாஸனங்களில்‌ அபிஷேகம்‌ செய்தல்‌
ஒருநாள்‌ ப்ரதிவாதி பயங்கர மண்ணாவை அழைத்தருளி, கந்தாடை யண்ணன்‌, போரேற்று நாயனார்‌, அநந்தய்யனப்பை. எம்‌பெருமானார்‌ ஜீயர்‌ நாயனார்‌, கந்தாடை நாயன்‌ இவர்களெல்லாருக்கும்‌ ஸ்ரீபாஷ்யம்‌ ஸாதித்தருளும்படிக்கு நியமித்து அவருக்கு ஸ்ரீபாஷ்யாசாரியர்‌” என்று திருநாமம்‌ ப்ரஸாதித்தருளிஸ்ரீபாஷ்ய ஜிம்ஹாஸனத்திலே அபிஷேகம்‌ செய்தருளினார்‌,

எறும்பி அப்பாவை கோயிலுக்கு அழைத்தல்‌
முன்பு ஜீயர்‌ ஸந்நிதியினின்று அனுப்புவித்துக் கொண்டு எழுந்தருளின எறும்பி அப்பா தத் விஸ்லேஷம்‌ ஸஹிக்க மாட்டாமல்‌ ஜீயருடைய தினசர்யா ப்ரகாரங்களை அநுஸந்தித்துக் கொண்டு ௮நுபவ பரீவாஹ ரூபமாக திநசர்யை” என்கிற ப்ரபந்தத்தைச்‌ செய்‌தருளி, ஜீயர்‌ ஸந்நிதிக்கு ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கையிலே கொடுத்து வரக் காட்ட, அத்தைக் கண்டு ஜீயர்‌ மிகவும்‌ உகந்தருளி, ”அபிமத
நிஷ்டராகில்‌ இப்படி யிருக்க வேண்டாவோ?” என்று மிகவும்‌ க்ருபை பண்ணி, அவரிடத்திலே திருவுள்ளம் சென்று, அப்போதே அப்பா எழுந்தருளும் படிக்கு ‘ப்ரீத: ப்ரேஷிதவாந்‌ முநிர் வர வரோ
யஸ்மை முஹுஸ்ரீமுகம்‌!* என்கிறபடியே எறும்பி யேறத் திருமுகம்‌ போக விட்டருள. அப்பாவும்‌ ஜீயரை அப்போதே காண வேணும்‌ என்று பேராசையோடிருக்க,
பாராவாரப் லவந சதுர: குஞ்ஜரோ வாநராணாம்‌ பத்மாபர்த்து: ப்ரிய ஸஹ சர : பத்ரிணாமீஸ்வரோ வா
வாயுர்பூத்வாஸ பதியதிவா மார்க்க முல்லங்க்ய துர்க்கம்‌ காலே காலே வரவரமுநே காமயே வீக்ஷிதும்‌ த்வாம்‌ ॥

[மணவாளமாமுனியே ! பெருங் கடலைத்‌ தாண்டுவதில்‌ சமர்த்தரான வானரங்களுள்‌ ஸ்ரேஷ்டரான சிறிய திருவடியாகவாவது பூமகள்‌ கேள்வனான எம்பெருமானுக்கு ப்ரியனாய்‌ ஸதா அருகே நித்ய கைங்கர்யம்‌ செய்து கொண்டிருக்கும்‌ பக்ஷி ராஜனான பெரிய திருவடியாகவாவது அடியேன்‌ ஆகி இப்பொழுதே கடக்த முடியாத வழியையும்‌ கடந்து தேவரீரைக்‌ காலந் தோறும்‌ கண்‌ணாரக் கண்டு களிக்க ஆசைப்படுகிறேன் ] என்றும்‌ மநோ ரதித்துக்‌ கொண்டிருக்கிற தசையிலே திருமுகம்‌ வரக் கண்டு அத்யாதரத்‌துடனே ப்ரத் யுக்தராய்ச்‌ சென்று ஸேவித்து திருமுகத்தை சிரஸா வஹித்து.

தேவ:ஸ்வாம்‌ ஸ்வயமிஹ பவந்‌ வெளம்ய ஜாமாத்ரு யோகீ |
போகீஸ த்வத் விமுக மபிமாம்‌ பூய ஸாபஸ்ய ஸித்வம்‌’?
அர்த்தெள தார்யாதசே வசஸா மஞ்ஜாஸா ஸந்நிவே ஸாதா
விர் பாஷ் பைர மலமபிதிர்‌ நித்ய மாராதநீயம்‌
ஆஸா ஸாநைர் வரவரமுநே நித்ய முக்தைரலப்யம்‌ மர்த்யோ லப்தும்‌
ப்ரபவதிகதம்‌ மத்வித: ஸ்ரீமுகம்தே
ஸாரா ஸார ப்ரமிதி ரஹிதஸ் ஸர்வதா ஸாஸ நம்தே ஸத்ய ஸ்ரீ மாந்‌
கபிகர க்ருதர மாலிகா மேவ குர்யாம்‌’

[திரு வநந்தாழ்வானே! தேவரீர் தாமாக இவ் வுலகில்‌ அஸ்மதாதிகளுக்கு ஸ்வாமியான மணவாளமாமுனிகளாகத்‌ திருவவதரித்து,தேவரீரிடத்தில்‌ விமுகனாயிருப்பினும்‌ அடியேனை விசேஷமாக கடாஷித்தருளிற்று. மணவாளமாமூனியே! தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளின்‌ அமைப்பினாலும்‌ அர்த்த கெளரவத்தாலும்‌ தூய மதியுடையவரால்‌ ஆநந்தக் கண்ணீருடன்‌ எப்போதும்‌
ஆராதிக்கத் தக்கனவாய்‌, எப்‌போதும்‌ பல்லாண்டு பாடிக் கொண்டுள்ள நித்ய முக்தர்களாலும்‌ அடைய வரிதான தேவரீருடைய ஸ்ரீ முகத்தை அடியேன்‌ போல்வார்‌ அடைய எப்படித் தக்கவராவர்‌.’
நன்மை தீமைகளைப்‌ பகுத்தறியும்‌ அறிவற்ற அடியேன்‌ எல்லா விதத்திலும்‌ தேவரீருடைய ஸ்ரீமுகத்தை குரங்கின்‌ கைப் பூ மாலை யாகவே ஆக்குவேன்‌] என்று அதிலே ஈடுபட்டு, அப்போதே கோயிலைக் குறித்து அத்யபி நிவேசத்துடேன எழுந்தருளி மடத்திலே புகுந்து வழியிலுண்டான விடாயும்‌ நெடு நாளாக ஸேவியாத விடாயும்‌ தீர “ஸுதா நிதிமிவ ஸ்வைர ஸ்வீக்ருதோ தகர விக்ரஹம்‌”? [அமுதக் கடல் போல தமதிச்சையாலே ஸ்வீகரிக்கப்‌ பட்ட உயர்ந்த திருமேனி] என்னும்படியான விக்ரஹத்தைக் கண்டு
களித்து, வரவர முநி யோகி வர்யருடைய ஸ்ரீபாதபத்மங்களைத் தம்‌ நெஞ்சிலும்‌ கண்ணிலும்‌ ஒற்றிக் கொண்டு ஸேவித்து,
பொன்னிதனிற்‌ குளித்தாங்கந்‌ தனிற் புகுதப்‌ பெற்றோம்‌
பொருவருஞ் சீர்‌ நம்பெருமாள் பதம்‌ புகழப் பெற்றோம்‌
மன்‌னிய சீர்‌ மணவாள மாமுநி வனென்னையன்‌ வாழ்ந்திருக்கும்‌ மடம் தனில்‌ வந்திருக்கப் பெற்றோம்‌
சென்னி தனிலவனடியார்‌ பதஞ்சூடப்‌ பெற்றோம்‌
திருமலையாழ்வாரிலென்றும்‌ சிறந்திருக்கப் பெற்றோம்‌
பின்னை யவர்க்கந்தரங்கப்‌ பொருளும்‌ பெற்றோம்‌
பெருந் திவத்தி லின்‌பமிங்கே பெருகவும்‌ பெற்றோமே
–என்றும்‌
மண்ணாடு வாழ வந்தோன்‌ மணவாளமா முனிவன்‌ வண்மை
கண்ணாருளுக் கிலக்காக நல் வாழ்வுங் கண்டவன் தன்‌
திண்ணாரடிகளில்‌ குற்றேவல்‌ செய்து திரியவும்‌ நான்‌
எண்ணாதிருக்க நடுவே நமக்கு வந்‌தெய்தியதே
–என்றுஞ்‌ சொல்லுறபடியே தாம் பெற்ற பேற்றினுடைய கெளரவத்தை நாடோறும்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டு,

அந்த: ஸ்வாந்தம்‌ கமபி மதுரம்‌ மந்த்ர மாவர்த்த யந்தீம்‌ உத்யத் பாஷ்ப ஸ்திமித நயநா ழுஜ்ஜிதா ஸேஷ வ்ருத்திம்‌ | வ்யாக்யா கர்ப்பம்‌ வரவர முநே த்‌வந் முகம்‌ யீக்ஷமாணாம்‌ கோணேலீந : க்வசித ணுரசவ் ஸம் ஸதம் தாமுபாஸ்தாம்‌
(மணவாள மாமுனிகளே, மனத்தினுள்ளே மதுரமான தோர் மந்த்ரத்தை அடிக்கடி உச்சரிப்பதும்‌, உண்டான ஆனத்தக்‌ கண்ணீரினால்‌ அசையாத திருக் கண்களை யுடையதும்‌, வேறு காரியங்‌களை விட்டிருப்பதும்‌, உபய வேதாந்த ரஹஸ்யார்‌த்த விவரணத்தை உள்ளடக்கிக்‌ கொண்டிருக்கிற தேவரீர்‌ திருமுக மண்டலத்தை ஸேவித்துக்‌ கொண்டிருப்பதுமான(பெரியோர்களுடைய) அந்த கோஷ்டியை, அற்பனான அடியேன்‌ ஒரு மூலையில்‌ மறைந்திருத்து அருகிலேயே ஸேவித்திருக்கக் கடவேன்‌.] என்னும்படியான திவ்ய கோஷ்டியை ஸேவித்துக் கொண்டு வரவர முநி ப்ருத்யர்‌ களுடனே வாழ்ந்து கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌. அவர்களிலே வரந் தரும்‌ பெருமாள்‌ பிள்ளை ஜீயருடைய திருக் கைச்‌ செம்பும்‌ திரு வொற்று வாடையுங் கொண்டு ஸேவிப்பாரா யிருக்கிற நாளிலே அவர்க்குத்‌ திருக் குழற் கற்றை வளர்ந்திருக்க, இதேதென்று ஜீயர்‌ கேட்டருள தத் தேதுவை அவர்‌ விண்ணப்பஞ் செய்ய, ‘இன்று திரு முடி விளக்கும்‌” என்று நியமித்தருள, அவரும்‌ அப்படியே திருமுடி விளக்குவித்துக்‌ கொண்டு எழுந்தருள, அவர்க்கு குமாரர்‌ திருவவதரித்தா ரென்றும்‌ பத்து நாளாயிற் றென்றும்‌ அன்று ஆள் வர?இத்தைக் கேட்டு இதென்ன ஸர்வஜ்ஞதை! என்று எல்லோரும்‌ விஸ்மயப் பட்டார்கள்‌ அவரும்‌ பின்பு தம்முடைய குமாரருக்கு நாயனாரென்று ஜீயர்‌ திரு நாமஞ் சாத்‌தி யருளினார்‌; இப்படி பலரும்‌ திரு நாமஞ் சாத்தினார்கள்‌; ஆகையாலே வந்து பரந்த தெங்கு மித்‌ திருநாமமிங்கு என்கிறபடியே இதுவும்‌ அழகிய மணவாளன்‌ கோத்ர மென்னும்படி எங்கும்‌ விஸ்த்ருதமாயிற்று,

அக் காலத்திலே கந்தாடை யண்ணன்‌ ஜீயர்‌ விரும்பி யமுது செய்தருளும்‌ கீரைக் கறியமுது நடத்திக் கொண்டு போந்து ஸர்வ காலத்திலும்‌ தத்பதாஸ்ரயராய்‌ ஸேவித்துக் கொண்டு போருகிறவர்‌ ,தம்முடைய எம்பெருமான்‌ தளிகைக்கு உபாதான த்ரவ்யத்தாலே நடத்திக் கொண்டு செல்ல, அவருக்குண்டான த்ருஷ்ட ஸங்‌கோசதைத்‌ திருவுள்ளம் பற்றி, தமக்கு வந்த திரு முன் காணிக்கைகளையும்‌ அவர்க்கு ப்ரஸாதித்தருளி, இப்படி.த்ருஷ்டாத்ருஷ்டங்‌களிரண்டும்‌ ஸ்வாதீனமாக நடத்திக் கொண்டு போருகற நல்லடிக் காலத்திலே,
அப்பிள்ளை கந்தாடையண்ணன்‌ முதலானோர்‌ செப்பமுடன்‌ சேர்ந்த திரள் தன்னை-யெப்பொழுதும்‌ பார்த்தாலும்‌ எமக்கிழவாம்‌ பட்டர் பிரான்‌ தாதர் தனைச்‌ சூர் தீரக் காணாமையால்‌
என்று! அவர்‌ விச்லேஷம்‌ ஸஹியாமலருளிச்‌ செய்துவிட,
அப்பிள்ளானுங் கந்தாடை யண்ணனு மருள் புரிந்த சடகோபதாதரும்‌
ஒப்பிலாத சிற்றானுங் கூடியே யோங்கு வண்மை மணவாள யோகி தாள்‌
செப்பி வாழ்ந்து களித்துத்‌ தென் கோயிலிற்‌ சிறந்த வண்மையைச்‌ சேவித்திராமலே
தப்பி யோடித்‌ தவித்துத் திரிவது தலை மெழுத்துத்‌ தப்பாது காணுமே

என்று தம்முடைய இழவை அநுஸந்தித்து அப்போதே புறப்பட்டு வந்து திருவடிகளிலே ஸேவித்துக்‌ கொண்டிருந்தார்‌. பின்பு.

வாது செயவென்று சில வாதினர்கள்‌ வந்து மனமுறிய நிற்ப ரொருபால்‌
வாழி யெனவே பெரிய சாப மறவென்று சிலர் வந்தனைகள்‌ செய்வ ரொருபால்‌
போதுமினி வாதமுன பாதம்ருளென்று புகழ்ந்து சிலர்‌ நிற்ப ரொருபால்‌
பொங்கி வருமெங்கள் வினை மங்க வருளென்‌று சிலர்‌ போற்றி செய்து நிற்ப ரொருபால்‌
ஈதிவை கிடக்க மறை நூற் றமிழ்‌ தெரிந்து சிலரேதமற வாழ்வ ரொருபால்‌
ஏதமற வாதுலர்கள்‌ பேதையர்கள்‌ தாமயங்கி நிறை திறைஞ்சி நிற்ப ரொருபால்‌
மா தகவினாலுலக மேழையு மளிக்க வென வந்த வெதிராசனடி சேர்‌
மா முனிவர் தீபமருளாளர்‌ மணவாள முனி மன்னு மடம்‌ வாழும்‌ வளமே

என்று இப்படி பாகவத ஸம்‌ருத்தி யுடனே வாழுகிற நாளிலே

(1432-தொடங்கி –1433-பரிதாபி ஆவணி மூலம் தொடங்கி ஆனி மூலம் வரை -பஞ்ச வ்யாக்யானங்களையும் ஸாதித்து அருளினார்)

நல்லதோர் பரிதாபி வருடம் தன்னில்
நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
தொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர் பக் நாலாம் நாளில்
செல்வமிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்றே
வல்லி யுரை மணவாளர் அரங்கர் நங்கண்
மணவாள மா முனிக்கு வழங்கினாரே
–-ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை–-6–

ஆனந்த வருடத்தில் கீழ்மை ஆண்டில்
அழகான ஆனி தனில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீறிட்ட வழக்கே என்ன
மணவாள மா முனிகள் களித்திட்டாரே
–ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை–-7–

நம்பெருமாள்‌ ஜீயரை பகவத் விஷய கால க்ஷேபம் ஸாதிக்க நியமித்தது
தத : கதாசிதா ஹூ௰ தமேகம்‌ முநி புங்கவம்‌!
ஸத் க்ருதம்‌ ஸாது ஸத் க்ருத்ய சரணாப்‌ஐ ஸமர்ப்பணாத்‌’ ॥
ஸந்நிதெள மேநிஷீதேதி ॥ஸஸாஸ முரஸாஸந : |
மஹாந் ப்ரஸாத இத் யஸ்ய ஸாஸநம்‌ ஸிரஸா வஹந்
ததைவ தத்ர வ்யாக்பாதும் தத் ஷணாதுப சக்ரமே |
ஸ்ரீமதி ஸ்ரீ பதிஸ் ஸ்வாமி மண்டபே மஹதி ஸ்வயம்‌ |
தத் வந்தஸ்ய ப்ரபந்தஸ்ய வயக்தந் தேநைவ தர்ஸிதம்‌
ஸடவைரிமுகை: ஸ்ருண்வந்‌ தேஸிகைர் திவ்ய தர்ஸநை: |
அத திவ்ய முநேஸ் தஸ்ய மஹிமாந மமாநுஷம்‌ ॥
அநுபூயே மமாபால கோபால மகிலோ ஜந: |
அமந்யத பரம் தந்ய மாத்மாநம்‌ தத்ர நிக்ஷிபந் ॥

[பின்பொரு கால்‌ நித்ய ஸூரி நிர்வாஹகரான பெருமாள்‌ முனிவர்‌ பெருமானாகிய இம் மணவாள மா முநிகளை வரவழைத்து கிருபையினால்‌ தமது ஸ்ரீசடகோபனை ஸாதிப்பதன்‌ மூலமாக மிகவும்‌ கெளரவித்து, “தேவரீர்‌ நமது ஸந்நிதியல்‌ திருவாய்‌ மொழி ஸ்ரீஸக்திகளின்‌ அறிவரிய விசேஷார்த்தங்களை ௨பந்யஸித்து கொண்டு வாரீர்‌” என்று நியமித்தருளினார்‌. மாமுனிகள்‌
அவருடைய உத்தரவை, பெரிய அநுக்ரஹ மென்று சிரஸாவஹித்து அப்படியே அங்கு அந்த ஷணத்திலேயே உபந்யஸிக்கத்‌ தொடங்கினார்‌. ஸ்ரீய பதியான ஸ்ரீ ரங்க நாதர்‌ பெரிதாய்‌ அழகிய பெரிய திருமண்டபத்தில்‌ தாம்‌ நம்மாழ்வார் முதலான திவ்ய ஞாநம் படைத்த ஆசார்யர்களுடன்‌ எழுந்தருளி யிருந்து அந்தத்‌ திருவாய்மொழிக்கு அம் மணவாள மா முனிகளாலேயே தெளிவாக அருளிச்‌ செய்‌யப்பட்ட உண்மைப்‌ பொருள்களைக்‌ கேட்டருளி மகிழ்ந்தார்‌. பின்பு குழந்தைகள்‌ இடையர்‌ தொடக்கமான சாதாரண ஜனங்கள்‌ முதலாக எல்லோரும்‌ அந்த உயர்ந்த முனிவரான மணவாள மா முனிகளின்‌ அமானுஷமான வைபவத்தை அனுபவித்துத்‌ தம்மை அவரிடத்திலேயே ஸமர்ப்‌பித்துத்‌ தம்மை மிகவும்‌ பாக்ய சாலிகளாக நினைத்தார்கள்‌, என்கிறபடியே பரீதாபி வருஷத்தில்‌ திருப் பவித்ரத் திருநாளிலே

க்ருபயா பர யா ஸ ரங்கராட்‌ மஹிமாநம்‌ மஹதாம்‌ ப்ரகாஸயந்‌
குரு’சே ஸ்வயமேவ சேதஸா வர யோகி ப்ரவரஸஸ்ய ஸிஞ்யதாம்‌

[அந்த ஸ்ரீரங்கராஜர்‌ தமது உயர்ந்த தயையினாலே முநி ஸ்ரேஷ்டரான மணவாள மாமுனிகளின்‌ பெருமையைப்‌ பெரியோர்‌களுக்கு வெளிப்படுத்துவதற்காக, அம் முனிவர்க்குத்‌ தாம் சிஷ்யராக வேணுமென்று தாமே தமது மனத்தினால்‌ விருமபினார்‌ ] என்று ஸ்ரீரங்கநாயகரான பெருமாள்‌ தம்முடைய ப்ரம க்ருபையாலே ஜீயருடைய மஹிமையை பெரியோர்களுக்கெல்லாம்‌ ப்ரகாசிப்பிப்பதாக ஸ்ரேஷ்டரான ஜீயருக்கு சிஷ்யராகுகையை -பிதரம்‌ ரோசயாமாஸ ததா தஸரதம்‌ ந்ருபம்‌- என்று பெருமாள்‌ சக்ரவர்த்தியை பிதாவாக ருசித்தாப் போலே இங்கும்‌ தாமே திரு வுள்ளத்திலே ருசித்தருளினார்‌, அநந்தரம்‌,
ஸ்ரோதும்‌ த்ராவிட வேதபூரி விவ்ருதிம்‌ ளெளம்யோம் பயந்துர் முநே ருத்கடண்டாஸ்தி மமைந மாந்ய ததஸ் தார்க்ஷ்யாஸ்ரயம்‌ மண்டபம்‌ ஆவிஸ்ய அர்ச்சக மூரிவாநிதிமுதா, நிஸ்போஷ லோகாந்விதோ
ரங்கீ வத்ஸர மேகமேவம ஸ்ருணோத்‌ வ்யக்தம்‌ யதோக்தம்‌ க்ரமாத்‌ ॥

[ஸ்ரீ ரங்கநாதன்‌ திராவிட வேதமான திருவாய்மொழியின்‌ உரையாகிய ஈட்டை மணவாளமா முனிவரிடமிருந்து கேட்க வேணுமென்ற ஆசை எனக்குள்ளது -ஆகையால்‌ அவரை கருட மண்டபத்துக்கு அழைத்து வாரும்‌” என்று அர்ச்சகரை ஆவேசித்து அருளிச் செய்தான்‌, பின்பு அப்பெருமான்‌ எல்லாரோடும்‌ கூடி யிருந்து ஸந்தோஷமாக முறையே ஒரு வருஷ காலம்‌ அம் முனிவர்‌ ஸ்பஷ்டமாக ஸாதிக்கக்‌ கேட்டருளினான்‌] என்று ஸ்ரீரங்கநாதர்‌ நமக்கு அழகிய மணவாளமாமுனி யிடத்திலே திராவிட வேதமான நாலாயிரம்‌ திவ்ய ப்ரபந்த வ்யாக்யானங்‌களைக் கேட்டருள அபி நிவேசமா யிருக்கிறது; ஆகையாலே இந்த மணவாளமாமுனியை கருட மண்‌டபத்திலே அழைப்பியும்‌!’ என்று அர்சசகரிடத்திலே ஆவிஷ்டராய்‌ ஸந்தோஷத்துடனே அருளிச்‌ செய்து, தாமுமங்கே யெழுந்தருளி, ஸமஸ்த ஜனங்களோடுங்‌ கூடி யிருந்து ஒரு ஸம்வத்ஸரம்‌ இப்படியே வ்யக்தமாக ஜீயரருளிச்‌ செய்த கிர்மத்திலே கேட்டருளினார்‌, அதெங்ஙனே எனில்‌;

மங்களா யதநே ரங்கே ரம்ய ஜாமாத்ரு யோகிராட்‌ |
யுகபத த்ராவிடாம்நாய ஸர்வ வ்யாக்யாந கெளதுகீ
॥-என்கிறபடியே மிகவும்‌ ஹ்ருஷ்டராய்‌
தேஸாந்தர கதோ வாபி த்வீபாந்தர கதோபி வா |
ஸ்ரீரங்காபிமுகோ பூத்வா ப்ரணி பத்ப நஸீததி ॥

[மங்களங்களுக்கு இருப்பிடமான ஸ்ரீரங்கத்தில்‌ மணவாள மாமுனிகள்‌ ஒரே சமயத்தில்‌ திருவாய்மொழியின்‌ எல்லா வ்யாக்‌யானத்தையும்‌ உபந்யஸிப்பதில்‌ ஆசை யுடையரா யிருந்தார்‌ ]
[தேசாந்தரத்திலிருந்தாலும்‌ த்வீபாந்தரத்திலே யிருந்தாலும்‌ ஸ்ரீரங்கத்திற் கெதிர்முகமாக நின்று ஒருவன்‌ தண்டம்‌ ஸமர்ப்‌பித்தானாகில்‌ அவன்‌ எவ்வித வருத்தமும்‌ அடைய மாட்டான்‌] என்றும்‌ தேசாந்தரங்களி$ல இருந்தானே யாகிலும்‌ திருவரங்கன்‌ திருப்பதியை திக்கு நோக்கி தண்டன்‌ ஸமர்ப்பித்த மாத்ரத்திலே ஸகல துரித நிவர்த்தகமாய்‌ ஸகல மங்கள ப்ரதமான கோயிலிலே எழுந்தருளியிருந்து -ஸ்ரீரங்கமங்கள மணியான பெருமாள்‌ ஸந்‌நிதியிலே ஸ்வாமி அழகிய மணவாளமாமுனி, த்ராவிட வேதமான திருவாய்‌ மொழிக்கு ஆறாயிரப்படி , ஒன்பதினாயிரப்படி,பன்னீராயிரப்படி, இருபத்நாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்‌ படிகளையும்‌, திருவாய்மொழிக்கு அங்கோபாங்கங்களான அருளிச்‌ செயல்‌ வ்யாக்னங்களையும்‌ ஒருக்கால்‌ காலக்ஷேபம்‌ நடத்தத் திருவுள்ளமா யெழுந்தருளி யிருந்தார்‌. பெருமாளும்‌ திருப் பவித்ரோத்‌ஸவ வ்யாஜமாகப்‌ புறப்பட்டருளி யிருந்தார்‌, பெருமாளும்‌ திருப் பவித்ர மண்டபத்திலே யேறி யருளி பேரோலக்கமா யெழுந்‌ தருளி “அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌, ஆசார்ய புருஷர்கள்‌, ஜீயர்கள்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அனைத்துக் கொத்துக்கும்‌ அருளப் பாடு ஸாதித்தருளி, ஜீயரும்‌ முதலிகளுடனே பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணிக் கொண்டெழுந்தருளி யிருக்க, பலரடியார்‌ முன்பருளிய என்ற படியே ஜீயரைத்‌ தனித்து அருள்பாடிட்டருளி, ஸ்ரீசடகோபனையும்‌ ப்ரஸாதித்தருளி, ‘* நாளை முதலாக தம்முடைய பெரிய திருமண்டபத்திலே பெரிய வண்குருகூர்‌ நம்பியான ஆழ்வாருடைய திருவாய்மொழிப் பொருளை ஈடு முப்பத்தாறாயிரத்துடனே நடத்தும்‌’” என்ன; “இப்படி அருளுவதே!” என்று மிகவும்‌ ஹ்ருஷ்டராய்
நாமார்‌? பெரிய திருமண்டபமார்‌? நம் பெருமாள்‌
தாமாக நம்மைத் தனித் தழைத்து–நீ மாறன்‌
செந் தமிழ்‌ வேதத்தின்‌ செழும் பொருளை நாளுமிங்கே
வந்துரை யென்றேவுவதே வாய்ந்து.
-என்று அருளிச் செய்தார் –

பிற்றை நாள்‌ தொடங்குவதாக எழுத்தருஸி இன்பம்‌ பயக்க விருக்க நிலத் தேவர்‌ குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக காந கோஷ்டியைப்‌ பாரித்தாப் போலவும்‌ இராமாயணத்தைக்‌ கேட்‌பதாக பார்‌த்‌தி வாம்ஸ் ச நர வ்யாக்ர: பண்டிதாத்‌ நைகமாம்ஸ்த தா”! [(புருஷஸ்ரேஷ்டனான) இராமபிரான்‌ அரசர்களையும்‌ புலவர்‌ களையும்‌ வேதம் வல்லவர் களையும்‌ வரவழைத்தான்‌] என்று தொடங்கி பரிகணிதரான அனைவரையும்‌ திரட்டினாப்‌ போலவும்‌ பெருமாள்‌ நாய்ச்சிமாருடனே கூட திவ்ய ஸிம்ஹாஸநத்திலே யேறி யருனி திவ்ய கோஷ்டியைப்‌ பாரித்து அந்த கோஷ்ட் யந்தர் பூதராய்‌ சேர்த்தியை அநுபவிக்க -அயர்வறுமமர்களான திருவநந்தாழ்‌வான்‌, பெரிய திருவடி, ஸேநாபதியாழ்வான்‌ என்கிற ஸுரிமார்‌ களோடும்‌, -வைகுத்தத்து முனிவராயிருந்துள்ள நம்மாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்கள்‌ பதின்மரோடும்‌, நாதமுநி யதிவர ப்ரப்ருதிகளான ஆசார்யர்களனைவரோடும்‌, ஸ்ரீரங்கநாராயண ஜீயர்‌, திருமாலை தந்த பட்டர்‌ தொடக்கமானாரோடும்‌, அணிய ரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌ தங்கள் இன்ப மிகு பெருங் குழுவோடுங்கூட பேரோலக்கமாக வெழுந்தருளி யிருத்து ஈடு தொடக்கமான ஐத்து வ்யாக்யானத்துடனே திருவாய்மொழி தொடங்க, அவ் வவ்விடங்‌ களிலே இது ஸ்ருதி ப்ரக்ரியை, இது ஸ்ரீபாஷ்ய ப்ரக்ரியை, இது ஸ்ருத ப்ரகாசிகா ப்ரக்ரியை, இது கீதா பாஷ்ய ப்ரக்ரியை, இது ஸ்ரீ பாஞ்சராத்ர ப்ரக்ரியை, இது ஸ்ரீ ராமாயண ப்ரக்ரியை, இத மஹா பாரத ப்ரக்ரியை, இது ஸ்ரீ விஷ்ணு புராண ப்ரக்ரியை, இது மஹாபாகவத ப்ரக்ரியை, இது பதார்த்தம்‌, இது வாக்யார்த்தம்‌, இது மஹா வாக்யார்த்தம்‌, இது ஸமபிவ்யாஹாரார்த்தம்‌, இது ஸ்த்வநி யர்த்தம்‌, இது அர்த்த ரஸம்‌, இது பாவ ரஸம்‌, இது ஒண்‌ பொருள் , இது உட் பொருள்‌ என்று இவர்‌ இப்படி அருளிச்‌ செய்யும்படியையும்‌, ரங்கீ வத்ஸர மேகமேவம ஸ்ருணோத்‌ வ்யக்தம்‌ யதோக்தம்‌ க்ரமாத்‌” [ஸ்ரீரங்கநாதன்‌ மாமுனிகளால்‌ முறையே ஸ்பஷ்டமாக சொல்லப்பட்ட விஷயத்தை இங்ஙனமே ஒரு வருஷ காலம்‌ கேட்டருளினான்‌] என்றபடியே இவர்‌ தொடங்கி நடத்தி யருளும் படியையும்‌ திருச் செவி சாத்தி யருளி அங்கே இப்படியே ஒரு ஸம்வத்ஸரம்‌ நடந்து பின்பு சாத்தி யருளும் போது।

பகவத்‌ விஷய சாத்து மறை
முன்பு போலே, பராங்குஸ பரகால பட்டநாத யதிவராதிகளுடனே கூட ஏறி யருளித்‌ திருச்செவி சாத்தி யருளி ஜீயரை மிகவும்‌ உபலாளித்தருளி திவ்ய ப்ரபந்த தத்வ வ்யாக்யாந வைபவங்களையும்‌, ஜீயருடைய வைபவங்களையும்‌ ப்ரகாசஞ்‌ செய்தருள வேணுமென்றும்‌, தாம்‌ அநுஷ்டித்துக்‌ காட்ட வேணுமென்றும்‌ திரு வுள்ளமாய்‌

(சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தலைப்பப்
போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ விப்பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே
–11இந்தப் பாசுரம் பகல்பத்து ஐந்தாம் நாள் இன்றும் அரையர் விண்ணப்பம் செய்து அருளுகிறார்)

ஸமாப்தெள க்ரந்தஸ்ய ப்ரதிதஸீ விநிதோ பர்யாயசசயே பரம்‌
ஸஜ்ஜீபூதே வரவர முநேரங்க்ரி ஸவிதே |
ஹடாத்பால: கஸ்சீத் குத இதி நிரஸ்தோப் படிபகத: ஐகெள
ரங்கே ஸாக்ய: பரிணத் சதுர் ஹாயாந இதம் ॥

[பகவத் விஷய க்ரந்தத்தின்‌ சாத்துமுறை ஸமயத்தில்‌, வெற்றிலை பாக்கு பழம்‌ என்றிங்ஙனே ப்ரஸித்தமான பலவகைப்பட்ட உபஹாரங்கள்‌ ஸித்தப்படுத்தப் பட்டவளவில்‌, நான்கு பிராயம்‌ நிறைந்து ‘ரங்கநாயகன்‌ என்னும்‌ பெயர் பூண்ட சிறுவனொருவன்‌ திடீரென்று அங்கு வரப் புக, “நீ எதற்கு வருகிறாய்‌ அப்பால்‌ செல்‌’ என்று |தடுக்கப்பட்ட போதிலும்‌ அருகே வந்து நின்று இத் தனியனைச்‌ சொன்னான்‌ ) என்கிறபடியே ஜீயருக்கு ஆசார்ய ஸம்‌பாவனையாக சில த்ரவ்யங்களும்‌ ஏலா லவங்க கர்ப்பூராதிகளும்‌ திருப்பரிவட்டங்களும்‌, அடைக்காயும்‌, பலங்களும்‌, அமர்த்தி நிற்க

ஸ்ரீ சைலேச தயா பாத்ர தனியனவதாரம்‌
அழகிய மணவாள பட்டரான அர்ச்சக குமாரராய்‌ ஐந்தாம்‌ வயதாய்‌ ரங்கநாயக மென்கிற திருநாமத்தை யுடையரான ஒரு பிள்ளை, ஸம்பாவனைத்‌ தட்டுக்களுக்கும்‌ பெருமாளுக்கும்‌ நடுவே வத்து நிற்க, அப்பாலே விடவிடத் திரும்பி வந்து நிற்கும் , இது வெறுமனன்று, ஒரு ஆஸ்சர்ய முண்டாக வேணும்‌” என்று எல்லாரும்‌ பார்த்திருந்து சிறு பிள்ளையை நீர்‌ நிற்கிற காரியமேதென்ன, அவர்‌ கையைக் கூப்பிக் கொண்டு பயப்படாமல்‌ ஸ்ரீ ஸைலேஸ தயா பாத்ரம்‌ என்ன, பின்னுமேதென்ன, தீ பக்த்யாதி குணார்ணவம்‌ என்ன, இன்னஞ் சொல்லுமென்ன, யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜா மாதரம்‌ முநிம்‌ என்று சொல்லி ஓடிப் போக, பெரியோர்களெல்லாம்‌ ஆஸ்சர்யப்பட்டு இந்த ஸ்லோகத்தைப்‌ பட்டோலை கொண்டு மஞ்சட் காப்புச்‌ சாத்தித்‌ திருவடிகளிலே ஸமர்ப்பித்து, பின்பு அத்தைத்‌ தட்டிலே வைத்து ரங்க நாயகத்தை உபலாளித்‌ தழைத்து இன்ன மேதென்ன, நானொன்று மறியேன் என்ன முன்பு சொன்‌னத்தை இன்னமொறு முறை சொல்லுமென்ன, நானொன்று மறியேனென்று ஓடி விட;

வாழி திரு நாமத்துக்கு நியமனம்‌
பின்பு அப் பிள்ளைக்கு அருள்பாடு ஸாதித்து,நீர்‌ வாழித் திரு நாமமோதுமென்ன, அவர்‌ தமிழிலே அதி சதுரராகையாலே,

வாழி திருவாய்மொழிப் பிள்ளை மாதகவால்‌
வாழும்‌ மணவாள மா முனிவன்‌–வாழியவன்‌
மாறன்‌ திருவாய்மொழிப் பொருளை மா நிலத்தோர்‌
தேறும்படி யுரைக்கும்‌ சீர்‌-
– என்றும்‌(இப் பாசுரம்‌ மடத்துப்‌ பிள்ளை அருளிச்‌ செய்தது என்பர்-அப்பிள்ளை அருளிச் செய்தார் என்பாரும் உண்டு )
செய்ய தாமரைத்‌ தாளிணை வாழியே
சேலை வாழி திரு நாபி வாழியே
துய்ய மார்பும்‌ புரி நூலும்‌ வாழியே
சுந்தரத் திருத் தோளிணை வாழியே
கையுமேக்திய முக்கோலும்‌ வாழியே
சுருணைபொங்கிய கண்ணிணை வாழியே
பொய்யிலாத மணவாளமாமுனி புந்திவாழி புகழ்வாழி வாழியே
என்றும்‌–(ப்ரதிவாதி
பயங்கரம்‌ அண்ணன்‌ அப் பிள்ளை அருளிச் செய்ததாகச் சொல்வர் )
அடியார்கள்‌ வாழ அரங்க நகர்‌ வாழ
சடகோபன்‌ தண்டமிழ் நூல்‌ வாழ–கடல்‌ சூழ்ந்த
மன்னுலகம்‌ வாழ மணவாள மா முனியே!
இன்னுமொரு நூற்றுண்டிரும்‌
-என்றும்‌ -(ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணன்‌ அப் பிள்ளை அருளிச் செய்ததாகச் சொல்வர் )
ஒத, பெருமாளுகந்தருளி அவரை க்ருபை பண்ணி யருளி வரிசைகளும்‌ ப்ரஸாதித்து:

திவ்ய தேசங்களுக்கு நம்பெருமாள்‌ நியமனம்‌-
உடனே திருமலை, பெருமாள் கோயில்‌ தொடக்கமான திருப்‌பதிகளுக்கெல்லாம்‌ ஸ்ரீசேனை முதலியாருடைய ஸ்ரீ முகமாக அநுஸந்தான காலங்கள்‌ தோறும்‌ ஜீயர்‌ விஷயமாக நம்பெருமாளருளிச்‌ செய்த தனியன்‌ ,
ஸ்ரீ ஸைலேஸ தயா யாத்ரம்‌ தீ பக்த்யாதி குணார்ணவம்‌ |
யதீந்த்ர ப்ரவ்ணம்‌ வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ॥
-என்‌றநுஸந்திந்துத்‌ தொடங்கவும்‌, ப்ரபந்தம்‌ சாத்தி -வாழி திருவாய்மொழிப் பிளளை என்று தொடங்கி , மணவாளமாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்‌ என்று அநுஸந்தித்துத்‌ தலைக் கட்டவும்‌ என்று அனுப்பி விட்டருளி ஜீயருக்கு ஸம்பாவனையும்‌ செய்‌தருளி வரிசையுடன்‌ மடத்திற்கு அனுப்பி யருளி நிற்க, பின்னும்‌ ஒரு அதிசயம்‌ ப்ரவர்த்தமாயிற்று,

ஸ்ரீசைலேச தயாபாத்ரம்‌: என்பது ப்ரணவார்த்தம்‌. ஸ்ரீசைலேச-(திருமலையப்பன்‌) ௮காரார்த்தம்‌. தயா-பாத்ரம்‌-௮வன்‌ க்ருபைக்கு பாத்ரமான ஜீவாத்மா மகார வாச்யன்‌.-எம்பெருமானுகக்குரியன்‌ என்ற ஸம்பந்தார்த்தமும்‌ தயா பாத்ரம்‌ என்பதனால்‌ காட்டப்பட்டது,

அண்ணன்‌ திருமாளிகையில்‌ அதிசய நிகழ்ச்சி
ஈடு சாத்து முறை யுத்ஸவம்‌ ஸேவிக்க அனைவரும்‌ கோயிலிலே சேர்ந்த வளவிலே அண்ணன்‌ திருமாளிகையிலே ஜ்ஞாநாதிகைகளான அம்மைமார்களும்‌ அண்ணன் தேவிகளும்‌ சேர விருந்து கொண்டு ஜீயருடைய வைபவத்தை அநுஸந்தித்திருக்கிற வளவிலே ஒரு ப்ரஹ்மசாரி வந்து ஒரு சீட்டை அண்ணன் தேவிகள்‌ கையிலே கொடுத்து, இத்தை அண்ணன்‌ திருக் கையிலே ஸமர்ப்பியும்‌-என்ன; அவர்‌ அத்தை வாங்கி வாஸிப்பித்து “இது ஒரு ஸ்லோகமிருத்தபடியே!*? என்று உகந்து ப்ரஹ்மசாரியைக்‌ கேட்டு ஆதரிக்‌ கப்பார்க்க, அங்கே அவரைக்‌ காணா தொழிய பின்பு எல்லாரும்‌ எழுந்திருந்து எங்குந் தேடியுங்‌ காணப் பெறாமையாலை அங்குள்ளவர்கள்‌ பகவல் லீலை யென்று அறுதியிட , அவர்களிலே சிலர்‌ பெரிய திருமண்டபத்திலே சென்று முறியை ஸமர்ப்பித்துச்‌ செய்தியை விண்ணப்பஞ்‌ செய்யக் கேட்டு
ஹடாத் தஸ்மிந்‌ ஷணே கஸ்சித் வர்ணீ ஸம் ப்ராப்ய பத்ரிகாம்‌ |
வாதூல வரதாசார்ய தர்ம பத்ந்யா: கரே ததெள ॥

திடீரென்று அக் கணத்திலே ஒரு ப்ரஹ்மசாரி வந்து கோயிற் கந்‌தாடை யண்ணனுடைய தேவிகளின்‌ கையில்‌ ஒரு ஓலையைக்‌ கொடுத்‌தான்‌] என்று அநுஸந்தித்து அனைவரும்‌ ஆச்சர்யப்பட்டு முறியில்‌ திருவெழுத்துப்பட்ட ஸ்ரீஸைலேஸ தயாபாத்ர ஸ்லோகத்தைக் கண்டு வித்தராய்‌, தனியனின்‌ அர்த்தத்தை திருமந்த்ரமாக யோஜித்து -அநுஸந்தித்து, வானமா மலை ராமாநுஜ ஜீயர்‌; கந்தாடை அண்ணன்‌, அப்பா, அண்ணா முதலான பெரியோர்கள்‌ தாங்கள்‌ தங்களுடைய பக்த் யதிசயத்தாலே தனியனாக வேணுமென்று அருளிச் செய்த ஸ்லோகங்களையும்‌ இதிலே அந்தர் பவிப்பித் தருளி -இது எல்லார்க்கும்‌ உத்தாரகம்‌’- என்று உகந்திருக்க, பெருமாள்‌ ஆழ்வார்களுக்கு அருள் பாடிட்டு அனுப்பி யருளி, -உள்ளே பெரிய பெருமாள்‌ சேர்த்தியிலே எழுந்தருளினவாறே கோயில்‌ பரிகரமனைத்துக் கொத்தும்‌ ஸகல வரிசைகளுடனே ஜீயரை யெழுந்தருளப்‌ பண்ணி வைத்துக் கொண்டு திருவீதி ப்ரதக்ஷிணமாக மடத்திலே யெழுந்தருளப்‌ பண்ணி வைத்தார்கள்‌. பின்பு கோயில்‌ பரிகரமனைத்‌துக் கொத்தும்‌ ஸந்நிதியிலே சென்றவாறே அவர்களைப்‌ பெருமாள்‌ உகந்தருளி, ஜீயர்‌ முப்பத்தாறாயிரப்‌ பெருக்கர்‌ என்னுமது கண்‌டோம்‌ என்று மிகவும்‌ க்ருபை பண்ணி யருளினார்‌. இதற்கு முதலிகளும்‌-வாழி திருவாய்மொழிப் பிள்ளை என்று தொடங்கி மங்களா சாஸநம்‌ பண்ணியும்‌
அடிசூடி யென்‌ தலைமேலரு மறை யாய்ந்து தொண்டர்‌
முடி சூடிய பெருமான்‌ வரயோகி முனங்குரவோர்‌
படி சூடு முப்பத்தாறாயிரமும்‌ பணித் தரங்க
ரடி சூடி விட்டதற்கோ எந்தாயென்ப துன்னையுமே
–என்று ஆபால கோபாலரெல்லாரும்‌ தத் வைபவத்துலே யீடு பட்டு ததேக பரராய்‌ தந் நாம குணங்களை அநுஸந்தித்துக்‌ கொண்டு ஹ்ருஷ்டரா யிருந்தார்கள்‌.

திருவேங்கடமுடையான்‌ இத் தனியனை ப்ரவர்த்திப்பித்தது
இத் தனியனுக்கு இன்னம்‌ அதிசயமுண்டு. அதெங்ஙகனே யென்னில்‌; –தென்னனுயர்‌ பொருப்பி லழகரும்‌ தெய்வ வடமலை யப்‌பனும்‌ இதற்கு ப்ரவர்த்தகரா யிருப்பர்கள்‌. முன்பு முமுஷுவாய்‌ தேசாந்தரங்களிலே திரிவாரொருவருடைய உஜ்ஜீவநார்த்தமாக ஸர்வேஸ்வரன்‌ ஸ்வப்நத்திலே இந்த ஸ்லோகத்தை யவருக்கு உபதேசிக்க, அவரும்‌ அத்தைத்‌ தஞ்சமாக நினைத்திருந்து பின்‌பொருக்‌கால்‌ இந்த ஸ்லோகம்‌ நடையாடுகிற தேசமான திருமலையிலே திருப் புரட்டாசாதி திருநாள்‌ ஸேவிக்கும் போது திருவேங்கடமுடையான்‌ அவரை க்ருபை பண்ணி அர்ச்சசக முகேந கையைப்‌ பிடித்திட்டு வந்து திருவோலக்கத்திலே வைஷ்ணவர்கள்‌ நடுவே யிட்டு, -அவர்கள்‌ அருளிச் செய்வதைக்‌ கேள்‌” என்றும்‌ அவர்களை“இவன்‌ பணிப்பதைக்‌ கேளுங்கோள்‌” என்றும்‌ நியமிக்க, சேனை முதலியார்‌ திருமுகப்படியே நடத்துகிற தனியனை பெரிய கேள்வி ஜீயர்‌ தொடங்க, அத்தைக் கேட்டு விலஷணராகையாலே தெண்‌டனிட்டு,! “ஒரு விண்ணப்பம்‌; கேட்டருள வேணும்‌” என்றது விண்ணபஞ்‌ செய்து “அடியேனுக்கு ஸ்வப்ந லப்தமாய்‌ அது.தன்னை அடியேன் தஞ்சமாக நினைத்திருக்க ஸ்லோகத்தையே தேவரீர்‌களும்‌ அநுஸந்தித்தது இதென்ன ஆஸ்சர்யம்‌- என்ன, ஆகில்‌ நீர்‌ அந்த ஸ்லோகத்தைச்‌ சொல்லிக் காணீர்‌” என்ன, அவர்‌
ஸ்ரீசைலேச தயா பாத்ரத்தைச்‌ சொல்ல அத்தைக் கேட்டு எல்லாரும்‌ மிகவுமுகந் தருளித்‌ தங்களுக்கு வந்தவற்றை யெல்லாம்‌ ஸ ப்ரகாரமாக அருளிச் செய்யக்‌ கேட்டு அதி ப்ரவணராய்ப்‌ புறப்பட்டுக்‌ கோயிலிலே சென்று ஜீயர்‌ திருவடிகளிலே வேரற்ற மரம்‌ போலே விழுந்து கிடக்க; பரம தயாளுவான ஜீயரும்‌ அவரைத்‌ திருக் கையாலே ஸப்ர்சித்து ”நீயார்‌? வந்த காரியமேது?” என்று கேட்டருள“அடியேன்‌ முமுக்ஷுவாய்‌ தீர்த்த யாத்ரா ப்ரனாய் திரிவானொருத்‌தன்‌”என்று தொடங்கிச்‌ சிலவற்றையும்‌, ஸ்வப்ந வ்ருத்தாத்தத்தையும்‌ தனியனையும்‌ விண்ணப்பஞ் செய்து ஜீயர்‌ திருவடிகளைத்‌ தன் தலையிலே நற்றரிக்க வைத்துக் கொண்டு, திருவேங்கடமுடையான்‌ அடியேனை விசேஷ கடாஷம் செய்தருளி, இத்‌ தனியனைத்‌ திருவோலக்கத்திலே ஸாதித்து தேவரீர்‌ திருவடிகளை ஸேவிக்க விட்டார்‌” என்று விண்ணப்பஞ் செய்து நிற்க; , இப்படி, பகவத்‌ கடாஷ பாத்ர பூதனோ நீ!” என்று மிகவும்‌ உகந்தருளி-இனி உனக்கு வேண்டுவதென்‌?” என்ன.-மோஷ உபாயமான மந்த்ர ரூபமான தனியனையும்‌ மந்த்ரதாசார்ய ரூபியான அப்பனையும்‌, மந்த்ர ப்ரப்‌திபாத்ய தேவதையான தேவரீர்‌ திருவடிகளையும்‌ த்ருடமாகப்‌ பற்றி முத்தனானேன்‌; இனி வேண்டுவதுண்டோ?’-என்று கையைத் தட்டிச்‌ சிரித்துக்‌ கூத்தாடி நிற்க, ஜீயரும்‌,
மந்த்ரே தந் தேவதாயாஞ்ச। ததா மந்த்ர ப்ரேத குரெள |
த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸாஹி ப்ரதம ஸாதநம்‌ ॥

[மந்த்ரத்தினிடத்தும்‌, அதன்‌ உள்ளீடான தேவதை யிடமும்‌ அப்படியே அம் மந்த்ரத்தை யுபதேசித்த ஆசாரியனிடமுமாக இம்‌ மூன்று விஷயங்களிலும்‌ எப்போதும்‌ பக்தி செய்யப்பட வேண்டும்‌;இந்த பக்தியே பகவத் ப்ராப்திக்கு முக்ய ஸாதநம்‌] என்னுமது இவருக்குண்டா யிருக்கிறதே! அதிகார பூர்த்திக்கு வேண்டுவதும்‌ இதுவே யன்றோ?’? என்று உகந்தருளி, அவருக்கு தாபாதி பஞ்‌ச ஸம்ங்காரங்களையும்‌ ஸாதித்து ‘*திருவேங்கட ராமாநுஜ தாஸர்‌”என்று தாஸ்ய நாமத்தையும்‌ ஸாதித்து க்ருபை பண்ணி யருளினார்‌.பெருமாளும்‌, * வாரீர்‌ திருவேங்கட ராமாநுஜ தாஸரே! உமக்கு மேல்‌ வீடு தந்தோம்‌”? என்று ஸ்ரீ சடகோபனை ஸாதிக்க உடனே அவர்‌ திரு நாட்டுக் கெழுந்தருளினார்‌- எல்லாரும்‌ அவருக்குப்‌ பெரியோர்களுக்குச்‌ செய்யும்‌ க்ரியைகளெல்லாஞ்‌ செய்து நிறை வேற்றி ஜீயருடைய வைபவத்தை எல்லாருமாகக்‌ கொண்டாடிக் கொண்டு எழுந்தருளி யிருந்தார்கள்‌ ‘-(எட்டாவதாக வந்த இவருக்கு முதலில் பேறு -தனியன் அவதரித்த பின்பு வந்தவர்)

திருமாலிருஞ்சோலை அழகர்‌ இத் தனியளை ப்ரவர்த்திப்பித்தது
அழகர்‌ திருமலையிலே ஸமஸ்த கைங்கர்ய நிரதராய்‌ ஜீயர் திருவடி ஸம்பந்த முடையார யிருக்கிற ஜீயர்‌ தம்முடைய ஆசார்யருடைய ஆத்ம குணங்களையும்‌ விக்ரஹ குணங்களையும்‌ சிந்தித்து–அனுஸந்தித்துக்‌ கொண்டு ப்ரதஷிணமாக வெழுந்தருளி, தமக்கு நித்யா நுஸந்தேயமாக ஜீயர்‌ விஷயமான தனியன்‌ பெரியோர்களிடத்தினின்று உண்டாக வேணுமென்று எண்ணிக் கெண்டு சேனை முதலியார்‌ ஸந்நிதியிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து நிற்க: அந்த அவஸரத்திலே அர்ச்சகரும்‌ ஸேனை முதலியாருக்குத்‌ திருவாராதநங்‌ கண்டருளப் பண்ணி திருவந்திக்‌ காப்புங் கண்டருளப்‌ பண்ணி திருமுக மண்டலத்தை ஸேவித்து
ஸ்ரீசைல ஸூந்தரே ஸஸ்ய கைங்கர்ய நிரதோ யதி: |
அமந்யத குரோஸ் ஸ்வஸ்ய பத்ய ஸம்பவ மார்யத; ॥

[தெற்குத்‌ திருமலை யழகருடைய கைங்கர்யத்திலே ஊற்றமுடைய ஒரு ஜீயர்‌ தமது ஆசார்யராகிய மணவாளமாமுனிகளுக்கு ஒரு தனியன்‌ பெரியோர்‌ திருவாக்கிலிருந்து அவதரிக்க வேணுமென்று எண்ணினார் என்று விண்ணப்பஞ் செய்து கொண்டு பெருமாள்‌ ஸன்னிதியிலே அமுது செய்தருளப்‌ பண்ணச்‌ செல்ல, அவ் வளலிலே அழகிய மணவாளமாமுனியினுடைய திருவடி ஸம்பந்தமுடைய சேனை முதலியார்‌ என்பவர்‌ தெற்குத்‌ திருப்பதிகளெல்லாம்‌ மங்களாசாஸனம் பண்ணி அழகரைத்‌ திருவடி தொழ வெழுந்தருள, ஸ்ரீகார்யம் பார்க்கிற ஜீயரும்‌. அவரைக்‌ கண்டு மிகவும்‌ ஆதரித்துப்‌ பெருமாளை மங்களாசாசனம்‌ பண்ண வெழுந்தருளப்‌ பண்ணி வைத்துக் கொண்டு திரு முன்பே செல்ல, அழகரும்‌ அவரை மிகவும்‌ க்ருபை பண்ணி யருளி தீர்த்தம்‌ முதலான வரிசைகள்‌ ப்ரஸாதித்து ஸ்ரீ சடகோபனையும்‌ அவர்‌ திரு முடியிலே நற்றரிக்க வைத்தருனி உமது நாவின்‌ நுனியில்‌ நான்‌ இருந்து
ஜிஹ்வாக்ரே தவ வக்ஷ்யாமி ஸ்த்தித்வா வதஸூ பாவநம்‌ |
பத்மம்‌ த்வதார்ய விஷயம்‌ முநீகரஸ்ய மமாஜ்ஞாயா: ॥

கொண்டு சொல்லப்‌ போகிறேன்‌, என்னுடைய நியமனமாக ௨ம்‌முடைய ஆசார்யரான மணவாள மா முனிகளுடையதாய்ப்‌ பரம பவித்ரமான (இந்த) ஸ்லோகத்தை இந்த ஜீயருக்குச்‌ சொல்லும்‌,என்று அர்ச்சக முகேந நியமிக்க சேனை முதலியாரும்‌,
தந்யோஸ் மீதிஸ் ஸேநேஸ தேஸி கோ வதந ஸ்லயம்‌’]
வஹக் ஸிரஸி தேவஸ்ய பாதெள பரம பாவநவ் ॥

(சேனை முதலியாரென்பவர்‌ அழகருடைய பரம பாவநமன திருவடி நிலைகளை ‘தமது திருமுடியில்‌ வைத்துக் கொண்டு அடியேன்‌ தந்யனானேன்‌ என்று கூறி, தாமே அத் தனியனைச்‌ சொன்னார்‌] என்கிறபடியே ஸ்ரீசடகோபனையும்‌ முடியில்‌ தரித்துக்‌ கொண்டு ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்‌”” என்னுமித் தனியனை யருளிச்‌’ செய்‌த உடனே அர்ச்சகரும்‌ தெரியப்பட்டு ஜீயருக்கு ஸாதித்தருளின்ர்‌-பின்பு சேனை முதலியாருக்கும்‌ அர்ச்சகருக்கும்‌ இந்த ஸ்லோகம்‌ தெரியா தொழிய, ஜீயர் மடமே சென்று ஸ்லோகம் அருளிச்‌ செய்ய வேணு மென்று கேட்க, அருளிச் செய்த தேவரீரே கேட்க வேணுமோ “என்ன, ”எனக்கொன்றுமே தெரிய லில்லை, இது ஸுந்தர ராஜர்‌’ தானே ஸூந்தர ஜாமாத்ரு முநி விஷயமாக அருளிச்‌: செய்த என்று மூன்று திருநாமமும் கூடி தெரிவிப்பை கடாஷித்துத்‌ கொண்டு வித்தராய்த்‌ தங்களுக்குத் தஞ்சமாகக்‌ கொண்டருள்‌,சேனை முதலியாரும்‌ அதி ப்ரீதியடனே இச் செய்தியைக்‌ கோயிலிலே பெரியோர்களுக்செல்லாம்‌ தெரிவிக்க வேணுமென்று அதி த்வரையாக எமுந்தருளி கோஷ்டியிலே ஜீயரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து இவ் வைபவங்களை யெல்லாம்‌ “விண்ணப்பஞ் செய்ய, எல்லாரு மிகவும் உகந்தருளி இப்படி திருவேங்கடமுடையானும்‌ அழகரும்‌ உகந்தருளின இத் தனியனை ப்ரகாசப்‌பித் தருளுகிறதே ! இதென்ன வைபவம் தான்‌!” என்று போர வித்தரா யருளினார்கள்‌. –

வானமாமலை ஜீயர்‌ முதலானார்‌ ஜீயரைப்‌ புகழ்தல்‌
வான மாமலை ராமாநுஜ ஜீயர்‌ மிகவும்‌: ஹர்ஷ பரவசராய்‌”’ ஸ்தப்தராயிருக்க, ஜீயரும்‌ திருக் கைகளாலே அவரைத்‌ தட்டி உம்முடைய ஹர்ஷத்துக்குப்‌ போக்குவீடாக வார்த்தை யருளிச் செய்யலாகாதோ?” என்ன, அவரும்‌ “இரண்டு முலைக் காம்பினும் மாறாதே பெருகுகிற பாலை ஆராவமுதமாகப் பருகுவார்‌ நாமே யன்றோ?’” என்று கத்தாடை யண்ணனைப்‌ பார்த்தருளிச்‌ செய்ய -அண்ணணும்‌ -அந்தப் பாலிலும்‌ இந்த உக்தி ரஸம்‌ அதிசயமாயிருக்கிறதே!” என்ன, ப்ரதிவாதி பயங்கரரும்‌ உத்தரோத்தரம் அதிசயமாயிருக்கிற தென்று அண்ணனைக் கொண்டாட, அப்பிள்ளை இருத்து, மந்த்ரோத்தரமான பூர்வ வாக்கியத்திலும்‌ உத்தர வாக்கியம் அதிசயித்து இருக்குமென்ன, பட்டர்‌ பிரான் ஜீயர் த்வயத்திலும்‌ சட கோப த்வயம்‌ அதிசயிதமாய்‌, அது தன்னிலும்‌ ராமாநுஜ த்வயம் உத்‌தரம்‌ அதிசயமாய்‌, (அதுதன்னிலும்‌) தந் நிஷ்டரான நம்‌ ஜீயரைத்‌ தொழுவதா யிருக்கிற இந்தத் தனியனே ஸ்ரேஷ்ட்ட மென்று ஒருவருக் கொருவர்‌ இட்டீடு கொண்டு சாடுரஸோக்திகள்‌ அருளிச்‌ செய்து கொண்டு எழுந்தருளி யிருந்தார்கள்‌-

ஜீயர்‌ வடதேசத் தெம்பெருமான்களை த்யாநித்தது
அநந்தரம்‌ ஒருநாள் ஜீயர் ப்ராத: காலத்திலே திருமலை யாழ்வாரிலே எழுந்தருளி யிருந்து திவ்ய தேசங்களை த்யாநித்து அங்கே ஆஸக்தமான திருவுள்ளத்தை உடையராய்‌ –பாரவஸ்யத்தை யுமடைந்து அந்த திவ்ய தேசங்களையே வாய் புலத்தித்‌ கொண்டு இரண்டு யாம பர்யந்த மெழுந்தருளி யிருத்து “காலம்‌ போகிறதே” என்று, சிந்திக்கும்‌ திசைக்கும் தேறும்‌ கை கூப்பும்‌; -வெருவாதாள்‌ வாய் வெருவி,
அருவி சோர் வேங்கடம நீர்மலையென்று-வாய் வெருவி; இவறிராப்‌ பகல்‌ வாய்வெரீஇ என்கிறபடியே வாய் புலத்திக்‌ கொண்டு தளர்ந்து சாய்ந்தருள, கால ஷேபத்திற்கு சில ஆசார்யர்க ளெழுந்‌தருளி பின்னுஞ் சில ஆசார்யர்கள்‌ எழுந்தருள வேண்டி யிருக்‌கிற அவஸரத்திலே.
அவ்யாஜ பந்தோர்‌ கருட த்வஜஸ்ய திவ்யாஞ்சிதாந்யா யதநா நிபூய: |
த்யாயம் ஸ்தமோ நாஸகராணி மோஹ வஸாத்த தேவ ப்ரஹரத் வயம்ல:
த்யாத்வாதி வ்யாஞ்சிதார்ச்ந விலஸித நிலயாந் யெளத்தராண்யாஸூ
விஷ்ணேஸ் தத் ஸேவாயத்த சித்தே ப்ரணிகததி முஹுர்நாமதஸ்‌ தாநிதாநி |
தூஷ்ணீம்‌ பூதேஸ பாஷ்பம்‌ ஸபுளகநிசயம்‌ ரம்ய ஜாமாத்ரு யோகி ந்யப்‌
யேத்யா நம்ய ஸர்வே கிமிதமிதி பராமார்தி மார்திமா பூரம ஹாந்த: |

[இயல்பாகவே உறவினனாய்‌ கருட த்வஜனான எம்பெருமானுடைய அஜ்ஞான நாசகங்களான திவ்யங்களென்று கௌரவித்துச்‌ சொல்‌லப்படுகிற திருப்பதிகளை (திவ்ய தேசங்களை! தியானித்துக்‌ கொண்டே மோஹித்து இரண்டு நாழிகைக் காலம்‌ அப்படியே மாமுனிகள்‌ இருந்தார்‌.

பின்பு எம்பெருமான்‌ அர்ச்சாவதாரமாக ஸேவை ஸாதிக்கிற-வடதேசத்திலுள்ள திவ்ய தேசங்களை த்யானித்து . அவற்றை ஸேவிக்க வேணுமென்ற ஆசை யுடையவராய்‌ அத் திருப்‌பதிகளின் திருநாமங்களையே அடிக்கடி உச்சரிப்பவராய்‌ மயிர்க்‌ கூச்செறியக்‌ கண்ணீர்‌ மல்‌கி வெறுமனே அவர்‌ இருந்தவளலிலே சிஷ்யர்களான பெரியோர்கள்‌ அருகில்‌ வந்து வணங்கி இது என்‌?என்று மிசுவும்‌ வருத்த மடைந்தார்கள்‌ ] என்கிறபடியே ஜீயர்‌ கிளர் ஒளி 2-10-1) என்றநு ஸந்தித்திருந்து, வட தேசத்திலே திருவயோத்யை முதலான திவ்ய தேசங்களை ‘[த்யானித்து ‘ஸேவிக்கப்‌ பெற்றிலேமே!! என்று நிருபாதிக பந்துவாய்‌ ஆஸ்ரித ரஷணத்திற்குக்‌ கொடி கட்டி யிருக்கிற திவ்ய தேசங்களை த்யாநித்து மோஹித்திருக்க அஷ்டதிக் கஜங்கள்‌ முதலான ஆசாரியர்கள்‌ இதென்னென்ப தென்று கலங்கி அநேக விதமாக ஸமாதானம்‌ விண்ணப்‌பஞ் செய்யச்‌ செய்தேயும்‌ திருக் கண்களைத்‌ திறவாமல் அஸ்ருக்களோடே புளகிதகாத்ரராய்‌ ஜீயரெழுந்தருளி யிருக்கக்‌ கண்டு கிட்ட வந்து, உற்று ஸேவித்து இதென்னவென்று பெரியவர்களெல்லாம்‌ பரவஸராய்‌ ஆர்த்தியை யடைந்து விட்டார்கள்‌;

அவ் வளவிலே சரம பர்வ நிஷ்டராய்‌ திருவடிகளுக் கந்தரங்கராய்‌-கண்‌டியூ ரரங்கம்‌ மெய்யம்‌ கச்சி பேர்‌ மல்லை என்கிறபடியே திவ்ய தேசங்களில்‌ மிகுந்த கைங்கர்யத்தைப்‌ பண்ணுகிற ராமாதுஜ தாஸர்‌,
ஸூமத்யே ராமாநுஜ தாஸ நாமாவ்ய ஜிஜ்ஞ பத்தம்‌ வர யோகி வர்யம்‌–
நிஷேவ்ய ஸர்வாணி பதாநி விஷ்ணோ: ஸமர்ப்ப யிஷ்யாமித தைவதத்வ:

[ராமாநுஜ தாஸரென்னும்‌ பெயர்‌ பெற்ற ஒருவர்‌ வந்து, “விஷ்‌ணுவின்‌ ஸ்தலங்களனைத்தையும்‌ சென்று ஸேவித்துத்‌ திரும்பி வந்து அந்த ஸேவையை அப்படியே தேவரீருககுக்‌ காணிக்கையாகச்‌ செலுத்துகிறேன்‌” என்று அம்மா முனிகளிடம்‌ விண்ணப்பம்‌ செய்தார்‌] என்கிறபடியே அவர்‌ ஜீயர்‌ ஸந்நிதியிலே சென்று”அடியேன்‌ ராமாநுஜ தாஸன்‌ தேவரீர்‌ திருவடிகளை முன்னிட்டு வட தேச திருப்பதிகளெல்லாம்‌ தேவரீர்‌ மங்களாசாஸநமாகத்‌ தொழுது வந்து அந்தப் படியே ஸமர்ப்பிக்கிறேன்‌’* என்றும்‌
ஆஸேதோரா பதர்யாஸ்ரம வர நிலயா தர்ச பூர்வா பராப்தே
க்ஷேத்ராணி ஸ்ரீதரஸ்ய த்ருஹிண ஸட ஜிதாத் யஞ்சிதாநி ப்ரணம்ய |
ப்ராப்ஸ்யே ராமாநுஜோலம்‌ பவ தய தநுசதஸ் சிந்த யம்ஸ் த்வத்‌
பதா வித்யஸ்மிந்‌ விஜ்ஞாப யித்வா ப்ரணமதி புபுதே ஸெளம்ய ஜாமாத்ரு யோகீ ॥

“தென் திசையில்‌ உள்ள ஸேது முதலாக வடதிசையிலுள்ள பத்ரிகாஸ்ரமென்னும்‌ உயர்ந்த ஸ்தானம்‌ வரையில்‌ கிழக்குக்‌ கடல்‌ தொடநக்கி மேற்குக் கடலீறான இடங்களிலு முள்ளவையாய்‌, பிரமன்‌ முதலிய தேவர்களாலும்‌ நம்மாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்களாலும் பூஜிக்கப் பட்ட விஷ்ணுவின்‌ ,திவ்ய தேசங்களை எல்லாம் சேவியாததனால்‌ . தேவரீர்க்குள்ள மன வருத்தம்‌ காரணமாகச் சென்று தேவரீர்‌ திருவடிகளைத் தியானித்துக்‌ கொண்டு ராமானு தாஸனாகிய அடியேன்‌ ஸமர்த்தனாய்‌ ஸேவித்து வருகிறேன்‌! என்று விண்ணப்பித்து அவர்‌ வணங்க, மாமுனிகள்‌ மோஹம் தெளியப்‌ பெற்றார்‌] என்று ராமாநுஜ தாஸர்‌ விண்ணப்பஞ்‌ செய்து தண்‌டன் ஸமர்ப்பித்த வுடனே ஜீயர்‌ தெளிந்து திருக் கண்களை மலரத்‌ திறந்து “வாரீர்‌ ராமாநுஜ தாஸரே!” என்றருளிச்‌ செய்ய திக் கஜங்‌கள்‌ , முதலானா ரெல்லாரும்‌ தேறி அவரை மிகவும்‌ கொண்டாடி இருக்க, ஜீயரும்‌ எழுந்திருந்து நெடும்‌ போதாயிற்றே காலஷேப மின்றிக்கே யொழிந்ததே!’” என்று அருளிச் செய்ய, தேவரீர்‌ திவ்ய தேசங்சளில்‌ அநுபவ பரவசரா யெழுந்தருளி யிருக்க ஸேவித்து அநுபவித்துக்‌ கொண்டிருக்க மாட்டாமல்‌ சுலங்கி பயப்பட்டு விட்‌டோம்‌” என்று விண்ணப்பஞ் செய்து நிற்க, “ராமாநுஜ தாஸரே!”நீர்‌ சொன்னது கூடவற்றோ?’” என்றருளிச் செய்ய, அவரும்‌, அப்‌பொழுதே பயணமாகப் புறப்பட்டு நிற்க, திருவடி நிலைகளில்‌ ஸம்‌பந்த முடையாரயிருக்கிற, குமாண்‌டூர்‌ இளையாழ்வார்‌ பிள்ளையை யழைத்தருளி, “ரஈமாநுஜ தாஸரைக்‌ கூட்டிக் கொண்டு திருப்பதிகளை ஸேவித்து வருகிறீரோ?”” என்று கேட்டருள அவரும்‌ பாக்யமாயிற் றென்று விண்ணப்பஞ் செய்து நிற்க
ததோஸ் ப்வுங்க்த ஸ்வக முத்தரீயம்‌ விதீர்ய ராமாநுஜ தாஸ மாஸூ |
ஸஹஸ்வ பாதாவநி நித்ய யோக மஹோ ஜுஷாசாசுக லக்ஷ்மணேந ॥

பின்பு ஜீயர்‌ உடனே ராமாநுஜ தாஸருக்குத் தமது உத்தரீயத்தைத்‌ ப்ரஸாதித்தருளி அவரை–தம்‌ திருவடி நிலைகளோடு நித்ய ஸம்பந்தமாகிற தேஜஸ்ஸைப்‌ பெற்றவராய்‌ வேகமாகச்‌ செல்லும்‌ இளையாழ்வார்‌ பிள்ளையோடு செல்லுமாறு நியமித்தார்‌.] என்கிறபடி ஜீயர்‌ திருவடிக்குத்‌ திருவடி நிலைகள்‌ கொண்டு ஸதா ஸேவிக்கிற மஹாதிசயத்தை யுடைய இளையாழ்வார்‌ பிள்ளையோடே ராமாநுஜ தாஸரைத் தம்முடைய திருவடி நிலைகளை ஸூக்தமாக ப்ரசாதித்துப்‌ பயணமாக நியமித்தருளினர்‌-

இளையாழ்வார் பிள்ளையும்‌ ராமாநுஜ தாஸரும்‌ யாத்திரை செய்தல்‌,
சக்ரவர்த்தி திருமகனார்‌ ஸ்ரீபரதாழ்வானுக்குத்‌ திருவடி சாதிக்க அப்போது இளைய பெருமாளுக் கல்லாது ஒழிந்ததே– பரதாழ்வானைப் போலே. இளைய பெருமாள் திரு நாமத்தை யுடைய இவரும் ஜீயருடைய திருவடி நிலைகளை லபித்து, வோசத்‌தில் ஜனங்களுக்கு ஸந்தோஷ உத்ஸவத்தைச்‌ செய்தருளினார்‌-இப்படி அவருக்குத்‌ திரு உத்தீரீயம்‌ ஸாதித்தருளினாப் போலே இவருக்குத் திருவடி நிலைகள்‌- இப்படி தமக்கு ப்ரதி நிதியாக திருவடி நிலைகளை ஸாதித்தருளி யிருக்க, இளையாழ்வாரும்‌, -தநம்‌ மதீயம்‌ தவ பாத பங்கஜம்‌” என்கிறபடியே மஹா தநத்தை லபித்‌தருளி-மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி” என்று திருமுடி மேலே நற்றரிக்க வைத்துக் கொண்டு நிர்‌ மர்யாத ஹர்ஷ யுக்தரா யருளினார்‌-ராமாநுஜ தாஸரும்‌ பெருமானரையில்‌ பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசினீர்‌-என்று மிகவுமுகந்தார்‌-இப்படி அவரும்‌ ஜீயர்‌ திருவடி நிலைகளையே திருவாராதனமாக வெழுந்தருளப் பண்ணி வைத்துக் கொண்டு “அதி த்வரையாக கங்கா தீரத்திலே எழுந்தருளி திருவடி நிலைகளுக்கு நன்றாக சாஸ்த்ர ப்ரகாரம்‌ நெடும் போது கங்கையில்‌ திருமஞசனம்‌ ‘பண்ணி ஜீயர்‌ நீராடுவதாக அத்யவஸித்து அத் தீர்த்தத்திலே தாங்களும்‌ நீராடி பின்பு அங்குண்டான இடங்களெல்லாம்‌ ஸேவித்து
க்ரமேண தீர்த்தாநி ஸரீர பாஜாம்‌ பாபா பஹாந் யூர்ஜித ஸெயக்யதாநி ]
பரிக்ர மந்தாவதிதிம்‌ த்ருஸேர்ஸ்தெள விநிந்யது: ஸ்ரீ பதரீ நிவாஸம்‌ ॥
விசித்ரர் தேஹ ஸம்பத்திரீரஸ்வராய நிவேதிதும்‌

அவ் விருவரும்‌-மனிதர்களின்‌ பாபங்களைப்‌ போக்க வல்வையாய்‌ உயர்ந்த ஸெளக்யத்தை யளிக்க வல்ல தீர்‌த்தங்களை யெல்லாம்‌ முறையே நீராடிச் சென்று பின்பு தம்‌ கண்களுக்கு ஸ்ரீபதரிகாஸ்ரமப்‌ பெருமாளை அதிதியாக (விருந்தாக) ஆக்கினர்‌ ] [பல வகையான சத்திகளைப் பெற்ற சரீராவயவய ஸம்ருத்தியானது பகவானுக்குக் கைங்கர்யம் செய்வதற்காக ஏற்படுத்தப் பட்டுள்ளது ] என்கிறபடியே பகவதர்த்தமாக தேஹ பரிக்‌ரஹம்‌ பணணினவர்‌களுக்கு ஸ்வ ஸம்பந் தத்தாலே ஸமஸ்த ப்ரதிபந்தகங்களையம்‌ போக்கி ஊர்ஜிதமான மஹா புருஷார்த்தத்தை ஸாதிக்கற திவ்ய தேசங்களை-இரண்டு திருநாமங்களும்‌ க்ரமேண ஸஞ்சரித்து ஸேவித்து பத்ரிகாஸ்ரம நாராயணனைத்‌ தங்களுடைய திருக் கண்‌ மலர்களுக்கு ஸர்வ ப்ரிய தர்ஸந மாக அடைவித்தார்கள்‌.

இப்படி நர நாராயணப்‌ பெருமாளை மங்களாசாஸநம்‌ பண்ணிப் புக்க வளவிலே
அயோத்ய ராமாநுஜ தாஸ நாமக ஸதா முதா பூஜயதி ப்ரஸந்ந |
வஸீ நிஜ ஸ்ரீ குல சேகரஸ் ஸந் ஹரிம்‌ பதர்யாஸ்ரம வாஸிநம் தம்‌ ॥

(அயோத்யா ராமானுஜ தாஸரென்‌பவர்‌, அனைவரையும் தாமிட்ட வழக்காக்கியவராய்த் தமது ஸ்ரீ வைஷ்ணவ குலத்துக்குச் சிரோ பூஷணமானவராய்‌, மிகத் தெளிந்த மனமுள்ளவராய்க்‌ கொண்டு மகிழ்ச்சியுடன்‌ எப்போதும்‌ ப்ரஸித்தரான பதரிகாச்ரமப்‌ பெருமானை ஆராதித்து வருகிறார்‌] என்று அயோத்யை ராமாநுஜ தாஸ ரென்கிற திரு நாமத்தை யுடையவர்‌, குலசேகரராய்க்‌ கொண்டு ஸமஸ்த துரிதஸ்ஹரான வயதாஸ்ரிமப்‌ பெருமாளை எக் காலத்‌திலும்‌ ஸந்தோஷத்துடனே ஆராதித்துக் கொண்டிருந்தார்‌,

ஸ லஷ்மணம்‌ வீஷ்ய பவித்ர ரூபம்‌ ஸமேத்ய ராமநுஜ தாஸ மேநம்‌ |
ஸமர்ச்ச யித்வா விவிதோபசாரைஸ் ஸ தர்ஸ யாமாஸ ரமாஸஹாயம்‌ ॥

[அந்த அயோத்யா ராமானுஜ தாஸர்‌-இளையாழ்வார்‌ பிள்ளையோடு வந்த இந்த சுத்த ஸ்வரூபரான ராமாநுஜ தாஸரை கிட்டி வந்து பல வகைப்பட்ட உபசாரங்களைச்‌ செய்து ஆராதித்துப்‌ பின்பு பதரிகாச்ரம பெருமாளான ஸ்ரீயபதியை இவர்களுக்கு ஸேவை ஸாதிக்கப்‌ பண்ணினார்‌] என்று ராமாநுஜய்யங்கார்‌ பரம பாவநரா யிருக்கிற இவரைக்‌ கண்டு ஸேவித்து நர நாராயணப்‌ பெருமாளுக்கு விசேஷித்து தளிகைக்கு வரிசையாக ஸமர்ப்பித்துத்‌ தளிகை அமுது செய்தருளப்‌ பண்ணுவித்து உடனே அநுஸந்தாநம்‌ நடக்க வேணு மென்ன;
வரயோகி வராகதெள ஸைலேதெள நர நாராயண ஸந்நிதெள புரஸ்தாத்‌ |
த்ரமிடோப நிஷந் மஹா பிரபந்த பிரதமோ உதாஹரணே ந்ய யுங்த வித்வாந் ॥

[வித்வானாகிற அயோத்யா ராமானுஜ ஐய்யங்கார்‌- மணவாள மா முனிகள்‌ ஸந்நிதி யிலிருந்து வந்த இவ் விருவரையும்‌-நர நாராயணப்‌ பெருமாள்‌ ஸந்நிதியில்‌ பெருமாளுக்கு முன்னிலையில்‌ திவ்ய ப்ரந்தம்‌ தொடங்கும்படி நியமித்தார்‌-. என்கிறபடியே அழகிய மணவாளமாமுனினுடைய ஸந்நிதி யினின்றும்‌ அவருடைய மரியாதையாக எழுந்தருளின இவர்களை நர நாராயணப்‌ பெருமாள்‌ திரு வோலக்கத்தலே அருளிச் செயலாகிய மஹா ப்ரபந்தாநுஸந்தானத்‌ தொடக்கத்திலே நியமிக்க, இளையாழ்வார்‌ பிள்ளையும்‌
ததா விதிஜ்ஜோ விதிவித்‌ ப்ரஸாதாத் வரோப்யந்துர் துரி ரங்க தாம்நா |
நிவேநிதம்‌ பத்ய வரம்‌ த்வி கண்டம் படந் ஜகெள த்ராவிட வேதமேஷ। ॥

[முறை யறித்த இவ் விளையாழ்வார்‌ பின்ளை அவர்‌ நியமனத்‌தின் படியே, மணவாள மாமுனிகள்‌ முன்பே ஸ்ரீரங்க நாதரால்‌ மனத் தெளிவோடு அருளிச் செய்யப்பட்டதாய்‌ இரண்டு பாகங்கள்‌ கொண்ட (ஸ்ரீசைலேச’ என்ற ஸ்லோக ரத்நத்தை முதலில் சொல்லிப்‌ பின்பு திவ்ய ப்ரபந்தத்தை ஓதினார்‌.] என்‌கிறபடியே ராமாநுஜருடைய நியமனத்தின் படியே தொடங்குகிறவராய்க்‌ கொண்டு “ஸ்ரீஸைலேஸ தயா பாத்ரம்‌” என்னும் தனியனை முந்துற அனுஸந்தித்து மற்றத்‌ தனியன்களையும்‌ க்ரம ப்ரகாரம்‌ அநுஸந்தித்து ப்ரபந்தாநுஸந்தாநஞ்‌ செய்தருளினார்‌.

அது கண்டு ராமாநுஜய்யங்கார்‌ முதலானவர்கள்‌ விஸ்மிதராயிருக்க,
ஜஜ்ஜே அமுநா ஸ்வப்ந நிவேதிதம் ஹி யத்‌ கதம்‌ பதர்யாஸ்ரம நித்ய வாஸிநா |
ப்ராகாஸி மந்த்ரர்ர்த்த மிதம்‌ முரத் விஷேத் யாயோத்ய ராமாநுஜ ஆவிஸிஷ்மயே 1

[பத்ரிகாச்ரமற்தில்‌ நித்ய வாஸம்‌ செய்யும்‌ இந்த முராரியான பகவானாலே தம் ஸ்வப்நததில்‌ அருளிச்‌ செய்யப்பட்டு எந்தத்‌ தனியன்‌ உண்டாயிற்றோ-மந்த்ரார்த்தங்களைத்‌ தன்னகத்தே கொண்ட இந்தத் தனியன்‌ இவர்களால்‌ எப்படி வெளிப்படுத்தப்‌ பட்டது” என்று அயோத்யா ராமானுஜய்யங்கார்‌ மிக்க ஆச்சரிய மடைந்தார்‌]. என்று ‘ஸ்ரீபதரிகாச்ரமப்‌ பெருமாளாலே தமக்கு ஸ்வப்நத்திலே அருளிச்‌ செய்யப்‌ பட்டதன்றோ இது ‘” என்று இவர்களாலே ப்ரகாசமாய்‌ மந்த்ரார்த்த மானத்தை யறிந்து இது க்ருஷ்ண லீலை யென்று ராமாநுஜய்யங்கார்‌ மிகவும்‌ ஆஸ்சர்யப்‌ பட்டு, பின்பு இந்த ஸ்லோகம்‌ தேவரீருக்கு வந்தபடி யென்னென்ன)-கோயிலிலும்‌ பெருமாள்‌-ஆசிநோதிஹி ஸாஸ்த்ரார்த்தாத்‌[சாஸ்த்ரப்‌ பொருள்களை வெளியிடுமவன்‌ ஆசாரியன்‌] என்கிற படியே இந்த ஸ்தலததிலே நர நாராயண ரூபேண பெரிய திருமந்தரத்தை வெளியிட்டருளினாப்‌ பாலே அந்த மந்த்ரார்த்தமான திவ்ய ப்ரபந்த தத் வ்யாக்யாநங்களை லோகோபகாரமாக ப்ரவர்த்‌திப்‌ பிக்கத்‌ திருவுள்ளமாய்‌ ”யதோசிதம்‌ சேஷ இதீரிதே”* [ஸமயத்‌துக்குத்‌ தக்கபடி அடிமைக்கு உறுப்பான பல சரீரங்களைக்‌ கொள்ளுகையால்‌ சேஷன்‌ என்று சொல்லப்பட்டவன்‌] என்கிறபடியே அசேஷ சேஷ வருத்தியிலும்‌ அந்வயித்திருக்கிற திருவநந்‌ தாழ்வானை ஜீயராக வவதரிக்கச்‌ சொல்லி நியோகிக்க, அவரும்‌ தத் கைங்கர்யமாய்‌ அவதரித்து திவ்ய ப்ரபந்ததத்‌ வ்யாக்‌யாதங்களை அதி சதுரராய்‌ நடத்திக் கொண்டு போர, அவருடைய வைபவங்களை ப்ரகாசஞ்‌ செய்தருளத்‌ திருவுள்ளமாய்‌ ஜீயரிடத்‌திலே தாம்‌ ஈடு கேட்டருள நியமிக்க, ஜீயரும்‌: இதுவுமொரு கைங்கர்யமென்று தொடங்கி. நடத்திச்‌ சாத்துகிற ஸமயத்திலே

(வதரியாச் சிரமத்தில் இரு மெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடி வணங்கிக்
கதியாக ஒரு பொருளை அளிக்க வேண்டும்
கண்ணனே அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீர்சைல மந்திரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச் செய்து
பதியான கோயிலுக்கு சென்மின் நீவீர்
பாதியையும் சொல்லுதும் யாம் தேற வென்றார் –
4-)

ஆசார்ய சம்பாவனை காலத்திலே, அர்ச்சக புத்ரராம்‌ ரங்கநாயகன்‌ என்கிற பெயருடையரான அஞ்சு வயஸ்ஸூ உள்ளவர் மேலே பெருமாள் ஆவேஸித்து அருளிச்செய்த படியையும்‌, ‘ அப்‌பிள்ளையைக்‌ கொண்டு வாழி திரு நாம மவதரிப்பித்தபடியையும்‌ ப்ரபந்தாநுஸத்தான காலத்திலே ஆதியிலே இந்தத் தனியனையும்‌ ப்ரபந்தம்‌ சாத்தினால்‌ இந்த வாழித் திருநாமத்தையும்‌ அநுஷத்‌திக்கும்படி திருமலை பெருமாள்‌ கோயில்‌ தொடக்கமான திவ்ய தேசங்களிலும்‌ மற்றெங்கும்‌ நடக்கும்‌ படிக்கு
ஸ்ரீபந்நகாதீஸ முநே பத்யம்‌ ரங்கேஸ பாஷிதம்‌ | அஷ்டோத்தர தசஸ் தாலேஷ் வநுஸந்தாநமாசரேத்‌ ॥
இத்யாஜ்ஞா பத்ரிகா விஷ்வக்ஸேநேந ப்ரதி பாதிதா | ததாரப்ய மஹத் பிஸ்ச பட்யதே ஸந்நிதே:புரா ॥

[ஸ்ரீரங்க நாதனால்‌ மணவாள மாமுனிகள்‌ விஷயமாக அருளிச்‌ செய்யப் பட்டது இந்த ஸ்லோகம்‌. இது தன்னை நூற்றெட்டுத்‌ திருப்பதி களிலும்‌ எல்லோரும்‌ அனுஸந்தானம் செய்யக் கடவர்கள்‌ -என்று நியமன பத்ரிகை ஸ்ரீஸேனை முதலியாரால்‌ அனுப்பப்பட்டது. அது முதலாகப்‌ பெரியோர்களாலும்‌ இஸ் ஸ்லோகம்‌ பெருமாள்‌ ஸந்நிதானத்தில்‌ முதலில்‌ அநுஸந்திக்கப்‌ பட்டு வருகிறது. என்கிறபடியே ஸ்ரீசேனை முதலியார்‌ திருமுகம்‌ வரவிட நடக்கிற படியையும்‌, திருவேங்கடமுடையான்‌ தீர்த்த
யாத்ரா ப்ராஹ்மணனுக்கு
உபதிஷ்டம்‌ மயாஸ்வப்நே திவ்யம்‌ பத்யமிதம்‌ ஸூபம்‌ |
வரயோகி ஸமாஸ் ரித்ய பவத:ஸ்யாத்‌ பரம்‌ பதம்‌ ॥

மிக வுயர்ந்ததும்‌ மங்களகரமுமான இந்த ஸ்லோகம்‌ கனவில்‌ உனக்கு உபதேசிக்கப்பட்டது. மணவாள மாமுனிகளை ஆஸ்ரயித்தால்‌ உனக்குப்‌ பரமபத ப்ராப்தி உண்டாகும்‌.] என்று.. ஸ்வப்நத்திலே இந்தத் தனியனையும்‌ ப்ரஸாதித்து சில நாட்களுக்குப்‌ பின்‌ அந்த ப்ராஹ்மணனை ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸரயிக்கும்‌ படிக்கு
இத் யுக்த்வாதம்‌ வ்ருஷாத்ரீஸோ ஸ்ரீபதாத ரேணு மேவச | தத்‌வா ஸூப்ரேஷ யாமாஸ கச்ச யோகி வரம்‌ ஸூசிம்‌.॥-[திருவேங்கடமுடையான்‌’ இங்ஙனம்‌ கூறிவிட்டு, ஸ்ரீ பாத ரேணுவையும்‌ அவனுக்குக்‌ கொடுத்து, பரிசுத்தரான ‘ மாமுனிகளிடம்‌ செல்வாயாக என்று சொல்லி விரைவாக அனுப்பினார்‌.] என்கிறபடியே அவருக்கு ஸ்ரீசடகோபனையும்‌ ஸ்ரீபாத ரேணுவையம ப்ரஸாதித்தருளின படியையும்‌, அவரும்‌ ஆஸ்ரயித்துத்‌ திருவடிகளைச்‌ சார்ந்த படியையும்‌, திருமாலிருஞ்சோலையழகர்‌ ஜீயர்‌ திருவடிகள்‌ ஸம்பந்த முடைய ஸேனை முதலியார்‌ முகமாக இந்தத் தனியனை அருளிச்‌ செய்தபடியையும்‌, பகவதுக்ததி யாயிருக்க ஈஷத் பேத முண்டாயிருந்ததே யானாலும்‌ அர்த்தைக்ய ப்ராதாந்யேந ஸேனை முதலியார்‌ ஆசார்ய கோடி ப்ரவிஷ்டராகையாலே “அவர்‌ திரு முகத்தின்படியே எங்கும்‌ அநுஸந்தித்துப்‌ போருகிறபடியையும்‌ ப்ரஹ்‌மசாரி சிறுமுறி கொடுத்ததையும்‌ ஸர்வ வ்ருத்தாந்தாந்தங்‌ களையும்‌ அருளிச் செய்யக் கேட்டு வித்தராய்‌ தமக்கு இந்தத்‌ தனியன்‌ வந்தபடியை அருளிச்‌ செய்யத்‌ தொடங்கினார்‌-

தனியனவதரித்த வருஷம்‌ மாதம்‌ முதலியன கூறல்‌
அதில்‌ முந்துற இத் தனியனும்‌ வாழித் திருதாமமும்‌ அவதரித்த வருஷம்‌ மாஸம்‌ தேதிகளைக்‌ கேட்டருள, இளையாழ்வார்‌ பிள்ளையும்‌
நல்லதோர்‌ பரீதாபி வருடந் தன்னில்‌ நலமான வவ் ஆவணியின்‌ முப்பத்‌ தொன்றில்‌
சொல்லரிய சோதியுடன்‌ விளங்கு வெள்ளித்‌ தொல் கிழமை வளர் பக்க நாலா நாளில்‌
செல்வ மிகு பெரிய திருமண்டபத்தில்‌ செழுந் திருவாய்மொழிப்‌ பொருளைச்‌ செப்புமென்று
வல்லி யுறை மணவாளரரங்கர்‌ நங்கண்‌ மணவாள மாமுனி வழங்கினாரே
—என்றும்‌,
ஆனந்த வருடத்தில்‌ கீழ்மை யாண்டில்‌ அழகான ஆனி தனின்‌ மூல நாளில்‌
பாநுவாரங் கொண்ட பகலில்‌ செய்ய ‘பெளரணையினாளி யிட்டுப்‌ பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்‌ அழகாக மணவாளரீடு சாத்த
வானவரும்‌ நீரிட்டவழக்கே என்ன மணவாள மாமுனிகள்‌ களித்திட்டாரே
–என்றும்‌

தத: கதாசிதாஹூய தமேநம்‌ முநி புங்கவம்‌ |
கிருபயா ஸாது ஸக்ருத்ய சரணாம் புஜ ஸமர்ப்பணாத்‌ ॥
தர்ஸயந்‌ துர்க்ரஹாரர்த்தாந் த்ரமிடோபநிஷத் கிராம்‌ |
ஸந்நிதெள வ்யாகுருஷ்வேதி ஸஸாஸ அமர ஸாஸந : ॥

என்கிறபடியே பெருமாளும்‌ ஒரு திருப் பவித்ரோத்ஸவத்‌ திரு நாளிலே அங்குண்டான அனைவரும்‌ பேரோலக்கமாக ஸேவித்துக்‌ கொண்டிருக்கச் செய்தே, ஜீயரும்‌ முதலிகளும்‌ பெருமாளை
மங்சகளாசானைம்‌ பண்ண எழுந்தருளின வளவிலே, பலரடியார்‌ முன்பருளிய பாம்பணை யப்பன்‌ என்கிறபடியே, தம்முடைய பரம கிருபையாலே உடையவருடைய வைபவத்தை நம்பி தாமே வெளியிட்டாப் போலே ஜீயருடைய மஹிமையை ப்ரகாசிப்பித் தருளுவதாகத்‌ திருவுள்ளம் புற்றி தாமும்‌ ஜீயருக்கு சிஷ்யராகுகையைக்‌ குறித்து ஜீயரைத்‌ தனித்தருளப் பாடிட்டருளி, “நாளை முதல்‌ நம்முடைய பெரிய திருமண்டபத்திலே பெரிய வண்‌ குருகூர் நகர்‌ நம்பியான ஆழ்வாருடைய திருவாய்மொழியை ஈடு முப்பத்தாறாயிரம்‌ தொடக்கமான ஐந்து வ்யாக்யானங்களுடனே நடத்தும்‌”:
என்று நியமித்தருள,
மங்கள ஆயதநே ரங்கே. ரம்ய ஜாமத்ரு யோகிராட்‌ |
யுகபத்‌ த்ராவிடாம்நாய வ்யாக்யநத்யாந கெளதுகி–
–என்‌கிறபடியே, ‘“இப்படி ஏவி யருளுகிறதே!” என்று ஹ்ருஷடராய்‌

மஹாந் ப்ரஸாத இத்யஸ்ய ஸாஸநம்‌ ஸிரஸா வஹந்
ததைவ தத்ர வ்யாக்யாதும்‌ தத் க்ஷணா துபசக்ரமே ॥
ஸ்ரீபதி ஸ்ரீபதிஸ் ஸ்வாமி மண்டபே மஹதி ஸ்‌வயம்‌ |
தத்‌வம் தஸ்ய ப்ரபந்தஸ்ப வ்யக்தம்‌ தேநைவ தர்ஸிதும்‌ ॥
ஸடவைரி முகை ஸ்ருண்ஸந் தேசிகைர் திவ்ய தர்‌ஸநை |.
அத திவ்ய முநேஸ் தஸ்ய மஹிமாந மமாநுஷம்‌
அநு பூயே மஹா பூகணே ஆபால கோபால மகிலோ ஜநா |
அமந் யத பரம் தந்ய மாத்மாநம்‌ தத்ர நிக்ஷிபந் ॥

என்கிறபடியே ஈடு தொடக்கமாக ஐந்து வ்யாக்யானங்களுடன்‌ மாறன்‌ பணித்த தமிழ்‌ மறைக்கு அர்த்தம்‌ நடத்துகிறபடியை அருளிச் செய்ய; (இன்பம்‌ பயக்க விருக்க நிலத்தேவர் குழுவிலே பாட்டு கேட்பிப்‌பதாக கான கோஷ்டியைப் பாரித்தாப் போலே பெருமாளும்‌ நாச்சி மாருடனே திவ்ய ஸிம்ஹாஸநத்திலே ஏறி யருளி அச் சேர்த்‌தியை யநுபவிக்கிற அயர்வறுமமரர்களான திருவநத்தாழ்வான்‌ பெரிய திருவடியாழ்வான்‌, ஸ்ரீசேநாபதி யாழ்வானாகிற நித்ய ஸூரிகளோடும்‌, வைகுந்தத்து முனிவரான நம்மாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்கள்‌ பதின்மரோடும்‌ ஸ்ரீரங்க மா மறையோரான அனைத்துப்‌ பரிகரத்தோடும்‌ அணி யரங்கத் திருமுற்‌றத்தடியார்‌களோடுங் கூடப்‌ பேரோலக்கமாக எழுந்தருளி யிருத்து “ரங்கி வத்ஸர மேக மேவம்‌ ஸ்ருணோத் வ்யக்தம் யதோக்தம்‌ க்ரமாத்‌- என்கிறபடியே திருச்செவி சாத்தியருள-)அன்று ராத்ரி ஸ்வப்நத்தில பதர்யாஸ்ரம நாராயணன்‌ தமக்குப்‌ பாடமாமளவும்‌ ஸாதித்து ஸாயம் ப்ராத: அநு ஸந்தான காலத்திலே அநுஸந்தித்து ப்ரபந்தாநுஸந்தானஞ்‌ செய் யென்று நியமித்த படியைச்‌ சொல்லிக் கொண்டு விஸ்மிதராய்‌ ஆநந்த பரவசரா யிருகக, இளையாழ்வார்‌ பிள்ளை முதலானாரும்‌
பகவத் ப்ரஸாத லப்தமன்றோ இத் தனியன்‌?’‘ என்று பரஸ்பரம்‌ கொண்டாடிக்‌ கொண்டு மிகவும்‌ ஈடுபட்டிருக்க, ராமாநுஜ ஐயங்கார்‌ க்ரமத்திலே தேறி அழகிய மணவாள மா முனியினுடைய வைபவங்களை யெல்லாம்‌ அடியேனுக்கு இரங்கி ப்ரஸாதித்தருள வேணுமென்று திருவடிகளைப்‌ பிடித்து ப்ரார்‌த்‌திக்க, இளையாழ்வார்‌ பிள்ளையும்‌ ஒமறைந்து மடத்திலே யாகிறதென்ன; திருப்பாவை
அநுஸந்தாநத்தையும்‌ நிறைவேற்றிச்‌ சாத்தி தீர்த்த ப்ரஸாதங்கஞம்‌ விநியோகமாய்‌ இளையாழ்வார்‌ பிள்ளைக்கு வரிசைகளும்‌ ப்ரஸாதித்தனுப்பி யருள, அவரும்‌ ராமாநுஜய்யங்கார்‌ மடத்திலே யெழுந்தருளி அவருக்கு அழகிய மணவாள மாமுனியினுடைய வைபவங்களை யெல்லாம்‌ ஸாதித்து உகப்பித்தருளினார்‌, ராமாநுஜய்‌யங்காரும்‌ லைபவங்களை யெல்லாங் கேட்டு வித்தராய்‌ ஜீயரைக்‌ கண்டு ஸேவிக்க வேணுமென்று அத்யபிநிஷ்டராயிருக்க’ அவருடைய மநஸ்ஸை யறிந்து ராமாநுஜ தாஸர்‌ -பத்ரிகாச்ரமம்‌ முதலான திவ்ய தேசங்களில்‌ கைங்கர்யங்களுக்கு தேவரீர்‌ நியமித்த படிக்கு சில நாளைக்கு ஸேலித்துக் கொண்டிருந்து ஜீயர்‌ திருவடிகளை ஸேவிக்க விடை கொள்ளுகிறேன்‌” என்று சொல்லி,தேவரீர்‌ இளையாழ்வார்‌ பிள்ளையுடன்‌ கோயிலுக்கு எழுந்தருள வென்று அருளிச்‌ செய்ய, ராமாநுஜய்யங்காரும்‌ மிகவும்‌ ப்ரியப்‌பட்டு அவரை பஹுவாக உபலாளித்தருளி ஜீயர்‌ திருவடி நிலைகளை வரிசையுடன்‌ எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு இளையாழ்வார்‌ பிள்ளையும்‌ ராமானுஜய்யங்காரும்‌ திருமலையிலே சென்று திருவேங்கடமுடையானை ஸேவிக்க நிற்க, அப்பனும்‌ இவர்களை மிகவும்‌ க்ருபை பண்ணி யருளி அயோத்யை ராமானுஜய்யங்காருக்குச்‌ சில கைங்கர்‌யங்களை நியமிக்க, அவரும்‌ அதற்கு அங்கே நிற்க வேண்டுகையாலும்‌ ஜீயரைத் தம்முடைய மநோரதத்தின்படி ஸேவிக்கப்‌ பெறாமையாலும்‌ ப்ரீத்யப்ரீதி ஸமராயிருத்தார்‌ (சில கைங்கர்யங்கள் என்பவற்றை -அடிவாரத்துக்கும் திருசுகவனூருக்கும் படிக்கட்டு கட்டச் சொல்லி – அழகிய சிங்கப்பெருமாள் ஸ்தாபித்தார் -மார்க்க மத்யத்தில் -சேவிக்கும் படி -திருக்கோவில் கட்டி- வழி எம்பெருமானார் சந்நிதியும் உண்டாக்கி-போகும் வழியில் மண்டபங்களும் கட்டி அருளி -எம்பெருமானாருக்கும் கோவிந்தராஜர் கோயிலில் பிரதிஷ்டை செய்தருளி -போன்றவை -)-

(அயோத்ய ராமானுஜ ஐயங்கார் இங்கு திருமலையில் கைங்கர்யம் செய்து பின்பு 1489 திருவரங்கம் வந்து -வெள்ளை கோபுரம் கைங்கர்யம் -அண்ணனை ஆஸ்ரயித்து –கந்தாடை ராமானுஜ முனி -பின்னர் பெற்ற திரு நாமம் -கல்வெட்டு பதிப்புக்களும் உண்டு -திருமலையில் வழி எம்பெருமானார் சந்நிதியும் இவரே செய்தார் -வேங்கடாத்ரி கொண்டை சாத்தி அருளி -இன்றும் சேவிக்கிறோம் -)

மேலும்‌ கோயிலில்‌ நடந்தவை ‘
இனிக் கோயில்‌ வ்ருத்தாந்தம்‌-
திருவேங்கடமுடையான்‌ ராமாநுஜ அய்யங்காருக்கு கைங்கர்யம்‌ நியமித்தருளின தினத்‌திலே திருமலை யாழ்வாரிலே பகவத்‌ விஷய காலஷேபம்‌ நடத்தி யருள, அற்றைக்கு ஒழிவில்‌ காலத்தறுவாய்‌ நடந்து செல்ல,-ஒழிவில்காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும்‌-என்று ௨க்தி மாத்ரமாயொழிவதே! என்று மிகவுத்‌ தளர்ந்து பரவசராய்ப்படுப்பதும்‌ இருப்‌பதும்‌ நிற்பதும்‌ புலம்புவதுமாயிருக்க, அற்றைக்கு முதல் நாள் ராத்ரி ப்ரதிவாதிபயங்கரமண்ணா ஸ்வப்நத்திலே திருவேங்கடஜீயர்‌ என்னும்‌ திரு நாமத்தை யுடை த்தாயிருக்கிற ஒரு ஏகாங்கி சென்று, “வாரீர்‌! ஸ்ரீவைஷ்ணவ தாஸரே நாளை ஒழிவில் கால வ்யாக்யாநாவஸரத்‌திலே ஜீயர் கைங்கர்ய ருசி விவசராயிருப்பர்‌, அவருக்கு சேஷசைலத்‌திலே சேஷாவதராமான ஜீயர்‌ மனோரதப்படியே கைங்கர்யம்‌ கொண்டருளுகிறோம்‌ என்று நீர்‌ விண்ணப்ஞ் செய்யும்‌’; என்று இப்படிக்‌ கண்டு எழுந்திருந்து வித்தராய்‌ ‘ ஈதொரு ஸ்வப்ந வைபவமிருந்தபடியே!” என்று எண்ணிக் கொண்டு நித்ய கர்மாநுஷ்‌டானங்களை நிறைவேற்றி மடத்திலே யெழுந்தருளித்‌ திருமலை யாழ்வாரிலே ஜீயரை தண்டன்‌ ஸமர்ப்பித்து, எழுந்தருளி யிருக்‌கிற ப்ரகாரத்தைக் கண்டு தம்முடைய ஸ்வப்ந மிருந்த ஸ்த்திதியும்‌ சேர்ந்திருக்கிற படியையுங் கண்டு, ஹ்ருஷ்டராய்‌ இந்த ஸ்வப்ந வ்ருத்தாந்தத்தை ஜீயர்‌ திருவுள்ளத்தில் படுத்த, ஜீயரும்‌ -இதுவுமொரு க்ருபையே!’” என்று ஹருஷ்டராய்‌ அண்ணாவை உபலாளித்தருளி, புந புந: கேட்டருளி, திக் கஜங்களை ‘இது எப்படி இருக்கிறது?? என்று கேட்டருள, அவர்களும்‌ “இந்த வேளை திருமலையிலே ஒரு அத்புத முண்டாயிருக்க வேணும்‌; அத்தை யறியும்‌ படிக்கு ஒருவரை நியமித்தருள வேணும்‌” என்று விண்ணப்பம் செய்ய; அவ்வளவிலே ௮ழகரண்ணன்‌ -எழுத்திந்து தண்டன்‌ ஸமர்ப்பித்து, “அடியேன்‌ தேவரீர்‌ திருவடிகளை – முன்னிட்டுக்‌ கொண்டு திருமலைக்கு விடை கொண்டு அப்பனையும்‌ ஸேலித்து செய்தியையும்‌ அறித்து கொண்டு விடை கொள்ளுகிறேன்‌’ என்று விண்ணப்பஞ் செய்ய, ஜீயரும்‌ போர உகந்தருளி அனுப்பி யருள,அவரும்‌ அதி த்வரையாகக்‌ திருமலையிலே சென்று பெருமாளை ஸேவிக்க, உடனே இளையாழ்வார்‌ பிள்ளையைக் கண்டு அந்யோந்பவந்தந பரராய்க் கொண்டு குசல ப்ரச்நம்‌ பண்ணிக் கொண்டு அயோத்யை ராமாதுஜய்யங்கார் பாடே செல்ல, அழகரண்ணனுக்கு பஹுமாநம் பண்ணி ப்ரதிபத்தி பண்ண, ஜீயருடைய வைபவங்களை புந:புந: கேட்டுத்‌ திருவேங்கடமுடையான்‌ தமக்குக்‌ கைங்கர்யங்கள்‌ நியமித்தருளின படியையும்‌ தாம்‌ ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க வேணுமென்கிற த்வரையையும்‌ அருளிச்‌ செய்ய அழகரண்ணனும்‌, ஜீயருக்கு உகப்பு கைங்கர்யம்‌ செய்து போருகையாய்‌ இருக்குமென்று, ப்ரதிவாதி பயங்கரருடைய ஸ்வப்ந வ்ருத்தாந்‌தத்தையு மருளிச் செய்ய; ராமாநுஜ அய்யங்காரும்‌, “ஆனால்‌ தன்‌யனானேன்‌, ஜீயர்‌ நியமனப் படிக்கு அவருடைய திருக் கைகளாலே யதா-சக்தி செய்து போருகிறேன்‌” என்று சொல்லி இளையாழ்வார பிள்ளையையும்‌ அழகரண்ணனையும்‌ கோயிலுக்கு அனுப்பி விட அவர்களும்‌ உடனே புறப்பட்டெழுந்தருளி ஜீயரை தண்டன்‌ ஸமர்ப்பித்து வடக்கில்‌ எம்பெருமான்களுடைய அபய ஹஸ்த ப்ரஸாதங்களையும்‌ ஸமர்ப்பித்துத்‌ திருவடி நிலைகளையும்‌ திருவடிகளிலே சேர்க்க, ஜீயரும்‌ இளையாழ்வார் பிள்ளையை பஹு நாளைக்‌காகக்‌ கண்டோமே! என்று மிகவும்‌ க்ருபை பண்ணி யருளி, அழகரண்ணனையும்‌ போர க்ருபை செய்தருளி, ப்ரதிவாதி பயங்கர மண்ணாவை -உம்முடைய ஸ்வப்நம்‌ பல வ்யாப்தமாயிற்று; உமக்‌காக வன்றோ திருவேங்கட முடையான்‌ க்ருபை பண்ணி யருளினார்‌!-என்று உகப்பு தோன்ற அடிக்கடி அருளிச் செய்து கொண்டு இளையாழ்வார் பிள்ளையை அடிக்கடி திருக்கையாலே தழுலி உபலாளித்து, ”நெடுந் தூரம்‌ சென்று வந்தீரே!” என்று அருளிச்‌ செய்து கொண்டு ராமாநுஜ அய்யங்கார்‌ ஸ்வரூப ஸ்வபாவங்களை உகந்தருளிக்‌ கேட்டுக் கொண்டு, நம்பெருமாள்‌, ஸ்ரீபத்ரிகாச்ரமப்‌ பெருமாள்‌, திருநாராயணப்‌ பெருமாள்‌, திருவேங்கடமுடையான்‌,அழகர்‌, இவர்களுடைய ஐக கண்ட்யத்தையும்‌ அருளிச் செய்து கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌. இந்த அர்த்தங்களை யெல்லாம்‌ வரவரமுநி வைபவ விஜயம்‌ என்கிற ப்ரபந்தத்திலே கந்தாடை யப்பன்‌ விஸ்த்ருதமாக அருளிச்‌ செய்ய ஜீயர்‌ திருச்செவி சாத்தி யருளினார்‌.
பின்பொருநாள்‌ திருக் காவேரியினின்றும்‌ எழுந்தருளச்‌ செய்தே ஜீயருக்கு இளையாழ்வார்‌ பிள்ளை திருக்கை ஸர்ப்பித்துக்‌ கொண்டு வரும் போது ப்ரஸங்காத்‌ அயோத்யை ராமாநுஜ அய்யங்காருடைய மநோ ரதத்தை விண்ணப்பஞ் செய்யக் கேட்‌டருளி, ‘திருவேங்கடமுடையானை இன்னுமொருக் கால்‌ ஸேவிக்‌கையுமுண்டாம்‌, அப்போது அவர்‌ மநோரதப் படியே ஆகிறது;இப்போது அவர்‌ கைங்கர்யஸ்ரீ யுடனே யிருக்கக் கடவர்‌ ‘ என்றருளிச் செய்ய, பின்னும்‌ ராமாநுஜ அய்யங்கார்‌ இந்‌தத் திருவடி நிலைகளைத்‌ தமக்குத்‌ திருவாராதனமாசு ப்ரார்த்தித்துக்‌ கொண்‌டிருக்கிறாரென்று விண்ணப்பஞ்செய்ய , அப்படியே ஆகிறதென்று மடத்திலே யெழுந்தருளி னவுடனே தைவாதீனமாகத்‌ திருவடி ஸம்பந்தமுடையரான சில வைஷ்ணவர்கள்‌ திருமலைக்கு விடை கொண்டு திருப் புரட்டாசித்‌ திருநாள்‌ ஸேவித்து விடை கொள்ளுகிறோம் என்று தண்டன்‌ சமர்ப்பித்து நிற்க, போர உகந்தருளி,புணர்‌த்த கையினராயடியேனுக்கும்‌ போற்றுமினே என்று திருமலையை நோக்கித் தொழுது ராமாநுஜ அய்யங்காருக்குத்‌ திருவடி நிலைகளை ஸாதித்து விடை கொடுத்தருள; அவர்களும்‌ புறப்பட்டுத்‌ திருமலைக்கு எழுந்தருளினார்கள்‌.

கந்தாடை அண்ணன்‌ திருமலைக்கு எழுந்தருளல்‌
பின்பொரு நாள்‌ கந்தாடையண்ணனை கடாஷித்தருளி திரு வேங்கட முடையானை மங்களாசாஸநம்‌ பண்ண வேண்டாவோ?என்ன, அப்பிள்ளை, “காவேரி கடவாத கந்தாடை யண்ணரன்றோ?” என்ன, அரங்கத்தரவினணையான்‌ வானவர்கள்‌ சந்தி செய்ய நின்றது அங்கேயே யன்றோ? என்று ஜீயரருளிச்‌ செய்ய,அண்ணனும்‌ அப்படியே நியமித்தருள வேணும்‌” என்ன, அவரையுங் கூட்டிக்‌ கொண்டு பெருமாள்‌ ஸந்நிதியிலே எழுந்தருளி விடை கொடுப்பித்தருளி உத்தம நம்பியையும்‌ கூடவே ஸேவித்துக்‌ கொணடு போரும்படி நியமித்தருளி, அனேகம்‌ ஸ்ரீவைஷ்ணவர்‌களையும்‌ ஜீயர்களையும்‌ ஏகாங்கிகளையும்‌ சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்‌களையும்‌ கூடப் பயணஞ்‌ செய்தருளி யிருக்கிற வவஸரத்திலே; உத்தம நம்பியும்‌ (அண்ணனுக்குத்‌ திருப்பல்லக்கு முதலான வரிசைகளைச்‌ சேர்த்துப்‌ புறப்பட்டிருக்கும் படிக்கு விண்ணப்பஞ் செய்து கொண்டு நிற்க, அண்ணனும்‌ அவைகளை யெல்லாம்‌ நிரோதித்து -ஸ்ரீ வைஷ்‌ணவ கோஷ்டியை ஸேவித்துக் கொண்டு திருமலைக்குப்‌ பெரும் கூட்டத்துடனே செல்லுகிற நமக்கு உசிதமன்றென்று மறு விண்ணப்பஞ் செய்ய வொண்ணாதபடிக்கு நிஷேஷித்து விட்டு ” திரு நாளிலே இரண்டு மூன்று நாளாகிலும்‌ மங்களாசாளனமாக வேண்டும்‌” என்று அதி த்வரையாகப்‌ பயண கதிகளிலே யெழுந்தருளி திருமலை யடிவாரத்திலே அடிப்புளி யழகிய சிங்கரைத்‌ தொழுது திருமலை யேறி யருள; அச் செய்தியைத்‌ திருமலை யநந்தாழ்வான் கேட்டருளி,(இவர்‌ ஒன்றான திருமலை யநத்தாழ்வான்‌ திருவம்ச்யராய்‌ அவர்‌ ஸ்தாநத்தில்‌ கைங்கர்யம்‌ பண்ணி யிருந்தவர் ) பெரிய கேள்வி ஜீயர்‌ முதலானார்‌, மற்ற ஆசார்ய புருஷர்கள்‌, ஸ்தலத்தார்‌ எல்லாருக்கு மறிவிக்க, அவர்களெல்லாரும்‌ போர உகந்தருளி வெள்ளிக் கிழமை புழுகுக் காப்பு. உத்ஸவத்தை அண்ணன்‌ மங்களாசாஸனம்‌ செய்தருள வேணுமென்று ப்ராத; கால வேளைக்கு நிறுத்தி, பெருமாள்‌ திருத் தேரிலே ஏறி யருளின வுடனே அனைவரும்‌ வரிசையுடனே ௮ண்ணனை எதிர்‌ கொண்டு எழுந்தருளப் பண்ணுவித்துக் கொண்டு வந்து திருத்‌ தேரிலே பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணுவித்து, பின்பு திருத் தேர்‌ திரு வீதி யெழுந்தருள இயல்‌ தொடங்குகிற விடத்திலே அயோத்யை ராமாநுஜ அய்யங்கார்‌ கண்டு பக்தி பரவசராய்‌ ஸேவித்து நிற்க, அவரையும்‌ க்ருபை பண்ணி யருளி எழுந்தருளா நிற்கிற வளவிலே:ஸ்ரீபத்ரிகாச்ரமத்தினின்றும்‌ ராமாநுஜ தாஸர்‌ வந்து அசிந்தமாக அண்ணன் எழுந்தருளி யிருக்கக்‌ கண்டு மிகவும்‌ வித்தராய்‌ உகந்து திருவடிகளிலே தண்டன்‌ ஸமர்ப்பிக்க,, அண்ணனும்‌ போர வுகந்தருளி எடுத்தணைத்தக்‌ கொண்டு அத்யந்தம்‌ ஹர்ஷ பரவசராய்‌ “வாரீர்‌ ராமாநுஜ தாஸரே! உம்மைக்‌ காணப் பேருமே பெற்றோமே! தேசாந்தர கதனான புத்ரனிடத்தில்‌ பித்ரு ஹ்ருகயம் போலே ஜீயர்‌ திருவுள்ளம்‌ உம்மிடத்தலே ஒருமைப் பட்டிருக்கிறது’என்று அங்குள்ள பெரியோர்களுக்கெல்லாம் இவருடைய ஆசார்ய நிஷ்டையை யருளிச் செய்து, திருத் தேர்‌ நிலையில்‌ எழுந்தருள, பெருமாளும்‌ உள்ளே எழுந்தருளின வுடனே ஸேவாக்ரமத்திலே அப்பனை பாதாதி கேசாந்தமாகவும்‌ கேசாதி பாதாந்தமாசுவும்‌ ஸேவித்து பூர்ண மநோரதராய்‌, புழுகுக் காப்பு ஸேவையுமாய்‌,தீர்த்தம்‌ ஸ்ரீசடகோபன்‌, ஸ்ரீபாத ரேணு ப்ரஸாதித்தருள ஸ்லீகரித்தருளி, பின்பு அநந்தாழ்வான்‌ திருமாளிசைக்கு எழுந்தருளப்‌ பண்ணுவித்துக் கொண்டு எழுந்தருள, ‘அங்கே யெழுந்தருளின வுடனே அநந்தாழ்வானும்‌ ஸர்வோபசாரங்களையுஞ்‌ செய்தருள அங்கே எமுந்தருளி இருந்தார்‌.

அயோத்யை ராமாநுஜ அய்யங்கார்‌ அண்ணனை ஆச்ரயித்தது.
ராமர்நுஜ தாஸரும்‌ ராமாநுஜ அய்யங்காரைக்‌ கண்டு,“தேவரீர்‌ திருமுக ப்ரசாரம்‌ அவ் விடத்தில்‌ கைங்கர்யங்களெல்லாம்‌ அமர்த்தி, சிறிய ராமானுஜ அய்யங்காரைக்‌ கற்பித்து அவரைக்‌ கொண்டு ஸகல வித கைங்கர்யங்களும்‌ நடக்கும்படி பண்ணி வந்தேன்‌; தேவரைக்‌ காணப் பெற்றேன்‌; அண்ணன்‌ திருவடி நிலையும்‌ ஸேவிக்கப் பெற்றேன்‌? என்று விண்ணப்பஞ்செய்ய;
ராமாநுஜ அய்யங்காரும்‌ போர உகந்தருளித்‌ தமக்கு ஹிதங்‌ கேட்கத்‌ தொடங்கி அப்பன் திருவடி தொழுதவன்று தொடங்கி இற்றை வரைக்கும்‌ தம்முடைய வ்ருத்தாந்தங்களை யெல்லாம்‌ விண்ணப்பஞ் செய்யக்‌ கேட்டு அவருக்கு ஹிதமருளிச்‌ செய்தபடி,-“ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்க வில்லை யென்கிற குறையை விடும்‌;அதிலும்‌ அதிசயமாய்‌ ஜீயருக்கு இரட்டிப்பு உகப்பாயிருக்கும்‌:நாளை தீர்த்தம்‌ திருவோணத்தில்‌ அண்ணன்‌ திருவடிகளிலே ஆஸ்ரயணமாக:’ என்று நியமிக்க: ராமாநுஜ அய்யங்காரும்‌ அதி ஸந்தோஷத்துடனே அவரையுங் கூட்டிக் கொண்டு அண்ணனைத்‌ தெண்டன்‌ மைர்ப்பித்து நின்று இச் செய்தியை விண்ணப்பம் செய்ய, அண்ணனும்‌ ”ஜீயருடைய நியமனமும்‌ அப்படியே இருக்கும்‌’* என்றருளிச்‌ செய்து, -ராமாநுஜ தாஸர்‌ ஹ்ருதமமும்‌ ஜீயர்‌ திரு வுள்ளமும்‌ ஏகமாய் இருந்தபடி யென்‌!” என்று போர வித்தராயிருக்க, அண்ணனும்‌ “ஜீயர்‌, தமக்கு ப்ரதி பிம்பமாக அபிமானித்தருளி திவ்ய தேச மங்களாசாஸநம்‌ செய்தபடி அறிவீரே’” என்று அருளிச்‌ செய்து வைஷ்ண கோஷ்டி புரஸ்ஸரமாக ராமாநுஜ அய்யங்காருக்கு ஸமாஸ்ரயணம்‌ செய்தருளினார்‌. ராமாநுஜ தாஸரும்‌ பண்டைக்‌ குலத்தைத்‌ தவிர்த்து தாமும்‌ வேதகப்‌ பொன்னானார்‌ பின்பு அண்ணன்‌ இருவரையும்‌ கூட்டிக் கொண்டு கோவிலிலே எழுந்தருளி அப்பனை மங்களாசாஸதம்‌ செய்தருளா நிற்க , பெருமாளும்‌ அண்ணனை மிகவும்‌ க்ருபை. பண்ணி யருளி ராமாநுஜ அய்யங்காருக்கு அண்ணன்‌ திருவடி ஸம்பந்தம்‌ தோற்ற
“கந்தாடை ராமாநுஜ அய்யங்கார்‌” என்று அருள்‌ பாட்டுடன் பட்டு வஸ்த்ரம்‌ ப்ரஸாதித்து இதுவே இவருக்குத்‌ திருநாம மென்று விதித்தருளிச் செய்து உபலாளித்தருளினார்‌ பின்பு பெரிய கேள்வி சிறிய கேள்வி ஜீயர்கள, ஏகாங்கிகள், ஆசார்ய புகுஷர்கள்‌ முதலான ஸ்தலஸ்தாரனைவரும்‌ அண்ணன்‌ சந்நிதிக்கெழுந்‌தருளி, சிறப்பு வரிசைகளும்‌ ஸமர்ப்பித்து, ஆஸ்ரயிக்க வேண்டியவர்கள்‌ ஆஸ்ரயித்து ஸ்ரீபாத தீர்ததம்‌ ஸ்வீகரித்து, அமுது செய்யத் தக்கவர்கள்‌ அமுது செய்தருளி, தளிகை ப்ரஸாத ப்ராப்‌தாக்கள்‌ தளிகை ப்ரஸாதம்‌ ஸ்வீகரித்து ௨பலாளித்து க்ருதார்த்த ரானார்கள்‌-

அண்ணன்‌ திருமலையினின்‌றும்‌ கோயிலுக்கெழுந்தருளல்‌
மற்றை நாள்‌ அண்ணனை அனைவரும்‌ கோவிலுக்கு வரிசையுடனே எழுந்தருளப்‌ பண்ணிக் கொண்டு வந்து மங்களாசாஸநம்‌ பண்ணின வுடனே பெருமாளரையில் பீதக வண்ண வாடையான பெரிய பீதாம்பரம்‌ முதலான வரிசைகளெல்லாம்‌ ஸாதித்தருளி கந்தாடை ராமாநுஜ ௮ய்யங்காருடைய திருப் பல்லக்கு, சத்ர சாமராதிகள்‌, மற்றை ஸமர்ப்பணைகளை யெல்லாம்‌ பரிக்ரஹிக்கும்‌ படிக்கு அர்ச்சக முகேந நியமித்தருளி விடைகொடுத்தருள உடனே புறப்பட்டருளிக்‌ கீழ்த் திருப்பதியிலே யெழுந்தருளி ஸ்ரீகோவித்த ராஜப்‌ பெருமாளையும்‌ மற்றவர்களையும்‌ மங்களாசாஸநஞ்‌ செய்தருளி வரிசை பெற்றுப்‌ புறப்பட்டு எறும்பியிலே எழுந்தருள, அப்பா திருத் தகப்பனார்‌ ஐயைகளும்‌ அழகிய மணவாள தாஸராகிய ஸ்ரீவைஷ்ணவர்களுடனே எதிர் கொண்டு ஸேவித்துத்‌ தம்முடைய திருமாளிகையிலே எருந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு சென்று உபசரித்தருளின வளவிலே; அண்ணன்‌,இளையாழ்வார்‌ பிள்ளை, திருவாய்மொழியாழ்வார்‌ பிள்ளை முதலான ஆசார்யர்களும்‌, எம்பெருமானார்‌ ஜீயர்‌, திருவேங்கட ஜீயர்‌ முதலான ஜீயர்களும்‌, முந்தி எழுந்தருளுகிறார்கள்‌’- என்‌கை -“அடியேன்‌ சேரிக்கு எழுந்தருளி க்ருபை பண்ணி யருளாமல்‌ அப்படிச்‌ செய்தருளலாமோ?” என்று ஐயைகள்‌ வெறுத்துக்‌ கொண்டு சுத்த ஸத்வமண்ணனைக்‌ கேட்டருள, அண்ணனும்‌,“ஸ்வாமி ஆசார்யரண்ணன்‌, தாம்‌ திருப் பல்லிக்கலே யெழுந்தருளச்‌ செய்தே அவர்களும்‌ கூட எழுந்தருளப் போகாதென்று முன்னே அனுப்பி யருளினார்‌. அவர்களும்‌, பத்மபுரமென்சிற திருமலையடி வாரத்திற் கெழுந்தருளுகிறார்கள்‌’” என்ன, ஆகில்‌ தாம்‌ எழுதந்தருளி அவர்களை யெல்லாரையும்‌ எழுந்தருளப்‌ பண்ணிக் கொண்டு வர வேணுமென்று சுத்த ஸத்வ மண்ணன்‌ திருக் கைகளைப் பிடித்துக்‌ கொண்டு பத்ம புரம் யெழுந்தருள, அவர்களுங் கண்டு அந்யோந்யம் வந்தந பராய்‌ குசல ப்ரச்நம்‌ பண்ணிக் கொண்டு எல்லாரும்‌ எறும்பியிலே ஐயைகள்‌ திருமாளிகையிலே எழுந்தருளி சக்ரவர்‌த்தி திருமகன்‌ அதி விஜ்ரும்‌பணமாக பூர்ணமாக அமுது செய்தருளி ததீயாராதநமும்‌ நடக்க, மற்றை நாள்‌ திருக்‌ கடிகையில்‌ ௮க்‌காரக் கனியை யடைந்து மங்களாசாஸநஞ் செய்தருளிப்‌ புறப்‌பட்டுப்‌ புட்குழி யம் போரேற்றைத் தொழுது பெருமாள்‌ கோயிலுக் கெழுந்தருள, அங்குள்ள ஆசார்யர்களும்‌ கோவிலனைத்துக் கொத்தும்‌ எதிர் கொண்டு எழுந்தருளிவித்துக்‌ கொண்டு போய்‌ பேரருளாளர்‌ பெருந் தேவியாரை ஸேவா க்ரமத்‌திலே மங்களாசாஸதம்‌ பணணுவித்துத்‌ திருமாளிகையிலே எழுந்தருளப்‌ பண்ணிச்‌ சிறப்பும்‌ நிரவதிகமாக ஸமர்ப்பித்து உபசரித்‌தருளினார்கள்‌-அப்பாச்சியாரண்ணாவும்‌ முதலியாண்டான்‌ தொடங்கி யுண்டான தம்முடைய பெரியோர்களை யெல்லாம்‌ ஸேவித்தாற்‌ போலிருக்கிறதென்று மிகவும்‌ உகந்தருளி ப்ரதிபத்தியுடனே ஸ்வாமி யண்ணனையும்‌, கூட எழுந்தருளின ஸ்வாமிகளையும்‌ மற்றுமுண்டான பரிஜனங்களையும்‌ தம் திருமாளிகையிலே தானே எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு பஹுவாக உபசரித்து உபலாளித்துக்‌ கொண்டெழுந்தருருளி யிருந்தார்‌. பேரருளாளரும்‌ உகந்தருளி அண்ணனுக்குத்‌ திருநாமம்‌ :ஸ்வாமி’” என்று அனைவரும்‌ அநுஸந்திக்கும் படிக்கு ஆஜ்ஞாபித்தருளி அருள் பாடும்‌ ப்‌ரஸாதித்தருளினார்‌.

ஸ்வாமி யண்ணன்‌ பேரருளாளனுக்கு சாலைக் கிணற்றில்‌ திருமஞ்சந கைங்கர்யம்‌ செய்தல்‌-
ஸ்வாமி யண்ணனும்‌ பேரருளாளனுக்கு மிகவும்‌ ௨கப்பாக எம்‌பெருமானார்‌ உகந்து செய்தருளின கைங்கர்யமாய்‌, பின்பு முதலியாண்டானும்‌ அப்படியே செய்தருளி, துன்னு புகழ்க்‌ கந்தாடைத்‌ தோழப்பரும்‌ விரும்பிச்‌ செய்தருளின சாலைக் கிணற்றில்‌ திருமஞ்சந கைங்கர்ய மின்றிக்கே யொழிய வொண்ணா தென்று அப்பாச்சியாரண்ணாவுக் கருளிச்‌ செய்து, தாமும்‌ புறப்பட்டருளி அருணோதய காலத்திலே அநுஷ்டாந குளத்திலே நீராடி நித்ய கர்‌மாநுஷ்டாநங்களையும்‌ நிறை வேற்றி, கைங்கர்ய ருசியை யுடையருமாய்‌ சக்தருமா யெழுந்தருள ஸ்ரீவைஷ்ணவர்களுடனே சாலைக்‌ கிணற்றருகே எழுந்தருளி குடங்களை சோதித்துத்‌ திருமஞ்சநம்‌ பூரித்துத்‌ திரு முடியிலே வைத்துக் கொண்டு ஆளவந்தார்‌ ஸ்தோத்ர அநுஸந்தாநத்துடனே தண்ணீரமுது வழி திருத்துகிற உத்ஸவம்‌ (எம்பெருமானார் திரு மலையிலே நியமித்து ஏற்படுத்தி யருளிய ஒரு உத்ஸவம்‌, திரு மலையப்பன்‌ ஒரு வேடனுருலில்‌ பெரிய திருமலை நம்பி நித்யமாக ஆகாச கங்கை யினின்றும்‌ கோயிலுக்கு எழுந்தருளப்‌ பண்ணும்‌ திருமஞ்நத்தை ஒருநாள்‌ குடத்தை அம்பெய்து ஒட்டை பண்ணி பெருகிய தீர்க்தத்தைப்‌ பருகி யருளியதை அனைவரும்‌ அறியும்படி, பல ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ குழாமாக ஆகாச கங்கையிலிருந்து அத்‌யயந உத்ஸவம்‌ முடிந்த மறு தினம்‌ திருமஞ்சனம்‌ எழுந்தருளப்‌ பண்ணிக் கொண்டு திருவீதி வலம்‌ வந்து கோயிலில்‌ ஸமர்ப்பித்தல்‌ )போலே தாம்‌ எழுந்தருளி யிருக்கிற நாளெல்லாம்‌ பேரருளாளருக்குத்‌ திருமஞ்சந கைங்கர்யம்‌ செய்தருளி, பின்பு அப்பாச்சியர் அண்ணாவை -இந்த கைங்கர்யம்‌ தப்பாமல்‌ நடத்தி வாரும்‌’” என்று நியமித் தருளினார்‌.

கந்தாடை ராமாநுஜ அய்யங்கார்‌ செய்த கைங்கர்பங்கள்‌
ஒரு நாள்‌ கந்தாடை ராமாநுஜ அய்யங்காரைத்‌ திருமவை திருப்பதியில்‌ கைங்கர்யங்களை நிறைவேற்றி மீண்டு வந்து, திருவநந்த ஸரஸ்ஸுக்கு நீராழி மண்டபமும்‌, சுற்றி வர ஸோபானங்களும்‌ தென் கரையில்‌ உந்நதமான குளக் குறடும்‌, ஸிம்ஹாஸநமும்‌,மண்டபமும்‌, திருமழிசைப் பிரான்‌ கோயில்‌ கைங்கர்யமும்‌, திரு வபிஷேக மணடபத்திற்கு முன்னே பெரிய மண்டபமும்‌ திருமலைக்கு ஒலிமுக மண்டபம்‌ முதலான இன்னும் சில மண்டபங்களும்‌, திருமடைப் பள்ளி, வடக்குத்‌ திருக்குளப் படிக்கட்டும்‌, யதா ஸம்பவம்‌ திருவாபரணங்களும்‌, திருமஞ்சந காலத்திற்கு மஞ்சள் காப்பு கைங்கர்யம்‌ முதலான அநேக கைங்கர்யங்களும்‌,திருப் பவளத்திற்கு உகப்பாக அமுது செய்தருளும் படிக்கு சில கட்டளைகளும் நியமித்து,-இவைகளெல்லாம்‌ அழகிய மணவாள மாமுனிகள்‌ கைங்கர்யம்‌, அவச்யம்‌ நடத்‌தி வாரும்‌” என்றும்‌-அப்பாச்சியாரண்ணாவை நாமாகவே ப்ரதிபத்தி பண்ணி வாரும்‌’* என்றும்‌ புத்திகளை ஸாதித்து திருமலைக்கு அனுப்பி யருளினார்‌.

“அண்ணன்‌ ஜீயர்‌- ஜீயரண்ணன்‌”
பின்பு தாமும்‌ ஸ்ரீபெரும்பூதூர்‌ முதலான திவ்ய தேசங்களை மங்களாசாஸநம்‌ பண்ணத் திருவுள்ளமாய்‌, பேரருளாளர்‌ ஸந்நிதியிலே அனுப்புவித்துக் கொள்ள எழுந்தருள, திருவாராதநம் கண்டருளி தத்யோதந அவஸரம்‌ அமுது செய்தருளின வுடனே அண்ணனை அருள்பாடிட்டழைத்து உடுத்துக் களைந்த பீதக வாடை, அபய ஹஸ்தங்கள்‌, திருவடிசோடு, களபம்‌, சூடிக் களைத்த தொடுத்த துழாய் மலர்‌, ப்ரஸாதங்தள்‌ இவையெல்லாங் கட்டி “இவை ஜீயருக்கு’” என்று அண்ணன்‌ திருக் கைகளிலே ஸாதித்தருளி அண்ணனுக்கு உகப்புடனே வரிசைகளும்‌ ஸாதித்தருளி விடை கொடுத்தருள, ஸ்வாமி யண்ணனும்‌ திருவைய மாளிகையிலே கச்சிக்கு வாய்த்தான் திரு மண்டபத்திற்கு எதிராக எழுந்தருளி இருந்து ஜீயருடைய வைபவங்களை அநுஸந்திக்க அதற்கு அநு குணமாக பேரருளாளர்‌ உபலாளித்தருளி உகந்து கொண்டிருக்க , அவ்வளவிலே சில பெரியோர்கள்‌ “தம்முடைய ஸ்வாமி ஜீயருக்கு”: “அண்ணன்‌ ஜீயர்‌” என்று பேரருளாளர்‌ திருநாமம்‌ சாத்துவது!” என்று உகந்தருள! வேறு சில பெரியோர்கள்‌, அண்ணனுக்கு பெரிய பெருமாள்!”ஜீயரண்ணன்‌’ என்று திருநாமம்‌ சாத்தினதுண்டே!யென்று, “ராமாநுஜம்‌ லக்ஷ்மண பூர்வஜம்‌ ச ‘- என்கிறபடியே ஜீயருக்கும்‌ அண்ணனுக்கு முண்டான அந்யோந்ய ப்ரீத்யதிசயத்‌தையும்‌ அப்ரதிம னவபவங்களையு மிட்டுப்‌ பேரருளாளரும்‌ பெரியோர்களும்‌ உகந்தருளி இப்படித் திரு நாமங்கள்‌ சாத்தினார்‌களென்று எல்லாருங்‌ கொண்டாடிக் கொண்டு திரு மாளிகை யிலே எழுந்தருள; ‘பஹுநாளாயிற்று அதி சீக்ரமாக வரவும்‌” என்று அண்ணனுக்கு ஜீயருடைய திருமுகம்‌ வர, அண்ணனும்‌ அந்தத்‌ திரு முகத்தை சிரஸா வஹித்தருளி உட்பட்டுக்‌ கொண்டு ஸ்ரீ பெரும்‌பூதூர்‌ முதலான திவ்ய தேசங்களை திக்கு நோக்கி தண்டன்‌ ஸமர்ப்‌பித்துக்‌ கோயிலுக்குப்‌ புறப்பட்டு -பொன்னடி காண்பதோராசையினால்‌ அதி த்வரையாக பயண கதியில் எழுந்தருளித்‌ திருக் காவேரிக்‌ கரையிலே யெழுந்தருள, கோயிலுள்ள பெரியோர்களெல்லாருங்‌ கேட்டருளி மிகவுமுகந்திருக்க, பட்டர்‌ கோயில் பரிகரமனைத்‌துடனே எதிர் கொண்டு திருமாளிகையிலே எழுந்தருளிப்‌ பண்ணி வைத்தார்‌. ஜீயரும்‌ அண்ணன்‌ திரு மாளிகையிலே எழுந்தருளி யிருந்து அண்ணனை க்ருபை பண்ணி யருளி, திரு வேங்கடமுடையான்‌, பேரருளாளர்‌ ப்ரஸாதங்களையும்‌ அங்கீ கரித்தருளி அவ்வவ்‌ விடங்களிலுள்ள வைபவங்களைக் கேட்டருளி உகப்புடனே எழுந்‌தருளி யிருக்கிற வளவிலே, ஸ்ரீவைஷ்ணவர்கள்‌, பேரருளாளர்‌ ஜீயருக்கு அண்ணன்‌ ஜீயர்‌” என்று திரு நாமம்‌ ஸாதித்தபடியை விண்ணப்பஞ்‌ செய்யக் கேட்டருளி மிகவுமுகந்து, -நம்முடைய மனஸ்ஸூக்குத் தக்கபடி பேரருளாளரும்‌ தேவரீர் ஸம்பந்தம் தோற்ற அருளிச் செய்வதே!” என்று அண்ணனைப்‌ பார்‌த்தருளிச் செய்ய, ஸ்வதந்த்ரனுடைய அதி க்ரமணத்துக்குத்‌ தடை யுண்டோ? என்று சிலர் அருளிச்‌ செய்யப் புக ப்ரதிவாதி பயங்கர மண்ணாவும்‌ “ஸ்ரீயபதி’* என்னுமா போலே ஜீயருக்கு இதுவுமொரு திருநாம மென்ன , அவரை எல்லாரும்‌ கொண்டாடினார்கள்‌,
பின்பு ராமாநுஜ தாஸர்‌ திருவடிகளிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து நிற்க, அவர்‌ திருமுடியில் திருவடிகளை நற்றரிக்க வைத்தருளி மிகவும்‌ விஸேஷ கடாக்ஷம்‌ பண்ணி யருளினர்‌. அவரும்‌ வட தேசத்‌ தெம்பெருமான் களுடைய ப்ரஸாதங்களை நாலு ஸ்ரீவைஷ்ணவர்‌களைக் கொண்டு எழுந்தருளப் பண்ணி அவற்றை யெல்லாம்‌ ஸமர்ப்‌பிக்க , அங்கீ கரித்தருளி விநியோகம்‌ செய்தருளி தாமும்‌ ஸ்வீகரித்‌ தருளி பூர்ண மநோ ரதராய்‌, வடக்கில்‌ திருப்பதிகளெல்லாம்‌ ஸேவித்தாராயிற் றென்று ராமனுஜ தாஸரை நெருங்கத் தழுவி யருளினார்‌,

அநந்தரம்‌ அப்பாவை ஊரேற வரும்படிக்கு அவர்‌ திருத் தமப்‌பனார்‌ ராமாநுஜ தாஸர்‌ திருக்கையிலே திருமுகம்‌ வரக் காட்ட அவரும்‌ ஸேவா விஸ்லேஷ பீருவாயிருக்க, அவருக்குத் தஞ்சமாகத் தம்‌முடைய விக்ரஹமாக ஒரு விக்ரஹத்தையும்‌ திருவடி நிலைகளையும்‌ திரு உத்தரீயத்தையும ப்ரஸாதித்தருளினார்‌
ப்ரீத। ப்ரேஷி தவாந் முநிர் வர வரோ யஸ்மை முஹு: ஸ்ரீமுகம்‌
ப்ராதாத்‌ ஸ்வாங்க்ரி ஸரோஜ ஸங்க ஸுபகம்‌ ஸ்வீயா முபாநத்யுகீம்‌ |
ஸ்வீயம்‌ ஸுந்தர முத்தரீய மமலம்‌ ஸ்வாம் மூர்த்தி மர்ச்சா மயீம்‌
தம்‌ தேவேஸ குரும்‌ பஜேம ஸரணம்‌ ஸம்ஸார ஸந்தாரகம்‌ ॥

[மணவாளமாமுனிகள்‌ யாருக்கு அடிக்கடி உகந்து ஸ்ரீ முகம் ஸாதித்‌தாரோ, யாருக்கு தம் திருவடித் தாமரைகளின்‌ ஸம்பந்தத்தினால்‌ பாக்யம்‌ பெற்ற தமது பாதுகைகளிரண்டையும்‌, தமது அழகியதாய்த்‌ தூயதான உத்‌தரீயத்தையும்‌- தமது அர்ச்சா விக்ரஹத்தையும்‌ தந்தருளினாரோ, ஸம்ஸார தாரகரான அந்த தேவராஜ குரு வென்னும்‌ எறும்பி யப்பாவைச்‌ சரணமாகப்‌ பற்றக் கடவோம்‌]
என்று பின்புள்ளாரும்‌ இவ் வ்ருத்தாந்தத்தை யநுஸந்திக்கும்படி அபிமானித்தருள, பின்பு எறும்‌பியப்பாவின்‌ திருப் பேரனாரான பிள்ளை யப்பாவும்‌ இந்த வ்ருத்தாந்தத்தை அநுஸந்‌தித் தருளினாரிறே. அப்பாவும்‌ ஜீயரநுமதி கொண்டு கோயிலினின்றும்‌ புறப்பட்டு எறும்பி யேற எழுந்தருளி தம் திருத் தமப்பனாரைத்‌ திருவடி தொழுது அவருக்கு சுஷ்ரூஷித்திக்‌ கொண்டிருந்து, –எண்டிசையுமறிய இயம்‌புகேன்‌ ஒண்டமிழ்ச்‌ சடகோப னருளையே-என்கிறபடியே, ஜீயருடைய சேஷா க்ருதித்வ லஷ்மணா க்ருதித்வ ப்ரப்ருதிகமான அப்ரதிம ப்ரபாவத்தை வரவர முநி ஸதகம்‌, வரவர முநி ப்ரபந்தம்‌,வர வரமுநி பஞ்சாஸத்‌, வரவர முநி ஸ்தவம்‌, வரவர முநி மங்களாசாஸநம்‌ வரவர முநி கத்யம்‌ முதலான ஹ்ருதயமான அநேக ப்ரபந்தங்களாலே வெளியிட்டு உபகரித்தருளினார்‌

ஸ்ரீ வான மாமலை ஜீயர்‌ அரங்க நகரப்பனை திருவாரதனமாகப் பெறுதல்‌
அவ்வளவிலே வானமாமலை ஜீயரை வானமாமலை ஸ்ரீகார்‌யார்த்தமாக அனுப்பி யருளவேணுமென்று ஸேனை முதலியார்‌ ஸ்ரீமூகம்வர, எதிர்கொண்டு சிரஸா வஹித்து உட்பட்டுக் கொண்டு அப்படியே ஸம்மதியாம் படி ஜீயர்‌ நியமித்தருளி, அவரையும்‌ கூட்‌டிக் கொண்டு பெருமாள்‌ திரு முன்பே சென்று இச் செய்தியை விண்ணப்பஞ் செய்து தாமும்‌ திவ்யப் ப்ரபந்தம்‌ நாலாயிரத்திலும் நூறு பாட்டு க்ரமத்திலே நித்யாநுஸந்தானமாக அநுஸந்‌திக்‌கிறது அன்றைக்குத்‌ திருமொழி சாற்று முறையாய்‌, அணியார்‌ பொழில் சூழ்‌ அரங்கநகரப்பா என்று -அநுஸந்திக்கிற வேளையில பெருமாளும்‌ அப்படியே ஸம்மதித்து, தம்முடைய ஸந்நிதியிலே பூபால ராயனில்‌ தட்டிலே யெழுந்தருளி யிருக்கிற அரங்க நகரப்பனாகிய லஷ்மீ நாராயணனான நாம்‌ வானமாமலை ஜீயருக்கும்‌ உமக்குமாக வருகிறோமென்று வானமாமலை ஜீயர்‌ இருக்கையிலே எழுந்‌தருளப் பண்ணிக்‌ கொடுக்க, அவரும்‌ ஜீயர்‌ திரு முக மண்டலத்தைப்‌ பார்த்து பெரியார்க் காட்பட்டக்கால்‌ பெறாத பயன்‌ பெறுமாறு என்று விண்ணப்பஞ்செய்ய., பெருமாளும்‌ தீர்த்தம்‌ திருப்பரியட்‌டம்‌, திருமாலை அபய ஹஸ்தம்‌ முதலான வரிசைகளும்‌ ஸ்ரீசடகோபனும்‌ ப்ரஸாதமும்‌ ஸாதித்து விடை கொடுத்தருள, ஜீயரும்‌ மங்கள வாத்யங்களுடளே அரங்க நகரப்பனை எழுந்தருளப் பண்ணிக்‌ கொண்டு மடத்திலே யெழுந்தருளி அமுது செய்தருளின வுடனே ஜீயரை வாழ்த்தி அரங்கநகரப்பனை ப்ரஸாதித்து வானமா மலைக்கு அனுப்‌பி யருளினார்‌.

ஸ்ரீ கோவிந்த தாஸரப்பனின்‌ மதுரகவி நிஷ்டை
அநந்தரம்‌ ஜீயரும்‌ ஒரு நாள்‌ எல்லாரும்‌ பேரோலக்கமாக ஸேவித்துக்‌ கொண்டிருக்கச்‌ செய்தே முதலிகளைக் குறித்து, எல்லாரு மறிந்தார்களே யாகினும்‌ தேவு மற்று அறியேன் என்றிருக்கிற இருப்பு ஸ்ரீ கோவிந்த தாஸரப்பனுக்கே யுள்ளதொன்றிறே என்று விசேஷாபிமாநம்‌ செய்தருளி (இவரே பட்டர்பிரான் தாசர் -அடுத்து ஜீயர் ஆனவர் -முன்னால் மோர் முன்னார் ஐயர் -30 வர்ஷம் -ஆஸ்ரம ஸ்வீகாரம் முன்பே 18 வர்ஷம் -பிண்பு 12 வர்ஷம் ),
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்ய மயீம்‌ தநும்‌ |
மக்நா நுத்தரதே லோதாந்‌ காருண்யாச் சாஸ்த்ர பாணிநா |
என்றும்‌
ஐகதோ ஹித சிந்தாயை ஜாக்ரத பணி ஸாயிந : |
அவதாரேஷ் யந்ய தமம்‌ வித்தி ஸெளம்ய வரம்‌ முநிம்‌ ॥

[ஸர்வேஸ்வரனான நாராயணன் தானே இவ் வுலகில்‌ மனித வுருவில்‌ (ஆசார்யனாய்‌) வந்தவதரித்து ஸம்ஸாரமாகிற கடலில்‌ முழுகிக்‌ கிடக்கும் ஜனங்களைத்‌ தமது கருணையினால்‌ சாஸ்த்ரங்களைக்‌ கைக் கொண்டு மேலெழச் செய்கிறான்‌-என்றும்‌, உலகங்களுக்கு நன்மை செய்யும்‌ எண்ணத்தினால்‌ அதன் பொருட்டு விழிப்புடனுள்ள சேஷ சாயியான எம்பெருமான்‌ பண்ணி யருளும்‌ அவதாரங்களில்‌ மணவாள மா முனிகளையும்‌ ஒரு அவதாரமாக அறிவீர்‌] என்றும்‌ சொல்‌லுகிறபடியே தாம்‌ பகவதவதார மென்னுமிடம்‌ தோன்ற நாமே கிடீர்‌’ என்றருளிச் செய்து தம் மழகிய மணவாளப்‌ பெருமாளையும்‌ அவருக்குத்‌ திருவாராதனமாக ப்ரஸாதித்து ப்ராப்யைக நிஷ்டராக்கி யருளினார்‌.(ஆச்சார்யர் ப்ராபகம் பெருமாள் ப்ராப்யம் என்று இருக்காமல் ஆச்சார்யரே ப்ராப்யம் என்று) அவரும்‌, மோர் முன்னாக முப்பது ஸம்வத்ஸரம்‌ தளிகை ப்ரஸாதம்‌ ஸ்வீகரிக்கப் பெற்று (ஆசார்யன்‌ அமுது செய்த பாத்ரத்தில்‌ (இலையில்‌) அவர்‌ கடைசியாக அமுது செய்த மோர் ப்ரஸாதம்‌ ரஸம்‌ மாறாமல்‌ அதையே சிஷ்யனான தாம்‌ முதலில்‌ உணடு பிறகு மற்ற வ்யஞ்சளங்‌களுடன்‌ அதே இலையில்‌ உண்பது. ஆசாரியன்‌ போனகம்‌ செய்த சேடம்‌ உண்கை சிஷ்யனுக்கு ப்ராப்யம்‌. இப்படி மோர் முன்னாரையன்‌ என்னும்படி 30 ஆண்டுகள்‌ தினமும்‌ ஆசாரியனின்‌ உச்சிஷ்ட முண்டு சிரோபாஸித ஸத் வ்ருத்தர்‌ என்று கொண்டாடப்‌ பெற்றவர்‌ பின்புள்ளாரிலு முண்டு )க்ருதார்த்தராய்‌ ஸகல ரஹாஸ்யார்த்தங்களையுங்‌ கேட்டு ஜீயர் திருவடிகளை ஒருக் காலும்‌ பிரியாதே, பிரிந்தாலும்‌ இராத் தங்குமூருக்கும்‌ போகாதே, நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டிருந்தார்‌. பின்பொரு திருவாடிப்‌ பூரத்திலே சூடிக் கொடுத்த நாச்சியார்‌ தீர்த்த ப்ரஸாதங்களை போர ஆதரித்துக்‌ கொண்டு வந்து ஸமர்ப்பிக்க, ஜீயரும்‌ அங்கீகரித்‌தருளி பெரிய ப்ரீதியோடே ஆண்டாளுக்குகப்பாக பட்டர்‌ பிரான்‌ தாஸர்‌” என்று திரு நாமம்‌ ஸாதித்தருளினார்‌. பின்பு கோவிந்த தாஸரப்பன்‌ மஹா விரக்தராய்‌ ஆஸ்ரம ஸ்வீகாரம்‌ செய்ய,பட்டர் பிரான்‌ ஜீயர்‌!’ என்று, திருநாமமாயிற்று. எம்பெருமானார்‌ திருவடிகளுக்கு வடுக நம்பியைப் போல யாய்த்து இவரும்‌ ஆசார்ய நிஷ்ட அக்‌ரேஸரரா யிருக்கும்படி-இப்படியான விவர்‌ சரம பர்வ நிஷ்டை மணவாள யோகி வாழ்ந்தருளிகிற காலத்திலே தணவாத வடிமை ஸகல காலத்திலும்‌ செய்தருள, ‘பட்டர் பிரான்‌ ஜீயர்‌’” என்றும்‌, தேவு மற்றறியேன்‌ என்றும்‌, ‘பட்டநாத முநி வர அபீஷ்ட தைவதம்‌” [மணவாளமாமுனிகள்‌ பட்டர்பிரான்‌ ஜீயருக்கு இஷ்ட தேவதை] எனறும்‌ “ஸ்ரீமதுரகவி சரிதகாரி மஹித சாரித்ர ஸ்ரீமாந்‌ பட்டநாத யதீஸ்வர – [ஸ்ரீமதுரகவி நிஷ்டையை மணவாள மாமுனிகளிடம்‌ உடையவர்‌ நன்னடத்தை யுள்ள ஸ்ரீபட்டர்‌ பிரான்‌ ஜீயர்‌] என்றும்‌ அங்குத்தைக்கு அந்தரங்கரானவர்கள்‌ அருளிச்‌ செய்தார்கள்‌-இப்படி அந்திமோபாய நிஷ்ட்ட அக்ரேஸராகவே ஸேவ்யமாநராய் எழுந்தருளி யிருக்கிற ஸெளம்ய ஜாமாத்ரு முநி வர்யரான ஜீயரும்‌ அன்னையாய்‌ அத்தனாய்‌ என்கிறபடியே தமக்கு ஸர்வ விதோத்தாரக பந்து பூதரான நம்மாழ்வாரை ஸேவித்து நெடுநாளாயிற்று ஆகையால்‌ தத் விஷய ப்ரேமம் அதிசயித்து தாய்‌ நாடு கன்றே போல த்வரித்துக்‌ கொண்டு பெருமாளுக்கு விண்ணப்பஞ் செய்து அப்போதே திருதகரி யேற வெழுந்தருளுவதாகப்‌ புறப்பட்டு, ““கூடல்‌” என்றது மதுரையிலே சென்று திருப் பல்லாண்டு அவதரித்த ஸ்தலமென்று உகந்தருளி மல்லாண்ட திண்டோள்‌ மணி வண்ணரையும்‌ திருவடி தொழுது,பல்லாண்டு பல்லாண்டு என்று மங்களாசாஸநம்‌ செய்தருளி அங்கே யெழுந்தருளி யிருக்குமளவிலே।

மஹாபலி வாண நாத ராயன்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
அத் தேசத்துக்கு அதிபதியான மஹாபலி வாண நாத ராயன்‌ (1422-1477-வரி 55 வருஷங்கள் ஆண்டவர் )வந்து திருவடிகளிலே ஆஸ்ரயிக்க, அவனையும்‌ விசேஷ கடாக்ஷம்‌ பண்ணி தாப புண்ட்ராதி பஞ்ச ஸம்ஸ்கார யுக்தனாக்கித்‌ திருவடிகளுக்‌ காட்படுத்திக் கொண்டு அற்றைக்கு அங்‌கே யெழுந்தருளி யிருந்து பிற்றை நாள்‌ அர்த்த ராத்ரியிலே
மணி காஞ்சந ஸஞ்சந்நாம்‌ சிபிகாம்‌ தததிஷ்ட்டிதாம்‌ |
ஸபந் நயந்த ஸ்வஸ்கந்தே க்ருத்வா கேகித்‌ ப்ர தஸ்த்திரே ॥

(சில ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ பொன்னாலும்‌ ரத்னங்களாலும்‌ ஆனதும்‌, நன்கலங்கரிக்கப் பட்டதும்‌, மாமுனிகள்‌ எழுந்தருளி யுள்ளதுமான அத் திருப் பல்லக்கை சலிப்பில்லாமல்‌ தமது தோள்களிலே தாங்கிக் கொண்டு புறப்பட்டார்கள்‌ ] என்கிறபடியே அந்த ராஜா ஸமர்ப்பித்த அநர்க்கமான நவ ரத்ந கசித ரமணீயாந்‌ தோளிகையிலே ஏறி யருளிப்‌ புறப்பட்டு மூடு பனி யாகையாலே திருப் பல்லக்கை குக்கூடலிட்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஸ்ரீபாதந்‌ தாங்கிக்‌ கொண்டு எழுந்தருளா நிற்க,
சத்ரம் சித்ரம்‌ தது : கேசித்‌ சாமரே ததிரேபரே |
ப்ருங்கார மவரே அபிப்ரந் களாசீமமி கேசந ॥
தத் பதாப்ஜா ஜஸ்பர்‌ஸ பாவநீ மாத்ம பாவிநீம்‌ |
ஸந்த்ஸ் ஸந்தாரயந்தி ஸ்ம மெளளி நாமணி பாதுகாம்‌ |
அகாயந் நக்ரத;கேசிதத ந்ருத்யந்தி கேசக ॥

[சிலர்‌ திரு வெண்‌ கொற்றக் குடையைத்‌ தாங்கிச்‌ சென்றனர்‌ ;சிலர்‌ திரு வெண் சாமங்களை வீசினர்‌; சிலர்‌ படிக்கும்‌ காளஞ்சிகளைத்‌ தாங்கிச்‌ சென்றனர்‌ -சில பாகவதர்கள்‌ ஜீயருடைய ஸ்ரீபாத ரேணு படுதலால்‌ பரிசுத்தராய்‌ ஸ்வரூபாநுகுணமாக ஸ்வாமியினுடைய மணி பாதுகங்களைத் திருமுடி மேல்‌ தாங்கிச் சென்றனர்‌ -பிலர்‌ முன்னே பாடிச்‌ சென்றனர்‌; சிலர்‌ ஆடிச் சென்றனர்‌] என்கிறபடியே-சத்ர சாமராதிகள்‌ தொடக்கமான கைங்கர்யோப கரணங்களைத் தரித்துக் கொண்டு பாடுவாராடுவார்‌ உகந்தாலித்துக்‌ கேட்பாராய்‌ ஸஸம்ப்ரம ந்ருத்த கீதத்தடனே அனைவரும்‌ ஸேவித்துக் கொண்டு போருகிற படியைக் கண்டு இரவெல்லாம்‌ அவஸர ப்ரதீஷராய்‌ ஜீயரறியாதபடி ஸ்ரீ பாதம்‌ தாங்கிக் கொண்டு இரு காத வழி ஸேவித்து வர, விடிந்த பின்பு வைகை யாற்றின்‌ கரையிலே அநுஷ்ட்டா நார்த்தமாக இறங்கி யருளின வளவிலே ராஜாவும்‌ கச்சை கட்டி யுடுத்து ஸந்நத்தனாய் ஸ்ரீபாதம்‌ தாங்கின வேஷத்தோடே வந்து திருவடிகளிலே ஸேவிக்க, ஜீயரும்‌ அது கண்டு இப்படி செய்வதே என்று ஆச்சர்யப் பட்டருள அப்போது அநுஷ்ட்டானம்‌ பண்ணுவதாக வெழுந்தருளி யிருந்த “முத்தரசன்‌” என்கிற கிராமத்தை அங்கீ கரித்தருள வேணு மென்று அபேக்ஷிக்க, ஜீயருமவனுடைய நிர்ப்‌பந்தத்துக்காக அந்த க்ராமத்தை அங்கீகரித்தருளி அன்று தொடங்கி அந்த க்ராமத்திற்கு ”அழகிய மணவாள நல்லூர்‌”என்று திரு நாமம்‌ ப்ரஸாதித்து (முத்தரசன் ஏந்தல் இன்றையப் பெயர் )மஹாபலி வாண நாத ராஜாவையும்‌ மிகவு முகப்போடே அனுப்பி யருளி, திருப் புல்லாணி வழியாக எழுந்தருளு மளவிலே முதலிகளும்‌ தாமாக அத்வ ஸ்ரமாந்தராய்‌ நிழல் தேடி வாரா நிற்க, அங்கே ஸ்த்தாவர விசேஷமா யிருப்பதொரு இந்த்ரிணீ வ்ருஷம்‌ நீரந்தீரச் சாயா யுக்தமாய்‌ நிற்கக் கண்டு அங்கே வெழுந் தருளி அப் புளிய மர நிழலிலே விஸ்ரமித்து அத்வ ஸ்ரமம்‌ தீர்த்துக் கொண்டு எழுந்தருளி யிருக்க

ஜீயர்‌ புளிய மரத்துக்கு மோக்ஷமருளுதல்‌
முதலிகளெல்லாரும்‌ இப்படி மஹோபகாரம்‌ பண்ணின விதற்கு ஒரு கிருபை பண்ணி யருள வேணு மன்று ஜீயரைப் ப்ரார்த்திக்க, அவரும்‌ ஸ்வ க்ருபாதிசயத்தாலே அந்தப்‌ புளிய மரத்தைத்‌ திருக்கையாலே ஸ்பர்‌சித்து, தாம்‌ பெற்ற பேற்றை நீயும்‌ பெறக் கடவாய்‌’-என்று அநுக்ரஹித்து எழுந்தருளினார்‌. பின்பு அசிரேண அம் மரம்‌ உலர்ந்திருக்கக்‌ கண்டு முதலிகள்‌
யம்யம்‌ ஸ்ப்ருஸதி பாணிப்யாம்‌ யம்யம்‌ பஸ்யதி சஷுஷா |
ஸ்தாவராண்யபி முச்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா ; ॥

[ஸத்துக்கள்‌ யார் யாரைத்‌ திருக் கைகளால்‌ ஸ்பர்சிப்பார்களோ ,யார் யாரைத்‌ திருக் கண்களால் கடாக்ஷிப்பர்களோ அவரில்‌ தாவரங்‌களும்‌ மோஷமடைகின்றன; பந்து ஜனங்களைப் பற்றிச்‌ சொல்லவும்‌ வேணுமோ? என்கிற அர்த்தம்‌ இவரிடத்திலே அந்வர்த்த ஸித்தமிறே ! என்று உகந்தருளினார்கள்‌-

அநந்தரம்‌ ஜீயரும்‌ திருப்புல்லாணி யேற எழுந்தருளி புல்லாணி யெம் பெருமானைத்‌ திருவடி தொழுது அங்கு நின்றும்‌ புறப்பட்டுப்‌ பயண கதியிலே திருநகரி யேற வெழுந்தருளி ஸேவா கிரமம்
தப்பாமல்‌ அடைவே ஆழ்வாரையும்‌ பொலிந்து நின்ற பிரானையும்‌ ஸேவித்து மங்களாசாஸநம்‌ பண்ணிக் கொண்டு அங்கே அங்கே ஆத்மாக்களை திருத்தித் திருமகள் கேள்வனுக்காக்கி , திருவாய்‌மொழி முதலான திவ்ய ப்ரபந்தங்களையும்‌ ப்ரஸாதித்து நின்று, ப்ரதி தினம்‌ ஆழ்வார்‌ திரு மஞ்சன காலத்தையும்‌ மற்ற திவ்யோத்‌ ஸவங்களையும்‌ ஸேவித்துக்‌ கொண்டெழுந் தருளி யிருக்க।

கோயிலில்‌ அநுபவங்களில்லாமைக்கு வருந்துதல்‌
இப்படிக்‌ காலங் கழித்து செல்லா நிற்கச்‌ செய்தே மார்கழி மாஸம்‌ வர,
எந்தை யெதிராசர் சிறப்பை யெழிலரங்கர்‌
சிந்தை மகிழ்ந் தமுது செய்ய–அந்த நிலம்‌
சென்று நின்று சேவிக்கும்‌ செல்வமின்று பெற்றிலமே

என்று சேவிக்குமினி யாம்‌?
என்று எம்பெருமானார்‌ திருப்பாவைச்‌ சிறப்பை ஸேவிக்கப்‌ பெற்றிலோமில்லையீ என்று வெறுத்தருளியும்‌, பின்பு ஸங்க்ரமணம்‌ வர
சீராரங்கர் தந் தேவியரோடு சிறப்புடனே
யேராரு மாறன்‌ கலியனெதிராசனோடமரப்‌
பாரோர்‌ மகிழ்ந்தேத்தும்‌ தட்டுக்கள் தன்னுடன்‌ போற்று மந்தப்‌
பேரார வாரத்தை யின்று கண்டின்‌ புறப்‌ பெற்றிலமே

என்று அதற்கும்‌ நொந்தருளி, பின்பு தைத் திரு நாளை நினைத்தருளி (பூபதி திருநாள் -உபய நாச்சியார் உடன் திருத் தேரில் எழுந்தருளி -)
தேவியருந் தாமும்‌ திருத்தேரின்‌ மேலரங்கர்‌
மேவி விக்கிரமன்‌ வீதி தனிற்‌–சேவைசெயு
மந்தச் சுவர்க்கத்தை யநுபவிக்கப்‌ பெற்றிலமே
யிந்தத் திருநாளிலே யாம்‌

என்றநுஸந்தித்துப்‌ பேரிழவோடே யெழுந்தருளி யிருந்து தொந்து
அணி யரங்க மாடுதுமோ என்றும்‌, திரு வரங்கப் பெரு நகருள்‌ தெண்ணீர்ப்‌ பொன்னி திரைக் கையாலடி வருடப்‌ பள்ளி கொள்ளும்‌ கருமணியைக்‌ கோமளத்தைக்‌ கண்டு கொண்டென்‌ கண்ணினைகள்‌ . என்று கொலோ களிக்கும்‌ நாள்‌ (பெருமாள்‌ திரு.1-1) என்றும்‌.
“ஊரரங்கமே யென்பதிவன்‌ தனக்காசை” என்றுஞ்‌ (
காரிளம்‌ புரை மேனி நம் கதிர்‌ முத்த வெண்ணகைச்‌ செய்யவாய்‌ ஆரமர்வ னரங்கமென்னும்‌ அரும் பெருஞ்சுடரொன் றிை , (பெரு திரு. 2-7) சேரும்‌ நெஞ்சுடையராய்‌ அப்போதே ஆழ்வார்‌ திரு முன்பே சென்று-)சொல்லுகிற படியே அபிநிவேசத்தைப்‌ பண்ணிக் கொண்டு அதி த்வரையுடனே ஆழ்வார்‌ திரு முன்பே சென்று

திருக்குருகைப்பெருமாள்‌ தன்‌ திருத்தாள்கள்‌ வாழியே
திருவாளதிருமுகத்துச்‌ செவியென்‌ றும்‌ வாழியே
இருக்கு மொழி யென்னெஞ்சில்‌ தேக்கினான்‌ வாழியே
யெந்தை யெதிராசர்க் கிறைவனார்‌ வாழியே
கருக் குழியில்‌ புகா வண்ணம்‌ காத்தருள்வோன்‌ வாழியே
காசினியி லாரியனாய்க்‌ காட்டினான்‌ வாழியே
வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான்‌ வாழியே
மதுரகவி தம்பிரான்‌ வாழி வாழி வாழியே

என்று மங்களாசாஸனம்‌ பண்ணி ஸேவித்து, ஆழ்வாரனுமதி கொண்டு அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி அதி த்வரையுடனே ஸ்ரீ வில்லிபுத்தூர்‌ சென்று ப்ரவசித்து பொங்கும்‌ பரிவுடைய பட்டர்‌ பிரானையும்‌ வட பெருங்கோயிலு டையானையும்‌ ஸேவித்து, நாச்சியார்‌ திரு மாளிகையிலே சென்று புகுந்து (19 வருஷங்களுக்கு ஒருதரம் தை உத்சவம் ஆரம்பம் மாறும் -தை முதல் நாள் ஜீயருக்கு நீராட்ட உத்சவம் ) ஆழ்வார்‌ திருமகளாராண்டாளையும்‌ அன்புடனே அடி பணித்து நிற்க, கோதையும்‌ கோயிலண்ணருடைய திருவவதார மன்றோ நீர்‌!” என்று மிகவும்‌ க்ருபை செய்தருள, ஆண்டாளருள்‌ கொண்டு புறப்பட்டு அழகனலங்காரன்‌ மலையான திருமாலிருஞ்‌சோலை மலை நின்ற சுந்தரத் தோளுடையானான பரம ஸ்வாமியையும்‌ ஸேவித்து, அழகர்‌ திருக்குறுங்குடிக்குக்‌ குடி வாங்கிப்‌ புறப்‌ டெழுந்தருளி யிருக்கையாலே அவ்விடம்‌ “நல்லதோர்‌ தாமரைப்‌ பொய்கை நாண் மலர் மேல்‌ பனிசோர அல்லியுந் தாதுமுதிர்‌ந்திட்‌ டழகழிந்தாவொத்ததாலோ, இல்லம்‌ வெறியோடிற்றுலோ என்‌ மகளை யெங்குங் காணேன்‌ (பெரியாழ்வார்‌ திரு. 3-8-1) என்று-அழகழிந் திருக்கிற கோயிலைக் கண்டு ‘புத்ர த்வய விஹீநம்‌ தத்‌:(ராம லஷ்மணர்களாகிற புத்திர ரிருவரும்‌ இல்லாத அந்த வீடு-இத்யாதிப் படியே மிகவும்‌ அவஸந்நராய்‌ க்லேசித்தருளி இவரும்‌ உடையவரைப் போல்‌ வேண்டும்‌ பொருள்களை யெல்லாம்‌ அழைப்‌பித்தருளி அங்கே பாங்காக தளிகை பண்ணி நாறு நறும்‌ பொழில்‌ மாலிருஞ் சோலை நம்பிக்கு (நாச்‌ திரு. 9 6) என்கிறபடியே அமுது செய்தருளப் பண்ணி, அத்தைக் கண்டருளினதற்குக்‌ கைக் கூலியாக-பின்னுமாளுஞ் செய்வன்‌-உன் பொன்னடி வாழ்க (பெரியா திரு-5.3.3) என்று மங்களாசாஸநம்‌ பண்ணி யருளி பரம ஸ்வாமியின்‌ திரு முக மண்டலத்தை ஸேவித்து -நங்கள் குன்றம்‌ கை விடான்‌(திருவாய்‌ 10-8-4) என்று ஆழ்வாரருளிச்‌ செய்த பொய்யில் பாடலை அந்வர்த்த ஸித்தமாக்கி யருள வேணுமென்று ப்ரார்த்தித் தருளி;

ஜீயர்‌ மீண்டும்‌ கோயிலுக் கெழுந்தருளியது
அங்கு நின்றும்‌ புறப்பட்டு மாலிருஞ் சோலை மணாளனார்‌ பள்ளி கொள்ளுமிடமான திருவரங்கன் திருப்பதியைக்‌ குறித்து எழுந்‌ தருளி -கொடி யணி நெடு மதிள்‌ கோபுரம்‌ குறுகினர்‌ (திருவாய்‌-10-9-8)என்னும்படி கிட்டியவாறே அங்குண்டான வர்களெல்லாம்‌ எதிர் கொண்டு வந்து திருவடி களிலே ஸேவித்து
வகுள தர ஸவித்ரீம்‌ யாதி யஸ்மிந் தரித்ரீம்‌ மது மதந நிவாஸோ ரங்க மாஸீ தஸாரம்‌ |
புநரிபி ஸூஸம்ருதம்‌ பூயஸா ஸம் ப்ரவிஷ்டே’ வர வர முநிவர்யோ மாநுஷ:ஸ்யாத் கிமேஷ ॥

எந்த மணவாள மா முனிகள்‌ மகிழ் மாலை மார்பரான நம்மாழ்‌வாருடைய பிறப்பிடமான திரு நகரியை அடைந்திருந்த போது மதுமதநனான பெருமாளுக்கு வாஸஸ்தானமான திருவரங்கமானது பொலிவற்றதாய்ப்‌ போயிற்றோ அவர்‌ அங்கு மீண்டும்‌ எழுந்தருளின வளவில்‌ அந்த ஸ்ரீரங்கம்‌ மிகவும்‌ நன்றாக பொலி வுற்றது; இந்த மணவாளமாமுனிகள்‌ மனிதராக எண்ணத் தக்கவராவாரோ?] என்றநுஸந்தித்து ப்ரீதராய்‌ ப்ரதிபத்தி பண்ண,அவர்களையும்‌ க்ருபை பண்ணி யருளி அவர்களுடனே கூட-ப்ரதமம்‌ எம்பெருமானாரைத்‌ திருவடி தொழுது அவர்‌ புருஷகாரமாக ஸ்ரீரங்கநாச்சியாரையும்‌ பெரிய பெருமாளையும்‌ திருவடி தொழுது அவர்கள்‌ ப்ரஸாத விசேஷங்களையும்‌ பெற்று மடம் யெழுந் தருளி -ரங்கே தாம்நி ஸுகாஸீதம்‌” என்‌கிறபடியே திருமலை யாழ்வாரிலே இனிதாக வீற்றிருத்து வ்யாக்யாநித்து அகிலரையும்‌ ஆநந்திப்‌ பித்துக் கொண்டு வாழ்த்தருளா நிற்க, முதலிகளும்‌ அவ் விருப்புக்கு
ஜயது யஸஸா துங்கம் ரங்கம்‌ ஜகத் த்ரய மங்களம்‌
ஜயது ஸுசிரம்‌ தஸ்மிந் பூமா ரமா மணி பூஷணம்‌
வரத குருணா ஸார்த்தம்‌ தஸ்மை ஸுபாந் யபிவர்த்தயந்‌
வரவர முநி:ஸ்ரீமாந் ராமாநுஜோ ஐயது க்ஷிதெள ॥

[பெருமையினால்‌ உயர்ந்து முவ் வுலகுக்கும்‌ மங்களாவஹமான திரு வரங்கமானது பெருமை யுற்று விளங்க வேணும்‌; அத்‌ திருப்பதியிலே பெரிய பிராட்டியாரையும்‌ ஸ்ரீகெளஸ்துபத்தையும்‌ திவ்ய ஆபரணமாக வுடையனான எம்பெருமான்‌ பல்லாண்டாக விளங்க வேணும்‌; அவ் வெம் பெருமானின்‌ பொருட்டு வரத குருவான அண்ணனுடன் மங்களங்களை மேலும்‌ மேலும்‌ உண்டாக்குபவரான ராமாநுஜாபரா வதாரரான மணவாள மா முனிகள்‌ இப் புவியில்‌ விளங்க வேணும்‌-என்று மங்களாசாஸனம்‌ பண்ணிக் கொண்டு வாழ்ந்தருளுகிற காலத்திலே

அழகர்‌ கோவிலுக்கு நிர்வாஹகராக ஒரு ஜீயரை அனுப்பியது -இவர்‌ அழகருக்குப்‌ பண்ணிய மங்களாசாஸனம்‌ பலித்து அழகர்‌ மீண்டும்‌ தம் கோயிலிலே குடி புகுந்தருளி ஜீயருக்குத் தம்‌ திருமுக மெழுதி,நாம்‌ உம்முடைய நினைவின் படியே வந்து-“நங்கள்‌ குன்றங் கைக் கொண்டு குடி புகுந்‌தோம்‌; நம்‌ வீட்டில்‌ கார்யமாராய்ந்து நன்றாக நடத்தி யருளும்‌ ஒருவரை வரவிட வேணும்‌’ என்று வரக் காட்டி யருள, ஜீயரும்‌ போர உகந்தருளி எதிராஜ ஜீயர்‌ என்னு திருநாம முடையராய்‌ மஹா விரக்தராய்‌ மங்களாசாஸன பரராயிருக்குமரை அழகர்‌ ஸ்ரீ கார்யார்த்தமாக அனுப்பி யருள, அவரும்‌ அங்கே சென்று அழகரை ஸேவிதது ஆசார்ய ப்ரீத் யர்த்தமாக அனைத்தழகும்‌ கண்டருளப் பண்ணினாரிறே.

முதலிகளைக்‌ கொண்டு திவ்ய தேச கைங்கர்யங்கள்‌ செய்வித்தல்‌
அநந்தரம்‌, ஜீயரை யாஸ்ரயித்த மஹாபலி வாண நாதரும்‌ திருமாலை தந்தான்‌ தோழப்பரை (திருமலை தோழப்பரை) முன்னிட்டுக்‌ கொண்டு மாலிருஞ் சோலை மாலுக்கு ஸர்வ வித கைங்கர்யங்களும்‌ செய்து போந்தார்‌. இவர்களாலே அழகர் கைங்கர்யம்‌ ஸம்ருத்த மாயிற்று. இப்படி கோயில்‌ திருமலை முதலான திருப்பதிகளின்‌ கைங்கர்ய மெல்லாம்‌ குறைவறக்‌ கொண்டருளு கையாலே மிகவு முகப்புடனே எழுந்‌தருளிருக்கும்‌ காலத்திலே துளுவருடைய வம்சத்திலே பிறந்து தேசாந்தரத்திலே திரிந்து போருவானொரு பிள்ளை திருவடிகளிலே வந்து ஆஸ்ரயிக்க, அவரை விசேஷித்து க்ருபை பண்ணி யருளி,-ஸ்ரீராமானுஜ தாஸர்‌’-என்று தாஸ்ய நாமம்‌ ப்ரஸாதித்து அவரைக்‌ கொண்டு அநேகம் திருப்பதிகளில்‌ கைங்கர்யமெல்லாங்‌ கொண்டருளப் பண்ணும்படிக்கு விசேஷாபிமானஞ்‌ செய்தருள, அவ் விசேஷ கடாக்ஷ மடியாக பெருமாள்‌ கோயில்‌ தொடக்கமான திருப்பதிகளில்‌ அவரைக் கொண்டு கைங்‌கர்யங்களெல்லாம்‌ கொண்டருளப்‌ பெற்றது. அநந்தரம்‌ ஜீயரும்‌.
திவ்யோத்‌வ ப்ரஸங்கேஷு தேவ தேவ மதந்த்ரித: |
ஆஸாஸாநஸ் ஸமா ஸீதந் நத்ராக்ஷீத்‌ ரங்க பூஷணம்‌ ॥

[விசேஷமான உத்ஸவ காலங்களில்‌ சோர்வில்லாமல்‌ ஸர்வேசஸ்வரனான ஸ்ரீரங்கநாதனை அணுக்கராய்‌ ஸேவித்து மங்களாசாஸனம்‌ பண்ணினார்‌ ] என்கிறபடியே திவ்யோத்ஸவங்களிலும்‌ நம் பெருமாளை மங்களாசாஸநம்‌ பண்ணிக் கொண்டு
கஸ்தூரி ஹிம கற்பூர ஸ்ரக்‌ தாம்பூல அநுலேபரை: |
திவ்யைரப்ய பஜத்‌ போஜ்யை: ரங்கநாத திநே திநே –

அநு தினமும்‌ ஸ்ரீரங்கநாதனை கஸ்தூரி, பச்சை கற்பூரம்‌,பூ மாலை, அடைக் காயமுது, பரமள த்ரவ்பங்கள்‌. இவற்றினால்‌ உபசரித்தராதித்தார்‌. என்கிறபடியே ப்ரதி தினமும்‌ பாங்காக கிஞ்சித்கார பூர்வகமாக கைங்கர்யங்களையும்‌ நடத்திக் கொண்டு, மார்கழி மாஸத்திலு மப்‌படியே
காலே கோதண்ட மார்த்தாண்டே காங்ஷந்நே வாருணோதயம்‌ |
ந்யஷேவ தவிஸேஷேண ஸேஷிணம்‌ ஸேஷ ஸாயிநம்‌ ॥ –
மங்களாநி ப்ரயுஞ்ஜாநோ மாதவம்‌ ப்ரத்ய போதயத்‌
ஸம்யகேநம்‌ ஸமப்யர்ச்ய ஸர்வதாநுகதை : க்ரமை: ॥
ஸ்வ ஸ்வ காலோசிதைர் திந்யை : ஸ்வாங்கல்போப லம்பிதை: |
அபோஜயதயம்‌ போஜ்யை ஸாக மூல பலாதிபி; ॥
ஸுூபா அபூப க்ருத க்ஷீர சர்க்கரா ஸஹிதம்‌ ஹவி: |

தநுர் மாதத்தில்‌ அருணோயத்திற்கு முன்னே அரவணை மேல்‌ பள்ளியானான எம்பெருமானை விசேஷமாக பூஜித்‌தார்‌. மங்களமான பாசுரங்களை அநுஸந்தித்து திருமகள்‌ மணாளனை திருப் பள்ளி யுணர்த்தினார் – எல்லாப் படியாலும்‌ சாஸ்த்ர முறையான திருவாராதன க்ரமங்களால்‌ எம்பெருமானை நன்றாக ஆராதித்து, பின்னர்‌ மணவாள மாமுனிகள்‌ தமது நியமனப்படி வரவழைக்கப்பட்ட தத் தத் காலோசிதங்களாய்‌ உயர்ந்தவையான காய்‌, கிழங்கு, பழம்‌, முதலான இனிய பதார்‌த்தங்களுடன்‌ வடை,பருப்பு, நெய்‌, பால்‌ சர்க்கரை இவைகளுடன்‌ கூட ப்ரஸாதத்தை அமுது செய்தருளப்‌ பண்ணினார்‌ ]
செந்நெலரிசி பருப்புச்‌ செய்த வக்காரம்‌ நறு நெய்‌ பாலால்‌ என்று சொல்லப்‌ படுகிற அக்கார வடிசில்‌ தொடக்கமான அனேக வகைத்‌ தளிகைகளும்‌ அமுது செய்தருளப் பண்ணிப் போருகிறதுக்கு மேலே ஒன்றும்‌ தேவும்‌ சிறப்பும்‌, கண்ணி நுண்‌ சிறுத் தாம்புச்‌ சிறப்பும்‌, நூற்றந்‌தாதிச்‌ சிறப்பும் ப்‌ரதி ஸம்வத்ஸரம்‌ பெருமாளும்‌ நாச்சியாரும்‌ உகந்து அமுது செய்தருளும்படி நன்றாக நடத்திக் கொண்டு ஆழ்வார்களின்‌ அருளிச் செயல்களை ல்யாக்யானங்களுடன்‌ அநு தினம்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டு எழுந்தருளி யிருக்கும்‌ நாளிலே

பெரியாழ்வார்‌ திருமொழிக்கு வ்யாக்யானம்‌ அருளிச் செய்தல்‌
பெரியாழ்வார்‌ திருமொழிக்குப்‌ பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செய்த வ்யாக்யானம்‌ காணாமையாலே அதற்கு வ்யாக்‌யானம்‌ செய்தருளத்‌ திருவுள்ளமாய்‌ (திருபபாணாழ்வார் தாதர்‌ நாயனாருக்கு)
செந் தமிழிலாழ்வார்கள்‌ செய்த வருளிச்‌ செயலை
சிந்தை செயல்‌ தன்னுடனே செப்பலுமாம்‌-அந்தோ
திருப்பாணாழ்வார் தாதர்‌ நாயனார்‌ சேர
விருப்பாராகில்‌ நமக்கீடாவர்‌ யார்‌

சிந்தையினால்‌ தேறலுமாம்‌ வாய் கொண்டு செப்பலுமாம்‌’என்று திருமுகம்‌ போக விட்டருள, அவரும்‌ திருநகரியிலே தம் திருநந்தவனத் திலிருக்கிறவர்‌ அந்த ஸ்ரீஸக்தியைக்‌ கண்டு உகந்து சிரஸா வஹித்து, திருநந்த வனத்தினின்றும்‌ அப்போதே புறப்பட்டு அதி சிக்ரமாக வெழுந்தருளி வந்து ஸேவித்து நிற்க, அவருடைய அத்வ ஸ்ரமத்தையும்‌ ஸ்வ விஸ்‌லேஷத்தா லுண்டான பெரு விடாயையும்‌ தத் விக்ரஹத்திலே கண்டு “மிகவு மிளைத்தீரே”’ என்று குசல ப்ரஸ்நம்‌ பண்ணிக்‌ குளிர கடாஷித்தருளி, பிற்றை நாள்‌ அவரையுங் கூட்டிக் கொண்டு திருமொழி நாலு பத்தளவாக நன்றாக வ்யாக்யாநஞ்‌ செய்தருளி மற்றை நாற்பது பாட்டுக்களுக்கு சேஷித்திருந்த பூர்வர்கள்‌ வ்யாக்‌யானத்தை அழைப்பித்து அத்தோடு சேர்ப்பதாக வைத்திருக்க,
கந்தாடை நாயன்‌ ஜீயரருளிய வ்யாக்யானத்தை ஸேவித்தது
அப்போது அதி பாலரா யிருக்கிற கந்தாடை நாயன்‌ அங்கே எழுந்தருளி ஜீயருடைய ஸ்ரீ ஸூக்திகளையும்‌ அபய ப்ரதராஜ ஸூரி ஸ்ரீஸூக்திகளையும்‌ ஆலேகித்து அவற்றில்‌ அபய ப்ரதராஜ ஸுரி திவ்ய ஸூக்தியைக்‌ கீழே ஒரு பீடத்திலிட்டு வைத்து அபிராமவர யோகி திவ்ய ஸுூக்தியை ஆதரேண ஆலோகியா நிற்கிறவர்‌ “இந்த நாற்பது பாட்டுக்கும்‌ சேஷியாதே முற்றப் போகா தொழிவதே!’என்ன; இத்தை மணவாள மா முனிகள கேட்டருளி, ‘அதி பால்யத்‌திலே இவருக்கு இத்தனை ஞான பூர்த்தி யுண்டாவதே!’” என்று உகந்து, நாயனைக்‌ “கருணை பொங்கிய கண்ணிணைகளாலே கடாக்ஷித்து அழைத்தருளி “ஒன்றைப்‌ பொகட்டு ஒன்றை ஆதரிப்பானென்‌); இங்ஙன மிருப்ப தொன்றுண்டோ?”?. என்று கேட்டருள, நாயனும்‌, மாம்பொழிற் றளிர் கோதிய மடக் குயில்‌ வாயது துவர்ப் பெய்த தீம்பலங் கனித் தேனது நிகர்‌”என்று சொல்லுகிறபடியே அஸாரத்தை விட்டு ஸாரத்தைப் பற்றுகை யன்றோ ஸாரஜ்ஞ க்ருத்யம்‌; ஆகையாலே அதிலுமிது மஹா ரஸ வாக்ய ஜாலவத்தா யிருக்கிற தென்று ஆதரித்தது என்ன, ஜீயரும்‌ அது கேட்டாநந்தித்து இவரும்‌ ஒரு அவதார விசேஷ மென்று ஆலிங்கித்‌துக் கொண்டருளினார்‌. *இவள்‌ வாயனகள்‌ திருந்தவே என்கிறபடியே நாலூர்‌ பிள்ளை (திருவாய் மொழிப் பிள்ளை )யிட்டருளின வ்யாக்யானங்க ளெல்லாவற்றிலும்‌ அதிசயித்திறே இவருடைய ஸூக்தி வைபவமிருப்பது-இப்படிப்‌ பெரியாழ்வார்‌ திருமொழிக்கு ஸர்‌வ ஜந ஹ்ருதய மாம்படி வ்யாக்யானஞ் செயதருளி, திருப் பாணாழ்வார்‌ தாதர் நாயனார்க்கு– பிள்ளை லோகாசாரியர்‌ திருக் கை ஸ்பர்சமுடையராய்‌ ஸ்ரீரங்க ராஜ: பதிமே ஸஹாய:’ என்கிறபடியே தமக்குத் துணையாய்‌ எழுந்தருளி யிருக்கிற ஸ்ரீ ரங்கராஜரையும்‌ திருவாராதனமாக ப்ரஸாததித்து விடை கொடுத்தருளினார்‌.

ஜீயர்‌ ஆசார்ய ஹ்ருதயத்திற்கு வ்யாக்யான மருளியது
அநந்தரம்‌ ஆசார்ய ஹ்ருதயத்திற்கு வ்யாக்யாநஞ்‌ செய்தருளத்‌ திருவுள்ளமாய்த்‌ திரு மேனியில்‌ தெளர்ப்பல்யத்தையும்‌ பாராமல்‌ திருவணையிலே சாய்ந்தருளினபடியே திருக்கழுத்து நோவத் திரு வெழுத்துச் சாத்தி யருளும்படியைக்‌ கந்தாடை யண்ணன்‌ கண்டு தேவரீர்‌ இப்படி எதுக்காக ப்ரயாஸப்படுவது?’” என்ன, ஜீயரும்‌“உம்முடைய புத்ர பெளத்ராதிகளுக்காகப்‌ படுகிறேன்‌” என்றருளிச்‌ செய்து வ்யாக்யானத்தை யருளிச்‌ செய்து தலைக் கட்டினார்‌.

ஏட்டூர்‌ சிங்கராசாரியர்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌ -அஷ்ட கோத்ர நிபந்தனை–
அக் காலத்தில்‌ பெரிய திருமலை நம்பி திருவம்சஸ்தரான ஏட்டூர்‌ சிங்கராசாரியர்‌ ஜீயருடைய அப்ரதிம ப்ரபாவத்தைக் கேட்டு-பெருமையும்‌ நாணும்‌ தவிர்ந்து ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வங்களை
முன்னிட்டு அநந்ய சரணராய்‌ ஜீயர்‌ திருவடிகளை ஆஸ்ரயிக்க, அவரை க்ருபை செய்தருளி, தன் மூலமாக வந்த திரவியத்தை ஆழ்வார்‌ திருக் கோபுர கைங்கர்யத்துக்கு திரு நகரிக்குப்‌ போக
விட்டருளினார்‌. அக் கைங்கர்யம்‌ சிறிது குறையாக விருக்க பின்பு ஜீயர்‌ நாயனார்‌ அக் குறையைத்‌ தீர்த்தருளி சிகர பர் யந்தமாக நிறைவேற்றி யருளினார்‌- பின்பு போளிப் பாக்கம்‌ நாயனாரை
அழைப்பித்தருளி அவர்‌ முகமாக ஸப்த கோத்ர நிபந்தனை செய்‌தருளி அதில்‌ இந்த ஏட்டூர்‌ சிங்கராசாரியரையுங் கூட்டிக் கொண்டு அஷ்டகோத்ர ஸங்கயை யாயிரும்‌ என்று நியமித்தருளினார்‌.

இப்படி வாசா மசோசரமான வைபவத்தை யுடைய ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்து
ஜகத் ரஷா பரோ அநந்தோ ஜநிஷ் யத்ய பரோ முநி |
ததாஸ்ரயாஸ் ஸதாசாராஸ்‌ ஸாத்விகாஸ் தத்வ தர்‌ஸிந : ॥

[ஐகத் ரக்ஷணத்தில்‌ ஊன்றி யுள்ள திருவநந்தாழ்வான்‌’ வேறு முனிவராக-மணவாளமாமுனியாக- அவதரிக்கப்‌ போகிறார்‌. அவரை ஆஸ்ரயிப்போர்‌ நல்ல ஆசார சீலர்களாகவும்‌, ஸாத்விகர்களாகவும்‌ தத்வார்த்தங்களை உணர்ந்தவர்களாகவும்‌ ஆவார்கள்‌ என்கிறபடியே ஸத்வோத்தரராய்‌ ஸதாசார நிரதராய்‌ தத்வ தர்சிகளாய்‌ அதிகத பரமார்த்தராய்‌ அநவரதம்‌ ஜீயரை ஸேவித்துக்‌ கொண்‌டிருக்கும்‌ முதலிகள்‌; (இந்த ஸ்லோகம்‌ துன்னு புகழ்க் கந்தாடைத்‌ தோழப்பருக்கு ஸ்வப்‌நத்தில்‌ கச்சிப்‌ பேரருளாளன்‌ அருளியதாக இந்த நூலின்‌ தொடக்கத்தில்‌ வந்துள்ளது காண்க, )

அஷ்டதிக்கஜங்கள்‌
பாராரு மங்கை திருவேங்கட முனி பட்டர் பிரான்‌
ஆராமம்‌ சூழ் கோயில்‌ கந்தாடை யண்ணன்‌ எறும்பி யப்பா
ஏராரு மப்பிள்ளை அப்பிள்ளார்‌ வாதி பயங்கரரென்‌
பேரார்ந்த திக் கயஞ் சூழ்‌ வர யோகியைச்‌ சிந்தியுமே

என்று சொல்லப்பட்ட வானமாமலை ஜீயர்‌, திருவேங்கடஜீயர்‌-பட்டர் பிரான்‌ ஜியர்‌, கந்தாடை யண்ணன்‌, எறும்பி யப்பா, அப்‌பிள்ளை, அப்பிள்ளார்‌, ப்ரதிவாதி பயங்கர மண்ணா என்கிற அஷ்ட திக்கஜங்களுக்கும்‌, திருப்பாணாழ்வார்‌ தாஸர்‌, ஏட்டூர்‌ சிங்கராசாரியர்‌, வரந் தரும்‌ பெருமான்‌ பிள்ளை, மேனாட்டுத்‌ தோழப்பர்‌,அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌, ஜீயர்‌ நாயனார்‌, அண்‌ணராய சக்ரவர்த்திகள்‌ தொடக்கமானாரும்‌ ஜகத் ரஷா பரோ அநந்தோ…தத்வ தர்ஸிந:” என்கிறபடியே இவர்களெல்லாரும்‌ ஸத்வோத்தரராய்‌ ஸதாசார நிரதராய்‌ தத்வ தர்சிகளாய்‌ ஜகதுஜ்‌ஜீவநைக பரராய்‌ இருப்பார்கள்‌.

முதலிகளுக்கு வகுத்த கைங்கர்யங்கள்‌
இப்படிப்பட்ட திக்கஜங்களாலும்‌ மற்றுமுள்ள முதலிகளாலும்‌ ஸேவ்யமாநரா யிருக்கிற ஜீயர்‌ திருவடிகளிலே நித்யகைங்கர்யம்‌ செய்யும்‌ முதலிகளாரென்னில்‌:
1-வானமாமலை ஜீயர்‌-பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தராய்‌ ஆஸ்ரயித்தவன்‌று தொடங்கி பிரியாதாட்‌ செய்‌திருப்பர்‌,
2-கந்தாடை அண்ணன்‌ ‘“ராமாநுஜ முநீந்த்ரஸ்ய ஸ்ரீமாந் தாஸரதிர் யதா” என்று உடையவருக்கு முதலி யாண்டானைப் போலே அத்யந்தம்‌ பீரீதி விஷய பூதராய்‌ பாதுகா ஸ்தாநீய் இருப்பர்‌
3-எறும்பி யப்பா வடுக நம்பியைப்‌ போலே தேவுமற்றறியாதே ஜீயருக்கு அத்யந்த மபிமதராயிருப்பர்‌.
4- ப்ரதிவாத பயங்கர மண்ணா உடையவர்‌ திருவடிகளுக்குக்‌ கூரத் தாழ்வான்‌ போலே ப்ரதி பக்ஷ நிரஸந பூர்‌ வகமாக ஸ்ரீபாஷ்யத்திற்கு உசாத் துணையா யிருப்பர்‌.
5-ஸேனை முதலியாரண்ணன்‌, சடகோப தாஸர்‌, அப்பிள்ளை, திருப்பாணாழ்வார்‌
தாஸர் இவர்கள்‌ திருவாய்மொழி முதலான அருளிச் செயல்களுக்கு உசாத் துணையாய் இருப்பர்கள் -விசேஷித்து அப்பிள்ளை ஜீயர் நியமனத்தாலே ஐந்து திருவந்தாதிகளுக்கும் உரை யருளிச்‌ செய்து யதிராஜ விம்ஸதிக்கும்‌ வ்யாக்யாநம்‌ செய்தருளினார்‌.
6-அப்பிள்‌ளார்‌ மட த்தில்‌ ஸர்வ பரங்களையும்‌ பரித்துக் கொண்டு தளிகைக்குப்‌ பாங்காக அமுதுபடி, பருப்பமுது, கறியமுது, பாலமுது, நெய்‌யமுது,தயிரமுது தொடக்கமானவை நடத்திக் கொண்டு போருவர்‌
7-பட்டர் பிரான்‌ ஜீயர்‌ எம்பாரைப் போலே ஸ்ரீபாதச்சாயா பந்தராய்‌ பிரியில்‌ தரியாமையை முன்னிட்டு அடிமை செய்து ததேக நிஷ்டராய்‌ ஸர்வ வித கைங்கர்யங்களிலும்‌ அந்வயிததுத்‌ திருவடிகளை யல்லது ஒரு தெய்வ மறியா திருப்பர்‌,
8-ஜீயர்‌ நாயனார்‌ இளவரசராய்‌ எல்லார்க்கும்‌ உத்தேச்யராய்‌ திருக் குருகைப் பிரான்‌ பிள்ளானைப் போலே அத்யாதரணீயராயிருப்பர்‌

இப்படி இவர்களாலே ஸேவ்யமானரா யிருக்கிற வரவர முநி வர்யரான பெரிய ஜீயர்‌, திருமகள்‌ தன்‌ கொழுநன் திருக் கழல்‌ சேர்‌ மாறனடி பரவும் எதிராசர்‌ செம் பொற் பாத மிரவு பகல்‌ மறவாமலிறைஞ்சி யேத்து மெழில்‌ திருவாய் மொழிப்‌ பிள்ளை யிணைத் தாள் பேணுமவரான மணவாள மா முனிவனெந்தை மண்ணுலகலவதரித்து வாழ்ந்த பின்‌ முன்னறிவெனவு மறியாத மானிடவரெல்லா முதிதான வர்த்த பஞ்சக நிஷ்டரார்‌ என்றும்‌,
இத்தம்‌ ப்ருத்யா நர்த்திரஸ் தோஷ யித்வா தேஸே தஸ்மிந் தர்ஸயந் வைபவம்‌ ஸ்வம்‌
ப்ரத்யா வ்ருத்தஸ் த்வந்திமோபாய தத்வம்‌ தத்ரத்யேஷு ஸ்தாபயித்வா ஜநேஷு ॥
-இப்படி விஷயங்களை யறிய வேணுமென்று வந்த சிஷ்யர்‌களை மகிழ்‌வித்துக்‌ கொண்டு அந்த திவ்ய தேசத்தில்‌ தமது வைபவங்களை ப்ரகாசிப்பித்துக்‌ கொண்டு அங்குள்ள வைஷ்ணவரிடையே அந்திமோபாய நிஷ்டையில்‌ உண்‌மையை நிலை நிறுத்தித்‌ திரும்‌பி யெழுந்‌தருளினார்‌ என்றுசொல்லுகிறபடியே-)ஜகத்திதுண்டான சேதனரெல்லாரையும்‌ அர்‌த்த பஞ்சக நிஷ்டராயும்‌ அந்திமோபாய நிஷ்டராயும்‌ உஜ்ஜீவிக்கும்படிக்குத் திருத்தி வாழ்வித்ருளி நாயனாருக்குத்‌ திரு வாய் மொழி ஈடும்‌ ஸ்ரீபாஷ்யமும்‌ விசதமாக ப்ரஸாதிக்கும்படி,அண்ணனையும்‌ அண்ணாவையும்‌ நியமித்தருளி க்ருதார்த்த்ராய்‌,
தென்னரங்கா்‌ சீரரளுக் கிலக்காகப்‌ பெற்றோம்‌
திருவரங்கந் திருப்பதியே இருப்பாகப்‌ பெற்றோம்‌
மன்னிய சீர் மாறன் கலை யுணவாகப் பெற்றோம்‌
மதுரகவி சொற் படியே நிலையாகப்‌ பெற்றோம்‌
முன்னவராநங் குரவர்‌ மொழிகளுள்ளப்‌ பெற்றோம்‌
முழுது நமக்கிவை பொழுது போக்காகப்‌ பெற்றோம்‌
பின்னை யொன்று தனில் நெஞ்சம்‌ போராமற் பெற்றோம்‌
பிறர் மினுக்கம்‌ பொறாமை யில்லாப்‌ பெருமையும்‌ பெற்றோமே

என்று இப்படி ஸ்வ நிஷ்டா விசேஷத்தை மதித்துக் கொண்டு அகாரண க்ருபா பரிதஸ்வ விஸேஷ கடாஷ பாதேந புளி முதலான வ்ருஷாதிகளையும்‌ உஜ்ஜீவிப்பித்துக்‌ கொண்டெழுந் தருளியிருந்‌தார்‌. யம் யம்‌ ஸ்ப்ருஸதி பாணிப்யாம்‌” என்கிற ஸ்லோகார்த்தம்‌ இவரிடத்திலே அந்வர்த்த ஸித்தமாய்‌ பலித்தபடி கண்ட பின்பு மனுஷ்யரான ஜ்ஞாநிகளுக்குஜ் ஜீவநம்‌ கிம் புநர்‌ ந்யாய ஸித்தமிறே-

தத்‌ பாத பத்ம ஸம் ஸ்பர்ஸ பாவநம்‌ ஸலிலம்‌ ஐநா |
ஸ்வீகுர் வந்தஸ் ஸூகேநைவ ஸ்வரூபம்‌ ப்ரதி பேதிரே ॥
ஆலோகைர நுகம்பாத்யை ராலாபை ரம்ருதச்யுதை: !
அந்வஹம்‌ பாணி சாதன்‌ய ஸ்பர்ஸந் யாஸைஸ் சபாவநை : ॥
மந்த்ர ரத்ந ப்ரதாநேந ததர்த்த ப்ரதி பாதநாத்‌ |
ஆத்மார்ப்பணேந கதிசித் அஜ்ஞாதஜ் ஞாபநே ந௪ ॥
கேசித் ஷேமம் யயுஸ்‌ தஸ்ய பாதபத்மஸ்ய ஸம்ஸ்ரயாத்‌ |
அந்யே தத் ரூப நித்யா சிந்தநாத் நாதந்யே தந் நாம கீர்தீதநாத்‌ ॥
ஸம்ருத்வா தஸ்ய குணான் திவ்யாந்‌ ஸ்துத்வா தாநேவ கேசந |
நத்வாதாம்‌ திஸ முத்திஸ்ய ஸ்ம்ருத்வா தத் வைபவம்‌ பரே ॥
அபதிஸ்ய கமப்பயேந மந்யே ப்ரதித வைபவம்‌ |
அந்யேதத்‌ பருத்ம ப்ருத்யா நாம லோக ஸ்பர்ஸ நாதபி:॥
அந்யே தத் பாத ஸம்‌ ஸ்பர்ஸ தந்யே ஸம்பூய பூதலே |
அபவந்‌ பூயஸா தஸ்ய முநே : பாத்ரம்‌ க்ருபா த்ருஸநம்‌ ॥
ஏவம்‌ ஸர்வே முநீந்தரேண பபூவுஸ் ஸ்ரஸ்த பந்தநா;
|
[அம் மணவாள மாமுனிவருடைய திருவடித் தாமரைகளின்‌ ஸம்பந்‌தத்‌தினால்‌ பரிசுத்தமான ஸ்ரீபாத தீர்‌த்தத்தைப்‌ பருக அடியார்கள்‌ எளிதில்‌ தமது ஸ்வரூபத்தை (சேஷத்வத்தை)உணர்ந்தனர்‌. அவருடைய திவ்ய கடாக்ஷத்தாலும்‌ அம்ருதம் போல்‌ பாயா நின்ற க்ருபாதிசயத்தாலும்‌, திருவடிகளின்‌ ஸ்பர்சத்தாலும்‌ அவற்றில்‌ பர ஸமர்ப்பணத்தினாலும்‌, மந்த்ர ரத்நமான த்வயத்தை ௨பதேசமாகப்‌ பெற்றும்‌ அதன்‌ பொருளை அருளிச்‌ செய்யக்‌ கேட்டும்‌ சிலர்‌ ஆத்ம ஸமர்ப்பணத்தினாலும்‌ (ப்ரபத்தியாலும்‌)), தமது அறியாமையை விண்ணப்பம்‌ செய்வதாலும்‌, (சிலர்‌) அம்மா முனிவருடைய திருவடித் தாமரைகளில்‌ ஆஸ்ரயிப்பதாலும்‌, ஆத்மோஜ்‌ ஜீவனத்தை (க்ஷேமத்தை) அடைந்தார்கள்‌. சிலர்‌ அம்மாமுனிவருடைய திருமேனியை எப் போதுமாக தியாந விஷயமாக்குதலாலும்‌, அவர்‌ திரு நாமங்களைப்‌ பாடுதலாலும்‌,சிலர்‌ அவருடைய கல்யாண குணங்களைக் கேட்டு அவற்றைக் கொண்டு அவரைத்‌ துதித்தும்‌, அவர்‌ எழுந்தருளி யுள்ள திக்கு நோக்கித்‌ தண்டனிட்டும்‌,அவருடைய பெருமைகளைச்‌ சிந்தித்து மூழ்ந்தும்‌, இப்படிப்பட்ட வைபவமுடைய ‘ஸ்வாமியை ஈடற்றவராக நிச்சயித்தும்‌, சிலர்‌ அவருடைய தாஸ தாஸர்களின்‌ கடாக்ஷித்தினாலும்‌ ஸ்பர்ஸத்தினாலும்‌, அவர்களின்‌ பாத ஸ்பர்ஸத்தினாலும்‌ தன்யமான இப்‌பூவுலகில்‌ (பாக்ய சாலிகளாக) பிறந்து, அம் முனிவருடைய க்ருபா கடாஷத்திற்கு மேலான பாத்ர பூதர்களாக ஆனார்கள்‌. இப்படி
யாவரும்‌ முநீந்தரரான மணவாள மாமுனிகளருளாலே பந்தங்‌கள்‌ நீங்கியவர்களாக ஆனார்கள்‌] என்கிற படியே தம்முடைய ஸ்ரீபாத தீர்‌த்த ஸ்வீகாராதிகள்‌ தொடக்கமாக ஈஷண த்யாந ஸம்ஸ்பர்ஸ அபிமாநாதி விசேஷங்களாலே ஸமீபஸ்தரோடு தூரஸ்தரோடு பவிஷ்யோத்தர முண்டாமவர்களோடு வாசியற ஸர்வரையும்‌ ஸம்ஸாராதுத் தீர்ணராம்படி பண்ணி ஸம்ஸார பரமபத விபாகமற பூதலமெங்கும்‌ பொன்னுலகமாக்கி, இனி தேடித்‌ திருந்தும் படியாக வொழிந்த தசையாய்‌

ஸர்வாவஸ்தா ஸத்ருஸ விபவா ஸேஷக்ருத்த்வம்‌ ரமயா பர்த்து;
த்யக்வா ததபி பரமம்‌ தாம தத் ப்ரீதி ஹேதோ: |
மக்நா நக்நெள வரவரமுநே மாத்ரு ஸாநுந்நி நீஷந்‌
மர்த்யா வாஸே பவஸி பகவந்‌ மங்களம்‌ ரங்க தாம்‌ந : ॥

(கல்யாண குண பூர்ணரான மணவாள மா முனிவரே! ஸ்ரீய:பதியான எம்பெருமானுக்கு எல்லா நிலைகளிலும்‌ தகுந்தபடி வைபவம்‌ மிக்க குற்றேவல்கள் அனைத்தும்‌ செய்து கொண்டுள்ள தேவரீர்‌ அந்தப்‌ பரம பதத்தையும்‌ விட்டு அவ் வெம்பெருமானுடைய பிரீதியின்‌ பொருட்டு ஸம்ஸாராக்நியில்‌ அழுந்திக் கிடக்கிற அடியேன்‌ போல்‌வாரை உத்தரிப்பிக்கத்‌ திருவள்ளமாய்‌ இம் மாநிட வுலகில்‌ திருவரங்கமான திருப்பதிக்கு அணி விளக்‌ஈய்‌ உள்ளீர்‌] என்றபடியே தம்முடைய அவதார காரியம்‌ தலைக் கட்டி யருளி:

இப்படி தம்முடைய திருவவதார கார்யம் தலைக் கட்டினவாறே -அயர்வறும் அம்பரங்கள் அதிபதியானவனுடைய மேலை வைகுந்தத்தில் சென்று இமையாத கண்ணினராய் ஆதி யஞ்சோதியுருவை அனுபவித்து அவ்வனுபவ ஜெனித ப்ரீதி உள்ளடங்காமல் அசேஷ சேஷ விருத்திகளிலும் அன்வயித்து அடிமை செய்ய வேணும் என்கிற அபிநிவேசத்தை யுடையவராய் விண்ணுக்குச் செல்ல இசைந்திருக்கும் அளவிலே திருமேனியைக் நோவு சாத்தி ஸஞ்சார ஷமர் அன்றிக்கே மிகவும் தளர்ந்திருக்கும் நாளிலே
திரு நாளுக்காகத் திருவீதியில் அரங்கர்
வருநாளுமாற தெந்தைக்கின்று -பெருமாள் தன்
அந்தப் வடிவழகைத் தானோர் நாளும் காணேனே
இந்த உடம்போடு இனி –

என்னும் பேராசையோடே பெருமாள் சேவையை அபேக்ஷித்து இருக்க
ஸத் சம்பந்தோ பவதி ஹித மித்யாத்மநை லோப நிஷ்டம்
சிஷ்டாசாரம் த்ரடயிதுமிஹ ஸ்ரீ ஸகோரங்க துர்ய
த்வாரம் ப்ராப்ய பிரதித விபவோ தேவதேவ வஸ்த்வதீயம்
திருஷ்ட்வை வத்வாம் வரவரமுநே த்ருஸ்யதே பூர்ணகாம

மணவாள மா முனிவரே யாவரும் அறிந்த வைபவம் உடையவனாய் ஸர்வேஸ்வரனாய் ஸ்ரீ யபதியான அழகிய மணவாளன் சத்துக்களில் சம்பந்தம் நன்மை பயக்கிறது என்றும் தன்னாலேயே காட்டப்பட்ட சிஷ்டாசாரத்தை திடப்படுத்துவதற்காக இங்கு தேவரீருடைய திருவாசலை யடைந்து தேவரீரைக் கடாஷித்து தனது ஆசை நிறைவேறியவனாய் காணப்படுகிறான் –என்கிறபடியே
அப்பொழுது பெருமாளும் உடுத்து முடிந்து அலங்கரித்து ஒப்பித்துக் கொடு திருவீதியிலே புறப்பட்டவர் இவர் மடத்து வாசலிலே நெடும் போது நின்றும் சேவை ஸாதித்தருள வாடிக்கிடந்த பயிரைத் தளிர்ப்பிக்கும் மேகம் போலே
நீடு புகழ்த் தென்னரங்கர் தேவியரும் தாமுமாக வந்து என்னிடர் தீர்த்தார் இப்போது -என்று தம்மார்த்தி தீரச் சேர்த்தியை அனுபவித்தருள -பின்னும் திருமேனி மிகவும் தளர்ந்து இட்டகால் இட்ட கைகளாய் பரவசகாத்ரராய் நிற்க -மீளவும் பெருமாள் எழுந்தருளி மடத்து வாசலிலே நின்ற வன்று
இந்த உடல் நோட் வீழ்ந்தென்னை வல் வினையேனை
அந்தோ எனக்குத் தென்னரங்கா
இந்த உடம்புடன் சேவை தனக்கென் விரோதியாய்
வன் பரையே தாளினி

என்று அனுசந்தித்துக் கொண்டு திருக்கைத்தலத்தில் எழுந்தருளி சேவித்துப் பேர் இழவாளராய்
பாராரும் அண்ணல் இராமானுஜ சீயர்
சீராரும் சேனை முதல் நாயனார் ஆராத
அன்புடையவாத் தான் அறிந்திலரே என்னுடைய
துன்பமதைத் தீர்த்ததற்குத் தான்

என்று அருளிச் செய்து -தாய் மனம் நின்றும் இரங்கத் தனியே நெடுமால் துணையாய்ப் போயின -என்று அருளிச் செய்து -இங்கு திருவேங்கட சீயரைச் சொன்னபடி -எம்பெருமானார் திருப்பாவை ஜீயர் அன்றோ -திருமுகம் போக விட்டருள-அவர்களும் அந்த ஸ்ரீ திருமுகத்தை சிரஸாவஹித்து சீக்ரமாகப் புறப்பட்டு எழுந்தருளி வந்து திருவடிகளிலே சேவித்துக் கொண்டு எழுந்தருளி இருந்தார்கள் – அவ்வளவிலே திருமேனியிலே நோய் சகல்பம் இன்றிக்கே சமித்திருக்க அத்தைக் கண்டு வானமா மலை சீயர் வான மா மலை ஸ்ரீ கார்யத் த்வரையாலே த்வரித்து -மீண்டு வருகிறோம் என்று விண்ணப்பம் செய்ய ஜீயரும் அவரைக் கடுக வாரும் என்று அனுப்பி விட அவரும் புறப்பட்டு வடதேசத்து எழுந்தருளினார்

ஜீயர் ஆர்த்தி மிக்கு திருநாடு அடைய த்வரித்தல்
அவர் எழுந்தருளின பின்பும் சில நாள் கழிந்தவாறே ஜீயருக்கு முன்பு போல் ப்ராப்ய பூமியில் ப்ராவண்யமும் -த்யாஜ்ய பூமியில் ஜிஹாசையும் அனுபவ அலாபத்தில் ஆத்ம தாரணா அயோக்யதையும் அத்யந்தம் அதிசயித்து வர –அதற்கு மேலே தமக்கு ப்ராப்யரான உடையவர் திருவடிகளிலே ப்ராவண்யம் அதிசயித்தது தத் அனுபவ அலாபத்தில் ஆர்த்தியும் அதிசயித்து அதடியாக பரமபக்தி தலையெடுத்து அதினாலேயே நாள் தோறும் ஸ்வ தசையடியாக வருகிற ஸ்வ அபேஷிதங்களை அவர் திரு முன்பு விண்ணப்பம் செய்வாராய்ப் போருகிறவர்-வாழி எதிராசன் என்று தொடங்கி இராமானுசன் திருவடிகளே சரணம்‌,-இராமானுசாய நம : என்றது நடுவாக இந்த வரங்கர்‌ என்று தலைக் கட்டி அருளிச் செய்ய- அதுவே-ஆர்த்தி என்று அறுபது பாட்டாய்‌ ஒரு ப்ரபந்தமாய்த்‌ தலைக்‌ கட்டிற்று, அந்த அபிநிவேசம்‌ அவ்வளவிலே நில்லாதே பரவி
எம்பெருமானார்‌ தம்பிரானென்னுமவரை
நம்பெருமாள்‌ தாமுகந்து நாள் தோறும்‌–தம் பரமா
ஏறிட்டுக் கொண்டளிப்ப ரென்றுமவர்‌ தம்மை
வேறிட்டுத்‌ தாங் கைவிடார்‌ —
என்று தேறுவதென்றும்‌,
பொல்லானிவனென்று போதிடென்று நங்குரவ
ரெல்லாரு மென்னை யிகழ்ந்தாரோ-நல்லார்கள்‌
வாழ்வான வைகுந்த வான்‌ சபையில்‌ வண் கூரத்‌
தாழ்வானி ருந்திலனோ வங்கு?
என்று கலங்குவதுமாய்‌ அநுகம்பாஞ்சலி யானவர்களை ஆராய்‌வதும்‌,
ஆரியர்காள்‌! ஆழ்வீர்காள்‌! அங்குள்ள முக்தர்காள்‌ !
சூரியர்காள்‌! தேவியர்காள்‌! சொல்லீரோ–நாரணற்கு
எங்களடியானிவன்‌ மீடேற வேணுமென்‌
நுங்களடியரருமுள
என்று கடகர்‌ பலரையும்‌ பல கால்‌ கால் கட்டி அர்த்திப்பதும்‌,
தென்னரங்கர்‌ தேவியே! சீரங்க நாயகியே!
மன்னுயிர்கட்கெல்லாம்‌ மாதாவே!–என்னை யினி
இவ் வுலகந் தன்னிலிருந்து நலங்காமல்‌
அவ் வுலகில்‌ வாங்கி யருள்‌
என்றும்‌
சீ ரங்க நாயகியே! தென்னரங்கள்‌ தேவியே! ்‌
நாரங்கட்கெல்லாம்‌ நற்றாயே ! — மாருதிக்கு
வந்த விடாய்‌ தன்னை யொரு வாசகத்தால்‌ போக்கின நீ
எந்தனிடர்‌ தீராத தென்‌
? என்றும்‌ மறுக்க வொண்ணாத மாத்ருத்வ ஸம்பந்தத்தைச்‌ சொல்லி மடி பிடிப்பதும்‌
இந்த வுடம்‌ போடினி யிருக்கப்‌ போகாதுன்‌
செங்கமலத் தாள் தன்னைத்‌ தந்தருள்நீ–அந்தோ
மையார் கருங் கண்‌ணி மணவாளா! தென்னரங்கா!
வையாம லிருப்பாயே யிங்கு
-என்று ஆர்த்ர ஹருதயத்வ விஸிஷ்டராய்–ஆர்த்தி ஹரத்வ விசிஷ்டரான – அவர் முன்பே தம்‌முடைய ஆர்த்தியைச்‌ சொல்லுவதும்‌,

சென்று திருமாலடியார்‌ தெய்வக் குழாங்கூடு
மென்று மொரு நாளாமோ? ஆழ்வாரே!-துன்னு புகழக்‌
கமலம்பாடினீரையோ அடியேனுமிக்‌
கமலஞ் சேர் காயம்‌ விட்டு
(கமலம்பாடி நிறையா அடியேனுமிக்‌–பாட பேதம்)என்று “அடியார்கள்‌ குழாங்களை உடன்‌ கூடுவதென்று கொலோ? என்று அர்த்தித்த ஆழ்வாரிடத்தில்‌ ஸ்வரூபா நுரூபமான ப்ராப்யத்தை அபேக்ஷிப்பதும்‌
இந்த வுடம்போ டிருவினையாலிவ்வளவும்
உந்தனடி சேராதுழன்றேனே–அந்தோ
அரங்கா! இரங்கா யெதிராசர்க்காக
இரங்காய்‌ பிரானே இனி–
என்றும்‌ திருவாங்கா! அருளாய்‌ இனி யுன் திருவருளாலன்றிக்‌ காப்பரிதால்‌” என்கிறபடியே மீளவும்‌ மரங்களுமிரங்கும்படி அவர்க்கந்தரங்கரை முன்னிட்டுக் கொண்டு அவரிரக்கத்தை இரப்‌பதுமாய்‌, இப்படி ஒரு தேச விஸேஷத்திலே சென்றாலொழிய தரியாத தசையை யடைந்து எழுந்தருளி யிருக்க;

அந்த தசையிலே தேசாந்தரஸ்தரான மேல்நா ட்டுத்‌ தோழப்‌பரும்‌ அவர்‌ திருத்தமயனாரான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாரும்‌ பெருமாளை ஸேவிப்‌பதாகக்‌ கோயிலுக்கெழுந்தருள।
அவர்களைத்‌ தென் மாடத்திருவீதியிலே பட்டர்பிரான்‌ ஜீயர்‌ கண்டருளி, “நீங்கள்‌ எங்கு நின்றும்‌ எழுந்தருளினீர்கள்‌? எங்கேறப்‌ போகிறீர்கள்‌?” என்று கேட்க, அவர்களும்‌ ஸ ஸாத்வ ஸ விநயராய்‌ ஸாஷ்டாங்க ப்ரணாமம் பண்ணி உகப்போடே யதா மநோ ரதம்‌ வ்ருத்தாந்தத்தை விண்ணப்பஞ் செய்ய, ‘ இப்படி ஜ்ஞாநாக்த்யாதிகள்‌ வடிவிலே தொடை கொள்ளலாம்படி அநுகூலராயிருக்கிற நீங்கள்‌ யதிபுநரவதாரமான நம்முடைய பெரிய ஜீயரை ஸேவிக்க வேண்டாவோ?” , என்றருளிச்செய்ய-
அவர்களும்

அதற்கு இசைந்து மடமேற கூடவெழுந்தருள, மணவாள யோகி தஞ்சமாம்‌ மலர்த் தாளிணைகாட்டி-என்கிறபடியே-ஜீயர்‌ திருவடிகளை ஸேவிக்கப் பண்ண, அவ்வளவிலே நாயனாரும்-புரை கொண்ட கோயில்‌ மணவாளமாமுனிக்கண்ணருளே” என்றும்‌ போதச்‌ சிவந்து பரிமளம்‌ விஞ்சும்‌ புதுக் கணித்த
சீதக் கமலத்தை நீரேற வோட்டிச்‌ சிறந்தடியேன்‌ ஏதத்தை மாற்றும்‌ மணவாள யோகி யினிமைதரும்‌
பாதக் கமலங்கள்‌ கண்டேனெனக்குப்‌ பயமில்லையே என்றும்‌ வாசிக கைங்கர்யமாக இந்தத்‌ திருநாமத்தை விண்‌ணப்பஞ் செய்து கொண்டு
திருவடிகளிலே ஸாஷ்டாங்கமாக
தெண்டன்‌ ஸமர்ப்பித்து நிற்க, ஜீயரும்‌ அவர்‌ அபேஷித்தபடியே அமலங்களாகக்‌ கடாக்ஷித்தருளி அப்போது எம்பெருமானார்‌ திறத்திற் சென்ற சிந்தையரான தாம்‌ இவர்கள்‌’ என்றவாறே
எம்பெருமானாருடைய விசேஷாபிமானமுள்ள திருநாராயண புரத்தை நினைத்து, அவர்‌ அந்திம தசையிலருளிச்‌ செய்தருளின
கச்சந் பதம் பரமுவாச வசாம்ஸி யாரி
ராமநுஜார்ய இஹதேஷு சதுர்த்த ஸித்தாம்‌ |
ஸ்ரீ யாதவாத்ரி வஸதிம்‌ ஸததம் பஜந்தஸ்‌
ஸக்தோ பவந்தி மம ஸந்ததி மூலநாத: 1

[எமது குலகூடஸ்தரான எம்பெருமானாருக்‌கு தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளுமளவில்‌ அருளிச் செய்த (ஆறு) வார்த்தைகளில்‌ நாலாவதான (வார்த்தைப்படி) திருநாராயணபுரத்தில்‌ இடை விடாமல்‌
வாஸம்‌ செய்பவர்கள் மஹான்களாவர்‌] என்கிறபடியே திரு நாராயண புரத்திலே நித்ய வாஸம்‌ பண்ணுவார்‌ நம்முடைய முதலிகளிலே ஒருவருமில்லையோ?” என்று ஜீயரரருளிச்‌ செய்ய,
அட்போது தோழப்பர்‌ திருப் பரியட்டத்தைத்‌ தலையிலே முடிந்து கொண்டு -‘இந்தக் கைங்கர்யம்‌ அடியேனுக்காக வேணும்‌”’ என்று ப்ரார்த்திக்க, ஜீயரும்‌ மிகவுமுகந்தருளி, “எம்பெருமானாருக்கும்‌
நமக்கும்‌ ப்ரியமாம்படி கிஞ்சித்கார பூர்வமாக எதிராஜ குமாரரை ஸேவித்து மங்களாசாஸந பரராய்‌ நித்ய வாஸம்‌ பண்ணியிரும்‌” என்று நியமித் தருளினார்‌-

அண்ண ராயரை பட்டர்பிரான்‌ ஜீயர்‌ திருவடிகளுக்கு ஆளாக்கினது
அந்த சமயத்திலே ராமாநுஜ பரிக்ருஹீதராய்‌ திருமலை நல்லான்‌ திருவம்சஸ்தராய்‌ .”இடங்கொள் சமயத்தை யெல்லாம்‌ எடுத்துக்‌ களைந்து ஸ்வமத ஸ்தாபகராயிருக்கிற அண்ணராய சக்ரவர்த்திகள்‌ ஸ குடும்பராக பெருமாளை ளேவிக்க எழுந்தருளிக்‌ கோயிலிலே பெருமாளை ஸேவித்துக்‌ கொண்டெழுந் தருளியிருக்க, அப்போது ஜீயருடைய சரம தசையை தேசாந்தரஸ்த்தரோடும்‌ தத் தேஸிரீயரோடும்‌ வாசியற ஸர்வரும்‌ குழாங் குழாமாகச்‌ சென்று ஸேவித்து மீளுகிறபடியை அண்ணராய சக்ரவர்த்தி திருத்தாயார்‌ ஆச்சி கண்டு, அவ் விசேஷங்சேட்டு, ”அண்ணராயனே! நமக்கு ஜீயரை ஸேவிக்க வேண்டாவோ?! என்ன, சக்ரவர்த்தியும்‌ இசைந்து எல்லாரையுங் கூட்டிக் கொண்டு ஜீயர்‌ மடத்திலே சென்று பட்டர்‌பிரான்‌ ஜீயர்‌ புருஷகாரமாக வந்து ஸேவித்து திருவடிகளிலே வேரற்ற மரம் போலே விழுந்து கிடக்க, ஜீயர்‌ நெடுநாளாக அங்‌கீ கரிக்கைச்கு விஷயங் காணாமையாலே முடங்கிக் கிடந்த திருவடிகள்‌ இப்போது இவரைக் கண்டு (தத ஸ்திமித முத்க்ஷிப்ப சரணம்‌ சக்ரலாஞ்சிதம்‌ |
க்ருபயாமூர்த்கி விந்யஸ்ப ஸநிநாய குருஸ்ரமம்‌
॥ [பிறகு அம் மணவாளமாமுனிகள்‌ சக்கர அடையாளம்‌ பெற்ற நிச்சலமான தம்‌ திருவடிகளை உயர வெடுத்து க்ருபையுடன்‌ அவர்‌ திருமுடியில்‌ வைத்தருளி அவரது பெரு விடாயைப்‌ போக்கினார்‌ -என்கிறபடியே; )நிமிரப் பெற்றுத் தந் திருவடித் தாமரைகளை இவர்‌ திரு முடியிலே வைத்தருள, இத்தைக் கண்டு முதலிகளெல்லாரும்‌ இவருடைய பேறிருந்தபடியென்‌! என்று உகந்தருளினார்கள்‌. ஜீயரும்‌ சக்ரவர்‌த்‌திகளைக் குறித்து எம்பெருமானார்‌ ஜீயரை திருவேங்கட த்ரோஹிகள்‌ நலியா வண்ணம்‌ காத்து ரக்ஷித்து நம்‌ தர்சந விஷயமாக அநேக கார்யங்கள்‌ பண்ணிப் போந்தவரன்றோ நீர்‌!” என்று மிகவுமுகந்தருளி, உமக்குத் தகுதியான பேறில்லையே, சற்று முந்துறச் சேரப் பெற்றீரில்லையே!’ என்று அருளிச் செய்து, பட்டர்பிரான்‌ ஜீயரைப் பார்த்து, வாரீர்‌ கோவிந்தப்ப தாஸரே! என்றழைத்தருளி, :ராமஸ்ய தஷிணோ பாஹு:”‘ [ராமபிரானுக்கு வலது கை லக்ஷ்மணன்‌ ] என்று நமக்கு தஷிண பாஹாு ஸ்த்தாநீயரன்றோ நீர்‌? ஆகையாலே நாம்‌ செய்கிறதாக நினைத்து நம்‌ ஸம்பந்தத்தை அபேக்ஷித்திருக்கிற இவர்களுக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களையும்‌ செய்யுமென்று அண்ணராய சக்ரவர்த்திகளையும்‌ தோழப்பரையும்‌ நாயனாரையும்‌ அவர்‌ கையில காட்டிக்‌ கொடுத்து “தர்‌சந ப்ரவர்த்தகராம்படி திருத்தம்‌’” என்று
நியமித்தருள, அவரும்‌ அப்படியே அவர்களை விசேஷ கடாக்ஷம்‌ செய்தருளினார்‌. பின்பு அப்பிள்ளானும்‌ ஜீயர்‌ நாயனாரும்‌ ஜீயர்‌ திருவடிகளிலே ஸேவித்து, ‘அடியோங்களுக்குத்‌ தஞ்சமாசு தேவரீருடைய அர்ச்சா ரூபமான விக்ரஹம்‌ வேணும்‌” என்றபேஷிக்க,அப்படியே அநுமதி பண்ணித்‌’ தம்முடைய திருக்கைச் செம்பை உபாதாநமாக்கி யருள, அப்படியே அவர்களும்‌ இரண்டு விக்ரஹம்‌ ஏறி யருளப் பண்ணிக் கொண்டு உகந்தருளினார்‌கள்‌.

பெரிய ஜீயர்‌ சரம தசையில்‌ நாலாயிரமும்‌ கேட்டருளியது
பின்பு தனித் தனியே முதலிகளெல்லாருக்கும்‌ வேண்டிய ஹிதங்‌களை யெல்லாம்‌ ப்ரஸாதித்தருளி மேலிலங்குவானான கலங்காப்‌ பெரு நகரில்‌ சென்று இமையாத கண்ணீனராய்‌ வழுவிலா வடிமை
செய்யப்‌ புறப்பட்டெழுந்தருள நாலு நாள் என்னவே, :’“நாலாயிரமும்‌ தொடங்கி நடத்துங்கோள்‌” என்று நாயனார்‌ தொடக்கமான முதலிகளுக்கு நியமித்தருள, அவர்களுமப்படியே தொடங்கி அநுஸந்திக்க, இவைகளை யெல்லாம்‌ திருச் செவி சாத்தி யருளி
-ஜீயரும்‌ உகப்புடனே -வளர்த்ததனால்‌ பயன்‌ பெற்றேன்‌ என்‌றருளிச்‌ செய்து, மஸ்தகாஞ்சலியாய்‌ ததர்த்தாநுபவ பாரவஸ்யததாலே நிமீலிதாக்ஷ யுகளராயிருக்க, “இப்போது திருவுள்ளத்திலோடுகிறதென்‌?” என்று கந்தாடை யண்ணன்‌ கேட்டருள, “ஈட்டில்‌ அர்த்த ரஸம்‌ தலை மண்டி யிட்டுச்‌ செல்கிறது” என்று அருளிச் செய்து, அப்படியே நடக்கும் போது *மருளொழி நீ மட நெஞ்சே என்னும்‌ தசையை ப்ராப்தராய்‌ இங்ஙன்‌ ஏகாதசி சென்று மற்ற நாள்‌ திருத்‌ த்வாதசியிலே உத்தம நம்‌பி தொடக்கமான அனைத்துப் பரிகரத்தையும்‌ அழைப்பித்து ‘ஸர்வாபராதங்களையும்‌ பொறுத்தருள வேணும்‌”’ என்று ஷாமணம் பண்ணிக் கொள்ள, அவர்களும்‌ தேவரீருக்குமோரபசாரமுண்டோ?’? என்று அருளிச் செய்ய, மீளவும்‌ அவர்களைக்‌ குறித்து ‘பெரிய பெருமாளுடைய ஸ்ரீகார்யத்‌தைக்‌ குறைவற நடத்திக் கொண்டும்‌, ஸ்ரீவைஷ்ணவர்களை
வரவளைத்துக் கொண்டும்‌ போருங்கோள்‌”” என்‌றருளிச் செய்துப்‌ போக விட்டு, திருவாராதநம்‌ [திருவாராதந எம்பெருமான்‌ ஆசாரியர்‌ திருமேனிகள்‌], ஸ்ரீகோசங்கள்‌, மற்றுமுண்டான உபகரணங்கள்‌, மடம்‌ முதலான எல்லாவற்றையும்‌ :யஸ்யை தே தஸ்ய தத் தநம்‌’‘என்னும்படி நம் பெருமாளுக்கு சேஷமாக்கி ஸமர்ப்‌பித்து, ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்வித்து அவர்கள்‌ தீர்த்‌தமும்‌ ஸ்வீகரித்து அபராத ஷாமணம்‌ பண்ணிக் கொண்டு எழுந்‌தருளி யிருக்க, முதலிகளும்‌ பலிதமான வ்ருக்ஷத்தை பக்ஷி ஜாதங்கள்‌ காத்துக்‌ கொண்டிருக்குமா போலே பரிந்து ஸேவித்துக் கொண்டு அஞ்ஜலி பத்மதங்களை யுடையராய்‌ அநுபவித்துக் கொண்டிருக்க, ஆதித்ய அஸ்தமான வாறே தத் காலீந கர்மத்தையுஞ்‌ செய்தருளி பிள்ளை திருவடிகளே சரணம்‌-வாழி உலகாசிரியன்‌” என்றநுஸந்தித்துப்‌ பிள்ளையை த்யாநித்துக்‌ கொண்டு அவசராக அணையிலே சாய்ந்தருள, ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும்‌ கை கூப்பிக்‌கொண்டு ப்ரஹ்‌ம வம்லி ப்ருகு வல்லி, சூழ்விசும்பணிமுகில்‌, அர்ச்‌சிராதி, நூற்றந்தாதி இவைகளை அநுஸந்திப்பாராய்‌ பெரிய ஆரவாரத்துடளே செல்லுகிறவளவி3ல அங்கயல் பாய் வயல் தென்‌னரங்கன்‌ [இரா. நற்‌. 108] என்ற பாசுரத்தை ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அநுஸந்திக்கக் கேட்டு தாமும்‌ க்ருதாஞ்ஜலிபுடராய்‌ ”எம்‌பெருமானார்‌ திருவடிகளே சரணம்‌”’ என்றநுஸந்தித்து தத் கத சித்தராய்த்‌ திருக் கண்களைச்‌ செம்பளித்துக்‌ கொண்டிருக்க:

ஜீயர்‌ திருநாட்டுக்கெழுந்தருளியது
*கநசகிரி மேலே கரிய முகல்போல விநதை சிறுவன்‌ மேற்‌ கொண்டு என்றும்‌, எந்தை திருவரங்கரேரார்‌ கருடன்‌ மேல்‌ வந்து முகங் காட்டி வழி நடத்த
என்றும்‌ இவர்‌ அபேக்ஷித்தபடியே பெரிய
பெருமாளும்‌ -செழும்பறவை தானேறித் திரிவாராய்த்‌ தம்‌ தாளிணையை இவர்‌ திருமுடி மேலே வைத்து –மஞ்சுயர்‌ பொன் மலை மேலெழுந்த மாமுகில் போன்ற தன்‌ வடிவை ஸாக்ஷாத்கரிப்பித்து
அநுபவிப்பிக்க அநுபவித்து – உன் சரணந் தந்தென்‌ சன்மங் களையாயே என்றும்‌ ”ஸுகேநேமாம்‌ ப்ரக்ருதிம்‌ ஸ்தூல ஸூஷ்ம ரூபாம்‌ விஸ்ருஜ்ய’ ‘ என்றும்‌,-நோய்களாலென்னை நலங்காமல்‌ சதிராக
உன்‌ திருத்தாள்‌ தா என்றும்‌ -நிரதிசய போக்யமான திருமேனியை விடுவித்து அங்‌கீ கரிக்கப்பெற்று, மாதவன்‌ தன்‌ துணையா நடந்‌தாள்‌ என்றும்‌ அரங்கத்துறையுமின்‌ துணைவனொடும்‌ போய்‌ என்றுஞ்‌ சொல்லுகிறபடியே
ஸ்ரீயபதியான பெரிய பெருமாள்‌ பெரிய திருவடி மேற்கொண்டு ஹார்த்தன்‌ வழி நடத்த, ஸுஷும்‌நை யாகிற வாசலிலே புறப்பட்டு சிர:கபாலத்தை பேதித்து ப்ரஹ்மரந்த்ரத்தாலே ஜீயர்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌

அநந்தரம்‌ பெரிய பெருமாளும்‌ ‘விஸ்ருஜ்ய லஷ்மணம்‌ ராமோ துக்க ஸோக ஸமந்வித :- [இளையபெருமாளைப்‌ பிரிந்த ராம பிரான்‌ சோக துக்கங்களின்‌ வசமானான்‌] என்கிறபடியே ‘ஸெளமித்ரிர்மே ஸகலு பகவாந்‌ ஸெளம்ய ஜாமாத்ரு யோகீ – (ஸெளம்ய ஜாமாத்ரு யோகி-மணவளவாளமாமுனிகள்‌ இளைய பெருமாளே] என்கிற இளைய பெருமாளவதாரமான ஜீயரையும்‌ வழி விட்டு வந்து, இளைய பெருமாளைப்‌ பிரிந்து ஒரு பகலாயிரமூழியாய்‌ அமுது செய்யாதே முசித்துக்‌ கொண்டு பெருமாளிருந்தாப்போலே இவரும்‌ அமுது செய்யாதே முசித்து மூடிக்கிடந்தார்‌. ஸ்ரீ பாதத்து முதலிகளெல்‌லாரும்‌ –ஐயோ கண்ணபிரான்‌! அறையோ! முறையோ? அரவணை மேல்‌ பள்ளி கொண்ட முகில்‌ வணணனே| என்று பெரு மிடறு செய்து கையெடுத்துக்‌ கூப்பிட்டுக்கொண்டு துடிக்க,அருகிலிருந்த முதலிகள்‌ தேற்றத் தேறி தின்று இப்படி யெழுந் தருளின அவருடைய அந்திம தசையை எல்லாருமறிந்து உஜ்ஜீவிக்‌கும்படி
கும்பம்பாஸ்வதி யாதி தத் ஸுததிநே பஷே வள க்ஷேதரே
த்வாதஸ்யாம்‌ ஸ்ரவணர் க்ஷ்பாஜி ருதிரோத் கார்யாக்ய ஸம்வத்ஸரே |
தீ பக்த்யாதி குணார்ணவோ யதி வராதீநாகிலாத்ம ஸ்த்திதி:
ஸ்ரீ வைகுண்ட மகுண்ட வைபவமகாத்‌ காந்தோ பயந்தா முநி : ॥

ஜ்ஞாந பக்தி வைராக்யம்‌ முதலான குணங்களுக்கு மஹா ஸமுத்ரம்‌ போன்றவரும்‌, எம்பெருமானாருக்கு ஸ்வாதீநமான தமது ஸமஸ்தமான நிலைகளையு முடையவருமான மணவாளமாமுனிகள்‌ ருதிரோத்காரி ஸம்வத்ஸரத்தில்‌ சூரியன்‌ கும்ப ராசியை யடைந்த அளவில்‌ (மாசி மாதத்தில்‌) சனிக் கிழமையில்‌ க்ருஷ்ண பக்ஷத்த்தில்‌ திருவோண நக்ஷத்ரம்‌ கூடிய த்வாதசி தினத்தன்று எல்லை யற்ற பெருமை யுள்ள ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தருளினார்‌-
என்று அங்குத்தைக்கு அந்தரங்கர்கள்‌ அருளிச் செய்தார்கள்‌-
அவ்வளவு மன்றிக்கே,
ஆசிலாத மணவாள மா முனி யண்ணல் பூமியுறு வைப்‌பசியிற் றிருமூலம்‌
தேச நாளது வந்தருள் செய்த நந் திருவாய் மொழிப்பிள்ளை தா
ளீசனாகி யெழுபத்து மூவாண்‌ டெவ் வுமிர்களையு முய்வித்து வாழ்ந்தனன்‌
மாசி மால்‌ பக்கத் துவாதசி மா மணி மண்டபத் தெய்தினன்‌ வாழியே

என்று இப்படி அவர்‌ தோன்றியது முதலாகத்‌ தன்னுலகம்‌ புக்க தீறாகப்‌ பேசித்‌ தலைக் கட்டினார்களிறே-

(ஜீயர் நாயனாரும் வான மா மலை ஜீயரும் -மா முனிகளின் இரண்டு பக்கமும் சேவை சாதிக்கிறார்கள் -கந்தாடை அண்ணனும் உத்தம நம்பியும் தூணில் இரண்டு பக்கமும் மா முனிகளின் நிஜ ஸ்வரூபத்துடன் சேவை சாதிக்கிறார்கள் -)

(பெரிய அவசரமான பின்பு திருமூலத்தில் பிரஸாதம் வரும் -திரு அத்யயன த்துக்கு முன்பே வந்து அரங்கன் அர்ச்சகர் மா முனிகளுக்கு அமுது செய்யப் பண்ணி பின்பு தான் அரங்கனுக்கு கோயிலே ஏறி அமுது செய்யப் பண்ணுவார்)

ஜீயருக்கு சரம கைங்கர்யங்கள்‌
அநந்தரம்‌ ஜீயருக்கு சரம கைங்கர்‌யங்களைச்‌ செய்வதாக முதலிகளெல்லாரையுங் கூட்டிக்கொண்டு ஜீயர்‌ நாயனார்‌ திருக் காவேரிக்‌ கெழுந்தருளி நீராடி அலங்காரத் திருமஞ்சனங் கொண்டு வந்தருளி
ஜீயரைத்‌ திருமஞ்சநம்‌ கொண்டருளப் பண்ணுவதாக ஒரு திருமஞ்‌சந வேதிகையிலே விமல சரம விக்ரஹத்தை யேறி யருளப் பண்ணி புருஷ ஸுக்தா நுஸத்தத்தாலும்‌ த்வயாநுஸந்தாத்தாலும்‌ மற்று முண்டான அநு ஸந்தாநத்தாலும்‌ திருமஞ்சநங்‌ கொண்டருளப்‌ பண்ணி திருவொற்று வாடை சாத்தி, திருப் பரியட்டஞ் சாத்தி அலங்கரித்து, ‘விஸ்தீர்ண பால தல விஸ்புர தூர்த்வ புண்ட்ரம்‌”[விசாலமான திரு நெற்றியில்‌ மிக விளங்கும்‌ திருமண் காப்புடையவர்‌ ] என்றபடி த்வாதசோர்ந்த்வபுண்ட்ரங்களையும்‌ தரிப்பித்து தச் சேஷமான திருமண்‌ ஸ்ரீசூர்ணங்களை யெல்லாம்‌ தங்களுக்கு ஆபத் தநமாகச்‌ சேர்த்து வைத்துக்‌ கொண்டு, ஜீயரை திவ்ய ஸிம்‌ஹாஸநத்திலே ஏறி யருளப் பண்ணி அவர்‌ திருவடிகளைக்‌ கண்ணிலும்‌ நெஞ்சிலும்‌ ஒற்றிக் கொண்டு ஸ்வ சிரோ பூஷணமாக தரித்துக்‌ கொண்டு, அத்தன்‌ மணவாளயோகி அடியிணையைச்‌ சித்தப்‌ பெருங்கோயில்‌ கொண்டருளி என்று ஸூபாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தைத் தம் தாம்‌ திருவுள்ளங்களில தேக்கிக் கொண்டு வைத்த கண் வாங்காதே விமல சரம விக்ரஹாநுபவம்‌ பண்ணிக்‌ கொண்டிருக்க :அவ்வளவிலே-௮ரங்கத் தம்மானரைச் சிவந்த வாடையையும்‌,-அவன் மார்வணிந்த வன மாலையையும்‌ பொற்றட்டிலே வைத்துக்‌ கொண்டு ஸகல வாத்ய கோஷங்களுடனே உத்தம நம்பி ஸிரஸா வஹித்துக்‌ கொண்டு அனைத்துக் கொத்துப் பரிகரத்துடனே மடத்து வாசலிலே செல்ல, முதலிகளும்‌ அவற்றை எதிர் கொண்டு தண்டன்‌ ஸமர்ப்பித்து அங்கீரித்து, உடுத்துக் களைந்த பீதக வாடை யுடுத்துக்‌ கலத்ததுண்டு தொடுத்த துழாய்‌ மலர்‌ சூடிக் களைந்தன சூடுமித் தொண்டரான ஜீயருக்கு அவற்றைச்‌ சூட்டி அலங்கரித்து, கோயில் அனைத்துப் பரிகரம்‌, ஆசார்ய புருஷர்கள்‌ ஜீயர்கள்‌, ஏகாங்கிகள்‌, ஸ்ரீவைஷ்ணவர்கள்‌, சாத்தாத முதலிகள்‌ மற்று முண்டானவர்க ளெல்லாருங் கூடி ஜீயரை ஸேவித்து, -செய்‌ய தாமரைத் தாளிணை வாழியே என்று தொடங்கி அநுஸந்தித்து மங்களா சாஸநம்‌ பண்ணி ”எம்பெருமானாரை ஸேவியாத இழவெல்லாம்‌ தீர்ந்தோம்‌ இவரை ஸேவித்து; இப்போது இவ் வவதாரமும்‌ தீர்த்தம்‌ ப்ரஸாதித்துப்‌ போவதே! என்று மிகவும்‌ துக்காபிதப்தராய்‌ (சோகித்து, பின்பு அங்கிருந்த முதலிகள்‌ தேற்‌றத் தேறி நின்று ஸந்நிதியில்‌ முதலிகளெல்லாரையுங்‌ கூட்டிக்‌ கொண்டு யதா க்ரமத்திலே ஸ்ரீசூர்ண பரிபாலநத்தையும்‌ நடத்தி தச் சேஷமான ஸ்ரீசூர்ண ப்ரஸாதங்களைத்‌ தாங்களும்‌ தரித்துக்‌ கொண்டு, பின்பு எண்ணெய்‌ சுண்ணங் கொண்டாடி திவ்யாலங்க்ருதமான புஷ்பக விமாநத்திலே ஜீயரை ஏறி யருளப் பண்ணி வைத்து எல்லோரும்‌ ஸ்ரீபாதந் தாங்கிக்‌ கொண்டு சத்ர சாமர தால வ்ருத்தாதிகள்‌ பணிமாற, மஹாஸம்ப்ரமத்துடனே மத்தளங்‌கள்‌ சங்க காஹள பேரிகள்‌ தொடக்கமான ஸகல வாத்யங்கள்‌ கடல்‌ போலே முழங்க,
பதாகா த்விஜிநீம் ரம்யாம்‌ தூர்யோ த்ருஷ்ட நிகாதநீம்‌ |
ஸிக்தராஜ பதாம் ராம்யாம்‌ க்ருத்ஸ்நம்‌ ப்ரகீர்ணகுஸு மோத்கராம்‌ ॥

[நகரத்தையும்‌ மார்க்கத்தையும்‌ அலங்கரித்தக்‌ க்ரமம்‌-அங்கங்கே நாட்டிய கொடிகளால்‌ அழகியதாய்‌, ஸகல வாத்ய கோஷங்களால்‌ சப்த மயமானதாய்‌, நீர் தெளித்து அலங்கரிக்கப் பட்டதாய்‌, புஷ்பங்‌களை ராஜ மார்க்க மெங்கும்‌ தெளித்து வைத்ததாய்‌ ஆக்கினார்கள்‌] என்கிறபடியே காவொத்த கமுகு, பல, கதாலிச் சோலைகளாய்‌ அரங்‌கன்‌ திருவீதி யெட்டிலும்‌ நாட்டி -மகர தோரணம்‌ மேற்கொடிகளாட -என்று சொல்லுகிறபடியே ஸர்வாலங்கார ஸம்ப்ருதையான எட்டுத் திரு வீதிகளிலும்‌ கரும்பேந்தி நூற்றந்தாதி முதலாக அநுஸந்திக்க, திரு நீர்‌ பரிமாற பொரியும்‌ புஷ்பமும்‌ சிதற “தர்‌சநத்திலே மணவாளமாமுனிகள்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌’-என்று ஒற்றைத் திருச் சின்னம்‌ பணிமாற ஸூமங்கலிகள்‌ தீப மெடுக்க, திரு வீதிகளிலே அங்குண்டானவர்களெல்லாம்‌ ஸேவிக்க எழுந்தருளப்‌ பண்ணு வைத்துக்‌ கொண்டு போய்‌;

திருப் பள்ளிப் படுத்தல்‌
மகிழாதி கேசவன்‌ தன்னடிக்கீழாக”? என்கிறபடியே ஆதிகேசவப் பெருமாள்‌ திருவடிக்கீழாக ௮வர்‌ திருவடி பிரியா வண்‌ணம்‌ தவராசன்‌ படுகையிலே பொன்னித் தென் பாலிலே (இங்கு சொல்லப்படும்‌ ஆதி கேசவப்‌ மெருமாள்‌ ஸந்நிதியையும்‌ மணவாளமாமுனிகள்‌ திருவரசையும்‌ தென் திருக் காவேரிப்‌
படுகையில்‌ இன்றும்‌ ஸேவிக்கலாம்‌; )எழுந்தருளப் பண்ண ஒருப்பட அவ் வளவிலே பூதேவி யானவள்‌ முன்பு ஜனக ராஜன்‌ திரு மகளை மடியில வைத்து அணைத்துக் கொண்டு ஆதரித்தாற் போலே அந்த மண்மகளான பிராட்டியும்‌ மணவாளமாமுனியான இவரையும்‌ மடியிலே எழுந்தருளப் பண்ணி வைத்‌துக் கொண்டு மகிழ, ஆளவந்தார்‌ எம்பெருமானாரைப்போலே யதி ஸம்ஸ்கார விதி யடங்கச்‌ செய்து கனித்து வாழும்படி திருப் பள்‌ளிப் படுத்தினார்கள்‌.

முதலிகள்‌ ஜீயர்‌ பிரிவாற்றாமல்‌ சோகித்தல்‌
அநந்தரம்‌ ”கதிரவன் போய்‌ குணபால் சேர்ந்த மகிமை போல்‌”-என்கிறபடியே கீழ்திக்கில்‌ ஒரூ ஆதித்யன்‌ அஸ்தமித்தாற் போல இருக்கையாய்‌ தத் ப்ரபாவஜ்ஞரான ஜீயர் நாயனார்‌ கந்தாடை யண்ணனுள்ளிட்ட முதலிகளெல்லாரும்‌
ஜீயரெழுந்தருளி விட்டார்‌ செக ழுழுதும்‌
போயிருள்‌ மீளப் புகுந்ததே தீய
வினை நைய வெம் புலனா லீடழிந்து மாய்வோ
ரனை வார்க்குமேதோ வரண்‌?

என்று மிகவும்‌ சிந்தாக்ராந்தராய்‌ துக்கித்து பின்பு சிஷ்யர்களான தாங்கள்‌ தங்களுடைய சேஷத்வாநுகுணமாக திருமுடி விளக்குவித்துக் கொண்டு பெருமாள் அவப்ருதம்‌ கொண்டாடுமா போலே அவப்ருதம்‌ கொண்டாடி மீண்டும்‌ மடத்திலே எழுந்‌தருளி வெறித்தான மடத்தைக் கண்டு –இல்லம்‌ வெறி யோடிற்‌றாலோ என்று ஆசார்ய விஸ்லேஷ அஸஹிஷ்ணுக்களாய்‌ மிகவும்‌
க்லேசித்து தங்களிலே தேறி நின்று
சீயர் திருத் தம்‌ பிரானாரே தென்னரங்க
மேய பெருமானே விண்ணப்பம்‌-காய விலங்‌
கெந்நாள்‌ விடுவீரெடுத்த பணி யுமக்குப்‌.
பன்னாளும்‌ செய்யும்படி –
-என்றும்‌
சீயரபிமானமே தேர்ந்தருளித்‌ தீ வினையோம்‌
காய விலங்கைக் கழித்தருளீர்‌–தூய புகழ்‌
நம்பெருமாளே! இமையோர்‌ நாயகரே!- நான்மறை தேர்‌
எம்பெருமானார்‌ பெருமாளே!
–என்றும்
தாயகலக்‌ கண்டு சிலுகிட் டடியேனை
மாயையிலே மூட்டி மருட்டாதே-சீயரே
காய விலங்கைக் கடுகெனவே தீர்த்தருளீர்
தூய திருத் தாளே தொழ-
-என்றும்
எழும் பாவி யைம் புலன்கள்‌ சொன்ன வண்ணம்‌ செய்து
தழும்பேறி வாழுந் தமியேன்‌-செழும் பொன்‌
மணவாள மா முனியே மா சுடலைத் தீர்க்குமின
முணவாக வாழ்ந்திடுகையோர்‌
–என்றும்
நானென தென்னும்‌ நரகத்திடை யழுந்திப்‌
போன விந்தக் காலமெல்லாம்‌ போதாதோ?-கான மலர்‌
மாலை யணி திண்டோண்‌ மணவாள மா முனியே
சால நைந்தேனுன்‌ பாதம்‌ தா-
-என்றும்
புண்ணாராக்கை தன்னுள்‌ புக்குழலும்‌ தீ வினையேன்‌
தண்ணாருமென் கமலத் தாளணைவ தென்று கொலோ
பண்ணாரு நால் வேதம்‌ பயின்றுய்யும்‌ பண்டிதனே
மண்ணாள வந்த மணவாள மா முனியே

என்று இத்யாதியான ஆர்த்தியை அவர் விஷயத்தில்‌ விண்ணப்‌பஞ்செய்து திருமிடறு தழுதழுப்பத்‌ திரு முத்துதிர்த்துத்‌ தங்களிலே தேறி நின்று வித்த்யுக்த ப்ரகாரேண செய்ய வேண்டுங்‌ க்ருத்யங்‌களை யெல்லாஞ் செய்து ஜீயர்‌ வைபவத்திற்கு அநுகுணமாகப்‌ பெருக்கத் திருவத்யயநம் நடத்தி யருளி தீர்த்த ப்ரஸாதங்களும்‌ ஸ்வீகரித்து, பின்பு தந்தாமுக்கு நியமித் தருளின கைங்கர்யங்களைச்‌ செய்து கொண்டு போந்தார்கள்‌

அநந்தரம்‌ –இஷ்வாஹூணாம்‌ குலதநம்‌’”’ என்னும்படியான-பெரிய பெருமாளும்‌ ஜீயர்‌ நாயனாருக்குக்‌ குலதநமான ஸ்ரீரங்கராஜரையும்‌ மடத்தையும்‌ நேக்கிக்‌ கொண்டு போருமென்று திரு வுள்‌ளமாய்‌, தீர்த்தம்‌, திருமாலை, திருப்பரியட்டம்‌, ஸ்ரீசடகோபன்‌ எல்லாம்‌ ஸாதித்து வாழ்வித்தருளினார்‌. இத்தைக் கண்டு ஜீயருடைய அபிமாநாந்தர்ப் பூதரெல்லாரும்‌ ஹர்‌ஷ ப்ரகர்ஷ யுக்தராய்‌ ஜீயர்‌ நாயனாரை பெரிய ஜீயரைக்‌ கண்டாப்‌ போலே கண்டு அநுவர்‌த்தித்து ஸேவித்துக்‌ கொண்டிருந்தார்கள்‌.

(இப்பொழுது மா முனிகளின் 27 தலைமுறை கோமடத்து வம்ஸர் இன்றும் மா முனிகள் மடம் பரிபாலனம் செய்து வருகிறார்)

ஜீயர்‌ நாயனார்‌ ஸ்ரீபாஷ்யம்‌,திருவாய்மொழி ஈடு பெறுதல்‌.
கந்தாடை யண்ணனும்‌ ஆசார்ய நியமனத்தின் படியே ஆசார்ய பெளந்ரரான ஜீயர்‌ நாயனாருக்குத் திருவாய்‌ மொழியினீட்டை ப்ரஸாதித்தருளினார்‌. அநந்தரம்‌ ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணாவும்‌ ஸ்வாசார்ய நியமனததின் படியே நாயனாருக்கும்‌ கத்தாடை நாயனுக்கும்‌ ஸ்ரீபாஷ்யம்‌ ஸாதித்தருளி,
ஸ்ரீமாந்‌ ஸுந்தர ஜாமாத்ரு முநி: பர்யாய பாஷ்ய க்ருத்‌ |
பாஷ்யம்‌ வ்யாகுருதே தஸ்ய ஸ்ரோத்ரு கோடெள மமாந்வய; ॥

[பாஷ்யகாரருடைய புநவரவதாரமான, கைங்கர்ய ஸ்ரீமானான மணவாள மாமுனிகளே ஸ்ரீபாஷ்யத்தை விளக்கிக்‌ கொண்‌டிருக்கிறார்‌. அந்த ஸ்ரீபாஷ்யத்தை அதிகரிப்பாருடைய கோஷ்‌டியிலே அடியேனுக்கு ஸம்பந்தமுள்ளது] என்று அதில்‌ தமக்குண்டான கர்த்ருத்வத்தையும்‌ கழித்துக்‌ கொண்டருளினார்‌,-பின்பு திருப்பதியே யிருப்பாக எழுந்தருளியிருந்த போளிப்‌பாக்கம்‌ போரேற்று நாயனார்‌ தொடக்கமானவர்களுக்கும்‌ ஸ்ரீபாஷ்யத்தை ப்ரஸாதித்தருளியும்‌, பட்டர் பிரான்‌ முனி பாத சேகராய்‌ தத்‌ வம்ஸ்யரான பர வஸ்து ஸ்ரீநிவாஸாசாரியருக்கும்‌ அவருக்கு ஸ ப்ரஹ்மசாரிகளான பரவஸ்து அழகிய மணவாள ஜீயருக்கும்‌, திருவாய்மொழி நாயனார்‌ என்று நிரூபகமாம்படி திருவாய் மொழியினீட்டை ப்ரஸாதித்தருளியும் , ப்ரதிவாதி பயங்‌ கர ரென்னும்‌ ப்ரஸித்தி தோற்ற ஸ்ரீராமாநுஜ ஸித்தாந்தத்தை ரக்ஷித்துப் போந்தார்‌,

வானமாமலை ஜீயர்‌ எழுந்தருளல்‌
அநந்தரம்‌ அழகிய வரதரான வானமாமலை ஜீயர்‌ வடதேசத்தினின்‌றும் எழுந்தருளி ஜீயர்‌ திருநாட்டுக் கெழுந்தருளின வருத்தாந்‌தத்தை பெரிய திருமலை யருகே கேட்டு மிகவும்‌ ப்ரலாபித்தருளி
திருமலை யேற வெழுந்தருளி அங்கே சிறிது காலம்‌ பாடாற்றிக்‌ கொண்டு எழுந்தருளி யிருந்து கைங்கர்யார்த்தமாகக்‌ கூட்டின த்ரவ்யங்களை யெல்லாம்‌ கொண்டு கோயிலேற வெழுந்தருளி மடத்‌திலே சென்று போர க்லேசித்து ஜீயர்‌ நாயனாரையும்‌ ஸேவித்து-உடனே வானமாமலை யேற வெழுந்தருளி, கைங்கர்யங்களை எல்‌லாம்‌ தலைக்கட்டி யருளி மீண்டு திருமலை யேற வெழுந்தருளி நடுவே எறும்பியிலே சிலநாளெழுந்தருளி யிருந்து சுத்த ஸத்வ மணணாவுக்கும்‌ போளிப்பாக்கம்‌ நாயனாருக்கும்‌ திருவாய்மொழயின்‌ ஈடு முதலாக பகவத் விஷயத்தை ப்ரஸாதிந்தருளி மீண்டு வான
மாமலை யேற வெழுந்தருளி தெய்வ நாயகன்‌ கைங்கர்ய ஸாம்ராஜ்‌யத்துடன்‌ வாழ்ந்து கொண்டிருந்தார்‌.

பட்டர்பிரான்‌ ஜீயர்‌ அந்திமோபாய நிஷ்டை அருளியது
பட்டர்பிரான்‌ ஜீயரும்‌ ‘வடமாமலைக்கதிபர்‌ பட்ட நாதமுனி’ என்கிறபடியே திருமலையிலே எழுந்தருளி யிருந்து அண்ணராய சக்ரவர்த்தி, நாயனார்‌, தோழப்பர்‌ தொடக்கமான அனேகாத்‌ மாக்களைத்‌ திருத்தி இந்தத் தரிசன ப்ரவர்த்கர்களாக்கி யருளி பர வஸ்து அண்ணரையும, பரவஸ்து அழகிய மணவாள ஜீயரையும்‌ ஸத் புத்ர ஸச் சிஷ்யர்களாச அபிமானித்து ஸத் ஸம்ப்ரதாய ப்ரவர்‌த்‌தகராம்படி திருத்தி யருளி அகிலாத்மாக்களும்‌ உஜ்ஜீவிக்கும்படி அந்திமோபாய நிஷ்டா க்ரேஸரர்‌ என்னுமது தோற்ற “அந்தி மோபாய நிஷ்டை” என்கிற சரம ரஹஸ்‌ய ப்ரபந்தத்தை யருளிச்‌ செய்து வாழ்வித்தருளியும்‌.

அந்திமோபாயநிஷ்டாயா வக்தா ஸெளம்ய வரோமுநி; ॥
லேககஸ்யாந்வயோ மே அத்ர லேகநீ தாள பத்ரவத்‌ ॥

[அந்திமோபாய நிஷ்டா எனுமிந்த க்ரந்தத்தை அருளிச்‌ செய்‌தவர்‌ மணவாளமாமுனிகள்‌ ஒலை போலவும்‌ எழுத்தாணி போலவும்‌ பட்டோலையில் இதை எழுதும் தொடர்பே அடியேனுக்‌ குள்ளது] என்றும்‌
எந்தை மணவாள யோகி யெனக்களித்த
அந்திமோபாய நிட்டையாமிதனைச்‌-சிந்தை செய்திங்‌
கெல்லாரும்‌ வாழ வெழுதி வைத்தேனிப் புவியில்‌
நல்லறி வொன்‌ றில்லாத நான்‌

என்று அதில்‌ தமக்கு கர்த்ருத்வ ராஹித்யத்தையும்‌ அருளிச் செய்து உபகரித் தருளினார்‌.

(ஐப்பசி மூலம் தாயார் மாலைப்பிரசாதம் முதல் ஐந்து நாள்களிலும் -பெருமாள் மாலைப் பிரசாதம் இறுதி ஐந்து நாள்களிலும் வரும்-விட்டவன் விழுக்காடு பகல் பத்து ஆறாம் நாள் பிரசாதமும் மா முனிகளுக்கு இன்றும் வரும்)

திருநாராயண புரத்தில்‌ திரு நந்தவன கைங்கர்யம்‌
ஆசார்ய பரதந்த்ரரான பட்டர் பிரான்‌ ஜீயர்‌ திருவடிகளிலே ஆச்ரயித்த தோழப்பரும்‌ அவர்‌ திருத் தமையனாரான அழகிய மணவாள தாஸ நானாரும்‌ ஜீயர்‌ நியமனத்தின் படியே அரங்கத்‌துறைவா ரநுமதியடனே திரு நாராயண புரத்திலெழுந்தருளி, எம்பெருமானாருக்கும்‌ செல்வப் பின்ளைக்கும்‌ திரு நாராயணப்‌ பெருமாளுக்கும்‌ திரு நந்தவனம்‌ தொடக்‌கமான எல்லா வடிமைகளும்‌ செய்து கொண்டு அங்கே அனேகரையும்‌ ஜீயரபிமானாந்தர்‌ பூதராம்படி திருத்தி ஸ்ரீசைலத்துற்கு மேற்கும்‌ ஸ்ரீசைலே தயா பாத்ரரின்‌ வைபவத்தை வர்த்திப்பித்துக்‌ கொண்டு எதிராஜர்‌ மடத்துக்குப்‌ பின்னடியிலே வாழ்ந்து கொண்டிருந்தார்‌. பின்பு அவர்கள்‌ ஸந்தான பரம்பரையிலுணடான ஐயன்‌ முதலானாரும்‌ அந்தக் கைங்கர்யங்களை அபிவ்ர்த்தமாக நடத்திக் கொண்டு போந்‌தார்களிறே.

எறும்பி யப்பாவின்‌ ஆர்த்தி
பின்பு அழகிய மணவாள தாஸரான எறும்பி யப்பாவும்‌ ஜீயர்‌ திருநாட்டுக்‌கெழுந்தருளிள செய்தியைக் கேட்டு
வரவர முநி பதிர் மே தத் பதயுகமேவ ஸரண மநுரூபம்‌ |
தஸ்யைவ சரண யுகளே பரி சரணம்‌ ப்ராப்யமிதி நநு ப்ராப்தம்‌ |

[மணவாளமாமுனிகளே அடியேனுக்கு ஸ்வாமி; அவருடைய திருவடித் தாமரைகளே பேற்றுக் கநுரூபாமன உபாயம்‌; அவருடைய திருவடித் தாமரைகளில்‌ கைங்கர்யமே உபேயம்‌ என்றே அடியேனால்‌ அடையப்பட்டது; இதுவே எனது அத்யவஸாயம்‌ என்கிற நிஷ்டை யுடையவராகையாலே ஆசார்ய விச்லேஷாஹிஷ்‌ணுவாய்‌ அவர்‌ விஷயத்திலே ஆர்த்தி மிகுந்து
வபுரபி, ஸபதிமதீயம்‌ வரவர முநிவர்ய; மோசநீயமிதம்‌ |
பரிசரதி நஹி பவந்தம்‌ பகவநிநஹி பகவதபிமதா நபிவா ॥
–கல்யாண குண பூர்ணரான மணவாள மாமுநிவரே’ அடியேனுடைய இவ்வுடலும தேவரீரால்‌ இப்போதே விடுவிக்கத் தக்கது -இதனால் தேவரீருககு கைங்கர்யம்‌ செய்யப்‌ பெற்றதில்லை-எம்பெருமானடியார்களான பாகவதர்கள்‌ விஷயததிலுமில்லை. –என்றும்‌
இதி புநரேஷு விதந்நபி துரி தரதிர்தூர நிம்ந பதரூட: |
வரவர முநி வர கருணாம்‌ நிக்நந்‌ பத ந்ருபசு ரஸ்நுதே நியமாந்‌ ॥
-இவன்‌ மனிதவுடல் படைத்த விலங்கினம்‌!” என்னுமபடி, அறிவிருந்தும்‌ பாப கார்யங்களில்‌ ஆசை யுடையவனாய்‌ மிகத்‌ தாழ்ந்ததான நிலையிலிழிந்து மணவாளமாமுனிகளுடைய க்ருபையை யழித்துக்‌ கெண்டு கர்ம பலன்களை அநுபவிக்கிறான்‌–என்றும்‌
ஆயுரபஹரதி ஜகதாமய முதயம்‌ விலயமபி பஜந்‌ பாநு. |
மயி புநரிதம ந்ரு ஸம்ஸோ வரவர முநி வர்ய வர்த்தயத் யேவ ॥
-மணவாள மாமுனிகளே! இந்த ஸூரியன்‌ உதயத்தையும்‌ அஸ்தமனத்தையும்‌ செய்து உலகங்களின்‌ ஆயுளை அபகரிக்கிறான்‌.-அடியேன்‌ விஷயததில்‌ மட்டும்‌ கொடியவனாய்‌ இந்த ஆயுளை வளரச் செய்கிறான்‌–என்றும்‌
ததித பரமநுரூபம்‌ ந விளம்பிதுமிதி சிந்தயந்தயயா |
மலபாஜநாதி தோமாம்‌ வரவரமுநி வர்ய மோசயத்வரிதம்‌
–ஆதலால்‌, மணவாள மாமுனிவரே-அடியேன்‌ விஷயத்தில்‌ இனி கால விளம்பம்‌ செய்யத் தக்கதன்று.-தயை யுடைய மனத்தினராய்‌ இவ்வழுக்குடம்பினின்றும்‌ அடியேனை விடுவித் தருள வேணும்‌- என்கிறபடியே தம்முடைய ஆர்த்தியை ஆவிஷ்கரித்து குணாநுபவைக தத் பரராய்‌ தத் ஸேவாபி நிவேசத்தை யுடையராய்‌ ஜீயரைப்‌ பிரிந்து ஸம்ஸாரத்திலிருக்கு மிருப்பு பிராட்டி பெருமாளைப் பிரிந்து ராவண பவநத்திலே தனிச் சிறை யிருந்தாப் போலே அதிதுஸ்ஸஹமாய்‌ பொய்ந்நின்‌ற ஞானமும்‌ பொல்லா வொழுக்கு மழுக்குடம்பும்‌ இந் நின்ற நீர்மை யினியா முறாமை என்றும்‌, கூவிக் கொள்ளுங்கால மின்னங்‌ குறுகாதோ?-என்றும்‌, ஆவிக்கோர்‌ பற்றுக் கொம்பு நின்னலா லறிகின்‌றிலேன்‌ யான்‌ என்றுஞ்‌ சொல்லுகிறபடியே பெற்றல்லது தரிக்க கில்லாத பேரார்த்தியை யுடையராய்‌ ஒருபகலாயிர மூழியாய்‌ அவர்‌ திரு
நாமந் தன்னையே பலகாலும்‌ வாய் வெருவிக் கொண்டு முன்னடி தோற்றாதே திகைத்து மதி மயங்கி உன்மத்தர் போல்‌ பித்தேறி என்னும்படி எழுந்தருளி யிருந்தார்‌,

ஸ்ரீ பாதத்து முதலிகள்‌ தந் நிஷ்டராய்‌ வாழ்ந்தது
இப்படி ஜீயர்‌ திருவடிகளிலாஸ்ரயித்த முதலிகளெல்லாரும்‌ஆசார்யாபிமான நிஷ்டராய்‌ -யதீந்த்ர ப்ரவணரான ஜீயர்‌ திருவடிகளே தஞ்சமென்றிருங்கோள்‌”’ என்று தந் தாம்‌ சிஷ்யர்களுக்கு
அருளிச் செய்து எல்லாரையும்‌ வரவரமுநி ப்ருத்யராக்க அவர்களும்‌
அபகதமத மாநை: அந்திமோபாயநிஷ்டைஃ
அதிகத பரமார்த்தை ரர்த்த காமாநபேக்ஷை: |
நிகில ஜுஸுஹ்ருத்பிர்‌ நிர் ஜிதக்ரோத லோபை :
வர வர முநி ப்ருத்யைரஸ்துமே நித்ய யோக: ॥

[செருக்கும்‌ நான்‌ சுதந்திரனென்னும்‌ அபிமான முமில்லாதவர்களும்‌, கருமம்‌ ஞானம்‌ பக்தி ப்ரபத்தி ஆசார்யாபிமானம்‌ என்பவற்றில்‌ ஐந்தாமுபாயமான ஆசார்யாபிமானத்தில்‌ ஊன்‌றியவர்களும்‌, புருஷார்த்தத்தின்‌ எல்லையான ஆசார்ய கைங்‌கர்யத்தை யடைந்தவர்களும்‌, செல்வத்திலும்‌ அதைக்‌ கொண்டு அனுபவிக்கும்‌ சிற்றின்பத்திலும்‌ ஆசை யற்றவர்களும்‌ பகைவரிடமும்‌ நல்ல மனமுடையவர்களும்‌ கோபத்தையும்‌ உலோபித் தனத்தையும்‌ வென்றவர்களுமாகிய மணவாளமா முனி சிஷ்யர்‌களுடன்‌ சேர்க்கை அடியேனுக்கு உண்டாக வேணும்‌] என்கிற படியே ஜீதாரிஷட் வர்க்கமாய்‌ த்ரணீ க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதிகளை யடையராய்‌ அதிகத பரமார்த்தராய்‌ அந்திமோபாய நிஷ்டராய்‌ ஆஸ்திகாக்‌ரேஸரராய்‌, இடைச் சுவர் தள்ளி இரண்டு விபூதியையு மொன்றாக்கிக்‌ கொண்டு எல்லாரும்‌ தத் நிஷஷ்டராய்‌ தத் ஸேவோத் ஸுகராய்‌ வாழ்ந்து கொண்டிருந்தார்கள்‌.
ஸ்ரீ ஸடாரி குரோர் திவ்ய ஸ்ரீபாதாப்‌ஜ மதுவ்ரதம்‌ |
ஸ்ரீமத்‌ யதீந்த்ர ப்ரவணம்‌ ஸ்ரீலோகார்ய முநிம்‌ பஜே ॥

இப்புவியில ரங்கேசர்க்‌ கீடளித்தான்‌ வாழியே
எழில்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை இணை யடியோன்‌ வாழியே
ஐப்பசியில்‌ திருமூலத் தவதரித்தான்‌ வாழியே
அரவரசப்‌ பெருஞ்சோதி அநந்தனென்றும்‌ வாழியே
எப்புவியும்‌ ஸ்ரீ சைலமேத்த வந்தோன்‌ வாழியே
ஏராருமெதிராசரென வுதித்தான்‌ வாழியே
முப்புரிநூல்‌ மணி வடமும்‌ முக்கோல் தரித்தான்‌ வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன்‌ வாழியே

செந்தமிழ்‌ வேதியர்‌ சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்‌
சீருலகாரியர்‌ செய்தருள்‌ நற்கலை தேசு பொலிந்திடுகாள்‌
மந்த மதிப்புவி மானிடர்‌ தங்களை வானிலுயர்த்திடு நாள்‌
மாசறு ஞானியர்சேரெதிராசர் தம்‌ வாழ்வு முளைத்திடு நாள்‌
கந்தமலர் பொழில் சூழ்‌ குருகாதிபன் கலைகள் விஎங்கிடு நாள்‌
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள்‌ களித்திடு நாள்‌
அந்தமில் சீர் மணவாளமுனிப் பரன்‌ அவதாரம்‌ செய்திடு நாள்‌
அழகு திகழ்ந்திடும்‌ ஐப்பசியில்‌ திரு மூலமதெனும்‌ நாளே.

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே |
ஸ்ரீரங்க வாஸிநே பூயாத்‌ நித்யஸ்ரீர் நித்ய மங்களம்‌ ॥

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-3–

May 17, 2026

ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

(மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)

ஜீயர்‌ நாயனார்‌ திரு வவதாரம்‌.
இப்படி ஸம்பந்த ஸம்பந்திகளும்‌ உத்தாரகராம்படி வைபவமுடைய ஜீயர்‌ தர்சநம்‌ நிர்வஹிக்கிற காலத்திலே ஜீயருடைய பூர்வாஸ்ரமத்தில்‌ குமாரரான நம்மையனிராமானுசன்‌ திருநகரியிலே வளர்ந்தருளி அங்கே திருக்கல்யாணஞ்‌ செய்தருளி சில காலத்‌துக்கு மேல்‌ அவருக்குக்‌ குமாரர்‌ திருவவதரிக்க, அவருக்கு – அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌?’ என்று ஜீயர்‌ திருநாமம்‌ சாத்தி
யருளினார்‌.
பின்பு அவர்‌ ஸ்ரீவில்லிபுத்தூரிலே யெழுந்தருளியிருக்க பின்னுமொரு குமாரர்‌ திருவவதரிக்க, அவருக்குத்‌ திருநாமமேதென்று ஜீயர்‌ ஸந்நிதியிலே கேட்டு வரக் காட்ட, ஸ்ரீவில்லிபுத்‌தூரிலே பிறந்த பிள்ளைக்கு பெயரேதென்று கேட்டு வர விடுவதென்‌! பெரியாழ்வார்‌ திருநாமம்‌ சாத்துங்கோள்‌” என்று அருளிச்‌செய்து போகவிட, அப்படியே ‘பெரியாழ்வாரையன்‌”” என்று திருதாமஞ்‌ சாத்தி யருளினார்‌. அவர்களும்‌ வளர்ந்து உபநீதநான பின்பு ஜீயர்‌ திருவடிகளிலே வந்தாஸ்ரயித்தார்கள்‌. அவ்விருவரும் அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌ ஜீயர்‌ திருவடிகளைப் பிரியாது ஆட்செய்து ஸேவித்திருந்தார்‌. ஸ்ரீபாதத்து முதலிகளெல்‌லாரும்‌ ஸ்வ புத்ரர்களுக்கு நாயனார்‌ என்று திரு நாமம்‌ சாத்துகையாலே இவருக்கும்‌ *’ஜீயர்‌ நாயனார்‌” என்றே நிரூபகமாயிருக்கும்‌. இவரும்‌ ‘ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு ஆளவந்தாரைப்‌ போலே தமக்குப்‌ பெளத்ரரான இவரை தர்சந ப்ரவர்த்தகாரம்படி விசேஷ கடாக்ஷம்‌ செய்தருளினார்‌. ஆசார்ய பெளத்ரரான அவரும்‌ தீபாதுத்பந்ந ப்ரதீபம்‌ போலே மிகவும்‌ ப்ரகாச மாநராயிருத்தார்‌.-இத்தைக்‌ கொண்டு ஸ்ரீபாதத்து முதலிகள்‌ அஸ்மாஸு வத்ஸல தயா க்ருபயாச பூய:
ஸ்வச்சாவதீர்ணமிவ ஸெளம்ய வரம்‌ மூநீந்த்ரம்‌
ஆசார்ய பெளத்ர மபிராமவராபிதாநம்‌
அஸ்மத் குரும்‌ குணநிதிம்‌ ஸததம்‌ ஸ்ரயாம: ॥

நம்மிடம்‌ வாத்ஸல்யத்தாலும்‌ பரம க்ருபையாலும்‌ தமதிச்சையாலே மணவாளமாமுனிகள்‌ மீண்டுமவதரித்தாரோ என்னலாம்‌படி யுள்ளவரும்‌ நற் குணங்களுக்கு நிதி போல விருப்பிடமும்‌,
ஆசாரியர்‌ திருப் பேரனாரும்‌, அபிராமவரர்‌ (அழகிய மணவாளர்‌) என்ற திருநாம முடையவருமான ஜீயர்‌ நாயனாரான அஸ்மதசார்‌யரை எப்போதும்‌ அடி பணிகிறேன்- என்று அநுஸந்தித்துப்‌
போந்தார்கள்‌.

ஜீயர்‌ ஆழ்வார்‌ திருநகரி யேற எழுந்தருளுதல்‌
அநந்தரம்‌ -எமரேழெழு பிறப்பும்‌ கேசவன்‌ தமரானார்கள்‌ என்‌னும்படி ஆழ்வாரபிமாநாந்தர்ப் பூதரில்‌ அக்ர கண்யரான ஜீயரும்‌-பகவந்‌ பவதுத்பவஸ்தலீ பவது ஸ்ரீநகரீகரீயஸீ” –கல்யாண குண பரி பூர்ணரே! தேவரீருடைய அவதார ஸ்தலமான திருகரியானது எல்லா விடங்களிலும்‌ உயர்ந்து விளங்கட்டும்‌–என்று சொல்லுகிற படியே, ஜீயர்‌ தமக்குப்‌ பிறந்தகமான ஆழ்வார்‌ திருநகரியிலே சென்று ஆழ்வாரைத்‌ திருவடி தொழ வேணுமென்று திருவுள்ளமாய்‌, குருகூர்நம்பி! முயல்கின்றேனுன் தன்‌ மொய் கழற்கன்‌பயே -என்றபடியே உத்ஸாஹத்தை யுடையராய்‌, நம்பெருமாளை ஸேவித்து அநுமதி கொண்டு நம்மாழ்வாரை ஸேவிக்கப்‌ புறப் பட்டருளி அரங்கத்‌ துறையுமின் துணைவனே வழித் துணையாக எழுந்தருளி, திருவாய்மொழிப் பிள்ளை திருவவதார ஸ்தலமான குந்தீ நகரத்திலே த்ரிராத்ர மெழுந்தருளி யிருந்து,

சித்தந் திருமால் மேல்‌ வைத்தருளும்‌ சீர் மன்னர்‌
நத்தமிது காணு நாந் தொழில்‌–முத்தராய்ப்‌
போனாரே யாகிலும்‌ பூங் கமலத்தாள்‌ கடனைத்‌
தாமார வைத்தார்‌ தலம்‌-
என்றநுஸந்தித்து, ஸேவித்துப்‌ புறப்பட்டருளி,
யாநி யாநிச திவ்யாநி தேஸே தேஸே ஜகந்திதே: |
தாநிதாநி ஸமஸ்தாநி ஸ்த்தாநாநி ஸமஸேவத ॥

அவ்வோ இடங்களில்‌ எம்பெருமானுக்கு எந்தெந்த உகந் தருளின திவ்ய தேசங்கள்‌ உண்டோ அந்தந்த ஸ்தலங்கள்‌ எல்லாவற்‌றையும்‌ திருவடி தொழுதார்‌–என்றும்‌ தானுகந்த வூரெல்லாம்‌ தன் தாள் பாடி -என்றுஞ் சொல்லுகிறபடியே வழியிலுண்டான திருப்‌பதிகளை யெல்லாம்‌ திருவடி தொழுது அவ்வவ் விடங்களிலே தத் ஸ்தலோசிதமான மங்களசாஸநங்களைப்‌ பண்ணி ஸேலித்தருளி,
வைகுண்டநாத விஜாயஸந பூமி பாலாந்‌ தேவேஸ பங்கஜ விலோசந சோர நாட்யாந் |
நிக்ஷிப்த வித்த மகராலய கர்ண பாஸாந் நாதம்‌ நமாமி வகுளாபரணேந ஸார்த்தம்‌ ॥

ஸ்ரீவைகுண்டநாதன்‌, விஜயாஸநர்‌, பூமிபாலர்‌ தேவபிரான்‌,(புளிங்குடி ) ‘ அரவிந்த லோசநர்‌ (துலை வில்லி மங்கலம்‌), சோரநாட்‌யர்‌ (மாயக் கூத்தர்‌), வைத்த மா நிதி, மகர நெடுங் குழைக் காதர்‌, வகுளாபரணரான ஆழ்வாருடன்‌ ஆதி நாதரையும்‌ திருவடி தொழுகிறேன்‌- என்கிறபடியே அஷ்ட தளம்‌ போலவே யிருக்கிற ஸ்ரீவைகுண்டம் முதலான திருப்பதிகளை ஸேவித்து, தத் கர்ணிகை போலிருந்துள்ள திருநகரியை திருக் குருகூரதனைப் பாடி யாடிப்‌ பரவிச்‌ சென்மின்கள்‌ என்று அத்யந்தம்‌ ஹர்ஷ ப்ரஹர்ஷத்துடன்‌ சென்று கிட்டி திருத் தாமிரபரணிச்‌ சங்கணித்‌ துறையிலே நீராடி–கேசவன்‌ தமரில்படியே திரு த்வாதச நாமங்களையும்‌ சாத்தி யருளித் தாமும்‌ முதலிகளுமாக குயில் நின்றார்‌ பொழில்களையும்‌, செந்தாமரைத்‌ தடங்களையும்‌, அதிலே அறு கால வரி வண்டிசை பாட-அன்னமென்‌ கமலத் தணி மலர்ப் பீடத்து அலை புனலிலைக் குடை நீழல்‌ செந் நெல் ஓண்‌ கவரி யசைய வீற்றிருக்கும்‌ (திருமொழி 9-1-5) படியையும்‌ செம் பொன்‌ மாடங்களையும்‌, உயர்ந்த திருமாளிகைகளையும்‌ சிரங்களாலமரர்‌ வணங்கும்‌ திருக்குருகூர்‌ என்ற ஊரையும்‌ அனுபவித்து

புக்ககத்தினின்‌றும்‌ பிறந்தகத்தில்‌ போந்தது போல்‌
தக்க புகழ்த் தென்னரங்கந் தன்னினின்றும்‌–மிக்க புகழ்‌
மாறன்‌ திருநகரி வந்தோம்‌ அரங்கன்‌ தன்‌
பேறன்றோ? நெஞ்சே! இப்போது–

என்றநுஸந்தித்துக்‌ கொண்டு எழுந்தருளி யிருக்கிற வளவிலே-நல்லார்‌ பலர் வாழ்‌ திருக்குருகூரிலுண்டான ஸத்துக்களெல்‌லாரும்‌ குழாங்‌ குழாமாக வந்து திருவடிகளிலே ஸேலிக்க, அவர்‌களையும்‌ கிருபை பண்‌ணி யருளி, அவர்களுடனே கூட வெழுந்தருளி,
பிரதமம்‌ எம்பெருமானாரை ஸ்ரீமாதவாங்கரி என்று தொடங்கி,
ராமாநுஜம்‌ யதிபதிம்‌ ப்ரணமாமி மூர்த்நா*(யதிராஜ விம்சதி-1) என்று ஸேவித்தருளி,
அதி ப்ரீதியடனே தீர்த்தம்‌ ப்ரஸாதப்பட்டு, அங்கு நின்றும்‌ புறப்பட்டு, பிள்ளை (திருவாய்மொழிப்‌பிள்ளை ) திருமாளிகை யேற வெழுந்தருளி தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளே புகுந்து இன வாயர்‌ தலைவனையும்‌ மங்களாசாஸநஞ்‌ செய்தருளி,-நம: ஸ்ரீஸைல நாதாய என்றநுஸந்தித்து, பிள்ளை எழுந்தருளி யிருந்து வ்யாக்யானஞ்‌ செய்தருளின ஸ்தலத்தையும்‌ ”தம்மை விஷயீகரித்த இடமன்றோ!” என்று ஸேவித்து, அங்கு நின்றும்‌ புறப்பட்டு,குன்‌றம் போல்‌ மணி மாடங்களையும்‌ “செம் பொன்‌ மாடங்களையும்‌ ஸேவித்துக்‌ கொண்டு போய்‌ உபய ப்ரதாந ப்ரணவமான உறை கோயிலிலே புக்கு, ‘வகுளாபரணம்‌ தேவம்‌ ஸ்வ குலாபரணம்‌ யயெள” -தமது குலத்துக்கு பூஷணமான பூஜ்யரான நம்மாழ்‌வாரைக்‌ கிட்டினார்‌-ஆஸ்ரயித்தார் – என்கிறபடியே முந்துற நாட் கமழ்‌ மகிழ் மாலை மார்பனான ஆழ்வார்‌ திருவடிகளைச்‌ சென்று கிட்டி, மாதா பிதா என்று தொடங்கி -வகுளாபிராமம்‌ ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம்‌ ப்ரணமாமி மூர்த்நா என்றநுஸந்தித்து ஸேவித்தருளி, கண்ணி நுண் சிறுத் தாம்பை யநுஸந்தித்து, அன்னையாய் யத்தனாய்‌ என்கிற பாட்டின் படியே ஸர்‌வ வித பந்து விசேஷங்களெல்லாம்‌ தமக்கு ஆழ்வாரே யென்று தோற்றும்படி அதி ப்ரேமத்துடனே அநுபலித்துக்‌ கொண்டு அஞ்ஜலித்து நிற்க, ஆழ்வாரும்‌ தேசாந்தர கதனான புத்ரனைக் கண்ட மாதா பிதாக்களைப்‌ போலே காரி மாறப் பிரானார்‌ தாம்‌. இவரைக்‌ கண்டு கொண்டிருந்து , பின்பு தீர்த்த ப்ரஸாதங்களையும்‌ ப்ரஸாதித்து ஸ்ரீராமாநுஜனையும்‌ ப்ரஸாதித்தருள. *செல்வச் சடகோபர்‌ தே மலர்த் தாட்‌ தேய்த்தினிய –பாதுகமா மெந்தை யிராமானுசனை வாய்ந்தெனது நெஞ்சமே வாழ்‌” என்றும்‌, “வகுளாலங்க்ருதம்‌ ஸ்ரீமச் சடகோபத் த்வயம்‌. அஸ்மத் குல தநம்‌ போக்யமஸ்துமே மூர்த்நி பூஷணம் ‘-மகிழ மலர்‌ மாலையால லங்கரிக்கப்பட்ட செல்வச்‌ சடகோபரின்‌ (ஆழ்வாரின்‌) இனிய திருவடியிணை அடியேனுக்கு சிரோ பூஷணமாய்‌ அமையட்டும்‌ என்று மநுஸந்தித்து ஹ்ருஷ்டராய்‌, அநந்‌தரம்‌ திரி தந்தாகிலும்‌ தேவ பிரானுடைக்‌ கரிய கோலத் திரு வுருக்‌ காண்பன்‌ நான்‌ என்கிறபடியே அவருகந்த விஷயமான பொலிந்து நின்ற பிரானையும்‌ மங்களாசாஸனம்‌ பண்ணிப்‌ புறப்பட்டருளி மடமே யெழுந்தருளி அங்கே சிறிது காலம்‌ எழுந்தருளி யிருந்தார்‌

அங்குண்டானவர்களெல்லாம்‌ இவரை அவதார விசேஷ மென்றறிந்து இவர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்தார்கள்‌. அவர்களை க்ருபை பணணி யருளி மாஹப்ரபாவரா யெழுந்தருளி யிருக்கிற காலத்திலே
சுருதித் தமிழ் மொழியுஞ்‌ சடகோபர் தம்‌ பாதத்தைக்‌
கருதிப்‌ பரவு மெதிராசராசன்‌ கவியமுதம்‌
வருதிக் கறிந்துரை செய்யுமோ மா முனிவன்‌ புகழ் போய்ப்‌
பருதிக் கதிர்‌ செல்லு மண்டலமேறப்‌ பரந்ததுவே

என்னும்‌ படியான இவர்‌ வைபவங்களெல்லா வற்றையும்‌ அறிந்து இருக்கிறவர்களுக்கு ஆழ்வார்களின்‌ திவ்ய ப்ரபந்தங்களின்‌ அர்த்த மருளிச்‌ செய்து கொண்டிருக்குங் காலத்திலே;

திருநாராயணாபுரத் தாயி யுடன்‌ ஸமாகமம்‌
ஆசார்ய ஹ்ருதயத்திற்குப்‌ பொருள்‌ அருளிச்‌ செய்யும் போது ‘ஜ்ஞாந சதுர்த்திகளின்‌ மேலே யிறே ஆநந்த ஷஷ்டிக் குதயம்‌।” என்கிற வாக்கியத்திற்கு அர்த்தம்‌ ஸ்வ ரஸமாக வாகாமையாலே இதற்கு அர்த்த மருளிச்‌ செய்வாராரென்று விசாரமுண்டால்‌ திரு நாராயண புரத்தாயி பக்கலிலே இவ் வர்த்தம்‌ கேட்க வேணும்‌ என்னும்‌ பேராசையோடே ஆழ்வாருக்கு விண்ணப்பஞ்‌ செய்து அவரநுமதி கொண்டு திருநாராயண புரத்துக்குப்‌ போவோ மென்று புறப்பட்டெழுந் தருளா நிற்க, ஆயியும்‌ ஜீயருடைய ப்ரபாவங்‌ கேட்டு இவரை ஸேவிப்பதாகத்‌ திருநகரிக்கு ஆஸந்தமாக, மார்க்க மத்யே வந்து ஸங்கதராக, அவரைக்‌ கண்டு எண்‌ணின பலம்‌ எதிரிலே வரப் பெறுவதே” என்று பெரிய ப்ரீதியோடே தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி நிற்க, ஆயியும்‌ தாளுந் தடக் கையுங்‌ கூப்பி ஸேவிக்க, இருவரும்‌ அந்யோந்யம்‌ வந்தந பரராய்‌ குசல ப்ரஸநம்‌ பண்ணி நிற்க, இத்தைக்‌ கண்டு ஜீயர்‌ ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும்‌ ‘பெரிய நம்பியும்‌ எம்பெருமானாரும்‌ எதிர்ப்பட்டாப்‌ போலே யாயிற்று” என்று மிகவும்‌ உகந்தருளினார்கள்‌. அநந்தரம்‌ குன்‌ற மாட திருக் குருகூரேற வெழுந்தருளி ஆயி பக்கலிலே ஆசார்ய ஹ்ருதய ரஹஸ்யார்த்தங்களை யெல்லாம்‌ கேட்டருளி,
ஆசார்ய ஹ்ருதயஸ் யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: |
ஸ்ரீஸாநுதாஸ மமலம்‌ , தேவ ராஜம்‌ தமாஸ்ரயே ॥

[எவரால்‌ ஆசார்ய ஹிருதயத்தின்‌ எல்லா வர்த்தங்களும்‌ விளக்கமாகக்‌ காட்டப்பட்டதோ, தோஷமற்ற திருத் தாழ்வரை தாஸர்‌ என்ற அந்த தேவ ராஜரை (ஆயியை) அடி பணிகிறேன்‌ -என்று (ஸ்ரீ ஸாநு தாஸம்‌ என்று தெலுங்குப்‌ பதிப்பில்‌ பாடம்‌-ஆயிஸ்வாமிக்கு திருத்தாழ்வரை, தாஸர்‌ என்று திருநாமமுள்ளபடியால்‌ [௨. ர. மாலை 58ம்‌ பாசுர வ்யாக்யாநம்‌ காண்க ] ஸ்ரீஸாநு தாஸர்‌ என்ற பாடமே ஆதரணீயம்‌, ஸாநு-தாழ்வரை. –கிரிஸாது ஷுரம்ஸ்யஸே-அஹாம்‌ ஸர்வம் கரிஷ்யாமி*‘ எ்ன்‌று இளைய பெருமாள்‌ திருத் தாழ்வரை தாஸரானார்‌. )அந்த உபகார ஸ்ம்ருதிக்கு அவர் விஷயமாக ஒரு தனியன் அருளிச்‌ செய்தருள; ஆயி அதில்‌ தமக்கந்வய மற்றபடி தோற்ற,
பூதூரில்‌ வந்துதித்த புண்ணியனோ? பூங் கமழும்‌
தாதரு மகிழ் மார்பள்‌ தானிவனோ–தூதூர
வந்த நெடுமாலோ? மணவாள மா முனிவன்‌
எந்தை யிவர்‌ மூவரிலும்‌ யார்‌?

என்றருளிச்‌ செய்து ‘ஜீயரை அவதார விசேஷமென்று ஆதரித்துக்‌ கொண்டு அங்கே சில கால மெழுந்தருளி இருக்க; அதுவே ஹேதுவாக, ‘ஆயி திருநாட்டுக்‌ கெழுந்தருளினார்‌’ என்று திரு நாராயண புரத்திலுளள அஸுயாளுக்கள்‌ அவர்‌ திருமாளிகையிலுள்ள ஸர்வஸ்வத்தையும்‌ செல்வப் பிள்ளை அங்கீ கரித்தருளும்படி ஸ்ரீபண்டாரத்தில்‌ சேர்க்க அக் காலத்திலே ஆயிவும்‌ மீண்டும்‌ திருநாராயண புரத்தேற எழுந்தருளி இச் செய்‌தியைக்‌ கேட்டு ஹ்ருஷ்டராய்‌ “யஸ்யாநுக்ரஹ மிச்சாமி தஸ்ய வித்தம்‌ ஹராம்யஹம்‌’” -நான்‌ எவன்‌ விஷயத்தில்‌ அநுக்ரஹம்‌ பண்ண விரும்புகிறேனோ அவன்‌ தனத்தை அபஹரிக்கிறேன்‌-என்னுந்‌ திருமுகப்படியே ப்ரத்யக்ஷமாகச்‌ செல்வப் பிள்ளை இத்‌தைக் கொண்டருளிய பின்பு நாம்‌ இரக்கத்துக்கு விஷயமென்பது கிம் புநர் ந்யாய ஸித்தமிறே, ”யஸ்யைதே தஸ்ய தத் தநம்‌-. உடையவன்‌ உடைமையை ஸ்வீகரிக்கை ப்ராப்தமிறே” என்று ஈடுபட்டு
ஆநந்தாஸ்ருக்கள்‌ பனிப்ப எழுந்தருளி ஆசார்ய க்ருபா லப்தரான ஞானப் பிரான்‌ ஒருவரையுமே அர்த்தித்துப்‌ பெற்று மற்றவைகளை யெல்லாம்‌ அங்குத்தைக்கு ஸமர்ப்பித்து யாதவ கிரி நிலயனுக்கு மால்ய சமர்ப்பணைக நிஷ்டராய்‌ அங்கே ப்ரீதராய்‌ எழுந்தருளி யிருந்தார்‌.

அநந்தரம்‌ திருநகரியிலே பெரிய ஜீயரும்‌,
மாதவத்தோர்‌ வாழ்த்தும்‌ முடும்பை மணவாளன்‌
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார்‌–தீதற்ற
ஆசாரிய விதயம்‌ பெற்றார்‌ நம்மாயி யிவர்‌
தேசாரத்தன் கண்‌ நெஞ்சே காண்‌
-என்று ஆசார்ய ஹ்ருதய ஸம்ப்ரதாயத்தைத் தாமநுஸந்தித்தருள-அப்படியே முதலிகளும்‌
மாதவத்‌ தோன்‌ மாறன் மனம்‌ கூறும் மணவாளன்‌
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார்‌- நீதியினால்‌
ஆங்கவர் தாள்‌ சேரப் பெற்றாராயி மணவாள முநி
பூங்கமலத் தாள்கள்‌ நெஞ்சே! போற்று.
என்றநுஸந்தித்தார்கள்‌.

திருநகரியில்‌ ஜீயர் மடம்‌ தீக்கிறையாதல்‌.
இப்படி பெரிய ஜீயர்‌ ஜ்ஞாந ஸம்ருத்தியுடனே திருநகரியிலே வாழ்ந்தருளுங் காலத்திலே, இத்தைக் கண்டு ஸஹிக்க மாட்டாதசில அஸுயாளுக்கள்‌ ஆஸூர ப்ரக்ருதிகளாய்‌ மஹா பாபிகளாய்க்‌ கொண்டு கூரை மேய்ச்சலா யிருக்கிற மடத்திலே ஜீயர்‌ எழுந்தருளி யிருக்க,அர்த்தராத்ரியிலே அக்நி ப்ரஷேபணம்‌ பண்ண, அத் தசையிலே ஜீயர்‌ தம்முடைய ப்ரபாவத்தாலே அவ் வழல் தட்டாதபடி சேஷாக்ருதியாய்க்‌ கொண்டு அனைவருங் காணப் புறப்பட்டு; மடம்‌ வேகிறபடியைக் கண்டு விஷண்ணராய்‌ சோகார்த்தரா யிருக்கிற முதலிகள் திரளிலே வந்து புகுந்து நிற்க, இந்த அத்புதத்தைக்‌ கண்ட முதலிகளெல்லாருங் கண்டு மிகவும்‌ ஸந்துஷ்டராயிருத்‌தார்கள்‌,இந்தச்‌ செய்தியை அந்த தேசாதிபதியான ராஜா கேட்டு ப்ரச்சந்ந சாரிகளான அவர்களைக்‌ கண்டு பிடித்து தண்டிக்கத் தேட ஸாபராதைகளான ஏகாக்ஷி ஏககரணி தொடக்கமானவர்களையுமுட்பட திருவடியோடே மறுதலித்து, :’பாபாநாம்‌ வா சுபாதாம்‌ வா ”, ‘*த்ராஹி த்ராஹி’‘ இத்யாதிப்படி ரக்ஷித்த ஜநக குல ஸூந்தரியைப் போலே ஸுந்தர வர முநியான இவரும்‌, தேவீ லஷ்மீர்ப்‌ பவஸி தயயா வத்ஸலத்வேந சத்வம்‌” [தயையாலும்‌ வத்ஸல்யத்‌தாலும் தேவரீர்‌ லக்ஷ்மீ தேவியாகிறீர்‌– வர. சத்கம்‌-14], என்னும்‌படியான தம்முடைய பரம க்ருபையாலும்‌ வாத்ஸல்யத்தாலும்‌ அவர்களையும்‌ அப்படியே ரக்ஷித்தருளினார்‌. பின்பு அநேக காலத்‌திற்கு மேல்‌ அவர்கள்‌ ஸாந்தா நிகரா யுள்ளவர்கள்‌ கருணாம்ருத ஸிந்துவான காந்தோ பயந்த்ரு முநிவர்ய கமநீய சரண கமலங்களை வந்தாஸ்ரயித்து அபராத ஷாமணம்‌ பண்ணிக் கொண்டார்கள்‌.

திருக் குருகூரிலும்‌ திருக் குறுங்குடியிலும்‌ கைங்கர்யங்கள்‌
அநந்தரம்‌ அத் தேசத்துக்கு அதிபதியா யிருப்பானொருவன்‌ ஜீயருடைய ஜ்ஞாநாநுஷ்டான பூர்த்தியையும்‌ ஸர்வஜ்ஞத்வாதி களையுங் கண்டு அத்யந்தம்‌ ப்ரவணனாய்த்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க அவனுக்கு சடகோப தாஸர்‌ என்று தாஸ்ய நாமம்‌ ப்ரஸாதித்‌தருளி, அவனைக் குறித்து அத்ருஷ்டத்திலே முக்காற் கூறு ருசியும்‌ – அத்ருஷ்டாநுகுணமான த்ருஷ்டத்திலே காற் கூறு ருசியும பண்ணிக் கொண்டு போரும்‌” என்று நியமித்தருள அவனும்‌ அபப்டியே செய்து கொண்டு வர்த்தித்து, காளமேகன்‌ திரு மண்டபம்‌ தொடங்கித்‌ திரு வீதிகள்‌, திரு மதிள்கள்‌, திரு வெல்லைகள்‌ முதலான அனேக கைங்கர்யங்களை ஆழ்வாருகந்தருளும்படி பண்ணி அழகிய மணவாளன்‌ திரு மண்டபத்தையும்‌ உண்டாக்கினான்‌.

அநந்தரம்‌ ஜீயர்‌ திருக் குறுங்குடியிலே சென்று அங்கே திரு வேங்கடமுடையான்‌ என்றொரு ப்ராஹ்மணனை க்ருபை பண்ணி யருளி அவருக்குத்‌ திருவேங்கட தாஸர்‌ என்று தாஸ்ய நாமம்‌ ப்ரஸாதித்தருளி அவருக்குத்‌ திருக் குறுங்குடியில்‌ கைங்கர்யத்தை என்று நியமித்தருள–ஸ்ரீ வாரஹ புராண ப்ரஸித்தமான -அவர்‌ நின்ற நம்பி இருந்த நம்‌பி, கிடந்த நம்பி ப்ரஸித்தமான நம்பிகள் மூவருக்கும்‌ (திருப்பாற்கடல்‌ நம்பி, மலை மேல்‌ நம்பி என்று நம்பிகள் ஐவர்க்கும்‌ ) தனித் தனியே திரு விருப்புகளையும்‌ திரு மண்டங்களையு முண்டாக்கி ஸேவித்துக்‌ கொண்டிருந்தார்‌ இப்படி திருக் குருகூர்‌ நம்பிக்கும்‌ திருக் குறுங்குடி நம்பிக்கும்‌ அனைத்தழகும்‌ கண்டருளப்‌ பண்ணி, மற்றும்‌ அத் தேசத்திலுண்டான திருப்பதிகளுக்கெல்லாம்‌ அதிசயத்தை யுண்டு பண்ணத் தக்க ஆஸ்ரிதரையும்‌ கற்பித்தருளி, பின்பு,

ஜீயர்‌ மீண்டும்‌ கோயிலே எழுத்தருளல்‌
பிறந்தகத்திற்‌ சீராட்டுப்‌ பெற்றாலும்‌ தன்னைச்‌ –
சிறந்துகக்கும்‌ சீர் கணவன்‌ தன்னை-மறந்திருக்கப்‌
போமோ மணவாளர்‌ பொன்னடியை விட்டிருக்க
லாமோ கல்வி யறிந்தால்‌,

என்றநுஸந்தித்து அப்போதே ஆழ்வாரநுமதி கொண்டு கோயிலேறப்‌ புறப்படெழுந்தருளி பெருமாளை ஸேவித்துக்‌ கொண்டு இதர மத நிரஸந பூர்வகமாக ஸ்வமத ஸ்த்தாபநம்‌ பண்ணிக்‌ கொண்டு சேஷாவதார மென்னுமது தோற்ற பெரிய பெருமாள்‌ பரிஸரத்திலே ஸுகமே வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்திலே அப்பிள்ளா ரென்றொரு வித்வான்‌ வாதிகளை ஜயிக்கப் போய்‌ வடதேசத்தி லுள்ளாரை ஜயித்து எறும்பியில்‌ அப்பாவுடனே தர்க்‌கிக்க வேணுமென்று புக, அப்பாவுடைய ப்ரபாவத்தைக்‌ கண்டு வித்தராய்‌ அவரை யநுவர்த்தித்துக்‌ கொண்டு மூன்று நாளிருந்து ஜ்ஜாதவ்யாம்சங்களைக்‌ கேட்டறிந்து, அனுப்புவித்துக்‌ கொண்டு புறப்பட, வழிவிட வெழுந்தருளின அப்பாவும்‌ இப்பால்‌ நீர்‌ இனி எங்குப்‌ போக வேண்டுவது?” என்று கேட்க, ஸ்ரீரங்க ஸ்தலத்திலே ஜீயரென்றொருவர்‌ ப்ரஸித்தரா யிருக்கிறார்‌; அவரைக் கண்டு வாதிக்க வேணும்‌.’” என்ன, அப்பாவும்‌ அத்தைக் கேட்டு இவருக்கு ஹிதமாய்‌ ”நீரிப்படி செய்ய வொண்ணாது; ஜீயருடைய ப்ரபாவம்‌ நானறிவேன்‌; பெருமாள்‌ கோயிலிலே கிடாம்பி நாயனார்‌ பாடே ஸ்ரீபாஷ்யம்‌ ஸ்ரவித்தார்‌; நாயனாரும்‌ (கிடாம்பி நாயனார்‌ பாடே பாஷ்யம்‌ கேட்ட போது சிந்தனை பண்ணுவித்தவர்‌ திருநாமம்‌ ஐயைகளப்பா (பக்‌. 81) என்றுள்ளது. இங்குள்ளது மேல்‌ வரும்‌ விருத்தாந்தத்‌துடன்‌ சேரவில்லை: )நம்மை அவருடனே சிந்தனைக் கிருக்கச்‌ சொல்ல இருந்தேன்‌; அவர்‌ ஸகலார்த்தங்களையும்‌ யுகபத்‌ ஸாக்ஷாத்கரித்து உபந்யஸிப்பர்‌; அவருடனே வாதிக்க ஒருவர்க்கும்‌ க்ஷமமன்று; அதுக்கு மேலே அவர்‌ யதீஸ்வரர்‌, ஸ்ரீவைஷ்ணவ தர்சநத்திற்கு அபி வ்ருத்திரர்‌, அவரிடத்திலே நமக்கெல்லாம்‌ ப்ரதி பத்தி க்ரமம்‌ வேறே இருக்கிறது, ஸமய ப்ராப்தே சொல்‌லுகிறேன்‌”என்றருளிச்‌ செய்து அனுப்பி யருளி மீண்டும்‌ எறும்பியிலே எழுந்தருளினார்‌.

எறும்பியப்பா ஜீயரிடம்‌ ஆஸ்ரயித்தல்‌
அநந்தரம்‌ ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கோயிலினின்றும்‌ திருமலைக்கு எழுந்தருளுவதாக எறும்‌பியிலே வர, அப்பா கண்டு அவரை யழைத்‌தருளி ஆதரித்து, கோயில்‌ விருத்தாந்தங்களையும்‌ ஜீயருடைய விருத்‌தாத்தங்களையுங்‌ கேட்டருள, அவர்‌, ‘கந்தாடை யண்ணன்‌ முதலான கந்தாடை யய்யங்கார்களும்‌ மற்றும்‌ திருவாழியாழ்வார்‌ பிள்ளை முதலான பெரியோர்களும்‌ ஸ குடும்பமாகவும்‌ மற்றும்‌ அநேகம்‌ ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்‌தார்கள்‌;-ஜீயருடைய வைபவம்‌ உத்தரோத்தர்ம்‌ அதிசயமாக நடக்கிறது” என்று விண்ணப்பஞ் செய்ய, திருவுள்ளமுகந்தருளி,அவருக்கு பஹுமாநஞ்‌ செய்தருளி அற்றைக்கு அவரை நிறுத்திக்‌ கொண்டு, நீர்‌ சொன்னதெல்லாம்‌ ஸாமாந்யமாகக்‌ கேட்டிருந்‌தோம்‌; அந்த வ்ருத்தாந்தங்களையும்‌, ஜீயர்‌ திருநகரிக் கெழுந்தளி திரும்பி யெழுந்தருளின: செய்தியையும்‌ விஸ்தாரமாக வருளிச் செய்யும்‌” என்று கேட்டருளி. அவரை, பிற்றை நாள்‌ திருவேங்கடமுடையானை ஸேவித்து சீக்கிரமாக வரச்‌ சொல்லி நியமித்து நாமும்‌ பயணமாயிருக்கிறோம்‌, கூடப் போவோம்‌” என்றருளிச்‌ செய்து விட. பின்பு தமது திருத் தமப்பனாருக்கு இச் செய்தியை யறிவிக்க’ அவரும்‌, ”ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்க வேணுமென்று ருசி யுண்டு போலே யிருக்கிறது; இனி மேல்‌ அது நன்றன்று போலே தோற்றுகிறது; வேணுமாகில்‌ அவரிடத்தில்‌ ப்ரதிபத்தி பண்ணி ஜ்ஞாதவ்யாம்ச முண்டானால்‌ அநுவர்த்தித்துக் கேட்டு, ஸ்ரீபாத தீர்த்த தளிகை ப்ரஸாத ஸ்லீகாராதிகளைப்‌ பண்ணி வாரும்‌’” என்ன, அந்த ஸ்ரீவைஷ்ணவரும்‌ திருமலையில்‌ நின்றும்‌ வர,

அவரைக்‌ கூட்டிக்‌ கொண்டு எறும்பியப்பா கோயிலேற வெழுந்‌தருளி நம்பெருமாளைத்‌ திருவடி தொழுது, பெரிய கந்தாடை அண்ணன்‌ ஆப்த பந்துவாகையாலே அவர்‌ திருமாளிகையிலே அமுது செய்தருளி அவருடனே ஜீயர்‌ ஸந்நிதிக் கெழுந்தருள, ஜீயரும்‌ இவரைப்‌ பெரிய வித்வான்‌ என்றறிந்து, பரத்வ ப்ரதிபாதகமான உயர்வற வுயர் நல ப்ரவேசத்தை ௨பந்யஸித்துக்‌ காட்டி யருள. அப்பா அது கேட்டு ஆஸ்சர்யப்பட்டு ‘ஜீயருக்குத்‌ தமிழொழிய ஸம்ஸ்க்ருதத்தில்‌ மிகவும்‌ பரிசயமில்லை யென்று கேட்டிருந்தோம்‌; இவர்‌ உபய வேதாந்தத்திலும்‌ மிக நிபுணரயிருக்‌ கிறார்‌?” என்று போர ப்ரீதராயிருக்க ஜீயர்‌ இவரை மடத்தில்‌ அமுது செய்ய ப்ரார்‌த்திக்க, அவரும்‌,
யத் யந்நம்‌ பதிபாத்ரஸ்தம்‌ யதிநா ப்ரேஷிதம்ச யத்‌ |
அந்ந த்ரயம்‌ ந போக்தவ்யம்‌ புக்த்வா சாந்த்ரயணம்‌ சரேத்‌ ॥

ஸந்யாஸி களுடைய அந்நமும்‌, ஸந்யாஸிகளுடைய பாத்ரத்‌திலுள்ள அந்நமும்‌, ஸந்யாஸிகளால்‌ அனுப்பப்பட்ட அந்நமும்‌-இப்படி மூன்றும்‌ புசிக்கத் தக்கவை யன்று , அப்படி புசித்தானாகில்‌ சாந்த்ராயண வ்ரதத்தை யநுஷ்டிக்கக் கடவன்‌ -என்கிற ஸாமாந்ய சாஸ்த்ரைக நிரதராய்‌, ‘தருவரேல்‌ (திருமாலை-41),“ப்ரார்த்தயேத்‌’ என்கிற விசேஷ சாஸ்த்ர ஜ்ஞாத ரஹிதராய்‌ ஜீயர்‌ திருவடிகளிலாஸ்ரயியாமல்‌ மறுத்தெழுந்தருளி அண்ணனைப்‌ போர வெறுத்து அவர்‌ திருமாளிகைக்‌ கெழுந்தருளாமல்‌ அப்போதே கோயிலிலிருந்து புறப்பட்டுத்‌ தம் மூரேற வெழுந்‌தருளி

தமது திருவாராதநமான சக்ரவர்த்தி திருமகனாரைத்‌ திருவடி விளக்குவதாகக்‌ கோயிலாழ்வாரைத் திருக் காப்பு நீக்கப் புக; அது அவிசால்யமாய்‌, ஸக்லோபாயங்களாலும்‌ நீக்கப்‌ போகாமையாலே மிகவும்‌ து:கிதராய்‌ அமுது செய்யாமலே கண் வளர்த்தருள அவ்வளவில்‌ அப்பாவின்‌ ஸ்வப்நத்திலே
ஸேஷ: ஸ்ரீமாநஜநிஹி புரா ஸெளம்ய ஜாமாத்ரு யோகீ
போகீ பூதஸ்‌ ததநு பகவாந்‌ ராகவஸ் யாநு ஜந்மா |
பூத்வா பவ்யோ வரவர முநிர்‌ பூபஸாபா ஸமாந:
ரக்ஷத் யஸ்மாந்‌ ரகுகுல பதே ராஸ்திதோ பத்ர பீடம்‌ ॥
பூத்வா பவ்யோ வரவர முநிர்‌ போகிநாம்‌ ஸார்வ பெளம:
ஸ்ரீமத் ரங்கே வஸதி விஜயீ விஸ்வ ஸம் ரக்ஷணார்த்தம்‌ |
தத்வம்‌ கந்தும்‌ வ்ரஜ ஸரண மித்யாதி ஸத்‌ ராகவோயம்‌
ஸ்வப்நே ஸோயம்‌ வரவர குருஸ்‌ ஸம்ஸ்ரயோ மாத்ரு ஸாநாம்‌ –

இந்த மணவாள மாமுனிகள்‌ முதன் முதலில்‌ கைங்கர்ய ஸ்ரீயை யுடைய திருவனந்தாழ்வானாக இருந்தார்‌. அவ் வரவரசனே பின்பு இராம பிரானுடைய தம்பியான லஷ்மண பகவானாகப் பிறந்தான் -பின்பு ஆஸ்ரித ஸுலபரான மணவாள மா முனிகளாக அவரே அவதாரம்‌ செய்து சக்ரவர்த்தி திருமகனுடைய மங்களமான ஸிம்ஹாஸனத்தில்‌ வீற்றிருந்து நம்மை ரக்ஷிக்கிறார்‌-

திருவனத்தாழ்வான்‌ ஆஸ்ரித ஸூலபரான மணவாள மா முனிகளாக அவதரித்து லோகத்தை ரஷிப்பதற்காக ஸ்ரீரங்கத்‌தில்‌ எல்லோரினும்‌ மேம்பட்டு வாழ்கிறார்‌. தத்வ ஜ்ஞானம்‌ பெறுவதற்காக அவரை நீர்‌ தஞ்சமாகப்‌ பற்றுவீராக” என்று இந்த சக்ரவர்த்தி திருமகன்‌ அப்பாவுக்கு ஸ்வப்நத்திலே உத்தரவிட்டருளினார்‌. அப்படிப்பட்ட. மணவாள மாமுனிகள்‌ நம்மைப்‌ போன்றவர்களுக்கு சரணமடையத் தக்கவராகிறார்‌ -என்கிறபடியே, அவர்‌ திருவாராதநமான சக்ரவர்த்தி திருமகன்‌,நீர்‌ சேஷாவதாரமான ஜீயர்‌ திருவடிகளிலே அபசாரப்பட்டு. வந்தீர்‌; பகவத்‌ பக்த ஸம்புக்த பாத்ர சிஷ்டோதநாதராத்‌–கோபி தாஸீ ஸுதோப்யாஸீ தம்ருதோ வை நாரதோ அபவத்‌–பகவத் பக்தரொருவர்‌ அமுது செய்த பாத்திரத்தில்‌ மிச்சமான ப்ரஸாதத்தை அன்போடு உண்டதனால்‌,, வேசியின்‌ மகனொருவன்‌ கூட தான்‌ இறந்த பின்பு மறு பிறவியில்‌ நாரதராகப்‌ பிறந்தான்‌-என்று ஸ்ரீநாரத பகவான்‌ உத்பத்தி கேட்டறியீரோ? ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்து அபராத ஷாமணம்‌ பண்ணிக்‌ கொண்டு வந்தாலொழிய உம்முடைய கையினாலே நாம்‌ திருவராதநம் கொள்ளக்‌ கடவோமல்லோம்‌; சடக்கெனப்‌ போகீர்‌” என்று நியமித்தருள; அப்பாவும்‌ திருக் கண்களை விழித்து விஸ்மிதராய்‌ ஸ்வப்நத்தை விச்வஸித்து -அப்போதே புறப்பட்டுக்‌ கோயிலேறச்‌ சென்று புக்கு, ”அங்கே கவேர கந்யாயாஸ் துங்கே புவந மங்களே ..ரங்கே தாம்நி ஸுகாஸீநம்‌ வந்தே வரவரம் முதிம்‌”– திருக்‌ காவேரி மத்யத்தலே, உலகங்களுக்கு மங்களாவஹமாய்‌ விளங்கும்‌ திருவரங்கத்‌ திருப்பதியில்‌ இனிதாக வெழுந்தருளியுள்ள மணவாள மா முனிகளை அடி பணிகிறேன்‌-என்றநுஸந்திக் கொண்டு செல்ல; அவ்வளவிலே ஜீயரும்‌ பெருமாளை ஸேவிப்பதாகப்‌ புறப்பட்டு எதிரே எழுந்தருளக் கண்டு அத்யாதரத்துடனே ‘தண்டவத் ப்ரணமேத் பூமாவு பேத்ய குருமந்வஹம்‌”-நாடோறும்‌ ஆசாரியனைக்‌ கிட்டி தரையில்‌ தடி போல்‌ விழுந்து ஸேவிக்கக் கடவன்‌-என்கிறபடியே திருவடிகளிலே தண்டன்‌ ஸமர்ப்பிக்க, ஜீயரும்‌ அவரை “லோசநாப்யாம்‌ பிபந்நிய’ என்கிறபடியே நிரீஷண ஸுதாஸந்து ஷிதாரம்படி குளிர நோக்கிக்‌ கொண்டு நிற்க, அப்பாவும்‌ அப்போது தம்மை விஷயீகரிக்கப்‌ புறப்பட்டருளின ஜீயரின்‌ திவ்ய மங்கள விக்ரஹம ஸெளந்தர்யத்திலே யீடுபட்டு, ”மயி ப்ரவிதி ஸ்ரீமந் ‘ என்று தொடங்கி மயி ப்ரஸாத ப்ரவணம்‌” (பூர்வ தின சர்யை -என்னுமளவாக அநுஸந்தித்துக்‌ கொண்டு நிற்க

ஜீயரும்‌ இவருடைய உஜ்ஜீவநத்திலே யூன்‌றிப்‌ போமவராகையாலே மீண்டும்‌ உள்ளே புக்கு, ஆத்ம லாபத்தைப் பார்க்கிலும்‌ வேறொரு உயர்ந்த லாபமில்லை யென்றறுதியிட்டு, இவரை யங்கீ கரிக்கையிலுள்ள நசையாலே மதுரோதார பாஷணம்‌ பண்ணி யிருந்து, ஸ்ரீபாதத்து முதலிகளை ‘-பெருமாளை ஸேலித்து வாருங்கோள்‌’என்றனுப்பியருள, அவர்களும்‌ பெருமாளை ஸேவித்து மீண்டு வர ஜீயரும்‌; அவர்களுடனே ‘பெருமாள்‌ இன்னவொப்‌பனையோடே யெழுந்தருளியிருக்கிறார்‌; இன்னபடி, அமுதுசெய்ததருளினார்‌” என்றருளிச்‌ செய்ய, அவை ஒத்திருக்கையாலே, எல்‌லாரும்‌ ஜீயருடைய ஸர்வஜ்ஞதையைக் கண்டு விஸ்மயப்பட்‌டார்கள்‌. அப்பா,நெடுந்தூரத்திலிருந்து வந்தவராகையாலே வழியிலுண்டான விடாயெல்லாந்தீர பசியன்‌ சோற்றைக்‌ கண்டாப்‌போலே பவந்தமேவ நீரந்த்ரம்‌ பச்யந்வச்யேந சேதஸா” -தேவரீரையே, அடியேன்‌ வசப்பட்ட மனத்தோடு, இடை விடாமல்‌ ஸேவித்துக்‌ கொண்டு- என்றபடியே வைத்த கண்‌ வாங்க மாட்‌டாதே தாரக போஷக போக்யங்களெல்லாம்‌ ஜீயருடைய திவ்ய மங்கள விக்ரஹாநுபவமேயாக அநுபவித்துக்‌ கொண்டு போந்தார்‌ .

மற்றை நாள்‌ அபர ராத்திரியிலே அண்ணன்‌ முதலாவனார்கள்‌ ஜீயர்‌ திருப்பள்னியறை வாசலிலே எழுந்தருளி
ரவிருத யத்யதாபி ந விநஸ்யதி மே திமிரம்‌
விகஸதி பங்கஜம்‌ ஹ்ருதய பங்கஜமேவ நமே |
வரவர யோகி வர்ய! வரணீய குணைக நிதே
ஐயஜய தேவ! ஜாக்ரஹி ஜநேஷு நிதேஹி த்ருஸம்‌ ॥

சூரியன்‌ உதித்த போதிலும்‌ அடியேனுடைய அக விருள்‌ நீங்க வில்லை;-குளங்களில்‌* தாமரை மலர்கள்‌ மலரா நின்றன;-அடியேனுடைய மனமான தாமரை மலரவில்லை; விரும்பத் தக்க கல்யாண குண நிதியே! ஸ்வாமிந்‌! மணவாள மமுனியே ! விஜயியா யெழுந்தருளி யிருக்க வேணும்‌; திருப்பள்ளி உணர்ந்தருள வேணும்‌; ஆஸ்ரித ஜனங்‌களைக்‌ கடாக்ஷித்தருள வேணும்‌- என்று திருப்பள்ளி யுணர்த்த, திருப்பள்ளி யுணர்ந்து, குருபரம்பரா பூர்வகமாக ரஹஸ்ய த்ரயத்‌தையும்‌ அநுஸந்தித்தருளி அதில்‌ பர வ்யூஹாந்தர்யாமி குணங்‌களைத் திருமந்த்ரத்தாலும்‌, விபவ லெளலப்யாதி குணங்களை சரம ஸ்லோகத்தாலும்‌, அர்ச்சாவதார குண பூர்த்தியை த்வயத்தாலும்‌ அநுஸந்தித் தருளி பின்பு,

அயபம் புநஸ் ஸ்வயம் வ்யக்தாந வதாரா கநுத்தமாலந் |
நிதாய ‘ஹ்ருதிநீ ரந்தரம்‌ நித்யாயந்‌ ப்ரத்யபுத்யத ॥
விஸேஷேண விஷேவேச ஸேஷ போக விபூஷணம்‌ |
அமேயமாதிமம்‌ தாம ரமேஸம்‌ ரங்கஸாயிநம்‌ ॥
த்யாயம்‌ த்யாயம்‌ வபுஸ் தஸ்ய பாயம்‌ பாயம்‌ தயோததிம்‌ |
காயம்‌ காயம்‌ குணுநுச்சைஸ்‌ ஸோயம்‌ தத்பூய ஸாந்வயூத்‌

இம் மணவாள மாமுனிகளோ வென்னில்‌ ஸ்வயம் வ்யக்தங்‌களான அர்ச்சாவதாரங்களை முறையே சிந்தையில்‌ வைத்து இடைவிடாமல்‌ த்யானித்துக்‌ கொண்டே திருக்கண் விழுத்தருளினார்‌.சிறப்பாக, திருவனந்தாழ்வானுடைய திருமேனிக்கு ஆபரணமும்‌ அளவிடற்கரியதும்‌ ஸ்ரீரங்கத்தில்‌ துயில் கொண்டிருப்பதுமான ஸ்ரீய:பதியென்னும்‌ உயர்ந்த தேஜஸ்ஸை த்யானம்‌ செய்தருளினார்‌,-அத் திருவரங்க நாகனுடைய திரு மேனியை த்யானித்துக் கொண்டும்‌ அவனுடைய கருணையாகிய கடலைப்‌ பருகிக்‌ கொண்டும்‌ அவன்‌ குணங்களைப்‌ புகழ்ந்து பாடிக்‌ கொண்டும்‌ இம் மாமுனிகள்‌ முற்‌கூறிய தேஜஸ்ஸாகிய ஸ்ரீரங்கநாதனை மறுபடியும்‌ மறுபடியும்‌ அனுபவித்தார்‌-என்கிறபடியே, அர்ச்சாவதாரத்துக்கு வேர்ப் பற்றான பெரிய பெருமாளுடைய விக்ரஹ குணங்களை விசேஷித் தநுஸந்தித்தருளி அதினுடைய பராகாஷ்டையான யதீந்த்ர சரணத்வvத்வ ப்ராவண்யத்‌தோடே நீராடி நித்யா நுஷ்டானங்களையுஞ்‌ செய்தருளித்‌- திருமண்‌ காப்புச்‌ சாத்தி யருளி; தம்முடைய திருவாராதனமான ஸ்ரீரங்கராஜர்‌ திருமுன்பே எழுந்தருளி, தண்டன் ஸமர்ப்பித்து

ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்யம்‌ ஆசார்யாதீந தைவயத்‌ |
ஆம்நாயாராம்‌ ரஹஸ்யந்த தகிலேப்ய: ப்ரகாஸயந்‌ ॥
ஸர்வம் யதிபதேரேவ குர்வந் நாதேஸ பூர்வகம்‌ |
க்ருத்யாக்ருத்யேஷு கர்த்ருத்வம்‌ க்ருதீகிமபி நஸ்ப்ருபுஸக்‌ ॥
ததஸ் தஸ்ய முகோல்லாஸம்‌ சிகீர்ஷந் நேவ கேவலம்‌

யாதொரு ஆத்ம ஸ்வரூபத்தின்‌ உண்மையாண தன்மையானது ஆசார்யனுக்கே பரதந்த்ரமா யிருப்பதோ, ஸ்ருதிகளில்‌ ரஹஸ்ய மாயுள்ள அந்த ஆசார்ய பாரதந்த்ர்யத்தை ப்ரகாசிப்பிப்பவராய்‌,கேவலம்‌ அவ்வாசார்யருடைய(எம்பெருமானாருடைய) முக மலர்த்தியையே விரும்பிச்‌ செயல்படுபவரரய்‌ அவ் யதீந்த்ரரின்‌ நியமனப்படியே எல்லா விதமான கைங்கர்யங்களையுஞ்‌ செய்து கொண்டு ‘கார்யாகார்யங்களில்‌ நாம் செய்தோம்‌” என்ற எண்‌ணம்‌ சிறிதுமில்லாதவராய்‌ தந்யராய்‌ எழுந்தருளியிருந்தார்‌ -என்கிறபடி தம்முடைய பாரதந்தர்யத்துக்குச்‌ சேர்ந்த ப்ரதிபத்தியுடனே திருவாராதநத்தையும்‌ செய்தருளி;

(ஐயைகள் அப்பா -எறும்பி அப்பாவின் திருத்தகப்பனார் -கிடாம்பி நாயனார் இடமும் ஸ்ரீ பாஷ்யம் காலஷேபம் பண்ணும் பொழுது கூட இருந்து மா முனிகளின் வைபவம் அறிந்தவர்-74 லில் ஒருவராக இருந்தும் அண்ணன் போல்வார் மீண்டும் இவரிடம் ஸமாஸ்ரயணம் செய்து கொண்டதும் இவர் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பதால் பெறும் ஸ்ரேஷ்டத்துக்காகவே -)

அநந்தரம்‌ -ஸந்நிதிஸ்‌ நம்பமூல பூதல பூஷணமாய்‌ எழுந்‌தருளி யிருக்க, அவ் வளவிலே அப்பாவும்‌ அண்ணனைப்‌ புருஷகாரமாகக்‌ கொண்டு” அடியேனை அங்கீகரித்தருள வேண்டும்‌” என்றபேக்ஷிக்க அப்படியே அங்கீ கரித்தருளி, திருவிலச்சினை முதலான பஞ்ச ஸம்ஸ்காரங்களையும்‌ ப்ரஸாதித்து விசேஷ கடாக்ஷம்‌ ‘செய்‌தருளி, திருவடிகளாலே அவருடைய திருமுடியை யலங்கரித்தருளி,பின்பு அத்தலைக்கு மங்களாசாஸன பரராக வேணுமென்னும்‌ திருவுள்ளக் கருத்தோடே மந்த்ர த்ரயத்தையும்‌ ப்ரஸாதித்தருளி; அவரையும்‌ அந்தரங்கராக்கிக்‌ கொண்டு அவருடன்‌ கூட பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணுவதாகப்‌ புறப்பட்டருளி நான்‌முகன்‌(கோட்டை வாசல் வழியாக -ரெங்க ரெங்கா கோபுரம் ) தண்டன்‌ ஸமர்ப்பித்து மெள்ள வெழுந்‌தருளி உள்ளே புக்கு
தேவீ கோதா யதிபதி ஸடத்வேஷிணெள ரங்க ஸ்ருங்கம்‌
ஸேநா நாதோ விஹக வ்ருஷபஸ்‌ ஸ்ரீநிதிஸ் ஸிந்து கந்யா |
பூமா நீளா குருஜந வ்ருத: பூரூஷஸ் சேத்யமீஷாம்‌
அக்ரே நித்யம்‌ வரவர முநே ரங்க்ரி யுக்மம்‌ ப்ரபத்யே(பூர்வ தினசரி -24 )

ஆண்டாள்‌, எம்பெருமானார்‌, நம்மாழ்வார்‌, ஸ்ரீரங்கவிமானம்‌, சேனை முதலியார்‌, பக்ஷி ராஜனாம்‌ பெரிய திருவடி ஸ்ரீரங்கநாதீன்‌, ஸ்ரீரங்கநாச்சியார்‌. பூமிதேவி, ஸ்ரீதேவி நீளாதேவி ஆழ்வார்கள்‌ ஆகியவர்களால்‌, சூழப்பட்ட பரமதநாதன்‌. என்‌னும்‌ க்ரமத்திலே மங்களாசாஸனார்த்தமாசு எழுந்தருளி ஸேவை ஸாதித்தருளும்‌ மணவாள மா முனிகளின்‌ இணை யடிகளை தினமும்‌. தொழுகின்றேன்‌-என்கிற அடைவிலே ஸேவித்து – தத்தத் ஸ்தலோசித மங்களாசாஸனங்களைப்‌ பண்ணி, பெரிய பெருமாளையும்‌ நம்பெருமாளையும்‌ திருவடி தொழுது அநந்தரம்‌
உபேத்ய புநரப்யேஷி நிஜமேவ நிவேஸநம்‌ |
நிவேத்ய நிகிலம்‌ தத்ர யதீந்த்ராய நமஸ்யயா ॥

இந்த மணவாளமாமுனிகள்‌ மீண்டும்‌ தமது மடத்துக்‌கெழுந்தருளி அங்கு கோயில்‌ கொண்டெழுந்தருளியுள்ள யதிராஜரிடம்‌ நடந்ததை யெல்லாவற்றையும்‌ தெண்டனிட்டு விஜ்ஞாபித்து-என்கிறபடியே மீண்டும்‌ மடமே யெழுந்தருளி அங்கு எழுத்தருளி யிருக்கும்‌ உடையவர்‌ ஸந்நிதியிலே ஸர்வமும்‌ விஜ்ஜாபித்து, திருமலை யாழ்வாரிலே தத் பாதச் சாயையாக ப்ரதிபத்தி பண்ணிக்‌ கொண்டு எழுந்தருளி யிருந்து, இவர்க்கு [எறும்பியப்‌பாவுக்கு]

ஸம்சார நிவர்‌த்நகமாயிருக்கிற ஸ்வ திவ்ய சரணாம் போஐ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸெளரபமான ஸ்ரீபாத தீர்த்தத்தையும்‌ ப்ரஸாதித்தருளி
அத மாத்யாஹ்நிகம்‌ க்ருத்யம்‌ க்ருத்வா ஸத்வோத்தரம்‌ முநி . |
ஆராத்ய விதிவத் தேவ மந்வபூத்‌ ரங்க பூஷணம்‌ ॥
ததஸ்தந்‌ முக ஸம்ஸ்பர்ஸரஸேந ஸுகந்திநா |
ஸூசிநா ஸுகுமாரேண ஸத்வஸம்‌ ஸூத்தி ஹேதுநா ॥
பக்தி பூர்வம்‌ ப்ரபூதேந போஜ்யேந பகவத் ப்ரியாந்‌ |
தத் பரஸ் தர்ப்ப யாமாஸ ததீய ப்ரேம வ்ருத்தயே
ஆத்மாந மாத்மநா பஸ்‌யந்‌ போக்தாரம்‌ புருஷம்பரம்‌ ॥
அநு யாகம்‌ யதா யோகம்‌ நிஸ்ஸங்கோ நிரவர்த்தயத்‌ |

பிறகு பரம ஸாத்விகரான மணவாளமாமுனிகள்‌, மத்யாஹ்ந அநுஷ்டானங்களை முடித்து ஸ்ரீ அரங்கநகரப்பனுக்கு முறைப்படி திருவாராதனம்‌ கண்டருளப் பண்ணி, குணாநுபவம்‌ பண்ணிக்‌ கொண்டிருந்தார்‌. பின்னர்‌ அவ்வெம்பெருமானுடைய திருப்பவள ஸம்பத்தத்தினால்‌ அமுதமாய்‌, பரிமளிதமாய் ,தூயதாய்‌, மென்மை யுடைத்தாய்‌, ஸத்வ ஸ்வபாவத்துக்கும்‌ மனத் தூய்மைக்கும்‌ முக்‌கிய காரணமாயிருப்பதான, ஸம்ருத்தமான பகவத்‌ ப்ரஸாதத்தால்‌ எம்பெருமானடியார்களை ததீய பக்தி பூர்வமாக , தத் கைங்கர்ய பரராக அவர்களிடம்‌ ப்ரேமம்‌ வளர்வதற் குறுப்பாக ஆராதித்தார்‌; தாம்‌ (ப்ரஸாதத்தை) அமுது செய்தருளுவதனால்‌ தம் மூலமாத அந்தர்யாமியான பரம புருஷனையே போக்தாவாக அத்யவஸித்து அமுது செய்வதில்‌ நேரே தொடர்பில்லாத மனதுடன்‌ பிஷை யேற்றருளினார்‌ -என்கிறபடியே பெருமாளமுது செய்தருளின அநந்தரம்‌ தாமும்‌ அமுது செய்தருளி, போனகஞ் செய்த சேடந் தருவரேல்‌ புனிதமன்றே” என்னும்படி ஸுபாவனமான திருத் தளிகை ப்ரஸ்தம்‌ ப்ரஸாதிக்கப்‌ பெற்று இவர்‌ (அப்பா) க்ருதார்த்தரா யெழுந்தருளி யிருக்க; பின்பு,

ததஸ் ஸ ஜீமூல ஜீதஸ்யாம கோமள விக்ரஹே |
பீத கெளஸேய ஸம்வீதே பீந வ்ருத்த சதுர் புஜே ॥
ஸங்க சக்ர கதா தாரே துங்க ரத்ந விபூஷணே |
கமலா கெளஸ்து போரஸ்கே விமலாயத லோசநே ॥
அபராத ஸஹே நித்யம்‌ தஹ ராகாஸ கோசரே |
ரேமே தாம்நி யதாகாஸம்‌ யுஞ்ஜாநோத்யாந ஸம்பதா ॥
ஸதத்ர நிஸா சலம்‌ சே த, சிரேண விநிவர்த்தயஙந் |

பிறகு நீர்‌ கொண்ட மேகம் போல கருமையா யழகான திருமேனியில்‌ பீதாம்பர மணிந்தவனாய, பருத்து திரண்ட நான்கு திருத் தோள்களை யுடையனாய்‌, திருவாழி திருச்சங்கு கதைகளுக்கு இருப்பிடமாய்‌, சிறந்த ரத்ந மயமான திருவாபரணங்களால லங்கரிக்கப் பட்டவனாய்‌, பெரிய பிராட்டியாரையும்‌ ஸ்ரீகெளஸ்துபத்தையும்‌ திரு மார்பில்‌ தரித்தவனாய்‌ நிர்மலமான நீண்ட பெரியவாய கண்களை யுடையனாய்‌, ஆஸ்ரிதாபரதங்களைப்‌ பொறுப்பவனாய்‌ எப்போதும்‌ சேதந ஹ்ருதய மத்யத்தில்‌ வாஸம் செய்பவனாய்‌ பரம ப்ராப்யனான பரம புருஷனிடம்‌, தமது த்யான ஸம்ருத்தியினால்‌ ஒன்று பட்டு லயித்து யதாவகாசம்‌ தமது மடத்தில்‌ மகிழ்ந்திருந்தார்‌. அப் பெருமானிடத்தில்‌ ஸ்திரமாயிருந்த தமது மனஸ்ஸை வெகு காலம்‌ கழித்து மீட்டு–என்கிறபடியே
ஸூபாஸ்ரயமான அந்தர்யாமி விஷயத்திலே நிமக்ந ஹ்ருதயத்தை யுடையராய்‌ அத்தை ஒரு படி மீட்டு, யதீந்த்ர ப்ரவணமாக்கி, யதிராஜ விம்சதியை யநுஸந்தித் தருளி, பின்பு ஸ்ரீவசநபூஷண வாக்யங்களுக்கு வ்யாக்யாநம்‌ ப்ரஸாதித்தருளி, ஸாயங்காலமானவாறே ஸர்வாநுஷ்டானங்களையும்‌ முன்பு போலவே செய்தருளி, மீளவும்‌ ஸந்நிதயிலே யெழுந்தருளி எல்லா வுபசாரங்களையும்‌ கண்டருளப் பண்ணி, திருப்‌ பல்லாண்டை யநுஸந்தித்து மங்களாஸசாநம்‌ பண்ணி, பின்‌ கண்‌ வளர்ந்தருளுவதற்காக ்‌
தத:.கநக பர்யங்கே தருணத் த்யுமணி த்யுதெள |
ரத்ந தீபத்வ யோதஸ்த மஹதஸ்‌ ஸ்தோமஸ மேதிதே ॥,
ஸோபதாநே ஸுகாஸீநம்‌ ஸுகுமாரே வாரஸநே |:
அநந்ய ஹ்ருதயைர்த் தந்யை ரந்தரங்கைர்‌ நிரந்தரம்‌ ॥,
ஸூஸ்ரூஷமாணை; ஸூசிபி; த்வித்ரைர் ப்ருத்யை ருபாஸிதம்‌ |
ப்ராசாமாசார்ய வர்யாணாம்‌ ஸூக்தி வ்ருத்‌ த்யநு வர்ணநை : ॥
வ்யாச ஷாணம்‌ பரம் தத்வம்‌ வ்யக்தம்‌ மந்ததியாமபி |

பிறகு உச்சிப்பட்ட சூரியன் போல ப்ரகாசமுடைத்தாய்‌, ரத்ந மயமான இரு தீபங்களினின்றும்‌ உண்டான ஒளியினால்‌ மிக விளங்கா நின்ற பொன்னாலான கட்டிலில்‌ தவையணையுடன்‌ கூடிய மென்மையான அழகிய ஆஸனத்தில்‌ இனிதே யெழுந்தருளி யிருப்பவரும்‌. அந்த மாமுனிகளள்லது வேறிடத்தில்‌ செல்லாத மனதை யுடையராய்‌ பாக்யமுடையரான அந்தரங்கராய்‌ கைங்கர்ய பரரான இரண்டு மூன்று சிஷ்யர்களால்‌ இடைவிடாமல்‌ ஆட் செய்யப்படுமவராய்‌, பூர்வாசாரியர்கஞ்டைய ஸ்ரீஸூக்திகளையும்‌ அநுஷ்‌டான க்ரமங்களையும்‌ அருளிச் செய்வதால்‌ மந்த மதிகளுக்கும்‌ பர தத்‌வத்தை தெளிவா யருளிச்‌ செய்து கொண்டிருக்கும்‌ மாமுனிகளை–என்றபடியே திருப்பள்ளி யறையிலே புக்கு ‘திருப்‌ படுக்கையிலே சாய்ந்தருளி எல்லார்க்கும்‌ தெரியும்படி பூர்வாசாரியர்கள்‌ போதமனுட்டானங்கள்‌ கூறுவாராக வெழுந்தருளி யிருக்கற, போக்‌யதையை அநுபலித்து அவ் வனுபவத்துக்குத்‌ தேசிகரானவர்களோடே கூட அஸ்தாநே பய சங்கிகளாய்‌
மங்களம்‌ ரம்ய ஜாமாத்ரு முநி வர்யாய மங்களம்‌ |
மங்களம்‌ பந்ந கேந்த்ராய மர்த்ய ரூபாய மங்களம்‌ ॥
ஏவம் மங்கள வாணீபி ரேநம்‌ ஸாஞ்ஜலி பந்தநா; |
ஸத் க்ருத்ய ஸம் ப்ரஸீ தந்தம்‌ ப்ரணேமு; ப்ரேம நிர்ப்பரா; ॥

ஆசார்ய ஸ்ரேஷ்டரான மணவாள மா முனிகளுக்கு மங்களம்‌ மங்களம்‌, மனித வுருவில்‌ அவதரித்துள்ள திருவனந் தாழ்வானான மா முனிகளுக்கு மங்களம்‌, மங்களம்‌; இப்படி மங்கள வார்த்தைக்ளால்‌ ப்ரஸந்நரான இந்த மணவாள மா முனிகளை பக்தி நிறைந்த சிஷ்யர்கள்‌ கை கூப்பிக்‌ கொண்டு ஸேவித்தார்கள்‌-என்கிறபடியே மங்களாஸாசனம்‌ பண்ணி ஸாஞ்ஜலி ஹஸ்தராய்‌ ஸாஷ்டாங்க தீர்க்க ப்ரணாமாதிகளைப்‌ பண்ணிப் ப்ரேம நிர்ப்பரராய்‌ ஸேவித்துக்‌ கொண்டிருக்க, அதப்ருத்யாநநுஜ்ஞாப்ய’” என்கிறபடியே அவர்ளை விடை கொடுத்தனுப்பி யருளி
ததஸ் ஸஜ்ஜீக்குருதம்‌ ப்ருத்யை; ஸூயநீ யம்‌ விபூஷயந்‌ |
யுயோஜ ஹ்ருதயம் தாம்நி யோகித்யேய பதத்வயே ॥

பிறகு சிஷ்யர்களால்‌ ஸித்தப்படுத்தப்பட்ட படுக்கையில்‌ சயனித்து, யோகிகளால்‌ த்யானிக்கத் தக்க திருவடிகளை யுடைய பரம புருஷனிடத்தில்‌ மனதை சேர்ப்பித்தார்‌- என்கிறபடியே
படுத்த பைந் நாகணையாயிருக்கிற தாமும்‌ ஒரு படுக்கையைப் பற்றிக் கண் வளர்‌ந்தருளுவதற்காக யோகீ த்யேயமுமாய்‌ -ரங்காஸ்ரயம்‌ மம ஸூபாஸ்ரய மாஸாயாணி” என்னும்படி ஸூபாஸ்ரயமுகமாய் –அணைப்பார்‌ கருத்தனுவானான வெள்ளத் தரவில்‌ துயிலமர்ந்த வித்தினை மணவாள யோகியான தாம்‌ மனத்திற்‌ கொண்டு நெஞ்சத்துப்‌ பேராது நிற்கும்‌ பெருமானாய்‌ ஸூ ப்ரதிஷ்டிதஞ்‌ யெழுந்தருளி யிருக்கிற சேஷசாயியான ஸர்வேஸ்வரன்‌ திருவடிகளிலே வைத்த இத் தயை யுடையராய்‌ நிர்ப் பரராய்‌ கண் வளர்ந்தருளப் புக்கார்‌.

இத்தம்‌ திநே திநே குர்வந் வ்ருத்திம்‌ பத்யு, ப்ரஸாதிநீம்‌ |
க்ருதீர்‌ கடாபதம்‌ சக்ரே ப்ராக்தநீம்‌ தத்ர வர்த்தநீம்‌ 1
இத்தம்‌ திநே திநே குர்வந்‌ வ்ருத்தம்‌ பர்த்து; ப்ரஸாதிகீம்‌ |
க்ருதி கண்டா பதஞ்சக்ரே ப்ராக்த்நீம்‌ தத்ர வர்த்தநீம்‌ 1

இப்படி ஸ்வாமியான மணவாள மா முனிக்கு திரு வுள்ளத்துக்கு உகப்பான கைங்கர்யத்தை நாடோறும்‌ செய்து கொண்டு அவ்விடத்தில்‌ திநசர்யையை (45-ஸ்லோகங்களுடன் ) க்ரந்தமாகச்‌ செய்தருளி அதன்‌ மூலமாம்‌ அந்த கிரந்தத்தை எல்லோரும்‌ அனுஸந்திக்கும்படி ராஜ மார்க்கம் போலே ப்ரஸித்தமாக்கினார்‌- என்கிறபடியே எழுந்தருளி யிருக்கற நாளிலே நாடோறும்‌ ஸந்நிதியிலே கைங்கர்யம் பண்ணிக்‌
கொண்டு செய்து கொண்டு அப்பா எழுந்தருளி யிருக்க; பின்பு
வரவர முநி வர்ய பாத யுக்மம்‌ வரத குரரோ; கர பல்லவ த்வயேந |
ரஹஸி ஸீரஸிமே நிதீயமாநம்‌ மநஸி நிதம்ய நிதாநவாந் பவாமி ॥

கந்தாடை யண்ணனுடைய இருதளிரன்ன கைகளாலும்‌ ஏகாந்தத்தில்‌ அடியேனுடைய சிரஸில்‌ வைக்கப்பட்ட மணவாள மாமுனிகளின்‌ திருவடித்‌ தாமரைகளை மனதில்‌ கொண்டு ஸத்தை
பெற்றவனாகிறேன்‌- என்று இவர்‌ ஹ்ருஷ்டராம்படி தம்‌ திருவடிகளைப் ப்ரஸாதித்து , ”ஊரேறப் போம்‌” என்று விடை கொடுத்தருள அப்பாவும்‌ பெரு வருத்தத்தோடே ஊரேற வெழுந்தருளினார்‌

நாயனார்‌ ஸப்த கோத்ர வ்யவஸ்தை செய்தருளியது
இவர்க்கு அநுபந்திகளுமாய் கந்தாடை யண்ணனுக்கு ஸம்பந்திகளுமாயிருப்பார்‌, கந்தாடை நாயன்‌ தேவிகளைப்‌ பிறந்தகத்தினின்‌றும்‌ புக்ககத்திற்கு அழைத்துக்‌ கொணடு வருமளவில்‌ அப்ராப்த வாஹநத்திலே ஏற்றிக்‌ கொண்டு வர, அப்பா அத்தைக் கண்டு ஜீயர்‌ ஸந்நிதியிலே விண்ணப்பஞ்செய்ய, திருவுள்ளங் கலங்கி உடனே ௮ண்ணனை அழைத்தருளி இப்படியாகாது, அவர்களையும் பெண்ணையும்‌ த்யஜிக்கிறது தகுதி ” என்ன -அவர்களுக்கு ஸ்வரூபசிஷா பூர்வகமாக ஹிதோபதேசம்‌ செய்யலாகாதோ? என்ன,-அப்படியாகாது, எம்பாவுக்கு ஆப்த ஸம்பந்திகளான துர்மாதிகள்‌!” என்ன, ஆகில்விடும்‌:’ என்ன, பின்பு முதலியாண்டான்‌ திரு வம்ஸ்யரான கந்தாடை யண்ணன்‌ முதலான கந்தாடைஅய்யங்கார்களையும்‌ அவர்களுடைய ஸம்பந்திகளையும்‌ கூட்டி விசாரித்து அவர்களை க்ருபை பண்ணி யருளி ஹிதோபதேசஞ்‌ செய்தருளி, ஸப்த கோத்ர வ்யவஸ்தை செய்தருளி-இந்த ஸப்த பர்வஸ்த்ருக்கும்‌ பரஸ்பர ஸம்பந்தங்களும்‌ அப்யவஹாராதிகளுமாம்படி மர்யாதை கட்டி இன்ன கோத்ரத்தாரின்னரென்று பட்டோலை கொண்டு திருமங்கைமன்னன்‌ திருமாளிகையில்‌ சிலா சாஸனமுமிடுவித்து விசேஷித்து கந்தாடையய்யங்கார்களுக்கு விலஷண ப்ரவரமும்‌ ஸாதித்து அப்பா திருவுள்ளம்‌ மிகவும்‌ ப்ரஸந்நமாம்படி, செய்தருளி எழுந்தருளி யிருக்கிற காலத்திவே ஜீயர்‌ திருவடிகளிலே ஆநுகூல்யமில்லாமை மாத்ரமன்றிக்கே ப்ரதிகூலித்து வாக் துருக்திகளும்‌ பண்ணினவாகள்‌ , தரித்ரராய்‌ அபக்‌யாதி பாரீத்ர பூதரர்ய்‌ அநர்‌த்தப்பட்டுப்‌ போனார்கள்‌ –

(ப்ரும்மாவின் புத்ரகளான,ப்ருகு, அங்கிரஸ், மரீசி, அத்ரி ஆகிய நால்வர் மற்றும் இவர்களில்,ப்ருகுவின் புத்ரரான ஜமதக்னி, அங்கிரஸரின் புத்ரகளான கெளதமர், பரத்வாஜர், மரீசியின் புத்ரரான கஸ்யபர், வஸிஷ்டர், அகஸ்தியர் மற்றும் அத்ரியின் புத்ரரான விஸ்வாமித்ரரும் கோத்ர ரிஷிகளில் வரும் மூலவர்கள்.கோத்ர ரிஷிகள் 8 என்று சொல்லும் ஸ்மிருதிகள், மேற்சொன்ன புத்ரர்களான 7 நபர்களையும், அத்ரியையும் சேர்த்து 8 ரிஷிகளாக குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லுகிறார்கள். ப்ருகு மற்றும் அங்கிரஸ் ஆகிய இருவர்கள் பற்றி ஸ்மிருதிகளில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறதால் அவர்களையும் சேர்த்து 10 ரிஷிகள் என்பதாக சில ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது)

(கந்தாடை ஆண்டான் முன்பே சந்யாச ஆஸ்ரமம் -வேண்ட -ராமானுஜர் முதலியாண்டான் சன்னதியில் சந்யாச ஆஸ்ரமம் வேண்டாம் என்று-ஆறு கோத்தர வ்யவஸ்தை செய்து அருளினாராம் -அதேபோல் இங்கும் கந்தாடை அண்ணனுக்கு ம் சந்யாச ஆஸ்ரமம் வேண்டாம் என்று அருளிச் செய்து ஏழு கோத்தர வ்யவஸ்தை செய்து அருளினார் -)

(கோயிற் கந்தாடை யண்ணனும் எரும்பியில் ஸ்ரீரங்கராஜரும் முன்பு லாட புரத்திற்கு ஸ்தாலீபாகார்த்தம் போன விடத்திலே நடந்த லாட புரஸ்தருடைய வாசார வைகல்யாதிகளையும் தமக்கு அந்த தேஹாநுபந்தத்தில் ருசி யில்லாமையையும் பெரிய ஜீயருக்கு விண்ணப்பஞ் செய்ய,அதைக் கேட்டருளிய பெரிய ஜீயரும் வைலக்ஷண்யமுடையராய் பூர்வமே பிடித்து அந்யோய ஸம்பந்த முடையராய் ஸமான ப்ரவர தோஷமில்லாம லிருக்கிற வாதூல ஹரீத ஸ்ரீவத்ஸ களண்டிய களசிக பரத்வாஜாத்ரேயகோத்ரஸ்தர் எழுவர்களையும் அந்யோய ஸம்பந்தம் பண்ணிக் கொண்டு வரும்படியும் கோத்ராந்தரத்திலே ஸம்பந்தம் பண்ணாதே யிருக்கும் படியும் ஏதத் கோத்ரங்களிலே குடிக் கந்தாடை முதலான வந்ய ஸம்பந்த மில்லா திருக்கும்படியும் அண்ணனையும் வேடலப்பையையும் எரும்பியிலப்பா முதலானாரையும் நியமித்து அத்தைத் தப்பாமைக்குத் தம் ஸ்ரீபாதத்திலாணை யிட்டருளினார்.இச் சேதிக்கு எரும்பி, விராலி, வேடல்-திருவிண்ணகர், திருக்குடந்தை, முறப்பாக்கம், கடிகை, கச்சிநகர்,ஸ்ரீபெரும்பூதர்,திருநறையூர், திரு எவ்வுளூர்,திருமழிசை,முதலான விடங்களில் உண்டான தாசரதி வம்ச்யரான வாதூலவருக்கும் ஸ்ரீபாஷ்யகார வம்ஸ்யரான ஹாரிதருக்கும் மற்றும் ஏததனுபந்திகளான கோத்ராந்தரஸ்தருக்கும் ஜீயர் ஸ்ரீமுகம் வர அத்தை சிரஸாவஹித்து அன்று
முதலின்றளவும் அந்த நியமனத்தாலே நடந்து வருகிறது-இந்த நியமனத்திற்குட்பட்ட விந்த ஏழு கோத்ரத்தாருக்கும் கந்தாடையாரென்று வியபதேசம் நடந்து வருகிறது. இவர்களெல்லாரும் எழுபத்தி நாலு ஸிம்மாஸனாதிபதிகளுக்குள் சேர்ந்த முதலியாண்டான் முதலானாருடைய திருவம்ஸ்யர்.இது ஸப்த கோத்ர வியவஸ்தா ப்ரகாரமிருக்கும்படி. இந்த ஸப்த கோத்ரத்தாரில் வாதூல வம்சியராய் ஸ்ரீ பாஷ்ய ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராய் ஐகஜ் ஜீவாதுவான போளிப்பாக்கம் நயினார், பெரியதிருமலை நம்பி வம்ச்யராய் சடமர்ஷண கோத்ரரான எட்டலூர் சிங்கராசாரியரையும் மற்ற வேழு கோத்ரஸ்தரையுங் கூட்டி யஷ்ட கோத்ரமாக நியமித்தருளினார்.போளிப்பாக்கம் நயினார் ஸப்த கோத்ரஸ்தர்; அஷ்ட கோத்ரத்திற்கு நியமன கர்த்தா.
இது அஷ்டகோத்ர வயவஸ்த்தை. இவர்களிலும் ப்ரயாச: எழுபத்திநாலு ஸிம் மாஸனாதிபதி வம்ஸ்யர்களுண்டு. திருவனந்தாழ்வான் பூமியை வஹிக்க அஷ்டதிக் கஜங்கள் ஸஹகரிக்க ஸப்த குல பர்வதங்களும் பூமிக்கு அஞ்சூராணி விட்டாப் போலே யிருக்கும். அது போல திருவநந்தாழ்வானுடைய திரு வவதாரமான பெரியஜீயர் பராங்குச பரகால யதிவரர்களுடைய ஸம்ப்ரதாய நிர்வஹணமாகிற பாரத்தை வஹித்தருளுவதற்கு அஷ்ட திக் கஜங்களும் ஸஹகரித்து ஸப்த கோத்ரமும் ஸம்ப்ரதாயத்திற்கு ஆணி விட்டாப் போலே வியவஸ்தாபகமா யிருக்கும்படி. கோத்ரமென்று பர்வதத்திற்கும் குலத்திற்கும் பேரென்று சொல்லுவர்கள்.பழ நடை விளக்கம்‌-திருமழிசை அண்ணா அப்பங்கார் சுவாமி-)

(ஸப்த கோத்ர வ்யவஸ்தை
பிற்காலத்தில், ஏட்டூர் சிங்கராசார்யர் அவர்களின் வைபவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வரிசை அஷ்ட கோத்ர வ்யவஸ்தை (எட்டு கோத்திரங்கள்) என மாற்றப்பட்டது
ஸ்ரீ வாஸ்த்ரேய கௌடின்யம் பாரத்வாஜஸ் ச கௌசிக
சடமர்ஷணஸ் ச வாதூல காஸ்யபஸ் ச அஷ்டகோத்ர ஜா
ஸ்ரீ வத்ஸம் –வாதூல்யம் -கௌடின்யம் பாரத்வாஜம் -கௌசிகம்- ஆத்ரேயம்
ஷடமர்ஷணம் -நைத்ருவ காஸ்யபம்
-)

பின்பு ஜீயரும்‌ முதலிகளும்‌ ஒரு நாள்‌ ஆலின் மேலமர்ந்தான் என்கிற பாட்டுக்கு அர்‌த்த சிந்தநம்‌ பண்ணிக்‌கொண்டிருக்கிற வளவிலே, ஒன்று ஆல வ்ருக்ஷமாய்‌, மற்றதற்கு பத்ர பரமாய்‌ அர்த்தம்‌
சொல்ல, !’ஆல்‌ என்று இலையைச்‌ சொல்லாது” ‘ என்று ஜீயரரருளிச்‌ செய்ய; பாலராய்‌ ஒத்த பருவத்தாரோடே க்ரீடா ஸக்தராயிருக்‌கிற கத்தாடை நாயன்‌ ”ஜீயா! ஆலாங்கட்டி யென்‌றன்றோ வ்யவஹாரம் ‘” என்ன, அவரை யழைத்து மடி மேலே வைத்துக்‌ கொண்டு நீர்‌ தொழு குலமன்றோ?” என்று உகந்தருளி தர்சந ப்ரவர்த்தகராம்படி நன்றாக வாழ்த்தி யருளினார்‌

(மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-ஆல் -நீரும் இடமும்-
தண்ணீரின் மேல் இருக்கிற ஆல் என்னுதல்-ஆலின் மேலிடத்து என்னுதல்-பவனான உண்டாகும் நிலை -யில் உள்ள ஆலின் இலை – ஆல்-நீரை சொல்லுமோ -ஆலங்கட்டி -கந்தாடை ஆண்டான் சொல்ல பெரிய ஜீயர் உகந்து அருளினார் –
)

அப்பிள்ளை, ‘அப்பிள்ளார்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்தல்‌
அநந்தரம்‌ அப்பா சகுந விருத்தமென்று மீண்டு தண்டன்‌ ஸமர்ப்பிக்க, ஜீயரும்‌ இவ் விடத்திலே ஒரு அதிசயமுண்டாக வேணும்‌, ஒரு நல்ல நாளிலே பயணப் படுத்துவோம்‌” என்று உகப்‌புடனே அருளிச்‌ செய்ய, இது கேட்டுப்‌ பெரியோர்கள்‌ ‘“ஸ்ரீஸூக்தி யில்‌ மோகமாவது ஒன்றுமில்லையே: ஏதோ அதிசயமுண்டாம்‌’ என்று ஒருவருக் கொருவர்‌ அருளிச் செய்து கொண்டிருக்க, அவிளம்பேந அக்காலத்தே அப்பிள்ளை அப்பிள்ளார்‌ இருவரும்‌ ஜீயர்‌ திருவடிகளீலே ப்ராவண்யமின்றிக்கே பெருமாளை ஸேலிக்க வேணு மென்று திருக் காவேரிக் கரையிலே வந்திறங்கி இரண்டு நாளிருந்து ஜீயருடைய ஸ்த்திதிகதிகளையும் அவருடைய வாக்‌ சாதுர்யத்தையும்‌,ஆராய்ந்து கந்தாடை யண்ணன்‌ முதலானோர்‌ ஆஸ்ரயித்த படிகளையும்‌ ஸ ப்ரகாரமாகக் கேட்டு ‘இதுவென்‌”என்று விஸ்மிதராயிருந்து, அப்பிள்ளை அப்பிள்ளாரை யழைத்து -இது ஸம்பவிக்குமோ” என்று கேட்க , இவர்‌: ‘“எறும்பி யப்பா ஸகல ஸாஸ்த்ர வல்லபர்‌, அதிக்ருத பரமார்த்தர்‌; அவரிப்படிச்‌ செய்யார்‌; நாம் விசாரித்து வருகிறோம்‌” என்று போய்‌ மடத்துக்கு ஸமீபத்திலே யிருந்து, தமக்கு அந்தரங்கராய்‌ ஸமர்த்தரா யிருப்பாரொவரை யமைத்து ”நீர் போய்‌ அப்பிள்ளான்‌ வந்திருக்கிறான்‌ ” என்றறிவியும்‌ -அந்த எறும்பியப்பாவே யாமாகில்‌ உடனே எழுந்தருளுகிருர்‌; அன்றிக்கே மற்றொருவராகில்‌ அப் பிள்ளானை யாரறிவார்‌? என்கிறார் என்று விட, அவர்‌ சென்று எறும்பியப்பாவைக்‌ கேட்டறிந்து கொண்டு தண்டனிட்டு – அப்பிள்ளார்‌ வத்து தெருவிலேயிருக்கிறார்‌, தேவரீருக்குத்‌ தெரிவிக்கச்‌ சொன்னார்‌” என்ன. அப்பா, ௨கந்‌தருளி “அவருக்கு நல்விடிவு” என்‌றருளிச்‌ செய்து கொண்டு தாம்‌ புறப்பட்டெழுந்தருள, அப்பிள்ளார்‌ அவருடை புஜ மூலங்களிலே யிருக்கிற சிஹ்நங்களைக்‌ கண்டு ஒரு தெளிவு பிறந்து அவர்‌ திருவடிகளிலே தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி நிற்க, அப்பா குசல ப்ரச்நங்களுடன் ஆதரித்து இருவரும் கூடி ஒரு திண்ணையிலே இருந்து பெருமாள் தம்மை உஜ்ஜீவிப்பிக்க ஜீயர்‌ திருவடிகளிலே சேர்த்த ப்ரகாரத்தை முந்துற அப்பா அருளிச் செய்யக்‌ கேட்டுத்‌ தெளிந்து ஸ்வாத்மோஜ்ஜீவநபரராய்‌ , அப்பாவை அநுவர்த்தித்து, அப்பிள்ளை முதலானார்‌ திருக்காவேரிக் கரையிலிருக்கிற செய்தியையும் அவ்விடத்தே அப்பா எழுந்தருள வேணும் என்னும் காரியத்தையும் அறிவிக்கக் கேட்டருளி திரும்பி மடத்துக்கு எழுந்தருளி இச்செய்தியை வான மாமலை ஜீயருக்கு அறிவித்து நாம் அவர்களைத் திருத்திக் கொண்டு வரலாம் படி கடாஷித்து அருள வேண்டும் என்று புறப்பட்டு அப்பிள்ளாரைக்‌ கூட்டிக்‌ கொண்டு அப்பிள்ளை பாடே எழுந்தருளி அவருக்கு ஹிதமருளிச்‌ செய்து ஆஸ்திக்யாதரங்கள்‌ விஞ்சி வரப்‌ பண்ணிக்‌ கொண்டிருக்க, வானமாமலை ஜீயர்‌, ஜீயர்‌ ஸந்நிதியிலே எழுந்தருளி, ”அப்பிள்ளை அப்பிள்ளார்‌ என்பவர்கள்‌ ப்ரஸித்தர்‌ அவர்கள்‌ திருக்காவேரிக்கரையிலே இரண்டு நாளாக விருக்கிறார்‌கள்‌; அவர்களுக்கு

ஈஸ்வரஸ்யஸ்ய ஸெளஹார்தம்‌ யத்ருச்சா ஸுக்ருதம்‌ ததா விஷ்ணோ. கடாக்ஷமத்வேஷமாபிமுக்யம்ச ஸாத்விகை: ஸம்பாஷணம்‌ ஷடேதாநி.-யன்றோ? ஸாத்விக ஸம்பாஷணம்‌ ப்ராப்தமாயிற்று- எறும்பியப்பா அங்கே எழுந்தருளியிருக்கிறார்‌; இப்படி ஆசார்ய ப்ராப்தி ஹேதுக்களெல்லாமுண்‌ டானபடியினாலே தேவரீர்‌ திருவடிகளிலே ஸம் பந்தம்‌ லபிக்கிறது; ஆத்மலாபாத்பரம்‌ கிஞ்சிதத்யத்‌ நாஸ்தி” என்‌றன்றோ தேவரீர்‌ திருவுள்ளமிருக்கும்‌; ஆசார்யன்‌ இருவருக்கும்‌ உபகாரகன்‌ என்றன்றோ இருக்கிறது; அவர்கள்‌ விஷயத்தில்‌ இரங்கி யருள வேணும்‌; அப்பாவுடையவும்‌ அடியேனுடையவும்‌ மநோ ரதம்‌ நிறைவேறும்படி ‘ஸூபேந மநஸாத்யாதம்‌” என்கிறபடியே திருவுள்ளம் பற்ற வேணும்‌’ ‘ என்று விண்ணப்பஞ்‌ செய்ய, ஜீயரும்‌ “எம்பெருமானார்‌ அப்படியே திருவுள்ளமாயருளினாய் , ஒருவருக்கு எம்பெருமனார்‌ திருநாமம்‌’* என்று அருளிச்‌ செய்தருள, வானமாமலை ஜீயர்‌ ௨கந்தருளி *அவர்களை எதிர்‌ கொண்டு ஆதிரிப்பதற்காக அடியேனுக்கு விடை ஸாதிக்க வேணும்‌”என்ன அப்படியே அனேகம்‌ ஸ்ரீவைஷணவர்களைக்‌ கூட்டி அனுப்பி யருளப்‌ புறப்பட்டு எழுந்தருளா நிற்க, இவர்கள்‌ வருகிற செய்தியை அப்பிள்ளாருக்‌கறிவிக்க , அவரெழுந்திருந்து அந்த கோஷ்டியைக்‌ கண்டு ஸாஷ்டாங்க ப்ரணாமம்‌ பண்ணி அஞ்சலி ஹஸ்தராய் வைத்த கண்‌ வாங்காதே ஸேவித்துக் கொண்டு -தமக்கத்யந்த மபிமதமாயிருக்கிற பட்டுப் பச்சை வடத்தை இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ கையிலே கொடுத்து நீங்கள்‌ அதி த்வரையாகச் சென்று அவர்களெழுந்தருளுகிற வழியிலே அகலமெல்லாம்‌ படுத்து அத்தை நாலண்டையும்‌ எல்லாரு மெழுந்தருளும்படி பண்ணி, அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஸ்ரீபாதரேணுவை ஸாவதாநமாகக்‌ கொண்டு வரச்‌ சொல்லி விட்டு, அடைக்காய்த் தட்டும்‌ பழத் தட்டும்‌ மத்யையில்‌ வைத்து எறும்பியப்பாவை முன்னிட்டுக்‌ கொண்டு எதிரே சென்று ஜீயர்‌ திருவடிகளிலே தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி ஸ்வ ஜதங்களை யெல்லாம் காட்டி, அடியோங்களெல்லாரையும்‌ கற்றுவிப்பித்தருள வேணுமென்று ஸ்ரீபாத ரேளியை எல்‌லோரும்‌ சிரஸா வஹித்து நிற்க,

ஜீயர்‌ குசல ப்ரச்நம்‌ செய்தருளி உபலாளித்‌தருளி பெருங்கூட்டமாக அண்ணன்‌ திருமாளிகைக் கெழுந்தருள, அண்ணன்‌ எதிர் கொண்டு ஆதரித்தருளி உள்ளே அழைத்துக்‌ கொண்டு சென்று திருவோலக்கமாயிருந்து, தாம்‌ முன்னிருந்த இருப்பையும்‌, நிர்ஹேதுகமாக எம்பெருமானார்‌ க்ருபையால்‌ வந்த மஹா லாபத்தையும்‌, ஜீயர்‌ யதிபுநரவதார மென்பதையும்‌ பஹு முகமாக அருளிச் செய்யக் கேட்டுத்‌ தாம்‌ ஜீயர்‌ திருவடிளை ஸேவிக்க த்வரிக்க, அப்படியே திரு முன் காணிக்கையையும்‌ பட்டுப்‌படாவளிகளையும்‌ பச்சையையும்‌ முன்னே பிடித்துக் கொண்டு மடத்‌திலே சென்று திருமலை யாழ்வாரிலே ஜீயர்‌ கோஷ்டியாக எழுந்த ருளியிருக்கக்‌ கண்டு மிகவும்‌ ஈடுபட்டு,
அபூர்வ ருப ஸம்ஸ்தாதம்‌ தேஜஸாம்‌ ராஸ்மி மூர்ஜிதம்‌‘-எங்கும்‌ கண்டறியாத நிறத்தோடு கூடிய அவயவ ஸந்நிவேசமுடையவரும்‌ த்ருடமான தேஜோ ராசி போலிருப்பவருமானவரை என்று கொண்டு திருவடிகளிலே தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி உபஹாரங்‌களையும்‌ ஸமர்ப்பிக்கத் தக்க மரியாதையுடனே ஸமர்ப்பித்து நிற்க, ஜீயர்‌ அவர்களுடைய வைதுஷ்யங்களுக் கநுரூபமாகச்‌ சிறிது ஸ்ரீஸூக்கிகளை யருளிச்‌ செய்ய, அவர்களும்‌ வித்தராய்‌ ஸமாஸ்ரயணத்துக்கு ப்ரார்த்தித்து த்வரைப்பட, தாப புண்ட்ர:’ இத்யாதிப்படியே பஞ்ச ஸம்ஸ்காரங்களையுஞ்‌ செய்தருளி கோயிலுக்குப்‌ புறப்பட்டு ‘தேவீ கோதா’ இத்யாதிப்படியே அவர்களோடே மங்களாசாஸனஞ்‌ செய்தருளி மீண்டு மடத்திலே யெழுந்தருளி ததீயாராதநமும்‌ நடந்து, ‘குரோருச்சிஷ்டம்‌ புஞ்ஜீத, போனகஞ் செய்த சேடந்‌ தருவரேல்‌ புனிதமன்றே-என்கிறபடியே ஸுபாவநமான தளிகை ப்ரஸாதத்தையும்‌ ப்ரஸாதித்தருளி திருவடிகளுக்கு அந்தரங்கராக்கி உஜ்ஜீப்பித்‌ தருளினார்‌. அப்பா திருத் தமப்பனா எறும்யியிலே அப்பாவைக்‌ காண வேணுமென்று ஜீயருக்குக் குறித்து வரக் காட்ட, பின்பு ஜீயர் தாமே அப்பாவை ஊருக்குப்‌ போம்‌” என்று விடை கொடுக்கப்‌ பெரு வருத்தத்தோடே ஊரேற எழுந்தருளினார்‌.

பெரிய பெருமான்‌ உத்தம நம்பியைத்‌ திருத்துதல்‌
பின்பொரு நாள்‌ ஜீயர்‌ பெருமாளை மங்களாசாஸநம்‌ பண்ண எழுந்தருளினவளவிலே ஏகாந்த ஸேயையாய்‌ திருத்திரை பரிமாறித்‌ திருவாராதநங்‌ கொண்டருளா நிற்க, இவரும்‌ உள்ளே சென்று திருவடி தொழுது நிற்க, அவ்வளவிலே திருவாலவட்டம்‌ ஸேவித்துக்‌ கொண்டிருந்த உத்தமநம்பியும்‌,-வெள்ளிப் பெருமலைக் குட்டரான ஜீயரூடைய “க்ஷீர ஸங்காத கெளரம்‌‘ என்றபடியே -பாலின்‌
நீர்மை போலிருக்கிற விக்ரஹ வைலஷண்யத்தைக்‌ கண்டு பாப வாஸனையாலே அந்யதா சங்கை பண்ணி ஜீயரை -நெடும்போதிருக்க வேண்டா”’ என்ன, இவரும்‌ அபிப்ராயமறிந்து ‘மஹாப்ர
ஸாதம்‌”” என்று புறப்பட்டு மடமே யெழுந்தருளினார்‌. அவ்வளவிலே திருவால வட்டம்‌ ஸேவித்துக்‌ கொண்டிருந்த உத்தம நம்பியும்‌ தரங்கிப்‌ பலகணிக் கதவிலே சாய்ந்திருக்க, –அரவினணை மிசை மேய மாயனாரான பெரிய பெருமாளும்‌ இவர்‌ கனாவில் வந்து,’திருப் பவளச்‌ செவ்வாய்‌ முறுவல்‌ தோன்ற,-௮ணி விளங்கு முயர் வெள்ளை யணையான திருவநந்தாழ்வானைத்‌ தொட்டுக் காட்டி, ‘ இவர் கிடீர்‌ ஜீயராக வந்து, அவதரித்தருளினார்‌; அவருடைய நிறம்‌ வெளுப்பு–விஸ்வஸித்திரும்‌” எனறருளிச் செய்ய, அவரும்‌ அத்யந்தம்‌ பீதராய்‌,அப்போதே மடமேற வந்து ஜீயர்‌ திருவடிகளை ஸேவித்து இச்‌ செய்தியை விண்ணப்பஞ் செய்து அபராத ஷாமணம்‌ பண்ணிக்‌ கொண்டு திருவடிகளுக் கந்தரங்கராய்ப்‌ போந்தார்‌, அது பற்றி-அனந்தாவதாரர்‌ வர யோகி யென்பது தென்னரங்கன், மனந்தானறியும்‌ மற்றாரறிவார்‌ “என்று பின்புள்ளாரும்‌ சொல்லும்‌ படி யாயிற்று,

ஒரு ஸாத்விகைக்கு ஜீயர் தமது நிஜாகாரத்தைக்‌ காட்டி யருளல்‌
அநந்தரம்‌ ஸாத்விகைகளில்‌ சடகோபக் கொற்றி யென்னும்‌ திருநாமத்தை யுடையளாயும்‌ ஆச்சியார் பாடே திவ்ய ப்ரபந்தம்‌ நாலாயிரத்வையும்‌ ரஹஸ்யங்களையும்‌ அதிகரித்தவளாயும்‌ திருவடிகளுக்கு மிகவும்‌ அந்தரங்கையாயு மிருப்பாளொரு அம்மையார்‌ ஒரு நாள்‌ திருவோலக்கங் குலைந்த வநந்தரம்‌ மத்யாஹ்நத்திலே திருமலை யாழ்வாராகிற வ்யாக்யாந மண்டபத்திவ ஏகாந்தமாகத்‌ திருக் காப்பு சேர்த்துக்‌ கொண்டு தக்க மா மணி வண்ணனடியிலே வைத்த சிந்தையராய்‌ எழுந்தருளி யிருக்க, அப்போது கதவுப்‌ புரையிலே ஸேவிக்குமளவில்‌ ஆயிரம்‌ பைந் தலையனான திருவநந்தாழ்வானாக ஸேவை ஸாதிக்கக்‌ கண்டு திடுக் குற்றிருக்க,ஜீயர்‌ அத்தைக் கண்டு திருக் காப்பு நீக்கிக்‌ கொண்டு, புறப்பட்டு வந்து சிரித்தருளி அம்மையாரை நடந்தபடி யென் னென்று கேட்டருள, அவள்‌ அப்போது ஸேவித்த படியை விண்ணப்பஞ்‌ செய்ய, ‘ஆகில்‌ ஒருவர்க்கும்‌ சொல்லாதே கொள்‌” என்று நியமித்தருளினார்‌. இப்படி ஜீயர்‌ அவதார விசேஷ மென்பது எல்லார்க்கும்‌ ப்ரத்யஷமிறே –

ஜீயர்‌ வ்யாக்யானங்கள்‌ அருளிச்‌ செய்தது.
பூத்வா பூயோ வரவர முநிர்‌ போகிநாம்‌ ஸார்வபெளம
ஸ்ரீமத் ரெங்கேவஸதி விஜயீ விஸ்வ ஸம்ரக்ஷணார்‌த்தம்‌”
[ஆதி சேஷன்‌ உலகைக்‌ காப்பதற்காக மறுபடியும்‌ மணவாளமாமுனிகளாக அவதரித்து ஸ்ரீரங்கத்தில்‌ மிகவும்‌ மேம்பட்டு வாழ்கிறார்‌] என்கிறபடி ஜகத் ரஷணார்த்தமாக அவதரித்தவராகையாலே ஜகத்தை யெல்லாம்‌ உஜ்ஜீவிப்பிக்கும்படி ஸகல ஜீவாதுவாகப்‌ பிள்ளை லோகாசாரியர்‌ அருளிச் செய்த ரஹஸ்யங்களுக்கெல்லாம்‌ வ்யாக்யாநம்‌
“செய்தருள்வதாகத்‌ திருவுள்ளம்‌ பற்றி
ரஹஸ்ய க்ரந்த தத்வேஷு ரமயாமாஸ தத் ப்ரியம்‌ |
வாக்ய ஸங்கதி வாக்யார்த்த தாத்பர்யாணி யதா ச்ருதம்‌ ॥
வ்யாகுர்வந்நேவ பூர்வேஷாம் வர்த்தமாந: பதே பதே |
ஸ்வமநீஷாகதாம்‌ நைவ கல்பயந்‌ கிஞ்சிதப்யயம்‌ ॥
குப்தாம ஸர்வைர் குருத்வேந கூடாநர்த்தாந தீதிஸத்‌ |
தேஸிகாநாம்‌ நிடந்த்ரூணாம்‌ தர்‌ | ஸ்யங்நேக கண்டதாம்‌. ॥
வாக்யாலங்கார வாக்யாநி வ்யாசக்ஷாணோ விசஷண: |
ஸுதீய:ஸ்வாதயாமாஸ;ஸ்வ ஸ்வ ரூபம்‌ ஸுதுர்க்ருஹம்‌ ॥

இந்த மணவாள மாமுனிகள்‌ முன்னோர்‌ மொழிந்த முறைகளில்‌ நிலை நின்றவராய்‌ ஒவ் வொரு சொல்லுக்கும்‌ தந் தெஞ்சில்‌ தோற்றினதே சொல்வதைச்‌ சிறிதும்‌ பண்ணாமல்‌ ஆசார்ய முகமாய்க் கேட்ட அர்த்தாநுகுணமாக வாக்யங்கள்‌, ஸங்கதிகள்‌ வாக்யார்த்தங்கள்‌ பாவார்த்தங்கள்‌ இவற்றை விசேஷமாக அருளிச் செய்து கொண்டு, ஸகல பூர்வாசாரியர்களாலும்‌ அர்த்த கெளரவம்‌ பற்றி மறைத்து வைக்கப்பட்ட ரஹஸ்யமான விசேஷார்த்தங்கலையும்‌ தமது க்ருபையால்‌ வெளியிட்டார்‌. இப்படி. ரஹஸ்ய க்ரந்தங்களில்‌ ஈடுபட்டவர்களை அவற்றின்‌ தத்வார்த்தங்‌களில்‌ மகிழச் செய்தார்‌. மேலும்‌ வேதங்களென்ன வேதாந்தங்‌களான உபநிடதங்களென்ன, இவற்றை யுட் கொண்டு பேசப்‌ பட்ட ஸ்ம்ருதிகளென்ன, ஸ்ரீராமாயணாதி இதிஹாஸங்கள் என்ன , ஸ்ரீபாஞ்சராத்ரமென்ன, இந்த ப்ரமாணங்களால்‌-பல க்ரந்தங்களை: யருளிச்‌ செய்துள்ள ஆசாரியர்களின் ஒருபடிப்பாட்டைக்‌ காட்டியருளி, நிபுணராய்‌ ஸ்ரீவசன பூஷண சூர்ணிகை வாக்யங்களை வியாக்யானம்‌ செய்தருளுமவராய்‌ அறிய வரிதான ஆத்ம ஸ்‌வருப யாதாத்ம்யத்தை ஞானிகளுக்கு அநுபவிப்பித்து மகிழ்வித்‌தார் ] என்றிப்படி ப்ரதமம்‌ தத்வ ரஹஸ்யங்களுக்கு வ்யாக்யாநம்‌ செய்தருளி அநந்தரம்‌ அசேஷார்த்த ப்ரதிபாதகமுமாய்‌ ஆழ்‌ பொருள்களை யுமுடைத்தான ஸ்ரீவசனபூஷணத்திற்கு மெச்சும்‌
வியாக்கியை யென்று விலக்ஷண பரிக்ரஹமாம்படி வயாக்யாநஞ்‌செய்தருளி, தாமும்‌
ஸ்ரீ வசன பூஷணமாந் தெய்வக் குளிகை பெற்றோம்‌
பார் தன்ளைப்‌ பொன்னுலகாப்பார்க்க வல்லோம்‌-தேரில் தமக்‌
கொப்பாரினியா ருலகாசிரியனருள்‌
தப்பாம லோதிய பின்‌ தான்‌

என்று இதினுடைய வைபவத்தை அநுஸந்தித்துப்‌ ப்ரீதராயருளினார்‌.-முதலிகளு மப்படியே
வாக் பூஷணம்‌ வகுள பூஷண ஸாஸ்த்ர ஸாரம்‌
யோ மாத்ருஸாஞ்ச ஸுகமம்‌ வ்யவ்ருணோத்தயாளூ |
ரம்யோ பயந்த்ரு முநயே யமிநாம்‌ வராய
தஸ்மை நமஸ் ஸமதமாதி குணார்ணவாய

(வகுளாபரணரான நம்மாழ்வாரின்‌ அருளிச் செயலான திருவாய்மொழி எனும்‌ சாஸ்தரத்தின்‌ ஸாரமான ஸ்ரீவசனபூஷணத்தை மந்தர்களான நம் போல்வாருக்கும்‌ எளிதில்‌ அறியும்படி எந்த மணவாளமாமுனிகள்‌ விவரித் தருளினாரோ, சமம்‌, தமம்‌ முதலான கல்யாண குணக் கடலாய்‌ யதி ஸ்ரேஷ்டரான அம் மணவாள மா முனிவருக்‌கு வணக்கம்‌) என்றும்‌,
மேவுந் தவத்து வர யோகி யிட்ட வியாக்கியையால்‌
தேவுந் திகைக்கும்‌, நற்றீந் தத்துவ ரகஸ்யத்துடனே
தாவும் பெரும்‌ புகழாசாரிய விதயத்திற்குமா .
தாவும்‌ பொருள் செறி சொல் லாபரணச்‌ சுருதிக்குமே
-என்றும்‌ இப்படி உபகரித்தமையை அநுஸந்தித்தார்கள்‌.

அநந்தரம்‌ ஸ்ரீவசனபூஷணத்திற்கு அடியாய்‌ சரம பர்வ நிஷ்‌டா கிரமங்ளை ப்ரதிபாதிக்கிற இராமானுச நூற்றந்தாதிக்கும்‌ ஞான ஸார ப்ரமேய ஸாரங்களுக்கும்‌ வியாக்யாளஞ்செய்தருளி (மற்றை ரஷஸ்யங்களுக்கும்‌ ஈட்டுக்கும்‌ ப்ரமாணத் திரட்டு ஸங்க்ரஹித்து அருளியும்‌ கீதைக்கு தாத்பர்ய தீபமென்றொரு வ்யாக்யானமும் இட்டருளி உடையவரருளிய நித்ய திருவாராதன க்ரமத்‌தையும்‌ ஸுக்ரஹமாகவும்‌ ஸுவ்யக்தமாகவும் ஸர்‌வவாத்மோஜ்‌ஜீவந தனமாகச்‌ செய்தருனாரிறே )திருவாய்மொழி முதலான அருளிச்‌ செயல்களை யெல்லாவற்றையும்‌ ப்ரவர்த்திப்பித்து, தர்‌சநத்துக்குப் பண்டில்லாத அதிசயங்களையும்‌ உண்டாக்கிக்‌ கொண்டு எழுத்தருளி யிருக்கிற காலத்திலே, திருவாய்மொழி விஷயமாக திருப் பவளத்தாலே ஏதேனுமொரு ப்ரபந்தம்‌ அருளிச் செய்ய வேணும்‌’ என்று முதலிகளெல்லாரும்‌ அபேஷிக்க, திருவாய்மொழி நூற்றந்தாதியை யருளிச்‌ செய்து தத்வ த்ரயத்திற்கும்‌ ஈட்டுக்கும்‌ ப்ரமாணத் திரட்டு ஸங்க்ரஹித்‌தருளி ஆசாரியர்களுடைய உபதேச பரம்பரா ப்ராப்தமாய்‌ வந்த தர்சந தாத்பர்யங்களை யெல்லாம்‌ உபதேச ரத்தின மாலை என்கிற
ப்ரபந்த முகேந ப்ரதிபாதித்து, உடையவர்‌ நித்யத்தை ஸுக்ரஹமாகவும்‌ பண்ணி யருளி இப்படி ஞான வர்த்தகராய்‌ எழுந்தருளி யிருக்கிற காலத்திலே

தம்முள்‌ விரோதப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்களைத்‌ திருத்தியது.
இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அஹங்காரத்தாலே அந்யோந்யம்‌ விவாதம்‌ பண்ணிக் கொண்டு போர, அப்போது நிஹீத ஜந்துக்‌களுக்கு விவாதமுண்டாக (நாய்களுக்குள்‌ சண்டை மூள), ஜீயர்‌
அத்தைக்‌ கண்டு ‘ நீங்களும்‌ இவர்களைப் போல ஸ்ரீவசன பூஷணாதிகாரிகளோ அஹங்காரம்‌ நடையாடி விவாதம்‌ பண்ணுகைக்கு–என்ன, அவர்கள்‌ இத்தைக்‌ கேட்டு லஜ்ஜா புரஸ்ரமாக அதில்‌
நின்றும்‌ நிவ்ருத்தரானார்கள்‌.

பொருளில்‌ பற்றின்மை
பின்பு வட தேசத்தினின்றும்‌ சில திரு நாமதாரிகள்‌ சில த்ரவ்வம்‌ மடத்திற்கு வரக்காட்ட, அத்தை நிரூபித்துப்‌ பார்த்த வளவில்‌ அநுகூலமன்‌றியிலே யிருக்க, அது த்யாஜ்யமென்று கழிக்க, அநந்தரம்‌ மடத்துக்கு ஷேத்ரமுண்டாய்‌ (விளை நிலம்‌ சேர்ந்ததால்‌) தத்‌த்வாரா வந்த குடிகள்‌ மடத்தில்‌ புஜித்துப் போக அவ்விடம்‌ கோ மயத்தாலே சுத்‌தி பண்ணி ஈரமாயிருக்க, யாத்ருச்சிகமாகப்‌ புறப்பட்டருளினவர்‌ அத்தைக் கண்டு ஈரமேதென்று கேட்டருள,அங்கிருந்தவர்கள்‌ அக் காரணத்தை விண்ணப்பஞ்‌ செய்ய அப்போதே அந்தப்‌ பங்கை பெருமாளுக்கு சமர்ப்பித்து அந்தக்‌ கை யோலையையும்‌ ஸ்ரீபண்டாரத்திலே அர்த்த ராத்திரியி?லே போகவிட்டருளி எழுந்தருளி யிருக்கிற காலத்திலே,

கிழட்டணிலாகிலும்‌ மரமேற வல்லதன்றோ?
அதி வ்ருத்தையாயிருப்பாள்‌ ஒரம்மையார்‌ ஒரு நாள்‌, ராத்திரி மடத்தை விட்டுப்‌ போக மாட்டாமையாலே சயநிக்க அவளைக்‌ கண்டு அர்த்த ராத்திரியில மடத்தினின்று புறப்பட விட்டு(கேட்டவர்களுக்கு) “கிழட்டாணிலாகிலும்‌ மரமேற வல்ல தொன்றன்றோ? உகவாதார் அபவாதம்‌ சொல்ல இது போறுமே’-என்‌றருளிச்‌ செய்து இப்படி யோக்யதை யில்லாத விடத்திலும்‌-பிணமெழுந்து கடிக்கிறதோ!’ வென்று அதி சங்‌கையும்‌ போரா நிற்க –

சிலருக்கு ஸ்வரூப சிக்ஷை
ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ தூதுளங் கீரை கொண்டு வந்து தளிகைக்குச்‌ செய்கிற (தளிகைக்குச்‌ செய்தலாவது-தளிகைக்கு உபயோகமாகக்‌ கறியமுது திருத்துதல்‌ முதலியன செய்தல்‌ )அம்மையார்‌ கையிலே ‘இத்தைப் பாங்காச்‌ செய்து ஸமர்ப்பியும்‌” என்று கொடுக்க, அவர்‌ அத்தை உதாசித்துச்‌ செய்யாமலிருக்க, பின்பு அமுது செய்தருளும் போது அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌ அம்மையார்‌ முகத்தைப் பார்க்க, ஜீயரும்‌ அத்தைக்‌ கண்டருளி இதென்னென்று கேட்டருள அவர்‌ உண்மையை விண்ணப்பஞ் செய்ய அத்தைக் கேட்டருளி அம்மையாரை ‘“ஆறு மாஸம்‌ தளிகைக்குப் பண்ண வேண்டாம்‌” என்று வெறுத்‌தருளிப்‌ பின்பு பாகவதாவமானம்‌ பண்ணினதற்கு ஷாமணம்‌ பண்ணுவித்து பின்பு பூர்வம் போலே நியமித்தருளி நடந்து செல்லுகிற நாளிலே!

ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ தனி வழி வரக்‌ கூடாது :
வரந் தரும்‌ பெருமாள் பிள்ளை ”ஜீயர்‌ திருவடிகளை ஸேவிக்க வேணும்‌” என்ற ஆதாரதிசயத்தாலே தனித்துப் புறப்பட்டு அதி த்‌வரையுடனே வந்து திருவடிகளிலே ஸேவிக்க, இப்படி ஸ்ரீவைஷ்ணவ ஸஹவாஸ மின்றிக்கே தனியே ஸாஹஸித்து வருவதே,!”என்று வெறுத்து அவரை ஆறு மாஸம்‌ புறத்திண்ணையிலே யிருக்கும்படி உபேஷித்து பின்பு அங்கீ கரித்தருளி ஏதத்‌விஷயமாக
1-பஷிதம்‌ ஹி, விஷம்‌ ஹந்தி ப்ராக்ருதம்‌ கேவலம்‌ வபு: |
மந்த்ரெளஷத மயீ தத்ர பவத்யேவ ப்ரதிக்ரியா,
தர்‌ஸந ஸ்பர்ஸ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷ ஸ்ரவணாதபி |
அப்ரதிக்ரிய மாத்மைவ ஹந்யதே விஷயைர்‌ த்ருடம்‌ ॥
இத்த முத்கோஷயந்‌ தோஷாந் விஸ்தரேண ஸாுதுஸ்தராந் |
தூரம்‌ நிர்வாஸ யாமாஸ வாஸநா விஷயேஷ் வஸெள ॥
என்றும்‌-
உட் கொள்ளப் பட்ட விஷம்‌ ப்ரக்ருதமான உடலை மட்டும்‌ அழியச் செய்கிறது; அவ் விஷயத்தில்‌ ‘மந்த்ர ரூபமாயும்‌ ஒளஷத ரூபமாயும்‌ பரிஹாரம்‌ இருக்கிறது ஸித்தம்‌, -ஜீவாத்மாவோ(அவற்றை) காண்பதாலும்‌, தொடுவதாலும்‌ அவற்றுடன்‌ கூடுவதாலும்‌ அவற்றைப்‌ பிரிவதாலும்‌, கேட்பதாலும்‌-பரிஹாரம்‌ பண்ண வொண்ணாதபடி விஷயங்களால்‌ நன்றாக அழிக்கப் படுகிறது- இந்த மணவாளமாமுனிகள்‌ எவ் விதத்திலும்‌ நிவர்‌த்திக்க முடியாத விஷய தோஷங்களை விரிவாக நன்றாக வெளிக் காட்டி ,அவற்றில்‌ வாஸனையை மீண்டும்‌ அணுக வெண்ணாபடி, ஸ மூலமாக
போக்கினர்‌)
2, நிதாநம்‌ ஸர்வ தோஷாணாம்‌ நிதாநம்‌ க்ரோத மோஹயோ; |
மாந ஏவ,மநாம் ஸ்யேஷாம்‌ நித்ய முந் மூல யத்யஸெள
॥ என்றும்‌
(ஸ்வாபிமாநமே (அஹங்காரமே) எல்லா தோஷங்களுக்கும்‌ காரணம்‌-கோப மோஹங்களுக்கும்‌ காரணம்‌,இவ் வபிமானமானது சேதநருடைய மதத்தை எப்போதுமாக அடியோடு அழித்து விடுகிறது. )

3-அர்த்த ஸம்பத்‌ விமோஹாய விமோஹோ நரகாயச |
தஸ்மா தர்த்த மார்த்தாக்யம்‌ ஸ்ரேயோர்த்தீ தூரதஸ் த்யஜேத்‌ ॥
யஸ்ய தர்மார்த்த மர்த்தேஹா தஸ்ய நீஹைவ ஸோபநா |
ப்ரஷாள நாத்தி பங்கஸ்ய தூராத ஸ்பர்ஸநம்‌ வரம்‌
॥ என்றும்‌
(பொருட்‌ செல்வமானது மோஹத்‌துக்குக்‌ காரணமாகிறது. மோஹம்‌ நரக ஹேதுவாகறது. ஆகையால்‌ நன்மையைக் கோருபவன்‌ அநர்த்தம்‌ என்ற பெயருடைய செல்வத்தைக் கிட்ட வொண்ணாமல்‌ விலக்கக் கடவன்‌’ எவனுக்குத்‌ தருமஞ் செய்வற்காகப்‌ பொருளில்‌ ஆசை யுண்டாகிற்றோ அவனுக்குப்‌ பொருளில்‌ ஆசை யில்லாமையே நல்லது. சேற்றைக்‌ காலிலிருந்து அலம்புவதை விட, தூர நின்று அதைக் காலில் பட விடாதிருப்பது நலம்‌.)

4–ப்ருத்யோஹம்‌ விஷ்ணு பக்தாநாம்‌ ஸாஸிதாரஸ் தஏவமே |
க்ரேதும்‌ விக்ரேதுமபிமாமீ ஸதேதே யதேப்ஸிதம்‌ ॥
இதி யஸ்ய மதம்‌ நித்ய மயமேவாத்ம வித்தம: ॥
ஸ்வரூப ஸித்திஸ் ஸர்வேஷாம்‌ ஸ்வோஜ் ஜீவந மபி த்ருவம்‌ |
ஸ்ரேயஸீ தேஸிகாநாஞ்ச ஸித்யதி ப்ரத் யுபக்ரியா ॥
என்றும்‌
அடியேன்‌ ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு தாஸ பூதன்‌. அவர்களே அடியேனுக்கு நியந்தாக்கள்‌-அவர்கள்‌ அடியேனை தங்களிஷ்டப்‌படி விற்கவும்‌ வாங்கவும்‌ உரியவர்கள்‌. இப்படி எத்த சேதனனுக்கு அத்யவஸாயம்‌ நித்தியமாய்ச்‌ செல்லுமோ அவனே ஆத்ம ஸ்வரூப முணர்ந்தவரில்‌ முதல்வன்‌. இதனால்‌ எல்லாருக்கும்‌ ஆத்ம ஸ்வரூபம்‌ நிலை பெறுகிறது.-தமதுஜ்தீவநமும்‌ ஸித்திக்கிறது, ஆசாரியர்‌களுக்கும்‌ மேலான ப்ரத்யுபகாரமானது ஸித்திக்கிறது.

5-ஆசார்யவத்‌ தேவதாவத்‌ மாத்ருவத்‌ பித்ரு வத் ததா
த்ரஷ்ட வ்யாஸ் ஸந்த இத்யா திர்த்ருஷ்ட: ஸாஸ்த்ரேஷுவிஸ்ராத்‌ ॥
என்றும்‌
ஆசார்யனைப் போலவும்‌ தேவதையைப்‌ போலவும்‌,தாயைப்‌ போலவும்‌. தந்தையைப்‌ போலவும்‌ ஸத் புருஷர்கள்‌ அபி மானிக்கத் தக்கவர்கள்‌ என்று இது போன்ற நல் வழிகள்‌ சாஸ்தரங்‌களில் விரிவாகக்‌ காட்டப்பட்டுள்ளன.,

6-ஸுஸீலஸ் ஸுலபஸ் ஸ்வாமீ ஸ்ரீமாநபிக் க்ருபாநிதி:
அணோரபி மஹத் த்வேஷா தத்த் யந்தாம்‌ யாதி விக்ரயாம்
பாவநீ மஹதாம்‌ த்ருஷ்டி: ப்ரச்யுதா நபி மோசயேத்‌ |
அமர்ஷ; புநரல் போபி நித்யாநபி நிபாதயேத்‌ ॥ ._
ப்ரியாத்‌ ப்ரிய தரம்‌ சவ்ரேஸ் ஸஜ்‌ ஜநாநாம்‌ ஸபாஜநம்‌ |
அப்ரியாத ப்ரியஸ் தேஷா மவ மாநோ மநாகபி ॥
என்றும்‌
ஸர்வ ஸ்வாமியான எம்பெருமான்‌ ஸ்ரீமானாயினும்‌, யாவருடனும்‌ கலப்பவனாயினும்‌, எளியனாயினும்‌, பரம காருணீகனாயினும்‌, மஹான்களிடம்‌ பண்ணப்பட்ட சிறிது அபசாரத்தாலும்‌ மிகவும்‌ மனக் கலக்கம்‌ (சீற்றம்‌) அடைகிறான்‌, யாவரையும்‌ பரிசுத்தராக்க வல்ல மஹான்௧ளுடைய கடாஷமானது எம்பெருமானிடமிருந்து நழுவியவரையும்‌ உயர்‌த்த வல்வது, அவர்களின்‌ மனக் கலக்‌கம்‌ சிறிதாயினும்‌ நித்யர்களையுங் கூட நழுவப் பண்ண வல்லது, அந்த மஹான்களுக்கு நேரிட்ட அவமானமானது சிறிதாயினும்‌,எம்பெருமானுக்கு-தனக்கு நேரிடும்‌ அநிஷ்டத்தைக் காட்டிலும்‌ மிகவும்‌ அநிஷ்டமா யிருக்கும்‌.

7-ஸஜ்‌ஜநாதிக்ரம க்ரெளர்யம்‌ ஸாஸ்த்ரைரர்த்தம்‌ ப்ரதர்‌ஸயகந் |
ஸூக்தி பிர்யுக்தி யுக்தாபிஸ் ஸர்வாந் ஸமுத ஜீவயத்‌
-என்றும்
ஸத் புருஷர்கள்‌ விஷயத்தில்‌ பண்ணுமபசாரத்தின்‌ (பாகவதபாசாரத்தின்‌) கொடுமையை இப்படி சாஸ்த்ர முகத்தாலும்‌ யுக்திகளுடன்‌ கூடிய திரு வாக்குக்களாலும்‌ எடுத்துக் காட்டி யாவரையும்‌ உய்வித்துப் பேந்தார்‌]-என்றும்‌ இத்யாதிகளாலே இவற்றினுடைய ஸாஹித்ய ராஹித்யங்களா லுண்டான குண தோஷங்களைத்‌ தம்முடைய தீர்க்க தர்ஸித்வத்தாலே தர்‌ஸிப்பித்‌தருளி ஸர்வரையும்‌ உஜ்ஜீவிப்பித்துக் கொண்டு போருகிற காலத்திலே

ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம்‌ காட்டித் தருதல்‌,
இவருடைய உக்த யநுஷ்டானங்களை யெல்லாம்‌ உத்தர தேசத்‌திலே வைஷ்ணவ ப்ரபுவாயிருப்பா ரொருவர்‌ கேட்டு, தம்முடைய உஜ்ஜீவநத்திற் குடலாக ஸகல சாஸ்த்ர தாத்பர்யங்களையும்‌ ஸங்க்ரஹ ரூபேண அநுஷ்டேயமா யிருப்பதொரு படி அடியேனுக்கு அருளிச் செய்து வரக் காட்டி யருள வேண்டும்‌” என்று குறித்து வரக் காட்ட, ஜீயரும்‌ அப்படியே ‘ பகவத் தாஸ்ய ரஸம்‌ புருஷார்த்‌தமென்று தெளிந்த அதிகாரிக்கு 1-கேவலம்‌ பகவத் ஆஸ்யரணம்‌ புருஷார்‌த்தமன்று; 2-கேவலம்‌ பகவல் லாஞ்சந தாரண மாத்ரமும்‌ போராது; 3-கேவலம்‌ பகவத் ஸமாராதந நிஷ்ட்டா மாத்ரமும் போராது; 4-கேவலம்‌ ஆசார்ய பர தந்த்ர யதிகார மாத்ரமும்‌ போராது; 5-கேவல பாகவதாநுவர்‌த்தந மாத்ரமும் போராது; பின்னை எங்ஙனே யென்னில்‌; யதோசித கைங்கர்யைக நிரதகனாய் ஸ்வ கீயமான க்ருஹத்திலே ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ நிஸ் ஸங்கமாக ப்ரவேஸித்திப்‌ பாங்காக வர்த்திக்கத்‌ தன்னை அத் தலைக்காகவே வைத்துத்‌ தலைக் கட்டும்‌-அடியார்க் கென்னை ஆட் படுத்த, *எம் தம்மை விற்கவும்‌ பெறுவார்களே என்‌னும்‌ நிலை யுண்டாக வேணுமிறே,-இப்படி இவ் வர்த்தம்‌ அநுஸத்தித்து அநுஷ்டியானாகில்‌ தனக்கு ப்ரதிபத்தி ஸெளபாக் யைஸ்வர்யங்கள்‌’ கை கூடாது.
“ந்ய க்ரோத பீ்ஜ வடவத்‌ ப்ரணவே ஸப்த ஜாலவத்‌;
ஸித்தே ததீய ஸேஷத்வே ஸர்வார்த்தாஸ் ஸம்பவந்தி ஹி”-

ஆலம்‌ விதையில்‌ பல கிளைகளை யுடைய ஆல மரம்‌ போலவும்‌, ப்ரணவத்தில்‌ பல சப்த ராசிகள்‌(அஷரங்கள்‌, பதங்கள்‌) போலவும்‌ -பாகவத ஸேஷத்வம்‌ அநுஷ்டாந ஸித்தமானால்‌ (உணர்ந்தால் மட்டுமே அல்ல அனுஷ்டான பர்யந்தமாக வேண்டுமே )எல்லா ஸத் ஸம்ப்ரதாய அர்‌த்தங்களும்‌ தன்னடையே கை புகும்‌] என்கிறபடியே சரமார்த்த விசேஷம்‌ கை புகுத்ததாகில்‌ விவிதங்களாய்‌ விசித்ரங்களாய்‌ அநந்தங்களா யிருந்துள்ள பகவத்‌ ரஹஸ்ய விசேஷங்களெல்லாம்‌ அறிய வேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை, இவ் விசேஷா நுஷ்டாந மின்றிக்கே செல்லுகிற ஜ்ஞாந அநுஷ்டாந ப்ரதி பாதநமும்‌ பகவத் ரஹஸ்ய விசேஷங்களும்‌ வேஸ்யை சொல்லுற பதி வ்ரதா தர்மம்‌ போலே வ்யர்த்தமாகி விடும்‌-
பூஜநாத்‌ விஷ்ணு பக்தாநாம்‌ புருஷார்த்தோஸ்தி நேதர:; தேஷு
வித்வேஷத: கிஞ்சித் நாஸ்தி,நாஸக மாத்மநாம்‌”’

எம்பெருமானிடம்‌ பக்தி யுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களை ஆராதிப்பதிற் காட்டில்‌ வேறு உயர்ந்த புருஷார்‌த்தமில்லை, அவர்களிடம்‌ த்வேஷம்‌ பண்ணுவதைக் காட்டில்‌ ஆத்ம நாசம்‌ பண்ணுவது வேறொன்‌றில்லை-என்கிறபடியே திருமந்த்ரார்த்தமான சரமார்த்த தந் நிஷ்டையை ஸ்வ திவ்‌ய ஸூக்தி விசேஷத்தாலே தர்சிப்பித்து எழுதிப் பேச விட்டருள,அவரும்‌ அப்படியே ததீயாராதநத்திலே நிஷ்ட்டராய்‌ :
தஸ்யை நித்யம்‌ ப்ரதி ஸததிஸே தஷிணஸ்யை நமஸ்யாம்‌”
[அந்த தெற்குத்‌ திசைக்கு எப்போதும்‌ நமஸ்காரம்‌ செய்யுங்கள்‌ ] என்றும்‌,
திஸே வாபி நமஸ் குர்யாத்‌ யத்ராஸெள வஸதி ஸ்வயம்‌”
[இவ் வாசாரியர்‌ தாம்‌ எத் திசையில்‌ வசிக்கிராரோ அத் திசைக்காவது நமஸ்கரிக்கக்‌ கடவன்‌] என்றுஞ்‌ சொல்லுகிறபடியே ஜீயரெழுந்தருளி யிருக்கிற திக்கை நோக்கி , –தொழுமத் திசை யுற்று நோக்கியே (திருவாய்‌ 6-5 5) என்கிறபடியே நாடோறும்‌ ஸேவித்துச்‌ கொண்டு தம்முடைய வர்ணாநு குணமான கைங்கர்யத்தையும்‌ மடத்திற்கு நடத்திக் கொண்டு போந்தார்‌.

அக் காலத்திலே கோயிலிலே யிருக்கிற பட்டர்‌ பெருமாள்‌ திருவோலக்கத்திலே ஜீயரை ஸேவித்து உம்முடைய சிஷ்யர்கள்‌ நம்மை தண்டனிடாமல்‌ அவமதி பண்ணிப்‌ போரா நிற்பர்கள்‌-என்று அறிவிக்க, ஜீயரும்‌ மடத்திற்கெழுந்தருளி அவர்களை யழைத்து நீங்கள்‌ இப்படி செய்வானென்‌?”‘ என்று கேட்டருள, அவர்‌கள்‌, அவரிருக்கற இருப்பை விண்ணப்பஞ் செய்து, அவரை யநுவர்த்திக்க எங்களுக்கு மனமில்லை’* என்ன, ‘ஆகில்‌, பெருமாளும்‌, பிராட்டியும்‌ திவ்ய ஸிம்ஹாஸநத்திலே எழுந்தருளி யிருக்கிறதாக ப்ரதி பத்தி பண்ணி ஸேவித்துக் கொண்டு போருங்கோள்‌” என்று அருளிச் செய்து, இப்படி தோஷமுள்ள விடத்திலும்‌ குண ப்ரதிபத்தி நடக்கும்படியான பகவத் ப்ராவண்யத்தை யுடையவராய்‌, பின்பு வ்ருத்தாசாரங்களை அறிந்தருளு மவராகையாலே வேதகப்‌ பொன்னான விலக்ஷண விஷயங்களையும்‌ ஆதரித்துக் கொண்டு,அவர்கள்‌ விஷயத்திலே பூர்வர்கள்‌ அநுஷ்டித்துப் போரும்‌ சேஷ வ்ருத்திகளெல்லாம்‌ அநுஷ்டாந பர்யவஸாயியாம்படி அநுஷ்டித்‌தருளி;
எக் குணத்தோ ரெக்குல்த்தோ ரெவ் வியல்‌ வோராயிடினும்‌
அக் கணத்தே நம்மிறைவராவரே-மிக்க புகழ்க்‌
காரார் பொழிற்‌ கோயிற் கந்தாடை யண்ணனெனும்‌
பேராளனை யடைந்த பேர்‌

என்று அநுஸூந்திந்தருளி, இப்படி விலஷணமான ஜ்ஞாந அனுஷ்‌டாநங்களோடே கூடி ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீ யுடனே எழுந்தருளி யிருக்கிற காலத்திலே –

வேடலப்பையைக் கொண்டு (வேடல் என்னுமூரில் அப்பை என்னும் கந்தாடை வம்சர் )குத்ருஷ்டியை நிரஸித்தல்‌
குத்ருஷ்டி மதாவலம்‌பியா யிருப்பானொருவன்‌ கோயிலிலே வந்து ஸ்வ மதாபந்யாஸம்‌ பண்ணிக் கொண்டு இறுமாந்திருக்க-ஸர்‌வஜ்ஞரான ஜீயரும்‌ அவனுடனே தர்க்கிக்கைக்கும்‌ ப்ரஸங்‌கத்தாலே அவனை வாய்‌ மூடப் பண்ணுகைக்கும்‌ ஸாமர்த்யமுண்டா யிருக்கச்‌ செய்தேயும்‌ -கலை யறக் கற்ற மாந்தர்‌ காண்பரோ கேட்பரோ தாம்‌ -என்கிறபடியே அவனை த்ருண வத்கரித்து அநாதரித்துக்‌ கொண்டு ”பகவதநுபவ விரோதியான இவனை ஊரோடு ஒட்டக்‌ கடவோம்‌” என்று ஸங்கல்‌பித்து, முன்னே அவன்‌, வாதூல வம்ஸ்‌யரான வேடலப்பையை ஆஸ்ரயித்திருந்தவன்‌, ஸஹ வாஸ தோஷத்‌தாலே கலங்கி ப்ரசந்ந பெளத்தரான விரோதிகளோடே கூடிக்‌ கொண்டு மதாந்தர ப்ரவிஷ்டனானாகையாலே, திரிசங்குவைப்‌ போலே கர்ம சண்டாளனான அவனை ஆலோசித்து வார்த்தை யருளிச்‌ செய்யக்‌ கூசி வேடலப்பையைக்‌ கொண்டு நிரஸிக்க வேணுமென்று திரு வுள்ளம்‌ பற்றி அவரை அழைப்பித்தருள; அவரும்‌ லந்து ஜீயரை ஸேவித்து கோயிலிலே அவனைக் கண்டு ‘“மாணீ! இவ்‌ விடம்‌ கொண்டயோ?” என்ன, அவனும்‌ அவரைக் கண்டு கருடனைக் கண்ட ஸர்ப்பம்‌ போல மிகவும்‌ பீதனாய்‌ ஸேவித்து அங்கு நின்றும்‌ புறப்பட்டு ஒடிப் போனான்‌. அப்பை யுடைய வித்வதப்ரதிம ப்ரபாவத்தை ஜீயர்‌ கண்டருளி விஸ்மயப் பட்டு அப்பையை, “தேவரீர்‌ இங்கே யெழுந்தருளி யிருக்க வேணும்‌ என்று மிகவும்‌ ஆதரிக்க,அவரும்‌ ஜீயர்‌ நியமித்தபடி செய்யாமல்‌ தம்‌ தேஹ யாத்ரா சேஷமான லெவ்கிக கார்யங்களையும்‌ அபிஜந வித்யாவ் விருத்தங்களையும்‌ நினைத்து- ப்ரக்ருதி பரவசராய்‌- பர்யுஷிதாந்நத்தையும மாஹிஷ ததியையும்‌ நினைத்து அங்கு நிற்க மாட்டாதே ஸ்வ க்ராமத்தை நோக்கி எழுந்தருளினார்‌.

மணவாள மாமுனிகளால்‌ வித்யா பூர்த்தியை யிட்டு மதிக்கப் பட்டவரும்‌, முதலியாண்டான்‌ திருவம்ஸ்யருமான வித்வானைக்‌ குறித்து இந்த பரிஹாஸோக்திகள்‌ பொருந்தவில்லை.
தமது வயது முதிர்ந்த பருவத்தை யுத்தேசித்து தம்மை யொத்த ஒரு வித்வானான தமது சிஷ்யரான தாசரதி ஆச்சானை ஜீயர் ஸந்‌நிதியிலிருக்கும்படி நியமித்து ஸ்வ க்ராமம்‌ எழுந்தருளியதாகப்‌ பழ நடை விளக்கம்‌ ‘ என்னும்‌ நூல்‌ கூறுகிறது. அதிலுள்ள விவரங்கள்‌ வருமாறு –
ஸ்ரீமான்‌ திருமழிசை கோயில்‌ கந்தாடை அண்ணா வப்பங்கார்‌ ஸ்வாமி அருளிச் செய்த பழநடைவிளக்கம்‌
பின்பு க்ருஷ்ணாநந்தி யென்‌கிற ஏக தண்டி ஸந்யாஸி கோயிலிலே வந்து தன்னோடே சாஸ்த்ர வாதம்‌ பண்ணச் சொல்ல, பெரிய ஜீயரும்‌, ‘இவனோடே வாதம்‌ பண்ணும் போது மங்களாசாஸந விரோாதமாமே! வாதம்‌ பண்ணா விட்டால்‌ விரோதி நிரஸனம்‌ ஸித்தியாதே! என்ன செய்வோம்‌?என்று சிந்தித்துக் கொண்டிருக்கச்‌ செய்தே, பெரிய பெருமாள்‌ நியமனத்தாலே வேடலப்பைக்குப்‌ பெரிய பெருமாள்‌ ஸ்ரீமுகத்தை வனுப்ப, முதலியாண்டான்‌ திருவம்ஸ்யராய்‌, மஹா வைபவ முடையரான வேடலப்பையும்‌ ஸ்ரீமுகத்தை சிரஸா வஹித்து, தம்முடைய ஸந்நிதியிலே சாஸ்த்ரங்களையும்‌ அதிகரிதது மஹா வித்வானாகிய தாசரதி யாச்சானையும்‌ கூட்டிக் கொண்டு கோயிலுக் கெழுந்‌தருளி நம் பெருமாளை மங்களாசாஸனம்‌ செய்தருளி -ஸகல வரிசைகளையும்‌ விசேஷ கடாக்ஷங்களையும்‌ பெற்று, ஸ்ரீரங்க நாயகியாரை மங்களாசாஸநம்‌ செய்தருளி அவருடைய ப்ரிபூர்ண கடாக்ஷம்‌ பெற்று, ஸம்மானமும்‌ பெற்று, வில்வ வ்ருக்ஷத்திற்கு ஸமீபமாக வெழுந் தருளிச்‌ செய்தே அப்போது அவ் விடத்தில்‌ ஜபம்‌ பண்ணிக்‌ கொண்டிருக்கிற ஏக தண்டியானவன்‌ இவர்களைக் கண்டெழுந்திருந்து, தனக்கு ஸகல சாஸ்த்ரங்களும்‌ படிப்பித்த வேடலப்பையை தண்டனிட்டு நின்றான்‌. வேடலப்பையும்‌ அவனைப் பார்த்து குசல ப்ரச்நம்‌ பண்ணினார்‌. அவனும்‌ தான்‌ வந்த காரியத்தை வேடலப்பைக்குச்‌ சொன்னான்‌ -வேடலப்பையும்‌ -அதற்கள்றோ நாமிங்கே வந்தது’-என்‌றருளிச்‌ செய்தார்‌.-ஆனால்‌ அபசாரப் பட்‌டேன்‌” என்று பயப்பட்டு தண்டனிட்டு நின்றான்‌. வேடலப்பையும்‌ அண்ணன்‌ திருமாளிகைக் கெழுந்தருளி, அண்ணனும்‌ வேடலப்‌பையும்‌ தாசரதி யாச்சானும்‌ அமுது செய்தருளி, க்ருஷ்ணாநந்தி இவர்களுடைய ப்ரஸாதத்தை அர்த்தித்தானாகையால்‌ ஒரு பரிசு ப்ரஸாதத்தை அவனுக்கு ப்ரஸாதித்தார்கள்‌. அவனுமிவர்கள்‌ அநுமதி கொண்டு புறப்பட்டுப்‌ போய் விட்டான்‌-பின்பு வேடலப்டையும்‌ தாசரதி யாச்சானையுங்‌ கூடக்‌ கூட்டிக்‌ கொண்டு அண்ணனும்‌, பெரிய ஜீயர்‌ ஸந்நிதியிலே யெழுந்தருளி தண்டன்‌ ஸமர்ப்பித்து க்ருஷ்ணாநந்தி போய்‌ விட்ட செய்தியை விண்ணப்பஞ் செய்ய, பெரிய ஜீயரும்‌ அண்ணனையும்‌ வேடலப்‌யையையும்‌ தாசரதி யாச்சானையுங்‌ கடாக்ஷித்து மிகவுமுகந்து”உகப்பினுடைய வதிசயத்தால்‌ முதலியாண்டான்‌ திருவம்ச விஷயமாக இரண்டு ஸ்லோகம்‌ அருளிச்‌ செய்து பரிபூர்ணாநுக்ரஹம்‌ செய்தருளி வேடலப்பையையும்‌ தாசரதி யாச்சானையும் ஸந்நிதியிலே நித்ய வாஸம்‌ பண்ணும்படி நியமித்தருள- வேடலப்பையும்‌ வார்த்தகமான படியினாலே தாசரதி யாச்சானை யங்கே யிருக்கும்படி நியமித்து தாம்‌ பெரிய ஜீயர்‌ ஸந்நிதியிலே அநுமதி பெற்று மிகவும்‌ உபலாளனம்‌ பெற்று வேடலுக்கு எழுந்தருளினார்

(வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்தபோதம்
காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம்
வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்
)–திரு ஆடி –திரு பூசம் திருவவதாரம் -ஏழாவதாக மா முனிகளை ஆஸ்ரயித்தார்-

ப்ரதிவாதி பயங்கர மண்ணா வருத்தாந்தம்‌ (இந்த வ்ருத்தாந்தம்‌ தெலுங்குப் பதிப்பில்‌ வேறு விதமாக உள்ளது. அதுவும்‌ பின்னர்‌ இப் பதிப்பில்‌ வெளியிடப்படுகிறது, )
இனி இதற்காவாராரென்று சிந்‌தித்திருக்க, அவ் வளவிலே -ஹஸ்திகிரிநாதரண்ணா வென்னும்‌ திருதாமத்தை யுடையராய்‌ தர்சந விரோதிகளான வாதிகளை ஜெயித்து ‘ப்ரதிவாதி பயங்கரர்‌’ என்று
விருதிடும்படியான ப்ரபாவத்தை யுடையராய்‌ ‘ லோகே வேதேச பண்டித; லெளகிகே ஸமயாசாரே க்ருத கல்போ விஸாரத;” இத்‌யாதிப்படியே லௌகிக வைதிகங்களிவே அத்விதீயராய்‌ பெருமாள் கோயிலிலே சில நாள்‌ வஸித்து -திருப் பதியிலே நித்ய வாஸமாக எழுத்தருளி யிருக்கிற காலத்திலே -அவருக்கு மூன்று குமாரர்கள்‌ திருவவதரித்திருந்து அவர்கள்‌ அதி மேதாவிகளாகவும்‌. தேவிகள்‌ கூரத்தாண்‌டளோ டொத்திருப்பவள் ஓருத்தியும்‌ இப்படி யிருக்கிற ப்ரதிவாதி பயங்கர மண்ணா கூரத்‌தாழ்வானைப்‌ போலே ப்ராப்ய விரோதி யென்று ஐச்வர்யத்தில்‌ ஜிஹாஸை பிறந்து கேவலம்‌ ஸத்வ நிஷ்டராய்‌ ”அர்த்த ஸம்பத் விமோஹாய”” இத்யாதிகளை யநுஸத்தித்து -முற்றவும்‌ வீடு செய்து எல்லாவற்றையும்‌ பகவத் பாகவத ஸ்வம் ஆக்கி, தமக்கு: பரம ஸேஷி விஷயத்தில்‌ கைங்கர்யமே புருஷார்த்தம்‌ என்றறுதி யிடடு திருவேங்கடமுடையான்‌ திருவடிகளிலே ஒழிவில்‌ காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி வழுவிலா வடிமை செய்ய வேணும்‌ என்று நிற்க, திருமலை தோழப்பர்‌ உகந்தருளி –அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பதாவநே ஜநாத் அந்யத் குஸல ஸம் ப்ரஸ்நாத் ந சேச்சதி ஜநார்த்தந:’‘-ஐநார்த்தனனாகிய கண்ண பிரான்‌ பூர்ண கும்பமோ -திருவடி விளக்குதலோ குசல ப்‌ரஸ்னமோ இவற்றில்‌-ஒன்றைத் தவிர வேறொன்றையும்‌ ஆசைப் படமாட்டான்‌ என்று வெள்ளிக் குடத்தை ஸாதித்து ”ஆகாச கங்கையினின்றும்‌ திருமஞ்சநம்‌ கொண்டு வந்து பூர்ணமாக ஏலாதி ஸம்ஸ்‌க்ருத மாக்கி நீரே ஸமர்ப்பித்து வாரும்‌!’ என்று நியமிக்க,

அண்ணா-நாயன்தே, நாயன்தே” என்று குடத்தை வாங்கிக் கொண்டு அதி ஸந்துஷ்டராய்‌ :“இவ்வளவாகிலும்‌ சேஷத்வ ஸித்தி யுண்டாயிற்றே’” என்று நித்யமாக நடத்திக் கொண்டு போர, ஒரு ஸ்ரீவைஷ்‌வணர்‌ கோயிலினின்றும்‌ அப்பனை ஸேவிக்க வந்து நிற்க , அவரை ஸேவிக்கப்‌ பண்ணி வைத்து, வரிசை பெறுவித்துத்‌ தாமும்‌ ஸத்கரித்து -அற்றைக்கு தம்முடைய அண்டையிலே வைத்துக்‌ கொண்டு கோயில்‌ விருத்தாந்தங்களையும்‌ பெருமாளமுது செய்கிற வரிசைகளையும்‌ உத்ஸவங்களையும்‌ – அழகிய மணவாள மா முனி யுடைய அப்ரதிம வைபவத்தையும்‌ கேட்டுக்‌ கொண்டிருந்து பிற்றை நாள்‌ தாம்‌ திருமஞ்சனத்திற் கெழுந்தருளுகிற போது அவரையுங்‌ கூட்டிக் கொண்டு ”ஸ்ருணோம் யஹம்‌ ப்ரீதி கரம்‌ மம நாதஸ்ய கீர்த்தநம்‌’* [எனக்கு ப்ரீதியை யுண்டு பண்ணும்‌ என்‌ நாதனுடைய கதையைக்‌ கேட்கிறேன்‌] என்றபடியே அழகிய மணவாள மா முனியினுடைய திநசர்யையையும்‌ அத்புத வைபவங்‌களையும் சொல்லுமென்று ததேக சித்தராய்‌ திருமஞ்சநங் கொண்டு வந்து, ஏலாலவங்க கர்ப்பூராதிகளைப்‌ பரிமாறுவதற்காகத்‌ திருத்த, அப்போது ஒரு ஏகாங்கி ஓடி வந்து குடத்தை யெடுத்தக்‌ கொண்டு திருவாராதந ஸமயத்திற்கு உதவ வேணுமென்று கொண்டு போகா நிற்க , ‘-திருமஞ்சந த்ரவ்யங்கள்‌ இன்னும்‌ பரிமாற வில்லையே” -என்ன அதை அவர்‌ கேளாமல்‌ கொண்டு போய்‌ சமர்ப்பிக்க எப்போதும் போல்‌ திருவாராதநம்‌ கொண்டருளா நிற்க அண்ணா, “அபசாரம்‌ வந்ததே” எனறு ஏலாதிகளை வட்டிலிலே கொண்டு நிற்க br> br>அர்ச்சகர்‌, அவசராய்‌ ‘இத்தனை நாளைக் காட்டிலும்‌ பரிமள த்ரவ்யங்கள்‌ விஞ்சி, திருமஞ்சன வாஸனை அதிகமாயிருக்கிறதே’! என்ன அண்ணா பாவஜ்ஞராகையாலே ‘இது வெறுமன்று; ௨கப்பு விஞ்சி யிருக்கிறது; இதற்கு ஹேது ஜீயருடைய வைபவ ஸ்ரவணமாக வேணும்‌”’ என்று எண்ணி, அந்த ஸ்ரீவைஷ்ணவரை யழைத்து “நீர்‌ அழகிய மணவாளமாமுனி , வைபவமான ஐதிஹ்யங்களை அருளிச் செய்ய அடியேன்‌ கேட்டபடியினாலே க்ருதார்‌த்தனானேன்‌; அப்பன்‌ திருவுள்ளம்‌ ப்ரஸன்னமாயிற்று;, அழகிய மணவாளமா முனியை ஸேவிக்கப்‌ பெறுதேனாக வேணும்‌ என்ன; அப்பனும்‌ உகந்து அவரை ஸத்கரித்து அனுப்பி யருளினார்‌.பின்பு தாம்‌ எப்போதும் போலே சில நாள்‌ திருமஞ்சந கைங்கர்‌யஞ்‌ செய்தருளி, அப்பனுடைய நியமனத்தினாலே ஸ குடும்பமாகக்‌ கோயிலுக்கும்‌ புறப்பட்டருளி, பயண கதியிலே திவ்ய நகரத்தைத்‌ தண்டன்‌ ஸமர்பித்து வைத்த கண் வாங்காமல்‌ ஸேவித்துக்‌ கொண்டு நீராடி திருமண் காப்புச்‌ சாத்தி யருளி ஸ்ரீரங்க நாராயண ஜீயர்‌ மடத்திலே எழுந்தருளி பின்பு பெரிய பெருமாளை மங்களா சாஸநம்‌ பண்ணுவதாக ஸேவா க்ரமத்திலே யெழுந்தருள சித்ர மண்டபத்திலே ஜீயர்‌ கோஷ்டியாக எழுந்தருளியிருந்து -ஒன்றுந்‌ தேவு ப்ரவேசம்‌ நடத்த அந்த கோஷ்டியைக் கண்டு ஹர்ஷ பர வசராய்‌ தண்டன்‌ சமர்ப்பித்து நிற்க, ப்ரதிவாதி பயங்கரர்‌ அண்ணா’” என்று ஜீயர்‌ கேட்டருளி குசல ப்ரச்நம்‌ செய்தருளி-இத்தனை நாளைக்காக இன்று ஸேவிக்கப்‌ பெற்றேன்‌” என்று தழுவிக்‌ கொண்டு பின்பு அவரையும்‌ கூட வைத்துக் கொண்டு கால ஷேபம்‌ நடத்த மூன்று பாட்டாய்‌ நாலாம்‌ பாட்டுத்தருவாய்‌ நிறுத்தின வளவிலே ப்ரதிவாதி பயங்கர அண்ணா ‘ இப்படி ஆழ்வார்‌ பர தத்வ நிர்ணயஞ்‌:செய்தருளி வைத்த படியை தேவரீர்‌ திருவடிகளிலே ஸம்பந்த முண்‌டானாலல்லது ஆர்க்கு மறியப்‌ போகாது””என்று வித்தராயிருக்க அவர்‌ திருக் கைகளைப்‌ பிடித்துக்‌ கொண்டு பெருமாளைத்‌ திருவடி தொழப் புக, தீர்த்தம்‌ ஸ்ரீசடகோபன்‌ முதலான வரிசைகளெல்லாம்‌ ப்ரஸாதித்து, பெருமாள்‌ அர்ச்சக முகேந-வாரீர்‌ ப்ரதிவாதி பயங்கராசார்யரே! என்று அவர்‌ கையைப்‌ பிடித்துக்‌ கொண்டு ‘ திருமலையிலே போரத் திரு மஞ்சந கைங்‌கர்யம்‌ பண்ணினீரே: ஒரு நாள்‌ திருமஞ்சநங் கொண்டு வரும்‌ போது அழகிய மணவாளமாமுனி வைபவங்‌ கேட்டுக்‌ கொண்டு வர அதினாலே தீர்த்த ருச்யாதிக்யமும்‌ பரிமளாதிக்யமுமுண்டாய்‌ தாம்‌ உகந்த படியை நினைத்து வந்தீர்‌; உமக்கு விலக்ஷண ஸம்பந்தம்‌ தந்தோம்‌” என்று ஜீயர்‌ திருக் கையிலே இவரைக்‌ காட்டிக்‌ கொடுக்கப்‌ புறப்பட்டு மடமே யெழுந்தருள;

அநந்தரம்‌ அண்ணா கந்தாடை யண்ணன்‌ திருமாளிகைக்‌ கெழுந்தருளுவதாகப்‌ புறப்பட்டருள, அண்ணன்‌ எதிர் கொண்டு, “வைஷ்ணவோ வைஷ்ணவம்‌ த்ருஷ்ட்வா தாண்டவத்‌ ப்ரணமேத்‌ புவி” என்கிற படியே அந்யோத்ய வந்தந பரராய்‌ சேஷத்வ புரஸ்‌ ஸரமாக குசல ப்ரச்நங்களுடனே திருமாளிகையிலே எழுந்தருள, அங்கே யாத்ருச்சிகமாய்‌ வானமாமலை ஜீயரெழுந்தருளி யிருக்கக் கண்டு, “அருள் கொண்டாடு மடியவரன்றோ தேவரீர்‌!’* என்று திருவடிகளிலே தீர்க்கப் ப்ரணாமம்‌ பண்ண -ஜீயர்‌ ப்ரணாம பூர்வமாகத்‌ தழுவிக் கொண்டு மூவருங் கூடி யிருந்து ஜீயருடைய யதி புநரவதாராதி வைபவங்களை யெல்லாம்‌ அந்யோந்யம் அநுஸந்ததித்துக்‌ கொண்டு, மடத்திலே எழுந்தருளி; சிறட்பும்‌ திருமுன்‌ காணிக்கையும்‌, ஸமர்ப்பித்தருளி தேவிகள்‌ குமாரர்‌ எம்பெருமானாரப்பன்‌, அநந்தய்யன் அப்பை, திருவாய்மொழிப்‌ பெருமாள்‌ நாயனார்‌ முதலானாரெல்லாரைங்‌ கூட்டிக் கொண்டு திருவடிகளிலே ஆஸ்ரயித்தருளி க்ருதார்த்தராய்‌ ஸ்ரீபாத தீர்த்தமும்‌ தளிகை ப்ரஸாதமும்‌ ஸ்வீகரித்துத்‌ திருவடிகளுக்கு அந்ததரங்கராய்‌ வாழ்ந்தருளினார்‌, ஜீயருடைய ஸம்பந்த முடையராய்‌ -அடங்கெழில்‌ சம்பத்து என்கிறபடியே கட்டடங்க விலஷணமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை அடங்‌கக் கண்டு என்கிறபடியே கார்த்ஸ்ந்யேத கண்டு –அடங்கெழில்‌ என்றபடியே பந்நகாதீஸரான அழகிய மணவாளமாமுனிகளுடைய நிரவதிக விலக்ஷண ஸ்ரீயிலே அஃதென்‌ நடங்குக வுள்ளே-என்கிறபடியே தாமுமொன்றென்று அந்தர்பவித்து, ‘‘ப்ரஸித்த:பரகோஷ்டீஷு ப்ரவாதி பயங்கர:; ஸ்ரீவைஷ்ணவா நாம்‌ கோஷ்டீஷு தத்தாஸ இதி விஸ்ருத: [ஸ்ரீவைஷ்ணவரல்லாத புறம்‌பான கோஷ்டிகளில்‌ பிரதி வாதிபயங்கரரென்று பிரஸித்தரானாலும்‌ ஸ்ரீ வைஷ்ண கோஷ்டிகளில்‌ அவர்களுக் கடியவர்‌ என்‌று நன்கறியப்‌ பட்டவர்‌] என்று ஸ்வ சேஷத்வாநுஸந்தாநத்துடனே ஜீயர்‌ திருவடிகளுக் கந்தரங்கராய்‌ வாழ்ந்தருளினார்‌.(இந்த ஸ்லோகம் அடியாக இவர் சிஷ்யர்களுக்கு ஸ்ரீ வைஷ்ணவ தாஸன் என்றே திருநாமம்)

தெலுங்குப்‌ பதிப்பிலுள்ளபடி. ப்ரதிவாத பயங்கர மண்ணா வ்ருத்தாந்தம்‌-(வேடலப்பை ஸ்ரீரங்கத்தில்‌ நித்ய வாஸத்‌துக்கு இசையாமல்‌ அகன்று போக ‘இனி இதற்கு ஆவாரர்‌?” என்று சிந்தித்துப்‌ பெருமாள்‌ கோயிலில்‌ ‘ப்ரதிவாதி பயங்கரர்‌’ என்று திருநாம முடையராய்‌ விதேசேஷ்வபி விக்யாதராய்ப்‌ போருகிற ஹஸ்‌தி கிரிதாதரண்ணாவின்‌ பக்கல்‌ திருவுள்ளம்‌ குடி போய்‌ –ஆம்‌ முதல்வனிவன்‌ என்று அபிமானித்தருளி அவரை ஸ்ரீவைஷ்ணவ தாஸராக்க வேணும்‌” என்று ௧ருதித்‌ தன்‌ திருவடிகளுக் கந்தரங்கர்‌களான ஸ்ரீவைஷ்ணவரிருவர்‌ கையிலே தம்முடைய திருமுக மெழுதிக்‌ கொடுத்து அவர் பக்கல்‌ போக விட்டருள, அவர்களும்‌ ப்ரதிவாதி பயங்கர மண்ணாவைக்‌ கிடடித்‌ திருமுகத்தையும்‌ கொடுத்து ஜீயர்‌ அனுப்பின விருத்தாந்த்தையும்‌ அறிவிக்க, அண்ணாவுங்‌ கேட்டு அதி ப்ரீதராய்த்‌ திருமுகத்தை சிரஸா வஹித்துக்‌ கொண்டு; முன்பே திராவிட வேதாந்தார்த்த ஸ்ரவண ஸ்ரத்தா யுக்தரானவர்‌ இதுவே இடமாமென்று கருதி தத் ஷணமே புறப்பட்டு –தாய் நாடு கன்றே போல்‌ என்றும்‌ * வத்‌ஸோவா மாதரம்‌”’ என்றுஞ் சொல்லுகிறபடியே ஸ்ரீவத்ஸ குல திலகராய்‌ ஸ்ரீவத் ஸிஹ்ந மிச்ர துல்‌யரான இவரும்‌ ஸ்ரீரங்காபிமுகராய்‌ -ஆஜகாம முஹூர்த்தேநல்‌-என்கிறபடியே பயண கதிகளை அர்ச்சிராதி கதியாக மநோ ரதித்துக்‌ கொண்டு ::மணவாளமாமுனிவன்‌ பாத கமலங்கள்‌ காண வேணும்‌” என்ற பேராசையுடனே திருவரங்கப்‌ பெரு நகரிலே சென்று-காவேரீ விரஜா ஸேயம்‌’‘ என்கையாலே அந்த வைகுந்த நாட்டிலே விரஜை தானான தன்மை யுடைய திருக் காவேரியிலே நீராடி நதீ நிஸ்தரணாநந்தரம்‌ ப்லவ பரித்யாகம்‌ போலே, சேதனன்‌ வாஸநா ரேணுவைக்‌ கழிக்குமா போலே அநுவாத ரீதியாகிற வாஸநா ரேணுவைக்‌ கழித்து கேசவாதி த்வாதசோர்த்வ புண்‌டரங்களையும்‌ தரித்துக் கொண்டு ஸ்ரீவைஷ்ணவாலங்கார முடையராய்‌ திவ்ய நகர ப்ரவேச யுக்தராயிருக்க;

அவ்வளவிலே அவரண்டைக்குப்‌ போக விட்ட வைஷ்ணவர்‌களும்‌ ஜீயருக்கு இவர்‌ எழுந்தருளின வ்ருத்தாந்தத்தை விண்ணப்‌பம்‌ செய்ய, ஜீயருங் கேட்டு -பக்வமாய்ப்‌ பலிக்குமோ?”’ என்‌று அவர்களை வினவி யருள அவர்களும் தேவரீருடைய அமோக ஸங்கல்பம்‌ பழுது போமோ? அங்கோல தைலம்‌ போலே அப்போதே பல பர்யந்தமாய்‌ பலித்தது” என்ன, போர வுகந்தருளி,இவர்க்கு அபிமுகமாக கோயிலனைத்துப் பரிகரத்துடனே தம் ஸந்நிதி ஸ்ரீவைஷ்ணவர்களைப்‌ போக விட்டருள, இவரும்‌ அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌ தங்களின்பமிகு பெருங்குழுவு கண்டு கொண்டு ஸேவித்து ஹ்‌ருஷ்டராய்‌ நிகில ஜந ஸுஹ்ருத்துக் களானவர்‌களுடனே கூட திருவரங்கத்‌ திருப்பதியிலே ப்ரவேசித்து, “அவர்கள்‌ முன்னிலையாகப்‌ பெருமாள்‌ ஸேவா கிரமந் தப்பாமல்‌ ஸேவித்து மீண்டு வர யோகி மடத்திலே சென்று ‘‘ரங்கே தாம்நி ஸுகாஸீநம்‌- வந்தே வர வர முநிம்‌!’ என்‌கிறபடியே விசேஷாதிஷ்டாதமாக ஸ்வாங்கீகா ரோந்முகராய்‌ எழுந்தருளி யிருக்கிற ஜீயர்‌ திருவடிகளிலே ‘*அகிஞ்சநோ அநந்ய கதி ஸரண்ய த்வத் பாத மூலம்‌ சரணம்‌ ப்ரபத்யே” என்கிறபடியே ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வ பூர்வமாகத்‌,தாளுந் தடக்கையுங்‌ கூப்‌பி ஸாஷ்டாங்க ப்ரணாமம்‌ பண்ணா நிற்க; ஜீயரும்‌ க்ருபை செய்து, “லோசநாப்யாம்‌ பிபந்நிவ – என்னும்படியே (வில்லிறுத்து மெல் இயல் தோள் தோய்ந்தாய் என்னும் -அங்கும் உருகினார் -பருகினார் )குளிர நோக்க, –வசஸா ஸாந்தவயித்வைநம்‌”என்னும்படி குசல ப்ரஸநம் பண்ணி இருத்திக் கொண்டு அப்போது நடக்கிற *ஒன்றுந் தேவின்‌ ப்ரவேசத்தை உபந்யஸித்துக் காட்ட இவருங் கேட்டுப்‌ போர வாச்சர்யப்பட்டு, திருவாய்‌ மொழியிலு மருளிச் செயலிலு மொழிய ஸம்ஸ்‌க்ருத்தில்‌ பரிசயமில்லை” என்று கேட்டிருந்தோம்‌; இவர்‌ உபய வேதாந்தத்திலும்‌ மிகவும்‌ நிபுணரா யிருந்தார்‌’” என்று ஜீயரிடத்தில்‌ அத்யாதரம்‌ பண்ணி, இனி,-அடியேனை யாட் கொண்டருள வேணும்‌” என்ன, ஜீயரும்‌, “நீர்‌ ப்ரதிவாதி பயங்‌கரர்‌; நாம்‌ ஸாது; எங்ஙனே கூடுகிறது? என்ன, அண்ணுவும்‌ ஜீயரைக் குறித்து ”ப்ரஸித்த பர கோஷ்டீஷு பரவாதி பயங்கர:, ஸ்ரீவைஷ்ணவாநாம்‌ கோஷ்டீஷு தத் தாஸ இதி விஸ்ருத:” என்று அடியேனுக்கு இங்ஙனே இரண்டு ப்ரஸித்தி யுமுண்டு”’ என்ன அத்தைக் கேட்டு ஜீயரும்‌ உகந்த திருவுள்ளத்தை யுடையராய்‌ பஞ்ச ஸம்ஸ்காரங்களையும்‌ ப்ரஸாதித்து, –பலரடியார்‌ முன்பருளிய என்றும்‌ ‘பஹு மாநேந மஹதா?’ என்றுஞ்‌ சொல்லுகிறபடியே விசேஷாபிமானம்‌ செய்தருளி, ஐந்மாத்‌ யுத்க்ருஷ்ட தாதிகளால்‌ “உண்டான அபிமானம்‌ போம்படி-“அடியார்க்கென்னை யாட்படுத்த விமலன்‌ என்கிறபடியே ஆத்ம தாஸ்யமாக ஸ்ரீவைஷ்ணவ தாஸன்‌” என்று ஆர்க்கும்‌ ஸித்தியாத தாஸ்ய நாமத்தையும்‌ ததீய சேஷத்வமே நிலை நின்ற நிரூபகமாம்‌ படி ப்ரஸாதித்தருளி,((வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்தபோதம்-காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம் வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம் பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்)) “காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக பாத்‌ரம்‌” என்னும்படியான அண்ணாவைக்‌ குறித்து ”இதர மத நிராகரண பூர்வமாக ஸ்வ மதமான ஸ்ரீராமாநுஜ ஸித்தாந்தத்தையே ரக்ஷித்துக் கொண்டு விசிஷ்ட பஷத்திலேயே நிஷ்டராய்ப்‌ போரும்‌” (விசேஷணம் -சேதன அசேதனம் –இரண்டிலும் கண் வைக்காமல் -விசிஷ்டம் -பரமாத்மா )என்று நியமித்தருள, இவரும்‌ ஒரு பிறவியிலே இரு பிறவியாய்‌ ஸத்தா மூலமான மூல ஸ்பர்‌ஸமுள்ள (திருமூல வவதாரமான ஸ்வாமி)தொன்றைப்‌ பற்றி ”ஸந்தமேநம்‌ -என்னும்படி ஸத்தையும்‌ பெற்று க்ருதார்த்தராய்‌, உடையவர்‌ திருவடிகளுக்கு ஆழ்வானைப் போலே அந்தரங்கராய்‌, ஸகல வ்யாக்யான நிர்மாண ஸஹ காரியாய்‌ தத் பாதாப்த ஸேவைக தாரகராய்‌ வாழ்ந்து கொண்டு ஜீயருக்கு உகப்பாகப்‌ பெருமாளையும்‌ ஸேவித்து அரிய அருளிச்‌ செயற்‌ பொருளை யெல்லாங்‌ கேட்டு ஆதரித்துக் கொண்டு எழுந்தருளி யிருத்தார்‌. பின்பு ”தஸ்மாத் பார்‌யாதய: புத்ராஸ் தமேகம்‌ குருமாப்நுயு: [அண்ணா ஆஸ்ரயித்‌த படியால்‌ அவருடைய புத்ரர்களும்‌ பத்நீ முதலானவர்களும்‌ அம்‌ மா முனிகளொருவரையே ஆச்சார்யராக ஆஸ்ரயித்தார்கள்‌] என்‌னும் படி தத் ஸம்பத்திளான அப்பா முதலானவர்களும்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்தார்கள்‌. அந்த அப்பாவிறே அஸ்மத் தேசிகராயிருக்கிற சடகோப தேசிகரை ப்ரதமம்‌ கடாக்ஷித்‌தருளினார்‌.

ஜீயர்‌ மீளவும்‌ திருமலை யாத்ரை செய்தருளல்‌.
அநந்தரம்‌ ஜீயர்‌ மீளவும்‌ திருமலை முதலான திவ்ய தேசங்களைத்‌ திருவடி தொழ வேணுமென்று திருவுள்ளமாய்‌, “ப்ரதீதைரபி தத் ப்ருத்யை ப்ரதிவாதி பயங்கரை: (ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணாவுடனும்‌ பிரசித்தர்களான அவருடைய அடியார்களுடன்‌ )என்கிறபடியே ப்ரதிவாதி பயங்கர அண்ணா முதலான அனேக ஸ்ரீவைஷ்ணவர்களுடனே திருக் காவேரி வடக்கு நோக்கினாப்‌ போல புறப்பட்டருளி-அத விலோகந லோக தமேநுதம்‌ த்வதவலோகந துங்க குதூஹலம்‌ | த்விரத ஸைல ஸிரோக்ரஹ மேதிநம்‌ வரத முத்தர வேதி பூஷணம்‌ (பின்னர்‌ தமது கடாக்ஷத்தாலே ஐநங்களுடைய அஜ்ஞான இருளை அடியோடு போக்குமவராய்‌ தேவரீரை கடாக்ஷிப்பதில்‌ மிகவும்‌ குதூஹல முடையவராய்‌ திருவத்தி மலை யுச்சியில்‌ நித்ய வாஸம்‌ செய்தருள்பவராய்‌ உத்தர வேதியான யாக சாலைக்கு அலங்கார பூதரான பேரருளாளனை) என்கிறபடியே அர்த்திதார்த்த பரிதானத்‌தில்‌ அவஸர ப்ரதீஷார யெழுந்தருளி யிருக்கும்‌ பேரருளாளரைத்‌ திருவடி தொழுவாராக ப்ரதமம்‌ பெருமாள்‌ கோயிலேற எழுதந்தருள, அங்குண்டான ஸ்ரீ வைஷ்ணவர்களெல்லாரும்‌ எதிர்‌ கெண்டு வந்து ஸேவிக்க அவர்களை க்ருபை பண்ணி அவர்கஞடனே எழுந்தருளி கோயிலுக்குள்ளே புக்கு.
1-ஸ்ரீ மந் த்வாரவரம்‌ மஹத்தி பலி பீடாக்ர்யம்‌ பணீந்த்ரஹ்ரதம்‌ கோபீநாம் ரமணம்‌ வராஹ வபுஷம்‌ ஸ்ரீபட்ட நாதம்‌ ததா |
ஸ்ரீமந்தம்‌ சட வைரிணம்‌ கலிரிபும்‌ ஸ்ரீபக்தி ஸாரம்‌ முநிம்‌ பூர்ணம்‌ லக்ஷ்மண யோகிநம்‌ முநிவரிராநாத்யா த்வாரபவ்
ஸ்ரீமந் மஞ்ஜந மண்டபம்‌ ஸரஸிஜாம்‌ ஹேதீஸ போகீஸ்வரெள ராமம்‌ நீல மணிம்‌ மஹாந ஸவரம்‌ தார்க்ஷ்யம்‌ ந்ரு ஸிம்ஹம் ப்ரபும்‌
ஸே நாந்யம்‌ கரி பூதரம்‌ ததுபரி ஸ்ரீ புண்ய கோடிம்‌ ததா தந் மத்பே வரதம்‌ ரமா ஸஹசரம்‌ வந்தே ததீயைர் வ்ருதம்‌ ॥

நித்யஸ்ரீயுடன்‌ விளங்கா நின்ற பெரிய திருக் கோபுர வாயிலையும் பலி பீடத்துக்கு முன்புள்ள திருவநத்த ஸரஸ்ஸையும்‌, கோபீ ரமணனான ஸ்ரீவேணு கோபாலனையும, ஞானப் பிரானையும்‌, அப்‌படியே பட்டர்பிரானையும்‌, ஸ்ரீமானான சடகோபனையும்‌, திருக்கலிகன்‌றியான திருமங்கையாழ்வாரையும்‌, திருமழிசைப்‌ பிரானையும்‌ பெரியநம்பியாரையும்‌, எம்பெருமானாரையும்‌, முதலாழ்வார்களையும்‌, பிறகு திருவாசல் காக்கும்‌ முதலிகளையும்‌, திருவபிஷேக மண்டபத்தையும்‌, தாமரையாளான ‘பெரும் தேவித் தாயரையும்‌, திருவாழி யாழ்வானையும்‌, திருவநந்தாழ்வானையும்‌ சக்கரவர்த்தி திருமகனையும்‌, கரிய மாணிக்க வரதரையும்‌. திருமடைப் பள்ளியையும்‌, பெரிய திருவடி நாயனாரையும்‌, ஸ்வாமியான அழகிய சிங்கரையும்‌, சேனை முதல்வரையும்‌, திருயத்திமாமலையையும்‌ அதன்மேல்‌ ஸ்ரீபுண்ய கோடி விமானத்தையும்‌ அதன்‌ மத்தியில்‌ ஸ்ரீதேவி பூதேவி முதலானாரால்‌ சூழப்பட்ட திருமகள் கேள்வனான தேவப் பெருமானையும்‌: அடிபணிகிறேன்‌..


2-கமல நிவேஸி தாங்க்ரி கமலம்‌ கமலாபரணம்‌ கந மணி பூஷண த்யுதி கடாரித காத்த ருசிம்‌ |
அபய கதா ஸூதர்ஸந ஸரோருஹ சாருகரம்‌ கரிகிரி ஸேகரம்‌ கிமபி சேதஸி மேநிததே ।

ஆஸந பத்மத்தில்‌ அழுதியிட்ட திருவடித் தாமரைகளை யுடையனாய்‌ லஷ்‌மீ வல்லபனாய்‌ உயர்ந்த மணிமயமான திருவாபரணரங்களின்‌ ஒளியினால்‌ பொன் வண்ண மாக்கப்பட்ட திருமேனி
சோபை யுடையனாய்‌ அஞ்சேலென்று காட்டும்‌ முத்திரை யென்ன கதை சங்கம்‌ சக்ரம்‌ இவ்வாழ்வார்களென்ன இவற்றை தரிக்கும்‌ திருக்கைகளாலே அழகாக விளங்கா நின்‌ற அத்திகிரிக்கு சிரோ பூஷணமான அநிர்வசநீயனான பேரருளாளனான எம் பெருமானை எனது மனதில்‌ த்யாநிக்கிறேன்‌) என்கிற படியே அடைவே ஸேவித்தருளி வைய மாளிகையிலே ஏறி யருளி பேரருளாளரைத்‌ திருவடி தொழுது
மங்களம்‌ வேதஸோ வேதி மேதிநீ க்ருஹ மேதிநே வரதாயதயா தாம்நே தீரேதாராய மங்களம்‌ ”--பிரமனுடைய யாக பூமியில்‌ எழுந்தருளி யிருப்பவராய்‌, க்ருபா நிதியாய்‌, ஆஸ்ரிதாபேக்ஷிதங்‌களைத் தருவதில்‌ நிலை நின்றவரான பேரருளாளருக்கு மங்களம்‌,
மங்களம்‌-என்று தொடங்கி மங்களாசாஸனம் பணணி எழுந்தருளி நிற்க திருவடிக்‌கீழவர்கள்‌ தீர்‌த்த ப்ரஸாதங்களும்‌ ஸ்ரீ சடகோபனும்‌ ப்ரஸாதிக்க ஸ்வீகரித்தருளி தண்டன் ஸமர்ப்பித்துப்‌ புறப்‌பட்டருள, அங்குண்டானவர்கள்‌ எழுந்தருளியிருக்கும்படி அங்கே ஒரு மடத்தைக் தற்பிக்க.
கதி ஸித்திநாநி கரிஸைல வாஸிந கமலா ஸகஸ்ய நயநாதுதா பவந |
நிஜ பாத பங்கஜ ரஜோபி ஷேச நைரகிலாஸ்ரிதாந்‌ விமலாயக்நு வாஸை : ॥

(அம் மணவாளமா முனிகள்‌: சில நாட்கள்‌ ஹஸ்தி கிரியில்‌ நித்ய வாஸியாய்‌ ஸ்ரீ யபூதியான பேரருளாளனுடைய கடாக்ஷத்திற்கு இலக்காகி, அங்கு எல்லா ஆஸ்ரிதர்களையும்‌ தமது திருவடித்‌ தாமரைகளின்‌ ஸ்பர்சத்தால்‌ சுத்த ஸ்வபராகச்‌ செய்து கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌) என்கிறபடியே அங்கேயே அவர்களுக்கு உகப்பாக நாலாறு நாள்‌ எழுந்தருளி யிருக்க, அநந்தரம்‌ திரு வைசாகத்‌ திருநாள்‌ தொடங்கி நடக்க, முன்றாந் திருநாளன்று பெருமாள்‌ ஒப்பித்துக் கொண்டு
ஆரூட : பதகேந்த்ர மஸ்ய கரயோ ரங்க்ரி த்வயீ மர்ப்பயந்‌
திவ்யை ரம்பர பூஷணைர் திந க்ருதோ தீப்திம்‌ திவா தீபயத்‌ |
முக்தேந்து ஸ்மிதீரோ சிஷா மதுரயந் முக்தாத பத்ர ச்ரியம்‌
விஸ்வம்‌ பஸ்யதி சக்ஷுஷா விகஸ தாவீதீ விஹாரீ ஹரி!

(தேவப் பெருமாள்‌ பெரிய திருவடியின்‌ மேலே எழுந் தருளி அவருடைய கைகளிலே இரு திருவடிகளையும்‌ வைத்துக்‌ கொண்டு, திவ்யமான திருப் பரியட்டங்களாலும்‌ திருவாபரணங்களாலும்‌ சூரியனுடைய ஒளியைப்‌ பகல்‌ விளக்காக்குமவராய்‌, அழகிய வெண் மதி போன்ற புன்முறுவலுடைய காந்தியான திரு முத்துக்‌ குடைகளின்‌ சோபையை விளங்கச்‌ செய்பவராய்‌, திருவீதிகள்‌ தோறும்‌ பவநி எழுந்தருளி, திருக் கண்ணோக்கினால்‌ யாவரையும்‌ குளிரக் கடாக்ஷித்‌ தருளுகிறார்‌) என்கிறபடியே பெரிய திருவடி மேற்‌ கொண்டு திரு வீதியிலே புறப்பட்டருள ஜீயரும்‌ பெருமாளை ஸேவித்‌துக்‌ கொண்டு கங்கை கொண்டான்‌ மண்டபத்தேற வெழுந்தருள);

எறும்பியப்பா ஜீயரை ஸேவித்தல்‌
எறும்பியப்‌பாவும்‌ சில ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ திருநாள்‌ ஸேவிக்க எழுந்தருளினவர்கள்‌ அங்கே அசிந்திதமாக ஜீயரை ஸேவித்து
ஆருஹ்ய பதக வ்ருஷபமா யாந்தம்‌ வரதம் ஆதராத் த்ரஷ்டும்‌. |
கத்வாத தக்ர பூமிம்‌ நாத்ர நஷம்‌ தத்ர தேசிகம்‌ த்ருஷ்ட்வா

(பெரிய திருவடியின்‌ மேல்‌ ஏறி யருளி எழுந்தருஞம்‌ தேவப் பெருமாளை ஸேவிக்க ஆதரத்துடன்‌ சென்று அவ் விடத்தில்‌ ஆசார்‌யரை-மணவாளமாமுனிகளை-ஸேவித்து அங்கு ஈடுபாட்டினால்‌-அதற்கு மேலே எதையும்‌ பார்க்க வில்லை) என்னும்படி அப்பா விஸ்‌மித ஹ்ருதயராய்‌ மோஹித்து ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆதராதிசயத்‌தாலே விழுந்து தத் விக்ரஹாநுபவம்‌ பண்ணிக் கொண்டு ”சிரேண ஸம்ஜ்ஞநம்‌ ப்ரதி லப்ய சைவ விசிந்தயாமாஸ விஸால நேத்ரா””. வெகு காலம்‌ கழித்துத்‌ (சீதை] தன்னினைவடைந்து மேலும்‌ மலர்ந்த திருக் கண்களை யுடையளாய்‌ சிந்திக்கலானாள்‌-என்கிறபடியே மூன்று நான்கு நாழிகைக்கு மேலே தெளிந்து-பின்பு திரு நாளென்றறிந்து ஜீயரை ஸேவித்துக்‌ கொண்டு போய்‌ –குமிறு மோசை விழவொலி தொலை வில்லி மங்கலம்‌ கொண்டு புக்கு(திருவாய்‌ 2-4-2] என்றும்‌ (இழைகொள்‌ சோதிச்‌ செந்தாமரைக்‌ கண் பிரான்‌ இருந்தமை காட்டினீர்‌ [திருவாய்‌ 5-5] என்றுஞ்‌
சொல்லுகிறபடியே ஸேவித்தருளி
(என்கிறபடியே ஜீயர்‌ புருஷகாரமாக ‘ஸெளம்யோ பயந்த்ரு முநிசா மம தர்ஸிதெள தெள ஸ்ரீ தேவராஜ சரணெள சரணம்‌ ப்ரபத்யே ” என்கிற படியே ஸேவித்தருளி) பின்பு ஜீயரும்‌ பெரிய திருவடியோட்டைச்‌ சேர்த்தியை ஸேவித்தருளி
ஸூபர்ண ப்ருஷ்டரம் ஆரூடஸ் ஸ்யாம: பிதாம் புரோ ஹரி: |
காஞ்சநஸ்ய கிரேஸ் ஸருங்கே ஸ தடித் தோயதோ யதா ॥

(பெரிய திருவடி நாயனாரின்‌ முதுகிலே எழுந்தருளி யிருக்கும்‌ நீல மேக ஸ்யாமளனும்‌ பீதக வாடைப் பிரானுமான தேவப் பெருமாள்‌ திரு பொன்மலையின்‌ மேலே மின்னலுடன் கூடிய மேகம்‌ போலே விளங்கினார்‌.) என்கிறபடியே மஞ்சுயர்‌ பொன் மலை மேலெழுந்த மா முகில்‌ போன்ற வடிவை அநுபவித்தருளி –

தரசழுந்து மணி தவள நற் பவள மருண ரத்ந வகை சாத்தியே
சங்கு சக்ர முமங்கையில்‌ திகழ மங்கை பாகன் அரனேத்தவே
நரகு மொத்தமரர்‌ திரளு மேத்தும்‌ நர வாகவனன்‌ வருணனிந்திரன்‌
நடுவு நான்‌மறை கொள்‌ முனிவர்‌ வானவர்‌ குணாலமிட்டு நடமாடவே
வரைகளிற்‌ பெரிய வட கிரிக்குமிசை மரதகக் குவடு போலவே
வரதர்‌ கச்சி நகர்‌ வரு தனித் தெருவில்‌ வடகலைக்கழகு பொழியவே
அரவுதித்த மணி மகுட முற்றவொரு வணி பிணக்குடன்‌ மிழற்றவே
கநக மொத்த தொரு வடிவமொத்தி வரு கருடனிற் பவனி வருவரே
-என்றநுபவித்து அதற்குப்‌ பாசுரமிட்டருளி ஹ்ருஷ்டரா யெழுந்‌தருளி யிருந்து மற்றைத்‌ திருநாள்களையும்‌ ஸேவித்தருளி எழுந்தருளி யிருக்க.

அப்பாச்சி யாண்ணாவைக்‌ கச்சியில்‌ நித்ய வாசம் பண்ண நியமித்தல்‌
ஸ்தலத்திலுள்ள பெரியோர்கள் எல்லோரும் கூடி யெழுந் தருளி-ஜீயர்‌ மங்களாசாஸநஞ்‌ செய்தருளுகையாலே இந்த விசை திரு வைசாக மஹோத்ஸவம்‌ அதி விலஷணமாகக்‌ கண்டருளினார்‌” என்று உகந்தருளக்‌ கேட்டருளி, ஜீயர்‌ அவர்களை ஆதரித்தருளி- கர்த்தவ்ய ஆசார பாகங்களையும்‌ பரஸ்பர சேஷத்வ ஸெளஹார்த அவஸ்யாகத்வத்தையும்‌ திவ்ய ப்ரபந்த வாஸநாத்ய அவஸ்யகத்தையும்‌ அவர்களுக்கு உத்தரோத்தரம்‌ அதிசயமாக வேணுமென்று அருளிச்‌ செய்ய, எல்லோரும்‌ அப்படியே யாக வேணும்‌; இவற்றிற்க் கெல்‌லாம்‌ ஒருவரைக் கற்பித்தருளி’ அடியோங்களைத்‌ திருத்திப் பணி கொள்ளும்படி அந்த ஸ்தலத்திலே நித்ய வாஸமாக நியமித்தருள வேண்டும்‌” என்ன ஜீயரும்‌ போர வுகந்தருளி –வானமாமலை ஜீயரை இட்டு நம்முடைய அப்பாச்சி யாரண்ணாவை அழைத்து வாரும்‌” என்று நியமிக்க அவருமப்படியே செய்தருள, அப்பாச்சி யாரண்ணாவை எல்‌லார்க்குங் காட்டி யருளி, இவரை தம்முடைய மர்யாதையாக வெண்ணி க்ருபை பண்ண வாருங்கோள்‌” என்றருளிச் செய்து அவரையும்‌ நீர் முதலியாண்டான்‌ திரு வம்சத்திலே அவதீர்ணரா யிருக்கையாலே ஆண்டான்‌, தோழப்பர்‌, முதலானார்க்கு உகப்பாக நம்முடைய வாக்யாநுவிதாயியாய்‌ இவர்‌களுக் கெல்லாம்‌-ஹித ப்ரவர்‌த்தகராய்ப்‌ பேரருளாளருக்கு மங்களாசாஸந பரராய்‌ நித்ய வாஸம்‌ பண்ணும்‌
ஸ்ரே யாம்ஸி கரி ஸைலேந்த்ர। கருணா வருணால்ய: |
தோதுஹ்யாத் வரதஸ் ஸ்ரீமா நர்த்திநாம்‌ நிதிரவ்யய: ॥

யாசிப்பவர் களுக்குக்‌ குறையாத நிதியாய்க் கருணைக்‌ கடலாய்‌ ஹஸ்தி கிரி நாதனாய்‌ ‘ஸ்ரீமானான வரந் தரும்‌ பெருமாள்‌ நன்மைகளை(உமக்குச்‌) சுரந்தருளுவாராக] என்று ஆஸீர்‌வதித்தருளினார்‌-

ஜீயர்‌ திருக்கடிகை, எறும்பி வழியாகத்‌ திருமலை எழுந்தருளல்‌.
அநந்தரம்‌ அப்பாவையுங்‌ கூட்டிக்‌ கொண்டு திருப்புட்குழி வழியாக எழுந்தருளி அங்கே புட்குழி அம் போர் ஏற்றையும்‌ ஸேவித்‌துப்‌ புறப்பட்டு,
கடிகாசல ஸேகரம் ததோ நரஸிம்ஹம்‌ நயநேந நிர்விஸந் |
உதஜீவய தர்ஸ்ரிதைர ஜநைரவநீம்‌ தாம பநீத பந்தநை: ॥

(பிறகு கடிகைத் தடங் குன்‌றுக்கு சிரோ பூஷணமா யெழுந்தருளியுள்ள நரசிங்கப்‌பிரானைத்‌ திருக் கண்களாலே பூர்ணமாயநுபவித்து, தம்மை யாஸ்ரயித்தவர்களாய்‌ அறுக்கப்பட்ட ஸம்ஸார பந்தத்தையுடைய சில மனிதர்களுடன்‌ அந்த நாட்டை அநுக்ரஹித்தருளினார்‌) என்கிறபடியே வண்டு வளங் கிளரும்‌ நீள் சோலை வண் பூங் கடிகைத் தடங் குன்றேற வெழுந்தருளித்‌ தக்கானையும்‌ திருவடி தொழுது க்ராமாந்தரங்களினின்றும்‌ அநுகூலராய்‌ வந்து ஆஸ்ரயித்தவர்களையும்‌ க்ருபை பண்ணி யருளி, அநந்தரம்‌ கடிகைத்‌ தடங் குன்றின்‌ மேல்‌ ஏறி யருளி -மிக்கார் வேத விமலர்‌ விழுங்கும்‌ அக்காரக் கனியை யநுபவித் தருளி, அந்தியம் போதிலரியுருவாகி யரியை யழித்தவனைப்‌ பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்‌டென்று பாடுதும்‌ -என்கிறபடியே மங்களாசாஸனம்‌ பண்ணி-அங்கே யெழுந்தருளி நின்று எறும்பியைக்‌ கடாஷித்தருளி ‘வட திருவரங்கம்‌” என்று ஊருக்குத்‌ திருநாமஞ் சாத்‌தி யருளி-அங்குண்டானவர்களெல்லாரையும்‌ அழகிய மணவாள தாஸரென்று அபிமானித்தருளி அண்ணல் மலை யருகே அரங்க மா நகராக்கி அநந்தரம்‌ -வண் பூங் கடிகைக்கு பண்டெல்லாம்‌ வேங்‌கடம்‌ என்று திருமலையோடே சேர்த்தி யுண்டாகையாலே பொன்‌மணியை அணி யார்ந்ததோர்‌ மின்னை வேங்கடத்துச்சியில்‌ கண்டு இப்படி ஸ்ரீதிதி யாகிற பொருள் படைப்பாராக ஒண்ணுதல்‌ மாமையின் படியே மநோ ரதத்தை யுடையராய்‌ தேவம்‌ திவ்யம்‌ ஸேஷ ஸைலே வஸந்தம்‌ தத் பாதாப்ஜம்‌ வீக்ஷிதும்‌’-என்று வேங்கடத்து உச்சியில்‌ கோயில்‌ கொண்டுள்ள தேவனின்‌ திருவடி தொழுவாராக திருவடிவாரமான திருப்பதியிலே முந்துற வெழுந்தருள அங்குள்ள்‌ ஆசார்‌ய புருஷர்கள்‌ முதலானாரனைவரும்‌ எதிர் கொண்டு சேவிக்க-

அவர்களுடன்‌ கூட கோவிந்த ராஜப்‌ பெருமாளைத்‌ திருவடி தொழுவதாக எழுந்தருளி ப்ரதமம்‌ எம்‌ பெருமானாரைத்‌ திருவடித் தொழுது, அவருகந்து எழுந்தருளப் பண்ணினவரென்று அத்‌யாதரத்துடனே ஸ்ரீகோவிந்த ராஜப் பெருமாளையும்‌ –கையினார்‌ சுரி சங்கனலாழியர்‌ என்கிற படியே அத்யாதரத்துடன்‌ ஸேவித்‌தருளி கோவிந்தன்‌ குணம் பாடி மங்களசாளனம்‌ பண்ணி யருளி கோவிந்தன்‌ தன்னடியாரா யிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களுடனே புறப்பட்டருளி திருமலை யடிவாரத்‌திலே எழுந்தருளி யிருக்கிற நம்மாழ்வார்‌ முதலான ஆழ்வார்களையும் *உலகுய்ய மால்‌ நின்ற என்று தொடங்கி மகிழ் மாறன்‌ தாளிணையே ௨ன்‌ சரணாய்‌ நெஞ்சமே யுள்‌ (திருவாய் நூற்‌-60) என்றும்‌ ஓழிவில் காலம்‌ என்று தொடங்கி -மிக்க நலஞ்சேர் மாறன் பூங் கழலை நெஞ்சே புகழ்‌ (திருவாய்‌ நூற்‌-23) என்றும்‌ அநுஸந்தித்து ஸேவித்தருளி அன்றைக்கு அங்கே எழுந்தருளி யிருந்து அங்குண்டானவர்களையும்‌ க்ருபை பண்ணி யருளி, பிற்றை நாள்‌ திலத முலகுக்காய்‌ நின்ற திருவேங்கடத்தைச்‌ சென்று வணங்கி, அநந்தரம்‌ மொய்த்த சோலை மொய் பூந் தடந் தாழ்வரே (திருவாய்‌ 3-3-10) என்றும்‌ -தேனேய்‌ பொழில் சூழ்‌ திருவேங்கட மா மலை (திருமொழி 11-9-2) என்றும்‌-அப்ராக்ருத மமேயஞ்ச ஸர்வ ரத்ந மயம் கிரிம்‌, ஹிரண்மய மஹா ஸ்‌ருங்கம்‌ பஞ்ச உபநிஷதாத் மகம்‌:” (பஞ்சோபநிஷ மயமாய்‌ அப்ராக்ருதமாமய் அளவிடற்கு அரியதாய் ஸகல மணி மயமாய்‌ பொன்‌ மயமான பெரிய சிகரத்தை யுடைத்தான திருமலையை என்கிறபடியே அப்ராக்ருத திவ்ய வபுஸ்ஸை யுடைய திருமலை யாழ்‌வாரை யடைந்து வணங்கி, அப்பால்‌ பரம பதத்துக்குப்‌ படி யொழுங்கு போலே யிருக்கிற திருமலையிலே *தம்பாதே நாத்யாரோ ஹதி (கெளஷீடக்‌ 1-5) என்னும்‌ ப்ரதிபத்தியுடன்‌ ஏறி எழுந்தருளி காட்டு அழகிய சிங்கரையும் திருவடி தொழுது -தேனாறு பாயுத்‌ திரு வேங்கடத்தி லுண்டான கானாறுகளையும்‌ -கண்டு களித்து கொண்டு அவ் வருகே எழுந்தருளு கிறவர்‌ விண்ணின்‌ மீதி யன்றே வேங்கடத்திலுண்டான விலங்கல்‌ குடுமிகளையும்‌ மின்‌ திகழ்‌ குடுமிகளையும்‌ கோல் தேன் பாய்ந்தொழுகும்‌ குளிர் சோலை சூழ்ந்த வழகையும்‌ கல் தேன்‌ பாய்ந்தொழுகும்‌ கமலச் சுனைகளையும்‌ செப்பார்‌ திண் வரையையும்‌ ஸேவித்துக் கொண்டு அப்பாலே எழுந்தருளி காட்டில்‌ வேங்கடத்திலுண்டான காட்டையும்‌ வைகுந்த நாட்டுக்‌ கொப்பான வட வேங்கட நாட்டையு மநுபவித்து –மாலுகந்தவூரான ஊரருகே யெழுந்தருளி -நன் மணி வண்ணன்‌ (நான்‌திரு, 47)
என்ற பாட்டின் படியே அங்குண்டான ‘ அபூர்வங்களை யெல்லாம்‌ ஆஸ்சர்யத்துடனே அநுபவித்து,-கண்ணன்‌ விண்ணூரைத்‌ தொழுது ஊரருகே, ஸேவித்துக் கொண்டு நிற்க அவ்வளவில்‌ -வேங்‌கடத்தைப்‌ பதியாக வாழுகிற கோயில் கேள்‌வி ஜீயர்களும்‌ ஏகாங்கி ஸ்ரீ வைஷ்ணவர்களும்‌ மற்றெல்லாரும்‌ வந்தெதிர்‌ கொண்டு ஸேவிக்க, அவர்களை –நிகரிலமரர்‌ முனிக் கணங்கள்‌ என்று ப்ரதிபத்தி பண்ணி யருளி அவர்களுடனே கூடத்‌ திருவேங்கட நகரை ப்ரவேசித்து அவ் வருகே வைகுந்தன்‌ திருவாசல்‌, அவாவறச் சூழ்ந்‌தான்‌ திருவாசல்‌, என்கிற திரு வாசல்களையும்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து ப்ரதஷிணமாக வெழுந்தருளி அங்கே அநந்தாழ்வான்‌ கைங்‌கர்யமான ‘இராமானுசன்‌”’ என்கிற திரு நந்தவனத்தையும்‌ மற்றுமுண்டான திருநந்தவனங்களையும்‌ திருப் பூ மண்டபங்களையும்‌ ஸேவித்து திருவுள்ளமுகந்தருளி, பின்பு திருக் கோனேரியிலே நீராடி-த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களையும்‌ தரித்தருளி-மேலொரு நாள்‌ மண் கோட்டுக் கொண்டான்‌ மலை (மூன்றாம் -திரு-45) என்கிறபடியே-எறிதர வையம்‌ முற்றும்‌ ஏனத்துருவா யிடந்த ஷேத்ராதிபயான ஞானப் பிரானையும்‌ ஸேவித்து ஊனேறு!செல்வத்தை (பெரு. திரு .4) அநுஸந்தித்து அங்குண்டான திர்யக் ஸ்தாவர ஜந்மங்களை ப்ரார்த்‌தியா நின்று கொண்டு கோனேரி வாழுங் குருகு தொடக்கமான பஷி ஸங்கங்களையும்‌ தம்பகமாய்‌ நிற்கும்‌ தவமுடையாரையும்‌ அநுபவித்துக் கொண்டு, பெரிய திருக் கோபுரத்துக் கருகே தண்டன்‌ ஸமர்ப்‌பித்து உள்ளே புகுந்து, நம்‌ பெருமாள்‌ எழுந்தருளி யிருந்த அழகிய மணவாளன்‌ திரு மண்டபத்தையும்‌ ஸேவித்தருளி

1-ஸ்ரீமதி மஹாத்வரார சிஞ்சாம்‌ காஞ்சந மயஞ்ச பலிபீடம்‌ |
ஸ்தாந மதயாமுநேயம்‌ சம்பக தரு ஸம்பதம்‌ ப்ரதீ ஹாரம்‌ ॥
விநதா தநய மஹாநஸ மணி மண்டபம்‌ கநக மய விமாந வரம்‌ |
ப்ருதநாபதி யதி துர்யெள நர ஹரி மதந மத ஜாநகீ ஜாநிம்‌ ॥

பெரிய திரு வாயிலிலே அந்தாணிப் புளிபையும்‌ பொன் மபமான பலி பீடத்தையும்‌ அதன் பின்னர்‌ யமுனைத் துறைவர்‌’ என்கிற புஷ்ப மண்டபத்தையும்‌ செண்பக வ்ருக்ஷ ஸம்பத்தை யுடைய செண்பகத்‌ திரு வாசலையும்‌ பெரிய திருவடி நாயனாரையும்‌ திருமடைப்‌ பள்ளி யையும்‌ திருமாமணி மண்டபத்தையும்‌, தங்கத்தால்‌ சமைந்த ஆநந்த நிலய விமானத்தையும்‌, சேனை முதல்வரையும்‌, யதிராசனாரையும்‌, நரசிங்கப் பிரானையும்‌ பின்னர்‌ இராம பிரானையும்‌ வணங்கக்‌ கடவீராக.

2-அதபுந ரநக மணி த்யுதி கவசித கமலா நிவாஸ புஜ மத்யம்‌ |
கலயத கமல விலோசந மஞ்ஜந கிரிநிதி மநஞ்ஜநம்‌ புருஷம்‌ ॥

பின்னர்‌ தோஷமற்ற மணிகளின்‌ காந்தியால்‌ வியாபிக்கப் பெற்றதாய்ப்‌ பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமான திருமார்பை யுடையனாய்‌ செந்தாமரையை யொத்த திருக் கண்களை யுடையனாய்‌ அஞ்சன கிரி நிதியாய் ஹேய ப்ரதிபடனாய்‌ பரம புருஷனான திருவேங்கடமுடையானை கண்ணாரக் கண்டு களிக்கக் கடவீர்‌கள்‌

3-ஸரணமய மித்யங்க்ரிம்‌ நிர்திஸ்ய தக்ஷிண பாணிநா
கர கிஸலயம்‌ ஸவ்யம்‌ ஸவ்யோரு ஸீம்நி ஸமர்ப்பயந் |
மணி கண மஹோ மக்நே வக்ஷஸ் ஸ்தலே தததிந்திராம்‌
பவதபிமத ஸ்ரீமாநஸ் மாகமஸ்து பரம் பதம்॥

இந்தத் திருவடிகளே உங்களுக்கு மோக்ஷோபாயம்‌ என்று வலது திருக் கையால்‌ காட்டிக்கொண்டு, தளிர் போன்ற இடது திருக் கையை இடது திருத் தொடை ப்ரதேசத்தில்‌ வைத்திருப்பவராய்‌, ரத்நங்களின்‌ ஒளியில்‌ மூழ்கின திரு மார்‌பில்‌ பெரிய பிராட்டியாரைத்‌ தரிக்குமவனாய்‌ உங்களுக்கு ப்ரிய தமனுமான திருவேங்கடமுடையான்‌ ஸ்ரீநிவாஸன்‌ நமக்கு மேலான ப்ராப்ய ஸ்தானமாக ஆகக்‌ கடவன்‌]

என்கிறபடியே திருவேங்கடமுடையானைத் திருவடி தொழுவதாக ஸேவா க்ரமத்தில்‌ அடைவே அத்தாணிப் புளி, ஸ்ரீபலி பீடம்‌, யமுனைத் துறைவனென்கிற திருப் பூ மண்டபம்‌, செண்‌பகத் திருவாசல்‌, பெரிய திருவடி, திருமடைப் பள்ளி, திருமாமணிமண்டபம்‌, திவ்ய விமானம்‌, முதலானவற்றையும்‌ ஸேவித்தருளி, அநத்தரம்‌ சேனை முதலியாரையும்‌ திருவடி தொழுது -நின்ற வண்‌ கீர்த்தியும்‌ நீள் புனலும்‌ நிறை வேங்கடப்‌ பொற் குன்‌றமும்‌ என்றும்‌-இருப்பிடம்‌ வைகுந்தம்‌ வேங்கடம்‌ என்றும்‌ இத்யாதிகளை அநு ஸந்தித்து எம்பெருமானாரையும்‌ ஸேவித்து அவருடைய அநுமதியோடே புறப்பட்டருளி தூணாயதனூடரியாய்‌ என்றநுஸந்தித் தருளி -திருவேங்கடத் தரியையும்‌ ஸேவித்து, வென்று மாலை யிட்‌டான்‌ திருமண்டபத்தே யெழுந்தருளி தாயே தந்தை என்று தொடங்கி -நாயேன்‌ வந்தடைந்தேன்‌ நல்கி யாளென்னைக்‌ கொண்‌டருளே என்று தண்டன்‌ சமர்ப்பித்து உள்ளே புக்கு, பின்பு-மிடைந்த ஏழ் மரங்களுமடங்க வெய்து வேங்கட மடைந்த மாலான சக்ரவர்த்தி திருமகன்‌ திருவடிகளை யடைந்து, அப்பால்‌ அவன்‌ தாளிணைக் கீழ்ப் புகுங்‌ காதலை யுடையராய்க் குலசேகரன் படி
யருகே சென்று -அகலகில்லேன்‌ என்று பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே-அடிக்கீழமர்ந்து புகுந்து நின்று ஸேவித்தருளி, அநத்தரம்‌ -செங்கமலக்‌ கழலில் படியே,

திருமகள்‌ மருவு மிருபதமலரு முழந்தாள்களுங் குறங்கும் தாங்கு
செக்கரம் மா முகில் போலத்‌ திருவரைச்‌ செம்பொனம்பரமும்‌
அருமை சேர்‌ சீராவு மயனைத் தந்த தோருந்தியு மமுதமாருதர பந்தமும்‌
அலர் மேல் மங்கை யுறை திருமார்வமு மாரமும்‌ பதக்க கன்னிரையும்‌
பெருவரை யனைய புய மொரு நான்கும்‌ பிறங்கடலாழியுஞ் சங்கும்‌
பெறு திவமென்று காட்டிய கரமும்‌ பிடித்ததோர்‌ மருங்கினிற் கரமும்‌
ஒருமதி யெனவே சோதி சேர் முகமு முயர் திருவேங்கடத் துறையு
மொப்பிலா வப்பன் கருணை சேர் விழியு மென்னுளெலாம்‌ நிறைந்து நின்றனவே

என்று பாதாதி கேசமாக அநுபவித்தருளி அலங்கல்‌ துளப முடியையும்‌ திருத்தியகோறம்பையும்‌ சுற்றுமொளி வட்டஞ்சூழ்ந்து சோதி பரந்த கோளிழைவாள்‌ முகத்தையும்‌ அதில்‌ தன் முகத்‌துச் சுட்டியையும்‌, திரு நெற்றியில்‌ சாத்தின முத்தின்‌ திருநாமத்தையும்‌ “வெண்ணெ யுண்டான்‌ திருமூக்கு” என்று ப்ரத்யபிஜ்ஞை பண்ணலாம்படி புழுகிலே முழுகி யிருக்கிற கோல நீள் கொடி மூக்கையும்‌ தாமரை கட் கனி வாயையும்‌, வார் காதிலே சாத்தின இலகு மகர குண்டலங்களையும்‌ உலகமுண்ட பெரு வாயாலே அண்டமுநாடுமடங்க விழுங்கிய கண்டத்தையும்‌ அத் திருக் கழுத்தினில்‌ காறையையும்‌ -அலர் மேல்‌ மங்கை யுறை மார்வையும்‌, அதில்‌ பவள வாய்ப் பூமகளும்‌ பன் மணிப் பூணாரமுமான சேர்த்தியையும்‌,அத்தோடு சேர்த்த வெண் புரி நூலையும்‌ வட வேங்கட வனுடைய மல்லார் தோள்களையும்‌ அதிலே சாத்தின தண் துழாய் விரை நாறு கண்ணியையும்‌ திருக் கைகளிலே தரித்த வலம்புரி ஆழியையும்‌ அவற்றிற்குப்‌ பரபாகாவஹமான வண்ண மருள்‌ கொளணி மேக வண்ணத்தையும்‌, உய்ய வுலகு படைத்துண்ட மணி வயிற்றையும்‌ அதில்‌ திரு வுதர பந்தநத்தையும்‌, அதுக்கநந்தர பாவியாய்‌ உடையார்‌ கனமணி யோடொண் மாதுளம்பூ இடை விரவிக் கோத்த வெழில்‌ தெழ்கனோடும்‌ பொன்னரை நாணொடு மாணிக்கக்‌ கிண்‌ கிணியையும்‌ -பெருமானரையில்‌ பீதக வண்ண வாடை என்று ப்ரணயினிகள்‌ வாய்‌ புலற்றும் படியான அந்தி போல்‌ நிறத்தாடையையும்‌ -பல்லி நுண் பற்றாகச் சாத்தின உடை வாளையும்‌, புரிந்து மலரிடுறை புண்டரீகப் பாதமான பூவார் கழல்களையும்‌ அதில்‌ அதிர் கழல் சதங்கைகளை யுமுடைய திருவேங்கடமுடையானை எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே ‘ என்கிறபடியே கேசாதி பாதாந்தமாக அநுபவித்தருளி ப்ரீதராய்த்‌ திருப் பல்லாண்டு தொடங்கி அநுசந்தித்து, மங்களாசாஸனம் பண்ணி, பர்யாப்தி பிறவாமையாலே.

மங்களம்‌ மாநுஷே லோகே வைகுண்டமதி திஷ்டதே | ஸேஷஸைல நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்‌ ॥-மானிட வுலகில்‌ ஸ்ரீவைகுண்டமான திருமலையில்‌ எழுந்தருளி யிருக்கிற திருவேங்கடவனுக்கு மங்களமுண்டாக வேணும்‌; என்று மங்களாசாஸநம் பண்ணியருளி.
ஸெளம்யோ பயந்த்ரு முநிநா மம தர்ஸி தெளதே |
ஸ்ரீ வேங்கடேஸ சரணெள சரணம்‌ ப்ரபத்யே ॥

ஆசார்யரான ஸ்ரீ மணவாள மா முனிகளாலே அடியேனுக்‌குப் புகலாகக்‌ காட்டி யருளப்பட்ட ஸ்ரீவேங்கடேச பாத கமலங்‌களைப் புகலாகப்‌ பற்றுகிறேன்‌ என்கிறபடியே எல்லார்க்கும்‌புகலாக அடிக்கீழம்ர்ந்துபுகுந்து அடியீர்வாழ்மின்‌ என்று திருவடியைக் காட்டி யருள அவனும்‌ மலை மேல் தான்‌’நின்று என்‌ மனத்‌துளிருந்தான்‌ என்கிறபடியே இவர்‌ திருவுள்ளத்தைக்‌ கணிஸித்துக்‌
கொண்டிருந்து இப்போது இவரைப்‌ பெற்றவாறே ‘ஸ்ரீமத் ஸூந்‌தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிதே’ என்னும்படி. இவர்‌ திருவுள்‌ளத்தைத்‌ தனக்கு ஆவாஸ ஸ்தாநமாக விரும்ப, –எந்தாய்‌-வந்தாய்‌
(திருவாய்‌ 2-6-9, திருமொழி 1-10-9) என்கிற பாட்டுக்களின்‌ படியே இனி யெங்குப் போகின்றதே , நிகரில் புகழான வாத்ஸல்‌யாதி குணங்களுக்குத் தோற்று அதிலே ஈடுபட்டு, ஒழிவில்காலம்‌-என்கிறபடியே உத்தர-வாக்யத்தில்‌ கைங்கர்ய ப்ரார்‌த்தனையையும்‌
பண்ணி யருளா நிற்கிற வளவிலே, தீர்த்தம்‌, ப்ரஸாதம்‌, ஸ்ரீசடகோபன்‌, பூவார்‌ கழல்கள்‌ முதலான வரிசை களெல்லாம்‌ ப்ரஸாதிக்கப்‌ பெற்று க்ருதார்த்தராய்‌ புறப்பட்டருளி :கதி சந திவஸாநி தாம்நி தஸ்மிந்‌ சுமல விலோசந மேந மீஷமாண;,’- இல
நாட்கள்‌ செந்தாமரைக்‌ கண்ணனான இவ் வெம்பெருமானை ஸேவித்துக் கொண்டு அவ் விடத்தில்‌ எழுந்தருளி யிருத்தார்‌ என்‌ கிறபடியே அங்கே சிறிது நாளெழுத்தருளி யிருந்து அங்குண்டான
வர்களையும்‌ அபிமானித்தருளி இது விண்ணோர்‌ வெற்பாயிருக்‌கிறது என்றருளிச்‌ செய்து அங்குள்ள வைபவங்கனை வைபவங்களை எல்லாம் ஸேவித்தருளிப்‌ புறப்பட்ட வளவிலே அங்தள்ளார்‌ ‘“இங்குத்தைக்‌குப் பரிவரா யிருப்பாரொருவரைக்‌ கற்பித்தருள வேணும்‌” என்ன,எம்பெருமானார்‌ ஜீயரைக்‌ கற்பித்தருளினார்‌.
திருவேங்கடவனுடைய ஐஸ்வர்யங்களை ரஷித்து நிர்வஹிக்க பகவத் ராமாநுஜர் ஸ்ரீ ஸேநாபதி ஜீயர்‌- என்‌ற பட்டப்‌ பெயருள்ள ஏகாங்கியை நியமித்ததாக அநந்தார்யர்‌ அருளிச்‌ செய்த வேங்கடாசல இதுஹாஸ மாலை கூறுகிறது. பின்னர்‌ அவ் விராமாதுஜரே அந்த ஏகாங்கித்கு ஸந்யாஸாஸ்ரமம்‌ தந்து “அப்பன்‌ திருவேங்கட சடகோப ஜீயர்‌” என்ற திரு நாமத்துடன்‌ கோயில்‌ கார்ய நிர்வாஹகராக நியமித்து அவருக்குத்‌ துணையாக நாலு ஏகாங்கிகளை ஏற்படுத்ததாக இதிஹாஸ மாலை கூறுகிறது. இவருக்குக்‌ ”கோயில்‌ கேள்வி ஜீயர் என்ற பிருதும்‌ உண்டு. பின்னர்‌ பெரிய கேள்வி ஜீயர்‌ என்றும்‌ சிறிய கேள்வி ஜீயர்‌ என்றும்‌ இரண்டு ஜீயர்‌ ஸ்வாமிகள்‌ பெரியவருக்கு சிறியவர்‌ இளவரசாக நியமனம்‌ பெற்றதாகத்‌ தெரிகிறது. மணவாளமா முனிகள்‌ ”சிறிது காலம்‌” திருமலை-திருப்பதியில்‌ தங்கி யிருந்ததாக யதீந்த்ர ப்ரவண ப்ரபாவமாகிற இந் நூலில்‌ சொல்லப்பட்டுள்ளது.-இந்த சிறிது காலம்‌ ஒன்றிரண்டு ஆண்டுகள்‌ இருக்கலாம்‌ பிள்ளை லோகாசாரியர்‌ காலத்துக்குப்‌ பின்னர்‌ ராமாநுஜார்ய திவ்‌யாஜ்ஞஜை என்று திருவரங்கம்‌ திருவேங்கடம்‌ முதலான இடங்‌களில்‌ நடந்து வந்த கட்டுக்கோப்பு கலக கலாபாங்கள்‌ காரணமாகக்‌ குலைந்து, பின்னர்‌ மா மாமுனிகள்‌ காலத்தில்‌ ராமாநுஜார்ய திவ்யாஜ்ஜஞை வரவர முநி திவ்யாஜ்ஞையாக நிலை நாட்டப்பட்டது. “கோயில்‌ கேட்கும்‌ எம்பெருமானார்‌ ஜீயர்‌ என்‌பவர்‌ [கி பி] 1445ம்‌ ஆண்டு திருப்பதி திருமலை கல்வெட்டில்‌ பேசப்படுகிறார்‌, 1370-1443-என்ற காலத்தில்‌ வாழ்ந்திருந்த மணவாள மாமுனிகள்‌ நியமித்த ஜீயர்‌ இவரே என்பது தெளிவாகிறது. இவர்‌ திருமங்கையாழ்‌வார்‌ கோயிலுக்கு தரும கர்த்தாவான படியால்‌ இவர்‌ சின்ன ஜீயரே யாவர்‌ என்று கல்வெட்டுச்‌ சான்றுகளிலிருந்து ஊகிக்க முடிகிறது- திருமலை திருப்‌பதி தேவஸ்தான வெளியீடான திருப்பதி, 1953] திருமலை யொழுகு”‘ என்ற திருமலை திருப்பதி ஐதிஹ்ய மாலையில்‌-சகாப்தம்‌ 379 விகாரி வருஷம்‌ தை மாசம் அப்பன்‌ சடகோப ஜீயரை பகவத் ராமாநுஜர்‌ கோயில்‌ கேள்வி ஜீயராகப் பட்டாபிஷேகம்‌ செய்வித்ததாகவும்‌ அவரும்‌ 45 ஆண்டுகள்‌ கைங்கர்யத்துக்குப் பின்‌ ஐய வருஷத்தில்‌ தமக்கு இளவரசாக அழகிய மணவாள ஜீயர்‌ என்‌பவரை தியமித்ததாகவும் காணப் படுகிறது [பக்‌.123], இதே நூலில்‌ (பக்‌ 104) காண்பது: “முன்னாளில்‌ ஸ்ரீராமாநுஜ தரிசந ப்ரவர்‌த்தகரான மணவாள மாமுனியானவர்‌ திருப்பதிக் கெழுந்தருளித்‌ தேசாதிபதியை ஆஸீர்வதித்து ஸ்தலத்திலே மதாந்தரஸ்தராலே உபத்ரவம்‌ வராதபடிக்கு ஒரு உத்தமாஸ்ரமியை ஸ்தலாதிபதியாக்க வேணுமென்று சிந்தித்து, தம்முடைய சிஷ்டராய்‌,கோயிலில்‌ ஸ்ரீரங்க நாராயண ஜீயர்‌ ஸ்ரீபண்டாரத்துக்கு நிர்வாஹகராய்‌ இருக்கிறாப்‌ போலே திருமலைக்கு உத்தாரகராய்‌ நிக்ரஹ அனுக்ரஹ ஸமர்த்தரான ஒரு ஜீயரைக்‌ ”கோயில்‌ கேள்வித் திருவேங்‌கட ஜீயர்‌” என்று திருநாமம்‌ சாத்தி தேசாதிபதி அனுமதி கொண்டு அர்ச்சகர்‌ முதலான ஸமஸ்த பரிகரங்களையும்‌ ஸ்தல நிர்வாஹகரான ஆழ்வார்‌ கோவிந்த ஜீயர்‌ என்ற ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவரையும்‌ திருவேங்கட ஜீயர்‌ அதீனமாக்கி இவர்‌களெல்லாருக்கும்‌ இவர்‌ சிஷகராயும்‌ ரஷகராயும்‌, திருவேங்சடச்‌ செல்வத்துக்கு வர்த்தகராயும்‌ தேசாதிபதிக்கு பகவத் தர்மோபதேஷ்டாவாயும்‌ கல்பித்து, எம்பெருமானார்‌ திருமேனி முத்ரையாக ஓரு முத்ரை மோதிரத்தைப்‌ பண்ணி ஜீயரைத்‌ தரிக்கச்‌ சொல்லிக்‌ கொடுத்து விஷ்வக்ஸேந முத்ரா ஸுசிதமாக எம்பெருமானார்‌ நியமன ஸித்தமாய்‌ ஏகாங்கி பரம்பரா ப்ராப்தமான கண்டா, கடாரி, ஹநுமத் த்வஜங்களையும்‌ அவர்‌ ‘வசம் பண்ணி, கைங்கர்ய யாத்ரா காலங்களிலே கண்டா நாத ஹநுமத் த்வஜ புரஸ் ஸரமாக ஸஞ்சாரம்‌ பண்ணுமென்று நியமித்து: ஸ்ரீராமாநுஜ புரத்திலே ஜீயருக்கு ஒரு மடமும்‌ ஸங்கல்‌பித்துக்‌ கொடுத்து திருவேங்கட ஜீயர்‌ ஜ்ஞாந ஸந்தான பரம்பராந்தர்பூதரான ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவர்களில் தானே திருமலை ஸ்தானத்‌துக்கு தத் தத் காலங்களிலே உத்தமாஸ்ரமியாய்‌ மடாதிபதியாய்த்‌ திருவேங்கட நாட்டுக்கும்‌ திருவேங்கடச்‌ செல்வத்துக்கும் கர்த்தாவாகவும்‌ நியமித்துக் கோயிலுக்கு எழுந்தருளினார்‌.’ இதுவரை திருமலை யொழுகு நூலில்‌ காண்பவை.

எம்பெருமானார்‌ நியமித்த ஸ்தலாதிகாரி ஜீயருக்கு திருவடி [அனுமான்‌ ] முத்ரையாக ஒரு முத்ராங்குளீயகத்தை தரிக்‌திருக்கும்படி எம்பெருமானார்‌ நியமநம்‌ [திருமலையொழுகு, பக்‌,
42] மணவாளமாமுனிகள்‌ நியமித்த ஜீயருக்கு எம் பெருமனார்‌ முத்ரையுள்ள அங்குளீயகம்‌ என்று சொல்லி யுள்ளபடியால்‌ இவர்‌ எம்பெருமானார்‌ ஜீயர்‌ என்று அழைக்கப்பட்டதாகத்‌ தெரிகிறது.

இவரே சின்ன ஜீயர்‌ என்றும்‌ தெரிய வருகிறது.

ஜீயர்‌ திருவாலி திருநகரியில்‌ திருமங்கை யாழ்வரை ஸேவித்தது:-அநந்தரம்‌ :
அஹி ராஜ ஸைலமபிதோ நிரந்தரம்‌ ப்ருதநாஸதேந ஸ விலோகயந் தத; |
அவருஹ்ய திவ்ய நகரம்‌ ரமாஸ்பதம்‌ புஜ கேஸயம்‌ புநருபேத்ய பூருஷம்‌ ॥

அந்த மணவாளமா முனிகள்‌ தாம்‌ சிஷ்ய ஜந பரிவாரத்துடன்‌ திருமலைக்கு நான்கு புறத்திலும்‌ இமை கொட்டாமல்‌ பார்த்துக்‌ கொண்டே அம் மலையினின்‌றும்‌ இறங்கி திவ்ய நகரமான கீழத் திருப்‌பதியை அடைந்து மறுபடியும்‌ பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமாய்த் திருவநந்தாழ்வான்‌ மேல்‌ பள்ளி கொண்டிருக்கிற பரம புருஷனான கோவிந்த ராஜனை ஸேவித்தார்‌.-என்கிறபடியே அங்கு நின்றுமிறங்கி யெழுந்தருளி-ஸ்ரீகோவிந்தராஜப்‌ பெருமாளையும்‌
குளிரருவி வேங்கடத் தென்‌ கோவிந்தன்‌ குணம் பாடுவாராய்‌ அநுபவித்துப்‌ புறப்பட்டருளி, திருவெவ்வளூர்‌, திருவல்லிக்கேணி முதலான திருப்பதிகளெங்கும்‌ திருவடி தொழுது பெருமாள்‌ கோயிலேற வெழுந்தருளி பேரருளாளரையும்‌ திருவடி தொழுது, அங்கு நின்றும்‌ அவரநுமதியுடனே புறப்பட்டருளி மண்ணில்‌ பெரிய மதுராந்தகத்தேற எழுந்தருளி
மருமலர்‌ கமழ் சோலை மதுரை மாநகர்‌ வந்தெய்தி
அருள் பொழி பெரிய நம்பி யன்றெதிராசற்கு
அரும் பொருள்‌ வழங்கு மெங்களேரி காத்தருள்வார்‌ கோயில்‌
திருமகிழடியிற் செல்வீர்‌ தீ வினை தீருமாறே
-என்று அங்கேற வெழுந்தருளி,-
இதுவோ கிளியாறிவ்வூரோ திரு மதுரை
இதுவோ திருமகிழுங் கோபுரமு- மிதுவோ
பெரியநம்பி தாமுகந்து பின்னு மெதிராசர்ச்குத்‌
துயமளித்த தூயப் பதி-
என்று அங்கே தண்டன்‌ ஸமர்ப்பித்து அத்யந்த ஹ்ருஷ்டராய்‌ அற்றைக்கங்கே எழுந்தருளி யிருந்து

பிற்றை நாள்‌ புறப்பட்டு திருச்சித்திர கூடத்தேற வெழுந்தருளி கோவிந்த ராஜரையும்‌ திருவடி தொழுது- (பாலாலயமாக இருக்க வேண்டும் -பிண்பு 1539-வருஷம் ஸ்வாமிகள் தொட்டாச்சார்யார் –முதலியாண்டானின் 12 திருவம்சம் -அச்யுத தேவராயர் -கிருஷ்ண தேவராயர் குமாரர் – உதவியுடன் பிரதிஷ்டை செய்து அருளினார் )அநந்தரம்‌ சோழ மண்டலத்திலுண்டான திருப்பதிகளைத்‌ திருவடி தொழுவாராக மநோ ரதித்துக்‌ கொண்டு புறப்பட்டருளி அப்படியே வழியிலுள்ள திவ்ய தேசங்களையும்‌ மங்களாசாஸநம்‌ செய்தருளி, பின்பு திருவாலி திருதகரி யேற வெழுந்தருளித்‌ திருமங்கை யாழ்வாரைத் திருவடி தொழுது

உறை கழித்த வேலை (வாளை )யொத்த விழி மடந்தை மாதர் மேல்‌
உறைய (உருக )வைத்த மனமொழித் தவ்‌ வுலகளந்த நம்பி மேல்‌
குறையை வைத்து மடலெடுத்த குறையலாளி திருமணங்‌
கொல்லை தன்னில்‌ வழி பறித்த குற்றமற்ற செங்கையான்‌
மறையன் வைத்த (மறை யுரைத்த )மந்திரத்தை மாலுரைக்க வவன் முன்னே
மடி யொதுக்கி மன மொடுக்கி வாய் புதைத்தல்‌ வொன்‌னலார்‌
கறை குளித்த வேலணைத்து நின்‌ற விந்த நிலைமை யென்‌
கண்ணை விட்டகன்றிடாது கலியம் ஆணை யாணையே– என்றும்‌

அணைத்த வேலும்‌! தொழு கையும்‌, அழுந்திய திரு நாமமும்‌
ஓமென்ற வாயும்‌, உயர்ந்த மூக்கும்‌, குளிர்ந்த முகமும்‌,
பரந்த விழியும்‌, இருண்ட குழலும்‌, சுருண்ட வளையமும்‌,
வடித்த காதும்‌, மலர்ந்த காதுகாப்பும்‌, தாழ்ந்த செவியும்‌
செறிந்த கழுத்தும்‌, அகன்‌ற மார்பும்‌, திரண்ட தோளும்‌
நெளித்த முதுகும்‌ குவிந்த இடையும்‌, அல்லிக் கயிறும்‌
அழுந்திய சீராவும்‌, தூக்கிய கருங்கோவையும்‌’
தெங்கலுந் தனி மாலையும்‌,சாத்திய திருத் தண்டையும்‌,
சதிரான வீரக் கழலும்‌ குந்தியிட்ட கணைக் காலும்‌.
குளிர வைத்த திருவடி மலரும்‌, மருவலர் தமுடல்‌ துணிய
வாள் வீசும்‌ பரகாலன்‌ மங்கை மன்னரான வடிவே
–என்றும்‌

ஐயனருள் வாழி செய்ய வடிவிணைகள்‌ வாழியே
அந் துகிலும்‌ சீராவுமணையுமரை வாழியே
மையிலகு வேலணைத்த வண்மை மிக வாழியே
மாறாமல்‌ அஞ்சலி செய்‌ மலர்க் கரங்கள்‌ வாழியே
செங்யகலனுட னலங்கல்‌ சேர் மார்பும்‌ வாழியே
திண் புயமும்‌ பணிந்த திருக் கழுத்தும்‌ வாழியே
மையல்‌ செய்யு முக முறுவல்‌ மலர்க் கண்கள்‌ வாழியே
மன்னு முடித் தொப்பாரம்‌ வலயமுடன்‌ வாழியே–
என்றும்‌ ஈடுபட்டு,

வேலணைத்த மார்வும்‌ விளங்கு திரு வெட்டெழுத்தை மாலுரைக்கத்‌ தாழ்த்த வலச்‌ செவியும்‌–காலணைத்த தண்டையும்‌ வீரக் கழலும் தார்க் கலியன்‌ வாண் முகமும்‌ கண்டு களிக்கு மென்‌ கண்‌.–என்று அவர்‌ மந்த்ர லாபத்துக்கு நின்ற நிலையிலே மக்ந மநாவாய்‌ அநுபவித்து மங்களாசாஸனஞ் செய்தருளி பரகாலர்க்கு பரம ப்ரீதி கரரான வயலாவி மணவாளரையும்‌ ஸேவித்துப்‌ புறப்பட்டுத்‌ திருமணங் கொல்லை யேற வெழுந் தருளி

ஈதோ திருவரசு? ஈதோ!மணங்கொல்லை
ஈதோ எழிலாலி என்னுமூர்‌–ஈதோ தான்‌
வெட்டுங்கலியன்‌ வேலை வெட்டி நெடுமால்‌
எட்டெழுத்தும்‌ பறித்த விடம்‌!
-என்று அவ்விடத்தையும்‌ ஸேவித்துப்‌ புறப்பட்டருளி,

நீணிலா முற்றத்து நின்றிவள்‌ நோக்கினாள்‌,
காணுமோ கண்ணபுரமென்று காட்டினாள்‌-
என்கிறபடியே திருக் கண்ண புரத்திலே திருவுள்ளஞ்‌ சென்று –இன்றே சென்று திருக்கண்ணபுரம்‌ புக்கு- என்கிறபடியே அதி த்வரையுடனே அங்கேற வெழுந்‌தருளி கருவரை போல்‌ நின்றானையும்‌ ஸர்வாங்க ஸுந்தரரான செளரி ராஜனையும்‌ ஸேவித்தருளி கண்ணபுரத் தடியன்‌ என்றதுவே நிரூபகமான திருமங்கை யாழ்வாரையும்‌ அங்கே யேறி யருளப்‌ பண்ணி, காலின்‌ மணி கரை யலைக்கும்‌ கணபுரத்தினின்றும்‌ போந்து வாவித் தடஞ்சூழ் மணி முத்தாற்றின்‌ நறையூர்‌ நெடு மாலான நம்பியையும்‌ நாய்ச்சியாரையும்‌ ஸேவித்துப் புறப்பட்டு
செழு மா மணிகள்‌ சேரும்‌ திருக் குடந்தையிலே சேர்ந்து ஆராவமுதாழ்வாருடைய ஏரார்‌ கோலத் திரு வுருவையும் திருவடி தொழுது, அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி, திருமால்‌ சென்று சேர்‌விடமான தென்திருப்பேரையில்‌ சென்று திருப்பேர் நகரானையும்‌ திருவடி தொழுது அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி மாமலராள்‌ புணர்ந்த பொன் மார்வன்‌ பொருந்தும் பதிதொறும்‌ புக்கு நிற்கும்‌
-என்றும்‌,

திவ்யாநி தத்ர நகராணி திகந்தராளேர் தேவே நயாநி ஹரிணு விஷயீ க்ருதாநி
ஸத்யம்‌ த்வ தீஷண ஸம்ர்த்த மஹோத்ஸ வாநி தங்யாநி தாநி ஜகதஸ்‌ ஸமயம் த்வகாநி

அவ்விடத்தில்‌ திங் மத்யத்தில்‌ எந்த திவ்ய தேசங்கள்‌ எம்பெருமானாலே ஆஸ்ரயிக்கப்பட்டனவோ, தேவரீருடைய கடாக்ஷத்தால்‌ ஸம்பூர்ணமான விஷோத்ஸவங்களை யுடையனவாய்‌. தந்யங்களான அந்த திவ்ய தேசங்கள்‌ லோகங்களுடைய ஸகல பாபங்களையும்‌ போக்கக் கடவன]என்றுஞ் சொல்லுகிறபடியே மற்றுமுண்டான திருப்பதிகளையும்‌ மங்களாசாஸநம்‌ பண்ணி யருளி, தையல் நல்லார் குழல் மாலையும்‌ மற்றவர்‌ தட முலைச்‌ செய்ய சாந்தும்‌ கலந்திழி புனல் சூழ்‌ தென்னரங்‌கத்தே சென்று பெரிய பெருமாளையும்‌ ”ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்‌டோஸ்தி கரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம்‌” [இந்த நான்‌ க்ரீஷ்ம காலத்‌தில்‌ குளிர்ந்திருக்கிற மடுவில் போல்‌ பர ப்ரஹ்மத்தில்‌ மூழ்கினவனாகிறேன்‌ ] என்றும்‌,பொற்றாமரைக் கயம்‌ நீராடப் போனாள்‌-என்றும் சொல்லுகிறபடியே விடாய் கெட படிந்து குடைந்தாடி யநுபவிந்து தீர்த்த ப்ரஸாதம்‌ பெற்று ஹ்ருஷ்டராய்ப்‌ புறப்பட்டு।

அப்பாச்சியா ரண்ணாவை பெருமாள்‌ கோயிலுக்கு நியமித்தது
தமக் கிருப்பான திருவரங்கன்‌ திருப்பதியிலே யெழுந்தருளி பெருமாளை ஸேவித்து,
சித்ராணி தீப்ததர ரத்ந விபூஷணாநி சத்ராணி சாமர யுகம்‌ வ்யஜ நாஸநாநி |
தக்நா மலாஞ்சக யுதாநி ததெள ததைவ ரங்காதிபாய தயிதா ஸஹிதாய தஸ்மை ॥

[அந்த அழகிய மணவாளனுடைய திரு நாமத்துடனும்‌ சங்கு சக்கரம்‌ முதலிய அடையாளங்களுடனும்‌ கூடி யிருக்கிற-ஆச்சர்யகரமாய்‌ மிகவும்‌ ப்ரகாசியா நின்ற ரத்ந மயமான திருவாபரணங்‌களையும்‌ திரு வெண் கொற்றக் குடைகளையும்‌ திரு வெண் சாமரங்களையும்‌ திருவாலவட்டங்களையும்‌ சித்ராஸநங்களையும்‌, பெரிய பிராட்டியாருடன்‌ கூடி யிருக்கிற அந்த அழகிய மணவாளன்‌பொருட்டு அப்போதே ஸமர்ப்பித்தார்‌.]’ என்னும்படி தாம்‌ கொண்டெழுந்தருளின திருவாபரணங்கள்‌, திரு வெண் கொற்றக்குடை. திரு வெண் சாமரம்‌,- திருவாலவட்டம்‌, ரத்ந கம்பளம்‌, திருமெத்தை முதலான வஸ்துக்களெல்லா வற்றையும்‌ ஸமர்ப்‌பித்து மங்களாசாஸநம்‌ பண்ணிக் கொண்டு எழுந்தருளி யிருக்க-
பெருமாளும்‌ மிகவுமுகந்தருளி, தீர்த்தம்‌, ஸ்ரீசடகோபன்‌ முதலான வரிசைகளையும்‌ ப்ரஸாதித் தருளி உத்தம நம்பி பிள்ளையை கோயில்‌ பரிகர மனைத்துக் கொத்துடன் வரிசையாக ஜீயரை மடத்‌திலே விட்டுவரவென்று அருள் பாடிட்டருள, அவரும்‌ அப்படியே அஷ்டாதச வாத்யங்களுடனே மஹோத்ஸவமாக மடத்திலே எழுந்தருளப் பண்ணினார்‌. நம்‌ பெரிய ஜீயரும்‌, மடத்திலே யெழுந்தருளி
யிருக்கிற அப்பிள்ளை, திருவாழி யாழ்வார்‌ பிள்ள தொடக்கமான பெரியோர்களையும்‌ மற்றும்‌ கைங்கர்ய பரராய்‌ எழுந்தருளி யிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களையுபம் க்ருபை பண்ணி யருளி திருமலை பெருமாள் கோயில்‌ தொடக்கமான திவ்ய தேசங்களினின்றும்‌ கொண்டெழுந்தருளின தீர்த்த ப்ரஸாதங்களையும்‌ விநியோகம்‌ செய்தருளி;

அப்பாச்சியாரண்ணாவை அழைத்தருளி முன் நியமனப் படிக்கு பெருமாள் கோயிலுக்கு நியமித்தருள, அவரும்‌ ‘இந்த ஸேவையையும்‌ கோஷ்டியையும்‌ விட்டு விடை கொள்ள வல்லேனோ?’” என்று
வ்யாகுலப்பட, ஜீயர்‌ அவர் கையைப் பிடித்துக் கொண்டு ஸந்நிதியிலே யெழுந்தருளி தாம்‌ அடி தொடங்கி ‘இராமானுசன்‌’* என்று திருநாமம் சாத்தி பஹுநாளாண்டதாய்‌ ஜீர்ணமாயிருக்கிற தீர்த்‌தச் செம்பு ஸ்வாமி யுடைய ப்ரஸாதமென்று வானமாமலை ஜீயர்‌ அணை கையவனாள்‌ தமது திருமண் கூடையிலே வைத்து ஸேவித்துக் கொண்டிருச்‌ கிறதைக்‌ கொண்டு வரச் சொல்லி திருக்கையிலே வாங்கிக்‌ கொண்டு: முன்னிருந்த இராமானுசன்‌ என்கிற விலாஸமும்‌, திருவாழி
திருச்சங்கு, திருமண் ஸ்ரீசூர்ணம்‌ எல்லாம்‌ பரிமுஷிதமாயும்‌ ஜீர்ணமுமாயு மிருப்பதனாலே, தம்மைப் போலிருக்கிற இரண்டு விக்ரஹங்கள்‌ இத்தை யிட்டு உண்டாக்‌க ‘உம்முடைய ஆசாரியருக்கு ஒரு விக்ரஹமும்‌ உமக்கு ஒரு விக்ரஹமுமாகக்‌ கொள்ளும்‌” என்று ஸாதித்‌தருளி
, கோயிலாழ்வாரிலே எழுந்தருளி யிருக்கிற “என்னைத்‌ தீ மனங்‌ கெடுத்தார்‌” ஆட்கொண்டவில்லி ஜீயர்‌ திருவாராதனமாய்‌ எழுந்‌தருளி யிருந்தவராகையாலே, அவர்‌ திருவடிகளுக்கு அந்தரங்கரான கந்தாடை யாண்டான்‌ திருவம்சமாக அவருடைய கைங்கர்யம்‌ போலே நீரும்‌ கைங்கர்யம் பண்ணத் தக்கவராகையாலே உமக்கு இவர்‌ திருவாரதனம்‌ என்று உகந்து ஸாதித்தருளி கோஷ்டியிலே எழுந்தருளி
ஸ்ரீ தீர்த்த தேவ ராஜார்ய தநயாம்பேதி விஸ்ருதா |
தஸ்யாஸ் தநூஜோ வரத: காஞ்சீ நகர பூஷண: ॥

[திருமஞ்சனம்‌ அப்பா என்ற தேவ ராஜார்யரின்‌ குமராத்‌தியாய்‌ ஆய்ச்சி–அம்பா என்று அறியப்பட்டவரின்‌ குமாரரான வரதாசாரியர்‌ (அப்பாச்சியாரண்ணா) காஞ்சீ நகரத்துக்கு ஆபரணமானவர்‌] என்று பேரருளாளரே ஆச்சியாருக்கக்‌ குமாரராக அவதரித்தருளினார்‌?” என்று ப்ரீத் யதிசயத்தாலே அருளிச் செய்து பெருமாள்‌ கோயிலிலே நித்ய வாஸம்‌ பண்ணிக் கொண்டு ஸுகோத்‌தரராயிரும்‌’” என்று விடை ஸாதித்தருளினார்‌.


ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-2-

May 15, 2026

ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

(ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

(மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)


இனி நம்பெருமாள் விருத்தாந்தம்
பின்பு நம்பெருமாளும்‌ *அரங்கதகருள் முனைவனைத்‌- திருமாலிருஞ் சோலை நின்றான்‌ என்கிற சேர்த்தியாலே -சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ் சோலையிலே யெழுத்தருளி! இவ்விடம் ஆயிரம் ஆறுகளும் சுனைகள்‌ பலவாயிரமும்‌ ஆயிரம்‌ பூம் பொழிலுமுடைத்தாய்‌ திருப் பொன்னியாலே சூழப்பட்ட ஆராமம்‌ சூழ்ந்த யரங்கத்தைப் போலே அதி மநோ ஹரமாயிருக்கையாலே, பிள்ளையைப் பிரிந்த க்லேசமெல்லாம்‌ மாறி

சிகரிஷு விபிநேஷ்வப் யாபகா ஸ்வச்ச தோயா ஸூ
அநுபவசி ரசஞ்ஜோ தண்டகாரண்ய வாசாந்
ததிஹ தத் அநு பூதவ் சாபிலாஷோத்ய ராம
ஸ்ரயஸி வந கிரீந்த்ரம் ஸூந்தரீ பூய பூயஸ் –-ஸுந்‌, ஸ்தவம்‌
103 —

தண்டகாரண்யம் போன்ற காடுகள்-கோதாவரி கங்கை போன்ற நதிகள் –இவற்றால் உண்டான விலக்ஷண ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டியே இங்கே அழகராக சேவை சாதித்து அருளுகிறீர்-சித்ரா கூடாதி பர்வத ஸ்தானத்தில் இத்திருமலையும் தண்டகாரண்யம் -ஸ்தானத்தில் வனராஜிகளும்-கங்கா நதி ஸ்தானத்தில் நூபுர கங்கையும் கொள்ளக் கடவன ரசிகரான தேவரீர் சித்ரா கூடாதி பர்வத ராஜங்களிலும் -என்னும்படியான வனங்களிலும் தண்டகாரண்ய வாசாந் -அநுபவசி –சித்ரகூட மனு ப்ராப்ய-பரத்வாஜஸ்ய சாஸனாத் ரம்யமா வசதம் க்ருத்வாரமமானா வநே த்ரய தேவ கந்தர்வ சங்கா சாஸ் தத்ர சே ந்யவசன் ஸூகம் –இத்யாதிப்படியே ஆரண்ய வாச ஸூகத்தை அனுபவித்தீர்-அநுபவசி -வர்த்தமான பிரயோகம் –அனுபவம் தொடர்ந்து கொண்டே இருப்பது பற்றி-இங்கனம் திருஉள்ளத்துக்கு பங்காக அனுபவித்த ராசிக்ய அதிசயத்தாலே மீண்டும் அவ்வனுபவங்களைச் செய்து போர திரு உள்ளம் பற்றினவராய்க் கொண்டு அழகராக திருவவதரித்து திருமாலிருஞ்சோலை மலையை உறைவிடமாகக் கொண்டு அருளிற்று–என்கிறபடியே வந வாஸ லாஞ்சையை யுடையராய்‌ வநகரி ப்ரஸ்தமான அங்கே சிலகால மெழுந்தருளி யிருந்து விச்ரமித்தருளி, அழகிய மணவாளன்‌ கிணற்றையும்‌ அறஞ்சுவராகி நின்ற வரங்கரான தாம்‌ தார்‌மிகன்‌ வைத்த தணணீர்ப் பந்தலோ பாதியாக உண்டாக வைத்து, பின்பு அனைத்துப் பரிகரத்துடனே கொல்லி காவவன்‌ கூடல் நாயகன்‌ கோழிக் கோன்‌ குலசேகரன்‌ என்று அதுவே நிரூபகமாம்படியான ஸ்ரீகுலசேகரப் பெருமாளாண்டருளிய தேசத்தை விரும்பி யெழுந்தருளி அவ்வவ தேசங்களிலே சில நாள்‌ இனிதமர்ந்‌திருந்து; அநந்தரம்‌ கோழிக்கோடேற எழுந்தருள:

(தன்வந்திரி சந்நிதி சேதம் -தங்க கொடிக் கம்பம் சேதம் -முதலாம் சடையவர்மன் சீர் படுத்தி –
விஜய ஸ்தம்பம் -திருப்பாண் ஆழ்வார் சந்நிதிக்கு எதிராக உள்ளது -ராமானுஜர் விஜயத்துக்காக வைத்த ஸ்தம்பம்-கூர நாராயண ஜீயர் ரஷித்த விருத்தாந்தம் -தகடுகளில் மந்த்ரம் பதித்து வைத்தார் –விருப்பண்ண உடையார் சக்கரத்தாழ்வார் சேதத்தில் இருந்து ரக்ஷித்தார் -இவற்றை கோயில் ஒழுகு விவரிக்கும்)

சுடர் கொள் சோதியைத்‌ தேவரும்‌ முனிவருந் தொடர என்கிறபடியே மற்ற திவ்ய தேசத் தெம்பெருமானகளும்‌ நம்மாழ்வாரும்‌ அங்கே வலசையாக எழுந்தருள, அவர்களையும்‌ ஆதரித்தரு௭
ஆழ்வாரைத் தம்முடைய திவ்ய ஸிம்ஹாஸனத்திலே வைத்துக்‌ கொண்டு. அடி யடையாதாள் போலணுகி யடைந்த இவரைக்‌ கண்டு கொண்டிருந்து, தம்முடைய திவ்ய ஸிம்ஹாஸனமான வட்ட
மணையையும்‌ முத்துச் சட்டையையும்‌, பகல் திரு முன் பந்தத்தையும்‌ ப்ரஸாதித்து க்ருபை பண்ணி அங்கு நின்றும்‌ புறப்பட்டு
ஆழ்வாருடனே தேனைக் கிடம்பைக்கு (திருக்கணாம்பி -தமிழ் மாடு கர்நாடகம் கேரளா -மூன்றுக்கும் எல்லை )எழுந்தருளி அங்கே சிறிது காலமெழுந்‌தருளி யிருந்து, *’கூட வருகிறேன்‌” என்ற ஆழ்வாரை நிறுத்தி, புங்கனூர்‌ வழியாக வெழுந்தருளி அங்கே யிருந்து திருநாராயண புரத்தேற ப்ரதஷிணமாக வெழுந்தருளி, அங்கே சில நாள்‌ விஹரித்து, திலதமுலகுக்காய்‌ தின்ற திருவேங்கடத்தை யடைந்து

ஸுரம்ய மாஸாத்யது சித்ர கூடம்‌ நதீஞ்சதாம்‌(மால்யவதீம்‌ ஸுதீர்த்தாம்‌ |,நநந்த ராமோ ம்ருக பக்ஷி ஜுஷ்டாம்‌ ஜஹெளச துக்கம்‌ புர விப்ரவாஸாத்‌[ஸ்ரீரா ஆர. 59-38 )ஸ்ரீ ராம பிரான்‌ மிக அழகியதான திரி கூடத்தையும்‌ நல்ல நீருடையதும்‌ விலங்குகள்‌ பக்ஷிகளால்‌ விரும்பப் பட்டதுமான அந்த மால்யவதீ என்னும்‌ நதியை யுமடைந்து அயோத்தி யினின்றும்‌ பிரினால் உண்டான துக்கத்தையும்‌ மறந்தான்‌ ]–என்கிற படியே *நன் மணி வண்ணனாரான குளிரருவி வேங்கடத்தில்‌ கூடி யிருந்து குளிரப் பெற்று, ‘ மந்திபாய்‌ வட வேங்கட மாலை வானவர்கள்‌ சந்தி செய்ய நின்றான்‌ அரங்கத்தரவினணையான்‌ என்னும்படியே ஏகமான ஆகாரத்தாலே அங்கே அநேக காலம்‌ திவ்யோத்ஸவாதி வைபவங்களுடனே வாழ்ந்து கொண்டெழந் தருளி யிருந்தார்‌.

(லோக குரும் குருபிஸ் சஹா பூர்வை கூர குலோத்தம தாசம் உதாரம்
ஸ்ரீ நக பதி அபிராம வரே ஸௌ தீப்ரசயம் வரயோகி ந மீடே–ரஹஸ்யரார்த்த பரம்பரை பற்றிய தனியன் -மா முனிகள்-
பூர்வர்கள் அனைவரையும் லோக குருவையும் சொல்லி கூர குலோத்தமை தாசர் அருள் பெற்ற இவர்களையும் சொல்லி அருளுகிறார் –
நகபதி திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை –
அபிராம வர சவ்–அழகிய மணவாள பெருமாள் பிள்ளை -மாப்பிள்ளை-தீப்ரசயம் வரயோகி-
திகழக் கிடந்தான் திரு நாவீறுடையான் தாதர் -மா முனிகளின் திருத் தகப்பனார் –)

இனி ஆம்வார்‌ வ்ருத்தாந்தம்‌
கோழிக் கோட்டினின்றும்‌ பெருமாள்‌ புறப்பட்டெழுந்‌தருளுகிற போது கூடப் புறப்பட்டருளாமல்‌, ஸ்தாநத்தார்‌ ஸ்தலத்தார்‌ பரஸ்பர வைஷம்யத்தாலே தடங்கல்‌ பண்ண அந்த ஸமயத்திலே மேற்கும்‌ கள்ளர் பற்றாய்‌, கிழக்கும்‌ கள்ளர்‌ பற்றாய்‌ வடக்கும்‌ துருஷ்க மயமாயிருந்த படியினாலே அத்திசைகளில்‌ இருக்கப்‌ போகாமல்‌ ஆழ்வாரை வலசையாகத்‌ தென் மேற்கு மூலையிலே பஹுதூரம்‌ எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு செல்ல, அங்கே கள்ளர் பயம் மிக, வேறு கத்யந்தர மில்லாமையாலே அத்யுந்நததமான ஒரு சரிவு கண்டு (முத்தரப்பு மலை -இன்றும் உள்ளது -)ஆழ்வாரை ஒரு திருப் பெட்டகத்திலே யெழுந்தருளப் பண்ணி, சங்கிலி கட்டி ‘அந்த அரங்கிலே பாங்காக எழுந்தருளப்‌ பண்ணி விட்டு திருவாபரணங்களையும்‌ திருப் பொஷகத்தையும்‌ நிக்ஷேபித்து எல்லோரும்‌ மலையினின்றும்‌ இறங்கின வளவிலே கள்ளர்‌ பள்ளர்‌ கையிலகப்பட்டவர்கள்‌ உடைகளை சூறை கொடுத்து விட, அதற்கும் தப்பினவர்கள்‌ தங்கள்‌ தங்களுடைய இடம்‌ போய்ச் சேர்ந்தார்கள்‌-

அவர்களிலே தோழப்பர்‌ என்பாரொருவர்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே அத்யந்த ப்ரவணராய்‌ அபிமானியா யிருக்கையாலே,தாம் மதுரையிலே சென்று திருமலை யாழ்வாருக் கறிவிக்கக்‌ காத்‌திருந்து இச் செய்தியை யெல்லாம் தெரியுச்‌ செய்ய , திருமலை யாழ்‌வாரும்‌ எல்லாவற்றையுங் கேட்டு அபிமானித்து (திருவிதாங்கூர் )மலையாள ராஜாவுக்கு தம்முடைய ஸ்ரீ முகமும்‌ கொடுத்து, அத்தரங்கராய்‌ ராஜ வல்லபராய் ஸ்ரீகார்‌யத்திலே அபிமானிகளா யிருக்கும் ஸ்வ படர்களையும் கூட்டி, த்ரவ்யமும்‌ ஸாதித்து அனுப்பி யருள-அவர்களும் அப்படியே திருவாங்கோட்டூரிலே. செல்ல, கலஹம்‌ தெளிந்தபடியினாலே ஹ்ருஷ்டராய்‌ ராஜாவைக்‌ கண்டு செய்‌தியைச்‌ சொல்ல, திருமலை யாழ்வாருடைய ஸ்ரீமுகத்தை ஸிரஸா வஹித்தித்துக்‌ கொண்டு. ப்ரியப்பட்டு, தோழப்பருக்கு பஹுமானம்‌, பண்ணி, ஆழ்வாரைத்‌ திருக் கணாம்பியிலே யெழுந்தருளப்‌ பண்ணி வைக்கும்படி மநுஷ்ய ஸாமக்ரியையும்‌ அர்த்த ஸாமுக்ரியையும்‌ பூர்ணமாகக்‌ கொடுத்தனுப்ப, அவர்களும்‌ முத்‌திரிப்பு என்‌கிற ஊரிலே சென்று சங்கிலிகஞம்‌ ஊஞ்சற் பலகைகளும் சேர்த்துக்‌, கொண்டு மலையிலேயேறி,-சரிவிலே யிழிவாரார்‌?’? “என்று, சித்திக்க, ப்ராண ஸந்தேஹிகளாகையாலே எல்லாரும்‌ பின்‌ வாங்கி யிருக்க தோழப்பர் “நாமே, இழிகிறோம்‌” என்று துணிய: அவருக்கு அப்போது ஸ்தலத்தார்‌ சொன்ன கட்டளை : உமக்கு, ஆழ்வார்‌ ஸந்நிதியில்‌ வகுளாபரண பட்டரோடொத்த ஸ்வதந்த்‌ரமும்‌, திரு மஞ்சன காலத்திலே ஸஹஸ்ர தாரை கண்டருளிய திருவந்திக் காப்பு ஆனவுடனே ஆழ்வார்‌ திருமுடியிலே சாத்தி யிருக்கிற அலுங்கலும்‌ பூந் தொடையலையும்‌, ஆழ்வார்‌ தோழப்பர்‌” என்‌று உமக்கு அருளப்பாடிட்டு நித்யமாக ஸாதிக்கிறோம்‌” என்று சொல்லி, அனைவரும்‌ உகந்து ஓமறைந்து ஆழ்வார் தோழப்பரைத்‌ தூங்கு பலகையிலே ஏற்றிச்‌ சரிவிலே விட்டு ஸாவதாநமாகப்‌ பார்த்திருக்க அவரும்‌ அதிலிறங்கித்‌ திருப் பெட்டகத்தைத் தேட, ஒரு ஷேமகாரி பஷி திருப் பெட்டகத்தின்‌ மேலே யிருந்து நெடும் போது சப்திக்க, ‘இதுவெறுமனன்று’ என்று உகந்து திருப் பெட்‌டகம் கண்டு ஸேவித்து சிறிது பொழுது ஆழ்வாரை த்யாநிக்க-உடனே அப் பஷி அப்புறத்திற் செல்ல, திருக் காப்பு நீக்‌கி ஆழ்வாரைக் கண்டு கொண்டு ஸேவித்து க்ருதார்த்தராய்த்‌ திருப் பெட்டகத்தை திருக் காப்பு சேர்த்துக்‌ கட்டி தூங்கு பலகையிலே ஏறி யருளப் பண்ணி: சங்கலியைக்‌ குலுக்க, அவர்களும் மேலே சேர்த்துக் கொள்ள தோழப்பர்‌ எழுத்தாணியையும் ஓலையையும் கொண்டு போனவராகையாலே அங்கு நடந்த வ்ருத்தாந்தத்தை யெழுதி வைக்கக் கண்டு அனைவரும்‌ சந்தோஷப்பட்டு சேவித்துத் திருப் பெட்டகத்தைப் பலகையினின்றும் இறக்கி யருளப் பண்ணி தோழப்பர் வரும்படிக்குத் திரும்பி பலகையை விட வந்து சேர்ந்தவுடனே தோழப்பரும் ஏறி சங்கிலியைக்‌ குலுக்க

அவர்களும் சங்கிலியை ஏத்த நடுவே. தட்டுப்‌ பட்டுத்‌ தோழப்பர்‌ விழுந்து விட்டார்‌. பிற்பாடு அவர்‌ குமாரரான அப்பன்‌ பிள்ளைக்கு எல்லாருமாக சமாதானம்‌ சொல்லி ஆழ்வாருடைய சமீபத்திலேயே திருமேனி விட்டவராகையாலே அவருக்கு நீர்‌ சோகிக்க வேண்டா- ஆழ்வார்‌ உம்மை புத்ரராக அபிமானித்தருளினார் -உமக்கு சந்திதியிலே முன்‌ கட்டளை ப்ரகாரத்துக்கு, ஆழ்வான்‌ தோழப்பர் என்று, அருள் பாடும்‌. வரிசைகளும்‌ நடப்பிக்கிறோம் !” என்று சொல்லி, ஆழ்வாரை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு முத்திரப்பிலே சென்று ஆழ்வாருக்கு அஞ்சு நாள் ஸ்ம்ப்ரோஷணம்‌ கண்டருளப்‌ பண்ணி மலையினின்றும்‌ புறப்பட்ட வன்று தொடங்கி திருவடி நம்பியாரும்‌ ஸ்தலத்தாரும்‌ ஆழ்வாரப்பனும்‌ நன்றாக ஆராதித்துக்‌ கொண்டு போந்தார்கள்‌.-அனைத்துப்‌ பரிகரத்துடன்‌. திருக்கணாம்பியில்‌ எழுந்தருளப் பண்ணி ஸம் ப்ரோஷணம்‌ செய்து நித்தியப்படி திருவாராதனம் முதலான. விசேஷ உத்சவங்கள் எல்லாம்‌ நடத்‌திக் கொண்டு ஆழ்வார்‌ திருவடிகளில்‌.அதிப்ரவணராய்‌ அபிமானிகளாய் வாழ்ந்து. கொண்டிருந்தார்கள்‌-

கள்ளர் பற்றி லுள்ளார் இச் செய்தியைக் கேட்ட மாத்திரத்திலே தெய்வ யோகத்தாலே ஆநுகூல்யம்‌ பிறந்து ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ரவணராய் அநேகமாக ஸத்கரித்து முன்பு பறித்‌ததையும்‌ ஸமர்ப்பிக்க, அழகிய மணவாளன்‌ ப்ரஸாத லப்தமான பொற்றகடு சேர்த்த வட்ட மணையையும்‌, முத்துச்‌ சட்டையையும்‌!வெள்ளி தீவர்த்திக் கோலையும்‌, சித்தையையும்‌ மைர்ப்பித்து ஆழ்வாரைத்‌. திருக்கணாம்பி யிலெழுந்தருளப்‌ பண்ணும்‌ படிக்குத்‌ திருப் பல்லக்கு முதலானவைகளைச் சேர்த்து மார்க்க கோதஷம்‌ பண்ணி மங்கள வாத்தியங்களுடனே எழுந்தருளப்‌ பண்ணினார்கள்‌. ஒரு பெரிய திருவடி பக்ஷியும்‌ ஆழ்வாருக்கு மேலாக ஆகாசத்திலே சூழ்ந்து கொண்டு திருக்கணாம்பியிலே ஆழ்வார் எழுந்தருளி யிருக்கற கோயில்‌ மரத்திலே கூண்டு கட்டி வஸிக்க இந்த ஆச்சர்யத்தைக்‌ கண்டு எல்லாரும்‌ ஆழ்வாரை ஸேவித்து அவர்‌ ப்ரபாவத்தைக்‌ கொண்டாடிக்‌ கொண்டு தங்கள்‌ தங்கள்‌ சக்திக்குத் தக்கபடி, சிறப்பு ஆராதனமும்‌ நித்ய உத்சவமும் யதோ உசிதம்‌. விசேஷ உத்சவமும்‌ நடப்பித்துக் கொண்டு போந்‌தார்கள் -இந்த அதிசயங்களை யெல்லாம்‌ திருவநந்தபுரம்‌, திருவட்டாறு திருவண்பரிசாரம்‌, திருவல்லவாழ்‌ முதலான திவ்ய தேசங்‌களிலுள்ள போற்றிமார்‌ நம்பூதரிமார்கள்‌ கேட்டு உடனே வந்து ஆழ்வாரை ஸேவித்து வித்தராய்‌ அவரை விட்டுப்‌ பிரிய மாட்டாமல்‌ உதய காலத்திலே எப்போதும்‌ போலே திருமஞ்சனங் கொண்டருளி தத்யோதநமும்‌ நெய்த் தோசைப் படியும்‌, பாகூட்டின கட்டிப்‌பொரியும்‌, பாற்கஞ்சிக் கடாரமும்‌ நித்யப்படியாக அமுது செய்‌தருளி விநியோகமாய்‌, பிற்பாடு ஒரைவகைகளும்‌ அமுது செய்‌தருளி, மத்யாஹ்ந காலத்திலே நாயகமலங்காரத்துடனே வரிசையாக சம்பாவவஸரமும்‌ அமுது செய்தருளி, திருப் பணியார வகைகளும்‌ அமுது செய்து பின்பு உச்சிக் காலமும்‌ அமுது செய்தருளி காலோசிதமான உபசாரங்களுடனே விச்ரமித்தருளத்‌ திருக் காப்‌புச்‌ சேர்த்து மீளவும்‌ போது போக, நாலு நாழிகைக்குத்‌ திருக்‌ காப்பு நீக்கி ஸாயங்காலம்‌ திருவாராதனங் கண்டருளி ‘அஸ்தமன ஸமயத்திலே உப்புச் சாற்றமுதும்‌, சம்பாவும்‌, தோசைப் படியும்‌ பொரியும்‌ அமுது செய்து விநியோகமாய்‌, பிற்பாடு அத்தாளம்‌ அமுது செய்த்ருளி, இராக் காலமுமாய்‌ ஸ்ரீபலிதுடி, திருவுற்றசாதம்‌, அரவணை, சுக்கு கஷாயம்‌, இவைகளெல்லாம்‌ அமுது செய்‌யும்படி போற்றிமார்‌ திட்டம்‌ பண்ணி நடப்பித்துப்‌ போந்தார்‌கள்‌. திருநகரியைப் போலே-பரிஜனங்களும்‌ பூர்ணமாய்‌ ஏழு மடாதிபதிகளும்‌ ஒன்று பட்டு ஆழ்வார்‌ திருவடிகளிலே அதி ப்ரவணராய்‌ அபிமானிகளாய்‌ தத்தத் காலோசிதமான உத்ஸவங்களை நன்றாக நடப்பித்துக்‌ கொண்டு வாழ்ந்தருளி யிருந்தார்க்கள்‌.

இனி கோயில்‌ வ்ருத்தாந்தம்‌
பெருமாள்‌ புறப்பட்டருளின பின்பு-அபிவ்ருஷ பரிம்‌லாநா: என்னும்படி அயோத்தி யென்னுமணி நகரமானது அழகழிந்தாற் போலே நம் பெருமாள்‌ புறப்பட்டருளின பின்பு அற்ற பற்றர்‌ சுற்றி வாழும்‌ அந்தணீரங்கம்‌ என்றும்‌, நல்லார்கள்‌ வாழும்‌ நளிரங்கம்‌ என்றும்‌, தென்னாடும்‌ வடநாடும்‌ தொழ நின்ற திருவரங்கம்‌ என்னும்படியான கோயிலானது அழகழிந்தது.-பின்னும்‌ அங்கே வந்து ஆக்ரமித்தவன்‌ செய்தபடி: -திட்‌ கொடி மதிளைப்‌ பிடுங்கி கண்ணனூரிலே தனக்கு ஆவரணமாகக்‌ கட்டுவித்து, பின்னையும்‌ அங்கே உபத்ரவங்களைப் பண்ண உபக்ரமிக்க , அவ்வளவிலே, சிங்கப் பிரான்‌ என்னும்‌ பேரை யுடையராய்‌ பெருமாள்‌ திருவிளையாட்டமான அழகிய மணவாளர்‌ காணிய ப்ராஹ்மணராய்‌ தமிழ்‌ விரகரான ஒருவர்‌ துருஷ்கன்‌ வாசலிலே காரியம்‌ ஆராய்ந்து நின்று அவன்‌ நினைத்தபடி ஒன்றும்‌ செய்யாமல்‌ அவனுக்கு அநுகூலமாகவே சொல்லிக்‌ கொண்டு, மதிள்கள்‌, மாளிகைகள்‌, கோபுரங்கள்‌ துன்னு மணி மாடங்கள்‌, சாலைகள்‌ தொடத்‌கமானவற்றையும்‌, செம்பொனாய வருவரை யனைய கோயில்‌ மணி யனாரையும்‌ காத்து ரக்ஷித்துக் கொண்டு போந்தார்‌. அது கண்டு அங்குண்டான ஆசார்யர்கள்‌ எல்லாரும்‌ அவரை அநுவர்த்தித்து நல் வார்த்தை சொல்லிக்‌ கொண்டு போந்தார்கள்‌.

திருவாய்மொழிப் பிள்ளை வையவம்‌.
பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளில் ஆச்ரயித்தவளான ஸாத்விகை அம்மையார்‌ அவர்‌ விச்லேஷம்‌ பொறுக்க மாட்டாமல்‌ பரமபதத்துக் கெழுந்தருள, அவள்‌ குமாரரான திருமலை யாழ்வாரை அவர்‌ சிறிய தாயாரான அம்மையார்‌ போஷித்துப்‌ போந்தார்‌.- திருமலையாழ்வாரும்‌ பால்யங்‌ கடந்து ப்ராப்த யெளவநராய்‌ ப்ரவபுத்வமுலடயராய்‌, சதிரிளமடவார்‌ தாழ்ச்சியை மதித்து, அணி மென் குழலாரின்பக் கலவியமுதுண்டு கொண்டு திரிய, இவர்‌ சதிருடைய தமிழ்‌ விரகராயிருக்கையாலே இவரைத்‌ திருத்துவதாகக்‌ கூர குலோத்தம தாஸர்‌ திருவுள்ளம் பற்றி இவர்‌ முன்பே திரு விருத்தத்தை அநுஸந்தித்துக்‌ கொண்டு எழுந்தருள, இவர்‌ (திருமலை யாழ்வார்‌) அர்த்தவானாய்‌ அதற்குப்‌ பொருள்‌ கேட்க,நாயனும்‌, “உனக்குச்‌ சொல்ல வொண்ணாது’ என்று குத்ஸித்து உமிய, (திருமலையாழ்வார்‌ அப்போது ராஜ ப்ரதிநிதியாய்‌ ராஜ்ய பாரம்‌ பண்ணிக் கொண்டிருந்தார்‌. ராஜா இறந்து ராஜ புத்ரர்கள்‌ பாலர்களாயிருந்தபடியால்‌ ராஜ பத்நி ராஜய பாரத்தை இவரிடம்‌ ஓப்புவித்திருந்ததாகத்‌ தெரிகிறது) திருப் பல்லக்கிலே இருந்த இவர்க்கு (திருமலை யாழ்‌வாருக்கு) பிள்ளை லோகாசாரியர்‌ விசேஷ கடாக்ஷம்‌ பண்ணி யிருக்கையாலே உமிழ்ந்தற்குக்‌ கோபியாமல்‌ ஸ்வ படரை விலக்கி அச் செய்தியை அம்மையாருக்குச்‌ சொல்ல, அவளும்‌ பிள்ளை லோகாசரியர்‌ திருவடிகளிலுண்டான ஸம்பந்தத்தை ஸ்மரிப்பிக்க,இவர்க்கு அநுதாபம்‌ பிறந்து ஆச்ரயணோந் முகராயிருக்க–அக் காலத்திலே சிங்கப்பிரானுக்குத்‌ திருமணத் தூண்‌ நம்பி!”என்று திருநாமமா யிருக்க, அவர்க்கு எல்லாரும்‌ ப்ரீத்யதிசயத்‌தாலே அனுவர்த்தித்து நல் வார்த்தை சொல்ல அவரும்‌, ‘பலரும்‌ அருளிச்‌ செய்கையாலே எனக்கொன்றும்‌ தெரிகிறதில்லை; வாக்மியா யிருப்பாரொருவரைத்‌ தெளிவா யருளிச்‌ செய்யும்படி கற்பிக்க வேணும்‌ என்ன; அவர்களும்‌, திருமலை யாழ்வாருடைய வாக் வ்யவஹார ஸாமர்‌தயத்தைக்‌ கண்டு “நீர்‌ சொல்லும்‌!” என்று நியமிக்க, அவரும்‌ அப்படியே சொல்ல, அவ் வார்த்தைகள் அஸம்ப்‌ரதாயமாயிருந்த படியையும்‌, அவருடைய ஆச்ரய ருசியையும் கண்டு, இவரை ஸத் ஸம்ப்ரதாய ப்ரவர்‌த்தகரர்க்கக்‌ கடவோமென்று -ஒது முடும்பை யுலகாசிரியரனருள்‌ ஏதும் மறவாத எம்பெருமானான கூரகுலோத்தமதாஸர்‌ இவரை அநுவர்த்தித்துத்‌ தம்முடைய நிர்ஹேதுக க்ருபையாலே செயல்‌ நன்றாகத்‌ திருத்துவதாக மதுரையிலே சென்று ஸமயம்‌ பார்க்க, ஒரு நாளளவிலே திருமலையாழ்வார்‌ யானை மேலேறிப்‌ புறப்பட, தாம்‌ மேட்டு நிலத்திலே நின்று தம்மைக்‌ காண்பித்துக்‌ கொள்ள, திருமலை யாழ்‌வார்‌ இவரைக்‌ கண்டவுடனே பிள்ளை லோகாசாரியராக ப்ரதிபத்தி பண்ணி, யானையினின்றும்‌ சடக்கென இறங்கி நாயன்‌ திரு வீதிகளில் தீர்க்க ப்ரணாமம்‌ பண்ண, நாயனும்‌ இவரை எடுத்‌ தணைத்து ஸ்வாசார்ய ப்ரபாவத்தை யிட்டு இவரைக்‌ கொண்டாட, திருமலை யாழ்வாரும்‌ இவரை (நாயனை) உள்ளே எழுந்தருளப்‌ பண்ணு வித்துக்‌ கொண்டு சென்று ஸத்கரித்து ஹிதம்‌ கேட்க, பிள்ளைலோகாசாரியர்‌ சரம காலத்திலே அருளிச்‌ செய்தபடிகளை யெல்லாம்‌ ஸவிஸ்தாரமாக அருளிச்‌ செய்யக்‌ கேட்டு உகந்து-தேவரீர்‌ அடியேனை க்ருபை பண்ணி இங்கே யெழுந்தருளி யிருந்து ப்ராத காலத்திலே திருமண்காப் பவஸரத்திலே எழுந்தருள வேணும்‌’* என்று வேண்டிக் கொண்டு, வைகை யாற்றின்‌ கரையிலே ஸந்த்யா மடத்தருகே ஒரு திருவீதியையையும்‌ அதில்‌ இவர்க்‌கொரு திருமாளிகையுஞ்‌ சமைத்து ஜாத்யாச்ர நிமித்த துஷ்டங்‌கள் ஏதோ அவைகளைப்‌ பரிஹரித்துத்‌ தளிகைக்கு நடக்கும்படி அமரிக்கை பண்ணினார்‌.

கூரகுலோத்தம தாஸ நாயனும்‌ நித்யமாகத்‌ திருமண்காப்பு வேளைக்கு எழுந்தருள, இவர்‌ திருமண்‌ சேர்க்கச்‌ செய்தே லோகா சார்யாய’ என்று தொடங்கி தனியன்களை யநுஸந்திக்கக் கண்டு மிகவும்‌ ப்ரியப்பட்டு அன்று தொடங்கி கிஞ்சித் கிஞ்சித் காலம்‌ அவரிருக்குமளவும்‌ அநுவர்த்திக் கொண்டிருந்து ரஹஸ்யார்‌த்தங்களை ப்ரஸாதிக்க, அவரும்‌ நன்றாக அநுவர்த்‌தித்துக் கொண்டு ப்ரதி பத்தி யுடனே கேட்டு வந்தார்‌. ஒருநாள்‌ ராஜ காரியாவஸரத்தினாலே சொன்ன அர்த்தத்தைக்‌ கேளாமல்‌ ‘பொறுத்தருள வேணும்‌’ என்ன; மற்றை நாள்‌ இவரெழுந்தருளாமலிருக்க, அற்றைத் தினம் பராமர்சமின்‌றிக்கே யொழிய,-பிற்றை நாள்‌ நாயனெழுந்தருள வில்லை யென்று பராமர்சித்து உடனே ஆளை விட, அவர்கள்‌ சென்று அறிவித்த விடத்து பேசாமலிகுந்து விட, அவர்கள்‌ சென்று திருமலையாழ்‌வாருக் கறிவிக்க, அவர்‌, மற்றை நாளும்‌ நாயனெழுந்தருளாத படியினாலே தம்முடைய ஆர்த்தி யெல்லாம்‌ தோன்றும்படி கால் நடையாக நாயன்‌ திருமாளிகைக்குச்‌ செல்ல, நாயன்‌ நெடும் போது விளம்பித்து ஸேவை ஸாதிக்க ஸேவித்து, திருவடிகளிலே விழுந்து போர க்லேஸிக்க, நாயனாரும்‌ ௨கந்தருளி ஷமித்தோம்‌” என்று சொல்ல, காலஷேப ஸமய மாகையாலே அது நிறைவேறுந் தனையுமிருந்து அவர்களுடன்‌ ஸ்ரீபாத தீர்த்த ஸ்வீகாரம்‌ பண்ணின பின்பு நாயனாரும்‌ திருமலை யாழ்வாரை அமுது செய்யும்படி நியமிக்க,திருமலை யாழ்வாரும்‌ தளிகையை ஸ்வீகரிக்க அபேஷிக்க, உகத்தருளி தளிகை ப்ரஸாதம்‌ ஸாதித்தருள, திருமலை யாழ்வாரும்‌ ப்ரஸாத ஸ்வீகாரம்‌ செய்த மாத்ரத்தில்‌ பரம விரக்தராய்‌ “”கூர குலோத்தம தாஸ நாயன்‌ திருவடிகளே சரணம்‌”என்று பல காலு மநுஸத்தித்துக்‌ கொண்டு சென்று, ராஜ கார்ய ஸமயத்திலேயும்‌, ஒருவரை பேர்‌ சொல்லி யழைக்கும்‌ போதும்‌ இப்படியே சொல்லத் தொடங்கினா ராகையாலே இவருக்கு உந்மாதம்‌ பிடித்ததாக வேணுமென்று ராஜபத்‌நிக் கறிவிக்க, அவளும்‌ திருமலை யாழ்வாரை யழைத்து வார்த்தை சொல்ல, இவரும்‌ உத்தரத்துக்கு ப்ரத்யுத்தரம்‌ சொல்லாமல்‌ கூர குலோத்தம தாஸ நாயன்‌ திருவடிகளே சரணம்‌; ஸகல கார்யமும்‌ பத்ரம்‌”” என்று இப்படியே சொல்ல. அவளும்‌ நாங்கள்‌ ஸ்த்ரீ பாலர்களா யிருக்கிறபடியால்‌ பிள்ளை ப்ரபுத்தனாகும்‌ தனையும்‌ எல்லாவற்றிற்கும்‌ தேவரீருண்டென்றிருந்தோம்‌; அப்படி யின்றிக்கே யொழிந்ததோ?’ என்று சோகிக்க, “நீர் சோகிக்க வேண்டா; பிள்ளை ஸமர்த்தனானான்‌, எனக்கு நாயன்‌ திருவடிகளை ஸேவித்துக் கொண்டிருக்க வேணும்‌; நீர்‌ தவிர்க்க வேண்டா; ராஜ கார்யத்தை அடிக்கடி விசாரித்துக் கொண்டு பிள்ளைக்கும்‌ புத்தி சொல்லிக் கொண்டு வருகிறேன்‌” என்று சொல்லி ஸமாதானம்‌ பண்ணி, ராஜ கார்யமும்‌ விசாரித்துக் கொண்டு நாயன்‌ திருவடிகளை யநுவர்த்தித்து ஸகலார்த்‌தங்களையும்‌ அருளிச் செய்யக் கேட்டு க்ருதார்த்தராய்‌ சிறிது நாள்‌ அங்கே தானே யிருந்து பிற்பாடு திருப் புல்லாணிக்கு ஸமீபத்திலே நாயனெழுந்தருளி யிருக்கிற சிக்கிலி என்‌கிற வூரிலே யெழுத்தருளி குருகுல வாஸம்‌ பண்ணிக் கொண்டிருந்தார்‌. நாயனாரும்‌ தமக்குப்‌ பிள்ளை லோகாசாரியர்‌ ப்ரஸாதித்த பரமார்த்தங்களை யெல்லாம்‌ இவருக்கு ப்ரஸாதித் தருளினராகையாலே கூர குலோத்தமை தாஸ முதாரம்‌ என்றருளிச் செய்தார்‌.

அநந்தரம்‌ நாயன்‌ தம்முடைய சரம காலத்திலே திருமலை யாழ்வாரை யழைத்தருளி ‘“விளாஞ்சோலைப்பிள்ளை யிடத்திலே இன்னம்‌ உமக்கு வேண்டிய அர்த்த விசேஷங்களை யெல்லாம்‌ கேளும்‌’‘ என்றும்‌, திருக்கண்ணங்குடிப்பிள்ளை யிடத்திலே திருவாய்‌மொழியைக்‌ கேளும்‌’” என்றருளிச்‌ செய்து, பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளை த்யாநித்துக் கொண்டு திருநாட்டுக்‌ கெழுந்தருளினார்‌ . அவர்‌ குமாரரைக்‌ கொண்டு நாயனுக்கு தீர்த்த திருவத்யயனமும்‌ நடத்தி யருளினார்கள்‌.
கூர குலோத்தம தாஸ நாயன்‌ திருநஷத்ரம்‌ ஐப்பசியில்‌ திருவாதிரை; அவர்‌ தனியன்‌
லோகாசார்ய க்ருபா பாத்ரம்‌ கெளண்டின்ய குல பூஷணம்‌ |
ஸமஸ்தாத்ம குணாவாஸம்‌ வந்தே கூரகுலோத்தமம்‌ ॥
ஸ்வயமாஹுய ஸைலேஸ குரவே அர்த் ப்ரதாநத: |
லப்தோ தாராபிதம்‌ கூர குலோத்தம மஹம்‌ பஜே ॥

பிள்ளை லோகாசாரியருடைய க்ருபைக்குக்‌ கொள்கலமாய்‌ கெளண்டின்ய குலத்துக்கணியாய்‌, எல்லா ஆத்ம குணங்களுக்குமிருப்பிடமான கூர குலோத்தம தாஸ நாயனாரை அடி பணிகிறேன்‌.
தானே வலிய அழைத்து திருமலை யாழ்வாருக்கு விசேஷார்த்‌தங்களை ப்ரஸாததித்ததனால்‌ பெறப்பட்ட -௨தரார்‌” என்கிற பெயரை யுடைய கூர குலோத்தம தாஸ நாயனாரை ஸேலிக்கிறேன்‌.

அநந்தரம்‌ திருமலையாழ்வாரும்‌ ‘திருக்கண்ணங்குடிப்பிள்ளை யருகே: எழுந்தருளி ஸேவித்து, ‘அடியேனுக்குத்‌ திருவாய்‌ மொழியின்‌ அர்த்தமருளிச் செய்யவேணும்‌‘ என்று வேண்ட,
அவரும்‌ அப்படியே தொடங்கி யருளிச்‌ செய்ய, அவர்‌ தாத்பர்ய ப்ரதாநராய்க் கொண்டு தாத்பர்யார்த்தங்களையே ப்ரஸாதிக்க, இவர்‌ சப்தத்துக்கிசைய அருளிச் செய்ய வேணும்‌” என்று நிர்ப்பந்திக்க,ஆகில்‌ திருப்புட்குழி ஜீயர்‌ பாடேறப்‌ போய்க் கேளும்‌” என்ன,
அப்படியே புறப்பட்டுப்‌ பெருமாள்‌ கோயிலிலே எழுந்தருளின அற்றை நாள்‌ அவர்‌ திருநாட்டுக்கெழுத்தருளின பன்னிரண்டாம்‌ திவஸமாய்‌ அவர்க்குத்‌ திருநாராயண பலி நடக்க அத்தைக்‌ கண்டு மிகவும்‌ துக்கித்திருக்க, பெருமாள் கோயிலாசார்யர்களும்‌ கோயில்‌ பரிகரமனைத்துக்‌ கொத்தும்‌ திருமலை யாழ்வாரை கோயிலுக்கெளுந்தருளப் பண்ணுவித்துக்‌ கொண்டு போய்‌ பெருந்‌
-தேவியாரையும்‌ பேரருளாளனையும்‌ ஸேலிக்கப் பண்ணி , தீர்த்தம்‌ ஸ்ரீசடகோபன்‌, சாத்துப்படி, திருத்துழாய்‌, திருமாலை முதலான வரிசைகள்‌ ப்ரஸாதித்து பஹாுமாளம்‌ பண்ணி தர்சந ப்ரவர்த்தகராக வாழ்த்தினார்கள்‌. பிற்றை நாள்‌ திருநாராயண புரத்திலிருந்து
நாலூர்ப்பிள்ளையும்‌ அவர் குமாரரான நாலூராச்சான்‌ பிள்ளையுமெழுந்தருளிப்‌ பேரருளாளனை மங்களாசாஸனம்‌ பண்ண வெழுந்‌தருள, அந்த வேளையில்‌ திருமலை யாழ்வார்‌ ஸத்நிதியிலே மங்களாசாஸனம்‌ பண்ணிக் கொண்டு எழுந்தருளியிருக்க, இவர்கள்‌ திருமலையாழ்வார்‌ எழுந்தருளின செய்தியும்‌ உள்ளே மங்களாசாஸனம்‌ பண்ணி யருளுகிறதும்‌ அறியாமல்‌ ஸந்நதியிலே பின்னே நின்று, ”உள்ளே ஸேவிக்கிறவரார்‌?” என்று கேட்க, கோயில்‌ திருமலை யாழ்வார்‌’”’ என்ன, ‘ கோயில்‌ திருமலை பெருமாள்‌ கோயிலன்றோ!’” என்றருளிச்‌ செய்து கொண்டு அவர்‌ ஸத்நிதி வைஷ்ணவர்களுக்குப்‌ பின்னே நின்று ஸ்ரீசடகோபனுக்கு திரு முடியை உயர வெடுத்ருள, ஸ்ரீ சட கோபன்‌ திருமுடியிலே தரிக்கிற வளவிலே தம்முடைய திருவிரலாலே ஊன்‌ற, அர்ச்சகரும்‌ சீக்கிர்மாக ஸந்நிதியிலே ஸ்ரீசடகோபனை யெழுந்தருளப்‌ பண்ணி வைத்து திருமலை யாழ்வார்‌ கைப்பிடித்து, பின்னே வருகிற நாலூர்‌பிள்ளையை ‘அருளாளர்‌ திருவடி யூன்றியவரே!”” (கோல வராஹரான நாலூர் பிள்ளைக்கு இந்தத் திருநாமம் )என்றழைத்துத்‌ திருமலை யாழ்வாரை அவர் கையில்‌ காட்டிக்‌ கொடுத்து, “இவருக்கு மூவாயிர வ்யாக்யானம்‌ ஸாதிக்கும்படி ஜ்யோதிஷ்குடியிலே. நியமித்தோம்‌; (பிள்ளை லோகாச்சார்யார் பேர் அருளாளன் தானே )இவர்‌ வந்தார்‌; திருப்புட்குழி ஜீயர் பாடே ஈடுகேளாத இழவு தீர அத்தையும்‌ இவருக்கு ஸாதியும்‌”’ என்று பரவசராய்‌ நியமிக்க, பிள்ளையும்‌, “அடியேன்‌ க்ருதார்‌த்தனாளேன்‌; திருக்‌ கண்ணங்குடிப்பிள்ளை போராத விவருக்குத்‌ தினவுகெடச்‌ சொல்ல வல்லேனோ?’” என்று சிந்தித்து நிற்க, மனமொத்த நாதனான பேரருளாளன்‌ ‘*ஆத்மாவை புத்ர நாமாஸி” என்று ஆச்சான்‌ பிள்ளை ஸாதித்தால்‌ நீர்‌ ஸாதித்ததாம்‌” என்று நியமித்தருள–நாயன்தே நாயன்தே ” என்று உகந்து புறப்பட்டருளி -வாரீர்‌ திருமலை யாழ்வாரே! நாம்‌ போர ஜரித்தோம்‌; நீர்‌ அதி நிபுணர்‌; உமக்குத்‌ தகும்படி சொல்ல வல்லவர்‌ இவர்‌? என்று *நல்ல மகனாரான ஆச்சான் பிள்ளை கையிலே காட்டிக்‌ கொடுத்து, தமக்குத்‌ திருநாராயணபுரத்துக்‌ கெழுந்தருளத்‌ திருவுள்ளமாய்‌ புறப்பட்டெழுந்தருளினார்‌.

(ஆங்கு அவர்பால் பெற்ற சிறியாழ்வானப் பிள்ளை
தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் -பாங்குடனே
நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு —49-)

திருமலையாழ்வாரும்‌,”க்ருதார்த்தனானேன்‌” என்று ஆச்சான்‌ பிள்ளை திருவடிகளிலே ந்யஸ்த பரராயிருக்க, இவரைக்‌ கைக்‌கொண்டருளித்‌ திருவாய்மொழி யீடு தொடங்கி நடத்தி யருளாநிற்க, இத்தைத்‌ திருநாராயணபுரத்தில்‌ ஆயி, பிள்ளை தொடக்கமானவர்கள்‌ கேட்டு, இவரை யெழுத்தருளும்படி எம்பெருமானாருடைய திருமுகமாக திவ்யாஜ்ஞையிட்டுவிட, அதைக்‌ கண்டு ஆச்சான் பிள்ளை திருமலை யாழ்வாரைக்‌ கூட்டிக்‌ கொண்டு திருநாராயணபுரத்தேற எழுந்தருள அவர்களும்‌ எதிர் கொண்டு திருவடிகளை ஸேவித்து எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு போர,

ஆகுஹ்யாமல யாதவாத்ரி சிகரம்‌ கல்யாண தீர்த்தம்‌ தத:
ஸ்நாத்வா லக்ஷ்மண யோகிந: பதயுகம்‌ நத்வாதுகத்வாதந : |
ஸ்ரீ நாராயயணமேத் யத்ய தத்ர தரணீ பத்மாலயா மத்யகம்‌
பஸ்யேயம்‌ யதிகிம்‌ தப: பலமத: ஸம்பத் குமாரம்‌ ஹரிம்‌ ॥

தூய்தான யாதவாத்ரியினுடைய உச்சியிலேறி திருக்கல்‌யாணி தீர்த்த புஷ்கரியிணியில்‌ நீராடி இளையாழ்வாருடைய (எம்பெருமானாருடைய) திருவடிகளைத்‌ தொழுது, மேலே சென்று திரு நாராயணனை ஆஸ்ரயித்து, அங்கு ஸ்ரீபூமிப் பிராட்டியார்‌, பெரியபிராட்டியார்‌ இவர்கள்‌ நடுவில்‌ எழுந்தருளி யிராநின்றுள்ள சம்பத்குமார்‌ (செல்வப்பிள்ளை) எனும்‌ எம்பெருமானைக்‌ காண்‌பேனாகில்‌ இதைக் காட்டிலும்‌ வேறான தப:பலனானது என்ன இருக்கிறது?] என்று சொல்லுகிற படியே க்ரமத்திலே பெரிய ப்ரீதியோடே சென்று திரு நாராயணன்‌ திருவடிகளை அரணாகப் பற்றி அங்கே இனிததமர்‌ந் தெழுந்ருளி யிருக்கிற எம்பெருமானாரை ஸேவித்து அவர்‌ புருஷகாரமாக யதுகிரி நாயகியாரையும்‌ செல்வப்‌ பிள்ளையையும்‌ திரு நாராயணனையும்‌ ஸேவித்து -அங்கே யெழுந்தருளி இருந்து எம்பெருமானார்‌ ஸந்நிதியிலே தொடங்கி *உறுபெருஞ்‌ செல்வம்‌ இத்யாதிப்‌படியே அவருக்குகப்பாக அங்கே ஆச்சான்‌ பிள்ளையுடனே ஈடு முப்பத்தாரறாயிரமுங்‌ கேட்டார்கள்‌; அவரும்‌ மேலோர்க்கீந்தார்‌ என்னும்படி ப்ரஸாதித்தருளினார்‌ -திருமலை யாழ்வாரும்‌ அவர்‌ திருவடிகளைப்‌ பழுக்க ஸேவித்து -அரிய வருளிச்‌ செயல் பொருளை ஆரியர்களெல்லாரும்‌ உகக்கும்படி கேட்டருளினார் -பின்பு தேவ ராஜரும்‌ இவருடைய ஜ்ஞாந பக்தி வைராக்‌யாதி குண பூர்த்தியைக்‌ கண்டுகந்து இவரை விசேஷாபிமானம்‌ பண்ணி யருளி தம்முடைய திருவாராதனமான *இன வாயர் தலைவனை இவர்க்கு ப்ரஸாதித்தருளினார்‌.

தேவாதி பாத் ஸமதிகம்ப ஹைஸ்ர கீதேர்‌ பாஷ்யம்‌ நிகூடமபிய ப்ரதயாம்‌ சமார | குந்தி புரோத்பவமமும்‌ ஸரணம் பஜேஹம்‌ ஸ்ரீ சைலநாதமுருபக்தி ப்ருதம்‌ ஸடாரெள

உறுபெருஞ்செல்வமும்‌ என்று தொடங்கி, -மாறன்‌ விளங்கிய சீர்‌ நெறி தரும்‌ செந் தமிழாரணமே -என்கிறபடியே உடையவருக்கு உகப்பாக நல்லருள்‌ நம்‌ பெருமாள்‌ நாராயணன்‌ நாமங்களாய்‌(திருவாய்‌ 5-9 10), கேட்‌டாரார்‌ வானவர்கள்‌ செவிக்கினிய செஞ்சொல்‌ (திருவாய்‌ 10-6-11)ஆன திருவாய்மொழி தொடங்கி ஈடு முப்பத்தாறாயிரமும்‌ அத்ருப்‌ தாம்ருத ரூபமான இதின்‌ சப்த ஸ்வாரஸ்யம்‌, அர்த்த ஸ்வாரஸ்யம்‌ த்வநி வ்யங்க்யம்‌, பாவார்த்தம்‌, ஸ்வாபதேசம்‌, அந்யாபதேசம்‌, எல்லாம்‌ ஸம்சய விபர்யமற நன்றாகத்‌ தெரியும்படி *மேலோர்க்‌ கீந்தார்‌ அவரேமிக்கு (௨ப.ர.மா 49) என்னும்‌ படி நாலுராச்சான்‌ பிள்ளை தம்‌ பரம க்ருபையாலே ப்ரஸாதித்தருள, பிள்ளை முதலானவர்கள்‌ கேட்டார்கள்‌, அத்தைப் பற்றி

ஸ்ரீஸைல நாத குரு மாத்ர குருத்தமாப்யாம்‌ ஸ்ரீஸூக்தி தேஸிக வரேண ச யஸ் த்ரிதைவம்‌ |
வ்யக்தஸ் ஸடாரி க்ருதிபாஷ்ய ஸு ஸம்ப்ரதாயோ விஸ்தாரமேதி ஸஹி வைஷ்ணவ புங்கவேஷு ॥-
என்றும்‌

கோலாதிபாத்‌ பிதுரவாப்ய ஸஹஸ்ர கீதேர்‌ பாஷ்யம்‌ ஹி பூர்வதக தேஸிக வர்யகுப்தம்‌ |
த்‌ரேதா ப்ரவர்த்ய புவிய: ப்ரத்யாஞ்சகார தம்‌ தேவ ராஜ குருவர்ய மஹம்‌ ப்ரபத்பே –
என்றும்‌ அநுஸந்தித்தார்கள்‌.
யாதொரு ஆழ்வாரருளிய திருவாய்‌ மொழியின்‌ பாஷ்யமான ஈட்டின்‌ நல்ல ஸம்ப்ரதாயமானது திருவாய்மொழிப் பிள்ளை திருநாராயணபுரத்தாய்‌ திருவாய்மொழி யாசார்யர்‌ என்னும்‌ இம் மூவராலும்‌ இப்படி மூன்று விதமாக வெளியாயிற்றோ, அது வன்றோ ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரேஷ்டர்களிடம்‌ (இப்போது) பல படியாகப்‌ பரவுதலைப்‌ பெற்றுள்ளது. யாவ ரொருவர்‌–பூர்வாசார்யர்களால்‌ மறைத்து வைக்கப்‌ பெற்ற திருவாய்மொழியின்‌ ஈட்டை தம்‌ தமப்பனாராகிய நாலுர் பிள்ளை யிடமிருந்து பெற்று (மூவரின்‌ மூலமாக) மூன்று விதமாகப் பிரவர்த்திப்பித்து பூமியில்‌ அது தன்னை ப்ரஸித்தமாக்கினாரோ,அந்த நாலுராச்சான்‌ பிள்ளையை அடியேன்‌ சரணமடைகிறேன்‌-திருவாய்மொழிக்கு ஈடு முப்பத்தாறாயிரம்‌ ஸாதித்த வுடன் நாலுராச்சான் பிள்ளை திருமலை யாழ்வாருடன்‌ ஸ்வ ஸ்தானத் தேற எழுந்தருளினார்‌.-

யாவரொரு திருமலையாழ்வாரானவர்‌ தேவாதிபர்‌ என்ற நாலூராச்சான் பிள்ளையிடமிருந்து ரஹஸ்யமான திருவாய்மொழி யாயிரத்தினுடைய பாஷ்யமான ஈடு முப்பத்தாறாயிரப்‌ படியைப்‌ பெற்று, பின்னர்‌ அத்தைப் ப்ரஸித்தமாக்கினாரோ, நம்மாழ்வார்‌ விஷயத்தில்‌ மிகவும்‌ பக்தியுடையவராய்‌, குந்‌தி நகரத்தில்‌ அவதரித்‌தவரான புகழ் பெற்ற அந்தத்‌ திருமலையாழ்வாரை சரணம்‌ பற்றுகிறேன்‌ –என்கிற படியே தேவப் பெருமாள்‌ கைக் கொண்டருளுந்‌ திருமலை யாழ்வாருக்கு ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ராவண்யமதிசயித்து அவர்‌ திருவடி தொழ வேணுமென்கிற அபிநிவேசத்‌தை யுடையராய்‌, ‘ஆஜகாம முஹார்த்தேந” என்கிறபடியே அவரெழுந்தருளி யிருக்கும்‌ திருக்கணாம்பி யென்கிற திருப்படை வீட்டைக்‌ குறித்து அங்கே சென்று அவர்‌ திருவடிகளை ஸேவித்துத்‌ தம்முடைய அபிநிவேசமெல்லாம்‌ தீர்ந்து;

(சடகோபர் தாசர் திருவாய்மொழிப்பிள்ளை இவை பட்டப்பெயர் -திருமலை ஆழ்வார் இயல் பெயர் –
1371-பரிதாபி ஸம்வத்சரம் வைகாஸி 17 நம்பெருமாள் மீண்டு அருளினார்
கோட்டூரில் அண்ணர்-திருகுமாரத்தியை ஸ்ரீ ரெங்கநாச்ச்யார் மணந்தவர் திகழக் கிடந்தான் பாடிய திரு நா வீறுடைய பிராணன் தாதர் அண்ணர் வீப்ர ஸயான குரு கோமடத்தாழ்வான் திருவம்சம் -இவர் திருக் குமாரர் நம் பெரிய ஜீயர் -சாதாரண வருஷத்தில் திருவவதாரம் -)

அநந்தரம்‌ ஆழ்வாரைத்‌ திருநகரியிலே திருக்குடி புகுவிப்பதாகத் திருவுள்ளமாய்‌, தாம் முந்தி திருநகரியேற யெழுந்தருளி, காடுவெட்டி நாடாக்கி, -நல்லார்‌ பலர்வாழ்‌ குருகூர்‌ என்னும்படி குடியேற்றி ஆழ்வாரை யெழுந்தருளப்‌ பண்ணுவித்துக்‌ கொண்டு குருகூர்ச் சடகோபன்‌ என்னும்படி யதா ஸ்தாதத்திலே திருப்ரதிஷ்டை பண்ணி யருளி
ஸடகோப முநிம்‌ வந்‌தே ஸடாநாம்‌ புத்தி தூஷணம்‌ |
அஜ்ஞாநாம்‌ ஜ்ஞாந ஜந கம்‌ திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம்‌ ॥

வஞ்சகர்களுடைய புத்தியை நாசம்‌ செய்பவராய்‌, ஜ்ஞானமில்லாத மூடர்களுக்கு ஜ்ஞானம்‌ பிறப்பிப்பவராய்‌, திருப்புளியினடியில்‌ எழுந்தருளி யிருக்கும்‌ ஸ்ரீசடகோப முநிவரை அடி பணிகிறேன்‌- என்கிறபடியே உறங்காப் புளி நிழல் தன்னிலே ஏறி யருளப்‌ பண்ணி ஸேவித்து நிற்க இவர்க்கு சடகோப தாஸர்‌ என்று தம்‌முடைய திரு நாமத்தை யாதார்த்த நாமமாம்படி ப்ராஸாதித்‌தருள, இருவரும்‌ “ப்ரஸாத லப்‌த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே –ஆழ்வாரின்‌ அநுக்ரஹத்தினால்‌ பெற்ற நிரதிசயமான பேறான
கைங்கர்யத்தினால்‌ விளங்கா நின்‌ற திருமலை யாழ்வார்‌- என்னும்படி,
பெரிய வண் குருகூர் நகர்‌ நம்பிக்காளுரியனாய்‌, புகழ் வண்‌ குருகையும்‌ பொற் கோபுரமும்‌ புரிசை சூழ் கழனி தண் பொருநை மன்னாழ்வார்‌ மறைத் தமிழாயிரமுநம் திகழும்படி செய்த ஸ்ரீசைலேசர்‌’–என்னும்படி ஆழ்வார்‌ திருவடிகளிலே ௮சேஷ சேஷ வ்ருத்திகளிலும்‌ அந்வயித்து அதுவே யாத்ரையாய்ப்‌ பேரா நிற்கிற காலத்திலே

(இன்றும் இனவாயர் தலைவன் திவ்ய விக்ரஹம் திருவாய் மொழிப்பிள்ளை திருமாளிகையில் சேவிக்கலாம் -விளாஞ்சோலைப் பிள்ளை யுடைய திருவாராதன திவ்ய மங்கள விக்ரஹம்)

திருமலை யாழ்வாரும்‌ விளாஞ்சோலைப் பிள்ளையும்‌
விளாஞ்சோலைப்‌ பிள்ளையை ஸேவித்து விசேஷார்த்தங்களைக்‌ கேட்க வேணும்‌” என்று திருவுள்ளமாய்த்‌ திருவநந்தபுரத்தே யெழுந்தருளி ஆழ்வாருடைய தமர்களில்‌ ப்ரதானரான வாசி தோற்ற –படமுடை யரவிற்‌ பள்ளி பயின்றவன்‌ பாதங்கண்டு பணிந்து, அநந்தரம்‌ “கண்ணன்‌ கழலினை காட்டுமுலகாரியன்‌ தாள்‌ நண்ணு நலந் திகழ்‌ நாரணனை”’ என்று சொல்லும்‌ படியான விளாஞ்சோலைப் பிள்ளையைத்‌ திருவடி தொழுவதாக அவரெழுந்‌தருளி யிருக்கிற -வாசமே கமழுஞ்‌ சோலையான திருச்சோலைக்‌ குள்ளே சென்று ஸேலிக்க,! ”குரு பதாம் புஜம்‌ த்யாயேத்‌ குரோர்‌
நாம ஸதா ஜபேத்‌”
-ஆசாரியனின்‌ தாமரை யடிகளை எப்போதும்‌ சிஷ்யன்‌ தியானிக்கக் கடவன்‌; ஆசாரியனின்‌ திருநாமத்தை விடாமல்‌ அநுஸந்திக்கக் கடவன்‌-
ஸ்ரீ லோகார்ய முகார விந்த மகில ஸ்ருத்யர்த்த கோஸம்‌ ஸதாம்‌ |
தத் கோஷ்டீஞ்ச ததேக லீந மநஸா ஸஞ்சிந்த யந்தம்‌ ஸதா ॥

ஸகல வேதார்த்தங்களாகிய செல்வம்‌ சேமிக்கப்பட்ட பொக்கிஷமான பிள்ளை லோகாசார்யருடைய தாமரை போன்ற திருமுக மண்டலத்தையும்‌ ஸத் புருஷர்களினுடைய இருப்பிடமான அவருடைய கோஷ்டியையும்‌ எப்போதும்‌ அவற்றிலேயே லயமடைந்த மனஸ்ஸோடு த்யானித்துக் கொண்டிருக்கிற விளாஞ்‌ சோலைப்‌ பிள்ளையை- என்றும்‌ சொல்லுகிறபடியே பிள்ளை லோகாசாரியருடைய திவ்ய மங்கள விக்ரஹத்தையும்‌ அவருடைய திருவோலக்கத்தையும்‌ த்யானித்துக்‌ கொண்டு தம்முடைய திரு மேனியிலே சிலந்தி நூலிழைக்கும்படி அஸ்தமிதாந்ய பாவராய்‌ நாலாறு நாள்‌ ஸமாதியாக வெழுந்தருளி யிருந்து அநுபவித்து,பின்பு இவரைக்‌ கண்டு இவர்க்கு ஸகலார்த்தங்களையும்‌ ஸாதிக்க இவரும்‌ கேட்டு க்ருதார்த்தராய்க்‌ வேதிகப்‌ பொன்னான இவர்‌ ஸம்பந்தத்தாலே தம்முடைய ஐந்மக் கொத்தையைக்‌ கழித்துக்‌ கொண்டு மீண்டு திருநகரி யேறே வெழுந்தருளினார்‌. விளாஞ்‌ சோலைப்‌ பிள்ளையும்‌ ஸ்ரீவசந பூஷணத்தின்‌ தாத்பர்யங்களை ஏழு -ஸப்த-காதையாக ஸங்க்ரஹித்து அருளிச்‌ செய்து ஸர்வர்க்கும் உபகரித்தருளி தாமும்‌ –செறிபொழிலந்தபுரத்து அண்ணலார்‌ கமல பாதமணுகுவார்‌ அமரராவார்‌-என்கிறபடி அயர்வறுமரர்‌களோடே கூடி அடிமை செய்ய வேணுமென்கிற ப்ராப்ய த்வரையாலே தடுத்தும்‌ வளைத்தும்‌ பெற வேண்டும்படி பரமபக்தி தலை யெடுத்து அவா வற்று வீடு பெற்றார்‌. (பாவோ நாந்யத்ர சச்சதி’ என்கிற திருவடியைப்‌ போல இவரும்‌ அஸ்தமிதாந்ய பாவராய்‌ நாலாறு நாள்‌ ஸமாதியாக எழுந்தருளி யிருந்து ஸ்வாசார்ய விக்ரஹா நுபவம்‌ பண்ணி யருளுகிறவர்‌ திருக் கண்களை விழித்து நீர்‌ யார்‌? இங்கு வந்த கார்யமென்‌?” என்று கேட்டருள இவரும்‌ அடைவே எல்லாம்‌ விண்ணப்பம்‌ செய்யக் கேட்டு ஸந்தோஷித்து இவருக்கு ஸ்ரீவசந பூஷண தாத்பர்யங்களை-ஸப்த-ஏழு காதையாக ஸங்க்ரஹித்து அருளிச்‌ செய்து ஸர்வர்க்கும் உபகரித்தருளினார் )

அப்போது நம்பிமார்‌ (அநந்த சயனனை) திருவாராதனம்‌ செய்யா நிற்க, விளாஞ்சோலைப்பிள்ளை திருவடி தொழச்‌ சென்று கர்ப்ப க்ருஹகத்திலே புகுந்து திருவடி யருகே நிற்கக் கண்டு நம்பிமாரும்‌ அது மலையாள தேசமாகையாலே புலையரான விளாஞ்‌ சோலைப் பிள்ளை யகத்து (அருகே) நாம்‌ போகிறதில்லை” என்று திருக் காப்பு சேர்த்துக்‌ கொண்டு புறப்பட, அவ்வளலிலே பிள்ளை ஸ்ரீபாதத்து முதலிகள்‌ ”விளாஞ்சோலைப் பிள்ளை வோகாசார்யர்‌ திருவடிகள்‌ சேர்த்தார்‌?” என்று நூற்றத்தாதி இயலுனே பரியட்‌டம்‌ திருமாலைக்குக்‌ கோயில்‌ வாசலிலே வரக்‌ கண்டு நம்பிமார்‌ ப்ரத்யஷமாகக்‌ கண்ட ஆஸ்சர்யத்தை அனைவரக்கும்‌ வெளிப்‌ படுத்தினார்களென்று ப்ரஸித்தமிறே, இச் செய்தியை யறிந்து திருமலையாழ்வார்‌ ஸ்ரீபாதத்து முதலிகள்‌.
கத்வா நந்தபுரம்‌ ஜகத் குரு பதத்யாநே ரதம்‌ குத்ர சித்‌தம்‌
நாராயண தாஸ மேத்ய விமலம்‌ ஈத்வா ததங்க்ரிம்‌ முதா |
தஸ்மாதார்ய ஜநோக்தி மெளக்தி கக்ருதம்‌ வேதாந்த வாக் பூஷணம்‌
ஸ்ரீவாக் பூஷணமப்ய வாப்பஸ ருதம்‌ ஸ்ரீஸைல நாதோ பவத்‌ ॥

அந்தத் திருமலையாழ்வார்‌ திருவநந்த புரத்தை யடைந்து ஓரிடத்தில்‌ (புறச் சோலையில்‌) பிள்ளை லோகாசாரியருடைய திருவடிகளை தியானம்‌ பண்ணுவதில்‌ விருப்பமுள்ள அந்த நாராயண தாஸரை(விளாஞ்சோலைப்‌ பிள்ளையை) அடைந்து நிர்மவமான அவர்‌ திருவடிகளை மகிழ்ச்சியுடனடி பணித்து அவரிடமிருந்து பூர்வாசார்யர்களுடைய ஸ்ரீஸூக்திகளாகிற முத்துக்‌களால் அமைக்கப் பெற்ற வேதாந்த வாக்யங்களுக்கு ஆபரணமான ஸ்ரீவசந பூஷணத்தைப்‌ பெற்று (மேலான) ஆசார்யரானார்‌ ] என்று அநுஸந்தித் தருளினார்கள்‌-

இத்தைத்‌ திருமலையாழ்வார்‌ கேட்டருளி சிஷ்ய புத்ரர்கள்‌ செய்யும்‌ க்ருத்யங்களை யெல்லாம்‌ பிள்ளை விஷயத்திலே அநுஷ்‌டான சேஷமாம்படி அநுஷ்டத்துக்‌ காட்டி யருளினார்-(பயிலுஞ்சுடரொளி, நெடுமாற்கடிமை திருவாய்மொழிகளில்‌ காட்டப்பட்ட ஸாரார்த்தமாய்‌ பெரிய் நம்பி மறாதே,
நம்பி விஷயத்தில்‌ அநுஷ்டித்ததை நினைப்பூட்டும்‌,
)இப்படி இவருடைய சரம சேஷி விஷய சரமாநுவர்த்தநத்தை யறிந்தவர்கள்‌
பற்றாத வெங்கள்‌ மணவாள யோகி பதம் பணிந்தோன்‌
நற்றேவராச னலந் திகழ்‌ நாரண தாதருடன்‌
கற்றாரெங் கூர குலோத்தம தாதன்‌ கழல்‌ பணிவோன்‌
மற்றாரு மொவ்வாத்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை வாழியவே–
என்று அநுஸந்தித்தார்கள்‌.
வாழி நலந் திகழ்‌ நாரண தாதன்‌ வடிவும்‌
வாழி யவனமுத வாய் மொழிகள்‌–வாழியவே
ஏறு திருவுடை யானெந்தை உலகாசிரியன்‌ சொல்‌
தேறு திருவுடையான்‌ சீர்‌
— என்று தாமும்‌ அநுஸந்தித்தருளினார்‌. பின்பு திருமலை யாழ்வார்‌ தம்முடைய திருமகனாரை புத்ராபிமானம்‌ பண்ணி, தேவப்‌ பெருமாள்‌ என்று நாலுராச்சான் பிள்ளை திருநாமம்‌ சாத்தி யருளினார்‌.

இனி பிள்ளை லோகாசாரியர்‌ சிஷ்யராய்‌ கொல்லி காவல தாஸரான கோட்டூர்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள் பிள்ளையும்‌(இவர்‌ மணவாள மா முனிகளின்‌ மாதா மஹர்‌,) லோகாசாரியர்‌ ப்ராஸாதித்தருளின அர்த்த விசேஷங்களை அநுஸந்தித்துக்கொண்டு சிக்கல்‌ கிடராம்‌ என்கிற க்ராமத்திலே சிலநாள் எழுந்தருளியிருந்தார்‌. பின்‌பு திகழக் கிடந்தான்‌ திருநாவீறுடைய
பிரான்‌ தாதரண்ணரையர்(மா முனிகளின்‌ தகப்பனார்‌; இவர்‌ 74 ஸிம்ஹாஸனாதி பதிகளில்‌ கோமடத்‌தாழ்வான்‌ என்பவரின்‌ திருவம்ஸ்யர்‌ )அவர்‌ குமாரத்தியான ஸ்ரீ ரங்க நாச்சியாரைத்‌ திருமணம்‌ புணர்ந்து அவர்‌ திருமாளிகையிலே யெழுந்தருளி யிருந்து தமக்கு ஜ்ஞாதவ்யார்த்தங்களை யெல்லாம்‌ அவர்‌ ஸந்நிதியிலே கேட்டருளி
பிள்ளை லோகாசாரியர்‌ ஸந்நிதியிலே கேளாத இழவெல்லாம்‌ தீர்ந்து அந்த க்ருதஜ்ஞதைக்கு
வாழி மணவாளன்‌ வாழி யவன்‌ வீர நகர்‌
வாழி யவன்‌ குரவை மண்ணின்‌ மேல்‌–வாழி
உலகாசிரியனுரைத்த பொருள்களெல்லாம்‌
பல காலும் உரைக்குமவன்‌ பண்பு

என்றநுஸந்தித்து அவரைப்‌ பிள்ளை லோகாசாரியராகவே ப்ரதிபத்தி பண்ணிக்‌ கொண்டு அவருக்கு அநந் யார்ஹராய்‌ அநுவர்த்‌தித்துப் போந்தார்‌. இப்படி அவருக்கு அசேஷ ரஹஸ்யங்களையும்‌ ஸாதித்து சில நாள்‌ கழிந்தவாறே அழகிய மணவாளப் பெருமாள்‌ பிள்ளையும்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌.

அழுகிய மணவாளா மா முனிகள் திருவவதாரம்‌
இப்படி ப்ரப்த்தி மார்க்கமானது ஸங்குசிதமாக நடந்து செல்லுகிற காலத்திலே ஸ்ரீய:பதியாய்‌ பரம காருணிகனாய்‌-திருவரங்கத் தரவணையிலே – உறங்குவான்‌ போல்‌ யோகு செய்த-என்கிறபடியே ஜகத் ரஷண சிந்தா யுக்தனாய்க்‌ கண் வளர்ந்தருளுகிற பெரிய பெருமாள்‌ மீண்டும்‌ தர்சநம்‌ இப்படி ஒராண் வழியாய்‌ வருகிறபடியைக்‌ கண்‌டு ‘எம்பெருமானாரைப்‌ (போலே லோகமெல்லாம்‌ உஜ்ஜீவிக்கும்படி ஒரு விஷயத்தை உண்டாக்குவோம்‌”’என்று யோசித்து இனி இதற்கு ஆவாரார்‌ என்று தேடி மீண்டும்‌ திருவநந்தாழ்வானையே. கடாக்ஷித்து ஜகத்தைத் திருத்தும்படி நியோகித்தருள அவரும்‌ அப்படியே

1–ததஸ் ததிங்கிதம்‌ தஸ்ய ஜாநந்நேவ ஜகக்நிதே: | தஸ்மிந் தாம்நி ஸடாராதே:புரே புநரவாதரத்‌ ॥ என்றும்‌
2–ஸம்ஸந்தி ஸமயம்‌ தஸ்ய துலாம் ப்ராப்தே த்விஷாம் பதெள |
மூலம்‌ ஹி ஸர்வ ஸித்தீநாம்‌ மூலருஷம்‌ ப்ரசஷதே ॥ என்றும்‌
3–யந் மூலயாஸ்வ யுஜமாஸ் யவதார மூலம்‌ காந்தோ பயந்த்ரு யமிந। கருணைக ஸிந்தோ:
நஸீத் அஸத்ஸு கணிதஸ்ய மமாபி ஸத்தா மூலம்‌ ததீத வஷகதுப்யுதயைக மூலம்‌ ॥என்றும்‌

1-அப்போது திருவநந்தாழ்வான்‌ பெரிய பெருமாளுடய திருவுள்ளத்தை யறிந்தவராய்‌, அதன்படியே சடகோபுனுடைய இருப்பிடமான அந்தத்‌ திருநகரியிலே மீண்டும்‌ அவதரித்தருளினார்‌-
2-ஸுரியன்‌ துலா ராசியை அடைந்திருக்கும் போது எல்லாகாரிய ஸித்திக்கும்‌ காரணமான மூல நக்ஷத்ரத்தை அந்தத்‌ திருவநந் தாழ்வானின்‌ அவதார காலமாக பூர்வாசாரியர்கள்‌ அருளிச்‌ செய்‌கிறார்கள்‌.
3–எந்த ஐப்பசி மாதத்தில்‌ மூல நஷாத்ரமானது கருணைக் கடலான மணவாள மா முனிகளின்‌ அவதாரத்துக்கு அடியாயிற்றோ அதே மூலமானது அஸத்துக்களில்‌ ஒருவனாக மதிக்கப்பட்ட
(தாழ்ந்தவனான) அடியேனுக்கும்‌ ஸத்தைக்குக்‌ காரணமாகவும்‌, உலகெல்லாம்‌ வாழ்வதற்கு முக்கிய காரணமாகவும்‌ அமைந்தது] என்றும்‌ சொல்லுகிற படியே திருவநந்தாழ்வானும்‌ தம்முடைய திருவவதாரத்துக்கு இடம்‌ பார்த்து ஆழ்வார்‌ திருநகரியிலே அண்ணர் தேவிகள்‌ கர்ப்பத்தை யடைந்து நவமாஸம்‌ சென்றவாறே

செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடுநாள்!
சீருல காரியர் செய்தருள் நற்கலை தேசு பொலிந்திடுநாள்!
மந்த மதிப்புவி மானிடர் தங்களை வானி லுயர்த்திடுநாள்!
மாசறு ஞானியர் சேரெதிராசர் தம் வாழ்வு முளைத்திடுநாள்!
கந்த மலர்ப்பொழில் சூழ்குருகாதிபன் கலைகள் விளங்கிடுநாள்!
காரமர் மேனியரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடுநாள்!
அந்தமிழ்சீர் மணவாள முனிப்பர னவதாரம் செய்திடுநாள்!
அழகு திகழ்ந்திடு மைப்பசியில் திருமூலமதெனுநாளே

பாதோபாவம்‌ கதாயாம்‌;கலியுக ஸரதி ஸ்ரத்தராயே ஸகாப்தே .
வர்ஷே ஸாதாரணாக்யே ஸமதிகததுலே வாஸரே தீர ஸங்க்‌யே |
வாரே ஜைவேசதுர்த்மாம்‌ ஸமஜநிசதிதெள ஸூக்லபஷே
ஸு*கர்மா ப்ராஜம்‌ மூலக்யதாரே யதிபதி ரபரோ ரம்ய ஜாமாத்ருந்‌ நாமா 1

கல்யப்தம்‌ 4471 என்ற எண்‌ அடைந்த வளவில்‌ சகாப்தம்‌ 1292ல்‌ ஸாதாரண வருஷத்தில்‌ சூரியன்‌ துலா ராசியை அடைந்துள்ள போது 26-ம்‌ தினத்தில்‌ வியாழக் கிழமையில்‌ விளங்கா நின்ற மூல நக்ஷத்ரத்தில்‌ சுக்ல பக்ஷ சதுர்த்தி திதியிலே ஸதாசார சீலராய்‌ ரம்ய ஜாமாத்ரு முநி என்னும்‌ !திருநாம முடையராய்‌ யதிபதி புநரவதாராய்‌ மணவாளமாமுனிகள்‌ அவதரித்தார்‌–என்கிறபடியே கலி யுகம்‌ பிறந்து நாலாயிரத்து நானூற்று எழுபத்தொரு வருஷத்துக்குப்‌ பின்பு’ ஸாதாராண வருஷம்‌ ஐப்பசி மாசத்தில்‌ சுக்ல பக்ஷத்தில்‌ சதுர்த்தியும்‌ வியாழக் கிழமையும் கூடின க்ர்ன திருமூலத்திலே (ஆங்கில கணக்கில் 1370)உபயவிபூதியும்‌ கொந்தளிக்கும்‌, குடியை யுடையரான திகழக்கிடந்தான்‌ திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்‌ண அரையருக்கு குமாரராகத்‌ திருவவதரித் தருளினார்‌. அநந்தரம்‌,

யஸ்மிந் ஸ்வ பாத பத்மேந பஸ்பர்ஸ ப்ருதிவீ மிமாம்‌ |
கலிஸ்ச தத் ஷணேநைவ துத்ருவே தூரதஸ்தராம்‌ ॥

எப்போது அவர்‌ தமது திருவடித்‌ தாமரைகளால்‌ இந்த பூமியைத்‌ தொட்டாரோ அப்போதே கலி புருஷனும்‌ வெகு தூரம்‌ ஓடி விட்டான் என்று இவர்‌ கால் காண கலி கால்‌ பறந்தோடிற்று:

இப்படி ஸமஸ்தாத்ம ஸமுஜ்ஜீவந ஜந்மாவாக அவதரித்‌தருளின தம்முடைய குமாரருக்கு அண்ணரும்‌ ஜாத கர்மம்‌ செய்‌தருளி பத்து நாளுங்கடந்த விரண்டாம் நாள்‌ திருவிலச்சினையும்‌ ப்ராஸாதித்து (முன்காலத்‌தில் குழந்தை பிறந்து புண்யாஹவாசநமானவுடன்‌ ‘புஷ்ப ஸமாஸ்ரயணம்‌” என்ற ஸம்ஸ்காரம்‌ பண்ணி வைத்தார்கள்‌. இதில் குழந்தைக்கு ஸுதர்ஸந பாஞ்சஜன்ய இலச்சினைகளை அக்நியால்லாமல்‌ திருமண்‌ ஸ்ரீ சூர்ணங்களால்‌ புஜங்களில் ஓத்துவது அநுஷ்டானம்‌. இத்த ஸம்ஸ்காரம்‌ இன்றும்‌ சில வைஷ்ணவர்களின்‌ ௮நுஷ்டாநத்திலுள்ளது. )
அததஸ்ய குரு: ஸ்ரீமாந் மத்வாதம்‌ திவ்ய தேஜஸம் |
அபிராம வராதீஸ இதி நாம ஸமாதிஸத்‌ ॥

ஸ்ரீமானாய்‌–அந்தக்‌ குமாரரின்‌ தமப்பனாரான அண்ணர்‌ அந்தக்‌ குமாரை, அப்ராக்ருகதா தேஜஸ்ஸை யுடையவராகக்‌ கருதி அவருக்கு அழகிய மணவாளப் பெருமாளென்று திருநாமம்‌ சாத்தினார்‌] என்கிறபடியே-பணமாடரவணைப்‌ பற்ப காலமும்‌ பள்ளி கொள் மணவாளரான அழகிய மணவாளப்‌ பெருமாளுடய திருநாமம் சாத்தி ஆயர் புத்திரனல்லனருந்‌ தெய்வம்‌ என்றும்‌
என்னையுமெங்கள்‌ குடிமுழுதாட்கொண்ட மன்னன்‌ என்றும் சொல்லுகிறபடியே விசேஷ ப்ரதிபத்தியுடனே மாதுல க்ருஹமான சிக்கல்‌ கிடாரத்திலே வர்த்திப்பித்துக்‌ கொண்டு போர, இவரும்‌
பரபக்தி:பரஜ்ஞாநம்‌ பரம பக்திரித்பபி |
வபுஷா வர்த்தமாநேந தத்‌ தஸ்ய வவ்ருதே த்ரயம்‌ ॥

அந்த அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாருடைய வளரும்‌ தேஹத்துடனே பர பக்தி பர ஜ்ஞானம்‌ பரம பக்தி என்னும்‌ படியான மூன்றும்‌ வளர்ச்சி யடைந்தன-என்றும்‌
உன்‌ வளர்த்தி யூடே வளர்கின்றதா லுன் தன்‌ மாயை தானே என்றும் சொல்லுகிற படியே நாடோறும்‌ வர்த்தித்துக்‌ கொண்டு போரா நிற்க தம்முடைய திவ்ய வபுஸ்ஸோடே பரிணதங்களாய்‌ வளருகிற
பர பக்த்யாதிகளை வடிவாக வுடையராய்‌ வளர்ந்து செல்லுகிற காலத்திலே மீளவும்‌ தமப்பரான அண்ணர்‌
ப்ராப்தான் ப்ராதமிகே வர்ணே கல்பஜ்ஞா:கல்பயந்தி யாந் |
காலே காலே ச ஸம்ஸ்காராந்‌ தஸ்ய சக்ரே க்ரமேண ஸ :

கல்பத் ஸூத்ரங்களை யறிந்தவர்கள்‌ முதல்‌ வருணத்தவரான அந்தணர்கட்கு உரித்தாக எந்த ஸம்ஸ்காரங்களை (சடங்குகளை) விதித்தனரோ அந்த ஸம்ஸ்காரங்களை அவர்‌ (அண்ணர்‌) தமது குமாரருக்கு முறைப்படிப்‌ பண்ணினார்‌- ‘என்கிறபடியே செளள உபநயநங்களையும சாஸ்த்ர ப்ரகாரத்தாலே தத் தத் காலத்திலே செய்வித்‌து வேத சாஸ்த்ரங்களையும்‌ அதிகரிப்பித்துக்‌ கொண்டு போரா நிற்க அநந்தரம்‌,
ஆதாம்ரபாத மாஜாநு புஜமம்புஜலோசநம்‌ |
ஆகாரமஸ்ய ஸ்ம்பஸ்பந்‌ முக்தோபி முமுதே ஜந
– என்றும்‌
ஸெளஸீல்யேந ஸுஹ்ருத்வேந காம்பீர்யேண கரீயஸா |
ரஞ்ஜநேந ப்ரஜாநாஞ்ச ராமோ அயமிதி மேநிரே ॥

அறிவில்லாத ஐநங்களும்‌ செந் தாமரை போல்‌ சிவத்த திருவடிகளையும்‌ முழந்தாள்‌ வரையிலும்‌ நீண்டுள்ள திருக் கைகளையும்‌, செந்தாமரையை யொத்த திருக் கண்களையு முடைத்தான இவருடைய திருமேனியை ஸேவித்து மகழ்வெய்தினர்‌-
தாழ்ந்தவர்களுடனும்‌ நன்கு கலந்து பழகுமியல்பாலும்‌ யாவரிடத்துத்‌ ப்ரீதி யுடையரா யிருப்பதாலும்‌ மிகவும்‌ கம்பீரமான ஸ்வபாவத்தாலும்‌, ஜநங்களை மகிழ்விக்கையாலும்‌, இவர்‌ ராமபிரான்‌ என்று எண்ணினார்கள்‌–என்கிறபடியே அகல ஐநங்களையும்‌ ஆநந்திப்‌பித்துக் கொண்டு
காலேந ஸகலா நாம்ச கலாநாமேக மாஸ்பதம்‌ |:
ஸூஸூபே ஸதநம்‌ பூர்ண: ஸுதாம் ஸூரிவ நிர்மல: ॥

பின்னர்‌ எல்லா வித்யைகளுக்கும்‌ சிறந்த கொள்கலமான அழகிய மணவாளப் பெருமாள்‌ களங்க மில்லாத பூர்ண சந்த்ரன்‌ போலே எப்போதும்‌ விளங்கினார்‌ -என்கிற படியே-(மேகோபராக திரோஹிதனாய்‌ க்ருஷ்ணபஷே க்ஷயிஷ்ணுவாய்‌ ஸ களங்கனான தோஷா கரனைப்‌ போலன்றிக்கே அகளங்கித ஸதா ஸம்பூர்ண கலாயுத ராகா சந்த்ரனைப் போலே ஷோடஸ வார்‌ஷிகரானவாறே ஷோடஸ ஸம்ஸ்கார ஸம்ஸ்க்ருதராய்‌ கலா பூர்த்தியால்‌ வந்த பரபூர்ண ஜ்ஞாநமுடையராய்‌ அத்தால்‌ அத்யந்தம்‌ ப்ரகாஸகராய்‌ போரா நிற்க ) பால சந்த்ரனாவன்‌ நாடோறும்‌ கலைகளாலே வர்த்தித்துக் கொண்டு பூர்ணனாய்‌ விளங்குமா போலே இவரும்‌ ஸகல கலா பூர்த்தியால்‌ வத்த பரி பூர்ண ஜ்ஞாதத்தாலே நிரதிஸய வைபவத்தை யுடையரா யெழுந்தருளி யிருந்தார்‌.

(1286-1406 திருவாய் மொழிப்பிள்ளை
1323-1371-நம்பெருமாள் விஜயம் -15 ஆண்டுகள் திருநாராயண புரம் -23 ஆண்டுகள் திருமலையில் –
வீரபாண்டியன் கலியுக ராமன் -சித்திரை வீதிக்கு முன் பெயர் –
இவன் தம்பி -சுந்தர பாண்டியன் -கைங்கர்யம் நிறைய பண்ணி யுள்ளான் -பராக்கிரம பாண்டியன் இவன் பிள்ளை -இவர் மந்திரி திருவாய் மொழிப் பிள்ளை –
1371-சாதாரண வர்ஷம் ஐப்பசி மூலம் மா முனிகள் திருவவதாரம்)

இனி கோயில்‌ வருத்தாந்த்தம்‌
அக் காலத்தில்‌ அங்கிருந்த மஹாத்மாக்கள்‌ நாடோறும்‌ பூர்வம்‌ போலே ஸ்ரீமந்‌ ஸ்ரீரங்க ச்ரிய மநுபத்ரவா மநுதிநம்‌ ஸம்வர்‌த்தய*” என்று ஸ்ரீரங்க ஐஸ்ர்வர்யம்‌ நித்யமாய்‌ நிர்வதிகமாய்‌ நிர் விக்நமாய்ச்‌ செல்ல வேணுமென்று –
திருப்பல்லாண்டும்‌,
ஏழை யேதலனும்‌,
ஆழி யெழச் சங்கும்‌ அநுஸந்தித்துப்‌ பெருமாளை ப்ரபத்தி பண்ணிப்‌ போருகையாலே
, அந்த மங்களாஸாஸநம்‌ பலித்து செஞ்சியில்‌ கோபணார்யனென்பானொரு வைஷ்ணவ ப்ரபு திருப்பதிக்குச்‌ சென்று திருவேங்கடத் தெம்பெருமானைத்‌ திருவடி தொழுது மீண்டு வருகிறவன்‌ அங்கே நம்பெருமாளை ஸேவித்து திருப்பதி யினின்றும்‌ நம்பெருமாளைத்‌ தன்னுடைய நகரமான செஞ்சி யேற எழுந்தருளுவித்துக் கொண்டு வந்து சிங்கராயபுரத்‌திலே யெழுந்தருளப் பண்ணிக்‌ கொண்டிருந்து பக்தி புரஸ்ஸரமாக ஆராதித்துக் கொண்டிருக்க, திருமணத்தூண்‌ நம்பியாகிய சிங்கப்‌ பிரானும்‌ காட்டிக்‌ கொடுக்க, பகவத் விட்டுக்களான துருஷ்கரை யடக்க ஸமயம்‌ பார்த்து, நிரவதிக பல ஸஹிதராய்ச்‌ செஞ்சியார்‌ சென்று நிஸ்ஸேஷமாக நிரஸித்து ஸ்வ நகரத்தினின்றும்‌ திரு வரங்கன் திருப்பதி யேற நம்பெருமாளைப்‌ பிராட்டிமாருடனே எழுத்தருளப் பண்‌ணி வைத்துக் கொண்டு யதாஸ்தாநத்தில்‌ பெரிய பெருமாளுடனே சேர்த்து ப்ரதிஷ்டிப்பித்து அனைத்தழகும்‌ கண்டருளப் பண்ணினானிறே –

ஆநீயா நீல ச்ருங்கத் யுதிரசித ஐகத் ரஞ்ஜநா தஞ்ஜநாத்ரேஸ்‌ செஞ்ஜ்யா
யாராத்ய கஞ்சித்‌ ஸமயமத நிஹத் யோத் தநுஷ்காந்‌ துருஷ்காந்‌ |
லக்ஷ்மீ க்ஷமாப்யா முபாப்யாம்‌ ஸஹ நிஜ நிலயே அஸ்தாபயத்‌ ரங்கநாதம்‌
ஸம்யக் சர்யாம்‌ ஸபர்யா மக்ருத நிஜயஸோ தர்பணோ கோபர்ணார்ய: ॥

தனது, கண்ணாடி போல்‌ பளபளக்கின்ற புகழை யுடைய கோபணார்யனென்பவன்‌, முழுவதும்‌ கறுத்த கொடி முடியின்‌ காந்தியினால்‌ உலகுக்கு மகழ்ச்சியை யூட்டுகின்ற அஞ்ஜநாசல மென்னும்‌ திருவேங்கட்மலையிலிருந்து எழுந்தருளி வித்துக் கொண்டு வந்து, செஞ்சியில்‌ சில நாட்கள்‌ ஆராதித்து பின்பு வில்லேந்தித்‌ சண்டை யிட வந்த துருஷ்கர்களைக்‌ கொன்று, ஸ்ரீதேவி பூதேவிகளோடு கூட ரங்க நாதனை அவர்‌ தமது ஸ்தானமாகிய திருவரங்கத்தில்‌ ஸ்தாபித்தான்‌. திருவாராதனத்தையும்‌ மிகவும்‌ ஒழுங்குடையதாக நடத்தினான்‌ -என்று இவ்வார்த்தை அபியுக்தருமருளிச் செய்தாரிறே,

கொங்குங்‌ குடந்தையுங்‌ கோட்டியூரும்‌ பேரும்‌ எங்குந்திரித்து விளையாடும்‌ என்கிறபடியே மயல்மிகுபொழில்சூழ்‌ மாலிருஞ்‌சோலையிலும்‌ -விரையார்‌ பொழில்‌ வேங்கடத்திலும்‌ விஹரித்து!
ப்ரதிபக்ஷ நிரஸந பூர்வகமாக கோயிற்பிள்ளாய்‌! இங்கே போதராயே என்னும்‌ படியான தாம்‌ மீண்டு கோயில் ஏற வெழுந்தருளி , பஹு ப்ரியமான சகாப்தம்‌(சகாப்தம்‌ 1293 பரீதாபி வைகாசி என்று கோயிலோழுகு,) ஆயிரத்திருநூறு சென்ற வர்த்தமான பரீதாபி ஸம்வத்ஸரம்‌ வைகாசி மாஸம்‌ பதினேழாந்தேதியில் அரங்க நகரானது -ராமஸ் ஸீதா மநுப்ராப்ய ராஜ்யம்‌ புநரவாப்‌தவாந்‌’–இராமபிரான்‌ ஸீதையைப் பெற்றுத் திரும்பி மறுபடியும்‌ ராஜ்யத்தை அடைந்தான்‌-என்றும்‌, திருமகளோடினிதமர்ந்த செல்வன்‌ என்றும்‌, வீற்றிருந்த மணவாளர்‌ மன்னு கோயில்‌ என்றும்‌ சொல்லுகிறபடியே அழகிய மணவாளரான தாம்‌ நாய்ச்சிமாருடனே கூடி சேர பாண்டியன்‌ என்கிற திவ்ய ஸிம்ஹாஸநத்திலே சேர்த்தியுடனே யேறி யருளி இனிதுடன்‌ வீற்றிருத்து-செங்கோலுடைய திருவரங்கச்‌ செல்வனார்‌ என்னுமது தோன்ற திருவாரதனங் கண்டருளி வாழ்ந்தருளா நிற்க:

(முதலான சடைய வர்மன் -பாண்டியன் கொண்டை சமர்ப்பித்தவன் ஸ்ரீ ரெங்கவிமானத்துக்கு பொன் வேய்ந்தவன்-பூ பல ராயன் சிங்காசனனம் பெயர் கர்ப்பக்ருஹ -உள்ளே இருக்கும் -சேர பாண்டியன் சிங்காசனனம் -மூன்றாம் குலோத்துங்கன் -வெளியில் திருமஞ்சனம் இதில் தான் செய்து அருளுவார் -)

அச்செய்தியை தேசாந்தரஸ்தரான ஸ்ரீவைஷ்ணவர்களெல்‌லாரும்‌ கேட்டு,
பஹுநிநாம வர்ஷாணி கதஸ்ய ஸூ மஹத்வரநம்‌ 1
ஸ்ருணோம்யஹம ப்ரீதிககும்‌ மமநாதஸ்ய கீர்த்தநம்‌ ॥

பலவாண்டுகள்‌ மிகப் பெரிய கானகத்தை யடைத்த நம்பெருமாளுடையதாய்‌ மகிழ்ச்சியை உண்டாக்குகிற (திரும்பி யெழிந்தருளினாரென்னும்‌) நல் வார்த்தையைக்‌ கேட்கப் பெற்தேன்‌-என்கிறபடியே நெடுங்காலத்திற்காக இப்போது பெருமாள் எழுந்தருளப் பெற்றதே! என்று போர ப்ரீதராய்‌ அப்போதே யாவரும் வந்தடி வணங்கி, ‘*ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக; -மக்கள்‌ மிகவும்‌ களிப்படைந்தனர்‌- என்றபடியே அத்யந்தம்‌ ஹ்ருஷ்டாரயிருக்க பெருமாளும்‌ ‘விஜ்வர: ப்ரமுமோதஹ”-ஜ்வரம்‌-கவலை- நீங்கியவராய்‌ மிகவும்‌ மகழ்வெய்தினார்‌- என்கிறபடியே துளக்கற்றமுதமாய்‌ எங்கும்‌ பக்க நோக்கறியாதே -ஸர்வரையுங்‌ குளிரக் கடாஷித்துக்‌ கொண்டு அன்பொடு தென் திசை நோக்கி அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாரைக்‌ கடாக்ஷித்துக் கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌.

அழகிய மணாவாளப் பெருமாள்‌ திருமலை யாழ்வாரை ஆஸ்ரயித்தல்‌
அக் காலத்தில்‌ திகழக் கிடந்தான்‌ திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்ணர்‌ தம்முடைய திருக் குமாரராக வளர்ந்தருளுகிற பரம போகீந்த்ரரான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாருக்குத்‌ திருக் கல்யாணமுஞ்‌ செய்வித்து, பின்பு அருளிச் செயல்களையும்‌ ரஹஸ்யங்களையும்‌ தாமே யோதுவித்தருளினார்‌. அவரும்‌ அந்த உபகாரத்துக் கீடுபட்டு
ஸ்ரீ ஜிஹ்வாவ ததீஸ தாஸ மமல மஸேஷ ஸாஸ்த்ர விதம்‌ |
ஸுந்தர வர குரு கருணாகந்‌ தனிது ஜ்ஞாந மந்திரம் ச லேய ॥-ஸ்ரீஜிஹ்வார்க்யாதீஸம்‌ என்றும்‌ பாடமுண்டு-

கோட்டூரழகிய மணவாளப் பெருமாள்‌ பிள்ளையினருளால்‌ விருத்தி யடைந்த ஜ்ஞாநத்திக் கிருப்பிடமாய்‌, எல்லா சாஸ்த்ரங்களையும்‌ குறை யறக்‌ கற்றறிந்தவரான திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்‌ணரை த்யானிக்கிறேன்‌ -என்றும்‌
வாழி திருநாவீறுடைய பிரான்‌ தாதனருள்‌
வாழியவன்‌ மாமை வாக்கின்பம்‌–வாழியவன்‌
வீரன்‌ மணவாளன்‌ விரை மலர்ததாள்‌ சூடி.
பாரமதைத்‌ தீர்த்தளித்த பண்பு
‘-என்று அநுஸந்தித்தருளினாரிறே.

பின்பு சிலகாலம் சென்‌றவாறே அண்ணரும்‌ திருநாட்டுக்கெழுந்தருள, அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ அவரை ஸம்ஸ்கரித்துப்‌ பள்ளிப் படுத்தி திருவத்யயநமும்‌ பெருக்க நடத்தி யருளினார்‌
அநத்தரம்‌ ஆழ்வார்‌ திருதகரியிலே தர்‌சந ப்ரவர்த்தகரா யெழுத்தருளி யிருக்கிற திருமலையாழ்வாரும்‌, “இனி தர்சநப்‌ ப்ரவர்த்தகராவாரார்‌?” என்று விசாரித்துக் கொண்டு-தொண்டர்க்கமுதுண்ணச்‌ சொன்‌ மாலைகளான திருவாய்‌ மொழி, நிலத் தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும்‌, பக்தாம்ருதம் என்னும்படி பரம போக்யமாக வவதரித்ததாகையாலே சப்த ரஸம்‌, அர்த்த ரஸம்‌, பாவ ரஸம்‌, என்கிற விவற்றை அநவரதம்‌ அநுஸந்தித்துக் கொண்டு ததேக் நிஷ்டராய்‌ தத் வ்யதிரிக்த சாஸ்த்‌ரங்களை த்ருணவத் ப்ரதிபத்தி பண்ணி யிருக்கையாலே திருவாய்‌ மொழிப் பிள்ளை என்று திருவாய்மொழி ஸம்பந்தத்தையே தமக்கு நிரூபகமாக வுடையராரய்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே கைங்கர்யமே அநவரதமுஞ் செய்து கொண்டு போரா நிற்கிற திருவாய்மொழிப்‌ பிள்ளையினுடைய திவ்ய கடாக்ஷத்திற்கு விஷயமாமபடி அழகிய மணவாளப்பெருமாள்‌ நாயனாரும்‌ திருவநந்தாழ்வான்‌ சகந் தன்னைத்‌ திருத்த மருவிய குருகூர்‌ வளநகர்‌ வந்து-என்‌கிற படியே ஸ்வ மாதுல க்ருஹமான சிக்கில் கடாரத்திலிருந்து தமக்கு ஜந்ம பூமியான திருநகரி யேற வெழுந்தருளி பொருநற் சங்கணித்‌ துறையிலே சங்கங்கள்‌ சேறுமா போலே சங்க வண்ண நம்பி யுடைய அவதாரமாகையாலே சுத்த ஸ்வபபாவரான தாமும்‌ திருவாய்‌ மொழிப் பிள்ளை திருத்‌ தாள்‌ சேர்ந்து என்கிறபடியே மெய்ஞ்ஞானத்‌ துறையான பிள்ளை திருவடிகளிலே ஆச்ரயித்து ”அஸிஸரிய தயம்‌ பூய: ஸ்ரீ ஸைலாதீஸ தேஸிகம்‌” -இந்த அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ திருமலை யாழ்வாரென்னும்‌ ஆசார்யரை ஆஸ்ரயித்தார்‌-என்கிறபடியே தேசந் திகழுந்‌ திருவாய்மொழிப் பிள்ளை வாச மலர்த்தாளடைந்து வைத்து என்னும்படி விலஷாண ஸம்பந்த யுக்தராய்‌;
ததஸ்‌ ஸ்ருதிதரஸ் ஸோயம்‌ தஸ்மாத் தஸ்ய ப்ரஸாதத: |
அஸேஷாந ஸ்ருணோத் திவ்யாந்‌ ப்ரபந்தாந்‌ பந்தநச்சித: ॥

பின்னர்‌ ஸாங்க வேதாத்யயநம்‌ பண்ணிய இவ் வழகிய மணவாளப்‌ பெருமாள்‌ திருமலை யாழ்வாருடைய அருளால்‌ அவரிடமிகுத்து ஸம்ஸார பந்தத்தை யறுப்பதான எல்லா வருளிச் செயல்‌களின்‌ தாத்பர்யங்களையும்‌ கேட்டறிந்தார்‌-என்கிறபடியே த்ராவிட வேத ததங்கோபாங்கங்களான ஸமஸ்த திவ்ய ப்ரபந்த தாத்பர்யங்களையும்‌ அவருபதேச முகத்தாலே.லபித்து மிக்க வேதியர்‌ வேதத்‌த்தின் உட்ப் பொருளான சரம பர்‌வத்திலே நிஷ்ட்டராய்‌- ஸேஷித்வ ஸரண்யத்வ ப்ராப்யத்வங்கள்‌ மூன்றையும்‌ பிள்ளை விஷயத்திலே அநுஸந்தித்து, (அன்னையுமத்தனு மாசாரியனு மனைத்துறவும்‌, மன்னிய பேறுமுபாயமும்‌ தெய்வமும்‌ மற்றுமெல்லாம்‌, என்னை யளித்த திருவாய்மொழிப்‌ பிள்ளையென்று நெஞ்சே! உன்னி யிராது மற்றோன்‌றில்‌ புல ஓதுவதே’ என்றும்‌, விண்ணும்‌ திருமலையாழ்‌ வாழ்வார் வடிவு விரை புடை சூழ்‌, மண்ணும்‌ திருமலை யாழ்லார்‌ வடிவு மற்றொங்கும்‌, கண்ணும்‌ திருமலை யாழ்வார்‌ வடிவன்றித்‌ காண்டகிறிலேன்‌, என்றும்‌ திருலையாழ்வார்‌ வடிவெங்கும்‌ யாவர்க்குமே–என்றும்‌. )ததேக நிஷ்டரா யெழுந்தருளி யிருக்கிற இவரை:

நாயனாரை திருவாய்மொழிப் பிள்ளை உடையவர் திருவடிகளில் ஈடுபடுத்தல்‌
பிள்ளை தாமே உகந்து உடையவர்‌ திருவடிகளைக்‌ காட்டிக்‌ கொடுத்தருள உன் பதயுகமேர் கொண்ட வீட்டை எளிதினிலெய்துவன்‌ என்கிறபடியே பரம புருஷார்த்தத்தை ஸுலபமாக லபித்து அத்யந்த ஹ்ருஷ்டராய்‌ எழுந்தருளி இருக்க, அவ்வளவில்‌ பிள்ளையும்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ராவண்யாதிசயத்தாலே அவரடி பணிந்துய்ந்த எம்‌பெருமானார்‌ திருவடிகளிலும்‌ அதி ப்ராவண்யத்தை யுடையவாராய்ப்‌ போருகையாலே ராமாநுஜ பதாம் போஜ த்வந்த்வ கைங்கர்யத்திலே அந்வயிக்க வேணுமென்று திருவுள்ளமாய்‌ அப்படியே தத் கைங்கர்யத்திலே அந்வயித்து
அவகாஹித்து அதுவே தமக்கு தாரகாதிகளாகச்‌ செய்து கொண்டு போருகிறவர்‌, உடையருக்குத்‌ தனிக் கோயில்‌ தொடக்கமான அனைத்தழகுங் கண்டருளப்‌ பண்ணி, கோயிலை வளைய ராமாதுஜ சதுர்வேத மங்கலம்‌.என்கிற திரு வீதியையும்‌ உண்டாக்கி, அங்கே ராமாநுசனைத் தொழும்‌ பெரியோரையும்‌ ப்ரதிஷ்டிப்பித்து, தாமும்‌ ஸூக ப்ரதிஷ்டிதராய்‌ எழுந்தருளி யிருந்தார்‌.
நாயனார் யதீராஜ விம்சதீ விண்ணப்பம் செய்தல்‌
அநந்தரம்‌ நாயனாரும்‌ தமக்குப்‌ பிள்ளை ப்ராப்யமாகக்‌ காட்டி யருளின உடையவர்‌ திருவடிகளிலே யதீந்த்ர ப்ரவணர்‌ என்னும்படி அத்யந்தம்‌ ப்ராவண்யத்தை யுடையராய்‌ தம்முடைய ப்ரேமாநுகுணமாக யதிராஜ விம்சதியை அவ்வெம்பெருமனார்‌ விஷயமாக அருளிச்‌ செய்ய, அந்த உபகாரத்திற்கு
வல்லார்கள்‌ வாழ்த்துங் குருகேசர்‌ தம்மை மனத்து வைத்துச்‌
சொல்லார வாழ்த்தும்‌ மணவாள மா முனி தொண்டர்‌ குழாம்‌
எல்லாந் தழைக்க எதிராச விம்சதி யின்றளித்தோன்‌
புல்லாரவிந்தத்‌ திருத்தாளிரண்டையும்‌ போற்று நெஞ்சே
-என்று பின்புள்ளாரும் அநுஸந்தித்து ஈடுபடும்படியாயிற்று,

இவருடைய விண்ணப்பமான விம்சதியைப்‌ பிள்ளையுங் கேட்டு உகந்தருளித்‌ திருப்புளி யாழ்வாரடியிலே தாம்‌ கண்ட(கண்டெடுத்த) தம் முடையவரையும்‌ (இந்த ஸன்னிதியில்‌ ப்ரதிஷ்டிப்பிதுள்ள உடையவர்‌ திருமேனி(உத்ஸவர்‌) பற்றி பெரியோர்‌ வாய் வழி வரும்‌ வரலாறு: மதுரகவிகள்‌ ஆழ்வாரின்‌ ஸ்வப்ந முக நியமனப்படி ஆழ்வார்‌ திருமேனி எழுந்தருளப்‌ பண்ணுவதாக தாம்ரபரணி நீரைக்‌ காய்ச்ச-முதலில்‌ உடையவர்‌ திருமேனி ஆவிர்ப்பவித்தாகவும்‌, மதுரகவிகள்‌
மாநஸிகமாய்‌ “இது உமது திருமேனி யல்லவே” என்று ஆழ்வாரை வேண்ட, ஆழ்வாரும்‌ இது *பொலிக பொலிக திருவாய்‌ மொழிக்கு விஷயமான பவிஷ்யதாசார்ய விக்ரஹம்‌; கலியுங்‌ கெடும்‌ கண்டு கொண்மின்‌ என்னும்படி இவர்‌ அவதரிக்கப்‌ போகிறார்‌. இவரை ஆராதியம்‌. மீண்டும்‌ தாம்ரபரணி நீரைக்‌ காய்ச்சும்‌; நாம்‌ அர்ச்சையாக ஆவிர்ப்பவிக்கிறோம்‌” என்று நியமிக்க, மதுரகவிகளும்‌ அப்படியே செய்ய, இன்றும்‌ உபதேச முத்ரையுடன்‌ ஸேவை தரும்‌ ஆழ்வார்‌ திருமேனி ஆவிர்ப்பாவித்தாகவும்‌
சொல்வர்‌. ஆழ்வார்‌ திருமேனிக்கும்‌ முன்னரே ஆவிர்ப்பவித்த உடையவர்‌ திருமேனியே இன்றும்‌ ஆழ்வார்‌ திருநகரி உடையவர்‌ ஸன்னிதியில்‌ ஸேவிப்பது என்று பெரியோர்‌ பணிக்கும்படி. )
இவர்க்கு ‘ப்ரஸாதித்தருளி இவரும்‌ ‘ஸ்ரீமந்யதீத்த்ர! தவ திவ்ய பாதாப்ஜ ஸேவாம்‌ ஸ்ரீஸைல நாத கருணா பரிணாமதத்தாம்‌” (யதிராஜ விம்சதி -19) என்று அநுஸந்தித்து ப்ரிதராய்‌, ‘ யதீந்தர்மேவ நீரந்த்ரம்‌ நிஷேவேதைவதம்பரம்‌--எம்பெருமானாரையே பரதெய்வமாக அத்யவஸித்து நித்யமாய்‌ கைங்கர்யம்‌ பண்ணிக்‌ கொண்டிருந்தார்‌–என்கிறபடியே அவருக்கு உகப்பாக ததாராதன பரராய்‌ ததேக நிஷ்டரா யெழுந்தருளி யிருக்க, இப்படி ஆழ்வாருடையவும்‌ எம்பெருமானாருடையவும்‌ கைங்கர்யமே புருஷார்த்தமாக வெழுந்தருளி யிருக்கிற பிள்ளையும்‌ அப்போதைக்கப்‌போது அபிநவங்‌களாய்‌ வர்த்தித்துக் கொண்டு போகிற இவருடைய ஜ்ஞான பக்த்யாதிகளைக்‌ கண்டு (ஜ்ஞான பக்தி வைராக்யங்கள்‌ இட்டு மாறினாப்‌ போலே வடிவிலே தொடை கொள்ளலாம்படியான இவருடைய பரமாஸ் திகத்வத்தைக்‌ கண்டு-)அபிமத விஷயத்தைக்‌ கண்டாற்‌ போலே ஆதரித்துப்‌ போரா நிற்க;

பின்பொருநாள்‌ தமது திரு நந்த்த வனத்தில்‌ விளைகிற பச்சைக் கறியமுதை இவர்க்குப்‌ போக விட்டருள, இவரும்‌ “இப்படிச்‌ செய்‌தருளுவதே?’” என்று விண்ணப்பஞ்‌ செய்ய, பிள்ளையும்‌ உம்மைப் போலே வொரு விஷயத்தைப்‌ பெறாமையாலே அர்ச்சாவதாராத்திலே மண்டினோம்‌*’ என்று அருளிச்‌ செய்து தாமும்‌ விரக்தராய் விருக்கச்‌ செய்தேயும்‌ இவருடைய ளெளகுமார்யத்துக் கநுகுண மாக அமுது செய்தருளுகை தொடக்கமான எல்லா உபுசாரங்களையு மாராய்ந்து கொண்டு போருகிறபடியையும்‌, அங்கீ கரித்த வன்று தொடங்கி பங்க்தி பாவநராம்படி அபிமானித்து ஆதரித்துக்‌ கொண்டு போருகிற படியையுங்‌ கண்டு ஸ்ரீ பாதத்து முதலிகளுக்கு இவரிடத்தலே அஸுயை நடந்து செல்ல, இத்தை ஸர்வஜ்ஞரான பிள்ளை அறிந்தருளி அவர்கள்‌ அபசாரப்படாதபடி இவருடைய சேஷாஹிபதி வேஷாந்தரத்தை எல்லோரும்‌ ப்ரத்யஷீ கரிக்கும் படி வாக் சாதுர்யங்களாலே காட்டி யருளி, அவர்களுக்கும்‌ இவரிடத்‌திலே விசேஷ ப்ரதி பத்தியை விளைவித்துப்‌ போரா நிற்க, இவரும்‌ பிள்ளை திருவுள்ளத்தை உகப்பித்துக்‌ கொண்டு அங்குத்தைக்கு விதேயரா யிருக்கிற காலத்திலே ஈடு முப்பத்தாறாயிரம்‌ பாட மிட்டருளி மற்று முண்டான வ்யாக்யானங்களையும்‌ பாட ப்ராயமாகப்‌ பண்ணி யிருக்கிற காலத்திலே நாயனாருக்கு திருக் குமாரர்‌ ‘திருவவதரிக்க, “’திருநாமமேது?” என்று பிள்ளையைக்‌ கேட்டருள, “ஒருக்கால்‌ சொன்னாற் போலே தூற்றெட்டு தரம்‌ சொல்லி யிருக்கிறதே!’” என்றருளிச்‌ செய்ய, எம்யைனிராமானுசன்‌ என்று : திரு நாமம்‌ சாத்‌தி யருளித்‌ தாமும்‌ *இராமானுசன்‌ திருநாமம்‌ நம்ப வல்லராய்‌ வாழ்ந்து கொண்டு போரா நிற்க; ஒரு நாள்‌ ஒரு திருவாதிரை நக்ஷத்ரத்திலே பிள்ளையும்‌ முதலிகளும்‌ அமுது செய்தருளா நிற்க,

இன்றோ வெதிராசரிவ்வுலகில்‌ தோன்றிய நாள்‌
இன்றோ கலி யிருள்‌ நீங்கு நாள்‌-
-என்று பிள்ளை ஈடுபட்டருளி மேல்‌ அருளிச்‌ செய்ய மாட்டரமல்‌ இத்தையே பலகாலுமருளிச்‌ செய்து கொண்டிருக்க
இன்றோ தான்‌ வேதியர்கள்‌ வாழ, விரை மகிழோன்‌ தான்‌ வாழ
வாதியர்கள்‌ வாழ்வடங்குநாள்‌–
என்று நாயனார்‌ தலைக்கட்டி யருள, இதைக் கேட்ட பிள்ளை மிகவும்‌ ப்ரீதராய்‌ அமுது செய்யா நிற்க மத்யே தளிகைப்‌ ப்ரஸாதம்‌ பரஸாதித்து பிகவும்‌ க்ருபை பண்ணி யருளினார்‌. இப்படி சிஷ்யாசார்ய க்ரமம்‌ நன்றாக நடந்து செல்லுகிற காலத்திலே ஸ்ரீபராங்குச தாஸரான்‌ பெரிய நம்பியை ஆஸ்ரயித்த ஏற்றம்‌ எம்பெருமானார்க்கு உண்டானாற் போல சடகோப தாஸரான பிள்ளையை யாஸ்ரயித்த வேற்றம்‌ இவர்க்குண்டாயிற்றென்று எல்லாரு மிவரை உடையவருடைய அவதார விசேஷமென்று ஆதரித்துக் கொண்டு போந்தார்‌கள்‌.

இப்படி அவதார விசேஷமான இவர்‌
வடமாமலை முதல்‌ மல்லனந்தபுரி யெல்லை மல்கித்‌
திடமாக வாழுந் திருவுடைய மன்னிரில்‌ தேசுடையோன்‌
திடமான ஞான விரக்தி பரமிவை சேர நின்ற
சடகோப தாதர்‌ குருகூர் வாழ்‌ பிள்ளையைச்‌ சேரு நெஞ்சே
-என்றும்‌
நம ஸ்ரீஸைல நாதாய குந்‌தீ நகரா ஜத்மநே !,ப்ரஸாத லப்த பரம
ப்ராப்ய கைங்கர்யய ஸாலிநே ॥
என்றும் -குந்தி புரத்தில்‌ திருவவதரித்தருளி ஆழ்வாரருளால் பெறப்பட்ட நிரதிசய ப்ராப்பமான கைங்கர்யத்தினால்‌ விளங்கும் திருவாய் மொழிப் பிள்ளயை வணங்குகிறேன்‌ —
செந்தமிழ்‌ வேதத் திருமலை யாழ்வார்‌ வாழி
குந்தி நகர்க்‌ கண்ணல்‌ கொடை வாழி—உந்திய சீர்‌
வாழியவனமுத வாய்‌ மொழி கேட்டப் பொருளில்‌
தாழுமற்றன்பர்‌ திருத்தாள்‌-
-என்றும் இத்தனியன்களை பிள்ளை விஷயத்தில்‌ தாமுமநுஸத்தித்‌தருளினார்‌. அநந்தரம்‌ உகப்புடனே இங்கிருக்கும்‌ காலத்திலே பிள்ளை
அப்யர்ச்ய நந்ததநயம்‌ கரபங்கஜாத்த வேணும்‌ ததீய சரண
ப்ரவணார்த்ரசேதா: |
கோதாபிதுர் கஹந ஸூக்தி நிபந்தநஸ்ய வ்யாக்யாம் வயதாத்‌
த்ரவிட வேத குரு: ப்ரஸந்நாம்‌-என்றும்‌ ॥

செந்தாமரைக் கைகளாலே தரிக்கப்பட்ட புல்லாங்குழலை யுடைய இன வாயர்‌ தலைவனை நன்றாக வாராதித்து, ‘ அக் கண்ணன்‌ கழலிணையில்‌ ப்ரேமத்துடன்‌ ஆழ்ந்த மனத்தை யுடைய திருவாய்‌
மொழிப் பிள்ளை பெரியாழ்வா ருடைய கம்‌பீரமான பாசுரங்களுக்குத்‌ தெளிவான வியாக்கியானத்தை அருளிச்‌ செய்தார்‌

அநந்தன்‌ திருமலை யாழ்வாரென வந்த வதரித்து
தனம் தன்கைப்படிற்றானம்‌ செய்வனென்று தரணி தனில்‌.
அநந்தம்‌ புரிய சடகோபனருட்‌ காட்செய்வது
இனந் தனிலொக்கு மென்று எல்லோரும்‌ பாவித்திருப்பதுவே
-என்றும்‌ பிள்ளையுடைய வைபவத்தை மற்றுமுண்டானவர்களும்‌ அநுஸந்தித்தார்கள்‌.

அழகிய மாணவாள எம் பெருமாளுக்குப்‌ பிள்ளை சரம நியமனம்‌.
இப்படி ஜ்ஞான பக்தி வைராக்யங்களை வடிவாக வுடையராய்‌, அத்தாலே வந்த மஹா ப்ரபாவத்தை யுடையரான பிள்ளை கைங்கர்யஸ்ரீயோடே நெடுங்காலம்‌ வாழ்ந்தருளி, பின்பு நித்ய விபூதியிலே
நித்ய கைங்கர்யாதராய்‌ வாழ்க்கையில்‌ நினைவாய்‌,
உத்தமனே! உலகாரியனே! மற்றொப்பாரை யில்லா
வித்தகனே ! நல்ல வேதியனே ! தண் முடும்பை மன்னா!
சுத்த நன்ஞானியர்‌ நற்றுணையே! சுத்த ஸத்துவனே!
எத்தனை காலமிருந் துழல்வேன்‌ இவ்வுடம்பு கொண்டே-
-என்று
அதற்கு ப்ரதி பந்தகம்‌ திருமேனி யோட்டை ஸம்பந்தமென்று அறுதி யிட்டு தத் விமோசனத்தையும்‌ தம்‌ தேசிகரிடத்திலே யபேக்ஷித்துக் கொண்டே யிருக்க, ௮வ்‌ வளவிலே திருமேனியிலே நோவு சாத்தி மிகவும் தளர்ந்து கண் வளர்ந்தருளுகிறவர்‌ பெரிய கிலேசத்துடனே முசித்து எழுந்தருளியிருக்க, “இது என்‌?” என்று நாயனார்‌ தொடக்கமான முதலிகள்‌ கேட்டருள, காலம்‌ கலிகால மாகையாலே ஆழ்வார்கள்‌ திவ்ய ஸூக்தகளான அருளிச் செயலிலே ருசி விஸ்வாஸங்களை யுடையராய்‌ இத்தை வளர்த்துப் போருவார்‌ ஆர்‌? என்று மிகவும்‌ க்லேசமா யிரா நின்றது” என்ன, பின்பு நாயனாரும்‌ திருவடியிலே ஸேவித்து அடியேன்‌ அப்படியே செய்‌கிறேன்‌’? என்ன, ”கேவலம்‌ வார்த்தை போராது” என்ன
நாயனாரும்‌ திருவடிகளைத் தொட்டு சபத பூர்வகமாக அப்படியே செய்கிறேன்‌” என்றருளிச் செய்ய, பின்பு திருவுள்ளம்‌ தேறி,நாயனாரை யழைத்தருளி, ஸம்ஸ்க்ருத சாஸ்த்ரங்களிலே பல காலும்‌ கண் வையாமல்‌ ஸ்ரீபாஷ்யத்தை ஒருக்கால்‌ கேட்டு தமக்கும்‌ எம்பெருமானாருக்கும்‌ ப்ரியமாகத்‌ திருவாய்மொழி முதலான அருளிச் செயலிலே அநவரதம்‌ பரிசீலனை பண்ணிக் கொண்டு பூர்வர்களைப் போலே பெருமாளுக்கு மங்களா சாசன பரராய்க்‌ கொண்டு கோயிலிலே நித்ய வாஸமாக எழுந்தருளியிரும்‌”‘ என்று நியமித்தருளி மற்று முண்டானவர்களை யழைத்தருளி நாயனார்‌ திருக்கையிலே காட்டிக் கொடுத்தருளி இவரை அவதார விசேஷமென்று ஆதரித்துப் போருங்கோள்‌” என்று அருளிச் செய்து ந்யஸ்த பரராய்‌ பின்பு மாக வைகுந்தம்‌ காண்பதற்கு என் மனமேக மெண்ணும்‌ என்கிறபடியே அதிலே அபிவ்ருத்த மநோ ரதராய்‌ பிள்ளை லோகாசாசியர்‌ திருவடிகளைத் த்யானித்துக்‌ கொண்டு வைசாக பஹுள அஷ்டமியில்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌.(ஊூனொழிந்தால்‌ நானிருந்ந உயர்திவத்து வாரும்‌ என்ற ஸ்வாசாரியரான பின்னைலோகாசாரியர்‌-)

திருவாய் மொழிப் பிள்ளையின் தன்னேற்றம்
அநந்தரம்‌ நாயனார்‌ தொடக்கமான முதலிகளெல்லாரும்‌ ஆசார்ய வியோகா அஸஹிஷ்ணுக்களாய்‌ அத்யந்தம்‌ ஆர்த்தராய்‌ க்லேசித்துத்தேறி ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரத்தாலே பள்ளிப்படுத்து தீர்த்தம்‌ கொண்டாடி பதிமூன்றாந்‌ திவஸத்திலே திருவத்யயனமும்‌ நன்றாக நடத்தி யருளினார்கள்‌ -நாயனாரும்‌ ப்ரதிவருஷம்‌ வைகாசி மாஸத்தில்‌ அபர பக்ஷத்தில்‌ அஷ்டமி தோறும்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களை நன்றாக அமுது செய்யப்‌ பண்ணி யருளி “’முப்பழமுமுண்டாகப்‌ பெறுவதே தீர்த்த திவஸம்‌!!’ என்று பரிபாலித்துக்‌ கொண்டு (ஆசார்ய நியமனத்தில் படியே திருவாய்மொழி முதலானஅருளிச் செயல்களை வயாக்யானத்துடன்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டு-) எழுந்தருளி யிருந்தார்
பெண்களும்‌ பேதைகளும்‌ உஜ்ஜீவிக்கும்படி பரமார்த்த விசேஷங்களை ஸுக்ரஹமாகப்‌ பண்ணப் பெற்ற தன்னேற்றமும்‌ பிரிவில்‌ தரியாமையை முன்னிட்டு பின்‌ தொடரந்தடிமை செய்யப்‌ பெற்ற தன்னேற்றமும்‌, பிள்ளை லோகாசாரியருக்கே உள்ள தொன்றிறே, ஸரரீரமர்த்தம்‌ ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவதயேத்‌” (உடல்‌ தனம்‌, உயிர்‌ யாவற்றையும்‌ ஸதாசாரியர்‌ பொருட்டுப்‌ பயன்படுத்த வேண்டும்‌) என்கிறபடியே பரமாசாரியரான பராங்குசரையும்‌ தத் ப்ரிய சிஷ்யரான உடையவரையும்‌ திரு நகரியிலே ப்ரதிஷ்டிப்பித்து அனைத்தழகுங் கண்டருளப்‌ பண்ணின தன்னேற்றமும்‌, ஆழ்வார்களின்‌ அருளிச்‌ செயல்களை ருசி விச்வாஸ பூர்வமாக ப்ரவர்த்திப்பித்துக்‌ கொண்டு போந்த
தன்னேற்றமும்‌, திருவாய்மொழிப்பிள்ளை யொருவர்க்கே யுள்ள தொன்றிறே.
இவர்‌ திருநக்ஷத்ரம்‌ வைகாசி விசாகம்‌, இவர்‌தனியன்‌:
நமஸ்‌ ஸ்ரீ ஸைல நாதாய குந்தீ நகர ஜந்மநே |
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே ॥

அநந்தரம்‌ நாயனாரும்‌ ஆசாரியன்‌ நியமித் தருளின படியே திருவாய்மொழி முதலான அருளிச்‌ செயல்கள் வ்யாக்யானமாக அநு ஸந்தித்துக்‌ கொண்டு.
ததஸ்து மூல பூதேஷு தேஷு திவ்யேஷு யோகிஷு
வவ்ருதே வர்த்தயந் பக்திம்‌ வகுளா பரணாதிஷு
ததா தத்தத் ப்ரபந்தார்த்த ஸம் ப்ரதாய ப்ரவர்த்தகாந்‌
அயமாத்ரியத ஸ்ரீமாந்‌ ஆசார்யாநாதி மாநபி

பின்னர்‌ ஸ்ரீமானான இவ் வழகிய மணவாளப் பெருமாள்‌ ப்ரபந்ந ஜந கூடஸ்தர்களாய்‌ பெரு மதிப்புற்ற நம்மாழ்வார்‌ முதலான ஆழ்வார்களிடத்தில்‌ பக்தியை வளர்த்துக்‌ கொண்டு(தாமும்‌) வளர்ந்தருளினார்‌; அப்படியே அந்த ஆழ்வார்களருளிச்‌ செய்த ஸம்ப்ரதாயார்த்தங்களை அநுஷ்டானத்தால்‌ ப்ரவர்த்தியா நின்ற பூர்வாசாரியர்களையும்‌ (ஆசார்யகளிடமும்‌) ஆதரித்துப்‌ போந்தார்‌ (மிக்க ஆதரம்‌ காட்டினார்‌] என்கிறபடியே விலஷண ப்ரமாண ப்ரமேய ப்ரமாதாக்களிடத்தில்‌ விசேஷ ப்ரதிபத்தியை யுடையராய்த்‌ திருநகரியிலே தர்சநத்தை வளர்த்துக்‌ கொண்டு போருகிற நல்லடிக்‌ காலத்திலே

அழகிய வரதர்‌ நாயனாரை ஆஸ்ரயித்தது.
ஸ்ரீஸெளம்ய ஜாமாத்ரு முநீஸ் வரஸ்ய ப்ரஸாத ஸம்பத்‌ ப்ரதமாஸ்பதாய” ஸ்ரீஸெளம்ய ஜாமாத்ரு முநீஸ்வரருடைய (அழகிய மணவாளர்‌ பின்னர்‌ உத்தமாஸ்ரமம்‌ பெற்று ஸெளம்ய ஜாமாத்ரு முனி- மணவாள மாமுனியானார்‌. ) அருட்‌ செல்வத்துக்கு முதல்‌ கொள்கலமான] என்கிறபடியே
அழகிய வரதர்‌ (இவரே பின்னர்‌. ‘ஒண்ணான ஸ்ரீவானமாமலை ஜீயரானவர்‌,-பொன்னடிக் கால்‌ ஜீயர்‌-என்றழைக்கப்பட்டவர்‌ ) சேனை முதலியார்‌ தொடக்கமானவர்கள்‌ இவர்‌ வைபவத்தைக்‌ கேட்டுத்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்தார்கள்‌ —அவர்களிலே அழகிய வரதர்‌, அப்போதே ஸந்யசித்து ‘ராமாநுஜ ஜீயர்‌’” என்னும்‌ திருநாமத்தை யுடையலராய்‌, நாயனாருக்கு நிழலுமடிதாறு மானோம்‌ என்னும்படி ஸதா பாதரேகா ஸமராய் நாயனாரை நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டு போந்தாரராய்‌, நாயனாருக்கு நிழலுமடிதாறு மானோம்‌ என்னும்படி ஸதா பாதரேகா ஸமராய் நாயனாரை நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டு போந்தார்‌.

நாயனார் திரு வரங்கத்து எழுந்தருளுதல்
இப்படி அந்தரங்கரானவர்களோடே கூட எழுந்தருளி யிருக்‌கிறவர்‌ –ஸூபேந மநஸாத் யாதம்‌: என்கிறபடியே அப்போதொரு சிந்தை செய்து,-நமக்கெல்லாம்‌ நற்சீவனமான நம் பெருமாளை சேவித்துக் கொண்டு அத்தலைக்கு அதிசயாவஹராய்‌ மங்களாசாஸனம்‌ பண்ணிக்‌ கொண்டு யாவத் தேஹாவஸாதம்‌ அங்கே யிருக்கை யன்றோ தமக்கு ப்ராப்தம்‌” என்று அறுதியிட்டு, அப்போதே ஆழ்வார்‌ திருமுன்பே சென்று ஸேலித்து, நண்ணா வசுரர்‌ நலிவெய்த நல்லவமரர்‌ பொலிவெய்த, எண்ணாதனக
ளெண்ணும்‌ நன்முனிவர்‌ இன்பந் தலைச்சிறப்ப, பண்ணார்‌ பாடலின்‌ கவிகளைப்பாடி தேவரீர்‌ மங்களாசாஸனம்‌ செய்தருளுகையாலே பெருமாளுடைய ப்ரதிபந்தங்ளெல்லாம்‌ நிரஸ்தமாய்ப்‌ பண்டு போல அனைத்தழகும்‌ கண்டருளுகிறார்‌; அடியேன்‌ பெருமாளை ஸேவிக்க விடை கொள்ளுகிறேன்‌
” என்று விண்ணப்‌பஞ்‌ செய்ய, அப்படியே நம்மாழ்வாரும்‌ விடை கொடுத்தருளினார்‌.

அநந்தரம்‌,
தத: கதிபயைர் திவஸைஸ்‌ ஸகுருர்‌ திவ்ய தர்ஸந |
ஆஜகாம பரந்தாம ஸ்ரீரங்கம்‌ மங்களம்‌ புவ:

பின்பு திவ்யமான திருமேனித்‌ தேற்றத்தை யடைய அந்த நாயனார்‌ சில தினங்களில்‌ உயர்ந்த திவ்ய தேசமாய்‌ பூமிக்கு மங்களகரமான ஸ்ரீரங்கத்துக்கு வ்ந்து சேர்ந்தார்‌- என்கிறபடியே முதலிகளும்‌ தாமுமாக, எம்பெருமான்‌ திருவரங்கம்‌ எங்கே என்று நாடிக்‌ கொண்டு புறப்பட்டெழுந் தருளுகிறவர்‌ – வில்லி புத்தூருறைவான் தன்‌ பொன்னடி காண்பதோராசையினாலே அங்கே எழுந்தருளி வட பெருங் கோயிலுடையானையும்‌ பெரியாழ்வாரையும்‌ திருவடி தொழுது. அநந்தரம்‌ அன்ன வயல் புதுவை யாண்‌டாளையும்‌ ”நீளா துங்கஸ்‌ தந கிரிதடீ” என்று தொடங்கி, கோதா”தஸ்யை நமஇதமிதம்‌ பூய,” என்கிறபடியே ஸேவித்து,

தேவஸ்ய மஹிஷீம்‌ திவ்யாம்‌ ஆதெள கோதாமுபாஸநத்‌ |
யந் மெளலி மாலிகாமேவ ஸ்வீகரோதி ஸ்வயம்‌ ப்ரபு –

எந்த ஆண்டாளுடைய திருக் குழலில்‌ ‘ சாத்தின திருமாலையையே ஸ்வாமியான அழகிய மணவாளன்‌ ஆதரவுடன்‌ சாத்திக்‌ கொள்கிறானோ, அந்த அழகிய மணவாள தேவனுடைய திவ்ய மஹிஷியான கோதையை முதல்‌ முன்னம்‌ ஸேவித்தார்‌ – என்கிறபடியே
சூடிக் கொடுத்தவள்‌ தொல்லரளால்‌ வாழ்கின்ற வள்ளலாய்‌-அங்கு நின்றும்‌ புறப்பட்டு -மாலிருஞ்சோலை தொழக் கருதி, -நெறி படவதுவே நினைவது நலமே-என்கிறபடியே மார்க்க சிந்தை பண்ணி அவ் வழியாலே அங்கே புக்கு, *பதியதுவேத்தி, அநந்தரம்‌ அழகர் தம்‌ கோயிலிலே புக்கு , திருமாலிருஞ்சோலை நின்றான்‌ கனை கழல்களைக் கண்டு வணங்கத்‌ தொழுது, -முடிச் சோதியில்‌ படியே-முடியார்‌ திருமலையில்‌” என்று தொடங்கி, -முற்றுமநுபவித்தார்‌- என்னும்படி அநுபவித்து தீர்த்‌த ப்ரஸாதங்களும்‌ ப்ரஸாதிக்க ப்ரஸாதப்படடு
விஞ்ஞாபநம்‌ வந கிரீஸ்வர! ஸத்ய ரூபா மங்கீ குருஷ்வ கருணார்ணவ மாமகீநாம் |
ஸ்ரீ ரங்க தாமநி யதா புரமேஷ ஸோஹம்‌ ராமாநுஜார்ய வஸாக பரிவர்த்திஷீய ॥

கருணைக் கடலான திருமாலிருஞ் சோலை யழகரே! யதார்த்தமான அடியேனது விண்ணப்பத்தைத்‌ திரு வுள்ளம்‌ பற்றி யருளவேணும்‌; அது ஏதெனில்‌; அடியேன்‌ முன்பு போலத்‌ திருவரங்கம்‌ பெரிய கோயிலிலே எம்பெருமானாருடைய திருவடிகளிலே சேர்ந்து வாழ்வேனாம்படி அருள் புரிய வேண்டும்‌-என்று தாமும்‌ இத்தை யநுஸந்தித்து அப்படியே ப்ரார்த்தித்தருள, அரங்கனென்னம்மானுக்கே காதல்‌ செய்யும் தொண்டராய்‌ அதி த்வரை யுடனே கோயிலேற எழுந்தருள:

அநந்தரம்‌
எண்டிசைக்‌ கணங்களுமிறைஞ்சியாடு திர்த்த நீர்‌-என்றும்‌,
கங்கையில்‌ புநிதமாய காவிரி என்றும்‌ சொல்லுகிறபடியே (காபாலி ஸ்ப்ர்ஸ ரஹிதராய்‌, ‘காவேரீ விரஜா ஸேயம்‌” என்கிற இவ் விரஜை யாறு இது வென்னும்‌ திருக் காவிரியிலே நீராடி-) திருக் காவேரியிலே நீராடி யருளி கேசவாதி பன்னிரண்டு திரு நாமங்களையும்‌ சாத்தி யருளி திருவரங்கப் பெரு நகரைத்‌ தண்டன் ஸமர்ப்பித்து நிற்க, அவ்வளவிலே தம்மை எதிர் கொள்ள வந்த அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌ தங்களின்பமிகு பெருங்‌ குழுவு கண்டு தண்டன் ஸமர்ப்பித்து அவர்களுடனே கூட வுள்ளே புக்கு, வழியிலுள்ள வண்டினமுரலுஞ்சோலை தொடக்கமான திருச் சோலைகளையும்‌ அநுபவித்துக்‌ சொண்டு அவ்வருகே யெழுந்தருளி

மாடமாளிகை சூழ்‌ திரு வீதியும்‌ மன்னு சேர்‌ ‘திரு விக்ரமன்‌ வீதியும்‌
ஆடல்மாறனகளங்கன் வீதியும்‌ ஆலி நாடன மர்ந்துறை வீதியும்‌
கூடல்‌ வாழ் குலசேகரன் வீதியும்‌ குலவுந் ராச மகேந்திரன்‌ வீதியும்‌
தேடு தன்‌வன்மாவின்‌ வீதியும்‌ தென்னரங்கர்‌ திருவாவரணமே

என்று சொல்லப்‌ படுகிற திருவீதிகளையும்‌ திருமதிள்களையும்‌ திருக்‌ கோபுரங்களையும்‌ கண்டு களித்துக்‌ கொண்டு எழுந்தருளி, தமக்கு ஆசார்ய துல்யரான கோட்டூரிலண்ணர்‌ திருமாளிகை யேற வெழுந்‌தருளினார்‌ -அவர்‌ திரு மெய்யத்திலே திருவாய்மொழி வ்யாக்யாநம்‌ இருபத்தி நாலாயிரத்தையும்‌ ஸாதித்துக்‌ கொண்டெழுந்தருளி யிருந்து பின்பு பெருமாளெழுந் தருளுகையாலே இங்கே நித்யவாஸமாக எழுந்தருளி யிருக்கிறவரை நாயனாரும்‌ அத்யாதரத்துடனே ஸேவித்தருள –அவரும்‌ உகந்தருளி இவரை அவதார விசேஷமென்‌றிந்து ஆதரித்து , பெருமாளை ஸேவிக்கப் பண்ணுவதாக எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு புறப்பட்டு, அக் காலத்திலே
கோயிலதிபதியா யிருந்த திருமலை தந்த பெருமாள்‌ பட்டருடைய அநுமதிக்காக அவர்‌ திருமாளிகையிலே எழுந்தருள; அவரும்‌ அப்ப்யுத்தாத பிரணாமாதிகள்‌ தொடக்கமான உபசாரங்களைப்‌ பண்ணி ஆஸநத்திலே எழுந்தருளுவித்து, ‘தேவரீரை ஸேலிக்கப் பெற்றோமே!?’ என்று பெரிய ப்ரீதியோடே ஆதரித்து “திருவாய்‌ மொழியிலே ஒரு பாட்டுக்கு அர்த்த மருளிச்‌ செய்ய வேணும்‌” என்ன, நாயனாரும்‌ ஆழ்வாருடைய வைபவத்தை ஐதிஹ்யமாகப்‌ ப்ரதிபாதிக்கிற பாட்டை யெடுத்து (துவளில்‌ மா மணி மாடம்‌, என்ற திருவாய்மொழியாக இருக்கலாம்‌ -இத் திருவாய்மொழி ஆழ்வார் ப்ரக்ருதி சொல்கிறது என்று நம்‌ முதலிகளெல்லாரும்‌ போர விரும்பி இருப்பார்கள் -என்று ஈட்டவதாரிகை )உபந்யஸித்தருள, பட்டரும்‌ போர வித்தராய்‌, ”இவர்‌ முப்பத்தாறாயிரப் பெருக்கர்‌ * என்று மிகவும்‌ உபலாளித்து “பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணி யருள”என்று அருளிச்‌ செய்து, அங்குண்டானண ஸ்ரீவைஷ்ணவர்‌களையும் கூட்டி யனுப்பி யருள, அவர்‌களும்‌’ அப்படியே புறப்பட்டருளி : ப்ரதமம்‌, பொன்னரங்கமென்னில்‌ மயலே பெருகுமிராமானுசன்‌ மன்னு மா மலர்த் தாளைக் கிட்டி, -யோ நித்யமச்யுத” என்று தொடங்கி , ‘ராமாநுஜஸ்ய சரணெ சரணம்‌ பரபத்யே!’ என்று அநுஸந்தித்து ஸேவித் தருளி.

இவ்வுலகந்தன்னி லெதிராசர்‌ கொண்டருளும்‌
எவ்வுருவும்‌ யான் சென்றிறைஞ்சினக்கால்‌–அவ்வுருவம்‌
எல்லா மினிதேலுமெழிலரங்கத் திருப்புப்‌ போல்‌
நில்லாதென்னெஞ்சு நிறைந்து

என்றநுபவித்தருளி பின்பு பூமகள்‌ கோன்‌ தென்னரங்கள்‌ பூங்கழற்குப் பாதுகமாய்த்‌, தாம்‌ மகிழுஞ்‌ செல்வச் சடகோபரையும்‌ ஸேவித்தருளி, ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி அங்கயல்‌ பாய் வயல்‌ தென்னரங்கனணி யாகம்‌ மன்னும்‌ பங்கய மா மலர்ப்‌ பாவையான ஸ்ரீரங்கநாச்சியாரையும்‌, ‘ஸ்ரீரங்க ராஜ மஹிஷீம்‌ ஸ்ரியமாஸ்ரயாம:”‘என்று திருவடி தொழுது, பூவளரும்‌ திருமகளாரருள்‌ பெற்று உள்ள புக்குத்‌ திருமண்டபங்களையும்‌ திருமடைப் பள்ளியையும்‌ கருவுகூலங்களையுங் கண்டு களித்தருளி ஸ்ரீபலிபீடத்தருகே தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளில்‌ திருச்‌ சுற்றையும்‌ ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி, அநந்தரம்‌ வேத ஸ்ருங்கமாய்‌ அயன்‌ பணிந்த கோயிலான ப்ரணவாகார விமாநத்தையும்‌ ஸேனை
முதலியாரையும்‌ ஸேவித்தருளி, அழகிய மணவாளன்‌ திரு மண்டபத்தில்‌ எழுத்தருளி, -ஆழி வண்ண। நின்‌ அடியிணை யடை ந்தேன்‌ அணி பொழில்‌ திருவரங்கத்தம்மானே என்று தண்டன்‌ ஸமர்ப்‌பித்துப்‌ பெரிய திருவடியையும்‌ திருவடி தொழுது, த்வார பாலகர்‌கள் அநுமதியுடனே யுள்ளே புகுந்து திருமணத் தூணருகே சென்று மாயோனை வாயார வாழ்த்தி, அரங்கமா கோயில்‌ கொண்ட கரும்பினைக்‌ கண்டு கண்ணினை களித்து அமலனாதிபிரானில்‌ படியே பாதாதி கேசாந்தமாக வநுபவித்தருளி, பழுதே பலபகலும்‌ போயின என்று இழந்த நாளுக்கு அநுதபித்து, அரங்கத் தரவணைப்‌ பள்ளியானாய்க் கண்வளர்ந் தருளுகிற சேர்த்தியைக்‌ கண்டு படுத்த பைந்நாகப் பள்ளி கொண்டானுக்குப்‌ பல்லாண்டு கூறுதுமே-என்கிறபடியே திருப்பல்லாண்டை யநுஸந்தித்து மங்களசாஸனம்‌ செய்தருளி, அநந்தரம்‌ பாயு நீரரங்கந்தன்னுள்‌ பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார்‌ திரு நன் மார்வும்‌ என்று தொடங்கி ஆய சீர் முடியுந்‌ தேசுமடியரோர்க்ககலாமே என்று ஸேவித்து, அதற்கு மேல் பெரிய பெருமாளுடைய வ்யூஹ சவ்ஹார்தாதி குணங்களை யநுபவித்து அநந்தரம்‌ திவ்ய ஸிம்ஹாஸந ஸமான சேர பாண்டியனிலே மலர் மடந்தை மண் மடந்தைகளாகிற உபய நாய்ச்சிமாருடனே எழுந்தருளி யிருக்கிற நம்பெருமாளை

அப்ப ஜந்யஸ்த பதாப்ஜம்‌ அஞ்சித கடீ ஸம்வாதி கெளஸேயகம்‌
கிஞ்சித்தாண்டவ கந்தி ஸம்ஹநநகம்‌ நிர் வ்யாஜ மந்தஸ்மிதம்‌ |
சூடாசும்பி முகாம்புஜம்‌ நிஜ புஜா விஸ்ராந்தி!திவ்யாயுதம்‌ :
ஸ்ரீ ரங்கே ஸரதஸ்சதம்‌ ததஇத: பஸ்யேம லக்ஷ்மீஸகம்‌ [ஸ்ரீரங்க ராஜஸ்தவம்‌, பூர்‌-74:)

ஆஸந பத்மத்திலழுத்தின திருவடித்‌ தாமரைகளை யுடையவரும்‌, சிறந்த திருவரைக்குப்‌ பாங்கான பட்டுத்‌ திருப்பரிவட்டத்தை யணிந்தவரும்‌, சிறிது நர்த்ததஞ்‌ செய்வது போல்‌ விளங்குகிற திருமேனியை யுடையவரும்‌ இயல்பான புன்முறுவலை யுடையவரும்‌, திருவபிஷேகத்தைத்‌
தழுவி யிருக்கின்ற முக கமலத்தை யுடையவரும்‌, தமது திருக் கையில்‌ இளைப்பாறுகின்ற திவ்யாயுதங்களை யுடையவருமான திருமகட்‌கன்பனான அழகிய மணவாளனைத்‌ திருவரங்கத்தலே இன்னமொரு நூற்றாண்டளவும்‌ அங்குமிங்கும்‌ (எழுந்தருளுமிட மெல்லாம்‌) ஸேவிக்கக்‌ கடவோம்‌] என்கிறபடியே ஸேவித்தருளி ,திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும்‌ வைத்தஞ்சலென்ற
கையும்‌ கவித்த முடியும்‌ முகமும்‌ முறுவலும்‌ ஆஸந பத்மத்திலே அழுத்திய திருவடிகளுமாய்‌ நிற்கிற நிலையே நமக்குத்‌ தஞ்சம்‌(முழுஷுப்படி த்வயம்‌-21)
என்று அநுஸந்திதருளி, அத நன்‌ நிதியைக்‌ கண்டாப்‌ போலே பூர்வர்கள்‌ தநமாயிருக்கிற ஸ்ரீநிதியான நம் பெருமாளைக்‌ கண்டு கொண்டு, சிவந்த திருமுக மண்டலத்‌தையும்‌ கஸ்தூரித்‌ திருநாமத்தையும்‌ (மதி நுதல்‌ கஸ்தூரி திருநாமத்தையும்‌, மறுவல் பூத்த பவன வாயையும்‌, கவித்த கதிராயிரமிரவி கலந்தெறித்தா லொத்த நீண் முடியையும்‌, கையினார்‌ சுரிசங்கனலாழி எழிலையும்‌, அஞ்சலென்ற கையையும்‌, திருவரை பூத்தாப் போலிருக்கற அந்தி போல்‌ நிறத்தாடையும்‌ ஆஸந பத்மத்திலே அழுத்தின செம் பங்கயத் பதாள்களையும்‌ கோல மா மணி யாரமும்‌ முத்துத் தாமமும்‌ முடிலில்லதோரெழிலையும் கண் வாங்க மாட்டாதே நிர்நிமேஷத்ரு ஸஞ்சலராய்‌-)வைத்த கண்‌ வாங்காதே அநிமிஷரா யநுபவித்துக்‌ கொண்டு நிற்க, தேசாந்தர கதனான புத்ரனைக்‌ கண்ட மாதா பிதாக்களைப்‌ போலே தந்தையுந் தாயுமான தாம்‌ இவரைக்‌ கண்டு ப்ரஸந்ந வதநேகஷணராய்‌ கருணாம்ருத ஸ்ஷ்டியாலே குளிரக்‌ கடாக்ஷித்தருளி ‘”தமக்காவாரை தாமே தேடிக்‌ கொள்வோம்‌” என்று அருளிச்‌ செய்து எம்பெருமானாரை விஷயீகரித்தாப்‌ போலே இவரையும்‌ விஷயீகரித்தருளினார்‌

பின்பு தீர்‌த்த ப்ரஸாதங்களையும்‌ ஸ்ரீ சடகோபனையும்‌ திருமாலை ப்ரஸாதத்தையும்‌ ப்ரஸாதிக்கப்‌ பெற்று, முடியும்‌ மாலையும்‌ பெற்றாப்‌ போலே தென்னங்கர்‌ சீரருளுக்கிலக்காகப்‌ பெற்று
அத்யந்தம்‌ ப்ரீதராய்‌ அண்ணரைப்‌ பார்த்து தேவரிருக்காக நம்பெருமாள்‌ இப்படி வாழ்வித்தருளினார்‌’” என்று அருளிச்‌ செய்து, அநந்தரம்‌ அண்ணருடனே கூடப் புறப்பட்டருளி அவர்‌ திருமாளிகையிலே எழுந்தருள, பட்டரும்‌ அனேக பதார்த்தங்‌களுடன்‌ சிறப்பு வரக்‌ காட்டி யருள அத்தை யங்கீ கரித்து அண்ணர்‌ திருமாளிகையிலே யமுது செய்து எழுந்தருளி யிருக்க அவரும்‌ பூர்வாசாரியர்கள்‌ ‘ போத மநுட்டானங்களை யருளிச்‌ செய்யக்‌ கேட்டுத்‌ திருவுள்ளந் தேறி அவருடனே கூடப் புறப்பட்டு பூர்வர்கள்‌
எழுந்தருளியிருந்த திருமாளிகைகளைச்‌ சென்று ஸேலித்து, பின்பு பிள்ளை லோகாசாரியர்‌ திரு மாளிகை நோக்கி யெழுந்தருளி,
வாழி யுலகாசிரியன்‌ வாழி யவன்‌ மன்னு குலம்‌
வாழி முடும்பை யென்னும்‌ மாககரம்‌–வாழி
மனஞ்சூழ்ந்த பேரின்மல்கு மிக நல்லார்‌
இனஞ் சூழ்ந்திருக்கு மிருப்பு
–என்றும்‌,
மணவாளன்‌ மாறன்‌ மனமுரைததான்‌ வாழி
மணவாளன் மன்னு குலம் வாழி–மணவாளன்‌
வாழி முடும்பை வாழி வடவீதி தான்‌
வாழியவன்‌ உரை செய்த நூல்‌
–என்றும்‌
அநுஸந்தித்துத்‌ திருமாளிகை வாசலிலே தண்டன்‌ சமர்ப்‌பித்து அஞ்ஜலித்துக்‌ கொண்டு,

ஆத வாணிம்‌ புண்ய ஸுதாபகாம்‌ ஸடஜித்ஸ் ஸ்வைரம்‌ விகாஹ் யாதராத்‌
ஆநீயாம்ருத மத்ர சக்ர துகுபெள லோகோபகரராத்மகெள |
யெள வாக் பூஷண தேஸி கேந்த்ர ஹ்ருதயாபிக்யெள ப்ரபந்தாவிமெள
தே வந்தே புவநார்ய ஸூந்தர வரெஎ க்ருஷ்ணாத்மஜெள தேஸிகவ் ॥

இங்கு உலகத்தவருக்கு உதவுமியல் புடையராய்‌ எந்த இரு ஆசாரியர்கள்‌ நம்மாழ்வாருடைய திருவாய்மொழியாகிற புண்யமான அமுத ப்ரவாஹத்தில்‌ ஆதரத்துடன்‌ யதேச்சையாயாழ்ந்து அதில்‌ நின்றும்‌ ௮ம்ருதத்தைக் கொண்டு எந்த ஸ்ரீவசந பூஷணம்‌ ஆசார்ய ஹ்ருதயம்‌ என்ற பெயரை யுடைய இரு ப்ரபந்தங்‌களையுமருளிச்‌ செய்தார்களோ, வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையின்‌ குமாரர்களான பிள்ளை லோகாசாரியர்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ என்ற ஆசாரியர்களை அடி பணிகிறேன்‌-

ஆர்யஸ் ஸெளம்ய வர ஸடாரிகலிஜித்‌ பட்டேஸ :॥ முக்யாத்மமாம்‌
பக்தாநாம்‌ விமலோக்தி மெளக்திக மணீநாதாய சக்ரே ப்ருஸும்‌ |
க்ருத்வா ஸாதுரஹஸ்த்ரயார்த்த மகிலம்‌ கூடம்‌ விபஸ் சித்ரியம்‌
லோகார்யா வரஜஸ்ஸூ ஸிக்ஷ்க வரஸ் சூடாமணிஸ் ஸோபதே

பிள்ளை லோகாசாரியரின்‌ திருத் தம்பியராய்‌ ஸத் ஸம்ப்ரதாயார்த்தங்களை சிக்ஷித்து அருளிச் செய்பவராய்‌, யாவருக்கும்‌ பூஜ்யராய்‌ சிரோ பூஷணமான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌,நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்‌. பெரியாழ்வார்‌, முதலான பக்தாக்ரேஸரர்களின்‌ தூய வாக்குக்களாகிற மணி, முத்துக்களைக்‌ கொண்டு ரஹஸ்ய த்ரயத்தின்‌ ஆழ் பொருள்களை யெல்லாம்‌ பூர்வாசாரியர்களின்‌ திருவுள்ளத்துக் கிசைய விளக்கி வெளியிட்டு மிகவும்‌விளக்கமுறுகிறார்‌.

யஸ்யாஹம்‌ குல தைவதம்‌ ரகுபதேரா ரதநம்‌ ஸ்ரீஸக:
காவேரீ ஸரிதிந்தரீ பநகரீ வாஸஸ்தலீ புண்யபூ: |
க்ருஷ்ணோ மாந்ய குருர்‌ வரேண்ய மஹிமா வேதாந்த வித்யாநிதி;
ப்ராதா சவ்ம்ய வரஸ்‌ ஸ்வயந்து புவநாசார்யோஸி கஸ்தே ஸம:

யாருக்கு சக்ரவர்த்தி திருமகனுடைய திருவாராதனமான அழகிய மணவாளன்‌ குலதெய்வமோ, திருக் காவேரியின்‌ நடுவிலுள்ள புண்ய பூமியான கோயிலானது இருப்பிடமோ, பெரும்‌ ‘ புகழாளராய்‌ பூஜ்யரான வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை தந்‌தையுமாசார்யருமாவரோ, உபய வேதாந்த நிதியான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ இளைய ஸஹோதரரோ, அப்படியான தேவரீரே ஜகத்துக்கெல்லாம்‌ ஆசாரியராக உள்ளீர்‌; இப்புடிபட்ட தேவரீருக்கு யார்‌ ஒப்பாவார்‌? என்கிறபடியே பிள்ளை லோகாசாரியருடைய ஸமாப்யதிக ரஹிதமான பெருமையைப்‌ பேசா நின்று கொண்டு -ரஹஸ்யம்‌ விளைந்த மண்ணன்றோ?’ என்று மிகவுமாதரித்தருளி, அங்கே யெழுந்தருளி யிருந்து பிள்ளலோகாசாரியர்‌’ வைபவங்களை யெல்லாம்‌ ௮ண்ணரருளிச் செய்யக்‌ கேட்டு, இவ்வளவாகிலும்‌ பெற்றோமே!!’ என்று ப்ரீதராய்‌ அண்ணரை ஸேவித்துக் கொண்டு ஆசாரியர்களுக்கு ஆவாஸ் பூமியான கோயிலிலே எழுந்தருளி யிருக்க, பின்னையும்‌ ஒருநாள்‌ வரையிலே நம்பெருமாளை இவர்‌ திருவடி தொழச்‌ சென்றவாறே தீர்த்தம்‌ திருமாலை பரியட்டத்துடனே தம்முடைய தேனே மலரும்‌ திருப்‌ பாதத்தை இவர்‌ திருமுடி சூடுவித்து

தஸ்மிந்‌ ஸஸ்மித நேத்ரேண ஸ்ரீமதா ஸேஷ ஸாயிநா |
ஸத்க்ருத: க்ருதவாந் வாஸம்‌ கிஞ்சித்தத்ர ததந்திகே

மலர்ந்து நீண்ட வப் பெரியவாய கண்களை யுடைய ஸ்ரீமானான பெரிய பெருமாளாலே அநுக்ரஹிக்கப் பட்டவராய்‌ சில நாட்கள்‌ அவர்‌ திருவடி வாரத்தில வாழ்ந்திருந்தார்‌- என்கிறபடியே,
திருப்பவளச் செவ்வாய்‌ முறுவல்‌ கொண்டு நம் முடையவரைப்‌ போலே நீரும்‌ நம் வீட்டில்‌ கார்யத்தையும்‌ தர்சந ரஹஸ்யங்களையும்‌ ஆராய்ந்து கொண்டு உம்முடைய சரீராவஸானத்தளவும்‌ இங்கேயே இரும்‌” என்று அருளிச் செய்ய; இவரும்‌ ‘ மஹா ப்ரஸாதம்‌” என்று அங்கீகரித்து நியமித்தபடியே அங்கே எழுந்தருளி யிருந்தார்‌-அக் காலத்திலே அங்குண்டான ரஹஸ்ய ப்ரபந்தங்களை யெல்‌லாம்‌ திருக் கண் சாத்தி ஜீர்ணோத்தாரணம்‌ பண்ணி யருளி அவற்றை ப்ரகாசிப்பித்துக் கொண்டு-எழுந்தருளி யிருக்க; பின்பு ஒரு நாள்‌ பெருமாள்‌ திருவாராதனம்‌ நடத்திக் கொண்டு போருகிற உத்த நம்பி தாழ்வாக நடத்துகிற படியையும்‌ அமுது செய்தருளுகிற தளிகைக் குறைகளையுங் கண்டு ”இவனை நிரஸித்தருளி அநுகூலரானவர்களைக்‌ கொண்டு குறைவறக் கண்டருளப் பண்ண வேணும் ‘
என்று வானமாமலை ஜீயரருளிச் செய்ய (அழகிய வரதர்‌ என்று திருநாமமுடையராய்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரை பால்யத்திலேயே ஆஸ்ரயித்துப்‌ பின்னர்‌ ஆஸ்ரம ஸ்வீகாரம்‌ செய்தருளி ஸ்ரீவானமா மலை ஜீயர்‌” என்றுஅழைக்கப்பட்டார்‌; )அத்தைக் கேட்டருளி தேவரீருடைய திருப்பணி திருவாராதநம்‌, குறைவற நடத்திப்‌ போம்படி இவனை யநுகூலனாகத்‌ திருத்திப் பணி கொணடருள வேணும்‌ என்று மங்களாசாஸனம்‌ பண்ணாீ!’ என்‌றருளிச் செய்து, தாமும்‌ அப்படியே மங்களாசாஸனம்‌ பண்ணி யருளி, (இவ்விடத்தில்‌ ஜீயர்‌, அழகிய மணவாள நாயனாரை, ”தேவரீர்‌ பெருமாளைக் குறித்து ‘இவனை நசிப்பித்து அநுகூலரைக் கொண்டு திருப்பணி திருவாராதனம்‌ குறைவறக்‌ கொண்டருளவேணும்‌” என்று ப்ரபத்தி பண்ண வேண்டிக் கொள்ளும்‌” என்ன; நாயனாரும்‌ அது கேட்டருளி அழகிய வரதரைக் குறித்து பெருமாளுக்கு-)

நாயனார் திருவேங்கட யாத்திரை எழுந்தருளுதல்‌
அநந்தரம்‌ வட திருவேங்கடமென்று ப்ரஸித்தமான வட மா மலை முதலான வடதிசை யிலுண்டான திருப்பதிகளைத்‌ திருவடி தொழுகையிலே மிகவுந் திருவுள்ளத்தை யுடையராய்‌ -ததஸ்தே நாப்ய நுஜ்ஞாதோ யாதோ தரணி முத்தராம்‌” -பின்னர்‌ பெருமாளால்‌ அநுமதிக்கப்‌ பட்டவராய்‌ வட தேசத்திலுள்ள திருப்பதிகளைச்‌ சென்றடைந்தார்‌-என்கிறபடியே பெருமாள்‌ ஸந்நிதியிலே
சென்று ஸேவித்து நின்று, அடியேன்‌ திருமலைச்குப்‌ போய் திருவேங்‌கடமுடையானைத்‌ திருவடி தொழ விடை கொள்கிறேன்‌” என்று விண்ணப்பம்‌ செய்ய, பெருமாளும்‌ தீர்த்த ப்ராஸதங்களும்‌ பரியட்‌டமும்‌ ஸ்ரீசடகோபனும்‌ ப்ரஸாதித்து ”போய் வாரும்‌’ என்று விடை கொடுத்தருள;

திருக் கோவலூர்‌, திருக் கடிகை மங்களாசாஸனம்‌
அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ *அணியரங்கத்‌தினின்றும்‌ பெரிய திருமலை யேறப்‌ போவாராய்‌ அப்போதே புறப்‌பட்டருளி, முப்போதும்‌ வானவரேத்தும முனிவர்கள்‌ வெள்ளறையிலே சென்று புக்கு பங்கயச் செல்வியார்‌ புருஷகாரமாகச்‌ செந்தாமரைக்‌ கண்ணரை ஸேவித்துத்‌ தீர்த்த ப்ரஸாதங்களும்‌ ப்ரஸாதப்‌பட்டு | பாதேயம்‌ புண்டரீக நாம ஸங்கீர்ந்தநம்ருதம்‌-செய்ய தாமரைக் கண்ணனின்‌ திருநாமங்களைப்‌ பாடுவதான அம்ருதம்‌ வழிக்கு உணவாகிறது-என்கிறபடியே! த்வய வசந பாதேயத்துடனே -பூங்கோவலுர்‌ தொழுதும்‌ போது நெஞ்சே! என்று பெரிய த்வரையோடே புறப்பட்டு அவனடி நிழற்றடங்‌களை யுடையராய்‌ விச்ரமித்து விடாயாறி, ஊரைச்‌ சென்று கிட்டி ,
உள்ளே புக்கு முதலாழ்வார்களை த்‌ திருவடி தொழுது அவர்கள்‌புருஷகாரமாக ”த்ரிவிக்ரம மபிகம்ய”’ என்கிறபடியே ஆழ்வார்கள்‌ நாயனாரையும்‌ ஆயனாரையும்‌ ஸேவித்து, தூவடிவில் பார்‌ மகள்‌[திருமொழி 2-10-9) என்று-தொடங்கி திருக்கோவலூரதனுட்‌ கண்டேன்‌ நான்‌ என்றபடியே அநுபவித்து, நீயும்‌ திருமகளும் நின்றாயால்‌ (முதல்‌ திரு-86) என்கிற பாட்டை யநுஸந்தித்து,
அன்‌றிவ்வுலகமளந்தாய்‌ அடிபோற்றி என்று மங்களசாஸநம்‌ பண்ணி யருளித்‌ தீர்த்தம்‌ ப்ரஸாதப்பட்டு, பூங்கோவலாயனழகு பின்னே தள்ள திருவங்கடத்தானருள்‌ முன்னே நடத்த’ புறப்‌பட்டு, குன்றமேந்திக்‌ குளிர்‌ மழை காத்தவன்‌ அன்று ஞாலமளந்த பிரான்‌ பரன்‌ சென்று சேர்‌ திருவேங்கடமாமலை (திருவாய்‌, 3-3-4)என்றும்‌ திருவேங்கடத்தாயன்‌ என்றும்‌ மொய்த்த சோலை மொய்‌ பூந்தடம்‌ என்றும்‌ சொல்லப்படுகிற நீர்மையை யுடைய திருவேங்‌கடமுடையானைத்‌ திருவடி தொழுகையிலே திருவுள்ளமாய்‌ பெருங்‌ கூட்டத்துடனே போவான் வழி கொண்டு அதி த்வரையுடனே (இதிலிருந்து திருக் கடிகை மங்களாசாஸனம்‌, )யெழுந்தருளுகையில்‌ நீள்‌ சோலை வண் பூங் கடிகையில்‌ தக்கானையும்‌, கடிகைத் தடங்குன்றில்‌ அக்காரக் கனியையும்‌ அடைந்து மங்களாசாஸநம்‌ பண்ணிப்‌ புறப்படா நிற்கச்‌ செய்தே எறும்பியிலுள்ள பெரியோர்களும்‌ பச்சையுடன்‌ வந்து ஸேவித்து நிற்க ,அவர்களை ஆதரித்துப்‌ புறப்பட்டருளினார்‌.

இனி திருமலை வ்ருத்தாந்தம்‌
திருப் புரட்டாசி முதல்‌ திருநாள்‌ ராத்ரி பெரிய கேள்வி ஜீயருடைய ஸ்வப்நம்‌: ஆழ்வார்‌ தீர்த்தத்திற்குத்‌ தெற்கிலுள்ள திருத்‌ தோப்பருகே ஒருவர்‌ வடக்கு முகமாக நிற்கிறதாகவும்‌ திருமலையாழ்வார்‌ மேல் கோடி தொடங்கி கிழக்கு முடிவு மட்டும்‌ ஸ்தூலமாய்‌ அதி தீர்க்கமா யிருக்கிற திருமேனி யுடையராய்‌ மேற்கே திருமுடியும்‌ இழக்கே திருவடிகளும்‌, தெற்கு திக்கைக்‌ கடாக்ஷித்துக்‌ கொண்டு பெரிய பெருமாளைப்‌ போல ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கண்‌ வளர்‌ந்தருளுகிறதாகவும்‌;- ஒரு ஜீயர்‌ திருவடி பார்ச்வத்திலே நிற்‌கிறதாகவும்‌ கண்டு ‘“இவரார்‌?” என்று போவார்‌ வருவாரைக் கேட்க, அவர்கள்‌ சொன்னபடி: ‘இவர்‌ முப்பத்தாரறாயிரப்‌ பெருக்‌கரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌; அவர்‌ பொன்‌னடிக்கால்‌ ஜீயர்‌” என்று,சொல்ல, கண் விழித்து ‘“இதொரு ஸ்வப்நமிருந்தபடி என்‌!” ‘ என்று அதி ப்ரீதியுடனே “எழுந்திருந்து பெருமாள்‌ திருலீதியில்‌ ப்ராதகாலம்‌ புறப்பாட்டிற்கு மங்களா சாஸநத்துக்‌ கெழுந்தருளி இயல்‌ தொடங்குகிற விடத்திலே இச்‌ செய்தியை ஸ்வாமிகளுக் கறிவிக்க இத்தை தோழப்பய்யங்கார்‌ கேட்டருளி

ஸ்வப்நே ப்ருஹத் யதீந்த்ரஸ்ய ஸ்ரீஸைல ஸமிதோ மஜாாந்‌ |
ஸயாந புருஷோத்ருஷ்ட: ஸெளம்ய ஜாமாத்ரு தேஸிக: |
ததர்ச பஸ்சாத்‌ தஸ்யைவ பாதமூலே யதீஸ்வரம்‌ |
ப்ராஞ்ஜலிம்‌ நிப்சுதம் ப்ரஹ்வம்‌ ஸ்வர்ணாதிபதி பத ஸம்ஜ்‌ஞகம்‌ ॥

பெரிய ஜீயருடைய ஸ்வப்நத்தில்‌: திருமலையோடு ஓத்த’ அளவுடையவராய்‌, மணவாளமாமுனி யென்கிற மிகப்‌ பெரிய புருஷர்‌ படுத்துக்‌ கொண்டிருப்பவராகக்‌ காணப்பட்டார்‌.
அவரது திருவடி வாரத்தில்‌ விநயத்துடன்‌ குனிந்து கை கூப்பி நிற்கும்‌ பொன்னடிக்கால ஜீயரையும்‌ அப் பெரிய ஜீயர்‌ கண்டார்‌-என்று ஸ்லோகமாக அருளிச்‌ செய்தார்‌. இத்தை எல்லாரும்‌ கேட்டு உகந்திருக்க, அப்போது தேசாந்தரத்தினினில்‌ நின்றும் வந்த பெரியோர்‌களில்‌ சிலர்‌ இப்படி ஸேவை ஸாதித்தவர்‌ கோயில்‌ நாயனார்‌ என்ன, வேறு சிலர்‌ அவர்‌ திருநாளுக் கெழுந்தருளுகிறார்‌ – என்ன,
மற்றும்‌ சிலர்‌ நாயனார்‌ தம்முடைய சிஷ்யரான வானமாமலை ஜீயரைத்‌ தமக்கு ப்ராண ஸூஹ்ருத்தென்றும்‌. பொன்னடிக்கால்‌ ஜீயரென்றும்‌ அருளிச்‌ செய்வர்‌ என்ன; ஆனால்‌ இந்த விசை
திருநாளுக்கு மஹாதிசய முண்டாயிற்று- என்று அனைவரும்‌ போர உகந்து எதிர்பார்த்துக்‌ கொண்டு எழுந்தருளியிருக்க நாயனாரும்‌ பயண கதியிலே யெழுந்தருளித்‌ திருமலை யாழ்‌வாரைக்‌ கண்டருளி திருவேங்கடமாமலை யொன்றுமே தொழ நம்‌ வினையோயுமே (திருவாய்‌ 3-3-8)என்று திருமலையாழ்வாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, வைத்த கண் வாங்காதே அநுபவித்துக்‌ கொண்டு சென்று ”ஸுவர்ண முசகரீம்‌ தத்ர ஸங்கதாம்‌ மங்களஸ்வதாம்‌- அத் திருமலையோடு சேர்த்து நல்ல ஓசை யுடைய ஸுவர்ண முகி நதியை- என்று மங்களாவஹமான ஸ்வர்ண முகியைக்‌ கட்டி அங்கே நீராடி யருளி, கேசவாதி த்வாதச நாமங்களையும்‌ சாத்தி யருளின வளவிலே ஸ்ரீகோவிந்த ராஐருடைய அபய ஹஸ்தம்‌, களபம்‌ திருமாலை தொடக்கமான வரிசைசள்‌ வர. அங்கீ கரித்தருளி
ஸ்ரீவைஷ்ணவர்களுக் கெல்லாருக்கும்‌ ப்ரஸாத விநியோகம்‌ செய்தருளித்‌ தாமும்‌ ஸ்வீகரித்துப்‌ புறப்பட்டு கோவிந்தராஐரை மங்களாசாஸநம்‌ செய்தருளி, வரிசை பெற்று திருமலை யடிவாரத்திலே
அழகிய சிங்கரைத்‌ தொழுது, -ஏவம்வித்‌ பாதேநாத்யாரோஹதி”- இப்படி உபாஸிப்பவன்‌ காலால்‌ ஏறுகிறான்‌ -என்‌கிற படியே ஏறியருளி, பரிஷத்‌ திருவேங்கட முடையானைத்‌ தொழுது
கர்ப்பூரக்காலிலே தீர்த்த ஸ்வீகாரம்‌ செய்தருளி, காட்டழகிய சிங்கரைத்‌ தொழுது, மாம்பழ வெம்பெருமானாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து விச்ரமித்துப்‌ புறப்பட்டருள; இச் செய்தி கேட்டுப்‌
பெரிய கேள்வி ஜீயரும்‌ ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவர்களும்‌, அனைத்துத்‌ கொத்துப்‌ பரிகாரத்துடனே பூவார் கழல்களை எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு, பெரிய பரிவட்டம்‌, ஸ்ரீபாத ரேணு,அபய ஹஸ்தம்‌ முதலான வரிசைகள்‌ கூட்டி மங்கள வாத்யங்களுடனே எதிர்‌ கொண்டு ப்ராஸாதிக்க ஸ்லீகரித்து

(அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்
ஆச்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்-
-ஆத்மாவுக்கு இருக்கவேண்டிய அனைத்து குணங்களுக்கும் இருப்பிடமானவரும், அறியாமையாகிற இருளை மீதமில்லாமல் போக்குபவரும், தம்மை அடைந்த சிஷ்யர்களுக்கு அகலாத தஞ்சமாக இருப்பவருமான அனந்தாழ்வான் என்னும் ஆசார்யரை வணங்குகிறேன்.
ஸ்ரீமத்ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம்போருஹத்வயம்|
ஸதுத்தமாங்க ஸந்தார்யம் அநந்தார்யமஹம் பஜே||
-ஸ்வாமி ராமாநுஜருடைய திருவடித்தாமரைகளாக இருப்பவரும், அதனால் நல்லோர்கள் சென்னிக்கு அணியாக இருப்பவருமான அநந்தாழ்வானை வணங்குகிறேன்.)

மொண்ணைத் திருக் கோபுரத்தருகே திவ்ய விமானத்தையும்‌ திரு நாராயண
கிரியையும்‌ த்வஜ ஸ்தம்‌பத்தையும்‌ பொற் கோபுரத்தையும்‌ கண்டு களித்துத்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து உள்ளே புக்கு, அவா வறச் சூழ்ந்தான்‌ திருவாசலிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து திருவீதிகளையும்‌ திரு மாளிகைகளையும்‌ கண்டு களித்துக்‌ கொண்டு ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி ஸ்வாமி புஷ்கரிணியிலே நீராடி யருளி, திருமண்காப்புச்‌ சாத்தியருளி, வேங்கட வராஹத்தை ஸேவித்து, தீர்த்தம்‌ ப்ரஸாதம்‌, ஸ்ரீ சடகோபன்‌ சந்தனம்‌ ப்ரஸாதிக்க ஸ்வீகரித்துப்‌ புறப்பட்டருளி திருத் தேர்களையும் கண்டு களித்து, உள்ளே யெழுந்தருளி அழகிய மணவாளன்‌ திருமண்டபத்தை தண்டன்‌ ஸமர்ப்பித்து ஸ்ரீபலிபீடத்தையும்‌ செண்பகத்‌ திருவாசலையும்‌ அத்தாணிப்‌ புளியையுந்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்துச்‌ செண்பகச் சுற்று ப்ரதஷிணமாக வெழுந்தருளிச்‌ சாலை வாசலாலே
யுள்ளே புக்கு நெய்க்கிணறு முதலான சாலை வரிசைகளைக்‌ கண்டு களித்துத்‌ திருமடைப் பள்ளியையும்‌ யமுனைத் துறைவனையுந்‌ தொழுது, புஷ்கரிணியிலே தீர்த்த ஸ்‌வீகாரம்‌ பண்ணி ஸ்வர்ணமண்டபமேறி நாராயண கிரியைச்‌ தொழுது, செண்பகத்‌ திருவாசலாலே யுள்ளே புக்கு, தேவப் பெருமாள்‌ எழுந்தருளியிருந்த பொன்‌விஞ்சு பெருமாள்‌ கோயிலையும்‌ அழகப் பிரானாரையும்‌ திவ்ய விமானத்தையும்‌ தொழுது திருமடைட்பள்ளி நாய்ச்சியாரையும்‌ ஸேவித்து தசாவதாரங்களையுந்‌ தொழுது, திருமாமணி மண்ட.பமான யாகமண்டபத்திலே நாய்ச்சிமாருடன்‌ மலைக்கினிய நின்ற பெருமாளையும்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, தீர்த்தம்‌, ஸ்ரீ சடகோபன்‌, ஸ்ரீபாதரேணு ப்ரஸாதிக்க ஸ்வீகரித்தருளி, திவ்ய விமானத்தைத்‌ தொழுது ஸேனை முதலியாரையும்‌ வணங்கி, ராமநுஜஸ்ய சரணெள சரணம்‌ ப்ரபத்யே’ என்று எம்பெருமானாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, தீர்த்தம்‌ அநந்தாழ்வான்‌, ப்ரஸாதம்‌, சந்தனம்‌, ப்ரஸாதிக்க ஸ்வீகரித்து, அழகிய சிங்கரையும்‌, திருநிலைக்‌ கண்ணாடி போலிருக்கிற பெரிய திருவடி நாயனாரையும்‌ ‘தொழுது உண்டியிலே திருமுன்காணிக்கையும்‌ ஸமர்ப்பித்து த்வார பாலகருடைய அநுமதி கொண்டு உள்ளே புக்கு, மத்யே சக்ரவர்த்தி
திருமகனாரையும்‌ தொழுது” குலசேகரன்‌ படியருகே சென்று, பொன்னம்‌ புயல் போல்‌ மரகதம் போல்‌ பூவை மலர் போல்‌ கருவிளை போல்‌ பொங்கார்கடல் போல்‌ பொலிந்திருண்ட புழுகிற்றுளைந்த
செஞ்சோதி, அன்னம்‌ பயிற்றி நடமாட அலர்மேல்‌ மங்கையுறை மார்பனாய்‌, ”ஸிஷேவே தேவதேவேசம்‌ சேஷ சைல நிவாஸிதம்‌”-திருமலையில்‌ நித்ய வாஸம்‌ பண்ணும்‌ தேவாதிதேவனான திரு
வேங்கட முடையானை ஸேலித்தார்‌-என்கிற படியே,எழில் கொள் சோதியான திருவேங்கடத்தெந்தையை அநபவித்து நிற்க-அப்பனும்‌ தீர்த்த ப்ரஸாதம்‌ திருமாலை, ஸ்ரீ சடகோபன்‌ இவை ப்ரஸாதிக்க, பெற்று க்ருதார்த்தராய்‌–

நாயனார்‌ பெருமாள்‌ கோயிலுக்கு எழுந்தருளுதல்‌
அங்கு நின்றும்‌ புறப்பட்டு நடுவே இரண்டு மூன்று நாள்‌ வஸித்து அதன்‌ பின்பு உலகேத்து மாழியானத்தியூரேற வெழுந்தருளி
தூரஸ்திதேபி மயித்ருஷ்டி பதம் ப்ரபந்நேது:கம்விஹாய பரமம்‌ ஸுகமேஷ்யதீதி |
மத்வேவயத்கக நசும்பி நதார்த்திஹந்து! தத் கோபுரம்‌ பகவதஸ் ஸரணம் ப்ரபத்யே॥

நான்‌ தூரத்திலிருந்தாலும்‌ ஒருவன்‌ கண்களுக்குப்‌ புலப்படுவேனாகில்‌, அவன்‌ துக்கத்தை விட்டு உயர்ந்த ஸுகத்தை அடைவான்‌ என்று நினைத்துப் போலும்‌ வானளாவி நிற்கிற–ப்ரணதார்த்தி ஹரனான பேரருளாளனுடைய எந்தக்‌ கோபுரமொன்றுண்டோ- அதைச்‌ சரணமடைகிறேன்‌- என்று திருக்‌ கோபுர நாயனாரை தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளே சென்று புண்ய கோடி விமானத்தையும்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து திரு வநந்த ஸரஸ்ஸிலே நீராடி யருளித்‌ திருமண்‌ காப்பு சாத்தி யருளி
அடைவே ஆழ்வார்களையும்‌ ஸேவித்து பலி பீடத்தருகே தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளே புக்கு, சேர்ந்த வல்லி நாய்ச்சியாரையும்‌ சக்ரவர்த்தி திருமகனாரையும்‌ திருவநந்தாழ்வானையும்‌ தொழுது
ப்ரக்ஷிணமாக வெழுந்தருளித்‌ திருப்புற்றுக்குக்‌ கீழாக இளையாழ்‌ வாரை ஆம்முதல்வனிவன்‌ என்று: கடாக்ஷித்தருளிய யமுளைத்துறைவன்‌ திரு முற்றத்தையும்‌ அவரெழுந்தருளி யிருக்கிற கரியமாணிக்‌கத்தாழ்வார்‌ ஸோபாநத்தையும்‌ ஸேவித்து, பேரருளாளர்‌ பெருந் தேவியாரையும்‌
ஆகார த்ரய ஸம்பந்நாம்‌ அரவிந்த நிவாஸிநீம்‌ |
அஸேஷ ஜகதீஸித்ரீம்‌ வந்தே வரத வல்லபாம்‌ ॥

அநத்யசேஷத்வ, அநந்ய சரணத்வ, அநத்ய போக்யத்வமாகிற மூன்று ஆகாரங்களோடே கூடியவளாய்‌, தாமரை மலர்மேல்‌ நித்ய வாஸம்‌ செய்யுமவளாய்‌ எல்லா வுலகங்களுக்கும்‌ ஈஸ்வரியாய்‌ தேவப் பெருமாளுக்கு வல்லபையான பெருந்தேவியாரை அடிபணிகிறேன் -என்று அநுஸந்தித்து ஸேவித்து பங்கயத்தாள் திருவருளும் கொண்டு அங்கே பெரிய திருவடியையும் தொழுது உள்ளே
புகுந்து தானவனை வன் நெஞ்சங்‌ கீண்ட சிங்கப் பிரானையும்‌ ஸேவித்‌துச்‌ சூடிக் கொடுத்த நாய்ச்சியாரையும்‌ ஸேனை முதலியாரையும்‌ ஸேவித்து அவ்வருகே ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி ஸ்ரீ ஹஸ்திகிரீ யருகே சென்று, ‘*ஏஷதம்‌ கரிகிரீம்‌ ஸமாஸ்ரயே”‘ என்று தண்டன்‌
ஸமர்ப்‌பித்து மலையாள நாய்ச்சியாரையும்‌ ஸேவித்து, பத க்ரமத்‌திலே படிகடந்தேறி, கச்சிக்கு வாய்த்தான்‌ திருமண்டபத்திலே திருக்கச்சி நம்பி முன்னாக வரதராஜர்‌ திருவரங்கப் பெருமாள அரையருக்கு இராமானுசனைத் த்யாகம்‌ செய்தருளிய ஸ்தலமன்றோ-என்று அஞ்சலித்து, அவ் விடத்தில்‌ அநவரத ஸந்நிதி பண்ணித்‌ கொண்டிருக்கிறவர்கள்‌ புருஷகாரமாக
ஸிந்துரர்ஜஸி ரோரத்ந மிந்திரா வாஸ வக்ஷலம்‌ |
வவந்தே வரதம்‌ வேதிமேதிநீ க்ருஹ மேதிரம்‌ ॥

திருவத்தி மா மலைக்குத்‌ தலைக் கணி மணியாய்‌ அலர்மேல் மங்கை வுறை திருமார்பை யுடையனாய்‌ யாக பூமிக்கு ஸ்வாமியான வரத ராஜனை அடிபணிந்தார்‌ -என்கிற படியே புண்ய கோட்‌ யாக்யாதமான விமான மத்யத்திலே எழுந்தருளி யிருக்கிற பேரருளாளரை:
ராமாநுஜாங்க்ரி ஸரணேஸ்மி குல ப்ரதீப.
த்வாஸீத்‌ ஸ யாமுந முநேஸ்‌ ஸ ச நாத வம்ஸ்ய: |
வம்ஸ்ய.பராங்குஸ முநேஸ்‌ ஸ ச ஸோபி தேவ்யா:
தாஸஸ்தவேதி வரதாஸ்மி தவேக்ஷணிய ॥

பேரருளாளனே! அடியேன்‌ எம்பெருமானார்‌ திருவடிகளை சரணம்‌ பற்றியவன்‌; அந்த எம்பெருமானாரோ ஆளவந்தாருடைய ஜ்ஞாத பரம்பரைக் கணி விளக்கானவர்‌, அவ் வாளவந்தார்‌ தாமும்‌ ஸ்ரீமத்‌ நாதமுனிகளுடைய வம்சத்தவர்‌. அந்த நாதமுனிகளும்‌ நம்மாழ்‌வாருடைய ஜ்ஞாந பரம்பரையினர்‌, அந்த ஆழ்வாரும்‌ பிராட்டிக்‌ கடியவர்‌; இப்படி பாரம்பர்யத்தாலே அடியேன்‌ தேவரீருக்கு கடாஷிக்கத் தக்கவனாகிறேன்‌ -என்றநுஸந்தித்து தண்டன்‌ ஸமர்ப்‌பித்து, அநந்தரம்‌ திருப்பல்லாண்டையும்‌ வரதராஜ அஷ்டகத்தையும்‌ ஸ்தோத்ர கத்யங்களையும்‌ அநுஸந்தித்து மங்களாசாஸனம்‌ பண்ணி யருள , தேவப் பெருமாளும்‌, ‘நம்மிராமானுசனைப் போலே யிருப்‌ பாரோருவரைப்‌ பெறுவதே!’ என்று மிகவும்‌ க்ருபை பண்ணி தீர்த்‌த ப்ரஸாதங்களையும்‌ ஸ்ரீசடகோபனையும்‌ ப்ரஸாதித்தருளி விடை கொடுத்தருள. அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி–
தீப ப்ரகாஸ நர கேஸரி வித்ருமாப வைகுண்ட வாமந யதோக்தகர அஷ்ட பாஹுூந்‌ | அந்யாந் ஸுதா பணி பாண்டவ தூத ஹேம வர்ணாதிமாந்‌ வாகுரு:க்ரமஸஸ்‌ ஸிஷேவே ॥
ஸ்ரீ அழகிய மண்வாள குருவானவர்‌, தீப ப்ரகாசர்‌, அழகிய சிங்கர்‌,
பவழ வண்ணர்‌, வைகுண்ட நாதர்‌, வாமனன்‌ (உலகளந்தார்‌]
யதோக்தகாரி, அட்டபுய கரத்தான்‌, இவர்களையும்‌ ஸுதாகரர் ஊரகத்தான்‌, பாண்டவ தூதர்‌, ஹேம வர்ணர்‌, இவர்கள்‌ முதலான மற்றுமுள்ள எம்பெருமான்களையும்‌ முறைப்‌படி ஸேவித்தார் -என்கிற படியே-நிறைந்த சீர்‌ நீள்‌ கச்சியிலுண்டான திருவெஃகா முதலான திருப்பதிகளையும்‌ திருவடி தொழுது

நாயனார் ஸ்ரீ பெரும் பூதூரேற எழுந்தருதளுல்‌-அநந்தரம்‌;,
யதீந்ரத் ஜநநீம் ப்ராப்ய புரீம்‌ புருஷ புங்கவ: |
அந்த.கிமபி ஸம்‌ பஸ்யந் நத்ராக்ஷீல் லஷ்மணம்‌ முநிம்‌ –

ஆண்களின்‌ சிறந்தவரான அழகிய மணவாளர்‌ யதிராஜரின்‌ அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்பூதுரை யடைந்து ஊரிலுள்ள சிறப்‌புக்களைக்‌ கண்டு களித்துக்‌ கொண்டு சென்று இளையாழ்வாரை ஸேவித்தார்‌-என்கிறபடியே ஸ்ரீ பெரும்பூதூர் ஏற வெழுந்தருளி ஊரருகே நின்று
இதுவோ பெரும்‌ பூதூர்‌? இங்கே பிறந்தோ
எதிராச ரெம்மிடரைத்‌ தீர்த்தார்‌? – இதுவோ தான்‌ :
தேங்கும்‌ பொருநல்‌ திருநகரிக் கொப்பான
ஓங்கு புகழுடைய வூர்‌
-என்று ஊரை யநுபவித்து ஊரிலே ப்ரவேசித் தருளி, ‘
எந்தை எதிராச ரெம்மை யெடுத்தளிக்க
வந்த பெரும்பூதூரில்‌ வந்தோமோ!–சிந்தை
மருளோ? தெருளோ? மகிழ் மாலை மார்பன்‌
அருளோ விப் பேற்றுக் கடி-
-என்று அலாப்ய லாபமாக ப்ராப்ய கெளரவத்தை யநுஸந்தித்து வித்தரா யுள்ளே புக்கு, ஆண்டுகள்‌ நாள்‌ திங்களாய்‌ (இரா-31) என்று தொடங்கி இராமானுசனைப்‌ பொருந்தினமே என்று விஸ்மித ஹருதயராய்‌ ஸேவித்து,

என்னெஞ்சே! எங்களிராமானுசனென்‌னும்‌
நன்னெஞ்சே! நல்லை காண்‌, இன்னுமின்னும்‌
பெரும்பூதாரென்னாய்‌ போரப்‌
பெரும் போகமெல்லாம்‌ பெற
— என்று
ஸஹ்ருத யநுபவம்‌ பண்ணி சரம பர்வத்திலே நிலை நின்று ஸேலித்து, இராமனுசனிணையடிகளை அடைந்து ‘யோ நித்யம்‌” என்று தொடங்கி ‘ ராமாநுஜஸ்ய ஸரணென ஸரணம்‌ ப்ரபத்யே-என்று அநுஸந்தித்து தண்டன் ஸமர்ப்பித்து எதிராஜன்‌ வடிவைத்‌ தன்‌ கண்ணுள்ளும்‌ நெஞ்சுள்ளும்‌ நின்று நீங்காதபடி நிலை நிறுத்திக்‌ கொண்டு தீர்த்த ப்ரஸாதங்களும்‌ பெற்று -சீராரும்‌
எதிராசர்‌ திருவடிகள்‌ வாழி என்று தொடங்கி, ‘ தேவரீர்‌ நித்ய மங்களராய்‌ வாழ்ந்தருள வேணும்‌’ என்று மங்ளாசாஸனம்‌ செய்தருளி, ஸ்ரீபாஷ்ய ஸ்ரவணத்துக்கு உடையவரநுமதி கொண்டு -ஸ்ரீபாஷ்யத்துக்கு அநுமதி கொண்டு -அநந்தரம்‌ கோயிலிலே யெழுந்தருளியிருக்க, ராத்ரி ஸ்வப்நத்திலே எம்பெருமானாரெழுந்தருளி நாயனாரை அழைத்தருளி ஸ்ரீபாஷ்ய கோசத்தை ஸாதித்து, “நாமே உமக்குப்‌ பெருமாள் கோயிலிலே ஸ்ரீ பாஷ்யம் சாதிக்கிறோம் -கிடாம்பி நாயனார் பாடேறேச் செல்லும் நமக்கும்‌ திருவாய்மொழிப் பிள்ளைக்கும்‌ ப்ரியமாக வாசித்து பின்பு அருளிச்செயல்‌ வ்யாக்யானங்களையே பஹுமுகமாக ப்ரவர்த்திப்பியும்‌’” என்று அருளிச் செய்கையாலே,
ராமாநுஜயதி பணித ஸ்ரீபாஷ்யார்த்த ஸ்ரவணத்திலே ஸ்ரத்தையுடைராய்‌ மீண்டு பெருமாள்‌ கோயிலேற வெழுந்தருளி:

நாயனார்‌ கிடாம்பி நாயனார் பாடே ஸ்ரீ பாஷ்யம் கேட்டது
அங்கே கிடாம்பி யாச்சான்‌ திருவம்ஸ்யரான கிடாம்பி நாயனாரை ஸேவித்து (அவர் பக்கலிலே ஸ்ரீபாஷ்யம்‌ ஸேவித்தருளி, பேரருளாளரையும்‌ ஸேவித்து, சிறிது காலம்‌ எழுந்தருளி யிருந்து ஸ்ரீபாஷ்யம்‌ அநுஸந்தித்துத்‌ தலைக்கட்டினவாறே –செந் தமிழும்‌ வட கலையுந்‌ திகழ்ந்த நாவர்‌ என்கிறபடியே உபய வேதாந்தாசார்யராய்‌ வேதாந்த லிழுப்‌ பொருளின்‌ மேலிருந்த விளக்கை விட்டுசித்தன்‌ விரித்தனன்‌ என்கிறபடியே தந் முகேந பேரருளாளருடைய வைபவத்தை ப்ரகாசிப்பித்துக்‌ கொண்டு, தேவ ராஜரை ஸேலித்து அவரநுமதி கொண்டு, அங்குண்டான தர்ஸந க்ரந்தங்களை எடுப்‌பித்துக் கொண்டு கோயிலேற எழுந்தருளினார்‌)அங்கே ஸ்ரீபாஷ்யம்‌ கேட்டருளா நிற்க,கிடாம்பி நாயனாருக்கு ஸஹ பாடியாயிருக்கிற ஐயைகளப்பாவும்‌ செல்வ நாயனாரும்‌ போர ஆதரித்து வைத்துக் கொண்டு பாடம்‌ நடத்த அப்பா, நாயனாருடைய வாசகதாடியையும்‌ க்ரஹண தாரண வாகவ்யவஹார சாதுர்யததையும்‌ கண்டு போர வித்தராய்‌ (கிடாம்பி )நாயனாரைப் பார்த்து, இவருடைய புத்திக்கநுகுணமாக ஸாதிக்‌க வில்லையே” என்ன, நாயனாரும்‌ அப்பாவை, நாளை இவருக்கு சிந்தனை பண்ணுவியும்‌’? என்று ஸாபிப்ராயமாக ஒரு வார்த்தை யருளிச் செய்ய, அப்பா, அதி நிபுராகையாலே’ பிற்றை நாள்‌ தொடங்கி நாயனாருக்கு சிந்தனை பண்ணுவிப்பதற்கு எழுந்தருளி யிருக்க, நாயனாரும்‌ ஸஹஸ்ர முகமாக உபன்யஸிக்கக் கண்டு ஐயைகள்‌ ‘ப்ரஸாதித்த அர்த்தங்கள்‌ ஒன்றும்‌ தப்பாமல்‌ பின்னையும்‌ போஷித்து விசேஷார்த்தங்களுடனே ஸாதித்தருளினீர்‌’- என்று அதிலே ஹர்ஷ யுக்தராய்‌ நெடும் போது பரவசராயிருக்க,-இத்தைக் கேட்டு கிடாம்பி நாயனாரும்‌ ஆங்கே யெழுந்தருள, அவர்‌ சிஷ்யர்களான வித்வஜ் ஜநங்கள்‌ நாயனாரோடே தர்க்கிக்க வேணு மென்றபேக்ஷிக்க, நாயனாரும்‌, ”நமக்கு இதர சாஸ்த்ர வ்யவஹாரத்துக்கு ஆசார்ய வாக்ய நிரோதமுண்டு” என்று அப்பாவுக்கு அருளிச் செய்ய, அப்பாவும்‌, “இவர்களும்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களன்றோ? இவர்களோடு ப்ரஸங்கித்தால்‌ ஸ்வரூப விரோதம்‌ வராது, அவர்‌களபிநிவேசத்தைச்‌ செய்தருள வேணும்‌’? என்றருளிச் செய்து அவர்களை முன்னே கொணர்ந்து விட, அவர்களுக்குத் தக்கதாக தர்க்க சப்த மீமாம்ஸைகளிலே பஹுமுகமாக உபந்யஸித் தருளின வளவிலே எல்லாரும் வித்தராய்‌ திருவடிகளிலே தீர்க்‌க ப்ரணாமம்‌ பண்ணிப்‌ புறப்பட்டு நாயனார் பாடே சென்று, ,’நாயனாரை இத்‌தனை நாளும்‌ ஸாதாரணமாக எண்ணி யிருந்தோம்‌; அவரிடத்திலே ஸகல சாஸ்த்ரங்களும்‌ ஒருமிடறு செய்திருக்கின்‌றன!” என்று ஆச்‌சர்யப்பட, ‘அவர்‌ ஒரு அவதார லிசேஷங் காணுங்கோள்‌”” என்று அருளிச் செய்து விட்டு அவரைக் கொண்டு அருளிச் செயல்‌ வ்யாக்‌யானங்களை ப்ரவர்த்திப்பிக்கத திருவுள்ளமாய்‌, பின்பு அதி த்வரை யுடனே ஸ்ரீபாஷ்யம்‌ நடத்திக்கொண்டு போர, நாயனார்‌ பல காலும்‌ ஈடு முப்பத்தாறாயிரப்படியை உருச் சொல்லிக்‌ கொண்டு போருகிறதைக்‌ கண்டு ஆச்சர்யப்பட்டு, ஒருவரு மறியாமல்‌ ஏகாந்‌தத்திலே நாயனார்‌ பாடே சென்று “முப்பத்தாறாயிரப்‌ பெருக்கர்‌’- என்று உமக்குத்‌ திருநாமஞ் சாத்தினது வெறுமனன்று; இந்த புத்தி ஸாமர்த்யம்‌ எங்குங் கண்ட தன்று; நமக்கொரு மநோ ரதமிருக்கிறது-அவஸ்யம்‌ செய்ய வேணும்‌’- என்று மறுக்க வொண்ணாதபடி அநுவர்த்திக்க, நாயனாரும்‌ இதுக்கென்‌ செய்வோ மென்று சிந்தித்துக் கொண்டு ஏதென்று கேட்க நாயனாரும்‌, ‘*தேவரீர்‌ அவதார விசேஷமென்று நிச்சயமாக வறிந்தேன்‌; எனக்கு அத்தை யொளிக்க வேண்டா. உள்ளபடி காட்ட வேண்டும்‌” என்றருளிச் செய்ய-ஆகில்‌ ஆசார்யராகிய தேவரீருக்கு ஒளிக்க ஒண்ணாதே; பெரிய பெருமாளுடைய ரஹஸ்ய நியோகத்தை’ ஒருவருமறிய வேண்டா: என்று விண்ணப்பஞ்‌ செய்து கொண்டு ஏகாந்த ஸ்லத்திலே மங்கள தீபத்தை ஸ்ப்புரித்து, ”அஞ்சாமலிருக்க’ வென்று விண்ணப்பஞ்‌ செய்து, அஹிபதி நிஜாகாரத்தைக்‌ காட்டக் கண்டருளி பீதி யுக்தராய்‌ – இத்தை உப ஸம்ஹரிக்க வேணும்‌ – என்றபேஷிக்க” உபஸம்‌ஹரித்து எப்போதும் போலே நாயனா ரெழுந்தருளி யிருக்கக் கண்டு விசேஷ ப்ரதி பத்தி யுடனே அத்யாதரம்‌ பண்ணிக் கொண்டு தேவ ரஹஸ்யம்‌ நடத்திக் கொண்டு நாடோறும்‌ அமுது செய்தருளின படியையும்‌ ஆராய்ந்து கொண்டு :திருமேனி ளெஎகுமார்யத்திற்கு அநுரூபமாம்படி பண்ணிக் கொண்டு வாரும்‌-என்று அடிக்கடி யருளிச் செய்து கொண்டு ஸ்ரீபாஷ்யம்‌ தலைக் கட்டி யருளும்படி தம்முடைய திருமாளிகையிலே கறக்கிற பசுவின் பாலை ஸாவதானமாகத்‌ திருத்தி நாயனார்‌ அமுது செய்யும்‌ படிக்கு ஸாதித்து உகப்புடனே ஸ்ரீபாஷ்யம்‌ நிறைவேற்றி “செந்தமிழும்‌ வடகலையுந்‌ திகழ்ந்த நாவர்‌ என்கிறபடியே உபய வேதாந்‌தாசார்யராய்‌ வேதாந்த விழுப் பொருளின்‌ மேலிருந்த விளக்கை விட்டு சித்தன்‌ விரித்தனனே -என்கிறபடியே தந் முகேநே பேரருளார்‌ வைபவத்தை ப்ரகாஸிப்‌பித்துக் கொண்டு (ஓராண்டு காலம்‌ யதோக்தகாரி ஸந்நிதியில்‌ ஸ்ரீபாஷ்யமும்‌ பகவத் விஷயமும்‌ ஸாதித்தருளினதாகவும்‌ அது காரணமாகவே அந்த ஸந்நிதியில்‌ மணவாள மா முனிகள்‌ உபதேச ஹஸ்த முத்ரையுடன்‌ ஸேவை ஸாதிப்பது என்றும்‌ பெரியோர்கள்‌ பணிக்கக்‌ கேட்டிருக்கை )அங்கே சில நாளெழுந் தருளி யிருந்து:-அநந்தரம்‌ அங்குண்டான பகவத் விஷய ஸ்ரீ கோசங்களை யெடுப்பித்துக் கொண்டு கோயிலிலே யெழுந்தருள-

தத: ப்ரதிநிவ்ருத்தம் தம்‌ புருஷோ புஜ கேஸய: | ப்ரத்யுத் கம்ய ப்ரபுஸ்ஸ்வைரம்‌ புந . ப்ராவேஸ யத்புரம்‌ ॥
பின்னர்‌ அரவணையில்‌ பள்ளியானான ஸ்ரீரங்கதாதன்‌ திரும்பவும்‌ எழுந்தருளின அவ் வழகிய மணவாளப்‌ பெருமாளை எதிர்‌ கொண்டு, தம்மிஷ்டப் படியே மீண்டும்‌ திருவரங்கத்தில்‌ ப்ரவேஸிப்‌பித்தார்‌-என்கிறபடியே பெருமாளாலே ப்ரத்யுத்கதராய்‌க் கொண்டு திருவரங்கப்‌ பெரு நகரிலே ப்ரவேஸித்துப்‌ பெருமாளை ஸேவித்தருள, பெருமாளும் போர வுகந்தருளி தீர்‌த்த ப்ரஸாதங்கள்‌ ப்ரஸாதித்து,
நித்யம்‌ ரங்கே நிவாஸய ப்ரார்த்தித: பணி ஸாயிநா ;
பஸ்யந்‌ பதாம் புஜம்‌ தஸ்ய பாலயாமாஸ ஸாஸநம்‌ ॥

இந்த வரங்கத்தே இனிதிரும்‌*” என்று ஸ்ரீ ரங்கஸாயியான பெருமாளால்‌ ப்ரார்த்திக் கப்பட்டவராய்‌ அழகிய மணவாளப் பெருமாளுடைய திருவடிகளை ஸேவித்துக்‌ கொண்டு அந்த நியமனதைப்‌ பரிபாலித்தார்‌ -என்கிறபடியே, ”இங்கேயே நித்ய வாஸம்‌ பண்ணும்‌” என்று நியமித்தருள, இவரும்‌ அப்படியே ஸம்மதி பண்ணி யெழுந்தருளி யிருக்க, அங்குண்டான பெரியோர்‌களெல்லாரும்‌ “தேவரீர்‌ இங்கே பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணிக்‌ கொண்டு எழுந்தருளி யிருக்க வேணும்‌” என்று ஆதரிக்க, அப்படியே -இன்பமிகு பெருங்குழுவுடனே யெழுந்தருளியிருக்க இசைந்து,
ஸ்ரீமத் ரங்கம்‌ ஐயது பரமம்‌ தாம தேஜோ நிதாநம்‌
பூமா தஸ்மிந்‌ பவது குஸலீ கோபி பூமா ஸஹாய: |
திவ்யம்‌ தஸ்மை திஸது விபவம்‌ தேஸீகோ தேஸகாநாம்‌
காலே காலே வரவரமுநி கல்பயந்‌ மங்களாநி ॥

பிறரை வெல்லும்‌ ஆற்றலுக்கு உயர்ந்த ஸ்தானமாய்‌, நித்ய ஸ்ரீயுடலன் கூடியதாய்‌ ஸ்ரீரங்கம்‌ என்கிற மேலான திவ்ய தேசமானது நன்றாக விளங்கட்டும்‌; அங்கு ஸ்ரீதேவி பூதேவிகளோடு கூடிய அநிவாச்யனான பெரிய பெருமாள்‌ பாங்காக எழுந்தருளி யிருக்க வேணும்‌; ஆசார்யர்களுக்கெல்லாம்‌ முதல்வரான வரவர முநி அநுதிமும்‌ மங்களாசாஸனங்களைப்‌ பண்ணிக்‌ கொண்டு அப் பெருமானுக்கு ஸ்ரேஷ்டமான வைபவங்களை உண்டாக்‌க வேணும்‌- என்று காலகாலங்களிலே மங்களாசாஸநம்‌ பண்ணி யருள அத்தாலே *அரங்கர் தஞ்சீர்‌ தழைப்ப என்கிற படியே பெரிய பெருமளுடைய திருச்செல்வம்‌, சிறந்த செல்வம்‌ மல்கி என்றும்‌ நீங்காத செல்வம்‌ நிறைந்து என்றும்‌ ஸம்ருத்தமாயிற்று-

நாயனார்‌ ஸந்யாஸாஸ்ரமம்‌ ஸ்வீகரித்தல்
அக் காலத்திலே பெருமாளுடைய ஸேவைக்கு விருத்தமான ஒரு ஆசெளச விசேஷத்தைத்‌ தெற்கினின்றும்‌ சிலர் வந்து விண்ணப்‌பஞ் செய்யக்‌ கேட்டருளி தென்னரங்கள்‌ கழல்‌ சென்னி வைத்துத்‌தானதில்‌ மன்னி யிருக்கிற தமக்கு தத்‌ விஸ்லேஷம்‌ அத்யந்தம்‌ துஸ் ஸஹமாய்‌ த்வத் பாத பத்ம ப்ரவணாத்ம வ்ருத்தேர்பவந்தி ஸர்வே ப்ரதி கூல ரூபா:” -தேவரீருடைய திருக் கமல பாதங்களில்‌ ஈடுபாடுள்ள மனமுடையவனுக்கு எல்லாம்‌ விரோதிகளாகவே ஆகின்றன-என்கிறபடியே பகவதநுபவ விரோதிகளான பரிகரங்‌களெல்லாம்‌ அத்யத்தம்‌ ப்ரதிகூலங்களா யிருக்கின்‌றன வென்று அறுதி யிட்டு அப்போதே தமக்கு ஸப்ரஹ்மசாரியான சடகோப ஜீயர்‌ ஸத்நிதியிலே யெழுந் தருளி
சந்தம்‌ தஸ்யைஷ விஜ்ஞாய நந்தந் நந்தந்‌ நிரந்தரம்‌ |
ஸர்வம்‌ ஸங்கம்‌ பரித்யஜ்ய துங்கம்‌ ப்ராவிஸதாஸ்ரமம்‌ ॥

இவ் வழகிய மணவாள நாயனார்‌ அந்த சடகோப ஜீயருடைய திருவுள்ளக்‌ கருத்தை யறிந்து மிகவும்‌ ௨கந்துகந்து, ஸர்வ ஸம்‌பந்தங்களையும்‌ விட்டு விட்டு உயர்ந்தான ஸந்நியாஸாஸ்ரமத்தில்‌ ப்ரவேசித்தார்‌-என்கிறபடியே ஸர்வஸங்க பரித்யாக பூர்வகமாக ஸந்யஸித்தருளி, த்ரி தண்ட காஷாயங்களை அவர்‌ திருக் கைகளாலே ஸாதிக்க தரித்தருளி துரீயாச்ரமத்தை யடைந்து அதற்கு அநுகுணமாக ‘சடகோப ஜீயர்‌” என்று பிள்ளை திரு நாமத்தை யுடையராய்‌, அற்ற பற்றராய்‌, பற்றிலார்‌ பற்ற நின்ற பெருமாள்‌ திரு முன்பே யெழுந்தருளி ஸேவித்து,
மங்களம்‌ ரங்க துர்யாய நம: பந்நக ஸா யிநே |
மங்களம்‌ ஸஹ்ய ஜாமத்யே ஸாந்நித்ய க்ருத சேதஸே ॥

ஸ்ரீ ரங்கநாதனுக்கு மங்கள முண்டாக வேணும்‌. அரவணை மேல் துயிலும்‌ பெருமாளை அடி பணிகிறேன்‌. உபய காவேரி மத்யத்தல்‌ நித்ய ஸாந்நித்யம்‌ பண்ணி யிருப்பதில்‌ நிலைத்த திருவுள்ளமுடைய பெருமாளுக்கு மங்களமுண்டாகுக-என்று மங்களாசாஸநம்‌ பண்ணிக்‌ கொண்டெழுந்தருளி நிற்க, பெருமாளும்‌ இவரை ஆதரித்தருளி, தம்முடைய திரு நாமமான முந்தின திருநாமத்‌தையே முடிய நடத்த வேணுமென்‌றருளிச் செய்து, ”உமக்கு பல்‌லவராயன்‌ மடத்தை ப்ரஸாதிக்கிறோம்‌; யாவச் சரீர பாதம்‌ எம்பெருமானாரைப்‌ போலே இங்கே இரும்‌” என்று நியமித்தருளி, எம்‌பெருமானார்‌ காலத்தில்‌ கந்தாடை யாண்டான்‌ தம்முடைய ஆசார்‌யரான ஆட் கொண்ட வில்லிஜீயர்‌ எழுந்தருளியிருக்கும்‌ படி மடமாக்கி, அவருடைய திருவராதனமான என்னைத் தீமனங்‌ கெடுத்‌தார்க்கு மத்யாஹ்ந கால அவஸரத்திலே அமுது செய்யப்‌ பண்ணும்‌ படி பெருமாள்‌ ஸந்நிதியிலே நித்யம்‌ ஒரு தளிகையும்‌ திருவிளக்கு நெய்‌ முதலியவையும்‌ நடக்கும்படி பொலிவிட்டு நடந்து வந்ததாயும்‌, சில நாள்களுக்குப்‌ பின்பு முதலியாண்டான்‌ திருவம்‌சத்தார்‌ பரஸ்பர விவாதத்தாலே ஸ்ரீபண்டாரத்தில்‌ சேர்த்ததாயும்‌ பூர்வ காலத்திலே அதி விலஷணமான ராமாநுஜ கூடம்‌ பல்லவராயன்‌ நடத்தின படியாலே பல்லவராயன்‌ மடமாயிற்று;

திருவாராதநமும்‌ என்னைத் தீ மனங்கெடுத்தார்‌, என்று திருநாமம்‌; அந்த மடத்தையும்‌, திருவாராத நத்தையும்‌ ப்ரஸாதித்து மிகவும்‌ க்ருபை பண்ணி யருளி நிஸ்ருஷ்டாத்மா ஸுஹ்ருத்ஸுச:-நண்பர்களிடத்தில்‌ தம் பொறுப்பை வைத்தவர்‌-என்கிறபடியே தாமும்‌ அவ் விடத்திலே ந்யஸ்த பரராய்‌ தீர்த்த ப்ரஸாதங்களையும்‌ ப்ரஸாதித்து, பரிவட்டம்‌ ஸ்ரீசடகோபன்‌ ப்‌ரஸாதித்து ‘-நம்முடைய அழகிய மணவாள ஜீயரை மடத்திலே விட்டு வாருங்கோள்‌-என்று உத்தம நம்பி முதலான அனைத்துப்‌ பரிகரத்தையும்‌ இவர்‌ பின்னே அனுப்பி யருள, அவர்களும்‌ அப்படியே ஸேவித்துச்‌ கொண்டு போய்‌ மடத்தில்‌ யெழுந்தருளப்‌ பண்ணி, அடியார்கள்‌ வாழ, அரங்க நகர் வாழ…….. மணவாள மா முனியே இன்னு மொரு நாற்றாண்டிரும்‌ என்று ஸேலித்து மீண்டார்கள்‌.
பின்பு மடம்‌ முழுவதையும்‌ வான மாமலை ஜீயர்‌ முதலான முதலிகளைக்‌ கொண்டு செப்பமிடுவித்து, ‘திருமலையாழ்வார்‌” என்று திருவாய்மொழிப் பிள்ளை பெயராலே யொரு வியாக்கியான மண்டபத்தையு (காலக்ஷேப கூடம்‌) முண்டாக்கி பிள்ளை லோகாசாரியர்‌ திருமாளிகையிலிருந்து ரஹஸ்யம்‌ விளைந்த மண்ணால்‌ தாம்‌ எழுந்தருளியிருக்கிற இடத்திற்கு மண் காப்புச்‌ சாத்துவித்து அவ்விடத்தை குருகுல ஸமமாகவே எண்ணி, ஸ்வாசார்ய பாத பங்கஜ த்வந்த்வச்சாய மத்யே ஸுகாஸீநராய்‌ இனிதமர்ந்து வியாக்யானித்துக்‌ கொண்டெழுந்தருளி யிருந்து, பிள்ளை நம்மாழ்வார்‌ திரு நாமத்தாலே விளங்கி யருளினாப்‌ போலே தாமும்‌ நம் பெருமான்‌ திரு நாமத்‌தாலே மிகவும்‌ விளங்கி யருளினார்‌. இப்படி ‘ரங்க மங்கள துர்யாய ரம்ய ஜாமாத்ரு யோகிநே ”’ ஸ்ரீரங்கத்துக்கு மங்களாசாஸன பரரான மணவாளமாமுனிகளுக்கு மங்களமுண்டாகுக- என்னும்படி கோயிலுக்கு மிசவும்‌ மங்களாசாஸன பரராய்‌ எழுந்தருளி யிருக்கும் நாளிலே,

ஆசாரஜ்ஞாந வைராக்ரை ராகாணே ச தாத்ரும: |
ஸ்ரீமாந்‌ ராமாநுஜஸ் ஸோயமித்யாஸம்‌ ஸந்‌ மித.ப்ரஜா:

ஆகாரத்தினாலும்‌, ஆசாரம்‌, ஜ்ஞாநம்‌, வைராக்யம்‌ இவற்றினாலும்‌, எம்பெருமானாரைப்‌ போலலே இந்த மணவாள மா முனிகளும்‌ உள்ளமையால்‌ ஸ்ரீமானான அந்த ராமாநுஜ முனிவரே இவர்‌ என்று ஜனங்கள்‌ பரஸ்பரம்‌ புகழ்ந்து பேசினர்‌ -என்னும்படியான திருவரங்கள்‌ திருமுற்றத் தடியவ ரெல்லாரும்‌ ‘இவர்‌ எம்பெருமானார்‌ அவதாரம்‌” என்று அறுதியிட்டு இவர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்து அத்யந்தம்‌ விலஷணராய்‌, ‘ பரமந போநிவாஸ பணி புங்கவ ரங்க பதேர் பவந மிதம்‌ ஹிதாய ஜகதோ பவதா அதிகதம்‌”” (பரமபதத்‌தில்‌ எழுந்தருளி யிரா நின்ற திருவநத்தாழ்வானே! இந்த அழகிய
மணவாளனுடைய வாஸஸ்தானமான இத் திருவரங்கமானது தேவரீரால்‌ லோக ஷேமத்தின்‌ பொருட்டு அடையப்பட்டது-என்றும்‌
வன் பெரு வானகமுய்ய, அமரருய்ய, மண்ணுய்ய மண்ணுலகில்‌
மனிசருய்ய, துன்பமிகு துயரகல, அயர்வொன்றில்லாச்‌ சுகம்‌ வளர
அக மகிழுந் தொண்டர்‌ வாழ அன்பொடு தென் திசை நோக்கப்‌பள்ளி கொள்ளும்‌
(பெரு திரு 1-10) பெரிய பெருமாள்‌ ஐகத் ரக்ஷணார்த்தமாக இங்கே யெழுந்தருளினாற் போலாயிற்று இவர்‌ இங்கே எழுந்தருளினது என்று மிகவும்‌ ஆதரித்துக் கொண்டு போந்தார்கள்‌.

திருமஞ்சந அப்பாவும்‌ பட்டர் பிரான்‌ ஜீயரும்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
இப்படி எழுந்தருளி யிருக்கிற காலத்திலே ஜீயர்‌ அருணோதயத்‌துக்குத்‌ திருக் காவேரியில்‌ நீராட எழுந்தருளுவர்‌; அக் காலத்திலே அத்யந்தம்‌ ஸத்வ நிஷ்டராய்‌ பெருமாள்‌ ஸந்நிதியிலே அநந்ய ப்ரயோஜனராய்‌ கைங்கர்யம்‌ பண்ணிப் போருகிற திருமஞ்ஜநம்‌ அப்பா வென்றொருவர்‌ கூடவே சென்று ஜீயர் நீராடுகிற ஸ்தானத்‌திற்குப்‌ பின்பே யிருந்து அந்த ப்ரவாஹ தீர்த்தத்தில்‌ தப்பாமல்‌ நீராடிக்‌ கொண்டு போக அவருக்கு ஞாநோதயமாய்‌ ஜீயர்‌ திரு வடிகளிலே நிரவதிக ப்ராவண்யமுண்டாய்‌ ஆஸ்ரயித்துக்‌கு க்ருதார்த்‌தரானார்‌. இந்த அர்த்தத்தை
உஷஸ்யயம் வாரிணி ஸஹ்யஜாயா: ஸ்நாதோ யதீந்த்ர ப்ரவணோ முநீந்த்ர: |
தத்ரைவ பஸ்சாதவ காஹ்ய தீர்த்தே ஸ்ரீ தீர்த்தாதாதஸ்‌ கமுபாஸரி தோபூத்‌ ॥

உஷ: காலத்தில்‌ யதீந்த்ர ப்ரவணாரான மா முனிகள்‌ நீராடிய காவிரி ப்ரவாஹத்தில்‌ பின்னர்‌ அமிழ்ந்தாடின திருமஞ்சனம்‌ ௮ப்பா அவரிடம்‌ ப்ராவண்யமுடையராய்‌ அவரை(மாமுனிகளை) ஆஸ்ரயித்‌தவரானார்‌] என்று அநுஸந்தித்தார்கள்‌. அப்பாவும்‌ ஜீயர்‌ திருப்‌ பவளத்தாலே ஸகலார்த்தங்களையும்‌ ஸ்ரவித்து, ”சாயா வாஸத்வ மநுகச்சேத்‌ –நிழலுறடிதாறுமா னோம்‌ என்கிறபடியே சாயாவத்‌ பரதந்த்‌தரராய்த்‌ திருவடிகளைப்‌ பிரியாமல்‌ அங்குத்தைக்கு அந்தரங்கராய்‌ எழுந்‌தருளி யிருத்தார்‌
(தீர்த்த தாதஸ் –திருமஞ்சனம் அப்பா)

அநந்தரம்‌ ‘கோவிந்த தாஸரப்பர்‌” என்னும்‌ நிரூபகத்தை யுடையவரான பட்டர்‌ பிரான் ஜீயர்‌, திருவடிகளிலே வந்து ஆஸ்ரயித்து தத் பாத பத்ம ஸேவைகதா ரகராய் ஸேலித்துக் கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌-கோவிந்ததாதர்‌–பட்டர்பிரான்‌ ஜீயர்‌ மாமுனிகளின்‌ அஷ்ட திக் கஜங்கனில்‌ ஒருவரானர்‌; பட்டர்‌ பிரான்‌ ஜீயர்‌ வந்து தண்டமிழோர்‌ மன்னு புகழ்‌ தொண்டை மண்டலத்தில்‌ வந்துதித்து தன்னுடைய வாசாரம்‌தப்பாமல்‌ இந்நிலத்திலாசரிததுக் காட்டி, யரங்கத்தே சென்று புகுந்து ஈஸரவணை மேல் எம் பெருமான்‌ வாச மலர்த்தாள்‌ பரவும்‌ மணவாள யோகி மலர்த் தாள்‌ தனிலிறைஞ்சி நண்ணி நில மேல்‌ சிச்சனாகாரம்‌ தெரிவிப்போம்‌’” என்று வந்த கோவிந்ததாதன்‌–என்கிறபடியே மணவாள மாமுனியை யாஸ்ரயித்து, *கோவிந்‌ தாஹ்வாநபாயிநீ’ என்கிறபடியே எம்பாரைப் போலே இவரும்‌ அவருக்கு நிழலுமடி தாறும்‌ போல வரவர முனி சரணத்தை அரை க்ஷணமும்‌ பிரிய க்ஷமரன்றிக்கே பிரியா வடிமை செய்து தத்பாத ஸேவைகதாரகராய்‌ வாழ்ந்து கொண்டிருந்தார்‌

அதன் பின்பு மணவாள மாமுனியும முகில்வண்ண்னடி மேல்‌ சொன்ன சொல் மாலையாயிரம்‌ என்றும்‌ மதிளரங்கர்‌ வண்‌புகழ்‌ மேலான்ற தமிழ்‌ மறைகளாயிரம்‌ என்றும்‌-இப்படி பெரிய பெருமாள்‌ விஷயமாக ப்ரதி பாதிக்கப்படுகிற திருவாய்மொழியினுடைய ஈடு முதலான வ்யாக்யானங்களையும்‌ மற்றுமுண்டான ஆழ்வார்கள்‌ அருளிச்‌ செய்த வ்யாக்யானங்களையும்‌ வ்யக்தமாக ப்ரஸாதித்திக்‌ கொண்டும்‌, ஸ்ரீவசந பூஷணாதி திவ்ய ரஹஸ்ய தாத்பர் யங்களையும்‌ தர்சிப்பித்துக் கொண்டும்‌ ராமாநுஜார்ய வசகராய்‌ நாடோறும்‌ ஸேவித்துக்‌ கொண்டும்‌ குரோர்‌ நாம ஸதா ஜபேத்‌”, என்று எம்பெருமானார்‌ திருநாமமாய்‌-சயந்தரு கீர்த்தியாய்‌-ஸ்ரீவைஷ்ணவ காயத்ரியான நூற்றந்தாதியை ‘அநவரதம்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டும்‌ ”வகுள பூஷண வாகம்‌ருதாராநம்‌” என்று தொடங்கி தம்முடைய அபேக்ஷிதங்களையும்‌ அவர்‌ திருவடிகளிலே நித்யமாக ப்ரார்த்திக்‌ கொண்டும்‌ தத் ப்ரஸாதைக தாரகராய்‌ தத்‌ வைபவத்தை ப்ரகாசித்துக்‌ கொண்டும் அஸத்ருச வைபவராய்‌ திருமாலை யாழ்வாருடைய அடி நிழலிலே (தத்‌ ப்ரஸாததைக ப்ரயோஜநராயிருக்க, ஸ்ரீபாதத்து முதலிகள்‌ தப்பா மறை மொழியானெதிராசன்‌ தண்டாமரைத்‌ தாள்‌, இப்பாரிடந்தனிலிட்டு வைத்த தனமிதன, வைப்பாகிய மனத்தான்‌ மணவாள மா முனியை இனி ஒப்பார்களில்லை உலகேழிலும் உம்பரிலுமே என்று உபய விபூதியிலும்‌ இவர்‌ அஸத்ருஸ வைபவ யுக்தராய்‌: தேசந் திகழ எழுந்தருளி யிருக்கிற காலத்திலே பெரிய பெருமாளுடைய நியமானத்தாலே தமக்குத்‌ திருவாராதனமாக ஸ்ரீரங்தராஜரை எழுந்தளருப்‌ பண்ணி வைத்துப்‌ பிள்ளை லோகாசாரியருடைய திருநஷத்ரமான ஐப்பசி மாஸம்‌ திருவோணத்‌ திரு நன்னாளிலே திரு ப்ரதிஷ்டையுங்‌ கொண்டருளப்பண்ணி, தமது திருக் கைகளாலே ஆராதநமுஞ்‌ செய்து ‘ ஐந்மர்க்ஷே ஸ்ரவணோபி வா” என்றும்‌ நீ பிறந்த திருவோணம்‌ என்றுஞ்‌ சொல்லுகிற படியே பிள்ளை லோகா சாரியர்‌ திரு நக்ஷத்ரமான திருவோணம்‌ முதலான மற்றுமுள்ள ஆசாரியர்கள்‌ திரு நக்ஷத்ரங்களையும்‌ *செந்தெலரிசி சிறுபருப்புச்‌ செய்த வக்காரம்‌ நறு நெய் பாலால்‌ பன்னிரண்டு திருவோணமட்டேன்‌ (பெரியா திரு, 2-9-7) என்கிறபடியே அக்கார வடிசிலாலே அமுது செய்தருளப்‌ பண்ணிப் பரிபாலித்துக் கொண்டும்‌ பூர்வாசாரியர்களுடைய வசநாநுஷ்டானங்களையும்‌ தம்முடைய உக்த்யநுஷ்டாநங்களாலே ப்ரகாசிப்பித்துக் கொண்டும்‌ ஸ்ரீரங்கஸ்ரீக்கு மங்கள தீபம்‌ போலே எழுந்தருளி யிருந்தார்‌.(விசத வாக் ஸிரோமணி –பிரமாணத் திரட்டு அருளிச் செய்து -)

இப்படி திசை விளக்காய்‌ நிற்கிற திருவரங்கத்திலே திக்குற்ற கீர்த்தி யிராமனுசனைப் போலே
சிர விரஹதஸ் சிந்தா ஸந்தாந நஜர்‌ ஜர சேதஸம்‌ புஜக ஸயநம்‌தேவம்‌ பூய! ப்ரஸாதயிதும்‌ த்ருவம்‌ |
யதிகுலபதிஸ்‌ ஸ்ரீமான் ராமாநுஜஸ் ஸம பூதயந்த்விதி ஸமதுஷக்‌ ஸர்வே ஸர்வத்ர தத்ர ஸுதீஜநா-
என்றும்‌,
வெகுகாலம்‌ பிரிந்திருந்ததால்‌, மிகவும்‌ நினைப்பதினால்‌ மனம்‌ தளர்ந்த அரவணை மேல்‌ பள்ளிகொண்டுள்ள பெருமாளை ஆஸ்வாஸிப்பிப்பதற்கு யதீந்த்ரரான ஸ்ரீமாந்‌ ராமநுஜரே இந்த மணவாளமாமுனிகளாக அவதரித்தார்‌ என்று வித்வஜ் ஜனங்கள்‌ எங்கும்‌ சொல்லி மகிழ்ந்தனர்‌.
அதுக்கும்‌ மேலே
(2) ஸமுநிஸ் ஸெளம்ய ஜாமாதா ஸர்வேஷாமேவ பஸ்யதாம்‌ |
ஸ்ரீஸகஸ்ய நிதேஸேந ஸூ ஸூபே தேஸிகே ஸ்ரியா -என்றும்‌

அழகிய மணவாள னென்று பெயருள்ள அந்த முனிவர்‌(ஆசாரியர்‌) திருமகளனபனான பெருமாளுடைய நியமனத்தினால்‌ எல்லோரும்‌ காண ஆசார்ய ஸ்ரீயுடன்‌ விளங்கினார்‌. தேஸிக ஸ்ரீயாலே மிகவும்‌ விளங்கா நிற்க இதை தேசாந்தரஸ்த ரெல்லாருங்‌ கேட்டு
(3) ததஸ் ஸமுத் ஸுகாஸ் ஸர்வே ஸதஸோத ஸஹ ஸ்ரஸ :
ஸரணம் தஸ்ய ஸம்ஸ்ரித்ய சரணேள தந்யதாம்‌ கதா: ॥ –

பிறகு மிக மகிழ்ந்த யாவரும்‌ நூற்றுக் கணக்கிலும்‌ ஆயிரக்‌ கணக்கிலும்‌ அந்த மணவாளமாமுனிகளுடைய திருவடிகளைப்‌ புசுலாப் பற்றி தந்யரானார்கள்‌-என்கிறபடியே ஸமீபஸ்தரோடு தூரஸ்தரோடு வாசியற அஸங்க்யாதராய்‌ ஆஸ்ரயிக்க, அவர்களை யெல்லாம்‌ பரம க்ருபையாலே திருத்தித் திருமகள்‌ கேள்வனுக்‌காக்கி என்றும்‌, அரங்கன்‌ செய்ய தாளிணை யோடார்த்தான்‌ என்றும்‌ சொல்லுகிறபடியே அரங்கன்‌ மெய்யடியார்கள்‌ என்றும்‌ திருமாலடியார்கள்‌ என்றும்‌ நிரூபகமாம்படி அத் தலைக்கு ஆளாக்கி யருள, அவர்களும்‌ அபகத மத மனை–இத்யாதிப்‌படியே குற்றமின்றிக்‌ குணம்‌ பெருக்கிக்‌ குருக்களுக்க நுகூலராய்‌,
-வரவர முநி ப்ருத்யர்‌” என்று நிரூபிக்கும்படி அங்குத்தைக்கு அந்‌தரங்கராய்த்‌ திருவடிசுளிலே நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டு அவர்‌ பிரஸாதித் தருளுகிற பகவத் விஷயங்களையுங்‌ கேட்டுக்‌
கொண்டு ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கி அநுகூலராயிருக்க-

அப்பா குமாரத்தி ஆச்சியார்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
ஜீயர்‌ ப்ராத காலத்தில்‌ நீராட்டத்திற்குப்‌ புறப்பட்டெழுந்‌தருளா நிற்கச்‌ செய்தே ஒரு நாள்‌ அசிந்திதமாக வர்ஷம்‌ வர, அதனால்‌ ஒரு வைஷ்ணவர்‌ க்ருஹத்தின்‌ வாசல்‌ திண்ணையை உத்‌தேசித்து எழுந்தருளா நிற்க அந்த க்‌ருஹ யஜமானை கண்டு அத்யந்‌தம்‌ ப்ராவண்யத்தாலே புடவைத்‌ தலைப்பாலே திண்ணையைத்‌ துலக்கி, “ஸ்வாமீ நீர் .இங்கே எழுந்தருள வேணும்‌” என்று ஸ விநய பக்தியோடே ஸேவித்து நிற்க, ஜீயரும்‌ திருவடி நிலைகளைக்‌ கீழே வீட்டுத்‌ திண்ணை மேலே ஏறி யருள அந்த அம்மை மழையிலே நனைகிற திருவடி நிலைகளை எழுந்தருளப்‌ பண்ணித் தம்‌ சிரஸ்ஸிலே தீர்த்‌தத்தோடு தரித்துக்‌ கொண்டு, பிற்பாடு தலைப்பாலே திருவொற்று வாடை சாத்தி மீளவும்‌ சிரஸா வஹித்து, திரு முன்பே எழுந்தருளப்‌ பண்ணி நிற்க, ஜீயரும்‌, ‘நீயார்‌? பேரேது? இது ஆருடைய திரு மாளிகை ?” என்று கேட்டருள, “தேவரீர்‌ திருவடி ஸம்பந்தியா யிருக்கிற திருமஞ்சனம்‌ அப்பாவுடைய பெண்‌- அடியேன்‌ பெயர்‌ ஆச்சி. இது அவருடைய மணவாளப்‌ பிள்ளை கந்தாடை ஐயங்‌கார்‌ க்ருஹம்‌ (முதலி யாண்டான்‌ திரு வம்ச்யரான சிற்றண்ணர்‌ )என்று விண்ணப்பம்‌ செய்யக்‌ கேட்டு உகந்தருளி,தம்முடைய அப்பாச்சியாரோ!’”’ என்று அருளிச்‌ செய்து கடாஷித்துக்‌ கொண்டு வர்ஷம்‌ நிவர்த்தமான வுடனே திருக் காவேரிக்‌ கெழுந்தருளினார்‌.

ஆச்சியாரும்‌ திருவடி நிலைகளின்‌ திருமஞ்சனம்‌, தலையிலே ஊறி ஜீயர் கடாஷம்‌ பெற்றவளாகையாலே உடனே ஜ்ஞாநோதயமுண்டாய்‌, அப்போதே ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க வேணு மென்னும்‌ ருசி பிறந்து, பிறந்தகத்திலே சென்று பிதாவுக் கறிவிக்க அவரும்‌ உகந்து, தம்முடைய தெளஹித்ரர்களும்‌ அறியா மலிருக்க வேணுமென்று அருளிச் செய்து, ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆச்ரயண மான பின்பு தம்முடைய திரு மாளிகையிலே தானே ஒரிடத்திற்கும்‌ புறப்பாடமல்‌ சில நாளிருக்கும்‌ படிக்கு ஆலோசனை பண்ணிய அப்பா, தம்முடைய குமாரத்தியாரைக்‌ கூட்டிக் கொண்டு மடத்திலே எழுந்தருளி ஜீயரை தண்டன்‌ ஸமர்ப்பித்து இச் செய்தியை விண்ணப்பஞ் செய்ய; ஜீயரும்‌, கந்தாடை
அய்யங்கார்கள்‌ ஸம்பந்தத்தைப்‌ பார்க்க வேண்டாவோ? காரியப்‌ படாது” என்றருளிச் செய்ய, அப்பாவும்‌ தம்முடைய குமாரத்தியாருடைய ஆஸ்திக்யாத்ரார்‌த்திகளை விண்ணப்‌பஞ் செய்து-ப்ரதிஹதி ஒன்றும்‌ வாராது; க்ருபை செய்தருள வேனும்‌” என்று விண்ணப்பஞ் செய்ய, -ஆகில்‌ இவளை யிட்டு இந்தத் திருவம்சத்திற்‌ கெல்லாம்‌ ஆநுகூல்ய முண்டாமென்று –ஸூபேந மநஸா த்யாதம்‌’-என்கிறபடியே அப்போது ஒரு சிந்தை செய்து ஆச்சியாருக்கு ஸமாஸ்ரயணம்‌ ஸாதித்தருளி ஹிதங்களையும்‌ ஜ்ஞாதவ்யார்த்தங்‌களையும்‌ உகந்து ப்ரஸாதித்தருளினார்‌, அப்பாவும்‌ தம்முடைய குமாரத்தியாரைத்‌ தம்முடைய திருமாளிகையிலே தானே சில நாளிருக்கும்படிக்கு நியமித்து அவருடைய குமாரர்‌ அண்ணா தொடக்கமானவர்களுக்கு ஒரு கார்யாந்தரத்தை அருளிச் செய்து பரிஹரித்து வைத்தருளினார்‌. இப்படி ஆச்சியாருக்கு ஸ்ரீபாத தீர்த்த வஹநத்தினாலே வந்து அதிசயத்தை
ஸ்ரீபாதுகாம்புஜ நிதாத்ம விவேகரங்க பூநாத தீர்த்த ஜலதாதஜ மாத்ரு தேவம்‌ |
த்வந்த்வச்சிதம்‌ நிகில தேஸி௧ வந்த்யபாதம்‌ ஸெளம்யோ பயந்த்ரு முநி வர்யமஹம்‌ நமாமி

என்று அநுஸந்தித்தார்கள்‌ -தமது பாதுகையின்‌ தீர்த்தத்‌தினால்‌ ஆத்ம விவேகத்தைப்‌ பெற்ற திருமஞ்ஜனம்‌ அப்பாவின்‌ பெண்ணான ஆச்சிக்குத் தேவதையும்‌, சீதோஷ்ணம்‌ ஸூக துக்கம்‌ முதலிய த்வத்வங்களை அறுப்பவரும்‌, ஆசார்யர்களனைவராலும்‌ வணங்கத் தக்க திருவடிகளை யுடையவருமான அழகிய மணவாள மாமுனிவரை அடியேன்‌ வணங்குகிறேன்‌-அநந்தரம்‌ கந்தாடை யண்ணன்‌ திருத் தகப்பனார்‌’ தேவ ராஜ தோழப்பருடைய தீர்த்தம்‌ வர-அற்றைக்கு சிற்றண்ணர்‌ தேவியாரான ஆச்சியாரைத்‌ தளிகை பண்ண அழைத்து விட, அவரும்‌ அப்படியே பாவநத்வ போக்யத்‌வங்களுடேன்‌ தளிகை பண்ண, பெருமாளமுது செய்தருளி முத்தின ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ அமுது செய்தருளி இஷ்ட பங்க்தியும்‌ அண்ணன்‌ தொடக்கமானாரும்‌ அமுது செய்தருளின அநத்தரம்‌ அண்ணன்‌ வாசல்‌ திண்ணையிலே எழுந்தருளியிருக்க;

சிங்கரையார் வ்ருத் தாந்தம்‌
ஓரு ஸ்ரீவைஷ்ணவர்‌ ஜீயர்‌ மடத்தில்‌ நின்றும்‌ புறப்பட்டுவர அவரைக்‌ கண்டு உமக்கு எந்த ஊர்‌?’என்று கேட்டருள, அவரும்‌ வள்ளுவ ராஜேந்த்ரம்‌ -என்ன இங்கே வந்த காரியமேது?’என்ன, ‘அடியேன்‌ ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்கக்‌ காத்திருக்‌கிறேன்‌: ப்ராப்‌தி காலம்‌ வர வேணும்‌ என்ன–இந்த ஸ்தலத்தில்‌ ஆசார்ய புருஷர்கள்‌ திரட்சியாக வுண்டே, மற்றோரிடத்தில்‌ ஆனாலோ? ‘என்ன, “இங்கே பகவந் நியமனமாயிருக்கிறது’ ‘ என்ன,
-அது எப்படி?” என்ன, அது ரஹஸ்யம்‌” என்ன, “உம்முடைய பெயரேது?’ என்ன, ”சிங்கரையர்‌” என்ன, இவர்‌ பகவத்‌ ப்ரஸாத பாத்ர பூதராக வேணுமென்று திருவுள்ளத்திலே எண்ணி, இவர்‌
கையைப்‌ பிடித்துக்‌ கொண்டு உள்ளே சென்று தீர்த்த ப்ரஸாதங்‌களையும்‌ சந்தனம்‌ அடைக்காய்களையும்‌ ப்ரஸாததித்து ஆதரித்தருளி இவ் விரா திருமாளிகையிலே சயியும்‌” என்று நியமித்தருளித்‌ தாமும்‌ திருத் தம்பிமார் கந்தாடை யப்பனும்‌, திருக் கோபுரத்து நாயனார் பட்டரும்‌ எழுந்தருளி யிருக்க, திருவத்யயநத் தளிகை கைங்கர்யமெல்லாம்‌ நிறைவேறி ஆச்சியார்‌ அலஸையாய்‌ உள்ளே படுக்‌கையிலே சாயும்‌ போது -ஜீயர்‌ திருவடிகளே சரணம்‌, பிள்ளை திருவடிகளே சரணம்‌, வாழி உலகாரியன்‌” என்று சயிக்க, இந்த சப்தத்தை மூவரும்‌ கேட்டு இதேது என்று விஸ்மித வ்யாகுலராயிருக்க, இவர்களில்‌ பாட்டர்‌ உள்ளே சென்று கேட்கிறேன்‌!”என்று போய்‌ மதினியாரே! என்றழைக்க, ஆச்சியார்‌ பயப்பட்டு,தாம்‌ சொன்னது இவர்‌ செவிப்பட்டதென்று பேசாமலிருக்க,
அண்ணனும்‌ அப்பனும்‌ அவரை யழைத்து “எல்லாம்‌ பொழுது விடிந்தவாறே தெரியும்‌, அவரை எழுப்ப வேண்டாம்‌” என்று மூவரும் கண் வளர்ந்தருள; அண்ணனுக்கு பய பக்திகள்‌ மிக்கு
மென்மலர்ப் பள்ளி வெம் பள்ளியாகி, ப்ராதாக்களறியாமல்‌ சிங்கரையர்‌ சயநித்த விடத்திலே எழுந்தருளி அவரை யெழுப்பி சில ஆத்யாத்மிக தர்மங்களை யருளிச்‌ செய்ய, அவர்‌ கேட்டு ௨கந்திருக்க அந்த வேளையிலே ‘ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்கும்படி உமக்கு பகவந் நியமனமான பெருமையை அறிய வேணுமென்று அத்யபி நிவேசமா யிருக்கிறது” என்றருளிச் செய்யக் கேட்டு அவர்‌ சொன்னது:-எங்களூரிலே யுண்டாகிற காய்‌ கிழங்குகளை யதா சக்தி ஸம்‌பாதித்து “இந்த ஸ்தலத்திலே பெரியோர்கள்‌ திரு மாளிகைகளுக்கு அடிக்கடி ஸமர்ப்பித்துப் போருவதுண்டு; அத்தை ஒரு நாள்‌ ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கண்டு இன்றைக்கு மடத்திலே ஸமர்ப்பியும்‌ என்ன, பாக்யமாயிற்று என்று கொண்டு ஸமர்ப்பித்தேன்‌; அத்தை ஜீயர்‌ கண்டு இது எங்கே விளைந்தது? எந்த நீர்‌ பாய்ந்தது?
நீரிறைத்தவரார்‌? எதற்காகக்‌ கொணர்ந்தீர்‌?” என்று கேட்டருள
அடியேன்‌ அதி விநயமயயும்‌ உசிதமாயும்‌ விண்‌ணப்பம்‌ செய்தபடி-பரிசுத்த ஸ்தலத்திலேயே விளைந்தது, அடிச் சேரியிலே தேவரீர்‌ தாஸ வர்க்கங்கள்‌ நீரியிரைத்துப்‌ பாய்ச்சினது, ஸ்ரீ பாகவத
ஸ்வத்து” என்று விண்ணப்பம்‌ செய்ய, அது கேட்டு ௨கந்தருளி அத்தை அங்கீகரித்தருளி கோயிலுக்குப் போய்‌ பெருமாளை ஸேவித்‌துப்‌ போருமென்று விடை கொடுக்கப்‌ பெருமாள் ஸந்நிதியிலே
செல்ல, அருகே யிருந்த அர்ச்சகர்‌-இன்றைக்குக்‌ காய்கறி யாருக்கு ஸமர்ப்பித்திர்‌?’* என்ன? ஜீயர்‌ மடத்திலே” என்ன, அர்ச்சகர்‌ ப்ரியப்பட்டுப்‌ பரவசராய்‌ அடியேன்‌ முதுகைத்‌ தட்டி ‘நீர்‌ பாக்யவான்‌; உமக்கு விலஷண ஸம்பந்த முண்டாகப்‌ போகிறது-என்று தீர்த்தம்‌, சந்தனம்‌ திருமாலை, வேளையம்‌, அபய ஹஸ்தம்‌, ஸ்ரீ சடகோபன்‌ ப்ரஸாதித்து பஹுமானம்‌ பண்ண, :அடியேனை இன்றைக்கு இத்தனை க்ருபை பண்ணி யருளுவதே! என்று ஸந்நிதியினின்றும்‌ புறப்பட்ட வளவிலே, ‘இவனை மல்லுக்கட்‌டிப்பிடி? என்கிற வார்த்தை கேட்க, அவ் வார்த்தை ஸாபிப்ராயமாக இருக்‌கிறதென்று மீண்டும்‌ மடத்திலே சென்று தண்டன்‌ ஸமர்ப்பித்து
தேவரீருக்காகப்‌ பெருமாள்‌ போர க்ருபை பண்ணி யருளினார்‌-என்று -இச் செய்தியை யெல்லாம்‌ விண்ணப்பஞ்‌ செய்து ஊருக்கு விடை கொள்ளுகிறேனென்ன; அங்குள்ளார்‌ அடியேனை யாதரித்து
ப்ரஸாதமும்‌ ப்ரஸாதித்தனுப்ப அத்தை வழியிலே ப்ரஸாதப்‌பட்டுச்‌ செல்ல, உடனே சித்த சுத்தி பிறந்து ஆஸ்ரயண ருசி யுண்டாயிற்று; அன்று ராத்திரி ஸ்வப்நத்திலே பெரிய பெருமாள்‌ ஸந்நிதியிலே திருமணத் தூணருகே நின்று ஸேவித்துக்‌ கொண்டிருக்க பெரிய பெருமாள்‌ அணையில்‌ வைத்த திருக் கையை உயர வெடுத்துத்‌ திருவநந்தாழ்வானைக்‌ காட்டி இவர்‌ கிடாய்‌ அழகிய மணவாளச்‌ சீயர்‌, இவரோடு உனக்கு ஸம்பந்த முண்டாக்கிக்‌ கொள்‌” என்றருளிச்‌ செய்ய, இந்த ஸ்வப்நத்தைக்‌ கண்டு க்ருதார்த்தனாய்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்கக் காத்திருக்கிறேன்‌’ என்று சிங்கரையர்‌ விண்ணப்பஞ் செய்யக்‌ கந்தாடை அண்ணன்‌ கேட்டருளி பய பக்திகள்‌ விஞ்சி நெடும்போது சிந்தித்து உள்ளே யெழுந்தருளித்‌ திருப் படுக்கையிலே சாய்ந்தருள, ஸ்வப்நமான ப்ரகாரம்‌:-

(ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பாதாச்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ச்ரயே
-தேவராஜ தோழப்பர் திருக் குமாரர் –வரதநாராயண குருவான அண்ணன்=திருமஞ்சனம் அப்பாவுக்கும் தேவராஜர் திருநாமம் உண்டு -திருவரங்கத்தில் இருந்து கொண்டே பேர் அருளாளன் திருநாமம் கொண்டவர்கள்)

கந்தாடை யண்ணன்‌ கண்ட ஸ்வப்நம்‌.
ஒரு ஸ்ரீவைஷணவர்‌ மெத்தையினின்றும்‌ ஏணி வழியாலே இறங்கி வந்து பெரிய கசையாலே தம்மை யடிக்க, தமக்கு நிவர்த்‌திப்பிக்க சக்தி யுண்டாயிருக்கச் செய்தேயும்‌, “நம்மிடத்தில்‌ ஸ்வரூப விருத்தமான நடக்கை யுண்டாயிருப் பதினாலே சிக்ஷித் தருளுகிறார்‌ ‘ என்றெண்ணி, –ஸாஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா–தன்‌ மகன்‌ புண்ணை ஆற்றுதற்காகத்‌ தகப்பன்‌ கத்தியாலறுப்பது, காரமான மருந்தை யிடுவது தீயினால்‌ கடுவது முதலிய செயல்களை ஹித புத்தியாலே செய்விக்குமா போலே- என்றநுஸந்தித்துக்‌ கொண்டிருக்க, கசையும்‌ துணிக்கை துணிக்‌கையாக அறுந்து போக, அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌ அண்ணன்‌ திருக்‌ கைகளைப்‌ பிடித்திழுக்க, அண்ணன்‌ ஏது செய்ய வேண்டுமென்ன ஏணி மேலேறி மெத்தை மேலை போவென்ன அண்ணனும்‌ அப்‌படியே செய்ய அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌ தாமும்‌ ஏறி வந்து எடுத்துக்‌ கட்டி மேலே கொண்டு போசு, அங்கே ஒரு ஜீயர்‌ ஒரு திருவடியைத்‌ தொங்க விட்டுக்‌ கொண்டும்‌ ஒரு திருவடியை குஞ்சித்துக்‌ கொண்‌டும்‌, த்ரிதண்டத்தைத்‌ தோளிலே சாத்திக்‌ கொண்டும்‌ திருக்கையிலே கசையைப்‌ பிடித்துக்‌ கொண்டும்‌ அக்நி கல்பராய்‌ மிகவும்‌ குபிதராயிருக்க, அவர்‌ முன்னே அண்ணனைப்‌ பிடித்துக்‌ கொண்டு போக , ஜீயர்‌ அண்ணனை பஹுவாக அடிக்க, கசையும்‌ துணிக்கையான வாறே இன்னுமடிக்கத் தக்கதாக உப தண்டத்தை வாங்கப்‌ புக, அத்த ஸ்ரீ வைஷ்ணவர்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து அஞ்சலி ஹஸ்‌தரராய்‌ ஜீயர்‌ திருமுக மண்டலத்தைப்‌ பார்த்து ‘இவன் சிறு பிள்‌ளை பஹுவாக அடிபட்டான்‌. இனி க்ஷமித்தருளித்‌ திருவுள்ள மிரங்கி க்ருபைப்‌ பண்ணி யருள வேணும்‌” என்ன; அவரும் இறங்கி யருளி அண்ணனை அழைத்து மடியிலே வைத்து உச்சி மோந்து திருக் கைகளாலே திருமேனி யெங்குந்‌ தடவி நீயும்‌ உத்தம நம்பியும்‌ போர அபசாரப்‌ பட்டீர்கள்‌” என்ன, ”அழகிய மணவாள ஜீயர் ப்ரபாவ மறியாமல்‌ அவிவேகம்‌ வந்தது; இனி க்ஷமித்தருள வேணும்‌!என்று திருவடிகளைப்‌ பிடித்துக்‌ கொள்ள, ஜீயர்‌ இரங்கி யருளி, நாம்‌ ஸ்ரீபாஷ்யகாரர்‌, இவர்‌ முதலியாண்டான்‌’ என்று தம்மையும்‌ அந்த ஸ்ரீவைஷ்ணவரையுங் காட்டி,
த்வதீயாந்‌ அபராதாந்யீரந்‌ த்வத் ஸம்பந்தி க்ருதாநபி |
க்ஷமாம் யஹம்‌ தாஸரீதஸ்‌ ஸம்பந்தம்‌ மா அந்யதாக்ருதா: ॥

நீர்‌ செய்த தவறுகளையும்‌ உம்‌முடைய ஸம்பந்திகள்‌ செய்த தவறுகளையும்‌ பொறுத்துக்‌ கொள்ளுகிறேன்‌ நான்‌, முதலியாண்டான்‌ ஸம்பந்தத்தை வ்யர்த்தமாக்காதீர்‌- என்றிந்த ஸ்லோகத்தை யுநு ஸந்தித்து ”நாமே திருவநந் தாழ்வான்‌, நாமே வரவர முனி; அவர்‌(அழகிய மணவாள ஜீயர்‌) திருவடிகளிலே நீயும்‌ உன்னுடைய ஸம்பந்திகளும்‌ ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்‌” என்று விட,
அண்ணனும்‌ திருக் கண்கள்‌ [விழித்து நெடும் போது ‘*ஈதொரு ஸ்வப்ந மிருந்தபடி யென்‌!” என்று விஸ்மிதராய்‌ கண்டவற்றை யெல்லாம்‌ புந:புந: சிந்தித்து மறவாமல்‌ திருவுள்ளத்திலே கட்டிபண்ணி, திருத் தம்பிமார்களை யெழுப்பி ஸ்வப்ந வ்ருத்தாந்தங்களை யருளிச் செய்யத்‌ தொடங்கி நடுவே நடுவே ஹர்ஷ பரவசராய்‌-ஸ்தப்தராயிருந்து அருளிச் செய்து தலைக் கட்டி யருளினார்‌.

இப்படி அண்ணனுக்கு எம்பெருமானார்‌ ஸாதித்தருளின அர்த்தத்தையும்‌ அண்ணன்‌ விண்ணப்ஞ்செய்த அர்த்தத்தையும்‌ அதற்கு உத்தரத்தையும்‌,
வாதூல துர்ய வரதார்ய குரோர்‌ பபாண ஸ்வப்நே யதீத்ர வபுரேத்ய க்ருபா பரோந்ய: |
ஸேஷோப் யஹம்‌ வர வரோ முநிரப் யஹம்‌ த்வம்‌ |மாம் ஆஸ்ரயேதி தமஹம்‌ கலயாமி சித்தே ॥
அத்யந்த பாப நிரத:கதமார்ய வர்ய-த்வாம் ஆஸ்ரயேஹமிதி தம்‌ க்ருபணம்‌ வதந்தம்‌ |
த்ருஷ்ட்வா க்ஷமாமி நநு தாஸரதேஸ் த்வதீய ஸர்வ அ பராதமிதி தம்‌ ப்ரவதந்த மீடே ॥

யாவர் ஓருவர்‌ வாதூல குலஸ்ரேஷ்டரான அண்ணனுடைய ஸ்வப்நத்தில்‌ எம்பெருமானார்‌ திரு மேனியாக ஸேவை ஸாதித்துப்‌ பரம க்ருபை யுடையராய்‌’ ஆதிசேஷனும்‌ நாமே, மா முநிகளும்‌ நாமே நீர்‌ நம்மை ஆஸ்ரயியும்‌” என்று அருளிச் செய்தாரோ அவரை அடியேன்‌ மனதில்‌ த்யானம்‌ செய்கிறேன்‌. பாப கார்யத்தில்‌ மிகவும்‌ ஊன்றிய அடியேன்‌ ஆசார்ய ஸ்ரேஷ்டராள தேவரீரை எப்படி ஆஸ்ரயிப்பேன்‌ என்று நமாகக்‌ கூறுகிற அவ் வண்ணனைப்‌ பார்த்து ஒ அண்ணனே! முதலியாண்டானுக்காக உம்முடைய ஸர்வாபாரதங்களையும்‌ பொறுத்துக்‌ கொள்ளுகிறோம்‌” என்று அருளிச் செய்யும்‌ அந்த ஜீயரை ஸ்தோத்ரம்‌ செய்கிறேன்‌- என்று பெரியோர்கள்‌ அநுஸத்தித்தார்கள்‌. அண்ணன்‌ தம்பிமார்களைக்‌ கூட்டிக்‌ கொண்டு “அத்யமே ஸபலம்‌ .ஐந்ம ஸுப்ர பாதாச மே நிமா” (விஷ்ணு 5) 7-3) இன்று என்‌ பிறவி பயன்‌ பெற்றது எனக்கு நேற்றிரவு இன்று நல்ல விடிவாயிற்று-என்று சொல்லிக்‌ கொண்டு புறப்பட்டு ஆச்சியாரருகே சென்று தண்டனிட்டு அவர்‌ பயப்படாத படிக்கு முந்துற ஸ்வப்ந வ்ருத்தாந்தத்தை யருளிச் செய்ய, ஆய்ச்சியார்‌ தமக்கு ஜீயர்‌ ஸம்பந்த முண்டான படியையும்‌ ‘அதற்கு மூல பூதமான ஜீயருடைய பாதுகா தீர்த்த வைபவத்தையும்‌ தம்முடைய திருத் தமப்பனாரான அப்பாவுக்கு ஜீயர்‌ நீராடி யருள அந்த தீர்த்தத்தலே அவகாஹித்ததால்‌ வந்த ஜ்ஞாநாதிக்யத்தையும்‌ ஆச்சியார்‌ முகத்தாலே கேட்டருளி அத்யந்த ஹ்ருஷ்டராய்ப்‌ புறப்பட்டு சிங்கரையரைக் கண்டு உகந்து அவருக்கு. எல்லாவற்றையு மருளிச்‌ செய்து கொண்டு திருக் காவேரிக்‌ கெழுந்தருளி நீராடி நித்ய கர்மாநுஷ்டாநங்களாகிப்‌ புறப்‌ பட்டருளி;

அண்ணன்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்க ஒருப்பட்டது
சுப ஸூசகங்களா யிருக்கிற நிமித்தங்களைச்‌ செய்து கொண்டு
ததா கதாம் தாம்‌ வ்யதிதாம நிந்திதாம்‌ வ்யபேத ஹர்ஷாம்‌ பரிதீந மாநஸாம்‌ |
ஸூபாந் நிமித்தாநி ஸூபாநி பேஜிரே நரம்‌ ஸ்ரியா ஜுஷ்ட மிவோப ஜீவிந:

சொல்ல முடியாத துன்பமுடையவரும்‌, இனி மேல்‌ தான்‌ அதிகமான துன்பங்கள்‌ நேரப் போகின்றன வென்று நினைத்தவளும்‌ குற்றமற்றவளும்‌, சிறிதும்‌ மகிழ்ச்சி யில்லாதவளும்‌, அறவே மனமழியப்‌ பெற்றவளுமான அந்த ஸீதாப் பிராட்டியை, யாசகர்கள்‌ பணமுள்ளவனை அடைந்து ஸத்தை பெறுமா போலே சில சுப ஸுசனைகளும்‌ அடைந்து ஸத்தை பெற்றன-என்கிறபடியே போய்‌ திருமாளிகையிலே யெழுந்தருளி ஆச்சியாரைக் கண்டு
ரங்கேஸ கைங்கர் ஸு தீர்த்த தேவ ராஜார்ய ஜ அம்பாகலு பாக்ய ஸீலா |
ரம்யோ பயந்து: பத ஸம்ஸ்ரயேணயா யஸ்மத் குலம்‌ பாவந மாத நோதி ॥

யாவருளாருத்தி மாமுனிகளின்‌ திருவடிகளை ஆஸ்ரயித்து நமது

குலத்தைப்‌ பாவனமாக ஆக்கினாளோ, திருவரங்கனுக்குத்‌ தொண்‌டரான திருமஞ்சனம்‌ தேவராஜர்‌ என்னும்‌ அப்பாவின்‌ புதல்வியான அந்த ஆச்சியார்‌ பாக்யசாலிநி யல்லவா? என்‌று அநுஸந்‌தித்தருளி “உம்முடைய திருக் கைகளாலே ‘ ப்ரஸாதப்‌பட்ட்ன்றோ இப்பேறு ஸித்தத்தது” என்று உகந்தருளி, உத்தம நம்பியை யழைத்து வரப்‌ போக விட்டு, தாமும்‌ தம்முடைய தாயாதரான கந்தாடை அய்யங்கார்கள்‌ எல்லாருக்கும்‌ இச் செய்தியை அருளிச்‌ செய்து அவர்களுக்கு ஜீயர்‌ ஸம்பந்த முண்டாக்கும்படி திருவுள்ளமாய்‌ அவர்களுடைய அகங்களிலே எழுந்தருள,ஆச்சியார்‌ குமாரரான அண்ணாவும்‌ -தாசரதி அப்பையும்‌, தந்தையரான எம்பாவும்‌ அண்ணன்‌ திருவடிசுளிலே தீர்க்க ப்ரணாமத்துடனே ‘தேவரீருக்கு ஸாதித்த ஸ்வப்நமே அடியோங்களுக்‌கும்‌” என்று விண்ணப்பஞ்செய்ய, அவர்களையுங்‌ கூட்டிக் கொண்டு லக்ஷ்மணா சாரியரென்று ப்ரஸித்தரா யிருந்தவருடைய பெளத்ரராய் இருக்கிற எம்பா வண்டையிலே எழுந்தருளி ஆஸ்ரயித்து (இந்த எம்பா என்னும்‌ ஸ்வாமி, அப்போது திருமண்‌ காப்பு வேளையா யிருக்க கோபத்தில்‌ அதையும்‌ பூர்த்தியாக அணியாமல்‌ உள்ளே எழுந்தருளி விட்டபடியினால்‌ ”ஒத்தைக்‌ கொம்பு எம்பா” என்று திருநாமம்‌ பெற்றதாக கர்ண பரம்பரைச்‌ செய்தி: பிறகு இவர்‌ ஸ்ரீரங்கத்திலிருந்து திருமழிசை எழுந்தருளி விட்டதாகச்‌ சொல்லப்‌ படுகிறது. )இச் செய்தியை அருளிச் செய்ய அவர்‌ குபிதராய்‌ ‘*அபிஜந வித்யா வ்ருத்தநங்களுடைய மஹா குலத்திகே பிறந்து இப்படி யானாயோ?’? என்று நாநா பெளருஷ உக்திகளைப்‌ பண்ணி விட, அவருக்கு புத்ர கோடிகளாய்ப்‌ பெரிய ஆயி திரு வம்சத்தராயுள்ள அப்பா முதலானார்‌ பதின்மர்‌ க்ருஹங்‌ளிலு மெழுந்தருளி ஹிதமருளிச்‌ செய்ய, அவர்களுக்கு அநபிதமாய்த்‌ தோன்றி பரிஹரிக்க, திருவுள்ளத்தில்‌ குறையோடே புறப்பட்டருளித்‌ தம்முடைய திரு வம்சஸ்த்தராய்‌ தமக்கு ப்ராத்ருரு கோடிகளா யுள்ளவர்கள்‌ திரு மாளிகைகளுக்கும்‌ புத்ர கோடிகளுடைய இருபது திருமாளிகைகளுக்கும்‌ எழுந்தருள, அவர்கள்‌ அதி ப்ரவணராய்‌ இருந்து கொண்டு தண்டன்‌ ஸமர்ப்பித்து அண்ணர் அருளிச்‌ செய்த ஹிதங்களை யெல்லாங் கேட்டு, தங்கள்‌ தங்களுக்‌குண்டான ஸ்வப்நங்களையும்‌ உப ச்ருதிகளையும்‌ சகுநங்களையும்‌ அழகிய மணவாள மா முனியினுடைய வைபவங்களையுஞ்‌ சொல்லிக்‌ கொண்டு ஆஸ்ரயணத்துக்கு த்வரிக்க, தமக்கு ப்ராத்ரு கோடிகளா யுள்ளவர்களையும்‌ புத்‌ர கோடிகளா யுள்ளவர்களையும்‌ தங்கள்‌ தங்கள்‌ பார்யாதிகளையுங்‌ கூட்டிக் கொண்டு உபஹார புரஸ்ஸரமாக மடத்துக்குப்‌ புறப்படும்படி நியமித்து,

தம்முடைய திருமாளிகையிலே திருத் தாயார்‌ திருத் தமப்பனார்‌ முதலானவர்களையும்‌ ;விட்டு குரு குல வாஸமாக தாரக போஷக போக்யங்களெல்லாம்‌ அண்ணன்‌ திருவடிகளே யென்றிருக்கிற திருவாழியாழ்வார்‌ பிள்ளையையும்‌, சுத்த ஸத்வம்‌ அண்ணனையும்‌,திருத் தம்பிமாரையும்‌ மற்றும்‌ பெரியோர்களையும்‌ அழைத்து வைத்துக் கொண்டு சுத்த ஸத்வ மண்ணன்‌ பாக்யாதிசயத்தாலே ஸ்வத ஏவே மிகவும்‌ பாகவத ப்ராவண்ய முடையராய்‌ ஜீயருடைய திநசர்யையை அடிக்கடி ஆராய்ந்து கொண்டு அதி ப்ரீதராய்‌ அண்ணன்‌ திருவுள்ளம்‌ சிறிது கலங்கினாலும்‌ –குரும்‌ ரஹஸி போதயேத்‌” என்கிற படியே திருவடிகளுக்கு ஹித பராய்‌ ஜீயரிடத்‌திலே ப்ரீதி வரும்படி யருளிச்‌ செய்து கொண்டு போருகிறவரா யிருப்பார்‌; அத்தைத்‌ திரு வுள்ளத்திலே வைத்து அண்ணன்‌ அருளிச்‌ செய்தபடி: இவருக்‌கு சுத்த ஸத்வம்‌ என்கிற திருநாமம்‌ யதார்த்தமாயிற்று; நமக்குப்‌ போர நல் வார்த்தை சொல்லிப்‌ போருவர்‌, இவருடைய ஹ்ருதயாநு ஸாரியாய்‌ யாவத் கார்யமும்‌ கடித்தது; இனி ஒரு குறையுமில்லை” என்றருளிச்‌ செய்து கொண்டு தம்முடையவர்களும்‌ மற்றக்‌ கந்தாடை அய்யங்கார்‌களும்‌ அவரைக்‌ கடாஷித்துக்‌ கொண்டிருக்க-

அண்ணன்‌ ஸ்வ ஸம்பந்திகளுடன்‌ ஜீயர்‌ மடத்துக்‌ கெழுந்தருளுதல்‌
அவர்களில்‌ சிலரை எம்பா மாறுபடுத்தி விட, சென்று அண்ணனுக்கு இச் செய்தியை அறிவிக்க, மிகவும்‌ கோபித்தருளி-அவர்களை விடும்‌’ என்று மற்றவர்களை யெல்லாம்‌ கூட்டிக் கொண்டு ஜீயர்‌ ஸந்நதிக் கெழுத்தருளுவதாக ஆச்சியாரை யழைத்து ஸமயமறிந்து திருவுள்ளத்தில்‌ படுத்தும்படிக்கு அனுப்பி யருள அவரும்‌ சென்று திருமலை யாழ்வாரில்‌ ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்ட்டியிலே ஜீயரெழுந்தருளி யிருக்கிறபடியினாலே கிட்டி விண்ணப்பஞ்‌ செய்ய ஸங்கோசப்பட்டு ஒரு ஸாத்விக ஸ்ரீவைஷ்ணவரை யழைத்து “ஸ்வாமியை உள்ளே யெழுந்தருளும்படி ஏகாந்தமாக திருச் செவியிலே லிண்ணப்பஞ் செய்யும்‌” என்ன அவர்‌ ,”ஏதுக்கு”?என்ன, அண்ணன்‌ முதலான கந்தாடை அய்யங்கார்‌களெல்‌லாருங் கூடி எழுந்தருளுகிறார்கள்‌” என்று ஆச்சியார்‌ உள்ளே சென்றார்‌-

அசட்டாச்சான்‌-
அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌, ஆச்சியார்‌ சொன்னதை அந்யதாவாக க்ரஹித்து ஓடிச் சென்று, ‘ஸ்வாமீ! சீக்கிரமாக எழுந்தருள। கந்தாடை அய்யங்கார்கள்‌ கூடி வருகிறார்களாம்‌’, என்ன-ஜீயர்‌ துணுக்கென்று எழுந்திருந்து புறக்கடைக்கு எழுந்தருள உள்ளே எழுத்தருளக் காணாமையாலே ஆச்சியார்‌ அந்த ஸ்ரீ வைஷ்ணவர்‌ என்ன விண்ணப்பஞ்‌ செய்தாரோ வென்று பயப்பட்டு, சோபந வார்த்தையை விண்ணப்பஞ்‌ செய்ய வேணுமென்று புறக்கடையில்‌ புகுவதற்கு ஸமயமாகக் காணாமையாலே, புறம்பே ஒளிக்க–அண்ணன்‌ முதலானார்‌ பெருங்கூட்டமாகத்‌ திருமுன் காணிக்கைகளும்‌ பலங்களும்‌ முன்னே பிடித்துக் கொண்டு மடத்து வாசலிலே எழுந்தருளி வானமாலை ஜீயர்‌ முதலானவர்களை புரஸ்கரித்தருளி அவர்களுடனே அண்ணன்‌ அதி விநீதராய்‌ ‘ஜீயர்‌ திருவடிகளே ப்ராப்ய ப்ராபகமாக வந்தடைந்தோம்‌; தேவரீர்‌ அங்கீகரிப்பித்தருள வேண்டும்‌:’ என்ன, வானமாமலை ராமாநுஜ ஜீயர்‌ இது கேட்டு அதி ப்ரிதராய்‌ ஸ்தப்தராயிருந்து பிற்பாடு ஸந்நிதிக் கெழுந்‌தருள; அதற்குள்ளே ஆய்ச்சியார்‌ அதி த்வரையுடனே ஸமயமானவாறே ஜீயர்‌ திருவடிகளிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து, இற்றைக்கு சோபநம்‌; அண்ணன்‌ முதலானாரெல்லமும்‌ திரளாகத்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க எழுந்தருளுகிறார்கள்‌” என்ன, அவ்வளவிலே வானமாமலை ராமாஜஜீயரு மெழுந்தளி ஹர்‌ஷ பரவசராய்‌ விண்ணப்பஞ்‌ செய்ய ஜீயர்‌ கேட்டு உகந்து, இவற்றிகெல்‌லாம்‌ மூல பூதை ஆச்சியாரன்றோ!’ என்று திருவுள்ளம் பற்றி,திருமலை யாழ்வாரிலே வந்து விண்ணப்பஞ்‌ செய்த ஸ்ரீவைஷ்ணவரை யழைத்தருளி உம்முடைய பேரேது?” என்று விநோதமாகக் கேட்டருள, அவரும்‌ “அடியேன்‌ ராமாநுஜ தாஸன்‌” என்ன, அப்படியன்று, அசட்டாச்சான்‌- என்று அவரைப்‌ பரிஹஸித்து திருவுள்ளத்தில்‌ உகப்போடே

அண்ணன்‌ ஐியரை ஸேவித்தல்‌
வித்யா விமுக்தி ஜநநீ விநயாதிகத்வ மாசார ஸம்பதநுவேல விகாஹஸீலம்‌
ஸ்ரீ லஷ்மணார்ய கருணா விஷயீ க்ருதாநாம்‌ சித்ரம்‌ ந தாசரதிவம்ஸ ஸமுத்பவாநாம்‌

மோக்ஷத்துக்கு உதவக்‌ கூடிய ஜ்ஜாநமும்‌ அதிசயிச்கத் தக்க விநயமும்‌, அநுஷ்டானச்‌ செல்வமும்‌ வேளைக்கு வேளை வளரும்‌ சீலமும்‌ எம்பெருமானார்‌ கருணைக்கு இலக்கான ஸ்ரீமுதலியாண்‌டான்‌ திரு வம்சத்தினருக்கு வாய்த்திருப்பதில்‌ வியப்பில்லை] என்று அருளிச்‌ செய்து (இந்த ஸ்லோகத்தை மாமுனிகள்‌ வேடலப்பை விஷயமாக அருளிச்‌ செய்ததாகவும்‌ கூறுவர்‌, வேடலப்பை விஷயம்‌ பின்னர்‌ வரும்‌, ௮ங்கு இது மிகப்‌ பொருந்தும்‌. ) புறப்பட்டருளி மடத்து வாசலிலே அவர்களெல்‌லாரையுங்‌ கண்டு ஸ்ரீ ராமாநுஜ யோகீந்த்ர கருணா பரிப்ரும்ஹிதாம்‌ |
ஸ்ரேயஸீம் அநகாம்‌ வந்தே ஸ்ரீமத் வாதூல ஸந்ததிம்‌ ॥

ஸ்ரீராமாநுஜர்‌ என்னும்‌ யோகியர்‌ தலைவர்‌ கருணையால் மல்கியதும்‌ சிறந்ததும்‌ குற்றமற்றதுமான ஸ்ரீமத் வாதூல குலக்‌ கொடி வழியை வணங்குகிறேன்‌] என்றநுஸந்தித்தருள, அவர்களெல்‌லாரும்‌ திருவடிகளிலே தீர்க்க ப்‌ரணாமம்‌ பண்ணி, ‘ந கர்மணா ந ப்ரஜியா தநேந:’வேதாஹமேதம்‌’ என்கிற பஞ்சாதிகளை அநுஸந்தித்து, உபஹாரங்களை ஸமர்ப்பிக்க, அங்கீகரித்தருளி,உள்ளே எழுந்தருளி திருவோலக்கமாக எழுந்தருளி யிருந்து
பொலிக பொலிக, என்கிற திருவாய்‌ மொழிக்கும்‌, திருப் பல்‌லாண்டுக்கும்‌ ஸங்க்ரஹமாக அர்த்தோபந்யாஸம்‌ செய்தருளி இப்படி ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தி நித்யமாய்ச் செல்லவும்‌ எல்லாரும்‌ மங்களாசாஸந பரராகவும்‌ ஆசீர்வதித்தருளி எழுந்தருளி யிருக்க;
அண்ணன்‌ வானமாமலை ஜீயருடனே ஸமாஸ்ரயணத்துக்கு த்வரித்‌தருள, அழகிய மணவாள மாமுனியும்‌ எழுந்திருந்து அப்பாலே ரஹஸ்ய ஸ்தலத்திலே எழுந்தருளி யிருந்து வானமாமலை ஜீயரைக்‌ கொண்டு அண்ணனை அழைப்பித்து, ‘தேவரீர்‌ மஹா குல ப்ரஸூதரும்‌ எல்லாருக்கும்‌ குருகுலமன்றோ! இப்படி எதுக்கு?’! என்ன;
அப்படி யொன்றும்‌ அருளிச்‌ செய்ய வேண்டா’! என்று தாம்‌ முன்‌ விருந்த இருப்புக்கு ஷாபணம்‌ பண்ணிக்‌ கொண்டு” ஸ்வப்ந வ்ருத்‌தாந்தத்தை முதலிலிருந்து தப்பாமல்‌ விண்ணப்பஞ்‌ செய்யக்‌ கேட்‌டருளி, ”ஈயானுடைய திருவம்சஸ்த்தராய்‌ அநுகூலித்தவர்‌ சிலருண்டே ; அவர்களுக்கும்‌ வேறே சில பாக்யாதிகர்களுக்கும்‌ பெருமாள்‌ இரங்கி ஸ்வப்நாதிகளாலே தேவரீர்‌ நியமனத்திலே கூட்டுகிறார்‌. அவர்களையுங்‌ கூட்டிக்‌ கொண்டு இற்றைக்கு மூன்று நாள்‌ கழித்து நாலாம்‌ நாள்‌ தேவரீர்‌ திருவுள்ள ப்ரகாரத்திற்கு எல்லோருக்கும்‌ ஸமாஸ்ரயணமாகிறது” என்று நிர்ணயித் தருளிப்‌ புறப்‌பட்டுத்‌ திருவோலக்கத்திலே யெழுந்தருளின வநந்தரம்‌ சாத்துப்‌ப்டி அடைக்காயமுது விநியோகமாய்‌ எல்லாரும்‌ தம் தம்‌ திருமாளிகைகளுக் கெழுந்தருளினார்கள்‌.

மீண்டும்‌ பெருமாள்‌ சிலரைத் திருத்துவதாகத்‌ திருவுள்ளம் பற்றி
புநஸ் ஸ்வப்நா பதேஸேந தேஸே தேஸே நிரங்குஸ . |
அயமர்ச்சா வதாரத்வ ஸமாதி மவதீரயத்‌
அத்ய மர்த்யந்‌ ததே தஸ்ய தத்வ மாத்யந்திகம்‌ ஹிதம்‌ |-
அஸங்குசித மாசக்யெள புஜங்க ஸயந: புமாந்‌ ॥

அரவ்ணையில்‌ துயிலும்‌ ப்ரம புருஷன்‌ மறுபடியும்‌ ஓவ்வோரிடத்திலும்‌, ஸ்வப்ந மென்கிற வ்யாஜத்தினால்‌, தன்னைத்‌ தடுப்பார்‌ யாருமில்லாமையாலே-அர்ச்சாவதாரத்வத்தின்‌ மெய்ப்பாட்டினை- பேசாமலிருக்கும்‌ ஸ்வபாவத்தை உதறித் தள்ளி விட்டு, தேவர்களையும்‌ விஞ்சிய-இம் மாமுனிகளுடைய உண்மைத்‌ தன்மையையும்‌ மோக்ஷத்திற்கு அந்திமோபாய மாயிருக்கும்‌ தன்மையையும்‌ விவரமாக அருளிச்‌ செய்தான்‌–என்று இத்யாதிகளாலே ”குருஸ்ச ஸ்வப்ந த்ருஷடஸ்ச” என்கிறபடியே அவர்கள்‌ ஸ்வப்நத்திலே அர்ச்சாவதார ரூபியாய்‌ வந்து நாமே இப்படி ஆசார்ய ரூபேண அவதரித்தோம்‌; நீங்களுமப்படியே ஆசார்யம்மாம்‌ விஜாநீயாத்‌ பவ பந்த விமோசநம்‌”‘ -ஸம்ஸார பந்தத்தை விடுவிக்கும்‌ நாமே மாமுனிகளென்று அறியக் கடவர்கள்‌- என்கிறபடியே விசேஷ:ப்ரதிபத்தி பண்ணி ஆஸ்ரயியுங்கோள்‌” என்றருளிச் செய்ய;

அநந்தரம்‌:
அண்ணன் ஜீயரிடம்‌ ஸமாஸ்ரயணம் பெற்றது
ராமாநுஜ பதாம் போஜ ஸெளகந்த்ய நித யோபியே |
அஸாதாரண மெளந்நத்ய மவதூய நிஜம்தியா
உத்தேஜ யந்தஸ்‌ ஸ்வாத்மாநம்‌ தத்ஜேஸ் ஸம்பதா ஸதா |
ஸ்வேஷா மதிசயம்‌ மத்வா தத்வேந ஸரணம்‌ யயு: ॥

எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளில்‌ நறு மணத்தையே நிதியாகப் பெற்றவர்களும்‌ தம்முடையதான பிறர்க்கில்லாத உயர்த்தியை புத்தி பூர்வகமாக உதறி விட்டுத்‌ தம்மை அதிகமாக ப்ரகாசிக்கும்படி செய்ய நினைத்தவர்களாய்‌, அம் மா முனிகளின்‌ தேஜஸ் ஸம்ருத்தியினால்‌ தமக்குப்‌ பெருமை உண்டாகுமென்று எண்ணி ௮ம் மா முனிகளைப்‌ பூர்ணமாகச்‌ சரணமடைத்தனர்‌-என்றபடியே ராமா நுஜ பரிக்ருஹீதராய்‌ அபிஜந வித்யாவ்ருத்தங்‌களா லுயர்ந்திருக்கிற கந்தாடை அண்ணன்‌ முதலான ஆசார்ய புருஷர்கள்‌ எல்லாரும்‌ தந்தம்‌ உயர்த்திகளைப்‌ பாராமல்‌ ஜீயர்‌ திருவடி ஸம்பந்தமே தங்களுக்கு ஸர்வாதிசயங்களுமாக வெண்ணி ஜீயர்‌ திருவடிகளை சரணமாக வந்தடைந்திருக்க அண்ணன்‌ ஜீயர்‌ திரு முன்பே சென்று, ‘தேவரீர்‌ அடியோங்களை க்ருபை பண்ணுகைக்கு இட்டிருந்த நாளும்‌ வந்தது; எம்பா முதனாராலே ப்ரதிபாதிக்கப்பட்ட நம்முடையவர்களுக்கு பெருமாள்‌ ஸ்வப்நாதி வ்யாஜத்தாலே திருந்தத் திருந்தி –தேவரீர்‌ திருவடிகளே ப்ராப்யமாக வந்து இந்த கோஷ்டியிலே கூடி யிருக்கிறார்கள்‌. எல்லாரையும்‌ க்ருபை பண்ணி யருளத்‌ திருவுள்ளமாக வேணும்‌” என்று விண்ணபஞ் செய்ய; ஜீயரும்‌ வானமாமலை ஜீயரை அழைத்து அதற்கு வேண்டியவைகளை ஸந்நத்தமாக்க நியமித்தருளி, தாமும்‌ திருவாராதநஞ் செய்தருளி -திருப்பணியாரமும்‌ பழவமுதும்‌ பூர்ணமாகக்‌ கண்டருளப்‌ பண்ணி, ஸந்நிதி முன்பாக எழுந்தருளி யிருந்து ஸமாச்ரயணமாக வேண்டியவர் களெல்லாரையும அழைத்து அண்டையிலே வைத்துக் கொண்டு செய்யுங் கிரிசைகளெல்லாஞ்‌ செய்தருளி, தாப புண்ட்ரஸ் ததா நாம மந்த்ரோ யாகஸ்ச பஞ்சம:” திருவிலச்சினை, திருமண்காப்பு, தாஸ்ய நாமம்‌, மந்த்‌ரோபதேஸம்‌, தேவ பூஜை என்று ஐந்து-என்கிறபடியே பஞ்ச ஸம்ஸ்‌காரங்களையும்‌ செய்தருளி பரமைகாந்த்ய மஹா பலத்தையும்‌ பூர்ணமாக்கி உகந்தருளி நெடும் போது அண்ணனை -இருந்தான்‌ கண்டு கொண்டு என்கிறபடியே கடாக்ஷித்துக்‌ கொண்டிருந்து;

அப்பாச்சியாரண்ணா வானமாமலை ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
வானமாமலை ராமநுஜ ஜீயரைக்‌ காட்டி யருளி-இவர்‌ தமக்கு ப்ராண ஸுஹருத்து, தமக்குண்டான அதிசயமெல்லாம்‌ இவர்க்கு முண்டாக வேணும்‌, முதலியாண்டான்‌ திரு வம்சத்திலே நமக்கு ஸம்பந்த முண்டானாற் போல இவர்க்கு முண்டாக வேணும்‌’ என்று அருளிச் செய்ய அண்ணன்‌, திருவுள்ளக் கருத்தறிந்து அடியேனை அங்கே ஆஸ்ரயிப்பித் தருளாதே யொழிந்ததே”’ என்று விண்ணப்பஞ் செய்ய, ‘ நமக்கு ப்ராப்தமானதை விடப் போமோ?!”என்ன, அண்ணன்‌ தம்முடைய அநுபந்திகளை ஸாபிப்ராயமாசப்‌ பின்னே கடாக்ஷித்தருள, பாவஜ்ஞராய்‌ ஆச்சியாருடை குமாரராயிருக்கிற அண்ணா எழுந்திருந்து தண்டன்‌ ஸமர்ப்பிக்க – என்ன வென்று கேட்டருள, *‘அடியேனை எங்களாண்டவன்‌ வானமாமலை ராமாநுஜ ஜீயருடைய திருவடிகளிலே ஆஸ்ரயிப்பிக்க வேணும்‌ என்ன, ஜீயரும்‌ மிகவுகந்தருளி, நம்மப்பாச்சி யாரண்ணாவோ- என்றருளிச் செய்து,(‘ஸ்ரீ தீர்த்த தேவராஜஸ்ய தநயாப் பேதி விச்ருதா. தஸ்யாஸ் தநுஜோ வரத:”‘ என்று இவர்‌ போற்றப்படுகிறார்‌.-திருமஞ்சனம்‌ அப்பா என்ற தேவராஜருடைய குமாரத்தியாய்‌ ஆச்சி என்று ப்ரஸித்தை யானவருடைய குமாரரான வரதாசாரியர்‌, ஜீயர்‌ இவருக்கிட்ட பெயர்‌ அப்பாச்சியாரண்ணா என்பது.) ‘அவரைக்‌ கையைப் பிடித்துத்‌ தம்முடைய அண்டையிலே வைத்துக் கொண்டு தாம்‌ எழுந்தருளி யிருந்த ஆஸநத்திலே வானமாமலை ஜீயரை யிருத்தித்‌ தம்முடைய திருக் கைகளிலிருந்த ஆழ்வார்களை அவர்‌ திருக் கைகளிலே ஸாதித்தருளி, இவர்க்கு ‘ஸாதியும்‌’ என்ன, அவர்‌ சற்று இறாய்க்க, “அப்படி, செய்ய வேண்டா, நமக்கு ப்ரியமானதைச்‌ செய்யும்‌” என்றருளிச்‌ செய்து ௮ண்ணாவை ப்ரீத்யதிசயத்தாலே தழுவிக் கொண்டிருந்து ஆஸ்ரயிப்பித் தருளினார்‌; உடனே அண்ணாவுடைய திருத் தம்பியாரன தாசரதி அப்பையும்‌ அங்கே ஆஸ்ரயித்தார்‌. உடனே வானமாமலை. ராமாநுஜ ஜீயர்‌ போதும்‌, இனி அடியேனை விட வேணும்‌” என்று எழுந்திருந்து தூரப் போய்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து நிற்க, “அப்படியே யாகிறது; எழுந்தருளி யிருக்க’ என்றருளிச் செய்து, தாமும் முன் போலே எழுந்தருளி யிருந்து கந்தாடை அப்பன்‌ முதலான அண்ணன்‌ ப்ராதாக்களுக்கும்‌, ப்ராத்ரு கோடிகளா யுள்ளவர்களும்‌, புத்ர கோடிகளா யுள்ளவர்களும்‌ ஸ்வ பார்யாதி வர்க்கங்களுடனே நூற்றிருபது திருநாமம்‌ மற்றும்‌ சிங்கரையர்‌ முதலான பகவத் க்ருபா பாத்ர பூதரான அநேகம்‌ பேர்களும்‌ ஆஸ்ரயித்தார்கள்‌. அந்த ஸமயத்தில்‌ கோயில்‌ பரிகரமனைத்துக்‌ கொத்தும்‌ ஸகல மங்கள வாத்யங்களுடனே பெருமாளுடைய ப்ரஸாதங்‌கள் கொண்டு வர, ஜீயர்‌ எதிர் கொண்டு ப்ரணாம புரஸ்கரமாக ஆதரித்து உள்ளே எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு போயிருக்க, அண்ணன்‌ அவர்களை யதோசிதம்‌ ஆதரித்து பஹுமாநஞ்‌ செய்தருளி, அவர்‌களுடனே ஜீயர்‌ தொடக்கமானவர்களும்‌ அன்று ஆஸ்ரயித்தவர்‌களும்‌ கோயிலிலே எழுந்தருளி எம்பெருமானார்‌, ஆழ்வார்‌ பெருமாள்‌, நாய்ச்சியார்‌, எல்லாரையும்‌ “தேவீ கோதா”-இத்யாதிப்படியே மங்களாசாஸனம் செய்தருளி மீண்டும்‌ மடத்திலே எழுந்தருளித் ததியாராதனமும்‌ மஹோத்ஸவமாக நடந்தது.
ஜகத் ரக்ஷாபரோ ஆநந்த'” என்று தோழப்பர்‌ ஸ்வப்நத்திலே பேரருளாளர்‌ அருளிச்‌ செய்த படி பலிக்கக் கண்‌டோம்‌” என்று எல்லாரும்‌ உகந்தருளினார்கள்‌.

இப்படி ஆஸ்ரயித்தவர்களெல்லாரும்‌ ஜீயருடைய அதி மானுஷமான அத்புத சரிதங்கள் எல்லாவற்றையும்‌ ஸேலித்து
சிர விரஹதஸ் சிந்தா ஸந்தாந ஜர்‌ஜ ஜர சேதஸம்‌
புஜக சயநம்‌ தேவம் பூய: ப்ரஸாத யிதும்‌ த்ருவம்‌ |
யதி குலபதி ஸ்ரீமாந் ராமாநுஜ ஸ்வய மித்யபூ
திதிதி ஸமதுஷந் ஸர்வே ஸர்வத்ர தத்ர ஸுதீ ஜநா; ॥

யதி குல நாதரான ஸ்ரீமத் ராமானுஜர்‌-தம்மை வெகு நாட்கள்‌ பிரிந்ததனால்‌ இடைவிடாமல்‌ தம்மையே நினைத்து நினைத்துத்‌ தளர்ந்த திருவுள்ளங் கொண்ட அரவணையானான ஸ்ரீரங்கநாதப்‌ பெருமாளை மறுபடியும் மகிழ்விக்கக் கருதியே போலும்‌, தாமே மணவாள மாமுனிகளாக அவதரித்‌தருளினாரென்று அங்கு எல்லா விடத்திலும்‌ உள்ள ஞானியர்‌ அனைவரும்‌ மிக மகிழ்ந்தனர்‌–என்கிறபடியே யதி புந அவதாரமாக வெண்ணித்‌ தாங்களும்‌ சிரோபாஸித ஸத் வ்ருத்தரென்னும்படி அவர்‌ திருவடிகளைப்‌ பழுக்க ஸேவித்து, அங்குத்தைக்குப்‌ பரிவராயிருந்தார்கள்‌. இப்படி ஜீயர்‌ சிஷ்ய ஸம்பத்துடனே இனிதாக வாழ்ந்தருளுகிற போது திருவாழி யாழ்வார்‌ பிள்ளையை ஸ்ரீ கோசங்களை யெல்லாம்‌ அப்போதைக்‌கப் போது சோதித்து ஸம் ரஷணம்‌ பண்ணிக் கொண்டு வரவும்‌ ஏறி யருளப்‌ பண்ண வேண்டிய ஸ்ரீ கோசங்களை லேகரிகளை யிட்டு நன்றாக ‘ஏறி யருளப் பண்ணவும்‌ தாமபேக்ஷித்த அவஸரங்களிலே அபேக்ஷிந்த ஸ்ரீகோசங்களை ஸமர்ப்பிக்கவும்‌ ஈடு முப்பத்தாறாயிரப்‌படி அர்த்தமாம்‌ படி சிறிது வ்யாக்யானங்களைக்‌ கூட்டி ப்ரதி ஏறி யருளப் பண்ணி வைக்கவும்‌ நியமிக்க, அவரும்‌ அப்படியே எல்லாவற்றையும்‌ செய்து கொண்டு போந்தார்‌.

ஆண்ட பெருமாள்‌ அண்ணனை ஆஸ்ரயித்தது
ஒரு நாள்‌ சுத்த ஸத்வம்‌ அண்ணனை யழைந்தருளி போர வுகந்‌தருளி “ஆழ்வாருக்கு ஸ்ரீ மதுர கவிகளைப் போலே நீர்‌ அண்ணனுக்கு அபிமத விஷயமாக விருக்கப்‌ பெற்றிரே; *தன்னாரியனுக்குத்‌ தானடிமை செய்வது இந் நாடு தன்னிலிருக்கும்‌ நாளன்றோ; ஸகல சுச்ரூஷைகளும்‌ பண்ணிக் கொண்டு வாழும்‌”- என்று ஆசீர்வதித்து;குமண்டூர்‌ ஆச்சான் பிள்ளை பெளத்ரராயும்‌ ஜ்ஞாநாதிகராயும்‌ ஸகல சாஸ்த்ர பாரங்கதரா யுமிருக்கற ஆண்ட பெருமாளை ஜீயர்‌ அண்ணனிடம்‌ “உம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கராய்‌ தர்சந ப்ரவர்த்தாராம்படி விநியோகித்துக்‌ கொள்ளும்‌” என்று விட, அண்ணனும்‌ அப்படியே செய்தருளினார்‌-

(வரவரமுநி ப்ருத்யர்‌” என்று நிரூபகமாம்படி திருவடிக்கு அந்தரங்கராய்‌ ஆசார்யாபிநைக நிஷ்டராயிரா நிற்க -இது கண்டு கந்தாடை அண்ணன்‌ முதலானோர்‌ இவர்‌ திருவடிகளில்‌ ஆச்ரயணோந் முகராயிருக்க, அவ்வளவிலே பெருமாளும்‌ அவர்கள்‌ ஸ்வப்நத்திலே அஸங்குசிதமாசக்யே புஜங்க ஸயந : புமாந்‌” (சேஷஸாயியான ரங்கநாதன்‌ விரிவாக அருளிச்‌ செய்தார்‌) என்கிறபடியே விசதமாக ஜீயர்‌ திருவடிகளே ஆஸ்ரயிக்கும்படி நியமித்தருள்‌, அவர்‌ திருமுகப்படியே ” ராமாநுஜ பதாம் போஜ ஸெளகந்த்ய நிதயோபியே”’ என்று தொடங்கி “ஸ்ருத்வைவ வைபவம்‌ தஸ்ய தத்வேத ஸரணம்‌ யயு.” [எவர்கள்‌ எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளின்‌ பரிமளத்தையே தமக்கு நிதியாக நினைத்திருத்தார்‌களோ அவர்களும்‌ அந்த மணவாள மாமுனிகளுடைய வைபவங்களை உள்ளபடி கேட்ட மாத்திரத்தலேயே அவரைச்‌ சரணம்‌ பற்றினார்கள்‌-என்கிறபடியே, ராமாநுஜ பரிக்ருஹீதராய்‌
அபிஜந வித்யா வ்ருத்தங்களாலும்‌ உயர்ந்திருக்குமவர்களான கந்‌தாடை அண்ணன்‌ முதலான ஆசார்ய புருஷர்களாயுள்ள அனைவர்‌களும்‌ தந்தாமுயர்த்திகளைப்‌ பாராமல்‌ இவர்‌ திருவடி ஸம்பந்தமே தங்களுக்கு தாரகமென்று அறுதியிட்டு வந்து ஜீயர்‌ திருவடிகளையே சரணமாகப்‌ பற்றி உஜ்ஜீலித்தார்கள்‌.
இப்படி ஆஸ்ரயித்தவர்களெல்லாரும்‌ ஜீயருடைய அதி மாநுஷமான அற்புத சரித்‌திரங்‌களெல்லாம்‌ கண்டு யதி புநரவதாரமாக எண்ணி, தாங்களும்‌-சிரே பாஸித ஸத் வ்ருத்தர்‌:”’ என்னும்படி அவர்‌ திருவடிகளைப் பழுக்க ஸேவித்துக்‌ கொண்டு அங்குத்தைக்கு அந்தரங்கராய்‌ இருந்தார்கள்‌– என்று மட்டுமே தெலுங்குப்பதிப்பில்‌ காண்பது, மேலே வேடலப்பை, ஹஸ்திகிரி நாதரண்ணா விஷயங்கள்‌ பேசப்பட்டு, ஜீயருக்கு பூர்வாச்ரம ஸந்ததி லிஷயம்‌ பேசப்பட்டுள்ளது, வேடலப்பை, அண்ணா பற்றியவை இப்பதிப்‌பில்‌ பின்னர்‌ வரும்‌.)

—==-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-1-

May 11, 2026

ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

(துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

(ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

(மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்–திருநக்ஷத்ரம் : சித்திரை திருவோணம்-அவதார ஸ்தலம் : காஞ்சிபுரம்-காஞ்சிபுரத்தில் அவதரித்த இவர் பரவஸ்து பட்டர்பிரான் ஜீயரின் (மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவர்) கொள்ளுப் பேரனாவார். இவருடைய திருநாமம் வரதாசார்யர் என்பதாகும். இவர் பிரபலமாக பிள்ளை லோகம் ஜீயர் என்றும் பிள்ளை லோகாசார்ய ஜீயர் என்றும் அறியப் படுகிறார்.-இவர் திருகடல்மல்லை ஸ்தலசயன பெருமாள் (மஹாபலிபுரம் – மாமல்லபுரம்) ஆலயத்தை புதுப்பித்து, கோவிலில் முறையான வழிபாடு செய்வதையும் நிலை நிறுத்தினார். இதற்காக மன்னரால் கௌரவிக்கப்பட்டு இன்றும் இவருடைய சந்ததியினர் அந்தச் சிறப்பு கௌரவத்தை கோவிலில் பெற்று வருகிறார்கள்-திருகடல்மல்லை திவ்யதேசத்தில் கி. பி. 1614 என்ற வருடத்தை பொறிக்கப்பட்ட உள்ள ஒரு தாமிரத் தட்டில், இந்த ஜீயரை யதீந்திர ப்ரவண ப்ரபாவம் ஜீயர் என்று அழைக்கப்பட்ட குறிப்பு உள்ளது (இதிலிருந்து அக்காலத்திலேயே இவர் மணவாள மாமுனிகளின் சரித்திரத்தை எழுதியவரென்று மிகவும் பிரபலமாகவும் பரவலாகவும் அறியப் பட்டார் என்பது தெளிவாகிறது-ஸ்ரீரங்கத்தில் இரண்டாவது ப்ரகாரத்தில் கி.பி. 1614 என்ற வருடம் பொறிக்கப்பட்ட கல்வெட்டில், பிள்ளை லோகம் ஜீயருடைய சிஷ்யர் ஒருவர் எம்பெருமானாரின் திருநக்ஷத்ரத்தன்று பக்தர்களுக்கு சக்கரைப்பொங்கல் விநியோகத்திற்கு 120 பொற்காசுகளை மூலதனமாக கொடுத்துள்ளார் என்ற தகவல் உள்ளது-யதீந்திர ப்ரவண ப்ரபாவத்தில் பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், திருவாய்மொழிப் பிள்ளை, மணவாள மாமுனிகள் மற்றும் சிலருடைய புகழ் மிக்க வாழ்க்கை வரலாற்றை அழகாக இவர் அருளிச் செய்துள்ளார். மாமுனிகளின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் விரிவாக கொடுத்தது மட்டுமல்லாமல் மாமுனிகளின் உபதேசங்களை இந்த கிரந்தத்தில் அழகாக கூறியுள்ளார்-

ஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |
ஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முனிம் பஜே ||-பிள்ளை லோகம் ஜீயரின் தனியன் (யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் உள்ளது)

ஸ்ரீ வைஷ்ணவ சமாசார்ய நிஷ்கர்ஷம்
ஸ்ரீ ராமாநுஜாய திவ்ய சரித்திரம் போன்ற கிரந்தங்களையும் அருளிச் செய்துள்ளார்


ஆசார்யபதம்‌ எம்பெருமானாருக்கே உரியதொன்று. அவரே அபராவதாரமாய்‌ வரவர முனியாய்‌ வந்துதித்தார்‌. நம் பெருமாள்‌ இவருக்கு எம்‌பெருமானாரிடம்‌ இருந்த ப்‌ரேமத்தின்‌ கனத்தை யிட்டு யதீந்த்ர ப்ரவணர்‌” என்று தாமருளிச்‌ செய்த ஸ்ரீசைலேச தனியனில்‌ பெயரிட்டருளினார்‌. அத் திருநாமமே இந்த வைபவ நூலுக்கும்‌ அமைந்தது. பிள்ளை லோகார்ய ஜீயர்‌ இந்த திவ்ய க்ரந்‌தத்தை அருளிச்‌ செய்யாவிடில்‌ நம்பிள்ளைக்குப்‌ பின்னர்‌ தோன்றிய ஆசாரியர்களின்‌-குறிப்பாக பெரிய ஜீயரின்‌ வைபவங்களை அறியவே முடியாது போயிருக்கும்‌. ஆகவே நாம்‌ பிள்ளை லோகார்ய்‌ ஜீயர்‌ விஷயத்தில்‌ கனத்த உபகார ஸ்ம்ருதியை அநுஸந்திக்க ப்ராப்‌தமாகிறது.

மயர்வற மதிநலம் அருளப்‌ பெற்ற ஆழ்வார்கள்‌ அவர்களுக்குப்‌ பின்‌ அவதரித்த பூர்வாசாரியர்கள்‌ வைபவங்களை நம்பிள்ளையின்‌ திருவடியான பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ ஆறாயிரப்படி குரு பரம்பரா ப்ரபாவம்‌’? என்ற கரந்தத்தில்‌ வெளியிட்‌டு அருளினார்‌.
அந்த க்ரந்தம்‌ நம்பிள்ளை வைபவத்துடன்‌ முடிவடைகிறது, அதன்‌ தொடர்ச்சியாக அமைந்துள்ளது இந்த நூல்‌ வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளை வைபவம்‌ ஈடு முப்பத்தாறாயிரப்படியின்‌ அவதாரம்‌, நம்‌
பிள்ளை நியமனத்தால்‌ அது பிராசாரமடையாம லிருந்தது, நம்‌ பிள்ளை யருளால்‌ வடக்குத்‌ தி௫ வீதிப் பிள்ளைக்கு பிள்ளை லோகாசாரியர்‌, அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌ என்ற இரு குமாரர்களின்‌ அவதாரம்‌- அவர்கள்‌ ரஹஸ்‌ய க்ரந்தங்கள்‌ அருளிச்‌ செய்தமை, பிள்ளை லோகாசாரியர்‌ நம்பெருமாள்‌ திவ்ய மங்கள விக்ரஹத்தை துலுக்கரால்‌ விளைந்த கலாபத்தில்‌ வலசையாய்‌ எழுந்தருளப்‌ பண்ணியது. ஆழ்வார்‌ திரு நகரி நம்மாழ்வார்‌ திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு ஏற்பட்ட ஆபத்து, நம்‌ பெருமாளுடன்‌ ஆழ்வார்‌ ஸமாகமம்‌, பிரிவு, இந்த விக்‌ரஹங்கள்‌ சேமமாகப்‌ பேணப்பட்ட வைபவங்கள்‌ எல்லாம்‌ இந்‌ நூலில்‌ முற்‌பகுதியில் விவரிக்கப் பட்டுள்ளன. திருவாய் மொழிப் பிள்ளை பிள்ளை லோகாசாரியர்‌ நியமனப்படி கூர குலோத்தம தாஸரால்‌ திருத்தப்பட்டது.
பெருமாள்‌ கோவிலில்‌ சேம வைப்பாயிருந்த ஈடு முப்‌பத்தாறாயிரப்‌படியை தேவப் பெருமாளுடைய நியமனத்தால் திருவாய் மொழிப்‌ பிள்ளை பெறுதல்‌, திருவாய்மொழிப்பிள்ளை ஆழ்வார்‌ திருநகரியிபல் கோயிலை புநருத்தாரணம்‌ பண்ணி வலசையாக எழுந்தருளியிருந்த
ஆழ்வார்‌ திருமேனியை எழுந்தருளப் பண்‌ணி ப்ரதிஷ்‌டிப்பித்தல்‌,மணவாள மா முனிகளின்‌ அவதாரம்‌, அவர்‌ திருவாய்மொழிப்‌பிள்ளையிடம்‌ ஆச்ரயித்தல்‌ முதலான விஷயங்கள்‌ அடைவே பேசப்‌பட்டுப்‌ பின்னர்‌ மணவாளமாமுனிகளின்‌ வைபவம்‌ பரக்கப் பேசப்‌ பட்டுள்ளது-

பூர்வாசார்யர்களைப் பற்றிய குருபரம்பரா ப்ரபாவம் போன்ற முன்னுள்ள ப்ரபந்தங்களைத்  தொடர்ந்து இந்த ப்ரபந்தம் வரும்.  பிள்ளை லோகம் ஜீயர்,  இந்த ப்ரபந்தத்தின் தொடக்கத்திலேயே மணவாள மாமுனிகளின் மேன்மையை குறித்துச் சொல்லாமல் முதலில் மணவாள மாமுனிகள் எவ்வாறு ஸத் ஸம்ப்ரதாயத்தின் (தொன்மையான பாரம்பரியக் கருத்துக்கள்) பொருட்களை கிடைக்கப் பெற்றார் என்று சொல்கிறார். பாரம்பரிய தத்துவத்தின் கொள்கைகளில் நம்பிள்ளை நஞ்சீயர் முதலானோருக்கு இருந்த ஊக்கத்தைக் காட்ட கீழ்க்கண்ட ஶ்லோகத்தை அவர் மேற்கோளாகக் காட்டுகிறார்.

ஸ்ரீவத்ஸசிஹ்ந பவதஶ் சரணாரவிந்த3 ஸேவாம்ருதைக ரசிகான் கருணாஸுபூர்ணான் |
பட்டார்யவர்ய நிகமாந்தமுனீந்த்ர லோகாகு3ர்வாதி3 தே3ஶிகவரான் ஶரணம் ப்ரபத்3யே ||

கூரத்தாழ்வானே! தேவரீருடைய திருவடித் தாமரைகளில்‌ கைங்கர்யமாகிற அமுதத்தில் மிக்க ரஸிகர்களாய்‌, கருணை மிக்கரான பட்டர்‌ நஞ்ஜீயர்‌, நம்பிள்ளை, முதலான மஹாசாரியர்களை சரணமாகப் பற்றுகிறேன்‌.

(கூரத்தாழ்வானே ! காருண்யம் நிறைந்த இதயமும் உம் திருவடித் தாமரைகளில் தொண்டு செய்வதில் உறுதியும் கொண்ட பட்டர் (கூரத்தாழ்வானின் திருக்குமாரரான பராசர பட்டர்) நஞ்சீயர் நம்பிள்ளை முதலான மஹாசார்யர்களின் திருவடிகளில் பணிகின்றேன். பிள்ளைலோகம் ஜீயர், நம்பிள்ளைக்கு பிற்பட்ட ஆசார்யர்களில், பிள்ளை லோகாசார்யரின் வ்யாக்கியானங்களை முதலில் எடுத்து கொண்டு எவ்வாறு மணவாள மாமுனிகள் பாரம்பரிய தத்துவத்தின் கொள்கைகளைப் பெற்றார் என்று நமக்குக் காட்டுகிறார். இது கீழ்க்கண்ட பாசுரம் மூலம் காட்டப்பெறுகிறது:

கோதில் உலகாசிரியன் கூரகுலோத்தம தாதர்
தீதில் திருமலையாழ்வார் செழும் குரவை மணவாளர்
ஓதரியபுகழ் திருநாவீறுடைய பிரான் தாதருடன்

போத மணவாளமுனி பொன்னடிகள் போற்றுவனே

(1) அப்பழுக்கற்ற பிள்ளை லோகாசார்யர் (2) கூரகுலோத்தமதாசர் (3) குறையொன்றும் இல்லாத திருவாய்மொழிப்பிள்ளை எனப்படும் திருமலையாழ்வார் (4) குரவை நகரில் அவதரித்த கோட்டூர் அழகிய மணவாளர் (5) போற்றத்தக்க புகழ் கொண்ட திகழக்கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாசர் (6) தாமரை ஒத்த திருவடிகள் கொண்ட மணவாள மாமுனிகள் முதலானோரின் திருவடிகளைப் பணிவோம். [ஸ்ரீவசன பூஷணம் அனுஸந்தானத்தின் முடிவில் இப்பாசுரம் சேவிக்கப்படுகிறது; மேற்சொன்ன ஆறு மஹாசார்யர்களில் கோட்டூர் அழகிய மணவாள தாசர் மணவாள மாமுனிகள் அம்மான் ஆவார்; திகழக்கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாசர் மணவாள மாமுனிகள் திருத்தகப்பனார் ஆவார்]

ஸ்ரீயபதியான ஸர்வேஸ்வரன்‌ ஸம்ஸாரி சேதநோஜ்ஜீவந காமனாய்க் கொண்டு கலி காலத்திலே பராங்குச பரகால பட்டநாதாதிகளான ஆழ்வார்களையும்‌ நாத யாமுந யதிவராதிகளான ஆசார்யர்‌களையும்‌ அவதரிப்பித்தருளி தந் முகேந லோகத்தை ரக்ஷித்தருளின படியைப்‌ பின்புள்ளாருமறிந்து உஜ்ஜீவிக்கும்படி முன்புள்ள ஆசார்யர்கள்‌ குரு பரம்பரா ப்ரபாவ ப்ரமுகங்களான ப்ரபந்தங்‌களாலே ப்ரதி பாதித்து உபகரித்தருளினார்கள்‌.

அவ்வள வன்றிக்கே விசேஷித்து அசேஷ சிதசித் வஸ்து சேஷியான அந்த ஸ்ரீய பதியினுடைய நியோகத்தாலே சேஷாவதாரமாக வவதரித்து பஹு முகமான தம்முடைய உக்த் யநுஷ்டானங்களாலே ஸர்வ சேதனரையும்‌ ரக்ஷித்துப் போந்த யதீந்த்ர ப்ரவணரான ஜீயருடைய ப்ரபாவத்தை அனைவருமறியும் படியாக அஸ்மதாசார்யருடைய ப்ரஸாதமடியாகவும்‌ கந்தாடை நாயனுடைய (கோயில் அண்ணன் ஸ்வாமிகளின் திருப்பேரனார்) ப்ரஸாதமடியாகவும்‌ அறிந்தவளவிலே ப்ரதிபாதிக்கிறது இப் பிரபந்தத்தாலே.

சத் சம்ப்ரதாயா சம்யுக்ததர் வைபவத்தை முன்புற பேசி பின்பு அவர் வைபவம் பேசுவதாக உபக்ரமிக்கிறார்-

(1) ஸ்ரீ வத் சிஹ்ந பவத சரணாரவிந்த சேவாம்ருதைக ரஸிகாந் கருணா ஸூபூர்ணாந் |
பட்டார்ய வர்ய நிகமாந்த முநீந்த்ர லோக குர்வாதி தேசிக வராந்‌ சரணம்‌ ப்ரபத்யே ॥
-என்று சுத்த ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகத்வம்‌ நஞ்ஜீயர்க்கும்‌ நம் பிள்ளைக்குமே யுள்ள தொன்றாகையாலே, அந்த நம்பிள்ளை யடியாக வந்த ஆசார்யர்களுடைய சுத்த சம்ப்ரதாய பரம்பரா அந்வயமானது இவர்க்கு வந்தவாற்றை ப்ரதிபாதிப்பதாக ப்ரதமம்‌ பிள்ள லோகாசாரியருடைய வைபவத்தை ப்ரதிபாதிக்கிறது-எங்ஙனே யெனள்னில்‌;

கோதில் உலகாசிரியன்‌ கூர குலோத்தம தாதர்‌
தீதில்‌ திருமலை யாழ்வார்‌ செழுங் குரவை மணவாளர்‌
ஒதரிய புகழ்த் திரு நாவுடைய பிரான்‌ தாத ருடன்‌
போத மணமான முனி பொன்னடிகள்‌ போற்றுவனே

என்கிறபடியே ஆழ்வாருடைய அவதார மென்னலாம் படியான வைபவத்தை யுடைய நம் பிள்ளை, ஒரு நாள்‌ நித்யப்படி கால ஷேபம்‌ நிறைவேறி மத்யாஹ்ந காலத்திலே தனியே எழுந்தருளி யிருக்க, திருவடிகள்‌ ஸம்பந்தியான வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை திருத் தாயாராயிருக்கிற அம்மி-தண்டன்‌ ஸமர்ப்பித்து நிற்க, அவளைக்‌ கடாக்ஷித்தருளி “உம்முடைய க்ருஹ யோக ஷேமங்கள் என்‌” என்று கேட்டருள; “என்ன விண்ணப்பஞ்‌ செய்யப்‌ போகிறேன்‌? ஒரு பேய்ப் பிள்ளையா யிருக்கிறதே ” என்ன,‘அதெப்படி?’ என்ன, ‘ஒரு பெண்ணை விவாஹம் செய்வித்தீரே;அந்தப்‌ பெண்‌ பெரியவளானாள்‌; ஸஹ சயன கல்யாணம்‌ பாலே பண்ணி சயிக்க விட, உடனே பிள்ளை முறையிட, ‘அதென்‌?’ என்று எல்லாரும்‌ உள்ளே புக, உடம்பெல்லாம்‌ புழுக்க நீர் சொரிய விம்மி யழுது நிற்க, “இதேது பிள்ளாய்‌?” என்று கேட்டேன்‌-
அம்மா! இதுவொரு ஆடுகிற பாம்பாயிருந்தது; பயப்பட்டேன்‌;-இன்னுமப்படியே யிருக்கிறது” என்ன, ”இதுவுமொரு புதுமையோ”வென்று பெண்ணை அப்பாலே போக விட்டேன்‌, இன்னுமொரு நாள்‌ அந்தப்‌ படியே யாச்சுது” என்று வ்யாகுலப்‌பட, பிள்ளையும்‌ சிரித்தருளி, **அதற்கு உமக்கென் ?” என்ன,
*இப்படி யருளிச்‌ செய்யுமோ? பெண்‌ வாழ வேண்டாவோ? வம்சத்துக்குப்‌ பிள்ளை ணே்டாவோ?” என்று திருவடிகளிலே விழுந்து சோகிக்க, பிள்ளையும்‌, ‘அம்மீ! எழுந்திரு: நீ சோகிக்க வேண்டா; மணாட்டுப் பெண்‌ ருது ஸ்நாதையாய்‌ வருகிற போது இது வழியாயழைத்து வா? என்று அருளிச் செய்து விட அவளும்‌ அப்படியே அழைத்து வந்து விட, திருவோலக்கத்திலே பிள்ளையும்‌ அந்தப்‌ பெண்ணைக்‌ கிட்ட வழைத்தருளி அவள்‌ வயிற்றைத்‌ தம்‌ திருக் கைகளாலே ஸ்பர்சித்து, “*நம்மைப்‌ போலிருப்பானொரு பிள்ளையைப்‌ பெறக்‌ கடவாய் ” என்று ஆஸீர்‌வாதம்‌ பண்ணி விட்டு, அற்றை ஞாயிறு பாடு வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளையை யழைத்தருளி, **உம்முடைய பயமும் தீர்ந்தது, விஹித விஷய வைராக்கியத்திற்கும் குறைவு வராது; ஆனால்‌ லோக மரியாதைக்கு நாம்‌ சொன்னதற்காக இன்றிராக்‌ கூடியிரும்‌’ என்றருளிச் செய்ய; அப்படியே கூடியிருந்த வளவில் ஆச்சியுங் கர்ப்‌பந் தரித்து லோக விலஷணமாய்‌ :’ததஸ்க த்வாதஸே மாஸேஎன்றபடியே பன்னிரண்டாம்‌ மாஸத்திலே ஐப்பசியில்‌ திருவோண நஷத்திரத்திலே பிள்ளை திருவவதரிக்க, அவருக்குப்‌ பன்னிரண்டாம்‌ நாள் நாம கரணத்திலே ”லோகாசார்யர்‌ பிள்ளை” என்று நம்பிள்ளை யுடைய திருநாமஞ் சாத்‌தி வளர்ந்து வந்து அப்த பூர்த்தி உத்ஸவத்திற்கு பெருமாளை ஸேவிப்பிக்கத் தக்கதாக நம்பிள்ளை முதலான பெரியோர்கள் எல்லோரும் மங்கள வாத்தியங்‌களுடனே திருப்பல்லக்கிலே எழுந்தருளிப் பண்ணுவித்துக்‌ கொண்டு சென்று ஸேவிக்க, நம் பெருமாளும்‌ போர வுகந்தருளி-தீர்த்தம்‌, ஸ்ரீ சடகோபன்‌, சந்தனம்‌, ஸூகந்தம்‌, திருமாலை ப்ரஸாதங்களும்‌ பட்டுச்‌ சிற்றாடையும்‌ ப்ரஸாதித்தருளி, நம்பிள்ளையை, அர்ச்சக முகேந “உம்மைப்‌ போலே யொரு பிள்ளை கொடுத்‌தீரே; இனி தம்மைப்‌ போலே யொரு பிள்ளை கொடும் ‘ என்று நியமிக்க, *’நாயன்தே நாயன்தே” என்று ஓமறைய, அப்படியே அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ திருவவதாரஞ்‌ செய்தருளினார்‌.-

(1147 நம்பிள்ளை அவதாரம்
1167-பெரியவாச்சான்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை
1205-பிள்ளை லோகாச்சார்யார் –ஐப்பசி திருவோணம்–1325— திருநாடு
1207-அழகியமணவாள நாயனார் –மார்கழி அவிட்டம் -1309-திருநாடு அலங்கரித்தார் -)

ஒருநாள்‌ நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை திருமாளிகைக்‌கெழுத்தருள, அங்குள்ளாரெல்லாரும்‌ நம்பிள்ளை திருவடிகளிலே வந்து ஸேவிக்க, அப்போது வடக்குத் திருவீதிப் பிள்ளை தேவிகள்‌
ஆர்த்ர வஸ்த்ரததுடனே தண்டனிட்டு நிற்க, நம்பிள்ளை அவளருகு நிற்கிற ஸ்த்ரீ ஜனங்களைப்‌ பார்த்து *இத்தப்‌ பெண்‌ ஆர்த்ர வஸ்த்ரத்துடனே நிற்பானென்‌?” என்ன, அவர்கள்‌. சொன்னபடி –
**தாலு நா ள்‌ தூரஸ்தையா யிருந்து இப்போது தீர்த்தமாடி வந்து தேவரீர்‌ திருவடிகளிலே ஸேவிக்கிறாள்‌’” என்ன. அது கேட்டு நம்‌ பிள்ளையும்‌ உகந்து அவளை “பெண்ணே! இங்கே வா” என்றழைத்து திருக் கையாலே அவளுதரத்தை ஸ்பர்சித்து **நம்மைப்‌ போலோரு பிள்ளையைப்‌ பெறுவாயாக” என்று திருவுள்ளம்‌ பற்றி யருளினர்‌. அத்தைக்‌ கண்டு வடக்குத் திருவீதிப் பிள்ளையும்‌-நமக்குக்குமாரனுண்டானால்‌ ஆசார்யன்‌ திருவுள்ளத்துக்கு உகப்பாம்‌’” என்றிருந்து ததநுகுணமாக *வர்த்திக்க, தத் ஸம்வத்‌ஸரத்தில்‌ வடக்குத் திருவீதிப் பிள்ளை தேவிகள்‌ கர்ப்பவதியாய்‌ததஸ்ச த்வாதசேமாஸே” என்கிறபடியே பன்னிரண்டாம்‌ மாஸத்தில்‌ க்ரோதந வருஷம்‌ ஐப்பசியில்‌ திருவோணத்தில்‌ ஒரு குமாரர்‌ திருவவதரிக்க ஸூதிகா செளச நிவ்ருத்தியான பன்னிரண்‌டாம் தாள்‌ நாம கரணத்திலே அக் குமாரருக்கு லோகாசாரியர்‌ என்று ஸ்வாசாரியரான நம்பிள்ளையின்‌ திருநாமம்‌ சாத்தி யருளினார்‌-பிள்ளையும்‌ அது கேட்டு, வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையை யழைத்து, “க்ருஷ்ணரே! நாம்‌ பெருமாளின்‌ திருநாமம்‌ சாத்துவதாக உத்தேஸித்திருக்க, நீர்‌ நம்மைக்‌ கேளாமல்‌ இப்படிச்‌ செய்யலாமா?”’ என்ன, அவரும் நடுங்கி, பயப்பட்டு, நிருத்தரராய்‌ நிற்க, அவ்வளவிலே, முதலிகளெல்லாரும்‌ “தேவரீர்‌ திருநாமம்‌ சாத்துகையிலுள்ள ஆதரத்தாலே செய்தாரித்தனை; இன்னுமொரு குமாரர்‌ உண்டாம்படி ஆஸீர்வதித் தருள வேணும்‌‘ என்று விண்ணப்பஞ்செய்ய, பிள்ளையும்‌ உகந்து, அப்படியே,-ஸத் புத்ரன்‌ இன்னுமொருவன்‌ உண்டாக”‘ என்று ஆசீர்வதித்து விட, வடக்குத்‌ திருலீதிப்‌ பிள்ளைக்கு அப்படியே பின்னையுமொரு குமாரர்‌ -திருவவதரிக்க, பிள்ளையும்‌ அதுகேட்டு ஸந்துஷ்டராய்‌, பத்துநாளும் கடத்த இரண்டாம்‌ நாள்‌ அவரை அழகிய மணவாளப்‌ பெ௫மாள்‌ நாயனார்‌” என்று நம்‌ பெருமாள் திரு நாமம் சாத்தி யருளினார்‌.

இப்படிப்பட்ட பெருமையை யுடையவருடைய அருளாலே அவதரித்தவராய்‌ ௮வதார விசேஷ மாயிருந்துள்ள பிள்ளை லோகாசாரியரும்‌, அவருடைய அருளே தாரசகமாக வளர்ந்த அவர்‌ திருத்‌ தம்பியரான அழகிய மணவாளப் பெருமான்‌ நாயனாரும்‌, தத்வ ரஹஸ்யந்‌ தொடங்கி அநேக ப்ரபந்தங்கள்‌ இட்டருளி ஸ்வரூபவர்த்தகராய்‌
தம்பியுடன்‌ தாசரதியானுனும் சங்க வண்ண
நம்பியுடன்‌ பின்னடைந்து வந்தானும்‌–பொங்கு புனல்‌
ஒங்கு முடும்பை யுலகாரியனும்‌ அறந்
தாங்கு மணவாளனுமே தான்‌

என்னும்படி ஸெளப்ராத்ரத்தை யுடையராய்‌ யெழுந்தருளி யிருக்‌கிற காலத்திலே ஸர்வஜ்ஞரான பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளிலே ஸாத்விகராயிருப்பார்‌ பலரும் ஆச்ரயித்து ஸத் ஸம்பந்‌தத்தை யுடையராய்‌ :ஸம்பந்தாத்‌ ஸ்வாத்ம லாப:””’ என்று ஆநந்த நிர்ப்பரா யிருத்தார்கள்‌.

அவர்களில்‌
கூர குலோத்தம தாஸ நாயனும்‌,
மணப் பாக்கத்து நம்பியும்‌
கொல்லி காவல தாஸரான அழகிய மணவாளப் பெருமாள்‌ பிள்ளையும்‌,
கோட்டூரிலண்ணரும்‌,
விளாஞ்சோலைப் பிள்ளையும்‌,
ஸாத்‌விகைகளில்‌ திருமலை யாழ்வார்‌ திருத் தாயார்‌ தொடக்கமான சில அம்மையார்களும்‌,

திருவடிகளிலே ஆச்ரயித்த வன்று தொடங்கி அந்தரங்க ஸேவை பண்ணிக் கொண்டு அந்தே வாஸிகளாய்‌ அகலாமலிருந்தார்கள்‌. இப்படி இவர்களாலே ஸேவ்யமனராயிருக்கிற
பிள்ளை, பின்பு தம்முடைய க்ருபையாலே இவர்களை யழைத்து அந்தரங்கமாகக்‌ திருவாய் மொழியாகிற திவ்ய ப்ரபந்தத்துக்கு ஆறாயிரப்டி, ஒன்பதினாயிரப்படி, இருபத்து நாலாயிரப்படி முப்பத்தாரறாயிரப்படி, என்கிற வியாக்கியானங்கள்‌ ப்ரவ்ருத்த மானதற்குக் காரணம்‌ இன்னபடியும்‌ இன்னபடியு மென்று அருளிச்‌ செய்தருளினார்‌ .

அதா்வது– திராவிட வேத ஸாகரமான திருவாய் மொழிக்கு நிபுணராய்‌ ‘பூர்விகரா யுள்ளவர் அனேகர்‌ ஸ்வ ஸ்வ புத்தி விஸ்தாராநுகுணமாக லக்ஷணங்களுக்கு படிமாவென்றுகந்து வ்யாக்யான மிட்டு வைத்தார்கள்‌.அவ்வளவே யன்‌றிக்கே இவற்றினுடைய ஸஹஸ்ரசாகோபநிஷத்‌ ஸமாகமத்வம்‌ ப்ரகடிதமாம்படி ஒரு ப்ரபந்தமிட்ட ருளும்படி திருக் குருகைப் பிரான்‌ பிள்னாளை எப்பெருமானார்‌
கடாக்ஷிக்க, அவரும்‌ அவதார விசேஷமென்னும்படி ஆழ்வார்‌ திருவுள்ளத்தை அடி யொற்றிக்‌ கொண்டு; ஆறாயிரப்படி- என்கிற வியாக்யானஞ்‌ செய்தருளினார்‌

இன்பு, அவரும்‌ மற்றுமுள்ள பெரியோர்களும்‌ ‘இன்னம்‌ இவ்‌ வர்த்த விசேஷங்களுங்‌ கூட்டி அனைவர்க்கும்‌ ஸூக்ரஹமாக அர்த்தமாம்படி ஒன்பதினாயிரப்படியாக ஒரு ப்ரபந்தமிட்டு
வையும்‌”! என்று பட்டருக்கு நியமித்து வைகக ; அவரும்‌ அத்தைத்‌ திரு வுள்ளத்திலே வைத்துக்‌ கொண்டு மாதவர்‌ என்னும் திரு நாமத்‌தை யுடையராய்‌, ஸகல சாஸ்த்ர வித்தமராய்‌, ஸந்யஸித்து
வேதாந்தி என்னுந்‌ திருநாமத்தை யுடையராய்‌, பின்பு பட்டர்‌ திருவடிகளிலே ஆச்ரயித்து ஸர்வஜ்ஞராம்‌ திருவடிகளுக்கு அந்தரங்‌கராயிருக்க, இவரை பட்டர்‌ *’நம்‌ ஜீயர்‌” என்று அபிமானித்துப்‌ பெருமாளைத்‌ தொழ வெழுந்தருள, பின்னும்‌ சில ஜீயர்களும்‌ ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ நிறைந்து நிற்க, பெருமாள்‌ உகந்தருளி அர்ச்சக முகேத இவரைக் கையைப்‌ பிடித்து, ‘வாரீர்‌ நஞ்ஜீயரே!’!என்று அருள் பாடிட்டருளி ”பட்டர்‌ திருவுள்ளப் படிக்கு ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானஞ் செய்யும்‌” என்று நியமித்தருள ஆறாயிரப்‌படிக்கு கனகாபிஷேக மென்னும்படி ஒன்பதினாயிரப்படி செய்‌தருளினார்‌. அன்று முதல்‌ இவருக்கு நஞ்சியர்‌ என்று இதுவே திருநாமமாயிற்று,

பின்பு பட்டருக்கு ப்ராப்ய பூமி அணித்தாக, நஞ்சீயர் சோகித்து சிந்தித்தபடி:- நாம்‌ வார்த்தக்யத்தை யடைந்தோம்‌ -ஸ்வாமி பட்டருக்குச்‌ சிறு வயஸ்ஸாகையாேலே தர்‌சந ஸ்‌திதிக்குக்‌ குறைவில்லை, உத்தரோத்தரம்‌ தழைக்கு மென்றிருந்தோம்‌; அது போய்‌ இப்படி யாவதே!!’ என்று திருமுடி மோதி பட்டர்‌ திரு முன்பே சென்று திருவடிகளைப் பிடித்துக் கொண்டு க்லேசிக்க-பட்டரும்‌ அவரைக் கிட்ட வர வழைத்தருளி :’நீர்‌ சோகிக்க வேண்டா; தர்சந ப்ரவர்த்தகனா யிருப்பானொரு பிள்ளையைப்‌ பெருவீர்‌” என்‌றருளிச் செய்யக் கேட்டு ஜீயரும்‌ ஸமாஹிதராய்‌ திருவுத்தரீயத் தலைப்பை முடிந்து கொண்டு (பட்டர்‌ திரு நாட்டைந்‌தவாறே) பட்டருடைய கைங்கர்யத்தை அதி விஜ்ரும்பணமாக நடப்பித்தருளி, பின்பு ஒன்பதினாயிரப்படியை இன்னம்‌ இருபத்தி நாலாயிரப்படி ,முப்புத்தாறாயிரப்படி வ்யாக்யானங்களுக்‌கு இடம்‌ கொடுக்கத் தக்க அர்த்த பூர்‌த்தியுடனே பட்டோலை கொண்டு நிறை வேற்றி, இத்தை தல்லவலேகத்கிலே ஏறி யருளப் பண்ணி அநேக மதமாக ப்ரவர்த்திப்பிக்கத்‌ திருவுள்ளமாய்‌ நல்ல லேகரி விசாரித்தருள:

அவ் வளலிலே -பருஷக சக்ரவர்‌த்தி திருமகன்‌ கோயில் அருகே குடி இருந்து அனவரதம் ஸத்வநிஷ்டராய்‌, பண்டித பாமர ஸாதாரணமாக எல்லாரும்‌ ஆதரிக்கும்‌ படியான வைபவத்தை யுடையராய்‌ உபாதாந பரராய் தேவ ராஜர்‌ என்று ஓருவருண்டு; அவரை யழைத்து அவருக்குபதேசித்து அவரைக் கொண்டு ஏறி யருளப்‌ பண்ணுவியும்‌* என்று ஸ்வப்நமாக; *’இது ஆழ்வாருடைய நியமனம்‌” என்று உகந்தருளி, மறு நாள்‌ -இப்படி யொருவருண்டோ?” என்று அருகு நிற்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக்‌ கேட்டருள, அவர்களும்‌ உண்டென்று உடனே தேவ ராஜரை யழைத்து வந்து விட, ப்ரதமத்திலே *ஆ முதல்வன் இவன்‌ என்று கடாஷித்தருளி -ஒரு முறியைக்‌ கொடுத்து எழுத்து எழுதிக்‌ காட்டுமென்ன, -அவரும் ‘நஞ்சீயர்‌ திருவடிகளே சரணம்‌, பட்டர்‌ திருவடிகளே சரணம்‌” என்று எழுதக் கண்டருளி யிருக்க, தேவராஜரும்‌, திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, கிருபை பண்ணி வருள வேணும்‌‘ என்று விண்ணப்பம்‌ செய்து கொள்ள; உகந்து க்ருபை பண்ணி யருளி, திருவாய்மொழியினர்த்தத்தை ஸங்க்ரஹேண ஸாதித்தருளி, பட்டோலையையும்‌ அலேகத்தையும்‌ ஸாதித்தருளி நன்றாக ஏறி யருளப் பண்ணிக் கொண்டு வாரும்‌’ என்று விடை கொடுத்தருள; அவரும்‌ அக்கரைக் கெழுந்தளுவதற்காகப்‌ புறப்பட, ஆறு பெரு வெள்ளப்பட நீஞ்ச வல்லவராகையாலே ஒரு சாலைப்‌ பிடித்துக் கொண்டு பட்டோலையும் அலேகத்தையும்‌ திருமுடியிலே கட்டிக் கொண்டு நீஞ்ச, வெள்ளம்‌ அதிகமாக, போரத் தளர்ந்து பட்டோலையும்‌ அலேகமும்‌ திருப் பரிவட்டத்துடனே (பெருக்கிலே விழுந்து விட, இவர்‌ போர கிலேஸித்து நொந்து! மெள்ள அக்கரைப்‌பட்டு, ‘ஆசார்யாபசாரம்‌ வந்ததே?’* என்று விழுந்து புரள இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ கண்டு தேற்றி இவர்‌ திரு மாளிகையிலே சேர்க்க, தேவிகளும்‌ கண்டு அநு சோகித்து இருவருமுபவாஸமாயிருக்க, ‘பெரு நாளுக்குத்‌ திருவாராதன மின்‌றிக்கே யிருக்க வொண்ணாது ”* என்று தேவிகளறிவிக்க , அப்படியா வென்று கைங்கர்யத்தை நியமித்துத்‌ தாமும்‌ நீராடி யருளித்‌ திருமண்காப்பு சாத்திக்‌ கொண்டு திருவாராதனத்துக்கு எழுந்தருளி உபக்ரமிக்க, அலஸையினாலே நித்ரைபட , அவ்வளலிலே கோயிலாழ்வாரிலே யிருக்கிற ஸ்ரீரங்கராஜர்‌ திருவாய் மலர்ந்தகுளி, *வாரிர்‌| தேவராஜரே! நீ சோகிக்க வேண்டா; ஸம்புடமேறி யருளப்‌ பண்ணும்‌;நாம் முன்‌ நிற்கிறோம்‌” என்ன, “ஸ்ரீய:பதியாய்‌’” என்று தொடங்கி, “விசேஷ கடாக்ஷம்‌ பண்ணி யருளினான்‌” என்னுமளவாக ஒரு ஸூர்ணையைப் ப்ரஸாதிக்கப்‌ பெற்றுத்‌ தெளிந்து, ஸூர்ண நெட்டுருவாயிருக்க அத்தை அப்போதே லிகித்தருளி, திருவுள்‌ளம் உகந்து பெருமாளை யமுது செய்தருளப் பண்ணித்‌ தாமும்‌ அமுது செய்தருளி ஸ்ரீகோசம் ஏறி யருளப் பண்ணத் தொடங்கி நிறைவேற்றி, ஸ்ரீ கோசத்தைக்‌ கொண்டு புறப்பட்டு ஜீயரை தெண்டன் சமர்ப்பித்து

ஸ்ரீ கோசத்தையும்‌ ஸமர்ப்பிக்க, ஜீயரும்‌ உகந்தருளி திருவுள்ளத்துக் குகப்பான பேரைக்‌ கூட்டிக்‌ கொண்டு கடாக்ஷித்‌தருள: தாம்‌ ஸந்திக்தமாக வைத்த ஒரோ விடங்களிலுள்ள வாக்யங்‌களும்‌ அர்த்தங்களும்‌ நன்றாக இசைத்திருக்கக் கண்டு எல்லாரும்‌ உகந்து தேவ ராஜரை உள்ளே யழைத்தருளி, *’இதென்ன அற்புதம்‌? இதென்ன சாதுர்யம்‌?” என்று கேட்க, அவர்‌ இஸ் ஸந்நிதியினின்றும்‌ புறப்பட்ட பிற்பாடு நடந்த செய்திகளை யெல்லாம்‌ நடந்த படியே தப்பாமல்‌ விண்ணப்பஞ் செய்யக்‌ கேட்டருளி -ஜீயரும்‌ உகந்து எழுந்திருந்து தேவ ராஜரை *நம் பிள்ளையோ! என்று கட்டிக் கொண்டு எல்லாருங்கூடி யெழுந்தருளி பெருஞ்‌ செல்வத்தைத்‌ திருவடி தொழுது நிற்க; தேவராஐருக்கு நம்பிள்னை என்று அருள் பாடிட்டு தர்சந ப்ரவர்த்தகத்வாபிஷேகம்‌ பண்ணி யருளி ‘உம்முடைய புத்தி விஸ்தார அநு குணமாகத்‌ திருவாய்‌ மொழிக்கு வ்யாக்யானமாம்படி உபந்யஸித்து நம்மிராமானுசன்‌ தரிசனச்தை வளர்த்‌துக் கொண்டு போரும்‌” என்று நியமித்து-பட்டர்‌ சரம காலத்திலே தர்சந ப்ரவர்த்தகருக்கென்று ஸாதித்‌திருந்த மோதிரத்தை நம்‌பிள்ளை திரு விரலிலே யிட அவரை யெல்லாருங்‌ கொண்டாடி ப்ரதிபத்தி பண்ணினார்கள்‌. இப்படி தர்சந ப்ரவர்த்தகராய்‌ ஜ்ஞாந பக்தி வைராக்யங்கள்‌ இட்டு மாறினாப் போலே வடிவிலே தொடை கொள்ளலாம்படி அதிசயத்‌தை யுடையராய்‌, அத்புத வ்யாக்யான வைபவராய்‌ எழுந்தருளி யிருக்கிறபடிகைக்‌ கண்டு அநேகம்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஆச்ரயித்து, நம்‌பெருமாள்‌ கோஷ்டியோ? நம்பிள்ளை கோஷ்டியோ?”’ : என்னும்படி ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தியுடனே வாழ்ந்தருளும் காலத்திலே யுண்டான அப்ரதிம வைபவங்கள்‌ அனேகமா யிருக்கும்‌.

இப்போது பெரிய வாச்சான்‌ பிள்ளைக்கு (1167-1262-95 ஸம்வத்சரங்கள் எழுந்தருளி இருந்தவர்)நம்பிள்ளை ஒன்பதினாயிரப் படியுடனே சில அர்த்த விசேஷங்களைக் கூட்டி ப்ரஸாதிக்க,அவர்‌ அன்றைக்கன்றாடம்‌ பட்டோலை கொண்டு எழுதி நிறைவேறின பின்பு எல்லாவற்றையுங்கொண்டு வந்து ஸமர்ப்பிக்க-கடாக்ஷித் தருளி உகந்தருளி நல்ல அலேகத்திலே ஏறி யருளப் பண்ணி பின்னும்‌ அநேக ஸ்ரீகோசங்களையுமுண்டாக்கி பஹு முகமாக ப்ரவர்‌த்‌திப்பிக்கும்படி நியமித்தருளி அப்படியே நடவா நிற்கச்‌ செய்தே

நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவி விட
பின் பெரியவாச்சான் பிள்ளை யதனால் -இன்பா
வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது
இருப்பத்து நாலாயிரம் –43-அந்த ஆச்சார்ய நியமனத்தைப் பற்றி–இத்தால் ஸ்வ யத்னத்தாலே செய்த ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டரையும்
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை பட்டரையும் வ்யாவர்த்திக்கிறது –

ஐயரையும்‌ (வடக்குத் திருவீதிப் பிள்ளை) சிறியானாழ்வானப்‌ பிள்ளையையும்‌ (ஈ யுண்ணி மாதவர்‌) அழைத்து ஒன்பதினாயிரப்படி வாசியுங்கோள் ‘” என்ன; பெரியவாச்சான்‌ பிள்ளையும்‌! அடியேனுங்‌கூட ஸேவித்து வருகிறேன்‌” என்ன, “ஆனால்‌ பெருக்காம்‌” என்றருளிச்‌ செய்து உகந்து ஸாதித்தருளி; அன்றைக்கன்றாடம்‌ ஸாதித்த வர்த்தத்னத ஸ்வார்த்தமாகப்‌ (பரார்த்தமாக இல்லாமல்) பட்டோலை கொண்டு ஐயர்‌-வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை- சேர்த்துக்‌ கட்டி வைக்க; ஒரு நாள்‌ நம்பிள்ளையை அமுது செய்தருள விண்ணப்பஞ் செய்ய; உடனே புறப்பட்டருளி தாமே திருவாராதனஞ் செய்கிறோமென்று முயன்ற வளவிலே பட்டோலைக் கட்டைக் காணா, ஒரு ஓலையை வாங்கி வாசித்தருளி,“இதென்னன்‌ புது?!” என்று கேட்க, ஐயர்‌, ”தேவரீர் ஸாதித்‌தருளின அர்த்தத்தை விஸ்மரியாமைக்குக்‌ குறிப்பாக இட்டு வைத்‌தேன்‌” என்று விண்ணப்பஞ் செய்ய; **ஆகில்‌ திருவாராதனம்‌ நீரே செய்யும்‌” என்று நியமித்து பட்டோலைக் கட்டை யிறக்கி நெடும்‌ போது சோதித்து, பெரியவாச்சான் பிள்ளையையும்‌ சிறியாழ்‌வான் அப் பிள்ளையையும்‌ “நீங்கள்‌ இந்த விரசைப்‌ பார்த்துக்‌ கொண்‌டிருங்கோள்‌” என்று சடக்கென வமுது செய்தருளித்‌ தாமுமங்கே யெழுந்தருளி பின்னும்‌ தேடும் போது கடாக்ஷித்தருளி, “யானைக்‌ கோலஞ் செய்தாப் போலிருக்கிறது’” என்று ஒருவர்க்கொருவர்‌ அருளிச் செய்து கொண்டு உகந்திருக்கச்‌ செய்த நம் ஐயரை யழைத்தருளி, : “நீர்‌ இப்படிச்‌ செய்ததென்‌? ஆச்சான்‌ பிள்ளை பண்ணலாமோ? நாமும்‌ பண்ணுவோமென்று ஆக்ரஹித்துச்‌ செய்தது போலே யிருக்கிறது’ என்று பிள்ளை சீறி யருள, ஐயர்‌ நடு நடுங்கி சோகித்து மோஹித்துத்‌ தெளித்து ‘ஐயா! அடியேன்‌ அப்படிச்‌ செய்திலேன்‌; விஸ்மரித்தால்‌ பார்த்துக் கொள்ளச்‌ செய்தேன்‌” என்ன, ”அதற்கு இருபத்தி நாலாயிரப் படியுண்டே,- என்ன, :’ ‘அவிவேகம்‌ வந்தது”’என்று; திருவடிகளிலே விழ, க்ஷமித்‌தோம்‌:’ என்‌றருளிச் செய்து, ‘ ‘நீர்‌ ஒரு அவதார விசேஷமென்றிருக்கிறோம் ; நாம்‌ ஜீயர்‌ ப்ரஸாதமாகச்‌ சொன்ன அர்த்தத்தில்‌ ஒரு-ச-து-போடாமல்‌ எழுதினீர்‌;(தீபா உத்பன்ன ஜ்வாலை போல் 9000 படியே 36000 படியாக விரிந்தது ) உம்முடைய ஸாமர்த்யத்தை என்னென்று சொல்லுவோம்‌?” என்று மிகவும்‌ ப்ரியப்பட்டு,மாதவருக்கு ஓர் அதிசயம்‌ வேணும்‌”! என்று “திருவுள்ளம்‌ தோன்ற நமக்கு ப்ராண ஸுஹ்ருத்தாம்‌; ஜீயருடைய பூர்வாச்ரமத்தின்‌ திருநாமத்தை யுடையராய்‌ நமக்கு- அபிமதரா யிருப்பர் ரொருவரா கையாலே அவரைக் கொண்டு இத்தை ப்ரவர்த்திப்போம்‌!? என்ன ஐயரும்‌ மிகவுமுகந்து “அப்படியே செய்தருள வேணும்‌”” என்று தீர்க்க ப்ரணாமம்‌ பண்ண, உடனே பட்டோலைக் கட்டை யெடுத்துச்‌ சிறியாழ்வானப் பிள்ளை கையிலே ப்ரஸாதித்தருனி, “இத்தை நாலைந்து அலேகத்திலே ஒரு ஊர்த்வமாம்‌ படி பண்ணி இத்தை பஹு முகமாகப்‌ ப்ரவர்த்‌திப்பியும்‌” என்றை நியமித் தருள; “அதற்கு அடியேன்‌ வல்லேனோ? அதிகாரங் கிடைக்குமோ?”என்றாற் போலே சில விண்ணபஞ் செய்ய, :’அது உமக்கு பரமோ?-ஜீயர் கடாக்ஷம்‌ முன் நிற்கும்‌ திரு நாமமுடையீரன்றோ? ஒரைதிஹ்யமுண்டு–கேளும்‌, துன்னு புகழ்க் கந்தாடைத்‌ தோழப்பர்‌ ஸ்வப்நத்‌திலே பேரருளாளப்‌ பெருமாள்‌,

ஜகத் ரஷா பரேந அநந்தோ ஜநிஷ்யத் யபரோ முநி: |
ததரஸ்ரயாஸ் ஸதா சாரா ஸாத்விகாஸ் தத்வ தர்ஸிந : ॥

உலகத்தைக்‌ காப்பாற்றுவதில்‌ ஊற்றமுடைய திருவனந்‌தாழ்வான்‌ [ராமாநுஜ முநிவராக மட்டுமன்றி] மற்றொரு முநிவராகவும்‌ அவதரிக்கப்‌ போகிறார்‌. [அப்போது] அவரை ஆச்ரயிக்குமவர்கள்‌ ஸதாசாரமும்‌ ஸத்துவ குணமும்‌ தத்துவ ஜ்ஞானமும் உடையரா யிருப்பர் –என்று அருளிச்‌ செய்திருப்பது முண்டு,-திருவனந்தாழ்வான்‌ எம்பெருமானருடைய அவதாரமானாப்‌போலே இன்னமும் ஓரு அவதாரமும் செய்யப்‌ போகிறார்‌ -அவர்‌ முப்பத்தாறாயிரப்‌ பெருக்கராய்‌ இத்தை ப்ரவர்‌த்‌திப்பிக்கப் புகுகிறார்‌ -நீர்‌ ஓராண்‌ வழியாய்‌ நடததிப் போரும்‌” என்று பட்டோலைக்‌ கட்டை ப்ரஸாதித்தருளினார்‌. அவரும்‌ அஞ்சு (5) ஸம்புடமாக ஏறி யருளப்‌ பண்ணித்‌ தம் குமாரருக்குப்‌ பிரஸாதித்தருளினார்‌.

நம்பிள்ளைக்கு இரண்டு தேவிகளுண்டாயிருக்க, மூத்த தேவிகள்‌ ஒரு நாள்‌ தளிகைக்குச்‌ செய்ய இளைய தேவிகள் ஒரு நாள்‌ தளிகைக்குச்‌ செய்ய இங்ஙனே நடந்து செல்கிற நாளில் ஒரு நாள்‌ மூத்த தேவியாரை யழைத்து, ‘*நீ நம்மை புத்தி பண்ணி யிருக்கும்படி. சொல்லிக் காண்‌” என்ன, அவளும்‌ அஞ்ஜலித்து லஜ்ஜாபயங்களநுவர்த்திக்க , வணக்க வொடுக்கமுடனே ‘தேவரிீர்‌ நம்பெருமாளுடைய அபராவதாரம்‌ அடியேனுக்கு ஆசார்யர்‌” என்றும்‌, திருவடிகளிலே பண்ணும்‌ கைங்கர்யங்கள்‌ ஸத்தா தாரகமான ஆசார்யாநுவர்த்தநம்‌ * என்றும்‌ நினைத்திருப்பன்‌” என்று விண்ணப்பஞ் செய்ய, ‘*நல்லது” என்று கேட்டு, இளைய தேவியாரை யழைத்து “நீ நம்மை நினைத்‌திருக்கும்படி யென்‌?” என்று கேட்டருள , அவளும்‌ லஜ்ஜாபயங்களுடனே ‘தேவரீர்‌ பர்த்தா,அடியேன்‌ பார்யை என்றன்றோ நினைத்திருக்கும்‌ படி என்று விண்ணப்பஞ்‌ செய்யக்‌ .கேட்டு, பிள்ளை மூத்த தேவிகளைப்‌ பெருமாள்‌ தளிகைக்கு ப்ரதி தினம்‌ செய்வதாக நியமித்து இளைய தேவியை தத் பரிசாரக க்ருத்யையாக நியோகித்து இப்படிச் செல்லுகிற வளவிலே மூத்த தேவி ருதுவாய்‌ தூரஸ்தையான போது இளைய தேவி தளிகைக்குச்‌ செய்தால்‌ எம்பெருமானைத்‌ திருவடி விளக்கி அமுது செய்வித்தருளித்‌ தமக்கபிமதராய்‌ உத்க்‌ருஷ்ட ஜந்ம ஜாதராய்‌ வேதகப் பொன் போலே யிருந்துள்ள பரம ஸத்வ நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவாக்ரகண்யர்‌ கர ஸ்பர்ஸமாக்கி அமுது செய்தருளுவர்‌. இத்தால்‌ இளைய தேவிகளுக்கு பாவ சுத்தி போராமையாலே பகவத் த்ருஷ்டி பூதமானாலும்‌ நியத ஸத் பாத கர ஸ்பர்சமும்‌ அவச்யாபேக்ஷிதமென்று கருத்து.

நம்பிள்ளைக்கு இளைய தேவிகளிடத்திலே ஒரு குமாரர்‌ திருவவதரிக்க, முதலிகள்‌ வந்து பிள்ளைக்கறிவிக்க, அருகிருந்த திருப்‌பேராச்சான்‌, ”அடியேனுக்கு ஒரு திருத் தமையனார்‌ திருவவதாரம்‌”!என்று உகந்தருளினார்‌. இத்தால்‌ ஆசார்ய புத்ரன்‌ அத்ய ஜாதனேயாகிலும்‌ பஹுமந்தவ்ய னென்று கருத்து. பிள்ளையும்‌ ஜாத கர்மம்‌ செய்து, பன்னிரண்டாம்‌ நாள்‌ நாம கரணத்திலே தூவி யம்புள்‌ என்று திரு நாமம்‌ சாத்தி யருளினார்‌.

நம்பிள்ளை பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ மடத்திலே யொரு நாள்‌ எழுந்தருளி யிருக்க, ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும, “ஆழ்வாருடைய அவஸ்தை யுண்டாய்ப் போர வேண்‌டியிரா நின்றது; ப்ராப்ய ஸித்திக்கு இப்போது ஸ்த்ர்யந்ந பாநாதிகளாலே கூடி யிருக்கிற , நாங்கள்‌ என்‌ செய்யக் கடவது?‘ என்று விண்ணப்‌பஞ் செய்ய பிள்ளையும்‌, ”இங்கு அவஸ்தை பிறந்ததே யாகிலும்‌ (பிறக்காமல் இருந்தாலும் )ஸதாசார்ய கடாக்ஷ விசேஷத்தாலே ஸ்‌தூல சரீரம்‌ கழித்து ஸூக்ஷ்ம சரீர மோசநத்துக்கும்‌ கைங்கர்ய ப்ராப்திக்கும்‌ நடுவே அவ் வவஸ்‌தையைப்‌ பிறப்பித்து எம்பெருமான்‌ காரியம்‌ செய்யும்‌” என்‌றருளிச்‌ செய்தார்‌. இதுக்கு ப்ரமாணம்‌ ‘ந கலு பாகவதா யம விஷயம்‌ கச்சந்த்’‘[பாகவதர்களால் வைஷ்ணவர்கள்‌ யமனுடைய தேசத்தை யடையார்‌ ] என்றும்‌, அவன்‌ தமர்‌ எவ் வினையராகிலும்‌ எம் கோனவன்‌ தமரே என்றொழிவதல்லால்‌ நமன்‌ தமரால்‌ ஆராயப்‌ பட்டறியார்‌ கண்டீர்‌ [முதல திகு. 53) என்னுமிதுவே யிறே. ஆகையால் இவ் வாத்மாக்களுக்கு உஜ்ஜீவனத்தில்‌ ஊன்றிப் போரும்‌ எம்‌ பெருமான்‌ ஸ்‌தூல சரீர வியோகாதந்தரத்திலே அர்ச்சிராதி பத கமந காலத்திலே ஸ்வ சரீரோபேக்ஷயைப்‌ பிறப்பித்து ஸ்ரீமாலாகாரர்க்குத்‌ தன்‌ திருவடி வழகைக் காட்டினாப் போலே இவனுக்கும்‌ வடிவழகைக் காட்டி பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளை யுண்‌டாக்கிக்‌ கைக் கொண்டருளும்‌ படி.

நம்பிள்ளை பெரிய கோயில்‌ வள்ளலாரைக் குறித்து *குலந்தரும்‌[திருமொழி 1-1-9] என்கிற பாட்டில்‌ முதற்பதத்துக்குத்‌ தாத்பர்யமருளிச்‌ செய்ய வேணும்‌ என்ன, அவரும்‌, “’முருட்டுத் திருப்பதியனான வென்னை நம்பூர்‌ குலத்துக்கு சேஷமாக்கினால்‌ குலந்தரும்‌:’ என்றருளினார்‌. அதாவது, பண்டைக் குலத்தைத்‌ தவிர்த்து தொண்டக் குலத்திலே மாசில்‌ குடியிலே ஸ்ரேஷ்ட ஜந்ம ஜாதனாய்‌ ஆசார்ய வம்ச பரம்பரைக்கு இஷ்ட விநியோகார்‌ ஹனாகை–ஸ்ரீ வைஷ்ணவோத்தம குல மென்றநுஸந்திக்க வேணு மென்‌றபடி-

*அவதாரமிருக்கும்படி யென்‌?’ என்று முதலிகள்‌ நம்பிள்ளையைக்‌ கேட்க, பிள்ளையும்‌, *மெய் வெளுத்து நாக்கு வற்றி யிருக்கும்‌’என்றருளினார்‌. “முதலிகளும்‌ “அது வென்‌?‘ என்று கேட்சு, “அதிகாரி பெறாமையாலே மெய் வெளுத்திருக்கும்‌; பெற்றாலும்‌ ப்ரயோஜநாந்தர பரராகையாலே மயிர்ப்பட்ட சோறென்று நாக்கு ‘வற்றி யிருக்கும்‌’? என்றருளினார்‌. ஆகையால்‌ ஆசார்யவானான
அநந்ய ப்ரயோஜநனா யிருக்குமதிகாரி எம் பெருமான்‌ தேடிப் பார்க்‌கிலும்‌ துர் லபனென்‌றபடி.

முதலிகளெல்லாருங் கூடி பெரிய கோயில்‌ வள்ளலாரை ஸ்ரீவைஷ்ணவர்களென்று இவர்களுக்குத்‌ திரு நாமமாகைக் கடி யென்‌?’,என்று கேட்க -ஸ்ரீ யபதி புத்ரராகையாலும்‌, ஸ்ரீ மான் பிதாவாகையாலும்‌, ஸ்ரீ மாதா வாகையாலும்‌ ஸ்ரீமானுடைய வைபவத்தை யறிகையாலும்‌ ஸ்ரீமான்‌ இவர்கள் வைபவ மறிகையாலும்‌, ஸ்ரீமத் பதத்திலே பிறக்கையாலும்‌, ஸ்ரீ புருஷகாரமாக வளர்கையாலும்‌ இவர்களுக்கு ஸ்ரீவைஷ்ணவர்களென்று நிரூபகமாய்த்து!” என்று அவரருளிச்‌ செய்தாரிறே.

நம் பிள்ளையைச்‌ சில ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ‘*ப்ரபந்நனுக்குத்‌ தஞ்சமாக விச்வஸித்திருக்குமர்த்தமேது?” என்று கேட்க பிள்ளையும்‌, “ஸகல ப்ரமாண ஸார தமமான மந்த்ர ரத்நார்த்தத்தையே
விச்வஸித்திருப்பான்‌. த்வயத்திலர்த்தத்தை விச்வஸித்திருந்‌ தானால்‌ எம்பெருமானைப் பற்றியிருக்கும்‌; ஆசார்யனைப் பற்றின ஊற்றம் உண்டாகில் ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்றி யிருக்கும்‌; இனி எம்‌பெருமானையே பற்றி யிருக்கை -தேவதாந்தர பஜந ஸமமென்று ஆசார்யன்‌ திருவடிகளையே கட்டிக் கொண்டு கிடக்க, எம்பெருமாள்‌ இவனளவிலே பிச்சேறி யிருக்கும்‌. இவன்‌ ஸ்ரீவைஷ்ணவர்களைப்‌ பற்றி யிருக்க எம்பெருமானோபாதி ஆசார்யனும்‌ இவன்‌ மேல பிச்சேறி யிருக்கும்‌. இத்தால் , தத் தேசிக ததீய (பகவத் ஆச்சார்ய பாகவத மூன்றுக்கும் இம் மூன்று பதங்கள்)சரம நிஷ்டை யுண்டாகவே அம் மூவரும்‌ இவன்‌ விஷயத்திலே ஆஸக்தராவர்சுள்‌- என்‌றருளிச் செய்தார்‌,

நம்பிள்ளை யருளிச் செய்த வார்த்தை:– ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஈச்வரனுக்கு ஆத்ம ஸமாநர்‌; ப்ராண ஸமாநர்‌; திருஷ்டி ஸமாநர்‌,பாஹு ஸமாநர்‌; ஆபரண ஸமாநர்‌; ஆயுத ஸமாநர்‌; பாத ஸமாநர்‌”
பாத ரேகா ஸமாநர்‌; பாதுகா ஸமாநர்‌; சாயா ஸமாநர்‌; ஜிஹ்வா ஸமாநர்‌,

அதெங்ஙகனே யென்னில்‌;
*ஜ்ஞாநீத்வாத்மைவ மேமதம்‌ (கீதை 7-18)பகவத் ப்ராப்தி காமனான ஜ்ஞாநி எனது ஆத்மா வென்பது என் கருத்து] என்கிற அநந்ய ப்ரயோஜந ஜ்ஞானத்தைப்‌ பற்றவும்‌-ஆத்ம ஸமாநர்‌-என்னது உன்னதாவி உன்னது என்னதாவி – –;
*மம ப்ராணா ஹி பாண்டவா: (பாரதம்‌ உத்‌, 90-32)[பாண்டவர்கள்‌ எனது ப்ராண பூதர்கள்‌ அல்லவா ] என்கிற பராபிமானத்தைப் பற்றவும்‌ -ப்ராண ஸமாநர்‌-;
*யே ப்ரபந்நா மஹாதமாநஸ்தே மே நயந ஸம்பத: [ப்ரபந்நர்களான மஹாத்மாக்கள்‌ எனக்குக்‌ கண்ணான செல்வங்கள்‌ ] என்கிற பாமர ஜநோஜ்ஜீவந கர கடாக்ஷ த்‌ருஷ்டித்வத்தைப்‌ பற்றவும்‌–திருஷ்டி ஸமாநர்‌-;
*ராமஸ்ய தக்ஷிணோ பாஹு. (ராமா , ஆ, 34-13) [ராம பிரானுடைய வலது கை போன்றவர்‌ இளைய பெருமாள்‌] என்கிற ததிச்சா கத ப்ரவர்த்தந பாஹுத்வத்தைப்‌ பற்றவும்‌)–பாஹு ஸமாநர்‌;-
சாப மாதாயா ஆத்ம விபூஷணம்‌ [தமக்கு ஆபரணமாயிருக்கிற தநுஸ்ஸை வாங்கி] என்ற ஆபரணகோட்யந்தர்‌ பாவத்தைப்‌ பற்றவும்‌–ஆபரண ஸமாநர்‌;-;
*அலர்மகள்‌ கேளவன்‌ கையாழி-இடையே இராமானுசமுநி (இரா, நூற்‌ 33) என்கிற ப்ரதிபஷ நிரஸன சீல ஸுதர்சந ஸாம்யத்தைப்‌ பற்றவும்‌-ஆயுத ஸமாநர்‌=; *ஜங்கம ஸ்ரீவிமாநாநி ஹ்ருதயாநி மநீஷிணாம்‌ [ஜ்ஞானிகளின்‌ இதயங்கள்‌ எம்பெரூமானுக்கு நடமாடும்‌ ஸ்ரீவிமானங்கள்‌ –கர்ப்ப க்ருஹங்கள்‌ ] நடையாவுடைத்‌ திருநாரணன்‌ (திருவாய்‌ 3-7-4) என்கிற கௌரவத்தைப்‌ பற்றவும்‌-பாத ஸமாநர்‌–;
ஸ்ரீ ய:பதி பதத்வந்தத்வங்களுக்கு “சடகோபன்‌”! என்கிற பாதுகா த்வத்தைப்‌ பற்றவும்‌-பாதுகா ஸமாநர்‌–;
*நிழலும் அடி தாறுமானோம்‌
(பெரிய“திரு 31) என்கிற அவிநா பாவ ப்ராதீந ஸத்தாதிமத்தையைப்‌ பற்றவும்‌–பாத ரேகா ஸமாநர்‌-சாயா ஸமாநர்‌-;
*ரஸாந்‌ பக்தஸ்ய ஜிஹ்வாயாமஸ்நாமி ஷட் ரஸங்களையும்‌ பக்தனுடைய ரஸநேந்தரியமான நாக்கிலே புஜிக்கிறேன்‌ ]என்ற ஸ்வாநுபவ ஸாதநத் வத்தைப்‌ பற்றவும்‌ -ஜிஹ்வா ஸமாநர்‌ -கண்டு தானே அருளுகிறான் -அனைத்தும் ஸ்ரீ பக்தாநாம் என்று இருப்பவன் அன்றோ-ஜிஹ்வாத் யகில அவயவ ஸமானர் களிறே ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌.

ஸ்ரீவைஷ்ணவத்வமாவது-மூன்று ப்ரகாரமாயிருக்கும்‌,-எங்ஙனே யென்னில்‌ ஸத்கார யோக்யரென்றும்‌,
ஸஹவாஸ யோக்யரென்றும்‌, ஸதாநுபவ யோக்யரென்றும்‌.

இதில்‌ ஸத்கார யோக்யராவார்‌-ரூப தாம ப்ராதாத்யர்‌, உச்சாரண ப்ராதாந்யர்‌,அபிமானப்‌ ப்ராதாந்யர்‌, ஸஹவாஸ யோக்யராவார்‌–ஜ்ஞாத ப்ராதாந்யர்‌,அனுஷ்டான ப்ராதாந்யர்‌, அங்கீகார ப்ராதாந்யர்‌,
ஸதாநுபவ யோக்யராவார்‌ – ஆர்த்தி ப்ராதாந்யர்‌, அபிநிவேச ப்ராதாந்யர்‌- அபிருசி ப்ராதாந்யர்‌.

இதில்‌ த்யாஜ்யோபாதேயத்தைத்‌ தெளிய வறியாதவர்களாய்‌ ஸம்பந்த மாத்ரமே யானவர்கள்‌ நமஸ்கார யோக்யர்‌-தெளிந்த ஜ்ஞாநிகளான ஸ ப்ரஹ்‌ம சாரிகள்‌ *போதயந்த:பரஸ்பரம்‌ (கீதை 10-9) பண்ண யோக்யர்‌, ஆசார்யனும்‌, ஸதாசார்ய ஸத்ருசரும்‌ உத்தேச்ய தயா அநுவர்த்தநீய ரென்ற படி.

(நாதம் பங்கஜநேத்ர ராம யமுநாவாஸ் தவ்ய மாலாதரான்
யோகீந்த்ரம் குருகேசசந்திரஜலதிம் கோவிந்த கூராதியௌ
பட்டார்யம் நிகமாந்தயோகி ஜகதார்சார்யௌ சக்ருஷ்ண த்வயௌ
வந்தே மாதவ பத்மநாப ஸூமன கோசல தேவாதிபான்
—திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்தது

திருவருள் மால் சேனை முதலி சடகோபன் நாத முனி -சீர் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிரார்க்கு அன்பாம் எதிராசர் கோவிந்தர் கூரேச பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடளித்தற்கு ஏய்ந்த மாதவர் பற்பநாபர் இவர் அருளாளர்
திருவடி ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே
–மா முனிகள் அருளிச் செய்தது)

இனி ஸ்ரீவைஷ்ண விஷயமாக த்ரிவித கரணங்களாலும்‌ அபராதம்‌ பண்ணாதொழிவான்‌. ப்ரஹ்ம ஹத்திக்கு சிகா யஜ்ஜோவீத தர விப்ர மாத்ரமே போருமாகையாலே பாகவதாபசாரத்துக்‌கும்‌ ரூப நாம தர வைஷ்ணவத்வ மாத்ரமே போரும்‌ -ப்ரஹ்மவிதக்‌ரேஸரை ப்ரபதந்நாதிகாரி விஷயாபாசாரம்‌ உடலும்‌ உயிரும்‌ பிரியும்‌படியாய்‌ ஸத்தாஹாநியாம்‌படி யாயுமிருக்கும்‌. *தஸ்ய ப்ரஹ்ம விதாகஸா [அந்த ப்ரஹ்ம ஜ்ஞாநியபசாரத்துக்கு] *ஸங்கே ப்ருஸம்‌ ப்ரஹ்ம விதோ வமாநாத்‌ [ப்ரஹ்ம ஜ்ஞானியை அவமதிப்பதாலே உண்டாயிற்றென்று சங்கை பண்ணுகிறேன்‌ ] என்றும்‌, *ஹந்தி ஸரோயம்ஸி ஸர்வாணி பும்ஸோ மஹ ததிக்ரம: [மஹான்களிடத்தில்‌ அபசாரமானது புருஷனுடைய ஸமஸ்த மங்களங்களையும்‌ நாசமடைவிக்கும்‌] என்றும்‌ இந்த பாகவதாபசார விஷயமாக
ஸ்ருதி ஸ்ம்ருதி தீஹாஸ புராணாதிகளிலே ப்ரமாண சதங்கள்‌ கோஷியா நின்றதிறே, *வையத் தேவரான இவர்கள்‌ பாத தூளி பட்டு இவ் வுலகம்‌ பூதமாம்‌ படி) *ஸ்ரீதரஸன் தொல்‌ புகழ் பாடி ஸவிலாஸ ஸஞ்சாரம்‌ பண்ணி வருமது கண்டு; *த்ரவந்தி தைத்யா:ப்ரணமந்தி தேவதா: [அசுரர்கள்‌ ஓடுகிறார்கள்‌, தேவர்கள்‌ வணங்குகிறார்கள்‌] என்றும்‌, *உன் தமர்க் கென்றும்‌ நமன் தமர்‌ கள்ளர்‌ போல்‌ (திருமொழி 8-10-7) என்றுஞ் சொல்லுகிறபடியே தூரே-இவர்களைக்‌ கண்ட மாத்திரத்தில்‌ க்ரூரரான அஸுர ராஷஸ யம படாதிசள்‌ காடேறி விழுந் தாடவும்‌, ஜ்ஞாநாதிகாரன தேவ ருஷி ஜாதியிலுள்ளார்‌ அஞ்ஜலித்து விரும்பி ஸேவிக்கும்‌ படியுமிறே இவர்கள்‌ வைபவமிருப்பது என்‌றருளினாரிறே

ஒருகால்‌ யதி ராஜ தாஸர்‌ பிள்ளை திருமாளிகைக்கு நம்பிள்ளை எமுந்தருளி அவருடைய ஸம்பத்தைக்‌ கண்டு உகந்தெழுந்தருளி யிருக்க ஸ்ரீபாதத்து முதலிகள்‌ ‘(இதுக்கடியென்‌?” என்று கேட்க,பிள்ளையும்‌, ‘த்ருஷ்டத்தில்‌ தனக்குண்டான ஸம்பத்தைத்‌ தனக்கே என்கை நரக ப்ராயம்‌; தனக்கும்‌ எம்பெருமானுக்கு மென்கை ஸ்வர்க்க ப்ராயம்‌; அவனுக்கும்‌ அவனடியாருக்கு மென்கை பரமபத ப்ராயம்‌” என்றருளினார்‌. ஆகையாலே தனக்குண்டான ஸம்பத்தைத்‌ ததீயருக்குமாக்கி நெய்யமரின்னடில்‌ நிச்சல்‌ பாலொடு (திரு வாய்‌ 8-8-2) என்கிற மாற்றிலி சோறிட்டுத்‌ திருமாலடியார்களைப்‌ பூசிக்கைக்கு அவ் வருகு பட்ட தொன்றுமில்லை யிறே என்று கருத்து-(கொடுக்கில் கள்வனாம் கொள்ளில் மிடியனாம் -கர்தவ்யம் இருவருக்கும் -இதனால் அது இல்லை)

இப்படி பிள்ளை *ஊரும்‌ நாடும்‌ உலகமுமெல்லாம்‌ கலி யிருள்‌ நீங்கிப்‌ பெரிய கிதயுகம்‌ பற்றிப்‌ பேரின்ப வெள்ளம்‌ பெருகும்படி எல்லாரையும்‌ திருத்தித்‌ திருமாலுக்கே யாக்கிச்‌ சிறிது காலம்‌ வாழ்ந்தருளி, திருமேனியிலே நோவு சாத்தி மிகவும்‌ அவஸந்நராய்‌ முதலிகளெல்லாரையும்‌ தண்டனிட்டு தீர்த்தங் கொண்டு, அமுது செய்யப் பண்ணி முதலிகள்‌ சேஷமும்‌ அங்கீ கரித்தருளி திருநாட்டுக்‌ கெழுந்தருளும் போது ஸ்ரீ பாதத்து முதலிகள்‌ ப்ரஹ்‌மவல்லி, சூழ்‌ விசும்பணிமுகில்‌ முதலாக ஸேவிக்க, கோயிலுக்கு நேரே நடுவில்‌ திருவீதிப் பிள்ளை பட்டர்‌ திருமடியிலே திருமுடியையும்‌ பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ திருமடியிலே திருவடிகளையும்‌ வைத்துக்‌ கண்‌ வளர்ந் தருளி நஞ்சியர்‌ திருவடிகளை த்யாநித்துக்‌ கொண்டு ப்ரஹ்‌ம ரந்த்ரத்தாலே திருநாட்டுக் கெழுத்தருள; பெரியவாச்சான்‌ பிள்ளை, நடுவில்‌ திருவிதிப் பிளளை பட்டர்‌, வடக்குத் திருவீதிப்‌ பிள்ளை, பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ முதலாக எல்லாரும்‌ கடலோசைப்‌ போலே பெரு மிடறு செய்து கூப்பிட்டுக் கொண்டு விழுந்து ஆசார்ய விரஹ அஸஹராய்‌ மோஹித்துக்‌ கிடந்து சதைர்‌ மோஹந்‌ தெளிந்து சோகாகுலராய்‌ கண்ணீர்‌ பெரு வெள்ள மிட்டுப்‌ பெருக பஹுதா ப்ரலாபித்துத்‌ தங்களிலே தேறி நின்று,பரியட்டம்‌ திருமாலை யுடனே பெருமாள்‌ பரிகர மனைத்தும்‌ வந்து ஸேவிக்க பிள்ளை குமாரர்‌ தூவியம் புள்ளைக்‌ கொண்டு ப்ரஹ்ம மேதத்தாலே ஸம்ஸ்கரித்துப்‌ பள்ளிப் படுத்தி யருளி ஸ்ரீ பாதத்து முதலிகளெல்லாரும்‌ திருமுடி விளக்குவித்துக்‌ கொள்ள;

நடுவில்‌ திருவீதிப்பிள்ளை பட்டரும்‌ திருமுடி விளக்க வைத்துக்‌ கொள்ள, அவருக்கு தேரே ப்ராதாவா யிருப்பாரொருவர்‌ (இவரே சர்வஞ்ஞா பட்டர் -வாக் விஜய பட்டர் இவரது தமையனார் -இருவரும் வேத வ்யாஸ பட்டரின் திருக் குமாரர்கள் )பட்டரைப்‌ பார்தது, திருக் கலி கன்‌றி தாஸர்‌ பரம பத ப்ராப்தி பண்ணினதுக்கு எங்கள்‌ கூர குலத்திலே பிறந்தவரொருவர்‌ தலை க்ஷவரம்‌ பண்ணுவித்துக்‌ கொண்டது அவத்யமன்றோ? கூர குலத்துக்‌கு இழுக்கன்றோ?” என்ன, பட்டரும்‌ அவரைப்‌ பார்த்து ‘ அப்படியா! ஐயோ உங்கள்‌ கூர குலத்துக்கிழுக்காய்ப்‌ பிறந்தேனே; இக்‌ குறையை நீர்‌ என்றைக்குத்‌ தீர்த்துக்‌ கொள்ளக் கடவீர்‌?’” என்று வ்யதிரேகம்‌ சொல்லிப்‌ போக விட, அவர்‌ இத்தைப்‌ பொறுக்க மாட்டாமல்‌ பெருமாள்‌ ஸன்னிதியிலே சென்று லிண்ணப்பஞ்‌ செய்ய அத்தைப்‌ பெருமாளும் கேட்டு பட்டரை யழைத்து வர விட்டு அர்ச்சக முகேந” தாமிருக்க நீரிப்படிச்‌ செய்யலாமோ?” என்ன, பட்டரும்‌, “பெரிய திருவோலக்த்திலே அடியேன்‌ செய்த முறை கேட்டைப்‌ பொறுத்தருள வேணும்‌” என்று தண்டனிட பெருமாளும்‌ ‘இதென்‌ நினைத்துச்‌ சொல்லுகிறபடி?” என்று கேட்டருள, இவரும்‌, ‘-பிள்ளையையும்‌ அடியேனையும்‌ பாராதே ஸர்வஜ்ஞரான தேவரீரிப்படிக்‌ கேட்டருளுவதே! நாயன்தே! நம்பிள்ளை திருநாட்டுக் கெழுந்தருளினால்‌ அவர்‌ திருவடிகளில் ஆச்ரயித்த நான்‌ ஆழ்வானுடைய சேஷத்வ, பாரதந்தர்யத்துக்குகத் தகுதியாக கூர குலத்திலே பிறந்த பின்‌ தாஸ்ய க்ருதயமான மோவாயும்‌ முன்கையும்‌ வபதம்‌ பண்ணுவித்துக்‌ கொள்ள வேண்டியிருக்க, அத்தைச்‌ செய்யாதே சிஷ்ய புத்ரர்களுடைய க்ருத்யமான தலை மாத்ரம்‌ ஷவரம்‌ பண்ணுவித்துக்‌ கொண்டதுக்கு தேவரீர்‌ முனிந்தருளக்‌ கூடுமோ?” என்று விண்ணப்பஞ்‌ செய்ய பெருமாளுமது கேட்டு இசைந்து ஸந்துஷ்டராய்‌ பட்டருக்கு தீர்த்தம்‌ திருமாலையுடனே பரியட்டமும்‌ ப்ரஸாதித்து உபலாளித்‌துத்‌ திருமாளிகை யேறப்‌ போக விட்டருளினார்‌. அதந்தரம்‌ பிள்ளைக்குப்‌ பெருக்கத்‌ திருவத்யயதம்‌ நடத்தி யருளினார்கள்‌.

லோகாசார்யன்‌ என்று திரு நாமம்‌ பெற்ற தன்னேற்றமும்‌-அரிய வருளிச்செயல்‌ பொருள்களறிந்துரைக்கப்‌ பெற்ற தன்னேற்றமும் – பரமபதம்‌ தம்‌ சிறுமுறிக்குச்‌ செல்லப் பெற்ற தன்னேற்‌றமும்‌ நம்பிள்ளைக்கன்றி மற்றொருவருக்கு மில்லையிறே.
இவர்‌ தனியன்‌,
வேதாந்த வேத்யாம்ருத வாரி ராஸோ : வேதார்த்த ஸாராம்ருத பூரமக்ர்யம்‌ |
ஆதாய வர்ஷந்தம் அஹம்‌ ப்ரபத்யே காருண்ய பூர்ணம்‌ கலி வைரி தாஸம்‌

[நஞ்சீயராகிய- அமுதக் கடலினிதும்‌ உயர்த்த வேதாந் தார்த்த சாரமாகிற அமுத வெள்ளத்தைக்‌ கொண்டு வர்ஷிக்குமவராய் கருணையால் நிறைந்துள்ள திருக்கலிகன்றி தாஸரை தஞ்சம் அடைகிறேன் –

நமாமி தெள மாதவ ஸிஷ்ய பாதெள யத் ஸந்நிதம்‌ ஸூக்தி மயம்‌ ப்ரவிஷ்டா: |
தத்ரைவ நித்ய ஸ்திதி மாத்ரி யந்தே வைகுண்ட ஸம்லார விமுக்த சித்தா: ॥

[யாதொரு நம்பிள்ளை யுடைய ஆழ்வாஸர் ஆசார்ய ஸ்ரீ ஸூக்திகளால் நிறைந்த ஸன்னிதியில்‌ அந்வயித்தவர்கள்‌ ஸ்ரீவைகுண்டத்திலும்‌ ஸம்ஸாரத்திலும்‌ செல்லாத மனத்தினராய்‌ அந்த ஸன்னிதி யிலேயே நிலையான இருப்பை ஆதரிக்கிறார்களோ அந்த மாதவ (நஞ்சீயர்‌) சிஷ்யரான நம்பிள்ளையின்‌ திருவடிகளை வணங்குகிறேன்‌]

வார்த்த உஞ்ச வ்ருத்த்யாபி யதீய கோஷ்ட்யாம்‌ கோஷ்ட் யந்தராணாம்‌ ப்ரதமா பவந்தி |
ஸ்ரீமத் கலி த்வம்ஸந தாஸகாம்கே தஸ்மை கஸ்‌ஸ ஒக்தி மஹார்ணவாய

[யாதொரு நம்பிள்ளையின்‌ கால க்ஷேப கோஷ்டியில்‌ பிறக்கும்‌ வார்த்தைகளில்‌ பிஷையாவது பெற்றவர்‌ (சிறிதாவது பெற்றால்‌ அது கொண்டு) இதர கோஷ்டிகளில்‌ தலைவர்களாக ஆகிறார்களோ அந்த ஸ்ரீஸூக்தி மஹார்ணவரான (ஆழ்வாராசார்ய வசனங்கள்‌ நிறைந்த பெருங்கடலான) திருக்கலிகன்றி தாஸர்‌ என்ற திருநாமமுடைய அந்த நம்பிள்ளையை வணங்குகிறேன்‌ ]

நெஞ்சத்திருந்து நிரந்தரமாக நிரயத் துய்க்கும்‌
வஞ்சக் குறும்பின்‌ வகை யறுத்தேன்‌ மாய வாதியர் தாம்‌
அஞ்சப் பிறந்தவன்‌ சீமாதவனடிக் கன்பு செய்யும்‌
தஞ்சத் தொருவன்‌ சரணாம் புயமென்‌ தலைக் கணிந்தே
-இயல்பா சாத்துமுறைப் பாடல்-

ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரைப் பார்த்து உமக்கு ஆசார்ய விஷயத்தில்‌ க்ருஜ்ஞ்தை எத்தனை நாள்‌ நடக்கும்‌?” என்று கேட்க, பட்டரும்‌ “நம்பிள்ளை திருவடிகளில்‌ உபகார ஸ்ம்ருதி அடியேனுக்கு யாவதாத்‌மபாவி (ஆத்மாவுள்ளவரை–நித்யமாக) நடக்கும்‌ என்ன, அவரும்‌, ஆசார்ய விஷயத்தில்‌ உபகார ஸ்ம்ருதி யாவதாத்மபாவியோ! யாவதாத்ம பாவியோ!!” என்று ஈடுபட்டு திருவம்ச ப்ரபாவத்தாலே தெளிந்து பட்டர் திருவடிகளிலே ஆச்ரயித்து ஜ்ஞாநாதிகராய்‌ விட்டார்–

பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வைபவம் –
அனந்தரம்‌ பிள்ளை ஸ்ரீபாதத்து முதலிகளைக்‌ கூட்டிக் கொண்டு பெரியவாச்சான் பிள்ளை தர்சதம்‌ நிர்வஹித்தருளா நிற்க, நடுவில்‌ திருவீதிப் பிள்ளை பட்டர்‌ பெரியவாச்சான்‌ பிள்ளையைப்‌ பார்த்தருளி, ”குரு பரம்பரையையும்‌ த்வயத்தையும்‌ உபதேசித்தவர்‌களோடு கேட்டவர்களோடு வாசியற ‘உத்தேச்யர்‌’ என்று ப்ரஸாதித்தீர்‌. பரம ஸாத்விகரான ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ உம்மை அநுவர்‌த்‌திக்கிறதற்கு என்‌ நினைந்திருப்பீர்‌?’” என்று கேட்டருள, ஆச்சான்‌ பிள்ளையும்‌, அடியேன்‌ அஹங்காரி யாகையலே(ஸாத்விக அஹங்காரம்) அடியேனுடைய அபிப்ராயத்தாலும்‌, ஸ்ரீவைஷ்ணவத்வம்‌ உண்டென்று நினைத்திருப்பன்‌, ஈச்வரன்‌ பெற்ற பிறவியாகையாலே ஸ்ரீவைஷ்ணவன்‌ என்று நினைத்திருக்கும்‌. (இனி இவர்கள்‌ என்‌ நினைத்‌திருக்கிறார்கள்‌?! என்று கூசிக் கொண்டிருக்கும்‌. இவர்கள்‌ என்னைக் கண்டு அநுவர்த்‌திக்கையாலே இவர்கள்‌ பக்ஷத்தாலும்‌ ஸ்ரீவைஷ்ணவத்வம்‌ உண்‌டென்றிருந்தது. ஆக, திரிவிதாபிப்ராயத்தாலும்‌ அடியேனுக்கு முப்புரி யூட்டின ஸ்ரீவைஷ்ணவத்வமுண்டென்று நினைத்திருப்பன்‌’ ”என்றருளினார்‌ ஆக, தரிவிதாபிப்ராயத்தாலும்‌ ஸ்வ வைஷ்ணவத்வம்‌ ஸித்தமாய்‌, ஸ்வ ஸ்லாக்யதா புத்தி ரஹிதமுமான புத்தி விசேஷம்‌ சொல்லப்பட்டது.

ஆச்சான் பிள்ளை கோஷ்டியிலே ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ திரள விருந்து “நாம்‌ லீலைக்கு விஷயமோ? இரக்கத்துக்கு விஷயமோ?” என்று விண்ணப்பஞ் செய்ய, ‘உடன்பட்டிருந்தோமாகில்‌ லீலைக்கு விஷயமாகிறோம்‌” என்றருளிச்‌ செய்தார்‌. [ஆச்சான்‌ பிள்ளையும்‌ -அஸ்ப்ருஷ்ட அஹங்காரரான நித்யரும்‌, நிவ்ருத்த அஹங்கரரான் முக்தரும்‌ அவன்‌ இனிமைக்கு விஷயமாகிறார்கள்‌. அஹங்கார மமகார வச்யராய்‌ இருந்து வைத்து அக் குறையுங்‌ கூட அறிய மாட்டாத ஸம்ஸாரிகள்‌ லீலைக்கு விஷயமாகிறார்கள்‌- ஸதாசார்ய ப்ரஸாதமடியான பகவத் ப்ரஸாதத்தாலே அஹங்கார மமகாரம்‌ அறிய வேணுமென்றிருக்கிற நாம்‌ (முமுஷு)௮வன்‌ இரக்கத்துக்கு விஷயமாகிறோம்‌ என்றருளிச் செய்தார்‌]. ஆக, ஸர்‌வ சேதனரைரயும்‌,சர்‌வேஸ்வரன்‌ அஹம்‌ மமதா புத்தி முக்தி விரக்தி யாஸக்தி விசேஷத்‌தாலே ஸ்வ மாதுர்ய காருண்ய லீலா விஷயமாக்கி விநியோகிக்கும் என்றபடி –

ஆச்சான்‌ பிள்ளை கோஷ்டியிலே சிலர்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌-எங்களுக்குத் தஞ்சமா யிருப்பதொரு வார்த்தை யருளிச் செய்ய வேணும்‌” என்ன, அவரும்‌, ‘*கலங்குகிறவனும்‌, கலக்குகிறதும்‌, கலங்கிக் கிடக்கிறவர்களும்‌, தெளிவிக்கறவனும்‌ தெளிகிறவனும்‌ தெளிந்திருப்பவனுமாயிறே இருப்பது. இதில்‌ கலங்குகிறவன்‌-ஜீவாத்மா; கலக்குகிறது–அசித்து; கலங்கி இருப்பர்கள்‌–ஸம்ஸாரிகள்‌; தெளிவிக்கிறான்‌–ஆசாரியன்‌; தெளிகிறான்‌ சேதனன்‌; தெளிந்திருக்கிறான்‌–ஈச்வரன்‌, ஆகையாலே ஆசார்‌யோபதேசேந தெளிந்தவன்‌ கலங்குகிற தன்னையும்‌ கலக்குகிற ப்ரக்ருதியையும்‌ கலங்கிக் கிடக்கிற ஸம்ஸாரிகளையும்‌ தஞ்சமன்‌றென்று கை விட்டு, தெளிவிக்கிற ஆசார்யனையும்‌ தெளிந்திருக்கும்‌ ஈஸ்வரனையும்‌ பற்றுகை காண்‌ இவ் வாத்மாவுக்கு ஸ்வரூபம்‌” என்‌றருளிச் செய்தாராயிற்று.

ஆச்சான்‌ பிள்ளையை ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ ”ஸ்வரூப பாரதந்தர்‌யமிருக்கும்படி. என்‌” என்று கேட்க, அவர்‌ அருளிச் செய்தபடி– *ஸ்வ சக்தி நிவ்ருத்தி பூர்வகமாக ஸர்வ சக்தியை அண்டை கொண்டு
உபாயத்தில்‌ கந்தலற்று உபேயத்தில்‌ த்வரை விஞ்சி யிருக்கை காண்‌ பாரதந்தர்ய ஜ்ஞாநம்‌’”
என்றருளினார்‌. இத்தால்‌ நிவ்ருத்தி ப்ரேரகத்தோடு ப்ரவ்ருத்தி ப்ரேரகத்தோடு வாசியற பராதீனான ‘ இவ்வதிகாரிக்கு எல்லாம்‌ பர ப்ரேரிதமா மத்தனை யிறே.

(த்ரவ்ய குண கர்மம் -கமனம் செய்யும் கிரியையுடன் கூடியவன் –தியாகம் கிரியையுடன் கூடியவனாகி இருக்கும் கர்த்தா -பரித்யஜ்யம் -கிரியை வந்தாலே கர்த்ருத்வம் வருமே -மூன்று வித த்யாயகமும் வேண்டுமே –விடுவித்து பற்றுமவனே உபாயம் -செய்விக்கிறான் உணர்வே பாரதந்தர்யம்-மாஸூச -சோகப்படவும் கூடாதே –நின்றனர் இருந்தனர் கிடந்தனர் –நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் -இத்யாதி பிரவிருத்தியும் நிவ்ருத்தியும் அவன் ப்ரவர்த்திக்கவே நடக்கும் -)

ஆச்சான்‌ பிள்ளையை ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ “ஸ்வரூபா நுரூபமான ப்ராப்யமோ? ப்ராப்யாநுபமான ஸ்வரூபமோ?”’ என்று கேட்க, அவரும்‌ ‘*முமுஷு தசையில்‌ ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யம்‌; முக்த தசையில்‌ ப்ராப்யாநுரூமாயிருக்கம்‌ ஸ்வரூபம்‌” என்றருளிச் செய்தார்‌.

(போகத்திலே தட்ட மாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும் -)

நாட்டிலிருத்து பெருமாளை ஸேவித்திருப்பார்‌ இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அந்யோந்யம்‌ விஸ்லேஷ பீருக்களாய்ப்‌ போருகிறவர்கள்‌ ஒரு கால்‌ ராக த்வேஷம்‌ கொண்டாடி, அதிலொருவர்‌ ஆச்சான் பிள்ளை ஸ்ரீபாதத் தேறச்‌ சென்று மற்றவருடைய குற்றம்‌ விண்ணப்பஞ்செய்ய; அருகிருந்த முதலிகளிலே சிலர்‌, “இப்படி சொல்லலாமோ?” என்று விண்ணப்பஞ்‌ செய்ய, ஆச்சான்‌ பிள்ளையும்‌, “அவர்கள்‌ சொல்லுகிறபடி கேளீர்‌: தண்ட தரனான யமன்‌“பரிஹர:’ (ஸ்ரீ வி.பு. 8-2-13; மதுசூதனனனடியார்களிடம்‌
போகாதீர்கள்‌ என்று தனதாட்களிடம்‌ என்றான்‌. **ந கஸ்சிந் நாபாரத்யதி” [ஸ்ரீரா-யு-44-மன்னிப்பதே பெரியோர்‌ பணி-௨லகில்‌ யார் தான்‌ குற்றம்‌ செய்தவரில்லை- என்றாள்‌ பிராட்டி; ஈஸ்வரன்‌ -செய்தாரேல்‌ நன்று செய்தார்‌ [அடியார்கள் குற்றம் செய்தாராகில்‌ அது நற்றமே-பெரியா..திரு. 4-6-1. என்றான்‌. ஆழ்வார்கள்‌, அவன்‌ தமர் ! எவ்வினையராகிலும்‌ எங் கோனன்‌ தமரே–(முதல்திரு, 35)என்றார்கள்‌. இப்படி யிருக்க, ”அவர்‌ குற்றம்‌ இவரை யொழியச்‌ சொல்லுவார்‌ யார்‌?” என்றருளினார்‌.
இத்தால்‌ சக்‌திமான்களுமுட்பட ததீய தோஷம்‌ சொல்லக் கூசுவர்கள்‌ என்றபடி,

ஆச்சான் பிள்ளை பாகவத வைபவம்‌ அருளிச் செய்யா நிற்கச்‌ செய்தே ஒருவர்‌ பகவத் வைபவஞ்‌ சொல்ல,-விசேஷஞ் சொல்லுகிற விடத்தே இது ஸாமாந்யம்‌” என்றருளிச்‌ செய்தார்‌. இத்தால்‌ பாகவத வைபவத்தை நிறுத்தி பகவத் வைபவம்‌ சொல்லுகை அனுப யுக்தமென்றபடி. (நாவ காரியம் பாசுர வியாக்யானங்களில் -இது போல் பல ஐதிஹ்யங்கள் உண்டு)

ஆச்சான்‌ பிள்ளை சிறிய தாயார்‌ பெரிய பிள்ளையும்‌ ஆச்சான் பிள்ளையை ஸேவித்துப்‌ போருகிற காலத்திலே,இவர்‌ சோகார்த்தராக, ஆச்சான்‌ பிள்ளை ‘*நீர்‌ சோகிக்கிற தென்‌?’। என்ன, அவரும்‌, :’அநாதிகால பாப வாஸனா பலாத்கார வசத்தாலே ஐந்மாதிகளிலே ஈஸ்வரன்‌ என்னை இன்னம்‌ தள்ளப்‌ போகிறானோ?” என்று பயப்படா நின்றேன்‌” என்ன, மேலருளிச் செய்த வார்த்தை: ”இது ஆர்‌ கேடு? என்‌றிருந்தாய்‌, உனக்கு ஸ்ருஷ்டிக்க வேணுமோ? அவதரிக்க வேணுமோ? பிறப்பில்‌ பல்‌ பிறவிப் பெருமான்‌ (திருவாய்‌, 2-9-5) என்றும் , *பொருளென்றிவ்‌ வுலகம்‌ படைத்தவன்‌ (திருவாய்‌, 2-10-11) என்றும்‌, *ஸம்பவாமி யுகே. யுகே” (கீதை 4-8) என்றும்‌ ஒருவனைப்‌ பிடிக்க நினைத்து ஊரை வளைப்பாரைப் போல்‌ அகில ஜகத் ஸ்வாமி யாய்த்து அஸ்மத்‌ ஸ்வாமியாகைக் கன்றோ?” என்‌றருளினார்‌. “ஆகையால்‌ ஈச்வரனுக்கு ஒரு சேதனனைப்‌ பெறுகை அலப்ய லாபம்‌ என்றும்‌, எதிர் சூழல்‌ புக்குத்‌ தேடித் திரியுவன் தானே, “பேறும்‌ இழவும்‌ தன்னது” என்று ரக்ஷிக்குமென்று நிர்ப் பரராயிரும்‌”-என்றபடி-

அநந்தரம்‌ பெரியாழ்வார்‌ திருமொழி தொடக்கமான ஆழ்வார்களருளிச்‌ செயல்களுக்கெல்லாம்‌ வ்யாக்யாநம்‌ செய்து லோகத்தை வாழ்வித்தருளினார்‌, இத்தை நினைத்திறே –பெரிய வாச்சான் பிள்ளை பின்‌புள்ள வைக்கும்‌ தெரிய வியாக்கி யானங்கள் செய்வால்‌ அரிய அருளிச் செயற் பொருளை ஆரியர்கட்கு இப்போது அருளிச்‌ செயல் ஆய்த்து அறிந்து (உபேதே ரத்‌-46) என்று உபதேச ரத்தின மாலையிலே ஜீயர்‌ அருளிச் செய்ததும்‌, பின்னையும் ரஹஸ்ய த்ரய விவரணம்‌, தத்வ த்ரய நிர்ணயம்‌ முதலான அநேக ரஹஸ்ய மருளிச்‌ செய்தருளினார்‌.

ஒருநாள்‌ பிள்ளை யுடைய ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்திருந்த வாதி கேஸரி கார்‌ஹஸ்த் யாஸ்ரம நிஷ்டராயிருக்கும் போது சாஸ்த்ர பரிசிலனை பண்ணுகிறவர்‌களைக் கண்டு ”படிக்கிறதென்‌?” என்று கேட்க அவர்களும்‌ “இவர்க்கு அஷராப்யாஸ மில்லை’ என்று அறிந்து ‘“முஸலகிஸலயம்‌ (உலக்கைக் கொழுந்து -உலக்கை துளிர்க்காதது போல் உமக்கு ஞானம் வராது )படிக்கிறோம்‌” என்று பரிஹசித்தொரு வார்த்தை சொல்ல, இவரும்‌ அத்தை யறியாதே.-இப்படி யொன்றுண்டோ என்று திகைத்து, அத்தை ஸ்வாசார்யரான பெரிய வாச்சான்‌ பின்ளைக்கு விண்ணப்பம்‌ செய்ய, அவரும்‌ மந்தஸ்மிதம்‌ செய்து, அவர்கள்‌ உமக்கு அக்ஷராப்யாஸ மில்லாமையாலே ”கழுக்காணி துளிர்க்குமோ? உமக்கத்தைக் கொண்டு காரியமென்‌?” என்று பரிஹஸித்து விட்டார்கள்‌’ என்றருளிச் செய்ய இவருமத்தைக்‌ கேட்டு லஜ்ஜாவிஷ்டராய்‌, சலம்‌ பிறந்து, திருவடிகளிலே விழுந்து, “அடியேனை வித்வானாகும்படி கடாக்ஷித்தருள வேணும்‌’” என்று ப்ரார்த்திக்க-அபய ப்ரத ராஜர்‌ (கவலைப்படாதீர் என்று உகந்து அருளிச் செய்ததால் இந்த திருநாம பிரயோகம் )உகந்து முப்பத்திரண்டு திரு நஷரத்திலே அக்ஷர சிஷைகளும்‌ பண்ணுவித்து காவ்ய நாடலங்கார சப்த தர்க்க பூர்வோத்தர மீமாம்ஸாதி ஸகல ஸாஸ்த்ர வித்தராம்படி சிஷித்தருள; இவரும்‌ அவர் கடாஷத்தாலே வித்வ ஜ்ஞாநாக்ர கண்யராய்‌ “’முஸல கிஸலயம்‌” என்று ஒரு காவ்யமிட்டு அவர்கள் கையிலே கொடுத்து வாய் மூடித் தலை யிறக்கிட்டு லஜ்ஜா விஷ்டராம்படி, பண்ணி யருளி, மஹா விரக்தாய்‌ ஆஸ்ரம ஸ்‌வீகாரம்‌ செய்து, பரவாதிகளை ஜெயித்து மிகவும்‌ சாஸ்த்ர நிபுணரா யிருக்கையாலே வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌ என்று ப்ரஸித்தரான இவர்‌ பூர்வர்கள்‌ செய்தருளிய திருவாய்மொழி வ்யாக்யானங்களை யெல்லாம்‌ திருக் கண் சாத்தி அவைகளிலே ஸார தமமான அர்த்த விசேஷங்களை ஸங்க்ரஹித்து எவர்க்கும்‌ ஸுக்ரஹமாகவும்‌ ஸூ வ்யக்தமாகவும்‌ தெரியும்படி திருவாய் மொழிக்கு த்வாதச ஸ்கந்த யுக்தமான ஸ்ரீபாகவத ப்ரக்ரியையயாலே பன்னீராயிரம்‌ உரை செய்தருளினார்‌. ஜீயரும்‌ உபதேசரத்தின மாலையில்‌ *அன்போடழகிய மணவாளச் சீயர்‌ என்று தொடங்கி–ஏதமில்‌ பன்னீராயிரம்‌ (45) என்றித்தையு மருளிச்‌ செய்தார் இறே -பின்னையும்‌ தீப ப்ரகாசம் ‘ தத்வ நிரூபணம்‌ முதலான அனேக ரஹஸ்ய க்ரந்தங்களையும்‌ அருளிச்‌ செய்து உபகரித்தருளினார்‌,

ஆச்சான் பிள்ளை குமாரர்‌ நாயனாராச்சான் பிள்ளையும்‌ தீபாதுத்‌பந்ந ப்ரதீபம் போலே தர்சநம்‌ நிர்‌வஹித்துக்‌ கொண்டு போர மதிப்புடையராய்‌ ஸகல வித்யாபாரங்கதர்‌’‘ என்கிற விருதை
யுடையவராய்‌, :*ஸ்ரீரங்கராஜ தீக்ஷிதர்‌” என்று பெளண்டரீக யாகம்‌ செய்து ப்ரஸித்தராய்‌, தத்வ ஸங்க்ரஹம்‌, முக்த போகா வலீ: ஜ்நார்ணவம்‌, ஸாரீரம்‌ முதலான அனேக ரஹஸ்ய க்ரந்தங்களிட்டு உபகரித்தருளினார்‌ .

பெரிய வாச்சான்‌ பிள்ளை திரு நஷத்ரம் -ரோஹிணி -இவர் தனியன் –
ஸ்ரீ மத் க்ரூஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூந வே !-
யத் கடாஷண லக்ஷ்யாணாம்‌ ஸுலபஸ் ஸ்ரீதரஸ் ஸதா ॥

யாவரொருடைய திவ்ய கடாஷத்துக்கு விஷய பூதரானவருக்கு ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரன்‌ எப்போதும்‌ ஸுலபனாயிருக்‌கிறானோ, யாமுனர்‌ குமாரராய்‌, ஸ்ரீமானான க்ருஷ்ணர்‌ என்கிற
திரு நாமத்தை யுடையரான அந்தப்‌ பெரியவாச்சான்‌ பிள்ளையை வணங்குகிறேன்‌-

நாயனாராச்சான் பிள்ளை திருநஷத்ரம்‌ சித்திரை-(சிலர் ஆவணி ரோஹிணி என்பர் ), இவர் தனியன்‌–
ஸ்ருத் யர்த்த ஸார ஜாநகம்‌ ஸ்ம்ருதி பால மித்ரம்‌ பத்மோல்லஸத்‌ பகவதங்க்ரி புராண பந்தும்‌ |
ஜ்ஞாநாதி ராஜம் அபய ப்ரத ராஜ புத்ரம்‌ அஸ்மத் குரும்‌ பரம காருணிகம்‌ நமாமி ॥

வேதங்களின்‌ ஸாரார்த்தங்களை ப்ரதி பாதிப்பவராய்‌ ஸ்ம்ருதி களுக்கு பால மித்ரராய்‌ தாமரை போல்‌ ப்ரகாசிக்கும்‌ பகவச்‌ சரணங்களுக்குப்‌ புராதந பந்துவாய்‌, ஜாஞாந ஸாம்ராஜ்யத்தின்‌ அரசராய்‌ அபய ப்ரத ராஜரான பெரிய வாச்சான் பிள்ளையின்‌ குமாரராய்ப்‌ பரம காருணிகராய்‌ அஸ்மதாசார்யரான நாயனாராச்சான்‌ பிள்ளையை வணங்குகிறேன்‌ –

வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌ திரு நக்ஷத்ரம்‌ மகம்‌-(ஆனி ஸ்வாதி என்பர் சிலர் –ப்ரஹ்ம தேசம் மன்னர் கோயிலிலே அவதரித்தவர் -குலசேகரப் பெருமாள் திருவரசு இருக்கும் தேசம் )-இவர்‌ தனியன்‌– ்‌
ஸுந்தர ஜாமாத்ரு முநே: ப்ரபத்யே சரணாம் புஜம்‌ |ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தார போதகம்‌ ।
அஸ்மத் வித பரித்ராண ப்ரேமே ப்ரத்ராண மாஸநம்‌ | வாதி கேஸரிணம்‌ வந்தே ரம்ய ஜாமாதரம்‌ முநிம்‌ ॥

ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்திலே மிக அழுந்திக் கிடக்கும்‌ ஜீவர்‌களை உத்தரிப்பதற்கு ஓடமான (வாதி கேஸரி) அழகிய மணவாள ஜீயருடைய திருவடித்‌ தாமரைகளை ஆஸ்ரயிக்கிறேன்‌. (அஸ்மதாதிகளை ரக்ஷிப்பதில்‌) ப்ரீதியினல்‌ நிறைந்த மனதை யுடையரரன வாதி கேஸரியான அழகிய மணவாள ஜீயரை வணங்குகிறேன்‌.]

ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமால் வைபவம்‌-(ஈ உண்ணி -ஈந்த பின்பே உண்ணுபவர்கள் வாழ்ந்த தேசம் )
நம் பிள்ளை பக்கல்‌ ஈடு முப்பத்தாறாயிரமும்‌ பெற்ற ஈயுண்ணி மாதவப்‌ பெருமாள்‌ தம் குமாரரான ஸ்ரீபத்மநாபப் பெருமாளுக்கு ஈடு முப்பத்தாறாயிரமும்‌ பின்னும்‌ வேண்டும்‌ ரஹஸ்யார்த்தங்களை யெல்லாம்‌ ப்ரஸாதித்து தர்சன ப்ரவர்‌த்தகர் ஆக்கி அருளினார்‌.ஸ்ரீபத்ம நாபப்‌ பெருமாளும்‌ தமக்கு அந்தரங்க சிஷ்யராய்‌, கோல வராஹ நாயனார்‌ என்ற திருநாமமுடைய நாலூர்‌ பிள்ளைக்குத்‌ தம்‌ பைத்ருக தநமான ஈடு முப்பத்தாறாயிரமும்‌ பின்னும்‌ வேண்டின தர்‌ஸநார்த்தங்களெல்லாம்‌ ப்ரஸாதித் தருளினார்‌. நாலூர்‌ பிள்ளையும்‌ தம்‌ தல்ல மகனாரான நாலூராச்சான்‌ பிள்ளைக்கு ஸ்வாசார்‌யரான பத்ம நாபப் பெருமாள்‌ ப்ரஸாதித்த ஈடு முதலான அகிலார்த்‌தங்களையும்‌ ப்ரஸாதித்து தர்ஸந ப்ரவர்த்தகராம்படி கடாக்ஷித்‌ தருளினார்‌. நாலுராச்சான்‌ பிள்ளையும்‌ மணவாள மா முனிகளுக்கு நேரே ஆசார்யரான திருவாய்மொழிப் பிள்ளைக்கும்‌, திரு நாராயண புரத் தாயிக்கும்‌ -திருவாய்‌ மொழி யாச்சான்‌ பிள்ளைக்கும்‌ திருவாய் மொழியை ப்ரஸாதித்தருளினார்‌ என்னுமத்தை *ஆங்கவர் பால் பெற்ற சிறியாழ்வா னப்பிள்ளை தாம் கொடுத்தார்‌ தம்‌ மகனார்‌ தங்கையில்‌, பாங்குடனே நாலூர்ப் பிள்ளைக்கவர் தாம்‌ நல்ல மகனார்க் கவர் தாம்‌ மேலோர்‌க்‌கு ஈந்தாரவரே மிக்கு என்று உபதேசரத்ந மாலையிலே (49) ஜீயர்‌ தாமே தெளிய வருளிச்‌ செய்தாரிறே –

ஈ யுண்ணி மாதவப் பெருமாள்‌ திரு நஷத்ரம்‌ ஹஸ்தம்‌.(சிலர் கார்த்திகை பரணி என்பர் ) இவர்‌ தனியன்‌–
வரதார்ய க்ருபா பாத்ரம்‌ ஸ்ரீமாதவ குரும்‌ பஜே |
குருகாதீஸ வேதாந்த ஸேவோந் மீலித வேதநம்‌ ॥

நம்மாழ்வார்‌ அருளிச் செய்த த்ரமிடோபநிஷத்தான திருவாய்மொழி கால க்ஷேபத்தால்‌ தெளித்த ஜ்ஞானமுடையவராய்‌ வரதார்யரென்ற நம்பிள்ளையின்‌ தயைக்கு கொள்கலமான்‌ ஈ யுண்ணிமாதவப்‌ பெருமாளை வணங்கிப்‌ போற்றுகிறேன்‌-

பத்ம நாபப்‌ பெருமாள்‌ திரு நக்ஷத்ரம்‌ ஸ்வாதி– இவர்‌ தனியன்‌–
யேந அவகாஹ்ய விமலோஸ்மி ஸடாரி ஸூநோர்‌-வாணீ கணார்த்த பரிபோத ஸுதாபகாயாம்‌ |
ஸ்ரீமந் முகுந்த சரணாப்ஜ மது வ்ரதாய ஸ்ரீபம் மகாப குரவே நம ஆசராம : ॥

யார் ஓருவரால்‌ நம்மாழ்வாருடைய ஸ்ரீஸக்தி ஸமூஹத்‌திலுண்டான அர்த்த விசேஷங்களின்‌ தெளிவான அறிவாகிற அமுதக் கடலில்‌ ௮மிழ்‌ந்து தூய மனதினனாய் ஆகிறேனோ ஸ்ரீ யபதியான முகுந்தனின் திருவடிகளில் வண்டு போல்வரான அந்தப் பத்மநாபப் பெருமாள் பொருட்டு நமஸ்காரத்தைப்‌ பண்ணக் கடவோம்‌-

நாலூர் பிள்ளை திரு நக்ஷத்ரம்‌ புஷ்யம்‌, இவர்‌ தனியன்‌…
ஸ்ரீ பத்ம நாப குருத: ஸடஜிக்‌ முநீந்தர ஸ்ரீ ஸூக்தி பாஷ்ப மதிகம்ய ஸம்ருத்த போத: [ தந் தேவ ராஜ குரவே ஹ்யதி ஸச் சதுஷ் பூர்வாஸேத்த கோல வர தேஸிக மாஸ்ரயே தம்‌ ॥

ஸ்ரீ பத்ம நாபப்‌ பெருமாளிடமிருந்து நம்மாழ்வாருடைய ஸ்ரீ ஸூக்திகளின் பாஷ்யமான -விளக்கமான – ஈட்டை அதிகரித்‌து நிறைவான ஜ்ஞான முடையரான யாவரொருவர்‌ அந்த ஈட்டை நாலூராச்சான்‌ பிள்ளைக்கு ப்ரஸாதித்தாரோ , அந்த–நாலூரில்‌ வாஸத்தால்‌ ப்ரசாசிக்கிற கோல வர குருவை சரணம்‌ பற்றுகிறேன்‌-(மேல்பாடாகம் -காஞ்சி அருகில் இருக்கும் நாலூர்)

நாலுராச்சான்‌ பிள்ளை-மார்கழி பரணி திரு நக்ஷத்ரம் – தனியன்‌
நமோஸ்து தேவ ராஜாய சதுர்க்ராம நிவாஸிநே | ராமாநுஜார்ய தாஸஸ்ய ஸூதாய குண ஸாலிநே 1

ஸ்ரீராமாநுஜ தாஸரென்னும்‌ நாலூர்‌ பிள்ளையின் குமாரராய்‌ குண பூர்ணராம்‌ நாலூரில்‌ வாஸம்‌ பண்ணுமவரான தேவ ராஜர்‌ என்னும்‌ நாலூர் ஆச்சான்‌ பிள்ளையை நமஸ்கரிக்கிறேன்‌-

கோலாதிபாத்‌ பிது வாரப்ப ஸஹஸ்ர கிதேர் பாஷ்பம்‌ ஹி பூர்தந .. தேஸிக வர்ய குப்தம்‌ |
த்ரேதா ப்ரவர்த்ப புவிய: ப்ரதயாஞ்சகார ஸ்ரீ தேவ ராஐ குருவர்யமஹம்‌ பஜே தம்‌

யாவரொருவர்‌ பூர்வர்களான ஆரியர்களால்‌ ரஹஸ்ய மாகக்‌ காக்கப்பட்டிருந்த திருவாய்மொழியின்‌ வ்யாக்யாநமான ஈட்டை, தந்தையான கோலாதிபரேன்னும்‌ நாலூர்ப் பிள்ளை யிடத்தில்‌ நின்றும்‌ பெற்று மூவர்‌ மூலமாய் வெளிப்படுத்தி உலகத்தில்‌ ப்ரஸித்தி யடையப்‌ பண்ணினாரோ அந்த பரமாசாரியரான தேவ ராஜரை (நாலூரச்சான்‌ பிள்ளையை), நான்‌ போற்றி வணங்குகிறேன்‌ –

ஸ்ரீ சைல நாத குரு மாத்ருகுகணாருத்த மசப்யாந் ஸ்ரீஸூக்தி தேசிக வரேண ச யஸ் த்ரிதைவம்‌–
ங்யத்தஸ் ஸடாரி க்ருதி பாஷ்ய ஸூஸம் ப்ரதாயோ விஸ்தார மேதி லஹி வைஷ்ணவா . ॥

எந்த திருவாய்மொழியின்‌ பாஷ்யமான ஈட்டின்‌ ஸத் ஸம்ப்ரயமானது திரு வாய் மொழிப்பிள்ளை என்ன-திரு நாராயணத்தாய் என்ன–இந்த சிறந்த ஆச்சார்யர்களாலும் திருவாய் மொழி ஆச்சானாலும் மும்முகமாய் ப்ரகாசமாயிற்றோ அந்த ஸத் ஸம் பிரதாயம் தான் ஸ்ரீ வைஷ்ணவ பெரியார்கள் இடையே விஸ்தாரமாயிற்று

வடக்குத் திருவீதிப் பிள்ளை வைபவம் –
அநந்தரம்‌ வடக்குத் திருவீதிப் பிள்ளை தர்சநம்‌ நிர்வஹித்தருளுகிற காலத்தில்‌ ஸ்ரீபாதத்து முதலிகள்‌ –ஆத்ம ஸ்வருபமிருக்கும்‌ படியென்‌?’” என்று விண்ணபஞ்செய்ய, அவரும்‌, –அஹங்காரமாகிற ஆர்ப்பைத் துடைத்தால்‌ ஆத்மாவுக்கு அழியாத பெயர் அடியான்‌” என்றிறே” என்றருளினார்‌. இத்தால்‌ ‘ஈஸ்வரோஹம்‌-என்கிற அஹங்காரம்‌ பற்றற்றால்‌ ஆத்மாவுக்கு தாஸோஹம்‌ என்கிற சேஷத்வமே நிலை நின்ற அந்தரங்க நிரூபகம்‌ என்ற படி-பாகவத சேஷத்வ விதுரமான பகவச் சேஷத்வமும்‌ தேஹாத்மாபிமானம் போலே பொல்லாததா யிருக்கையாலே, –அடியாரடியார்‌ தம்மடியாரடியார்‌ தமக்கடியாரடியார்‌ தம்மடியாரடியோங்களே (திருவாய்‌, 3-7-10) என்றிருக்க வேணுமென்‌றருளியும்‌, (அறிந்து அறிந்து தேறித் தேறி யான் எனது ஆவியுள்ளே நிறைந்த ஞான மூர்த்தியாயை நின்மலமாக வைத்து பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் நறுந்துழாயின் கண்ணி அம்மா! நான் உன்னைக் கண்டு கொண்டே.”–10-6-7-)

எல்லா வேதங்களையும்‌ எல்லா சாஸ்த்ரங்களையும்‌ எல்லா ஆழ்வார்கள்‌ பாசுரங்களையும்‌ எல்லா ஆசார்யர்கள்‌ வசநங்களையும்‌ ஆராயந்து பார்‌த்த விடத்தில்‌ ஒரு ஸ்ரீவைஷ்ண வனுக்கு நிலை நின்ற ஆசார்யாபிமானமொழிய மோஷோபாயமில்லை; நிலை நின்ற பாகவதபசாரமொழிய மோக்ஷ விரோதி யில்லையிறே. ‘*ஸ்வ ஸத்தையில்‌ நித்யத்‌வமும்‌ நிலை நின்ற பாகவதாபசார முண்டாமளவத்தனை யன்றோ ” என்று பிள்ளை பலகாலுமருளிச் செய்யக்‌ கேட்டிருக்கை யாயிருக்கும்‌” என்று வடக்குத் திருவீதிப் பிள்ளை தம்‌ ஸ்ரீபாதத்து முதலிகளுக் கருளினார்‌.

இத்தால்‌, ஆசார்யாபிமானம்‌ நிலை நிற்கையாவது- கேட்ட அர்த்தத்தின்படி அநுஷ்டானமும்‌ கை புகுரப் பெற்று தத் விஷயமே ப்ராப்ய ப்ராபகங்களென்றும்‌, தத் விஷயத்தில மஹா விச்வாஸத்துடனிருக்கை. பாகவதாபசாரம்‌ :நிலை நிற்கையாவது-தீரக் கழியப் பண்ணியும்‌ நிரநுதாபமான பாகவதாபசாரம்‌ ஸ்வ ஸத்தையை விளக்குப்‌ பிணம் படுத்தி தக்த படமாக்கி உயிர்‌ மாட்டல்‌ செய்து நஸிப்பிக்கு மென்றபடி

இப்படி ஸர்வரையும்‌ உஜ்ஜீவிப்பித்துக் கொண்டிருக்கற இவர்‌ தம்‌ குமாரரான பிள்ளை லோகாசார்யரையும்‌, அவர்‌ திருத் தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாரையும்‌ தர்சந ப்ரவர்த்தகராம்படி நன்றாகத் திருத்தி யருளி சில நாளைக்குப்‌ பின்பு பிள்ளை திருவடிகளை த்யாநித்துக் கொண்டு திருதாட்டுக் கெழுந் தருளினார்‌ . பிள்ளை லோகாசாரியரும்‌, உபய ஸம்பந்தமுடைய விலஷண விஷயத்தை இழந்தோமே” என்று பெருக்க வ்யாகுலப்‌பட்டு க்லேஸித்துத்‌ தம்மிலே தேறி நின்று பிள்ளைக்கு ப்ரஹ்மமேதத்‌தாலே சரம கைங்கர்யம்‌ செய்து பள்ளிப் படுத்தி அவப்ருதம்‌ கொண்டாடிப்‌ பெருக்கத்‌ திருவத்யயனமும்‌ நடத்தி யருளினார்‌.

வடக்குத் திருவீதிப் பிள்ளை திரு நஷத்ரம்‌ ஆனி-ஸ்வாதி–இவர்‌ தனியன்‌- –
ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி ஸிரஸா ஸதா |
யத் ப்ரஸாத ப்ரபாவேந ஸர்‌வ ஸித்திர பூந்‌ மம ॥

யாவரொருவருடைய அநுக்ரஹாதிசயத்தினுல்‌ எனக்கு ஸமஸ்த புருஷார்‌த்த ஸித்தியும்‌ உண்டாயிற்றோ அந்த ஸ்ரீக்ருஷ்ணரான வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளையின்‌ திருவடித்‌ தாமரைகளை எப்போதும்‌ தலையால்‌ வணங்குகிறேன்‌-

பிள்ளை லோகாசார்யர் வைபவம்
அநந்தரம்‌ நம்மாழ்வார்‌ திருவவதார மென்னலாம்‌படியான வைபவமுடையவராய்‌ நம்பிள்ளை யுடைய அநுக்ரஹத்தாலே அவதார விசேஷமாய்த்‌ திருவவதரித்‌திருந்துள்ள பிள்ளை லோகாசார்யரும்‌, அவருடைய அருளே தாரகமாய்‌ வளர்ந்த அவர்‌ திருத் தம்பியாரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ பால்யாத்‌ ப்ரப்ருதி ஸுஸ்நிக்தராய்‌ இணைத்‌ தொட்டிலிட்டு வளர்ந்த இளைய பெருமாளையும்‌ பெருமாளையும்‌ போலவும்‌ பல தேவன் என்னும்‌ தன்னம்பியோடப்‌ பின்‌ கூடச் செல்வான்‌ (பெரியாழ்வார்‌ திரு- 1-8-5) என்கிற நம்பி மூத்த பிரானையும்‌ கிருஷ்ணனையும்‌ போலவும்‌,

தம்பி யுடன்‌ தாசரதி யானுனுஞ்‌ சங்க வண்ண
நம்பி யுடன்‌ பின்னடந்து வந்தானும்‌ –பொங்கு புனல்‌
ஒங்கு முடும்பை உலகாரியனும்‌ அறந்
தாங்கு மணவாளனுமே தான்‌

என்னும்‌படி ஸெளப்ராத்ருத்வத்தை யுடையரான இவர்களிலே பிள்ளை லோகாசார்யர்‌ தம்‌ பரம க்ருபையாலே பெண்ணும்‌ பேதையும்‌ அத்கரித்து. உஜ்ஜீவிக்கலாம்படி தனி ப்ரணவம்‌, தனி த்வ்யம்‌ தனி சரமம்‌, பரந்தபடி, ஸ்ரீய:பதிப்படி, யாத்ருச்சிகப்படி, முமுஷுப்படி, ஸம்ஸார ஸாம்ராஜ்யம்‌, ஸார ஸங்க்ரஹம்‌, தத்வ த்‌ரயம்‌, தத்வ சேகரம்‌, ப்ரபந்த பரித்ராணம்‌, ப்ரமேய சேகரம்‌, அர்ச்சிராதி, அர்த்த பஞ்சகம்‌. நவவித ஸம்பந்தம்‌, நவரத்ந மாலை, ஸ்ரீவசன பூஷணம்‌ முதலான அநேக ரஹஸ்ய க்ரந்தங்களிட்டருளி தம்பியோடு தாமும்‌ கூடி வாழ்ந்தருளுங்‌ காலத்திலே பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளிலே பரம ஸாத்விகாரயிருப்பரான கூர குலோத்‌தம தாஸர்‌ நாயனும்‌ -மணப் பாக்கத்து நம்பியாரும்‌, கொல்லி காவல தாஸரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ பிள்ளையும்‌, கோட்டூரில் அண்ணரும்‌, திருமலை யாழ்வாரும்‌, விளாஞ் சோலைப்‌ பிள்ளையும்‌-ஸாத்விகைகளில்‌ திருமலை யாழ்வார்‌ திருத் தாயார்‌ முதலான சில அம்மைமார்களும்‌ திருவடிகளிலாஸ்ரயித்து ஸத் ஸம்பந்தத்தை யுடையராய்‌, ‘“ஸம்பந்தாத்‌ ஸ்வாத்ம லாப: ‘ என்று ஆநந்த நிர்ப்‌பரராய்‌ *ஓழிவில்‌ காலப் படியே ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும்‌ நித்ய ஸேவை பண்ணி தேவு மற்றறியா திருந்தார்கள்‌

(நம்பெருமாளை -1311-முதல் -1313-1323- பங்குனி ப்ரஹ்மோத்சவம் எட்டாம் நாள் -கிளம்பி -ப்ரஹ்மத்துக்கு வேர்க்க -விசிறச் சொல்லி -அம்மையார் விசிற)

இப்படி இவர்களுடைய ஐக கண்ட்யத்தாலே ப்ரவர்த்தமாய் ஸங்க்ரஹ விஸ்தார ரூபமாயிருக்குமென்று அருளிச்‌ செய்து
சீராருந் திருவத்தியூர்‌ தன்னில்‌ நின்றும்‌ சிறந்த மணப்பாக்கத் துறு நம்பியாரை
ஏராருங் கனவிலுபதேசத்தால்‌ முன்னெடுத்தருளி யெழிலரங்கத்தே போயிரு நீர்
சேராமலுக் கிதமங்கே ,சொல்வோந் தூய வுலகாரியன் பால்‌ சேர்ந்ததற் பின்‌ அவர்க்கு
நேராகக் கனவிலாங்கவ ருபதேசத்தால்‌ முன்னம்‌ விரித்த கலை வசன பூஷண மா நிதியே

என்கிறபடியே பரம ரஹஸ்யமான ஸ்ரீவசன பூஷணமாகிற திவ்ய ப்ரபந்தத்தைச்‌ செய்தருளி லோகத்தை வாழ்வித்தருளினார்‌.

அநந்தரம்‌ நாயனாரும்‌ ”வாக் பூஷணம்‌ வகுள பூஷண ஸாஸ்த்ர ஸாரம்‌’” என்னும்படியான ஸ்ரீவசந பூஷண ஸ்தாபநார்த்தமாக ஆசார்ய ஹ்ருதயத்தை யருளிச்‌ செய்து தோதவத்தித்‌ தூய மறையோரான பெற்றார்க்கு ப்ரஸாதித்து இப்படி முப்பத்தாறாயிரப்‌படி யினர்த்தத்தை ஸ்ரீ வசந பூஷண ஆசார்ய ஹ்ருதய ப்ரபந்ததங்களாலே தாத்பர்யமாகக்‌ கூட்டிப்‌ பின்னையு மருளிச்‌ செய்கையாலே-ஈட்டுத் தனியனிலே இவர்கள்‌ தனியனையு மநுஸத்திக்கிறது-அவரும்‌ ஆசார்ய ஹ்ருதயம்‌ பெற்றார்க்கு ப்ரஸாதித்தார்‌; அவரும்‌ திருநாராயண புரத்து ஆயிக்கு ப்ரஸாதித்தார்‌.

மாதவத்தோன் மாறன் மனம் கூறும் மணவாளன்
தோ தவத்தித் தூய் மறையோரான பெற்றார் –நீதி யினால்
ஆங்கு அவர் தாள் சேர் பெற்றார் ஆய் மணவாள மா முனி
பூம் கமலத் தாள்கள் நெஞ்சே போற்று
-தோதவத்தி –ஆச்சார்ய அனுஷ்டானம் உள்ளோர் -நடுவில் உள்ளோர் மூலம் பெற்ற-நீதி -வருகிற முறை வழுவாமல்
பிரபன்ன ஜன கூடஸ்தர் -நம்மாழ்வார் -மாறன்
பெற்றார் -ஸ்ரீ நாயனார் ஸச் சிஷ்யர் என்பர்
ஸ்ரீ ஆய் ஸ்ரீ மா முனிகள் இருவரும் ஸ்ரீ பெற்றாருடைய திருவடிகளை பெற்றார்கள்

ஈட்டுத் தனியன்‌ வியாக்கியானத்தில்‌ ‘பிள்ளை லோகஞ்‌ சீயர்‌ அருளிச்‌ செய்துள்ளது: ”பிள்ளைலோகாசார்யர்‌, நாயனாராச்சான்‌ பிள்ளை, அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌, வாதி கேஸரி அழகிய மணவாளச்‌ சீயர்‌ இவர்கள்‌ நால்வரும்‌ ஈட்டு ஸம்ப்ரதாயத்துக்கு ப்ரவர்த்தகராகாமலிருக்கச்‌ செய்தேயும்‌, பிள்ளை லோகாசாரியர்‌ ஈட்டின் வர்த்தத்துக்கு உபயுக்தமாக வகுள பூஷண சாஸ்த்ர ஸாரமான ஸ்ரீ வசந பூஷண திவ்ய சாஸ்த்ரத்ரத்தை யருளிச்‌ செய்கையாலும்‌; நாயனாராச்சான் பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த இருப்பத்தி நாலாயிரப்படி வயாக்யானத்துக்கு ப்ரவர்த்தகராகையாலும்‌; அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ திருவாய்‌ மொழியினுடைய சந்தை திரட்டான ஆசார்ய ஹ்ருதயமருளிச்‌ செய்கையாலும்‌ வாதி கேஸரி அழகிய மணவாளச்‌ சீயர்‌ பன்னீராயிரப்படியையும்‌, திருவிருத்தத்துக்கு ஸ்வாபதேசமும்‌ அருளிச்‌ செய்கையாலும்‌ இவர்களுடைய தனியன்களும்‌ அநு சந்திக்கிறார்‌கள்‌ ‘நம்‌ ஆசார்யர்கள்‌” என்று பிள்ளை லோகாசாரியரும்‌ நாயனாரும்‌ ஈட்டை நேரே ஸேவிக்கா விடினும்‌ அதிலுள்ள அர்த்த விசேஷங்களைத்‌ தமது தமப்பனாரான வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை வாயிலாகக்‌ கேட்டே யிருப்பார்கள்‌-

இதற்கு ப்ரபந்த ப்ரதிபாத்யமான அர்த்த ஸம்ப்ரதாயம்‌ ஜீயருக்கு ஆய் வழியாக வந்தபடியை மேலே சொல்லுகிறது; இது ஜீயருடைய ஆசார்யரான திருமலை யாழ்வாரும்‌, அவருடைய திருத்‌
தமப்பனாரான அண்ணரும்‌ அதி பால்யத்திலே பிள்ளை லோகாசார்யர் திருவடிகளிலே ஆச்ரயித்தவர் களாகையாலே பின்பு கொல்லி காவல தாஸரிடத்திலும்‌ கூர குலோத்தம தாஸரிடத்திலும்‌ ஜ்ஞாநோபஜீவநம்‌ பண்ணி உஜ்ஜீவித்தார்கள்‌. இப்படி ஸம்பந்த ஸம்பத்திகளும்‌ உஜ்ஜீவிக்கும்படி தம்பியோடு தாசரதி என்கிற படியே நம்மாழ்வார்‌ திருவவதார மென்னலாம்படியான நம்பிள்ளை யுடைய அநுக்ரஹத்தாலே தேவுமற்றறியா திருந்தார்கள்‌

இப்படி யெழுந்தருளி யிருக்கும்‌ பிள்ளை லோகாசார்யர்‌ பரம ரஹஸ்யமுமாய்‌ திவ்ய சாஸ்த்ரமுமான ஸ்ரீவசன பூஷணத்தை ஸர்வரும்‌ அதிகரித்து ஈடேறலாம்‌ படி யருளிச் செய்து லோகத்தை
வாழ்வித்தருள, அத்தைக் கண்டு பாகவதோச்ச்ராயம்‌ பொறுக்க மாட்டாத சில அஸூயாளுக்கள்‌ நம் பெருமாள்‌ பக்கலிலே சென்று, “பெருமாளே! பிள்ளை லோகாசார்யர்‌ ஸ்ரீவசனபூஷணமென்று
ஒரு ரஹஸ்ய க்ரந்தமிட்டு நம்‌ தர்சனத்தை யெல்லாம்‌ வ்யர்த்தமாக்‌கினார்‌” என்று பெருமாளுடனே கோள்‌ சொல்ல; அத்தைக்‌ கேட்ட பெருமாளும்‌ சீறி பிள்ளை லோகாசார்யரை யழைத்து விட, அவ்வளவிலே அவர்‌ நீராட எழுந்தருளி யிருக்க, நீராடி யெழுந்தருளுகிற அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌ இவ் விசேஷங் கேட்டு பெருமாள்‌ ஸந்நிதியில்‌ சென்றவாறே பெருமாளும்‌, அர்ச்சக முகேந , ‘நாயனாரே! நாம்‌ அநந்தமான அவதாரம்‌ பண்ணினது தர்ம ஸம்ஸ்த்தாபநார்த்த மன்றோ? நீங்கள்‌ ரஹஸ்ய க்ரந்தமிட்டு அத்தை வ்யர்த்தமாக்குகிறது என்‌?” என்று வினவி யருள; அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌, ஸ்ரீவசந பூஷண ஸ்தாபதார்த்தமாகச்‌ செய்தருளின ஆசார்ய ஹருதயமாகிற ப்ரபந்தத்தை பெருமாள்‌ ஸ்ரோதாவாய்‌ தாம்‌ வக்தாவாக, ஸ்ரீதொண்டரடிப்‌ பொடி யாழ்வார்‌ திருமாலை சொன்னாற் போலே இவர்‌ ஆசார்ய ஹ்‌ருதயத்தை விண்ணப்பஞ் செய்து தலைக் கட்டினவாறே, பெருமாள்‌ மிகவுகந்தருளி. “இதுவும்‌ நாம்‌ செய்ததொன்றன்றோ?” என்று கோள்‌ சொன்னவர்களை வாரி யடித்துத்‌ தள்ளி விட்டருளி நாயனாருக்கு தம்‌ ஸர்வ பரிஜந பரிச்சதங்களோடே ப்ரஹ்ம ரதம்‌ ப்ரஸாதித்து ௨பலாலித்துத்‌ திருமாளிகை யேற போக விட்டருளினார்‌.-இவ் வைபவங் கேட்டுப்‌ பிள்ளை லோகாசார்யரும்‌ -வளர்த்ததனால்‌ பயன் பெற்றேன்‌ என்று அதி ஸந்தோஷத்துடனே ஆலிங்கித்துக்‌
கொண்டருளினார்‌

ஸ்ரீ வசந பூஷண திவ்ய சாஸ்த்ரம்‌ நம் பெருமாளுடைய நியமனம் அடியாக அருளிச்‌ செய்யப்பட்டதென மணவாளமா முனிகள்‌ ஸாதித்தருளி யிருப்பதால்‌ இங்கு காணும்‌ ஐதிஹ்யம்‌ ப்ராமாணிகமா? என்ற ஐயம்‌ எழுகிறது பின்புள்ளார்‌ எக் காரணத்தனாலோ சேர்த்ததா யிருக்கலாம்‌ என்று தோன்றுகிறது -மணவாளமாமுனிகள்‌ தாமருளிச்செய்த ஸ்ரீவசந பூஷண வ்யாக்‌யான அவதாரிகையில்‌ ஸாதித்தருஞம்‌ பங்க்திகள்‌ வருமாறு:ஸ்ம்ஸாரி சேதனரிழவு ஸஹிக்க மாட்டாத பரம க்ருபையாலே தத் உஜ்ஜீவநார்த்தமாக தாமும்‌ பல ப்ரபந்த்தங்கள் அருளிச்‌ செய்த பிள்ளை லோகாசார்யர்‌, ஆசார்ய பரம்பரா ப்ராப்தங்களான வர்த்தங்‌களில்‌ அவர்கள்‌ தாங்கள்‌ கெளரவாதிசயத்தாலே ரஹஸ்யமாக வுபதேஸித்துப்‌ போந்தவையாய்‌ அருமை பெருமைகளைப் பற்ற-இதுக்கு முன்பு தாமும்‌ ப்ரகாசிப்பியாமலடக்கிக் கொண்டு போந்தவையுமான அர்த்த விசேஷங்களெல்லாத்தையும்‌, பின்புள்ளாருமிழக்க வொண்ணா தென்ற தம்முடைய க்ருபாதிசயத்துக்கு மேல்‌
பெருமாளும்‌ ஸ்வப்நத்திலே திருவுள்ளமா யருளுகையாலே, ஸ்ரீ வசந பூஷணமாகிற இப் ப்ரபந்த முகேந வெளியிட்டருளினார்‌.

முன்பே பேரருளாளப் பெருமாள்‌ (கச்சித் தேவப் பெருமாள்‌) தம்முடைய நிர்ஹேதுக க்ருபையாலே மணற் பாக்கத்திலே இருப்‌பாரொரு நம்பியாரை விசேஷ கடாஷம்‌ பண்ணி யருளி, தஞ்சமாயிருப்பன சில வர்த்த விசேஷங்களைத்‌ தாமே யவர்க்கு ஸவப்ந முகேந வருளிச்செய்து, நீர்‌ போய்‌ இரண்டாற்றுக்கும்‌ நடுவே வர்த்தியும்‌; இன்னமும் உமக்கிவ் வர்த்தங்களெல்லாம்‌ விஸதமாக நாமங்கே சொல்லுகிறோம்‌” என்று திருவுள்ளமா யருளுகையாலே அவரிங்கே (திருவரங்கத்தே) வந்து பெரிய பெருமாளை ஸேவித்துக்‌ கொண்டு, தமக்கு முன்பங்கருளிச் செய்த வர்‌த்தங்களையும்‌ அசலறியாதபடி அநுஸந்தித்துக் கொண்டு ஏகாந்தமான தொரு கோயிலிலே வர்த்தியா நிற்கச்‌ செய்தே, தம்முடைய ஸ்ரீபாதத்‌து அந்தரங்கரான முதலிகளுந்தாமுமாக பிள்ளை ஒரு நாள்‌ அந்தக்‌ கோயிலிலே யாத்ருச்சிகமாக வெழுந்தருளி, அவ்விடம்‌ ஏகாந்தமா யிருக்கையாலே ரஹஸ்யார்‌த்தங்களை யவர்களுக் கருளிச்‌ செய்து கொண்டெழுந்தருளியிரா நிற்க, அவை, தமக்குப்‌ பேரருளாளப் பெருமாளருளிச் செய்த வார்த்தா விசேஷங்களா யிருக்கையாலே, அவர்‌ போர வித்தராய்‌ உள்ளினின்றும்‌ புறப்பட்டு வந்து பிள்ளை ஸ்ரீபாதத்தலே விழுந்து, ்‌*அவரோ நீர்‌?” [அந்த பேரருளாகப்பெருமாள்‌ தானோ நீர்‌ என்ன, **ஆவது; ஏது” என்று பிள்ளை கேட்டருள, பேரருளாளப் பெருமாள்‌ தமக்கு இவ்வர்த்தங்களை ப்ரஸாதித்‌ தருளினபடியையும்‌, இத் தேசத்திலே போர விட்டருளின படியையும்‌-இன்னமுமங்கே சொல்லுகிறோமென்‌ றருளிச்‌ செய்தபடியையும்‌, லிண்ணப்பஞ் செய்ய, கேட்டு மிகவும்‌ ஹ்ருஷ்டராய்‌ அவரையுமபிமாநித்தருள, அவருமங்குத்தைக் கந்தரங்கராய்‌ வர்த்திக்கிற நாளிலே, பெருமாள்‌ அவர்க்கு ஸ்வப்நத்திலே ‘இவ் வர்த்தங்கள்‌
மறந்து போகாதபடி ‘இவற்றை யொரு ப்ரபந்தஸ்தமாகச்‌ சொன்‌னோமென்று நீர்‌ பிள்ளைக்குச்‌ சொல்லுமென்று திருவுள்ளமாக, அவரிப்படி பெருமாள்‌ திருவுள்ளமா யருளினாரென்று விண்ணப்பம் செய்ய, ”ஆனால்‌ அப்படியே செய்வோம்‌” என்று” திருவுள்ளம்‌ பற்றி அநந்தர மிப்ரபந்த மிட்டருளினா ரென்று ப்ரஸித்தமிறே
, [இதுவரை மணவாளமாமுனிகளின்‌ ஸ்ரீவசநபூஷண வ்யாக்யாந அவதாரிகை பங்க்திகள் –

அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ திருப் பாவை முதலான சில ப்ரபந்தங்களுக்கு வ்யாக்யாதஞ்‌ செய்தருளினார்‌.இத்தை நினைத்திறே –தன்‌ சீரால்‌ வைய குருவின்‌ தம்பி மன்னு மணவாள முனி செய்யுமவை தானுஞ்‌ சில– என்று ஜீயரும்‌ ௮நு சந்‌தித்தருளினார்‌. [உபதேச ரத்ன மாலை-47]-

பின்பு பிள்ளைலோகாசாரியரும்‌ நாயனாரும்‌ அதி விரக்தராய்‌ வாழ்ந்தருளுகிற காலத்திலே, நாயனார்‌ சிறிது காலமெழுந்தருளி யிருந்து அசிரேண பரமபதத்தை ப்ராபித்தருள, பிள்ளையும்‌ பாகவத விஸ்லேஷத்தாலே மிகவும்‌ சோகார்த்தராய்‌ அவர்‌ திருமுடியைத்‌ தம் மடியிலே வைத்துக்‌ கொண்டு
மா முடும்பை மன்னு மணவாள வண்ணலொடு
சேமமுடன்‌ வைகுந்தஞ் சென்றக்கால்‌–மாமென்‌று
தொட்டுரைத்த சொல்லுந் துயந் தன்‌னின் ஆழ்‌ பொருளும்‌
எட்டெழுத்து மிங்குரைப்பாரார்‌

என்கிறபடியே பல வகை புலம்பி திருமுத் துதிர்த்து முதலிகள்‌ தேற்றத்‌ தேறி நின்று நாயனாருக்குச்‌ சரம கைங்கர்யஞ்‌ செய்து திருவத்யயனமும்‌ நடத்தி யருளினார்‌.
இவர்‌ தனியன்‌
திராவிடாம்நாய ஹ்ருதயம்‌ குரு பர்வ க்ரமாகதம்‌ |
ரம்ய ஜாமாத்ரு தேவேந தர்ஸிதம்‌ க்ருஷ்ண ஸூநுநா ॥

க்ருஷ்ணரென்னும்‌ வடக்குத்‌ திருவீதிப்‌ பிள்ளையின்‌ குமாரரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாராலே ஆசாரியகளுடைய பரம்பரா க்ரமமாய்‌ ஆசார்ய ஹ்ருதயம்‌ என்ற க்ரந்தம்‌
அருளிச்‌ செய்யப்‌ பட்டது

(1323 தொடங்கி 48 ஆண்டுகள் கழித்து வந்தால் 12 ஆண்டுகள் பின்பே -சித்திரை திருநாள் தொடர்ந்து நடந்தது)

நம் பெருமாள் கோயிலை விட்டு வஸலையாக எழுந்தருளல்‌–
ஸர்வ சேதநரு முஜ்ஜீவிக்கும்படி சரம ப்ரமாண ப்ரமேய ப்ராமத்ரு வைபவங்களைப் ப்ரகாசப்‌பித்துக்‌ கொண்டு பிள்ளை லோகாசார்யர்‌ பெருமாளுக்கு ப்ராண பூதரா யெழுந்தருளி யிருக்குங் காலத்தில்‌ ஸ்ரீ ரங்கம்‌ (கலாபகாலத்தில் )துருஷ்காக்ராந்தமாய்க்‌ குடி யிருக்‌கப்‌ போகாமல்‌ பெருமாள்‌ நாய்ச்சி மாருடனே்‌ புறப்பட்டு, பெரிய பெருமாளுக்குத்‌ திரு முன்பே கல் காப்புச்‌ சாத்தி, முன்னே ஒரு விக்ரஹத்தை யெழுந்தருளப்‌ பண்ணி வைத்து, சுற்றமெல்லாம்‌ பின்‌ தொடரத்‌ தொல் காநமடைந்து (பெருமாள்‌ திரு4-6) என்றும்‌ *தம்பியோடு தாமொருவர் தம்‌ துணைவி காதல்‌ துணையாக (பெரிய திரு 15-10-5) என்றுஞ் சொல்லுகிறபடியே பெருமாள்‌ தம்‌ அந்தரங்க பரிகரத்துடனே வலசையாக வெழுந்தருள; பிள்ளையும்‌, வாளும்‌ வில்லுங் கொண்டு பெருமாளைப்‌ பின் தொடர்ந்தடிமை செய்த இளைய பெருமாளைப் போலே *௨ருவார் சக்கரஞ் சங்கு சுமந்‌ திங்கும்‌ மோடொரு பாடுழல்வானோ ரடியான்‌ (திருவாய்‌ 8-3-7)
என்கிறபடியே அத் தலைக்கு மங்காளாசாஸந பரராய்த்‌ தாமும்‌ முதலிகளும்‌ ஸேவித்துக் கொண்டு சேர வெழுந்தருள, அநந்தரம்‌ பெருமாளும்‌, ப்ரவிஸ்யது மஹாரண்யம்‌ ராமோ ராஜிவ லோசந:?’ (ஸ்ரீராம -ஸம்க்ஷேபம்‌) என்றும்‌ ‘*வநம் ஸ பார்ய: ப்ரவிவேஸ ராகவஸ் ஸ லஷ்மணஸ் ஸுர்ய இவா ப்ரமண்டலம்‌ (ஸ்ரீரா. அயோ. 119-22) (ராம பிரான்‌ மனைவியுடனும்‌ லஷ்மணனுடனும்‌ சூரியன்‌ மேக மண்டலத்தைப்‌ புகுவது போல வநம் புகுந்‌தனர்‌-என்றுஞ் சொல்லுகிறபடியே ஹர்ய்ர்க்ஷ தரக்ஷா கிடி கட்க
பல்லூகாதி அநேசு வந ம்ருக ஸஞ்சார கர்ஜந பயங்கரமாய்‌ *சிலைக்‌ கை வேடர்‌ திரிகிற கடுங் கானமான கள்ளர் பற்றிலே எழுந்தருளுகிற வளவிலே சில தஸ்யுக்களுக்கு (திருவாபரணம் களவு போக தன்னைக் காட்டி யருளி) ஸர்வஸ்வதாநம்‌ பண்ணி யருள, அச் செய்தியைக் கேட்டு முன்னே யெழுந்தருளின பிள்ளை லோகாசார்யர்‌ மீண்டு எழுந்தருளி அவ்விடத்தில்‌ அவர்களுக்குத்‌ தாமும்‌ (ரஹஸ்யத்ரயர்த்தங்கள் பிரசாதித்து அருளி )ஸர்‌வஸ்வதாநம் பண்ணி யருளி அப்பாலே யெழுந்தருள, அவ்வளவிலே சில கள்ளர்‌ வந்து அவர்‌ பதம்‌ பணிந்து பச்சை கட்ட,
கலகமிகு பஞ்சமுடன்‌ கள்ளர் பற்றில்‌ கத்திருவிர் காரியப் பேரொருவர்‌ வந்து
பலம் அறிந்து பதம் பணிந்து பச்சை கட்டப் பாங்குடனே வாங்கினாப் போல்‌ வாங்கி நீங்க
நல மிகுந்த தநமிதனை நம்பினோமேல்‌ நம்பெருமாளும் உம்பருடன்‌ நயந்து வாழும்
இலகு மிகு பெருஞ் செல்வ மில்லை யென்‌று ஏர் முடும்பை யுலகாரியனு முரை செய்தானே –
-என்கிறபடியே அவற்றை யுபேஷித்து:

உலகாரியன்‌ திருமலை யாழ்வாரைத் திருத்த நியமித்து திருநாடலங்கரித்தல்‌
ஜ்யோதிஷ்குடி என்கிற கிராமத்தில்‌ பெருமாளுடனே யெழுந்‌தருளி அங்கே திரு மேனி நோவு சாத்தி மிகவுந் தளர்ந்து கண்‌ வளர்ந்தருள, திருவடிகளுக்கு அந்தரங்கரான முதலிகள்‌ “எங்களுக்குத்‌ தஞ்சமேது?” என்று விண்ணப்பஞ் செய்ய, அப்போது திருமலை யாழ்வாரிடத்தில்‌ திருவுள்ளம்‌ ப்ரஸந்நமாய்க்‌ குடி.புகுந்து, ஒரு மிடறு செய்து, லௌகிக வைதிகங்களிலே அதி நிபுணராய்‌
மதுரை ராஜ்யாதிபத்யம்‌ பண்ணுகிறவர்‌ அத்தை விட்டு தர்சந ப்ரவர்த்தகராம்படி ஆசீர்‌வதித் தருளி, அவரை யநு வர்த்தித்து ரஹஸ்‌யங்களையும்‌ அர்த்தங்களையும்‌ நன்றாக ப்ரஸாதிக்கும்படி கூர குலோத்தம தாஸ நாயனாருக்கும்‌, –திருவாய் மொழியை ப்ரஸாதிக்கும்படி திருக் கண்ணங்குடிப்‌ பிள்ளைக்கும்‌ திருபுட்குழி ஜீயருக்கும்‌, –மூவாயிர வ்யாக்யாநத்துக்கு நாலூர்ப் பிள்ளைக்கும்‌,–
ஸப்த காதை முதலான சில அர்த்த விசேஷங்களை ப்ரஸாதிக்கும்படி விளாஞ் சோலைப் பிள்ளைக்கும்‌ நியமித்தருளி,

ஆனி தனில்‌ வளர்‌பஷத் தாறிரண்டாம் நாள்‌ தன்னில்‌, ஊனமிலில் வுலகாரு முடும்பையர் கோனுயர்‌ திவத்து, வானவர்கள்‌ தற் சூழ வைகுந் தக்குட்டனோடு தானினிது வீற்றிருக்கத்‌ திருவுள்ளமாய்‌, விளாஞ்சோலைப்‌ பிள்ளையைத்‌ திருவநந்த புரத்தலே திருமேனி யளவாக எழுந்தருளி யிருக்கும்படி நியமித்தருளி, பிள்ளை திருவடிகளை த்யாநித்துக்‌ கொண்டு ஜ்யேஷ்ட சுத்த த்வாதசியிலே திருநாட்டுக் கெழுந்‌தருளினார்‌. முதலிகள்‌ சோகார்த்தராய்‌ மிகவும்‌ க்லேஸித்துத் தேறி, பெருமாள்‌ திருப்பரிவட்டம்‌ திருமாலை வரவிட, ஸம்ஸ்கரித்துப்‌ பள்ளிப் படுத்துத்‌ திருவத்யயநத்தைப்‌ பெருக்க நடத்தி யருளினார்கள்‌.
பிள்ளை லோகாசாரியர்‌ திரு நக்ஷத்ரம்‌ ஐப்பசியில் திருவோணம்‌, அவர்‌ தனியன்‌,
லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம்: ॥

ஸம்ஸாரமாகிற பாம்‌பினால்‌ கடிக்கப் பட்டிருக்கு ஜீவர்‌களுக்கு உஜ்ஜீவன ஒளஷதமாய்‌, வடக்குத்‌ திருவீதப் பிள்ளையின்‌ திருக் குமாரரான பிள்ளை லோகாசார்யரை அடி பணிகிறேன்‌-

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வார்த்தா மாலாவில் ஸ்ரீ எம்பெருமானார்– அருளிச் செய்த முத்துக்கள்-

January 26, 2026

ஒரு அதிகாரிக்கு த்வய மொழிய மந்திரமில்லை. மிதுநமொழிய வஸ்து வில்லை. மிதுந கைங்கர்ய மொழியப்‌ புருஷார்த்த மில்லை -ஆசார்ய அபிமான மொழிய மோக்ஷோபாயமில்லை. பாகவத அபசார மொழிய மோக்ஷ விரோதி யில்லை என்பது எம்பெருமானாரது வைதிகக் கொள்கைகள்‌. பாகவத அபசாரம்‌ பன்னிரண்டு வகைப்படும்‌. அவை யாவன: முறையே ஜன்ம நிரூபணம்‌ (உயர்ந்த ஜன்மம்‌ என்ற செருக்கு] சரீர நிரூபணம்‌(புருஷ, ஸ்திரி விலங்கு, பறவை] என்ற பாகுபாடு; பாவநிரூபணம்‌ (பாலன்‌, விருத்தன்‌) என்ற பாகுபாடு, ஆஸ்ரம நிரூபணம்‌ (பிரம்மச்சாரி, ஸந்யாசி போன்ற பாகுபாடு) அவயவ நிரூபணம்‌ (நொண்டி, முடம்‌ என்ற பாகுபாடு) ஆலஸ்ய நிரூபணம்‌ (விண்ணப்பஞ்‌ செய்வார்‌ என்ற பாகுபாடு) வாஸ நிரூபணம்‌(கோயில்‌, திருமலை, பெருமாள்‌ கோயிலில்‌ வாழ்பவர்‌ என்றபாகுபாடு) பந்து நிரூபணம்‌ (சொந்தம்‌, உறவு அல்ல என்ற பாகுபாடு, பிரகாஸ நிரூபணம்‌ (ஆசார்யர்களையும்‌-கைங்கர்யர்களையும்‌ சமமாகக்‌ கருதுதல்‌, பிரகார நிரூபணம்‌ (நந்தவன கைங்கர்‌யம்‌ செய்யும்‌ தொண்டர்களைக்‌ கேவலமாக நினைத்தல்‌) வர்த்தக நிரூபணம்‌, தோஷ நிரூபணம்‌ எனக் கொண்டனர்‌. பகவத்‌ அபசாரத்‌தை விடப்‌ பாகவத, அபசாரம்‌ மிகக்‌ கொடுமையானது. பாகவத அபசாரம்‌ ஒன்று செய்தால்‌ அது பலவாகப்‌ பெருகும்‌. இவற்றைத்‌ தாம்‌ பண்ணுவது கூடாது என்பதோடன்றித்‌ தன்‌ மதிப்புக்குரிய ஆச்சார்யனே பண்ணினாலும்‌, ஆச்சார்யன்‌ செய்யும்‌ வரம்பு மீறிய செயல்களைச்‌ சிஷ்யன்‌ ரஹஸ்யத்தில்‌ உணர்த்த வேண்டும்‌ என்கிற படி ஆச்சார்யனும்‌ பாகவத அபசாரம்‌ செய்யாதிருக்கும்படி எடுத்‌துச் சொல்ல வேண்டும்‌.-வைஷ்ணவர்கள்‌ ஒருவருக்கொருவர்‌ அபசாரம்‌ செய்தால்‌ அவர்களை நல்ல முறையில்‌ கெஞ்சி விலக்க வேண்டும்‌. அவர்கள்‌ தனிமையில்‌ செய்த குற்றங்களை வெளிப்படுத்தக்கூடாது பிரகிருதி வாசனையால்‌ குற்றம்‌ செய்து மன்னிப்புக்‌ கேட்டவர்களை வெளிப்படுத்துதல்‌ பாகவத அபசாரமாகும்‌.-எம்பெருமானார்‌ தீர்த்தமாடி சேவித்தெழுந்து வருகிறவர்‌;பிள்ளை உறங்காவில்லிதாசர்‌ கையைப்பிடித்து வருவதற்குக்‌ காரணம்‌ கேட்க, பிராமண குலத்தில்‌ பிறந்தவர்களுக்கு, நாம்‌ உயர்ந்த குலத்தில்‌ பிறந்தும்‌ அடிமை செய்கிறோமே என்ற வருத்தமும்‌ தயக்கமும்‌ வரும்‌. ஆனால்‌ பிறருக்குக்‌ கைங்கர்யம்‌ செய்யவே பிறந்த சூத்திர வர்ணத்தவருக்கு, அந்த வருத்தம்‌, தயக்கம்‌ ஏற்படாது. உள்ளத்தால்‌. பரிசுத்தமான அவருடைய ஸ்பரிசம்‌ தமக்கும்‌ வர்ணாஸ்ரம அபிமானத்தைப்‌ போக்கி பரிசுத்தி யளிக்கிறது என்றார்‌ இராமானுஜர்‌.

ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள் –

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம் யஹம்-முதலியாண்டானின் தனியன்

ஜாகரூக தநுஷ்பாணிம் பாணௌ கட்கஸமந்விதம் ராமானுஜ ஸ்பர்சவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம் பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம் ரங்கேச மங்களகரம் தநுர் தாஸம் அஹம் பஜே-பிள்ளை உறங்காவில்லி தாஸரின் தனியன் :

ஸ்ரீ உடையவர்  ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் விஷயமாக
ஸ்ரீ முதலியாண்டானுக்கு பணித்த பத்து வார்த்தைகள் –

ஸ்ரீ முதலியாண்டான் உள்ளம் விம்மிப்  புறம் பொசிந்து ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்திலே தண்டன் இட்டு நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றம் அருளிச் செய்ய வேணும் என்ன –

ஸ்ரீ உடையவரும்
நாமே உமக்கு சொல்ல வேணும் என்று இருப்பதொரு அர்த்தத்தை நீர் தாமே கேட்டீரே என்று ப்ரீதராய்
சகல வேத சாஸ்திரங்களிலும் இதிஹாச புராணங்களிலும் உள்ளதைப் பொறுக்கிச் சேர்த்து
நம் ஆழ்வார்கள் அருளிச் செயல்களிலும் சொல்லப்பட்ட குஹ்யமாய் இருப்பதொரு அர்த்தத்தை
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு இப் பத்து வார்த்தைகளால் அருளிச் செய்கிறார் –

இதில் முதல் வார்த்தை –
நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
பூணூல் சாத்திய நமக்கும் சாத்தாத தாசர் போன்றவர்களுக்கும் உள்ள வாசி –
நாம் (ஆச்சார்யர்கள்)நாடு பரிக்ரஹிகைக்காகச் செய்வுதோம் –
அவர்கள் நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி இருப்பர்கள் -திருவாய்மொழி -10-6-2–

( உலகைத் திருத்துவதற்காக நாம் உழல வேண்டும் -அவர்களுக்கு இக் கடமை இல்லையே -நாராயணனுக்குக்கே எப்பொழுதும் பற்றியே இருக்கும் பெருமை அவர்களுக்கு உண்டே)

(வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-அஹங்கார மமகார வச்யரோடு தொற்றற்ற படி கண்டாயே –உண்டியே உடையே என உகந்து ஓடும் இம் மண்டலத்தாரோடு –பெருமாள் திருமொழி -3-4-தொற்று அற பெற்றபடி கண்டாயே –
யானே என் தனதே -2-9-9-என்று யான்-எனது -என்னும் செருக்குகளுக்கு வசப் பட்டவர்களாய்-இருப்பவர்களோடு சம்பந்தம் அறப் பெற்றோம் –-ஒ ஒ உலகினது இயல்பே -திருவாசிரியம் -6-இவை என்ன உலகு இயற்கை -4-9-1- கொடு உலகம் காட்டேல் -4-9-7-என்னப் பண்ணினபடி கண்டாயே –உங்களோடு எங்களிடை இல்லை -8-2-7- என்று கழிந்தவரே அன்றோ – –நாரணனை நண்ணினமே--நிருபாதிக சர்வ ரக்ஷகனைக் கிட்டப் பெற்றோம் -நிருபாதிக சர்வ பந்துவைக் கிட்டப் பெற்றோம் -ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்களை விட்ட அளவேயோ-ஒரு காரணமே இல்லாமல் பந்துவாக இருக்கும் சர்வேஸ்வரனை பற்றவும் பெற்றோம் –விட்டவர்கள் தம்மை வேறு ஒரு தன்மையாலே பற்றுகிறார் காணும் –ஆகாராந்தரம் -நார சப்தத்துக்குள் உண்டே -இதனாலே தானே உபதேசிக்கிறார் –
முக்தனுக்கு இவை எல்லாம் சர்வேஸ்வரன் உடைமைப் பொருள் -என்னும் தன்மையாலே உத்தேச்யம் ஆகின்ற அன்றோ இவைதாம்-தானே ஆக்கி உண்டு களித்தல் தவிர்ந்து-தந்தையோடு ஒன்றாக உண்டு களித்து ஜீவிப்பாரைப் போலே காணும் –படுக்கைக்கு கீழே மிகப் பெரிய நிதி கிடக்க-புறங்கால் வீங்கி சாவாரைப் போலே அன்றோ- நாராயணனாக -அந்தர்யாமியாக -இருக்கச் செய்தேயும் நண்ணாமல் இருந்த படி–கேட்டாயே மட நெஞ்சே-பவ்யமான நெஞ்சே கேட்டாயே –என்று உபகார ஸ்ம்ருதி தொடராக கூறிக் கொள்ளுகிறார் – சப்ததோஸ்மி – திமிர் கொண்டால் போல் நிற்குமே –பெற்ற பேற்றின் கனத்தை நினைத்து-வகாதது வகுத்தது என்று திமிர்த்து இருக்கிறாயோ-இதனை அனுபவியா நின்றாயோ –

இரண்டாம் வார்த்தை –
திருப்பதிகளுக்கும் கோயில் திருமலை பெருமாள் கோயிலுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
நாம் தெப்பக் கையரைப் போலே இரண்டையும் விடோம்
அவர்கள் சாரஞ்ஞராய்க் கொண்டு விட்டத்தில் இருப்பாரைப் போலே முதல் அடியிலே நிற்பர்கள்
பிரதான ஷேத்ரம் ஒன்றில் வாழ்ந்து நிர் பரராய் இல்லாமல் –
மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் -இராமானுச நூற்றந்தாதி -60-புக்கு நிற்போம் —

(வைகுந்தன் என்பதோர் தோணியை-நாச்சியார் -5–4– சம்சார நிஸ்தாரமாகப் பற்றி
தத் ஞான சக்தியாதி அனுசந்தானத்தாலும் ஸ்வ பாரதந்த்ர்யாதி அனுசந்தானத்தாலும்
நிர் பரர் ஆகையாலே இரண்டு கையும் விடுமா போலே ஸ்வ யத்ன ரூப உபாசனாதியையும்
தத் சாத்திய பகவத் கிருபையையும் அவலம்பிக்கையை விட்டு கேவல பகவத் கிருபையே உத்தாரகம் என்று அத்யவசித்து கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ -திருவாய் -6–9–9 -என்றும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–திருவாய் -1–2–9-என்று சொல்லுகிற படியே பகவத் பிராப்தி ஆகிய கரையை குறுகைக்கு ஈடான கால சிந்தனை பண்ணா நிற்பார்கள் என்கை-)

(உணர்ந்த மெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின்
மணந் தரும் இன்னிசை மன்னும் இடந் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக் கொழுந்தே.–60-ஆத்ம குண  ஔஜ்ஜ்வல்ய யுக்தராய் -ஆத்மகுணங்கள் தன்னை சர்வ விஷயமாகஉபகரித்து அருளும் பரம ஔ தாரராய் -எங்கள் குலத்துக்கு தலைவரான எம்பெருமானார்-ஞாதவ்யார்தங்களை அடங்க அறிந்து இருந்தும் -யதா ஞான யுக்தரானவர்கள் கூட்டுரவு தோறும் –திரு வாய் மொழியினுடைய பரிமளிதமாய் விலஷணமான இசை நிரந்தரமாக நடக்கும் ஸ்த்தலங்கள் தோறும் –பெரிய பிராட்டியாராலே நித்ய வாசம் பண்ணப்பட்ட அழகிய திரு மார்வில் உடையவன் உகந்தருளி-வர்த்திக்கும் திருப்பதிகள் தோறும் –-அவ்வவற்றை அனுபவிக்கையில் உண்டான ஆசையாலே புக்கு அவற்றிலே ஆழம் கால் பட்டு-நில்லா நிற்பர்-இது அவருடைய பக்தி வைபவம் இருக்கும் படி-)=எம்பெருமானார் உடைய ஞான வைபவத்தை பேசின அநந்தரம் -அவருடைய பக்தி வைபவத்தை தாமே அனுசந்தித்து -ஏவம் பூத குண ஔஜ்ஜ்வலராய் இந்த பிரேமத்தை எல்லாருக்கும் உபகரிக்கும்-பரம ஔதாரரான எம்பெருமானார் எம் குலக் கொழுந்து என்கிறார்-எம்பெருமானார் தாம் கொழுந்தாய் கொண்டு -வேருக்கு வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே -எங்கள் குலத்துக்கு ஒரு குறை வந்தால் முற்பட தம்முடைய முகம் வாடி இருக்குமவர்-பொருந்தும் பதி -எனவே பொருந்தாத பதியும் உண்டு என்று தோற்றுகிறது-அந்த பொருந்தா பதியே .-பரம பதம்அவன் மேவி உறை கோயில் -என்னும் இடத்தில் –அவன் பரம பதத்தில் உள் வெதுப்போடே போலே காணும் இருப்பது .சம்சாரிகள் படுகிற கிலேசத்தை அனுசந்தித்து -இவை என் படுகின்றனவோ  என்கிற திரு உள்ளத்தில் வெதுப்போடே யாயிற்று அங்கு இருப்பது -4 10-2 — – என்னும் ஈட்டு ஸ்ரீ ஸூக்தி

ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -என்றும் த்யக்த்வா வைகுண்ட முத்தமம் -என்னும் பரம-பதத்தில் வைராக்கியம் பிறந்து -அதனை விட்டு திருப்பதிகளிலே உகந்து அருளி பொருந்தி உள்ளமைக்கு-ஹேது-மலராள் புணர்ந்த பொன் மார்பினன் ஆனதால் .திவ்யதம்பதிகள் இங்கேயே-இமயத்து பரம பதத்தை துறந்து மறந்து ஒழிந்தனர்-என்க-திருமங்கை ஆழ்வாரைப் போலே –தான் உகந்த திருப்பதிகள் தொறும் மண்டி அனுபவிக்க புக்கு நிற்பவர்-எம்பெருமானார் இனி இவற்றில் புகாத போது கால் பாவி நிற்க மாட்டாது -புகுந்து பின்னர் தரித்து கால் பாவி நிற்கிறார்

மூன்றாம் வார்த்தை –
ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில்
நாம் கலக்கங்களும் தேற்றமுமாய்-திருவாய்மொழி -6-3-2- போருவுதோம்
அவர்கள் கலக்கம் இல்லா நற்றவர்களாய் —
கலக்கமிலா நல்தவ முனிவர் -திருவாய்மொழி -8-3-10-என்னும் பெருமை உடையவர்களாய்
பல்லாண்டு கூறி இருப்பர்கள் –
(திருப்பல்லாண்டு 3/11)பல்லாண்டு கூறுதுமே பல்லாண்டு கூறுவனே என்று மங்களாசாசன பரராய் இருப்பர்கள் – 

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-பரிச்சின்ன ஸூகம் -ப்ரத்யக்ஷ சித்தம் அன்றிக்கே -சாஸ்திர ஸித்தமாய்-அபரிச்சின்னமான ஸூகத்திலே இறே தமக்கு அந்வயம்-அதற்கு எதிர்த்தட்டான துக்கம்-அஞ்ஞானங்கள் -ஞானம் –இதர விஷயங்களைப் பெறாமையால் வரும் கலக்கமும், அவற்றைப் பெற்றால் வரும் தேற்றமும்.-கோபமும் அருளும்.-கோபம் -பிரசாதம் -உஷ்ணத்தை பண்ணும் அக்னியும் -சீதா ஸ்வ பாவமான நிழலும்

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10–தங்கள் ஞானத்துக்கு விஷயங்களால் கலக்கம் இன்றிக்கே மஹா தபஸ் ஸூ க்களை யுடைய மனன சீலரான சனகாதிகள்-முக்தர் –முதலிலே சம்சார ஸ்பர்ஸ கந்தம் இல்லாத நித்ய ஸூரிகள்-துளக்கம் -சலனம் -அதாவது ஞானக் குறைவு -அது இல்லாத நித்ய ஸூரிகள்

ஆழ்வார்கள் எல்லோரையும் போல் அல்லர் பெரிய ஆழ்வார்-சூரணை-250-அவர்களுக்கு இது காதா சித்தம் –இவர்க்கு இது நித்யம் –சூரணை -251-அவர்களுடைய ஆழம்கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –சூரணை -252-அவர்களுக்கு உபய சேஷத்வத்தையும் அழித்து
ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது -விருத்திக்கும் ஹேதுவாய் ஸ்வரூபத்தை கரை ஏற்றும் –சூரணை -253-1-பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –2-பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –3-அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலேயே வயிறு எரிவது4-பிராப்தி பலமும் இதுவே எனபது –5-அநிமிஷரை பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் -சூரணை -254-)

நாலாம் வார்த்தை
அந்தரத்துக்கும் -(கரைக்கும் )-கடலுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில் –
நாம் சம்சாரம் ஆகிற கடலிலும் மழையிலும் பெரும் காற்றிலும்
அவற்றின் உடைய லாபச் சேதங்களாலும் சோக ஹர்ஷங்களைப் பண்ணா நிற்புதோம் –

ஆவாரார் துணை என்று அலைநீர் கடலுள் அழுந்தும் நாவாய் -திருவாய்மொழி -5-1-9- போலே –
அவர்கள் இரண்டிலும் தளர்தல் அதன் அருகும் சாரார் -இரண்டாம் திருவந்தாதி-45-என்றும்
தரு துயரம் தடாயேல் -பெருமாள் திருமொழி -5-1-என்கிறபடியே நிற்பர்கள்—

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–இத்தசையில் நமக்கு துணையாவார் யார் என்று-ஷூ பிதமான கடலுக்கு உள்ளே அழுந்துகிற நாவாய் போலே சம்சார ஆர்ணவத்திலே நான் நின்று துளங்க-நாவாய் என்று அதில் நிற்கிறவர்களை சொல்கிறது -மாஞ்சா க்ரோசந்தி இத்யாதி -கேவலம் நாவாயைச் சொன்ன போது கரையிலே நின்றார் இதுக்கு துணை யாவார் யார் என்கிறார்கள் ஆகக் கடவது -அப்போது தனக்கு ஓடுகிற தசையை உணர மாட்டாத அளவைச் சொல்லுகிறது -நாவாய் (-பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் -சூர்ணிகை -180-)ஆவாரார் துணை -என்கை யாவது -வ்ருஷடீ பிரதீஷாத் சாலையை என்றால் போலே யாகக் கடவது –நடுங்குகை யாவது -அசைந்து வருகை -இந்த நடுக்கத்தில் அவன் செய்வது என் என்ன-அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடும் -அவ்வடிவுக்கு சேர்ந்த திவ்ய ஆயுதங்களோடும் ஆழ்வார்களை சேர்த்துக் கொண்டால் போலே என்னையும் சேர்த்துக் கொண்டான் -என்று ஆளவந்தார் நிர்வாஹம்- எம்பெருமானார் –கூராழி வெண் சங்கு ஏந்தி –வாராய் என்று இவர் உகந்த படி வந்தான் என்று அருளிச் செய்வார் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானமே யாகிலும் பூ வேளைக் காரரைப் போலே ஆழ்வார்களை ஒழிய காண மாட்டார்

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-தரித்ரர் அர்த்தம் உண்டானவாறே மாதா பிதாக்களையும் ஆச்சார்யர்களையும் அவமானம் பண்ணுவர்கள் -இவர்கள் இப்படி செய்யார்கள்-தன்னுடைய பூர்வ அவஸ்தையை அறியாதே நடுவே நாலு நாள் இது உண்டானதுவே அடியாக மாதா பிதாக்களையும் ஆச்சார்யனையும் அவமானம் பண்ணுவது –உத்க்ருஷ்ட ஜன்மங்களை அவமானம் பண்ணுவது – பர லோக கதை சொன்னார் யுண்டாகில் சிரிப்பதுமாய் திரியும் ஆய்த்து –சர்வேஸ்வரனைப் பற்றி இருக்குமவர்கள் இப்படி இருப்பது ஓன்று யுண்டாகில் அத்தை ஒன்றாக மதித்து இராமையாலே அது உண்டு என்னும் இடம் தோற்றி இரார்கள்  -இல்லை என்று தளரார் என்னாதே-உண்டு இல்லை என்று தளரார் என்றது என் என்னில் நித்ய தரித்திரன் சோகம் அறியான் –ஒரு நாள் உண்டாய் அது இல்லை யானவாறே பாவியேன் பண்டு சுகமே ஜீவித்தோம் இப்போது இடி படா நின்றோம் என்று மிகவும் தளர்த்திக்கு உடலாம் என்று –உண்டு இல்லை என்று தளரார் – என்று சொல்லுகிறது-ஒரு நாள் யுண்டாய் இல்லை யானவாறே பாவியேன் பண்டு ஸூகமே ஜீவித்தோம் இப்போது மிடிபடா நின்றோம் -என்றுமிகவும் தளர்த்திக்கு யுடலாமே –-அர்த்தார்த்தி யானால் கிடையா விடில் சோகம் இல்லை -ஆர்த்தனுக்கு இறே சோகம் உள்ளது –பகவத் விஷயத்தில் பேறும் பிரிவும் அனர்த்தமாம் 0பகவத் விஷயத்தில் பிரிவும் உத்தேச்யமோ என்னில் –அழு நீர் துளும்ப  அலமருகின்றன வாழியரோ -திரு விருத்தம் -2-என்னக் கடவது இறே

கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் -வாரி ஸ்ரவதி சோகஜம் –சுந்தர -33-4-சம்சாரியில் காட்டில் ஜ்ஞானவானுக்கு வாசி விச்லேஷத்தில் துவட்சி யன்றோ-இத்தை அன்றோ உண்ணும் சோறில் முற்கூறும் துவளில் மா மணியும் சொல்லுகிறது –-முன்னம் நோற்ற விதி கொலோ முகில் வண்ணன் மாயம் கொலோ -திருவாய் -6-5-7- நான் பண்ணின ஸூஹ்ருதமோ-அவன் தன்னுடைய கிருபையோ – நிர்குண பரமாத்மா சௌ தேஹம் தே வ்யாப்ய திஷ்டதி -பீமசேனன் அனுமன் உடலில்  துவட்சி கண்டு சொன்னான் இறே – இத்யாதிகளால் பிரிவும் உத்தேச்யம்-இன்னம் இவ்வளவே அன்றிக்கே –அதனருகும் சாரார் –-இப்படிப் பட்ட ஜீவனத்தை இழந்தோம் என்னும் தளர்த்தி இல்லாத ஜ்ஞானவானுக்கும்-அவ் விழவாலே வருவதொரு அனுதாபம் யுண்டாய் இருக்கும் இறே-அங்கனே வருவதோர் அனுதாபமும் இன்றிக்கே இருப்பார்கள் இவர்கள் – அத்தை ஒரு வஸ்துவாக  புத்தி பண்ணும் அன்று இறே அத்தை இழந்ததாலே வருவதோர் அனுதாபத்தை யுடையராய் இருப்பது-ஸ்திரம் என்று நினைத்து பின்னை அஸ்திரம் என்று இருக்கும் அவர்கள் அன்றே –-ஸ்திரமானது அஸ்திரமாய்த்து என்னில் அன்றோ சோகம் உள்ளது-என் தான் இவடினுடைய லாப அலாபங்களில் நாட்டார்க்கு வரக் கடவதான சோக ஹர்ஷங்கள் இவர்களுக்கு இன்றிக்கே இருப்பான் என் என்னில் இவர்கள் பற்றி இருக்கும் விஷயத்துக்கு அவை இரண்டும் இல்லை

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -5-1-நீயே தருகிற துக்கத்தை நீயே மாற்றாயாகில்-தன்னாலே தனக்கு விரோதி வந்தது என்றும்-தானே சாதன -அனுஷ்டானத்தாலே அது போக்கிக் கொள்வான் என்றும்-சாஸ்திரங்கள் சொல்லிக் கிடக்கச் செய்தே-இவர் அவனே துயர் தந்தான் என்பான் என் என்னில் பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணி இருப்பார் ஒருவர் ஆகையாலே சொல்லுகிறார் –தானே கர்மம் பண்ணினவன் தானே சாதன அனுஷ்டானம் பண்ணித் தவிர்த்துக் கொள்ளுகிறான் என்று நம்மைப் பழியிட்டு தள்ள நினைத்தான் ஆகிலும் நானும் தன்னைக் குறித்து பரதந்த்ரன் –நான் செய்த கர்மமும் பரதந்த்ரம் –நான் பண்ணும் சாதன அனுஷ்டானத்துக்கு பலபிரதன் ஆகையாலே அதுவும் தன்னைக் குறித்து பரதந்த்ரம் ஆகையாலே –தரு துயரம் -என்கிறார் –ஸ்ரீ முதலிகள் எல்லாரும் கூட ஸ்ரீ பெரிய திரு மண்டபத்துக்கு கீழாக இருந்து ரகஸ்யார்த்தங்கள் விசாரித்து எழுந்து இருப்பார்களாய்த்து- ஒரு நாள் நித்ய சம்சாரியாய்ப் போந்தவனுக்கு ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி பிறக்கைக்கு அடி என் என்று விசாரிக்கச் செய்தே – யாத்ருச்சிக ஸூஹ்ருதம் என்ன -அஜ்ஞ்ஞாத ஸூஹ்ருதம் என்னப் பிறந்தது –அவ்வளவிலே ஸ்ரீ கிடாம்பி பெருமாள் இருந்தவன் நமக்கு ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணம் போலே
ஸ்ரீ ஸூக்ருத தேவர் என்று ஒருவர் உண்டோ ஆஸ்ரயணீயன் என்றான் –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் ஸூஹ்ருதம் என்று சொல்லுகிற நீர் தாம் நினைத்து எத்தைக் காண் என்றார் —அதாவது-ஒன்றை ஆராயப் புக்கால் அதுக்கு அவ்வருகு வேறு ஓன்று இன்றி இருப்பது இறே -அடியாவது –யாதொன்று பல பிரதமானது இறே உபாயமாவது -அல்லது நடுவே அநேக அவஸ்தை பிறந்தால் அவற்றின் அளவில் பர்யவசியாது இறே-இளைப்பாறுவது இதிலே சென்று இறே -நடுவு இளைப்பாறாது இறே -தரு துயரம் -என்னலாம் -இறே -தடாயேல் – நீ விளைத்த துக்கம் நீயே போக்காயாகில் –
மம மாயா துரத்யயா -என்றும் –மா மேவயே ப்ரபத்யந்தே மாயா மேதான் தரந்திதே -என்றும் –நம்முடைய மாயை ஒருவரால் கடக்க ஒண்ணாது காண் என்றும் –இது கடக்க வேண்டி இருப்பவன் நம்மைப் பற்றி கழித்துக் கொள்வான் என்றும்-நீயே சொல்லி வைக்கையாலே நீயே துயர் தந்தாய் என்னும் படி தோற்றப் படுகிறது இறே –துக்கத்தை விளைப்பான் ஒருவனும் போக்குவான் ஒருவனுமாய் அன்று இறே இருப்பது –-பண்ணினவன் தானே போக்கும் இத்தனை இறே-ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் –ஒரு -குருவி பிணைத்த பிணையல் ஒருவரால் அவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை-ஒரு சர்வ சக்தி பிணைத்த பிணையை எலி எலும்பனான இவன் அவிழ்க்க என்று ஒரு கார்யம் இல்லை இறே –அவன் தன்னையே கால் கட்டி போக்கும் அத்தனை இறே -என்றார்-

ஐந்தாம் வார்த்தை –
அணுவுக்கும் மஹா மேருவுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் சம்பந்தமும் -குடி கோத்ரமும் ஸூத்ரமுமாகப் பண்ணுவுதோம் –
அவர்கள் சம்பந்த ஜ்ஞான அனுஷ்டானமே குடி கோத்ர ஸூத்ரம் என்று இருப்பர்கள்
நாம் பண்டைக் குலம் ப்ராஹ்மாண்யம் பற்றி நின்று குடி கோத்ரம் ஸூத்ரம் என்றும் —
அவர்கள் தொண்டக் குலம் -ஜீவ பர சம்பந்த ஜ்ஞானம் ஒன்றே என்று இருப்பர்கள்—

(விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்த்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள்
பிரபன்ன ஜன கூடஸ்த்தர் பராங்குச பரகால யதி வராதிகள் .-சூரணை -36-)

ஆறாம் வார்த்தை –
கரும்புக்கும் (கல்)கண்டுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில் –
நாம் வேதம் ஆகிற கரும்பைக் கடித்து -(மறையாய நால் வேதம் -சக்கை கலந்த கரும்பு )
பல்லு முறிவுதோம் –
அவர்கள் சாரத் த்வயம் ஆகிற கண்டைக் கடித்து இன்புருவர்கள் —

(அறக் கற்கை அரிது என்று இறே-வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில்-முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும் ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும் தேனும் பாலும் அமுதமாக வெடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-சூரணை-16-)

ஏழாம் வார்த்தை
மண்ணுக்கும் விண்ணுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
நாம் -மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா -திருவாய்மொழி -7-1-6- என்றும்
அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-1- என்றும் –
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ-திருவாய்மொழி -6-9-9- என்றும் –
திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன் -பெரிய திருமொழி -7-7-9- என்றும் –
பயப்பட்டு கலங்கா நிற்புதோம்

விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6-தம் நிலமான சம்சாரத்திலே–சம்சாரிகளுக்கும் அவ்வருகாய் இருக்கிற என்னைப் பெற்றால் இந்திரியங்கள் அளவுடையாரையும் அகப்படுத்த வல்லவை -அவை அகப்படுத்த வேண்டாதே மேல் விழுமவன் நான் -ஆனால் எல்லாம் படுத்தவோ-

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடர் ஆழி வல்லானே உலகுண்ட வொருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை என்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் 
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-1-ரஷகனான உன்னில் காட்டிலும் பாதக வர்க்கம் அணித்தாய் நின்று நலியா நின்றன –
உண்ணிலாவிய -என்னுமா போலே ஒருவர் இருவர் இன்றிக்கே சேதன சமாதியாலே நலியா நின்றுள்ள ஐந்து இந்திரியங்கள் என் பக்கலில் வந்து புகுந்து என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்குகிறன  இல்லை –என்னுடைய விஷயத்தை காட்டு -என்னுடைய விஷயத்தைக் காட்டு -என்று இவை தனித் தனியே அலைத்து நெருக்க அவற்றுக்கு அஞ்சி வந்து சர்வ ஸ்வாமியான உன்னுடைய திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?

தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-நெஞ்சு கலங்கும் படி-பஞ்ச இந்திரியங்களும் விஷயங்களில் மூட்டி நலியும் படியான -ஐவர் -என்று சேதன சமாதியாலே சொல்லுகிறது -நலிவின் மிகுதியால்-பகவத் விஷயத்தை இழப்பிக்க வேண்டுவதுண்டாய்-தன் பக்கல் அனுபாவ்யம் ஒன்றும் இன்றிக்கே இருக்கும் ஷூத்ர ஸூகத்தை அந்தமில் பேரின்பத்துக்கு இட்டுப் பிறந்து வைத்து சப்தாதிகள் நடையாடுகிற தேசத்திலே இருக்கும் படி பாபத்தை பண்ணின என்னை -வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் -என்றவர் இறே இங்கனம் சொல்லுகிறார்-பைதல் கைசு -நோய் முக்கைசு -என்று தம் அளவன்றிக்கே பலவாய் இருக்கை-ரக்ஷகனான நீ காட்டி முடிக்கப் பார்க்கிறாயோ -சப் தாதி விஷயங்களின் உடைய தர்சன மாத்திரத்திலே முடியும்படி யாயிற்று இவர் பகவத் குணங்களிலே நைந்த படி -நாம் காணாவிடில் முடியும்படியான விஷயங்கள் இவருக்கு காணில் முடியும்படி யாயிற்று

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாயிற்று-இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன்-ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்-கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் இது அன்றோ –நான் அவரை பொறுக்க மாட்டேன்-நீரே போக்கும் விரகு பார்க்கலாகாதோ
கிருபை ஒன்றே நான் அறிவேன் என்கிறார் 

அவர்கள் இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் -திருவாய்மொழி -8-10-4- என்றும் –
வான் உயர் இன்பம் எய்தில் என் நரகமே எய்தில் என் -திருவாய்மொழி -8-1-9 -என்றும் –
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -கண்ணி நுண் -11 -என்றும்
செய்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள -பெரியாழ்வார் திருமொழி -3-7-9- என்றும்
சொல்லுகிறபடியே நித்ய விபூதியில் இருப்பவர்களைப் போலே கலக்கமும் பயமும் இல்லாமல் இருப்பர்கள்–

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் வழி பட்டு ஓட அருளிலே–8-10-4–பாகவத கைங்கர்யத்துக்கு வர்த்தகமான பகவத் அனுபவம் பூர்ணமாக கிடைப்பது பரம பதத்தில் யன்றோ என்ன -அவ்வனுபவம் அவன் பிரசாதத்தாலே இங்கேயே கிடைக்குமாகில் இங்கேயே வர்த்தித்தால் சேதம் என் என்கிறார் என்றுமாம் –அங்குத்தை அனுபவத்துக்கும் அவன் பிரசாதமே இறே ஹேது -இங்கேயே கிடைக்குமாகில் சேதம் என் -என்கை -தண்ணிதானது என்-மநோ வாக் காயங்கள் அவன் திருவடிகளிலே நிரந்தரமாக அடிமை செய்யும் படி -அவன் பிரசாதத்தை பெறில் –பாகவத ப்ரிய ரூபமான -பகவத் கைங்கர்யத்தை -அவன் பிரசாதத்தாலே -இங்கே பெறில் -அதுவே புருஷார்த்தம் -என்கை –

யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-இச் சேஷத்வ ஞானத்தோடு திரு நாட்டிலே போய் நிரதிசய ஆனந்தத்தை பெற்று இருக்கில் என் -உயர் இன்பம் -நிரதிசய ஆனந்தம் –ஸூ கத்துக்கும் சேஷத்வ ஞானத்துக்கும் எதிர்தலையான சம்சாரத்திலே இருக்கில் என் –சேஷ வஸ்து வானால் சேஷியினுடைய எல்லைக்கு உள்ளே -அவன் செய்தபடி செய்கிறான் -என்று இருக்குமது ஒழிய அவனை நிர்பந்திக்கக் கடவன் அல்லன் என்பதோர் அர்த்தமும் உண்டு-எனினும் உடையவன் வைத்த இடத்தில் கிடக்கும் அத்தனை அன்றோ என்று ஓர் அர்த்த தத்வம் உண்டு-இந்த உண்மை இப்படி இருந்தாலும் —இந்த சம்சாரம் உனக்கு புறம்பு என்கிற ஆகாரத்தால்-தன்மையால் அன்றிக்கே-நான் உனக்கு அத்யந்த சேஷமாய் இருப்பவன் என்கிற தெளிவு பிறக்க பிறக்க-சேஷத்வ ஞானம் உண்டான பின்பு–சேஷமாய் இருக்கும் பொருள்–சேஷி செய்தபடி கண்டு
அவன் எல்லைக்குள் கிடக்கும் இத்தனை அன்றோ–நம்மை நிர்பந்திக்கக் கடவதோ-
என்பதே அன்றோ தேவர்க்கு நினைவு-உனக்கு இது நினைவு ஆனாலும் இந்த சம்சாரத்தில் இருப்பை நான் மிகவும் அஞ்சா நின்றேன்-அடிமை என்கிற எண்ணத்துக்கு விரோதி ஆகையாலே–சேஷத்வ பிரதிபத்தியே குலையும் படி அன்றோ இங்கு உள்ளது –

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–இது கற்றாருக்கு வாசஸ் ஸ்தானம் ககலங்கா பெரு நகரான பரமபதம் – இது வ்யாஹத பாஷணமாய் இருந்ததீ-ஆழ்வாரை ப்ராப்யமாகச் சொன்னால் திரு நகரியே ப்ராப்ய தேசமாக வேண்டாவோ என்னில் திரு நகரியிலே பொலிந்து நின்ற பிரான் ஆணையும் ஆழ்வார் ஆணையும் கூடச் செல்லுவது
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ என்கிறபடியே ஆழ்வார் ஆணை ஒன்றுமே யாய்த்து அங்குச் செல்லுவது – சேதனனுக்கு ப்ராதி கூல்யத்தில் நின்றும் நிவ்ருத்தன் ஆனேன் என்று தோற்றும் போது ஈஸ்வரன் பக்கல் ஸ்நேஹித்து இருக்க விடுக்கும்
ஈஸ்வரன் பக்கல் ஸ்நேஹித்து இருக்கை யாவது அவன் அடியார் அளவும் ஸ்நேஹித்து இருக்கை-அவர்கள் எல்லாருக்கும் ப்ரியம் செய்கையாவது ஜ்ஞான ப்ரதன் பக்கலிலே ஸ்நேஹித்து இருக்கை இறே-ஆகையாலே திரு நாட்டை ப்ராப்யமாகச் சொல்லிற்று
அதவா நம்புவார் இருந்த இடமே வைகுந்தம் என்னவுமாம்-திரு நாடு என்றும் லீலா விபூதி என்றும் விபாகம் இல்லையோ வென்ன நம்பி திருவழுதி வள நாடு தாசர் வார்த்தை -கூரத் தாழ்வான் மகன் பிறந்த பின்பு இடைச் சுவர் தள்ளி ஒரு போகியாய்த்துக் காண் -என்று பணித்தான் –

கைத் தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்து கொண்டு  என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த் தலை எழு நாற்றுப் போலே   அவன் செய்வன செய்து கொள்ள
மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே – 3-7-9-செய்த் தலையிலே விளைந்த நாற்று உடையவன் வேண்டினபடி விநியோகம் கொள்ளுமா போலே இவளையும் அவன் வேண்டினபடி செய்து கொள்ள-கழுத்தே கட்டளையாக நீரை பருகையாலே கறுத்து பெருத்து இருந்துள்ள மேகம் போலே இருக்கிற வடிவை உடையவன் பக்கலிலே இவள் வளரும்படியாக நீங்களே சேர்த்து விடும் கோள்-என்று இப்படி பந்துக்கள் சொன்னார்கள் என்கிற இத்தனையும் இவ் விடத்தில் அபிப்ரேதம் –அதுக்கடி-தாயுரை செய்ததனை–(3-7-11) -என்று திரு மொழி முழுவதம் தாயார் வார்த்தை என்று நியமிக்கையாலே –

எட்டாம் வார்த்தை –
இரவுக்கும் பகலுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில்
நாம் வேதம் ஆகிற அந்த காரத்திலே தடுமாறா நிற்புதோம் –
அவர்கள் பேர் ஆயிரமும் ஓதின -பெரிய திருமொழி -1-5-10-விளக்கு ஒளியாலே
மாதவன் தன் துணையா நடந்து -மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய
கீதையின் செம்மைப் பொருள் -இராமானுச நூற்றந்தாதி -68–வழியே நடப்பர்கள் —

தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே –1-5-10-லோகத்தில் அறிவு உடையாராய் இருப்பார் –நித்ய சூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம்
அத்தை ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே தாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த –ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லப் பாருங்கோள் –அங்கன் இன்றிக்கே
இவற்றையே அடைவு கெட சொல்லப் பாருங்கோள்-திரு நாமம் சொல்லுங்கோள்-இல்லையே வேதம் சொல்லுங்கோள் சுருதி–இங்கு திரு மொழி -வேதம் தமிழ் செய்த மாறன் -அங்கம் அன்றோ

ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்

பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –சாரத்திய வ்ருத்தாந்தாலே தன்னுடைய ஆஸ்ரித பார தந்த்ர்யத்தை-ஜகத் பிரசித்தம் ஆக்கின ஆச்சர்ய பூதன் –ரதியான அர்ஜுனன் கையில் வில்லையும் பொகட்டு சோகாவிஷ்டனாய்–சிஷ்ய ஸ்தேஹம் சாதிமாம்   த்வாம் பிரபன்னம் –கீதை -7-2 – -என்கிற-அக்காலத்திலே பாண்டவர்களுடையதாய் தன்னுடைய திருவடிகளோட்டை ஸ்பர்சத்தாலே திவ்யமாய் இருந்துள்ள திருத் தேர்த்தட்டிலே -நின்று அருளிச் செய்த -ஸ்ரீ கீதையினுடைய ஸ்வ ரசமான அர்த்தத்தை -ஸூவ்யக்தமாம் படி -தேரிலே அர்ஜுனைக விஷயமாக அவன் அருளிச் செய்தால் போல் அன்றிக்கே –-பாரிலே சர்வ விஷயமாக அருளிச் செய்த எம்பெருமானாரை ஆஸ்ரயித்து இருக்கும் விலஷணரானவர்கள் உடைய    கல்யாண குணங்களிலே இவ்வருகு ஒன்றில் கால் தாழாதே சென்று என்னாத்மாவும் மனசும் அத்தை விடில் முடியும் என்னும்படி ப்ரவணமாய் விட்டது .

சொல்லுமளவில் யார் தான் எனக்கு இன்று சத்ருசர்

ஒன்பதாம் வார்த்தை –
ரத்னத்துக்கும் பாஷாணத்துக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே -திரு நெடும் தாண்டகம் -4- என்று
அந்தி தோறும் மந்திரத்தை சொல்லா நிற்புதோம்(இங்கு மந்திரத்தால் என்றும் திருமந்த்ரத்தையே ஆழ்வார் அருளிச் செய்தால் காயத்ரி மந்த்ரத்தைத் சொல்லி நிற்பதற்குப் பிரமாணம்)
அவர்கள் பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும் அந்தியாலாம் பயன் எங்கன் -முதல் திருவந்தாதி -33-என்று
(காயத்ரி ஜெபத்தில் ஈடுபடாமல் )மந்திர ரத்னம் த்வயத்தைச் சிந்திப்பர்கள் —

இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித் திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா அந்தணனை அந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே–4-கீழ் உக்தமான இவ் வஸ்து வேத சிரஸ்சிலே குஹ்யமாய் இருக்கும் -என்கிறார் –ப்ராஹ்மனர்க்கு தனம் வேதம் இறே-பிரமாண முகத்தாலே இறே -பிரமேய பூதனான ஈஸ்வரனை தனம் என்று அறிவது –மந்த்ரம் -என்று–பிரதிபாத்யமும் அங்கேயாய்-பிரதிபாதகமும் அங்கேயாய்
இருக்கிறபடி ஈஸ்வரனுக்கு திரு நாமமாக ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமாவில் சொல்லிற்றே-1-ஜகத் காரண பூதனை –-2-சர்வாந்தராமியாய் –-3-துர் ஜ்ஜேயனாய் –-4-தத் கத தோஷை ரசம் அஸ்பர்ஷ்டனாய் இருக்கிறவனை அனுபவிப்புதியாகில்-அவ் விஷயத்தை அனுபவிக்கும் இடத்தில் -வேதாந்த முகத்தாலே யாதல் –இதிஹாச புராணத்தாலே யாதல் -அனுபவிக்கப் பாராதே நான் இழிந்த துறையில் அனுபவிக்கப் பார் –திரு மந்த்ரத்திலே அனுபவிக்கப் பார் –திரு மந்தரத்தால் அனுபவிக்குமா போலே ஸூகரமாய் இராது இறே – சர்வம் அஷ்டாஷராந்தஸ்தம் –என்கிறபடியே –சர்வார்தங்களையும் திரளச் சொல்லும் மந்த்ரம் இறே –மறவாது வாழ்தியேல் –விஸ்மரியாதே அனுபவிப்புதியேல்-பகவத் அனுபவத்துக்கு விஸ்ம்ர்தி ஹேது விஷயாந்தர ஸ்பர்சம் ஆகையாலே-விஷயாந்தரம் கலசாதபடி அனுபவி -என்கிறாரோ -என்னில் –அது இவர்க்குச் சேராது –சரம தசையில் சாஷாத் கரித்து அனுபவிக்கிறவர் ஆகையாலே-இனி இவர்க்கு விஸ்ம்ர்தி ஹேது என் என்னில் –
தாபத் த்ரய ஆஸ்ரயமான தேக சம்பந்ததோடே இருக்கையாலே தேகத்தைப் பாரார் –
பூர்வ வ்ருத்தத்தைப் பாரார் – விஷய வைலஷண்யத்தைப் பாரார் – தந் நிவ்ருத்திக்கும் அபிமத சித்திக்கும் உறுப்பாக ஈஸ்வரனை உபாயமாக அனுசந்திப்பதொரு அனுசந்தானம் உண்டு –அது பகவத் அனுபவத்துக்கு விஸ்ம்ர்தி ஹேதுவாகக் கடவது-ஆகையாலே பூர்வார்தத்தில் இழியாதே அனுபவிக்கப் பார்–இவர் தாம் த்வய நிஷ்டர் அன்றோ-இங்கனே சொல்லுவான் என் என்னில்-அடியிலே ஒருக்கால் ஈஸ்வரன் கையில் நம் கார்யத்தை சமர்ப்பித்து விட்டோம் ஆகில்-இனி ஸ்வ உஜ்ஜீவனதுக்கு சிந்திக்கை யாவது பிறர் கார்யத்தில் இழிகை இறே –பிறர் கார்யம் -ஈஸ்வரன் கார்யம்
ஸ்வ ரஷணத்தோடு ஜகத் வியாபாரத்தோடு வாசி இல்லை இறே பிராப்தி இல்லாமைக்கு-வாழ்தியேல் –அவனுடைய பரத்வத்திலும் சாதனத்திலும் இழியாதே – போக்யதையில் இழிந்து அனுபவிப்புதி யாகில் –-வாழ்ச்சி உன்னதே இறே-நானும் உனக்கு சஹகாரியாம் இத்தனை இறே –வாழ்தியேல் -என்று தமக்கு கரணமான மனசை சேதன சமாதியாலே கர்த்தாவாகப் பேசுகிறார் இறே –மன பிரதானம் தோற்ற –யாவதாயுஷம் பகவத் அனுபவத்துக்கு பரிகாரம் இதுவாகையாலே -தத் சாபேஷனாய்  இறே முமுஷூ இருப்பது –என்றும் வாழலாம் –நித்ய ஸூரிகள் நடுவே இருந்து -யாவதாத்மபாவி வாழலாம் –எங்கும் ஒக்க அனுபவம் இறே இவனுக்கு உள்ளது வைஷ்ணவன் ஆகிறான் ராஜ குமாரன் இறே- மட நெஞ்சமே-எனக்கு பவ்யமான நெஞ்சே-விஷய ப்ராவண்ய நிவ்ருத்தி வேளையோடு
உஜ்ஜீவன வேளையோடு போக வேளையோடு வாசி அற என் பின்னே ஒழுகும் படி எனக்கு விதேகமாகப் பெற்றேனே என்று திரு உள்ளத்தைக் கொண்டாடுகிறார் – நெஞ்சமே நல்லை நல்லை -என்னுமா போலே –

நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி யுரு வெண்ணும்
அந்தியா லாம் பயன் அங்கு என்
 -33–சத்தையையும் வெளிச் சிறப்பையும் பண்ணிக் கொடுக்கக் கடவனவனுடைய திரு நாமத்தையே புத்தியாலே அனுசந்தியாதே-அவன் குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ஸ்வா பாவிக சம்பந்தத்தை அனுசந்தித்து அவனை உகப்பியாதே இடக்கை பத்துருக் கொண்டு வாயாலே சொல்லுகிற இத்தால்
அவ்விடத்தில் பிரயோஜனமாய்த் தலைக் கட்டுவது ஏதோ-நெஞ்சு விஷயாதிகளைப் பற்றிக் கிடக்க வாயாலே சொல்லுவது கையாலே எண்ணுவதாகிற இவ்விருத்திகளால் என்ன கார்யம் உண்டு-எம்பெருமானை அகலுகையே பலித்ததாய் விடுமத்தனை-சந்த்யையாலே
எல்லா அனுஷ்டானங்களையும் நினைக்கிறது  –

பத்தாம் வார்த்தை –
பதி வ்ரதைக்கும் பர நாரிக்கும்(ஆபாச ப்ரதீதி -சந்தேகப்பட இடமுண்டு) உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் ஆக்நேயாதி களுக்கு சேஷமாய் இருப்புதோம் -(வைதிக கர்மங்களைப்
பற்றி இருப்போம்)
அவர்கள் அவனுக்கே சேஷம் என்று -அவனை ஒழிந்தவர்களுக்கு சேஷம் அன்று என்று
அறுதி இட்டு இருப்பர்கள் –
இது இருவருக்கும் உள்ள தன்னேற்றம்

இந்தத் தன்னேற்றம் தான்
1-பெருமாள் பக்கலிலும் (-ரிஷிகள் விட குகப் பெருமாள் வானர முதலிகள் விபீஷண ஆழ்வான் போல்வார் இடமும்)
2-நம்பெருமாள் பக்கலிலும் -(லோக சாரங்கர் விட திருப் பாண் பெருமாள் இடமும்)
3-அப்பன் பக்கலிலும் -(தொண்டை மான் சக்ரவர்த்தி விட்டு குறும்பு அறுத்த நம்பி இடமும்)
4-பெரிய நம்பி பக்கலிலும் -(மாறனேர் நம்பிக்கு ப்ரஹ்ம ரதம் ஏற்றி அருளினது மூலம்) காணலாம்

இதின் ஏற்றம் தான் நமக்கும் உமக்கும் பெரியோர்களுக்கும் நித்ய அநுசந்தானம்
என்று ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்தார்

ஸ்ரீ முதலியாண்டானும் -அடியேன் இத்தனை காலமும் அபசாரம் பண்ணிப் போந்தேன்
இனிச் செய்ய அடுப்பது என் -என்று விண்ணப்பம் செய்ய –

சரணாகதனான முமுஷுவுக்கு இப் பத்து வார்த்தையும் நெஞ்சிலே பட்ட வன்று
திருவடிகள் ஸித்திக்கும் என்று ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்தார் –

இந்தத்‌ தன்னேற்றங்களை பெருமாள்‌ பக்கமும்‌, நம்பெருமாள்‌ பக்கமும்‌ பெரிய நம்பியிடத்தும்‌ காணலாம்‌. எம்பெருமானாருக்கு ஒரு நிர்ப்பந்தம்‌ உண்டு. பிறருடைய துர்க்கதியைக்‌ கண்டால்‌ திருஉள்ளத்தில்‌ இரங்கி அருளிச்‌ செய்வது த்வயத்தை. அடியார்‌,தொண்டர்‌ போன்ற பிரபந்ந ஜனங்களுக்குக்‌ கூடஸ்தர்‌ என்று பெயர்‌. ஆகவே நம்மாழ்வார்‌, மங்கை மன்னன்‌ தொடக்கமான ஆழ்வார்களும்‌ எம்பெருமானார்‌ முதலான ஆச்சார்யர்களும்‌ உபதேச அனுஷ்டானங்களினாலே பிரபத்தி மார்க்கத்தைத்‌ தலைப்பெறுத்தி வளர்த்தவர்களாகையாலே பிரபந்த ஜன கூடஸ்தர்‌ என்று அழைக்கப்பட்டனர்‌.வாமனாவ தாரத்திலே தன்னுடைமையைப்‌ பெறுவதற்குத்‌ தான்‌ அர்த்தியானாற்போலே, அர்த்தியாய்‌ நின்று பாஷ்யகாரர்‌ பக்கலிலே வேதாந்தார்த்தம்‌ கேட்டு சிஷ்யனாய்‌, நாமும்‌ நம்‌ இராமானுசனை உடையோம்‌ என்‌ கையாலே, ஸ்ரீ வைஷ்ணவ நம்பி என்று திருநாமமாய்‌ வாமனாதார அம்சமாகப்‌ புராண ஸித்தராய்‌ இருக்கிற நம்பியுடைய திருப்பதி என்று காட்டவே திருக்குறுங்குடி என்னாதே வைஷ்ணவ வாமநம்‌ என்றது.

எம்பெருமானாரது அந்திம தசையிலே, எங்களுக்குத்‌ தஞ்சமாய்‌ இருப்பதொன்றை அருள வேண்டும்‌ என்று முதலிகள்‌ கேட்கவே ‘எல்லோரும்‌ பாஷ்யத்தலே வாஸநை பண்ணுகையே நமக்குப்‌ பிரியம்‌. அது இயலாதவர்கள்‌ நத்தவனம்‌ அமைத்துத்‌ திருப்படித் தாமம்‌ (துளஸிபுஷ்பம்‌) பறித்துத்‌ திருமாலை எடுக்கையும்‌ பிரியமாய்‌ இருக்கும்‌. அது எல்லோராலும்‌ செய்ய முடியாததால்‌ ‘த்வயம்‌’ மந்திரத்தை ஜபித்து, ஸ்மரித்து அதையே விசுவாசியாய்‌ இருப்பது மிகவும்‌ பிரியமாய்‌ இருக்கும்‌ என்றார்‌.விஷ்ணுவானவர்‌ அனைவருக்கும்‌ சேஷியாய்‌ இருப்பவர்‌.நற்குணங்களுக்கு இருப்பிடமான நம்மாழ்வார்‌ அவருடைய திருமேனியாவார்‌. கைங்கர்யச் செல்வம்‌ நிறைந்த எம்பெருமானார்‌ அந்த நம்மாழ்வாருடைய திருவடித் தாமரை யணையாய்‌ விளங்குகிறார்‌. அந்த எம்பெருமானாரிடத்திலேயே ஆச்சார்ய ஸப்தம்‌ நிறை பொருளாய்‌ இருக்கிறது. அவருடைய அபிமானமே ஆத்ம ஜீவனத்தை விரும்பும்‌ எல்லாச்‌ சேதனர்களுக்கும்‌ ஸம்ஸாரக் கடலிலிருந்து கரையேறும்‌ உபாயமாகும்‌. அவரது குணானுசந்தானமே போது போக்குக்கு விஷயம்‌. அவருக்கு முன்னும்‌ பின்னும்‌ உள்ளமற்ற ஆச்சார்யர்களுக்கு உபகாரத்வம்‌ உண்டே ஒழிய உத்தாரகத்வம்‌ கிடையாது. அவர்கள்‌ எல்லோரும்‌ அவ்வெதிராசனால்‌ சத்தைப்‌ பெற்றவர்கள்‌. ஆகவே அவ்வெம்பெருமானாருடைய திருவடிகளையே ஸம்ஸாரம்‌ அடியோடு நீங்குவதற்கு ஆஸ்ரயிக்க வேண்டும்‌ என்று நம்‌ ஜீயர்‌, வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌கூறுவர்‌. ஸோமாஸி ஆண்டான்‌ வடுக நம்பி போன்ற பலரும்‌ இக் கருத்தையே அருளியுள்ளார்கள்‌.“ஸத்யம்‌ ஸத்யம்‌ புநஸ் ஸத்யம்‌யதி ராஜோ ஜகத் குரு’என்று கணியனூர்‌ சிறியாச்சான்‌ சத்தியம்‌ பண்ணினார்‌.-இராமானுஜாச்சாரியரிடம்‌ காணும்‌ முக மலர்த்தி, அர்ச்சாவதாரத்தில்‌ விளைவதால்‌; குளிரக் கடாக்ஷித்தல்‌, வாய் திறந்து பேசுதல்‌, வாரி அணைத்தல்‌, போன்ற பேறுகள்‌, அவரோடு ஓரே காலத்தில்‌ வாழ்ந்த முதலியாண்டான்‌, கூரத்தாழ்வான்‌, அவரது குமாரர் பட்‌டர்‌, எம்பார்‌, திருக் குருகைப் பிரான்‌ பிள்ளான்‌ முதலானோருக்கு,எல்லை யற்றதும்‌, நினைத்தற் கரியதுமான ஆஸ்ரித வாத்சல்யம்‌, செளலப்யம்‌ முதலியன உள்ளங்கை நெல்லிக்கனி போல நேரில்‌ காணலாமாமிருந்தது. எம்பெருமானாருக்கு முற் காலத்தில்‌ இருந்த மணக்கால்‌ நம்பி, உய்யக் கொண்டார்‌, ஆளவந்தார்‌. நாதமுனி முதலியோருக்கு அம்முக மலர்த்தி அப்ரதஷணமாகவே இருந்தது.முதலிகள்‌ ஆழ்வானிடம்‌ எம்பெருமானார்‌ ஆளவந்தார்‌ இருவரில்‌ யாருக்குச்‌ சிறப்புண்டு என்று வினவிய பொழுது, ஆளவந்தார்‌ எம்பெருமானாருக்கு ஆச்சார்யார்‌ ஆன போதிலும்‌ அவருடைய கிருபா கடாக்ஷ்த்தாலேயே எம்பெருமானார்‌ உய்வு பெற்றவரானாலும்‌, ஆளவந்தாருக்கே சிறப்பு இருந்த போதிலும்‌, ஆசையுடையோர்க்கெல்லாம்‌ ஆரியர்கள்‌ கூறும்‌ என்ற கிருபாமாத்ர பிரசந்நாச்‌சார்யாத்வம்‌, காரேய்‌ கருணை இராமானுசரிடத்திலேயே நிலை நிற்கையாலே இவர்க்கே சிறப்பு என்றார்‌ ஆழ்வான்‌.யதிராஜரது நித்ய கர்மங்கள்‌ உடையவர்‌ பெருமாளுடைய ஸ்ரீகார்யம்‌ ஆராய்ந்து கொண்டு பகலில்‌ ஸ்ரீபாஷ்யம்‌ காலட்சேபம்‌ செய்து இரவில்‌ திருப்பள்ளியேறினால்‌, திருவாய்மொழி சேவித்த படியே கண்‌ வளர்ந்தருளுவார்‌.இரவில்‌ உறங்காவில்லிதாஸர்‌, ஸ்ரீ குண தாஸர்‌ போன்ற இராமானுஜ வேளைக்காரர்‌ இவருக்குக்‌ காவலாயிருப்பர்‌. காலையில்‌ அவரை வைணவ முதலிகள்‌ இராமனுஜ சுப்ரபாதம்‌ ஓதி துயிலெழுப்புவார்கள்‌. உடையவர்‌ கண் விழித்த பின்‌, பிரபந்தப் பாடல்களை அனுசந்தித்துப்‌ பின்பு நீராடுவார்‌. திருவீதியிலுள்ள ஆசார்ய புருஷர்‌கள்‌ வணங்கி நிற்க காவேரியிலிருந்து மடத்துக்கு எழுந்தருளுவார்‌. எல்லாத்‌ திவ்ய தேசத்துப்‌ பெருமான்களுடைய பவித்திரங்களைத்‌ திருமுடியிலும்‌, கழுத்திலும்‌ சாத்திக் கொண்டு திருப் பல்லாண்டு, திருப் பள்ளி யெழுச்சி, திருப் பாவை, ஸ்ரீ ஸ்தோத்ர தனியன்களை அனுசந்தித்துக்‌ கொண்டு திருமண்‌ காப்பணிந்து தியானத்தில்‌ ஈடுபடுவார்‌. பின்னர்‌ பேரருளாளன்‌ தொடங்கி அழகிய மணவாளனை மங்களாசாசனம்‌ செய்ய கோவிலுக்குச்‌ செல்வார்‌. நம்‌ பெருமாளுக்கு ஸகல கைங்கர்யங்களும்‌ காலாகாலங்களில்‌ நடக்கும்படி பத்துக்கொத்தலுள்ளவர்களுக்கும்‌ கட்டளை இட்ட பின்‌ கோயிலிலிருந்து மடத்‌திற்கு வந்து பேரருளாளர்‌ திருவராதனம்‌ பூர்த்தி செய்து தளிகை மாறிய பின்‌ சிஷ்யர்களுக்குத்‌ தீர்த்தப் பிரசாதம்‌ வழங்கிய பின்‌ தாமும்‌ ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ (பிரஸாதப்படுதல்‌) உணவு உட்கொள்ளுவர்‌.அதன்‌ பின்னர்‌ ஆளவந்தாரை நினைத்துத்‌ தியானம்‌ செய்த பின் பட்‌டரையும்‌, ஸ்ரீராமப்பிள்ளையையும்‌ கொண்டு இராமாயணம்‌ படிக்‌கச்‌ சொல்லிக்‌ கேட்பார்‌. சாயங்காலம்‌ காயத்ரி ஜபம்‌ செய்து
அனுஷ்டானங்களை முடித்தபின்‌ பேரருளாளன்‌ முன்பு பல்லாண்டு முதலியனவற்றைச்‌ சிஷ்யர்களை சேவிக்கச்‌ சொல்லுவார்‌. பின்னர்‌ அழகிய மணவாளனைச்‌ சென்று சேவித்து கோயில்‌ முழவதும்‌ திருவிளக்கேற்றி ஸந்நிதியில்‌ பொன் குத்து விளக்கிலே தெய்விளக்‌கேற்றி, மலர்மாலைகள்‌ சாத்தி இளநீர்‌ அமுது செய்வித்தருளுவார்‌.இரவிலும்‌ பகலைப் போலவே திருவாராதனம்‌ நடத்துவித்து திருவரங்கச்‌ செல்வரை எழுந்தருளுவித்து நடைப் பலிகளை நடத்தி யாகசாலை ஹோமங்களை நடத்தச்‌ செய்வார்‌.பள்ளி கொள்ளுமிடத்தில்‌ செல்வரை எழுந்தருளச்செய்து சம்பா அமுது செய்வித்து தன்வந்திரி வம்சத்தவர்‌ தயாரித்த கஷாயமும்‌ அமுது செய்வித்து, ஸ்ரீரங்கநாயகியார்‌, கோவிலையும்‌ அலங்கரிப்பித்து என்‌ திருமகள் சேர்‌ மார்பனானை’ சேர்த்தியிலே எழுந்தருளப்பண்ணி, பலவிதமான சுகந்தங்களைச்‌ சாத்துவித்து வெள்ளிக்‌ கிடாரங்களிலே பாற்குழம்பு சேர்த்து ௮முது செய்வித்து அரம்பையர்கள்‌ தாலாட்ட யாழ் குழல்‌ வீணை வாசிக்க பெருமாள்‌ பள்ளி கொண்டருளும்படி செய்து சங்குசக்கரத்தாழ்வார்களை பள்ளியறைக்குக்‌ காவலடைத்து ஸ்ரீநிதி இருக்கும்‌ இடத்தற்கு திருக் காப்புச் சேர்ப்பித்து புறப்படுவார்‌. மடத்தில்‌ பேரருளாளர்க்கும்‌ எல்லாம்‌ செய்து தாமும் பள்ளி கொள்வார்

இன்னமுத மூட்டுகேன்‌ இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம்‌ பாடவல்ல சீர்ப்பெருமாள்‌ – பொன்னஞ்‌
சிலைசேர்‌ நுதலியர்‌ வேள்‌ சேரலர்‌ கோன்‌, எங்கள்‌
குலசேகரனென்றே கூறு
-எம்பெருமானார்‌ அருளிய பெருமாள்‌ திருமொழித் தனியன்‌
வாழிபரகாலன்‌ வாழிகலிகன்றி
வாழிகுறையலூர்‌ வாழ்வேந்தன்‌ – வாழியரோ
மாயோனை வாள்வலியால்‌ மந்திரங்‌ கொள்‌, மங்கையர்கோன்‌
தூயோன்‌ சுடர்மான வேல்‌
-எம்பெருமானார்‌ அருளிய பெரிய திருமொழித் தனியன்‌
முந்துற்றநெஞ்சே முயற்றித்‌ தரித்துரைத்து வந்தித்து வாயார வாழ்த்தியே – சந்த
முருகூரும்‌ சோலை சூழ்‌ மொய்பூம்‌ – பொருதல்‌ குருகூரன்‌ மாறன்‌ பேர்கூறு
-எம்பெருமானார்‌ அருளிய பெரிய திருவந்தாதி தனியன்‌

சீரார்‌ திருவெழு கூற்றிருக்கை யென்னும்‌ செந்தமிழால்‌
ஆராவமுதன்‌ குடந்தைப் பிரான்‌ றனடியிணைக்கீழ்‌
ஏரார்‌ மறைப் பொருளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே
‘சேராமர்சொன்ன வருள்மாரிபாதம்‌ துணை நமக்கே.
-திருவெழு கூற்றிருக்கை தனியன்‌

“அழுக்கென்றிவையறிந்தேன்‌ அம்பொன்‌ அரங்கா
ஒழித்தருள்வாய்‌ உள்ளில்‌ வினையை பழிப்பிலா
என்னாரியர்க்காக எம்பெருமானர்க்காக
உன்னாருட்காக உற்று’
-விளாஞ்சோலைப்பிள்ளை அருளிச் செய்தது

சீராரும்‌ எதிராசர்‌ திருவடிகள்‌ வாழி.
திருவரையிற்‌ சாத்திய செந்துவராடை வாழி.
ஏராரும்‌ செய்ய வடிவு எப்பொழுதும்‌ வாழி.
இலங்கிய முந் நூல்‌ வாழி இணைத் தோள்கள்‌ வாழி.
சோராத துய்ய செய முகச்சோதி வாழி.
தூ முறுவல்‌ வாழி துணை மலர்க்‌ கண்கள்‌ வாழி.
ஈராறு திருநாம மணிந்த எழில்‌ வாழி.
இனி திருப்போடெழில்‌ ஞான முத்திரை வாழியவே.

அறு சமயச்‌ செடி யதனை யடி யறுத்தான்‌ வாழியவே.
அடர்ந்து வரும்‌ குதிட்டிகளை யறத் துறந்தான்‌ வாழியவே.
செறு கலியச்‌ சிநிதுமறத் தீரத்து விட்டான்‌ வாழியவே.
தென்னரங்கர்‌ செல்வ முற்றும்‌ திருத்தி வைத்தான்‌ வாழியவே.
மறையதனில்‌ பொருளனைத்தும்‌ வாய் மொழிந்தான்‌ வாழியவே.
மாறனுரை செய்த தமிழ்‌ மறை வளர்த்தோன்‌ வாழியவே.
அறம் மிகு நற் பெரும்புதூர்‌ அவதரித்தான்‌ வாழியவே.அழகாரும்‌ எதிராசர்‌ அடியிணைகள்‌ வாழியவே.

சங்கர பாற்கர யாதவ பாட்டப்‌ பிரபாகர்‌ தங்கள்‌ மதம்‌
சாய்வுற வாதியர்‌ மாய்குவரென்று சதுமறை வாழ்ந்திடுநாள்‌
வெங்கலி யிங்கினி வீறு நமக்கிலை யென்று மிகத் தளர்நாள்‌
மேதினி நஞ்சுமையாறு மெனத் துயர்விட்டு விளங்கிய நாள்‌
மங்கையராளி பராங்குச முன்னவர்‌ வாழ்வு முளைத்திடு நாள்‌
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்று முவந்திடுநாள்‌
செங்கயல்‌ வாவிகள்‌ சூழ் வயல்‌ நாளும்‌ சிறந்த பெரும்பூதூர்ச்‌
சிமானிளையாழ்வார்‌ வந்தருளிய நாள்‌ திருவாதிரை நாளே

அத்தகிரி யருளாளரடி பணிந்தோன்‌ வாழியவே.
அருட்கச்சி நம்பியுரை யாறு பெற்றோன்‌ வாழியவே.
பக்தியுடன்‌ பாடியத்தைப்‌ பகர்ந்திட்டோன்‌ வாழியவே.
பதின்மர்‌ கலையுட்‌. பொருளைப்‌ பரிந்து கற்றோன்‌ வாழியவே.
சுத்த மகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன்‌ வாழியவே.
தொல்‌ பெரிய நம்பி சரண்‌ தோன்றினான்‌ வாழியவே.
சித்திரையில் லாதிரை நாள்‌ சிறக்க வந்தோன்‌ வாழியவே.
சீர் பெரும்புதூர்‌ முனிவன்‌ திருவடிகள்‌ வாழியவே.

எண்டிசை யெண்‌இளையாழ்வார்‌ எதிராசன்‌ வாழியவே.
எழுபத்து நால்வர்க்கெண்ணான்‌ குரைத்தான்‌ வாழியவே.
பண்டை மறையைத்‌ தெரிந்த பாடியத்தான்‌ வாழியவே.
பரகால னடிஇணையைப்‌ பரவுமவன்‌ வாழியவே.
தண்டமிழ்நூல்‌ நம்மாழ்வார்‌ சரணானான்‌ வாழியவே.
தாரணியும்‌ விண்ணுலகும்‌ தானுடையோன்‌ வாழியவே.
தெண்டிரைசூழ்‌ பூதூரெம்பெருமானார்‌ வாழியவே.
சித்திரையிற்‌ செய்ய திருவாதிரையோன்‌ வாழியவே.

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ எம்பெருமானார் வைபவம் -ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ வார்த்தா மாலையில் வார்த்தை -441-

December 17, 2025

குளப்படியிலே தேங்கினால் குருவி குடித்துப் போம் –
வீராணத்து ஏரியிலே தேங்கினால் நாடு விளையும் -என்று அருளிச் செய்தார் நாதமுனிகள்
இவ் வர்த்தத்தை உய்யக் கொண்டாருக்கு அருளிச் செய்தார் –
உய்யக் கொண்டார் மணக்கால் நம்பிக்கு அருளிச் செய்தார் –
மணக்கால் நம்பியும் ஆளவந்தாருக்கு பச்சை இட்டார் –
இம் மஹா அநுபாவன் இத் தர்சனத்திலே புகுந்தானாகிலோ -என்றார் ஆளவந்தார் 

(லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்-எம்பார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்) 

(ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது -எம்பார் பட்டருக்கு அருளிச் பெய்த-10 வார்த்தைகள் அடுத்து பார்க்கப் போகிறோம் -அதில் தொடக்கத்தில் உள்ளவை ––)

பரம காருணிகரான ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீ சரமோபாய நிர்ணயத்தில் ஸ்ரீ ஸூக்திகள்-

நாதமுனிகளுக்கு ஆழ்வார் திருத் திரை வளைத்துத் திருவாய்மொழி ப்ரஸாதித்து அருளுகிற அளவிலே-“பொலிக பொலிக” வந்தவாறே பூத பவிஷ்யத்வர்த்தமான கால த்ரய பர்யவஸாயி ஜ்ஞாநமுடையராகையாலே-உடையவருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்தருளி “கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று“இந்த ப்ரபந்ந குலத்திலே ஒரு மஹானுபாவர் திரு அவதரிக்க போகிறார். அவராலே நாடு அடங்க வாழப் போகிறது”
என்று நாதமுனிக்கு அருளிச் செய்ய,

அவரும் “பயன் அன்றாகிலும்” என்கிற பாட்டை இயலும் இசையுமாக ஏறிட்டு ஆழ்வாரைப் பாடி உகப்பித்து,”தேவரீர் ஸர்வஜ்ஞராகையாலே அறியப் போகாது ஒன்றுமில்லை
அவ்யக்தியினுடைய ஸம்ஸ்தானத்தை தேவரீர் பாவித்துக் காட்டி யருள வேணும்” என்று ப்ரார்த்திக்க

அற்றை ராத்திரியிலே நாதமுனிகளுக்கு ஸ்வப்ன முகேந ஆழ்வார் எழுந்தருளி
த்வாதஶோர்த்வ புண்டரங்களும் காஷாய திருப் பரியட்டமும், த்ரிதண்ட ஹஸ்தமும், ஆஜானுபாஹுவும் நிரவதிக தேஜோ ரூபமான திருமேனியும்,
“மகரம்சேர் குழையிருபாடிலங்கியாட” தீர்க்கராய் எழுந்தருளி, க்ருபா ப்ரவாஹ ஸூசகமான முகமும், முறுவலும் சிவந்த திருக் கண் மலருமாக ஸேவை ப்ரஸாதித்தருளி
‘அவ்யக்த்தி யிருக்கும்படி இது காணீரே’
என்றருளிச் செய்து,
இவ்யக்தி அடியாக ப்ரபந்ந குல பூதரெல்லாரும் பேறு பெறப் போகிறார்கள்’ என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகளும் உடனே உணர்ந்தருளி ஆழ்வார் திருவடிகளிலே தண்டம் சமர்ப்பித்து
‘தேவரீருடைய ஸம்ஸ்தானத்திலும் தேவரீர் பாவித்தருளின ஸம்ஸ்தானம் அடியேனுக்கு மிகவும் ஆகர்ஷகமாயிருந்ததீ!” என்ன, “இதென்ன மாயம்! லோகமெல்லாம் இவ்யக்த்தியாலே காணும் மேல்விழப் போகிறது!” என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகளும் திரியவும் ஆழ்வாரை உகப்பித்து இந்த பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை நித்யமாக அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்ய,
ஆழ்வாரும் உடையவருடைய ஸர்வோத்தாரகத்வத்தை வெளியிடக்கடவோமென்று
மற்றை நாள் ராத்திரி ஸ்வ விக்ரஹத்துக் கடவ சில்ப வம்ஶரிடத்திலே ஸ்வப்ன முகேன எழுந்தருளி பவிஷ்யதாசார்ய ஸம்ஸ்தானத்தை வகுத்துக் காட்டி யருளி
“நாளை நம் புளிக்கீழே வந்து இப்படியே ஸர்வாவயவ பூர்ணமாக சமையுங்கோள்” என்று அருளிச் செய்ய, மற்றை நாள் விடிந்தவாறே, திருப்புளியின் கீழேவந்து ஶரீரஶோதன பூர்வகமாக ஆஹார நித்ரை யின்றிக்கே அவ்விக்கிரஹத்தை நிர்மித்துக் கொடுக்க,
அவ்விக்ரஹத்திலே ஒரு ஶக்தி விசேஷத்தை அதிஷ்டிப்பித்தருளி, நாதமுனிகளை அழைத்தருளி, “உம்முடைய அபேக்ஷிதத்தை இதோ தலைக் கட்டினோம் கண்டீரே” என்று அவ் விக்ரஹத்தை ப்ராஸாதித்து அருளி –

“ராமஸ்ய தக்ஷிணோ பாஹூ: “ இலக்குவன் ராமனுடைய வலது கை போன்றவன். (ரா-அ-34-13)என்கிறபடியே நம்முடைய அவயவமாக நினைத்திரும்.-இவ்யக்த்திக்கு அடி நாமாகையாலே நமக்கு அடியுமாய் நம் கார்யத்துக்கு கடவதுமாயிருக்கும்.
இனிமேல் நம் தர்ஶனத்துக்கு வர்த்தகமாக அடியிட்டு வைத்தோம்.
உம்முடைய குலத்திலே ஒருவர் இவ் வயக்தியை ஸாக்ஷாத்கரிக்க போகிறார்.

அது தான் பெருமாள் திரு அபிஷேகத்துக்கு பாரித்த மாதத்திலே பதினெட்டாமோத்திலே ப்ரதமோபாயம் பிறந்தாப்போலே நம் பிறவி நாளைக்கேறப்பார்த்தால் பதினெட்டாமவதியிலே சரமோபாயம் பிறக்கப் போகிறது,-இவ்வயக்தியை நம்மை கண்டு கொண்டிருந்தாப் போலே கண்டு கொண்டிரும் என்றருளிச் செய்து விடைக் கொடுத்தருள,
அப்போதே நாதமுனிகளும் ஆழ்வார் ஸேவை ஸாதித்தருளினதுக்குத் தோற்று.

யஸ் ஸ்வாபகாலே கருணாஸ்ஸந் பவிஷ்யதாசார்ய பர ஸ்வரூபம் |
ஸந்தர்ஶயாமாஸ மஹாநுபாவம் தம் காரி ஸூநும் ஶரணம் ப்ரபத்யே ||

எந்த நம்மாழ்வார் கருணை மிக்கவராய், அடியேன் தூங்கும் போது பவிஷ்யதாசார்யரின் சிறந்த விக்ரஹத்தை எனக்கு காட்டியருளினாரோ, காரியாரின் பிள்ளையான அவரை ஶரணமடைகிறேன். (நாதமுனிகளருளியது) என்கிற ஶ்லோகம் அருளிச் செய்தாரென்று
நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச் செய்வர்.-இவ்வர்த்தம் ஓராண் வழியாய்ப் பரம குஹ்யமாய் வந்ததென்றும் அருளிச் செய்வர்.

கொசித் கொசித் என்று -எப்போதோ எப்போதோ —இவர் ஆவிர்பாவம் கலியும் கெடும் போலே ஸூசிதம்-பாகவதம் -த்ராவிடேஷூ மகா பாகவதர்கள் -நாராயண பராயதா –நாராயணா எல்லாமாகக் கொண்டு இருப்பார்கள் –தாமிரபரணி கரையில் -பயச்வினி-பாலாற்று -கரையில் வேகவதி வைகை-காவேரி கரையில் தோன்றுவார்கள் –
ராமானுஜ திவாகர – -கலித் த்வம்சம்-பவிஷ்யகார ராமானுஜ விக்ரகம் மதுரகவி ஆழ்வாருக்கும் –நாத முனிகளுக்கும் பிரசாதித்து அருளினார்-வஜ்ர நாபன் என்பவர் -ஸ்ரீ கிருஷ்ணன் உடனே இருந்தவர் என்பர் -ஸ்ரீ கிருஷ்ணன் சந்ததியில் வந்தவர் என்றும் சொல்வர்-வடக்கில் ஸ்ரீ கிருஷ்ண விக்ரகம் பல இடங்களில் -பிரதிஷ்டை செய்து அருளினார் என்பர்

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.
–5-2-1-

பொலிக பொலிக பொலிக-
சம்ருத்தம் யாயிற்று -முக்கால் அருளிச் செய்கிறது -வைதிகமான மங்களா சாசனமும் -சாந்தி சாந்தி சாந்தி -என்று முக்கால் சொல்லுகையாலே–நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும்.“சாந்தி: சாந்தி: சாந்தி:” என்று வைதிகமான மங்களாசாசனங்கள் மும் முறை சொல்லக் கடவதாயிருக்குமே யன்றோ?
ஆதலால், ‘பொலிக பொலிக பொலிக’ என்கிறார்.
‘பெரியாழ்வாரைப் போலே முற்படப் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்து, பின்பு பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்ய வேண்டாவோ?” என்ன, -நம்பிள்ளை கேட்க –அப்படியே யன்றோ செய்தது,
“வீற்றிருந்தேழுலகு” என்ற திருவாய்மொழியால் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்தார் கண்டீரே;-பின்னை இத் திருவாய் மொழியிலே பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்கிறார்” என்று நஞ்சீயர் அருளிச் செய்தார்.
பரமாசாரியரான இவரைப் பின் சென்றாரித்தனை காணும் பெரியாழ்வாரும்.
போயிற்று வல்லுயிர்ச் சாபம்-
உயிரினுடைய வலிய பாபமானது போயிற்று –பாபம் ஆகிறது -அவித்யா கர்மா வாசனா ருசிகள் –இத்தை சாபம் என்கிறது அனுபவித்தால் அல்லது போகாமையாலும் -ஆகந்துகம் ஆகையாலும்-
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை-
கர்மம் போகையால் கர்ம அநு குணமாக அனுபவிப்பிக்கும் நரகமும் கோப்புக் குலைந்து கட்டு அழிந்து போயிற்று –
சிறை கிடப்பார் இல்லாமையால் சிறைக் கூடம் பேணா வேண்டா வி றே –
கர்மமும் கர்ம அனுபவ ஸ்தானமும் போகையாலே-அதுக்கு நிர்வாஹகானான யமனுக்கு இந்த சம்சாரத்தில் சாத்தியம் ஒன்றும் இல்லாத படி யாயிற்று –
நமன் தமரால் ஆராய பட்டு அறியார் -ஸ்வ புருஷ மபிவீஷ்ய பாச ஹஸ்தம் –அவன் முக்த ப்ராப்ய பூமியிலே ஆராயில் ஆராயும் இத்தனை -இங்கு ஓர் அவகாசமும் இல்லை என்கை
அபாபனான தர்ம புத்திரனுக்கு ஒரு பாப லேசத்தாலே நன்றாக தர்சனம் பண்ண வேண்டிற்று இ றே -அதுவும் இல்லை இ றே இவர்களுக்கு –
கலியுங் கெடும் கண்டு கொண்மின் –
அதுக்கு எல்லாம் அடியான கால தோஷமும் போயிற்றே-அந்தக் கலி காலமும் அழிந்து போகும். மேலே சொல்லிக் கொண்டு போந்தவற்றை இறந்த காலத்திலே ஆக்கி, ‘கலியும் கெடும்’ என்ற இதனை எதிர் காலத்திலே ஆக்கி நிர்வஹிக்கவுமாம்.-அன்றிக்கே, இவையும் எல்லாம் போயிற்றன, ‘கலியும்’ நசித்தது என்றே இருக்க அமையும் என்று, இங்ஙனே ஒரே ரீதியாகச் சொல்லவுமாம்.-நன்று; கலிக்கு அடைத்த காலமாய் இருக்கச் செய்தே, ‘கெடும்’ என்பது என்? என்னில்,-கண்டு கொண்மின்-அநுபவத்தால் அறியுமதற்கு உபதேசம் வேணுமோ? நீர் ‘இது கெடும்’ என்று சொல்லுகிறது என் கொண்டு? என்னில்,‘கடல் வண்ணன்’ என்று தொடங்கி, விடை அருளிச் செய்கிறார் மேல்:“எந்தத் தேசத்தில் திரு அஷ்டாக்ஷர மந்திர சித்தியை யுடைய பெருமை பொருந்திய பாகவதர்கள் வசிக்கின்றார்களோ-மதிக்கப்படுகிறார்களோ அங்கு வியாதி துர்பிக்ஷம் தஸ்கர-களவு முதலானவை நடமாடுகின்றன இல்லை” என்கிறபடியே, நாராயணயா அர்த்தம் -பகவத் ஏக போகத்வம் -விரோதி -வியாதி -விஷய ப்ராவண்யம் உபாயத்வ விரோதி -ஸூவ ரஷணம் ஒழிகை – நமஸ் அர்த்தம் பஞ்சம் – ஆத்மா அபகாரம் தஸ்கரம் –களவு -பிரணவம் அர்த்தம் – பாகவத சஞ்சாரம் இல்லாமையே யன்றோ இப் பொல்லாங்குகள் உண்டாவதற்குக் காரணம்; அவர்கள் சஞ்சாரம் உண்டான பின்பு இவை நிற்குமோ? அன்றிக்கே நாட்டில் உள்ள வியாதி களவு பஞ்சம் -இத்யாதி குலம் தரும் செல்வம் தரும் இத்யாதி -கலிக்கு அடைத்த காலமாய் இருக்க போகை யாவது என் என்னில் –அநுபூத அர்த்தத்திலும் சம்சயம் உண்டோ –இவை அடங்க போகைக்கு அடி என் என்ன –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்-
பாகவத சஞ்சாரம் இல்லாமையினாலே கால தோஷம் உண்டாகிறது –அவர்கள் சஞ்சாரம் உண்டாகையாலே கலி துர்லபம் யாயிற்று
பூதங்கள் என்கிறது –பூ சத்தாயாம்-என்று தாது வாகையாலே அவன் சத்தத்தையே சத்தையாய் அறுகையாலே-அவன் வடிவு அழகை அனுபவித்து -அத்தாலே லப்த சத்தாகராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
மண் மேல் – அழகுக்கு தோற்று இருப்பார் – உள்ளது பரம பதத்திலேயாய் இருக்க -அதுக்கு சம்பாவனை இல்லாத பூமியிலே -அவன் அழகிலே தோற்றிருப்பவர்கள் உள்ளது பரம பதத்திலே அன்றோ? என்ன, இங்கே என்று படி எடுத்துக் காட்டுகிறார். –மண் பிடி எடுத்து காட்டுகிறார் – பகவானுடைய அநுபவத்திற்கு மேட்டு மடையான சம்சாரத்தில் மரு பூமியில் தண்ணீர் போலே எங்கேனும் ஒருவர் இருவர் உண்டாமத்தனை யன்றோ? என்ன,-அவர்களுக்கு அளவு என் என்னில் –
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–
அடியார் குழாங்கள் என்னும் படி நெருங்கப் புகுந்து –ஏதத் சாம காயன் நாஸ்தே -என்னும் படியே பாடி இருந்த இடத்தில் இருக்க மாட்டாதே ஆடி –
உழி தரக் கண்டோம்.–-சஞ்சரிக்கக் கண்டோம் -போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த -நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை -கலியும் கெடும் -கண்டு கொண்மின் -பொலிக பொலிக பொலிக –

——————–

ஆளவந்தாருக்கு எம்பெருமானார் ஏகலவ்யன் அன்றோ என்றார் -எம்பார்
வித்தாகும் காய் பிஞ்சிலே தெரியும் என்று பெரிய திருமலைநம்பி

(அனைத்து உலகும் வாழப் பிறந்த ராமானுஜ நம்பி
ஏகலைவனுக்கும் மேலே இவருக்கே -ஆ முதல்வன் இவன் என்றும் ஆளவந்தார் கடாஷித்து – பேர் அருளாளனை சரண் அடைந்த பரகத ஸ்வீகாரம் இவருக்குத்தான் -)

இது ஒரு திரு வவதாரமோ -என்றார் திருமாலை யாண்டான் –
உன்னோடு வருகிறவன் நித்ய ஸூரிகளில் ஒருவன் என்றது ப்ரஹ்ம ரஷஸூ –
என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது – என்றார் தெய்வவாரி யாண்டான் –-(பெரியநம்பி ஆளவந்தாரை கண்டேனோ சேவித்தேன் என்பதால் இந்த வார்த்தையும் ராமானுஜரின் மஹிமையைக் காட்டுமே)

ஊர் புக்கு வருகிறேன் என்றார் திருக்கோட்டியூர் நம்பி (அரங்கன் உகந்த அருளின திவ்யதேசமாய் இருந்தாலும் நம்பியோ ராமானுஜர் வாஸம் செய்யும் ஊர் புக்கு வருகிறேன் என்றார்)
பெருமாளே சரணம் என்னக் கண்டிலோம் -ஆளவந்தாரே சரணம் என்னக் கண்டிலோம் –
நாம் என் செய்யக் கடவோம் -என்றார் பெரியநம்பி

என்னுடைய சர்வஸ் வத்தையும் வாங்கிக் கொள்ளவோ இப்படி செய்கிறது என்றார்
ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர்
வைத்த கையிலும் வாங்கின கை தஞ்சம் -என்றார் அம்மங்கி -(அரங்கனும் தந்திலன் தான் அது தந்து -அமுதனார்-நம்மளவும் மோக்ஷம் வாங்கிப் பெற்ற ஹஸ்தம் அன்றோ-“முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்-இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்-இராமா நுசனை ஈன்ற தன்றோ?“-பாரதிதாசன்-அறிவுடையார் எல்லாம் உடையரென்றார் வள்ளுவனார்ஆழ நினைந்தால், எதனை அறிவதெனும் செறிவுடைய கேள்வி வரும்; சிந்தித்தால் விடை தெரியும்; சித்தத் தெளிவுக்கு வித்தான ‘உடையவரை’ அறிவதினும் பெரிய அறிவுண்டோ? )
சர்வம் பலவத பத்யம் -என்றார் முதலி யாண்டான் –
(பலம் உடையவனுக்கு அபத்யமான ஆகாரமும் பத்தியமாக இருக்கும் என்றவாறு)
வெள்ளை சாத்தி எழுந்து அருளியது பற்றி முதலி யாண்டான் வார்த்தை –
(த்ருஷ்ட்வோ தர்ம வ்யதிக்ரம ஸாஹஸம் ச பூர்வேஷாம் தேஷாம் தேஜோ விஸேஷேண ப்ரத்யவாயோ ந வித்யதே -கௌதம தர்ம-1-3-4-பூர்வர்களான பெரியவர்கள் சில சமயங்களில் தர்மத்துக்கு மாறுபட்ட கார்யங்களையும் ஸாஹஸமான கார்யங்களையும் செய்திருப்பதைக் காண்கிறோம் -மிகுதியான தேஜஸ்ஸு உண்டாகையாலே அவர்களுக்கு அவை தவறில்லை -)

பிதற்று என்றே இருந்தேன் -என்றார் கூரத் ஆழ்வான்

ஆழ்வான் -இஷ்ட சித்தி வாசிக்கிற வர்களோடு இருந்து தாழ்த்து வர ஆழ்வானுக்கு உடையவர் சொன்ன வார்த்தையை அனுசந்திப்பது –இஷ்ட சித்தி -என்பது-சாங்க்ய வாசஸ்பதி என்று பேரான சாங்க்ய சாஸ்திரம் –நீ இஷ்ட ஸித்தியை என் நினைத்து இருந்தாய் என்றும் ஆழ்வார் கேட்க – பிதற்று என்றே இருந்தேன் என்று ஆழ்வான் சொல்லி இருக்க வேண்டும் –ஆழ்வானுக்கு சொன்ன வார்த்தை யாவது-இத்தனை போது விளம்பித்தது என் என்ன ஆழ்வான் இவ் விருத்தாந்தத்தை அருளிச் செய்ய-கலை அறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ -என்று அருளிச் செய்து-புனஸ் ஸ்நானம் பண்ணுவித்து அருளிஸ்ரீ பாத தூளியும் இடுவித்து அருளினாராம் உடையவர்–பாஹ்ய குத்ர்ஷ்டிகள் சத்தயா அசஹ்யமாகையும் பகவத் விஷயம் சத்தயா தாரகமாயும் இறே-தர்சன நிஷ்டை -யாவது -திரு மாலை-7-வியாக்யானத்தில் ஐதிஹ்யம் – –

அன்னக் கேடும் தீர்ந்தது என்றார் -அருளாள பெருமாள் எம்பெருமானார்(சேஷ பிரசாதம் பெறாமல் இத்தனை நாளும் இழந்தேன் -மடத்தை இடித்து எம்பெருமானாரை அண்டை கொண்ட பலன் இது-அன்னக் கெடு -பாட பேதம் -அப்பொழுது விஷ அன்னம் என்று பொருள் )
அத்தீட்டை யாருக்குச் சொல்வேன் -என்றார் வங்கி புரத்து நம்பி -(ஆச்சார்ய கைங்கர்யம் இழந்ததனால் அருளிச் செய்த வார்த்தை)
பார்த்திட்டேன் ஆகில் செய்வது என் -என்றார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் -(பாகவதர்கள் திரு உள்ளத்தைப் பின் பற்றியே நடக்க வேண்டும் என்று தேவரீர்)அருளிச் செய்யும் வார்த்தையும் பொய்யோ என்ன-
பொன்னாச்சி -பூணாரச் செப்பாய் இருந்திலையீ -என்றார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் –
(ஆபரணங்களை இட்டு வைக்கும் செப்பு-அசித்வத் பாரதந்தர்யம் காட்டி இருக்க வேண்டுமே)நஞ்ஜீயருக்கு விசேஷ கடாஷம் மூன்று உண்டு -எம்பெருமானார் கடாஷம் பட்டரை நியமித்து –வேதாந்திகள் மூலம் செய்தி அனுப்பியது -நேராக திரு நெடும் தாண்டகம் அருளி கடாஷித்தது
நான் அவருக்கு நல்லேன் -என்றார் வடுக நம்பி(ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் -சத்ருக்ந ஆழ்வான் மதுரகவி நிஷ்டை -வடுகநம்பி நிலையை எனக்கு அருள வேண்டும் மா முனிகள் பிரார்த்தனை)

விஷ த்ருஷ்டியான பாம்பைப்  பிடித்துக் கொண்டு ஆட்டா நின்றீர் -என்றார் அனந்தாழ்வான்
தொண்டனூர் நம்பி பின்னாட்டியாக பெற்றிலேன் -என்றார் –
கொல்லி காவல தாசர் பாய்ந்த பாய்ச்சலே தஞ்சம் என்று இருந்தேன் -என்றார் ஆட் கொண்ட வில்லி ஜீயர்(வாரிக்கொண்டு விழுங்குவன் -பாய்ந்து பாரிப்பை வெளிமானால் வெளி மணல் வெளியில் நம் பெருமாள் பக்கலில் காணலாம் -ததீய சேஷத்வம் -கரிய கோலத்திரு உருவம் காண்பன்)
நெருப்பு எழுந்து தாக்கின போது ஓன்று உண்டோ -என்றார் கணியனூர் சிறியாச்சான் -(சம்சாரமும் செல்வமும் நெருப்பு -வெக்காயம் குறைய நீர்வண்ணன் தருச்சாயையில் ஒதுங்க வேண்டும்)

நான் காண்கிற களவுக்கு இதொரு களவோ -என்றார் திருப்பாவை பாடினார்(பிறர் நன் பொருள் -ஆத்ம அபஹாரம்)
ஆண்டாள் சாத்தின திரு வாபரணமோ உள் இருக்கிறது என்றார் தேவ ராஜப் பிள்ளை
த்ரிவித ப்ரவ்ருத்தியை நிவர்த்திக்கலாமோ -என்றார் -திருவரங்கத்து ஆழ்வார் -(மனம் மொழி காயம் -முக்கரண ப்ரவ்ருத்தி பகவத் பாகவத அஸஹ்ய அபசாரங்கள் தாவிர்த்திப்பது மிக்க சிரமம்)

பிரஜைகள் நடமாடுகிற வாசலிலே பாம்பைப் பிடித்து விடுவாரைப் போலே
இவருக்கு நான் ஹிதம் சொன்னேன் -இது என்னாய் விளைகிறதோ என்று –
உடலைக் காட்டி வெருட்டாதே உயிரைக் காட்டி அகப்படுத்திக் கொடு போகப் பார்
என்று அருளிச் செய்தார் -அம்மங்கிக்கு ஆளவந்தார் –

(வார்த்தை -303-அம்மங்கிக்கு பெரிய முதலியார் (ஆளவந்தார் ) அருளிச் செய்த வார்த்தை உன்னுடைய பால்யத்தைப் பாராமல் பகவத் விஷயம் சொன்னோம் – விபூதி என் படக் கடவதோ என்று அறிகிலோம்-விஷயம் கேட்க ஸ்த்ரீகளும் வருவார்கள் அன்றோ-நீரும் பால்யம்-உடம்பை இட்டு வெறுக்காதே உயிருக்கே இறை தேட வேண்டும் -காம சுகம் அற்று உடம்பை பட்டினி போட்டு –ஆத்ம ஸ்வரூபம் பார்க்க வேண்டும் -உடம்பை வெய்யில் வைத்து வாஸூதேவ தருச்சாயை யாகிய நிழலிலே வைக்க வேண்டும் –)

——————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சார ஸங்க்ரஹம்-வார்த்தை -456-

December 17, 2025

வார்த்தை -456-

(ஸ்ரீ சார ஸங்க்ரஹம் பிரபந்தம் இந்த வார்த்தை அடியாகவே அருளிச் செய்யப்பட்டு உள்ளது
அஷ்ட ஸ்லோஹியும் இவற்றை விவரிக்கும் )

அகில ஜகத்திதாநு சாசனமான வேதத்திலும் –
வேத உப ப்ரும்ஹணங்களாக பிரவ்ருத்தங்களான ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களிலும்
அவிகீதமாக பிரசித்தமாய் –
சர்வேஸ்வரனுடைய ஸ்வம்மாய் –
சர்வ ஆத்மாக்களுக்கும் ஆபத் தனமாய் இருந்துள்ள த்வயம் -என்னும் திரு நாமத்தை உடைத்தாய் இருந்துள்ள வாக்ய த்வயம்
பத்து அர்த்தத்தை பிரதிபாதிக்கிறது –

1-ஸ்ரீய பதித்வமும்
2-ஸ்ரீ நாராயணத்வமும்
3-ஸ்ரீ நாராயணன் உடைய சர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளமும்
4-அதினுடைய ப்ராபகத்வமும்
5-தத் கோசரமாய் சேதன கதமாய் இருந்துள்ள பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பமும்
6-ஸ்ரீ லஷ்மீ தத் வல்லபர்களுடைய நிகில ஆத்ம நித்ய கைங்கர்ய ப்ரதான அர்த்தமான நித்ய சம்பந்தமும்
7-கைங்கர்ய ப்ரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யதையும்-8-சர்வ ஸ்வாமித்வமும்(இவை இரண்டுமே நாராயணார்த்தம்)
9-நித்ய கைங்கர்யமும் –
10-கைங்கர்ய பிரதிபந்தக நிச்சேஷ நிபர்ஹணமுமாகிற அர்த்த விசேஷங்கள்

ஈத்ரு சார்த்த விசேஷ ப்ரகாசகமான மந்திர விசேஷணத்தின் உடைய விவரண ரூபமாய்
அபௌருஷேயமாய் -இருந்துள்ள திருவாய்மொழியில் பத்துப் பத்தாலும்
இப் பத்து அர்த்தத்தையும் பூர்வாச்சார்யர்கள் அடைவே சேர்த்து அனுசந்தித்து கொண்டு போருவார்கள்

(த்வயார்தம் தீர்க்க சரணாகதி என்றது சார சங்கரஹத்திலே–சூரணை -210—திருவாய்மொழி பத்து பத்தாலும் ஸ்ரீயபதித்வம் முதலாக — கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி பர்யந்தமாக த்வயத்தில் பிரதிபாதிதமான பத்து அர்த்தத்தையும் பிரதிபாதிக்கையாலே , த்வய அர்த்தமாய்க் கொண்டு தீர்க்க சரணாகதியாய் இருக்கும் என்று சொல்லப் பட்டது –
பிள்ளை அருளி செய்த சார சங்கரகமாகிற பிரபந்தத்தில்-அந்த பிரபந்தம் ஆவது தான் என் என்னில்- அகில ஜதத்தி தானுசாசன பரமான வேதத்திலும் –வேத உப ப்ரும்ஹமான அர்த்தமாக –பிரவ்ருத்தங்களான-ஸ்ம்ருதி இதிகாச புராணாதி சமஸ்த சாஸ்திரங்களிலும் பிரசித்தமாய் –சர்வேஸ்வர- சர்வ ஸ்வமாய் –நம் ஆச்சர்யர்களுக்கு ஆபத் தனமாய் -இருந்துள்ள அர்த்த த்வ்யத்தை – பிரதி பாதிக்கையாலே -த்வயம் -என்று திரு நாமத்தை உடைத்தாய் உள்ள வாக்ய த்வயம் – பத்து அர்த்தத்தை பிரதி பாதிக்கிறது -இப்படி திருவாய்மொழியின் த்வய அர்த்த பிரதிபாதாக த்வத்தை விசதமாக ஆச்சார்யர்கள் அருளிச் செய்து வைக்கையாலே – ஸ்வ பிரபந்தத்தில் வக்தவ்ய அம்சத்தை தத் பிர பந்தத்தில் தர்சிப்பித்தார் ஆய்த்து .. )

இதில் முதல் பத்தால் –
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -1-3-1-என்றும் –
மலராள் மைந்தன் -1-5-9-என்றும் –
திருமகளார் தனிக் கேள்வன் -1-6-9-என்றும் –
திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே -1-9-1-என்றும் –
பூ மகளார் தனிக் கேள்வன் -1-9-3-என்றும் –
மைந்தனை மலராள் மணவாளனை -1-10-4-என்றும் –
ஸ்ரீ ய பதித்வம் ப்ரதிபாதிதம் ஆய்த்து

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-தாமரைப் பூவை பிறப்பிடமாக யுடைய ஸ்ரீ மஹா லஷ்மியானவள் விரும்பும்படியான பெறுவதற்கு அறிய நம் ஸ்வாமியானவன்-ஈஸ்வரீம் சர்வ பூதானாம் -என்கிற மேன்மையை யுடையளாய்-பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற போக்யதையை யுடையளான பிராட்டி  அகலகில்லேன் இறையும் என்று விரும்பும் தத்துவம் பெறற்கு அரிய ஸ்வாமிகள்
ஸ்ரீ யபதி என்கை இறே சர்வாதிகத்வத்துக்கு லஷணம்-நம் -என்று இந்த மேன்மையும் நீர்மையும் தமக்கு பிரகாசித்து இருக்கிற படி –

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –1-5-9-நித்ய ஸூரிகள் ஜீவனம் இருக்கிற படி–‘தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார்,’ என்கிறபடியே, அவர்கள் விரும்பித் தொண்டுகளைச் செய்யப் பெரிய பிராட்டியாரும் தானுமாக இருக்குமவன்.-மைந்தன் -நித்ய யௌவன ஸ்வ பாவன்-அவளுக்கு மிடுக்கானவன்.-இனி, இதற்கு, ‘அவளுடைய சேர்த்தியினாலே நித்தியமான புதிய யௌவனத்தை யுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.-

தரும வரும பயனாய –திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9-உபநிஷத்துக்களிலே பரம பிரயோஜனமாக பிரசித்தமானவற்றை தரும் திருமகளார் –தர்மத்தினுடைய பரம பிரயோஜனமான திருமகளார்-தருமத்தினுடைய-பரம – மேலான பிரயோஜனந்தான் ஒரு வடிவு கொண்டாற் போன்று இருக்கின்ற ஸ்ரீ பெரிய பிராட்டியார்  -அத்விதீயனான வல்லபன்-ஸ்ரீ யபதித்வ நிபந்தனமான பெருமையை யுடையவர்-இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி -நாயகனாய் இருக்கிறவன். அப்ரமேயம் ஹி தத் தேஜ -ஜனக குலத்தில் அவதரித்த பிராட்டியானவள் எவனுக்கு மனைவியாக இருக்கின்றாள்?-அவனுடைய திறல் வலி முதலாயின அளவிட முடியாதனவாக இருக்கின்றன,’ என்கிறபடியே.
ஸ்ரீயப்பதி- திருமகள் கேள்வன் ஆகையாலே வரும் ஏற்றம் உள்ளது இவன் ஒருவனுக்குமே ஆதலின், ‘தனிக் கேள்வன்

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-என்னமுதம் –
தேவர்கள் அதிகாரிகளான அம்ருதத்தில் காட்டில் வியாவ்ருத்தி-சுவையன் –-ரசிகன் -அவ்வமுதத்தில் காட்டில் வியாவ்ருத்தி -அதுக்கு போக்த்ருத்வம் இல்லையே-திருவின் மணாளன் –இவருடைய அமிர்தம் ஒரு மிதுனம் ஆயிற்று

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கும் படியான பாக்யத்தை யுடையவள்-அத்விதீய நாயகன் -என்னும் வை லக்ஷண்யத்தை யுடையவன்-புஷ்பத்தில் பரிமளம் வடிவு கொண்டால் போலே இருப்பவளாய் -போக்யத ஏக வேஷையான ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் என்றால் -இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்துக்கு இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி இருக்கிறவன்

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-நித்ய யவ் வன ஸ்வ பாவனை—மைந்து -மிடுக்கு இனிமை அழகு கெடுவாய், இவ் விஷயத்தைச் சிலரால் விடப் போமோ?–நிரதிசய போக்யையாய் இருக்கிற பிராட்டி செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தவனை-ஸ்ரீ பெரிய பிராட்டியார் ‘அகலகில்லேன் இறையும்’ என்னும் விஷயத்தை யன்றோ நான் உன்னை ‘விடாதே கொள்’ என்கிறேன்?

—————

இரண்டாம் பத்தால் –
எம்பெருமான் நாரணற்கு -2-1-7-என்றும் –
எம்பிரான் எம்மான் நாரயணனாலே -2-7-1-என்றும்
நாராணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -2-7-2-என்றும் நாரயணத்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-அப்ராப்த விஷயத்துக்கு தோற்றோமோ -அல்லோம் என்றாரையும் விட மாட்டாத வத்சலனுக்கு –ஸூலபனுக்கு என்னவுமாம்-ப்ராப்த விஷயத்தில் வாத்சல்யாதிகளால் இழந்தோம் என்கை –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-நித்ய ஸூரிகளை அனுபவிக்குமா போலே என்னை அனுபவிப்பித்தவன்-அவர்களை போலே என்னை அநந்யார்ஹன் ஆக்கியவன் –தன் மேன்மை பாராதே -சர்வ அந்தர்யாமியாய்க் கொண்டு இவற்றின் சத்தையை நோக்கி நிற்கும் வத்சலன் ஆனவனாலே –எமர் கீழ் மேல் ஏழு பிறப்பும்-கேசவன் தமர் ஆனார்கள் -மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வாநாராயணனாலே என்கிற இடம் மா சதிரினுடைய உபபாதனம்

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-அர்த்தத்தை சொல்லுகைக்காக சப் தத்தை உபாதானம் பண்ணுகிறார் -அர்த்தம் சொல்லி –ஸூ விஷய பக்ஷபாதத்தை  அருளிச் செய்கிறார் –நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–நாரணன் -திரு நாமம் சொல்லி –எண் பெருக்கு அந்நலத்து ஒண் புகழ் ஈறிலா -வண் புகழ் நாரணன் -திண் கழல் சேரே -கீழே-வேத மயன்-அந்த நாரணன் சப்தத்தையே வேதங்கள் பிரதானமாக பிரதிபாதிக்கப்படும் —ப்ரஹ்மம் ஆத்மா சத் பொதுவான சொற்கள் நாராயணனையே குறிக்கும் –

—————-

மூன்றாம் பத்தால் –
நாண் மலராம் அடித் தாமரை -3-3-9-(ப்ராப்யம் சொல்ல வந்த பதிகம் -ஒழிவில் காலம் -இருந்தாலும் பூர்வ வாக்ய ப்ரமாணமாகக் இங்கு எடுத்து ஆள்கிறார்)என்றும் –
அங்கதிர் அடியன் -3-4-3-என்றும் –
அவன் பாத பங்கயம் -3-6-4-என்றும் –
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் -3-6-10-என்றும் –
மூ உலகும் தொழுது ஏத்தும் சீரடியான் -3-8-1-என்றும்
நாராயணன் உடைய சர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளம் பிரதிபாதிதம் ஆய்த்து

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9-நிரதிசய போக்யமான திருவடிகளை—செவ்விப்பூவைத் தலையிலே வைத்தலைப் போன்றிருப்பது ஒன்றாதலின், ‘நாண்மலராம் அடித்தாமரை’ என்கிறார்.மநோ வாக் காயங்களால் அனுபவிக்கப் பார்ப்பார்க்கு-இது இறே துக்க நிவ்ருத்திக்கு குடிக்கிற வேப்பங்குடி நீர்-அவன் கால் காண, ‘மூப்புப் பிறப்பு இறப்பு’ என்கிற இவையெல்லாம் அழியும்’ என்றபடி.-திருமேனியில் கால் பகுதியைக் காண -நாலு பகுதியும் போகும் -மூப்பு -இறப்பு -பிறப்பு -பிணி இவை எல்லாம் போகுமே-நான்கு வர்ணர் நான்கு பகுதிகளில் இருந்து பிறந்தார்கள் என்பதால் திருவடியை கால் பகுதி என்கிறார்-இவை இரண்டும் உடலுக்கும் உபலக்ஷணமாய், ‘திருவடிகளை மனம் வாக்குக் காயங்களாலே அநுசந்திப்பார்கட்கு’ என்றபடி.-வாயுள் வைக்கையாவது, ‘ஓவாது உரைக்கு முரை’-முதல் திருவந்தாதி -95- என்கிறபடியே உரைத்தல்.-மனத்துள் வைக்கையாவது, மறவாதிருத்தல். இப்படி -கரணங்களுக்கு-உறுப்புகட்கு –அடைத்த காரியங்களைக் கொள்ளவே,-சொரூபத்திற்கு விரோதியாய் வந்தேறியானவை தாமாகவே போம்.

பங்கயக் கண்ணன் என்கோ! பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ! அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ! திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ சாதி மாணிக்கத்தையே!–3-4-3-நோக்குக்கும் முறுவலுக்கும் தோற்றார் விழும் திருவடிகள் –நிலத்தைச் சொல்லுகிறது.-

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4-அநந்ய பிரயோஜநரோபாதி தடை இன்றிக்கே புக்கு நிரதிசய போக்யமான திருவடிகளை நினைத்தும் அது உள்ளடங்காமே புகழ்ந்தும் அது தானே யாத்ரையாய் சஞ்சரிப்பர்கள்-நாடொறும் செம்மையால் என்னவுமாம் –வேறு பலன்களைக் கருதும் தன்மையும் நெஞ்சிலே கிடக்கச்செய்தே வேறு பலனைக் கருதாதவர்களைப் போல வந்து பற்றாநிற்பர்கள் ஆதலின், ‘செம்மையால் திரிவர்’ என்கிறது; ‘வேறொரு பயனை விரும்புகிற விருப்பமும் உள்ளே கிடக்கச்செய்தே அது இன்றித் தன்னையே பற்றினாரைப் போலே இருக்க, புகுவது புறப்படுவதாய்த் திரியும்படி அன்றோ அவன்படி இருக்கிறது?’ என்றபடி.-செம்மை – செவ்வை; அதாவது, வேறொரு பயனையும் கருதாமை.
தூயோமாய் வந்தோம் –என்று இல்லாமல் -இவர்கள் மித்ர பாவேன -பாவ தோஷமும் கிடக்கச் செய்தே -அநந்ய பிரயோஜனர் போலே புகுந்து புறப்பட்டு –

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-
யுத்தத்திலே அன்று தேரிலே ரதியாய் அன்றிக்கே கையாளாய் சாரத்யம் பண்ணினவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை-காண்பது எஞ்ஞான்று கொலோ என்கிறபடியே பட்டினியாய்க் கிடக்கிற கண்கள் காண்பது-சேனா தூளியும் உழவு கோலும் சிறு வாய்க் கயிறுமான வடிவைக் காண்பது என்றோ –கனைக்கை-த்வநிக்கை-என்னுதல் – செறிகை-என்னுதல் –சேநா தூளியும் உழவுகோலும் சிறுவாய்க் கயிறும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளும் அத்திருவடிகளிலே சார்த்தின சிறுச் சதங்கையுமாய்ச் சாரதி வேஷத்தோடே நின்ற போதைத் திருவடிகளில் ஆபரணத்தின் ஒலி செவிப்படவும் அவ்வடிவைக் காணவும் காணும் ஆசை.-இக்கண்கள் அடிப்படுவது –திருவடிப் படுவது -எப்போதோ? இவை முடியப் பட்டினி விட்டே போந்தவை இப்பட்டினி விடக்கடவது என்றோ?‘அவ்வடிவைக் காண வேண்டும்,’ என்று விடாய்த்த கண்கள் ‘காணப் பெறுவது என்றோ?’ என்றபடி. இவர் மனஸ் சஹகாரியம் இல்லாமலே கண்கள் காண ஆசைப் படுகின்றனவே

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்தால் தம்முடைய அனுரூபமாக திருவடிகளில் இறே விழுவது-திருமுடியின் அழகை நினைந்து தோற்றுத் திருவடிகளிலே விழுகிறார். ஒருகாலும் அடி விடாரே.-மேல் திருவாய்மொழியில் ‘தன் தாள் இணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை’ என்றது, வடிம்பு இடுகிறபடி.-‘எல்லார்க்கும் பொதுவான திருவடிகளை என் தலையிலே வையாய்,’ என்பது கருத்து.-குணாகுண நிரூபணம் அசேஷ லோக சரண்யமான திருவடிகளை உடையவனே-மதீய மூர்த்தானாம் அலங்கரிஷ்யதி -என்று வகுத்த திருவடிகளை என் தலையிலே வைக்கப் பெறுவது எப்போது காண் என்று கருத்து

———————

நாலாம் பத்தால் –
இலங்கை நகர் அம்பெரி உய்த்த உய்த்தவர் -4-2-8-என்றும் –
வல் வினை தீர்க்கும் கண்ணனை -4-4-11-என்றும் –
தொல் வினை தீர -4-4-11-என்றும் –
வெய்ய நோய்கள் முழுவதும் வியன் ஞாலத்து வீய -4-5-2-என்றும் –
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் -4-5-4-என்றும் –
பிறந்தும் செத்தும் நின்று இடரும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் -4-9-7-என்றும் –
நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணியே என்று இவை ஒழிய -4-9-9-என்றும் –
வேட்கை எல்லாம் விடுத்து –கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை -4-9-9-என்றும் –
அக்தே உய்யப் புகுமாறு -4-1-11-என்றும் –
உய்வுபாயம் மற்று இன்மை தேறி -4-3-11-என்றும் –
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் ஹேதுவான ப்ராபகத்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர்
தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால்; நான் இதற்கு என்செய்கேன் நங்கைமீர்?–4-2-8-சந்த்ர ஆதித்யர்களும் புகப் பயப்படுமூர்-சர அக்னியை புக பிறப்பித்தவர் -கேவல அக்னி சோற்றை வேவிக்குமது ஒழிய பிரவேசிக்க கூசுமூர்-கையாலே சர அக்னியை பிரவேசிப்பித்தான்–அம்பாகிய நெருப்பைப் புகச் செய்தவர்.-சக்கரவர்த்தி திருமகன் இதனைக் கை தொட்டு சிக்ஷித்துக் குணவான் ஆக்கிப் பின்பே அன்றோ போகவிட்டது?-பலவான் ஆக்கி என்றபடி -நாணுக்கும் குணவான் -நாணை ஏற்றி அனுப்பினார் என்றபடி –ஆகையாலே, கேவலாக்நி புகுதற்குக் கூசும் ஊரிலே தன் வாய் வலியாலே புக்கதாயிற்று.-சரத்தின் பலம் -வாய் வலி –யதா ராகவா நிர்முக்த சர -என்று திருவடி புகிலும் சரஸ்த நீயானாக இறே புகுந்தது-இப்படி, தான், முதுகிட்டாரையுங்கூட, குணவான்கள் ஆக்கும்படி ஏக்கற்றவருடைய திருவடிகளில் சார்த்தப்பட்ட.-ஏ- வரும் வெஞ்சிலை -ஏ – க்கற்றவர் -சக்தி கொடுத்து போக்க வைத்தவர்
ஏ -அம்பு -கை தொடுகை -பிடிக்கையும் அடிக்கையும்-சிஷை -அர்ஜவம் நியமிக்கி -நாணில் ஏத்தி-முதுகிடவை முதுகிலே அம்புறா தூணி வைப்பதும் -சொன்ன வார்த்தை கேட்கால் முது காட்டி ஓடினார் –

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11–அடியார்களுடைய பிரிவிற்குக் காரணமான மஹா பாவத்தைப் போக்கும் தன்மையனான கிருஷ்ணனை. பெற்றவர்கள் கை விட்டால் கைப்பிடித்தார் விடாரே–என் செய்கேன் என்று கை விட்டதும் -இவன் கைக் கொண்டான் -கை பிடித்தவர் -இதம் சீதா -பிரியம் உடன் -பிடித்தவர்-ஆஸ்ரிதர் உடைய விஸ்லேஷ ஹேதுவான மஹா பாபத்தை போக்கும் ஸ்வ பாவனான கிருஷ்ணனை—தொல் வினை தீர -அநாதி யான அவித்யாதிகள் நீங்கி-இவர் பாடின திருவாய்மொழியைக் கற்றவர்களைத் தொழுது நித்திய ஸூரிகள் உய்வு பெறும்படி.-வீற்றிருப்பாரே –-அவன் இறைவனாம் தன்மைக்கு முடி சூடி இருக்கப் பெறுவர்கள்.-‘அந்த முத்தன் சுதந்தரன் ஆகிறான்,’ என்னக் கடவதன்றோ? என்றது,-‘கர்மம் அற்றவன் ஆகின்றான்’ என்றபடி. வீற்று -வேறுபாடு. ஸ்வராட் பவதி -ஸ்ருதி-சாம்யாபத்தி அடைந்து -கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு முடி சூடி என்றபடி –

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-குரூரமான சாம்சாரிக சகல துக்கங்களும் பூமியிலே இருக்கப் போம் படி ‘ வியன் ஞாலத்திலே இருக்கையால் உண்டான வெய்ய நோய்கள் என்னுதல்-லோகத்தில் துரிதங்கள் எல்லாம் நசிக்கும் படி என்னுதல்
பாவனா பிரகர்ஷத்தாலே-தாம் பரம பதத்தில் இருக்கிறாராய் பூமியில் உள்ள துக்கங்கள் எல்லாம் போம்படி என்னுதல்-க்கஸ்தா பஸ்யந்தி பூகதான்-என்று சீயர் அருளிச் செய்தார் –‘அவசியம் அனுபவித்தே தீரவேண்டும்’ என்கிறபடியே, அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவன அல்லாத கர்மங்கள் முழுதும் நசிக்க. இவ்வுலகத்திலே இருக்கச் செய்தே, இவை முழுதும் அழிந்தன என்று சொல்லலாம்படி யாயிற்று, பகவானுடைய அனுபவத்தாலே பிறந்த தெளிவு; ஆதலால், ‘வியன் ஞாலத்து வீய’ என்கிறது.-‘பனை நிழல் போலே தம்மை ஒருவரையும் நோக்கிக் கொள்ளுகை யன்றிக்கே, ஊரும் நாடும் உலகமும்
தம்மைப் போலே யாம்படி தாம் இருந்த உலகத்தில் உண்டான கர்மங்களும் முழுதும் அழிந்தன,’ என்னுதல்.
அங்ஙனம் அன்றிக்கே,‘வியன் ஞாலம்’ என்று வேறு ஒரு தேசம் போலே இருக்கச் சொல்லுகையாலே,தாம் ‘வீற்றிருந்து ஏழுலகு’ என்னும் இத் திருவாய்மொழியை அருளிச் செய்கிறது-பரமபதத்திலே இருந்து போலே காணும்,’ என்று அருளிச் செய்வர்.
பாவனையின் மிகுதியாலே திருவுள்ளம் பரமபதத்திலேயாய் அங்குற்றாராய்த் தோன்றுகிறபடி.-வியன் ஞாலம் – ‘ஆச்சரியப்படத் தக்க உலகம்’ என்னுதல்; ‘பரப்பையுடைத்தான உலகம்’ என்னுதல்.

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-அகல நின்று ப்ரயோஜனங்களைக் கொண்டு போகாதே அநந்ய பிரயோஜனராய் ஆஸ்ரயித்து இருப்பார் -கிட்டக்கொண்டு –தேஹி மே ததாமி தே -‘நான் உனக்குத் தருகிறேன்; நீ எனக்கு ஒன்று கொடு,’ என்று வேறு பிரயோஜனங்களுக்கு மடியேற்றுக்கொண்டு போகை அன்றிக்கே
,எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை வழுவா வகைநினைந்து வைகல் தொழுவார்’-முதல் திருவந்-26-என்கிறபடியே,-அவன் றன்னையே பிரயோஜனமாகக் கொண்டு தொழுமவர்கள். என்றது,-இன்று வந்தித்தனையும் அமுது செய்திடப்பெறில் நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்’- நாய்ச்சியார் திருமொழி, 9 : 7.என்கிறபடியே தொழுமவர்கள் என்றபடி.-கொடுத்துக் கொள்கை அன்றிக்கே கொண்டதுக்குக் கைக் கூலி கொடுக்க வேண்டும் –-பகவத் அலாபம் ஆகிற துக்கம் போம்படி-அநந்ய பிரயோஜனரை குறித்து அநந்ய பிரயோஜனனாயக் கலக்கும் உபகாரகன் -அவர்களுக்குப் பின்னை வினை உண்டோ?’ என்னில், வேறு பிரயோஜனங்களிலே
நெஞ்சு செல்லுகைக்கு அடியான பாவங்கள் போகும்படியாக.
‘ஆஸ்ரயண விரோதி கழிந்ததேயாகிலும், பாப ஹேதுவான சரீரம் இருக்கையாலே வேறு பிரயோஜனங்களிலே மனம் செல்லுகைக்கு அடியான பாபம் உண்டாகைக்குக் காரணம் உண்டே யன்றோ? அத்தகைய பாபங்கள் போம்படி’ என்பது கருத்து.

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-இறப்பு பிறப்பு பிணி வியாதி இவற்றாலேநோவுபடுகிற சம்சாரிகள் நடுவில் நின்றும்–சரீரத்துக்கு வந்தவற்றுக்குச் சரீரியான ஆத்துமா இன்புறுதல் துன்புறுதல் செய்யுமதனைப் போன்று, எனக்கு வந்தவற்றுக்கு இன்புறல் துன்புறல் செய்வாய் நீ ஆம் படி சம்பந்தம் உண்டாய் இருந்த பின்பு, பிறவி காரணமாக வருகின்ற இந்தத் துன்பங்களைக் கழித்து-அழைத்துக் கொள் -ஆதி -மநோ வியாதி என்றவாறு -வியாதி தேக வியாதி–கொடிதான லோகம் -சப் தாதி விஷய ப்ரவணமாய் த்வத் விமுகமான லோகம் -த்ருஷ்ட்டி விஷம் போலே காணவே முடிவன் என்கிறார்-இவன் தானே வருகிறான்,’ என்று இராமல், நீயே அழைத்துக் கொண்டருள வேண்டும்.

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-
உன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களிலும் உண்டான சங்கத்தை விடுவித்து -நான் எனக்கு என்று இராத படி பண்ணி—எனக்கு உன்னை ஒழிந்தவை ஆமத்தனை அன்றோ ஆசைப் படுகைக்கு?
உன் உலகத்தில் நான் ‘எனக்கு, எனக்கு’ என்னாதது உண்டோ?-யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்திலையோ?ருசியுடைய என்னை உன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணி வர்த்திக்கும் படி –புறம்பான விஷயங்களிலே உண்டான ஆசை எல்லாம் உன் பக்கலிலே யாய், உன் திருவடி களையே நான் ஆதரித்து, அதுவே வாழ்க்கையாய்ச் செல்லும்படிக்காக.-அந்நிய சாத்தியமான திருவடிகளிலே கூட்டினாய் —யாவர் சிலர்க்கும் தந்தாமால் சேர்த்துக் கொள்ள அரிய திருவடிகளை நான் சேரும்படி என்னைச் சேர்த்துக் கொண்டாய்.கேட்டார் வாய் கேட்க்கை யன்றிக்கே நான் அனுபவிக்கப் பெற்றேன் ஆகையால் அறிந்தேன்-

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-நான் சொன்னதுவே ஆத்மாவுக்கு உஜ்ஜீவன உபாயம் என்று—திருநாரணன்தாள்’ என்று நான் சொன்ன அதுவே உய்வதற்கு உரிய வழியும் பலமும் என்று. உபாயாந்தரம் வேறே இல்லை -பிரயோஜ நாந்தரம் இல்லை –அதுவே உய்வு -அதுவே ஆறு -அதுவே உய்யப் புகும் ஆறு –-அது ஏது என்னில்-ஸூ லபனான கிருஷ்ணனை யாயிற்று கவி பாடிற்று –கண்ணனைத் தாள் பற்றி’ என்று தாமும் சொல்லி, கண்ணன் கழல்கள் நினைமினோ’ என்று பிறர்க்கும் உபதேசித்து நின்றாரே?-அது தன்னையே அருளிச்செய்கிறார். ‘இப்படி அடியுடையார் புறம்பு இல்லை’ என்றே அன்றோ இவ்வடிகளைத் தாம் பற்றியது?-‘துயர் அறு சுடர்அடி தொழுது எழு’ என்று தம் திருவுள்ளத்திற்கு அருளிச்செய்தார்;‘வண் புகழ் நாரணன் திண்கழல் சேரே’ என்று பரோபதேசம் செய்தார் அங்கு.-இங்கு, ‘கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே,’ என்றார்;‘கண்ணன் கழல்கள் நினைமினோ,’ என்று பரோபதேசம் செய்தார்.
இது என்ன அடிப்பாடுதான்! ‘கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்,’ என்றே அன்றோ பரோபதேசம் முடிக்கிறதும்?-திருவடியில் என்ன ப்ராவண்யம் –-

உய்வு பாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண்கழல்கள் மேல்
செய்ய தாம ரைப்பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன்,
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.-–4-3-11-அவன் பிரணயித்வ குணத்தை பேசா விடில் உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று தெளிந்து ––இவர் சர்வேசுவரனுடைய காதல் குணத்தைப் பேசத் தொடங்கியது, பேசித் தலைக்கட்ட வல்லவராய் அன்று; இஃது ஒழியத் தரிக்கைக்கு உபாயம் இல்லை என்று தெளிந்து.-தான் பரம காதலன் என்பதனை அவதரித்துப் பிரகாசிப்பித்த கண்ணபிரானுடைய திருவடிகளிலே.-அவதரித்து தன் பிரணயித்வ குணத்தை ஆவிஷ் கரித்த கிருஷ்ணன் திருவடிகளில்-

—————–

ஐஞ்சாம் பத்தால் –
தமியேனுக்கு அருளாய் -5-7-2-என்றும்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -5-7-10-என்றும் –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –5-8-3-என்றும் –
அவளை உயிர் உண்டான் கழல்கள் அவையே சரணாக கொண்ட 5-8-11–என்றும் –
நாமங்கள் ஆயிரம் உடைய நம்பெருமான் அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் –5-9-11-என்றும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -5-10-11-என்றும் –
நாள் தோரும் ஏக சிந்தையனாய் -5-10-11-என்றும் –
பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பம் பிரதிபாதிதம் ஆய்த்து(பிரார்த்தனையை உள்ளடிக்கிய மஹா விஸ்வாஸம்ப்ரபத்யே கத்யர்த்தம் புத்த்யர்த்தம்)

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-என் பக்கல் ஸத்தாத்திரேகி இருப்பது ஒன்றும் இல்லை-ஆற்றாமையோடே ஒரு துணை இன்றிக்கே இருக்கிற எனக்கு—தமியேனுக்கு –1- இத்தலையும் குறைவற்றது என்கிறார். ருசி உள்ளதே –அங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன், -அங்கே சதா பஸ்யந்தி அன்றோ-இங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன். -இங்குள்ளார்க்கு இவ்விஷயத்தை அறியாமையாலே பிரிவு இல்லையே.-தமியேனுக்கு–2-உன்னை ஒழியத் துணை இல்லாத எனக்கு. ஸ்வரூபத்தைச்‘சாதனம்’ என்று செலவு எழுதிக் கழிக்கில் கழிக்குமித்தனை. -சாதநாந்தர ஸூன்யன்-அவாவில் வீழ்ந்து -பக்தி -சிநேக பூர்வம் உபாயம் ஆகாதோ -என்னில் இது ஸ்வரூபம் தானே –சாதனம் என்று இத்தை எழுத ஒண்ணாதே-நீ உபாயம் ஆனாலும் உபாயத்தைப் பிரதிபத்தி பண்ணுவார் வேண்டாவோ.–பிரபன்ன ஜன கூடஸ்தர் என்னை அன்றோ சொல்கிறார்கள் –தமியேன்-3-பிராட்டியில் வேறுபாடு அங்காகில் ஒரு திரிசடையாகிலும் உண்டே அன்றோ,-இங்கு “ஆவார் ஆர் துணை” என்னும்படி அன்றோ தனிமை செய்ய வேண்டுவது என் என்ன-ருசிக்குப் பண்ணின க்ருஷியை விரோதி நிவ்ருத்திக்கும் ப்ராப்திக்கும் பண்ணும் இத்தனை என்கிறார் –என் வெறுமையும் உன் நிறைவும் அறிகைக்கு, நீ அடியில் தந்த அருள் இன்று குடி போயிற்றோ, அன்று நான் விரும்பாதிருக்க அருளின நீ, விரும்புவதற்குத் தகுதியைப் பிறப்பித்துப் பொகடவோ.
ருசியை உண்டாக்குவார் ஒருவரும், உபாயத்தை அநுஷ்டிக்கிறவர் ஒருவருமாயோ இருப்பது.-நின்னருளே புரிந்திருக்கிற எனக்கு அருளாயாகில் பின்னை யார்க்கு வேறு அருள இருக்கிறாய்.

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்–இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் -எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் –நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர ஸூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது -அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ –“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”– ஸ்ரீகீதை. 9. 34.“என்னை நமஸ்காரம் செய்வாய், என்னை அடைவாய்” என்றால் எனக்குச் சோகம் போகாது கண்டாய்.-ஓதி நாம் குளித்து -நமக்கே நலம் ஆதலால் -திருப் புல்லாணி-நமக்கு நலம் தேடும் –-உபாயாந்தரம் வேண்டாம் -என் நலம் நீ தேடுவதே உக்தம் –உபாயம் தன்னைப் பொறுக்கும் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி எதையும் பொறாதே –யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாய பாவம் ஒரு சேதனனாலே என்றிருக்கையாலே.-அன்றிக்கே, பெறுவது உன்னையே யாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன்,-என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன்.-மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே ஸ்வரூப விரோதியானது எனக்கு வேண்டாம்.
கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது, இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன்.-அன்றிக்கே, ‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி, ‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை’ என்று சொல்லுவாருமுளர்.-இப்பொருள் அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பது போதரும்.

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்

குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11-ஊழலை கோத்தால் போலே இருக்கிற எலும்புகளையுடைய பேய்ச்சி முலையிலே உகப்பாலே அவளை ப்ராணாபஹாரம் பண்ணின விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணனுடையவையாய்-தமக்கு உபாயமாக முன்பு பிரகாசிப்பித்த திருவடிகளையே-அபிமத சித்திக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாரானவர்-விருப்பமில்லாதவைகள் நீங்குவதற்கும் விருப்பமுள்ளவைகளை அடைவதற்கும் உபாயம் என்று அறுதியிட்ட ஆழ்வார்.-விரோதிகளைப் போக்குவதும் அவனைத் தருவதும் திருவடிகளேயாம் என்பார் ‘அவையே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகிறார் பலியாவிட்டாலும் தம்மடி விடாதவரே அன்றோ இவர்; ஆதலின், ‘கொண்ட’ என்கிறார்

நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த

நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11—ஸ்வயம் பிரகாசகனான சர்வேச்வரன் ஆயிரம் திருப் பெயர்களை யுடையவனாயிருக்கிறான்” என்கிறபடியே, குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசகமான திருப் பெயர்களை யுடையவனாகையாலே சர்வேச்வரனாகப் பிரசித்தனானவன்.தேவோ நாம சஹஸ்ரவான் ஸஹஸ்ர பாஹு: ஸர்வஜ்ஞோ தேவோ நாம ஸஹஸ்ரவாந்”-பாரதம். என்கிறபடியே குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை யுடையவன் ஆகையாலே சர்வேஸ்வரனாக பிரசித்தனானவன்—-‘நம்’ என்பது, பிரசித்தியைக் காட்டும். பெருமான்-சர்வேஸ்வரன்.-அவனைப் பெறாதே நோவு பட நோவு பட–புறம்புள்ள காற் கட்டுக்களை விட்டு, அவன் திருவடிகளே ரக்ஷகமாகப் பற்றும் ஆழ்வார் பிராட்டி ஆற்றாமை மிக்க இடத்திலும் ராவணனை சபிய்யாதே பெருமாள் வரவை பார்த்து இருந்தால் போலே அவனுக்கு திரு நாமங்கள் போலே குண சேஷ்டிதங்களுக்கு ப்ரதிபாதகமான ஆயிரத்திலும்-ஆராய்ந்து உரைத்த இப்பத்தையும்

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்
க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இறே-ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார் -பகவத் குண பிரேரிதராய் தாம் உள்ராகைக்காக-ஈஸ்வர நைரபேஷ்யம் -பல பிரபத்தி என்றும் சொல்வார்கள் –-உபாய எதிர்பார்க்க மாட்டார் -அதிகாரி ஸ்வரூபம் வேண்டுமே – ஆகிஞ்சன்யம் அனந்யகதி மகா விஸ்வாசாதிகள் எல்லாம் இதுவே –சம்சார சம்பந்தப்பட்ட ஸ்வபாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும்
அப்படி அடிக்கழிவு செய்வார் ஒருவரல்லரே இவர். மஹா விஸ்வாசமாகிறது, இஃது ஒழிய வேறொன்றில் கால் தாழாதொழிகை ஆம்.-புறம்பு உண்டான சிந்தனை போய், இவ் விஷயத்திலே ஒரே தன்மையான எண்ணத்தை யுடையராய், பொருள் ஈட்டுதற்குச் செல்வார் ஒருவர் ஒரு சிராயை -மரக்கலம் -நம்பி நாலாண்டு பதிற்றாண்டு இழியா நின்றார்களன்றோ,
பேற்றின் சீர்மையைப் பார்த்தால் அவ்வளவாகிலும் வேண்டாவோ இவ் விஷயத்தில்.
சம்சாரத்தின் இயல்பால் வியசனங்கள் தொடர்ந்து வந்தாலும் உறுதி குலையாமே போருமதன்றோ ஸ்வரூபமாவது.-மித்ர பாவேனே –ஸூசகம் –தொழுது எழு மிகை என்பான் என் என்னில் -மகா விஸ்வாசம் இதில் வைப்பது சுலபம் தானே –

————–

ஆறாம் பத்தால் –
திரு மா மகள் இருந்தாம் மலிந்து இருந்து -6-5-8-என்றும் –
அடிமை செய்தார் திருமாலுக்கே -6-5-11-என்றும் –
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் -6-7-8-என்றும்
என் திரு மார்வற்கு (மூவரையும் சொன்னபடி)-6-8-10-என்றும் –
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே(உயிர்கள் காப்பார் கைங்கர்யம் இல்லாமல் ஆத்மநாசமாகுமே -ஆகவே ரக்ஷணத்தைச் சொன்னபடி) -6-9-3-என்றும்
கைங்கர்ய பிரார்த்தனா கர்ப்பமான நித்ய சம்பந்தம் பிரதிபாதிதம் ஆய்த்து –

(கீழ் பூர்வ வாக்யத்திலும் நித்ய யோகம் -எப்பொழுதும் புருஷகாரமாவதற்காக -இங்கு ஒன்றைப் பத்தாக்கி கைங்கர்ய வர்த்தகையாய் இருப்பதற்கு -கைங்கர்ய பிரதிசம்பந்தி சேஷி மிதுனத்துக்கே தான்)

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம்மலிந்து
இருந்து வாழ்பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-ஆராத்யரான பெரிய பிராட்டியாரும் தானும் சம்ருத்தமாய் இருந்து வாழுகிற வூர் -வேதமும் வைதிக சமாராதானமும் அதன் பலமான சம்பத்துமானவை மிக்கு இருந்து வர்த்திக்கிற வூர் -என்றுமாம் –தாம் என்றது கீழ் சொன்னவை தாம் என்கை -ஆராதிக்கின்றவர்களுடைய நிறைவு இருக்கிறபடி.-திருமாமகள் – செல்வம்.

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-இப்பத்தை அப்யஸிக்க வல்லார் ஸ்ரீ யபதிக்கு அடிமை செய்வார்-பெருமாளும் பிராட்டியும் சேர இருக்க இளைய பெருமாள் அடிமை செய்தாற்போலே, சேர்த்தியிலே அடிமை செய்யப் பெறுவர்

ஒசிந்த நுண்ணிடைமேல் கையை வைத்து நொந்துநொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்தஎம் காரிகையே.–6-7-8–வண்டாலே ஆத்தசாரமான புஷபம் போலே நித்ய சம்ச்லேஷத்தாலே துவண்டு இருக்கிற பிராட்டிக்கு நாயகன் -இவருடைய சேர்த்தி யாயிற்று இவளைக் கொண்டு போயிற்று -அவனுடைய பிரணயித்தவம் இறே இவளை இருக்க ஒட்டாது ஒழிந்தது-ஒசிந்த நுண்ணிடை-இவள் நடவாதே இருந்தாலும், நினைத்தால் வயிறு எரிய வேண்டும்படி காண் இடை இருப்பது!-நடு ஒன்று இல்லை என்று அறிகின்றிலள். தன் கையை வைக்கவும் பொறாதே அன்றோ தன் இடை தான்;“மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள்” – பெரிய திருமொழி, 3. 7 : 7.-என்று,அவன் கூடப் போகச் செய்தேயும் அஞ்ச வேண்டும் படியான இடை அன்றோ.-ஒசிதல் – துவளுதல். நுண்ணியதாய் தேரிதான இடை.-பல சொல்லி என்? இடை ஒன்று இல்லை என்கை. அதாவது, இற்றது முறிந்தது இப்போது, பின்னை’ என்று பயப்பட வேண்டும்படியாய் இருக்கை.-அவனுடைய காதல் குணத்திலே அகப்பட்டவள் இனி மீளப் புகுகிறாளோ? என்னுதல்.-ஒண் மலராள் கொழுநன் என்று அவனுக்கு ஏற்றம் இருக்கிறபடி என்னுதல்.-திருமகளார் தனிக் கேள்வன்-திருவாய். 1. 6 : 9.- என்னும் பெருமை யுடைய பிரானாரே அன்றோ.

வந்திருந்து உம்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்!
என்திரு மார்வற்கு என்னை இன்னவாறிவள் காண்மின்என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர்மறு மாற்றங்களே.–6-8-10-என் ஸ்வாமிநி யான பெரிய பிராட்டியாரை திரு மார்விலே உடையவர்க்கு-எனக்கு அங்கு ஓர் அடி இல்லாமை மிறுக்குப் படுகிறேனோ?“பிராட்டி சந்நிதியில் ஸ்ரீராமபிரானைப் பார்த்து இந்த வார்த்தையைச் சொன்னார்”“ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் இதம் வசனம் அப்ரவீத்”என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.-என்கிறபடியே, சொன்ன வார்த்தை விலை போமவள் முன்னால் சொல்லுங்கோள்;
நான் பற்றின அடைவே பற்றுங்கோள் என்கிறாள்.

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-பிராட்டியோடே கூட இருக்கிற யுன்னைக் கிட்டி அடிமை செய்யப் பெறாதே -மாதா பிதாக்களை சேர க் காணுமா போலே ஒரு மிதுனம் இ றே ப்ராப்யம் -மாதா பிதாக்களை அகன்று ஸ்தநனயப் பிரஜை ஜீவிக்க வற்றோ -தாயும் தமப்பனும் கூட இருக்கக் கிட்டப் பெறாதே, பால் குடிக்கும் குழந்தை நாக்கு ஒட்டிக் கிடந்து துடிக்குமாறு போலே இருக்கிறது காணும்.“வேறாகாதவள்” என்கிறபடியே, அவனும் அவளுமான சேர்த்தி யன்றோ இவர்க்குப் பேறு.-இருவரும் சேர்ந்த சேர்த்தி பேற்றுக்கு உறுப்பாய் அன்றோ இருப்பது –ஸஹ தர்ம ஸரீதவ -என்ன கடவது இறே

————————–

ஏழாம் பத்தால் -(இனிமைக்கு ஏழாம் பத்து ஸ்வாமித்வத்துக்கு எட்டாம் பத்து -இரண்டுமே உத்தரவாக்கிய நாராயண பதார்த்தம்-பூர்வ வாக்கியத்தில் ஆஸ்ரய ஸுகர்ய கல்யாண குண விஸிஷ்ட நாராயணன் -இங்கு ஆஸ்ரிய கார்ய ஆபாதக கல்யாண குண விஸிஷ்ட நாராயணன்)
கன்னலே அமுதே -7-1-2-என்றும் –
திருமாலின் சீர் இறப்பு எதிர்காலம் பருகிலும் ஆர்வனோ -7-9-9-என்றும்
ஏழுலகை இன்பம் பயக்க -7-10-1- என்றும்
கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யதை பிரதிபாதிதம் ஆய்த்து

என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப்பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2-அகலப் போனால் ஆற்ற ஒண்ணாத படி போக்யத்தை இருக்கிற படி –ஒரு வகையால் வந்த இனிமையாகில் நான் ஆறி இரேனோ? ‘ர்வ கந்த: ஸர்வ ரச’ என்கிறபடியே, எல்லா விதமான இனிய பொருள்களுமாய், அளவு இறந்து, கொள்ள மாளா இன்ப வெள்ளமாய் இராநின்றதே.
‘அமுது’ என்பது, இனிய பொருளுமாய், சாவாமல் காக்குமதுவுமாய் இருப்பது.

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?

மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-ஏதேனும் ஒன்றிலே புக்கால் அத்தை தலைக் கட்ட வல்ல சாமர்த்தியத்தை யுடையவன் -த்ருணத்தைக் கொண்டு ஒரு கார்யம் கொள்ளப் புக்கால் -அத்தைக் கொண்டே நினைத்த கார்யம் கொள்ளும் சாமர்த்தியத்தை யுடையவன் –திறம் -கூறுபாடு –துப்புரவு -சாமர்த்தியம்-திரு மாலின் சீர்-இந்த சாமர்த்யரத்துக்கு அடியாய் இருக்கிறது ஸ்ரீ யபதித்தவம் ஆயிற்று -ஸ்ரீ யபதியினுடைய கல்யாண குணங்களை –‘அவன் குப்பைக்காலன் காண், ஸ்ரீமான் செய்தன எல்லாம் நன்றாய் வருங்காண்’ என்னக்கடவது அன்றோ?(குப்பைக்காலன்-நல்லவன் விபரீத லக்ஷணை)இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?-போன காலமும் வரும் காலமும் நான் அனுபவித்தால் தான் ஆர்வேனோ -போன காலம் அனுபவிப்பாராய்ச் சொல்லுகிறார் அல்லர் -எல்லா காலமும் அனுபவித்தாலும் ஆரார் என்கை -கீழ்ச சொன்ன ஸமஸ்த சேதனருடைய போக்த்ருத்வ சக்தியையும் கூட்டிக் கொண்டு அனுபவித்தாலும் ஆராது-எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ என்கிறதில் காட்டிலும் ஏற்றம் இல்லையாம் இறே சேதனரைக் கூட்டிக் கொள்ளாத போது -நான் உடையேனாய் அனுபவிக்கப் புக்காலும் உயிர் வாழ்வதற்கு அடியான ஆயுள் அற்பமாகையாலே உபகாரத்தை நினைப்பதற்குக் காலம் போருகிறது இல்லை.

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்

அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-நிரதிசய ஆனந்தம் பிறக்கும் படியாக-நித்ய துக்கியான சம்சாரியானவன் -ஆனந்த மயனான தன்னோட்டை சேர்த்தியாலே ஆனந்திக்குமா போலே யாயிற்று -பிராட்டியோட்டை சேர்த்தியாலே தான் ஆனந்திக்கிற படி –அல்லி மலர் மக்கள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் -என்ன கடவது இறே –ராமஸ்து ஸீதயாசார்த்தம்ராகவோ அர்ஹதி வைதேஹீம் -என்று இறே இவளுக்கு ஏற்றம் –யஸ்ய ஜனகாத்மஜா -என்று இறே தனக்கு ஏற்றம் -எழிலை யுடைய பெரிய பிராட்டியார் –இருவரும் கூடின சேர்த்தியாலே சகல லோகங்களும் ஆனந்தம் உண்டாம் படி -இருவருக்கும் அந்யோன்யம் பிறந்த ஆனந்தம் இறே லோகத்தில் ஆனந்தத்துக்கு அடி –ராம்ஸ ஸீதாம் அநு ப்ராப்ய ராஜ்யம் புனர வாப்தவான் ப்ரஹ்ருஷ்டம் உதிதோ லோக -என்கிற படியே -மாதா பிதாக்கள் சேர இருந்தால் பிரஜைகளுக்கு மிகவும் ஏற்றம் உண்டாம் இறே –இந்த லோகங்களுக்கு ஸூகம் பிறக்கையாலே தனக்கு இனிமை பிறக்கும் படியாகவும் -இவற்றை ஆளுகைக்கு வந்து இருக்கிறார்கள் இருவரும் கூட என்று வேறுபாடு தோற்ற இருந்து இவற்றை ரஷியா நிற்கிற-எங்கள் பிரான்-என்னை இட்டு திருவாய்மொழி பாடுவித்துக் கொண்ட மஹா உபகாரகன் –கேசவன் தமருக்கு பின்பு இவர் தனி அல்லர் இறே

——————

எட்டாம் பத்தால் –
அடியனேன் பெரிய வம்மான் (நந்தகோபருக்கு சொத்து யசோதைக்கு அன்பு அடியேனுக்கு அம்மான்)-8-1-3-என்றும் –
விண்ணோர் கோன்  நங்கள் கோனை (ஸ்வாமித்வம்)-8-2-2-என்றும் –
அமர்ந்த நாதனை (ஸ்வாமித்வம் இவனிடம் அமர்ந்து இருக்கும் மற்றவர்கள் இடத்தில் இல்லை)-8-4-10-என்றும் –
மூவுலகாளி (க்ருதக -அக்ருதக -க்ருதாக்ருதக -ஸமஸ்த லோகங்களும் ஸ்வாமி)-8-9-5-என்றும் –
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் -8-9-11-என்றும் –
சர்வ ஸ்வாமித்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-விபரீத ஞானம் உடையார்க்கோ வந்து கிட்டலாவது-ஸ்வரூப ஞானம் உடையோருக்கு வந்து கிட்டலாகாதோ -அடியேன் என்று இருப்பார்க்கோ உன் பெருமை எல்லாம் காட்டுவது –உன்னை மகன் என்று இருப்பார்கோ உதவல் ஆவது –முறை உணர்ந்து இருப்பார்க்கு உதவல் ஆகாதோ –தேவ தேவோ ஹரி பிதா -பிதாச் ச ரக்ஷக சேஷி -நவ வித சம்பந்தம் –நான் முறையில் நின்றவாறே நீயும் முறையிலே நில்லா நின்றாய் -என்றது-அடியேன் என்று நான் சொல்ல நீ ஈஸ்வரனாய் இரா நின்றாய் என்றபடி-

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-நித்ய ஸூரிகளைப் போலே என்னை அநன்யார்ஹை யாக்கினவன் -ஒரு விபூதியாகப் படுத்தின பாட்டை கிடீர் என்னை ஒருத்தியையும் படுத்திற்று –

அமர்ந்த நாதனை யவரவராகி அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-ஆனைப் பிணங்களை குதிரை சுமக்க வற்றோ -என்னாத படி -உபய விபூதிக்கும் நாதன் என்றால் தாக்கு இருக்குமவனை –த்ரை லோக்யம் அபி நாதேந யேன ஸ்யன்னாதவத்தரம்-என்று ரஷ்யத்தில் காட்டில் ரக்ஷகத்வம் விஞ்சி இருக்கை –உபய விபூதிகட்கும் காரணம் பற்றாத சேஷி என்றால் போரும்படி இருக்கிறவனை-எந்த நாதனால் மூன்று உலகங்கட்கும் நல்ல நாதனை உடையன ஆகுமோ -என்ற பிரமாணம் படி-மூன்று உலகங்களையும் பெருமாளுக்கு கை யடைப்பு ஆக்கினாலும்-பின்னையும் காக்கப் படும் பொருள்கள் சுருங்கி காப்பாற்றுகின்ற துடிப்பே விஞ்சி இருக்கும் –

புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-ஸமஸ்த லோகங்களுக்கும் நிர்வாஹகன்-அப்பன் -ஐஸ்வர்யத்தாலும் குறைவறப் பெற்றேன் -என் தன் ப்ரீதியால் சொல்லுகிறாள் -அவனுடைய-திருவருள் மூழ்கினளே––கடல் கொண்ட வஸ்துவை யன்றோ நீங்கள் மீட்கப் பார்க்கிறது

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்ய நேர் பட்டார் -இவர் பாசுரத்தை சொன்னவர்கள் -இவருடைய வ்ருத்தியிலே அந்வயிக்கப் பெறுவார்கள் -என்கை -சர்வேஸ்வர ஸ்வரூபத்தையும் –ஸ்வ ஸ்வரூபத்தையும் -ப்ரதிபாதகமான பிரபந்த வை லக்ஷண்யத்தையும் -இத்தை அப்யசித்தாருடைய ப்ராப்ய வை லக்ஷண்யத்தையும் சொல்லிற்று ஆயிற்று –இவர் பாசுரத்தை சொன்னவர்-இவர் செய்ய விரும்பிய கைங்கர்யத்திலே சேரப் பெறுவர் –-நேர் படுகை -சொல்லப் படுகை -சொல்லப் பட்டார் -என்றபடி –-ஆக-இப் பாட்டால் சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும்-
ஆத்ம ஸ்வரூபத்தையும்- இவற்றைச் சொல்லுகிற பிரபந்தத்தின் சிறப்பினையும்-
இதனைக் கற்றவர்கள் பெரும் பேற்றின் சிறப்பினையும்- சொல்லிற்று ஆயிற்று —

——————–

ஒன்பதாம் பத்தால் -(ஆய பதார்த்தம்)
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு உன் கோயில் சீய்த்து -9-2-1-என்றும் –
நின் தீர்த்த அடிமைக் குற்றேவல் -9-2-2-என்றும் –
தொடர்ந்து குற்றேவல் செய்து -9-2-3-என்றும் –
கொடுவினையேனும் பிடிக்க (முன்னில் மூன்றிலும் ப்ரகடம்)-9-2-10-என்றும் –
உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு -9-4-4-என்றும் –
ஆட் கொள்வான் ஒத்து -9-6-7-என்றும் –
நானும் மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன் -9-8-4–என்றும் –
நித்ய கைங்கர்யம் பிரதிபாதித்யம் ஆய்த்து

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப்
பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-நெடுநாள் கூடவே பண்ணிப் போந்த கடாக்ஷத்தையும் –எதிர் சூழல் புக்கு நெடுநாள் பட்ட கிலேசத்தின் பலம் அன்றோ இது -நெடு நாள் கிருஷி பண்ணி பல வேளையில் கை விடவோ –அதுக்கு அடியாக பெரிய பிராட்டியார் கடாக்ஷத்தையும் கொண்டு –அவனுடைய அருளின் ஸ்வாதந்தர்யத்தை கெடுக்கும் அவள் அருள் -பிரணயித்தவத்தால் வந்த பாரதந்தர்யம் இறே -என்னடியார் யது செய்யார் –என்னும் உன் கடாக்ஷமும் –நகச்சின் நபராத்யதி –என்னும் அவள் கடாக்ஷத்தையும் பெற்று –க்ருபயா பர்யபாலயத் -என்று கிருபா பரதந்த்ரமான உன் கடாக்ஷமும் -அந்த பாரதந்தர்யத்துக்கு அடியான அவள் கடாக்ஷமும் -என்றுமாம் –உகந்து அருளின நிலங்களிலே அசாதாரண பரிசர்யை பண்ணி -தேஹாத்ம அபிமானிகள் தம் தாமுடைய க்ருஹங்களைப் பேணுமவர்கள் –பிராட்டி யடியாக பகவத் பிரசாதம் பெற்றவர்கள் உகந்து அருளின தேசங்களை பேணுவர்கள் –இன்று புதிதாய் வந்ததோ -நீ விசேஷ கடாக்ஷம் பண்ண தொடங்கின அன்றே தொடங்கி வந்தது அன்றோ –

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-தன்னுடைய ரஸ்யத்தை யாலே இதர புருஷார்த்தங்களிலே நசை அறுக்க வல்ல அடிமைகளில் அந்தரங்கமான அடிமைகளை செய்து-உன் பொன்-அடிக் கடவாதே-உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை அல்லது அறியாதே -என்னுதல் – உன் திருவடிகளை தப்பாதே என்னுதல் -அல்லது அறியாமை யாவது -அநந்ய பிரயோஜனகை -தப்பாது ஒழிகை யாவது -ஆஞ்ஞஜையை அதி லங்கியாது ஒழிகை –ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -என்று இருக்கையும் -பெருமாளை மீடகைக்கு சென்று திருவடிகளிலே விழ -பித்ரு வசனத்தை அனுஷ்டித்தோமானா நிறம் நமக்கு யுண்டாவது நீ ராஜ்யத்திலே இருக்கிறது காண் -என்ன ஆரூரோஹ ரதம் ஹ்ருஷ்ட -என்று மீளுகையும்

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-இத்தசையில் செய்யப்படுவது இது -என்று உணர்த்தி அந்தரங்க வ்ருத்தியைப் பண்ணி -பெருமாள் தமக்கு அபிமதங்களில் அவஹிதர் அன்றிக்கே இருந்த போதும்-இவ் வடிமையைக் கொண்டு அருள வேணும் -என்று வடிம்பிட்டு இளைய பெருமாள் அடிமை செய்தால் போலே –தொல்லடிமை-ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமான வடிமை -மம சஹஜ கைங்கர்ய விதய -என்கிறபடியே–அகாரார்த்தா யைவ ஸ்வம் அஹம் அத மஹ்யம் ந நிவஹா நராணாம் நித்யாநாம் அயநம் இதி நாராயண பதம் யம் ஆஹ அஸ்மி காலம் சகலம் அபி சர்வத்ர சகலாஸூ அவஸ்தாஸூ ஆவிஸ்யு மம சஹஜ கைங்கர்ய விதய -அஷ்ட ஸ்லோகி –எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளுளும்-
தானாகவே உண்டாகும் கைங்கர்யங்கள் வெளிப்பட வேண்டும் -என்னக் கடவது அன்றோ –வழி வரும் தொண்டரோர்க்கு அருளி-நெறி தப்பாதே வருகிற அடியோங்களுக்கு கிருபை பண்ணி –அடிமை முறை தப்பாமே போருகிற-வேறு கதி இல்லாத-எங்களுக்கு-திருவருள் செய்து –இம் மூன்று பாசுரங்களிலும் தம்முடைய வம்ச பரம்பரையின் பெருமையை சொன்னால் போலே அன்றோ இருக்கிறது –அது அன்று இங்குச் சொல்லுகிறது-
ஒருவருக்கேயாய் இருப்பாரை முகம் பார்ப்பார் வேறு ஒருவர் இலர் -என்று-தம்முடைய அநந்ய கதித்வத்தைச் சொல்லுகிறார் –கைங்கர்ய கிரியைச் சொல்லி -யோக்யதை இருப்பதாகச் சொல்லிக் கொள்ள வில்லை -உனக்கே அற்றுத் தீர்ந்தோம் -நீ கை விட்டால்
வேறு யாரும் கொள்ள மாட்டார்கள் –மறந்தும் தொழா மாந்தர் -அன்றோ -அநந்ய கதித்வம் அன்றோ வெளியிட்டுக் கொள்கிறார் –-

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-
இவ்வடிவில் வந்தால் ஒப்பு இல்லை -பகவத் தத்துவமும் ஒப்பன்று —துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்யாபி ஜன லஷணாம்-ராகவ அர்ஹதி வைதேஹீம் தம் ச இயம் அஸி தேஷணா-சுந்தர -16-5-பெருமாளுக்கு கருத்த கண்களை உடைய வளான இந்தப் பிராட்டியும் தகுந்தவள்-என்கிறபடியே-எற்றமாயே நின்றது அன்றோ –-அப்படிப்பட்ட நில மகள் -ஏவம் பூதை -என்னும் அத்தனை-அவர்கள் கூசித் தொட வேண்டும் படி ஸூ குமாரமான திருவடிகளை-அவர்கள் சந்நிதியும் யுண்டாய் இருக்க நான் இழப்பதே -என்னும் இன்னாப்பாலே சொல்லுகிறார் -கண்கள் சிவந்த -திருவாய் மொழிக்கு பின் நிகர்ஷ அனுசந்தானம் இல்லை இறே-நிரதிசய போக்யனாய் ஸந்நிஹிதனான நீ சத்தையை நோக்குகைக்காக ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல் செய்து அருள வேணும் -வருதல் என்கிற இத்தை முந்துற சொல்லாது ஒழிந்தது அந்த சமுதாயத்தை காண வேணும் என்னும் நசையாலே –எல்லை இல்லாத இனியனாய்-அண்மையில் இருப்பவனான நீ-ஸ்வரூபத்தை நோக்குகைக்கு-ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல்-செய்து அருள வேண்டும்-முற்பட வருதல் என்று இலர் ஆயிற்று-அச் சேர்க்கையை குலைக்க ஒண்ணாது என்னுமதனாலே-விருப்பம் உடையார் பக்கல் அவனைத் தனியே விட்டு இரார்கள் அன்றோ –அதனால் கூடக் கொடு வருவார்கள் என்னும் அதனை பற்றச் சொல்லுகிறார்-

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4-சீரியது அடிமை செய்யுமது என்று–உனக்கு அடிமை புகுந்து -ஸ்வரூபம் பகவத் பரதந்த்ரம் என்று உணர்ந்தால் சீரிய பிரயோஜனம் கைங்கர்யம் இறே-உன் பக்கல் பெறுவது ஏதோ என்று -ஸ்வரூபத்தையும் உணர்ந்து -கைங்கர்யமே சீரியது -என்று அறிந்து -ஈஸ்வரன் அநந்ய பிரயோஜனர்க்கு வேறு ஒன்றைக் கொடுத்து விடுவான் அல்லன் -என்று அறியும் இவர் -உன் பக்கல் பெறுவது ஏதோ என்கைக்கு ஹேது என் என்னில் -க்ரமத்திலே வந்து முகம் காட்டுகிறோம் -என்று சம்சாரத்தில் இருப்பே சேஷித்து விடப் புகுகிறதோ -என் த்வரை அறிந்து முகம் காட்டுகிறாயோ-என்கைக்காக சொல்லுகிறார் என்பது –ஆர்த்த பிரபன்னர் அன்றோ ஆழ்வார் –கஜேந்திரன் அநாதி காலம் இழந்து காணப் பெற்றான் -பரதன் கண்டு இழந்து 14 சம்வத்சரம் பொறுத்து பெறப் பெற்றான் -எனக்கு என்ன ஆகுமோ-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-அடிமை கொள்வாரைப் போலே புகுந்து –என்னை வெறும் தரை யாக்கின ஆச்சர்ய பூதனாலே –கீழே திருவருள் என்று மறைத்துச் சொன்ன வார்த்தையை வெளியிடுகிறார் –கிட்டின போது தாழ நின்று மின்மினி பரக்க பரிமாறும் ஆச்சர்யம்-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்

நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-நித்ய ஸூரிகள் பண்ணும் ஆத்மாந்த தாஸ்யத்தில் அன்றோ நானும் அதிகரித்தது -ஒரு பிரயோஜனத்தை கொள்ளக் கிட்டினவனாய் ஆறி இருக்கிறேனோ -தாஸ்ய பரிமளத்தில் சுவடு அறியாதவனாய் ஆறி இருக்கிறேனோ

————-

பத்தாம் பத்தால் -(நமஸ் பதார்த்தம் ப்ராப்யத்தில் களை இருக்கிறது -மற்றை நம் காமங்கள் மாற்று)
துயர் கெடும் கடிது -10-1-7-என்றும் –
கெடும் இடர் ஆய வெல்லாம் -10-2-1-என்றும் –
எழுமையும் ஏதம் சாரா -10-2-2-என்றும் –
இப் பிறப்பு அறுக்கும் -10-2-5-என்றும் –
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க  இன்புறுதும் எம் பெண்மை யாற்றோம் -10-3-9-என்றும்
பிணி ஒன்றும் சாரா -10-4-7-என்றும்
பிறவித் துயர் கடிந்தோம் -10-4-3-என்றும் –
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் -10-5-9-என்றும் –
அமரா வினைகளே -10-5-9–என்றும் –
கடு நரகம் புகழ் ஒழித்த -10-6-11-என்றும் –
தடுமாற்ற வினைகள் தீர்த்தான் -10-8-5-என்றும் –
பிறவி கெடுத்தேன் (அவனே செய்தாலும் இப்படி சொல்லும்படி வைத்து உகக்கிறான்)-10-8-3-என்றும் –
அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் -10-8-7-என்றும் –
அவா வற்று வீடு பெற்ற (ஞாதும் த்ரஷ்டும் ப்ராப்தி-பரபக்தி கீழ் எல்லாம் -பரஞானம் சூழ் விசும்பு -பரமபக்தி முனியே நான்முகன்)-10-10-11-என்றும் –
கைங்கர்ய பிரதிபந்தக நிஸ் சேஷ நிபர்ஹணம் பிரதிபாதிதம் ஆய்த்து –

மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே
-10-1-7-எல்லா தேவ ஜாதியோடும் கூட எல்லா லோகங்களையும் உண்டாக்குமவன் வர்த்திக்கிற திரு மோகூர்-நாம் சென்று -விடாதே ப்ரதக்ஷிணாதிகளைப் பண்ண-வழித் துணை இல்லை -என்று நாம் படும் துக்கங்கள் சடக்கென போகும் -அதஸோ அபயங்கதோ பவதி -என்னக் கடவது இறே -ஆனபின்பு மற்றிலம் அரண் –

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-இடர் என்று பேர் பெற்றவை அடங்க போம் –பாபே குருணி குருணி –என்று பாப அனுரூபமாக பிராய்ச சித்தம் பேதித்து இருக்கும் -திரு நாமத்துக்கு அங்கனம் ஒரு நியதி இல்லை –மேரு மந்த்ர மாத்ரோ அபி –நஸ்யதி –என்றபடி சகல பாபங்களும் போம் -திரு நாமங்கள் தான் பலவும் வேணுமோ என்னில் –ஒரு விரோதியைப் போக்கின படியைச் சொல்ல விரோதி வர்க்கமாக போம் என்னுதல் –ப்ரசஸ்த கேசன் என்றால் –கேசவ கிலேச நாசன – என்கிறபடியே சாம்சாரிக சகல துரிதங்களும் போம் என்னுதல் –பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி –விஷ்ணு தர்மம் –பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் -என்கிறபடியே
எல்லா துன்பங்களும் ஒரு முறையிலேயே அழியும் – –என்னக் கடவது இறே-நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித-கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே -நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்-க இதி ப்ரஹ்மனொ நாம ஈசோஹம்சர்வ தேஹிநாம்-ஆவாம் தவ அங்கே சம்பூதௌ தாஸ்மான் கேசவ நாமவான் -என்கிறபடியே-பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவனே என்ன-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் –போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்கிறபடியே-அனுபவிக்க கடவனவும்-முன்பே தொடங்கி அனுபவிக்கிறவையும்-எல்லாம் நசிக்கும் ஆதலால் -எல்லாம் -என்கிறார் –என்ன -அர்த்த அனுசந்தானம் வேண்டா -யுக்தி மாத்திரமே அமையும் பாப விமோசனத்துக்கு என்கிறது –

இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-போவோம் என்று இச்சை பிறந்த இன்றே போய்த் திருவனந்த புரத்தே சென்று புகுவீராகில் -இதர விஷய விரக்தி வேண்டாவோ -இச்சா மாத்திரமே அமையுமோ என்னில் –யதஹரேவ விரஜேத் ததஹரேவ பிரவ்ரஜேத்-ஜாபாலி ஸ்ம்ருதி –எவன் வைராக்யம் உள்ளவன் ஆகிறானோ அன்றே துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் -என்கிறபடியே- -அதிக்ருதாதிகாரமானவற்றுக்கு–சர்வாதிகாரமுமாய் பிராப்தமுமாய் முன்பே இவனை இச்சித்து இவன் இச்சை பார்த்து இருக்கும் விஷயத்துக்கு -இச்சா மாத்திரமே வேண்டுவது –அப்ராப்த விஷயத்துக்கு இறே அதிகாரி சம்பத்து வேண்டுவது –கால தத்வம் உள்ளதனையும் ஒரு வ்யஸனம் வாராது -சாரா -அவன் திரு முகம் கொண்டு தவிர்க்க வேண்டா -இவ்வ்வாஸ்ரயம் நமக்கு இருப்பு அன்று என்று சர்வ துக்கமும் கழலும்–சும்மெனாதே கை விட்டு ஓடி தூறுகள் பாய்ந்தனவே -பெரியாழ்வார் திருமொழி -5-4-3-என்கிறபடியே-நாம் இவ்விடத்தில் இருப்பதற்கு உரியோம் அல்லோம் -என்று தன்னடையே வந்து கிட்டாது –இராஜ குல சம்பந்தத்தாலே விட்டு ஓடிப் போம் –
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆன் ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வான் துயரை ஆ ஆ மருங்கி –
பெரிய திருவந்தாதி -54-–

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-என் ஸ்வாமி யுடைய திரு நாமத்தை அநுஸந்தியுங்கோள்–இடறினவன் அம்மே என்னுமா போலே-வகுத்தவனுடைய திரு நாமத்தை அநுஸந்தியுங்கோள் –சததம் கீர்த்தயந்தோ மாம் யதன் தச்த த்ருடவ்ரத-நமச்யந்தச்ய மாம் பக்த்யா நித்ய யுக்தஉபாசதே -ஸ்ரீ கீதை -9-14-எப்பொழுதும் என்னை கீர்த்தனம் செய்கின்ற வர்களாயும் -என்னா நின்றதே அன்றோ –அதனைச் சொல்லுகிறது –நஞ்சீயர் பட்டரை-திரு நாமம் சொல்லும் பொழுது பக்தி உடையனாய் சொல்ல வேண்டுமோ -என்று கேட்க-கங்கையில் முழுகப் போமவனுக்கு-வேறு உவர்க் குழியிலே முழுகி போக வேண்டுமோ-மேல் உண்டான நன்மையைத் தருகிற இது-அதிகாரி சம்பத் ஆகிய -தகுதியையும் தர மாட்டாதோ -என்று அருளிச் செய்தாரம் –-திரு நாமம் சொல்லுகைக்கு ருசியே ஆயிற்று வேண்டுவது-அவர்களே அதிகாரிகள் ––பிறவியினுடைய தோஷ பிராஸுர்யம் ப்ரத்யக்ஷ சித்தம் இறே–இ -சுட்டு எழுத்து-கண்டதே அன்றோ இதனுடைய இழையீடு -நூலாலே தைத்தல்-இழை இட்டால் போலே இருக்கிற அவயவங்களுடைய சேர்த்தி-கவிழ்ந்து பார்க்கவே அமையுமே இதனுடைய அகவாயை-தன்னைடையே வைராக்கியம் பிறக்குமே –-இப்படி கண் கூடாக கண்டு இருக்கச் செய்தேயும் வைராக்கியம் பிறவாது இருக்கிறதே அன்றோ வாசனையின் கனம் –-ஒரு செட்டியை -இவன் தமிழில் சிறந்த புலமை படைத்தவன் -என்று பட்டருக்கு காட்டினார்களாக-பட்டர் அவனைப் பார்த்து -உனக்கு யாதேனும் கேட்க விருப்பம் இருப்பின் கேட்கலாகாதோ -என்ன-சிலர் -காண்கிற இத் தேகத்துக்கு அவ்வருகு ஆத்மாவும் இல்லை –புண்ணிய பாபங்களும் இல்லை-ஈஸ்வரனும் இல்லை -என்று இரா நின்றார்கள்–சிலர் -இச் சரீரம் தான் நிலை அற்றது -என்று இதனுடைய தாழ்வினைக் கண்டு-அவ்வருகே நிலைத்து இருக்குமது ஒன்றனை பற்ற வேண்டும் -என்று இரா நின்றார்கள்-விஷயம் ஒன்றாக இருக்க வேறுபட்ட இவ்விரண்டு கொள்கைகளும் நடக்கிற படி எங்கனே -என்ன--தைவீ ஹி ஏஷ குணமயீ மம மாயா துரத்தயா-மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே -ஸ்ரீ கீதை -7-14-
என்கிறபடியே-நல்லவர்கள் இதனுடைய தாழ்வினைக் கண்டு இதனைக் கழித்து கோடற்க்கும்-மற்றையோர்கள் இதிலே இனிமை உண்டு என்று நினைத்து கேடு உறுகைக்கும்- உடலாம்படி கர்மங்களுக்கு தகுதியாக இதனை எடை எடுத்து காணும் -நிறுத்து -அறுதி இட்டு -காணும் –ஈஸ்வரன் பண்ணிற்று என்று அருளிச் செய்தார்-
இது கண்டாய் நன்னெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தரு கணையா
காரணமும் வல்லையேல் காண்
–இரண்டாம் திரு -66-என்னும்படியாய் இருக்கும் அன்றோ-
நாம் நன்றாக நினைத்து இருக்குமது அன்று இதன் தன்மை –அல்பம் அஸ்திரம் -ஆகாரம் பிரத்யஷிக்கலாமே –-ஈஸ்வரன் வெளிச் சிறப்பினை பிறப்பிக்க-இது சிறிது -நிலை அற்றது -என்று அறிந்த இதுவே காண்–இதுக்கு நிலை நின்ற தன்மை –இப் பிறப்பு அறுக்கும் –
இப்படி தாழ்வு உள்ளதாக அறியப் படுகின்ற இச் சரீர சம்பந்தத்தை அறுக்கும் –செறிந்த பொழிலை யுடைய திருவனந்த  புரத்திலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை ஆஸ்ரயிக்குமவர்கள் -இப் பிறப்பு அறுக்க வேணும் -என்ன வேண்டாத நித்ய ஸூரிகளானவர்கள் –இத்தால் விரோதியை போக்கும் அளவன்றியே-உத்தேச்யத்தை பெறுகைக்கும் திருவனந்த புரமே ஆஸ்ரயணீய ஸ்தலம் என்கிறது –வியக்தமாக -மதிநலம் அருளப் பெற்ற நாம் -தேஹாத்ம அபிமானிகளான -நீங்கள் அறியும் படி உங்கள் அநர்த்தத்தைப் பார்த்துச் சொன்னோம் –

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-எங்களை போல் அன்றிக்கே -நீ உகக்கும்படியான விலக்ஷணைகளோடு சஞ்சரித்து -அவர்களோடே பரிமாறப் பெற்றிலோம் என்று திரு உள்ளத்தில் யுண்டான விடாயால் வந்த துக்கம் கெடும் தோறும் –புறம்புள்ளாரைப் போல் அன்றியே -உன் உகப்பே பிரயோஜனமாக நாங்கள் -மிகவும் உகப்புதோம்-மிகுதி எதில் காட்டில் என்னில்-எங்களோடு கலக்குமதில் காட்டில் -என்னுதல்–உன்னில் காட்டில் நீ உகந்தவர்களை உகப்புதோம் -என்னுதல் –உன் உகப்புக்கு புறம்பாய் வரும் ஸ்த்ரீத்வம் எங்களுக்கு அஸஹ்யம் -அது வேண்டா –-நீ உகந்தாரை ஒழிய உன்னை உகக்குமவர்கள் அல்லோம் காண் நாங்கள் -உன்னைத் தனித்து உகப்பாள் மூக்கறைச்சி அன்றோ -சூர்பணகை அன்றோ –
ததீயர் சேஷத்வம் ஞானம் உடையவர்கள் அன்றோ -அவனும் ததீயாரும் சேர்ந்ததே புருஷார்த்தம் –

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-சகல துக்கங்களும் நம்மை ஸ்பர்ஸியா -அந்த துக்கங்களுக்கு அடியான ஜன்மத்தைப் போக்கி அடிமை கொள்ளும்

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே10-4-3-துக்க ஹேதுவான ப்ரக்ருதி சம்சர்க்கத்தையும் ஒட்டினோம் -பரம பதத்தில் புகச் செய்தேயும் ருசி முன்னாக போகாத வைதிக புத்ரர்களுக்கு மீள வேண்டிற்று இறே –மயர்வற மதி நலம் அருளினன் -என்று ருசி ஜனகனும் அவனேயாய் -பேறும் அவனாலேயாய் இருக்கிற எனக்கு புநாவ்ருத்தி பிரசங்கம் இல்லை-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9–கண்ட போதே வினை என்று பேர் பெற்றவை எல்லாம் விட்டுப் போய்த்து -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னுமவன் அடியாக வந்ததாகையாலே தட்டில்லை இறே-இவர் கேவலர் அல்லர் –அடி வுடையராய் இருந்தார் -என்று விட்டுப் போயிற்றின –சாடு- மூலம் உண்டு -திருவடி கண்டார்-
த்ருஷ்டே பராவரே-கண்டால் போகும் -ஸ்ருதி -ஆழ்வார் சங்கை இல்லாமல் கண்டேன் –
பரன் அவரன்-மேன்மைக்கும் எளிமைக்கும் எல்லை இவனே –பரர்கள் என்று லோகத்தில் உள்ளார் அவரர்கள் போல் –உயர்வற உயர் நலம் -உயர்வு அறும் படி அன்றோ இவனது உயர்வு –

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயிக்க இழியவே பிரயோஜனாந்தர ப்ராவண்யத்துக்கு அடியானை கர்மங்களானவை தானே போம் —

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-தன் கனை கழல்கள்-காட்டி -கடு நரகம் புகல் ஒழித்த–ஸ்வரூப குணங்களை பிரகாசிப்பிக்கிற வடிவைக் காட்டி சம்சார சம்பந்தத்தைத் தவிர்த்த -என்னுதல் -தன்னைக் காணப் பெறாத துக்கத்தைப் போக்கினவன் என்னுதல் -கழல் -திரு மேனிக்கு உப லஷணம்-இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை –என்று விரும்பியவாறே-செய்தான் ஆயிற்று–அறிவுடையாருக்கு பொறுக்க முடியாத நரகம்-இவ் உலக வாழ்க்கை அன்றோ 

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-புகுந்த பின்பு தான் அனுகூலித்தேனோ-தன்னைப் பிரிந்து தடுமாறுகைக்கு அடியான புண்ய பாப ரூபமான கர்மங்களை தானே தவிர்த்தான் –கர்மங்களுக்கு கட்டுப் படாதவனான தானே –இவர் பல காலம் தேகத்தினை விரும்பி விட மாட்டாதே போந்தார்-இப்போது இவருக்கு தன் பக்கலில் ருசி பிறந்தவாறே–இதனோடு தொற்று அல்லாத தானே-இதிலே வந்து புகுரா நின்றான் –
அவனைப் போலே முன்னடி தோற்றாது ஒழியில் அன்றோ இவர்-இச் சரீரத்தின் தண்மையைக் காணாது ஒழிவது-இதன் தண்மையை நினைந்து -இதனுள் -என்கிறார் –காதல் கண்ணை மறைத்தது அவனுக்கு- இவர் மயர்வற மதி நலம் அருள பெற்றவர் அன்றோ-தானே--புகுகிற போது தானே யாய்-பின்னர் நானும் அவன் செய்யும் கார்யத்துக்கு அனுகூலமாக இருந்தேனோ –தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் – தன் பக்கல் நின்றும் என்னை பிரித்து தடுமாறும்படி-செய்ய வல்ல பாபங்களைப் போக்கினான் –அவை யாவன-பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்-இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்கள் –

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3—தலை மேலே தாள் இணைகள் -10-6-6-என்று-அவன் திருவடிகளை தலை மேல் கொண்டு வந்து வைக்கையாலே அவற்றை உரக்கப் பிடித்துக் -கெட்டியாக பிடித்துக்-கொண்டேன் –தலை மேலே தாள் இணைகள் -என்கிறபடியே -அவன் திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க -அத்தை ஒரு நாளும் பிரியாத படி பற்றினேன் -ஜன்மத்தைப் போக்கினேன் –ஜென்ம சம்பந்தத்தால் வந்த துக்கங்களை அடியேன் -சம்சாரத்திலே நிற்கைக்கு அடியான மூல பிரக்ருதியை நிவர்த்திப்பித்தேன்-பிறவியை மறுவல் இடாதபடி போக்கினேன் –ஸ்தூல சரீர விமோசனம்-
கானோ ஒருங்கிற்றும் கண்டிலோம் -பெரிய திருவந்தாதி -54-என்கிறபடியே-எங்கே போயிற்று -கண்டிலேன் –அவன் தம்மோடு-நிர்ஹேதுகமாக வந்து கலந்த படியை நினைந்து இவன் திருவடிகள் எனக்கு இங்கனே எளிது ஆவதே –என்கிறார்-

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-மேலான தாஸ்ய ரசம் அதிசயித்து -யேந யேந தாதா கச்சதி -என்கிற ரசத்தை அனுபவித்து -சேவாச்ச்வ வ்ருத்தி -என்கிற இது இறே கீழான தாஸ்யம் –முடிவிலே -தொழும் சொல்லுப் பெற்றேன் -அனுபவ ப்ரீதி தலை மண்டையிட்டால் -அதன் மேலே நம என்று புத்தி பூர்வகமாக சொல்லும் சொல்லைப் பெற்றேன் –நம இத்யேவ வாதின -இறே -அதாவது ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பெறுகை –அந்தி தொழும் -என்கையாலே பலம் சொல்லிற்று
கைங்கர்ய ஏக ரச இன்பம் மிகுந்தால் -அதனுடைய முடிவிலே நம -என்று சொல்லுகின்றவர்கள் -என்று மனம் அறியச் சொல்லுவது ஓன்று உண்டு-அப் பாசுரத்தைச் சொல்லப் பெற்றேன் –முக்தாநாம் லஷணம் ஹி ஏதத் ஸ்வேத த்வீப வாஸிநாம்-பத்தாஞ்சலி புட ஹ்ருஷ்டா நம இதி ஏவ வாதின –பாரதம் மோஷம் -என்கிறபடியே –-அந்தி தொழும் -சரம நிலை -நம -பிராப்ய-விரோதி -ஸூ போக்துத்வ புத்தி -தவிர -கைங்கர்யம் செய்யும் பொழுது
எப்போதாவது வரலாம் என்பதால் எப்பொழுதும் ஸ்வேத தீப வாசிகள் சொல்லிக் கொண்டே இருப்பார்-யவாதாத்மபாபி -மற்றை நம் காமங்கள் மாற்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமே மேலைத் தொண்டு –-அதாவது-ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய்மொழி பாடி-அடிமை செய்யப் பெறுகையைத் தெரிவித்த படி –

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11- அவனைப் பெற்று நிரஸ்தித ஸமஸ்த பிரதிபன்னராகையாலே நிர் துக்கரான ஆழ்வார் அருளிச் செய்த –

———————–

இப்படி ஸ்ரீயபதித்ய பிரமுகங்களாய் (தொடங்கி)
கைங்கர்ய பிரதிபந்தக நிஸ் சேஷ நிபர்ஹண பர்யந்தங்களாய் இருந்துள்ள
உபாதேய அர்த்தங்களை பிரதிபாதிக்கக் கடவதாய் இருந்துள்ள
வாக்யத் த்வயமும்  -திருவாய்மொழியும் –
பகவத் சரணார்த்திகளாய் -பிரபத்தி உபாய பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு
கால ஷேப ஹேதுவாகவும்
ஈஸ்வர ப்ரீணந அர்த்தமாகவும்
யாவச் சரீர பாதம் அனுசந்தேயம் -(த்வய அர்த்த அனுசந்தாநேந ஸஹ உடன் யாவத் சரீர பாதம் -அரங்கன் எம்பெருமானுக்கு இட்ட கட்டளை -த்வய அர்த்தமே திருவாய்மொழி)

———

நேத்ருத்வம் நித்யயோகம் ஸமுசித குண ஜாதம் தநுக்யாபநம் ச உபாயம்
கர்த்தவ்ய பாகம் து அத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரஸித்தம் |
ஸ்வாமித்வம் ப்ரார்த்தநாஞ்ச ப்ரபலதர விரோதிப்ரஹாணம்
தசைதான் மந்தாரம் த்ராயதே சேத்யதிகத நிகம: ஷட்பதோயம் த்விகண்ட: ||
-5-

இந்த ஸ்லோகம் மந்த்ர ரத்னமான த்வயத்தை விவரிக்கிறது. த்வயம் என்பது இரு கண்டங்களும் ஆறு பதங்களும் கொண்டு அமைந்தது. பத்துப் பொருளை உட்கொண்டிருக்கிறது: (1) சேதனனைத் தன் வயமாக நடத்தும் திறமை (2) பிராட்டியோடு பிரிக்க முடியாத நிலை (3) ஈச்வரத் தன்மைக்கேற்ற இனிய குண ஸமூஹம் (4) அழகிய திருமேனி (5) உபாயம் (6) சேதனன் செய்ய வேண்டிய கடமை (7) இருவருமான சேர்த்தியில் கைங்கர்யம் என்னும் பலன் (8) உரிமை என்னும் ஸம்பந்தம் (9) கைங்கர்ய ப்ரார்த்தனை (10) கைங்கர்யத்துக்கு இடையூறாக உள்ளவைகளிலிருந்து விடுதலை – ஆகிய இந்தப் பத்துப் பொருள்களையும் இடைவிடாது நினைப்பவனை ரக்ஷிக்கிறது என்னும் இதை வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

—————————————————-———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வார்த்தா மாலை -ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பட்டருக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள்

December 11, 2025

ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பட்டருக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள் –
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் இருக்கும்படி என் -என்று ஸ்ரீ பட்டர் ஸ்ரீ எம்பாரைக் கேட்க –
சகல வேத சாஸ்த்ரங்களாலே அறுதி இட்ட அர்த்தத்தை  பத்து வார்த்தையாலே
ஸ்ரீ பட்டருக்கு ஸ்ரீ எம்பார் அருளிச் செய்தார் –

இப்பத்து வார்த்தைகள் உடைய வரலாறு சொல்லுகிறது
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது –

(லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்)

(ராம மிஸ்ரர் உய்யக் கொண்டார் புண்டரீகாக்ஷர் மணக்கால் நம்பி -அருவி -ஆளவந்தார் பெருக்காரு -பஞ்ச ஆச்சார்யர் வாய்க்கால் மூலம் வீராணம் ஏரி யாகிய எம்பெருமானார் -74ஸிம்ஹாஸனாதிபதிகள் -வம்சம் மூலமும் நம்மிடம் சேரும்)

இனி
எத்தினால் இடர்க் கடல் கிடக்கிறாய் -திருச்சந்த விருத்தம் -115-
அதன்றியே
பிரகிருதி அந்தத்தில் எம்பெருமான் திருவடிகளைப் பெறலாம் என்கிறது

அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-ஷிபாமி -என்கிறபடிய த்யாக  விஷயமாம் படி சூழ்த்துக் கொண்ட நம்முடைய நெஞ்சில் –-ஹேய பிரத்யநீகர் ஆனவர் புகுந்து -ஒரு நீராக பொருந்தினார் –

—————

முதல் வார்த்தை (பேற்றுக்குத் த்வரிக்க வேண்டும் -என்பதற்குப் பிரமாணங்கள்)
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன் -திருவாய்மொழி -8-5-2- என்றும் –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -திருவாய்மொழி -7-2-1- என்றும் –
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன் -திருவாய்மொழி -4-7-10 என்றும் –
பிரபன்னஸ் சாதகோ யத்வத்
(ப்ரபன்னன் சாதகப் பறவை போலே எம்பெருமானுடைய கருணை நீர் ஒன்றையே எதிர்பார்த்து இருப்பான்)-என்றும் இருக்கை-

காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால் இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும் கருமா மாணிக்கம்
நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி முடிசேர் சென்னி யம்மானே–8-5-2-ஒருகால் அழைத்தது வரக் காணா விட்டால் -நம் ஆசையை ஆவிஷ்கரித்தோம்-வந்த போது வருகிறான் -என்று இருக்கிறார் அல்லர் -நிரந்தரமாக கூப்பிடா நிற்பர்-காரார் திருமேனி காணும் அளவும் -சீரார் திருவேங்கடம் -எங்கும் போவார் – –எங்கனே வரும் என்று அறியாமையால் திக்குகள் தோறும் பார்த்து கண் பசை அற யுணர்ந்து -கண்ண நீர் கைகளால் இறைக்கும்-என்கிற தசையும் கழிந்தது -கூப்பிட்டு நாவும் பசை அற யுலர்ந்தது-அத்தலையிலே அவத்யம் நம்மதாம் படியான சம்பந்தத்தை யுடைய நான் லஜ்ஜித்து -இவனை நாட்டார் என் சொல்லுகிறார் என்று லஜ்ஜித்து என்னுதல் -பிரயோஜனார்த்தியாய் கூப்பிடுகை அன்றிக்கே -முறை அறிந்து காண்கைக்கு கூப்பிட்ட நமக்கு உதவின படி அழகிதாய் இருந்தது என்று லஜ்ஜித்து என்னுதல் –அநந்த கிலேச பாஜநம் ஆகையால் விபரீத லக்ஷணை யாதல் -விஷய அனுபவத்தால் களித்து வர்த்திக்கிற தேசம் என்னுதல் -தம்மைப் போலே கூப்பிடக் காணாமையாலே அவனை பெற்று இருக்கிறார்கள் என்னும் நினைவாதல் –இது பிள்ளான் நிர்வாஹம் -விபரீதமாக -குத்தலாக -கூப்பிடாமல் உண்டியே உடையே உகந்து போகிறார்களே -கூப்பிட வில்லை என்றால் அடைந்தார்கள் அன்றோ ––அலமந்தால் -தடுமாறினால் –இரங்கி-உனக்கு அபேக்ஷை இல்லா விட்டால் பர அநர்த்தத்துக்கு இரங்க வேண்டாவோ -ரிஷிகளுக்கு உள்ள ஆன்ரு சம்சயமும் இல்லையோ –யொருநாள் -பல நாள் வேணும் என்கிறேனோ –-நீ -கண்டு கொண்டு நிற்க வேண்டும் வை லக்ஷண்யத்தை யுடைய நீ-யந்தோ-உன் வை லக்ஷண்யம் அறியாது ஒழிந்தால் -என் ஆர்த்தியும் அறியாது ஒழிவதே-காண வாராய்-பிரயோஜ னார்த்தியாய் அழைக்கிறேனோ –-கரு நாயிறுதிக்கும்-கறுத்து இருக்கிற ஆதித்யன் உதிக்கிற-கருமா மாணிக்கம்-நாள் நன்மலைபோல்-அவ்வாதித்யனுடைய உதய கிரி இருக்கிற படி –நீலமாய் பெரு விலையனான ரத்ன பர்வதம் போலே – நாள் மலை -நாள் பூ -என்னுமா போலே தர்ச நீயமான மலை-சுடர்ச் சோதி முடி-மிக்க புகரை யுடைய மயிர் முடி -கறு நாயிறு உதிக்கும் -என்கிற த்ருஷ்டாந்த பலத்தால் –முடி என்று மயிர் முடி யாகிறது –
சேர் சென்னி -அதுக்கு ஆஸ்ரயமான திருமேனி நீல ரத்ன பர்வதம் போலே யாயிற்று இருப்பது –யம்மானே–ஸர்வேஸ்வரனே -நித்ய துக்கியாய் பேர்ந்த சம்சாரி முக்தனாய் சென்றால் தாப ஹரமாக அவனுக்கு செய்வது திருக் குழலை பேணும் அத்தனை –கிம் த்வயா நார்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -என்பது பிரமாணம்- –

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-உறங்கக் கடவ இரவோடு -உறங்காமைக்கு கண்ட பகலொடு வாசி அற நித்திரை என்பது ஓன்று அறிகிறிலள் -கண் துயிலாள் என்னாதே அறியாள் என்கிறது நித்திரையை அறிந்து விரோதி என்று கை விட்ட இளைய பெருமாளின் வாசி சொல்கிறது -இளைய பெருமாளுக்கு முன்பு இல்லை யாகிலும் ஜென்மத்தில் மெய்ப்பாட்டாலே பற்றி விட வேண்டிற்று -இவளுக்கு-பிரணயி நிகள் பகல் உறங்குவர்கள் -இப்படி உபய வ்யாவ்ருத்தமாய் இரவும் பகலும் உறங்காதபடி ஆனாள்-அநித்ரஸ் சததம் ராம -என்கிற உம்முடைய படியை இவள் உடையாள் ஆனாள்-கண் உறங்காமையாலே போது போக்கு அரிதாய் -அதினாலே கண்ண நீர் வெள்ளம் இடத் தொடங்கிற்று -இவ்வாற்றாமையில் அவன் வாராது ஆழியான் -என்று அத்யவசித்து -வரும் போது காண்கைக்கு கண்ண நீர் பகையாக ஒண்ணாது என்று அத்தை மாற்றப் பாரா நின்றாள் -கடலைக் கையாலே இறைக்கத் தொடங்குவாரைப் போலே இது என்ன சாஹசம் என்கிறாள் -கடல் கொண்ட கண்ணீர் அறிவி செய்யா நிற்கும் இறே -இவள் கண்ணும் கண்ண நீரும் தாயாருக்கு சுபாஸ்ரயமாய் யாயிற்று இருக்கிறது –கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் –இவள் தர்சன விரோதி என்று மாற்றப் பார்க்கிறாள் இத்தனை –சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;-வந்து தோற்றும் படி – –கூரரார் ஆழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் என்று சொல்லக் கருதி முடியச் சொல்ல மாட்டாமையாலே -விடாய்த்தார் ஹஸ்த முத்திரையால் தண்ணீர் வேண்டுமா போலே அஞ்சலியாலே குறையும் தலைக் கட்டா நின்றாள் -இன்னார் என்று அறியேன் -என்று அறிவு அழிப்பனவும் இவை –செரு ஒண் சக்கரம் சங்கு என்று அறியப் பண்ணும் அவையும் இவை –சங்கு சக்கரம் என்று இயல் ஆனாலோ என்று பிள்ளை திரு நறையூர் அரையர் -பஹு வசனத்துக்கு பொருள் கண்டிலோமீ என்ன –இசையில் தூக்கின இடத்து இரண்டும் இசைந்து கிடைக்கையாலே சொல்லிப் போருகிற படியே சங்கு சக்கரங்கள் என்ன அமையும் -என்று ஆப்பான் நிர்ணயித்தார்–இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை ஏறி கிற கண்களின் அழகை இடைவிடாதே சொல்ல நினைத்து தளரா நின்றாள் -தாமரைக் கண்களால் நோக்காய் -என்கிறபடியே திருக் கண்களால் நோக்கி அருள வேணும் -என்று உபக்ரமித்து -ஹஸ்த சேஷ்டையாலும் தலைக் கட்ட மாட்டாதே தளரா நின்றாள் -ராமம் ரக்தாந்த நயன மபஸ்யந்தீ ஸூ துக்கிதா -இங்கனம் தளரலாமோ-தத் தஸ்ய என்று இருக்க வேண்டாவோ என்ன –என்னும்;-பர வ்யூஹ வைபவங்களில் ஆசைப்பட்டேனோ தூரஸ்தன் என்று ஆறி இருக்க ?-அவதாரங்களில் ஆசைப் பட்டேனோ சமகாலம் அன்று என்று ஆறி இருக்க ?உன்னை -என்கிறது வடிவு அழகையும் சீலாதிகளையும் -இவளை அறியாது ஒழிந்தால் உம்மையும் அறியாது ஒழிய வேணுமோ -உம்மைக் கண்ணாடி புறத்திலும் கண்டு அறியீரோ -அநந்தரம் வரக் காணாமையாலே-இரு நிலம் கைதுழா இருக்கும்;-இம் மஹா பிருத்வி எல்லாம் கைகளால் துழாவா நின்றாள் இறே -பூமிப பரப்பு அடங்க ஒரு பாஜனத்துக்கு உட்பட்ட சந்தனம் போலே யாயிற்று இவள் கைக்கே படுகிறது -சர்வ சக்தியே வேண்டா வாகாதே பூமியை அளக்க -ஆற்றாமையாலும் அளக்கலாம் ஆகாதே –செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!-ஜல சர தத்துவங்களும் கூட ஹர்ஷத்தாலே களிக்கும் படியான கோயிலிலே உள்ளவனே -செங்கயல் -இளமையாலே சிவந்த புகரை யுடைய கயல்-இவள் திறந்து –அந்த சத்தவங்களுக்கு ஜலத்தை ஒழிய செல்லாதாப் போலே உம்மை ஒழிய செல்லாத இவள் திறத்து –நிறமும் இழந்து -சஞ்சாரமும் அற்று இறே இவள் கிடக்கிறது –ஏஹி பஸ்ய சரீராணி என்று வடிவைக் காட்டுகிறாள்-திருவரங்கத்தாய்-என் செய்கின்றாயே?-பரமபதத்தில் இருப்பிலோ கேட்க்கிறது-கண்ணுக்கு விஷயமான இடத்தே அன்றோ சாய்ந்து அருளிற்று -இவள் நிறம் பெற்று செருக்கி நடக்கும்படி பண்ணப் பார்த்ததோ -தவிரப் பார்த்ததோ – இவளை அவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ இவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ –

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10-வருகைக்கு சம்பாவனை உண்டான திகைப்பு பார்த்தே நின்று-அலந்தேன்;-வெறுத்தேன் -பரம ஆபதாமபன்ன-என்னும் அளவு இறே-பாவியேன் காண்கின்றிலேன்; ஆபத் சகனாய் இருக்க மஹா பாபியாகையாலே நான் காணப் பெறுகிறிலேன்-காணப் பெறாது ஒழிந்தால் மறந்து பிழைக்கலாம் படி நெஞ்சில் பிரகாசியாது ஒழியத் தான் பெற்றேனோ –பரிபூரணமான ஞானத்தையே ஸ்வரூபமாக யுடைய வேதமாகிற விளக்கிலே காணப் படுமவனை-எனக்கு தக்காப் போலே ஒரு ஞான த்ருஷ்ட்டி யுண்டாய் அத்தாலே கண்டு அனுபவிப்பன்-காணப் பெறாமையாலே ப்ரேமம் கிலேச ஹேது வாகிறாப் போலே -நெஞ்சில் பிரகாசமும் கிலேச ஹேது வாகா நின்றது
மதி நலம் அருளினன் என்கிற ஞான பக்திகள்-இரண்டும் கழுத்துக்கு கட்டியாய் விட்டது

——————————

இரண்டாம் வார்த்தை –(பேறு தப்பாது என்றும் துணிந்து இருக்கையாகிற மஹா விஸ்வாஸத்துக்கு பிரமாணங்கள்)
அப் பேறும் அவனாலே பெற வேண்டும் என்று இருக்கை -அதாவது –
உன்னால் அல்லால் யவாராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும்
உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் -பெரியாழ்வார் திருமொழி -5-3-3- என்றும் –
யானே நீ என் உடைமையும் நீ -திருவாய்மொழி -2-9-9- என்றும் –
எனதாருயிர் அவன் கையதே -திருவாய்மொழி -9-5-3- என்றும் –
இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால் -திருவிருத்தம் -62 என்றும் –
சேமம் செங்கோன் அருளே -திருவிருத்தம் -27-என்றும்
செய்த்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள -பெரியாழ்வார் திருமொழி -3-7-9-என்றும் -இருக்கை-

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ

உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன்  இனிப் போய் ஒருவன்
தனக்கு  பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்

புனத்  தினைக் கிள்ளி புது வவிக் காட்டின் பொன்னடி வாழ்க வென்
றினக் குறவர்  புதியது உண்ணும் எழில் மால் இரும் சோலை எந்தாய் – 5-3-3- –1-முதலில் சேஷத்வ ஞானம் பிறந்து -(உனக்கு )2-பின்பு சேஷ விருத்தியிலே ஆசை பிறந்து -(பணி )
3-கைங்கர்யமே யாத்ரையாய் -(பணி செய்து-வர்த்தமானம் )-4-அது செய்யாத போது சத்தை குலையும் படியாய் இருக்கும் (பணி செய்து இருக்கும்)-இவை நாலும் சம்சாரிகளுக்கு இல்லை-தவம் உடையேன் –உன் பிரசாதம் உடையேன்-இந்நாலு தசையும் பிறந்த பின்பு –
இவற்றை பொகட்டு புறம்பே போய் –இந்திர ஞாலங்கள் காட்டி புறம்பே தள்ளினாய் ஆகிலும்-பிரம்மா முதலாக பிபீலிக அந்தமாக அதி ஷூத்ரர் இறே –அவர்களிலே ஒருத்தனுக்கு கடைத்தலை நிற்கை –உன் கடைத்தலை இருந்து வாழும் -என்கிற செயலை
அங்கே செய்கை உனக்கு அவத்யம் இறே-உனக்கு தேஜோ ஹானி இறே -எனக்கு இது புதுமை அன்று –

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-நானும் உனக்கு பிரகாரமே –அஹம் மநுரபவம் ஸூர்யச்ச–ப்ருஹத் உபநிஷத் –என்னா நிற்பார்கள் யாயிற்று முக்தர்-மத்தஸ் சர்வமஹம் சர்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-85 -என்னா நிற்பார் சம்சாரத்திலே தெளிவுடையார்
அஹம் பிரஹ்மாஸ்மி-நான் ராஜ புத்ரன் -என்னுமா போலே -நான் ப்ரஹ்மம் என்னலாம் படி இறே சம்பந்தம் இருக்கும் படி-ஸ வாஸூ தேவ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-5-என்றது வாஸூ தேவ சரீரம் என்றபடி இறே–என் உடைமையும் உனக்கு பிரகாரமே–யஸ்யைத தஸ்ய தத்தனம் -ஸ்ரீ மகா பாரதம் –என்னுமா போலே நானே மனு நானே சூர்யன் -சர்வம் ப்ரஹ்மாத்மகம் -ஸ்வரூப ஐக்கியம் இல்லை -பிரகார -பிரகாரி பாவ நிபந்தன சாமாநாதி கரண்யம்-என்னிடத்தில் இருந்து தான் எல்லாம் தோற்றிற்று -பிரகலாதன் –ப்ரஹ்ம பிரகாரா அஹம் அஸ்மி -என்று தானே சம்பந்தம் இருக்கும் படி-வாஸூ தேவனே -ஏகம் சதா ஏகம் -அந்யத் அஸ்தி வேறு பட்டது இல்லை லோகம் எல்லாம் அவர் -சரீர சரீரி ஆத்மா பாவ சாமாநாதி கரண்யம்-அனைத்தும் அவனது சொத்து –-வானில் உள்ளார் முறை அறிந்து ஏத்த-நீ -சேஷியான உத்கர்ஷத்தோடே இருக்குமவன் அல்லையோ–மாஞ்சா க்ரோசந்தி போலே -எம் என்று தமக்கும் அவர்களோடே பிராப்தி உண்டாய் இருக்கிற படி-எனக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி உண்டாய் இருக்க இழந்து அனர்த்தப் பட்டேன் -என்கிறார் –

அவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3-என்னுடைய பிராணன் அவன் கையதே –நாயகன் நாயகி இருவரும் கூடி இருந்தால் -மிதுனமானால்-உயிர்கள் மாறாடி அன்றோ இருப்பது –உங்களுக்கு இது அறியப் படாததோ- உங்களுக்கு இது அவ்யுத் பன்னமோ –அஸ்யா தேவ்யா-

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62-உம்முடைய பிரணயித்வத்தால் நோக்கும் எல்லை கழிந்தது இறே – ஸ்வரூப பிரயுக்தமான கிருபையாலே -அல்லது நோக்க ஒண்ணா தாய்  வந்து விழுந்தது – ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்சி மீளும் எல்லையும் கழிந்தது-தத் தஸ்ய சத்ரு சம்பவேத் –என்று இருக்கும் நிலை கழிந்து –கூப்பிட்டுப் பெற வேண்டும் தசையேயாய் வந்து விழுந்தது -இப்பாட்டால் ஸ்வரூபத்தாலே பெற இருக்கை அன்றிக்கே – ஸ்வரூபத்தை அழித்தாகிலும் பெற வேண்டும்படி -ஆற்றாமை கரை புரண்டபடி சொல்லுகிறது –

சேமம் செம் கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்கள் தோறும் எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து  தண் என்றதே –27-இவ் ஆத்மாவுக்கு வகுத்த சேஷியான ஸர்வேஸ்வரனுடைய கிருபையே இதுக்கு ரஷை-அவனே இதுக்கு ரஷையாமோபாதி– இவன் தானும் தனக்கு  அநர்த்த அவஹானாய் இருக்கும்-எங்கனே என்னில் —ஜகத்தை உண்டாக்குகையும் ,-சேதனருக்கு கரண களேபராதிகளை கொடுத்து
பக்த்யாதி உபாயங்களை உண்டாக்கி திரு மலை தொடக்கமாக உகந்து அருளின தேசங்களிலே-சந்நிஹிதனாய் நிற்கச் செய்தேயும் இத்தை கால் கடை கொண்டு ,
தேக ஆத்மா அபிமானம்-பண்ணும் படி இறே தன் படி இருப்பது-மாமேகம் -என்று
தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்-அத்தை அறுத்து விழ விடும் அவனாய் இறே  இருப்பது அவன் படி-இவன் சைதன்யம் -தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்-அவன் சைதன்யம்-உளன் கண்டாய் நல் நெஞ்சே –முதல் திரு அந்தாதி -69-என்னும் படி-இவ் அளவில் இவனை எடுத்துக் கொள்ளுகைக்காய் இருக்கும்–தான் தனக்கு தஞ்சம் அல்லாதவோபாதி பிறரும் தனக்கு தஞ்சம் அன்று-அவன் கிருபை அல்லது இல்லை —
அவ் வருள் அல்லன அருளும் அல்ல —-இடையீடான பக்தியாதிகளும் வேண்டா-

கைத் தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்து கொண்டு  என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த் தலை எழு நாற்றுப் போலே   அவன் செய்வன செய்து கொள்ள
மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே – 3-7-9-செய்த் தலையிலே விளைந்த நாற்று உடையவன் வேண்டினபடி விநியோகம் கொள்ளுமா போலே இவளையும் அவன் வேண்டினபடி செய்து கொள்ள-கழுத்தே கட்டளையாக நீரை பருகையாலே கறுத்து பெருத்து இருந்துள்ள மேகம் போலே இருக்கிற வடிவை உடையவன் பக்கலிலே இவள் வளரும்படியாக நீங்களே சேர்த்து விடும் கோள்-என்று இப்படி பந்துக்கள் சொன்னார்கள்

————————————-

மூன்றாம் வார்த்தை –
இப்பேறு பெற்று வாழ நினைத்து இருப்பார் தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிவர் –
அதாவது –
மறந்தும் புறம் தொழா மாந்தர் -நான்முகன் திருவந்தாதி -68 என்றும் –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக் கீழ் வாழ்ச்சி -திருவாய்மொழி -3-2-4- என்றும் –
கூராழி வெண் சங்கேந்தி கொடியேன் பால் வாராய் -திருவாய்மொழி -6-9-1-என்றும் –
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் -பெருமாள் திருமொழி -5-2-என்றும் இருக்கை –
தன் பர்த்தாவுடன் தான் வாழ வில்லை யாகிலும் பிறர் முகம் பாராதவளை இறே பதி வ்ரதை எனபது –

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68–பரிஹர மதுசூதன பிரபன்னான் -என்கிறபடியே
ஸ்வாமி யினுடைய திரு நாமத்தை மறக்கவுமாம் – தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிகை
இவன் பிரபன்னன் ஆகையாவது – பர்த்தாவின் பக்கல் அனுகூல்யம் கிரமத்தாலே பிறக்கவுமாம் –பர்தரந்தர பரிக்ரகம் இறே அவனுக்கு ஆகாமைக்கு அடி-

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி
யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து -நீ அன்றிக்கே ஒழிய அமையும் நான் மேல் விழுகைக்கு-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை -தாழ்ச்சி என்னாதே -வாழ்ச்சி -என்கிறார் – வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே –ச்சாயா வா சத்துவம் அநு கச்சேத்–வா ஸூ தேவா தருச்சியா –என்னக் கடவது இறே-சர்வம் பரவசம் துக்கம் -என்று விஷயாந்தரம் அப்ராப்தம் ஆகையால் துக்க ரூபம் என்று இட்டு தாழ்ச்சி என்கிறார்-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்!
ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-காட்டும் இடத்திலும் ஒப்பனையோடே காட்ட வேணும் -பிரதிபக்ஷத்தின் மேலே ஏவ சாணையில் இட்டால் போலே கூர்மை மிக்கு இருக்கிற திரு வாழி -ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தில் வெளுப்போடே திரு வாழி யிலே கூர்மையோடு வாசி அற இவருக்கு அழகுக்கு உறுப்பாய் இருக்கிறது இறே –ஜகதாகாரத்தையைக் காட்டின இத்தால் அதிருப்தனாய் நிர்பந்திக்கும் படி பாபத்தைப் பண்ணின என் பக்கலிலே -செய்தபடி கண்டு இருக்கக் கடவதாய் இருக்க அத்யபி நிவேசத்தை பண்ணுகை இறே பாபம்-அசாதாரண விக்ரஹத்தைக் காட்ட வேணும் -திவ்யாயுதங்களோடே காட்ட வேணும் -நீயே வந்து காட்ட வேணும் -என்கிறார்

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா! நீ
கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே— 5-2-தானும் அவனும் அறிந்ததாகப் பிறக்கும் பிரணய கலஹங்களுக்கும்-பரிஹாரங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே- அப்படி அன்றியே இவர்கள் கார்யம் கொண்டு கார்யம் இல்லாத உதாசீனரும் இகழும் படிக்கு ஈடான அசஹ்யங்களை அவன் பண்ணினாலும்-பிரேமத்தை யிட்டு நிரூபிக்க வேண்டு இருக்குமவன்-இவ்வருகு அவன் பண்ணும் அபகாரங்களை காற்கடைக் கொண்டு சம்பந்தத்தில் முதல் அடியிலே நினைத்து இருக்குமவளைப் போலே-அக்னிக்கு அந்தர்யாமியான ஸ்ரீ சர்வேஸ்வரனை சாஷியாக கொண்டவனை அல்லது அறியாதவளைப் போலே-கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே -பாதி வ்ரத்யம் சொல்லிற்று-குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று-

———————

நான்காம் வரத்தை –
தேவதாந்தர பஜனம் பண்ணுமரோட்டை சஹ வாஸம் வருந்தியும் கை விடுவான் –
அதாவது
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே -பெரிய திருமொழி -2-6-1- என்றும்
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே -பெரிய திருமொழி -11-6-7- என்றும் –
சடைத்தேவர் தம் துவக்கைப் பாரது ஒழிவதே (
சடைமுடியை யுடைய சிவன் ஷூத்ர புருஷார்த்தங்களைக் கொடுப்பதனால் ஏற்படும் ஆகர்ஷணத்தை அலட்சியப் படுத்துவதே)-என்றும் –
பரம் தாமத்தை பற்றுவதே -என்றும் –
சத்தான சாந்துக்கு சுண்ணாம்பு விரோதி யாம் போலேயும்
ஸ்தா லீஸம் சர்கத்தாலே ஜலத்துக்கு உஷ்ணம் ப்ரேவேசிக்குமா போலேயும்
(பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சுடுமா போல் தேவதாந்த்ர சம்பந்திகள் சம் சர்க்கத்தாலே நாமும் இழப்போம் அன்றோ)
ப்ராக்ருத அன்னம் த்யஜேத் -என்றும்
தஸ்ய பிரகிருதி லஷணம் -என்றும் –
த்விஷத அன்னம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்
பாண்டவான் த்விஷேச ராஜன் மம ப்ராணா ஹி பாண்டவ உத்யோக பர்வம் -91-27-த்வேஷியின் அன்னம் உண்ணத் தகாதது -த்வேஷிக்கு ஒருபோதும் உணவளிக்கக் கூடாது -அரசனே நீ பாண்டவர்களை த்வேஷிக்கிறாய் -எனக்கு பாண்டவர்கள் உயிர் அன்றோ -கண்ணன் துரியோதனைப் பார்த்துக் அருளிச் செய்த வார்த்தை -)-என்று
சர்வ சக்தி தானே அநாதரிக்கையாலே சர்வதா நமக்கும் அநாதரணீயம்

நண்ணாத வாளவுணர் இடைப் புக்கு வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார்  மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத் துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1-
மருவினிய தேசமாய் -ஸ்ரமஹதை விஞ்சி இருப்பதாய் –சிறு திவலை திரு மேனியிலே வந்து ஸ்பர்சிக்கும் படியாய் இருக்கிற திருக் கடல் மல்லையிலே-ஆஸ்ரிதனை உகந்து ஸ்தல சயனத்திலே நித்ய வாஸம் பண்ணுகிறவனை-நித்ய ஸூரிகள் நடுவே இருக்கக் கடவ வஸ்து-இப்படி சம்சாரத்திலே புகுந்து தரைக் கிடை கிடப்பதே –இது என்ன நீர்மை  இருக்கும்படியே என்று அநவரதம் பாவித்தல் சொல்லுதல் செய்கையாயிற்று சேதனர்க்கு செய்ய அடுப்பது –இது செய்யாதே இருப்பாரை –அவனிடை ஆட்டம் கொண்டு -கார்யம் அற்று-கேவல தேக போஷண பரராய் இருப்பாரை –இறைப் பொழுதும் எண்ணோமே– எண்ணப் பெற்றிலோம் என்ற அனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை –(அறிவினால் குறை இல்லா அகல் ஞாலத்தவர்-அறிவு இல்லை என்ற குறையும் இல்லாமல் போல் இங்கும் )அவஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே-வஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே அவ்வளவிலும் எண்ணோம் என்கிறார் .(அவஸ்துக்கள் எண்ணும் பொழுதும் இவர்கள் எண்ணத் தக்கவர்கள் அல்லர்)

மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட
கண்ணாளன் கண்ண மங்கை நகராளன் கழல் சூடியவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத  போதெல்லாம் இனியவாறே –11-6-7-பகவத் ஜ்ஞானமும் வேண்டா –வைஷ்ணவ சஹ வாசமும் வேண்டா-அ வைஷ்ணவர்களை நினையாத போது -இனிது என்கை- –

——————–

ஐஞ்சாம் வார்த்தை –
உகந்தருளின திவ்ய தேசங்களிலே வர்த்திப்பான் –
அதாவது –
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -நாச்சியார் திருமொழி -11-5- என்றும் –
அற்ற பற்றர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கம் -திருச்சந்த விருத்தம் -52- என்றும் –
வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள் -நாச்சியார் திருமொழி -8-9- என்றும் –
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -பெருமாள் திருமொழி -4-10 என்றும்
பிள்ளை திருநறையூர் அரையர் பட்டர் ஸ்ரீ பாதத்திலே சென்று தண்டனிட்டு –
அடியேனுக்கு தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -என்ன –
பொய்யே யாகிலும் உகந்தருளின திவ்ய தேசங்களிலே புக்குப் புறப்பட்டீர் ஆகில்
அந்திம தசையிலே கார்ய கரமாம் -என்று அருளிச் செய்தார் –

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால்நீர் ஏற்று
எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே–11-5-அநந்ய பிரயோஜனர் வர்த்திக்கும் தேசம்-மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார் வரு விருந்தை அளித்திருப்பார் சிறப்புடைய மறையவர் வாழ்-திருவரங்கம் என்பதுவே -பெரியாழ்வார் -4-8-2-என்னக் கடவது இறே-அத்தேசம் வாஸம் தானே வாழ்ச்சி –வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள் –8-9-என்னக் கடவது இறே –நளிர் அரங்கம்நளிர் -குளிர்த்தி -ஸ்ரமஹரமாய் -தாப த்ரயங்களும் தட்டாத தேசம்-நாகணையான்-அனந்த சாயி-என்னை ஒழியவும் படுக்கை பொருந்துவதே –

பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே –52-அற்ற பற்றர் -என்றும் பாட பேதம் -புருஷார்த்தாந்தரங்களிலும் சாதநாந்தரங்களிலும் பற்று அற்று-பெரிய பெருமாளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று இருக்குமவர்கள் –த்ரிதண்ட தாரிகளாய் பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயராய்-பகவத் வ்யதிர்க்தங்களை த்ரணமாக புத்தி பண்ணும் சந்நியாசிகள் என்றுமாம்-சுற்றி வாழும் –சர்வ அவஸ்தையிலும் விடாதே கோயில் வாசமே வாழ்வாக இருக்குமவர்கள் என்னுதல் -தேச ஸம்ர்த்தியை மநோரதித்து அதுவே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள் என்னுதல் –சுற்றல்-எண்ணல்-அம் தண் நீர் அரங்கமே ––தர்சநீயமாய் ஸ்ரமஹரமான ஜல ஸம்ர்த்தியை வுடைய கோயில் –

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-ஏஷ ஹ்யேவா நந்தயாதி -தைத் ஆனந்த -7-என்கிறபடியே-அவன் ஆனந்திப்பிக்க ஆனந்தித்து திரிகிறி கோள் அன்றோ நீங்கள்-மா முகில்காள்-ஒரு விபூதியாக அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று களிக்குமா போலே நீங்களும் திரள் திரளாக வர்த்திக்கிறிகோள் அன்றோ-வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்-வந்தேறிகளாய் திருநாள் சேவித்து போவாரைப் போலே போராதே- அங்கே நித்ய வாசம் பண்ணப் பெறுவதே நீங்கள் –சேறு தோய்ந்து கழுவினவர்கள் அன்றிக்கே –
முக்தரைப் போலே அன்றிக்கே –நித்ய சித்தரைப் போலே யாய்த்து –
அங்குத்தை வர்த்தநத்தை இறே வாழ்வாகச் சொல்லுகிறது-கீழே முமுஷுக்களில் வ்யாவ்ருத்தி சொல்லி
இங்கே முக்தர்களில் வ்யாவ்ருத்தி சொல்கிறது-இரண்டு ஆற்றுக்கும் நடுவில் வாசம் போலே – நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -11-5- என்னக் கடவது இறே-பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் -6-9-9- என்றும் – புறத்து இட்டு இன்னம் கெடுப்பாயோ -6-9-8-என்றும்
இதர விஷய ப்ராவண்யம் விநாச ஹேதுவாய் இருக்கும் –பகவத் ப்ராவண்யம் வாழ்வாய் இருக்கும்பாம்பணையான் வார்த்தை என்னே- படுக்கைத் தலையில் சொல்லும் வார்த்தைகள் –வேங்கடத்தை பதியாக உடைய உங்களுக்கு -அந்தரங்கர்க்கு தெரியும் இறே

உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–என்னாயனுடைய மலை மேல்
என்னாயனுடைய ஸ்லாக்யமான ஸ்ரீ திருமலையிலே-ஏதேனும் ஆவேனே – ஸ்ரீ அனந்தாழ்வான் இவ்விடத்துக்கு -ஸ்ரீ திருவேங்கடமுடையான் தானாகவே அமையும் -என்னும்-அது என் என்னில் –சேஷ பூதர் திரளுக்கு புறம்பான சேஷியாகிலும் அமையும் என்கை-அங்கன் அன்றிக்கே ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி –நாம் அறிய வேண்டா
திரு வேங்கட முடையானும் அறிய வேண்டா –கண்டாரும் அறிந்து ஸ்லாகிக்கவும் வேண்டா
ஸ்ரீ திருமலை மேலே உள்ள தொரு பதார்த்தமாக அமையும்
-என்றார் –

————

ஆறாம் வார்த்தை –
அநுகூல்ய சங்கல்பனாய் இருக்கை –
அதாவது –
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணமறி -திருவாய்மொழி -2-7-10- என்றும்
சக்ருதேவ பிரபந்நாயா -என்றும் –
சக்ருத் க்ருதோஸ் அஞ்சலி -ஸ்தோத்ர ரத்னம் -என்றும் –
இச்சா மாத்ரமே அமையும் என்று இருக்கை-(
பரம புருஷார்த்தத்தை எம்பெருமானிடமிருந்தே பெற வேணும் என்கிற இச்சா மாத்திரமே பேற்றுக்கு வேண்டியது)

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-தெருளுதியாகில்-அறிவுடைய யாகில் -ஞான இந்திரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான ஏற்றம் உண்டாகில் நெஞ்சே வணங்கு –-உபகாரகனான அவன் திருவடிகளில் விழப் பார்-இத்தை ஓலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாக புத்தி பண்ணு அறிந்து-அவன் விட அடான் என்று அறிந்து-உனக்கு ஒரு போதாக அயோக்யதா அனுசந்தானத்தாலே அகல நினைப்பதொரு அறிவு கேடு உண்டு -அவ்வளவிலும் விடாதே கிடாய்-அவன் குண பூர்த்தி இருந்த படி கண்டாயே-வடிவு அழகு இருந்தபடி கண்டாயே-முன்பு உபகரித்து நின்ற படி கண்டாயே
இவ்விஷயத்தை விட்டால் எத்தைக் கொண்டு உஜ்ஜீவிக்க –

————————

ஏழாம் வார்த்தை –
ப்ராதி கூல்யத்தை வருந்தியும் கை விடுவான் –
அதாவது –
பகவத் அபசார பாகவத அபசார அசஹ்ய அபசார ரூப நாநாவித அநந்த
அபசாரத்துக்கும் அடியாய் -த்யாஜ்யமான அர்த்த காமங்கள் நிமித்தமாக
பகவத் பாகவத விஷயங்களிலே சிவிட்கு என்று இருக்குமாகில்
அத்தை வருந்தியும் கை விடுவான்

(த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-ஶ்லோகம் 28 –காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.)

——————–

எட்டாம் வார்த்தை –
ஆழ்வார்கள் ஈரச் சொல்லாலே நெஞ்சை நெகிழ்க்கை –
அதாவது –
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே -திருமாலை -14- என்றும்
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே -பெரியாழ்வார் திருமொழி -4-4-5- என்றும் –
எண்ணக் கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ண கிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்கு கவளம் உந்துகின்றார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-3-என்றும் –
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும்
இருக்கெசுச் சாம வேத நாண் மலர் கொண்டு உனபாதம் நண்ணா நாள் அவை தத்துறு மாகில்
அன்று எனக்கு அவை பட்டினி நாளே -பெரியாழ்வார் திருமொழி -5-1-6- என்றும் –
தரித்து இருந்தேன் ஆகவே தாரா கணப்போர் -விரித்துரைத்த வெநநாகத்து உன்னை
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினான்  போது –நான்முகன் திருவந்தாதி -63-என்றும் –
நகரமருள் புரிந்து நான்முகற்க்குப் பூ மேல் பகர மறை பயந்த பண்பன்
பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி யுரு வெண்ணும்
அந்தியால் ஆம் பயன் எங்கென் -முதல்திருவந்தாதி -33- என்றும் இருக்கை –

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே-14-அவன் தங்களுக்காக வந்து கண் வளரா நிற்க – அவன் இருந்த தேசத்தை வாயாலே சொல்லவும் கூட மாட்டாத மூர்க்கர் –விழுக்காடு அறியாதவர்கள்-அதாகிறது-நரக வாசம் கர்ப்ப வாசம் -முதலானவை பிடரியைப் பிடித்துக் கொண்டு நிற்க கேவலம் தேக போஷண பரராய் இருக்குமவர்கள் –திருவரங்கம் என்ன மாட்டாத மூர்க்கராய் இருப்பார் ஜீவிக்கிறது வழி அல்லா வழியே அபஹரித்து ஜீவிக்கிறார்கள் இத்தனை – அத்தை விலக்கி நாய்க்கு இடும்கோள்-தங்களை உத்தேசித்து வந்து கண் வளர்ந்து அருளுகிற அந்த உபகாரத்தை
அறியாத க்ருதக்னர் ஜீவிக்கிற ஜீவனத்தை விலக்கி ஒரு நாள் ஒரு பிடி சோறு இட்டவன் வாசலைப் பற்றிக் கிடக்கும் அத்தனை க்ருதஞ்ஞமான நாய்க்கு இடும் கோள்-இது தான் –“நேமிசேர் தடங்கையினானை நினைப்பிலாவலி நெஞ்சுடைப், பூமிபாரங்களுண்ணுஞ் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே” என்றார் பெரியாழ்வார்;இவர் நாய்க்கிடுங்களென்கிறார்.-தங்களை உத்தேசித்து வந்து கண்வளர்ந்தருளுகிற அந்த உபகாரத்தை அறியாத க்ருதக்னர் ஜீவிக்கிறஜீவனத்தை விலக்கி, ஒருநாள் ஒருபிடி சோறிட்டவன் வாசலைப் பற்றிக் கிடக்குமத்தனை நன்றி யறிவுடைய நாய்க்கிடுங்களென்கை.-நாய் நன்றியறிவுடையதென்பது உண்மையே;
அதற்கு சோறிடவேணுமானால் தனக்கு உரிய சோற்றை இடட்டும்;
பிறன் உண்கிற சோற்றைப்பிடுங்கி நாய்க்கு இடுவதற்கு என்ன அதிகாரமுண்டு? என்று மங்கிக்க வேண்டாயோ-அஸாதுப்யோர்த்த மாதாய ஸாதுப்பயஸ் ஸம்ப்ரயச்சதி-கல்பகோடி கைஸ்ராணி ஸ யாதி ச்ரேயஸாம் பதம்” என்று-அஸத்துக்களின் பொருளைப் பறித்து ஸத்துக்களுக்கு இடும்படி ப்ரஸ்த்ரம் விதித்திரா நின்றதிறே;-இவ்வர்த்தத்தை உண்மையாக அறிந்து அநுஸ்டாந பர்யந்தம் வெளிக் காட்டியவர் திருமங்கையாழ்வாரென்க.
——————-

ஒன்பதாம் வார்த்தை –
ஆழ்வார்கள் ஈரச் சொல்லாலே நெஞ்சை நெகிழ்க்கும் சத்துக்களோடு சஹ வாஸம் பண்ணுவான் –
அதாவது
வாழாட் பட்டு  நின்றீர் உள்ளீரேல் -திருப்பல்லாண்டு -3 என்றும்
தொண்டீர் எல்லீரும் வாரீர் -திருவாய்மொழி -5-2-2- என்றும்
எல்லாரும் போந்தாரோ -திருப்பாவை -15-என்றும் –
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெரும் குழுவு கண்டு -பெருமாள் திருமொழி -1-10- என்றும் –
அவன் அடியார் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க -திருவாய்மொழி -8-10-7- என்றும் –
அவன் அடியார் -திருவாய்மொழி -8-10-3- என்றும் –
திரு உடை மன்னர் -திருவாய்மொழி -4-4-8- என்றும்
வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரை சாத்தி இருப்பார் தவம் –நான்முகன் திருவந்தாதி -18-என்றும் –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10- என்றும் –
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -திருவாய்மொழி -10-9-11-என்றும்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்றும் இருக்கை –
-(தத்தாலே ததீயரா – ததீயராலே நாமா-எம்பெருமானுக்கும் திருமங்கையாழ்வாருக்கும் சம்வாதமாக -ததீய பரகத ஸ்வீ கார மஹிமை வைபவம் -காட்டும்-அவர்கள் மூலமே உம்மைப் பற்றினேன் -உம் மூலமே பாகவத கைங்கர்யம் பெற்றேன் -பேறு பெரும் வரை இவர்களையே மண்டினேன்-பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -)
ஆழ்வீர் உமக்கு இவர்களோட்டை சம்பந்தம் ஓரளவு இன்றியிலே இருந்ததீ -என்ன
என் செய்கேன் -உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும்
உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும்
இருந்த நாளைக்கு உசாத் துணை யாகையாலும் பிரிகிலேன் என்கிறார்-

வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே -3-நிரதிசய ஸூக ரூபமான வ்ர்த்தியைச் சொல்லுகிறது-வ்யதிரிக்த விஷயங்களில் அடிமை -துராராதனம் ஆகையாலும் -துஸ்சகம் ஆகையாலும் –அத்யல்ப பலம் ஆகையாலும் -துக்க ரூபமாய் இறே இருப்பது
சர்வம் பரவசம் துக்கம் -சேவாஸ் ஸ்வவ்ருத்தி –நாய் தொழில் -என்னக் கடவது இறே
இவ்விஷயம் தன்னிலும் ப்ரயோஜனாந்த பரராய் இழிந்தால் பலம் பந்தகம் ஆகையாலும்
அநந்ய பிரயோஜநரோ பாதி -அநவரத பாவனையும் -அந்திம பிரத்யமும் -வேண்டுகை யாலும்-துக்க ப்ராயமுமாய் இருக்கும் -சாதனாந்தர நிஷ்டனுக்கும் கர்த்தவ்ய புத்தியாலே ரசம் இல்லை –இக்குறைகள் ஒன்றும் இன்றிக்கே -ப்ராப்த விஷயத்தில் தன்னைப் பேணாதே பர ச்ம்ர்த்தியை ஆஸாசிக்க-சர்வ நிரபேஷனான ஈஸ்வரன் இத்தைக் கண்டு -இதொரு ப்ரேம ஸ்வபாவம் இருந்தபடி என் –என்று ப்ரீதனாக -இவனுக்கு அந்த ப்ரீதியே புருஷார்த்தமாய் இறே இருப்பது –பட்டு -என்பது- உவரிக்கடலில் முத்துப் பட்டது என்னுமா போலே -நான் -எனக்கு -என்று இருக்கிற சம்சாரத்திலே பகவத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கும்படி கை ஒழிந்து இருப்பார் சிலரை பெறுகையாவது அலாப்ய லாபம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்-நின்றீர்- வாயு பரவசமாய் திரிகிற த்ர்ணம் போலே கர்ம பரதந்த்ரனாய் திரிகிற சம்சார சேதனனுக்கு பகவத் ஜ்ஞான பூர்வகமாக தத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கப் பெற்றால் இறே ஸ்திதி உண்டாவது –உள்ளீரேல்-ஸ மஹாத்மா ஸூ துர்லப -என்று அநந்ய பிரயோஜனரை கிடையாது என்று சர்வேஸ்வரன் கை விட்ட சம்சாரம் ஆகையாலே மங்களா சாசனத்துக்கு ஆள் தேட்டமாய் இ றே இருப்பது-நாக பாசத்தில் அன்று அடைய மோஹித்துக் கிடக்க திருவடியும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும் பிராணன் உடையார் உண்டோ -என்று தேடினால் போலே சம்சாரத்தில் ஸ்வரூப ஞானம் உடையார்தேட்டமாய் இறே இருப்பது –-இந்த யதி -சப்தத்தாலே -சம்சாரத்தில் வைஷ்ணத்வம் துர்லபம் என்றது ஆய்த்து-அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்களும் -நம்மை விரும்புவார் சிலர் உண்டாவதே -என்று சந்நிஹிதராக வந்து அவர்களுடைய ஸ்வரூப ஸ்வாபவம் ஆராய்வதற்கு முன்பே அவர்களோடு கலந்து கொடு நிற்க வேண்டும்படியான த்வரை சொல்கிறது

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2—கொடு உலகம் காட்டேலே” – திருவாய். 4. 9 : 10.-என்கிறபடியே, பாகவதர் அல்லாதாரைக் கண்ட இன்னாப்புத் தீர,
பாகவதர்களுடைய கூட்டத்தைக் காணப் பெற்றோம்-பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்னும் பாகவத விஷயத்திலே சபலர் எல்லாரும் திரளுங்கோள்-இந்த ஸ்ரீவைஷ்ணவர்களுடைய கூட்டத்தை அநுபவிப்பதற்கு அநுகூலர் எல்லாரும் வாருங்கோள் என்கிறார்.-காணப் பெற்றோம். பிரீதியின் மிகுதியாலே, பலகாலும் சொல்லுகிறார்.

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-15-உங்களை ஒழிய எனக்கு ஒரு ஸூகம் உண்டோ –நம்மில் சிலர் உறங்கிக் கிடக்க போக ஒண்ணாது என்னும் இன்னாப்பாலே சொன்னேன் அத்தனை அன்றோ –உணர அறியாத சிறு பெண்களும் உணர்ந்தால் புறப்படுவதாக இருந்தேன் –எல்லாரும் உணர்ந்து புறப்பட்டார்களோ என்ன-போந்தார்
கிருஷ்ண விரஹத்தாலே துவண்ட பெண்கள் அடைய உன்னைக் காண்கைக்கு
உன் வாசலிலே வந்து கிடந்தார்கள் என்ன-ஆகில் உள்ளேபுகுர விடுங்கோள் -என்ன –போந்து எண்ணிக் கோள் –புறப்பட்டு மெய்ப்பாட்டுக் கொள்-மெய்க்காட்டுக் கொள்ளுகைக்கு பிரயோஜனம்-தனித் தனியே பார்க்கையும் அனுபவிக்கையும் 

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே
?—1-10-ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து – அத் திக்கைப் பார்த்து கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாளுடைய உள்ளில் திரு முற்றத்திலே-நிரதிசய ஆனந்த உக்தராய் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைக் கண்டு-அபிஷிர்த ஷத்ரியன் -என்று என்னை நினையாதே அவர்களிலே ஒருவனாக இசைந்து-என்னைச் சிலர் சேவிக்க நான் நியாமகனாய் இருக்கும் இருப்பை ஒழிந்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே சேவித்து இருப்பது என்றோ –

தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-
உபகரிக்கும் இடத்தில் அத்விதீயாரான பரதேவதை யுடைய ஸூ குமாரமான திருவடிகளின் கீழே புகுகை தவிர்ந்து -தான் இல்லாத வன்று ஹிதம் பார்த்த உபகாரகனாய் -போக்ய பூதனானவனுடைய திருவடிகளை பற்றுகை இறே பிராப்தம் -அது எனக்கு வேண்டா -வேண்டுவது தான் எது என்னில்-அவன் அடியார்-அவனுடைய குணங்களிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய-நனி மாக் கலவி இன்பமே-மிக்க வேண்டற்பாடு யுடைத்தான சம்ச்லேஷ ஸூ கமே– –நனி -மிகுதி – மா -வேண்டற்பாடு-நாளும் வாய்க்க -நாள் தோறும் வாய்க்க வேணும் என்னுதல் -பகவத் பிராப்தி யுண்டானாலும் இதுவே வாய்க்க வேணும் -என்னுதல் –நங்கட்கே–புருஷார்த்தத்தில் சரமாவதியை அர்த்தித்த நமக்கு -அவனை அணைக்க வேண்டா -அவன் காலைத் தலையிலே வைக்க அமையும் -என்னுமா போலே –

உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே
-8-10-3-ஸ்ரீ வாமனனுடைய மிக்க நல்ல பரிமளத்தை யுடைய நாட் பூ போலே இருக்கிற திருவடிக் கீழ் புகுகை உறுமோ எனக்கு -பகவத் விஷயத்தில் வெளிறு கழிந்த அம்சமான இதுவாயிற்று -பாகவத புருஷார்த்தத்தை குறித்து இவருக்கு கழிப்பனாகிறது-அன்றி -அத்தை தவிர்ந்து –அவன் அடியார்-ஸ்ரீ வாமனனுடைய ஸுந்தர்ய சேஷ்டிதாதிகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-சிறுமா மனிசராய் -ப்ரபாவங்களைப் பார்த்தால் -பரிச்சேதிக்கப் போகாதே -வடிவைப் பார்த்தால் நம்மோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை -சர்வேஸ்வரன் மனுஷ்ய சஜாதீயனாய் முகம் கொடுத்து கொண்டு இருக்குமா போலே யாயிற்று இவர்களும் -சிறுமை பெருமை யாகிற விருத்த தர்ம த்வய சமாவேசம் ஏக வ்யக்தியில் கூடுமோ -என்று பட்டர் ஆழ்வானைக் கேட்க -நம்மோடு ஓக்க அன்ன பானாதிகள் தாரகம் என்னலாய்-பகவத் விஷயத்தில் அவகாஹனம் பார்த்தால் -நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள் என்னலாம் படி இருக்கிற -ஆண்டான் -அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த பெருமாளார்-இவர்கள் காண் சிறு மா மனுசர் ஆகிறார் -என்று பணித்தான் -என்னை அடிமை கொண்டவர்கள் –என்னை யாண்டார்-இங்கே திரியவே-கண் வட்டத்தில் சஞ்சரியா நிற்க –அன்றி-அவர்களைத் தவிர்ந்து —நறு மா விரை நாள் மலரடிக் கீழ்—உறுமோ பாவியேனுக்கு–இவருடைய கண்ணி நுண் சிறுத் தாம்பு இருக்கிற படி -ஸ்ரீ மதுரகவிகளுக்கும் அடி இது இறே –பொய் நின்ற ஞானம் தொடங்கி முனியே நான்முகன் அளவும் அனுவர்த்தித்த விடத்து ஆழ்வார் தமக்கு பிரயோஜன ரூபமாக சொன்ன பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமையே தமக்கு தஞ்சமாக பற்றினார் -யான்யஸ்மாகம் ஸூ சரிதாநி -என்னக் கடவது இறே –

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8-குறைவற்ற ஐஸ்வரியங்களையுடைய இராசாக்களைக் காணில், ‘திருமகள் கேள்வனை ஒருபடி காணப் பெற்றேனே’ என்பாள்.-நாதமுனிகள், இராஜா சாமந்தன் தலையிலே அடியை இட்டு யானைக் கழுத்திலே புக்கபடியைக் கண்டு, சர்வேசுவரன் பிரமன் முதலியோர் தலையிலே அடியிட்டுப் பெரியதிருவடியை மேற்கொள்ளும்படி இதுவாகாதே!’ என்னா-மோகித்தார் என்பது பிரசித்தமே அன்றோ? இராஜா தன் சேனையோடே கங்கை கொண்ட சோழபுரத்து ஏறப் போகச்செய்தே, பெரிய முதலியார் மன்னனார் திருவடிகளிலே சேவித்திருக்கச் செய்தே, பெண்பிள்ளை வந்து, ‘நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்ணுமாய் வந்து புகுந்தார்கள்,’ என்றவாறே, ‘பெருமாளும் இளைய பெருமாளும் பிராட்டியும் ஐந்திரவியாகரண பண்டிதனும்’ என்று புத்தி பண்ணிப் பின் தொடர்ந்து போய்,
முன்னே போகின்றவர்கள் ‘போகின்றார்கள், போகின்றார்கள்’ என்னக் கேட்டுக் கீழை வாசலிலே சென்றவாறே, ‘இப்படிப் போகின்றவர்களைக் கண்டீர்களோ?’ என்று வாசலில் அவர்களைப் பார்த்துக் கேட்க, அவர்கள் ‘கண்டிலோம்’ என்ன, அதுவே காரணமாகத் திருநாட்டிற்கு எழுந்தருளினார் அன்றோ?-காணும் அளவும் போனாரே

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை   இரண்டு கூறாக அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்    அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“-வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப் பல்லாண்டு -என்று- ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வார் போல்வார்–வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம்
சாத்தி இருப்பார் ஆகிறார் –வல்ல பரிசு வரிவிப்பரேல்
-என்று- பெரியாழ்வார் பக்கலிலே ந்யஸ்த்த பரராய் இருக்கும் ஆண்டாள் போல்வார்–தவம் –ஸூஹ்ருதம்–பெரியாழ்வார் -ஆண்டாள்-நம்மாழ்வார் -மதுரகவி ஆழ்வார்-ராமானுஜர் -வடுக நம்பி-உண்ட போது வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தை -பேசுவாரை சிரித்து இருப்பாரே இவர்கள்-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே-யவாதாத்ம பாவியாய் நிரதிசயமான ஆனந்தத்தை யுடையராய்க் கொண்டு -ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு –சம்சாரத்தில் துக்கத்துக்கு எல்லை யுண்டாகில் யாய்த்து -அஸ் ஸூகத்துக்கு அவதி சொல்லலாவது –அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்று ஆசைப் பட்ட படியே இருந்தமையை -அவர்களும் தங்களுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு துணை தேடி இறே இருப்பது-

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொரு காலும் பிரிகிலேனே  -7-4-4-உபரிதன லோகங்களை நடத்தும் சர்வாதிகன் –வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத
ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு -( ஓதும் நிகழ் காலம் )அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன் –

——————

பத்தாம் வார்த்தை
ஆசார்யன் திறத்தில் செய்த அடிமையை மறந்து
செய்யப் பெறாத அடிமைக்கு இழவு பாடனாய் இருப்பன் –
அதாவது
ஆசார்யன் திரு உள்ளத்தை பின் சென்ற அனந்தாழ்வானைப் போலவும்
(எம்பெருமானரைப் பிரிந்து திருமலையில் புஷ்ப கைங்கர்யம் -அனந்தாண் பிள்ளை -அன்றோ))-எம்பாரைப் போலவும் (எம்பெருமானார் திரு உள்ளபடியே பட்டருக்கு ரக்ஷையாக த்வயம் உச்சாரணம் –வந்தே கோவிந்த தாதவ் -அல்ப அக்ஷரம் பூர்வகமாக இல்லாமல் அப்யஹிதம் பிரபாவம் அதிகமாக உள்ள ஆச்சார்யர் முன்னாக -ஞானப்பிதா -அன்றோ)
ஆசார்யன் அநாதரம் அநர்த்த கரம் என்று தன்னைத் தாழ விட்டு அடிமை செய்த
எச்சானைப் போலவும் இருக்கை
(பருத்திக் கொல்லை அம்மாளை அலட்ஷியம் செய்தது கண்டு எம்பெருமானார் தம்மை அநாதரித்து விட யஞ்ஞேசர் ஆகிற எச்சான் தம்மை தாழ விட்டு அடிமை செய்த வ்ருத்தாந்தம்)

இப்பத்து வார்த்தையும் அருளிச் செய்த ஆசார்யன் விஷயத்திலே க்ருத்ஜ்ஞனாய் இருப்பான்
இப்பத்து வார்த்தையும் ஓருரு நெஞ்சிகே பட அனுசந்திப்பான்
இப்பத்து வார்த்தையில் ஓன்று குறைந்தால் தன் ஆநுகூல்யம் அரை வயிறாம் என்று இருப்பான்
இப்படி அறுதி இட்டு இருப்பாருக்கு –
வைகுண்ட மாநகர் மற்றது கையதுவே -திருவாய்மொழி -4-10-11

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-
சிலர் அர்த்திக்க வன்றிக்கே தம் அபி நிவேசத்தாலே அருளிச் செய்த இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார் கையது மீட்சி இன்றி வைகுந்த மா நகர்-நச புனராவர்த்ததே என்கிற பரமபதமும் அவர்களுக்கு ஸூலபம்
பகவத் பரத்வ ஞானமே பிரயோஜனம் போரும்-ஞான பல ரூபமான பரிமாற்றத்துக்கு ஏகாந்த தேசமும் அவர்களுக்கு ஸூலபம்-மற்றது என்று சம்சாரத்துக்கு ப்ரத்ய நீகமான தேசம் என்னுதல் -அவ்யயமாகக் கிடத்தல் -பாஹ்ய குத்ருஷ்டிகள் இல்லாமையால் உபதேசிக்க வேண்டாதே அனுபவமே யாய் செல்லும் தேசத்திலே புகப் பெறுவர்-

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பட்டர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ எம்பார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருவடிகள்-திருமேனி -திருவதரம் -திருக்கண்கள்-திரு நாமம் திருமுடி -1-சேஷியுமாய் -2-உபாயுமுமாய் -3-உபேயமுமாய் -4-பாதகமுமாய் -5-சர்வ ரஷகமுமாய் இருப்பதை விளக்கும் ஸ்ரீ அருளிச் செயல்கள்

December 4, 2025

வார்த்தை -438-
திருவடிகள் -1-சேஷியுமாய் -2-உபாயுமுமாய் -3-உபேயமுமாய் -4-பாதகமுமாய்(விரஹ தாபத்தால் பாதகமாகுமே) -5-சர்வ ரஷகமுமாய்
இருக்கும் -எங்கனே என்னில் –

துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே -திருவாய்மொழி -1-1-1- என்கையாலே
சேஷித்வம் சொல்லிற்று

ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -திருவாய்மொழி -5-7-10-என்கையாலே
உபாயத்வம் சொல்லிற்று

கோல மாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய்மொழி -4-3-6- என்கையாலே உபேயத்வம் சொல்லிற்று

அழித்தாய் வுன் திருவடியால் -திருவாய்மொழி -6-2-9- என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தான் -திருவாய்மொழி -5-3-3- என்கையாலே சர்வ
ரஷகத்வம் சொல்லிற்று -(தனக்கும் தனது திருவடியையே ரக்ஷகத்வம் -ஆகவே ஸர்வ ஸப்த பிரயோகம்)

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-துயரறு-துயர் அற்ற என்றபடி-இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி-சுடரடி-நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய விக்ரஹம்-அடி -சேஷபூதர் அனுபவிக்க இழியும் துறை

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்-இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் -எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் -நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர சூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது –அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –

கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்றுஎன்று,
ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்,
கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே.–4-3-6-பிராப்தமுமாய் போக்யமுமான திருவடிகள் –சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர்பவிஷ்யதி -என்னும் என் சென்னிக்கு போக்யமுமாம் –தாரகாதிகளுக்கும் உப லக்ஷணம்-குரை -பரப்பு -போக்யதா பிரகர்ஷத்தை சொல்லுதல் -ஆபரண த்வனியை சொல்லுதல்–ஒன்றும் வாராயாகிலும்,-
குசஸ்த்தலே நிலசதி சச ப்ராத ரிஹைஷ்யதி-என்று புறப்பட்டான் அங்கே -இங்கே விட்டான் என்று வருகைக்கு பிரசங்கம் ஒன்றும் இல்லையே யாகிலும்-நாம க்ராஹஞ்ச நாதஸ்ய சீதல காஹள த்வனி –என்ன கடவது இறே-வாராய் யாகிலும் கோலமாம் என்பான் என் என்னில்-வாராது ஒழிகை கூடாது -கூடிலும் என் நினைவு இது என்கிறார் -என்னை இப்படிஆக்கினாய் என்று கருத்து –

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9–அழித்தாய் உன் திருவடியால்;-உன் சிற்றில் அழிக்க வேண்டும் பரிகரம் அமையாதோ இதுக்கு -ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது சங்கல்பத்தாலே இறே -சங்கல்பத்தாலே யாதல் -கையாலே யாதல் அழிக்கல் ஆகாதோ-தகவு செய்திலை;-நிர்த்தயர் செய்வதைச் செய்தாய் -பிரிந்த போதே பிரணயித்தவம் போயிற்று இறே -நீர்மை யுடையார் செய்வதுவும் செய்திலை-நான் செய்த குறை என் என்ன –எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு-நின்-முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே-எங்கள் லீலைகளைக் கண்டு ப்ரீதனாய் -நின் முகத்தில் ஒளி திகழ முறுவல் செய்து நிற்க -நாங்கள் சிற்றிலை தொட்டுக் கொண்டு இருந்து கடைக் கண்ணாலே உன்னைப் பார்த்துக் கொண்டு இருக்க வைத்திலையே -முழுக்க பார்க்கில் எல்லோரையும் பாதி யுமாமே -பிரணயியைப் பார்ப்பது கடைக் கண்ணாலே இறே -உன்னுடைய லீலை போலே என்று இருந்தாயோ எங்களுடைய லீலையை –கர்மா நிபந்தம் ஆகையால் த்யாஜ்யம் இறே இது -உன்னோடே சம்ஸ்லேஷியன் என்று நான் பண்ணின சங்கல்பத்தை அழகாலே அழித்தாய்-லீலைகளைத் திருவடிகளாலே அழித்தாய் என்று இன்னாதாகிறாள்-

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3-பூதனை விஷயமாகவும் சகடாசூரன் விஷயமாகவும் பண்ணின சேஷ்டிதங்களாலே -அவர்கள் நிரஸனம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு என்னுடைய ஸ்த்ரீத்வத்தை இழந்தேன் என்கிறாள் –பருவம் நிரம்பி ப்ரணயத்தில் தேசிகனாய்ச் செய்தவை ஒழிய பால சேஷ்டிதங்களும் தனக்காக செய்தான் என்று இருக்கிறாள் –அவதரித்தது தனக்கு என்று இருக்கையாலும்-ஸ்நேஹம் சத்தா ப்ரயுக்தம் ஆகையால்-ஊர் சகடம் அன்று -ஊர்ந்த சகடம் – அது செய்தது எல்லாம் செய்தற்றது -இவன் மௌக்கியத்தாலே அகப்பட்டான்-திருவடிகளினுடைய அவதானத்தாலே பிழைத்தான் அத்தனை –தாயார் ரக்ஷகமாக நிறுத்தின சகடம் -பாடி காப்பாரே களவு காண்பாரைப் போலே இறே நலிந்து –
உதைத்த பாதத்தன்--ஸ்தன்யார்த்தீ ப்ரருரோத ஹா -என்று -முலையை நினைத்து சீறிச் திருவடிகளை நிமிர்த்தான் -மேல் விழுந்த சகடம் துகளாகப் போயிற்று -இது பக்வ தசை என்னும் படி இறே பூதனை நிரசன தசை

——————————–

திரு மேனியும் -1-ருசி ஜனகமுமாய் -2-உபாயமுமாய் -3-உபேயமுமாய் -4-சேஷியுமாய் -5-பாதகமுமாய் இருக்கும்
எங்கனே என்னில் –
காரார் திருமேனி கண்டதுவே காரணமா சிறிய திருமடல் -55 -என்கையாலே -ருசி ஜனகத்வம் சொல்லிற்று –(வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் —சூரணை -162-)

வண்ண மருள் கொள் -திருவாய்மொழி -6-10-3-என்கையாலே உபாயத்வம் சொலிற்று -(பாசுரம் தோறும் திருவடி பிரயோகம் -அனைத்துமே உபாய பரமாகவே இருக்கும்)

காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -திருவாய்மொழி -5-3-4-என்கையாலே உபேயத்வம் சொல்லிற்று(ஆழ்வாரது பக்தி சாத்திய ஸஹஜ பக்தி -ஆகையால் -விளைவித்த -பத பிரயோகம் -ஆகவே இது உபேயத்வம் தானே)

எம் மண்ணல் வண்ணமே யன்றி வாய் உரையாது -பெரிய திருமொழி -7-3-7-என்கையாலே சேஷித்வம் சொல்லிற்று

சிவனோடு பிரமன் வண் திருமடந்தை சேர் திருவாகம் எம்மாவி ஈரும் -திருவாய்மொழி -9-9-6-என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3–நிறமானது கண்டார் நெஞ்சை அறிவு கெடுக்கும் படியான அழகிய மேகம் போலே இருக்கிற திரு நிறத்தை யுடையவனே -வண்ணம் உண்டு -படி -ஸ்வபாவம் -அது அருள் கொண்டு இருக்கும் -கொள்வார் அளவன்றிக்கே கொடுக்கும் ஸ்வபாவனாய் இருக்கை-வண்ணமானது – வடிவமானது, கண்டார் நெஞ்சினை இருளப் பண்ணக் கூடியதாயிருக்கை என்றுமாம்.
மைப்படி மேனி” திருவிருத்தம், 94.-அன்றோ. –மருள்-மேகத்துக்கும் எம்பெருமானுக்கும் விசேஷணம்-மேகத்தினுடைய அகவாய் கல் என்னும் படியாயிற்றுத் திருமேனியில் உண்டான திருவருளின் மிகுதி இருக்கிறபடி

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன்
தோழீ! கடியனே?–5-3-4-பேரமர் காதல்--ஊரார் பழியும் -தாயார் ஹித வசனமும் -கேளாத படியான காதல் -அமர்ந்த காதல் -தர்ம அனுபந்தியான காதல் -பெரிதான அமரை விளைத்த காதல் -ஊராரை பூசல் ஆக்கின காதல் என்னவுமாம் –
ஈரம் -சங்கம் -காதல் -காமம் –சங்காத் சஞ்சாயதே காமகடல் புரைய விளைவித்த-
அப்ரமேயோ மஹாத-என்ற கடல் ஒப்பாம் அத்தனை -கிடையா விடினும் விட மாட்டாத காதல் என்கை-கடல் புரைய என்றார் முதல் -அநந்தரம் கடலின் மிகப் பெரிதால் என்றார் -பின்னை மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றார் -முடிவில் அதனில் பெரிய என் அவா -என்றார் -இது இறே காதல் பெருகின படி -இது இறே பொய் நின்ற ஞானத்திற்கு பின்பு இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட கார்யம் –

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே –7-3-7-
சம்ருத்தமான ஜலத்தை உடைத்தாய்-ஜல சர சத்வங்கள் தன்னில் கூடி விளையாடா நிற்கிற
கடல் போலே இருக்கிற நிறத்தை உடையனாய் பெரு விலையனான நீல மணி போலே இருக்கிற நிறத்தை உடையவனை –இந் நிறத்தைக் காட்டி-என்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவனுடைய நிறத்தை ஒழிய என்னுடைய வாக் இந்த்ரியம் ஆனது வேறு ஒன்றைப் பேசாது –(ஐயப்பாடு அறுக்கவும் ஆதாரம் பெருக்கவும் அழகன் அன்றோ )

அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெறுமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-அந்நிய பரரான ருத்ராதிகளோடு வாசி அற உடம்பு கொடுக்கும் சீலம் ஸ்மாரகமாய் நித்தியமான ஆத்மாவை முடியா நின்றது -அந்நிய பரர்க்கு எளிதான உடம்பு கிடீர் எனக்கு அரிதாய்த்து –எவன் இனிப் புகுமிடம் -சர்வ சாதாரணமான உடம்பை இழந்தால் இனி எங்கே போய் தரிப்பது –அவன் உடம்பு கிட்டிற்று இல்லை என்னா ஹிதம் சொல்லுகிற உங்கள் உடம்பைப் பற்றித் தரிக்கவோ -ஆனாள் லோக யாத்ரையைப் பற்றி தரித்தாலோ என்ன
எவன் செய்கேனோ-அவ் அளவில் தரிக்கலாம் விஷயம் அன்றே -தோழிமார் உடன் வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரித்தாலோ என்ன –ஆருக்கு-வடுகருக்கு தமிழர் வார்த்தை போலே சொல்லும் வார்த்தைக்கு அதிகாரிகள் யார் -வ்ருத்த கீர்த்தனம் பண்ணும் தோழிமார் எனக்கு முன்னே அழிந்தார்கள்-என் சொல்லுகேன் -கேட்ப்பாரைப் பெற்றால் சொல்லுகைக்கு பாசுரம் தான் உண்டோ-அன்னைமீர்காள்–தோழிமார் அழிந்தார்கள் –நாட்டார் அந்நிய பரர் — சேஷித்து கோள் நீங்களாய் இருத்தி கோள் -உங்களுக்குச் சொல்லவோ –

—————

திருவதரமும் –1-தாரகமுமாய் -2-சேஷியுமுமாய் -3-ப்ரப்யமுமாய் -4-போக்யமுமாய்
5-பாதகமுமாய் இருக்கும் -எங்கனே என்னில் –

அமுத வாயிலூறிய நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே –
நாச்சியார் திருமொழி -13-4-என்கையாலே தாரகத்வம் சொல்லிற்று –

பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ -பெரியாழ்வார் திருமொழி -3-4-6- என்கையாலே
ப்ராப்யத்வம் சொல்லிற்று

கனி இருந்தனைய செவ்வாய் -திருமாலை 18 என்கையாலே போக்யத்வம் சொல்லிற்று

முறுவல் எனதாவி யடும் -திருவாய்மொழி -7-7-5- என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே--13-4-இவளுடைய விசல்ய கரணியும் சந்தான கரணியும் இருக்கிறபடி -சஞ்சீவி மலை மூலிகைகள்-மார்பில் பட்ட அம்புகளை எடுக்கவும்-அதனால் பட்ட புண்களை ஆற்றவும்-ஆராவமுதம் அனையான் -கண்ணன் —விசல்ய கரணி -அவன் வாயில் ஊறிய நீர் -சந்தான கரணி இவளுக்கு-மார்வில் கொணர்ந்து புரட்டீர் -என்றது-எல்லாம் பெற்றதில்லை யாகிலும் -பல அவயவ சம்பந்தம் கொண்ட மாலை அன்றோ – அவனுடைய ஒரோ அவயவத்தில் உள்ளதைக் கொடு வந்தாகிலும் –புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே– இது சருகாய்ப் போகாமே -அந் நீரைக் கொடு வந்து தெளித்து பருகும் படி பண்ணி-உமிழ் நீர் மருந்தாகத் தீரும் காணும் என் நோய்-அவ்யவதா நேன என் தசைக்கு அவனைக் கொடு வர வேணும் இறே – அது செய்ய ஒண்ணாத பின்பு-இத்தாலே என் இளைப்பைப் பரிஹரித்துக் கொண்டு நிற்கப் பாருங்கோள்-வாய் மருந்திட்டு தீர்க்க வேண்டும் நோய் இறே இது –

சிந்தூரம் இலங்க தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும்
அந்தரம் முழவத் தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் -வளை கோல் வீச
அந்தம் ஒன்றில்லாத ஆய்ப் பிள்ளை அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழி 3-4-6- தன்னை ஒழிய எனக்கு செல்லாமையும் –என்னை ஒழிய தனக்கு செல்லும்படியான தீம்புகளையும் அறிந்தால் –இத் தெருவில் வரக்கூடாது –இவற்றை அறிந்து வைத்தும் இத் தெருவே வந்தானாகில்-பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து –திரளிலே நாம் அவனை வளைக்கும் படி என் – என்று நீ நினைக்க வேண்டா – நாங்கள் விளையாடுகிற போது எங்கள் பந்தைப் பறித்து கொண்டு போனான் -என்று சொல்லி போகாதபடி தடுத்து வைத்து-பவள வாய் முறுவலும் காண்போம் தோழி –நாம் இப்படி செய்தவாறே அவன் கால் வாங்கிப் போகாமே நின்று மந்த ஸ்மிதம் பண்ணுமே –அப்போது அவனுடைய பவளம் போல் இருக்கிற திரு அதரத்துக்கு பரபாகமான முறுவலையும்-தோழி-நாம் கண்டு அனுபவிக்க கடவோம் -என்று மனோரதிக்கிறாள்

இனித் திரைத்  திவலை மோத வெறியும் தண் பரவை மீதே
தனிக் கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனி யரும்பு திரு மாலோ  என் செய்கேன் பாவியேனே-18-சம்சாரிகளுக்கும் இவ்வருகான என்னைத் தோற்பித்த கண்களுக்கு இனி வெல்ல ஒண்ணாத நிலம் உண்டோ –கனி இருந்தனைய செவ்வாய்–அக் கண்ணாலே நிர்மமர் ஆனார்க்கு அனுபாவ்யமான விஷயம் இருக்கிறபடி –கண்ட போதே நுகரலாம் கனி போலே யாய்த்து திரு அதரத்தில் போக்யதை இருப்பது –இருந்து -என்றது அச் செவ்வி என்றும் ஒக்க ஏக ரூபமாய் இருக்கிறபடி – சதைக ரூபரூபாய -என்னக் கடவது இறே-கண்ணனை-பெரிய பெருமாளைத் திருவடி தொழுதால்
அவதாரத்துக்கு பிற்பாடர்க்கு உதவுவதற்காக கிருஷ்ணனாய் வந்து கண் வளர்ந்து அருளுகிறான் -என்று ஸ்மரிக்கலாம் படி யாய்த்து இருப்பது –கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன்– அண்டர் கோ னணிய ரங்கன் திருப்பாணாழ்வாரும்.-யசோதைப் பிராட்டி பிள்ளை மனம் கன்றாமல் தீம்பிலே கை வளரும் படி வளர்ந்த மொசு மொசுப்பு எல்லாம் தோற்றி இருக்கும்-பெரிய பெருமாளைக் கண்டால் -என்றும் வசிஷ்டாதி களாலே ஸூசிஷிதராய் வார்ந்து வடிந்த விநயம் எல்லாம் தோற்றும்படியான சக்கரவர்த்தி திருமகனை ஸ்மரிக்கலாம் படி இருக்கும் நம் பெருமாளைக் கண்டால் -என்றும்
பட்டர் அருளிச் செய்வர் –

என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன்
அன்னைமீர்!எனக்கு உய்விடமே.–7-7-5–மலையை எடுத்து மழையிலே நோவு படாத படி பெண்களை நோக்கின உபகாரகனுடைய முறுவலானது,
என் ஒருத்திக்கும் பாதகமாகா நின்றது.‘பசுக்களை அன்றோ தான் நோக்கிற்று?’ என்னில்,
‘‘கோ கோபீஜந ஸங்குலம், அதீவார்த்தம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு. புரா. 5. 11. 13.மிக்க வருத்தம் அடைந்த பசுக்களின் கோபிமார்களின் கூட்டத்தைப் பார்த்து’ என்னக் கடவது அன்றோ?
மழையால் வந்த நலிவை மலையை எடுத்து நீக்கி, அவர்கள் துன்பம் எல்லாம் போம் படி
புன்முறுவல் செய்து கொண்டாயிற்று நின்றது.கோவர்த்தன உத்தாரணம் பண்ணின உபகாரகனுடைய முறுவல் என்னுடைய பிராணனை நலியா நின்றது -பிரிவால் பட்ட நலிவு எல்லாம் தீரும்படி பெண்கள் முகங்களில் பண்ணின ஸ்மிதம் எனக்கு ஒருத்திக்குமே பாதகம் ஆகா நின்றது -இவை நலியாத இடத்தில் போனாலோ என்னில்
அன்னைமீர்!எனக்கு உய்விடமே.-ஒன்றும் அறிகின்றிலேன்-இவை நலியாதபடி ஒதுங்கலாவது ஓர் இடமும் கான்கிறிலேன் -என்னுதல் -அழகுகளில்-உஜ்ஜீவன ஹேது என்று ஒதுங்கலாவது ஒன்றும் கான்கிறிலேன் என்னுதல் -அழகு ஆகில் பாதகமாய் அல்லது இருக்கிறது இல்லை –

—————–

திருக்கண்களும் -1-ரக்ஷகமுமாய் -2-சேஷியுமுமாய் -3-உபாயுமுமாய் –4-உபேயமுமாய் -5-பாதகமுமாய் -இருக்கும்
எங்கனே என்னில்
உயிர்க்கெல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா -பெரிய திருமொழி -7-1-9-என்கையாலே ரக்ஷகத்வம் சொல்லிற்று -அனைத்துலகுமுடைய அரவிந்த லோசனனை -6-7-10- என்கையாலே சேஷித்வம் சொல்லிற்று
அமலங்களாக விளிக்கும் -திருவாய் 1-9-9- என்கையாலே உபாயத்வம் சொல்லிற்று
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து -திருவாய் -7-3-3-என்கையாலே உபேயத்வம் சொல்லிற்று –
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ-திருவாய் -10-3-1- -என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

(அச்சேத்யம் என்னும் அது ஈரும் வேம் ஈரியாய் உலர்த்த வென்னப் பட சித்தம் சித்தாய் அல்லேன் என்று நீங்க கரணங்கள் முடியானேயில் அவையாக உடலம் ஆத்ம தர்மம் கொள்ள காற்றும் கழியும் கட்டி அழக் கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லையே —சூரணை –132-)

தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ  –7-1-9-ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்கிறபடியே-சர்வ பூத ஸூ ஹ்ருதாய்-ஆனுகூல்யம் பண்ணினாரோடு-பிரதி கூல்யம் பண்ணினாரோடு-வாசி அற-எல்லாருக்கும் ஒக்க நன்மையைப் பண்ணுகையால்
வந்த பாவ சுத்தியை உடையவனே –சகல தாபங்களும் ஆறும்படி ஸீதமான கிரணங்களை உடைய பூர்ண சந்தரனைப் போலே –சர்வ பிராணிகளையும் தாயாய் கொண்டு அளிக்கின்ற குளிர்ந்த திருக் கண்களை உடையவனே -என்று திருக் கண்களுக்கு விசேஷணம் ஆதல் –அன்றிக்கே-சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிப்பவனுமாய் – அவ் வாத்சல்யம் எல்லாம் தோற்றும்படியாக இருக்கும் திருக் கண்களை உடையவனே -என்னுதல் –

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப்போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக்கோ ளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10–இவ்வளவே காண் அவன் கண்ணுக்குத் தோற்றிருப்பது. ஓர் உபய விபூதி மாத்திரம் கண்டீர் அவன் கண்ணுக்கு ஈடுபட்டிருப்பது ; அவன் தன்னையும் தோற்பிக்கும் கண் அன்றோ இவளது. -அனைத்து லோகம் தானே -ஒரு உபய விபூதி தானே அவனையும் சேர்த்து அன்றோ இவளது –அவன் அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனன்;-உபய விபூதி உக்தன் என்கிற இடத்தை கோட் சொல்லுகிற கண்களை உடையவனை –இவள் நெடுங்கண் இளமான்-அவன் அரவிந்த லோசனன் –அவன் கண் ஸர்வேச்வரத்வ ஸூ சகம் -அவனையும் கூட விளாக் குலை கொள்ளும் கண் இவளது-அவன், தானும் தன் விபூதியும் இவள் கண்ணிலே ஒரு மூலையிலே அடங்கும்படி யாயிருக்கை.-கண்ணில் அல்லாத பரப்பும் இவள் பருவமும் குமர் கிடந்து போமத்தனை.- காலியாக உள்ள கண் இடம் அனுபவிக்க ஆள் இல்லை -நெடும் கண்

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9–கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான் – புண்டரீகாக்ஷனானவன் என் கண்ணுக்கு விஷயமானான்.
ந சஷூஷா க்ருஹீயதே ‘இறைவன் கண்ணுக்குப் புலப்படுமவன் அல்லன்,’ என்னும் மரியாதை குலைந்தது.-அவன் அவ் வடிவை உம்முடைய கண்ணுக்கு விஷயமாக்கினான் ஆகில், நீர் பின்னைச் செய்வது என்?’ என்னில்,-காண்பன் –நானும் கண்டு அனுபவியா நின்றேன்.உலகத்திற்கே வேறுபட்ட -விலக்ஷண இறைவனை நீர் கண்டு அனுபவிக்க வல்லீரானபடி எங்ஙனே?’ எனின்,-அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும் –அவன் திருக் கண்களால் நிர் தோஷனாம் படியும் -காண வல்லேனாம் படியும் விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணினான்-அவன் தன் திருக் கண்களாலே என் குற்றம் எல்லாம் கழிந்து நான் காண வல்லேனாம்படி குளிர நோக்குகின்றான்.

செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ! நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3-தன்னோட்டை சம்பந்தம் எல்லாம் தோற்றும் படி நோக்கின கண் அழகிலே அநந்யார்ஹ சேஷமாயும்-தவாஸ்மி–‘உனக்கு ஆகிறேன்’ என்று சொல்லப் புக்கு மாட்டாது ஒழிந்தால், குறையும் தலைக் கட்டின திருக் கண்களுக்கு ஆயிற்று அநந்யார்ஹமாக எழுதிக் கொடுத்தது. என்றது,-‘பிரிகிற போது நோக்கின நோக்கிலே பிறர்க்கு ஆகாதபடி உஜ்ஜீவிக்கச் செய்தான்’ என்றபடி.

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1–நாம் பிரிந்திலோம் –பிரிய நினைத்திலோம் –இப்படி இருக்க போனோமுமாய் -போனால் நலியக் கடவ பதார்த்தங்களும் நலிந்ததாய் இருக்கிற இது ஒரு ப்ரேம ஸ்வபாவம் இருக்கும் படியே -என்று சாதரமாகப் பார்க்க –அழகிய திருக் கண்களால் நோக்கி -நோவு படுத்தா நின்றாய் என்கிறாள் -இந்நோக்கில் காட்டில் நீ பசு மேய்க்கப் போகை யமையும் என்கை முன்புத்தை நோக்கு -ஸ்ம்ருதி விஷயமாக சொல்லுகிறாள் என்பாரும் உண்டு –-ஈர்தி -என்கையாலே -இப்போது பார்த்தானாக வேணும் -இப்படி சொன்ன இடத்திலும் நோக்கை மாற வைத்திலன்–

————————————————————————————————-

வார்த்தை – 439-
திரு நாமமும் திருமுடியும்
1-பாவனமுமாய் -2-தாரகமுமாய் -3-போக்யமுமாய் -4-பாதகமுமாய் இருக்கும்-எங்கனே என்னில் –
மாயனை –தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்-திருப்பாவை -5-என்கையாலே பாவனத்வம் சொல்லிற்று
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே-நாச்சியார் என்கையாலே தாரகத்வம் சொல்லிற்று
ஆயர் கொழுந்தே என்னும் இச்சுவை -திருமாலை -2-என்கையாலே பரம போக்யத்வம் சொல்லிற்று

கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5-
உத்தர பூர்வாகக்ங்கள்-பால் குடித்து வியாதி போக்குமா போலே –இனியது அனுபவிக்க இன்னாதது குலையும்-பூர்வமாகிறது –ஞானம் பிறப்பதற்கு முன்பு புத்தி பூர்வகமாக பண்ணின பாவம்-உத்தாரகம் ஆவது –
பகவத் ஸமாஸ்ரயணத்துக்கு பின்பு பிரகிருதி வாசனையால் பிராமாதிகமாகச் செய்யுமது –தீயினில் தூசாகும் –நெருப்பில் இட்ட பஞ்சே போலே ஆம்-அர்த்தம்-பெரியாழ்வார் மகள் ஆகையால் இடைச்சியான பின்பும் பின்னாட்டுகிற படி –

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-என் –-இப்போது வந்திலன் ஆகிலும்
முன்பு தன்னை எனக்காக்கி வைத்தவற்றை முந்துற முன்னம் தவிர்க்க ஒண்ணாது இறே-கோவிந்தன்-சர்வ ஸூலபனான நிலையைத் தவிர்க்க ஒண்ணாது இறே-குணம் பாடி –
-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா -என்கிறபடியே அன்வயத்திலும் குண அனுபவமாகில் பண்ணுவது-பிரிந்தாலும் குண ஜ்ஞானத்தாலே தரிக்கலாம் என்று இருக்கிறாரோ –ஆசம்சேயம்–தச்மிம்ச பகவோ குணா –சுந்தர -27-14-சீதா பிராட்டி தரித்தால் போலே

பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர நான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே -2-மேன்மைக்கு எல்லை யானவர்களுக்கு நியாமகனாய் இருக்குமா போலே-தாழ்வுக்கு எல்லையான இடையருக்கும் பசுக்களுக்கும் ஸூலபன் ஆனபடி-வடிவு அழகும் மேன்மையும் நீர்மையும் ஒரு பசும் கூட்டமாய் இறே பரத்வம் இருப்பதுஎன்னும் – இஸ் ஸ்வபாவங்களை அனுபவித்தோ உமக்கு இவ்வினிமை பிறந்ததோ என்னில்-அங்கன் அன்று-திரு நாமத்தின் உடைய உக்தி மாத்ரத்திலே வந்த இனிமை –இச்சுவை தவிர –இந்த ரசத்தை விட்டு-சுவை -ரசம் –
கைப்பட்டதை விட்டு இவ் அறு சுவைக்கு வேறு ஒரு சுவை இருந்த இடம் தேடித் போகச் சொல்லுகிறாயோ –இவருடைய அறு சுவை இருக்கிறபடி –திரு நாமத்தை உம் நாக்கிலே இட்டுப் பாராமை இறே நான் உபதேசிக்க வேண்டி இருக்கிறது –இத்தால் சொல்லிற்று ஆய்த்து –இங்கே இருந்து திரு நாமம் அனுபவிக்கும் இனிமைக்கு பரம பத அனுபவமும் சத்ருசம் அன்று என்னும்படி தமக்கு திரு நாமம் ரசித்த படியை சொல்லிற்று ஆய்த்து-

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-தீரா மாற்றாலே நெஞ்சைப் புண் படுத்தி வைக்கும் கிருஷ்ணன் திரு நாமங்களையே அவ்யக்தமாகச் சொல்லி முடித்தி கோள் -ம்ருத சஞ்சீவனமான ராம குணங்களை ஒரு காள் சொல்லலாகாதோ-

—————-

திருமுடியும் -(குழல்) -1-பாவனமுமாய்–2–ரக்ஷகத்வமுமாய்-3–சேஷியுமாய்04-போக்யமுமாய் -5-பாதகமுமாய்
இருக்கும்–எங்கனே என்னில் –
கெடும் இடராயவெல்லாம் கேசவாய என்கையாலே பாவனத்வம் சொல்லிற்று
துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும்–திருநெடும் தாண்டகம் -16-என்கையாலே -ரக்ஷகத்வம் சொல்லிற்று
முடியானே மூ வுலகும் தொழும் சீர் அடியானே–என்கையாலே-சர்வ சேஷித்வம் சொல்லிற்று
பூந்துழாய் முடியார்க்கு –திருவடி மூழிக் களத்தார்க்கு -9-7-என்கையாலே போக்யத்வம் சொல்லிற்று
சுடர் முடிக்கே ஒற்றுமை கொண்டது உள்ளம் –7-7-10-என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்

விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-இடர் என்று பேர் பெற்றவை அடங்க போம் -பாபே குருணி குருணி –என்று பாப அனுரூபமாக பிராய்ச சித்தம் பேதித்து இருக்கும் -திரு நாமத்துக்கு அங்கனம் ஒரு நியதி இல்லை –மேரு மந்த்ர மாத்ரோ அபி –நஸ்யதி –என்றபடி சகல பாபங்களும் போம் -திரு நாமங்கள் தான் பலவும் வேணுமோ என்னில் –
கேசவா வென்ன -ஒரு விரோதியைப் போக்கின படியைச் சொல்ல விரோதி வர்க்கமாக போம் என்னுதல் –ப்ரசஸ்த கேசன் என்றால் –நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித-கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்– என்கிறபடியே -சாம்சாரிக சகல துரிதங்களும் போம் என்னுதல் –பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி -விஷ்ணு தர்மம் – பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் -என்கிறபடியே எல்லா துன்பங்களும் ஒரு முறையிலேயே அழியும் -என்கிறார் -என்றபடி – இராவணன் ஒருவனும் தீ வினை செய்ய-இராக்கச சாதியாக அழிந்தால் போலே –இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் -பெரிய திருமொழி –போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்கிறபடியே-அனுபவிக்க கடவனவும்- முன்பே தொடங்கி அனுபவிக்கிறவையும்-எல்லாம் நசிக்கும் ஆதலால் -எல்லாம் -என்கிறார்-என்ன -அர்த்த அனுசந்தானம் வேண்டா –யுக்தி மாத்திரமே அமையும் பாப விமோசனத்துக்கு என்கிறது –நாளும்-கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்-நாள் தோறும் குரூரமான வ்ருத்தியைப் பண்ணும் யமபடரும் கிட்ட மாட்டார் –ஸ்வ புருஷம் –இத்யாதி -தாஸ் யஞ்ஞ வராஹஸ்ய –இத்யாதி –கில்லார் -சக்தர் அல்லர் – எரிகிற நெருப்பில் ஏறச் சக்தர் யுண்டோ –

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்ற மரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே–16-நம்பி உடைய திருக் குழலையும் வடிவையும் சொல்கிறது – அற நெருங்கி இருண்ட குழலையும்-காளமேக நிபச்யாமமான வடிவையும் உடைய என் துணையே –தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக் கண் கனிவாய்
காள மேகத்தை யன்றி மற் றொன்றிலம் கதியே-இறே இவர்கள் துணையாகப் பற்றுவது –
இந்தக் குழலிலும் வடிவிலும் போலே காணும் தான் அகப்பட்டது – பிராட்டியைத் தேடி திரிகிற காலம் திருக் குழல் பேணாமையாலே ஜடையாய் கிடந்தது-கண்டவாறே அவள் கையாலே வகிர்ந்து பேணின குழல் ஆகையாலே துன்று குழல் -என்கிறது –என் துணையே –ஸ்நிக்த நீல குடில குந்தளம் என்கிற மயிர் முடியையும் வடிவில் ஸ்ரமஹரதையும் காட்டி
என்னை அனன்யார்ஹை ஆக்கினவனே –ப்ரஷஸ்த கேஸ பாஸம்-ப்ரஷஸ்த ஸ்நிக்த நீல குடிலை குண்டல -புகழப் படும் -வழுவழுப்பான -கறுத்த -சுருண்ட திருக் குழல் கற்றை-

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-ஆதிராஜ்ய ஸூ சகமாய் உபய விபூதிக்கும் தவித்த முடி இ றே-சேஷ பூதனுக்கு சேஷித்வம் இறே முதல் காணப்படுவது-அவன் சேஷித்வ பிரகாசமான திரு அபிஷேகத்தில் முந்துறக் கண் வைக்கிறார் -தர்ச நீயமான திரு அபிஷேகம்-ஆயின், சிவன் முதலானோர்க்கும் முடி உண்டே?’ எனின்,-அல்லாதார் முடிகளைப் பொய்ம்முடி ஆக்கும்படி-அசத் சமம் -அலங்காரத்துக்கு இட்டவை – தலையான முடியே அன்றோ இது?
மற்ற தலைகள் வணங்கும் -அடி சேர் முடியனராகி -அபிமான பங்கமாய் வந்து சங்கம் இருப்பார்களே –உபய விபூதிகளும் ஒரு முடியிலே கட்டுண்ணும்படி கவித்த முடியே அன்றோ இது?  இவருடைய அபிநிவேச அதிசயம் இசையின் ஓசையிலே அறியும் அத்தனை மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! –அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்தால் தம்முடைய அனுரூபமாக திருவடிகளில் இறே விழுவது-குணாகுண நிரூபணம் அசேஷ லோக சரண்யமான திருவடிகளை உடையவனே-மதீய மூர்த்தானாம் அலங்கரிஷ்யதி -என்று வகுத்த திருவடிகளை என் தலையிலே வைக்கப் பெறுவது எப்போது காண் என்று கருத்து

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு

ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-பூந்துழாய் முடியார்க்கு –திருமுடிக்கு ஒப்பனையான வளையம் இருக்கிற படி–பாண்டியன் கொண்டை -வளையம் திருத் துழாய் மேலே சாத்தி –-பொன் ஆழிக் கையார்க்கு-திரு முடிக்கு வளையம் போலே யாய்த்து திருக்கைக்கு திரு வாழி –திரு மூழிக் களத்தார்க்கு–வளையம் போலேயும் ஆபரணம் போலேயும் அவ் வூரில் நிலையும் அழகுக்கு உடல் என்று இருக்கிறாள் -அவை விக்ரஹத்துக்கு ஆபரணம் ஆனால் போலே -சீலம் ஸ்வரூபத்துக்கு ஆபரணம் இ றே -அழகும் குணமும் ஒரு தலைத்த விஷயம் இறே

நிற்றி முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச் சோதி மணி நிறமாய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்! நசை என் நுங்கட்கே?–7-7-10-
நிரவதிக தேஜஸ்ஸான ரத்னங்களின் ஒளியை உடைத்தாய் கொண்டு ஸமஸ்த லோகங்களையும் ஓர் இடம் ஒழியாமே வியாபிக்கிற தேஜஸ்ஸை யுடைய திரு அபிஷேகத்தில் என்னுடைய ஹ்ருதயம் ஒருப்பட்டது என்னுதல் -அங்கே விலை செய்து கொடுத்தது என்னுதல் -ஒற்றுமை -ஒருமை-ஒருப்பட்டது தத்பரமானது ஐகாந்த்யம் –ஈடுபட்டு கிரயம் பண்ணிக் கொடுத்தது –‘தப்புவிக்கைக்கு வார்த்தை சொல்லுகிற இவர்களைப் போலே ஓர் இடத்தில் அன்று அன்றே, அகப்படுத்தி நலியக் கோலுகிற அது நிற்கும்படி?’ என்பதனைத் தெரிவித்தபடி.

—————————-——————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அந்தர்யாமி திருவாராதனம்–

November 29, 2025

வார்த்தை -434-
அந்தர்யாம்ய ஆராதனம் விளக்கும் வார்த்தை-

பகவத் விஷயம் –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா வமுதமே -திருவாய்மொழி -2-5-4- என்றார் –
பொங்கைம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம்பூதம் இங்கு இவ் உயிரேய்
பிரகிருதி மானாங்கார மனங்கள் -திருவாய்மொழி -10-7-10-என்கிறபடியே
இருபத்து நால்வர் ஏறின ஆகாரத்திலே
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி –
பெரியாழ்வார் திருமொழி -4-5-3-என்கிறபடியே
நடுவில் திரு முற்றத்தில் இருபத்தரறுவர் ஆவானை உகந்தருளப் பண்ணி –
அநந்யார்ஹனாய் -அநந்ய சரண்யனாய் -அநந்ய போகனாய் -ஜ்ஞானாநந்தியான
இருபத்தைவரான ஆத்மா திருவாராதானம் பண்ணும் நம்பியாருக்கும் பரத்வம் எட்டாது –

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-தாரா வாஹிக ஞானத்தில் கால உபஷடம்பாதிகளால் வருவதொரு பேதம் உண்டு இறே ஞானத்துக்கு-அது போல் அன்றிக்கே அனுபவித்த ஒன்றை அனுபவித்தால் போலே நித்ய அபூர்வமாய் இருக்கை-அதாவது ஒரு பொருளைப் பற்றித் தொடர்ச்சியாக உண்டாகின்ற பல வகை அனுபவங்களில் காலம் தேசம் முதலியவைகளின் கூட்டரவுகளால் வருவது ஒரு பேதம் உண்டு ஞானத்திற்கு;-இங்கு விஷயந்தானே பேதியா நின்றது வேறுபடுகின்றது-ஆயிற்று – என்பதாம்.அதாவது, பூர்வ க்ஷணத்தில் ‘ அனுபவம் போல அல்ல ஆயிற்று உத்தர க்ஷணத்தில் அனுபவம் இருப்பது’ என்றபடி.

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-
-சேதனனை விக்ருதனாம் படி பண்ணும் சப் தாதி விஷயங்கள் ஐந்தும் –-வறை நாற்றத்தைக் காட்டி அகப்படுத்துமா போலே சப் தாதிகளிலே மூட்டுகிற ஸ்ரோத்ராதிகள் ஐந்தும் –கர்ம இந்திரியங்கள் ஐந்தும் -பிருதிவ்யாதி பூதங்கள் ஐந்தும் —இஸ் சம்சாரத்திலே இருக்கிற -இவ்வாத்மாவைத் தொற்றி இருக்கிற மூல பிரகிருதி என்ன -மஹான் அஹங்கார மனஸ்ஸூக்கள் என்ன -இவை யாகிற உன்னுடைய மஹா மாயையை மங்க வொட்டு என்று அந்வயம் –உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம் உணர்வைப் பெற ஊர்ந்து -8-8-3-என்று அவன் தான் இவர் பக்கல் செய்ததனை–இப்போது அவனுக்கு இவர் தாம் அறிவிக்கிறார் –ஒரு கர்மம் செய்தது செய்ய மாட்டாமை இல்லை அன்றோ கழி பெரும் காதல் –

சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன் 
மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி 
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே – 4-5 -3-ஹ்ருதயம் என்று பிரசித்தமாய் -அத்விதீயமான ஸ்த்தானத்தை உண்டாக்கி -ஸ்ரீ யபதி -என்று பிரசித்தமாய் -அத்விதீயமான வஸ்துவை பிரதிஷ்டிப்பித்து –திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திரு மால் வந்து  என் நெஞ்சு நிறைய புகுந்தான் (10-8 )-என்று இவர் அஹ்ருதயமாக சொன்னதை சஹ்ருதயமாக கொண்டு வந்து புகுந்தான் –இவர் இப்போதே -அஹ்ருதயமாக சொன்னேன் -என்னவும் வல்லர்-அதுக்கு முன்பு இவர் நெஞ்சில் இடம் அற புகுந்து  கொள்ளும் கிடீர் என்று  பிராட்டியும் கூடக் கொண்டு புகுந்தான் –இவர் நெஞ்சு திருந்துவதற்கு முன்பு இறே -அல்லாத இடங்களில் நிற்பது –-நின்றது எந்தை ஊரகத்து -இத்யாதி-உகந்து அருளின நிலங்களில் கண்டு அனுபவிக்குமா போலே  இவர் திரு உள்ளத்தில் இருப்பதும் கண்டு அனுபவிக்கலாம் படி இருக்கும் இவர்க்கு –
சல சயனத்து உள்ளும் எனது உள்ளத்து உள்ளும் உறைவாரை உள்ளீரே -என்னக் கடவது இறே –வந்தாய் என் மனம் புகுந்தாய்(பெரிய திருமொழி – 1-10-9 )-என்று இறே புகுந்தது –
வந்து வந்து என் மனத்து இருந்து (பெரிய திருமொழி -6-2 )-என்கிறபடியே-இவர் இசையாமல் -தட்டின நாளைக்கு ஓர் அவதி இல்லை இறே –அடியார் மனத்தாயோ-(பெரிய திருமொழி 11-5 )-வெள்ளத்தான் வேம்கடத்தான்  ஏலும் கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் –என்று   உகந்து அருளின நிலங்களோடு ஒக்கும் -இறே இவர் திரு உள்ளமும் –

வ்யூஹம் கால்கடியாருக்கு
அவதாரம் அக்காலத்தில் உள்ளாருக்கு
அர்ச்சாவதாரம் உகந்து அருளின நிலங்களில் எப்போதும் திருவடிகளைப்
பிடித்து இருக்க ஒண்ணாது –

இவனுக்கு எப்போதும் ஒக்கப் பற்றலாவது அந்தர்யாமித்வம் இறே
இவனையே குறித்து நிற்கும் இடம் இறே அவ்விடம்
அல்லாத இடங்களில் காட்டில் அவன் அதி ப்ராவண்யம் பண்ணா நிற்பதும் இங்கே இறே
எங்கனே என்னில் –

(அர்ச்சாவதாரத்தை விட உயர்ந்த அந்தர்யாமித்வம் என்றும் அழகாக விளக்கிக் காட்டுகிறான்)

அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மான் -திருவாய்மொழி -2-5-1- என்றும் –
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடி வந்து என் மனக்கடலில்
வாழ வல்ல மாய மணாளா நம்பி -பெரியாழ்வார் திருமொழி -5-4-9-என்றும் –
வில்லாளன் நெஞ்சத்துளன் -நான்முகன் திருவந்தாதி -85-
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் -பெரிய திருமொழி -11-3-7- என்றும் –
திருமால் இரும் சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து இருப்பேன்
என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -திருவாய்மொழி -10-8-6-என்றும் –
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுள்ளே -திருச்சந்த விருத்தம் -65-என்றும் –

(பரத்வமும் வ்யூஹமும் விபவமும் அர்ச்சையும் அந்தர்யாமிக்குள்ளே அடங்குவதற்கு பிரமாணங்கள்)

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-பரமபதத்தில் உள்ளார் எல்லார் பக்கலிலும் பண்ணும் அபி நிவேசத்தை என் பக்கலிலே பண்ணி –மஞ்சா க்ரோசந்தி இத்வத்-கமர் பிளந்த தரையிலே நீரைப் பாய்ச்சினால் போலே -உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து -என்று குருத்து வற்றாக வற்றான என்னாத்மாவிலே-விடாயர் மடுவில் விழுமா போலே வந்து கலந்தான் –நித்ய விபூதியில் உள்ளரோபாதி லீலா விபூதியில் உள்ளாருக்கும் வந்து முகம் காட்ட வேண்டும் பிராப்தி உடையவனுக்கு இவரைப் பெற்ற பின்பு யாயிற்று அவன் சர்வேஸ்வரன் யாயிற்று –ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்தில், ‘அந்தாமம் வாழ்முடி சங்காழி நூல் ஆரமுளவாய்க் கொண்டு, அந்தாமத்து அன்பு செய்து என் ஆவிசேர் அம்மான்’ என்ற சொற்களைக் கூட்டியும்,-எம்பெருமானார் நிர்வாஹத்தில், ‘அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர்ந்த பின்னர், அந்தாமம் வாழ் முடி சங்காழி நூலாரமுளவாய், அம்மானும்
ஆனவனுக்குச் செந்தாமரைத் தடம் கண்
’ என்று சொற்களைக் கூட்டியும் பொருள்-

பனிக் கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து  என்
மனக் கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ

தனிக் கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –சகல தாப ஹராமான கடல்-சம்சாரத்தில் தாப த்ரய தப்தரானவர்களுக்கு-ஸ்ரீ திருப் பாற் கடலில் கண் வளர்ந்து அருளுகிற படியை அனுசந்திக்க போம் என்கை–சீதள ஸ்வபாவமான கடல் –
பாற் கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனை -என்று அவனுடைய ஸ்வபாவம் இதுக்கு உண்டாய் இருக்கிற படி –சம்பந்தம் அடியான வாத்சல்யம்
(கடல் அரசன் அபசாரம் பொறுத்தார் அன்றோ பெருமாள் )பள்ளி கொண்ட படி என்னும் இத்தனை -பாசுரம் (விசேஷணம்) இடப் போகாது –-கிடந்ததோர் கிடக்கை -என்றும்
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் -என்றும் சொல்லும் இத்தனை இறே –நாளும் வாய்க்க (8-10)-என்கிற பாட்டில் ஒரு போலி சொல்லும் இத்தனை இறே –இவர் தாமும் -வெள்ளை வெள்ளத்தின் மேல் -என்று ஆசைப்பட்ட படியே வந்து புகுந்தான் ஆய்த்து-தல சயனப்பெருமாள் போல் ஆதி சேஷன் படுக்கையை விட்டு வந்தாரா-அங்கு உள்ள சேவை கண்டு ஆனந்தம் படுவது போல் இங்கும் – இவருக்கு சேவை சாதித்தான்-ஆகவே மனதில் இல்லாமல் மனக்கடலில் என்கிறார்-பழக விட்டு –அங்கு உண்டான ஆசையை நேராக மறந்து விட்டு-ஓடி வந்து  –காதக் குதிரை கட்டி ஆய்த்து வந்தது –(காதக்குதிரை இட்டு –குதிரை போல் தானே நடை இட்டு என்றுமாம் )என் மனக் கடலில் வாழ வல்ல–அது பனிக் கடல் ஆகையாலே குளிர்ந்து இருக்கும்-இது மனக் கடல் ஆகையாலே குளிர் கெட்டு இருக்கும்(சந்தனம் சீதளம் -சந்திரன் இன்னும் சீதளம் —சத்துக்கள் மனஸ்ஸூ அவற்றை விட சீதளம் -பிரமாணம் )அது ஊற்று மாறினாலும் இது ஊற்று மாறாது-பனிக் கடலையும் தனக்கு உள்ளே அடக்கும் கடல் இறே –பரவைத் திரை பல மோதி -இத்யாதி-இக் கடலை கண்ட வாறே பனிக் கடல் காட்டுத் தீயோடு ஒத்தது –வாழ வல்ல–செருக்கரான ராஜாக்கள் பழைய படை வீடை விட்டு –தாங்களே காடு சீய்த்து சமைத்த – படை வீட்டிலே இறே ஆதாரத்தோடு இருப்பது –(ஸ்ரீ ரங்கம் -ஷீராப்திகளை விட்டு ஆசையுடன் கண் வளரும் திவ்ய தேசம் போல் )சாதன தசை போலே அன்று இறே போக தசை-பனிக் கடலையும்   விரும்புகைக்கு அடி -இவரைச் சேர்த்துக் கொள்ளுகைக்கு-யோக நிந்த்ரை சிந்தை செய்க்கைக்கு இறே –(ஸாத்யம் கை புகுந்த பின்பும் விடாமல் இருப்பதுக்கு காரணம் –இளம் கோயில் கை விடேல் என்ற பிரார்த்தனையாலும்-க்ருத்தஞ்ஞதா கந்தத்தாலும் )-மனக் கடலில் வாழ வல்ல –வாழ வல்ல வாசு தேவா –-அக் கடல் எங்கும் வாழ்ச்சி இறே-கீழில் பாட்டில் -வாழச் செய்தாய் -என்று –ஸ்ரீ ஆழ்வாரை வாழ்வித்து-அவ் வாழ்வு கண்டு தான் வாழுகிற  படி-மாய மணாளா நம்பீ –இவர் திரு உள்ளத்திலே புகுந்த பின்பு இறே –குணங்களும் -திரு மேனியில் செவ்வியும் பூர்த்தி பெற்றது(அந்தாமத்து அன்பு போல்-மாய-குணங்களும் –-மணாளா-திரு மேனியில் செவ்வியும்-நம்பீ -பூர்த்தி பெற்றது)

தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் –85-—மிக்க சினத்தை உடையனாய் -பெரு மிடுக்கனாய்  -வாநராதிபனுமாய் -இருந்த வாலியுடைய கர்வத்தை யழித்த- வில்லை யுடை யவன் என்னுடைய ஹிருதயத்தே யுளன் –வானவர் கோன் மதம் அழித்த வில்லாளன் அன்றோ இவன் –சரணாகத வத்சலன் -தம் பலத்தை தீயோரை அழித்து ஆஸ்ரித ரக்ஷணத்துக்குப் பயன் படுத்த வாலி தனது வலிமையை சரணாகதனான ஸூக்ரீவனை சிஷிக்க பயன் படுத்திய வில்லாளன்-அந்ய பரதை அறும்படிக்கு இடம் யறும் படி ஹ்ருதயத்தில் சன்னிஹிதராய் இரா நின்றார்-ஆகையாலே மிருத சஞ்சீவனமான ராம குணங்களிலே அகப்பட்ட எனக்கு நித்ய க்ருத்யம்-பழையவனாய் சர்வாதிகனான சக்ரவர்த்தி திருமகனுடைய திரு நாமங்களை அபிநிவேச பர வசனாய்க் கொண்டு
வாயாரப் பாடுகை ஏத்துகை-லௌகிகரான உங்களில் வியாவ்ருத்தமான எனக்கு மற்று உள்ள காலங்கள் எல்லாம் அதுக்கே நேரம் போதும்-எங்கள் தம் யுடையவர் திருக்கை அருளை ராமருடைய அருளைப் பெற இரக்கும் எங்களுக்கு அந்நிய பரதை பண்ணுவது எங்கனே என்கிறார்
– என்று பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்ததாக அருளிச் செய்யும் படி-

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை   யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம்   நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே –11-3-7-அவன் ஹிருதயத்தில் நித்ய வாசம் பண்ணா நிற்கச் செய்தேயும் கையில் வளை கழலும் படி இருக்கிற நமக்கு –

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6–ஏவகாரத்தால் திருமலை இருப்பை விரும்புகின்றதையும் சொல்லி –-திரு அயோத்யையில் வாசம் போலே யாய்த்து திருப் பேரில் இருப்பு -திருச் சித்ர கூடத்தில் இருப்பு போலே யாய்த்து திருமலையில் வாசம்–இன்று வந்து-பூர்வ க்ஷணத்தில் நினைவு இன்றியிலே இருக்க -வந்து கொடு நிற்கக் கண்டது அத்தனை –இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-தன் பேறாக பிரதிஜ்ஜை பண்ணி -இருந்திடுவானுக்கு என்று இராதே என் நெஞ்சிலே குறைவறப் புகுந்தான் –விருப்பே பெற்று -அவன் விருப்பத்தைப் பெற்று -அவனாலே பஹு மானம் பண்ணப் பெற்று அமுதம் உண்டு களித்தேனே –அவனுடைய கொண்டாட்டம் ஆகிற அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேன் -அவனுடைய குண அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேன் –ஷிபாமி என்று அவனுடைய அவன் உபேக்ஷைக்கு இலக்காகாதே -அவன் பஹு மானத்துக்கு இலக்கானால் -ப்ரீதி உள் அடங்காது இறே –நரக ஹேதுவான விஷய அனுபவத்தால் வந்த களிப்பளவன்றியே -பகவத் அனுபவம் பண்ணப் பெற்ற செருக்கால் உண்டான ப்ரீதியை ஆற்றலாமோ —நாவல் இட்டு உழி தருகின்றோம் -என்கிறபடியே
செருக்காலே களிக்கிற களிப்பே அன்றோ இது-நமன் முதலானோர் தலைகளிலே அடி இட்டுக் களிக்கப் பெற்றேன்-

நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே –65-கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம் – என்கிறபடியே அத் திருப்பதிகளை காற்கடைக் கொண்டு அவ் வவ் இடங்களில் நின்றும் இருந்தும் கிடந்தும் செய்து அருளின நன்மை எல்லாம் என் நெஞ்சிலே யாய்த்து –நிகிந அக்ரேசரனான என்னை -விஷயீ கரித்தவாறே -திருமலையில் நிலையும் மாறி என் நெஞ்சில் நின்று அருளினான் –தன் திருவடிகளில் போக்யதையை எனக்கு அறிவித்த பின்பு -பரம பதத்தில் இருப்பை
மாறி -என் நெஞ்சிலே போக ஸ்தானமாய் இருந்தான் –தாபார்த்தோ ஜல சாயிநம் -என்கிறபடியே திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியைக் காட்டி –என்னுடைய சாம்சாரிகமான தாபத்தை தீர்த்த பின்பு திருப் பாற் கடலில் கிடையை மாறி என் நெஞ்சிலே கண் வளர்ந்து அருளி தன் விடாய் தீர்ந்தான் –இப்படி என் பக்கலிலே பண்ணின வ்யாமோஹம் என்னால் மறக்கலாய் இருக்கிறது இல்லை -என்கிறார் –

இங்கு இருக்கும் இடத்தில் தான் ஒருவனுமேயோ -என்னில் –
அரவத்தமளி யினொடும் -அழகிய பாற்கடலோடும் அரவிந்த பாவையும் தானும்
அகம்படி வந்து புகுந்து -பெரியாழ்வார் திருமொழி -5-2-10 -என்கிறபடியே
நாய்ச்சிமாரோடும் சர்வ பரிகரத்தோடும் கூடி இருக்கிற இவனை இந் நம்பியார்
திருவாராதனம் பண்ணும்படி –

அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து

பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவல் பொருட்டே -5- 2-10 -அடியார்கள் குழாங்களுடனே வந்து புகுந்து-தான் இவர் திரு உள்ளத்திலே கண் வளர்ந்து அருளுகிற படிக்கு ஸ்மாகரமாக அலை கேட்கும் படி கண் வளர்ந்து அருளுகிற உபகாரத்துக்குத் தோற்று தம் சத்தைக்கு போற்றுகை அன்றிக்கே –ரஷையின் பொருட்டு –காவலுக்கு உறுப்பாகப் போற்றுகிறார்-காத்தல் ரக்ஷை-உபய விபூதி உடன் இங்கும் அங்கும்-அரவிந்த பாவை –
அகம்படி வந்து புகுந்து -சுடர் ஆழி தானும் என்கையாலே நின்னோடும்
-இத் திருமொழியால்
திருப் பல்லாண்டில் அர்த்தத்தை நிகமிக்கிறார் –சேவடி செவ்வி திருக்காப்பு -என்ற அர்த்தம் –உறகல் உறகலிலே நிகமித்தார்-அடியோமோடும் நின்னோடும் -என்கிற பாட்டின் அர்த்தத்தை –அரவத் தமளியிலே -நிகமித்தார்-

ப்ராஹ்மே முஹுர்த்தே ச உத்தாய -என்கிறபடியே –
சத்வோத்தர காலத்திலே பிறந்து –
ஆத்மனோ ஹிதம் -என்கிற நன் ஜ்ஞானத் துறை (திருவிருத்தம்)படிந்தாடி –
அத் துறையிலே ஒரு குடம் திருமஞ்சனத்தை எடுத்து –
குரு பரம்பர அனுசந்தானத்தாலே கோயிலிலே வந்து-
அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமான –
அனன்யார்ஹ சேஷத்வ அனுசந்தனத்தாலே தண்டனிட்டு

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி –
அநந்ய  சரணத்வ அனுசந்தானாம் ஆகிற திருவிளக்கை எழத் தூண்டி –
அநந்ய போகத்வ அனுசந்தானத்தாலே -பிரயோஜநாந்தரம் ஆகிற துராலை விரட்டி –
சம்பந்த ஜ்ஞான அனுசந்தானத்தாலே திருவடி விளக்கி –

அன்பினால் ஜ்ஞான நீர் கொண்டாட்டுவன் அடியனேனே -திருக் குறும் தாண்டகம் -15-என்கிறபடியே திருமஞ்சனம் செய்து –
வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அக்தே -திருவாய்மொழி -4-3-2-என்கிறபடியே
வாசிக அனுசந்தானத்தாலே திருப் பரியட்டம் சாத்தி –
பூசும் சாந்து என் நெஞ்சமே -திருவாய்மொழி 4-3-2- என்கிறபடியே மானஸ அனுசந்தானத்தாலே சாத்துப்படி சாத்தி –

தேசமான அணி கலனும் என் கை கூப்புச் செய்கையே -திருவாய்மொழி -4-3-2- என்கிறபடியே புரையற்ற அஞ்சலியாலே
திரு வாபரணம் சாத்தி –

நாடாத மலர் -திருவாய்மொழி -1-4-9- என்றும் –
விண்டு வாடா மலர் -திருவாய்மொழி -9-10-3- என்றும் –
இனமலர் எட்டும் இட்டு -பெரிய திருமொழி -1-2-7-என்றும்
கந்த மா மலர் எட்டும் இட்டு –பெரிய திருமொழி -3-5-6- என்றும் சொல்லுகிற ஆனுகூல்யத்தாலே திருமாலை சாத்தி –

(அடிக்கடி எட்டு மலர்கள் -அஹிம்சா ப்ரதமம் இத்யாதி -என்பக்கர் பூவும் கொணர்ந்தேன் -அஷ்ட வித கல்யாண குணங்கள் ஸூசிதம்)

பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்க துலகே -திருவாய்மொழி -5-2-9- என்கிற
அனுசந்தானத்தாலே தூபம் கண்டருளப் பண்ணி
மாடு விடாது என் மனன் -பாடும் என் நா -ஆடும் என் அங்கம் -திருவாய்மொழி -1-6-3-
என்கிறபடியே பக்தி ப்ரேரிதமான ந்ருத்த கீத வாத்யம் கண்டருளப் பண்ணி

கர்த்ருத்வ நிவ்ருத்த பூர்வகமான அனுசந்தானத்தாலே –
அஹம் அன்னம் -என்கிறபடியே அவனுக்கு போக்யமாக்கி
அஹம் அந்நாத -என்கிறபடியே தானும் புஜித்து
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே யிருக்கின்றாரே -பெரிய திருமொழி -7-4-2-என்கிறபடியே
இப்படி உணர்த்தின ஆசார்யன் விஷயத்திலே க்ருதஜ்ஞதா  அனுசந்தானத்தோடே தலைக் கட்டுகை –

இருபத்து நாலுபேரில் ஐஞ்சு பேர் க்ராமணிகள்(கண் காது மூக்கு வாய் த்வக் -ஞான இந்திரியங்கள்)
இவ் வைவர் கூடே கூடாதார் ஐஸ்வர்யம் இது
இவ் வைவரோடும் கூடினார் இமையாத கண்-முதல் திருவந்தாதி -32-(ஞானக் கண்) – பறி யுண்டு விடுவார்கள் –

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே -15-என் நெஞ்சிலே உண்டான அன்பன்று –நெஞ்சு என்ற பேராய்-பகவத் ப்ரேமமே வடிவாய் இருக்கிற அன்பாலே
ஜ்ஞானம் ஆகிற திரு மஞ்சனத்தாலே நீராட்டுவன் –அந் நீருக்கு சம்ஸ்காரம் இறே அன்பு –அங்குத்தைக்கு யோக்யராவது அடியார் ஆனால் போலே காணும் –

பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;

ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-இவருடைய பாவ பந்தம் அவனுக்கு பரிமளிதமான அங்க ராகமே யாயிற்று-வழக்கனான மாலை அன்றிக்கே ஆதரித்துச் சூடும் மாலை –என்னுடைய யுக்தி மாத்திரமே-இவர் நெஞ்சிலும் பரிமளிதம் யாயிற்று இவர் வாக்கு -வாக்கான மாலை இறே -சாந்துக்கு பூக்கட்டி இறே மணம் கொடுப்பது-இவர் அவனுக்கு என்று சொல்ல வேண்டா; இவர் உண்மையாகில் அவனுக்கேயாய் இருக்கும்; ஆதலின், ‘எனதுடைய’ என்கிறார்.-இவர் நெஞ்சினைக் காட்டிலும் வாக்குப் பரிமளம் விஞ்சி இருக்கும் போலே காணும்.-சாந்து மணம் கொடுப்பது பூவை அணிந்த பின்பே அன்றோ? ஆஸ்ரித கர ஸ்பர்சம் விரும்புவன் அன்றோ -இவர் அவனுக்கு என்று சொல்ல வேண்டாமே-ஆழ்வார் எனக்கு சொன்னாலும் அவனுக்கே -நாம் அவனுக்கே சொன்னாலும் நமக்கே –-நான் -அஹம் -மாறாடி அன்றோ இருக்கும்
நானே அவர் தனம் ஆன பின்பு என்னுடையது எல்லாமே உன்னுடையதே-ஓன்று ஒரு போக உபகாரணமாகை தவிர்ந்து -அவனுக்கு பும்ஸவதாவஹமான பரிவட்டமும் என் யுக்தி யாவதே-பெரு விலையனான திருப் பரிவட்டம்–நெஞ்சின் பெருமை வாசகத்தாலே தானே தெரியும் –அந்தச் சொற்கள் தாமே புருஷோத்தமனாம் தன்மைக்கு அறிகுறியான பரிவட்டமும்.-இவருடைய பா, நல்ல நூல் ஆதலின், வான் பட்டாடை ஆயிற்றுக்காணும்;
‘நல்ல நூலாக வேண்டும்’ என்று அடியிலே நோற்று நூற்றவர் அன்றோ
?தேஜஸ் கரமான திரு ஆபரணமும் என்னுடைய அஞ்சலி யாவதே-ராஜ மஹேந்த்ரன் படி போலே இவருடைய அஞ்சலி அவனுக்கு உத்கர்ஷ ஹே துவாய் இருக்கிற படி-சேரபாண்டியன் தம்பிரானைப் போன்று, அவனுக்கு ஒளியை உண்டாக்கா நின்றது இவருடைய அஞ்சலி.அத்விதீயமான திரு மேனியை உடையவனுக்கு-சர்வ கந்த என்கிற விக்கிரஹத்தை உடையவனுக்கு பூசும் சாந்து என் நெஞ்சம் ஆவதே என்கிறார் –என்னுடைய உறுப்புகளின் காரியங்களான – நினைவு முதலானவைகளே எல்லாவற்றாலும் நிறைவுற்று விளங்கும்-இறைவனுக்கு இன்பப் பொருள்கள் எல்லாம் ஆயின,’ என்கிறார்.

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று

வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ
ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே –1-4-9-அபி நிவேசத்துக்கு ஈடாகத் தேட வரிதான புஷ்பங்களைத் தேடி –எண்டிசையும் உள்ள பூக் கொண்டு -என்னுமா போலே–‘ஆத்தும புஷ்பத்தைச் சொல்லுகிறது’-விச்சேதியாத படி-கிஞ்சித் கரித்து-ஸ்வரூபம் பெரும் வஸ்துவுக்கு விச்சேதம் ஸ்வரூப ஹானி இறே-சர்வ ஸ்வாமி யானவனுடைய ஏக ரூபமான செவ்விப் பூ போலே இருந்துள்ள திருவடியின் கீழே-அகிஞ்சித்கரமான வன்றும் விட ஒண்ணாத படி நிரதிசய போக்யமான திருவடிகள்-ஸ்ருஷ்டச்த்வம் வன வாசாய -என்னுமா போலே இதுக்காக வாயிற்று இவனை உண்டாக்கிற்று-வைக்க-சேர்க்க–ஆக, இப்படி வகுத்ததுமாய், சுலபமுமாய்-நிரதிசய போக்யமுமான – எல்லை இல்லாத இனிய பொருளுமாய் உள்ள திருவடிகளிலே- சர்வவித கைங்கர்யங்களையும் – எல்லா வகைத் தொண்டுகளையும் செய்யவாயிற்று இதனை உண்டாக்கினான்சேஷ பூதனுக்கு கிஞ்சித் காரத்தாலே ஸ்வரூப லாபம் ஆனால் போலே சேஷிக்கும் கிஞ்சித் கரிப்பித்து கொண்டு அத்தாலே இறே ஸ்வரூப சித்தி

தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே–9-10-3-அலரத் தொடங்கின அளவாய் கழிய அலர்ந்து வாடாத பூ – –ஈஷத் விகசிதம் –செவ்விப் பூவைக் கொண்டு வணங்கும் கோள்-ஆஸ்ரயிங்கோள்-

கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய கறி வளர் கொடி துன்னி
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்றடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே —1-2-7-அஹிம்ஸாதிகளான  புஷ்பங்கள் எட்டும் இட்டு(அஹிம்சா-பிரதமம் இந்திரிய நிக்ரஹம் சர்வ பூத ஹிதம் ஷமா தானம் தபஸ் த்யானம் சத்யம் -அஷ்ட விதம் விஷ்ணுவுக்கு பிரிய தர்மம் )அன்றிக்கே செங்கழுநீர் செண்பகம் இருவாட்சி பாதிரி புன்னை குறுக்கத்தி கருமுகை தாமரை என்றாப் போலே பிரதானமாய் இருப்பன எட்டும் ஆதல்-அஷ்டாங்க பிரணாமத்தை சொல்லுதல் ஆதல் –மனஸ் புத்தி அஹங்காரம் தலை கால்கள் கைகள்-அத்தை மலர் என்னும்படி என் –என்னில் பூவோபாதி அவனுக்கு ஸ்ப்ருஹா விஷயமாய் இருக்கும் ஆகில் இறே –சூட்டினேன் சொன் மாலை -என்னுமா போலே –அன்றிக்கே கீழில் திரு மொழியில் திரு மந்த்ரம் பிரஸ்துதம் ஆகையாலே திரு வஷ்டாஷரத்தை சொல்லிற்று ஆதல் –

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6-கந்த வத்தான விலஷண புஷ்பங்கள் எட்டையும் இட்டு –அவை யாவன – கருமுகை -கற்பகம் -நாழல் -மந்தாரம் -சௌகந்தி -செங்கழுநீர் – தாமரை -கைதை –ஸ்வாபதேசம் – பரம போக்யமான திரு மந்தரத்தால் பிரதிபாத்யமான வஸ்துவின் பக்கலில் தன்னை சமர்ப்பித்து –-சர்வ கந்த -என்கிற வஸ்து ஆகையாலே – உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான சிவந்த திருவடிகளை கையாலே தொழுது உஜ்ஜீவிக்க வேணும் என்னும் அத்யவாசாயத்தை உடைய என்னுடைய ஹிருதயத்திலே –

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-
–வேதத்தில் அவன் விபூதி விஷயமாகப் பரக்குமவற்றை அன்றிக்கே, அசாதாரண விக்கிரஹத்திலும் குணங்களிலும்
ஸ்வரூபத்திலுமாகப் பரந்திருக்கிற ஸ்ரீ புருஷ சூக்தாதிகளை நாக்கிலே கொண்டு.
நாவில் கொண்டு -நாவினால் நவிற்று -அஹ்ருதயமாக சொன்னதை அடியாருக்கும் பகவருக்கும் கொள்ளாமல் நமக்குக் கொள்வதே பொருந்தும் -இவர்கள் நாவிலே கொண்டு மனத்தோடு படாமல் சொன்னால் அதனை மனத்தொடு பட்டதாகக் கொண்டு “
அவர்களை விட மாட்டேன்” என்னுமவன்.–பக்தியினாலே தூண்டப்பட்டுச் செய்கின்ற காரியங்களில் ஒன்றும் தப்பாமல்.-ஞானம்’ என்கிறது, ஞான விசேஷமான பக்தியை.பூவோடு கூடின புகையையும் -ஸமாராதன த்ரவ்யங்களையும் மிகுத்து –அநந்ய பிரயோஜனராய் தொழும் கைங்கர்ய நிஷ்டரும் –பகவரும் -அதுக்கு ஷமர் அன்றிக்கே குண அனுபவம் பண்ணும் குண நிஷ்ட்ருமாய்க் கொண்டு லோகம் அடங்க சம்ருத்தம் ஆயிற்று –கிடந்த இடத்தே கிடந்து குண அனுபவம் பண்ணும் ஸ்ரீ பரத ஆழ்வானையும்-தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும் போலே இருக்குமவர்கள் –உலகம் அடைய என்றபடி.-ஆதலால், நீங்களும் மேவித் தொழுது உய்ம்மின் என்க.

ஈடும் யெடுப்புமிலீசன் –மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3-
அவன் பரிசரத்தை விடுகிறது இல்லை என் மனஸ்சானது பிரயோஜனத்தைப் பற்றிக் கிட்டிற்று ஆகில் இறே பலத்து அளவிலே மீளுவது நான் அதிகரித்த காரியத்துக்கு நெஞ்சு ஒழிகிறது இல்லை
உம்முடைய அஹ்ருதமான உக்தியே அமையாதோ எங்கள் ஹிததுக்கு என்ன–‘நா இயலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்’ என்பது அன்றோ உம்முடைய தன்மை?
ஆதலால் உம்முடைய மனத்தோடு படாத சொற்களே அமையாதோ எங்களுடைய நலனுக்கு?’ என்ன,-என்னுடைய வாக்கானது அவனுடைய குண பிரதிபாதிதமான காதா விசேஷங்களைப் பாடா நின்றது-உம்முடைய ஹஸ்த முத்ரையே அமையாதோ எங்களுக்கு அர்த்த நிச்சயம் பண்ணுகைக்கு என்ன-என்னுடைய சரீரமும் தைவாவிஷ்டரைப் போலே ஆடா நின்றது–அதுவும் அவன் விஷயத்திலேயே பிரவணம் அன்பு கொண்டதாயிற்று.-தம்முடைய கரணங்கள் தனித் தனியே மேல் விழக் கண்ட ப்ரீதியாலே –என் மனன் -என் நா -என் அங்கம் -என்று உகக்கிறார் –

அம் புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-நித்ய வசந்தமாய் ஸ்ரமஹரமான பொழிலை உடைத்தாய் இருக்கிற திருச் சேறையிலே-ஸ்பர்தையாலே ( போட்டியாலே )ஆகாசத்தைத் தள்ளுகிறாப் போலே இருக்கிற கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனுடைய திருவடிகளைத் தொழுவார் –எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே –((ஸ்ரோதவ்ய -மந்தவ்ய -நிதித்யா சி தவ்ய-த்ரஷ்டவ்ய
கேட்டு ஆராய்ந்து இடை விடாமல் சிந்தித்து காண 
)நிதித்யாசி தவ்ய-என்கிற விஷயத்துக்கு இடம் காண்கிறிலேன்  –

—————————-——————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .