ஸ்ரீ ஆறாயிரப்படி –6-4-2-
கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.–6-4-2-
சேதன அசேதன ஸமஸ்த வஸ்துக்களும் நீராயுருகும்படி குழலூதிக் கொண்டு -திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உகந்து
நிரை மேய்த்து அருளினபடியையும் -பசு மேய்க்க எழுந்து அருளின ஆயாசத்தால் வந்த ஸ்ரமமும்
நப்பின்னைப் பிராட்டியைப் பிரிகையால் வந்த ஸந்தாபமும் தீருகைக்கு சிசிரோபசாரமாக அவளுடைய ப்ரேம கர்ப்பாதி
சீதள திவ்ய அவலோகந அம்ருத வர்ஷ அபி ஷிக்தனாய் ததீய புண்ய கந்த வாசித அநந்த அதி கந்தரான
கவரீ பரிமள அனுபவ நிரதரனாய்க் கொண்டு அவளுடைய நிரதிசய ஸூக ஸ்பர்சமான திருத் தோள்களோடே புணர்ந்ததும் உள்பட
மற்றுமுள்ள ஸர்வ திவ்ய சேஷ்டிதங்களையும் நினைந்து மனம் குலைந்து இப்படி ஸ்நேஹத் தோடே
காலத்தைப் போக்கப் பெற்ற எனக்குத் திரு நாட்டிலே தான் சத்ருசர் உளரோ -என்கிறார் –
————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-4-2-
தொல் அருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல் -என்று பிரார்த்தித்த படியே பெறுகையாலே திரு நாட்டில் தான் தன்னோடு ஒப்பார் உண்டோ என்கிறார் –
கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.–6-4-2-
கானத்தோடே இனிய குழலை ஊதிற்றும்–பசு மேய்த்து வந்த இளைப்பு தீரும்படி அவனை தன்னுடைய முக்தமான அழகிய கண்களாலே அம்ருதத்தை வர்ஷித்தால் போலெ குளிர நோக்கி திருக் குழலிலே பரிமளம் அவன் திரு மேனி எல்லாம் வெள்ளம் இடும்படி தழுவின நப்பின்னை பிராட்டி யுடைய தோள்களில் கலந்ததுவும் -நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்தால் அத்யாச்சர்யமான அழகையும் உடையனாய் அனுக்ரஹ சீலனாய் இருக்கை –நேயத்தோடு கழிந்த போது -இனிமையோடு போன காலம் –
—————
ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-4-2-
அநந்தரம் ஆச்சர்யமான ஆகாரத்தை யுடையனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய நினைத்தார் நெஞ்சை நெகிழப் பண்ணும் சேஷ்டிதங்களை
ச ஸ்நேஹ அநு சந்தானம் பண்ணிக் காலம் எல்லாம் போகா நின்றது –
நித்ய அனுபவம் பண்ணுகிற விலக்ஷண தேசம் எனக்கு சத்ருசமோ -என்கிறார் –
கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.–6-4-2-
கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் –பெண்கள் நெஞ்சு வசீக்ருதமாகைக்காக-கேய -தாழ்ச்சி தோற்றின கேயங்களை வைத்து
இனிதாம்படி குழல் ஊதினதும்-அக்குழல் வழியே பெண்கள் வருமோ பாதி பசுக்களும் வரும்படி அக்குழலையூதி-நிரை மேய்த்ததும்
கெண்டை ஒண்கண் வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் -கெண்டை போலே முக்தமான திருக் குழல்களையுடைய
நப்பின்னைப் பிராட்டி திருத் தோளோடு ஸம்ஸ்லேஷித்த இதுவும்
மற்றும் பல–பின்னையும் ஹ்ருத்யமாய்க் கொண்டு பலவாய் இருப்பனவான
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து–ஆச்சர்ய ரூபத்தை யுடையவனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய நித்ய அநு பாவ்ய
சேஷ்டிதங்களை நினைத்து நைஞ்சு குலைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.–ஸ்நேஹத் தோடே போதுகள் போகா நின்றன -எனக்கு எந்த
லோகம்தான் ஒப்பு ஆவது -பரமபதம் தான் ஒப்போ -என்று கருத்து –
——
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-4-2-
தொல் அருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல் -என்று பிரார்த்தித்த படியே பெறுகையாலே திரு நாட்டில் தான் தன்னோடு ஒப்பார் உண்டோ என்கிறார் –
கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.–6-4-2-
கேயத் தீங்குழல் ஊதிற்றும் –
கேயம் -என்று கானம் / தீங்குழல்-இனிய குழல் /பர தந்திரனாய் பசு மேய்க்கப் புகையால் வரவு தாழ்த்தேன் இத்தனை -என்றால் போலே சில பாசுரங்களை நெஞ்சை வருத்தும் இசையோடு கூட்டி பெண்கள் நெஞ்சில் மறம் மாறும் படி குழல் ஊதிற்றும் –
நிரை மேய்த்ததும்
அக்குழல் ஓசையே தாரகமாக வளருமவை யாயிற்று பசுக்கள் -பெண்களும் அக் குழல் ஓசை வழியே சேருமவர்கள்-ஒன்றைக் கொண்டு எல்லா காரியமும் செய்ய வல்லான் இ றே
கெண்டை ஒண்கண்-வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும்
பசு மேய்த்த விடாய் தீருவது நப்பின்னை பிராட்டி தோளோடு அணைந்தாயிற்று -நப்பின்னை பிராட்டி முக்தமான அழகிய திருக் கண்களாலே குளிர நோக்கி அழகிய திருக் குழலில் பரிமளத்தாலே திருமேனியை வாசிதமாக்கி -பசு மேய்த்து வந்த சிரமம் தீர -பர்த்தாராம் பரிஷஸ் வஜே–என்கிறபடியே அணைக்க அவள் தோளோடு கலந்ததும்
மற்றும் பல-மற்றும் உண்டான பிராட்டிமாரோடு கலந்த படி
மாயக் கோலப் பிரான்-நப்பின்னை பிராட்டியாரோடே கலவியால் வந்த ஒற்று மஞ்சளும் மாளிகைச் சாந்துமான அத்யாச்சர்யமான ஒப்பனையை யுடையனாய் -உபகார சீலனானவனுடைய
தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
கிருஷ்ண சேஷ்டிதங்களை நினைத்து அத்தாலே நெஞ்சு நெகிழ்ந்து –
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.–
இனிமையோடே கழிந்த காலம் -ஒரு தேச விசேஷத்திலும் தான் எனக்கு எதிர் உண்டோ -ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே அனுபவ வேளையில் போலே ஸ்ம்ருதி வேளையிலும் இனிமையோடே செல்லக் கடவதானால்-எனக்கு எங்கே எதிர்-
———
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-4-2-
கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ் வுலகம் நிகரே.–6-4-2-
ஆச்சர்யமான ஆகாரம் -நினைத்தார் நெஞ்சம் நெகிழப் பண்ணும் -அன்பு கனிவு ஆசை ஸ்நேஹம் –
கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண் கண்-பெண்கள் நெஞ்சை -கானம் -கேயம் -வசீகரித்து -தாழ்ச்சி தோற்றிய
மூங்கில் -இனிதாம் படி -அக் குழல் வழியே பெண்கள் பசுக்கள் வர –
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல-நப்பின்னை சம்ஸ்லேஷித்த இதுவும் -பக ஹிருத்யமாய்
மாயக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து-ஆச்சர்ய ரூபம் -கிருஷ்ணன் அனுபாவ்ய சேஷ்டிதங்கள் -குண அனுபவம் பண்ணி
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே-ஒப்பிலா அப்பன் -முன்- பரமபதம் தான் ஒப்போ –
வேய்ங்குழலிலே இனிய பாட்டுக்களை வைத்து ஊதியதும் பசுக்களை மேய்த்ததும், கெண்டைமீன் போன்ற பிரகாசம் பொருந்திய
கண்களையும் வாசனைபொருந்திய பூக்களை யணிந்த கூந்தலையுமுடைய நப்பின்னைப் பிராட்டியினுடைய தோள்களைக் கூடியதும்,
மற்றும் பலவான, அழகிய மாயப்பிரானுடைய செயல்களை நினைந்து மனம் குழைய அன்போடு காலங்கள் கழிகின்றன;
ஆதலால் எனக்கு எந்த உலகம்தான் ஒப்பாகும்.
மற்றும் பல செய்கை என்க. நினைந்து மனம் குழைந்து போது நேயத்தோடு கழிந்த என்க. குழைந்து – குழைய; எச்சத்திரிபு. கேயம் – பாட்டு.
கழிந்த – கழிகின்றன; கால மயக்கம். மாற்றிக் கூட்டாமல், கழிந்த போது – கழிந்த காலத்தில் என நேரே பொருள் கூறலுமாம். உலகம் : ஆகுபெயர்.
“தொல்லருள் நல்வினையால் சொலக் கூடுங்கொல்”-5-9-10- என்று பிரார்த்தித்த படியே பெறுகையாலே,
திருநாட்டிலே தான் என்னோடு ஒப்பார் உளரோ? என்கிறார்.
கேயம் தீம் குழல் ஊதிற்றும் –
தான் நினைத்த பெண்களுடைய பெயரை வைத்துப் புணர்த்துச் சுவைப் பாட்டாக வைத்து ஊதிற்றும்.
கேயம் – பாட்டு. தீம் – இனிமை. இனிமையை யுடைய பாட்டு என்றபடி.
நிரை மேய்த்ததும் –
இதுக்கும் பசு மேய்க்கைக்கும் ஒன்றே பரிகரம்.
குழலை ஊதவே பசுக்கள் வயிறு நிறையும்.
சக்கரவர்த்தித் திருமகனுக்கு வில் கை வந்திருக்குமாறு போலே யாயிற்று, கிருஷ்ணனுக்குக் குழல் கை வந்திருக்கும்படி.
வேற வியாபாரம் இல்லையே கிருஷ்ணனுக்கு -குழல் வைத்தே சம்ஸ்லேஷம் -கோதண்டம் வைத்து பெருமாள் வியாபரிப்பது போலே
இது வைஸ்ய வர்ண தர்மம் -அது ஷத்ரியன் வர்ண தர்மம்-
கெண்டை ஒண் கண் வாசம் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் –
கரனைக் கொன்ற அன்று, பிராட்டி “கணவனை ஆலிங்கனம் செய்தாள்”
–“தம் த்ருஷ்டவா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்
பபூவ ஹ்ருக்ஷ்டா வைதேஹீ பர்தாரம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 30 : 39.
என்னும்படி அணைத்தாற் போலே யாயிற்று,
பசு மேய்த்து வந்த சிரமம் எல்லாம் போகும்படி நப்பின்னைப் பிராட்டி இளமை பொருந்திய அழகிய திருக் கண்களாலே
குளிர நோக்கி அழகிய திருக் குழலின் பரிமளத்தாலே திருமேனியை வாசனை யுடைய
தாம்படி ஆக்கித் தன் தோள்களோடே அணைத்ததுவும்.
கெண்டை ஒண் கண் –
கெண்டை போலே மிக இளமையினை யுடையனவாய்,
அமிருதத்தைப் பெய்தாற் போலே குளிர நோக்குகிற திருக் கண்கள்.
வாசம் பூங் குழல் –
வாசம் செய் பூங் குழலிற் காட்டிலும் –திருவாய். 10. 10 : 2.-பொலிவை யுடைத்தான
தன்னே்ற்றமுடைய குழலை யுடையவள்.
வாசப் பூம் குழல் வாசனையே இவளது குழல் -கந்தம் கமழும் குழலி
பின்னை தோள்கள் மணந்ததும் –
அவளுடைய தோள்களுடனே கலந்ததுவும்.
மணத்தல் – கலத்தல்.
“தோளி”சேர் பின்னை –இது, திருவாய். 4. 2 : 5.-என்கிறபடியே, இவளுக்கு அழகு கை விஞ்சி யிருக்குமே.
பெண்களை அழைக்கை மற்றும் பல-
மற்றைப் பிராட்டிமாரோடு கலந்த படி.
(கீழே மற்றும் பல -சேஷ்டிதங்களைச் சொல்லி யாயிற்றே
இங்கு மற்றும் -மற்ற கோபிமார்கள் )
சக்கரவர்த்தித் திருமகனுக்கு அத்யயநம், ஆசாரிய சேவை, அஸ்திர சஸ்திரப் பயிற்சிகள் உண்டாமாறு போலே,
இவனுக்கு, எல்லாம் இவையே அல்லவோ.
மாயம் கோலம் பிரான்-
நப்பின்னைப் பிராட்டியோடே கலந்த ஒற்று மஞ்சளும் தானுமான மிக்க ஆச்சரியமான ஒப்பனை யுடைய உபகாரகன்.
அன்றிக்கே,
நப்பின்னைப் பிராட்டியோடு கலந்தாற் போலே,
அல்லாத பிராட்டிமார் “கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள்,
தங்கு மேல் என் ஆவி தங்கும்” –நாய்ச்சியார் திருமொழி, 8 : 7.என்று இருக்குமவர்களுடைய
திரு முலைத் தடத்தில் குங்குமக் குழம்பும் கோயிற் சாந்துமாய் நின்ற அழகினைச் சொல்லவுமாம்.
தன் செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது –
அவன் செயல்களை நினைத்தவாறே நெஞ்சு தன் வசம் இன்றி அழியும்படி.
“நினை தொறும், நெஞ்சு இடிந்துகும்” –. 9. 6 : 2.என்றே அன்றோ இருப்பது.
நேயத்தோடு கழிந்த போது –
நினைக்கப் படுகின்ற பொருளினுடைய இனிமையாலே நினைவு தான் இனிதாய்க் கழிந்த போது.
நேயம் – நேசம் ( இனிமை ஸ்நேஹம் )
எனக்கு எவ் வுலகம் நிகர் –
ஒரு தேச விசேடத்தில் தான் எனக்கு ஒப்பாவார் உளரோ?
அநுபவ வேளை போலே நினைக்கின்ற காலத்திலும் இனிமையோடே செல்லக் கடவதானால் எனக்கு எங்கே ஒப்பு?
ஆகாச வாயர் எனக்கு எதிரோ!
( ஆகாசம் கிடைக்குமா பார்த்து இருக்கும் சம்சாரிகளைச் சொல்லிக் கழிக்கக் கூடாதே )
வாய் – இடம். பரமாகாசம் என்கிற பரம பதமாகிற இடத்திலுள்ளார் தாம் எனக்கு ஒப்பாரோ!!
உலகம் என்பது, உயர்ந்தோராகையாலே நித்திய ஸூரிகள் என்றபடி.
பிரார்த்தித படி பெற்றதால் பரம பதத்திலும் சமம் தனக்கு இல்லை என்கிறார்-
——————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –