Archive for the ‘கம்பராமாயணம்’ Category

சங்கத் தமிழும் சநாதன தர்மமும்-

June 7, 2026

உலகம் உண்ட பெருவாயன்; [திருவாய் 6 – 10 – 1] பாலனாய் ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி ஆல் இலையில் அன்னவசம் செய்யும் அண்ணல் அவன் [திருவாய் 4 – 2 – 1]–“பிறப்பில் பல்பிறவிப் பெருமான்” [திருவாய் 2 – 9 – 5]–பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே; கபாலநல் மோக்கத்துக் கண்டுகொண்மின்” [திருவாய் 4 – 10 – 4]

உலகம் யாவையும்” என்னும் முதல்பாடலில் “யதோ வா இமாநி பூ4தாநி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி, யத்ப்ரயந்த்யபி, ஸம்விசந்தி தத்3 விஜிஜ்ஞாஸஸ்வ தத்3 ப்3ரஹ்மேதி” [எதனிடமிருந்து இந்த ஜீவராசிகள் (ஸ்ருஷ்டிகாலத்தில்) தோன்றுகின்றனவோ, எதனால் தோன்றியவை உயிர் வாழ்கின்றனவோ, (ப்ரளய காலத்தில்) எதனிடம் சென்றடைகின்றனவோ அதை ப்ரஹ்மமென்றறிவாயாக] என்னும் உபநிஷத்தைப் பின்பற்றி ஜகத் காரணப்பொருளை சரணம் பற்றினான். இந்த ஜகத்காரணப்பொருள் எது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக,
“சிற்குணத்தர் தெரிவரு நன்னிலை
எற்(கு) உணர்த்தரிது எண்ணிய மூன்றனுள்
முற்குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடலாடுதல் நன்றரோ”
[புல்லறிவாளர்களால் அறியமுடியாத பரம்பொருள் நிலையை என்னால் உரைக்க இயலாது; ஸத்வம், ரஜஸ், தமம் என்று மூன்றாக எண்ணப்படும் குணங்களுள் முதலாவதான ஸத்வகுணத்தை உடைய திருமாலே (முறையே) ரஜோகுணத்தையும், தமோகுணத்தையும் உடைய பிரமனையும், சிவனையுங்காட்டிலும் முதல்வர். அவரது கல்யாணகுணக்கடலில் குடைந்தாடுவதே நன்று ] என்னும் பாடலை அமைத்திருக்கிறான் கல்வியிற்பெரிய கம்பன். ஸத்வகுணத்தையுடையவர் திருமாலே என்பதும், பிரமன் ரஜோகுணத்தையுடையவன் என்பதும், சிவன் தமோகுணத்தையுடையவன் என்பதும் ஸகல சாஸ்திரங்களிலும் பிரசித்தம். 

ஒருபகல் உலகெலாம் உதரத் துட்பொதிந்(து)
அருமறைக்கு உணர்வரும் அவனை அஞ்சனக்
கருமுகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை” (கம்ப-பால-திருவ 2 – 10 – 3)

எழுதரிய திருமேனிக் கருங்கடலைச்
செங்கனிவாய்க் கவுசலையென் பாள்பயந்தாள்” [பால – குலமுறை 20]

கராம்மலை யத்தளர் கைக்கரி எய்த்தே
அராவணை யில்துயில் வோயென அந்நாள்
விராவி அளித்தருள் மெய்ப்பொரு ளுக்கே
‘இராமன்’ எனப்பெயர் ஈந்தனன் அன்றே” [பால – திருவ 119]-[கராம் – முதலை; கைக்கரி – யானை; அராவணை – பாம்புப் படுக்கை]

“கடுத்துநிமிர் கராம்கவ்வக் கையெடுத்து மெய்கலங்கி
உடுத்ததிசை அனைத்தினும்சென்(று) ஒளிகொள்ள உறுதுயரால்
அடுத்தபெருந் தனிமூலத்து அரும்பரமே பரமேஎன்று
எடுத்தொருவா ரணம் அழைப்ப நீயோவந் தேன் என்றாய்” [ஆரணி, விராதன் வதை 49]-[கராம் – முதலை]-

“கொல்லாழி நீத்தங்கோர் குனிவயிரச்
சிலைதடக்கைக் கொண்ட கொண்டல்” [பால – மிதிலை 154][ஆழி – சக்கரப்படை]

பஞ்சணை பாம்பணை யாகப் பள்ளிசேர்
அஞ்சன வண்ணனே இராமன்” [ஆரணி சடாயுவுயிர் நீத்த 142]

சங்கு சக்கரக் குறியுள தடக்கையில் தாளில்
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் வில்கரத்து இராமன அத் திருநெடுமாலே” [கிட்கிந் – நட்புகொள் 79]

“தோற்றம் என்பதொன்று உனக்கில்லை” [யுத்த – மீட்சி 107]

“மெய்யே பிறந்தேயும் பிறந்தி லாதான்” [யுத்த – நாகபாசப் 222]

மறைகளின் தலைகள் மன்பெ ரும்பர மார்த்தமென்(று)
உரைக்கின்ற மாற்றம் அன்ப நின்னையல் லாம்மற்றிங்(கு)
யாரையும் அறையா” [யுத்தமீட்சி 101]-[மறைகளின் தலைகள் – உபநிடதங்கள்]-

முன்னை ஆதியாம் மூர்த்திநீ மூவகை உலகின்
அன்னை சீதையாம் மாதுநின் மார்பின்வந் தமைந்தா:” [யுத்தமீட்சி 113]

“நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கெல்லாம்
வேராய்முழு முதற்காரணப் பொருளாய்” [யுத்த – நிகும்பலை 141]

உற்றொடு தனியே தானே தன்கணே
உலகம் எல்லாம் பெற்றவன் முனியப் புக்கான்” [யுத்த வருணனை வழி 63]

“நவையறும் உலகிற் கெல்லாம் நாயக நீயே” [யுத்த வருணனை வழி 67]

எள்ளலா காதமூலத்(து) யாதுக்கும் முதலாய் உள்ள வள்ளலே” [யுத்த வருணனை வழி 71]

மேலொரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கிக்
கால்தரை தோய நின்று கட்புலக் குற்றதம்மா” [கிட்கிந் – வாலிவதை 148]

மும்மையாம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன்
தூதாய்ச் செம்மையால் உயிர்தந் தாய்க்கு” [சுந்தர – உருக்காட்டு 71]

மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத் தாய
காலமும் கணக்கும் நீத்த காரணன்” [சுந்தர – பிணிவீட்டு 80]

மூவர்க்கும் தலைவ ரான மூர்த்தியார் அறத்தை முற்றும்
காவற்குப் புகுந்து நின்றார் காகுத்த வேடங் காட்டி” [யுத்த – கும்பகருணன் வதை 150]

மூலமே இல்லா முதல்வனே நீஎடுத்த
கோலமே யார்க்கும் தெரிவரிய கொள்கைத்தால்
ஆலமோ? ஆலின் அடையோ? அடைக்கிடந்த
பாலனோ? ஆதிப் பரமனோ? பகராயே” [ஆரணி – கவந்த 44]

“மெய்யைத்தான் சிறிதுணர்ந்து நீவிதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ? உனக்கென்ன குறையுண்டோ?
வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்றளித்த
ஐயத்தால் சிறிதுஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா” [ஆரணி – விராதன் வதை 59]மெய் – நீயே பரதத்துவம் என்னும் உண்மை; மழுவாளி – பரமசிவன்; ஐயம் – பிச்சை, சந்தேகம்.]

அன்னமாய் அருமறைகள் அறைந்தாய்நீ அவையுன்னை
முன்னம் ஆர் ஓதுவித்தார் எல்லாரும் முடிந்தாரோ?” [ஆரணி-விராதன் வதை 60]

மூவகை உலகம் ஏத்தும் முதல்வன்;
எவர்க்கும் மூத்த தேவர்தம் தேவன்” [யுத்த நிகும்பலை யாகப் 175]

“மூவ ராய்முத லாகி மூலம தாகி ஞாலமும் ஆகியத்
தேவ தேவர் பிடித்த போர்வில் ஒடிந்த சேவகர்” [அயோத். கைகேசி சூழ்வினை 62][தேவ தேவர் – சிவன்; சேவகர் – இராமன்]

முப்பரம் பொருளிற்குள் முதலை மூலத்தை” [பால. கடிமணப் 69]

“காலம் ஆகணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற
மூலமாய் முடிவிலாத மூர்த்தி இம்முனிவன் என்பார்” [அயோத். கைகேயி சூழ்வினை 91]

“வான்நின்றிழிந்து வரமிகந்த மாபூதத்தின் வைப்பெங்கும்
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளனென்ப;
கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை யிழைப்பக் கோல்துறந்து
கானும் கடலும் கடந்திமையோர் இடுக்கண்காத்த கழல்வேந்தே”
அயோத்தியாகாண்டம் முதலில் கடவுள் வாழ்த்துப் பாடல்

சந்நியாசிகளின் இலக்கணத்தைக் கூறவந்த தொல்காப்பியர்,-“நூலே கரகம் முக்கோல் மனையே
ஆயுங்காலை அந்தணர்க்குரிய
“[தொல்காப்பியம் பொருளதிகாரம் 9.71]-மற்ற சங்க இலக்கியங்களிலும் ‘முக்கோற் பகவர்’ என்று இவர்களை பாகவத சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களாக எடுக்கையால் இவர்கள் பாஞ்சராத்ரத்தைப் பின்பற்றுபவர்கள் எனத் தேறுகிறது.

சங்கநூலான பரிபாடலோ “முதல்முறை, இடைமுறை, கடைமுறை தொழிலில் பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே” [பரிபாடல் 3 – 71,72] என்று திருமால் எடுக்கும் பலவகைப்பட்ட அவதாரங்கள் அனைத்தும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைச் செய்வதற்கே என்றும், அவன் தானே தன்விருப்பத்தால் பிறக்கிறானேயொழிய அவனைப் பிறப்பித்தவர்கள் எவரும் இலர் என்றும் முழங்கிற்று.

மறுபிறப்பு அறுக்கும் மாசில் சேவடி மணிதிகழ் உருபின் மாஅயோயே” [பரிபாடல் 3 – 2,3][மறுபிறப்பை அறுத்துவிடும் குற்றமற்ற திருவடிகளையுடைய நீலமணியைப்போன்ற திருமேனியைக்கொண்ட மாயோனே] என்றும், “நாறு இணர்த்துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்” [பரிபாடல் 15 – 15,16] [மணம்மிக்க துழாய் மாலையை அணிந்த திருமால் அளித்தாலல்லது எவராலும் வீட்டுலகத்திற்கு ஏறமுடியாது] என்றும் திருமாலே மோட்சமளிக்கவல்லவன் என முழங்கப்பெற்றது.–மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் மாயோய்! நின் வயின் பரந்தலைய உரைத்தேம். மாயா வாய்மொழி உரை தர” [பரிபாடல் 3 – 9,10,11] [மாயோனே! எல்லா உலகங்களும், உலகினில் உள்ள ஜீவர்கள் அனைவரும் உன்னிடமிருந்தே உண்டானவர்கள் என்பதை அழியாத வேதம் சொல்ல நாங்கள் உரைத்தோம்.] “நின் சேவடி தொழாரும் உளரோ” [பரிபாடல் 3 – 19] என்று சங்ககாலச் சான்றோர்கள் பாடியிருக்கும்போது திருமாலை முல்லைநிலத்திற்கு மாத்திரம் உரியவன் என்றோ, அந்நிலத்தினரால் மாத்திரம் தொழப்படுபவன் என்றோ எவர் கூறமுடியும்? ஆகையால் பரிபாடல் முதலானவற்றில் திருமால் ஒருவனே வேதத்தால் பரம்பொருளாக முழங்கப்படுபவன் என்று கூறியதை இத்தொல்காப்பியப்பாடல் வலியுறுத்துகின்றதேயொழிய, அதற்கு முரணாகப் பேசவில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது.

“மாயோன் மேய காடு உறை உலகமும்,
சேயோன் மேய மை வரை உலகமும்,
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்,
வருணன் மேய பெரு மணல் உலகமும்,
முல்லை, குறிஞ்சி, மருதல், நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே”–தொல்காப்பியத்தில் முதலாவதான அகத்திணை இயலில் ஐந்தாவது பாடலாக உள்ளது-சங்ககாலத்திலேயே) முல்லைநிலத்தில் மாத்திரமல்லாமல் மற்ற நிலங்களிலும் திருமால் கோவில்கள் இருந்தன என்பதைக் காண்கிறோம்.-

அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல்பாணி
நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்று பின் ஒழியப் போகி”–அகநானூற்றின் ஒன்பதாவது பாடலில்,-நெடுமால் வரைய – குன்று ஒழியப் போகி’ என்னும் தொடரால் நெடுமாலாகிற திருமால் எழுந்தருளியிருக்கும் வேங்கடக் குன்றையும் கடந்து தான் சென்றதாகக் குறிப்பிட்டான். தலைவன் வேங்கடமலைக்கும் அதைக்கடந்து அப்பாலும் சென்று பொருளீட்டி வருவது என்னும் மரபு அகநானூற்றின் பல பாடல்களில் காணப்படுவதால் இங்கு வேங்கடமலையைக் குறிப்பதாகக் கொள்வதே பொருத்தம். அகநானூற்றில் அறுபத்தோராம் பாடலில் ‘விழவுமலி வேங்கடம்’ என்று வருவதும் இதை வலியுறுத்துகிறது. எப்படியும் ‘நெடுமால் வரைய – குன்று ஒழியப்போகி’ என்னும் தொடர் சங்க காலத்திலேயே திருமால் மலையாகிற குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியிருந்ததைக் காட்டுகிறது.

வென்று எறிமுரசின் விறல் போர்ச் சோழர்
இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண்
வரு புனல் நெரிதரும் இரு கரைப் பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண்பொழில்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல
பெரும் பாழ் கொண்டன்று நுதலே”–அகநானூறு நூற்றிமுப்பத்தேழாம் பாடலில் உறையூர் முதுகூத்தனார் என்னும் புலவர்-தலைமகன் பிரியப்போகிறான்’ என நினைத்து வேறுபட்ட தலைமகளின் நிலையைக் கூறும்போது, “திருவரங்கத்தில் பங்குனி உத்தரத் திருநாளின் போது, மக்கள் மிகுதியாகத் திரண்டு காவிரியின் இருகரைகளிலும் உள்ள சோலைகளில் தங்கியிருந்தபோது பொலிவுடையதாகத் தோன்றிய அச்சோலைகள், அவ்விழாவின் முடிவில் அனைவரும் அரங்கத்தைவிட்டுப் போனபின் பொலிவிழந்து தோன்றுவதுபோல், தலைமகன் பிரிவை எண்ணிய தலைமகளின் நெற்றியும் பொலிவிழந்து தோன்றுகிறது” என்கிறார். இன்றும் திருவரங்கத்தில் பங்குனி பிரம்மோத்ஸவம் நடைபெறுவது அனைவரும் அறிந்தது. அந்த உத்ஸவம் சங்க காலத்திலேயே நடந்துவந்தது என்று இப்பாடலிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. திருமாலைப் பற்றிய நான்காவது பரிபாடலில், “நல்யாற்று நடுவும் கால்வழக்கு அறுநிலை குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்’ (67 – 69) என்னும் பகுதி நல்யாற்று நடுவாகிற திருவரங்கமும், காலவழக்கை அறுத்து முக்தி அளிக்கும் குன்றமாகிற வேங்கடமும் திருமால் வெவ்வேறு பெயர்களுடன் எழுந்தருளியிருக்கும் இடங்கள் என்று பாடியிருப்பதிலிருந்து முற்கூறிய அகநானூற்றுப் பாடல்களில் வேங்கடத்திலும், திருவரங்கத்திலுமிருந்தது திருமால் கோவில்களே என்று தெளிவாகிறது. இதிலிருந்து சங்ககாலத்திலேயே மருதநிலத்திலும் திருமால் கோவில் கொண்டிருந்தான் என விளங்குகிறது. சிலப்பதிகாரத்திலும் இளங்கோவடிகளால் இவ்விஷயம் விரித்துரைக்கப்பட்டது. பதினைந்தாவது பரிபாடலில் திருமாலிருங்குன்றமாகிய குறிஞ்சிநிலத்திலும் திருமால் எழுந்தருளியிருந்தது விரிவாக வருணிக்கப்படுகிறது. பரிபாடல் திரட்டின் முதல்பாடலில் கூடல்மாநகரில் இருந்தையூர் என்னும் பகுதியில் திருமால் கோயில்கொண்டிருந்தது சிறப்பாக வருணிக்கப்படுகிறது. இதிலிருந்து மருதநிலத்திலும் சங்ககாலத்தில் திருமால்கோயில் உண்டென்று தெரிகிறது.

“வண்டு ஊது பொலிதார், திரு ஞெமர் அகலத்து
கண் பொரு திகிரி, கமழ் குரற் துழாஅய்
அலங்கல், செல்வன் சேவடி பரவி,
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதிப் பெயர
மணி நிற மை இருள் அகல, நிலா விரிபு,
கோடு கூடு மதியம் இயலுற்றாங்கு”–பதிற்றுப்பத்து என்னும் சேரவேந்தர்களைப் பற்றிய சங்க நூலில் நான்காம்பத்தின் தொடக்கத்தில்,-திருஞெமர் அகலம் – ஸ்ரீதேவி வாழும் மார்பு. திகிரி – சக்கரம். துழாஅய் அலங்கல் செல்வன் – துழாய் மாலையணிந்த உயபவிபூதி செல்வத்தையுடைய திருமால். கோடு – திருவிதாங்கோடு என்று வழங்கப்படும் திருவனந்தபுரம். ]என்னும் பாடற்பகுதியில் குறிஞ்சிநிலமான திருவனந்தபுரத்துத் திருமால் கோயிலைப் பாடியிருப்பதிலிருந்து சங்ககாலத்தில் குறிஞ்சி நிலத்திலும் திருமால் கோயில்கொண்டிருந்தார் எனத் தெரிகிறது.

நீடுகுலைக் காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்,
வெயில் நுழைபு அறியா, குயில் நுழை பொதும்பர்,
குறுங்கால் காஞ்சி சுற்றிய நெடுங் கொடி … …
அருந்திறற் கடவுள் வாழ்த்தி”–பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையில்,-மலையில் யானை படுத்திருப்பது போலே காஞ்சியில் (திருவெஃகாவில்) பாம்பணைப்பள்ளியில் திருமால் கிடக்குமழகு பாடப்படுகிறது. இதிலிருந்தும் சங்ககாலத்தில் மருதநிலத்தில் திருமால் கோயில்கொண்டு எழுந்தருளியிருந்தது காட்டப்படுகிறது.

உலகைப் படைத்தளித்து அழிக்கும் பெருமை. (2) எல்லாம் அறியும் பெருமை. (3) எல்லாம் வல்லவனாய் இருக்கை. (4) எங்கும் வியாபித்திருக்கை. (5) தன்னை அண்டியவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமற்செய்து வீட்டுலகத்தை அளிக்கவல்லவனாயிருக்கை. (6) நற்குணங்கள் அனைத்திற்கும் கொள்கலமாகவும், தாழ்ந்த தன்மைகள் எதுவுமே இல்லாதவனாகவும் இருக்கை. (7) எவராலும் அளவிட்டு அறியமுடியாதவனாயிருக்கை. (8) மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்த தேவர்களுக்கெல்லாம் ஆதிதேவனாய், ஒத்தாரும் மிக்காரும் இல்லாதவனாயிருக்கை. (9) உயிர்களுக்கெல்லாம் இயற்கை உறவினனாயிருக்கை. (10) முற்கூறிய ஒன்பது பெருமைகளும் இவனுக்கே உள்ளதாக வேதத்தால் சொல்லப்படுகிறவனாயிருக்கை – என்னும் பரம்பொருளுக்கேயுள்ள பத்து தனித் தன்மைகள் திருமால் ஒருவனுக்கே பரிபாடல் முதலான சங்கநூல்களில் சங்ககாலச் சான்றோர்களால் முழங்கப்பட்டுள்ளன-அக்காலத்தில் சான்றோர்கள் அனைவரும் திருமால் ஒருவனையே முற்கூறிய பத்து பெருமைகளையுமுடைய பரம்பொருளாகக் கொண்டிருந்தார்கள்; வேறு எந்த தெய்வத்தையும் அப்படிக் கொள்ளவில்லை” என்பதை நிலைநாட்டித்தரும் ‘கொள்கை விளக்கப் பாடல்கள்–

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாகச் சொல்லப்படும் தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்திலேயே திருமாலானவர் முல்லை நிலத்து மக்களின் வழிபடு தெய்வமாகச் சொல்லப்படுகிறார். ‘மாயோன் மேய காடுறை உலகம்’ என்பது தொல்காப்பியச்சூத்திரம். தொல்காப்பியத்திற்கு முன்னும் பின்னும் தோன்றிய இலக்கியங்களிலேயும் திருமாலானவர் ‘காடும் காடு சேர்ந்த நிலமும்’ என்று தொல்காப்பியத்தால் வரையறுத்துச் சொல்லப்படும் முல்லை நிலத்து மக்களின் தெய்வமாக வருணிக்கப்படுகிறார். சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரத்திலேயும் காடும் காடு சேர்ந்த நிலமுமாகிய முல்லை நிலத்திலே வாழும் மக்கள் திருமாலை வழிபடுவதை இளங்கோவடிகள் ‘ஆய்ச்சியர் குரவையிலே’ காட்சிபடுத்துகின்றார்

அகிலபுவனங்களையும் தன் மூவடிகளின் கீழ் ஒடுக்கியவன் எவனோ அப்பெருமான் கிரியில் நிலைபெற்றருள்கின்றான் என்ற கருத்தில் ‘ம்ருகோ3 ந பீ4ம; குசரோ கி3ரிஷ்டா2: – யஸ்யோருக்ஷு த்ரிக்ஷு விக்ரமனேஷு அதி4க்ஷயந்தி பு4வநாநி விச்வா’ என்று வேதமும் திரிவிக்ரமனாகிய திருவேங்கடமுடையான் திருமலையில் நித்யவாசம் செய்தருளுகிற சிறப்பை எடுத்துக்கூறுமென்பர். இவ்வேதப்பொருளையே ‘இழைத்தார் ஒருவரை இல்லா மறைகளை இன் தமிழால் – குழைத்தார் ஆகிய குருகைப்பிரானும்’ ‘குன்றமேந்திக் குளிர்மழை காத்தவன் – அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் – சென்று சேர் திருவேங்கடமாமலை’ என்றருளிச்செய்தார். ‘வேதவெற்பு’ என்று திருமலையை ஸ்ரீமத் வேதாந்ததேசிகன் சிறப்பித்தருளியதும் இக்கருத்தை உட்கொண்டே–

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெருமாள் தூதரும்- ஸ்ரீ பாண்டவ தூதனும்–

May 1, 2026

இன்னார் தூதன் என நின்றான் -தரித்து நின்றான்

சொல்லின் செல்வன் -ராமன் சங்கல்பத்தாலேயே சுக்ரீவன் திருவடியையே தூதுவனாக அங்கதன் தலைமையில் தெற்கு நோக்கி அனுப்பினான் -வாய் போல் எங்கும் செல்லும் திறமை யுடையவன்

உத்யோக பர்வம் -70- கிருஷ்ணனே தன்னைத் தூதுவனாக –

இருவருக்கும் செய்தி சொல்லி அனுப்ப -பெருமாள் -சுக்ரீவனின் மந்திரி -அவன் சொல்லியே செல்ல வேண்டும் -அங்குளி கொடுத்து -அடையாளங்களும் -ரஹஸ்யங்கள் -இதுவா காடு -கோட்டைக்கு வெளியில் வந்ததும் -கங்கை தாண்டி சுமந்தனுக்கு செய்து சொல்லும் -கிளி அரண்மனையில் விட்டு வந்தேன் ஊர்மிளையை பார்த்துக்கக் சொல்லி
பாண்டவர்-ஐந்து ஊராவது இது உண்மைக் கார்யம் அல்ல -பாஞ்சாலி கூந்தல் முடிக்க -நறையூர் நம்பி பாசுரம் -உத்யோக பர்வம் -81-துச்சாதனன் கர்ணன் அவமானம் -சர்வாத்மா அந்தகன் வெள்ளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவன் -சண்டைக்கு பேசிய வர சொல்லி அனுப்பினாள்

தேர்வு – செய்தி -பயணம்
கார்த்திகை மாதம் ஆரம்பம்

சம்பாதி சொல்ல -கடலைத்தாண்ட -பங்குனி மாதம் மஹேந்திர கிரியில் இருந்து புறப்படுகிறார் -காலினால் அளந்தான் -வாலினால் அளந்தான் -ஆகவே திருவடி திருநாம பெற்றார்
மூன்று தடைகள் -மைநாகம் – ஆதர சப்தமோ தசை-ஆறு சுவைக்கு மேல் -சுரசா நாகமாதா -வாயுக்குள் சென்று -ஸிம்ஹிதா நிழல் -வயிற்றுக்குள் -குடலை கிழித்து
அன்பால் வென்று -அறிவால் வென்று ஆற்றலால் வென்று -ராமநாமம் சொல்லி தடை நீக்கி-பங்குனி பவ்ர்ணமி அடைந்தார்

உத்யோக -82 பர்வம் -காலை புறப்பட்டு -அதே கார்த்திகை மாதம் கிளம்பி ரேவதி நக்ஷத்ரம் -பனி வர ஆரம்பிக்க – தாரகன் தேரோட்டி -நான்கு குதிரைகள் பூட்டி -சுக்ரீவனின் பெயரும் ஒரு குதிரை -சாத்விகி உடன் கூடி -காலால் குதிரைப்படை 1000 பின் தொடர-வேத விற்பன்னர் உபசரிக்க ஒரு நாள் தங்கி-ஹஸ்தினாபுரம் அடுத்த நாள்

சந்திப்பு -திருவடி சீதா பிராட்டி -இவனோ விதுர பக்தன் -நான் தேடி கிடைக்க வில்லன் -நான் விட்டு அடியேன் -நினைக்க அசோகவனத்தில் கண்டார் -ஞான முத்திரை -கட்டைவிரல் –
நமோஸ்து ராமாய-ருத்ரன் இத்யாதி ராமகைங்கர்ய துடிப்பால் -சம்சரே மதுரம் வாக்கியம் -31 -1-சர்க்கம் -தமிழ் இராமாயணம் -பாசுரப்படி இராமாயணம்- -அகஸ்தியர் ஆஸ்ரமம் தங்கி-இராமாயண உபன்யாசத்தில் தூங்கினால் அரக்கர்கள் ஆவோம்-

பீஷ்ம த்ரோண -விட்டு விதுரர்-துரியோதனன் சம்பந்தி -சாம்பன் இவன் மகளை திருமணம் -மம பிராண பாண்டவ-பஞ்ச பிராணனும் பஞ்ச பாண்டவர்கள்-விதுரன் வாழ் வள மனை புகுந்தான் உன் குடிசைக்கு வா -வில்லிபாதரம்-கணை யாழி கொடுத்து சீதையை உளனாக்கி -இங்கு கைங்கர்யம் ஏற்றுக்கொண்டு விதுரனை உளனாக்கி

பேச்சு -ராவணன் இடம் -அசோகவனம் துவம்சம் இங்கு அடிக்க அங்கு வலிக்கும் -கதை உபயோகிக்க வில்லை -மரங்களே ஆயுதம் -எதிராளி ஆயுதம் உபயோகிப்பர் -80000 கிங்கர்களை அழித்து –ப்ரஹ்மாஸ்திரம் கட்டுப்பட்டது போல் -நடித்து -ராம தூதன் -ராம தாஸ்ன் -சீதா அருளாலே-வாலையை ஆஸனம் நேரடிக் குறிப்பு இல்லை -அண்ணாந்து பார்த்து உத் வீஷய வால்மீகி இராமாயணம்-வரம் பொய்க்கும் ராமசரம் பொய்க்காது -தேவி ஒப்படைக்காவிடில் ஆவியை விடவேண்டி வரும்

பொய்யாசனம் -பாண்டவ தூதன்-அப்பூச்சி காட்டுகிறான் ஊர் ஓன்று வேண்டி-துஷ்டர்கள் எவ்வளவு பேசினாலும் கேட்க மாட்டார்கள்

இருவரையும் தூதன் என்றும் பார்க்காமல் அழிக்க பார்த்தால்-நரத்துக்கு வால் வாநரம் -சீதை சோக அக்னியை வைத்தே எரித்தார்-

இருவரும் விஸ்வரூபம் -திவ்யம் ததாமி அர்ஜுனனுக்கு-த்ருதராஷ்டரனுக்கும் காட்டி -இத்தைப்பார்த்த கண்ணாலே வேறே ஒன்றையும் பார்க்க மாட்டான் கண்ணை வாங்கிக்கோ பிரார்த்தனை -தூது பேரில் -இலங்கை முழுவதும் கண்டு -விபீஷணன் பற்றி நன்றாக அறிந்து -தோளில் அமர்ந்து கொண்டு போவேன் -இவர் அறிவார் அவள் ஒத்துக்கொள்ள மாட்டாள் தெரிந்தும் -ராமன் காக்கும் வரை உயிர் காத்து இருப்பவள் -ஒரு மாதம் கெடு வாங்குவதற்காகவே இந்த வார்த்தை –

சூடாமணி -காகாசுரன் -மனசிலா -செங்கல்பொடிக்கதை -திலகம் கோணலாக -கன்னத்தையே கண்ணாடி -இத்தையும் சொல் அடையாளம் -ஒரு கல்லில் பல மாங்காய் இருவரும் -விதுரன் உணவு -கோபத்தில் துரியோதனன் -வில் முறித்து உனக்காக போராட மாட்டான் -அரசியல் -குந்தி கர்ணன் இடம் அர்ஜுனனைத்தவிர மற்ற பாண்டவர்களை கொல்ல மாட்டான் -அஸ்வத்தாமா தளபதியாமல் பண்ணி -மோதிரம் போட-சண்டையில் உதவுவான் சகுனி தப்பாக புரிந்து -லீலைகள் பல செய்து

இருவரும் செய்தியுடன் வந்தார்கள் தஸ்ய சத்ருசம் பவத்-தென் திசை நோக்கி நமஸ்காரம் தொழத்தக்க நிலையில் இருப்பதைக் குறிப்பால் கண்டேன் சீதையை-கற்பினுக்கு அணியை-பரிஷ்வங்கம் -தன்னையே கொடுத்து பெருமாள் திருவடியையே விட ஸ்ரேஷ்டரானார் அங்கு தர்மபுத்ரன் நன்றி கூட சொல்லாமல் சங்கல்பித்தது -பின் வந்த தூதனை கொண்டாடட்டும் என்று செய்த செயல்-தூதரே முக்கிய போர் புரிந்தனர்

ஆச்சார்ய பிரபாவம் சொல்லும் தூது -பிறவிப்பெரும்கடல் -அசோகவனம் உடம்புடன் -இத்யாதி-தூது போனவன் ஏற்றம் உபாய வைபவம் சொல்லிற்று-ஆஸ்ரித பாரதந்தர்யம் -கண்ணன் அல்லால் கண்ணில்லை-பொருப்பு துறப்பு-

கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்கள் தங்குவதற்கு இடம் கேட்பதற்காக துரியோதனனிடம் தூது சென்றார் கிருஷ்ணர். பாண்டவர்களின் மிகப்பெரிய பலமாக கிருஷ்ணர் இருப்பதால், அவரைக் கடத்த துரியோதனன் முயற்சிக்கிறான். கிருஷ்ணரை சூழ்ச்சிசெய்து தன் இடத்துக்கு வரவழைத்து ஓர் இருக்கையில் அமரச் செய்கிறான். அந்த இருக்கையின் கீழ் ஒரு நிலவறையை அமைத்து, கிருஷ்ணர் இருக்கையில் அமர்ந்ததும் பாதாள அறைக்குள் விழுந்து விடுவார், அப்போது அவரைக் கொன்று விடலாம் என்பது துரியோதனின் திட்டம். திட்டம் போலவே அனைத்தும் நடைபெறுகிறது. பாதாள அறைக்குள் விழுந்ததும், கிருஷ்ணர் விஸ்வரூபம் எடுத்து மல்யுத்த வீரர்களை அழித்தார். இந்த மகாபாரத சம்பவம் குறித்து வைசம்பாயனர் என்ற முனிவர் மூலம் கேள்வியுற்ற ஜனமேஜய மஹாராஜன், காஞ்சியில் அச்வமேத யாகம் செய்து கிருஷ்ணரை வரவழைத்து, பாதாள அறையில் விஸ்வரூபம் எடுத்தக் காட்சியை நினைவுகூர்ந்து, தனக்கு இங்கேயே விஸ்வரூபக் காட்சியைக் காட்ட வேண்டினான். பக்தனுக்காக ஸ்ரீகிருஷ்ணர், விஸ்வரூப காட்சியைக் காட்டிய திருத்தலம்தான் திருப்பாடகம். (திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார்.)திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 48-வது திவ்ய தேசம் ஆகும்.கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பு அம்சமாகும்.இத்தலத்தை பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.மகாபாரதத்தில் விஸ்வரூபக் காட்சியை பகவான் மூன்று இடங்களில்தான் காட்டியிருக்கிறார். சகாதேவனிடம் நிமித்தம் கேட்கப் போனபோது ஒருமுறை; துரியோதன் அரசவைக்கு தூதுவனாகப் போனபோது ஒரு முறை; குருக்ஷேத்திர யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்தபோது ஒரு முறை.-பத்ர விமானத்தின்கீழ் மூலவர் பாண்டவ தூதர், வீற்றிருந்த திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். வெள்ளிக்கிழமைதோறும் திருமஞ்சனம் காணும் ருக்மிணி தாயார் குசேலனாய் தன்னிடம் வந்து அன்பு செலுத்துவோரை பகவான் கிருஷ்ணருக்கு சிபாரிசு செய்து குபேரனாக வாழ வரம் அருள்கிறார்.

யக்ஞ மூர்த்தி என்ற அத்வைத கொள்கையுடைய சான்றோர் ஒருவர் ராமானுஜருடன் வாதப்போரில் ஈடுபட்டார். பதினெட்டு நாட்களும் வாதம் தொடர்ந்தது. இறுதியில் தனது தோல்வியை ஒப்புக் கொண்ட யக்ஞ மூர்த்தி ராமானுஜரின் கீர்த்திக்கும் வாதத் திறமைக்கும் தன்னை அடிமையாக்கிக் கொண்டார். தனக்கு எதிராக வாதம் புரிந்தவர் ஆனாலும் அவருடைய பாண்டியத்துக்கும் மதிப்பளிக்கும் வகையில் அவரை ‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்று அழைத்து சிறப்பித்தார், ராமானுஜர். ராமானுஜரின் சீடராகி அவரது கொள்கைகளையும் தத்துவங்களையும் பரப்பும் நோக்கத்தில் இதே தலத்தில் பல்லாண்டு வாழ்ந்திருந்த அவரை கவுரவிக்கும் வகையில் இந்த பாண்டவ தூதர் கோயிலிலேயே அவருக்கு தனி சந்நிதி உள்ளது.அருளாளப் பெருமான் எம்பெருமானாருக்காக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்றுமுறை உற்சவம் நடைபெறுகிறது.

மன்னா போற்றி! மணாளா போற்றி!
அஞ்சன வண்ணத் தரியே போற்றி!
கஞ்சனை அடர்ந்த கண்ணா போற்றி!
கருங்கடற் றுயின்ற காரே போற்றி!
ஆயிரந் தோளுடை அடுபோர் வாணனை
நேமியற் றுணித்த நெடியாய் போற்றி!
பேய்முலை யுண்ட பிரானே போற்றி!
பேருல களந்த மாலே போற்றி!
மருதிடைத் தவழ்ந்த மாயா போற்றி!
மாக்கடல் கடைந்த மகேசா போற்றி!
பெருவரை எடுத்த பிரானே போற்றி!
சங்கொடு சக்கரந் தரித்தாய் போற்றி!
தண்டொடு சார்ங்கமும் தனிநாந் தகமும்
பிண்டி பாலமும் பெருவச் சிரமும்
எண்டிசை நிறைந்த எம்மான் போற்றி!
அண்டமும் விசும்பும் அகலிடம் எல்லாம்
உண்டுமிழ்ந் தவனே ஒருவா போற்றி!
திருமறு மார்பத் திருமால் போற்றி!
தீவினை கெடுக்கும் செல்வா போற்றி!
அருமறை தேடும் அடியாய் போற்றி!
அடியவர் வினைகெட அருள்வாய் போற்றி!
சென்றொரு தூணிடை நின்றாய் போற்றி!
சிறுவனை உகந்த செல்வா போற்றி!
அயனொடு தேவர்க் கரியாய் போற்றி!
மலர்மகள் புணர்ந்த மணாளா போற்றி
நிலமகள் இடந்த நெடியாய் போற்றி!
திருவருள் தருவாய் திருவடி போற்றி!>

இரத்தினச்‌ சுருக்கம்‌ என்னும்‌ நூல்‌ தூது விடுவதற்குரிய பொருள்களாகப்‌ பத்தினைக்‌ குறிப்பிடுகின்றது. அன்னம்‌, மயில்‌, இளி, மேகம்‌, நாகணவாய்ப்‌புள்‌, தோழி, குயில்‌, நெஞ்சு, தென்றல்‌, வண்டு
என்னும்‌ இவற்றள்‌ ஒன்றைப்‌ பொருளாகக்‌ கொண்டு, புலவர்கள்‌ தம்‌ புலமை நலம் தோன்றுமாறும்‌ இலக்கிய நயம்‌ பொருந்துமாறும்‌ தூதிலக்கியத்தை ஓதுகின்‌றனர்‌. |
*இயம்புகன்ற காலத்‌தெகின மயில்‌ கிள்ளை
பயம்பெறு மேகம் பூவை பாங்கி--நயந்த குயில்‌
பேதை நெஞ்சம்‌ தென்றல்‌ பிரமரம்‌ ஈரைந்துமே
தூதுரைத்து வாங்கும்‌ தொடை”
என்னும்‌ பழம் பாட்டால்‌ ௮வ் வுண்மை புலனாம்‌.

தான்‌ வகுத்துக்‌ கூறுவான்‌ தலையாய தூதன்‌ ; கூறியது கூறுவான்‌ இடையாய தூதன்‌; ஓலை கொடுத்து நிற்பான்‌ கடையாய தூதன்‌ என்பர்‌.
தானறிந்து கூறும்‌ தலைமற்‌றிடையது .
கோனறைந்த தீதென்று கூறுமால்‌--தான றியா
தோலையே காட்டும்‌ கடையென்‌(.று) ஒரு மூன்று
மேலையோர்‌ தூதுரைத்த வாறு”
என்னும்‌ பெருந் தேவனாரின்‌ பழந் தமிழ்ப்‌ பாரத
வெண்பாப்‌ பாடல்‌

கடனறிந்து காலம்‌ கருதி இடனறிந்து
எண்ணி யுரைப்பான்‌ தலை”
அறிவுரு ஆராய்ந்த கல்வி யிம்‌ மூன்றன்‌
செறிவுடையான்‌ செல்க வினைக்கு”'
இறுதி பயப்பினும்‌ எஞ்சா திறைவற்‌
குறுதி பயப்பதாம்‌ தூது”
----திரு வள்ளுவர்


அன்புடைமை ஆய்ந்த அறிவுடைமை இற்பிறப்பு
நன்குடைமை நல்ல நயனுடைமை--நன்கமைந்த
சுற்‌றமுடைமை வடிவுடைமை சொல் வன்மை
கற்றடங்கல்‌ தூதின்‌ கடன்‌.”-பெரும் தேவனார்

வில்லின்‌ செல்வனாகிய: இராமன்‌ சொல்லின்‌ செல்வனாகிய அனுமனைத்‌ தன்‌ தேவியாகிய ஸீதையைக்‌ கண்டு வரும்‌ பொருட்டுத்‌ தென்றிசை நோக்கித்‌ தூது போக்கினான்‌-ஐயமகற்றும்‌ அடையாளங்கள்‌ பலவற்றை அறிவுறுத்தினான்‌. இறுதியில்‌ ஓளி பொருந்திய கணை யாழி யொன்றையும்‌ அளித்து வாழ்த்தி வழியனுப்பினான்‌.
அனுமன்‌ இராமனை வணங்கி விடை. பெற்றுத்‌ தென்‌றிசை நோக்கிச்‌ சென்றான்‌-இராமபிரானை மனத்துள்‌ நினைத்து வணங்கியவாறே இலங்கைமாநகர்‌ வீதிகளில்‌ ஓரமாக நடந்து சென்றான்‌. மலர்களில்‌ தேனை நாடிச்‌ செல்லும்‌ வண்டைப் போல்‌ கண்ட இட மெல்லாம்‌ சீதையைத்‌ தேடிக் கொண்டே சென்றான்‌–பிராட்டியைக்‌ காணுதற்கு இதுவே ஏற்ற சமயமென எண்ணிய அனுமன்‌ தனது மந்திர வன்மையால்‌ அரக்கியர்‌ உறக்கம்‌ கொள்ளுமாறு செய்தான்‌. உற்ற தோழியாய்‌ அமைந்த திரிசடையும்‌ துயில்‌ கொள்ளலானாள்‌-இராமபிரானால்‌ அனுப்பப்‌ பெற்ற தூதன்‌
நான்‌” என்று கூறியவாறே அவளை வணங்கி முன்னே சென்றான்‌-
அரக்கனே யாக, வேறோர்‌ அமரனே யாக, அன்றிக்‌
குரக்கனத்‌ தலைவனே தான்‌ ஆகுக, கொடுமையாக :
இரக்கமேயாக வந்து இங்‌கு எம்பிரான்‌ நாமம்‌ சொல்லி
உருக்கினன்‌ உணர்வைத்‌ தந்தான்‌ உயிரிதின்‌ உதவி யுண்டோ

இராமபிரான்‌ கூறியனவாக அனுமன்‌ கூறிய அடையாள மொழிகளையும்‌ கேட்டு உள்ளம்‌ உருகினாள்‌. பின்னர்‌, இராமபிரான்‌ அளித்த கணையாழி யொன்றை எடுத்துப்‌ பிராட்டிக்குக்‌ காட்டினான்‌.அதனைக்‌ கண்ட சீதை பெரு மகிழ்ச்சி கொண்டாள்‌.அதனை அன்புடன்‌ வாங்கித்‌ தன்‌ மார்பில்‌ வைத்துத்‌ தழுவிக்‌ கொண்டாள்‌ ; தலைமேல்‌ தாங்கினாள்‌ ; கண்களில்‌ ஓத்திக்‌ கொண்டாள்‌; அதனைக்‌ கொண்டுவந்தளித்த அனுமனை வாயார வாழ்த்தினாள்‌-
பின்னர்ச்‌ சீதை, அனுமன்‌ தன்னைக்‌ கண்டு பேசியதற்கு அடையாளமாகத்‌ தன்பால்‌ இருந்த சூடாமணி யென்னும்‌ அணிகலத்தை அவனிடம்‌ நல்கினாள்‌.
அதனைத்‌ தொழுது வாங்கிய அனுமன்‌ தன்‌ ஆடையிலே முடிந்து பாதுகாப்புச்‌ செய்து கொண்டான்‌.
பிறகு, பிராட்டியிடம்‌ விடைபெற்று அவ்விடம்‌ விட்டுப்‌ பெயர்ந்தான்‌.
அனுமன்‌ இராமபிரான்‌ இருக்கும்‌ இடத்தை யடைந்தான்‌. அவன்‌ அங்கு இராமபிரானை வணங்கவில்லை. ஸீதை இருக்கும்‌ திக்கை நோக்கி வணங்கி வாழ்த்தினான்‌. குறிப்பறிவதில்‌ வல்ல இராமபிரான்‌ ௮னுமனது செயலை உற்று நோக்கினன்‌.ஸீதை நலமாக உள்ளாள்‌ ; இவ்வனுமன்‌ அவளைப்‌ பார்த்து விட்டு வந்துள்ளான்‌; அவளுடைய கற்பும்‌ கலங்காது இலங்குகின்றது என்று அறிந்து கொண்டான்‌. அவனுக்கு உற்ற துயர்‌ நீங்கியது? உவகையால்‌ தோள்கள்‌ பூரித்தன.
இங்ஙனம்‌ இராமன்‌ விடுத்த தூதனாய அனுமன்‌ அவ் விராமனைப்‌ பிரிந்த சீதைக்குக்‌ கணவன்‌ விடுத்த காதல்‌ தூதனாக மட்டும்‌ தொண்டாற்ற வில்லை. தன்‌ பெருந்தலைவனாகிய இராமன்‌ விடுத்த போர்த் தூதனாகவும்‌ இலங்கை வேந்தனைக்‌ கண்டு, அவனது உள்ளமும்‌ துளங்குமாறு செய்து மீண்டான்‌. அதனாலேயே கவியரசராகிய. கம்பர்‌, அவ்வனுமனைச்‌ சொல்லின்‌ செல்வன்‌” என்று தம்‌ காவியத்தில்‌ போற்றிப்‌ புகழ்‌கின்றார்‌.

முன்னமே துயின்‌ றருளிய முது பயோ ததியோ
பன்னகாதி பப்‌ பாயலோ ? பச்சை ஆல்‌ இலையோ
சொன்ன நால் வகைச்‌ சுருதியோ ₹ கருதி நீ எய்தற்
கென்ன மாதவம்‌ செய்தது இச்‌ சிறுகுடில்‌ என்றான்‌.”
–விதுரர் –


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கனக வல்லித்தாயார் வீர ராகவ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமாயணத்தில் ஸரணாகதி-

February 11, 2026

சரணாகத ரக்ஷணம்” அடி பணிந்தோரைக் காத்தல் என்கிற சீரிய வேதச் செழும் பொருளைக் காட்டவே வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் ஸ்ரீசக்ரவர்த்தித் திருமகனாய் ராமனாய் அவதாரம் செய்தருளினான் எம்பெருமான். அவனே ஸ்ரீகிருஷ்ணனாய் அவதரித்தருளி “பார்த்தன் மாமணித் தேர்விடும் பாகனாய்” நன்கமர்ந்து கீதையாம் அமுத மொழியில் அதையே பலவாறாக மொழிந்து அருளினான்.  

“வத்யம் ப்ரபந்நம் ந ப்ரதிப்ரயச்சந்தி” என்பது வேதவாக்யம். இதன் பொருள் “கொல்லத் தகுந்த குற்றமே செய்திருந்தாலும் அடிபணிந் தவனைக் காட்டிக் கொடுப்பதில்லை” என்கிறது மறை. இதை விளக்கவே ஸ்ரீராமகிருஷ்ண அவதாரம் தோன்றிற்று. 

சுவாமி ஸ்ரீதேசிகன் தாம் இயற்றி அருளிய ‘ஸ்ரீஅபயப்ரதான ஸாரம்’ என்ற நூலில், ”ஸ்ரீமத் ராமாயணத்தில் சரணாகதி அஞ்சுரு வாணியாய் கோர்க்கப் பெற்றது” என்கிறார். 

ஸ்ரீமத் ராமாயணமே ஒரு தேர் என்று எடுத்துக்கொண்டால் அதனுடைய சட்டங்களையெல்லாம் சேர்த்து இடையிலே ஒரு கடை ஆணி போடப்பட்டுள்ளது. அக்கடையாணிதான் “சரணாகதி” என்பது. ”சரணாகதி என்கிற ஆணியை ராமாயணத்திலிருந்து எடுத்துவிட்டால் ஸ்ரீமத் ராமாயணமாகிற தேர் – நிலைகுலைந்து விழுந்துவிடும் என்கிறார் அவர். 

ஸ்ரீபாலகாண்டத்தில் தேவர்கள் அனைவரும் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் செய்யும் சரணாகதி. அதே பாலகாண்டத்தில் ஸ்ரீதசரத சக்ரவர்த்தி, ஸ்ரீபரசுராமரிடம் செய்யும் சரணாகதி. 

ஸ்ரீஅயோத்யா காண்டத்தில் ஸ்ரீசீதா பிராட்டியின் முன்பு ஸ்ரீலக்ஷ்மணன், ஸ்ரீராமபிரானிடம் செய்யும் சரணாகதி. அதே அயோத்யா காண்டத்தில் ஸ்ரீவசிஷ்டர் முதலானோர்களை முன்னிட்டுக் கொண்டு சித்ரகூட பர்வதத்தில் ஸ்ரீபரதன், ஸ்ரீராம பிரானிடம் செய்த சரணாகதி. 

ஸ்ரீஆரண்ய காண்டத்தில் தபோதனர்களான மகரிஷிகள் அனைவரும் ஸ்ரீராமபிரானிடம் செய்த சரணாகதி. 

அடுத்து ஸ்ரீகிஷ்கிந்தா காண்டத்தில் வானரத் தலைவனான ஸ்ரீசுக்ரீவன் ஸ்ரீராமபிரானிடம் செய்த சரணாகதி. 

ஸ்ரீசுந்தர காண்டத்தில் ஸ்ரீவிபீஷணனின் மகளான திரிஜடை ஸ்ரீசீதாபிராட்டியிடம் செய்த சரணாகதி. 

ஸ்ரீயுத்த காண்டத்தில் ஸ்ரீவிபீஷணன், ஸ்ரீராமபிரானிடம் செய்த சரணாகதி. அதே யுத்த காண்டத்தில் ஸ்ரீராமன், சமுத்ரராஜனிடம் செய்த சரணாகதி. ஸ்ரீஉத்தர காண்டத்தில் தேவர்கள், திருப்பாற்கடலில் ஸ்ரீமந் நாராயணனிடம் செய்த சரணாகதி. 

இப்படி ஸ்ரீமத் ராமாயணத்தில் காண்டம் தோறும் சரணாகதி அழுத்தம், திருத்தமாகப் பேசப்பட்டுள்ளதை நன்கு கவனிக்க வேண்டும். அதனால்தான் ஸ்ரீமத் ராமாயணத்திற்கு ”ஸ்ரீசரணாகதி சாஸ்த்திரம்” என்றே பெயர் அமைந்தது. 

ஒரு பெரும் சபையில் பண்டிதர்கள் பலர் அமர்ந்திருந்தார்கள். அதில் சில பேர் தர்க்கம் படித்தவர்கள். சிலர் வ்யாகரணம் படித்தவர்கள். சில பேர் மீமாம்ஸா சாஸ்த்திரம் படித்தவர்கள். இவர்களுக்கிடையில் ஒருவர் வந்து அமர்ந்தார். இவரைப் பார்த்ததும் எல்லோருக்கும் ஆச்சர்யம் ஏற்பட்டது. அவர்கள் இவரிடம், “கஸ்மிந் சாஸ்த்ரே ப்ரவேசோஸ்தி?” – ‘நீங்கள் எந்த சாஸ்த்திரத்தில் வல்லுனர்?’ என்று கேட்டார்கள். 

அதற்கு அவர், “சரணாகதி சாஸ்த்ரே ” – சரணாகதி சாஸ்த்திரத்தில் என்று பதிலளித்தார். இதைக் கேட்டதும் அத்துணை சாஸ்த்திர வல்லுனர்களும் திகைத்தனர். தர்க்கம், வ்யாகரணம், மீமாம்ஸை என்ற சாஸ்திரங்கள் உலகில் புகழ்பெற்றவைகள். ஆனால் ‘நீங்கள் சொல்லும் சரணாகதி சாஸ்த்திரம் என்பதை நாங்கள் கேள்விப் பட்டதே இல்லையே!’ என்றனர். 

அப்போதுதான் இந்தப் புதுவித்வான், “இது தெரியாதா உங்களுக்கு? மற்ற சாஸ்திரங்கள் கற்று பிரயோஜனமில்லையே! ”சரணாகதி சாஸ்த்திரம்” தெரியவில்லை என்றால் மற்றைய சாஸ்த்திரங்கள் இருந்தும் பயனில்லை. எல்லா சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தாலும், ராமாயணம் ஒருவருக்குத் தெரியவில்லை என்றால் ஒரு பயனும் இல்லை என்பது இதன் மூலம் காட்டப் பட்டது.

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
‘சென்மமும் மரணமும் இன்றித்தீருமே
இம்மையே இராமவென்றிரண்டெழுத்தினால்’

தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்

அறந்தலை நிறுத்தி வேதமருள்சுரந் தறைந்த நீதித்
திறந் தெரிந்துலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தீயோர்
இறந்துக நூறித் தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டுப்
பிறந்தனன் தன் பொற்பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான்–பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |தர்ம சம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே || (அத்தியாயம் 4 ஸ்லோகம் 8)

மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத்தாய
காலமும் கணக்கும் நீத்த காரணன் கை வில்லேந்திச்
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை
ஆலமும் அலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்
-யார் நீ என்று இராவணன் கேட்க அநுமன் தான் இராமனின் தூதன் (செங்கணோர் வில்லி தன் தூதன்) என்று சொல்லி இராமன் யார் என்பதை அநுமன் விவரித்துக் கூறும் பதிலாக ஒன்பது கவிகள் உள்ளன. அதில் வரும் பாடல்களே இவை.

தேவர்ஷி–பூதாப்த–ந்ருணாம் பித்ரூணாம்
ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன்
ஸர்வாத்மனா ய: ஷரணம் ஷரண்யம்
கதோ முகுந்தம் பரிஹ்ருத்ய கர்தம்–ஸ்ரீமத் பாகவதம் (11.5.41)
எல்லா கடமைகளையும் விட்டொழித்து, முக்தி அளிப்பவரான முகுந்தனின் பாத கமலங்களில் சரணடைந்து, தீவிர பக்தித் தொண்டு புரிபவர், தேவர்களுக்கோ முனிவர்களுக்கோ மற்ற உயிர்களுக்கோ குடும்ப அங்கத்தினர்களுக்கோ மனித குலத்திற்கோ முன்னோருக்கோ எவ்விதத்திலும் கடன் படுவதில்லை.”

தன்னுடைய வாக்கைத் தூய்மைப்படுத்திக்கொள்ளும் பொருட்டு துளஸீதாஸர் ராமனின் புகழை கூறுகிறார். “ராமனின் சரிதம் கரை காண முடியாத கடல். இந்தச் சரிதத்தை கேட்பவர்களுக்கு எப்பொழுதும் உற்சாகம்தான். ஆனந்தம்தான். ஏனெனில் ராமனுடைய புகழ் மங்களங்களின் உறைவிடம்”

மரவுரி – முசுக்கட்டை, அத்தி, ஈரப்பலாவைப் போன்ற சில மரங்களின் உட்பட்டைகளைத் தண்ணீரில் ஊற வைத்து, மரச்சுத்தியால் தட்டி மிருதுவாக்கப்படும். அப்பட்டை தகடு போன்று இருக்கும். அதற்கு நிறம் கொடுக்கப்படும்; அல்லது ஓவியத்தால் அழகுபடுத்தப்படும். அது பார்வைக்கு நெய்த துணி போல இருக்கும். இத்தகைய ஆடைகள் மரவுரிகள் எனப்படுகின்றன.

1. தசரதன் கைகேயிக்கு தந்த வாக்கைக் காப்பாற்ற செய்த உயிர் (ராமன்) தியாகம்.

2. ராமன் தந்தையின் வாக்கைக் காப்பாற்ற செய்த அரசுரிமை தியாகம்.

3. சீதை ராமனோடு வனவாசம் செல்ல அரச போகங்களை துறந்த தியாகம்.

4. சுமித்திரை ராமனையும், சீதையையும் காக்க லட்சுமணனை அனுப்பிய தியாகம்.

5. ஊர்மிளை தனது கணவனான லட்சுமணனை, சீதா-ராமருக்காக தந்த தியாகம்.

6. பரதன் தனது அரசாட்சியை ராமனின் பாதுகைகளுக்கு வழங்கிய தியாகம்.

அனுமான் தனது தலைவன் (Leader) கூறும் வேலையில் இருந்து நொண்டிச் சாக்குகள் (Lame excuses) கூறித் தப்பிக்க நினைக்காமல் அதனைச் சென்று முடிக்கும் சுறுசுறுப்பைக் கொண்டவர் (Go-Getter). அவர் பொறுப்புகளைத் (Responsibility) தன் தோளில் ஏற்பவர்.

அனுமான் தனக்குக் கொடுத்த பணியை சிறப்புற முடிக்கும் செயலாளர் (Secretary) போன்றவர்.

அனுமான் ராமனை சந்திக்கையில் தன்னை சுக்ரீவனின் மந்திரியாக முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல் தன்னை சுக்ரீவனின் தாழ்மையான பணியாளனாகவே (Obedient Servent) காட்டிக் கொள்கிறார்.

அனுமான், ராமன் கோபம் கொண்டு லட்சுமணனை அனுப்பும் முன்பே வரவிருக்கும் சிக்கலை ஊகித்தறிந்து அதற்கான முன்னேற்பாடுகளையும் (Precaustionary Measures) சுக்ரீவனிடம் கூறி வானரப் படைகளை திரட்டும் வேலைகளை செய்து விடுகிறர். அது சரியான நேரத்தில் செய்யப்பட்ட சரியான செயல் ஆகும். (Right Action at Right Time)

லக்ஷ்மணன் கோபத்தோடு கிஷ்கிந்தை வருகையில் அவர் கோபத்தைக் குறைக்கும் பணியில் ஒரு மத்தியஸ்தர் (Mediator) ஆக செயல்பட்டவர் அனுமான்.

அங்கதன் தன்னைவிட வயதில் இளையவனாக இருந்தாலும் தனக்கு தலைவனாக இருப்பதனால் அவன் அனுமதி பெற்று அனுமான் செயல்படுகிறார். (Egoless Nature).

அனுமான் சூழலில் உள்ள குறிப்புகளை அறியும் கவனம் (Attentive) கொண்டவர். அதனாலேயே அவர் ஈரத்தில் நனைந்து வரும் பறவைகளின் இறக்கைகளைக் கண்டு நீர்நிலைகள் அருகில் உள்ளன என்று அறிந்து தனது படைகளுக்கு வழிகாட்டுகிறார்.

அனுமான் ஒரு அணியின் தலைவனாக (Team Leader) சுயம்பிரபையின் அனைத்ஹ்டு வினவல்களுக்கும் (Queries) பதில் அளித்து அவர்களை மீட்கிறார். அனுமான் சூழலுக்கு ஏற்றாற்போல விரைவான, சிறந்த முடிவுகளை எடுப்பவர் (On-time decision maker, அங்கதன் சீதையைக் கண்டறிய முடியாமல் அனைவரும் உண்ணா நோன்பு இருந்து உயிரை விடலாம் என்று கூறியபோது, உடனடியாக தனது திறமையினால் (Efficiency) தனது படைகளுக்கிடையே பேதம் ஒன்றை உருவாக்கி நல்வழிப்படுத்துகிறார். தன் வலிமை அறியாத அனுமானின் தன்னம்பிக்கையை (Self Confidence) உயர்த்தி அவருக்கு ஊக்கமளிப்பவராக (Motivator) இருப்பவர் ஜாம்பவான். ராமாயணமும், அனுமானும் மற்ற கதாபாத்திரங்களும் என்றைக்கும் மேலாண்மை பாடத்திற்கான முன்னோடிகளாகவே இருந்துள்ளன


யதிதம் மே அனுரூபார்த்தம் மயா சாதி சுமந்த்ரிதம்
பவந்தோ மே அனுமன்யந்தாம் கதம் வா கரவாண்யாஹம்-2-2-15-

இது எனது விருப்பம்; நன்கு பிறரை ஆலோசித்து எடுத்த முடிவு -உங்களுடைய அனுமதியையும் கோருகிறேன்; வேறு என்ன செய்ய வேண்டும் என்றும் விளம்புங்கள் .
யத்யப்யேஷா மாமா ப்ரீதிர் ஹிதம் அந்யத் அபி சிந்த்யதாம்
அன்யா மத்யஸ்த்ய சிந்தா ஹி விமர்த்தாப்ய அதிகோதயா–2-2-16-

இது என்னுடைய விருப்பம் என்றாலும் மாற்று வழிகள் இருப்பின் அவைகளையும் சிந்திக்க வேண்டும். நடு நிலையில் நின்று சிந்திப்போரின் வாதங்கள் பலன் தரக் கூடியவை

மித்ரா பாவேன ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன
தோஷோ யதி அபி தஸ்ய ஸ்யாத் ஸதாம் ஏதத் அகர்ஹிதம்–6-28-3

நண்பன் என்ற முகத்துடன் வருபவனுக்கு சிறிய குறைகள் இருந்தாலும் அவனை நான் மறுக்க மாட்டேன் . அவனை ஏற்பதை நல்லோர் எல்லோரும் ஏற்பர் –ஒரு புறா கூட தன்னுயிரையும் ஈந்து , அதைக் கொல்லவந்த வேடனுக்கு தன்னுயிரையே தந்த கதை

ஸ்ரூயதே ஹி கபோதேன சத்ரு சரணம் ஆகதஹ
அர்ச்சிதஹ ச யதா ந்யாயம் ஸ்வைஹி ச மாம்ஸைர் நிமந்த்ரிதஹ

ஒரு புறா , அதனுடைய எதிரியான வேடன், அடைக்கலம் நாடி வந்த பொழுது விருந்தோம்பல் விதிகளைப் பின்பற்றி அவனை வரவேற்றத்தை நாம் கேட்டிருக்கிறோம் . அவனுக்குத் தன்னுடைய உடலையே விருந்தாகப் படைத்தது .

ஸ ஹி தம் ப்ரதிஜக்ராஹ பார்யா ஹர்த்தாரம் ஆகதஹ
கபோதோ வானர ஸ்ரேஷ்ட கிம் புனர் மத் விதோ ஜனஹ

ஓ குரங்கினப் பெருந் தலைவர்களே ! அதே வேடன் புறாவின் மனைவியைக் கொன்ற போதும் அந்த வேடனை விருந்தாளியாக ஏற்றது ஆண் புறா . அப்படி இருக்கையில் என்னைப் போன்ற ஒரு மனிதன் எவ்வளவு செய்ய வேண்டும் ?

ருஷேஹே கண்வஸ்ய புத்ரேன கண்டுனா பரம ருஷிணா
ஸ்ருணு காதாம் புரா கீதாம் தர்மிஷ்டாம் ஸத்ய வாதினா

முன்னொரு காலத்தில் வாழ்ந்த ,உண்மையின் உறைவிடமாக விளங்கிய ,கண்வ மஹரிஷியின் மகனான கண்டு மகரிஷியின் கவிதைகளை கேளுங்கள் ; அவர் இது பற்றி சொல்லியுள்ளார்

பத்த அஞ்சலி புடம் தீனம் யாசந்தம் சரண ஆகதம்
ந ஹன்யாத் ஆன்ருசம்ஸ்ய அர்த்தம் அபி சத்ரும் பரம் பத

எதிரிகளை அழித்தொழிக்க வல்ல அரசனே ! ஒருவன் கூப்பிய கரங்களுடன் வருகையில் எதிரியானாலும் கூட , அவனைக் கொல்லுவது கொடூரமான செயல் ஆகும். அதே போல பிச்சை கேட்டு வருவோனையும்,அடைக்கலம் கேட்டு வருவோனையும் கொல்லக் கூடாது

அர்த்தோ வா யதி வா த் ருப்தஹ பரேஷாம் சரணம் கதஹ
அரிஹி ப்ராணாம் பரித்யஜ்ய ரக்ஷிதவ்யஹ க்ருத ஆத்மனா

முன்னர் அகந்தையுடனும் அடக்கி யாண்டவானுமாக இருந்த எதிரியானாலும் ஏனையோரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு வந்தால் நல்ல மனதுடையவன் தன உயிரினைக் கொடுத்தாவது சரணடைந்தவனைக் காப்பாற்ற வேண்டும்

ஸ சேத் பயாத் வா மோஹாத் வா காமாத் வா அபி ந ரக்ஷதி
ஸ்வயா சக்த்யா யதா தத்வம் தத் பாபம் லோக கர்ஹிதம்

பயத்தினாலோ , அறியாமையினாலோ, ஆசையினாலோ அவனைத் தன் பலம் கொண்ட மட்டும் பாதுகாக்கா விடில் அது பாபம் . உலகமே அவனை இகழும்-

வினஷ்டக பச்யதம் தஸ்ய ரக்ஷிணஹ சரண ஆகதஹ
ஆதாய சுக்ருதம் தஸ்ய ஸர்வம் கச்சேத் அரக்ஷிதஹ

ஒரு அகதியைக் காக்கும் சக்தி இருந்தும் , அவன் நம் கண் முன்னாலேயே இறக்க நேரிட்டால் இது வரை கிடைத்த நற் பெயர் , நன்மைகள் அனைத்தும் பறந்தோடிப் போய் விடும்

ஏவம் தோஷோ மஹான் அத்ர ப்ரபந்நாம் அரக்ஷணே
அஸ்வர்க்யம் ச அயசஸ்யம் ச பல வீர்ய விநாசனம்

அடைக்கலம் கேட்டு வந்த அகதிகளை காப்பாற்றாமல் இருப்பது பெரிய இழுக்கு ; அவர்களுக்கு சொர்க்க போகமும் கிட்டாது ; புகழையும் வீரத்தையும் பலத்தையும் அழித்தும் விடும்

கரிஷ்யாமி யதா அர்த்தம் து கண்டோர் வசனம் உத்தமம்
தர்மிஷ்டம் ச யசஸ் மயம் ச ஸ்வர்க்யம் ஸ்யாத் து பல உதயே

நான் கண்டு மகரிஷி சொன்ன அற்புதமான வார்த்தைகளையே பின்பற்றுவேன் .அதுவே அறநெறி ; புகழ் ஈட்டும் ; சொர்க்கத்துக்கு வழி திறக்கும் ; கை மேல் பலன் தரும்-

ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய தவ அஸ்மி இதி ச யாசதே
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம-6-18-33-

ஒரே ஒரு முறை என்னைச் சரணடைந்தால் போதும்;நான் உன்னவன் என்று சொன்னால் , எல்லா உயிரினங்களிடமிடமிருந்தும் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன் இது என்னுடைய உறுதி மொழி . என்னுடைய உறுதியான கொள்கை

ராமாயண காவியத்தினுடைய ஆன்மீக சாரமாக விளங்குவது சரணாகதி தத்துவம் தான். இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டவேண்டும் என்று கருதியே கம்பர் தனது முதல் பாடலிலேயே ‘அன்னவர்க்கே சரண் நாங்களே’ என்று குறிப்பிடுகிறார்.

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
எல்லா உலகங்களையம் தானே தனது சங்கல்பத்தால் படைப்பதையும், நிலைத்திருக்குமாறு காப்பதையும், அழிப்பதையும், என்றும் முடிவுறாத அளவில்லாத அழகிய விளையாட்டாக உடையவர். அவரே தலைவர். அப்படிப்பட்ட பரமனையே நாங்கள் சரணடைகிறோம்.

ஐயா, உங்களுடைய பெருமையைப் பற்றி ரொம்பவே கேள்விப்பட்டிருக்கேன். ஒருமுறை நீங்கள் நடந்துபோகும்போது வழியில் கிடந்த கல் உங்க பாததூளி பட்டு ஒரு அழகிய பெண்ணாக மாறிவிட்டதாம். அவ்வளவு கடினமான கல்லுக்கே அப்படி நேர்ந்தது என்றால், மரத்தால் செய்த என் படகு எப்படி ஆகும் என்று தெரியவில்லையே. அதுவும் ஒரு அழகியாகி விட்டால், என் பிழைப்பு என்ன ஆவது? அதனால் உங்களது பாதங்களை நான் என் கையால் நன்றாகக் கழுவிய பிறகு தான் படகில் ஏற அனுமதியளிக்க முடியும்” என்று பணிவுடன் கூறுகிறான் படகோட்டி.படகோட்டி தனது தோல்பையிலிருந்து தண்ணீரை எடுத்து ராமரின் பாதங்களின் மீது வார்க்கிறான். அருகில் நிற்கும் அவனது குடும்பத்தாரும் வருகிறார்கள். அளவற்ற அன்புடனும் மகிழ்ச்சியுடனும் ஸ்ரீராமரின் பாதங்களைத் தொட்டு அலம்பி அந்தத் தீர்த்தத்தைத் தங்கள் தலைமீது தெளித்துக் கொள்கிறார்கள்.

அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்,
முடித்தலம் இவை என, முறையின் சூடினான்;
படித்தலத்து இறைஞ்சினன், பரதன் போயினான் –
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்.
இராமனின் இரண்டு பாதுகைகளையும், அழுத கண்களோடு, எனக்குத் திருமுடிகள் இவையே என்று பரதன் முறையாகத் தலைமேல் சூடிக்கொண்டான்.திருவடி சூடிய திருமுடி:

அரண் உடைத்தாக உய்ந்தேன்;ஆர் உயிர் துறக்கலாற்றேன்,
சரண் உனைப் புகுந்தேன்; என்னைத்தாங்குதல் தருமம் என்றான்.

‘மற்று, இனி உரைப்பது என்னே?வானிடை மண்ணில் உன்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்;தீயரே எனினும், உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்;உன் கிளை எனது; என் காதல்
சுற்றம், உன் சுற்றம்; நீ என்இன் உயிர்த் துணைவன் ‘என்றான்.

இடைந்தவர்க்கு, “அபயம் யாம்“ என்று இரந்தவர்க்கு, எறிநீர் வேலை
கடைந்தவர்க்கு, ஆகி, ஆலம் உண்டவற் கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின்,
உள்ளது ஒன்று ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின்,
அறம் என்னாம்? ஆண்மை என்னாம்?

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –


ஸ்ரீ நாராயணனே ஸ்ரீ ராமர் -ஸ்ரீ கம்ப நாட்டாழ்வான்–

December 7, 2025

நாராயணனே ராமன்: பரமபத நாதனாகிய நாராயணனே இராமனாக அவதரித்தான் என்ற செய்தியைக் கம்பநாடன் காவியத்தில் பல இடங்களில் பெற வைக்கின்றான். இராமனது அவதாரத்தைக் கூறும் கவிஞன்

ஒரு பகல் உலகெலாம் உதரத் துட்பொதிந்(து)
அரு மறைக்கு உணர்வரும் அவனை அஞ்சனக்
கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
திரு வுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை
” (பால-திருவ 2 – 10 – 3)

பிரளயகாலத்தில் எல்லாவுலகங்களையும் தன் திருவயிற்றில் மறைத்து வைப்பவன் நாராயணன்; உலகம் உண்ட பெருவாயன்; [திருவாய் 6 – 10 – 1] பாலனாய் ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி ஆல் இலையில் அன்னவசம் செய்யும் அண்ணல் அவன் [திருவாய் 4 – 2 – 1] நான்மறைகளாலும் உணர முடியாத அவனை, அந்த அஞ்சனக் கருமுகிலை, கோசலை மகனாகப் பெற்றாள்-

எழுதரிய திருமேனிக் கருங் கடலைச் செங்கனி வாய்க் கவுசலை யென்பாள் பயந்தாள்” [பால – குலமுறை 20]

“கராம்மலை யத்தளர் கைக்கரி எய்த்தே
அராவணை யில்துயில் வோயென அந்நாள்
விராவி அளித்தருள் மெய்ப்பொரு ளுக்கே
‘இராமன்’ எனப்பெயர் ஈந்தனன் அன்றே” [பால – திருவ 119]
” [பால – குலமுறை 20

கராம் – முதலை; கைக்கரி – யானை; அராவணை – பாம்புப் படுக்கை]-முதலை வாயில் அகப்பட்ட களிறு ‘ஆதிமூலமே’ எனக்கூவ, அதனை முன்வந்து அளித்த திருமாலே இராமனாகப் பிறந்தான் என்பது ஈண்டு மீண்டும் வலியுறுத்தப் பெறுவதைக் காண்க. இதே கருத்து விராதன் வாய்மொழியாகவும்,

“கடுத்துநிமிர் கராம்கவ்வக் கையெடுத்து மெய்கலங்கி
உடுத்ததிசை அனைத்தினும்சென்(று) ஒளிகொள்ள உறுதுயரால்
அடுத்தபெருந் தனிமூலத்து அரும்பரமே பரமேஎன்று
எடுத்தொருவா ரணம் அழைப்ப நீயோவந் தேன் என்றாய்
” [ஆரணி, விராதன் வதை 49]

சனகன் மாளிகையில் இராமன் திருப்பள்ளி எழுதலைக் கூறவந்த கவிஞன்,

கொல்லாழி நீத்தங்கோர் குனி வயிரச் சிலை தடக்கைக் கொண்ட கொண்டல்” [பால – மிதிலை 154]ஆழி – சக்கரப்படை] பாற்கடலில் துயிலும் பரந்தாமனே சக்கரப் படையை நீத்துவிட்டு, கோதண்டத்தைத் திருக் கையில் கொண்ட முகில்வண்ணன்-

“பஞ்சணை பாம்பணை யாகப் பள்ளி சேர் அஞ்சன வண்ணனே இராமன்” [ஆரணி சடாயுவுயிர் நீத்த 142]-என்று சங்கரன் கொடுத்த வாளால் இராவணனால் சிறகொடிக்கப் பெற்ற சடாயு வாக்கில் வைத்துக் கூறப்பெற்றுள்ளதை எண்ணி உணர்க

“சங்கு சக்கரக் குறியுள தடக்கையில் தாளில்
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் வில்கரத்து இராமன அத் திருநெடுமாலே
” [கிட்கிந் – நட்புகொள் 79]-திருமாலே இராமனாக அவதரித்துள்ளான் என்பதை,அநுமன் வாக்கிலும் வந்துள்ளமை காண்க.

“தோற்றம் என்பதொன்று உனக்கில்லை” [யுத்த – மீட்சி 107]–“மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான்” [யுத்த – நாகபாசப் 222]அவதார் இரகசியம். -“பிறப்பில் பல்பிறவிப் பெருமான்” [திருவாய் 2 – 9 – 5]-கம்ப நாடன் இதனை நான்முகன் வாக்காக.

“மறைகளின் தலைகள் மன்பெ ரும்பர மார்த்தமென்(று)
உரைக்கின்ற மாற்றம் அன்ப நின்னையல் லாம்மற்றிங்(கு)
யாரையும் அறையா
” [யுத்தமீட்சி 101]-மறைகளின் தலைகள் – உபநிடதங்கள்–தேவர்களின் வேண்டுகோட்கிணங்க நான்முகன் இராமனது உண்மைச் சொரூபத்தை விளக்குகின்றான்.

முன்னை ஆதியாம் மூர்த்திநீ மூவகை உலகின்
அன்னை சீதையாம் மாதுநின் மார்பின்வந் தமைந்தா
:” [யுத்தமீட்சி 113]-என்பதால் திருமாலே முதற்கடவுள் என்றும், சீதையே உலக அன்னையென்றும் உறுதி செய்வன்

“நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கெல்லாம்
வேராய்முழு முதற்காரணப் பொருளாய்
” [யுத்த – நிகும்பலை 141]

“உற்றொடு தனியே தானே தன்கணே
உலகம் எல்லாம் பெற்றவன் முனியப் புக்கான்
” [யுத்த வருணனை வழி 63]

நவையறும் உலகிற் கெல்லாம் நாயக நீயே” [யுத்த வருணனை வழி 67]

மும்மையாம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன்
தூதாய்ச் செம்மையால் உயிர்தந் தாய்க்கு
” [சுந்தர – உருக்காட்டு 71]-சீதை அநுமனைக் குறிப்பிடும் பாடற் பகுதி

மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத் தாய
காலமும் கணக்கும் நீத்த காரணன்
” [சுந்தர – பிணிவீட்டு 80]-அநுமன் வாய்மொழி

“மூவர்க்கும் தலைவ ரான மூர்த்தியார் அறத்தை முற்றும்
காவற்குப் புகுந்து நின்றார் காகுத்த வேடங் காட்டி”
[யுத்த – கும்பகருணன் வதை 150]-கும்பகருணன் வாய்மொழி

“மூலமே இல்லா முதல்வனே நீஎடுத்த
கோலமே யார்க்கும் தெரிவரிய கொள்கைத்தால்
ஆலமோ? ஆலின் அடையோ? அடைக்கிடந்த
பாலனோ? ஆதிப் பரமனோ? பகராயே
” [ஆரணி – கவந்த 44]ஞான ஒளி தட்டுப்பட்ட கவந்தனும்,இராமன் முதற் பொருள் என்று கூறுவதைக் காண்க

“மெய்யைத்தான் சிறிதுணர்ந்து நீவிதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ? உனக்கென்ன குறையுண்டோ?
வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்றளித்த
ஐயத்தால் சிறிதுஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா
” [ஆரணி – விராதன் வதை 59]-[மெய் – நீயே பரதத்துவம் என்னும் உண்மை; மழுவாளி – பரமசிவன்; ஐயம் – பிச்சை, சந்தேகம்-பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே; கபாலநல் மோக்கத்துக் கண்டுகொண்மின்” [திருவாய் 4 – 10 – 4]

“அன்னமாய் அருமறைகள் அறைந்தாய்நீ அவையுன்னை
முன்னம் ஆர் ஓதுவித்தார் எல்லாரும் முடிந்தாரோ?
” [ஆரணி-விராதன் வதை 60]-முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு  வீடும் அறியாது
என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ் வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே
–11-4-8-

 இதில் நாராயணனே ஊழிக்குப் பிறகும் நிலைபெற்று நிற்பவன் என்ற கருத்து வற்புறுத்தப் பெற்றுள்ளமை காண்க. மேகநாதன் ஏவிய நான்முகன் கணையால் இலக்குவன் அறிவொடுங்கி அயர்ந்தபோது தம்பி இறந்தான் என்று புலம்புகின்றான் இராமன். பின் அறிவு சோர்ந்து துயருறுகின்றான். அப்போது வந்த தேவர்கள், “முன்பு பின்பு நடு இல்லாய்!” [யுத்த – பிரமாத்திரப் 227] என்று விளித்துப் பேசுவதிலும் இதைக் காணலாம். நிகும்பலையைக் குலைக்கும்போது மேகநாதன் தன்னை இகழ்ந்து பேசியபோது, மறுமாற்றம் உரைக்கும் வீடணனின் பேச்சில்,-“மூவகை உலகம் ஏத்தும் முதல்வன்;
எவர்க்கும் மூத்த தேவர்தம் தேவன்”
[யுத்த நிகும்பலை யாகப் 175]-“மூவ ராய்முத லாகி மூலம தாகி ஞாலமும் ஆகியத் தேவ தேவர் பிடித்த போர்வில் ஒடிந்த சேவகர்” [அயோத். கைகேசி சூழ்வினை 62][தேவ தேவர் – சிவன்; சேவகர் – இராமன்]

இராமன் கோலம் புனைதலைக் கூறும் இடத்தில் இராமனைக் கவிஞன்,-முப்பரம் பொருளிற்குள் முதலை மூலத்தை” [பால. கடிமணப் 69]-காலம் ஆகணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற மூலமாய் முடிவிலாத மூர்த்தி இம்முனிவன் என்பார்” [அயோத். கைகேயி சூழ்வினை 91]-முடிசூடப் போகும் இராமனின் திருமேனியைக் (திவ்வியமங்கள விக்கிரகத்தைக்) கண்டு ஊரார் வாய்மொழி-

“சிற்குணத்தர் தெரிவரு நன்னிலை
எற்(கு) உணர்த்தரிது எண்ணிய மூன்றனுள்
முற்குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடலாடுதல் நன்றரோ”

[புல்லறிவாளர்களால் அறியமுடியாத பரம்பொருள் நிலையை என்னால் உரைக்க இயலாது; ஸத்வம், ரஜஸ், தமம் என்று மூன்றாக எண்ணப்படும் குணங்களுள் முதலாவதான ஸத்வகுணத்தை உடைய திருமாலே (முறையே) ரஜோகுணத்தையும், தமோகுணத்தையும் உடைய பிரமனையும், சிவனையுங்காட்டிலும் முதல்வர். அவரது கல்யாணகுணக்கடலில் குடைந்தாடுவதே நன்று ] என்னும் பாடலை அமைத்திருக்கிறான் கல்வியிற்பெரிய கம்பன்.

“ஆதி அந்தம் அரி என யாவையும் ஓதினார் அலகில்லன உள்ளன வேதம் என்பன மெய்ந்நெறி நன்மையன் பாதமல்லது பற்றிலர் பற்றிலார்

 —————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்பராமாயணத்தில் திருமந்த்ரார்த்தம்-ஸ்ரீ சேஷையங்கார்‌ ஸ்வாமிகள்-

September 22, 2025

எம்பெருமான்‌ சர்வ சக்தன்‌ என்பதைப்‌ பால காண்டத்திலும்‌, பக்த ரக்ஷண தீக்ஷிதன்‌ என்பதை அயோத்யா காண்டத்திலும் –பாகவத பரதந்த்ரன் என்பதை ஆரண்ய காண்டத்‌திலும்‌ சரணாகதி தர்‌மம்‌ அபயப் பிரதான வைபவ மிவற்றை யுத்த காண்‌டத்திலும்‌, ஏனைய தர்மங்களை மற்ற இடங்களிலும்‌ கம்பர்‌ வெளி யிட்டிருப்பதைப்‌ பரக்கப் பார்க்கலாம்‌,

கிஷ்கிந்தா காண்டத்தில்‌ ௮னுமப் படலத்தில் ,-மாற்றமஃது உரைத்தலோடும்‌’இல்லாத வுலகத்‌தெங்கும்‌”, என்னும்‌ செய்யுள்களாலும்‌ ** அஞ்சனைக்கொரு சிறுவன்‌” என்று தொடங்கி , துன்‌பினைத் துடைத்‌து மாயத் தொல்வினை”’ என்னுமளவான செய்யுள்களாலும்‌ சொல்லப்பட்ட ஆசார்ய லஷணமான சாஸ்திரார்த்த தத்வ ஞானமும்‌, சதாசார சீலமும்‌ பரத்வ நிச்சயமு முடையனாய்‌, இயல்பாகவே பராநுகூல பரனும்‌ ஸ்வ ப்ரயோஜனத்தில்‌ விருப்ப மில்லாதவனுமா யிருப்பானொருவன்‌,-மஞ்செனத் திரண்ட கோல மேனிய’”என எம்பெருமானை ஸாக்ஷாத் கரித்தவாறே அவனனுக்ரஹத்தால்‌ லோகத்தாரை உஜ்ஜீவிக்கச் செய்யம்‌ சதாசாரிய னாவனென்பது :’மாணியாம் படிவமன்று ” என்‌னுஞ் செய்யுளால் குறிக்கப் பட்டிருக்‌றது –

இப்படியான சதாசார்யனைச்‌ சிஷ்ய யாத்திரையில் பிரவிர்த்திப்பித்து, சம்சார துக்கத்தில் அகப்‌பட்டுழலும் அவரை உடைமை யென்னும்‌ மமகார நிவர்த்தி கண்டு உஜ்ஜீவிக்கும்படி எம்பெருமான்‌ திருவுள்ளம் பற்றுவன்‌ என்பதை, ““அணிகலக் குறியினாலே , வென்றி யானடியன் தன்னை வேறு கொண்டிருந்து கூறித்‌, தென்றிசைச் சேறி யென்றான வனருள் சிதைவதாமோ என்னும்‌ சுந்தர காண்டச்‌ செய்யு ளாலும்‌ தெளியலாம்‌,

இராமாவதார ரஹஸ்யத்தை ஹனுமான்‌ வாக்கால்‌, இராவணனுக்கு அறிவுறுத்தி யிருப்பதையும்‌,-அன்னவர்க் கடிமை செய்வேன் நாமமுமனுமனென்பேன்‌”?
என்ன ஹனுமான வாக்கால் காட்டும்‌ ஆண்டானடிமைத் திறனையும்‌ கருதுமிடத்‌து ஹனுமானை ஈசனருள் பெற்று உலகத்தார்க்கு உறுதி பயக்கும்‌ உண்‌மைப் பொருளை உபதேசிக்கும்‌ நல்லாசிரியனாகவும்‌, பரமபதியின் பிரிவாற்றாமல்‌ துன்புறும்‌ சீதைப் பிராட்டியாருக்கு பதியின்‌ அருள் சின்னத்தைக் காட்டி துயரை நீக்கி பதியை யடைய ஹேது வாயிருந்த திருவாழியை சேதனர்கள்‌ சம்சாரத் துக்கத்தினின்று கரையேறி
எம்பெருமானை யடையும் ஹேதுவான திருமந்த்ரமாகவும் உய்த்து உணரவைத்துக்
கம்பர் சுந்தர காண்டத்தில் ஆசார்ய தர்மத்தையும்‌ திருமந்திர மேம்‌பாட்டையும்‌ வெளியிட்டிருப்பது
நன்கு தெளியத் தக்கது-சுந்தர காண்டத்தில் இந்
துண்ணிய கருத்துக்களடங்கிய உருக்காட்டு படலத்‌தில்‌ 10 செய்யுள்கள் காணத்தக்கது –௮றுபத்‌து மூன்றாவது மீட்டுமுரை”யென்ற செய்யுள் முதல்‌ எழுபத்து இரண்டாவது
-பாழிய பணைத் தோள்‌”
என்‌ற செய்யுளீறாகப்‌ பத்துப் பாசுரங்களிலும்‌ உள்ளுறைப் பொருள் உணர வேண்டும்-இக் காண்டத்தில்‌ ஜீவாத்மாவினுடைய ஸ்வரூபத்தையும்‌, ஆசாரிய கிருத்தியத்தையும்‌ மிகக்‌ தெளிவாயும்‌ அழகாயும்‌சித்தாந்தம் செய்திருப்பதால்‌, சுந்தர காண்டமெனப்‌ பெயர் கிடைத்தது என்பதேயாம்‌.

ததோ ராவணநீதாயாஃ ஸீதாயாஃ ஷத்ருகர்ஷநஃ. இயேஷ பதமந்வேஷ்டுஂ சாரணாசரிதே பதி৷৷5.1.1৷৷-முதல் ஸ்லோகார்த்தம் -மேலே கிஷ்கிந்தா காண்டத்‌திற் கண்டபடி நிகழ்ந்த பிறகு சத்‌துருவை நாசம் பண்ணத் தகுந்த ஹநுமான்‌ இராவணனாற்‌ பெயர்த்துக் கொண்டு போகப்பட்ட சீதாப் பிராட்டியினுடைய இருப்பிடத்தைக்‌ தேடுவதற்காக ஆகாய மார்க்கத்திற்‌ பிரவேசிக்க எண்ணங் கொண்டார்‌?!-சேதனர்களை உய்யக்‌ கொள்வதற்காகவே ஏற்படுத்திய முத்‌ரையையும்‌ ஆஜ்ஜையையும்‌ பெற்ற பிற்பாடு அஜ்ஞானமான பகைவனை வேரோடு வெல்லத் தக்க ஆசாரியன்‌, (ஹூுமான்‌) பூர்வாசாரியர்களால் அநுஷ்டிக்கப்பட்ட
ஸத் ஸம்பிரதாய மார்க்கத்தில்‌ நிலைத்தவராய்‌, அவிவேகத்தால்‌ தனக்கு ஸ்வாதினம் பண்ணப்பட்ட சேதனனுடைய ஸம்ஸார மண்டலத்தையும்‌,பகவத்‌ ப்ராப்‌தியிலுண்டான எண்ணத்தையும்‌, ஸாத்விக ஸம்பாஷண முதலான அடையாளத்தையும் தேட நினைத்தார்-

கழுந்தரா யுன கழல் பணியாதவர் கதிர் மணி முடிமீதே
அழுந்த வாளிகள் தொடு சிலை ராகவ வபி நவகவிநாதன்‌
விழுந்த நாயிற தெழுவதன் முன் மறை வேதியருடன் ஆராய்ந்து
எழுந்த நாயிறு விழுவதன் முன்கவி பாடின தெழ நூறே.–
தனியன்

“தேவபாடை யினிக் கதை செய்தவர்‌
மூவரானவர் தம்முள் முந்திய
நாவினா ருரையின்படி நான்‌ றமிழ்ப்‌
பாவினா லிதுணர்த்திய பண்பரோ?
, —வால்மீகி வசிஷ்டர் போதாயனர் -மூவர்
தமிழிலே தாலை நாட்டி—பார் மேல்‌, நம்பு பா மாலையாலே நரருக்கின்‌ றமுதமீந்தான்‌

மீட்டிமுரை வேண்டுவன வில்லையென மெய்ப் பேர்‌
தீட்டியது தீட்டரிய செய்கையது செவ்வே
நீட்டி தென நேர்ந்தனனெனா நெடிய கையாற்‌
காட்டினனொராழியது வாணுதலி கண்டாள்‌
–சுந்தர காண்டம்‌ உருக் காட்டு படலம்‌. பாட்டு-63,

மீட்டுமுரை – முன்னமே-பகவானுடைய சொருபத்தையும்‌, செளலப்யத்தையும்‌ காருண்யத்தையும்‌, சேதனனுக்கும்‌ பகவானுக்குமுள்ள சம்பந்தத்தையும்‌, சேதனனுடைய பூர்வ வாசனையையும்‌, ஆசாரியன்‌ (ஹநுமான்‌) எடுத்துச்‌ சொன்ன பின்‌ மற்றும் சொல்ல வேண்டிய விஷயம்‌
வேண்டுவனவில்லை–இனி மேல்‌, சேதனனால் கேட்‌கப் பெறுவதும்‌, ஆத்மா உஜ்ஜீவிக்கும் பொருட்‌டுள்ள அவசியமானதுமான உபாயம்‌ வேறு யாதொன்றுமில்லை்‌
என– என்று, (இவ் விதமாகச்‌ சொல்லி,)
மெய்ப்பேர் தீட்டியது –நாராயண என்‌னும்‌ பெயரும்‌ உயிருமான திரு நாமத்துடன்‌ ஓம்‌ நமோ என்னும் உடலாகிய (மெய்யாகிய) எழுத்துக்‌களைச் சேர்த்துச் செய்த திவ்ய மங்கள கரமான அஷ்டாஷரம்‌ என்ற திரு மந்தரமொன்றுண்டு,
தீட்டரியசெய்கையது–அந்தத் திருமந்திரமானது எழுதவரிது, எழுதற்பாலதன்று, எழுதாக்கிளவி, (வேத வாக்கியம்‌) அதை எழுத முடியாது, எழுதுதற்‌கடங்காது, எழுதிக் கற்‌றுக் கொள்வதிற் பயனில்லை,௮து உபதேச மந்திரம்‌, உபதேசக் க்ரமத்தா லடையத் தக்கது யொழிய வேறல்ல. (ஆகையால்‌)செவ்‌வே–நேராக (முறைப்படி) ௮தாவது குரு பரம்‌பரா பூர்வமாக, அல்லது உபதேச விதிப்படி
நீட்டிதென–நீ சேதனனுககு இந்த அஷ்டாக்ஷர மந்த்ரத்தை உபதேசம் பண்ணு என்று சொல்லி,
நேர்ந்தனன் -எனக்குப்‌ பகவான் கொடுக்தார்‌, ௮தாவது ஆஞ்ஞாபித்தார்‌, என–என்று உபதேசம்‌ பண்ணக் கருதி, நெடிய கையால்‌– விசேஷ அர்த்த புஷ்டி யுள்ளதும்‌, ஞான வித்தகந் தரித்த செங்கை ‘என்பதற்கிணங்க ஞானக் குறியுமாகிய சின் முத்ரையினால்‌ காட்டினனொராழி – தனது இருக்கையை வட்ட வடிவாய்ச்‌ சின் முத்ரா ரூபமாக வைத்துக் கொண்டு, பகவத் ஆஜ்ஞா ரூபமான வேத வாக்கியமாயும்‌, மிகவும்‌ ஆழ்ந்த பொருள்களை யுடையதாயு மிருப்பதால்‌ ஆழியென்று சொல்லத் தக்கதாயுள்ள திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தை ஹனுமானாகிய வாசாரியன்‌ சீதை யாகிய சேசனனுக்கு உபதேசித்தார்‌.
அது வாணுதலி கண்டாள்‌–சேதனனும்‌ உபதேதசம்‌ பெற்ற பின்‌ அந்தத் திருமந்திரத்தின்‌ பெருமையை ௮றிந்தான்‌- அதனால் அகம் மகிழ்ந்தான்-௮கத்தினழகு முகத்தில் தெரியுமாதலால்‌ ஆத்மா வடைந்த ஆனந்தத்தை வெளிப் படுத்திக் காட்டிய முக மலர்ச்‌சி கொண்டு, வாணுதலி கண்டாள் எனக் கூறப்பட்‌டன. இன்னும்‌, திருமந்திர உபதேசத்துக்குரி வைஷ்ணவ சின்னமான ஊர்த்துவ புண்டர மணிந்த நெற்றியும்‌ பகவத் பார தந்திரியமுமுடைய சேதனனென்பது தோன்ற வாணுதலி யென்றாரென்பதும்‌ பொருந்தும்‌-எனவே ௮னுமான்‌ சீதைக்கு ஸ்ரீராமனது கணையாழியைக் கொடுத்தார்‌ என்பது இச் செய்யுளுக்குச்‌ சாமானியக் கருத்தாயிருப்பினும்‌, விசேஷார்த்தமாக, அனுமானாகிய ஆசாரியன்‌ ராஷஸ மண்டலமாக சம்சார பந்தத்தால்‌ நலிவடையா நின்ற சீதையாகிய சேதனனுக்குத்‌ திரு வாழியாகிய திருவஷ்டாஷாரத்தை வேத விதிப்படி. பிரஸாதித்தார்‌ என்பதையும்‌ இச் செய்யுள்‌ ௮டக்கிக்‌ கொண்டி ருக்கிறது.

அது வாணுதலி கண்டாள்‌” என்று சொன்ன பின்‌ அந்தச் சேதனலுக்குண்டான பரவசச்தை வெளிப்படுத்த விரும்பிப்‌ பின்‌ வரும்‌ இரண்டு செய்யுள்களின் முலம்‌ பலவித திருஷ்டாந்தங்களுடன்‌ உபபாதிக்கிறார்‌,

இறந்தனர் பிறந்த பயனெய்தினர் கொலென்கோ
மறந்தனரறிந் துணர்வு வந்தனர் கொலென்கோ
துறந்த வுயிர் வந்திடை சொடர்ந்தது கொலென்கோ
திறந்தெரிவ தென்னை கொலி நன்னுதலி செய்கை
–64-

(இதுவும்‌ உபதேச அநந்தரம்‌)
இந் நன்லுதலி செய்கை-இத் திவ்விய முக மலர்ச்சியை யடைய சேதனனுக்கு ஜாயமான கடாஷத்தாலுண்டான ஆனந்த அனுபவத்தை (எவ் வனுபவத்துக்கு ஈடாகச்‌
சொல்லுதல்‌ கூடுமென்று ஆராய்ந்தால்‌) இறந்தனர்‌ – ஜீவாத்மா சம்சார பந்தத்திலகப்பட்டு இந்திரியங்களாற் கட்டுண்டு பூர்வ ஞானமே மேலிடாது அஞ்ஞானமான அந்தகாரத்தி லகப்‌பட்டுழன்று ஜென்ம மெடுத்தும்‌ ஜென்ம சாபல்யமான கிருத்தியங்கள்‌ யாதொன்னுஞ் செய்யாமல்‌, திருவடிகளை அடைய வேண்டிய கருமங்களிருந்தும்‌ விலகி ஜீவப் பிரேதம் போலிருக்கும்‌ பயனற்ற ஆத்ம கோடிகள்‌ ; பிறக்க பயனெய்தினா்‌ கொலென்கோ – திடீரென்று பகவத் ஜாயமான கடாஷ விசேஷத்தாலே உலகில் பிறந்து ௮டைய வேண்டிய புருஷார்த்தங்களை அடைந்தால்‌ அந்த ஜீவர்களுக்கு எவ் வளவு ஆனந்த முண்டாகுமோ ௮வ்வளவு சந்தோஷம்‌ உண்டாயிற்றென்று சொல்‌லலாமோ ; (அல்லது) அறிந்து – சத் சம்பிரதாய மார்க்கக்தை யனுஷ்டித்து வந்து, பகவத் சரணாரவிந்தங்களில் ஈடுபட்டிருந்து வந்து; (இப்பால்‌)மறந்தனர்‌ – ஜென்மாந்தர வாசனையையும்‌, பகவானுடைய சராணாரவிந்தங்களின்‌ வைபவத்தையும்‌ ஒரு கால விசேஷத்தில்‌ மாயையினால்‌ அடியோடு மறந்திருக்க ஒரு ஜீவன்‌ உணர்வு வந்தனர் கொலென்கோ- மறுபடியும் குருமுகமாகப்‌ பூர்‌வ அனுஷ்டானத்தையும்‌ தன் நிலைமையையும்‌ திடீரென்று அறிந்து உஜ்ஜீவுக்கும் படியான ஒரு ஹேது நேர்ந்தால்‌ ௮ப்போது என்ன குதூகலமுண்டாகுமா அதற்குச் சமமாகச் சொல்லலாமோ ;(அல்லது) துறந்த உயிர்‌-போன பிராணன்‌; வந்து இடை தொடர்ந்தது கொலென்கோ – மறுபடியும்‌ உடலுட்புகுந்து உடலும்‌ உயிரும்‌ கூடிற்று என்றால் எவ்வளவு ஆனந்தமுண்டூ அவ்வளவு ஆனந்தத்‌தை இந்தச் சேதனன்‌ அடைந்தானென்று தான் சொல்லலாமோ, (செய்கை) திறந் தெரிவது என்னை கொல்‌ -௮ந்த ஆனந்தத்தின்‌ அளவையும்‌ பெருமையையும்‌ வன்மையையும்‌ என்ன வென்றெடுத்துரைப்பது,

இழந்த மணி புற்றர வெதிர்ந்‌த தெனலானாள்‌
பழந்தன மிழந்தன படைத்தவரை யொத்தாள்‌
குழந்தையை யுயிர்த்த மலடிக்குவமை கொண்டாள்‌
உழந்து விழி பெற்றதொருயிர்ப்‌ பொறையு மொத்தாள்‌–65-

(தவிரவும்‌,) புற்றரவு – இந்த சம்சார மண்‌டலத்தில்‌ ஜீவாத்மா;
இழந்த மணி – (தான்‌ அயர்‌வுற்றிருந்த போது, ௮தாவது தான்‌ மாயையினால்‌
மயக்குற்று மெய்ம்மறந்து புத்தி ஸ்‌திரமில்லாமற்‌ சஞ்சல மடைந்திருந்த காலத்தில்‌) தன்னை விட்டகன்ற உயர்ந்த ரத்ன சமானமான அழுக்கற்ற
நல்லறிவை;
எதிர்ந்ததெனலானாள்‌ – மறுபடியும்‌
அடைந்தால்‌, அச்சேதனனுக்கு ௮ப்போதுண்‌டாகும்‌ களிப்பை ஓக்கும்‌;(அல்லது) இழந்தன தானே தன்னுடைய கர்மானுஷ்டானங்களினாலும்‌, ௮விவேகத்தினாலும்‌, சுயேச்சையினாலான
கிருத்தியங்களினாலும்‌ இழந்த மோக்ஷத்தை;
பழந்தனம்‌ – மிகப் பழமையாயும்‌ அநாதி பூர்வகமாயும்‌
௮நாதி காலங்களாககத் தன்னைக் காப்பாற்றுவதற்கு
ஹேதுவாயுமுள்ள ஒரு சாரமான மூல மந்திரமானதும்‌, பூமியிலுள்ள மநோ ரதங்களையும்‌ சுவர்க்க
போகங்களையம்‌ முக்தியையும் சாதித்துக் கொள்வதற்கு ஆதாரமானதுமான ஒப்பற்ற பொருளை;
படைத்தவரை யொத்தாள்‌ – மீண்டும்‌ புதையல்‌ கண்டெடுத்தாற்‌ போல்‌ ௮திக வியப்புடன்‌ புதிதாக
கிட்டினது போலடைந்தால்‌ அப்போது சேதனனுக்குண்டாரும்‌ ஆநன்தத்திற்கு ஒப்பாகுமென்று சொல்லற் பாலதாம்‌; (அல்லது) குழந்தையை – தென் புலத்தாரைத் தான்‌ பருவ காலங்களிற் கொடுக்கும் நன்னீர் முதலாயுள்ள கருமங்கள்‌ யாவும்‌ வேத விதிப்படி செய்வதால் கரை யேற்றும்
தன்மை யுடைய ஆண் குழந்தையை;
(இனி உள்‌ளுரை )
ஜீவாத்மா எத்தனையோ கோடி ஜென்மமெ
டுத்துழலும் போது *பூதமைந்தும்‌, விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடுற்‌ற வீக்கம்‌, கலங்குவது”? என்பதற்கிணங்க அந்த வீக்கமாகிய பிறப்‌பின்‌ மிகுதியற்று மறுபிறப்பில்லாமல்‌ உய்யும்படிக்கான ஓர்‌ உபாயத்தை; (திவ்விய ௮ஷ்டாஷர
மந்த்ர அனுக்கிரஹத்தை)
உயிர்த்த – நூதனமாக எதிர்பாராது அடைந்த;
மலடிக்குவமைகொண்டாள்‌ – நெடு நாளாகக் காத்திருந்தும்‌ பிரயத்தனப்‌
பட்டும்‌ கிட்டாமல்‌ இனிக் கிடைப்பதரிதென்று
மனங்கலங்கச்‌ சோர்வும்‌ ஏக்கமுமுற்றிருக்கும்‌ ஒரு
ஜீவாத்மாவுக்கு ௮ப்போதுண்டாகும்‌ பர வசத்தை நிகரக்குமென்‌று சொல்லலாம்‌; (அல்லது) உழந்து -அஞ்ஞான மிகுதியால்‌ தன்னுடைய ஞானக்கண்‌ ணடைக்கப்பட்டு ௮தனால்‌,தெளிவான நடையற்று
நன்னெறி விட்டு விலகி உழல்கின்ற போது
விழி பெற்றது -சன்மார்க்கமும்‌ மோஷ ஹேதுவுமான
நன்னெறியை ஊட்டும்‌ படிக்குள்ள ஓர்‌ உபாயத்தை யடைந்த;
ஓர்‌ உயிர்ப்பொறையும்‌ ஒத்தாள்‌-ஒரு ஜீவாத்மா அல்லது ஒரு சேதனனுக்குள்ளது
போல்‌ ஆயிற்று.

ஆகவே, இந்த இரண்டு செய்யுள்களாலும்‌ அனுமான்‌ சீதா பிராட்டிக்குக்‌ கணையாழியைக்‌ காட்டினவுடன்‌ ௮வள்‌ மிகக் களிப்புற்றாளென்பது சாமான்யக் கருத்தாயினும்‌ . விசேஷார்த்தமாகத்‌ திருவஷ்டாக்ஷர வுபதேச பூர்வமாகச்‌ சேதனனுக்குண்டாகும்‌ ஆத்மானந்த வைபவத்தைப்‌ பூர்வாசாரியர்களாற்‌ பலவித திருஷ்டார்தங்களுடன்‌
விரித்தெழுதப் பெற்றதற்கிணங்க இவ் விடத்திலும்‌
கூறப் பட்டது.

———–

இனிப்‌ பின்வரும்‌ இரண்டு செய்யுள்களால் திரு மூல மந்திரத்தை உபதேசம் பெற்ற பின்‌ அந்தச் சேதனன்‌ ௮தைக் கொண்டாடி யனுபவித்த விதத்தை விரித்துக் காட்டுகிறார்‌

வாங்கி நண் முலைக் குவையில் வைத்தனள் சிரத்தால்‌
தாங்கி நண் மலர்க்கண் மிசை யொத்தின டடந்தோள்‌
வீங்கி நண் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போ
டேங்கினள் உயிர்த்தனல் இதின்னது எனலாமே,
–66-

வாங்கினள் –சேதனன்‌ ௮ஷ்டாஷ மந்திரத்தை வானமீகி பகவான்‌ பிரயோகித்ததற்கு இணங்க மனசில் வாங்கினன்‌ என்றார்‌ ; மனசில்‌ நிலை பெறச் செய்தான்‌ என்றபடி-
முலைக் குவையில் வைத்தனள்‌ – பகவத் அனுபவ முச்கிய சாதனமான சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பிக்கும்‌ த்வயம்‌ என்‌னும்‌ மந்த்ரத்துடன் சேர்த்து அந்த மந்திரத்தை அனுசந்தித்தான்‌-
சிரத்தால் தாங்கினள்‌ – அந்த த்‌வயார்த்தத்துக்குள்‌ உத்தர வாக்கியார்த்தத்தில் ஊன்றினான்‌; ௮தாவது சர்வ ஸ்லாக்கியமானதும்‌ சாரமானதுமான மந்திரத்தை ௮தனுடைய கெளரவமும்‌, தன்னுடைய பாரதந்தர்யமும்‌ தோற்ற அதை ப்ரதானமாகவும்‌ மூலாதாரமாகவும்‌ கொண்டாடினான்‌ என்றபடி-
மலர்க்கண்‌ மிசை யொத்தினள்‌ -தன்னுடைய ஞானக் கண்‌களால்‌ ௮ம் மந்திரத்தின்‌ பெரும் பயனை ௮னுபவித்தான்‌-
தடந் தோள் வீங்கினள்‌ – பெரிய தோள்‌களாகிய பகவத் பாகவத கைங்கரிய சாதனங்களைப்‌ பெருக்கினான்‌- மெலிந்தனள்‌ – பகவத் கைங்கரியத்‌தில்‌ த்வரை யுடையனாய்‌ ௮து எப்பொழுது கிட்‌டுமோ வென்னும்‌ ஏக்கத்தாற்‌ சோர்வுற்றான்‌.
குளிர்ந்தனள்‌ – இந்த மந்திராநுசந்தானமே சகல வித கைங்கரியமுமாகி ௮வன்‌ திருவடி சேவை கிடைப்பிக்கச் செய்வதென்ற நிச்சயத்தால்‌ ஸந்தோஷத்தை யடைந்தான்‌- வெதுப்‌போடு ஏங்கினாள்

“ஒரு கணத் திரண்டு கண்டேனொளி மணி யாழி யான்ற
திரு முலைத் தடத்து வைத்தாள் வைத்தலுஞ் செல்வ நின்பால்
விரக மென்பதின் வந்த வெங் கொழுந் தீயினால் வெந்‌
துருகிய துடனே யாறி வலித்தது குளிர்ப் புள்ளூற–

என்பதற்கிணங்க, ஈசனுக்‌கு உகப்பாகச்‌ செய்யும்‌ சத் கர்மங்களில்‌ ஏதேனும்‌ குறைவு பட்டு விடுமோ வென்று மனக் கலக்கங்கொண்டு பரி தபித்தான்‌ உயிர்த்தனள்‌ – இன்னதென்று தோன்‌றாது பெருமூச்செறிந்தான்‌-இது இன்னதெனலாமே – இப்படியாகச்‌ சேதனனால் செய்யப்பட்ட பல செய்கையை இன்னின்ன எண்ணங் கொண்டு இன்ன காரணத்தோடு இன்னின்ன செய்கைகள்‌ செய்து கொண்டாடினான்‌ என்று சொல்வது எளிதாமோ என்பதாம்‌.

மோக்கு முலை வைத்துற முயங்கு மொளிர் நன்னீர்‌
நீக்கி நிறை கண்ணிணை ததும்ப நெடு நீள
நோக்கு நுவலக் கருதுமொன்‌று நுவல்கில்லாள்‌
மேக்கு நிமிர் விம்மலள் விழுங்கலுறுகின்றாள்‌-
-67-

மோக்கும்‌–சேதனன்‌ திருமந்திரத்தை
௮நு சந்தானம் செய்துகொண்டே அதன் அர்த்தத்தை யனுபவிப்பான்‌-
முலை வைத்துற முயங்கும்‌ – அதை த்வயதத்தோடு நன்றாகப்‌ பொருந்தும்படி. சேர்ப்பான்‌- அதாவது அத்‌வைத பாவமின்றி விசிஷ்டாத்வைத சித்தாந்த பரமாக அர்த்தத்தை நயிப்பிப்ப னென்றபடி-
கண்‌ணிணை ததும்‌ப வொளிர் நிறை நன்னீர் நீக்கி -உயர் மழைக் கண்ணீரா லாயிரங் கலசமாட்டி யேங்கனெ ளிருந்த தல்லா லியம்பலள்‌? என்றபடி
தனக்குண்டான ஆஹ்லாதத்தால்‌ அஜ்ஞானம் மேலிட்டுத்‌ தன்னாற்‌ சரியான கைங்கரியம் செய்து ஆதரிக்க முடியுமோ வென்று ஏக்கங்கொண்ட மனோ சாஞ்சல்யத்தை நீக்கி;
நெடு நீள நோக்கும்‌ – திரு ௮ஷ்டாக்ஷரத்தின்‌ ஆழ்ந்து கிடக்கும்‌ அர்த்த விசேஷங்களை யெல்லாம்‌ நெடுந்தூரம்‌ ஆராய்‌வன்‌,
நுவலக் கருதும்‌ – அதன் பெருமையைக்‌ கண்டு பூரித்துப்‌ பலமாக ஸ்தோத்திரம் செய்ய ஆசையை உடைவனாவான்‌. ஒன்னும்‌ நூவல்‌ இல்லாள்‌ – அடங்காத ஆனந்தத்தைப்‌ பெற்ற படியால்‌ யாதொன்றும்‌ வாய் திறந்து சொல்ல மடியாது திகைத்து நிற்பான்‌.
மேக்கு நிமிர்‌ விம்மலள்‌ -ஞான ஆனந்தத்தாலுண்டான ஆத்ம புஷ்டி யுடையனாய்‌.
விழுங்க லுறுகின்றாள்‌ – அக்காரக் கனியான எம்பெருமானை விழுங்குவது போல அவகாஹித்துத் தொடங்கினான்‌ என்பதாம்‌–

மேலே கண்டவிதமாகத்‌ திருமந்திரத்தை அனுபவித்ததன்‌ மேல்‌, பின் வரும்‌ இரண்டு செய்‌யுள்களால் இந்தச் சேதனனுக்குண்டான தேஜஸ்ஸையும்‌ ௮வன்‌ பெற்ற பேருதவியையும்‌ உணர்த்துகிறார் –

நீண்ட விழி நேரிழை தன்‌ மின்னினிற மெல்லாம்‌
பூண்ட தொளிர் பொன்னனைய பொம் மனிற மெய்யே
ஆண்ட கை தன் மோதிர மடுத்த பொருளெல்லாம்‌
தீண்டள வில் வேதிகை செய் செய்வ மணி கொல்லோ.
–68-

நீண்ட விழி நேரிழை தன்‌ –திருமந்த்ரார்த்த ஞான தைர்க்யத்தை அடைந்த சேதனனுக்கு
மின்னினிற மெல்லாம்‌-அப்பியாச தசையில் மின் போல் தோன்றி மறைந்து வந்த ஸ்வரூப ஞானம் எல்லாம்
மெய்யே -பாவந ப்ரகர்ஷத்தாலே ப்ரத்யக்ஷ ஸமான ஆகாரமாய்
ஓளிர் பொன்னனைய பொம் மனிறம் பூண்டது –தப்த காஞ்சனம் போல்‌ இடை வீடின்றி -அதாவது- சேதனனுடைய மன நிலை நிஷ்களங்க மாயிற்று ; (ஏனெனில்‌) ஆண்ட கை தன் மோதிரம் –திரு ௮ஷ்டாஷர மந்தர மானது
அடுத்தபொருளெல்லாம்‌ – உபதேசம்‌ பெற்ற எந்த ஜீவனையும்‌,
தீண்டள வில் வேதிகை செய் —ஸ்ரவண மாத்திரத்தாலே ஸ்வரூப பிரகாசத்தை உண்டாக்குவதால்
செய்வ மணி கொல்லோ-ஸ்பர்சன வேதி
யென்னும் தெய்வத் தன்மை பொருந்திய மணி விசேஷமோ – அல்லது ஞான ஆனந்த ஸ்வரூபம் தானோ -மூலத்தில்‌ ஐக்கியம் தானோ என்று வியக்கத் தக்கதாயுள்ளதோ என்பதாம்

இருந்து பசியாலிட ருழந்தவர்கள் யெய்‌தும்
அருந்துமமுதாகிய தறத்தவரை யண்மும்‌
விருந்து மெனலாகியது வீயுமுயிர் மீளும்‌
மருந்‌து மெனலாகியது வாழி மணியாழி
-69-

வாழி – பெருமை பொருக்திய நித்‌தியமான வாழ்வை அளிக்கத் தகுந்த;
மணியாழி -திரு மூல மந்திரமானது ; பசியால்‌ – இந்திரியங்களின்‌ ஈடுபாட்டால்‌; இருந்‌திட ருழந்தவர்கள்‌ மெய்ச் நெறி செல்லாதுய் நெறி யறிவின்றி- துக்கத்திலாழ்ந்து கஷ்டப்படுற ஒரு ஆத்மாவுக்கு;
எய்தும்‌ ௮ருந்துமமுதாகியது – கால விசேஷத்தில்‌ இந்திரிய அனுபோகங்களினின்‌றும் விலகி உய்யுமநெறி யடைவதற் கேற்பட்ட தொரு ஒப்‌பற்ற உபாயம்‌ கிடைத்தாற் போலாயிற்று;
அறத்‌தவரையண்மும்‌-சன்மார்க்கம் அமைந்தவர்களைத் தேடிச் சேரும்‌.
விருந்துமென லாகியது -விருந்து போலவே சந்தோஷ ஹேதுவுமாயிற்று ;
வீயுமுயிர்‌ மீளும் மருந்துமெனலாகியது – இறுதி யினுயிர் தந்தீயு மருந்தொத்‌த தனைய தெக்தாய்‌”எம்பிரானாமஞ் சொல்லி,௨ருக்கின னுணர்வைத் தந்தானுயிர் -என்பதற்கு இணங்க யாதொரு பயனுமற்றுத்‌ திருவடிகளைச் சேராது வியர்தமாகப் போகும் நிலையில்‌ நின்ற ஒரு ஆத்மா உஜ்ஜீவிப்பதற்கு ஹேதுவான ஒரு ௮மிர்‌த சஞ்சீவி போலும்‌ ஆயிற்று என்பதாம்‌-

இவவிரு செய்யுள்களாலும்‌ திருமந்திரத்தின்‌ ஸ்வபாவத்தையும்‌, அதன் பெருமையையும்‌, ௮தனால்‌, சேதனனுக் குண்டான மேன்மையையும்‌ சொல்லி, இனி அடுத்‌து வரும்செய்யுளால்‌ அந்தச்‌ சேதனன்‌ கிருதக்ஞதையுடன்‌ ஆசாரியனை ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பித்ததைச்‌ சொல்லுகிறார் –

இத்‌தகையளாகி யுயிரேமுற விளங்கும்‌
முத்த நகையாள் விழியினாலி முலை முன்‌ றில்‌
தத்தி யுகமென்குதலை தள்ள வுயிர் தந்தாய்‌
உத்தம வெனா வினைய வாசக முரைத்தாள்‌.
-70-

இத்தகையளாகி – மேற் சொன்ன
படிக்குள்ள வைபவங்களைப் பெற்று; உயிரேமுறவிளங்கும்‌ முத்த நகையாள்‌ – அத்தியானந்தத்தை யடைந்த சேதனன்‌; விழியினாலி – திருமந்திரத்தின்‌ அர்த்த ஜ்ஞான சாரம்‌;
முலை முன்றில்‌ தத்தி யுக – த்வயார்த்தத்தில்‌ ததும்பி வழிய அனுசந்தித்து;
மென்குதலைதள்ள – மிருது பாஷியாய்‌
ஸ்தோத்திர பூர்வகமாக ஆசாரியனைப் பார்த்து-
உயிர்‌ தந்தாய்‌ – உஜ்ஜீவிக்கும் பொருட்டு உபதேசம் செய்து ௮னுக்கிரகித்க எம்பெருமானே!
உத்‌தம-பரமபுருஷனே!
என-என்றழைத்து ஸ்தோத்‌தரத்துக்கு ஆரம்பித்து;
இனையவாசகமுரைக்‌
தாள்‌ – பின் வருமாறு சேதனன் சொல்லலுற்றான்‌ என்பதாம்‌,
இச் செய்யுளுக்குப்‌ பிராட்டி கணை யாழியைக் கண்டு மகிழ்ந்து ஆனந்த பாஷ்பத்துடன்‌ தன்னை உயிர் வைத்துக் கொள்ளும்படிக்கான ஹேதுவைச் செய்து மணியாழியைக் கொடுத்து
உதவின ௮னுமனைப் பார்த்துத்‌ தன்னுடைய நன்‌றி யறிதலை வெளிப்படுத்தினாளென்பது சாமானனியக் கருத்தாயினும்‌, வேதார்த பரமாகத் திரு மூல மந்திர உபதேச அநந்தரம் ஞநான பிரகாசமுள்ள சேதனன்‌, ஆத்மானந்தப் பெருக்குடன்‌ திரு மந்திர சாரத்தை த்வயஅர்த்தத்திலூன்‌றி அனுசந்தித்து உபதேசத்தால்‌ தன்னை உஜ்ஜீவிக்கச்‌ செய்த பரமாசாரியனுக்குத்‌ தன்‌ கிருதஜ்க்ஷதையை வெளிப்படுத்‌துகிறான்‌ என்னும் கருத்துத்‌ தோன்றுமாறு காண்க,
இனி வரும்‌ இரண்டு செய்யுள்களால்‌ உத்தமமான தத்து வத்தையும்‌, வேதாந்தக் குறிப்பையும்‌ மங்களாசாசன மகிமையையும்‌ விசேஷமாக எடுத்‌துச் சொல்‌லுகிறார் –

மும்மையா முலகம் தந்த முதல்வன் தூதாய்ச்
செம்மையால் உயிர்‌ தந்தாய்க்கு செயலென்னா வெளியதுண்‌டே
அம்மையாய் யத்தனாய் யப்பனே யருளின் வாழ்வே
இம்மையே மறுமை தானு நல்கினை யிசையொடென்றாள்‌
–71-

மும்மையாமுலகக்தந்த – பதினான்குலகத்‌ தையும்‌, க்ருதகம்‌, அக்ருதகம்‌, கருதாகிருதகம்‌
என்று மூன்று வகையாகப் பிரித்தபடி எல்லா உலகர்களையும்‌ சிருஷ்டித்த முதல்வற்கு– சிருஷ்டியால்‌ முதல்வனாகிய பிரமனுக்கு
முதல்வன்‌-*முதலாவார் மூவரே யம் மூவருள்ளும்‌, முதலாவான் மூரிநீர் வண்ணன்‌” என்னும்‌ பூதனான சாக்ஷாத் பரமாத்ம
தூதாய்‌–அஜ்ஞாநமடைந்த சேதநனுக்கு
அறிவிக்கச் செய்ய வேண்டியதற்காக ஞானம் அனுஷ்டானம் நிறைந்த ஆச்சார்யனுடைய கிருபையால்‌–
செம்மையால் நேரான வழியான சரணாகதி முறைப்‌ படி ;
உயிர் தந்தாய்‌-ஈடேற்றி உய்யச் செய்த பரம
கிருபாளுவுமாகிய வுனக்கு;
செயல்‌ என்னா வெளிய துண்டே – நீ செய்த பேருதவிக்கு நான் செய்யக்‌
கடவ கைம்மாறு யாதொன்றுமில்லையே ௮தாவது ஞான உதயமானபின்பு ‘நான்‌’ எனது என்‌பது இல்லை யாதலின்‌ தன்னுடைய பாரதந்திரியம்
துலங்க இவ்வாறு சேதனன் சொல்லலுற்றான்‌ என்பதாம்‌ –
அம்மையாய் –பிரிய பரையாகிய
மாதாவைப் போலும்‌ ;
௮த்தனாய் –ஹித பரனாய
பிதாவைப் போலும்‌ அனுக்கிரகஞ் செய்த; அப்பனே–பகவத் ஸ்வரூபனான ஆசார்ய மூர்த்‌தியே,
அருளின் வாழ்வே -கிருபைக்கு இருப்பிடமாயுள்ளவனே !
இம்மையே மறுமை தானும்‌ இசையொடு
நல்கை- த்வயானுபவத்தைக் கொடுத்‌ தருளினய்‌, அதன் மூலம்‌ புகழையும்‌ புண்ணியத்தையும்‌ கட்டிக் கொண்டாய்‌ என்றாள் –என்று சேதனன்‌
ஸ்தோத்திரம்‌ செய்தான்‌. (தவிரவும்‌)

பாழிய பணைத் தோள் வீர துணையிலேன் பரிவு தீர்த்த
வாழியர் வள்ளலே யான் மறுவிலா மனத்தேனென்னின்‌
ஊழியோர் பகலா யோதும் யாண்டெலா முலகமேழும்
ஏழும் வீவுற்ற ஞான்‌று மின்றென விருத்தி யென்றாள்‌–72

பாழிய பணைத் தோள் வீர-“மாணியாம் வேடம் தாங்கி மலர் அயற்கு அறிவு மாண்டோர்‌, ஆணியா யலகுக்‌கெல்லாம் அறம் பொருணிரப்பு மண்ணல்‌”‘ என்றபடி.
பகவத பாகவத கைங்கர்ய சாதனமான பாஹு பல
முடையவனே
துணையிலேன் பரிவு தீர்‌த்த-யாதொரு ஆதாரமும் இன்றிக்‌ கடைத்தேறும் வழி யற்‌றுக்‌ கலங்‌கக் கிடந்த அடியேனுடைய துக்கத்தையும்‌ அஜ்ஞானத்தையும்‌ நிவிர்த்தித்த
வாழியர் வள்ளலே – நித்திய மங்களமான வாழ்வை அன்‌புடனும் ஆதரத்துடனும் ௮ளித்த உதார குணமுடை.யவனே!
யான் மறுவிலா மனத்தேனென்னின்‌—-
அஜ்ஞாந அந்தகாரத்துள் மூழ்கி ஆத்ம நாசமடையா நின்ற நான் உன்னுடைய ஸந்தர்சனத்தாலே ஸ்வரூப யதாத்ம்ய ஞானத்தை யடைந்து உஜ்ஜீவித்தேனாகையால்‌.
ஊழியோர் பகலா யோதும் யாண்டெலா முலகமேழும் ஏழும் வீவுற்ற ஞான்‌று மின்றென விருத்தி யென்றாள்‌–நீ பல்லாண்டு பல்லாண்டாய்‌ நெடும்காலம் நிலை பெற்று என் போன்ற இன்னும்‌
௮நேக சேதனர்களையும்‌ உயிர்ப்பிக்கக் கடவை என்று சொல்லிச் சேதனன்‌ ௮திக வினயத்துடன்‌ மங்களாசாசனம் செய்தான்‌ என்றபடி –

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீ சேஷையங்கார்‌ ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண தர்மம்-ஸ்ரீ அகர இராமாயணம்!-

April 7, 2025

ஸ்ரீ இராமாயண தர்மம்– ராமாயணம். என்ற சொல் “ராமஸ்ய அயனம்’ எனப் பிரிந்து இராம சரிதமெனவும்-ராம : அய்யதே அனேன இதி – ராமாயணம் எனப் பிரிந்து இதனால் இராமன் அடையப்படுகிறான் எனவும் பொருள்படும்.-இன்னும் ‘ரமாய இதம் சரிதம் – ராமம், தஸ்யாயன மிதி,ராமாயணம்’ எனப் பிரித்து, சீதாப் பிராட்டியின் சரிதமெனச் சாற்றலுமுண்டு.-‘காவ்யம் ராமாயணம் க்ருத்ஸநம் ஸீதாயாச் சரிதம் மஹத்-“மேன்மையான ஸீதா சரித்திரமாயும், மஹா காவ்யமுமான இராமாயணத்தை” என்பது இதை வலியுறுத்தும்.

தருமம்: உலகத்தைத் தரிப்பதால், போஷிப்பதால், தருமமென்று சொல்லுகிறார்கள்.
வேத : ஸ்மருதி: ஸதாசார : ஸ்வஸ்யச ப்ரிய மாத்மான :
ஏதத் சதுர் விதம் பராஹு : ஸாஷாத் தர்மஸ்ய லக்ஷணம்’-
என தருமத்திற்கு நான்கு ப்ரமாணங்கள் ஏற்பட்டிருக்கின்றன-அதாவது,ஒரு விஷயம், தருமமென நிச்சயிப்பதற்கு அது
(1) வேதோக்தமாக இருக்க வேண்டும் அல்லது
(2) ஸ்மிருதியிலாவது கூறப்பட்டிருக்க வேண்டும். அல்லது
(3) அது ஸத் புருஷர்களால் அனுஷ்டிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.அல்லது
(4 )அது மனதிற்கு இனிப்பாகவும் ஆனந்த கரமாகவும் இருக்க வேண்டும்.

இந்த நான்கு பிரமாணங்களுக்கு, ஸ்ரீராமாயணம் பொருத்தமா யிருக்கிறதோ வென்னில் –
முதலாவது:- வேதம். “வேதமு மற்றுஞ் சொல்லு மெய்யற மூர்த்தி வில்லோன்.“” என்றும் –கைவிலேந்தி இலங்கையிற் பொருதாரன்றே மறைகளுக் கிருதி யாவார்.”(கம்பர்)-என்றபடி,வேதத்தினால் அறியும் படியான பரம் புருஷன்,ஸ்ரீராமனாக அவதரித்த போது,–வேத: ப்ராசேதஸா தாஸீத் ஸாஷாத் ராமாயணாத்மநா--அவரை அறிவிக்கிற வேமும், வான்மீக முனிவரினின்றும் நேராய் ஸ்ரீமத் ராமாயண ஸ்வரூபத்தினாலே அவதரித்தது.–இதம் பவித்ரம் பாபாக்னம், புண்ணியம் வேதைச் ச சம்மிதம் !இந்த ஸ்ரீ ராம சரிதமானது,பரிசுத்தம் செய்யத் தக்கதும்,பாபங்களை நாசஞ் செய்ய வல்லதும், நன்மைகளை விளைவிக்கத் தக்கதும், வேதங்களோடு சமானமானதுமா யிருக்கின்றது.
இந்த இரண்டு ஆதாரங்களினால், முதலாவது பிரமாணமாகிய வேதத்திற்கு பொருத்தமாகிறது.

இரண்டாவது:- ஸ்ம்ருதி.
தர்ம சாஸ்த்ர ரதா ரூடா வேதகட்கதரா த்விஜா : கரீடார்த்த மபி யத் ப்ரூயு: ஸ தர்ம; பரம ஸ்மருத || (
போதாயனாச்சாரியார்)-வேதத்தை நன்றாய் அப்யசித்தவர்கள் ஸத் புருஷர்கள். அவர்களால் வேதார்த்தங்களைச் சுருக்கிச் சொல்லப் பட்டவைகளே ஸ்மருதிகளாம்.
“ஸ்ரீ ராமாயணம் (2 வது சர்க்கம்.)
‘மச் சந்தா தேவ தே ப்ரஹ்மந் பிரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குருத்வம் ரிஷி ஸத்தம
ந தே வாக ந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி “-

நான்முகக் கடவுள் வான்மீகரை நோக்கி நம்முடைய சங்கல்பத்தினாலேயே இந்த ஸரஸ்வதி உம்முடைய வாக்கிலிருந்து தோன்றினாள். நீர் ராம சரிதத்தை ஒரு பிரபந்தமாகச் செய்யக் கடவீர். நீர்செய்யுங் காவியத்தில் ஒரு சொல்லும் பொய்யாகாமலிருக்கும்.” என்றருளிச் செய்த பிரகாரம், வான்மீக முனிவரால் இராமாயணம் செய்யப் பட்டத்தினால்,இதை ஒரு ஸ்ம்ருதியாகச் சொல்லத் தடையில்லை.

மூன்றவது:- ஸதாசாரம்= (ஸத் புருஷரால் அனுஷ்டிக்கப் பட்டது)
பால காண்டம் முதலாவது சருக்கத்தில் 2- முதல் 4-சுலோகங்களினால், வான்மீக முனிவர் நாரத மகரிஷியைநோக்கி சுவாமி! இவ் வுலகத்தில், இக் காலத்தில், சகல கல்யாண குணங்களும் சவுசில்ய குணமும் மற்றும் அநேக குணங்களுடன் தருமத்தை நன்றாயறிந்த சத் புருஷனைக் கேட்டறிய அடியேன் விரும்புகிறேன்.-அடியேனுக்கு தேவரீர் அருளிச் செய்ய வேண்டும் என்று வினாவின் பொழுது நாரத மகரிஷி, மிகுந்த களிப்புடன் “ஒய் முனிவரே! நீர் கேட்ட குணங்களெல்லாம் பொருந்திய புருஷனைச் சொல்லுகிறேன் கேளும்–இசுவாகுவம்ஸ் ப்ரபவோ ராமோ நாம ஜநை : ஸ்ருத-‘இக்ஷவாகு குலத்தில் அவதரித்த ஸ்ரீராம பிரான் என்பவர் தான்”என விடை யளித்திருக்கிறார்.-இதனால் ஸ்ரீராம பிரான் ஸத் புருஷன் என்றும் அவரால் அனுஷ்டிக்கப் பட்டவை ஸதா சாரம் என்றும்,ஏற்படுவதால், மூன்றாவது ப்ரமாணமும் பொருத்த மாகிறது.

நான்காவது:- ஆத்ம ஸந்துஷ்டி.
“பாட்யே கேயே ச மதுரம் –
” ஹ்லாதயத் ஸர்வ காத்ராணி மநாம்ஸி ஹ்ருதயாநிச
“–இந்த ராமாயணம், மனதிற்கும், இருதயத்திற்கும், மிகக் களிப்பாக இருக்கின்றது என்று 4 வது சருக்கத்தில் கூறப்பட்டிருக்கின்றது.-இதனால் நான்காவதான ப்ரமாணமும் பூர்த்தி யாகின்றது

“ராமோ விக்ரகவான் தர்ம ஸாது: ஸத்ய பராக்ரம :-ஆரண்ய-37- 13.-ஸ்ரீ ராமன் உருவங்கொண்ட தருமம் போலும்,நற் குண முடையோனும், உண்மையான தோள் வலியுற்ற வனுமாகின்றனன். ” என இராவணனுக்கு,ராம த்வேஷியான மாரீசன் உரைத்த வசனம்.
யஸ்மின் ந சலதே தர்மோன யோ தர்மம் நாதி வர்த்ததே ஸ ஏஷ ராம;-யுத்த-. 28-19.
எவரிடமிருந்து தருமம் சலிக்க வில்லையோ எவர் தருமத்தை விட்டு விலக வில்லையோ, அவரே இந்த இராம பிரான்.”என, இராவணனைப் பார்த்து சுகனுடைய வசனம்.

தர்மாத்மா சாத்ய சந்தஸ்ச ராமோ தாசரதிர் யதி
பெளருஷே சா ப்ரதி த்வந்த: ததைனம் ஜஹி ராவணிம்
| ”(யுத்த- 91. 69.) ” ஸ்ரீராம பிரான் தர்ம ஸ்வரூபி என்பதும்,சொன்ன சொல் தவறாதவர் என்பதும், இணை யற்ற பராக்கிரம முடையவரென்பதும் உண்மை யாயின், இந்த பாணம் இந்திரஜித்தை ஹதம் செய்யட்டும்.” என சபத பூர்வமா யுரைத்த, இளைய பெருமாளுடைய வசனம்
‘ஏக பத்நீ ரததரோ ராஜர்ஷி சரித சுசி:]
ஸ்வதர்மம் க்ரு மேதியம் சிசுப ஸ்வய மாசரந்
“(ஸ்ரீமத் பாகவதம் – 9 -10- 55.)ஸ்ரீ இராம பிரான் ஏக பத்நீ விரதத்துடன், சுத்தராக கிருஹஸ்த தர்மத்தைத் தாம் அனுஷ்டித்தார். ஜனங்களும் அதனைக் கண்டு அவர் அவர்கள் தர்மத்தை விடாமல் செய்தார்கள்.” என பரிக்ஷித்து மஹாராஜனை நோக்கி, சுகப் பிரம்ம ரிஷியின் வசனம்

தோன்றிய நல்லற நிறுத்தத் தோன்றினான்” அயோத்தி நகர் -நீங்கு 163
நல்லற நிறுத்த நணுகித், தாமராவணை துறந்து தரை நின்றவரை “‘ ஆரணி – விராத-30.-இராம பிரான் உலகத்தில் தருமத்தை நிலை நிறுத்தவே அவதரித்திருப்பதாக கவிக் கூற்று.

”சூரறுந்தவனுஞ் சுடர் நேமியு மூரறுத்த வொருவ மோம்பினும்
ஆரறத்தி னொடன்றி நின்றாரவர்
வேரறுப்பென் வெருவன் மினீரென்றான்
.”-(ஆரணி-அகத்தி 22)
“வெம்பு கண்டகர் விண் புக வோறுத்
திம்பர் நல்லறஞ் செய்ய வெடுத்தவிற் கொம்பு முண்டருங் கூற்ற முமுண்டுங்க
ளம்பு முண்டென்று சொல்லு நம் மாணையே
.”(கிட்கிந்தை 4)
உலகத்தில், துஷ்ட நிக்கிரகமும்,தர்ம ஸம் ஸ்தாபனமும் செய்வதற்காக, தாம் அவதரித்திருப்பதாக, இராம பிரானுடைய வசனம்”
பின்னை யேது முதவுந் துணை பெறாளுரை பெறாண்
மின்னையே யிடை நுடங்கிட விரைந்து தொடர்வா
ளன்னையே யனையவன் பினாவோர் கடமை விட்
டென்னையே நுகர்தி யென்றன ளெழந்து விழவாள்.
“( ஆரணி- விராத-39)
இராம, லெட்சுமணர் உலகத்துக்கெல்லாந் தாயைப் போன்ற அன்பினை யுடைய தரும் ஸ்வரூபிகள், என சீதா பிராட்டியின் வசனம்,
ஓயாத மலரயனே முதலாக வுளராகி மாயாத வானவர்க்கு மற்றொழிந்த மன்னுயிர்க்கு
நீ யாகின் முதற் றாதை நெறி முறையா லீன்றெடுத்து
தாயாவார் யாவரே தருமத்தின் றனி மூர்த்தி
.”(ஆரணி – விராத 52)
பிரம்ம தேவன் முதலான சகல தேவர்களுக்கும்,உலகத்திலுள்ளஉயிர்களக்கும், இராம பிரான் முதல் தந்தை யெனவும், தரும ஸ்வரூபி எனவும், விராத ஸ்தோத்திரம்.
” இருவர் மானிடர் தாபத ரேந்திய
வரி வில் வாட் கையர் மன்மதன் மேனியர்
தரும நீரர் தயரதன் காதலர்
செருவி னேரு நிருத்ரைத் தேடுவார்.
ஒன்று நோக்கலருந் வலியோங்கற
னின்று நோக்கி நிறுத்து நினைப்பினர்
வென்றி வேற்கை நிருதரை வேரறக்
கொன்று நீக்குது மென்று துணர் கொள்கையார்
‘ (ஆரணி- கா.4,5)

இராம லக்ஷ்மணர்கள் தரும சிந்தை யுடையவர்கள், சிறந்த தரும வழியிலே தாங்கள் நினறு ஆராய்ந்து அத் தருமத்தை உலகமெங்கும் நிலை பெறச் செய்யுங் கருத்துடையவர்கள், என கரனிடம் சூர்ப்பனகை வசனம்.
சங்கு சக்கரக் குறியுள தடக்கை யிற் றாளி லெங்கு மித்தனை யிலக்கணம் யாவர்க்கு மில்லை -செங்கண் விற் கரத்தி ராமனத் திரு நெடுமாலே யிங்குதித்தன னீண்டற நிறுத்துதற் கின்னும் “(கிட்கி- மராமர – 117)
கோதண்ட பாணியான இராமன், தர்ம ஸம் ஸ்தாபனத்தின் பொருட்டு இங்கு திருவவதரித்த ஸ்ரீ மஹா விஷ்ணு வென்பதாக சுக்ரீவ மகாராஜனிடம், தெரிவித்த நவ வ்யாகரண பண்டிதரான திருவடியின் வசனம்.
உழைத்த வல் லிருவினைக் கூறு காண்கலா
தழைத் தயருலகினுக் கறத்தினாறெலா
மிழைத்த வற் கியல் பல வியம்பி யென் செய்தாய்
பிழைத்தனை பாவியுந் பெண்மையா லென்றான்
“‘(கிட்கி. வாலி வதை. 22)
பல பிறப்புகளில் தாம் செய்து சேர்த்த கொடிய கருமங்களை யொழிக்கும் உபாயத்தைக் காணாமல் வருந்திக் கதறுகின்ற உலகத்தவர்கள் உய்யுமாறு அவதரித்துத் தர்ம மார்க்கங்களை யெல்லாம்.தான் அனுஷ்டித்துக் காட்டும் புருஷோத்தமனான இராம பிரான்,என்பதாக, தாரையிடம் கூறிய வாலியின் வசனம்.
“அற மன்னானுட னெம்பி யன்பினோ
டுற வுண்ணா வுயிரொன்ற வோவினான்
பெற வொண்ணாத தொர் பெற்றி பெற்றவற்
கிற வென்னா மிதினின்ப மியாவதோ.
“(கிட்கி. சம்பாதி45)
தர்ம ஸ்வரூபியான இராம பிரான் திறத்தில் ஜடாயு வுயிரைக் கொடுக்க நேர்ந்தது பெரும் பாக்கியமென்று வானரரிடம் சம்பாதி வசனம்.-இத்யாதி வசனங்கள் ஸ்ரீமத் ராமாயணத்தில் ஸ்ரீராம சரித்த்தினாலே தரும ஸ்வரூபமும், தர்மானுஷ்டானமும் வர்ணிக்கப் பட்டிருக்கின்றன வென்பதற்குப் போதிய சான்றாகும்,

இராமாவதார காலம்.
” பயம் த்யஜ்த பத்ரம் வோ ஹிதார்ததம் யுதி ராவணம்
ஸ புத்ர பெளத்ரம் ஸமாதயம் ஸமித்ராஜ்ஞாதி பரந்தவம் | “”ஹத்வா க்ரூரம் துராத்மானம் தேவ ரிஷிணாம் பயாவஹம் தச வருஷ ஸஹஸ்ராணி தச வருஷ சதாநிச
வத்ஸயாமி மாநுஷே லோகே பாலயன் ப்ருத்வீ மிமாம்
.”-பாலகாண்டம்- 15- 28, 29.
“ஓ தேவர்களே! இனி அச்சம் என்பதை விட்டு விடுங்கள்; உங்களுக்கெல்லாம் நன்மையே உண்டாகும். அந்தத் துராத்மாவான இராவணனை அவனுடைய பரிவாரங்களோடு சங்கரித்துப் பூலோக பரிபாலனஞ் செய்து கொண்டு பதினோராயிரம் வருடமிருப்பேன்” என்று தன்னைச் சரணமடைந்த தேவர்களை நோக்கி ஸ்ரீ மஹாவிஷ்ணுவானவர் அருளிச் செய்தனர்.
”க்ருதே யுகே வயதீ தேவை முகே திரேதா யுகஸ்யது ஹிதார்த்தம் தேவ மர்த்யானாம் பவிதா ருப விக்ரஹ இஷ் வாஹு ணாம் ச யோ ராஜா பாவ்யோ தசரதோ புவி
தஸ்ய ஸூநுர் மஹா தேஜா ராமோ நாம பவிஷ்யதி
.–உத்-கர் 37 – க்குப்பின் ப்ரக்ஷிப்த சரு-18,19.ஸனத்குமார முனிவர் இராவணனை நோக்கி சொன்னது – ” க்ருத யுகம் கழிந்த பின்னர் த்ரேதா யுகத்தின் துவக்கத்தில் தேவர்களுக்கும் மனுஷ்யர்களுக்கும் ஹிதமியற்றுமாறு இஷ்வாகு குலத்திலே தசரதனென ஒரு ராஜன் ஜனிப்பான்; அந்தத் தசரத மஹா ராஜனுக்குப் புதல்வனாய் ஸ்ரீராமனென்னும் ஒருமாஹாநுபாவன் அவதரிக்கப் போகின்றனன் என உரைத்தனர்.
த்ரேதா முகே தாசரதிர் பூத்வா ராமோஹம் அவ்யய :
உத்பத்ஸ்யே பரயா சக்த்யா ததாத்ரக்ஷயஸி மாம் தத
–3.அத்யாத்ம ராமா . பால-7-255, 263- அழிவற்ற நான் த்ரேதா யுகத்தில் தசரத சக்ரவர்த்திக்குக் குமாரனாக அவதாரஞ் செய்யப் போகிறேன். அப்போது மறுபடியும் நீ என்னைப் பார்க்கப் போகிறாய் ” என்பதாக ஸ்ரீ மஹாவிஷ்ணு தனக்கு வரமருளி யிருப்பதாக பரசுராமர் ஸ்ரீ ராமபிரானிடம் விண்ணப்பஞ்செய்தனர்.
த்ரேதா யுகே தாசரதிர்பூத் நாராயண: ஸ்வயம் | ஆகமிஷ்யதி தே பாஹுச் சித்யேதே யோஜனாயதெள் தேனசாபாத் வினிர் முக்தோ பவிஷ்யஸி யதா புரா!–அத்யாத்ம -ராமா -ஆரண்ய -9-19-ஸ்ரீமந் நாமாயண மூர்த்தி த்ரேதா யுகத்தில் தசரத குமாரனாக பூமியில் அவதாரமெடுத்து, ஸ்ரீ ராமனென்னும் திரு நாமத்துடன் வரப் போகிறார். அவர் திருக் கரத்தால் உன் கரங்கள் சேதிக்கப் படுங்காலம், உன் சாப விமோசன காலமாகும். ” என்பதாக அஷ்டவக்ர முனிவர் தனக்கு உரைத்திருப்பதாய் கபந்தாசுரன்ஸ்ரீ ராம பிரானை நோக்கிக் கூறினன்.

புராஹம் ப்ரஹ்மண ப்ரோக்தா ஹ்யஷ்டா விம்சதி பர்யயே |த்ரேதா யுகே தாசதீராமோ நாராயணோ அவ்யய: -சுந்தர-1-48.”இருபத்தெட்டாவது பரிவிருத்தியில் த்ரேதா யுகத்தில் சாஷாத் நாராயணன் தசரத குமாரனாகிய ஸ்ரீராமனாக அவதரிக்கப் போவதாய் ப்ரஹ்ம தேவர் என்னிடம் அருளிச் செய்திருக்கிறார் ‘ என்பதாக இலங்கணி என்பவள் திருவடி யிடம் உரைத்தனள்.

ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமி கெதிதெள நக்ஷத்ரெ அதிதி தைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ் தேஷு பஞ்சஸு க்ரஹேஷ. கர்க்கடெ லக்நே வாக் பதா விந்தூ நாஸஹ ப்ரோத்ய மாநெ ஜகன்னாதம் ஸர்வ லோக நமஸ்கிருதம் கௌஸல்யா ஜநயத் ராமம் ஸர்வ லக்ஷண ஸம்யுதம் விஷ்ணொ சர்த்தம் மஹா பாகம் புத்ர மைஷாவாக வர்த்தகம் —பால -9-10-11–பின்பு பன்னிரண்டாவது மானமான சித்திரை மாஸத்தில் நவமி திதி புநர் வஸு நக்ஷத்திரம் கூடின தினத்தில் ஐந்து க்ரமங்கள் உச்சமாயிருந்த வளவில்,கர்கட லக்நத்தில், குரு சந்திரனோடு கூடியிருந்த வளவில், கௌஸல்யா தேவி, ஸகல ஜகத்துக்கும் நாயகராய், ஸமஸ்த பிராணிகளுக்கும் வந்தநீயராய், சாமுத்ரிக சாஸ்திரத்திற் சொல்லிய ஸமஸ்தமான உத்தம புருஷ லக்ஷ்ணங்களோடு கூடினவராய், விஷ்ணுவினுடைய பேர் பாதி பாகத்தினாலுண்டானவராய், மஹா பாக்யவானாய், பித்ருக்களை நரகத்தில் நின்று முத்தரிப்பிக்குமவராய், தசரத மஹா ராஜனுடைய மனோல்லாசத்தை வ்ருத்தி பண்ணுபவரான ஸ்ரீ ராம பிரானைப் பெற்றனள்.

ஒரு பகலுலகெலா முதரத்துட் பொதிந்
தரு மறைக் குணர் வரு மவனை யஞ்சனக்
கரு முகிற் கொழுந் தெழில் காட்டுஞ் சோதியைக்
திருவுறப் பயந்தன டிறங்கொள் கோசலை. “‘
” மேட மா மதி திதி நவமி மீன் கழை நீடுறு மாலை கற்கடக நீதி சேர்
ஓடை மா களிறனானு தயராசி கோள் நாடினே காதசர் நால்வருச்சரே.”-பால-கா. திரு அவதாரப் படலம்-104, 110.

இந்த ஆதாரங்களினால், வைவஸ்வத மன்வந்தரத்தில் 28- வது சதுர் யுகமான த்ரேதா யுகத்தில் சித்திரை மாஸத்தில் சுக்ல பக்ஷ நவமி திதி, புனர்வசு நஷத்திரம் கூடிய சுப தினத்தில் ஸ்ரீமந் நாராயணனே தசரத சக்கரவர்த்திக்குத் திருக் குமாரராக ஸ்ரீராமனென்னும் திரு நாமத்துடன் அவதாரம் செய்ததாக ஏற்படுகிறது.

தச வர்ஷ ஸஹஸ்ராணி கதாநி மஹாத்மனோ-உத்-42-26-பதினாயிரமாண்டுகள் பெருமையாகச் சென்றன.அப்ரவீச்ச வராரோஹாம் ஸீதாம் ஸூர ஸுதோபமாம் அபத்ய லாபோ வைதேஹி தவய்யயம் ஸமுபஸ்தித: கிமிச்சஸி வராரோஹேகாம : கிம் க்ரியதாம் தவ – உத்-42-31, 82 ஒரு நாள் ஸ்ரீராம பிரான் ஜானகியை நோக்கி ஹே.வைதேஹி! நீ கர்ப்பந் தரித்திருப்பது எனக்கு மிகவும் களிப்பைத் தருகிறது. இப்பொழுது நீ யாது விரும்புகின்றனை? நீ யாது வேண்டினும் அதனை யான் நிறைவேற்றுவேன் ” எனக் கூறினார். அதற்குப் பிராட்டி, கங்கைக் கரையிலுள்ள மிகப் பரிசுத்தமான தபோ வனங்களுக்குச் சென்று, அங்கு, மகரிஷிகளுடைய பாத மூலத்திற் சிலநாள் பணிவிடை செய்து ஆனந்தமனுபவிக்க வேணுமென்ற ஆசை யிருப்பதாகத் தெரிவித்தாள்.

அந்த சமயம் ஸ்ரீராமபிரான் சீதாபிராட்டியை இராவண கிரஹத்திலிருந்து அழைத்து வந்ததைப் பற்றி சிலர் அபவாதம் சொல்வதாகக் கேட்டு, பிராட்டி கருதி யிருந்த காரணத்தையே வியாஜமாகக் கொண்டு,அவளை யழைத்துக் கொண்டு போய் கங்கா நதி தீரத்தில் வான்மீக முனிவராச்சிரமத் தருகே விட்டு விடுமாறு,இளைய பெருமாளுக்கு நியமித்தருளினர்.-சீதாப்பிராட்டி தனியே புலம்பித் தவிப்பதை ரிஷி குமாரர்களால் கேள்வி யுற்ற வான்மீக முனிவர் உடனே அவ்விடம் சென்று, பிராட்டியைச் சமாதானப்படுத்தி தமது ஆச்சிரமத்திற்கு அழைத்து வந்து அங்குள்ள ரிஷி பத்னிகளிடம் ஒப்புவித்து அவளைக் கருந்துடனே காத்து வருமாறு கட்டளை யிட்டனர்.-யமுனாதீர வாசிகளான முனிவர்கள் முலமாக மதுவின் மகிமையையும், அவனது மகன் லவணாஸூரனது வரலாற்றையும் கேட்டு ஸ்ரீராம பிரான், லவணாசுரனை வதைக்குமாறும் அவனது நகரத்திலேயே யிருந்து ராஜ்ய பரிபாலனஞ் செய்து வருமாறும் சத்ருக்கனருக்கு நியமித்தருளினர். லவணாசுரனுடன் போர் புரிவதற்காக அயோத்தியிலிருந்து புறப்பட்டு மூன்றாம் நாள், சத்ருக்னர்,வான்மீகி ஆச்சிரமத்தில் தங்கினர்.

” யாமேவ ராத்ரிம் சத்ருக்ன: பர்ணசாலாம் ஸமாவிசத் தாமேவ ராத்ரிம் ஸ்தாபி ப்ரஸூதா தாரகத்வயம் ”( உத்-6-1.) சத்ருக்ன ஆழ்வார், என்றையத் தினம் இராத்திரி வான்மீக முனிவரது ஆச்சிரமத்திலே பர்ண சாலையில் படுத்திருந்தனரோ, அன்றைய தினம் இராத்திரி ஸீதாப் பிராட்டியார் இரண்டு திருக் குமாரர்களைப் பெற்றனர்.-இந்த ஆதாரங்களினால் ஸ்ரீ இராம பிரானுடைய பட்டாபிஷேகானந்தரம், பதினாயிரம். வர்ஷங்கள் கழிந்த பினனரே, குச லவர் ஜநநம் என ஏற்படுகிறது.

ப்ராப்த ராஜ்யஸ்ய ராமஸ்ய வால்மீகிர் பகவான் ரிஷி: சகார சரிதம் க்ருத்ஸ்னம் விசித்ர பதமாத்மவான்| சதுர் விம்சத் ஸஹஸ்ராணி ஸ்லோகாநா முக்தவான் ரிஷி :
ததா ஸர்க்க சதான் பஞ்ச ஷட் காண்டானி ததோத்தரம்
–பால-4-1-2-
ஸ்ரீராமபிரான் இராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டி ருக்கும காலத்தில், வான்மீகமுனிவர் இருபத்தினாலாயிரம் சுலோகங்களும் ஐந்நூறு சருக்கங்களும், ஆறு காண்டங்களும், உத்ரகாண்டமும் செய்தருளினார்.
“மானிஷாத என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத்தினிடமாக வான்மீக முனிவர்க்குற்ற சந்தேகத்தை, (தமஸா நதிக் கரையில்)ப்ரம தேவர் வந்து நிவர்த்தி செய்து வரங்கள் அளித்து அந்தர் கதானமான பின்பு
தத: ஸ சிஷ்யோ வால்மீகிர் முநிர் விஸ்மய மாயயௌ தஸ்ய சிஷ்யாஸ் தத: ஸர்வே ஐகு ஸ்லோகமிம்ம் புன: “முஹர் முஹு : ப்ரீயமாணா: ப்ராஹுஸ்ச ப்ருச விஸ்மிதா–பால்-2-39- வான்மீக முனிவர், தம்முடைய சிஷ்யர்களுடனே கூட அதிக ஆச்சரியத்தை யடைந்தார். அந்த ஸ்லோகத்தை அவருடைய சிஷ்யர்களெல்லோரும் மிகுந்த பிரியத்துடனும் ஆச்சரியத்துடனும்,அடிக்கடி ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டு பாடிக் களித்தனர்.சிஷ்யா – என்று பஹு வசனமாகக் கண்டிருப்பதற்கு, கோவிந்த ராஜர் வ்யாக்யானத்தில் தனது ஆச்சிரமத்திலுள்ள, குசலவர், பரத்துவாஜர் என்று வ்யாகயானம் செய்யப்பட்டிருக்கிறது.-இதனால் குசலவர்கள், ஜனித்து தக்க வயது அடைந்த பின்ன்ரே, இராமாயண கிரந்தம் செய்யப்பட்டதாக ஏற்படுகின்றது.
சதருக்ன ஆழ்வான், லவணாஸுரனை சம்ஹரித்து மதுரா புரியை ஸ்தாபித்த பின்
“ததோ த்வா தசமே வர்ஷே சத்ருகனோ ராம பாலி தாம் அயோத்யாம் சக்ரமே கந்துமல்ப ப்ருத்ய பலாநுக –உத்-7- 1 )
பன்னிரண்டாவது வருஷத்தில் சத்ருக்னாழ்வான் ஸ்ரீராகவனைச் சேவிக்கக் காதல் கொண்டு சொற்ப பரிவாரங்களுடன் அயோத்தியைக் குறித்துப் புறப்பட்டனர்-வழியில் 7, 8 நாள் தங்கி வான்மீகாச்சிர மமடைந்து, அம் முனிவர் அளித்த அர்க்கிய பாதியாதி அதிதி பூஜைகளைப் பெற்று,அன்று ராத்திரி அவ்வாச்சிரமத்திலேயே சயனித்திருந்தனர்.

ஸ புத்தவாந் நர ஸ்ரேஷ்டோ கீத மாதுர்ய முத்தமம்
சுச்ராவ ராம சரிதம் தஸ்மின் காலே யதா க்ருதம்
தம் த்ரீலய ஸமா யுக்தம் த்ரிஸ்தான கரணாந்விதம்
ஸமஸ்க்ருதம் லக்ஷணோபேதம் ஸம தால ஸமந்விதம்
சுச்ராவ ராம சரிதம் தஸ்மின் காலே புராக்ருதம்
–உத்தர –71-14-15-16
சத்ருக்னாழ்வான் வான்மீகாச்சிரமத்தில் விருந்தமுது செய்தவளவில், ஸமீபத்தில் அதி மதுரமான ஸங்கீதமொன்று கேட்டது.ஸ்ரீராம சரிதமானது ஸம்ஸ்க்ருத பாஷையில் இசை யொத்த தாள லயங்களுடனே, யாழிலிட்டு,சு லஷணமாக மறைவிலே பாடப்பட்டது. அதனைச் செவி யுற்ற வளவில், சத்ருகனாழ்வானுக்கு முன் நடந்த ஸ்ரீ ராம சரித்திரம் மறுபடி தமது கண்ணெதிரில் நடப்பது போல தோன்றியது.வான்மீக முளிவர் தாமுண்டு பண்ணிய இராமாயண மஹா காவியத்தைக் குச லவருக்கு உபதேசித்தருளின போது, அவர்களுக்கு வயது பன்னிரண்டு என ஏற்படுகின்றது

ஸ்ரீராம பிரான் அச்வமேத யாகஞ் செய்யத் தீர்மானித்து கோமதீ நதீ தீரத்தில் யாக சாலை நிருமித்து வருகிறவர்களுக்கு விடுதிகள் அமைத்து, ஸகல பதார்த்தங்களும் அங்கே சித்தப் படுத்தவும்,வானரர், ராக்ஷஸர் முதலான யாவரையும் அவ் வேள்விக்கு வர வாழைக்கும்படிக்கும் தம்பிமார்களுக்கு நியமித்தருளியும்,
மம மாத்ரூஸ் ததா ஸர்வா: குமாராம் : புராணி ச
காம்சநீம் மம பத்ம்ச தீக்ஷா யாம்ஜ்ஞாம் ஸ்ச கர்மணி
அக்ரதோ பரத: க்ருத்வாகச் சாத்வக்ரே மஹா யசா
: | “உத்தர -91-24-25-
நமது மாதாக்களையும், பரதன் முதலியோர்களுடைய அந்தப்புர ஸ்திரீகளையும், ஸீதைக்குப் பிரதியாக நிருமித்து வைத்திருக்கின்ற சுவர்ண ஸீதையையும் யாகஞ் செய்யும்
நன்குணர்ந்த பிராம்மணர்களையும், முன்னிட்டுக் கொண்டு, பரதன் முன்னாலே செல்லக் கடவன் ” எனவும்nநியமித்தருளினர்.-இதனால் ஸீதாப்பிராட்டி வான்மீகாச்சிரமத்தி லிருக்கும் பொழுது யாகம் ஆரம்பிக்கப்பட்டதாக வாகின்றது.

வர்தமானே ததா பூதே யஜ்ஞேச பரமாத்புதே
ஸ சிஷ்ய ஆஜகாமாசு வால்மீகிர் பகவான் ரிஷி
:-உத்தர -93-1-இவ்வாறு மகா வைபவத்துடனே நடக்கும் அற்புதமான அச்வமேத யாகத்துக்கு வான்மீக முனிவரும் தமது சிஷ்யர்களுடனே எழுந்தருளினர்.”வான்மீக முனிவர் தாம் கற்பித்த இராமாயணத்தை, முனிவர்கள் வாஸஸ்தானங்களிலும், பிராம்மணர்கள் இறங்கி யிருக்கு மிடங்களிலும், ராஜ மார்க்கங்களிலும், அச்வமேத யாகம் நடக்குமிடத்தில் ஸ்ரீராமபிரான் சன்னதியிலும் பாடிக் கொண்டு போகும்படி தமது சிஷ்யர்களான குசலவர்களுக்குக் கட்டளை யிட்டனர். அவ் விருவரும் முனிவர் மொழிந்த வண்ணம், இராமாயணத்தை கானம் செய்து கொண்டு சென்றனர்கள்.

தாம் ஸசுச்ராவ காகுஸ்த: பூர்வாசார்ய விநிர்மிதாம் அபூர்வாம் பாட்ய ஜாதிம்ச கேயேன ஸமலம க்ருதாம் ப்ரமாணைர் பகுபி பத்தாம் கந்த்ரீலய ஸமந்விதாம் பாலாப்யாம் ராகவ: ஸ்ருத்வா கெளதூகல பரோபவத் .”–உத்தர -94-2- இரண்டு பாலகர்கள் வீணை மீட்டிக் கொண்டு ஓத்த குரலினராய் சு லக்ஷணமாக தம்மாசிரியர் கற்பித்த இராமாயணத்தை இன்பமாய்ப் பாடிக் கொண்டு வருவதை ஸ்ரீராகவன் திருச் செவி சார்த்தி இஃது அபூர்வமாயும்,அற்புதமாயு மிருக்கின்றதே யென வியந்து களிப்படைந்தனர்.”‘அனந்தரம் அந்தக் காவியத்தின் வாலாற்றையும், அதை இயற்றியவர் வான்மீக முனிவரென்பதையும் அச் சிறுவர்கள் மூலமாக ஸ்ரீராகவன் தெரிந்து கொண்டனர்–.ராமோ பஹுன் யஹான்யேவ தத் கீதம் பரமம் சுபம் சுச்ராவ முனிபி ஸார்த்தம் பார்த்தி வை: ஸஹ வானரை: “-உத்தர -95-1- ஸ்ரீராகவன் நாள் தோறும் பல முனிவர்களும், அரசர்களும் புடை சூழச் சபையினடுவே முனி குமாரர்களை வரவழைத்து மிகச் சிறந்ததும், சுபமுமான அவர்களது சங்கீதத்தைச் செவி சார்ததிக் களி கூர்ந்தனர்.-இந்த ஆதாரங்களினால் ஸ்ரீராமபிரான் அயோத்யா புரிக்கு ராஜவாக பட்டாபிஷேகம் செய்யப்பட்டு,பதினாயிரம் வருஷங்கள் தரும நெறி தவறாது அரசாட்சி செய்து வந்த பின் சீதாப் பிராட்டி கர்ப்பமடைந்து வான்மீக முனிவராச்சிரமத்தில் குசன், லவன் என்னும் இரண்டு குமாரர்களைப் பெற்று,அக் குமாரர்களுக்கு வயது பன்னிரண்டு நிரம்பிய பொழுது,வான்மீக முனிவருக்கு நாரத மகரிஷியால் ஸ்ரீராம சரிதம் சங்கரஹமாக உபதேசிக்கப்பட்டு பிரம தேவரின் ஆக்ஞா ப்ரகாரம் அம் முனி புங்கவர் 24000 கிரந்தங்களடங்கிய ஸ்ரீஇராமாயண மென்னும் ஆதி காவியத்தைச் செய்தருளி அதைத் தமது சீடர்களான குச லவர்களுக்கு உபதேசிக்க, அவர்களால் அந்த இராமாயணம் ஸ்ரீராமபிரானுடைய அஸ்வமேத மகா மண்டபத்தில் முனிவர்,அரசர், வானார் முதலியோர் சேர்ந்துள்ள சபையில் ஸ்ரீராமபிரான் சனனதியில் தாளலயத்துக் கிணங்க கானம் செய்து அரங்கேற்றப்பட்டு சபையோர்களால் மிகுந்த சந்தோஷத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்டதாக நிச்சயிக்கப்படுகிறது.

—————

குருசிஷ்ய தருமம்.

குரு சிஷ்ய லக்ஷணம்:-
“தப: ஸ்வாத்யா நிரதம் தபஸ்வி வாக் விதாம் வாம்
நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர் முநி புங்கவம்

தபஸ் வேத வேதாந்தங்கள் இவைகளைப் பூர்ணமாக அடைந்தவரும், உபதேசிப்பவர்களுக்குள் மேலானவரும், முனி ஸ்ரேஷ்டருமான நாரத மஹ ரிஷியை, தவத்தோடு கூடிய வான்மீக முனிவர் தெண்டம் ஸமர்ப்பித்து வினாவினார்.”
இது இராமாயணத்தின் முதல் சுலோகம். இதனால் குரு சிஷ்யன் லஷணம் சொல்லப் பட்டதாகிறது.-எவ்விதமெனில்- ஆசார்ய லஷணம்
1- தபோ நிரதம்: தவத்தைப் பூரணமாக அடைந்தவர்,என்றதினால் அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் என்பது ஸுசகம்.
” யத் துஸ்தரம் யத் துராபம் யத் துர்கம் யச் சதுஷ்கரம்
தத் ஸர்வம் தபஸா ஸாத்யம் தபோஹி தூரதிக்ரமம் “

எது கடக்க முடியாததோ, எது பெற முடியாததோ, எது செய்ய முடியாததோ அவை எல்லாம் தவத்தால் சாதிக்க முடியும். ஆகையால் தவத்தை வெல்வதரிது.”
வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவமீண்டு முயலப்படும்.”
கூற்றங் குதித்தலும் கைகூடு நோற் றவினாற்ற தலைப் பட்டவர்க்கு ‘
என்ற ஆகாரங்கள் நோக்கத் தக்கன.

(2) ஸ்வாத்யாய நிரதம்:- வேத வேதாந்தங்களைப் பூர்ணமாக அடைந்தவர், என்றதினால் நாரதர் சொல்வதெல்லாம் தருமத்தோடு பொருந்திய ஸத்திய வசனம் என்பது ஸூசகம்.

(3) வாக் விதாம் வரம் :உபதேசிப்பவர்களுக்குள் மேலானவர்,என்றதினால் சிறந்த போதனா சக்தி வாய்ந்தவரெனவும்,வ்யாகரணம் முதலான சகல சாஸ்திரங்களையும் நன்றாயறிந்தரெனவும் பொருள்படும்.
(4)முனி புங்கவம் :- முனி ஸ்ரேஷ்டர், என்றதினால் இந்திரிய நிக்கிரகமுள்ளவர் என்பதும், பகவ த்யானத்தோடு கூடிய வரென்பதும்,திரி கால வர்த்தமானங்களை அறியக் கூடியவரென்பதும், ஸதா ஜப பரரென்பதும், ஸுசகம்.
(5) நாரதம் -நாரத மஹரிஷியை,என்றதினால் நாரம்-ஜ்ஞானம், அதைக் கொடுக்கக் கூடியவர் என்பதும், நாரம்- அஜ்ஞானம், அதை நிவர்த்தி செய்யக் கூடியவரென்பதும், த்ரி லோக சஞ்சாரியான படியால்,மூன்று லோகத்திலுள்ள வர்த்தமானங்களை யறிபவரென்பதும்,பிரம்ம புத்திரரான படியால், உத்தம குலத்தைச் சேர்ந்தவரென்பதும் ஸூசகம்.

ஆகவே இந்த ஐந்து பதங்களினால், ஆசார்யன் பூர்ணமான தபஸை யுடையவராகவும், வேத வேதாந்தங்களையும் வியாகரணம் முதலான ஸகல சாஸ்திரங்களை யுமுணர்ந்தவராகவும், பகவத் பக்தியுடன் அநவரத ஜப பரராகவும்,சிஷ்யனுடைய அஜ்ஞானத்தைப் போக்கி,ஜ்ஞானத்தைக் கொடுத்துப் பரமாத்ம ஸ்வரூபத்தை உபதேசிக்க வல்லவராகவும், ஜிதேந்த்ரியராகவும்,உத்தம குலத்தவ ராகவுமிருக்க வேணுமென்று ஆசார்ய லஷணம் சொல்லப் பட்டதாயிற்று.
கு ஸப்தஸ் த்வந்தகார ஸ்யாத் ருகாரஸ் தந் நிவர்தக :
அந்தகார நிரோதித்வாத் குருரித் யபிதீயதே

கு , என்பது அஜ்ஞானத்தையும், ரு -என்பது அதன் நிவர்த்தியையும் சொல்லுகிற படியால் மனதின் கண்ணுள்ள அஜ்ஞானமாகிற விருளை நீக்கி மெய்ஞ் ஞானமாகிற பிரகாசததைத் தருவதால் குருவெனச் சாற்றப் படுகின்றனர்.
“குலனருள் தெய்வங் கொள்கை மேன்மை
கலை பயில் தெளிவு கட்டுரை வண்மை
நில மலை நிறை கோல் மலர் நிகர் மாட்சியும்
உலகிய லறிவோ டுயர் குண மினையவும்
அமைபவன் நூலுரை யாசிரி யன்னே.”
என்ற நன்னூல் இங்கு நோக்கத்தக்கது.

சிஷ்ய லக்ஷணம:-
(1) தபஸ்
:- என்றதினால் பகவத் சொரூபத்தை யறிய ஆவல் கொண்டரென்பதும், பல விரதங்களை யனுஷ்டித்தவரென்பதும், சம தமாதி ஸம்பத்திகளை யடைந்தரென்பதும் ஜீவ காருண்ய முடையவரென்பதும் களங்கமற்ற இருதயமுடையவ ரென்பதும் ஸூசகம்-உற்ற நோய் நோன்ற லுயிர்க்குறு கண் செய்யாமை யற்றே தவத்திற் குரு.”

2-பரிபப்ரச் ச :- என்றதினால், விதிவதுபஸந்ந: என்பது பொருள்.-அதாவது,உபதேசம் பெற்றுக் கொள்ள,குருவைத் தேடிப் போய்,தண்டம் ஸமர்ப்பித்து, விதிப் பிரகாரம் கேட்க வேண்டு மென்பது.
தத்வித்தி ப்ரணிபாதே பரி ப்ரஸ்நேந ஸேவயா
உபதேஷ் யந்தி தே ஞாநம் ஞாநிநஸ் தத்வ தர்ஸிந
”–அந்த ஆத்ம ஜ்ஞானத்தை. குருவைத் தேடிப் போய், தண்டம் ஸமர்ப்பித்து, விதிப் பிரகாரமான கேள்வியினாலும், ஸூஸ்ரூஷையினாலும் அறிந்து கொள்ளக் கடவாய். தத்வ மறிந்த பண்டிதர்கள் உனக்கு ஜ்ஞானத்தை போதிப்பார்கள்.” என்று அர்ஜூனனை நோக்கி யருளிச் செய்தஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய வசனம் இங்கு கவனிக்கத் தக்கது.
ஆகவே, தபஸ்வீ, பரிபப்ரச்ச என்ற பதங்களினால் சிஷ்ய லக்ஷணம் சொல்லப் பட்டதாயிற்று.
ஸத் புத்திஸ் ஸாது ஸேவீ ஸமுசித சரிதஸ் தத் போதாபிலாஷி
ஸூஸ்ரூஷுஸ் த்யக்தமாந: ப்ரணிபதந பர : பிரஸ்ந கால ப்ரதீஷ :
ஸாந்தோ தாந்தோ ந ஸூயுஸ் ஸரண முபகதஸ் ஸாஸ்தா விஸ்வாஸ ஸாலி
ஸிஷ்ய ப்ராப்த: பரீக்ஷாங் க்ருத விதபி மதம் தத்வதஸ் ஸிஷணீய

நற் புத்தியுடன் ஸாது ஸேவை யுடையவனாகி நன்னடக்கை யுடையவனும்,உண்மை ஞானத்தை அறிவதில் அபிலாஷை யுடையவனும்,பணிவிடைக் காரனும்,மான அவமான மென்பதற்றவனும், ப்ரஸ்ன காலத்தை எதிர் பார்ப்பவனும், சாந்தனும் அஸூயை யில்லாதவனும், சரணாகதி யடைந்தவனும், சாஸ்திர விஸ்வாஸ முடையவனுமே சிஷ்யனாக அங்கீ கரிக்கத் தகுந்தவன் ” என்பது நோக்கத் தக்கது.
வால்மீகி பகவான் பருகு வம்சத்தி லவதரித்தவர். இவர் (வல்மீகம்- புற்று) புற்றிலிருந்து வெளி வந்ததினால் வால்மீகி என்று பெயர். இவர்க்கு”ப்ராசேதஸர்’ ( அதாவது வருணனுடைய புத்திரர்) என்னும் பெயருண்டு.

உபதேசக் கிரமம் :- .
(1) வான்மீக முனிவர் நாரத மஹரிஷியை நோக்கி-“கோந்வஸ்மிந் ஸாம் ப்ரதம் லோகே குணவாந் கச்ச வீர்யவாந் ”என ஆரம்பித்து,”ஏததிச் சாம் யஹம் ஸ்ரோதும் பரம் கெளதூஹலம் ஹி மே-என்றபடி ஒ ஸ்வாமி! இவ்வுலகிலிக் காலத்தில், அனந்த கல்யாண குணங்களும், சவ்ஸீல்யாதி குணங்களுமுடைய உத்தம புருஷன் யார்? என்பதை அடியேன் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.தேவரீர் அடியேனுக்குக் கிருபை செய்தருள வேண்டும்.” என்று பாலகாண்டம் – 1-2 முதல் ஐந்து ஸ்லோகங்கள் மூலமாக ப்ரஸ்நம் பண்ணினர். அதைக் கேட்டு நாரத மஹரிஷி மிகுந்த சந்தோஷ மடைந்தவராய்(பால – 1 -8 முதல் 96-ஸ்லோகங்க ளடங்கிய ஸ்ரீராம சரிதத்தைப் பூராவாகவும், சம்ஷேபமாகவும் வான்மீக முனிவருக்கு உபதேசித்தருளினார்.-இதனால்- ” தத் விஜ்ஞாநார்த்தம் ஸ குருமே வாபி கச்சேத் “ என்றபடி வேதாந்தார்த்தங்களை ஒரு குருவினிடத்தில் போய்க் கேட்டே அறிய வேண்டு மென்ற தருமமும், ” நா ப்ருஷ்ட: கஸ்யசித் ப்ருயாத் ” என்றபடி ஸிஷ்யன் கேட்காமலிருக்கும் போது குரு உபதேசஞ் செய்யலாகாதென்ற தருமமும் ஸூ சிதம்.

(2) விஸ்வாமித்ர மஹரிஷி யாக ஸம் ரக்ஷணார்த்தமாக ஸ்ரீராம லக்ஷமணர்களை அழைத்துக் கொண்டு, சரயூ நதியின் தென் கரையில் சேர்ந்தவுடன மகரிஷி ஸ்ரீராமபிரானை நோக்கி- “ மந்திர க்ரமம் க்ருஹாணத்வம் பலாமதிபலாம் ததா
த்ரிஷு லோகேஷ வா ராம ந பவேத் ஸத்ருஸஸ் தவ
பிதாமஹ ஸு-தே யேதே வித்யே தேஜஸ் ஸமந்விதே
ததாமி தவ காகுத்ஸ்த ஸ்த்ரு ஸஸ் த்வம் ஹி தார்மிக ”’

ஸ்ரீராமா பலை, அதிபலை யென்னும் மந்திரங்களை உபதேசிக்கின்றேன் பெற்றுக் கொள்க.மூன்று லோகங்களிலும் உனக்குச் சரியாக ஒருவனுமாக மாட்டான். மிகுந்த, பிரகாசம் பொருந்திய ப்ரஹ்ம புத்திரிகளான இம் மந்திரங்களை கிரஹிப்பதற்குத் தார்மிகனான நீயே தகுந்தவன். ஆகையால் உனக்கு உபதேசஞ் செய்கின்றேன் ” என்றுரைத்து உபதேசஞ் செய்தருளினர்.-நோக்கின்னவர் முக நோக்க நோக்குடைக்
கோக்கு மரருமடி குறுக நான்முகன் ஆக்கிய விஞ்ஞைகளிரண்டு மவ்வழி
ஊக்கினனவையவ ருகள்ளத் துள்ளினார்.”
என்ற கம்ப ராமாயணம் நோக்கத் தக்கது.

பின்னும் விஸ்வாமித்திரமுனிவர் ஸ்ரீராமபிரானை நோக்கி
“பரிதுஷ்டோஸ்மி பத்ரம் தெ ராஜ புத்ர மஹாயஸ :
ப்ரீத்யா பாமயா யுக்தோ ததாம் யஸ்த்ராணி ஸர்வஸ
தேவாஸூர கணாந்வாபி ஸ கந்தர்வோர காநபி
யைர மித்ராந் ப்ரஸஹ்யாஜௌ வஸீக்ருத்ய ஜயின்யஸி
ஸ்திதஸ்து ப்ராங்முகோ பூத்வா ஸூசிர் முநிவரஸ் ததா
ததெள ராமாய ஸுப்ரீதேர மந்திர க்ரம மனுத்தமம்”–பால -27-2-3-21-
சக்கரவர்த்தி திருக் குமாரரான ஸ்ரீராம உன்னிடத்தில் யான் மிகுதியும் சந்தோஷ முடையவனானேன். உனக்கு மங்களமுண்டாகட்டும். யான் அறிந்ததான எல்லா அஸ்த்திர ஸஸ்த்திர மந்திரங்களையும் உனக்கு உபதேசிக்கின்றேன். அதனால் தேவாஸூர கந்தருவாதி கணங்களை யுத்தத்தில் வஸ்பம் செய்து ஜெயிப்பாய்.” என அருளிச் செய்து முனிவர் கிழக்கு முகமாயிருந்து மிக்கப் பிரீதியுடன் கூடி அஸ்த்திர ஸஸ்த்திரங்களின் மந்திரங்கள் யாவற்றையும் ஸ்ரீராமபிரானுக்கு உபதேசஞ் செய்தருளினர்.-மறுபடியும் விவாமித்திர முனிவர் ஸ்ரீராமரானை நோக்கி”க்ருஸாஸ் வதந யாந் ராம பாஸ்வராந் காம ரூபிண :ப்ரதீச்ச மம பத்ரம் தெ பாத்ர பூதோஸி ராகவ-பால –28-10-

ஸ்ரீராமா க்ருஸாஸ்வ புத்திரர்களும் பிரகாசத்தோடு கூடியவர்களும் காம ரூபிகளுமான உப ஸம்ஹார மந்திரங்களை யெல்லாம் உனக்கு உபதேசஞ் செய்கின்றேன் பெற்றுக் கொள். உனக்கு சேமமுண்டாகும். இவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு நீயே தகுதி யுடையவன் என அருளி செய்து அம் மந்திரங்களையும் உபதேசஞ் செய்தருளினர்.
இதனால் ஆசார்யன் தகுந்த சீடனுக்கே உபதேசம் செய்யவேண்டு மென்பது ஸுசிதம்.
சொல்லொக்குங் கடிய வேகச் சுடு சரங் கரிய செம்மல்
அல்லொக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் வயிரக் குன்றக்
கல்லொக்கும் நெஞ்சிற்றங் காதப் புறங் கழன்று கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்றன்றே.

தாடகையின் பேரில் பிரயோகித்த ராம பாணமானது கல்லைப் போன்ற கடினமான அவள் மார்பில் தைத்துத் தங்கி யிராமல்,ஊடுருவிப் பின்புறஞ் சென்று, கல்வி யறிவடையாத மூடர்களுக்கு ஞானவான்கள் உபதேசித்த தத்துவம் போலப் போயிற்று ‘ அறிவிலாதவற் கறிவன சொல்லுவாரவரால் இறுதி யெய்து வாரென்னு மதின்றுகை கண்டோம்.“என,குபேரன் தனது பரிஜனங்களின் முன்னிலையில் கூறி யிருப்பதாலும்,மூடர்களுக்கு (அபக்குவருக்கு) உபதேசஞ் செய்யலாகா தென்பது ஸூசிதம்.
ஸ்ரீராமபிரான் கேட்காமலிருக்கும் பொழுது விஸ்வாமித்திர முனிவர் தாமாகவே முதலில் மந்திரம் உபதேசித்தது உசிதமோ வெனில் –தன்மக னாசான் மகனே மன்மகன் பொருள் நனி கொடுப்போன் வழி படுவோனே உரை கோளாளற்கு உரைப்பது நூலே “-நன்னூல் –என்றபடி,ஸ்ரீ ராமபிரான், சக்கரவர்த்தி திருமகனாகவும்,வழிபாடு செய்பவனாகவும், சிறந்த மேதாவியாகவும் இருந்ததனால். முனிவர் உபதேசித்தது உசிதமேயாம்.

——————————–

ஊந ஷோடச வர்ஷோ மே ராமோ ராஜீவ லோசந : -எனது மைந்தன் இராமன் பதினாறு வயதுக்கும் குறைவான பாலனன்றோ -என்ற தசரதர் வாக்கியத்தினாலும்;
ஊந த்வாதச வர்ஷோயம் அக்ருதாஸ்த்ரச்ச ராகவ: -தாடகாவதம் செய்யும் பொழுது இராம பிரானுக்கு வயது பன்னிரண்டு நிரம்பவில்லை யென்று இராவணனிடம் கூறிய மாரீச வசனத்தினாலும் ;
இராவண ஸந்நியாஸியை நோக்கி ஸீதா தேவி –
“உஷித்வா த்வாதச ஸமா இக்ஷ்வாகூணாம் நிவேசநே –
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநி –
தத்ர த்ரயோதச வர்ஷே ராஜா மந்த்ரயத ப்ரபு:
அபிஷேச யிதும் ராமம் ஸமேதோ ராஜ மந்த்ரிபி:

” யான் ஸ்ரீராம பிரானைத் திருமணஞ் செய்து கொண்ட பின்னர், திருவயோத்தியில் பன்னிரண்டாண்டு பதியுடன் கூடிச் சகல போகங்களையும் குறைவின்றி யனுபவித்துக் கொண்டு வாழ்ந்திருந்தேன். பதின்மூன்றாவது வருஷத்தில் என் மாமனார் என் பர்த்தாவுக்கு இராஜ்யாபிஷேகஞ் செய்வதற்கு ஆலோசனை செய்தனர்.
ஸீதாப் பிராட்டியாருக்கு விவாஹமாகும் பொழுது வயது ஆறு எனவும், ஸ்ரீராமபிரானுக்கு வயது பன்னிரண்டு எனவும், ஸித்திக்கின்றது.

அயோநி ஜாம் ஹி மாம் ஜ்ஞாத்வா நாத்ய கச்சத் ஸசிந்தயந் -ஸத்ருசம் சா நுருபம் ச மஹீ பால: பதிம் மம –ஸீதாப் பிராட்டியார் அநஸூயா தேவியை நோக்கி-யான் அயோநிஜை யானதால் எனக்கு ஏற்றவனும் அநுரூபமான கணவனை எனது பிதா தெரிந்து கொள்ள முடிய வில்லை.” என உரைத்தனள்.

வஸிஷ்ட விஸ்வாமித்திரர்களிருவரும் ஜனக மஹா ராஜனை நோக்கி
“ஸத்ருசோ தர்ம ஸம்பம்த: ஸத்ருசோ ரூப ஸம்பதா
ராம லக்ஷமணயோ ராஜந் ரீதா ச ஊர்மிலயா ஸஹ

“ஸ்ரீ ராமபிரானுக்கு ஸீதாப் பிராட்டியும்,இளைய பெருமாளுக்கு ஊர்மிளா தேவியும் குல ரூபாதிகளில் தகுதி யுள்ளவர்களாக இருக்கின்றார்கள்.” என்று அருளிச் செய்தனர்.

துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்யாபிஜந லக்ஷணாம் -ராகவோர்ஹதி வைதேஹிம் தம் சேய மஸி தேக்ஷணா

பாபாநாம் வா சுபாநாம் வா வதார்ஹாணா மதாபிவா
கார்யம் காருண்ய மார்யேன ந கச்சித் நாபராத்யதி

சூடக வரவுறழ் சூலக் கையினள்
காடுறை வாழ்க்கையள் கண்ணிற் காண்பரேல்
ஆடவர் பெண்மையை யவாவுந் தோளினாய்
தாடகை யென்பதச் சழக்கி நாமமே.

சந்த்ர காந்தா நநாம் ராம மதீவ ப்ரிய தர்சனம்
ரூபௌதார்ய குணை: பும்ஸாம் த்ருஷ்டி சித்தா பஹாரிணம்

தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழற் கமலமன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரு மஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்தன்னா னுருவு கண்டாரை யொத்தார்.”

எண்ணரு நலத்தினா ளினைய நின்றுழி கண்ணொடு கண்ணினை கௌவி யொன்றை யொன் றுண்ணுவு நிலை பெறாதுணர்வு மொன்றிட அண்ணலு நோக்கினான் அவளும் நோக்கினாள்.”
கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச் சொற்க ளென்ன பயனு மில-
குறள்

ஜனக மஹாராஜர் வசிஷ்ட லிச்வாமித்திரர்களை நோக்கி:-“உத்தரேதிவஸே ப்ரஹ்மந் பல்கு நீப்யாம் மநீஷிண: வைவாஹிகம் ப்ரசம் ஸந்தி பகோ யுத்ர ப்ரஜாபதி :
நாளை நின்று விவாஹத்திற்கு ஸ்லாக்கியமான உத்தர பல்குனி நக்ஷத்திர மாகையால் அன்று விவாஹம் நடத்தப்பட வேண்டும். ” என்றுரைத்தனர்.
பங்குனி யுத்தரமான பகற்போதங்க ணிருக்கினி லாயிர நாமச்
சிங்க மணத் தொழில் செய்த திறத்தால் மங்கல வங்கி வதிட்டன் வகுத்தான்.
“என்றபடி ஸீதாப் பிராட்டியாரின் திருமணம் பகற் காலத்தில் உத்தர பல்குனி நக்ஷத்திரத்தில் நடந்திருப்பதால், விவாஹத்திற்கு பகற் பொழுதும் உத்தர பல்குனி நக்ஷத்திரமும் சிறந்ததென்பது ஸூசிதம்.

இயம் ஸீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ
ப்ரதீச்ச சைநாம் பத்ரம் தெ பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா
பதி வ்ருதா மஹா பாகா சாயேவாநுகதா ஸ்தா
இத்யுக்த்வா ப்ராக்ஷிபத் ராஜா மந்த்ர பூதம் ஜலம் ததா “

லக்ஷ்மணாகச்ச பத்ரம் தெ ஊர்மீளா முத்யதாம் மயா
பரதீச்ச பாணிம் க்ருஹ்ணீஷ்வ மாபூத் காலஸ்ய பரிய :
தமேவ முக்த்வா ஐநநோ பரதம் சாப்ய பாஷத
க்ரஹாண பாணிம் மாண்டயா: பாணிநா ரகு நந்தன
சத்ரூக்நம் சாபி தர்மாத்மா அப்ரவீஜ் ஜநகேஸ்வர :
ஸ்ருத கீர்த்யா மஹா பாஹோ பாணிம் க்ருஷ்ணீஷ்வ பாணிநா
ஸர்வே பவந்த: சவ்ம்யாச்ச ஸர்வே ஸு சரித வ்ரதா :
பத்நீபி : ஸந்து காகுத்ஸ்தா மாபூத் காலஸ்ய பர்யய:
ஐநகஸ்ய வச: ஸ்ருத்வா பாணீந் பாணி பிரஸ் ப்ருசந்
சத்வாரஸ்தே சதஸ் ருணாம் வஸிஷ்டஸ்ய மதே ஸ்திதா :
அக்நிம் ப்ரதக்ஷிணீ க்ருத்ய வேதிம் ராஜாநமேவச
ருஷிம்ஸ்சைவ மஹாத்மாந : ஸபார்யா ரகு ஸத்தமா:
யதோக்தேந தாசக்ருர் விவாஹம் விதி பூர்வகம்
த்ரீ ரக்நிம் தே பரிக்ரம்ய ஊஹுர் பார்யா மஹோஜஸ :
அதோபகாயாம் ஜக்முஸ்தே ஸபார்யா ரகு நந்தநா :

ராஜாப் யநு யயெள பஸ்யந் ஸ ருஷி ஸங்க : ஸ பாந்தவ: ‘

ஸீதாப் பிராட்டியாரின் திருமணம் அத்யாத்ம ராமாயணத்திலுள்ளபடி:-
வஸிஷ்டம் கௌசிகம் சைவ சதாநந்த புரோஹித:
யதா க்ரமம் பூஜ யித்வா ராமஸ்யோபுய பார்ஸ்வயோ
ஸ்தாபயித்வா ஸ தத்ராக்நிம் ஜ்வால யித்வா யதாவிதி
ஸீதாமாநீய சோபாட்யாம் நாநா ரத்ந விபூஷிதாம்
ஸ்பார்யோ ஜநக : ப்ராயாத்ராமம் ராஜீவ லோசநம்
பாதெள ப்ரஷால்ய விதிவத் ததபோ மூர்த்ந்யத் தாரயத்
தத: ஸ்தாம் கரே த்ருத்வா ஸாக்ஷத் உதக பூர்வகம்
ராமாய ப்ரததெள ப்ரீத்யா பாணி க்ரஹ விதாநத:
ஸீதா கமல பத்ராக்ஷி ஸ்வர்ண முக்தாதி பூஷிதா
தீயதே மே ஸுதா துப்யம் ப்ரீதோ பவ ரகூத்தம
இதி ப்ரீதேந மநஸா மீதாம் ராம கரே அர்பயந்
ஊர்மிளாம் செளரஸீம் கந் யாம் லக்ஷ்மணாய ததெள முதா
ததைவ ஸ்ருத கீர்திம் ச மாண்டவீம் ப்ராத்ரு கந்யகே
பரதாய ததா வேகாம் சத்ருக்நாயா பராம் ததெவ்

ஸ்ரீராம பிரானுக்கு இரு பக்கத்திலும், வஸிஷ்டர் விஸ்வாமித்திரர், ஸதாநந்தர் இவர்கள் இருந்து கொண்டு அக்நியை ஸ்தாபனஞ் செய்து விதிப்படி பூஜித்து ஜ்வாலை பண்ணி பாணி க்ரஹண முஹுர்த்தக் காரியங்களை ஆரம்பித்தனர். ஜனக மஹாராஜனும் தன் பத்தினியுடன், நவ ரத்னங்களுடன் கூடிய பலவித ஆபரணங்களை யணிந்தவளும் மிகுந்த தேஜஸ்ஸோடு கூடி யவளுமான ஸீதா தேவியை அழைத்துக் கொண்டு வந்து, செந்தாமரைக் கண்ணனாகிய ஸ்ரீராமபிரானுடைய திருவடிகளை ஜலத்தால் அலம்பி அந்தத் தீர்த்தத்தை ஸிரஸில் ப்ரோக்ஷித்துக் கொண்டு ஸீதாதேவியின் கையை பிடித்துக் கொண்டு என் புத்திரியாகிய இந்த ஸீதா தேவியை உமக்குக் கொடுக்கிறேன். நீர் ப்ரீ தியுடன் அங்கீகரிக்கக் கடவீர் என்றுறைத்து மிகுந்த பிரீதியுடன்

ஸ்ரீராம பிரானது கையில் கொடுத்து உதக பூர்வமாகக் கன்னிகாதானஞ் செய்தனர். இந்தப் பிரகாரமே தன் குமாரியாகிய ஊர்மிளையை இளைய பெருமாளுக்கும், தன் ப்ராதாவின் புத்திரிகளான மாண்டவி,ஸ்ருத கீர்த்தி என்னும் கன்னிகைகளை பரத சத்ருக்கனர்களுக்கும் பாணி க்ரஹணம் செய்து கொடுத்தனர்.

(விவாஹங்கள் எட்டு விதங்களென ஸ்மிருதிகளில் கூறப் பட்டுள்ளன.
” ப்ரஹ்மோ தைவஸ்த தைவார்ஷ : ப்ராஜபத்யஸ் ததாஸ்ர :
கந்தர்வோ ராஷஸச் சைவ பைராசஸ் ச அஷ்டமோ தம: “
” பிரம நற்றெய்வ மாரிடம் பிரசா பத்திய மாசுரம் பெட்பின்
மருவுகாந்திருவ மிராக்கதம் பசாச மென மணமெட்டுள.”
” இருவருமிணங்கு களவு கந்தருவ மனந்தலிலிணங்கல் பைசாசம்
பெரு வலியதனான் மருவுதலரக்கம் பெரிலக் கெய்தலே யசுரம்
பொருளுகந்தளித்தலாரிடம் பிரசாபத்தியம் பொருள் கொளாதளித்த லருமகந்தனை வேட்பித்தலே தெய்வ மழைத்தெதிர் கொடுத்தலே பிரமம் “

1 ) பிரம்மம். (2)தைவம் (3) ஆர்ஷம். (4)ப்ராஜா பத்யம். (5)ஆரம். (6)காந்தர்வம்,(7)ராக்ஷஸம். (8)பைசாசம். என்ற எட்டு வித விவாஹங்களுள் ஸீதாப் பிராட்டியாரின் திருமணம் “ஸஹ தர்மம் சரத இதி ப்ராஜா பத்ய ; ” என்ற ஆச்வலாயனார் வசனப் பிரகாரம் ப்ராஜா பத்தியத்தைச் சேர்ந்ததாக ஏற்படுகின்றது.

யதா யதா ஹி கௌஸல்யா தாஸிவச் ச ஸகீவ ச
பார்யாவத் பகிநீவச் ச மாத்ருவச் சோபதிஷ்டதே-
அயோத்யா -12-69-

ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜனகாத்மஜாம்
அயோத்யா மடவீம் வித்தி கச்சதா தயதா ஸுகம் -அயோத்யா -40-9-
ஆகாத தன்றா லுனக்கவ்வன மிவ்வயோத்தி
மாகாதலிராமனம் மன்னவன் வையமீந்தும்
போகா வுயிர்த் தாயர் நம்பூங்குழற் சீதை யென்றே
ஏகா யினியிவ் வயினிற்றலு மேதமென்றாள். “
“பின்னும் பகர்வாண் மகனே யிவன் பின்செறம்பி
என்னும் படியன் றடியா ரினி லேவல் செய்தி
மன்னும் நகர்க்கே யிவன் வந்திடின் வாவதன்றேல்
முன்னம் முடி யென்றனள் பான் முலைசோர நின்றாள்.”

————-

அகர இராமாயணம்!

அனந்தனே அசுரர்களை அழித்து, அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான்!

அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம்.

அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன்?

அவனே அறிவழகன், அன்பழகன், அன்பர்களை அரவணைத்து அருளும் அருட்செல்வன்!

அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில் அரசனின் அரியவில்லை அடக்கி, அன்பும் அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான் .

அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய அனந்தராமனுக்கே! அப்படியிருக்க அந்தோ ! அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும் அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு அனுப்பினாள். அங்கேயும் அபாயம்! அரக்கர்களின் அரசன் , அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான்

அங்கேயும் அபாயம்! அரக்கர்களின் அரசன் , அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான்

அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை அரசனாக அரியணையில் அமர்த்தினர்.

அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும் அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர். அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து அளந்து அக்கரையை அடைந்தான்.

அசோகமரத்தின் அடியில் , அரக்கிகள் அயர்ந்திருக்க அன்னையை அடிபணிந்து அண்ணலின் அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான்

அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள் அநேகமாக அணைந்தன.

அன்னையின் அன்பையும் அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.

அடுத்து, அரக்கர்களை அலறடித்து , அவர்களின் அரண்களை , அகந்தைகளை அடியோடு அக்கினியால் அழித்த அனுமனின் அட்டகாசம் , அசாத்தியமான அதிசாகசம்.

அனந்தராமன் அலைகடலின் அதிபதியை அடக்கி , அதிசயமான அணையை அமைத்து, அக்கரையை அடைந்தான்.

அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின் அஸ்திரத்தால் அழித்தான்.

அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.

அன்னையுடன் அயோத்தியை அடைந்து அரியணையில் அமர்ந்து அருளினான்

அண்ணல்.

அனந்தராமனின் அவதார அருங்கதை அகரத்திலேய அடுக்கடுக்காக அமைந்ததும் அனுமனின் அருளாலே!!

—————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆழ்வார்‌ கலித்துறை யந்தாதி என்று வழங்குகிற ஸ்ரீ சடகோபாரந்தாதி–

March 31, 2025

ஆழ்வார்‌ – கடவுளின்‌ நற் குணக் கடலில்‌ முழுகி அமுங்கி யிருப்பவர்
கலித்துறை – கலித்துறை யென்லும்‌ ஒரு வகைப் பாடலினாற்‌ செய்‌யப் பட்ட,
அந்தாதி என்று – ௮ந்தத்தை ஆதியாக வுடைய நூல் என்று
வழங்குகிற – சொல்லுகின்ற,
சடம்‌ – சடம்‌ என்‌னும் வாயுவை,
கோபர்‌ – கோபித்த இறைவரது என்பதாம்‌.

சடகோபரந்தாதி – சடகோபரைப்‌ பற்றிய அந்தாதி யெனவும்‌ சடகோபரது ௮ந்தாதி எனவும்‌ விரிக்கலாம்‌. இவற்றுள்‌, முன்னது இரண்டாம்‌ வேற்றுமை உருபும் பயனுமுடன்றொக்கத் தொகையும்‌ பின்னது ஆறாம் வேற்றுமைத்‌ தொகையுமாகச் கொள்ளலாம்‌.

தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
நாவில் சிறந்த மாறற்குத் தக்க நன் நா வலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.
-சிறப்புப் பாயிரம்-அபியுக்தர் ஒருவர் அருளிச் செய்த தனியன் இது-அடுத்த மூன்று செய்யுள்களும் அப்படியே –

தேவில்‌ – தெய்வங்களில்‌-சிறந்த
திருமாற்கு -திரு மகள் கணவனாகிய மாயோனுக்கு,
தக்க – தகுந்த,
தெய்வக் கவிஞன்‌- தெய்வத் தன்மை யுள்ள கவிபாட வல்லவர்‌,
பாவில்‌ சிறந்த – பாடல்களில் சிறந்த
திருவாய்மொழி – திருவாய் மொழிப்‌ பிரபந்தத்தை,
பகர்‌-பாடியருளிய,
பண்டிதனே – நல்ல பாண்டித்தியமுடைய நம்மாழ்வாரேயாம்‌;, (௮ப்படிப் போல), நாவில் சிறந்த – அப்படிப் பாடுதற்குரிய நாக்‌கினால் சிறந்த
௮ம் மாறற்கு – அந்த நம்மாழ்வாருக்கு, தக்க – தகுந்த
நல் நா வலவன்‌ – நல்ல கவிஞரானவர்‌, பூவில்‌ – உலகத்தில்‌, -சிறந்த-
ஆழ்‌வான்‌ – பக்தி வெள்ளத்தில்‌ மூழ்குபவராகிய,
கம்ப நாட்டு புலமையன்‌-கம்ப நாடரென்னும்‌ வித்துவானேயாம்‌;

எல்லாத் தேவரிலும்‌ சிறந்த மாயோனுடைய கீர்த்திகளைப்‌ பாடுதலில்‌ வல்லவர்‌ நம்மாழ்வாரேயாம்‌-௮ப்படிப் போல நம்மாழ்வாரைப்‌ பாடுதலில் சிறந்தவர்‌ கம்ப நாட்டாழ்வாரேயாமென்பதாம்‌-மற்றைத்‌ தேவர்களைப் போலாகாமல்‌ உயிர்களிடத்தில்‌ அந்தர் யாமித்‌துவமுடைமையால்‌ தேவிச் சிறந்த திருமாலென்றார்‌. சிவ பிரானிடத்தில்‌ உபதேசம் பெற்று அகத்தியர் எழதிய இலக்கணத்துத்குப்‌ பொருந்திய பாடல்‌களைப்‌ பாடப் பெற்றதனால்‌ தெய்வக்கவி யென்றார்‌. ஏனைய நூல்கள்‌ போலாகாது இருமைப் பயனுந் தருதலால்‌ பாவில் சிறந்த திருவாய் மொழி யென்றார்‌. பண்டிதன்‌ -ஞான பண்டிதருமாம்‌, மாறன்‌ – ஆழ்வார்‌-பிறந்த பொமுது அழுதல்‌, விம்முதல்‌, பால் குடித்தல்‌ முதலிய ஒரு தொழிலுஞ் செய்யாமல்‌ உலகியல்பிற்கு மாறாக இருந்ததினால்‌ மாறன்‌ என்று பெயர் பெற்றார்‌. பூவிற் சிறந்த கம்ப நாட்டு ஆழ்வானெனக் கூட்டலும்‌ அமையும்‌. கம்பநாடு – முதலில்‌ இது வெண்ணெயூர்‌ நாடாக விருந்து பின்‌பு கம்பர் காலத்தில்‌ அவர் பெயரால்‌ மாற்றப் பட்டமையால்‌ கம்பநாடென்றார்‌. பல வேறு வகைப்பட்ட நூலுணர்ச்சிகள் எல்லாம்‌ ஒரு சேரக் கொண்ட பேரறிவுடைமையால்‌ புலமையனென்றார்‌–கவிஞன்‌-ஞ்‌ -பெயரிடை நிலை. திருவாய்மொழி -சிறந்த வாயில் சொல்லாகிய நூல்‌ என்று பொருள் பட்டு ௮டையடுத்த கருவி யாகு பெயராயிற்று-ஏகாராமிரண்டும்‌ தேற்றம்‌.

———

ஆரணத்தின் சிர மீது உறை சோதியை ௮ந்தமிழால்
பாரணம் செய்தவனைக் குருகூரனைப் பற்பல வா
நாரணனாம் என ஏத்திக் தொழக் கவி நல்கு கொடைக்
காரணனைக் கம்பனை நினைவாம் உள் களிப்புறவே.

ஆரணத்தின்‌ – வேதத்தின்‌,
சிரம்‌ மீது – முடிவிடத்‌திலே,
உறை : பொருந்தி யிருக்கின்‌ற,
சோதியை – சோதி வடிவனான மாயோனை,
௮ம்‌ – அழகிய,
தமிழால்‌ – தமிழ்ப் பாடல்களால்‌,
பாரணம்‌ செய்தவனை -பாடி மகிழ்ந்தவராகிய,
குருகூரனை – திருக் குருகூரிலவதரித்த
சடகோபரை,
பல்‌ பல ௮ – பலபலவகையாக ,
நாரணன்‌ ஆம்‌ என–இவர்‌ நாராயணனது அமிசமாவாரென்று,
ஏத்தி- துதித்து,
தொழ–வணங்கும் படியாக,
கவி- பாடல்களை,
கொடை – கொடுத்தற்குரிய பொருளாக
நல்கு – கொடுக்கின்ற,
காரணனை – தலைவராகிய,
கம்‌பனை – கம்பரென்னும்‌ புலவரை (யாம்‌,) உள்‌ – எமது மனத்தில்‌,
களிப்பு உற – மகிழ்ச்சி மிகும் படியாக, நினைவாம்‌ – கருதுவோம்‌;

வேதாந்தத்தின்‌ மேல்‌ விளங்குஞ்‌ சோதியாகிய மாயோனைத் துதித்த நம்மாழ்வாரைத் துதித்த கம்பரை யாம்‌ உள்ளங் களிக்கும்படி தியானிப்‌போம் என்பதாம்‌, உபநிஷத்துக்களிலும்‌ உத்தர மீமாம்சை யாகிய ப்ரஹ்ம ஸூத்திரத்திலும்‌-மாயோனைத் தலைவனாகக் கூறுதலால்‌ ஆரணத்தின் சிரமீதுறை என்றார்‌. எல்லாரிலும்‌ மேம்பட்ட சரீர காந்தி யுடைமையால்‌ சோதி யென்றார்‌, செய்யுளிடத்தன்றி உலக நடையில்‌ மாந்தர்‌க்குப்‌ பயன்படாமலும்‌ தமக்கென்று ஓர்‌ இடமில்லாமலும்‌ இலக்கணங்கள் அமையப் பெறாமலுமுள்ள ௮ன்னிய மொழிகளைப் போலாகாமல்‌ ௮வை யெல்லாமுடைமையால்‌ அந் தமிழ் என்றார்‌. திருமாலால்‌ அளிக்கப்படுவன யாவும்‌ தாமே கொடுக்கத் தக்கவராதல் பற்றிப்‌ பல முகத்தாலும்‌ இவர்‌ நாராயணனே யாவார் என்பதைக் கம்பர்‌ குறிப்பித்தமை இங்கு எடுத்துக் காட்டினது காண்க, ஆரணம்‌ – வேதத்திக்குச்‌ சினை யாகுபெயர்‌.
சோதி – உவமை யாகுபெயர்‌. யாம்‌ -தோன்றா எழுவாய்‌, நினைவாம்‌-பயனிலை-

———-

நம் சட கோபனைப் பாடினையோ?’ என்று நம் பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால் கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித் துறை நூறும் தெரியும் வண்ணம்
நெஞ்சு அடியேற்கு அருள் வேதம் தமிழ் செய்த நின்மலனே

வேதம்‌ – வேதங்களின்‌ கருத்துக்களை, (எடுத்து ),
தமிழ்‌ -தமிழ்ப் பாடல்களாக , செய்த—-,
நின் மலனே – குற்றமற்றவரே !,
நம்‌ பெருமாள்‌ – எங்கட்கிறைவனாகிய மாயோன்‌,
விஞ்சிய – மிகுந்த,
ஆதரத்தால்‌ – அன்பினால்‌ (கம்பரை நோக்கி ),
நம்‌ சடகோபனை – நமது சடகோப முனிவரை,
பாடினையோ – நீ பாடித் துதித்தனையோ ??
என்று கேட்ப- என்று கேட்டவடன்‌, கம்பன்‌—-.-,
விரைந்து – விரைவாக,
உரைத்த – பாடிய,
செம்சொல்‌ -௮ழகிய தமிழ் சொற்களாலமைந்த,
௮ந்தாதி- அந்தாதி யென்னும்‌ நூலிலமைந்து கிடக்க ,
நூறு கலித்துறையும்‌ – நூறு கலித் துறைப் பாடல்களும்‌,
தெரியும்‌ வண்ணம்‌ – நான்‌ அறிந்து கொள்ளும் படியாக,
அடியேற்கு – உம்முடைய திருவடிகளில்‌ பற்றுள்ள எனக்கு,
நெஞ்சு-மனத்தினை,
அருள்‌-கொடுத்தருளுவீர்‌;

வேதத்தைத்‌ தமிழிற் செய்தருளிய நம்மாழ்வாரே ! பெருமாள்‌ சடகோபரைப் பாடினையோ வென்று கேட்டலும்‌ கம்பர் பாடிய அந்தாதியைத்‌ தெரிந்து கொள்ளும் வண்ணம்‌ அடியேனுக்கு மனத்தைக்‌ கொடுத்‌தருளுவீர் என்பதாம்‌. வேதம்‌ நான்கு;-இருக்கு , எஜூர்‌, சாமம்‌, அதர்வணம்‌. இந் நான்கின் கருத்தினை அடக்கித் தமிழில்‌ நம்மாழ்வார்‌ செய்த
பிரபந்தங்கள்‌ முற்கூறப்பட்டன., நம் சடகோபனென்றது மாயோன்‌ தான்‌ ஆழ்வார் மீது வைத்துள்ள அன்பின்‌ மிகுதியால்‌ தன்னொடு சேர்த்துக் கூறிய ஆர்வமொழி; இது பற்றியே யாவரும்‌ நம்மாழ்வாரெனக் கொண்டாடுவதுமென்றறிக-அரங்க நாதனுச்கு எல்லா வடியாரிடத்தும்‌ அன்பொத்திருக்கச்‌ சடகோபரை நம் சடகோபனை யென்று
விசேடித்ததும்‌ தம்மைக் கம்பர்‌ பாடி யிருக்கவும்‌ அவற்றால்‌ திருப்தி யுறாமல்‌ சடகோபனைப்‌ பாடினையோ வென்றதும் பற்றி விஞ்சிய ஆதரத்தாலென்றார்‌. பெருமாள்‌ – உயர்‌ திணை யிருபாற்‌ பொதுப் பெயர்‌, கம்பன்‌-சாதிப் பெயர்‌, உரைத்த அந்தாதி யெனக் கூட்டுக –

———–

நாதன் அரங்கன் நயந்துரை என்ன நல் கம்பன் உன் தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும் படி யெனக்கு உள்ளம் தனை யருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருளே இது என் விண்ணப்பமே.

ஒதரிய- சொல்லு தற்கரிய, (அளவினையுடைய),
வேதம்‌-வேதங்களை,
தமிழ்‌ செய்‌த-தமிழ்ப் பாடல்களாகப்‌ பாடி யருளிய,
மெய்ப்‌ பொருளே – தத்‌துவ ஞான மூர்த்தியே !
நாதன்‌ – தலைவனாக,
அரங்கன் – – திருவரங்கத்தெம்பெருமான்‌, (கம்பரை நோக்கி )
நயந்து – விரும்‌பி,
உரை யென்ன – ‘ சடகோபனைப் பாடு’என்று சொல்ல,
நல்‌ கம்பன்‌.-சிறந்த கம்பரென்னும் புலவர்‌, உன்‌ தன்‌ – உம்முடைய,
பாதம்‌ – திருவடிகளை,
பரவிய – துதித்துப் பாடிய,
பைந்தமிழ்‌ – பசுந்‌ தமிழ்ப் பாடல்‌கள்‌-நூறும்
பரிவுடன்‌ – (யான்‌) அன்போடு
ஒதும்படி – படித்து உய்யும்‌ வண்ணம்‌, எனக்கு—-உள்ளம்‌ தனை – மனத்தினை,
அருள்‌ – திருத்தி யருள வேண்டும்‌,
என்‌ – எனது ,
விண்ணப்பம்‌ – வேண்‌டு கோளானது ,
இது – ஈதொன்றேயாம்‌; –

வேதத்தினைச்‌ தமிழிற்‌ செய்த நம்மாழ்வாரே ! ௮ரங்க நாதன்‌ கட்‌டளையால்‌ கம்பர்‌ உம்மைத் துதித்த இவ் வந்தாதியைப்‌ படிக்கும்படி எனக்குக் கருணை செய்வீராக வென்பதாம்‌, அனந்தாவை வேதா : என்ற படி வேதங்கள்‌ அளவில்லாத பகுதியன ஆதலால்‌ ஓதரிய என்றார்‌-கேட்போருக்கு இன்பத்தையே தருதலால்‌ பாடலென்று கூறாமல்‌
இன்பமென்ற. பொருள் படும்‌ தமிழென்றார்‌-எல்லா வூழிகளிலும்‌ அழியாதிருத்தலால்‌ நாதனென்றார்‌. அப்படி யிருப்பதை அறியா , மனிதரும்‌ ௮றிந்து தர்ஸித்து நன்‌மை யடைய வேண்டி.-ஸ்ரீரங்கத்தில்‌ கோயில்‌ கொண்டெழுந்தருளினமையால்‌ அரங்கனென்றார்‌. எத்தனையோ புலவர்‌ தோன்றியிருந்தும்‌ இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும்‌ புண்ணியத்தை இவ்வொருவரே செய்து வந்தமையால்‌ நற்கம்பனென்‌றார்‌-இளமையர் மழலை செவிக்கு இன்பம் செய்வது போல இதுவும் இன்பந்‌ தருதலின்‌ பைந் தமிழ் என்றார்‌.; பசுமை – இளமை – பாராட்ட நானினியாளல்வவே பசுமென்குழவி” என்றார்‌ பிறரும்‌, கம்பன்‌ – அந்தச் சாதியர்க்குரிய பட்டப் பெயர்‌ – இயற் பெயர்‌ புலப்பட வில்லை ; பெரியோர்களின்‌ இயற் பெயர்களைக் கூற அஞ்சி மரியாதை தோன்‌ற அப் பட்டப்‌ பெயரால் அழைக்கப்படுவது தொன்று தொட்டு வந்த வழக்கம்‌- ‘ஐயரவர்‌கள் பிள்ளையவர்கள்‌, செட்டியாரவர்கள்‌’ என்கின்ற இம் மொழிகள் தமிழில் சிறந்த ஒவ்வொருவரைக் குறித்தல்‌ போல அக் காலத்திலிவரைக்‌ கம்பரெனக் கூறுதலுண்டென்‌றிந்து கொள்க. உரை –ஏவலொருமை-வினைமுற்று -ஆய் விகுதி புணர்ந்து கெட்டது உன்தன்‌, தன்‌- சாரியை-ஓதும்படி – படி ஈற்று வினை யெச்சம்‌.-ஓத அகரம் தொக்கது,

———-

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே
.–தற் சிறப்புப் பாசுரம்

——–

வேதத்தின் முன் செல்க மெய் யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக் கடல் எங்கள் தென் குரு கூர்ப் புனிதன் கவி ஓர்
பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே
.– 1-

தொல்லை – பழமையும்‌,
மூலம்‌ – எல்லாவற்றிற்கும் காரணமும்‌,
பரம்‌ – மேன்மையுமாகிய,
சுடர் – சோதி வடிவனாகிய மாயோன்‌,
வேதத்தின்‌ முன்‌ செல்க – வேதங்களின்‌ ௮ளவைக் கண்டது போவனென்‌றாலும்‌ போவானாக ;
மெய்‌ உணர்ந்தோர்‌ – உண்மை நிலையை அறிந்‌தவராகிய,
விரிஞ்சன்‌ முதலோர்‌ – பிரமா முதலான தேவருடைய,
கோது -குற்றம்‌
அற்ற – நீங்கிய,
ஞானம்‌ – ஞானத்தின்‌,
கொழுந்தின்‌ முன்‌-முடியைக் கடந்து போவனென்றாலும்‌,
செல்க – போவானாக ;
தென்‌-அழகிய,
குருகூர்‌ – குருகூரென்னும்‌ பதியிலவதரித்த,
குணம்‌ கடந்த -முக் குணங்களையுங் கடந்த,
போதம்‌ கடல்‌ – ஞான சாகரமாகிய,
எங்கள்‌ புனிதன்‌- எங்களுக்கு மேலாய்‌ விளங்குகிற நம்மாழ்வாரது,
கவி- பாடல்‌களின்‌,
ஓர்‌ பாதத்தின் முன்‌ – ஒரு அடிக்கு முன்னே,
செல்லுமே-போகும் தகுதி யுடையவனோ ? [எனவே போகானென்பதாம்‌];

திருமால்‌, வேதத்தினெல்லையையும்‌ அறிவுடையவர்‌ ஞான நிலையையையும் கடந்தவனென்றாலும்‌ சடகோபரது பாடலெல்லையைக் கடக்கும்‌ வலியிலனென்பதாம்‌. எனவே திருமாலின்‌ செயலினெல்லையைக் கடந்து ௮ப்பாலும் பரவி நின்றது இவர் பாடலென்க. த்ரை குண்ய விஷயா வேதா : என்றபடி மூன்று குணமுடையோர்க்கும்‌ வேண்டுவன உணர்த்தும்‌ வேதத்தில் பரமாத்துமாவைக் கூறாத பாகமுமிருப்பதால்‌ வேதத்தின்‌ முன்‌ செல்க வென்றும்‌ குணாதிதரான நம்மாழ்வார்‌ பாடலில்‌ அங்ஙனம்‌ ஒரு பாதமுமில்லாமையால்‌ பாதத்தின்‌ முன் செல்லுமே யென்றுங்‌ கூறினா.தவம் முதவியவற்றால் பெற்ற அறிவினை யுடைய பிரம்மா முதலானோர்‌ ஞானத்துக்கும்‌ முதலடியிலேயே மயர்வற மதி நலம்‌ அருளப் பெற்ற நம்மாழ்வார்‌ ஞானத்துக்கும்‌ மிகுந்த ஏற்றத் தாழ்வுண்‌டாதலால்‌ விரிஞ்சன்‌ முதலோர்‌ கோதற்ற ஞானக் கொழுந்தின்‌ முன்‌ செல்கவென்றும்‌ பாதத்தின் முன்‌ செல்லுமே யென்றுங்‌ கூறினார்‌, இது மெய் யுணர்ந்தோர்‌ என்‌றதனாலே தவத்தாற் பெற்ற அறிவுடையாரென்‌பது விளங்கும்‌, வேதம்‌ – மங்கலச்‌ சொல்லாதலின்‌ முதவிலெடுத்‌துக் கொண்டார்‌, இது விருத்தப் பொருத்தமாயினும்‌ பெரியோராட்சியிற்‌’குற்றமில்லையென்‌க -. மெய் யுணர்ந்தோர்‌– வியாஸ, அம்பரீஷ, சுக, செளனகாதியரெனினுமாகும்‌.-முதலோரென்‌றதனால்‌ இந்திராதியரையுங்‌ கொள்க – கோதற்ற ஞானம்‌ – ௮மல ஞானம்‌. குணங்கள்‌ தந்த எனப்‌ பிரித்‌துத்‌ திருவாய் மொழியைக் கற்றவர்களுக்கு நற்குணங்களைத்‌ தந்தருளுகின்ற என்றலுமாம்‌.-தென் குருகூர்‌ – தென்றிசைக் கண்ணுள்ளதாகிய குருகூரென்றலுமாகும்‌, எல்லோரிலுஞ்‌ சிறந்தவராதலால்‌ புனிதனென்றார்‌. முன்‌ – இடைச் சொல்‌ ; இடத்தின்மேலது – செல்க -வியங்கோள் வினை முற்று, உணர்ந்தோர்‌ – பெயரெச்சமுற்று, செல்‌லுமே, ஏ-எதிர்மறை, சுடர்‌ – உவமை யாகுபெயர்‌-

————-

சுடர் இரண்டே பண்டு மூன்றாயின துகள் தீர்ந்துலகத்து
இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன எம் பிறப்பை
அடர் இரண்டாம் மலர்த்தாள் உடையான் குருகைக் கரசன்
படர் இருங் கீர்த்திப் பிரான் திருவாய் மொழிப் பாவொடுமே.
2-

பண்டு- முற்காலத்தில்‌,
சுடர்‌ இரண்டே-சூரியனும்‌ சந்திரனுமாகிய இரண்டு சுடர்களென்றே நிலை யிடப்பட்டன;(இப்பொழுதோவெனில்‌),
எம்‌ பிறப்பை – எமது பிறவியை,
அடர்‌ – போக்கிய,
இரண்டு ஆம்‌ – இரண்டாகிய,
மலர்‌ தாள்‌, உடையான்‌ -தாமரை மலரை யொத்த திருவடிகளை யுடையவரும்‌, குருகைக்கு – குருகூருக்கு,
அரசன்‌ – தலைவரும்‌,
படர்‌ – பரவிய,
இரும்‌ – பெரிய,
கீர்த்தி பிரான்‌ – புகழை யுடையவருமாகிய நம்மாழ்வார்‌ (செய்தருளிய),
திருவாய்மொழி – திருவாய்‌ மொழி யென்னும்‌ பிரபந்தத்தினது ,
பாவொடும்‌ – பாடல்களுடனே(சேர்ந்து )
துகள் தீர்ந்து – குற்றமின்றி,
உலகத்து – உயிர்களிடத்தில்‌,
இரண்டு இடர்‌ஆய்‌ – இரண்டு வகைத் துன்பமாகி ,
வரும்‌ – வந்து பற்றிக்‌ கொள்கின்ற,
பேர்‌ இருள்‌ – பெரிய மயக்கம் பற்றி வருகிற இரு வினையாகிய இருளை,
சீப்பன – போக்குவனவாகி ,
மூன்று ஆயின – மூன்று சுடர்‌களென்று மேம் பட்டு விளங்கலாயின ;

முன்னாளில்‌ சூரியன்‌ சந்திரனென்னும்‌ இரண்டு சுடர்களே உலகத்தை விளக்கி வந்தன ; அவை புற விருளைக் கெடுப்பனவன்றி வேறு செய்யலாவன வின்மையால்‌, உயிர்களின்‌ மனத்திலுள்ள இருளைப் போக்‌க வேண்டிப்‌ பிரானது திருவாய்மொழிப்பாவொடு சேர்ந்து மனத்தெழுகின்ற இருளையும்‌ கெடுத்து முச் சுடராயின வென்பதாம்‌-உலகத்தின்‌
பேரிருளைக்‌ கெடுத்தற்குத்‌ திருவாய்மொழி வேண்டுமானாலும்‌ நம்மாழ்‌வார்‌ திருவடிகளில்‌ அன்பு பூண்ட தமக்கு ௮வர்‌ திருவடிகளே அமையுமென்பது தோன்ற எம் பிறப்பை அடரிரண்டா மலர்த் தாளுடையானென்றார் –பூவோடு நாரும்‌ மணம் பெறுதல் போலத்‌ திருவாய்மொழிப்‌ பாவொடு சுடர் சேர்ந்து மூன்றாயின வென்றார்‌-இனிச் சுடரிரண்டென்பதற்கு இராம கிருஷ்ணர்களென்று பொருள் கொண்டால்‌ அவ் விராமபிரான்‌ சுக்ரீவனை நோக்கி சரணாகதி தருமத்தை யளித்தமையாலும்‌ கண்ணபிரான்‌ அருச்சுனனை நோக்கிக்‌ கீதை யருளிச் செய்தமையாலும்‌ இங்கு-வீடுமின்‌ முற்றவும்‌!” என்று எல்லா வுயிர்களையும்‌ நோக்கி யருளிச் செய்‌தமையாலும்‌ இத் திருவாய்மொழியே ௮வரினும்‌ சிறப்புடைமையாவது அறிக,
வினைகளுள்‌ நல்வினை மீண்டும்‌ பிறவியைத் தருதலால்‌ இரண்டினையும்‌
சேர்த்து இடரென்றூர்‌ ; இருள்‌ என்பதும்‌ இக் கருத்துப் பற்றியேயாம்‌ :
‘* இருள் சேரிரு வினையும்‌”’ என்றார் பிரரும்‌. ஒருவன் செய்யும்‌ நன்மையால்‌ அவனைச்‌ சார்ந்த பலரும்‌ மேம் படுவாராதலால்‌ தாம்‌ ஒருவர் துதித்‌தலினால்‌ தம்மைச் சாரர்த பலர் பிறப்புக்களும்‌ நீங்குதல் பற்றி எம்‌ என்று தன்மைப் பன்மையாற்‌ கூறினார்‌. இரண்டே, ஏ- தேற்றம்‌, மலர்த்‌ தாள்‌ – உவமைத் தொகை, குருகை- மரூ௨,-இரும் கீர்த்தி – பண்புத்‌ தொகை,

————

பா வொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்
நா வொடுக்கும் நல் அறி வொடுக்கும் மற்றும் நாட்டப் பட்ட
தே வொடுக்கும் பர வாதச் செரு ஒடுக்கும் குருகூர்ப்
பூ வொடுக்கும் அமுதத் திரு வாயிரம் போந்தனவே
. 3–

குருகூர்‌. -திருக்குருகூர்ப் பதியிலே,
பூ – (ஆழ்வாரது திருவாய்‌) மலரில்‌,
ஒடுக்கும்‌ -அடக்கப் பெற்றிருந்ததான, அமுதம்‌ – அமிர்‌தம் போன்ற,
திரு ஆயிரம்‌ – சிறந்த ஆயிரம்‌ பாடல்களும்‌, போந்தன.-வெளி வந்தவைகள்‌ தாம்‌,
பா-செய்யுட்களின்- இலகணங்களை யெல்லாம்‌,
ஒடுக்கும்‌ – தம்முளடக்கிக் கொண்டு விளங்குவன –
நுண் -நுட்பமாக அறியத் தக்க,
இசை -இராகப் பகுதிகளெல்லாவற்றையும்‌,
ஒடுக்கும்‌—தம்முள் அடக்கிக் கொண்டு விளங்குவன
பலவும்‌ – வேறாகிய பலவற்றையும்‌, பறையும்‌ – மாறுபடக் கூறுகின்‌ற,
நா – புறச் சமயிகளின்‌ நாவினை,
ஓடுக்கும்‌ – அடக்கி விடும்‌ ;
நல்‌ ௮றிவு -நல்ல அறிவினை,
ஒடுக்கும்‌ – தன்னுள்ளடக்கி யிருக்கும்‌ ; மற்றும்‌ – அன்றியும்‌,
நாட்டப்பட்ட – (உலகத்தை) நிலை நிறுத்‌தப் பட்டுள்ள,
தே- -தேவனாகிய திருமால்‌,
ஒடுக்கும்‌ –தன்னுளடக்கிக் கொண்டிருக்கிற,
பரம்‌ – வேறாகிய (மதங்களின்‌),
வாதம்‌ – விவகாரத்‌தினாலாகிய,
செரு- போரை,
ஒடுக்கும்‌ – அடக்கி விடும்‌

பாடல்களினுறுப்பக்கள்‌ பலவற்றையும்‌ நிறையப் பெற்றிருப்பதனால்‌ பாவொடுக்கு மென்றார்‌-சிவபிரான்‌ திருக்கையிலேந்திய வெண்டலையால்‌ பாடப் பெற்ற தேவ கானமாகிய பதினெட்டுப்‌ பண்களின்‌ வழியில்‌ விரிந்த நூற்று மூன்று பகுதிகளையும்‌ பெற்றிருப்பதனால்‌ நுண்ணிசை யொடுக்குமென்றார்‌. நம்மாழ்வார்‌ கொண்ட கொள்கைச்கு மாறாகப்‌ பிதற்று்கின்றவர்‌ நாவினை அடங்கச் செய்தலால்‌ பலவும் பறையும் நா வொடுக்குமென்றார்‌; காலையில்‌ நறுமல ரொன்றக்‌ கட்டிய, மாலையினியல்‌
புரை சமய வாதியர்‌, சூலையின்‌ திருக்கலாற்‌ சொல்லுவோர்க்கெலாம்‌,
வேலையும்‌ திரையும் போல்‌ வேறு பாடிலான்‌ ” என்றபடி எல்லா மதத்தையும்‌ தன்னுளடக்கிக் கொண்டவனாதலால்‌ தேவொடுக்கும்‌ பரவாதமென்றார்‌. இறந்தாரைப் பிழைப்பிக்கும்‌ அமுதம் போலசத் தீவினையிலழிவார்‌ தாம்‌ நினைத்த மாத்திரையில்‌ அவரை அதினின்று நீக்குதலால்‌ இறந்தாரைப்‌ பிழைப்பிக்கும்‌ ௮முதத்தை அத்‌ திருவாய் மொழிக்கு உவமை கூறினார்‌.-இறைவனருளாற்‌ பாடியதன்றி ஆழ்வார்‌ தாமாகப் பாடினரில்லை யென்பது தோன்றப் போந்தன வென்றார்‌; முந்தை ஆயிரம்‌” என்‌ற் பாசுரப்படி, திருவாய் மொழி நித்தியமென்பதும்‌ நித்தியமான வேதத்தைப்‌ பிரமதேவர்‌ வெளியிட்டது போலத்‌ திருவாய்‌ மொழியையும்‌ ஆழ்‌வார்‌ வெளியிட்டனர் என்பதும்‌ இதனால்‌ விளங்கும்‌, ஒடுக்கும் நுண்ணிசை, பறையும் நா , ஒடுக்கும் நல்லறிவு, ஒடுக்கும் மற்று, ஒடுக்கும் மமுதம்‌ –
இவற்றிலுள்ள நகர மகரங்கள்‌ விரித்தல்‌ விகாரம்‌, பூ – உவமை யாகு பெயர்‌-

——–

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தரும நிறை
கனமாம் சிலர்க்கு அதற்கு ஆரணமாஞ் சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்கு அதற்கு எல்லையுமாம் தொல்லை ஏர் வகுள
வன மாலை எம்பெருமான் குருகூர் மன்னன் வாய் மொழியே
. 4-

தொல்லை- பழமையாகிய,
எர்‌- அழகிய,
வகுளம்‌ – மகிழம் பூக்கள்‌ தொடுத்த ,
வனம்‌ – குளிர்ந்த,
மாலை : மாலையை யுடைய
எம்‌பெருமான்‌ – எமது தலைவராக,
குருகூர்‌ மன்னன்‌ – குருகூரிலவதரித்‌த நம்மாழ்வாரது ,
வாய்‌ மொழி – திருவாயிலிருந்து வந்த பாடல்கள்
சிலர்க்கு, – சிற் சிலருக்கு,
தனம்‌ ஆம்‌-செல்வப் பொருளாகும்‌;
சிலர்‌க்கு— தவம்‌ ஆம்‌ – தவமே யாகும்‌; சிலர்க்கு–தருமம்‌ நிறை -புண்ணியமிகுந்த, கனம்‌ ஆம்‌ – பெரும் சிறப்புமாகும்‌ ;
சிலர்க்கு- ந அதன்‌-காரணம்‌ ஆம்‌-அப் பெருஞ்‌ சிறப்புக்குக் காரணமுமாகும்‌ ;
சிலர்‌க்கு –;.,ஆரணத்தின்‌ இனமாம்‌ -வேதத்தின்‌ பகுதியாகும்‌;
அதற்கு-அந்த வேதத்தின்‌ பகுதிகள் அனைத்துக்கும்‌,
எல்லையும்‌ – முடிவாய உப நிஷத்துக்களும்‌,
ஆம்‌ – ஆகும்‌;

குருகூர்‌ நம்மாழ்வார்‌ திருவாய் மொழி யானது செல்வம்‌ முதலியவற்‌றை வேண்டியவர்க்கு வேண்டிய படியே பயன்படத் தக்க தென்பதாம்‌.-திருவாய் மொழி தமிழ்ப்‌ பிரபந்தமாதலால்‌ அந்தத்‌ தமிழுக்குரிய தெய்‌வம்‌ தான்‌ ௮ந் நூலைப்‌ பாராயணஞ் செய்வார்க்கு வேண்டியதை வேண்டியபடியே கொடுக்குமென்பார்‌ -தனத்தை வேண்டு வார்க்குத்‌ தனமும்‌ தவத்‌தை விரும்பினவர்க்குத் தவமும்‌ பெருமையை விரும்பினவர்க்குப்‌ பெருமையும்‌ அதன்‌ காரண்முமாமென்றார்‌- அத் தெய்வமும்‌ வேறன்று வேதத்தினுள்‌ விளங்குவதென்பதை விளக்குவார்‌ ஆரணமாமென்றும்‌ வேதமும்‌ வேதாந்தமாகாது இது வேதாந்தமுமாகுமென்பார்‌ -அதன்‌ எல்லை யென்றும்‌ ஆரணம்‌ பழமை யுடையதே யென்பார்க்கு இதுவும்‌ பழமையே யெனக்‌ கூறுவாராகித் தொல்லை வாய் மொழி யெனறும் கூறினார்‌-அன்றியும்‌ உலகத்தில்‌ தனம்‌ இம்மையின்பத்திற்கே உரியது ; தவம்‌ -மறுமையின்‌பத்திற்க்கே யுரியது இம்மைக்குப்‌ பயன்படாது ; இத் திருவாய்மொழி அப்படி யன்றி இருமைப் பயனும் தருதலால்‌ தனமென்றும்‌ தவமென்றுங்‌ கூறினார்‌ என்றலுமாம்‌-

—————-

மொழி பல ஆயின செப்பம் பிறந்தது முத்தி யெய்தும்
வழி பல வாய விட்டொன்றா அது வழுவா நரகக்
குழி பல ஆயின பாழ் பட்டது குளிர் நீர்ப் பொருநை
சுழி பல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே
–5-

குளிர்‌ – குளிர்ந்த,
நீர்‌- நீரை யுடைய,
பொருநை -தாமிரபருணி நதியானது ,
பல சுழியாய்‌- பற் பலவாசச்‌ சுழித்து, ஒழுகும்‌ – ஓடுகின்ற,
குருகூர்‌- குருகூர்‌ என்னும் பதியில்‌,
எந்தை- எமது தந்தை போல்வாராகிய -சடகோபர்
தோன்றலின் – அவதரித்தலால்‌,
பலவாயின – பற் பலவாகிய,
மொழி- பாஷைகளுக் கெல்லாம் ,
செப்பம்‌ – ஓழுங்‌கு,
பிறந்தது – உண்டாயிற்று ;
முத்தி- மோஷ வீட்டினை,
எய்தம்‌- ௮டைகின்ற,
வழி: மார்க்கங்கள்‌,
பல ஆய -பலவாயினவை யெல்லாம்‌,
விட்டு – ஒழிந்து, ‘
ஒன்று ஆயது – ஒருவழி யாயிற்று ;
வழுவா – நீங்காத,
நரகம்‌ குழி- நரகக் குழிகள்‌,
பல ஆயின – பல வாயின வெல்லாம்‌,
பாழ்‌ பட்டது – பாழாயிற்று-

குருகூரில்‌ நம்மாழ்வார்‌ ௮வதரித்தலால்‌ பாஷைகளில்‌ ஓழுங்கென்‌பது தோன்றிற்று -முத்தி மார்க்கம்‌ ஒழுங்காயிற்று, நரகு பாழாயிற்‌று என்பதாம்‌. செந்தமிழ் மொழியில்‌ மாறுபட்டுக் கிடந்த துறைகள்‌ பலவும்‌, சடகோபர்‌ திருவாய் மொழியை ஒழுங்கு படுத்தப்‌ பாடி யருளினது நோக்கி அவ் வழியே திருத்தப் பெற்றதனால்‌ செப்பம்‌ பிறந்ததென்றார்‌-வழுவா நரகம்‌.-.தீவினை செய்தாரைத் தப்பாமல்‌ விழுங்கும் நரகம் , அத் திருவாய்மொழியைப்‌ பாராயணஞ்செய்வோரும்‌ அப்படிச் செய்வோர் அருகலிருப்போரும்‌ கேட்போரும்‌ முத்தியையே – அடைதலால்‌ நரகக் குழி பாழ்பட்ட தென்றார்‌.-மொழி யென்பதற்குப்‌ பதமென்ற பொருள்‌ கொண்டு கட படாதி சப்தங்கள்‌. அவ்‌வப் பொருள்களையே யுணர்த்தின வாதலால்‌ மொழி பலவாயின தென்றும்‌ திருவாய் மொழியிலுள்ள எல்‌லாப்‌ பதங்களும்‌ அவ்‌வப் பொருள்களின் நினைவில்‌ நில்லாது எம்பெருமான்‌ வரையிற்‌ சென்றுணர்த்தினமையால்‌ செப்பம்‌ பிறந்தது என்றும் கூறினுமமையும்‌-இவ் வாழ்வாரவதரித்ததன்‌ பின்‌ பலலா யிருந்தன சுழிகளே யன்‌றிப்‌ பிறவில்லை யென்பார்‌ பொருநைச் சுழி பலவாயொழுகுமென்றார்‌. செப்பம்‌-பண்புப் பெயர்‌, ஆய-வினைப் பெயர்‌-

————–

தோன்றா உபநிடதப் பொருள் தோன்றல் உற்றார் தமக்கும்
சான்றாம் இவை என்ற போது மற்றென் பல காலும் தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத்தின் மும்மைத் தமிழை
ஈன்றான் குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக் கவியே
. 6-

பல காலும்‌ : பல தரமும்‌,
தம்மில்‌ -தமக்குள்‌,
மூன்று ஆயினவும்‌ – மூன்‌று பகுதியாகி அமைந்தவற்றையும்‌,
நினைந்த—
ஆரணத்‌தின்‌ – வேதத்தினைப் போல, மும்மை – மூன்று கூறுபாடாகிய,
தமிழை -தமிழினில் ஆகிய பாடல்களை, ஈன்றான்‌ – அருளிச் செய்தவரும்‌,
குருகை -குருகூரிலவதரித்த,
பிரான்‌ – பெரியவரும்‌,
எம்பிரான்‌ – எம் தலைவருமாகிய நம்மாழ்வாருடைய,
இசை கவி இவை -பண்ணோடு பாட வல்ல இப்‌ பாடல்கள்‌,
தோன்றா- பலராலும்‌ ௮றியப் படாத உபநிடதம் பொருள்‌-உபநிஷதத்தின்‌ கருத்‌துக்களை,
தோன்‌றல்‌ உற்றார்‌ தமக்கும்‌ – அறியப்‌ பெற்ற பெரியோர்களுக்கும்‌,
சான்று ஆம்‌ – சாட்சியாகி விளங்கும்‌,
என்‌ற போது – என்று சொல்லிய காலத்தில்‌,
மற்று – வேறாகிய (சிறப்பு),
என்‌ -யாது வேண்டும்‌-

ஜீவ ஈஸ்வர ஜகத்தென்று மூன்‌று கூறுபடுத்‌திக் காட்டி யிருப்பதைத் தம்முள்‌ ஆராய்ந்து அதற்குத் தகும் படியாகக் குருகூர்‌ நம்மாழ்வாரால் பாடி யருளிய இப் பாடல்கள்‌ உப நிஷதத்தின்‌ கருத்தை அறிகிற பெரியோர்களுக்கு இடையில்‌ சந்தேகம் நேருமிடத்து இது சாட்சியாயிருக்து-அந்தச்‌ சந்தேகங்களை ஒழிக்குமானால்‌ இதன்‌ சிறப்பினை வேறு என்ன சொல்லுவதென்பதாம்‌. ௮ரிய தத்வ ஞானத்தைப்‌ பெறத் தக்க புண்‌ணிய முடையார்க்கன்‌றிப்‌ பிறர்க்கு வெளிப் படாமையால்‌ தோன்றா வுபநிடசப் பொருளென்றார்‌. தோன்‌றலுற்றார்‌-இங்கு மதுர கவியாரும்‌, நாத முனிகளுமாம்‌; எப்படி யெனில்‌? ஆழ்வாரைக்‌ கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற பிரபந்தம் அருளிச் செய்து வெளிட்டு அருளியவர் மதுரகவி. பிற் பட்டு நாத முனிகள்‌ உண்டாகி இக் கண்ணி நுண்‌ சிறுத் தாம்பு என்ற ப்ரபந்தத்தைப் பலதரம்‌-12000-தடவை ஒதினமையால்‌ முன்பு ஆழ்வார்கள் அருளிச் செய்த அனைத்து பிரபந்தங்களும் ஆழ்வாரது அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹம் அருளிச் செய்ய நாத முனிகளின்‌ மனத்தில்‌ தோன்‌ற- இவர்‌ தம் மனத்தில்‌. ‘தோன்றிய படியே அவற்றைத் ஏடுபடுத்தி ஆழ்வார்‌ பெயர்களுடன் வெளியிட்டு அருளினார் -முத் தமிழ்‌-இயற் றமிழ்‌, இசைத் தமிழ்‌, நாடகத் தமிழ்‌ ; இயற்றமிழ்‌ – இலக்கண அமைதியை
யுடைய தமிழ்‌, -இசைத் தமிழ்‌- இராக: அமைதியை யுடைய தமிழ்‌, நாடகத்‌ தமிழ்‌ வெளிப்படை, எம்பிரான்றன்‌, தன்‌-சாரியை,

———–

கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான் சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே.
7-

கவி- பாடலாகிய,
பா- பரவிய,
௮முதம்‌ – உணவினை,
இசையின்‌ – இராகமாகிய,
கறியொடு- கறி முதலான விஞ்சனத்துடனே,
சண்ணன்‌ – கண்ணபிரான்‌,
உண்ண – உட்கொண்டருளும்படி,
குவிப்‌பான்‌ – சமைத்துச் குவிப்பவரும்‌, குருகை – குருகூரில்‌ அவதரித்த,
பிரான்‌ – பெரியோரும்‌,
சடகோபன்‌ – சடமென்னும் வாயுவை முனிந்து போக்கினவரும்‌,
குமிகொண்கன்‌ -குமரி நாட்டுக்குத் தலைவரும்‌,
புவி -பூமியிலுள்ள,
பாவலர்தம்‌ – வித்துவான்‌களுக்கு,
பிரான்‌ – தலைவருமாகிய நம்மாழ்வார் பாடிய, திருவாய்மொழி– ,
பூ சுரர் தம்‌-நிலத் தேவர்களாகிய பிராமணர்‌ களுடைய,
செவிப்பால்‌ – காதுகளின்‌ வழிகளிலே, நுழைந்து புக்கு-நுழைந்து புகுந்து, உள்ளத்து உள்ளே – மனத்‌தினிடத்திலே, நின்‌று – நிலை பெற்று நின்று,
தித்திக்கும்‌- இனிய சுவையை உண்டாக்கும்‌-

ஆழ்வார்‌, பாடலாகிய சோற்றினையும்‌ இசையாகிய கறி முதலியவற்‌றையும்‌ கண்ண பிரான்‌ உண்ணும்படி சமைத்துக் குவித்த திருவாய் மொழி யென்னுமுணர்வு ௮ந்தணர்‌ செவியின்‌ வழியே நுழைந்து தித்திக்கும் என்பதாம்‌. இப் பாடல் முழுவதம்‌ உருவகப் படுத்தினமையால்‌ முற்றுருவகம்‌. சிவ சச்தியாகிய குமரி யென்னும் தேவியைப்‌ பரசுராமன்‌ ஸ்தாபித்‌திப் பூஜித்தமை பற்றி இந்த இடத்திற்குக் கன்னியா குமரி யென்றும்‌ இது சூழ்ந்த நாட்டிற்குக்‌ குமரி நாடென்றும்‌ பெயராயிற்று-ஆழ்வார் பாடல்‌களையே புலவர்கள்‌ மேற் கோளாகக் கொள்கின்‌றமையால்‌ பாவலர்‌ தம்‌ பிரானென்றார்‌. புளியங்காடி யுண்பவருக்கு ௮முதம் கிடைத்தால் போல வேதாந்த நூலில் கிடந்து மனத்தை வருத்தும்‌ பூசுரரிதனை நோக்கி மகிழ்ந்து ஏற்றலின்‌ ௮வருள்ளத்‌துள்ளே தித்திக்குமென்றார்‌. அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமுமென்‌று இடையர்கள்‌ கண்ணன் உண்ணக் குவித்தாரேனும்‌ ௮ச்சோறு கண்ணனுக்கே யுரியதாயிற்று, இஃது. அது போலன்றிப்‌ பூசுரரும்‌ சுவைத்து மகிழ்வதாயிற்று-

மறைப் பாற் கடலைத் திரு நாவின் மந்திரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தித் தமிழ் ஆயிரத்தின் சுவை யமுதம்
கறைப் பாம்பணைப் பள்ளியான் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றிச் சன்மம் விடாய்க்கு நிழல் இல்லையே –

—————

தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே.
8-

குருகை – குருகூரிலவதரித்த,
பிரான்‌ – சடகோபர்‌,
சொன்ன——, ஆயிரம்‌- திருவாய் மொழி ஆயிரம் பாடல்களும்‌,
தித்‌திக்கும்‌’- இனிமை செய்கின்‌ற
மூலம்‌ -(சாவாமைக்குக் ) காரணமாயிருக்கின்ற,
‘தெளி அமுதே – தெளிந்த ௮மிர்தமே யாம்‌; (அன்றியும்‌), தெய்‌வம்‌ உண்டு என்பார்‌ – தெய்வங்கள் இருக்கின்‌றன என்று சொல்லுவர்‌களுடைய,
பத்‌திக்கு மூலம்‌ – பக்திக்கும்‌ இதுவே காரணமாகும்‌
பனுவற்க்கும் – வரவாற்‌று முறையில் பாடுகின்ற நூல்களுக்கும்‌, மூலம்‌—-;
பவம்‌-பிறவியை,
அறுப்பார்‌ – போக்கத் துணிந்தவர்கள்‌, முத்திக்கும்‌ – முக்தி யடைவதற்கும்‌–மூலம்‌ முளரி கை – தாமரை மலர் போன்ற கைகளும்
வாள்‌ நகை -ஒளி பொருந்திய பற்களுமுள்ள,
மொய் குழலார்‌ -நெருங்கிய கூந்தலை யுடைய மாதர்களிடத்தாசையை, அத்திக்கும்‌-போக்‌குகைக்கும்‌, மூலம்‌ —;

அமிர்தின் மேற்பட்ட சிறந்த பொருளில்லை யாதலின்‌ அமுதத்தை உவமித்தார்‌. அன்றி ௮மிர்தமோ இதற்கு ஒப்பாவது என்று ஏகாரத்தை எதிர்மறை யாக்கி யுமுரைக்கலாம்‌. ௮ங்ஙனம்‌ ஆக்கவே தேவாமிர்தமானதை பத்திக்கும்‌ பனுவலுக்கும் மூலமாகாது. உடம்பைக் காத்‌து நிற்றலால்‌ முத்திக்கும் மூலமாகாது. ௮ரம்பையரைச் சேரச் செய்தலால்‌ மொய்‌
குழலார்‌ அத்திக்கு மூலமாகாது – அன்றியும்‌ பவம்றுப்பார்ச்கு அழியா முத்தியைக் கொடுக்கின்ற இத் திருவாய் மொழி போல அமிர்தம்‌ அழியா வின்பத்தைத் தர மாட்டாது அமிருதமுண்டவரும்‌ சிற் சில நாளில்‌ இறப்பதுண்டு -எல்லை மூவைந்து நாள்கள் உள வென விமைக்கும் கண்ணு, நல்லெழின்‌ மாலை வாடு நஞ்சுடை யமிர்துண்‌டாரில்‌, பல் பகற்‌
றுய்த்த வின்பம்‌ பழுதெனக்‌ கவல்ப கண்டாய்‌ ” என்பதனாலுமறிக-திருவாய் மொழி ஆயிரத்து நூற்றிரண்டு செய்யுட்களை ஆயிரமென்றது பெரும் பான்மை பற்றியே யாம்‌, அன்றியும்‌ நூறு பதிகத்திலுமுள்ள நூறு கடைக் காப்புச் செய்யுட்களைக் கழிக்க – ஆயிரத்திரண்டேயாமென்௧.

————

ஆயிரம் மா மறைக்கும் அலங்காரம் அருந் தமிழ்க்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்கு எல்லாம்
தாய் இரு நாற் றிசைக்குத் தனித் தீபந் தண்ணங் குருகூர்ச்
சேயிரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே.
9-

தண்‌ – குளிர்ச்சியான,
அம்‌ – நீர் வளமுடைய,
குருகூர்‌ சேய்‌ – குருகூர்ப் பதியிலே குழந்தை வடிவாக அவதரித்தவரும்‌,
மா -சிறந்த,
இரு மரபும்‌ – (தாய் வழி தந்தை வழியாகிய) இரண்டு வழியும்‌,
செவ்‌வியான்‌ – சிறந்‌த மரபினருமாகிய சடகோபர்‌, செய்த—,
செய்யுட்கள்‌-பாடல்களானவை ,
ஆயிரம் மா மறைச்கும்‌ – சிறந்த ஆயிரமென்‌ற பகுதியுள்ள சாம சாகைகளுக்கெல்லாம்‌,
அலங்காரம்‌ – அழகு செய்வனவாகும்‌ ;
௮ரும்‌ தமிழ்க்கு – அரிய தமிழ்ச்கு,
பாயிரம்‌ – வரலாற்று முறையாகும்‌ ;
நாற் கவிக்கு- நான்கு வகைப் பட்ட கவிகளுக்கு,
படி சந்தம்‌ – ஒப்புக் காண்‌பதற்குரியனவாம்‌
பனுவற்கு எல்லாம்‌-எல்லா வகைப்பட்ட நூல்களுக்‌கும்‌ –
தாய்‌ -தன்னுட் கொண்டு தரும் தாய் போல்வனவுமாம்‌;
இரு நால்‌ திசைக்கும்‌ – எட்டுத் திக்குக்கும்‌,
தனி – ஒப்பற்று விளங்குகிற,
தீபம்‌ – விளக்குமாகும்‌;

குருகூராழ்வாரருளிய பாடல்கள்‌ சாம வேதத்துக்கு அழகு செய்‌வனவாம்‌.-தமிழுக்கு ௮ணிந்து கொண்டு அதற்குரிய பாயிரமாகும்‌ ; கவிகளுக்குப் படிச் சந்தமாம்‌; பனுவலுக்குத் தாயாகும்‌ ;எட்டுத் திக்குக்குக்‌ தீபமாகுமென்பதாம்‌. ஒரு பெண்ணுச்கு அவளைக் காமுகர்‌ விரும்புமாறு அணிகளால்‌ ௮ணியப் படுவன போல பொருள்‌ மறைந்து கிடந்த வேதங்களின் பொருள்களை மேற்கொண்டு யாவரும் விரும்பும்படி அழகு செய்தலால் மறைக்கு ௮லங்காரமென்றார்‌. சிவ பெருமான்‌ முருகக் கடவுள்‌ நிதியின்‌ கிழவன்‌ இந்திரன்‌ முதலாகிய தேவர்களும்‌, வான்மீகியார்‌ கெளதமர்‌ மார்க்கண்டேயனார்‌ ௮கத்தியனார்‌ முதலாகிய முனிவர்களும்‌ ஆராய்ந்த ௮ருமை தோன்ற அரும் தமிழென்றார் – நாற்கவி- ஆசு, மதுரம்‌, சித்திரம்‌, விஸ்தாரம்‌ என்பன-ஒருவன்‌ பாடுக வென்றவுடன்‌ பாடுதல்‌ ஆசு கவியாகும்‌; இனிய சுவைகள்‌ ஒன்பதும் தோன்‌றப் பாடுதல்‌ மதுர கவியாகும்‌.
மாலை மாற்று -சக்கரம் சுழி குளம்‌, ஏக பாத மெழுகூற்‌று இருக்கை நாதை கரப்பே கரந்துறை பாட்டே, தூசுங்‌ கொளவே வாவன்‌ ஞாற்று நாக பந்தம்‌’” முதலாகிய மிறைக் கவிகளைப் பாடுதல்‌ சித்திர கவியாகும்‌.-ஒரு பொருளை மேற் கொண்டு பலவகை வர்ணனைகளையும்‌ அமைத்து விரிவாகப் பாடுதல்‌ விஸ்த்தார கவியாகும்‌. பாயிரம்‌ — தமிழிலின்ன பொருள்கள் உளவென்று திருவாய் மொழியில் காட்டிதாம்‌, தமிழில்‌ இவ் வண்ணம்‌ பாட வேண்டுமென்ற கட்டளைக்கு உதாரணமாகப் பெரியோர் கொள்ள வைத்தலால்‌ படிச் சந்தமென்றார்‌. பனுவல்‌, பலவகைய ; ௮வை ;–அறநூல்‌, பொருள் நூல்‌, காமநூல்‌, வீட்டுநூல்‌ என்பன. இந் நான்கும்‌ திருவாய் மொழியில் பரக்கக் காணலாமாதலால்‌ தாயென்றார்‌, உபய
குலோத்தமரென்றதன் கருத்தாக இரு மா மராபுஞ் செவ்வியானென்றார்‌

குறு முனிவன் முத்தமிழும் -என் குறளும் -நங்கை சிறு முனிவன் வாய் மொழியின் சேய் –திருவள்ளுவர்

ஐம் பொருளும் நால் பொருளும் முப்பாலில் பெய்து அமைத்த செம்பொருளைத்
தண் குருகூர்ச் சேய் மொழியது என்பர் சிலர் யான் இவ்வுலகில்
தாய் மொழியது என்பேன் தகைந்து
–ஒவ்வையார்

சேய் மொழியோ தாய் மொழியோ செப்பில் இரண்டும் ஓன்று
அவ் வாய் மொழியை யாரும் மறை என்ப
வாய் மொழி போல் ஆய் மொழிகள் சால உள எனினும்
அம் மொழியின் சாய் மொழி என்பேன் யான் தகைந்து
–இடைக்காதர்

————–

செய் ஓடு அருவிக் குருகைப் பிரான் திரு மாலை நங்கள்
கை ஓர் கனி எனக் காட்டித் தந்தான் கழற்கே கமலம்
பொய்யோம் அவன் புகழ் ஏத்திப் பிதற்றிப் பித்தாய்ந் திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே
. 10-

அருவி – அருவி நீர்கள்‌,
செய்‌ – வயல்களில்‌,
ஓடு – ஓடிப் பாய்கின்ற,
குருகை பிரான்‌ – குருகூரில் வந்த பெரியோரான பராங்குசனை
திருமாலை – சிறந்த மாயோனை,
நங்கள்‌ – நம்முடைய,
கை – கையிலுள்ள,
ஓர்‌ கனி என – ஒரு பழமென்னும்படியாக , காட்டித் தந்தான் -குறித்துக் காட்டிக் கொடுத்தருளினார்‌ (அதனை அறிந்தும்‌), அவன் -௮ந்‌தப் பராங்குசருடைய,
கழற்கே – திருவடிகளிலே,
கமலம்‌ – தாமரை மலர்களை,
பெய்யோம்‌ – பூஜித்து அறியோம்‌
அவன்‌ புகழ்‌ – அவரது கீர்த்தியை
ஏத்தி – துதித்து,
பிதற்றி – பல காலும் சொலலி,
பித்தாய்‌ – பிறர்‌ நம்மை நோக்கிப் பைத்தியரென்று சொல்லும்படியாக, திரியோம்‌-திரிந்து அலைந்திலோம்‌; (அவன்‌) உபகாரத்தின்‌ – அவர்‌ நமக்குச் செய்‌த நன்றியின்‌,
ஆற்றலை – பெருமையை,
என்று அறிதும்‌ – எப்போது அறியப் போகிறோம்‌?
ஐயோ -ஐய ஓ ! என்னே!

திருக் குருகூர்‌ நம்மாழ்வார்‌ திருமாலைக் காட்டிக் கொடுத்தருளினார்‌; அப்படிப்பட்ட மகோபகாரிக்கு ஒருவிதத்‌ தொண்டும் செய்தறியோம்‌; அவருபகாரத்தின்‌ பெருமையை எப்பொழுது தானறியப் போகிறோமென்பதாம்‌ “கைத்தலத் தாமலகமெனக் கண்டு கொள்‌’”? என்றபடியே நமக்குக் காட்டிக் கொடுத்தும்‌ ‘“வாணார்‌ நுதலார்‌ வலைப்பட்‌ டடியேன்‌ பலவின்‌ கனி யீந்‌தது போல வதன் முன்‌ -என்றும் இன்கனி சுவருமந்தி கடுவனோடிரிய வோட்டி, நன் கனி சிலது உண்ண ’ என்கின்றபடியே அறிவின்மையால்‌’ எம்பெருமான்‌. நமக்குச் செய்யும்‌ பேரருளை யிகழ்ந்து பிறரனுபவிக்கப்‌ பார்த்துக்‌ ‘கைப்பழ மிழந்த மந்தி போல
ஏக்கற்று இருக்கிறோமென்று வெறுத்து ஐயோ வென்று இரங்கிக் கூறினார்‌.
அருவி நீர்‌ வயலில்‌ சென்று பாய்தல் போல்‌’ ஆழ்கார் கருணை அவரைத் துதிப்பவருள்ளத்தில் சென்று பரவுமென்பது தொகை மொழியின்‌ கருத்து –
மற்றும்‌ அருவி நீர்‌ வயல்களை விளையச் செய்வது போல்‌ ஆழ்வார்‌ மாயோனைக் காட்டிப்‌ பக்தியை விளையச் செய்தாரெனினும்‌ பொருந்தும்‌-குருகை – மரூவு . கழற்கு – உருபு மயக்கம்‌.-பெய்யோம்‌, திரியோம்‌-தன்மைப் பன்மை எதிர்மறை வினை முற்று, அறிதும்‌ – தன்மைப்‌ பன்மை எதிர்கால வினை முற்று,

———

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழுமாக் கமலம்
சேற்றில் பொதிய வீழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே
. 11-

ஆற்றில்‌ – பொருநை யாற்றில்‌,
பொதிந்த – தங்கி யுள்ள,
மணலின்‌ தொகை -மணவினளவை யொத்த,
மா – சிறந்த,
அரும்‌ மறைகள்‌ வேற்றில்‌ – பலவகைப் பட்ட அரிய வேதங்களில்‌,
பொதிந்த – மறைந்து கிடக் கின்ற,
பொருள்கள்‌ எல்லாம்‌ -எல்லாப் பொருள்களும்‌,
விழும்‌ – (யாவரும்‌) விரும்பத் தக்க ,
மா கமலம்‌ – சிறந்த தாமரைகள்‌,
சேற்றில்‌… பொதி அவிழ்க்கும்‌ – கட்டவிழ்த்து மலரப் பெற்ற,
குருகூரர்‌-குருகூர்ப் பதியிலுள்ள பராங்குசர்‌ செய்தருளிய,
செம்‌ சொல்‌ பதிகம்‌ நூற்றில்‌ – செந் தமிழ்ச் சொற்களாற் செய்த நூறு பதிகங்களிலும்‌, பொதிந்த – நிறைந்துள்ள,
பொருள்‌-பொருள்களில்‌,
ஒரு கூறும்‌-(நூற்றில்‌) ஒரு பகுதி யளவும்‌, நுலல்கில – சொல்லினவில்லை;

பலவாகிய வேதங்களெல்லாம்‌ ஆழ்வார்‌ திருவாய்‌ மொழியிற் கூறியவற்றில் நூறிலொருபங்‌களவும் கூடக்‌ கூறின வில்லை யென்பதாம்‌-அனந்தாவை வேதா: என்றதனால்‌ ஆற்றின்‌ மணலின்‌ தொகை மறைகளென்றார்‌-மிகுதியை விளக்க வேண்டி இப்படியே–நன்னீர்ப்‌ பக்றுளி மணலினும்‌ மலவே’? ”மிக்கு வரு மின்னீர்க் காவிரி, யெக்கரிட்ட மணலினும்‌ பலவே’” என்பன முதலாகப்‌ பிற சான்றோர்களும் கூறுதல்‌ காண்க. வேறு ஆவன:–இருக்கு, தைத்திரியம்‌, பெளடிகம்‌, தலவகாரம்‌, ௭சு , சாமம்‌, அதர்வணம்‌ என்பன,-திருமாலும் யீசனும்‌ பின் சென்றும் தூது செலத் துணிந்தும் வளர்த்த தமிழால் புனர்தமையால்‌ செஞ்சொலென்றார்‌. பத்துப் பாடலென்கின்ற நியமனத்தைக் கொண்டமையால்‌ பதிகம் என்றார் -நூற்றில்‌ என்பதனை ஒரு கூறு என் பதனோடும் கூட்‌டிப்‌ பொருள் கொள்ளுதல்‌ சிறப்பு- மாக் கமலம்‌ சேற்றில் பொதியவிழ்க்‌குமெனவே சேற்றில்‌ தாமரை மலர்‌தல் போல தகுதியில்லாத உயிர்‌கள்‌ உலக மயக்கத்‌தில் பட்டு வருந்துவதை யறிந்த ஆழ்வார்‌ மிகுந்த கருணையோடு அவர்களுக்கு அருளிச் செய்வாரென்பதாம்‌

——–

இலவே இதழுளவே முல்லை யுள்ளி யம்பும் மொழியும்
சிலவே அவை செழுந் தேனொக்குமே தமிழ்ச் செஞ் சொற்களால்
பல வேதமும் மொழிந்தான் குரு கூர்ப் பதுமத்து இரண்டு
சல வேல்களும் உளவே யது காண் என் தனி யுயிரே.
12-

பொருள் -அகப்பொருள்
திணை -உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி- பாங்கற் கூட்டம்‌,
துறை–அஃது, இவ்விடத்‌து இவ்வியல் தென்றல்

பல – பற்பலவாகிய,
வேதமும்‌ – வேதத்தின்‌ ௧ருத்தை யெல்‌லாம்‌,
செம்‌ தமிழ்‌ சொற்களால்‌ – செவ்விய தமிழ்ச் சொற்களிளாலே,
மொழிந்தான்‌ – பாடி யருளிய பராங்குசர் அவதரித்த,
குருகூர்‌-குருகூர்ப் பதியிலே, (நண்பனே!), பதுமத்து – ஒரு தாமரை மலரிலே,
இதழ்‌-சில இதழ்கள்‌,
இலவே – நிறத்தில்‌ முள்ளிலவ மலரேயாம்‌; உள்‌ – அவ்விதழ்‌களுக்குள்ளே,
முல்லை – முல்லை யரும்புகளும்‌,
உளவே- சில உள்ளனவாம்‌;
௨ள் – அவைகளிலிருந்து ,
இயம்பும்‌ – சொல்லப்படுகின்‌ற,
மொழியும்‌ – வார்த்தைகளும்‌,
சிலவே – சிலவுண்டாம்‌;
அவை – அவ் வார்த்தைகள் தாம்‌,
செழும் தேன்‌ – செழுமையான தேனை, ஓக்கும்‌ – நிகர்க்கும்‌;
(இன்னும்‌ அத் தாமரை மலரிலே), இரண்டு சலம்‌ வேல்களும்‌ – கோபம் செய்வனவாகிய இரண்டு வேலாயுதங்களும்‌,
உளவே-உள்ளனவேயாம்‌;
௮து – ௮ம் மலரையுடைய வடிவம் தான்‌, என்‌ – எனது,
தனி – ஒப்பற்ற,
உயிரே – உயிரே யாகும்‌;
காண்‌ – நீ சென்று அதனைப் பார்‌;

நண்பனே! யான்‌ கருதிய தலைவியினிடம்‌ ஆழ்வார்‌ குருகூர்‌; அவளியல்பு இலவ மலர் போன்ற இதழும்‌ முல்லை யரும்பொத்த பற்களும்‌ தேனொத்த சொற்களும்‌ தாமரை மலர்போன்ற முகமும்‌ வேல் போன்ற கண்களுமாம்‌; ௮ந்தப் பெண்‌ என்னுயிரே யாவளென்பதாம்‌. அவள்‌ எவ்‌விடத்தில் இருக்கிறாள் என்றதற்கு இடம்‌ குருகூரென்றான்‌–இயல் எவ்‌வண்ணமென்பதற்கு இதழ் -இலவென்றான்‌. மொழி பெறாது வருந்‌திய தலைவன்‌ அவள்‌ வறிது நகைத்தலை இயற்கைப்‌ புணர்ச்சியிற்‌ கண்‌டனனாதலின்‌ இதழுள்‌ முல்லை யுளவென்றான்‌. அவள்‌ வழிபாடு மறுத்த பொழுது சில சொற் கூறி யதனைக் கேட்டவனாதலின்‌ சிலவே சொல் என்றான்‌. பிற்பாடு அச் சொல்லைப்‌ பெறாமையால்‌ சில வென்றான் எனினுமாம்‌. அருமையைச்‌ செய்தலால்‌ தேனொக்குமென்றான்‌. தன்‌
மனத்தை ௮வள்‌ வசப்படுத்தலால்‌ முகத்தைத் தாமரை மலர் என்றான் –
அவள்‌ விழிகள்‌ தன் மேற் பாய்ந்து துன்பஞ்செய்தலால்‌ சல வேல்களென்‌றான்‌. ௮வள்‌ இன்றியமையாமையின்‌ என்‌ உயிரென்றான்‌. கைகோள்‌-களவு, கூற்று – தலைவன் கூற்று, கேட்போர்‌ – பாங்கன்‌-இடம்‌-முன்னிலை–காலம்‌ – இறந்த காலம்‌, மெய்ப்பாடு – உவகை , பயன் -பாங்கற்குணர்த்தல்‌. இலவு, முல்லை – மலர்களுக்கு முதலாகு பெயர்‌கள்‌, இயம்பும்‌ மொழியும்‌ – விரித்தல் விகாரம்‌, உள-முதல்‌ விளக்காக இரண்டிடத்தும்‌ கூட்டப்பட்டது.

ஆழ்வாருடைய திரு முக மண்டல திவ்ய ஸுந்தர்யத்தையும் கூரிய ஞான விகாஸத்தையும்
திருவாய் மலரின் செவ்வியையும் அதன் அகத்தே விளங்கும் ஸூத்தமான தந்த பங்க்தியையும் தீம் சொற்களையும் கண்டு ஈடுபட்ட பாகவதர் உசாவியா அன்பர்களுக்கு எடுத்துக் கூறுவதே இதுக்கு ஸ்வா பதேசம் –

———-

உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சட கோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே
. 13

உருக்கும்‌ நெய்யொடு – உருக்குவதற்குரிய வெண்ணெயுடனே,
தயிர்‌- தயிரையும்‌,
திருடி திருடி-ஆயர்பாடியில்‌ எல்லா வீடு களிலும் சென்று திருடி,
உண்டான்‌ – விழுங்கிய கண்ண பிரானது, அடி -திருவடியைசத் தொழுபவராகிய, சடகோபன்‌ – சடகோபனென்னும்‌ பெயருடையவரும்‌,
சந்தோடு – சந்தன மரங்களுடனே,
அயிர்‌ – நுண் மணலையும்‌ கொணர்ந்து, உருக்கும்‌ – கரை யோரங்களில்‌ ஒதுக்கித் தள்ளுகின்ற,
பொருநல்‌ – பொருநை யென்னும் தாமிரபர்ணி நதியை யுடைய,
குருகூர்‌ – குருகூர்ப் பதியிலவதரித்தருளிய,
எந்தை – எந்தந்தை போல்‌வராகிய பராங்குசரது ,
அம் தமிழ்‌ – அழகிய தமிழ்ப் பாடல்கள்‌,. (படிக்‌கும் பொழுது ), உயிர்‌ உருக்கும்‌ – நம்‌ உயிரை உருகச் செய்யும்‌ ;
புக்கு -உள்ளே புகுந்து ,
உணர்வு – அறிவை, உருக்கும்‌:
உடலத்தில்‌ உள்ள – நம் சரீத்திலமைந்துள்ள,
செயிர்‌ – குற்றமே,
உரூ கொண்ட -வடிவமாகக்‌ கொண்டிருக்கிற,
நம்‌ தீங்கு உருக்கும்‌ – நம்முடைய தீ வினைகளெல்லாம்‌ போக்கும்‌;

குருகூர்‌ ஆழ்வார்‌ அருளிச் செய்த திருவாய் மொழியானது உயிரையும் உணர்வையும்‌ செயிரைக் கொண்ட தீங்கையும்‌ போக்குமென்பதாம்‌.படிக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும்‌ உயிரையும்‌ உணர்வையும் தன்‌ வசப் படுத்திக் கொள்ளுதலால்‌ உயிரும் உணர்வும் உருக்கும் என்றார்‌-தீங்கு -காமக் குரோத லோபாதிகள்‌; இவை வேண்டிய அளவு துன்புறுத்தி இம்மைக்குப் பழியும்‌ மறுமைக்கு நரகும் தருதலால்‌ செயிருருக்‌ கொண்ட தீங்கு என்றார்‌. கண்ண பிரான்‌ ஆயர் பாடியில்‌ வீதிகள் தோறும் புகுந்து தயிரையும்‌ வெண்ணெயையும்‌ திருடி யுண்டமை வெளிப் படை- மற்றைய மொழிகள்‌ போலாகாமல்‌ தனக்கு அரசு வீற்றிருத்தற்கு நாடுடைமையும்‌ இலக்கண வரம்புடைமையும்‌ நோக்கி ௮ந்தமிழ் என்றார்‌. பொருநை யெனினும்‌ பொருநலெனினும்‌ பொருந்தும்‌, உடலத்து, ௮த்து – சாரியை-

———

அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே
. 14

ஆர்‌ – சுவை நிரம்பிய,
தமிழ் கவியின்‌ – தமிழ்ப் பாடல்கள்‌போல,
பந்தம்‌- க்ரமமாக,
விழா – உத்சவங்கள்‌,
ஒழுகும்‌ – நடந்தேறி வருகின்ற,
குருகூர் – குருகூர்ப் பதிபில்‌,
வந்த – அவதரித்த,
பண்ணவன்‌ – சிறந்தவரான சடகோபர்‌,
௮ந்தம்‌ இலா – முடிவில்லாத,
மறை ஆயிரத்து – ஸாம வேத சாசை ஆயிரத்திலும்‌,
ஆழ்ந்த – மறைந்து இருக்கிற
அரும் பொருளை – அருமையாகிய விஷயத்தை,
செம்தமிழாக – செவ்விய தமிழ்ப் பாடலாக , திருத்திலனேல்‌-திருத்தமமையப் பாடி யருளா விட்‌டால்‌,
நிலம்தேவர்களும்‌ – பூசுரராகிய பிராமணர்களும்‌,
தம் தம்‌ – அவரவர்கள்‌ கொண்டாடப் படுகிற,
விழாவும்‌ – உற்சவங்கழும்‌,
அழகும்‌ -அவர்களுள்‌ அமைதியும்‌,
என்னாம்‌ – எத் தன்மையவாய்‌ முடியும்‌?

குருகூராழ்வார்‌ வேதத்தைத் திருவாய் மொழியாக வெளிப் படுத்தா விட்டால்‌ பிராமணர்களும்‌, அவர்கள்‌ வேள்வி முதலிய விழாக்களும்‌ ௮ழகும்‌ என்ன பயன்படுமென்பதாம்‌. ‘“பரத்துவாஜோ அத்திரி? என்ற வாக்யத்தின் படி பரத்துவாச முனிக்கு இந்திரன்‌ வேதமாகிய நான்கு மலைகளைச் காட்டி ௮வற்றில்‌ ஒவ்வொரு பிடி யெடுத்துக்‌ கொடுத்தவையே வேதமாக வழங்கப் படுவன என்றிருத்தலால்‌ ௮ந்தமிலா மறை என்றார்‌.
ஆழ்ந்த அரும் பொருளாவது -நாராயணனுக்கே பரத்வம் கூறுதல்‌.இம் மொழியின்‌ சுவை யேற்றம்‌ நோக்கிச்‌ செந் தமிழ் என்றார்‌. ஆகாயத்தில்‌ தேவர்களைப் போலப்‌ பூமியில்‌ பெரும் சிறப்புஉடைமையால்‌ அந்தணர் நிலத் தேவர் என்ற பெயர் பெற்றார்‌ ; பூசுரர் என்பதன்‌ பொருளும் இதுவே. சுவை நிரம்பிய தமிழ்க் கவிகள்‌ படிக்கப் படிக்க இன்பம் தருதலால்‌ பார்க்கும் தோறும் மகிழ்ச்சி தருகின்ற விழாவினுக்கு உவமித்தார்‌. (இதனால்‌ ஆசிரியர்க்‌குள்ள இம் மொழியிடத்தன்பு விளங்குவதாயிர்று.) வைஷ்ணவ மதத்தை நிலை நிறுத்தியவராதலால் பண்ணவனென்றார்‌ – பண்ணவன்‌ – குரு. நிலத் தேவர்ர்களென்னுமுயர்‌ திணையோடு விழாவும்‌ அழகுமென்னும்‌ அஃறிணையைக் கூட்டி மிகுதி பற்றி அஃறிணை முடிபாற் கூறினர்‌- ,

மண்ணாடின சக்ய ஜலம் தோதவத்தி சங்கணி துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய்
அந்தஸ் ஸ்தத்தத்தை காட்டுமா போலே அல்ப ஸ்ருதர் கலக்கின சுருதி நன் ஞானத் துறை சேர்ந்து தெளி உற்று ஆழ் பொருளை அறிவித்தது–
ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -71-

அறியக் கற்று வல்லார் வைஷ்ணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே –

———–

பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித் தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே
. 15-

இயலோடு – இயல் தமிழோடு,
இசையின்‌ – இசைத் தமிழுமாகிய,
வண்ணம்‌ – அழகிய,
படைக்கு – சேனைக்கு,
தனி – ஒப்பற்ற,
தலை வேந்தன் – தலைமை வாய்ந்த அரசரும்‌,
மலர்‌ உகுத்த – பூக்களிலிருந்து உதிர்க்கப்பட்ட,
சுண்ணம்‌ – மகரந்தங்கள்‌,
படர்‌ – பரவிய,
படப்பை – நீர் நாட்டூராகிய,
குருகூர்‌ வந்த – குருகூரில் அவதரித்த, சொல்‌ கடல்‌ : தமிழ் சொற் கடல்‌ போல்பவருமாகிய பராங்குசர்‌,
மறை-வேதங்கள்‌,
பண்ணப் படுவனவும்‌ – இனிப் புதியனவாகச்‌ செய்யப் படுபவைகளும்‌,
உளவோ என்று -இருக்கின்‌றனவோ வென்று,
பல்லோர்‌ – பல வகைப் பட்டவர்களும் , வண்ணம்‌ பட – தங்கள்‌ மனத்தில்‌ நினைக்கும்படியாக,
சொல்‌ – சொற்கள்‌,
திகழ – விளங்குமாறு,
செய்தான்‌ – பாடி யருளினார் –

குருகூரிலவதரித்த சொற் கடலாகிய நம்மாழ்வார்‌ வேதங்களில் இனிச்‌
செய்யப் படுவனவும்‌ முளவோ வென்று கூறும்படி திருவாய்‌ மொழியைப்‌ பாடி யருளினாரென்பதாம்‌. வேதத்திற்‌ கூறப் படும்‌ பொருள்‌ நிலைமையினும்‌ மேலான பொருளை வெளிப் படுத்தலால்‌ பண்ணப்படுவனவும்‌ உளவோ மறை யென்றார்‌ -இதனை “மிக்க விறை நிலையும் மெய்யா முயிர்‌ நிலையும் , தக்க நெறியு்‌ம் தடையாகித் தொக்கியலு மூழ் வினையும்‌ வாழ் வினையுமோதுங்‌ குருகையர் கோன்‌, யாழினிசை வேதத்‌தியல்‌’” என்பதானாலும் அறிக- கடல்‌ – உவமை யாகு பெயர்‌,

எங்களைப் பணி கொள் என்று அன்றோ தமிழ் சொற்கள் ஆழ்வாருக்கு கைங்கர்யம் செய்யப் பாரித்தன-சொல் இகழச் செய்தான் -பகவத் விஷயங்களை அருளிச் செய்து
விஷயாந்தரங்களை இகழப் பண்ணி அருளினான் –என்றும் உரைப்பார்-

—————-

கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் குளிர் சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே.
16-

களித்தார்‌ – கட்குடியராகிய அசுரர்களுடைய,
குடலை கலக்கும்‌ – குடல்களெல்லாம் கலங்கச் செய்கின்ற,
குளிர் சங்கினான்‌ -குளிர்ச்சி பொருந்திய சங்கத்தை யுடைய மாயோனானவன்‌, கடலைச் கலக்கி – சமுத்திரத்தைக் கடைந்து,
அமுது – அதிலுண்டாகிய அமிருதத்தை , ௮மரர்க்கு – தேவர்களுக்கு,
அளித்தான்‌ – கொடுத்தருளினான்‌ ; (அப்படிப்‌ போல) நடலை- வஞ்சனையாகிய,
பிறப்பு அறுத்து – பிறவியைப் போக்கி ,
என்னையும்‌—, ஆட் கொண்ட -அடிமையாகச் கொண்டருளிய,
நாயகன்‌ – நம்மாழ்வாரானவர்‌,
குறையா – குறைவில்லாத,
மறையின்‌ – வேதங்களின்‌,
திடலைக் கலக்கி – பெரிய திடலாகிய முட்டுக்களை யிடித்தெறிந்து
திருவாய் மொழியெனும்‌ – திருவாய்மொழி யென்று சொல்லப்படுகிற,
தேனை—-தந்தான்‌-தந்தருளினார்‌ –

மாயோன்‌ சமுத்திரத்தைக் கடைந்து தேவர்களுக்கு அமிருதம் கொடுத்தருளினான்‌ ; அப்படிப் போல நம்மாழ்வார்‌ வேதங்களின்‌ முட்டுப்‌பாடுகளைப்‌ பெயர்த்தெடுத்துத்‌ திருவாய்மொழி பாடி. அடியார்களுக்குக் கொடுத்தருளினார் என்பதாம்‌. தவத்தால்‌ நீங்குவது போலத் தோற்றி மீண்டும் பற்றிக் கொள்ளுதலால்‌ நடலைப் பிறப்பென்றார்‌- தமிழில்‌ ஓப்பாரும் மிக்காரு மில்லாச் சிறப்புடைமையால்‌ நாயகனென்றார்‌… அடியார்க்கு மகிழ்ச்சி செய்தலால்‌ குளிர் சங்கு என்றார்‌. பரத்துவாசனுக்கு இந்திரன்‌ நான்கு வேத மலைகளைக் காட்டி. அவற்றில்‌ “ஒவ்வொரு பிடி யெடுத்துக் கொடுத்து உலகத்தில் பராவச் செய்த பெருமையால்‌ குறையா மறை என்றார்‌- கடலை வேதமாகவும்‌ அமுதத்தைத் தேனாகவும்‌ அமரர்‌ அடியராகவும்‌-சங்கினான்‌ நாயகனாகவும்‌ உவமித்தமை காண்க,-இது எடுத்துகாட்டு உவமை யணி. என்னையும்‌, உம்‌- இழிவு சிறப்பு.

———

நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் பிறவி யெனும்
நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே
. 17–

பிறர்‌ கடை தோறும்‌ – அயலார்‌ வாயில்கள்‌ தோறும்‌,
நாய் போல்‌ நுழைந்து – நாயைப் போல உள்ளே புகுந்து ,
அவர்‌ எச்சில்‌ -அவர்களுடைய எச்சிலை,
நச்சி- விரும்பி,
பேய் போல்‌ – பிசாசைப்‌ போல,
திரியும்‌ – அலைகின்ற,
பிறவியினேனை – பிறப்புடையவனாகிய
என்னை,
பிறவி எனும்‌ – பிறப்பென்கிற,
நோய்‌ – பிணிகள்‌,
போம்‌ மருந்து என்னும்‌ – போகத் தக்க மருந்தென்று சொல்லப் படுகிற,
நுன் -உமது
திருவாய் மொழி- திருவாய்‌ மொழிப்‌ பிரபந்தத்தை,
நோக்குவித்து -யான் பார்க்கும் படி கருணை செய்து,
தாய் போல்‌ – பெற்ற தாயைப் போல,
உதவி செய்தாய்க்கு – உபசாரம் செய்த உமக்கு,
அடியேன்‌ – தொண்டனாகிய நான்‌,
பண்டு – முன்னாளில்‌,
என் சாதித்தது -என்ன உபகாரம்‌ செய்ததுண்டு?

நாய் போல நுழைந்து பேய் போலத்‌ திரியுமென்பால் வன்பு கூர்ந்து நுமது திருவாய் மொழியைப்‌ பார்த்‌துப்‌ பிறப்பறுக்கும்படி உதவி செய்த உமக்கு யான்‌ முன் செய்த நன்றி தான்‌ யாதோ ?என்றதாம்‌, தம்‌ தாழ்ச்சியைக் குறித்துக்‌ கடைப்பட்ட நாயை உவமித்தார்‌.-ஒயாமல்‌ பிரந்து உழலுதலால்‌ மாறாமல்‌ அலைகின்ற பேயை உவமிழத்தார்‌, எச்சில்‌ – எஞ்சியது ; மிச்சமானதென்பதாம்‌ -எஞ்சு பகுதி இல்‌ – பெயர் விகுதி, நோய் போம்‌ மருந்து என்பதில்‌ போம்‌ என்ற காரியப் பொருளாகிய பெயரெச்சம்‌ மருந்து என்னும்‌ காரணப் பெயரைக் கொண்டது. நுன்‌ – பெயர்த் திரி சொல்‌,

வாய்க்கும் குருகைத் திரு வீதி எச்சிலை வாடி யுண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் அளித்தால் பழுதோ பெருமாள் மகுடம்
சாய்க்கும் படிக்குக் கவி சொல்லும் ஞானக் கடலே –

———–

சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத்து இருக்கை
சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே.
18–

எம்‌ கோன்‌ – எங்கள்‌ தலைவராகிய நம்மாழ்வாரது,
தமிழ்‌ சொல்‌ என – தமிழ்ப் பிரபந்தம் போல,
உங்கள் வேதம்‌ – உங்களுடைய வேதங்களெல்லாம்‌,
பர தத்துவத்தை – மேலான கடவுளின்‌ நிலைமை இன்ன தென்பதை ,
சாதிக்குமே – உறுதிப் படித்துமோ ?
சமயம்‌ திருக்‌கை – அன்‌னிய மதங்களின்‌ மாறு பாடுகளை,
சேதிக்குமே – அழிக்குமோ ?
ஒன்று சிந்திக்குமே – ஒரு பொருளை ஆராய்ந் தறியுமோ (அப்‌படி அறிந்தாலும்‌),
அதனை – அறிந்த அவ் விஷயத்தை,
தெரிய போதிக்குமே – பிறர்க்குத் தெரியும் படி உணர்த்துமோ?
எங்கும்‌ ஓங்கி – எவ்‌விடத்‌திலும்‌ சிறப்படைந்து
பொது நிற்கும்‌ – பொதுவாய்‌ நிற்கின்ற
மெய்யை – சத்தியத்தையும்‌,
பொய்யை – அதற்கு மாறான அசத்தியத்‌தையும்‌,
சோதிக்குமே – ஆராய்ந்தறியுமோ ?

நம்மாழ்வார்‌ பிரபந்தம் போல உங்கள்‌ வேதம்‌ பரம் பொருள்‌ நிலையை நிறுத்திக் காட்டுமோ ? புற மதங்களின்‌ மாறுபாட்டை அழிக்குமோ ? ஒன்றை ஆராய்ந்தறியுமோ ? தெரிந்தாலும்‌ பிறர்க்குச்‌ சொல்ல முடியுமோ ? மெய்யையும்‌ பொய்யையும்‌ பகுத்தறியுமோ ? இவை யொன்‌றும்‌ செய்ய இயலாது என்பதாம்‌. எல்லார்க்கும்‌ மேலானாரென்பது பற்றிக் கோன்‌ என்றார்‌, உங்கள்‌ என்றது புற மதத்தவரை என்க -,-வேதம்‌ ஆங்காங்கு எல்லாக் கடவுளருக்கும்‌ படிப் படியாகப்‌ பரத்‌துவஞ்‌ சொல்லுதலால்‌ திருவாய்‌ மொழி போல ஓரே கடவுளைக் குறிக்காமை பற்றிச் சாதிக்குமோ வென்று எதிர் மறையாகக் கூறினாரெனினுமாம்‌.-இப் பாடல்களிலுள்ள ஏகாரங்களெல்லாம்‌ வினாவாகச்‌ கூறி யிருப்பினும்‌ எதிர் மறைப் பொருள்‌ படுதல்‌ காண்க-

————–

சொல் என்கெனோ முழு வேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கெனோ மறை நேர் நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக் கனி யென்கெனோ புகல
வல் என்கெனோ குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே.
19-

குருகூர்‌ – திருக் குருகூரிலுள்ள,
எம்பிரான்‌ – நம்மாழ்‌வார்‌,
சொன்ன – ௮ருளிச் செய்‌த,
மாலையை – பாடலாகிய மாலையை,
சொல்‌ என்கேனோ – இயல்பாகிய தமிழ்ச் சொல்லென்பேனோ ?
முழு வேதம்‌ – எல்லா வேதத்திலுமுள்ள, சுருக்கு என்கெனோ – சுருக்கமான
சாரமென்பேனோ?
எவர்க்கும்‌ – யாவருக்கும்‌,
நெல்‌ என்கெனோ -௨ணவுப் பொருளாகிய நெல்லென்கெனோ?
உண்ணும்‌ – பருகுகின்ற,
நீர்‌ என்கெனோ – நீரென்பேனோ ?
மறை – வேதங்களை,
நேர்‌ நிறுக்கும் -நேரே தராசில்‌ நிறுத்‌தப் பார்ப்பதற்குரிய
கல்‌ என்கெனோ- படிக்‌கல்லென்று சொல்லுவேனோ ?
ஞானம்‌ முதிர்‌ – ஞானமாகிய சுவை முற்றிய,
கனி என்கெனோ – பழமென்பனோ?
புகலவல்‌ என்கெனோ -பல விதமாகச்‌ சொல்லுவதற்கு எனக்கு வலிமை யுண்டென்‌பேனோ,

குருகூர்‌ நம்மாழ்வார்‌ பாடல்களைக்‌ தமிழ்ச் சொல்லென்‌பேனோ ?வேத சாரமென்பேனோ?உணவுப் பொருளென்பேனோ? நீரென்பேனோ? படிக்கல்லென்‌பேனோ ? பழமென்‌பேனோ? பலவிதமாகச்‌ சொல்‌ல வல்லமை யுண்டென்‌பேனோ ? என்ன சொல்லுவேனென்பதாம்‌. ஒன்‌றோடொன்று அந்தாதியான தொடர்புடைமையால்‌ மாலை யென்றார்‌-இது தமிழ்ச் சொல்லென்பார்க்கு இதுவே வேதச் சுவையைத் திரட்டிச்‌ சுருக்க வைத்திருத்தலால்‌ சொல்லென்‌பெனோ சுருக்கென்‌பெனோ என்‌று ஐயத்தாற்‌ கூறினார்‌. திருவாய்‌ மொழியின்‌ பொருளாலுலகு நன்மை பெறுவதை நோக்கி உள்ளரிசியாலுலகு பிழைத்தற்குரிய நெல்லை உவமித்‌தார்‌ -ஏனைய வெளிப்படை-பலபடியாக விகல்பித்துச் சொல்லும் படி அன்றோ ஆழ்வாரது பிரபாவம் –

———-

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சி யம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே
. 20-

பொருள்‌-அகப் பொருள்‌.
திணை– பாலை,
கிளவி-கற்பொடு புணர்ந்த கௌவை.
துறை–கலந்துடன்‌ வருவோர்‌ புலம்பல்‌ தேற்றல்

மாலை – பூ மாலை யணிந்த,
குழலியும்‌ – கூந்தலை யுடைய உன்‌ மகளும்‌,
வில்லியும்‌ – கையில்‌ வில்லை யுடைய அவள் தலைவனும்
மாறனை – நம்மாழ்வாரை,
வாழ்த்தலர்‌ – துதியாதவர்கள்‌,
போம்‌ – செல்‌லத் தகுந்த,
பாலை கடம்‌ – பாலை நிலத்‌து வழியை, பகலே கடந்து ஏகி -இன்றைப்‌ பகலிலேயே தாண்டிச்‌ சென்று,
மருதத்துப் பணை- மருத நிலத்து வயல்களில்‌,
கரும்பின்‌ஆலை – விளைந்துள்ள கரும்புகளை ஆட்டுகிற ஆலைகளில்‌,
நரேல்‌ என்னும்‌ ஓசையை – நரேலென்று ஒலிக்கிற ஒலியைக் கேட்டு,
அம் பொன் சாலை – அழகிய பொலிவு பெற்ற வீடுகளில்‌ வளர்க்கிற,
கிளி – கிளிகள்‌,
௮ஞ்சி – பயந்து ,
உறங்கா – தூங்காத,
திரு நாட்டு இடம்‌ – சிறந்த எமது நாட்டினிடத்தை,
சார்வர்கள்‌ – அடைவார்கள்‌;

உன்‌ புதல்வியும்‌ ௮வள்‌ கணவனும்‌ நம்மாழ்வாரைத்‌ துதியாதவர்‌ போகின்ற கொடும் பாலை வழியைசத் தாண்டி இனித்‌ தமது நாட்டை யடைவார் களென்பதாம்‌-செவிலியைத்‌ தேற்றுபவராதலின்‌ அவள்‌ வருத்த மின்றிச்‌ சென்றாளென்பது தோன்ற மாலைக் குழலி யென்றார்‌; எனவே இடை வெயிலில்‌ தலைவியும்‌ தலைவனும்‌ உகந்து அலா் சூட்டி உள் மகிழ்ந்து இருக்து -புறப்பட்ட பிறகு இவர்கள்‌ கண்டாரென்றறிக-எதிர்த்து வந்த சிங்கத்தைக் கொன்று அவளுக்கு ௮ச்ச முண்‌டாகாதபடி வில்லின்‌ நாணேற்றிக் கையிலேந்திச்‌ செல்கின்‌றமையால் வில்லி யென்றார்‌,கிளவித் தலைவன்‌ பெயர்‌ கூறாமையால்‌ அகப் பொருளாயிற்று,-போக்கெல்லாம்‌ பாலை” ஆதலால்‌ திணை – பாலை. தலைவி கற்பு நிலை தவறாமல்‌ ஒருவனைக்‌ கைக் கொண்டபடியே சென்றதால் எழுந்த பழிச்‌ சொல்லாதலால்‌ கற்பொடு புணர்ந்த கெளயை யாயிற்று, தேடிச்‌ சென்ற செவிலியை எதிர்‌ வந்தோர்‌ கூறித் தேற்றுதல்‌ துறைக் கருத்து,-கைகோள்‌ – களவு, கூற்று . கண்டோர் கூற்று, கேட்போர்‌ – செவிலி, இடம்‌ – முன்னிலை, காலம்‌ -நிகழ் காலம்‌. மெய்ப்பாடு – பெருமிதம்‌, பயன்‌ – செவிலியை மீள வுரைத்தல்‌, ஆதலால்‌ நீ மீள்வாயாக என்ற சொல் எஞ்சி நின்றது –

திருவடி இணைகளை தமது சென்னியில் பொருத்தி அந்த ப்ரணாமத்தால் அவனை வஸீ கரித்து தம்மைப் போன்ற அடியார்கள் இடரைத் தீர்த்து ரக்ஷணத்துக்காக ஸ்ரீ கோதண்டம் எப்போதும் திருக்கையில் ஏந்தி உள்ள எம்பெருமானை தர்சித்து அவரைப்பிரிந்து தரிக்க மாட்டாதவராய் அவரைப்பின் தொடர்ந்து ஸம்ஸாரத்தை தத்வ ஞானத்தால் கடந்து நிரதிசய அந்தமில் பேரின்பம் தரும் ஸ்ரீ வைகுண்டம் அடைவார் என்று இவரது வை லக்ஷண்யம் கண்ட உலகத்தார் அவர் பக்கலில் பரிவையுடைய ஞானியருக்குக் கூறுவதே இதற்க்கு ஸ்வா பதேசம் –

———-

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் தளிர் மெல்லடித் தண்
மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினை தோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை மலை யவனே.
21–

பொருள்‌–அது,
திணை -குறிஞ்சி ,
கிளவி–வரைவு கடாதல்‌.
துறை–நெறி யருமை கூறி வரவு விலக்கல்‌,

குருகைப் பிரான்‌ – குருகூர்‌ நம்மாழ்வாரது , திரு ஆணை -சிறந்த ஆஜ்ஜை -(கட்டளை) கொண்டுள்ள,
மலையவனே – பொதியில்‌ மலை யிலிருக்கிற தலைவனே !
சாரல்‌-மலைச்சார்பாகிய,
குறிஞ்சி தழுவம்‌ -குறிஞ்சி நிலம் தழுவப் பட்ட,
பொழில்‌ – சோலையிலே,
தளிர் மெல்‌ அடி -தளிர் போன்ற மெல்லிய அடிகளையும்‌,
தண்‌ – குளிர்ந்த,
குறிஞ்சி மூரல்‌ நகை-குறிஞ்சி அரும்பு போன்ற பற்களையுமுடைய தலைவியினது
முகம்‌ நோக்கற்கு-முகத்தைப் பார்ப்பதற்கு, நீ—-, முடுகும்‌-விரைசந்து வருகிற,
சூரல்‌ – பிரப்பங்காடுகள்‌ நெருங்கிய,
குறிஞ்சி நெறி – மலை வழியை,
நினை தோறும்‌ – நினைக்கும் பொழுதெல்லாம்‌,
துணுக்கெனும்‌ ஆல்‌ – அவள் துணுக்கென்று நடுங்குவளாதலால்‌,
வாரல்‌ – நீ வாராது நீங்குவாய்‌.

நம்மாழ்வார்‌ ஆஜ்ஜையைச்‌ சிரத்தால்‌ வகிக்கும்‌ பொதியிவின்‌ தலைவனே ! சோலையில்‌ தலைவியானவள்‌ அவள்‌ முகத்தைப் பார்த்து மகிழ்தலுக்கு நீ விரைந்து வருகிற மலை வழியை நினைக்கும் தோறும்‌ துணுக்கென்று நடுங்குவளாதலால்‌ நீ வாராதொழிவாய்‌ -என்பதாம்‌. எனவே தலைவன்‌ ஆற்றாதானாயினான் ; பின்பு ஒரு வழியாக ஆற்றுவானாம்‌ எப்படியோ வெனில்‌, ‘ பிரான் திரு வாணையை உடையவனே ” என்றமையால்‌ அவ் வாணையை உடையார்க்கு ஊறுபாடுகள்‌ வாரா வென்று தோழி அறிந்திருந்தும்
என்னை வர வேண்டாமென்று கூறியது வேறு ஓன்றினை நினைத்தன்றோ? ௮து தானும்‌ நான்‌ அவளை மணஞ்செய்து கொள்ள வேண்டியே என்று மன வுறுதி கொண்டு மறு நாள்‌ மணஞ்‌ செய்யப்‌ புகுவானாம்‌, இங்கனம்‌ கூறுதல்‌ தலைவனை நன்கு மதியாமையான வழுவாயினும்‌ இருவரும்‌ மணஞ்செய்து கொள்ள வேண்டிச்‌ கூறும்‌ அன்பின்‌ மிகுதியால்‌ வழுவமைதி யாயிற்று, இப்படி யன்றித்‌ தலைவனை வர வேண்டாமென்று பிரான் மேல்‌ ஆணை யிட்டு மறித்தாளென்‌று உரைப்‌பின்‌ ஆணை யிட்டு மறித்ததனால்‌ தலைவன்‌ வாராதே யொழியவும்‌ அதனால்‌ தலைவி யிறந்து படவுஞ்‌ செய்தவளாம்‌. அங்ஙனஞ்‌ செய்யவே “ நாணவும் நடுங்கவும் நாடாள்‌ தோழி ” என்னுஞ்‌ சூத்திரத்துக்கு விரோதமாம்‌ ; ஆதலால்‌ இவ் விஷயங்களை கல்வி யறிவுடையோர்‌ ஆராய்ந்து அறிவாராக.’
தளிர் மெல்லடித் தண் மூரற் குறிஞ்சி நகை -௮ன்மொழித்‌ தொகை பன் மொழித் தொடர்‌, குறிஞ்சி மூரல்‌-மூரல்‌-அரும்புக்கு உமையாகு பெயர்‌, ** முல்லை, யாழ் கடற்றானை வேந்தே ! அணியெயி றீன்‌ற தன்றே’-என்ற சிந்தாமாணிச்‌ செய்யுளுரையை நோக்குக-துணுக்கெனல்‌ – ௮ச்‌சக் குறிப்பு, கைகோள்‌-களவு, கூற்று – தோழி கூற்று, கேட்போன்‌ -தலைவன்‌, இடம்‌ – முன்னிலை, காலம்‌- எதிர்காலம்‌,-மெய்ப்பாடு- அச்சத்தைச்‌ சார்ந்த பெருமிதம்‌, பயன்‌- வரைவு கடாதல்‌,

———–

மலை யாரமும் கடல் ஆரமும் பன் மா மணி குயின்ற
விலை யாரமும் விரவுந் திரு நாடனை வேலை சுட்ட
சிலையார் அமுதின் அடி சட கோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே.
22-

மலை- பொதியில்‌ மலையிலுள்ள,
ஆரமும்‌ – சந்தன மரமும்‌,
கடல்‌ ஆரமும்‌ – கடலிலுள்ள முத்துக்களும்‌, பல்‌ மா மணி குயின்‌ற -பலவாகிய சிறந்த ரத்னங்களால் இழைத்த
விலை ஆரமும்‌ – விலை பெற்ற மாலைகளும்‌,
விரவும்‌ – பொருந்தி யிருக்கிற,
திரு நாடனை – சிறந்த பாண்டி நாட்டிலுள்ளவராகிய,
வேலை – சமுத்திரத்தை,
கட்ட சிலை – அம்பு விட்‌டெரித்த கோதண்டமென்னும்‌ வில்லை யுடைய,
ஆர்‌ – அரிய,
௮முதின்‌-அருமருந்தன்ன இராம பிரானுடைய,
அடி – திருவடிகளில்‌ பற்றுள்ள,
சடகோபனை – நம்மாழ்வாரை,
சென்று இறைஞ்சும்‌ – போய்‌ வணக்குகின்ற,
தலையார்‌ – தலையை யுடையவர்‌,
௭வர் !-யாவரோ, அவரே.
எம்மை – எங்களை,
ஆளும்‌ – ஆண்டு கொள்ளுகின்ற, தபோதனர்‌-தவமாகிய செல்வத்தை யுடையவராவர்‌ ;

மூவகை ஆரங்களும்‌ பொருந்திய பாண்டி நாட்டிலுள்ளவரும்‌ இராம பிரானடித் தொண்டருமாகிய நம்மாழ்வாரை வணங்குபவர் யாவரோ அவரே எங்களுக்குத்‌ தலைவராவாரென்பதாம்‌, விலை யாரம்‌ இந்திரன்‌ கொடுத்த மாலையுமுடைய பாண்டி நாடென்றாகலுமொன்று ; அதற்கு “ கோவா மலையாரங்‌ கோத்த சடலாரம்‌. தேவர் கோன்‌ பொன்னாரம்‌ தென்னர் கோன்‌ மார்பினவே:? என்ற சிலப்பதிகாரத்தையும்‌ நோக்குக” இராமாமிருதமென்னும்‌ பெயருடைமையால்‌ அமுதென்றார்‌; அன்றி மனத்திற்‌ கொண்டாரை நிலை பெற வாழ்வித்தலாற்‌ கூறினார் என்றலுமாம்
வேலை சுட்டது :–இராமாவதாரத்தில்‌ இராம பிரான்‌ . தென்‌ கடலருகு வந்து இலங்கைக்குச்‌ செல்ல வழி வேண்டி வருணனை அழைத்‌தலும்‌ ௮வன்‌ வாராமையால்‌ சினங்கொண்டு ௮க்னியாஸ்திரத்தைப்‌ பிரயோகித்துக்‌ கடலை வற்றச் சுட்டு வருணன்‌ வந்து அடைக்கலம்‌ புகக்‌ காத்தருளினார் என்பதாம்‌. அமுது -உவமை யாகு பெயர்‌. குயின்ற-குயில்‌ – பகுதி, ௮வரே , ஏ- பிரிநிலை ,

தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே- தலையை யுடைய அவரே எம்மை அடிமை கொள்ளும் தவச் செல்வர் ஆவார்-ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் போல்வார்
கற்றார் பரவும் ராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவர் அவர் எம்மை
நின்று ஆளும் பெரியவரே -ராமானுஜ நூற்றந்தாதி பாசுரத்தை ஒட்டியே இப் பாசுரம் –

———–

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் எழில் குருகூர்
நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே.
23-

போந்து – எங்கள்‌ விமானத்தில் வந்து,
ஏறுக என்று-ஏறிக் கொள்ளுக வென்று,
இமையோர்‌ – தேவர்கள்‌,
புகலினும்‌ -சொன்‌னாலும்‌,
பூ – அழகிய,
தொழுவின்‌ – கொட்டிலினிடத்துள்ள,
வேந்து -தலைமை பெற்ற,
ஏறு – ஏழு காளை மாடுகளை,
அடர்த்தவன்‌ – அடக்கிய கண்ண பிரானது ,
வீடே பெறினும்‌ – பரம பதத்தை யடையப்‌ பெற்றாலும்
எழில்‌ குருகூர்‌ – அழகிய குருகூர்ப் பதியில்‌,
நாம் தேறிய – நாங்கள்‌ தெளிவடையச் செய்த,
அறிவன்‌ – பேரறிவாளராகிய நம்மாழ்வாரருளிச்‌ செய்த, திருவாய்மொழி —,
நாளும்‌ – தினமும்‌,
நல்கும்‌- கொடுக்கின்ற,
தீம்‌ தேறல்‌ – இனிய தேன் போன்ற சுவையை,
உண்டு உழலும்‌ – பருகி உலாவுகின்‌ற , சித்தியே-ஓப்பற்ற பயனே,
வந்து…-சித்திக்கும்‌-நான்‌ பெறும்படி எனக்குக் கை கூடா நிற்கும்‌;

என்னைத் தேவர் வந்து அழைத்தாலும் நான் பரம பதம் அடைந்தாலும் குருகூர்‌ நம்மாழ்வாரருளிச் செய்த திருவாய் மொழியின்‌ இனிய சுவையை உண்டு மகிழும் சித்தியே எனக்குக்‌ கை கூடி யிருக்கும்‌ என்பதாம்‌-இது ௮ப்பிரபந்தத்தின்‌ சுவை மிகுதியைத் துதித்தவாறு, ஆராயுங்காலத்‌திலே தெளிவடைந்த மகிழ்ச்சியால்‌ நாம்‌ என்று தன்மைப் பன்மையாற்‌ கூறினார்‌…படிக்கும் தோறுஞ்‌ சுவை தருதலால்‌ நாளும்‌ நல்குமென்றார்‌-ஏனைய பயன் போலாகாமல்‌ மேம் பட்டமையால்‌ சித்தி யென்றார்‌, ஏறு -விலங்கின் ஆண் பாற்‌ பெயர்‌ ; இங்குக் காளைக்காயிந்று, வீடே,-ஏ-தேற்‌றம்‌, தேறல்‌ – கள்ளின்‌ தெளிவுமாம்‌ ;௮தற்கேற்ப உண்டு உழலுமென்றதனால்‌ இத ஏக தேச வுருவக வணி. கண்ணன்‌ ஏறடர்த்தது: — நம்பினைப் பிராட்டியாரை மணஞ்செய்விக்க வேண்டி ௮வள்‌ தந்தை யானவன்‌ அசுர விவாகமாக நியமித்துத்‌ தன் தொழுவிலுள்ள கொழுத்த ஏழு காளைகளைப்‌ பிடித்‌துக் கட்டுபவனுச்கு என்‌ மகளைக்‌ கொடுப்பேனென்றதை யறிந்த கண்ண பிரான்‌ அங்ஙனமே அவற்றை யடக்கி ௮வளை மணம் புரிந்து கொண்டானென்பதாம்‌.

———-

சித்தர்க்கும் வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர் கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே யன்றி பண்டு சென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித் தொகையே.
24-

சடகோபன் – நம்மாழ்வார்‌ பாடி யருளிய,
மொழித் தொகை – பாடல்களின்‌ தொகுதியானது ,
சித்தர்க்கும்‌- எண் வகைச்‌ சித்தி யுடையவர்க்கும்‌,
வேதச் சிரம்‌ – வேதத்தின்‌ தலையாகிய வேதாந்தத்தை,
தெரிந்தோர்கட்கும்‌ – அறிர்தவர்களுக்கும்‌, செய்‌ தவர்க்கும்‌ – தவத்தைச் செய்பவர்க்கும்‌,
சுத்தர்க்கும்‌-பரி சுத்தமுடையவர்க்கும்‌, மற்றைத் துறை- வேறு மார்க்கங்களிலிருந்து ,
துறந்தோர்கட்கும்‌ – எல்லாப் பற்றும் விட்ட துறவிகளுக்கும்‌,
தொண்டு செய்யும்‌ – கடவளுக்கு அடிமை செய்கின்‌ற,
பத்தர்க்கும்‌ – அடியார்களுக்கும்‌,
ஞானப் பகவர்க்குமே அன்றி- ஞானமிகுத்த பெரியோர்களுக்குமே யல்லாமல்‌,
பண்டு – முன்னாளில்‌ சென்‌ற,
முத்தர்க்கும்‌- முத்தி பெற்றவர்களுக்கும்‌, இன்‌ ௮முதம்‌- இனிய ௮மிருதமேயாம்‌;

நம்மாழ்வார்‌ பாடல்கள்‌ சித்தர்‌ முதலாகிய எல்லார்க்கும்‌ இனிய அமிருதமாகவே யிருக்குமென்பதாம்‌, சித்தி எட்டாவன: —அணிமா,மகிமா, தெரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம்‌, ஈசத்துவம்‌, வசித்துவம் -என்பன. சுத்தர்‌- மனத்திற்‌ பரி சுத்தமுடையவர்‌. பகவர்‌ – வீரம்‌ கீர்த்தி வைராக்கியம்‌ இவற்றில்‌ மிக்கவர்‌, முத்தி யடைந்தவர்‌-பரம பதத்தில் தேவராயிருந்து இதனைக் கேட்டு மகிழ்வாராதலில்‌ அவர்க்கும்‌ இன்‌னமுதமென்றார்‌.-வேதாந்தமான உபநிஷத்துக்களை ஆராய்பவர்‌ அதனிலும்‌ இதன்‌ கருத்துத்‌ தெளிவாய்‌ விளங்குதலால்‌ அவர்க்கும்‌ அமுதென்றார்‌. இதிலுள்ள உம்மைகள்‌ எண்ணுப் பொருளன. பகவர்க்குமே, ஏ – பிரிநிலை,

———-

தொகை உளவாய பணுவற் கெல்லாம் துறை தோறும் தொட்டால்
பகை யுளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான் மறையின்
வகை யுள வாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே
. 25-

தொகை உள ஆய -சேர்க்கப் பட்டுள்ளனவாகிய,
பனுவற்கு எல்லாம்‌ -சாஸ்‌திரங்களிலெல்லாம்‌,
துறை தோறும்‌ – ஒவ்வொரு பகுதிகள் தோறும்‌,
தொட்டால்‌ – உற்று நோக்கினால்‌,
பகை உளவாம்‌ -ஒன்றற்கொன்று விரோதமுள்ளனவாம்‌ ;
மற்றும்‌ – மீட்டும்‌,
பற்றுளவாம்‌-தொடர்சி யுள்ளனவாகும்‌ :
பழ நால் மறையின்‌ – பழமையகிய நான்கு
வேதங்களின்‌,
வகை உளவாகிய- பகுதி யுள்ளனவாகிய,
வாது உளவாம்‌ -விரோதங்களுமுள்ளனவாகும்‌; (அப்படியன்றி,) குருகூர்‌ -திருக்குருகூரிலவதரித்த,
எம்பிரான்‌ தன்‌ – எங்களிறைவனாராகிய நம்மாழ்வாருடைய,
விழு தமிழ்க்கு-சிறந்த தமிழ்ப் பாடல்களில்‌,
வந்த வந்த இடத்து – பார்த்த பார்த்த இடங்களிலெல்லாம்‌,
ஏ- சிறந்த,
மிகை உளவாம்‌ -மேம் பாடுகள்‌ உள்ளனவாகின்றன ;

எல்லாச் சமய நூல்களிலும்‌ உற்று நோக்குமிடத்து ஒவ்வொன்றிலும்‌ முன்னுக்குப் பின்‌ விரோதமாகக் கூறுவன வுள்ளன ; ௮ப்படி யன்றிக்‌ குருகூர்‌ நம்மாழ்வார் பாடல்களில்‌ பார்க்குமிடம் தோறும்‌ சிறந்த மேம்பாடான பொருள்கள் அமைந்துள்ளன வென்‌பதாம்‌-நான்மறையின் வாது – வேதவிரோதம்‌; அஃதாவது, வேதத்திற் கூறும் பொருளுக்கு விரோதமாகக் கூறுவது-வந்த இடம்‌ -வந்திடம்‌ ;பெயரெச்ச விகுதி தொக்கது.
‘* ஏ பெற்றாகும்‌ ‘? என்றதனால்‌ ஏ என்னும்‌ ஓரெழுத்தொரு மொழி உரிச்‌ சொல்லாயமைந்த விடத்துப்‌ பெருமையை யுணர்த்தும்‌,

———

விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் மெய் உற வந்து
அழுப்பாது ஒழிமின் அரு வினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகு சங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக் கொழுந்தே
26-

௮ரு வினைகாள்‌ -நீங்குவதற் கரிய வினைகளே!
இள நாகு சங்கம்‌- மிக்க இளைய சங்கங்களில்‌,
கொழு – உழுகின்ற கொழுவானது ,
பாய்‌ -பாயப் பெற்ற,
மருதம் சுலாம்‌- மருத நிலங்கள் சூழ்ந்துள்ள, குருகூர் ,
எம்‌ குலம்‌ – எம் போல்வாராகிய தொண்டர்‌ கூட்டங்களுக்‌கு,
கொழுந்து – கொழுந்து போல்வாராகிய,
ஒருவன்‌ – ஒப்பற்ற நம்மாழ்‌வார்‌,
உம்மை – உங்களை,
அப் புறத்தே – எங்கள் இடத்தில்‌ நெருங்க ஓட்‌டாமல்‌ அப்பால்‌,
இழுப்பான்‌ -இழுத்தெறிய வேண்டி, வந்து
இன்று – இப் பொழுது,
நின்றான்‌ – எம்‌ உள்ளத்தில்‌ எழுந்தருளி யிருக்கிறார்‌; (ஆதலால்‌,)
மெய் உற வந்து – மெய்யாகவே எங்களைக் கிட்டி வந்து,
அழுப்பாது – அப்பாமல்‌,
ஓழிமின்‌ – நீங்கி விடுங்கள்‌ ;
இனி – இனி மேல்‌,
எம்மை-எங்களை,
பிறவித் துயர்‌ – பிறவியாகிய துன்பத்தில்‌, விழுப்பார்‌ யார்‌ – தள்ளுபவர் யாவர்‌ இருக்கிறார்கள்‌ –

வினைகளே ! குருகூரிலவதரித்த ஒப்பற்ற நம்மாழ்வார்‌ உங்களை நீக்க வேண்டி எம்முள்ளத் தெழுந்தருளி யிருக்கிறார்‌-ஆதலால்‌ கிட்ட நெருங்காதீர்‌ ; ; இனி எம்மைப்‌ பிறவிபில்‌ தள்ளுபவர்‌ யாவர்‌ இருக்கிறார்கள்‌? என்பதாம்‌-ஆழ்வார்‌ மனத்திலிருப்பதைக் காட்டி அச்சுறுத்தி வினைகளை யொழித்து விட்டால்‌ இனிப்‌ பிறவியில்‌ புகாதிருத்தல்‌ நிச்சயமென்று கொண்டு விழுப்பார் யாரென்றார்‌. ஊர்ந்து வருகிற சங்குகளை உழுது வருகின்ற கொழுவானது வயிற்றில் குதித்துத் தள்ளுதல் போல, அடர்ந்து வரும் வினைகளை ஆழ்வார் கருணை சென்றழிக்குமென்பது தொகை மொழியின் கருத்து, இளநாகு- மீமிசைச் சொல்‌. கொழுந்து உவமை யாகு பெயர்‌ -ஆயர் குலக் கொழுந்து ?’ என்றார் பிறரும்‌. கொழு- கலப்‌பைப் படை வாள்‌ நுணியில் தைக்கும் இரும்பு.

பெற்றம் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்று இல்லை கண்டீர் நடமின் -என்றும்

திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறு என் நம் மேல் வினை -என்றும்

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன் —
ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரை கிடக்கும் உள்ளத்து எனக்கு -என்றும்

இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன் ஆறு வினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -என்றும்
உள்ள அருளிச் செயல்கள் இங்கே அனுசந்தேயம் –

———

கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் விறல் மாறனென்றால்
அழும் தோள் தளரும் மனமுருகும் குருகூர் அறையில்
எழுந்து ஓடவுங் கருத் துண்டு கெட்டேன் இவ் இளங் கொடிக்கே.
27-

பொருள் –அகப் புறப் பொருள் ,
திணை –பெருந்துணை
துறை–மாலை பெறாமல்‌ வருந்தித் தலைமகளேங்கியது அறிந்த பாங்கி புலம்பல் –

கொழுந்தோடு – கொழுந்துகளும்‌, இலையும்‌, முகையும்‌- அரும்புகளும்‌, எல்லாம்‌ – மற்றுள்ள மலர் காய்களும்‌, கொய்யும்‌ கொய்‌ மகிழ்‌ கீழ்‌ – மிகக் கொய்யும் படியாகிய மகிழ மரத்தின்‌ கீழ்ச் சென்று,
விழுந்து ஓடுவது -அங்கே காற்றால் விழுவது ஓடுவதாகிய
ஓர்‌ சருகும்‌ பெறாள்‌ -ஒரு சருகேனும் பெற்றாளில்லை;
விறல்‌- வலிமை யுடைய,
மாறன்‌ என்றால்‌ – நம்மாழ்வாரென்று அயலர் கூறினால்‌,
அழும்‌ – அழுகின்றனள்‌;
தோள் தளரும்‌- சோள் தளர்ச்சி யடைவாள்‌;
மனம்‌ உருகும்‌-மனம் கரைவாள்‌ ;
குருகூர்‌ அறையில்‌ -குருகூரென்று சொன்னால்‌,
எழுந்து ஆடவும்‌- தான்‌ எழுந்‌து ஒடிச் சென்று அவ்வூரை யடையவும்‌,
இ-இந்த,
இளங்கொடிக்கு – இளமையான கொடி போன்ற பெண்ணுக்கு,
கருத்து உண்டு- நினைவு உண்டாயிருக்கிறது ;
கெட்டேன்‌ – நான் யாது செய்கேன்‌-கெட்டேன்‌ !

நம்மாழ்வாரைச் சேர விரும்பிய இப் பெண்‌ ௮வர்‌ வருவதற்கு அடையாளமாக முன்னாடியே அவர்மகிழ மாலையை வர விடுக்காமையால்‌ ௮ம்‌ மலரையாவது அணைத்துக் கொண்டு காமத்தைக் கழிக்கலாமென்று அம்‌ மரத்தடியிற் சென்றாலோ எல்லாம் கொய்யக் கூடிய அதன் சருகும்‌ பெற்‌றாளில்லை-௮வர் பெயரைச் சொன்னால்‌ அழுகின்றாள்‌ ;தளர்கின்றாள்‌ ;உருகுகின்றாள்‌ ; குருகூரென்றால்‌ அவட்கு ௮ங்கு ஓடவுங் கருத்துண்டு-ஆ ஆ ! கெட்டேன்‌ ! என்றாள்‌ என்பதாம்‌. காமத் தீக்கு ஆற்றாளென்பது தோன்ற இளங்கொடி யென்றார்‌. இவள்‌ இன்னும் காமத்தால்‌ மிக வருந்திப் புலம்புவள் போலுமென்பார்‌ எல்லாம் கொய்யக் கூடிய மகிழின்‌ சருகும்‌ பெற்றாளில்லை யென்றார்‌. ஆற்றாமை மிகுதியினால்‌ ௮ழுமென்றார்‌, அணைத்து மகிழ்வது தோளாதலால்‌ ௮து பெறாமை ஹேதுவாகத் தோள்‌ தளருமென்றார்‌, மனத்தை அவர் பால்‌ விடுத்தமையால்‌ உருகுமென்றார்‌. யாமிங்‌கு இருத்தலால் எழுந்தோடவில்லை கருத்து மட்டுமுண்டு என்‌றார்‌. தோழியாற் செய்யும் உபசாரமனைத்துஞ்‌ செய்தும்‌ பயன் படாமையால்‌ கெட்டேனென்றாள்‌. தோழி செய்யுமுபசாரமாவது மலரணையலும்‌ சந்திரகாந்தச்‌ சிலையிலும்‌ படுச்கச் செய்தல்‌ -கொங்கைகளில்‌ தளிர்களையும்‌ சந்தனத்தையும்‌ பிறவற்றையும்‌ அப்புதல்‌; பன்னீர் தூவுதல்‌ முதலியவாம்‌, இது கிளவித் தலைவனது இயற் பெயரைக் கூறினமையால்‌ ௮கப் பொருளாகாமல்‌ அகப் புறப் பொருளாயிற்று-கை யற்றுப் புலம்புதலால்‌ கந்தருவத்தின் வழுவிய பெருந் திணை யாயிற்‌று. தலைவன்‌ வருவதற்கு அடையாளமாக முன்னாடி மாலையை வர விடுக்க வில்லையே யென்று வருந்திய தலைவியின்‌ வருத்தம் கண்ட தோழி புலம்பினாள் என்பது துறையின் கருத்து.

தெய்வத் தண் அம் துழாய்த் தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும்
கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
-என்றும்
சீரார் இதழ் பொழில் மாலிருஞ்சோலையில் செல்வர் செங்கண் போரார் தாள் புனை தழை தொடுத்த நாரார் இதாகில் பிழைப்பு அரிதாம் எங்கள் நன்னுதற்கே –என்றும்
உள்ள அருளிச் செயல்கள் அனுசந்தேயம் –

கம்ப நாட்டாழ்வார் ஆழ்வார் திருவடிகளில் சேர்ந்து இருக்கப் பெறாது வருந்தும் நிலையில்
அவருடன் நேராகவாவது இடையிட்டாவது சம்பந்தம் பெற்ற பொருள் யாதாயினும் ஒன்றை
அவருடைய பிரசாதமாகப் பெற்று ஆறி இருக்கக் கருதி வேண்டுதலையும் அங்கனம் ஒன்றும் அவருக்கு கிடைத்திடாமையும் ஆழ்வாருடைய திரு நாமத்தைச் சொல்லும் போது எல்லாம் பக்தி பரவசராய் அழுது உடல் சோர்ந்து மனம் தளர்தலையும் அவரது திவ்ய தேசத்துக்கு விரைந்து செல்ல விரும்புதலையும் அன்பர்கள் பாராட்டி இனி இவருக்கு என்னாகுமோ என்று இரங்கிக் கூறுதல் இதற்கு ஸ்வாப தேசம் –

———-

கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் இனிக் கொடுங் கூற்றினுக்கோ
அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே
. 28-

ஆரணத்தின் படி-வேதத்தைப் போல, -நான்‌கு பகுதியாக,
எடுத்துக் கொண்ட – தமிழில்‌ எடுத்‌துக் கொண்டு கூறிய,
மாறன்‌ என்‌றால்‌ – நம்மாழ்வார்‌ என்று யார் சொன்னாலும்‌,
பதுமக் கரங்கள்‌ – தாமரைப் பூப் போன்ற கைகளை,
முடி யெடுத்துக் கொண்ட – தலையில்‌ அஞ்‌சலி செய்து கொண்ட,
அந்தணர் – எல்லா வுயிர்களிடத்தும்‌ ௮ன்பு பொருந்திய மேலோர்களுடைய,
தாள்‌ – பாதங்கள்‌,
என் முடி என – எனது தலையிற்‌ சூடப் படுவன வென்று,
கொடி. எடுத்துக் கொண்டு நின்றேன்‌ -விருதுக் கொடி பிடித்‌துக் கொண்டு நிற்கின்றேன்‌ ; (அதலால்‌),
இனி -இனி மேல்‌,
கொடுங்கூற்றினுக்கு – கொடிய யமனுக்கு,
ஓர்‌ அடி எடுத்‌துக் சொண்டு – ஒரு காலை எடுத்துக் கொண்டு,
என்பால்‌ வரலாகும் கொல்‌-என்னிடத்தில்‌ வருதல்‌ கூடுமோ? |கூடாதென்பதாம்‌]

நம்மாழ்வாரென்று யார்‌ கூறினும்‌ ௮ன்பினால்‌ அஞ்சலி செய்கின்‌ற கருணை யாளர்களுடைய திருவடிகளே என் முடியிற்‌ சூடுவன வென்று விருதாக நான் கொண்டிருக்கின்‌றமையால்‌ கூற்றுவன்‌ அஞ்சாமல்‌ என்னிடத்து அடி யெடுத்‌து வைக்கக் கூடுமோ ? கூடாதென்பதாம்‌-நான்கு பிரபந்தங்களைச்‌ செய்தமையின்‌ ஆரணத்தின் படி யென்‌றார்‌. கரங்கள்‌ முடி யெடுத்‌துக் கொண்ட வென்றது அன்பு மேலீட்டினால்‌ என்க, ௮ந்தணர்‌ -௮ழகிய தண்மை யுடையார்‌ என்றதே பொருத்தமுடையது. ௮ந்தணர்‌. வைஷ்ணவப் பிராமணரென்றால்‌ குறைபாடு என்‌னை யெனின்‌ அதில்‌ தோன்றிய சிலர்‌ பொருளாசை மேலீட்டினால்‌ பிறர்‌ நூல்‌ உரை முதலியவரற்றை இகழ்ந்து கூறி நரகமே குடியாகக் கொள்ளுத லால்‌ முற்கூறிய அழகிய தண்மை யுடையார் என்பதே உரை யென்க ,

———-

என் முடியா தெனக்கி யாதே அரியது இராவணன் தன்
பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான் பொருநைந் துறைவன்
தன் முடியால் அவன் தாள் இணைக் கீழ் எப் பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே.
29–

இராவணன்‌ தன்‌ – இராவணனுடைய,
பொன் முடியால்‌ -பொன்னாகிய கிரீடமணிந்த தலைகளைக் கொண்டு,
கடல் தூர்த்த – சமுத்‌திரத்தைகத் தூரச் செய்த,
வில்லான்‌ – கோதண்டமென்னும்‌ வில்லை
யுடையவனுடைய,
அவன்‌ – அந்த இராம பிரானுடைய,
இணை தாள்‌ கீழ்‌ -இரண்டு திழுவடிகளிலும்‌,
பொருநை துறைவன்‌ – தாமிரபருணை யாற்‌றம் கரையி லவதரித்த நம்மாழ்வார்‌,
தன்‌ முடியால்‌ – தம் தலையால்‌ வணங்கி ,
எ பொருளும்‌ – எல்லாப் பொருள்களையும்‌,
தழீஇ – ஒரு சேரச்‌ கொண்டு,
சொல்‌ முடியால்‌ – சிறந்த சொற்களாலமைந்த,
அமுதம்‌ -அமிர்தம் போன்ற,
ஆயிரம்‌ கவி- ஆயிரம்‌ பாடல்களை,
சூட்டினன்‌ -பாடிச் சேர்ப்பித்தனர்‌; (அவ் வாழ்வாரைத் துதிக்கின்ற), எனக்கு—-.
என்‌ முடியாது – என்ன காரிய முடிய மாட்டாது?
யாதே அரியது – எது தான்‌ அரியதாகும்‌? [எல்லாம்‌ முடியும்‌-௮ரிதொன்றுமில்லை யென்பதாம்‌]

இராவணனைக் கொன்ற இராம பிரான்‌ திருவடிகளில்‌ நம்மாழ்வார்‌ ஆயிரம் பாடல்‌ பாடிச் சூட்டினார்‌;-அவரடியனாகிய எனக்கு முடியாத காரியம் தான்‌ யாது? ௮ரியது தான்‌ யாது? [ஒன்று மில்லை] என்பதாம்‌, இராவணன்‌ -இலங்கைக் கிறையவன்‌ ; ஸ்ரீ கைலாஸ மலையைப்‌ பெயர்த்து அதன் கீழ்‌ ௮கப் பட்டுக் கொண்டு ஒயாமற்‌ கதறினமையால்‌ இப் பெயர் பெற்றனன்‌ ; இராவணம்‌ -அழுகை, ௮வன்‌ தன்‌ தலைகள்‌ வெட்டுண்டால்‌ மீள முளைக்கும் படி பிரமனிடத்தில்‌ வரம் பெற்றான்‌-பின்பு இராம பிரான்‌ போரில்‌ ௮வன் தலைகளை வெட்டிக்‌ கடலிற்‌ குவித்தனன்‌ ; வெட்ட வெட்ட முளைத்தமையால்‌ மார்பிலோரம்பெய்து ௮வனைக் கொன்றனன்‌. எப் பொருளும்‌ – முதல் கடவுளாகிய மாயோன்‌ நிலையும்‌, அக் கடவுளை யடையும்‌ நெறியும்‌, அடைதற்குரிய உயிர்களினிலையும்‌, அடைதலாற் பெறும்‌ பேறும்‌ பிறவுமாம்‌, எனக்கு – இடை நிலைத்‌ தீவகம்‌. தழீஇ – சொல்லிசை யளபெடை, ௮முதக் கவி -உவமைத் தொகை,-

——–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தே னென்னை நல் வினையாம்
காட்டில் புகுத விட்டு உய்யக் கொள் மாறன் கழல் பற்றிப் போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை மறை மெய் எனிலே
. 30–

சூட்டில்‌ – செற் போரில்‌,
குருகு – நாரை முதலிய பறவை,
உறங்கும்‌ – தூங்குகின்ற,
குருகூர்‌ – திருக் குருகூரையும்‌, தொழுதேன்‌-வணங்கினேன்‌ ;
வழுதி நாட்டில்‌ – பாண்டி நாட்டில்‌,
பிறந்தவர்க்கு-பிறந்தவராகிய இறைவனிடத்தில்‌ ௮ன்புடையவருக்கு,
ஆளும்‌ செய்தேன்‌ – அடிமையுமாயினேன்‌ ;
(ஆதலால்‌), மறை – வேதமான,
மெய்‌ எனில்‌, உண்மையா யிருக்குமானால்‌, என்னை- -,
நல்வினை ஆம்‌ நாட்டில்‌ -நல்ல தவஞ் செய்தலால்‌ மேன்மை யுற்ற நாட்டில்‌, புகுதவிட்டு – ,
உய்யக் கொள்‌ – பிழைக்கும்படி ௮ருள் செய்கின்‌ற ,
மாறன்‌ – நம்மாழ்வாருடைய,
கழல்‌ – பாதங்களை,
பற்றி போய்‌ – புணையாகக் கொண்டு சென்று,
வீட்டில்‌ புகுதற்கும்‌- மோட்சத்தை அடைதற்கும்‌,
குறை உண்டே – தடை யுண்டோ ? (இல்லை யென்றதாம்‌;)

யான்‌ அழ்வார்‌ அவதரித்த குருகூரை வணங்கினேன்‌ ; பாண்டி நாட்டிலுள்ள கடவள் பாலன்புடையவர்களுக்கும்‌ அடிமையாயினேன்‌ ; வேதம்‌ உண்மையா யிருக்குமானால்‌ நல் தவத்தில்‌ என்னை விட்டு ஆழ்வார்‌ பாதங்களே புணை யாகக் கொண்டு மோட்சத்திற்குச்‌ செல்லத் தடை யுண்‌டோ? என்பதாம்‌. தாம்‌ கவலை யற்று மோட்சதிற்குச் சென்று வசிக்கலா
மென்பதை உள்ளடக்கிப்‌ போரில்‌ நாரை கவலை யின்றி யுறங்கும் என்று உவமையால்‌ விளக்கினார்‌, இங்கனமே நாடுகளைச்‌ சிறப்பித்தல் பண்டை வழக்கு; * பொய்கை சாரை போரிற்‌ சேக்கும்‌ ” என்றார்‌ ஐங்குறு நூற்றிலும்‌. குருகு உறங்கும் குருகூர்‌ எனச் சொல்‌ நயம் தோன்றக் கூறியது காண்க ,-வழுதி – கொடை யுடையானுக்கும்‌ பெயராதலால்‌ வீடு வேண்டின்‌ மறாமல்‌ கொடுப்பாரென்று கொண்டு அப் பெயராற்‌ கூ.றினார்‌. ஆளும்‌, புகுதற்கும்‌ – உம்மைகள்‌ இறந்தது தழுவிய எச்சப் பொருளன, உண்டே-ஏ. எதிர்மறை,

—————

மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய் மெய்யன் தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே
. 31-

உறு வினையை – மிக்க தீவினைகளை,
கொய்யும்‌ – வெட்டி யழிக்கின்‌ற,
மெய்‌ – சத்தியமாகிய,
வாள் வலவன்‌ – வாள் யுத்தத்தில்‌ வல்‌லவரும்‌,
குருகைக்கு – குருகூர்க்கு,
அரசன்‌ – இறைவரும்‌,
புலமை செய்யும்‌ – தம்மை யடைந்தவர்களுக்கு உபதேசித்தருளுகின்‌ற,
ஐயன்‌ தனக்கே – தலைவருமாகிய நம்மாழ்வாருக்கே ,
தனி-ஒப்பற்ற,
தாள்‌-திருவடிகளுக்கு,
அன்பு செய்த பின்‌ – தான்‌ பக்தி செய்யத் தொடங்கிய பிற்பாடு,
மெய்யும்‌ – சத்துவப் பொருளெல்லாம்‌,
மெய்‌ ஆயது – உண்மையாக விளங்கிற்று;
பொய்யும்‌ – பொய்ப் பொருளும்‌,
பொய்‌ ஆயது – பொய்ப்‌ பொருளென்று தோன்ற விளங்கிற்று;
வேறு படுத்து – இங்கனம்‌ வேறாகப்‌ பகுத்‌துக் காட்டி,
உய்யும்‌ – பிழைப்பதற்குரிய,
மெய்‌ ஆய – உண்மையாகிய,
உபாயம்‌ -தந்திரமும்‌,
வந்து உற்றது – வந்து பொருந்திற்று,

நான்‌ நம்மாழ்வாருக்குத்‌ தொண்டு செய்யத்‌ தொடங்கிய பின்‌பு தான்‌ தத்‌துவ ஞானம்‌ உண்மையாக வெளிப்பட்டது ;அஞ்ஞானமும்‌ நீங்கிற்று ; இங்கனம்‌ பகுத்தறிந்து பிழைத்தற்குரிய தந்திரமும்‌ வந்து பொருந்தித்றென்பதாம்‌-உண்மை நிலை தெரியாமல்‌ அஞ்ஞானம்‌ மூடப்‌ பெற்றிருந்து பிறகு தெளிவடைந்ததனால்‌ மெய்யும்‌ மெய்யாயது என்‌றார்‌. ௮து மெய்யாதலும்‌ ௮தற்கு மறுதலையாகிய பொய்யும்‌ பொய்யாகிய தென்பது தானே இயையினும்‌ மகிழ்ச்சி மிகுதியால்‌ அதனையும்‌ உடன்‌ கூறினர்‌, பொய்ப் பொருள்‌ – தார புத்திர தனாதி ஏஷணாத் திரயங்கள்‌-பிழைத்தல்‌ -பரம பதத்தை நாடும்‌ வழி
கொய்தற்கேற்ப வினையைப்‌ பகை யென்னாமையால்‌ இது ஏக தேச வுருவக வணி. எல்லாரிலும் மேலானவனாதலால்‌ ஐயனென்றார்‌.

———-

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே.
32–

திருமாலை – திரு மகள் கணவனாகிய மாயோனை,
செய்யன்‌(என) – சிவந்த நிறமுடையவனென்றும்‌,
கரியன்‌ என – கரிய நிறமுடையவனென்றும்‌,
தெரிந்து உணர – ஆராய்ந்து தெரிந்து கொள்ளுதற்கு,
வையம்‌ – உலகத்‌ துயிர்கள்‌,
கரி ௮ல்ல – பொருந்திய சாட்சியாக மாட்‌
டாவாம்‌;
மறை- வேதங்களும்‌,
மாட்டா – அறிய வல்லன அல்ல ;
(ஆதலால்‌), மதுரம்‌- இனிமை யாகிய, குருகூர்‌ – திருக் குருகூரில்‌ ௮வதரித்தருளிய,
ஐயன்‌ – நம்மாழ்வாருடைய,
கவி அல்லலேல்‌ – பாடல்‌கள்‌ அல்லா விட்டால்‌,
பிறவிக் கடல்‌ – பிறப்பாகிய சமுத்திரத்தில்‌,
ஆழ்‌வது அல்லால்‌ -அமுங்குவது ௮ல்லாமல்‌,
இ உயிர்களுக்கு – இந்த உயிர்‌களுக்கு, உய்யும் வகை – ஈடேறும்‌வழி,
ஒன்றும்‌ – ஒன்‌றினையும்‌,
யான்‌ -நான்‌,
கண்டிலேன்‌ -பார்த்தேனில்லை ;

மாயோன்‌ சிவந்த வடிவனோ கறுத்த வடிவனோ வென்று அறிவதற்கு உலகத்தாராலுமில்லை ; வேதங்களாலுமில்லை; ஆதலால்‌ உயிர்கள்‌ நம்‌மாழ்வார்‌ பாடலில்லாவிட்டால்‌ பிறவிக் கடலில்‌ அழுந்துவதே யல்‌லாமல்‌ அவ் வுயிர்கள்‌ ஈடேறும்‌ வழியை யான்‌ பார்த்தேனில்லை என்‌பதாம்‌. செய்யன்‌,கரியன்‌– சிவப்போ கறுப்போ என்னும்‌ உலக வழக்கை நோக்கிச்‌ கூறியவாம்‌. வையம்‌–இடவாகுபெயர்‌, தமிழ்க்‌ குருகூர்‌ என்பார்‌ – அதன்‌ மறு பெயராகிய மதரமென்னும்‌ மொழியாற்‌ கூறினார்‌. எல்லாருக்கும்‌ மேலாவான்‌ என்பது பற்றி ஐயன்‌ என்றார்‌. ஒரு நாளும்‌ முடிவு பெறாமையும்‌ கடத்த வருமையும்‌ நோக்கிப்‌ பிறவியைக் கடலென்றார்‌,

———–

உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே.
33–

உயிர்த் தாரையில்‌ – உயிர் செல்லுன்ற வழியிலே,
புக்கு”-சென்று,
உறு – பொருந்துகின்ற,
ஒரு- ஒப்பில்லாத,
குறும்பு ஆம்‌ மூன்றனையும்‌ – காமம்‌ வெகுளி மயக்கமாகிய முக் குற்றங்களையும்‌,
செயிர்த்தார்‌ – கடிந்து விலக்கியவராகிய, குருகை வந்தார்‌-குரூகூரிலவதரித்த நம்மாழ்வாரது,
திருவாய்‌ மொழி -திருவாய் மொழி யென்னும்‌ பிரபந்தத்தினை,
செப்பல்‌ உற்றால்‌ – சொல்லத் தொடங்கினால்‌,
எங்கள்‌ அந்தணர்க்கு-தத்துவ நூல்‌ ஆராய்ச்சி யுடைய எங்கள் பெரியோர்களுக்கு,
மயிர்த்‌ தாரைகள்‌ பொடிக்கும்‌ – சரீரத்திலுள்ள்‌ மயிரொழுங்குகளெல்‌லாம்‌ சிலிர்க்கும்‌ ;
கண்கள்‌-கண்களில்‌,
நீர்‌ மல்கும்‌ – ஆனந்தக் கண்ணீர்‌ பெருகும்‌ ;
மா மறையுள்‌-சிறந்த வேதத்தின்‌ பொருள்களுள்‌,
அயிர்த்தார்‌-சந்தேகித்த வர்களுக்கு அயிர்த்த பொருள்‌ – சந்தேகித்த அர்த்தங்களெல்லாம்‌,
வெளியாம்‌ – நன்றாக விளங்கும்‌ ;

முக் குற்றமும் போக்கிய குருகூர் நம்மாழ்வார்‌ அருளிச் செய்த திருவாய் மொழியைச்‌ சொல்லத் தொடங்கினால்‌ அதனைக்‌ கேட்கும்‌ சத்துவ ஆராய்ச்சி யுடையவர்களுக்கு எல்லாம்‌ மயிர்‌ புளகிக்கும்‌ ; கண்ணீர்‌ வடி.யும்‌; ௮ன்றி வேதப் பொருளில்‌ சந்தேக முற்றவர்களுக்கு அந்தச்‌ சந்தேகமும்‌ நிவர்த்தியாகும்‌ என்பதாம்‌. என்றும்‌ நீங்கா இயல்பினவாதலால்‌ உயிர்த் தாரையிற்‌ பொருந்திய முக்குறும்பென்றார்‌. அவை தம்‌மை யடையாதபடி இருந்தமையால்‌ செயிர்த்தார்‌ என்றார்‌, மயிர்‌ புளகித்தலும்‌ கண்ணீர் விடுதலும்‌ பக்தியினால்‌ தோன்றிய புற மெய்ப்பாடு,-வேதாந்தத்தில்‌ பொருந்தி யிருத்தலால்‌ தத்வ ஆராய்ச்சி யுடையாரை அந்தணர் என்றார்‌,-உபநிடதப்பொருளை அறிந்து மகிழ்பவர்‌ ௮ந்தணராதலால்‌ ௮வ்வுபநிடதங்களிலும்‌ இது சிறந்ததாகக் கண்டு மயிர் புளகிக்‌கும்‌, கண்ணீர் மல்கும்‌ என்றுரைப்பினும்‌ அமையும்‌,

———-

அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே.
34–

சுடர் தோய்‌ – சூரியனும்‌ சக்திரனுமாகிய இரண்டு சுடர்களும்‌ தவழப் பெற்ற, சந்தனம் சோலை – சந்தன மரச் சோலைகள்‌ சூழ்ந்த,
குருகை – திருக் குருகூரில்‌,
பிரான்‌ – நம்மாழ்வார்‌,
வந்து சந்தித்தது –
வந்து ௮வதரித்ததானது ,
அந்தணர்க்கோ – பிராமணர்களுக்காகவோ,
நல்‌ அரும்‌ தவர்க்கோ – நல்ல அரிய தவத்தைச் செய்கின்‌றவர்களுக்காகவோ, : அன்றி – அல்லாமல்‌,
யோகியராய்‌ வந்தவர்க்கோ – யோகம்‌
செய்பவராகி அவதரித் தவர்களுக்காகவோ,
மறவாதியர்க்கோ – மாறு பட்‌ட சமயங்களிலிருந்து வாதஞ் செய்கிறவர்களுக்காகவோ,
மகாம்‌ குழை சேர்‌ – காதிலணிந்த மகர குண்டலம் தாழப் பெற்ற,
சந்தரம் தோளனுக்கோ – ௮ழகிய தோள்களை யுடைய இறைவனுக்காகவோ, அவன் தொண்‌டர்கட்கோ-அவனுடையஅடியார் கட்காகவோ; (அறியோம்‌);

குருகூரில் நம்மாழ்வார் அவதரித்து அருளியது அந்தணர் முதலானவர்களுக்காகவோ என்பதாம் -வேதக் கடலில் புகுந்து நெறி தெரியாது மயங்காமல் அந்நெறியைத் தெரிவித்தலின் அந்தணர்க்கோ என்றார் -முதல் கடவுளை அறியாது பிற தெய்வங்களை விரும்பித் தவத்தில் உழல்வாரைத் தெளிவித்தலால் அரும் தவர்க்கோ என்றார் -யோகத்தால் அரிதின் அறியும் உண்மைப் பொருளைத் திருவாய் மொழியைக் கொண்டு எளிதில் உணரச் செய்ததினால் யோகியராய் வந்தவர்க்கோ என்றார் -புற மதஸ்தரை அடக்குதால் மற வாதியர்கோ என்றார் -மகரக்குழை -முதலை வடிவாகச் செய்த காதணி -சந்தனச் சோலை மிகவும் குளிர்ச்சி யுடைமையால் ஆழ்வார் பாடலும் அத்தன்மையது என்பதைக் குறிப்பால் உணர்த்திமை காண்க-ஓகாரங்கள் ஐயப் பொருளன-

இவர்களுக்கு எல்லாம் தனித்தனியே ப்ரயோஜன கரமாம் படி அன்றோ இவரது ஆவிர்பாவம்-எனவே இவ்வாறு விகல்பித்து அருளிச் செய்கிறார் –

————-

சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே
. 35–

சந்தியும்‌ – பதப் புணர்ச்சி யிலக்கணமும்‌,
சந்தி – அப்படிப்‌ புணர்கின்ற,
பதமும்‌- சொல்லிலக்கணமும்‌,
அவை தம்மிலே -அந்தச் சொற்களால்‌,.
தழைக்கும்‌ – அடுக்கப்பட்டுப் பெருகுகின்‌ற,
பந்தியும் -வரிசையான செய்யுளிலக்கணமும்‌,
பல்‌ அலங்காரம்‌ பொருளும்‌- பல வகைப் பட்ட அணி யிலக்கணப் பகுதிகளும்‌, பயிலுகிற்பீர்‌ – ‘கற்றறிகின்ற புலவர்களே ! (இவற்றால்‌’ முத்தி மார்க்கத்தை யறிய மாட்டீர்‌);
தென்குருகூர்‌- அழகிய திருச்குருகூரை,
சிந்தியும்‌ – நினையுங்கள்‌ ;
தேவரை – ௮தில் அவதரித்த நம்மாழ்வாரை
தொழுது – கை குவித்து, .
ஆள்‌ செய்யும்‌ -அவருக்கு அடிமை செய்யுங்கள்‌
வந்தியும்‌ – நமஸ்கரியுங்கள்‌ –
வந்திப்பவரை-அப்படி வணங்குபவரை யாவது,
வணங்கும் -நீங்கள் வணங்குங்கள்‌)
வகை – முக்தி மார்க்கத்தை
அறிவீர் -அறிந்து கொள்வீர்கள்

பஞ்ச லக்ஷணங்களும் படித்து உழல்கின்ற புலவர்களே -அவ்விலக்கணங்களால் முக்தி மார்க்கம் அறிய மாட்டீர் -குருகூரை மனத்தினால் நினையுங்கோள் -நம்மாழ்வாரை அஞ்சலி செய்து அவருக்கு அடிமை செய்யுங்கோள் -வணங்குங்கோள் -வணங்குவோரை வணங்குங்கோள்-நீங்கள் முக்தி மார்க்கத்தை அறிவீர்கள் என்பதாம் -அலங்காரப் பொருளும் என்றதுக்கு உவமை முதலிய அணியியல் பொருந்திய பொருள் இலக்கணமும் உண்டு என்றும் உரைப்பினும் அமையும் -பூ சுரராலும் வணங்கப் பெறுவதால் தேவர் என்றால் -அவர் அவதரித்த ஊராதலால் அழகிய குருகூர் என்றார் -நெடும்தூரத்தில் இருப்பவர் வருவதற்கு இசையாமலும் இருக்கக்கூடும் என்பதால் அங்கிருந்தே நினையுங்கோள் என்றார் -அவ்வூர் ஏனைய முக்தி நகரங்கள் போல் அல்லாமல் இருப்பதால் சிந்திக்கவே முக்தி தரும் என்பது துணிவு -ஆட் செய்யக் கிட்டாவிடினும் அடியாரைத் தரிசித்த இடத்தே அவற்றைத் வணங்குங்கோள் என்றார் -மற்ற நான்கைக் கூறிவிட்டதனால் உப லக்ஷணத்தால் பொருளையும் கூட்டி பஞ்ச லக்ஷணம் என்றுமாம் -வந்தியும் முதலிய உம்மைத் தொகை புதியன புகுதலால் ஏவலுக்கு வந்தமை அறிக-

———-

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே
. 36–

பொருள்‌–அகப் புறப்‌ பொருள்‌.
திணை-கந்தருவத்தின்‌ வழவிய பெருந் திணை,
கிளவி–அறத்தொடு நிற்றல்‌,
துறை -பாங்கி செவிலியர்க்கு அறத்தோடு நிற்றல்

நீங்கள்‌-தேவரை – தெய்வத்தை,
ஏறிய- ஆவேசமாகப்‌ பெற்ற
மூது அறிவாட்டியை – முதிர்ந்த அறிவை யுடையளான கட்டுவிக்கியை
சீர்‌ அழித்தீர்‌ – நிலை குலையச்‌ செய்தீர்கள்‌
பூ வரை – மலர்கள்‌ மட்டும்‌,
ஏறிய – சூட்டப் பெற்ற,
கோதை -கூந்தலை யுடைய தலைவியது ,
உள்ளம்‌ – மனத்தில்‌,
புகுந்தார்‌ – புகுந்து வருத்துகின்றவர்‌,
எவர்‌ என்று – எவர் தாமென்று,
ஏ- பெருமை மிக்க ,
வரை ஏறி-நம்‌ குறிச்சியில்‌ வந்து,
மொழிகின்ற போது – சொல்லுகின்ற காலத்தில்‌,
இறைவர்‌ – தலைவராகிய,
மூவரையோ – திரி மூர்த்திகளையோ ?
குரு கூரரையோ – அன்றிக்‌ குருகூர்‌ நம்மாழ்வாரையோ?
கூறிற்று -சொல்லியது
முந்து உற- முன்னதாக,
சொல்லும்‌ – சொல்லுங்கள்‌ ;

நீங்கள்‌ கட்டு விச்சியாகிய மூதறிவாட்டியின்‌ பெருமையைக்‌ கெடுத்து விட்டீர்கள்‌; நம்‌ தலைவியின்‌ மனத்திற்‌ புகுந்தார்‌ யாரெண்று வினாவுகின்‌ற பொழுது மூவர் புகுந்தாரென்றோ அல்லது குருகூர்‌ ஆழ்‌வார்‌ புகுந்தா ரென்றோ ௮வள்‌ கூறியது. அதனைச்‌ சொல்லுவீ ரென்பதாமாம்‌, கட்டு- ஒருவிதக் குறி : ; முறத்தில்‌ நெல்‌ மூதலியவற்றை வைத்து
அக்‌ கடவுளைப் பரவி அந்த நெல்லில்‌ ஒரு பிடியள வெடுத்துத்‌ தனியே வைத்து இந் நெல்‌ ஒற்றைப் பட்டால்‌ தெய்வத் தானாயிற்றென்றும்‌ இரட்டைப் பட்டால்‌ பிற நோய்‌ முதலிய வென்றும்‌ கூறுவதோர்‌ குறி யென்‌று சில நூல்களால்‌ தெரிகின்றது.-இக் குறி, கட்டு வைத்தல்‌, கழங்கு பார்த்தல்‌, கன்னமெடுத்தல்‌ எனப்‌ பலவகைப் படும்‌. கட்டு வைத்து
உரைப்பவள்‌ கட்டுவிச்சி -, அறிவுடைய மூதிர்ந்தவளாதலால்‌ மூதறிவாட்டி யென்றாள்‌. இவளுக்கு நோய்‌ வந்த மூலமறிந்து கூறாமல்‌ மாறாகக் கொண்டு குறி பார்க்கத்‌ தொடங்கியதனால் அவளைச்‌ சீர் அழித்தீர் என்றாள்‌-தெய்வத்தால்‌ தீண்டப்‌ பெற்றிலளென்பது தோன்றப்‌ பூவரை யேறிய கோதை யென்றாள்‌. தெய்வம் தீண்டப்‌ பெற்றால்‌ பூவைச் ரூடு மறிவு பெறாளென்று இங்கனம் கூறினளாம்‌. தலைவன்‌ பிரிந்ததனால்‌ வருந்திய மனத்தினளாய்‌ ௮ணி முதலிய அணிபப் பெறாமல்‌ பூ மட்டுஞ்சூடிய கோதை யெனினுமாம்‌. திரிமூர்த்திகளிலும்‌ மேலாக ஆழ்வாரை இவள்‌ மனங்கொண்டிருப்பதனால்‌ மூவரில்‌ யாரேனும்‌ இவள்‌ உள்ளம்‌ புகுந்தாருண்டோ என்று நகை யாடிக்‌ கூறினாள்‌. நம்மாழ்வாரையே இவள்‌ கருதி இருக்கிறாள் என்பதைக்‌ கொள்ஞங்களென்பாள்‌ அவரை ஈற்றில் கூறி முடித்தாள்‌. தலைவனது இயர்பெயர்‌ கூறுதல்‌ அகப் பொருள்‌ கந்தருவ வழக்க மில்லாமையால்‌ பின்னர்‌ நான்கும்‌ பெருந்திணை பெறுமே ? என்ற சிறப்புடைய பெருந் திணை யன்றிக்‌ கந்தருவத்தின்‌ வழுவிய பெருந் திணை யாயிற்று- அறத்தொடு நிற்றல்‌ – தலைவி தரும வழி தவறவில்லை யென்‌றதை நிலை நிறுத்துதல்‌, தலைவியின்‌ அபிப்பிராயத்தை யறிந்த தோழி தாய்மார்க் கறிவித்தல்‌ துறையின்‌ கருத்து. முதுமை யென்னும்‌ பண்புப்‌ பெயர்‌ ஈறு போய்‌ ஆதி நீண்டது. ஆட்டி – பெண்‌ பாற் பெயர்‌, “அன்ன பிறவு மவற்றொடு சிவணி, மன்னிய வினைய நிமித்த மென்ப” (தொல்‌ -பொரு – 287) என்ற சூத்திர வுரையில்‌ கைக் கிளைக்கும்‌ பெருந்‌ திணைக்கும்‌ மெய்ப்பாடு வரை யறை யின்றி வேண்டியவாறு வரப் பெறுமென்றதனால்‌ இதற்கு ஒன்றனை நிலையிட்டு உரைக்க வில்லை. பயனுமப்படியே கொள்க.

தேவு மற்று அறியேன் –மதுரகவி நிலையைப் பெற்ற கம்ப நாட்டாழ்வார்

————

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே.
37–

துறவாதவர்க்கும்‌ -இல்லறத்தி லிருப்பவர்க்கும்‌,
துறந்தவர்க்கும்‌ – துறவறத்தி லிருப்பவர்க்கும்‌,
சொல்லவே – சொல்லும் பொழுதிலேயே, சுரக்கும்‌ – கருணை யாகிய பாலைச் சுரக்கின்ற,
அறம்‌ – தரும வடிவமாகிய,
ஓ ஆயிரம்‌ ஆ அவை – ஒரு ஆயிரம்‌ பசுக்கள்‌,
இங்கு நிற்க – இவ் விடத்திருக்கையில்‌,
அந்தோ – ஐயோ !
சிலர் போய்‌ – சிலர் சென்று,
மறம்‌ வாதியர்‌ – மாறுபட்ட வாதங்களைச சொல்லுகின்ற புறச் சமயிசள்‌,
சொன்ன – சொல்லிய,
ஆசு – குற்றத்தை,
அகம்‌ ஆம்‌ -தன்‌னிடத்தில் கொண்ட நூல்களாகிய
மலடு ஆவைப்பற்றி – மலட்டுப் பசுக்களைப்‌ பிடித்துக் சொண்டு,
கறவா – கறந்து,
கிடப்பர்‌ – உழலுவார்‌ ;
அங்கு – அந்தப் பசுவினிடத்தில் ,
தங்கள்‌ கை வலிப்பே – அவர்கள்‌ கை
வருந்துவதானது ,
என்‌ பெறவோ -வேறு யாது பயனைப்‌ பெறுவதற்காகவோ?

யாவர்க்கும்‌ சொல்லின அளவிலே பயனைத் தருகின்ற காமதேனுவை யொத்த திருவாய்மொழி ஆயிரம்‌ பாடல்களுமிருக்க அவற்றை விட்‌டுப்‌ புறச் சமயிகள்‌ சொன்ன மலட்டுப் பசக்கள் போன்ற ‘நூல்களில் சென்று பயன் கருதி வருந்துவார்‌ அதனால்‌ தங்கள்‌ கை வருந்துவது வேறு யாது பயனைக்‌ கருதியோ !? ஒன்றுமில்லை யென்பதாம்‌. துறவாதவர்க்கு இருமைப் பயனையும்‌, துறந்தவர்க்கு மறுமைப் பயனையும்‌ தன்‌னை நினைத்தவுடனே கொடுத்தலாலும்‌ மற்றும்‌ வேண்டியவர்க்கு வேண்டிய படியே காம தேனுவைப் போலக் கொடுத்தலாலும்‌ திருவாய்மொழியைக் காமதேனுவாக உருவகப் படுத்திக்‌ கூறினார்‌. புறச் சமையத்தார்‌ நூல்கள்‌ மலட்டுப் பசுவைப் போலப்‌ பயன் கொடாதொழிவதன்றித்‌ தம்‌மைப்‌ படித்தவர்க்கு நரகத்கையும்‌ கொடுப்பதால்‌ குற்றம்‌ பொருந்திய மலட்டுப் பசு வென்றார்‌-மற வாதியரென்ற பன்மைப் பெயராற்‌ கூறினமையால்‌ ஆசுகளை அகத்‌திற் கொண்ட பல நூல்களே யென்பது வெள்ளிடை மலை போல
விளங்கிக் கிடக்க இதனை நன்கு ஓராமல்‌ எல்லாச் சமயத்தாராலும் புகழும்‌
-மாணிக்க வாசகர்‌ திருவாசக மென்று ஒன்றனைச் சட்டிக்‌ கூறி எரி வாய்‌ நரகிற்கு
ஆளாகின்றாரும் சிலர் உளர்‌. ஆ அவை, ௮வை- பகுதிப் பொருள்‌ விகுதி. ௮ந்தோ – இரக்கக் குறிப்பிடைச் சொல்‌ ; : தனித் தமிழ்‌ மொழி- அந்தீற்றோவும்‌”என்றதனா லறிக , ஆசகம்‌- அன்மொழித் தொகை ,-இப் பாடல்‌ உருவகவணி..

குரு பரம்பரை உள்ள ஸம்ப்ரதாயத்து பால் அன்றோ இது –

————

கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே
. 38–

பொருள் –புறப் பொருள்‌.
திணை – பெருந் திணை
கிளவி : இரு பாலில்‌ பெண்பாமல் கூற்று,
துறை–தலைவி மடலூரத் தோழி சாற்றுதல் .

குருகூர்‌ என்னும்‌ ஆறு ௮றியா – குருகூரென்றும் சொல்லு வதற்கும் தெரியாத,
பைதலை-எந் தலை மகளை,
கோகு – தன்‌ தோள்களை ,
தட்டிட்டு-தட்டிக் கொண்டு,
ஏட்‌டில்‌- பனை மடலாலகிய குதிரையில்‌,
ஏற்றிய-ஏறும்படி செய்த,
பண்பனை-இயல்புடைய தலைவனை, (குறித்‌து ),
கை – கைகளை,
தலை பெய்து – தலைக்கு மேல்‌ தூக்கி , அரும்‌ பூசல்‌ இட்டு-பேரிரைச்சலிட்டு,
கவியால்‌ – செய்யுட்களால்‌,
உலகை – உலகத்திலுள்‌ள் உயிர்களை,
உய்தலைச் செய்ததும்‌ – ஈடேறும்படி. செய்ததும் ,
பொய்‌ என்றுமோ – பொய்யென்று சொல்லுவோமோ ?
சென்று-அந்தக் குருகூர் புகுந்து,
அவ் வூர்‌ அறிய – அவ்வூரார் அறியும் படி,–
வைது அலைத்து– துன்பப் படுத்தி,
ஏசுதுமோ – இகழ்வோமோ ?[யாது செய்வோம்‌?.]

குருகூர் என்றும் சொல்லவும் கற்றறியா எமது தலை மகளை இப்படி மடலூரும்படி செய்த நம்மாழ்வாரைச் சென்று பெரும் பூசலிட்டு நுமது பாடலாலுகத்தை வாழ்வித்தது பொய்யென்போமா ? அவ்வூரார்‌ அறியும்படி வைது அலையச் செய்து ஏசுமோமா?யாது செய்வோமென்பதாம்‌-தலைவி பால்‌ அண்பு மிகுதியால்‌ பெண் பாலை ஆண் பாலாகப்‌ பைதல் என்றாள் – ஆண் மகனில்‌ சிறுவனுக்கும்‌ துன்பத்திற்கும்‌ பெயர்‌,
‘பைத்தலை யாவெனக் கனன்று பைதலை, யித்தனை போது கொண்டிருப்ப தோவெனா ” இங்கு ஹனுமானைப்‌ பைதலென்‌றதும் , “பைதல வாகிப்‌ பசக்குவ மன்னோ… கண்‌! இங்குத்‌ துன்பத்துக்கும்‌ ஆயிபனமையுமறிக -ஆண்பாற்‌ குழந்தைகளைப் பிள்ளை யென்பதால் -கிளிப்பிள்ளை யென்னும்‌ வழக்குப் பற்றிக்‌ கிளிப் பைதல் என்றார் -ஆழ்வாரும்‌, கோகு தட்டுதல் – தோள் தட்டுதல்‌; கோகு கட்டிட்டு என்று பாடமோதி கோகு உகட்டிட்டு என்று பதம்‌ பிரித்தார்‌ பூர்வாச்சார்யர்- எனின்‌ அதுவும்‌ ஏட்டுப் பிரதியில்‌ தட்டென்பது கட்டென்று ப்‌றழ இருந்திருக்கக் கண்டு அங்கனமே வைத்து உரை யெழுதி யிருக்கலாமன்‌ றி உகட்டென்‌று வேறு ஓரு நூலிலும் காணப் படாப் பதம்‌ இவர்களுக்குத்‌ தோன்றிப்‌ பொருள் பட்டமை யிறும்‌பூதென்க.-பனை மடற் குதிரை- பனங்கருக்குக்களை வெட்டி. ஒரு குதிரை போலக் கட்டி அதன்‌ மேல் ஏறி நின்று இளையாரைக் கொண்டு. அப்பெண்‌ணிருக்கும் தெருவழியே மூன்று நாள்‌ வரையில் இழுக்கச் செய்து அந் நாட்களுக்குள்‌ ௮ப் பெண்ணைக் கொடா விட்டால்‌ நாலா நாள்‌ மலை மேலேறி விழுந்திருப்பது – ஆண்பால்‌ மடற் கூற்று, பெண் பால்‌ மடலேறுவதற்கு விதியில்லாமையால்‌ பொருந்தாதாயினும் பிற் காலத்தார்‌ இங்கனம் எழுதுதலால்‌ இது புறத் திணையில்‌ அடக்கலாயிற்று,

கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே-கம்ப நாட்டாழ்வாருக்கு ஆழ்வார் முதலிலே பக்தியை உண்டாக்கி -அதனை அபிவிருத்தியாம்படி செய்து – அவரை பிரபந்தம் பாடும்படி செய்வித்தது ஆழ்வாரது திரு அருளே – ஸாந்நித்யம் கால விளம்பம் பொறாமல் -இவ்வாறு கூறும் வகையால் அவரை ஆற்றுதல்

———–

பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே
. 39–

மகிழ் மாறன்‌ – மகிழ மாலை யணிந்த நம்மாழ்வார்‌ பாடி யருளிய,
செய்யுள்‌ – பாடல்களை,
௭ண்ணும்‌-தியானிக்கின்ற,
தகைமைக்கு-தகுதிக்கு ,
உரிய – ஏற்ற,
மெய்‌ – உண்மையான,
யோகியர்‌ – யோக சாதனை யுள்ளவர்களுடைய,
ஞானம்‌ என்னும்‌ கண்ணும்‌- அறிவாகிய மனக் கண்ணும்‌,
மனமும்‌ – உள்ளமும்‌,
செவியும்‌- காதுகளும்‌,
தவஞ்செய்த-தவஞ்செய்‌தன :
காலத்திலே, பண்ணும்‌–குறிஞ்சிப் பண்‌ முதலிய இராகங்களும் –
தமிழும் -தமிழ் மொழியும்‌, தவம் செய்தன
பழ நால் மறையும் -பழைமையான நான்கு வேதங்களும்
மண்ணும் -பூ வுலகும்
விசும்பும்‌ – விண்ணுலகும்‌, தவம் செய்தன-

நம்மாழ்வார்‌ பாடி யருளிய பாடல்களைத்‌ தியானித்தற்குரிய யோகியர்களுடைய ஞானக் கண்‌ணும்‌ மனமும்‌ செவியும் தவஞ்செய்‌தன -காலத்திலே பண்களும் தமிழ் மொழியும்‌ மறையும்‌ மண்‌ணும்‌ விண்‌ணும்‌ தவம் செய்தன வென்‌ தாம்‌.-எனவே யோகியர்‌ இவர்‌ பாடல்களையே கருதுவார்கள் எனவும்‌ இப் பாடல்களுக்கு பண்கள்‌ இன்றியமையாதான எனவும்‌,-தமிழுக்கு இந்நூல் ஒரு ஏற்றமுடையது எனவும்‌, நான்‌கு மறையுமென்றதனால்‌ நான்கு வேதங்களின் சாரமே யிவர்‌ நூல்கள் எனவும் , மண்ணும்‌ விசும்புமென்‌றதனால்‌ இருமைப் பயனும்‌ இந்நூல் அளிக்கும் எனவும்‌ கூறினாராயிற்று, பண்‌ – முற் கூறப் பட்டது, மண்‌, விசும்பு-இட வாகு பெயர்கள்‌,

————-

காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே
. 40–

கடை நாள்‌ – உலகமொடுங்கும்‌ ஊழிக் காலத்தில்‌,
ஆலத்திலே – ஆலிலையிலே,
துயின்றோர்‌ – பள்ளி கொண்டருளிய வாசு தேவர்‌,
கொண்ட. – தாம்‌ எடுத்துக் கொண்ட, ஐயிரண்டாய்‌ அமைந்த -பத்தாக எண்ணப்பட்ட,
கோலத்திலே – வழிவங்களிலே,
முளைத்து – தோன்றி,
கொமுந்து ஓடி – மேலோங்கி வளர்ந்து குணம்‌ கடந்த – மிக்குணங்‌களுக்கும்‌ அப்பாற் பட்டு நின்ற,
மூலத்திலே செல்ல – காரணப் பொருளிடத்திலே செல்‌லும்படி ,,
மூட்டிய ஞானத்து – மெய்ஞானத்தை எமக்குத்‌ தந்தருளிய,
எம்‌ மூர்த்தியை – நம்மாழ்வாரை,
குருகூர்‌- அவர்‌ அவதரித்த திருக் குருகூரில்‌,
காலத்திலே புக்கு – உரிய காலத்திலே புகுந்து,
கைக்கொள்மின்‌ – தரிசித்து நற் பயனைக்‌ கைப் பற்றுங்கள்‌ ;

ஆலிலையில் பள்ளி கொண்ட மாயோனது தசாவதாரங்களில்‌ யீடுபட்டுக்‌ காரணப் பொருளாகிய அவ் வாஸூ தேவனிடத்துச்‌ செல்லும் படியான மெய்ஞ் ஞானத்தை நமக்குத் தந்தருளிய நம்மாழ்வாரை உரிய காலத்திலே சென்று வணங்கிப்‌ பிழையுங்கள்‌ என்பதாம்‌, எல்லாம்‌ அழிந்து முடிவிலும்‌ நிலை பெற்று விளங்குவதால் கடை நாள்‌ ஆலத்திலே துயின்‌றோர் என்றார் -பத்து அவதாரங்களும் கர்மவசம் அல்லாமல் தன்னிச்சையால் எடுத்தமையால் கொண்ட என்றார் -தனக்கு என ஓருபொருளைவிரும்பிலராதலால்‌ கொண்மினோ என்றார்‌. உலகெலாமொடுங்கும் கற்ப காலத்தில்‌ அவற்றை அழியாதபடி மாயோனானவன்‌ தனது திருவயிற்றில் அடக்கி ஆதி சேடன்‌ வடிவான ஆலிலையில்‌ யோக நித்திரை செய்தருளுவன் என்பராதலால்‌ கடைநாள்‌ ஆலத்திலே துயின்றோர் என்றார்‌. ஆலத்தில்‌, அத்து – சாரியை,

————-

மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே
. 41–

முழு ஏழ்‌ உலகை – ஏழுலகம் முழுவதினையும்‌,
முழுகுகின்ற – படிகின்ற,
தீர்த்‌தத்தினை – பரிசுத்தரன கடவுள்‌நிலையையும்‌,
செய்ய – செவ்விய,
வேதத்தினை – வேதங்களையும்‌,
திருமால்‌ பெருமை – சிறந்த மாயோன்‌ பெருமையை,
பார்த்தற்கு – அருச்சுனனுக்கு,
அருளிய – சொல்லி யருளிய,
பாரதத்தை – கீதை யடங்கிய மகா பாரதத்தையும்‌,
பணித்‌தானும்‌ – வெளி யிட்டருளிய வியாஸ முனிவரும்‌,
நின்‌ற- நிலை பெற்ற,
வார்த்தை – திருவாய்‌ மொழியை யுடைய, குருகைப் பிரானும்‌ – குருகூர்‌ நம்மாழ்வாரும்‌, ஆகிய அவ் விருவருமே,
௮ம் மறைப்பொருள்‌-, அந்தப் மறைவா யுள்ள உண்மைப் பொருளை,
கண்டார்‌ – அறிந்தவராவார்கள்‌,

உயிர் நிலை, உலக நிலை, கடவுள் நிலை, என்னும்‌ மூவகை நிலைமைகளையும்‌ நான்கு வேதங்களையும்‌ ஐந்தாம் வேதமாகிய மகா பாரதத்தையும் வெளி யிட்டருளிய வியாஸ முனிவரும்‌ நிலை பெற்ற திருவாய்மொழியைப் பாடி யருளிய நம்மாழ்வாரும்‌ ஆகிய இவ் விருவருமே அந்த மறைவாயுள்ள உண்‌மைப் பொருளை யறிந்தவராவார்கள் என்பதாம்‌. மூவகை நிலையை வேதாந்த ஸூத்திரத்தால்‌ வெளியிட்டமை வெளிப்படை-வேதாந்த ஸூத்திரங்கள் அடங்கிய உதர மீமாம்சையும்‌ வேதமும் பாரதமும் கூறும் பொருள் எல்லாமே இந்தத் திருவாய்மொழி கூறுமெனவும்‌ அந்த வியாஸ முனி போல இந்த ஆழ்வார்‌ மகோபசாரியா யுலகத்துக்கு நன்மை செய்தவரெனவுங்‌ கொள்ளக் கிடந்தமை காண்க,

———

பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே
. 42–

பொருள் –அகப் பொருள்‌.
திணை – பாலை.
கிளவி.-பொருள் வயிற் பிறிவு.
துறை–நெஞ்சோடு மறுத்தல்

(நெஞ்சமே!) குருகூர்‌ புனிதன்‌ -திருக் குருகூரிலவதரித்‌த பரிசுத்தரான நம்மாழ்வாருடைய,
அருளை – கருணையை,
சுமந்தவள்‌ -அடைந்தவளாகிய தலைவியின்‌,
கண்ணின்‌ கடை திறந்து – கடைக் கண்‌ணைத் திறந்து கொண்டு,
ஆறு பட்டு – ஒரு ஆறாகி ,
வெளி பரந்து – வெளியிற் பரவி,
குருளை சுமந்து – காட்டில்‌ விலங்கின்‌ குட்டிகளை அடித்துக் கொண்டு,
ஒட்டரும்‌ – ஓடி வருகின்‌ற,
கொள்ளை வெள்ளம்‌ – மிகுதியான கண்ணீர்‌ வெள்ளமானது ,
உருளை – சக்கரங்களை யுடைய,
மணி சுடர்‌ – இரத்தினங்கள்‌ பிரகாசிக்சின்ற,
தேரை – என்னுடைய தேரை ,
வந்து உதைக்கின்றதே -வந்து தடுக்கின்றதே;
அந்தோ. ஐயோ!
பொருளை… சுவை என்று -சிறப்புடையதென்று கொண்டு,
எங்கே போவது – எப்படி நான் போகலாகும்‌?

நெஞ்சமே நம்மாழ்வார்‌ அருள் பெற்ற நம் தலைவியின்‌ கடைக் கண்‌ணில்‌ நின்‌று வடிகின்ற கண்ணீர்‌ வெள்ளமானது நாம் போகும்‌ வழியில்‌ குறுக்கே வந்து தடுக்கின்றதே! ஐயோ ! நாம்‌ எப்படிப் பொருள்‌ சம்பாதிக்கப் போவது என்பதாம்‌.-குருகூர்ப் புனிதன்‌ அருளைச் சுமந்தவள்‌ கண்ணீர் வெள்ளமானதால்‌ அதற்குத் தப்பி எப்படிப் போவதென்று நெஞ்சத்தோடு கூறிச்‌ செல வழுங்கினான்‌- பிரிவாதலால் பாலை யாயிற்று, தாயத்தால் செய்தது தேவரும்‌ பிதிரரும் இன்புறார்‌? என்பது விதியாதலால்‌ தானே பொருள்‌ சம்பாதித்து அதனால்‌ அறம் செய்ய வேண்டி வேற்று நாடுகளை வென்று அவ் வரசரால் இடுகிற கப்பங்களைப் பெற்று வருதற்குப்‌ போனமையால்‌ பொருள் வயிர் பிரிவென்று பெயராயிற்று, மெய்ப்பாடு–அசைவு பற்றிய பெருமிதம்‌, பயன்‌ நெஞ்சொடு கூறி யாற்றுதல்‌, ஓட்டரும் – ஓட்‌டம் தருமென்பதன்‌ விகாரம்‌.

உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற -பெரியாழ்வார் – ஓட்டம் தந்து என்பதையே ஓட்டந்து என்று விகாரப்பட்டது

ஆழ்வார் கம்ப நாட்டாரை விஷயீ கரித்து திவ்ய தேச யாத்திரை செர்ல்ல யத்தனிக்க
அப்பிரிவை ஆற்றாது நின்ற நிலையை அன்பர்கள் ஆழ்வார் பக்கலிலே விண்ணப்பம் செய்தல் இதுக்கு ஸ்வா பதேசம் –

————

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே
. 43–

பொருள் -அகப் பொருள்
திணை குறிஞ்சி.
கிளவி-இருவரும் உளம் அழிய அவன் வரவு உணர்தல்
துறை -ஆடிடம் புகுதல்

மாறன்‌ – நம்மாழ்வார்‌ அவதரித்த,
குருகை -திருக்குருகூரில்‌,
வஞ்சி – இம்மாதின்‌, கொங்கைகள்‌-.—-.,
வந்து – தோன்றி,
அடி கொண்டன – மார்பில்‌ அடி பரந்து பெருத்தன ;
செம்தடித்து அன்ன – செவ்விய மின்னல் போன்ற,
மருங்கிற்கு- இடைக்கு,
நிற்‌கும்‌ – நிலை நிற்கக் கூடிய,
சிக்கனவு உண்டோ – அக் கொங்கைகளைத்‌ தாங்கும்
வவிமை யுண்டோ ? (இல்லை) ;
என்றால்‌ – கொங்கைப்‌ பெருமனும்‌ இடையின்‌ துவட்சியும்‌ இப்படி யென்றால்‌,
கொந்து – பூங்கொத்‌துக்கள்‌,
அடிக் கொண்ட – சூடப் பெற்ற,
குழலும்‌ – தலை மயிரும்‌,
கலையும்‌- இடையிற் கட்டிய சேலையும்‌,
குலைந்து – நிலை குலைந்து,
அலைய -சோர,
பந்து அடிக்கும் தொறும்‌ – இவள் பந்தடிக்கும் போதெல்லாம்‌,
நெஞ்சம்‌ – என் மனமானது,
பறை அடிக்கின்றது – துடிக்கின்றது

ஆழ்வார்‌. குருகூரில்‌ இம் மாதின்‌ கொங்கைகள்‌ பருக்கின்றன ;இடைக்கு அவற்றைத்‌ தாங்கும்‌ வலிமை யுண்டோ -(இல்லை 😉 இந் நிலைமையில்‌ இவள்‌ குழல் குலைந்து கலைய அலையப் பந்தடிக்கும் போதெல்லாம்‌ என்‌மனந் துடிக்கின்‌றதே யென்பதாம்‌.–இதில் கூறிய படியே : அடிக் கொண் டகுலவுக்‌ கொங்கை’* என்றார்‌ இராமாயணத்திலும்‌. மார்பிடமெலாம் கவர்ந்து வட்டமிட்டு அடி யிட்டு நாளுக்கு நாள்‌ மேல் வளர்தலால்‌ அடிக்‌ கொண்டன வென்றான்‌, வஞ்சி – ஒரு கொடி ; கொடி போன்ற இடை யுடையாளாதலால்‌ அப் பாரத்தை இடை தாங்காதென்னுங் குறிப்பால்‌ வஞ்சி யென்றான்‌. பின்னும்‌ ஆடுதல் நோக்கி ஆற்றாமையால்‌ உண்டோ சிக்கன வென்று வெளிப்படக் கூறினான்‌. பந்தாடுமிடத்திற்‌ புகுந்த தலை மகன்‌ தலைவி பந்தடிப்பதை நோக்கிக்‌ கூறினதாகத்‌ துறை கூறினமையில்‌ இது கிளவியில் அடங்க வில்லை யெனினும்‌ ஒன்றனுள்‌ அடக்க வேண்‌டி யிருத்‌தலால்‌ இருவருமுளவழி யவன் வர வுணர்‌தலின்‌ பாற் படுத்தலாம்‌, மெய்ப்‌பாடு- உவகை, பயன்‌-தலைமகளைச் சார்தல்‌.

இவரது பக்தி வளர்ச்சியும் ப்ராணாமம் முதலிய முயற்சிகள் நிலை குலையும்படி நேர்கிற
பிரபஞ்ச போக லீலைக்கு அவர் உரியர் அல்லாமையும்
அவரது வைராக்யத்தின் முதிர்ச்சியையும் பாராட்டிக் கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்

இடை அழகு -ஒன்றும் பொறாத வைராக்யத்தையே காட்டும்
வேறு ஒன்றின் தொடர்பு உண்டானால் இடையே இல்லாதபடி இடையறாத அன்பின் மிகுதியைக் காட்டும்
கொங்கை பக்தி -பகவத் பாகவத அனுபவ உபகரணம்
வந்து அடிக் கொள்ளுதல் –அதன் முதிர்ச்சி -பரம பக்தியாக பரிணமித்தல்
கொந்து அடிக் கொண்ட குழல் -விதி முறைப்படி செய்யும் பிரணாமம்

கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே.
44–

கனவு ஆயினவும்‌- சொற்பன அவஸ்த்தையின்‌ பகுதிகளையும்‌,
துரியமும்‌ ஆயயையும்‌ – துரியாவஸ்தை முதலியவைகளையும்‌,
கடந்து -தாண்டி,
மனம்‌ வாசகங்களை -மநோ வாக்குகளையும்‌,
வீசிய- கடந்த,
மாறனை – மாறனென்னும்‌ பெயருடையவரும்‌,
மா மறையை- சிறந்த வேதங்களை, வினவாது உணர்ந்த- பிறர் பால்‌ ஒதாமல்‌ உணர்ந்த,
விரகனை -௮றிவுடையோரும்‌,
வெவ்வினையை – கொடிய தீச் செயல்களெல்லாம்‌,
தொலைத்த – போக்கிய,
சினம்‌- கோபத்தை யுடைய,
வாரணத்‌தை -யானை போன்றவரும்‌, குருகைக்கு அரசனை – திருக் குருகூர்க்குத்‌
தலைவருமாகிய நம்மாழ்வாரை,
சேர்ந்தனம்‌ – யாம்‌ சரணமாக அடைந்தோம்‌;

கனவு துரியம்‌ முதலிய ஐந்து ௮வஸ்தைகளையும்‌ தாண்டி எம் மனோ வாக்குக்கு எட்டாத மாறனென்பவரும்‌ ௮ரசனுமாகய நம்மாழ்வாரை நாம்‌ சரணமாக வடைந்தோம்‌ என்பதாம்‌-ஆயினவும்‌ என்பதனால்‌ கனவின்‌ முன்னுள்ள ஜாக்கிரத அவஸ்தையும்‌ பின்னுள்ள சுழுத்திய அவஸ்தையும் கொள்ளப் படும்‌, ஆயவையும்‌ என்பதனால்‌ துரியாதீத அவஸ்‌தையும்‌ கொள்க. அதன்‌ உட்‌ பகுதி பலவாதலால்‌ ஆயவை என்று பன்‌மையாற்‌ கூறினார்‌ ; எனவே ௮வத்தை ஐந்து என்றவாறாம்‌! அவையாவன:– ஜாக்கிரதம் , சொற்பனம்‌, சுழுத்தி, துரியம்‌, துரியாதீதம்‌ என்பன-இவற்றின்‌ பொருள்‌ முறையே விழித்திருத்தல்‌, கனா நிலை , அயர்ந்து தூங்குதல் -உயிர் ஒடுங்கி சமாதி யிருத்தல் கடவுளொடு கலத்தல்‌, என்‌பனவாம்‌. மனத்தால்‌ எண்ணுதற்கும்‌ வாயினால் சொல்லுதவற்கும்‌ எட்‌டாத நிலைமை யாராதலால்‌ மன வாசகங்களை வீசிய மாறனென்றார்‌,-“மயர்வற மதி நலம்‌’ அருளப்‌ பெற்றவராதலால்‌ வினவாது உணர்ந்த விரகனென்றார்‌. சடமென்னும் வாயுவைக் கோபித்தவராதலால்‌ வினை தொலைத்த சின வாராணமென்றார்‌. இது ஒரு பொருள் மேல்‌ பல பெயர்‌ வந்து சோரந்தனமென்ற ஒரு வினையைக் கொண்டது-. யாம்‌-தோன்‌றா எழுவாய்‌,

———-

சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே
. 45–

அவ் வரியினுக்கு – அந்த மாயோனுக்கு,
வேதம்‌- வேதங்களால்‌,
செப்பும்‌- சொல்லப்படுகிற,
பேர்‌ ஆயிரம்‌ – திருப் பெயர்கள்‌ ஆயிரங்களாம்‌;
திண்‌ – வலிய,
பெரும்‌ புயம்‌ – பெரிய தோள்களும்‌, ஆயிரம்‌-ஆயிரங்களாம்‌;
துளவம்‌ பெய்‌- திருத் துழாய வைத்துத்‌ தொடுத்த,
தார்‌- மாலை,
ஆர்‌ – பொருந்திய,
முடி – திரு முடிகள்‌,
ஆயிரம்‌ – ஆயிரங்களாம்‌; (அப்படி யெல்லாம்‌ ஆயிரமாயமைந்தன போல,) குருகூர் – திருக் குருகூரிலவதரித்த ,
சடகோபன்‌ – நம்மாழ்வார்‌,
சொன்ன – சொல்லியருளிய,
ஆரா – தெவிட்டாத,
அமுதம் கவி- அமிர்தம்‌ போன்ற பாடல்‌கள்‌, ஆயிரம்‌ – ஆயிரங்களாம்‌ : (ஆதலால்‌;) பெருஞ்‌ செல்வர்க்கு – பெரிய அனுபோகப்‌ பொருளுடையார்க்கு,
சேராதன உளவோ – அடையப்‌ பெறாதேவைகளும் உண்டோ? -எல்லாம்‌ அடையும்‌ -என்றவாறு –

மாயோனுக்குத் திருப் பெயர்கள்‌ ஆயிரம்‌ ; தோள்களுமாயிரம்‌ ;முடிகளும்‌ ஆயிரம்‌ ; அப்படிப் போல நம்மாழ்வார்‌ பாடல்களுமாயிரம்‌ ;ஆதலால்‌ பெருஞ்‌ செல்வரை யடையப்‌ பெறாதவை யுமுண்டோ ?? எல்‌லாம்‌ அடையுமென்பதாம்‌, உலக குருவாகிய ஸ்ரீ சங்கராசாரியருரை
செய்தருளிய ஏற்ற முடைமையால்‌ ஸகஸ்ரநாமமென்னு நூலைக்‌ கூற வந்தவர் அதன்‌ தயிழ்‌ மொழியாகிய பேராயிரமென்றார்‌, புயமாயிரம்‌, முடியாயிரம்‌- இவற்றிலுள்ள ஆயிரங்கள்‌ மிகுதிப்‌ பொருளன-திண்‌ பெரும்‌ புயம்‌- பண்புத் தொகை ; பன் மொழித் தொடர்‌. இதன்‌ முதலடி. வேற்றுப்‌ பொருள் வைப்பணி –

———–

அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே
. 46–

பொருள் – அகப்! புறப்‌ பொருள்‌. ்‌
திணை-நெய்தல்‌.
கிளவி -தூதில் பிரிவு.
துறை—காமக்‌ கிழத்தி காதல் நிலை கண்டு தாமக் குழிலி பாங்கி தளர்தல் .

முரி – வளைந்த,
வளை- சங்கு பெற்ற, –முத்தும்‌,
சினையும்‌ – அன்னப் பறவை ஈன்ற முட்டையும்‌,
மயங்க – வேறுபாடு தோன்றாமல்‌ கலந்திருக்க (அவற்றை யீன்ற),
வரி வளையும்‌ – கோடுகளுடைய சங்கும்‌,
அன்னமும்‌: அன்னப்‌ பறயையும்‌,
முறை செறுத்து – முறையே கோபிக்க,
தம்மிலே – தங்களுக்குள்ளே,
வழக்கு ஆட – விவகாரம்‌ பேச, (அப்பொழுது), வலம்புரி வளை – வலம் புரிச்‌ சங்கானது ,
ஊடு – அவ்விரண்டின்‌ நடுவிலே சென்று,
அறுக்கும்‌- அந்த வழக்கைத்‌ தீர்த்து விடுகிற,
குருகூர்‌ – திருக் குருகூரிலவதரித்த,
எம்‌ பூர்வலன் -எம்‌ இறைவன்‌,
அரி- வண்டுகள்‌,
வளை- வளைந்து மொய்க்கப்‌ பெற்ற,
பொன்‌ -பொன்‌ போன்ற,
மகிழ்‌ – தமது மகிழம்பூ மாலையை,
அந்தி வந்து – மாலைக்‌ காலத்தில்‌ வந்து, ஆயிழைக்கு – ஆராய்ந்து அணிந்த தணிர் ஆபரண்களை யுடைய தலைவிக்கு,
ஈயும் கொல்‌ – கொடுத்தருளுவானோ ?

குருகூரிலிருக்கும்‌ எம்‌ தலைவன்‌ ௮ந்திச்‌ காலத்தில்‌ வந்து எம்‌ தலைவிக்குத்‌ தன்‌ மகிழ மாலை அளிப்பானோ என்பதாம்‌.-முத்தும்‌ சினையும்‌ வேற்றுமை தெரியாமல்‌ ஒரு தன்மையா யிருக்கக்‌ கண்டு மாறுபாடாய்‌ ஒன்‌றனை ஒன்று எனது எனது என்று முத்தைப்‌ பெற்ற சங்கும் சினையைப்‌ பெற்ற அன்னமும்‌ வாது கூறலும்‌ இடையிலே வலம்புரி சென்று
விலக்கி விடும்‌ நாடெனவே இரண்டு அரசர்‌ தம்முள்‌ மாறுபட்டுப்‌ போர்‌ தொடங்க எத்தனித்த பொழுது இடையில்‌ இத் தலைவன்‌ இருவரையும்‌ சமாதானப் படுத்த வேண்டித்‌ தூதிற்குக்‌ சென்றானென்பதை உள்ளுறை யுவமையாற்‌ கூறியது காண்க, ”ஓதலுர்‌ தூதும் உயர்ந்தோர்‌ மேன *என்‌றமையால்‌ அரசர்க்குத்‌ தூது போகலுரித் தென்க.–தூதில் பிரிவு கற்பிற்‌ குரியதனால்‌ தலைவி மாலை வேண்டாளென்பது தெளிவாகும்‌; ஆகவே இங்குக்‌ காமக் கிழத்தியே மாலை வேண்டற்‌ குரியவளாவாள்‌,கிளவித் தலைவன்‌ மாலையைச்‌ சுட்டிக்‌ கூறினமையாலிது அகப் புறமாயிற்று,-இரங்குதலால்‌ திணை – நெய்தலாயிற்று, காமக் கிழத்தியாவாள்‌ – சேரிப் பரத்தையின்‌ மசளாகித்‌ தலைவனைத்‌ தானும் மணந்துகொண்டு வேறு ஓருவரையும்‌ விரும்பா நிலையி லிருப்பவளென்க

கம்ப நாட்டாழ்வாருக்கு மனக்கண்ணில் சேவை சாதித்து மறைந்த ஆழ்வார் இடம் பிரிவாற்றாமையாலே-அவர் ஸதா ஸாந்நித்யத்தை அபேக்ஷித்து ஆதாரத்தோடு கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்-அரிவளை பொன் மகிழ்–சார க்ராஹிகள் மிக விரும்பி விடாத தம் காட்சி இன்பம்-ஆயிழை -ஆத்ம பூஷணம் -ஸத்குணவாதி-அந்தி வருதல் -உரிய சமயத்தில் உபேக்ஷியாது வருதல் –

———–

புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கடை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே.
47–

பொருள் -அகப் பொருள்
திணை – நெய்தல்‌.
கிளவி -ஒரு வழித் தணத்தல்
துறை –சென்றொன்‌ நீடலில் , காம மிக்க கழிபடர்‌ கிளவி ,

எம்‌- எம்முடைய,
உறு- மிக்க ,
துரை பிறவி- விரைந்து பற்றுகிற பிறவிகளை,
துடைத்து – போக்கி ,
ஆட் கொண்ட – என்னை அடிமையாகக் கொண்ட,
தொண்டர் பிரான் – அன்பர்களின்‌ தலைவரான நம்‌மாழ்வார்க் குரிய,
துறை நீர்‌ பொருநை -துறைகள் பொருந்திய நீரையுடைய தாமிரபருணி யாற்றின்‌,
கரை துடைக்கும்‌ – கரையை மோதுகின்ற,
கடலே- சமுத்திரமே!
புரைதுடைத்து – எனக்குள்ள காமமாகிய துன்பத்தைப்போக்கி ,
பெரும் பொய்யும்‌ துடைத்து – தாம் சொல்‌லும்‌ வார்த்தைகளில்‌ பொய்யில்லாத படி போக்கி,
பிறர் புகலும்‌- அயலார்‌ கூறுகின்ற,
உரை துடைத்து – பழிச் சொல்லுகளுக்கும்‌ இடங்கொடாமல் போக்கி ,
௮ங்கு- புன்னை மரச் சோலையாகிய அவ் விடத்தில்‌,
உள்ள -யாம் கட்டியுள்ள,
ஊசல்‌ – அறுந்து போனகொடி ஊஞ்சலை,
துடைத்த -மீட்டும் கட்டி. அதிலுள்ள வருத்தத்தைப் போக்கின,
அன்பர்‌ – எம்‌ தலைவருடைய.
கால் சுவடு – சேர்க்கால் சென்‌ற வழியை, துடையேல்‌ – அழித்து விடாதே கொள்‌;

கடலே! எம் தலைவர் வந்து சென்ற தேர்க் காலின்‌ சுவட்டைத் துடைக்‌காதே என்பதாம்‌–கைக்கிளையில்‌ தலைவனை நோக்கியவுடன்‌ தனக்குண்‌டாகிய காமத் துன்பத்தைத் தரிக்கினமையால்‌ புரை துடைத்தென்றாள்‌-கடல் தெய்வச்தைக் காட்டி உன்னைப் பிரியேன்‌ என்று சத்தியஞ் செய்ததினால் தான் வேறு கருதாதபடி மெய்யென்பாள்‌ பொய்யுந் துடைத்தென்றாள்‌-பிரிந்தால்‌ தலைவிக்கு வேறு பாடுண்டாகுமே- அதனைப்‌ பிறர் கண்‌டால்‌ பழிப்புக்கு இடமாகுமே யென்று பிரியாதிருந்தமை தோன்றப்‌ பிறர் புகலமுரை துடைத்தென்றாள்‌. ஊசல்‌ -அடும்பு முதலிய கொடிகளை ஒன்றாகத் திரித்து மரக்கிளைகளில் கட்டித் தொங்கவிட்டு அதிலே ஊஞ்சலாடுதல்‌ இக் காலத்திலுமுளது – இரங்கலால் நெய்தற்றிணை யாயிற்று,-தலைவியைப் புணர்ந்த பின்‌ தலைவன்‌ யாதேனும்‌ ஒரு காரியத்தின்‌ மேற் பிரிகின்றது ஒரு வழித் தணத்தலாம்‌-அங்கனம் பிரிந்த தலைவன்‌ குறித்த நாளில்‌ வாராமல்‌ தாமதித்ததனால்‌ தலைவி கடலை நோக்கிப்‌ புலம்புவது துறையின்‌ கருத்து – இது போல நேர்ந்த நம் காதலர்‌ நேமி நெடும் திண்டேர்‌,ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடலோதம்‌ ‘என்றார் பிறரும்‌-கை கோள்‌ – களவு,-கூற்று- தலைவி கூற்று, காலம்‌ -எதிர் காலம்‌, மெய்ப்‌பாடு- அழுகை. பயன்‌ – -கடலொடு புலம்பி யாற்றுதல்‌.

ஸம்ஸார ஆரணவத்தை நோக்கி கம்ப நாட்டாழ்வார் தமது மநோ ரதம் அழியாமல் இருக்க
பிரார்த்திப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –கடலில் நதி கலப்பது -ஆழ்வார் சம்பந்தத்தை இந்த லீலா விபூதிக்குக் காட்டி உறவு கொண்டாடின படி-

———-

சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே
. 48–

பொருள் — அகப் பொருள்
திணை – நெய்தல்‌
கிளவி -ஒரு சார் பகற் பகுதி
துறை–பாங்கிபுலம்பல்

நங்காய்‌- பெண்ணே !
படர்‌ – துன்பத்தைச் செய்கின்‌ற
௮ந்தி – மாலை வேளையாகிய இப்பொழுது,
வானம்‌ – ஆகாயமெங்கும்‌,
இருள்கின்‌றதே – இருள் மூடுகின்‌றதே ; இரண்டு கவடு இற – தலையில்‌
கவையாயுள்ள இரண்டு கட்டுத் தறிகளையும்‌ ஒடியும் படியாக,
கட்டிய -கட்டி யிருக்ற,
பாசத்தளை – அன்பாகிப சங்கிலிகளை, கண்பரிந்து-அறுத்தெறிந்து,
தொடர்‌ – தன்னைத் தொடர்ந்த,
ஆசை களிற்றை-ஆசையாகிய யானையை, சுவடு இறக்க – ௮டிச் சுவடு தெரியாமல்‌ ஓடிப்‌ போம்படி,
தொடர்ந்து – பின் தொடர்ந்து வெருட்டி, சங்கம்‌ – தமிழ்ச் சங்கமாகிய
குவடு இற – மலையானது சிதறும்படி,
குத்திய – குத்திப் பெயர்த்த,
மாறப் பெயர்‌ -மாறனென்னும் பெயருடைய,
கொலை யானை -கொலை செய்ய வல்ல யானையானது, (இன்று),
இவள் திறத்து- இவள்‌ நிமித்‌தமாக, ஒன்றும்‌- வருமோ?

நங்கையே ! அந்தி வானமிருண்டு விட்டதே ; சுற்றத்தாரிடத் தெழுகின்ற ௮ன்பாகிய சங்கிலியை அறுத்தெறிந்து தன்னைத் தொடர்ந்த ஆசையாகிய யானையை அடி தெரியாமலோடிப் போம்படி வெருட்டி சங்‌கமாகிய மலையைக் குத்திப் பெயர்த்த மாறனாகிய கொலை யானை இவள் நிமித்தமாக இன்று வருமோ? என்பதாம்‌. பேருணவைக் கொள்கின்ற யானை போல பெரும் பொருளைப் பற்ற விரும்புவதனால்‌ ஆசையை யானையாக உருவகப் படுத்கினார்‌, இரண்டு கவடு இற -உட் பகை புறப் பகை யாகிய இரண்டு வஞ்சனையும்‌ அழிபட எனவுமாம்‌, சுற்றத்தை நீங்காமல்‌ பிணித் தலால்‌ அன்பைத் தளை யென்றார்‌. சினந்து மலையை முட்டிப் பெயர்த்தல்‌ யானைக்கியல் பாதலால்‌ ஆழ்வார்‌ பாடல்‌ – சிறு சங்கத்தவரை வென்றமை தோன்ற அதனை மலையாகக் கூறினார்‌. அன்னியமான பொய்ச் சமயங்களை அழித்தலினால்‌ ஆழ்வாரைக்‌ கொலை யானையாகக் கூறினார்‌ -எனவே இத் துறை முழுதும்‌ உருவகமாகச்‌ கூறினமையால்‌ முற்றுருவகமாயிற்று,-இரங்கலால்‌ திணை நெய்தலாயிற்று,இருவரையும்‌ மணஞ்செய்விக்க எண்‌ணிய தோழி அவ் விருவரையும்‌ குறியிடத்துச் சேர்ப்பியாமல்‌ தந்திரஞ் செய்தலால்‌ தலைவன் புலந்து அப்பால்‌ போதலும்‌ மற்றையோர் கூற்று நிகழ்‌தலின்‌ ஒரு சார் பகற் குறியாயிற்று.

ஆழ்வார் உரிய காலத்தில் வந்து கைக்கொள்ளுவார் என்பதே ஸ்வா பதேசம் –
கொலையானை -ராமானுஜ முனி வேழம் போல் -வி பக்ஷிகளை சித்ரவதை பண்ணவும்
தாம் பரிக்ரஹித்தவர்களை பட்டாபிஷேக யோக்யராம் படி பண்ணவும் வல்லவர் –
இந்த யானைக்கு மதம் -ப்ரஹ்மானந்தம்-சங்கக் குவடிறக் குத்திய மாறன் -சங்கப்பலகையில் கண்ணன் கழலிணை -ஏத்தி புகழ்ந்த ஐதிக்யம் அனுசந்தேயம்

————-

இருளாய்ப் பரந்த உலகங்களை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே
. 49–

இரவி அது தான்‌ – குரியனானது.
பொருள்‌ ஆய்‌ பரந்த -காணும்‌ பொருளாகி,
பொது நிற்றலின்‌ – பொதுவாய்‌ நிற்றலினால்‌,
இருள்‌ ஆய்‌ பரந்த – இருள்‌ மிகுத்துப்‌ பரவிய,
உலகங்களை – உலகங்களை யெல்லாம்‌,
விளக்கும்‌ – அவ விருளைப்‌ போக்கி விளங்கச்‌ செய்யும்‌ ;
அது போல்‌ – ௮தனைப் போல,
மருளாய்‌ – மனமயங்கும்படி,
பரந்த – பரவிய,
மயக்கம்‌- மாயையினது ,
துயக்கு அற்ற – துன்பம்‌ நீங்கப் பெற்ற
கோன்‌ மாறன்‌ – எங்கள்‌ தலைவரும்‌ மாறனென்னும்‌ பெயருடைய வருமாகிய நம்மாழ்வாருடைய,
அருளால்‌ – கருணையினால்‌,
சமயம்‌ எல்லாம்‌- எல்லாச் சமயமும்‌,
பரன்‌ உண்டு என்று – தங்களுக்கு நாராயணனே முதற் கடவுளாக உளனென்று,
அறிவு உற்றது – அறிந்து கொண்டது.

சூரியன்‌ தான்‌ பொதுவாய்‌ நின்று உலகத்தின்‌ இருளைப் போக்கிப்‌ பொருள்களை அறிவிக்கும்‌; அதே போல நம்மாழ்வார்‌ கருணை யானது எல்லாச்‌ சமயத்தவர் களிடத்திலுமுள்ள அஞ்ஞானத்தை நீக்கி மெய்ப்‌ பொருளைத் தெரிவித்தலால்‌ எல்லாரும்‌ நாராயணனே முதல் கடவுளாக உளன் என்றும் அறிந்து கொள்ளலாயிற் றென்பதாம்‌. எல்விதத்தாலும்‌ நீங்குதில௫மை நோக்கி மருளாய்ப்‌ பரந்த மயக்கென்றார்‌. பிறந்த பொழுதே பற்றின்றி நின்றமையால்‌ துயக்கற்ற மாறனென்றார்‌. விளக்கும்‌-மிகவும்‌- விரித்தல்‌ விகாரம்‌. அது – பகுதிப்‌ பொருள்‌ விகுதி, தான்‌-சாரியை, மற்று -அசை நிலை. எல்லாம்‌- தொகுதி யொருமை யாதலின்‌ ஒருமை முடிபு கொண்டது,–வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ

———-

அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே
. 50–

மற்றை- வேத சம்பந்த மில்லாத,
ஆகம வாதியரை – ஆகம நூல்களைக் கொண்டு வாதம்‌ புரிவோரை,
செறிவேன்‌ என – யான்‌ அடைவேனென்று, ஒன்று – இவ்விஷயத்தினை
சிந்தை செய்யாது – கருதாமல்‌,
செய்தாரை இல்லா-ஒருவராலும்‌ செய்யப்படாத,
நெறி .-நல்ல வழி கூறுகின்ற,
வேதம்‌ – வேதத்தில்‌,
நின்ற- பொருந்தியுள்ள,
நிலை – தத்துவ நிலைகளை,
உணர்ந்தோன்‌ – ௮றிந்தவரான நம்மாழ்வார் அவதரித்த,
குரு கூர்‌ நிலத்தை – திருக்குருகூரென்னும்‌ திவ்விய தேசத்‌தை,
பிறிவேன்‌ எனவும்‌ – நான்‌ பிரிந்து போவேனென்றும்‌,
எண்ணாது-நினையாமல்‌,
என்னை— ௮ வீடு பெறுத்தினை -மோக்ஷத்தைப்‌ பெறச்‌ செய்தனை யாதலால்‌,
௮றிவே- எனது அறிவே !
உனை – உன்னை,
தொழுதேன்‌ – வணங்குகின்றேன்‌ ;

ஆகம வாதியரை நான்‌ சேர்வேனென்று நினையாமலும்‌ ஆழ்வார்‌ குருகூரைப்‌ பிரிவேனென்‌று எண்ணாமலும்‌ எனக்கு மோஷம் அடையச்‌ செய்தனை யாதலால்‌ ௮றிவே ! உனைத்‌ தொழுதே னென்பதாம்‌, மற்றை யாகம மென்றதனால்‌ அங்கம் , பூர்வம்‌, பகுசுருதி’ என்கின்‌ற சைனாகம் முதலியவற்றை என்க . வேதம்‌ அனாதி யாதவால்‌ செய்தாரையில்லா மறை யென்றார்‌, நின்ற நிலை- நாராயணனுக்‌கே பரத்வம் கூறிய நிலை. பிறிவேன்‌, பிறி- பகுதி,

நெஞ்சமே நல்ல நல்ல உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் போல் இங்கு தமது உணர்வைக் கொண்டாடுகிறார்

———

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே
. 51–

குறும்பு ஆக்கிய -பெரியோரால்‌ இவை குற்றமென்று நீக்கப் பட்ட,
முப்பகை தவிர்த்து – காமம்‌ வெகுளி மயக்கம்‌’ என்னும்‌ மூன்று உட் பகைகளைப் போக்கி,
ஆண்ட – அடிமை கொண்ட
குருகை மன்‌ -திருக் குருகூர்த் தலைவராகிய நம்மாழ்வார்‌,
பிறர் பால்‌ – அன்னியரிடத்‌தில்‌,
வெறும் பா கிளத்தி- பயனற்ற பாடல்கள் பாடி,
மெலிகின்ற என்னை – தளர்கின்றேனும்‌,
வினை – வினையானது.
கொடு போய்‌ – கொண்டு சென்று,
எறும்பு ஆக்கிய -எறும்பளவாகச் சிறுமைப் படுத்திய,
தமியேனை – தனிமையேனுமாகிய என்னை,
அமரர்க்கும்‌ – தேவர்களுக்‌கும்‌,
ஏற விட்டான்‌ -மேலாகச் செய்தருளிவிட்டார்‌ ; (ஆதாலால்‌), பெறும்‌ பாக்கியம்‌ உள்ள போதும்‌ -ஒருவர் பெறக்கூடிய செல்லமுள்ள காலத்தில்‌,
பிழைப்பும்‌ – அதற்கு ஒரு கெடுதியும்‌, உண்டே-உண்டாமோ? [இல்லை.].

குருகூர்‌ நம்மாழ்வார்‌ மெலிகின்றேனும்‌ தமியேனுமாகிய என்னை அமரரிலு மேலாகச் செய்து விட்டாராதலால்‌ ஒருவர்‌ பெறக் கூடிய செல்‌வமுள்ள காலத்‌தில்‌ அதற்கொரு கெடுதியமுண்டாமோ?இல்லை யென்பதாம்‌. பிறரைப் பாடி இம்மைப் பயன் சிறிது பெற்றாலும்‌ மறுமைக்குப்‌ பயன் படாமையால் வெறும் பா என்றார்‌. எறும்பு – சிறுமைப் பொருள் உணர்த்தற்குக் கூறினார்‌. தீ வினையில்‌ தனக்கு ஒத்தவரில்லை யென்பார்‌.
தமியேனென்றார்‌. அமரர்‌ – அமிருத முண்டு சரவாமலிருக்கப் பெற்றதனால்‌ அமரெனப் பட்டார்‌. காமம்‌ -வேறொரு பொருளின் மேல் செல்லும்‌ பற்றுள்ளம்‌, வெகுளி-கோபம்‌, மயக்கம்‌- ஒன்றனை வேறொன்றாகக்‌ க௫துதல்‌.-ஆளுகைக் குரியோர் அரசர் என்பது தோன்ற ஆண்ட மன்னென்‌றார்‌. போது -பொழுது என்பதன் மரூ௨. உண்டே, ஏ- எதிர்மறைப்‌ பொருள் பட நின்றது -கொடு -கொண்டென்பதன் தொகுத்தல் விகாரம்‌-அமரர்க்கும்‌ – ஜந்தனுருபு மயக்கம்‌; எல்லைப் பொருளது, மன்‌ -எழுவாய்‌,”விட்டான்‌ – பயனிலை, இதன்‌ முதலடி. வேற்றுப் பொருள் வைப்பணி,

விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -என்றுமாம் –

அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –

——–

குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே.
52–

எம்மை- எங்களை,
உள்ளும்‌ சுற்றும்‌ – உள்ளேயும் சுற்றிக் கொண்டிருக்கிற,
கூர்‌ – மிக்க.
இருவினையும்‌ – நல்வினை தீவினையாகிய விரண்டும்‌,
௮றுத்து- போக்கி ,
இற பார்க்கும்‌- அவைகளழியும் படியாகப்‌.
பார்கின்‌ற,
இயற்கை- இயற்கையானது
குருகூர் நகர்‌- -திருக் குருகூரென்னும் பதியில்‌,
எம் பிரான்‌ – எழுந்தருளி யிருக்கிற தலைவரான ‘ நம்மாழ்‌வார்க்கு,
அடியாரொடு- தொண்டருடன்‌,
கூடி – சேர்ந்து
இன்புற்று -மகிழ்ந்து
ஒரு கூரையில்‌ — ஒரே விட்டினுள், உறைவார்க்கும்‌ – வசிக்கின்‌ எங்களுக்கும்‌,
உண்டு- உண்டாகும்‌) (அப்படீப்பட்ட இயற்கையானது ),
அவ் வூர்‌ அருகூர்‌- இந்த அடியாரிருக்கிற ஊருக்கு அருகிலுள்ள ஊரிலிருப்‌பார்கும்‌,
அருகுஇல்‌ – அவர் விட்டின்‌ சமீபத்திலுள்ள,
அயல் அயலார்க்கும் – – அயல் விட்டுக்கயல் வீட்டிலுள்ளவர்‌க்கும்‌,
அரியத்ன்று -அரியதொரு காரியமில்லை ;

எம்மைச் சூழ்ந்துள்ள இரு வினைப் பற்றை யொழிக்கு மியல்பானது நம்மாழ்வாரின் அடியவரோடு வாழ்கின்‌ற வெமக்குண்டு ;அவ் வியல்பானது அவ் வூருக்கு அயலூர்‌ அவ் வீட்டுக்கு அயல் வீடு இவற்றிலிருப்பவர்களுக்‌கும்‌ அரியதொரு காரியமில்லை என்பதாம்‌. உண்டே, ஏ-தேற்றம்‌. உள்‌ளும்‌, உம்‌- இறந்த தழுவிய வெச்சம்‌, இறப்பு ஆர்க்கும்‌ என்று பிரித்‌து
இரத்தலைச் செய்யும்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌, அவ் வூர்‌ – அடியாரிருக்கும்‌ ஊரென்பதே பொருந்திய வுரை,

அருகு ஊர் -நவ திருப்பதிகள்
அசலூர் -திரு வழுதி வள நாட்டில் உள்ளவை
அதன் அயலார் -ஆழ்வார் சம்பந்தம் உடையார் அனைவரும்
இரண்டு ஏவகாரங்களும் தேற்ற ஏவகாரம்-

——————–

அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே
. 53–

பொருள்‌–அகப் புறப் பொருள்‌.
திணை–பெருந்திணை ,
துறை–மாலையால்‌ வந்த வருத்த முரைத்தல்‌.

அன்றாத- பகைமை கொள்ளாத, அன்றிலையும்‌ – அன்றிப் பறவைகளையும்‌,
அன்றுவித்து – பகைமை யாக்கி,
என்னை–அன்னையுடன்‌ – தாயோடு, பின்றாத வண்ணம்‌ எல்லாம்‌ -மாறுபடாத வகை யெல்‌லாம்‌,
பின்றுவித்து – மாறுபடச் செய்து, பிறைக்கொழுந்தை -இளமையாகிய சந்திரனை,
ஒன்றாத வண்ணம்‌ – என் மனத்தோடு பொருந்தாதபடி,
உபாயம்‌ இயற்றியது – தந்திரஞ்செய்தது , (யாதோம வெனில்‌?)
ஊழ் வினையை-பழ வினைத் தொடர்சியை,
வென்றான்‌- நீக்கினவராகிய,
குருகைப் பிரான்‌ -திருக் குருகூர் நம்மாழ்வாருடைய,
மகிழே௮ன்‌றி-மகிழ மலர் மாலையே அல்லாமல்‌,
வேறில்லை – வேறு ஓன்று மிப்படிச் செய்ய
வில்லை ;

தலைவனைப்‌ பிரிந்த தலைவிக்கு அன்‌றில் கத்தற வோசை செவியிற்‌ பட்டால்‌ விரகத்தை யதிகப்படுத்து மென்பது பற்றி அன்றிலை விரோதப்‌ படுத்தி என்றார்‌. தலைவனைப் பிரிந்திருக்கும் பொழுது உள்ளம்‌ தலைவனிடத்தே செல்லுமாதலால்‌ அப்பொழுது அருகிலிருந்த தாய்‌ கேட்பதற்குத் தக்க விடை கொடாமை பற்றி அன்னையுடன்‌ விரோதப் படுத்தி என்றார்‌. பிரிந்தார்க்கு நிலவு வருத்தத்தைச் செய்யுமாதலால்‌ அதனையும்‌ விரோதித்து என்றார்‌. ௮ன்றுதல்‌ – விரோதித்தல்‌; ௮ன்றுவித்‌து , வி -பிற வினை விகுதி, வென்றான் – வினைப் பெயர்‌, மகிழே, ஏ-தேற்றம்‌,-அன்றி. எதிர்மறை வினை யெசசம்‌. வேறு இல்லை – குறிப்பு முற்றுக்கள்‌.

ஆழ்வார் மனக் கண்ணில் தோன்றி பாஹ்ய ஸம்ச்லேஷம் பெறாமல் வருந்தி அருளிச் செய்யும் பாசுரம் இது –

———

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே
. 54–

செந் தமிழ்ப் புலவர்க்கு எறே – செவ்விய தமிழ் பயின்‌ற வித்‌துவான்களுள்‌ சிங்கம் போன்றவரே –
யெதிகளுக்கு-முற்றத்‌ துறந்த முனிவர்களுக்கெல்லாம்‌,
இன்‌ – இனிமையாகிய,
அமுதே – அமிர்தம் போன்றவரே ! எறிநீர்‌-௮லை வீசுகின்‌ற நீர்ப் பெருக்கை யுடைய,
பொருநை யாறே-தாமிர பருணி நதியானது ,
தொடர்‌ – தொடர்ந்து வரப் பெற்ற,
குருகூர்‌ -திருக் குருகூரிலுள்ள,
மறையோர்‌ – அந்தணர்கள்‌,
பெற்ற- ௮டையப்‌ பெற்ற,
ஆணிப் பொன்னே -மாற்றறியும் பொன் போன்‌றவரே !
‘இவன்‌-இந்தக் கம்பன்‌,
நமக்கு வேறே -நமக்கு ௮ன்னியனானவனே,
அன்‌புடை- அன்பு பொருந்திய,
மெய்யடியானென்று -உண்மையான அடியவனென்‌று
உள்ளம் தேறேன்‌ -நான் மனத்தில் தெளிய மாட்டேன்‌.’
எனல்‌ – என்‌று தள்ளாதொழிக;
௮து தேறத் தகும்‌- ௮து நம்ப வேண்டிய காரியமாகும்

ஏறே! ௮முதே ! குருகூர்ப் பொன்னே ! இவன் வேறானவனென்‌றும்‌ இவனைத் தெளிய மாட்டேனென்றும்‌ சொல்லா தருள்செய்க, அது நம்ப வேண்டிய காரியமாகுமென்பதாம்‌. எல்லாரிலும்‌ சிறந்தமை பற்றி ஏறென்றார்‌; அழியா வாழ்க்கை கொடுத்தல் பற்றி அமுதென்றார்‌ ; பிறர்‌ கவியின்‌ ஏற்றத் தாழ்வுகளை அறிதற்க்குத் தக்க பாடல்கள்‌ செய்தமையால்‌ வேறு பொன்னை யறியு மாற்றுப் பொன் என்றார்‌. இம் மூன்றும்‌ உவமை யாகு பெயர்‌, எனல்‌ – எதிர் மறை அல்லீற்று வியங்கோல் – தகும்‌ – இது தொழிற் பெயராய்த் தேற்றப்‌ பொருள் பட்டு நிற்கும் சொல்-

——

பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே
. 55–

பெரும்‌ – பெரிய,
தண்‌ – நீர் வளமிக்க ,
குருகூர்‌ – திருக் குருகூரி லவதரித் தருளிய,
தென்‌ – சென் திசைக் கண்ண தாகிய,
ஐ- அழகிய,
உரைக்கும்‌ – தமிழ் மொழிக்கும்‌,
இயற்கும்‌ – ௮தன் பகுதியாகிய இலக்கணத்திற்கும்‌,
இசைக்கும்‌ – இசைத் தமிழ்க்கும்‌,
சிகா மணியே -சிரோ ரத்தினம்‌ போன்றவரே!
பொன்னை –உரைப்பது -உரைத்து மாற்றுப் பார்ப்பது,
௮ – அந்த, பொன்னொடு அன்றே – பொன்‌
னுடனே யல்லவோ ? (பார்ப்பது ),
புலமைக்கு – கல்வி யறிவிற்கு,
உயர்‌-உயர்ரந்த,
நாற் காவியும்‌-ஆசு மதுர சித்திர வித்தாரக கவிஞர்களையும்‌,
பின்னை-கடைசித்தரத்தில்‌,
உரைக்கப் பெறுவது அல்லால்‌ – சொல்லத் தக்கதே யல்லாமல்‌,
உன்னை உரைத்து – முதலில்‌ உம்மைக் கூறி,
உரைத்தற்கு-உமக்கு ஒப்பாக உரைப்பதற்கு,
ஒருவர்‌ – வேறொருவர்‌,
உளரோ -இருக்கிறார்களோ ?

குருகூர்ச் சிகா மணியே 1! பொன்னை மாற்றுப் பார்ப்பதென்றால்‌ பொன்னோ டன்றோ வுரைத்துப் பார்ப்பது; அதுபோல உம்முடைய பெருமையை அறிவதென்றால்‌ உம்மோடொத்த ஒருவரைக் காட்டி யன்றோ அறிய வேண்டும்‌ அப்படி யார் இருக்கிறார்கள்‌ ? ஒருவருமில்லையே யென்பதாம்‌. நாற்கவி -திரு மங்கை யாழ்வாருமாம்‌, புலமை- பல வேறு வகைப்பட்ட நாலுணர்ச்சி களெல்லாம்‌ ஒருங்கே கொண்ட பேரறி வுடமை, ஏனைய மொழிகளைப் போலாகாமல்‌ சிறந்த பொருளிலக்கணத்தைத் தன்னிடதில்‌ கொண்டிருத்தலால்‌ ஐயுரை யென்றார்‌, ஆழ்வார்‌ பிரபந்தத்தில்‌ இலக்கண அமைதி மிக்கிருத்தலாலும்‌ அப் பிரபந்தம்‌ பண்‌ணோடு’ பாட அமைந்திருத்தலாலும்‌ அவ் விடயங்களைச் கொண்டு இயற்‌கும்‌ இசைக்கும்‌ சிகாமணி யென்றார்‌,-இதன் முதலடி. எடுத்துக் காட்டு வமையணி,

தமிழுக்கு தென் மொழி -தென் சொல் -தென் காலை போல் தென்னுரை என்றும் உண்டே
ஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு -பெரிய திருமடல்-குருகையர் கோன் யாழின் இசை வேதத்து இயல் -என்பதால் சிகாமணி-

———

மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே.
56–

மறம்‌ – பல்வரிக் கூத்தில்‌ ஒன்று ; ௮து தான்‌ மறவரின்‌ மகளை விரும்‌பி விட்ட ௮ரசனது தூதனை நோக்கிக் கடிந்து மறவரியல்பு தோன்றக் கூறுவன, வரிக் கூத்து – நாடகத் தமிழ்‌ நூல்களிற்‌ காண்க,-பல்‌ வரிக்‌ கூத்திற்‌ சில வுறுப்புச்கள்‌ கலம்பக முதலியவற்றிற்‌ காணலாம்‌.

சுருதிப் பொருளை – வேத ப்பொருள்களை,
தமிழால்‌ – தமிழ்ப்‌ பாடல்களால்‌,
பணித்தான்‌ – பாடி யருளினவரும்‌,
எம்‌ – எம்முடைய,
வினையை – தீய வினைகளை, :
துணித்தான்‌ – போக்கின வருமாகிய,
குருகைப் பிரான்‌ – குருகூர்‌ நம்மாழ்வாரின்‌,
பணி அன்றெனில்‌ – கட்டளை யில்லை யென்றால்‌, (எம்‌ பெண்ணை விரும்பிய), மணித்தார்‌ – இரத்தின மாலைகளணிந்த, ௮ரசன்‌ தன்‌-௮ந்த அரசனது,
ஒலையை- திருமுகத்தை,
தூதுவன்‌ – அதனைக் கொணர்ந்த தூதுவனது ,
வாய்‌ வழியே திணித்து -வாயில் வைத்து நன்றாக அடைத்து ,
ஆசு – ‘பெண்ணைக் சொடு’ என்ற
குற்றமெல்லாம்‌,
அழிய – நீங்கும்படி,
தலையை – அத் தூதுவன்‌ தலையை,
சிதைமின்‌ – வெட்டி யெறியுங்கள்‌ ;
எம் பாவையை – எமது பாவை போல்‌வாளாகிய பெண்ணை,
கொள்ளும்‌ கொள்ளும்‌- நன்றாகச்‌ கொள்வானே போலும்‌

வாயைத் திறந்திருந்தால்‌ – பேரிரைச்சலிடு வானாதலின்‌ முதலில்‌ வாயை அடையுங்களென்றதாம்‌. ஆழ்வாருக்கு அடிமை யென்‌றறிந் திருந்தும்‌ பெண் கேட்க வந்தது குற்றமாதலின்‌ ஆசென்றதாம்‌; ** மாதரைக் கொன்றுளார் களுளரென வரினும்‌ வந்த, தூதரைசக் கொன்றுளார்கள்‌ யாவரே தொல்லை நல்லோய்‌” என்‌றபடி தூதரைக் கொல்லலாகாதே யெனின்‌ அது அறப் போர்க்கே யன்றி மறப் போர்க்கில்லாமையால்‌ வதைக்க அமையுமென்க . கொள்ளும்‌ கொள்ளும்‌ – வெகுளி பற்‌றி வந்த அடுக்கு, பாலை -உவமை யாகு பெயர்‌ : இது கொல்லி மலையில்‌ தேவரும்‌ முனிவருஞ்சேர்ந்து உறையும் காலத்து அங்கு வந்து துன்புறுத்‌திய ௮சுரரை மயக்க வேண்டித்‌ தேவ தச்சனால்‌ யந்திரத்தோடு செய்து வைத்திருந்ததொரு பெண் வடிவம்‌ ; இது அவ் வசுரரைக் கண்டால்‌ சிரித்‌து மயக்கிக் கொல்லுவது –

————

பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே.
57–

திருவாய்மொழி பழத்தை -திருவாய்மொழி யென்னுஞ்‌ சுவை யுள்ள கனி போன்றதும்‌, பசுங்கற்பகத்தின்‌ – பசுமையாகிய கற்பக மரத்தினது,
பூவை – மலர் போன்றதும்‌,
பொருகடல்‌ – மோதுன்ற கடலில்‌ நின்றும்‌,
போதா – வாராத,
அமுதை – அமுதம் போன்றதும்‌,
பாவை-பாடலாகியுமுள்ள,
பொருள்‌ – நால் வகைப்பொருளையும்‌,
சுரக்கும்‌ – ஊற்று மாறாதே பெய்வதாகிய,
கோவை பணித்த – காம தேனுவை யொத்த,
எம்‌ கோவை – எங்களிறைவராகிய நம்மாழ்வாரை,
அல்லா -விரும்பாத,
என்னை–குற்றம்‌ சுண்டு -முன்னமே பாடாத குற்‌றத்தை யறிந்து,
மற்றை நா வலர்‌ –இனி வேறுள்ள புலவர்கள்‌,
என்‌ -எனது,
நாவை– நாக்கினை, –
பறிப்பினும்‌ – பிடங்கினாலும்‌,
நல்லர் அன்றோ – நல்லவரல்லரோ ? [நல்லவரே.]

திருவாய் மொழி பாடி யருளிய நம்மாழ்வாரை விரும்பாத என்னை ௮வரை முன்னமே படாதிருந்த குற்றத்திற்காக மற்றை நாவலர்‌ எனது நாக்கைப் பிடுங்கி விட்டாலும்‌ அது நல்லதே யாகுமென்பதாம்‌, எங்கும்‌ பரவி நிற்பதென்னும்‌ பொருளும் தோன்றப் பா வென்றார்‌, சுவை யறிவார்க்குச்‌ சுவை மிக்கிருத்தலினால்‌ பழமென்றார்‌. கேட்கக் குளிர்ந்திருத்‌தலின்‌ கற்பக மலரைக் கூறினார்‌. கடலில் தோன்றிய அமுதம்‌ எடுக்கக்‌ குறைந்தும்‌ உண்டதானால் எச்சிற் பட்டுமிருத்தலால்‌ போதாரவமுதென்றார்‌. நால் வகைப் பொருள்‌ அறம்‌, பொருள்‌, இன்பம்‌, வீடு-நாவினால்‌ வருணித்துச்‌ சொல்லுஞ்‌ சொல்லில்‌ வல்லவராதலின்‌ நாவலர் எனப்பட்‌டார்‌, நல்லதன்றோ எனற பாடங்கொள்ளுதல்‌ நேர்‌. அன்றோ , ஓ – எதிர் மறை; இரண்டெதிர் மறை ஒரு உடன் பாட்டை யுணர்த்தியது,-இது ஒரு பொருள் மேல் பல பெயர் ஓடுக்கி வந்து முடிக்குஞ்சொல்‌ ஓன்றனைக் கொண்டது.-

பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அது குறித்து அனுதாபம் கொண்டு அக்கழிவு இரக்கத்தால் கூறியது இது – நாவலர் -கவனம் பிரசங்கம் போதனை முதலிய நாவின் வன்மை யுடையவர் என்றவாறு –

——-

நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே
. 58–

நாவல்‌ ௮ம்‌ தீவில்‌ – அழகிய ஜம்புத்தீவில்‌,
கவிகள்‌ எல்‌லாம்‌ – பிறர் பாடிய பாடல்களெல்லாம்‌,
சில நாள்‌ கழிய – சில நாட்கள்‌ சென்ற பின்‌, பூ- மலர்‌,
வலம்‌ – மணம் முதலிய வன்மைகள்‌,
தீவது போல்வ அல்லால்‌ – கெட்டழித்தல்‌ போல்வன வாகிக்‌ கெடுமே யல்லாமல்‌,
குருகூர்‌ – திருக் குருகூரில்‌ அவதரித்த,
புலவன்‌ – புலவரும்‌,
தீங்கு -உயிர்களின்‌ குற்றங்களை,
கேவலம்‌ – முழுவதும்‌,
அறுப்பான்‌ – ஒழிப்பவருமாகிய நம்மாழ்வாருடைய,
கவி போல்‌ – திருவாய்மொழிப்‌ பாடல்களைப் போல,
எங்கும் போய்‌ – எவ்விடத்‌தும் பரவி, கெழுமா – விளங்காதன வாகும்‌;
கூவல்‌ – கிணற்றிலுள்ள,
அம்தீம்புனலும்‌ – அழகிய இனிய நீரானதும்‌,
வெள்ளம்‌ – பெரு வெள்ளத்தை ,
கோள்‌ இழைத்துக் கொள்‌ளுமே – தாழ்மைப் படுத்தி மேற் கொள்ளுமோ ? [கொள்ளாது.]

உலகத்தில்‌ பிறர் பாடல்கள்‌ சிலகாலத்தில்‌ கெட்டழிந்து போகுமே யல்லாமல்‌ நம்மாழ்வார்‌ பாடல்கள் போல எங்கும்‌ போய்ப் பரவாவாம்‌ ;கிணற்று நீர்‌ பெரு வெள்ளத்தைகத் தாழ்மைப் படுத்‌த இயையுமோ -இயைதாதென்பதாம்‌, பூ.-மலர்ந்த வுடன்‌ மணம்‌ வீசிப் பின்‌ பூ இல்லாமற்‌ போவது போலப்‌ பிறர் கவிகள்‌ பாடும் பொழுது வெகு சிறப்புப் போலத்‌ தோன்றி பின்பு பயன்படாதெனக்‌ கொள்க,. நாவலம்‌, அம் -சாரியையுமாம்‌, தீவது -தொழிற் பெயர்‌, அறுப்பான்‌ -வினைப் பெயர்‌,கெழுமா. – எதிர் மறைப் பலவின் பால் முற்று, கொள்ளுமே, ஏ – எதிர் மறைப் பொருளில்‌ வந்தது , இதன் கடை யடி எடுத்துக் காட்டு உவமை யணி

கிணற்று நீர் -போல் அந்தர்யாமித்வத்தையும் விளக்கிக் காட்ட வல்லது -என்றபடி

————

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார்க்கும ரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே
. 59–

இழைத்தார்‌ – செய்தவர்‌,
ஒருவரும்‌ இல்‌லா-வேறு யாரு மில்லாத,
மறைகளை -வேதத்தின்‌ பொருள்களை,
இன் தமிழால்‌ – இனிய தமிழ்‌ மொழியினாலே,
குழைத்தார்‌ – செய்தருளியவரும்‌,
குமரித் துறைவர்‌ – கன்னியா குமரி யென்னும்‌ தீர்த்தத்தை யுடையவருமாகிய,
குருகையில்‌ – குருகூரில்‌,
கூட்டம்‌ கொண்டார்‌ – அடியார்‌ கூட்டத்தோடு எழுந்தருளி யிருக்கிற நம்மாழ்வார்‌,
வானின்‌ – பரம பதத்தினது .
வரம்பிடை நின்று – எல்லையினுள்ளிருந்து, மழைத்து – மேகத்தினது தன்மை,
ஆர- நிரம்பிய,
தடம்‌-பெரிய, கைகளால்‌—-,
என்‌னை அழைத்தார்‌-என்னை வா வென்றழைத்தார்‌ ; (அங்கனம்‌ அழைத்தன்றி),
அறிவும்‌ தந்தார்‌ – அங்கே செல்வதற்கு வேண்டிய அறிலையும்‌ கொடுத்தார்‌ ; (ஆதலால்‌ யான்‌),
அங்கும்‌ போய்‌ – அவ்விடத்துஞ்‌ சென்று,
அவர்க்கு – அந்த ஆழ்வாருக்கு,
ஆட்‌ செய்வன்‌-அடிமைத்‌ தொழில்‌ செய்வேன்‌ ;

வேதப்‌ பொருளைத்‌ தமிழில்‌ விரித்துரைத்த குமரித் துறைவராகிய குருகூர்‌ நம்மாழ்வார்‌ பரமபதத்தில் இருந்து தடக் கைகளால்‌ என்னை வா வென்று அழைத்தாராதலால்‌ நான்‌ அங்கும்‌ போய்‌ அவர்க்கு அடிமை செய்வேனென்பதாம்‌.-இழைத்தாரொருவரு மில்லா மறை யெனவே வேதம்‌ கடவளாலமைக்கப் பெற்ற தென்பதாம்‌. அளவிலாத இலக்கண
இன்பமுடைமையின்‌ இன்‌ தமிழென்றார்‌. கைமாறு கருதா அருள்‌ செய்‌யுங்‌ கைகளாதலால்‌ மேகத்தின்‌ தன்மை வென்றார்‌, அங்கும்‌, உம்‌.இங்குத் துதித்த தன்றியும்‌ என இறந்தது தழுவிய வெச்சப்‌ பொருளது,

——–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே.
60–

தண்‌ – குளிர்ந்த,
குருகூர்‌ – திருக் குருகூரில்‌ எழுந் தருளி யிருக்கிற,
செய்ய – சிவந்த
நாள்‌ பூ-௮ன்று பூத்த மகிழ மலர்களாலாகிய,
தொடை – மாலைகளை யுடைய,
மாறன்‌ என்பேன்‌ – நம்மாழ்வாரென்‌று கூறினேன்‌ ;
ஆள்‌ – அவர்க்கு ௮டிமையாக,
செய்யல்‌ ஆவது எல்லாம்‌ – என்னாற்‌ செய்யக் கடவதெல்லாம்‌ செய்து.
அடி அடைந்தேன்‌ – அவர்‌ திருவடிகளை யடைந்தேன்‌ ;
அது அன்றி- அதுவல்லாமல்‌,
செய்‌ய தாமரை தாள்‌ – செந்தாமரை போன்ற அவர்‌ திருவடிகளை,
என்தலை ஏற்றனன்‌ – என்‌ தலையில்‌ சூடிக் கொண்டேன்‌ ;
இனி – இனிமேல்‌,
நாள்‌ குறித்து – என்‌ வாழ் நாளை உத்தேசித்து,
என்‌ தன்‌ ஆர்‌ உயிர்‌ – எனது அரிய உயிரை,
கூற்றினுக்கு – யமனால்‌,
கோள்‌ செய்யலாவது – குற்றப் படுத்தற்காவது ,
உண்டே – உண்டாகுமோ? [உண்டாகாது];

யான்‌ குருகூரில்‌ நம்மாழ்வாரைத்‌ தியானித்து அடிமைத்‌ தொழில்‌ செய்து ௮வரடியை யடைந்து ௮ப் பாதங்களைச்‌ சிரத்திலணிந்து கொண்‌டேன்‌ ; இனி யமன்‌ என்னுயிரைக் கோளிழைக்க இயலுமோ வென்பதாம்‌. தாளாகிய தாமரை யென்று நேரினும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. அவரே தெய்வமென உறுதியாகக் கொண்டிருத்தலால்‌ ஆட்‌ செய்யலாலவது
எல்லாஞ்‌ செய்தேன் என்றார்‌. அன்றி-எதிர் மறைக் குறிப்பு வினையெச்சம்‌, உண்டே,-ஏ- எதிர்மறைப்‌ பொருள்‌ தோன்றி நின்றது,

உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா-

———-

கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே.
61–

பொருள் –அகப் புறப் பொருள்‌.
திணை–பெருந்திணை
துறை–மாலை பெறாமல் வருந்துவ துரைத்தல்

கூறப்படா- ஒருவராலுஞ்‌ சொல்லப்படாத,
மறையின்‌ பொருள்‌ – வேதத்தின்‌ பொருள்களை,
கூறி- தமிழ்ப் பாடல்களால்‌ வெளிப் படுத்தி, குவலையத்தோர்‌ – உலகத்தவராலே,
மாறப் படா – நீக்கப்‌படாத,
வினை . தீவினைகளை,
மாற்றிய – போக்கி யருளிய,
மாறன்‌ – நம்‌மாழ்வருடைய,
மகிழ்‌ அலங்கல்‌ – மகிழ மலர்‌ மாலையானது ,
நாறப் படா நின்றபோத- மணம் வீசுகின்‌ற காலத்தில்‌,
அன்றில்‌ நஞ்சம்‌௮து -௮ன்‌றிலினுடைய விடத்தை யொத்த ஓசையானது,
அமுதாகும்‌- அமுதாக விருக்கும்‌;
மன்றல்‌ நாறும்‌ – மணம்‌ வீசுகின்ற,
தண்‌ தென்றலை – குளிர்ந்த தென்றல்‌ காற்றினையும்‌,
தேரப் படாது -நம்புவதற்கு இடமில்லை; கெட்‌டேன்‌ – இனி யான்‌ வாழ மாட்டேன்‌ ;

கூறப் படா மறை- மக்களால் கூறப் படாத வேதமென்க-இந்த வேளையில்‌ ௮ன்றிலோசை நஞ்சு போலிருத்தலால்‌ ஓசையை நஞ்‌சென்றார்‌-தீண்டப்‌ பெற்ற வுடன்‌ தலைக்கேறும்‌ விடம் போல அன்றிலோசை கேட்டவுடன்‌ விரகம் தலைக்கேறுதலால்‌ நஞ்சமென்றலுமாகும்‌.
கெட்டேன்‌ -இனி யான்‌ உண்ணா லும்‌ உண்ணேன் வாழலும்‌ வாழேன்‌ ” என்பதை யடக்கு ‘பசி யட நிற்றல்‌” என்ற மெய்ப்பாடு தோன்றி நின்றது – வேறு மெய்ப்பாடு கூறினும்‌ அமையுமேல் கொள்க-

லௌகிக பதார்த்தங்கள் ஆழ்வார் சம்பந்தத்தால் உபாதேயமாகவும்
இல்லையாகில் த்யாஜ்யமாகவும் இருப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –

——-

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே
. 62–

தென்‌ தலை தோன்றும்‌ – இவ் வுலகத்தின்‌ தெற்குத் திசையிலே உண்டாகிய,
உபநிடதத்தை – உபநிடதப்‌ பொருளாயும்‌,
என்‌ தீ வினையை – என்‌ தீவினைகளை,
நின்று-நிலை கொண்டு,
அலைத்து-போக்கி ,
ஓன்றும்‌- பொருந்திய,
நியாய நெறியை-நியாய மார்க்க முடையதாயும்‌,
நிறை – எல்லா வளங்களும்‌ நிறைந் துள்ள, குருகூர்‌ – திருக் குருகூரில் எழுந்தருளிய,
மன்‌ தலை- நம்மாழ்கார்‌ வாக்கில்‌,
தோன்றும்‌ – உண்டாகுகின்ற,
மதுரம்‌ கவியை- சொற் சுவை பொருட் சுவை யுடைய திருவாய்‌மொழிப் பாடல்களை,
மனத்துள்‌ – தங்கள்‌ மனத்திலே,
வைப்பார்‌- வைத்‌துக் கொண்டிருப்பவர்களே,
என்‌ தலை- என்னுடைய சிரத்தின்‌ மேலே,
தோன்றும்‌ – விளங்கிய திருவடிகளை யுடைய,
எம்பிரான்கள்‌ – எமது தலைவ ராவார்கள்‌;( அவர்களே),என்‌ நாவுக்கு-என்னுடைய நாவினால்‌ துதிப்பதற்கு, உரியவர்‌ – தக்கவராவார்‌ )

திருக் குருகூர்‌ நம்மாழ்கார்‌ பாடி யருளிய, திருவாய் மொழிப் பாடல்களை மனத்துள்‌ வைப்பவரே என்னால்‌ வணங்குவதற்கும்‌ துதிப்பதற்‌கும்‌ உரியவராவார்‌ என்பதாம்‌, தத்‌துவப்‌ பொருளை உள்ளடக்கிக் கொண்டமையின்‌ உபநிடச மென்றார்‌. தருக்க நியாயத்தால்‌ பரத்துவ நிர்‌ணயஞ்‌ செய்தலால்‌ நியாய நெறி யென்றார்‌.-வேதம் போலாகாது எல்‌லாச் சாதியாரும்‌ படித்த்துச் சுவை காணும் தன்மையினால்‌ மதுரகவி என்‌றார் -ஒன்று – ஒன்று, வென நீட்டல்‌ விகாரம்‌ பெற்றது. பிரான்‌ – என்னும்‌ னகர ஈறே யுடைமையின்‌ (கள்‌’ என்ற விகுதி பெற்றது.

அப்பனைப் பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர் மறுமையும் இம்மையும்
நம்மை அளிக்கும் பிராக்களே –ஆழ்வார் அடியார் அடியார் அடியோங்களே என்கிறார்

————

உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே
. 63–

பிறர்‌ – அயலாருடைய,
புல்‌ கவி- புன்மையாகிய பாடல்‌கள்‌,
உரிக்கின்ற – இதழ் இதழ்களாகப்‌ பகுக்கப் படுகின்‌ற ,
கோடலின்‌ -வெண் காந்தள்‌ மலரினின்றும்‌,
உந்து – வீசுகின்ற,
கந்தம்‌ என – மணத்தைப் போல,
ஒன்றும்‌ இன்றி- சொல்‌ பொருள்‌ அணி முதலிய யாதொன்றுமில்லாமல்‌,
விரிக்குந் தொறும்‌ – பதங்களைப்‌ பிரித்தப்‌ பார்க்‌கும்‌ போதெல்லாம்‌,
வெறும்‌ பாழாய் விடும்‌- வீணே பயனற்றதாய்ப்‌ போய் விடும்‌;
மெய்‌ – கடவளின்‌ உண்மை நிலையை, தெரிக்கின்ற – யாவர்க்கும் தெரியச்‌ சொல்லுகின்ற,
கோ – இறைவராகிய,
சடகோபன்‌ தன்‌ – நம்மாழ்வாருடைய,
தெய்வக்கவி- தெய்வத் தன்மையுள்ள பாடல்‌கள்‌,
புவியில்‌ – பூமியில்‌,
தோண்ட – பறிக்கப்‌ பறிக்க,
சுரத்தலின்‌ -தண்ணீரூறுதலால்‌,
நுண் மணல்‌ – மிகச் சிறியனவாகிய மணல்களை,
சுரிக்‌கின்ற – சுற்றிலுமுடையதாய் இருக்கின்ற
ஊற்று-மணலூற்றினை,
ஓக்‌கும்‌- ஒத்திருக்கும்‌;

பிறர்கள்‌ பாடும்‌ பாடல்களெல்லாம்‌ மணமில்லாத கார்த்திகைப்‌ பூவை ஒத்திருக்கும்‌; நம்மாழ்வார்‌ பாடல்கள்‌ ஆராயும் தோறுஞ்‌ சுவை ஊருதலால்‌ தோண்டுந் தோறுஞ்‌ சுரக்கின்ற மணலூற்றினை யொத்திருக்கு மென்பதாம்‌. காந்தள்‌ – கார்த்திகை. இது கார்த்திகை மாதத்தில்‌ மலர்தலால்‌ இப் பெயர்‌ பெற்றதென்பர்‌ ; கார்த்திகை மலர்‌ பார்‌வைக்கு அழகாயிருத்தல்‌ போலப்‌ பிறர் கவி படிப்பதற்கு ஓசை முதவியவை குறையாதிருப்பினும்‌ ௮க்‌ கார்த்திகை மலர்‌ நறுமண மில்லாதது போல அப்‌ பிறர்‌ கவியும்‌ சொற் சுவை பொருட் சுவை நிரம்பாமையால்‌ பயன ற்றதாய்‌ விடுமென்றார்‌, கந்தம் மென, மகரம்‌ – விரித்தல்‌ விகாரம்‌ பெற்றது. தொறும்‌ இங்குத்‌ தொழிற்‌ பயில்வுப்‌ பொருளைத்‌ தந்தது. பாழாய் விடும்‌, விடு-துணிவுப் பொருள்‌ விகுதி, சுரத்தலின்‌ – மூன்றாம்‌ வேற்றுமை ஏதுப் பொருள்‌,

தொட்டனைத்து உறும் மணல் கேணி மாந்தர்க்கு கற்றனைத்து ஊரும் அறிவு-

——–

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே.
64–

திரக்கும் -முத்துக்கள் தெறித்து விழப் பெற்ற
கழை -கரும்புகளின்
நெடும்‌ தாளில்‌ – நீண்ட தூறுகளிலே, தொடுத்த – கட்டின,
செம்‌ தேன்‌ – சிவந்த சேனடைகளானவை, (பக்கத்திலுள்ள குளங்‌களிலிருக்கின்ற,) கயல்‌ குதிப்ப- கெண்டை மீன்கள்‌ துள்ளி மோதி விழுதலாலே,
உடைந்து – உடை.பட்டு,
பரக்கும்‌ – தேன்‌ பரவுகின்ற
பழன வயல்‌ – மிக்க வயல்கள்‌ சூழ்ந்த,
குருகூர்‌ – நம்மாழ்வாரவதரித்த திருக் குருகூரின்‌,
வளம்‌ – மகிமைகளை,
பாடுமின்‌ -பாடுங்கள்‌ ;(அப்படிப்‌ பாடினீர்களாயின்‌),
திருவும்‌ சுரக்கும்‌ -செல்வமும்‌ பெருகும்‌ ;
வறுமையும்‌ தீரும்‌ – தரித்திரமும்‌ நீங்கும் ;
இரு வினை – நல் வினை தீ வினை யாகிய இரண்டும்‌,
தொடக்கு விட்டு – தொடர்ச்சி நீங்கி ,
கரக்கும்‌- மறைந்து போகும்‌;
மேன்மையும்‌ காணும்‌ – மேலாகிய பரம பத தரிசனமுமாகும்‌,

ஐனங்களே ! நம்மாழ்வாரவதரித்த திருக் குருகூரின்‌ மகிமையைப்‌ பாடுங்கள்‌ ; செல்வமுண்டாகும்‌ -வறுமை நீங்கும்‌; இருவினைப் பற்றொழியும்‌; மேன்மை யுண்டாகு மென்பதாம்‌. திரக்குதல்‌ – தெறித்து விழுதல்‌. கயல்‌ குதித்தலால்‌ தேன்‌ உடைந்து வயல்களிற்‌ பாவுதல்‌ போலக் குருகூர்‌ மகிமையைக் கூறுதலால்‌ நம்மாழ்வாரின்‌ கருணை உங்களுக்கு நிரம்ப உண்டாகிப்‌ பரவும்‌ என்பது தொகை மொழியின்‌ கருத்தெனக் கொள்க. திரு முதலிய வற்றுள்ள உம்மைகள்‌ எண்ணுப்‌ பொருளன,. குதிப்ப- காரணப்‌ பொருளில்‌ வந்த செயவெனெச்‌ச வாய்பாடு, பழன வயல்‌ – இருபெயரொட்டு,

———-

பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே
. 65–

பாடும்‌ – எப் பக்கங்களிலும்‌,
கறங்கும்‌ சிறை – சுழலுகின்‌ற சிறகுகளை யுடைய,
வண்டு – வண்டுகள்‌,
பாட -சப்த்தித்து நெருங்குதலால்‌,
பை தாள்‌ – பசுமையான தண்டுகளை யுடைய,
குவளை தோடும்‌ -நெய்‌தல்‌ மலரின்‌ இதழ்களும் (அவ் வண்டுகள்‌ வந்து மோதலுக்கு ஆற்றாமல் )
கறங்கும் – சுழலுகின்‌ற
குருகை – திருக் குருகூரிலுள்ள,
பிரான்‌ – மிக்க உபகாரமுடையவராய்‌,
இ -இந்த –
சுழல்‌ பிறவியோடும்‌ – சுழன்று வருகிற பிறப்பினுடன்‌,
கறங்கு அன்ன- காற்றாடி யொத்த,
வாழ்க்கையை -சரீர வாழ்லை,
நீக்கி – போக்கி விட்டு,
உணர்வு உதவி- நல்லறிவு தந்து ,
வீடும்‌ – பரம பதத்தையும்‌,
திறந்து தந்தானை – கதவு திறந்து தந்தருளினவரை,
எ நான்றும்‌ – எந்த நாளும் ,
விடகிலம்‌- யாம்‌ கை விட மாட்‌டோம்‌);

குருகூரிலவதரித்த மக்களின்‌ நிலை யற்ற வாழ்வைப்‌ போக்கி மோட்ச பதத்தினைத்‌ திறந்து தந்தருளிய நம்மாழ்வாரை நாம்‌ எந் நாளும்‌ விட மாட்டோம்‌ என்பதாம்‌. வண்டு பாடி நெருங்கக் கண்ட குவளை மலர்‌ சுழலாறு ஏற்றுக் கொள்ளுதல்‌ போல நம்மாழ்வார் பாடல்களை ௮ன்‌போடு யாவர்‌ பாடுகிறார்களோ ௮வர்களைப்‌ பரம பதமானது தட்டாமல்‌ ஏற்றுக் கொள்ளுமென்பது தொகை மொழியின்‌ கருத் தென்க-சிலர்‌ இதனையே உள்ளுறை யுவமை என்பர்‌, குருகை- மருஉ மொழி, பிற வி, வாழ்க்கை – தொழிற்பெயர்கள்‌,-தந்தான்‌ – வினைப் பெயர்‌, விடகிலம்‌, ௮, கு – சாரியைகள்‌, இல்‌ – எதிர் மறை இடை நிலை-

———–

விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே.
66–

பொருள் –அகப் புறப் பொருள் ,
திணை -பெருந்திணை
துறை– வேலமர்‌ கண்ணி மாலை யம்‌ பொழுது கண்டு ஏங்கிய தறிந்த பாங்கி புலம்பல்‌.

வெம்‌ – கொடிய,
விடம்‌ -நஞ்சு போன்ற ,
அந்தகாரம்‌ பாலில்‌- இருட்டை யுடைய இராக் காலமாகிய பகுதியிலே, மெல்லியலுக்கு- மென்மையான சாயலை யுடைய எம்‌ தலைவிக்கு,
இடர்‌ வந்ததென்று- காமத்‌ துன்பஞ்‌ செய்கின்ற சந்திரன்‌ உதித்து வந்ததென்று,
இரங்கி -கருணை கூர்ந்து,
பராங்குசர்‌-நம்மாழ்வார்‌,
புணர்ந்திலர்‌-வந்து புணர்ந் தாரில்லை ; [இந்த வேளையில்‌], இன்று- இ அந்தி- இந்த மாலைக் காலமானது ,
வந்து பட – வந்‌து நீங்குதலும்‌,
௮ந்த காரம்‌ பெரும்‌ புகை – -பெரிய புகை போன்ற இருட்டானது
ஒடி – எங்குஞ்‌ சென்று,
பரக்கின்றது -பரவுகின்றது ; (இப்படி வந்த இருட்டானது ), இன்‌ உயிரை-எம்‌ தலைவியின் இனிய உயிரை ,
அட வந்த -கொல்லுவதற்கு வந்த
காலன்‌ கொலோ -யமன்‌ தானோ ? அறியேன் -யானறிந்திலேன்‌ ;

கொடிய இருள்‌ பரவிய இரவில்‌ என் தலைவிக்கித் துன்பமுண்டாயிற்றே யென்று இரங்கிப்‌ பராங்குசர் வந்து புணர்ந்தாரில்லை; இம் மாலைப்‌ பொழுதில்‌ இருள்‌ பரவா நின்றது தான்‌ உயிரைக் கொண்டு போகிற யமனோ? அறியேனென்பதாம்‌. விடம்‌ -இருளுக்கு நிறத்தாலுவமை. இடர்‌ -சந்திரனுக்கு ஆகு பெயர்‌, ஆல்‌ – அசை, காலன்‌ கொல்‌ – ‘இடைச் சொற்றொடர்‌ ) கொல்‌ – அசை நிலை யிடைச்சொல்‌.-ஓ – ஐயப் பொருளில்‌ வந்த இடைச் சொல்‌, மாலைப்‌ பொழுதின்‌ பின்‌ இருளைப்‌ பார்த்தலும்‌ தலைவி விரகங்கொண்டு சோகமுறக் கண்ட தோழி இருளை மேலிட்டு விடமாகா க் கூறினள்‌, வெம்மையை இடர்‌ என்பதனோடு கூட்டுக ., இன்னும்‌ தலைவர்‌ வந்திலாமையில்‌ இருள்‌ பரவுவதைக்‌ காலனோ வென்றாள்‌, பாரங்குசர்‌ – அயல்‌ மதங்களாகிய யானைகளை அடக்குகின்ற அங்குசம்‌ போவ்பவர்‌, இங்கும்‌ துன்பஞ்‌ செய்யுங்‌ காமனை யடக்குபவர் என்று எண்ணிப்‌ பராங்குசர் என்றாள்‌. காமன்‌ கொடுமைக்கு ஆற்றாளென்பது தோன்ற மெல்லியல் என்றாள் -தலைவியின்‌ துன்பத்தைக் கண்டு பொறாளாய்‌ வெளிப் படையாகப்‌ புணர்ந்‌திலர் என்று கூறினாள்‌. கிளவித் தலைவன்‌ பெயர்‌ கூறினமையால்‌ அகப் புறமாயிற்று, காமத்தை யாருமறியக் கூறிப் புலம்பினமையால்‌ நான்கு மணம்‌ பெற்ற பெருந் திணை யாகாமல்‌ கந்தருவத்தின்‌ வழுவிய பெருந்திணை யாயிற்று , பராங்குசர்‌ – தீர்க்க சந்தி, மெல்லியல்‌ – பண்புத் தொகைப்‌ புறத்துப்‌ பிறந்த ௮ன்மொழி,

——–

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே.
67–

பொருள் –அகப் பொருள்
திணை -பாலைத் திணை
கிளவி – உடன் போக்கு : உட் பகுதி -தேற்றல்‌.
துறை–(தலைவிக்குத் தலைவன்‌) தன்பதி யணுமை சாற்றல்‌,

சுரவாத – அறிவுடையோர்க் கன்‌றிப்‌ பிறருக்குப்‌ பொருள்‌’ வெளிப் படாதனவகிய, சுருதி பசுக்கள்‌ அவற்றை – வேதங்களாகிய அந்தப் பசுக்களை,
சுரப்பித்‌து – எல்லாருக்கும்‌ பொருள்‌ தோன்றச் செய்து ,
அவை -அந்த நாற் பகுதியாகிய பிரபந்தங்களும்‌,
சொரியும்‌ -கொடுக்கின்ற,
பொருள் பால்‌ – பொருளாகிய பாலை,
கரவாது – மறைக்‌காமல்‌,
உதவிய – கொடுத் தருளிய,
மாறன்‌ – நம்மாழ்வாருடைய,
கவி அனையாய்‌ – பாடல்களை யொத்த பெண்ணே !
இனி – இனி மேல்‌,
இப் புறம்‌ – இந்தப் பாலை நிலத்தின்‌ எல்லை யானது,
ஓர்‌ சரம் வாதம்‌- ஓர்‌ அம்பு வீழ்ச்சி யளவு தான்‌ ;
அப்புறம்‌-இதற்கு அப்பால்‌,
௮ தடம்பணை -அந்தக் குருகூரின்‌ எல்லை யுளகப்பட்ட அகன்ற வயல்களேயாம்‌;
காண்‌ – நீபார்‌;
ஆதலால்‌, பரவாது – உன்‌ மனத்தை அலைய விடாமல்‌,
கேட்டு- யான் சொல்லுகின்ற இதனைக் கேட்டு,
இனி – இப்பொழுது முதல்‌,
பைய – மெல்ல,
நட – நடப்பாயாக;

தலைவியை இருளிடை அழைத்து உடன் கொண்டு போகின்ற தலைமகன்‌ தன்‌ ஊர்‌ அருகில் இருப்பதனைக்‌ காட்டித்‌ தெரிவித்தனனென்‌க -, இணை – பாலை, கைகோள்‌ – களவு, கூற்று – தலைவன்‌கூற்று, கேட்‌போர்‌ – தலைவி இடம்‌ – முன்னிலை, காலம்‌ – ௭திர் காலம் , எச்சம்‌ -நீ என்பது எஞ்சி நின்றது,-மெய்ப்பாடு – உவகை. பயன்‌ – தலைவியைத் தேற்றல்‌. வேதத்தைப்‌ பசுவாகவும்‌ அதன் பொருளைப்‌ பாலாகவும்‌ அதனைச்‌ சுரப்பிக்கச் செய்தனரென உருவகஞ் செய்தமையின்‌ இதுஉருவக வணி. பெண்களிற்‌ சிறந்தமையின்‌ – எல்லாக் கவிகளுள்‌ளும் சிறந்த மாறன்‌ கவியோடு உவமித்தான்‌. இன்னம்‌ எவ்வளவு தூரமுளதோ வென்று கவலை கொண்டதனை அறிந்தனனாதலின்‌ பரவாது கேட்டு என்றான்‌. நெறி முழுதும்‌ இவ் வண்ணமேயாமெனக்‌ கொண்டு விரைந்து செல்லாதவாறு அப்பால்‌ தடம் பணை யுள்ளதனால்‌ பைய நட வென்றான்‌, இடையிலெதிர்த்த சிங்கம்‌ முதலியவற்றை ௮வன்‌ அம்பாலெய்‌ததனைத் தலைவி யறிந்துள்ளாளாதலின்‌ ௮வள்‌ அறிந்த அம்பின்‌ வீழ்ச்சியைக் குறித்துக் காட்டிச் சார வாதமென்றான்‌, ஆங்கே தடம் பணை ௮ருகில் இருக்கிறதாகக் கொண்டு காண்‌ என்றான்‌. அப்பால்‌ ஊர் போய்ச்‌ சேரும்‌ வரையில்‌ அந்தப் மருத நிலமே யென்பது தோன்றத் தடம் பணை யென்றான்‌.தடம்பணை -உரிச் சொற்றொடர்‌,

புணர்ந்து உடன் போந்த தலைமகன் நடந்து இளைத்த தலைவியைக் குறித்து இடந்தலைப் பெய்தமை சொன்ன பாசுரம் –சம்சார மார்கத்தைக் கடந்து ஸ்ரீ வைகுண்டம் அழைத்துச் செல்லும் ஆழ்வார் அந்த ஸ்தானம் அணித்தமையைச் சொன்னவாறு –

———–

தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே.
68–

பொருள் –அகப் புறப்பொருள்‌,
திணை–பெருந் திணை ,
துறை – பாகொத்த சொல்லி பைந்தொடை பெறாமல் மேகத்தைத் தூது போக விடுதல்‌

பனி – விடாமல்‌ மழை பெய்வதை ,
தோய்ந்திடும்‌ – மேற்‌ கொண்டுள்ள,
மேகங்களே – ஆகாயத்திற்‌ செல்கின்ற மேகங்களே!
தண்‌ பொருநை – சூளிர்ந்த தாமிரபர்ணி நதி சூழப் பெற்ற,
தடம்பணை -அகன்ற வயல்களை யுடைய,
குருகூரர்‌ – திருக் குருகூர்‌ நம்மாழ்வார்‌,
(தமது ), தகை – பெருமை யுடைய,
வகுளம்‌ வடம்‌- மதிழமலர் மாலையை,
பணை – பருத்த,
கொங்கையில்‌ – என்‌ கொங்கைகளில்‌, வைக்‌கின்‌றிலர்‌ –
ஓற்ற வைத்தருளுகின்றாரில்லை ;
(அதனையன்றி), மற்றை மாலை யெல்‌
லாம்‌ – பிற மாலைகளெல்லாவற்றையும்‌,
உடம்பு அணைக்குந் தொறும்‌ –
என்‌ உடம்பில்‌ சேர்த்து ஒற்றிக் கொள்ளும்‌ பொழுதெல்லாம்‌,
வெந்து – என்னுடம்பிலுள்ள சாமாக்கினியால்‌ வெந்து போய்‌,
உகும்‌ – உதிர்ந்து விடும்‌ ;
(௮ந்தக் காமத்தீயும்‌.) ஐந்து வெம்‌ பாம்பு -கொடிய ஐந்து பாம்புகள்‌, (ஒரு சேரச் கூடி ஒரே உடம்பில்‌ ஓரிடத்திலேயே கடித்து ),
உமிழ்ந்த – கடிவாயில்‌ கக்கின,
விடம்‌ – விடங்களானவை,
பணைக் கொண்டனவே -அதிகரித்தாற் போல்வனவேயாம்‌;

மேகங்களே ! குருகூராழ்வார்‌ தம்‌ வகுள மாலையை என்‌ கொங்கைகளில்‌ வைத்தருளு கின்றாரில்லை ; அதனை யன்றித் தோழியர்‌ கொண்டு வந்து சூட்டு கின்‌ற பிற மாலைகள்‌ காமாக்கினியால்‌ கருகி உதிர்வன ; ஒரு பாம்பு கடித்தாலே பிழைப்பரிது ; அந்தக்‌ காமாக்கினி ஐந்து பாம்பு கடித்த நஞ்சு பரக்கின்றால் போல்வன; இவ் விஷயத்தை ஆழ்வாருக்கு அறிவிப்பீராக வென்றாளென்பதாம்‌.-அகன்ற நீர் பாய் வயல்களும்‌ குளிர்ந்த
பொருநை யுமுடையவாதலால்‌ அவர்‌ மாலையும்‌ குளிர்ச்சியைச்‌ செய்யு மென்றாள்‌, உயிர்க்கு நன்மை செய்தலால்‌ தகை வகுளமென்றாள்‌,-பனி – குளிர்ச்சியுமாம்‌. நீங்கள்‌ மிருந்த குளிர்ச்சியான கருணை யுடையீ ராதலால்‌ பெண்ணென்றால் பேயும் இரங்கும் இயல்பன்றோ அதனால்‌ என்பாற்‌ கருணை யுடையீராகிச் சென்று அவர்க்கு அறிவிப்பீர்‌ என்பதனை யடக்கிப்‌ பனி தோய்ந்திடு மேகங்களே யென்ருள்‌. நீங்கள்‌ இங்கே
பொழிவதனால்‌ பயனில்லை அவருடைய மலையிலேறி மழை பொழியத்‌ தொடங்கினால்‌ அவர்‌ நம்மைக் கண்டவடன்‌ விரக மேலீட்‌டினால்‌ தாமே என்னிடம்‌ வந்தணைவார் எனக் கொண்டு மேகத்தை நோக்கிக் கூறினா ளென்றலுமாம்‌. ஐந்து பாம்பு – காமனம்பைக் குறித்ததுமாம்‌,

பொருள் ஈட்டி பின்பு கார் காலத்தில் மீண்டு வருவதாக சொல்லிப் போந்த தலைமகன் வாராமையாலே ஆழ்வாருக்கு போலியான மேகங்கள் இந்நிலையில் வருத்தத்தை மிகுவிக்கும் -போலி கண்டு அழிதல் –

———

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே
. 69–

பொருள் —அகப்பொருள் ,
திணை – முல்லை,
கிளவி- வரைவிடை வைத்துப்‌ பொருள் வயிற்‌ பிரிதல்‌,
துறை–தலைவன்‌, மேகம் தன்னொடும் சோகம் கொண்டவன்‌ சொல்லல்‌,

மேகத்தை – மேகமே! உங்களை,
ஆற்றில் கண்டேன்‌ என்‌று-வழியிலே கண்டு மார்க்கத்தைச் சொன்னேனென்று,
எண்ணாது – நினைக்‌காமல்‌, (நீங்கள்‌),
குருகூர்‌ மெய்யன்‌ -குருகூரிலுள்ள சத்‌துவ ருபியாகிய
நம்மாழ்வார் செய்தருளிய, பாகத்தை – செம்பாகமாகிய திருவாய்மொழியை,
ஆர்றும்‌ – ஒத்திருக்கின்‌ற,
சொல்லாளை – சொல்லை யுடைய என்‌ தலைவியை,
கண்‌ நீரின்‌ துளி பரந்த – கண்ணினின்று உண்டாகிய நீர்த் துளி மிக்குள்ள,
மோகத்தை – என்பாலெழுந்தா காம விரகத்தை,
ஆற்றிக்‌ கொண்டே – ஆற்றுவித்துக் கொண்டே,
கண்ட மாற்றம்‌ – என்னை நீங்கள்‌ வருகிற வழியிற் பார்த்ததான வார்‌த்தையை,
மொழிந்து -சொல்லி
சிந்தை -அவள் மனத்திலுண்டாகிய, சோகத்தை – சோர்வை,
ஆற்றிக் கொண்டே- சாந்தப் படுத்திக் கொண்டு
பிற்பாடு, தூளிதூவ – மழை பெய்ய, தொடங்‌குக-ஆரம்பிப்பீர்களாக ;

மேலோரை முன்னிலை மொழியாற்‌ கூறுதலினும்‌ படர்க்கை மொழியாற்‌ கூறுதல்‌ சிறப்புடைமை நோக்கி மேகமே!உங்களை என்று குறித்‌துக் கூறாமல்‌ படர்க்கைப் பெயரை யமைத்துக் கூறி நீங்களி ருக்குமிடம்‌ வந்து வழி மொழிந்து வேண்டுதலியல்பு – அங்ஙனமின்றி வழியிலே உங்களைப்‌ பார்த்து விட்டமையால்‌ இதனை நும்‌ வீட்டில் வந்து கேட்டுக்‌ கொண்டமையாகக் கருதுக வென்பது தோன்ற ஆற்றிர் கண்டேன்‌ என்று எண்ணாது என்று உபசாரம்‌ கூறினான்‌-ஏனைய மாதர்கள் போல்வாளல்‌லள்‌ என்பது தோன்றத்‌ திருவாய் மொழியோடு உவமித்ரான்‌, உங்களுக்கு ௮வள்‌ மறு மொழி கூறத் தொடங்கினால்‌ அவள் சொல்வே உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமென்பதனால்‌ சொல்லாளென்றான்‌. அவளைக் கண்டவுடன்‌ என்னை நீங்கள் பார்த்ததாகக் கூறினால்‌ உடனே அதிக மகிழ்ச்சி கொண்டு ஆவென்றலும்‌ ஏத முண்டாகுமோ வென்‌றஞ்சி முதலில்‌ மோகத்தை யாற்றிச்‌ சிறிது சிறியதாக என்னை வழியில் கண்டது உண்டென்று சொல்லுக வென்றான்‌, சொல்லிய வுடன்‌ சென்று விட்டால்‌ சோகமடைவளாதலால்‌ மீட்டும்‌ ௮வள்‌ மனத்திலுள்ள சோர்வை நீக்கிக் கொண்‌டென்றான்‌, பெரு மழை பெய்யத் தொடங்‌கினால்‌ குளிரில்‌ வருந்துவளாதலின்‌ சிறிது துளிகளைத் தூவுக வென்றான்‌. யான்‌ விரைவில் வந்து விடுவேனென்பது தோன்றத் தொடங்குக வென்றான்‌, திணை-முல்லை, கை கோள்‌-
களவு, கூற்று – தலைவன்‌ கூற்‌று. கேட்போர்‌ மேகத்தோடு கூறுவானாய்க்‌ கூறியது , இடம்‌ -முன்னிலை. காலம்‌ – எதிர் காலம்‌. எச்சம்‌- யான்‌ விரைவில்‌ வருவேனென்பது எஞ்சி நின்றது -. மெய்ப்பாடு -அலலம்‌. பயன்‌-மேகத்தோடு கூறிச் சிறிதாற்றுதல்‌, பொருள் கோள்‌-யாற்றுகீர்‌. மேகத்தை –இடவழுவமைதி,. எண்ணாது, – எதிர் மறை வினை யெச்சம்‌, பாகம்‌ -சுவையை யுடைய திருவாய்மொழிக்குப் பண்பாகுபெயர்‌. கண்ணீரின்‌ துளி-பிரிவாற்றாமை யென்னும்‌ மெய்ப்பாடு தோன்ற நின்றது,

மேகங்களை பாகவதர்களாக சொல்லத் தட்டில்லையே-ஆழ்வார் வரை அறிவித்து ஆஸ்வாசப்படுத்த சொன்னபடி

———

தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே
. 70–

இது மதங்கி கூத்து-ஒருகூத்தாடிச்சி ஆடத் தொடங்கும் பொழுது ஒருவன்‌ சபையோரை நோக்கிக் கூறியது -. இதுவும்‌ முற்கூறிய பல்வரிக்‌ கூத்திலொன்று,

சபையீர் -சபையிலுள்ளவர்களே!
சொல்லுகின்‌றேன்‌ -இப்‌பொழுது உங்களுக்கு ஒரு விஷயம்‌ சொல்லுகின்றேன்‌ அதனைக் கேளுங்கள்‌,
மதங்க – பாடல் வல்ல இக் கூத்தாடிச்சி,
நடம் தொடங்குகின்றாள்‌-கூத்தாட எத்தனிக்கின்றாள்‌ ;
குருகூர்த் தொழா – திருக் குருகூரிலே எழுந்தருளிய நம்மாழ்வாரைத் தொழுது, மடங்குன்றாள்‌ – திரையினுள்‌ளேயே திரும்பிப் போகின்‌றாள்‌ ;
மண்டலம் சுற்றி – (அத்திரை யிடத்துள்‌ இருந்தாபடியே), மண்டலமாகச் சூழவந்து
ஆடுகின்றாள்‌-கூத்தாடுகின்றாள்
மதங்கி விடங்கு கண்டு -இந்த மதங்கியி னழகைக் கண்டால்‌,
பிழைப்‌பார்‌ ஆர் – இங்கே பிழைப்பவர் யாரிருக்கிறார்கள்‌ ?
இந்தப் படங்கு விண்‌டால்‌ – இந்தத் திரையை நீக்கி விட்டாலோ,
பின்னை – பிற்பாடு,
உம்‌ பதி களுக்கு – உங்களூர்களுக்கு,
போக ஒண்ணாது – போக முடியாது ; (ஆதலால் ) விரைந்து ஏகும்‌- சீக்கிரமாக ௮ப்பால் போய் விடுங்கள்‌ :

சபையிலிருப்பவர்களே ! உங்களுக்கு ஒரு விஷயம்‌ சொல்லுகேன்‌ கேளுங்கள்‌, பாடல் வல்ல இக் கூத்தாடிச்சி குருகூராழ்வாரை வணங்கிக்‌ கூத்தாடத் தொடங்குகிறாள்‌, இவளழகு கண்டால்‌ எல்லாரும்‌ மோகித்து வீழ்ந்து இறப்பார் -ஆதலால்‌ இப்பொழுதே விரைந்து உம்மூர்க்குப் போங்களென்பதாம்‌. பின்னை – இடைச் சொற் றிரிபு, எண்ணாது – ஒன்றாதென்‌பதன்‌ மரூஉ.

பக்தி அதிசயத்தைக் கண்டவர் இவர் பக்கல் ஈடுபடுவதை விட்டு பிரபஞ்ச விஷயங்களில் செல்ல இயலாமையைச் சொன்னவாறு-

———–

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே
. 71–

பொதியம்‌ – பொதிய மலையானது ,
தரும்‌ – கொடுக்கின்ற
அமுதம்‌ – நீர்ப் பெருக்கை யுடைய,
நதி – தாமிரபருணியாற்றருகிலுள்ள,
அம் -அழகிய,
குருகூர்‌ – திருக் குருகூரிலவதரித்த, –
எந்தை -எங்கள் இறைவரான ஆழ்வார்‌, பூசுரர்க்கு – பிராமணர்களுக்கு,
தமிழ் பதியம்‌ என்ன – தமிழில்‌ பதிகங்களென்‌னும் படியாகவும்‌,
நான்மறை என்ன – நான்கு வேதங்களென்பனவாகவும்‌,
இ பார்‌ – இந்த உலகத்தை
புரக்கும் – தன்‌ குளிர்ச்சியால்‌ காக்கின்ற,
மதி- சந்திரனை யொத்த,
அந்தமில்‌ – முடிவில்லாத,
ஒளி – பிரசாசத்தை யுடைய,
மாலைகள்‌ என்ன – மாலைகளென்‌னும் படியாகவும்‌,
மறை – வேதத்தை யொத்த,
தமிழின்‌ -தமிழ் மொழியில்‌,
௮தியம்‌ தரும்‌ – மிகுதியான பெருமையைத்‌ தருகின்ற,
ஆயிரம்‌’ கவி- ஆயிரம்‌ பாடல்களை,
செய்து – பாடி,
அளித்தான்‌– கொடுத்தருளினார்‌ ;

குருகூராழ்வார்‌ பிராமணர்களுக்குத் தமிழெனவும்‌, நான் மறை யென்னவும்‌ மாலை ளென்னவும்‌ ஆயிரம் பாடல்கள் பாடிச்‌ கொடுத்தருளினாரென்பதாம்‌.-பொதிய மலையில்‌ அகத்தியரிடத்தில்‌ பிறந்த தமிழிலக்கணம்‌ உலகத்தை வாழ்விப்பது போல தாமிரபருணி நதி பொதிய மலையில் சோன்றித்‌ தென்னாட்டை வாழ்விக்கும்‌ சிறப்புத் தோன்ற பொதியந் தரு நதி என்றார்‌.-பூசுரர்‌ – பூயியிலுண்டாகிய தேவரெனவே அந்தணர்க்காயிற்று, நம்மாழ்வார்‌ பிரபந்தம்‌ நான்‌கும்‌ நான்கு வேதங்‌கள்‌ போல்‌ கூறப்படுதலால்‌ நான்மறை என்றார்‌. பதிகம்‌ – பத்துப் பாடல்களை யுடைமையின்‌ பதிகமெனப் பட்டது, நினைக்கவும்‌, கூறவும்‌ குளிர்ச்சியைத் தருதலின்‌ மதியை யுவமித்தார்‌. ஒன்றோடொன்று தொடர்புடைமையின்‌ மாலைகளென்றார்‌. பதிகம்‌, அதிசம்‌ என்பன எதுகை நோக்கி, பதியம்‌, .அதியம்‌ என்றாயின. வேதப்‌ பொருளைக்‌ கண்டு மகிழ்பவர் அந்தணராதலால்‌ அவரே யிதன் பெருமையை யறிய வல்லவரென்று பூசுரர்க்கு அளித்தார்‌ என்க,

பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் கழித்து அருந்த நிறைப்பதற்கு அன்றோ அமுதமாய் அருளினான்-

—————-

பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே
. 72–

பரவும்‌ – எல்லாராலும்‌ துதிக்கப் படுகின்‌ற , குருகூர்‌ -திருக் குருகூரில்‌,
வந்த – அவதரித்த,
கற்பகம்‌ – கற்பகத் தருவை யொத்த நம்மாழ்வார்‌,
பொய்ச் சமயப்‌ புலவர்க்கு – பொய்யாகக் கூறப்படுகிற(லோகாயிதம்‌ பெளத்தமென்னும்‌) புறச் சமயங்களிலுள்ள வித்வான்‌களுக்‌கும்‌,
பூட்சி கண்டீர்‌ -மேற்கொள்ளத் தகுவாரென்று தெரிந்து கொள்ளுங்‌கள்‌;
மற்றை – அவர்களை யல்லாத,
மாயத்து -வஞ்சனையை யுடைய,
அருகர்க்கு – சயினர்களுக்கு,
போக்கு – அவர்கள்‌ மாறு பாட்டைப்‌ போக்குவதாகிய,
வல்வாய்‌ – உறுதியான வாயை யுடைய, வாட்சி கண்டீர்‌ – வாள்‌ போல்வதென்று தெரிந்த கொள்ளுங்கள்‌ :
மன்‌ – நிலை பெற்ற,
உயிர்‌கட்கு – ஜீவ ராசிகளுக்கெல்லாம்‌,
ஆட்சி கண்டீர்‌ – நிலையான பொருளாவாரென்று தெரிந்து கொள்ளுங்கள்‌ ;
தொண்டர்க்கு – திருமாலின்‌ அடி.யவர்களுக்கு,
ஆனந்த வாரி கண்டீர்‌ – பேரின்பக்‌ கடல் போல்வாரென்று தெரிந்து கொள்ளுங்கள்‌
அறிவை – நம்முடைய அறிவுக்கு,
காட்சி கண்‌டீர்‌ – காண்பதற்குரிய பொருளாவார் என்று தெரிந்து கொள்ளுங்கள்‌,

குருகூரில் அவதரிதத கற்பகம் போன்ற நம்மாழ்வாரானவர்‌ பொய்‌யான சமயத்தருமேற்‌ கொள்ளத் தகுவார்‌ ;அருகர்க்கு வாள் போன்றவராவார்‌ ; மன்னுயிர்களை ஆளும் தன்மையராவர்‌ : தொண்டர்க்கு ஆனந்தக் கடலாவார்‌ ; அறிவுக்குரிய காட்சிப் பொருளாவாரென்பதாம்‌.-பிரத்தியஷப் பிரமாணம்‌ ஒன்றே யுடைய லோகாயிதரும்‌ காட்சி,அனுமானமாகிய இரண்டு பிரமாணங்களுடைய பெளத்தரும்‌ ஆழ்வார்‌ திருவாய் மொழியின்‌ கருத்தை மறுத்தற்கு இயலாதவராதலின்‌ அவராற்‌
பூணப்படுவாரென்றார்‌. வஞ்சனை யுடைய ஜைனர்‌ முற்கூறிய இரண்டினோடு ஆகமம்‌, அருத்தாபத்தி ஆகிய இரண்டனையுங்கூட்டி நான்கு பிரமாணங்களைக் கொண்டு எதிர்த்தும்‌ ஆழ்லார்‌ நூல்‌ அதன்‌ மேற் பட்டுள்ள பிரமாணங்களைக் கொண்டுள்ளதாதலின்‌ இதனை வெல்ல முடியாமையால்‌ அந்த அருகருக்கு வாள் போல்வர் என்றார்‌. தேவர்களுக்கு வேண்டுவன அளிக்கும் தருவைப் போல உலகத்தின்‌ மன்னுயிர்களுக்கு வேண்டியவற்றைத்‌ தரலிற்‌ கற்பகமென்றும்‌ அங்கனம் தருதலின் ஒன்றாகிய பேரின்பக் கடலைத்‌ தொண்டர்க்கே கொடுப்பரென்றும்‌ இங்கனம் இருந்தும்‌ மனத்தால்‌ நினைத்த மாத்திரத்தில் தர்சனம் கொடுத்தலில் காட்சி என்றும் கூறினார் -கற்பகம்‌ -உவமை யாகு பெயர்‌-

————-

கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே.
73–

எம்மை – எங்களை,
விற்றும்- விலைக்‌கு விற்கவும்‌,
விலை கொள்ளவும்‌ – அந்த விலைப் பொருளைத் தாம்‌ பெற்றுக் கொள்ளவும்‌, உரியான்‌ உரியவரகிய,
மாறன்‌ – நம்மாழ்வார்‌ பாடி யருளிய,
கவி வெள்‌ளத்தை – பாடலாகிய பிரவாகத்தை,
யாம்‌ – நாம்‌,
நிதம்‌ – தினந்தோறும் ,
கற்றும்‌ – மூலத்தைக் கற்கக் கடவோம்‌; (௮ப்படிக் கற்ற பிற்பாடு),
செவிஉற கேட்டும்‌ – அதன் பொருளைக் காதில் நன்றாகக்‌ கேட்கக் கடவோம்‌ ; பருகி – குடித்து, களித்தும்‌ – மகிழ்வோம்‌ ; முற்றும்‌ – அந்தப்‌ பிரபந்த முழுவதும்‌, உள்ளே -எம் மனத்தினுள்ளே, ௨க – விழும்படி.,-பெய்தும்‌ – ஊற்றிக் கொள்வோம்‌ ; மூழ்கி – அந்த வெள்ளத்தில்‌ அழுங்க,-குடைதும்‌ – ஸ்நாநஞ் செய்வோம்‌ ; முகந்து கொடு – அள்ளி முகந்து எடுத்‌துக் கொண்டு,
நில உற – நிலை பெற்ற இடங்களிலே,
நிற்றும்‌ – நிற்போம்‌;
நீந்துதம்‌ – நிலை கொள்ளாத இடங்களில்‌ நீந்திச் செல்வோம்‌;

ஆழ்வார்‌ பாடலாகிய வெள்ளத்தைப் பற்றி வாயினாற் பேசுவோம்‌ ;பிறர் பாற்‌ கேட்போம்‌ ; உண்டு மகிழ்வோம்‌ ; எடுத்து உள்ளே ஊற்றிக் கொள்வோம்‌ ; அதில்‌ ஸ்நாநஞ் செய்வோம்‌ ; நிலை கொண்ட இடத்தில்‌ நிற்போம்‌; நிலை கொள்ளாத விடத்தில்‌ நீந்துவோம்‌ என்பதாம்‌, பருகும் போதெல்லாம்‌ தெவிட்டாது தித்தித்தலால் களித்துமென்றார்‌. முழுதுங்‌ கொள்ளுதற்கு எம்‌ அறிவாகிய கொள்கலம் பற்றாதாயினும்‌ வலிந்துஊற்றிக் கொள்வோமென்றார்‌. ஓயாமற்‌ பருக வேண்டியதனால்‌ முகந்துகொடு நிற்றுமென்றார்‌, யாம்‌ அவர்க்கு அடிமையாய் விட்டபடியால்‌ அவர்‌ என்னை விற்கவும்‌ பொருளைப் பெறவுமுரியரென்றார்‌. விற்றல்‌-அடியார்க்கு அடியனாகச் செய்தல்‌.விலை கொள்ளுதல்‌ – அவ்வடியாரையும்‌ தம்மடியாராக்குதல்‌, மாறன்‌ – ஆழ்வார்‌ திருப் பெயர்களுளொன்று.-கற்றும்‌ முதலியவை – தன்மைப்‌ பன்மை எதிர் கால வினை முற்று, திருவாய் மொழியை வெள்ளமாக்கி அதற்கேற்ப முமுவதும்‌ உருவகஞ்‌ செய்தமையால்‌ இது முற்று உருவக அணி’.

———–

வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே.
74–

பொருள் -அகப்பொருள்
திணை -உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி –இடத் தலைப்பாடு,
துறை–கண்ணயந்‌துரைத்தல்‌.

கவிக்கு – செந்தமிழ்ப் பாடல்கள்‌ பாடுவதற்கு,
அரசன் -தலைவராகிய (நம்மாழ்வார் அவ தரித்த )
தெள்‌ – தெளிந்த,
அம்‌ – நீர்‌,
பரந்த – பரவிய,
வயல்‌ – கயல்கள் சூழ்ந்த,
குருகூர்‌ – திருக் குருகூரிலிருக்கிற ,
கொம்பின்‌ – அந்தப் பெண்ணினது ,
செம் முகத்து – சிவந்த முகத்தினிடத்தில்‌,
எம்‌ உள்ளம்‌ – எமது மனமானது ,
பரந் தனவயோ -இரண்டாகப்‌ பரவி இருக்கின்றனவோ
கமலத்து – தாமரை மலரில்‌,
வெள்ளம்‌ – பிரவாகமான கடல்கள்‌ தாம்‌,
பரந்தனவோ – பரவி யிருக்கின்‌றனவோ ? அன்றி- அல்லாமல்‌,
வெள்மதி மேல்‌ – வெண்மையாகிய சந்திரன்‌ மேலே யுள்ள,
முயல்‌ நீக்கி- களங்கமாகிய முயலை நீக்கி, கள்‌ளம்‌ – களவாகிய தொழிலொன்று தான்‌, பரந்தனவோ – இரண்டு வடிவாகி விளங்கு கின்றனவோ ?
கண்களோ – கண்கள் தாமோ ?
ஒன்றும்‌ ஒர்கிலோம்‌- ஒன்றாகத்‌ துணிந்து சொல்ல யாம்‌ ௮றிந்தோமில்லை.

ஆழ்வார்‌ குருகூரில்‌ எம்‌ தலைவியின்‌ முகத்திலுள்ளன கமலத்தில்‌ வெள்ளம்‌ பரந்தனவோ ? சந்தின் மேற்‌ களவுத் தொழில் தான்‌ பரந்னவோ? அல்லது என்‌ மனந்தான்‌ ௮ங்கனம்‌ பரந்தனவோ ? கண்கள்‌ தாமோ? ஒன்றும்‌ அறிந்தோமில்லை யென்பதாம்‌,-தலைவியைக் கண்ட பொழுது அவளுறுப்புக்கள் சில மலர்கள்‌ போலத்‌ தலைவனுக்குத்‌ தோன்றியதற்கு ஏற்ப இங்குக் கொம்பு என்றான் – கொம்பு-மலர் நிறைந்த கொம்பு, காம மயக்கத்சாலிருண்ட தன்‌ மனத்தை அவளுடைய இருண்டு விழியாகக்‌ கூறியது பண்பு பற்றி யென்க , இவன்‌ நெஞ்சம் அவள் விழியால்‌ தாக்கப்பட்டு அவ்விழி களிலே அடங்கிக் கிடந்ததனால் தன் மனமே அல்வடிவினது என்றான்‌.,அங்கனம்‌ கொண்ட மயலுச்கு எல்லை காணாமல்‌ ஆழ்ந்ததனால்‌ கரையிலாக் கடலே பரந்தனவோ என்றான்‌; இப்படியே கடலினும் பெரிய கண்கள் என்றார் இராமாயணத்திலும்‌, கொம்பு -உவமை யாகு பெயர்‌. வெள்ளம்‌, கள்ளம்‌, உள்‌ளம்‌ – பால் பகா அக்றினைப் பெயர்களாதலால்‌ பன்மை முடிபு கொண்டன.இத்துறை முற்றும்‌ ஐயவுவமை. குறிஞ்சிக்குரிய கருப்பொருளொன்று மில்லாமையால்‌ உரிப் பொருளைக் கொண்டு குறிஞ்சி யென்‌று கூ.றலாயிற்று,-இடந்தலைப்பாடு இயற்கைப் புணர்சசி துணிந்த தலை மகன்‌ மற்றை நாள்‌ முன்‌ கொடுத்த தெய்வம்‌ இன்னுங்‌ கொடுக்குமென்று அவ்விடஞ் செல்லுதல்‌. கை கோள்‌ – களவு, கூற்று -தலைவன்‌ கூற்று, மெய்ப்பாடு – பெருமிதம்‌ ; உவகையுமாம்‌. பயன்‌ -கண் சிறப்புரைத்தல்‌ ஹேதுவாகத் தலைவியைச் சார்தல்‌.

ஐய உவமை அணி
திரு உள்ளம் காம மயக்கத்தால் இருந்து அன்றோ போனது-தலைவன் நெஞ்சோடு கூறிக்கொண்டது-நலம் பாராட்டு துறை
கண் அழகு -ஞான வைலக்ஷண்யம்-இவருக்கு பேர் அறிவு ஆழ்வாரது சங்கல்பத்தாலே
இதயக் கமலத்திலே எழுந்து பொங்கும் ஞான வெள்ளத்தை -வெள்ளம் பரந்தனவோ கமலத்து என்கிறார் – இந்த தெளிந்த ஸூத்த ஞானம் பரமாத்மாவின் திரு உள்ளத்தையும் வசீகரிக்குமே -ஆகையால் வெண் மதி மேல் முயல் நீக்கிக் கள்ளம் பரந்தனவோ -என்கிறார்

————–

ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே
. 75–

ஓரும் – ஆராய்‌ந்து அறிகின்ற
தகைமைக்கு – உயர்ந்த தன்‌மைக்கு,
உரியாரும்‌ – தகுந்தவர்களும்‌;
ஓங்கிய -உயர்ந்த,
ஞானியரும்‌ -ஞானமுடையவர்களும்‌,
சாரும்‌ – அடையப் பெற்ற,
தனி. ஒப்பற்ற,
தலைவன் – தலைவராகிய,
சடகோபன்‌ – சடகோபனென்‌னும் பெயருடைய நம்மாழ்வாரவதரித்த,
தட பதிக்கு – விசாலமான திருக் குருகூருக்கு,
வாரும்‌- வரக் கடவீர்கள்‌ ;
உமக்கு -உங்களுக்கு
ஒர்உறுதி – ஒரு உறுதிப்‌ பாட்டை,
சொன்னேன்‌ – இப்பொழுது சொல்லுகிறேன்‌; (அப்படி. வருவீரேல்‌,)
நும்‌- உங்களுடைய,
மயக்கம்‌ எல்லாம்‌ -விபரீதமுழுவதும்‌,
தீரும்‌: -நீங்கி விடும்‌ ;
திருக்கு அறும்‌ – மாறுபாடுகள் நீங்கி விடும்‌
தீங்கு -தீவினைகள் எல்லாம்‌,
அறும்‌ – நீங்கும்‌;
சிந்தை -உங்கள் மனமும்
செவ்வே நிற்கும் -கோணாமல் ஒரு தன்மையாக நிலை நிற்கும்

நீங்கள் ஆழ்வார் குருகூருக்கு வாருங்கள்‌ ; உங்களுக்கு ஓர் உறுதி சொல்லுகின்றேன்‌ ; உங்கள்‌ மயக்கம்‌ நீங்கும்‌ ; திருக்கு நீங்கும்‌; மனம்‌ ஒழுங்குபடும்‌ ; தீங்கறுமென் பதாம்‌. ஒர்தல்‌ – கடவுளியல்பை யறிதல்‌, ஓங்கிய ஞானம்‌ – கடவுளை அறியும் அறிவு – மயக்கம்‌ – ஒன்றை மற்றொன்றாகக்‌ கருதும் விபரிதம்‌: என்றது எங்கும் வியாபித்து இருப்பவன் நாராயணனென்‌பதை மறந்து மற்றத் தெய்வங்க௭ வியாபித்திருப்பதாகக் கருதுதல்‌, திருக்கு – மாறுபாடு, அதாவது கடவுளும்‌ அவர் போல்வாரும்‌ நியமித்த வழிக்கு விரோதமாக நிற்றல்‌, இவைகள் ஓழியவே மனம்‌ ஓரு, தன்மையாகவே நின்று கடவுளைத் துதித்துப் பரம பதத்தை அடைதல்‌ கூடிமென்பதாம்‌,-இவை யனைத்தும்‌ திருக் குருகூரை யடைந்த மாத்திரையே பெறலாகுமென்றதனால்‌ இது அப் பதியின்‌ சிறப்புக் கூறப்பட்டது, வாரும்‌ என்பதற்கு நீங்கள் என்பதை தோன்றா எமுவாயாக்கிக் கொள்க,சொன்னேன்‌-தெளிவினால்‌ வந்த கால வழு வமைதி,

———

அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே.
76–

பொருள் —அகப் பொருள் .
திணை -மருதம்
கிளவி –பராத்தையிற் பிரிவு.
துறை–காமக் கிழத்தி மைந்தனை யெடுத்தல்‌.

அறு வகையாய் -ஆறு வகைப்பட்ட சமயமும்
சமய நூல்களும் ஐ வகைத்தாம்‌-ஐந்து வகைப் பட்டதாகிய,
புலனும்‌ உறுவகையால்‌-தன் மாத்திரைகளும்‌ கூடி யுள்ளவகையினால்,
சொன்ன – சொல்லிய,
ஓட்‌டம்‌எல்லாம்‌ – நீண்ட பொருள் விரிவு முழுவதும்‌,
ஒழிவித்து – போக்கி,
ஒருங்ககே – ஒரு சேர,
பெறு வகை ஆறு என – அடையும்படியான வழுி இது வென்று,
செய்த – பிரபந்த ரூபமாகச் செய்து காட்டி யருளிய,
பிரான்‌ -தலைவரும்‌,
குருகூர்‌ பிறந்த – குருகூரிலே அவதரித்‌தருளிய,
சிறு வகையார்‌ – சிறிய மனித வடிவினருமாகிய,
அவரை – அந்த நம்மாழ்வாரை,
தொழுதோம்‌ – யாம்‌ வணங்கினோம்(ஆதலால்‌) எம்மை
தீண்டுக- தொடுவாயாக;

சமய நூல்களில்‌ கூறிய மாறுபாடுகளை யெல்லாம்‌ போக்கி நல்வழி இதுவே யெனப்‌ பிரபந்த ரூபமாகக்‌ காட்டி யருளிய திருக் குருகூர்‌ நம்‌மாழ்வாரை யாம்‌ தொழுதோமாதலால்‌ மைந்தனே ! எம்மைத் தொடுவாயாக வென்பதாம்‌, பஞ்ச, தன் மாத்திரை: சுவை, ஒளி, ஊறு! ஒசை, நாற்றம்‌ எனபன, இவற்றாற் சொல்லிய ஓட்டம்‌ – அவ்வச்‌ சமய நால்களில்‌ கூறிய தத்துவ சாத்திரங்களாம்‌ ; எனவே அவற்றை யொழித்து நான்கு வேதங்களின்‌ பொருள்களாகிய கிருவாய்மொழி முதலிய நான்கு பிரபந்தங்களையும்‌ நிலையிட்டருளியபடி என்பதாம்‌, ஆய சமயம்‌ – இடைச்‌ சொற்றொடர்‌. ஒழிவித்து, வி- பிற வினை விகுதி. குரு கூர்ப்பிறந்த – எழாம்‌ வேற்றுமைத் தொகை.
தலைவன்‌ பரத்தையிற்‌ பிரிவில்‌ தலைவியின்‌ மைந்தன்‌ தெருவில்‌ விளையாடும் பொழுது அங்கு வந்த காமக் கிழத்தி தான்‌ தூய்மை யுடையவளென்று கூறி ௮ப் புதல்வனைத் தன் பாலழைத்தது இத் துறையின் கருத்து. தலைவன்‌ பரத்தையிற் பிரிதலும்‌ தலைவிக்கு ஊடல் தோன்றுதலின்‌ உரிப் பொருளால்‌ மருதமாயிற்று , மெய்ப்பாடு பெருமிதம்‌. பயன்‌-காமக் கிழத்தி மகிழ்தல்‌. கை கோள்‌ – கற்பு, கூற்று – காமக் கிழத்தி கூற்று,

சிறு மா மானிசராய்த் தோன்றி நம்மை ஆண்டு அருளிய ஆழ்வாரை வணங்கினோம்
ஐவகைத் தாம்புலனும் எம்மைத் தீண்டுகவே.–மெய் வாய் கண் மூக்கு செவி -ஐம் பொறிகளாலும் உண்டாகும் ஸ்பர்ச ரஸ ரூபம் கந்தம் ஸப்தம் போன்ற ஐந்து வகைப் புலன்களும் எம்மைச் சார்வனவாக –அவற்றைக் குறித்து அஞ்ச வேண்டாமே

சடகோபர் எம்மைத் தீண்டுகை என்று தலைமகள் பிரணய ரோஷம் அடைந்து
நீங்கப் பெற்றதாகவும் இதற்குப் பொருள் சொல்வர்

சிறு மா மானிடராய் ஆழ்வார் அடியார்களையும் சொன்னவாறு
வழுதி நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தேன்-என்றாரே –

————

தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே
. 77–

அணி நீர்‌ -அழகிய பொருநை யாற்று நீர் பரந்த,
தமிழ்‌ -தமிழ் வளம் பொருந்திய,
திரு – அழகிய,
பாண்டி நாட்டு- தன் பாண்டி நாட்டிலே, உருக் காட்டிய – வடிவமெடுத்தருளின, பாவகற்கு – பரி சுத்தரான நம்மாழ்வாருக்கு,
அன்பனாய்‌ – தொண்டு செய்பவனாய் ,
ஆண்டில்‌ -அவ்விடத்‌தில்‌,
வீனையேன்‌ -தீ வினை யுடையவனாகிய நான்‌,
இவ் வெறும்‌ பிறவி – இப் பயனற்ற பிறப்பில்‌,
பிறந்த அக் காலத்திலே – பிறந்த அப்‌பொழுதே தானே.
தீண்டி- பரிசித்து .
திருவடியைப் பற்றிக் கொண்டு -ஆழ்வார்‌ திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, சிந்தித்ததை – மனத்தில் நினைத்ததனை, வேண்டிக் கொளப்‌ பெற்றிலேன்‌ – பிரார்த்தித்து அடையப்‌ பெற்றேன் இல்லை ;

நான்‌ பிறந்த பொழுதே நம்மாழ்வாருக்‌ கன்புடையோனாய்‌ அவர்‌ திருவடியைப் பற்றிக் கொண்டு நினைத்ததைப்‌ பிரார்த்தித்துப்‌ பெற்றுக்‌ கொண்டேனில்லை என்பதாம்‌. மற்றை நாட்டைக் காட்டிலும்‌ சிறப்புடைமை தோன்றம்‌ தமிழ்த் திருநாடு என்றார்‌.-பாவகன்‌ – அக்னி. அவனைப்‌ போலப் பரிசுத்த முடைமையால்‌ ஆழ்வாரை அவ்வாறு கூறினார்‌. இம்மைப்‌ பயனைத் தேடி உழலுதலால்‌ வெறும் பிறவி என்றார்‌. சிந்தித்தது – வீட்‌டின்பம்‌, பாவகன்‌- உவமை யாகு பெயர்‌, வெறம் பிறவி-பண்புத் தொகை நிலைத் தொடர்‌, சிந்தித்தது – வினைப்பெயர்‌,

மதுர கவி ஆழ்வார் இந்த தேஜஸ்ஸூ பார்த்தே இவரை வந்து சேர்ந்தார் அன்றோ
ஆதலால் அவருக்கு பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே-என்பது பொருந்துமே-தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் -அடையப் பெற்றேன் அல்லேன்

பழுதே பல பகலும் போக்கினேன் -அஞ்சி அழுகிறார்-வேண்டிய அனைத்தையும் தர வல்லவர் ஆழ்வார் என்பதாலேயே – சிந்தித்ததையே வேண்டிக் கொளப் பெற்றிலேன் -என்கிறார்-இங்கு சிந்தித்தது முக்தியையே இவருக்கு –

————–

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே
. 78–

பாவகத்தால்‌ – அம்சத்தினால்‌,
தன்‌ – மாயோனானவன் தன்னுடைய,
திருஅவதாரம்‌ – சிறந்த அவதாரங்கள்‌, பதினொன்று என்‌று -பதினொன்றாகுமென்று,
இ பூவகச்தார்‌ – இந்த வுலகத்திலுள்ளவர்‌கள்‌,
அறியாத வண்ணம்‌ -அறிந்து கொள்ளாதபடி
தனையே புகழ்ந்து – தன்னைத் தானே கொண்டாடி,
நா ௮கத்தால்‌-தந் நாவினிடமாக,
ஆயிரம்‌ கவி பாடி -ஆயிரம் பாடல்கள் பாடி,
நடித்து- வேறாயுள்ளவரைப்‌ போலக் காட்டி, அளித்த -கொடுத்தருளிய,
கோ அகத்தாற்கு அன்றி-பரம பத நிலைமையை யுடையவராகிய நம்மாழ் வாருக்கே யல்லாமல்‌.
புறத்தார்‌-அன்னியர்களுக்கு,
செய்‌ – செய்கின்ற
குற்றேவல்கள் -சிறிய ஊழியங்கள்
என் –என்ன பயன் தரும்

நம்மாழ்வார் மாயோன் அம்சமாகப் பிறந்து அந்த மாயோனைத் துதித்தலால் தன்னையே புகழ்ந்து கொண்டவராய்‌ ஆயிரம் பாடல்கள் பாடி யருளினார்‌-௮ப்படிப் பட்டவர்ச்குத் தொண்டு செய்யாமல்‌ பிறருக்குச் செய்‌யும்‌ ஊழியத்தாலடைவன யாவை யென்பதாம்‌,-ஆழ்வார் திருமாலின்‌ அம்சமென்று கூறப்படுதலால்‌ அந்த மாயோனவதாரம்‌ பத்தன்றிப் பதினொன்றென்‌றார்‌. அக் காரணத்தால்‌ இவர்‌ மாயோனைப் புகழ்ந்ததும் தம்மைப் புகழ்ந்ததாயிற்று, நடித்தல்‌- மாயோன்‌ வேறு தாம் வேறு என்று உலகத்தாருக்குத் தோன்ற நடித்தல்‌-. பூ ௮கம்‌ -பூமியாகிய இடம்‌; இருபெயரொட்டு, தன்னையே, ஏ -பிரி நிலை, கோவகத்தான்‌ – மேலாகிய இடத்தை யுடையவன்‌, புறத்தார்ச் செய்‌- வேற்றுமைத் தொகை –

வங்கி புரத்து நம்பி -ஆழ்வார் ப்ரபாவத்தாலே எம்பெருமானே இவ்வாறு திரு அவதரித்தார் என்னலாம் படி என்று அருளிச் செய்வார்-

தானே யான் என்பானாகத் தன்னைத் தன்காண் துதித்து-யானாய்த் தன்னைத் தான் பாடி–நாராயணா அடியேன் நாடும் தமிழ் வேத பாராயணா சடகோபா -பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்–திருப்புளிய மரம் ஆதி சேஷன் அம்சம் தானே–அத்ரி ஜமதக்கினி -ப்ராஹ்மண -தத்தாத்ரேயர் -பரசுராமன் முதல் யுகத்தில்–சக்ரவர்த்தி திருமகன் க்ஷத்ரியர் அடுத்த யுகத்திலும்–வைஸ்ய யதுகுல கண்ணன் அடுத்தும்–கலியுகத்தில் ஆவேச அவதாரம் -வேத வியாசராய் வேதங்களை வெளியிட்டு அருளினால் போல் திவ்ய பிரபந்தங்களை வெளியிட்டு அருளவே அன்றோ இவர் திரு அவதாரம் –

———

குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே
79–

குருகைப்‌ பிரான்‌ – திருக் குருகூரிலுள்ள இறைவராகிய,
எம்‌ பிரான்‌ தன்‌ – எங்கள்‌ நம்மாழ்வாருடைய,
இயல்‌ இசைக்கு – இலக்கணமும்‌ பண்ணும்‌ அமைந்த திவ்யப்‌ பிரபந்தங்களாலே. (யான்‌) குற்றேவலும்‌ செய்து – சிறிய வேலைகளும் செய்து ,
மெய் கண்டு – அப்பிரபந்தங்களின்‌ தத்துவார்த்தத்தைத் தெரிந்து கொண்டு,
கை கொண்டு கும்பிட்டு – எனது கைகளாலஞ்சலி செய்து.
அன்பு பெற்றேன்‌ – அவருடைய கருணையை யடையப் பெற்றேன் ;
என்‌ போல்‌- என்னைப் போல,
எவர்‌ – யாவர் தாம்‌,
பேறு பெற்றார்‌ – பயனடைந்து இருக்கிறார்கள்‌ ? (ஒருவருமில்லை என்றதாம்‌),
பின்னையே பிறந்து – பிற்பட்டு உண்டாகி,
வெற்று ஏவலில் நின்ற – பயனற்ற பணி விடைகளில்‌ நிலை நிற்கின்ற ,
பொய்‌ அன்பர்‌ தாங்களும்‌ – பொய்யாகிய வழிகளில் சென்று அன்பு செய்கின்றவர்களும்‌,
மெய்‌ – தத்துவ ஞானத்தை ,
உணர்ந்தார்‌ – அறிந்து கொண்‌டார்கள்‌ ; எறறு – இது எத்தன்மைத்தான வியப்புடையது

யான்‌ ஆழ்வார்‌ பிரபந்தத்தை ஆரியருக்கு ஏவல்‌ முதலியவற்றைச்‌ செய்து படித்து ௨ண்மைப் பொருளறிந்து அவர் அருள் பெற்றேன் – என்‌னைப் போல் பெற்றவர் யார்‌? ஆழ்வார்க்குப்‌ பிற் பட்ட பலர்களும்‌ இந்தப்‌ பிரபந்தத்தினால் தத்துவ ஞானம்‌ பெற்றார்கள்‌, ஈதென்ன வியப்பு ?என்பதாம்‌. இயல்‌, இசை – சினை யாகு பெயர்‌.-ஏவலும்‌, உம்‌. இறந்தது தழுவிய எச்சம்‌. எற்றே , எல்‌ – தே எனப் பிரித்து ஒளி பொருந்திய தெய்வமாகிய பிரானென்று கூட்டினும்‌ அமையும்‌. கைகொண்டு, கொடை-மூன்றாம் வேற்றுமைச்‌ சொல்லருபு, எற்று – குறிப்பு முற்று,

———

இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–
80–

பொருள் –அகப் புறப் பொருள்‌,
திணை -கைக்கிளை
துறை–காட்சி; ஆண் பாற் கூறறு,

இயலை – இலக்கணங்களை,
தொடுத்து – திருவாய்மொழியி்‌ல் புகுத்தி,
இன்‌ இசையை- இனிய இராகங்களை.
புணர்த்து-கூட்டி,
எம்மை–, இ. இந்தா ,
பிறவி மயலை. – பிறப்பினால் உண்டாகிய மயக்கத்தை ,
துடைத்த – போக்கின,
பிரான்‌ – நம்மாழ்வாரவதரித்தருளிய,
குருகூர்‌ – திருக் குருகூரில்‌,
மதியைக் கொணர்ந்து- சந்திரனைப் பிடித்து வந்து ,
முயலை – அதிலுள்ள களங்கத்தை, துடைத்து – போக்கி , (அதனிடத்தில்‌),
தனுவைப் பதித்து – இரண்டு விற்களை அமைத்து ,
முத்தங் குயிற்றி – முத்துக்களைப்‌ பதித்து,
கயலை – இண்டு கயல் மீன்களை,
கிடத்தி- வைத்து,
சாளரத்தூடு – சன்னல்களுள்ளே வந்து,
கதவு இட்‌டதே கொல்‌ – கதவு தாழ் போடப் பட்டதோ ?

இலக்கண அமைதியும்‌ இசை அமைதியுமுள்ள பிர்பந்தஞ் செய்தருளின ஆழ்வாரது குருகூரில்‌ சந்திரனிடத்தில்‌ களங்கம் போக்கி விட்‌டும்‌ முத்தும்‌ மீனும்‌ அமைத்து பலகணியினூடு வைத்துக் கதவிடப் பட்‌டதோ வென்றான்‌ என்பதாம்‌.-எல்லா இலக்கணங்களுக்கும்‌ இலக்கியமாகக் கொள்ளுதலால்‌ இயலைத் தொடுத்தென்றார்‌ – இசையோடு கூறப்படுவதனால் இசையைப்‌ புணர்த்தென்றார்‌. படித்தலால்‌ பிறப்பின்‌
மயக்கம்‌ நீங்குதல் பற்றி மயலைத் துடைத்தென்றார்‌. களங்கம் துடைத்த
மதி – முகத்துக்கு உவமை. தனு-புருவத்துக்கும்‌, முத்துக்கள்‌. – பற்களுக்கும்‌; கயல்கள்‌ – கண்களுக்கும்‌ உவமை யாதலால்‌ இவை யனைத்தும்‌ உவமை யாகு பெயர்கள்‌. கொணர்ந்து , கொணா – பகுதி, கொல்லென்‌னும்‌ ஐய இடைச் சொல்‌ பிரித்துக் கூட்டிப் பொருள்‌ கொள்ளப்பட்டது -கைக் கிளை – ஒரு மருங்கு பற்றிய அன்பு; அதாவது ஒரு தலைக் காமம்‌;ஒப்பாரு மிக்காரு மில்லாத்‌ தலைவன்‌ வேட்டை மேலீட்டினால் சென்று ஒரு தலைவியை நோக்கி மயங்கிய சிறப்புடைக்‌ கைக்கிளை யன்றி அடியோர்‌
பாங்கினும்‌?? என்ற விதிப்படி யமைந்த அடியவன்‌ தலை மகனாய்த்‌ தெருவில் செல்பவன்‌ சாளரத்துள் ஓருத்தியைக் கண்டு இருவரும் மயங்கியவழித் தலைவன்‌ கூறியது, மெய்ப்பாடு -மருட்கை, பயன்‌ – வியப்பினாலுள்ள மகிழ்தல்-

————

இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே.
81–

கேணியிலும்‌ – கிணறுகளிலும்‌,
பட்டத்திலும்‌ – பட்டக்‌ கால்களிலும்‌,
பைந்தடத்திலும்‌ – பசிய குளங்களிலும்‌,
ஓடை – நீரோடைகள்‌ சூழ்ந்த,
பழனத்திலும்‌ – பள்ளமாகிய வயல்களிலும்‌,
குட்டத்திலும்‌ – ஆழமான குட்டைகளிலும்‌,
கயல்பாய்‌ – கயல் மீன்‌ பாய்ந்து குதிக்கின்ற,
குருகூரர்‌ – குருகூரிலவதரித்த நம்மாழ்வாருடைய,
குணங்களுக்கு – நல்லொழுக்கம்‌ அமைந்த குணங்களைக் கண்டு,
இருப்பின்‌ கிட்டத்திலும்‌ வலியாரும்‌-இரும்புகளுருக்குகின்‌ற உருக்குக் கிட்டானைக்‌ காட்டிலும்‌ வலிய நெஞ்சுடையவரும்‌,
இட்டத்திலும்‌ _ கருத்துக்களைச்‌ சொல்லுமிடத்திலும்‌,
தம்தம்‌ உள்ளத்திலும்‌ – தங்கள்‌ தங்கள்‌ மனத்திலும்‌,
எண்ணிலும்‌ – நினைப்பினும்‌,
உருகுவர்‌ – கரைவார்கள்‌ ;

குருகூராழ்வாருடைய நல்லொழுக்கமமைந்த குணங்களைக் கண்டு கடின செஞ்சுடையவரும்‌ மனமுருகு வாரென்பதாம்‌, பட்டம்‌ – தண்‌ணீர்ப் பெருக்கும் காலத்‌தில் மட்டும்‌ ஏறிப் பாய்கிற மேட்டு நிலம்‌. நீர் வளத்‌தால்‌ மேடும்‌ பள்ளமான வயல்களிலும்‌ கிணறு குள முதலியவற்றிலும்‌ ஏற்றத் தாழ்வின்றி மீன்கள்‌ பாய்தல் போல ஆழ்வாரின்‌ குண விசேஷத்‌தால்‌ அறிந்தோர்‌ அறியாதோர் கொடிய நெஞ்சர்‌ முதலிய யாவரும்‌ உருகுவாரென்று தொகை மொழியாற்‌ கொள்க , இரும்பு – வன்றொடராயிற்‌
று. ஓடையாகிய பழனம்‌ என்றாக்கி இரு பெயரொட்டென்றலுமாம்‌’-இதற்கு நீண்ட வயலென்று பொருள் கொள்க -குட்டம்‌ – பண்பாகு பெயர்‌.

இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்-இரும்பாகில் அக்னியாலே நிமிர்த்துக் கொள்ளலாம்-இது ஒருபடியாலும் திருத்த ஒண்ணாது என்கை-கடின ஸ்தலத்தில் வர்ஷித்தால் காடின்யம் அடங்க நெகிழிச்சிக்கு -உறுப்பு ஆமாப் போலே
விஷயாந்தரத்தாலே மனஸூ அதி கடினமானாலும் சிதிலமாம்படி வயிர உருக்காய் இறே
பகவத் ப்ரபாவம் இருப்பது –-ஆழ்வாரது திரு அருள் பெருக்கால் -இடையறாத நீர்ப்பெருக்கால் மேடு பள்ளம் வாசி இன்றி
எங்கும் ஒக்கக் கயல் பாய்தல் போலே வலிய நெஞ்சினாரும் மெல் நெஞ்சினாரும் வாசி அற உருகுவார்களே –

————————–

குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–

பெரும்‌- பெரிய,
தண்‌ – குளிர்ந்த,
வகுளம்‌ மணம்‌ – மகிழ மலரின்‌ மணமானது ,
வேண்டும்‌ – விரும்பி யுறைகின்ற,
தண் தெரியல்‌ – குளிர்ந்த மாலை யுடைய,
பெருமான்‌ – நம்மாழ்வாரருளிச் செய்த,
செய்யுள்‌ – பாடல்களாகிய,
மா மணியின்‌ – சிறந்த இரத்தினங்களுடைய,
கணம்‌ -,கூட்டத்தை ,
வேண்டும்‌ என்று – கற்க வேண்டுமென்று,
அறிவாரை – அன்போடு படித்து அறிந்தவரை ,
கண்டால்‌ – தரிசித்தால்‌,
குணம்‌வேண்டுமே – அவர்களுக்கு நற் குணங்கள்‌ வேண்டுமோ? (வேண்டாம்‌)
நல்‌ குலம் வேண்டுமே – நல்ல குலமாயிருக்க வேண்டுமோ ? (வேண்டாம்‌)
௮ குலத்து ஒழுக்காம்‌ – அந்தக் குலத்‌துக்குரிய நடையாகிய, –
பிணம்‌-பயனற்ற பிணம் போல்‌வதும்‌. வேண்டுமே – வேண்டுமோ ? (வேண்‌
டாம்‌)
செல்வம்‌ பேய்‌ – பொருளாகிய பிசாசும்‌, வேண்டுமே – வேண்‌டுமோ ? வேண்டாம்‌
ஆதலால்‌, சென்று -உடனே அருகிற் சென்று,
கை தொழும்‌ – கை கூப்பி வணங்குங்கள்‌

நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழிப்‌ பிரபந்தத்தை அன்‌போடு படிப்பவரைக் கண்டால்‌ ௮வருடைய குணம்‌ குலம்‌ நடை பொருள்‌ யாவும்‌ பார்க்க வேண்டியதில்லை உடனே சென்று வணங்குங்கள்‌ -என்பதாம்‌. குணம்‌ – அன்பு. பொருள்‌, அடக்கம்‌ முதலியன. குலம்‌ – ௮ந்தணர்‌ முதலிய உயர்குலம்‌, நடை – அவர்கள்‌ தர்கள்‌ மதத்துக் ஏற்பக் கட்டியதானால்‌ பிணமென்றிகழ்ந்தார்‌. பேய்‌ – தான்‌ பிடித்தவரைத்‌ தன்‌ வசமாக்குதல்‌ போலப்‌ பொருளும்‌ விருமபினாரை வசமாக்குதலால் பேயென்றார்‌. மணிக்கு மேற் சிறந்த பொருள்‌ தோற்றத்தி லில்லை யாதலால்‌ மணியை உவமித்தார் -வேண்டுமே என்பவன வற்றிலுள்ள ஏகாரங்கள்‌ எதிர் மறைப் பொருளன.-செல்வப் பேய்‌ – இருபெயரொட்டு, பெருந் தண் வகுளம்‌- பண்புத் தொகை ; பன் மொழித் தொடர்‌:

அவாவில் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –
இப் பத்து அறிந்தார் தொண்டர் வாழ்வது சூழ் பொன் விசும்பே -என்றவாறு-

———-

தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென்னாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே–
83-

தொழும்பு ஆக்கிய – என்னை அடிமையாகக் கொண்ட,
வினை – தீ வினை மிக்க,
தொல்லை – பண்டைக் காலம் தொட்டுள்ள,
பிறவி-பிறப்பாகிய, (கடலிலுள்ள), சுழியிடை நின்று – தண்ணீரின்‌ சுழலிருந்து
எழும்‌ – வெளியில்‌ வரும்படியாகிய, பாக்கியம்‌ – செல்வம்‌,
உடைத்து ஆக்கவும்‌ – எனக்கு உடையதாக்கவும்‌,
தென்‌ – அழகிய,
இயலோடு இசைந்து – இலக்கணத்துடனே பொருந்தி,
கெழும்‌ – விளங்‌கிய,
பா – பிரபந்தப் பாடல்களில்‌,
கெழுமிய – பொருந்திய,
கீர்த்தியை -கடவுளின்‌ குண விசேடங்களை,
நாளும்‌ கிளத்தி- தினந்தோறும்‌ சொல்‌லிச் சொல்லி,
என்‌ நா – எனது நாக்கில்‌,
தழும்பு ஆக்கவும்‌ – தழும்பு ஏறச் செய்யவும்‌, வல்ல கோ – வலியரான இறைவர்‌,
தயா பரன்‌ – கருணை யுடையவரான, சடகோபன்‌ – நம்மாழ்வாரேயாம்‌ ;

பிறவிப் பெருங் கடற்‌ சுழியில் அமுங்கிப்‌ போகாமல் எழுந்து மீண்டு வருந்‌ திறமை யுடையதாக்கவும்‌ திவ்வியப்‌ பிரபந்தங்களில் உள்ள கடவுளின்‌ மகிமையைத் தினந்தோறும்‌ கூறி எனது நாக்கில் தழும்பேறச்‌ செய்யவும் தகுதி யுள்ளவர்‌ நம்மாழ்வாரே யென்பதாம்‌. தீ வினை தான் செல்லும்‌ வழியே என்னை இழுத்தலால்‌ தோழும்பாக்கிய வினை யென்‌றார்‌. மாறாமல்‌ தொடர்ந்து வருதலால்‌ தொல்லைப் பிறவி யென்றார்‌.
இது பற்றியே தொல்லை நம்‌ பிறவி யெண்ணிற்‌றொடு கடல்‌ மணலுமாற்றா” என்றார்‌ திருத் தக்க தேவரும்‌, அதில்‌ நின்று மீண்ட வரருமையாதலால்‌ சுழி யென்றார்‌. ஏனை மொழி களுக்குச் சிறப்புடை யிலக்கணம்‌ அமையாமை நோக்கி அரிய பெரிய தெய்வத் தமிழுக்கு உரிய இலக்கணத்துக்குத் தென்னியல் என்றார் -தொல்லை – பண்புப் பெயர்‌, உடைத்து –
குறிப்பு முற்றெச்சம்‌. வல்ல – குறிப்புப் பெயர் எச்சம்‌, கோ ௭ன்னும்‌ எழுவாய்‌ ஆம்‌ என்னும்‌ ஆக்கத்தைக் கொண்டு முடிந்தது –

தயா பரன் -பரம தயாளு-முக்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரம் என்றாரே முன்னமே-செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத்துற்று-அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றி

——–

பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே
.–84-

பொருள் -அகப் புறப் பொருள் .
திணை -பெருந்திணை
கிளவி -௮றத்தொடு நிற்றல்‌,
துறை– செவிலி நற்றாயத் தறத்தோடு நிற்றல்-நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்

நங்காய்‌ – அன்னையே !
பரந்து – பரவி,
அலைக்கும்‌ – அலை மோதுகின்ற, பொருநை – தாமிரபர்ணி நதி சூழ்ந்த, குருகூர்‌ என்‌னில்‌ – திருக் குருகூர் என்று யாரேனும் கூறினால்‌,
உன்‌ மகள்‌ – உன்‌ புதல்வி,
கண் பனி மல்கும்‌ – கண்களில்‌ நீர்‌ பெருக்குவாள்‌ ;
கரம்‌ – கைகளை,
தலை கொள்ளும்‌ – தலையிற்‌ குவித்துக் கொள்ளுவாள்‌ :
கருத்து உள்‌ளும்‌ – மனத்தில்‌ தியானிக்கின்றாள்
(கருத்து ) உருகும் – மனம்‌ உருகுகின்றாள்
கவியால்‌ – பாடல்களால்‌,
உலகை – இந்தத்‌ தமிழ் நாட்டினை,
புரந்து – பாதுகாத்து,
அலைக்கும்‌ வினை – உயிர்களை வருத்துகின்ற தீ வினைகளை,
தீர்த்தான்‌ – நீக்கிய நம்மாழ்வார்‌.
புனை – ௮ணிந்து கொள்‌ளுகின்ற,
மகிழ்‌ பூவும்‌ ௮ன்றி- மகிழ மலரைச் சூடிக் கொள்ள விரும்புவதும் அல்லாமல்‌,
மரம்‌ தலைக் கொள்ளவும்‌ – ௮ந்த மகிழ மரத்தை அணைத்து மேற் கொள்ளவும்‌,
போதும்‌ – செல்லுகின்றனள் -இப்படி
யன்றி உன் மகள்‌ கருத்து இது என்று வருவித்து முடிப்பினுமையும்‌.

நங்காய்‌ உன்‌ மகள்‌ குருகூர் என்றவுடன்‌ கண்ணீர்‌ வடிக்கிறாள்‌ -கை கூப்புவாள்‌ ; கருத்தில்‌ நினைக்கிறாள்‌ மனம் கரைகிறாள்‌ ; அவ்வாழ்வார் சூடுகிற பூவை சூடிக் கொள்வதுமன்றி அந்த மகிழ மரத்தை அணைத்துக் கொள்ளவும்‌ செல்கிறாள்‌ என்பதாம்‌. நங்கை – எல்லாக்‌
குணங்களும்‌ நிறைந்தவள்‌. இதன்‌ ஆண்பால்‌ – நம்பி. கிளவித் தலைவன்‌ பெயர் கூறலின்‌ அகப்புறமாயிறறு, புறமெனவே அதன்‌ பகுதியாகிய பெருந் திணையாம்‌. தலைவனைப்‌ பிரிந்த தலைவியின்‌ சரீர வேறு பாட்டை யறிந்து இது தெய்வத்தினால் ஆயி்ற்று என்று அத் தெய்வத்துக்குச்‌ சிறப்புச்‌ செய்யப் புகுந்த பொழுது அதனை அறிந்த தலைவி அஞ்சித்‌ தோழியிடத்‌துத்‌ தன்‌ காம நிலையைக் கூறத்‌ தோழியாலறிந்த செவிலி யானவள்‌ பெற்ற தாய்க்கு நிகழ்ந்தமை வெளியிடுதல்‌ கிளவியின்‌ துறையாகும்‌-கண் பனி மல்குமெனவே அன்பும்‌ தலைக் கொள்ளுமெனவே ஆர்வமும்‌ உள்ளுமெனவே கூடற்குறிப்பும்‌ உருகுமெனவே இன்பத்தின்‌ மகிழ்ச்சியும் மரம் தலைக் கொள்ளப் போதுமெனவே பிறரைக் கூற ஏதம் பயத்தலையும் குறிப்பிட்டமை யறிக-

தாராயினும் தழை யதாயினும் தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே-ஆழ்வார் சம்பந்தத்தை நேராகவோ அடியார்கள் மூலமாகவோ பெற ஆசை விஞ்சி உள்ளபடி-ஆழ்வார் அடியார்கள் வாழும் இடங்களையும் தலை மேல் கொள்ளுகிறார் என்றபடி –

———–

கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற்கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே
. 85–

பொருள்‌–அகப் பொருள்‌
திணை – உரிப் பொருளால் பாலை.
கிளவி -உடன்போக்கு ,
துறை – பாங்கி தலைவனை உடன் படுத்தல் .

(ஐயனே !) கருத்தில்‌ – உமது மனத்திலே,
கருணை வைத்‌து – அன்பு பாராட்டி,
இவளொடு – இத் தலைவியைக் கைக் கொண்டு,
ஏகும்‌ – செல்லக் கடவீர்‌ ;
இதுவும்‌ – இப்படி நீர் கைக் கொள்ளுதலும்‌,
கலை மறையோர்‌ – கல்வியில் சிறந்த அந்தணர்கள்‌,
திருத்திற்று – ஒழுங்கு பட அமைத்ததாகிய,
ஒரு மணம்‌ – எண் வகை மணத்து ளொன்றாகிய காந்தருவமேயாம்‌ ;
தினம்‌ மயல் தீரும்‌ – இதனால்‌ காள்தோறும்‌ உங்களுக்குண்டாகிய காம மயக்கமும்‌ நீங்கும்‌;
நீரில்‌ – தண்ணீரருகில்‌,
நிறை – முளைத்து நிறைந்துள்ள,
முருத்தின்‌ – வெண்மையான அடிக்‌ குருத்துக்களை யுடைய,
செருந்து – நெட்டிக் கோரைகளுச்கு,
அயலே -பக்கத்திலுள்ள,
கரும்பின்‌ – கரும்புகளைடைய,
குருத்தில்‌ – குருத்துக்‌களில்‌,
முயல்‌ – முயற்கூடாகிய சந்திரன் போல, பிரசம்‌ வைக்கும்‌ -தேனடைகள்‌ வைக்கின்‌ற,
குருகூர்‌ – அவ்வாழ்வார் அவரித்த திருக் குருகூரை
சென்று – போய்‌,
கூடுமின்‌ – அடையுங்கள்‌ ;

ஐயனே ! இவளைக் கைக் கொண்டு செல்வீராக; இப்படிச் செல்வதும் கந்தர்வ மணத்தின் பாற்படும்‌ ; உங்களுக் குண்டாகிய காம மயக்கமும் தீரும்‌; ஆதலால்‌ நீங்கள்‌ திருக் குருகரைப் போயடையுங்கள்‌ என்பதாம்‌, நீரில்‌ முளைத்த மெட்டிக் கோரையோடு தோன்றி விளங்கிய கரும்பில்‌ தேனடை வைப்பது போல இந்தக் குடும்பத்‌தில்‌ இருக்கிற தன்‌
னிற் சிறந்து விளங்கிய தலைவி யிடத்து அன்பு வைப்பீர்‌ என்று உள்ளுறை யுவமம் கொள்க , இதனுள்‌ நீர் தலைவியின்‌ குடியாகவும்‌ தோழி நெட்டிச்‌கோரை யாகவும்‌ தலைவி கரும்பாகவும்‌ தலைவனது அன்பு தேனடையாகவும்‌ உவமித்தமை காண்க. இவை முழுவதும்‌ முதாலொடு முதல் வந்த மெய் யுவமம்‌,-எண் வகை மணமான :– பிரமம்‌, பிராசாபத்தியம்‌,ஆரிடம்‌. தெய்வம்‌, காந்தருவம்‌, அசுரம்‌, இராக்கதம்‌, பைசாசம்‌ என்‌பன, தேனனடையைச் சந்திரனாக வுவமித்தல்‌ பண்டை வழக்கு, : அவனுந் தான்‌, ஏனலிதணச்‌ தடிற் புகை யுண்டி யங்கும் , வானூர்‌ மதியம்‌ வரை சேரினவ்வரைத்‌, தேனினிறாலென வேணி யிழைத்திருச்கும் கானக நாடன்‌ மகன்‌ ‘என்பதினாலுமறிக , தலைவன்‌ தலைவி சுரத்தில்‌ செல்லுதலால்‌ திணை -பாலை யாயிற்று , தலைவனுடன்‌ தலைவி செல்லுதலால்‌ உடன்போக்காயிற்று, இத் துறை- * போக்கும்‌ வரைவும்‌ மனைவிக்கட்‌
டோன்றும்‌ ” (தொல்‌ – பொரு – 225) என்ற வழுவமைதிக்கு மாறாகத்‌ தோழி கூற்றாற் கூறியது : ஒன்‌றித் தோன்றும்‌ தோழி மேன ”(தொல்‌ – பொரு – 19..) என்பதனாற்‌ கொள்க,

கரும்பினிடைத்தேறல் -கலியன்-சேஷி பேற்றுக்கு உகப்பானும் அவனே -ஆகவே இவருடைய மயலும் தீருமே –

————-

கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே
. 86–

கூட்டங்கள்‌ தோறும்‌- தாம்தாம்‌ கூடுமிடங்களிலெல்‌லாம்‌,
குருகை பிரான்‌ – திருக் குருகூரிலவதரித்த நம்மாழ்வாருடைய
குணம்‌ -சிறந்த குணங்களை,
கூறும்‌ – சொல்லிப் புகழ்கின்ற,
அன்பர்‌ ஈட்‌டங்கள்‌ தோறும்‌ – அடியார்களின் கூட்டங்களிலெல்லாம்‌,
இருக்கப்‌ பெற்றோம்‌ – கூடி யிருக்கலாயினேம்‌;
இருந்து – அப்படிக் கூடியிருந்த,
எம்முடைய… நாட்டங்கள்‌ தோறும்‌ -இரண்டு கண்களிலும்‌,
புனல்‌ வந்து- கண்ணீர் பெருகி,
நாலப்‌ பெற்றோம்‌- வடியப் பெற்றோம்‌ ;
(ஆதலால்‌) இனி மேல்‌, வீட்டு- பரமபதத்தில்‌,
எங்கள்‌ தோழர்க்கு என்றே (உள்ளவர்கள்‌) தங்கள் நண்பர்‌களுக்கு வேண்டுமென்று அமைத்தலால்‌,
பெரும்‌ போகம்‌- பேரின்ப நலமானது, விளைகின்றது -(யாம் போகு முன்‌) உண்டா யிருக்கிறது –

கூடும் போதெல்லாம்‌ குருகூர்‌ நம்மாழ்வார்‌ குணங்களைப் புகழுகிற அடியார் கூட்டத்திற்‌ சேர்ந்து இருக்கப் பெற்றோம் – இருந்து அன்பினால்‌ கண்ணீர் பெருகப் பெற்றோம்‌ ; இனி மேல்‌ பரம பதத்திற்கு யாம் வருகிறோ மென்‌ றறிந்து அங்குள்ளார்‌ அமைத்தலால்‌ அங்கே எமக்குப்‌ பெரும்‌ போகம் விளைந்து கொண்டிருக்கிறது என்பதாம்‌. குணம்‌-பிறரை வாழ்‌விக்கக் கருதிய குணம்‌. கண்ணீர் வடிதல்‌ – அன்பு மிகுதி பற்றி, ஆழ்வாரைத்‌ துதித்தலால்‌ பிறவிப் பிணி நீங்குதலும்‌ பரம பதத்திலுள்ளார்‌ தங்கள்‌ நண்‌பரென்று அமைத்தலும்‌ பேரின்பம்‌ பெறுதலும்‌ இதனால் கூறப் பட்டது.அளவையில் இன்‌பம் தருதலால்‌ பெரும் போகமென்றார்‌. தோறும்‌- தொழிற் பயில்வுப் பொருளில் வந்த இடைச் சொல்‌,

————-

விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் காப் புனமே
. 87–

பொருள்‌. அகப் பொருள் .
திணை -குறிஞ்சி
கிளவி –வரைவுழடூக்கம்‌.
துறை–தினையோடு வெறுத்து வரைவு கடாதல்

கிளை- தோன்றுதலை யுடைய,
பிறவி தளை – பிறப்பாகிய பந்தத்தை,
ஆசு அழிய – விரைவில் கெடும்படியாக,
தடுத்து- போக்கி,
தென்‌ – தெற்கே செல்லுகிற,
பாலை வழி – பாலை நில வழியை,
தடுத்து -நீக்கி விட்டு,
களை – தீ வினைகளை,
ஆசு அற – அடியோடொழிய,
தடுத்து ஆண்டான்‌ -நீக்கி என்னை ஆண்டருளிய நம்மாழ்வாரது ,
குருகையில்‌ -குருகூரில்‌,
கார்‌ புனமே -பெரிய தினைக் கொல்லையே !
என் வினை.- என்‌னுடைய தீ வினையே, தினையின்‌ -தினைப் பயிர்களாக,
இளையா – முளைத்து,
கிளர -நன்றாக,
விளைகின்‌றது – முற்றிப் போகின்‌றது ; விளயாதொழிய…இப்படி முற்றாமல்‌ கதிர் பறிந்த படியே யிருக்க,
மருந்தும்‌ உண்டே – ஏதேனும்‌ மருந்தும் இருக்கிறதோ ? |(சொல்லுவாயாக,]

ஆண்டானது குருகூரிலுள்ள தினைக் கொல்லையே! எனது தீவினை தான்‌ உங்களிடத்தில்‌ தினைப் பயிராக முளைத்துக் கதிர் முற்றிப் போகிறது ; அப்படி முற்றாதிருக்க மருந்துமுண்டோ? உண்டாயிற்‌ சொல்லிக் காணா யென்பதாம்‌. திவ்வியப் பிரபந்தத்தைப் படித்தால்‌ யமனுக்குத் தப்பலாமென்பார்‌ தென் பாலை வழி தடுத்தென்றார்‌-பாலை வழி- நீருநிழலுமற்ற கொடிய வழி,-தினை முற்றினமையால்‌ தலைவியின் தமர்‌ அத் தினையைக்‌ கொய்து கொண்டு தங்களையும்‌ வீட்டிற்கு அழைதுப் போவார்‌ ; முற்றா திருப்பின்‌ தாங்கள்‌ அங்கே புனத்தைக் காத்திருச்கலாமென்பது பற்றி விளையாதொழிய மருந்துமுண்டோ வென்றாள்‌, இங்ஙனம்‌ பிரியச் செய்வது தீ வினையே யாதலால்‌ ௮துவே தினை வடிவமாகியும்‌ வந்து வருத்திற்று என்றாள்‌. கை கோள்‌ – களவு, கேட்போர்‌ – தலை மகன்‌ சிறைப்புறத்தானாக தினைப் புனத்தை நோக்கிச் சொல்லுவாளாய்‌ச் சொல்லியது, இடம்‌ -முன்னிலை, காலம்‌- இறந்த காலம்‌. மெய்ப்பாடு – அழுகை. பயன்‌ – பகற்‌ குறி விலக்கல்‌. ஒழிய, ஓழி-துணிவுப் பொருள் விகுதி. உண்டே, ஏ – வினா,-களையா – உடன்பாட்டு வினை யெச்சம்‌, ஆல்‌ – அசை, இளையாம்‌. ஆம்‌ -சாரியை, கருப் பொருளாகிய தினையைக் கூறுதலால்‌ திணை குறிஞ்சி யாயிற்று, களவில் புணர்ந்து ஓழுகினால்‌ புறத்தார்க்குக் தெரியுமே யென்றும்‌-அப்படித் தெரிந்ததனால்‌ தலைவனுக்கு ஊாறு நிகழமே யென்றும்‌ அஞ்சிப்‌ பல வழியாலும்‌ களவுப் புணர்ச்சி புணராதபடி விலக்கிக் கலியாணஞ் செய்‌யும்படி. முயற்சிப்பதால்‌ கிளவி வரைவு முடுக்கமாயிற்று, வரைவு – கலியாணம்‌. இங்கனம்‌ நாளும் தனியிடத்தில்‌ தலைவியைச் சேருதற்குச்‌ தகுதியான இத் தினைக் கொல்லையிலுள்ள தினையும்‌ கொய்யப் பட்டால்‌ தலைவியை வீட்டுக்கழைத்துப் போய் விடுவார்களே -இனிக் களவில் வராதபடி மண முடித்தால்‌ நலமாகுமே யென்று குறிப்பிற் கூறுதலால்‌ துறை – தினையொடு வெறுத்து வரைவு கடாதலாயிற்று,

நித்ய விபூதி அனுபவம் தந்து அருள வேண்டும் என்றவாறு –

———-

புனல் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே
. 88–

பொருளும்‌, திணையம்‌ அவை. கினவி–பகற்குறியிடையீடு,
துறை–நெடுந்தகை, வறுங்கள நாடி மறுகல்‌.

வழுவா- நீங்காத ,
நரகத்து இனம்‌- நரகத்தின் தொகுதியை,
பாழ்படுத்த- அன்பர்களுக்கில்லாமலழித்த,
பிரான்‌ – தலைவரும்‌,
இன்னா – துன்பத்தைச் செய்கின்‌ற
கலியின்‌ சினம்‌ – கலியின்‌ கோபத்தை ,
பாழ்படுத்த – பாழாகச் செய்ய,
நின்றான் – அவதரித்த வருமாகிய,
சடகோபன்‌ -நம்மாழ்வாரது,
குன்று – மலையில்‌,
சூழ்கின்ற . சூழ்ந்து விளைந்த,
செந் தினையே – செவ்விய தினையே! புனம்‌ பாழ்‌ படுத்து – கதிர்‌ கொய்தலால்‌ கொல்லையைப் பாழாக்கி ,
புகழ் பாழ்படுத்தது அல்லால்‌ -உனக்குண்டாக்கிய கீர்த்தியையும் பாழாக்கினதல்லாமல்‌,
புகுந்து – என்‌னிடத்துச் சார்ந்து ,
என் மனம்‌ – எனது மனத்தையும்‌, பாழ்படத்தனை -பாழாக்கினை ;
வாழ்தி- நீ வாழ்வாயாக; ௮ன்று, ஏ அசைகள்‌.-வாழ்தி ௮ன்றே -இவ்வளவு கொடுமை செய்த நீ வாழ்வாயல்லவோ ?-எனிலும்‌ ௮மையும்‌-

நம்மாழ்வார் மலையிற்‌ சூழ்ந்த விளைந்துள்ள தினையே ! புனத்தைப்‌
பாழாக்கிப்‌ புகழைக் கெடுத்துக் கொண்டதன்றி என்‌ மனத்தையும் பாழாக்கினை -இப்படிப்பட்ட நீ வாழ்வாயாக என்பதாம்‌-முற்றுதலால்‌ குறவர்‌ கொய்து கொண்டு போனது நிமித்தமாகப்‌ புனம் பாழ்படுத்து என்றான்‌, ௮ப் புனத்துக்கு அணியாக விளங்கிய தலைவியை இல் வயிற் செறித்ததற்கு ஏதுப்பட்டதனால்‌ பனம் பாழ்படுத்து என்றானெனிலனுமாம்‌. தானும்‌ தலைவியும் கூடுதற்கு இடம் தந்ததனால்‌ பெற்ற பயன்‌ இழந்தமையாற் புகழ் பாழ்படுத்த என்றான்‌. மெய்ப்பாடு -அழுகை , பயன்‌ – ஆற்றாமை நீங்குதல்‌. பகலில்‌ தலைவியைத் தனியிற் சேர்தற்குத் தகுதியாயிருந்த இடம்‌ பாழாய்ப் போய்த்‌ தலைவியைச் சேர வழி யில்லாமையால்‌ கிளவி-பகற் குறியிடை யீடாயிற்று,-தலைவியை வீட்டுக் கழைத்துப் போன பின்‌ தலைவன்‌ அவளிருந்த தினைக் கொல்லைக்குப் போய்‌ அங்குத் தலைவியைக் காணாமையால்‌ ௮வ் விடத்தைக் கண்டு வருந்துதல்‌ துறையின்‌ கருத்து,

தூராத மனக்காதல் –பலவும் பாடி ஆறாத மனக்களிப்போடே -இருந்தமை-

————

தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே.
89–

பொருள் –அகப் புறப் பொருள்‌.
திணை -பெருந் திணை
துறை–மை யுறு கண்ணி கை யற வெய்தக்‌ கண்ட தோழி யுட் கொண்டு புலம்புதல்

தினை ஓன்‌றிய – தினயினளவு பொருந்திய,
குற்றம்‌- பிழையும்‌,
அற்று – இல்லாமல்‌,
உணர்ந்தோர்‌ – ஞான நிலை யுணர்ந்தருளிய ஆழ்‌வாரது,
மகிழின்‌ திறத்தின்‌ – மகிழ மலர் மாலை நிமித்தமாக ,
மனை ஓன்றிய-வீட்டில்‌ வருந்தி யிருக்கிற,
கொடியாள்‌ – கொடி போன்‌ற இடையை யுடைய எங்கள்‌ தலைவி,
துயின்றாலும்‌ -தான் புலம்புவதின்‌று சிறிது நித்திரை செய்தாலும்‌, (தூங்க வொட்டாமல்‌),
தன்‌—-. வாய் அடங்கா – வாய்‌ ஓயாமல்‌,
வினை ஒன்றிய – கத்துதல் பொருந்திய,
அன்‌றிலுக்கு – அன்றில் பறவைக்கு,
இடம் காட்ட – இருக்குமிடம் கொடுக்க,
விரி தலைய – விரிந்த தலையை யுடைய,
பனை அன்றியும்‌ – பனை மரமல்லாமலும்‌,
தமியேற்கு -தனியான எனக்கு,
பழம் பகை – பழமையாகிய பகை மை,
உளதோ -வேறு என்று ஓன்றுண்டோ?

நம்மாழ்வார்‌ மகிழ மாலை வேண்டி நங்கள் தலைவி வருந்திச் சிறிது பொழுது தூங்கினாலும் தூங்க வொட்டாமல்‌ கத்துகிற அன்‌றித் பறவைக்கு இருக்கும் இடங் கொடுக்க விரிந்த தலையை யுடைய பனை மரமல்லாமலும்‌ எனக்கு வேறு பழம் பகை யொன்று உண்டோ-இல்லை யென்பதாம்‌. எந்‌தத் தேவரைக் குறிப்பினுங் காம முதலியன இல்லாதாரிலராதலின்‌ அவரினும் சிறந்தவரென்பது தோன்‌றத் தினை யொன்றிய குற்ற மற்றென்றார்‌.-அன்றிற் பறவை பனை மரத்திலேயே யிருப்பது பற்றி அதல்லாமல்‌ வேறு ஓரு பகை தனக்கில்லை யென்றாள்‌. ௮ன்றில் ஆண் பெண் பிரியாததொரு பறவை; அது ஒன்றனை ஒன்று புணர்ச்சி நிமித்தமாகவே யழைக்கும்‌ ) அங்‌கனம்‌ அழைக்கும் போது பிரிந்தவர்க்குக் காம மயக்கம்‌ அதிகரிக்குமென்‌பது பற்றி இங்கனம் கூறுதல்‌ வழக்கம்‌, இது கிளவித் தலைவன்‌ பெயர்‌ கூறுதலால்‌. அகப் புறமும்‌ கந்தருவத்தின்‌ வழுவிய பெருந் திணையுமாயிற்று-தலைவி வருந்துதலை நோக்கிய தோழி தனக்குப் பகை யாயிற்றென்றது (தாயத்தினடையா ”’ (தொல்‌ -பொ 221). என்ற விதி பற்றி யென்க , வாயடங்கா வினை -கத்துதல் -காட்ட என்னும் எச்சம் விரி என்னும் வினைப் பகுதி கொண்டது-ஓ எதிர் மறை-

————

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே
. 90–

பொருள் –அகப் பொருள்
திணை -குறிஞ்சி
கிளவி -பிரிவுழிக்‌ கலங்கல்‌.
துறை–கண்படை பெறாது கங்குல் நோதல்‌

பகையாய்‌ வருகின்ற- தமக்கு உட்பகையாகி வருகிற,
மூன்றையும்‌ – காமம்‌ வெகுளி மயக்க மென்னும்‌ முக் குற்றங்களையும்‌,
வேரினொடும்‌ – வேரோடும்‌,
பறித்து – பிடுங்கி எறிந்து
வகையாய்‌ – அதன்‌ பகுதியாய்‌,
வருவன – வருகின்ற,
யாவையும்‌ – ஆகாமிய சஞ்சித பிராரப்த கருமங்களெல்லாவற்றையும்‌,
மாற்றி- போக்கி
இ- இந்த,
வையம்‌ உய்ய – உலகத்தினுயிர்கள்‌ பிழைக்கும் படியாக,
தொகை – நூறு நூறாகத்‌ தொகுக்கப்பட்ட,
ஆயிரங்‌ கவி – ஆயிரம்‌ பாடல்களை,
சொன்‌னோன்‌ – சொன்னவரரகிய நம்மாழ்வாரது ,
பெயர்‌ சொல்ல – திருப் பெயரைத்
தியானிக்க வேண்டி,
சூழ்‌ பனியின்‌ புகை – புகை போலப்‌ பனி
பரந்து குழ்ந்திருக்க,
ஆம்‌ இரு ள்‌ – குளிர்சியோடு கூடிய இருட்டானது,
பின்னை – பிற்பாடு,
எந் நாள்‌ – எப்பொழுது,
கழிய புகுகின்றது -நீங்கப் போகின்றது ?

நம்மாழ்வாரைத்‌ தியானிக்க வேண்டிப்‌ புகை போலப்‌ பனி சூழ்ந்த இருட்டானது எப்பொழுது நீங்கப்‌ போகின்றதென்பதாம்‌.-காமம்‌ -பிற பொருளிச்‌ செல்லுகிற பற்றுள்ளம்‌. வெகுளி – சினம்‌. மயக்கம்‌ -நல்லது தீயதென்றறியா மயக்கம்‌. இவை நீ ங்கவே மனம்‌ தூய்மையாகு மென்பர்‌,-இவற்றின்‌ வகையாவது இவை காரணமாக வருகின்றவைகளை யென்க , ஆகாமியம்‌ – இனி வரப் போகும்‌ வினை,சஞ்சிதம்‌ -இது வரை சேர்த்து வைத்திருக்கும் வினை. பிராரரப்தம்‌ – அவற்றுள் பயன்களை கொடுத்துக் கொண்டிருக்கும் வினைகள்-தலைவியை -இயற்கைப்‌ புணர்ச்சிப்‌ பின் பிரிந்த தலை மகன்‌ இரவு மீட்டிப்பத்‌ துயிலப்‌ பெறாமல் அந்த இரவினைக் கடிந்து கூறுதல்‌ இத் துறையாகும்‌ இருளைக் கூறினமையால்‌, திணை – குறிஞ்சி, கைகோள்‌ – களவு.-கூற்று-தலைவன்‌ கூற்று, கேட்போர்‌ – இல்லை. இடம்‌ – தன்மை. காலம்‌ -நிகழ் காலம்‌. மெய்ப்பாடு – இளிவரல்‌. பயன்‌ -தன்‌ ஆற்றாமை நீங்குதல்‌. மூன்று- தொகைக் குறிப்பு. வையம்‌- இடவாகுபெயர்‌. பின்‌னை – இடைச்சொல் திரிபு

இருள் தரும் மா ஞாலத்தில் பிரிவாற்றாமையால் ஆற்றாமை விஞ்சி வாய் விட்டுக் கூறி அலற்றுகிறார் –

————-

பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே.
91–

பொருள்‌–௮கப் பொருள்‌,
திணை –உரிப் பொருளால் நெய்தல்‌.
கிளவி -வரைவு கடாதல்‌
துறை -தலைவன் சிறைப் புறத்தானாகத் தோழி செப்புதல்

இருள்‌ புகுகின்‌றது – இருட்டானது வந்து கம்பிக் கொள்‌கின்றது
வண்ணம்‌ – இவளுடைய நல்ல நிறமும்‌,
போகின்றது -மாறுபடுகின்றது
பூவை இந்தத் தலைவியின்து
கண்‌ – கண்ணிலிருந்து,
நீர்‌ உகுகின்றது – நீரானது வடிகின்றது
என்று- என்பதாகக்‌ கருதி,
உயிர்‌ – என்னுடைய உயிரானது,
ஓய்கின்றது – சோர்வை யடைகின்‌றது ;
உலகு ஏழும்‌ – ஏழுலகங்களும்‌,
உய்ய – பிழைக்கும்படி,
தொகுகின்ற – பத்துப்‌ பத்துப்‌ பாடல்களாகச்‌ சேர்க்கப்‌ படுகின்ற,
ஆயிரம்‌ -ஆயிரம்‌ பாடல்களும்‌,
சொன்னோன்‌ – அருளிச்‌ செய்தவாரகிய நம்மாழ்‌வாரவதரித்த,
குருகை- திருக் குருகூருக்குரிய,
சொல்லால்‌ – கீர்த்தியால்‌,
விளங்கத் தகுகின்றனர்‌ – விளங்கத்‌ தக்க வராகிய,
மேல்‌ மேலும்‌ – மேலும்‌ மேலும்‌ ௮திகமாக, காதல்‌ தரும்‌ அவர்‌ – ஆசையைத் தருகின்ற தலைவர்‌,
அல்லர்‌ – தகுதி யுடையார் அல்லர்‌ ;

இருள்‌ வருகின்றது ; தலைவியின்‌ மாமை நிறம்‌ மாறுகின்றது ;இவள்‌ கண்ணீர்‌ வடிகின்றது ; இவற்றைப்‌ பார்த்து என்னுயிர்‌ சோர்வடைகின்றது ; இவளுக்கு இங்கனம்‌ காதலைக்‌ கொடுக்கின்றவர்‌ நம்‌மாழ்வாரது திருக் குருகூருக்குரிய கீர்த்தியினால்‌ விளங்கத் தக்கவரல்‌லர்‌ என்பதாம்‌. முந்திய நாள்‌ வரையிலும்‌ இரவில்‌ துன்புற்றவளாதலின்‌ இன்றைத் தினமும்‌ இரவு வந்தால் என் செய்வளோ வென்று அஞ்சிப் புகுகின்றது இருள்‌ என்றாள்‌. மாமை – மாந் தளிரின்‌ தன்மை, சிறிது சிறிதாக உயிரின்‌ வலிமை ஒடுங்குதலால் ஒய்கின்ற தென்று நிகழ் காலத்தாற்‌ கூறினள்‌. மெய்ப்பாடு -அழுகை, பயன்‌ – வரைவு கடாதல்‌. இரங்குதலால் திணை – நெய்தலாயிற்று, தலைவன்‌ ஒரு புறமாக வரும் பொழுது அறியாதவள்‌ போலத் தலைவியின்‌ துன்பத்தைச்‌ சொல்லுதலின்‌ தலைவன்‌ கேட்டு வரைவானாதலின்‌ கிளவி- வரைவு கடாதல் யாயிற்று, துறை யும் அதுவே யாகும்‌-

இன்னமும் பூர்ண கடாக்ஷம் பெறாத குறையால் அலற்றுகிறார்-

———–

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே
. 92–

இருமையும்‌ தீர்ந்த பிரான்‌ – யான்‌ எனது என்னும்‌ செருக்கு நீங்கிய தலைவராகிய,
சடகோபன்‌ தன்‌ – நம்மாழ்வாரது,
இன்‌௮ருள்‌ – இனிய கருணை யானது,
தருமமும்‌ – அறமும்‌,
காமமும்‌ – இன்பமும்‌,
தாவில்‌ அரும்‌ பொருளும்‌ – கெடாத அரிய செல்வமும்‌,
தணவாக் கருமம்‌ ஆகிய – நீங்காத செய்கை யுடையதாகிய,
காரணமும்‌ – காரணமாகிய வீடும்
கண்டு – செய்து,
அவக் காரணத்தின்‌ – பயனற்ற காரணங்களின்‌,
பெருமையும்‌ – பெருமைகளும்‌,
மாயப்‌ பிணக்கும்‌ – வஞ்சனைவுடைய மாறு பாடுகளும்‌,
தவிர்ந்து – நீங்கும் படியாக,
உறு பேதம்‌ செய்‌யும்‌ – மிக்க வேறு பாட்டைச் செய்யும்‌; உம்‌ – பிரித்துக் கூட்‌டப்பட்டது.,

நம்மாழ்வாருடைய கருணையானது தரும அர்த்த காம மோட்ச மென்னும்‌ நான்கும் தந்து பயனற்ற காரணங்களின்‌ பெருமையும்‌ பிணக்‌கும் நீங்கும்படியான நல்ல வேறு பாடுகளைச்‌ செய்யுமென்பதாம்‌. செய்யுளாதலால்‌ காமம்‌ பொருள்‌ என முன் பின்‌ மாற்றி வைத்தார்‌. தருமமும்‌,காமமும்‌ பொருளால் செய்யப்படுதலின்‌ அரும் பொருளென்றார்‌.
அறத்தால்‌ சேர்ப்பதே பொருளாமாதலால்‌ வருத்தமில்லாத என்றார்‌. பயனற்ற தொழிலின்‌ மூலங்களின்‌ பெருமையும்‌ பிணக்கும்‌ நீங்க எனவே நல்ல நெறியில்‌ சேர்க்கு மென்பது தானே பெறப்பட்டது. தவிர்ந்து என்பதனைத் தவிர எனத் திரித்திக் கொள்க. யானென தென்னுஞ்‌ செருக்கறுப்பான்‌ வானோர்க்‌, குயர்ந்த வுலகம்‌ புகும்‌” என்பதற்கு ஆழ்‌வாரே சாட்சி யெனக் கொண்டு இருமையும் தீர்ந்த பிரானென்றார் –

இவை பத்தும் வல்லார் உலகில் எனது பெரும் செல்வராய்த் திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்களே-

———-

அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே.
93–

பொருள்‌–அகப் புறப் பொருள்‌.
திணை -பெருந்திணை
துறை–இரவுறு துயர மிகுளை கூறல்‌.

இயலோடு – இலக்கணத்துடன்‌,
இசையின் பொருளில்‌ -இராகப்‌ பொருளிலும்‌,
சிறந்த —-அலங்கார வல்லியில்‌ – அலங்காரங்கள் அமையப் பெற்ற கொடி போலவும்‌,
போக்கு இல்‌ – நீங்காத,
உள்‌ளம்‌ – மனத்தால்‌,
தெருளில்‌ – ஆராயுமிடத்து,
கரும்பு ஓக்கும்‌ – கரும்‌பை ஓத்த,
ஆயிரம்‌ பர – ஆயிரம்‌ பாடல்களாலாகிய (திருவாய்மொழியை),
பண்டு – முன்னாளில்‌,
செய்தவர்‌ – செய்தருளிய நம்மாழ்வார்‌,
௮௫ளில்‌ – கருணையால்‌,
சில மகிழ்‌ – சிலவாகிய மகிழ மலர்‌ மாலையை,
ஆயிழைக்கு – ஆராய்ந்து அணிந்த ஆபரணங்களை யுடைய நமது தலைவிக்கு,
ஈவர்‌ கொல்‌ – கொடுத்தருளுவாரோ ?
அந்தி வந்த இருளில்‌ – மாலையில்‌ வந்த இருளைக் காட்டிலும்‌,
பிறிது துயரும்‌ உண்டோ -துன்பம் செய்ய வல்லது வேறு ஓன்றுண்டோ

முன்னம்‌ திருவாய்மொழி செய்தருளிய நம்மாழ்வார்‌ தமது மகிழ மலர்‌ மாலையை நம்‌ தலைவிக்காக் கொடுப்பரோ ? நேற்று இராத்திரி பட்‌ட துன்பத்திற்‌ கெல்லை யில்லை யாதலால்‌ அவ் விருளைக் காட்டிலும்‌ துன்பம் செய்வது வேறு ஓன்றுண்டோ ? என்பதாம்‌. தொடர்ச்சி பெறப்‌ பாடினமையால்‌ அலங்காரம்‌ அமைந்த கொடி யென்றார்‌. மனத்தால்‌
ஆராயும் தோறும்‌ சுவை மிகுதலால்‌ கரும்பொக்குமென்றார்‌. ஆயிழை – வினைத் தொகைப்‌ புறத்துப்‌ பிறந்த அன்மொழித் தொகை, துயரைச்‌ செய்கின்ற இருளைத்‌ துயர் என்றது குறிப்பு மொழி.

———–

அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே.
94–

(உலகத்தின்‌ உயிர்கள்‌ தம் பிறப்புக்களை), படர்‌ – ஓடுகின்‌ற,
நீரின்‌ இட்ட – தண்ணீரிலெழுதப்பட்ட,
நவம்‌-புதிய,
ரேகை – எழுத்‌தை,
உட் கொள்ள – மனத்திற் கொள்ள,
செய்‌தாது ௮ல்லால்‌ – செய்ததே யல்லாமல்‌,
பவம்‌ – பிறப்பாகிய,
ரேகையில்‌ – வழியில்‌,
தம்‌ பணி-தங்கள்‌ தொழிலை,
கொள்ளுமோ- கொள்வனவோ ? (கொள்ள மாட்டா ஆதலால்‌),
நம்பி- மாயோன் அம்சமாகிய,
மாறனைப் போல்‌ – நம்மாழ்வாரைப்‌ போல,
மோஷ மாலை- மோட்ச மாலையாகிய,
திருவாயிரம்‌ – ஆயிரம் பாடலாலாகிய திருவாய் மொழியை,
இசைப்பவர்‌ – பாட வல்லவர்‌,
எவரே -யாவரிருக்கிறார்கள்‌ ?(ஒருவருமில்லை அதனால்‌,)
அயற்கும்‌ – பிரம தேவருக்கும்‌,
அரற்கும்‌ – சிவ பிரானுக்கும்‌,
அல்லா அமரர்க்கும்‌ – மற்றுமுள்ள தேவர்க்கும்‌,
எல்லாம்‌ – முழுவதும்‌,
அவரே – ௮ந்த மாயோனே சிறந்தவர் ஆவார்‌;

உலகத்திலுயிர்கள்‌ இத் திருவாய் மொழியைப் படித்‌துத் தம் பிறவியைநீர் மேலெழுத்தாக செய்து விடடனவன்‌றிப் பிறப்பிடத்தில்‌ நாடினவில்‌லை -ஆதலால்‌ மாயோன் வடிவமாகிய நம்மாழ்வாரைப் போல மோட்ச மாலை பாடினவர்‌ யாவருளர்‌? அதனால்‌ அந்த மாயோனே யாவர்க்கும் தலைவரென்பதாம்‌. நம்பி -எல்லாக் குணங்களும்‌ நிறைந்தவன்‌. மோட்ச மாலை – திருவாய் மொழிக்கு ஒரு பெயர்‌.

————

தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே.
95–

மெய்யன்‌ – உண்மை ஞான மறிந்தவரும்‌,
குருகைப்‌ பிரான்‌ -திருக் குருகூரிலவதரித்தவரும்‌,
எம்மை – எங்களை,
இன்னம்‌-மறுபடியும்‌,
ஒரு பவம்‌ செய்கை – ஒரு பிறப்பில் தோன்றுவதை,
மாற்றிய – போக்கிய
பண்டிதன்‌ – பாண்டித்திய முடையவருமாகிய நம்மாழ்‌வாரது,
வள்‌ – வளம் பொருந்திய,
தமிழ்ப்‌ பாவும்‌ உண்டு – தமிழ்ப் பாடல்களு முள்ளன
௮வம்‌ செய்கை மாற்ற- பயனற்ற செய்கையை மாற்று வதற்கு
செவி உண்டு – காதுகள்‌ உள்ளன ;
நா உண்டு – படிப்பதற்கு நாக்கு உண்டு ;
அறிவும்‌ உண்டு – அவற்றின்‌ பயனை அறிவதற்கு அறிவுமுண்டு ; (இங்கனம் இருக்கையில்‌),
தம்மை ஒறுத்து – தங்களை வருத்திக்‌
கொண்டு,
தவம்‌ செய்வதும்‌ – தவங்களைச் செய்வதும்‌,
தழல்‌ – அக்னி முகமாக,
வேள்வி முடிப்பதும்‌ -யாகங்களைச் செய்வதும்‌,
எவன்‌ செய்‌யும்‌ – என்ன பிரயோஜனத்தைத் தரும்‌

நம்மாழ்வாருடைய பிரபந்தங்களும்‌ அவற்றை ஆசிரியர் முகமாகக்‌கேட்க நமக்குச்‌ செவிகளும்‌, படிப்பதற்கு நாவும்‌, பயனறிவதற்குப் புத்‌தியும்‌ உள்ளனவாயிருக்க அந்தப்‌ பிரபந்தங்களை ஆராய்ந்தடையும்‌ பயனைக் காட்டிலும்‌ தம்மை வருத்‌தித் தவங்களும்‌ யாகங்களும்‌ செய்வதனால்‌ என்ன பயன்‌ என்பதாம்‌,-உண்மையாகப் பயன்படும்‌ நூலைச்‌ செய்ததனால்‌ மெய்யனென்றார்‌. அவரைத் தியானித்ததனால்‌ தாமடைந்த பயனை
உலகத்தாருக்குக் காட்ட வேண்டி பவம் செய்கை மாற்றியவென்றார்‌.பிறிதொரு மொழிக்கு இவ்வளவு வளப்ப மில்லாமையால்‌ வண்டமிழென்‌றார்‌. எவன்‌ – குறிப்பு வினா வினை. மெய்யன்‌ – குறிப்பு முற்றுப் பெயரெச்சம்‌, உண்டு, என்பன – குறிப்பு முற்று,

நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உறையுண்டு மூவாத மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என் ஒருவன் தீக்கதிக் கண் செல்லும் திறம் –பொய்கையார்-

———

உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே
. 96–

பொருள்‌–அகப் பொருள்‌,
திணை -நெய்தல் ,
கிளவி–இடந்தலைப்பாடு ,
துறை–புகழ்தல் .

உண்டாட்டு – மகிழ்ச்சி கொண்டு திருக் கூத்துக்கள்‌ மூன்‌றனையும்‌,
இயலும்‌ -செய்தருளிய,
திருமால்‌ – திருமகள்‌ கொழுநனாகிய மாயோனுடைய,
உருவை – அவதாரங்களை,
உயர்த்து – உயர்வு செய்து,
உலகை – உலகத்தை,
தொண்டு ஆட்டிய – அடிமையாகச் செய்து கொள்ள,
வந்து தோன்றிய – அவதரித்த,
தோன்றல்‌ – நம்மாழ்வாரது,
குருகூர்‌ துறை-குருகூரெல்லை யிலுள்ள கடல்‌ துறை யிடத்து
நண்டு ஆட்‌டிய நங்கை – நண்டுகளைப் பிடித்து விளையாடுகிற தலைவி யினுடைய,
நாட்டங்களால்‌ – குறிப்புக்களால்‌,
இந்த நாட்டை யெல்லாம்‌ – இந்தஉலக முழுவதையும்‌,
திண்டாட்டிய – வருந்தச் செய்த,
கண்கள் போல்‌ -கண்களைப் போல,
கயல்‌- கயல்‌ மீன்கள்‌,
தீங்கு செய்யுமோ – தீமைகள்‌ செய்யுமோ ? [செய்யாவாம்‌.]

திருமாலின்‌ ௮வதார வடிவங்களை யுயர்த்திக் கூறி உலகத்தை அடிமையாகக் கொள்ள அவதரித்த நம்மாழ்வாரது குருகூர்க் கடல்துறைவாய்‌ தலைவியின்‌ குறிப்புக்களால்‌ இவ்வுலகை வருத்திய கண்களைப் போலக்‌ கயல்‌ மீன்கள்‌ தீங்கு செய்யுமோ? செய்யாவென்பதாம்‌.-திருக் கூத்துக்கள்‌ மூன்றாவன :– அல்லியம்‌, மல்‌, குடம்‌; அல்லியம்‌ – குவலையாபீடத்தின்‌ தந்தத்தை முறித்த பொழுது ஆடியது ;இயம்‌ அல்லாதது-வாத்தியமில்லாமல்‌ யாடியது அல்வியமாம்‌. மல்லாடல்‌ – ஆங்கு மல்லரைக் கொன்று ஆடியது -குடம்‌ – வாணாசுரனை வென்ற மகிழ்ச்சியால்‌ அவனது சோணித புரத்தின் தெருவில்‌ கையில்‌ குடமேந்தி ஆடியது, இவற்றின்‌ விரிவைச்‌ சுத்தானந்தப்‌ பிரகாச முதலிய வற்றிற் காண்க ;இவை புறக் கூத்தின்‌ பகுதி களாம்‌. கைகோள்‌ – களவு. கூற்று-தலைவன் கூற்று, கிளவி- முற் கூறப்பட்டது. கருப் பொருளால்‌ திணை நெய்தலாயிற்று, இடந் தலைப் பாட்டில் புணர்ந்த தலை மகன்‌ புணர்ச்சிக்குப்‌ பின்னும்‌ தனக்கு அவளிடத்திலுண்டாகிய அன்பின்‌ மிகுதியால்‌ புகழ்ந்தானென்பது துறையின்‌ கருத்து, மெய்ப்பாடு – உவகை. பயன்‌-புகழ்‌தல்‌,

ஞான விசேஷங்களையே திருக் கண்கள் என்பர்

———–

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே
. 97–

பொருள்‌ -அகப் புறப் பொருள் ,
திணை- பெருந்திணை ,
துறை–மாலை பெறாது வருந்திய தலைவி
காதல்‌ கைம் மிக்குக்‌ கையற வுரைத்தல்

இந்த, நுண் பிறவி – அற்பப்‌ பிறப்பாகிய,
மாயைக்‌ கிழியை – மாயா ரூபமான படத்தை,
இழித்து—எம்மை – எங்களை
வாங்கிட – தம்முடைய பாதங்களில்‌ சேர்த்துக் கொள்ள,
வல்லவர்‌- வல்‌லவராகிய நம்மாழ்வார்‌,
தீயை- நெருப்பை,
கிழித்து – துண்டாகக்‌ கிழித்தெடுத்து,
ஒரு திங்கள்‌ கொழுந்தென – ஒரு இளஞ்‌ சந்திரனாக,
செய்ததல்லால்‌ – செய்ததமன்றி,
அன்றில்‌ பனை… அன்றில்‌ பட்சிகள்‌
இருக்கின்ற பனை மரத்தை ,
பேயை கிழித்தென – பேயை இரண்டாகக் கிழித்தாற்போல்‌,
பிளவார்‌ – இரு பிளவாகச்‌ செய்தாரில்லை ; உளவாம்‌ நோயை – அவர்‌ நிமித்தமாக வுண்டாகிய காம நோயை,
இழிக்கும்‌-போக்கும் படியாகிய,
வகுளம்‌ – மகிழ மாலையை,
நல்கார்‌ – கொடுத்தாரில்லை

இந்தப்‌ பிறவியைப் போக்கி நம்மை யடிமை கொள்ளத் தக்க நம்மாழ்‌வார்‌ நெருப்பைத்‌ திங்களாகச் செய்து விடுத்ததுமன்றி அன்‌ றிலிருக்கும்‌ பனையைப் பிளக்காமலும்‌, அவர்‌ நிமித்தமாக வுண்டாகிய காம நோயைப்‌ போக்கத் தக்க மகிழ மாலையுங்‌ கொடுத்தாரில்லை என்பதாம்‌-காமநோய்‌ கொண்டார்க்கு நிலவு வெயில் போலச் சுடுதலால்‌ திங்களைத்‌ தீ யென்றார்‌. ஒன்றனை யொன்று புணர்ச்சிக்கு அழைக்கும்‌ ஓசை காமமுடையார்க்குத்‌
துன்பத்தைச்‌ செய்தலால்‌ அவ் வன்‌றிவிருக்கும்‌ பனை மரங்களை பிளந்திலர்‌ என்றாள்‌. பேய்க்குப்‌ பனையை யுவமித்தல்‌–கரு நெடும் பனங்காடு முழுமையும்‌ காலும்‌ கையுமுடையன போல்வன ” என்ற கலிங்கத்‌துப் பரணிச்‌ செய்யுளாலறிக, மெய்ப்பாடு – அழுகை. பயன் – ஆற்றாமை நீங்குதல்

——–

வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு கட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே.
98–

பொருளும்‌, திணையும்‌, துறையும்‌ அவை.

அம்புலி – சந்திரனைப் போன்ற,
முகம்‌ வாயில்‌ – முகத்தின்‌ வாயிலுள்ள,
கரும்பின்‌ – கரும்பு போன்ற திவ்வியப்‌ பிரபந்தங்களால்‌,
மறு பிறப்பை – உயிர்களுக்குண்டாகிய பிறப்புக்களை,
சொல்‌ – சொல்ல வல்ல,
அம்‌ புலி- அழகிய புலி போன்ற நம்மாழ்வார்‌,
ஓர்‌ வகுளம்‌ கொடார்‌ – ஒப்பற்ற மகிழ மாலையைத் தந்தாரில்லை ;
இங்கு-இவ் விடத்தில்‌,
தாய்‌ என்ற – தாயென்று சொல்லப் படுகிற, ஓர்‌ இல்லம்‌ புலி – ஒரு வீட்டுப் புலியானது ,
கொடும்‌ கோகு தட்டி – வளைந்த தோள்‌களைத் தட்டிக் கொண்டு,
சல்லம்‌ புவி இட்டு – முள்ளம் பன்றி போலொத்‌து ,
எதிரிடப் பாய்வது உண்டு – நேரே வந்து என் மேற்றாவி விழுவது முண்டு ; (இது போதாமல்‌),
மீள – மறுபடியும்‌,
அம்புலி எழுகின்றது -சந்திரனாகத் தோன்றுகின்ற -உம்‌- அசை நிலை

தம்முடைய வாயிலுள்ள திவ்ய ப்ரபந்தத்தால்‌ ஐநங்களின்‌ மறு பிறப்பைப்‌ போக்குபவராகிய நம்மாழ்வார்‌ தாம்‌ இங்கு வருவதற்கு அடையாளமாக மாலை கொடுத்தாரில்லை ; தாய்‌ வீட்டிலுள்ள புவி போலப்‌ பாய்ந்து என்னை வருத்துகின்றாள்‌ ; இது போதாமல்‌ சந்த்ரனும்‌ உதயமாய் விட்டது – இனி மேல்‌ நான்‌ உயிர் பிழைப்பது எவ்விதமென்றாள்‌ என்பதாம்‌.-கரும்பு- உவமை யாகு பெயர்‌,-இரணடாமடியில்‌ புலி-உவமை யாகு பெயர்‌, மூன்றாமடியில்‌ புல்லி என்பது தொக்கு, தாயின்‌ கொடுஞ்சொல்‌ முட் போல தைத்தலால்‌ ௮வளை முட் பன்றியின்‌ தன்‌மையைக்‌ கொண்டென்றாள்‌. புலி போலக்‌ கறுவு கொண்டு பாய்தலால்‌ புலியை உவமித்தார்‌, இது உவமைக்கு உவமையின்‌ பாற் பட்டு வழுவாகாதவாறு எப்படி யென்றால்‌ தாயாகிய புலியானது முட் பன்றியின்‌ தன்மை யடைந்து என்றதனாலே உவமைக்கு உவமை யாகாமை வெளிப்படை. மெய்ப்பாடும்‌ பயனும்‌ அவை. இதில் புலி யென்று ஒரு சொல்லே யடுக்கி வந்தமையால்‌ சொற் பொருள் பின் வரு நிலை யணி- தாயைப்‌ புலி யென்றதற்கேற்பப்‌ பாய்கின்‌ற தென்‌றதனால்‌ உருவகவணி,-விரகங்கொண்டு, கலங்க விழுதலால்‌ தாய் புலி போலப்‌ பாய்கின்றாள் எனவும்‌, ௮வள்‌ வார்த்தை முள்ளம் பன்றியின்‌ முட்போலத் தைக்கின்ற தெனவும்‌, சந்திரனது நிலவைக் கண்டு விரகம்‌ ௮திகரித்தலால்‌ ௮துவும் தோன்‌றிற்று எனவும்‌ வருந்திக் கூறினாளாயிற்று-

சந்த்ர உதயம் அலாப தசையில் விவேகமும் பாதகமான படி –

———

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே
. 99–

புகழ் மெய்ப்‌ புலவோர்‌ – புகழுடைய உண்மையான கல்‌விமான்கள்‌,
தொழுது இயல்‌ – வணங்கி நடக்கப் பெற்ற,
நாயகன்‌ -தலைவரும்‌,
ஒதும்‌ – சொல்லப் பெற்ற,
கனல்‌ தறை – யாச நெறிகள்‌ மிக்க
நீர்ப் பொருநை – நீரை யடைய தாமிர பரணி சூழ்ந்த,
வழுதி நல்‌ நாடன்‌ – நல்ல பாண்டி நாட்டிலவதரித்த நம்மாழ்வாருடைய,
திருவாய்‌ மொழி எம்‌. மனத்தன – எம் மனத்திலே யுள்ளன; (ஆதலால்‌).
எழுதிய நாளும் – பிரமன்‌ எமக்கு எழுதி வைத்தால் ஆயுளும்‌,
வினையும்‌-பழ வினைத் தொடர்ச்சியும்‌, தொகுத்து – சேர வைத்து,
எம்மை – எங்களை,
இப்‌ பிறவி- இந்தப் பிறப்பாகிய,
புழுதியில்‌ நாற்று இட்டு – புழுதிக் காவில்‌ மாற்று விதைத்துப்‌ பயிராக்கி ,
வைப்பரிது – வைக்க முடியாததாகும்‌.

புலவோரால்‌ வணங்கப் படுபவராகிய நம்மாழ்வார்‌ அருளிய திருவாய்மொழி எம் மனத்திடத்தன வாதலால்‌ பிரம தேவர்‌ எமக்கு ஒரு ஆயுளைக் கற்பித்து அதற்கேற்பப்‌ பழ வினைகளும் சேர்த்துப்‌ புழுதியில்‌ நாற்றுப் பாவினது போல் இந்தப் பிறவியைச்‌ செய்ய முடியாது என்பதாம்‌. இம்மையி லனுபவிப்ப தெல்லாம்‌. பழ வினைத் தொடர்ச்சி யாதலால் -வினை -பழ வினை யென்க -நாற்று இட்டு நெற் பயன்‌ கொள்ளுதல் போல இப் பிறப்பால்‌ இன்னும்‌ வினையைச்‌ சேர்க்கச் செய்ய முடியாதென்று கொள்க-வழுதி-கொடை வள்ளலுக்கும்‌ பெயராதலால்‌ பரோபகாரி யாகிய ஆழ்வாரை வழுதி நன்னாடனென்றார்‌. வைப்ப – அகரம் தொக்கது -ஆல்‌ அசை-துறையை இடைநிலைத் தீபகமாக்கி பின்னும்‌
கூட்டி நீர்த் துறை யென்றும்‌ கொள்ளலாம்‌.

ஏதமிழ் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாறே
இப்பத்து அரு வினை நீறு செய்யுமே-

———

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள் விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள்
. 100–

மனையும்‌ – மனைவியும்‌, பெருஞ்செல்வமும்‌ – மிக்க பொருளும்‌,
மக்களும்‌ – புத்திராதிகளும்‌,
மற்றை வாழ்வும்‌ – மற்றுமுள்ள வாழ்வுகளும்‌,
தம்மை நினையும்‌ பதம்‌ என – வேண்டாதபடி தம்மையே தியானித் திருத்தலே நல்லதென,
நின்றபிரான்‌ – நிலையிட்ட தலைவராகிய,
குருகூர்‌ நிமலன்‌ – திருக் குருகூரில்‌ அவதரித் தருளிய குற்றமற்ற நம்‌மாழ்வார்‌,
புனையும்‌ – பாடி யருளிய,
தமிழ்க் கவியால்‌ – தமிழ்ப் பாடல்களால்‌, இருள்‌ நீங்கு – அஞ்ஞான இருள்‌ நீங்கிப் போய்‌,
பொருள்‌ விளங்‌கி – மெய்ப் பொருளான ஞானம்‌ தோன்றப் பெற்று,
வினையும்‌ – இரு வினைகளும்‌,
திரிவு உற்றன – அழிவடைந்தன ;
வேதங்கள்‌ குற்றம் நீங்கின – பொருள் விளங்காக் குற்றங்களெல்லாம்‌ நீங்கலாயின.

தார புத்திர தனாதி எஷணாத் திரயங்களும்‌ மற்றுமுள்ள வாழ்வுகளும்‌: தம்மைத்‌ தியானிக்கும்‌ பதமாக நின்ற நம்மாழ்வார்‌ தமிழ்ப் பாடல்களால்‌, அஞ்ஞானம் நீங்கி நன்‌ ஞானம்‌ பெற்று வினைகளும்‌ அழிந்தன-வேதங்களும் குற்றமற்று விளங்கின வென்பதாம்‌. தம்மை நினைத்‌தவர்கள்‌ எஷணாதிகளாலும்‌ பிற வாழ்‌வினாலும் அடையும்‌ மகிழ்ச்சியிலும்‌ மிகுத்துத் தம்மைத் தியானித்தலே மேற் கொள்ளுதலால்‌ தம்மை நினையும்‌ பதமென நின்ற வென்றார்‌. மற்றை வாழ்வு – சுற்றத்தார்‌ சேர்க்கை , எண்‌ வகைப் போகம்‌ தசாங்க முதலியனவுமாம்‌,

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேன மத அந்வயாநாம்
ஆத்யஸ்யன குல பதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இன் நீண் நிலத்தோர்
அறி தர நின்ற இராமானுசன்

————

மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே –

முன் – முன்னாளில்‌,
மாறனை – நம்மாழ்வாரை,
மதுர கவிப் பெருமாள்‌ – மதுர கவி யாழ்வார்‌,
சென்று – அடைந்த ,
தென்‌ தமிழ்‌ தொடையால் – அழகிய தமிழ்ப் பாடலால்‌,
பதிகம்‌ ஒன்றே உரைத்து .
கண்ணி நுண்‌ சிறுத்தாம்பென்ற ஒரு பதிகம் பாடி,
அவன்‌ – அந்த மாயோனுடைய
பொன்‌ ௮டி -சிறந்த திருவடிகளை,
உற்று நின்றான்‌ என்றே-அடைந்து நிலை பெற்று வாழ்கின்‌றனர் என்பதாக எண்ணி
மன்று புகழும்‌-உலகம் எல்லாம்‌ புகழ் கின்ற
திரு வழுந்தூர் வள்ளல்‌ – திரு வழுந்தூரில் உலகுய்ய வந்த கம்ப நாடர்‌,
பதிகம்‌ – ஒரு பதிகம் போல,
பதிகம்‌ ௮து ஆக – பத்‌துப் பதிகமாக,
இசைத்தனன்‌ – பாடி யருளினார்‌ ;

முன்னாளில்‌ நம்மாழ்வாரை மதுர கவிப்‌ பெருமாள்‌ அடைந்து ஒரு பதிகம் பாடிப்‌ பரமபத முற்றாரென்று இந் நாளில்‌ கம்ப நாடர்‌ ௮வ்வொரு பதிகம் போலப்‌ பத்துப் பதிகம்‌ பாடி யருளினார் என்பசாம்‌. மன்று-சபையுமாம் -கம்பன் பிறந்த ஊர்‌ காவேரி தங்குமூர்‌, கும்ப முனி சாபங்‌ குலைந்த வூர்‌ ~ செம்பத்மத் தாதகத்து நான்முகனும் தந்தையும் காணா நான் மறையை யோதுவித்து வாழுமழுந்தூர்‌.” என்‌றதனால்‌ கம்பர்‌ திரு வழுந்தூரில் பிறந்தமை யறிக. தென் தமிழ்‌ நாடு என்னாளும் உய்ய இராமாயணம்‌ பாடிக் கொடுத்த பெருங் கொடையாளி யாதலால்‌ வள்ளலென்றார்‌, மதுர கவியார்‌ – நம்மாழ்வாரைத்‌ துதித்து முத்தி பெற்றவர்‌. பதிகம்‌ – பத்‌துப் பாடல்கள்‌ சேர்ந்துள்ள தென்ற ஒரு தொகைக் குறிப்புச் சொல்‌.
மன்றே, சென்றே ஏ- ௮சை நிலைகள்‌. ஒன்ற, ஏ- எண்‌, என்றே-ஏ தேற்றம்‌. பதிகமது, ௮து – பகுதிப் பொருள்‌ விகுதி,

இது திரு நாமப்பாட்டு –
மார்க்க தர்ஸீ மஹ ரிஷி –
இப்பாடலைப் பாடினவர்களும் ஓதினவர்களும் ஆழ்வாரது
பொன்னடி பேற்றைப் பெறுவார் என்று பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

சோழ நாட்டில்‌ மூவலூர்‌ ஆதித்தன் புதல்வரும்‌ திருவழுந்தூரிற்‌ பிறந்து உவச்சனெடுத்து வளர்க்க வளர்ந்தவருமாகிய இக் கம்பர்‌ கதிரா மங்கலத்தின்‌ கீழ்ப் பாதியாகிய வெண்ணெயூர் சடையப் பிள்ளை யிடத்து நட்புடையவராகி அவரால்‌ ஆதரிக்கப் பெற்று இதின்‌ வடபாலுள்ள தரணி என்னும் ஊரைத்‌ தமக்கு முற்றூட்டாக (முழுவனுபவமாக) ப்பெற்று அங்கு வசித்து வரு நாளில்‌ இவரது கவி பாடும் திறமை யறிந்த அரசர்‌ முதலாயினோர்‌ வட மொழி இராமாயணத்தைத்‌ தமிழில்‌ மொழி பெயர்க்கும்‌ படி கேட்க அப்படியே மொழி பெயர்த்துப்‌ பால காண்ட முதல்‌ யுத்தகாண்டம்‌ வரையிலுள்ள ஆறு காண்டங்களையும்‌ தமிழில்‌ செய்யுள் நடை யாகப் பாடி்‌ அரங்கேத்தத் தொடங்குகையில்‌ பலரும்‌ ஸ்ரீ ரங்கத்தில்‌ ௮ரங்க நாதன்‌ சன்னிதியில்‌ அரங்கேற்றுதல்‌ தகுதியாகுமென அப்படியே திருவரங்கம் சென்று அங்குள்ள கல்வி யறிவுடைய பலருக்குத் தெரிவித்து அரங்கேற்ற எத்தனித்திருக்கும் பொழுதில் ஒரு நாள்‌ இவரது கனவில்‌ அரங்கராதன் தோன்றி -நம் சடகோபனைப் பாடினயோ ?” என்று கூறி மறைந்தருளினார்‌. உடனே அஞ்சி நம்மாழ்வார்‌ மீது இந்தஅந்தாதியைப் பாடி அங்கு கூடிய அவைக் களத்தில்‌ இதனை முதலில்‌ அரங்கேற்றிப் பின்பு இராமாயணத்தை அரங்கேற்றினார் என்பதாம் –
இவர்‌ காளிதேவியாருச்கு அடிமை செய்பவராதலின்‌ இராமாயணம்‌ பாடும் பொழுது காளிதேவியாரைப்‌ பந்தம் பிடிக்கச் சொல்லியவெண்பா :–
ஒற்றியூர்‌ காக்க யுறைகின்ற காளியே
வெற்றியூர் காகுத்தன்‌ மெய்ச் சரிதை- பற்றியே
நந்தா தெழுது தற்கு நல்லிரவில்‌ மாணாக்கர்‌
பிந்தாமற்‌ பந்தம்‌ பிடி,

இக் கம்பரது இயற்பெயரின்னதென்று விளங்க வில்லை ; உவச்சரில்‌ மேளம் கொட்டுகிற பகுதியாருக்குக்‌ கம்பர் என்ற பட்டப் பெயருள்ளதென்று கல் வெட்டுக்களால்‌ தெரிகிறதனால்‌ இவரும்‌ அப் பகுதியாரென்‌று ஊூ்கிக்கப் படுகிறார்‌, இவரிருந்த நாட்டுக்கு வெண்ணெயூர் நாடென்ற பெயருளதா யிருந்தது – இவரின்‌ பெருமையை யறிந்த அரசாங்கத்தார்‌’அந்நாட்டினை இவர் பெயரால்‌ மாற்றி விட்டதனால்‌ கம்ப நாடென்று பெயராயிற்று, இங்கனமே முதலில்‌ நித்த வினோத வளநாடென்ற ஒன்றனைப்‌ பின்பு அருண் மொழித் தேவர்‌ வள நாடென்று பெயரிட்டமையும்‌ ௮றிக,
இன்னும்‌ இவர் சரித்திரம் ஆராய்சியில் இருப்பதால் பின்பு வெளியிடப்‌ படும்
இவர் காலம் -இற்றைக்கு ஆயிரம் வருஷங்களுக்கு முற்பட்டது
இவற்றுடன் இருந்த புலவர்கள்‌ ஓட்டக் கூத்தர்‌, நேமிநாதர்‌, பேராசிரியர் ஒவ்வையார் புகழேந்தி முதலானோர்
இவர் செய்த நூல்கள்
கம்ப இராமாயணம்
சடகோபர் அந்தாதி
ஏர் எழுபது

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாலு கவிப்பெருமாளும் ஸ்ரீ கவி சக்ரவர்த்தியும்-ஸ்ரீ கலியனும் ஸ்ரீ கம்பரும்

November 26, 2024

திரு வெழு கூற்று இருக்கை திருமடல்

இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பது என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே –

ஆராவமுத ஆழ்வார் உடைய திருவடி இணைகள் ஆழ்வார் திரு உள்ளத்தில் பொருந்தி
பெறாமல் இருப்பதை- ஆழ்வார் அனுசந்திப்பதாக
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் அருளிச் செய்கிறார்

————

திரு கம்ப நாட்டு ஆழ்வார் அருளிச் செய்த தனிப் பாடல்-

ஊராது ஒழியேன் உலகு அறிய ஒண் நுதலீர்
சீரார் முலைத் தடங்கள் சேரளவும் –பாரெல்லாம்
அன்று ஓங்கி நின்று அளந்தான் நின்ற திரு நறையூர்
மன்று ஓங்க வஊர்வன் மடல்-

—————

கம்பர்பாடல்

என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான்
தன்னருளும் ஆகமும் தாரானேல் -பின்னைப் போய்
ஒண்டுறை நீர் வேலை யுலகறிய யூர்வன் நான்
வண்டறை பூம் பெண்ணை மடல்-பரகாலன் பாவனையில் அருளிச் செய்த பாடல் –

————–

வண்ணம்-மை வண்ண இந்தளூர் வண்ணம் -அகலிகை படலம் அதே 8 வண்ணம் கால் வண்ணம் -துகள் மூலம் திருவடியால் தீண்ட மாட்டான் -முக்கால் எங்கு காண்பேன்

கங்கை படலம் -ஆத்ம ஸஹ -இளவலும் -ஏழை அறிந்து பாடினார்-நின்னோடும் எழுவர் ஆனோம்

பேடையொடு –நறையூர் -வெட்க்கி
ஆரண்ய -யானை நடை அன்னம் நடை

தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றதே கோழியும் கூவ வில்லை -பெரிய ஒடுங்கின -பிராணிகள் -நான்கு கண்கள் தவிர

இன்று போய் போருக்கு நாளை வா -ஆளாயா -ஆள் ஐயா -வால்மீகி 2 நாள் கம்பர் முதல் நாள் -வெள்ளியங்குடி -காற்றிடை

காதைகள் செறிவான செவி நுகர் கனிகள் –நாட்டு படலம்

செவிகளாரே நின் கீர்த்திக் கனி என்னும் கவிகள் காலப் பண் தென் உறைப்பத்துற்று –திருவாய் -3-8-6-

செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து –பெரிய திரு -3-6-7-

எம்பெருமான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் அன்றே —

————

ஸ்ரீ பால காண்டம் –

என்னை ஆளுடைய ஐயன், கலுழன் மீது எழுந்து போய
பின்னர், வானவரை நோக்கி, பிதாமகன் பேசுகின்றான்:
“முன்னரே எண்கின்வேந்தன் யான்”-என, முடுகினேன்; மற்று,
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடுமின்’ என்றான். 23-

மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிரும் சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர் மலையார் கொல் நினைக்க மாட்டேன்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் வந்து காணீர்
அஞ்சிறைப் புள்ளும் ஓன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-8-

———

உலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு
அலகு இலாது, அவ் அடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்,-
சிலை குலாம் தோளினாய்!-சிறியன் சாலவே! 26′

ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக வென மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீ ராம விண்ணகரே சேர்மின் நீரே—–பெரிய திருமொழி–3-4-1-

திறம் கொள் ஆமையாய் முதுகினில் மந்தரம் திரிய
விறல் கொள் ஆயிரம் தடக்கைகள் பரப்பி மீ வலிப்ப–அகலிகை படலம் -24-

ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் –பெரிய திருமொழி -5-7-4-

——–

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய் வண்ணம் இன்றி மற்றோர் துயர் வண்ணம் உறுவது உண்டோ
மை வண்ணத் தரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே யுன்
கை வண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன் -82-

மழை வண்ணத்து அண்ணலே –மின்னு மா மழை தவழும் மேக வண்ணா –

இப்பாட்டில் எட்டு தடவை வண்ணம் பத பிரயோகம் –

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே-பெரிய திருமொழி-–4-9-8-போலவே

————

மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்,
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார் –
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால், பேசல் வேண்டுமோ? 38-

கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் –பெரிய திருமொழி -3-1-1-

இராமனை நினைத்து சீதை உருகுதல்
‘இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,
சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,
சுந்தர மணி வரை தோளுமே, அல;
முந்தி, என் உயிரை, அம் முறுவல் உண்டதே! 57-

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட
எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண் இணையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி!
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –21-

விண்ணுளே எழுந்த மேக மார்பின் நூலின் மின்னொடு இம்
மண்ணுளே இழிந்து என்ன வந்து போன மைந்தனார்
எண்ணுளே இருந்த போதும் யாவர் என்று தேர்கிலேன்
கண்ணுள்ளே இருந்த போதும் என் கொல் காண்கிலாதவே -53-

இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை
இன்னார் என்று அறியேன் -பர கால நாயகி போலவே –

——

மண்ணுற விழுந்து நெடு வானுற எழுந்து
கண்ணுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் கார்
உண்ணிற நறும் பொடியை வீசி ஒரு பாகம்
வெண்ணிற நறும் பொடி புனைந்த மத வேழம்–வரைக்காட்சி–19-

குல வரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான் பங்கயத்தாய் –திரு நெடும் தாண்டகம் -9-

—–

மாடகம் பற்றிய மகர வீணை தன்
தோடு அவிழ் மலர்க்கரம் சிவப்பத் தொட்டனள்
பாடினள் ஒருத்தி தன் பாங்கி மார்களோடு
ஊடின துறை செயாள் உள்ளத்து உள்ளதே—உண்டாட்டுப் படலம்-32-

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு என்றும் கடல் கிடந்த கனி என்றும்
அல்லியம்பூ மலர்ப் பொய்கை பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித்
தூ முறுவல் நகை யிறையே தோன்றநக்கு
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவியாங்கே
மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே-திரு நெடும் தாண்டகம்–-15-

———-

பழுது இலா வொரு பாவை யன்னாள் பதைத்து
அழுது வெய்துயர்த் தன் புடைத் தோழியை
தொழுது சேர்ந்தயர் வாள் இந்தத் தோன்றலை
எழுதலாம் கொல் இம் மன்மதனால் என்றாள்–25-

தோழியை தொழுதாள் என்றும் தேர் போன திக்கைத் தொழுதாள் என்றுமாம்

வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே–திரு நெடும் தாண்டகம் -14-

கண்டாமவை யாயிரம் கதுவக்
கண் தாமரை போல் கரு ஞாயிறு எனக்
கண்டான் இமையோர் இறை காசினியில்
கண்டான் அரு நான் மறையின் கனியை –ஆரண்ய –சரபங்கர் பிறப்பு நீங்கு படலம் –24-

கண்ட போதே நுகர வேண்டும் கனி அன்றோ இவன்

அமுதம் பொதியின் சுவைக் கரும்பினைக் கனியைச் சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –பெரிய திருமொழி -7-10-1-

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் கடல் கிடந்த கனியே -என்றும் –திரு நெடும் தாண்டகம் -15-

யானை தோன்றிய இடம் கடல் -திருப் பாற் கடலிலே பழுத்த பழம்

————-

ஸ்ரீ அயோத்யா காண்டம் – —

செந்தாமரைக் கண்ணோடும் செங்கனி வாயினோடும்
சந்தார் தடம் தோளொடும் தாழ் தடக் கைகளோடும்
வந்தார் அகலத்தோடும் அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவனாகும் அவ்வளவில் இராமன் என்றாள் –சூர்ப்பனகை வர்ணனை -ஆரண்ய -மாரீச வதை படலம் -149-

கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ண மங்கையுள் நின்றானை
வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்து உண்டானைச்
செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றன் தன்னை அடியேன் கண்டு கொண்டேனே–பெரிய திருமொழி-7-6-5-

வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை
தஞ்சுடையாளர் கொல் யான் அறியேன் தாமரைக் கண்கள் இருந்தவாறு
கஞ்சனை யஞ்ச முன் கால் விசித்த காளையராவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –பெரிய திருமொழி–9-2-6-

குகன் இலக்குவனுக்குத் தன்னை அறிவித்தல்
கூவா முன்னம், இளையோன் குறுகி, ‘நீ
ஆவான் யார்?’ என, அன்பின் இறைஞ்சினான்;
‘தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்’ என்றான். 11

அன்னவள் உரை கேளா அமலனும் உரை நேர்வான்
என்னுயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இந்
நன்னுதல் அவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது நான் உன் தொழில் உரிமையில் உள்ளேன் -73-

அங்குள கிளை காவற்கு அமையின் உளன் ஊம்பி
இங்குள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ
உன் கிளை எனதன்றோ உறு துயர் உறலாமோ
என் கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான் -76-

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-

———–

இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும்
கடிய மா சுணம் கற்று அறிந்தவர் என அடங்கிச்
சடை கொள் சென்னியர் தாழ்விலார் தாம் மிதித்து ஏறப்
படிகளாம் எனத் தாழ்வரை கிடப்பது பாராய் -35-

கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை
வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை
அரியவின்னிசை பாடு நல்லடியவர்க்கு அருவினை யடையாவே ––பெரிய திருமொழி–1-2-10-

—————

உவரி வாய் அன்றிப் பாற் கடல் உதவிய அமுதே
துவரின் நீள் மணித் தடம் தோறும் இடம் தோறும் துவன்றிக்
கவரிப் பால் நிற வால் புடை பெயர்வன கடிதில்
பவளமால் வரை அருவியைப் பொருவன பாராய் -5-

அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-2-

——

உருகு காதலின் தழை கொண்டு மழலை வந்து உச்சி
முருகு ஞாரு செந்தேனினை முலை நின்றும் வாங்கிப்
பெருகு சூழினும் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை
பருக வாயினில் கையின் அழிப்பது பாராய் -10-

கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே –பெரிய திருமொழி-–1-2-5-
பிரசம் -தேன் கூட்டுக்கும் மதுகரங்களுக்கும் பெயர் -வாரி -அவற்றினுடைய தேன்

—————-

ஸ்ரீ ஆரண்ய காண்டம் –

அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ; அவை உன்னை
முன்னம் ஆர் ஒதுவித்தார்? எல்லாரும் முடிந்தாரோ?
பின்னம் ஆய் ஒன்று ஆதல், பிரிந்தேயோ? பிரியாதோ?
என்ன மா மாயம் இவை?-ஏனம் ஆய் மண் இடந்தாய்! 59′

ஒரு நாள் அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் –பெரிய திருமொழி -5-7-3-

பின்னம் ஆய் ஒன்று ஆதல், பிரிந்தேயோ? பிரியாதோ? என்ன மா மாயம் இவை–விசிஷ்டாத்வைத தத்வம் –

ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா! முன் உவந்து உறையும்
அப்பு உறையுள் துறந்து, அடியேன் அருந் தவத்தால் அணுகுதலால்,
இப் பிறவிக் கடல் கடந்தேன்; இனிப் பிறவேன்; இரு வினையும்,
துப்பு உறழும் நீர்த்த சுடர்த் திருவடியால், துடைத்தாய் நீ.’ 60-

அருளோடு பெரு நிலம் அளிக்கும் –பெரிய திருமொழி -1-1-9-

—————–

கண்டாமவை யாயிரம் கதுவக்
கண் தாமரை போல் கரு ஞாயிறு எனக்
கண்டான் இமையோர் இறை காசினியில்
கண்டான் அரு நான் மறையின் கனியை —-24-இந்திரன் இராமபிரானை ஸ்துதிப்பது –

அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை
அமுதம் பொதியின் சுவை கரும்பினைக் கனியைச் சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –பெரிய திருமொழி -7-10-1-

————

மேவாதவர் இல்லை மேவினரும் இல்லை வெளியோடு இரு இருளும் இல்லை மேல் கீழும் இல்லை
மூவாமை இல்லை மூத்தமையும் இல்லை முதல் இடை கடையோடு ஈறில்லை முன்னோடு பின்னில்லை
தேவா இங்கு இவ்வோ நீ சென்ற நிலை என்றாள் சிலை ஏந்தி வந்து செம்மைச் சேவடிகள் நோவக்
காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றேல் கரும் கடலில் கண் வளராய் கைம்மாறும் உண்டோ —

வெண்மையான பாற்கடலும் இவன் நிழலீட்டாலே கருங்கடல் ஆனதே

கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் –பெரிய திருமொழி 3-1-1-

————

‘செந் தாமரைக் கண்ணொடும், செங் கனி வாயினோடும்,
சந்து ஆர் தடந் தோளோடும், தாழ் தடக் கைகளோடும்
அம் தார் அகலத்தொடும், அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவன் ஆகும், அவ் வல் வில் இராமன்’ என்றாள். 149-இராவணன்-சூர்ப்பணகை உரையாடல்-

கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே –திரு நெடும் தாண்டகம் -21-

———–

பொங்கு வெம் கோளரா விசும்பு ஒத்தன
வெங்கதிர்ச் செல்வனை விழுங்கி நீங்குமால்
அங்கண் மா ஞாலத்தை விளக்குமாய்க் கதித்
திங்களும் ஒரு முறை வளரும் தேயுமால்-196-
கிரகண காலத்தில் சூர்ய சந்திரர் பீடிக்கப்பட்டு மீளுவது போலே பிறவி -சடாயு சமாதானம் இளைய பெருமாளுக்கு –

அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கோர் ஆளரியாய் –பெரிய திருமொழி 1-7-1-

————-

ஸ்ரீ கிஷ்கிந்தா காண்டம் – 

ஆடினான் அன்ன மாய் அரு மறைகள் பாடினான்
நீடு நீர் முன்னை நூல் நெறி முறையின் நேமி தாள்
சூடினான் முனிவர் தொகுதி சேர் சோலை வாய்
மாடு தான் வைகினான் ஏறி கதிரும் வைகினான் -37-

வில் நெறி முறையின் படி–மிக்க நீர்மை அமைந்த வேத நெறி படி அரக்யாதிகளைச் செய்து முடித்தான் –
அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் –பெரிய திருமொழி 5-7-3-

——

‘துன்பினைத் துடைத்து, மாயத் தொல் வினைதன்னை நீக்கி,
தென் புலத்து அன்றி, மீளா நெறி உய்க்கும் தேவரோதாம்?
என்பு எனக்கு உருகுகின்றது; இவர்கின்றது அளவு இல் காதல்;
அன்பினுக்கு அவதி இல்லை; அடைவு என்கொல்? அறிதல் தேற்றேன். 13

வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –பெரிய திருமொழி-–8-1-9-

—–

அனுமன் ராமபிரானை புகழ்ந்து சுக்ரீவன் இடம் கூறினமை
உளை வயப் புரவியான் உதவ உற்ற ஒரு சொலால்
அளவில் கற்புடைய சிற்றவை பணித்தருளால்
வளை யுடையப் புணரி சூழ் மகிதலத் திருவெலாம்
இளைவர்க் குதவி இத்தலை எழுந்து அருளினான் -46-

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே-2-3-1-

—————–

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால் –காப்புச் செய்யுள்

குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-9-

——–

வழை துறு கானயாறு மா நிலக் கிழத்தி மக்கட்கு
உழைத்துறு மலை மாக் கொங்கை சுரந்த பால் ஒழுக்கை ஒத்த
விழை வுறு வேட்கை நாளும் வேண்டினார்க்கு தவ வேண்டிக்
குழை தோறும் கனகம் தூங்கும் கற்பகம் நிகர்த்த கொன்றை -34-

காரார் வரைக் கொங்கை –சிறிய திருமடல்

மழைக் கூந்தல் தென்னன் உயிர் பொறுப்பும் தெய்வ வடமலையும் என்னும்
இவையே முலையா வடிவமைத்த –பெரிய திருமடல் —

————

ஸ்ரீ ஸூந்தர காண்டம் – 

குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-9-

ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தநமே தக்க உபாயம் –

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தேயுமே
இம்மையே ராம என்று இரண்டு எழுத்தினால் –பாசுரமும் ஒப்பு நோக்குக –

———-

பெரிய நாள் ஓளி கொள் நாநாவித மணிப் புத்திப் பத்தி
சொரியுமா நிழல்கள் ஆங்குச் சுற்றலால் காலின் தோன்றல்
கரியனாய் வெளியனாகிச் செய்யனாய்க் காட்டும் காண்டற்கு
அரியனாய் எளியனாய் தன் அகத்துறை அழகனே போல் –ஊர் தேடு படலம்

திரு வடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
த்ரேதைக் கண் வளை யுருவேத் திகழ்ந்தான் என்றும்
பெருவடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவத் தோர் உருவன் என்று உணரலாகாது
ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக்
கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே–திரு நெடும் தாண்டகம்–-3-

———

கரிய நாழிகைப் பாதியில் காலனும் வெருவி ஓடும் அரக்கர் தம் வெம் பதி —

இரவு பாதி ராத்ரியை -கரிய நாழிகைப் பாதியில் என்றது

கரிய நாழிகை ஊழியில் பெரியன கலியுமாறு அறியேனே –ஸ்ரீ பெரிய திரு மொழி -8-5-6-

——

ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி; நீ
தோழன்; மங்கை கொழுந்தி’ எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்.–காட்சிப் படலம்–23–

வாழி நண்பினை–நட்புக்குப் பல்லாண்டு பாடுகிறார் —

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே ––பெரிய திருமொழி-5-8-1-

அன்னவன் உரை கேளா, அமலனும் உரைநேர்வான்;
‘என் உயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்; இந்
நன்னுதலவள் நின் கேள்; நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்.’–குகப் படலம்–42

‘துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; “இடை, மன்னும் பிரிவு உளது” என, உன்னேல்;
முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; –குகப் படலம்–43

————

அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ்-இலங்கை

அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய் –பெரிய திரு -1-7-1-

——

ஸ்ரீ யுத்த காண்டம் – —

ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா’ என நல்கினன் -நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். –இராமன் அறிவுரை கூறி, ‘இன்று போய், நாளை வா’ எனல்

காற்றிடைப் பூளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன கோயில்
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன வுண்டு மண்டிச்
செற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி யதுவே –பெரிய திருமொழி-–4-10-6-

———-

அன்னை நீ; அத்தன் நீயே; அல்லவை எல்லாம் நீயே;
பின்னும் நீ; முன்னும் நீயே; பேறும் நீ; இழவும் நீயே;
என்னை, “நீ இகழ்ந்தது” என்றது எங்ஙனே? ஈசன் ஆய
உன்னை நீ உணராய்! நாயேன் எங்ஙனம் உணர்வேன், உன்னை?’

எம்பிரான் என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்றும் வாழ் நாள் –பெரிய திருமொழி 1-1-6-

——

கிட்டியதோ, செரு? கிளர் பொன் சீதையைச்
சுட்டியதோ? முனம், சொன்ன சொற்களால்,
திட்டியின்விடம் அன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ? இது விதியின் வண்ணமே! 80

திட்டியின் விஷம் -என்று சீதா பிராட்டியை குறிக்கிறார் –

எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன
அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ -பெரிய திருமொழி-–10-2-4-

—————–

உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி; ஒருவர்க்கும் உண்மை உரையாய்;
முன் ஒக்க நிற்றி; உலகு ஒக்க ஒத்தி; முடிவு ஒக்கின், என்றும் முடியாய்;
“என் ஒக்கும், இன்ன செயலோ இது?” என்னில், இருள் ஒக்கும் என்று விடியாய்;
அந் நொப்பமே கொல்? பிறிதேகொல்?-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 253-

உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி; ஒற்றை விடையனும் நான்முகனும்
உன்னை அறியாப் பெருமையோனே –பெரிய திருமொழி 4-10-4-

——

சொல் ஒன்று உரைத்தி; பொருள் ஆதி; தூய மறையும் துறந்து, திரிவாய்;
வில் ஒன்று எடுத்தி; சரம் ஒன்று எடுத்தி; மிளிர் சங்கம் அங்கை உடையாய்;
“கொல்” என்று உரைத்தி; கொலையுண்டு நிற்றி; கொடியாய்! உன் மாயை அறியேன்;
அல் என்று, நிற்றி; பகல் ஆதி!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 257-

நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணி யுறையும்
உறை கொள் புகராழி சுரி சங்கமவை அங்கை யுடையானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்
முறையிலிவை பயில வல வடியவர்கள் கொடு வினைகள் முழுதகலுமே–-பெரிய திருமொழி–5-10-10–

————

நாராயண நரர் என்று இவர் உளராய், நமக்கு எல்லாம்
வேராய், முழு முதல் காரணப் பொருளாய், வினை கடந்தோர்;
ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார்;
பாராயண மறை நான்கையும் கடந்தார்; இவர் பழையோர்; –நிகும்பலை யாகப் படலம்—140–

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே—பெரிய திருமொழி–10-6-1-


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்பநாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வாமன வ்ருத்தாந்தம் -ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார்-பால காண்டம்-வேள்விப் படலம்

September 1, 2024

நதியை அடுத்த சோலையின் சிறப்பை இராமன் கேட்க, முனிவன் எடுத்துரைத்தல்

தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை’ என்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போலத் தூயது; மற்றும் கேளாய்:
எங்கள் நான்மறைக்கும், தேவர் அறிவிற்கும், பிறர்க்கும், எட்டாச்
செங் கண் மால் இருந்து, மேல்நாள் செய் தவம் செய்தது அன்றே
. 6

தங்கள் நாயகரின் தெய்வம் தான்பிறிது இலை – தங்களது கணவரைக் காட்டிலும் தெய்வம் வேறுஇல்லை;
என்றெண்ணும் மங்கைமார்- என்று கருதும் பெண்ணரசிகளது;
சிந்தை போலத் தூயது – மனத்தைப்போல (இச்சோலை) தூய்மையானது;
மற்றும் கேளாய் – பின்னும் சொல்லுகிறேன் கேட்பாயாக;
எங்கள் நான் மறைக்கும் – எங்களுடைய நான்கு வேதங்களுக்கும்;
தேவர் அறிவிற்கும் – தேவர்களின் நுட்பமான அறிவுக்கும்;
பிறர்க்கும் எட்டாச் செங்கண்மால் – மற்றவர்களுக்கும் (உள்ளம். உரை) செயல்களால் எட்டமுடியாத திருமால்;
இருந்து மேல் நாள் – இங்குத் தங்கி முன் ஒரு காலத்திலே;
செய்தவம் செய்ததன்றே – செம்மையான தவத்தைச் செய்த இடமல்லவா?

ரமணீயம் ப்ரஸன்னாம்பு ஸத் மனுஷ்ய மாதோ யதா -ஸ்லோகார்த்தம்

—————–

‘”பாரின்பால், விசும்பின்பாலும், பற்று அறப் படிப்பது அன்னான்
பேர்” என்ப; “அவன் செய் மாயப் பெரும் பிணககு ஒருங்கு தேர்வார்
ஆர்?” என்பான்; அமல மூர்த்தி கருதியது அறிதல் தேற்றாம்;
ஈர்-ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து, இப்பால்
. 7-

பாரின்பால் விசும்பின் பாலும்- மண்ணுலகிலும் விண்ணுலகிலும்;
பற்று அறப்படிப்பது – (பிறப்புக்குக் காரணம் ஆன) உலகப் பற்றுக்கள் நீங்க. சொல்லப் பெறுவது;
அன்னான் பேர் என்பார் – அத்திருமாலின் பெயர்களே என்று சொல்லிய கோசிகன் மேலும்;
அவன் செய் மாயப் பெரும்பிணக்கு – அப்பரமன் செய்யும் மாயமாகிய பெருங்கலகத்தை;
ஒருங்கு தேர்வார் ஆர் என்பான் – ஒரு சேரத்தெளிந்து தேர்பவர் யாரென்று சொல்லும் தெளிவுடையவர்
எவரும் இலர் என்று கூறிவிட்டு;
அமலமூர்த்தி கருதியது – களங்கமற்ற அப்பரமன் நினைத்துள்ளதை;
அறிதல் தேற்றாம் – அறிந்து சொல்லும் தெளிவில்லேன்;
ஈரைம்பது ஊழிக்காலம் – நூறு யுகம்வரையும்;
இருந்தனன் யோகத்து இப்பால் – இவ்விடத்திலே யோகத்தில் இருந்தான் என்றான்.

——————

முனிவன் உரைத்த மாவலி வரலாறு

ஆனவன் இங்கு உறைகின்ற அந் நாள்வாய்
ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான்,
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்; 8

ஆனவன் இங்கு உறைகின்ற அந்நாள்வாய் – அத்தகைய திருமால் இங்கு வாழ்ந்து வருகின்ற அந்தக் காலத்திலே;
ஊனம் இல்ஞாலம் ஒடுங்கும் எயிற்று – குற்றமற்ற இவ்வுலகம் ஒடுங்கத் தகுந்த இரு பற்களை உடைய;
ஆண் ஏனம் எனும் திறல் – ஆதிவராகத்தோடு ஒப்பு கூறத்தக்கவன் இவனே என்னுமாறு;
மாவலி என்பான் – மகா பலி என்னும் பெயருடைய அசுரர்குலத் தலைவன்;
வானமும் வையமும் – விண்ணுலகத்தையும். மண்ணுலகத்தையும்.
வவ்வுதல் செய்தான்- கவர்ந்து தனக்குரியதாக்கிக் கொண்டான்.

———————

செய்தபின், வானவரும் செயல் ஆற்றா
நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான்;
ஐயம் இல் சிந்தையர் அந்தணர் தம்பால்,
வையமும் யாவும் வழங்க, வலித்தான்
; 9

செய்த பின் – மாவலி அவ்வாறு விண்ணையும் மண்ணையும் வவ்வுதல் செய்த பிறகு;
வானமும் செயல் ஆற்றா – தேவர்களும் செய்ய இயலாத;
நெய்தவழ் வேள்வியை – நெய்மிகுந்து அவி வழங்கும் வேள்வியை;
முற்றிட நின்றான் – செய்து நிறைவேற்ற நிலைத்தவனாகி;
ஐயம் இல் சிந்தையர் – ஐயமில்லாத உள்ளம் உடையவராகிய;
அந்தணர் தம்பால் – அந்தணர்களிடத்திலே;
வையமும் யாவும் – பூமியையும் மற்றெல்லாவற்றையும்;
வழங்க வலித்தான் – வழங்கத் துணிந்தான்.

—————–

ஆயது அறிந்தனர் வானவர், அந் நாள்;
மாயனை வந்து வணங்கி இரந்தார்;
“தீயவன் வெந் தொழில் தீர்” என நின்றார்;
நாயகனும், அது செய்ய நயந்தான்.
10-

வானவர் ஆயது அறிந்தனர் – தேவர்கள் மாவலியின் அந்தச் செய்தியைத் தெரிந்தனர்;
அந்நாள் மாயனை வந்து வணங்கி நின்றார் – அப்போது திருமாலை வந்து வணங்கி நின்றனர்;
தீயவன் வெந்தொழில் தீர் என இரந்தார் – கொடியவனான மாவலியினது கொடுந் தொழிலைத் தீர்ப்பாய் எனக் கெஞ்சிக் கேட்டனர்;
நாயகனும் அது செய்ய நயந்தான் – தலைவனாகிய திருமாலும் அக்காரியத்தைச் செய்ய ஒருப்பட்டான்.

—————–

காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வால்-அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய்,
நீல நிறத்து நெடுந்தகை வந்து, ஓர்
ஆல் அமர் வித்தின் அருங் குறள் ஆனான்.
11

காலம் நுனித்து உணர்- முக்காலங்களையும் சூக்குமமாகக் கணித்து எதனையும் உணரவல்ல;
காசிபன் என்னும் வால் அறிவற்கு – காசிபன் என்ற பெயருடைய மெய்யறிவுடைய முனிவனுக்கும்;
அதிதிக்கும் ஒருமகவாய் – அவனது மனைவியான அதிதி என்பவளுக்கும் ஒப்பற்ற குழந்தையாக;
நீல்நெடுந்தகை வந்து – நீல நிறத்தை உடைய திருமால் வந்து பிறந்து;
ஓர் ஆல்அமர் வித்தின் – ஆலமரம் நுண்ணுருவில் தங்கியிருக்கத் தகுந்த அந்த ஆலம் விதையை ஒத்து;
அரும் குறள் ஆனான் – அரிய குறள் உருவத்தில் வளர்ந்து வந்தான்.

பிரஹ்மேச மத்ய கணநா கணநா அர்க்க பங்க்தவ்
இந்த்ர அனு ஜத்வம் அதிதேஸ் தந யத்வ யோகாத்
இஷுவாகு வம்ச யது வம்ச ஜநிச்ச ஹந்த
ஸ்லாக்யாநி அமூநி அநுபமஸ்ய பரஸ்ய தாம்ந –ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம் 15-

அநுபமஸ்ய–ஒப்பற்ற
பரஸ்ய தாம்ந –பரஞ்சோதியாகிய எம்பெருமானுக்கு

பிரஹ்மேச மத்ய கணநா –ப்ரஹ்ம ருத்ரர்களின் நடுவே ஒருவனாக எண்ணப் பெறுகையும்

கணநா அர்க்க பங்க்தவ் –துவாதச ஆதித்யர்கள் திரளில் எண்ணப் பெறுகையும்

இந்த்ர அனுஜத்வம் அதிதேஸ் தந யத்வ யோகாத் -அதிதிக்குப் பிள்ளையாகப் பிறந்ததனால் உபேந்த்ரனாக ஆனதும்

இஷுவாகு வம்ச யதுவம்ச ஜநிச்ச –இஷுவாகு வம்சத்திலும் யதுவம்சத்திலும் அவதரித்ததும்

அமூநி -ஆகிய இவ் வவதாரங்கள் எல்லாம்
ஹந்த ஸ்லாக்யாநி –அதிசயாவஹங்கள் அன்றோ -ஆச்சர்யம்

பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம்
கேவல பரத்வமும் கேவல ஸுவ்லபயமும் ஸ்லாக்யமாக மாட்டாவே
ஸுவ்லப்யம் பொலியும்படி பரத்வத்தை மறைத்து அருளி அவதரித்து ஒளி பெறுவதே

பிரஹ்மேச மத்ய கணநா –விஷ்ணுவாய் -நல்லரன் நாரணன் நான்முகனுக்கு –என்றபடி
நாட்டைப் படைத்து அயன் முதலாயத் தந்த
ப்ரதமஜ -மத்யே விரிஞ்சு கிரீஸம் பிரதம அவதாரம்
இணைவனாம்

கணநா அர்க்க பங்க்தவ் –ஆதித்யர் பன்னிருவரில் உயர்ந்த விஷ்ணு நான் -ஸ்ரீ கீதா
இந்த்ர அனுஜத்வம் அதிதேஸ் தந யத்வ யோகாத் -அதிதி காஸ்யபருக்கு -ஸ்ரீ வாமனனாய் –
ஸூர்ய மண்டல வர்த்தி தானே ஸூர்யனாக திருவவதரித்து

இஷுவாகு வம்ச யது வம்ச ஜநிச்ச ஹந்த ஸ்லாக்யாநி அமூநி அநுபமஸ்ய பரஸ்ய தாம்ந —
இவ் வவதாரங்கள் எல்லாம் இச்சா பரிக்ருஹீதம்–அதிசயவஹம் அன்றோ -என்றபடி

கீழே இஹ அவதீர்ண –என்றவாறே
இவ் வவதாரங்களை அனுசந்தித்து அருளிய படி –

———————-

முப்புரிநூலினன், முஞ்சியன், விஞ்சை
கற்பது ஒர் நாவன், அனல் படு கையன்,
அற்புதன்,-அற்புதரே அறியும் தன்
சிற்பதம் ஒப்பது ஒர் மெய்க்கொடு-சென்றான்.
12-

அற்புதன்- ஆச்சரிய மாயையில் வல்லவனாகிய திருமால்;
முப்புரி நூலினன் – மூன்றாகத் திரிக்கப்பட்ட பூணூலை அணிந்தவனாகியும்;
முஞ்சியன் – முஞ்சி என்னும் புல்லாலாகிய அரைநாணை உடையவனாகியும்;
விஞ்சை கற்பது ஓர் நாவன் – வேதவித்தையைச் சொல்லுகின்ற நாவைக் கொண்டவனாகவும்;
அனல்படு கையன் – அனல் தோன்றும் கையை உடையவனாவும்;
அற்புதரே அறியும் – அற்புத ஞானம் வாய்ந்த மேலோர்களே அறிந்து கொள்ளத் தகுந்த தான;
தன் சிற்பதம் ஒப்பது ஓர் – தனது ஞான நிலைக்கு ஒப்பதாகிய ஒரு;
மெய்க்கொடு சென்றான் – வடிவத்தை எடுத்துக் கொண்டு மாவலியின் வேள்விச் சாலைக்குச் சென்றான்.

——————-

அன்று அவன் வந்தது அறிந்து, உலகு எல்லாம்
வென்றவன், முந்தி வியந்து எதிர் கொண்டான்;
“நிந்தனின் அந்தணர் இல்லை; நிறைந்தோய்!
எந்தனின் உய்ந்தவர் யார் உளர்?” என்றான்.
13

அன்று அவன் வந்தது அறிந்து – அன்று அந்த வாமனன் வந்ததை அறிந்து;
உலகு எல்லாம் வென்றவன் – உலகையெல்லாம் வென்றவனான மாவலி;
முந்தி விரைந்து எதிர் கொண்டான் – முற்பட விரைந்து சென்று எதிர்கொண்டு அழைத்து வந்தான். பின்பு;
நிறைந்தோய் – நிறைந்த தவம் உடைய மேலோனே;
நின்தனில் அந்தணர் இல்லை – உன்னைவிடச் சிறந்த அந்தணர் வேறில்லை;
என்தனின் உய்ந்தவர் யார் இனி என்றான் – என்னைவிட உய்வு பெற்றவர் இனி இங்கு யார் இருக்கிறார்கள் என்றான்.

———–

ஆண்தகை அவ் உரை கூற, அறிந்தோன்,
“வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி,
நீண்ட கையாய்! இனி, நின்னுழை வந்தோர்
மாண்டவர்; அல்லவர் மாண்பு இலர்” என்றான்.
14-

ஆண்தகை அவ்வுரை கூற – வீரம் மிக்க மாவலி அவ்விதமாகச் சொல்லவே;
அறிந்தோன் – அனைத்தும் அறிந்தவனாகிய அவ்வாமனமூர்த்தி;
வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி நீண்ட கையாய் – வேண்டி வந்தவர்களது விருப்பத்துக்கு மேற்படும்படி வாரி வழங்கி
அதனால் நீண்டிருக்கும் கைகளை உடையோய்!;
இனி நின் உழை வந்தோர் மாண்டவர் – உன்னிடம் வந்தவர்கள் மாண்புடையவராவர்;
அல்லவர் மாண்பிலர் என்றான் – அல்லாதவர் மாட்சியில்லாதவரே என்றான்.

————

சிந்தை உவந்து எதிர், “என் செய்?” என்றான்;
அந்தணன், “மூஅடி மண் அருள், உண்டேல்;
வெந் திறலாய்! இது வேண்டும்” எனா முன்,
“தந்தனென்” என்றனன்; வெள்ளி, தடுத்தான்:
15

சிந்தை உவந்து – (மாவலி இதைக் கேட்டு) மனம் மிக மகிழ்ந்து;
என் செய என்றான் – மறு மொழியாக நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்;
அந்தணன் – அதைக் கேட்ட வாமனனாக வந்த திருமால்;
வெந்திறலாய் – கொடிய வலிமை வாய்ந்த மாவலியே;
உண்டேல் மூவடிமண் அருள் இது வேண்டும் – உள்ளதாயின் என் காலால் மூன்றடி மண் தருவாயாக இதுவே வேண்டும்;
எனா முன் தந்தனென் என்றான் – என்று சொல்லுதற்கு முன்பே (மாவலி) தந்தேன் என்றான்;
வெள்ளிதடுத்தான் – அப்போது அசுர குருவாகிய சுக்கிரன் த்ராதே என்று தடுத்தான்.

—————-

‘”கண்ட திறத்து இது கைதவம்; ஐய!
கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்;
அண்டமும் முற்றும் அகண்டமும், மேல்நாள்,
உண்டவன் ஆம்; இது உணர்ந்துகொள்” என்றான்.
16-

ஐய! இது கண்ட திறத்திது கைதவம்- தலைவனாகிய மாவலியே! ஆராய்ந்து உணர்ந்தால் இந்த அந்தண வடிவம் கபடமானது;
கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல் – (இதனை) மேகம் போன்ற நிறமுடைய குறள் வடிவம் என நினைக்காதே;
அண்டமும் முற்றும் அகண்டமும் – இந்தப் பூமியையும் அதனைச் சூழ்ந்துள்ள பேரண்டங்களையும்;
மேல் நாள் உண்டவன் ஆம் – முன் ஒரு காலத்திலே உண்டவனாகிய திருமாலே ஆகும்;
இது உணர்ந்து கொள் என்றான் – இதை அறிந்து கொள்வாய் என்று கூறினான்.

——————

”நினைக்கிலை; என் கை நிமிர்ந்திட வந்து,
தனக்கு இயலாவகை தாழ்வது, தாழ்வு இல்
கனக் கரியானது கைத்தலம் என்னின்,
எனக்கு இதன்மேல் நலம் யாது கொல்?” என்றான்
. 17

நினைக்கிலை – சுக்கிரனே! நீ நினைத்துப் பார்த்துக் கூறினாயில்லை;
என் கை நிமிர்ந்திட – என்னுடைய கை மேலாக நிமிர்ந்து நிற்க;
தனக்கு இயலா வகை வந்து தாழ்வது – தனது தன்மைக்குப் பொருந்தாத விதத்தில் தானே வந்து என் முன் தாழ்ந்து நிற்பது;
தாழ்வு இல் கனக் கரியானது கைத்தலம் என்னின் – எவ்விதத்திலும் தாழ்வில்லாத மேகம் போன்ற கரிய நிறத்தை உடைய
திருமாலின் கை என்றால்;
எனக்கு இதன்மேல் நலம் – எனக்கு இதைவிட மேலான நன்மை;
யாது கொல் என்றான் – ஏது இருக்கிறது என்று மாவலி கூறினான்.

———————–

‘”துன்னினர் துன்னலர்” என்பது சொல்லார்,
முன்னிய நல் நெறி நூலவர்; ‘முன்வந்து,
உன்னிய தானம் உயர்ந்தவர் கொள்க’
என்னின், இவன் துணை யாவர் உயர்ந்தார்?
18

நன்னெறி முன்னிய நூலவர் – நல்ல நெறியினையே நினைந்துள்ள நூலறிவு வாய்ந்த பெரியோர்கள்;
துன்னினர் துன்னலர் என்பது சொல்லார் – நெருங்கியவர். நெருங்காதவர் என்ற வேறுபாடு கருதார்;
உன்னிய தானம் – தாம் செய்வதாக நினைத்த தானப் பொருள்;
உயர்ந்தவர் முன்வந்து கொள்க – உயர்ந்தோர் முற்பட வந்து கொள்க;
என்னின் – என்று சொல்லிவிட்ட பிறகு அதனைப் பெறவந்திருக்கும் பலருள்ளும்;
இவன் துணை யாவர் உயர்ந்தார் – இந்த வாமனனுக்கு இணையாகக் கல்வி கேள்விகள் வல்ல உயர்ந்தோர் யாருண்டு?

————-

‘”வெள்ளியை ஆதல் விளம்பினை, மேலோர்
வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால்,
எள்ளுவ என் சில? இன் உயிரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்
. 19

வெள்ளியை ஆதல் விளம்பினை- நீ வெள்ளறிவுடையனாதலின். உன் இயற்கைக்கேற்ப சொல்லினை;
மேலோர் – மேன்மைக் குணம் உடைய பெரியோர்கள்;
வள்ளியர் ஆக – தாம் வள்ளமை உடையோராயின்;
இன் உயிரேனும் – தமது இனிய உயிரையே என்றாலும்;
வழங்குவர் அல்லால் – கொள்வோர்க்குக் கொடுப்பாரே அல்லாமல்;
எள்ளுவ என்சில – சில கூறி பரிகசிப்பரோ?;
கொள்ளுதல் தீது கொடுப்பது நன்று – பிறர்பால் ஏற்றல் தீமை ஈதலே நன்மையாகும்.

—————–

‘”மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர்;-எந்தாய்!-
வீந்தவர் என்பவர்; வீந்தவரேனும்,
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே?
20-

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள் – இறந்தவர்கள் இறந்தவர்களாக எண்ணப்படுபவர்கள் அல்லர்;
மாயாது ஏந்திய கை கொடு இரந்தவர் – இழிவு வந்த போதும் இறந்து படாமல் ஏந்திய
கைகளைக் கொண்டு. வசதி உள்ளவர் முன் சென்று யாசிப்பவர்களே;
வீழ்ந்தவர் – இறந்தவர்களாகக் கருதப்படுவோராவர்;
எந்தாய் வீந்தவரேனும் எனது தந்தைக் கொப்பானவே! பருவுடல் மறைந்து இறந்தவரே எனினும்;
இருந்தவர் – உயர்ந்தவர்தம் மனத்தில் மறையாது புகழுடம்புடன் இருந்தவர்கள்;
ஈந்தவரே அல்லது யாரே – நாடிவந்தோர்க்கு ஈந்தவரே அல்லாது வேறு யார்?

———————

”அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்;
கொடுப்பவர் முன்பு, ‘கொடேல்’ என நின்று,
தடுப்பவரே பகை; தம்மையும் அன்னார்
கெடுப்பவர்; அன்னது ஒர் கேடு இலை” என்றான்
. 21-

அடுப்ப அரும்பழி செய்ஞ்ஞரும் அல்லர்- பிறர் அழியும்படி பழிச்செயல் செய்யும் தீத்தொழிலுடையோர் பகைவரல்லர்;
கொடுப்பவர் முன்பு – கொடுப்பவருக்கு எதிரே நின்று கொண்டு;
கொடேல் என நின்று தடுப்பவரே பகை – கொடுக்காதே என்று கூறித் தடுப்பவரே பகைவராவார்;
அன்னார் தம்மையும் கெடுப்பவர் – அத்தகையோர் கொள்வாரையும் கொடுப்பாரையுமல்லாது தம்மையும் கெடுத்துக் கொள்பவரே ஆவர்;
அன்னது ஓர் கேடு இலை என்றான் – (ஈவது விலக்கும்) அதனை ஒத்த கேடு வேறில்லை என்றான்.

—————-

‘”கட்டுரையின், தம கைத்து உள போழ்தே
இட்டு, இசைகொண்டு, அறன் எய்த முயன்றோர்
உள் தெறு வெம் பகை ஆவது உலோபம்;
‘விட்டிடல்’ என்று விலக்கினர் தாமே
.” 22-

தமகைத்து உள போழ்தே- தமது செல்வம் இருக்கும் காலத்திலே; இட்டு இசை கொண்டு – இரப்போர்க்கு ஈந்து புகழ் பெற்று:
அறன் எய்த முயன்றோர்- அறத்தை அடைய முயல்பவர்களான அறவாளர்;
உள்தெறு வெம்பகை யாவது உலோபம் – மனத்தை அழிக்கும் கொடிய பகையாய் இருப்பது உலோப குணமாகும்;
விட்டிடல் என்று – (அதனை) விட்டுவிட வேண்டும் என்று;
தாம் கட்டுரையின் விலக்கினர்- (மேலோர்) நீதி நூல்களில் விளக்கிக் கூறியுள்ளனர்.

———–

‘எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ. தகவு இல் வெள்ளி?
கொடுப்பது விலக்கு கொடியோய் உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிவிடுகின்றாய்!*

தகவு இல்வெள்ளி – பெருந்தன்மை இல்லாத சுக்கிரனே;
ஒருவருக்கு ஒருவர் எடுத்து ஈவதனின் முன்னம் – நாடி வந்திருக்கும் ஒருவருக்கு உடையவர்
ஒருவர் பொருளை எடுத்துக் கொடுப்பதற்கு முன்பு;
தடுப்பது நினக்கு அழகிதோ – கொடுக்க வேண்டாமெனத் தடுப்பது உனக்கு அழகாகுமோ?;
கொடுப்பது விலக்கு கொடியோய் – ஈவதை விலக்கும் கொடிய குணம் கொண்டவனே!;
உனது சுற்றம் – உன்னைச் சார்ந்து நிற்கும் உனது சந்ததியானது;
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி – உடுக்கத் துணியும். உண்ண உணவும் இல்லாமல்;
விடுகின்றாய் – விடுகின்றாய் என்பதை அறிவாயாக.

———————

‘முடிய இம் மொழி எலாம் மொழிந்து, மந்திரி,
“கொடியன்” என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன்;
“அடி ஒரு மூன்றும், நீ, அளந்து கொள்க” என,
நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான்
. 23-

இம்மொழி யெலாம் முடிய மொழிந்து – இத்தகைய நீதிகளை எல்லாம் முற்றும் எடுத்துச் சொல்லி;
மந்திரி கொடியன் என்று உரைத்த சொல் – அமைச்சனும். புரோகிதனுமான சுக்கிரன்
வாமனனைக் கொடியன் என்று கூறிய சொற்களை;
ஒன்றும் கொண்டிலன் – ஒரு சிறிதும் ஏற்றுக் கொள்ளாதவனாகி;
நீ அடி ஒரு மூன்றும் – (வாமனனைப் பார்த்து) நீ என்னைக் கேட்ட அந்த மூன்றடி அளவுள்ள நிலத்தை;
அளந்து கொள்க என – உனது காலால் அளந்து கொள்க என்று சொல்ல;
நெடியவன் குறிய கை – திருமால் தனது குறுங்கைகளை;
நீரில் நீட்டினான் – மாபலி வார்த்த தான நீரில் நீட்டினான்.

—————–

‘கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்,
பயந்தவர்களும் இகழ் குறளன், பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள, விசும்பின் ஓங்கினான் –
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே
. 24-

கயம் தரு நறும் புனல்- குளத்தின் நறுமணமுள்ள அந்தத் தான நீர்;
கையில் தீண்டலும் – தனது கைகளில் தீண்டபப்பட்டவுடனே;
பயந்தவர்களும் இகழ் குறளன் – பெற்றவரும் இகழும்படியான குறுகிய வடிவு கொண்ட வாமன மூர்த்தி;
எதிர்பார்த்து வியந்தவர் – எதிர்நின்று பார்த்து வியந்து கொண்டிருந்தவர்களும்;
வெருக்கொள – அஞ்சும்படியாக;
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்ப – அறிவு ஒழுக்கங்களில் சிறந்த மேலோருக்குச் செய்த உதவி சிறந்து
விளங்குவதுபோல;
விசும்பின் ஓங்கினான் – வானத்தின் அளவுக்கு வளர்ந்து நின்றான்.

————-

‘நின்ற கால் மண் எலாம் நிரப்பி, அப்புறம்
சென்று பாவிற்றிலை, சிறிது பார் எனா;
ஒன்ற, வானகம் எலாம் ஒடுக்கி, உம்பரை
வென்ற கால் மீண்டது, வெளி பெறாமையே.
25-

நின்ற கால் – நிலத்தில் ஊன்றி நின்ற கால்;
மண் எலாம் நிரப்பி- நிலத்தின் பரப்பை யெல்லாம் மூடி;
பார் சிறிது எனா – இப்பூமி சிறிய அளவுடைய தென்று;
அப்புறம் சென்று பாவிற்றிலை -அப்புறம் போய்ப் பாவவில்லை;
உம்பரை வென்ற கால் – வானம் சிறிதாகுமாறு மேலே நீண்டு உயர்ந்து வென்ற காலானது;
வானகம் எலாம் ஒன்ற ஒடுக்கி – வானத்தை எல்லாம் ஒருமிக்கச் சிறிதாகும் படி தனக்குள் ஒடுக்கி;
வெளி பெறாமையால் மீண்டது -மேலும் இடம் கிடைக்காமையால் மீண்டது.

——————

‘உலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு
அலகு இலாது, அவ் அடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்,-
சிலை குலாம் தோளினாய்!-சிறியன் சாலவே!
26-

ஓரடி உலகு எலாம் உள் அடி அடக்கிற்று- ஊன்றிய காலாகிய ஒரு அடி உலகத்தை எல்லாம் பாதத்துள் அடக்கிவிட்டது;
அலகு இலா அவ்வடிக்கு – அளந்து கொள்ள இடமில்லாத அந்த மூன்றாம் அடிக்கு;
அன்பன் மெய் அது ஆம் – பக்தனாகிய மகாபலியின் தலையே அளவடியாக ஆயிற்று;
சிலைகுலாம் தோளினாய் – வில் பொருந்திய தோளினை உடைய இராமா!;
இலைகுலாம் துழாய்முடி- இலைகள் மிகுந்த துளப மாலையை அணிந்துள்ள;
ஏகநாயகன்- உலகுக்கு ஒரு தனி முதல்வனான அத்திருமாலாகிய;
சாலச் சிறியன்- மிகச் சிறிய வடிவினானா அவ்வாமனன்.

——————

‘”உரியது இந்திரற்கு இது” என்று, உலகம் ஈந்து போய்,
விரி திரைப் பாற்றுடல் பள்ளி மேவினான்;
கரியவன், உலகு எலாம் கடந்த தாள் இணை
திருமகள் கரம் செக்கச் சிவந்து காட்டிற்றே!
27-

உரியது இந்திரற்கு இது என்று- இம்மூவுலகாட்சியும் இந்திரனுக்கே உரிமை உடையது என்று கூறி;
ஈந்து போய் – அவற்றை அந்த இந்திரனுக்கு தந்து போய்;
விரிதிரைப் பாற்கடல் பள்ளி மேவினான் – விரிந்த அலைகளை உடைய பாற்கடல் படுக்கையை அடைந்தான்;
உலகு எலாம் கடந்து – மூவுலகத்தையும் அளந்த;
கரியவன் தாள் இணை – கருமை நிறம்வாய்ந்த அத்திருமாலின் பாதங்கள்;
திருமகள் கரம் தொட – திருமகளான இலக்குமி தொட்டு வருடவே;
சிவந்து காட்டின – செந்நிறம் கொண்டு விளங்கின.

——————–

திருமால் இருந்த இடமே வேள்விக்கு ஏற்ற இடம் என முனிவன் கூறுதல்

‘ஆதலால், அரு வினை அறுக்கும்; ஆரிய!
காதலால் கண்டவர் பிறவி காண்குறார்;
வேதநூல் முறைமையால் வேள்வி முற்றுவேற்கு,
ஈது அலாது இல்லை, வேறு இருக்கற்பாலதே
. 28-

அருவினை அறுக்கும் ஆரிய – உயிர்களைப் பற்றி வருத்தும் அரிய வினைகளை அழித்துக் காக்கும் மேலோனே!;
காதலால் கண்டவர் – (இந்தத் தூய்மையான இடத்தை) காதல் கொண்டு காண்பவர்கள்;
பிறவி காண்குறார் – பிறவி நோயைக் காணமாட்டார்கள்;
ஆதலால். வேதநூல் முறைமையால் – ஆதலாலே. வேத நூல்களில் கூறியமுறைப்படி;
வேள்வி முற்றுவேற்கு – வேள்வியை நடத்த நினைத்திருக்கும் எனக்கு;
இருக்கற்பாலது – வீற்றிருந்து செய்யத்தக்க இடம்;
ஈது அலாது வேறு இல்லை – இவ்விடம் அல்லாது வேறில்லை.

—————–———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமன் -எத்தனை ராமனடி -ஸ்ரீ அயோத்யா ராமன் வந்தார் ஐயா-

June 22, 2024

ராமன்… எத்தனை ராமனடி?
ராமன்… எத்தனை ராமனடி?

ராமன்… எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
ராமன் எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
ராமன் எத்தனை ராமனடி!

கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்…
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்!
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்!
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்…
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்!
அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன்… ராமன்!

ராமன்… எத்தனை ராமனடி?
ராமன்… எத்தனை ராமனடி?

தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்…
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்!
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்!
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்…
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்!
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன்… ராமன்!

ராமன்… எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
ராமன்… எத்தனை ராமனடி?

வம்சத்திற்கொருவன் ரகு ராமன்!
மதங்களை இணைப்பவன் சிவ ராமன்!
வம்சத்திற்கொருவன் ரகு ராமன்!
மதங்களை இணைப்பவன் சிவ ராமன்!
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன்!
முடிவில்லாதவன் அனந்த ராமன்!
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன்!
முடிவில்லாதவன் அனந்த ராமன்!

ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
நம்பிய பேருக்கு ஏது பயம்?
ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
நம்பிய பேருக்கு ஏது பயம்?
ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
ராமனின் கைகளில் நான் அபயம்!
ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
ராமனின் கைகளில் நான் அபயம்!!

ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!

ராமன்… எத்தனை ராமனடி!

————-

1-ரகு ராமன் -தான பிரபு

2-கோசல ராமன்

3-தசரத ராமன்

4-ஸூர்ய ராமன் -ராம திவாகரன் -உள் இருக்கும் அறியாமை போக்கும் -ஸீதா தேவியே ஒளி-அநந்யா ராகவே அஹம் பாஸ்கர -ஸூர்ய வம்சம்

5-சந்த்ர ராமன் -ராமசந்திரன் -16 கலைகள் -16 கல்யாண குணங்கள்

6-பால ராமன் -வஸிஷ்டர் இடம் கற்றவர்

7-ரஷக ராமன் -யாக ரக்ஷணம்-கண்ணை இமை காப்பது போல் -இருவரும் ரக்ஷணம்-

8-பாவந ராமன் -அகல்யை -பூதராக்கிய -காகுத்தன் கழல் துகள் -பட்டு -பதித பாவந ஸீதா ராமன்

9-ஸீதா ராமன்-மாலை போல் அனாயாசன வில்லை எடுத்து –
வில் தானே முறிந்து திருவடி ஸ்பர்சம்

10-கோதண்ட ராமன்

——

11-அயோத்யா ராமன் -பூமா தேவி திருக்கல்யாணம்-ராமனைப் பெற்ற குற்றம் இச்சா மோஹ-இத்யாதி

12-ஸத்ய ராமன்-அரசன் -ரசம் இல்லா மன்னன் இயம்பினன் -நின் பணி மறுப்பனோ -அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றதே

13-வன வாஸ ராமன்–ஜடா முடி தரித்து -ஆலம் பால் -ஆலமரத்தில் இருந்து குகன் கொடுக்க – -குகன் ஸஹ்யம் -திருச்சேறையில் ஸேவிக்கிறோம்

14- பாதுகா ராமன்-யோக க்ஷேமம் இரண்டையும் அளிக்க-இதுவே ரக்ஷை பாதுகாப்பூ பாதுகாப் பூ

—–

15- வேத ராமன் -தண்ட காரண்ய ரிஷிகளைக் காத்து அருளி

16-மாதுர்ய ராமன் -பாத்ம புராணம் -ரிஷிகள் மயங்கி -ஆலிங்கனம் அனுக்ரஹம் பிரார்த்திக்க -கிருஷ்ணன் கோபிகள் –

17-வல் வில் ராமன் -கர தூஷண நிரசனம் அஸஹாய சூரன்-தோலாத தனி வீரன்

18- முகுந்த ராமன் -ஜடாயு மோக்ஷம்-ஆயுஷ்மன் -பத்ரம் தே -விந்தம் முஹூர்த்தம் -அப்படியே திரும்பி வருவாள்-கச்ச லோகம் அநுத்தம

19-ஸூலப ராமன் -ஸபரி தேடி வந்து -தந்த கனி உகந்து -மோக்ஷம் செல்வதை ஸாக்ஷி -ராமன் மனதுக்கு இனியான் -அர்த்தம் தேடி வருவான் -நம்மூருக்கும் வருபவன்

———-

20 தர்ம ராமன்-வாலி வதம் –

21-காருண்ய ராமன் -சுக்ரீவன் மழைக் காலம் -தாரை -லஷ்மணன் -நன்றி கெட்டவன் சடலத்தை பருந்தும் தீண்டாதே –

—————–

22-ஆத்மா ராமன் -தத்வம் உணர்த்தி -இந்திரியங்கள் -தச -ஸம்ஸாரம் பிறவி பெரும்கடல் அசோக வனம் சரீரம் -முக் குணங்கள் விபீஷணன் ராவணன் கும்பகர்ணன்-ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம் –

23-ஸூந்தர ராமன் -கண்டேன் ஸீதையை -ஆலிங்கனம் செய்து அருளி -தன்னையே தந்த கற்பகம் –ஸூந்தரன் -அஞ்சனா தேவி சாத்திய திருநாமம் -பந்தர் ஹிந்தியில் குரங்குக்கு

—————-

24- தர்ப்ப சயன ராமன் -கரும் கடல் நோக்கி கருணைக் கடல் பள்ளி கொண்ட திருக் கோலம்

25-சேது ராமன் -நளன் விஸ்வ கர்மா தேவ சிற்பியின் திருமகன் -நள சேது -என்றே திரு நாமம் -திருவடி துகள் களைத் திரட்டி -நம் கடல் போன்ற பாபங்களை போக்கி

26-வீர ராமன் -வீர ராகவப் பெருமாள் –

27-கோல வில்லி ராமன் –திரு வெள்ளியங்குடி –கொடும் கணை துரந்த கோல வில்லி ராமன்-விஜய ராமன் ஜய ராமன் -விஜய ராகவப்பெருமாள் திரு புட் குழி

28-பட்டாபி ராமன் -ராமனுக்கு இடப்புறம் இதில் -உத்சவர் கல்யாண ராமன் வலது பக்கம் சீதை கும்பகோணம் இரண்டு திருக் கோலமும் சேவிக்கிறோம்

—————-

29- ராஜா ராமன்-அசித்வத் பாரதந்தர்யம் காட்டவே மூன்றாம் பிரிவு-தபோ வனம் ரிஷிகள் மதியம் வேத மந்த்ரம் கேட்டே கர்ப்பவதியாக இருக்க -ராமன் திரு உள்ளபடி இருக்கவே தானே சொல்லி –லவகுசர் ஸ்ரீ ராமாயணம் பாட கேட்க ஆசை கொண்டார் –

30-ஸீதா ராமன்-அனுப்பி வைத்தது ராஜா ராமன் -அழுது கொண்டு இருந்தவன் ஸீதா ராமன் –ஸ்வர்ண விக்ரஹம் வைத்து அஸ்வமேத யாகம்

31- ஸந்தான ராமன் -தனது சரிதை கேட்டான்

32-வைகுண்ட ராமன் -பத்ராசல ராமனுக்கு இந்தத் திரு நாமம் –

———————

ராமர் கோவில்: 72 ஏக்கர் நிலம் இருக்கும்போது 2.7 ஏக்கரில் மட்டும் கோவில் கட்டப்பட்டது ஏன்?-கோவில் வடஇந்திய பாணியில்(style) கட்டப்பட்டுள்ளது. சோம்நாத் மற்றும் துவாரகா ஆகிய கோவில்களும் இதே பாணியில்தான் கட்டப்பட்டுள்ளன.

சோம்நாத் கோவிலை வடிவமைத்த ஸ்தபதி சோம்புராவின் பேரன்தான் அயோத்தி கோவிலை வடிவமைத்தவர்.

மேலும், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமர் பிறந்த இடத்திற்கு அருகில் சராயு நதி ஓடியது. அந்த நதி இன்றும் பூமிக்கு அடியில் பாய்ந்து கொண்டிருக்கிறது.

நிலநடுக்கங்களை தாங்கும் வகையிலும், 1000 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் அளவிலும் இந்த கோவிலின் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 72 ஏக்கரில் தென்மேற்கு திசையில் கடவுள் ராமர் பிறந்ததாக கூறப்படுகிறது. அங்கு கோவில் கட்டப்படுகிறது. அதோடு சேர்த்து பிற கோவில்கள் மற்றும் உபகோவில்களும் இங்கு கட்டப்படும்.

முதலில் கோவிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன.

மீதி இருக்கும் இடத்தில் யாத்திரைக்கான அமைப்புகள், அன்னதான மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை அறக்கட்டளையின் மூலம் கட்டப்படும்.

முற்காலத்தில் இருந்தே பால ராமரின் சிலை உள்ளது. அயோத்தி ராமர் பிறந்த பகுதியாக கருதப்படுவதால், அங்கு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

தரைத்தளத்தில் 5 வயது பால ராமரின் சிலை நிறுவப்படுகிறது.

அந்த சிலையின் தோராயமான உயரம் நான்கரை அடி இருக்கும்.

முன்பு வழிபாடு செய்யப்பட்டு வந்த ராமர் மற்றும் அன்னதம்முவின் சிலைகளும் இங்கு உள்ளன.

முதல்தளத்தில் ராம்தர்பார் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நாம் வழிபடும் படங்களில் இருப்பது போன்று ராமர், சீதா, லக்ஷ்மணன், ஹனுமான், பரதன் மற்றும் சத்ருகன் ஆகியோரை வழிபடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூரிய திலகத்தை கருத்தில்கொண்டு, ராம நவமி நாளில் குழந்தை ராமரின் நெற்றியில் சூரியனின் கதிர்கள் படும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து புராதன கோவில்களும் கற்களால் தான் கட்டப்பட்டுள்ளன. 1,000, 1,200, 1,500 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட கோவில்கள் கூட இன்றும் உறுதியாக நின்று கொண்டிருக்கின்றன.

ஸ்ரீரங்கம், ஸ்ரீசைலம் மற்றும் ராமப்பா ஆகிய கோவில்களும் கற்களால் தான் உருவாக்கப்பட்டுள்ளன. கற்களின் ஆயுள் நீடித்து கொண்டே இருக்கும்.

இரும்பு துருப்பிடித்து கெட்டு போய்விடும். இதனால், கோவில் கட்டுமானத்தில் சிமென்ட், இரும்பு பயன்படுத்தக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கேற்றவாறு கட்டப்பட்டுள்ளது. சோம்நாத், துவாரகா மற்றும் ராமேஸ்வரம் கோவில்களும் கூட கல்லால் ஆனவை.

அயோத்தியில் 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும், தரையில் இருந்து 16.5 அடி உயரமும் கொண்ட இத் திருக்கோயில் ஐந்து குவி மாடங்கள், மூன்று தளங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் உடையதாக இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் 160 தூண்களும், முதல் தளத்தில் 132 தூண்களும், இரண்டாவது தளத்தில் 74 தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. 12 நுழைவு வாயில்கள் உடைய இக்கோயிலின் திருக்கோபுரம் 161 அடியாகும். புயல் மழை வெள்ளம் நிலநடுக்கம் போன்ற இயற்கை பாதிப்புக்களில் இருந்து திருக்கோயிலைப் பாதுகாக்கும் விதமாக கோயிலைச் சுற்றி மூன்று அடுக்குகளில் மரம் வளர்ப்பு மற்றும் நந்தவனம் வளர்ப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன கோயில் கட்டுமானப் பொறுப்பான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை முதலில் ரூ. 1,800 கோடி செலவாகும் என்று மதிப்பிட்டது. ஸ்ரீ இராம பக்தர்களின் காணிக்கையாக மட்டும் 3400 கோடிகளுக்கு மேல் பொருள் உதவி கிடைத்துள்ளது. கட்டுமான செலவு போக மீதமிருக்கும் பணத்தை அயோத்தியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்று கோயில் அறக்கட்டளையினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

ராமர் கோவிலின் முதன்மை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு கல் அனைத்தும் ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள பன்சி பஹர்பூரில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த இளஞ்சிவப்பு கல் வலுவாக இருப்பதோடு நீண்ட ஆயுட்காலம் கொண்டது. பார்ப்பதற்கும் அழகான தோற்றத்தைக் கொடுக்கக் கூடியது. ராம் லல்லாவின் சிலையைச் செதுக்குவதற்காக நேபாளத்திலிருந்து அயோத்திக்குச் சிறப்பு ஷாலிகிராம் கற்கள் கொண்டு வரப்பட்டன. இந்த ஷாலிகிராம் கற்களைச் செதுக்கி இந்த சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. ராம் லல்லா 5 வயதுக் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். அதே மாதிரி அயோத்தியிலிருந்து கொண்டு வரப்பட்ட ஷாலிகிராம் கற்கள் சுமார் ஆறு கோடி ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது

ராம் பத், பக்தி பத், தர்ம் பத், ஜனம்பூமி பத் என்ற நான்கு பிரதான சாலைகள் விரிவாக்கப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ராம் பத் சாலையின் இருபுறமும் உள்ள வீடுகள் கடைகள் ஆகியவற்றின் முகப்புகள் மெருகூட்டப்பட்டு, ஒரே மாதிரியான இளம் மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதை முழுவதும் பல சிறிய, பெரிய கடைகள் முளைத்துள்ளன. காவிக் கொடிகள், ராமாயணப் புத்தகங்கள், ராமர், அனுமரின் உருவப் படங்கள், சிலைகள் மும்முரமாக விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த கோவிலை தலைமை கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் பாய் சோம்புரா வடிவமைத்தார், அவருடைய தாத்தா பிரபாகர்ஜி சோம்புரா, அவரது மகன் ஆஷிஷ் சோம்புராவுடன் இணைந்து சோம்நாத் கோயிலை வடிவமைத்துள்ளார். 79 வயதான கட்டிடக் கலைஞர் 1992 இல் நியமிக்கப்பட்டார். வாஸ்து சாஸ்திரத்தின் கொள்கைகளைப் பின்பற்றி நாகரா பாணியில் ராமர் கோயில் கட்டப்படுவதாக சோம்புரா குறிப்பிட்டார். கிழக்கில் உள்ள நுழைவாயில் கோபுர பாணியில் கட்டப்படும், இது தெற்கின் கோயில்களைக் குறிக்கும். கோவிலின் சுவர்கள் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலைப்படைப்புகளைக் காண்பிக்கும். வடிவம்: மந்திரின் கருவறை எண்கோண வடிவில் இருக்கும், அதே சமயம் கட்டமைப்பு சுற்றளவு வட்டமாக இருக்கும். தளங்கள்: இந்த மந்திரில் 161 அடி உயரம் கொண்ட ஐந்து குவிமாடங்களும் ஒரு கோபுரமும் இருக்கும். 3-தளங்களைக் கொண்ட கோயிலில் ஒரு மையம் – கர்ப் க்ரிஹா – சூரியக் கதிர்கள் ராம் லல்லாவின் சிலை மீது விழும் வகையில் கட்டப்பட்டிருக்கும். இறைவன். கருவறையைப் போலவே, கிரஹ மண்டபமும் முழுமையாக மூடப்பட்டிருக்கும், அதே சமயம் கீர்த்தனையும் இருக்கும் மண்டபம், நிருத்ய மண்டபம், ரங் மண்டபம் மற்றும் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு பிரார்த்தனை மண்டபங்கள் திறந்த பகுதிகளாக இருக்கும். சிலை: சிசு ராமர் சிலை 5 அடி உயரம் மற்றும் வெள்ளை பளிங்குக் கல்லால் ஆனது. கோவில் மணி: ராமர் கோவிலுக்கு 2,100 கிலோ எடையுள்ள மணி, இந்தியாவில் மணி உற்பத்திக்கு நன்கு அறியப்பட்ட இடமான எட்டாவிலிருந்து கொண்டு வரப்படுகிறது. 6 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட இந்த மணியின் விலை 21 லட்சம் ரூபாய்.

அயோத்தி ராமர் கோவில்: காலவரிசை

1528-1529: முகலாயப் பேரரசர் பாபர் பாபர் மசூதியைக் கட்டினார் 1850கள்: நிலத்தில் வகுப்புவாத வன்முறையின் ஆரம்பம் 1949: மசூதிக்குள் ராமர் சிலை கண்டெடுக்கப்பட்டது, வகுப்புவாத பதற்றத்தை தீவிரப்படுத்துகிறது 1950: பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்ய அனுமதி கோரி சிலையை வழிபட அனுமதி : UP 1961 சிலையை அகற்றக்கோரி மத்திய வக்ஃப் வாரியம் 1986: இந்து வழிபாட்டாளர்களுக்கான இடத்தை மாவட்ட நீதிமன்றம் திறந்தது 1992: பாபர் மசூதி டிசம்பர் 6, 2010ல் இடிக்கப்பட்டது: அலகாபாத் உயர்நீதிமன்றம் மூன்று வழிப் பிரிவினை விதித்தது. சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா இடையே சர்ச்சைக்குரிய பகுதி 2011: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எஸ்சி தடை 2016: சுப்ரமணியன் சுவாமி எஸ்சியில் மனு தாக்கல் செய்தார், ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கோருகிறார் 2019: அயோத்தி ராமர் பிறந்த இடம் என்பதை எஸ்சி ஏற்றுக்கொண்டு, முழு உரிமையையும் ஒப்படைக்கிறது சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் அறக்கட்டளைக்கு மற்றும் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்திற்கு மாற்று இடமாக வழங்க அரசுக்கு உத்தரவு 2020: பிரதமர் மோடி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்

———

ழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட வைணவ ஆலயங்களை, ‘திவ்ய க்ஷேத்ரம்’ என்பர். இவை மொத்தம் 108. இவற்றுள் பரமபதமும் பாற்கடலும் இந்தப் பூலகில் தரிசிக்க இயலாதன. ஏனைய 106 திவ்ய ஸ்தலங்களில் அயோத்தி முக்கியமானது. பலரும் அயோத்தியில் இருக்கும் ராம ஜன்ம பூமிதான் ஆழ்வார்களால் பாடப்பட்டது என நினைப்பர். ஆனால், உண்மையில் திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற, 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுவது அம்மாஜி மந்திர். ‘மதறாஸ் மந்திர்’ என்றும் இது அழைக்கப்படுகிறது. அயோத்தியில் வசிப்பவர்கள் பலருக்குமே இந்த ஆலயத்தைக் குறித்து சரியாகத் தெரியவில்லை. அயோத்திக்குச் செல்லும் பக்தர்கள் அவசியம் காணவேண்டிய திருத்தலம் இது.

அம்மாஜி மந்திர், நிர்மோச்சன் செள ரஸ்தா அருகில், கொத்வாலி அயோத்தியா காவல் நிலையத்துக்கு எதிர்ப்புற சாலையில் அமைந்துள்ளது. அச்சு அசலாகத் தமிழ்நாட்டு வைணவ ஆலயம் போலவே இது தோற்றம் தருகிறது. மூலவர் ஸ்ரீராமர், தாயார் சீதா தேவி. புஷ்கல விமானத்தின் கீழ் அமைந்த கருவறையில்
ஸ்ரீ ராமபிரானின் ஒருபுறம் சீதாபிராட்டியும், இன்னொரு புறம் லட்சுமணரும் காட்சி தருகின்றனர். ஸ்ரீராமபிரான் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலுக்கு பரமபத புஷ்கரிணி மற்றும் சரயு நதி ஆகியவை தல தீர்த்தங்களாக உள்ளன.

யோகி ஸ்ரீ பார்த்தசாரதி அய்யங்கார் என்பவரால் நிறுவப்பட்டது இந்தக் கோயில். இவர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ஆழ்ந்த புலமை கொண்டவர். வேத இதிகாசங்களில் விற்பன்னராகவும் இருந்தவர். இவர்,
‘ஸ்ரீ சரஸ்வதி பண்டார்’ என்ற ட்ரஸ்ட் ஒன்றை ஏற்படுத்தி, தனது சொத்துக்கள் முழுவதையும் அதற்கே தந்துவிட்டார். அதில் கிடைக்கும் வருவாயிலேயே இந்த ஆலயம் நிர்வகிக்கப்படுகிறது. அம்மாஜி மந்திர் இருக்கும் இடத்தில்தான் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆழ்வார்கள் பாடிய ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் இருந்ததாம்.
ஸ்ரீ ரங்கநாதர், அனுமன் மற்றும் ஆழ்வார்களுக்கான தனி சன்னிதிகளும் இந்தக் கோயிலில் உண்டு. ஸ்ரீ சடகோபர், ஸ்ரீராமானுஜர் மற்றும் ஸ்ரீ மணவாள மாமுனி ஆகியோரும் காட்சி தருகின்றனர். கோயிலில் பாஞ்சராத்ர ஆகமம் கடைபிடிக்கப்படுகிறது.

கோயில் அமைந்ததற்கான சுவாரசிய வரலாறு ஒன்றும் கூறப்படுகிறது. யோகி ஸ்ரீ பார்த்தசாரதி அவர்களின் மனைவி சிங்காரம்மா என்பவரது கனவில் ஸ்ரீராமர் மற்றும் சீதாபிராட்டியாரின் உத்ஸவ விக்ரஹங்கள் தோன்றினவாம். அவை தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் திருப்புல்லாணி தலத்தில் அமைந்த ஒரு பாழடைந்த கோயிலில் புதைந்திருப்பதாகக் கனவில் அறியப்பட்டது. அந்தத் தம்பதியினர் உடனே சென்று அங்கே பார்க்க, கனவில் கண்டபடியே கோயிலும் மூர்த்திகளின் திருவுருவங்களும் தென்பட்டிருக்கின்றன.

உறவினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் ராமநாதபுரம் மன்னரின் அனுமதியோடு அந்த விக்ரஹங்களை எடுத்து வந்து ஆராதிக்க அயோத்தியில் கோயில் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றனர். கோயில் திருப்பணிகள் முடிவதற்கு முன்னரே பார்த்தசாரதி அய்யங்கார் இறந்து விட, அவரது மனைவியே கோயில் பணிகளை நிறைவு செய்து, நித்ய ஆராதனை சேவைகளையும் உத்ஸவங்களையும் நடத்தும் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அவரது முனைப்பான திருப்பணியால் ஆலயம் உருவானதால், ‘அம்மாஜி மந்திர்’ என்ற பெயரிலேயே இந்த ஆலயம் அழைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் இருக்கும் ஒரு கல்வெட்டு, இந்த ஆலயத்தை, ‘சேது ராம மந்திர்’ என்று தெரிவிப்பதையும் கவனிக்கலாம்.

இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் ஸ்ரீராமநவமி உத்ஸவம் ஐந்து நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கெனவே அர்ச்சகர்கள், பரிசாரகர்கள், வேத பாராயண விற்பன்னர்கள் ஆகியோர் திருவல்லிக்கேணியில் இருந்து அயோத்தி செல்கிறார்கள். ஆலயத்தில் தங்கும் வசதிகளும் உண்டு.

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-