ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
பிரபத்தி -பக்திக்கு அங்கமாகவும் ஸ்வயம் சாத்யமாகவும் உண்டே-ஸ்வயம் பிரயோஜனமாக பக்தி அதுக்குப் பின்பும் உண்டு-ஸம்ஸார ஸ்வ பாவம் கண்டு அஞ்சி -கால விளம்பம் பொறாமல் ஆற்றாமை துடிக்க – அருளிச் செய்கிறார்-தொல்லை யூழி சுருங்கலதே – காலம் நெடுகிக் கொண்டே போகிறதே –
இம் மாயம் -ஆச்சர்யம் –திருவடியைத் தலையிலே சூட -தலை வேணுமே -அதுக்கு நோன்பு நோற்றுப் பெற வேண்டுமே –சரீரம் இதனால் உபாதேயம் ஆகுமே -ஆக்கைக்கு நோற்றது-சரீரம் நிலையாதே -32-திரு நக்ஷத்ரம் தானே இங்கே இருந்தார் –-பக்தி பெற நோன்பு என்று கொண்டு -தகைமைக்கு நோற்றது -சம்சாரத்தில் பக்தியும் நிலை நில்லாமல் -ரஜோ தமஸ் மூடுமே –முக்குண மய ப்ரக்ருதி அன்றோ –
நிலைப் பெய்யாத -இது ஆக்கைக்கும்-பக்திக்கும் – தன்மைக்கும் -பிரபாக ப்ராப்ய பரமாக இரண்டு நிர்வாஹங்கள்-குரவை ஆய்ச்சியர் -6–4–விவரணம்-குறைவில்லாமல் அருளிச் செய்து-மாய வினைகளையே அலற்றி இரவும் நன் பகலும் தவிராமல் -அங்கும் உண்டே–நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-மகிழ்ந்து அருளிச் செய்த திருவாய் மொழி அங்கு –
அவதாரிகை –-என் ஞான்று தலைப் பெய்வனே -என்று இறே கீழ் நின்றது –-என்றாகில் என் –
பகவத் ஸ்பர்சம்-பலத்தோடு சந்திப்பித்து விடும் -என்று விஸ்வசித்து இருக்கும் அத்தனை அன்றோ -என்ன –அப்படி செய்யலாய் இற்று இறே -சம்சாரிகளைப் போலே நிரபேஷன் ஆனேன் ஆகில் எனக்கு உன்னை ஒழிய கால ஷேபம் பண்ணுகை அரிதாக நின்றது என்கிறார் –இப்பாட்டில் சொல்லுகிறது என் என்னில்-உன் திருவடிகளை சமாஸ்ரயிக்கைக்கு ஈடாக-இருப்பதொரு சரீரத்தை பெற்ற படியையும் –
அது தான் அஸ்த்ரமாய் இருக்கிறபடியையும் -அனுசந்திக்கப் புக்கால் –அத்தாலே வந்த ஆற்றாமையாலே -காலம் நெடுகா நின்றது என்னுதல் –அன்றிக்கே-உன்னை ஒழிய வேறு ஒன்றால் தரியாத படியான ஸ்வபாவத்தை பெற்றான படியையும் –(ஸ்வ பாவம் -பக்தி -இது பெற சரீரம் வேண்டும் இங்கு அது இரண்டாம் பக்ஷம் )இது தான் பிரகிருதியோடு இருக்கச் செய்தே வந்த ஸ்வபாவம் ஆகையாலே –இது தானே ஏக ரூபம்-அன்றிக்கே -இருக்கிற ஆஸ்ரயத்தை அனுசந்திக்கப் புக்கால்
இதுக்கு காலம் போருகிறது இல்லை-என்றது ஆதல் –(மண் பற்று போல் -ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும்-மங்க ஒட்டு உன் மா மாயை என்று உபதேசிக்க வேண்டிற்று-இத்தைத் தள்ளியே அழைத்துப் போவார்-விமல சரம திருமேனி -ஸ்ரீ வைகுந்ததில் உள்ளாருக்குக் காட்ட அபிநிவேசம் அவனுக்கு –
விண்ணுளாரிலும் சீரியர் அன்றோ-ஆகவே சரீரத்துக்கு முக்கியம்-ப்ரக்ருதி கார்யமான பிராகிருதம் -அஞ்சு சேர் ஆக்கை-இது தான் -ஸ்வ பாவம் இங்கு -ஏக ரூபமாக இருக்காதே)
இப்படி ஆர்த்தரான இவரை ஆஸ் வஸிப்பிப்பதாக-நம் பக்கலிலே நீர் ஆபி முக்யம் பண்ணி நம்மை ஆஸ்ரயிக்கைக்கு ஹேதுவான-விலக்ஷண சரீரத்தைப் பெற்றீர்-நம் பக்கலிலே நிரதிசய ப்ராவண்யம் உண்டாயிற்று-முக்திஸ் தஸ்ய கரே ஸ்திதா என்று பக்தி யுடையார்க்கு பிராப்தி கைப்பட்டது அன்றோ என்று ஈஸ்வரன் தன் திரு உள்ளக் கருத்தைப் ப்ரகாசிப்பிக்க-இதுக்கு முன்பு நின்ற நிலையை நிரூபித்தால் விளம்பம் பொறுக்கிறது இல்லை என்கிறார்-இதுவும் தலை மகள் ஆற்றாது உரைத்தலாகவுமாம்-
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை-இவ்விடம் பொறாமைக்கு மூன்று ஹேது யுண்டு –
இதில் அத்தை அருளிச் செய்கிறார்
தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு அசுரர் குழாம்
தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே – 90–தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாது உரைத்தல் –தலைப் பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்-பெய்தி பாட பேதம்-
அசுரர் குழாம்–அசுரர் கூட்டத்துக்கு
தொலைபெய்த–அழிவைப் பண்ணின
நேமி–சக்கராயுதத்தை யுடைய
எந்தாய்–எம்பெருமானே!
யான்–நான்
தலைப்பெய்து–(யான் உன்னைச்) சேர்ந்து
நிலைப்பு எய்த–நிலைப்பெற்றிருக்கும்படியாக
ஆக்கைக்கு–இவ்வுடம்பைப் பெறுதற்கு
நோற்ற–தவஞ்செய்த
இ மாயமும்–இந்த ஆச்சர்யத்தையும்
உன் திரு அடி–உனது திருவடித் தாமரை மலர்களை
சூடும்–(எனது) தலைமேற் கொள்ளும்படியான
தகைமையினால்–அடிமைக் குணமாகிய தகுதியினால்
மாயம் செவ்வே நிலைப்பு எய்திலாத நிலைமையும்–இந்த ஆச்சரியம் ஒருபடியாக நிலை
நின்று முடிவு பெற மாட்டாத நிலைமையையும்
காண் தோறு–நோக்கும் போதெல்லாம்
தொல்லை ஊழி சுருங்கலது–பழமையான (அநாதியான காலம் சுருங்குகிறதில்லை)
குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள்
இரவு பகல் என்னாமல் என்றும் பரவு மனம்
பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன்
சொல் தேனில் நெஞ்சே துவள் —54–மாசறு சோதி-5-3–மானேய் நோக்கு -5-9–பிறந்தவாறு–5-10-என்கிற திருவாய் மொழிகளிலே-சேணுயர் வானத்து இருக்கும் –5-3-9- நாராயணன் நாமங்களே தொல் அருள் நல் வினையால் சொலக் கூடும் கொல் –5-9-10–உருக்கி உண்டிடுகின்ற உன் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய்–-5-10-10-என்று தூரஸ்தன் என்றும்-நா நீர வரத் திரு நாமம் சொல்லக் கூடவற்றே -என்றும்
தரித்து நின்று குண அனுபவம் பண்ண வல்லேனாம் படி பண்ண வேண்டும் என்றும்
தாம் ஆசைப் பட்ட வகைகள் எல்லாம் சித்திக்கும் படி தான் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திரு வவதரித்து
செய்து அருளின நிகில சேஷ்டிதங்களையும்-தத் ஹேதுவான திவ்ய குணங்களையும்
அனுபவ விஷயமாக காட்டிக் கொடுக்க-அவற்றைக் கட்டடங்க தரித்து நின்று மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற குரவை ஆய்ச்சியில் அர்த்தத்தை குரவை முதலாம் இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் –அமுத மென் மொழி யாகையாலும்–தேனே இன்னமுதே -5-1-2–என்று பேசப் படுமவன் விஷயம் ஆகையாலும்-தேன் போலே இனிதாய் இறே இத் திருவாய்மொழி தான் இருப்பது
தலைப் பெய்து –உன்னை வந்து கிட்டி –நான் – அறக் கை கழிந்த நான்-உன் திருவடி இத்யாதி –
உன் திருவடிகளை ஆஸ்ரயிக்கை ஆகிற இஸ் ஸ்வ பாவத்தாலே தரிப்பதான சரீரத்தைப் பெறும்படி –
ஜன்மாந்த்ரத்திலே ஸூஹ்ருதத்தை பண்ணின ஆச்சர்யம் –மாயம் செவ்வே நிலைப்பெய்திலாத நிலைமையும் —மாயம் உண்டு –இப் பிரகிருதி –இது என்றும் ஒக்க ஒரு படிப்பட்டு இராதே இருக்கிற இஸ் ஸ்வபாவத்தையும் காண்டோறும் –அன்றிக்கே –தலைப் பெய்து -இத்யாதி –நான் உன்னை வந்து கிட்டி உன் திருவடிகள் ஒழிய வேறு ஒன்றால்-தரியாத படியான இஸ் ஸ்வ பாவத்தை உடையேனாய் கொண்டு – நான் இதிலே நிலை நின்ற ஆச்சர்யத்தையும்- ஆக்கைக்கு நோன்ற இம் மாயமும் –ஜன்மாந்தர சகஸ்ரேஷூ -என்று நோற்றால் இறே-இஸ் ஸ்வ பாவம்-பிறப்பது –ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி இருக்கச் செய்தே -இறே-இஸ் ஸ்வ பாவம் தான் உண்டாவது –ஆகையால் தாத்ருச சரீர பரிக்ரஹமும் -அந்த பக்திக்கு உறுப்பாம் இறே –இந்த யோஜனையிலும்-க்ரியாகாரக பாவேன அன்வயிக்கும் இடத்தில் –ஆக்கைக்கு நோற்ற -என்கிற இதுவே விசேஷ்யமாய் கொண்டு-பிரதானமாய் -தோற்றிற்றே யாகிலும் –திருவடி சூடும் தகைமையினால் -நிலைப் பெய்க -என்கிற இஸ் ஸ்வபாவ பரமான விசேஷணாம்சத்திலே வாக்யத்துக்கு தாத்பர்யமாய் – அதுவே பிரதானமாகக் கடவது –மாயம் செவ்வே யித்யாதி –அச் சரீரம் தான் குண த்ரய உக்தமாய் இருக்கையாலே ரஜஸ் தமஸ்ஸூக்கள் தலை எடுத்த போது –இஸ் ஸ்வ பாவம் (இப்பக்தி- தகைமை )இன்றிக்கே -சத்வம் தலையான போது உண்டாமது ஆகையாலே –என்றும் ஒக்க ஒருபடிப் பட நிலை இல்லாதே இருக்கிற இந்த ஆச்சர்யத்தையும் –காண்டோறு –அனுசந்திக்கும் தோறு எல்லாம் –இத்தையே முடிய அனுசந்தித்துப் போந்தார் என்று-தோற்றுகிறது –அசுரர் இத்யாதி –அசுரர் சமூகத்தை தொலையும்படி பண்ணின திரு ஆழியை உடைய என் ஸ்வாமி யானவனே –இத்தால் –நீ -அசக்தனாய் ஆதல் —அப்ராப்தனாய் ஆதல் —
நாம் செய்தது நாம் பட்டோம் இத்தனை அன்றோ -என்று தான் ஆறி இருக்கிறேனா –தொல்லை இத்யாதி –பழையதான கல்பம் சுருங்குகிறது இல்லை -நெடிதாக நின்றது –அன்றிக்கே இந்த ஆச்சர்யத்தை அனுசந்திக்கப் புக்கால் –தொல்லை ஊழி யானது சுருங்கலை-உடைத்தாய் இரா நின்றது –காலம் போருகிறது இல்லை –இப்படி சமர்த்தனான நீ ஸ்வாமியாக இருக்க எனக்கு இப்படி வீணாக காலம் கழிவது பொறுக்கப் போகிறது இல்லை -என்று சர்வேஸ்வரனைக் குறித்து முறை இடுகிறார் –
ஆற்றாமையால் காலம் மிக தோன்றுகிறதே –சுருங்கலதே-சுருங்குகிறது இல்லை -இப்படியே என் காலம் கழிந்து விடுகிறதே-நோற்ற விம்மாயமும்-பூர்வ ஜென்ம தவ பலனாகவே நாயகனைப் பெற இயலும் –உன் திருவடிகளில் அடிமையால் அல்லது செல்லாத படியான சரீரத்தைப் பெற்ற படியையும்-அப்படி இருக்கச் செய்தே-அவ்வடிமையை இழந்து இருக்கிற இருப்பையும் அனுசந்திக்கக் காலம் போருகிறது இல்லை -என்கிறார் -அப்பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள்-ஆயிரம் ஜென்மங்கள் செய்த நோன்பின் பயனாகவே ஸ்ரீ வைஷ்ணவ ஜென்மம் கிட்டும்-மாயம் செவ்வே-நிலைப் பெய்திலாத நிலைமையும்-இந்த ஆச்சர்யம் ஒரு படியாக நிலை நின்று முடிவு பெற மாட்டாத நிலைமையையும் -அன்றிக்கே-இவ்வுடம்பு நிலை இல்லாது இருக்கும் தன்மை -என்றும் பிரகிருதி சம்பந்தத்தால் இருப்பதால் உண்டான சேஷத்வம் நிலை பெறாமல் சளிக்கக் கூடிய தன்மையையும் என்றுமாம் –
திருவடிச் சூடும்-கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே–அசுரர் குழாம்-தொலைப் பெய்த நேமி எந்தாய் -என்னுடைய பிராப்தி பிரதிபந்தகங்களைப் பாற்றுதல் உமக்கு ஒரு கார்யமோ –நாயகனைப் பிரிந்த நாயகி பிரிவுக்கு ஆற்றாது உரைக்கும் பாசுரம் இது. நான் உன்னை யணுகி உனது திருவடிகளைத் தலைமேற்கொண்டு வழிபடும்படியான இவ்வுடம்பைப் பெறுதற்கு நல்ல தவஞ் செய்து வைத்திருந்தும் அப்பேறு முட்ட மூடியக்கை கூடாமல் இடையில் நீங்குதலை ஆலோசிக்குமிடத்து ஆற்றாமையாற் காலம் மிக நெடுகித் தோன்றுகிறது-என்பது இப்பாட்டின் தேர்ந்த கருத்து. ‘சுருங்கலது’ என்பதற்கு சுருங்குகிறதில்லை என்று எதிர்மறையாகப் பொருள் கொள்வதன்றியே‘சுருங்குதலை யுடையது’ என உடன்பாடாகப் பொருள் கொள்வதாயின், இப்படியே என் காலங் கழிந்து விடுகிறதேயென்று இரங்கியபடியாம்.-பூர்வ ஜந்மங்களில் மிக்க பெருந்தவஞ் செய்திருந்தாலன்றி, இப்படிப்பட்ட அரிய பெரிய நாயகனைப் பெறுதல் இயலாதாதலால் ‘நோற்ற இம்மாயம்’ என்றது “உள் திருவடிகளில் அடிமையாலல்லது செல்லாதபடியான சரீரத்தைப் பெற்றபடியையும், அப்படியிருக்கச செய்தே அவ்வடிமையை இழந்திருக்கிற இருப்பையும் அநுஸாந்திக்கக் காலம் போருகிறதில்லை யென்கிறார்’ என்பது அப்பிள்ளையுரை.–ஸர்வேச்வரனைச் சரணமடைந்து அவன் திருவடிகளையே வணங்கி அத்திருவடிகளே பேற்றுக்கு உபாயமென்று அத்யவஸாயங் கொள்வதற் குறுப்பான இவ்விலக்ஷண சரீரத்தைப் பெற்றிருப்பதையும் அப்படி பெற்றிருந்தும் பூர்ணாநுபவம் கிடைத்திடாமலிருப்பதையும் நோக்குமிடத்துக் காலதாமதம் பொறுக்க முடியவில்லை யென்று ஆழ்வார் கலங்கியுரைத்தாயிற்று.–‘மாயம் செவ்வே நிலைப்பெய்திலாத நிலைமை’ என்பதற்கு- இவ்வுடம்பு நிலையில்லாத தாயிருக்குந் தன்மையென்றும், ப்ரக்ருதி ஸம்பந்தத்தோடியிருக்கையில் உண்டான அடிமைக்குணம் ரஜோகுண தமோகுண ஸம்பந்தத்தால் நிலைப்படாது சலிக்கக்கூடியதன்மை என்றும் உரைப்பர்.-‘திருவடி’ என்றதற்கு ‘திருவடித் தாமரை மலர்’ எனப் பொருளுரைத்தது ‘சூடும்’ என்றதற்கேற்ப.“கோலமாமென் சென்னிக்கு உன் கமலமன்ன குரைகழலே” என்ற திருவாய் மொழி காண்க.-ஆயிரம் ஜந்மஙக்ளிற் செய்த நோன்பின் பயனாகவே ஒரு ஸ்ரீவைஷ்ணவ ஜன்மம் கிடைப்பதாக ப்ராப்திப்ரதிபந்தகங்களைப் பாற்றுதல் உனக்கொரு பெருங்கார்யமோ? என்பதற்காக ‘அசுரர்குழாந் தொலைப்பெய்தநேமி யெந்தாய்!’ என விளிக்கப்பட்டது.–தலைப்பெய்து + யான், தலைப்பெய்தியான்; “யவ்வரினிய்யாம்” என்பது நன்னூல். தலைப்பெய்தலென்பது ஒரு முழுச்சொல்.
தலைப் பெய்தி (பெய்து) யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும்-பகவத் அனுபவ ப்ரஸங்கம் அற்று இருக்கிற நான் உன் திருவடிகளை
கோலமாம் என் சென்னிக்கு -(திருவாய் –4-3-6-)என்று சிரஸா வஹிக்கும் படியான சேஷத்வமாகிற ஸ்வபாவத்தாலே கிட்டி திருவடிகளே பிராப்தி ஸாதனம் என்று நிலை பெறுகைக்கு உறுப்பான இந்த சரீரத்தைப் பெறுகைக்கு உன்னுடைய கிருபை யாகிற புண்யத்தை நோற்று வைத்த இந்த ஆச்சர்யத்தையும்-(ஸூ ஹ்ருத தேவர் யார் -முதலிகள் ஐதிகம்-தனக்கும் தெரியாமல் ஸாஸ்த்ரமும் அறியாமல் -எனது அடியாருக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் ஸாஸ்த்ர வேத்யனான புறப்பாடு கண்டு அருளும் அவனே அறிவான்)-மாயம் செவ்வே நிலைப் பெய்திலாத நிலைமையும்-கிருபா லாபம் ஆகிற ஆச்சர்யம் ஒருபடிப்பட நிலை நின்று நடத்தித் தாராதே நிற்கிற படியையும்–காண் தோறு-பார்க்கும் தோறும்–அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய்-அஸூர ஸமூஹங்களுக்கு முடிவைப் பண்ணின திருவாழியை யுடைய என் ஸ்வாமி யானவனே–தொல்லை யூழி சுருங்கலதே –விரோதி நிவ்ருத்திக்குக் காலம் பார்க்க வேண்டாமையாலும் பரிகரம் தேட வேண்டாமையாலும் பிராப்தி விளம்பிக்கைக்கு ஹேது இல்லாமையால் முன்பு பழையதாக அகன்று போந்த காலத்தோடு
ஸஜாதீயமான ஆகாமி காலமானது கல்ப ஆகாரமாய்க் கொண்டு வளர்ந்து வரையிட்டுக் காட்டுகிறது இல்லை என்று அருளிச் செய்தார் ஆயிற்று
இதில் இங்கனே அந்வயம்-உன் திருவடிச் சூடும் தகைமையினால்-நிலைப்பெய்த யான் தலைப்பெய்த
வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு
அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே –என்று–உம்மை விட்டு இங்குப் பொறாமைக்கு அடியேனுடைய நிஜ ஸ்வபாவம் ஒரு ஹேது-இப்போதாக வந்தேறின ஆக்கைக்கு தேவரீர் ஸங்கல்பித்த ஆச்சர்யமும் ஹேதுவாம்-பகவத் ஸ்வரூப திரேதாந கரீம் -சத்யத்ரயம் என்று தொடங்கி அருளிச் செய்தபடி-ஸ்வ விஷய போக்ய புத்தி ஜனனியான ப்ரக்ருதியானது
ஸ்வ பர ஸ்வரூப யாதாம்ய அநு குண ஞான ப்ரவ்ருத்திகளை நிலை நிற்க ஹேதுவாம்-உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும்-தகைமை என்று ஸ்வ பாவம்
இடை விடாதே த்வதீய புக்தோஜ்ஜித -ஸ்தோத்ர ரத்னம் -42-இத்யாதி யுக்த விதனாய் உன் திருவடிகளில் கீழ் இருப்பதை நிலை நின்ற யான் இங்கனே இங்கு இருப்பைப் பொறுத்து இருக்க ஒட்டுமோ என்றபடி-தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் எனக்கு இப்போது வந்தேறினதான இத்தேஹத்துக்காக தேவரீர் நோன்பு நோற்றதே -ஸங்கல்பித்ததே -என்றபடி–இந்த ஆச்சார்யம் இன்னம் எத்தனை அநர்த்தத்துக்கு ஹேதுவோ என்று
ஏங்கப் பண்ணுமது அன்றி இங்கனே இங்கு இருப்பைப் பொறுத்து இருக்க ஒட்டுமோ என்றபடி-மாயம் செவ்வே நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு-மயாத்யஷேண ப்ரக்ருதி –ஸ்ரீ கீதை -9-10-என்று உன்னால் புகழப்பட்ட மாய ப்ரக்ருதி யானது ஸ்வரூப யாதாத்ம்ய அநு குண ஞான ப்ரவ்ருத்திகளை நிலை நிற்க ஒட்டாத நியத ஸ்வ பாவம் யுடையது என்பதும்–இத்தேஹத்தில் அகப்பட்ட எனக்கும்-ராஜ்யாத் பிரம்ஸோ வநே வாஸே –ஆரண்ய -67-24-என்னும்படி பிரிந்து பட்ட உனக்குப் போலே அதி பயாவஹம் ஆகையாலே இங்கனே இங்கு இருப்பைப் பொறுத்து இருக்கப் போமோ என்றபடி-இம்மூன்றையும்-காண் தோறு-பார்க்கும் தோறும்–அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய்-அஸூர வர்க்கத்தை உரு அழிக்கும் திருவாழியை ஏந்தின அழகாலே என்னை ஆண்டு கொண்டவனே-தொல்லை யூழி சுருங்கலதே-உன்னையே அனுபவித்தும்-உனக்கே அடிமை செய்தும் கழிந்த யாவதாத்ம உபக்ரமமாய் இந்நாள் வரைக்குள்ள காலம் எல்லாம் நாம் அங்கனே இருந்தோமோ
அங்கனே இருந்தது அத்யல்ப காலங்கள் என்றே போனதாகா நின்றதே-ஆகையாலே
எஞ்ஞான்று தலைப்பெய்வன் என்று இங்கு இருப்பைப் பொறாமையால் ஜலாதுத் த்ருத மத்ஸ்யம் போன்று இரா நின்றேன் என்கிறார் –
தாத்பர்யம்
இதில் சர்வேஸ்வரன் தன்னுடைய கைங்கர்யத்துக்கு உபயோகியான சரீரத்தையும்-தன்னிடம் உள்ள பக்தியும் அருளிய பின்பு பேறு தப்பாது என்று விஸ்வசித்து இல்லாமல் இவற்றின் அஸ்திரம் பார்த்து அலமந்து கூப்பிடுகிறார்-இங்கு தகைமைக்கும் ஆக்கைக்கும் முக்யத்வம் கொண்டு இரண்டு நிர்வாஹங்கள்-பக்திக்கு ஆக்கை எதுக்கு-ஆக்கை சரீரம் பக்தி எதுக்கு-ஒன்றுக்கு முக்கியம் கொடுக்க அடுத்தது அமுக்கியம்-இரண்டுமே வேண்டுமே -சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் போல்
நான் உன்னைக் கிட்டி உனது திருவடிகளை தலையில் வைத்து கொண்டால் அல்லது தரிப்பது அரிது ஆற்றாமையுடைய இந்த சரீரத்தை அநேக பிறவிகளில் அநேக தவம் செய்து பெற்றும்-இனி வரையில் உன்னைக் காணப் பெற்றிலேன்-இனி காணும் அளவும் இவை ஸ்திரமாக இருக்காவே-சரீரம் மின்னின நிலையில -மன்னுயிர் ஆக்கை-இனி மறு பிறவியில் உன்னை ஆஸ்ரயிப்போம் என்னில்-அங்கு பக்தி நிலைக்க வேண்டுமே -அதுவும் சங்கை உண்டே-அதி துர்லபமான மானுஷ்ய தேஹம் -க்ஷண பங்கி
அது பெற்றாலும் முக்குண மயமான இங்கு சத்வகுண கார்யமான பக்தி இருக்க வேண்டுமே அவ்வளவு துர்லபம்-இப்பிறவியில் இப்போதே பெற வேண்டும்-இவ்விதமாக பாதங்களை நினைத்துப் பார்க்க
உன்னைப்பெறாத இக்காலம் கல்பமாக நெடுகி உள்ளதே-நாதனான நீயோ ஆஸ்ரித விரோதி நிரசன நீயும் ரக்ஷண தீஷிதனாயும் உள்ளாய்-இப்படி இருக்க வீணாக காலம் பெருகுவது பொறுக்கப் போவது இல்லை என்று சர்வேஸ்வரன் இடம் முறை இடுகிறார் –
6-4-குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்-ப்ரவேஸம்–
இத் திருவாய்மொழியில் ஆழ்வார் ஸ்ரீ வால்மீகி பகவானோடு ஒப்பர்.
அவனும் இராமாவதார மல்லது போக்கி அறியான்; அவனுடைய பிரபந்தமும் அப்படியே.
இவரும் கிருஷ்ணாவதாரம் அல்லது அறியார்;
இத் திருவாய்மொழி கிருஷ்ணனுடைய சரிதை ஒழிய வேறு ஒன்றைச் சொல்லாது.
அன்றிக்கே,
“சூரனே! என் எண்ணமானது வேறு இடத்தில் செல்வது இல்லை” என்று கொண்டு
‘பர நிலையும் கூட வேண்டேன்’ –
“ஸநேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி”- என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16.
என்ற திருவடியைப் போலே யாயிற்று இவரும் கிருஷ்ணாவதாரம் ஒழிய வேறு ஒன்று அறியாதபடி என்னுதல்.
“சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான்” -5-3-9-என்கிறபடியே, கிட்டி நின்று அநுபவிக்கப் பெற்றிலோம் என்கிற இழவு தீர,
பூமியிலே ஆகப் பெற்றது;-அவதரித்து என்றபடி –
“தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங் கொல்?” -5-9-10-என்றே யன்றோ இவர் ஆசைப் பட்டது.
அதாவது,
நா நீர் வந்து திருநாமம் சொல்லுகையாகிறது புண்ணியத்தின் பலமே அன்றோ.
“பிறந்தவாறும்”-5-10- என்ற திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான இழவு எல்லாம் தீரும்படி
ஸ்ரீ பிருந்தாவனத்தில் நடந்த செயல்களைக் காட்டிக் கொடுக்கக் கண்டு,
அவை இறந்த காலத்தில் நடந்த செயல்கள் போலத் தோற்றுகை அன்றிக்கே,
சம காலத்தில் நடக்கும் செயல் போலே தோற்றக் கிட்டி நின்று அனுபவிக்கிறார்.
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, ‘அல்லோம்’ என்று அகன்று முடிந்து போகப் புக்க தம்மை
‘ஆவோம்’ என்னச் செய்து சேரவிட்டுக் கொண்டபடியை நினைத்து,
இப்படி வல்லார் இவன் அல்லது இலர் கண்டீர்-6-3- என்று தலைக் கட்டுகிறாரா யிருக்கிறது.
(இப்படி 5-3- தொடங்கி 6-3 -இவ்வாறு தலைக்கட்டி இத்திருவாய் மொழி என்கிறார் ஆயிற்று )
“சன்மம் பல பல”-3-10- என்ற திருவாய்மொழியிலும் இப்படி இருப்பது ஓர் உவகை உண்டே;
அதற்கும் இதற்கும் வாசி என்? என்னில்,
அங்கு, இதர வியாவிருத்தி மாத்திரத்தால் உண்டான ஞான லாபத்தால் உண்டான உவகை;
இங்கு, அவன், தன் குணங்களை நேரே இவரை நெருங்கி அநுபவிப்பிக்க,
தம் வசப்பட்டவர் அல்லாதபடி அநுபவித்து உவகையராய் வாய் விடுகிறார்.
சன்மம் பல பல-3-10-அவதார சேஷ்டிதங்கள்
பிறந்தவாறும் -5-10 -அவதார சேஷ்டிதங்கள்
6-2/6-4- நேரே சங்கதி -6-3- பிராசங்கிகம்-சேர மாட்டேன் என்றவரை சேர்த்த வ்ருத்த கடநா சாமர்த்தியம் இடைச் சேர்க்கை
4-10-/5-2—நேரே சங்கதி –5-1- போலே – உபகார பரம்பரை சொல்லி அருளியது போலே –
சேஷத்வம் பாரதந்த்ர்யம் மறந்து -இருப்பதே ஆழ்வார் தம் வசம் இல்லை –
எனக்கு நிகர் யார் -ஸ்வாதந்த்ர்யம் தோன்ற அருளிச் செய்கிறார்
கிருஷ்ணானுபவம் இப்படி பண்ண வைக்கிறதே –
நாலாம் திருவாய் மொழியில் -கீழ் விருத்த விபூதி யோகத்தால் தன் அகடி கடநா சக்தியைக் காட்டி -பல பிரதான சமர்த்தன்
என்கிற பிரதிபத்தியைப் பிறப்பித்த ஸர்வ ஸ்மாத் பரனுடைய ஸூக மத்வ ஸூச நார்த்தமாக
அவனுடைய அனந்த ஸாயித்தவத்தையும்
ஆச்சர்ய ஆகாரவத்தையும்
அதிசயித உஜ்ஜ்வல்யத்தையும்
அப்ராக்ருத விக்ரஹவத்தையும்
அர்த்திகளுக்கு அபேக்ஷிதா கரத்வத்தையும்
அந்நிய அபிமான நிவர்த்தகத்வத்தையும்
அதிசயித போக்ய ஆகாரத்தையும்
அர்த்தியாயும் அபேக்ஷிதம் தலைக் கட்டிக் கொள்ளூம் படியையும்
அசாதாரண சிஹ்ன யோகத்தையும்
பரஞ்சோதி ஸ்வரூபவத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகாரனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய மநோ ஹரியானா அகில சேஷ்டிதங்களையும் இங்கே இருந்து
அனவரத அனுபவம் பண்ணப் பெற்ற எனக்கு ஆர் இனி நிகராவர் என்று ஹ்ருஷ்டராய்க் கொண்டு
அவனுடைய ஸூப ஸூகத்வத்தை ப்ரதிபாதித்து அருளுகிறார் –
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-
பிறந்தவாறும்” என்றாற் போலே தொடங்கி ஓர் அவதாரம் முன்னாக இழியாமல், இதிலே இழிவான் என்? என்னில்,
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் உண்டான தம்முடைய பிரணய ரோஷத்தினைப் போக்கித் தம்மைச் சேர விட்டுக் கொண்டபடி,
திருக் குரவைக் கூத்தில் பெண்களோடே கலந்து அவர்களை அநுபவிப்பித்தாற் போலே இருக்கையாலே, அது முன்னாகப் பேசுகிறார்.-நாம் அநுசந்திக்கில் அன்றோ ஓர் அடைவாக இழிவது!-அவன் அநுபவிப்பித்தபடியே பேசுகிறாராகையாலே திருக் குரவைக் கூத்தினை முதல் முன்னம் பேசுகிறார் -திருக் குரவையில் பெண்களோடு உண்டான கலவியையாயிற்று இவர்க்கு முதலிலே காட்டிக் கொடுத்தது.-ஐந்து லக்ஷம் குடிகளிலுள்ள பெண்கள் எல்லாரோடும் கலந்த பிரீதி உண்டாயிற்று, இவர் ஒருவரோடு கலந்து பிரீதி.-குரவை பிணைந்த குழகும்” என்று ஆசைப்பட்டபடியே அநுபவிக்கிறார்.-திருக்குரவையில் இவனை ஒழியப் பெண்களுக்குச் செல்லாதது போலே காணும்
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில், ஆழ்வாரை ஒழிய இவனுக்குச் செல்லாமை விளைந்தபடி,
பூமியிலே ஒரு பருவத்திற் பெண்களோடே கூடப் பூர்ணமாக அநுபவித்திருக்கிற இருப்பைக் கண்டு அது பொறுக்க மாட்டாமையால் பொறாமை மிக்கு, ‘நமக்கு இட்ட சோற்றை உண்டான்’ என்று ஒரு வியாஜமாகக் கல் மழையைப் பெய்வித்தான்;
அப்போது கைக்கு எட்டிற்று ஒரு மலையை எடுத்துத் தரித்துக் கொண்டு நின்ற படி.-இப்படி அநுபவிக்கிறான் சர்வேஸ்வரன்’ என்று அறியான் அன்றோ;
இவன், தன்னை மனித சஜாதீயன் ஆக்கிக் கொண்டு இருக்கையாலே.-அன்றைய தினத்தில் கல் மழையில் பசுக்களுக்கும் இடையர்க்கும் வந்த ஆபத்தைத் தீர்த்தாற் போலே யாகாதே,
இவர்க்கும் “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் வந்த ஆபத்தைத் தீர்த்தபடியும்.
உள் பட மற்றும் பல –-இவை முதலான செயல்களுக்கு ஓர் எண் இல்லை.
“பிறந்தவாறும்” என்ற திருவாய்மொழியில், வலிமைக் குறைவாலே சொல்ல மாட்டிற்றிலர்;
இங்கு, உகப்புத் தலை மண்டை யிட்டுச் சொல்ல மாட்டுகிறிலர்.
மற்றும், இப்படிப் பெண்களுடைய கலவிக்குத் தண்ணீர்த் துரும்பு அறுத்தவை பலவாம்.
அரவில் பள்ளிப் பிரான் –நாட்டார் உறக்கம், தமோ குணத்தால் மறைக்கப்பட்டதாய்த் தங்கள் பொருட்டேயாய் இருக்கும்;-இவன் உறக்கம் பிறருடைய ரக்ஷணத்தின் பொருட்டு இருக்கும்.
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் அல்லனோ.-திருவாய். 5. 4 : 11.–
உறங்கினானாகில் பிறருடைய ரக்ஷணத்துக்கு உடலாயிருக்கும்;
உணர்ந்திருந்தானாகிலும் அப்படியே; இது என்ன உபகாரந்தான்!
அரவில் பள்ளிப் பிரான் –-மேலே, ஒரு பாம்போடு உண்டான சேராமை சொல்லிற்று;
இங்கு, ஒரு பாம்போடு உண்டான சேர்த்தி சொல்லுகிறது.
அங்கு, போகத்தைக் காற் கடைக் கொண்டமை சொல்லிற்று;-இங்கு, போகப் பிராவண்யம் சொல்லுகிறது.-போகம் -பாம்பு -இனிமை-பிரதிகூலனான காளியனைப் பறக்க ஓட்டினான்;
அநுகூலனானவனைப் படுக்கையாகக் கொண்டான்.-இவன் தான் -அநந்த முகமாக -பல பல முகமாக அநுகூலிக்கும்;-அவனும்-அநந்த முகமாக – பல பல முகமாக அடிமை கொள்ளும்.
அரவில் பள்ளிப் பிரான்-அவதாரங்களுக்கு அடி திருப்பாற் கடலாகையாலே அதனைச் சொல்லுதல்;-அன்றியே,“நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்” –திருவாய். 5. 10 : 11.என்றதனை நினைக்கிறாராதல்.
அநுபவத்திற்குத் தக்கதான காலமாகையாலே, நல்ல இரவும் நல்ல பகலும் என்கிறார்.
பிரிந்த காலத்திலே அன்றோ நெருப்பை உருக்கி ஏறட்டினாற் போலே இருப்பது,
என்ன குறைவு எனக்கே –-“அங்குக் காலம் பிரபுவாய் இல்லை” என்று கொண்டு பகலும் இரவும் நடையாடாதது ஒரு தேச விசேடம் தேடி அநுபவிக்கைக்குப் பட்டைப் பொதி சோறு கட்ட வேண்டும்படி குறைவாளனா யிருந்தேனோ?-ஒரே தன்மையதான அநுபவம் அன்றோ அங்கு உள்ளது;-அந்த அந்தக் காலங்கள் தோறும் உண்டான அநுபவ விசேடங்களை அநுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு குறை உண்டோ?
அன்றிக்கே,-பரத்துவ அநுபவமே அன்றோ அங்கு உள்ளது;-சீல குண அநுபவமுள்ளது இங்கே அன்றோ. ஆதலின் “என்ன குறைவு எனக்கே” என்கிறார் என்னுதல்.
(ஒரே திவ்ய தேசம் அங்கு இங்கு பஹு வாக உள்ளவை அன்றோ )
—————-
கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.–6-4-2-
கேயம் தீம் குழல் ஊதிற்றும் – தான் நினைத்த பெண்களுடைய பெயரை வைத்துப் புணர்த்துச் சுவைப் பாட்டாக வைத்து ஊதிற்றும்.-கேயம் – பாட்டு. தீம் – இனிமை. இனிமையை யுடைய பாட்டு என்றபடி.-இதுக்கும் பசு மேய்க்கைக்கும் ஒன்றே பரிகரம்.–குழலை ஊதவே பசுக்கள் வயிறு நிறையும்-சக்கரவர்த்தித் திருமகனுக்கு வில் கை வந்திருக்குமாறு போலே யாயிற்று, கிருஷ்ணனுக்குக் குழல் கை வந்திருக்கும்படி.-இது வைஸ்ய வர்ண தர்மம் -அது ஷத்ரியன் வர்ண தர்மம்-
பசு மேய்த்து வந்த சிரமம் எல்லாம் போகும்படி நப்பின்னைப் பிராட்டி இளமை பொருந்திய அழகிய திருக் கண்களாலே குளிர நோக்கி அழகிய திருக் குழலின் பரிமளத்தாலே திருமேனியை வாசனை யுடைய தாம்படி ஆக்கித் தன் தோள்களோடே அணைத்ததுவும்.-“தோளி”சேர் பின்னை-இவளுக்கு அழகு கை விஞ்சி யிருக்குமே.-
சக்கரவர்த்தித் திருமகனுக்கு அத்யயநம், ஆசாரிய சேவை, அஸ்திர சஸ்திரப் பயிற்சிகள் உண்டாமாறு போலே,-இவனுக்கு-பெண்களை அழைக்கை மற்றும் பல-
மற்றைப் பிராட்டிமாரோடு கலந்த படி.
மாயக் கோலப் பிரான்-நப்பின்னை பிராட்டியாரோடே கலவியால் வந்த ஒற்று மஞ்சளும் மாளிகைச் சாந்துமான அத்யாச்சர்யமான ஒப்பனையை யுடையனாய் -உபகார சீலனானவனுடைய-கிருஷ்ண சேஷ்டிதங்களை நினைத்து அத்தாலே நெஞ்சு நெகிழ்ந்து
எனக்கு எவ் வுலகம் நிகர் – ஒரு தேச விசேடத்தில் தான் எனக்கு ஒப்பாவார் உளரோ?
அநுபவ வேளை போலே நினைக்கின்ற காலத்திலும் இனிமையோடே செல்லக் கடவதானால் எனக்கு எங்கே ஒப்பு?-ஆகாச வாயர் எனக்கு எதிரோ!
( ஆகாசம் கிடைக்குமா பார்த்து இருக்கும் சம்சாரிகளைச் சொல்லிக் கழிக்கக் கூடாதே )
வாய் – இடம். பரமாகாசம் என்கிற பரம பதமாகிற இடத்திலுள்ளார் தாம் எனக்கு ஒப்பாரோ!!
உலகம் என்பது, உயர்ந்தோராகையாலே நித்திய ஸூரிகள் என்றபடி.
பிரார்த்தித படி பெற்றதால் பரம பதத்திலும் சமம் தனக்கு இல்லை என்கிறார்-
——————
நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மாகளிறு அட்டதும் இவைபோல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக் கென்னினி நோவதுவே–6-4-3-
மல்லரோடே கூட எல்லா அவயவங்களும் பொருந்தி போர்த் தொழில் செய்ய நிற்கச் செய்தே, சாத்தின சாந்து குறி அழிந்தது இல்லை காணும்.
கூனி சாத்தி விட்ட உடனே பெண்கள் கண்களாலே இலச்சினை இட்டு விடுகையினாலே இவனால் அழிக்கவும் போகாதே அன்றோ.
இவர்கள் கண்களாலே இலச்சினை இடுகையாவது, அவன் தோள்களிலே சேலும் கயலும் இடுகை அன்றோ.
இவன் மல்லரோடே சேர்ந்து அழித்தானாகிலும், ‘மற்று எங்கேனும் அழித்தான்’ என்றே அன்றோ அவர்கள் இருப்பார்கள்.-இதனை அழித்துப் போனானாகில், பின்பு பெண்கள் கோஷ்டிக்கு ஆளாகானே.
க்ஷத்திரியப் பிறவிக்கு ஈடாம்படி மல்லரோடே போர் செய்தான்;-ஆயர் பிறவிக்கு ஈடாம்படி பசுக்களை மேய்த்தான்.-பசுக்களை மேய்த்த போதை ஆயாச மாகாதே, மல்லரோடு பொருத போதும் உள்ளது
சிகர மாகளிறு அட்டதும்-பர்வத சிகரம் போலே உரத்து பெருத்து இருக்கிற குவலயா பீடத்தை நிரசித்ததும்-இவை போல்வனவும் பிறவும்-இவை போலே மற்றும் உண்டான கேசி நிரசன நாதிகளும்-புகர்கொள் சோதிப் பிரான்-விரோதி நிரசன த்தாலே ஒளி பெற்ற தேஜஸ் ஸூ –உபகார சீலன்
எனக்கு என் இனி நோவதுவே –‘காலம் நெடுகுவது குறுகுவது ஆகாத இடந் தேடி அநுபவிக்கப் பெற்றிலேன்’ என்கிற அதிருப்தி யுண்டோ எனக்கு என்கிறார்.
அன்றிக்கே,-அவனுக்கு வரும் நோவன்றோ, இவர்க்கு நோவாவது; அது கழியப் பெற்ற தன்றோ என்னுதல்.
இவர் நோவு போக்கும் அவனுக்கு வரும் நோவன்றோ,-சம்சார ரஷண்ம் -பலிக்காததே அவனது நோவு – ரஷிக்க இசைவதே அவன் நோய்க்கு பரிகாரம் –
இவர்க்கு நோவாவது: அது போகவே இவர்க்கு நோவு போயிற்றதாமன்றோ.-உயிருக்கு வரும் நோவு உடம்புக்கு வரும் நோவாமன்றோ.-
—————-
நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4-
ஆய்ச்சி உரலோடு நோவ ஆர்க்க இரங்கிற்றும் –-சீயர், இத் திருப் பாசுரத்தை இயல் அருளிச் செய்ய புக்கால் “நோவ”என்று அருளிச் செய்யும் அழகு காணும்.
‘நோவ என்கிறார் காணும் ஆழ்வார், தம் திரு மேனியிலே கயிறு உறுத்தினாற் போலே.’
ஒரு துவேஷம் உண்டாய்க் கட்டுகிறாள் அல்லளே, சிநேக காரியமான கோபமாகையாலே
சிநேகமுள்ள அளவும் இடை நிற்கும் -சத்ருசமாக -அன்றோ கோபமும்.
தாய் எடுத்த சிறு கோலுக்கு -8-3-5-உளைந்து ஓடியன்றோ, விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான்;-வாய் விட்டு அழ மாட்டாதது அன்றோ இவரை வருத்துகிறது.
“தறியார்ந்த கருங்களிறே போல நின்று தடங்கண்கள் பனி மல்கும் தன்மையானை” என்கிறபடியே,-ஒரு மத்த யானையைத் தறியோடே சேர்த்தாற் போலே காணும் இவன் கட்டுண்டு நின்ற நிலை.
ஓர் அபலை கட்டின கட்டு அவிழ்த்துக் கொண்டு போக மாட்டாதே, நின்று அழுகையே இயல்பாய் இருந்தபடி.-“வல்லையாகில் போய்க் காணாய்” என்றாள் அன்றோ.
(அகாரம் கட்டி வைத்து ஆகாரம் கட்ட போனாள் அன்றோ பஹு குடும்பிநி )
யசோதைப் பிராட்டியின் முலை உண்ணும் போதும் தான் உயிர் பெற உண்ணுமாறு போலே காணும், இவள் முலை உண்கிற போதும் தான் உயிர் பெற முலை யுண்டபடி; ஆதலின், ‘உண்டதும்’ என்கிறார்.(அவள் உயிரை தான் பெரும் படி இங்கு )
தேவக் கோலப் பிரான் – மனிதர்களை ஒத்து நின்று செய்யவும் பெற்றதில்லையே.
அதி பால்யத்திலே செய்த செயலாகையாலே அப்ராகிருதமாய் இருப்பதோர் ஒப்பனை போலே இருக்கிறபடி.-தன் செய்கை நினைந்து மனம் குழைந்து மேவக் காலங்கள் கூடினேன் –அவனுடைய செயல்களை நினைத்து அகவாய் உடை குலைப்பட்டு
வேறு பிரயோஜனம் இல்லாதவனாய்க் கொண்டு காலம் போக்கப் பெற்றேன்.
நெஞ்சு நெகிழ்ந்து செயல்களோடே பொருந்தும்படி காலங்களைக் கூடப் பெற்றேன்.
எனக்கு என் இனி வேண்டுவது – இனி அடையத் தக்கது ஒன்று இல்லை என்கிறார்.-
—————-
வேண்டித்தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம் புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம்செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல்உளதே?–6-4-5-
தந்தையாக அடைய வேண்டும் என்று விரும்பி-இச்சையாலே-இரக்கிறவர்கள் அளவு பார்த்தல், தன்னளவு பார்த்தல் செய்கை யன்றிக்கே வந்து பிறந்தபடி காணும் இவரை வருத்துகிறது.-தான் இரப்பாளனாய்க் காரியம் செய்யுமவன், பிறர் இரந்தால் பொறுக்க மாட்டானே யன்றோ.
இருளாலே அன்றோ நாம் பிழைத்தது.-இனி, இந்த இருளைச் சரணம் புகுமித்தனை அன்றோ’ என்று பிள்ளை யுறங்கா வில்லி தாசர் பணிப்பாராம்.
“ஊர் எல்லாம் துஞ்சி” -5-4-என்ற திருவாய்மொழியில், கூற்றமான இருள், இப்போது இவர்க்கு ஆதாரத்துக்கு விஷயமாயிற்று அன்றோ.
அங்கு ஓர் ஆய்க் குலம் புக்கதும் – அந்த நிலையிலே இடையிலே வளருகைக்கு ஓர் அஞ்சினான் புகலிடம் உண்டாவதே! ஆய்க்குலம் – ‘கம்சன் பாதகன்’ என்று பயப்பட அறியாதவர்கள். ‘குடி வாய் உடன் பட இருந்தானாகில் இருக்கிறான், இல்லை யாகில் உழக் கோலாலே தகர்க்கிறோம்’ என்று இருப்பர்கள்.
தேவகியாரைப் போலே சமகாலத்தே இருந்து பயப்படாதே, இப்போது பயம் கெட்டு இருந்து அநுபவிக்கப் பெற்றேன்.-கம்சனை முடித்த படியை இன்று இருந்து அநுபவிக்கப் பெற்ற எனக்கு இனி ஒரு மிடி இல்லை-எனக்கு என்ன இகல் உளதே-கம்சன் பட்ட பின்பு எனக்குப் பகைவர்கள் உண்டோ?-இகல் – பகை.-பகவத் விமுகர்களே சத்ருக்கள் -அவர் ஆணைக்கு எதிராக செயல் படுபவர்கள் எனக்கு சத்ரு –
————-
இகல்கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும்பல
அகல்கொள்வைய மளந்த மாயன் என்னப்பன்தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்பரிப்பே.–6-4-6-
பகல் இராப் பரவப் பெற்றேன் – நாட்டார் அபிமத விஷயங்களை அநுபவிப்பதற்குப் ‘பகல் இரா’ என்று கூறிட்ட காலம் இரண்டும்-இந்த விஷயத்திலே அநுபவிக்கப்பெற்ற எனக்கு,
இரவு பகல் புறம்பே விஷயங்களை அனுபவிப்பாருடைய மனோ துக்கம் உண்டோ?
பரிவு – துக்கம்.-அதிலே ஒரு ஒற்றெழுத்து ஏறினாலும் அந்தப் பொருளையே காட்டக் கடவது.பரிவு என்கிறதை சந்தஸ்ஸூ க்குச் சேர பரிப்பு என்கிறது-
————
மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய்முடி மாலை மார்பன்என்னப்பன்தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7-
நாட்டாரை அழுக்கு உடம்பு கழிக்குமவன் தான் கண்டீர் அழுக்கு மானிடச் சாதியில் வந்து பிறந்தான்;-குழந்தை கிணற்றிலே விழுந்தால் எடுக்க வரும் தாய் நெஞ்சு நொந்து வந்து எடுக்குமாறு போலே-குற்றங்களுக் கெல்லாம் எதிர்த்தட்டான தான் பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்ய திருமேனியோடே கர்ப்பத்தில் வாசம் செய்து அவதரித்தானாதலின் ‘தான் பிறந்து’ என்கிறது.
அன்றிக்கே,-பிறப்பதற்குக் கர்மம் செய்து வைத்தவரும் கூட அருவருக்கும் பிறவியிலே கண்டீர்-கர்மத்துக்கு வசப்படாத தான் பிறந்தது என்பார் ‘தான் பிறந்து’ என்கிறார் என்னுதல்.
இதற்கு அடி பரம கிருபை அன்றோ.-அப்படிப் பிறந்தால் ஒருபடிப் பட்டிருக்கப் பெற்றோமோ! இரண்டு தோள்களுடையவனா? நான்கு தோள்களுடையவனா?” என்னும்படியன்றோ பட்ட படி.-தான் வேண்டிய உருவம் அப்ராக்ருத சமஸ்தான விக்ரகம் –
அடியார்கள் வேண்டிய உருவம் என்றுமாம் –இச்சையால் எடுத்தவை-
அடியார்களுடைய விரோதியைப் போக்கினானாய் இருக்கை யன்றிக்கே,
தன் சினம் தீர்ந்தானாய் இருக்கை;-தாயானவள், குழந்தையை நலிந்தவர்களைத் தான் நலிந்து தன் சினம் தீருமாறு போலே.-புனம் துழாய் முடி மாலை மார்பன் என் அப்பன்-
அடியார்களுடைய விரோதிகளைப் போக்கித் திருமஞ்சனம் செய்து ஒப்பித்து,
திருமேனியின் பரிசத்தாலே தன் நிலத்தில் நின்றாற் போலே செவ்வி பெற்று இருக்கின்ற
திருத்துழாய் மாலையினைத் திரு முடியிலும் திருமார்பிலுமுடையவனாய்,
அந்த ஒப்பனையாலே என்னை எழுதிக் கொண்டவன்.-பொதுவாகை யன்றிக்கே, அவனுடைய ஆச்சரியமான செயல்களையே அநுசந்திக்கும் நெஞ்சை யுடையேன்.
எனக்கு நீள் நிலத்தில் யார் நிகர்--பூமி பரப்பை யுடைத்து என்னா, எனக்கு ஒப்பாவார் உளரோ?-பரமபதத்தை ஒன்றாக நினைக்கின்றிலர்; தம்மைப் போலே கவி பாடி அடிமை செய்வார் இல்லாமையாலே, சம்சாரத்தே இருந்து கவி பாடி அடிமை செய்யப் பெற்ற எனக்கு, பூமியில் ஓர் எதிர் உண்டோ? என்கிறார்.-
————–
நீணிலத்தொடு வான்வியப்ப நிறை பெரும் போர்கள்செய்து
வாண னாயிரம் தோள்துணித்ததும் உட்பட மற்றும்பல
மாணியாய்நிலம் கொண்ட மாயன் என்னப்பன்தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-
சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றின தோள்களைக் கழித்தபடி.
‘இவன் கர பாதை ஆற்ற மாட்டாமல் கண்டார் கால்களில் எல்லாம் குனிந்து திரியா நின்றான்’ என்று அந்தக் கரத்தைக் கழித்து விட்டான்.
‘கை கழியப் போய்ச் சிவனை அடைந்தான், இவன் கர பாதை ஆற்றாமை’ என்று அதனைப் படைக்கு -திரு ஆழிக்கு –-அடைத்து விட்டான். –இவர் கை சக்கரம் கழிய போய் அவன் கைகளை கழித்தான்–வேறு தெய்வத்தைப் பற்றிக் கையிலே பலம் பெற்று விட்டான்.
பகவானைப் பற்றுவதற்குக் கைம் முதல் இல்லாமை விட்டான் அன்றே.
(கை முதல் -மூல தனம் இல்லை -ஆயிரம் கை கொடுத்தான்-அஞ்சலி பண்ணாததால் -கை தப்பிற்று -கைகள் போனது )
கண்ணழிவற்ற அழகாலும்,-வரையாதே எல்லாரையும் தீண்டுகையாலும்,
அடியார்கள் விஷயத்தில் ஓரத்தாலும்,-செய்யும் ஆனைத் தொழில்களாலும்
கிருஷ்ணாவதாரத்தோடு ஒத்திருக்கையாலே, ஸ்ரீ வாமனாவதாரத்தை அநுபவிக்கிறார்.
நிலம் கொண்ட மாயன் என் அப்பன் –-திரு உலகு அளக்க’ என்று ஒரு வியாஜத்தை இட்டு அளந்து கொண்டது தம்மை என்று இருக்கிறார்.-மநோ வாக் காயங்கள் -சிந்தை சொல் செயல் மூன்றையும் கொண்டானே –
அப்பன் தன் மாயங்களே காணும் நெஞ்சுடையேன் – ‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற் கூறிய கரணங்களை யுடைய ஆழ்வார் ஆகையாலே, நெஞ்சு தானே நினைக்கவும் வற்றாய்க் காணவும் வற்றாயிருக்கும் என்று பிள்ளான் பணிப்பர்” என்று அருளிச் செய்வர்.
அன்றிக்கே,-‘கட்கண்’ என்றும், ‘உட்கண்’ என்றும் சொல்லுகிறபடியே,
நெஞ்சு தன்னையும் கண்ணாகச் சொல்லக் கடவதன்றோ; அது ஆகவுமாம்.
கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும்
உணர்ந்து”-(பெரிய திருவந். 28.)– என்பது, ஈண்டு அநுசந்தேயம்–
எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே –-‘இந்த விஷயத்தைக் காணப் பெற்றிலோம்’ என்கிற கலக்கம் எனக்கு உண்டோ?
அன்றிக்கே,-வேறு தெய்வங்கள் ‘ரக்ஷகர்’ என்று இருக்கிற கலக்கமும்,
ஈஸ்வரனுடைய ரக்ஷணத்திலே ஐயப்படும் கலக்கமும்,
‘தானே தனக்குக் கடவன்’ என்னும் கலக்கமும் இல்லை என்னலுமாம்.
என் நான் செய்கேன் -யாரே களை கண் -என்னை என் செய்கின்றாய் போலே –
உபாய அம்சத்தில் கண் வைக்காமல் பிராப்ய அம்சத்தில் கண் வைத்து-கைங்கர்யமே யாத்ரையாக போக வேண்டும் –
———-
கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?–6-4-9-
வைதிக புத்திரர்களை இந்தத் தேசத்தினின்று கொண்டு போருகையும், போன செவ்வியிலே கொடு வந்து கொடுக்கையும், காலையில் செய்ய வேண்டிய யாக காரியங்களைச் செய்து முடித்த பின்பு மத்தியானத்தில் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வதற்கு முன்பு இவை அடங்கலும் செய்கையும்.
வலம் கை ஆழி இடம் கைச் சங்கம் இவை யுடை மால் வண்ணனை மலக்கு நாவுடையேற்கு –
இவ்விடத்தைப் பட்டர் அருளிச் செய்யா நிற்கச் செய்தே கஞ்சனூரில் இருந்தவரான வண்டுவரைப் பெருமாள் என்பவர்,-மால் வண்ணனை ‘மலக்கு நாவுடையேன்’ என்ன அமையாதோ? ‘வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை’ என்று விசேடித்ததற்குக் கருத்து என்? என்ன,
“சோளேந்திர சிங்கனை உளுக்காக்கப் பண்ணுகிறேன் என்கிறார் காணும்” என்று அருளிச் செய்தார்.-சோளேந்திர சிங்கன்’ என்பது, நம் பெருமாளுடைய யானை. உளுக்காக்க – இருக்கும்படி. என்றது சர்வேஸ்வரனாகிற மத்த யானையானது பணிந்து கொடுக்கும்படி செய்கிறேன் என்கிறார் என்றபடி.
அறப் பெரியவனுக்கு லக்ஷணம் அன்றோ சங்க சக்கரங்கள்.-“ஒன்றிலும் ஆசை இல்லாதவன், மௌனமாக இருப்பவன்”-“அவாக்யநாதர:” என்பது, சாந்தோக்யம். 3 : 14.-என்கிற சர்வாதிக வஸ்துவைக் கலங்கச் செய்யும் நாவீறுடையேன் என்கிறார்.
மலக்கும் நாவுடையேன் – இவர் வார்த்தையில் கலங்குமவனன்றோ அவன் தான்.
இவர் கலங்கிச் சொல்லச் சமைந்தாற் போலே யன்றோ அவனும் கலங்கிக் கேட்கச் சமைந்தபடி.-இம் மண்ணின் மிசை மாறு உளதோ –-பரம பதத்தில் அநுபவம் வாய் புகுநீர் ஆகையாலே அதனை ஒன்றாக நினைத்திருக்கின்றிலர்.-இனி, உண்டாகில் பூமியிலே; அதிலும் இல்லை என்கிறார்.-தரித்து நின்று அனுபவம் இங்கே தானே –
அன்றிக்கே,-‘ஒப்பு உண்டு, இல்லை’ என்று ஐயங்கொள்ளுகைக்குத் தான் விஷயமுள்ளது நித்திய விபூதியிலே யன்றோ? ஆதலால், ‘இம் மண்ணின் மிசை மாறுளதோ?’ என்கிறார் என்னுதல்.
———–
மண்மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர்பாரத மாபெரும்போர்
பண்ணிமாயங்கள் செய்துசேனையைப் பாழ்படநூற் றிட்டுப்போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதிதன்தாள்
நண்ணி நான்வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க –-‘விஸ்வம்பரை’ என்றும், ‘க்ஷமை, பொறை’ என்றும் பெயர்களை யுடைத்தாய்த் தாங்கக் கூடியதான பூமியாலும் பொறுக்க ஒண்ணாதபடி அன்றோ துர் வர்க்கம் திரண்டபடி,
பரமபதத்தில்-“எந்தப் பரம பதத்திலே பழையர்களான சாத்தியர் என்கிற தேவர்கள் வசிக்கிறார்களோ” என்கிறபடியே, கனத்தார் உண்டாயிருக்கச் செய்தேயும், பாரம் இல்லை அன்றோ அகங்கார சம்பந்தமுடையார் இல்லாமையாலே. “யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:” என்பது, புருஷ ஸூக்தம்.
இங்குப் பாரம் என்கிறது, மக்கள் பாரம் அன்று; யான் எனது என்னும் செருக்கே பாரம் என்றபடி.-தங்கள் பாரத்தினை அவன் தலையிலே வைத்திருக்குமவர்களன்றோ அவர்கள்
பகைவர்களை அழித்ததற்கு மேலே அன்றோ-இவர்கள் இருந்த நிலத்தில் இராமல் பரம பதத்திலே போய்ப் புகப் பெற்றபடி என்று உகக்கிறார்.-பொய்யாசனம் இடுவார், பரிபவிப்பவர் இவர்களையுடைய இந்த நிலத்தை விட்டுப் பரிவரேயான பரம பதத்து ஏறப் போகப் பெறுவதே!
ஒரு தீர்த்தத்தின் அன்று நாயிறு -அஸ்தமன காலம் -போது ஆண்டானும் எம்பாரும் தங்களிலே சந்தித்து,-“யான் எனது என்னும் செருக்கினால் மலினமாக்கப் பட்டவராயிருப்பார் பத்துக் கோடி பேர் நடுவே,-அதி சுகுமாரமான திருமேனியைக் கொண்டு பத்து நாள் எழுந்தருளி, அபாயம் இல்லாமல் புக்கருளப் பெற்றபடி கண்டதே!” என்று
ஒருவரை ஒருவர் தண்டன் இட்டுத் தழுவிக் கொள்ளா நிற்கக் கண்டேன் என்று சீயர் அருளிச் செய்வர்.
எனக்கு நாயகர் பிறர் ஆர் – அவனுடைய அவதாரம் தொடக்கமாக, நடுவுள்ள அபாயங்களைத் தப்பி அடியார்களை வாழ்வித்துத் தனக்கு அமர்ந்த நிலத்தே போய்ப் புக்கபடி யளவும் அநுபவிக்கப் பெற்ற எனக்கு ஆர் தான் நியமிக்கின்றவர்கள் என்கிறார்.“பயிலும் திருவுடையார் யவரேலும்” என்றதனை மறந்தார் போலே இருந்தது.
அன்றிக்கே,-அவர்களைப் பிறராக நினையாரே யன்றோ என்னலுமாம்.-
————————–
நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே.–6-4-11-
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன – கேசி என்னும் அசுரனைக் கொன்ற சர்வேஸ்வரன் திருவடிகளிலே. “மேல் திருவாய் மொழியிற் சொன்ன சர்வேஸ்வரத்வத்தையும், – இத் திருவாய்மொழியிலே, கேசியைக் கொன்றவனான கிருஷ்ணனுடைய அவதாரத்தையும் அநுபாஷித்துத் தலைக்கட்டுகிறது” என்று சொல்லுவர்.–நாயகன் —6-3 சுருக்கம் –கேசவன் -6-4- சுருக்கம்-
‘நாயகன் முழுவேழ் உலகுக்குமாய்” என்றது முதல் “அவையல்லனுமாய்” என்றது முடிய,
“நல் குரவும்” என்ற திருவாய்மொழியிற் கூறிய சர்வேஸ்வரத்தையும்,
“கேசவன்” என்றதனால், இந்தத் திருவாய்மொழியிற் கூறிய கிருஷ்ணனுடைய செயல்களையும் அநுவதித்துத் தலைக் கட்டுகிறார் என்றபடி.
அன்றிக்கே,-எல்லா உலகங்கட்கும் காரணன் கிருஷ்ணனே” என்கிறபடியே, கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல்,,“க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிசாப்யய: க்ருஷ்ணஸ்ய ஹிக்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்” என்பது, மஹாபாரதம் சபாபர். 38 : 23.
இப் பத்தினையும் கற்றவர்கள் ஆழ்வாரைப் போலே ஆவர்.-துவள் இன்றியே பத்தர் ஆவர் –
துவள் – குற்றம்.-அதாவது பரத்வத்திலே நெஞ்சு செல்லுகை-குற்றம் இல்லாமையாவது, -அத்தை தவிர்ந்து-வேறு அவதாரங்களில் போகாமல் கிருஷ்ணனுடைய செயல்களிலே தாழ்தல்.-திருவடி ஸ்ரீ ராமாவதாரத்தில் பிரவணராய் இருக்குமா போலே-
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –