Archive for the ‘SRi Valimiki Raamaayanam’ Category

ஸ்ரீ பெருமாள் தூதரும்- ஸ்ரீ பாண்டவ தூதனும்–

May 1, 2026

இன்னார் தூதன் என நின்றான் -தரித்து நின்றான்

சொல்லின் செல்வன் -ராமன் சங்கல்பத்தாலேயே சுக்ரீவன் திருவடியையே தூதுவனாக அங்கதன் தலைமையில் தெற்கு நோக்கி அனுப்பினான் -வாய் போல் எங்கும் செல்லும் திறமை யுடையவன்

உத்யோக பர்வம் -70- கிருஷ்ணனே தன்னைத் தூதுவனாக –

இருவருக்கும் செய்தி சொல்லி அனுப்ப -பெருமாள் -சுக்ரீவனின் மந்திரி -அவன் சொல்லியே செல்ல வேண்டும் -அங்குளி கொடுத்து -அடையாளங்களும் -ரஹஸ்யங்கள் -இதுவா காடு -கோட்டைக்கு வெளியில் வந்ததும் -கங்கை தாண்டி சுமந்தனுக்கு செய்து சொல்லும் -கிளி அரண்மனையில் விட்டு வந்தேன் ஊர்மிளையை பார்த்துக்கக் சொல்லி
பாண்டவர்-ஐந்து ஊராவது இது உண்மைக் கார்யம் அல்ல -பாஞ்சாலி கூந்தல் முடிக்க -நறையூர் நம்பி பாசுரம் -உத்யோக பர்வம் -81-துச்சாதனன் கர்ணன் அவமானம் -சர்வாத்மா அந்தகன் வெள்ளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவன் -சண்டைக்கு பேசிய வர சொல்லி அனுப்பினாள்

தேர்வு – செய்தி -பயணம்
கார்த்திகை மாதம் ஆரம்பம்

சம்பாதி சொல்ல -கடலைத்தாண்ட -பங்குனி மாதம் மஹேந்திர கிரியில் இருந்து புறப்படுகிறார் -காலினால் அளந்தான் -வாலினால் அளந்தான் -ஆகவே திருவடி திருநாம பெற்றார்
மூன்று தடைகள் -மைநாகம் – ஆதர சப்தமோ தசை-ஆறு சுவைக்கு மேல் -சுரசா நாகமாதா -வாயுக்குள் சென்று -ஸிம்ஹிதா நிழல் -வயிற்றுக்குள் -குடலை கிழித்து
அன்பால் வென்று -அறிவால் வென்று ஆற்றலால் வென்று -ராமநாமம் சொல்லி தடை நீக்கி-பங்குனி பவ்ர்ணமி அடைந்தார்

உத்யோக -82 பர்வம் -காலை புறப்பட்டு -அதே கார்த்திகை மாதம் கிளம்பி ரேவதி நக்ஷத்ரம் -பனி வர ஆரம்பிக்க – தாரகன் தேரோட்டி -நான்கு குதிரைகள் பூட்டி -சுக்ரீவனின் பெயரும் ஒரு குதிரை -சாத்விகி உடன் கூடி -காலால் குதிரைப்படை 1000 பின் தொடர-வேத விற்பன்னர் உபசரிக்க ஒரு நாள் தங்கி-ஹஸ்தினாபுரம் அடுத்த நாள்

சந்திப்பு -திருவடி சீதா பிராட்டி -இவனோ விதுர பக்தன் -நான் தேடி கிடைக்க வில்லன் -நான் விட்டு அடியேன் -நினைக்க அசோகவனத்தில் கண்டார் -ஞான முத்திரை -கட்டைவிரல் –
நமோஸ்து ராமாய-ருத்ரன் இத்யாதி ராமகைங்கர்ய துடிப்பால் -சம்சரே மதுரம் வாக்கியம் -31 -1-சர்க்கம் -தமிழ் இராமாயணம் -பாசுரப்படி இராமாயணம்- -அகஸ்தியர் ஆஸ்ரமம் தங்கி-இராமாயண உபன்யாசத்தில் தூங்கினால் அரக்கர்கள் ஆவோம்-

பீஷ்ம த்ரோண -விட்டு விதுரர்-துரியோதனன் சம்பந்தி -சாம்பன் இவன் மகளை திருமணம் -மம பிராண பாண்டவ-பஞ்ச பிராணனும் பஞ்ச பாண்டவர்கள்-விதுரன் வாழ் வள மனை புகுந்தான் உன் குடிசைக்கு வா -வில்லிபாதரம்-கணை யாழி கொடுத்து சீதையை உளனாக்கி -இங்கு கைங்கர்யம் ஏற்றுக்கொண்டு விதுரனை உளனாக்கி

பேச்சு -ராவணன் இடம் -அசோகவனம் துவம்சம் இங்கு அடிக்க அங்கு வலிக்கும் -கதை உபயோகிக்க வில்லை -மரங்களே ஆயுதம் -எதிராளி ஆயுதம் உபயோகிப்பர் -80000 கிங்கர்களை அழித்து –ப்ரஹ்மாஸ்திரம் கட்டுப்பட்டது போல் -நடித்து -ராம தூதன் -ராம தாஸ்ன் -சீதா அருளாலே-வாலையை ஆஸனம் நேரடிக் குறிப்பு இல்லை -அண்ணாந்து பார்த்து உத் வீஷய வால்மீகி இராமாயணம்-வரம் பொய்க்கும் ராமசரம் பொய்க்காது -தேவி ஒப்படைக்காவிடில் ஆவியை விடவேண்டி வரும்

பொய்யாசனம் -பாண்டவ தூதன்-அப்பூச்சி காட்டுகிறான் ஊர் ஓன்று வேண்டி-துஷ்டர்கள் எவ்வளவு பேசினாலும் கேட்க மாட்டார்கள்

இருவரையும் தூதன் என்றும் பார்க்காமல் அழிக்க பார்த்தால்-நரத்துக்கு வால் வாநரம் -சீதை சோக அக்னியை வைத்தே எரித்தார்-

இருவரும் விஸ்வரூபம் -திவ்யம் ததாமி அர்ஜுனனுக்கு-த்ருதராஷ்டரனுக்கும் காட்டி -இத்தைப்பார்த்த கண்ணாலே வேறே ஒன்றையும் பார்க்க மாட்டான் கண்ணை வாங்கிக்கோ பிரார்த்தனை -தூது பேரில் -இலங்கை முழுவதும் கண்டு -விபீஷணன் பற்றி நன்றாக அறிந்து -தோளில் அமர்ந்து கொண்டு போவேன் -இவர் அறிவார் அவள் ஒத்துக்கொள்ள மாட்டாள் தெரிந்தும் -ராமன் காக்கும் வரை உயிர் காத்து இருப்பவள் -ஒரு மாதம் கெடு வாங்குவதற்காகவே இந்த வார்த்தை –

சூடாமணி -காகாசுரன் -மனசிலா -செங்கல்பொடிக்கதை -திலகம் கோணலாக -கன்னத்தையே கண்ணாடி -இத்தையும் சொல் அடையாளம் -ஒரு கல்லில் பல மாங்காய் இருவரும் -விதுரன் உணவு -கோபத்தில் துரியோதனன் -வில் முறித்து உனக்காக போராட மாட்டான் -அரசியல் -குந்தி கர்ணன் இடம் அர்ஜுனனைத்தவிர மற்ற பாண்டவர்களை கொல்ல மாட்டான் -அஸ்வத்தாமா தளபதியாமல் பண்ணி -மோதிரம் போட-சண்டையில் உதவுவான் சகுனி தப்பாக புரிந்து -லீலைகள் பல செய்து

இருவரும் செய்தியுடன் வந்தார்கள் தஸ்ய சத்ருசம் பவத்-தென் திசை நோக்கி நமஸ்காரம் தொழத்தக்க நிலையில் இருப்பதைக் குறிப்பால் கண்டேன் சீதையை-கற்பினுக்கு அணியை-பரிஷ்வங்கம் -தன்னையே கொடுத்து பெருமாள் திருவடியையே விட ஸ்ரேஷ்டரானார் அங்கு தர்மபுத்ரன் நன்றி கூட சொல்லாமல் சங்கல்பித்தது -பின் வந்த தூதனை கொண்டாடட்டும் என்று செய்த செயல்-தூதரே முக்கிய போர் புரிந்தனர்

ஆச்சார்ய பிரபாவம் சொல்லும் தூது -பிறவிப்பெரும்கடல் -அசோகவனம் உடம்புடன் -இத்யாதி-தூது போனவன் ஏற்றம் உபாய வைபவம் சொல்லிற்று-ஆஸ்ரித பாரதந்தர்யம் -கண்ணன் அல்லால் கண்ணில்லை-பொருப்பு துறப்பு-

கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்கள் தங்குவதற்கு இடம் கேட்பதற்காக துரியோதனனிடம் தூது சென்றார் கிருஷ்ணர். பாண்டவர்களின் மிகப்பெரிய பலமாக கிருஷ்ணர் இருப்பதால், அவரைக் கடத்த துரியோதனன் முயற்சிக்கிறான். கிருஷ்ணரை சூழ்ச்சிசெய்து தன் இடத்துக்கு வரவழைத்து ஓர் இருக்கையில் அமரச் செய்கிறான். அந்த இருக்கையின் கீழ் ஒரு நிலவறையை அமைத்து, கிருஷ்ணர் இருக்கையில் அமர்ந்ததும் பாதாள அறைக்குள் விழுந்து விடுவார், அப்போது அவரைக் கொன்று விடலாம் என்பது துரியோதனின் திட்டம். திட்டம் போலவே அனைத்தும் நடைபெறுகிறது. பாதாள அறைக்குள் விழுந்ததும், கிருஷ்ணர் விஸ்வரூபம் எடுத்து மல்யுத்த வீரர்களை அழித்தார். இந்த மகாபாரத சம்பவம் குறித்து வைசம்பாயனர் என்ற முனிவர் மூலம் கேள்வியுற்ற ஜனமேஜய மஹாராஜன், காஞ்சியில் அச்வமேத யாகம் செய்து கிருஷ்ணரை வரவழைத்து, பாதாள அறையில் விஸ்வரூபம் எடுத்தக் காட்சியை நினைவுகூர்ந்து, தனக்கு இங்கேயே விஸ்வரூபக் காட்சியைக் காட்ட வேண்டினான். பக்தனுக்காக ஸ்ரீகிருஷ்ணர், விஸ்வரூப காட்சியைக் காட்டிய திருத்தலம்தான் திருப்பாடகம். (திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார்.)திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 48-வது திவ்ய தேசம் ஆகும்.கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பு அம்சமாகும்.இத்தலத்தை பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.மகாபாரதத்தில் விஸ்வரூபக் காட்சியை பகவான் மூன்று இடங்களில்தான் காட்டியிருக்கிறார். சகாதேவனிடம் நிமித்தம் கேட்கப் போனபோது ஒருமுறை; துரியோதன் அரசவைக்கு தூதுவனாகப் போனபோது ஒரு முறை; குருக்ஷேத்திர யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்தபோது ஒரு முறை.-பத்ர விமானத்தின்கீழ் மூலவர் பாண்டவ தூதர், வீற்றிருந்த திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். வெள்ளிக்கிழமைதோறும் திருமஞ்சனம் காணும் ருக்மிணி தாயார் குசேலனாய் தன்னிடம் வந்து அன்பு செலுத்துவோரை பகவான் கிருஷ்ணருக்கு சிபாரிசு செய்து குபேரனாக வாழ வரம் அருள்கிறார்.

யக்ஞ மூர்த்தி என்ற அத்வைத கொள்கையுடைய சான்றோர் ஒருவர் ராமானுஜருடன் வாதப்போரில் ஈடுபட்டார். பதினெட்டு நாட்களும் வாதம் தொடர்ந்தது. இறுதியில் தனது தோல்வியை ஒப்புக் கொண்ட யக்ஞ மூர்த்தி ராமானுஜரின் கீர்த்திக்கும் வாதத் திறமைக்கும் தன்னை அடிமையாக்கிக் கொண்டார். தனக்கு எதிராக வாதம் புரிந்தவர் ஆனாலும் அவருடைய பாண்டியத்துக்கும் மதிப்பளிக்கும் வகையில் அவரை ‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்று அழைத்து சிறப்பித்தார், ராமானுஜர். ராமானுஜரின் சீடராகி அவரது கொள்கைகளையும் தத்துவங்களையும் பரப்பும் நோக்கத்தில் இதே தலத்தில் பல்லாண்டு வாழ்ந்திருந்த அவரை கவுரவிக்கும் வகையில் இந்த பாண்டவ தூதர் கோயிலிலேயே அவருக்கு தனி சந்நிதி உள்ளது.அருளாளப் பெருமான் எம்பெருமானாருக்காக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்றுமுறை உற்சவம் நடைபெறுகிறது.

மன்னா போற்றி! மணாளா போற்றி!
அஞ்சன வண்ணத் தரியே போற்றி!
கஞ்சனை அடர்ந்த கண்ணா போற்றி!
கருங்கடற் றுயின்ற காரே போற்றி!
ஆயிரந் தோளுடை அடுபோர் வாணனை
நேமியற் றுணித்த நெடியாய் போற்றி!
பேய்முலை யுண்ட பிரானே போற்றி!
பேருல களந்த மாலே போற்றி!
மருதிடைத் தவழ்ந்த மாயா போற்றி!
மாக்கடல் கடைந்த மகேசா போற்றி!
பெருவரை எடுத்த பிரானே போற்றி!
சங்கொடு சக்கரந் தரித்தாய் போற்றி!
தண்டொடு சார்ங்கமும் தனிநாந் தகமும்
பிண்டி பாலமும் பெருவச் சிரமும்
எண்டிசை நிறைந்த எம்மான் போற்றி!
அண்டமும் விசும்பும் அகலிடம் எல்லாம்
உண்டுமிழ்ந் தவனே ஒருவா போற்றி!
திருமறு மார்பத் திருமால் போற்றி!
தீவினை கெடுக்கும் செல்வா போற்றி!
அருமறை தேடும் அடியாய் போற்றி!
அடியவர் வினைகெட அருள்வாய் போற்றி!
சென்றொரு தூணிடை நின்றாய் போற்றி!
சிறுவனை உகந்த செல்வா போற்றி!
அயனொடு தேவர்க் கரியாய் போற்றி!
மலர்மகள் புணர்ந்த மணாளா போற்றி
நிலமகள் இடந்த நெடியாய் போற்றி!
திருவருள் தருவாய் திருவடி போற்றி!>

இரத்தினச்‌ சுருக்கம்‌ என்னும்‌ நூல்‌ தூது விடுவதற்குரிய பொருள்களாகப்‌ பத்தினைக்‌ குறிப்பிடுகின்றது. அன்னம்‌, மயில்‌, இளி, மேகம்‌, நாகணவாய்ப்‌புள்‌, தோழி, குயில்‌, நெஞ்சு, தென்றல்‌, வண்டு
என்னும்‌ இவற்றள்‌ ஒன்றைப்‌ பொருளாகக்‌ கொண்டு, புலவர்கள்‌ தம்‌ புலமை நலம் தோன்றுமாறும்‌ இலக்கிய நயம்‌ பொருந்துமாறும்‌ தூதிலக்கியத்தை ஓதுகின்‌றனர்‌. |
*இயம்புகன்ற காலத்‌தெகின மயில்‌ கிள்ளை
பயம்பெறு மேகம் பூவை பாங்கி--நயந்த குயில்‌
பேதை நெஞ்சம்‌ தென்றல்‌ பிரமரம்‌ ஈரைந்துமே
தூதுரைத்து வாங்கும்‌ தொடை”
என்னும்‌ பழம் பாட்டால்‌ ௮வ் வுண்மை புலனாம்‌.

தான்‌ வகுத்துக்‌ கூறுவான்‌ தலையாய தூதன்‌ ; கூறியது கூறுவான்‌ இடையாய தூதன்‌; ஓலை கொடுத்து நிற்பான்‌ கடையாய தூதன்‌ என்பர்‌.
தானறிந்து கூறும்‌ தலைமற்‌றிடையது .
கோனறைந்த தீதென்று கூறுமால்‌--தான றியா
தோலையே காட்டும்‌ கடையென்‌(.று) ஒரு மூன்று
மேலையோர்‌ தூதுரைத்த வாறு”
என்னும்‌ பெருந் தேவனாரின்‌ பழந் தமிழ்ப்‌ பாரத
வெண்பாப்‌ பாடல்‌

கடனறிந்து காலம்‌ கருதி இடனறிந்து
எண்ணி யுரைப்பான்‌ தலை”
அறிவுரு ஆராய்ந்த கல்வி யிம்‌ மூன்றன்‌
செறிவுடையான்‌ செல்க வினைக்கு”'
இறுதி பயப்பினும்‌ எஞ்சா திறைவற்‌
குறுதி பயப்பதாம்‌ தூது”
----திரு வள்ளுவர்


அன்புடைமை ஆய்ந்த அறிவுடைமை இற்பிறப்பு
நன்குடைமை நல்ல நயனுடைமை--நன்கமைந்த
சுற்‌றமுடைமை வடிவுடைமை சொல் வன்மை
கற்றடங்கல்‌ தூதின்‌ கடன்‌.”-பெரும் தேவனார்

வில்லின்‌ செல்வனாகிய: இராமன்‌ சொல்லின்‌ செல்வனாகிய அனுமனைத்‌ தன்‌ தேவியாகிய ஸீதையைக்‌ கண்டு வரும்‌ பொருட்டுத்‌ தென்றிசை நோக்கித்‌ தூது போக்கினான்‌-ஐயமகற்றும்‌ அடையாளங்கள்‌ பலவற்றை அறிவுறுத்தினான்‌. இறுதியில்‌ ஓளி பொருந்திய கணை யாழி யொன்றையும்‌ அளித்து வாழ்த்தி வழியனுப்பினான்‌.
அனுமன்‌ இராமனை வணங்கி விடை. பெற்றுத்‌ தென்‌றிசை நோக்கிச்‌ சென்றான்‌-இராமபிரானை மனத்துள்‌ நினைத்து வணங்கியவாறே இலங்கைமாநகர்‌ வீதிகளில்‌ ஓரமாக நடந்து சென்றான்‌. மலர்களில்‌ தேனை நாடிச்‌ செல்லும்‌ வண்டைப் போல்‌ கண்ட இட மெல்லாம்‌ சீதையைத்‌ தேடிக் கொண்டே சென்றான்‌–பிராட்டியைக்‌ காணுதற்கு இதுவே ஏற்ற சமயமென எண்ணிய அனுமன்‌ தனது மந்திர வன்மையால்‌ அரக்கியர்‌ உறக்கம்‌ கொள்ளுமாறு செய்தான்‌. உற்ற தோழியாய்‌ அமைந்த திரிசடையும்‌ துயில்‌ கொள்ளலானாள்‌-இராமபிரானால்‌ அனுப்பப்‌ பெற்ற தூதன்‌
நான்‌” என்று கூறியவாறே அவளை வணங்கி முன்னே சென்றான்‌-
அரக்கனே யாக, வேறோர்‌ அமரனே யாக, அன்றிக்‌
குரக்கனத்‌ தலைவனே தான்‌ ஆகுக, கொடுமையாக :
இரக்கமேயாக வந்து இங்‌கு எம்பிரான்‌ நாமம்‌ சொல்லி
உருக்கினன்‌ உணர்வைத்‌ தந்தான்‌ உயிரிதின்‌ உதவி யுண்டோ

இராமபிரான்‌ கூறியனவாக அனுமன்‌ கூறிய அடையாள மொழிகளையும்‌ கேட்டு உள்ளம்‌ உருகினாள்‌. பின்னர்‌, இராமபிரான்‌ அளித்த கணையாழி யொன்றை எடுத்துப்‌ பிராட்டிக்குக்‌ காட்டினான்‌.அதனைக்‌ கண்ட சீதை பெரு மகிழ்ச்சி கொண்டாள்‌.அதனை அன்புடன்‌ வாங்கித்‌ தன்‌ மார்பில்‌ வைத்துத்‌ தழுவிக்‌ கொண்டாள்‌ ; தலைமேல்‌ தாங்கினாள்‌ ; கண்களில்‌ ஓத்திக்‌ கொண்டாள்‌; அதனைக்‌ கொண்டுவந்தளித்த அனுமனை வாயார வாழ்த்தினாள்‌-
பின்னர்ச்‌ சீதை, அனுமன்‌ தன்னைக்‌ கண்டு பேசியதற்கு அடையாளமாகத்‌ தன்பால்‌ இருந்த சூடாமணி யென்னும்‌ அணிகலத்தை அவனிடம்‌ நல்கினாள்‌.
அதனைத்‌ தொழுது வாங்கிய அனுமன்‌ தன்‌ ஆடையிலே முடிந்து பாதுகாப்புச்‌ செய்து கொண்டான்‌.
பிறகு, பிராட்டியிடம்‌ விடைபெற்று அவ்விடம்‌ விட்டுப்‌ பெயர்ந்தான்‌.
அனுமன்‌ இராமபிரான்‌ இருக்கும்‌ இடத்தை யடைந்தான்‌. அவன்‌ அங்கு இராமபிரானை வணங்கவில்லை. ஸீதை இருக்கும்‌ திக்கை நோக்கி வணங்கி வாழ்த்தினான்‌. குறிப்பறிவதில்‌ வல்ல இராமபிரான்‌ ௮னுமனது செயலை உற்று நோக்கினன்‌.ஸீதை நலமாக உள்ளாள்‌ ; இவ்வனுமன்‌ அவளைப்‌ பார்த்து விட்டு வந்துள்ளான்‌; அவளுடைய கற்பும்‌ கலங்காது இலங்குகின்றது என்று அறிந்து கொண்டான்‌. அவனுக்கு உற்ற துயர்‌ நீங்கியது? உவகையால்‌ தோள்கள்‌ பூரித்தன.
இங்ஙனம்‌ இராமன்‌ விடுத்த தூதனாய அனுமன்‌ அவ் விராமனைப்‌ பிரிந்த சீதைக்குக்‌ கணவன்‌ விடுத்த காதல்‌ தூதனாக மட்டும்‌ தொண்டாற்ற வில்லை. தன்‌ பெருந்தலைவனாகிய இராமன்‌ விடுத்த போர்த் தூதனாகவும்‌ இலங்கை வேந்தனைக்‌ கண்டு, அவனது உள்ளமும்‌ துளங்குமாறு செய்து மீண்டான்‌. அதனாலேயே கவியரசராகிய. கம்பர்‌, அவ்வனுமனைச்‌ சொல்லின்‌ செல்வன்‌” என்று தம்‌ காவியத்தில்‌ போற்றிப்‌ புகழ்‌கின்றார்‌.

முன்னமே துயின்‌ றருளிய முது பயோ ததியோ
பன்னகாதி பப்‌ பாயலோ ? பச்சை ஆல்‌ இலையோ
சொன்ன நால் வகைச்‌ சுருதியோ ₹ கருதி நீ எய்தற்
கென்ன மாதவம்‌ செய்தது இச்‌ சிறுகுடில்‌ என்றான்‌.”
–விதுரர் –


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கனக வல்லித்தாயார் வீர ராகவ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தில் ஸ்ரீ ராமானுஜ ஸப்த பிரயோகங்கள்-

October 24, 2025

ஸ்ரீ அயோத்யா காண்டம்
ஹா ராம ராமானுஜ ஹா ஹா வைதேஹி தபஸ்விநி
ந மாம் ஜாநீத துக்கேந ம்ரியமாணம் அநாதவத் –2-59-27-

ஸ து ராமாநுஜ சாபி சத்ருக்ந ஸஹித ததா
ப்ரதஸ்தே பரத யத்ர கௌசல்யாயா நிவேஸநம் –2-75-8-

ஸ்ரீ கிஷ்கிந்தா காண்டம்
ததஸ்து ராமாநுஜ ராம வாநர ப்ரக்ருஹ்ய ஸாஸ்த்ராணி உதித உக்ர தேஜஸ
புரீம் ஸூரேஸாத்மஜ வீர்ய பாலிதாம் வதாய சத்ரோ புநராகதா இஹ -3-13-30-

அவஷ்டப்ய அதிஷ்டந்தம் ததர்ஸ தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்து சைவ ததா அநுஜம் –3-19-25-

ஸ காமிநம் தீநம் அதீன சத்த்வ சோகாபி பன்னம் ஸாமுதீர்ண கோபம்
நரேந்திர ஸூநு நரேந்திர புத்ரம் ராமாநுஜ பூர்வஜம் இதி உவாஸ –3-31-1-

யதா உக்த காரி வசனம் உத்தரம் சைவ ஸ உத்தரம்
ப்ருஹஸ்பதி ஸமோ புத்த்யா மத்த்வா ராமாநுஜ ததா –3-31-12-

ஏஷ ராமாநுஜ ப்ராப்த த்வத் ஸகாஸம் அரிந்தம
ப்ராதுர் வ்யஸன சந்தப்த த்வாரி திஷ்டதி லஷ்மண –3-31-33-

ந ராம ராமாநுஜ ஸாஸநம் த்வயா கபீந்த்ர யுக்தம் மனஸாபி அபோஹிதம்
மநோ ஹி தே ஜ்ஞாஸ்யதி மாநுஷம் பலம் ஸ ராகவஸ்ய அஸ்ய ஸூரேந்த்ர வர்சஸ–3-32-22-

ஸ்ரீ ஸூந்தர காண்டம்
நூநம் ஸ காலோ ம்ருக ரூபா தாரே மா மல்பபாக்யம் லுலுபே ததா நீம்
யத்ர ஆர்ய புத்ரம் விஸ ஸர்ஜ மூடா ராமாநுஜம் லஷ்மண பூர்வஜம் –4-28-10-

அறிவிலியான நான் எந்த சமயத்தில் சக்ரவர்த்தித் திருமகனுடைய தம்பியானவரான இளைய பெருமாளையும், இளைய பெருமாளுடைய தமயனாராய், எனது கணவரான பெருமாளையும் விரட்டி விட்டேனோ, அப்போதே ஸுப்ரஸித்தனான யமன் மானாக உருக் கொண்டு அற்பமான புண்ணியத்தை யுடைய என்னை வஞ்சித்து விட்டான்.]

உபஸ்திதா ஸா ம்ருது ஸர்வ காத்ரீ ஸாகாம் க்ருஹீத்வாத நகஸ்ய தஸ்ய
தஸ்யாஸ்து ராமம் ப்ரவி சிந்த யந்த்யா ராமாநுஜம் ஸ்வம் ச குலம் ஸூபாங்க்யா –4-28-19-

பரிஸ்ரமாத் ப்ரஸுப்தா ச ராகவாங்கே அப்யஹம் சிரம்
பர்பாயேண ப்ரஸுப்தஸ் ச மமாங்கே ப,ரதாக்ரஜ: ]ரா-ஸு 38-21]
[ராகவனுடைய திருத்தொடையில், நான் களைப்பினால் வெகுநேரம் தூங்கினேன். பரதனுடைய தமையனாரான அவரும் என் தொடையில் தூங்கினார். ]

ஸ்ரீ யுத்த காண்டம்
ஸ பாண வர்ஷம் து வவர்ஷ தீவ்ரம் ராமானுஜ கார்முக ஸம் ப்ரயுக்தம்
ஷுரார்த சந்த்ரோத்தம கர்ணி பல்லை ஸராம்ஸ் ச சிச்சேத ந சுஷுபே ச –5-59-101-

தத் த்ருஷ்ட்வேந் த்ரஜிதா கர்ம க்ருதம் ராமாநுஜ ததா
அசிந்தயித்வா ப்ரஹசன்நைதத் கிம் சிதிதி ப்ருவந் –5-88-52-

ஸ்ரீ உத்தர காண்டம்
இதோ கச்சதா பஸ்யத்வம் வத்யமானம் மாஹாத்நா
ராமாநுஜேந வீரேண லவணம் ராக்ஷஸ உத்தமம் –6-61-29-

ததோ ராமாநுஜ க்ருத்த காலஸ் யாஸ்த்ரம் ஸூதாருணம்
ஸம் வர்தம் நாம பரதோ கந்தர் வேஷ்வப்ய யோஜயத் –6-91-6-

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ மஹாபாரதத்தில் ஸ்ரீ மத் இராமாயணம்– ஸ்ரீ வன பர்வம்- ஸ்ரீ ராமோ பாக்யான பர்வம்-

October 11, 2025

இராமாயணம் ஆரம்பம்! – வனபர்வம் பகுதி 272-ராமன் மற்றும் சீதையின் பிறப்பு; ராவணனின் மூதாதையர் பற்றிய அறிமுகம்; குபேரன் பிறப்பு; குபேரன் பெற்ற நன்மைகள் ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, {தசரத ராமனே} ராமனே கூட இணையற்ற துயரத்தைச் சந்தித்தான். ராட்சச மன்னனான தீய மனம் கொண்ட ராவணன், ஏமாற்றைக் {மாயையைக்} கைக்கொண்டு, ஜடாயு என்ற கழுகை வீழ்த்தி, அவனது {ராமனின்} மனைவியான சீதையை, அவனது {ராமனின்} ஆசிரமத்தில் இருந்து பலவந்தமாகக் கடத்திச் சென்றான். பிறகு உண்மையில், சுக்ரீவனின் உதவியைப் பெற்று, கடலில் பாலத்தைக் கட்டி தனது கூர்முனை கொண்ட கணைகளால் லங்கையை எரித்து, சீதையை மீட்டான்”

யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}“ராமன் எந்தக் குலத்தில் பிறந்தான். அவனது பலம் மற்றும் பராக்கிரமத்தின் அளவு என்ன? ராவணன் யாருடைய மகன்? எதன் பேரில் அவன் ராமனுடன் முரண்பட்டான்? ஓ சிறப்புமிக்கவரே {மார்க்கண்டேயரே}, அனைத்தையும் விவரமாக எனக்குச் சொல்லும்; பெரும் சாதனைகள் கொண்ட ராமனின் கதையை நான் கேட்க மிக ஆவலாக உள்ளேன்” என்றான்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குல இளவரசே {யுதிஷ்டிரா}, இந்தப் பழைய வரலாற்றை அது நடந்தவாறே சரியாகக் கேள்! தனது மனைவியுடன் சேர்ந்து ராமன் அனுபவித்த துன்பம் அனைத்தையும் நான் உனக்குச் சொல்கிறேன். இக்ஷவாகு குலத்தில் உதித்த அஜன் என்ற பெரும் மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு {அஜனுக்கு}, வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்து, எப்போதும் சுத்தமாக இருந்த தசரதன் என்ற பெயர் கொண்ட மகன் ஒருவன் இருந்தான். அந்தத் தசரதனுக்கு, அறநெறிகளையும், பொருளையும் அறிந்த ராமன், லட்சுமணன், சத்ருக்னன் மற்றும் பலம்பொருந்திய பரதன் என்ற நான்கு மகன்கள் இருந்தனர்.

ராமனுக்குக் கௌசல்யை என்ற தாயும், பரதனுக்குக் கைகேயி என்ற தாயும் இருந்தனர். எதிரிகளுக்குக் கசையாக இருந்த லட்சுமணனும், சத்ருக்னனும் சுமித்திரையின் மகன்கள். ஜனகன் விதேக நாட்டின் மன்னாக இருந்தான். சீதை அவனது மகளாக இருந்தாள். அவளை {சீதையை} ராமனின் அன்பிற்குரிய மனைவியாக்க விரும்பிய தஷ்திரி {பிரம்மன்} தானே அவளைப் படைத்தான். ராமன் மற்றும் சீதையின் பிறப்பு குறித்த வரலாற்றை இப்போது நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.

இப்போது, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் ராவணனின் பிறப்பைக் குறித்து உரைக்கிறேன். அனைத்து உயிர்களின் தலைவனும், அண்டத்தைப் படைத்தவனும், பெரும் தவத்தகுதி படைத்த தேவனும், சுயம்புவுமான பிரஜாபதியே {பிரம்மனே} ராவணனின் பாட்டனாவான். புலஸ்தியருக்கு, பசுவிடம் பெறப்பட்ட வைஸ்ரவணன் {குபேரன்} என்ற பெயரில் அழைக்கப்பட்ட பலம்பொருந்திய மகன் ஒருவன் இருந்தான். ஆனால் அவரது {புலஸ்தியரின்} மகன் {வைஸ்ரவணன்}, தன் தந்தையை {புலஸ்தியரை} விட்டுவிட்டு, தன் பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்றுவிட்டான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதனால் கோபமடைந்த அவனது {வைஸ்ரவணனின்} தந்தை {புலஸ்தியர்}, தன்னிடமிருந்து இரண்டாவதாக ஒரு சுயத்தைப் படைத்தார். தன் சுயத்தின் மறுபாதியின் மூலமே அந்த மறுபிறப்பாளர், வைஸ்ரவணனிடம் கொண்ட கோபத்தைத் தீர்க்க விஸ்ரவஸ் என்றவனைப் பிறப்பித்தார்.

ஆனால் வைஸ்ரவணனிடம் {குபேரனிடம்} மனநிறைவு கொண்ட பெரும்பாட்டனோ {பிரம்மனோ}, அவனுக்கு {வைஸ்ரவணனுக்கு} இறவாமையையும், அண்டத்தில் உள்ள அனைத்துச் செல்வங்களின் மீது ஆட்சி அதிகாரத்தையும், திசைப்புள்ளிகளில் ஒன்றுக்குப் பாதுகாவலன் என்ற பொறுப்பையும், ஈசானனின் நட்பையும், நளகுபேரன் என்ற மகனையும் கொடுத்தான். அவன் {பிரம்மன்}, ராட்சசக் கூட்டத்தால் பாதுகாக்கப்பட்ட, அவனது தலைநகரான இலங்கையையும், செலுத்துபவன் விருப்பதிற்கேற்ப நினைத்த இடம் எங்கும் செல்லும் திறன் கொண்ட புஷ்பகம் என்று அழைக்கப்பட்ட தேரையும் {விமானத்தையும்} கொடுத்தான். யக்ஷர்களுக்கு மன்னனாகவும், மன்னர்களை ஆள்பவனாகவும் அவனை {வைஸ்ரவணனை} நியமித்தான்.” 

ராவணன் பெற்ற வரம்! – வனபர்வம் பகுதி 273-ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், கரன், சூர்ப்பனை பிறப்பு; அவர்கள் வைஸ்ரவணனிடம் கொண்ட பொறாமை; அவர்களின் கடுந்தவம்; தனது தலையை வெட்டி வேள்வி நெருப்பில் இட்ட ராவணன்; அவர்களுக்கு பிரம்மன் அருளிய வரம்; விபீஷணன் இறவாமை பெற்றது ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “புலஸ்தியரின் பாதி ஆன்மாவாக இருந்த விஸ்ரவஸ் என்ற பெயர் கொண்ட முனிவன், பெரும் கோபத்துடன் வைஸ்ரவணனைப் பார்க்க ஆரம்பித்தான். ஆனால், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ராட்சசர்களின் மன்னனான குபேரன், தன்னிடம் தன் தந்தை {விஸ்ரவஸாக இருந்த புலஸ்தியர்} கோபமாக இருப்பதை அறிந்து, அவனை எப்போதும் ஆறுதல் படுத்த எண்ணினான். ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}. மனிதர்களின் தோள்களில் சவாரி செய்து இலங்கையில் வாழ்ந்து வந்த அந்த மன்னர்களுக்கு மன்னன் தனது தந்தைக்காகக் காத்திருப்பதற்காக மூன்று ராட்சசப் பெண்களை அனுப்பி வைத்தான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, புஷ்போத்கதை, ராகை, மாலினி என்பது அவர்களது பெயர்களாகும். பாடுவதில் ஆடுவதிலும் திறமை பெற்ற அவர்கள், எப்போதும் அந்த உயர் ஆன்ம முனிவரை சிரத்தையுடன் கவனித்து வந்தனர்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த முனிவரை மனநிறைவு கொள்ளச்செய்ய அந்தக் கொடியிடை மங்கையர் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். அந்த உயர் ஆன்மா கொண்ட வணங்கத்தக்கவர்கள் அவர்களிடம் மனநிறைவு கொண்டு, அவர்களுக்கு வரங்களை அருளினார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்திற்கேற்ப இளவரசர்கள் போன்ற மகன்களைக் கொடுத்தார். இவ்வுலகில் நிகரற்ற பராக்கிரமத்தைக் கொண்ட ராட்சசர்களில் முதன்மையான கும்பகர்ணன் மற்றும் பத்துத் தலை கொண்ட ராவணன் ஆகிய இரு மகன்களும் புஷ்போத்கதைக்குப் பிறந்தனர். மாலினி விபீஷணன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றாள். ராகை என்பவள் கரன் மற்றும் சூர்ப்பனகை என்ற இரட்டைப் பிள்ளைகளைப் பெற்றாள்.

அவர்கள் அனைவரிலும் விபீஷணன் மிகுந்த அழகைக் கொண்டிருந்தான். அந்த அருமையான மனிதன் பக்திமானாகவும், சிரத்தையுள்ளவனாகவும் இருந்து அறச் சடங்குகள் அனைத்தையும் செய்து வந்தான். அவன் அறம் சார்ந்தவனாக, சுறுசுறுப்புள்ளவனாக, பெரும் பலமும் பராக்கிரமமும் கொண்டவனாக இருந்தான். அவர்களில் ராட்சசனான கும்பகர்ணனே போர்க்களத்தில் பெரும் பலம் உள்ளவானாக இருந்தான். முரட்டுத்தனமும் பயங்கரமும் கொண்ட அவன் அனைத்து மாயக் கலைகளிலும் நிபுணனாக இருந்தான். கரண் விற்கலையில் நிபுணனாக இருந்தான். அவன் அந்தணர்களின் எதிரியாக இருந்து, {அவர்களது} இறைச்சியை உண்டு வாழ்ந்தான். கடுமை நிறைந்த சூர்ப்பனகை துறவிகளுக்கு எப்போதும் தொல்லை கொடுத்து வந்தாள்.

வேதங்களைக் கற்று, சடங்குகளில் விடாமுயற்சியுடன் இருந்த அந்த வீரர்கள் அனைவரும் தங்கள் தந்தையுடன் கந்தமாதனத்தில் வாழ்ந்தனர். அங்கே அவர்கள் செல்வத்தின் தலைவனான, மனிதர்களின் தோள்களில் பயணிக்கும் வைஸ்ராவணன் {குபேரன்} தங்கள் தந்தையின் அருகே அமர்ந்திருப்பதைக் கண்டனர். பொறாமையால் பீடிக்கப்பட்ட அவர்கள், தவங்கள் பயிலத் தீர்மானித்தனர். தங்கள் கடும் தவத்தால் அவர்கள் பிரம்மனை நிறைவடைய வைத்தனர். காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்த பத்து தலை ராவணன், ஐந்து புனித நெருப்புகள் சூழ தியானத்தில் மூழ்கி, ஆயிரம் வருடங்களுக்கு ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்தான். உண்ணாதிருந்து தலைகீழாக நின்று கொண்டிருந்த கும்பகர்ணன், தனது தவத்தில் உறுதியாக இருந்தான். ஞானமும் மேன்மையும் மிக்க விபீஷணன் உண்ணா நோன்புகள் நோற்று, காய்ந்த இலைகளை உண்டு, தியானத்தில் ஈடுபட்டு, நீண்ட காலத்திற்குத் தவம் இருந்தான். அவர்கள் இப்படித் தவம் செய்து கொண்டிருந்த போது, கரணும், சூர்ப்பனகையும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவர்களைப் பாதுகாத்துக் கொண்டும் கவனித்துக் கொண்டும் இருந்தனர்.

ஆயிரம் வருடங்கள் முடியும் நெருக்கத்தில், பத்துத் தலை கொண்டவன் {ராவணன்}, தனது தலைகளை {ஒவ்வொன்றாக} வெட்டி வேள்வி நெருப்பில் காணிக்கையாக இட்டான். அவனது இச்செயலால் அண்டத்தின் தலைவன் {பிரம்மன்} நிறைவு கொண்டான். பிறகு பிரம்மன் நேரடியாக அவனிடம் வந்து, தவத்தைக் கைவிடுமாறும், அவர்கள் அனைவருக்கும் வரங்களை அருள்வதாகவும் உறுதி கூறினான். அந்த வணங்கத்தக்க பிரம்மன், “பிள்ளைகளே, நான் உங்களிடம் நிறைவு கொண்டேன்! தவத்தை நிறுத்துங்கள்; என்னிடம் வரங்களைக் கேளுங்கள்! இறவாமை தவிர்த்து, நீங்கள் கேட்கும் எந்த விருப்பங்களும் உங்களுக்குக் கிடைக்கும். பெரும் குறிக்கோளுடன், நீ காணிக்கையாக இட்ட உனது தலைகள், நீ விரும்பியபடி முன்பு போலவே உனது உடலை அலங்கரிக்கும். உனது உடல் உருகுலையாது. நீ விரும்பிய உருவம் எடுக்கவல்லவனாகவும், போர்க்களத்தில் எதிரிகளை வெல்பவனாகவும் இருப்பாய். இதில் சந்தேகமில்லை” என்றான் {பிரம்மன்}. அதற்கு ராவணன், “கந்தர்வர்கள், தேவர்கள், கின்னரர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள் மற்றும் அனைத்து பிற உயிரனங்களிடமும் நான் தோல்வியடையாமலிருப்பேனாக!” என்றான். பிரம்மன், “மனிதர்கள் தவிர்த்து, நீ பெயரிட்டுச் சொன்னவர்கள் மூலம் உனக்கு எப்போதும் அச்சம் இருக்காது (அச்சமேற்படும் சந்தர்ப்பம் உனக்கு வாய்க்காது). உனக்கு நன்மை உண்டாகட்டும்! அப்படியே நான் உனக்கு விதித்திருக்கிறேன்!” என்றான்.

மார்க்கண்டேயர், “இப்படிச் சொல்லப்பட்ட பத்துத்தலையன் {தசக்கிரீவன்} {இராவணன்} மிகவும் மன நிறைவு கொண்டு, அவனது வக்கிரபுத்தியின் காரணமாக, மனிதர்களை உண்ணும் அவன் மனிதர்களை அலட்சியமாக எண்ணினான். பிறகு அந்தப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, முன்பு போலவே {ராவணனிடம் கேட்டது போலவே} கும்பகர்ணனிடமும் கேட்டான். இருளால் மூடப்பட்ட அறிவு கொண்ட அவன் நீண்ட தூக்கத்தைக் கேட்டான். “அப்படியே ஆகும்” என்று சொன்ன பிரம்மன் விபீஷணனிடம், “ஓ என் மகனே {விபீஷணா}, நான் உன்னிடம் மிகவும் நிறைவு கொண்டேன்! நீ விரும்பும் எந்த வரத்தையும் கேள்!” என்று கேட்டான். அதற்கு விபீஷணன், “பெரும் ஆபத்திலும் நான் நேர்மையில் இருந்து வழுவாமல் {அதர்மம் செய்யாமல்} இருக்க வேண்டும். நான் அறியாமையில் இருப்பதால், ஓ வணங்கத்தக்க ஐயா, தெய்வீக ஞான ஒளி எனக்குள் ஒளிர வேண்டும்” என்று கேட்டான். பிரம்மன், “ஓ ஏதிரிக்குத் தீமை விளைவிப்பவனே {விபீஷணா}, உன் ஆன்மா அறமின்மையை விரும்பாதாதல், நீ ராட்சசனாகப் பிறந்திருந்தாலும், உனக்கு இறவாமையை அருள்கிறேன்” என்றான் {பிரம்மன்}”

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இந்த வரத்தைப் பெற்றுக் கொண்ட பத்து தலை ராட்சசன் {ராவணன்}, போரில் குபேரனை வீழ்த்தி, இலங்கையின் ஆட்சியுரிமையை அவனிடம் இருந்து அடைந்தான். கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கின்னரர்கள் ஆகியோர் தன்னைத் தொடர இலங்கையை விட்டகன்ற அந்தப் போற்றுதலுக்குரியவன் {குபேரன்}, கந்தமாதன மலையில் வாழ்வதற்குச் சென்றான். அவனிடம் {குபேரனிடம்} இருந்த தெய்வீகத் தேரான புஷ்பகத்தையும் பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டான். இதனால் வைஸ்ரவணன் அவனிடம், “இந்தத் தேர் உன்னைச் சுமக்காது; போர்க்களத்தில் உன்னைக் கொல்வனை இது சுமக்கும்! உன் அண்ணனான என்னை நீ அவமதித்ததால்,விரைவில் நீ சாவாய்!” என்று சாபமிட்டான்.

பக்திமானான விபீஷணன், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அறம்சார்ந்தவர்களும், பெரும் புகழ் கொண்டவர்களும் தொடரும் பாதையில் நடந்து, குபேரனைத் தொடர்ந்து சென்றான். போற்றுதலுக்குரிய அந்தச் செல்வத்தலைவன் {குபேரன்}, தன் தம்பிகளிடம் மிகவும் மனநிறைவு கொண்டு யக்ஷ, ராட்சசக் கூட்டத்திற்குத் தலைவனாக்கினான். மறுபுறம், மனிதர்களை உண்ணும் வலிமைமிக்க ராட்சசர்களும், பிசாசங்களும் ஒன்று கூடி பத்து தலை ராவணனிடம் தங்கள் ஆட்சியுரிமையைக் கொடுத்தார்கள். நினைத்த வடிவம் கொள்பவனும், பயங்கரப் பராக்கிரமம் கொண்டவனும், காற்றில் செல்பவனுமான அந்த ராவணன், தேவர்களையும், தைத்தியர்களையும் தாக்கி, அவர்களது மதிப்புமிக்க உடைமைகளை அவர்களிடம் இருந்து கவர்ந்தான். அனைத்து உயிர்களையும் நடுங்கச் செய்ததால் அவன் ராவணன் என்று அழைக்கப்பட்டான். எந்த அளவு சக்தியையும் திரட்டும் வல்லமை பெற்ற ராவணன், தனது பயங்கரத்தால் தேவர்களின் மனதிடத்தையே அகற்றினான்”

மந்தரை என்ற கூனி ! – வனபர்வம் பகுதி 274-ராவணன் செய்யும் தீமைகளைப் பொறுக்காத அக்னி, ராவணனின் அழிவைக் குறித்துப் பிரம்மனிடம் கேட்பது; பிரம்மன் முக்கியமான தேவர்கள் அனைவரையும் பூமியில் குரங்குகளாகவும், கரடிகளாகவும் பிறக்கச் சொன்னது; குரங்குகள் மற்றும் கரடிகளில் முதன்மையான தங்கள் மனைவியரிடம் தேவர்கள் பிள்ளைகளைப் பெறுவது; பூசல்களை உருவாக்க பிரம்மன், துந்துபி என்ற கந்தர்வியை, பூமியில் கூனியான மந்தரையாகப் பிறக்கச் செய்தது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பின்னர்ப் பிரம்ம முனிவர்கள், சித்தர்கள், தேவமுனிவர்கள், ஆகியோர் ஹவ்யவாகனனை {அக்னியைத்} தங்கள் பேச்சாளனாகக் கொண்டு பிரம்மனின் பாதுகாப்பை நாடினார்கள். அக்னி {பிரம்மனிடம்}, “விஸ்ரவசின் சக்திமிக்க மகனான பத்துத் தலையனை {ராவணனை}, உமது வரத்தின் காரணமாகக் கொல்ல முடியவில்லை. பெரும் பலம் கொண்ட அவன் {ராவணன்} பூமியில் உள்ள உயிரினங்களை ஒடுக்குகிறான். ஓ! போற்றுதலுக்குரியவரே! எனவே எங்களைக் காப்பாற்றும்! எங்களைக் காப்பாற்ற உம்மைத் தவிர வேறு யாரும் இல்லை” என்று சொன்னான்.

பிரம்மன் {அக்னியிடம்}, “ஓ! அக்னி, தேவர்களாலோ அசுரர்களாலோ அவனை {ராவணனை} போர்க்களத்தில் வெல்ல முடியாது! அந்நோக்கத்திற்குத் தேவையானதை நான் ஏற்கனவே விதித்துவிட்டேன். உண்மையில் அவனது மரணம் அருகிலிருக்கிறது! எனது தூண்டுதலின் பேரில் நான்கு தலை கொண்ட தெய்வம் அக்காரணத்திற்காகவே அவதரித்துவிட்டான். அடிப்பவர்களில் முதன்மையான விஷ்ணு அந்நோக்கத்தைச் சாதிப்பான்” என்றான் {பிரம்மன்}.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிறகு அந்தப் பாட்டன் {பிரம்மன்} அவர்களுக்கு மத்தியில் சக்ரனிடம் {இந்திரனிடம்}, “தேவர்களுடன் சேர்ந்து நீயும் பூமியில் பிறப்பாயாக! குரங்குகளும், கரடிகளும் விஷ்ணுவின் கூட்டாளிகளாவதற்காக நினைத்த உருவம் கொள்ளக்கூடிய பெரும் பலம் கொண்ட உங்கள் மகன்களாக அவர்களைப் பெறுவீர்களாக” என்று சொன்னான். இதனால், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் தானவர்கள் ஆகியோர் விரைவாகக் கூடி தாங்கள் எவ்வாறு பிறக்க வேண்டும் என்பதை ஆலோசித்து, அவரவர்க்கு உரிய தன்மையுடன் பூமியில் பிறந்தார்கள். வரங்களை அருளும் தேவன் {பிரம்மன்}, அவர்கள் முன்னிலையிலேயே துந்துபி என்ற பெயர்கொண்ட கந்தர்வியை அழைத்து, “நோக்கம் நிறைவேற நீ அங்குச் செல்!” என்றான். பாட்டனின் {பிரம்மனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட துந்துபி, மனிதர்களின் உலகில் கூன்முதுகு கொண்ட மந்தரையாகப் பிறந்தாள்.

சக்ரனோடு {இந்திரனோடு} கூடிய முக்கியமான அனைத்து தேவர்களும் குரங்குகள், கரடிகள் ஆகியவற்றில் முதன்மையான தங்கள் மனைவியரிடம் தங்கள் வாரிசுகளைப் பெற்றார்கள். அந்த மகன்களும் பலத்திலும் புகழிலும் தங்கள் தந்தைகளுக்கு ஈடாக இருந்தனர். அவர்கள் மலைச்சிகரங்களைப் பிளக்கவல்லவர்களாக இருந்தார்கள். கற்களும் ஆச்சா மரங்களும் {சால மரங்களும்}, பனை மரங்களும் {தால மரங்களும்} அவர்களது ஆயுதங்களாக இருந்தன. அவர்களது உடல்கள் உறுதி மிக்கதாவும் கடுமை நிறைந்ததாகவும் இருந்தன. அவர்கள் பெரும் பலம் கொண்டவர்களாக இருந்தார்கள். போரில் வல்லவர்களாகவும், விருப்பத்திற்கேற்ற ஆற்றலைத் திரட்டும் திறன் அவர்களுக்கு இருந்தது. பலத்தால் அவர்கள் ஆயிரம் யானைகளுக்கு நிகராக இருந்தார்கள். வேகத்தால் அவர்கள் காற்றுக்கு ஈடாக இருந்தனர். சிலர் தாங்கள் விரும்பிய இடங்களிலெல்லாம் வசித்தார்கள், அதே வேளை மேலும் சிலர் கானகத்தில் வாழ்ந்தார்கள். அண்டத்தைப் படைத்த போற்றுதலுக்குரியவன் {பிரம்மன்}, இவ்வனைத்தையும் விதித்து, மந்தரை {கூனி} என்ன செய்ய வேண்டும் என்பதை அவளுக்கு உரைத்தான். மனோவேகம் கொண்ட மந்தரை, அவனது வார்த்தைகள் அனைத்தையும் புரிந்து கொண்டு, இங்கும் அங்கும் சென்று பூசல்களைத் தூண்டுவதில் ஈடுபட்டாள்”

காட்டுக்குச் சென்ற ராமன்! – வனபர்வம் பகுதி 275-ராமனுக்குப் பட்டம் சூட்ட தசரதன் தீர்மானம்; ராமனைக் காட்டுக்கு அனுப்பி, பரதனை நாடாள வைக்க வேண்டும் என்ற வரத்தைக் கைகேயி தரசதனிடம் கேட்டல்; ராமன் காட்டுக்குச் செல்வது; கரன் தூஷணனைக் கொல்வது; அங்கம் பழுதான சூர்ப்பனகை ராவணனிடம் சென்று தனது நிலையைத் தெரியப்படுத்துதல்; கோபம் கொண்ட ராவணன், ராமனை அழிப்பதற்குத் திட்டம் தீட்டி மாரீசனை அணுகுதல்…

யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, “ஓ! போற்றுதலுக்குரியவரே {மார்க்கண்டேயரே}, ராமன் மற்றும் பிறரின் பிறப்பு வரலாற்றை நீர் எனக்கு விவரமாகச் சொன்னீர். நான் அவர்களது வனவாசத்திற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன். ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, தசரதன் மகன்களான ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய சகோதரர்கள், மிதிலை இளவரசியுடன் {சீதையுடன்} காட்டுக்கு ஏன் சென்றார்கள் என்பதை உரைப்பீராக” என்று கேட்டான்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “பக்திமானான மன்னன் தசரதன், எப்போதும் பெரியவர்களைக் கவனிப்பவனாகவும், அறச்சடங்குகள் செய்வதில் சிரத்தையுள்ளவனாகவும் இருந்தான். அவன் {தசரதன்} தனக்குப் பிறந்த மகன்களைக் குறித்துப் பெரும் மனநிறைவு கொண்டான். அவனது மகன்கள் பலத்திலும் வேதங்களிலும், அதன் புதிர்களிலும், ஆயுத அறிவியலிலும் படிப்படியாக வளர்ந்தனர். தங்கள் பிரம்மச்சரிய நோன்பை நிறைவேற்றிய அந்த இளவரசர்களுக்குத் திருமணமும் நடந்தது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியும் உயர்ந்த மனநிறைவையும் கொண்டான். அவர்கள் அனைவரிலும் மூத்தவனான புத்திகூர்மை கொண்ட ராமன், தனது அழகான நடத்தையால் மக்களைப் பெரும் மனநிறைவு கொள்ளச் செய்து, தன் தந்தைக்குப் பிடித்தமானவனாக ஆனான்.

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தன் வயது முதிர்வை கவனத்தில் கொண்ட அந்த ஞானமுள்ள மன்னன் {தசரதன்}, தனது அமைச்சர்களிடமும், ஆன்ம ஆலோசகரிடமும் {வசிஷ்டரிடமும்}, ராமனைத் தன் பேரரசின் பிரதிநிதியாக {பட்டத்து இளவரசனாக} நியமிக்க ஆலோசனை செய்தான். அந்தப் பெரும் அமைச்சர்கள் அனைவரும், அதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை ஏற்றனர். ஓ! குருகுலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, கௌசல்யையின் மகிழ்ச்சியைப் பெருக்குபவனும், கண்கள் சிவந்தவனும், தசை பொருந்திய கரங்கள் கொண்டவனுமான தன் மகனைக் {ராமனைக்} கண்ட மன்னன் தசரதன் பெரிதும் மனம் நிறைந்தான் . அவனது {ராமனின்} நடை காட்டு யானையைப் போல இருந்தது. அவன் {ராமன்} நீண்ட கரங்களும், உயர்ந்த தோள்களும், சுருண்ட கரிய தலைமுடியும் கொண்டிருந்தான். வீரனாகவும். பிரகாசம் கொண்டவனாகவும், போர்க்களத்தில் இந்திரனுக்கு எந்தவிதத்திலும் தாழாதவனாகவும் அவன் {ராமன்} இருந்தான். புனித ரித்துகள் அனைத்தையும் அறிந்த அவன் {ராமன்}, ஞானத்தில் பிருஹஸ்பதிக்கு இணையானவனாக இருந்தான். அனைத்து மக்களின் அன்புக்கு ஒரு பொருளாக இருந்த அவன் {ராமன்}, அனைத்து அறிவியலிலும் திறன்வாய்ந்தவனாக இருந்தான். புலன்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அவனைக் கண்ட அவனது எதிரிகளே கூட அவனைக் கண்டதும் அவனிடம் {ராமனிடம்} மனநிறைவு கொண்டார்கள். தீயவர்களுக்குப் பயங்கரனாகவும், அறம்சார்ந்தவர்களைப் பாதுகாப்பவனாகவும், அவன் {ராமன்} இருந்தான். புத்திகூர்மையும், கலங்கடிக்கப்பட முடியாதவனாகவும் இருந்த அவன் {ராமன்}, அனைவரையும் வெல்பவனாகவும், எவ்வழியிலும் வீழ்த்தப்பட முடியாதவனாகவும் இருந்தான்.

ஓ! குருக்களின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, கௌசல்யையின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான தனது மகனை {ராமனைக்} கண்ட மன்னன் தசரதன் மிகவும் மகிழ்ந்தான். ராமனின் நற்பண்புகளை நினைத்துப் பார்த்த சக்திமிக்கவனும் பலமிக்கவனுமான மன்னன் {தசரதன்}, மகிழ்ச்சியோடு தனது குடும்பப் புரோகிதரிடம் {வசிஷ்டரிடம்}, “ஓ! அந்தணரே, நீர் அருளப்பட்டிரும். இன்று இரவு பூச நட்சத்திரம், வெகு மங்களமான சேர்க்கையைக் கொண்டுவருகிறது. எனவே, அனைத்துப் பொருட்களும் சேகரிக்கப்படட்டும், ராமனும் அழைக்கப்படட்டும். இந்தப் பூச நட்சத்திரம் நாளை வரை நீடிக்கிறது. எனவே, ராமன் எனது குடிமக்களின் பட்டத்து இளவரசனாக என்னாலும், எனது அமைச்சர்களாலும் நியமிக்கப்பட வேண்டும்” என்றான்.

அதே வேளையில், (கைகேயியின் பணிப்பெண்ணான) மந்தரை, மன்னனின் வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, தனது தலைவியிடம் {கைகேயி} சென்று சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசினாள். அவள் {மந்தரை}, “ஓ! கைகேயி, உனது பெரும் தீயூழை {துரதிர்ஷ்டத்தை} இந்நாளில் மன்னர் {தசரதர்} பிரகடனம் செய்திருக்கிறார்! ஓ! பேறிலியே {துரதிர்ஷ்டசாலியே}, கோபம் மிகுந்த கரும்பாம்பு மறைந்திருந்து உன்னைக் கடிக்கிறது. தன் மகன் அரியணையில் நிறுவப்பட இருப்பதால், உண்மையில் கௌசல்யையே பேறு பெற்றவளாவாள். உன் மகன் {பரதன்} நாட்டை அடையாத போது, உனக்குச் செழிப்பு எங்கே இருக்கும்?” என்று கேட்டாள்.

தன் பணிப்பெண்ணின் {மந்தரையின்} வார்த்தைகளைக் கேட்ட, அழகிய கொடியிடை கொண்ட அந்தக் கைகேயி, தன் ஆபரணங்கள் அனைத்தையும் பூண்டுகொண்டு, தனது கணவனைத் தனிமையில் நாடினாள். மகிழ்ச்சியான இதயத்துடன், இனிமையாகப் புன்னகைத்து, அனைத்து பசப்புநயமான காதல் வார்த்தைகளுடன் சேர்த்து, “ஓ! மன்னா {தரசரதரே}, நீர் என்றும் உமது உறுதிமொழிகளுக்கு உண்மையாக இருப்பீர் {என்று நம்புகிறேன்}. முன்பே நீர் எனது விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தீர். அந்த உறுதிமொழியை இப்போது நிறைவேற்றும். வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஏற்படும் பாவத்தில் இருந்து உம்மைக் காத்துக் கொள்ளும்!” என்று சொன்னாள். அதற்கு மன்னன் {தசரதன்-கைகேயியிடம்}, “நீ என்ன விரும்பினாலும் கேள், நான் உனக்கு அவ்வரத்தைத் தருவேன். கொல்லத்தகாத எந்த மனிதன் இன்று கொல்லப்பட வேண்டும்? கொல்லத்தகுந்த எவன் இன்று விடுதலை பெற வேண்டும்? யாருக்கு இன்று நான் செல்வம் அளிக்க வேண்டும்? யாருடைய செல்வத்தை இன்று பறிமுதல் செய்ய வேண்டும்? அந்தணர்களின் உடைமைகளைத் தவிர இவ்வுலகத்தில் உள்ள எந்தச் செல்வமானாலும், அது எனதே! நான் இந்த உலகத்தில் உள்ள மன்னர்களுக்கெல்லாம் மன்னனும், நால்வகை மனிதர்களின் பாதுகாவலனுமாவேன்! ஓ! அருளப்பட்ட மங்கையே {கைகேயி}, எந்தப் பொருளின் மீது உன் இதயம் நிலைத்திருந்தாலும், அதை விரைவாக என்னிடம் சொல்!” என்று கேட்டான்

மன்னனின் {தசரதனின்} வார்த்தைகளைக் கேட்டு,  அவன் மீது தான் கொண்ட ஆளுமையை அறிந்து, அவன் கொடுத்திருந்த வாக்குறுதியில், அவனை உறுதி கொள்ள வைக்க முயன்று, அவள் {கைகேயி} அவனிடம் {தசரதனிடம்}, ராமனுக்காக நீர் வடிவமைத்த பதவியேற்பைப் பெறுபவனாகப் பரதன் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். சடாமுடி தரித்து, மரவுரியும், மான்தோலும் அணிந்து, தண்டகவனத்தில் பதினான்கு {14} வருடங்களுக்கு ராமன் வனவாசம் செய்யட்டும்” என்றாள். ஏற்கத்தகாத இந்தக் கொடும் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {தசரதன்}, ஓ! பாரதக் குல தலைவா {யுதிஷ்டிரா}, மிகவும் துன்புற்றுப் பேச்சற்றவனானான்!

ஆனால் வலிமையும் நல்லொழுக்கமும் கொண்ட ராமன், {கைகேயியால்} தன் தந்தை இப்படி வேண்டிக்கொள்ளப்பட்டதை அறிந்து, தன் தந்தை கொடுத்த உறுதிமொழி களங்கமடையாமல் இருக்கக் காட்டுக்குச் சென்றான். {யுதிஷ்டிரா} நீ அருளப்பட்டிரு, வில்லாளிகளில் முதன்மையான {தம்பி} லட்சுமணனும், விதேகநாட்டு இளவரசியும்ஜனகனின் மகளும்,அவனது மனைவியுமான சீதையும் அவனைப் {ராமனைப்} பின்தொடர்ந்தார்கள். ராமன் காட்டுக்குச் சென்றதும், காலத்தின் நிலைத்த விதிக்குக் கட்டுப்பட்டு மன்னன் தசரதன் தனது உடலைத் துறந்தான். ராமன் அருகில் இல்லாததையும், மன்னன் {தசரதன்} இறந்துவிட்டதையும் அறிந்த கைகேயி, தன் முன்னே பரதனை அழைத்து வரச் செய்து, அவனிடம் {பரதனிடம்} “தசரதர் சொர்க்கம் சென்றுவிட்டார். ராமனும் லட்சுமணனும் காட்டில் இருக்கின்றனர்! குந்தகம் விளைவிக்க எந்தப் பகைவரும் அற்ற இந்த அகன்ற அரசை {நாட்டை} நீ எடுத்துக் கொள்” என்றாள் {கைகேயி}.

நல்லொழுக்கமுடைய பரதன் அவளுக்கு {கைகேயிக்கு} மறுமொழியாக, “செல்வத்தில் மட்டுமே மோகம் கொண்டு, உன் கணவரைக் கொன்று, குடும்பத்தை அடியோடு அழித்து, தீச்செயலைச் செய்தாய்! ஓ! எம்குலத்தில் சபிக்கப்பட்டவளே, ஓ தாயே, நீ என் தலையில் புகழ்க்கேட்டைச் சுமத்தி, உனது இந்த நோக்கத்தை அடைந்தாய்” என்றான். இப்படிச் சொன்ன அந்த இளவரசன் {பரதன்} உரக்க அழுதான். அந்நாட்டுக் குடிமக்கள் அனைவரின் முன்பும் தன் களங்கமின்மையை மெய்ப்பித்து நிறுவி, ராமனைத் திரும்ப அழைக்க விரும்பி, அவனைத் {ராமனைப்} பின்தொடர்ந்து சென்றான். பிறகு, வரிசையாக உள்ள தனது வாகனங்களில், கௌசல்யை, சுமித்திரை, கைகேயி ஆகியோரை ஏற்றி, சத்ருக்னனுடன் கனத்த இதயத்தோடு முன்னேறினான்.

ராமனைத் திரும்ப அழைக்க விரும்பிய அவன் {பரதன்}, வசிஷ்டர், வாமதேவர் மற்றும் பிற ஆயிரக்கணக்கான அந்தணர்கள், நகரங்கள் மற்றும் மாநிலங்களின் மக்கள் ஆகியோருடன் சென்றான். பிறகு அவன் {பரதன்}, கையில் வில்லுடனும், துறவிகளின் ஆபரணங்கள் பூண்டும் சித்திரகூட மலைகளில் வாழ்ந்து வந்த ராமனை, லட்சுமணனுடன் சேர்ந்திருக்கக் கண்டான். எனினும், தந்தையின் {தசரதனின்} வார்த்தைகளுக்கிணங்க செயல்படத் தீர்மானித்திருந்த ராமன், பரதனை திருப்பி அனுப்பினான். இப்படித் திரும்பிய பரதன், தன் அண்ணனின் {ராமனின்} மரக்காலணிகளைத் {பாதுகைகளைத்} தன் முன்பு வைத்து, நந்திகிராமத்தில் இருந்து ஆட்சி செய்தான்.

அயோத்தியின் மக்கள் மீண்டும் மீண்டும் வருவார்கள் என்ற அஞ்சிய அவன் {ராமன்}, சரபங்கர் ஆசிரமம் இருக்கும் பெருங்காட்டுக்குள் நுழைந்தான். சரபங்கருக்குத் தனது மரியாதைகளைச் செலுத்தி, தண்டகக் காட்டுக்குள் நுழைந்த அவன் {ராமன்}, அழகிய கோதாவரி ஆற்றங்கரையில் தனது வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான். அங்கே வாழ்ந்து கொண்டிருந்த போது, சூர்ப்பனகையின் காரணமாக, ஜனஸ்தானத்தில் வசித்த கரனிடம் அவன் {ராமன்} பகைமை கொள்ள நேரிட்டது. துறவிகளைப் பாதுகாப்பதற்காக, அந்த ரகு குலத்தின் நல்லொழுக்கம் கொண்ட வழித்தோன்றல் {ராமன்}, பூமியில் இருந்த பதினாலாயிரம் ராட்சசர்களைக் கொன்றான். கரன், தூஷணன் என்ற பெரும்பலமிக்க ராட்சசர்களைக் கொன்ற, ஞானமிக்க ரகுவின் வழித்தோன்றல் {ராமன்}, அந்தப் புனிதமான காட்டை மீண்டும் ஆபத்தற்றதாக்கினான்.

அந்த ராட்சசர்கள் கொல்லப்பட்ட பிறகு, மூக்கும், உதடுகளும் அறுபட்டிருந்த சூர்ப்பனகை, தனது அண்ணனின் {ராவணனின்} வசிப்பிடமான இலங்கைக்குச் சென்றாள். துன்பத்தால் உணர்வற்று, முகத்தில் காய்ந்த ரத்தக்கறையுடன் ராவணன் முன்பு சென்ற அந்த ராட்சசப் பெண் {சூர்ப்பனகை}, அவனது {ராவணனின்} காலில் விழுந்தாள். இப்படிக் கடும் சேதத்திற்குள்ளாகியிருக்கும் அவளை {சூர்ப்பனகையைக்} கண்ட ராவணன் கோபத்தால், பற்களைக் {நறநறவெனக்} கடித்து, தனது இருக்கையை விட்டு எழுந்தான். பிறகு தன் அமைச்சர்களை அனுப்பிவிட்டு, அவளிடம் {சூர்ப்பனகையிடம்} தனிமையில், “அருளப்பட்ட தங்கையே {சூர்ப்பனகையே}, என்னை மறந்து, என்னை அவமதிக்கும்படி, உனக்கு இப்படிச் செய்தவன் எவன்? கூரிய ஈட்டியைத் தனது உடலில் தேய்த்துக் கொள்பவன் எவன்? தலைக்கருகே நெருப்பை வைத்துவிட்டு, பாதுகாப்பாக உணர்ந்து மகிழ்ச்சியுடன் தூங்குபவன் எவன்? பழியுணர்வும் கடும்நஞ்சும் கொண்ட பாம்பை மிதித்தவன் எவன்? பிடரிமயிர் கொண்ட சிங்கத்தின் வாய்க்குள் கையைத் திணித்துக் கொண்டு நிற்பவன் உண்மையில் எந்த மனிதன்?” என்று கேட்டான்.

பிறகு, நெருப்பில் இருக்கும் மரங்களின் துவாரங்களில் இருந்து வெளிப்படும் சுடர்களைப் போல, அவனது உடலில் இருந்து கோபம் எனும் சுடர் வெடித்தது. அவனது தங்கை {சூர்ப்பனகை}, ராமனின் பராக்கிரமத்தைக் குறித்தும், கரன் மற்றும் தூஷணனைத் தலைமையாகக் கொண்ட ராட்சசர்களின் தோல்வி குறித்தும் சொன்னாள். தன் உறவினர்கள் கொல்லப்பட்டதைக் கேட்ட ராவணன், விதியால் உந்தப்பட்டு, ராமனைக் கொல்வதற்காக மாரீசனை நினைவுகூர்ந்தான். தான் பின்பற்ற வேண்டிய வழியைத் {திட்டத்தைத்} தீர்மானித்து, தனது தலைநகரை ஆள ஏற்பாடுகள் செய்துவிட்டு, தன் தங்கைக்கு {சூர்ப்பனகைக்கு} ஆறுதலளித்து, ஒரு வான்வழிப் பயணத்தை மேற்கொண்டான். திரிகூடம் மற்றும் கால மலைகளைத் தாண்டிய அவன், மகரங்களின் வசிப்பிடமான ஆழம்நிறைந்த நீரின் அகன்ற கொள்கலனைக் {கடலைக்} கண்டான். பிறகு அந்தக் கடலைக் கடந்த பத்து தலை ராவணன், திரிசூலம் ஏந்திய சிறப்புமிக்கத் தேவனுக்கு {சிவனுக்குப்} பிடித்த ஓய்விடமான கோகர்ணத்தை அடைந்தான். அங்கே, ராமன் மீது கொண்ட பயத்தின் காரணமாகத் துறவு வாழ்வை மேற்கொண்டிருந்த தனது பழைய நண்பனான மாரீசனை ராவணன் கண்டான்.

சீதையைக் கடத்திய ராவணன்! – வனபர்வம் பகுதி 276-மாரீசன் ராவணனுக்குப் புத்தி சொல்வது; ராவணன் மாரீசனை மிரட்டுவது; மாரீசன் மானுரு கொண்டு சீதைக்கு ஆசை காட்டுவது; ராமன் மானைத் துரத்துவது; ராமனால் அடிக்கப்பட்ட மாரீசன் ராமனின் குரலில் கதறுவது; அச்சமுற்ற சீதை ராமனைத் தேடி லட்சுமணனைப் போகச் சொல்வது; போகாத லட்சுமணனை சீதை நிந்திப்பது; லட்சுமணன் சென்றதும் ராவணன் வந்து சீதையைத் தூக்கிச் செல்வது..

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ராவணன் வருவதைக் கண்ட மாரீசன் அவனை மரியாதையுடன் வரவேற்று, அவனுக்குப் பழங்களும் கிழங்குகளும் கொடுத்தான். ராவணன் இருக்கையில் அமர்ந்து சற்று ஓய்வெடுத்த பிறகு, பேச்சில் வல்லவனான மாரீசன், ராவணன் அருகில் அமர்ந்து, பேச்சில் சொல்திறனுடன் அவனிடம் {ராவணனிடம்}, “உன்னுடைய நிறம் இயற்கைக்கு மாறான சாயலைக் கொண்டிருக்கிறதே, ஓ! ராட்சச மன்னா {ராவணனா}, உன் நாட்டில் அனைத்தும் சரியாக இருக்கிறதா? எது உன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது? உனது குடிமக்கள் முன்பு போலவே உன்னிடம் பற்றுறுதியுடன் இருக்கிறார்களா? என்ன காரியம் உன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது? அது {அக்காரியம்} சாதிப்பதற்கு எவ்வளவு கடினமானதாக இருப்பினும் அதை நிறைவேறிவிட்டதாக அறி” என்றான்.

கோபத்தாலும் அவமானத்தாலும் கொந்தளித்த இதயம் கொண்ட ராவணன், ராமனின் செயல்களைக் குறித்தும், இனி செய்ய வேண்டியவை குறித்தும் அவனிடம் சுருக்கமாகச் சொன்னான். அவனது கதையைக் கேட்ட மாரீசன், “நீ ராமனைத் தூண்டக்கூடாது. நான் அவனது சக்தியை அறிவேன். அவனது கணைகளின் வேகத்தைத் தாங்கும் திறன்மிக்க மனிதன் எவன்? அந்தப் பெரும் மனிதனே {ராமனே}, எனது தற்போதைய துறவு வாழ்க்கைக்குக் காரணமானவன். உனக்குச் சிதைவையும், அழிவையும் தரும் இத்திட்டத்தைத் தீட்டிய தீய மனம் கொண்டவன் எவன்?” என்று சுருக்கமாகவே கேட்டான். அதற்கு ராவணன் கோபத்துடன் மறுமொழி கூறி, நிந்தித்து {மாரீசனிடம்}, “நீ எனது கட்டளைகளுக்குக் கீழ்படியவில்லையென்றால், நிச்சயம் என் கைகளால் இறப்பாய்” என்றான் {இராவணன்}.

பிறகு மாரீசன் {ராவணனிடம்}, “மரணம் தவிர்க்க முடியாதது எனும்போது, மேன்மையானவன் கையால் இறப்பதே சிறந்தது. எனவே, நான் இவன் கேட்டதைச் செய்வேன்” என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். பிறகு அவன் {மாரீசன்}, ராட்சசர்கள் தலைவனிடம் {ராவணனிடம்}, “என்னால் முடிந்த உதவியை நான் உனக்கு நிச்சயம் செய்வேன்” என்றான். பிறகு, அந்தப் பத்துத்தலை ராவணன் அவனிடம் {மாரீசனிடம்}, “தங்கக் கொம்புகளும், தங்கத் தோலும் கொண்ட அழகிய மானின் வடிவம் தாங்கிச்சென்று சீதைக்கு ஆசை காட்டு. அப்படி இருக்கும் உன்னைக் காணும் சீதை, உன்னை வேட்டையாட நிச்சயம் ராமனை அனுப்பிவிடுவாள். பிறகு சீதை எனது ஆளுகையின் கீழ் நிச்சயம் வருவாள். நான் அவளைப் பலவந்தமாகத் தூக்கிச் செல்வேன். பிறகு, தனது மனைவியின் இழப்பால் வருந்தும் தீய ராமன் நிச்சயம் இறப்பான். இவ்வழியில் நீ எனக்கு உதவி செய்!” என்றான்.

இப்படிச் சொல்லப்பட்ட மாரீசன், (எதிர்நோக்கியிருக்கும்) தனது ஈமச்சடங்குகளை முடித்துக் கொண்டு {எள்ளும் தண்ணீரும் இறைத்துவிட்டு}, தனக்கு முன் சென்ற ராவணனைத் தொடர்ந்து சோகமான இதயத்துடன் சென்றான். பிறகு, கடும்சாதனைகள் செய்திருந்த ராமனின் ஆசிரமத்தை அடைந்து, இருவரும் முன்பே தீர்மானித்து வைத்திருந்தபடி செயல்பட்டனர். கமண்டலமும் திரிதண்டமும் தரித்த ராவணன், துறவியின் கோலத்தில் மழித்த {மொட்டைத்} தலையுடன் தோன்றினான். மாரீசன் மானின் வடிவம் கொண்டான். அந்தக் கோலத்தில் மாரீசன் விதேக இளவரசியின் {சீதையின்} முன் தோன்றினான். விதியால் உந்தப்பட்ட அவள், மானுக்குப் பின்னே ராமனை அனுப்பிவிட்டாள். அவளை மனநிறைவு கொள்ளச் செய்யும் நோக்கத்துடன், விரைவாகத் தனது வில்லை எடுத்துக் கொண்ட ராமன், அவளை {சீதையைப்} பாதுகாப்பதற்கு லட்சுமணனை விட்டுவிட்டு, மானைத் துரத்திச் சென்றான்.

வில், அம்பறாத்தூணி மற்றும் கூன்வாள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, உடும்புத் தோலாலான உறையை விரல்களுக்கு அணிந்த ராமன், நட்சத்திர மானைத் [1] தொடர்ந்த ருத்திரனைப் போல, அந்த மானைத்  தொடர்ந்து சென்றான். ஒருநேரம் தோன்றுவதும், மறுநேரம் அவனது பார்வையில் இருந்து மறைவதுமாக, அந்த ராட்சசன், வெகுதூரத்திற்கு  ராமனைக் கவர்ந்திழுத்துச் சென்றான். கடைசியில், ராட்சசனே மான் என்பதை ராமன் அறிந்த போது, ரகு குலத்தின் அந்தச் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, தவறாத கணையொன்றை எடுத்து, மானின் உருவம் கொண்டு வந்த அந்த ராட்சசனைக் {மாரீசனைக்} கொன்றான். ராமனின் கணையால் அடிக்கப்பட்ட அந்த ராட்சசன் {மாரீசன்}, ராமனின் குரலைப் பிரதிபலித்து, பெருந்துக்கத்துடன் அழுது, சீதையையும், லட்சுமணனையும் அழைத்தான்.(தார்த மிருகம் – முன்பொரு சமயம், பிரஜாபதி, மானின் உருவம் கொண்டு காமத்தால் தனது மகளைத் தொடர்ந்தார். திரிசூலம் கொண்ட ருத்திரன், பிரஜாபதியைத் தொடர்ந்து சென்று, அவன் தலையை அடித்தான் {துண்டித்தான்}. பிரஜாபதியின் அந்த மான் தலை உடலில் இருந்து அறுக்கப்பட்டு, மிருகசீரிஷம் {மிருகத்தின் அறுக்கப்பட்ட தலை} என்றழைக்கப்படும் நட்சத்திரமாகவோ, விண்மீன்கூட்டமாகவோ மாறியது)

அந்தத் துன்பக் குரலை விதேக இளவரசி {சீதை} கேட்ட போது, அந்தக் குரல் வந்த பகுதியை நோக்கி லட்சுமணனை விரையச் சொல்லி வலியுறுத்தினாள். பிறகு, லட்சுமணன் அவளிடம் {சீதையிடம்}, “அச்சமுள்ள பெண்ணே, நீ அஞ்சக் காரணமேதுமில்லை. ராமனை அடிக்கும் அளவு சக்தியுள்ளவன் எவன்? ஓ! இனிய புன்னகை கொண்டவளே {சீதை}, ஒரு நொடியில் நீ உனது கணவனைக் காண்பாய்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கற்புடைய சீதை, பெண்களுக்கே இயற்கையான அச்சத்துடன், புனிதமான லட்சுமணன் மீது சந்தேகம் கொண்டு, உரக்க அழுத் தொடங்கினாள். பிறகு கணவனுக்கு {ராமனுக்குத்} தன்னை அர்ப்பணித்திருந்த அந்தக் கற்புடைய மங்கை {சீதை}, “ஓ! மூடனே {லட்சுமணா}, உனது இதயத்தில் நீ கொண்டிருக்கும் நோக்கம் எப்போதும் ஈடேறாது! ஆயுதம் கொண்டோ, மலைமேல் இருந்து குதித்தோ, சுடர்விட்டெரியும் நெருப்புக்குள் புகுந்தோ என்னை மாய்த்துக் கொள்வேனேயன்றி, என் கணவர் ராமரைப் புறக்கணித்து, நரியின் பாதுகாப்பில் இருக்கும் பெண்புலியைப் போல, உன்னைப் போன்ற இழிந்தவனுடன் நான் வாழ மாட்டேன்” என்று சொல்லி கடுமையாக ஏசினாள் {சீதை}.

தன் அண்ணனை மிகவும் விரும்புபவனும், நல்ல இயல்பு கொண்டவனுமான லட்சுமணன், இவ்வார்த்தைகளைக் கேட்டு, தனது காதுகளைப் (தன் கைகளால்) பொத்தி, ராமன் சென்ற பாதையில் சென்றான். கோவைப்பழம் {Bimba Fruit} போலச் சிவந்து மென்மையாக இருக்கும் உதடுகளைக் கொண்ட அந்த மங்கையை {சீதையை} ஒரு முறையும் {திரும்பிப்} பாராமல் லட்சுமணன் சென்றான். அதே வேளையில், இதயத்தில் தீமையுடன் இருந்தாலும், மரியாதையான தோற்றத்தை அணிந்திருந்த அந்த ராட்சசனான ராவணன், சாம்பற்குவியால் மூடப்பட்ட நெருப்பு போல இருந்து, தன்னை வெளிப்படுத்தினான். களங்கமற்ற குணம் கொண்ட அந்த மங்கையைப் {சீதையைப்} பலவந்தமாகத் தூக்கிச் செல்ல அவன் துறவியின் கோலத்தில் அங்கே தோன்றினான்.

அவன் {துறவியின் வேடத்திலிருந்த ராவணன்} வருவதைக் கண்ட நல்லொழுக்கம் கொண்ட ஜனகனின் மகள் {சீதை}, கனிகளும், கிழங்கும், இருக்கையும் கொடுத்து அவனை {ராவணனை} வரவேற்றாள். இவற்றையெல்லாம் அலட்சியம் செய்து, தன் சுயஉருவம் கொண்ட அந்த ராட்சசர்களில் காளை {ராவணன்}, விதேக இளவரசியிடம் {சீதையிடம்}, “ஓ! சீதை, ராவணன் என்ற பெயரில் அறியப்படும் நான், ராட்சசர்களின் மன்னனாவேன். இலங்கை என்ற பெயரில் அறியப்படும் காண்பதற்கினிய என் நகரம், பெருங்கடலைத் தாண்டிய அக்கரையில் இருக்கிறது! அங்கே அழகிய பெண்களுக்கு மத்தியில் என்னுடன் நீ ஒளிர்வாய்! ஓ! அழகிய உதடுகள் கொண்ட மங்கையே {சீதையே}, துறவியான ராமனைப் புறக்கணித்து,  என் மனைவியாவாயாக!” என்ற வார்த்தைகளைச் சொன்னான்.

இவற்றையும், இதே வகையான வேறு வார்த்தைகளையும் கேட்ட அழகிய உதடுகள் கொண்ட ஜனகனின் மகள் {சீதை}, தனது காதுகளைப் பொத்திக் கொண்டு, அவனிடம் {ராவணனிடம்}, “அப்படிச் சொல்லாதே! நட்சத்திரங்களுடன் கூடிய வானம் இடிந்து விழலாம், இந்தப் பூமித் தூள் தூளாக உடைந்து போகலாம், நெருப்பும் தனது இயல்பை விட்டுக் குளுமையடையலாம், இருப்பினும் என்னால் ரகுவின் வழித்தோன்றலைக் {ராமரைக்} கைவிட முடியாது! யானைக்கூட்டத்தில், நெற்றிப்பொட்டில் {temple} மதம் பெருகும் தலைமை யானையுடன் வாழ்ந்த பெண் யானை எப்படி அதைக் கைவிட்டு காட்டுப்பன்றியுடன் {hog} வாழும்? தேன் அல்லது {இலுப்பை} மலர்களில் இருந்து தயாரிக்கப்பட்ட இனிய மதுவை ஒரு முறையே சுவைத்த ஒரு பெண், அரிசியில் தயாரிக்கப்பட்ட இழிந்த சாராயத்தை எப்படி விரும்பி அருந்துவாள்?” என்றாள்.

இந்த வார்த்தைகளைச் சொன்ன அவள் {சீதை}, கோபத்தால் உதடுகள் நடுங்க, உணர்ச்சி வசப்பட்டதால் கரங்கள் இங்கும் அங்கும் ஆட, அந்தக் குடிசைக்குள் நுழைந்தாள். எனினும், அங்கே அவளைத் தொடர்ந்து சென்ற ராவணன், மேலும் முன்னேறுவதில் இருந்து அவளை {சீதையை} இடைமறித்தான். முரட்டுத்தனமாக அந்த ராட்சசனால் வசைபாடப்பட்ட அவள் {சீதை} மயக்கமடைந்தாள். ஆனால் ராவணன் அவளது தலை முடியைப் பற்றிக்கொண்டு காற்றில் எழும்பினான். பிறகு {பிரஸ்ரவணம் என்ற} மலைச்சிகரத்தில் வாழும் ஜடாயு என்ற பெயர் கொண்ட ஒரு பெரிய கழுகானவன், இப்படி ராவணனால் தூக்கிச் செல்லப்படும் போது, அழுது கொண்டும், பெருந்துயரத்துடன் ராமனை அழைத்துக்கொண்டுமிருந்த ஆதரவற்ற அந்த மங்கையை {சீதையைக்} கண்டான்.

கவந்தன் வதம்! – வனபர்வம் பகுதி 277-சீதையை  ராவணன் கடத்திச் செல்வதைத்தடுத்துப் போராடிய ஜடாயு; ராவணன் ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்துவது; ராமனும் லட்சுமணனும் ஜடாயுவைக் காண்பது; ராவணன் சென்ற திக்கை ஜடாயு குறிப்பால் உணர்த்துவது; கவந்தனிடம் லட்சுமணன் சிக்குவது; கவந்தனின் இரு கைகளை ராமனும் லட்சுமணனும் வெட்டுவது; கவந்தன் ராமனை சக்ரீவனோடு நட்பு கொள்ளச் சொல்வது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சம்பாதியைத் தனது உடன்பிறந்த அண்ணனாகவும், அர்ஜுனனைத் {அருணனைத்} தனது தந்தையாகவும் கொண்ட வீரமிக்கக் கழுகு மன்னனான ஜடாயு, தசரதனின் நண்பனாவான். தனது {தன் நண்பனின்} மருமகளான சீதை, ராவணனின் மடியில் இருப்பதைக் கண்ட அந்த விண்ணதிகாரி, அந்த ராட்சச மன்னனை {ராவணனை} எதிர்த்துக் கோபத்துடன் விரைந்தான். அந்தக் கழுகானவன் {ஜடாயு} ராவணனிடம், “மிதிலை இளவரசியை {சீதையை} விடு, அவளை விடு என நான் சொல்கிறேன்! ஓ ராட்சசா, நான் உயிருடன் இருக்கும்போது நீ எப்படி அவளைக் கடத்த முடியும்? நீ எனது மருமகளை {சீதையை} விடவில்லையெனில், என்னிடம் இருந்து நீ உயிருடன் தப்ப மாட்டாய்!” என்று சொன்னான். இந்த வார்த்தைகளைச் சொன்ன ஜடாயு, தன் நகங்களைக் கொண்டு அந்த ராட்சச மன்னனைக் {ராவணனைக்} கிழிக்கத் தொடங்கினான். அவனது உடலின் நூற்றுக்கணக்கான வெவ்வேறு பகுதிகளில் தனது அலகாலும், சிறகுகளாலும் அடித்து, அவனைச் சின்னாபின்னமாய்ச் சிதைத்தான். மலையின் ஊற்றில் இருந்து நீர் வடிவது போல, ராவணனின் உடலில் இருந்து இரத்தம் திரளாகப் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.

ராமனுக்கு நன்மை செய்ய விரும்பிய கழுகால் {ஜடாயுவால்} இப்படித் தாக்கப்பட்ட ராவணன், தனது வாளை எடுத்து அந்தப் பறவையின் {ஜடாயுவின்} இரு சிறகுகளையும் அறுத்தெரிந்தான். மேகங்களுக்கு மேலே காட்சித் தரும் பெரும் மலைச்சிகரம் போல இருந்த அந்தக் கழுகு மன்னனைக் {ஜடாயுவைக்} கொன்ற அந்த ராட்சசன் {ராவணன்}, மடியில் சீதையை வைத்துக் கொண்டு காற்றில் உயர எழும்பினான். எங்கெல்லாம் துறவிகளின் ஆசிரமங்கள், தடாகம், ஆறு, குளம் எங்கெல்லாம் தென்பட்டனவோ, அங்கெல்லாம், அந்த விதேக நாட்டு இளவரசி {சீதை}, தனது ஆபரணங்களில் ஒன்றை வீசி எறிந்தாள். ஒரு மலையின் மேல் குரங்களில் முதன்மையான ஐந்து குரங்குகள் இருப்பதைக் கண்ட அந்தப் புத்திக்கூர்மை கொண்ட மங்கை {சீதை}, தன் விலையுயர்ந்த ஆடையில் இருந்து ஒரு பெரும் துண்டை அவர்களுக்கு மத்தியில் வீசி எறிந்தாள். மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த அழகிய துணித்துண்டு, அந்தக் குரங்குகளில் முதன்மையான ஐவர் மத்தியல், மேகத்தில் இருந்து வரும் மின்னல் போலக் காற்றில் படபடத்துக் கொண்டு வந்தது. அதற்குள் அந்த ராட்சசன் {ராவணன்}, காற்றில் {விரைவாகச்} செல்லும் பறவை போல, வானத்தில் வெகு தொலைவு கடந்து சென்றுவிட்டான். விரைவில் அந்த ராட்சசன் {ராவணன்}, உயர்ந்த சுவர்களைக் கொண்டு அனைத்துப் பக்கங்களில் சூழப்பட்டதும், பல வாயில்களைக் கொண்டதும், விஸ்வகிரீத்தால் {விஸ்வகர்மாவால்} கட்டப்பட்டதுமான காண்பதற்கினிய தனது அழகிய நகரத்தைக் கண்டான். பிறகு அந்த ராட்சச மன்னன் {ராவணன்}, இலங்கை என்று அழைக்கப்பட்ட தனது நகரத்திற்குள் சீதையுடன் நுழைந்தான்.

இப்படிச் சீதைக் கடத்திச் செல்லப்பட்ட வேளையில், அந்தப் பெரும் மானைக் {மானுருவில் இருந்த மாரீசனைக்} கொன்ற புத்திக்கூர்மை கொண்ட ராமன், திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, (வழியில்) தன் தம்பி லட்சுமணனைக் கண்டான். தன் தம்பியைக் {லட்சுமணனைக்} கண்ட ராமன், “ராட்சசர்கள் நடமாடும் ஒரு காட்டில், விதேக இளவரிசயை {சீதையை} விட்டு விட்டு, நீ எப்படி இங்கே வரலாம்? என்று சொல்லிக் கடிந்து கொண்டான். மான் தோற்றத்தில் வந்த ராட்சசன் தன்னை நெடுந்தூரம் இழுத்துச் சென்றதையும், (சீதையை ஆசிரமத்தில் தனியாக விட்டுவிட்டு வந்த) தன் தம்பியின் வருகையையும் நினைத்துப் பார்த்த ராமன், வேதனையால் நிரம்பினான். லட்சுமணனைக் கடிந்து கொண்டே, அவனை நோக்கி விரைவாக முன்னேறிய ராமன், “ஓ! லட்சுமணா, விதேக இளவரசி {சீதை} இன்னும் உயிருடன் இருக்கிறாளா? அவள் இனி இல்லை என நான் அஞ்சுகிறேன்!” என்றான்.

பிறகு லட்சுமணன் சீதை சொன்ன அனைத்தையும், குறிப்பாகத் தகாத இழிவான மொழிகளை அடுத்தடுத்துச் சொன்னான். எரியும் இதயத்துடன் ராமன் ஆசிரமத்தை நோக்கி ஓடினான். வழியில் மரண வேதனையில் பெரும் மலைபோல் கிடந்த ஒரு பெரிய கழுகைக் கண்டான். அவன் {ஜடாயு}, ஒரு ராட்சசனாக இருக்கக்கூடும் என்று சந்தேகித்த காகுஸ்த குல வழித்தோன்றல் {ராமன்}, பெரும் சக்தியுடன் தனது வில்லை வட்டமாக வளைத்து, தன் தம்பி லட்சுமணனுடன் அவனை {ஜடாயுவை} நோக்கி விரைந்தான். எனினும் அந்தப் பெருங்கழுகானவன் {ஜடாயு}, அந்த இருவரிடமும், “அருளப்பட்டிருப்பீர்கள், நான் கழுகுகளின் மன்னனும், தசரதனின் நண்பனுமாவேன்” என்றான். அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட ராமன் மற்றும் அவனது தம்பி ஆகிய இருவரும் தங்கள் அற்புதமான வில்லை ஒதுக்கி வைத்துவிட்டு, “நம் தந்தையின் பேரை இக்கானகத்தில் சொல்லும் இவன் யார்?” என்றனர்.

பிறகு அவர்கள் அந்த உயிரினத்தை {ஜடாயு என்ற கழுகை}, இரண்டு சிறகுகளும் அற்ற பறவை எனக் கண்டார்கள். அந்தப் பறவையானவன் {ஜடாயு}, சீதைக்காக {போராடி}, ராவணன் கையால் தான் வீழ்ந்ததைச் சொன்னான். பிறகு ராவணன் போன வழியைக் குறித்து ராமன் அந்தக் கழுகிடம் {ஜடாயுவிடம்} விசாரித்தான். அக்கழுகானவன் {ஜடாயு} தனது தலையசைவின் மூலம் பதிலளித்துத் தனது கடைசி மூச்சை விட்டான். ராவணன் தென் திசையில் சென்றான் என்ற அந்தக் கழுகின் குறிப்பைப் புரிந்த கொண்ட ராமன், தன் தந்தையின் நண்பருக்கு {ஜடாயுவிற்கு} அஞ்சலி செலுத்தி, அவனது {ஜடாயுவின்} ஈமச் சடங்குகளை முறைப்படிச் செய்தான்.

பிறகு எதிரிகளைத் தண்டிப்பவர்களான ராமனும் லட்சுமணனும், விதேக இளவரசி {சீதை} கடத்தப்பட்டதால் பெருந்துக்கத்தில் மூழ்கி, தண்டக வனம் செல்லும் தென் பாதையில் பயணித்தனர். அப்படி அவர்கள் போகும் வழியில், தர்ப்பை ஆசனங்கள் சிதறி, நீர்க்குடங்கள் உடைந்து, இலைகளைக் குடைகளாகக் கொண்டிருந்த துறவிகளின் பல ஆசிரமங்கள் ஆளற்று இருப்பதையும், நூற்றுக்கணக்கான நரிகள் அங்கு நிறைந்திருப்பதையும் கண்டனர். சுமித்திரையின் மகனுடன் {லட்சுமணனுடன்} சென்ற ராமன், அந்தப் பெரும் கானகத்தில், அனைத்துத் திசைகளிலும் ஓடிக்கொண்டிருக்கும் மான்கூட்டங்களைக் கண்டான். விரைவாகப் பரவும் கானக நெருப்பின் போது {காடு எரியும்போது} கேட்கப்படும் ஒலியைப் போலப் பல்வேறு உயிரினங்களின் ஒலியைக் கேட்டான். விரைவில் அவர்கள் கொடூரமான முகத்தோற்றம் கொண்ட தலையில்லாத ராட்சசன் ஒருவனைக் கண்டனர். மேங்களைப் போலக் கருமையாகவும், மலையைப் போலப் பெரிதாகவும் இருந்த அந்த ராட்சன் சால {ஆச்சா} மரத்தைப் போல அகன்ற தோள்களும், பெரும் கரங்களையும் கொண்டிருந்தான். அவனது மார்பில் இரண்டு பெரிய கண்கள் இருந்தன. வாயின் திறப்பு அவனது அகன்ற தொந்தியில் இருந்தது.

அந்த ராட்சசன் {கவந்தன்} தன் கரம் கொண்டு லட்சுமணனை எந்தச் சிரமமும் இல்லாமல் {எளிதாகப்} பிடித்தான். ராட்சசனால் பிடிக்கப்பட்ட அந்தச் சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, முற்றிலும் குழம்பிப் போய் ஆதரவற்றவனானான். ராமனை நோக்கித் தன் பார்வையைச் செலுத்திய அந்தத் தலையில்லாத ராட்சசன் {கவந்தன்}, தன் உடலில் வாயிருக்கும் பகுதியை நோக்கி லட்சுமணனை இழுக்க ஆரம்பித்தான். அப்போது லட்சுமணன் துயரத்துடன் ராமனிடம், “என் அவலநிலையைப் பாரும்! உமது நாட்டை இழந்தீர், பிறகு நமது தந்தை இறந்தார், சீதை அபகரிக்கப்படாள், இறுதியாக இந்தப் பேரழிவு என்னை அடைந்திருக்கிறது! ஐயோ, விதேக இளவரசியுடன் {சீதையுடன்} கோசலத்துக்கு நீர் திரும்புவதையும், மூதாதையர் வழி வந்த அரியணையில் அமர்ந்து நீர் முழு உலகையும் ஆளப்போவதையும் என்னால் காண முடியாதே! தர்ப்பைப் புற்களாலும், நெற்பொரிகளாலும் {fried paddy}, கருப்புப் பட்டாணிகளாலும் {வன்னித்துளிர்களாலும்} சுத்தப்படுத்தப்பட்டுப் புனிதப்படுத்தப்பட்ட நீரில் பட்டமேற்புக்கான குளியலை முடித்து, மேகங்களில் இருந்து வெளிப்படும் சந்திரனைப் போல இருக்கும் உமது முகத்தை, பேறுபெற்றவர்களால்தானே காணமுடியும்!” என்றான் [1]. புத்திகூர்மை கொண்ட லட்சுமணன் இதையும், இதுபோன்ற வார்த்தைகளையும் இதே போன்ற தொனியில் சொல்லிப் புலம்பினான்.

அவ் வழி, இளையவன் அமர்ந்து நோக்கியே,
 ‘வெவ்வியது ஒரு பெரும் பூதம், வில் வலாய்,
வவ்விய தன் கையின் வளைத்து, வாய்ப் பெயும்;
செய்வது என் இவண்?’ என, செம்மல் சொல்லுவான்:

தோகையும் பிரிந்தனள்; எந்தை துஞ்சினன்;
வேக வெம் பழி சுமந்து உழல வேண்டலென்;
ஆகலின், யான், இனி, இதனுக்கு ஆமிடம்;
ஏகுதி ஈண்டுநின்று, இளவலே!’ என்றான்.கம்பனின் ராமகாதையில், ராமன் புலம்புவதாகச் சொல்லப்பட்டிருக்கும் இந்த அழகிய வரிகள்.

எனினும் காகுஸ்த குலத்தைச் சேர்ந்த அந்தச் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, ஆபத்துக்கு மத்தியில் அச்சமற்றவனாக இருந்து, லட்சுமணனிடம், “ஓ! மனிதர்களில் புலியே {லட்சுமணா}, துயருக்கு வழி கொடுக்காதே! நான் இங்கு இருக்கும்போது உன்னை இது {இந்த அசுரன்} என்ன செய்யும்? இவனது வலக்கரத்தை நீ வெட்டு, நான் இவனது இடக்கரத்தை வெட்டுகிறேன்” என்றான். ராமன் இப்படிப் பேசிக் கொண்டே, அந்த அரக்கனின் இடக்கரத்தை, கூர்மையான தனது கூன்வாள் கொண்டு, எள்ளுக்கட்டைக் வெட்டுவதுபோல வெட்டினான். தன் அண்ணன் தன் முன் நிற்பதைக் கண்ட சுமித்திரையின் பலம் பொருந்திய மகன் {லட்சுமணன்}, தன் வாளைக் கொண்டு, அந்த ராட்சசனின் வலக்கரத்தையும் துண்டித்தான். பிறகு அந்த லட்சுமணன், அந்த ராட்சசனை விலாப்புறத்தில் தொடர்ந்து அடிக்கவும் ஆரம்பித்தான். பிறகு தலையில்லாத அந்தப் பெரும் அரக்கன் தரையில் விழுந்து விரைவாக அழிந்தான்.

அப்போது அங்கே அந்த ராட்சசன் உடலில் இருந்து ஒரு தெய்வீக மனிதன் வெளிப்பட்டான். அவன் ஒரு நொடி வானத்தில் நின்று, ஆகாயத்தில் இருக்கும் ஒளி பொருந்திய சூரியனைப் போல அந்தச் சகோதரர்களுக்குக் காட்சியளித்தான். பேச்சில் வல்லவனான ராமன், அவனிடம், “நீ யார்? உன்னை விசாரிக்கும் எனக்குப் பதில் சொல்? எப்படி இது போன்ற ஒன்று நடக்கக்கூடும்? அனைத்தும் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றன!” என்றான். ராமனால் இப்படிக்கேட்கப்பட்ட அவன் {ராட்சசன்}, “ஓ! இளவரசே {ராமா}, நான் விசுவாவசு என்ற பெயர் கொண்ட கந்தர்வனாவேன். ஒரு அந்தணரின் சாபத்தால் நான் ராட்சசனின் உருவத்தையும் இயல்பையும் அடைந்தேன். உன்னைப் பொறுத்தவரை, ஓ! ராமா, இலங்கையில் வசிக்கும் மன்னன் ராவணனால் சீதை பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டாள். உனக்குத் தனது நட்பைத் தரும் சுக்ரீவனிடம் செல். ரிஷ்யமூகச் சிகரத்திற்கு மிக அருகே புனிதமான நீரும், கொக்குகளும் நிறைந்த பம்பை என்ற பெயர் கொண்ட ஒரு தடாகம் இருக்கிறது. அங்கே பொன் மாலைத் தரித்த குரங்கு மன்னன் வாலியின் தம்பியான சுக்ரீவன், தனது நான்கு ஆலோசகர்களுடன் வசித்து வருகிறான். அவனிடம் சென்று உனது துயரத்தைச் சொல். உன்னைப் போலவே அவல நிலையில் இருக்கும் அவன், தனது உதவியை உனக்கு அளிப்பான். இதைத்தான் {இவ்வளவுமட்டும்தான்} நாம் சொல்ல முடியும். சந்தேகமற நீ ஜனகனின் மகளைக் {சீதையைக்} காண்பாய்! ராவணனையும், பிறரையும் குரங்குகள் மன்னன் {சுக்ரீவன்} அறிந்திருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை!” என்றான் [2]. இந்த வார்த்தைகளைக் சொன்ன அந்தப் பெரும் ஒளி கொண்ட தெய்வீகமனிதன் தன்னைப் பார்வையில் இருந்து மறைத்துக் கொண்டான். ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய அந்த இரு வீரர்களும் இதனால் {இக்காட்சியினால்} மிகவும் ஆச்சரியப்பட்டனர்.

கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை

எதிர் எதிர் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின் ஈண்ட,வெதிர் பொரும் தோளினானை நாடுதல் விழுமிது’ என்றான்,அதிர் கழல் வீரர்தாமும், அன்னதே அமைவது ஆனார்.கவந்தன் ராமனை சுக்ரீவனோடு நட்பு கொள்ளச் சொல்வது :கம்பனின் மொழியில்

ராமனும், சீதையும் கொண்ட நட்பு! – வனபர்வம் பகுதி 278-சுக்ரீவனோடு நட்பு கொண்ட ராமன் வாலியைக் கொன்றது; கிஷ்கிந்தையில் ராமன் நான்கு மாதங்கள் இருந்தது; அசோகவனத்தில் ராட்சசிகள் பாதுகாப்புடன் சீதையை வைத்த ராவணன்; திரிஜடை சீதையைத் தோழி என்று அழைத்தது; அவிந்தியன் சொன்னது; சீதைக்குத் திரிஜடை நம்பிக்கையூட்டியது..

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சீதை கடத்தப்பட்ட துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த ராமன், பல்வேறு வகையான தாமரைகள் நிறைந்திருந்த பம்பை என்ற தடாகத்தை வெகு தூரம் செல்வதற்கு முன்னரே அடைந்தான். காட்டிலிருந்து வீசிய இனிய, நறுமணமிக்க, குளிர்ந்த காற்றால், திடீரென ராமன் தனது அன்பிற்குரிய மனைவியை {சீதையை} நினைவுகூர்ந்தான். ஓ! பலமிக்க ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, தன் அன்பிற்குரிய மனைவியை {சீதையை} நினைத்துப் பார்த்த அவன் {ராமன்}, அவளது பிரிவின் நினைவால் மிகவும் துன்பப்பட்டுப் புலம்பி அழுதான். பிறகு சுமித்திரையின் மகன் {லட்சுமணன்} அவனிடம் {ராமனிடம்}, “ஓ! தகுந்தவர்களுக்கு முறையான மரியாதையளிப்பவரே, முறையான வாழ்வு வாழும் முதிர்ந்த மனிதனை நோய் அண்டுவதில்லை. எனவே, இது போன்ற {நோய் போன்ற} மனத்தளர்ச்சி உம்மை அண்டுவதற்கு விடாதீர். ராவணன் குறித்தும், விதேக இளவரசி {வைதேகி, சீதை} குறித்தும் நீர் தகவலைப் பெற்றீர்! இனி உமது முயற்சியாலும், புத்திக்கூர்மையாலும் அவளை விடுவியும்! இப்போது, நாம் மலையின் மேல் இருக்கும் குரங்குகளில் முதன்மையான சுக்ரீவனை அணுகலாம்! உமது சீடனும், அடிமையும், கூட்டாளியுமான நான் உம் அருகில் இருக்கிறேன் {என்பதை மறவாதீர்}. எனவே உம்மை ஆறுதல் படுத்திக் கொள்ளும்” என்றான் {லட்சுமணன்}.

லட்சுமணனால் சொல்லப்பட்ட இவையும், இவைபோன்ற வேறு வார்த்தைகளையும் கேட்ட ராமன் தனது இயற்கையான தன்மையை {இயல்பை} அடைந்து, காரியத்தைச் செய்யத் தொடங்கினான். பம்பையின் நீரில் குளித்து, தன் முன்னோர்களுக்கு நீர்க்காணிக்கைகள் செலுத்திய ராமன், லட்சுமணன் ஆகிய அந்த இரு வீரச் சகோதரர்களும் (ரிஷ்யமுகத்திற்கு) கிளம்பினார்கள். கனிகளும், கிழங்குகளும், மரங்களும் நிறைந்த ரிஷ்யமுகத்தை அடந்தை அந்த வீரர்கள், மலைச் சிகரத்தின் மேலே ஐந்து குரங்குகளைக் காண்டார்கள். அவர்கள் {அந்தச் சகோதரர்கள்} தங்களை அணுகுவதைக் கண்ட சுக்ரீவன், இமய மலை போன்ற பெரிய உருவம் படைத்த தனது ஆலோசகனான {அமைச்சனான} புத்திக்கூர்மை கொண்ட ஹனுமானை அவர்களை வரவேற்க அனுப்பினான். முதலில் ஹனுமானிடம் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்ட அச்சகோதரர்கள், {பின்பு} சுக்ரீவனை அணுகினார்கள். பிறகு, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ராமன் சுக்ரீவனைத் தனது நண்பனாக்கிக் கொண்டான். ராமன் தன் மனதில் இருந்த நோக்கத்தைச் சுக்ரீவனிடம் சொன்ன போது, ராவணனால் தூக்கிச் சொல்லப்படுகையில், குரங்குகளுக்கு மத்தியில் சீதை வீசிய துணித்துண்டை சுக்ரீவன் அவனுக்குக் {ராமனுக்குக்} காட்டினான். அந்தச் சான்றுகளை அவனிடம் {சுக்ரீவனிடம்} இருந்து பெற்றுக் கொண்ட ராமன், பூமியில் உள்ள குரங்குகளுக்கு மன்னனாகச் சுக்ரீவனை நிறுவினான். மேலும் ராமன் போரில் வாலியைக் கொல்வதெனப் பற்றுறுதியை ஏற்றுக்கொண்டான்.

பிறகு ஒரு புரிதலை அடைந்து, ஒருவருக்கொருவர் முழு நம்பிக்கைவைத்த அவர்கள் அனைவரும் (வாலியுடன்) போரிட விரும்பி கிஷ்கிந்தைக்குச் சென்றார்கள். கிஷ்கிந்தையை அடைந்ததும், சுக்ரீவன், மலைவீழாறு போல ஆழ்ந்த கர்ஜனையை உரக்க எழுப்பினான். இந்த அறைகூவலைத்  தாங்கிக் கொள்ளாத வாலி, வெளியே வந்தான். (ஆனால் அவனது மனைவி) தாரை அவனது வழியில் நின்று, “பெரும்பலத்தோடு கூடி சுக்ரீவர் கர்ஜிக்கும் முறை, அவர் ஏதோ துணையை அடைந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது என நான் கருதுகிறேன். எனவே நீர் வெளியே செல்வது தகாது!” என்றாள். அவளால் {தாரையால்} இப்படிச் சொல்லப்பட்ட குரங்குகள் மன்னனும், தங்க மாலை அணிந்திருந்தவனும், நாநயமிக்கவனுமான வாலி, நிலவு போன்ற அழகு முகம் கொண்ட தாரையிடம், “அனைத்து உயிரினங்களின் குரலையும் நீ புரிந்து கொள்கிறாய். {எனவே}, பெயரளவுக்கே எனது தம்பியான இவன் {சுக்ரீவன்}, யாருடைய உதவியைப் பெற்றிருக்கிறான் என்பதைச் சிந்தித்துச் சொல்!” என்றான்.

அவனால் {வாலியால்} இப்படிச் சொல்லப்பட்டவளும், சந்திரனின் பிரகாசத்தைக் கொண்டவளும், ஞானமுள்ளவளுமான தாரை, ஒரு நொடியே சிந்தித்த பிறகு தனது தலைவனிடம் {வாலியிடம்}, “ஓ! குரங்குகளின் ஏகாதிபதியே, கேளும்! வில்லாளிகளில் முதன்மையானவனும், பெரும் வலிமை படைத்தவனும், தன் மனைவியை இழந்தவனும், தசரதன் மைந்தனுமான ராமன், தாக்குதலுக்காவும், தற்காப்புக்காகவும் சுக்ரீவருடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்தியிருக்கிறான். சுக்ரீவரின் நோக்கம் வெல்வதற்காகச் சுமித்திரையின் வீழ்த்தப்பட முடியாத மகனும், வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனுமான லட்சுமணனும் அவன் {ராமன்} அருகில் நிற்கிறான். மயிந்தன் {Maind}, திவிவிதன் {Dwivida}, பவனனின் மகனான ஹனுமான் {ஹனுமான்} மற்றும் கரடி மன்னனான ஜாம்பவான் (Jamvuman} ஆகியோர் சுக்ரீவரின் அருகில் ஆலோசகர்களாக {அமைச்சர்களாக} இருக்கிறார்கள். இந்தச் சிறப்புமிக்கவர்கள் அனைவரும், பெரும் பலமும், புத்திக்கூர்மையும் கொண்டவர்களாவர். இவர்கள் அனைவரும் ராமனின் வலிமையையும் சக்தியையும் நம்பி, உம்மை அழிக்கத் தயாராக இருக்கின்றனர்!” என்றாள் {தாரை}.

தன் நன்மைக்காகச் சொல்லப்பட்ட அவளது {தாரையின்} வார்த்தைகளைக் கேட்ட அந்தக் குரங்குகளின் மன்னன் {வாலி}, அவை அனைத்தையும் மொத்தமாக அலட்சியப்படுத்தினான். பிறகு பொறாமையால் நிறைந்த அவன், சுக்ரீவன் மீது அவள் {தாரை} இதயத்தை நிலைக்க வைத்திருக்கிறாள் எனச் சந்தேகப்பட்டான்! பிறகு தாரையிடம் கடும் வார்த்தைகள் பேசிவிட்டு, குகையை விட்டு வெளியேறி, மால்யவாத மலைகளின் {Malyavat} அருகில் நின்று கொண்டிருந்த சுக்ரீவனின் முன்பு வந்து, “முன்பு என்னால் அடிக்கடி வீழ்த்தப்பட்ட நீ, உனது உயிரை விரும்பியதால், என்னுடன் நீ கொண்ட உறவு முறைக்காக, {உயிருடன்} தப்பிச் செல்ல என்னால் அனுமதிக்கப்பட்டாய். இவ்வளவு விரைவாக உன்னை மரணத்தை விரும்ப வைத்தது எது?” என்று கேட்டான்.

வாலியால் இப்படிச் கேட்கப்பட்ட எதிரிகளைக் கொல்பவனான சுக்ரீவன், என்ன நடந்தது என்பதை ராமனுக்குச் சொல்வது போல, தன் அண்ணனிடம் {வாலியிடம்} “ஓ! மன்னா, உன்னால் மனைவியையும், நாட்டையும் இழந்த நான், உயிர் வாழ வேண்டிய தேவை என்ன இருக்கிறது? அதற்காகவே {மனைவிக்காகவும், நாட்டுக்காகவுமே} நான் வந்திருக்கிறேன் என்பதை அறி!” என்ற சிந்தனைக்குரிய வார்த்தைகளைப் பேசினான். பிறகு, இது போலவும், வேறு வார்த்தைகளாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்ட வாலியும், சுக்ரீவனும் மோதலுக்கு விரைந்தனர். பிறகு அவர்கள் ஆச்சா மரங்கள், பனை மரங்கள் மற்றும் கற்களைக் கொண்டு போரிட்டுக் கொண்டனர். அவர்கள் ஒருவரை ஒருவர் பூமியில் அடித்துக் கீழே வீழ்த்தினர். காற்றில் உயர குதித்த அவர்கள், தங்கள் கை முட்டிகளால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். தங்கள் நகங்களையும் பற்களையும் கொண்டு ஒருவரையொருவர் சிதைத்துக் கிழித்தனர். அவர்கள் இருவரும் ரத்ததால் மூடப்பட்டிருந்தனர் {ரத்தத்தில் நனைந்தனர்}.

அவர்கள் இருவரும் பூத்திருக்கிற புரசமரம் {Kinshuka} போல அப்போது விளங்கினார்கள். அவர்கள் அப்படி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது (தோற்றத்தில்) அவர்களிடையே ஒரு வேற்றுமையும் காணப்படவில்லை. பிறகு ஹனுமான், சுக்ரீவனின் கழுத்தில் மலர்களால் ஆன மாலையை அணிவித்தான். பிறகு அந்த வீரன் {சுக்ரீவன்}, வரிசையான மேகங்களுடன் கூடிய மால்யா {மால்யாவாதம்} எனும் பெரும் சிகரத்தைப் போல அழகாக, கழுத்திலிருந்த அந்த {மலர்} மாலையால் ஒளிர்ந்தான். அந்தக் குறிப்பால் சுக்ரீவனை அடையாளம் கண்ட ராமன், விற்களில் முதன்மையான தனது பெரும் வில்லை எடுத்து, தனது இலக்காக வாலியைக் குறிவைத்தான். ராமனின் வில்லில் இருந்து புறப்பட்ட அந்த நாணொலி, பொறியைப் {இயந்திரத்தைப்} போல ஒலி பெருக்கியது. அக்கணையால் மார்பில் துளைக்கப்பட்ட வாலி, அச்சத்தில் நடுங்கினான். இதயம் துளைக்கப்பட்ட வாலி ரத்தம் கக்க ஆரம்பித்தான். பிறகு தன் முன் நின்ற ராமனையும், அவன் {ராமனின்} அருகில் நின்ற சுமித்திரையின் மகனையும் {லட்சுமணனையும்} கண்டான். காகுஸ்த குலத்தவனை {ராமனை} ஏசிய வாலி தரையில் விழுந்து உணர்வற்றவன் ஆனான். சந்திரனைப் போன்ற பிரகாசமுடைய தனது தலைவன் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைத் தாரைக் கண்டாள். இப்படி வாலி கொல்லப்பட்ட பிறகு, சுக்ரீவன் கிஷ்கிந்தையையும், அதனுடன் சேர்த்து அழகிய நிலவு போன்ற முகம் கொண்ட தாரையையும் மீண்டும் அடைந்தான். பிறகு மால்யவாதமலையின் அழகிய மார்பில் நான்கு மாதங்கள் வசித்த புத்திக்கூர்மை கொண்ட ராமன், சுக்ரீவனால் எப்போதும் சரியான முறையில் வழிபடப்பட்டான்.

அதே வேளையில், காமத்தால் உந்தப்பட்ட ராவணன், தனது நகரான இலங்கையை அடைந்ததும், அசோகங்களின் {அசோகர மரங்கள் நிறைந்த} காட்டில், நந்தனத்தை ஒத்திருக்கும் வசிப்பிடத்தில், துறவிகளின் ஆசிரமம் போல இருக்கும் ஒரு ஆசிரமத்தில் சீதையை அமர்த்தினான். அகன்ற கண்கள் கொண்ட சீதை, கனிகளையும், கிழங்குகளையும் கொண்டு வாழ்ந்து, துறவியின் ஆடை (குறிப்பிட்ட வகை ஆடை) உடுத்தி, உண்ணா நோன்புகளுடன் கூடிய தவங்களைப் பயின்று, தனது கணவனின் பிரிவை எண்ணி நாளுக்கு நாள் மெலிந்து, தனது நாட்களைத் துன்பகரமாகக் கழித்தாள். ராட்சசர்களின் மன்னன் {ராவணன்}, சீதைக்குப் பாதுகாவலாகப் பராசங்களையும், வாள்களையும், சூலங்களையும், போர்க்கோடரிகளையும், தண்டாயுதங்களையும், எரிகொள்ளிகளையும் தாங்கிய பல ராட்சசிகளை நியமித்தான். அவர்களில் சிலர் இரண்டு கண்களுடனும், சிலர் மூன்றுடனும் இருந்தனர். சிலருக்கு நெற்றியில் கண்கள் இருந்தன. சிலருக்கு நீளமான நாக்கும், சிலருக்கு நாக்கு இல்லாமலும் இருந்தது. சிலருக்கு மூன்று கொங்கைகளும், சிலருக்கு ஒரே காலும் இருந்தன. சிலருக்குத் தலையில் மூன்று சடைகள் இருந்தன. சிலர் ஒரே கண்ணைக் கொண்டிருந்தனர். இவர்களும், சுடர்மிகும் கண்கள் கொண்ட பிறரும், ஒட்டகத்தின் முடி போல மேல்நோக்கிய முடி கொண்டவர்களும், சீதையின் அருகில் நின்று கொண்டு, இரவும் பகலும் கவனமாக அவளைச் சூழ்ந்திருந்தனர். பயங்கரக் குரலும் கொடூரத் தன்மையும் கொண்ட அந்தப் பெண்பிசாசங்கள், அந்த அகன்ற கண் கொண்ட மங்கையிடம் {சீதையிடம்} கடுமையான தொனியிலேயே பேசினார்கள். அவர்கள் {அந்தப் பிசாசுகள்}, “நமது தலைவனை அவமதித்து இங்கே வசிக்கும் இவளைத் தின்றுவிடுவோம், இவளைச் சிதைப்போம், இவளைத் துண்டு துண்டாகக் கிழிப்போம்” என்றனர்.

தன் தலைவனின் பிரிவால் துன்பம் நிறைந்த சீதை ஆழமான பெருமூச்சுவிட்டு, அந்த ராட்சசிகளிடம், “மரியாதைக்குரிய மங்கையரே {ராட்சசிகளே}, தாமதமில்லாமல் என்னை உண்ணுங்கள்! நீலநிறத்தவரும், அலைபாயும் கூந்தல் கொண்டவரும், தாமரை இதழ்களைப் போன்ற கண்கள் கொண்டவருமான எனது கணவர் {ராமர்} இல்லாது நான் வாழ விரும்பவில்லை! உணவருந்தாமல், உயிர்மேல் கிஞ்சிற்றும் ஆசையில்லாமல், வேல மரத்திற்குள்ளிருக்கும் பெண் பாம்பு (ஒடுங்கி) {பனிக்ககாலத்தில் ஓய்வெடுக்கப் பாம்பு மரப்பொந்துக்குள் உறங்குதல்} போல இருந்து, என் அங்கங்களை மெலியச் செய்வேன். ரகு குல வழித்தோன்றலைத் {ராமரைத்} தவிர நான் வேறு எந்த மனிதனின் பாதுகாப்பையும் எப்போதும் நாடமாட்டேன் என்பது அறியுங்கள். இது நிச்சயம். இதை அறிந்த பிறகு, தகுந்ததென்று நீங்கள் நினைப்பதைச் செய்யுங்கள்!” என்றாள். அவளது வார்த்தைகளைக் கேட்ட கரடுமுரடான குரல் கொண்ட அந்த ராட்சசிகள் ராட்சசர்களின் மன்னனிடம் {ராவணனிடம்} சென்று அவள் {சீதை} சொன்னது அனைத்தையும் சொன்னார்கள்.

இப்படி அந்த ராட்சசிகளை அனைவரும் சென்ற பிறகு, அவர்களில் {ராட்சசிகளில்} ஒருத்தியும், அறம்சார்ந்த, ஏற்புடைய பேச்சு கொண்டவளும், திரிஜடை என்ற பெயரால் அறியப்படுபவளுமான ராட்சசி, விதேக இளவரசிக்கு {சீதைக்கு} ஆறுதல் கூறத் தொடங்கினாள். அவள் {திரிஜடை}, “ஓ! சீதையே கேள்! நான் உனக்கு ஒன்றைச் சொல்கிறேன்! ஓ தோழி, நான்சொல்வதை நம்பு! ஓ! அழகிய இடை கொண்டவளே, உனது அச்சத்தை விலக்கி, நான் சொல்வதைக் கேள். புத்திக்கூர்மை கொண்டவனும், ராட்சசர்களின் முதிய தலைவனுமான ஒருவன் அவிந்தியன் என்ற பெயரில் அறியப்படுகிறான். அவன் {அவிந்தியன்}, ராமனின் நலத்தை எப்போதும் நாடுபவனாவான். அவன் {அவிந்தியன்}, உனக்காக என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.

{அவிந்தியன்} “என் பெயரைச் சொல்லி சீதைக்கு நம்பிக்கையும் உற்சாகமும் ஊட்டி, நான் சொன்னதாக, “உனது கணவனான வலிமைமிக்க ராமன் நன்றாக இருக்கிறான். அவனை லட்சுமணன் காக்கிறான். ரகுவின் அருளப்பட்ட அந்த வழித்தோன்றல் {ராமன்} ஏற்கனவே குரங்குகள் மன்னன் சுக்ரீவனின் நட்பைப் பெற்று, உனக்காகச் செயல்படத் தயாராக இருக்கிறான். மேலும், ஓ! அச்சம் கொண்ட மங்கையே, முழு உலகும் நிந்திக்கும் ராவணனைக் கண்டு அச்சத்தை வளர்த்துக் கொள்ளாதே. ஓ! மகளே, அவன் {ராவணன்} நளகூபரனிடம் {நளகுபேரனிடம்} பெற்ற சாபத்தின் காரணமாக நீ பாதுகாப்பாகவே இருப்பாய். உண்மையில், இந்தப் பாவி {ராவணன்}, தனது மருமகளான ரம்பையைக் களங்கப்படுத்தியதால் முன்பே சபிக்கப்பட்டிருக்கிறான். இந்தக் காமாந்தகப்பாவி {ராவணன்}, எந்தப் பெண்ணையும் பலவந்தமாக அடைவதற்கு சக்தியுடையவனல்ல. சுக்ரீவனால் பாதுகாக்கப்பட்டு, புத்திக்கூர்மையுள்ள சுமித்திரையின் மகனால் {லட்சுமணனால்} பின்தொடரப்பட்டு விரைவாக வரும் உனது கணவன் {ராமன்}, உன்னை மிக விரைவில் மீட்டுச் செல்வான் என்று சொல்” என்றான் {அவிந்தியன்}.

ஓ! மங்கையே {சீதையே}, தீய சகுனமாக, புலஸ்திய குலத்தின் தீய மனம் கொண்ட பாவியின் அழிவைக் குறிக்கும் மிகப் பயங்கரக் கனவொன்றை நான் {திரிஜடை} கண்டேன். இழிந்த செயல்கள் புரியும் இரவு உலாவியான இவன், உண்மையில் மிகத் தீயவனும் கொடூரனுமாவான். தனது இயல்பின் குறைபாடுகளால் அவன் {ராவணன்} தீய நடத்தையையும், பயங்கரங்களையும் மேற்கொள்கிறான். விதியால் தனது அறிவை இழந்த அவன் {ராவணன்}, தேவர்களுக்கே அறைகூவல் விடுகிறான். அவனது வீழ்ச்சியைக் குறிக்கும் அனைத்து குறியீடுகளையும் நான் எனது பார்வையில் {அந்தக் கனவில்} கண்டேன். தலைகள் மழிக்கப்பட்ட அந்தப் பத்துத் தலையன் {the Ten-headed} {தசக்ரீவன்}, உடலெங்கும் எண்ணெய் பூசி, சகதியில் மூழ்கினான். அடுத்த நொடியில் கழுதைகளால் இழுக்கப்பட்ட வாகனத்தில் கூத்தாடினான். முழுவதும் நிர்வாணமாக, தலை மழிக்கப்பட்டவர்களாக, சிவப்பு மலர்மாலைகள் தரித்து, களிம்பு சிவப்பு மேற்பூச்சு} பூசியிருந்த கும்பகர்ணனும், மற்றவர்களும், தென்திசை நோக்கி ஓடினார்கள்.

தலைக்கு மேல் குடையுடனும் தலைப்பாகை அணிந்து, வெண்மாலைகள் தரித்து, களிம்பு {வெண்சந்தனம்} அணிந்திருந்த விபீஷணன் மட்டுமே, வெண்மலையின் உச்சியில் ஏறியதை நான் கண்டேன். வெண்மாலைகள் தரித்து, களிம்பு {வெண்சந்தனம்} அணிந்திருந்த அவனது நான்கு ஆலோசகர்களும் {அமைச்சர்களும்} அவனுடன் உச்சிக்கு ஏறுவதையும் நான் கண்டேன். எதிர்வரும் பயங்கரத்தில் இவர்கள் மட்டுமே காக்கப்படுவார்கள் என்பதையே இது குறிக்கிறது. ராமனின் கணைகளால், இந்தக் கடல் சூழ்ந்த பூமி மறைக்கப்படுப்போகிறது. ஓ! மங்கையே, உனது கணவன் {ராமன்}, தனது புகழால் இந்த முழு உலகையும் நிறைப்பான். (தனது கணைகளால்), லட்சுமணன் அனைத்துப் புறங்களையும் எரிப்பதையும், எலும்புக்குவியல் மீது ஏறி தேனும், கண்ணமுதும் பருகுவதையும் கண்டேன். ஓ! மங்கையே, அழுது கொண்டு, இரத்தத்தால் நனைந்து, ஒரு புலியால் பாதுகாக்கப்பட்ட நீ, வடதிசை நோக்கி ஓடுவதையும் கண்டேன்! ஓ! விதேக இளவரசியே, ஓ! சீதை, தம்பியின் துணையுடன் இருக்கும் ரகு குல வழித்தோன்றலான உனது கணவனுடன் {ராமனுடன்} மீண்டும் சேர்ந்து, நீ விரைவில் மகிழ்ச்சியை அடைவாய்!” என்றாள் {திரிஜடை}.

இளமான்களின் கண்களைக் கொண்ட அந்தப் பெண் {சீதை}, திரிஜடையின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, தன் தலைவனுடன் சேரும் நம்பிக்கையை மீண்டும் வளர்க்க ஆரம்பித்தாள். கடுமையும் கொடுமையும் நிறைந்த பிசாசங்களான {ராவணனிடம் சென்ற} அந்தப் பாதுகாவலர்கள், திரும்பி வந்த போது, முன்பு போலவே திரிஜடையுடன் அமர்ந்திருக்கும் அவளைக் {சீதையைக்} கண்டனர்.”

சீதையை அணுகிய ராவணன்! – வனபர்வம் பகுதி 279-அசோக வனத்தில் சோகமாக இருக்கும் சீதையை அணுகி, தன்னைக் கணவனாக ஏற்கும்படி ராவணன் கேட்பது; சீதை ராவணனை அவமதிப்பது; ராவணன் அங்கிருந்து மறைந்து, தான் விரும்பிய இடம் சென்றது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தன் தலைவனை {ராமனைப்} பிரிந்த துயரத்தால் தாக்கப்பட்டு, எளிய ஆடை (குறிப்பிட்ட வகையிலான துணி) உடுத்தி, (மணிக்கட்டில் அணியும் திருமண நூல் {தாலியில்} கோர்க்கப்பட்டிருந்த) ஒரே ஒரு நகை மட்டும் அணிந்தபடி அங்கே {அசோக வனத்தில்} வசித்துவந்த கற்புடைய சீதை, ஒரு கல்லில் அமர்ந்து கொண்டு இடைவிடாமல் அழுது கொண்டிருந்தாள். அப்படி அமர்ந்திருந்த அவளுக்காக ராட்சசிகள் காத்திருந்தனர். அப்போது, காம தேவனின் {மன்மதனின்} கணைகளால் தாக்குண்ட ராவணன் அங்கே அவள் முன்னிலையில் வந்து நின்றான். போர்க்களத்தில், தேவர்களாலும், தானவர்களாலும், கந்தர்வர்களாலும், யக்ஷர்களாலும், கிம்புருஷர்களாலும் வெல்லப்பட முடியாத அவன் {ராவணன்}, ஆசையில் எரிந்தான். தெய்வீக ஆடைகள் உடுத்தி, அழகிய அம்சங்களுடன், ரத்தினம் பொருந்திய காதுகுண்டலங்களும், அழகிய மாலையும், மகுடமும் தரித்து, இளவேனிற்காலத்தின் {வசந்த காலத்தின்} உருவகமாக அசோக வனத்துக்குள் அவன் {ராவணன்} நுழைந்தான். கவனமாக {அழகாக} உடுத்தியிருந்த ராவணன், இந்திரனின் நந்தவனத்தில் உள்ள கல்ப மரத்தைப் {கற்பகவிருக்ஷம்} போல இருந்தான். ஆனால், அனைத்தையும் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், கல்லறைக்கு மத்தியில் இருக்கும் அழகிய ஆல மரத்தைப் போலவே, அவன் {ராவணன்}, அவளுக்குப் {சீதைக்குப்} பயத்தை ஏற்படுத்தினான். இரவு உலாவியான அவன், அந்தக் கொடியிடை மங்கையின் {சீதையின்} முன்னிலையை அடைந்து, ரோகிணியின் {ரோகிணி நட்சத்திரத்தின்} முன்பு நிற்கும் சனிக்கிரகம் போல இருந்தான்.

பூக்களைத் தனது சின்னமாகக் கொண்ட தேவனின் {மன்மதனின்} கணைகளால் தாக்குண்ட அவன் {ராவணன்}, பெண் வெள்ளாடு போல அச்சத்துடன் இருந்த அழகிய இடை கொண்ட அந்த ஆதரவற்ற மங்கையை {சீதையை} அணுகி, “ஓ! சீதை, உன் தலைவனை {ராமனை} நீ வெகுவாக மதிக்கிறாய்! ஓ! மென்மையான உறுப்புகள் கொண்டவளே {மென்மையானவளே}, என்னிடம் கருணை காட்டு. {இந்தப் பணிப்பெண்கள்} இப்போது உன் மேனியை அழகூட்ட அனுமதி கொடு. ஓ! அருமையானவளே, என்னை உன் தலைவனாக ஏற்றுக் கொள். ஓ! மிக அழகான நிறம் கொண்டவளே, விலையுயர்ந்த ஆடை ஆபரணகளைத் தரித்து, எனது வீட்டின் பெண்கள் அனைவரிலும் முதன்மையான இடத்தைப் பெறு. நான் கொண்டிருக்கும் அவர்களில் பலர், தேவர்கள் மற்றும் கந்தர்வர்களின் மகள்களாவர். நான் பல தானவ மற்றம் தைத்திய மங்கையருக்குத் தலைவனாக இருக்கிறேன். பதினான்கு கோடி {14,00,00,000_One hundred and forty million} பிசாசங்களும், அதைவிட இரண்டு மடங்கு மனிதனை உண்ணும் பயங்கர ராட்சசர்களும், அதைவிட மூன்று மடங்கு யக்ஷர்களும் என் உத்தரவுக்காகக் காத்திருக்கின்றனர். அவர்களில் சிலர் கரூவலத்தலைவனான {குபேரனின்} என் அண்ணனின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். ஓ! அழகிய தொடைகள் கொண்டவளே {சீதை}, என் மதுபான கூடத்தில் {Drinking Hall}, கந்தர்வர்களும் அப்சரசுகளும், என் அண்ணனுக்காகக் காத்திருப்பது போலவே எனக்காகக் காத்திருக்கின்றனர். மேலும், மறுபிறப்பாள {பிராமண} முனிவரான உயர்ந்த தவத்தகுதி படைத்த விஸ்வரசின் மகன் நான். நான் இந்த அண்டத்தின் ஐந்தாவது ஆட்சியாளனாக {லோகபாலகனாக} புகழ்பெற்றிருக்கிறேன். ஓ! அழகிய மங்கையே {சீதையே}, நான் தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போல மிகச்சிறந்த உணவும் பானமும் கொள்கிறேன். காட்டு வாழ்வின் தொடர்ச்சியாக உனக்கு ஏற்பட்ட தொல்லைகள் எல்லாம் நின்று போகட்டும். ஓ! அழகிய இடை கொண்டவளே {சீதை}, மண்டோதரியைப் போலவே, நீ எனது ராணியாகு” என்ற வார்த்தைகளைக் கூறினான் {ராவணன்}.

அவனால் {ராவணனால்} இப்படிச் சொல்லப்பட்ட விதேகத்தின் அந்த அழகிய இளவரசி {சீதை}, அப்புறம் திரும்பிக்கொண்டு, புல்லைவிட இழிந்தவனாக அவனை {ராவணனைக்} கருதி, அந்த இரவு உலாவிக்கு மறுமொழி கூறினாள். விதேக இளவரசியான அந்த அழகிய இடை கொண்ட பெண் {சீதை}, தொடர்ந்து அழுததால் ஏற்பட்ட மங்கலமற்ற கண்ணீர், அவளது பருத்த கச்சிதமான மார்புகளை அந்நேரத்தில் நனைத்தது. தன் கணவனைத் தேவனாகக் {தெய்வமாகக்} கருதிய அவள் {சீதை}, அந்த இழிந்த பாவியிடம் {ராவணனிடம்}, “ஓ! ராட்சசர்களின் மன்னா {ராவணா}, சுத்தமாகப் பேறு இல்லாததாலேயே உன்னால் பேசப்படும் இத்தகு துக்ககரமான வார்த்தைகளைக் கேட்க வேண்டியிருக்கிறது. ஓ! சிற்றின்பத்தை விரும்பும் ராட்சசா {ராவணா}, என்னிடம் இருந்து உனது இதயத்தை விலக்கு. நீ அருளப்பட்டிருப்பாயாக! நான் வேறு ஒருவரின் மனைவி; கணவருக்கே என்னை எப்போதும் அர்ப்பணித்திருக்கிறேன். எனவே, நான் உன்னால் அடையத்தகாதவள்! ஆதரவற்ற மானுடப் பெண்ணான நான், உன் மனைவி ஆவதற்குத் தகுந்தவளல்ல! விருப்பமில்லாத பெண்ணை வன்முறையால் அடைவதால், நீ அடையப்போகும் மகிழ்ச்சிதான் என்ன? உனது தந்தை ஒரு ஞானமுள்ள அந்தணர்; பிரம்மனுக்குப் பிறந்தவர்; படைப்புத் தலைவனுக்கு {பிரம்மனுக்கு} நிகரானவர்! எனவே, அண்ட ஆட்சியாளனுக்கு {லோகபாலனுக்கு} நிகரான நீ ஏன் அறத்தைக் கடைப்பிடிக்கக்கூடாது? மகேஸ்வரனுக்கு {சிவனுக்கு} நண்பனும், யக்ஷர்களின் மன்னனும், கருவூலத் தலைவனுமான உனது அண்ணனை {குபேரனை} அவமதித்துவிட்டு, நீ எப்படி வெட்கப்படாமல் இருக்கிறாய்?” என்று கேட்டாள்.

இந்த வார்த்தைகளைச் சொன்ன சீதை, ஆடையால் தனது கழுத்தையும் முகத்தையும் மூடிக் கொண்டு, கலக்கத்தால் தன் மார்புகள் நடுங்க அழத்தொடங்கினாள். அழுது கொண்டிருந்த அந்த மங்கையின் {சீதையின்} தலையில் இருந்து விழுந்த, நன்றாகப் பின்னப்பட்ட, மிகக் கருமையான, பளபளப்பான நீண்ட சடை பார்ப்பதற்குக் கருநாகம் போல இருந்தது. சீதையால் சொல்லப்பட்ட இந்தக் கொடுஞ்சொற்களைக் கேட்ட அந்த முட்டாள் ராவணன், இப்படி அவளால் {சீதையால்} நிராகரிக்கப்பட்டாலும், அவளிடம் {சீதையிடம்} மீண்டும், “ஓ! மங்கையே, மகரத்தைச் சின்னமாகக் கொண்ட தேவன் என்னைச் சுட்டெரிக்கட்டும். இருப்பினும், ஓ! இனிய புன்னகையும், அழகிய இடையும் கொண்டவளே {சீதை}, விருப்பமற்ற உன்னை நான் எக்காரணம் கொண்டும் அணுக {அடைய} மாட்டேன். எங்களுக்கு உணவாக இருக்ககூடிய மனிதனான ராமனை இன்னும் உயர்வாகக் கருதும் உன்னை நான் என்ன செய்யக்கூடும்?” என்று சொன்னான். களங்கமற்ற மங்கையிடம் {சீதையிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்ன ராட்சச மன்னன் {ராவணன்}, பார்த்துக் கொண்டிருக்கும்போதே காட்சியில் இருந்து மறைந்து, தான் விரும்பிய இடத்திற்குச் சென்றான். ராட்சசிகளால் சூழப்பட்டிருந்த சீதை, திரிஜடையால் மென்மையாக நடத்தப்பட்டு துயரத்துடன் அங்கு வசிக்கத் தொடங்கினாள்.

கண்டேன் சீதையை ! – வனபர்வம் பகுதி 280-கோபம் கொண்ட ராமன், லட்சுமணனை சுக்ரீவனிடம் அனுப்பியது; சுக்ரீவனின் முன்னேற்பாடுகளை லட்சுமணன் அறிந்து கொள்வது; சீதையைக் கண்டு திரும்பிய ஹனுமான்; ஹனுமான் இலங்கையில் தான் கண்டதை ராமனிடம் விளக்கியது; சீதை கொடுத்தனுப்பிய மணியைப்பற்றி ராமனிடம் ஹனுமான் சொன்னது…

மார்க்கண்டேயர் {{யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அதேவேளையில், ரகுவின் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, சுக்ரீவனால் விருந்தோம்பலுடன் நடத்தப்பட்டு, தினமும் தெளிந்த நீல வானத்தைக் கண்டபடி, மால்யவாத மலையின் மார்பில் தன் தம்பியுடன் தொடர்ந்து வசித்து வந்தான். ஒரு நாள் இரவில், மேகங்களற்ற தெரிந்த வானத்தில் கோள்களாலும், விண்மீன் கூட்டத்தாலும் சூழப்பட்ட பிரகாசமான சந்திரனை மலை மேல் இருந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது, தாமரை, அல்லி மற்றும் அதே வகையைச் சார்ந்த மலர்களின் நறுமணத்தைச் சுமந்த வந்த குளுமையான தென்றலால் அந்த எதிரிகளைக் கொல்பவன் {ராமன்} திடீரென எழுச்சியடைந்தான்.

பிறகு அறம்சார்ந்த ராமன், சீதை சிறைபிடிக்கப்பட்டு ராட்சசனின் வசிப்பிடத்தில் இருப்பதை நினைத்து மனச்சோர்வடைந்து, வீரனான லட்சுமணனிடம் காலையில், “லட்சுமணா போ. ஓ! ரகு குலத்தை நிலைநிறுத்துபவனே {லட்சுமணா}, சொந்த நலன்களை மட்டுமே நன்கு புரிந்து கொள்பவனும், இப்போது சிற்றின்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவனும், என்னால் அரியணையில் அமர்த்தப்பட்டவனும், தன் குலத்தின் இழிந்த மூடனும், {கொண்டை முசுறுகள்}, குரங்குகள், கரடிகள் ஆகியற்றால் முழு மனதுடன் நம்பப்படுபவனுமான நன்றிமறந்த அந்தக் குரங்குகள் மன்னனைத் {சுக்ரீவனை} தேடி கிஷ்கிந்தைக்குச் செல். ஓ! லட்சுமணா, துயரத்தில் மூழ்கியிருக்கும் என்னை அந்த இழிந்தவன் மறந்துவிட்டான். அதனால்தான், அந்தக் குரங்குகளில் இழிந்தவன் {சுக்ரீவன்} நன்றி மறந்திருக்கிறான் என்று கருதுகிறேன். மந்த புத்தியினால், தனக்கு இத்தகு சேவை செய்தவனை {என்னை} அவமதிக்கும் வகையில், தான் ஏற்ற உறுதியைச் செய்வதற்கு விருப்பமில்லாமல் இருக்கிறான் என நினைக்கிறேன். மந்தமாக, புலனின்பங்களில் அவன் உருண்டு கொண்டிருப்பதை நீ கண்டால், அனைத்து உயிர்களின் பொது இலக்குக்கு {யமலோகத்துக்கு}, வாலி சென்ற பாதையில் நீ அவனை {சுக்ரீவனை} அனுப்பி வைக்க வேண்டும்! மறுபுறம் அந்தக் குரங்குகளில் முதன்மையானவன் {சுக்ரீவன்}, நம் காரியத்தைச் செய்வதில் மகிழ்ச்சி கொண்டிருந்தானானால், ஓ! காகுஸ்தன் வழித்தோன்றலே {லட்சுமணா}, நீ அவனை {சுக்ரீவனை} என்னிடம் அழைத்து வா! விரைந்து செல். தாமதிக்காதே!” என்றான் {ராமன்}.

மூத்தோர் நலனில் அக்கறையிலும் அவர்களின் கொடுக்கும் உத்தரவுகளிலும் எப்போதும் கவனமாக இருப்பவனான லட்சுமணன் தனது அண்ணனால் இப்படிச் சொல்லப்பட்டதும், கைகளில் நாணுடன் கூடிய அழகிய வில்லுடனும், கணைகளுடனும் கிளம்பிச் சென்றான். கிஷ்கிந்தையின் வாயிலை அடைந்து, யாராலும் தடுக்கப்படாமல் அந்நகருக்குள்ளே நுழைந்தான். அவன் {லட்சுமணன்} கோபமாக இருப்பதை அறிந்த குரங்குகள் மன்னன் {சுக்ரீவன்}, அவனை வரவேற்பதற்காக முன் சென்றான். குரங்குகள் மன்னனான சுக்ரீவன் தனது மனைவியுடனும், எளிய இதயத்துடனும், மகிழ்ச்சியுடனும், உரிய மரியாதைகள் செய்து அவனை {லட்சுமணனை} வரவேற்றான். அந்த அச்சமற்ற சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, ராமன் சொன்னதை அவனிடம் {சுக்ரீவனிடம்} சொன்னான். ஓ! பலமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அனைத்தையும் விவரமாகக் கேட்ட குரங்குகள் மன்னன் சுக்ரீவன், தனது மனைவியுடனும், பணியாட்களுடனும் கரங்கள் கூப்பி, மனிதர்களில் களிறான லட்சுமணனிடம் மகிழ்ச்சியாக, “ஓ! லட்சுமணா, நான் தீயவனோ, நன்றிகெட்டவனோ, அறமற்றவனோ கிடையாது! சீதை சிறைசெய்யப்பட்டிருக்கும் இடத்தை அறிய நான் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளைக் கேள்! விடாமுயற்சி கொண்ட குரங்குகளை நான் அனைத்து திசையிலும் அனுப்பியிருக்கிறேன். அவர்கள் அனைவரும் ஒரு மாதத்திற்குள் திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்திருக்கிறேன். ஓ! வீரா {லட்சுமணா}, காடுகள், மலைகள், கடல்கள், கிராமங்கள், நகரங்கள், பட்டணங்கள், சுரங்கங்கள் நிறைந்த முழு உலகத்தையும் அவர்கள் தேடுவார்கள். ஒரு மாதம் முடிய இன்னும் ஐந்து இரவுகளே இருக்கின்றன. பிறகு, ராமனோடு சேர்ந்த நீ பெரிய மகிழ்ச்சியான செய்தியைக் கேட்பாய்!” என்றான்.

புத்திக்கூர்மையுள்ள குரங்குகள் மன்னனால் {சுக்ரீவனால்} இப்படிச் சொல்லப்பட்ட, உயர் ஆன்ம {மகாத்மாவான} லட்சுமணன் அமைதியடைந்து, பதிலுக்குச் சுக்ரீவனை வழிபட்டான். பிறகு சுக்ரீவனையும் அழைத்துக் கொண்டு, மால்யவாத மலையின் மார்பில் இருந்த ராமனிடம் திரும்பினான். அவனை {ராமனை} அணுகிய லட்சுமணன், தங்கள் காரியத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டிருப்பவை குறித்துத் தெரிவித்தான். விரைவில் வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளைக் கவனமாகத் தேடிப் பார்த்துவிட்டு, ஆயிரக்கணக்கான குரங்கு தலைவர்கள், திரும்பத் தொடங்கினார்கள். ஆனால் தெற்கே சென்றவர்கள் யாரும் திரும்பவில்லை. ஏற்கனவே திரும்பி வந்தவர்கள், தாங்கள் கடல்களை இடைக்கச்சையாக அணிந்த முழு உலகத்தையும் தேடியும் தங்களால் விதேக இளவரசியையோ {சீதையையோ}, ராவணனையோ காண முடியவில்லை என்று சொன்னார்கள். இதனால் காகுஸ்தன் குல வழித்தோன்றல் {ராமன்} இதயம் தாக்கப்பட்டாலும், தெற்கே சென்ற பெரும் குரங்குகளின் மீது கொண்ட நம்பிக்கையால் (சீதையைக் குறித்த செய்திகளை அறிவோம் என்ற நம்பிக்கையால்) உயிரை விடாதிருந்தான்.

இரண்டு மாதங்கள் கழிந்ததும், சுக்ரீவனின் முன்னிலைக்கு விரைந்து வந்த பல குரங்குகள், “ஓ! மன்னா {சுக்ரீவா}, குரங்குகளில் முதன்மையானவர்களான பவனனின் மகனும், வாலியின் மகனான அங்கதனும், தென்திசைக்கு நீர் அனுப்பி வைத்த இன்னும் பிற பெரும் குரங்குகளும் திரும்பிவிட்டார்கள். அவர்கள், வாலியின் பாதுகாவலர்களாலும், உம்மாலும் எப்போதும் காக்கப்பட்டு, மதுவனம் என்ற பெயரால் அழைக்கப்படும் அற்புதமான பெரும் பழத்தோட்டத்தைச் சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பணியாட்களே இதைப் போலச் செயல்பட முடியும் என்பதால், தங்கள் பங்குக்கு இவ்வளவு சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளும் அவர்களது செயல்பாட்டைக் கேட்ட சுக்ரீவன் அவர்களது பணி வெற்றியடைந்திருக்கிறது என்பதை அனுமானித்தான். குரங்குகளில் புத்திசாலியும் முதன்மையானவனுமான அவன் {சுக்ரீவன்}, தனது சந்தேகங்களை ராமனுக்குத் தெரிவித்தான். இதனால், மிதிலையின் இளவரசி {சீதை} காணப்பட்டாள் என்று ராமனும் ஊகித்தான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அனுமானின் நடைபாணியையும், அவனது முகத்தின் நிறத்தையும் கண்ட ராமன், ஹனுமான் உண்மையில் சீதையைக் கண்டிருக்கிறான் என்ற நம்பிக்கையில் உறுதி கொண்டான். பிறகு ஹனுமானின் தலைமையில் வெற்றி பெற்ற குரங்குகள் ராமனையும், லட்சுமணனையும், சுக்ரீவனையும் முறைப்படி வணங்கினார்கள். பிறகு தனது வில்லையும் அம்பறாத்தூணியையும் எடுத்துக் கொண்ட ராமன் அக்குரங்குகளிடம், “நீங்கள் வெற்றியடைந்தீர்களா? நீங்கள் என்னை உயிரடையச் செய்வீர்களா? போர்க்களத்தில் எனது எதிரியைக் கொன்று ஜனகனின் மகளை {சீதையை} மீட்டு, அயோத்தி திரும்பி நான் மீண்டும் ஆட்சி செய்யச் செய்வீர்களா? விதேக இளவரசியை {சீதையை} மீட்காமல், எதிரியைப் போர்க்களத்தில் கொல்லாமல், மனைவியையும் மதிப்பையும் இழந்து நான் உயிர்வாழத் துணிய மாட்டேன்” என்றான்.

ராமனால் இப்படிச் சொல்லப்பட்ட பவனனின் மகன் {ஹனுமான்}, அவனிடம் {ராமனிடம்}, “ஓ! ராமா, நான் உனக்கு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன்; கண்டேன் ஜனகனின் மகளை {கண்டேன் சீதையை}. மலைகள், காடுகள், சுரங்கங்கள் ஆகியவற்றைக் கொண்ட தென் பகுதியை சில காலம் தேடிக் களைப்படைந்தோம். பிறகு ஒரு பெரும் குகையைக் கண்டோம். அதைக் கண்டபிறகு, பல யோஜனைகள் நீண்டிருந்த அந்தக் குகைக்குள் நுழைந்தோம். அது இருளடைந்து, மரங்கள் அடர்ந்து, புழுக்களில் தொல்லை நிறைந்து இருந்தது. அந்தப் பெரும் வழியில் நீண்ட தூரம் சென்ற பிறகு, நாங்கள் சூரியனின் வெளிச்சத்தையும், அழகிய அரண்மனை ஒன்றையும் கண்டோம். ஓ! ராகவா {ராமா}, அது தைத்தியன் மயனுடைய வசிப்பிடமாகும். அங்கே தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் துறவியான பிரபாவதியைக் கண்டோம். அவள் எங்களுக்கு உணவும், பலவகைப்பட்ட பானங்களையும் கொடுத்தாள். இதனால் உற்சாகமடைந்து, எங்கள் பலத்தை மீண்டும் அடைந்து, அவள் காட்டிய வழியில் மேலும் தொடர்ந்து சென்றோம்.

கடைசியாக நாங்கள் அந்தக் குகையை விட்டு வெளிய வந்து, உப்புக் கடலையும், அதன் கரைகளில் இருந்த சஹ்யம், மலயம், பெரும் தர்துரம் என்ற மலைகளையும் கண்டோம். பிறகு மலய மலையில் ஏறி அகன்ற கடலைக் கண்டோம் [1]. அதைக் கண்ட நாங்கள் மனதால் மிகவும் துயரப்பட்டோம். மனச் சோர்வடைந்து, வலியால் தாக்கப்பட்டு, பசியும் பட்டினியுமாக, உயிருடன் திரும்புவதில் ஆசையற்றவர்களானோம். திமிங்கலங்கள், முதலைகள், பிற நீர்வாழ்விலங்குகள் நிறைந்து பல நூற்றுக்கணக்கான யோஜனைகள் பரந்திருக்கும் பெரும் கடலைக் கண்களால் கண்ட நாங்கள் வருத்தமடைந்து ஆர்வமற்றுப் போனோம். பிறகு நாங்கள் ஒன்றுகூடி அமர்ந்து, பட்டினி கிடந்துச் சாவது என்று தீர்மானித்தோம். அப்படி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, நாங்கள் கழுகான ஜடாயு குறித்துப் பேச நேர்ந்தது. அப்போதுதான், பயங்கர உருவமும், காணும் அனைத்து இதயத்துக்குப் பயங்கரத்தை உணரச் செய்பவனும், வினதையின் இரண்டாவது மகனைப் போல [2] இருந்தவனும், மலை போலப் பெரிதாக இருந்தவனுமான ஒரு பறவையானவனை நாங்கள் கண்டோம்.

திகைப்பூட்டும் விதத்தில் எங்களை விழுங்க வந்த அவன், “என் தம்பி ஜடாயுவைக் குறித்து இப்படிப் பேசுபவர்களான நீங்கள் யார்? நான் அவனது அண்ணன், என் பெயர் சம்பாதி, நான் பறவைகளின் மன்னனாவேன். ஒரு காலத்தில் ஒருவரை ஒருவர் விஞ்ச எண்ணிய நாங்கள் இருவரும் சூரியனை நோக்கி முன்னேறினோம். எனது சிறகுகள் எரிந்து போயின. ஆனால் ஜடாயுவுக்கு எரியவில்லை. என் ஆருயிர் தம்பியும், கழுகுகளின் மன்னனுமான ஜடாயுவை நான் கடைசியாகக் கண்டது அப்போதுதான். எனது சிறகுகள் எரிந்ததும், நான் இப்போது இருக்கும் இதே பெருமலையில்தான் விழுந்தேன்” என்றான் {சம்பாதி}. அவன் பேச்சை நிறுத்தியதும், நாங்கள் அவனது தம்பியின் இறப்பைக் குறித்துச் சில வார்த்தைகள் பேசிவிட்டு, உனக்கு நேர்ந்த பெரும் தீங்கையும் சொன்னோம். ஓ! மன்னா {ராமா}, இந்தத் துன்பகரமான செய்தியைக் கேட்ட பலமிக்கச் சம்பாதி பெரும் துன்பமடைந்து, எங்களிடம், “யாரிந்த ராமன்? சீதை ஏன் கடத்தப்பட்டாள்? ஜடாயு எப்படிக் கொல்லப்பட்டான்? குரங்குகளின் முதன்மையானவர்களே, நான் அனைத்தையும் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்று மீண்டும் விசாரித்தான்.

பிறகு நாங்கள் உனக்கு ஏற்பட்ட துயர் அனைத்தையும் சொல்லி, அதன் காரணமாக, பட்டினி கிடந்து சாகப் போகும் எங்கள் நோன்பு குறித்தும் சொன்னோம். பிறகு அந்தப் பறவைகளின் மன்னன் {சம்பாதி} (எங்கள் நோன்பைக் கைவிட வலியுறுத்தி), “உண்மையில், ராவணனை நான் அறிவேன். இலங்கையே அவனது தலைநகரம். திரிகூட மலைகளின் பள்ளத்தாக்கில், கடலின் மறுபுறத்தில் நான் அதைக் {இலங்கையைக்} கண்டிருக்கிறேன். சீதை அங்குத் தான் இருக்க வேண்டும். இதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை” என்று சொன்னான். இந்த வார்த்தைகளைக் கேட்ட நாங்கள் விரைந்து எழுந்து, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ராமா}, கடலை கடப்பது எப்படி என்று ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்தோம்! யாரும் அதைக்கடக்கத் துணியவில்லை. என் தந்தையின் {வாயுத்தேவனின்} உதவியைப் பெற்ற நான், நூறு யோஜனைகள் அகன்ற அந்தப் பெரும் கடலைக் கடந்தேன். நீரில் இருந்த ராட்சசிகளைக் கொன்று, ராவணனின் அந்தப்புரத்தில், தவம் நோற்று, தன் தலைவனைக் காணும் அவலுடன், தலையில் ஜடை தரித்து, உடலில் புழுதி படிந்து, மெலிந்து போய், துன்பத்துடன் ஆதரவற்ற நிலையில் இருந்த கற்புடைய சீதையை நான் கண்டேன்.

வழக்கத்திற்கு மாறான அவளது குறிப்புகளைக் கண்டு, அவளே சீதையென உணர்ந்து, தனியாக இருந்த அந்த வழிபடத்தக்க மங்கையை அணுகி, “ஓ! சீதை, நான் ராமனின் தூதுவன்; பவனனால் பெறப்பட்ட குரங்கு [3]. உன்னைக் காண விரும்பியே, வானத்தில் பயணித்து இங்கே வந்திருக்கிறேன். (பவனன் என்றால் வாயுத்தேவன் )குரங்குகளின் ஏகாதிபதியான சுக்ரீவனால் பாதுகாக்கப்பட்ட அரசச் சகோதரர்களான ராமனும் லட்சுமணனும் அமைதியாக இருக்கிறார்கள். ஓ! மங்கையே, ராமனும், சுமித்திரையின் மகனும் {லட்சுமணனும்} உனது நன்னிலை குறித்து விசாரித்து அனுப்பினார்கள்! (ராமன் மற்றும் லட்சுமணனுடன் கொண்ட) நட்பின் காரணமாகச் சுக்ரீவனும் உனது நன்னிலை குறித்து விசாரித்து அனுப்பினான். அனைத்து குரங்குகளாலும் தொடரப்படும் உனது கணவன் விரைவில் இங்கு வருவான். ஓ! புகழத்தக்க மங்கையே, நான் ஒரு குரங்குதான்; ராட்சசனில்லை. என்னில் நம்பிக்கை கொள்” என்றேன்.

என்னால் இப்படிச் சொல்லப்பட்ட சீதை, ஒருக்கணம் தியானிப்பது போலத் தெரிந்தது, பிறகு, “அவிந்தியனின் வார்த்தைகளால் நீ ஹனுமான் என்பதை அறிந்தேன்! ஓ! பலமிக்கவனே, அவிந்தியன் முதிர்ந்த மதிக்கத்தக்க ராட்சசனாவார்! அவர், உன்னைப் போன்ற ஆலோசகர்களால் {அமைச்சர்களால்} சுக்ரீவன் சூழப்பட்டிருப்பதாகச் சொன்னார். நீ இப்போது செல்லலாம்” என்று சொல்லி இந்த மணியை ஒரு நற்சான்றாக அளித்தாள். உண்மையில், இந்த மணியின் காரணமாகவே களங்கமற்ற சீதை உயிர் தாங்க முடிந்திருக்கிறது. ஓ! மனிதர்களில் புலியே {ராமா}, மேலும் அந்த ஜனகனின் மகள் {சீதை}, அவளது அடையாளத்தைத் தெரிவிப்பதற்காக, சித்திரக்கூடம் என்ற பெயரால் அறியப்படும் பெரும் பலம் வாய்ந்த மலையின் மார்பில் நீ இருந்த போது (மந்திரங்கள் ஊட்டப்பட்டு, உயிர்க்கொல்லி ஆயுதமாக மாற்றப்பட்ட) ஒரு புல்லால் ஒரு காக்கையை அடித்ததாகச் சொன்னாள். நான் அவளைச் சந்தித்தற்கும், அவள்தான் உண்மையான விதேக இளவரசிதான் என்பதற்கும் சான்றாக இதைச் சொன்னாள். பிறகு ராவணன் படைவீரர்கள் பிடிக்குமாறு, நான் அவர்களுக்கு அகப்பட்டு, இலங்கை என்ற அந்த நகரத்திற்குத் தீ மூட்டினேன்” என்றான் {ஹனுமான்}.

இலங்கையை அடைந்தான் ராமன்! – வனபர்வம் பகுதி 281-குரங்குத் தலைவர்கள் ராமனையும், சுக்ரீவனையும் வந்து அடைவது; அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு, ராமன் கடற்கரையை அடைவது; அங்கே ராமனும் லட்சுமணனும் தர்ப்பை புல் விரித்துப் படுப்பது; கனவில் வந்த பெருங்கடலரசன், குரங்குப் படையில் இருக்கும் நளனைக் கொண்டு பாலம் அமைக்கச் சொன்னது; தன்னைத் தஞ்சமடைந்த விபீஷணனுக்குப் பட்டம் சூட்டிய ராமன், இலங்கையை அடைந்தது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அதே மலையின் {மால்யவாத மலையின்} மார்பில், குரங்குகளில் முதன்மையானவர்களுடன் ராமன் அமர்ந்திருந்த போது, சுக்ரீவனின் கட்டளையின் பேரில் குரங்குகளின் பெருந்தலைவர்கள் அங்கே ஒன்றுகூட ஆரம்பித்தனர். வாலியின் மாமனாரான சிறப்புமிக்கச் சுஷேணன், ஆயிரம் கோடி {1000,00,00,000} சுறுசுறுப்பான குரங்குகளுடன் ராமனிடம் வந்தான். குரங்குகளில் முதன்மையானவர்களான கயன் மற்றும் கவ்யன் [1] ஆகிய பலமிக்க சக்தி கொண்ட இருவரும், ஆளுக்கு நூறு கோடி {2 X 100,00,00,000} குரங்குகளுடன் அங்கே காட்சியளித்தனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கடுமை நிறைந்த முகமும், மாடு போன்ற வாலும் கொண்ட கவக்ஷயன், அறுபதாயிரம் கோடி  {60000,00,00,000} குரங்குகளைச் சேகரித்து அங்கே தோன்றினான். கந்தமாதன மலையில் வசிக்கும் புகழ்பெற்ற கந்தமாதனன் {என்ற குரங்கு}, நூறாயிரம் கோடி {100,000,00,00,000} குரங்குகளைச் சேகரித்தான். பனசன் என்ற பெயரில் அறியப்பட்ட புத்திசாலியும் பலசாலியுமான குரங்கானவன் ஐம்பத்திரண்டு கோடி {52,00,00,000} குரங்குகளைத் திரட்டினான் [2]. குரங்குகளில் சிறப்புமிக்க, முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனுமான ததிமுகன் என்பவன், பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பெரிய குரங்குகள் படையைத் திரட்டினான். பயங்கரச் செயல் புரிபவையும், முகத்தில் திலகக் குறி கொண்டவையுமான [3] நூறாயிரம் {100,000} கருங்கரடிகளுடன் ஜாம்பவான் தோன்றினான்.

இவர்களும், இன்னும் பிற குரங்குத் தலைவர்களுக்குத் தலைவர்களும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ராமனின் காரியத்தில் உதவுவதற்காக எண்ணிலடங்காதபடி அங்கே வந்தனர். மலைச்சிகரங்களைப் போன்ற பெரிய உடல் படைத்த அவை, சிம்மங்களைப் போன்று கர்ஜித்தன. அந்த உரத்த கர்ஜனையைக் கேட்ட குரங்குகள், ஓய்வில்லாமல் இடத்திற்கு இடம் மாறி ஓடிக் கொண்டிருந்தன. அவற்றில் சில {குரங்குகள்} பார்ப்பதற்கு மலைச்சிகரங்களைப் போல இருந்தன. சில எருமைகளைப் போல இருந்தன. சில இலையுதிர்கால மேகங்களின் நிறம் கொண்டிருந்தன. சில குங்குமத்தைப் போன்ற {ஜாதிலிங்கம் போல} சிவந்த நிறத்தில் இருந்தன. சில உயர எழுந்தன, சில கீழே விழுந்தன, சில மொட்டுகளை வெட்டிக் கொண்டும், சில புழுதியைக் கிளப்பிக் கொண்டும், பல திசைகளில் இருந்து வந்து ஒன்றுதிரண்டிருந்தன.

அலைகள் நிறைந்த கடலைப் போல, அகன்ற அந்தக் குரங்குப்படை, சுக்ரீவனின் உத்தரவின் பேரில் அங்கே இருப்பிடத்தை அமைத்துக் கொண்டது. அனைத்துத் திசைகளில் இருந்தும் அந்தக் குரங்குகளில் முதன்மையானவர்கள் திரண்ட பிறகு, சுக்ரீவனை அருகில் கொண்ட ரகுவின் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, அதிர்ஷ்டமான நட்சத்திர சேர்க்கை கொண்ட ஒரு மிக அற்புதமான நாளில், மங்களகரமான தருணத்தில் அணிவகுக்கப்பட்ட அந்தப் படையைக் கொண்டு, அனைத்து உலகங்களையும் அழிக்கும் காரியத்திற்குப் புறப்பட்டதுபோலப் போர்க்களத்திற்குக் கிளம்பிச் சென்றான். வாயுத்தேவனின் மகனான ஹனுமான், அந்தப் படையின் முன்னணியில் இருந்தான். அதே நேரம் படையின் பின்புறம் அச்சமற்ற சுமித்திரையின் மகனால் {லட்சுமணனால்} பாதுகாக்கப்பட்டது.  கைவிரல்களுக்கு உடும்புத் தோலாலான கையுறைகளைத் தரித்தக் கொண்டு, குரங்குத் தலைவர்கள் சூழ சென்ற அந்த ரகுவீட்டு இளவரசர்கள் {ராமனும், லட்சுமணனும்}, கோள்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனும், சந்திரனும் போல ஒளிர்ந்தார்கள்.

கற்கள், ஆச்சா {சால} மரங்கள் மற்றும் பனை {தால} மரங்களை ஆயுதமாகக் கொண்ட அந்தக் குரங்குப் படை, காலை சூரியனுக்குக் கீழே இருக்கும் மிக நீண்ட சோள {செந்நெல் – வேறு பதிப்பு} வயல் போல இருந்தது. நளன், நீலன், அங்கதன், கிராதன், மைந்தன், துவிவிதன் ஆகியோரால் பாதுகாகப்பட்ட அந்தப் பலம்பொருந்திய படை, ராகவனின் காரியத்தை நிறைவேற்றுவதற்காக அணிவகுத்துச் சென்றது. பழங்கள், கிழங்குகள், நீர், தேன், இறைச்சி ஆகியவை நிறைந்த, பரந்த மற்றும் ஆரோக்கியமான நிலப்பரப்புகளிலும், பள்ளத்தாக்குகளிலும், எவ்வகையான இடையூறுகளும் இன்றித் தங்கிச் சென்ற அந்தக் குரங்குகள் படை, கடைசியாக உப்புக்கடலின் கரையை அடைந்து, அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்தது.

பிறகு தசரதனின் சிறப்புவாய்ந்த மகன் {ராமன்}, அனைத்து குரங்குகளிலும் முதன்மையான சுக்ரீவனிடம் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசினான். அவன் {ராமன்}, “இந்தப் படை மிகவும் பெரிதாக இருக்கிறது. கடலும் கடப்பதற்குக் கடினமானது. எனவே, கடல் கடந்து செல்வதற்குப் பாராட்டுக்குரிய என்ன திட்டம் உன்னிடம் இருக்கிறது?” என்று கேட்டான். இந்த வார்த்தைகளுக்கு, வெட்டிப் பெருமை பேசும் {பகட்டான} குரங்குகள், “நாங்கள் கடலைக் கடப்பதற்கு முழுமையான திறன் பெற்றிருக்கிறோம்” என்றன. எனினும், அனைவராலும் அதைச் செய்ய முடியாதாகையால், இப்பதில், அதிகப் பலனைக் கொடுக்க முடியவில்லை. சில குரங்குகள் கடலைப் படகுகளில் கடக்கலாம் என்றும், சில குரங்குகள் பலவிதமான தெப்பங்களிலும் கடக்கலாம் என்றும் முன்மொழிந்தன.

இருப்பினும் அவர்கள் அனைவரையும் இணக்கப்படுத்திய ராமன், “இது முடியாது. இங்கே இருக்கும் கடல் நூறு யோஜனைகள் அகன்றிருக்கிறது. வீரர்களே, அனைத்துக் குரங்குகளும் இதைக் கடக்க இயலாது. எனவே, நீங்கள் செய்திருக்கும் இந்த முன்மொழிவுகள் அறிவுக்கு ஒத்திசைபவையாக இல்லை. மேலும் நமது துருப்புகள் அனைத்தையும் சுமந்து செல்லத் தேவையான எண்ணிக்கையில் படகுகள் நம்மிடம் இல்லை. மேலும், நம்மைப் போன்ற ஒருவன், வணிகர்களின் பாதையில் எப்படி இத்தகு தடைகளை எழுப்புவான்? நமது படை மிகவும் பெரியது. ஒரு துளை {ஓட்டை} கண்டுபிடிக்கப்பட்டாலும், எதிரி, பெரும் அழிவைச் ஏற்படுத்துவான். எனவே, படகுகளிலும், தெப்பங்களிலும் கடலைக் கடப்பது என்பது எனக்கு ஏற்புடையதல்ல. இருப்பினும், தேவையான வழிகளுக்காகப் பெருங்கடலை நான் வேண்டிக் கொள்வேன். உணவைக் கைவிட்டு, நான் இந்தக் கரையில் படுத்துக் கொள்வேன். நிச்சயம் அவன் {பெருங்கடலரசன் = சமுத்திர ராஜன்} எனக்குக் காட்சிக் கொடுப்பான். அவன் எனக்குக் காட்சிக் கொடுக்கவில்லை என்றால், நெருப்பைப் போன்று பிரகாசிக்கும் கலங்கடிக்கப்படாத எனது பெரும் ஆயுதங்களைக் கொண்டு நான் அவனைத் தண்டிப்பேன்!” என்றான்.

இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு ராமனும், லட்சுமணனும் நீரைத் தொட்டு [4], அந்தக் கடற்கரையில் தர்ப்பைப் படுக்கையில் தங்களைக் கிடத்திக் கொண்டனர். ஆண் நதிகளுக்கும், பெண் நதிகளுக்கும் {நதங்கள் மற்றும் நதிகள் என்கிறார்கள்} தலைவனாக இருந்த அந்தத் தெய்வீகமான, சிறப்புமிக்கப் பெருங்கடலரசன் {சமுத்திர ராஜன்}, நீர்வாழ் விலங்குகள் சூழ, ராமனின் பார்வைக்குக் காட்சி கொடுத்தான். அந்தப் பெருங்கடலின் அதிமேதாவி {சமுத்திர ராஜன்}, எண்ணிலடங்கா ரத்தினச் சுரங்கங்கள் சூழ ராமனிடம் வந்து இனிய உச்சரிப்புகளுடன், “ஓ! கௌசல்யை மகனே {ராமா}, என்னிடம் என்ன உதவி வேண்டும்! ஓ மனிதர்களில் காளையே, நான் உனக்கு அதைச் செய்வேன்! நானும் இக்ஷவாகு குலத்தில் உதித்தவன்தான் [5], எனவே நான் உனது உறவினனும் ஆவேன்” என்றான். அதற்கு ராமன், “ஓ!ஆண் நதிகளுக்கும் பெண் நதிகளுக்கும் {நதங்களுக்கும் நதிகளுக்கும்} தலைவா {பெருங்கடலரசனே}, புலஸ்திய குலத்தில் இழிந்த பாவியான பத்துத் தலையனைக் {ராவணனைக்} கொல்வதற்கு எனது துருப்புகள் செல்ல, எனக்கு வழி கொடுக்க வேண்டும் என நான் உன்னிடம் விரும்பிக் கேட்கிறேன்! நான் உன்னிடம் இரந்து கேட்கும் வழியை நீ கொடுக்கவில்லையென்றால், பிறகு நான் மந்திரங்களால் உந்தப்பட்ட எனது தெய்வீகக் கணைகளைக் கொண்டு உன்னை வற்ற செய்வேன்!” என்றான்.(இக்ஷவாகு குலத்தைச் சார்ந்த, மன்னன் சகரனின் மகன்கள், கடலைத் தோண்டினர் என்பது மரபு. எனவேதான் பெருங்கடல் சாகரம் என்று அழைக்கப்படுகிறது)

ராமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வருணனின் வசிப்பிடத்தில் இருக்கும் அதிமேதாவி {பெருங்கடலரசன்}, கரங்கள் கூப்பி, பெருந்துன்பத்துடன், “நான் உன் வழியில் எந்தத் தடையையும் இட விரும்பவில்லை. நான் உனது பகைவன் இல்லை! ஓ! ராமா, இந்த வார்த்தைகளைக் கேள். அதைக் கேட்டு எது சரியோ அதைச் செய்! உனது உத்தரவின் பேரில் நான் உனது இந்தப் படைக்கு வழியைக் கொடுத்தேனென்றால், பிறகு மற்றவர்களும், தங்கள் விற்களின் பலத்தால் இவ்வாறு கட்டளையிடுவர்! உனது படையில் நளன் என்ற ஒரு குரங்கானவன் இருக்கிறான். அவன் ஒரு தொழில்நுட்ப வல்லுனனாவான். பெரும் பலம் கொண்ட நளன், அண்டத்தின் தெய்வீக கைவினைஞனான தஷ்த்ரியின் {விஸ்வகர்மாவின்} மகனாவான். அவன் {நளன்}, என் நீருக்குள் எறிவது, கட்டையாகவோ, புல்லாகவோ, கல்லாகவோ இருப்பினும் நான் அவற்றை என் பரப்பின் மேல் தாங்குவேன். இப்படி (நீ கடந்து செல்வதற்கு) உனக்கு ஒரு பாலம் கிடைக்கும்!” என்றான்.

இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பெருங்கடல்மேதாவி {பெருங்கடலரசன்} அங்கேயே மறைந்து போனான். விழித்தெழுந்த ராமன், நளனை அழைத்து அவனிடம், “கடலின் மீது நீ ஒரு பாலத்தைக் கட்டுவாயாக! நீ மட்டுமே இதைச் செய்ய முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்!” என்றான். இப்படியே காகுஸ்த குலத்தின் வழித்தோன்றல் {ராமன்}, பத்து யோஜனை அகலமும், நூறு யோஜனை நீளமும் கொண்ட பாலத்தைக் கட்டச் செய்தான். இந்நாள் வரை அந்தப் பாலம் நளனின் பாலம் என்று அனைத்து உலகத்தாலும் கொண்டாடப்படுகிறது. பாலத்தை முடித்த மலை போன்ற பெரும் உடல் கொண்ட நளன் ராமனின் உத்தரவில் பேரில் அதை விட்டு வந்தான்.

ராமன், பெருங்கடலின் இக்கரையில்  இருந்தபோது, ராட்சச மன்னனின் {ராவணனின்} தம்பியான அறம்சார்ந்த விபீஷணன், தன்னுடைய நான்கு ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} ராமனிடம் வந்தான். உயர் ஆன்ம {மகாத்மாவான} ராமனும் அவனை முறைப்படி நல்வரவு கூறினான். இருப்பினும், அவன் {விபீஷணன்} ஒற்றனாக இருக்கக்கூடும் என்று சுக்ரீவன் அஞ்சினான். அதே வேளையில் (விபீஷணனிடம்) பெரிதும் மன நிறைவு கொண்ட ராமன், அவனது செயல்களில் இருந்த நேர்மையையும், நன்னடத்தையின் பல குறிகளையும் அவனிடம் கண்டு, மரியாதையுடன் அவனை {விபீஷணனை} வழிபட்டான். பிறகு அவன் {ராமன்}, விபீஷணனை அனைத்து ராட்சசர்களுக்கு ஆட்சியாளனாக நிறுவி, அவனைத் {விபீஷணனைத்} தனக்கு இளநிலை ஆலோசகனாகவும் {இளநிலை அமைச்சனாகவும் = Junior Counsellor}, லட்சுமணனுக்கு நண்பனாகவும் செய்தான்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பெருங்கடலின் மேல் இருந்த பாலத்தின் வழியாக ராமன் தன் அனைத்துத் துருப்புகளுடன் விபீஷணனின் வழிகாட்டுதலின் படியே, ஒரு மாத காலத்தில் கடந்தான். பெருங்கடலைக் கடந்து இலங்கையை அடைந்த ராமன், அதன் {இலங்கையின்} எண்ணிலடங்கா விரிவான தோட்டங்களைத் தனது குரங்குகளைக் கொண்டு பேரழிவுக்குள்ளாக்கினான். ராமனின் துருப்புகள் அங்கே இருந்த போது, ராவணனின் அமைச்சர்களும் அதிகாரிகாளுமான சுகன், சாரணன் என்ற இருவர், குரங்குகள் உருவம் கொண்டு ஒற்றர்களாக வந்த போது விபீஷணனால் பிடிக்கப்பட்டனர். அந்த இரவு உலாவிகள் தங்கள் உண்மை உருவான ராட்சச உருவை அடைந்த போது, ராமன் அவர்களுக்குத் தனது துருப்பைக் காண்பித்து, அவர்களை அமைதியாக அனுப்பிவைத்தான். அந்நகரத்தைச் {இலங்கையைச்} சூழ்ந்திருந்த வனத்தில் தனது துருப்புகளைத் தங்க வைத்த ராமன், பெரும் ஞானம் கொண்ட குரங்கான அங்கதனைத் தனது தூதனாக ராவணனிடம் அனுப்பி வைத்தான்.

இலங்கையில் அனைத்தும் இலக்கானது! – வனபர்வம் பகுதி 282-ராமனுடைய சொல்லை அங்கதன் ராவணனிடம் சொன்னது; ராமனின் கட்டளையின் பேரில் குரங்குகள் இலங்கையைச் சூறையாடி ராட்சசர்களோடு போர் புரிந்தது; நகரத்தில் இருந்த அனைத்தும் தங்கள் படைக்கு இலக்காகத் தெரியும்படி செய்த பிறகு ராமன் குரங்குகளைப் பின்வாங்கும்படி சொன்னது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பழங்கள், கிழங்குகள் என உணவும், நீரும் நிறைந்திருந்த அந்தத் தோப்புகளில் தனது படையை நிறுத்திய பிறகு, காகுஸ்த குல வழித்தோன்றல் {ராமன்} அவர்களைக் கவனத்துடன் பார்த்துக் கொள்ளத் தொடங்கினான். மறுபுறம் ராவணன், இராணுவ அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு தனது நகரத்தில் பல கருவிகளைப் பொருத்தினான். அவனது நகரம் {இலங்கை}, பலம் வாய்ந்த மதில்களாலும், வாயில்களாலும் இயற்கையாகவே தாக்குதல்களுக்கு அசைந்து கொடுக்காததாக இருந்தது. ஆழமான, விளிம்பு நிறைந்த நீர் கொண்ட ஏழு அகழிகளில் மீன்களும், சுறாக்களும், முதலைகளும் குவிந்திருந்தாலும் கூரிய கருங்காலி முளைகளை {Stakes of Khadira woods} {அவ்வகழிகளில்} நிறைத்து மேலும் {தன் நகரத்தை} அசைந்து கொடுக்காததாக்கினான் {ராவணன்}. கற்கள் குவிக்கப்பட்டிருந்த மதில்களில் கவண் பொருத்தி {அம்மதில்களை} மேலும் அசைந்து கொடுக்காததாக்கினான். (சுவர்களைக் காத்த) போர்வீரர்கள் நஞ்சுகொண்ட பாம்புகள் நிறைந்த மண்குடங்களையும், பலவகையான விஷப்பொடிகளையும் வைத்திருந்தனர். அவர்கள் தண்டம், எரிகொள்ளி, கணைகள், சூலங்கள், வாள்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றையும் ஏந்தியிருந்தனர். மேலும் அவர்கள் சதாக்னிகளையும் [1], மெழுகில் ஊறிய தடித்த கதாயுதங்களையும் [2] வைத்திருந்தனர்.

நகரத்தின் {இலங்கையின்} அனைத்து வாயில்களிலும், எண்ணற்ற யானைகளாலும், குதிரைகளாலும் தாங்கப்படும் பெரும் எண்ணிக்கையிலான காலாட்படையைக் கொண்ட, அசையும் மற்றும் அசையாத முகாம்கள் {ஸ்தாவர குல்மங்களும் ஜங்கமகுல்மங்களும்[3]} அமைக்கப்பட்டன. நகரத்தின் வாயில்களை அடைந்த அங்கதன் தன்னை ராட்சசர்கள் அறியச் செய்தான். சந்தேகமோ, அச்சமோ இல்லாமல் அவன் அந்நகரத்திற்குள் நுழைந்தான். கணக்கற்ற ராட்சசர்கள் சூழ சென்ற அந்த வீரன் {அங்கதன்} மேகங்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனைப் போல அழகாகத் தெரிந்தான். தனது ஆலோசகர்களுக்கு மத்தியில் இருந்த புலஸ்திய குல வீரனை {ராவணனை} அணுகிய நாவன்மை மிக்க அங்கதன் அம்மன்னனை வணங்கி, ராமனின் செய்தியை வழங்கத் தொடங்கினான். அவன் {அங்கதன்}, “ஓ! மன்னா {ராவணா}, கோசலத்தை ஆள்பவனும், முழு உலகம் பரந்த புகழைக் கொண்டவனுமான ரகுவின் வழித்தோன்றல் {ராமன்}, இச்சூழலுக்குத் தகுந்த வார்த்தைகளைச் சொல்லி அனுப்பினான். அந்தச் செய்தியை ஏற்று, அதன்படி செயல்படு. {அது இதுதான்}, “தங்கள் ஆன்மாக்களைக் கட்டப்படுத்த திறனற்ற பாவி மன்னர்களின் தொடர்பின் விளைவால் மாநிலங்களும் {நாடுகளும்}, நகரங்களும் மாசடைந்து அழிவைச் சந்திக்கின்றன. சீதையைப் பலவந்தமாக அபகரித்ததால் நீ மட்டுமே என்னைக் காயப்படுத்தினாய்! எனினும், பல குற்றமற்ற மனிதர்களின் மரணத்திற்கு நீ காரணமாகிறாய். அதிகாரத்தாலும், கர்வத்தாலும், முன்பு நீ, காட்டில் வாழும் பல முனிவர்களைக் கொன்றாய்; தேவர்களையும் அவமதித்தாய். நீ பெரும் மன்னர்கள் பலரையும், அழுது கொண்டிருந்த பல பெண்களையும் கொன்றாய். அந்த உனது வரம்புமீறல்களுக்கான தண்டனை உன்னை மூழ்கடிக்கப்போகிறது! நான் உன்னை உனது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} சேர்த்துக் கொல்வேன். போரிட்டு உனது வீரத்தைக் காட்டு [4]. ஓ இரவு உலாவியே, நான் அற்ப மனிதனாக இருப்பினும் எனது வில்லின் சக்தியைப் பார்! ஜனகனின் மகளான சீதையை விடுவி! நீ அவளை விடுவிக்கவில்லையெனில், நான் எனது கூரிய கணைகளால் இந்தப் பூமியை ராட்சசர்களற்றதாகச் செய்வேன்!” {என்று ராமன் சொன்னான்}” என்றான் {அங்கதன்}.

எதிரியின் இந்த இணக்கமற்ற வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ராவணன், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கோபத்தால் உணர்வற்றவனான். தங்கள் ஆசானின் அனைத்து குறிப்புகளையும் படிப்பதில் நிபுணர்களான நான்கு ராட்சசர்கள், நான்கு பருந்துகள் புலியைப் பிடிப்பது போலப் அங்கதனைப் பிடித்தனர். எனினும் தன்னை உறுதியாகப் பிடித்திருந்த அந்த ராட்சசர்களுடன் மேலே குதித்து அரண்மனையின் மொட்டைமாடியில் இறங்கினான். அப்படி அவன் பெரும் சக்தியுடன் குதித்த போது, அந்த இரவு உலாவிகள் {ராட்சசர்கள்} பூமியில் விழுந்து, அப்படிக் கடுமையாக விழுந்ததால் காயம்பட்டு, தங்கள் விலாக்களை {விலா எலும்புப் பகுதிகளை} உடைத்துக் கொண்டனர். பிறகு அவன் ஏறிய அந்தத் தங்க உப்பரிகையில் இருந்து கீழே குதித்தான். இலங்கையின் சுவர்களைத் தாண்டி குதித்து, தனது தோழர்கள் இருந்த இடத்தில் {சுவேல மலைக்கு அருகில்} இறங்கினான். பிறகு கோசலத் தலைவனின் {ராமனின்} முன்னிலையை அடைந்து, அவனிடம் அனைத்தையும் சொன்ன பெரும் சக்தியுடைய குரங்கான அங்கதன், உரிய மரியாதையுடன் ராமன் விடை கொடுத்ததும், ஓய்வெடுத்துப் புத்துணர்ச்சி பெறச் சென்றான்.

பிறகு, ரகுவின் வழித்தோன்றல் {ராமன்}, காற்றின் வேகம் கொண்ட அந்தக் குரங்குகளை ஒருங்கிணைந்து தாக்குதல் மூலம் இலங்கையின் மதில்களை உடைக்கச் செய்தான். பிறகு விபீஷணனுடனும், கரடிகளின் மன்னனுடனும் {ஜாம்பவானுடனும்} கூடிய லட்சுமணன், படையின் முன்னணியில் இருந்து, தாக்குதலுக்கு அசைந்து கொடுக்காத அந்நகரத்தின் தென்வாயிலைத் தகர்த்தெறிந்தான். பிறகு ராமன், போர்க்களத்தில் பெரும் நிபுணத்துவம் கொண்டவையும், இளம் ஒட்டகங்களைப் {கரபம் = இளம் ஒட்டகம்} போன்ற சிவந்த நிறம் கொண்டவையுமான நூறாயிரம் கோடி {100000,00,00,000} குரங்குகளுடன் இலங்கையைத் தாக்கினான். பொதுவாகத் தங்கள் அகன்ற இடுப்பின் மூலமே தங்களைத் தாங்கிக் கொண்டு, நீண்ட கரங்களும், கால்களும், பெரும் பாதங்களும் கொண்ட கோடிக்கணக்கான {3 கோடி என்கிறது கும்பகோணம் பதிப்பு} சாம்பல் நிற கரடிகள், அத்தாக்குதலுக்கு உதவியாக இருந்தன. அந்தக் குரங்குகள் மேலும் கீழுமாகவும், குறுக்கும் நெடுக்குமாகவும் குதித்தன் விளைவாக எழுந்த தூசியால், சூரியனின் பிரகாசமான வட்டு முழுவதும் நிழலால் கவ்வப்பட்டு மறைந்து போனது

நெற்கதிர்கள் போன்ற மஞ்சள் நிறத்திலும், வாகைப்பூக்களைப் {Shirisha flowers = சீரிதம்} போன்ற சாம்பல் நிறத்திலும், உதயசூரியனைப் போன்ற செந்நிறத்திலும், சணலைப் போல வெள்ளை நிறத்திலும் இருந்த குரங்குகளால் மூடப்பட்ட தங்கள் நகரத்தின் சுவர்கள் பழுப்பு நிறத்தை அடைந்திருப்பதை இலங்கையின் குடிமக்கள் கண்டனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தங்கள் மனைவியரோடும் மூத்தவர்களோடும் இருந்த ராட்சசர்கள் இக்காட்சியைக் கண்டு திகைத்தனர். பிறகு அந்தக் குரங்குப் போர்வீரர்கள், விலையுயர்ந்த கற்களாலும் செய்யப்பட்ட தூண்களையும், உப்பரிகைகளையும், அரண்மனைகளின் உச்சிகளையும் இழுத்துப் போட தொடங்கினர். கவண்கள் மற்றும் பிற இயந்திரங்களின் விசைகளையும் சுக்குநூறாக உடைத்த அவர்கள், அவற்றை அனைத்துப் புறங்களிலும் தூக்கி வீசினர். வட்டுகள், தண்டங்கள், கற்களோடு கூடிய சதாக்னிகளைப் பெருத்த ஒலியுடனும், பெரும் சக்தியுடனும் கீழே இருந்த நகரத்தில் தூக்கி எறிந்தனர். அவற்றைப் பாதுகாப்பதற்காகச் சுவர்களில் இருந்த ராட்சசர்கள், அந்தக் குரங்குகளால் தாக்கப்பட்டதால், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் சடுதியில் தப்பி ஓடினர்.

பிறகு கடும் முகத்தோற்றமும், நினைத்த உருவை அடைய வல்லவர்களுமான நூறாயிரம் ராட்சசர்கள் மன்னனின் {ராவணனின்} உத்தரவின் பேரில் வெளியே வந்தனர். சரியான கணை மழையைப் பொழிந்து, காட்டுவாசிகளை {குரங்குகளை} ஓட்டிய அந்தப் போர்வீரர்கள், தங்கள் பெரும் பராக்கிரமத்தைக் காட்டியபடி, மதில்களை அலங்கரித்தனர். விரைவில், சதைப் பிண்டமாக இருக்கும் அந்தக் கடும் முகம் படைத்த இரவு உலாவிகள் {ராட்சசர்கள்}, அக்குரங்குகளைச் சுவர்களில் இருந்து பலவந்தமாக விரட்டினர். எதிரிகளின் சூலங்களால் சிதைக்கப்பட்ட எண்ணற்ற குரங்குத் தலைவர்கள் மதில்களில் இருந்து கீழே விழுந்தனர். அப்படி அவர்கள் விழுவதால் நடுக்கப்பட்ட தூண்களும், வாயில்களும், எண்ணற்ற ராட்சசர்களும் கூட மீண்டும் எழாத படிக்கு கீழே விழுந்தனர்.

அந்தக் குரங்குகளும், எதிரியைத் தின்ன வந்த வீரமிக்க ராட்சசர்களும் தலைமுடிகளைப் பற்றி ஒருவரை ஒருவர் சிதைத்து, ஒருவரை ஒருவர் தங்கள் நகங்களாலும் பற்களாலும் கிழித்தெறிந்தனர். அந்தக் குரங்குகளும் ராட்சசர்கள் பயங்கரமாகக் கதறவும், கர்ஜிக்கவும் செய்தனர். இருதரப்பிலும் பலர் மீண்டும் எழாதபடிக்கு கீழே விழுந்து கொல்லப்பட்டாலும், எந்தத் தரப்பும் போட்டியைக் கைவிடவில்லை. அதே வேளையில் ராமன், மேகங்களைப் போல, தனது கணைகளை மழையாகப் பொழிந்து கொண்டிருந்தான். இலங்கையை மூழ்கடிக்கும்படி அவன் அடித்த கணைகள் ராட்சசர்களைப் பெரும் எண்ணிக்கையில் கொன்றன. போர்க்களத்தில் களைப்படையாத பலம் மிக்க வில்லாளியான சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, மதில்களில் நின்று கொண்டிருந்த குறிப்பிட்ட ராட்சசர்களைப் பெயர் சொல்லி அழைத்து, தன் துணிக்கோல் கணைகளைக் {clothyard shafts} கொண்டு அவர்களைக் கொன்றான். இலங்கையின் கோட்டைகளை உடைத்து, அந்த நகரத்திற்குள் இருக்கும் அனைத்துப் பொருட்களும் முற்றுகையிட்டிருந்த படைக்கு இலக்காகத் தெரியும்படி செய்த பிறகு, வெற்றி அடைந்த அந்தக் குரங்குக் கூட்டம் ராமனின் கட்டளையின் பேரில் பின்வாங்கியது. 

ராமனுடன் மோதிய ராவணன்! – வனபர்வம் பகுதி 283-வானரப் படைக்குள் கண்களுக்குப் புலப்படாதபடி ராட்சசர்கள் ஊடுருவுதல்; அதைக் கண்டறிந்த விபீஷணன் அவர்களது மாய சக்தியை விலக்குதல்; ஊடுருவிய ராட்சசர்கள் கொல்லப்படுதல்; ராவணன் ராமனோடும், இந்திரஜித் லட்சுமணனோடும் மோதியது; கடுமையும் பயங்கரமும் கொண்ட போர் நடந்தது.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அந்தப் படைகள் (இவ்வாறு திரும்பி) தங்கள் இடங்களுக்குச் சென்று இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, ராவணனைத் தலைவனாகக் கொண்ட அற்ப ராட்சசர்களும் பிசாசங்களும், அவர்களுக்கு மத்தியில் ஊடுருவினர். அவர்களில் பர்வணன், பதனன், ஜம்பன், கரன், குரோதவாசன், ஹரி, பிரருஜன், அருஜன், பிரகாசன் ஆகியோரும் பிறரும் இருந்தனர். கண்ணுக்குப் புலப்படாத இந்தத் தீயவர்கள் (குரங்குப் படைக்குள்) ஊடுருவிய போது, இதைக் குறித்து அறிந்த விபிஷணன், அவர்களது {கண்ணுக்குப் புலப்படாமல்} மறைந்திருக்கும் சக்தியை உடைத்தான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பலமிக்கவர்களும், நீண்ட தூரம் தாவுபவர்களுமான அக்குரங்குகளுக்கு {அக்குரங்குகளின் கண்களுக்கு} அவர்கள் காணப்பட்டதும், அவர்கள் {ராட்சசர்கள்} கொல்லப்பட்டு, உயிரற்றவர்களாய் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்தப்பட்டார்கள்.

இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ராவணன், அணிவகுத்திருந்த தனது துருப்புகளுக்குத் தலைமையேற்று புறப்பட்டான். இரண்டாவது உசானசைப் {சுக்கிராச்சாரியார்} போலப் போர் விதிகளை நன்கறிந்த ராவணன், ராட்சசர்களும் பிசாசங்களும் கொண்ட தனது பயங்கரப்படையால் சூழப்பட்டு, உசானசின் {சுக்கிரனின்} பெயராலேயே அழைக்கப்படும் வரிசையால் அணிவகுக்கப்பட்ட தனது படைகளை வெளியே அனுப்பினான். பிருஹஸ்பதியால் பரிந்துரைக்கப்பட்ட முறையைப் பின்பற்றிய ராமன், அந்த இரவு உலாவியை எதிர்த்து அணிவகுத்து, எதிர் வரிசையில் தனது படைகளை வெளியே அனுப்பினான். விரைவாக முன்னேறி வந்த ராவணன், ராமனுடன் போரிடத் தொடங்கினான். லட்சுமணன் இந்திரஜித்துடன் தனித்தும், சுக்ரீவன் விரூபாக்ஷனுடன் தனித்தும், நிகாவடன் தாரனோடும், நளன் துந்தனோடும் {பௌண்டரனோடும்}, படுசன் பனசனோடும் போரிட்டனர். தனக்கு ஒப்பானவன் என்று தான் கருதும் ஒருவனிடம் முன்னேறிய ஒவ்வொரு போர்வீரனும், தன் கரத்தின் பலத்தை நம்பி, போர்க்களத்தில் அவனோடு {தான் தேர்ந்தெடுத்த எதிரியோடு} போரிடத் தொடங்கினான். அச்சமுள்ளவர்களுக்கு அச்சமூட்டிய அது {மோதல்}, விரைவில் பயங்கரமானதாகவும், கடுமையானதாகவும், பழங்காலத்தில் நடைபெற்ற தேவாசுரப் போர் போலவும் மாறியது.

கணைகள், சூலங்கள், வாட்கள் ஆகியவற்றை மழையாகப் பொழிந்த ராவணன் ராமனை மறைத்தான். ராமனும், கூரிய முனை கொண்ட தனது இரும்புக் கணைகளால் ராவணனைத் துன்புறுத்தினான். அதே போல லட்சுமணனும் பெரும்பான்மையான உயிர்ப்பகுதிகளைத் துளைக்கும் வல்லமை கொண்ட தனது கணைகளால், தன்னுடன் மோதிய இந்திரஜித்தை அடித்தான். இந்திரஜித்தும் தனது கணை மழையால் சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} அடித்தான். விபீஷணன் பிரஹஸ்தன் மீதும், பிரஹஸ்தன் விபீஷணன் மீதும்கூர் முனையும் இறகும் படைத்த தங்கள் கணைகளை அடர்த்தியாகப் பொழிந்தனர். இப்படியே அந்தப் பெரும் பலம் கொண்ட போர்வீர்ர்களுக்கு இடையில் பெரும் சக்தி கொண்ட தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட மோதல் உருவானது. இதனால் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூன்று உலகங்களும் கடுந்துன்பத்தால் பாதிக்கப்பட்டன.

துயில்நீத்தான் கும்பகர்ணன்! – வனபர்வம் பகுதி 284-விபீஷணன் பிரஹஸ்தனைக் கொன்றது; ஹனுமான் தூம்ராக்ஷனைக் கொன்றது; வீரத்துடன் போராடிய குரங்குகள் ராட்சசர்களை இலங்கை நகரத்திற்குள் விரட்டியது; ராவணன் கும்பகர்ணனை எழுப்பியது; .

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “திடீரென விபீஷணனை நோக்கி முன்னேறி உரத்துக் கூவிய பிரஹஸ்தன், அவனைத் {விபீஷணனைத்} தனது கதாயுதத்தால் அடித்தான். பயங்கர சக்தியுடன் கதாயுதத்தால் அடிக்கப்பட்டாலும், வலிய கரமும், பெரும் ஞானமும் கொண்ட விபீஷணன், சற்றும் தடுமாறாமல் இமயத்தின் மலைகளைப் போல் அசையாமல் நின்றான். பிறகு விபீஷணன், நூறு மணிகளைக் கொண்டிருந்ததும், பெரியதும், பலம் வாய்ந்ததுமான ஒரு ஈட்டியை எடுத்து, மந்திரங்களால் அதற்கு ஊக்கமளித்து, தன் எதிரியின் { தலையை நோக்கி வீசினான். வஜ்ராயுதத்தின் சக்தியுடன் விரைந்த அந்த ஆயுதத்தின் மூர்க்கத்தால் பிரஹஸ்தனின் தலை துண்டிக்கப்பட்டது. அவன் {பிரஹஸ்தன்} காற்றில் முறிந்த மரம் போலத் தெரிந்தான்.

இரவு உலாவியான பிரஹஸ்தன் போர்க்களத்தில் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட தூம்ராக்ஷன், அந்தக் குரங்குக் கூட்டத்துக்கு எதிராக பெரும் வேகத்துடன் விரைந்தான். பயங்கரத் தோற்றம் கொண்ட மேகங்கள் போல முகத்தோற்றத்துடன் இருந்த தூம்ராக்ஷனின் படைவீரர்களை தங்களை நோக்கி விரைந்து வருவதைக் கண்ட குரங்குத் தலைவன் {சுக்ரீவனாக இருக்கும்} திடீரென {போரை} முறித்து {தவிர்த்து} ஓடினான். குரங்களில் முதன்மையானவன் திடீரென வழிவிடுவதைக் கண்ட குரங்குகளில் புலியான பவனனின் மகன் ஹனுமான் முன்னேறத் தொடங்கினான். பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்த குரங்குகள் அனைவரும், பவனின் மகன் {ஹனுமான்} போர்க்களத்தில் அசையாதிருப்பதைக் கண்டு, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, விரைவாக {மீண்டும்} அணிவகுத்தனர். ராமனும், ராவணனும் ஒருவருக்கெதிராக ஒருவர் விரைவதைக் கண்டதன் விளைவாக இருதரப்பு வீரர்களுக்கு மத்தியில் பயத்துடன் கூடிய வலிய பெரிய கூச்சல் எழுந்தது. அந்தப் போரில் பயங்கர சேதத்தைக் கண்ட களம் விரைவில் ரத்தச்சேறானது.

தூம்ராக்ஷன், சிறகு படைத்த கணைகள் மூலம் அந்தக் குரங்குக் கூட்டத்தைத் துன்புறுத்தினான். பிறகு எதிரிகளை வெல்பவனான பவனனின் மகன் ஹனுமான், முன்னேறிக் கொண்டிருந்த அந்த ராட்சசத் தலைவனை {தூம்ராக்ஷனை} விரைந்து பிடித்தான். ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பிய அந்தக் குரங்குக்கும் {ஹனுமானுக்கும்}, அந்த ராட்சச வீரனுக்கும் {தூம்ராக்ஷனுக்கும்} நடைபெற்ற மோதல், (பழங்காலத்தில்) இந்திரனுக்கும் பிரஹலாதனுக்கும் இடையில் நடைபெற்றதைப் போல கடுமையாகவும் பயங்கரமாகவும் இருந்தது. அந்த ராட்சசன், அந்தக் குரங்கை தனது கதாயுதங்களாலும், பரிகங்களாலும் {#} அடித்தான். அதே வேளையில் அக்குரங்கு {ஹனுமான்}, வெட்டப்படாத கிளைகளுடன் கூடிய மரத்தின் தண்டைக் கொண்டு அந்த ராட்சசனை {தூம்ராக்ஷனை} அடித்தான். பிறகு பவனனின் மகனான ஹனுமான் பெருங்கோபம் கொண்டு, அந்த ராட்சசனையும், அவனது தேரோட்டி மற்றும் அவனது குதிரைகளையும் கொன்று, அவனது தேரைத் துண்டுகளாக உடைத்தெறிந்தான்.

ராட்சசர்களில் முதன்மையான தூம்ராக்ஷன் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்டக் குரங்குகள், தங்கள் அச்சமனைத்தையும் கைவிட்டு, அந்த ராட்சசப் படையை நோக்கி பெரும் வீரத்துடன் விரைந்தன. வெற்றிபெற்ற வலிமைநிறைந்த குரங்குகளால் பெரிய எண்ணிக்கையில் தங்கள் தரப்பில் கொல்லப்பட்டதால், அந்த ராட்சசர்கள் உற்சாகமிழந்து இலங்கைக்குள் ஓடினர். உயிருடன் மீந்த அந்தச் சேதமடைந்த ராட்சசப் படை, நகரத்தை அடைந்ததும், மன்னன் ராவணனிடம் நடந்தது அத்தனையும் தெரிவித்தனர். பிரஹஸ்தன், பலம்வாய்ந்த வில்லாளியான தூம்ராக்ஷன் ஆகிய இருவரும் தங்கள் படையினருடன் சேர்த்து அந்த வலிமைமிக்க குரங்குகளால் கொல்லப்பட்டதைக் கேட்ட ராவணன் நீண்டு பெருமூச்சு விட்டு, தனது அற்புதமான இருக்கையில் இருந்து எழுந்து “கும்பகர்ணன் செயல்படுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று சொன்னான். இப்படிச் சொன்ன அவன் {ராவணன்}, பலதரப்பட்ட உரத்த ஒலியெழுப்பும் கருவிகளைக் கொண்டு, ஆழ்ந்த நீண்ட துயிலில் இருந்த தனது தம்பி கும்பகர்ணனை எழுப்பினான்.

பெரும் முயற்சி செய்து அவனை எழுப்பிய அந்த ராட்சச மன்னன் {ராவணன்}, துயரத்துடன் அந்த பலம்வாய்ந்த கும்பகர்ணனிடம் பேசினான். அவன் {கும்பகர்ணன்} தனது படுக்கையில் வசதியாக அமர்ந்து தன் சுயநினைவையும், தன்நிலைமையையும் அடைந்த பிறகு, “ஓ! கும்பகர்ணா உண்மையில் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய். நமக்கு நேர்ந்திருக்கும் இந்தப் பயங்கரப் பேரிடரை உணராது, இடையூறற்ற ஆழமான இளைப்பாறுதலை நீ அடையக்கூடாது. தனது குரங்குப் படையுடன் பெருங்கடலைப் பாலமமைத்துக் கடந்து வந்திருக்கும் ராமன், நம் அனைவரையும் அவமதிக்கும்படி, (நமக்கெதிராக) பயங்கரப் போரைத் தொடுத்திருக்கிறான். ஜனகனின் மகளான அவனது {ராமனின்} மனைவி சீதையை கள்ளமாக {Stealthily} நான் கொண்டு வந்தேன். பெருங்கடலின் மீது பாலமமைத்து அவளை {சீதையை} மீட்பதற்காகவே அவன் {ராமன்} இங்கே வந்திருக்கிறான்.  பிரஹஸ்தன் மற்றும் பிறர் கூடிய நமது பெரும் இரத்த உறவுகள் அனைவரும் அவனால் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர். ஓ! உனது எதிரிகளை துன்புறச் செய்பவனே {கும்பகர்ணா}, உன்னைத் தவிர ராமனைக் கொல்ல வேறு யாராலும் முடியாது! எனவே, ஓ! வீரா, உனது கவசத்தை அணிந்து கொண்டு, ராமனையும், அவனைத் தொடர்பவர்களையும் அழித்தொழிக்கும் நோக்குடன் இந்த நாளே செல்வாயாக! தூஷணனின் தம்பிகளான வஜ்ரவேகனும், பிரமாதினும் தங்கள் படையினருடன் உன்னைச் சேர்வார்கள்” என்ற வார்த்தைகளைச் சொன்னான் {கும்பகர்ணனிடம் ராவணன்}. பலம்வாய்ந்த கும்பகர்ணனிடம் இதைச் சொன்ன அந்த ராட்சச மன்னன் {ராவணன்}, வஜ்ரவேகனிடமும், பிரமாதினிடம், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தினான். அவனது அறிவரையை ஏற்ற அந்தப் போர்க்குணமிக்கவர்களான தூஷணனின் இரு தம்பிகள், நகரத்தில் இருந்து விரைந்து, கும்பகர்ணனை முன் கொண்டு அணிவகுத்து சென்றனர்.

மீளாத்துயில்கொண்ட கும்பகர்ணன்! – வனபர்வம் பகுதி 285-கும்பகர்ணனைக் கொன்ற லட்சுமணன்; வஜ்ரவேகனைக் கொன்ற ஹனுமான்; பிரமாதியைக் கொன்ற நளன்…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பிறகு கும்பகர்ணன் தனது தொண்டர்களுடன் நகரத்தைவிட்டுக் கிளம்பினான். வெற்றி பெற்ற குரங்கு துருப்புகள் முற்றுகையிட்டிருப்பதை விரைவில் தன் முன் கண்டான். ராமனைத் தேடும் நோக்கத்தோடு அவர்களைக் கடந்து சென்ற அவன் {கும்பகர்ணன்}, கையில் வில்லுடன் தனது நிலையில் நிற்கும் சுமித்திரையின் மகனைக் {லட்சுமணனைக்} கண்டான். பிறகு அந்தக் குரங்கு போர்வீரர்கள், அவனை {கும்பகர்ணனை} நோக்கி விரைந்து, அனைத்து புறத்திலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். பிறகு அவர்கள் எண்ணிலடங்கா பெரிய மரங்களைக் கொண்டு அவனை அடிக்க ஆரம்பித்தனர். அவர்களில் {குரங்குகளில்} பலர் அச்சமற்று, தங்கள் நகங்களைக் கொண்டு அவனது உடலைக் கிழிக்கத் தொடங்கினர். போர்க்கலை விதிகளால் அங்கீகரிக்கப்பட்ட பல வழிகளில் அந்தக் குரங்குகள் அவனுடனான தங்கள் போரைத் தொடங்கின. விரைவில் அவர்கள் அந்த ராட்சசர்களின் தலைவனை {கும்பகர்ணனை} பல வகைகளிலான பயங்கர ஆயுதங்களின் மழையால் மறைத்தனர்.

அவர்களால் இப்படித் தாக்கப்பட்ட கும்பகர்ணன், அவர்களைப் பார்த்துச் சிரிக்க மட்டுமே செய்து, அவர்களை உண்ண ஆரம்பித்தான். சலன், சண்டசலன், வஜ்ரபாகு என்ற பெயர்களால் அறியப்படும் குரங்குகளில் முதன்மையானவர்களை அவன் {கும்பகர்ணன்} விழுங்கினான். அந்த ராட்சசன் செய்த அஞ்சத்தக்க செயலைக் கண்ட பிற குரங்குகள் அச்சமடைந்தனர். அதனால் அவர்கள் அச்சமடைந்து உரத்த ஓலமிட்டனர். அந்தக் குரங்குத் தலைவர்களின் அலறலைக் கேட்ட சுக்ரீவன் துணிச்சலுடன் கும்பகர்ணனை நோக்கி முன்னேறினான். உயர் ஆன்மா கொண்ட அந்தக் குரங்குகள் மன்னன் {சுக்ரீவன்}, அந்த ராட்சசனை {கும்பகர்ணனை} விரைவில் அணுகி, ஆச்சா {சால} மரத்தின் தண்டைக் கொண்டு அவனது தலையில் கடுமையாக அடித்தான். எப்போதும் விரைந்து செயல்படும் உயர் ஆன்ம சுக்ரீவன், கும்பகர்ணனின் தலையில் அடித்து அந்த ஆச்சாமரத்தை ஒடித்தாலும், அந்த ராட்சசன் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தத் தவறினான். பின்பு, அந்த அடியால் மந்த நிலையில் இருந்து எழுந்தவன் போல இருந்த கும்பகர்ணன், தனது கரங்களை நீட்டி, தன் பலத்தை மட்டுமே கொண்டு சுக்ரீவனைப் பிடித்தான். நண்பர்களுக்கு மகிழ்வூட்டும் சுமித்திரையின் வீர மகன் {லட்சுமணன்}, அந்த ராட்சசனால் {கும்பகர்ணனால்} சுக்ரீவன் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டு, கும்பகர்ணனை நோக்கி விரைந்தான்.

எதிரி வீரர்களைக் கொல்லும் லட்சமணன், கும்பகர்ணனை நோக்கி முன்னேறியவாறு, தங்கப் புங்கங்கள் {#} கொண்ட பலமிக்க மூர்க்கமான கணையை அவனை {கும்பகர்ணனை} நோக்கி அடித்தான். அந்தக் கணை, அவனது கவசத்தைப் பிளந்து, அவனது உடலுக்குள் ஊடுருவி, அப்பட்டமாக அதைக் {அவ்வுடலைக்} கடந்து, அந்த ராட்சசனின் ரத்தக் கறையுடன் பூமியைப் பிளந்து நின்றது. அப்படி மார்பு துளைக்கப்பட்ட கும்பகர்ணன், குரங்குகளின் மன்னனை {சுக்ரீவனை} விடுவித்தான். ஒரு பெரும் பாறையைத் தன ஆயுதமாக எடுத்துக் கொண்ட அந்தப் பலமிக்க வீரனான கும்பகர்ணன், சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} இலக்காக வைத்து அவனை நோக்கி விரைந்தான். அப்படி அந்த ராட்சசன் {கும்பகர்ணன்} அவனை {லட்சுமணனை} நோக்கி விரைந்த போது, அவனது {கும்பகர்ணனின்} உயர்த்தப்பட்ட {இரு} கரங்களை, கத்தியைப் போன்றிருந்த தனது கூரிய முனை கொண்ட கணைகளால் லட்சுமணன் வெட்டி வீழ்த்தினான்.

ஆனால், அந்த ராட்சசனின் இருகரங்களும் அப்படி வெட்டப்பட்ட போது, அக்கரங்களின் எண்ணிக்கையைப் போல இருமடங்கு கரங்கள் அவன் மேனியில் தோன்றின. எனினும், சுமித்திரையின் மகன், தனது ஆயுத நிபுணத்துவத்தைக் காட்டி, அதே போன்ற கணைகளைக் கொண்டு, கற்களைக் கொண்டிருந்த அக்கரங்களையும் வெட்டி வீழ்த்தினான். இதனால், அந்த ராட்சசன் {கும்பகர்ணன்}, பல தலைகளும், கால்களும், கரங்களும் கொண்ட மிகப்பெரிய உருவமெடுத்தான். பிறகு, சுமித்திரையின் மகனான அந்த வீரன் {லட்சுமணன்}, மலைக்குவியலைப் போல இருந்த அவனை {கும்பகர்ணனை} பிரம்ம ஆயுதத்தினால் பிளந்தான். அந்தத் தெய்வீக ஆயுதத்தால் தாக்கப்பட்ட அந்த ராட்சசன் {கும்பகர்ணன்}, கிளைகள் விரித்த பெரும் மரம் ஒன்று, வானத்தின் இடியால் தாக்கப்பட்டு விழுவது போல, அந்தப் போர்க்களத்தில் விழுந்தான். அசுரன் விருத்திரனுக்கு ஒப்பானவனும், பெருஞ்செயல் புரியுபவனுமான கும்பகர்ணன் உயிரிழந்து போர்க்களத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்ததைக் கண்ட ராட்சச வீரர்கள் அச்சத்தால் பின்வாங்கி ஓடினார்கள்.

அப்படிப் போர்க்களத்தை விட்டு ஓடும் ராட்சச வீரர்களைக் கண்ட, தூஷணனின் தம்பி, அவர்களை அணிதிரட்டி, பெரும் கோபத்துடன் சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} நோக்கி விரைந்தான். எனினும், சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, உரத்த கர்ஜனை செய்து, தனது இறகு படைத்த கணைகளைக் கொண்டு, தன்னை நோக்கி விரைந்து வரும் கோபக்கார போர்வீரர்களான வஜ்ரவேகனையும், பிரமாதினையும் வரவேற்றான். ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, பிறகு, தூஷணன் தம்பிகள் ஒரு புறமும், புத்திக்கூர்மை கொண்ட லட்சுமணன் ஒரு புறமும் எனக் காண்பவர்களுக்கு மயிர்க்கூச்சலை ஏற்படுத்தும் மிகக்கடுமையான போர் மூண்டது. லட்சுமணன், அந்த இரு ராட்சசர்களையும் கச்சிதமான தனது அம்பு மழையால் மூழ்கடித்தான். மறுபுறம் கோபத்தால் பரபரப்படைந்த அந்த இரு ராட்சச வீரர்களும், தங்கள் கணைகளால் கல்மாரி பொழிந்து லட்சுமணனை மறைத்தனர். வஜ்ரவேகன், பிரமாதின் ஆகியோருக்கும் வலிய கரங்கள் கொண்ட லட்சுமணனுக்கு இடையில் நடந்த அந்தப் பயங்கர மோதல் சிறிது நேரம் {ஒரு முகூர்த்த காலம்} நீடித்தது.

பவனனின் மகனான ஹனுமான் ஒரு மலைச்சிகரத்தை எடுத்துக்கொண்டு விரைந்து, அந்த ஆயுதத்தால் {மலைச்சிகரத்தால}, அச்சகோதரர்களில் ஒருவனான ராட்சசன் வஜ்ரவேகனின் உயிரைப் பறித்தான். பலமிகுந்த குரங்கான நளனும் {நீலன் என்கிறது கும்பகோணம் பதிப்பு}, ஒரு பெரும் பாறையைக் கொண்டு, தூஷணனின் தம்பியான பிரமாதினை நசுக்கினான். எனினும், ஒருவருக்கொருவர் எதிர்த்து முன்னேறும் ராமன் மற்றும் ராவணனின் படைவீரர்களுக்கிடையேயான அந்தக் கொடிய போராட்டம், இதற்குப் பிறகும் ஒரு முடிவுக்கு வராமல், முன்பு போலவே உக்கிரத்துடன் நடந்தது. அந்தக் கானகவாசிகளால் {குரங்குகளால்} நூற்றுக்கணக்கான ராட்சசர்கள் கொல்லப்பட்டார்கள், அதே வேளையில் பல குரங்குகள் ராட்சசர்களாலும் கொல்லப்பட்டனர். எனினும், மரண இழப்பில் குரங்குகளை விட ராட்சசர்களுடைய இழப்பு மிக அதிகமாக இருந்தது.

ராமனைச் சாய்த்த இந்திரஜித்! – வனபர்வம் பகுதி 286-தன் மகன் இந்திரஜித்தை ராவணன் போருக்கு அனுப்பியது; இந்திரஜித்துக்கும் லட்சுமணனுக்கும் இடையில் நடந்த போர்; அங்கதன் அவர்களுக்கிடையே குறுக்கிட்டது; அங்கதனைக் கொல்ல இருந்த இந்திரஜித்தை லட்சுமணன் தடுத்தது; அங்கதன் இந்திரஜித்தின் குதிரைகளையும் தேரோட்டியையும் கொல்வது; மாயசக்திகளைப் பயன்படுத்தி இந்திரஜித் மறைந்திருந்து போர் தொடுப்பது; இதைக் கண்ட ராமன் தனது படையைக் காக்க அங்கே விரைவது; மறைந்திருந்து தாக்கிய இந்திரஜித் ராமனையும் லட்சுமணனையும் தரையில் விழச்செய்தது …

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தொண்டர்களுடன் {பின்தொடர்பவர்களுட்ன} கூடிய கும்பகர்ணனும், பெரும் போர்வீரனான பிரஹஸ்தனும், பெரும் சக்தி கொண்ட தூம்ராக்ஷனும் போர்க்களத்தில் விழுந்ததை அறிந்த ராவணன், தனது வீர மகன் இந்திரஜித்திடம், “ஓ! எதிரிகளைக் கொல்பவனே {இந்திரஜித்}, ராமன், சுக்ரீவன் மற்றும் லட்சுமணனை நீ கொல்வாயாக. எனது நன் மகனே, சச்சியின் தலைவனான, வஜ்ரத்தைத் தாங்கும் ஆயிரம் கண்கொண்டவனை {இந்திரனை} வீழ்த்தியதால், உன்னாலேயே எனக்கு இந்தப் பெரும்புகழ் கிடைத்தது. ஓ !எதிரிகளை அடிப்பவனே! உனது விருப்பத்துக்கேற்றவாறு தோன்றவும் மறையவும் கூடிய சக்தி கொண்ட நீ, (தேவர்களிடம்) வரமாகப் பெற்ற தெய்வீகக் கணைகளைக் கொண்டு எதிரிகளைக் கொல்வாயாக. உனது ஆயுதங்களின் சாதாரண ஸ்பரிசத்தையே ராமன், லட்சுமணன் மற்றும் சுக்ரீவன் ஆகியோரால் தாங்கிக் கொள்ள முடியாது. அப்படியிருக்கும்போது, அவர்களது தொண்டர்களைக் குறித்த நான் என்ன சொல்வேன்? ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {இந்திரஜித்}, பிரஹஸ்தனாலோ, கும்பகர்ணனாலோ எந்தப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லையோ, அது உன்னால் முடியட்டும். ஓ! மகனே {இந்திரஜித்}, உனது கூர்முனை கணைகளால், எனது எதிரிகளையும், அவர்களது படையினரையும் கொன்று, நீ முன்பொரு முறை வாசவனைக் கொன்று எனது மகிழ்ச்சியை எப்படி அதிகரிக்கச் செய்தாயோ, அப்படி இன்று செய்வாயாக” என்றான் {ராவணன்}. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவனால் {ராவணனால்} இப்படிச் சொல்லப்பட்ட இந்திரஜித், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, கவசம் பூண்டு தனது தேரில் விரைந்து ஏறி, போர்க்களத்தை நோக்கி முன்னேறினான்.

பிறகு அந்த ராட்சசர்களில் காளை, {இந்திரஜித் என்ற} தனது பெயரை உரக்கக் கூறி, ஒற்றைக்கு ஒற்றைப் போர் புரிய {to a single combat}, நற்குறிகள் கொண்ட லட்சுமணனுக்கு அறைகூவல் விடுத்தான். இப்படிச் சவால்விடப்பட்ட லட்சுமணன், தனது வில் மற்றும் கணைகளை எடுத்துக் கொண்டு, அந்த வில்லின் நாணைத் தோல் உறை பூண்ட, தனது இடது கையால் சுண்டிவிட்டு, எதிரிகளின் இதயம் பயங்கரத்தை உணரச்செய்யும் வகையில், அந்த ராட்சசனை {இந்திரஜித்தை} நோக்கி விரைந்தான். தெய்வீக ஆயுதங்களை அறிந்த அந்த இரு வீரர்களுக்கிடையில், ஒருவருக்கொருவர் தங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்தி, ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பி நடைபெற்ற அந்த மோதல் பயங்கரத்தின் எல்லையைக் காட்டுவதாக இருந்தது. ஆனால், தனது கணைகளால் எதிராளி {லட்சுமணன்} மீது எந்த ஆதிக்கத்தையும் தான் பெற முடியாது என்பதைக் கண்டறிந்த வலிமைமிக்க வீரர்களில் முதன்மையான ராவணனின் மகன் {இந்திரஜித்}, தனது ஆற்றல்கள் அனைத்தையும் திரட்டினான். பிறகு, இந்திரஜித் பெரும் சக்தி கொண்ட எண்ணற்ற எறிவேல்களை {#} லட்சுமணனின் மீது வீசத் தொடங்கினான். எனினும், சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, தனது கூர்முனை கொண்ட கணைகளால், அவற்றை வெட்டிச் சிதறடித்தான். லட்சுமணனின் கூர்முனைக் கணைகளால் துண்டு துண்டாக வெட்டப்பட்ட அந்த எறிவேல்கள் தரையில் விழுந்தன.

பிறகு வாலியின் மகனான அழகான அங்கதன், ஒரு பெரிய மரத்தை எடுத்து இந்திரஜித்தை நோக்கி மூர்க்கமாக விரைந்து, அதைக் கொண்டு அவனது தலையில் அடித்தான். இருப்பினும் அச்சமற்றிருந்த அந்த வலிமைமிக்க இந்திரஜித் சூலத்தைக் கொண்டு அங்கதனை அடிக்க முயன்றான். எனினும், சரியாக அந்நேரத்திலேயே, ராவணன் மகனால் {இந்திரஜித்தால்} எடுக்கப்பட்ட அந்தச் சூலத்தை லட்சுமணன் துண்டு துண்டாக வெட்டிப் போட்டான். பிறகு ராவணனின் மகன் கதாயுதத்தை எடுத்து, தன் அருகில் இருந்த அந்தக் குரங்குகளில் முதன்மையானவனும் வீரனுமான அங்கதனின் இடது விலாவில் அடித்தான். வாலியின் பலமிக்க மகனான அங்கதன், அந்த அடியை ஒரு பொருட்டாக எண்ணாமல், இந்திரஜித்தின் மேல் ஒரு பெரும் ஆச்சாமரத் தண்டை வீசினான். இந்திரஜித்தை அழிப்பதற்காகக் கோபம் கொண்ட அங்கதனால் வீசப்பட்ட அந்த மரம், ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, குதிரைகள் மற்றும் தேரோட்டியோடு கூடிய இந்திரஜித்தின் தேரை அழித்தது. பிறகு குதிரைகளற்ற, தேரோட்டியற்ற தேரில் இருந்து குதித்த ராவணனின் மகன் {இந்திரஜித்}, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தனது மாய சக்திகளின் துணை கொண்டு, காட்சியில் இருந்து மறைந்தான்.

அபரிமிதமான மாய சக்திகளைக் கொண்ட அந்த ராட்சசன் {இந்திரஜித்}, திடீரென மறைந்ததைக் கண்டு, அந்த இடத்தில் ராமன் முன்னேறி வந்து, தனது துருப்புகளைக் கவனமாகக் காக்க ஆரம்பித்தான். எனினும், இந்திரஜித், தேவர்களின் வரங்களால் {தான்} அடைந்த கணைகளைக் கொண்டு, ராமன், பலமிக்க லட்சுமணன் ஆகிய இருவரது உடல்களின் அனைத்துப் பாகங்களையும் துளைக்க ஆரம்பித்தான். பிறகு, தனது மாய சக்திகள் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டு போரிட்ட ராவணனின் மகனுக்கு எதிராக, வீரர்களான ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரும், தங்கள் கணைகளைக் கொண்டு தொடர்ந்து போராடினர். ஆனால் அந்த மனிதர்களில் சிங்கங்கள் மேல் முழுவதும் தனது கூர்முனை கொண்ட கணைகளை நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தொடர்ந்து அடித்தான். தொடர்ச்சியாகத் தனது கணைகளைப் பொழிந்து கொண்டிருந்த மறைந்திருந்த அந்த வீரனை {இந்திரஜித்தை}, கற்குவியல்களை ஏந்திய குரங்குகள், ஆகாயத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேடின. எனினும், அவர்களையும் {குரங்குகளையும்}, அந்த இரு சகோதரர்களையும், மறைந்திருந்த அந்த ராட்சசன் {இந்திரஜித்}, தனது கணைகள் மூலம் துன்புறுத்தத் தொடங்கினான். உண்மையில் அந்த ராவணனின் மகன், தனது மாய சக்திகளைக் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டு, அந்தக் குரங்குப் படையைப் பெருஞ்சீற்றத்துடன் தாக்கினான். இப்படி உடல் முழுவதும் அவனது {இந்திரஜித்தின்} கணைகளால் துளைக்கப்பட்ட வீர சகோதரர்களான ராமனும் லட்சுமணனும், ஆகாயத்தில் இருந்து விழுந்த சூரியனையும், சந்திரனையும் போலத் தரையில் விழுந்தனர்.

மாயையை வென்ற மாயநீர்! – வனபர்வம் பகுதி 287-ராமலட்சுமணர்களின் உணர்வை மீட்ட விபீஷணனும், சுக்ரீவனும்; குபேரன் ராமனுக்காகக் கைலாசத்தில் இருந்து நீர் கொடுத்தனுப்பியது; அந்நீரால் கண்களை அலம்பிக் கொண்ட ராமனும் மற்றவர்களும் மறைந்திருக்கும் அனைத்தையும் தங்கள் கண்களால் காண முடிந்தது; லட்சுமணன் இந்திரஜித்தை கொன்றது; சீதையைக் கொல்ல விரும்பிய ராவணன்; ராவணனின் கோபத்தைத் தணித்த அவிந்தியன்; போருக்குத் தயாரான ராவணன்…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சகோதரர்களான ராமனும், லட்சுமணனும் நெடுஞ்சாண்கிடையாக நிலத்தில் கிடப்பதைக் கண்ட ராவணனின் மகன் {இந்திரஜித்}, தான் வரங்களாகப் பெற்றிருந்த கணைகளால் வலை செய்து அவர்களைக் கட்டினான். இப்படி இந்திரஜித்தின் அம்புகளாலான வலையால் போர்க்களத்தில் கட்டப்பட்ட மனிதர்களில் வீரப்புலிகளான அவர்கள், சிறையிலடைபட்ட இரு பருந்துகளைப் போலத் தெரிந்தனர். அந்த வீரர்கள் நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டுத் தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடப்பதைக் கண்ட சக்ரீவன், எல்லாப்புறங்களிலும் அனைத்துக் குரங்குகளும் சூழ நின்றான். சுஷேணன், மைந்தன், துவிவிதன், குமுதன், அங்கதன், ஹனுமான், நீலன், தாரன், நளன் ஆகியோருடன் அந்தக் குரங்குகளின் மன்னன் {சுக்ரீவன்} அங்கு நின்று கொண்டிருந்தான். களத்தின் வேறொரு பகுதியில் வெற்றியடைந்த விபீஷணன், விரைவில் அந்த இடத்திற்கு வந்து, பிரக்ஞம் [1] என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, உணர்வற்றிருந்த அந்த வீரர்களை {ராமன் மற்றும் லட்சுமணனை} {நினைவடையும்படி} எழுப்பினான்.

பிறகு சுக்ரீவன் விரைவாக அவர்களது உடலில் இருந்து அம்புகளைப் பிடுங்கினான். பிறகு, தெய்வீக மந்திரங்களுடன், மிகவும் பயனளிக்கக்கூடிய விசல்யை [2] எனும் மருந்தைப் {சுக்ரீவன்} பூசியதும், அந்த மனித வீரர்கள் {ராமனும், லட்சுமணனும்} தங்கள் சுயநினைவை அடைந்தனர். தங்கள் உடல்களில் இருந்து அம்புகள் அகற்றப்பட்டதும், அந்தப் பலமிக்கப் போர்விரர்கள் தங்கள் வலி மற்றும் சோர்வு ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, தங்கள் மயக்கநிலையில் இருந்து ஒரு கணத்தில் எழுந்தனர். இக்ஷவாகு குலத்தின் வழித்தோன்றலான ராமன், துன்பம் நீங்கியவனாக இருப்பதைக் கண்டதும், ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, இரு கரங்கள் கூப்பிய நிலையில் இருந்த விபீஷணன் அவனிடம் {ராமனிடம்}, “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, குஹ்யர்கள் மன்னனின் {குபேரனின்} உத்தரவின் பேரில், வெண்மலைகளிலிருந்து நீரை [3] எடுத்துக் கொண்டு ஒரு குஹ்யன் {யக்ஷன்} இங்கு வந்திருக்கிறான். ஓ! பெரும் மன்னா {ராமா}, அந்த நீர் குபேரன் உனக்குக் கொடுத்தனுப்பியிருக்கும் பரிசாகும். அதனால், மறைந்திருக்கும் அனைத்து உயிரினங்களும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ராமா}, உனக்குக் காட்சியளிக்கும்! இந்த நீரைக் கொண்டு கண்களை அலம்பினால் மறைந்திருக்கும் அனைத்து உயிரினங்களும் உனக்குக் காட்சியளிக்கும். இதை {இந்த நீரை} நீ யாருக்குக் கொடுக்கிறாயோ அவர்களுக்கும் காட்சியளிக்கும்” என்றான் {விபீஷணன்}

(விசல்யை என்பது வெட்டுகள் மற்றும் காயங்களைக் குணப்படுத்தும் ஒரு மருத்துவத் தாவரமாகும். இது இன்றும் வங்காளத்தின் பகல பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இந்த எழுத்தாளரின் {கங்குலியின்} மருத்து நண்பர் ஒருவர், இப்பெயரில் இருக்கும் ஒரு தாவரத்தின் திறனைச் சோதித்துப் பார்த்தார். அப்போது அது, இரத்தத்தை உரையவைக்கும் காலிக் அமிலம் {gallic acid} அல்லது டேனிக் அமிலம்{tannic acid} ஆகியவற்றைவிடப் பெரும் வீரியம் கொண்டிருப்பதைக் கண்டறிந்தார். என்கிறார் கங்குலிஇந்து தொன்மவியலில் {புராணங்களில்} குஹ்யர்கள் என்பவர்கள் தேவர்களுக்கு அடுத்த நிலையிலும், தெய்வீக ஆடல் பாடல் நிபுணர்களான கந்தர்வர்களை விட மேம்பட்டவர்களாகவும் சொல்லப்பட்டுள்ளது. சிவனின் வசிப்பிடத்தைக் கொண்டிருக்கும் கைலாசத்தின் மறுபெயரே வெண்மலை என்பதாகும் என்கிறார் கங்குலி.)

“அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன ராமன் அந்தப் புனித நீரைப் பெற்றுக் கொண்டு, அதைக் கொண்டு தனது கண்களைச் சுத்தப்படுத்தினான். உயர்ந்த மனம் படைத்த லட்சுமணனும் அதையே செய்தான். சுக்ரீவன், ஜாம்பவான், ஹனுமான், அங்கதன், மைந்தன், துவிவிதன், நீலன் மற்றும் குரங்குகளில் முதன்மையான பலர், தங்கள் கண்களை அந்நீர் கொண்டு அலம்பினர். அதன் பிறகு, அனைத்தும் விபீஷணன் சொன்னவாறே சரியாக நடந்தன. ஓ! யுதிஷ்டிரா, விரைவில் அவர்கள் அனைவரின் கண்களுக்கும், துணையில்லா கண்களால் காணமுடியாத பொருட்களைக் காணும் திறன் பெற்றன.

அதேவேளையில், தான் பெற்ற வெற்றிக்குப் பிறகு இந்திரஜித் தனது தந்தையிடம் சென்றான். தான் செய்த செயல்களை அனைத்தையும் சொன்ன அவன் களத்திற்கு விரைந்து வந்து, படையின் முன்னணியில் தன்னை நிறுத்திக் கொண்டான். பிறகு விபீஷணனின் வழிகாட்டுதல்படி, சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, திரும்பி வந்துகொண்டிருக்கும் கோபக்கார ராவணனின் மகனை {இந்திரஜித்தை} நோக்கி, அவனைத் தாக்குவதற்காக விரைந்தான். விபீஷணனிடம் இருந்து ஒரு துப்பைப் {குறிப்பைப்} பெற்ற லட்சமணன், உக்கிரமடைந்து, தனது தினசரி வேள்வியை அன்று செய்து முடிக்காத இந்திரஜித்தைக் கொல்ல விரும்பி, வெற்றியைப் பெற எரிந்து கொண்டிருக்கும் அந்த வீரனைத் {இந்திரஜித்தைத்} தனது கணைகளால் அடித்தான். ஒருவரை ஒருவர் வீழ்த்த எண்ணி, அவர்களுக்கிடையில் நடைபெற்ற அந்த மோதல், {பழங்காலத்தில்} தேவர்களுக்கும் பிரகலாதனுக்கும் இடையில் நடைபெற்ற போரைப் போல அற்புதமாக இருந்தது. உயிர் நிலைகளைத் துளைக்கும் கணைகளால் சுமித்திரையின் மகனை {லட்சுமணனை} துளைத்தான் இந்திரஜித். சுமித்திரையின் மகனும் {லட்சுமணனும்}, ராவணனின் மகனைக் கடும் சக்திகள் கொண்ட தனது கணைகளால் துளைத்தான். லட்சுமணனின் கணைகளால் துளைக்கப்பட்ட ராவணனின் மகன் {இந்திரஜித்} கோபத்தால் உணர்வற்றுப் போனான். பிறகு அவன் {இந்திரஜித்}, லட்சுமணனை நோக்கி, நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற எட்டு கடும் கணைகளை அடித்தான்.

ஓ! யுதிஷ்டிரா, சக்தியும், பிரகாசமும், மூன்று சிறகுகளும் கொண்ட கணைகளால் சுமித்திரையின் வீர மகன் {லட்சுமணன்}, தனது விரோதியின் {இந்திரஜித்தின்} உயிரை எப்படி எடுத்தான் என்பதை இப்போது நான் சொல்கிறேன் கேள். அவற்றில் {அந்த அம்புகளில்} ஒன்றைக் கொண்டு வில்லைப்பிடித்திருந்த இந்திரஜித்தின் கரங்களை உடலில் இருந்து துண்டித்தான். இரண்டாவதைக் கொண்டு, கணைகளைப் பற்றியிருந்த மற்றொரு கரமும் தரையில் விழும்படி செய்தான். கூரிலும் கூரானதும் பிரகாசமானதுமான மூன்றாவதைக் கொண்டு, அழகிய மூக்காலும், பிரகாசமான காது குண்டலங்களாலும் அலகங்கரிக்கப்பட்டிருந்த அவனது {இந்திரஜித்தின்} தலையை அறுத்தெரிந்தான். கரங்களும், தலையும் அற்ற அவனது உடல் காண்பதற்குப் பயங்கரமாக இருந்தது. எதிரியைக் கொன்ற பிறகு, பலமிக்க மனிதர்களில் முதன்மையானவனான அவன் {லட்சுமணன்}, தனது கணைகளைக் கொண்டு, தனது எதிரியின் தேரோட்டியைக் கொன்றான். பிறகு குதிரைகள் வெறும் தேரை நகரத்திற்குள் இழுத்துச் சென்றன.

ராவணன், தனது மகன் இல்லாது திரும்பிய தேரைக் கண்டான். தனது மகன் கொல்லப்பட்டதைக் கேட்ட ராவணன், இதயம் நிறைந்த துன்பத்தால் பாதிக்கப்பட்டான். எல்லையில்லா துயரம் மற்றும் பாதிப்பில் மூழ்கிய அந்த ராட்சசர்களின் மன்னன் {ராவணன்}, திடீரென மிதிலையின் இளவரசியைக்  {சீதையைக்} கொல்ல விரும்பினான். தனது வாளை எடுத்துக் கொண்ட அந்த ராட்சசன் {ராவணன்}, அசோக வனத்தில் தனது தலைவனைக் காண்பதற்காகக் காத்திருந்த மங்கையை நோக்கி விரைந்தோடினான். அந்த இழிந்த பாவியின் பாவம் நிறைந்த காரியத்தைக் கண்ட அவிந்தியன் அவனது கோபத்தைத் தணித்தான்.

ஓ! யுதிஷ்டிரா, அவிந்தியன் சொன்ன காரணங்களைக் கேள்! அந்த ஞானம் கொண்ட ராட்சசன் {அவிந்தியன்}, “ஒரு வல்லரசின் சுடர்மிகும் அரியணையில் அமர்ந்திருக்கும் நீ, ஒரு பெண்ணைக் கொல்வது தகாது! அதுபோக, உன் சக்தியைக் கொண்டு இவள் சிறைபிடிக்கப்பட்டதைக் கருதினால், இந்தப் பெண் ஏற்கனவே கொல்லப்பட்டவளே. இவளது உடல் மட்டும் அழிவதால் இவள் கொல்லப்பட்டவள் ஆக மாட்டாள் என்று நான் நினைக்கிறேன். இவளது கணவனைக் கொல்! அவனைக் கொன்றால், இவளும் கொல்லப்பட்டவளே! உண்மையில் நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} கூடப் பராக்கிரமத்தில் உனக்கு நிகரானவனல்ல! இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் உன்னால் மீண்டும் மீண்டும் போர்க்களத்தில் அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்!” என்று சொன்னான். மேலும் இது போன்ற வார்த்தைகளால் இதற்கு ஒப்பான இதே போன்ற பல வார்த்தைகளாலும், ராவணனைத் தணிப்பதில் வெற்றிக் கொண்டான் அவிந்தியன். உண்மையில் பின்னவன் {ராவணன்}, தனது ஆலோசகனின் {அமைச்சனின்} பேச்சைக் கேட்டான். பிறகு அந்த இரவு உலாவி, தானே போரில் ஈடுபடத் தீர்மானித்து, வாளை உறையில் இட்டு, தனது தேரைத் தயாராக நிறுத்த ஆணைகள் பிறப்பித்தான்.”

ராவணன் எரிந்தான்! – வனபர்வம் பகுதி 288-ராமனை எதிர்த்து வந்த ராவணன் ; ராவணனின் படைவீரர்களை மரத்தண்டுகள் கொண்டு தாக்கி குரங்குகள் வீழ்த்துவது; மாயை வெளிப்படுத்திய ராவணன்; மாயையால் உண்டான வீரர்களைக் கொன்ற ராமன்; ராமனையும் லட்சுமணனையும் போன்ற தோற்றம் கொண்ட வீரர்களை ராவணன் உண்டாக்குவது; ராமன் அவர்களையும் கொல்வது; மாதலி ராமனைச் சந்தித்து, இந்திரனின் தேரில் பயணிக்குமாறு வற்புறுத்துவது; பிரம்மாயுதம் கொண்டு ராமன் ராவணனை வீழ்த்துவது..

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தனது அன்பிற்குரிய மகனின் {இந்திரஜித்தின்} மரணத்தால் ஏற்பட்ட கோபத்தால் உந்தப்பட்ட பத்து கழுத்தோன் {ராவணன்}, தங்கத்தாலும், ரத்தினத்தாலும் இழைக்கப்பட்டிருந்த தனது தேரில் ஏறினான். பல வகையான ஆயுதங்களைக் கையில் கொண்டிருந்த பயங்கர ராட்சசர்கள் சூழ இருந்த ராவணன், எண்ணிலடங்கா குரங்கு தலைவர்களுடன் சேர்ந்து போரிட்டுக் கொண்டிருந்த ராமனை நோக்கி முன்னேறினான். கோபம் கொண்ட அவன் {ராவணன்} குரங்குப்படையை நோக்கி விரைவதைக் கண்ட மைந்தன், நீலன், நளன், அங்கதன், ஹனுமான் மற்றும் ஜாம்பவான ஆகியோர் தங்கள் துருப்புகள் அனைத்துடன் அவனைச் {ராவணனைச்} சூழ்ந்தனர். குரங்குகளிலும், கரடிகளிலும் முதன்மையான அவர்கள், பத்துக்கழுத்தோனின் (ராவணனின்) படை வீரர்களை அவன் {ராவணன்} பார்வைக்கெதிரிலேயே மரத்தின் தண்டுகளைக் கொண்டு பூண்டோடு அழிக்கத் தொடங்கினர். எதிரி தனது துருப்புகளைக் கொன்றொழிப்பதைக் கண்ட பெரும் மாய சக்திகள் கொண்ட ராட்சச மன்னனான ராவணன், தனது மாயையைப் பயன்படுத்தத் தொடங்கினான். கைகளில் கணைகளும், சூலங்களும், இருபுறக்கூர் கொண்ட வாள்களையும் {ரிஷ்டிகளையும்} கொண்ட ராட்சச வீரர்கள் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அவனது {ராவணனின்} உடலில் இருந்து வெளிப்பட்டனர்.

இருப்பினும் ராமன் தனது தெய்வீக ஆயுதத்தைக் கொண்டு அந்த ராட்சசர்கள் அனைவரையும் கொன்றான். ராட்சசர்களின் மன்னன் {ராவணன்} மீண்டும் ஒருமுறை தனது மாயசக்தியை வெளிப்படுத்தினான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் பத்து முகத்தோன் {ராவணன்} தனது உடலில் இருந்து ராமனையும், லட்சுமணனையும் போன்ற எண்ணிலடங்கா போர்வீரர்களை உற்பத்தி செய்து அந்த இரு சகோதரர்களை நோக்கி விரைந்தான். பிறகு, ராமனுக்கும், லட்சுமணனுக்கும் எதிரியான அந்த ராட்சசர்கள், விற்களையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு ராமனை நோக்கி விரைந்தனர். அந்த ராட்சசர்கள் மன்னனால் {ராவணனால்} பிரயோகிக்கப்பட்ட மாயையின் சக்தியைக் கண்ட இக்ஷவாகு குல வழித்தோன்றலான சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, ராமனிடம், “உமது தோற்றத்தில் இருக்கும் இந்த இழிந்த ராட்சசர்களை நீரே கொல்லும்” என்ற வீர வார்த்தைகளைச் சொன்னான். அதன் பேரில் ராமன், தனது உருவத்தில் இருந்தவர்களையும் மற்ற ராட்சசர்களையும் கொன்றான்.

அந்த நேரத்தில், பழுப்பு நிற {tawny hue = கபில நிறம், மஞ்சட்பழுப்பு நிறம்} {பச்சை நிறம் என்கிறது கும்பகோணம் பதிப்பு} குதிரைகள் பூட்டப்பட்டு, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட தேரில் இந்திரனின் தேரோட்டியான மாதலி அந்தப் போர்க்களத்துக்கு வந்து ராமனை அணுகினான். மாதலி, “ஓ! காகுஸ்த குலத்தின் மகனே {ராமா}, ஒரு ஜோடி பழுப்புக் குதிரைகள் பூட்டுப்பட்டு, வெற்றிவாகை சூடும் இந்த அற்புதமான தேர் தேவர்கள் தலைவனுக்குச் சொந்தமானது! ஓ! மனிதர்களில் புலியே, இந்த அற்புதத் தேரில் இருந்தே நூற்றுக்கணக்கான தைத்தியர்களையும், தானவர்களையும் இந்திரன் போர்க்களத்தில் கொன்றான்! எனவே, ஓ! மனிதர்களில் புலியே, என்னால் செலுத்தப்படும் இந்தத் தேரில் பயணித்து விரைவாகப் போர்க்களத்தில் ராவணனைக் கொல்! இதைச் சாதிக்கத் தாமதிக்காதே!” என்றான் {இந்திரனின் தேரோட்டி மாதலி}.

எனினும், இப்படி அவனால் {மாதலியால்} சொல்லப்பட்ட ரகு குல வழித்தோன்றல் {ராமன்}, இதுவும் ராட்சசர்களின் மாயை என்று நினைத்து, மாதலியின் உண்மை நிறைந்த வார்த்தைகளில் சந்தேகங்கொண்டான். அப்போது விபீஷணன், “ஓ! மனிதர்களில் புலியே {ராமா}, இது தீய ராவணனின் மாயையன்று! ஓ! பெரும் பிரகாசமிக்கவரே, இந்திரனுக்குச் சொந்தமான இந்தத் தேரில் விரைவாக ஏறு!” என்றான். இதனால் மகிழ்ச்சி கொண்ட காகுஸ்த குல வழித்தோன்றல் {ராமன்}, விபீஷணனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, அத்தேரில் ஏறி ராவணன் மேல் கோபம் கொண்டு விரைந்தான்.

ராவணனும் தனது எதிரிக்கு எதிராக விரைந்த போது, பூமியில் இருந்த உயிரினங்கள் உரத்து அலறின, அதே நேரத்தில், சொர்க்கத்தில் இருந்த தேவர்கள், படக {#படகம்} ஒலியுடன் கூடிய சிம்ம கர்ஜனை புரிந்தனர். பிறகு பத்து கழுத்தோனான ராவணனுக்கும், ரகு குலத்தின் இளவரசனுக்கும் {ராமனுக்கும்} இடையில் தொடங்கிய மோதல் கடுமையாகவும், தீவிரமாகவும் இருந்தது. உண்மையில், அவர்களுக்கு இடையில் நடந்த போருக்கு வேறு எங்கும் இணையே கிடையாது. அந்த ராட்சசன் {ராவணன்} ராமனை நோக்கி, உச்சரிக்கப் போகும் நிலையில் இருக்கும் அந்தணரின் சாபம் போன்றதும் [1] {பிரம்ம தண்டம் போன்றதும்}, இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போன்றதுமான எறிவேலை {#} {சூலம்}எறிந்தான். இருப்பினும் ராமன் தனது கூரிய கணைகளால் அந்த எறிவேலை துண்டு துண்டாக அறுத்துப் போட்டான்.(வியாசர் மற்றும் வால்மீகி ஆகிய இருவரின் படியும், பிராமணச் சாபத்தைவிடக் கடுமையானது எதுவுமில்லை. இந்திரனின் வஜ்ராயுதமே பிராமணச் சாபத்துடன் ஒப்புநோக்கும்போது பலவீனமானதே. காரணம் தெளிவானது. வஜ்ராயுதம் யாரை நோக்கி ஏவப்படுகிறதோ அந்தத் தனிநபரையே அடிக்கும். பிராமணச் சாபமோ மொத்த குலத்தையும், மொத்த தலைமுறையையும், முழு நாட்டையுமே அடித்துவிடும்.)

செய்வதற்கு அரிதான அச்செயலைக் கண்ட ராவணன் அச்சத்தால் தாக்கப்பட்டான். ஆனால், விரைவில் கோபம் தூண்டப்பட்டுப் பத்து கழுத்து வீரன் {ராவணன்}, ஆயிரக்கணக்கிலும், பத்தாயிரக்கணக்கிலும், எண்ணிலடங்காதவாறும் ஏவுகணைகளையும் {புசுண்டி}, எறிவேல்களையும், தண்டங்களையும், போர்க்கோடரிகளையும், பலவிதமான கணைகளையும், சதாக்னிகளையும், கல்லில் கூராக்கப்பட்ட அம்புகளையும், மேலும் பலவகையான ஆயுதங்களையும் ராமன் மீது பொழிந்தான். பயங்கர உருவைக் காட்சிப்படுத்திய பத்து கழுத்து ராட்சசனின் {ராவணனின்} மாயையைக் கண்ட குரங்குகள் அச்சப்பட்டு அனைத்து திசைகளிலும் ஓடின.

பிறகு அந்தக் காகுஸ்தனின் வழித்தோன்றல் {ராமன்}, தனது அம்பறாத்தூணியில் இருந்த, அழகிய சிறகுகளும், தங்க இறகுகளும், பிரகாசமான, அழகிய தலை கொண்ட ஓர் அழகிய அம்பை எடுத்து பிரம்மாயுத {பிரம்மாஸ்திர} மந்தரத்துடன் சேர்த்து வில்லில் பொருத்தினான். இந்திரனைத் தலைமையாகக் கொண்டு தேவர்களும், கந்தர்வர்களும், சரியான மந்திரங்களால் பிரம்மாயுதமாக ராமனால் மாற்றபட்ட அற்புத கணையைக் கண்டு மகிழ ஆரம்பித்தனர். தேவர்களும், தானவர்களும் கின்னரர்களும் பிரம்மாயுதத்தின் அக்காட்சியால், எதிரியான ராட்சசனின் {ராவணனின்} உயிருக்கு முடிவு நெருங்கியது என்றே கருதத் தலைப்பட்டனர். பிறகு, ஒப்பற்ற சக்தி கொண்டதும், ராவணனின் மரணத்தை ஏற்படுத்த போவதும், உச்சரிக்கப்படும் நிலையில் இருக்கும் அந்தண சாபத்தைப் போன்றதுமான அந்தப் பயங்கர ஆயுதத்தை ராமன் அடித்தான்.

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, வில்லை வட்டமாக வளைத்து ராமனால் அக்கணை {பிரம்மாயுதம்} அடிக்கப்பட்டதும், தேர், தேரோட்டி, குதிரைகளுடன் கூடிய ராட்சச மன்னன் {ராவணன்} எல்லாப் பக்கங்களிலும் பயங்கர நெருப்பால் சூழப்பட்டு எரிக்கப்பட்டான். புகழ்பெற்ற சாதனையைச் செய்த ராமனால் ராவணன் கொல்லப்படுவதைக் கண்ட தேவர்களும், கந்தர்வர்களும் சாரணர்களும் மிகவும் மகிழ்ந்தனர். பிரம்மாயுதத்தின் ஆற்றலால் அண்ட மேலாட்சியை இழந்த சிறப்பு வாய்ந்த ராவணனை ஐங்கூறுகளும் {ஐம்பூதங்களும்} கைவிட்டன. ராவணனின் உடல் சார்ந்த மூலப்பொருட்கள் அனைத்தும் அந்தப் பிரம்மாயுதத்தால் எரிக்கப்பட்டன. அவனது சதை, குருதி ஆகியவை சாம்பல் கூடக் காணக்கிடைக்காதவாறு ஏதுமற்றவையாகக் குறைக்கப்பட்டன.

நான் பாவமிழைத்தவளானால்…! – வனபர்வம் பகுதி 289அ-ராமனிடம் சீதையை அவிந்தியன் அழைத்து வந்தது; ராமனின் கடுஞ்சொற்களைக் கேட்ட சீதை பூமியில் விழுந்தது; வாயு, அக்னி, வருணன், பிரம்மன் தசரதன் ஆகியோர் சீதையை ஏற்றுக் கொள்ளும்படி ராமனிடம் கேட்டது…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அற்பனும், தேவர்களுக்கு எதிரியுமான ராட்சசர்கள் மன்னனை {ராவணனைக்} கொன்ற பிறகு தனது நண்பர்களுடனும், சுமித்திரையின் மகனுடனும் {லட்சுமணனுடனும்} ராமன் மிகுந்த மகிழ்ச்சியோடிருந்தான். அந்தப் பத்துக்கழுத்தோன் (ராட்சசன்) {ராவணன்} கொல்லப்பட்ட பிறகு, முனிவர்களைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள், வலிய கரங்கள் கொண்ட ராமனை வழிபட்டு, “ஜெயம்” என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் உச்சரித்து அருள் வழங்கினர். தேவர்கள் அனைவரும், கந்தர்வர்களும், தேவலோகவாசிகளும் தாமரை இதழ்களைப் போன்ற கண் கொண்ட ராமனை, தங்கள் பாடல்களாலும், பூமாரியாலும் மனநிறைவு கொள்ளச் செய்தனர். இப்படி ராமனை முறையாக வழிபட்ட அவர்கள் அனைவரும் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே திரும்பினர். ஓ! மங்காப் புகழ் கொண்டவனே {யுதிஷ்டிரா}, அப்போது வானத்தைப் பார்த்த போது, அங்கே ஏதோ பெரும் திருவிழா கொண்டாடப்பட்டது போல இருந்தது.

பத்து கழுத்து ராட்சசனைக் {ராவணனைக்} கொன்றபிறகு, உலகம் பரந்த புகழ் கொண்டவனும், எதிரி நகரங்களை வெல்பவனுமான தலைவன் ராமன், இலங்கையை விபீஷணனுக்கு அளித்தான். பிறகு முதிர்ந்த ஞானியான (ராவணனின்) ஆலோசகனான {அமைச்சனான} அவிந்தியன், சீதையைத் தனக்கு முன்னும், அதற்கு முன்னே நடந்து சென்ற விபீஷணனுக்குப் பின்னும் விட்டு, நகரத்தை விட்டு வெளியே வந்தான். பிறகு பெரும் பணிவு கொண்ட அவிந்தியன் காகுஸ்த குலத்தின் சிறப்புமிக்கவனிடம் {ராமனிடம்}, “ஓ! சிறப்புமிக்கவனே {ராமா}, அற்புதமான நடத்தை கொண்ட ஜனகனின் மகளான இந்தத் தேவியை ஏற்றுக் கொள்!” என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட இக்ஷவாகு குலத்தின் வழித்தோன்றல் {ராமன்}, அற்புதமான தனது தேரில் இருந்து இறங்கி, கண்ணீரால் குளித்திருக்கும் சீதையைக் கண்டான்.

துயரத்துடனும், புழுதி படிந்த மேனியுடனும், தலையில் சடாமுடியுடனும், அழுக்கடைந்த ஆடை உடுத்தியும் தனது வாகனத்தில் {பல்லக்கில்} அமர்ந்திருந்த அந்த அழகான மங்கையைக் {சீதையைக்} கண்ட ராமன், தனது மதிப்புக்கு ஏற்படப்போகும் களங்கத்திற்கு அஞ்சி அவளிடம் {சீதையிடம்}, “விதேகத்தின் மகளே {சீதை}, நீ விரும்பிய இடத்திற்குச் செல். இப்போது நீ விடுபட்டாய்! நான் என்ன செய்ய வேண்டுமோ அது செய்யப்பட்டது! ஓ! அருளப்பட்ட மங்கையே, என்னைக் கணவனாகக் கொண்ட நீ, ஒரு ராட்சசனின் வசிப்பிடத்தில் கிடந்து முதிர்ந்து விடக்கூடாது! இதற்காகவே நான் அந்த இரவு உலாவியைக் கொன்றேன். ஆனால், அறநெறிகளின் அனைத்து உண்மைகளையும் அறிந்த எங்களைப் போன்ற ஒருவன், மாற்றான் கைகளில் விழுந்த ஒரு பெண்ணை எவ்வாறு ஒருக்கணமேனும் அணைக்க முடியும்? ஓ! மிதிலையின் இளவரசியே, நீ கற்புடையவளோ, கற்பற்றவளோ, நாயால் நக்கப்பட்ட வேள்வி நெய்யைப் போன்ற உன்னுடன் இன்பமாக இருக்க இனி நான் துணிய மாட்டேன்!” என்றான் {ராமன்}.

இந்தக் கொடும் வார்த்தைகளைக் கேட்ட அந்த வழிபடத்தக்க பெண் {சீதை}, இதயத்தில் ஏற்பட்ட துயரத்தால், வேர்களில் துண்டிக்கப்பட்ட வாழை மரம் போலத் திடீரெனக் கீழே விழுந்தாள். தான் அடைந்த மகிழ்ச்சியின் விளைவாக அவள் முகத்தை மூடியிருந்த நிறம், வாயிலிருந்து வெளிப்படும் மூச்சுக்காற்றால் ஊதப்படும் கண்ணாடியில் இருக்கும் நீர்த்துகள்கள் போல {கண்ணாடியில் ஊதினால் எப்படி அது மங்குமோ அதுபோல} விரைவில் காணாமல் போனது. ராமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அனைத்துக் குரங்குகளும், லட்சுமணனும் இறந்தவர் போல அசையாதிருந்தனர். பிறகு தெய்வீகமானவனும், புனித ஆன்மா கொண்டவனும், தாமரையில் இருந்து தானே உதித்த அண்ட படைப்பாளனும் நான்முகனுமான பிரம்மன், தனது தேரில் வந்து ரகுவின் மகனுக்குக் {ராமனுக்கு} காட்சி கொடுத்தான். சக்ரன் {இந்திரன்}, அக்னி, வாயு, யமன், வருணன், யக்ஷர்களின் சிறப்புமிக்கத் தலைவன், புனிதமான முனிவர்கள் மற்றும் மன்னன் தசரதனும் தங்கள் பிரகாசமான தெய்வீக உருவத்துடன், அன்னங்களால் இழுக்கப்பட்ட தேரில் காட்சி கொடுத்தனர். தேவர்களாலும் கந்தர்வர்களாலும் நிறைந்த ஆகாயம், நட்சத்திரங்களை ஆடையாகக் கொண்ட இலையுதிர்கால {சரதகால} வானம் போல இருந்தது.

பிறகு, தரையில் இருந்து எழுந்த அருளப்பட்டவளும், புகழ்பெற்றவளுமான விதேக இளவரசி {சீதை}, அங்கே இருந்தவர்களுக்கு மத்தியில் அகன்ற மார்பு கொண்ட ராமனிடம், “ஓ! இளவரசே, ஆண்களிடமும், பெண்களிடமும் எவ்வாறான நடத்தையைப் பின்பற்ற வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் நீர். எனவே, எந்தத் தவறாலும் நான் உம்மைக் குற்றப்படுத்தவில்லை. ஆனால், எனது வார்த்தைகளையும் கேளும்! எப்போதும் நகரும் தன்மை கொண்ட காற்று {வாயு} அனைத்து உயிருக்குள்ளும் இருக்கிறது. நான் பாவமிழைத்திருந்தால், அவன் {வாயுத்தேவன்} எனது உயிர் சக்திகளைக் கைவிடட்டும் {எனது உயிரைப் பறிக்கட்டும்}. ஓ! நான் பாவமிழைத்திருந்தால், (நான் ஏற்கனவே அழைத்திருக்கும்) காற்றைப் {வாயுவைப்} போலவே, நெருப்பு {அக்னி}, நீர், ஆகாயம், பூமி ஆகியனவும் எனது உயிர்ச்சக்திகளைக் கைவிடட்டும். ஓ! வீரரே, நான் கனவிலும் வேறொருவனின் உருவத்தைக் கூட நினைத்துப் பார்த்ததில்லை என்பது உண்மையானால், முன்பு தேவர்களால் நியமிக்கப்பட்டது போலவே நீர் எனக்குத் தலைவராக இருப்பீராக!” என்றாள்.

சீதை பேசிய பிறகு, மொத்த பகுதிகளுக்கும் கேட்கும்படி, உயர் ஆன்மா கொண்ட குரங்குகளின் இதயத்தை மகிழ்விக்கும் வகையில் வானத்தில் ஒரு புனிதமான குரல் கேட்டது. “ஓ! ரகுவின் மகனே {ராமா}, சீதை உண்மையையே சொன்னாள்! நான் வாயுத்தேவன். மிதிலையின் இளவரசி பாவமற்றவள்! எனவே, ஓ! மன்னா, நீ உன் மனைவியைச் சேர்வாயாக!” என்று வாயுத்தேவன் சொன்னது கேட்டது. பிறகு, நெருப்பு தேவன் {அக்னி தேவன்}, “ஓ! ரகுவின் மகனே {ராகவா = ராமா}, நான் அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் வசிப்பவன்! ஓ! காகுஸ்தனின் வழித்தோன்றலே, மிதிலையில் இளவரசி {மைதிலி = சீதை} நுண்ணியத் தவறையும் செய்யாத குற்றமற்றவள் ஆவாள்!” என்றான். பிறகு வருணனும், “ஓ! ரகுவின் மகனே {ராமா}, “அனைத்து உயிர்களின் உடல்களில் உள்ள சுவைகள் {ரசங்கள் = ரசனைகள்}, என்னிடம் இருந்தே இருப்பை அடைகின்றன! நான் சொல்கிறேன், மிதிலையின் இளவரசியை ஏற்றுக் கொள்வாயாக!” என்றான்.

பிறகு பிரம்மன், “ஓ! காகுஸ்தனின் வழித்தோன்றலே {ராமா}, ஓ! மகனே, நேர்மையும், சுத்தமும், அரச முனிகளின் கடமைகள் அனைத்தையும் கொண்ட உனது இந்த நடத்தை விசித்திரமாக இல்லை {ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை}. இருப்பினும், எனது வார்த்தைகளைக் கேள்! ஓ! வீரா, தேவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், யக்ஷர்கள், தானவர்கள் மற்றும் பெரும் முனிவர்களுக்கு எதிரியானவனை {ராவணனை} நீ கொன்றிருக்கிறாய். எனது அருளாலேயே அவன் {ராவணன்} இதுவரை எந்த உயிரினத்தாலும் கொல்லப்பட முடியாதவனாக இருந்தான். உண்மையில், ஒரு காரணத்திற்காகவே நான் அவனிடம் பொறுமை காத்து வந்தேன்! எனினும், அந்த இழிந்தவன் {ராவணன்} தனது அழிவிற்காகவே சீதையை அபகரித்தான். சீதையைப் பொறுத்தவரை, நளகூபரனின் சாபத்தினால் நான் அவளைப் பாதுகாத்தேன். பழங்காலத்தில், விருப்பமில்லாத பெண்ணை அவன் எப்போது அணுகினாலும் அவன் தலை நூறு துண்டுகளாகச் சிதறிப் போகும் என அவனே {நளகூபரனே} ராவணனைச் சபித்தான். எனவே, எந்தச் சந்தேகமும் கொள்ளாதே! ஓ பெரும் புகழ் கொண்டவனே, உனது மனைவியை ஏற்றுக் கொள்! ஓ! தெய்வீகப் பிரகாசம் கொண்டவனே, உண்மையில், தேவர்களின் நன்மைக்காகவே நீ இந்தப் பெரும் சாதனையைச் சாதித்திருக்கிறாய்!” என்றான் {பிரம்மன்}.

பின்பு அனைவரிலும் கடைசியாகத் தசரதன், “ஓ! குழந்தாய்! நான் உன்னிடம் நிறைவு கொண்டேன். நானே உன் தந்தையான தசரதன்; நீ அருளப்பட்டிருப்பாயாக! ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, உனது மனைவியைத் திரும்ப அழைத்துக் கொண்டு, உனது நாட்டை ஆட்சி செய் என நான் உனக்கு உத்தரவிடுகிறேன்!” என்றான். அதற்கு ராமன், “ஓ! மன்னர்களுக்கு மன்னரே, நீர் எனது தந்தை என்றால், நான் உம்மை மதிப்புடன் வணங்குகிறேன். உண்மையில் நான், உமது உத்தரவின் பேரில் அழகிய நகரமான ஆயோத்யைக்குத் திரும்புவேன்” என்றான்.” 

ஆட்சிக்கட்டிலில் ராமன்! – வனபர்வம் பகுதி 289ஆ-ராமன் தன் பரிவாரங்கள், லட்சுமணன் மற்றும் சீதையுடன் அயோத்திக்குப் புறப்பட்டது. வழியில் கிஷ்கிந்தையில் இறங்கி அங்கதனுக்குப் பட்டத்து இளவரசனாகப் பட்டம் சூட்டியது; நந்திகிராமத்தில் இருந்த பரதனிடம் ஹனுமானைத் தூதனுப்பியது; ராமனின் பட்டாபிஷேகம்; சுக்ரீவன், விபீஷணன் ஆகியோருக்குத் தகுந்த வெகுமதிகளை ராமன் கொடுத்தனுப்பியது; ராமன் கோமதியாற்றங்கரையில் பத்து குதிரை வேள்விகளைச் செய்தது…

“மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, விழியோரம் சிவந்த ராமன் இப்படிப் பதிலளித்ததும், மகிழ்ந்த அவனது தந்தை {தசரதன்} “அயோத்தி திரும்பி நாட்டை ஆட்சி செய்! ஓ! பெரும் புகழ்கொண்டவனே {ராமா}, உனது {வனவாசத்தின்} பதினான்கு {14} வருடங்கள் முடிவடைந்தன” என்றான். தசரதனால் இப்படிச் சொல்லப்பட்டு, ராமன் தேவர்களை வணங்கி, நண்பர்களால் வழிபடப்பட்டு, புலோமனின் மகளுடன் இணைந்த தேவர்கள் தலைவனைப் போலத் தனது மனைவியுடன் இணைந்தான். பிறகு அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் அவிந்தியனுக்கு ஒரு வரத்தைக் கொடுத்தான். திரிஜடை என்ற ராட்சச பெண்ணுக்கு செல்வங்களையும் மரியாதைகளையும் அளித்தான். இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களுடன் இருந்த பிரம்மன், ராமனிடம், “ஓ கௌசல்யையைத் தாயாகக் கொண்டவனே {ராமா}, உனது இதயத்தில் இருக்கும் எந்த வரங்களை நாங்கள் கொடுப்பது?” என்று கேட்டான்.

அதன்பேரில் ராமன், அவர்களிடம், அறத்தில் உறுதியான பற்றும், எதிரிகளைப் பொறுத்தமட்டில் வெல்லப்பட முடியாதவனாக இருக்க வேண்டும் என்றும், ராட்சசர்களால் கொல்லப்பட்ட அனைத்துக் குரங்குகளும் உயிர் மீள்வதையும் வேண்டினான். “அப்படியே ஆகட்டும்’ என்று பிரம்மன் சொன்னதும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயிர்மீட்கப்பட்ட அந்தக் குரங்குகள் போர்க்களத்தில் இருந்து எழுந்து வந்தனர். பெரும் நற்பேறுபெற்ற சீதையும் ஹனுமானுக்கு ஒருவரம் அளித்தாள். “ஓ! மகனே {ஹனுமானே}, ராமரின் சாதனைகள் (புகழ்) நீடிக்கும் வரை உனது வாழ்வும் நீடிக்கட்டும்! மேலும், மஞ்சள் கண்களைக் கொண்ட ஹனுமானே, மேலும், தெய்வீக உணவுகளும், பானங்களும் எனது அருளால் உனக்கு எப்போதும் கிடைக்கட்டும்” என்றாள் {என்ற வரத்தை ஹனுமானுக்கு அளித்தாள் சீதை}.

பிறகு களங்கமற்ற சாதனைகள் செய்த அந்த வீரர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் மறைந்தனர். ஜனகனின் மகளுடன் {சீதையுடன்} ராமன் இணைந்திருப்பதைக் கண்ட சக்ரனின் {இந்திரனின்} தேரோட்டி {மாதலி}, மிகவும் மனம் நிறைந்து, நண்பர்களுக்கு மத்தியில், “ஓ! கலங்கடிக்கமுடியாத பராக்கிரமம் கொண்டவனே, தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், நாகர்கள், மனிதர்கள் ஆகியோரின் துயரங்களை நீ விலக்கியிருக்கிறாய். எனவே, இந்தப் பூமி ஒன்றாக நிலைத்திருக்கும் வரை, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள் ஆகியோர் உன்னைக் குறித்துப் பேசிக் கொண்டே இருப்பார்கள்” என்றான்.

இவ்வார்த்தைகளை ராமனுக்குச் சொன்ன மாதலி, அந்த ரகுவின் மகனை வழிபட்டு, ஆயுதம் தாங்குவோரில் முதன்மையான அவனிடம் {ராமனிடம்} விடைபெற்றுக்கொண்டு, சூரியப் பிரகாசம் கொண்ட அதே தேரில் சென்றான். சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, விபீஷணன், சுக்ரீவனைத் தலைமையாகக் கொண்ட குரங்குகளுடன் சீதையை முன்னிட்டுச் சென்ற ராமன், இலங்கையின் பாதுகாப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, அதே பாலத்தின் வழியாகக் கடலை மீண்டும் கடந்தான். பயணிப்பவனின் விருப்பத்திற்கேற்ற இடத்திற்குச் செல்ல வல்ல புஷ்பகம் என்று அழைக்கப்பட்ட வானுறையும் அந்த அழகிய தேரில் அவன் பயணித்தான். ஆசைகளை அடக்கிய அவனை {ராமனை}, அவனது முதன்மையான ஆலோசகர்கள் முன்னுரிமை வரிசையில் சூழ்ந்திருந்தனர். ஏற்கனவே தான் படுத்திருந்த கடற்கரை பகுதிக்கு வந்த அந்த அறம்சார்ந்த மன்னன் {ராமன்} அனைத்துக் குரங்குகளுடன் தனது தற்காலிக வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.

பிறகு ரகுவின் மகன் {ராமன்}, உரிய நேரத்தில் குரங்குகளைத் தனது முன்னிலைக்கு அழைத்து, அவர்கள் அனைவரையும் வணங்கி, தங்கமும், ரத்தினங்களும் கொடுத்து மனநிறைவு கொள்ளச் செய்து ஒவ்வொருவராக அவர்களுக்கு விடை கொடுத்தான். குரங்குத் தலைவர்கள், கரடிகள் மற்றும் மாட்டுவால் கொண்ட குரங்குகள் அனைவரும் சென்ற பிறகு, ராமன் சுக்ரீவனும் கிஷ்கிந்தைக்குள் மீண்டும் நுழைந்தான். விபீஷணன் மற்றும் சுக்ரீவன் ஆகிய இருவருடன் புஷ்பகத்தேரில் கிஷ்கிந்தைக்குள் மீண்டும் நுழைந்த ராமன், வழியெங்கும் விதேக இளவரசிக்கு {சீதைக்கு} காடுகளைக் காட்டிக் கொண்டே வந்தான். பிறகு கிஷ்கிந்தையை அடைந்த அடிப்பவர்களில் முதன்மையான ராமன் வெற்றிபெற்ற அங்கதனை அந்த நாட்டின் பட்டத்து இளவரசனாக நிறுவினான்.

பிறகு சுமித்திரையின் மகனையும் {லட்சுமணனையும்}, அதே நண்பர்களையும் அழைத்துக் கொண்டு, தான் வந்த வழியிலேயே தன் நகரத்தை {அயோத்தியை} நோக்கி மீண்டும் சென்றான் ராமன். அயோத்தி நகரத்தை அடைந்ததும், அந்த மன்னன் {ராமன்} ஹனுமானைத் தூதுவனாகப் பரதனிடம் அனுப்பினான். வெளிப்புறக் குறிப்புகளைக் கொண்டு பரதனின் நோக்கங்களை உறுதி செய்து கொண்ட ஹனுமான், அவனுக்கு {ராமனின் வரவைக் குறித்த} நற்செய்தியைச் சொன்னான். அதன்பிறகு பவன குமாரன் {ஹனுமான்} திரும்பி வந்ததும், ராமன் நந்திகிராமத்திற்குள் நுழைந்தான். அந்த நகரத்திற்குள் நுழைந்த ராமன், புழுதி படிந்த தேகமும், கந்தலாடை உடுத்தியும், தன் முன்னிலையில் தனது அண்ணனின் {ராமனின்} பாதுகைகளை வைத்துக் கொண்டும் அமர்ந்து இருக்கும் பரதனைக் கண்டான். ஓ! பாரதக் குலத்தின் காளையே இப்படிப் பரதனுடனும், சத்ருக்னனுடனும் சேர்ந்த ரகுவின் பலம் வாய்ந்த மகன் {ராமன்}, சுமித்திரையின் மகனுடன் {லட்சுமணனுடன்} கூடி பெரும் மகிழ்ச்சி கொள்ள ஆரம்பித்தான். தங்கள் அண்ணனுடன் சேர்ந்த பரதனும் சத்ருக்னனும் சீதையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தனர். பிறகு, திரும்பி வந்த தனது அண்ணனை வழிபட்ட பரதன், மிகுந்த மகிழ்ச்சியுடனும் தன்னிடத்தில் புனிதமாக, அடைக்கலமாக வைக்கப்பட்டிருந்த நாட்டைத் திருப்பிக் கொடுத்தான். பிறகு வசிஷ்டரும், வாமதேவரும் சேர்ந்து, அந்த வீரனுக்குத் {ராமனுக்கு} திருவோணம் {சிரவண} நட்சத்திரத்தின் எட்டாவது முகூர்த்தத்தில் [1] (அயோத்தியின்} ஆட்சிக்கட்டிலில் அமர்த்திப் பட்டம் சூட்டினர். இப்படிப் பட்டம் நிறுவப்பட்ட பிறகு, மிகுந்த மனநிறைவோடிருந்த குரங்குகள் மன்னன் சுக்ரீவனுக்கும், அவனது தொண்டர்களுக்கும் மற்றும் புலஸ்திய குலத்தின் விபீஷணனுக்கும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்ல ராமன் விடை கொடுத்து அனுப்பினான்.(அபிஜித் முகூர்த்தமே {கிட்டத்தட்ட மதிய வேளை} ஒரு நாளின் எட்டாவது முகூர்த்தமாக இருக்கிறது. ஒரு முகூர்த்தம் என்பது 48 நிமிடங்களைக் கொண்டதாகும். ஒரு நாளுக்கு {அதாவது 24 மணி நேரம்} 30 முகூர்த்தங்களாகும். நீலகண்டரால் விளக்கப்பட்ட வைஷ்ணவ விண்மீன் அறிவியல் சிரவவம் என்று அழைக்கப்படுகிறது என்கிறார் கங்குலி.)

பலவகையான இன்பம்தரக்கூடிய பொருட்களைக் கொடுத்து அவர்களை வழிபட்டு, அந்த நேரத்திற்குத் தகுந்த அனைத்தையும் செய்து, துயரம் நிறைந்த இதயத்துடன் ராமன் தனது நண்பர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினான். பிறகு புஷ்பகத் தேரை வழிபட்ட ரகுவின் மகன் {ராமன்}, அதை மகிழ்சியுடன் வைஸ்ரவணனிடம் திருப்பிக் கொடுத்தான். பிறகு தெய்வீக முனிவரைத் {வசிஷ்டரைத்} துணையாகக் கொண்டு, அந்தணர்களுக்கு மூன்று மடங்கு கொடையளித்து, எத்தடையுமின்றிக் கோமதி ஆற்றங்கரையில் பத்து குதிரை வேள்விகளை நடத்தினான்.

துயர்களைந்த யுதிஷ்டிரன்! – வனபர்வம் பகுதி 290-ராமன் கதையைச் சொல்லிய மார்க்கண்டேயர், யுதிஷ்டிரனுக்குத் துணைவர்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டி அவனைத் தேற்றுவது…

“மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {யுதிஷ்டிரா}, இப்படியே அளவிலா சக்தி கொண்டவனான ராமன், வனவாசத்தின் விளைவாகப் பெரும்பேரிடரைப் பழங்காலத்தில் அனுபவித்தான். ஓ! மனிதர்களில் புலியே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, கவலைப்படாதே, நீ ஒரு க்ஷத்திரியன்! மேலும் நீயும் கரங்களின் வலிமையைச் சோதிக்கும் பாதையிலேயே சொல்கிறாய். அந்த வழி உறுதியாகப் பரிசுகளை ஏற்க இட்டுச் செல்லும். உன்னிடம் ஒரு துகள் அளவும் பாவமில்லை. இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், அசுரர்களும் நீ செல்லும் பாதையிலேயே செல்ல நேர்ந்தது! இது போன்ற துயரங்களுக்குப் பிறகுதான் வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்}, மருதர்களின் துணை கொண்டு விருத்திரனையும், ஒப்பற்ற நமுசியையும், நீண்ட நாக்குடைய ராட்சசியையும் {தீர்க்கஜிஹவை} கொன்றான். துணையுள்ளவன், தனது நோக்கங்களின் சாதனையை {நிறைவை} எப்போதும் ஈட்டுவான்!

தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தம்பியாகக் கொண்டவனால் {உன்னால்} போர்க்களத்தில் வெல்ல முடியாதது எது? பயங்கரப் பராக்கிரமம் கொண்ட இந்தப் பீமனும் பலம் நிறைந்த மனிதர்களில் முதன்மையானவனாக இருக்கிறான். இளைஞர்களும் வீரர்களுமான மாத்ரவதியின் {மாத்ரியின்} மகன்களும் {நகுலனும் சகாதேவனும்} பலமிக்க வில்லாளிகளாக இருக்கின்றனர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {யுதிஷ்டிரா}, இப்படிப்பட்ட துணை கொண்ட நீ ஏன் விரக்தியடைகிறாய்? இவர்கள் மருதர்களின் துணை கொண்ட வஜ்ரம் தாங்குபவனின் {இந்திரனின்} படையை அழிக்கும் திறன் கொண்டவர்களாவர். தெய்வீக வடிவில் இருக்கும் இந்தப் பலமிக்க வில்லாளிகளைத் துணையாகக் கொண்ட நீ, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, உனது அனைத்து எதிரிகளையும் போர்க்களத்தில் வெல்வாய் என்பது நிச்சயம்!

பலம் மற்றும் சக்தியில் கர்வமடைந்திருந்த தீய மனம் கொண்ட சைந்தவனால் {ஜெயத்ரதனால்}, துருபதனின் மகளான இந்தக் கிருஷ்ணை {திரௌபதி} பலவந்தமாக அபகரிக்கப்பட்ட போது, இந்தப் பலமிக்க வீரர்களின் பயங்கரச் சாதனைகளால் மீட்கப்பட்டாள் என்பதைப் பார். மன்னன் ஜெயத்ரதன் வீழ்த்தப்பட்டு, உனக்கும் முன்னால் சக்தியற்று கிடத்தப்பட்டான் என்பதைப் பார். கிட்டத்தட்ட எந்த உதவியுமற்று, பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பத்து கழுத்து ராட்சசனைப் {ராவணனைப்} போர்க்களத்தில் கொன்று, விதேக இளவரசி ராமனால் மீட்கப்பட்டாள்! உண்மையில், (அந்தப் போராட்டத்தில்) ராமனுக்குத் துணையாக இருந்தது, குரங்குகளும், கரிய முகம் கொண்ட கரடிகளுமே ஆவர். அவர்கள் மனிதர்கள் அல்லர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இவை அனைத்தையும் உனது மனதில் நினைத்துப் பார்! எனவே, குருக்களில் முதன்மையானவனே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, (நடந்தது) அத்தனைக்கும் வருந்தாதே! உன்னைப் போன்ற சிறப்புமிக்க மனிதர்கள், ஓ! எதிரிகளை அடிப்பவனே {யுதிஷ்டிரா}, துன்பத்தில் நாட்டம் கொள்ளமாட்டார்கள்!” {என்றார் மார்க்கண்டேயர்}

வைசம்பயானர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படியே மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} மார்க்கண்டேயர் ஆறுதலளித்தார். பிறகு, அந்த உயர் ஆன்மா கொண்டவன் {யுதிஷ்டிரன்}, தனது துயரங்களை விலக்கிவைத்து, மீண்டும் ஒரு முறை மார்க்கண்டேயரிடம் பேசினான்.”

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கம்பராமாயணத்தில் திருமந்த்ரார்த்தம்-ஸ்ரீ சேஷையங்கார்‌ ஸ்வாமிகள்-

September 22, 2025

எம்பெருமான்‌ சர்வ சக்தன்‌ என்பதைப்‌ பால காண்டத்திலும்‌, பக்த ரக்ஷண தீக்ஷிதன்‌ என்பதை அயோத்யா காண்டத்திலும் –பாகவத பரதந்த்ரன் என்பதை ஆரண்ய காண்டத்‌திலும்‌ சரணாகதி தர்‌மம்‌ அபயப் பிரதான வைபவ மிவற்றை யுத்த காண்‌டத்திலும்‌, ஏனைய தர்மங்களை மற்ற இடங்களிலும்‌ கம்பர்‌ வெளி யிட்டிருப்பதைப்‌ பரக்கப் பார்க்கலாம்‌,

கிஷ்கிந்தா காண்டத்தில்‌ ௮னுமப் படலத்தில் ,-மாற்றமஃது உரைத்தலோடும்‌’இல்லாத வுலகத்‌தெங்கும்‌”, என்னும்‌ செய்யுள்களாலும்‌ ** அஞ்சனைக்கொரு சிறுவன்‌” என்று தொடங்கி , துன்‌பினைத் துடைத்‌து மாயத் தொல்வினை”’ என்னுமளவான செய்யுள்களாலும்‌ சொல்லப்பட்ட ஆசார்ய லஷணமான சாஸ்திரார்த்த தத்வ ஞானமும்‌, சதாசார சீலமும்‌ பரத்வ நிச்சயமு முடையனாய்‌, இயல்பாகவே பராநுகூல பரனும்‌ ஸ்வ ப்ரயோஜனத்தில்‌ விருப்ப மில்லாதவனுமா யிருப்பானொருவன்‌,-மஞ்செனத் திரண்ட கோல மேனிய’”என எம்பெருமானை ஸாக்ஷாத் கரித்தவாறே அவனனுக்ரஹத்தால்‌ லோகத்தாரை உஜ்ஜீவிக்கச் செய்யம்‌ சதாசாரிய னாவனென்பது :’மாணியாம் படிவமன்று ” என்‌னுஞ் செய்யுளால் குறிக்கப் பட்டிருக்‌றது –

இப்படியான சதாசார்யனைச்‌ சிஷ்ய யாத்திரையில் பிரவிர்த்திப்பித்து, சம்சார துக்கத்தில் அகப்‌பட்டுழலும் அவரை உடைமை யென்னும்‌ மமகார நிவர்த்தி கண்டு உஜ்ஜீவிக்கும்படி எம்பெருமான்‌ திருவுள்ளம் பற்றுவன்‌ என்பதை, ““அணிகலக் குறியினாலே , வென்றி யானடியன் தன்னை வேறு கொண்டிருந்து கூறித்‌, தென்றிசைச் சேறி யென்றான வனருள் சிதைவதாமோ என்னும்‌ சுந்தர காண்டச்‌ செய்யு ளாலும்‌ தெளியலாம்‌,

இராமாவதார ரஹஸ்யத்தை ஹனுமான்‌ வாக்கால்‌, இராவணனுக்கு அறிவுறுத்தி யிருப்பதையும்‌,-அன்னவர்க் கடிமை செய்வேன் நாமமுமனுமனென்பேன்‌”?
என்ன ஹனுமான வாக்கால் காட்டும்‌ ஆண்டானடிமைத் திறனையும்‌ கருதுமிடத்‌து ஹனுமானை ஈசனருள் பெற்று உலகத்தார்க்கு உறுதி பயக்கும்‌ உண்‌மைப் பொருளை உபதேசிக்கும்‌ நல்லாசிரியனாகவும்‌, பரமபதியின் பிரிவாற்றாமல்‌ துன்புறும்‌ சீதைப் பிராட்டியாருக்கு பதியின்‌ அருள் சின்னத்தைக் காட்டி துயரை நீக்கி பதியை யடைய ஹேது வாயிருந்த திருவாழியை சேதனர்கள்‌ சம்சாரத் துக்கத்தினின்று கரையேறி
எம்பெருமானை யடையும் ஹேதுவான திருமந்த்ரமாகவும் உய்த்து உணரவைத்துக்
கம்பர் சுந்தர காண்டத்தில் ஆசார்ய தர்மத்தையும்‌ திருமந்திர மேம்‌பாட்டையும்‌ வெளியிட்டிருப்பது
நன்கு தெளியத் தக்கது-சுந்தர காண்டத்தில் இந்
துண்ணிய கருத்துக்களடங்கிய உருக்காட்டு படலத்‌தில்‌ 10 செய்யுள்கள் காணத்தக்கது –௮றுபத்‌து மூன்றாவது மீட்டுமுரை”யென்ற செய்யுள் முதல்‌ எழுபத்து இரண்டாவது
-பாழிய பணைத் தோள்‌”
என்‌ற செய்யுளீறாகப்‌ பத்துப் பாசுரங்களிலும்‌ உள்ளுறைப் பொருள் உணர வேண்டும்-இக் காண்டத்தில்‌ ஜீவாத்மாவினுடைய ஸ்வரூபத்தையும்‌, ஆசாரிய கிருத்தியத்தையும்‌ மிகக்‌ தெளிவாயும்‌ அழகாயும்‌சித்தாந்தம் செய்திருப்பதால்‌, சுந்தர காண்டமெனப்‌ பெயர் கிடைத்தது என்பதேயாம்‌.

ததோ ராவணநீதாயாஃ ஸீதாயாஃ ஷத்ருகர்ஷநஃ. இயேஷ பதமந்வேஷ்டுஂ சாரணாசரிதே பதி৷৷5.1.1৷৷-முதல் ஸ்லோகார்த்தம் -மேலே கிஷ்கிந்தா காண்டத்‌திற் கண்டபடி நிகழ்ந்த பிறகு சத்‌துருவை நாசம் பண்ணத் தகுந்த ஹநுமான்‌ இராவணனாற்‌ பெயர்த்துக் கொண்டு போகப்பட்ட சீதாப் பிராட்டியினுடைய இருப்பிடத்தைக்‌ தேடுவதற்காக ஆகாய மார்க்கத்திற்‌ பிரவேசிக்க எண்ணங் கொண்டார்‌?!-சேதனர்களை உய்யக்‌ கொள்வதற்காகவே ஏற்படுத்திய முத்‌ரையையும்‌ ஆஜ்ஜையையும்‌ பெற்ற பிற்பாடு அஜ்ஞானமான பகைவனை வேரோடு வெல்லத் தக்க ஆசாரியன்‌, (ஹூுமான்‌) பூர்வாசாரியர்களால் அநுஷ்டிக்கப்பட்ட
ஸத் ஸம்பிரதாய மார்க்கத்தில்‌ நிலைத்தவராய்‌, அவிவேகத்தால்‌ தனக்கு ஸ்வாதினம் பண்ணப்பட்ட சேதனனுடைய ஸம்ஸார மண்டலத்தையும்‌,பகவத்‌ ப்ராப்‌தியிலுண்டான எண்ணத்தையும்‌, ஸாத்விக ஸம்பாஷண முதலான அடையாளத்தையும் தேட நினைத்தார்-

கழுந்தரா யுன கழல் பணியாதவர் கதிர் மணி முடிமீதே
அழுந்த வாளிகள் தொடு சிலை ராகவ வபி நவகவிநாதன்‌
விழுந்த நாயிற தெழுவதன் முன் மறை வேதியருடன் ஆராய்ந்து
எழுந்த நாயிறு விழுவதன் முன்கவி பாடின தெழ நூறே.–
தனியன்

“தேவபாடை யினிக் கதை செய்தவர்‌
மூவரானவர் தம்முள் முந்திய
நாவினா ருரையின்படி நான்‌ றமிழ்ப்‌
பாவினா லிதுணர்த்திய பண்பரோ?
, —வால்மீகி வசிஷ்டர் போதாயனர் -மூவர்
தமிழிலே தாலை நாட்டி—பார் மேல்‌, நம்பு பா மாலையாலே நரருக்கின்‌ றமுதமீந்தான்‌

மீட்டிமுரை வேண்டுவன வில்லையென மெய்ப் பேர்‌
தீட்டியது தீட்டரிய செய்கையது செவ்வே
நீட்டி தென நேர்ந்தனனெனா நெடிய கையாற்‌
காட்டினனொராழியது வாணுதலி கண்டாள்‌
–சுந்தர காண்டம்‌ உருக் காட்டு படலம்‌. பாட்டு-63,

மீட்டுமுரை – முன்னமே-பகவானுடைய சொருபத்தையும்‌, செளலப்யத்தையும்‌ காருண்யத்தையும்‌, சேதனனுக்கும்‌ பகவானுக்குமுள்ள சம்பந்தத்தையும்‌, சேதனனுடைய பூர்வ வாசனையையும்‌, ஆசாரியன்‌ (ஹநுமான்‌) எடுத்துச்‌ சொன்ன பின்‌ மற்றும் சொல்ல வேண்டிய விஷயம்‌
வேண்டுவனவில்லை–இனி மேல்‌, சேதனனால் கேட்‌கப் பெறுவதும்‌, ஆத்மா உஜ்ஜீவிக்கும் பொருட்‌டுள்ள அவசியமானதுமான உபாயம்‌ வேறு யாதொன்றுமில்லை்‌
என– என்று, (இவ் விதமாகச்‌ சொல்லி,)
மெய்ப்பேர் தீட்டியது –நாராயண என்‌னும்‌ பெயரும்‌ உயிருமான திரு நாமத்துடன்‌ ஓம்‌ நமோ என்னும் உடலாகிய (மெய்யாகிய) எழுத்துக்‌களைச் சேர்த்துச் செய்த திவ்ய மங்கள கரமான அஷ்டாஷரம்‌ என்ற திரு மந்தரமொன்றுண்டு,
தீட்டரியசெய்கையது–அந்தத் திருமந்திரமானது எழுதவரிது, எழுதற்பாலதன்று, எழுதாக்கிளவி, (வேத வாக்கியம்‌) அதை எழுத முடியாது, எழுதுதற்‌கடங்காது, எழுதிக் கற்‌றுக் கொள்வதிற் பயனில்லை,௮து உபதேச மந்திரம்‌, உபதேசக் க்ரமத்தா லடையத் தக்கது யொழிய வேறல்ல. (ஆகையால்‌)செவ்‌வே–நேராக (முறைப்படி) ௮தாவது குரு பரம்‌பரா பூர்வமாக, அல்லது உபதேச விதிப்படி
நீட்டிதென–நீ சேதனனுககு இந்த அஷ்டாக்ஷர மந்த்ரத்தை உபதேசம் பண்ணு என்று சொல்லி,
நேர்ந்தனன் -எனக்குப்‌ பகவான் கொடுக்தார்‌, ௮தாவது ஆஞ்ஞாபித்தார்‌, என–என்று உபதேசம்‌ பண்ணக் கருதி, நெடிய கையால்‌– விசேஷ அர்த்த புஷ்டி யுள்ளதும்‌, ஞான வித்தகந் தரித்த செங்கை ‘என்பதற்கிணங்க ஞானக் குறியுமாகிய சின் முத்ரையினால்‌ காட்டினனொராழி – தனது இருக்கையை வட்ட வடிவாய்ச்‌ சின் முத்ரா ரூபமாக வைத்துக் கொண்டு, பகவத் ஆஜ்ஞா ரூபமான வேத வாக்கியமாயும்‌, மிகவும்‌ ஆழ்ந்த பொருள்களை யுடையதாயு மிருப்பதால்‌ ஆழியென்று சொல்லத் தக்கதாயுள்ள திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தை ஹனுமானாகிய வாசாரியன்‌ சீதை யாகிய சேசனனுக்கு உபதேசித்தார்‌.
அது வாணுதலி கண்டாள்‌–சேதனனும்‌ உபதேதசம்‌ பெற்ற பின்‌ அந்தத் திருமந்திரத்தின்‌ பெருமையை ௮றிந்தான்‌- அதனால் அகம் மகிழ்ந்தான்-௮கத்தினழகு முகத்தில் தெரியுமாதலால்‌ ஆத்மா வடைந்த ஆனந்தத்தை வெளிப் படுத்திக் காட்டிய முக மலர்ச்‌சி கொண்டு, வாணுதலி கண்டாள் எனக் கூறப்பட்‌டன. இன்னும்‌, திருமந்திர உபதேசத்துக்குரி வைஷ்ணவ சின்னமான ஊர்த்துவ புண்டர மணிந்த நெற்றியும்‌ பகவத் பார தந்திரியமுமுடைய சேதனனென்பது தோன்ற வாணுதலி யென்றாரென்பதும்‌ பொருந்தும்‌-எனவே ௮னுமான்‌ சீதைக்கு ஸ்ரீராமனது கணையாழியைக் கொடுத்தார்‌ என்பது இச் செய்யுளுக்குச்‌ சாமானியக் கருத்தாயிருப்பினும்‌, விசேஷார்த்தமாக, அனுமானாகிய ஆசாரியன்‌ ராஷஸ மண்டலமாக சம்சார பந்தத்தால்‌ நலிவடையா நின்ற சீதையாகிய சேதனனுக்குத்‌ திரு வாழியாகிய திருவஷ்டாஷாரத்தை வேத விதிப்படி. பிரஸாதித்தார்‌ என்பதையும்‌ இச் செய்யுள்‌ ௮டக்கிக்‌ கொண்டி ருக்கிறது.

அது வாணுதலி கண்டாள்‌” என்று சொன்ன பின்‌ அந்தச் சேதனலுக்குண்டான பரவசச்தை வெளிப்படுத்த விரும்பிப்‌ பின்‌ வரும்‌ இரண்டு செய்யுள்களின் முலம்‌ பலவித திருஷ்டாந்தங்களுடன்‌ உபபாதிக்கிறார்‌,

இறந்தனர் பிறந்த பயனெய்தினர் கொலென்கோ
மறந்தனரறிந் துணர்வு வந்தனர் கொலென்கோ
துறந்த வுயிர் வந்திடை சொடர்ந்தது கொலென்கோ
திறந்தெரிவ தென்னை கொலி நன்னுதலி செய்கை
–64-

(இதுவும்‌ உபதேச அநந்தரம்‌)
இந் நன்லுதலி செய்கை-இத் திவ்விய முக மலர்ச்சியை யடைய சேதனனுக்கு ஜாயமான கடாஷத்தாலுண்டான ஆனந்த அனுபவத்தை (எவ் வனுபவத்துக்கு ஈடாகச்‌
சொல்லுதல்‌ கூடுமென்று ஆராய்ந்தால்‌) இறந்தனர்‌ – ஜீவாத்மா சம்சார பந்தத்திலகப்பட்டு இந்திரியங்களாற் கட்டுண்டு பூர்வ ஞானமே மேலிடாது அஞ்ஞானமான அந்தகாரத்தி லகப்‌பட்டுழன்று ஜென்ம மெடுத்தும்‌ ஜென்ம சாபல்யமான கிருத்தியங்கள்‌ யாதொன்னுஞ் செய்யாமல்‌, திருவடிகளை அடைய வேண்டிய கருமங்களிருந்தும்‌ விலகி ஜீவப் பிரேதம் போலிருக்கும்‌ பயனற்ற ஆத்ம கோடிகள்‌ ; பிறக்க பயனெய்தினா்‌ கொலென்கோ – திடீரென்று பகவத் ஜாயமான கடாஷ விசேஷத்தாலே உலகில் பிறந்து ௮டைய வேண்டிய புருஷார்த்தங்களை அடைந்தால்‌ அந்த ஜீவர்களுக்கு எவ் வளவு ஆனந்த முண்டாகுமோ ௮வ்வளவு சந்தோஷம்‌ உண்டாயிற்றென்று சொல்‌லலாமோ ; (அல்லது) அறிந்து – சத் சம்பிரதாய மார்க்கக்தை யனுஷ்டித்து வந்து, பகவத் சரணாரவிந்தங்களில் ஈடுபட்டிருந்து வந்து; (இப்பால்‌)மறந்தனர்‌ – ஜென்மாந்தர வாசனையையும்‌, பகவானுடைய சராணாரவிந்தங்களின்‌ வைபவத்தையும்‌ ஒரு கால விசேஷத்தில்‌ மாயையினால்‌ அடியோடு மறந்திருக்க ஒரு ஜீவன்‌ உணர்வு வந்தனர் கொலென்கோ- மறுபடியும் குருமுகமாகப்‌ பூர்‌வ அனுஷ்டானத்தையும்‌ தன் நிலைமையையும்‌ திடீரென்று அறிந்து உஜ்ஜீவுக்கும் படியான ஒரு ஹேது நேர்ந்தால்‌ ௮ப்போது என்ன குதூகலமுண்டாகுமா அதற்குச் சமமாகச் சொல்லலாமோ ;(அல்லது) துறந்த உயிர்‌-போன பிராணன்‌; வந்து இடை தொடர்ந்தது கொலென்கோ – மறுபடியும்‌ உடலுட்புகுந்து உடலும்‌ உயிரும்‌ கூடிற்று என்றால் எவ்வளவு ஆனந்தமுண்டூ அவ்வளவு ஆனந்தத்‌தை இந்தச் சேதனன்‌ அடைந்தானென்று தான் சொல்லலாமோ, (செய்கை) திறந் தெரிவது என்னை கொல்‌ -௮ந்த ஆனந்தத்தின்‌ அளவையும்‌ பெருமையையும்‌ வன்மையையும்‌ என்ன வென்றெடுத்துரைப்பது,

இழந்த மணி புற்றர வெதிர்ந்‌த தெனலானாள்‌
பழந்தன மிழந்தன படைத்தவரை யொத்தாள்‌
குழந்தையை யுயிர்த்த மலடிக்குவமை கொண்டாள்‌
உழந்து விழி பெற்றதொருயிர்ப்‌ பொறையு மொத்தாள்‌–65-

(தவிரவும்‌,) புற்றரவு – இந்த சம்சார மண்‌டலத்தில்‌ ஜீவாத்மா;
இழந்த மணி – (தான்‌ அயர்‌வுற்றிருந்த போது, ௮தாவது தான்‌ மாயையினால்‌
மயக்குற்று மெய்ம்மறந்து புத்தி ஸ்‌திரமில்லாமற்‌ சஞ்சல மடைந்திருந்த காலத்தில்‌) தன்னை விட்டகன்ற உயர்ந்த ரத்ன சமானமான அழுக்கற்ற
நல்லறிவை;
எதிர்ந்ததெனலானாள்‌ – மறுபடியும்‌
அடைந்தால்‌, அச்சேதனனுக்கு ௮ப்போதுண்‌டாகும்‌ களிப்பை ஓக்கும்‌;(அல்லது) இழந்தன தானே தன்னுடைய கர்மானுஷ்டானங்களினாலும்‌, ௮விவேகத்தினாலும்‌, சுயேச்சையினாலான
கிருத்தியங்களினாலும்‌ இழந்த மோக்ஷத்தை;
பழந்தனம்‌ – மிகப் பழமையாயும்‌ அநாதி பூர்வகமாயும்‌
௮நாதி காலங்களாககத் தன்னைக் காப்பாற்றுவதற்கு
ஹேதுவாயுமுள்ள ஒரு சாரமான மூல மந்திரமானதும்‌, பூமியிலுள்ள மநோ ரதங்களையும்‌ சுவர்க்க
போகங்களையம்‌ முக்தியையும் சாதித்துக் கொள்வதற்கு ஆதாரமானதுமான ஒப்பற்ற பொருளை;
படைத்தவரை யொத்தாள்‌ – மீண்டும்‌ புதையல்‌ கண்டெடுத்தாற்‌ போல்‌ ௮திக வியப்புடன்‌ புதிதாக
கிட்டினது போலடைந்தால்‌ அப்போது சேதனனுக்குண்டாரும்‌ ஆநன்தத்திற்கு ஒப்பாகுமென்று சொல்லற் பாலதாம்‌; (அல்லது) குழந்தையை – தென் புலத்தாரைத் தான்‌ பருவ காலங்களிற் கொடுக்கும் நன்னீர் முதலாயுள்ள கருமங்கள்‌ யாவும்‌ வேத விதிப்படி செய்வதால் கரை யேற்றும்
தன்மை யுடைய ஆண் குழந்தையை;
(இனி உள்‌ளுரை )
ஜீவாத்மா எத்தனையோ கோடி ஜென்மமெ
டுத்துழலும் போது *பூதமைந்தும்‌, விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடுற்‌ற வீக்கம்‌, கலங்குவது”? என்பதற்கிணங்க அந்த வீக்கமாகிய பிறப்‌பின்‌ மிகுதியற்று மறுபிறப்பில்லாமல்‌ உய்யும்படிக்கான ஓர்‌ உபாயத்தை; (திவ்விய ௮ஷ்டாஷர
மந்த்ர அனுக்கிரஹத்தை)
உயிர்த்த – நூதனமாக எதிர்பாராது அடைந்த;
மலடிக்குவமைகொண்டாள்‌ – நெடு நாளாகக் காத்திருந்தும்‌ பிரயத்தனப்‌
பட்டும்‌ கிட்டாமல்‌ இனிக் கிடைப்பதரிதென்று
மனங்கலங்கச்‌ சோர்வும்‌ ஏக்கமுமுற்றிருக்கும்‌ ஒரு
ஜீவாத்மாவுக்கு ௮ப்போதுண்டாகும்‌ பர வசத்தை நிகரக்குமென்‌று சொல்லலாம்‌; (அல்லது) உழந்து -அஞ்ஞான மிகுதியால்‌ தன்னுடைய ஞானக்கண்‌ ணடைக்கப்பட்டு ௮தனால்‌,தெளிவான நடையற்று
நன்னெறி விட்டு விலகி உழல்கின்ற போது
விழி பெற்றது -சன்மார்க்கமும்‌ மோஷ ஹேதுவுமான
நன்னெறியை ஊட்டும்‌ படிக்குள்ள ஓர்‌ உபாயத்தை யடைந்த;
ஓர்‌ உயிர்ப்பொறையும்‌ ஒத்தாள்‌-ஒரு ஜீவாத்மா அல்லது ஒரு சேதனனுக்குள்ளது
போல்‌ ஆயிற்று.

ஆகவே, இந்த இரண்டு செய்யுள்களாலும்‌ அனுமான்‌ சீதா பிராட்டிக்குக்‌ கணையாழியைக்‌ காட்டினவுடன்‌ ௮வள்‌ மிகக் களிப்புற்றாளென்பது சாமான்யக் கருத்தாயினும்‌ . விசேஷார்த்தமாகத்‌ திருவஷ்டாக்ஷர வுபதேச பூர்வமாகச்‌ சேதனனுக்குண்டாகும்‌ ஆத்மானந்த வைபவத்தைப்‌ பூர்வாசாரியர்களாற்‌ பலவித திருஷ்டார்தங்களுடன்‌
விரித்தெழுதப் பெற்றதற்கிணங்க இவ் விடத்திலும்‌
கூறப் பட்டது.

———–

இனிப்‌ பின்வரும்‌ இரண்டு செய்யுள்களால் திரு மூல மந்திரத்தை உபதேசம் பெற்ற பின்‌ அந்தச் சேதனன்‌ ௮தைக் கொண்டாடி யனுபவித்த விதத்தை விரித்துக் காட்டுகிறார்‌

வாங்கி நண் முலைக் குவையில் வைத்தனள் சிரத்தால்‌
தாங்கி நண் மலர்க்கண் மிசை யொத்தின டடந்தோள்‌
வீங்கி நண் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போ
டேங்கினள் உயிர்த்தனல் இதின்னது எனலாமே,
–66-

வாங்கினள் –சேதனன்‌ ௮ஷ்டாஷ மந்திரத்தை வானமீகி பகவான்‌ பிரயோகித்ததற்கு இணங்க மனசில் வாங்கினன்‌ என்றார்‌ ; மனசில்‌ நிலை பெறச் செய்தான்‌ என்றபடி-
முலைக் குவையில் வைத்தனள்‌ – பகவத் அனுபவ முச்கிய சாதனமான சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பிக்கும்‌ த்வயம்‌ என்‌னும்‌ மந்த்ரத்துடன் சேர்த்து அந்த மந்திரத்தை அனுசந்தித்தான்‌-
சிரத்தால் தாங்கினள்‌ – அந்த த்‌வயார்த்தத்துக்குள்‌ உத்தர வாக்கியார்த்தத்தில் ஊன்றினான்‌; ௮தாவது சர்வ ஸ்லாக்கியமானதும்‌ சாரமானதுமான மந்திரத்தை ௮தனுடைய கெளரவமும்‌, தன்னுடைய பாரதந்தர்யமும்‌ தோற்ற அதை ப்ரதானமாகவும்‌ மூலாதாரமாகவும்‌ கொண்டாடினான்‌ என்றபடி-
மலர்க்கண்‌ மிசை யொத்தினள்‌ -தன்னுடைய ஞானக் கண்‌களால்‌ ௮ம் மந்திரத்தின்‌ பெரும் பயனை ௮னுபவித்தான்‌-
தடந் தோள் வீங்கினள்‌ – பெரிய தோள்‌களாகிய பகவத் பாகவத கைங்கரிய சாதனங்களைப்‌ பெருக்கினான்‌- மெலிந்தனள்‌ – பகவத் கைங்கரியத்‌தில்‌ த்வரை யுடையனாய்‌ ௮து எப்பொழுது கிட்‌டுமோ வென்னும்‌ ஏக்கத்தாற்‌ சோர்வுற்றான்‌.
குளிர்ந்தனள்‌ – இந்த மந்திராநுசந்தானமே சகல வித கைங்கரியமுமாகி ௮வன்‌ திருவடி சேவை கிடைப்பிக்கச் செய்வதென்ற நிச்சயத்தால்‌ ஸந்தோஷத்தை யடைந்தான்‌- வெதுப்‌போடு ஏங்கினாள்

“ஒரு கணத் திரண்டு கண்டேனொளி மணி யாழி யான்ற
திரு முலைத் தடத்து வைத்தாள் வைத்தலுஞ் செல்வ நின்பால்
விரக மென்பதின் வந்த வெங் கொழுந் தீயினால் வெந்‌
துருகிய துடனே யாறி வலித்தது குளிர்ப் புள்ளூற–

என்பதற்கிணங்க, ஈசனுக்‌கு உகப்பாகச்‌ செய்யும்‌ சத் கர்மங்களில்‌ ஏதேனும்‌ குறைவு பட்டு விடுமோ வென்று மனக் கலக்கங்கொண்டு பரி தபித்தான்‌ உயிர்த்தனள்‌ – இன்னதென்று தோன்‌றாது பெருமூச்செறிந்தான்‌-இது இன்னதெனலாமே – இப்படியாகச்‌ சேதனனால் செய்யப்பட்ட பல செய்கையை இன்னின்ன எண்ணங் கொண்டு இன்ன காரணத்தோடு இன்னின்ன செய்கைகள்‌ செய்து கொண்டாடினான்‌ என்று சொல்வது எளிதாமோ என்பதாம்‌.

மோக்கு முலை வைத்துற முயங்கு மொளிர் நன்னீர்‌
நீக்கி நிறை கண்ணிணை ததும்ப நெடு நீள
நோக்கு நுவலக் கருதுமொன்‌று நுவல்கில்லாள்‌
மேக்கு நிமிர் விம்மலள் விழுங்கலுறுகின்றாள்‌-
-67-

மோக்கும்‌–சேதனன்‌ திருமந்திரத்தை
௮நு சந்தானம் செய்துகொண்டே அதன் அர்த்தத்தை யனுபவிப்பான்‌-
முலை வைத்துற முயங்கும்‌ – அதை த்வயதத்தோடு நன்றாகப்‌ பொருந்தும்படி. சேர்ப்பான்‌- அதாவது அத்‌வைத பாவமின்றி விசிஷ்டாத்வைத சித்தாந்த பரமாக அர்த்தத்தை நயிப்பிப்ப னென்றபடி-
கண்‌ணிணை ததும்‌ப வொளிர் நிறை நன்னீர் நீக்கி -உயர் மழைக் கண்ணீரா லாயிரங் கலசமாட்டி யேங்கனெ ளிருந்த தல்லா லியம்பலள்‌? என்றபடி
தனக்குண்டான ஆஹ்லாதத்தால்‌ அஜ்ஞானம் மேலிட்டுத்‌ தன்னாற்‌ சரியான கைங்கரியம் செய்து ஆதரிக்க முடியுமோ வென்று ஏக்கங்கொண்ட மனோ சாஞ்சல்யத்தை நீக்கி;
நெடு நீள நோக்கும்‌ – திரு ௮ஷ்டாக்ஷரத்தின்‌ ஆழ்ந்து கிடக்கும்‌ அர்த்த விசேஷங்களை யெல்லாம்‌ நெடுந்தூரம்‌ ஆராய்‌வன்‌,
நுவலக் கருதும்‌ – அதன் பெருமையைக்‌ கண்டு பூரித்துப்‌ பலமாக ஸ்தோத்திரம் செய்ய ஆசையை உடைவனாவான்‌. ஒன்னும்‌ நூவல்‌ இல்லாள்‌ – அடங்காத ஆனந்தத்தைப்‌ பெற்ற படியால்‌ யாதொன்றும்‌ வாய் திறந்து சொல்ல மடியாது திகைத்து நிற்பான்‌.
மேக்கு நிமிர்‌ விம்மலள்‌ -ஞான ஆனந்தத்தாலுண்டான ஆத்ம புஷ்டி யுடையனாய்‌.
விழுங்க லுறுகின்றாள்‌ – அக்காரக் கனியான எம்பெருமானை விழுங்குவது போல அவகாஹித்துத் தொடங்கினான்‌ என்பதாம்‌–

மேலே கண்டவிதமாகத்‌ திருமந்திரத்தை அனுபவித்ததன்‌ மேல்‌, பின் வரும்‌ இரண்டு செய்‌யுள்களால் இந்தச் சேதனனுக்குண்டான தேஜஸ்ஸையும்‌ ௮வன்‌ பெற்ற பேருதவியையும்‌ உணர்த்துகிறார் –

நீண்ட விழி நேரிழை தன்‌ மின்னினிற மெல்லாம்‌
பூண்ட தொளிர் பொன்னனைய பொம் மனிற மெய்யே
ஆண்ட கை தன் மோதிர மடுத்த பொருளெல்லாம்‌
தீண்டள வில் வேதிகை செய் செய்வ மணி கொல்லோ.
–68-

நீண்ட விழி நேரிழை தன்‌ –திருமந்த்ரார்த்த ஞான தைர்க்யத்தை அடைந்த சேதனனுக்கு
மின்னினிற மெல்லாம்‌-அப்பியாச தசையில் மின் போல் தோன்றி மறைந்து வந்த ஸ்வரூப ஞானம் எல்லாம்
மெய்யே -பாவந ப்ரகர்ஷத்தாலே ப்ரத்யக்ஷ ஸமான ஆகாரமாய்
ஓளிர் பொன்னனைய பொம் மனிறம் பூண்டது –தப்த காஞ்சனம் போல்‌ இடை வீடின்றி -அதாவது- சேதனனுடைய மன நிலை நிஷ்களங்க மாயிற்று ; (ஏனெனில்‌) ஆண்ட கை தன் மோதிரம் –திரு ௮ஷ்டாஷர மந்தர மானது
அடுத்தபொருளெல்லாம்‌ – உபதேசம்‌ பெற்ற எந்த ஜீவனையும்‌,
தீண்டள வில் வேதிகை செய் —ஸ்ரவண மாத்திரத்தாலே ஸ்வரூப பிரகாசத்தை உண்டாக்குவதால்
செய்வ மணி கொல்லோ-ஸ்பர்சன வேதி
யென்னும் தெய்வத் தன்மை பொருந்திய மணி விசேஷமோ – அல்லது ஞான ஆனந்த ஸ்வரூபம் தானோ -மூலத்தில்‌ ஐக்கியம் தானோ என்று வியக்கத் தக்கதாயுள்ளதோ என்பதாம்

இருந்து பசியாலிட ருழந்தவர்கள் யெய்‌தும்
அருந்துமமுதாகிய தறத்தவரை யண்மும்‌
விருந்து மெனலாகியது வீயுமுயிர் மீளும்‌
மருந்‌து மெனலாகியது வாழி மணியாழி
-69-

வாழி – பெருமை பொருக்திய நித்‌தியமான வாழ்வை அளிக்கத் தகுந்த;
மணியாழி -திரு மூல மந்திரமானது ; பசியால்‌ – இந்திரியங்களின்‌ ஈடுபாட்டால்‌; இருந்‌திட ருழந்தவர்கள்‌ மெய்ச் நெறி செல்லாதுய் நெறி யறிவின்றி- துக்கத்திலாழ்ந்து கஷ்டப்படுற ஒரு ஆத்மாவுக்கு;
எய்தும்‌ ௮ருந்துமமுதாகியது – கால விசேஷத்தில்‌ இந்திரிய அனுபோகங்களினின்‌றும் விலகி உய்யுமநெறி யடைவதற் கேற்பட்ட தொரு ஒப்‌பற்ற உபாயம்‌ கிடைத்தாற் போலாயிற்று;
அறத்‌தவரையண்மும்‌-சன்மார்க்கம் அமைந்தவர்களைத் தேடிச் சேரும்‌.
விருந்துமென லாகியது -விருந்து போலவே சந்தோஷ ஹேதுவுமாயிற்று ;
வீயுமுயிர்‌ மீளும் மருந்துமெனலாகியது – இறுதி யினுயிர் தந்தீயு மருந்தொத்‌த தனைய தெக்தாய்‌”எம்பிரானாமஞ் சொல்லி,௨ருக்கின னுணர்வைத் தந்தானுயிர் -என்பதற்கு இணங்க யாதொரு பயனுமற்றுத்‌ திருவடிகளைச் சேராது வியர்தமாகப் போகும் நிலையில்‌ நின்ற ஒரு ஆத்மா உஜ்ஜீவிப்பதற்கு ஹேதுவான ஒரு ௮மிர்‌த சஞ்சீவி போலும்‌ ஆயிற்று என்பதாம்‌-

இவவிரு செய்யுள்களாலும்‌ திருமந்திரத்தின்‌ ஸ்வபாவத்தையும்‌, அதன் பெருமையையும்‌, ௮தனால்‌, சேதனனுக் குண்டான மேன்மையையும்‌ சொல்லி, இனி அடுத்‌து வரும்செய்யுளால்‌ அந்தச்‌ சேதனன்‌ கிருதக்ஞதையுடன்‌ ஆசாரியனை ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பித்ததைச்‌ சொல்லுகிறார் –

இத்‌தகையளாகி யுயிரேமுற விளங்கும்‌
முத்த நகையாள் விழியினாலி முலை முன்‌ றில்‌
தத்தி யுகமென்குதலை தள்ள வுயிர் தந்தாய்‌
உத்தம வெனா வினைய வாசக முரைத்தாள்‌.
-70-

இத்தகையளாகி – மேற் சொன்ன
படிக்குள்ள வைபவங்களைப் பெற்று; உயிரேமுறவிளங்கும்‌ முத்த நகையாள்‌ – அத்தியானந்தத்தை யடைந்த சேதனன்‌; விழியினாலி – திருமந்திரத்தின்‌ அர்த்த ஜ்ஞான சாரம்‌;
முலை முன்றில்‌ தத்தி யுக – த்வயார்த்தத்தில்‌ ததும்பி வழிய அனுசந்தித்து;
மென்குதலைதள்ள – மிருது பாஷியாய்‌
ஸ்தோத்திர பூர்வகமாக ஆசாரியனைப் பார்த்து-
உயிர்‌ தந்தாய்‌ – உஜ்ஜீவிக்கும் பொருட்டு உபதேசம் செய்து ௮னுக்கிரகித்க எம்பெருமானே!
உத்‌தம-பரமபுருஷனே!
என-என்றழைத்து ஸ்தோத்‌தரத்துக்கு ஆரம்பித்து;
இனையவாசகமுரைக்‌
தாள்‌ – பின் வருமாறு சேதனன் சொல்லலுற்றான்‌ என்பதாம்‌,
இச் செய்யுளுக்குப்‌ பிராட்டி கணை யாழியைக் கண்டு மகிழ்ந்து ஆனந்த பாஷ்பத்துடன்‌ தன்னை உயிர் வைத்துக் கொள்ளும்படிக்கான ஹேதுவைச் செய்து மணியாழியைக் கொடுத்து
உதவின ௮னுமனைப் பார்த்துத்‌ தன்னுடைய நன்‌றி யறிதலை வெளிப்படுத்தினாளென்பது சாமானனியக் கருத்தாயினும்‌, வேதார்த பரமாகத் திரு மூல மந்திர உபதேச அநந்தரம் ஞநான பிரகாசமுள்ள சேதனன்‌, ஆத்மானந்தப் பெருக்குடன்‌ திரு மந்திர சாரத்தை த்வயஅர்த்தத்திலூன்‌றி அனுசந்தித்து உபதேசத்தால்‌ தன்னை உஜ்ஜீவிக்கச்‌ செய்த பரமாசாரியனுக்குத்‌ தன்‌ கிருதஜ்க்ஷதையை வெளிப்படுத்‌துகிறான்‌ என்னும் கருத்துத்‌ தோன்றுமாறு காண்க,
இனி வரும்‌ இரண்டு செய்யுள்களால்‌ உத்தமமான தத்து வத்தையும்‌, வேதாந்தக் குறிப்பையும்‌ மங்களாசாசன மகிமையையும்‌ விசேஷமாக எடுத்‌துச் சொல்‌லுகிறார் –

மும்மையா முலகம் தந்த முதல்வன் தூதாய்ச்
செம்மையால் உயிர்‌ தந்தாய்க்கு செயலென்னா வெளியதுண்‌டே
அம்மையாய் யத்தனாய் யப்பனே யருளின் வாழ்வே
இம்மையே மறுமை தானு நல்கினை யிசையொடென்றாள்‌
–71-

மும்மையாமுலகக்தந்த – பதினான்குலகத்‌ தையும்‌, க்ருதகம்‌, அக்ருதகம்‌, கருதாகிருதகம்‌
என்று மூன்று வகையாகப் பிரித்தபடி எல்லா உலகர்களையும்‌ சிருஷ்டித்த முதல்வற்கு– சிருஷ்டியால்‌ முதல்வனாகிய பிரமனுக்கு
முதல்வன்‌-*முதலாவார் மூவரே யம் மூவருள்ளும்‌, முதலாவான் மூரிநீர் வண்ணன்‌” என்னும்‌ பூதனான சாக்ஷாத் பரமாத்ம
தூதாய்‌–அஜ்ஞாநமடைந்த சேதநனுக்கு
அறிவிக்கச் செய்ய வேண்டியதற்காக ஞானம் அனுஷ்டானம் நிறைந்த ஆச்சார்யனுடைய கிருபையால்‌–
செம்மையால் நேரான வழியான சரணாகதி முறைப்‌ படி ;
உயிர் தந்தாய்‌-ஈடேற்றி உய்யச் செய்த பரம
கிருபாளுவுமாகிய வுனக்கு;
செயல்‌ என்னா வெளிய துண்டே – நீ செய்த பேருதவிக்கு நான் செய்யக்‌
கடவ கைம்மாறு யாதொன்றுமில்லையே ௮தாவது ஞான உதயமானபின்பு ‘நான்‌’ எனது என்‌பது இல்லை யாதலின்‌ தன்னுடைய பாரதந்திரியம்
துலங்க இவ்வாறு சேதனன் சொல்லலுற்றான்‌ என்பதாம்‌ –
அம்மையாய் –பிரிய பரையாகிய
மாதாவைப் போலும்‌ ;
௮த்தனாய் –ஹித பரனாய
பிதாவைப் போலும்‌ அனுக்கிரகஞ் செய்த; அப்பனே–பகவத் ஸ்வரூபனான ஆசார்ய மூர்த்‌தியே,
அருளின் வாழ்வே -கிருபைக்கு இருப்பிடமாயுள்ளவனே !
இம்மையே மறுமை தானும்‌ இசையொடு
நல்கை- த்வயானுபவத்தைக் கொடுத்‌ தருளினய்‌, அதன் மூலம்‌ புகழையும்‌ புண்ணியத்தையும்‌ கட்டிக் கொண்டாய்‌ என்றாள் –என்று சேதனன்‌
ஸ்தோத்திரம்‌ செய்தான்‌. (தவிரவும்‌)

பாழிய பணைத் தோள் வீர துணையிலேன் பரிவு தீர்த்த
வாழியர் வள்ளலே யான் மறுவிலா மனத்தேனென்னின்‌
ஊழியோர் பகலா யோதும் யாண்டெலா முலகமேழும்
ஏழும் வீவுற்ற ஞான்‌று மின்றென விருத்தி யென்றாள்‌–72

பாழிய பணைத் தோள் வீர-“மாணியாம் வேடம் தாங்கி மலர் அயற்கு அறிவு மாண்டோர்‌, ஆணியா யலகுக்‌கெல்லாம் அறம் பொருணிரப்பு மண்ணல்‌”‘ என்றபடி.
பகவத பாகவத கைங்கர்ய சாதனமான பாஹு பல
முடையவனே
துணையிலேன் பரிவு தீர்‌த்த-யாதொரு ஆதாரமும் இன்றிக்‌ கடைத்தேறும் வழி யற்‌றுக்‌ கலங்‌கக் கிடந்த அடியேனுடைய துக்கத்தையும்‌ அஜ்ஞானத்தையும்‌ நிவிர்த்தித்த
வாழியர் வள்ளலே – நித்திய மங்களமான வாழ்வை அன்‌புடனும் ஆதரத்துடனும் ௮ளித்த உதார குணமுடை.யவனே!
யான் மறுவிலா மனத்தேனென்னின்‌—-
அஜ்ஞாந அந்தகாரத்துள் மூழ்கி ஆத்ம நாசமடையா நின்ற நான் உன்னுடைய ஸந்தர்சனத்தாலே ஸ்வரூப யதாத்ம்ய ஞானத்தை யடைந்து உஜ்ஜீவித்தேனாகையால்‌.
ஊழியோர் பகலா யோதும் யாண்டெலா முலகமேழும் ஏழும் வீவுற்ற ஞான்‌று மின்றென விருத்தி யென்றாள்‌–நீ பல்லாண்டு பல்லாண்டாய்‌ நெடும்காலம் நிலை பெற்று என் போன்ற இன்னும்‌
௮நேக சேதனர்களையும்‌ உயிர்ப்பிக்கக் கடவை என்று சொல்லிச் சேதனன்‌ ௮திக வினயத்துடன்‌ மங்களாசாசனம் செய்தான்‌ என்றபடி –

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீ சேஷையங்கார்‌ ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண ஸாரம் -ஸ்ரீ கார்ப்பங்காடு ஸ்வாமிகள்

July 23, 2025

ஸ்ரீராமாயண உபன்யாஸத் தொடரை பார்த்தஸாரதி பக்த ஸபை சார்பில்
திருவல்லிக்கேணி வானமாமலை மடத்தில் நிகழ்த்திய போது வெளியிடப் பெறற
விழா மலரில் இந்நூல் இடம் பெற்றது.
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவசியம் ” அறிய வேண்டிய அர்த்தங்கள் ” என்று
கூறப்பெறும் அர்த்த பஞ்சகத்தை உள்ளத்தில் கொண்டு ஸ்ரீராமாயணத்தை ஆராயும்
ஓர் ஆய்வு நூலாக மீமாம்ஸா நியாயங்களின் உதவி கொண்டு இந்நூலை ஸ்வாமி
இயற்றியுள்ளார்.
மிக்க இறைநிலை மெய்யாம் உயிர்நிலை தக்கநெறி தடையாகி தொக்கியிலும்
ஊழ்வினை வாழ்வு, ஆகிய ஐந்து செம்பொருட்களும்
தூய தமிழ் நடையில் எழுதப்
பெற்றுள்ளது. தற்காலப் போக்கைக் கருத்தில் கொண்டு ஸ்வாமி கால்நூற்றாண்டிற்கு
முன்னமேயே ஸம்ப்ரதாய மணிப்பிரவாள நடையை விட்டு தமிழ் மரபு நடையை
மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாம்.

திருமகள் கொழுநனான பரமபுருஷன், நம்முடைய நன்மையைத் திருவுள்ளம்
பற்றி, திரு அயோத்தியில் திருவவதரித்து, பதினோராயிரம் ஸம்வத்ஸரம் இவ்வுலகில்
எழுந்தருளியிருந்த சரிதம் நாம் நன்கு அறிந்ததேயாகும். அப்பரமபுருஷன் அங்ஙனம்
இராமபிரானாகத் திருவவதாரம் செய்தருளினபோது, அவனை அறிவிக்கும் வேதமானது,
வால்மீகி முனிவனிடமிருந்து இராமாயணமாய்த் திருவவதாரம் செய்ததாம். இக்
கருத்தைக் கொண்டுள்ள,” வேத வேத்யே பரேபும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத : ப்ராசேதஸாதா த் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா| “
-என்னும் முதுமொழியை ஊன்றிக் காணுங்கால், ‘இராமபிரானைப் போன்று, அவ் இராமபிரான் திவ்யசரிதமான இராமாயணமும் நமக்கு அன்புடன் ஆதரிக்கத் தக்க திவ்ய சாஸ்திரம்’ என்பது நன்கு புலனாகும். “விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை இவ்வுலகில் நன்கு பாவச் செய்தவரும், பூர்வாசாரியருள் நடுநாயக மணிபோன்று விளங்குபவருமான எம்பெருமானார், திருமலையில் ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளி யிருந்து, திருமலைநம்பிகள் ஸந்நிதியில் இராமாயண விசேஷார்த்தங்களை (இராமா யணத்தில் கூறப் பெற்றுள்ள சிறந்த பொருள்களைக்) கேட்டருளினார்” என்பதே இவ் இராமாயணத்திற்குள்ள தனிச்சிறப்பை நன்கு தெரிவிக்கின்றதன்றோ?-“இவ்வாறு மிக்க சிறப்புள்ள இராமாயணத்தின் ஸாரப் பொருள், பரமாத்மா, ஜீவாத்மா, உபேயம், விரோதி, உபாயம் என ஐந்தாம்” என்பதை இந்த ‘இராமாயணஸாரம்’ என்னும் நூல், மிக விரிவும், மிகச் சுருக்கமும் இன்றி விளக்கிக் காட்டி யிருக்கிறது.

திருமாலான பரம புருஷன், தனக்கே உரித்தான திருநாட்டில் திருமகள் மண்மகள்
முதலிய தேவிமாரோடு வீற்றிருந்து, நித்யராலும் முக்தராலும் தொண்டு பூண்டொழுகப்
பெற்றிருப்பவனாம். இங்ஙனம் இருப்பினும்,அப்பரம புருஷன் அத்திருநாட்டிலுள்ளாரைப்
போன்று, இவ்வுலகிலுள்ளாரும் தன்னை அனுபவித்துப் பேரின்பக் கடலில் மூழ்கிப் பெருங்
களிப்புற வேண்டியிருக்க. அங்ஙனமின்றி,மாயா சப்தப் பொருளான மூலப்ரைக்குதியில்
அழுந்திக் கிடந்து, அறிவுற்றவராகயிருப்பினும், அறிவற்ற அசேதனப் பொருளோடு
வாசியற இருத்தலைக் கண்டு இரக்கமுற்றனன்.

இவ்வாறு இரக்கமுற்ற எம்பெருமான், இவ்வுலகத்தாரைக் கரையேற்றத் திருவுள்ளம்
பற்றி,

இங்ஙனம் அருளப் பெற்றிருப்பினும், இச் சேதனர் அக்கலைகள் காட்டிய வழியைப் பின்
பற்றாது அவ்வுறுப்புக்களையும் அவ்வுடல்களையும் கொண்டு, ஆற்றைக்கடக்கக் கொடுத்த
புணையைக் கொண்டு அவ்வாற்றைக் கடவாது கடலிடைப் புகுவாரைப் போல், சுவை,ஒளி,
ஊறு, ஓசை, நாற்றம் என்னும் விஷயங்களில்உழல்வராயினர்.
இதைக் கண்ட எம்பெருமான், தன் கட்டளை செல்லாத நாட்டில் தானே சென்று,
தன் வழி வருமாறு செய்யும் அரசன் போன்று, இவ்வுலகினில் எண்ணிறந்த அவதாரங்களைச் செய்தருளினான்.
இவ் வவதாரங்களுள்,இராமாவதாரம் மிகமிகச் சிறந்ததாம்.இவ்விராமபிரான், தன் உபதேச மொழிகளாலும், ஒழுக்கங்களாலும் இவ்வுலகத்தவர்க்கு உணர்த்தின நீதிகள் பல. அந்நீதிகளை, பின்னானார்க்கும் உதவ வேண்டும் என்னும் எண்ணத்தினால் நான்முகனார், நூறுகோடி அளவினதான இராமாவதார சரிதத்தைச் செய்து, நாரதர் முதலான தேவஷிரிகளுக்கு உபதேசம் செய்தருளினார்; அந்த நாரதரையே இராமநாமத்தையே ஜபித்துப் போது போக்குபவனாகிய வால்மீகி முனிவனிடம் அனுப்பி, அவ்விராமபிரானுடைய சரிதத்தை அம்முனிவனுக்கு உபதேசம் செய்வித்து, தாமும் காட்சி அளித்து, இராம சரி
தத்தை இயற்றுமாறு கட்டளையிட்டார்.

இங்ஙனம் அருள் பெற்ற அம்முனிவனும் ஸ்ரீராமாயணத்தைச் செய்தனன்.

ஸ்ரீராமாயணச் சிறப்பு

பிள்ளைலோகாசார்யார், ஸ்ரீராமாயணத்தை-இதிஹாஸ ச்ரேஷ்டம்’ எனக்கொண்டாடி
அருளிச்செய்திருக்கிறார். ஆனால், நாராயணனாகவே போற்றப்பெற்றவர் வ்யாஸர்; இராம
பிரானிடம் சிறந்த பக்தி பெற்றிருப்பவர் வால்மீகி ; அவரிடம் பிறந்தது பாரதம்;-இவரிடம் பிறந்தது இராமசரிதம்;
பாரதம் என்னும் இதிஹாஸத்தை அங்ஙனம் போற்றி அருளிச் செய்யாது, இராம சரிதத்தை ‘ இதிஹாஸ ச்ரேஷ்டம்’ எனப்போற்றி அருளிச்செய்ததற்குக் காரணம் யாதோ? எனின்,- (நாராயண:கதா மிமாம்) என்று தொடங்கி,வ்யாஸர், நாராயணனின் பரிபூர்ணாவதாரமாய்க், கொண்டாடப்பெறும் கண்ணபிரானுடைய சரிதத்தை, பாரதத்தில் ஒருவாறு வெளியிட்டிருப்பது உண்மையேயாம். ஆயினும்,
(யதா தர்மாதயச் சார்த்தா: முனிவர் யானுகீர்த்திதா !ந ததா வாஸுதேவஸ்ய மஹிமாஹ்
யனுவர்ணித:
)என்று நாரதர் (பாரதத்தைச் செய்து மன மகிழ்ச்சி சிறிதும் இன்றி இருக்கும்) வ்யாஸரை நோக்கிக் கூறுகின்றவாறு, அப்பாரதத்தில், அறம் பொருள் இன்பங்களும், அவற்றின் ஸாதனங்களும் கூறப் பெற்றிருக்கின்றன போன்று, கண்ணபிரானுடைய பெருமை கூறப்பட்டிலது.மேலும், பூசல் பட்டோலை‘ என்று ப்ரஸித்தி ஏற்படுமாறு, யுத்த சரிதத்தையே பெரும்பாலும் வெளியிட நேர்ந்திருக்கிறது; நான்முகனார் புத்திரரான நாரதர், கண்ணபிரானுடைய சரிதத்தைஉபதேசம் செய்ய, பின்பு வ்யாஸர், ஸ்ரீபாகவதத்தைச் செய்ததாக அங்கு சரித்தரம், பாரதத்தைச் செய்திருந்தும், அகக் களிப்பற்றிருந்த வ்யாஸர்,தம் துன்பம் தீருமாறு ஸ்ரீபாகவதத்தைச் செய்தார் என்பதற்கு அவர் திருவாக்கையே சான்றாகக் காண்க :–அஸ்த் கீர்த்தன காந்தார பரிவர்த்தன பாம்ஸுலாம் !வாசம் சௌரி தாலாப கங்கயைவ புனீமஹே||”நாரதருக்குத் தந்தையாரான நான்முகனார் பூஜிக்கப்பெறும் பெருமை வால்மீகி முனிவனுக்கு உண்டு, நான்முகனார்,வால் மீகி முனிவனுடைய ஆசிரமத்திற்கு வந்தார்;அம்முனிவனுடைய இராமபக்தியைக் கண்டு மனமகிழ்ச்சியுற்றார்; அம்முனிவனால், இவ்வுலகம் உய்வு பெற விரும்பினார்; அம்முனிவனைப் பூஜிக்க விரும்பி, தம் முன்னே உள்ளதோர்ஆஸனத்தைக் காட்டி, அதில் அமரச் சொன்னார். வால்மீகியும் அவ்வாறே அதில் அமர்ந்தார்” என்னும் வால்மீகி முனிவன் பெருமையைக் கூறும் சரிதம் இங்கே காணத்தக்கது.-வால்மீகயே மஹர்ஷயே ஸந்திதேசாஸனம் தத: ப்ரஹ்மணா ஸமநுஜ்ஞாத : ஸோப்யுபாவிச தாஸனே !-என்னும் வால்மீகியின் திருவாக்கும் இங்கே அனுபவிக்கத்தக்கது.-மேற்கூறிய சரித்ரங்களை உற்று நோக்குங்கால் அங்கு, பாரதத்தைச் செய்த வ்யாஸருக்கே மனமகிழ்ச்சி ஏற்படவில்லை என்பதும்,’இங்கு, இராம சரிதத்தைச் செய்த வால்மீகி முனிவனுக்கு அங்ஙனம் குறை கூறுவதற்கு இல்லை’ என்பதும் தெளிவாம்.-மேலும், வேதத்தினால் அறியப்படும் பரம புருஷன், சக்ரவர்த்தித் திருமகனாய் அவதரித்த வாறே, அவ்வேதம், அப்பரமன் கல்யாண
குணங்களையும், ஆச்சரியச் செயல்களையும் கூற வால்மீகி முனிவனிடம்  ராமாயணமாக (இராம சரிதமாக) அவதரித்தது’ என்னும் கருத்தைக் கொண்டுள்ள,-வேத வேத்யேபரே பும்ஸி ஜாதே தசரதாத் மஜே வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமா யணாத்மநா ||| என்னும் ஸ்காந்த வசனத்தை அனுபவிக்குங்கால், இவ்விராம சரிதத்தின் வேதத் தன்மையும் நன்கு புலனாம்.
அன்றியும், ஆழ்வான் திருக்குமாரரான பட்டர், ஸஹஸ்ரநாம் பாஷ்யத்தில்-
ஸ்ரீ மத் ராமாயணவன் மஹாபாரதம் சரணம் ) என்று அருளிச் செய்திருக்கிறார். இவ் வாக்கியத்தில், பாரதப் பெருமையைக் கூறும்போது இராமாயணத்தை எடுத்துக் காட்டாகக் காட்டியிருப்பது காணத் தக்கதாம்.

இவ்வாறு சிறப்புற்றிருக்கும் இராமாயணத்தில் தேறிய ஸாரப்பொருள் பல உண்டு. எம்
பெருமானார், திருமலையில் எழுந்தருளியிருந்து திருமலை நம்பியிடம் ஸ்ரீராமாயணம் கேட்டருளினார் என்பதே இதற்குத் தக்க சான்றாம்.
(அடைய வேண்டிய பரமாத்மா, (அடைகிறவனாகிய) ஜீவாத்மா, (பரமனை அடைவதன்)
பலம், (அவனை) அடையவொட்டாது தடைசெய்யும்) விரோதி, (அவனை அடைவதற்கான)
உபாயம், என ஸாரப்பொருள் ஐந்து
“ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோரூபம் ப்ராப்துச்ச ப்ரத்யகாத்மந ப்ராப்த்யுபாயம்பலம் ப்ராப்தே: ததா ப்ராப்தி விரோதிச வதந்தி ஸகலா வேதா : ஸேதிஹாஸ புராணகா: II என்னும் வசனம் இங்குக் காணத் தக்கது இவ்வசனத்தின் கருத்து – ” இதிஹாஸம்,
புராணம் ஆகிய இவற்றோடு கூடிய வேதங்கள் மேற்கூறிய ஐந்து பொருளையும் கூறுகின்றன என்பதாம்.
மேற்கூறிய ஐம்பொருளையும் வேறு வழியாக நாம் அறியலாகாதோ? இதிஹாஸத்தின் உதவியைக் கொண்டுதான் அறிதல் வேண்டுமோ? அவசியமானால், அவ்விதிஹாஸம் தான் எவ்வாறு இயம்புகின்றதோ ?எனின், விரித்துக் கூறுவோம் :
கண்முதலிய வெளி இந்திரியங்களையும் மனமாகிய உள்ளிந்திரியத்தையும் ப்ரத்யக்ஷம்
என்பர். இதனால், பரமாத்மா முதலிய பொருளை அறிய இயலாது. இந்திரியத்தினால்
அறியப்பெறும் இரண்டு பொருள்களுள், ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருக்கும் நிலைமையைக் கொண்டு, ஒன்றைக் காணாத இடத்தும் கண்ட ஒன்றினால் காணாத மற்றொன்றை அறிகைக்கு உறுப்பான யுக்தியை அனுமானம் என்று கூறுவர். புகையைக்கண்டு அப்புகையினால் காணாத நெருப்பை ஊஹித்து அறிகிறோம் அல்லவா? இவ்வனுமானமும், மேற் கூறிய ஐம்பொருளையும் அறிதற்குப் பயன்படாது. ஒருவகைக் குற்றமும் இன்றி இருப்பதும், என்றும் உள்ளதுமான வேதத்தினால் தான் அறியலாம். அவ்வேதமும்,தெளிவாக எடுத்து. உரைக்கும் வண்ணத்தில் அமைந் திலது, ஆதலின், இதிஹாஸத்தின் உதவி அவசியமாம். இவ்வுதவி அவசியம் என்னும் இவ் விஷயத்தை வால்மீகி முனிவன் பின் குறிக்கப்பெறும் சலோகத்தினால் வெளியிட்டு இருக்கின் றனன்.
ஸது மேதாவிநெள திருஷ்டவா வேதேஷ பரிநிஷ்டிதெள: 1-வேதோபப்ரும்கணார்த்தாய தாவக்ராஹயத ون-இதின் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம் :” வால்மீகி முனிவன் நான்முகனார் கட்டளையைப் பின்சென்று, இராமாயணத்தைச் செய்தபின், “இவ்விராம சரிதத்தைப் பாட வல்லவன் எவனோ? யான் அறியேன்; எம்பெருமான்! நீயே அவனை எனக்கு அருள வேண்டும். என்று அப்பரமனைச் சிந்தித்துக் கொண்டிருந்தனன். அக்காலத்தில் ‘முனி வேஷம் பூண்ட குசலவர் அம்முனிவன்- திருவடிகளைப் பணிந்து நின்றனர். அம்முனிவனோ, மிகச் சிறந்த புத்தி பெற்றிருப்பவரும், ருக் வேதம் முதலிய நான்கு வேதங்களையும், மற்ற நூல்களையும் நன்கு ஓதி உணர்ந்தவருமான
அக்குசலவர்களைக் கண்டு களித்து, வேதோபப்ரும்ஹணமாகிய இராம சரிதத்தை அவர்
களுக்கு உபதேசம் செய்தனன்”-வேதோப ப்ரும் ஹணம்’ என்பதற்குக் கருத்து யாதோ? எனின், கூறுவோம்: எங்ஙனம் இருபத்து நாலாயிரம் ச்லோகங்கள் கொண்டுள்ள இராமாயணத்தில் சில பகுதிகளை மட்டும் கற்றுணர்ந்தோர்க்கு அந்த இராமாய
ணத்தின் கருத்து அறுதியிட இயலாதோ,அங்ஙனமே, பல கிளைகள் கொண்டுள்ள வேதத்திலும் சில கிளைகளை மட்டும் ஓதி உணர்ந்தோர்க்கு அந்த வேதத்தின் கருத்து அறுதியிட இயலாது. அறிவிலிகளான நாம் வேதம்முழுவதும் ஓதி உணர இயலாது. ஆதலின், மிக நெடுகின காலத்தில் பரமபுருஷனை வணங்கி வழிபட்டு உள்ளத் தூய்மை பெற்றிருக்கும் மஹான்களுக்கே அந்த வேதமும், அதின் உண்மைக் கருத்தும் நன்கு புலனாகும்.-அன்னாரே,அந்த உண்மைக் கருத்தை உள்ளபடி அறுதியிட்டு, அக்கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்கும் நூலை இயற்றஇயலும். “அன்னாம்ருள் வால்மீகி முனிவனும் ஒருவன்’: ”அங்ஙனம் வேதக் கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்கும் நூல்களுள், இராமாயணமும் ஒன்று”என்னில், இவை புகழுரையாமோ? ஆகாதன்றோ? இவற்றால், “வேதக் கருத்தைத்தெளிவாகத் தெரிவிக்கும் நூல் உபப்ரும்ஹணம்’‘ என்பது நன்கு விளங்குகின்றதன்றோ?–இங்கு”வேதோபப்ரும் ஹணார்த்தாய- வேதோபப்ருமணரூப ஸ்வக்ரந்த படனாயேத்யர்த்த: உபப்ருஹம்ணம் நாம நாநாசாகானுஸாரண நிர்ணீத வேதார்த்த ரதிபதகோ சுரந்த: என்னும் கோவிந்த ராஜீய வ்யாக்யான வாக்யங்களும்
 (உபப்ரும்ஹணம் ச ச்ருதி பிரதிபந் நார்த்த விசதீகரணம் ) என்னும் எம்பெருமானாருடைய திருவாக்கும் அனுபவிக்கத்தக்கவை.
[பதப் பொருளைச் சொல்வது எதுவோ, அது உபப்ரும்ஹணம் என்று சிலர் கூறுவர்.இங்ஙனம் கூறுவதற்கு ஆதாரத்தைக் காணப் பெற்றிலோம். மேற் கூறிய ஆதாரங்களுள் அமைந்துள்ள “நிர்ணீதார்த்த பிரதிப்பாத கோக்ரந்த:” ச்ருதி ப்ரதிபந்நார்த்த விசதீகரணம்”-என்னும் வாக்கியங்களைக் காண்க-இனி, வேதத்தில் கூறப்பட்டுள்ள பரமாத்மா முதலிய ஐம்பொருளையும் இராமாயணத் தில் காண்போம்.

வேதாந்தமும் பரமாத்மாவும்

வேதம்,பரமாத்மாவை எங்ஙனம் கூறுகின் றது? என்னில், சிறிது விவரித்துச் செப்புவோம்:
வ்யாஸர், உபநிஷத்துக்களில் அமைந்துள்ள காரண வாக்கியங்களினால் பரமபுருஷனை
நன்கு உணரலாம் என்கிறார்.-கண் முதலிய வெளியிந்திரியங்களால் காணப்பெறும் இப்பிரபஞ்சத்திற்கு எது காரணமோ, அப்பொருளே ‘பரமாத்மா
“(யதோவா இமானி பூதானி ஜாயந் தே தத்ப்ரஹ்ம) என்னும் வாக்கியத்தைக் காண்க.
சங்கை : ஆனால், உபநிஷத்துக்களில் காரண வாக்கியங்கள் பல உண்டு. அவற்றுள்
ஒரு வாக்கியம் போன்று,மற்றொரு வாக்கியம் காரணப் பொருளைக் குறிக்காமல் முரண்பாடு தோன்றக் கூறியிருத்தலை நாம் காணலாம்.
(ஹிரண்ய கர்ப்பஸ் ஸமவர்த்ததாக்ரே -)(ஏகோ ஹவை நாராயண ஆஸீத்) என்னும்
வாக்கியங்களை எடுத்து நோக்கினால், ஒரு பொருள் காரணப் பொருளாகக்கூறப் பெற்
றிராமல் அந்த அந்த வாக்கியத்தில் வெவ்வேறு பொருள் (பிரமனும், சிவனும் நாரா
யணனும்) காரணப் பொருளாக முரண்பாடு தோன்றுமாறு குறிக்கப் பெற்றிருப்பது புலப்படுகின்றதன்றோ! இங்ஙனம் இருக்க,ஒன்றே காரணப் பொருள்; அப்பொருள் நாராயணனே என்பதை நாம் அறுதியிடுவது யாங்ஙனம்? என்னும் ஐயம் இங்கு உண்டாகலாம்.

வேத வாக்கியங்களைக் கொண்டு பரமனை அறியுங்கால், இவ்வாறான க்லேசம் உண்டாவது உண்மையே. இங்ஙனம் க்லேசம் பெற்றிருப்போர்க்கு மனத்தெளிவுக்கு இடம்
இல்லை. “வேதம் தெளிவாக எடுத்து உரைக்கும் வண்ணத்தில் அமைந்திலது’ என்று நாம்
முன்னமே கூறியிருந்தோமே அஃது.இப்போது எண்ணத் தகுந்தது. இக்லேசம் தீருவதற்கு
வ்யாஸர் செய்த மீமாம்ஸா சாஸ்திரம் ஒரு வழியினால் உதவி புரிகின்றது. வால்மீகி முனி
வன் இயற்றிய இராமாயணமோ, வேறொருவழியினால் உதவி செய்கின்றது. இவற்றுள்
மீமாம்ஸா சாஸ்திரம் செய்யும் உதவியை முதலில் சுருக்கமாகக்காண்போம் :
மீமாம்ஸா சாஸ்திரமாவது – வேத ஆராய்ச்சி செய்யும் நூலாகும். இவ்வாராய்ச்சி முறையை, மேற்கூறிய உபநிஷத்வாக்கியங்களில் பின்வருமாறு நாம் அறியலாம் :
“ஹிரண்ய கர்ப்ப : என்னும் முதல்வாக்கியம், ‘எல்லாம் அழிந்த காலத்து,பிரமன்
இருந்தான்’ என்னும் கருத்தையும், “நஸத்நசாஸத். என்னும் இரண்டாம் வாக்கியம்,
ஸத்தும் அஸத்தும் அக்காலத்தில் இல்லை; சிவன் இருந்தான்” என்னும் கருத்தையும்
“ஏகோ ஹவை நாராயண என்னும் மூன்றாம் வாக்கியம், ‘அச்சமயத்தில் நாராயணன்
இருந்தான்’ என்னும் கருத்தையும் கொண்டுள்ளன. ஆனால்,முதல் இரண்டு வாக்கியங்
களில் பிரமன் இருந்தான்; சிவன் இருந்தான் என்று தெளிவாகத் தெரிகிறது போல், ‘நாரா
யணன் இல்லை’ என்பது தெரிகிறதா? இங்கு இது முக்கியமாய் நோக்கத்தக்கது.
(ஏகோஹவை நாராயண ஆஹீத் ந ப்ரஹ்மா நேசான 🙂 என்னும் மூன்றாம் வாக்கியத்தில் “நாராயணன் அக்காலத்தில் இருந்தான்” என்பது எங்ஙனம் தெளிவாகத் தெரிகின்றதோ, அங்ஙனமே “அக்காலத்தில் பிரமனும் இல்லை; சிவனும் இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறல்லவா?-இதனால் என்ன தேறிற்று என்னில், கூறுவோம்; மேற்கூறிய மூன்று வாக்கியங்களுக்கும் முரண்பாடு சிறிதும் இன்றி, கருத்தைக் கொள்வது சிறந்த முறையாகும். முதல் இரண்டு வாக்கியங்களுக்கும் ‘எல்லாம் அழிந்தகாலத்து, பிரமன் மாததிரம் இருந்தான்; அல்லது சிவன் மாத்திரம் இருந்தான்; வேறு ஒரு பொருளும் இல்லை’ என்னும் கருத்தைக் கொண்டால், ஏகோ ஹவை நாராயண ஆஸீத். என்னும் வாக்கியம் சேருமோ? சேராதன்றோ? ‘ஏகோ ஹவை’ என்னும் வாக் கியம் தெளிவாகக் கூறுகின்றவாறு, “எல்லாம் அழிந்த காலத்தில் நாராயணன் மாத்திரம் இருந்தான் மற்றொன்றும் இல்லை” என்னும் கருத்தைக் கொண்டாலோ,முதல் இரண்டு வாக்கியங்களும் பொருந்தும் என்று கூறவும் வேண்டுமோ? வேண்டாமன்றோ ? ‘ஏனைய பொருள் அழிந்த காலத்து, பிரமனோ சிவனே இருந்ததாகவும், அப்பிரமனும் சிவனும் அழிந்த காலத்தும் அழிவில்லாத நாராயணனே இருந்ததாகவும், முதல் இரண்டு வாக்கியங்களும், மூன்றாம் வாக்கியமும் முறையே அறிவிக்கின்றன என்று கூறும்போது, முரண்பாடு சிறிதும் இல்லையன்றோ? இவ்வாறு ஆராய்ந்து வேதக் கருத்தை அறுதியிடும் நூலே வ்யாஸர் செய்த மீமாம்ஸா சாஸ்திரமாம். இந்த சாஸ்திர உதவியைக கொண்டு வேதக் கருத்தை நாம் நன்கு காணலாம்.-ஆயினும், மேதாவிகளுக்கே இது கூடும்.-இராமாயணம் செய்யும் உதவியை இனிக் காண்போம் :

இராமாயணமும் பரமாத்மாவும்
”சக்ரவர்த்தித் திருமகன் ஸீதாபிராட்டி யைத் திருமணம் புரிந்துகொண்டு அப்பிராட்டியுடனும், சுற்றத்தாருடனும், பரிவாரங்களுடனும் திரு அயோத்திக்கு எழுந்தருளும்போது, வழியில், பரசுராமன் வந்து-குறுக்கிட்டு, தன் வில்லை வாங்கி நாணேற்றுமாறு அச்சக்ரவர்த்தித் திருமகனை வேண்டிக்கொண்டனன்” என்பது வரலாறு. பரசுராமன் கையில் இருந்த அவ்வில்லின் பெருமை பின்வருமாறு:

[ததிதம் வைஷ்ணவம் ராம தனு: பரமபாஸ்வரம்!ஸமானஸாரம் காகுத்ஸ்தரௌத்ரேணதனு ஷாத்விதம்
ததாது தேவதாஸ்ஸர்வா : – ருச்சந்தி ஸ்மபிதாமஹம் சிதிகண்டஸ்ய விஷ்ணோச்சபலாபலநிரீக்ஷயா
அபிப்ராயந்து விஞாய தேவதாநாம் பிதாமஹ விரோதம் னயாமாஸ தயோ: ஸத்யவ
தாம்வர:
விரோதே து மஹத்யுத்தம் அபவத்ரோமஹர் சித்திகண்டஸ்ய விஷ்ணோச்ச பரஸ்பரஜி
கீஷிணோ: !|
ததா து ரும்பிதம் சைவம் தனுர்பீம பராக்ரமம் ஹுங்காரேண மஹாதேவ: ஸ்தம்பிதோதத்ரி லோசன:
தேவை ஸ்ததா ஸமாகம்ய ஸர்ஷிஸங்கை: ஸசாரணை: யாசிதெள ரசமம் தத்ர ஜக்மது :தெள ஸுரோத் தமெள 
ஜ்ரும்பிதம் தத் தனுர் த்ருஷ்டவா சைவம் விஷ்ணு பராக்ரமை அதிகம் மேனிரேவிஷ்ணும் தேவா : ஸர்கணாஸ் ததா]
இவற்றின் கருத்து – இந்த வில் விஷ்ணுவினுடையது. முன், எம்பெருமானுடைய வராஹாவதாரச் செயலை பிரமனிடம் கேட்டு,அவ்வெம்பெருமானுடைய மேன்மையை
உணர்ந்திருந்த எல்லாத் தேவர்களும், சிவன் த்ரிபுர ஸம்ஹாரம் செய்தபின் சிவனுடையவும் விஷ்ணுவினுடையவும் பலாபலத்தைக் காணக் கருதி, யாருடைய வலிமை மிகச் சிறந்தது’ என்று நான்முகனைக் கேட்க அந் நான்முகன், சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் விரோதத்தை விளைவிக்க, அவ்விருவரும் கோரமான யுத்தம் செய்ய, அப்போது விஷ்ணுவினுடைய ஹும் என்னும் ஓசையினால் சிவனுடைய வில்லும், சிவனும் பங்கம் அடைய, ‘இனிப் போர் நிகழ வேண்டாம்’ எனத் தேவர்கள் வேண்டிக் கொளள, அவ்விருவரும் சமனம் அடைய. விஷ்ணுவின் விக்கிரமத்தினால், சிவனும் சிவனது வில்லும் பங்கம் பெற்றதைக் கண்கூடாகக் கண்ட முனிவர்களும தேவர்களும் விஷ்ணுவைச் சிறந்த தெய்வமாக அறுதியிட்டனர்” என்பது

மேலும், திருவடி இராவணன் முன்னிலையில் இராம பிரானுடைய மேன்மையைக் கூறுமிடத்துத் தென்படும் வார்த்தை-(ப்ரஹ்மாஸ்வயம்பூ: சதுரானனோவா ருத்ரஸ்
த்ரிநேத்ர: த்ரிபுராந்தகோவா 1 இந்த்ரோ மஹேந் ர : ஸு ரநாயகோவா த்ராதும் நசக்தாயுதி ராமவத்யம் ! ] இதின் கருத்து- “சிறந்த செல்வம் பெற்றிருப்பவனும், வ்ருத்ரன் என்னும் அஸுரனைக் கொன்றொழித்தவனும், முப்பத்து முக்கோடி தேவதைகளைத் துணையாய்க் கொண்டிருப்ப வனுமான இந்திரனும், இந்த இந்திரனுக்கும் மேலானவனும் ப்ரளய காலத்தில் ப்ரஜைகளை அழச் செய்பவனும் காமனை நெற்றிக்கண்ணால் எரித்தவனும் த்ரிபுராந்தகனுமான சிவனும், இச்சிவனுக்கும் தந்தையானவனும் ஏனையோரைப் போல் பிறவாதவனும் நான்கு முகங்களை உடையவனுமான பிரமனும், தனித்தனியாகவோ, ஒன்று சேர்ந்தோ இராமபிரானுடைய சீற்றத்துக்கு இலக்காய் வதம் செய்யத்தகுந்தவனைக் காக்க சக்தியற்ற வராம்” என்பது.
மேற்கூறியவாறு, தேவதைகளை (இரக்ஷகராக விளங்குகின்றவரைக் கழித்துப் பேசும்
வார்த்தையில், “நாராயணனும் சக்தியற்றவன் என்று குறிக்கப் பெற்றிலது –இதனால்,
” இராமபிரான் நாராயணனே” என்னும் உண்மை யார்க்கும் கூறாமலேயே நன்கு
விளங்குகின்ற தன்றோ?-அன்றியும், இராமபிரானால் கொலையுண்டு கிடக்கும் இராவணனைக்கண்டு, நெஞ்சழிந்து, புலம்பிப் பேசும் மண்டோதரி, ஒருவாறு
தெளிந்து, அந்த இராமபிரானுடைய மேன் மையைப் பின்வருமாறு பேசியிருக்கிறாள்:
இராமபிரானே! “இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம், இனியறிந்தேன் எம் பெருமானுன்னை” என்று பெரியோர் அருளிச் செய்தது போன்று, இத்தனை போதும் உன்னை அறிந்திலேன்; இப்போது அறிந்தேன் என்றாள் மண்டோதரி.
இதைத் திருச்செவியேற்ற இராமபிரான்,-“நீ என்னை அறிந்தவாறு எங்ஙனே?” என்ன,
திருநாட்டில் திருவாழி, திருச்சங்கு, திருத்தண்டு இவற்றைத் திருக்கைகளில் ஏந்தியும்,
திருமறுவைத் திருமார்பில் சின்னமாகப் பெற் றும், திருமகளோடு என்றும் வாழ்பவனாகிய
திருமால் நீ என்றாள்.
”திருமாலாகிய நாம் திருநாட்டை விட்டிட்டு இவ்வுலகில் வரக்காரணம் யாதோ?”
என்று சக்ரவர்த்தித் திருமகன் திரும்பவும் வினவினான்.எல்லா உலகங்களிலும் உள்ள
எல்லாஉயிர்களுக்கும் நன்மையைச் செய்யத் திருவுள்ளம் கொண்டு,மானிட வடிவத்துடன்
திருவவதாரம் செய்து, உலகத்திற்கே கண்டகனாகிய இராவணனைக் கொல்ல வந்தாய்;
கொன்றாய் என்றாள் மண்டோதரி. இக்கருத்துக்களை, பின் குறிக்கப்பெறும் மண்டோதரி
வார்த்தையில் காண்க:
(தமஸ : பரமோதாதா சங்கசக்கர கதாதர-ச்ரீவத்ஸவக்ஷாநித்ய அஜய்யச்சா வ
தோத்ருவ:-மானுஷம் வபுராஸ்தாய விஷ்ணுஸ்ஸத்ய பராக்ரம் 1)
இன்னமும், ‘ தேவரீருடைய திரு நாபிக் கமலத்தில் பிரமனாகிய என்னை உண்டாக்கி,
என்னிடம் படைப்புத்தொழிலும் தேவரீரால் வைக்கப் பெற்றுள்ளது’ என்னும் கருத்தைக்
கொண்டுள்ள,-பத்மே திவ்யேஅர்க்க ஸங்காசே நா யாமுத் பாத்ய மாமபி! ப்ராஜாபத்யம் த்வயா கர்ம மயி ஸவம் நிவேசிதம் ||-என்னும் வார்த்தையைக் காணுங்கால்,
நாராயணன் மேன்மையை நாம் நன்கு அறியலாம் அன்றோ? (இராமபிரான் தன்னுடைச்
சோதிக்கு எழுந்தருளும் போது, பிரமன் வார்த்தையாகக் கால் புருஷனால் கூறப்பெற்
றுள்ளது, இது.)முன்னம், . ஹிரண்யகர்ப்பஸ் ஸமவர்த்த தாக்ரே” “நஸத் நசாஸத் சிவ ஏவ கேவல:”ஏகோஹவை நாராயண ஆஸீத்ந ப்ரஹ்மா)நேசான :” என்னும் வாக்கியங்கள், கருத்
தைத் தெளிவாகத் தெரிவிக்கும் வண்ணத்தில் அமைந்தில; மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றி ஆய்ந்து காணும் மேதாவிகளுக்கே கலக்கம் சிறிதும் இன்றி, ஏனைய பொருள்கள் இன்றி இருச்கும்போது, சிவனோ,பிரமனோ இருந்ததாகவும் எல்லாம் அழிந்த காலத்து, நாராயணனே இருந்ததாகவும் அவ்வாக்கியங்களின் தெளிந்த பொருளைக் காணக்கூடும் என்று கூறியிருந்தோமல்லவா?
இப்போது, இராமாயணம்,(மீமாம்ஸா சாஸ்திரம் செய்யும் உதவியைப் போலன்றி)
யார்க்கும் எளிதில் நன்கு விளங்குமாறு,
(I) விஷ்ணு.சிவன் இவ்விருவருக்கும் போர் நடக்கும்போது, விஷ்ணுவினுடைய மேன்மையை முனிவரும் தேவரும் கண் கூடாகக் கண்டனர்; (2) இந்திரனோ, சிவனோ, பிரமனோ ஒன்று சேர்ந்த இம்மூவரோ, இராமபிரானுடைய சீற்றத்துக்கு இலக்கானாரை இரக்ஷிக்கஇயலாதவர் ; (3) இவ்வுலகத்திற்கு நன்மையையும், இராவணனுக்கு அழிவையும் செய்ய வந்த இர க தெய்வமான நாராயணனேஇராமபிரான்; (4) படைப்பவனாகிய பிரமன்
படைப்புத் தொழிலைப் பரம புருஷனாகிய இராமபிரானுடைய அருளாலேயே பெற்றிருப்பவன் ; என்னும் உண்மைக் கருத்துக்களை முறையே, பரசுராமன்,திருவடி மண்டோதரி (பிரமன்) காலபுருஷன் ஆகிய இவர்கள் வாக்கியங்களினால் நன்கு இயம்புகின்றதைக் கண்டோமல்லவா?
மேற்கூறிய உண்மைக் கருத்துக்களை நாம் மனத்தில் கொண்டு “ஹிரண்யகர்ப்பு: “
“நஸத் நசாஸத்” “ஏகோ வை நாராயாண ஆஸீத் நப்ரஹ்மா நேசான: ‘ என்னும் வாக்
கியங்களைக் கண்டால், மந்த மதிகளுக்கும் கலக்கம் சிறிதும் உண்டாகாதன்றோ?
இவ்வாறு நாராயணன் மேன்மையையும், ஏனையோருடைய தாழ்ச்சியையும், ஆங்கு
ஆங்கு பல வாக்கியங்களினால் மிக மிகத்தெளி வாகத் தெரிவித்திருத்தலை ஒருவாறு சுருக்கமாகக் கண்டோ மல்லவா? இனி ஜீவாத்மாவின் உண்மையை உணருவோம்.

வேதாந்தமும் ஜீவனும்

(பதிம் விச்வஸ்ய) என்பது ஒரு வேதாந்த வாக்கியமாம். இவ்வாக்கியம், ‘இவ்வுலகை உடையவன் எம்பெருமான்’ என்னும் கருத்தைக் கொண்டுள்ளது. இதனால், (எங்ஙனம், சக்ரவர்த்தித் திருமகன் இராமன்’ என்றால், இராமனுக்குத் தந்தை சக்ரவர்த்தி’ என்பது தேறுகின்றதோ, அங் ஙனமே) இவ்வுலகு எம்பெருமானுக்கு உடைமைப் பொருள்’ என்பது தேறுகின்றதல்லவா?
இவ்வாறு உடைமைப் பொருளாயிருக்கும் தன்மையை சேஷத்வம்’ என்று கூறுவர் ஆன்றோர்.-உடைமைப் பொருளாயிருக்கும் தன்மை’ என்பதைச் சிறிது விவரித்துக் கூறுவாம்: கட்டிப் பொன் ஒருவனுக்கு உடைமைப் பொருளாய் இருத்தலைக்காண்கிறோம். அப் பொன், அவன் சிறப்புப் பெறுதற்கு ஏதுவாயும், அவன் விரும்புகின்றவாறு, தான் அனு பவித்தல், பிறர்க்கு உபகரித்தல் ஆகியவற்றிற்கு ஏற்றதாயும் இருக்கின்றது.இது போன்று,ஜீவனும் எம்பெருமானுக்கு உடைமைப் பொருளாய் இருத்தலை ” பதிம் விச்வஸ்ய” என்னும் வாக்கியத்தில் காண்கிறோம். அந்த ஜீவன், எம்பெருமான் சிறப்புப் பெறுதற்கு ஏதுவாயும்,அவ்வெம்பெருமான் விரும்புகின் றவாறு தான் அனுபவித்தல், பிறர்க்கு உபகரித்தல் ஆகியவற்றிற்கு ஏற்றவனாயும் இருக்கின்றான். இங்கு, “கட்டிப் பொன்
போலே சேஷத்வம்” என்னும் வாக்கியம் காணத் தக்கது.
அன்போடு கூடிய இந்தச் சேஷத்வ நிலையை தாஸ்யம்‘ என்பர். இந்தத் தாஸ்யம் ஜீவ
னுக்கே உரியதொரு சிறப்பாகும்.

(யஸ்யாஸ்மி நதமந்தரேமி) என்னும் மற்றொரு வேத வாக் கியத்தைக் காண்போம். இவ்வாக்கியத்தின் கருத்து- ‘எவனுக்கு நான் தாஸனாக (அடிமையாக) இருக்கின்றேனோ, அவனை விட்டு வேறொருவனிடம் செல்லமாட்டேன்’ என்ப தாம் இவ்வாக்கியத்தில் அமைந்துள்ள யஸ்யாஸ்மி‘என்னும் பகுதி, ‘பதிம் விச்வஸ்ய என்னும் வாக்கியத்தின் தேறிய பொருளையே குறிக்கின்றது.
‘நதமந்தரேமி’ என்னும் பகுதியின் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவாம். ஒருபொருள் ஒரு க்ஷணம் இருந்தால், அவ்வாறுஓரு க்ஷணம் இருத்தலை ‘ஸத்தை’ என்பர்-இரண்டு க்ஷணம் முதல் அந்த அந்தக்காலத்தில் இருத்தலை ‘ஸ்திதி’ என்று கூறுவர். முயறசியை ”ப்ரவ்ருத்தி’ என்று பகருவர். முயற்சியின்மையை ‘நிவ்ருத்தி, என்று சொல்லுவர்.
இம்முறையில், ஒவ்வொரு ஜீவனுடைய ஸத்தை, ஸ்த்திதி, பரவ்ருத்தி, நிவ்ருத்தி ஆகிய
இவை பரமபுருஷனுக்கு வயப்பட்டனவாகவே காணப்படுகின்றமையின், ஜீவன் எம்பெரு
மானுக்குப் பரதந்திரன் எனப்படுகிறான்.-எங்ஙனம்,தட்டான் கைப்பட்டுப் பணி செய்யப்படுகின்ற பொன்னானது, அவன் அதனை உருக்கவும், தட்டவும், நீட்டவும்,
ஆக்கவும், அழிக்கவும் முயலுமளவில், அது நெகிழ்வதும் வளைவதும், நீள்வதும், ஆவதும்
அழிவதுமாகி, தன் ஸத்தை முதலியவற்றில் தனக்கு வசமாயிருக்கையின்றி, அவன் வசப்
பட்டிருக்கின்றதோ, அங்ஙனமே, ஜீவனும், தன் ஸத்தை முதலியவற்றில் தனக்கு வச
மின்றி, எம்பெருமான் விரும்புகின்றவாறு, ஆக்கவும், அழிக்கவும் வசப்பட்டிருக்கின்றான்’
என்பதை நாம் அறிதல் வேண்டும் இங்கு,” பணிப்பொன் போலே பாரதந்திரியம்’
என்னும் வாக்கியம் நோக்கத்தக்கது.
இப்பாரதந்திரிய சப்தக் கருத்தை ஊன்றி நோக்கின்.எம்பெருமான் ஸ்வதநதிரன்’
என்பதும் இங்கு நன்கு விளங்குமன்றோ?
பரமபுருஷனைப் பற்றி உள்ள சேஷத்வ பாரதந்திரியங்களிரண்டும் சேர்ந்தே யிருக்கு
மாதலின், அவற்றைத் தனித்தனியே பிரித்து அறிந்து கொள்ளுமாறு, கட்டிப் பொன்,
பணிப்பொன் என்னும் இவ்வுதாரணங்கள் காட்டப் பட்டன.
இவற்றால்,எம்பெருமானுக்குச் சிறப்பை விளைக்கைக்கு உறுப்பாய், அவன் விருப்புக்கு ஏற்ப உபயோகம் கொள்ளுதற்குத் தகுதி யுடையதாயிருக்கை, ‘சேஷத்வம்’ என்றும்,
அங்ஙனம் உபயோகப்படுவதாயிருக்கை, ‘பாரதந்திரியம்’ என்றும் இவற்றிற்கு உள்ள
வேற்றுமையை நாம் நன்கு அறியலாம்.
இதுகாறும் கூறியவாற்றால், ”பதிம் விச் வஸ்ய., ‘யஸ்யாஸ்மி நதமந்தரேமி “ என்னும் வாக்கியங்களில் எம்பெருமான் ஸ்வாமி(உடையவன்) ‘ஸ்வதந்திரன்’(தனக்கு வசமான தன் ஸத்தை முதலியவற்றைப் பெற்றிருப்பவன்)’ என்னும் கருத்தும்,ஜீவன்,அவ் எம்பெருமானுக்குச் சேஷமாயும் பரதந்திரமாயும் இருப்பவன்’ என்னும் கருத்தும், அவ
னுக்கும் (பரமனுக்கும்) இவனுக்கும் ( சேதனனுக்கும்) வேற்றுமை உண்டு’ என்னும் கருத்தும் நன்கு விளங்குகின்றன அல்லவா?
இனி,  (தத் த்வம் அஸி) என்னும் வேறொரு வேதாந்த வாக்கியத்தைக் காண்போம். இவ்வாக்கியம், ஆத்மா ஒரு பொருள்தான் உண்டு; ஜீவனுக்கும் பரமனுக்கும் வேற்றுமை யில்லை என்னும் கருத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இக்கருத்தையும். “ பதிம் விச்வஸ்ய” “யஸ்யாஸ்மி ந தமந்தரேமி” என்னும் வாக்கியங்களின்,மேற்கூறிய கருத்தையும் சேர்த்து நோக்குங்கால், ‘ஜீவனும் பரமனும் ஒரு பொருளா ? அல்லது வேறு வேறு பொருள்களா? ஒன்று எனின். ‘பதிம் விச்வஸ்ய’ என்னும் சுருதி சேராது. வேறு எனின், “தத் த்வம் அஸி’ என்னும் சுருதி சேராது’ என்னும் இக்கலக்கம்)
உண்டாவது இயல்பன்றோ?
இக்கலக்கத்திற்குப் பரிஹாரம் மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின் பறறிக் காணுங்கால், பின்வருமாறு அறியத்தக்கது : தத்த்வம் அஸி” என்னும் சுருதியிலுள்ள-தத்’ என்னும் பதம், அறிவு, ஆற்றல் முதலிய திருக்குணங்களோடு கூடிய காரணப்பொருளான பரமனைக் குறிப்பதாகும். ‘த்வம்’ என்னும் பதம் ‘ஸ்வேதகேது ‘ என்னும் ஜீவனைச் சரீரமாய்க் கொண்டுள்ள பரமனைக் குறிக்கும்.-இவ்விருவரும் ஒருவர்’ என்பது இவ்வாக்கியத்
தின் கருத்து.

தத் என்னும் இப்பதம் பரமனைக் குறிக்கும் என்பது உண்மையே. ஆனாலும், இந்த த்வம்
என்னும் பதம், முன்னிலைப் பொருளான ஜீவனை (ச்வேதகேதுவை)க் குறிக்குமேயன்றி,
பரமன் வரையில் செல்லுமோ? செல்லாதன்றோ ? அங்ஙனமாயின்,இஃது அவனை
(ச்வேதகேதுவை)ச் சரீரமாய்க்கொண்டுள்ள  பரமனைக் கூறும் என்று நீங்கள் கூறுவது
எவ்வாறு?’ என்னும் கேள்வி உண்டாகலாம்.
இக் கேள்வியின் பரிஹாரம் – ஜாதியை உணர்த்தும் சொல், ஜாதியை உணர்த்தும் அளவில் நில்லாமல்,எங்ஙனம் அந்த ஜாதிக்கு இருப்பிடமான வடிவத்தையும் உணர்த்துகின்றதோ, (எங்ஙனம். ‘குடம்’ என்னும் சொல்,குடத்தன்மையை உணர்த்தி அவ்வளவில் நில்லாமல், அக்குடத்தன்மைக்கு இருப்பிடமான குடத்தையும் உணர்த்துகின்றதோ-அங்ஙனமே, சரீரத்தை உணர்த்தும் சொல்லும், சரீரத்தை உணர்த்தும் அளவில் நில்லாமல், அச்சரீரத்தைத் தாங்கும் ஆத்மா வரையில் செல்லும்’ என்பது ஒரு முறையாம். இம்முறையை-அபர்யவஸான வருத்தி’ என்று கூறுவர். ஜீவன் எம்பெருமானுக்குச் சரீரம்
 (என்பது யஸ்யாத்மாசரீரம் ) என்னும் சுருதியினால் அறியத்தக்கது.-ஜீவன். கை, கால் முதலிய உறுப்புக்களோடு கூடிய பிண்டத்தை ஏவி, தாங்கி,அப்பிண்டம் செய்யும் பணியை ஏற்று உகந்து போருகின்றமையின், அவனை ஆத்மா என்றும், அப்பிண்டத்தைசரீரம் என்றும் அறிகின்றோம்.
இது போன்றே, பரமாத்மாவும், அறிவுற்ற சித்தும் அறிவற்ற அசித்துமாகிய இப்பிரபஞ்
சத்தைத் தூண்டி, தாங்கி, இப்பிரபஞ்சம் செய்யும் பணியை ஏற்று உகக்கிறானாதலின்,
அப்பரமன் ஆத்மா; இப்பிரபஞ்சம் சரீரம் என்னத் தட்டில்லையன்றோ?(தாத்ம்யமிதம் ஸர்வம் தத் ஸத்யம் ஸ ஆத்மா) என்னும் வாக்கியம், “தத் த்வம் அஸி என்னும் வாக்கியத்தோடு சேர்ந்த வாக்கியமாம். இவ்வாக்கியம், ‘இப்பிரபஞ்சம் பரமனை ஆத்மாவாக உடையது ; அது உண்மை;-பரமன் ஆத்மா’ என்னும் கருத்தைக் கொண் டுள்ளது .-இவ்வாறு, முதலில், இப்பிரபஞ்சத்திற்கும் பரமனுக்கும் உள்ள சரீரத் தன்மை,ஆத்மா வின் தன்மை இவற்றைக் கூறி, பின்பு, ‘ஸ்வேதகேது’ என்னும் ஜீவனையும், பரமனையும் முறையே த்வம், ‘தத் ‘ என்னும் பதங்களினால் குறித்து, இவ்விருவருக்கும் உள்ள (சரீரத்தன்மை ஆத்மாவின் தன்மை ஆகிய) தொடர்பினால் உண்டான ஒற்றுமையை அந்த ”தத்த்வம் அளி” என்னும் சுருதி அறிவிக்கின்றதாக நாம்கொள்ளுதல் நன்றாம். இப்போது, “தத் த்வம் அளி ” என்னும்
இந்தச்சுருதியிலும், ”பதிம் விச்வஸ் ” “யஸ் யாஸ்மி ந தமந்தரேமி’ என்னும் சுருதிகளில்
போன்று, ஜீவனைப் பரமனுக்குச் சேஷப் பொருளாயும், பரதந்திரப் பொருளாயும்
கண்டோமல்லவா? கண்டவாறு யாதோ?எனின், ‘ஜீவன் எம்பெருமானுக்குச் சரீரம்
என்ற போதே,அந்த ஜீவன், எம்பெருமானுக்கு சேஷப் பொருளும், பரதந்திரப்
பொருளுமாம்’ என்பது தெள்ளிதன் விளங்குகின்றதன்றோ?
இம்முறையில், மீமாம்ஸா சாஸ்திரம், முன்னம் கூறிய கலக்கத்திற்குப் பரிஹாரத்தைத்
தெரிவிக்கின்றது. இது போலன்றி, இராமாயணம் எளிதில் உணருமாறு ஜீவனுடைய
உண்மை நிலையை உணர்த்துகின்றது. இவ்வாறு எளிதில் உணர்த்தும் உண்மை நிலையைக் காண்போம்.

இராமாயணமும் ஜீவாத்மாவும்-
‘சக்ரவர்த்தித் திருமகன், ஸீதாபிராட்டி யுடனும், இலக்குமணனுடனும் வனத்திற்கு எழுந்தருளி, சக்ரவர்த்தியும் துஞ்சி, இராச்சியம் அராஜகமாய்க் கிடந்த காலத்து, பரதனை
முடி சூடிக்கொள்ளவேணும் என்று வஸிஷ்டர்) வேண்டிக்கொள்ள, அப்பரதன் அதற்கு இசையாது இருந்தனன்’ என்பது சரித்திர உணமை அங்ஙனம் இசையாது இருக்கும்போது, பரதன் வளிஷ்டரை நோக்கிக் கூறினவார்த்தை பின் வருமாறு :-
(கதம் தசரதா ஜாதோபவேத் ராஜ்யா பஹாரக: ராஜ்யம் சாணம் ச ராமஸ்ய தர்மம் வக்து மிஹார்ஹ )-இதின் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம் :-
இராமபிரான் வனத்திற்கு எழுந்தருளிய பின், அப்பரமபுருஷன் பிரிவு பொறாது, என் தந்தையாரான சக்ரவர்த்தி துஞ்சினார். அச் சக்ரவர்த்தி வயிற்றில் பிறந்த நான், அவ்வி ராமபிரான் துறந்த இராச்சியத்தை எங்ஙனம் ஏற்றுக்கொள்வேன். அங்ஙனம் ஏற்றுக் கொண்டால், சக்ரவர்த்தி வயிற்றில் பிறந்த பிள்ளை என்று என்னை உலகம் கூறுமோ? கூறாதன்றோ ?
மேலும், என் உண்மை நிலையை உணருங்காலும் இவ்விராச்சியத்தை யான் ஏற்றுக் கொள்வதற்கு இல்லை. ஏனெனில், நான் என்னும் இவ்வாத்மாவும், இந்த இராச்சியமும் அப்பிரானுக்கே உரிய பொருள்களாம்.-அப்பிரானுக்கே உரிய இரண்டு உடைமைப் பொருள்களுள், ஒன்று மற்றொன்றை ஆண்டு பரிபாலனம் செய்வது முறையாமோ? ஆகா தன்றோ?
இவ்வுலகில் தன்னைப் பெற்று வளர்த்த தன் தந்தையாரையும்சிறையிலிட்டு வைத்து, தான்
இராச்சியத்தை முறை தவறிப்பெற்று, பரிபாலனம் செய்வது என்பதொன்று உண்டு. இம்முறையைப் பின்பற்றி, என் பாக்கல் இராச்சி யத்தை வைப்பது தகுமோ ? தகாதன்றோ ?
என் இயல்பை உணர்ந்து, காக்கும் தன்மையைக் கூறுவீர்.இராமபிரானுக்கே உரிய இப்பொருள்களுள், ஒன்று மற்றொன்றைஆண்டு பரிபாலனம் செய்யலாம் என்னில்,
என்னைத்தான் இராச்சியம் இரட்சிக்கட்டுமே?-என, ஒருவனுக்கே உரிய பெட்டி, இரத்தினம் ஆகிய இரு பொருள்களுள், ஒன்று காப்பதாயும், மற்றொன்று காக்கப்படுவதாயும் காணப் பெறுகின்றன அல்லவா? இதுபோன்று பரதனாகிய நீ, காப்பவனாகியும் இராச்சியம் காக்கப் படுவதாயும் ஆனாலோ? என்னில்,-மேற்கூறிய இரு பொருள்களுள், ஒன்றான இரத்தினம், உடையோனாகிய அப்புருஷனால் என்றும் தரிக்கத்தக்கதாம். அவ்வாறான அந்த இரத்தினத்தை,அவன் ஒருகால்பெட்டியில் வைத்து, அப்பெட்டியைக் காப்பதாய்க் கரு துங்கால், அது அங்ஙனம் காணப் பெறுகின்றது. அல்லாத போது, அப்பெட்டி அங்ஙனம்
காணப் பெறுகின்றதோ? இல்லையன்றோ? இராமபிரானுக்கே உரிய (இரத்தினமாகிய இராச்சியம் அப்பிரானாலேயே என்றும் தரிக்கத் தக்கதல்லவா? அந்த இராச்சியமாகிய
இரத்தினத்தைத் தரித்துக் காக்கத் தகுதி எனக்கு உண்டோ? இல்லையன்றோ? நான் அப் பெட்டியாய் இருக்கத் தகுமோ? தகாதன்றோ?-என,
இராச்சியத்திற்கு அறிவும் ஆற்றலும் இல்லை. அதனால், அதற்கு உன்னைக் காக்க இடமில்லை. அறிவும் ஆற்றலும் உள்ள உனக்கோ, அந்தஇராச்சியத்தைக் காக்கத் தகுதி உண்டு என்னில், என்அறிவும் ஆற்றலும் எம் பெருமானுக்குப் பணி செய்யப் பாங்காயுள்
ளன வன்றி, அந்த எம்பெருமான் உடைமையை அவனுக்கு இல்லை செய்யத் தகுதியுடையனவோ? அங்ஙனமோ தேவரீர் எண்ணியிருக் கிறது?” என்பது இதின் கருத்து-இதனால், ‘பரதன் உண்மைநிலையே ஜீவனுக்குரிய ஓர் உண்மை உயரிய நிலை என்பது தெள்ளிதின் விளங்குகின்றதல்லவா?

இனி, ஸீதா பிராட்டியார் சரிதத்தில் பார தந்தரிய நிலையைக் காண்போம் : ஸீதா பிராட்டியாருக்கு மூன்று பிரிவுகள் உண்டு. தேவமாதர்களின் சிறையை விடுவிக்கைக்காக அசோகவனத்தில் தாம் சிறை இருந்தது. முதல் பிரிவு. இரண்டாம் பிரிவாவது – உலக அபவாதத்தைப் போக்கிக் கொள்வதற்காகச் சக்ரவர்த்தித் திருமகன் அப்பிராட்டியாரை காட்டிலே போகவிடப் பிரிந்தது . மறுபடியும் அப்பிராட்டியார் இராமபிரான் முன்னிலையில் வந்திருக்கும் போது, பிரிந்து, பிறநதகத்தில் (பூமியில்) புகுந்து விட்டது மூன்றாம் பிரிவாம். இப்பிரிவுகளுள், இரண்டாம் பிரிவில் பாரதந்தரிய நிலை நன்கு விளங்குகின்றது. இதைச் சிறிது விவரித்துக் கூறுவாம் :
சக்ரவர்த்தித் திருமகனும் ஸீதாபிராட்டியாரும் திரு அயோத்தியில் எழுந்தருளியிருக்கும் காலம். திருவயிறு வாய்த்திருத்தலை (கர்ப்பிணியாயிருக்கையை ) சக்ரவர்த்தித் திருமகன் கண்டனன். அவன் அப்பிராட்டியாரை நோக்கி, அறுபதினாயிரம் ஆண்டு மலடு கிடந்த என் தந்தையாரான சக்ரவர்த்தியைப் போன்று வருந்திப் பெறாது, எளிதாகவே எனக்குப் புத்திரப் பேறு கிட்டிற்றே! அவசியம் அனுபவித்தல்லது நிற்க வொண்ணாத ஆசையோடு கூடி இருக்கும் நீ எத்தை விரும்பு கிறாய்? எல்லாவற்றையும் சொல்லாய், உள்ளோடுகிறவை நிழலெழுகிற முகவொளி உடையவளே!-(அபத்யலாபோ வைதேஹி மமாயம் ஸமு பஸ்தித: I கிமிச்சஸி ஸகாமா த்வம்ப்ரூஹி ஸர்வம் வரானனே) என்று அருளிச் செய் தனன்.
இதைச் செவியேற்ற பிராட்டி இராம பிரானை நோக்கி, அருளிச் செய்த வார்த்தை யாவது -(தபோவனானி புண்யானி த்ரஷ்டும் இச்சாமி ராகவ கங்காதீர நிவிஷ்டானி ருஷீணாம்
புண்ய கர்மணாம் பல மூலாசி நாம் வீர பாத மூலேஷு வர்த்திதும் / ஏஷமே பரம: காம :)-என்பதாம்.
இதின் பொருள் ‘இராகவனே ! கிழங்கு, காய்,கனி இவற்றைப் புஜிப்பவரும், ஸத்துவ குணம்பெற்றிருப்பவருமான மஹான்களுடைய திருவடி நிழலில் ஒரு நாளாகிலும் தங்கி, கங்கைக் கரையில் உள்ள தபோவனங்களைக் காண விரும்புகிறேன். இதுவே. எனக் குள்ள மேலான விருப்பம்’ என்பதாம்.
இவ்வார்த்தையைத் திருச்செவி சாற்றியருளின இராமபிரானும், உலக அபவாதத்தைப்
போக்கிக் கொள்ள வேணும் என்னும் திருவுள்ளம் பெற்றிருப்பவனாகையால், அப்பிராட்டி யாரின் விருப்பத்தை நிறைவேற்றுபவன்போல், அவ்வாறே அனுப்பினன். இதுவே இரணடாம் பிரிவாகும்.
இப்பிரிவுக்குப் பயன்- இராமபிரடான், கட்டிலே வைத்த போதோடு காட்டிலே
விட்ட போதோடு வாசியற அப்பிரானுடைய திருவுள்ளக் கருத்தையே பின் சென்று நடக்க வேண்டும்படியான தன் பாரதந்தரிய நிலையைப் பிரகாசப்படுத்துதலேயாம்.
கட்டிலே வைத்தபோதோடு காட்டிலே விட்ட போதோடு வாசியற, அப்பிரானுடைய திருவுள்ளக் கருத்தையே பின்சென்றுநடக்க வேண்டும்படியான நிலை’ என்பதைச் சிறிது விளக்குவோம்.
ஸீதாபிராட்டி அசோக வனத்தில் சிறை இருக்குங்கால், இராவணனாலும், அரக்கியராலும் பட்ட துன்பம் எல்லையற்றதாம். அப் பிராட்டி முன்னிலையில், இராவணன் முறை தவறிக் கூறிய வார்த்தைகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று பின்வருமாறு-‘கிளி போன்றவளே! நான் உன்னைக் கொணர்வதற்கு முன்னமே உன் கணவனாகிய இராமன் மாண்டு போனான்; அவன் இறக்குங்கால்,ஹா ஸீதா ! ஹா லக்ஷ்மணா ! என்று கூறியதை நீ காதாரக் கேட்டிருக்கின்றாய் ; அங்ஙனம் இருக்க, இராமனைக் கூடவேணும் என்று நீ கருதுகின்றனையே!  ஈது என்ன பேதமை? நல்விதி என்னை உன் பக்கல் கூட்டி
யிருக்க, அதை அவமதித்து என்னை வெறுப்பது தகுதியோ ‘ இங்கு,
“வீட்டும் காலத்து அலறிய மெய்க்குரல்
கேட்டும் காண்டாற்குஇருத்தி கொல் கிள்ளை நீ !
நாட்டும் கால்நெடு நல் அறத் தின்பயன்
ஊட்டும்காலத்து இகழ்வது உறும்கொலோ–என்னும் கம்பர் வாக்கைக் காண்க.
மக்களுள் ஒருவனாகிய இராவணன் தாயான பிராட்டி முன்னிலையில், கூறும் வார்த்தை
யாமோ? இது. இங்ஙனமே. அரக்கியரும். தத்தமக்குத் தோன்றியவாறு கடிந்து கூறிய
சரிதம் உலகமறிந்ததேயாம். வில்லம்புக்குத் தப்பலாம்; சொல்லம்புக்குத் தப்ப இயலுமோ? இயலா தன்றோ?
“தீயினாற்சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு-என்னும் ஆன்றோர் வாக்கு இங்குக் காணத் தக்கது.
இங்ஙனம் இருப்பினும்,முடிந்து பிழையாது, பிராட்டி அசோக வனத்தில் உயிர் தரித்து
இருந்தமைக்குக் காரணம் யாதோ? எனின்,-காரணம் ஒன்று கூறுவாம்.
நம் தலைமகனான இராமன் நம்மிடம் அளவற்ற அன்பு உள்ளவன்;ஜகதேக வீரன்;
விரோதியான இராவணனைக் கொல்வது திண்ணம். கொன்று, நம்மைத் தேடுங்கால்,
ஸீதை முடிந்து பல மாதங்களாயிற்றே? என்றால், தண்ணீர்ப் பந்தலில் வந்து, உருண்டு
உடைந்து கிடக்கும் தண்ணீர்ச்சாலைக் கண்டு தபிக்கும் விடாயனைப் போன்று, அப்
பரமன் கதி என்னாகும்! அப்பரமனுக்காகவே நாம் உயிர் தரித்திருப்பது நம் நிலைமைக்குப்
பொருந்திய கார்யம் அன்றோ?” என்று இருந்ததே அக்காரணமாம்.இங்கு, இராமபிரான் திருவுள்ளக் கருத்தைப் பின்சென்று இருக்கும் பாரதந்தரியநிலையை நாம் நன்கு உணரலாம் அல்லவா?-இக்கருத்தை நாம் மனத்திருத்தி, இரண்டாம் பிரிவையும், அப்பிரிவில் நடந்தசெயலையும் காணுங்கால்,ஓர் ஐயம் எழக்கூடும் அந்த ஐயம் பின்வருமாறு காணத்தக்கது.-இரண்டாம் பிரிவாவது – உலக அபவாதத்தைப் போக்கிக் கொள்வதற்காக இராமபிரான் பிராட்டியைக் காட்டிலே போகவிடப்பிரிந்தது’ என்று முன்னமேயே கூறியிருந்தோம். இதைக் காணுங்கால், பிராட்டியிடம் இராமபிரானுக்கு அன்பு எள்ளளவும் இல்லை என்று தெரிகிறதன்றோ? அப்பிராட்டியார், தம் உயிரை விரும்பி இருப்பது இராமபிரானுக்காகவே என்ற கருத்து,-(நஹி மே ஜீவிதேநார்த்த :) என்ற அவர் கூற்றால் நன்கு விளங்குகிறதன்றோ ? அசோகவனத்தில் எழுந்தருளியிருக்குங்கால், இரா
வணனாலும் அரக்கியராலும் சொல்லொணாத்துன்பம் பெற்றிருந்தும் இராமபிரானுக்காக
வேயன்றோ உயிர் தரித்திருந்தது? அவன் அவ்வாறு இருக்க, பிராட்டியார் உயிர் துறக்காது
இருந்ததற்குக் காரணம்யாதோ ?-இவ் ஐயத்திற்குப் பரிகாரமாவது– மிகவும்
துயருற்றிருந்த இலக்குமணன், கங்கைக் கரையேறினதும், பிராட்டி ஸன்னிதியில், இராமன்,
காட்டிலே விட்டதிற்குப் பயனாகத் திருவுள்ளம் பற்றின உலக அபவாத பரிஹாரத்தை விண்ணப்பம் செய்தனன். அதைச் செவிமடுத்த அப்பிராட்டி, மிகவும் துன்புற்றுப் புலம்பிப் பேசும்போது, அருளிச்செய்த வார்த்தைகளுள் ஒன்று.
(நகல்வத்யைவ ஸௌமித்ரே ஜீவிதம்ஜாஹ்வீ ஜலே
த்யஜேயம் ராகவம் வம்சேப துர்மாபரிஹாஸ்யதி ||–இதன் கருத்து – இலக்கு மணனே! ‘இராம
பிரானைச் சுட்டியிருக்கும் ரகுஸந்தானமானது, அவ் இராமபிரானுடைய திருவம்சத்தில்
இல்லாமல் அழிய வொண்ணாது’ என்று கங்கா ஜலத்தில் இப்போதே உயிரை விடுகைக்குத்
தகுதியுடையவளாக ஆகிறிலேன்’ என்பதாம்.
இக்கருத்தைக் காணுங்கால், இராமபிரானைப்பற்றி உயிர் தரித்திருக்க வேண்டுவதில்லை. அப்பிரான் விரும்பிய ஸந்ததியைப்பற்றி அப்பிராட்டியார் அப்பிரிவில் உயிர் தரித்திருந்ததாய்த் தெரிகிறதன்றோ? இதைக்காண்போருக்கு மேற்கூறிய ஐயத்தின் பரி
ஹாரம் நன்கு புலனாம்.-இங்கு, ”ஆற்றாமையின் கனத்தாலே முடிந்து பிழைக்கை தேட்டமாகா நிற்கச் செய்தேயும், அது செய்யமாட்டாதே பெருமாள் நினைவைப்
பின் சென்று, தன் ப்ராணனை நோக்கிக் கொண்டிருக்க வேண்டும் படியான பாரதந்
திரியத்தையிறே ப்ரகாசிப்பித்தது” என்னும் மணவாளமா முனிகள் திருவாக்கு அனுபவிக்
கத்தக்கது.
இத் திருவாக்கில் அமைந்துள்ள “பெருமாள் நினைவைப் பின்சென்று” என்பதற்கு, ‘குசல
வர்களுடைய திருவவதாரத்தில் இராமபிரான் விருப்புற்றிருப்பவனாம்.ஆதலின,இப்போது
நாம் உயிர் தரித்திருப்பது அப்பிரானுக்கு இஷ்டமாம்’ என்னும் எண்ணத்தை, (அபத்
யலாபோவைதேஹி. என்னும் அப்பிரான் திருவாக்கையும், அதின் மூலமான அவன் திரு
வுள்ளக் கருத்தையும் பின்பற்றி)ப் பெற்றிருந்து’ என்பது கருத்தாம்.
இனி, இங்கு அப்பிராட்டியார் குசலவர்கள் திருவவதாரம் செய்த பின், உயிரோடு இருந்ததிற்குக் காரணம் யாதோ?என்னும் வினா சிலருக்கு உண்டாகலாம். இராமபிரானுக்காகவோ, அப்பிரானுடைய ஸந்ததிக்காகவோ, பிராட்டியார் உயிர் தரித்திருக்க வேண்டுவதில்லையன்றோ?இவ்வினாவிற்கு விடை பின்வருமாரு – தலைவன், தலைவிக்கு அடையப்பெறும் நன்மையாயும், அந்நன்மையைப் பெறுதற்கு ஏதுவாயும்,-அத்தலைவியினால் உபசரிக்கத் தக்கவனாயும், போற்றத் தகுந்தவனாயும் இருப்பவனாம்.
அதனால், உயிரையோ, அவ்வுயிரிலும் மேற்பட்டது ஒன்றையோ, விட்டாகிலும் தலைவன்
விருப்பத்தைச் செய்ய வேண்டியவளாம் தலைவி
(பதிர்ஹி தைவம் நாரயா : பதிர்பந்து : பதிர் கதி: 1 ப்ராணை ரபி ப்ரயம் தஸ்மாத் பர்த்து: கார்யம் விசேஷத: I”பாலயந்தீ ஹரேர் பாவம் பத்னீ பகவ தோஹ்யஹம் ) என்று பிராட்டியாராலேயே அருளிச் செய்யப் பெற்றுளளது
இங்கு, ‘பிறருக்காக உயிர் தரித்திருக்கவேண்டும்; பரதந்திரருக்கு முடிகை தேட்டமானாலும் முடியப்போகாது’ என்னும் உண்மையை உணருதல் வேண்டும் இவ்வுண்மைக் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம்: பெருவ்யாதியினால் பீடிக்கப்பட்ட ஒருவன், அப் பீடை தாங்க மாட்டால், தானே உயிரைத் துறந்து விடுகிறான். அவன் அங்ஙனம் முடிகையே அவனுக்குச் சேர, பிழைக்கை எனப் பெறுகின்றது. இவ்வாறு முடிகையே பிழைக்கையானால் பிழைக்கையும் முடிகையாகலா மன்றோ?
ஸீதாப்பிராட்டியார், குசலவர்கள் திருவ வதாரம்செய்த பிறகு, இராமபிரானுடைய
ஸந்ததுக்காக உயிர் தரித்திருக்கவேண்டுவதில்லை என்பதும். அக்காலத்தில் அவருக்கு
முடிகை தேட்டமாயிருந்தது என்பதும் ஒருவாறு உன்மையேயாம். ஆயினும், அப்பிராட்டியார் தம் இயல்புக்கு ஏற்ப, மேற்கூறிய வாறு பிழைக்கை என்னும் முடிகையைப் பெற்றிருந்தவர் என்றே நாம் அறிதல் வேண்டும். இவ்வாறு இருத்தற்கும் காரணம் இராமபிரான் திருவுள்ளக் கருத்தேயாம்.
இங்கு, திருவுள்ளக் கருத்து என்பது யாதோ? எனின், கூறுவோம்: “ஸீதா பிராட்டியார் கற்
புடையவர்” என்பது மாத்திரமன்றி, கற்பினுக்கு அணியாகவே விளங்குபவராம். கண்
டனன் கற்பினுக்கு அணியை’ என்னும் திருவடி திருவாக்கையும் இங்கு நாம் காணுதல்
வேண்டும். அப்பிராட்டியாரை, இக் கொடுவுலகம் தன் இயல்புக்கேற்ப, குற்றம் கூறிற்று.
ஆயினும், நாள் செல்ல, நாள் செல்ல இக் கொடுவுலகத்திற்கே, அப்பிராட்டியாரின்,
குற்றம் சிறிதும் இன்றியிருக்கும் சிறப்பு நன்கு விளங்கக் கூடும். அக்காலத்கில் குழந்தைகளுடன் பிராட்டியாரை அழைத்துக் கொள்வதே தமக்கு நன்றாம். ஆதலின், இப்
பொழுது பிராட்டியார் உயிர் துறத்தல் கூடாது. என்பதே அக்கருத்தாம்.
இதற்குத்தக்க பிரமாணம் யாதோ? எனின்,
மூன்றாம் பிரிவைப் பற்றிக் கூறுமிடத்து, வால்மீகி முனிவன். இராமபிரானுடைய ஸன்
னிதியில் வந்து ஒடுங்கி நிற்கும் ஸீதாப்பிரட்டியாரைக் குறித்து,’இவர் குற்றம் சிறிதும்
இன்றி நல்லொழுக்கம் பெற்றிருப்பவர்;-பாவம் சிறிதும் இல்லாதவர் ; இராமபிரானை
யல்லாமல் மற்றொருவரையும் நெஞ்சாலும் நினைத்திலாது, அப்பிரானையே தெய்வமாகப்
பற்றி இருப்பவர்-‘இயம்சுத்தஸமாசாரா அபாபா பதிதே வதா’ என்று கூறியிருத்தலையும்,
இராமபிரானும், “நானும், குற்றம் சிறிதும் இன்றி இருப்பவர் பிராட்டியார் என்பதை அறிவன் (“அபாபேத் யபி ஜானதா ) முனிவனாகிய நீர் சொன்னதுவே போதும்-ஏ தேவம் மஹாபாக யதா வசஸ் தர்மவித்)ஆனாலும், இந்தத் திரளிலே உலகம் நம்புமாறு, தன் சுத்தியை வெளியிட்டுக்கொள்ள வேண்டும்’ என்று அருளிச் செய்திருத்தலையும் காணுங்கால், மேற்கூறிய கருத்து,தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ?
இங்கு, (பிறருக்காக உயிர் தரித்து இருக்க வேண்டும் பரதந்திர ஜன்மத்தில் பிறந்தோருக்கு நினைத்தபோது முடியப்போமோ ?-அங்ஙனம் நினைத்தபோது முடிந்து விட்டால்,
பாரதந்திரியமாகிற செல்வம் நிலை பெற்றிக் குமோ ?) என்னும் கருத்தைக் கொண்டுள்ள
மாயும் வகையறியேன் வல்வினையேன் பெண் பிறந்ததே என்னும் ஆழ்வார் திருவாக்கையும் காண்க.
இதுகாறும் கூறிய பரதன், ஸீதா பிராட்டியார் இவ்விருவருடைய சரிதங்களை நாம்
மனத்திருத்தி நோக்குங்கால், இராமபிரானுக்கு இராச்சியமும், பரதனும், ஸீதாப்
பிராட்டியும் போன்று, ‘இந்த ஜீவனும், இவனுடைமையாக எண்ணப் பெற்றிக்குமவையும் அப்பிரானுக்கே (நாராயணனுக்கே) உரிய உண்மை உடைமைப் பொருளும் பரதந் திரப்பொருளுமாம்’ என்பது நன்கு விளங்கு கின்றதல்லவா ? இவ்வாறு ஜீவனுடைய
உண்மை நிலையை இராமாயணத்தில் கண்டோ மல்லவா? இனி, உபேயம் எனப்படும் பயனைப் பற்றி ஆராய்வோம்.

—————-

வேதாந்தமும் உபேயமும்

இவ்வுலகிற்கு மீண்டுவருதல் இன்றி, மோக்ஷ உலகத்தைத் தருவதான வழியில் சென்று,  திருநாட்டிலே எம்பெருமானைச் சேர்ந்து, அவனையும், அவன் திருக்குணங்களையும், திருமேனியையும் அன்புடன் அனுபவித்து, அவ்வனுபவத்தினால் உண்டான. ஆனந்தம்தூண்ட அவன் திருவுள்ளம் உகக்குமாறு அடிமை செய்து வாழுதலே, இந்த ஜீவனுக்குச் சிறந்த நன்மையாம். இவ்வாறான வாழ்வையே உபேயம்’ என்றும், வீடுபேறு‘ என்றும் கூறுவர், ஆன்றோர். இங்கு, ‘பரமனைப் பஜனம் பண்ணுவோர்,
(மோஷ உலகத்திற்குச் செல்லுவோரை முதலிற்கண்டு. உபசரித்து, வழி நடத்தும்
தெய்வமான) அர்ச்சிஸ்ஸை அடைகின்றனர்’ என்னும் கருத்தைக் கொண்டுள்ள
(தே ர்ச்சி ஷமபி ஸம்பவந்தி)என்னும் வேதாந்த வாக்கியமும்,-பரமனைப் பஜனம் பண்ணுவோன் அப்பரமனையே அடைகின்றான்’ என்னும் பொருள் பெற்றுள்ள
 (ப்ரஹ்மம் விதாப்நோதி பரம்) என்னும் வேதாந்த வாக்கியமும்,
‘மிகவும் இனிய பொருளான பரம புருஷனை அடைந்து, அனுபவித்து இன்பம் துய்க்கின்றான்’ ‘திருநாட்டில் முக்தன் எம்பெருமா னுடன் அவன் திருக்கலியாண குணங்களை அனுபவிக்கின்றான்’ என்றும் அப்பரமபுருஷனுடைய திருமேனியைக் கண்கூடாகக் காண்கின்றனர் நித்யர்’ என்னும் கருத்துக்களை முறையே காட்டும்
 ” (ரஸம் ஹ்யேவாயம் லப்த்வாS நந்தீ பவதி) ” (பரமே வ்யோமன் ஸோ ச்னுதே ஸர்வான் காமான் ஸஹப்ரஹ்மணா விபச்சிதா(ஸதா பச்யந்தி ஸூரய :) என்னும் வேதாந்த வாக்கியங்களும் காணத் தக்கன.
ஆனால், ‘பரமபுருஷன் திருவுள்ளம் உகக்குமாறு அடிமை செய்து வாழுதல் இந்த ஜீவனுக்குச் சிறந்த நன்மை’ என்பதற்குத் தக்க பிரமாணம் யதோ? என்னும் கேள்வி இங்கு உண்டாவது இயல்பேயாம்.
இக்கேள்விக்கு விடை பின்வருமாறு : ஜீவன் கை, கால் முதலிய உறுப்புக்களோடு
கூடிய பிண்டத்தை ஏவி, தாங்கி, அப்பிண்டம் செய்யும் பணியை ஏற்று உகக்கின்றமையின், அந்த ஜீவன் ஆத்மா ; அப்பிண்டம்சரீரம்’ என்பது எங்ஙனமோ, அங்ஙனமே-பரமன் ஜீவனை ஏவி,தாங்கி, அந்த ஜீவன் செய்யும் பணியை ஏற்று உகக்கின்றமையின்,
அப்பரமனும் ஆத்மா; அந்த ஜீவனும் சரீரம், என்பதைபும் நாம் உணரலாமல்வலா?
இங்கு, (யஸ்யாத்மா சரிரம்= எவனுக்கு ஜீவன் சரீரமோ) என்னும் வேதாந்த வாக்கியம் பிரமாணமாய்க் காணத்தக்கது இதனால், தேறிய ஸாரப் பொருள் என்? என்னில், இந்தச் சுருதி. ஜீவன் பரமனுக்குச் சரீரமாம்’ என்று கூறிய போதே. இந்த ஜீவனுக்குச் சிறந்த நன்மை பரமனுக்குத் தொண்டு செய்கையேயாம். என்பதையும் கூறிற்றன்றோ?

ஆனால், ‘இவ்வடிமைத் தொழில் உலகப்போக்கில் துன்பம் தருவதாய் இருத்தலினாலும் ‘ஓருவருக்குத் தொண்டு பூண்டொழுகுவது துன்ப மயமானது’ எனச் சாஸ்த்திரங்களில் சொல்லப்படுவதாலும், மனுமுதலியபெரியோர் தொழில்களில் அடிமைத்தொழில், கடைப்பட்டது; துன்பமயமானது’என இயம்பி இருத்தலாலும், அடிமைத்தொழில் துன்பம் தருவதொன்றாம்’ என்பதுதெள்ளிதின் விளங்குகின்றதன்றோ?
உண்மை இவ்வாறு இருக்க, ‘துன்பம் கலவாத பேரின்பத்தையே அனுபவித்துக்
கொண்டிருக்கும் மோக்ஷ தசையிலும்,ஜீவனுக்கு இவ்வடிமைத் தொழில் உண்டு எனச்
சொல்லப் பெறுகின்றதே, இது பொருந்துமாறு யங்ஙனம்? என்னும் இவ்வினா இங்கு
எழுகின்றது.-இவ்வினாவிற்குவிடை பின்வருமாறு :-
எங்கும் அடிமைத் தொழில் துன்பம் தருவ தாகவே இருக்கும்’ என்பது இல்லை. ‘காளி
தாஸன், தான் உகந்த விலைமகளுக்குத் தண்ணீர் கொண்டு வ து தருதல் முதலிய தொண்டைமிக்க மகிழ்வுடனும், இன்பத்துடனும் செய்து வந்தான்’ என்பது சரித்திர உண்மை. அதைப்போன்றே, பரமனுக்குச் செய்யும்தொண்டும் இன்பமாகவே இருக்கும்.
காளிதாஸன், தான் உகந்த விலை மகளின் அழகு முதலிய குணங்களில் ஈடுபட்டு, அவ் வுவப்பினால், அங்குத் தொண்டு புரிந்ததால், அத்தொண்டு இன்பமாக இருந்தது என்ன லாம்.
இங்கு, எம்பெருமானுக்கு அழகு முதலியகுணங்கள் உண்டோ? ‘அவன் நிர்குணன் (குணங்களற்றவன்) என வேதாந்தங்களில் கூறப்பெறுகின்றனனே, அங்ஙனம் குணமற்ற அப்பெருமானிடத்தில் இந்த ஜீவனுடைய நெஞ்சம் ஈடுபடுமோ? ஈடு படாதன்றோ? மனக்
கவர்ச்சி உண்டாகாத இடத்தில் உவப்புக்கொள்ளாத இடத்தில் அடிமைத் தொழில் இன்பமாய்த் தோன்றுவதுதான் எவ்வாறு? எனச் சிலர் கருதக்கூடும்.
எம்பெருமான் நிர்குணன்’ என்னும் வேதாந்த வாக்கியத்திற்கு, குணம் ஒன்றுமே இல்லாதவன்’ என்பது கருத்தன்று; பின்னை-கருத்து யாதோ? எனின், ‘தீயகுணம் சிறிதும்
இல்லாதவன்’ என்பதே கருத்தாம்.
திருக்கலியாண குணங்களும் இல்லாதவன்’என்று பொருள் கொள்ளில், பேரறிவு,
பேராற்றல் முதலிய எண்ணிறந்த திருக்கலியாண குணங்களைப் பெற்றிருப்பவனாம் எம்
பெருமான் ‘ என்னும் கருத்தைக்கொண்டுள்ள (பராஸ்ய சக்தி:) என்பனபோன்ற பல வேதாந்த வாக்கியங்களோடு முரண்பாடுஉண்டாமன்றோ ?
இங்ஙனம், எம்பெருமான் திருக்கலியாண குணம் நிரம்பியிருக்கப் பெற்றவன்’ என
வேதாந்த வாக்கியம் இயம்புகின்றமையினாலும், இந்த ஜீவனும்,எம்பெருமான் திருக்
குணங்களில் ஈடுபட்டு, உவந்து, அடிமைத்தொழில் புரிகின்றமையினாலும், இங்கும்
அடிமைத் தொழில் இன்பமாகவே இருக்கும்என்பதில்,தட்டு ஒன்றுமில்லை.
இதுகாறும் கூறியவற்றால், வேதாந்த வாக்கியங்களைக்கொண்டே, ‘பரமபுருஷன் திருவுள்ளம் உகக்குமாறு அடிமை செய்வதே வீடுபேறு’ என்பதை உணர்ந்தோமல்லவா ?
(ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி) என்னும் வேறொரு வேதாந்த வாக்கியத்தையும், அவ்வாக்கியத்தில் மேலெழத்தோன்றும் கருத்தையும் காண்போம்.
“ஒருவன் குற்றத்தினால், முத்துச்சிப்பியில்அதன் தன்மையை அறியாது, வெள்ளியின்
தன்மையை அறிகின்றான்; அவ்வறிவு பிரமம் எனப்படும். அந்தப் பிரமம் இருக்கும்போது,
வெள்ளி உண்மைப் பொருளாய்த் தெரிகின்றது. அதனால் அவன் அதை எடுக்கச்
செல்கின்றான். அங்ஙனம் சென்று, எடுத்து,நோக்குங்கால், ‘ இது வெள்ளியன்று, முத்துச்
சிப்பி’என்று சிப்பியின் தன்மை புலனாகின்றது. அப்போது, அம்முத்துச் சிப்பியைத் தவிர,
வெள்ளியோ, அதன் தோற்றமோ இல்லை; சிப்பி மட்டும் தென்படுகின்றது” இது போன்று, ப்ரஹ்மமானது குற்றத்தினால் பிரபஞ்சமாகத் தோன்றுகின்றது. “தத் த்வம் அஸி-என்னும் வாக்கியத்தினால், ஆத்மா ஒன்று தான் உண்டு’ என்னும் உண்மையை உணரும்போது, இப்பிரபஞ்சமோ இதன்தோற்றமோ ஒன்றுமே இராது. அந்த ப்ரஹ்மம் மட்டும் இருக்கும். அங்ஙனம் அந்த ப்ராஹ்மம் மட்டும் இருக்கையே வீடு பேறாம். இதுவே மேற் கூறிய வாக்கியத்தின் மேலெழத்தோன்றும் கருத்தாம்.
இக்கருத்தையும், முன்னம் கூறிய அடிமைத்தொழிலே வீடு பேறாம்’ என்னும் கருத்தை
யும் ஒன்று சேர்த்துக் காண்போருக்குக் கலக்கம் உண்டாவது இயல்பேயாம்.-இக்கலக்கத்தை மீமாம்ஸா சாஸ்திர முறையைக் கைக்கொண்டு போக்கிக்கொள்ளுங்கால்,
” ப்ரஹ்மவேத ப்ரஹ்மைவ பவதி” என்னும் வாக்கியம், ‘ஆத்மாவினுடைய உண்மையை
உள்ளபடி உணர்பவன் ப்ரஹ்மமாகவே ஆகிறான்’ என்னும் கருத்தைக் காட்டுவதன்று; பிறகு எக்கருத்தைக் காட்டுகின்றதோ என்னில், ‘மேற்கூறியவாறு உண்மையை உணருவோன், மோஷ தசையில் பரமனோடு மிகவும் ஒற்றுமை பெற்றிருப்பவனாம்’ என்னும் கருத்தையே காட்டுவதாம் ; என்பதுநன்கு புலனாம்.
இவ்வாக்கியத்தில் அமைந்துள்ள “ப்ரஹ்மைவ பவதி” என்னும் பகுதியில் “ப்ரஹ்ம
மாக ஆகிறான்” என்னும் கருத்து காணப் பெறுகின்றது என்பது ஒருவாறு உண்மையே.
இக்கருத்தையே கொள்ளில் ஜீவனுக்கும் பரமனுக்கும் உள்ள வேற்றுமையைப் பலவாறாகக்
கூறும் பல வேதாந்த வாக்கியங்களோடுமுரண்பாடு உண்டாமன்றோ?
முன்னம் சேதனன் அர்ச்சிராதி வழியில் செல்லுதல், திருநாட்டிலே பரமபுருஷனைச்
சேர்தல்,அவனையும், அவன் திருக்குணங்களையும், திருமேனியையும் அனுபவித்தல், ஆனந்தம் பெறுதல்,அடிமை செய்தல், அப்பரமனை உவப்பித்தல் என்னும் பல நன்மைகளை அறிவிக்கும் பல வாக்கியங்களைக் கண்டோமல்லவோ?-மிகவும் ஒற்றுமையுள்ள இருபொருள்களைஅவ்வொற்றுமை தோன்ற ஒன்றாகவே கூறுதலும் செய்யுள் வழக்கில் உள்ளதொன்றேயாம். தாமரை மலர் போன்றுள்ள கண்ணை அம்மலராகவே கூறுகின்றாரல்லவா? ‘தாவிவையங் கொண்ட தடந்தாமரை என்று.இம்முறையைப் பின்பற்றி, ‘‘ப்ரஹ்மைவபவதி” என்னும் சுருதியில் மேற்கூறியவாறு பொருத்தமான பொருளைக் காண்பதே நன்றாம்.
ஆனால், தலைவன், தொண்டன் இவ்விருவருள் தலைவனுக்குச் சிறப்பும், தொண்டனுக்குத் தாழ்ச்சியும் தென்படுகின்றன. இது போன்று,உண்மையில் தலைவனான எம்பெருமானுக்குச் சிறப்பும் தொண்டனான ஜீவ னுக்குத் தாழ்ச்சியும் உண்டு என்றே கொள்ளுதல் வேண்டும். அங்ஙனமே பிரமாணங்களும் கூறுகின்றன.-உண்மை இவ்வாறு இருக்க, பரமனுக்கும் ஜீவனுக்கும் மிகவும் ஒற்றுமை உண்டு என்று கூறுவது யாங்ஙனம்? எனச் சிலர் கருதக்கூடும்.
ஓர் அரசனுக்கு அவன் புத்திரனைத் தொண்டன் என்றும், அந்த அரசனோடு மிகவும்
ஒற்றுமை பெற்றிருப்பவன் அவன் புத்திரன் என்றும் காண்கின்றோம். அது போன்றே
இங்கும் ப்ரஹ்மத்திற்கு ஜீவன்தொண்டன் என்றும், அந்த ப்ரஹ்மத்தோடு மிகவும்
ஒற்றுமை பெற்றிருப்பவன் என்றும் கொள்ளக் குறையில்லை நான் இராஜ குமாரன்’ என்
னும் கருத்தைப் பெற்றுள்ள ‘(அஹம் ப்ரஹ்மாஸ்மி) என்னும் வாக்கியத்தை இங்குக் காண்க. அரசனுடைய புதல்வன் அரசனன்றோ?
இவ்வாறு உபேயத்தைக் குறிக்கும் வேதாந்த வாக்கியங்களின் கருத்தை மிமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றி,கலக்கம் சிறிது மறக் கண்டோம். இனி, இராமாயணத்தில் இவ் உபேயத்தைக் காண்போம் :

இராமாயணமும் உபேயமும்

முதலில். எம்பெருமானுடைய அருளுக்கு இலக்கானவனை எம்பெருமானாகவே சுருதி இயம்புகின்றதே, இதை இராமாயணம் எவ்வாறு தெரிவிக்கின்றதோ, அதை அவ்வாறே அனுபவிப்போம்
திருவடி அசோக வனத்தில் ஸீதாபிராட்டி யாரைத் திருவடிதொழுது நிற்கும் போது, அப்பிராட்டியார் தாம், அத்திருவடியை நோக்கி, இவன் இராமதூதனோ? அல்லனோ?
என ஐயமுற்று, உண்மையை உணரவிரும்பி, இஷ்வாகு குலத்திலே திருவவதாரம் செய்தருளின புருஷோத்தமர்களான இராம இலக்ஷ்மணர்களுக்கும். வானரரான ஸுக்ரீவன் முதலானார்க்கும் தோழமை ஏற்பட்டதற்குக் காரணம் யாதோ? ஏற்பட்டது எவ் வாறோ? என்று வினவியிருப்பது நாம் அறிந்த தேயாம்.

அவ்வினாவிற்குத் திருவடி விடை விடுக்குங்கால், கூறிய வார்த்தை,  “(ராம ஸூக்ரீவயோரைக்யம் தேவ் யேவம் ஸமஜாயத) என்பதாம்.-இவ்வார்த்தையின் கருத்து, பின்வருமாறு:- ‘புருஷோத்தமனாகிய இராமபிரானோ. மிக மிகப் பெரியோனும், ஒப்பற்ற மேன்மை பெற் றிருப்போனுமாம். குரங்காகிய ஸுக்ரீவனோ மிக மிகச் சிறியோனும், ஒப்பற்ற தாழ்ச்சி பெற்றிருப்போனுமாம். அப்பெருமான் இக் குரங்கைத் தோழமை கொள்வதற்குத் தக்க காரணம் இவன்பால் ஒன்றும் அறிகின்றி லேன், அம்மா!ஆயினும், இராமபிரான் ஸுக்ரீவன் ஆகிய இவ்விருவரும் ஒருவர் என்னலாம் படி, அவ்விருவருக்கும் உள்ள தோழமையைத் தான் அறிகின்றேன்.’-இன்னமும் கேட்டருளாய்: இராமபிரானுடைய தர்ம பத்தினியாகிய தேவரீருக்கு இலக்குமணன் தூது வருதல் முறையாகும்.-அல்லது, உயிர்த்தோழனாகிய ஸுக்ரீவன் அங்ஙனம் தூது வருதல் முறை என்னலாம்.
நானோ, ஸுக்ரீவன் தொண்டர்களுள் மிகவும் கடைப்பட்டவன். இவ்வாறு கடைப்பட்டவனாகிய இத்தொண்டன், தூது வருமாறு அவ்விருவருக்கும் தோழமை ஏற்பட்டுள்ளது என்றால், அத்தோழமை எவ்வாறு உள்ளது என்பதற்கு யான் விடை விடுக்கவும் வேண்டுமோ? வேண்டாமன்றோ?இங்கு, “ராம ஸுக்ரீவ யோரைக்யம்”’
என்றிருந்தாலும், அவ்விருவரும் ஒருவரே’ என இயம்புவாரும் உண்டோ? இல்லையன்றோ?
அவ்வாறு இயம்பினால், அதை உலகம் ஏற்குமோ?=சுருங்கச் சொல்லின், இராமபிரானும்
ஸுக்ரீவனும் உண்மையில் வேறு வேறு பொருளாகவே இருப்பவராம். ஆயினும், இன்ப
துன்பங்களை ஸமமாகப் பெற்றிருப்பவராம். அஃதாவது- இராமபிரானுடைய இன்ப துன்பங்களை ஸுக்ரீவனும், ஸுக்ரீவனுடைய இன்ப துன்பங்களை இராமபிரானும் பெற்றிருத்தலாம். இவ்வாறு இவ்விருவருக்கும் மிகவும் ஒற்றுமை இருப்பது பற்றி
இருவரும் ஒருவராகவே போற்றப் பெறுகின்றனர். இது போன்று, வீடுபேற்றைப் பெற்
றிருக்குங்கால், பரமனுக்கும் ஜீவனுக்கும் உண்மையில் வேற்றுமை உண்டு, ஆயினும்,
மிகவும் ஒற்றுமையைப் பற்றி, ஜீவன் ப்ரஹ்ம மாக ஆகிறான், எனப்போற்றப் பெறுகிறான்
என்பது, இங்குத் தெளிவு அன்றே?
இராமாயணம் இவ்வாறு ‘ப்ரஹ்மைவ பவதி‘ என்னும் சுருதியின் கருத்தை, கலக்கம் சிறிது
மின்றி, யாருக்கும் எளிதில் விளங்குமாறு இயம்பியிருத்தலைக் கண்டோமல்லவா?
இனி, இலக்குமணனுடைய சரிதத்தில், ‘எம்பெருமானுக்கு அடிமை செய்து உவப்பிப்பதே
இந்த ஜீவனுக்கு சிறந்த நன்மையாம்’ என்பதைக் காண்போம்:
இராமாயணம் இயம்புகின்றவாறு, இலக்குமணனுக்கே உரிய சீரிய சிறப்புக்களை,-”பசியராயிருப்பார் அட்டசோறும் உண்ணவேணும், அடுகிறசோறும் உண்ணவேணும்
என்னுமாபோலே, காட்டுக்குப் போகிறபோது இளைய பெருமாள் பிரியில் தரியாமையை முன்னிட்டு அடிமை செய்யவேணும், எல்லா அடிமையும் செய்யவேணும், ஏவிக் கொள்ளவும் வேணும் என்றார்; படை வீட்டில் புகுந்த பின்பு, காட்டில் தனியிடத்தில் ஸ்வயம்பாகத்திலே வயிற்றைப் பெருக்கினபடியாலே, ஒப்பூணுண்ண மாட்டாதே ஒரு திருக்கையாலே திருவெண்கொற்றக் குடையையும், ஒரு திருக்கையாலே திருவெண் சாமரத்தை
யும். தரித்தடிமை செய்தார்” என்னும் ஸூத்திரத்தில், பிள்ளை லோகாசார்யர் வெகு அழகாக அருளிச் செய்திருக்கிறார். இந்தஸூத்திரத்தின் கருத்து :-
மிக்க பசியுடையோர் தம் பசியின் மிகுதியினால், ஆக்கின சோறும் ஆக்குகின்ற சோறும்
எல்லாம் தாமே உண்ணவேணும் என்றுஎண்ணுவர் . இவர் போன்று, இலக்குமணனும் இராமபிரானுக்கு எல்லா அடிமைகளும் தானே செய்யவேணும் என்று எண்ணுகின்றானாம். இந்த இலக்குமணன், முளைக்கும் போதே மணத்தோடு முளைக்கும் திருத்துழாய் போன்று, திருவவதாரம் செய்யும்போதே இராமபக்தியோடு அவதரித்தவனாம். ஆதலின், இராமபிரான் வனத்திற்கு எழுந்தருளும் போது, அவனுடன் செல்வதாக முயன்றனன்.
அம்முயற்சியைக் கண்ட இராமபிரான், ‘இலக்குமணா! நீ இத்திரு அயோத்தியிலேயே இருப்பாய்’ என்றனன். அப்போது, இலக்குமணன்,(நீரைப் பிரியில் உயிர் தரியாத மீன்நிலை
போன்றுள்ள) அந்த இராமபிரானைப் பிரியில் உயிர் தரியாத தன் நிலையை முன்னிட்டு,
“நாணோடு சேர்ந்த வில்லைத் தாங்கியும். உனக்கு முன்னே சென்றும், ஆங்கு ஆங்கு வழி
காட்டியும், காய், கனி முதலியவற்றைத் தேடிக் கொணர்ந்து உதவியும் இவ்வாறான அடிமையை இராமா ! நான் உனக்குச் செய் வேன் ; என்னை அழைத்துச் செல்வாய்’ என
வேண்டிக் கொண்டனனாம்.-அன்றியும், அப்பெருமானை அந்த இலக்குமணனே, தேவரீருக்குத் தொண்டு செய்யப் பெறாதபோது, நான் உயிர் தரியேன். தேவரீரோ எனில், நிறைவாளராகையாலே தொண்டைக் கொள்ளாவிடினும், உயிர்தாங்கத் தக்கவர். ஆயினும், என்னிடம் அடிமைகொண்டால தேவரீருக்கும் பெருமை உண்டு.-ஸீதாப்பிராட்டியார் தேவரீர் ஆகிய இருவரும் மலைச்சாரலில் விளையாடும் போதும்,-திருக்கண்வளருங் காலத்தும், அங்ஙனம் கண் வளருதலின்றி விழித்திருக்குங்காலும் எல்லா அடிமைகளும் செய்யவேணும். என் விருப்பத்துக்காக இன்றி,தம் விருப்பத்துக்கேற்ப ஏவி, என்னிடம் பணியை திருவுள்ளம் பற்ற வேணும்’ என்றும் விரும்பிப் பெற்றனனாம்.
இன்னமும், தானே சமையல் செய்து தானே உண்ணும் ஒருவன், நாளடைவில் தன்
வயிற்றைப் பெருக்கிக் கொள்வான்; மற்றவனோடு உண்ண இசையான். இவன் போன்று,
இலக்குமணனும். தானே வனத்தில் இராம பிரானும் ஸீதாபிராட்டியுமாகிற சேர்த்தியில், எல்லா அடிமைகளையும் செய்து, அடிமைக் கண் அன்பை பெருக்கிக் கொண்டவன் மற்றும் பரதன் முதலானாரோடு தானும் ஓர் அடிமை செய்ய இசைந்திலன். இவ்விசையாமையே எங்கே கண்டோம்? என்னில்,
இராமபிரான் வனவாஸத்தைச் செய்து, மீண்டு திரு அயோத்திக்கு எழுந்தருளி, முடி
சூடியிருக்கும் போது, ஒரு கையால் திருவெண் கொற்றக்குடையை எடுத்துப்பிடித்தும், மற்றொரு கையால் திருவெண்சாமரத்தைப் பணிமாறியும் இவ்வாறு இரண்டு அடிமையை ஒரு காலத்தில் செய்தனனாம்.
(நச ஸீதா த்வயா ஹீநா நசாஹமபி ராகவ ஜலான் மத்ஸ்யாவிவோத்ருதெள தனுராதாய ஸகுணம்.அகரதஸ் தே கமிஷ்யாமி பந்தானமனுதர்சயன், ஆஹரிஷ்யாமி தே-நித்யம் மூலாநி ச பலானி ச | பவாம் ஸ்துஸ்ஹ வைதேஹ்யா கிரிஸானுஷ ரம்ஸ்யதே, அஹம் ஸர்வம் கரிஷ்யாமிஜாக்ரத ஸ்வபதச்ச தே 1 கரியதாமிதி மாம் வத ச த்ரம்ச சாமரம் திவ்யம் திருதவான் லக்ஷ்மணஸ் ததா ) என்னும் இவை காணத்தக்கன
இனி, இங்கு மற்றொரு முக்கியப் பொருளையும் நாம் ஆராய்ந்து அறிதல் இன்றியமை
யாததாம். முன்னம் கூறிய பகுதிகளில்,)’ இராமபிரான், ப்ரஹ்ம சப்தப் பொருளான
நாராயணனே’ என்பது நமக்கு விளங்குகின்றது.ஆயினும், ‘அப்பரமன் திருக்கலியாண
குணமும் இல்லாதவனா? அல்லது தீய குணம் சிறிதும் இன்றி, திருக்கலியாண குணம் நிரம்பி இருக்கப் பெற்றவனா? இராமாயணம் இப் பரமனை இயம்புகின்றது எவ்வாறோ? என்னும் இக்கேள்வி இங்கு ஏற்படுவது இயல்பேயாம்.-இதற்கு விடை பின்வருமாறு-
ஒரு நூலின் உண்மைக் கருத்தைஉணரும் போது,அங்ஙனம் உணர்வதற்கு ஏதுவாயுள்ள
வழி சில உண்டு. அவ்வழியைப் பின்பற்றிக் காணுங்கால், உண்மை நன்கு புலனாகும். இம்
முறையில் ஒரு வழியை இங்குக் காண்போம்.
இராமாயணம், முதலிலும், இடையிலும், இறுதியிலும் எப்பொருளை எவ்வாறு இயம்பு
கின்றதோ, அதை அவ்வாறே அறுதியிடுதல் மேற்கூறிய வழியாகும்.
இராமாயணம் முதன் முதலில் இராமபிரானைக் கூறுகின்றது எவ்வாறோ ? எனின்,
திருக்கலியாண குணமும் இல்லா தவன் என்று கூறவில்லை; ‘தீயகுணம் சிறிதும் இன்றி,
திருக்கலியாண குணமே நிரம்பியிருக்கப் பெற்றவன்’ என்றேகூறுகின்றது.
நாரதமுனிவனை நோக்கி, வால்மீகி முனிவன் மிக வணக்கத்துடன், இக்காலத்தில் இவ்வுலகில் சீலம் முதலிய எல்லா நற்குணங்களும் பொருந்தியிருப்பவன் யாவன்? என வினாவ,-யாவும் அறிந்த அந்நாரத முனிவன், இஷ்வாகு குலத்தில் திருவவதாரம் செய்தருளின இராமபிரான், எல்லாத் திருக்கலியாண குணகணங்களும் பொருந்தி யிருக்கப் பெற்றவனாம்;-எங்ஙனம் கடல் தன்னிடத்துள்ள சிறந்த-இரத்தினம் முதலிய பொருளைப் பிறர் அறியாதவாறு மறைத்து வைத்திருக்கின்றதோ,-அங்ஙனமே இராமபிரான் (உலக நன்மையை உண்டுபண்ணுவதான) தன்னிடத்திலுள்ள
சிறந்த திருவுள்ளக் கருத்துக்களைப் பிறர் அறியாதவாறு மறைத்து வைத்திருப்பவனாம்;
வீரத்தன்மையில் விஷ்ணு போன்றவன்; பதினாறு கலைகளோடு கூடிய பூரண சந்திரன்
போன்று காண இனியன் ; காலாக்னி போல்சீற்றமுடையவன்; பொறுமையில் பூமியோடு
ஒத்தவன் ; ஸத்தியத்தில் தரும தேவதையே வடிவெடுத்தது போன்றவன் என்று விடை
கூறினன்.
(கோன்வஸ்மின்ஸாம் ரதம்லோகே குணவான் கச்ச வீர்யவான்) என்னும்வால்மீகி முனிவன் வார்த்தையும்-(வம்சா ப்ரபவ: ராமோ நாம ஜனை: ச்ருத: 1 ஸமுத்ர இவ காம்பீர்யே விஷ்ணுநா ஸத்ரு சோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்சன: காலாக்னிஸத்ருச: க்ரோதே க்ஷமயா ருதிவீ ஸம: 1 ஸத்யே தர்ம இவாபர:) என்னும் நாரத முனிவன் வார்த்தைகளும் காணத்தக்கன.
இவ்வாறு, வேதாந்தக் கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்க வந்த (உபப்ரும்ஹண
மாகிய) இராமாயணம் முதன் முதலிலேயே இராமபிரானுடைய திருக்கலியாண குணங்
களை, ஆசார்யன் சீடனுக்குக் கூறும் முறையில் மிகமிகத் தெளிவாக இயம்பியிருத்தலைக் கண்டோம். இனி, இடையிலும் காண்போம்
அயோத்தியா காண்டம் முதலில் கூறப்பெற்றுள்ள வரலாறு பின்வருமாறு – சக்ரவர்த்தி, ஸபையில் வீற்றிருக்கும் அரசர் முதலானாரை நோக்கி, இது மிகப் பெரிதான இராச்சியம். இதை என் முன்னோரான மன்னர் மிகுந்த மனவூக்கத்துடன் பாதுகாத்து வந்தனர். அவரது வம்சத்தில் பிறந்த நானும், மனுநெறியைப் பின்பற்றி எனது அறிவு ஆற்றல்களுக்கு ஏற்றவாறு இது வரையில் பாதுகாத்து வந்தேன். எனது சரீரம் மிகவும் மூப்படைந்து விட்டது. ஆதலின், இந்த அரசுரிமையை இராமபிரானிடம் வைத்து, வருத்தந் தீர்ந்து, இனிது வாழ
விரும்புகின்றேன். இது பொருத்தமான செயல் என்று நீவீர் எண்ணியிருப்பின், நுங்கருத்தைத் தெரிவிக்க வேண்டுகின்றேன் என்று கூறினன்.
இதைச் செவிமடுத்த அவையிலுள்ள அரசர் முதலானோரனைவரும் அளவற்ற ஆனந்தம்
அடைந்தனர்; மிகமிகப் பெரிய கோஷத்தைச் செய்தனர்; அப்பெரிய கோஷத்தினால் எதிரொலியைக் கிளப்பி அங்குள்ள விமானத்தை அசையச்செய்தனர். இவ்வாறு தம் ஆனந்தத்தை அறிவித்து, இப்போதே இராமபிரான் இராச்சியத்தை ஏற்று, முடிசூடி, பட்டத்து
யானையின் மீது திருவெண்கொற்றக்குடை நிழலில் எழுந்தருளும் சிறப்பைக் கண்டு
களிக்கவேணும் என்றனர்.
இவ்வாறான களிப்பைக் கண்ட தசரத மன்னவன், திரும்பவும் அவ்வரசர் முதலானோரைக் குறித்து, ‘நீவீர் பேரிரைச்சல் செய்து கூறுவதை நோக்குங்கால், இது வரையில் கொடுங்கோல் மன்னனான தசரதன் பாதுகாத்து வந்தான் ; இவன் விலகுவது நலம்;
இனி, செங்கோல் மன்னனான இராமபிரான் இராச்சியத்தை ஏற்று பாதுகாக்கப் போகிறான்; நமக்குஇனி நற்காலம்! என்னும் நுங்கருத்து வெளிப்படுகின் றதே ! இவ்வாறு என்னை வெறுத்துக் கூறுதற்குக் காரணம் யாதோ? எனக்குக் குற்றம் ஏதேனும் உண்டோ?’ என்றனன்.
சக்ரவர்த்தியின் இவ்வார்த்தையைக் கேட்ட அரசர் முதலானோர். ஒரு கருத்துடன், மன்னர்பிரானே! தேவரீருக்குக் குற்றம் உண்டு என்று கூறினர். அக்குற்றம் யாதோ ? என்று
அம்மன்னர்பிரான் கேட்க, (பஹவோ ந்ருப கல்யாணகுணா: புத்ரஸ்ய ஸந்தி தே)-எண்ணிறந்த திருக்கலியாண குணக் கூட்டங்களுக்குக் கடலான இராமபிரானைப்
புத்திரனாகப் பெற்றிருப்பதே தேவரீருக்கு உள்ள குற்றம். அதனாலேயே தேவரீரை
வெறுக்கின்றோம் என்றனர்.-இவ்வாறு, இராமாயணத்தின் இடையில் இராமபிரான் திருக்குணங்களைச் சுருக்கமாய்க் கண்டோம். இனி, இறுதியில் காண்போம்.
‘இராமபிரான் பதினான்கு வருடம் வனத்தில் வளித்து, அதினின்றும், மீண்டு திரு
அயோத்திக்கு எழுந்தருளி,முடிசூடி,பதினோராயிரம் ஆண்டு இராச்சியத்தைப் பாதுகாத்து வந்தான்’ என்பது சரித்திர உண்மை.-அவன் மன்னர்பிரானாயிருந்து அரசு புரியுங்
கால், மக்களின் மனோநிலைமையைக் கண்கூடாகக் கண்ட வால்மீகி முனிவன், (” ஸர்வம் முதிதமேவாஸீத் ஸர்வோ தர்ம பரோபவத்)மக்களனைவரும் மனமகிழ்ச்சியுடனும், அவரவருக்குரிய தருமங்களில் ஊற்றம் பெற்றிருப்பவருமானார் என்று கூறியிருக்கிறான். இங்ஙனம் அனைவரும் இருப்பதற்கு காரணம் யாதோ? எனின், இந்த இராமபிரானுடைய
திருக்கலியாண குணமேயாம். (ராமோ ராஜ்யமுபாஸித்வ) என்னும் வசனம் இங்குக் காணத் தக்கது.-இராமன் தன் தேஜஸ்ஸினால் மக்களைஅடக்கி ஒடுக்கி ஆண்டவனல்லன், தன் திருக் கலியாண குணத்திற்கு ஏற்ப, இனிய நல் வார்த்தைகளைக் கூறி, பின் சென்று,வயப்
படுத்தி, ஆண்டவன் என்கிறான்.
இவ்வாறு இராமாயணத்தில், ‘இராம பிரான் திருக்கலியாண குணம் நிரம்பியிருக்
கப்பெற்றவன்’ என்பதைக் கண்டோம்.-இலக்குமணன் இராமபிரானுடைய அத்திருக்
குணங்களில் மிகவும் ஈடுபட்டு உவப்புடன் எல்லா அடிமைகளும் செய்தவன்’ என்பதையும், (குணைர்தாஸ்யமுபாகத 🙂 என்னும் அந்த இலக்குமணன் வாக்கி யத்திலேயே நாம் நன்கு காணலாம்.
இங்ஙனம் இராமாயணத்தில் உபேயத்தைக் கண்டோம். இனி ஐம்பொருள்களுள் ஒன்றாகிய விரோதியைக் காண்போம்.

————–

வேதாந்தமும் விரோதியும்

எம்பெருமானை ஜீ வன்அடையாதவாறு எது தடையாய் நிற்கின்றதோ, அது, விரோதி’ எனப்படும். வேதாந்தம் அஜ்ஞானம், கருமம், ப்ரக்ருதி ஸம்பந்தம் முதலியவற்றை விரோதியாய் இயம்புகின்றது.-இதைச் சிறிது விவரித்துக் கூறுவோம்:
அஜ்ஞானம், ‘கை, கால் முதலிய உறுப்புக்களோடு கூடிய பிண்டமே ஆத்மா’ என
எண்ணும் எண்ணமும், ‘தான் எம்பெருமானுக்கு உரியவனல்லன்; தனக்காகவே இருப்பவன்’ என எண்ணும் எண்ணமுமாகும். இவ் விரு எண்ணங்களுள், முன்னது, தேஹாத்மாபிமானம்’ என்றும் பின்னது, ‘ஸ்வாதந்திரியாபிமானம்’ என்றும் கூறப் பெறும்.

தேஹாத்மாபிமானத்தைச் சிறிது விளக்கிச்சான்றுடன் கூறுவோம்: ‘இரும்புத் துண்டு, நெருப்பு இவ்விரண்டும் வேறு வேறு பொருள் களாயிருப்பினும், நெருப்பிலிட்டுப் பழுக்கக்
காய்ச்சிய அந்த இரும்புத்துண்டு, நெருப்புத்தொடர்பின் மிகுதியினால் நெருப்பாகவே
எங்ஙனம் தோன்றுகின்றதோ, அங்ஙனமே,-ஆத்மா, சரீரம் இவ்விரண்டும் வேறு வேறு பொருள்களாயிருப்பினும், அந்த ஆத்மாவும், சரீரத்தொடர்பின் மிகுதியினால் சரீரமாகவே தோன்றுகின்றான்’ என்பதை நாம் அறிதல் வேண்டும்.
இவ்வாறு, ‘சரீரமே ஆத்மா’ என எண்ணுங்கால், உண்மை உணர்வு சிறிதும் இல்லை. ஆத லின், (உணர்விண்மையே உறக்கமாதலின்-ஜீவனை உறங்குகின்றவனாகவே (அனாதி மாயயா ஸு ப்த:) என்னும் சுருதி இயம்புகின்றது. ( இந்தச் சுருதியில் மாயா சப்தம் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களோடு கூடிய பிரக்ருதி )என்னும் அசித்தைக் கூறும் வழியால் சரீரம் என்னும் பொருளைக் குறிக்கின்றது.)உண்டி உடைகளை உவந்து அவற்றைப் பெற ஓடித்திரியுங்காலத்தும், ஜீவனுக்கு இவ்வுறக்கம் உண்டு. அதனால் நன்மை சிறிதும் இல்லை. எப்போது, உறக்கம் போய் உண்மையை உணருகின்றனனோ, அப்போது தான் நன்மை உண்டு’ என்னும் கருத்தைக் கொண்டுள்ளதும், அனாதி மாயயா ஸுப்த: என்னும் வாக்கியத்தோடு தொடர்புற்றதுமான  ” (யதா ஜீவ: ப்ரபுத்யதே) என்னும் சுருதியைக் காணுமவர்க்கு தேஹாத்மாபிமானம்’ தடை என்பது நன்கு புலனாகும்.
இங்ஙனம் தேஹாத்மாபிமானத்தைச் சுருக்கமாய்க்கண்டோம். ஸ்வாதந்திரியாபிமானத்
தையும் இனிக்காண்போம் :
‘ஆத்மா, அறிவுடையவன்’ என்ற போதே,’ஸ்வதந்திரன்’ என்று கூறியதாகக் தேறும்.
எங்ஙனம் என்னில்,-இந்த ஜீவன், முதலில் ஒரு பொருளை உள்ளபடி அறிகிறான்; பின்பு, அப்பொருளின் சீர்மையைப்பற்றி அதை விரும்புகிறான் ; அதன் பிறகு அதை அடைய முயல்கிறான் ;-அதற்கேற்பஏதுவைத் தேடுகிறான்; முடிவில் அதை அடைந்து, இன்பம் பெறுகிறான்
இவற்றை, வடமொழியாளர்,(ஜாநாதி இச்சதி, யததே, கரோதி,அனுபவதி) என்பர்
இவற்றை நோக்குங்கால்,அறிவுடை யனான ஜீவன்,தனக்காக ஒன்றை விரும்பி, முயன்று,
செய்து, இன்பம் துய்ப்பவன்’ என்பது தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ? இங்ஙனம் இருக்கின்றமையின், ‘இவன் ஸ்வதந்திரன்’ எனப்படுகிறான்.
அஷ்டாக்ஷரத்தில் முதல் பதம் பிரணவம்.-அப்பிரணவம் அ, உ, ம் என்னும் மூன்று எழுத்துடையது. அம்மூன்றுனுள், ‘ம்’ என்னும் எழுத்து அறிவுடையனான ஜீவனைக் குறிக்கின்றது.-இவ்வாறு, அறிவுடையவன்’ என்பதை அறிவிக்கும் ‘ம்’ என்னும் அக்ஷரத்தாலும்,-நான் இதை அறிகிறேன்’ என்னும் அனுபத்தாலும், ‘ஜீவன் ஸ்வதந்திரன்’ என்பதை நாம் அறியலாகும். இங்ஙனம் தன்னை ஸ்வதந்திரனாக (தன் விருப்பத்திற்கு ஏற்ப ஒன்றில் முயன்று, செய்து, பெற்றுப் புஜிப்பவனாக) அறியுங்காலத்து, உண்மை உணர்வும் பெற்றிறான் ; தன் நிலைக்கேற்ற பயனையும் பெறான்.-இதனால்தான், அஷ்டாஷரத்தில், நடுவில் அமைந்துள்ள’நம:’ என்னும் பதமானது, ம்’ என்னும் அக்ஷரத்தினால் தேறிய ஜீவனுடைய ஸ்வாதந்திரிய நிலையை இல்லை செய்து, பாரதந்திரிய நிலையையே இவனுக்குரிய சீரிய தன்மையாக அறிவிக்கின்றது ‘நம:’ என்பதில், “ம: ந என்று எழுத்துக்களைப் பிரித்துக் கூட்டி, ‘எனக்கு நான் இல்லை; எம்பெருமானுக்கே உரியவன்’ என்னும் பொருள் கொள்ளப் பெற்றுள்ளது. அஃது இங்குக் காணத்தக்கது.
”தனக்குப் பாரதந்திரிய நிலையை உண்மையாக உணருங்கால், நன்மை உண்டு; அப்பாரதந்திரிய நிலைக்கு எதிரான ஸ்வாதந்திரிய நிலையை உணருங்கால், நன்மை இல்லை” என்பது அஷ்டாஷர மஹா மந்திரத்தில் தேறிய ஸாரம் பொருளாதலின், ஸ்வாதந்திரியாபிமானம்’ தடை என்பது தெளிவு.
இனி, கருமம் தடை என்பதைக் காண்போம்: புண்ணியமும் பாவமும் கருமம் எனப்படும். இக்கருமம் எம்பெருமானை அடைய வொட்டாது தடுக்கின்றது. ஆதலின்,
விரோதி’ எனப்படுசின்றது.-ஆனால், பொய் கூறுதல் முதலிய பாவம் தடை என்னில், அதை நம் மனம் ஏற்கின்றது போன்று, புண்ணியமும் தடை என்னில், அதை நம் மனம் ஏற்குமோ? ஏற்காதன்றே?-உண்மை இங்ஙனம் இருக்க,புண்ணியத்தைத் தடையாக கூறுவது யாங்ஙனம்? எனச் சிலருக்கு இங்கு ஐயம் எழக்கூடும்.-இதற்குப் பரிஹாரம் பின் வருமாறு
‘புபுஷு, முமுஷு என மானிடரை இருவகையில் வகுத்துக்காணுதல் வேண்டும். இம்மை
மறுமைகளில் இன்பத்தை விரும்புகின்றவன் புபுஷு என்றும், பரம புருஷனை அடைய
விரும்புகின்றவன் முமுஷு என்றும் கூறப்படு கின்றனர். புபுஷு நிலைமைக்கேற்ப இம்மை
மறுமைகளில் ஓரொரு நன்மைக்கு எதுவாய் உள்ளது புண்ணியம் எனப்படும்.உதாரணமாக இவ்வுலகில் பசு, பூமி, புத்திரன், முதலிய நன்மைக்கு ஏதுவாயுள்ள புண்ணியங்களையும்,
மறுமையில் ஸு வர்க்கம் முதலிய நன்மைக்கு எதுவாயுள்ள புண்ணியங்களையும் நாம் காணலாம். இப்புண்ணயங்கள், பரமபுருஷனை விரும்புபவனுக்கு (முமுக்ஷவிற்கு) இம்மை
மறுமைப் பயன்களைக் கொடுத்துத் தடையாயிருக்கின்றமையின்,பாவங்களேயாம்?.
(அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம்) என்னும் சுருதி வாக்கியமானது, குதிரை தன் ரோமங்களை விடுவது போன்று, புண்ணிய பாவங்களாகிற கருமத்தை விட்டு, பரமனுடைய
உலகத்தை இந்த ஜீவன் அடைவதாகக் கூறுகின்றமையின், கருமம் தடை எனத் தெரிகிற தன்றோ?(புண்ய பாபே விதூய நிரஞ்ஜன: பரமம் ஸாம்ய முபைதி) என்னும் வாக்கியமும் இங்குக் காணத்தக்கது.-இக்கருத்தாலே பொய்யில் புலவரும் *இருள் சேரிரு வினையுஞ் சேரா’ என்று கூறிச் சென்றனர்.-இதுகாறும், கூறியவாற்றால் கருமம் தடை என்பதைக் கண்டோம். இனி, ப்ரக்ருதி ஸம் பந்தம் விரோதி என்பதைக்காண்போம்
ப்ரக்ருதி ஸம்பந்தம்‘ என்னுமிடத்திலுள்ள”ப்ரக்ருதி’ என்னும் சொல், தேவ சரீரம், மானிட சரீரம், விலங்கு சரீரம், தாவர சரீரம் என்னும் நான்கு வகையிலுள்ள அசித்தைக் குறிக்கும்; ஸம்பந்தம் என்னும் சொல்,அந்த அந்தச் சரீரத்திற்கும் ஆத்மாவுக்கும் உள்ள-தொடர்பைக் குறிக்கும். இத்தொடர்பு, எம்பெருமானைப் பெற்று, பூர்ணமாக அனுபவித்து, அடிமை செய்து, அவனை உவப்பிப்பதற்குத் தடையாயிருக்கின்றது.-இப்பொருள்  (தஸ்ய தாவதேவ சிரம் யாவந்ந விமோ யே அத ஸம்பத்ஸ்யே) என்னும் சுருதியினால் நன்கு விளங்கும். இந்தச்
சுருதியின் கருத்து: “ஸத் என்னும் பரமனைப் பஜனம் செய்பவனுக்குச் சரீரத் தொடர்பு
உள்ளவரையில் விளம்பம் உண்டு; சரீரத் தொடர்பு மறுவலிடாதபடி விட்டதும் பரமனை அடைகின்றான்” என்பதாம்.இதனால்,’சரீரம் தடை’ என்பது வெள்ளிடைமலை.
இவ்வாறு, ப்ரக்ருதி ஸம்பந்தம் தடை என்பதைக் கண்டோம்.
மேற்கூறிய அஜ்ஞானம் முதலியவை போன்று,அஜ்ஞான வாஸனை, கரும வாஸனை,
ருசி ஆகிய இவையும் பரமபுருஷனை அடைய வொட்டாது தடையாயுள்ளனவாம்.
பாம்பு முதலியவற்றைக் காணும் போது, உண்டாகும் அச்சம் முதலியவற்றுக்கு காரணமாயுள்ளது ‘அஜ்ஞான வாஸனை’ என்றும்,-துரும்பு முதலியவற்றைக் கிள்ளுதற்குக் காரணமாயுள்ளது ‘கரும வாஸனை’ என்றும், பாவச் செயல்களையோ, புண்ணியச் செயல்
களையோ அறிந்தே செய்தற்குக் காரணமாயுள்ள சுவை ‘ருசி’ என்றும் நாம் அறிதல் வேண்டும்.-இங்ஙனம், அஜ்ஞானம், கருமம்,ப்ரக்ருதி ஸம்பந்தம், அஜ்ஞான வாஸனை,கரும வாஸனை,ருசி இவை பரமனை அடைவதற்குத் தடையாய்க் கண்டோம்.

இனி, சிலருடைய கருத்துக்கிணங்க வேறொருவாறு தடையைக் கூறுவதாகக்  தோன்றும் வேறொரு வேதாந்த வாக்கியத்தையும் காண்போம்(தத் யதா ஹிரண்யநிதிம் நிஹிதம் அக்ஷேத்ர ஜ்ஞா: உபர்யுபரி ஸஞ்சரந்த: ந விந்தேயு: எவ மேவ இமா: ஸர்வா: ப்ரஜா:
அஹரஹர் கச்சந்த்ய: ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி ப்ரத்யூடா🙂 என்பதே அவ்வேதாந்த வாக்கியமாம்.-இவ்வாக்கியத்தின் கருத்து : ‘ பூமியின் கீழே உள்ள புதைபொருளை அப்பூமியின் இயல்பை உணராதார், தினந்தோறும் அப்பூமியின்
மேலே செல்பவராயிருந்தும், எங்ஙனம் பெறு கிறாரில்லையோ, அங்ஙனமே, மிகமிகச் சிறந்த பயனும், ஆத்மாவுமான பரமனை உணராதார். எல்லாக்காலத்தும் அவனோடு ஒருவாறு தொடர்புற்றிருந்தும், பெறுகிறாரில்லை. இவர் பொய்யான அஜ்ஞானத்தினால் ஆத்மாவினிடத்தில் நின்றும் இழுக்கப் பெற்றும், மறைக்கப் பெற்றும் இருப்பவரன்றோ?’ என்பதாம்.
இங்கே, பின்குறிக்கப்பெறும் பொருள்முக்கியமாய் அறியத்தக்கதாம் -” முத்துச்சிப்பி
வெள்ளியாய்த்தோன்றுதற்குக் காரணம் குற்றம் என்பது உலகானுபவத்தினால் எங்ஙனம் புலனாகின்றதோ, அங்ஙனமே, ப்ரஹ்மம் பிரபஞ்சமாய்த் தோன்றுதற்குக் காரணம்
குற்றம் ‘ என்பதும் பிரமாணத்தினால்(வேதாந்த வாக்கியத்தினால்) புலனாகின்றது.
அக்குற்றம் அவித்யை. அஜ்ஞானம் என்பனபோன்றுள்ள சப்தங்களினால் குறிக்கப் பெறுகின்றதாம். அந்த அஜ்ஞானமும், அதனால் உண்டாம் பிரபஞ்சத்தோற்றமும், பிரபஞ்சமும் பொய்ப்பொருளாம்.
“தத்த்வம் அளி’ என்னும் வாக்கியத்தினால், ஆத்மா ஒருவனே உண்மைப் பொருள்
என்னும் உண்மை உணர்வு உண்டாகும் போது, மேற்கூறிய அஜ்ஞானமும்,அதன்
காரியங்களும், அழிந்து விடுகின்றமையின், அந்த அஜ்ஞானமும் அதன் காரியங்களும்
பொய்ப் பொருள்’ என்பது தெளிவாக விளங்குகின்றது? “இதைத்தான் மேற்
கூறிய வேதாந்த வாக்கியத்திலுள்ள அந்ருதசப்தம் இயம்புகின்றது” என்பதே அறியத்
தக்க அம்முக்கியப் பொருளாம்.
‘அஜ்ஞானமும், அதன் காரியமும் உண்மைஉணர்வினால் போக்கத் தக்கவையாயிருத்
தலின், பொய்ப் பொருள்களாம்’ என்பதும்,-‘அந்த அஜ்ஞானமே, ப்ரஹ்மமாக மாத்திரம்
இருக்கும் இருப்புக்குத் தடை’ என்பதும் இங்குத் தேறிய ஸாரப் பொருள்களாம்.
இக்கருத்தையும், மேற்கூறிய (அஜ்ஞானம், கருமம், ப்ரக்ருதி ஸம்பந்தம் முதலியவை
தடை என்னும்) கருத்தையும் வேத வாக்கியங்களிலே காணுமவர்க்குக் கலக்கம் ஏற்படுவது இயல்பேயாம். இக்கலக்கத்திற்கு, மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றிக்காணுங்கால் உண்டாம் பரிஹாரம் பின்வருமாறு-
”நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவன் மருத்துவனைக் கிட்டி, தன் நோய் தீருமாறு
மருந்தைப் பெற விரும்புகின்றான். அம்மருத்துவனும், அவன் நோயை உள்ளபடி
உணர்ந்து, அந்நோய்க்குத் தக்க மருந்தைக்கண்டு, உதவுகின்றான். அங்ஙனம் உதவப்
பெற்ற அந்நோயாளியும், அம்மருந்தை உட் கொள்ள,அவன் நோய் தீருகின்றது. இதை
இங்கு எடுத்து நாம் நோக்குதல் வேண்டும்.-நோக்கின் நோயின் உண்மையை உணர்ந்து,
தக்க மருந்தை உதவுகின்றதும், நோயின் பொய்மையை உணர்ந்து அங்ஙனம் மருந்தை
உதவா தொழிகின்றதும் யார்க்கும் நன்கு விளங்குகின்றன அல்லவா? நோயின் பொய்
மையை உணர்ந்தும், மருந்தை உதவுவார் உண்டோ? இல்லையன்றோ? இதுபோன்று, ப்ரஹ்மம் பிரபஞ்சமாய்த் தோன்றுதற்குக் காரணமாயுள்ள குற்றம்\(அஜ்ஞானம்) உண்மையாயிருப்பின், அது தீருவதற்கு, ‘தத் த்வம் அளி” என்னும் சாஸ்திரம், ஆத்மா ஒருவனே உண்டு’ என்னும் உண்மையை உணர்த்தி, உதவி செய்ய இடம் உண்டாம். ‘அஜ்ஞானம் உண்மை இல்லை’ என்னில், ‘சாஸ்திரம் உதவி செய்ய இடம் இல்லை’ என்பதைக் கூறுதலும் வேண்டுமோ? வேண்டாமன்றோ ?’அஜ்ஞானமும் உண்மைதான்’ என்று கொள்ளில், ‘ஆத்மா ஒன்று தான் உண்மைப் பொருள்; மற்றொன்றும் உண்மையில் இல்லை என்னும் கொள்கைக்கு இடமுண்டோ? இல்லை யன்றோ? (‘அஜ்ஞானமும் உண்மை’ என்று கொள்ளுங்கால், அஜ்ஞானமும் ஆத்மாவும் உண்மைப் பொருள்களாய்த் தேறுகின்றன அல்லவா? ‘ஆத்மாவைத் தவிர ஒன்றும் உண்மையில் இன்று’ என்பது பொருந்துவது எவ்வாறு?)
இதனால் என்ன தேறிற்று? என்னில் ‘ப்ரஹ்மம் பிரபஞ்சமாய்த் தோன்றுதற்கு ஏதுவான
அஜ்ஞானத்தை உண்மையாகவோ, பொய் மையாகவோ ஒத்துக் கொள்வதற்கு இல்லை”
என்னும் கலக்கமே தேறிற்று.-இவற்றை நெஞ்சில் கொண்டு நோக்கு
வார்க்கு, ”தத் யதா …..அந்ருதேந ஹி ப்ரத்யூடா:” என்னும் சுருதிக்கு மேற்கூறியவாறு கருத்துரைத்தல் பொருத்தமுடைத்தன்று என்றால், வேறு கருத்து யாதோ? எனின், கூறுவோம்.
ஒருவன் செய்யும் கருமம், பயனில் சிறிதும் விருப்பம் இன்றி,எம்பெருமான் முகமலர்த்திக்
குறுப்பாகவே, செய்யப் பெறுமாயின், அக் கருமம் ருதம்‘ என்றும், இவ்வாறின்றி
இம்மை மறுமைகளில் ஓரொரு பயனை விரும்பிச் செய்யப்படுமாயின், அக்கருமமே
‘அந்ருதம்’ என்றும் கூறப்படும். இம்முறையில், மேற்கூறிய சுருதியில் உள்ள அந்ருத
சப்தம், ஓரொரு பயனை விரும்பிச் செய்யும் கருமத்தையே கூறுகின்றமையினாலும், அக்
கருமம், பரமனை அடைவதற்குத் தடையாயிருத்தலாலும், மேற்கூறியவாறு இங்குக்
கலங்க இடம் இல்லை.
“அச்வ இவ ரோமாணி விதூய பாபம்” என்னும் சுருதி, பாவங்களை விட்டுப் பர
மனைப் பெறுகின்றான்” என்னும் கருத்தையும்,
“ஏதம் ப்ரஹ்ம லோகம் நவிந்தந்தி அந்ருதேந ஹி ப்ரத்யூடா:” என்னும் சுருதி,பாவமுடை
யார் பரமனைப் பெறுகின்றாரில்லை’ என்னும் கருத்தையும் கொண்டுள்ளனவாதலின், இங்கு முரண்பாட்டிற்குச் சிறிதும் இடமில்லை?-இல்லையன்றோ? இதனால்,’அந்ருத சப்தம்
பொய்ப் பொருளைக் குறிக்கும்’ என்று கூறும் போது ஏற்படும் இடர்களுக்கும் இங்கு இட
மின்று என்பது யாவருக்கும் புலனாகும்.
இவ்வாறு மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றிப் பொருள்கொள்வார்க்குக் கலங்க
இடமில்லை என்பதைக் கண்டோம். இனி, இராமாயணத்தில் விரோதியைக் காண்போம்:

இராமாயணமும் விரோதியும்

‘இராமாயணம் விரோதியை, ஒருவாறு மெய்ப்பொருளாகவே உணர்த்துகின்றது
என்பதையும் உபபாதித்துக் காட்டுவோம் :-இது மெய்’ ‘இது பொய்’ என்பதை நாம்
அறுதியிடுவது எவ்வாறோ? எனின், யாரும் எளிதில் உணருமாறு ஓர் அனுபவத்தை
முதலில் எடுத்துக் காட்டுவோம்.-ஒருவன், முதலில் முத்துச் சிப்பியை வெள்ளி என அறிந்து, அதை எடுக்கச் சென்று,பின்பு, இது சிப்பி; வெள்ளியன்று’ என்னும் உண்மையை உணர்ந்து, அதை எடுக்காது விட்டிடுகிறான். அங்கு, ‘வெள்ளி பொய்ப்பொருள்’ என்பது தெளிவு.
வேறொருவன், வெள்ளியையே வெள்ளி என உண்மையை உணர்ந்து, அதை எடுக்கச் சென்று, எடுத்து, அதனாலாம் பயனைப் பெறுகிறான். இங்கு, ‘வெள்ளி மெய்ப் பொருள்
எனபதும் யார்க்கும் நன்கு புலனாம்.
இம்முறையைக் கைக்கொண்டு.இராமாயணம் மெய் பொய்களை அறுதியிடுகின்றது’
என்பதை நாம் அறியலாம்; எங்கே? என்னில், திருவடி, இராமபிரானுடைய திருக்குணம்
சிறிதும் நடையாடாத அசோகவனத்தில் போய்ப்புக்கு, தென்றலும், சிறுதுளியும்
போன்றுள்ள இராம நாமத்தைக் கூறுங்கால், அதைத் திருச்செவி ஏற்ற ஸீதாபிராட்டியார்-முதலில் இந்நிலத்தில் இது பரிமாறுவது ஒன்றல்ல; இது சித்தமோஹத்தால் வந்ததோ? வாதகதியோ? உன் மாதஜவிகாரமோ?ம்ருக திருஷ்ணிகையோ?” என்று ஐயமுறுகிறார். பின்பு ‘இவன் (ஹனுமான்) முன்னே நின்று வார்த்தை சொல்லா நின்றான்; இது
கேட்டு, நாம் வேற்றுமை பெற்றிருக்கிறோம்;-ஆனபின்பு, இது மெய்யாம்’ என்று திருவுள்ளம் தெளிந்து இன்புறுகிறார் என்பது வரலாறு.-இவ்வரலாற்றைத் தெரிவிக்கும் வார்த்தை:-(கிம்நு ஸ்யாத் சித்தமோஹோயம் பவேத் வாதகதிஸ்த்வியம் | உன்மாதஜோ விகா
ரோவா ஸ்யாத் இயம் மருக ருஷ்ணிகா | அதவா நாய முன்மாத : மோஹோ யுன்
மாத லக்ஷண: ஸம்புத்யே சாஹமாத்மான மிமம்சாபிவனெளகஸம்) என்பதாம்.
(தலைமகனைப் பிரிந்த தலைமகளுக்கு. தன் தலைமகன் நன்மையைக் கேட்பதில் விருப்பம்
உண்டாவது இயல்பேயாம்; அவ்விருப்பினால் அவனைப் பற்றிய எண்ணமும் இடையீடின்றி
ஏற்படும். அவ்வெண்ணத்தின் ஒருநிலையை சித்தமோஹம் என்பர். ஊணும் உறக்கமும்
இன்றி இருக்கும்போது, வாத பித்த சிலேஷ்மங்களாகிய தாதுக்களுக்குக் கலக்கம் உண்
டாகும்.அக்கலக்கத்தினால் உண்டாகும் காற்றின் ஒரு நிலைக்கு வாதகதி’ என்று பெயர்.
அந்நிலையிலுள்ள பிரமத்தை இங்கு வாதகதி என்று கூறுவர். தலைமகனைப் பிரிந்த தலை மகளுக்கு உள்ள ஒருநிலையை உன்மாதம் என்றுபகருவர். அந்த உன்மாதத்தினால் உண்டாகும் பிரமத்தை உன்மாதஜ விகாரம் என்று செப்புவர். மருகதருஷ்ணிகையாவது ஒன்றை மற்றொன்றாக அறிதலாம். கானலைத் தண்ணீராகக் கருதலாம் ]

இங்கு ஸீதாப்பிராட்டியார், முதலில் திருவடி வார்த்தையைப் பொய்யாக பிரமித்து,
தக்க சான்றுகளினால், ‘இது பொய் அன்று ;மெய்தான்’ என்று அறுதியிட்டிருப்பதை உலகம் நன்கு காணக் கூடுமன்றோ? இது போன்று,(பிரஹ்மம் பிரபஞ்சமாகத் தோன்றுதற்கு காரணமாகிய) ‘அஜ்ஞானமும், பிரபஞ்சத் தோற்றமும், பிரபஞ்சமும் ஆகிய இவை
பொய்ப் பொருள்கள் தாம்’ என்று அறிதியிடு தற்குத் தக்க சான்றுகள் உளவாகில், நாம்
இசையத் தட்டு ஒன்றுமிராது. அங்ஙனம் உலகத்திலும் சாஸ்திரத்திலும் சான்றுகள்
காணக் கிடைக்காதவையே யாம்’ என்பது இங்கு முக்கியமாய் அறியத்தக்கதாம்.
இனி, தேஹாத்மாபிமானமும், ஸ்வாதந்தரியாபிமானமுமாகிய இவை, பரமனைப்
பெற்று அனுபவித்ததற்கு உண்மையான இடையூறாம்’ என்பதை இராமாயணத்தில்
காண்போம். இங்கு முதலில், பின்வருவது கவனிக்கத் தக்கதாம்:
ஒருவன் பரமனைப் பற்றிய அறிவு பெற்றிருப்பானாயின், அவன் ஸத்து’ என்றும், அவ்
வறிவு பெறாது இருப்பானாயின், அவன் அஸத்து’ என்றும் வேதாந்தம் அறிவிக்கின்றது
(ஸந்தமேனம்; அஸன்னேவஸபவதி) ஒருவன் பரமனைப் பற்றிய அறிவு பெற்றிருந்தும், அவ்வறிவுக்கு ஏற்ப அன்பையும் ஆதாரத்தையும் பரமன்பால் செய்யாது இருப்பின், அவனை
ஸத்து என்றோ, அஸத்து என்றோ, மேற்கூறிய சுருதி அறிவித்திலது. ஆயினும், அவனும்
அஸத்தே’ என்றுதான் கூறுதல் வேண்டும்.-அவன் அறிந்தும் அன்பைச் செய்யாது இருக்
கின்றமையின் அவனுக்குக் குற்றம் அதிகமாம்-இதுபோன்று, “ஒருவன் ஜீவனாகிய தன்னை
தேஹமாகவோ, ஸ்வதந்திரனாகவோ உணரவில்லை; தன் உண்மை நிலையை ஒருவாறு
உணர்ந்தவனேயாம். ஆனாலும், அவன் தேஹாத்மாபிமானமும், ஸ்வாதந்திரியாபிமான முமாகிய குற்றம் பெற்றிருப்பவன் எவ்வாறு சரிதம் பெற்றிருப்பனோ, அங்ஙனம்
சரிதம் பெற்றிருப்பானாயின், பரமனை அனுபவித்து வாழப்பெறாது இழந்து விடுகிறான்”
என்பது ஓர் உயரிய உண்மைப் பொருளாம்.
இவ்வுண்மைப் பொருளை இராமாயணம், சக்ரவர்த்தியின் வரலாற்றில் தெளிவாகத்
தெரிவிக்கின்றது.எங்கே?எங்ஙனம்? என்னில்,
அவ்வரலாற்றை முதலில் கூறுவாம்: “சக்ரவர்த்தி, வஸிஷ்டரைக் குல குருவாகக் பெற்
றிருந்தவர் ; அச்வமேதம், புத்திர காமேஷ்டி முதலியவற்றைச் செய்தவர். ஆதலின், ஆத்மாவின் உண்மை நிலையை உணராதவரல்லர். இங்ஙனம் இருப்பினும், இராமபிரானுக்கு முடி சூடுவதாய் நிச்சயித்து, தன் ப்ரிய மஹிஷியான கைகேயியிடம் சென்று தெரிவிக்க. அப்போது, ‘பரதனுக்கு முடி சூடவே ணும்; இராமன் பதினான்கு வருஷம் வனம் செல்லவேணும்’ என அக்கைகேயி வேண்டிக் கொள்ள சக்ரவர்த்தியும் அவ்வேண்டுதலுக்கு இசைய, இராமபிரான் இலக்குமணனோடும், ஸீதாபிராட்டியோடும் காடு சென்றனன்” என்பது வரலாறாகும்.
இவ்வரலாற்றைக் கூறுமிடத்து, இராமாயணம் சக்ரவர்த்தியைப் பல இடங்களில்
கைகேயியிடம் காமம் பெற்றிருப்பவன்’ என்றே நிந்தித்துக் கூறியிருக்கின்றது. ‘
காமீ கமல பத்ராஷீ முவாச வனிதாமிதம்) என்பதையும், இது போன்றுள்ள வசனங்களையும்
இங்குக்காண்க. ஒருவனுக்கு, ஆதமாவினுடைய உண்மை உணர்வு உள்ளபடி இருக்குமேயானால், பெண்ணாசை சிறிதும் இராது.’காமீ. என்று கூறும் போது, பெண்ணாசை உண்டு என்பது நன்கு விளங்குகின்றதன்றோ?
தேஹாத்மாபிமானமும் ஸ்வாதந்திரியா பிமானமும் பெற்றிருப்பான் போன்றவன் சரிதமே
யன்றோ? அக்காலத்திலேயே பரம புருஷனான இராமபிரானை அனுபவித்து வாழப்பெறாது
முடிய நேரிட்டதன்றோ? ஆனால், ச க்ரவர்த்தி இராமபிரானைப் பிரிந்து முடிய நேரிட்டதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு; கைகேயிக்கு முன்னமேயே சக்ரவர்த்தி இரண்டு வரங்கள் தருவதாய் வாக்களித்திருந்தத்தினாலும், அதைப் பின் சென்று ஸத்தியத்திற்குக் கட்டுப்பட்டு,இராம பிரானாகிய தருமத்தைத் துறந்து விட்ட தனாலும் அப்பரமனை இழக்க நேரிட்டது. ஸத்திபம்’ என்பது தருமமேயானாலும், இராமபிரா னாகிய மிகமிகச் சிறந்த தருமத்தைக் காணுங்கால், அந்த ஸத்தியம் என்னும் தருமத்தை ஒரு பொருளாய்க் கருதாமல் காற்கடை கொள்ள வேண்டியவன் சக்ரவர்த்தி.அங்ஙனம் அந்த ஸத்தியத்தைக் காற்கடை கொள்ளாது பற்றி, துறக்கத் தகாத அப்பரமனைத் துறந்ததே, இராமனை அனுபவிக்கப் பெறாது இழந்ததற்கு காரணம். [ இராமபிரான் மிக மிகச் சிறந்த தருமம் என்பதை வரும் உபாயத்தைப் பற்றிக் கூறும் பகுதியில் நாம் காணலாம்.] இதை, பிள்ளை லோகாசார்யர் “சக்ரவர்த்தியைப் போலே இழக்கைக்கு உறுப்பு” என்று அருளிச் செய்திருக்கிறார்.-உண்மை இவ்வாறு இருப்பினும், கைகேயி பால் உள்ள ஆசையும் இராமபிரானை இழந்த தற்கு காரணம் என்னில், குற்றம் ஒன்றும் வாராது, ‘மற்றதில் பற்றுள்ளவனுக்குப் பரமன் கிடைக்க மாட்டான்; பற்றற்றவனுக்கே பரமனைப் பெறலாம்’ என்பதும் சாஸ்திரத்தில் கூறப்பெற்றுள்ள ஓர் உயர்ந்த உண்மை . இவ்வாறு தேஹாத்மாபிமானம், ஸ்வாதந்திரியாபிமானன் இவற்றின் தடைத் தன்மையைக் கண்டோம
இனி, இராமாயணத்தில் கருமம் பரமனை இழக்கச் செய்கிறது’ என்பதையும் காண்போம். இராமபிரான் எம்பெருமான்; ஸீதாபிராட்டி எம்பெருமாட்டி” என்பது உண்மை.-இராமபிரானுக்குப் புண்ணியமும் பாவமும் உண்மையில் இல்லை. இதுபோன்று, ஸீதா பிராட்டியாருக்கும் புண்ணியமும் பாவமும் இல்லை’ என்பதும் உண்மையேயாம். ஆனாலும், ஸீதாபிராட்டியார் ., ஜீவன், இங்ஙனம் இருப்பின் பரமனைப் பிரிய நேரிடும்’ என்பதைத் தம் சரிதத்தில் வெளியிட்டிருக்கிறார்.-இதை முதலில் நாம் இங்கு அறிதல் அவசியமாம்.
“‘இராமபிரான் காட்டிற்கு எழுந்தருளும் போது, ஸீதாபிராட்டியாரின் மென்மையை
யும், காட்டின் வன்மையையும் திருவுள்ளம் பற்றி, அயோத்தியிலேயே தாம் வனவாஸம்
செய்து திரும்பிவரும் வரையில் அப்பிராட்டியாரை இருக்க வேண்டிக் கொள்கிறான். அப் பிராட்டியாரும் அப்பெருமான் பிரிவு பொறாது, தம்மை உடன் அழைத்துச் செல்ல வேணும் என விரும்புகிறார். பலகால் விரும்பியும், இசையாது இருந்த இராமபிரானைக் குறித்து, “என் தந்தையார் என்னை ஆண்மை உடையானொருவனுக்குக் கொடாது, பெண்
ணுக்கே கொடுத்து விட்டார்; ஆனால், “நான் பெண்ணோ? ‘ என்று தேவரீர் எண்ணலாம்.
அகவாயில் பெண்மையும், புறவாயில் ஆண்மையும் பெற்றிருப்பவரன்றோ ? நீவீர். அகவாயிலும் உண்மையில் ஆண்மை பெற்றிருப்பீராயின், இங்ஙனம் என்னை விட்டுச் செல்வதாகக் கூறுவீரோ ? கூற மாட்டீரன்றோ?-(ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்) என்றனள்” என்பது சரித்திர உண்மை.-தம் சரிதத்தினால் உலகுக்கு நன்மை புரிய வந்த பிராட்டியார், புருஷோத்தமனான இராமபிரானைக் குறித்து, இவ்வாறு என் தந்தையார் பெண்ணுக்கே பெண்ணைக் கொடுத்தார் என்று இயம்புவது முறையாமோ? ஆகாதன்றோ? இவ்வாறு கூறியது பகவதபசாரமன்றோ? இது முதலில் இங்குக்குறிக்கொள்ளத் தக்கது.
மேலும், இராமாயணத்திலேயே வேறொரு வரலாறும் இங்குக் காணத்தக்கதாம்:
இராமபிரான் ஸீதா பிராட்டியார்பால் உள்ள அன்பின் மிகுதியினாலே, மாரீசன் என்னும் மாயா மிருகத்தின் பின்னே வெகுதூரம் சென்று, அம்மிருகத்தை அம்பினால் அடித்துக்
கொன்றனன். அந்த சமயம் மாரீசன் மிருகரூபத்தைவிட்டு, தன் சரீரத்தை எடுத்து
உயிர் துறந்தனன் ; அங்ஙனம் உயிர் துறக்குங்கால், இராமபிரானுடைய குரல் போன்றுள்ள
தன் குரலாலே ஹா ஸீதே ! ஹா லக்ஷ்மணா என்று கூறினன். அக் கூற்று பிராட்டியார் திருச்செவியில் பட, அப்போதுஇலக்குமணனை, இப்போதே நீ சென்று இராமபிரானை இரட்சித்தல் வேண்டும்’ என்று அவள் வேண்டிக் கொள்ள, (இராமபிரா னுடைய சிறப்பைஉள்ளபடி உணர்ந்த ) இலக்குமணன், மாரீசன் மாயையைக் கூறி, அவ்வாறு செல்ல இசையாது இருந்தனன். அங்ஙனம் இலக்குமணன் இசையாது இருக்க, பிராட்டியார் அவனை நோக்கி, கடுஞ்சொற்களைக்-(“”அநார்ய, அகருணாரம்ப, நருசம்ஸ, குலபாம்.ஸந.)கூறினார் என்பதே அவ்வரலாறாம்.-இலக்குமணன் இயற்கையிலேயே இராம
பிரானிடம் அளவற்ற அன்பு பெற்றிருப்பவனாம். அவ்வாறு பரமபக்தி பெற்றிருக்கும்
அந்த இலக்குமணனை நோக்கி, கூறத் தகாத(லக்ஷ்மணா ! நீ நிச்சயமாய் என்னை உனதாககிக் கொள்ளக் கருதி,இம் மாதிரி கபட வேஷத்துடன் கானகம் வந்திருக்கின்றாய்
என்று கூறி) மேற்கூறிய கடுஞ் சொற்களைக் கூறியது அப்பிராட்டியாருக்குத் தகுமோ?
தகாதன்றோ ? இவ்வாறு கூறியது பாகவதாபசாரமன்றோ?இதுவும் இரண்டாவதாக இங்கு
காணத்தக்கது.
‘இம்மாதிரி பரமனிடமும்,பாகவதோத்தமனான இலக்குமணனிடமும் பிராட்டியார்
நடந்து கொண்டமையின், இவை காரணமாகப் பரமனைப்பிரிந்து, அசோக வனத்தில்
அரக்கிமார் நடுவில் இருந்து துன்புற வேண்டிற்று’ என்பதை இங்கு நாம் அறிதல்
வேண்டும்-இதை ஸீதாபிராட்டியார் அருளிச் செய்த”(மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி நஸம்சய:) என்னும் வார்த்தையில் நன்கு காணலாம். இவ்வார்த்தையில், இராமபிரான் திறத்தில் செய்த அபராதத்தை’கிஞ்சித்’என்னும் சப்தமும், இலக்குமணன் திறத்தில் செய்த அபராதத்தை மஹத்’ என்னும் சப்தமும் கூறுகின்றன என்று நாம் நன்கு அறியலாம். இவ்வாறு, கருமம் பரமனை இழக்கச் செய்கிறது’ என்பதை பிராட்டியார் சரிதத்தில் ஒருவாறு கண்டோம்.
இனி, ப்ரக்ருதி ஸம்பந்தம் தடை என்பதை இராமாயணத்தில் சில இடங்களில் காட்டுவோம்.
(1) இராமபிரான், ஸீதையுடனும் இலக்குமணனுடனும் சரபங்கருடைய ஆசிரமத்திற்கு எழுந்தருளும் தருணம். அத்தருணம் இந்திரன் சரபங்கரிடம் வந்து அளவளாவிக்
கொண்டிருந்தான். அந்த இந்திரன், இராம பிரானை அப்போது கண்டு, இந்த இராமன்,
வேறொருவராலும் சிறிதும் செய்ய இயலாத மிகப் பெரியதொருகாரியத்தை (இராவண
வதத்தைச் செய்யத் திருவுள்ளம் கொண்டு,அவதரித்தவன். அதை அவன் நிறைவேற்றிய பிறகு என்னைப் பார்ப்பது நலம் என்று கூறி, சரபங்கரிடம் விடை பெற்று, இரதம் ஏறி, தன் உலகம் சென்றான். இந்திரன் சென்றதும், இராமபிரான் சரபங்கரிடம் சென்று அவர் திருவடிகளை வணங்கினன் ; பின்பு இந்திரன் வந்து போனதைப் பற்றி வினவினான்.
அவ்வினாவுக்கு விடையாக சரபங்கர் கூறிய வார்த்தையை பின்வருமாறு காணலாம்:

(மாமேஷவரதோ ராம ப்ரஹம லோகம் நி ஷதி 1 ஜிதமுக்ரேண தபஸா து ப்ராபம் அக்ரு
தாத்மபி: அஹம் ஞாத்வா நரவ்யாக்ர வர்தமானம் அதூரத |
ப்ரஹ்மலோகம் நகச்சாமி த்வாம் அத்ருஷ வா ப்ரியாதிதிம் த்வயாஹம் புருஷவ்யாக்ர தார்மிகேண மஹாத்மநா! ஸமாகம்ய கமிஷ்யாமி த்ரிதிவம் தேவ ஸேவிதம் )
இதின் கருத்து : ”இராமா ! எல்லோருககும் நன்மையை அளிப்பவனாகிய இந்த இந்திரன்,பிரமனுடைய ஆணையினால் அப்பிரமனது உலகத்திற்கு என்னை அழைத்துக்
கொண்டு போக விரும்புகின்றனன். நான் ஸமீபத்தில் எழுந்தருளியிருக்கும் உன்னை
ஞானக் கண்ணால் கண்டவனாதலின், மிகவும் இனியனாகிய உன்னை வெளிக்கண்களாலும் கண்டு, களிப்புற எண்ணி, (திரும்பி வருதல், அழிதல் முதலிய குற்றங்களோடு கூடிய) பிரமனது உலகத்திற்குச் செல்ல விருப்பம் இன்றி இருக்கின்றேன். மிகமிகச் சிறந்த தர்மம் எனப் போற்றப் பெறும் பரமனாகிய உன் குளிர்ந்த நோக்குக்கு இப்போது இலக்காகிப் பின்பு அநந்தன், கருடன் முதலிய நித்யர் சூழ்ந்திருக்கப் பெற்றுள்ள பரமபதத்தில் உன்னை அடைய விரும்புகின்றேன்” என்பதாம்.
சரபங்கள் இவ்வாறு கூறி, இராமபிரானை நோக்கி, ” இராமா ! நீ சிறிது நேரம் என்னை
நோக்கிக் கொண்டிரு” என விரும்பி, அவ் வெம்பெருமானுடைய முன்னிலையிலேயே
எரிந்து கொண்டிருக்கும் ஹோமாக்னியில் ப்ரஹ்மமேத மந்திரங்களை ஜபித்துக் கொண்டு
பாம்பு தோலை உரிப்பது போன்று மானிட சரீரத்தை விட்டு, அர்ச்சிராதி வழியினால்
சென்று, பரம பத்தில் பரமனைப் பெற்று வாழ்வுற்றார்’ என்பது, சரபங்கருடைய சரித்திர உண்மை.
(2) இராமபிரானுடைய, ஸீதாபிராட்டி என்னும் உயரிய உடைமைப் பொருளை முறைதவறி விரும்பி, தனக்கு ஆக்கிக் கொள்ள இராவணன் எடுத்துச் செல்லும் ஸமயம் அதனை அறிந்த ஐடாயு தமக்கு இயன்ற அளவும் இராவணனோடு போர் புரிந்தார். இறுதி|யில் அப்பாபியினால் பிராட்டியைப் பற்றியே உயிர் துறக்க நேர்ந்தது. பரமபுருஷன் தேடிக் கொண்டு வரும்போது, ‘ஆயுஷ்மன்’ என்று அப்பரமனுக்கு மங்களம் பாடினார் ; “இராவ
ணன் உன் உயிரையும் (பிராட்டியையும் ), என் உயிரையும் கொண்டுபோய் விட்டான்” என்
னும் உண்மையையும் உணர்த்தினார். அவருக்குப் பரமன் ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரத்தைச்
செய்து,  (கச்ச லோகாநநுத்தமான்) என்கிறபடி விஷ்ணுலோகத்தையும் தந்திருளினான் என்பது ஜடாயுவின் சரித்திர ஸாரம்.
(3) “சபரி என்னும் வேட்டுவச்சி, தன் ஆசிரமத்திற்கு எழுந்தருளின இராமபிரானுக்கும் இலக்குமணனுக்கும் அதிகமான அன்புடன் பூஜை செய்தாள்; அப்பெருமானுடைய குளிர்ந்த நோக்குக்கு இலக்கானாள்; அவளும், தன் உடம்பை விட்டு உத்தம கதியைப் பெற்றாள் என்பது சபரியின் வரலாறு.-இங்கு (சஷுஷா தவ ஸும்யேனே பூதாஸ்மிரகுநந்தன பாதமூலம் கமிஷ்யாமி ) என்னும் வார்த்தை நோக்கத்தக்கது.-மேற்கூறிய மூவிடங்களிலும், சரபங்கரும், ஐடாயுவும், சபரியும் ஆகிய இம்மூவரும் இராமபிரானுடைய குளிர்ந்த நோக்குக்கு இலக்காகி, உடம்பை விட்டு அப்பரமன் திருவடிகளைச் சார்ந்ததாகவே தெரிகின்றமையின்,பிறப்பறுக்கலுற்றாற்கு உடம்பும் தடை’ என்பது நன்கு புலனாம். தேஹாத்மா பிமானம் முதலியன பொய்ப்பொருளாகவே இருப்பின், அவற்றின் காரியம் நிகழ்வதற்கு இடமில்லை யன்றோ? இவ்வாறு இராமாயணத்தில் விரோதியின் உண்மையைக் கண்டோம். இனி உபாயத்தைப் பற்றி ஆராய்வோம்.

———————————

வேதாந்தமும் உபாயமும்

வேதாந்தம் ஜீவன் பரமனைப் பெறுதற்கு எதை ஸாதனமாக அறிவிக்கின்றதோ, அது
உபாயம் எனப்படும். அவ்வேதாந்தம் கூறிய உபாயத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம் :
இப்பிரபஞ்சத்தை அந்த அந்தக் காலத்தில் ஆக்கி, அளித்து, அழிக்கின்றவன் எவனோ,
அவனே பரமாத்மா எனப்படுகின்றான். அப் பரமனையும், அவன் திருக்குணங்களையும், திருமேனியையும், உள்ளத்துக் கொண்டு அன்புடன் சிந்திக்கும் சிந்தனை ‘பக்தி’ எனப்படும்.
இப்பக்தி, இச்சேதனன் எம்பெருமானைப் பெற்று வாழ்வதற்குச் சிறந்த ஸாதனமாம்,
இங்கு (காரணந்து த்யேய: ) என்னும் சுருதி வாக்கியம் சான்றாய்க்காணத்தக்கது.
இந்தப் பக்தியை ஒருவன் சாஸ்திரம் கூறியவாறு செய்து தலைக்கட்டுதற்குச் சிறந்த அறி
வும், ஆற்றலும் இன்றியமையாதனவாம்.இச்சிறந்த அறிவும், ஆற்றலும் எவனுக்கு இல்லையோ, அவன், எம்பெருமானை இழக்க வேண்டுவதில்லை; எம்பெருமான் திருவடிகளில் சரணாகதியைச் செய்து, அவனைப் பெற்று வாழலாம்
சிலர், மேற்கூறிய பக்தியைச் செய்து தலைக் கட்டுதற்குத் தக்க அறிவு ஆற்றல்களைப் பெற்
றிருந்தும், பக்தியை ஸாதனம’ என்று எண்ணிச் செய்யாது, தன் நிலைக்கு ஏற்ப பக்தி
யைப் பயனாகவே எண்ணிச் செய்து,கொண்டானையல்லாலறியாக் குலமகள் போன்று,எம்பெருமான் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றி, இன்புறுகின்றனர். இவரே மிகச்
சீர்மையுற்றவராவர்.
சரணாகதியாவது: ‘எனக்குச் சிறிதும் நன்மையில்லை; குற்றங்களெல்லாம் உண்டு.
வேறு இரஷகரும் எனக்கு இல்லை’ என்று தன் நிலைகளைக் கூசாது கூறி, பெரிய பிராட்டியார் முன்னாக எம்பெருமான் திருவடிகளையே ஸாதனமாகப் பற்றுதலாம். இச்சரணாகதிக்கு, (சரணமஹம் ப்ரபத்யே) என்னும் சுருதி வாக்கியம் தக்க பிரமாணமாகும்.
இவ்வாறு, பக்தியையும் சரணாகதியையும் ஜீவன் எம்பெருமானைப் பெறுதற்கு ஸாதனமாக அறிவிக்கும் வாக்கியங்களைக் கண்டோம்
சிலர் ‘ப்ரஹ்மமாக மாத்திரம் இருத்தல் மோஷம்‘ என்றும், அதைப் பெறுதற்கு ஆத்மா ஒன்று தான் உண்மைப் பொருள் என்னும் (சுருதி வாக்கியத்தினால் ஏற்படும்) ஞானம் ஸாதனம்” என்றும் எண்ணுகின்ற (ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி) என்னும் வாக்கியத்தையும் ஆதாரமாய்க் காட்டுகின்றனர்.-இதைக் கேட்பவர்க்கு மனம் கலங்கும் என்பது உண்மையே. இக்கலக்கத்திற்கு மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றி ஒரு பரிஹாரத்தைச் சுருக்கமாய்க் கூறுவோம் :

ஒருவனுடைய முயற்சி சக்தியினால் (ஆற்றலினால்) எது உண்டாகிறதோ, அதைப் ‘புருஷதந்திரம்‘ என்றும், ஒருவன் முயற்சி சிறிதும்இன்றி இருந்தும், எது பிரமாணத்திலேயே
ஏற்படுகின்றதோ, அதைப் ‘பிரமாண தந்திரம்’ என்றும் சாஸ்திரம் கூறுகின்றது.
மேற்கூறிய பரமனைச் சிந்திக்கும் சிந்தனையும், பரமன் திருவடிகளை உபாயமாய்ப் பற்றும் பற்றுதலும், ஒருவன் முயற்சி சக்தியைக் கொண்டு செய்யும் போது உண்டாகின்றமையின், புருஷ தந்திரமாம். சிலர் கூறுகின்ற வாறு தத்த்வம் அஸி‘ என்னும் சுருதியினால்,’ஆத்மா ஒன்று தான் உண்மைப் பொருள்’ என்னும் ஞானம் உண்டாகும் போது,முயற்சி சக்தி ( பக்தி ப்ரபத்திகளுக்குப் போன்று வேண்டப்படாமையின் அந்த ஞானம் பிரமாண தந்திரமாம். இவற்றை நாம் மனத்திற் கொண்டு, பின்வருமாறு இங்கு ஆராய்தல் அவசியமாகும்:
சுருதி வாக்கியத்தினால் உண்டாகும், ‘ஆத்மா ஒன்றுதான் உண்மைப்பொருள் என்னும் ஞானம் மட்டும் மோஷஸாதனமா யிருப்பின், புருஷ தந்திரமான பக்தியையோ,
சரணாகதியையோ, அந்தச் சுருதி வாக்கியம் சேதனனைக் குறித்துக் கட்டளையிட இடம்
பெறுமோ? பெறாதன்றோ?
மேலும், ப்ரஹ்மவேத ப்ரஹ்மைவ பவதி என்னும் சுருதியில் அமைந்துள்ள “ப்ரஹ்மைவ பவதி” என்னும் பகுதியின் உண்மைக் கருத்தையும், “தத் த்வம் அஸி ‘ என்னும் சுருதியின் உண்மைக் கருத்தையும், முறையே-“வேதாந்தமும் உபேயமும்” “வேதாந்தமும் ஜீவனும்” 
என்னும் பகுதிகளில் கூறியுள்ளோம்; கண்டு கொள்வது.
ஆனால், “ப்ரஹ்ம வேத ” என்பதின் கருத்து யாதோ? எனச் சிலர் வினாவக் கூடும். இவ் வினாவிற்கு, ” பரமனைப் பற்றிய சிந்தனையும்-ப்ரஹ்ம ஞானமாதலின், அந்தச் சிந்தனை
என்னும் ஞானம் பெற்றிருப்பானையே ‘ப்ரஹ்ம வேத’ என்னும் சுருதி குறிக்கின்றது’ என்பது விடையாய்க் காணத்தக்கது.-இவ்வாறு மிகச் சுருக்கமாய் மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றிய பரிஹாரத்தைக் கண்டோம். இனி, வேதாந்தத்தின்முடிந்த பொருளைக் காட்டுவோம்:
இங்கு பின்வருமாறு வேதாந்தத்தின் அம்முடிந்தபொருள் காணத் தக்கது : பரமனைப்
பற்றிச் சிந்திக்கும் சிந்தனை பரமனைப் பெறுதற்குக் காரணம் என்பது ஒருவாறு உண்மையேயாம். ஆனாலும், ‘அப்பரமன் திருவடித் தாமரைகளையே சரணமாகக் கொண்டு,
அவற்றைப் பெறுகின்றது என்பது மிக மிகச் சிறந்த முறையாகும்”; இதற்குப் பல சான்று
கள் உண்டு.
(I) அறிவாளிகளுள் மிகச் சிறந்தவர் ஸ்ரீ பீஷ்மர். அவர் சரதல்பத்தில் கிடந்து தருமபுத்திரருக்குப் பல தருமங்களை உபதேசம் செய்தனர். அங்ஙனம் உபதேசம் பெற்ற
தருமபுத்திரர், அந்த அந்த தருமத்தை உபதேசம் செய்யும் போது, அது அது சிறந்த
தருமமாகத் தெரிகின்றமையின், மிக மிகச் சிறந்த தருமத்தை அறிய வேணும் என்று
கருதி, தம் சாதுரியத்துக்கு ஏற்ப அப்பீஷ் மரை நோக்கி, ‘தேவரீர் மிகவும் விரும்பும்
தருமம் எது?’ என்று வினவினார். அங்ஙனம் வினவப்பெற்ற ஸ்ரீபீஷ்மரும், ‘நாராயணனு
டைய திருநாமங்களைச் சொல்லுதலே மிக மிகச் சிறந்த தருமம்’ என விடை கூறியிருக்
கிறார். (இது விஷ்ணு ஸஹஸ்ர நாமாத்தியா யத்தில் காணக்கிடக்கின்றது.)
இதைநாம் மனத்திருத்தி, (மிகமிகச்சிறந்த பிரமாணம் எனப் போற்றப்பெறும்) வேதத்
தில் கூறப்பெற்றுள்ள தருமங்களுள், அவ் வேதம் மிகவும் விரும்பும் தருமம் எது? என்
பதையே ஆராய்ந்து அறிதல் இங்கு இன்றியமையாததாகும்.அங்ஙனம் ஆழ்ந்து ஆய்ந்து
காணுங்கால், ‘சரணாகதி’ என்னும் தருமத்தையே வேதம் மிக விரும்புகின்றது என்பது விளங்கும்.ஆனால், “ஸ்ரீ பீஷ்மர்தாம் விரும்பும் தருமத்தைத் தெரிவிக்கும்போது, (ஏஷமே ஸர்வ தர்மாணாம் தர்மோதி கத மோமத:) என்று எவ்வாறு தெளிவாகத் தெரிவித்திருக்கிறாரோ, அவ்வாறு வேதமும் சரணாகதியை, தான் விரும்பும் தருமமாய்த்தெரிவித்திருக்கிறதோ?” எனச் சிலர் ஐயமுறக்கூடும். இவ் ஐயத்திற்கு இடம் சிறிதும் இல்லை. எவ்வாறு எனின், கூறுவோம்: ஸ்ரீ பீஷ்மர் விரும்பிய தருமம் திருநாம ஸங்கீர்த்தனம் என்பதற்கு, அவருக்கு “ஏஷமே” என்னும் சொல்லை ஆதாரமாய்க் கண்டோம் அங்கு.-இங்கு, வேதபுருஷனுடைய ஆசாரத்தையே ஆதாரமாய்ப் பின்வருமாறுகாணலாம் :
இப்பிரபஞ்சத்திற்குக் காரணனான எம்பெருமான் அன்புடன் சிந்திக்கத் தக்கவன்’
என்று பக்தியைச் சுருதி சொல்லிற்று. அக்காரணனான எம்பெருமானை மோக்ஷத்தில்
விருப்பமுடைய நான் சரணம் பற்றுகிறேன்’ என்று சரணாகதியைத் தன் ஆசாரத்தில்
உள்ளதாய் அறிவிக்கின்றது. இங்கு மேற் கூறிய “காரணந்து த்யேய:” “முமுக்ஷர்வை
சரணமஹம் ப்ரபத்யே” என்னும் சுருதி வாக்கியங்கள் நோக்கத் தக்கன. ஸ்ரீபீஷ்மருடைய
சொல்லிலும், வேத புருஷனுடைய ஆசாரம் பிரபலமன்றோ? இவ்வாறு வேதத்தில் சான்றைக் கண்டோம்; இனி, பரம புருஷனுடைய திருவாக் கிலும் தக்க சான்றைக் காண்போம்
(2) பரம புருஷன் அர்ஜூனனைக் குறித்து அருளிச் செய்த திவ்விய சாஸ்திரம்
பகவத்கீதை ‘ என்பது உலகு உணர்ந்ததேயாம். அக்கீதையில் உள்ள பதினெட்டு அத்தி
யாயங்களிலும், கருமயோகம், ஞானயோகம்,பக்தியோகம் என்னும் தருமங்களைப் பரக்க
அப்பரமன் உபதேசம் செய்திருப்பது அதை அனுபவிப்போர் அறிந்ததேயாகும். (நான்
செய்பவன்’ இக்கருமம் என்னுடையதுஎனக்கு இப்பயன் வேண்டும்’ என்னும் எண்
ணங்களை அறவே ஒழித்து பரமன் திருவுள்ளம் உகக்குமாறு தன் வருணத்திற்கும், ஆசிரமத்திற்கும் ஏற்ற தருமங்களைச் செய்தலே கருமயோகமாம். இவ்வாறு நெடுகின காலத்தில் கரும யோகத்தைச் செய்து, அதனால் சித்த சுத்தி பெற்று, அச் சித்தத்தைக் கொண்டு,ஜீவ னாகிய தன்னைச் சிந்திக்கும் சிந்தனையே ஞானயோகமாம்.)
உண்மை இவ்வாறு இருப்பினும்,அப்பரமபுருஷன், அந்தக் கீதையின் முடிவில் அருளிச
(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ ) என்னும் வார்த்தையைக் காணுங்கால்
சரணாகதியே அவன் உகந்த தருமம் எனத் தெரிகின்றது. இதைச் சிறிது விரித்துரைப்
போம்.
பிள்ளைலோகாசார்யர், “தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவன்தானே, ஸர்வ
தர்மங்களையும் விட்டு என்னைப் பற்று’ என்கையாலே, ஸாக்ஷாத் தர்மம் தானே என்
கிறது’ என்று அருளிச் செய்திருக்கிறார்.-இதின் கருத்து : தருமத்தை நிலை நாட்டுதற்கெனவே திருவவதாரம் செய்தருளின கண்ணபிரான், .தன்னால் உபதேசம்
செய்யப் பெற்றவையும்’ ‘ஒருவாறு வீடு பேற் றைத் தருகின்றவையுமான கரும ஞான
பக்திகள் எல்லாவற்றையும் விட்டு, என் ஒரு வனையே பற்று’ என்கையாலே,அவனே,
நேரே பயனைக் கொடுக்கக் கூடிய தருமம்’ என்பதும், ‘மேற்கூறிய கரும ஞான பக்தி
களாகிய யாவும் அங்ஙனம் நேரே பயனைக் கொடுக்கும் தருமங்கள் அல்ல’ என்பதும்
நன்கு விளங்குகின் றனவல்லவா ? என்பதாம்.
அன்றியும், ‘ பக்தி சபலன்’ (ஜீவன் செய்யும் பக்தியில் மிகவும் விருப்புற்றிருப்பவன்)
என்று புகழப்பெறும் பரமபுருஷன் அப்பக்தியைப் பல இடங்களில் பலவாறாகப் பரக்கப்
பேசி, இறுதியில், ‘அதையும் விட்டு,என்னைப் பற்று’ என்று அருளிச் செய்திருக்கின்றமையின். அப்பக்தியிலும் தானாகிய தருமமேதான் உவந்ததாம் என்பதும் இங்கு தெளிவு.-இவ்வாறு, ‘எம்பெருமான் உகந்த தருமம் சரணாகதி” என்பதைக் கண்டோம். இனி, வைதிகரும் மிகவும் ஆதரித்து, ஆசரித்த தருமம் சரணாகதி’ என்பதைக் காட்டுவோம்.
(3) வேதத்தைச் சிறந்த பிரமாணமாகக் கொண்டு, அவ்வேதக் கருத்தையும் உள்ளபடி
உணர்ந்து, அவ்வுணர்வைப் பின் சென்று நடப்போர் யாவரோ,அவரே வைதிகர் எனப்
போற்றப் பெறுகின்றனர். அவ்வைதிகருள்,-மயர்வற மதி நலமருளப்பெற்ற நம்மாழ்வாரே சீர்மை யுற்றவராவர். ‘அவர் மிகமிகச் சிறந்த பக்திபெற்றிருந்தும், தமக்குப் பரமன்
பால்உள்ள அப்பக்தியை அவனைப் பெறுதற்குக்காரணமாய்க் கருதாது,அவன் திரு
வடித்தாமரைகளையே காரணமாய்ப் பற்றியிருந்தவர்’ என்பதும் மிகவும் பிரஸித்தமானது. இவர் போன்று, இவர் திருவடித் தாமரைகளைப் பணிந்துய்ந்தவரான நம்
ஆசார்யர்களும் சரணாகதி தர்மத்தையே விரும்பி யிருந்தனர் என்பதும் தெளிவு.
இவ்வாறு, வேதம், வேத்யன், (வேதத் தின் முக்கியப் பொருளான பரமபுருஷன்)
வைதிகர் ஆகிற இம்மூவரும் மிகவும் விரும்பும் தருமம் சரணாகதி என்பதைக் கண்டோம்.
இச்சரணாகதியையே இராமாயணம் விரித்துரைக்கின்றது’ என்பதை இனிக் காண்போம்.

இராமாயணம்-சரணாகதி-சாஸ்திரம்

பரமாத்மா.ஜீவாத்மா, உபேயம், விரோதி, என்னும் (ஐம் பொருளில் சார்ந்த, நான்கு பொருள்களையும் இராமாயணம் தெளிவாகத் தெரிவிக்கின்றவாறு இக்கட்டுரையி
லேயே ஒருவாறு கண்டிருக்கிறோம். ஆயினும், சரணாகதி தருமத்தைவெளியிடுவதில் இராமயணம் நோக்குடைத்தாதலானும், ‘இராமாயணம் சரணாகதி சாஸ்திரம்’ எனப் பிரஸித்தி பெற்றிருப்பதால்,சரணாகதி தருமத்தையே இராமாயணம் விரித்துரைக்கின்றது’
என்று கூறு வதிலும் தட்டொன்றும்இல்லை. இப்பகுதியில், சரணாகதி தருமத்தின் உண்மைகளை நாம் அறியலாம்.
எம்பெருமான் முன்னிலையில் தன் நிலைகளைக் கூசாது கூறி, பெரிய பிராட்டியார்.
முன்னாக எம்பெருமானை ஸாதானமாய்ப் பற்றுதல் சரணாகதி’ என முன்பு கூறியிருந்
தோம். இங்கு சேதனன்பால் உள்ள பற்றுதல், பேற்றுக்கு ஸாதனமா? அல்லது, இச்
சேதனனால் பற்றப் பெறும் எம்பெருமானே ஸாதனமா? என்னும் ஐயம் ஏற்படுவது
இயல்பேயாம்.

பிள்ளைலோகாசார்யர் ‘பற்றப் பெறும் எம்பெருமானே பேற்றுக்கு ஸாதனம்; பற்றுதல் ஸாதனமன்று’ என்று அருளிச் செய்திருக்கிறார் ; சேதனன் பாலுள்ள பற்றுதலை
அதிகாரி விசேஷணமாகத் திருவுள்ளம் பற்றியிருக்கிறார்.
இங்கு, முதலில், இவ்விரு ஆசார்யர்களுடைய கருத்துக்களையும் தக்க சான்றுகளுடன்
முறையே விரித்துக்கூறி, கருத்து வேற்றுமை யின்மையையும் காட்டி, பின்பு, இராமாயணத்தில் சரணாகதி பேசப் பெற்றிருக்கும் விதம் இன்னது என்பதையும் தெரிவிப்போம்.
தேசிகன், சேதனன் பாலுள்ள பற்றுதல் பக்தி ஸ்தானத்தில் எமபெருமானை ஸாதித்துத்
தருவதென்றும்,அத்தானத்திலுள்ள எம்பெருமானே பேற்றுக்கு ஸாதனமென்றும் திருவுள்ளம் பற்றியிருக்கிறார்.
பிள்ளைலோ காசார்யர் திருவுள்ளம் பின்வருமாறு காணத் தக்கது:
“தருமம்” என்னும் சொல்,எது விரும்பும்பயனுக்கு முக்கிய காரணமோ, அதைக்
குறிக்குமாம். பரமபுருஷன் அவர் அவர் விரும்பும் பயனுக்கு முக்கிய காரணனாயிருத்
தலின்,சாஸ்திரம் தர்மம்’ என்னும் சொல்லையிட்டு, அவனைக் குறிக்கின்றது.
 (ராமோ விக்ரஹவாந்தர்ம 🙂 ‘ (க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம் ) என்னும் வாக்கியங்களை
நாம் இங்குக் காணுதல் நன்றாம். மேலும் இந்த எம்பெருமான் எனப் பெரும் தருமம்
மிகச் சீர்மை யுற்றதாம். எவ்வாறு? என்னில் கூறுவோம்:
ஏனைய தருமங்களுக்கும்,எம்பெருமான் எனப்படும் தருமத்திற்கும் மிகவும் வேற்றுமை
உண்டு. எவ்வாறு? என்னில், ஏனைய தருமம் எதுவாயிருப்பினும், அது வேறொன்றின் உத
வியை விரும்பியன்றி இராது. எம்பெரு மானோ,அவ்வாறு வேறொன்றின் உதவியை
விரும்பான்’ என்பது மாத்திரமன்று; அவ்வாறு உதவியைப் பொறுப்பானும் அல்லன்.-இங்கு எடுத்துக்காட்டாகப் பின் குறிக்கப்பெறுவது நோக்கத்தக்கது. பரமனைச் சிந்திக்கும் சிந்தனை பக்தி’ என்பது நாம் அறிந்ததேயாம். இப்பக்தி, தான் உண்டாம்போது
சேதனனுடைய முயற்சியை விரும்புகின்றது;-இச்சேதனன், சாஸ்திரம் கூறுகின்றவாறு
முதலில் இன்னது பக்தி’ என்பதை உணர்ந்து-அங்ஙனம் உணர்ந்தவாறு முயன்று, செய்யும்
போதுதானே உண்டாகின்றது ; முயன்று-செய்யாதபோது உண்டாவதில்லையன்றோ ?
மேலும் இப்பக்தி, பயனைக் கொடுக்கும் போது, அங்ஙனம் கொடுக்கத்தக்க அறிவு
ஆற்றல்களைப் பெற்றிராமையின், பேரறிவு பேராற்றல்களைப் பெற்றிருக்கும் எம்பெரு
மானை உதவியாய் விரும்புகின்றது. இதனால், பக்தி, தான் உண்டாம்போது, சேதனனு
டைய முயற்சியை உதவியாய் விரும்புகின்றது என்பதும், பயனைக் கொடுக்குங்கால், எம்பெரு மானை விரும்புகின்றது’ என்பதும் நன்கு புல னாகும்.
அன்றியும், சித்தம் சுத்தமாய் இராத போது, அச்சித்தம் பரமனைச் சிந்திக்கப்பாங் காயிராது.ஆதலின்,எதைச் செய்தால் சித்தம் சுத்தி பெறுமோ, அதைச் செய்தல்
இன்றியமையாததாகும். இச்சித்த சுத்தியை கரும யோகத்தைச் செய்து பெறலாகும்.
இதைக் காணுங்கால்,பக்தியைச் செய்தற்குச் சித்த சுத்தி இன்றியமையாததாம். சித்த
சுத்தி பெறுதற்கு கரும யோகத்தைச் செய்தல் இன்றியமையாததாம். ஆதலின், ‘பக்தி,
சித்தசுத்தி வழியாகக் கருமயோகத்தை உதவியாய் விரும்புகின்றதாம்’ என்பது நன்கு
விளங்குகின்றது? (சித்த சுத்தியாவது – உள்ளத் தூய்மையாம்)-இன்னமும், இவ்வாறு, பக்திக்கு உதவியாயுள்ள பலவற்றைச் சாஸ்திரங்களில் காணலாம் .
உதவி வேண்டா உபாயம்
எம்பெருமான் என்னும் தருமத்திற்கோ,ஓர் உதவியும் கூறுதற்கு இன்று. நித்தியரனாய் (என்றும் உள்ளவனாய்) இருத்தலின், ‘உண்டாதல். என்பதே இல்லை; பேரறிவும்,
பேராற்றலும் பெற்றிருத்தலின், பயனைக் கொடுக்கும்போது, பிறருதவி வேண்டுவதில்லை; இயற்கையிலேயே மிகவும் தூய்மை பெற்றிருத்தலின், அத்தூய்மை பெற ஒன்றைவேண்டிச் செய்தலுக்கும் இடம் இன்று. இயற்கையில் தூய்மை பெற்றிருப்பவன் என்பது மாத்திரமன்று; தன் தொடர்பினால் பிறருக்கும் தூய்மையை உண்டு பண்ணுவானன்றோ?
எம்பெருமான்.-மேலும், வேறொன்றின் உதவியையும் எம்பெருமான் பொறான்’ என்பதற்குப் பின் வரும் சரிதம் எடுத்துக்காட்டாகக் கூறப்பெற்றுள்ளது: இந்திரஜித்தினுடைய பிரமாஸ்தி
ரத்தினால் கட்டுண்ட திருவடியை இராக்கதர்மேலும், சணல் கயிறுகளால் கட்டியபோது,
அப்பிரமாஸ்திரம் நழுவியதாயும், அங்ஙனம் நழுவியிருந்தும், இராவணனுடைய உண்மைகளை உணர விரும்பி, கட்டுண்டவன் போன்று, அத்திருவடி இருக்க, அவனை அவ் இராக்கதர் இராவணன்பால் இழுத்துச்சென்றனராம்”. என்பதே அச் சரிதமாம். இச் சரிதத்தில், ‘வேறொன்றின் (சணல் கயிறின்) தொடர்பைப் பிரமாஸ்திரம் பொறுத்திலது’ என்பது தெளிவு. இதுபோன்று, எப்பெருமானும் மற்றொன்றின் உதவித் தொடர்பைப்
பொறான்’ என்னும் உண்மை இங்கு உணரத் தக்கதாம். இவ்வாறு, எம்பெருமானுக்கும்
ஏனைய தருமங்களுக்கும் உள்ள வேற்றுமையையும், எம்பெருமானுக்குள்ள சீர்மையையும்
கண்டோம். மேற் கூறியவாறு, ‘எம்பெருமான் வேறு ஒன்றின் உதவியைச் சிறிதும் பொறான்’ என்பதற்குத் தக்க சான்று யாதோ? எனின், கூறுவோம்: சரணாகதியைக் கூறும் சான்றுகள் பலஉண்டு. அவையாவன ; (மாமே வயே ப்ரபத்யேத்) (தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யேத்)
(த்வமேவ உபாய பூதோ மே பவ)) ” ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்பனவாம்.-இச் சான்றுகளுக்கு முறையே, “யாவர் சிலர் என்னையே பற்றுகிறார்களோ, ‘அந்த ஆதி புருஷனையே பற்றக் கடவன்’ நீயே எனக்கு உபாயமாக வேண்டும்’ ‘எனக்கு
உபாயம் தருமிடத்தில் உன் திருவடிகளையே உபாயமாக அளித்தாய்’ என்னும் கருத்துக்கள்
காணத்தக்கன.-மேற்கூறிய சான்றுகளில்,உபாயப் பொரு ளைக் குறிக்கும் சொல்லைச் சேர்ந்தே ‘ஏவ-என்னும் சொற்களைக் காண்கின்றோமல்லவா?
இச்சொற்கள் இங்கு, பிரிநிலைப் பொருள் பெற்றுள்ளனவாம்,அஃதாவது: எம்பெருமான், அவனைப் பெறுதற்கு முக்கிய காரணனாம்; வேறொன்றும் முக்கிய காரணமாகவோ,
துணைக் காரணமாகவோ இல்லை’ என்பதாம்.
இக் கருத்தைக் காணுங்கால், சேதனன் பாலுள்ள பற்றுதல் காரணமன்று : பற்றப்
பெறும் எம்பெருமானே காரணன் என்பது தெளிவாக விளங்குகின்ற தன்றோ?

அதுவும் அவனது அருளே

இன்னமும், “இச்சேதனன் எம்பெருமானைப் பற்றுதலாகிய செயல் பேற்றுக்குக் கார
ணமன்று”, என்பதை  (தம் ஹ தேவம் ஆத்ம புத்தி பிரகாசம்) என்னும் சுருதியினாலும் நாம் நன்கு காணலாம். இந்தச்சுருதியின் கருத்து : ‘எம்பெருமான் உபாயம்’ என்னும் அறிவு அவ் எம்பெருமானுடைய அருளாலேயே பெறுவதொன்றாம் என்பது.-இந்தச் சுருதி, முன்னம் கூறிய “முமுஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே” என்னும் வாக்கியத்தோடு சேர்ந்திருக்கின்றமையின்,-‘எம்பெருமான் உபாயம் என்னும் அறிவை எந்த எம்பெருமான் தன் இன்னருளால் மலரச் செய்கின்றானோ, அவ்எம்பெருமானையே, வீடு பேற்றில் விருப்பமுடைய நான் (வேதபுருஷன்) உபாயமாகப் பற்றுகிறேன்’ என்னும் கருத்து இங்குக் காணத்தக்கதாம்.-இக்கருத்தை ஆழ்ந்து ஆராய்ந்து காணுங்கால், முதலில்,எம்பெருமான் இன்னருளுக்கு இலக்காகிய பின்பு, அவ் இன்னருளினால் ‘எம் பெருமான் உபாயம்’ என்னும் அறிவு பெற்று, அதன் பிறகு, அவ்எம்பெருமானைப் பற்ற விரும்பி, பிறகு, எம்பெருமானை உபாயமாகப் பற்றுகிறான்’ என்னும் அடைவு நன்கு புலப்படுகின்றதன்றோ?
எம்பெருமானை உபாயமாகப் பற்றுதற்கு அங்ஙனம் உபாயமாகப் பற்றுதல் வேண்டும்
என்னும் விருப்பம் காரணமாம். அவ்விருப்பம் உண்டாதற்கு, எம்பெருமான் உபாயம்
என்னும் அறிவு ஏதுவாம். அவ்வறிவு பெறு வதற்கு அவ் எம்பெருமான் இன்னருள் இன்றி
யமையாததாம் என்று வேறொரு வழியில் அமைந்துள்ள அடைவும் இங்கு அறியத் தக்கதாகும்.-இக் கருத்தையே நம்மாழ்வாரும், “என்னுணர்வினுள்ளே இருத்தினேன். அதுவும் அவனது இன்னருளே” என்ற தமது திருவாக்கினால் வெளியிட்டிருக்கிறார்.
இது காறும் கூறியவாற்றால். ”இந்தச் சேதனன் எம்பெருமானைப் பற்றிய பின்பு.
இவன் துன்பம் நீங்கி இன்பம் பெறுதல் எவ்வாறு ஏற்படுகின்றதோ, அவ்வாறே, இவை
இரண்டிற்கும் முன்பு இச்சேதனன் பாலுள்ள பற்றுதலும். அவ்வெம்பெருமானாலேயே உண்டாகின்றது” என்னும் முடிந்த உண்மைப் பொருளும் இங்கு நன்கு விளங்குகின்றது.
இங்கு, பின் குறிக்கப் பெறும் எடுத்துக் காட்டும் காணத்தக்கது: தந்தையான ஒரு
வன், தன் புத்திரனுக்கு ‘காயத்ரீ’ என்னும் மந்திரத்தைசாஸ்திர முறைப்படி உதவுகிறான்.
அங்ஙனம் உதவப் பெற்ற அப்புத்திரனும், தன் தந்தையார் தன் கையில் கொடுத்த
தனத்தை, அத் தந்தையாருக்கே தன் நன்றி அறிதலுக்கு ஏற்பத் திரும்பவும் கொடுக் கின்றான்.-இதுபோன்று, எம்பெருமான் கொடுக்க அறிவு, விருப்பம் இவற்றைப் பெற்ற இச்சேதனன், அவ்வெம்பெருமான் கொடுத்த ஆற்றலைக் கொண்டே அவனை உபாயமாகப் பற்றுகின்றான். ஆதலின், அப்பற்று தலுக்கு உபாயத் தன்மை கொள்ளுதற்கு இல்லை யன்றோ ?

அதிகாரி விசேஷணம்
இதுவரையில் கூறியவற்றால், ‘எம்பெருமானைப் பற்றும் பற்றுதல் ஸாதனமன்று;எம்
பெருமானே முக்கிய தருமமாம்’ என்பதை உணர்ந்தோம். ஆனால், இப்பற்றுதல் இச்
சேதனனுக்குப் பேற்றைப் பெறும்போது,உதவுகின்றது எவ்வாறு? எனின், அதிகாரி
விசேஷணமாய் உதவி புரிகின்றது. இதனைச் சிறிது விரித்துக் கூறுவோம்.
சாஸ்திரங்களில், உபாயம், அங்கம், பலம் என்று கூறப் பெற்றிருத்தலை நாம் காணலாம்.
எம்பெருமானைப் பெற்று அவனையும், திருக்குணங்களையும், திருமேனியையும் அன்புடன்
அனுபவித்து, அவ்வனுபவத்தாலாகிய ஆனந்தம் உள்ளடங்காது தூண்ட, அதனால் செய்யும்
அடிமைத் தொழிலே மிகமிகச் சிறந்த பயனாம். இப்பயனைப் பெறுதற்கு எம்பெருமானே உபாயமாம். இவ்வுபாயத்தை (எம்பெருமானை)ஒருவன் பற்றும்போது, ஏனைய தருமங்கள்
எல்லாவற்றையும் விட்டே பற்றுதல் இன்றியமையாததாகும். இ தற்கு “(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய ) என்னும் கண்ணபிரானுடைய திருவாக்கே தக்க சான்றாம்.
“உண்பானொருவன், முதலில் நீராடியே பின்பு உண்ணுதல் வேண்டும் ” ‘ (ஸ்நாத்வா புஞ்ஜீத) என்று எவ்வாறு சாஸ்திரம் கூறுகின்றதோ, அவ்வாறே, கண்ணபிரானும், ‘பரம புருஷனாகிய என்னைப் பற்றுங்கால், ஏனைய தருமங்கள் எல்லாவற்றையும்அறவே விட்டு, என்னைப் பற்று’ என்று அருளிச்செய்திருக்கின்றான். இவ்வாறு ஏனைய தருமங்களை விடுதல் என்பது அங்கமாம்(உதவியாம்).-இச்சேதனன் பாலுள்ள பற்றுதலோ, உபாயமும் அன்று ; அங்கமும் அன்று. ஆனாலும், இச்சேதனன் பற்றினால், மேற்கூறிய பயனைப் பெறலாம். பற்றாவிடில் பயனைப் பெற இயலாது.- இவ்வாறு, இச்சேதனன் பாலுள்ள பற்றுதல், உபயம், அங்கம் இவற்றில் வேறுபட்டதாயும், பயன் உண்டாம்போது வேண்டப் பெறுவதாயும் இருக்கின்றமையின்,இஃது அதிகாரி விசேஷணமாம்.
இங்கு, கண்ணன் அருளிச் செய்த(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ-அஹம் த்வா ஸர்வ பாபேப்ய ; மோக்ஷயிஷ்யாமி மாசுச :)என்னும் வார்த்தை காணத் தக்கது.
இவ் வார்த்தையில்,”ஸர்வ தர்மான்பரித்யஜ்ய” என்னுமிடத்து, முற்கூறியவாறு ஏனைய தருமங்களை அறவே விடுதல்’ என்னும் அங்கத்தையும்; ‘மாம்” என்னுமிடத்து, எம்பெருமானாகிற உபாயத்தையும்; ‘ஏகம்’ என்னுமிடத்துஇவன் பாலுள்ள பற்றுதல் உபாய
மன்று; ‘எம்பெருமான் வேறொன்றின் உதவியைப் பொறான்’ என்பதையும், ” வ்ரஜ என் னுமிடத்து, இவன் பற்றும் பற்றுதலையும்,”த்வா” என்னுமிடத்து, பற்றுதலைச் செய்த
சேதனாகிற அதிகாரியைக் கூறும் முகத்தாலே ‘பற்றுதலாகிய அதிகாரி விசேஷணத்தையும்,,ஸர்வபாபேப்யோ மோ யிஷ்யாமி’ என்னுமிடத்து, பரமனை அடைய
ஒட்டாது தடையாயிருக்கும் பாவத்தைப் போக்கி அளித்தலையும் கண்ணன் வெளியிட்டிருப்பது தெளிவு.-மேலும்,
தனக்கடிமைபட்டது தானறியானேலும் மனத்தடைய வைப்ப தாம் மாலை- வனத்திடரை ஏரி யாம் வண்ணமியற்று மிது வல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று” என்னும் பூதத்தார் பாட்டும் இங்கு அனுபவிக்கத் தக்கதாம். இப்பாட்டில் முன் அடிகள் தெரிவிக்கும் கருத்து : ”இச்சேதனன்,எம்பெருமான் உடையவன்;தான் உடைமைப் பொருள்’ என்னும் உண்மை
உணர்வு பெறாதிருந்தும், பெரியோர் செய்யும் முறையைக் கண்டாகிலும், எம்பெருமானைத்
தன் மனத்திலே கொண்டு விரும்பக் கடவன்”என்பதாம்.-இனிப் பின்னடிகளின் பொருளைக் காண்போம். (இச்சேதனனுக்கு முன்னடிகளில் கூறியவாறு) விருப்பம் மாத்திரம் உண்டானாலும், எம்பெருமான் இவன் விரோதியைப் போக்கி, இவனுக்குத் தன்னைத்தானே தந்தருளுவன். எவ்வாறு? என்னில்,-காடெழுந்து மேடாயிருக்கும் நிலத்தை ஏரியாக வெட்டுகின்றோம். இச்செயல் மழை பெய்தற்குக் காரணமன்று.நாம் ஏரி வெட்டு
கின்றோம் என்பது பற்றியே மழை பெய்யுமா?-அல்ல. இதனால், ‘ஏரி வெட்டுதல் மழை
பெய்தற்குக் காரணமன்று’ என்பது உலகறிந்ததேயாம். ஆனால் ஏரி வெட்டுதல் மழை
பெய்தற்குக் காரணமன்றாகில் அங்ஙனம் வெட்டுதல் பயனற்றதுதானே ! என்று எண்ணலாகாது. பரமனுடைய நினைவினால் மழை பெய்யும்போது,அம்மழை நீரை அவ் வனத்திடர் தாங்கிக்’ கொள்ளுமோ? கொள்ளாதன்றோ ? அத்துடரைத் திருத்தி, ஏரியாக
அமைத்து வைப்போமாயின். மழை பெய்யும் போது,அம்மழை நீரை அந்த ஏரி தாங்கித்
தன்பால் வைத்துக் கொள்ளும் என்பதே பின்னடிகளின் பொருளாம்.-இதனால் ‘ஏரி வெட்டுதல், மழை நீர் பழுதுபடாமைக்காகவே யன்றி, மழையைப் பெய்வித்தற்காக வன்று’ என்பது நன்கு தெரிகிறது.-இங்கு, எம்பெருமானை உபாயமாகப் பற்றாதாரை வனத்திடராகவும்,எம்பெருமானை உபாயமாக பற்றும் பற்றுதலை, ஏரியாம் வண்ணம் இயற்றுதலாகவும், சேதனன் பால்உள்ள எம்பெருமான் இயற்கை இன்ன ருளை,ஏரியில் தங்கின மழை நீராகவும் கொள்ளுதல் பொருத்தமாகும்.
இங்குத்தேறிய முடிந்த பொருள் என்ன?எனில், ” சேதனராகிற நாம் செய்யும் நற் செயல்களெல்லாம், எம்பெருமானுடைய இயற்கை இன்னருளைத் தாங்கிக் கொள்வதற்கு ஒருவாறு உறுப்பாம் என்பதொழிய, அப்பரமன் அருளை உண்டாக்குதற்கு உடலாகாது”-என்பதே அம்முடிந்த பொருளாம்.
இதனால், “ஏரி வெட்டுதல் போன்று, சேத னன் எம்பெருமானைப் பற்றுதலாகிய செயல்
உபாயமன்று ; ஏரி வெட்டுதல் எவ்வாறு இன்றியமையாததோ, அவ்வாறே எம்பெருமானை உபாயமாகப் பற்றுதலும் இன்றியமையாததாம். என்பதை இங்கு ஸாரப் பொருளாய்க் காணலாம். இக்கருத்தைத் திருவுள்ளத்தில் கொண்டு, பிள்ளைலோகாசார்யார்.
ப்ரபத்தியை அதிகாரி விசேஷணம் என்று திருவுள்ளம் பற்றியிருக்கிறார்.-இதுகாறும், பிள்ளைலோகாச்சார்யருடைய திருவுள்ளத்தைச் சுருக்கமாய்க் கண்டோம்.

இனி, தேசிகன் திருவுள்ளத்தைக் காண்போம்.
‘எம்பெருமானைச் சிந்திக்கும் சிந்தனை பக்தி’ என்று முன்னமே கூறியிருந்தோம்.
இப்பக்தியைச் செய்யத் தகுந்த அறிவும் ஆற்றலும் உள்ளவன், இதையே மோக்ஷ ஸாதனமாகச் செய்யக்கடவன். அறிவும் ஆற்றலும் இன்றி இருப்பவனோ, பக்தியைச் செய்யமாட்டாது இருப்பினும், வீடுபேற்றை இழக்கவேண்டியதில்லை; எம்பெருமானை உபாயமாகப் பற்றினால், அந்த எம்பெருமான் பக்தி ஸ்தானத்தில் வந்து சேருவன். அங்ஙனம் வந்து சேர்ந்த எம்பெருமான், (பக்தி ஸ்தலத்தில் பக்தி எங்ஙனம் வீடுபேற்றிற்கு ஸாதனமோ, அங்ஙனமோ மோக்ஷத்திற்கு உபாயம் ஆவான்.-இங்ஙனம், ப்ரபத்தி, எம்பெருமான் வேறொரு உபாயமாகிய பக்தி ஸ்தானத்தில் வந்து சேருதற்குக் காரணமேயன்றி, நேராக வீடு பேற்றைப் பெறுதற்கு காரணமன்று; எம்பெருமான தான் அப்பேற்றுக்கு காரணம்.-இவ்வாறு தேசிகன் திருவுள்ளத்தைச் சுருக்கமாய் காணலாம்.
மேற்கூறிய இரு பக்ஷங்களிலும், ப்ரபத்தியை, அதிகாரி விசேஷணமாக ஒருவரும்,
எம்பெருமான் பக்தி ஸ்தானத்தில் வந்து சேருதற்குக் காரணமாக மற்றொருவரும் திரு வுள்ளம் பற்றியிருத்தலைக் காண்கின்றோம்-இதை நோக்குங்கால், இவ்விரு ஆசாரியர்களுக்கும் திருவுள்ளத்தில் வேற்றுமை உண்டு’ என்பது தெரிகிறது.-ஆனாலும்.எம்பெருமான் நேரே வீடு பேற்றிற்கு உபாயம் என்பதை  இவ்விரு ஆசார்யர்களும்,  திருவுள்ளக் கருத்து வேற்றுமையின்றி, ஆதரித்திருக்கிறார்கள் என்பது நன்கு இங்கு விளங்குகின்றது.   இந்தத் திருவுள்ளக் கருத்தொற்றுமையே இங்கு முக்கியமாய் அனுபவிக்கத்தக்கது.
இனி, இராமாயணம் சரணாகதி தருமத்தை இயம்புகின்றவாறு சிறிது விரித்துக்
 கூறுவோம்.

இராமாயணமும் சரணாகதியும்

தசரத சக்ரவர்த்தி புத்திரப்பேற்றை விரும்பி, வேள்வி செய்யும் தருணம். அத்தருணத்தில், நான்முகனாரும், ஏனைய தேவதைகளும், மற்றும் மஹரிஷிகளும் அவ்வேள்வியில்,
தம்தம் அவியை (ஹவிஸ்ஸை)ப்பெற விரும்பி, ஒன்று சேர்ந்து வந்திருந்தனர். அங்ஙனம்
வந்திருந்த தேவதைகள் முதலானார் யாவரும், நான்முகனாரை நோக்கி, ஓ பகவானே !
உமது அருள்பெற்று, மிக்க பராக்கிரமம் கொண்ட இராவணன், எங்களனைவரையும்
துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனன். நாங்கள் அவனை அடக்கத் தக்க வன்மையற்றிருக்கின்றோம். ஆதலின் அவனைக் கொல்லுதற்கு ஏற்ற உபாயத்தை நீவிர் ஆராய்ந்து அருள் புரியவேண்டும்’ என்று வேண்டிக் கொண்டனர்.
இவ்வாறு வேண்டுங்காலத்து, சக்ரவர்த்தி வேள்வி நிகழும் நிலத்தின் கண், பேரொளி
பெற்றிருப்பவனும், சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையனும், திரு அரையில் கட்டிய கசசை
யுடையனும், என்றும் எல்லாப் பொருளிலும் உள்ளும் புறமும் பரந்திருப்பவனும், இப்பிர
பஞ்சத்திற்கு ஸ்வாமியுமான நாராயணன் வைகுந்தத்தினின்றும் எழுந்தருளினன்.
இங்ஙனம் பரமபுருஷன் எழுந்தருளின வரலாற்றைக் கூறும் வார்த்தை,

(ஏதஸ்மிந் அந்தரே விஷ்ணு: உபயாதோ மஹாத்யுதி : சங்க சக்ர கதாபாணி : பீதவாஸா ஜகத்பதி 🙂 என்பதாம்.-இவ்வார்த்தையில், சரணாகதி தருமத்தின் உண்மை பலவற்றை நாம் உணரலாகும்.(1 ) தருமம், என்னும் சொல்,எது பயனுக்கு ஸாதனமோ, அதைக் குறிக்கும். எம்பெருமான் அந்தஅந்த நன்மைக்குக் காரணனாயிருக்கின் றமையின், தரும சப்தத்தால் குறிக்கப்பெறுகின்றான். அவன் நித்தியமாயிருப்பவன். ஆதலின், ஏனைய தருமங்களில் ஏதேனும் ஒன்று எங்ஙனம் முயற்சி சக்தியினாலேயே ஏற்படுகின்றதோ, அங்ஙனம் எம்பெருமான் உண்டு பண்ணப்படுமவனல்லன் என்று முன்னமே கூறியிருந்தோம்.
எம்பெருமான் எதிர்நோக்குவது
இதைச் சிலர் காணுங்கால், ‘அவர் அவர்விரும்பிய பயன் அந்த அந்தக் காலத்து, யாதொரு இடையூறுமின்றி, எம்பெருமானாகிய தருமத்தினால் ஏற்படத் தட்டென்? ‘ என்றுகருதக்கூடும். ஆனாலும், இங்ஙனம் கருதஇடம் இல்லை. ஏனெனில்,’எம்பெருமானாகிய தருமம் எல்லாருக்கும் என்றும் உள்ளது’ என்பது ஒருவாறு உண்மையே. ஆனாலும், அந்த எம்பெருமானாகிய தருமம் துன்பம் துடைத்து, இன்பம் அளித்து, இவனை நோக்குங்கால், இவனுடைய வேண்டு தலையும் வேண்டுகின்றது.
(ரக்ஷயா பேக்ஷாம் ப்ரதீக்ஷதே) என்னும் பிரமாண வசனம் இங்குக் காணத் தக்கது.
இதனால் “‘இரட்சித்தல் என்னும் தொழிலை இயற்கையாகப் பெற்றிருக்கும் எம்பெருமான், (காக்கப்பெறும்) இச்சேதனனுடைய வேண்டுதலை விரும்பியே இவனை இரட்சிக்கின்றான்” ! என்னும் சரணாகதியைப் பற்றிய ஓர் உண்மையை நாம் உணரலாகும்.
இவ்வுண்மை, மேற்கூறிய “ஏதஸ்மிந் அந்தரே” என்னும்வார்த்தையில் நன்கு புலனாகின்றது . எவ்வாறு என்னில் ?”எம்பெருமான், ஏனைய தேவதைகளைப் போன்று, தன் அவியைப் பெற்றுப் புசிக்க, வேள்வி நிகழும் நிலத்து எழுந்தருளினான்” என்பது இங்கு உண்மையன்று. அங்ஙனம், அவியைப் பெற்றுப் புசிக்கத் திருவிள்ளமிருப் பின். அவர்களைப் போன்று, அந்நிலத்தில் முன்னமேயே எழுந்தருளியிரானோ? சங்கம், சக்கரம், தண்டு இவற்றைத் திருக்கைகளில் ஏந்தியும், திருவரையில் கச்சை கட்டியும் போர் புரிபவன் போன்று எழுந்தருளுதலும் ஏற்படுமோ? பிறகு உண்மை என்ன? எனின், ‘; ஏதஸ் மிந்அந்தரே” என்பதை இங்கு உற்றுநோக்குதல் இன்றியமையாததாகும். இச்சொல்லில் நான்முகனாரை நோக்கி, ‘துன்பம் தீர்ந்து இன்பம் யாம் பெருமாறு நீவிர் ஆராய்ந்து அருள் புரியவேண்டும்’ என்று தேவதைகள் வேண்டுங்காலத்து, எம்பெருமான் எழுந்தருளினான் என்பது கூறப்பெற்றிருத்தலால், ‘எம்பெருமான் இச்சேதனருடைய வேண்டுதலை விரும்பி இரட்சிக்கின்றான்’ என்பது வெளிப் படை.
”பிரமாஸ்திரம் எங்ஙனம் சணல் கயிற் றின் தொடர்பைப் பொறுக்கின்றதில்லையோ ; அங்ஙனமே, எம்பெருமானும் வேறொன்றின் தொடர்பைப் பொறான்’ என்று முன்னம் கூறியிருந்தீர்கள். இப்போது, ‘இச்சேதனன் வேண்டுதலை எம்பெருமான் எதிர்பார்த்தே இவன் காரியம் செய்கின்றான்’ என்று கூறுகிறீர்கள்.இக்கருத்துக்கள் இரண்டும் பொருந்துமாறு யாங்ஙனம்?” எனச் சிலர் இங்கு வினவக்கூடும்.
ஒருவன், வேறொருவரின் உதவி சிறிதும் இன்றி, சமையலைச் செய்ய வல்லவன்,அவனை
வேறொருவன் தன் வீட்டுச் சடங்கு நிமித்தமாய்ச் சமையல் தொழில் புரியுமாறு வேண்டிக் கொள்கின்றான். அங்ஙனம் வேண்டிக் கொள்ளப்பெற்ற அவனும் அவ்வேண்டுகோளுக்கு இணங்கி, சமையல் செய்கின்றான்.-இவ்விடத்து, “வேறொருவரின் உதவி சிறி
தும் வேண்டாதவன் இவன் என்று கூறினீர்களே? இவன் சமையல் நிமித்தமாய் வேறொருவன் வேண்டுதலை விரும்பித்தானே,வந்து சமையல் செய்தனன்” என்று முரண்பாடு தோன்ற வினவுவாரும் உண்டோ? இல்லை யன்றோ? இங்குக் கருத்து யாதோ? எனின், சமையல் செய்பவன் சமையலைச்செய்யுங்கால், வேறொருவரின் உதவியைச் சிறிதும் விரும்பி யிருப்பின், அஃது அவன் சிறப்பிற்கு (வேறொருவரின் உதவி சிறிதும்இன்றி சமையலைச் செய்ய வல்லவனாயிருக்கைக்கு ) அழிவை விளைக்கும்.
அஃது இல்லையன்றோ?-இது போன்று,எம்பெருமானாகிய தருமம் இச்சேதனன் காரியம் செய்யும்போது, வேறொன்றின்தொடர்பை வேண்டினால், அத் தருமத்தின் சிறப்பிற்கு அவ்வேண்டுதல் அழிவை விளைக்கத்தான் செய்யும். அங்ஙனம் வேண்டாமையின், முன்னம் கூறிய அச்சிறப் பிற்கு (வேறொன்றின் உதவித்தொடர்பை வேண்டாதவனாயிருக்கைக்கு) யாதொரு குறை கூறுதற்கும் இடம் இல்லையன்றோ
இவ்வாறு, இச்சேதனன் வேண்டுதலை விரும்பி எம்பெருமான் இவன் காரியம் செய்பவன்’ என்னும் உண்மையை உணர்ந்தோம்.-இனி, இவ்வார்த்தையில்,சரணாகதியைப் பற்றிய வேறொரு உண்மையையும் நாம் காணலாகும். அவ்வேறொரு உண்மை யாதோ ?எனின், கூறுதும்.

வேண்டுவது விலக்காமையே

(2) எம்பெருமான் உடையவன்; சித்தும் அசித்தும் உடைமைப் பொருள் என்று முன்னமேயே கூறியிருந்தோம். உடைமைப்பொருள்’ ‘உடையவன்’ என்னும் உண்மைப்பொருள்-இரண்டனுள், உடைமையை நோக்கிக்காக்கும் பொறுப்பு உடையவனுக்கு என்றும் உண்டு. அவ்வுடைமைப் பொருள் அறி வுற்றிருக்கும் ஜீவனாயிருந்தால், அந்த ஜீவனுடைய விலக்காமையைக்கண்டு, உடனே வந்து இரட்சிப்பவன் எம்பெருமான். இவ்வுண்மை
“ஜகத்பதி ” என்னும் சொல்லைஉற்று உணர்ந் தால் நன்கு உணரலாகும். இச்சொல் ‘இப்
பிரபஞ்சத்திற்கு ஸ்வாமி’ என்னும் பொருளைக் காட்டி நிற்கின்றமையின். இப்பிரபஞ்சம்
உடைமைப் பொருள்’ எம்பெருமான் உடையவன்’ என்பது இங்குத் தெளிவன்றோ? இராவணனால் துன்புற்றிருக்கும் தேவதைகள் முதலானாருக்கு உள்ள விலக்காமையைக் கண்டு,உடனே எம்பெருமான் எழுந்தருளினன்’ என்னும் உண்மையை இங்குக்காணலாமல்லவா? மேற்கூறிய உண்மைகளை உணருங்கால், இச்சேதனன், எம்பெருமானாகிய தருமத்தினால் தன் நிலைக்கேற்ற நன்மையை அடையும் போது, ‘சேதனனாகிய இப்பொருள் எம்பெருமான் ஒருவனுக்கே இரட்சிக்கத் தக்கதாம்?-எம்பெருமான் கிட்டிக்காக்கும்போது, அவன் செய்யும் இரட்சணத்தை விலக்காது இருத்தலும் இவனுக்கு இன்றியமையாததாம். என்பன தேறிய பொருள்களாக நன்கு விளங்குகின்றனவல்லவா?

பிராட்டியை முன்னிடுதல்

இனி, இந்த இராமாயணத்திலேயே, ‘இச்சேதனன் எம்பெருமானைச் சரணம் பற்றுங்கால், பெரிய பிராட்டியாரை முன்னிடுதலும் இன்றியமையாததாகும்’ என்னும் ஸாரப்பொருளையும் நாம் காண்போம். இப்பொருளை இராமாயணம் பலவாறாக விரித்துக் கூறியிருக்கின்றது. இதைச் சிறிது விவரிப்போம்.-எம்பெருமானும் பெரிய பிராட்டியாரும்
இச்சேதனனை இரட்சிப்பவராம். எம்பெருமான், இச்சேதனன் துன்பம் தீர்ந்து, இன்பம் பெற்று வாழ்தற்கு முக்கிய காரணனாம். பெரிய பிராட்டியாரோ, இச்சேதனன் எம் பெருமானைச் சரணம் பற்றுங்கால், புருஷகாரமாயிருந்து உதவியைச் செய்பவராம்.
புருஷகாரமாயிருந்து உதவியைச் செய்கையாவது : இச்சேதனன் எமபெருமானைச் சரணம் பற்றுங்கால், இவன் நெடுகின காலத்தில் அறிந்தும் அறியாமலும் எண்ணிறந்த பாவங்களைச் செய்திருக்கின்றமையினாலும், இவன்,தன் முன்னிலையில் வந்து நிற்குங்கால், பேரறிவாளனாகிய தனக்கு இவனது பாவம் முற்றும் நினைவுக்கு வருவதாலும்,அந்த அந்தப் பாவத்திற்கு ஏற்ப, பயனை அளித்து நல்வழியில் நடத்திப் போருமவனாய்த் தான் இருப்பதாலும்,எம்பெருமான் சீறிச் சிவந்து இச்சேதனனைக் கண்கொண்டு பாரான். அஙஙனம் இருக் குங்கால், இப்பரமனுக்கு, அவனுக்கும் (பரம
னுக்கும் ) இவனுக்கும் (சேதனனுக்கும்) உள்ள தொடர்பை உணர்த்தி, இவன் நிலையை அறி
வித்து,இரக்கத்தையும் இவன் பிழையைப் பொறுக்கும் தன்மையையும் கிளப்பி, இவனைக்
கண்கொண்டு பார்க்கச் செய்து, அப்பரமன் இவனைத் திருவுள்ளமுவந்து அங்கீகரிக்குமாறு
பெரிய பிராட்டியார் உதவி புரிகிறார். இங்ஙனம் உதவிபுரிகையே புருஷகாரமாயிருந்து
உதவி செய்கையாம்.
சரணாகதி தருமத்தைப் பற்றிய இந்த உண்மையை, இராமாயணத்தின் முடிந்த
பொருளாய்ப் பின்வருமாறு பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்திருக்கிறார்:-
அவள் புருஷகரமாக அவனைப்பற்றுவதே பலவ்யாப்தமாவது. இது தான் காக விபீஷணாதிகள் பக்கலிலே காணலாம். அவளை அநாதரித்து இவனைப் பற்றின சூர்ப்பண்கை அநர்த்தப் பட்டாளிறே. பெருமாளை யொழியப் பிராட்டியைப் பற்றின இராவணனும் அநர்த்தப்பட்டான். இருவரையும் பற்றினாலிறே ஸ்ரீவிபீஷணாழ்வானைப் போலே வாழ லாவது”
இதின் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம்:- முதலில்,காகத்தின் வரலாற்றைக் காண்போம். “திருச்சித்திரக் கூடத்தில்,இராமபிரான் ஸீதா பிராட்டியார் மடியில்
திருக்கண் வளருங் காலம். அக்காலத்தில்,இந்திரனுடைய புத்திரனும், கெட்ட எண்ணத்தினால் காகத் தன்மையைப் பெற்றிருப்பவனுமாகிய காகாஸுரன் ஸீதாபிராட்டியாரைக் கிட்டி,- திருமேனியில் புண்ணை உண்டாக்கினான் . அப்பிராட்டியார் துன்பம் பொறாமல், தன் மடியில் கண்வளரும் எம்பெருமானை எழுப்பினார். உணர்ந்தெழுந்து அப்பெருமானும், காகத்தின் பாவச் செயலைக் கண்கூடாகக் கண்டு, பிரமாஸ்திரத்தை அக்காகத்தின் மீது விட்டருளினான். அதுவும், அந்த அஸ்திரத்தினால் துரத்தப்பட்டு. ஓரிடத்தில் ஒன்பது தடவை சென்று இரட்சணத்தை இரந்தும், ஒருவரும் இரங்கவில்லை. அப்போது புகலற்று அப்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம்
வந்து விழுந்துகிடந்தது. தரையிலே தலையும் பெருமான மடியிலே கால்களுமாய்க் கிடந்தது. அக்காகத்தின் நிலையைக் கண்ட ஸீதா பிராட்டியார் அக்காகத்தை இரட்சிக்குமாறு அப்பரமனை வேண்டிக் கொண்டனர் . அப் பரமனும் அஸ்திரம் பயனற்றதாய் ஆகாமையின், அதனால் அக்காகத்தின் கண்ணை அழித்து, அதற்கு உயிர்ப் பிச்சைக் கொடுத்து, அதனை இரட்சித்தனன்” என்பதே காகத்தின் வரலாறாம்.

(ஸபித்ராச பரித்யக்த: ஸரைச்ச ஸமஹர்ஷிபி த்ரீந்லோகாந்ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம்கத : 1) என்னும் (இராமாயணம்ஸுந்தரகாண்டத்தில் உள்ள) வார்த்தை யிலும்,
சித்திர கூடத்திருப்பச் சிறு காக்கை முலைதீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலககும் திரிந்தோடி
வித்தகனே ! இராமாவோ ! நின் அபயம்என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்னை அறுத்ததும் ஓரடையாளம்”-என்னும் பெரியாழ்வார் திருவாக்கிலும் காணலாம். இவ்வரலாற்றில் அமைந்துள்ள ஸாரப் பொருளைப் பின் வருமாறு காணலாம் :

ஸீதா பிராட்டியார் திறத்தில் இராவணனும், காகா ஸுரனும் பொறுக்கொணாத்
துன்பத்தை விளைவித்தவர்களாம். ஆனாலும்இராவணனைக்காட்டிலும் காகா ஸுரனுக்குப்
பாவம் அதிகமாம். எங்ஙனம் ? என்னில், இராவணன் அப்பிராட்டியாரை எடுத்துச் சென்று, அசோகவனத்தில் சிறையில் வைத்து, தானும்,ஏகாக்ஷிமுதலான அரக்கிமாரும் பல தடவை சொல்லொணாச் சொற்களைச் சொல்லித் துன்புறுத்தியது ஒருவாறு உண்மையே.
ஆயினும் காகா ஸூரனைப் போன்று,அப்பிரட் டியார் திருமேனியில் புண்னை உண்டாக்க
வில்லை யன்றோ? ஆதலின், காகாஸுரன் பாவம் அதிகமன்றோ?-இக்காகாஸுரன், பிரமாஸ்திரத்தினால் துரத்தப் பெற்று எங்கும் புகலற்று, செய லற்றுப் பரமன் முன்னிலையில் விழுந்து கிடந்தது போன்று, இராவணனும், இராமபிரானுடன் முதலில்போர் புரிந்த போது,அவ் எம்பிரான் பாணங்களால் அடிப்பட்டு, கையில் உள்ள வில்லை விழ விட்டு, இரதத்தில் தனக்குரிய இடத்தையும் விட்டுச் செயலற்றுக் கிடந்ததாய்’ வால்மீகி முனிவன்
வரலாற்றைக் கூறியிருக்கிறான்.-இங்ஙனம் செயலற்றுக் கிடத்தல்’ என்பது,
காகம் இராவணன் இவ்விருவருக்கும் ஒத்தி ருந்தும், இராவணனிலும் காகம் மிக்க பாவம்
பெற்றிருந்தும், இராவணன் இலங்கையுடன் அழிவு பெற்றதற்கும் காகம் (கண்ணழிவு
மாத்திரம் பெற்று) உயிரழிவு பெறாததற்கும் காரணம் யாதோ? எனின் காகத்திற்கு ஸீதா
பிராட்டியார் முன்னிலையும், அதனால், அப் பிராட்டியார் இயற்கை இன்னருளுக்கு இலக்கானதும் உண்டு. ஆதலின், வாழ்வு பெற்றான். இராவணனுக்கோ, அப் பிராட்டியார் முன்னிலையும், அதனாலாம் இயற்கை இன்னருளுக்கு இலக்கா தலும் இல்லை. ஆதலின்
முடிந்தான். இவ்வுண்மை, இராவணன் வரலாற்றோடு காகத்தின் வரலாற்றையும் சேர்த்து உணருங்கால், நன்கு விளங்குகின்றதன்றோ ?-இங்கு,” இவள் ஸந்நிதியாலே காகம்
தலை பெற்றது; அதில்லாமையே இராவணன் முடிந்தான்” என்னும் பிள்ளைலோகாசார்யர்
திருவாக்கும்,இவள் ஸந்நிதியாலே அபரா தத்தைத் தீரக் கழியச் செய்து ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்காய் தலையறுப்புண்ணத்தேடின காகம்… தலை பெற்றுப் போய்த்து;-அப்படியிருக்கிற இவள் ஸந்நிதி இல்லாமயையாலே போக்கற்றுச் செயல் மாண்டு நின்ற நிலை யொத்திருக்கச் செய்தேயும், காகத்தோபாதி அபராதமுமின்றிக்கே யிருக்க, ராம சரத்துக்கிலக்காய் இராவணன் முடிந்து போனான் என்கை என்னும் மணவாளமாமுனிகள் திரு வாக்கும் அனுபவிக்கத் தக்கவை.
இதுகாறும் கூறிய காகாஸுரன் வரலாற்றினால், “மிக்க பாவம் பெற்றிருப்பவனும்,
பிராட்டியாரை முன்னிடும் போது, எம்பெருமா இன்னருளுக்கு இலக்காகி,
நன்மை பெற்று, வாழ்வு பெறலாம்” என்னும் உண்மைக் கருத்து தெள்ளிதின் விளங்கு
கின்றதன்றோ? மேலும், இராவணனும், சூர்ப்பணகையும், விபீஷணனும் ஒரு குடியிலே பிறந்தவர்கள். இராவணன் எம்பெருமானை அறிவிலக்கி, பிராட்டியாரை மாத்திரம் முறைதவறி விரும்பினான். சூர்ப்பணகை பிராட்டியாரைவிட்டு, எம்பெருமானை மட்டும் முறை தவறி விரும்பினாள். பிராட்டியாரை விட்டு என்பது மட்டும் இல்லை; ஏன் பிராட்டியாரை இடையூறாகக் கருதி, விழுங்கவும் முயன்றாள்.-இவ்விருவரும் நன்மையைச் சிறிதும் பெற்றரில்லை. விபீஷணனோ, இராவணன், சூர்ப்பணகை இவ்விருவருடன் பிறந்திருந்தும் இவ் விருவரைப் போன்று, முறை தவறி ஒருவரை விட்டு ஒருவரை மாத்திரம் விரும்பாமல், பிராட்டியார் எம்பெருமான் இருவரையும் முறையுடன் பற்றி, இருவர் சேர்த்திக்கும் முயற்சி மேற் கொண்டதால் இன்றும் வாழ்ந்து போருகின்றானன்றோ? திருவரங்கத்தில் எம்பெருமான் இன்றும் விபீஷணனை நோக்கிக் கிடக்கின்றானன்றோ? இவ்விடத்திலே, தென்திசை இலங்கை நோக்கி” என் னும் தொண்டரடிப்பொடியார் திருவாக்கும், இத் திருவாக்கிற்குப் பொருள் கூறுமிடத்துள்ள ‘‘தென் திசை இலங்கை நோக்கி (முன்புத்தை திக்குகளைக் கடாக்ஷித்தது அவ்வோ தேசங்களின் வெறுமை தீருகைக்காக) இது தம் குறை தீருகைக்காக ; மாதா ப்ரஜைகளுக்கு முலை கொடுத்து அவற்றின் முகமலர்த்தி காண்கைக்குப் பாங்காகச் சாயுமாபோலே’ என்னும் பெரியவாச்சான் பிள்ளை திருவாக்கும் அனுபவிக்கத் தக்கவை.
மேற்கூறிய இரு திருவாக்குகளிலும், விபீஷணன், இன்றும் எம்பெருமானுடைய இன்னருளுக்கு இலக்காயிருந்து வாழ்ந்து போருகிறான்’ என்பது நன்கு விளங்குகின்றதன்றோ?
இது காறும் கூறியவாற்றால், ‘இச்சேதனன் எம்பெருமானைப் பற்றுங்கால், பெரிய
பிராட்டியாரை முன்னிடுதல் இன்றியமையாததாம்’ என்பதை ஒருவாறு கண்டோம்.

இறைவன் திருவுள்ளத்தை பின் சென்று பற்றுதல்

இனி இச்சேதனன் எம்பெருமானை உபாயமாய்ப் பற்றும்போது, இவன் பற்றும்
அப்பற்றுதல் அவ எம்பெருமான் திருவுள்ளத்தைப் பின் சென்றிருக்கவேண்டும்” என்பதும்
சரணாகதியைப் பற்றிய ஓர் உண்மையாகும்.-இவ்வுண்மையைப் பரதன் வரலாற்றில் நாம்.
அறியலாகும்.
“கூனியின் கூற்றினால் கலங்கிய கைகேயி,பரதன் முடியையும், இராமபிரான் வன
வாஸத்தையும் சக்ரவர்த்தியிடம் வேண்ட,அச்சக்ரவர்த்தியும் ஸத்தியத்திற்குக் கட்டுப்
பட்டு அளிக்க, இராமபிரானும் வனம் செல்ல,அதனால் சக்ரவர்த்தியும் துஞ்ச, கேகய தேசத்
தினின்றும் அயோத்தி வந்த பரதன் இவ்வரலாறுகளை அறிந்து, சக்ரவர்த்திக்குச் செய்ய
வேண்டிய சடங்குகளைச் செய்து முடித்து.சித்திரகூடம் சென்று, இராமபிரான் திருவடித்
தாமரைகளை உபாயமாகப்பற்றி,இப்போதே திருவயோத்திக்கு எழுந்தருளி முடிசூடிக்
கொள்ளுதல் வேண்டும்’ என்று அவ் இராமனை ஆர்த்தியுடன் வேண்டின் இடத்தும், அப்
பிரான் அதற்கு இசையாது இருக்க, அத்தரு ணம் அவன் திருவடி நிலைகளை அருள, அவற்றைப் பெறாப்பேறாகப் பெற்று, திரும்பி நந்திக்ராமம் வந்து, அத்திருவடி நிலைகளுக்கு அபிஷேகம் செய்து, அவற்றுக்குப் பரதந்திரனாய் பதினான்கு ஆண்டு பரமபுருஷன் வரவை எதிர்பார்த்துக் காலம் கழித்துக் கொண்டிருந்தனன் பரதன்” என்பதே அப்பரதன் வரலாறாம்.
இவ்வரலாற்றைக் காணுங்கால், “இராமபிரான் திருஅயோத்திக்கு எழுந்தருளி முடி
சூடிக்கொள்ளுதல்” பயன் என்பதும், ” அப்பயனுக்கு அவன் திருவடிகளே உபாயம்”
என்பதும் பரதன் எண்ணத்தில் நன்கு விளங்குகின்றன அல்லவா ?
இங்கு வால்மீகி முனிவன்,  (அபிஷஞ்சஸ்வ சாத்) என்றும், (ஏவமுக்த்வா மஹா பாஹு : ஸபாஷ்ப: கைகயீஸுத : Iராமஸ்ய சிரஸா பாதெள ஜக்ராஹ விதிவத் புந : II) என்று கூறியிருப்பது காணத்தக்கது.-மேற்கூறிய வார்த்தைகளுள், “அத்யைவ அபிஷஞ்சஸ்வ” என்னும் பகுதியில், “பரதன் விரும்பும் காலத்திலேயே முடி சூடிக்கொள்ளுதல் அப்பரதன் விரும்பிய பயன் ‘ என்பதும்,”ஸபாஷ்ப:” என்பதில், “‘பரதன் ஆர்த்தியுடையவன்’ என்பதும், “ராமஸ்யபாதெள சிரஸா ஜக்ரா ” என்னும் பகுதியில்,”பரதன் இராமபிரானுடைய திருவடிகளை உபாயமாய்ப் பற்றியவன்” என்பதும், “விதிவத் ‘; என்பதில் “அப்பரதன் அங்ஙனம் பற்றும்போது, முறையுடன் பற்றியவன்” என்பதும் நன்கு விளங்குகின்றனவல்லவா ?
இக்கருத்துக்களை மனத் திருத்திக் காணுமவர்க்கு, “பரதன் ஆர்த்தியுடன் முறைப்படிசரணம் பற்றியவன்” என்பது தெளிவு.-(ஆர்த்தியுடன் சரணம் பற்றியவனுக்கு, அப்போதே பயனுண்டாம்’ எனச் சாஸ்திரம் கூறுகின்றது. அவ்வாறு அப்பரதன் பயன் பெற்றனனா? என்னில், பெறவில்லை என்றே வால்மீகி முனிவன் கூறியிருக்கின்றான்.
“(ஸகாமம் அநவாப்யைவ ராம பாதாவுபஸ்ப்ருசன் நந்திக்ராமே அகரோத் ராஜ்யம் ராமாகம
நகாங்யா) என்னும் வால்மீகி முனிவனின் வார்த்தை இங்குக்காணத்தக்கது.
இவ்வார்த்தையில் அமைந்துள்ள “ஸகாமம் அநவாப்யை ” என்னும் பகுதியில், பரதன் இராமபிரானிடம் தான் விரும்பிய பேற்றைப் பெறவில்லை என்பது தெளிவு.
இங்கு, பரதன் முறைப்படி பற்றியிருந்தும், பயனைப் பெறாதற்குக் காரணம் யாதோ? எனின், இதற்கு பரிஹாரமாய் முதலில் சிலர் கூறும் கருத்துக்களை கூறுவோம் :
(1) சக்ரவர்த்தி வேள்வி நிகழும் நிலத்தின் கண் எம்பெருமான் எழுந்தருளிய போது,
தேவதைகள் முதலானார், அப்பரம புருஷன் மானிட வடிவத்துடன் திருவவதாரம் செய்து
இராவணனை அழிக்க வேண்டும் என விரும்பி,அவனைச் சரணம் பற்றியிருப்பது சரித்திர
உண்மை. அந்தச் சரணாகதி முதலில் தேவதைகளினால் செய்யப்பெற்றுள்ளது. அத்
தேவதைகள் கோரின பயனை அளிக்கத் திருவுள்ளங்கொண்டு, வனவாஸம் என்னும் வியாஜத்தினால் எழுந்தருளியிருக்கும் தருணத்தில், பரதன் ஆர்த்தியுடன் சரணம் பற்றியிருக்கும் வரலாறும் நாம் அறிந்ததேயாம். இதனால்,’இப்பரதன் செய்தசரணாகதி பின்பு செய்யப் பெற்றுள்ளது’ என்பது தெளிவு. முன்பு செய்த தேவதைகளின் சரணாகதிக்கு முதலில் பயனை அருள் செய்து, பின்பு செய்த பரத சரணாகதிக்குப் பின்பு பயனை அருள புரிதல் முறை எனத் திருவுள்ளம் கொண்டு, பரதன் விருப்பத்திற்கு ஏற்ப, அப்போதே இராமபிரான் திரு அயோத்திக்கு எழுந்தருளி முடி சூடிக்கொள்ளவில்லை. இது முதல் பரிஹாரம்.
(2) இராமபிரான் திருவுள்ளம் புண்படுமாறு பரதனுக்குச் சில பாவங்கள் இருக்கக்
கூடும் பயனின்மையைக் கண்கூடாகக் காண்கின்றமையின், அங்ஙனம் சிலபாவங்கள்
இருக்கக்கூடும் என்று ஊஹிக்கலாமல்லவா ? இவ்வாறு கூறுவது இரண்டாம் பரிஹாரம்.
(3) இச்சரணாகதிக்குச் சில அங்கங்கள்(அங்கங்கள் = உதவி செய்யுமவை) உண்டு.பெரியோரை முன்னிடுதல், பெரியபிராட்டியாரை முன்னிடுதல் போல்வன அவ்வங்கங்களாகும். பரதன் பயன் பெறத்தற்குக்காரணம், அவ்வங்கங்களுள், ஏதோ ஓன்றிரண்டு குறைந்திருக்கலாம். இது மூன்றாம் பரிஹாரம்.
( ) இராமபிரான், தந்தை, தாய் இவரைப் பூசித்தல் இன்றியமை யாததாம்’ என்னும் முறையைத் தன் செயலில் நடத்திக்காட்டி நிலைநிறுத்த வந்தவன். ‘தன்தாய்’ என்றும், ‘ வேற்றுத் தாய் ‘ என்றும் வேற்றுமை சிறிது மில்லாதவன். கைகேயி வேற்றுத் தாயாயிருப்பினும், அத்தாய் சொல்லைப்பின்சென்று முடியையும் துறந்த பரமபுருஷனன்றோ? அவன். அப்பெருமான் அவ்வாறு பூசித்தகைகேயியைப் பரதன் பலவகையால் வெறுத்துப்பேசியது அவன் திருவுள்ளத்தை மிகவும் புண்படுத்தியது. ஆதலின், அவன் பரதன் விருப்பத்துக்கேற்ப இரங்கினான் இல்லை
(மாதரம் ரக்ஷ கைகேயீம்) என்னும் இராமபிரான் வார்த்தையும் (பூஜிதா மாமி கா மாதா) என்னும் பரதன் வார்த்தையும் இங்குக் காணத்தக்கன. சித்திர கூடத்தில் திருவடி நிலைகளைக் கொடுத்து அருளுங்கால், இராமபிரான் அருளிச் செய்தது, முதல்
வார்த்துை.பதினான்கு ஆண்டு வனவாஸம் செய்து மீண்டு நந்தி ராமத்தில் எழுந்தருளியிருக்கும் இராமபிரான் முன்னிலையில் பரதன்சொன்ன வார்த்தை( பூஜிதா மாமி காமாதா” என்பது .) இது நான்காம் பரிஹாரம்.
இவ்வாறு சிலர் கருத்துக்கிணங்க நான்கு பரிஹாரங்களைக் கண்டோம். இப்பரிஹாரங்கள் பொருத்தமுடையன அல்ல என்பதை முறையே காட்டுவோம், இனி
(1) தேவதைகள் சரணாகதியைத் தெரிவிக்கும் இடத்தில் “இராவணன் அழிவை விரும்பிச் சரணம் பற்றியிருக்கிறதாகக் கூறப் பெற்றிருக்கிறதன்றி, காலம் குறிக்கப் பெற்றிலது என்பதை நாம் அறிதல் அவசியமாகும்.-அவ்விடத்துள்ள தேவதைகள் வார்த்தை
 (விஷ்ணோ ஸரமே ஜஹி ராவணம்) என்பதாம். பரதன் சரணம் பற்றுங்கால், “அத்யைவ ” (இப்போதே) என்று காலம் குறிக்கப் பெற்றிருக்கின்றது வெளிப்படை. இதனால், என்ன தேறிற்று என்னில் கூறுவோம்.
தேவர்களும், பரதனும் தம் தமக்கு உரிய இராவணன் அழிவு. ‘திரு அயோத்திக்கு எழுந்தருளி முடிசூடிக் கொள்ளுதல்’ என்னும் பயன்களை ஒரே காலத்தில் பெற விரும்பியிருப்பின்
பயனைப் பற்றிய முரண்பாடு ஏற்படுகின்றமையின்,அம் முரண்பாடு தீருமாறு பரம புருஷனும், முந்திச் செய்த தேவதைகளின் சரணாகதிக்கு முந்தியும், பிந்திச் செய்த பரத சரணாகதிக்குப் பிந்தியும் பயனை அளித்தல் நன்றாம்’ என்று திருவுள்ளங்கொண்டு, பரதனுக்கு அக்காலத்திலேயே உதவ இசையவில்லை என்னலாம். தேவர்களும் பரதனும் தம் தமக்குஉரிய பயனை ஒரேகாலத்தில் பெற விரும்பி, பரமனை வேண்டிக் கொண்டதாகக் கூறப்பெற்றிலது.-பரதனாவது, காலத்தைக் குறிக்காது தனக்குரிய பயனைச் சரணம் பற்றி வேண்டிக் கொண்டிருந்தானென்றிருப்பின், பரமன் பரதனுக்கு அக்காலத்திலே அருளாவிடினும், இந்த ஆராய்ச்சிக்கே இடம் ஏற்பட்டிராது.-அப்பரத னே, ‘இப்போதே முடிசூட்டிக் கொள்ள வேண்டும்’ என்று காலத்தைக் குறித்தே சரணம் பற்றியிருக்கிறான் அன்றோ? இதனால் பரதன் விருப்பத்திற்கு ஏற்ப அப்போதே, முந்தி முடி சூடி, அப்பரதன்
தாபத்தைந்போக்கி, பிந்தித் தேவதைகள் விரும்பியவாறு, இராவணனை அழிக்க, ஏதோ
ஒன்றை வியாஜமாய்க் கொண்டு, இராம பிரான் வனததிற்கு எழுந்தருளலாமன்றோ ?
ஆதலின், முதல் பரிஹாரம் ஏற்கத் தகுந்த தன்று.(வியாஜம் = போலிக் காரணம்.)
(2) பரதன் திருவவதாரன் உண்மையை உணரின், இராமபிரான் எங் னம் பாவமின்றி
இருப்பவனோ, அங்ஙனமே அப்பரதனும், பாவமின்றி இருத்தலின், அப்பரதனுக்கு இராம
பிரான் திருவுள்ளம் புண்படுமாறு சில பாவங்கள் உண்டு’ கூறுதற்கும் இடம் இன்று.
இதனால், இரண்டாம் பரிஹாரமும் பொருத்தமுடைத்தன்று என்பது தெளிவு.
(3) “ராமஸ்ய சிரஸா பாதெள ஜக்ராஹ விதி வத்பு :” என்பதில் உள்ள “விதி வத்”
என்னும் சொல்லை நோககின், “எம்பெருமானை உபாயமாய்ப் பற்றுங்கால்,முறை வழுவாது
பற்றியவன் பரதன்” என்பது தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ? ஆதலின், மூன்றாம்
பரிஹாரத்திற்கும் இடம் இன்று.
(4) நான்காம் பரிஹாரம் இராமாயணத்தில் ஒருவாறு கூறபபெற்றுள்ளது என்பது உண்மையே. ஆயினும் அதைப் பரிஹாரமாய் எடுத்துக் கொள்வதற்கு இல்லை. இதைச்
சிறிது விரித்துக் கூறுவோம்.-‘இராமபிரான் பரமாத்மா, பரதன் ஜீவன்’ என்னும கொளகையை உள்ளத்தில் கொண்டு, பின்வரும உணமை உணரத்தககது.
எம்பெருமான எலலாச்சேதனருக்கும எனறும் தஞ்சமாகிய தந்தையும் தாயுமானவன். இங்ஙனம் தந்தையாயும தாயாயும அவன் இருப்பது கருமத்தினாலன்று. பரமனுக்கும் சேதனனுககும் உளள ஒன்பது வித்த தொடர்பும்என்றும உள்ள தனறோ? இவவாறான
தொடர்பு இலக்குமணனுக்கும் இராமபிரானுக்கும் எஙஙனம் என்றும் உள்ளதோ, அங்ஙனமே பரதனுக்கும் இராமபிரானுக்கும் என்றும் உள்ளதாம். இவவாறான தொடர்பு பரதனுக்கும் கைகேயிக்கும உண்டோ ? இல்லையன்றோ?
இலக்கு மணன், (முடி சூடவைத்த முஹுர்த்தத்திலே, ஜடைசூடி இராமபிரா னைக கானகம்புகச்செயத கைகேயி போன்று, விபரீதச் செயல் உண்மையில் இன்றியிருநதும் )
தசரதனையும ஸுமித்ரா தேவியையும் தஞ்சமாகி தந்தையாயும் தாயாயும் கருதாது,
இராமபிரானையே அங்ஙனம் தந்தையாயும், தாயாயும், மற்றும் எல்லா உறவினராயும் கருதி, அவ் இராமபிரான் பின்னே, அவன் மனம் மகிழுமாறு அடிமை செய்யக் சென்றனனன்றோ? இல்வாறு இலக்குமணன் சென்றதற்குக் காரணம் அவ் இலக்குமணனுக்குள்ள இராம பக்தியன்றோ?-அவ் இலக்குமணன்போன்று, பரதனும்
மிக்க இராமபக்தி பெற்றிருப்பவனன்றோ ? மேற்கூறியவாறு விபரீதச்செயல் உள்ள
கைகேயியினிடம் அப்பரதனுக்கு மனம்பொருந்துமோ ? அவன் தன் தாயை வெறுத்தது சாஸ்திர முறையைக் காணுங்கால்,குற்றமாமோ ?-பரமனிடம் வெறுப்புற்ற தாயை அறவே விட்டிடுவது, சாஸ்திரத்தின் உண்மைக்கருத்து அன்றோ?-இவ்வுண்மைக் கருத்தைக் காணுங்கால்,’நான்காம பரிஹாரமும் பரிஹாரமாகாது’ என்பது தெளிவாம்.
ஆனால், இராமபிரான் “மாதரம் ரக்ஷகைகேயீம் மா ரோஷம் குரு தாம ப்ரதி’
என்று கூறியிருக்கின்றனனே; பரதனும், பதினான்கு ஆண்டு வனவாஸம் செய்து, திரும்பி
நநதிகராமததில் எழு தருளியிருக்கும் இராம பிரானைக குறிதது, பூஜிதா மாமிகாமாதா “
என்று பகவதபிபராயத்தைப் பின்பற்றி நடந்த தன செயலைக் கூறியிருக்கின்றனனே
என்று சிலர்மறுபடியும மறுததுக கூறலாம்-இப்பரிஹாரத்தை முக்கியமாய் நம்
ஆசார்யர்கள் திருவுளளம் பற்றவில்லை சேதனனுடைய உண்மை நிலையை உணருஙகால்,
கைகேயியை பரதன் வெறுத்தது மேற்கூறியவாறு குற்றமாமோ?
மேலும், இராமாயணத்தில் இப்பகுதியி லேயே இரண்டொரு உண்மைகளையும், கிஷ்கிந்தா காண்டத்தில் ஓர் உண்மையையும் இங்கு எடுத்துக்காட்டுவோம்.
(1) தந்தை ஆசாரியன் இவ்விருவருள், தந்தை சரீரத்தை உண்டுபண்ணி அச்சரீரததை வளர்ப்பவனாம். ஆசாரியனோ,ஞானத்தை உண்டுபண்ணி ஆத்மாவை வளர்ப்பவனாம். இருவரும் உதவியைச் செய்பவரேயாயினும், ஞானத்தை உதவும் ஆசாரியனே மிக்க சிறப்புப் பெற்றவனாம். ” (ஸஹி வித்யாத : தம் ஐநயதி தத் ச்ரேஷ்டம் ஜன்ம கரியாந் ப்ரஹ்மத பிதா ) என்னும் வசனம் காணத்தக்கது,-இங்கு. ஆதலின், ஆசாரியன் ஆணையைப் பின் சென்று நடத்தல் மிகவும் முக்கியமாகும். இவ்வுண்மையை உணர்த்தி, வஸிஷ்டர்,
‘இராமா! உனக்கும் உன் தந்தையாருக்கும் நான் ஆசாரியன் ; ஆதலின், என் சொற்படி
நீ வனவாஸத்தை விட்டிட்டு, இராச்சியத்தை ஏற்று முடி சூடுதல் நன்றாம்” என்று கூறியிருக்கிறார், இராமபிரானை நோக்கி .-மேலும், ஸ்வதந்திரனான பரமனுக்கு
ஆசரித பாதந்திரியமும் உண்டு. அஃது அவனுக்குச்சிறந்த செல்வமாம். ஆச்ரித பாரதந்
திரியமாவது – பரமனாகிய தான், தன்னை அன்புடன் ஆதரித்தோருக்கு, அவர் ஏவிற்றுச்
செய்யும் கையாளாயிருத்தலாம். கண்ணபிரான் பஞ்ச பாண்டவர்க்குத் தூதனாயும்
தேரோட்டியாயும் இருந்து இழிதொழில் செய்தனனன்றே ?
வஸிஷ்டர் மேற்கூறிய உண்மையையும்உணர்த்தி, இராமா ! நீ பரமனன்றோ? பரதன்
பக்தி பெற்றிருப்பாரில் சீரியனன்றோ? ஆதலின், அப்பரதன் திறத்தில் பரதந்திரனாய்,
அவன் ஏவிற்றுச் செய்தல் உனககுச் சிறந்தசெல்வமன்றோ? இப்போது, பரதன் வேண்டு
கின்றவாறு, நீ முடியை ஏற்றுக்கொள்ளாதிருப்பின், உனக்குரிய சீரிய செல்வத்தை இழந்தே விடுவாய்’ என்றும் கூறியிருககிறார்.-இவ்வாறு வஸிஷ்டர் இராமபிரானை நோக்கிக் கூறிய உண்மைக் கருத்துக்களைப் பின்வரும் அவ்வஸிஷ்டர் வார்த்தைகளில் நாம்  காணலாம் 🙁ப்ரஞாம் ததாது சாசார்ய: தஸ்மாத் ஸகுரு ருச்யதே II ஸோ S ஹம் தே பிதுராசார்ய: தவ சைவ பரம்தப மம த்வம் வசனம் குர்வந்நாதிவர்த்தேஸ் ஸதாம்கதிம்||
பரதஸ்ய வச : பர்வந்யாசமாநஸ்ய ராகவ ஆத்மாநம் நாதிவர்த்தேஸ் த்வம் ஸத்ய தர்ம
பராக்ரம |1)-இவ்வாறு கூறிய வஸிஷ்டரை நோக்கிஇராமபிரான் அருளிச் செய்த விடையாதோ?எனின், கூறுவோம்.
உலகத்தில், சுவரை வைத்துச் சித்திரம் எழுதுதல்” என்று ஒரு முறை உண்டு. இம்
முறையைத் திருவுள்ளத்தில் கொண்டு, இராமபிரான் பின் வருமாறு விடையை அருளிச்
செய்திருக்கிறான் :-சரீரம் அற்றிருப்பானுக்கு ஞானம் உணடாதற்கும், ஆசாரியன் ஞானத்தை உதவிபுரிதற்கும் இடம் இன்று. சரீரம், பெற்றிருப்பானுக்கே ஞானம் உண்டாதற்கும், ஆசாரியன் ஞானத்தை உதவி புரிதற்கும் இடம் உண்டு. இதனால், சரீரம், சித்திரம் எழுதுதற்குச் சுவர் போன்று,ஞானம் உண்டாதற்கு மிகவும் முக்கியம் எனத்தெரிகின்றதன்றோ?-இவ்வாறு மிகவும் முக்கியமாயுள்ள சரீரத்தை உண்டாக்கி, வளர்ப்பதற்கு, தந்தையாரும், தாயாரும் நோன்புநோற்று,பத்து மாஸம் சுமந்து, பெற்று,பெற்றபினபும், இவனறியாது இருக்கும் சைசவ நிலையில் இவன்
பொருட்டு,படாதனபட்டு இவ்வாறு உதவி புரிகின்றவராதலின், ஆசாரியனிலும் மிக
மேம்பட்டவராவர். ஆசாரியனிலும், தந்தைக்கு ஏற்றமுண்டு; அவ்வாசிரியன் வசனத்திலும், தந்தையார் வசனத்திற்கும் ஏற்றமுண்டு. உண்மை இவ்வாறு இருத்தலின்,
தந்தையார் வசனமே ஆதரிக்கத்தக்கதாம்.-இதுவே, இராமபிரான் விடையாகும்.’ (ஸ ஹிராஜா ஜநயிதா பிதா தசரதோ மம ! ஆஜ்ஞாதம் யந்மயா தஸ்ய ந தந்மித்யா பவிஷ்யதி) என்னும் இராமபிரான்வார்த்தை அனுஸந்திக்கத் தக்கது.
இதைச் சிறிது ஆராய்வோம் : ‘ராமா! ஆச்ரித பாரதந்திரியமாகிய உன் சீரிய செல்வத்தை நீ இழந்துவிடாது பரதன் விருப்பத்தை நிறைவேற்றுவாய் ” என்று வஸிஷ்டர் கூறியதற்கு இராமபிரான் ஒன்றும் விடையறுத்ததாய் இங்குத் தெரியவில்லை.
இராமபிரான் இயம்பியவாறு தாய்தந்தைகளுக்குச் சிறப்பு உண்டு” என்பது ஒருவாறு உண்மையேயாகும். ஆனாலும், “ஆசாரியனிலும் தாய் தந்தைகளுக்கு ஏற்றம்
உண்டு” என்று கொள்ளில், அவர்களிலும் ஆசாரியனுக்குச் சிறப்புக்கூறும் பல சாஸ்திரங்
களோடு முரண்பாடுஉண்டாமன்றே?-மேலும், தாயையும் தந்தையையும் விடச்
சொன்ன சாஸ்திரம் போன்று, ஆசாரியனையும் விடச் சொன்ன சாஸ்திரமும் உண்டோ?)
இல்லையன்றோ? எழுத்தறிவித்தவன் போன்றாரைச் சாஸ்திரம் விடச் சொன்னது உண்மை.
திரு அஷ்டாக்ஷரத்தை உபதேசம்செய்தவன் எம்பெருமானிலும் மி க மேம்பட்டவன்”
என்பது சாஸ்திர உண்மைக் கருத்தனறோ?-வஸிஷ்டர், எம்பெருமான் இராமனுக்குத் திரு
அஷ்டாக்ஷரத்தை உபதேசம் செய்த ஆசாரியரன்றோ? இவ்வுலகத்தில், தன் உபதேச மொழிகளினாலும், செயல்களினாலும் அந்த அந்த முறையை நிலைநிறுத்தத் திருவவதாரம் செய்தருளினவனும்,அங்ஙனமே நிலை நிறுத்தினவனுமான இராமபிரானும், “ஆசாரியன் வசனம் ஆதரிக்கத் தக்கதன்று” ”தந்தையாரின் வசனமே ஆதரிக்கத் தக்கது ‘ என்று அருளிச் செய்வானாயின்,அவ் எம்பெருமானை யார் மறுத்துக்கூற முடியும். ஸ்வதந்திரனை மறுத்துக்கூற இயலுமோ? அவன் திருவுள்ளம் அப்போதே திரு அயோத்திக்கு எழுந்தருளி முடி சூடுதற்கு இடம் தரவில்லை என்பதைத் தவிர, வேறு நோக்கு அவன் வார்த்தைக்கு உண்டோ? இல்லையன்றோ?
இக்கருத்து, இப்பகுதியிலேயே உள்ள பரதனின் வேறொரு வரலாற்றைக் காணுங்கால், உறுதிப்படுகின் றமையின், அவ்வரலாற்றையும் எடுத்துரைப்போம் இங்கு :பரதன் தன் வேண்டுகோளுக்கு இராமபிரான் சிறிதும் இரங்கக் காணாமையின்,
“அந்த இராமபிரான் ஆசிரமத்தின் வாசலில், (அவன் திரு அயோத்திக்கு முடிசூட எழுந்தரு
ளும் வரையில்) ஊணின்றி, தர்ப்பங்களைப் பரப்பி அவற்றின்மேல் கிடப்போம்” என்று
எண்ணி, ஸுமந்திரனைத் ‘தர்ப்பங்களைக் கொண்டு வா” என்று ஏவினன். இதைக்
கேட்ட ஸுமநதிரன்,பரதன் கூற்று இராமபிரான் திருவுள்ளத்திற்குப் பாங்காயிராததை
ஒருவாறு உணர்ந்து, அப்பரதன் ஏவினவாறு செய்யாது இருநதனன். அத்தருணம், பர
தனே, தான் எண்ணியவாறு தர்ப்பங்களைப் பரப்பி, அவற்றின்மேல் கிடக்க முயன்றனன்.
இதைக் கண்கூடாகக் கண்ட இராம பிரான், பரதனை நோக்கி அருளிச் செய்த வார்த்தை பின் வருமாறு காணத்தக்கது :
”அப்பா! நான் உடையவன் ; நீ என்உடைமைப் பொருள். இங்ஙனம் உடைமை யாயிருக்கின்ற உன்னை, உடையோனாகிய யான், என் விருப்பத்திற்கு ஏற்ப உபயோகம் கொள்ள எண்ணினேன். இவ்வாறு விரும்பி உபயோகம் கொள்ளுதல், எனக்குச் செய்யத் தகாத செயலாய் உன் மனத்தில்தோன்றியது போலும் . அங்ஙனம்தோன்றியது மாத்திரம் இன்றி, உடைமைப் பொருளாய் உள்ள நீ, உன் நிலைக்கு உரியதும், உடையோனான என்னைஅடக்கி நல் வழியில் நடக்கச் செய்வதுமாக நீ கருதிய இச்செயலை (இந்த ஆசிரமத் தின் வாசலில் தர்ப்பங்களைப் பரப்பிச் கிடத்தல் என்னும் செயலை ச் செய்து,இதனால், என்பால் உள்ளதும், என் நிலைக்கு ஏலாததாய் நீ எண்ணியிருப்பதுமான செய்யத் தகாத
செயலை (உன்னைஎன் விருப்பத்திற்கு ஏற்ப உபயோகம் கொள்ளுதல் என்னும் செயலைத் தவிர்க்கப் பார்க்கிறாய் போலும். என்செயல் எனக்கு ஏற்றது’ என்பதை யான் இயம்புதலும் வேண்டுமோ? உன் செயல்உனக்கு ஏற்றதாமோ? “ஏற்றதன்று” என்பதையும் கூறுவேன்.
ப்ராஹ்மணன் ஒருவன் தன் பொருளை”இன்ன தருணம் தரவேண்டும்” என்று தருணத்தைக் குறித்து, கடனாக ஒருவனுக்குக்கொடுக்கின்றான். அங்ஙனம் கடன் வாங்கியவன், கடன்காரனான ப்ராஹ்மணனுக்குக் கொடுக்கவேண்டிய பொருளைக் குறிப்பிட்ட
காலத்துக் கொடுக்காது தவறி இருப்பின், அக்கடன் காரன் வாங்கியவன் வீட்டுவாசலில்,
நீ இப்போது செய்ய விரும்பியது போன்று, தர்ப்பங்களைப் பரப்பிக் கிடத்தல் நன்றாம்.
இது ப்ராஹ்மண தருமம். த்திரியனான உனக்குரியதன்று. நீ வேறொரு வருணத்தின்
முறையைப் பின்பற்றியவனாதலின், உனக்குப் பாவம் உண்டாம். அப்பாவம் போமாறு,
“இனி, இவ்வாறான பாவச் செயலை நான் செய்வதில்லை” என்று சபதம் பண்ணி, தண்ணீரைத்தொட்டு, நீ என்னைத்தொடு.ஈதேஅப்பாவச் செயலுக்கு ஏற்ற பரிஹாரச் செயலாம்.(இக்கருத்துக்களைப் பின் குறிக்கப்பெறும் வார்த்தைகளில் காண்க 🙂
(சேஷ்யேபுரஸ்தாத் சாலாயா யாவந்ந ப்ரதியாஸ்யதி) என்பது பரதன் வார்த்தையாம்.
(கிம் மாம் பரத குர்வாணம் தாத ரத்யுப வே யஸ் | ப்ராஹ்மணோஹ்யேக பார்ச்வேந் நராந் ரோத்தும் இஹார் தி 1நதுமூர்த்தாபிஷிக்தா நாம் விதி: ப்ரத்யுப வேச நே I உத்திஷ்ட த்வம் மஹாபாஹோ ! மாம்சஸ்ப்ருச ததோதகம்)(இவ்வாறே பரதனும் பரிஹாரச் செயலைச்
செய்ததாய்ச் சரித்திரம்]-இங்கு உண்மை பின்வருமாறு உணரத் தக்கதாம். இராமபிரான் சக்ரவர்த்தித் திருமகனாக இருக்கின்றமையின், க்ஷத்தி ரியனே ஆவான்.
மேலும், இப்பரம புருஷனுடைய திருவடிநிலைகள் திரு அபிஷேகம் செய்யப் பெற்றிருக்
கின்றமையின், ” இப்பரம புருஷன் மூர்த்தாபிஷிக்த சத்திரியன் ” என்று கூறுதற்குக் தடை
ஒன்றும் இராது அன்றோ?அன்றியும், இந்த இராமபிரான், வானர வெள்ளங்களுடன் கடற்கரை சேர்ந்து, கொந் தளிக்கும் அக்கடலைக் கண்டிருக்கும் காலம். அக்காலத்து, அவ்வாறான கடலைக் கடந்து செல்லத் தக்க உபாயம் யாதோ? என ஆராய்ந்து காணுங்கால், அப்பரம புருஷன்”இக்கடலைக் கடந்து அக்கரை செல்லுதற்கு, கடலரசனை நோக்கி அவன் அருள் புரியுமாறு இக்கடற்கரையிலே தர்ப்பங்களைப் பரப்பி அவற்றின் மேலே கிடத்தல்,’ அணைகட்டுதல், இக்கடலைத் தண்ணீர் சிறிதும் இன்றி வற்றச் செய்தல், எனப் பல உபாயங்கள் உண்டு. அவற்றுள், கடற்கரையிலே தர்ப்பங்களைப் பரப்பிக் கிடத்தலே சிறந்த உபாயமாம்” என்று அருளிச் செய்திருக்கின் றனன்.
(தபஸா ஸேதுபந்தேந ஸாகரோச் சோஷணேந வா ஸர்வதா ஸுஸமர்த்தோஸ்மி ஸாகரஸ்
யாஸ்ய லங்கநே) என்னும் அவ் இராமபிரான் வார்த்தை இங்குக்காணத் தக்கது.
இவ்விடத்து, ‘தபஸா’ என்னும் சொல் நோக்கத் தக்கது. இன்னமும் தர்மாத்மா’ என்று கொண்டாடப் பெறும் விபீஷணனும்,-” இராமபிரான் இவ்வாறு கடலரசனை நோக் கிக்கிடத்தலே நன்றாம்” என்று கூறியிருக்கின்றனன்.-இராமபிரானும், கடலரசனைக் குறித்து, தர்ப்பசயனத்திலே கிடந்தனன் என்பது சரித்திர உண்மை. அபிஷேகமில்லாத பரதனை நோக்கி, ” இது ப்ராஹ்மண தருமம் ; அபிஷே கம் செய்யப்பட்டுள்ள க்ஷத்திரியன் இவ்வாறு செய்தல் தீதாம்” என்று அருளிச் செய்த எம்பெருமான்,மேற்கூறியவாறு அபிஷேகம் செய்து கொண்டக்ஷத்திரியனாகிய தான் இவ் வாறு செய்திருத்தல் முறையாமோ? இன்னமும், பரதன், இவ்விராமபிரானுக்குப் பின் பிறந்த தம்பியாதலின், அபிஷேகத்திற்குத் தகுதியற்றவனாம். கேகயதேசத்தினின்றும் திரு அயோத்திக்கு வந்து,
தன் தாயின் வீட்டிலேதன் தந்தையார் சக்ரவர்த்தி உயிர் துறந்ததைக் கேட்டு, பூமியில்
விழுந்து புரண்டு அழும் போது, தன் தாய் கைகேயி ‘ராஐந்” என்று அழைக்க,அவ்வாறு அழைத்ததையே மிகவும் பொறாது இருந்தவனன்றோ?
மேலும், குலகுருவும், தன் குருவான இராம பிரானுக்கும் குருவுமான வஸிஷ்டர் “இவ்
விராச்சியத்தை ஏற்று முடி சூடிக்கொள்’ என்று கூறுங்கால், அவரையும் மிகவும் பூசிக் கத் தக்கவர் என்று பாராது பலவாறாக வெறுத்துப் பேசி, யானும் இராச்சியமும்
இராமபிரானுடைய உடைமைப் பொருளாய் உண்மையில் இருக்க, யான் இவ் இராய்ச்சி
யத்தை ஏற்றுக் கொள்வது எவ்வாறு? என்று பேரோலக்கத்தில் கதறிக் கூறிய மஹான்
அன்றோ?-இன்னும், மேற்கூறியவாறு கூறியது மாத்திரமேயன்றி, ஆர்த்தியே வடிவெடுத்து வந்தது போன்றுள்ள அப்பரதன், தாய்மார், மந்திரிமார், வ ஷ்டர், ஜாபாலி முதலிய பெரியோர், யானைகள், குதிரைகள், ஏன் அயோத்தியிலுள்ளார் அனைவரையும் ஒன்று
சேர்த்து, அழைத்துக் கொண்டும், மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி திசை நோக்கித் தொழுது கொண்டும், சித்திரகூடம் சென்றுசேர்ந்து,இராமன் திருவடித் தாமரைகளிலே
வேரற்ற மரம் போன்று விழுந்து கிடந்து,தன் தலையாலே இரந்து, வேண்டிக் கொண்ட
வனன்றோ?-இப்பரதன் உண்மை நிலை இதுவாயிருக்க. இவனுக்குப் பாவந்தான் உண்டோ? இவன் க்ஷத்திரியனானாலும்,மூர்த்தாபிஷிக் க்ஷத்திரியன் என்று கூறுதற்கு இடம் தான் உண்டோ? பாவத்திற்கே இடமில்லாத போது, பரம புருஷன் பரிஹாரத்தைச் செய்யக் கட்டளை யிட்டதுதான் பொருந்துமோ?-ஆனால், பரதன் இராமபிரான் கட்டளையிட்டவாறு பரிஹாரத்தைச் செய்திருக்கின்றனனே? என்று சிலர் வினாவக் கூடும். இராமபிரான் வனம் எழுந்தருளியதற்குத் தன் பாவமே காரணம்” என்று கூறினவனும், உண்மை யில் பாவம் சிறிதுமின்றி இருக்குமவனான பரதன், தன் நிலைக்கு ஏற்ப பரிஹாரத்தைச் செய்தனனேயன்றி, பாவம் இருந்து பரிஹாரம் செய்தான் என்பது உண்மையாமோ
இதுவே மேற்கூறிய வினாவிற்கு விடையாம்.-தன் நிலைமைக்கு ஏற்ப நடந்து கொள்ளும்
பரதன் ஸ்வாமியான இராமபிரான் முன், அவ்விராமன் திருவுள்ளத்திற்குப் பாங்காயிராத,”தர்ப்பங்களைப் பரப்பிக் கிடத்தல்” என்னும் செயலைச் செய்ய முயன்றது தான் முறையாமோ? என்று சிலர்க்கு இங்கு ஐயம் எழக்கூடும். இவ் ஐயத்திற்குப் பரிஹாரத்
தைக் கூறுவோம் :-அப்பரதன், எம்பெருமான் திருவுள்ளத்தைப் பின் சென்று நடக்கும் தன் நிலைக்குச் சேராத செயலை ( தர்ப்பங்களைப் பரப்பி அவற்றில் கிடத்தலைச் செய்ய முயன்றதும் இராமன்பாலுள்ள பக்திப் பெருமையினா லல்லது, வேறு காரணத்தினால் ஏற்பட்ட தாமோ? ஆகாதன்றோ?-நம்மாழ்வார், திருமங்கை மன்னன் போல்வார், எம்பெருமானை அடையப்பெறாத போது, தரித்திருக்க மாட்டாமையின்,
‘அப்பரம புருஷனை முறை தவறியாவது பெறவேணும்’ என்று எண்ணி, மடலெடுத்தல்,தூது விடுதல் முதலிய செயல்களைத் தம் நிலைக்குச் சேராதிருந்தும், செய்யக் கருதிச்
செய்திருக்கிறார்கள். ”இவ்வாறு இவர்கள் கருதிச் செய்தது எங்ஙனம் பக்திப் பெருமை
யினாலேயோ, அங்ஙனமே பரதன் செயலும் பக்திப் பெருமையினாலேயே” என்பதைநாம்
அறியலாகும்.-இதுகாறும் கூறியவாற்றால்,முடிந்த
பொருள் யாதோ? எனின், இராமபிரான் திருவுள்ளத்திற்குப் பரதன் செயல் பாங்கா
யில்லை” என்பதே தேறிய முடிந்தபொருளாம்.-ஆனால், மறுபடியும் சிலர், “மாதரம்ரக்ஷ
கைகேயீம்” ”ஆ ஞாதம் யந்மயாதஸ்ய”உத்திஷ்டத்வம்” என்னும் முன்னம் கூறிய
வாக்கியங்களில், இராமபிரான், ‘பரதா!கைகேயியை வெறுப்பது கூடாது’ என்றும்,
‘ஆசாரியனிலும் தந்தையாருக்கு ஏற்றம் உண்டு: ஆதலின் அவர் வசனமே தனக்கு ஆதரிக்கத் தக்கது’ என்றும், ‘பரதா ! நீ பாவம் செய்தவன் ஆதலின், பரிஹாரத்தைச் செய்’
என்றும் வெளிப்படையாக அருளிச் செய்திருக் கின்றமையின்,அங்ஙனம் வெளிப்படையாகக் கூறியவற்றைக் காரணமாய்க் கொள்ளாது, அவற்றைக் கழித்துப் பேசி, இராமபிரான் திருவுள்ளத்திற்குப் பாங்காயிராமையையே பரதன் பயன் பெறாததற்குக் காரணமாய்க் கூறுதல் ஏற்கத் தக்கதாமோ? என்று கருதக் கூடும்.
“வெளிப்படைப் பொருளை விட்டிட்டு, உட்கருத்தையே எடுத்துக்கொள்ளுதல் சிறந்த
முறையாம்” என்பதை ஓர் எடுத்துக் காட்டினால் விளக்கிக் காட்டுவோம் :
‘இராமபிரான், ஸுக்ரீவனுடன் தோழமைகொண்டவன்; ஸுக்ரீவன் விருமபியவாறு வாலியைக் கொன்று, கிஷ்கிந்தா ராச்சியத்தையும், ருமை என்னும் ஸுக்ரீவன்
மனைவியையும் அந்த ஸுக்ரீவன் பெற்று, முன்புபோல் வாழும்படி உதவி புரிந்தவன்;
அங்ஙனம் உதவி புரியும் போது, ஸுக்ரீவன் நம்புமாறு மழுவேந்திக் கொடுத்துக் காரியம்
செய்தவன்” என்று நம் ஆசாரியர்கள் பரம புருஷனுடைய திருக்குணங்களைப் புகழ்ந்து அருளிச் செய்வதுண்டு” அங்ஙனம் வாலியை வதம் செய்யும் போது, அவ்வாலிக்கும் ஸு க்ரீ
வனுக்கும் நடந்த போர் இரண்டு. முதலில் நடந்த போரில், இராமபிரான் வாலியை
அடித்துக் கொல்லாது விட்டிருக்கிறான். அப் போரில், ஸுக்ரீவன் தன்னாலாந்தனையும்
போர் புரிந்தும், இராமபிரான் கூறியபடி அம்பை எய்து வாலியைக் கொல்லாது இருந்தமையின், அடி தாங்கமுடியாமல் முதுகு காட்டி ஓடிவிட்டான் என்பது வரலாறு – (ஈது
இங்கு முதலில் அறியத்தக்கது-இவ்வாறுஓடிவந்த ஸுக்ரீவன், இராமா! நீ ஏன்? கூறியவாறு வாலியை அடிக்கவில்லை என்று வினவினான். இவ்வினாவிற்கு இராமபிரான் விடை யளிக்கும் போது கூறிய வார்த்தை-(ஸுக்ரீவ ச்ரூபதாம் தாத க்ரோதச்ச வ்யபநீயதாம்
காரணம் யேந பாணோயம் நமயா ஸ விஸர்ஜ்ஜித:-அலங்காரேண வேஷேண ப்ரமாணேம்
கதே நச த்வம் ச ஸுக்ரீவ வாலீச ஸத்ருசெள ஸ்த: பரஸ்பரம்||| ஸ்வரேண வர்சஸாசைவ ப்ரேக்ஷித ந விக்ரமேண ச வாக்யைச்ச யக்திம் ச வாநர வாம் நோபலக்ஷயே ததோரஹம் ரூப ஸாத்ருச்யாத் மோஹிதோ வாநரோத்தம நோத்ஸ்ருஜாமி மஹா வேகம் சரம்-என்பதாம்

இவற்றின் வெளிப்படையான பொருள்:
ஸுக்ரீவா ! ஒப்பனையிலும், வடிவ அமைப்பிலும். உயரத்திலும், நடையிலும்,குரலிலும், தேஜஸ்ஸிலும், பார்வையிலும், பராக்ரமத்தி லும்,வாக்கியங்களிலும் நீயும் வாலியும் ஒருவரை ஒருவர் ஒத்திருக்கிறீர்களாகையினால், உங்கள் இருவருள், ‘இன்னவன் வாலி ; இன்னவன் ஸுக்ரீவன்’ என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்த ஸந்தேஹத்தில் நான் பாணத்தை விட்டால், அது ஒருகால் உன்மேல் பட்டு, ஆபத்து நேருமோ என்று அஞ்சி, நான் வாளா இருந்து விட்டேன்” என்பதாம்.
இவ்வெளிப்படைப் பொருளை இங்குக் கொள்ளுதற்குப் பொருத்தம் உண்டா? என்பதுதான் நாம் ஆழ்ந்து கவனிக்கத்தக்க தாம். பேரறிவாளனான இராமபிரான் ஸு க்ரீ வனுக்கும் வாலிக்கும் உள்ள வேற்றுமையை உண்மையில் உணர இயலாதோ? உணர வில்லையோ? அல்பம் அறிவுள்ளவன் கூட ‘அடி படுபவன் ஸுக்ரீவன்; அடிப்பவன் வாலி’ என்பதை எளிதில் அறியக்கூடியதை, என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை’ என்று இராம பிரான் இயம்புகின்றனனே,இது பொருந் துமோ? இதில், நம் ஆசாரியர்களின் திருவுள்ளக் கருத்தைக் கூறுவோம். இங்கு, முதலில், பின் கூறப்பெறும் உண்மைஉணரத்தக்கதாம்.
பரமபுருஷன், சேதனனை நோக்கி, நீ,என்னி டத்தில் உனக்குள்ள அன்பை என் அன்பர்
பால் என்றும் வைத்திரு; அங்ஙனம் என் அன்பர் பால் அன்பைச் செய்யாது இருப்பின்,
அவர் திறத்தில் அபராதத்தைச் செய்தவனா வாய்; அதனால், உனக்கு மாத்திரம் அழிவு உண்டாம் என்று எண்ணாதே,உன்னோடு தொடர்புற்ற இப்பிரபஞ்சமும் அழிந்துவிடும்’ என்று அருளிச் செய்திருக்கின்றான்- -(யா ப்ரீதி: மயி ஸம்வருத்தா மத்பக்தேஷு ஸதாஸ்துதே 1 அவமானகரியா தேஷாம் ஸம்ஹரத் யகிலம் ஜகத் !! )என்னும் பரமபுருஷன் திருவாக்கு அனுபவிக்கத் தக்கது. இங்கு
இதனால், நாம் ஓர் உண்மையை உணர லாம்: ஒரு சேதனன் எம்பெருமானை முறை வழுவாது பற்றியிருப்பினும், தான் கோரின் பயனைப் பெறும்போது, அவன் அடியார் திறத்து அபராதம் சிறிதும் இல்லாது இருத்தல் இன்றியமையாததாகும்.இவ்வாறு அப ராதம் பெற்றிருப்பின், பயனைப் பெற இயலாது. சரணாகதி தருமத்தை நாம் உணரும் போது, ”பரமனடியார் திறத்து அபராதம் சிறிதும் இன்றியிருத்தல், ஒரு முறை என்ப தையும் உணரல் வேண்டும்.-இவ்வுண்மைக் கருத்தை மனத்தில் கொண்டு,ஸு க்ரீவன் வரலாற்றை ஆராய்தல் வேண்டும்! ஸுக்ரீவன் இராமபிரானி டத்து மிக்க அன்புள்ளவன் என்பது மெய்யே. ஆயினும், இலக்குமணனிடம் எங்ஙனம் அன்பு காட்டுதல் வேண்டுமோ, அங்ஙனம் காட்டினா னில்லை : இராமபிரானும் ஸுக்ரீவனும் அக்னி ஸாக்ஷியாய்த் தோழமை கொள்ளுகிறார்கள். அவ்வாறு தோழமை கொண்டபின், ஸுக்ரி வன். இலையும் பூவும் நிரம்பியிருக்கும் ஒரு மரத்தின் கிளையை ஒடித்து, பூமியின் மேலே போட்டு, அதின் மேலே இராமபிரானுடன் உட்கார்ந்து கொண்டு,அப்பெருமானிடம் தன் குறை ைப் போக்குமாறு வேண்டிக் கொள்கிறான். இவ்வாறு, ஸுக்ரீவனும் இராம பிரானும் இலையும் பூவும் நிரம்பியிருக்கும் கிளையில் பல ஸமயங்களில் உட்கார்ந்து ஒருவ ருடன் ஒருவர் பேசிக் கொண்டிருந்ததாய்ச் சரிதம் கூறப் பெற்றிருக்கிறது. ஆனால், ஒரு ஸ்மயமாவது, இலக்குமணனை ஸுக்ரீவன் இவ்வாறு ஆஸனம் கொடுத்து உபசரித்ததாய் இராமாயணத்தில் கூறப் பெற்றிலது.-(தத : ஸ ப ணப ளாம் சித்வா சாகாம்
ஸுபுஷ்பிதாம் ஸாலஸ்யாஸ்தீர்ய ஸுக்ரீவ: நிஷஸாத ஸராகவ: II லக்ஷ்மணாயாத ஸம்ஹ்ருஷ்ட:ஹநுமான் பலவகாஷப: சாகாம் சந்தனவர்க்ஷஸ்ய ததெள பரம்
புஷ்பிதாம் II)-என்பனகாணத் தக்கன ) ஸுக்ரீவனுடைய இச்செயலைக் காணுங்கால், இலக்குமணனிடம் அன்பில்லை; அபராதம் உண்டு’ என்பது நன்கு விளங்குகின்ற தன்றோ? இச்செயலை இராமபிரான் கண்கூடாகக் கண்டவனாதலின், முதலில் ஸுக்ரீவனும் வாலியும் போர் புரியுங்கால், வாலியை அடிக்க அவன் திருவுள்ளம் இசையாது இருந்தது-பின்பும், ஸுக்ரீவன் தன் செயலை உணர்ந்து, இலக்குமணனிடம் எங்ஙனம் அன்புகாட்டுதல் வேண்டுமோ, அங்ஙனம் காட்டின தாய்க்ாணப் பெற்றிலது . ஆனாலும், தன்னைப் பற்றினாரை அடியாருடைய அபிமானத்திற்குப் பாத்திரமாக்கிக் காரியம் செய்வது என்பது பரமபுருஷனுடைய ஓர் உயரிய முறையாம். இம்முறையைத் திருவுள்ளம் பற்றி, ஸுக்ரீவனுடைய கழுத்தில் இலக்குமணன் திருக்கைகளால் அடையாளமாய்
க புஷ்பி மாலையைப் போடச் செய்யும் முகத்தால், அந்தப் பாகவதோத்தமனுடைய அன்
புக்கு இலக்காக்கி, வாலியை இரண்டாம் போரில் கொன்று, ஸுக்ரீவனுக்கு, அவன்
கோரின பயனை அளித்திருக்கின்றான், இராமபிரான்.-கருதாபி ஞா நசிஹ்நஸ் த்வம் அநயா கஜஸாஹவயா லஷ்மணே ந ஸமுத்பாட்ய யைஷா கண்டே க்ருதா தவ Il
என்னும் வார்த்தை அனுபவிக்கத் தக்கது.

இதுகாறும் கூறிய ஸுக்ரீவன் வரலாற்றில், ஆழ்ந்து, ஆராய்ந்து காணும் போது,
“வெளிப்படையான பொருளில் உண்மை நோக்கு இன்று; உள்ளுரை பொருளிலேயே
உத்தமனுடைய உக்திக்கு நோக்கு உண்டு என்று எங்ஙனம் அறிகின்றோமோ, அங்ஙன மே, பரத சரணாகதிப் பகுதியில் அமைந்துள்ள புருஷோத்தமனுடைய,“மாதரம் ர கை
கேயீம்” ஆஞாதம் யந்மயா தஸ்ய” ” உத் திஷ்ட த்வம்” என்னும் உக்திகளுக்கும்,
”வெளிப்படையான பொருளில் நோக்கு இன்று; உள்ளுறை பொருளிலேயே நோக்கு “
என்பதை நாம் அறிதல் அவசியமாகும்.
ஆகவே, பரதன் இராமபிரானை முறை யுடன் பற்றியிருந்தும் அப்பற்றுதல், அந்த
இராமபிரான் திருவுள்ளத்திற்குப் பாங்காயிராமையின், பயனற்றதாம் என்பதைக்
கண்டோம். இப்பொருளை தேசிகன் திருவாக் கிலும் அனுபவிப்போம்.-(ராமே ராஜ்யம் பிதுரபிமதம் ஸம்மதம்ச ப்ரஜாநாம் மாதா வவ்ரே ததிஹ பரதே ஸத்யவாதி ததௌச 1 சிந்தாதீத: ஸம நி ததா பாதுகாகர்யாபிஷேக : துர்விஜ் ஞா நஸ் வஹ்ருதய மஹோ தைவமத்ர ரமாணம்)-என்பதே அத்திருவாக்காம்.
இத்திருவாக்கின் கருத்து : “தசரத சக்ரவர்த்தி, இராமபிரானுக்கு முடி சூட்டி,
இராச்சிய பாரத்தை அப்பரமபுருஷனிடத்தில் வைக்க விரும்பினான். அச்சகரவர்த்தி
கொள்கையை மக்கள் அனைவரும் ஒரு முகமாக விரும்பினார்கள். அச்சக்ரவர்த்தி மஹிஷியான கைகேயி, பரதனுக்கு முடி சூட்டி இராச்சிய பாரத்தை அவனிடம் வைக்க வரம்
கேட்டாள். ஸத்திய வாதியான சக்கரவர்த்தி யும் அங்ஙனம் அளித்தான். ஆனால், சக்ர
வர்த்தி கோரியவாறு இராமபிரானுக்கும்,கைகேயி கோரியவாறு பரதனுக்கும் திரு அபி
ஷேகம் நடைபெறாது . ஒருவரும் ஒரு காலும் எண்ணாதிருக்க, திருவடி நிலைகளுக்குத் திருவபிஷேகம் நன்கு நடந்தது. இதற்குக் காரணம் எம்பெருமானுடைய ஸங்கல்பமேயாம்” என்பதாம்.
இத்திருவாக்கில், இராமபிரான் திரு அயோத்திக்கு எழுந்தருளி முடி சூட வேண்டும்’ என்னும் பரதன் விருப்பம் சப்தத்தில் தெளிவாய்க்கூறப்பெறாதது ஒருவாறு உண்மையேயானாலும், கூறப் பெற்றிருக்கிறதாகவே கொள்ளுதல் பொருத்தமுடைத்தானதாம். சக்ரவர்த்திக்கும் மக்களுக்கும்) இராமபிரானுடைய திருவபிஷேகம் எங்ஙனம் இஷ்டமோ ; அங்ஙனமே அதுதானே பரதனுக்கும் இஷ்டம் அது தைவமாகிய இராமபிரானுக்குத் திருவுள்ளமில்லாமையால் உண்டாகவில்லை.
இத்திருவாக்கையும், இதின் கருத்தையும்அனுபவிப்போர்க்கு, இராமபிரான் திரு
வுள்ளமில்லை. அதனால், பரதன் கோரியதுநிறைவேறவில்லை’ என்பது நனகு விளங்கு
மன்றோ?
இதுவரையில், கூறிய வற்றால் “எம்பெருமான் சிறந்த தருமம்” என்பதும், “அவ்வெம்
பெருமான் சேதனனுடைய வேண்டுதலையும். இச்சேதனன் தன்னைப் பற்றும்போது.பெரிய
பிராட்டியாரை முன்னிடு தலையும் வேண்டு கின்றனன்” என்பதும், இச்சேதனன் அவ்
எம்பெருமானைப் பற்றும்போது,அப்பற்றுதல் அப்பெருமான் திருவுள்ளத்திற்குப் பாங்கா
யிருக்க வேண்டும்” என்பதும் இராமாயணத்திலேயே ஒருவாறு அறியப் பெற்றுள்ளன
அல்லவா? இனி, இவ்வாறான தருமம் இராமாயணத்தில் நிலை நிறுத்தப் பெற்றிருக்கும் இடத்தைக் காண்போம் :
ஆனால் “தருமம் இருவகைப்படும். இச் சேதனன் முயன்று செய்யும் போது, உண்டா
வது ஒன்று. எப்போதும் உள்ளது மற்றொன்று.எம்பெருமான் என்றும் உள்ளதொரு மிகச்
சிறந்த தருமம்” என்று முன்னமேயே கூறி யிருந்தோம்.

இக்கருத்தை மனத்தில் கொண்டு நோக்குவார்க்கு, “சேதனன் முயன்று செய்யும்
போது, உண்டாகும் தருமம், நாள் செல்லசெல்ல சிறிது அழிவு பெறலாமாதலின்,
அத்தருமத்தை நிலை நிறுத்துதல் என்பதற்குப்பொருள்உண்டு; என்றும் எங்கும் உள்ள எம்
பெருமானாகிய தருமத்தை எம்பெருமான் திருவவதாரம் செய்து, நிலை நிறுத்துவதாவது
என்?” என்னும் ஐயம் எழக்கூடும். இவ் ஐயத்திற்கு ஸமாதானத்தை இராமாயணத்தில்
விபீஷண சரணாகதிப் பகுதியில் நன்கு காணலாம். ஆதலின், விபீஷண சரணாகதிப் பகுதி
யில் அமைந்துள்ள வரலாற்றையும், ஸாரப் பொருள்களையும் மிக விரிவின்றி, அனுபவிப்
போம்.
இராமபிரான், கடற்கரையில் வானரவெள்ளங்களுடனும், ஸுக்ரீவன் இலக்கு
மணன் இவர்களுடனும் எழுந்தருளியிருக்கும் தருணம். அத்தருணம், இலங்கையில், இரா
வணன், தனக்கு நன்மையைக் கூறின விபீஷணனைப் பலவாறாக நிந்திக்க, அந்நிந்தனையைப்  பொறாது, அவ்விபீஷணன், கதையைக் கையில் உடையவனாய் நான்கு இராக்கதருடன் ஆகாசத்திலே கிளம்பி, வடகரையை அடைந்து, ஆகாசத்திலேயே தஙகியிருக்க, அதைக் கண்ட எல்லா வானரர்களும், இராவணன் தம்பியாயிருத்தலாலும், இலங்கையின் நின்றும் வந்திருத்தலாலும், இவ்விராக்கதரால், எம்பெருமானுக்கு என்ன தீங்குநேரிடுமோ?’ என்று தம் அன்பு நிலைக்கு ஏற்பஅஞ்சி,அவ்விராக்கதரை அழிக்கக் கருதி, தம் கைகளில் மரங்களையும் மலைச்சிகரங்களையும் வைத்துத் தயாராயிருக்க, அவ்வானரர்களின் அந்நிலையைக் கண்கூடாகக் கண்டிருந்தும், அவர்களின் இராமபக்தியைப் புகழ்ந்து, அவ் வானரர்கள் முன்னாக இராமபிரானைப் பற்றுகையே முறையாம்’ என அறுதியிட்டு, அங்ஙனம் அறுதியிட்டவாறே, அவ்வானரர்களை வெகு மதிப்புடன் முன்னிட்டு முறை வழுவாது இராமபிரானைப் பற்றியிருக்கின்றான், விபீஷணன்” என்னும் வரலாறு முதலில் இங்கு அறியத்தக்கதாம்.-இவ்வாறு இராமபிரானை விபீஷணன் பற்றுங்கால், அவ்விபீஷணன் கூறிய வார்த்தைகளாவன :

1. ராவணோ நாம் துர்வ்ருத்த : ராக்ஷ ோராக்ஷஸேச்வர : 1 தஸ்யாஹம் அநுஜோ ப்ராதா விபீஷணஇதி சருத : 11
2. தேந ஸீதா ஜனஸ்தாநாத் ஹ்ருதா ஹத்வா ஜடாயுஷம் ருத்தா ச விவசா தீநா ராக்ஷ பிஸ்
ஸூரக்ஷிதா!
3. தமஹம் ஹேதுபி: வாக்யை: விவிதைச்ச ந்யதர்சயம் ஸாது நிர்யாத்யதாம் ஸீதா ராமாயேதி.
4. ஸச ந ப்ரதிஜக்ராஹ உசயமாநம் ஹிதம் ராவண : கால சோதித : 1
வாக்யம் விபரீத இவெளஷதம்பு
5. ஸோஹம் பரு தஸ் தேந தாஸவச் சாவமாநித : த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம்
சரணம் கத: 11
6. ஸர்வாபாலோக சரண்யாய ராகவாய மஹாத்மநநிவேதயத மாம் ப்ரம் விபீஷணம் உபஸ்திதம் 1 )

இவற்றின் கருத்து : (I) (”எம்பெருமானைப் பற்றுவோன், தன் குற்றங்களைக் கூசாது கூறிப்பற்றக் கடவன்’ என்னும் முறையைக் கைக்கொண்ட) விபீஷணன், “இராமபிரானுக்கே உரியவனாய் இருத்தல் இன்றி, எல்லா உலகங்களையும் கதறிக் கூப்பிடுமாறு செய்பவனும், இங்ஙனம் கொடியோன்’ என ப்ரஸித்தி பெற்றிருப்பவனும் கெட்ட நடத்தை உடையவனும்
இராக்கதனும், இராக்கதர் அனைவர்க்கும் ஈச்வரனுமான இராவணனுக்கே உரியவனாயிருந்து, இதுவரையில் தொண்டு செய்து போந்தவன்; அவன் எக் குடலில் பத்து மாஸம் இருந்து பிறந்தனனோ, அக்குடலில் பத்து மாஸம் இருந்து பிறந்தவன்; எல்லோரையும் நடுங்கச் செய்பவனாயிருத்தலின் ‘விபீஷணன்’ என்று எங்கும் ப்ரஸித்தி பெற்றிருப்பவன்,-நான்” (சுருங்கச் சொல்லின், இராவணனுக்கு அவனுக்குரிய குற்றங்கள் மாத்திரம் உண்டு; எனக்கு எனக்குரிய குற்றங்களும், அவன் தொடர்பினாலாகிய குற்றங்களும் உண்டு ஆதலின்,என் குற்றம் அதிகம்) என்கிறான்.

(2) மேலும் அவ்விபீஷணன் கூறியதாவது: ”அவ் இராவணன், (திரு அயோத்தியில் இருப்பு சிறை என்னலாம் படி, அனுபவத்திற்கு மிகவும் பாங்கான) ஜனஸ்தானத்தினின்றும், உயிரையும் உடலையும் பிரிப்பது போன்று, ஸீதா பிராட்டியாரையும் இராமபிரானையும் பிரித்து, அவ்இராமபிரானுக்கு உயிரான ஜடாயுவையும் கொன்று, தன் அசோகவனிகையில், அந்த ஸீதா பிராட்டியாரைக் கொணர்ந்து வைத்து, எங்கும் போகவொட்டாது,-அரக்கிமாரைக் காவலாய் வைத்தவன் அங்ஙனம் ஸ்தா பிராட்டியார் திறத்திலும் ஜடாயு பக்கலிலும், அளவிறந்து அபராதத்தைச் செய்தவனாகிய இராவணன் பின் பிறந்தவன், நான்” என்பதாம்.
(3) அன்றியும், அவ்விபீஷணன் செப்பியதாவது : “இர வணா! நீ. இராமபிரானுக்கே உரியவராகிய அந்த ஸ்தா பிராட்டியாரை, அவ் எம்பெருமானிடம் திரும்பவும் கொணர்ந்து போய்ச் சேர்த்துவிடு’ என்றும், ”நான் கூறியவாறு செய்யாவிடின், நீ அழிந்து விடுவாய்” என்றும்,அவனுக்கு அடிக்கடி அறிவித்தேன்'” என்பதாம்.-

(4) இன்னமும் “நோய்வாய்ப் பட்டு, சாகக் கிடக்கிறான் ஒருவன், மருந்தை எங்ஙனம் எடுத்துக் கொள்ள மாட்டானோ,அங்னமே, யமனால் தூண்டப்பட்ட அவ் இராவணன், நான்கூறிய ஹித வசனத்தைச் செவிதாழ்த்தும் கேட்கவில்லை’ என்றும் கூறினான்,-விபீஷணன்.
(5) இன்னும்,விபீஷணன் பகர்ந்ததாவது : “என் ஹித வசனத்தைச் செவி தாழ்த்துக் கேட்கவில்லை ” என்பது மாத்திரமே அன்று. ஹித வசனத்தைக் கூறியதே காரணமாக அவனும். அவனைச் சேர்ந்தாரும் என்னை அவமதித்தனர். ஆதலின், என் மனைவிமாரையும், புத்திரர்களையும், விட்டிட்டுஇராமபிரானைத் தஞ்சமாகப் பற்றினேன், நான்” என்பதாம்.
(6) இவ்வாறு கூறி, பின்னும் அவ்விபீஷணன் வேண்டிக்கொண்டதாவது :
‘வானரர்களே !எம்பெருமான் எந்தச் சேதனனைக் காக்கத் திருவுள்ளம் பற்றுகின்றனனோ அந்தச் சேதனனே புண்ணியனாவான்.அவ் எம்பெருமானாகிய இராமபிரான், இவ்விபீஷணனைக் காக்கத் திருவுள்ளம் பற்றுவானாயின், இவனுக்கு நன்மை உண்டாம். அந்நன்மைநான் பெற்றேனாக வேண்டும்.-அங்ஙனம் நன்மை பெற்றேனாதற்குச்
செய்ய வேண்டுவது யாதோ? எனின், மிக்க ஆர்த்தியுடன் இலங்கையினின்றும் இங்கு வந்
திருக்கும் இவ்விபீஷணனை இராமபிரானுக்கு அறிவித்தல் வேண்டும். நீங்கள் என் வரவை அறிவிக்குங்கால் ” இராமபிரானுக்கு இவ்விபீஷணன் தொண்டுடனாதல் நன்றாம்” என்னும் எனக்குள்ள இந்த ருசி மாறுவதற்கு முன் வெகு சீக்கிரமாக அறி வித்தல் பயனுற்றதாகும். என்னை அவ்இராமபிரான், திருவுள்ளம் உவந்து ஏற்றுப் பணி கொள்ளுமாறு செய்தல் உங்களுக்குப் பணியாம். அப்பிரான் ஏற்றுப்பணி கொண்டு உவத்தல், அவன் தனக்கு உற்ற தாகும். நீங்கள் இச்சேதனனைப் பரமன் உவந்து ஏற்குமாறு செய்யுமவர்களா யிருக்கின்றமை யின்,அங்ஙனம் செய்யாதபோது, உங்கள் நிலை உங்களைவிட்டு அகன்றொழிந்து விடுமன்றோ? ஆத ன், உங்களுக்கு அழிவுஉண்டாம்.
அப்பெருமான், நீங்கள் என் வரவை அறிவித்த பின்பும், அவன் கூவுதல் வருதல் செய்யாதும், என்னைத்திருவுள்ளம் உவந்து ஏற்று, அடிமை கொள்ளாதும் இருப்பின்,அப்பரமன்
தன் நிலையினின்றும் தவறியவனாவானன்றோ ?
எம்பெருமானிடம் பேரன்பு பெற்றிருக்கும் உங்களையும், அவ் எம்பெருமானையும் உவப்பித்தல், தொண்டனான என் நிலைக்கு ஏற்றதும், இன்றியமையாததுமாம். அங்ஙனம்
உவப்பியாது யான் இருப்பின், அஃது என்நிலைக்கு அழிவை விளைக்குமன்றோ ? உவப்பியாது இருத்தலே அழிவை விளைக்கும் என்னும் போது, உங்களையும், அவ் எம்பெருமானையும் உங்களுக்கும் அவனுக்கும் உரிய அந்த அந்த நிலையில் நின்றும் நழுவச் செய்யும் முகத்தால் அழிப்பேனாயின், என் கதிதான் என்னாகும் ?
ஆதலின், நீங்கள் என் வரவை சீக்கிரம் அறிவிக்கும்போது, உங்களுக்கு நன்மையுண்டு.
அப்பரமன் என்னை ஏற்று அடிமை கொள்ளும் போது, அவனுக்கு நன்மை உண்டு; நான்
உங்கள் ஓலக்கத்தில் ஒருவனாகக் கலந்திருந்து உங்களைப்போல் அடிமை செய்யும்போது.
எனக்கும் நன்மை உண்டு. இவ்வாறு எல்லாரும் நன்மை பெற்றுவாழுமாறு நீங்கள் என்
வரவை அறிவித்தல் நன்றாம் எல்லா உலகங்களையும் காக்கும் பரமனன்றோ? அவ்வெல்ல உலகங்களிலும் யானும் ஒருத்தனன்றோ ? அவ்எம்பெருமான் நீர்மைக்கு ஆகாதாரும் உண்டோ ? இராவணன் தம்பியும் சத்துருவுமான உன்னைஎம்பெருமானிடம் அறிவிக்கையாவது என் ? என்னாதீர்கள். [இவ்வுலகத்திலுள்ளாரனைவரும்.ஒன்றுசேர்ந்து எதிர்த்தாலும் அறப் பெரியோ னாகிய அப்பரமனுக்கு, பொல்லாங்கு சிறிதும் உண்டாதற்கு இடமுண்டோ? சரணம் பற்றினாரைக் காக்கும் குடியில் திருவவதாரம் செய்த மஹாத்மாவன்றோ? அப்பரமன்.அவன் பொருட்டு எல்லோருக்கும் நன்மை உண்டாமாறு அறியுவிங்கோள்” என்பதாம்.-அங்ஙனம் விபீஷணன் அறிவிக்குங்கால் இராமபிரான் பக்கலில் பொங்கும் பரிவு பெற்றிருப்பவனான ஸுக்ரீவன், மேற்கூறிய விபீஷணன் வார்த்தையைக் கேட்டு, மிக்க பரபரப்புடன், அப்பெருமானைக்கிட்டி, ஒரு வார்த்தை
விண்ணப்பம் செய்து கொண்டனன்.
”திரு அயோத்தியை விட்டுப் போந்து அநேக நாளாயிற்றே? ராஜ நீதியை மறந்ததோ? இவ்விடம் இலங்கைக்கு மிகவும் அண்ணியதன்றோ ? இராவணன் அநீதிகள் அறியவில்லையோ? ஒருவன் ‘சரணம்’ என்னும் சொல்லைச் சொல்லும்போது, இவற்றை
மறந்து விடலாமோ?-வத்யதாம் ஏஷ தீவ்ரேணே தண்டேநஸசி வைஸ்ஸஹ | ராவணஸ்ய ருசம்ஸஸ்ய ப்ராதாஹ் யேஷ விபீஷண 1-இவனை கட்டியிட்டு வைத்தல்; மாரீசனைப்
போன்று,வரும் காலத்தில் துன்பம் விளைக்கும்படி தொடுத்த அம்போடே விடுதல் செய்யக்
கடவோமல்லோம். கொன்றே விடுவோம். அங்ஙனம் கொல்லும் போது, முதலிலே தேவரீரை நலிகைக்குக் கூட்டுப்படையாய் வந்த இந் நால்வரையும் தலையறுத்து, இவன்கையிலே கொடுத்துப் பின்பு இவனைக் கொல்லக் கடவோம். இவன் இராவணன் உடன்பிறந்தவனன்றோ ? அவ் இராவணன்,பெற்றதாயையும் தமப்பனையும் சேர இருக்கப்
பொறாதவனன்றோ ? உடலையும் உயிரையும் பிரித்தது போன்று, என்றும் விட்டகலாத
ஸீதாபிராட்டியரையும் எம்பெருமானாகிய தேவரீரையும் கடல் ஒரு புறமும் மலை ஒரு
புறமுமாக்கின பையலுக்கு, இவன் ஓர் அவயவம் என்று சொல்லலாம் படி அண்ணியனன்றோ?” என்பதே அந்த ஸுக்ரீவன் கூறியஅவ்வார்த்தையாம்.

இவ்வார்த்தையைத் திருச் செவியேற்ற இராமபிரான், வானரர்களை நோக்கி, கூறிய
தாவது :வானரர்களே! இவ்விபீஷணன், இராவணன் தம்பியாதலின், இவன் நம்முடன் சேரத்
தகுதியற்றவன்; அங்ஙனம் சேரத் தகுதியற்றமைக்குத் தகுந்ததும், யுக்தியோடு சேர்ந்ததும், எல்லோரும் விரும்பத் தக்கதும் இனியதுமான ஸுக்ரீவன் வார்த்தையை நீங்கள் கேட்டீர்களன்றோ? இவ்விபீஷணனை நாம் ஏற்றுக் கொள்ளுமிடத்து, உங்கள் கருத்து யாதோ? கூறுமின்’ என்பதாம்.-இராமபிரானுடையமேற்கூறிய வார்த்தையைக் கேட்ட வானரர்கள் அனைவரும், விபீஷணனை ஏற்றுக் கொள்ளுதல் முறை என்னில், ஸுக்ரீவ மஹாராஜருக்கும் கலக்கம் உண்டாம்; ‘அங்ஙனம் ஏற்றுக் கொள்ளுதல் முறையன்று’ என்னில், இராமபிரானுக்குத்திருவுள்ளம் கலங்கும்; இவ்விருவருக்கும் பரதந்திரமான நாம் ஒன்றும் கூறுதற்கு இல்லை என்று மெளனமாயிருந்தனர்.-அங்ஙனம் மெளனமாயிருக்கும் வானரர்களை நோக்கி, இராமபிரான் அருளிச் செய்த-வார்த்தையாவது 🙁 ஹ்ருதாஹ்யர்த்த க்ருச்ச்ரேஷ யுக்தம் புத்திமதா ஸதா ! ஸமர்த்தேநாபி ஸந்தேஷ்டும் சாச்வதீம் பூதிமிச்சதா ||
என்பதாம்.-இவ்வார்த்தையின் கருத்துப் பின்வருமாறு :
வானரர்களே! நம்மைச் சரணம் பற்றியிருக்கும் விபீஷணன், தன்னை நாம் ஏற்றுக் கொள்ளாது ஒழியில் பிழையாதாயினாயிருந்தான்; இவ்விபீஷணனை நாம் ஏற்றுக் கொள்ளில், உங்கள் மஹாராஜர் பிழையாதாராயிருந்தார். சரணம் பற்றி யவனை ஏற்றுக்கொள்ளுதலும், நம்மிடம் பொங்கும் பரிவுபெற்றிருக்கும் மஹாராஜர் கூறியதைக்
கேட்டு நடத்தலும் நமக்குச் சிறந்த நன்மைகளாகும். சரணம் பற்றி யவனை விட்டிட்டால், இரகு குலத்திலே பிறந்த இராமன் சரணம் பற்றியவனைக் கைவிட்டு விட்டான்’என்பர். மஹாராஜர் கூறியதைச் செய்யாவிடின், ‘தன்னைப் பற்றினாரிடம் பரதந்திரனாயிருக்கும் இராமன் க்ரீவ மஹாராஜர் கூற்றுச் செய்தான் இல்லை’ என்பர்.-இவ்வாறு இரண்டையும் செய்தேயாக வேண்டியிருந்தும், ஒன்றுக் கொன்று முரண்பட்டவைகளாயிருத்தலின், செய்வதா ? அல்லது செய்யமாட்டாது விட்டிடுகின்றதா?என்று தபிக்கும் நிலையில் இருக்கும் எனக்கு,’இது செய்யத்தக்கது; இது செய்யத் தகாதது’ என்னும் பகுத்தறிவு பெற்றிருப்பாரும்,
நினைத்ததை நடத்தவல்ல ஆற்றல் பெற்றிருப்பாரும், அழியும் பொருளில் கண்வையாது. அழிவற்ற செல்வத்தைவிரும்புவாரும், நொந்தாரைக் கண்டால் பொறுக்கமாட்டாது, ஐயோ !என்றிருப்பாரும் உத்தமஸ்நேஹிதரும் ஆன நீங்கள், என் தாபம் நீங்குமாறு,ஆராய்ந்து சொல்லுதல் பொருத்தமன்றோ? கூறுமின்.”
மேற்கூறிய வார்த்தையில் அமைந்துள்ள‘சாச்வதீம் பூதிம் இச்சதா” என்னும் பகுதி)
இங்கு ஆழ்ந்து நோக்கத்தக்கதாம். இப்பகுதியில் விளங்கும் இராமபிரானுடைய திருவுள்ளக் கருத்து வெகு அழகானதாம். அக்கருத்தாவது : ”உங்கள் மஹாராஜர், நம் சரீரத்திற்கு இராவணன் தம்பியான இவ்விபீஷணனால் என்ன தீங்கு நேரிடுமோ? என அஞ்சுகிறார். இச்சரீரம் என்றும் அழியாது இருக்கும் செல்வம் அன்று .சரணம் பற்றியவன்,யவரேனும் ஆகிலுமாம்; அவரை விட்டிடாதுகாக்கும் போது, உண்டாம் புகழுடம்பு ஒருநாளும் அழியமாட்டாதன்றோ? நீங்கள் கூறும் கூற்று, நமக்கு நிலைநின்ற புகழுடம்பு உண்டாமாறு இருத்தல் வேண்டும்” என்பதாம். மேற்கூறிய கருத்துக்களைக் காணுங்கால், ‘என்றும் உள்ள எம்பெருமானாகிய தருமத் திற்கும் ஒருவாறு சலனம் ஏற்படும் இடம்-உண்டு” என்பது நன்கு விளங்குகின்ற தன்றோ?
இராமபிரான் விபீஷணனை விட்டிடாது காப்பானாயின், அப்பிரானை விட்டு, தருமத்தின்
தன்மை(பற்றினாருக்கு நன்மையை அளிப்பவனாயிருக்கை) அகன்றொழியாது. ஸுக்ரீவன்
பொங்கும் பரிவினால் மிகக் கலங்கி, “விபீஷணனைக் காக்கல் ஆகாது ; கொன்றே தீரவேண்டும்’ என்று கூறும் கூற்று, தருமமாகிய இராமபிரானையே ஒருவாறு அழிக்கத் தேடு கிறதன்றோ?-இங்கு இராமபிரான், தானாகிய தருமத்தை அழிவுக்கு இடம்கொடாது, நிலைநிறுத்தும் பரிசு யாதோ? எனின், தன்னைப் பற்றி னார்,ஒருகாலும் தன் எண்ணத்தைப் பின்செல்லாது இரார் ; அங்ஙனம் பின் செல்லாது ஒரு ஆச்ரிதன் இருப்பின், அவ்வாச்ரிதனுடைய (தன்னைப் பற்றினவனுடைய) மனக்கலக்கத்தை ஏனைய ஆச்ரிதரால் மாற்றி, அவனைத் தன் வயப்படுத்தி, தன்னைத் தன்னிலையின் நின்றும் நழுவவிடாது, தன்னை நோக்கி அருளுவதே, அவன் தன்னை நிலைநிறுத்தும் பரிசாம். இதுவே, இராமபிரான் திருவவ தாரம் செய்து செய்யும் முக்கியமான தருமஸ்தாபனமாம்.(தருமத்தை நிலை நிறுத்தலாம்.)-இந்த ” ஸுஹ்ருதா ” என்னும்வார்த்தை கூறுகிறவாறு இராமபிரான் வானரர்களை நயமாகக் கேட்க, அவ்வானரர்கள் அனைவரும்தம் கொள்கையை அறிவித்துக் கொள்ளுதல் இயலாதாதலின்,அங்கதன், சரபன்,ஜாம்பவான், மைந்தன் ஹநுமான் இவ் ஐவரும் ஒன்று சேர்ந்து, ஒரு குழாமாயிருந்து, அவ் இராமபிரானுடைய ஸன்னிதியில், அவன் நன்மையையே நினைந்து, வேறிடத்தில் எண்ணத்தை விட்டிட்டு, தன் தனக்குரிய கொள்கையைத் தனித் தனியே விண்ணப்பம் செய்து கொண்டதாய் இங்கு வரலாறு அறியத் தக்கது.-அங்கதன் கூறிய வார்த்தையும்,அதின் கருத்தும் வருமாறு 🙁அர்த்தாநர்த்தெள விந்ச்சித்ய வயவ ஸாயம் பஜேத ஹ குணத : ஸங்க்ரஹம் குர்யாத்
தோஷ தஸ்து விஸர்ஜ்ஜயேத் என்பது அவ்-வார்த்தையாம்.
“இராமபிரான் தன்னைத் தஞ்சமாய்ப் பற்றியிருப்பவனை விட்டிடாதவன். ஸுக்ரீவன் விபீஷணனைக் கொல்ல வேனும் என்று இருப்பவன். இவ்விருவருடைய இவ்விரு
கொள்கைகளுள் ஒன்றை விட்டு ஒன்றைக்கொள்ளும்போது,வீபீஷணனுடைய நிலைமைகளை நன்கு ஆராய்ந்து காணுதல் அவசியமாகும். அங்ஙனம் ஆராய்ந்து காணும் போது, குற்றமிருப்பின், விபீஷணன் விடத்தக்கவனாம்.-மிக்க குணம் பெற்றவனாயிருப்பின்,விபீஷணன் கொள்ளத்தக்கவனாம்.ஆதலின், விபீஷணனைப் பற்றி ஆராய்தல் மிக முக்கியமானதாம்” என்பதே அவ்வார்த்தையின் கருத்தாகும்.
இவ்வாறு அங்கதன் கூறிய பின்பு,சரபன் தன் கொள்கையை, “புருஷர்களுள் மிகச்
சிறந்தவ னே ! இவ்விபீஷணனனுடைய, நடத்தை நன்கு நமக்குத் தெரியாதாகை
யால், அதை அறிகைக்கு, முந்துறத்தூதுவிடவேணும்.-க்ஷிப்ரம் அஸ்மிந் நரவ்யாக்ரசார: ப்ரதிவிதீய தாம் ) என்று கூறியிருக்கிறான்.-இங்ஙனம் சரபன் செப்பிய பிறகு,ஜாம்பவான் கூறியதாவது :
” இவ்விபீஷணன் இராவணனிடத்தினின்றும் வந்தவன் என்பது மாத்திரமின்றி வருகைக்குத் தகுதியற்ற இடத்திலும், காலத்திலும் வந்தவன். ஆதலின் யோசிக்கத் தக்கவன்(அதேசகாலே ஸம்ப்ராப்த: ஸர்வதா சங்க்ய தாம் அயம்) என்பதாம்.

இப்படி ஜாம்பவான் தன் கொள்கையைக்  கூறிய பிறகு, மைந்தன், ” இவ்விபீஷணனை : 
நம்மோடு சேர்த்துக்கொண்டு, இவன் நன்மை தீமைகளை நன்கறிந்து, அதற்கு ஏற்ப நடந்து
கொள்ளுவது நன்றாம். “(பாவமஸ்யது விஜ்ஞாயதத்வதஸ் த்வம் கரிஷ்யஸி)” என்று கூறினன்.
இந்நால்வரும் இவ்வாறு இயம்பிய பிறகு, திருவடி இந் நால்வருடைய கொள்கைகளையும்
கண்டித்து, தன் கொள்கையை இராமபிரான் ஸன்னிதியில் விண்ணப்பம் செய்து கொண்டி
ருக்கின்றனன். இங்கு இத்திருவடி வார்த்தையும், அவ்வார்த்தையின் கருத்தும் பின் வருமாறு : ஸுக்ரீவனைக் குறித்து, “தலைவ ஒருவரை வெல்லவேண்டும் என்றாவது, ஒருவ
ரிடத்தில் அஸுயையினாாவது, நான் பெரி யன்’ என்னும் எண்ணத்தினாலாவது, ஒரு
பயனை விரும்பி, பக்ஷபாதத்தினாலாவது கூறப் போகிறேனில்லை. இராமபிரானுடைய திருக் குணங்களைக்கண்டு, உண்மையைக் கூறுவேன்” என்றனன், திருவடி.
இவ்வாறு கூறி, அத்திருவடி அங்கதன் கொள்கைக்குக் கூறியிருக்கும் குற்றமாவது:
” இவ்விபீஷணனிடத்தில், குணங்கண்டு ஏற்றுக் கொள்ளுதல்; குற்றங்கண்டு விட்டிடு
தல்’ என்னும் கொள்கை சிறந்ததன்று.ஏனெனில், இவனை நம் காரியத்தில் ஏவினாலல்லது, இவன் நன்மை அறிய இயலாது ; நன்மையை அறியாமல் ஏவ இயலாது. ஆதலின்,
இவனை ஆராய்தல் இயலாததாம்.-(ருதே நியோகாத் ஸாமர்த்யம் அவ போத்தும் ந சக்யதே
ஸஹஸா விநியோகோ ஹி தோஷவாந் ப்ரதிபாதி மா ) என்பதாம்.
பின்பு, சரபன் கொள்கைக்குச் செப்பியிருக்கும் குறையாவது : “இவ்விபீஷணன் எதிரே நிற்கையால், “தூதனை விட்டு, இவன் நன்மை தீமைகளை அறிந்து, அவ்வறிவுக்கு
ஏற்ப நடந்து கொள்ளலாம் ” என்னும் கொள்கையும் சீரியதன்றாம்.-(சாரப்ரணிஹிதம் யுக்தம் யதுக்தம் ஸசிவைஸ்தவ அர்த்தஸ்யா ஸம்பவாத் தத்ர காரணம் நோபபத்யதே )என்பதாம்.
பிறகு, ஜாம்பவான் கொள்கைக்குப் பகர்ந்திருக்கும் புன்மையாவது :
“இவ்விபீஷணன், இராமபிரானிடம் வருகைக்குத் தகுதியற்ற இடத்திலும்,காலத்திலும் வந்தவன் ” என்னும் மதமும் பொருத்தமுடைத்தன்று. ஏனெனில், இராவணன் மிக்க தமோகுணம் பெற்றிருப்பவனாம், பிறரைத் துன்புறுத்துகின்றவனாம். ஆதவின், விடத் தக்கவனாம். விபீஷணன் அவனை விடாது இருப்பின், அவன்பாவச்செயலினால்,அவனைப் போன்று, அவனுக்கு உடன்பட்டிருக்கும் இவனும் அழிய நேரிடும்.-இராமபிரானோ, ரஜஸ்ஸும், தமஸ்ஸும் சிறுதுமின்றி, சுத்த ஸத்துவ குணமுடையவனாம். துன்பம் துடைத்து இன்பம் தந்து பிறரை வாழ்விப்பவனாம். ஆதலின், பற்றத்தக்கவனாவன். இவ் இராமபிரானைப் பற்றி இவனருளால், இப்பரமன் திருவடித் தாமரைகளைக் கிட்டி, தொண்டு செய்துவாழ்வுபெறலாம்.
இவ்வாறு இராவணனுக்கும் இராமபிரானுக்கும் உள்ள தீமை நன்மைகளைக் கண்டவனாம் இவ்விபீஷணன். மேலும், இராவணன் கீழ்மையும் இராமபிரான் ஆண்மையும் நன்கு உணர்ந்தவனாம், இவன். ஆகவே உள்ளத் தூய்மையுடன் பரமபுருஷனையே தஞ்சமாய்ப் பற்ற வந்தவன் வரவுக்கு இவ்விடமும் இக் காலமும் தகுந்த இடமும் காலமும் ஆகத் தட்டொன்று மில்லை யன்றோ?-(ஸ ஏஷதேச: காலச்சபவதீ யதா ததா புருஷாத் புருஷம் ப்ராப்ய ததா தோஷகுணாவபி !தெளராத்ம்யம் ராவணே திருஷ்ட்வா விக்ரமம் ச ததா த்வயி
யுக்தம் ஆகமநம் தஸ்ய ஸத்ருசம் தஸ்ய புத்தித)-என்பதாம்.
[ஒருவன் கருமயோகத்தைச் செய்கின்றான். அக்கரும யோகமாகிய தருமம், பரிசுத்மான இடத்திலும், காலத்திலும் செய்யப்பெறுமாயின், அதற்கு நன்மையுண்டாம் ;
அதனாலாகிய பயனும் உண்டாகும்.அங்ஙனம் செய்யப் பெறாவிடின், அத்தருமத்திற்கு நன்மையும் பயனும் உண்டாகா.இத்தருமம்போன்று. இடம் காலம் இவற்றினால், எம்பெருமானாகிய தருமத்திற்கு ஏற்படும் நன்மையும் பயனும் கூறுதற்கு சாஸ்திரம் இடம் தரவில்லையன்றோ? இராமபிரானாகிய தருமத்தைத் த ஞ்சமாய்ப் பற்றும் விபீஷணனுக்கு, அங்ஙனம் பற்றுங்கால், ஏதேனும் ஓர் இடமும் ஒரு காலமும் அமையுமாதலின், இன்ன இடம்
இன்ன காலம் என்பது இல்லையன்றோ? இந்த உண்மையைத் திருவடி வாயிலாக வெளியிடுகின்றான், வால்மீகி முனிவன். கருமயோகமாவது – எம்பெருமான் திருவுள்ளம் உகக்குமாறு, தனக்குரிய தருமங்களைச் சாஸ்திரமுறையைப் பின் சென்று செய்கையாம்.)
இவ்வாறு ஜாம்பவான் கொள்கைக்குக் குறை கூறி, மைந்தன் கொள்கைக்கு இழிவைக்
கூறியிருக்கிறான் திருவடி. அவ்விழிவாவது :-”இவ் விபீஷணனை ஒரு காரியத்தில்
தூண்டி, அக்காரியத்தைச் செய்வித்து, அதனால், இவன் கருத்தைத் தெளியலாம்” என்னும் கொள்கையும் சீர்மை உடைத்தன்று.-ஏனெனில், எதிரி தன் காரியத்தில் வல்லவனாயின், தன் எண்ணத்தை வெளியிடாதவாறு, நடந்துகொள்வன் ; ஆதலின், சீக்கிரத்தில் அவன் நினைவு அறிய இயலாது அன்றோ ?-(அசக்யஸ் ஸஹஸா ராஜந்பாவோ வேத்தும் பரஸ்யவை)-என்பதாம்.

இங்ஙனம்,அங்கதன் முதலானார் கொள்கைகளுக்குக் குறைகூறிய தி ருவடி, தன்
கொள்கையையும் நன்கு கூறியிருக்கின்றனன் :
”இந்த விபீஷணன் கூறும்போது, இவன் பால்குற்றங்களைக் குறிக்கும் செயல் ஒன்றும்
காணப் பெற்றிலது : வழியடியுண்டவன்தாய் முகத்திலே விழித்தாற் போன்று, இவன்
முகம் குளிர்ந்தன்றோ? தெரிகிறது; இவன் தீம்பனாகில், இவனுக்கு விரோதத்தைச் செய்ய
முயன்ற இவ்வானர வெள்ளத்தில், அன்பனாய் இவ்வாறு வார்த்தை கூறு தற்கு இடம்
உண்டோ? கூறியிருப்பனோ ? பயம் சிறிதும் இன்றியும் இருப்பனோ ? இவன் குரல் தழு
தழுத்துத் தெரிகின்றதோ? இல்லையன்றோ?-ஒருவனுக்குக் கெட்ட எண்ணம் உண்மையில்
இருப்பின்,அவ்வெண்ணத்தை அவன் மறைக்க முயன்றாலும், அதை, அவன் முகம்
வெளிப்படுத்திவிடுமன்றோ? ஆதலின், இவன் தூய்மை பெற்றிருப்பவனேயாம்.
பிறருக்குச் செய்ய அரிதான இராமபிரானுடைய முயற்சியையும், இராவணனுடைய
கெட்ட சரிதத்தையும் நன்கு கண்டு, தீம்பனான வாலியைக் கொன்று, கிஷ்கிந்தா இராச்
சியத்தை ஸுக்ரீவனுக்கு வயமாக்கிக் கொடுத்ததையும் கேட்டு, அவ்வாறே, இராவணனைக்
கொன்று, இலங்கா இராச்சியத்தைத் தனக்கு வயமாக்கிக் கொடுப்பன் என்று திடமாய்
எண்ணி, இவ்விபீஷணன் இங்கு வந்தனன்-என்பது என் எண்ணம். இவன் நிலையை
இவ்வாறுஉண்மையாக உணர்ந்தால் இவன் ஏற்றுக் கொள்ளத்தக்கவனாம் . இதுவே, திருவடி கூறிய கூற்றாம்.-இங்கு, திருவடியின் வார்த்தை பின் வருமாறு 🙁உத்யோகம் தவ ஸம்ப்ரேக்ஷ்ய மித்யா வ்ருத்தம்ச ராவணம் | வாலி நம் ச ஹதம் சருத்வா ஸுக்ரீவம்ச
அபிஷேசிதம் || ராஜ்யம் ரார்த்தயமானஸ்து புத்தி பூர்வமிஹாகத : ஏதாவத்து புரஸ்க்ருத்யவித்யதேத் வஸ்ய ஸங்க்ரஹ : ) இங்ஙனம் திருவடி கூறிய வார்த்தையைத்
திருச்செவி சாற்றி, (ஸக்ரீவன் முதலானார்,’சரணம் பற்றிய விபீஷணனை ஏற்றுக் கொள்
ளுதல் கூடாது’ எனக் கூறும்போது ஒருவாறு அழிந்திருந்த ) இராமபிரான் உளனானான் ;
மனக்களிப்பும் பெற்றான் ; தன் கொள்கையையும் வெகு அழகாகக் கூறியிருக்கின்றான்.
(அத ராம ப்ரஸந்நாத்மா) என்னும் வால்மீகி முனிவன் வாக்கியமும், ” அத ராம்: = அநந்தரம் பெருமாள் உளரானார்; திருவடி வார்த்தையாலே உளரானார். ப்ரஸந்நாத்மா=தர்மியுண்டான
வாறே தர்மம் உண்டாயிற்று’‘ என்னும் பெரியவாச்சான்பிள்ளை திருவாக்கும் அனுப விக்கத் தக்கவை.

இனி, இராமபிரான் கொள்கையைக்காண்போம்.-இராமபிரான், அங்கதன் முதலானாரை நோக்கி, தன் கொள்கையைக் கூறுதற்கு முன், தன் உத்தமத் தன்மைக்கு ஏற்ப, ‘உங்கள் வார்த்தையை நான் கேட்ட வோபாதி, இவ்விபீஷணனைப்பற்றி,யான் கூறும் வார்த்தையையும் நீங்கள், செவி தாழ்த்துக் கேட்க வேண்டும். என்று இரந்து கொண்டிருக்
கின்றான்.-இவ்வாறு இரந்து, இராமபிரான் கூறிய வார்த்தையாவது (மித்ராபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதம்சந தோஷோ யத்யபி தஸ்யஸ்யாத் ஸதாம்ஏதத் அகர்ஹிதம் )என்பதாம்
இராமபிரான். கடற்கரையில் வானரர்கள் திரளிலே அருளிச் செய்த ‘மித்ரபாவேந’
என்னும் இவ்வார்த்தை,கண்ணன் பகவத் கீதையின் இறுதியில் அருளிச் செய்த “ஸர்வ
தர்மாந் “ என்னும் வார்த்தைபோன்று உள்ளதாம்.
கண்ணபிரான், அக்கீதையில், கருமயோகம்,(எம்பெருமான் முக மலர்த்திக்குஉறுப்பாகச் செய்யும் ஜீவனாகிய தனக்குரியதருமம்) ஜ்ஞான யோகம், (உள்ளத் தூய்மை பெற்றிருப்பவன் சிந்திக்கும் ஜீவாத்மாவைப்பற்றிய சிந்தனம்) பக்தி யோகம் (பரமனைப்
பற்றிச்சிந்திக்கும் சிந்தனம்) ஆகிய இவ்வுபாயங்களைப் பரக்கக்கூறி, இறுதியில் இவற்றை
விட்டிட்டு, பரமனாகிய தன்னையே பற்றுமாறு கட்டளையிட்டிருக்கிறான்.
இராமபிரானும், இங்கு அங்கதன், சரபன் முதலானோர் கூறிய கொள்கைகளைக் கழித்து,
இறுதியில் தனக்கே உரிய சீரிய கொள்கையை முடிந்த பொருளாக அருளிச் செய்திருக்கிறான்.
கண்ணன் செல்வம் இழந்திருக்கும் அர்ஜ்னனைச் செல்வ வானாக்க இறுதியில் ஸர்வ தர்மாந்” என்னும் வார்த்தையை அருளிச் செய்தது போன்று, இராமபிரானும், இலங்
கையை இழந்த விபீஷணனை இலங்கையை உடையவனாக ஆக்க இறுதியில் ‘மித்ரபாவேந என்று அருளிச் செய்திருக்கிறான்.
அங்கு, கண்ணன் ஸேனையின் ந டுவில் அர்ஜ்ஜுனன் சோகம் தீர்வதற்கு அவ்வார்த்
தையை அருளிச் செய்திருக்கிறது போன்று, இங்கும், இராமபிரான் ஸேனையின் நடுவில்
விபீஷணன் சோகம் தீர்வதற்கு இவ்வார்த் தையை அருளிச் செய்திருக்கிறான்.
நம்ஆசாரியர்கள் ‘திருத்தேர்த் தட்டில்வார்த்தை’ ‘கடற்கரை வார்த்தை’ என்னும்,
(கண்ணபிரான் இராமபிரான் இவ்விரு எம்பெருமான்களுடைய) இவ்விரு வார்த்தைகளையும், எல்லாச் சேதனருடைய சேமத்தைவிளைவிக்கும் சீர்மையுடையன வாயிருத்தலினாலும், மேற்கூறியவாறு ஒற்றுமை பெற்றிருக்கின்றமையினாலும், அன்புடன் தாங்களும் ஆதரித்தும், தங்கள் திருவடிகளில் ஸம்பந்தம்
பெற்றிருப்பார்க்கு உபதேசம் செய்தும்போருகிறார்கள்’‘ என்பதையும், “எந்தச் சேதன
னுக்கு ‘இவ்விரு வார்த்தைகளில் நன்கு தொடர்பு ஏற்படுகின்றதோ,அந்தச் சேதனனே. ஸ்ரீ வைஷ்ணவன்’ எனப் புகழப்பெறுகின்றான்” என்பதையும் நாம் இங்கு அறிதல் அவசியமாகும்.
உண்மை இங்ஙனம் ஆனாலும், பெரியவாச்சான்பிள்ளை இராமபிரான் வார்த்தைக்கு
மிக்க ஏற்றத்தைத் திருவுள்ளம் பற்றி அருளிச் செய்திருக்கிறார் :
அங்கு.சரணாகதாத்வஸாயம்’ சொல்லிற்று; இங்கு . ‘சரண்யாத்வாஸாயம்’ சொல்
லுகிறது .அங்கு, ‘சரணாகதனைப் பாபங்களில் நின்றும் விடுவிப்பேன்’ என்கிறது; இங்கு
‘நான் விடேன்’ என்கிறது” என்னும் பெரியவாச்சான் பிள்ளை திருவாக்கு அவசியம் அனு
பவிக்கத் தக்கதாம்.
இத்திருவாக்கின் கருத்தைச் சிறிது விவரித்துக் கூறுவோம் : எம்பெருமானை எவன்
அவனைப் பெறுதற்குக் காரணமாய்ப் பற்றுகின்றனனோ, அவனைச் சரணாகதன் என்பர்
அச்சரணாக தனுக்கு உரிய திடமானஎண்ணத்தை (“எம்பெருமான் இப்பொருளை
ஒருகாலும் விட்டிடான்; காத்தே தீருவன் ‘என்னும் எண்ணத்தை) ‘அத்யவஸாயம்
என்று கூறுவர்.

இந்த எண்ணம், எம்பெருமான் திருவடிகளை உபாயமாய்ப்பற்றி, பேற்றைப்பெறுபவ
னுக்கு இன்றியமையாததாம். இவ்வின்றியமையாமையைப் பின்வருமாறு நாம் அறியலாம்:
ஒருவன், கப்பலை ஏறி, கடலைக் கடந்துதான் விரும்பிய இடத்துக்குச் செல்கிறான்.
அங்ஙனம் கடந்து செல்பவனுக்கு உள்ள(இக்கப்பல் மிக உறுதியானது : இது நம்மை,
கோரின் இடத்திற்குக் கொண்டு போய்ச்சேர்த்துவிடும் என்னும் ) எண்ணத்தைக் காண்
கின்றோமல்லவா?-இது போன்று, இந்த ஜீவனும் எம்பெருமானாகிய கப்பலை ஏறி ஸம்ஸாரமாகியபெருங்கடலைக் கடந்து, தான் விரும்பிய பரமபதமாகிய இடத்துக்குச் செல்ல வேண்டியவனாயிருக்கின்றமையின், .எம்பெருமானாகியகப்பல் மிகமிக உறுதியானது; இக் கப்பல்நம்மைப் பரமபதத்தில் கொண்டு போய்ச்சேர்த்துவிடும்” என்னும் திடமான எண்ணம்பெற்றிருக்கவேண்டியவனன்றோ?
இங்கு, ”ஒரு சிறாயை விச்வஸித்து,ஆறு மாஸத்துக்கு வேண்டும் சோறும் தண்ணீரும்
ஏற்றிக்கொண்டு, கடலிலே இழியாநின்றான். அவ் வோபாதியாகிலும் வேண்டாவோ பக
வத்விஷயத்தைப் பற்றுவார்களுக்கு‘ என்னும் நம்பிள்ளை திருவாக்கு அனுபவிக்கத்
தக்கது.
இத்திருவாக்கை அனுபவிக்குங்கால்
“எம்பெருமானாகிய கப்பலை ஏறிச் செல்பவ னுக்கு மிகவும் திடமான எண்ணம் வேண்டும்.
அவ் எண்ணம் இந்த ஜீவன் நிலையைக் காணுங்கால், உண்டாவது அரிதாம். ஆனாலும், கருங்கடலைக் கடப்பவன், அங்ஙனம் கடக்கக் கருவியாய் எண்ணியிருக்கும் கப்பலில் வைத்திருக்கும் நம்பிக்கை போன்றுள்ள நம்பிக்கையாவது இந்த ஜீவனுக்கு வேண்டுவது அவசியமன்றோ?”‘என்னும் உண்மை நன்கு விளங்குகின்ற தன்றோ?
‘இந்தத் திடமான எண்ணம் பரம புருஷனாகிய என்னைச் சரணம் பற்றியிருப்போனுக்கு
இன்றியமையாததாம்” என்பதை இயம்பியிருக்கிறான்,”ஸர்வ தர்மான்” என்னும்
வார்த்தை வாயிலாகக் கண்ணன்.மேலும், அக்கண்ணபிரான், மேற்கூறிய வார்த்தையிலேயே, இவ்வாறு திடமானஎண்ணம் பெற்றிருக்கும் சேதனனை, என்னை
அடையவொட்டாது தடைசெய்யும் பாவங் களினின்றும் விடுவிப்பேன்’ என்றும் அருளிச்
செய்திருக்கிறான்.
இதுவரையில், சரணாகதாத்யவஸாயம் சொல்லிற்று; சரணாகதனைப் பாவங்களில்
நின்றும் விடுவிப்பேன்‘ என்னும் பகுதியின் கருத்தைக் கண்டோம். இனி, சரண்யாத்ய
வஸாயம்’ என்பதின் கருத்தைக் காண்போம்.
‘சரண்யன்‘ என்பதற்கு, ‘துன்பம் துடைத்து இன்பம் தரும் எம்பெருமான் என்று பொருள். அவ் எம்பெருமானுடைய திடமான எண்ணத்தை (“இந்த ஜீவனை ஒருக்காலும் விட்டிடேன்; காத்தே தீருவேன்” என்னும் எம்பெருமான் எண்ணத்தை) சரண்யாதியவஸாயம்’ என்று கூறுவர்.
இவ் அத்யவஸாயத்தையும் ‘இந்த ஜீவனை எம்பெருமானாகிய நான் விடேன்’ என்று கூறி
யிருத்தலையும், இங்கு இராமபிரான் வார்த்தையில்நாம் நன்கு அறியலாகும்.
ஜீவனுடைய திடமான எண்ணம், எம் பெருமானுடைய திடமான எண்ணம் இவை
இரண்டும், இந்த ஜீவன் பேறு பெறும்போது அவசியமானவை என்றாலும், இவன் எண்ணத்
திலும்,அவன் எண்ணம் மிகமிக முக்கியமானதல்லவா ?
இந்த ஜீ வன், “எம்பெருமான் இப்பொருளை இரட்சியாது விட்டிடான் : இரட்சித்தே தீருவன்” என்னும் திடமான எண்ணம்பெற்றிலனேயானாலும், எம்பெரு மான்,
இந்த ஜீவனை நாம் விட்டிடாது, இரட்சித்தே தீருதல் வேண்டும” என்னும் திடமான எண்ணம் பெற்றிருப்பின், எம்பெருமானுடையஅவ் எண்ணத்தினாலேயே, இவனுக்கு நன்மை
உண்டாவது திண்ணமன்றோ ?

‘இந்த ஜீவன், எம்பெருமான் இப்பொருளை இரட்சித்தே தீருவன்’ என்று திடமாக
எண்ணியிருந்தாலும், எம்பெருமான், ‘இந்தஜீவனை இரட்சித்தே தீரவேண்டும் என்று எண்ணாது இருப்பின், இவன் நன்மை பெற இயலுமோ? இயலாதன்றே? இதுபோன்று
பாவத்தினின்று விடுவிப்பதிலும், எம்பெருமான் இவனை விடாது இருத்தல் மிகவும் முக்கி
யமானதன்றோ ?
இங்கு,”உன் மனத்தால் என் நினைந்திருந்தாய் இடவெந்தை எந்தைபிரானே” என்னும்
திருமங்கை மன்னன் திருவாக்கும் அனுபவிக்கத்தக்கதாம் .-உண்மை இவ்வாறு இருத்தலின், கண்ணன் வார்த்தையிலும், இராமபிரான் வார்த்தைக்கு ஏற்றம் உண்டு என்பது தெளிவாம்.
இதுவரையில், “மித்ரபாவேந்” என்னும் இவ்வார்த்தையின் சீர்மையைச் சிறிது கண்டோம். இனி,இவ்வார்த்தையின் கருத்தைச் சுருக்கமாய்க் காண்போம் :
நம்பத் தக்கவன் செயலாலே நம்மை நெருங்கி வந்த இவ்விபீஷணனை ஒரு படியாலும் விடஊஹை கூடச் சிறிதும் நமக்கு இல்லை; இவ்விபீஷணனுக்குக் குற்றம் இருந்தாலும்,இவன் நினைத்த காரியம் பெற்றானா கிறான். இவனை ஏற்றுக் கொள்ளுதல்,பெரியோர்களுக்கு நிந்திக்கத் தக்கதாகாதாம்” என்பது, மேற்கூறிய வார்த்தையின் கருத்தாம்.
இவ்வாறு இராமபிரான் தன் இயல்பை இயம்பியிருந்தும், பொங்கும் பரிவு பெற்றிருந்
துள்ள ஸுக்ரீவன், தெளிவு சிறிதும் இன்றி,-அவ் இராமபிரான் முன்னிலையில் “விபீஷணன் ஏற்றுக்கொள்ளத் தக்கவன் அல்லன்” என்பதைச் சில முறைகளைப் பின் பற்றிக் கூறி
யிருக்கிறான். அக்கூற்றிற்கு இராமபிரான் விடை அளிக்குங்கால். அப்பிரான் திருவாக்கி
லிருந்து அவதரித்ததும், “மித்ரபாவேந என்னும் வார்த்தை போன்று மிகச் சீர்மையுற்றதும், எல்லாச் சேதனருக்கும் நன்மையை உண்டு பண்ணுவதுமான வார்த்தை வருமாறு

(ஸக்ருதேவ ரபந்நாய தவாஸ்மீதிசயாசதே |அபயம் ஸர்வபூதேப்ய: ததாமி ஏதத் வரதம் மம1
என்பதே அவ்வார்த்தையாம்.-(இவ்வார்த்தையின் கருத்துக் காணும் போது. ஸக்ரீவன் கேள்விகளுக்கு இராமபிரான்விடையளித்திருக்கிறதாய் நாம் காணுதல் நன்றாம்.
ஸுக்ரீவன், இராமபிரானை நே க்கி இராம! நீ புருஷோத்தமன்; உன்னை முறையுடன் உபாயமாய்ப் பற்றியிருப்போனை விட்டிடாது காத்தல் உனக்குரிய தருமமேயாம். சாஸ்திரம், ‘சரணாகதியை ஒருகால் செய்தல் நன்று; பலகால் செய்யலாகாது’ என்று இயம்பியிருக்கின்றது. இவ்விபீஷணனோ, சாஸ்திரம் கூறும் முறையைப் பின்
சரணம் கா: / பவந்தம் சரணம்கத: / பாதயோச்சரணாவேஷநிபபாத ) என்று முக்
கால் சரணம் பற்றியவனன்றோ? ஆதலின், இவன் ஏற்கத் தக்கவனல்லன் எனறு கூறினன்.
இதற்கு, இராமபிரான் அருளிச் செய்தவார்த்தை :
“(ஸக்ருதேவ) இவ்விபீஷணன் முறை வழுவாது ஒருகால் நம்மைப் புற்றியவனே
ஆவான்; எங்ஙனம்? என்னில், இராவணனால் மிகவும் அவமதிக்கப்பட்ட விபீஷணன் நம்மை
நோக்கி, நான்கு இராக்கதருடன்,ஆகாசத் தில் கிளம்பிய போதே, நீங்கள் அவனைச் சத்துருவாய் எண்ணிக் கலங்க, உங்களுக்கு அக்கலக்கம் போக வேண்டும் என்று அவன் எண்ணி,’என்னைச் சத்துருவாய் எண்ணலாகாது நான் இராமனைச் சரணம் பற்ற வந்தனன்”’
என்னும் உண்மையை உங்களுக்கு உணர்த்திய வார்த்தை, “ராகவம் சரணம் கத” என்பது.
உங்கள் வார்த்தையினால், நாமும் கலங்கினோமோ? என்று ஐயம் கொண்டு,நம்மைத்
தெளியப்பண்ணச் சொன்ன வார்த்தை,
பவந்தம் சரணம் கத:” என்பது. உண்மையில் முறை வழுவாது நம்மைச் சரணம் பற்றும் போது உள்ள வார்த்தை“பாதயோச் சரணான்வேஷ நிபபாத ” என்பது. ஆதலின், இவன் ஏற்றுக்கொள்ளத்தக்கவனேயாம். . இதைச்செவி மடுத்த ஸு க்ரீவன், மேலும் வினவியதாவது:-இவ்விபீஷணன் தேவரீரைச் சரணம் பற்றியிருப்பவனல்லன்; ஏன்? எனில் “வதம் செய்யவேண்டும்” என்று எங்கள் கூற்றைக்கேட்டு வெருவி, போகநிற்கிறவனன்றோ?
இவன். ஆதலின்,இவன் ஏற்கத் தக்கவனல்லன்”
இதற்கு இராமபிரான் விடையாவது:‘(ப்ரபந்நாயைவ) நாம் இவ்வாறு இவனை
ஏற்றுக் கொள்ளுதல் முறையோ, முறையன்றோ? எனத் தடுமாறுதல் போன்று இராது.
உறுதியுடன் நம்மைப் பற்றியே இருப்பவன் காண், இவன்”.-இதைச் செவியேற்ற ஸுக்ரீவன், இவ்விபீஷணன்,தேவரீரையே மிகச் சிறந்த நன்மையாய்க் கருதாது, இலங்கையைப் பெற
விரும்பி வந்தவனன்றோ? –த வரீருக்கு த்தொண்டனான திருவடியுமன்றோ? “ராஜ்யம்
ப்ரார்த்தயமாநச்ச” என்று இவ்விபீஷணனுக்குள்ள நிலைமையை (இலங்கையில் விருப்
புற்றிருக்கும் இயல்பை)த் தெளிவாய்க்கூறி,தன் கொள்கையை முன்னம் வெளியிட்டிருக்
கின்றனன். ஆதலின், இவன் ஏற்கத் தகுந்தவனல்லன்’ என்றனன்.
இதற்கு, இராமபிரான் அருளிச் செய்தவார்த்தை : “( தவாஸ்மீதி ச யாசதே.)திருவடி இராவணன் முன்னிலையில், நம் சிறப்புக்களை கூறுங்கால், அவ் இராவணன்
அவற்றைப் பொறாது, அத்திருவடியைக்கொல்ல, தன் தொண்டர்களுக்குக் கட்டளை
இட்டனன். அந்த ஸமயம் அங்கிருந்த வி ஷணன். தூதனைப் கொல்லலாகாது” என்றுதடுத்தனன். அவ்வாறு தடுத்து, தனக்குச் செய்திருக்கும் நன்மையை உணர்ந்த திருவடி இலங்கையின் அரசுரிமையை விபீஷணனுக்கு அளிக்கவேணுமென்று தான் கருதி “ராஜ்யம் ப்ரார்த்தய மானச்ச “ என்று கூறினனேயன்றி விபீஷணன் அரசுரிகைமயை வேண்டினனோ? இல்லையன்றோ?
மேலும் நம் தம்பியான இலக்குமணன், நம்மைஎங்ஙனம் விரும்பி, நம்மைப் பிரியாது
நம்முடன் நின்று, நமக்கு மனமகிழ்ச்சிஉண்டாகுமாறு நம்மையே மிகச்சிறந்த பயனாகப் பற்றியிருக்கின்றனனோ,அங்ஙனமே இவ்விபீஷணனும், நம்மையே மிகச்சிறந்த பயனாக விரும்பி நமக்கே ஆட்செய்ய வந்தவன் காண். (தவ,ச, அஸ்மி இதி யாசதே என்று பதங்களைக் கூட்டி, ‘ச’ என்னும் சொல்லை,ஏகாரப்பொருளில் கொண்டு நோக்கின், ” இராமபிரானாகிய உனக்கே அடிமையாக இருக்கிறேன் என்று விரும்புகின்றவன் பொருட்டு” என்னும்பொருள் இங்குக் கிடைக்கிறதன்றே?)
இதைக் கேட்ட ஸுக்ரீவரின் மேலும்இராமபிரானை நோக்கி, இராமா! விபீஷண னுடைய சரணாகதி. முறை வழுவியது’ என்னும் என் கூற்றுக்கு நீ விடை கூறினாய் நீ அவனுக்கு அளிக்கும் பயன் தான் யாதோ?என்றனன்.
இதைத் திருச்செவியேற்ற இராமபிரானும், “தேவர் மனிதர். முதலிய எல்லா ஐந்துக்
களினின்றும், பயத்தைப் போக்கி, நன்மையைச் செய்வேன் எனக்கூறி, ! இவ் வுலகிலுள்ளார் அனைவருக்கும்துன்பம் துடைத்து இன்பம் தருதல்,நமக்கே உள்ளதொரு தருமமன்றோ! ஸுக்ரீவ ! இதை நீதலைக்கட்டித் தருதல் நன்றாம்” என்றும் கூறி
யிருக்கின்றனன். (அபயம் ஸர்வ பூதேப்ய; ததாமி ஏகத்வரதம் மம).இவ்வாறு, தன் திடமான ஸங்கல்பத்தை இராமபிரான் வெளிப்படுத்திய இடத்தும் ஸுக்ரீவனுக்குக் கலக்கம் தீர்ந்திலது.அத்தருணம் தன் மிடுக்கையும் அவன் நெஞ்சில் படுமாறு. கலக்கம் தீர்வதற்குக் கூறியிருக்கிறான் 🙁பிசாசாந்தாநவாந்யஷாந் ருதிவ் யாம்சைவ ராக்ஷஸாந் |
அங்குள்யக்ரேணதாந் ஹந்யாம் இச்சன் ஹரிகணேச்வர| ) என்பது, அம்மிடுக்கைக் கூறிய வார்த்தையாம்.
இதின், கருத்து : ‘ ஸுக்ரீவ!பிசாசங்களையும். அஸுரர்களையும் இயக்கர்களையும்,
இப்பூமியிலுள்ள அரக்கர்களையும் இவர்களனைவரையும் அழியச் செய்யுமிடத்து, தம் பலம்
எல்லாம் வேண்டா ; ஆயுதமும் வேண்டா; நம் கைவிரலும வேண்டா; விரல் நுனியே
போரும் . ஆனால். நம் விரோதிகளுடையதிரள் குறி அழியாது இருப்பானேன்? என்னலாம். அருமையாலனறு, செய்யநாம் நினையாமல் இருத்தலே, அங்ஙனம் அத்திரள அழியாது இருததலுக்குக் காரணமாம். உயிர்நிலையிலே நலிந்த இராவணனை நலிய நினைவில்லாமல் இதுகாறும் இருத்தலுக்குக் காரணம்யாதோ? என்று வினவலாம்.இவவிபீஷணனைப் போனறு உயிரோடு தலைவணங்கினால் அவனும் அவனைச் சேர்ந்தோறும் வாழ்நது போகலாமன்றோ? இதுதான அங்ஙனம் இருத்தலுக்குக்காரணம். வாலியை நாம் அடித்துக் கொன்றபோதுதானே கிஷ்கிந்தையின் அரசுரி மையை நீ பெற்றுவானர வெள்ளங்களுக்குஅரசனானது” என்பதாம்.
இங்கு, பின்வருமாறு உண்மை உணரத் தக்கது: எவன் தன் இச்சையினால் இப் பிர
பஞ்சத்தைஆக்கி, அளிதது அழிக்கின்றனனோ,அவனே மிகமிக மேலான தெய்வம்” என்பது
வேதாந்தங்களின் உண்மைக் கருத்தாகும்.-அங்ஙனம் மிகமிக உயர்ந்த தெய்வம் இராம
பிரான என்பதை இவ்வுலகம் உணர்ந்ததேயாம். அந்த இராமபிரானுக்கு, ” இவ் இரா
வணனையும் இலங்கையையும் அழித்தல்” என்பது உண்மையில் ஒரு பொருளோ?
தேவதைகளுடைய வேண்டுகோளுக்குஇணங்கி தன் மேன்மையை, மற்றவர் அறி
யாது இருக்குமாறு, மானிட சரீரம் போன்றுள்ள தன் சரீரத்தினால் மறைத்துக் கொண்டிருக்குமவனும், இராவண வதமான பிறகும்,-பிரமன், சிவன் முதலானோர். இராமா! நீ நாராயணன்’ என்று உண்மையை உணர்ந்து கூறுங்கால், தன்னை மானிடனாகவே கூறிக்
கொண்டவனும், பரதேவதையும் பரமபுருஷ னுமான இராமபிரான், தானாகிய தருமத்தை
நிலைநிறுத்தும் இவ்விடத்து, மித்ர பாவேந் என்னும் வார்த்தை வாயிலாகத் தன் இயல்
பையும், “ஸர்வ தர்மான் ‘ என்னும் வார்த்தை வாயிலாகத் தன் திடமான எண்ணத்தையும் கூறிய அந்த அந்த அளவில் நில்லாது, தன் இச்சையினாலேயே இப் பிரபஞ்சத்தை ஆக்கி, அளித்து, அழிக்க வல்லவனுக்குஇலங்கையையும் இவ் இராவணனையும் அழித்தல் அருமையாமோ? என்று தனக்கே உரிய தெய்வத் தன்மையையும் வெளிப்படுத்திக்
கூறி, இம் முகத்தால். ‘ஸகரீவனாகிய ஆசரிதனுக்குத் தான் வயப்பட்டிருத்தல்’ என்னும்
தனக்கே உரிய சீர்மையையும் அழியவொட்டாது காத்து தனககுரிய தருமத் தன்மையை
யும் நிலைநிறுத்தி, விபீஷணனையும் வாழ்வித்தஇச்சரிதம் வெகு ஆச்சர்யமானதல்லவா?
இராமபிரான் இவ்வாறு அருளிச் செய்து மேலும் கூறிய வார்த்தை:(ஆநயை நம் ஹரிச்ரேஷ்டதத்தம் அஸ்யா பயம் மயா விபீஷணோவா ஸுக்ரீவ யதிவா ராவணஸ் ஸ்வயம் )என்பதாம்.
இவ்வார்த்தையின் கருத்தையும் முடிந்தபொருளையும் முறையே இங்குக் காண்போம்:
“ஸுக்ரீவனே! தன் வரவை இராகவனாகிய நம்மிடம் தெரிவிக்குமாறு இவ்விபீஷணன், வேண்டிக் கொண்டவனன்றோ? இவன் நெஞ்சாறல் தீர்ந்து நம்மிடம் சேர்ந்தானாவ
தும்.நாம் ஏற்றுக் கொண்டோமாவதும் நீ சென்று அவனை அழைத்து வந்தாலன்றோ?
ஆதலின், அவனை அழைத்து வருதல் வேண்டும். விட வேண்டிய எல்லாவற்றையும் விட்டிட்டு, நம்மைச் சரணம் புகுந்த இவனுக்குநம்மால் பயமின்மையானது அருளப் பெற்றுள்ளது. (இவ்வாறு கூறியதும் விபீஷணனை அழைக்கச் சென்ற ஸுக்ரீவனைக் குறித்து, திரும்பவும் இராமபிரான் கூறியதாவது) விபீஷணனைத் தானே அழைத்து வரும்படி கூறப் பட்டது என்று மீளாதே, இராவணன் தானே யாகிலும் அழைத்துக் கொண்டு வரவேணும், விபீஷணனைக் கைக் கொண்டோமாகில், தன்பக்கல் புண்ணியம் உடையோனை ஏற்றுக்கொண்டோமாவோம்; இவ் விபீஷணனுடன் வந்த இந்நான்கு இராக்கதரும் பிழைத்துப் போருவர் ; வந்தவன் உண்மையில் இராவண னாயிருந்து, அவ் இராவணனை ஏற்றுக் கொண் டாலோ,அப்போதுதான், இராமபிரானாகிய நமக்கு நிறமுண்டாம்; இலங்கையிலுள்ள இராக்கதர் அனைவரும் வாழ்ந்து போருமாறு நோக்கினோமாவோம். நமக்கு வரும் ஏற்றம்முழுவதும் உயிர்த்தோழனான உன்ன தன்றோ?
என்னும், இதுவே மேற்கூறிய வார்த்தையின்உண்மைக் கருத்தாகும்.
இங்கு, ஸுக்ரீவன் இசைந்ததும், இராமபிரான் தானே நேரே விபீஷணனை அழைத்து
ஏற்றுக்கொள்ளாது, ஸுக்ரீவனையிட்டேஅழைத்து வருமாறு ஏவியிருப்பதற்குக் கருதது
யாதோ? எனின், கூறுவோம் :
இராமபிரானுக்கு ‘ஆச்ரிதபாரதந்திரியம்’ என்னும் செல்வம் உண்டு; அதாவது,
தன்னைப் பற்றியவனுக்கு வயப்பட்டிருத்தலாம்” என்று இக்கட்டுரையில் அடிக்கடி கூறி
வருகிறோம் அல்லவா ? தானே விபீஷணனைஅழைத்து ஏற்றுக்கொள்ளும்போது, அச்செல்
வம் இவன் பால் நிலைபெற்றிருக்குமோ ? அழிந்து விடாதோ? ஆதலின், ஸுக்ரீவனை இட்டே அழைத்து ஏற்றுக் கொண்டனன்.-இது நம் ஆசாரியர்களாலே இங்கு ஸமாதானமாய்க்கூறப் பெற்றுள்ளதொரு உண்மைக் கருத்தாம்.
மேலும், விபீஷணன் இராமபிரானிடம் அளவற்ற அன்பு உடையவன். அவ்விபீஷண
னைக் கொல்லவேண்டும்” என்று ஸுக்ரீவன் கூறியது, அவ்வாறு கூறிய ஸுக்ரீவனுக்குப்
பெரிய பாவமன்றோ ? ” தன்னை விட்டிட்டு, தன் அடியார் திறத்தில் அன்பைச் செய்தல்நன்றாம் என்பதும், “அங்ஙனம் அன்புசெய்யாது இருத்தல், பெரிய பாவம்” என்பதும்,
” அப்பாவம் உள்ளவன் மாத்திரமேயன்றி, அவனோடு தொடர்பு பெற்றிருக்கும் இப்பிர பஞ்சமும் அழிந்துவிடும்” என்பதும் பரமபுரு ஷனாலேயே கூறப்பெற்றுள்ள உயரிய உண்
மைக் கருத்துக்கள் அல்லவா?உண்மை இங்ஙனம் இருக்க, ஸுக்ரீவன்,
விபீஷணனைக் கொல்ல வேண்டும்’ என்று கூறியிருப்பது மிகமிகப் பெரிய பாவமன்றோ?
இராமபிரான, ஆச்ரிதரிடம் மிக்க அன்பு பெற் றிருப்பவனாதலினாலும், ஸு க்ரீவன் அவ் ஆச்ரிதருள் ஒருவனாதலினாலும், அந்த ஸுக்ரீவன்பாவம் தீர்ந்து நன்மை பெறுமாறு திருவுள்ளம்பற்றி, அந்த ஸுக்ரீவனையே அழைததுவர நியமித்தருளினான்’ என்பதும் இங்கு ஓாஉண்மைக் கருத்தாகும்.
இன்னமும், இங்கு அறியவேண்டுவதோர்உண்மை உண்டு: எம்பெருமானை ஜீவன பற்றும் பற்றுதல், “ஸ்வகத ஸ்வீகாரம்” எனப்படும் எம்பெருமான் ஒரு சேதனனைத்
தனக்குக் காக்கத தககவனாய்க கருதி, அவனே இவனை மேல் விழுந்து ஏற்றுக்கொளளுதல் என்பதை ‘பரகத ஸவீகாரம்” என்று பகருவர். இங்கு,முன்னது 
” (முமுக்ஷர்வை சரணமஹம் ப்ரபத்யே)என்னும் வாக்கியமும்,பின்னதுக்கு,
தேநலப்ய = எந்தச் சேதனனை எம்பெருமான்மேல் விழுந்து விருமபுகின்றனனோ, அவனால்
அப்பெருமான் அடையத் தக்கவனாம்) என்னும் வாக்கியமும் தக்க சான்றுகளாம்.
“ஜீவன் எமபெருமானைப் பற்றுமபோது எங்ஙனம் பிராட்டியாரை முன்னிட்டுப் பற்று
கின்றனனோ,அங்ஙனமே, எம்பெருமானும் ஒரு சேதனனை மேல் விழுந்து ஏற்றுக்கொள்
ளும போதும், பிராட்டியாரையோ, அல்லது, பிராட்டியார்ஸதாநத்தில் உள்ள ஒரு பாகவ
தோததமனையோ, முன்னிட்டே ஏற்றுக் கொள்கின்றான் என்பதும் ஒர் உயரிய
உணமையாகும்இம்முறையை, இந்த இராமயணத்தில் பலஇடங்களில் நாம் காணலாகும். எங்கே?என்னில், கூறுதும்.
ஸீதாபிராட்டியாரை முன்னிட்டு, ச்ருங்கி பேர புரத்தில் குகனை ஏற்றுக்கொண்
டிருத்தலை, நாம் காணலாம் 🙁குஹேந ஸஹிதோராம 🙂 என்னும் வாக்கியம் இங்குக் காணத்
தக்கது. இல்வாக்கியத்தில், “குஹன் இராமபிரானோடு சேர்ந்தனன்” என்று கூறப் பெற்றிலது; ‘இராமபிரான் குஹன் இருக்குமிடம்எழுந்தருளி அக்குஹனோடு சேர்ந்தனன்”
என்றே கூறப் பெற்றுள்து. இதனால், எம்பெருமான், சேதனனை அவனிருக்குமிடம்
எழுந்தருளி மேல் விழுந்து ஏற்றுக் கொள்கி றான்‘ என்பது தெளிவு.
இங்ஙனம் ஏற்றுக் கொள்ளும் போது,
ஸீதாபிராட்டியாரை முன்னிட்டே ஏற்றுக்கொண்டனன், இராமபிரான்‘ என்பதை
திருமங்கை மன்னன், “மாழை மான் மடநோக்கி” என்னும் வாக்கியத்தினால் அருளிச்
செய்திருக்கிறார்; காணலாம்.
இந்தக் குஹன் சரிதம் போன்றே, இவ்விபீஷணன் சரிதமும் உள்ளது. (விபீஷணே நாசு ஜகாம ஸங்கமம்) என்பது இங்கே வாக்கியம், இவ்வாக்கியத்திலும் இராமபிரான் விபீஷணனோடு சேர்ந்ததாகவே கூறப் பெற்றுள்ளது.
இங்கு ஸீதாபிராட்டியார் ஸ்தாநத்திலுள்ள ஸுக்ரீவனை முன்னிட்டு விபீஷணனை இராம
பிரான் ஏற்றுக் கொண்ட இவ்வுண்மை,
“ஆநயைனம் ஹரிச்ரேஷ்ட” என்னும் வார்த் தையில் தெளிவு.
ஆனால் “ஜீவாத்மா எம்பெருமானைப் பற்றும்போது, தான்,குற்றக்கடலாயிருக் கின்றமையின், பிராட்டியாரை முன்னிடுகிறது, அக்குற்றங்களைப் பொறுத்தற்கு என்னலாம்.எம்பெருமான் சேதனனைத் தனக்குத் காக்கத் தக்கவனாகக் கருதி, மேல் விழுந்துஏற்றுக்கொள்ளும் போது பிராட்டியாரையோ, அல்லது அந்த ஸ்தாநத்தில்
உள்ளஒரு பாகவதோத்தமனையோ,முன்னிடுதல், எப்பயனைக் கருதியோ ? இவ் எம்பெரு
மானுக்குக் குற்றம் சிறிதும் இல்லையன்றே?”எனச்சிலர் இங்கு ஐயமுறக்கூடும்.
இதின் பரிஹாரம் :
எம்பெருமானுக்கும் குற்றம் உண்டு; அக்குற்றம் யாதோ? எனில், எம்பெருமானுக்கும்
சேதனனுக்கும் உள்ள தொடர்பு என்றும் உள்ளது ; ஒழிக்க ஒழியாதது. இவ்வாறான
தொடர்பையும், தன்னுடைய நீர்மைக்குணங்களையும் இது வரையில் பாராது, இச்
சேதனன் செய்த குற்றங்களையே கண்டு,இவனை விலக்கி ஸம்ஸாரத்தில் வைத்திருந்
தானாதலின், இப்போது மேல் விழுந்து ஏற்றுக்கொள்பவ னாயிருந்தும், இவ் எம்பெருமானை இச்சேதனன் வெறுத்து விலகக்கூடுமன்றோ ? இவ்வாறு விலகாது இச்சேதனன் தன் வயத்திலே வரவேண்டி எம்பெருமானுக்கும் பிராட்டியாரையோ அவர் ஸ்தாநத்தில் உள்ள வரையோ முன்னிடுதல் இன்றியமையாததாம்.
இங்கு ”இவன் முன்னிடுமவர்களை அவன் முன்னிடும் என்னுமிடம் அபயப்ர தானத் திலும் காணலாம். இருவர் முன்னிடுகிறதும் தந்தாம் குற்றங்களைச் சமிப்பிக் கைக்காக.
என்னும் பிள்ளைலோகாசார்யர் திருவாக்கு-அனுபவிக்கத் தக்கது.
இவ்வாறு இராமபிரான் விபிஷணனை நேரே ஏற்றுக் கொள்ளாது, ‘ஸு க்ரீவனை அழைத்து வா’ என்று அருளிச் செய்திருப்ப தற்கு, பல உண்மைகளைக் கண்டோம்.
இவ்விடத்து, ஸுக்ரீவன் இராமபிரான்நியமனப்படி அழைத்து வர விபீஷணனும்
வந்து, அவ் இராமனைக்கிட்டி, வணங்கிவாழ்ந்துபோனான் என்பது சரித்திர உண்மை.
இங்கு, எம்பெருமானாகிய தருமம் நிலை நிறுத்தப் பட்டிருத்தலையும் கண்டோமல்லவா?
ஆக, ” திருமகள் கொழுநனான எம்பெருமான், இவ்வுலகில் செய்தருளின திருஅவதாரங்களுள் இராமாவதாரம் மிகச் சிறந்தது”‘என்பதும், அங்ஙனம் அவ் எம்பெருமான்திருவவதாரம் செய்தபோது, அவனைக் கூறும் வேதமும், வால்மீகி முனிவனிடமிருந்து இராமாயணமாகத் திரு அவதாரம் செய்திருக் கிறது’ என்பதும், ” அந்த இராமாயணம் மிக்க சிறப்பு பெற்றுள்ளது ” என்பதும், ”வீடு பேற்றை விரும்புகின்றவன் அவசியம் அறிய வேண்டும் பொருள் ஐந்து; அவை பரமாத்மா, ஜீவாத்மா, உபேயம், விரோ தி, உபாயம் என்பன” என்பதும், “ நாராயணன் பரமாத்மா, ” அப்பரமாத்மாவிற்குச் சேஷமாயும் பரதந்திரமாயும் இருப்பவன் ஜீவன்’ அப்பரமன் திருவுள்ளம் உ க்குமாறு
அடிமை செய்தலே வீடுபேறு என்னும் உபேயம் அப்பேற்றைஇதுவரையில் இந்த ஜீவன்
அடையப் பெறாது தடை செய்யும் அஜ்ஞானம் முதலியன விரோதி’ ” இவ்விரோ தி
போவதற்குத் தக்க ஸாதனம் பக்திப்ரபத்திகள்’ என்று வேதாந்தம் கூறுகின்றது ” என்பதும், “வேதத்தின் திரு அவதாரமான இராமாயணமும், வேதாந்தம் கூறுகின் றவாறு ஐம்
பொருளையும் நன்கு விளக்கிக் கூறுகின்றது’என்பதும், “ வேதாந்தம் மாத்திரம், தான்மிகச்சிறந்த பிரமாணமாயிருந்தும். இவ்ஐம் பொருளையும் கலக்கம் சிறிதும் இன்றி அறிவிக்க மாட்டாதாதலின், அவ்வேதாந்தம் மீமாம்ஸா சாஸ்திரம், இதிஹாஸமான இரா
மாயணம் இவற்றின் உதவியை விரும்புகின்றது என்பதும் “மீமாம்ஸா சாஸ்திரம்
செய்யும் உதவி சிறந்ததாயிருந்தும், மேதாவி களுக்கே அது பயன்படும்” என்பதும், ” இரா
மாயணம், பெண்ணுக்கும் பேதைக்கும் விளங்குமாறு, நன்கு உதவி புரிகின்றது” என்பதும், இவ் இராமாயணம் மேற்கூறிய ஐம்பொருளையும் நன்கு விளக்கிக் கூறுகின்ற
தாயிருப்பினும், சரணாகதி என்னும் உபா யத்தையே விளக்கிக் கூறுவதில் அது மிக்க
நோக்குடையது என்பதும், “இதனாலேயே சரணாகதி சாஸ்திரம் ‘ என இராமாயணம்
பெயர் பெற்றிருக்கிறது’ என்பதும், ” சரணாகதி தருமத்தைப் பற்றிய பல உண்மைகளை
இராமாயணம் அந்த அந்த இடத்தில் விரிவா கவும்,தெளிவாகவும், அழகாகவும் கூறுகிறது
என்பதும், இக்கட்டுரையின் பலபகுதிகளிலும் அறியக்கிடக்கின்ற ஸாரப் பொருள்கள் என
விளங்குகின்றன அல்லவா? 

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கார்ப்பங்காடு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண தர்மம்-ஸ்ரீ அகர இராமாயணம்!-

April 7, 2025

ஸ்ரீ இராமாயண தர்மம்– ராமாயணம். என்ற சொல் “ராமஸ்ய அயனம்’ எனப் பிரிந்து இராம சரிதமெனவும்-ராம : அய்யதே அனேன இதி – ராமாயணம் எனப் பிரிந்து இதனால் இராமன் அடையப்படுகிறான் எனவும் பொருள்படும்.-இன்னும் ‘ரமாய இதம் சரிதம் – ராமம், தஸ்யாயன மிதி,ராமாயணம்’ எனப் பிரித்து, சீதாப் பிராட்டியின் சரிதமெனச் சாற்றலுமுண்டு.-‘காவ்யம் ராமாயணம் க்ருத்ஸநம் ஸீதாயாச் சரிதம் மஹத்-“மேன்மையான ஸீதா சரித்திரமாயும், மஹா காவ்யமுமான இராமாயணத்தை” என்பது இதை வலியுறுத்தும்.

தருமம்: உலகத்தைத் தரிப்பதால், போஷிப்பதால், தருமமென்று சொல்லுகிறார்கள்.
வேத : ஸ்மருதி: ஸதாசார : ஸ்வஸ்யச ப்ரிய மாத்மான :
ஏதத் சதுர் விதம் பராஹு : ஸாஷாத் தர்மஸ்ய லக்ஷணம்’-
என தருமத்திற்கு நான்கு ப்ரமாணங்கள் ஏற்பட்டிருக்கின்றன-அதாவது,ஒரு விஷயம், தருமமென நிச்சயிப்பதற்கு அது
(1) வேதோக்தமாக இருக்க வேண்டும் அல்லது
(2) ஸ்மிருதியிலாவது கூறப்பட்டிருக்க வேண்டும். அல்லது
(3) அது ஸத் புருஷர்களால் அனுஷ்டிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.அல்லது
(4 )அது மனதிற்கு இனிப்பாகவும் ஆனந்த கரமாகவும் இருக்க வேண்டும்.

இந்த நான்கு பிரமாணங்களுக்கு, ஸ்ரீராமாயணம் பொருத்தமா யிருக்கிறதோ வென்னில் –
முதலாவது:- வேதம். “வேதமு மற்றுஞ் சொல்லு மெய்யற மூர்த்தி வில்லோன்.“” என்றும் –கைவிலேந்தி இலங்கையிற் பொருதாரன்றே மறைகளுக் கிருதி யாவார்.”(கம்பர்)-என்றபடி,வேதத்தினால் அறியும் படியான பரம் புருஷன்,ஸ்ரீராமனாக அவதரித்த போது,–வேத: ப்ராசேதஸா தாஸீத் ஸாஷாத் ராமாயணாத்மநா--அவரை அறிவிக்கிற வேமும், வான்மீக முனிவரினின்றும் நேராய் ஸ்ரீமத் ராமாயண ஸ்வரூபத்தினாலே அவதரித்தது.–இதம் பவித்ரம் பாபாக்னம், புண்ணியம் வேதைச் ச சம்மிதம் !இந்த ஸ்ரீ ராம சரிதமானது,பரிசுத்தம் செய்யத் தக்கதும்,பாபங்களை நாசஞ் செய்ய வல்லதும், நன்மைகளை விளைவிக்கத் தக்கதும், வேதங்களோடு சமானமானதுமா யிருக்கின்றது.
இந்த இரண்டு ஆதாரங்களினால், முதலாவது பிரமாணமாகிய வேதத்திற்கு பொருத்தமாகிறது.

இரண்டாவது:- ஸ்ம்ருதி.
தர்ம சாஸ்த்ர ரதா ரூடா வேதகட்கதரா த்விஜா : கரீடார்த்த மபி யத் ப்ரூயு: ஸ தர்ம; பரம ஸ்மருத || (
போதாயனாச்சாரியார்)-வேதத்தை நன்றாய் அப்யசித்தவர்கள் ஸத் புருஷர்கள். அவர்களால் வேதார்த்தங்களைச் சுருக்கிச் சொல்லப் பட்டவைகளே ஸ்மருதிகளாம்.
“ஸ்ரீ ராமாயணம் (2 வது சர்க்கம்.)
‘மச் சந்தா தேவ தே ப்ரஹ்மந் பிரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குருத்வம் ரிஷி ஸத்தம
ந தே வாக ந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி “-

நான்முகக் கடவுள் வான்மீகரை நோக்கி நம்முடைய சங்கல்பத்தினாலேயே இந்த ஸரஸ்வதி உம்முடைய வாக்கிலிருந்து தோன்றினாள். நீர் ராம சரிதத்தை ஒரு பிரபந்தமாகச் செய்யக் கடவீர். நீர்செய்யுங் காவியத்தில் ஒரு சொல்லும் பொய்யாகாமலிருக்கும்.” என்றருளிச் செய்த பிரகாரம், வான்மீக முனிவரால் இராமாயணம் செய்யப் பட்டத்தினால்,இதை ஒரு ஸ்ம்ருதியாகச் சொல்லத் தடையில்லை.

மூன்றவது:- ஸதாசாரம்= (ஸத் புருஷரால் அனுஷ்டிக்கப் பட்டது)
பால காண்டம் முதலாவது சருக்கத்தில் 2- முதல் 4-சுலோகங்களினால், வான்மீக முனிவர் நாரத மகரிஷியைநோக்கி சுவாமி! இவ் வுலகத்தில், இக் காலத்தில், சகல கல்யாண குணங்களும் சவுசில்ய குணமும் மற்றும் அநேக குணங்களுடன் தருமத்தை நன்றாயறிந்த சத் புருஷனைக் கேட்டறிய அடியேன் விரும்புகிறேன்.-அடியேனுக்கு தேவரீர் அருளிச் செய்ய வேண்டும் என்று வினாவின் பொழுது நாரத மகரிஷி, மிகுந்த களிப்புடன் “ஒய் முனிவரே! நீர் கேட்ட குணங்களெல்லாம் பொருந்திய புருஷனைச் சொல்லுகிறேன் கேளும்–இசுவாகுவம்ஸ் ப்ரபவோ ராமோ நாம ஜநை : ஸ்ருத-‘இக்ஷவாகு குலத்தில் அவதரித்த ஸ்ரீராம பிரான் என்பவர் தான்”என விடை யளித்திருக்கிறார்.-இதனால் ஸ்ரீராம பிரான் ஸத் புருஷன் என்றும் அவரால் அனுஷ்டிக்கப் பட்டவை ஸதா சாரம் என்றும்,ஏற்படுவதால், மூன்றாவது ப்ரமாணமும் பொருத்த மாகிறது.

நான்காவது:- ஆத்ம ஸந்துஷ்டி.
“பாட்யே கேயே ச மதுரம் –
” ஹ்லாதயத் ஸர்வ காத்ராணி மநாம்ஸி ஹ்ருதயாநிச
“–இந்த ராமாயணம், மனதிற்கும், இருதயத்திற்கும், மிகக் களிப்பாக இருக்கின்றது என்று 4 வது சருக்கத்தில் கூறப்பட்டிருக்கின்றது.-இதனால் நான்காவதான ப்ரமாணமும் பூர்த்தி யாகின்றது

“ராமோ விக்ரகவான் தர்ம ஸாது: ஸத்ய பராக்ரம :-ஆரண்ய-37- 13.-ஸ்ரீ ராமன் உருவங்கொண்ட தருமம் போலும்,நற் குண முடையோனும், உண்மையான தோள் வலியுற்ற வனுமாகின்றனன். ” என இராவணனுக்கு,ராம த்வேஷியான மாரீசன் உரைத்த வசனம்.
யஸ்மின் ந சலதே தர்மோன யோ தர்மம் நாதி வர்த்ததே ஸ ஏஷ ராம;-யுத்த-. 28-19.
எவரிடமிருந்து தருமம் சலிக்க வில்லையோ எவர் தருமத்தை விட்டு விலக வில்லையோ, அவரே இந்த இராம பிரான்.”என, இராவணனைப் பார்த்து சுகனுடைய வசனம்.

தர்மாத்மா சாத்ய சந்தஸ்ச ராமோ தாசரதிர் யதி
பெளருஷே சா ப்ரதி த்வந்த: ததைனம் ஜஹி ராவணிம்
| ”(யுத்த- 91. 69.) ” ஸ்ரீராம பிரான் தர்ம ஸ்வரூபி என்பதும்,சொன்ன சொல் தவறாதவர் என்பதும், இணை யற்ற பராக்கிரம முடையவரென்பதும் உண்மை யாயின், இந்த பாணம் இந்திரஜித்தை ஹதம் செய்யட்டும்.” என சபத பூர்வமா யுரைத்த, இளைய பெருமாளுடைய வசனம்
‘ஏக பத்நீ ரததரோ ராஜர்ஷி சரித சுசி:]
ஸ்வதர்மம் க்ரு மேதியம் சிசுப ஸ்வய மாசரந்
“(ஸ்ரீமத் பாகவதம் – 9 -10- 55.)ஸ்ரீ இராம பிரான் ஏக பத்நீ விரதத்துடன், சுத்தராக கிருஹஸ்த தர்மத்தைத் தாம் அனுஷ்டித்தார். ஜனங்களும் அதனைக் கண்டு அவர் அவர்கள் தர்மத்தை விடாமல் செய்தார்கள்.” என பரிக்ஷித்து மஹாராஜனை நோக்கி, சுகப் பிரம்ம ரிஷியின் வசனம்

தோன்றிய நல்லற நிறுத்தத் தோன்றினான்” அயோத்தி நகர் -நீங்கு 163
நல்லற நிறுத்த நணுகித், தாமராவணை துறந்து தரை நின்றவரை “‘ ஆரணி – விராத-30.-இராம பிரான் உலகத்தில் தருமத்தை நிலை நிறுத்தவே அவதரித்திருப்பதாக கவிக் கூற்று.

”சூரறுந்தவனுஞ் சுடர் நேமியு மூரறுத்த வொருவ மோம்பினும்
ஆரறத்தி னொடன்றி நின்றாரவர்
வேரறுப்பென் வெருவன் மினீரென்றான்
.”-(ஆரணி-அகத்தி 22)
“வெம்பு கண்டகர் விண் புக வோறுத்
திம்பர் நல்லறஞ் செய்ய வெடுத்தவிற் கொம்பு முண்டருங் கூற்ற முமுண்டுங்க
ளம்பு முண்டென்று சொல்லு நம் மாணையே
.”(கிட்கிந்தை 4)
உலகத்தில், துஷ்ட நிக்கிரகமும்,தர்ம ஸம் ஸ்தாபனமும் செய்வதற்காக, தாம் அவதரித்திருப்பதாக, இராம பிரானுடைய வசனம்”
பின்னை யேது முதவுந் துணை பெறாளுரை பெறாண்
மின்னையே யிடை நுடங்கிட விரைந்து தொடர்வா
ளன்னையே யனையவன் பினாவோர் கடமை விட்
டென்னையே நுகர்தி யென்றன ளெழந்து விழவாள்.
“( ஆரணி- விராத-39)
இராம, லெட்சுமணர் உலகத்துக்கெல்லாந் தாயைப் போன்ற அன்பினை யுடைய தரும் ஸ்வரூபிகள், என சீதா பிராட்டியின் வசனம்,
ஓயாத மலரயனே முதலாக வுளராகி மாயாத வானவர்க்கு மற்றொழிந்த மன்னுயிர்க்கு
நீ யாகின் முதற் றாதை நெறி முறையா லீன்றெடுத்து
தாயாவார் யாவரே தருமத்தின் றனி மூர்த்தி
.”(ஆரணி – விராத 52)
பிரம்ம தேவன் முதலான சகல தேவர்களுக்கும்,உலகத்திலுள்ளஉயிர்களக்கும், இராம பிரான் முதல் தந்தை யெனவும், தரும ஸ்வரூபி எனவும், விராத ஸ்தோத்திரம்.
” இருவர் மானிடர் தாபத ரேந்திய
வரி வில் வாட் கையர் மன்மதன் மேனியர்
தரும நீரர் தயரதன் காதலர்
செருவி னேரு நிருத்ரைத் தேடுவார்.
ஒன்று நோக்கலருந் வலியோங்கற
னின்று நோக்கி நிறுத்து நினைப்பினர்
வென்றி வேற்கை நிருதரை வேரறக்
கொன்று நீக்குது மென்று துணர் கொள்கையார்
‘ (ஆரணி- கா.4,5)

இராம லக்ஷ்மணர்கள் தரும சிந்தை யுடையவர்கள், சிறந்த தரும வழியிலே தாங்கள் நினறு ஆராய்ந்து அத் தருமத்தை உலகமெங்கும் நிலை பெறச் செய்யுங் கருத்துடையவர்கள், என கரனிடம் சூர்ப்பனகை வசனம்.
சங்கு சக்கரக் குறியுள தடக்கை யிற் றாளி லெங்கு மித்தனை யிலக்கணம் யாவர்க்கு மில்லை -செங்கண் விற் கரத்தி ராமனத் திரு நெடுமாலே யிங்குதித்தன னீண்டற நிறுத்துதற் கின்னும் “(கிட்கி- மராமர – 117)
கோதண்ட பாணியான இராமன், தர்ம ஸம் ஸ்தாபனத்தின் பொருட்டு இங்கு திருவவதரித்த ஸ்ரீ மஹா விஷ்ணு வென்பதாக சுக்ரீவ மகாராஜனிடம், தெரிவித்த நவ வ்யாகரண பண்டிதரான திருவடியின் வசனம்.
உழைத்த வல் லிருவினைக் கூறு காண்கலா
தழைத் தயருலகினுக் கறத்தினாறெலா
மிழைத்த வற் கியல் பல வியம்பி யென் செய்தாய்
பிழைத்தனை பாவியுந் பெண்மையா லென்றான்
“‘(கிட்கி. வாலி வதை. 22)
பல பிறப்புகளில் தாம் செய்து சேர்த்த கொடிய கருமங்களை யொழிக்கும் உபாயத்தைக் காணாமல் வருந்திக் கதறுகின்ற உலகத்தவர்கள் உய்யுமாறு அவதரித்துத் தர்ம மார்க்கங்களை யெல்லாம்.தான் அனுஷ்டித்துக் காட்டும் புருஷோத்தமனான இராம பிரான்,என்பதாக, தாரையிடம் கூறிய வாலியின் வசனம்.
“அற மன்னானுட னெம்பி யன்பினோ
டுற வுண்ணா வுயிரொன்ற வோவினான்
பெற வொண்ணாத தொர் பெற்றி பெற்றவற்
கிற வென்னா மிதினின்ப மியாவதோ.
“(கிட்கி. சம்பாதி45)
தர்ம ஸ்வரூபியான இராம பிரான் திறத்தில் ஜடாயு வுயிரைக் கொடுக்க நேர்ந்தது பெரும் பாக்கியமென்று வானரரிடம் சம்பாதி வசனம்.-இத்யாதி வசனங்கள் ஸ்ரீமத் ராமாயணத்தில் ஸ்ரீராம சரித்த்தினாலே தரும ஸ்வரூபமும், தர்மானுஷ்டானமும் வர்ணிக்கப் பட்டிருக்கின்றன வென்பதற்குப் போதிய சான்றாகும்,

இராமாவதார காலம்.
” பயம் த்யஜ்த பத்ரம் வோ ஹிதார்ததம் யுதி ராவணம்
ஸ புத்ர பெளத்ரம் ஸமாதயம் ஸமித்ராஜ்ஞாதி பரந்தவம் | “”ஹத்வா க்ரூரம் துராத்மானம் தேவ ரிஷிணாம் பயாவஹம் தச வருஷ ஸஹஸ்ராணி தச வருஷ சதாநிச
வத்ஸயாமி மாநுஷே லோகே பாலயன் ப்ருத்வீ மிமாம்
.”-பாலகாண்டம்- 15- 28, 29.
“ஓ தேவர்களே! இனி அச்சம் என்பதை விட்டு விடுங்கள்; உங்களுக்கெல்லாம் நன்மையே உண்டாகும். அந்தத் துராத்மாவான இராவணனை அவனுடைய பரிவாரங்களோடு சங்கரித்துப் பூலோக பரிபாலனஞ் செய்து கொண்டு பதினோராயிரம் வருடமிருப்பேன்” என்று தன்னைச் சரணமடைந்த தேவர்களை நோக்கி ஸ்ரீ மஹாவிஷ்ணுவானவர் அருளிச் செய்தனர்.
”க்ருதே யுகே வயதீ தேவை முகே திரேதா யுகஸ்யது ஹிதார்த்தம் தேவ மர்த்யானாம் பவிதா ருப விக்ரஹ இஷ் வாஹு ணாம் ச யோ ராஜா பாவ்யோ தசரதோ புவி
தஸ்ய ஸூநுர் மஹா தேஜா ராமோ நாம பவிஷ்யதி
.–உத்-கர் 37 – க்குப்பின் ப்ரக்ஷிப்த சரு-18,19.ஸனத்குமார முனிவர் இராவணனை நோக்கி சொன்னது – ” க்ருத யுகம் கழிந்த பின்னர் த்ரேதா யுகத்தின் துவக்கத்தில் தேவர்களுக்கும் மனுஷ்யர்களுக்கும் ஹிதமியற்றுமாறு இஷ்வாகு குலத்திலே தசரதனென ஒரு ராஜன் ஜனிப்பான்; அந்தத் தசரத மஹா ராஜனுக்குப் புதல்வனாய் ஸ்ரீராமனென்னும் ஒருமாஹாநுபாவன் அவதரிக்கப் போகின்றனன் என உரைத்தனர்.
த்ரேதா முகே தாசரதிர் பூத்வா ராமோஹம் அவ்யய :
உத்பத்ஸ்யே பரயா சக்த்யா ததாத்ரக்ஷயஸி மாம் தத
–3.அத்யாத்ம ராமா . பால-7-255, 263- அழிவற்ற நான் த்ரேதா யுகத்தில் தசரத சக்ரவர்த்திக்குக் குமாரனாக அவதாரஞ் செய்யப் போகிறேன். அப்போது மறுபடியும் நீ என்னைப் பார்க்கப் போகிறாய் ” என்பதாக ஸ்ரீ மஹாவிஷ்ணு தனக்கு வரமருளி யிருப்பதாக பரசுராமர் ஸ்ரீ ராமபிரானிடம் விண்ணப்பஞ்செய்தனர்.
த்ரேதா யுகே தாசரதிர்பூத் நாராயண: ஸ்வயம் | ஆகமிஷ்யதி தே பாஹுச் சித்யேதே யோஜனாயதெள் தேனசாபாத் வினிர் முக்தோ பவிஷ்யஸி யதா புரா!–அத்யாத்ம -ராமா -ஆரண்ய -9-19-ஸ்ரீமந் நாமாயண மூர்த்தி த்ரேதா யுகத்தில் தசரத குமாரனாக பூமியில் அவதாரமெடுத்து, ஸ்ரீ ராமனென்னும் திரு நாமத்துடன் வரப் போகிறார். அவர் திருக் கரத்தால் உன் கரங்கள் சேதிக்கப் படுங்காலம், உன் சாப விமோசன காலமாகும். ” என்பதாக அஷ்டவக்ர முனிவர் தனக்கு உரைத்திருப்பதாய் கபந்தாசுரன்ஸ்ரீ ராம பிரானை நோக்கிக் கூறினன்.

புராஹம் ப்ரஹ்மண ப்ரோக்தா ஹ்யஷ்டா விம்சதி பர்யயே |த்ரேதா யுகே தாசதீராமோ நாராயணோ அவ்யய: -சுந்தர-1-48.”இருபத்தெட்டாவது பரிவிருத்தியில் த்ரேதா யுகத்தில் சாஷாத் நாராயணன் தசரத குமாரனாகிய ஸ்ரீராமனாக அவதரிக்கப் போவதாய் ப்ரஹ்ம தேவர் என்னிடம் அருளிச் செய்திருக்கிறார் ‘ என்பதாக இலங்கணி என்பவள் திருவடி யிடம் உரைத்தனள்.

ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமி கெதிதெள நக்ஷத்ரெ அதிதி தைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ் தேஷு பஞ்சஸு க்ரஹேஷ. கர்க்கடெ லக்நே வாக் பதா விந்தூ நாஸஹ ப்ரோத்ய மாநெ ஜகன்னாதம் ஸர்வ லோக நமஸ்கிருதம் கௌஸல்யா ஜநயத் ராமம் ஸர்வ லக்ஷண ஸம்யுதம் விஷ்ணொ சர்த்தம் மஹா பாகம் புத்ர மைஷாவாக வர்த்தகம் —பால -9-10-11–பின்பு பன்னிரண்டாவது மானமான சித்திரை மாஸத்தில் நவமி திதி புநர் வஸு நக்ஷத்திரம் கூடின தினத்தில் ஐந்து க்ரமங்கள் உச்சமாயிருந்த வளவில்,கர்கட லக்நத்தில், குரு சந்திரனோடு கூடியிருந்த வளவில், கௌஸல்யா தேவி, ஸகல ஜகத்துக்கும் நாயகராய், ஸமஸ்த பிராணிகளுக்கும் வந்தநீயராய், சாமுத்ரிக சாஸ்திரத்திற் சொல்லிய ஸமஸ்தமான உத்தம புருஷ லக்ஷ்ணங்களோடு கூடினவராய், விஷ்ணுவினுடைய பேர் பாதி பாகத்தினாலுண்டானவராய், மஹா பாக்யவானாய், பித்ருக்களை நரகத்தில் நின்று முத்தரிப்பிக்குமவராய், தசரத மஹா ராஜனுடைய மனோல்லாசத்தை வ்ருத்தி பண்ணுபவரான ஸ்ரீ ராம பிரானைப் பெற்றனள்.

ஒரு பகலுலகெலா முதரத்துட் பொதிந்
தரு மறைக் குணர் வரு மவனை யஞ்சனக்
கரு முகிற் கொழுந் தெழில் காட்டுஞ் சோதியைக்
திருவுறப் பயந்தன டிறங்கொள் கோசலை. “‘
” மேட மா மதி திதி நவமி மீன் கழை நீடுறு மாலை கற்கடக நீதி சேர்
ஓடை மா களிறனானு தயராசி கோள் நாடினே காதசர் நால்வருச்சரே.”-பால-கா. திரு அவதாரப் படலம்-104, 110.

இந்த ஆதாரங்களினால், வைவஸ்வத மன்வந்தரத்தில் 28- வது சதுர் யுகமான த்ரேதா யுகத்தில் சித்திரை மாஸத்தில் சுக்ல பக்ஷ நவமி திதி, புனர்வசு நஷத்திரம் கூடிய சுப தினத்தில் ஸ்ரீமந் நாராயணனே தசரத சக்கரவர்த்திக்குத் திருக் குமாரராக ஸ்ரீராமனென்னும் திரு நாமத்துடன் அவதாரம் செய்ததாக ஏற்படுகிறது.

தச வர்ஷ ஸஹஸ்ராணி கதாநி மஹாத்மனோ-உத்-42-26-பதினாயிரமாண்டுகள் பெருமையாகச் சென்றன.அப்ரவீச்ச வராரோஹாம் ஸீதாம் ஸூர ஸுதோபமாம் அபத்ய லாபோ வைதேஹி தவய்யயம் ஸமுபஸ்தித: கிமிச்சஸி வராரோஹேகாம : கிம் க்ரியதாம் தவ – உத்-42-31, 82 ஒரு நாள் ஸ்ரீராம பிரான் ஜானகியை நோக்கி ஹே.வைதேஹி! நீ கர்ப்பந் தரித்திருப்பது எனக்கு மிகவும் களிப்பைத் தருகிறது. இப்பொழுது நீ யாது விரும்புகின்றனை? நீ யாது வேண்டினும் அதனை யான் நிறைவேற்றுவேன் ” எனக் கூறினார். அதற்குப் பிராட்டி, கங்கைக் கரையிலுள்ள மிகப் பரிசுத்தமான தபோ வனங்களுக்குச் சென்று, அங்கு, மகரிஷிகளுடைய பாத மூலத்திற் சிலநாள் பணிவிடை செய்து ஆனந்தமனுபவிக்க வேணுமென்ற ஆசை யிருப்பதாகத் தெரிவித்தாள்.

அந்த சமயம் ஸ்ரீராமபிரான் சீதாபிராட்டியை இராவண கிரஹத்திலிருந்து அழைத்து வந்ததைப் பற்றி சிலர் அபவாதம் சொல்வதாகக் கேட்டு, பிராட்டி கருதி யிருந்த காரணத்தையே வியாஜமாகக் கொண்டு,அவளை யழைத்துக் கொண்டு போய் கங்கா நதி தீரத்தில் வான்மீக முனிவராச்சிரமத் தருகே விட்டு விடுமாறு,இளைய பெருமாளுக்கு நியமித்தருளினர்.-சீதாப்பிராட்டி தனியே புலம்பித் தவிப்பதை ரிஷி குமாரர்களால் கேள்வி யுற்ற வான்மீக முனிவர் உடனே அவ்விடம் சென்று, பிராட்டியைச் சமாதானப்படுத்தி தமது ஆச்சிரமத்திற்கு அழைத்து வந்து அங்குள்ள ரிஷி பத்னிகளிடம் ஒப்புவித்து அவளைக் கருந்துடனே காத்து வருமாறு கட்டளை யிட்டனர்.-யமுனாதீர வாசிகளான முனிவர்கள் முலமாக மதுவின் மகிமையையும், அவனது மகன் லவணாஸூரனது வரலாற்றையும் கேட்டு ஸ்ரீராம பிரான், லவணாசுரனை வதைக்குமாறும் அவனது நகரத்திலேயே யிருந்து ராஜ்ய பரிபாலனஞ் செய்து வருமாறும் சத்ருக்கனருக்கு நியமித்தருளினர். லவணாசுரனுடன் போர் புரிவதற்காக அயோத்தியிலிருந்து புறப்பட்டு மூன்றாம் நாள், சத்ருக்னர்,வான்மீகி ஆச்சிரமத்தில் தங்கினர்.

” யாமேவ ராத்ரிம் சத்ருக்ன: பர்ணசாலாம் ஸமாவிசத் தாமேவ ராத்ரிம் ஸ்தாபி ப்ரஸூதா தாரகத்வயம் ”( உத்-6-1.) சத்ருக்ன ஆழ்வார், என்றையத் தினம் இராத்திரி வான்மீக முனிவரது ஆச்சிரமத்திலே பர்ண சாலையில் படுத்திருந்தனரோ, அன்றைய தினம் இராத்திரி ஸீதாப் பிராட்டியார் இரண்டு திருக் குமாரர்களைப் பெற்றனர்.-இந்த ஆதாரங்களினால் ஸ்ரீ இராம பிரானுடைய பட்டாபிஷேகானந்தரம், பதினாயிரம். வர்ஷங்கள் கழிந்த பினனரே, குச லவர் ஜநநம் என ஏற்படுகிறது.

ப்ராப்த ராஜ்யஸ்ய ராமஸ்ய வால்மீகிர் பகவான் ரிஷி: சகார சரிதம் க்ருத்ஸ்னம் விசித்ர பதமாத்மவான்| சதுர் விம்சத் ஸஹஸ்ராணி ஸ்லோகாநா முக்தவான் ரிஷி :
ததா ஸர்க்க சதான் பஞ்ச ஷட் காண்டானி ததோத்தரம்
–பால-4-1-2-
ஸ்ரீராமபிரான் இராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டி ருக்கும காலத்தில், வான்மீகமுனிவர் இருபத்தினாலாயிரம் சுலோகங்களும் ஐந்நூறு சருக்கங்களும், ஆறு காண்டங்களும், உத்ரகாண்டமும் செய்தருளினார்.
“மானிஷாத என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத்தினிடமாக வான்மீக முனிவர்க்குற்ற சந்தேகத்தை, (தமஸா நதிக் கரையில்)ப்ரம தேவர் வந்து நிவர்த்தி செய்து வரங்கள் அளித்து அந்தர் கதானமான பின்பு
தத: ஸ சிஷ்யோ வால்மீகிர் முநிர் விஸ்மய மாயயௌ தஸ்ய சிஷ்யாஸ் தத: ஸர்வே ஐகு ஸ்லோகமிம்ம் புன: “முஹர் முஹு : ப்ரீயமாணா: ப்ராஹுஸ்ச ப்ருச விஸ்மிதா–பால்-2-39- வான்மீக முனிவர், தம்முடைய சிஷ்யர்களுடனே கூட அதிக ஆச்சரியத்தை யடைந்தார். அந்த ஸ்லோகத்தை அவருடைய சிஷ்யர்களெல்லோரும் மிகுந்த பிரியத்துடனும் ஆச்சரியத்துடனும்,அடிக்கடி ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டு பாடிக் களித்தனர்.சிஷ்யா – என்று பஹு வசனமாகக் கண்டிருப்பதற்கு, கோவிந்த ராஜர் வ்யாக்யானத்தில் தனது ஆச்சிரமத்திலுள்ள, குசலவர், பரத்துவாஜர் என்று வ்யாகயானம் செய்யப்பட்டிருக்கிறது.-இதனால் குசலவர்கள், ஜனித்து தக்க வயது அடைந்த பின்ன்ரே, இராமாயண கிரந்தம் செய்யப்பட்டதாக ஏற்படுகின்றது.
சதருக்ன ஆழ்வான், லவணாஸுரனை சம்ஹரித்து மதுரா புரியை ஸ்தாபித்த பின்
“ததோ த்வா தசமே வர்ஷே சத்ருகனோ ராம பாலி தாம் அயோத்யாம் சக்ரமே கந்துமல்ப ப்ருத்ய பலாநுக –உத்-7- 1 )
பன்னிரண்டாவது வருஷத்தில் சத்ருக்னாழ்வான் ஸ்ரீராகவனைச் சேவிக்கக் காதல் கொண்டு சொற்ப பரிவாரங்களுடன் அயோத்தியைக் குறித்துப் புறப்பட்டனர்-வழியில் 7, 8 நாள் தங்கி வான்மீகாச்சிர மமடைந்து, அம் முனிவர் அளித்த அர்க்கிய பாதியாதி அதிதி பூஜைகளைப் பெற்று,அன்று ராத்திரி அவ்வாச்சிரமத்திலேயே சயனித்திருந்தனர்.

ஸ புத்தவாந் நர ஸ்ரேஷ்டோ கீத மாதுர்ய முத்தமம்
சுச்ராவ ராம சரிதம் தஸ்மின் காலே யதா க்ருதம்
தம் த்ரீலய ஸமா யுக்தம் த்ரிஸ்தான கரணாந்விதம்
ஸமஸ்க்ருதம் லக்ஷணோபேதம் ஸம தால ஸமந்விதம்
சுச்ராவ ராம சரிதம் தஸ்மின் காலே புராக்ருதம்
–உத்தர –71-14-15-16
சத்ருக்னாழ்வான் வான்மீகாச்சிரமத்தில் விருந்தமுது செய்தவளவில், ஸமீபத்தில் அதி மதுரமான ஸங்கீதமொன்று கேட்டது.ஸ்ரீராம சரிதமானது ஸம்ஸ்க்ருத பாஷையில் இசை யொத்த தாள லயங்களுடனே, யாழிலிட்டு,சு லஷணமாக மறைவிலே பாடப்பட்டது. அதனைச் செவி யுற்ற வளவில், சத்ருகனாழ்வானுக்கு முன் நடந்த ஸ்ரீ ராம சரித்திரம் மறுபடி தமது கண்ணெதிரில் நடப்பது போல தோன்றியது.வான்மீக முளிவர் தாமுண்டு பண்ணிய இராமாயண மஹா காவியத்தைக் குச லவருக்கு உபதேசித்தருளின போது, அவர்களுக்கு வயது பன்னிரண்டு என ஏற்படுகின்றது

ஸ்ரீராம பிரான் அச்வமேத யாகஞ் செய்யத் தீர்மானித்து கோமதீ நதீ தீரத்தில் யாக சாலை நிருமித்து வருகிறவர்களுக்கு விடுதிகள் அமைத்து, ஸகல பதார்த்தங்களும் அங்கே சித்தப் படுத்தவும்,வானரர், ராக்ஷஸர் முதலான யாவரையும் அவ் வேள்விக்கு வர வாழைக்கும்படிக்கும் தம்பிமார்களுக்கு நியமித்தருளியும்,
மம மாத்ரூஸ் ததா ஸர்வா: குமாராம் : புராணி ச
காம்சநீம் மம பத்ம்ச தீக்ஷா யாம்ஜ்ஞாம் ஸ்ச கர்மணி
அக்ரதோ பரத: க்ருத்வாகச் சாத்வக்ரே மஹா யசா
: | “உத்தர -91-24-25-
நமது மாதாக்களையும், பரதன் முதலியோர்களுடைய அந்தப்புர ஸ்திரீகளையும், ஸீதைக்குப் பிரதியாக நிருமித்து வைத்திருக்கின்ற சுவர்ண ஸீதையையும் யாகஞ் செய்யும்
நன்குணர்ந்த பிராம்மணர்களையும், முன்னிட்டுக் கொண்டு, பரதன் முன்னாலே செல்லக் கடவன் ” எனவும்nநியமித்தருளினர்.-இதனால் ஸீதாப்பிராட்டி வான்மீகாச்சிரமத்தி லிருக்கும் பொழுது யாகம் ஆரம்பிக்கப்பட்டதாக வாகின்றது.

வர்தமானே ததா பூதே யஜ்ஞேச பரமாத்புதே
ஸ சிஷ்ய ஆஜகாமாசு வால்மீகிர் பகவான் ரிஷி
:-உத்தர -93-1-இவ்வாறு மகா வைபவத்துடனே நடக்கும் அற்புதமான அச்வமேத யாகத்துக்கு வான்மீக முனிவரும் தமது சிஷ்யர்களுடனே எழுந்தருளினர்.”வான்மீக முனிவர் தாம் கற்பித்த இராமாயணத்தை, முனிவர்கள் வாஸஸ்தானங்களிலும், பிராம்மணர்கள் இறங்கி யிருக்கு மிடங்களிலும், ராஜ மார்க்கங்களிலும், அச்வமேத யாகம் நடக்குமிடத்தில் ஸ்ரீராமபிரான் சன்னதியிலும் பாடிக் கொண்டு போகும்படி தமது சிஷ்யர்களான குசலவர்களுக்குக் கட்டளை யிட்டனர். அவ் விருவரும் முனிவர் மொழிந்த வண்ணம், இராமாயணத்தை கானம் செய்து கொண்டு சென்றனர்கள்.

தாம் ஸசுச்ராவ காகுஸ்த: பூர்வாசார்ய விநிர்மிதாம் அபூர்வாம் பாட்ய ஜாதிம்ச கேயேன ஸமலம க்ருதாம் ப்ரமாணைர் பகுபி பத்தாம் கந்த்ரீலய ஸமந்விதாம் பாலாப்யாம் ராகவ: ஸ்ருத்வா கெளதூகல பரோபவத் .”–உத்தர -94-2- இரண்டு பாலகர்கள் வீணை மீட்டிக் கொண்டு ஓத்த குரலினராய் சு லக்ஷணமாக தம்மாசிரியர் கற்பித்த இராமாயணத்தை இன்பமாய்ப் பாடிக் கொண்டு வருவதை ஸ்ரீராகவன் திருச் செவி சார்த்தி இஃது அபூர்வமாயும்,அற்புதமாயு மிருக்கின்றதே யென வியந்து களிப்படைந்தனர்.”‘அனந்தரம் அந்தக் காவியத்தின் வாலாற்றையும், அதை இயற்றியவர் வான்மீக முனிவரென்பதையும் அச் சிறுவர்கள் மூலமாக ஸ்ரீராகவன் தெரிந்து கொண்டனர்–.ராமோ பஹுன் யஹான்யேவ தத் கீதம் பரமம் சுபம் சுச்ராவ முனிபி ஸார்த்தம் பார்த்தி வை: ஸஹ வானரை: “-உத்தர -95-1- ஸ்ரீராகவன் நாள் தோறும் பல முனிவர்களும், அரசர்களும் புடை சூழச் சபையினடுவே முனி குமாரர்களை வரவழைத்து மிகச் சிறந்ததும், சுபமுமான அவர்களது சங்கீதத்தைச் செவி சார்ததிக் களி கூர்ந்தனர்.-இந்த ஆதாரங்களினால் ஸ்ரீராமபிரான் அயோத்யா புரிக்கு ராஜவாக பட்டாபிஷேகம் செய்யப்பட்டு,பதினாயிரம் வருஷங்கள் தரும நெறி தவறாது அரசாட்சி செய்து வந்த பின் சீதாப் பிராட்டி கர்ப்பமடைந்து வான்மீக முனிவராச்சிரமத்தில் குசன், லவன் என்னும் இரண்டு குமாரர்களைப் பெற்று,அக் குமாரர்களுக்கு வயது பன்னிரண்டு நிரம்பிய பொழுது,வான்மீக முனிவருக்கு நாரத மகரிஷியால் ஸ்ரீராம சரிதம் சங்கரஹமாக உபதேசிக்கப்பட்டு பிரம தேவரின் ஆக்ஞா ப்ரகாரம் அம் முனி புங்கவர் 24000 கிரந்தங்களடங்கிய ஸ்ரீஇராமாயண மென்னும் ஆதி காவியத்தைச் செய்தருளி அதைத் தமது சீடர்களான குச லவர்களுக்கு உபதேசிக்க, அவர்களால் அந்த இராமாயணம் ஸ்ரீராமபிரானுடைய அஸ்வமேத மகா மண்டபத்தில் முனிவர்,அரசர், வானார் முதலியோர் சேர்ந்துள்ள சபையில் ஸ்ரீராமபிரான் சனனதியில் தாளலயத்துக் கிணங்க கானம் செய்து அரங்கேற்றப்பட்டு சபையோர்களால் மிகுந்த சந்தோஷத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்டதாக நிச்சயிக்கப்படுகிறது.

—————

குருசிஷ்ய தருமம்.

குரு சிஷ்ய லக்ஷணம்:-
“தப: ஸ்வாத்யா நிரதம் தபஸ்வி வாக் விதாம் வாம்
நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர் முநி புங்கவம்

தபஸ் வேத வேதாந்தங்கள் இவைகளைப் பூர்ணமாக அடைந்தவரும், உபதேசிப்பவர்களுக்குள் மேலானவரும், முனி ஸ்ரேஷ்டருமான நாரத மஹ ரிஷியை, தவத்தோடு கூடிய வான்மீக முனிவர் தெண்டம் ஸமர்ப்பித்து வினாவினார்.”
இது இராமாயணத்தின் முதல் சுலோகம். இதனால் குரு சிஷ்யன் லஷணம் சொல்லப் பட்டதாகிறது.-எவ்விதமெனில்- ஆசார்ய லஷணம்
1- தபோ நிரதம்: தவத்தைப் பூரணமாக அடைந்தவர்,என்றதினால் அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் என்பது ஸுசகம்.
” யத் துஸ்தரம் யத் துராபம் யத் துர்கம் யச் சதுஷ்கரம்
தத் ஸர்வம் தபஸா ஸாத்யம் தபோஹி தூரதிக்ரமம் “

எது கடக்க முடியாததோ, எது பெற முடியாததோ, எது செய்ய முடியாததோ அவை எல்லாம் தவத்தால் சாதிக்க முடியும். ஆகையால் தவத்தை வெல்வதரிது.”
வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவமீண்டு முயலப்படும்.”
கூற்றங் குதித்தலும் கைகூடு நோற் றவினாற்ற தலைப் பட்டவர்க்கு ‘
என்ற ஆகாரங்கள் நோக்கத் தக்கன.

(2) ஸ்வாத்யாய நிரதம்:- வேத வேதாந்தங்களைப் பூர்ணமாக அடைந்தவர், என்றதினால் நாரதர் சொல்வதெல்லாம் தருமத்தோடு பொருந்திய ஸத்திய வசனம் என்பது ஸூசகம்.

(3) வாக் விதாம் வரம் :உபதேசிப்பவர்களுக்குள் மேலானவர்,என்றதினால் சிறந்த போதனா சக்தி வாய்ந்தவரெனவும்,வ்யாகரணம் முதலான சகல சாஸ்திரங்களையும் நன்றாயறிந்தரெனவும் பொருள்படும்.
(4)முனி புங்கவம் :- முனி ஸ்ரேஷ்டர், என்றதினால் இந்திரிய நிக்கிரகமுள்ளவர் என்பதும், பகவ த்யானத்தோடு கூடிய வரென்பதும்,திரி கால வர்த்தமானங்களை அறியக் கூடியவரென்பதும், ஸதா ஜப பரரென்பதும், ஸுசகம்.
(5) நாரதம் -நாரத மஹரிஷியை,என்றதினால் நாரம்-ஜ்ஞானம், அதைக் கொடுக்கக் கூடியவர் என்பதும், நாரம்- அஜ்ஞானம், அதை நிவர்த்தி செய்யக் கூடியவரென்பதும், த்ரி லோக சஞ்சாரியான படியால்,மூன்று லோகத்திலுள்ள வர்த்தமானங்களை யறிபவரென்பதும்,பிரம்ம புத்திரரான படியால், உத்தம குலத்தைச் சேர்ந்தவரென்பதும் ஸூசகம்.

ஆகவே இந்த ஐந்து பதங்களினால், ஆசார்யன் பூர்ணமான தபஸை யுடையவராகவும், வேத வேதாந்தங்களையும் வியாகரணம் முதலான ஸகல சாஸ்திரங்களை யுமுணர்ந்தவராகவும், பகவத் பக்தியுடன் அநவரத ஜப பரராகவும்,சிஷ்யனுடைய அஜ்ஞானத்தைப் போக்கி,ஜ்ஞானத்தைக் கொடுத்துப் பரமாத்ம ஸ்வரூபத்தை உபதேசிக்க வல்லவராகவும், ஜிதேந்த்ரியராகவும்,உத்தம குலத்தவ ராகவுமிருக்க வேணுமென்று ஆசார்ய லஷணம் சொல்லப் பட்டதாயிற்று.
கு ஸப்தஸ் த்வந்தகார ஸ்யாத் ருகாரஸ் தந் நிவர்தக :
அந்தகார நிரோதித்வாத் குருரித் யபிதீயதே

கு , என்பது அஜ்ஞானத்தையும், ரு -என்பது அதன் நிவர்த்தியையும் சொல்லுகிற படியால் மனதின் கண்ணுள்ள அஜ்ஞானமாகிற விருளை நீக்கி மெய்ஞ் ஞானமாகிற பிரகாசததைத் தருவதால் குருவெனச் சாற்றப் படுகின்றனர்.
“குலனருள் தெய்வங் கொள்கை மேன்மை
கலை பயில் தெளிவு கட்டுரை வண்மை
நில மலை நிறை கோல் மலர் நிகர் மாட்சியும்
உலகிய லறிவோ டுயர் குண மினையவும்
அமைபவன் நூலுரை யாசிரி யன்னே.”
என்ற நன்னூல் இங்கு நோக்கத்தக்கது.

சிஷ்ய லக்ஷணம:-
(1) தபஸ்
:- என்றதினால் பகவத் சொரூபத்தை யறிய ஆவல் கொண்டரென்பதும், பல விரதங்களை யனுஷ்டித்தவரென்பதும், சம தமாதி ஸம்பத்திகளை யடைந்தரென்பதும் ஜீவ காருண்ய முடையவரென்பதும் களங்கமற்ற இருதயமுடையவ ரென்பதும் ஸூசகம்-உற்ற நோய் நோன்ற லுயிர்க்குறு கண் செய்யாமை யற்றே தவத்திற் குரு.”

2-பரிபப்ரச் ச :- என்றதினால், விதிவதுபஸந்ந: என்பது பொருள்.-அதாவது,உபதேசம் பெற்றுக் கொள்ள,குருவைத் தேடிப் போய்,தண்டம் ஸமர்ப்பித்து, விதிப் பிரகாரம் கேட்க வேண்டு மென்பது.
தத்வித்தி ப்ரணிபாதே பரி ப்ரஸ்நேந ஸேவயா
உபதேஷ் யந்தி தே ஞாநம் ஞாநிநஸ் தத்வ தர்ஸிந
”–அந்த ஆத்ம ஜ்ஞானத்தை. குருவைத் தேடிப் போய், தண்டம் ஸமர்ப்பித்து, விதிப் பிரகாரமான கேள்வியினாலும், ஸூஸ்ரூஷையினாலும் அறிந்து கொள்ளக் கடவாய். தத்வ மறிந்த பண்டிதர்கள் உனக்கு ஜ்ஞானத்தை போதிப்பார்கள்.” என்று அர்ஜூனனை நோக்கி யருளிச் செய்தஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய வசனம் இங்கு கவனிக்கத் தக்கது.
ஆகவே, தபஸ்வீ, பரிபப்ரச்ச என்ற பதங்களினால் சிஷ்ய லக்ஷணம் சொல்லப் பட்டதாயிற்று.
ஸத் புத்திஸ் ஸாது ஸேவீ ஸமுசித சரிதஸ் தத் போதாபிலாஷி
ஸூஸ்ரூஷுஸ் த்யக்தமாந: ப்ரணிபதந பர : பிரஸ்ந கால ப்ரதீஷ :
ஸாந்தோ தாந்தோ ந ஸூயுஸ் ஸரண முபகதஸ் ஸாஸ்தா விஸ்வாஸ ஸாலி
ஸிஷ்ய ப்ராப்த: பரீக்ஷாங் க்ருத விதபி மதம் தத்வதஸ் ஸிஷணீய

நற் புத்தியுடன் ஸாது ஸேவை யுடையவனாகி நன்னடக்கை யுடையவனும்,உண்மை ஞானத்தை அறிவதில் அபிலாஷை யுடையவனும்,பணிவிடைக் காரனும்,மான அவமான மென்பதற்றவனும், ப்ரஸ்ன காலத்தை எதிர் பார்ப்பவனும், சாந்தனும் அஸூயை யில்லாதவனும், சரணாகதி யடைந்தவனும், சாஸ்திர விஸ்வாஸ முடையவனுமே சிஷ்யனாக அங்கீ கரிக்கத் தகுந்தவன் ” என்பது நோக்கத் தக்கது.
வால்மீகி பகவான் பருகு வம்சத்தி லவதரித்தவர். இவர் (வல்மீகம்- புற்று) புற்றிலிருந்து வெளி வந்ததினால் வால்மீகி என்று பெயர். இவர்க்கு”ப்ராசேதஸர்’ ( அதாவது வருணனுடைய புத்திரர்) என்னும் பெயருண்டு.

உபதேசக் கிரமம் :- .
(1) வான்மீக முனிவர் நாரத மஹரிஷியை நோக்கி-“கோந்வஸ்மிந் ஸாம் ப்ரதம் லோகே குணவாந் கச்ச வீர்யவாந் ”என ஆரம்பித்து,”ஏததிச் சாம் யஹம் ஸ்ரோதும் பரம் கெளதூஹலம் ஹி மே-என்றபடி ஒ ஸ்வாமி! இவ்வுலகிலிக் காலத்தில், அனந்த கல்யாண குணங்களும், சவ்ஸீல்யாதி குணங்களுமுடைய உத்தம புருஷன் யார்? என்பதை அடியேன் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.தேவரீர் அடியேனுக்குக் கிருபை செய்தருள வேண்டும்.” என்று பாலகாண்டம் – 1-2 முதல் ஐந்து ஸ்லோகங்கள் மூலமாக ப்ரஸ்நம் பண்ணினர். அதைக் கேட்டு நாரத மஹரிஷி மிகுந்த சந்தோஷ மடைந்தவராய்(பால – 1 -8 முதல் 96-ஸ்லோகங்க ளடங்கிய ஸ்ரீராம சரிதத்தைப் பூராவாகவும், சம்ஷேபமாகவும் வான்மீக முனிவருக்கு உபதேசித்தருளினார்.-இதனால்- ” தத் விஜ்ஞாநார்த்தம் ஸ குருமே வாபி கச்சேத் “ என்றபடி வேதாந்தார்த்தங்களை ஒரு குருவினிடத்தில் போய்க் கேட்டே அறிய வேண்டு மென்ற தருமமும், ” நா ப்ருஷ்ட: கஸ்யசித் ப்ருயாத் ” என்றபடி ஸிஷ்யன் கேட்காமலிருக்கும் போது குரு உபதேசஞ் செய்யலாகாதென்ற தருமமும் ஸூ சிதம்.

(2) விஸ்வாமித்ர மஹரிஷி யாக ஸம் ரக்ஷணார்த்தமாக ஸ்ரீராம லக்ஷமணர்களை அழைத்துக் கொண்டு, சரயூ நதியின் தென் கரையில் சேர்ந்தவுடன மகரிஷி ஸ்ரீராமபிரானை நோக்கி- “ மந்திர க்ரமம் க்ருஹாணத்வம் பலாமதிபலாம் ததா
த்ரிஷு லோகேஷ வா ராம ந பவேத் ஸத்ருஸஸ் தவ
பிதாமஹ ஸு-தே யேதே வித்யே தேஜஸ் ஸமந்விதே
ததாமி தவ காகுத்ஸ்த ஸ்த்ரு ஸஸ் த்வம் ஹி தார்மிக ”’

ஸ்ரீராமா பலை, அதிபலை யென்னும் மந்திரங்களை உபதேசிக்கின்றேன் பெற்றுக் கொள்க.மூன்று லோகங்களிலும் உனக்குச் சரியாக ஒருவனுமாக மாட்டான். மிகுந்த, பிரகாசம் பொருந்திய ப்ரஹ்ம புத்திரிகளான இம் மந்திரங்களை கிரஹிப்பதற்குத் தார்மிகனான நீயே தகுந்தவன். ஆகையால் உனக்கு உபதேசஞ் செய்கின்றேன் ” என்றுரைத்து உபதேசஞ் செய்தருளினர்.-நோக்கின்னவர் முக நோக்க நோக்குடைக்
கோக்கு மரருமடி குறுக நான்முகன் ஆக்கிய விஞ்ஞைகளிரண்டு மவ்வழி
ஊக்கினனவையவ ருகள்ளத் துள்ளினார்.”
என்ற கம்ப ராமாயணம் நோக்கத் தக்கது.

பின்னும் விஸ்வாமித்திரமுனிவர் ஸ்ரீராமபிரானை நோக்கி
“பரிதுஷ்டோஸ்மி பத்ரம் தெ ராஜ புத்ர மஹாயஸ :
ப்ரீத்யா பாமயா யுக்தோ ததாம் யஸ்த்ராணி ஸர்வஸ
தேவாஸூர கணாந்வாபி ஸ கந்தர்வோர காநபி
யைர மித்ராந் ப்ரஸஹ்யாஜௌ வஸீக்ருத்ய ஜயின்யஸி
ஸ்திதஸ்து ப்ராங்முகோ பூத்வா ஸூசிர் முநிவரஸ் ததா
ததெள ராமாய ஸுப்ரீதேர மந்திர க்ரம மனுத்தமம்”–பால -27-2-3-21-
சக்கரவர்த்தி திருக் குமாரரான ஸ்ரீராம உன்னிடத்தில் யான் மிகுதியும் சந்தோஷ முடையவனானேன். உனக்கு மங்களமுண்டாகட்டும். யான் அறிந்ததான எல்லா அஸ்த்திர ஸஸ்த்திர மந்திரங்களையும் உனக்கு உபதேசிக்கின்றேன். அதனால் தேவாஸூர கந்தருவாதி கணங்களை யுத்தத்தில் வஸ்பம் செய்து ஜெயிப்பாய்.” என அருளிச் செய்து முனிவர் கிழக்கு முகமாயிருந்து மிக்கப் பிரீதியுடன் கூடி அஸ்த்திர ஸஸ்த்திரங்களின் மந்திரங்கள் யாவற்றையும் ஸ்ரீராமபிரானுக்கு உபதேசஞ் செய்தருளினர்.-மறுபடியும் விவாமித்திர முனிவர் ஸ்ரீராமரானை நோக்கி”க்ருஸாஸ் வதந யாந் ராம பாஸ்வராந் காம ரூபிண :ப்ரதீச்ச மம பத்ரம் தெ பாத்ர பூதோஸி ராகவ-பால –28-10-

ஸ்ரீராமா க்ருஸாஸ்வ புத்திரர்களும் பிரகாசத்தோடு கூடியவர்களும் காம ரூபிகளுமான உப ஸம்ஹார மந்திரங்களை யெல்லாம் உனக்கு உபதேசஞ் செய்கின்றேன் பெற்றுக் கொள். உனக்கு சேமமுண்டாகும். இவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு நீயே தகுதி யுடையவன் என அருளி செய்து அம் மந்திரங்களையும் உபதேசஞ் செய்தருளினர்.
இதனால் ஆசார்யன் தகுந்த சீடனுக்கே உபதேசம் செய்யவேண்டு மென்பது ஸுசிதம்.
சொல்லொக்குங் கடிய வேகச் சுடு சரங் கரிய செம்மல்
அல்லொக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் வயிரக் குன்றக்
கல்லொக்கும் நெஞ்சிற்றங் காதப் புறங் கழன்று கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்றன்றே.

தாடகையின் பேரில் பிரயோகித்த ராம பாணமானது கல்லைப் போன்ற கடினமான அவள் மார்பில் தைத்துத் தங்கி யிராமல்,ஊடுருவிப் பின்புறஞ் சென்று, கல்வி யறிவடையாத மூடர்களுக்கு ஞானவான்கள் உபதேசித்த தத்துவம் போலப் போயிற்று ‘ அறிவிலாதவற் கறிவன சொல்லுவாரவரால் இறுதி யெய்து வாரென்னு மதின்றுகை கண்டோம்.“என,குபேரன் தனது பரிஜனங்களின் முன்னிலையில் கூறி யிருப்பதாலும்,மூடர்களுக்கு (அபக்குவருக்கு) உபதேசஞ் செய்யலாகா தென்பது ஸூசிதம்.
ஸ்ரீராமபிரான் கேட்காமலிருக்கும் பொழுது விஸ்வாமித்திர முனிவர் தாமாகவே முதலில் மந்திரம் உபதேசித்தது உசிதமோ வெனில் –தன்மக னாசான் மகனே மன்மகன் பொருள் நனி கொடுப்போன் வழி படுவோனே உரை கோளாளற்கு உரைப்பது நூலே “-நன்னூல் –என்றபடி,ஸ்ரீ ராமபிரான், சக்கரவர்த்தி திருமகனாகவும்,வழிபாடு செய்பவனாகவும், சிறந்த மேதாவியாகவும் இருந்ததனால். முனிவர் உபதேசித்தது உசிதமேயாம்.

——————————–

ஊந ஷோடச வர்ஷோ மே ராமோ ராஜீவ லோசந : -எனது மைந்தன் இராமன் பதினாறு வயதுக்கும் குறைவான பாலனன்றோ -என்ற தசரதர் வாக்கியத்தினாலும்;
ஊந த்வாதச வர்ஷோயம் அக்ருதாஸ்த்ரச்ச ராகவ: -தாடகாவதம் செய்யும் பொழுது இராம பிரானுக்கு வயது பன்னிரண்டு நிரம்பவில்லை யென்று இராவணனிடம் கூறிய மாரீச வசனத்தினாலும் ;
இராவண ஸந்நியாஸியை நோக்கி ஸீதா தேவி –
“உஷித்வா த்வாதச ஸமா இக்ஷ்வாகூணாம் நிவேசநே –
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநி –
தத்ர த்ரயோதச வர்ஷே ராஜா மந்த்ரயத ப்ரபு:
அபிஷேச யிதும் ராமம் ஸமேதோ ராஜ மந்த்ரிபி:

” யான் ஸ்ரீராம பிரானைத் திருமணஞ் செய்து கொண்ட பின்னர், திருவயோத்தியில் பன்னிரண்டாண்டு பதியுடன் கூடிச் சகல போகங்களையும் குறைவின்றி யனுபவித்துக் கொண்டு வாழ்ந்திருந்தேன். பதின்மூன்றாவது வருஷத்தில் என் மாமனார் என் பர்த்தாவுக்கு இராஜ்யாபிஷேகஞ் செய்வதற்கு ஆலோசனை செய்தனர்.
ஸீதாப் பிராட்டியாருக்கு விவாஹமாகும் பொழுது வயது ஆறு எனவும், ஸ்ரீராமபிரானுக்கு வயது பன்னிரண்டு எனவும், ஸித்திக்கின்றது.

அயோநி ஜாம் ஹி மாம் ஜ்ஞாத்வா நாத்ய கச்சத் ஸசிந்தயந் -ஸத்ருசம் சா நுருபம் ச மஹீ பால: பதிம் மம –ஸீதாப் பிராட்டியார் அநஸூயா தேவியை நோக்கி-யான் அயோநிஜை யானதால் எனக்கு ஏற்றவனும் அநுரூபமான கணவனை எனது பிதா தெரிந்து கொள்ள முடிய வில்லை.” என உரைத்தனள்.

வஸிஷ்ட விஸ்வாமித்திரர்களிருவரும் ஜனக மஹா ராஜனை நோக்கி
“ஸத்ருசோ தர்ம ஸம்பம்த: ஸத்ருசோ ரூப ஸம்பதா
ராம லக்ஷமணயோ ராஜந் ரீதா ச ஊர்மிலயா ஸஹ

“ஸ்ரீ ராமபிரானுக்கு ஸீதாப் பிராட்டியும்,இளைய பெருமாளுக்கு ஊர்மிளா தேவியும் குல ரூபாதிகளில் தகுதி யுள்ளவர்களாக இருக்கின்றார்கள்.” என்று அருளிச் செய்தனர்.

துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்யாபிஜந லக்ஷணாம் -ராகவோர்ஹதி வைதேஹிம் தம் சேய மஸி தேக்ஷணா

பாபாநாம் வா சுபாநாம் வா வதார்ஹாணா மதாபிவா
கார்யம் காருண்ய மார்யேன ந கச்சித் நாபராத்யதி

சூடக வரவுறழ் சூலக் கையினள்
காடுறை வாழ்க்கையள் கண்ணிற் காண்பரேல்
ஆடவர் பெண்மையை யவாவுந் தோளினாய்
தாடகை யென்பதச் சழக்கி நாமமே.

சந்த்ர காந்தா நநாம் ராம மதீவ ப்ரிய தர்சனம்
ரூபௌதார்ய குணை: பும்ஸாம் த்ருஷ்டி சித்தா பஹாரிணம்

தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழற் கமலமன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரு மஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்தன்னா னுருவு கண்டாரை யொத்தார்.”

எண்ணரு நலத்தினா ளினைய நின்றுழி கண்ணொடு கண்ணினை கௌவி யொன்றை யொன் றுண்ணுவு நிலை பெறாதுணர்வு மொன்றிட அண்ணலு நோக்கினான் அவளும் நோக்கினாள்.”
கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச் சொற்க ளென்ன பயனு மில-
குறள்

ஜனக மஹாராஜர் வசிஷ்ட லிச்வாமித்திரர்களை நோக்கி:-“உத்தரேதிவஸே ப்ரஹ்மந் பல்கு நீப்யாம் மநீஷிண: வைவாஹிகம் ப்ரசம் ஸந்தி பகோ யுத்ர ப்ரஜாபதி :
நாளை நின்று விவாஹத்திற்கு ஸ்லாக்கியமான உத்தர பல்குனி நக்ஷத்திர மாகையால் அன்று விவாஹம் நடத்தப்பட வேண்டும். ” என்றுரைத்தனர்.
பங்குனி யுத்தரமான பகற்போதங்க ணிருக்கினி லாயிர நாமச்
சிங்க மணத் தொழில் செய்த திறத்தால் மங்கல வங்கி வதிட்டன் வகுத்தான்.
“என்றபடி ஸீதாப் பிராட்டியாரின் திருமணம் பகற் காலத்தில் உத்தர பல்குனி நக்ஷத்திரத்தில் நடந்திருப்பதால், விவாஹத்திற்கு பகற் பொழுதும் உத்தர பல்குனி நக்ஷத்திரமும் சிறந்ததென்பது ஸூசிதம்.

இயம் ஸீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ
ப்ரதீச்ச சைநாம் பத்ரம் தெ பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா
பதி வ்ருதா மஹா பாகா சாயேவாநுகதா ஸ்தா
இத்யுக்த்வா ப்ராக்ஷிபத் ராஜா மந்த்ர பூதம் ஜலம் ததா “

லக்ஷ்மணாகச்ச பத்ரம் தெ ஊர்மீளா முத்யதாம் மயா
பரதீச்ச பாணிம் க்ருஹ்ணீஷ்வ மாபூத் காலஸ்ய பரிய :
தமேவ முக்த்வா ஐநநோ பரதம் சாப்ய பாஷத
க்ரஹாண பாணிம் மாண்டயா: பாணிநா ரகு நந்தன
சத்ரூக்நம் சாபி தர்மாத்மா அப்ரவீஜ் ஜநகேஸ்வர :
ஸ்ருத கீர்த்யா மஹா பாஹோ பாணிம் க்ருஷ்ணீஷ்வ பாணிநா
ஸர்வே பவந்த: சவ்ம்யாச்ச ஸர்வே ஸு சரித வ்ரதா :
பத்நீபி : ஸந்து காகுத்ஸ்தா மாபூத் காலஸ்ய பர்யய:
ஐநகஸ்ய வச: ஸ்ருத்வா பாணீந் பாணி பிரஸ் ப்ருசந்
சத்வாரஸ்தே சதஸ் ருணாம் வஸிஷ்டஸ்ய மதே ஸ்திதா :
அக்நிம் ப்ரதக்ஷிணீ க்ருத்ய வேதிம் ராஜாநமேவச
ருஷிம்ஸ்சைவ மஹாத்மாந : ஸபார்யா ரகு ஸத்தமா:
யதோக்தேந தாசக்ருர் விவாஹம் விதி பூர்வகம்
த்ரீ ரக்நிம் தே பரிக்ரம்ய ஊஹுர் பார்யா மஹோஜஸ :
அதோபகாயாம் ஜக்முஸ்தே ஸபார்யா ரகு நந்தநா :

ராஜாப் யநு யயெள பஸ்யந் ஸ ருஷி ஸங்க : ஸ பாந்தவ: ‘

ஸீதாப் பிராட்டியாரின் திருமணம் அத்யாத்ம ராமாயணத்திலுள்ளபடி:-
வஸிஷ்டம் கௌசிகம் சைவ சதாநந்த புரோஹித:
யதா க்ரமம் பூஜ யித்வா ராமஸ்யோபுய பார்ஸ்வயோ
ஸ்தாபயித்வா ஸ தத்ராக்நிம் ஜ்வால யித்வா யதாவிதி
ஸீதாமாநீய சோபாட்யாம் நாநா ரத்ந விபூஷிதாம்
ஸ்பார்யோ ஜநக : ப்ராயாத்ராமம் ராஜீவ லோசநம்
பாதெள ப்ரஷால்ய விதிவத் ததபோ மூர்த்ந்யத் தாரயத்
தத: ஸ்தாம் கரே த்ருத்வா ஸாக்ஷத் உதக பூர்வகம்
ராமாய ப்ரததெள ப்ரீத்யா பாணி க்ரஹ விதாநத:
ஸீதா கமல பத்ராக்ஷி ஸ்வர்ண முக்தாதி பூஷிதா
தீயதே மே ஸுதா துப்யம் ப்ரீதோ பவ ரகூத்தம
இதி ப்ரீதேந மநஸா மீதாம் ராம கரே அர்பயந்
ஊர்மிளாம் செளரஸீம் கந் யாம் லக்ஷ்மணாய ததெள முதா
ததைவ ஸ்ருத கீர்திம் ச மாண்டவீம் ப்ராத்ரு கந்யகே
பரதாய ததா வேகாம் சத்ருக்நாயா பராம் ததெவ்

ஸ்ரீராம பிரானுக்கு இரு பக்கத்திலும், வஸிஷ்டர் விஸ்வாமித்திரர், ஸதாநந்தர் இவர்கள் இருந்து கொண்டு அக்நியை ஸ்தாபனஞ் செய்து விதிப்படி பூஜித்து ஜ்வாலை பண்ணி பாணி க்ரஹண முஹுர்த்தக் காரியங்களை ஆரம்பித்தனர். ஜனக மஹாராஜனும் தன் பத்தினியுடன், நவ ரத்னங்களுடன் கூடிய பலவித ஆபரணங்களை யணிந்தவளும் மிகுந்த தேஜஸ்ஸோடு கூடி யவளுமான ஸீதா தேவியை அழைத்துக் கொண்டு வந்து, செந்தாமரைக் கண்ணனாகிய ஸ்ரீராமபிரானுடைய திருவடிகளை ஜலத்தால் அலம்பி அந்தத் தீர்த்தத்தை ஸிரஸில் ப்ரோக்ஷித்துக் கொண்டு ஸீதாதேவியின் கையை பிடித்துக் கொண்டு என் புத்திரியாகிய இந்த ஸீதா தேவியை உமக்குக் கொடுக்கிறேன். நீர் ப்ரீ தியுடன் அங்கீகரிக்கக் கடவீர் என்றுறைத்து மிகுந்த பிரீதியுடன்

ஸ்ரீராம பிரானது கையில் கொடுத்து உதக பூர்வமாகக் கன்னிகாதானஞ் செய்தனர். இந்தப் பிரகாரமே தன் குமாரியாகிய ஊர்மிளையை இளைய பெருமாளுக்கும், தன் ப்ராதாவின் புத்திரிகளான மாண்டவி,ஸ்ருத கீர்த்தி என்னும் கன்னிகைகளை பரத சத்ருக்கனர்களுக்கும் பாணி க்ரஹணம் செய்து கொடுத்தனர்.

(விவாஹங்கள் எட்டு விதங்களென ஸ்மிருதிகளில் கூறப் பட்டுள்ளன.
” ப்ரஹ்மோ தைவஸ்த தைவார்ஷ : ப்ராஜபத்யஸ் ததாஸ்ர :
கந்தர்வோ ராஷஸச் சைவ பைராசஸ் ச அஷ்டமோ தம: “
” பிரம நற்றெய்வ மாரிடம் பிரசா பத்திய மாசுரம் பெட்பின்
மருவுகாந்திருவ மிராக்கதம் பசாச மென மணமெட்டுள.”
” இருவருமிணங்கு களவு கந்தருவ மனந்தலிலிணங்கல் பைசாசம்
பெரு வலியதனான் மருவுதலரக்கம் பெரிலக் கெய்தலே யசுரம்
பொருளுகந்தளித்தலாரிடம் பிரசாபத்தியம் பொருள் கொளாதளித்த லருமகந்தனை வேட்பித்தலே தெய்வ மழைத்தெதிர் கொடுத்தலே பிரமம் “

1 ) பிரம்மம். (2)தைவம் (3) ஆர்ஷம். (4)ப்ராஜா பத்யம். (5)ஆரம். (6)காந்தர்வம்,(7)ராக்ஷஸம். (8)பைசாசம். என்ற எட்டு வித விவாஹங்களுள் ஸீதாப் பிராட்டியாரின் திருமணம் “ஸஹ தர்மம் சரத இதி ப்ராஜா பத்ய ; ” என்ற ஆச்வலாயனார் வசனப் பிரகாரம் ப்ராஜா பத்தியத்தைச் சேர்ந்ததாக ஏற்படுகின்றது.

யதா யதா ஹி கௌஸல்யா தாஸிவச் ச ஸகீவ ச
பார்யாவத் பகிநீவச் ச மாத்ருவச் சோபதிஷ்டதே-
அயோத்யா -12-69-

ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜனகாத்மஜாம்
அயோத்யா மடவீம் வித்தி கச்சதா தயதா ஸுகம் -அயோத்யா -40-9-
ஆகாத தன்றா லுனக்கவ்வன மிவ்வயோத்தி
மாகாதலிராமனம் மன்னவன் வையமீந்தும்
போகா வுயிர்த் தாயர் நம்பூங்குழற் சீதை யென்றே
ஏகா யினியிவ் வயினிற்றலு மேதமென்றாள். “
“பின்னும் பகர்வாண் மகனே யிவன் பின்செறம்பி
என்னும் படியன் றடியா ரினி லேவல் செய்தி
மன்னும் நகர்க்கே யிவன் வந்திடின் வாவதன்றேல்
முன்னம் முடி யென்றனள் பான் முலைசோர நின்றாள்.”

————-

அகர இராமாயணம்!

அனந்தனே அசுரர்களை அழித்து, அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான்!

அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம்.

அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன்?

அவனே அறிவழகன், அன்பழகன், அன்பர்களை அரவணைத்து அருளும் அருட்செல்வன்!

அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில் அரசனின் அரியவில்லை அடக்கி, அன்பும் அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான் .

அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய அனந்தராமனுக்கே! அப்படியிருக்க அந்தோ ! அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும் அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு அனுப்பினாள். அங்கேயும் அபாயம்! அரக்கர்களின் அரசன் , அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான்

அங்கேயும் அபாயம்! அரக்கர்களின் அரசன் , அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான்

அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை அரசனாக அரியணையில் அமர்த்தினர்.

அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும் அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர். அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து அளந்து அக்கரையை அடைந்தான்.

அசோகமரத்தின் அடியில் , அரக்கிகள் அயர்ந்திருக்க அன்னையை அடிபணிந்து அண்ணலின் அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான்

அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள் அநேகமாக அணைந்தன.

அன்னையின் அன்பையும் அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.

அடுத்து, அரக்கர்களை அலறடித்து , அவர்களின் அரண்களை , அகந்தைகளை அடியோடு அக்கினியால் அழித்த அனுமனின் அட்டகாசம் , அசாத்தியமான அதிசாகசம்.

அனந்தராமன் அலைகடலின் அதிபதியை அடக்கி , அதிசயமான அணையை அமைத்து, அக்கரையை அடைந்தான்.

அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின் அஸ்திரத்தால் அழித்தான்.

அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.

அன்னையுடன் அயோத்தியை அடைந்து அரியணையில் அமர்ந்து அருளினான்

அண்ணல்.

அனந்தராமனின் அவதார அருங்கதை அகரத்திலேய அடுக்கடுக்காக அமைந்ததும் அனுமனின் அருளாலே!!

—————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண பாராயண தியான ஶ்லோகங்கள்- -ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம்-ஸ்ரீ ராம மங்கள -ஶ்லோகங்கள் ஸ்ரீ மா முனிகள் —

October 14, 2024

ஸ்ரீ இராமாயண பாராயண தியான ஶ்லோகங்கள்

ஸ்ரீ விஷ்ணு தியானம்

ஶுக்லாம் பரதரம் விஷ்ணும் ஶஶி வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யயாயேத் ஸர்வ விக்ந உபஶாந்தயே

வெண்மையான வஸ்திரங்களை அணிந்தவரும்,
சந்திரனைப் போன்றவரும், நான்கு திருக் கரங்கள் கொண்டவரும்,
மலர்ந்த திரு முகம் கொண்டவரும் ஆகிய விஷ்ணுவை, நான் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்படாமல் இருக்க தியானம் செய்கிறேன்.

——-

ஸ்ரீ வால்மீகி தியானம்

கூஜந்தம் ராம ராம இதி மதுரம் மதுர அக்ஷரம்
ஆரூஹ்ய கவிதா ஶாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

கவிதை என்னும் மரத்தின் கிளைகளில் ஏறி
அமர்ந்து, “ராமா ராமா” என்ற இனிமையான சொற்களை
எப்போதும் அழகாகக் கூவியபடி உள்ள வால்மீகி என்னும்
குயிலை நான் வணங்குகிறேன்.

வால்மீகே முநி ஸிம்ஹஸ்ய கவிதா வந சாரிண:
ஶ்ருண்வந் ராம கதா நாதம் கோந யாதி பராம் கதிம்

கவிதை என்னும் வனத்தில் உலவியபடி உள்ள
சிங்கத்தைப் போன்ற வால்மீகி முனிவருடைய (அல்லது
முனிவர்களில் சிங்கம் போன்று, கவிதை என்னும் வனத்தில் உலவியபடி உள்ள வால்மீகி முனிவருடைய) இராமனுடைய
கதையைக் கேட்கும் எந்த மனிதன் தான் உயர்ந்த கதியை அடைய மாட்டான்

——–

ஸ்ரீ ஹனுமான் தியானம்

கோஷ்பதீ க்ருத வாராஶிம் மஶகீ க்ருத ராக்ஷஸம்
ராமாயண மஹா மாலா ரத்னம் வந்தே அநிலாத்மஜம்

ஸமுத்திரத்தை, மாட்டுக் குளம்பால் உண்டான பள்ளத்தில் உள்ள நீர் போன்று கடந்தவரும், ராக்ஷஸர்களைக் கொசுவைப் போன்று நசுக்கியவரும், இராமாயணம் என்னும் உயர்ந்த மாலையில் இரத்தினம் போன்று விளங்குபவரும் ஆகிய வாயு புத்திரரை நான் வணங்குகிறேன்.-

அஞ்ஜநா நந்தநம் வீரம் ஜாநகீ ஶோக நாஶனம்
கபீஶம் அக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்

அஞ்ஜனையின் புத்திரரும், வீரரும், ஜானகியின் சோகத்தை அழித்தவரும், அக்ஷ குமாரனைக் கொன்றவரும், இலங்கைக்கு அச்சத்தை உண்டாக்கியவரும் ஆகிய உயர்ந்த வானரரை வணங்குகிறேன்.

ய: பிபந் ஸததம் ராம சரித அம்ருத ஸாகரம்
அத்ருப்த: தம் முநி வந்தே ப்ராசேதஸம் அகல்மஷம்

யார் ஒருவர், இராமனுடைய சரிதம் என்னும்
அமிர்தக் கடலை எப்போதும் பருகியபடி இருந்தாலும், மன நிறைவு அடைய வில்லையோ, வருணனுடைய புத்திரரும், களங்கம் அற்றவரும் ஆகிய அந்த முனிவரை நான் வணங்குகிறேன்.

மநோ ஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானர யூத முக்யம்
ஸ்ரீராம தூதம் ஶிரஸா நமாமி

மனதின் வேகம் போன்ற வேகம் கொண்டவரும்,
வாயுவிற்கு நிகரான வேகம் உள்ளவரும், இந்த்ரியங்களை
வென்றவரும், புத்தி உள்ளவர்களில் சிறந்தவரும், வாயுவின் புத்திரரும், வானரர்களுடைய தலைவர்களில் முக்கியமானவரும், ஸ்ரீராமனின் தூதனும் ஆகிய ஹனுமானை நான் எனது தலையால் வணங்குகிறேன்.

உல்லங்க்ய ஸிந்தோ : ஸலிலம் ஸலீலம்
ய: ஶோக வஹ்நிம் ஜனகாத் மஜாயா:
ஆதாய தேநைவ ததாஹ லங்காம் நமாமி
தம் ப்ராஞ்ஜலி: ஆஞ்ஜநேயம்

யார் ஒருவர், ஸமுத்திரத்தின் நீரை ஒரு
விளையாட்டாகவே தாண்டி, ஜனகருடைய புதல்வியின் சோகம் என்னும் அக்னியை எடுத்துக் கொண்டு, அந்த அக்னி மூலமாலவே இலங்கையை எரித்தாரோ, அந்த ஹனுமானை நான் கைகள் குவித்து வணங்குகிறேன்.

ஆஞ்ஜநேயம் அதிபாடலாநநம்
காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம்
பாரிஜாத தரு மூல வாஸிநம்
பாவயாமி பவமாந நந்தனம்

அஞ்ஜனையின் புதல்வரும், மிகவும் சிவந்த முகத்தைக் கொண்டவரும், ஸ்வர்ணம் போன்ற அழகான திருமேனியைக் கொண்டவரும், பாரிஜாத மரத்தின் அடியில் வசிப்பவரும் ஆகிய வாயுவின் புத்திரனை நான் மனதால் தியானிக்கிறேன்.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தநம் தத்ர தத்ர
க்ருதம் ஹஸ்தக அஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசநம் மாருதிம்
நமத ராக்ஷஸ அந்தகம்

எந்த இடங்களில் இராமனுடைய புகழானது கூறப்படுகிறதோ, அந்த இடங்களில் குவித்த கைகளுடனும், ஆனந்தக் கண்ணீர் நிறைந்த கண்களுடன் உள்ளாரோ-
ராக்ஷஸர்களுக்குக் காலனாக உள்ள அந்த வாயு புத்திரரை நான் வணங்குகிறேன்.

ஸர்வ அரிஷ்ட நிவாரகம் ஸுப கரம்
பிங்காக்ஷம் அக்ஷாபஹம்
ஸீதா அந்வேஷண தத் பரம் கபி வரம்
கோடி இந்து ஸூர்ய ப்ரபம்

லங்கா த்வீப பயங்கரம் ஸகல வதம்
ஸுக்ரீவ ஸம்மாநிதம்
தேவேந்திராதி ஸமஸ்த தேவ விநுதம்
காகுஸ்த்த தூதம் பஜே

அனைத்து விதமான துன்பங்களையும் முற்றிலும் விலக்கி, நன்மைகளை நல்குபவரும், மஞ்சள் நிறமான கண்கள் கொண்டவரும், வானரர்களில் உயர்ந்தவரும், ஸீதையைத் தேடிச் சென்றவரும், கோடி சந்திர சூரியன்களின் ஒளியைக் கொண்டவரும், இலங்கைக்கு அச்சத்தை உண்டாக்கியவரும், ராக்ஷஸர்கள் அனைவரையும் கொன்றவரும், ஸுக்ரீவனால்
கௌரவிக்கப் பட்டவரும், இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களாலும் போற்றப் படுபவரும் ஆகிய இராம தூதனை நான் வணங்குகிறேன்.

ஸ்ரீ இராமாயண தியானம்

ய: கர்ணணாஞ்ஜலி ஸம்புடைரஹரஹ: ஸம்யக் பிபத் யர்த்ததாத்
வால்மீகே: வதந அரவிந்த கலிதம் ராமாயணாக்யம் மது
ஜந்ம வ்யாதி ஜரா விபத்தி மரணை: அத்யந்த ஸ உபத்ரவம்
ஸம்ஸாரம் ஸ விஹாய கச்சதி புமாந்
விஷ்ணோ: பதம் ஶாஶ்வதம்

வால்மீகியின் தாமரை போன்ற முகத்திலிருந்து வெளிப்படும் இராமாயணம் என்னும் மதுவை, குவித்த கரங்களுடன் பருகுபவர்கள், “பிறப்பு, நோய், வயோதிகம், மரணம்” என்பதான ஸம்ஸாரம் மூலம் உண்டாகவல்ல உபத்திரவங்கள் நீங்கப் பெற்று, எப்போதும் உள்ளதான விஷ்ணுவின் பரம பதத்தை அடைகிறார்கள்.

வால்மீகி கிரி ஸம்பூத ராம ஸாகர காமிநீ
புநாது புவநம் புண்யா ராமாயணம் மஹாநதி

வால்மீகி என்ற மலையிலிருந்து உண்டானதும், இராமன் என்ற ஸமுத்திரத்தை அடைந்ததும், புண்ணியமானதும் ஆகிய இராமாயணம் என்ற பெரிய நதியானது, இந்த உலகத்தைத் தூய்மை செய்யட்டும்.

ஶ்லோக ஸார ஸமாகீர்ணம் ஸர்க கல்லோல ஸங்குலம்
காண்ட க்ராஹ மஹாமீனம் வந்ததே ராமாயண அர்ணவம்

ஸ்லோகங்களுடைய ஸாரமாக உள்ள நீரால் நிரம்பியதும், ஸர்க்கங்கள் என்னும் அலைகள் சேர்ந்திருப்பதும், காண்டங்கள் என்னும் முதலைகள் மற்றும் பெரிய மீன்கள் உள்ளதும் ஆகிய இராமாயணம் என்னும் ஸமுத்திரத்தை நான் வணங்குகிறேன்.

வேதத்தால் மட்டுமே அறியப் படக் கூடிய பரம புருஷன், தசரதருடைய புத்திரனாக அவதரித்தால்,வேதமானது வால்மீகியிடமிருந்து நேரடியாக இராமாயணம்
என்னும் ரூபத்தில் உண்டானது.

தத் உபகத ஸமாஸ ஸந்தி யோகம் ஸம
மதுரோ பநதார்த்த வாக்ய பத்தம்
ரகுவர சரிதம் முநி ப்ரணீதம் தஶ ஶிரஸஶ்ச
வதம் நிஶாமயத்வம்

நன்கு அமைந்துள்ள சொற்களின் சேர்க்கை (ஸமாஸம்) மற்றும் பிரிவு (ஸந்தி) ஆகியவற்றைக் கொண்டதும், ஒரே போன்று இனிமையான அர்த்தம் கொண்ட சொற்கள் நிறைந்த வாக்கியங்களால் கட்டப்பட்டதும், இராவணனுடைய வதம் குறித்துக் கூறுவதும், வால்மீகியால் செய்யப் பட்டதும் ஆகிய இராமனுடைய சரிதத்தைக் கேளுங்கள்.

ஸ்ரீ இராம தியானம்
ஸ்ரீராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
ஸீதாபதிம் ரகுகுல அந்வய ரத்னதீபம்
ஆஜாநுபாஹும் அரவிந்த தலாய தாக்ஷம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி

ஸீதையின் நாதனும், தசரதருடைய புத்திரரும், அளவிட இயலாத தேஜஸ் கொண்டவரும், ரகு வம்சத்தில் வந்தவர்களுக்கு இரத்தின தீபம் போன்றவரும், தாமரை இதழ் போன்ற திருக்்கண்களைக் கொண்டவரும், ராக்ஷஸர்களுக்கு அழிவாக உள்ளவரும் ஆகிய இராமனை நமஸ்கரிக்கிறேன்.

ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |
கிரண ஷமித பாப க்லேஷ துக்கஸ்ய நாஷம் ||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |
சகல புவன வந்த்யம் பாஸ்கரம் தம் நமாமி ||–

வெற்றி வெற்றி (தரும்) கர்ம வீரமே (ஸூர்யம்), ஏழு உலகங்களின் தீபமே
ஒளிக்கதிர்களால் பாபங்களையும், கவலைகளையும் (உடல்வலி பற்றிய எண்ணங்களையும்), துக்கங்களையும் போக்குபவனே.
கிரணங்களால் ஆட் கொள்பவனே. ஆதி முதல்வனே. பரமாத்மனே
ஸகல உலகங்களாலும் வணங்க படுபவனே. ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.

ஏழு உலகங்கள்- பூலோகம், புவர், ஸ்வர், மஹர, ஜனர், தபோ, ஸத்ய லோகம்

———

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

“ஸ்ரீ ராம்” என்று ஒரு முறை சொல்லப்படும் நாமம் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு நிகரானது.
எனவே ஒவ்வொரு நாளும் “ஸ்ரீ ராம்” என்று நாம் பாராயாணம் செய்யும் போது
அது முழு விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் பாராயாணம் செய்வதற்கு நிகரானது.

————–

வைதேஹீ ஸஹிதம் ஸுர த்ரும
தலே ஹைமே மஹா மண்டபே
மத்யே புஷ்பகமாஸநே மணிமயே வீராஸநே ஸுஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜந ஸுதே தத்வம் முநிப்ய: பரம்
வ்யாக்யாந்தம் பரதாதிபிர் : பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

கற்பக மரத்தின் கீழே, சிவந்த ஸுவர்ணத்தால் செய்யப் பட்ட பெரிய மண்டபத்தில், புஷ்பக விமானத்தின் நடுவில், இரத்தின மயமான ஸிம்ஹாஸனத்தில், பத்ர பீடத்தில்,
வைதேகியுடன் நன்கு வீற்றுள்ளவரும்; தனக்கு முன்பாக வாயுவின் புத்திரர் உயர்ந் தத்வத்தைக் குறித்து வாசிக்க,
அதனை முனிவர்களுக்காக பொருள் விளக்கம் அளிப்பவரும்; பரதன் முதலானவர்களால் சூழப்பட்டவரும்; கறுமையான திருமேனியைக் கொண்டவரும் ஆகிய இராமனை நான்
வணங்குகிறேன்.

வாமே பூமி ஸுதா புரஶ்ச ஹனுமான்
பஶ்சாத் ஸுமித்ராஸுத:
ஶத்ருக்நோ பரதஶ் ச பார்ஶ்வ தளயோ:
வாய்வாதி கோணேஷு ச
ஸுக்ரீவஶ்ச விபீஷணஶ்ச யுவராட்
தாரா ஸுதோ ஜாம்பவாந்
மத்யே நீல ஸரோஜா கோமளருசிம்
ராமம் பஜே ஶ்யாமளம்

(பட்டாபிஷேக திருக் கோலம்)
இடது பக்கத்தில் பூமியின் புதல்வியாகிய ஸீதை,
முன் புறத்தில் ஹனுமான்,
பின் புறத்தில் ஸுமித்ரரையின் புதல்வனாகிய லஷஷ்மணன்,
வலப் பக்கம் மற்றும் இடப் பக்கத்தில் சத்ருக்நனும் பரதனும்,
நான்கு பக்கங்களிலும் வாயு முதலான திக் பாலர்கள் போன்று ஸுக்ரீவன், விபீஷணன், இளவரசனாகிய அங்கதன் மற்றும் ஜாம்பவான் ஆகியோர் சூழ்ந்திருக்க, நடுவில் தாமரை மலரின் மென்மையுடன் அமர்ந்திருக்கும், கருமையான நிறம் கொண்ட இராமனை வணங்குகிறேன்.

நம: அஸ்து ராமாய ஸ லக்ஷஷ்மணாய தேவ்யை
ச தஸ்யை ஜநகாத் மஜாயை
நம: அஸ்து ருத்ர இந்த்ர யம அநிலேப்யோ
நம: அஸ்து சந்த்ர அர்க மருத் கணேப்ய:

(ஹனுமான் கூறுதல்)
லஷ்மணனுடன் கூடிய இராமனுக்கு எனது நமஸ்காரம். ஜனகருடைய புத்திரியான ஸீதைக்கு எனது நமஸ்காரம். ருத்ரன், இந்திரன், யமன், வாயு ஆகியோருக்கு எனது நமஸ்காரம்.
சந்திரன், சூரியன், மருத் கணங்களுக்கு எனது நமஸ்காரம்.

பாராயணத்துக்குப் பின் அநுஸந்திக்கும் த்யான ஸ்லோகங்கள்

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம்
ந்யாயேன மார்கேண மஹீம் மஹீஶா:
கோ ப்ராஹ்மணேப்யோ ஶுபமஸ்து
நித்யம் லோகா: ஸமஸ்தா: ஸுகிநோ பவந்து

தனது நாட்டு மக்களை, நீதியின் வழியில், நன்றாகக் கவனித்துக் கொள்ளும் மன்னனுக்கு, மிக்க நன்மைகள் உண்டாகட்டும். பசுக்களும், அந்தணர்களும், மற்ற அனைவரும்
எப்போதும் இன்பமாக வாழ்வார்களாக. அனைத்து லோகங்களும் சுகமாக வாழட்டும்.

காலே வர்ஷது பர்ஜந்ய: ப்ருதிவீ ஸஸ்ய ஶாலிநீ
தேஶ: அயம் க்ஷோப ரஹிதா ஸஜ்ஜநா: ஸந்து நிர்பயா:

மழையானது சரியான காலங்களில் (சரியான அளவில்) பொழிய வேண்டும். பூமியானது பயிர்களால் நிறைந்து இருக்கட்டும். நாடானது சச்சரவு இன்றி இருக்கட்டும். ஸாதுக்கள் அச்சம் இன்றி இருக்கட்டும்.

அபுத்ர: புத்ரிண: ஸந்து புத்ரிண: ஸந்து பௌத்ரிண:
அதநா: ஸதநா: ஸந்து ஜீவந்து ஶரதாம் ஶதம்

குழந்தை அற்றவர்களுக்கு குழந்தை பிறக்கட்டும்.
குழந்தைகள் உள்ளவர்களுக்குப் பேரக் குழந்தைகள் பிறக்கட்டும்.
தனம் இல்லாதவர்களுக்குத் தனம் உண்டாகட்டும். நூறு ஆண்டு காலம் வாழட்டும்.

சரிதம் ரகுநாதஸ்ய ஶத கோடி ப்ரவிஸ்தரம்
ஏக ஏகம் அக்ஷரம் ப்ரோக்தம் மஹா பாதக நாஶநம்

இராம சரிதமானது, நூறு கோடி (சொற்களுக்கும் மேலாக) விரிவாக உள்ளதாகும். அதில் ஏதேனும் ஒரு எழுத்து மட்டுமே மிகவும் கொடிய பாபத்தையும் கூட அழிக்க வல்லதாகும்.

ஶ்ருண்வந் ராமாயணம் பக்த்யயா ய: பதம் பதம் ஏவ வா
ஸ யாதி ப்ரஹ்மண: ஸ்தானம் ப்ரஹ்மண பூஜ்யதே ஸதா

யார் ஒருவன் இராமாயணத்தை பக்தியுடன் கேட்கிறானோ அல்லது அதில் உள்ள ஒரு சொல்லையாவது பக்தியுடன் கேட்கிறானோ, அவனை நான்முகன் தனது இடத்திற்கு அழைத்துச் சென்று, எப்போதும் பூஜிக்கிறான்.

ராமாய ராமபத்ராய ராமச் சந்த்ரராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம:

இராமன் என்றும், ராம பத்ரன் என்றும், ராம சந்த்ரன் என்றும், ரகு நாதன் என்றும் அழைக்கப்படும் ஸீதையின் நாதனுக்கு, வேதங்களில் கூறப்படுபவனுக்கு எனது நமஸ்காரங்கள்.

யத் மங்களம் ஸஹஸ்ர அக்ஷே ஸர்வ தேவ நமஸ்க்ருதே
வ்ருத்ர நாஶே ஸம பவத் தத் தே பவது மங்களம்

(இராமனிடம் கௌஸலை கூறுதல்)
வ்ருத்ரன் என்னும் ராக்ஷஸன் அழிக்கப் பட்ட போது, அனைத்து தேவர்களாலும்
வணங்கப் பட்டவனும், ஆயிரம் கண்கள் கொண்டவனும் ஆகிய இந்திரனுக்கு எத்தகைய மங்களம் உண்டானதோ, அத்தகைய மங்களம் உனக்கும் உண்டாகட்டும்.

யத் மங்களம் ஸுபர்ணஸ் ய விநாத அகல்பயத் புரா
அம்ருதம் ப்ரரார்த்த மாநஸ்ய தத் தே பவது மங்களம்

(இராமனிடம் கௌஸலை கூறுதல்)
முன்பு, அமிர்தத்தைத் தேடிச் சென்ற கருடனுக்கு, அவனுடைய தாயான வினதை எத்தகைய மங்களத்தை உண்டாக்கினாளோ, அத்தகைய மங்களம் உனக்கும் உண்டாகட்டும்.

அம்ருத உத்பாதநே தைத்யயாந் க்நதோ வஜ்ர தரஸ்ய யத்
அதிதி: மங்களம் ப்ராதாத் தத் தே பவது மங்களம்

(இராமனிடம் கௌஸலை கூறுதல்)
திருப்பாற் கடலில் அமிர்தம் உண்டான போது, அஸுரர்களை அழித்த இந்த்ரனுக்கு, அவனுடைய தாயான அதிதியானவள் எத்தகைய மங்களத்தை
உண்டாக்கினாளோ, அததகைய மங்்களம் உனக்கும் உண்டாகட்டும்.

த்ரீந் விக்ரமாந் ப்ரக்ரமத: விஷ்ணோ: அமித தேஜஸ:
யத் ஆஸீத் மங்களம் ராம தத் தே பவது மங்களம்

(இராமனிடம் கௌஸலை கூறுதல்)
இராமா! மூன்று காலடிகளை வைப்புகள் மூலம் (மூன்று லோகங்களை) அளந்தவரும், அளவற்ற தேஜஸ் கொண்டவரும் ஆகிய விஷ்ணுவிற்கு எத்தகைய மங்களம் உண்டானதோ, அத்தகைய மங்களம் உனக்கும் உண்டாகட்டும்.

ருதவ: ஸாகரா த்வீபா வேதா லோகா திஶ: ச தே
மங்களாநி மஹா பாஹோ திஶந்து தவ ஸர்வதா

அந்த ருதுக்கள், ஸமுத்ரங்கள், தீவுகள், வேதங்கள், லோகங்கள், திசைகள் ஆகிய அனைத்து உனக்கு எங்கும் மங்களங்கள் அளிக்கட்டும்.

ஸ்ரீராமசந்த்ர: ஶ்ரித பாரிஜாத: ஸமஸ்த
கல்யாண குண அபிராம:
ஸீதா முக அம்போருஹ ஸஞ்சரீக:
நிரந்தரம் மங்களம் ஆதநோது

தனது அடியார்களுக்கு வேண்டியதை அளிக்கும் பாரிஜாதமாக ஸ்ரீராமசந்திரன் உள்ளார். அனைத்து கல்யாண குணங்களையும் கொண்டு, அனைவரையும் கவர்கிறார். ஸீதை முகம் என்னும் தாமரையில் ஸஞ்சரிக்கும் வண்டாக உள்ளார்.-இப்படிப்பட்ட அவர் எப்போதும் மங்களங்களை அளிக்கட்டும்.

காயேந வாசா மந: இந்த்ரியை: வா
புத்தி ஆத்மாநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத் யத் ஸகலம் பரஸ்மை
நாராயணா இதி ஸமர்ப்பயாமி

எனது சரீரம், சொல், மனம், இந்த்ரியங்கள், புத்தி,ஆத்மா, இயல்பான குணம் ஆகியவற்றால் எவை எவைகளைச் செய்கிறேனோ, அவை அனைத்தையும் பரம புருஷனாகிய நாராயணனுக்கே ஸமர்ப்பணம் செய்கிறேன்.

குல தைவதம் அஸ்மாகம் கோதண்ட ஶர மண்டிதம்
இஷ்ட தைவதம் அஸ்மாகம் இக்ஷ்வாகு குல தைவதம்

(இதனை நான்கிலிருந்து பன்னிரண்டு முறைகள் ஜபிக்க வேண்டும்)
என்னுடைய குல தெய்வமாக உள்ளவர், கோதண்டம் என்னும் வில் மற்றும் அம்புகளால் அலங்கரிக்கப்பட்ட இராமனே ஆவார். எனது இஷ்டமான தெய்வமாக உள்ளவர்,
இக்ஷ்வாகு குலத்தின் தெய்வமாக உள்ள இராமனே ஆவார்.

————-

9 வரிகளை கொண்ட ஶ்ரீ ராமாயணம் ஸ்லோகம்

ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோ கரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச் சந்திர பாலயமாம்

———————

ஏக ஸ்லோக ஶ்ரீ ராமாயணம்

ஆதெள ராம தபோ வனாதிகமனம்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ சம்பாஷனம்
வாலீநிர்தலனம் சமுத்ர தரணம் லங்காபுரீ தாஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத்தி ராமாயணம்

—————–

*ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம்*

ஓம் அஸ்ய ஶ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரமம்த்ரஸ்ய புதகௌஶிக றுஷிஃ
ஶ்ரீ ஸீதாராம சம்த்ரோதேவதா
அனுஷ்டுப் சம்தஃ
ஸீதா ஶக்திஃ
ஶ்ரீமான் ஹனுமான் கீலகம்
ஶ்ரீராமசம்த்ர ப்ரீத்யர்தே ராமரக்ஷா ஸ்தோத்ரஜபே வினியோகஃ

த்யானம்
த்யாயேதாஜானுபாஹும் த்றுதஶர தனுஷம் பத்த பத்மாஸனஸ்தம்
பீதம் வாஸோவஸானம் னவகமல தளஸ்பர்தி னேத்ரம் ப்ரஸன்னம்
வாமாம்காரூட ஸீதாமுக கமல மிலல்லோசனம் னீரதாபம்
னானாலம்கார தீப்தம் தததமுரு ஜடாமம்டலம் ராமசம்த்ரம்

ஸ்தோத்ரம்
சரிதம் ரகுனாதஸ்ய ஶதகோடி ப்ரவிஸ்தரம்
ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக னாஶனம்

த்யாத்வா னீலோத்பல ஶ்யாமம் ராமம் ராஜீவலோசனம்
ஜானகீ லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மம்டிதம்

ஸாஸிதூண தனுர்பாண பாணிம் னக்தம் சராம்தகம்
ஸ்வலீலயா ஜகத்ராது மாவிர்பூதமஜம் விபும்

ராமரக்ஷாம் படேத்ப்ராஜ்ஞஃ பாபக்னீம் ஸர்வகாமதாம்
ஶிரோ மே ராகவஃ பாதுபாலம் தஶரதாத்மஜஃ

கௌஸல்யேயோ த்றுஶௌபாது விஶ்வாமித்ர ப்ரியஃ ஶ்றுதீ
க்ராணம் பாது மகத்ராதா முகம் ஸௌமித்ரிவத்ஸலஃ

ஜிஹ்வாம் வித்யானிதிஃ பாது கம்டம் பரத வம்திதஃ
ஸ்கம்தௌ திவ்யாயுதஃ பாது புஜௌ பக்னேஶகார்முகஃ

கரௌ ஸீதாபதிஃ பாது ஹ்றுதயம் ஜாமதக்ன்யஜித்
மத்யம் பாது கரத்வம்ஸீ னாபிம் ஜாம்பவதாஶ்ரயஃ

ஸுக்ரீவேஶஃ கடீபாது ஸக்தினீ ஹனுமத்-ப்ரபுஃ
ஊரூ ரகூத்தமஃ பாது ரக்ஷகுல வினாஶக்றுத்

ஜானுனீ ஸேதுக்றுத் பாது ஜம்கே தஶமுகாம்தகஃ
பாதௌவிபீஷண ஶ்ரீதஃபாது ராமோ‌உகிலம் வபுஃ

ஏதாம் ராமபலோபேதாம் ரக்ஷாம் யஃ ஸுக்றுதீ படேத்
ஸசிராயுஃ ஸுகீ புத்ரீ விஜயீ வினயீ பவேத்

பாதாள பூதல வ்யோம சாரிணஶ்-சத்ம சாரிணஃ
ன த்ரஷ்டுமபி ஶக்தாஸ்தே ரக்ஷிதம் ராமனாமபிஃ

ராமேதி ராமபத்ரேதி ராமசம்த்ரேதி வாஸ்மரன்
னரோ னலிப்யதே பாபைர்புக்திம் முக்திம் ச விம்ததி

ஜகஜ்ஜைத்ரைக மம்த்ரேண ராமனாம்னாபி ரக்ஷிதம்
யஃ கம்டே தாரயேத்தஸ்ய கரஸ்தாஃ ஸர்வ ஸித்தயஃ

வஜ்ரபம்ஜர னாமேதம் யோ ராமகவசம் ஸ்மரேத்
அவ்யாஹதாஜ்ஞஃ ஸர்வத்ர லபதே ஜய மம்களம்

ஆதிஷ்டவான் யதாஸ்வப்னே ராம ரக்ஷா மிமாம் ஹரஃ
ததா லிகிதவான் ப்ராதஃ ப்ரபுத்தௌ புதகௌஶிகஃ

ஆராமஃ கல்பவ்றுக்ஷாணாம் விராமஃ ஸகலாபதாம்
அபிராம ஸ்த்ரிலோகானாம் ராமஃ ஶ்ரீமான்ஸனஃ ப்ரபுஃ

தருணௌ ரூபஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாபலௌ
பும்டரீக விஶாலாக்ஷௌ சீரக்றுஷ்ணா ஜினாம்பரௌ

பலமூலாஸினௌ தாம்தௌ தாபஸௌ ப்ரஹ்மசாரிணௌ
புத்ரௌ தஶரதஸ்யைதௌ ப்ராதரௌ ராமலக்ஷ்மணௌ

ஶரண்யௌ ஸர்வஸத்வானாம் ஶ்ரேஷ்டா ஸர்வ தனுஷ்மதாம்
ரக்ஷஃகுல னிஹம்தாரௌ த்ராயேதாம் னோ ரகூத்தமௌ

ஆத்த ஸஜ்ய தனுஷா விஷுஸ்ப்றுஶா வக்ஷயாஶுக னிஷம்க ஸம்கினௌ
ரக்ஷணாய மம ராமலக்ஷணாவக்ரதஃ பதிஸதைவ கச்சதாம்

ஸன்னத்தஃ கவசீ கட்கீ சாபபாணதரோ யுவா
கச்சன் மனோரதான்னஶ்ச ராமஃ பாது ஸ லக்ஷ்மணஃ

ராமோ தாஶரதி ஶ்ஶூரோ லக்ஷ்மணானுசரோ பலீ
காகுத்ஸஃ புருஷஃ பூர்ணஃ கௌஸல்யேயோ ரகூத்தமஃ

வேதாம்த வேத்யோ யஜ்ஞேஶஃ புராண புருஷோத்தமஃ
ஜானகீவல்லபஃ ஶ்ரீமானப்ரமேய பராக்ரமஃ

இத்யேதானி ஜபேன்னித்யம் மத்பக்தஃ ஶ்ரத்தயான்விதஃ
அஶ்வமேதாதிகம் புண்யம் ஸம்ப்ராப்னோதி னஸம்ஶயஃ

ராமம் தூர்வாதள ஶ்யாமம் பத்மாக்ஷம் பீதாவாஸஸம்
ஸ்துவம்தி னாபிர்-திவ்யைர்-னதே ஸம்ஸாரிணோ னராஃ

ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகுவரம் ஸீதாபதிம் ஸும்தரம்
காகுத்ஸம் கருணார்ணவம் குணனிதிம் விப்ரப்ரியம் தார்மிகம்

ராஜேம்த்ரம் ஸத்யஸம்தம் தஶரததனயம் ஶ்யாமலம் ஶாம்தமூர்திம்
வம்தேலோகாபிராமம் ரகுகுல திலகம் ராகவம் ராவணாரிம்

ராமாய ராமபத்ராய ராமசம்த்ராய வேதஸே
ரகுனாதாய னாதாய ஸீதாயாஃ பதயே னமஃ

ஶ்ரீராம ராம ரகுனம்தன ராம ராம
ஶ்ரீராம ராம பரதாக்ரஜ ராம ராம
ஶ்ரீராம ராம ரணகர்கஶ ராம ராம
ஶ்ரீராம ராம ஶரணம் பவ ராம ராம

ஶ்ரீராம சம்த்ர சரணௌ மனஸா ஸ்மராமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ வசஸா க்றுஹ்ணாமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ ஶிரஸா னமாமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ ஶரணம் ப்ரபத்யே

மாதாராமோ மத்-பிதா ராமசம்த்ரஃ
ஸ்வாமீ ராமோ மத்-ஸகா ராமசம்த்ரஃ
ஸர்வஸ்வம் மே ராமசம்த்ரோ தயாளுஃ
னான்யம் ஜானே னைவ ன ஜானே

தக்ஷிணேலக்ஷ்மணோ யஸ்ய வாமே ச ஜனகாத்மஜா
புரதோமாருதிர்-யஸ்ய தம் வம்தே ரகுவம்தனம்

லோகாபிராமம் ரணரம்கதீரம்
ராஜீவனேத்ரம் ரகுவம்ஶனாதம்
காருண்யரூபம் கருணாகரம் தம்
ஶ்ரீராமசம்த்ரம் ஶரண்யம் ப்ரபத்யே

மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேம்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஶ்ரீராமதூதம் ஶரணம் ப்ரபத்யே

கூஜம்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்யகவிதா ஶாகாம் வம்தே வால்மீகி கோகிலம்

ஆபதாமபஹர்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஶ்ரீராமம் பூயோபூயோ னமாம்யஹம்

பர்ஜனம் பவபீஜானாமர்ஜனம் ஸுகஸம்பதாம்
தர்ஜனம் யமதூதானாம் ராம ராமேதி கர்ஜனம்

ராமோ ராஜமணிஃ ஸதா விஜயதே ராமம் ரமேஶம் பஜே
ராமேணாபிஹதா னிஶாசரசமூ ராமாய தஸ்மை னமஃ
ராமான்னாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தாஸோஸ்ம்யஹம்
ராமே சித்தலயஃ ஸதா பவது மே போ ராம மாமுத்தர

ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம னாம வரானனே

இதி ஶ்ரீபுதகௌஶிகமுனி விரசிதம் ஶ்ரீராம ரக்ஷாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

———-

*ஶ்ரீ ராமாயண ஜெய மந்திரம்*

ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாபலஃ
ராஜா ஜயதி ஸுக்ரீவோ ராகவேணாபிபாலிதஃ |

தாஸோஹம் கோஸலேம்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மணஃ
ஹனுமான் ஶத்ருஸைன்யானாம் னிஹம்தா மாருதாத்மஜஃ ||

ன ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
ஶிலாபிஸ்து ப்ரஹரதஃ பாதபைஶ்ச ஸஹஸ்ரஶஃ |
அர்தயித்வா புரீம் லம்காமபிவாத்ய ச மைதிலீம்
ஸம்றுத்தார்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||

———

ஸ்ரீ ராம மங்களம்

ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.

மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாப்தயே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம்

வேதவேதாந்தவேத்யாய மேகஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹநரூபாய புண்யஸ்லோகாய மங்களம்

விஸ்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம்

பித்ருபக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம்

த்யக்த ஸாகேதவாஸாய சித்ரகூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம்

ஸௌமித்ரிணா ச ஜாநக்யா சாபபாணாஸி தாரிணே
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம்

தண்டகாரண்ய வாஸாய கண்டிதாமர ஶத்ரவே
க்ருத்ரராஜாய பக்தாய முக்திதாயாஸ்(அ)ஸ்து மங்களம்

ஸாதரம் ஸபரீதத்த பலமூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம்

ஹநூமத் ஸமவேதாய ஹரீஶாபீஷ்டதாயிநே
வாலிப்ரமதநாயா (அ)ஸ்து மஹாதீராய மங்களம்

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூலங்கித ஸிந்தவே
ஜிதராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம்

ஆஸாத்ய நகரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம்

மங்களாஶாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைஸ்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்

ஸ்ரீ ராம மங்களம் -ஸ்ரீ மா முனிகள் —

ஸ்ரீ ராமர் மந்திரம்

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்த்ரம் நமாம்யஹம்

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

———

ஸ்ரீ ராம மங்கள ஸ்தோத்ரம்-ஸ்ரீ மா முனிகளே அருளிச் செய்த மங்கள ஸ்லோகங்கள் என்பர்

ஸ்ரீ ராம நாமமே தாரக மந்திரம் . ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.
மோட்சத்திற்கு வழி காட்டி. இதை சொல்லும் போதெல்லாம் மங்களமே உண்டாகும்.

——-

மங்களம் கோசலேந்த்ராய மஹ.நீய குணாப்தயே
சக்ரவர்த்தி த.நுஜாய ஸார்வ பௌமாய ம்ங்களம் –1-

மங்களம்
கோசலேந்த்ராய -கோசல தேச அரசருக்கு
மஹ.நீய குணாப்தயே -கல்யாண குணக்கடலான பெருமாளுக்கு
சக்ரவர்த்தி த.நுஜாய -சக்ரவர்த்தி திருமகனுக்கு
ஸார்வ பௌமாய -ஸார்வ பவ்மனுக்கு
மங்களம்

வேத வேதாந்த வேத்யாய மேக ஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹந ரூபாய புண்ய ஸ்லோகாய மங்களம் -2-

வேத வேதாந்த வேத்யாய -வேதங்களாலும் உபநிஷத்துக்களாலும் அறியப்படத் தக்கவனாயும்
மேக ஸ்யாமல மூர்த்தயே -நீல மேக ஸ்யாமள திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
பும்ஸாம் மோஹந ரூபாய -கண்டவர் தம் மனம் வழங்கும் படி -ஸித்த அபஹாரியான வனுக்கு
புண்ய ஸ்லோகாய -புண்யம் அளிக்கும் ஸ்தோத்ர வாசயனுக்கு
மங்களம் –

———

விஸ்வாமித்ராங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்ய ரூபாய மங்களம் –3-

விஸ்வாமித்ராங்காய -விச்வாமித்ர மகரிஷிக்கு அந்தரங்க சிஷ்யனுக்கு
மிதிலா நகரீபதே: பாக்யாநாம் பரிபாகாய -மிதிலா தேச ஜனக மஹாராஜருக்கு பரிபாக பாக்யமானவருக்கு
பவ்ய ரூபாய -பவ்ய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
மங்களம்

—————

பித்ரு பக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராம பத்ராய மங்களம் –4-

பித்ரு பக்தாய ஸததம் -எப்பொழுதுமே சக்கரவர்த்திக்கு உகப்பாக நடப்பவனும்
ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா நந்திதாகில லோகாய -அகில உலகில் உள்ளோரையும் தனது
ஸஹோதர்களுடனும் பத்னியுடனும் ஆனந்திப்பவனுமான
ராம பத்ராய மங்களம் –

—————-

த்யக்த ஸாகேத வாஸாய சித்ர கூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமி நாம் தீரோதராய மங்களம் –5-

த்யக்த ஸாகேத வாஸாய -அயோத்யா வாஸத்தையே துறந்து
சித்ர கூட விஹாரிணே -மநோ ஹராமான சித்ரகூடத்திலே இஷ்டமாகத் திரிந்து
ஸேவ்யாய ஸர்வயமி நாம் -ஸர்வ ரிஷிகளுக்கும் ஸேவை புரிந்து மகிழ்பவனாயும்
தீரோதராய -உதார தீர ஸ்திரமாய் இருப்பவனுக்கு
மங்களம்

————

சௌமித்ரிணா ச ஜாநக்யா சாப பாணாஸி தாரிணே
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய ஸ்வாமிநே மம மங்களம் –6-

சௌமித்ரிணா ச ஜாநக்யா -இளைய பெருமாள் ஜானகிப்பிராட்டி யுடன்
சாப பாணாஸி தாரிணே -சார்ங்க பாணியாயும் -அஸி -என்னும் கட்கத்தையும் தரித்து உள்ளவனாயும்
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய -அகில ஜகத்தும் பக்தி செய்யும் ஸ்வாமியுமான
ஸ்வாமிநே மம -அஸ்மத் ஸ்வாமியுமான பெருமாளுக்கு
மங்களம்

———-

தண்ட காரண்ய வாஸாய கண்டிதாம் அமர சத்ரவே
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து மங்களம் –7-

தண்ட காரண்ய வாஸாய – தண்டகாரண்யத்தில் உகந்து வாஸம் செய்து அருளினவனாயும்
கண்டிதாமர சத்ரவே -தேவ சத்ருக்களை நிரஸித்து அருளினவனாயும்
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து -ஜடாயு பெரிய உடையோருக்கு கச்ச என்று மோக்ஷம் அருளினவனாயும்
மங்களம்

———–

ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம் –8-

ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே -சபரி தந்த கனிகளை ஆதாரம் அபிலாஷை யுடன்
அமுது செய்து அருளினவனாயும்
ஸௌலப்ய பரிபூர்ணாய -பரிபூர்ண சவ் சீலவானாயும்
ஸத்வோத்ரிக்தாய -உத்க்ருஷ்ட ஸூத்த ஸத்வ மயனானவனாயும்
மங்களம் –

—————-

ஹநுமத் ஸமவேதாய ஹரீசா பீஷ்டதாயிநே
வாலி ப்ரமதநாயாஸ்து மஹா தீராய மங்களம் –9-

ஹநுமத் ஸமவேதாய -திருவடியுடன் ஒன்றறக் கலந்து மகிழ்ந்தவனாயும்
ஹரீசா பீஷ்டதாயிநே-ஸூக்ரீவ மஹா ராஜருக்கு தயை அருளி அபீஷ்ட பல பிரதனானவனாயும்
வாலி ப்ரமதநாயாஸ்து -வாலிக்கு வீட்டு அரசு அருளியவனாயும்
மஹா தீராய -மஹா வீர தீர பலாக்ரமனாயும் உள்ள பெருமாளுக்கு
மங்களம் —

———-

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதுல்லங்கித ஸிந்தவே
ஜித ராக்ஷஸ ராஜாய ரண தீராய மங்களம் –10-

ஸ்ரீமதே ரகுவீராய -ரகுகுலச் செல்வனாயும்
ஸேதுல்லங்கித ஸிந்தவே -சேது கட்டச் செய்து அருளி கடலைக் கடந்தவனாயும்
ஜித ராக்ஷஸ ராஜாய -ராக்ஷஸ அரசனை வென்றவனாயும்
ரண தீராய-பாட் வீரனாயுமான பெருமாளுக்கு
மங்களம்

———–

ஆஸாத்ய நக்ரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதி ராஜ ராஜாய ராம பத்ராய மங்களம் –11-

ஆஸாத்ய நகரீம் திவ்யம் -திரு அயோத்யைக்கு மீண்டு எழுந்து அருளி
அபிஷிக்தாய ஸீதயா -பிராட்டி யுடன் திருமுடி சூடி
ராஜாதி ராஜ ராஜாய -ராஜாதி ராஜனான பெருமாளுக்கு
ராம பத்ராய
மங்களம்

————–

மங்களாசாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்–12-

மங்களாசாஸந பரைர் -மங்களா ஸாஸன பரர்களான பூர்வர்களாலும்
மதாசார்ய புரோகமை:-அஸ்மத் ஆச்சார்யர் தொடக்கமானவர்களாலும்
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: -ஸர்வ பூர்வர்களாலும்
ஸத்க்ருதாயாஸ்து மங்களம்-ஸர்வ ஸத் கிருத்துக்களாலும்
மங்களா சாஸனமே பரம புருஷார்த்தம் என்று கொள்ளப்பட்டு
அடியேனுக்கும் அவ்வாறே மங்களா சாசனம் செய்யப் பணித்தார்களே

————

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண பாராயணத்தின் மங்கள ஸ்லோகங்கள் —

ஸ்வஸ்தி ப்ரஜாப்⁴ய꞉ பரிபாலயந்தாம்ʼ ந்யாய்யேன மார்கே³ண மஹீம்ʼ மஹீஶா꞉ .
கோ³ப்³ராஹ்மணேப்⁴ய꞉ ஶுப⁴மஸ்து நித்யம்ʼ லோகா꞉ ஸமஸ்தா꞉ ஸுகி²னோ ப⁴வந்து .. 1 ..

காலே வர்ஷது பர்ஜன்ய꞉ ப்ருʼத்²வீ ஸஸ்யஶாலினீ .
தே³ஶோ(அ)யம்ʼ க்ஷோப⁴ரஹிதோ ப்³ராஹ்மணா꞉ ஸந்து நிர்ப⁴யா꞉ .. 2 ..

அபுத்ரா꞉ புத்ரிண꞉ ஸந்து புத்ரிண꞉ ஸந்து பௌத்ரிண꞉ .
அத⁴னா꞉ ஸத⁴னா꞉ ஸந்து ஜீவந்து ஶரதா³ம்ʼ ஶதம் .. 3 ..

சரிதம்ʼ ரகு⁴நாத²ஸ்ய ஶதகோடிப்ரவிஸ்தரம் .
ஏகைகமக்ஷரம்ʼ ப்ரோக்தம்ʼ மஹாபாதகனாஶனம் .. 4 ..

ஶ்ருʼண்வன் ராமாயணம்ʼ ப⁴க்த்யா ய꞉ பாத³ம்ʼ பத³மேவ வா .
ஸ யாதி ப்³ரஹ்மண꞉ ஸ்தா²னம்ʼ ப்³ரஹ்மணா பூஜ்யதே ஸதா³ .. 5 ..

ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே .
ரகு⁴நாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ .. 6 ..

யன்மங்க³லம்ʼ ஸஹஸ்ராக்ஷே ஸர்வதே³வநமஸ்க்ருʼதே .
வ்ருʼத்ரநாஶே ஸமப⁴வத்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 7 ..

யன்மங்க³லம்ʼ ஸுபர்ணஸ்ய வினதா அகல்பயத் புரா .
அம்ருʼதம்ʼ ப்ரார்த²யானஸ்ய தத்தே ப⁴வது மங்க³ளம் .. 8 ..

மங்க³லம்ʼ கோஸலேந்த்³ராய மஹனீயகு³ணாப்³த⁴யே .
சக்ரவர்திதனூஜாய ஸார்வபௌ⁴மாய மங்க³ளம் .. 9 ..

அம்ருʼதோத்பாத³னே தை³த்யான் க்⁴னதோ வஜ்ரத⁴ரஸ்ய யத் .
அதி³திர்மங்க³லம்ʼ ப்ராதா³த்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 10 ..

த்ரீன் விக்ரமான் ப்ரக்ரமதோ விஷ்ணோரமிததேஜஸ꞉ .
யதா³ஸீன்மங்க³லம்ʼ ராம தத்தே ப⁴வது மங்க³ளம் .. 11 ..

ருʼதவ꞉ ஸாக³ரா த்³வீபா வேதா³ லோகா தி³ஶஶ்ச தே .
மங்க³லானி மஹாபா³ஹோ தி³ஶந்து ஶுப⁴மங்க³ளா: .. 12 ..

காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா பு³த்³த்⁴யாத்மனா வா ப்ரக்ருʼதே꞉ ஸ்வபா⁴வாத் .
கரோமி யத்³யத் ஸகலம்ʼ பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி .. 13 ..

—————————–————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அயோத்யா அடைந்த ஸ்ரீ ஆனந்த ராமன்-ஸ்ரீ கோவிந்த ராஜர் காட்டி அருளும் நாள் காட்டி-

May 29, 2024

வாலியின் மனைவி தாரை, இராமனை நேரே பார்த்த பின்பும், மனதிற்கு அப்பாற்பட்டவன் என்று சொல்கிறார். த்வம் அப்ரமேயஶ்ச, துராஸதஶ்ச, ஜிதேந்த்ரியஶ்ச, உத்தம தார்மிகஶ்ச. அக்ஷய்யகீர்திஶ்ச விசக்ஷணஶ்ச, க்ஷிதிக்ஷமாவாந்க்ஷதஜோபமாக்ஷஃ (4.24.31) – “நீங்கள், அளவிடமுடியாதவர், கட்டுப்படுத்த முடியாதவர், சுய கட்டுப்பாடு உடையவர், நீதிமான்களில் சிறந்தவர், உங்கள் புகழ் ஒரு நாளும் குறையாது”, என்று சொல்லிக் கொண்டே போகிறாள். இதில் ‘நீங்கள்’ என்று சொன்னதால், நேரில் இருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். அளவிட முடியாதவர் என்பதால், மனதினால் நினைத்து பார்க்க முடியவில்லை என்று கொள்ள வேண்டும்.

கம்பர், ராமநாமத்தின் மகிமையை, “ நன்மையும், செல்வமும் நாளும் பெருகுமே, தின்மையும், பாவமும் சிதைந்து தேயுமே, சென்மமும், மரணமும் இன்றித் தீருமே, இம்மையே ராமாவென்ற இரண்டு எழுத்தினால்” என்றும், “நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம், விடியல் வழியதாக்கும் வேரிஅம் கமலை நோக்கும், நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை சூடிய சிலை ராமன் தோள்வலி கூறுவார்க்கே” என்றும் கூறுகிறார்.

முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் முதல் க்ஷேத்திரம் இது. முக்கியமான க்ஷேத்திரமும் கூட. ‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரி த்வாரவதிஶ்சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற வாக்கியத்தின் படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். இந்த ஏழும் நாராயணனுக்கு அவயங்கள் ஆகும். அயோத்தி சிரசு, காசி மூக்கு, மதுரா கழுத்து, மாயா மார்பு, துவாரகா கொப்பூழ், காஞ்சி இடுப்பு, அவந்திகா பாதம்.

அயோத்தியின் வாசலில் அனுமனும், அதற்கு தெற்கில் சுக்ரீவனும், அவனுக்கு அருகில் அங்கதனும், தெற்கு வாசலில் நளனும் நீலனும், மேற்கில் வக்த்ரனும், வடக்கில் வீபீஷணனும் வாழ்ந்துகொண்டு இந்த நகரத்தை காப்பாற்றி வருகிறார்கள் என்று ஐதீகம்.

அநுமான்கார்ஹி என்றழைக்கப்படும் மிகப்பெரிய ஆஞ்சநேய மூர்த்தி கோவில் ஒன்று இந்த ராமஜென்ம பூமிக்கருகில் உள்ளது. 76 படிக்கட்டுகளை உடைய இத்தலம் சிறந்த வேலைப்பாடுகளுடன் அழகிய சிலைகளையும் கொண்டு கம்பீரத்தோறறத்துடன் பேரழகு பொருந்தி திகழ்கிறது. ஆஞ்சேநேயரின் பெரிய திருவுருவ சிலையைத்தவிர, அவருக்கும், அவரது தாயார் அஞ்சனாதேவிக்கும் இங்கே சிலைகள் உண்டு

அம்மாஜி மந்திர் என்றழைக்கப்படும் ஒரு தென்னிந்திய பாணி கோவில் உள்ளது. தென்னிந்திய வைணவர்களே பூஜை செய்கின்றனர். ரெங்கநாதன் சன்னதியுடன் இராமபிரான் சன்னதியும் அமைந்துள்ளது. இராமன் சந்நிதியில், ராமன், சீதை, லக்ஷ்மணன், பரதன், சத்ருக்கனன், அனுமன், மற்றும் கருடன் என்று எல்லோரும் சேர்ந்து தரிசனம் தருகின்றனர். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், இராமானுஜர் மணவாளமாமுனிகள் ஆகியோரும் காட்சி அளிக்கின்றனர்.

  1. ராம ஜென்ம பூமி, இதற்கு வடக்கே பரதன் அவதரித்த இடமும், ராமஜென்ம பூமியின் கிழக்கே லக்ஷ்மண, சத்ருகுண ஜென்மபூமிகளும் உள்ளன.
  2. ஹனுமான் கடி
  3. சரயு நதி (ராம் காட், லக்ஷ்மண் காட், குப்தார் காட்) லக்ஷ்மண் காட், இங்கிருந்து தான் லக்ஷ்மணன் தன்னுடைய அவதார முடிவின் போது தன்னுடைய சுய ரூபமான ஆயிரம் தலைகளுடன் ஆதிசேஷனாக மாறி பரமபதம் அடைந்தான். அதனால் இது சஹஸ்ராதார தீர்த்தம் என்றும் அழைக்கப்படும். குப்த காட் என்ற இடத்தில இருந்து தான் ராமன் பரமபத்திற்கு எழுந்து அருளினான்.
  4. வால்மீகி பவன்
  5. தசரத பவன்
  6. அம்மாஜி மந்திர் தெற்கு பக்க கோவில்போல் அமைப்பும், பூஜைகளும்
  7. கனகபவனம் என்று அயோத்தியிலேயே பெரிய மாளிகையாகத் திகழும் கைகேயியின் அரண்மனை – இராமன் சீதை அந்தப்புரம்
  8. லகட்மண்டி பரத் பவன் என்று தசரதன் புத்திர காமேஷ்டி செய்த இடம்
  9. வசிஷ்ட ஆஸ்ரமம்
  10. பரதன் ராமபிரானின் பாதுகைகளுடன் இராமன் வரும் வரை காத்திருந்து நாட்டை ஆண்ட நந்திகிராமம் (இது அயோத்தியிலிருந்து சுமார் 20 மைல்
  11. பிட்டூர் – இது கான்பூருக்கு அருகில் உள்ளது, வால்மீகி ஆஸ்ரமம் உள்ளது. லவ குசர் பிறந்த இடம். துருவன் தவம் செய்த இடம்.
  12. ப்ரயாக்ராஜ் அருகில், ஶ்ருங்கிபேரபுரம் என்று குகன் ராமனை சந்தித்து கங்கையை கடந்த இடம், குகன் மந்திர்
  13. ப்ரயாக்ராஜ் நகரில் பரத்வாஜமுனிவரின் ஆஸ்ரமம், த்ரிவேணி சங்கமம்
  14. சீதாமர்ஹி (பிஹார்) – சீதா அவதரித்த இடம்
  15. பஸ்ர் பிஹார் – தாடகா வனம், வதம், யாக சம்ரக்ஷணம், வைகுந்தநாதர் கோவில் . வாமன அவதார ஸ்தலம் (தற்போது, பிஹார் ஜெயில்)
  16. ஜனக்புரி (நேபாளம்) – தனுஷாதம், ஜனகபவன்
  17. சித்திரகூட் – மந்தாகினி ஆறு, ராமன் காட், துளசிதாசர் பவன்

—————

சுக்ல பஷ பஞ்சமி வனவாசம் புறப்படுகிறான்
அடுத்த நாள் சஷ்டி குகன் ஸஹ்யம்
சப்தமி இங்குள மரத்தடியில் தங்கி
அஷ்டமி பரத்வாஜ ஆஸ்ரமம்
நவமி
தசமி -சித்ர கூடம்
ஏகாதசி -தசரதன் மரணம்
துவாதசி தூதர்
பவுர்ணமி கேகேய தேசம் சேர்கிறார்கள்
கிருஷ்ண பக்ஷ நவமி பரதன் அயோத்யா வந்து
13 நாள் சம்ஸ்காரம் வைகாசி மாதம் -சுக்ல பஷ பஞ்சமி

ராமனை அழைத்து வர பாதை சரி பண்ண 4-5- நாள்கள் ஆயின
வைகாசி வளர்பிறை சுக்ல ஏகாதசி குகன் இருக்கும் இடம் கங்கைக்கரை அடைந்து
துவாதசி பரத்வாஜர்
அடுத்த நாள் ராமனை சேவித்து மூன்று நாள் தங்கி
கிருஷ்ண பக்ஷ த்விதியை புறப்பட்டு
வைகாசி கிருஷ்ண பஷம் சதுர்த்தி பாதுகா பட்டாபிஷேகம்
பஞ்சமி -ராமன் அத்ரி ஆஸ்ரமம் சென்று 10 வருஷம் வனவாசம்
கோதாவரி பஞ்சவடி
14 வருஷம் சித்திரை மாதம் சீதா அபஹாரம்
வைகாசி சுக்ரீவன்
ஆடி மாதம் வாலி வாதம்
ஐப்பசி வானரங்களை அனுப்பி
பங்குனி மாதம் சீதையை திருவடி காண்கிறான்
வளர்பிறை -சுக்ல பஷ சதுர்த்தி தீ வைக்க
மறு நாளே-பங்குனி பவுர்ணமி ராமன் இடம் சேர்க்கிறார்கள் -ஒரே நாளில்
பங்குனி அமாவாசை ராமன் வதம் -15 நாளிலே வால்மீகி -கம்பர் 30 நாள்
வளர்பிறை சுக்ல பஷ பிரதமை ராவண ஸம்ஸ்காரம்
த்விதியை விபீஷணன் பட்டாபிஷகம்
மன்னன் தானே மன்னன் ஆணையை மாற்றி சீதையை விடுவிக்க வேண்டும்
ராஜ நீதி அறிந்த பெருமாள் -ஆகவே அடுத்த நாள் சீதையை விடுவித்தான்
த்ருதீயை புறப்பட்டு -பஞ்சமிக்குள் திரும்ப வேனும்
சதுர்த்தி கிஷ்கிந்தை
பஞ்சமி பரத்வாஜர் ஆரமம் சேர்ந்தான்
12 வயசில் யாகம் காத்தஹு –
12 வராஹம் அயோத்யையில் வாழ்ந்து
25 வயதில் காட்டுக்கு
38-39- திரும்பி -சீதாப் பிராட்டிக்கு 32-33-

————-

சத்ருக்னன் -பரதனுக்கு
ஒரு அண்ணன்-பரதன் – வானகம் போக -காடாள நிலமங்கை விட்டு
ஒரு அண்ணன் -லஷ்மணன் -அவனுக்குத் தொண்டு செய்ய பின்னே போக
ஒரு அண்ணன்-ராமன் – கானகம் போக
அடியேன் போனகம் பருகி இருக்கவா
எண்ணில் கோடி ராமர் எனினும் அண்ணல் உனக்கு நிகராகுமோ-1-3-1000-கீழ் இப்பொழுது கோடி-கௌசல்யை-

————————

Maharishi Valmiki has recorded in ‘Bal Kaand’, Sarga 19 and Shloka 8 & 9 (1/18/8,9), that Shri Ram was born on 9th Tithi of Chaitra month when the position of different planets vis-a-vis zodiac constellations and nakshatras (visible stars) were:

i) Sun in Aries; 

ii) Saturn in Libra; 

iii) Jupiter in Cancer; 

iv) Venus in Pisces; 

v) Mars in Capricorn; 

vi) Lunar month of Chaitra; 

vii) 9th day after no moon; 

viii) Lagna as Cancer (Cancer was rising in the east); 

ix) Moon on the Punarvasu (Gemini constellation & Pllux star); 

x) Day time (around noon).

This data was fed into the software. The results indicated that this was exactly the location of planets /stars in the noon of January 10, 5114 BC.

Thus, Shri Ram was born on January 10, 5114 BC (7121 years back). As per the Indian calendar, it was the ninth day of Shukla Paksha in Chaitra month and the time was around 12 to 1 noon time. This is exactly the time and date when Ram Navmi is celebrated all over India.

The present Ayodhya has shrunk in size and the rivers have changed their course about 40 km north /south. Shri Ram went out of Ayodhya in his childhood (13th year as per Valmiki Ramayan) with Rishi Vishwamitra who lived in Tapovan (Sidhhashram). From there he went to Mithila, King Janaks’ kingdom. Here, he married Sita after breaking Shiv Dhanusha.

Researchers have gone along the route adopted by Shri Ram as narrated in the Valmiki Ramayan and found 23 places which have memorials that commemorate the events related to the life of Shri Ram. These include :

Shringi Ashram,

Ramghat,

Tadka Van,

Sidhhashram,

Gautamashram,

Janakpur (now in Nepal),

Sita Kund, etc.

Memorials are built for great men and not for fictitious characters. Date of exile of Shri Ram: It is mentioned in Valmiki Ramayans’ Ayodhya Kand (2/4/18) that Dashratha wanted to make Shri Ram the king because Sun, Mars and Rahu had surrounded his nakshatra and normally under such planetary configuration the king dies or becomes a victim of conspiracies.

Dashrathas’ zodiac sign was Pisces and his nakshatra was Rewati.

This planetary configuration was prevailing on the January 5, 5089 BC,

and it was on this day that Shri Ram left Ayodhya for 14 years of exile.

Thus, he was 25 years old at that time (5114-5089).

There are several shlokas in Valmiki Ramayan which indicate that Shri Ram was 25-years-old when he left Ayodhya for exile. 

Valmiki Ramayan refers to the solar eclipse at the time of war with Khardushan in later half of 13th year of Shri Rams’ exile. It is also mentioned it was amavasya day and Mars was in the middle. When this data was entered, the software indicated that there was a solar eclipse on October 7, 5077 BC, (amavasya day) which could be seen from Panchvati. The planetary configuration was also the same – Mars was in the middle,

on one side were Venus and Mercury and on the other side were Sun and Saturn.

On the basis of planetary configurations described in various other chapters, the date on which Ravana was killed works out to be December 4, 5076 BC, and Shri Ram completed 14 years of exile on January 2, 5075 BC, and that day was also Navami of Shukla Paksha in Chaitra month. Thus Shri Ram had come back to Ayodhya at the age of 39 (5114-5075). 

A colleague, Dr Ram Avtar, researched on places visited by Shri Ram during his exile, and sequentially moved to the places stated as visited by Shri Ram in the Valmiki Ramayan, starting from Ayodhya he went right upto Rameshwaram.

He found 195 places which still have the memorials connected to the events narrated in the Ramayana relating to the life of Shri Ram and Sita These include Tamsa Tal (Mandah), Shringverpur (Singraur), Bhardwaj Ashram (situated near Allahabad), Atri Ashram, Markandaya Ashram (Markundi), Chitrakoot, Pamakuti (on banks of Godavari), Panchvati, Sita Sarovar, Ram Kund in Triambakeshwar near Nasik, Shabari Ashram, Kishkindha (village Annagorai), Dhanushkoti and Rameshwar temple. 

In Valmiki Ramayan it is mentioned that Shri Ram’s army constructed a bridge over the sea between Rameshwaram and Lanka.

After crossing this bridge, Shri Ram’s army had defeated Ravana. Recently,

NASA put pictures on the Internet of a man-made bridge, the ruins of which are lying submerged in Palk Strait between Rameshwaram and Sri Lanka.

Recently the Sri Lankan Government had expressed the desire to develop Sita Vatika as a tourist spot. Sri Lankans believe this was Ashok Vatika where Ravana had kept Sita as a prisoner (in 5076 BC).

Indian history has recorded that Shri Ram belonged to the Suryavansh and he was the 64th ruler of this dynasty. The names and other relevant particulars of previous 63 kings are listed in Ayodhya ka Etihaas written about 80 years ago by Rai Bahadur Sita Ram. Professor Subhash Kak of Lousiana University, in his book, The Astronomical Code of the Rig Veda, has also listed 63 ancestors of Shri Ram who ruled over Ayodhya.

Sri Ram’s ancestors have been traced out as: Shri Ram, King Dashratha, King Aja, King Raghu, King Dilip and so on. From Kashmir to Kanyakumari and from Bengal to Gujarat, everywhere people believe in the reality of Shri Ram’s existence, particularly in the tribal areas of Himachal, Rajasthan, Madhya Pradesh and the North-East.

Most of the festivals celebrated in these areas revolve around the events in the life of Shri Ram and Shri Krishna.  

The events and places related to the life of Shri Ram and Sita are true cultural and social heritage of every Indian irrespective of caste and creed. Therefore, it is common heritage.

After all, Shri Ram belonged to the period when Prophet Mohammed or Jesus Christ were not born and Muslim or Christian faiths were unknown to the world.

The words Hindu (resident of Hindustan) and Indian (resident of India) were synonymous. India was also known as Bharat (land of knowledge) and Aryavarta (where Aryans live) and Hindustan (land of “Hindus” – derived from word Indus). 

During Ram Rajya, the evils of caste system based on birth were non-existent. In fact, Maharishi Valmiki is stated to be of Shudra class (scheduled caste), still Sita lived with him as his adopted daughter after she was banished from Ayodhya.

Luv and Kush grew in his ashram as his disciples. We need to be proud of the fact that Valmiki was perhaps the first great astronomer and that his study of planetary configurations has stood the test of times. Even the latest computer softwares have corroborated his astronomical calculations, which proves that he did not commit any error.

Shabri is stated to be belonging to the Bheel tribe. Shri Ram’s army, which succeeded in defeating Ravana, was formed by various tribals from Central and South India.

The facts, events and all other details relating to the life of Shri Ram are the common heritage of all the Indians including scheduled castes, scheduled tribes, Muslims, Christians, etc.

-Prophet Mohammad was born 1,400 years ago.

-Jesus Christ was born 2,000 years back.

-Gautam Buddha was born 2,600 years back,

-whereas Ram was born 7,000 years back.

——————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீயுத்த காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்-

May 27, 2024

அஹம் ச ரகு வம்சச்ச லஷ்மணச்ச மஹா பல
வைதேஹ்யா தர்சநே நாத்ய தர்மத பரி ரக்ஷிதா
–1-12-

திருவாய்மொழி – -6-8–1-நல் நலம் –
அஹம்ச-‘கண நேரமும் சீதையைப் பிரிந்து பிழைத்திருக்க மாட்டேன்’ என்னும் யானும்,
ரகு வம்ச: ச – என்னை ஒழிய ஜீவியாதபடி இருக்கிற பிள்ளை பரதனும்,
மஹா பல: லக்ஷ்மணஸ்ச – இருவர்க்கும் உஜ்ஜீனனத்திற்கு ஹேதுவான பிள்ளை இலக்குமணனும்,
வைதேஹ்யா: – இவை எல்லாம் தகும் என்கைக்காக,
தர்மத: பரிரக்ஷிதா: – நீ செய்ததற்கு ஒரு பிரதி உபகாரம் செய்யலாமோ?
வெறும் அறவனாகையாலே செய்தாயத்தனை;”
‘உனக்கு என் செய்தேன்’ என்று காலம் என்னும் ஒரு பொருள் உள்ளதனையும் உழைக்கும்படி
(உழைக்கும்படி – தடுமாறும்படி)அன்றோ நீ செய்தது என்றார் பெருமாள்.

“அஹம்ச ரகு வம்ஸ: ச லக்ஷ்மணஸ்ச மஹா பல:
வைதேஹ்யா தர்ஸநேந அத்ய தர்மத: பரி ரக்ஷிதா:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 1 : 11. இது,
திருவடியைப் பார்த்துப் பெருமாள் கூறியது.

—————-

ஏஷ ஸர்வ ஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத
மயா காலமிமம் ப்ராப்ய தத் தஸ் தஸ்ய மஹாத்மந
-1-14-

உடனே உண்பன் நான் என்று –பெரிய திருமொழி-5-8-2-
இனி நாம் ஒக்க ஜீவிக்கக் கடவோம்
இவ்வர்த்தம் -ஏஷ சர்வஸ்வ  பூதஸ்து-என்கிறத்தைப் பற்றச் சொல்லுகிறது
(சோஸ்நுதே ஸர்வான் காமான் -ப்ரஹ்ம குண சேஷ்டிதங்களை அனுபவிக்கிறோம்
பாலே போல் சீர் -அங்கு தான் நாம் சரீரம் அவன் சரீரீ என்பதை முற்றுமாக உணர்கிறோம் )
ஒரு கலத்தில் உண்பாரைப் போலே
சேஷ சேஷிகள் இருவருக்கும் அனுபாவ்யம் இறே திரு மேனி –

சர்வஸ்வ பூத -ஸ்வரூப ரூப குணங்களிலும் பிராட்டி மாரிலும் அபிமதமாய் இருக்கையாலே
அதாவது
ருசி ஜனகமாய் இருக்கையாலும்
தானே சாதனமாயுமாய் இருக்கையாலும்
சதா தர்சன விஷயமுமாய் இருக்கையாலும்
ரஷகனுக்கு ரஷணத்துக்கு பிரதான பரிகரம் திரு மேனி இறே
அவ் வுடம்போடே அணைந்த உடம்பு என்று இறே
தன் உடம்பையும் அவன் விட மாட்டாதே இருக்கிறது –
(பாவோ நான்யத்ர கச்சதி -பக்தியும் ஸ்நேகமும் உண்டே –
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே -இதுவே பூமா )

ஒண் பொருள் –
சீரிய அர்த்தம்

திருவாய்மொழி – -4-1-5-ஏஷ : – தாம் அனுபவித்துத் தமக்கு ரசித்தது என்று பிறர்க்குக் கொடுப்பாரைப் போலே; இச்சா க்ருஹீதாபிமதோருதேஹ’:
(விஷ்ணு புரா. 6. 5 : 84.) என்னக் கடவதிறே. ‘இச்சா க்ருஹீதம்’ என்கையாலே, கர்ம நிபந்தனம் அல்ல என்று தோற்றுகிறது;
‘அபிமதம்’என்கையாலே, தனக்கும் போக்கியம் என்று தோற்றுகிறது;
சர்வ ஸ்வபூத : –இது ஒழிய மற்றொன்றைக் கொடுத்தாலும் இது கொடாததால் வரும் குறை கிடக்குமே? திருமேனியைக் கொடுக்கவே
எல்லாம் கொடுத்ததாமிறே; சர்வ அபாஸ்ரயமாயன்றோ திருமேனிதான் இருப்பது!
மற்றுக் கொடுக்குமதிலும் இதுக்கு உண்டான வியாவிருத்தி தோற்றி இருக்கிறது
பரிஷ்வங்கோ ஹநூமத : – அமிருதாசிக்குப் புல்லையிட ஒண்ணாதே!பிறந்தது குரங்கு ஜாதி -நம்மை சேவிக்க அன்றோ பிறந்தான் –
ஸ்ரீ வைகுண்டம் -புல் ஸ்தானம் –
ஸ்நேஹோமே பரம : – (உத்தரராமாயணம்) – என்று இவ்வுடம்பை விரும்பினவனுக்கு இத்தையே கொடுக்கவேணுமே.
மயா காலமிமம் பிராப்ய தத்த: ‘இவன் ஒன்று கொள்வான் ஒருவன் அல்லன்; நாம் இவனுக்கு ஒன்று கொடுக்கப் பெறுவதுகாண்,’ என்று
குறைபட்டிருந்தவர், இவன் விலக்காததொரு சமயம் பெற்று இப்படிக் கொடுத்துக்கொண்டு நின்றார்.
தஸ்ய மஹாத்மந : – ஒரு படி கொடுத்தாராய் ஒன்று செய்த இத்தனை போக்கி,
இரண்டு உடம்பு கொடுத்தவனுக்கு ஓர் உடம்பு தரம் அன்றிறே.
வேணி உத்க்ரதனத்திலே பிராட்டி ஒருப்பட்ட அன்று அவளை உளள் ஆக்கினான்;
‘அவகாஹ்யார்ணவம் ஸ்வப்ஸ்யே’ (ஸ்ரீராமா. யுத்.) என்ற பெருமாளை மீட்டு அவரை உளராக்கி இப்படி இவர்க்கு இரண்டு உடம்பு
கொடுத்தானிறே அவன். அவன் பல படி உபகரிக்கையாலே இவர் ஒருபடி உபகரித்தார்,’ என்பது.

—-

நமே துக்கம் ப்ரியா தூரே நமே துக்கம் ஹ்ருதே திவா
ஏததேவாநுசோசாமி வயோஸ் யாஹ்யதி வர்த்ததே
–5-5-

ஸ்ரீ பெரிய திருமொழி-9-3-4-மங்கை நல்லாய் தொழுதும்  எழு –
ஓம் காண்-
உன் பருவம் நோக்கி அழகிதாக உண்டாகை இறே-கடுகப் புறப்படாய்-என்கிறாள் –

தன்னுடைய பருவம் அழியா நின்ற நின்ற பின்பு
நீ பருவம் நோக்குகிறோம் என்று இருக்கிற இத்தால் பிரயோஜனம் என் –
வயோஸ் யாஹ்யதி வர்த்ததே-என்றார் இறே
நமே துக்கம் ப்ரியா தூரே நமே துக்கம் ஹ்ருதே திவா எததேவா நு ஸோசாமி –
மைதிலி நம்மைப் பிரிந்து தூரத்திலே வர்த்தியா நின்றாள் -என்றத்துக்கு வெறுக்கிறேனும் அல்லேன் –
இனி வலிய ரஷசாலே பிரிவும் பிறந்தது –
இனி எங்கனே நாம் சாதிக்கும் படி –என்றத்துக்கு வெறுக்கிறேனும் அல்லேன் –
அதாகிறது கடக்க இருந்தாள் ஆகில் கடலை அணை செய்து நாலு பயணம் உள்ளே எடுத்து விட்டுத் தீருகிறது
இனி பிரிவுக்கு ஹேது பூதனான பையலைக் கிழங்கு கொடுத்து பொகடத் தீருகிறது அக்கார்யம்
நான் இது ஒழிந்த அல்லாத வற்றுக்கும்  வெறேன்
இது ஒன்றுக்குமே நான் மோஹிப்பது
அது ஏது என் என்னில்
வயோஸ்யா ஹ்யதி வர்த்ததே  –
இவை போல காலம் என் அம்பால் மீள விடலாவது ஓன்று அன்று இறே
அணைக்கு கிழக்கு பட்ட நீரை மீட்கப் போகாது இறே –

திருவாய்மொழி – -2-1-10-புத்த்வா காலம் அதீதஞ்ச முமோஹா பரமாதுர-என்னுமா போலே முன்புள்ள காலம் இழந்த தாகிலும் இனி மேலுள்ள காலம் இவ் வஸ்துவைக் கை விடாது ஒழிய வேணும்-
போன காலத்தை மீட்க ஒண்ணாது என்றதுக்கு சோகிக்கிறார்-இனியாவது எம்மை சோரேல்
ந மே துக்கம் ப்ரியா தூரே -என்னுடைய பிரியை யானவள் தூரத்தில் இருக்கிறாள் என்று அதுக்கு சோகிக்கிறேன் அல்லேன்
அது ஒரு பயணம் எடுத்து விடத் தீரும்
ந மே துக்கம் ஹ்ருதேதி வா -வலிய ரஷச்சாலே பிரிவு வந்தது என்று அதுக்கு சோகிக்கிறேன் அல்லேன் -அது அவன் தலையை அறுக்கத் தீரும்
ஏத தேவா நு சோசாமி-இது ஒன்றுமே எனக்கு சோக நிமித்தம் –பின் நின்ற காதல் –கழிய மிக்கோர் காதல் –
வயோஸ்யா ஹ்யதி வர்த்ததே -போன பருவம் இப்பால் மீட்க ஒண்ணாது இறே

—————-

வாஹி வாத யத காந்தா தம் த்ருஷ்ட்வா மாமபி ஸ்ப்ருச
த்வயி மே காத்ர ஸம் ஸ்பர்ச சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம
–5-6-

திருவாய்மொழி….6-8-3-தூ மது வாய்கள் கொண்டு ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ –“வாஹிவாத – பார்க்கப் படாமையாலே நீ பெற்ற பேறு என்?
த்வயி மே, காத்ர ஸம்ஸ்பர்ஸ:-நம்முடைய கரணங்களுக்குப் பரிசம் உன் பக்கலிலே ஆயிற்றே.
நமக்குத் தொட்டாரைத் தொட்டாயிற்றே.
சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:-காணுதலோடு ஒத்ததன்றோ எனக்கு ஸ்பரிசமும்” -அற்றது பொருந்தும்படி
வார்த்தை சொல்ல வல்ல வாயைக் கொண்டு.
த்ரௌபதி வார்த்தையால் இற்று விழுந்த மாம்பழம் கொம்பிலே ஒட்டிக் கொண்டதே போலே –
“காணப்பட்டாள் சீதை” “த்ருஷ்டா ஸீதா” என்பது, ஸ்ரீராமா. சுந். 65 : 10.
என்றாற்போலே. என்னையும் மதுபானம் பண்ணுவித்து நீங்களும் மதுபானம் பண்ணுங்கோள்.
நிர்பயம் -காற்று காண முடியாதே -வாயு பகவான் போலே இல்லை -உன் மூலம் சீதையை அணைக்கப் பெற்றேனே
சந்த்ரனை -உன்னைக் கண்டால் போலே -சொல்ல வேண்டுமே -காற்றை பார்த்து கண்டாரை கண்டால் போலே –
சந்தரன் தாரகம் போலே உன் ஸ்பர்சம் தாரகம் -ஸ்பர்சம் போலே தர்சனம் –வாயுவைத் திருஷ்டாந்தம் ஆக்கி -என்றுமாம் 

———–

உத்ப பாத கதா பாணிச் சதுர்ப்பிஸ் ஸஹ ராக்ஷஸை–16-17-

திருவாய்மொழி – -4-9-கதையைக் கையிலே யுடையவனாய் நான்கு மந்திரிகளோடு உயர எழுந்தான்,’ என்கிறபடியே,
இராவணனோடு பொருந்தாமை பிறந்த பின்பு நெருப்புப்பட்ட தரையில் கால் பாவாதாப்போலே அவ்விடம்
அடி கொதித்துப் போந்தான் ஆயிற்று.
ந நமேயம் என்னாதது கதை ஒன்றே ஆயிற்று -அத்தை எடுத்து தோளில் வைக்க வேண்டும் –
அதுவும் வேண்டாத படி நால்வரும் –இவன் கைகள் கால்கள் போல நால்வரும்
இத்தால், ஒருவன் ‘பகவானிடத்தில் பகைமை கொண்டு அதிலே நிலை நின்றான்’ என்று
அறிந்தானாகில் தன்னைக் கொண்டு அகல அன்றோ அடுப்பது என்பது போதருகின்ற தன்றோ?-
கர்ணன் இந்த தப்பித் தானே பண்ணினான் –
ஆத்மா உஜ்ஜீவனம் பார்க்காமல் செஞ்சோற்று கடன் என்று தேக யாத்ரை பார்த்தானே –
ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் –தாழ்வாக நினைப்பார்கள் -பக்கல் நெஞ்சே கூசித் திரி –
அசோகா வனம் பிரிவு –வால்மீகி ஆஸ்ரமம் பிரிவில் அவ்வளவு துயரம் இல்லையே –
ராம விரஹத்துக்கு மேலே ராஷசி கணங்கள் கூட இருப்பது அதில் -சாதுக்கள் கோஷ்டியில் அன்றோ இது 

————

தீப்த பாவக சாங்காசை சிதை காஞ்சன பூஷணை
நத்வா மிச்சாம்யஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம் சரை
–16-24-

ஸ்ரீ பெரிய திருமொழி-2-8-2-ராவணன் வார்த்தை
சத்ரோ–பிரக்யாத வீரஸ்ய-ரஞ்ச நீயஸ்ய விக்ரமை-
சத்ரோ –
கெடுவாய் என்னுடைய சத்ருவை ஆர் என்று நினைத்து தேரை மீட்டுக் கொடு போந்தாய்
பிரக்யாத வீரஸ்ய-
எதிரிகளான நம் படை வீட்டிலும் பிரசித்தமாய் அன்றோ
அவருடைய ஆண் பிள்ளைத் தனம் இருப்பது –
நீ கேட்டு அறியாயோ
அது ஏறிப் பாயாத மேடு இல்லை காண்
ரஞ்ச நீயஸ்ய விக்ரமை
கண்டு பராக்ரம் மிக்க ஒண்ணாதபடி அளவற எதிரி முடிகினால்
அது நிலமாக்கிக் கொண்டு பராமிக்கும்படியை படியைப் பார்த்தால்
காந்தனை விரும்புமா போலே எதிரிகளுக்கு விரும்ப வேண்டும்படி காண் அவரது ஆண் பிள்ளைத் தனம் இருப்பது-

தீ வாய் வாளி –திருவாய்–6-10-4-
பெருமாள் தொடுத்து விடும்போதாயிற்று அம்பு என்று அறியலாவது;
படும்போது நெருப்புப் பட்டாற்போலே இருக்கை.
ஸ்ரீகோதண்டத்தில் நாணினின்றும் கழிந்து செல்லும் போது காலாக்னி கவடுவிட்டாற் போன்று எரிந்து கொண்டு செல்லா நிற்கும்.
குணஹீநமானால் இருக்கும்படி அன்றோ இது. -குணம் -நாண்- சாடு -குண ஹீனம் -கிருபா ஹீனம் –
“தீப்த பாவக ஸங்காஸை: – படும் போது நெருப்பைப் போன்றிருக்கும்படி.

“தீப்த பாவக ஸங்காஸை: ஸிதை: காஞ்சநபூஷணை:
ந்த்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம்ஸரை:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 22.
இராவணனைப் பார்த்து விபீடணன் கூறியது.

ஸிதை: பட்டமை தெரியாதே தொளை உருவி அவ்வருகே விழக் காணுமித்தனை.
காஞ்சந பூஷணை: – இவற்றுக்கு இருவகைப்பட்ட ஆகாரம் உண்டாயிருக்கிறபடி.
“சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாது”பெரிய திருமொழி, 7. 3 : 4.– என்கிறபடியே,
அநுகூலர்க்கு அகப்படுகைக்கும் அதுதானேயாயிருக்கிறபடி.
நத்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம் ஸரை: – இவ் வழகுக்கு இலக்காய் வாழ்ந்து போகலாயிருக்க,
எதிரிட்டு முடிந்துபோக நான் இச்சிக்கிறிலேன்.
நீ எண்ணி இருக்கிறது நான் அறிகிறிலேன் அன்றோ.
இருத்திப் பிடித்த வில்லும், தெரித்துப் பிடித்த பகழியுமாய்க் கொண்டு நிற்கும்போது அபிராமராய் அன்றோ இருப்பது;
அவ்வழகைக் கண்டு அநுபவிக்கமாட்டாமல், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து முடிவாரைப்போலே,
தயரதன்பெற்ற மரகத மணித்தடத்தை எதிரிட்டு முடிந்துபோக நான் காணமாட்டுகிறிலேன்.

வாளி மழை பொழிந்த சிலையா –
“அம்பு மழையைப் பெய்தாரன்றோ”
“ஸரவர்ஷம் வவர்ஷ ஹ”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 18.
என்கிறபடியே, பாட்டம் பாட்டமாகப் பெய்தபடி.

————–

மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன –18-3-

ஸ்ரீ திரு விருத்தம் -42-மித்ர பாவேன-
அவன் பக்கலில் பாவமே அமையும் –
அவனை விடில் என்னை இழக்கும் அத்தனை இறே-
அவன் பக்கல் கிடையாதது ஒன்றை வேணும் என்றால் துராராதானம் இத்தனை இறே –
இவன் பக்கல் பெற்றது கொள்ளும் இத்தனை இறே –
இவனால் செய்ய முடியாதது ஒன்றைச் சொல்லுகை யாவது கை விட நினைத்து சொல்லிற்றாம் இத்தனை இறே –

ஆர்த்தோ வா யதி வா த்ருப்த –
ராகவம் சரணம் கத –
என்ற உக்தி திரு  செவி பட்ட போதே
இவன் நெஞ்சில் தளர்த்தியை திரு உள்ளம் பற்றினார் பெருமாள் –

உக்தியே இவன் பக்கல் உள்ளது –
நினைவு வேறு ஒரு படி -என்று அறிந்த முதலிகள் –
ராம பக்தியால்-
நினைவு ஒன்றாய் செயல் ஒன்றாய் இருக்கிறவன்
வத்யன் -என்றே இருந்தார்கள் –

திருவாய்மொழி – -5-1-1-“மித்ர பாவேந” என்கிற சுலோகத்திலே
எம்பார், ‘சர்வ ஜ்ஞனுக்கு ஒரு அஜ்ஞானமும் மறதியும், சர்வ சக்திக்கு ஒரு அசத்தியும் உண்டு’ என்று அருளிச் செய்வர்.
ஒருவன், தன்னை அடைந்தால், முன்பு புத்தி பூர்வம் பண்ணிப் போந்த குற்றங்களிலே மறதி, ஞானம் பிறந்த பின்பு தன்னை
அறியாமலே வரும் குற்றங்களில் அஜ்ஞானம் அவனை விட வேண்டி வருமளவிலே அசக்தி.
இப்படி இருக்கைக்குக் காரணம், இயல்பிலே அமைந்த குடல் தொடக்கு.

இப்போது கிருபா பரதந்திரனாய் இருந்தானே யாகிலும், சர்வஜ்ஞன் சர்வசக்தி அலனோ, அபராதங்கட்குத் தகுதியாக அவற்றின்
காரியங்களும் பிறவாவோ?-என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் “மித்ரபாவேந” என்று தொடங்கி.
மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந தோஷோ யத்யபி தஸய ஸ்யாத் ஸதாமேத தகர்ஹிதம்.” என்பது, ஸ்ரீராமா. யுத். 18:3.
இந்தச் சுலோகத்தில் உள்ள “தோஷோ யத்யபி” என்றதனை நோக்கி ‘அஜ்ஞானமும் மறதியும்’ என்றும்,
“கதஞ்சந நத்யேஜயம்” என்றதனை நோக்கிச் ‘சர்வசக்திக்கு ஒரு அசக்தியும் உண்டு’ -என்றும் அருளிச்செய்கிறார்.

———

ஸூஹ்ருதோ வா பவத் விதா –18-15-

திருவிருத்தம் -56–ஸூஹ்ருதோ வா பவத் விதா –நம்மைக் கண்ட காட்சியிலே ஜ்யேஷ்டனை எதிரியாகி அவனிலும் நம்மை அந்தரங்கராக்கி கார்யம் கொள்ளும் தனை ஸுஹார்த்தம் உள்ளது உமக்கே காணும் என்கிறார்-

————

பிசாசாந் தானவான் யஷான் பிருதிவ்யாம் சைவ ராக்ஷஸான்
அங்குல்ய அக்ரேண தான் ஹன்யாம் இச்சன் ஹரி கணேஸ்வர
–18-23-

திருப்பல்லாண்டு -1-கால க்ர்த பரிணாமம் உள்ள தேசத்தில் இருக்கிறவருக்கு அதி சங்கையும் -அத்தாலே வந்த பயமும்
பய நிவர்த்திக்காக காலத்தை பெருக்கி இக்காலம் உள்ளதனையும் இப்படி மங்களா சாசனம்
பண்ணச் சொல்ல வேணுமோ –
இப்படி மாறி மாறி பயத்தை விளைத்து -காலத்தை பெருக்கி -இதுவே தமக்கு யாத்ரையாக
செல்லப் புக்கவாறே -அவன் -இவருடைய பயத்தை பரிஹரிக்க வேணும் -என்று பார்த்து -புலி கிடந்த தூற்றுக்கு அஞ்சிக் காவல் தேடுவாரைப் போலே நீர் நமக்கு அஞ்சக் கடவீரோ -மல்ல வர்க்கத்தை நிரசித்த தோள் இருக்கிறபடி பாரீர் -என்று தோள் வலியைக் காட்டினான்-
ராவணா நுஜனைக் குறித்து மஹாராஜருக்கு பிறந்த பயத்தை போக்குகைகாக தன் மிடுக்கைக் காட்ட-அவர் பயம் சமிக்கக் காண்கையாலே -இவ் விஷயத்திலும் பலிக்கும் -என்று மிடுக்கைக் காட்ட
இவர்க்கு இது தானே பய ஹேது வாய்த்து -மஹாராஜர் பயத்தை தீர்த்த படி என் என்னில் –
பிசாஸான் தாநவான் யஷான் -கள்ளர் பள்ளிகள் வலையர் -என்னுமா போலே
ஹிம்சிகருடைய அவாந்தாபிதை இருக்கிறபடி -ப்ருதிவ் யாஞ சைவ ராஷசான் -இலங்கையில்
உள்ள ராஷசர் அளவு அன்றிக்கே பஞ்சாசத்கோடி விச்தீர்னையான பூமியில் உள்ள
ராஷசர் எல்லாம் எதிரிகள் ஆனாலும் -அங்குல்ய கரேண தாந ஹன்யாம் -ஆக
சத்ரு வர்க்கங்கள் எல்லாம் ஒரு கலத்திலே உண்டு எதிரிட்டாலும் இவற்றின் உடைய
நிரசனத்துக்கு அஸ்த்ர சஸ்த்ரங்கள் வேணுமோ -ஷூத்ர கிருமிகளை நிரசிக்குமோ பாதி
அங்குல்யக்ரத்தாலே நிரசிக்க வல்லோம் காணும் என்கிறார்
ஆனால் நம்மை நலிந்த பிரதிபஷம் நசியாதே கிடக்கிறது என் என்னில் -அழிப்போம் -என்னும்
இச்சை இல்லாமை -இச்சை உண்டானால் அழிக்கையில் அருமை இல்லை -அது தனக்கு அடி என் என்னில்
உயிரோடே தலை சாய்க்குமாகில் அழிக்கிறது என் -என்னும் இரக்கத்தாலே –
இவ்வார்த்தை ராம பாக்யத்தாலே மஹாராஜர் நெஞ்சிலே பட்டு பய நிவ்ருத்திக்கு உடலாய்த்து –
இவர்க்கு இது தானே பய ஹேது வாய்த்தது-

————

கிம் புநர்மத் விதோ ஜநா –18-25-

திருவாய்மொழி – -6-8-6-“ஓ வானரங்களுக்குத் தலைவனான ஸூக்கிரீவனே! அந்தப் புறாவானது தன் மனைவியை அபஹரித்தவனைத்
தன்னைக் கொடுத்துக் காத்தது; என்னைப் போன்றவர்கள் சரணாகதி செய்கிறவனைக் கைக் கொள்ள வேணும்
என்பது சொல்லவும் வேணுமோ?”-கபோதன வியாக்யானம் –

“ஸஹிதம் ப்ரதிஜந்ராஹ பார்யா ஹர்த்தாரம் ஆகதம்
கபோதோ வானரச்ரேஷ்ட கிம்புந: மத்விதோ ஜந:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 25.

பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்க வந் தடைந்த பேதை
வேடனுக் குதவி செய்து விறகிடை வெந்தீ மூட்டிப்
பாடுறு பசியை நோக்கித் தன்னுடல் கொடுத்த பைம் புள்
வீடு பெற் றுயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமி தன்றோ.-என்பது, கம்பராமாயணம், விபீடணனடைக். 112.

என்ற இடத்தில் சொல்லுவது ஒரு வார்த்தை உண்டு.
அது, அருளாளப் பெருமாள் எம்பெருமானாருடைய அந்திம தசையிலே, ‘திருவுள்ளத்தில் ஓடுகிறது என்?’ என்ன,
‘ஒரு பறவை பெருமாளுடைய திருவுள்ளத்தைப் புண்படுத்தியபடி என் என்று கிடந்தேன்’ என்றார் என்பது.
இதற்குக் கருத்தாக நம்பிள்ளை அருளிச் செய்யும் வார்த்தை:
‘நாம் பண்ணின சரணாகதி, ஆகையாலே பலத்தோடு அவ்யபிசாரியாக மாட்டாது;
இனி, சரண்யன் நீர்மையின் ஏற்றத்தாலே நமக்கு ஒரு குறை இல்லை என்கிறது’ என்பது.
பெருமாளை புண்படுத்தியது யாவது -விபீஷண சரணாகதி உக்தி அநந்தரம் உடன் கொள்ளாமல் வார்த்தைகளைச் சொல்லி
கால விளம்பம் -புறா இது எல்லாம் செய்ய வில்லையே -பிராணான் பரித்யஜ்ய -புறா செய்ய –
மேலே செய்ய வழி இல்லையே என்ற புண் என்றுமாம் –
சரண்யன் புறாவாலே பல சித்தி வேடனுக்கு –சரண்யன் குணத்தாலே தான் பலிக்கும் என்றவாறு –

—————

ஆர்த்தோ வா யதிவா திருப்த ப்ரேஷாம் சரணாகத
அரி பிராணன் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மநா
–18-23-

ஸ்ரீ திரு விருத்தம் -42–ஆர்த்தோ வா யதி வா த்ருப்த –
ராகவம் சரணம் கத –
என்ற உக்தி திரு  செவி பட்ட போதே
இவன் நெஞ்சில் தளர்த்தியை திரு உள்ளம் பற்றினார் பெருமாள் –

உக்தியே இவன் பக்கல் உள்ளது –
நினைவு வேறு ஒரு படி -என்று அறிந்த முதலிகள் –
ராம பக்தியால்-
நினைவு ஒன்றாய் செயல் ஒன்றாய் இருக்கிறவன்
வத்யன் -என்றே இருந்தார்கள் –

(அரும்பதம்
சரணாகதி ஸ்லோகம்
காற்றுத்தானும் வேண்டாவாயிற்று தனது காலின் மேன்மை
அவன் ஸுஹார்த்தம் எதுவுமே வெண்டாதே
ஆபி முக்கிய ஸூ சகமான ஆர்த்த ப்ரபத்தியும் வேண்டா
மானஸ பிரபத்தியும் வேண்டா
மித்ரா பாவேந உண்டே
ஆனால் ஆர்த்த பிரபத்தியோ திருப்த பிரபத்தியோ
சரணம் சொன்ன எதிரியாகவோ -பரேஷாவாக – இருக்கட்டும் -துல்ய விகல்பமாக உள்ளதே
ஆர்த்தியாலோ த்ருப்தியாலோ கொடுப்பவன் இல்லையே
பிரபத்தியால் கொடுக்கிறான் என்றபடி
அதிகாரி வேண்டுமே
புருஷனையும் புருஷகாரத்தையும் நோக்கும்
தன்னைப் பார்த்தே கொடுக்கிறான்
இத்தையே மேல் வியாக்யானம் விளக்கும் )

ஆர்த்தன் ஆகையாவது –
இத் தலையை பெறில் ஜீவித்தும்
பெறா விடில் முடியும் படி யுமாய் இருக்கை– 

த்ருப்தன் ஆகையாவது –
நெஞ்சு இன்றிக்கே இருக்கச் செய்தே
நம்முடைய அனுகூல பாஷணங்களை
பிறர் அனுகரிக்குமா போலே
நெஞ்சு இன்றிக்கே இருக்க செருக்காலே சொல்லுகை –

(நாம் திரு நாமங்களைச் சொல்ல -அவற்றை ஆபேஷித்து
கண்ணன் கள்வன் -என்று சொல்லுமவரும் உண்டே
இருவரும் அநு காரத்தோடே சொல்லுகிறார்கள் போல்
திருப்த ப்ரபன்னன் -வாய் வார்த்தையாகச் சொல்லி
ஆர்த்த ப்ரபன்னன்
நாமும் புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே –
ஆழ்வாரைப் போலே சொல்லுவது
நெஞ்சு இன்றிக்கே சொல்வது போல் )

(அவனுக்கு உடன் பேறு
இவனுக்கு சரீர அவசானத்தில் பேறு
பலம் வேறுபாடு உண்டே என்னில்
இவன் பெறுவதற்குத் தயாராக இல்லை
ஆகவே பலத்தில் வேறுபாடு இல்லையே
கோவிந்த ஸ்வாமி அனுபவம் பார்த்தோம்
18 நாடான் பெரும் கூட்டம் உண்டே )

ஆர்த்தன் ஆகவுமாம் த்ருப்தன் ஆகவுமாம்-
ஆர்த்யோபாதி த்ருப்திக்கும் பல ஐக்க்யம் உண்டாம் படி
எங்கனே எனில்
இவனைப் பார்க்கும் அன்று இது விசாரிக்க வேணுமே –
சரண்யனுக்கு வேண்டுவது சொல்லுகிறது இறே இதில் –

ஆர்த்தியோபாதி த்ருப்தியும் இதுக்கு பரிகராம்படி (சாதனமாம்) எங்கனே எனில் –
ஆர்த்தி பரிகரமான இடத்தில் –
இதுவும் பல வியாப்தமாகக் கண்டு போருகிறது –
ஆகையாலே
ஆகிஞ்சன்யமே ஆயிற்று அதுக்கு பரிகாரம் –

த்ருப்தனுக்கு –
இதுக்கு பரிகரமான ஆர்த்தியும் கூட இல்லையாய் இருந்தது
இனி நாமே ஆகாதே உள்ளோம் -என்று அதுக்கும்
அவன் இரங்கும் என்று பரிகரமாக தட்டில்லை –

(விபீஷணன் சரணாகதி பெருமாள் திரு உள்ளம் படி ஆர்த்த பிரபத்தி
முதலிகள் திரு உள்ளம் படி திருப்த பிரபத்தி
ஆர்த்தி உள்ள சாதனம் உள்ளவருக்குக் கொடுக்க
அது கூட இல்லாமல் இருந்தால் கொடுப்பத்துக்குச் சொல்ல வேண்டுமே
நீசனேன் நிறை ஒன்றும் இல்லேன் என்பவரைத் தானே பூர்ண கடாக்ஷம் பண்ணி
எங்கும் பக்க நோக்கு அறியாமல் இருந்து மேல் விழுந்து கொள்ளுவானே
இரக்கமே பரிகரம் என்றதாயிற்று -)

பரேஷாம் கத அரி –
சத்ருக்களில் வைத்து கொண்டு சரணாகதனான சத்ரு –
அதாவது –
உக்தி மாத்ரமேயாய் கார்யத்தில் சாத்ரவமே முடிய நடவா நிற்கை –
அன்றிக்கே –
கொன்றேன் பல்லுயிரை -அன்றே வந்து அடைந்தேன் -பெரிய திரு மொழி -1-9-3-
என்னுமா போலே கொன்ற கறை கழுவாதே -வந்து புகுருகை –
(கொத்தின ரத்தத்துடன் வந்த காகாசூரனை -பரமா கிருபையா -கொண்டு ரஷித்தானே )

ப்ராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய –
அவர்கள் பக்கலிலே வாசி உண்டாலும் -ரஷிக்கும் இடத்தில் இருவரையும் ஒக்க
பிராணன்களை அழிய மாறி ரஷிக்க படும் –

ப்ராணாநபி பரித்யஜ்ய -என்னாது ஒழிந்தது –
அவன் செய்ததுக்கு பிராணனை அழிய மாறி
ரஷிக்கும் அதுவும் போராது என்று நினைத்து இருந்த படியால் –

(பிராணனை விட்டாவது ரக்ஷிக்க வேண்டாம் என்று இல்லாமல்
பிராணனை விட்டே ரக்ஷிக்க வேண்டும்
இதுவும் அவன் சரணம் என்ற சொன்னதுக்குப் போராது என்று எண்ணு மவன் அன்றோ –
கபோத உபாக்யானம் -புறா கதை -அறிவோமே )

க்ருதாத்மன-
இவனுடைய ரஷணத்துக்கு செய்தது ஓன்று அன்று –
தன்னுடைய ஸ்வரூப சித்திக்காக –
(க்ருதாத்மன திருத்தப்பட்ட மனசை யுடையவன்
ராகவ வம்சம் -தர்மம் தெரிந்தவன் ராகவன் ஆனபடியால் )

திருவாய்மொழி – -6-2-“ஆர்த்தோ வா யதிவா திருப்த:-ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்;
“ஆர்த்தோ வா யதி வா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத:
அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷி தவ்ய: க்ருதாத்மநா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 28.
(கண்டு மகரிஷி வசனம் -சுக்ரீவனுக்கு பெருமாள் )

ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்’ என்றது முதல்,
‘இத்தனையும் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றபடி’ என்றது முடிய,
“ஆர்த்தோவா” என்ற சுலோகத்திற்குப் பொருள் அருளிச் செய்கிறார்.
சுலோகத்திலுள்ள “த்ருப்த:” என்றதற்குப் பொருள் அருளிச் செய்கிறார் ‘நாம் திருநாமங்களை’ என்று தொடங்கி.

திருப்தனாவான்,
சம்சார தோஷ ஞானமும் பகவத் வைலக்ஷண்ய ஞானமுமுடையவனாய், நல்லாசிரியனை அடைதலை
முன்னாகக் கொண்டு ஈசுவரனே உபாயோபேயம் என்று அறுதியிட்டு, இனி வரும் பிறவியினைப் பொறுக்காதவனாய்,
இப் பிறவி முடியுமளவும் ஆறியிருக்குமவனாய் இருக்க, ‘சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறு போலே’ என்று,
அவனை எளிமைப் படுத்துதல் என்? எனின்,
சரண்யனுடைய வைபவத்தைச் சொல்லும் இடமாகையாலே நஹி நிந்தா நியாயத்தாலே
எளிமைப்படுத்துகிறார் என்று அருளிச் செய்வர்.

அன்றிக்கே,
நாம் திரு நாமங்களைச் சொன்னால் சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறு போலே செருக்காலே சொல்லவுமாம்.
இங்ஙனம் விகல்பிப்பான் என்? ஆர்த்தனுக்கு அன்றோ பலத்தை அடைதல் உள்ளது?
மற்றையோனுக்கு உண்டாகச் சொல்லுகிற இடம் பிரசித்தம் அன்றே? என்னில்,
இந்தச் சுலோகம் சரணாகதத்தின் லக்ஷணம் சொல்லுகிறதன்று;
சரண்யனுடைய லக்ஷணம் சொல்லுகிறது. இவனுடைய ஆர்த்தி தானும் உபாயத்தில் சேராதே யன்றே;
ஆன பின்பு, அவனோடு இவனோடு வாசி இல்லை.

அன்றிக்கே,
தன் நிலை அறிந்து, ‘நமக்கு ஒரு கைம் முதல் இல்லையாய் இருந்தது’ என்று
தன் குறையை அறிவிக்கவும் மாட்டாதபடி யாயிருந்தான்; ஆன பின்பு, இவனுக்கு நாமே யன்றோ உளோம் என்று
திரு வுள்ளம் இவன் பக்கல் ஊன்றி யிருக்கும்.
பரேஷாம் சரணாகத: அரி:-
பகைவர்களில் வைத்துக் கொண்டு சரணம் அடைந்தவனான பகைவனாயிற்று இவன். அது என்? என்னில்
‘சரணம்’ என்ற வார்த்தையைச் சொல்லுகையாலே, ‘சரணாகதன்’ என்னவுமாய், அகவாயில் இல்லாமையாலே
‘பகைவன்’ என்னவுமாயிருக்கை.
அன்றிக்கே,
முன்பு செய்தனவற்றிற்கு அநுதாபம் இல்லாமையாலும், இப்போது ‘சரணம்’ என்கிற சொல்லைச் சொல்லுகையாலும்,
இரண்டும் சொல்லலாயிருக்கை.
அன்றிக்கே,
கொன்றேன். . .அன்றே வந்தடைந்தேன்’ என்னுமாறுபோலே என்னுதல்.

கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோள் ஒன்றிலாமையினால்
என்றேனு மிரந்தார்க் கினிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர் குளிர் மா மலை வேங்கடவா!
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.-, பெரிய திருமொழி, 1. 9 : 3. என்றது,

“பரேஷாம் அரிஸ்ஸந் ஸரணாகத:” என்று கூட்டி, பிறர்க்கும் பகைவனாய்க் கொண்டு
பிராயச்சித்தம் முதலியன செய்யாது சரணம் அடைந்தவன் என்று வேறும் ஒரு கருத்து அருளிச் செய்தபடி.
உதிரக் கை கழுவாமல் உடனே வந்து அடைந்தேன் என்பது பொருள்.
பிராணாந் பரித்யஜ்ய – பிராணன்களை ஒரு தலையாக விட்டு.
‘பிராணா நபி-பிராணன்களையும்’ என்ன வேண்டாவோ? என்னில், அவன் சொன்ன சொலவுக்கு இது
ஒன்றும் போராமையாலே அது வேண்டாவாயிற்று.
பிராணனையும் விட்டாவது சொல்லாமல் -சரணம் சொல்லே உயர்ந்தது —
பிராணனை விட என்பதால் பிராணான் பரித்யஜ்ய என்கிறார் –
ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா-திருந்திய மனத்தை யுடையவனா யிருக்குமவனால் இத்தனையும் செய்யப்படும். என்றது,
அறிவுடையார்க்கு இத்தனையும் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றபடி.
இது வன்றோ அவன் படி.

———–

யதிவா ராவண ஸ்வயம் –18-19-

திருவாய்மொழி – -10-2-2-ஆனய ஏனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா-விபீஷநோவா சுக்ரீவ யதிவா ராவண ஸ்வயம் -யுத்தம் -18–84
யதிவா -விபீஷணன் என்ற பெயராய் ராவணனே இருந்தான் என்று மீளாதேயுங்கோள் என்றான் இறே –
ஸ்வயம் –அது என்-அங்கு நின்றும் வந்தான் ஒருவனைக் கைக் கொண்டதாக அமையாதோ -என்ன வேண்டா-
குறைவாளர்க்கு அன்றோ நம்மால் கார்யம் உள்ளது –அது உள்ளது இராவணனுக்கே அன்றோ –
விபீஷணச்து தர்மாத்மா ததுராஷச சேஷ்டிதர் – ஆரண்யம் -17-24-என்கிறபடியே-
தனக்கு என்ன ஒரு கைம்முதலும் உள்ளவன் ஆகையாலே-நாளை வரவும் ஆம் –
அரைக்கணம் கிட்டா விடில் நாசமாக இருக்கிறது அந்த இராவணனுக்கே அன்றோ
ஆனபின்பு அவனை அன்றோ முற்பட கைக் கொள்ள வேண்டுவது
இனித் தான் இவனைக் கைக் கொண்டால் இவனும் இவன் தன்னோடு வந்த நால்வரும் ஆகப் போம்
இராவணனைக் கைக் கொண்டால் துறுப்புக் கூடாக கைக் கொண்டது ஆகலாம்
மகா ராஜர் ஒருவரையும் அங்கீ கரிக்க வானர சாதியாக வாழ்ந்து போனால் போலே-

———–

ராகவேணாபயே தத்தே ஸன்னதோ ராவண அநுஜ–19-1-

திருவாய்மொழி – -8-7-1-இராகவன் அபயத்தைக் கொடுத்த அளவிலே இராவணன் தம்பியான விபீஷணன் வணங்கினான் -என்றபடியே
ராகவேண அபயம் தத்தே ஸன்னத-(நன்று வணங்கினான்)  ராவணானுஜ விபீஷண மகா ப்ராஞ்ஞா பூமிம் சமவலோகயன் -யுத்தம் -1901-
இராவணன் பின் பிறந்த நாம் இரகு குலத்தில் உள்ளார்க்கு ஆளாக புக நின்றோமே -என்று இருந்தவன்
பெருமாள் பாடு நின்றும் அருள்பாடிட்டு வந்தவாறே-என்னையே இப்படி கைக் கொண்டு அருளுவது –
அவன் பின் பிறந்த தண்மை எங்கே போயிற்று -என்று
வேர் அற்ற மரம் போலே கூட வந்த நால்வரோடும் திருவடிகளிலே வந்து தரைப் பட்டாப் போலே-

———–

ஸமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி –19-321-

திரு விருத்தம் -42-இதொரு கடல் இடை சுவராய் கடவா நின்றது –
இத்தை கடந்து அவ்வருகு பட்டோமாம் விரகென்-என்று
பெருமாள் முதலிகள் அடைய கேட்க –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான்
1-தான் அணித்தாக கை கண்ட உபாயம் ஆகையாலும் –
2-சர்வ ஹிதங்களுக்கும் சாதனம் சரணா கதி -என்று அத்யவசித்து இருக்கையாலும் –
3-பல வியாப்தி இதுக்கு உள்ளது ஆகையாலும் –
பெருமாளுக்கு இந்தக் கடலை சரணம் புக அடுக்கும் -என்றான் –

சமுத்ரம் –
பெரியவர்களை வசீகரிக்கும் உபாயம் இது அல்லதில்லை –

ராகவோ ராஜா –
ஒரு குடிப் பிறப்பும் இன்றிக்கே
அளவுடையாரும் அன்றிக்கே இருப்பாருக்கும் இது பலிக்கும் ஆனால்
இவை உடையாருக்கு சொல்லவும் வேணுமோ ?

சரணம் கந்து மர்கதி –
வசிஷ்ட சிஷ்யர் பக்கலில் இது பலிக்கக் கண்ட படியாலே
அறிவில்லாத கடலின்  பக்கலிலும் அது பலிக்கும் என்று இருக்கிறான் –

(அதிகாரி நியமம் இல்லை
கால தேச பிரகார நியதி களும் இல்லை
கேவல விஷய நியதி மட்டும் உள்ளது என்பதை மறந்து பேசினான் )

சாதேவேச்மின் பிரயுஜ்யதாம் –
எருது கெடுத்தாருக்கும் ஏழே கடுக்காய்
(குழந்தை பெறுவதுக்கும் ஏழே கடுக்காய் ) -என்று

(அஹம் அஸ்ய அபராத ஆலய -அகிஞ்சனன் அகதி
த்வமே உபாய பூதா பிரார்த்தனா மதி சரணாகதி
சாதேவேச்மின் பிரயுஜ்யதாம்
சா தேவ தேவனான ஸ்ரீ மானாகிற அவன் இடம் மட்டுமே சொல்லப்பட வேண்டும் )

————-

தத சாகர வேலாயாம் தர்ப்பாநாஸ்தீர்ய ராகவ
அஞ்ஜலிம் பிராங்முக க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோ ததே
பாஹும் புஜக போகாப முபதாயாரி ஸூதந
–21-1-

திருவாய்மொழி – -6-9-3-கிடந்தும் –
“பாம்பின் உடல் போலே இருக்கிற திருக்கையைத் தலைக்கு அணையாகக் கொண்டு பகைவர்களை அழிக்கும் பெருமாள்
கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக் கொண்டு சமுத்திரத்திற்கு நேர் முகமாகப் படுத்தார்” என்கிறபடியே,
கடலை வேண்டி நின்று கிடக்கிற கிடை தானே இலங்கை குடி வாங்க வேண்டும்படி இருக்கை.
“பிரதிசிஸ்யே-எதிராகப் படுத்தார்” என்கிறதாயிற்று,
கடல் தன்னைப் போர அளவு உடைத்தாக நினைத்திருக்குமாயிற்று,
அதற்காக, ஒரு கடல் ஒரு கடலோடே பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கை;

“கருணையங் கடல் கிடந்தது கருங்கடல் நோக்கி” என்னும்படி அன்றோ.-கம்பர் பாசுரம்
ஈட்டிலே உள்ளதே -பிரமாணமாக காட்டி -நாத முனிகள் காலம் கம்பர் என்பர்-

திருவாய்மொழி – -2-8-7-கிடந்து –
1-திருப் பாற் கடலிலே கிடந்தபடி யாதல் –
2-அஞ்சலிம் க்ருத்வா –பிரதிசிச்யே -என்னும்படியாகக் கடல் கரையிலே சாய்ந்தபடி யாதல்
பஹூம் புஜக போகாபம் -திரு வனந்த ஆழ்வான் மேலே சாய்ந்தால் போலே யாயிற்று திருக்கையை மடித்து சாய்ந்தால் இருக்கும்படி
படுக்கை எல்லாம் திரு வநந்த ஆழ்வான் அம்சம்
அரி ஸூதன-கிடந்த கிடக்கையிலே இலங்கை குடி வாங்க வேண்டும்படி இருக்கை
பிரதிச்யே மஹா ததே -ஒரு கடலோடு ஒரு கடல் ஸ்பரசித்துச் சாய்ந்தால் போலே இருக்கை –கிடந்ததோர் கிடந்த அழகிலே-
கல்லணை மேல் கண் துயிலக் கற்றாயோ காகுத்தா -இங்கே மல்லணை —

———

ஷமயா ஹி ஸமா யுக்தம் மா மயம் மகராலய
அஸமர்த்தம் விஜாநாதி திக் க்ஷமா மீத்ருசே ஜநே
–21-21-

திருவாய்மொழி – -6-10-அதிகாரியாமிடத்தில், மெய்யே வேறு கதி அற்றவனாகவும் இருக்க வேணும்;
சரணம் புகா, பலித்தது இல்லை என்னா,அஸமர்த்தம் விஜாநாதி-என்பார் ஆகாது-
“இந்தக் கடல் பொறுமையோடு கூடிய என்னைச் சக்தி இல்லாதவனாக அன்றோ நினைக்கிறது” என்பார் ஆகாது
“க்ஷமயா ஹி ஸமாயுக்தம் மாமயம் மகராலய:
அஸமர்த்தம் விஜாநாதி திக்க்ஷமாம் ஈத்ருஸேஜநே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 20.
(மகராலய:-மீன் குட்டை -அஸமர்த்தம் விஜாநாதி-சாமர்த்தியம் இல்லை என்று எண்ணின் கடலை இப்படி சொல்லி )

சரண்யன் ஸ்வரூபம் -உலகம் உண்ட பெருவாயா -குணாதிகன்-இடம் பண்ண வேண்டும் –
அதிகாரி ஸ்வரூபம் –குல தொல் அடியேன் –கார்யகரத்துக்கு இரண்டும் இங்கே உண்டே
குண ஹானி இடம் பண்ணி அனர்த்த ஹேது -சமுத்திர ராஜன் -பெருமாள் -பலராமன் -சக்கரவர்த்தி -இடம் பார்த்தோமே
சிபி புறா –கபோதம் -வேடன் -பலிக்க கண்டோமே -என்னில் -கிம் புனர் நியாய சித்தம் –“சமுத்திரத்தை வற்றும்படி செய்யப் போகிறேன்; வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்”
“சாபம்ஆநய ஸௌமித்ரே ஸராந்ச ஆஸீவிஷ உபமாந்
ஸாகரம் ஸோஷ யிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.
என்று அவன் தாழ்த்ததுவே காரணமாக, சமூத்திர ராஜனை அழித்துப் பொகட்டு,
மற்றை நான்கு பொருள்களையும் கொண்டு காரியம் கொள்ளுகிறேன் என்றாரே அன்றோ.-
பஞ்ச பூதங்களில் ஒன்று போனால் என்ன நான்கையும் வைத்து காரியம் கொள்ளுகிறேன்

“க்ஷமயாஹி ஸமாயுக்தம் – ‘ஒரு பெண் பெண்டாட்டி எனக்கு என்றதனை நாம் விரும்புவது என்?’ என்று
இராஜ்யத்தைப் பொகட்டுப் பொறுத்துப் போந்தார்;
இங்கே வருணனை வழி வேண்டி அவன் முகங்காட்டிற்றிலன் என்னா, சீறிக் காலைக் கையைக் கட்டா நின்றார்;
வருண தேவன் கால் கை பிடிப்பது –வில் -வில் காலைப் பிடிக்கை -கை விரல் சரம் பிடிக்கை –
இது இருந்தபடி என்?” என்றாற்போலே இருந்தார்கள் வானர முதலிகள்.‘இவன் வந்திலன்’ என்று நாம் சீற ஒண்ணாதபடி,
வாலி புறப்படுகிறபோது தாரை வந்து காற்காட்டினத்தைப் போன்று, பொறை வந்து நம்மைக் காற்கட்டா நின்றது என்றார். –

கைகேயி அசமர்த்தனாக நினைக்க வில்லை –சமர்த்தன் சொன்னாலே சரணாகதன் லக்ஷணம் போகுமே –
அபலை ஆகையால் ராஜ்யம் விரும்பினாள் ஆகையால் க்ஷமை பண்ணி வந்தோம் –
க்ஷமை கால் காட்டியதால் மூன்று நாள் பொறுத்து இருந்தார் பெருமாள் -முதலில் சமர்த்தன் என்று நினைக்க வில்லை
அப்புறம் தான் தெரிந்தது அசமர்த்தன் என்று எண்ணி இருப்பதை அறிந்து க்ஷமையுடைய கால் கட்டை அவிழ்த்து விட்டார் –

மாம் என்கிற நாம் தாஸன் சொன்னதும் சரணாகதி பலிக்கும் –
பெருமாள் தாஸன் சொல்லி பின்பு மாம் சொல்லியதும் பலிக்க வில்லையே

“மாம் – ‘தூங்கினவன் மதங்கொண்டவன் கோபித்தவன் இவர்களுக்கு இயற்கை உணர்வு வெளிப்படும்’ என்கிறபடியே,
கோபம் விளைந்த பின்னர் ஜந்மத்தை உணர்ந்தார்.
‘பிறர் கை பார்த்திருக்கும் குடிப்பிறப்பு அன்று’ என்று இருக்கிறது இல்லை;- ‘நம்மை ஐயர் மகன்’ என்று அறிகிறது இல்லை.
அயம் – மஹோததி என்னும் பெருமையை நினைத்திரா நின்றது; தன்னைச் சிறாங்கித்திருக்கிற நம்மை அறிகிறது இல்லை.
மகராலய :- ஓர் அயோத்யாதிபதி, கோசலாதிபதிகளோடு ஒக்கக் காணும் தன்னை நினைத்திருக்கிறது;
தன்னை மீன் படு குட்டமாக அறிகிறது இல்லை.
அஸமர்த்தம் விஜாநாதி – செவ்வை கெடப் பரிமாறினாரையும் ஒக்கவிட்டுக் காரியம் கொள்ள வல்லோம் என்று அறிகிறது இல்லை.
இவ்வளவில் செய்ய அடுப்பது என்? என்னில்,
திக்க்ஷமாம் – இப்போது பொறையை வேண்டோம்.
விநியோகமுள்ள இடத்தே அன்றோ காரியம் கொள்ளுவது?
கோபத்தைப் போன்று, காரிய காலத்தே அழைத்துக் காரியம் கொள்ளப் பார்த்தோம்.
அது என்? இக்ஷ்வாகு குலத்தினராயிருப்பார்க்குப் பொறை கொண்டு காரியம் கொள்ள வேண்டாவோ?
என்னில், ஈத்ருஸே ஜநே – அதனால் பெற்றது என்? அது இங்கு ஜீவிக்கிறது இல்லை.
இதுக்கு இங்குள்ளாருடைய சம்பந்தமே பலியா நின்றதே. -கரைக்கு அந்தப் பக்கம் உள்ள இராவணன் படி –

————

ராம லஷ்மண குப்தா ஸா ஸூக்ரீவேண ச வாஹிநீ
பபூவ துர்த்தர்க்ஷ தரா ஸர்வைரபி ஸூரா ஸூரை
–25-32-

திருவாய்மொழி – -6-9-3-காப்பானே –
இவர்களுக்கு அழித்துக் கொள்ளூகை பணியானாற் போலே அன்றோ அவனுக்கும் நோக்குகை பணியானபடி.
நான் கை வாங்கினேன், (ஸ்வ ரக்ஷணம் தவிர்ந்தேன் )
இனிக் காவற் சோர்வு படாமல் வேணுமாகில் நோக்கிக் கொள்.

“இராமபிரானாலும் இலக்ஷ்மணனாலும் காப்பாற்றப்பட்டது, சுக்கிரீவனோடு கூட்டியுள்ள அந்தச் சேனை”
“ராம லக்ஷ்மண குப்தா ஸா ஸுக்ரீவேணச வாஹிநீ
பபூவ துர்தர்ஷதரா ஸர்வை: அபி ஸுராஸுரை:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 25 : 33.

கடற்கரையிலே விட்ட போது பெருமாளை நோக்குகைக்கு, தம்பிமார் மஹாராஜர் மைந்தர் துவிவிதர்கள்
உள்ளிட்ட முதலிகள் எல்லாரும் இலங்கையிலே கிட்ட, ஆகாசம் எல்லாம் வெளிக் காவல் அடைத்து,
நிதி நோக்குவாரைப் போலே பெருமாளை நோக்கிக் கொண்டு கிடக்க, இவர்கள் இத்தனை பேரும் கண் சோர்ந்த அளவிலே,
பெருமாள், தாம் கையும் வில்லுமாய்க் கொண்டு இவர்களுக்குப் புறம்பே நின்று உலாவினார் அன்றோ.
அவன் நோக்குகைக்கு இத்தலை கண் செம்பளிக்குமத்தனை யன்றோ வேண்டுவது.
நாம் அவனுக்கு ரக்ஷகராக நினைத்திருக்குமது மயக்கம். அன்றோ;
உணர்ந்து பார்த்தால் ரக்ஷகனாக வல்லான் அவனே அன்றோ.
(ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்யவம் இல்லாத போது தானே அவன் ரக்ஷித்து அருளுவான் –
முதலிகள் பரிவாலே நோக்கிக் கொண்டு இருந்தார்கள் -பக்தி பாரவஸ்யத்தால் பரிந்து –
பொங்கும் பரிவாலே -தட்டு மாறிக் கிடந்ததே )

—————–

ஸ்ரீ மதா ராஜ ராஜேந லங்காயாம் அபிஷேசித -27-2-

பெரிய திருமொழி-4-6-3–ஸ்ரீ மதா ராஜ ராஜேன லங்காயாம் அபிஷேசித-என்றார்கள் இறே 
அவன் தன் பரிகரமான சுக சாரணர் தாங்களே-

ஸ்ரீ மதா
உனக்கு முடி தந்த ப்ரஹ்மாதிகள் உடைய ஐஸ்வர்யம் போல் அன்றிக்கே
ஊற்று மாறாத சம்பத்து உடையவன் ஆகையாலே காண் அவன் முடி பெற்றது

ராஜ ராஜேன
உனக்கு முடி தந்தவர்களுக்கு முடி கொடுக்கப் பிறந்தவன் ஆகையாலே காண் –

லங்காயாம்  அபிஷேசித –
இனி உனக்கு ஒரு குடி இருப்பு தேடிக் கொள்ளாய்
அவன் பரிகரமாய் இருந்து வைத்து
அவன் மிடுக்கையும் ஐஸ்வர்யத்தையும் காணா நிற்கச் செய்தே
இப்படி சொல்லுகைக்கு அடி
அவர் கையும் வில்லும் கண்டு போந்த நாள் அணுமையாலே
இக் கொசுகு நம்மை என் செய்யப் புகா நின்றதோ  -என்று இவன் மதிப்பற நினைத்து இருந்த படியாலே-

————–

அத ஹரி வர நாத ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம்
நிசி சரபதி மாஜவ் யோஜயித்வா ஸ்ரமேண
ககந மதி விலாஸம் லங்கயித்வார்க்க ஸூநு
ஹரி வர கண மத்யே ராம பார்ஸ்வம் ஜகாம
–40-29-

திருவாய்மொழி – -7-4-1–பரிகரம் நிற்க மஹாராஜர் இராவணன் மேலே பாய்ந்தாற்போலே;
‘பையல் முடியுந்தானுமாய்ப் பெருமாள் திரு முன்பே நிற்பதே! ஈர் அரசு ஆயிற்றோ?’ என்று
பொறாமையாலே-பொறுக்காத படியாக – மேல் விழுந்தார் அன்றோ?

அத ஹரி வர நாத: ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம்
நிஸி சர பதிம் ஆஜௌ யோஜ யித்வா ஸ்ரமேண,
ககந மதி விஸாலம் லங்கயித்வா அர்க்க ஸூநு:
ஹரிவர கண மத்யே ராமபார்ஸ்வம் ஜகாம.’- என்பது, ஸ்ரீராமா. யுத். 40:29

‘அத ஹரி வர நாத:-தம்மோடு ஒக்க வினை செய்ய வல்ல பேர் தனித்தனியே பலர் அன்றோ?
ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம் – இவர்களோடு கூடி நின்று ஒத்த போர் ஆக ஒண்ணாது,
தூசித் தலையில் ஓர் ஏற்றம் செய்து தரம் பெற வேணும்,’ என்று இருந்தார்.
பூசல் தலையிலே பெருமாளுக்கு உண்டான கீர்த்தியையும் தம் தலையிலே ஏறிட்டுக் கொண்டார்.
நிசி சர பதிம் – அத் தலையிலும் அவனோடு ஒக்க வினை செய்ய வல்லார் பலர் அன்றோ?
‘அவன் கீழ்த் திரியுமவர்கள் தரம் போரார்’ என்று அவனோடே பொருதபடி.
ஆஜௌ-அவர்களைப் போலே வழி அல்லா வழியே இளைப்பிக்கை அன்றிக்கே, செவ்வைப் பூசல் செய்து இளைப்பித்தபடி.
யோஜ யித்வா ஸ்ரமேண-இதற்கு முன்பு கூடாதது ஒன்றோடோ கூட்டினார்.
ககந மதி விசாலம் லங்கயித்வா – பரப்பை யுடைத்தான ஆகாயத்தைத் திறலாலே வருத்தம் அறக் கடந்தார்.
அர்க்க ஸூநு:- மீட்சியில் தம் வரவு தெரியாதபடி மீண்டார்.
பிறப்புக்கு ஈடாகச் செய்தார். தன் நிலம் அன்றோ? சூரியன் ஓரிடத்தினின்றும் ஓரிடத்து ஏறப் போம் போது தெரியாது அன்றோ?
ஹரி வர கண மத்யே-‘இவர்களில் ஒரு வேறுபாடு தோற்ற ஒண்ணாத’ என்று இவர்கள் நடுவே நின்றார்.
ராம பார்ஸ்வம் ஜகாம – ‘தூசித் தலையிலே மதிக்க ஒரு வினை செய்தாரன்றோ முன்னிற்கப் பெறுவர்?’
என்று பெருமாள் பக்கத்திலே வந்து நின்றார்.

திருவாய்மொழி – -10-6-8-அதஹரி வர நாத –
ஒரு முத்தின் குடை நிழலிலே பையல் பெருமாளுக்கு எதிராக வந்து தோற்றினவாறே
பொறுக்க மாட்டாமை மேல் விழுந்து-நெடும் போது பொருது இளைப்பித்து
அவன் மாயப் போர் செய்யத் தொடங்கின அளவானவாறே
இனி நமக்கு அது வேண்டி வரும்-அது நமக்கு தக்கது அன்று
பெருமாள் செய்த சூளுறவை நாம் அழிக்க ஒண்ணாது -என்று மீண்டார் –
ராமேண ஹி பிரதிஜ்ஞ்ஞானம் ஹர்யர்ஷைகண சந்திதௌ-உத்சாதனம் அமித்ரானாம் சீதாயை பரிவஞ்சிதா -சுந்தர 51-32-
திருவடி ராவணன் இடம் அருளியது-சத்ய சங்கல்பரான பெருமாள் சூளுறவு செய்தார்
ஹர்யர்ஷைகண சந்திதௌ-
வீரர்கள் திரள் நடுவே சூளுறவு செய்ததும்-
ஆனபின்பு இவர்க்கு போர் செய்ய இடம் இல்லாமல் ஆக்க ஒண்ணாது என்று பார்த்தார் –
ஹரி வர நாத –
ஹரி நாத என்னாமல் ஹரி வர நாத -என்றது
தாம் செய்த இக்கார்யம் தன் சேனையில் செய்வார் இல்லாமல்-செய்தார் அல்லர்
பொறுக்க மாட்டாமையால் செய்தார் இத்தனை –
ப்ராப்ய சங்க்ராம கீர்த்திம்-
பூசல் புண்ணியம் என்று தனியே ஓன்று உண்டே அன்றோ-அதனால் வந்த புகழினைத் தாம் படைத்தார் –
நிசிசர பதிம் –
களவு பூசல் செய்வாருக்கு ஒதுங்க நிழலான பையலை-இராஜ புத்ரர்களை அகற்றி
தனி இடத்திலே பிராட்டியைப் பிரித்த பையல் அன்றோ –
ஆஜௌ –
அவர்களுக்கு நிலம் அல்லாத செவ்வைப் பூசலிலே –
யோஜயித்வா ஸ்ரமேண-
அவனை இளைப்போடே கூட்டினார் –தம்மை புகழோடு கூட்டினார் -கீர்த்திம் பிராப்ய –
ககன மதி விசாலம் லங்கயித்வா –
நாடு இடைவெளி பெருத்து இருக்கிற-ஆகாயத்தை வருத்தம் அறக் கடந்தார் –
அர்க்க ஸூந-
அது செய்த படி -சூர்ய புத்திரன் என்று-தோற்றும்படியாய் இருந்தது –
உதய கிரியில் தோன்றினால் பின்பு மறைந்து நிற்க காணும் இத்தனை அன்றோ –
ராம பார்ச்வம் ஜகாம-
பெருமாளைப் பிரிந்தபடியால்-வந்து கிட்டுவதும் செய்தோம் என்று தோற்றும்படி-மதிக்கத் தக்கது ஓன்று செய்து வராமையாலே
நேர் கொடு நேர் முன் நிற்க மாட்டாதே-பெருமாள் அருகே போய் நின்றார்
பையல் தலையைப் பிடிங்கிக் கொடு வந்து
திருவடிகளில் இடப் பெறாத நாம் என் சொல்லி முன் நிற்பது-என்று பெருமாள் அருகே வந்து நின்றார்-
கொழு மணி முடிகள் தோறும் கொண்டன குழுவின் கூட்டம்
அழுதயர் வுறுகின்றான் தன் அடித்தலம் அதனில் சூட்டித்
தொழுது அயல் நாணி நின்றான் தூயவர் இருவரோடும்
எழுபது வெள்ள யாக்கைக்கு ஓர் உயிர் எய்திற்று அன்றே -கம்பர் வுயுத் மகுட பங்கம் படலம் -27-

—————

த்வயி கிஞ்சித் ஸமா பந்நே கிம் கார்யம் சீதயா மம –41-4-

திருவாய்மொழி – –1-2-6-முற்றவும் நின்றனன்
அவர்கள் எல்லாராலும் வரும் ஏற்றம் இன்று ஆஸ்ரயிக்கிற இவனாலே யாம் படி நின்றான்
த்வயி கிஞ்சித் சமான்பன்னே கிம் கார்யம் சீதா மம -என்னுமா போலே
இன்று ஆச்ரயித்த தொரு திர்யக்குக்கு ஒரு வாட்டம் வரில் நித்ய ஆஸ்ரிதையான பிராட்டியாலும் கார்யம் இல்லை என்று
அன்று ஈன்ற கன்றின் பக்கல் வாத்சல்யத்தாலே முன்னணைக் கன்றினையும் கொம்பிலே கொள்ளுமா போலே
பிராட்டிக்காக கிஞ்சித் அவதி பட்டாய் இதற்கு நிமித்த பூதையான அவளிலும் பிரிய-பிரிய தர -பிரிய தம -இளைய பெருமாள் பரத -சத்ருக்னன்
-இவர்களுக்கு ஜீவனமான என் திரு மேனியும் வேண்டேன் -என்றாரே பெருமாள்
கிஞ்சித் கொஞ்சம் ஆபத்து வந்து இருந்தால் -வாயால் சொல்ல முடியாமல் -சீதை விடுவேன் சொல்லும் வாயால் –

திருவாய்மொழி – -4-5-8-இன்பனை –
இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பு ஆயிற்று அவளிடத்தில் அன்பு செலுத்தியிருப்பது.
இலங்கையிலேயுள்ள சுவேல மலையிலே பெருமாள் எழுந்தருளி நிற்கச் செய்தே இராவணன் கோபுர சிகரத்தே வந்து தோன்றினவாறே,
‘இராஜத் துரோகியான பையல் திரு முன்பே நிற்கையாவது என்?’ என்று மஹாராஜர் அவன்மேலே எழப் பாய்ந்து வென்று வந்த போது
பெருமாள் அவரைப் பார்த்து, ‘இராஜாக்கள் இப்படிப்பட்ட சாகஸ காரியங்களைத் தாங்களே செய்யமாட்டார்கள்,’ என்றார்; என்றது,
‘சிலர்மேல் விழ வேண்டினால், சேனைத் தலைவர்கள் நிற்க அரசரோ மேல் விழுவார்?’ என்கிறார் என்றபடி.-‘ஸ்ரீராமபிரான் உலகங்கட்கெல்லாம் நாதனாய் இருந்தும் சுக்கிரீவனை நாதனாக இச்சிக்கிறார்,’ என்னா நின்றதே அன்றோ?
கிடைப்பது கிடையாதொழிவது இச்சியா நின்றார்.
‘அத்தகைய இந்த ஸ்ரீராமபிரான் சுக்கிரீவனைச் சரணமாக அடைந்தார்,’ என்னா நின்றதே அன்றோ?
நீர் மஹாராஜரான தரம் குலைய அவன் ஒரு வார்த்தை சொல்லுமாகில்,
நீர் தேடிப் போகிற சரக்குதான் நமக்கு என்ன செய்ய?’ என்றாரே அன்றோ?
இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பாயிற்று அவளிடத்தில் அன்பு செலுத்தியிருப்பது,’ என்பதற்குப் பிரமாணங் காட்டுகிறார்,
‘நீர்மஹாராஜரான தரம் குலைய’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. யுத். 41 :4.
‘நீர் தேடிப்போகிற சரக்கு’ என்றது, சீதாபிராட்டியை.
பரிகரம் இருக்க அரசனா முன்னால் போவது என்றாரே பெருமாள் –
தாமே இவனுக்கு பரிகரம் என்ற நினைவால் அர்ஜுனனுக்கு இவன் தான் முன்னே இன்று பார்த்த சாரதி பெயர் வாங்கிக் கொண்டார் –
அன்று ஈன்ற கன்றின் மேல் உள்ள வாத்சல்ய அதிசயம் –
இச் சுலோகப்பொருளோடு,
‘இந்நிலை விரைவின் எய்தா தித்துணை தாழ்த்தி யாயின் நன்னுதற் சீதை யாலென்? ஞாலத்தாற் பயனென்? நம்பி!
உன்னையான் தொடர்வன்; என்னைத் தொடருமிவ் வுலக மெல்லாம்; பின்னை என்?
இதனை நோக்கி விளையாடிப் பிழைப்ப செய்தாய்.’என்ற கம்பராமாயணச் செய்யுளை ஒப்பு நோக்குக.

‘ஸ்ரீ விபீஷணாழ்வானைப் புகுரவொட்டேன்!’ என்றார் மஹாராஜர்;
‘இவன் புகுராவிடில் நாம் உளோம் ஆகோம்,’ என்கிறார் பெருமாள்;
‘இப்படி இருவரும் மாறுபடுதற்குக் கருத்து என்?’ என்று நஞ்சீயர் கேட்க,
‘இருவரும் ‘சரணமாகப் பற்றினவர்களை விடோம்!’ என்று மாறுபடுகிறார்கள் காணும்,’ என்பது பட்டர் அருளிச்செய்த வார்த்தை. என்றது,
‘சுக்கிரீவம் சரணம் கத:’ என்றதனை நடத்தப் பார்த்தார் மஹாராஜர்;
‘ராகவம் சரணம் கத:’-(சுக்ரீவம் நாதம் இச்சதி -வார்த்தைக்கு இந்த அர்த்தம் என்றபடி ) என்றதை நடத்தப் பார்த்தார் பெருமாள்,’ என்றபடி
‘அங்ஙனமாயின், மஹாராஜர்க்குத் தம்மை அடிமையாக நினைத்திருக்கும் நிலை குலையாதோ?’ எனின், ஆகையாலே அன்றோ
‘ஆநயைநம் ஹரி சிரேஷ்ட – வானரங்களுக்குத் தலைவனே!
இவனை அழைத்துக் கொண்டு வா’ என்று அவரை இடுவித்து அழைத்துக் கொள்ள வேண்டிற்று?

———–

சாகா ம்ருகா ராவண சாயகார்த்தா ஜக்முச் சரண்யம் சரணம் ஸ்ம ராமம்

திருவாய்மொழி – -7-1-ஸாகா ம்ருகா – பூசலிலே புக்கு அங்கு உண்டான பழக்கம் இன்றிக்கே இருக்கை.
பணையோடு பணை தத்தித் திரியுமவை அன்றோ? ராவண ஸாயகார்த்தா; –
‘தேவத்யமாநா: பதிதாக்ரய வீரா: நாநத்யமா நாபய ஸல்ய வித்தா:
ஸாகாம்ருகா ராவண ஸாய கார்த்தா: ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 59 : 45.
‘வாநரா:’ என்னாமல், ‘ஸாகா ம்ருகா:’ என்று விசேடித்ததற்கு பாவம் அருளிச் செய்கிறார்,

திசைப் பாலகர்களையுங்கூட அச்சமுறுத்தி வளர்ந்தவன் கையில் அம்புகள்.
ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம் – தங்களுடைய ஆபத்தை அறிந்து போக்கக் கூடியவனையும் பார்த்துப் பற்றினார்கள்.
‘அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட வானரங்களுடைய பெரிய கூட்டமானது,
பாதுகாக்கின்றவனும் சக்கரவர்த்தி திருமகனுமான பெருமாளைச் சரணமாக அடைந்தது,’ என்கிறபடியே,
‘ராக்ஷஸை: வத்யமாநாநாம் வாநராணாம் மஹாசமூ:
ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதா த்மஜம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.

முதலிகள் அடங்கலும் அரக்கர்கள் வாயிலே கிடந்து பெருமாளைச் சரணம் புக்காற்போலே,
இவரும் மனம் ஆளும் ஓர் ஐவர் வன்குறும்பரான இந்திரியங்களுக்குப் பயப்பட்டுக் கூப்பிடுகிறார்.

———–

சத்ரூணாம் அப்ரகம்ப்யோபி லகுத்வமகமத் கபே -59-118-

திருவாய்மொழி-1-3-1-சத்ரூணாம பிரகம்யோபி லகுத்வமகமத் கபே -ராவணன் ச பரிகரனாய்க் கொண்டு எடுக்கப் புக்க விடத்தில் நெஞ்சிலே சாத்ரவத்தாலே எடுக்க மாட்டிற்று இலன்
திருவடி தனியனாய் இருக்கச் செய்தேயும் நெஞ்சில் செவ்வையாலே கருமுகை மாலை போலே எடுத்து ஏறிட்டுக் கொண்டு போனான்
இங்கன் அன்றாகில் ராவணனுக்கு கனக்க வேணும் -என்றும் திருவடிக்கு நொய்தாக வேணும் அன்று –வஸ்து ஸ்வபாவம் இருக்கும் படி யாயிற்று இது –

————-

ஸ்மரந் ராகவ பாணாநாம் விவ்யதே ராக்ஷஸேஸ்வர–60-3-

பெரிய திருமொழி-8-1-1-சாபே –
வில் வலிக்கும் படியை நினைத்தால்
ஸ்மரன் ராகவ பாணா நாம் விவ்யதே-என்னும்படியாய் இருக்கும்
அழகுக்கு உறுப்பாய் இருக்கும் அனுகூலர்க்கு –
ஸ்மரன் ராகவ பாணா நாம் –
பெருமாள் திரு நாமத்தால் எழுத்து வெட்டின அஷரங்களையும்
திருச் சரங்களின் உடைய சந்நிவேசத்தையும் ஸ்ம்ரியா  நின்று கொண்டு –

விவ்யதே –
அவர் ஒரு கால் முன்னே நின்று போகச் செய்தேயும்
எப்போதும் ஒக்க முன்னே நிற்கக் கண்டாப் போலே வ்யதித்தான் —

ராஷேச்வர விவ்யதே –
இவர் ஆண்ட பரிகரம் அடங்கலும் வினைக்கு உடலாய் ஆயிற்று இல்லை –
எடுத்து எடுத்து குலைக்கிற போது சுளைப்பிடாம் -கம்பளி -இட்டு
அமுக்குகைக்கு உடலாம் இத்தனை –

சிலை –
ஒன்றை இட்டு விசேஷிக்க வேண்டாதே
தன்னையே சொல்ல  அமைந்து இருக்கிற ஸ்ரீ சார்ங்கம் –

—————-

சத்ரோ ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்ஜ நீயஸ்ய விக்ரமை
பஸ்யதோ யுத்த லுப்தோஹம் க்ருத கா புருஷஸ்த்வயா –1
06-6-

பெரிய திருமொழி-2-8-2-வெந்திறல் இத்யாதி -வெவ்விய திறல் உண்டு -பர அபிந சாமர்த்தியம் -அத்தை உடையரான வீரர்கள்
தாங்கள் மடல் எடுக்கும்படியான ஆண் பிள்ளைத் தனம் உடையவர் சக்கரவர்த்தி திருமகனார் –

ராவணன் வார்த்தை
சத்ரோ–பிரக்யாத வீரஸ்ய-ரஞ்ச நீயஸ்ய விக்ரமை-
சத்ரோ –
கெடுவாய் என்னுடைய சத்ருவை ஆர் என்று நினைத்து தேரை மீட்டுக் கொடு போந்தாய்
பிரக்யாத வீரஸ்ய-
எதிரிகளான நம் படை வீட்டிலும் பிரசித்தமாய் அன்றோ
அவருடைய ஆண் பிள்ளைத் தனம் இருப்பது –
நீ கேட்டு அறியாயோ
அது ஏறிப் பாயாத மேடு இல்லை காண்
ரஞ்ச நீயஸ்ய விக்ரமை
கண்டு பராக்ரம் மிக்க ஒண்ணாதபடி அளவற எதிரி முடிகினால்
அது நிலமாக்கிக் கொண்டு பராமிக்கும்படியை படியைப் பார்த்தால்
காந்தனை விரும்புமா போலே எதிரிகளுக்கு விரும்ப வேண்டும்படி காண் அவரது ஆண் பிள்ளைத் தனம் இருப்பது-

————–

உத்திஷ்ட உத்திஷ்ட கிம் ஸேஷே ப்ராப்தே பரிபவே நம
அத்ய வை நிர்ப்பயா லங்காம் ப்ரவிஷ்டாஸ் ஸூர்ய ரஸ்மய
–114-82-

பெரிய திருமொழி-1-2-2-(ராவணன் பட்டுக் கிடக்க மண்டோதரி-அருளிச் செய்த ஸ்லோஹார்த்தம்-)
ஆதித்ய கிரணங்கள் உள் புகுந்து சஞ்சரியா நின்றன கிடாய் –
இதுக்கு முன்பு இல்லாத ஓன்று இப்பொழுது உண்டாயிற்று கிடாய்-
முன்பு நெல் உலர்த்த வேண்டுவது சஞ்சரித்து போம் இத்தனை யாயிற்று ராவண பயத்தாலே –
இப்போது நிர்பயமாய்க் கொண்டு உலாவா நின்றன –

————

மரணாந்தாநி வைராணி நிர்வ்ருத்தம் ந ப்ரயோஜநம்
க்ரியதா மஸ்ய ஸம்ஸ்கார மமாப்யேஷ யாததவ –
114-101-

திருவாய்மொழி – -2-7-சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீகரித்தால்-அது பின்னை அவன் அளவிலே நில்லாது இறே –

மரணாந்தாநி வைராணி -ருஷிகள் குடியிருப்பை அழித்து -மைதிலியைப் பிரித்து நம் உயிர் நிலையிலே நலிந்தால் போலே
ஸ்ரீ ஜடாயு மகாராஜரை நலிந்து -இவை எல்லாம் செய்ய மாட்டானே இனி இவன்
நிர்வ்ருத்தம் ந பிரயோஜனம் –இவன் ஜீவிக்கிற நாளிலே நாம் செய்யும் நன்மை இவன் விலக்காது ஒழிவது காண் என்று இருந்தோம்
-அது அந்நாளிலே பெற்றிலோம் -நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம் இறே
க்ரியாதாம் அஸ்ய சம்ஸ்கார -இவன் நான் செய்யும் நன்மை விலக்காதனான அளவு பிறந்த இன்றும் இழக்க வேணுமோ -வேண்டுவன செய்யப் பாரும்
மமாப்யேஷ யதா தவ —யுத்த -114-99–நீர் இறாய்த்து இருந்தீர் ஆகில் குடல் துடக்குடையாரிலே ஒருவன் செய்யும் அத்தனை அன்றோ (புதல்வரால் பொலிந்தார் உந்தை -என்று அன்றோ ஸ்ரீ விபீஷணனை பார்த்து பெருமாள் வார்த்தை -குடல் துடக்கு -சாமான்ய சம்பந்தம் -)
நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய நீர் பின்னைக் கடக்க நில்லீர்-என்றார் இறே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் ஓரம் ராவணன் அளவும் சென்றது இறே

———

நிப்ருதஸ் பிரணத் ப்ரஹ்வ–116-

திருவாய்மொழி – -2-7-2-நிப்ருதஸ் -ஒரு அவயவத்திலே எல்லா அவயவங்களை அடங்கும்படி இருக்கை
பிரணத் -வேறு சிலர் எடுக்க வேண்டும்படி சிதிலனாய் விழுந்து கிடக்கை
ப்ரஹ்வ–இப்படிக்கிடந்தோம் என்னுமது நெஞ்சில் நடையாடாது இருக்கை

———–

தாஸீ நாம் ராவணஸ் யாஹம் மர்ஷயா மீஹ தூர்பலா –116–41-

திருவாய்மொழி – -5-4-5-என்னை ஆராய்வார் ஆர் –
“பிராப்தவ்யம் து தஸா யோகம் மயா ஏதத் இதி நிஸ்சிதம்
தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ தூர்பலா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 40.
“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுக்கிறேன்” என்கிறபடியே,
திருவடி சென்று அரக்கியர்களை நலியப் புக, இவர்கள் இராவணன் சோறுண்டு வாழ்ந்து பரதந்திரப் பட்டவர்களாகையாலே
என்னை நலிந்தார்களாகில், தங்களாலே வந்தது ஒன்று அன்றாகில்,
அது தனக்கு நாமும் ‘பொறுத்தோம்’ என்று நேர்த்தரவு கொடுத்த பின்பு இனி இவர்களை நலிகிறது என்? என்ன
‘இராவணனும் பட்டானாகில் நம்மைப் பல நாட்கள் நலிந்து போந்த இப் பெண் பையல்களை
இப்போது பொறுக்க வேண்டுகிறது என்?’ என்ன,
“துர்பலா – ‘சிலர் நம்மை நலிந்தார்கள்’ என்று நாம் அவர்களை நலியப் புக்கால், அப்போதே அவர்கள்
கண் குழிவு காண மாட்டாதார் பின்பு செய்வது என் பொறுக்காமல்.”
இராவணனும் பட்டு, பெருமாளும் வெற்றியினை யுடையரான பின்பு, இனி இது ஒழிய வேறு ஒரு தௌர்பல்யம் இல்லையே அன்றோ.
ஆக, இப்படித் தன்னை நலிந்த அரக்கியர்களையும், நீங்கள் அஞ்சாதே கொள்ளுங்கோள் என்று
“தத:ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்து: விஜய ஹர்ஷிதா
அவோசத் யதி தத் தத்யம் பவேயம் ஸரணம் ஹி வ:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 58 : 90.
“உங்களை நான் காப்பாற்றுகிறேன்” என்னக் கூடிய அவள், இப்போது, தன்னை ஆராய்வார் தேட்டமாய்,
ஆர் என்னை ஆராய்வார்’ என்கிறாளே அன்றோ-

திருவாய்மொழி – -6-10-10-“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுகிறேன்” என்றாளே அன்றோ.
என்றது, திருவடி, ‘அரக்கியர்களை என்கையில் காட்டித் தர வேணும்’ என்ன,
‘பிறர் கண்குழிவு காணப்பொறாத துர்ப்பலை காண் நான்’ என்றாள் அன்றோ என்றபடி.
ஈண்டு, “தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ துர்பலா”-என்பது, ஸ்ரீரா. யுத். 116 : 40.
“துர்ப்பலை” என்றது, இராவணன் பட்டானாகில், பெருமாளும் வெற்றியோடே நின்றாராகில்,
திருவடி வந்து முன்னே நின்றானாகில், வேறு ஒரு வலி இல்லாத தன்மை இல்லையாதலின்,
பிறர் நோவு காண மாட்டாமையாகிற துர்ப்பலத்தையே குறித்தபடி. துர்ப்பலம் – வலி இன்மை.

————-

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் பிலவங்கம
கார்யம் கருணமார்யேண ந கச்சின் ந அபராத்யதி —
116-45-

பாபாநாம் வா ஸுபாநாம் வா-
இவர்கள் நீ நினைத்திருக்கிறபடியே பாவத்தைச் செய்தவர்கள் ஆகவுமாம்.
நான் நினைத்திருக்கிறபடியே நல்வினையைச் செய்தவர்கள் ஆகவும் அதுதானே அன்றோ உத்தேசியம்;
“அவனுக்குக் குற்றமிருந்தாலும் இருக்கட்டும்; நல்லோர்களுக்கு இது பழிக்கத்தக்கது அன்று” என்றாற்போலே.
“தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 3.

இன்று வந்தான் என்றுண்டோ எந்தையை யாயை முன்னைக்
கொன்று வந்தானென் றுண்டோ புகலது கூறுகின்றான்
தொன்றுவந்தன்பு பேணும் துணைவனு மவனே பின்னைப்
பின்றுமென் றாலும் நம்பாற் புகழன்றிப் பிறிதுண் டாமோ.-என்றார் கம்பநாட்டாழ்வார்.

அழுக்குடையவன் அன்றோ குளிக்கத் தகுதியுடையவன்; அவர்கள் பாபத்தைச் செய்தவர்களாகில் அன்றோ
நாம் முகம் கொடுக்கவேண்டுவது.
நல்வினையராகில் உன் வால் வேணுமோ? அவர்கள் புண்ணியங்களே அவர்களுக்குக் கை கொடுக்குமே;
கோ தானம் பசுவின் வாலைப் பிடித்து தாங்களே தாண்டுவார்களே –
கைம் முதல் இல்லாதார்க்கு அன்றோ நாம் கைம்முதல் ஆகவேண்டுவது’ என்றாள்.

வதார்ஹாணாம் –
தண்டிக்க வேண்டியவர்களைத் தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிரவும் சொல்லுகிற தர்மசாஸ்திரம்
தேவரைத் தொற்றிக் கிழித்துப் பொகடக் கடவதோ? என்ன,
‘சரண் அடைந்தவர்கள் யாவரேயாயினும் அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும்’ என்கிற விசேஷ சாஸ்திரம்
உன்னைத் தொற்றிக் கிழித்துப் பொகடக் கடவதோ? என்கிறாள்.
“ஸரணம்” என்று வந்த ஸ்ரீ விபீஷணாழ்வான் தோஷவானேயாகிலும்
“நத்யஜேயம் – விடமாட்டேன்” என்று பெருமாள் கடற்கரையிற் சொன்ன வார்த்தை கடல் ஓசையாகக் கடவதோ? என்கிறாள்.

பிலவங்கம-
பின்னையும் இவன் புத்தியைத் திரியவிடாமையினாலே ஹரி! ஹரி! என்கிறாள்.
அன்றிக்கே,
வசிஷ்டர் முதலாயினோர் இருந்து ஆலோசனை சொல்லும் குடியான இக்ஷ்வாகுவம்சத்தில் பிறந்தாய் இல்லை;
யோகியான ஜனகன் குலத்தில் பிறந்தாய் இல்லை;
காட்டிலே பணையோடு பணை தத்தித் திரியும் ஜாதியிலே அன்றோ பிறந்தது;
அங்ஙன் ஒத்தார்க்குச் சரணாகதியினுடைய தன்மை தெரியாதன்றோ என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
அன்றிக்கே,
நச்சினத்தை நச்சும் சாதியானமை கண்டோமே என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
அன்றிக்கே,
அரசருமாய் மூலையடியே நடக்கவுரியருமாயிருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்;
நீ வானரசாதி யாயிருந்து வைத்து இங்ஙன் கோபிக்கக் கடவையோ? என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
‘வாநரோத்தம’ என்றவள் தானே அன்றோ ஹரி! ஹரி! என்கிறாள்.

கார்யம் கருணம் –
இவர்கள் புண்ணிய பாவங்கள் கிடக்க; இப்போது ஓடுகிற தயைசெய்யத் தகுந்த தன்மையைப் பாராய். என்றது,
உன் கையிலே அகப்பட்டு ‘நாம் என்படக் கடவோம்’ என்று தியங்குகிறபடி பாராய் என்றபடி.
இவர்களுக்கு இரக்ஷகர் வேறு இலரே. இப்போது இவ்வளவில் நாம் இரங்கவேணுங் காண்.

ஆர்யேண –
இவையெல்லாம் இப்போது நான் கற்பிக்க வேண்டும் படியாவதே உனக்கு!
ஆர்யேண – ஐந்திர வியாகரண பண்டிதன் என்கிறது பொய்யோ?
அவற்றையும் எல்லாம் கற்றுக் கேட்டிருக்கச் செய்தேயும், இப்போது இராம கோஷ்டியில் பழக்கம் பின்னாட்டின படியே யன்றோ.
அக் கோஷ்டியிற் பழக்கமன்றோ நீ இங்ஙன் சொல்ல வல்லையாயிற்று.
“நான் போந்த பின்பு அக் கோஷ்டி இங்ஙனே நீர் அற்றதே அன்றோ” என்று கருத்து.

ந கஸ்சித் ந அபராத்யதி-
சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார்!
திரை நீக்கிக் கடல் ஆடப்போமோ?
நற்குரிரையாகப் பாவித்திருக்கிற பெருமாள் தாம் குற்றவாளர் அல்லரோ!
நான் தான் குற்றவாட்டி அல்லேனோ?
நீ தான் குற்றவாளன் அல்லையோ?

பெருமாள் குற்றவாளரானபடி எங்ஙனே? என்னில், தாம் காடேறப் போந்தார்:
அவர் பின்னே மடல் ஊர்வாரைப் போலே இளையபெருமாளும் போந்தார்;
தம்மோடே ஏகாந்தமாக இன்பம் அநுபவிக்க வேண்டுமென்று இலையகலப் படுத்திக் கொண்டு நானும் போந்தேன்;
என்னைப் பிரிந்து பத்து மாதங்கள் இருந்தார்;
தாம் வாராவிட்டால் தம்மது ஓர் அம்பு இசங்க மாட்டாமை இல்லை அன்றோ இவ்வழி;
இத்தனை நாள் பிரிந்திருக்க வல்லவரான போதே பெருமாள் பக்கலிலே யன்றோ குற்றம்?

பாரதந்திரியத்திற்குத் தகுதியாகப் பேசாது இராமல், அது தன்னைச் சொன்ன என் பக்கல் தன்றோ குற்றம்?
இனி, நாயகன் சொன்ன காரியம் செய்த அடியாரைத் தண்டிக்கப் பார்த்த அன்று,
பெருமாள் அருளிச் செய்த காரியம் செய்யப் போந்த உன்னை முற்படத் தண்டித்துக் கொண்டன்றோ

இராவணன் சொன்ன காரியங்களைச் செய்த இவர்களைத் தண்டிப்பது? ஆகையால், நீ அன்றோ குற்றவாளன்!

‘எல்லாப்படியாலும் பெருமாள் ஒரு விஷயத்தை முனிந்த அன்று ஆற விடுகைக்கு நான் உண்டு
நானும் அவர் வழி போக வேண்டி இருந்த அன்றைக்கு நீ உண்டு’ என்றிருந்தேன்;
நீயும் இங்ஙனேயானால் அபராதம் செய்தார்க்குப் புகு வாசல் உண்டோ?’ என்கிறாள்.

—————–

தீபோ நேத்ரா துரஸ்யேவ ப்ரதி கூலாஸி மே த்ருடம் –118-17-

திருவாய் -2-3-7- இதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும்படி -நேத்ர தோஷத்தால் வந்தது போக்கி தீப தோஷத்தால் வந்தது அன்று -என்று

சங்கத்யா பரத ஸ்ரீ மான் ராஜ்யார்த்தீ சேத் ஸ்வயம் பவேத்
ப்ரசாஸ்து வஸூதாம் க்ருத்ஸ்நாம் அகிலாம் ரகு நந்தன
–128-16-

திருவிருத்தம் -51-ஐயர் நியமிக்க ஆச்சி யுடைய வர வ்யாஜத்தாலே நாம் ராஜ்யத்தைத் தனக்கே கொடுத்துப் போரச் செய்தேயும் நம்மைப் பின் தொடர்ந்து வந்து சொன்ன நாள் எல்லை கடந்தால் பின்னை ஒரு க்ஷணம் நான் தாழ்க்கில் தன்னைக் கிடையாது என்னும்படி நம் நெஞ்சில் படுத்திப் போந்தான் -இன்று நாம் சென்று கிட்டினால் பதினாலு ஆண்டு பிரிந்து கண்ட ஹர்ஷத்தாலே நீ முடி சூடு என்றால் -அல்லேன் என்னாதே அத்தை இசையப் பெறுவது காண் –ஐயர் நம்மை முடி சூட்டப் பாரித்து பெறாதே ஒழிந்த இழவு நாம் பிள்ளையை முடி சூட்டிக் கண்டு தீரப் பெறுவது காண்
சநைர் ஜகாம ஸாபேஷா -என்கிறதை ஸாவேஷா -என்று திருத்தி கீழ் விழியால் பார்த்துப் போனார் என்று பொருள் சொன்ன படியைப் பட்டர் கேட்டருளி -அது வேண்டா காண் -கிடந்த பாடம் தனக்கே பொருள் சொல்லலாம் காண் -என்று இவ் உப கரணங்களைக் கொண்டு நாம் பிள்ளையை முடி சூட்டிக் காணப் பெற்றிலோம் -என்னும் அபேக்ஷை யோடே போனார் என்கிறது காண் என்று அருளிச் செய்தார்-

———-

ந ஹி தே ராஜ புத்ரம் தம் காஷாயம் பர தாரிணம்
பரி போக்தும் வ்யவஸ்யந்தி பவ்ராவை தர்ம வத்ஸலம் –
128-16-

திருவாய் -9-2-2-ந ஹி தே இத்யாதி -அருகே இருக்கச் செய்தேயும் இவனைச் சூழ இருக்கிற பவ்ரரானவர்கள் இவனை அநுபவிக்கையில் நசை அற்றார்கள் -அதுக்கடி என் என்னில்
ராஜ புத்ரம் தம் காஷாயம் பர தாரிணம் பரி போக்தும் வ்யவஸ்யந்தி பவ்ராவை –பெருமாள் பேர நின்ற அநந்தரம் முடிந்தவன் மகன் அன்றோ -இவனோ தான் நமக்குத் தொங்கப் புகு கிறான் என்று இருந்தார்கள்
தர்ம வத்ஸலம் -இதுக்கும் அவனோடு ஒக்கும் -தர்மத்துக்காகத் தன்னை அழிய மாறினான் இறே அவன்-

—————–

ததோ ஹர்ஷ ஸமுத்பூதோ நிஸ்வநோ திவமஸ் ப்ருஸத்
ஸ்த்ரீ பால யுவ வ்ருத்தாநாம் ராமோயமதி கீர்த்திதே
–130-31-

திருவாய் -3-7-3-தம் தாம் கற்பு அழியும் வார்த்தை சொன்னால் -என்று இருக்கும் ஸ்த்ரீகள் -முதலிலே வார்த்தை சொல்ல அறியாத பாலர்கள் –வாய் விட்டு ஒன்றும் சொல்லாத யுவாக்கள் -கரண பாடவம் இல்லாத வ்ருத்தர்கள் -இவர்கள் அத்தனை பேரும் வாய் விட்டு ஏத்தும் படி யாயிற்று பெருமாள் அழகு-

————-

ப்ரதேஹி ஸூபகே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமிநி –131-80-

திருப் பல்லாண்டு –8-இந்த்ரன் வரக் காட்டிய ஹாரத்தைப் பெருமாள் வாங்கிப் பார்த்து அருளிப் பிராட்டிக்குக் கொடுக்கிற போது அத்தை வாங்கு கிறவள் பெருமாளை ஒரு கண்ணாலும் திரு வடியை ஒரு கண்ணாலும் பார்த்து வாங்கினாள்
ப்ரேஷிதஜ் ஞாஸ்து கோசலா -என்று பார்வையில் கருத்து அறியுமவர் யாகையாலே அவனுக்கு கொடுக்க லாகாதோ என்று அருளினார்
ஸூபகே-அடியார் ஏற்றம் அறிந்து கொண்டாடுகைக்கு ஈடான ஸுபாக்யம் உள்ளது உனக்கே யன்றோ என்ன -உம்முடைய திரு உள்ளத்தாலே யன்றோ நான் கொடுக்கிறது என்று பிராட்டி அருளிச் செய்ய நான் முற் பாடனாகப் பெறாமையாலே உன்னுடைய உகப்பின் கார்யத்தைக் கொடுக்க லாகாதோ -என்றார்-

————-

ராமோ ராமோ ராம இதி ப்ரஜா நாம் அபவந் கதா
ராம பூதம் ஜகத் பூத் ராமே ராஜ்யம் ப்ரசாஸதி –
-131-101-

அழகிய மணவாளப் பெருமாள் நாய னார் வியாக்யானம் -அமலனாதி பிரான்-2- -ராமோ ராமோ ராம இதி –பாதம் தலைக் கட்டுகையாலே மீளுகிறது அத்தனை என்று இறே நிர்வஹிப்பது
இத் த்ரை வித்யத்துக்குப் பொருள் -1-ரூப ஒவ்தார்ய குணங்களை வென்ற வடிவு அழகும் -2-ரூப ஒவ்தார்ய குணை -என்கிற படியே -அத்தை அனுபவிக்கக் கொடுக்கையும் -3- கொடா நின்றால் இறு மாப்பு அற்று இருக்கையும்
பும்ஸாம் தாருண்யமச -என் கிற படியே ஸ்த்ரீ பும்ஸ விபாகம் அற ப்ரவணராம் ஆகாரம் உண்டாய் இருக்கையாலே வீத ராகரைச் சொல்கிறது –
ப்ராப்த விஷய ப்ராவண்யம் இறே ஜிதேந்த்ரியத்வம் ஆவது
ப்ரஜா நாம் அபவந் –மாதா பிதாக்களுக்கு அன்று -வஸிஸ்டாதிகளுக்கு அன்று -ஜநி தர்மாக்களுக்கு
கதா –லோக யாத்ரை களுக்கு உறுப்பாம் வார்த்தை களும் பெருமாளைப் பற்றி அல்லாது இராது
ராம பூதம் ஜகத் பூத் –ஜகத்தடைய ராம அத்வைதம் ஆய்த்து -ஐததாத்ம்யமிதம் ஸர்வம் –என்கிற பொது அல்ல
ராம பூதம் என்று ராம அத்வைதம் ஆய்த்து -ப்ரஹ்ம அத்வைதத்தை வ்யா வர்த்திக்கிறது
பெருமாள் சுண்டு வில் கொண்டு லீலா ரஸம் அனுபவிக்கிற காலத்திலேயோ என்னில்
ராமே ராஜ்யம் ப்ரசாஸதி –தஹ பச என்கிற காலத்தில்

திருவாய் -7-3-1-ராமோ ராமோ ராம இதி –சோறு சோறு சோறு என்பாரைப் போலே
ப்ரஜா நாம் அபவந் கதா-மநி தர்மாக்களுக்கு எல்லாம் பாசுரம் இதுவே
ராம பூதம் ஜகத் பூத் –நாடு அடங்க ராம அத்வைதம் ஆன படி
நித்ய விபூதியில் பரி மாறக் கடவது இங்கே பரி மாறுகைக்கு ஹேது என் என்னில்
ராமே ராஜ்யம் ப்ரசாஸதி –நாடு அடங்கலும் தம் தாமுடைய கர்ம பலம் புஜிக்கப் பெற்றார்கள் இல்லை –ராம பாக்யமே அனுபவித்து விட்டது-

————

ஸ்நேஹோ மே பரமோ ராஜன் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித
பக்திச் ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி
–உத்தர காண்டம் -1-

அமலனாதி பிரான் -பிரவேஸம் —
ஸ்நேஹோ மே பரமோ -என் தன் அளவன்றால் யானுடைய அன்பு
ராஜன் த்வயி -இது தானும் என்னால் வந்த தன்று -அதுவும் அவனது இன்னருளே
நித்யம் ப்ரதிஷ்டித -இன்று அன்றாகில் மற்ற ஒரு போது கொடு போகிறோம் என்ன
அங்கன் செய்யுமது அன்று -தர்மியைப் பற்றி வருகையாலே
நின்னலால் இலேன் காண் –என்னுமாப் போலே
பக்திச் ச நியதா -ஸ்நேஹம் ஆவது என் -பக்தி ஆவது என் என்னில்
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து வ்யதிரேகத்தில் முடிந்த நிலை ஸ்நேஹம்
பக்தி யாவது நில் என்ன குருஷ்வ என்னும் படியாய் முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை
வீர -தன்னைத் தோற்ப்பித்த துறை
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்னா இங்கு வெல்ல முடியாது
தானும் வீர னாகையாலே தோற் ப்பித்த துறையைப் பிடித்துப் பேசுகிறான்
பாவோ நாந்யத்ர கச்சதி -என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சை மீட்கப் போகாது
அந்யத்ர -என்கிறது மற்று யாரானும் உண்டு என்பார் என்னுமாப் போலே கொடு போக நினைத்த தேசத்தின் பேரும் தனக்கு அஸஹ்யமாய் இருக்கிற படி

திருவாய் -7-5-1-ஸ்நேஹ: மே பரம:-
எழுந்தருளுகிற போது ‘என் வழியே போந்தாலோ?’ என்ன,
‘அவ்வளவு அன்று காணும் எனக்குச் சிநேகம்’, என்கிறான்.
‘என்றன் அளவு அன்றால் யானுடைய அன்பு’-(இரண்டாம் 100 )என்றும்,
‘உயிரின் பரமன்றிப் பெருகுமால் வேட்கையும்’–(9-6-1-) என்றும் சொல்லுமாறு போலே

ராஜந் த்வயி-
இது தானும் என்னால் வந்தது அன்று.-‘ரஞ்ஜயதீதி ராஜா’ ஆகையாலே.

நித்யம் ப்ரிதிஷ்டித; –
‘இப்போது ஒண்ணாதாகில், மற்றொரு போது கொள்ளுகிறோம்’, என்றால், அது செய்ய ஒண்ணாது,
தர்மியைப் பற்றிக் கிடப்பது ஒன்று ஆகையாலே .

பக்திஸ்ச நியதா –
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து பிரிவில் முடிந்த சக்கரவர்த்தியின் நிலை சினேகம்;
பத்தியாவது, ‘நில்’ என்ன, ‘குருஷ்வ – கொள்க’ என்னும் படியாய், முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை.

வீர –
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்னா, இங்கும் வெல்ல முடியாது.
தானும் அவன் ஆகையாலே ( நீயும் வீரன் நானும் வீரன் )தோற்பித்த துறையைப் பிடித்துச் சொல்லுகிறான்,

பாவோ ந அந்யத்ர கச்சதி –
என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சினை மீட்கப் போகாது,
‘என்னுடை நல் நெஞ்சந்தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி’ திருவாய். 1. 7 : 8.என்னுமாறு போலே.
‘சர்வ சக்தியான அவனாலும் மீட்கப் போகாது,’ என்கை.

கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணோவே’ என்னுமாறு போலே, ‘அந்யத்ர ந கச்சதி’ என்கிறது.

‘அந்யத்ர’ என்கிறது,
போகிற இடத்தின் பேரும் சொல்லுகை பொறாதபடி;

‘மற்று ஆரானும் உண்டு என்பார்’( திரு மடல் ) என்னமாறு போலே,
இவரும், ‘மற்றுங் கற்பரோ?’ என்கிறார்.-

—————

ந மந்தராயா ந ச மாதுரஸ்யா தோஷோ ந ராஞ்ஜோ ந ச ராகவஸ்யா
வந ப்ரவேஸே ரகு நந்தனஸ்ய மத் பாபமே வாத்ர நிமித்த மாஸீத் –
அயோத்யா காண்ட ஸ்லோகம் -இப்போது இந்த ஸ்லோகம் ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை

ஓர் பழி –திரு நெடும் தாண்டகம் -12-
அத்விதீயமான பழி –

(இப்பழி உத்தேச்யமென்பது விளங்க ஓர்பழி என்கிறாள்.
பகவத் விஷயத்தில் உண்டாகிற பதற்றமெல்லாம் ஞான விபாக கார்யமான ப்ரேமத்தின் பரீவாஹமென்று
உகப்பார்க்கு இதுவே புகழாமிறே.)

(‘என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்‘ என்றாற் போலே பிறர் சொல்லும் படியாகவும்
‘ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாருமில்லை‘ என்றாற் போலே தானே சொல்லிக் கொள்ளும்படியாகவும்
மகளிடத்தில் வைலக்ஷணயமிருப்பதை நோக்கி,
பெற்றேன் என்று உள்ளுற ஆனந்தம் பொலியச் சொல்லிக் கொள்ளுகிறாள்.)

ஏ பாவமே
இவள் குறையும் அன்று
அவன் குறையும் அன்று
நான் பண்ணின பாபமே இதுக்கு ஹேது என்கிறாள் –

ந மந்தராயா -இத்யாதி –
இவ் வனர்த்ததுக்கு எல்லாம் ஹேது பூதை மந்தரை என்று நினையா -அவளுடைய தோஷம் அன்று
அவள் வார்த்தை கேட்ட கைகேயி தோஷம் என்று நினைத்தான்

ந ச மாதுரஸ்ய-இவளுடைய தோஷமும் அன்று –
இவள் வார்த்தையைக் கேட்ட சக்கரவர்த்தி தோஷம் என்று நினைத்தான் –

தோஷோ ந ராஜ்ஞா-ராஜாவுக்கு ஒரு தோஷம் இல்லை
அவன் வார்த்தை கேட்டு -தமக்கு வகுத்த அபிஷேகத்தை பொகட்டு காட்டிலே போன அவர் குற்றமே இத்தனை –

ந ச ராகவஸ்ய -அவருக்குத் தான் குற்றம் என்
அவர் அபிஷிக்தராய் அனுகூல வ்ருத்தி பண்ண கடவனாய் இருக்க
அதுக்கல்லாத என் பாபமே இவ் வனர்த்ததுக்கு எல்லாம் ஹேது பூதம் –

வனப்ரவேச ரகு நந்தனஸ்ய -இக்குடி வாழப் பிறந்த செல்வப் பிள்ளை
வனவாசம் பண்ணுகைக்கு நிமித்தம் என் பாபமே யாம் இத்தனை –
கூனி சொன்னது கைகேயி கேட்க வேண்டா
அவள் சொன்னது சக்கரவர்த்திக்கு கேட்க வேண்டா
அவன் சொன்னது பெருமாளுக்கு கேட்க வேண்டா

கூனி சொன்னது கேட்க வேண்டாது ஒழிகிறது-அடியாத்தி யாகையாலே
கைகேயி சொன்னது சக்கரவர்த்திக்கு கேட்க வேண்டாது ஒழிகிறது என் என்னில்
ஸ்திரீ புத்திர வாத்சல்யத்தாலே சொன்ன வார்த்தையை
பர்த்தாவுக்கு கேட்க வேணுமோ –

சக்கரவர்த்தி சொன்னது பெருமாளுக்கு கேட்க வேண்டாது ஒழிகிறது என் என்னில் –
தர்ம ஆபாசத்தை ஆலம்பனம் ஆக்கிக் கொண்டு
ஸ்திரீ பாரதந்த்ர்யத்தாலே பிரமித்து சொன்ன வார்த்தையை பெருமாளுக்கு கேட்க வேணுமோ
தம்முடைய அந்ய வ்யதிரேகங்களில் நான் படும் பாடு அறிவர் தாம் ராஜ்ய ப்ராப்தர் என்னும் இடம் அறிவர்
ஆன பின்பு அவனைக் கட்டி இட்டு வைத்து ராஜ்யத்தை ஆளத் தட்டேன் –
அவன் சொன்ன வசனத்தை அநாதரித்து -ராஜ்யத்தை ஆண்டார் ஆகில்
தம்முடைய வ்யதிரேகத்தில் நான் முடியாத படி ரஷித்தார் ஆகில் ஆயத்தே
ஆகையால் என் பாபமே இதுக்கு நிமித்தம் என்றான் இறே ஸ்ரீ பரத ஆழ்வான் —

(நானே தான் ஆயிடுக
இல்லாத குற்றத்தை இருப்பதாக ஏறிட்டுச் சொன்னாலும் இல்லை செய்யாதே இருப்பதாக இசைவதே
நாம் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம்)

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ ஸூந்தர காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்-

May 25, 2024

அவ்யக்த ரேகாமிவ சந்த்ர ரேகாம் பாம் ஸூப்ரதிக்தாமிவ ஹேம ரேகாம்
ஷதப்ரரூடாமிவ பாண ரேகாம் வாயு ப்ரபந்நாமிவ மேகரேகாம்
–5-26-

நைவாய வெம்மே போல் –
1–நைவை யுடைய எங்களைப் போலே -என்னுதல் -நைவு வாய -நைவுக்கு இடமாய் –
2–நைவு தான் ஒரு வடிவு கொண்டால் போலே என்னுதல் —நைவு ஆய -என்றபடி -கிருஷ்ண த்ருஷ்ணாவால் ஏற்பட நைவு –
வெம்மே-எங்களை -கீழ் சொன்ன நாரை –அன்றில் –வானம் அனைத்தையும் சேர்த்து
ச பங்காம் –பூமியில் நின்றும் தோற்றின போது போலே இருந்தாள்–அசோகா வனத்தில் அழுக்கு-
அநலங்காராம் -அத்தால் அழித்து ஒப்பிக்கும் அவர் அசந்நிதியாலே ஒப்பனை யழிந்து இருந்தாள்-
விபத்மாமிவ பத்மிநீம் –பெருமாள் வந்தாலும் இவ்வாஸ்ரயத்தை உண்டாக்க ஒண்ணாது என்னும்படி முதலிலே
தாமரை குடி போன -குடி பெயர்ந்த -பொய்கை போலே இருந்தாள்-
விரீடிதாம் பரிம்லானாம் -தபஸ்வினீம்
அவ்யக்தலேகாமிவ சந்திர லேகாம் -சுந்தர -15-21–போய்த் தேய்ந்தற்ற படிக்கும் வைவர்ண்யத்துக்கும் நிதர்சனமாகச் சொல்லுகிறது
பாம்ஸூ பிரதிக்தாமிவ ஹேமலேகாம் -நற்சரக்குக்கு வந்த அழுக்கு என்று தோற்ற இருந்தாள்
ஷதப்ரூடாமிவ பாணலேகாம்-அம்புவாய் உள்ளே கிடக்க புறம்புவாய் சமாதானம் பண்ணினால் போலே -அகவாயில் இழவு பெரிது என்று தோற்ற இருந்தாள்
வாயுப்ரபக் நாமிவ மேகலேகாம் -பெரும் காற்றாலே சிதற அடியுண்ட மேகசகலம் போலே இருந்தாள்
சகலம் -சின்ன பகுதி -மேக சிதறுகள் –மின்னல் என்றுமாம் –சூறாவளிக் காற்று ராவணன் -/மேகம் பெரு/மின்னல் சீதா/ என்றவாறு –
வதததாம் வரன் -பேச்சாளிகளில் சிறந்தராமன் –

———

பபூவ புத்திஸ்து ஹரீஸ் வரஸ்ய யதீத்ருசீ ராகவ தர்ம பத்நீ
இமா யதா ராக்ஷஸ ராஜ பார்யா ஸூஜாதமஸ்யேதி ஹி ஸாது புத்தே
–9-13-

ஏர் கொள் இலங்கையை –2-9-10-
தர்ச நீயமாய் கட்டுடைத்தான இலங்கையை –அஹோ வீர்ய மகோ தைர்யம் -என்று திருவடி மதிக்கும் படியான இலங்கையை
பபூவ புத்திஸ்து ஹரீச்வரஸ்ய -ராவணனும் ஸ்த்ரீகளுமாய் இருக்கும் இருப்பை கண்டவாறே -தானும் ஒரு சமுதாயத்துக்குக்
கடவனாகையாலே -இங்கனே இருப்பதொரு புத்தி பிறந்தது –திருவடி மதித்த ஐஸ்வர்யம் அன்றோ –
யதீத்ருசீ இத்யாதி -பையல் தானும் ஸ்த்ரீகளுமாய் இருக்கும் இருப்பை -பெருமாளும் பிராட்டியுமாய் இருக்க சம்மதித்தான் ஆகில்
இந்த ஐஸ்வர்யம் குலையாது இருக்கலாயிற்றுக் கிடீர்
இமா யதா ராஷச ராஜ பார்யாஸ் ஸூ ஜாத மஸ் யேதி ஹி சாது புத்தே –சத்ருக்களுக்கும் நன்மை வேணும் என்று இருக்கும் புத்தியை உடையவனுக்கு –

————-

பைங்காம ந அலங்காரம் வி பங்காமிவ பத்மிநீம் –15-20-

திருவாய்மொழி – -2-1-6-நைவாய வெம்மே போல் –
1–நைவை யுடைய எங்களைப் போலே -என்னுதல் -நைவு வாய -நைவுக்கு இடமாய் –
2–நைவு தான் ஒரு வடிவு கொண்டால் போலே என்னுதல் —நைவு ஆய -என்றபடி -கிருஷ்ண த்ருஷ்ணாவால் ஏற்பட நைவு –
வெம்மே-எங்களை -கீழ் சொன்ன நாரை –அன்றில் –வானம் அனைத்தையும் சேர்த்து
ச பங்காம் –பூமியில் நின்றும் தோற்றின போது போலே இருந்தாள்–அசோகா வனத்தில் அழுக்கு-
அநலங்காராம் -அத்தால் அழித்து ஒப்பிக்கும் அவர் அசந்நிதியாலே ஒப்பனை யழிந்து இருந்தாள்-
விபத்மாமிவ பத்மிநீம் –பெருமாள் வந்தாலும் இவ்வாஸ்ரயத்தை உண்டாக்க ஒண்ணாது என்னும்படி முதலிலே
தாமரை குடி போன -குடி பெயர்ந்த -பொய்கை போலே இருந்தாள்-
விரீடிதாம் பரிம்லானாம் -தபஸ்வினீம்
அவ்யக்தலேகாமிவ சந்திர லேகாம் -சுந்தர -15-21–போய்த் தேய்ந்தற்ற படிக்கும் வைவர்ண்யத்துக்கும் நிதர்சனமாகச் சொல்லுகிறது
பாம்ஸூ பிரதிக்தாமிவ ஹேமலேகாம் -நற்சரக்குக்கு வந்த அழுக்கு என்று தோற்ற இருந்தாள்
ஷதப்ரூடாமிவ பாணலேகாம்-அம்புவாய் உள்ளே கிடக்க புறம்புவாய் சமாதானம் பண்ணினால் போலே -அகவாயில் இழவு பெரிது என்று தோற்ற இருந்தாள்
வாயுப்ரபக் நாமிவ மேகலேகாம் -பெரும் காற்றாலே சிதற அடியுண்ட மேகசகலம் போலே இருந்தாள்
சகலம் -சின்ன பகுதி -மேக சிதறுகள் –மின்னல் என்றுமாம் –சூறாவளிக் காற்று ராவணன் -/மேகம் பெரு/மின்னல் சீதா/ என்றவாறு –
வதததாம் வரன் -பேச்சாளிகளில் சிறந்தராமன் –

————

துஷ் கரம் க்ருதவான் ராமோ ஹீநோ யதநயா ப்ரபு
தாரயத் யாத்மநோ தேஹம் ந துக்கே நாவ ஸீததி —
15-32-

திருவாய்மொழி – —வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே–2-4-2-இம்மடவரல்
மடப்பம் வந்து இருக்கையாவது -மென்மையை உடையவளாகை-பிரிந்து கலக்கப் பொறாத சௌகுமார்யத்தை உடையவள்
துன்பம் பின்பு இன்பம் என்று குகனை நம்ப வைத்து பிரிந்தீர் -பிரிந்த பின்பு சேர இவள் இருக்க வேண்டுமே -மடவரல் –
பிராட்டி தசையைக் கண்ட திருவடியைப் போலே இருக்கிறது காணும் -இப் பெண் பிள்ளை தசையைக் கண்ட திருத் தாயாருக்கு –
துஷ்கரம் க்ருதவான் ராம -இவளைப் பிரிந்து சமாதானம் பண்ணி இருந்த பெருமாள் சால அரிதாகச் செய்தார் -வெளித் தோற்றத்தில் அழகன் –
ராமன் -இப்படிப்பட்ட தசையிலும் ரமியப்பண்ணும்-தானும் ஆனந்தப்பட்டு -வாயு குமாரன் திருப்தி பட்டர் -தமப்பன் பண்ணின உபாகாரத்தை ஸ்மரிப்பித்து
-பிராணன் இவளுக்கு இருக்கும் படி செய்த உபகாரம்
ஹீநோ யதநயா பிரபு -இவளைப் பிரிந்து தேஹத்தை தரித்து இருந்தார் என்பது யாதொன்று அது சால அரிதாக செய்தார் –
சோகம் என்னும் அக்னி சுடாதே சொல்ல வில்லையே -விரஹ அக்னி யால் முடிந்து இருக்க வேண்டாமோ -தாசோஹம் சொல்ல வைத்த கடாஷம்
பிரபு –ஆனை குதிரை ஏறவும் நாடாளவும் கற்றார் இத்தனை -ப்ரணய தாரையில் புதியது உண்டிலர்
மால்யவானில் பெருமாள் இருந்த போது மேக தர்சனத்திலே பட்ட பாட்டைக் கண்டு -வசிஷ்ட சிஷ்யன் ஒரு ஸ்திரீ நிமித்தமாக
இப்படிப் படுவதே என்று கர்ஹித்து சிரித்து இருந்தான் விரக்தன் ஆகையாலே
இப்போது இவளைப் பிரிந்து தேஹத்தை தரித்துக் கொண்டு இருப்பதே என்கிறான் ஆயிற்று விசேஷ்ஜ்ஞ்ஞன் ஆகையாலே
தாரயத்யாத்மநோ தேஹம் -இது ஏதேனும் இரவல் உடம்போ சுமந்து கொண்டு இருக்கைக்கு -பரதந்த்ரன் அல்லனே –
பெண் பிறந்தார் தானே முடிந்து பிழைக்க முடியாது –போகாய தனம் அன்றோ -துக்காய தனமோ இது –ஆயதனம் -வாசஸ் ஸ்தானம்
தேஹம் -வளரும் -சரீரம் தேயும் -பிரிந்தால் க்ரமத்திலே கூடுகிறோம் -என்று தரித்து இருக்க வல்லல் அள்ளலே இவள்-பவன சம்பவ த்ருஷ்ட்வா -வாயு குமாரன் திருப்தி -நல்ல வேளை இவள் உடம்பில் இருந்து பிரியாமல் இருந்ததால் -வாயுவை -உபகாரகன் என்கிறார்-

———

ஏவம் ஸீதாம் ததா த்ருஷ்ட்வா ஹ்ருஷ்ட பவந ஸம்பவ
ஜகாம மனஸா ராமம் ப்ரஸஸம்ஸ ச தம் ப்ரபும் –15-53-

திருவாய்மொழி -2-4-2-ஜீயர் அரும்பதம்-

இப்படி நிந்தித்தவன் தானே அநந்தரத்தில் கொண்டாடத் தொடங்கினான்
ஏவம் -க்ஷண கால விஸ்லேஷ அயோக்கியமான வஸ்துவாக
ஹ்ருஷ்டோ ராமம் மனஸா ஜகாம-இப்படி அவளைப் பிரிந்த பெருமாள் ப்ராணனைத் தரித்து இருந்தது நம்முடைய பாக்ய பலம் இறே என்று ஹ்ருஷ்டானானான் -என்றபடி
ராமம் -இப்படிப்பட்ட திசையிலும் நம்மை நோக்கி வைத்து நம்முடைய மனஸ்ஸை ரஞ்ஜிப்பிப்பதே என்று புத்தி பண்ணினான் என்றபடி
பவந ஸம்பவ-தம்முடைய தம்மப்பன் பண்ணின உபகாரத்தை ஸ்மரித்தான் ஆயிற்று
ப்ராண வாயு முகேந விடாமல் இருந்தவன் இறே உபகாரகன்
ஸீதாம் ததா த்ருஷ்ட்வா ப்ரஸஸம்ஸ ச தம் ப்ரபும் –இப்படி இவன் தரித்து இருந்ததற்கு நிபந்தநம் பிரபுத்த்வம் இறே என்று பிரபுத்வத்தைக் கொண்டாடத் தொடங்கினான்
தம் -பிரபுத்வத்தின் பெருமை இருந்தபடி என்றான் என்றதாயிற்று-

————–

த்ரை லோக்ய ராஜ்யம் சகலம் ஸீதாயா நாப்னுயாத் கலாம் -16-14-

ஈடு -6-2-6-மூன்று லோகத்தையும் அத்தோடு விஸ்வ ஸப்த வாஸ்யனானவன் தன்னையும் கூட ஒரு தட்டாக்கினால் பிராட்டியினுடைய ஒரு கலா மாத்ரத்துக்கு இடை நிற்க மாட்டாது-

——

ஸர்வான் போகான் பரித்யஜ்ய பர்த்ரு ஸ்நேஹ பலாத் கருதா
அசிந்தயித்வா துக்கானி ப்ரவிஷ்டா நிர்ஜனம் வநம்
-16-19-

பர்த்ரு ஸ்நேஹ பலாத்க்ருதா – ஒரு விஷயத்தில் சிநேகமானது எல்லாவற்றையும் விடப் பண்ணும் அன்றோ.
தன் வசத்தால் போனாள் அல்லளாதலின் ‘பலாத் க்ருதா’ என்கிறது
அசிந்த யித்வா துக்காநி – விட்டனவற்றை நினையாவிட்டால், போய்ப் புகுகிற இடத்தில் மிறுக்கைத் தான் நினையா நின்றாளோ?
இவள் பெருமாளை ஒழியத் தன்னைக் காணில் அன்றோ துக்கத்தை நினைக்க வல்லளாவது.
ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம் – ‘போகத்துக்கு ஏகாந்தமான இடம்’ என்னுமதுவே கண்டீர் இவள் நெஞ்சிலே பட்டது.
“கன்னகு திரள் புயக் கணவன் பின் செல நன்னகர் ஒத்தது நடந்த கானமும்”-என்றார் கம்பநாடரும்.

புத்ர த்வய விஹீநம் தத்-சக்கரவர்த்தி, பிள்ளைகள் இருவரையும் தேடிப் போர நொந்தான்.
ஸ்நுஷயாச விவர்ஜிதம் – ‘மீண்டும் இவ்விடத்தை விரும்புவார்கள்’ என்று நினையாதபடி
புத்ர த்வய விஹீநம் தத் ஸ்நுஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 42 : 31.
ஸ்நுஷயா-மாட்டுப்பொண்-குழை சரக்கு அறுத்துக்கொண்டு போனபடி.
அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் –
நிலவோடும் நக்ஷத்திர தாரா கணங்களோடும் கூட சந்திரன் குடி வாங்கின ஆகாசம் போலே கிடந்தது.
சந்தரன் பெருமாள் -நிலவு -சந்தரன் ஒளி சீதை –நஷத்ரங்கள் லஷ்மணன் –
(ராம சந்திரன் ஒளி போல் சீதை -நிலவு)
அப்படியே ஆயிற்று இத் திருமாளிகை கிடக்கிறது.
“நல்லது ஓர் தாமரைப் பொய்கை” என்ற திருப்பாசுரத்திற் கூறியுள்ள படியே யாயிற்று இவள் திருமாளிகை கிடக்கிறது.

நல்லதோர் தாமரைப் பொய்கை நாண் மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறி ஓடிற்றாலோ என் மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலொ.-என்பது, பெரியாழ்வார் திருமொழி, 3. 8 : 1.

————

நைஷா பஸ்யதி ராக்ஷஸ்யோ நேமாந் புஷ்ப பலத்ருமாந்
ஏகஸ்த்த ஹ்ருதயா நூநம் ராமம் ஏவ அநு பஸ்யதி —
16-25-

ஈடு -5-5-5-ராக்ஷஸீ தர்சனத்தோடு புஷ்ப பலத்ரும தர்சனத்தோடு வாசி அற்று இருக்குமது காணும் இவளுக்கு-அருகு இருந்தவர்களையும் பாராளாயிற்று-

———

இமாம ஸீத கேஸாந்தம் சத பத்ர நிபேஷணாம்
ஸூகார்ஹாம் துக்கிதாம் த்ருஷ்ட்வா மமாபி வ்யதிதம் மந –
16-23-

திருவாய் -5-9-1-வைகலும் வினையேன் மெலிய –-“இமாம் அஸித கேஸாந்தாம்-
மை வண்ண நறுங்குஞ்சியை யுடையவர்க்கும் பேணத் தகும் குழலையுடையவள் காண்.
இங்கே திருநெடுந்தாண்டகம் 21-ஆம் திருப்பாசுரம் அதுசந்தேயம்
ஸத பத்ர நிபேக்ஷணாம் –
ராம கமலா பத் ராக்ஷ -‘கமலக் கண்ணன்’ என்கிற கண்களாலே கண்டு கொண்டிருக்கத் தக்க கருங் கண்களை யுடையவள் காண்.
ஸுகார்ஹாம்-
அவர் மடியிலே இருக்கத் தகுமவள்.
துக்கிதாம் த்ருஷ்ட்வா-
இந்த இருப்பு இருக்கத் தகாதவளைக் கண்டு.
மமாபி வ்யதிதம் மந:-
இன்ப துன்பங்களுக்கு அழியாத என்னுடைய நெஞ்சுங்கூட வருந்திற்றுக் காண்.”
இப்படியே காணும் இவளுக்கும் இருக்கிறபடி.-

———-

ஹிம ஹதநலி நீவ நஷ்ட சோபா வ்யஸன பரம்பரயாதி பீட்யமாந
ஸஹ சார ஹிதேவ சக்ர வாகீ ஜனக ஸூதா க்ருபணாம் தஸாம் ப்ரபந்நாம் –16-30-

திருவாய்மொழி – -6-2-

பிரிவாகிற புதுக்கோமுற்றவன்-புது அரசன் – வந்து முதன்மை கொண்டாடுமதில்,
முகம் பழகின துன்பமே அமையும்’ என்று
ஆற்றாமை தோற்ற இருந்தாள். எங்ஙனே இருந்தாளோ? என்னில்,
‘ஹிம ஹத நளிநீவ நஷ்ட ஸோபா –

“ஹிம ஹத நளிநீவ நஷ்ட ஸோபா வ்யஸந பரம்பரயா அதி பீட்ய மாநா
ஸஹ சர ரஹி தேவ சக்ர வாகீ ஜநக ஸுதா கிருபணாம் தஸாம் ப்ரபந்நா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 30.
பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த் துரும்பு அறக் கலந்து போந்த இவளுக்கு வந்தேறியான பிரிவு அன்றோ;
அதனாலே அழகு அழிந்திருந்தாள்.
வ்யஸந பரம்பரயா –
பிரிவினைப் போன்று கலவியும் வந்து கழியப் பெற்றதில்லை.
அதி பீட்ய மாநா-
இடத்தின் அளவல்லாத படியாயிருக்கை.
ஸஹ சர ரஹிதேவ சக்ர வாகீ-
வருமளவும் உணர்ந்து பொறுக்க மாட்டாதிருக்கை. அவற்றின்படி அங்ஙனே அன்றோ;
ஜனக ஸுதா –
‘இவை வரும்’ என்று வளரப் பெற்றது இல்லை.
க்ருபணாம் தஸாம் ப்ரபந்நா –
மேலே கூறியவை ஒன்றும் ஒப்பாக மாட்டாது; சில சொல்லப்பட்டவாம் இத்தனை.

இவளும் அப்படியே ‘முகம் பழகின ஆற்றாமையோடே இருந்து முடிய அமையும்;
இனி அவன் வரவு நமக்கு வேண்டா’ என்று இருக்கிறாள்.-

———–

தஹந்தீமிவ நிஸ்வாஸைர் வ்ருஷான் பல்லவ தாரிண –17-29-

திரு நெடும் தாண்டகம் -12- திருவடி லௌகிக அக்னியால் ஊரைச் சுட்டான் -இவள் விரஹஅக்னியால் அசோக வநிகையைச் சுட்டாள்

திருவாய் -7-2-2–நெடு மூச்சாலே தன் பகை அறுக்கப் பாரா நின்றாள் -பல்லவ தாரிகளாய் இருக்கை அப்போது இவளுக்குப் பகை இறே -ஒருபடிப் பட்டு நின்று நலிகிற படி இறே அவை -ராக்ஷஸிகள் உறங்கும் போதும் உண்டு இறே உருவ இப்படியே நிற்கிற வித்தனை அவை-

—————–

மித்ரம் ஓவ்பயிகம் கர்த்தும் ராம ஸ்தாநம் பரீப்ஸதா
வதம் சா நிச்சதா கோரம் த்வயாசவ் புருஷர்க்ஷப –
-21-19-

மித்ரம் ஓவ்பயிகம் கர்த்தும் ராம ஸ்தாநம் பரீப்ஸதா
வதம் சா நிச்சதா கோரம் த்வயாசவ் புருஷர்க்ஷப –21-19-
பெருமாள் திருமொழி -5-5–அன்று கண்டால் போல் கையும் வில்லுமாய் நிற்பர் -அவனுக்கு அச்சத்தாலே -தமக்கு உருவு வெளிப்பாட்டாலே – முன்னே நிற்பர்
தீரக் கழிய அபராதம் செய்த எனக்கு அவர் கிருபை பண்ணுவாரோ என்று அவனுக்கு நினைவாக்க கொண்டு -புருஷர்க்ஷப –நீ அநுகூலனாய் ஓரடி வர நின்றால் அத்தையே நினைத்து நீ பண்ணின அபராதம் எல்லாம் புத்தி பண்ணுவரோ -அவர் புருஷோத்தமர் காண்-

திருவாய்மொழி – -3-6-

பிராட்டி நலம் அருளிச் செய்தாற்போலே நலத்தை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில்.
இராவணன் பிராட்டிபக்கல் ‘பெற்றதாய்’ என்ற நினைவு இன்றிக்கே திருமுன்பே நின்று சிலவற்றைப் பிதற்றப் புக்கவாறே
‘ஸ்ரீராமபிரான் யானையைப் போல எண்ணப்படுகிறார்; நீ மிகச் சிறிய முயலைப் போல எண்ணப் படுகிறாய்,’ என்று வெறுத்து வைத்து
பின்னையும் ‘ஐயோ! இவன் நினைவு இருந்தபடி என்? இவனுக்கு ஒரு நல்வார்த்தை சொல்லுவார் இன்றிக்கே ஒழிவதே!’ என்று
இரக்கங்கொண்டு ‘நீ ஸ்ரீராமபிரானோடு தோழமை கொள்,’என்று அவன்தனக்கே நலத்தை அருளிச்செய்தாற்போன்று,
இவரும் மேல் திருவாய்மொழியில் அவர்களை நிந்தித்து வைத்து, இரங்கி இத்திருவாய்மொழியில் நலத்தை அருளிச்செய்கிறார்.

ஸ்ரீராமா சுந். 21 : 19.- இந்தச் சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள் வருமாறு:
மித்ரம் ஒளபயிகம் கர்த்தும் ராம :-
‘பெருமாளைச் சரணம் புகு’ என்றால் அப்பையல் அதனைத் தனக்கு எளி வரவாக நினைத்திருக்குமே? அதற்காகத் ‘தோழமை கொள்’ என்கிறாள்.
தங்களைச் சரணம் புக்காரைத் தங்களிற் காட்டில் குறைய நினைத்திருப்பதில்லையே இவர்கள்;
‘மித்ரபாவேந’ என்றும்,‘மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்’ என்றுமிறே இருவர் படியும்.-துல்ய சீல வயோ வ்ருத்தாம் -முதலிலே சொன்னது பிராட்டியே –
இவள் துவம்சிக்கும் ராவணனை பார்த்து -சொல்ல -சரணாகதி என்று சொல்லாதவன்
-பெருமாள் -சரண் அடைந்த விபீஷணன் இடம் -ஊருக்கு பந்தல் போட சொன்ன வார்த்தை
ஸ்தாநம் பரீப்ஸதா
– வழியடிப்பார்க்கும் தரையிலே கால் பாவி நின்று வழியடிக்கவேணுமே? உனக்கு ஓர் இருப்பிடம் வேண்டியிருந்ததேயாகிலும் அவரைப் பற்ற
வேணுங்காண்.-கிளை மேலே இருந்து மரத்தை அடியிலே வெட்டுவது போலே உள்ளேயே —
எளிமையாக எதிரி காலிலே குனிந்து இவ்விருப்பு இருப்பதில் பட்டுப் போக அமையும் என்றிருந்தாயோ?
வதஞ்சாநிச்சதா கோரம் –
அப்படி உன்னை நற்கொலைப்பட விடுவரோ? உன்னை வைத்து உன் முன்னே உன் சந்தான கூட்டத்தைக் கொன்று பின்னை உன்னைச்
சித்திரவதை பண்ணுகையாகிற இவ்வதத்தை இச்சித்திலையே யாகிலும் அவரைப் பற்ற வேணுங்காண்.
த்வயா –
உன் நிலை இருந்தபடியால் விசேடித்து உனக்கு அவரைப் பற்றவேணும்.
அசௌ-
உருவெளிப்பட்டாலே முன்னிலையாயிருக்குமிறே இவளுக்கு;
அவனுக்கும் தானே மாயாமிருகத்தின் பின்னே போகிற போது கண்ட காட்சியாலே அச்சத்தாலே எப்போதும் முன்னிலையாயிருப்பரிறே.
புருஷர்ஷப:-
‘நான் பண்ணின அபராதத்துக்கு என்னை அவர் கைக்கொள்ளுவாரோ?’ என்றிருக்க வேண்டா; இவற்றை ஒன்றாக நினைத்திரார்காண்;
அவர் புருஷோத்தமர்காண்.
அசௌ புருஷர்ஷப: ராம: த்வயா மித்ரம் கர்த்தும் ஒளபயிகம்.

திருவாய்மொழி – -8-1-1-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி –
எவன் குற்றம் செய்யாதவன் -என்பாரும் அருகே இருக்க நான் வருந்த வேண்டிய காரணம் ஏன் –
பாபாநாம்வா சுபாநாம்வா வதார்ஹானாம் ப்லவங்கம்
கார்யம் கருணம் ஆர்யேன நகச்சின்னா பராயதி-யுத்த 116-44
மித்ரம் ஔ பயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா
வதம் தா நிச்சதா கோரம் த்வயா அசௌ புருஷர்ஷப -சுந்த -21-20

ராவணன் பிராட்டி முன் நின்று ஜல்பிக்க புக்கவாறே -பிரஜை நலிந்தால் தாய் சீறாள்- அன்றோ
தாயான முறையாலே அவன் கேட்டினைக் கண்டு ஹிதம் செய்து அருளுகிறாள்–
சரணாகத வத்சலன் -சரணாகதன் சொல்லாமல் மித்ரன் -என்றாவது போக ஹிதம் செய்து அருளுகிறாள்–
அவர் திருவடிகளிலே சரணம் புகு என்றால் அவன் தாழ்வாக நினைத்து இசையான் என்பதாலே -தோழமை கொள் என்கிறாள் –
அன்றிக்கே அவர் -தோழைமை -என்ற அளவாலே -என்றார் ஆதலின் -இவள் -தோழமை கொள் -என்கிறாள் என்னுதல்
அவ்வருகு போனாலும் பரம சாம்யா பத்தியை தான் அவன் கொடுப்பது-

எனக்கு பகைவராய் இருப்பாரோடு உறவு செய்ய வேண்டுகிறது என் என்னுமே
ஸ்த்தானம் பரீப்சதா -கெடுவாய் வழி பரிப்பாருக்கும் தரையிலே கால் பாவி நின்று கொள்ள வேணுமே –
ஆதலால் உன் குடி இருப்பை ஆசைப்பட்டாயாகில் இத்தனையும் செய்ய வேண்டும்–
எனக்கு ஒரு குடி இருப்பு வேண்டுமோ
ஆகாசத்தில் சஞ்சரிக்கிறவனாய் அன்றோ இருப்பது நான் என்பது–ராவணனுக்கு கருத்தாக அருளிச் செய்கிறாள்
வதம் சா நிச்சதா –கோரம்
அவர் அம்புகள் ஆகாசத்தில் நடவாவோ -என்கிறாள்
கோரம் -சிங்க விளக்கை எரித்து கொல்லாதே நற்கொலையாக கொல்லும் போதும்–அவரைப் பற்ற வேண்டும் காண் –
த்வயா
பல சொல்லி என் உனக்கு அவர் வேண்டும்
அசௌ
அவர்படி உனக்கு தோற்றுகிறது இல்லையா
உரு வெளிப்பாட்டிலே முன்னிலை இவளுக்கு–அச்சத்தாலே முன்னிலையாக தோற்றும் அவனுக்கு
தீரக் கழிய அபராதம் செய்து நிற்கும் என்னைக் கை கொள்ளுவாரோ -என்ன
புருஷ ரிஷப –
நீ செய்தவற்றை ஒன்றாக நினைத்து இருப்பவர் அல்ல –புருஷோத்தமன் காண் -என்கிறாள்-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ -திவு கிரீடா விஜிகீஷிர் -தாது
அவர்கள் புருவம் நெறித்த இடத்தில் உனக்கு கார்யம் செய்யும்படி–வல்லபைகளாய் இருக்கிற
பெரிய பிராட்டியாரும் ஆண்டாளாரும்-என்றது
குற்றம் செய்யாதவன் யாவன் -என்று பொறைக்கு உவாத்தாய் இருக்கும் ஒருத்தி-
பொறுப்பது எதனை – குற்றம் தான் உண்டோ என்று
அந்த பொறை விளையும் பூமியாய் இருக்கும் ஒருத்தி என்ற படி-
ஆக -அவர்கள் இங்கே இருக்க எனக்கு இழக்க வேண்டுகிறது என்-

—–

க்யாத ப்ராஞ்ஞா க்ருதஞ்ஞ ச ஸ அநு க்ரோசச்ச ராகவ
ஸத் வ்ருத்தோ நிர் அநு க்ரோஸஸ் சங்கே மத் பாக்ய ஸம் ஷயாத்
-26-13-

திருவாய்மொழி – -8-1-ப்ராஜ்ஞ –
விரும்பினவற்றை தம்மாலே பெற இருப்பார் அறிவில் குறையாலே இழக்க வேண்டாதபடி தம்
அளவையும் அவர்கள் அளவையும் அறிக்கைக்கு தகுதியான அறிவை உடையவர்
க்ருதஜ்ஞஸ் ச –
கிட்டுமவன் தன் பக்கல் முகம் பாராமை பண்ணுமது தவிர்ந்து ஓர் அடி வர நின்ற எல்லையும் அறிவர் –
ஸாநு குரோஸஸ் ச-
அறிவு கொண்டு கார்யம் கொள்ளவும் அறியாதே இருக்கும் அவர்களுக்கு
அவர்கள் இழவை நினைந்து ஐயோ என்று இரங்குமவராய் இருப்பர்-(அநு க்ரோஸம் -தயை)
ராகவ –
இது இவர் தம்மைத் தோற்றி -தொற்றி- வந்தது அன்று -குடிப் பிறப்பாலே
சத் வ்ருத்த
பிறருடைய நன்மையே தன் பிரயோஜனமாக கொண்டு இருப்பவர்
க்யாத
இப்படி பகைவர் கோஷ்டியிலும் பிரசித்தமானவர்(க்யாதி புகழ்)
நிரநுக்ரோச சங்க-இந்த குணங்களை உடைய பெருமாளை
இந் நிலைமையில் எனக்கு முகம் காட்டக் காணாமையாலே
இந்த குணங்களில் ஒன்றும் இல்லாத (ஆன்ரு சம்சயம் இல்லாதவராக)
அருள் அற்றவரைப் போன்றவராக ஐயப்படா நின்றேன் –
அவர் குணங்களை உடையவர் அன்றோ
மத் பாக்ய சங்க்ஷயாத்
எனக்கு புண்யம் இல்லாமை யாலேயாம் அத்தனை அன்றோ-

——-

பக்ஷி ச சாகா நிலய ப்ரஹ்ருஷ்ட புநஸ் புநஸ் சோத்தம ஸாந்த்வ வாதீ
ஸூஸ் வாகதாம் வாச முதீரயாந புநஸ் புநஸ் சோதயதீவ ஹ்ருஷ்ட
-27-51-

திருவாய்மொழி – -6-2-1-அவன் வரவுக்குச் சூசகமான நன்னிமித்தங்கள் பல உளவாயிருந்தன:
“பக்ஷீச – பறவையானது சிறகினை விரித்தது.
ஸாகா நிலய: – உலர்ந்த கொம்பிலன்றிக்கே, பசுமையை யுடைத்தான பணையிலே இருந்தது.
மரத்தை வலமாக வந்து, தழைத்த பணையிலே நற்றரிக்க இருந்தது என்றபடி.

“பக்ஷீச ஸாகா நிலய: ப்ரஹ்ருஷ்ட: புன:புனஸ் சோத்தம ஸாந்த்வ வாதீ
ஸு ஸ்வாகதாம் வாசம் உதீரயாந: புன:புன: சோத யதீவ ஹ்ருஷ்ட:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 27 ; 51.

ப்ரஹ்ருஷ்ட: –
அங்குள்ள பழம் முதலானவற்றை உண்பதனால் உண்டான உவகை வடிவிலே தோற்றும்படி இருந்தது.
புந: புந: ச உத்தம ஸாந்த்வ வாதீ –
மேன் மேலென நல்வார்த்தைகள் சொல்லத் தொடங்கிற்று அதற்குமேலே,
ஸுஸ்வாகதாம் வாசம் உதீரயாந: –
இவ்வளவு அல்ல கண்டீர் அத்தலைப் பட்டது என்று சொல்லுமாறு போலே இருந்தது.
புந:புந: சோத யதீவ-
வரவு நிச்சயமான பின்பு, குளித்தல் ஒப்பித்தல் செய்யாதிருக்கிறது என்? என்று சொல்லுமாறு போலே இருந்தது.
உலகு அளந்தான் வரப் போகிறார் போலே கூவிற்றே
ஹ்ருஷ்ட: –
வந்தால் பிறக்கும் வேறுபாடு தோற்ற உடம்பு மயிர் எறிந்திருந்தது.

ததா கதாம் – “ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச – இரகசியச் செயல்களும் வெளிப்படைச் செயல்களும்”
“ததா கதாம் தாம் வ்யதிதாம் அநிந்திதாம் வ்யபேத ஹர்ஷாம் பரி தீநமாநஸாம்
சுபாம் நிமித்தாநி சுபாநி பேஜிரே நரம் ஸ்ரியா ஜுஷ்டமிவ உபஜீவிந:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 29 : 1.
“ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச யத்விருத்தம் தஸ்ய தீமத:
ராமஸ்ய ஸஹ ஸௌமித்ரே ராக்ஷஸாநாம் ச ஸர்வஸ:”-என்பது, ஸ்ரீராமா. பால. 2 : 33.
என்று கொண்டு பிரமனுடைய திருவருளாலே உள்ளபடி எல்லாம் தோற்றக் கடவதாகப் பெற்றுடையனான
வால்மீகி முனிவருக்கும் பாசுரமிட்டுச் சொல்ல ஒண்ணாதபடி இருக்கிறபடி.

தாம்-தர்மிக்கு மேற்பட அவ்வருகு ஒன்று இன்றிக்கே இருக்கை.
வ்யதிதாம் – முற்கூறியவை எல்லாம் இயற்கையாய், வியசனமுள்ளது மேலே என்று தோற்றும்படியாயிருந்தாள்.
‘ஸமா த்வாதஸ தத்ராஹம்-ஸ்ரீராமா. சுந். 33 : 17.-என்று பன்னிரன்டு ஆண்டு கலந்து பிரிந்த இவளுக்கு
அது ஒன்றும் தோற்றாதே துக்கத்தை இட்டு நிரூபிக்க வேண்டும்படியா யிருந்தாள்.’
அநிந்திதாம்-
அத் தலையைப் பிரிந்தால் இருக்கக் கடவபடியே இருந்தாள். இப்படி இராத அன்று பழிக்கத்தக்கவள் ஆவளே,
வ்யபேத ஹர்ஷாம்-
‘உவகை குடிபுகுந்து போயிற்று’ என்று தெரியாதாய் இருக்கை.
பரிதீந மாநஸாம்-
உவகை வந்தாலும் தங்கும் இடமும் இன்றிக்கே இருக்கை.
ஸுபாம் –
மண் தின்று வந்த நகடு போல் அன்றே குணாதிக விஷயத்தைப் பிரிந்தால் இருக்கும்படி;
கடலேறி வடிந்தாற் போலே இருக்கிற அவ் விருப்பு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கை.
பெருமாளை பிரிந்து வெளுத்து இருப்பது உத்தேச்யம் என்பதால் ஸூபாம் –
ஸுபாநி நிமித்தாநி பேஜிரே-
நிமித்தங்களானவை இத்தலைக்கு நன்மை சொல்லித் தாம் தாம் சொரூபம் பெற்றன. என்றது,
சாக்ஷாத் லக்ஷ்மிக்குக் கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெற்றன என்றபடி.
என்போலே என்னில்,
நரம் ஸ்ரியாஜு ஷ்டம் இவ உபஜீவந:-
அர்த்திகளாயிருப்பார் உதாரர் பக்கலிலே சென்று தங்கள் தங்கள்
பிரயோஜனம் பெற்று உவகையினராமாறு போலே. இப்படியா யிருந்தன நிமித்தங்களின் அளவு.

————-

ஹா ராம ஹா லஷ்மணா ஹா ஸூமித்ரே ஹா ராம மாத ஸஹ மே ஜநந்யா
ஏஷா விபத்யாம்யஹ மல்ப பாக்யா மஹார்ணவே நேளரிவ மூட வாதா –
-28-8-

திரு நெடும் தாண்டகம் –16- ஹா ராம -என்று போக்கிய வஸ்துவை நினையா ஹா லஷ்மணா என்று புஜிப்பாரை நினையா ஹா ஸூ மித்ரே என்று நிமித்த பூதரை நினையாக் கூப்பிட்டாள் இறே-

———-

அநந்ய தைவத்வம் இயம் ஷமாச பூமவ் ச சய்யா நியமச்ச தர்மே
பதி வ்ரதாத்வம் விபலம் மமேதம் க்ருதம் க்ருதக்நேஷ்விவ மானுஷாணாம்

உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள் அவனை அல்லால் –4-6-10-

வேறு தெய்வங்களின் சம்பந்தம் இவளுக்குப் பொறாது,’ என்று அறிய வேண்டாவோ?’ என்கிறாள் என்றபடி

‘அநந்ய தைவத்வம் –
‘வேறும் பற்றக்கூடிய ஒரு தெய்வம் உண்டு, அது காப்பாற்றுகிறது,’ என்று நினைக்க விரகு இல்லை கண்டாய் எனக்கு.
ஸஹபத்நியா –
என்று, பெரிய பெருமாள் திருவடிகளிலே இவர் புகும் போதும் இவர்க்கு எடுத்துக் கைநீட்டப் புகுமத்தனை போக்கி,
பெரிய பெருமாள் தாம் உத்தேசியமாகப் புக்கு அறியேன். (ஸஹ பதன்யா விசாலாக்ஷி நாராயணன் உபகமனத் )
இயம்க்ஷமாச –
இராவணன் பலவாறாகப் பிதற்றிய வார்த்தைகளையும் இராக்ஷசிகளுடைய கைகளாலும் வாயாலும் அச்சம் உறுத்துதலையும்
பொறுத்திருந்ததும் ‘அவருடைய ஓர் இன்சொல் கேட்கலாம்’ என்று கண்டாய்.
பூமௌச ஸய்யா –
‘இத் தரைக்கிடை கிடந்ததும் தேவரீருடைய மடியில் படுத்துக்கொண்டேன்,’ என்கிறபடியே, ‘அவருடைய மடியில் இருப்பு
ஒருகால் சிந்திக்குமோ?’ என்னுமதனாலே கண்டாய்.
நியமஸ் தர்மமே –
‘காப்பாற்றும் தர்மம் அவர் தலையிலே’ என்னுமதனாலே கண்டாய் நான் இருந்தது; என்றது,
‘பத்துத் தலைகளையுடையவனே! எரிக்கப்படுவதற்குத் தகுந்தவனே! எனக்கு ஆற்றல் இருந்தும், என்னுடைய கற்பாகிய ஒளியால்
உன்னைச் சாம்பலாகச் செய்யேன்,’ என்று இராவணனைப் பார்த்துக் கூறியது ஸ்ரீ ராமபிரானை நினைத்து’ என்றபடி.
பதிவிரதாத்வம் –
‘சரணாகதி அடைந்தவர்களைப் பாதுகாத்தல் எனக்கு விரதம்,’ என்றவருடைய விரதம் ஒழிய,
‘எனக்கு’ என ஒரு சங்கல்பத்தை உண்டாக்கி இவற்றை அழிக்க நினைத்திலேன் கண்டாய்.
விபலம் மம இதம் –
தப்பாதவையும் தப்பிவிட்டன. ‘எது போலே?’ என்னில்,
மாநுஷாணாம் கிருதக்னேஷூ கிருதமிவ –
‘நான் என்னை மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்றவர்க்கும் உண்டே அன்றோ மனிதத் தன்மை?
அவரை ஒழிந்தார் திறத்துச் செய்த காரியங்களைப் போன்று விழுந்தது. என்றது,
‘தப்பாதது தப்பிற்று,’ என்றபடி, ‘அதற்கு அடி என்?’ என்னில்,
மம இதம் –
‘அவர் பக்கல் குறையில்லை; அதற்கு இலக்கு நான் ஆகையாலே,’ என்றாள் பிராட்டி.

————

விஷஸ்ய தாதா நஹி மேஸ்தி கஸ்ஸித் ஸஸ்த்ரஸ் யவா வேஸ்மநி ராக்ஷஸ்ய –28-16-

திருவாய்மொழி – -5-4-

எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான புருஷோத்தமனுடைய குணங்களை நினைக்க,
அவை தாம் பிரிவிலே நினைக்கையாலே மிகவும் ஆற்றாமைக்கு உறுப்பாய், சடையினால் தூக்கிட்டுக் கொள்ளுதல் முதலியவைகளிலே
ஒருப் பட்டவரைப் போன்று முடிந்து பிழைக்க வேண்டுமளவாய், அது தன்னைப் பெறுகை மடல் ஊரப் பெறுகையைப் போன்று தேட்டமாய்;

“விஷஸ்ய தாதா-
இத்தனை நற்சரக்குத் தரும் உதாரர் இவ்வூரில் கிடைப்பாரோ?
மே-
கிடைத்தால் தான் எனக்கு இது சம்பவிக்குமோ?
சஸ்த்ரஸ்ய வா-
விஷம் போன்று சிறிது போது நின்று கொல்லுமதன்றியே கடுக முடிக்கும் ஆயுதத்தைத் தான் தருவார் உண்டோ?
வேஸ்மதி ராக்ஷஸஸ்ய-
பிரித்து வைத்து உயிர்க் கொலையாக நலிகிறவனுடைய ஊரிலே, நற் கொலைக்குச் சாதனமானதைத் தான் தருவார் உண்டோ?”

“ஸா ஜீவிதம் க்ஷிப்ரம் த்யஜேயம் விஷேண ஸஸ்த்ரேண ஸிதேநவாபி விஷஸ்யதாதா நஹிமே அஸ்தி கஸ்சித்
சஸ்த்ரஸ்யவா வேஸ்மநி ராக்ஷஸஸ்ய” என்பது, ஸ்ரீராமா. சுந். 28 : 25.

வி்ஷஸ்ய தாதா –
விஷத்தையாவது கொடுப்பவர். ‘கிடைத்தால் தான்எனக்கு இது சம்பவிக்குமோ’ என்றது, உதாரர் இருந்தாலும் பாபியான
எனக்குத் தரமாட்டார் என்றபடி. அன்றி, எனக்குப் பலியாது என்னுதல்.
சஸ்த்ரஸ்ய வா –
ஆயுதத்தை யாவது.
வேஸ்மநி ராக்ஷஸஸ்ய-
இராக்ஷசனுடைய வீட்டில்.
இப்படி முடிகை தேட்டமாம்பாடி இருக்கிற அளவிலே, ‘நாம் சர்வ ரக்ஷகராகையாலே எல்லாருடைய ரக்ஷணத்துக்குமாகத்
திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்தோம், உம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவராய் இருந்தோம்;
கிராமப் பிராப்தி பற்றாமை பதறுகிறீரித்தனை’ என்கிற இதனை நினைப்பிக்க;
அவன் சர்வ ரக்ஷகனாகில், நம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவனாகில்,
கிரமப் பிராப்தி பற்றாமல் பதறுகிறோமித்தனை,
நம் அம்சத்தால் உள்ள ரக்ஷணம் நமக்குச் சித்தியாதோ என்று அவன் குண ஞானத்தாலே தரித்தாராகச் செல்லுகிறது இத் திருவாய்மொழி.

————-

நகோத்தமம் புஷ்பிதம் ஆஸ ஸாத –28-17-

பெரிய திருமொழி -3-6-1–எரிகிற நெருப்பைச் சென்று கிட்டுவாரைப் போலே -ஓங்கிப் பரப்பு அடங்கலும் புஷ்பிதமாய்க் கிடக்கை
ஆஸ ஸாத –தன் ஜீவனத்தில் நைராஸ்யம் விளைந்தமை தோற்றி இருக்கிறது

நாச்சியார் திருமொழி -9-5- நகோத்தமம் புஷ்பிதம் ஆஸ ஸாத –ஆற்றாமை கரை புரண்டால் தீப்பாய ஒருப்படுமா போலே
நேமாந் புஷ்ப பலத்ருமாந் -என்னும்படி இறே இவளுக்கு இருக்கிறது –

————

ததா கதாம்தாம் வ்யதி தாம நிந்திதாம் வ்யபேத ஹர்ஷாம் பரிதீ நமாநஸாம்
ஸூபாம் நிமித்தாநி ஸூபாநி பேஜிரே நாம் ஸ்ரியா ஜுஷ்டம் இவ உப ஜீவிந
-29-1-

திருவாய்மொழி – -6-2-ததா கதாம் – “ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச – இரகசியச் செயல்களும் வெளிப்படைச் செயல்களும்”தாம்-தர்மிக்கு மேற்பட அவ்வருகு ஒன்று இன்றிக்கே இருக்கை.
வ்யதிதாம் – முற்கூறியவை எல்லாம் இயற்கையாய், வியசனமுள்ளது மேலே என்று தோற்றும்படியாயிருந்தாள்.
‘ஸமா த்வாதஸ தத்ராஹம்-ஸ்ரீராமா. சுந். 33 : 17.-என்று பன்னிரன்டு ஆண்டு கலந்து பிரிந்த இவளுக்கு
அது ஒன்றும் தோற்றாதே துக்கத்தை இட்டு நிரூபிக்க வேண்டும்படியா யிருந்தாள்.’
அநிந்திதாம்-
அத் தலையைப் பிரிந்தால் இருக்கக் கடவபடியே இருந்தாள். இப்படி இராத அன்று பழிக்கத்தக்கவள் ஆவளே,
வ்யபேத ஹர்ஷாம்-
‘உவகை குடிபுகுந்து போயிற்று’ என்று தெரியாதாய் இருக்கை.
பரிதீந மாநஸாம்-
உவகை வந்தாலும் தங்கும் இடமும் இன்றிக்கே இருக்கை.
ஸுபாம் –
மண் தின்று வந்த நகடு போல் அன்றே குணாதிக விஷயத்தைப் பிரிந்தால் இருக்கும்படி;
கடலேறி வடிந்தாற் போலே இருக்கிற அவ் விருப்பு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கை.
பெருமாளை பிரிந்து வெளுத்து இருப்பது உத்தேச்யம் என்பதால் ஸூபாம் –
ஸுபாநி நிமித்தாநி பேஜிரே-
நிமித்தங்களானவை இத்தலைக்கு நன்மை சொல்லித் தாம் தாம் சொரூபம் பெற்றன. என்றது,
சாக்ஷாத் லக்ஷ்மிக்குக் கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெற்றன என்றபடி.
என்போலே என்னில்,
நரம் ஸ்ரியாஜு ஷ்டம் இவ உபஜீவந:-
அர்த்திகளாயிருப்பார் உதாரர் பக்கலிலே சென்று தங்கள் தங்கள்
பிரயோஜனம் பெற்று உவகையினராமாறு போலே. இப்படியா யிருந்தன நிமித்தங்களின் அளவு.

———–

ஸா திர்யகூர்த்வஞ்ச ததாப்யதஸ்தாத் நிரீக்ஷ மாணா தமசிந்த்ய புத்திம்
ததர்ச பிங்காதிபதேர மாத்யம் வாதாத்மஜம் ஸூர்ய மிவோதயஸ்தம் –
-31-19-

திருவாய்மொழி – -2-4-1-எங்கும் நாடி நாடி
தன ஆபத்தே செப்பேடாக வர சம்பாவனை இல்லாத திக்கையும் பார்க்கும் –
சா திர்யக் ஊர்த்த்வஞ்ச ததாப்ய தஸ்தாத்–சுந்தர -31-19-நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே வாராத் திரு நாமம் செவிப் பட்டவாறே-
விலங்கப் பார்ப்பது -மேலே பார்ப்பது கீழே பார்ப்பது ஆனாள்
கீழ் பார்த்ததுக்கு கருத்து என் என்னில் -பூமியைப் பிளந்து கொண்டு புறப்பட்ட ஒருவன் திரு நாமம் சொல்ல சம்பாவனை உண்டாகில்
அல்லாத திக்குகளிலும் உள்ளது என்று பார்த்தாள்
அன்றிக்கே மாச உபவாசீகள் சோறு -என்றவாறே அலமாக்குமா போலே பார்த்தாள் என்னுதல்
அங்கன் இன்றிக்கே சிம்சுபா வருஷத்தை எங்கும் ஒக்கப் பார்த்தாள் -என்னுதல் –
தமசிந்தய புத்திம் ததர்ச-சுந்தர -31-19- அவன் வடிவு காண்பதற்கு முன்னே அகவாயை யாயிற்று பரிச்சேதித்தது-
இந்நிலத்திலே புகுந்து இடம் கொண்ட நாம் இருந்தவிடம் துருவி நிலை குத்த வல்ல நெஞ்சை உடையவன் அன்றோ என்று
பிங்காதிபதே ராமாத்யம் -சுந்தர -32-7-இவன் ஸ்வதந்த்ரன் அல்லன் -ராஜ கார்யம் இவன் கையிலே உண்டு என்று அறிந்தாள்
வாதாத் மஜம் -சுந்த -32-7–பெருமாளுக்கு பிராண ஹேதுவான பிராட்டிக்கு பிராணங்களை கொடுக்கையாலே –
இவன் சர்வர்க்கும் பிராண ஹேதுவான வாயு புத்திரன் -என்று தோற்ற இருந்தான்
ஸூர்யம் இவ உதயஸ்தம்-சுந்தர -31-19- -இலங்கையிலும் கிழக்கு வெளுக்க அடியிட்டது
பெருமாள் ஆகிற ஆதித்ய உதயத்துக்கு அருணோதயம் -என்னலாம் படி இருந்தான்
ஆகை இறே இலங்கை நாலு மதிளுக்கு நடுவே ஹரி ஹரி -என்கிறபடியே இருக்கிறது
இப்படி வருகைக்கு சம்பாவனை இல்லாத திக்கிலும் தேடுவான் என் என்னில் சம்பாவனை இல்லாத இடத்தேயும் வந்து தோற்றுமவன் ஆகையாலே –

————-

கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரி ஸ்ரவதி சோகஜம்
புண்டரீக பலாசாப்யாம் விப்ர கீர்ண மிவோ தகம்
–33-4-

திருவாய்மொழி – -2-4-1-கண்ணீர் மல்கி
உருகின மனஸ் தத்வம் -இசையாய் ப்ரவஹித்து -மிக்கது கண்ணீராய் பிரவஹிக்கிற படி -நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ண நீர் இறே
முடியானேயில் கரணங்கள் அவையாக -பையரவணைப் பள்ளியினாய் –சஷூர் ஸ்ரவக -கட்செவி –
மல்கி –மிக்கு
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரிஸ்ரவதி சோகஜம் -சுந்தர -33-4-
ஆனந்த ஸ்ருவுக்கு யோக்யமான கண்களாலே சோகஸ்ரு பிரவஹிக்கிறது– ஆர்குடி வேர் அற –என்று பட்டர் அருளிச் செய்யும் படி
-இராவணனுடைய குலம் என்றவாறு-

———–

ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ரு ஸைன்ய ப்ரதாபிந –33-16-

திருவாய்மொழி – -5-3–6-வாசு தேவன்-
வடிவழகு இல்லையாகிலும் விட ஒண்ணாததாயிற்றக் குடிப்பிறப்பு.
“ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந: ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ருசைந்ய பிரதாபிந:”
என்பது ஸ்ரீராமா. சுந். 33 : 15, 16. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.
“நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே, பிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது
‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும். “எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே,
எங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ?
பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.

————-

ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே
புஞ்ஞாநா மானுஷாந் போகான் ஸர்வ காம ஸம்ருத்திநீ
–33-18-

திருவாய்மொழி – -7-3–பிள்ளான் சாஷாத் அனுபவம் பெற்றாள் என்று கொண்டு நிர்வாகம் –
‘முகில் வண்ணன் அடியே இவள் அணுகி அடைந்தனள்,’ என்றது ஆகையாலே,
‘நான் அங்கும் இராகவனுடைய வீட்டில் பன்னிரண்டு வருடங்கள் முடிய மனிதர்களுக்குரிய போகத்தை அனுபவித்தேன்,’ என்கிறபடியே,
ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேஸநே
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநீ’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33.17.

பெரிய பெருமாளோடே நெடுங்காலம் பூர்ண ரசமான கலவி உண்டாக,
பிரிந்து கூடா விடில் இரண்டு தலைக்கும் அழிவு வருமளவு ஆயிற்றது.

இனி, எல்லா அளவிலும் ஒரு நீராகக் கலக்கிறது தர்மிகள் இரண்டும் கூடி அன்றோ?

ஸமா த்வாதச தத்ர அஹம்-
இப்போது ஒருவேளை தரிசனமுங்கூட அரிதாம்படி இருக்கிற நான், முன்பு பல காலம் அவரோடே அனுபவிக்கப் பெற்றேன் காண்!
ராகவஸ்ய நிவேசநே-
எங்கள் மாமனாருடைய மாளிகையிலே அவர் தண்ணீர்த் துரும்பு அறுத்துத் தர, நெடுங்காலம் அனுபவித்தேன்
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநீ- ‘எல்லாக் காமங்களையும்’ என்கிறபடியே,
‘சோஸ்னுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா’ என்றது, தைத்.- எல்லாம் அனுபவிக்கப் பெற்றேன்.-

அப்படியும் அன்றே இங்கு:
‘அரசனே! கல்யாண குணங்கள் பல’ என்கிறபடியே, குணங்கள் இரட்டித்த இடம் அன்றோ இது?
‘பஸவோ ந்ருப கல்யாண குணா:’ என்பது, ஸ்ரீராமா, அயோத். 2:26.

‘ஆக, இதனால் என் சொல்லியவாறோ?’ எனின்,
‘நமக்கு ஐம்புல இன்பங்களினின்றும் இந்திரியங்களை மீட்க ஒண்ணாதவாறு போலே அன்றோ
இவரைப் பகவத் விஷயத்தினின்றும் மீட்க ஒண்ணாதபடி?’ என்பதனைக் கூறியவாறு.
அது கருமம் அடியாக வருகிறது: இது பகவானுடைய திருவருள் அடியாக வருகிறது.

——————

ப்ரா கேவது மஹா பாக ஸுமித்ரிர் மித்ர நந்தன
பூர்வஜஸ் யாநு யாத்ரார்த்தே த்ரும சீரை ரலங்க்ருத –
-33-29-

முயற்றி சுமந்து–பெரிய திருவந்தாதி -1-
அடிமை செய்கையில் ஒருப்பட்டு

ப்ராதேவ து மஹா பாக ஸுமித்ரி மித்ர நந்தன
பூர்வ ஐஸ்ய அநு யாத்ரார்த்தே த்ரும சீரைர் அலங்க்ருத -ஸ்ரீ ஸூந்தர காண்ட ஸ்லோகம்

ப்ராதேவ து மஹா பாக
பெருமாளுக்கு மரவுரி கொடுத்து அன்றோ இளைய பெருமாளுக்குக் கொடுத்தது
இவரை –ப்ராதேவ -என்பான் என் என்னில்
தீப்தம் அக்நிம் அர்ண்யம் வா யதி ராம பிரவேஷ்யதி -ப்ரவிஷ்டம் தத்ர மாம் தேவி தும் பூர்வ அவதாரய என்று
இளைய பெருமாள் இருக்கும் படியாலே சொல்லிற்று
பெருமாள் பித்ரு வசன பரிபாலனம் பண்ண வேணும் என்று மரவுரி சாத்தினார்
அவர் உடுக்கப் புகுகிறான் என்று உடுத்தவர் படி -அது வேறே ஓன்று அன்றோ என்கிறது –

(திரிபுரா தேவியார் -உடையவர் கைக் காட்டிய படி இருந்தால் போல்
து -பிரசித்த அர்த்தம் -லஷ்மணன் என்றாலே முன்னே -ப்ராதேவ அன்றோ
அதே போல் இங்கும் ஆழ்வார் திரு உள்ளமும்
து -வியாவ்ருத்த அர்த்தம் என்றுமாம் -இவர் மரவுரி உடுக்க வேறே காரணம் )

மஹா பாக
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -என்று
ப்ரதிஜ்ஜை பண்ணின படியே
(சுற்றம் எல்லாம் பின் தொடர என்னலாம் படி )எல்லா அடிமையும் செய்யலாம் படி
திரு அபிஷேக விக்நம் பிறக்க பாக்யம் பண்ணினவர்

ஸுமித்ரி
ஸ்ருஷ்டஸ்த்வம் வன வாஸாய -என்று சொன்னவள்
வயிற்றிலே பிறந்தவர்

மித்ர நந்தன
பெருமாளைப் பிரியாதே அடிமை செய்ய வேணும் -என்ற
அனுகூல வர்க்கம் எல்லாம் நாம் செய்யப் பெற்றிலோமே யாகிலும்
இளைய பெருமாள் எல்லா அடிமையும் செய்யப் பெற்றார் இறே என்னும்படி
அனுகூல வர்க்கத்தை யுகப்பிக்குமவர்

பூர்வ ஐஸ்ய அநு யாத்ரார்த்தே த்ரும சீரைர் அலங்க்ருத
பெருமாள் பின்னே சேவித்துப் போகைக்காக மரவுரி சாத்தி அத்தாலே
அலங்க்ருதமானவர்
பெருமாள் அபிஷேகம் தவிருகைக்கு மரவுரி சாத்தினார்
இவர் கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு முடி சூடுகைக்காக மரவுரி சாத்தினார்
(தாபஸ வேஷமே அலங்காரம் )

————–

ஸ்வப்நேபி யத்யஹம் வீரம் ராகவம் ஸஹ லஷ்மணம்
பஸ்யேயம் யதி ஜீவேயம் ஸ்வப்நோபி மம மத்சரீ –
-34-21-

நாச்சியார் -6-1- பிரவேசம்–பிராட்டிக்கு பெருமாளைப் பிரிந்த போதே கூட வேணும் என்னும் ஆசை உண்டாய் இருக்கச் செய்தே இறே
ஊர்த்வம் மாசன்ன ஜீவிஷ்யே -என்பது –
அவர் தாம் ந ஜீவேயம் ஷணம் அபி -என்பது யாய்த்து –

ஸ்வப்னே அபி யத்யஹம் வீரம் –ஸ்வப்னத்தில் கண்டாலும் துக்க நிவர்த்தகராக வல்லராய்த்து –
ராகவம் சஹ லஷ்மணம் -சுந்தர -34-21-
பிரிகிற போது இருவரும் கூடப் பிரிகையாலே
காணும் இடத்திலும் இருவரையும் கூடக் காண வேணும் என்று இறே ஆசைப் படுவது
அப்போது இருவரும் பிரிகையாலே -தங்களில் கூடினார்களோ இல்லையோ -என்றும் அதி சங்கை பண்ணி இருக்குமே –

பச்யேயம் யதி ஜீவேயம் ச்வப்னோ அபி மம மத்சரீ –என் அவஸ்தை அறிந்து
முகம் காட்டாமைக்கு அவரே அன்றிக்கே
இதுவும் என்னை நலிய வேணுமோ என்றாள் இறே –

தான் காணப் பெறாத போதும் பிறர் கண்டு சொல்லக் கேட்டு தரித்து இருந்தாள் இறே அவள் –
த்ரிஜடாதிகள் சொல்லக் கேட்டு தரித்து இருந்தால் போலே இருக்க வல்லவள் அல்லள் ஆயத்து இவள் –
இவள் தன்னை உண்டாக்கி அனுபவிக்க வேணும் என்று இருக்குமே
ஸ்வப்னத்திலே யாகிலும் அனுபவிப்பித்து தரிப்போம் என்று பார்த்தான்
இஜ் ஜந்துக்கள் கிடந்தது உறங்கா நிற்கச் செய்தே
சர்வேஸ்வரன் தான் உணர்ந்து இருந்து கர்ம அனுகுணமாக சில பதார்த்தங்களை சிருஷ்டித்து
ஸ்வப்னத்திலே அனுபவிப்பிக்கும் என்று சொல்லா நின்றது இறே

————-

ராம கமல பத்ராஷ ஸர்வ சத்த்வ மநோ ஹர
ரூப தாக்ஷிண்ய ஸம் பன்ன ப்ரஸூதோ ஜனகாத்மஜே
-35-8-

தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்–திருவாய்மொழி – -2-2-5-
ரஷகத்வம் இல்லையானாலும் தர்ச நீயமாய் குளிர்ந்து இருக்கிற திருக் கண்களை உடையனாய்
அக் கண் அழகாலே என்னை அடிமை கொண்டவனே -மிக்க தேஜசை உடையான்
திருவடி தோற்ற துறையிலே இவரும் தோற்றதே
ராம -சர்வாங்க ஸூந்தரராய் இருக்கை –ராமயதீ ராமயா –
கமல பத்ராஷ -அதிலே ஒரு சுழி யாயிற்று அமிழ்ந்து வார்க்கு வேண்டுவது
அக் கண் அழகுக்கு எல்லை என்-என்னில் சர்வ சத்த்வ மநோஹரே -திர்யக் சஜாதீயனாய் -பணையோடு பணை-தத்தித் திரிகிற
என் நெஞ்சினையும் அபஹரித்தான் அன்றோ -கைமுதிக நியாயம் –
ரூப தாஷிண்ய சம்பன்ன பிரஸூத-தேக குணங்களாலும் ஆத்ம குணங்களாலும் குறையற்றது தான் ஔத்பத்திகமாய் இருக்கும்
ஜனகாத்மஜே –அற விஞ்சச் சொன்னாய் -இனி இங்கன் சொல்லலாவார் உண்டோ இல்லையோ –என்று பிராட்டிக்கு கருத்தாக
-ஜனகாத்மஜே –சுந்தர -35-8–பின்னை உம்மைச் சொல்லலாம் -நீரும் உண்டு
இப்படிப்பட்ட அவர் அழகை நீர் ஒருத்தியே சொல்லலாம் -நீர் அவனுக்கு ஏற்ற அழகு என்றுமாம் –

—————–

ஸ ஸ்ருத்வா வாநரேந்த்ரஸ்து லஷ்மணே நேரிதம் வச
ததா ஸீந் நிஷ்ப்ரபோத்யர்த்தம் ராஹு க்ரஸ்த இவாம் சுமான் –
-35-36-

திருவாய்மொழி – -5-3-1-பெருமாளும் பிராட்டியுமான இருப்பிலே பிரிவு விளைந்தது’ என்று இளைய பெருமாள் மஹாராஜர்க்கு அறிவிக்க,
அவ்வார்த்தை செவியிலே படப்பட, பெருமாள் திருமேனியில் வை வர்ண்யம் இவர் உடம்பிலே மாறிற்றாயிற்று;
“ஸ ஸ்ருத்வா வாநரேந்த்ரஸ்து லக்ஷ்மணேந ஈரிதம்வச :ததாஸீத் நிஷ்பிரப:
அத்யர்த்தம் ராகு க்ரஸ்த இவ அம்சுமான்” – ஸ்ரீராமா. சுந். 35 : 36-
(ஸூர்ய புத்ரன்-ஸூ க்ரீவன் / இந்திரன் புத்ரன் வாலி /ராகு பிடிக்க பிடிக்க மாறுவது போலே -)
“அத்யர்த்தம் நிஷ்பிரப :- இழந்திருந்த தன்மை வாசா மகோசரம்” பிராட்டியைப் பிரிகையில் உண்டான ஆற்றாமை அன்றோ
பெருமாளுக்கு உள்ளது, பெருமாளுடைய ஆற்றாமையைக் காண்கையாலும்,
பிராட்டியும் பெருமாளுமாகச் சேர இருக்கக் காணப் பெறாமையாலும் மஹாராஜர்க்கு அவ்வள வன்றிக்கே, மிக்கிருக்குமே அன்றோ
‘அர்த்தம்’ என்ற சொல் பொருளை உணர்த்தும் சொல்லாயிற்று.
அதி அர்த்தமாவது, சொற்களைக் கடந்தது. என்றது, வாசா மகோசரம் என்றபடி.

———-

ராம ஸூ க்ரீவயோர் ஐக்யம் தேவ் யேவம் சமஜாயத –35-52-

திருவாய்மொழி – -5-9-5–

நல் நலம் தோழிமீர்காள்-
நலமாவது,
இவள் பக்கல் இவர்களுக்கு உண்டான அன்பு.
நன்னலமாவது,
தங்கள் காரியம் தலைக் கட்டிக் கொள்ளுகை யன்றிக்கே இருக்கை.
ஆன பின்பு, ‘தாய்மார்கள் பழி சொல்லுவர்கள்’ என்று அஞ்சி என் வழியே உங்களுக்கு ஒழுகாதிருக்கப் போமோ.

(ராமர் தன்னலம் பாராமல் சுக்ரீவன் நலம் -பார்த்தார் சுக்ரீவனும் தன்னலம் பாராமல் பெருமாள் நலம் பார்த்தார்
அதே போல் நீங்களும் தாய் நலம் பாராமல் என் நலம் பார்க்க வேண்டாமோ என்னும் நினைவால் இந்த திருஷ்டாந்தம் )

“குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் சேர்க்கை எப்படி தோழிமார்களுக்கும் இவளுக்கும் உண்டான ஸ்நேகத்துக்குத் திருஷ்டாந்தம்
காட்டுகிறார் ‘-இருவரும் பிறர் நலம் விரும்பி அன்றோ நண்பர்கள் ஆனார்கள்
“வாநராணாம் நராணாம் ச கதம் ஆஸீத் ஸமாகம:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 35 : 2.-உண்டாயிற்று?” என்றது,
குருகுலத்தில் வாசம் செய்யாத விலங்குகளுக்கும் வசிஷ்ட சிஷ்யர்களான இராஜ புத்திரர்களுக்கும்
இது ஒரு சேர்த்தி உண்டானபடி எங்ஙனே;
சாஸ்திரங்களை அறிந்தவர்கள் அலரோ குரு குல வாசத்திற்குத் தக்கவர்; என்ன,
மேல் இதற்குக் காரணம் சொல்லுகிறான்.

“இராமனுக்கும் சுக்கிரீவனுக்கும் இந்த விதமாகச் சிநேகமானது உண்டாயிற்று;”
“ராம சுக்ரீவயோ: ஐக்யம் தேவி ஏவம் ஸமஜாயத” — ஸ்ரீராமா. சுந். 35 : 32.-என்றது, நிர்ஹேதுகத்வம் என்றபடி.
தங்களையும் அறியாதே எங்களையும் –இஷ்வாகு குலக் கொழுந்து -குரங்கு ஜாதி – அறியாதே
இங்ஙனே விழுந்து கொடு -ஐக்யம்-நிற்கக் கண்டோமித்தனை.

அதாவது,
1-இளைய பெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்து கொண்டு நின்று நோக்கக் கூடிய அந்தப்புரக் காரியத்துக்கு
அடியேன் வரும்படி யன்றோ அவர்கள்-சங்கதரான படி – ஒருங்கு சேர்ந்தபடி.
2-இளைய பெருமாள் அடிமையில் தப்பி நின்ற அளவுக்கும்-மாரீசன் வ்ருத்தாந்தம்- திருவடியைக் கொண்டு
இழையிட வேண்டும்படியாக அன்றோ அவர் நிலவரானபடி;
இளைய பெருமாள் பேர நிற்கை யன்றோ பிரிய வேண்டிற்று.
3-தங்கள் அளவிலும் பெருக்கப் பார்த்தார்கள். ஐச்வரியம் அவனுக்குக் காடு படும்படியன்றோ பார்த்தது.
“ஏவம் ஸமஜாயத –

“ஏவம் ஸமஜாயத – இந்த விதமாக உண்டாயிற்று” என்றதற்கு, மூன்று வகையாகப் பாவம் அருளிச் செய்கிறார். அவற்றுள்,
முதலது,
‘தங்களையும்’ என்றது முதல் ‘ஒருங்கு சேர்ந்தபடி’ என்றது முடிய. என்றது, அந்தப்புரக் காரியத்திற்கு அடியேன்
வரும்படியன்றோ அவர்கள் சேர்ந்தது என்று கருத்து. ‘தங்களையும்’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து,
தங்கள் பெருமையையும் எங்கள் சிறுமையையும் பாராமல் நினைவின்றிக்கே சேர விழுந்தது என்பது.
இரண்டாவது பாவத்தை அருளிச் செய்கிறார்
‘இளைய பெருமாள் அடிமையில்’ என்று தொடங்கி. என்றது,
தம்பியான இளைய பெருமாளுடைய அபராதத்தையும் நான் பொறுப்பிக்கும்படி என்பது கருத்து. நிலவர்-அந்த ரங்கர்,
இளையபெருமாள் அடிமையில் தப்ப நின்றாரோ? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார்
‘இளையபெருமாள் பேர நிற்கை’ என்று தொடங்கி.
மூன்றாவது கருத்தை அருளிச் செய்கிறார்
‘தங்கள் அளவிலும்’ என்று தொடங்கி. ‘தங்கள் அளவிலும் பெருக்கப் பார்த்தார்கள்’ என்றது,
தங்களுடைய ஐஸ்வர்யத்தைக் காட்டிலும், அதிகமான ஜஸ்வர்யத்தை யுடையராகும்படி பார்த்தார்கள் என்றபடி.
மேல் வாக்யத்தை விவரணம் செய்கிறார் ‘ஐச்வரியம்’ என்று தொடங்கி. ‘காடுபடும்படி’ என்றது, நிறைவுற்றதாம்படி என்னுதல்;
காட்டுக்கெல்லாம் தலைவனாகும்படி என்னுதல்.
இவ்வாறு உண்டாயிற்று”-
இப்படியன்றோ நட்பு இருப்பது; இவர்களும் தோழிமார்கள் அன்றோ.

———–

க்ருஹீத்வா ப்ரேஷமாணா ஸ பர்த்துர் கர வி பூஷணம்
பர்த்தாரமிவ ஸம் ப்ராப்தா ஜாநகீ முதிதா பவத்
–36-4-

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும்
அல்லி யம் பூ மலர்ப் பொய்கை பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித்
தூ முறுவல் நகை யிறையே தோன்றநக்கு
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவியாங்கே
மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே–15-

வீணை முலை மேல் தாங்கித் –
வீணையை ஸ்பர்சித்த வாறே -காந்தனானவன் சம்ஸ்லேஷ தசையில்
தன்னுடைய போக்யதையும் இவளுடைய போக்யதையும் வீணையிலே ஏறிட்டு வாசிக்கும் படியை சாஷாத் கரித்து
அதுக்கு ஆஸ்ரயமான தோளை சாஷாத் கரித்து –
அதுக்கு ஆஸ்ரயமான வடிவை சாஷாத் கரித்து
அவனை சம்ஸ்லேஷ தசையிலே தன் மார்பிலே ஏறிட்டு கொள்ளுமா போலே
வீணையை மார்பிலே ஏறிட்டுக் கொண்டாள் –

இவ் வீணையை அவனாக நினைக்கக் கூடுமோ -என்னில் –
க்ர்ஹீத் த்வா ப்ரேஷமாணா ச பர்த்தும் கர விபூஷணம்
பர்த்தாரம் இவ சம்பிராப்தா ஜானகி முதிதாபவத் -என்று
பிராட்டி பெருமாளை பிரத்யபிஞ்ஞா பிரத்யஷத்தாலே அனுபவித்தாள் இறே –

(“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர்த்து; கர விபூஷணம் – பர்த்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்“
(ஸ்ரீராமாயணம், ஸுந்தரகாண்டம் 3-4.) என்னும் கணக்கிலேயாருற்று இதுவும்.
திருவடி தந்த திருவாழி மோதிரத்தைக் கை நீட்டி வாங்கிக் கண்ட ஸ்ரீராமபிரானையே கண்டதாக மகிழ்ந்தது போல.)

க்ர்ஹீத்வா –
தேசாந்தரம் போன பந்துக்களைக் கண்டால் போல் மேல் விழுந்தாள் –

ப்ரேஷமாணா –
வைத்த கண் மாறாதே பார்த்துக் கொண்டு இருந்தாள் –

ஸா
இவன் வரவை ராவணன் வரவாக சங்கித்தவள் கிடீர் இப்படி மேல் விழுந்தாள் -என்கிறான் –

பர்த்தும் கர விபூஷணம் –
அடியில் தன்னைக் கைப் பிடிக்கும் போது தன் கையில் உறுத்தின மோதிரத்தை

அங்கன் அன்றியே
தானும் அவரும் சம்ஸ்லேஷித்த போது போகத்தின் மிகுதியாலே
ப்ரணய ரோஷம் தலை எடுத்து ஒருவரை ஒருவர் முகம் பாராதே யூடி இருப்பார்கள் –
அப்போது இருவரையும் சேர்த்து வைத்த மோதிரம் -என்னுதல் –

அதாவது
அப்போது நேர் முகம் பார்க்கையும் வார்த்தை சொல்லுகையும் இருவருக்கும் அபேஷிதமாக இருக்கும் –
வேறு சேர்ப்பார் இல்லையாகையே கையில் திரு வாழி மோதிரத்தை கழற்றி
பெருமாள் தரையிலே விழ விடுவர் –
அப்போது தான் அம் மோதிரத்தை விழ விட்டீர் காணும் என்னும் வார்த்தையை உண்டாக்கின
மோதிரம் ஆகையாலே கடகமான மோதிரம் –என்கிறது –

பர்த்தாரம் இவ சம்ப்ராப்தா –
திரு வாழி மோதிரத்தைக் கண்டவாறே பெருமாள் கையை நினைத்தாள்
அதுக்கு ஆஸ்ரயமான தோளையும்
அதுக்கு ஆஸ்ரயமான வடிவையும் -நினைத்தாள் –
சந்நிதியில் அவரைத் தழுவிக் கொள்ளுமா போலே திரு வாழி மோதிரத்தைக் கொண்டாள்

பர்த்தாரம் இவ –
அவள் பெருமாளாகவே தழுவிக் கொண்டாள் –
இவன் பர்த்தாவைப் போலே என்கிறான் –

ஜாநகீ முதிதா பவத் –
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் உகவா நின்றாள் –
உதர்க்கத்தில் என்னாய் விழப் போகிறதோ என்று பீதன் ஆகிறான் ரிஷி
தாங்கி வைத்தது -என்னாதே -தாங்கி -என்கிறது –
சம்போக தசையில்
அபூர்வ வத் விஸ்மய மாததா நயா- என்கிறபடி
தன் போக்யதையாலே குமிழ் நீர் உண்டு தளர்ந்த தசையிலே
அவனைத் தன் கையாலே எடுத்து
அணைத்துக் கொள்ளும்படி ஸ்மரதி விஷயமாக அவனை நினைத்து
வீணையை எடுத்து முலையில் தாங்கின படி –

(ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||-ஶ்லோகம் 38 –

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

இதில், ஆளவந்தார் பிராட்டியின் எல்லை இல்லாத இனிமையையும், அவள் எம்பெருமானுக்காகவே இருப்பதையும்,
திருவாய்மொழி 10.10.6இல் “உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை”
(உனக்குத் தகுந்தவளான, அழகிய தாமரை மலரில் வசிக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி) சொன்னபடி அனுபவிக்கிறார்.)

திருவாய்மொழி – -6-2-இருட்டு அறைகளிலே தடவிக் கொண்டு வாரா நின்றால் உறியும் வெண்ணெயும்
கையிலே தாக்கினால் உவகையனாமாறு போலே,
பெரிய உவகையோடு விழுந்து அவற்றை எடுத்துக் கொண்டான்.

எடுத்துக் கொண்டு, அத்தலையில் செய்த வியாமோகம் அடங்கலும் அவற்றிலே தோற்றும்படி
கண்களிலே ஒற்றிக்கொள்வது தலையிலே வைத்துக் கொள்வதாய்,
பிராட்டி திருவாழி மோதிரங் கண்டு பட்டனவெல்லாம் பட்டான்.
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா – ‘இராவணன் மாயையாலே வந்ததோ’ என்னும் பயத்தாலே
முற்படக் கண் வைக்க மாட்டாதே இருந்தாள்;
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர் து: கர விபூஷணம்
பர்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 4.
‘அத் தலையாலே வந்தது’ என்று தெளிந்த பின்பு கண் மாற வைக்க அரிதாம்படி இருந்தாள்.
ஸா – ப்ரேக்ஷமாணா – “பஸ்ய தேவி – தேவியே! பார்க்க்”
“வாநரோஹம் மஹாபாகே தூதோ ராமஸ்ய தீமத:
ராம நாமாங்கிதம் சேதம் பஸ்யதேவி அங்குளீயகம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36. 2.
என்று கொண்டு முன்பு பார்வைக்குக் கிருஷி பண்ண வேண்டும்படி இருந்தவள் தானே,
கண் மாற வைக்கைக்குக் கிருஷி பண்ண வேண்டும்படியாய் இருந்தாள்.
பர்த்து: கர விபூஷணம் – முதல் கைப்பிடிக்கிறபோது உறுத்தின படியை நினைத்தாள்.
கர விபூஷணம் – அணி மிகு தாமரைக்கை யன்றோ. ஆபரணத்துக்கு ஆபரணங் காணும்.
பர்த்தாரம் இவ-இவன் இத்தைத் திருக்கையில் கொடுத்தவாறே, இதனோடே சேர்ந்த விரலையும் தோளையும் நினைத்தாள்;
அந் நினைவுதான், தான் இக் கரையில் ஆளாகவும், அவர் அக் கரையில் ஆளாகவும், கடல் இடையிலே கிடக்கிறதாகவும் அறிந்திலள்;
ஒரு படுக்கையிலே கூட இருந்ததாக நினைத்தாள்;
பார்த்தாராம் ஏவ என்னாமல் இவ அவனைப் -போலே இல்லை அவனையே என்றவாறு
ஒரு சூது சதுரங்கங்களிலே தோற்றுத் தன்கையில் இருந்ததாக நினைத்தாள்.
“இவ” என்கிறான் இருடி, உலக மாதா என்ற கருத்தாலே. இவள் உணர்ந்தால் என் படக் கடவள் என்று.
ஜாநகீ-இன்ப துன்பங்களுக்கு இளையாத குடியிலே பிறந்தவள்.
முதிதா பவத்- உவகையளானாள். அப்படியேயாயிற்று இவனும் இவை பெற்ற பின்பு.
சம்சாரி முக்தனானால் அவனுடைய லீலோபகரணமும் போகோபகரணமும் சமமாகத் தோற்றக் கடவது.
வேறு ஆகாரமான நினைவு இல்லையே. ததீயத்வ ஆகாரத்தாலே நித்திய விபூதியோடு ஒக்கத் தோற்றுமித்தனை.
அப்படியே இவளுடைய லீலோபகரணமும் போகோபகரணமுமாகத் தோற்றக் கடவது.

(வீணை தரித்த பர கால நாயகி திருத்தாயார் பாடும் இப்படியே தான்-)

————-

தத ஸா ஹ்ரீமதி பாலா பர்த்துஸ் ஸந்தேஸ ஹர்ஷிதா
பரி துஷ்டா விஸாலாஷீ ப்ரியம் க்ருத்வா ப்ராஸம்ஸத மஹா கபிம்
–36-6-

ஸ்ரீ பெரிய திருமொழி-3-6-1-ததஸ்தா
திருவடி ராம விருத்தாந்தம் சொல்ல கேட்ட அநந்தரம் உளள் ஆனாள் –
திதிர்மிணி தர்மாஸ் சிந்த்யந்தே -இதி யாயேன
சத்தை உண்டாக உண்டாக மது உண்டாயிற்று
பாலா –
ஹர்ஷம் பொறுக்க ஒண்ணாதவள் ஆயிற்று
பர்த்து சந்தேச ஹர்ஷிதா –
ரஷகரான ராம விருத்தாந்தம் கேட்டு ஹ்ருஷ்டை யானாள் –
பரி துஷ்டா –
அந்த ஹர்ஷம் புற வெள்ளம் இட்டபடி
விசாலாஷீ ப்ரா சம்சத –
ஏத்தத் துடங்கினாள்
மஹா கபிம்-
கடலை வற்ற இறைக்கக் கோலுருவாரைப் போலே-

————-

குசலீ யதி காகுத்ஸ்த்த கிம் நு சாகர மேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நி ரிவோத்தித
–36-13-

இவர் வரவிட்ட ஆளின் முன்பேயும்,
“ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்த பெருமாள், க்ஷேமத்துடன் இருந்தால் கோபத்தால் பிரளய காலத் தீயினைப் போன்று
புறப்பட்டவராய், கடலை மேகலா பரணமாகவுடைய பூமியை ஏன் கொளுத்தவில்லை” என்னுமவள் அன்றோ
“குஸலீயதி காகுத்ஸ்த: கிம்நு ஸாகரமேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நிரிவ உத்தித:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 14.

காகுத்ஸ்த:-
பரிபவம் பொறாத குடியிலேயன்றோ தாம் பிறந்தது;
‘பிறர்க்கு வந்தவை போக்குமத்தனை யல்லது, தமக்கு வந்தனவற்றைப் போக்கலாகாது’ என்று இருக்கிறாரோ?
கிம் நு ஸாகர மேகலாம் மஹீம் தஹதி –
‘நீர்ப் பண்டத்திற்கு ஓர் அம்பும் கடினப் பொருளுக்கு ஓர் அம்பும் வேண்டும்’ என்று இருக்கிறாரோ?
கடலில் நீரே நெய்யாக எரிக்க வல்ல அம்பை யுடையவரன்றோ. –
அம்பு இல்லாததால் வரமால் இல்லை அன்பு இல்லையே உன் தலைவருக்கு –
ஒக்கக் கைப்பிடித்தவளாகிலும் பரிவட்டம் பேணியிருக்கும்படி வைத்தாரே யன்றோ; –
பூமியை சமுத்ரம் பேணி இருக்க வைத்தாரே –
இராஜாக்களுக்குப் பூமியும் பெண் போலே யன்றோ;
(ஏக பத்னி விரதம் அல்லவோ என்னில் ஷத்ரியருக்கு ராஜ்ய பரிபாலனம் கர்தவ்யம் அன்றோ )ஈசுவரர்கள் படைத்தபடி கிடப்பது இவர் கண் சிவக்குமளவுமாகாதே என்றும்
“பித்ரு வசன பரிபாலநம் என்கிற வியாஜத்தாலே ராஜ்யத்தை விட்டவரும், என்னையும் கால் நடையாகக் காட்டில்
அழைத்து வந்தவருமான எந்த ஸ்ரீராமபிரானுக்கு” என்கிறபடியே,
பித்ரு வசன பரிபாலனம் செய்யப் போந்தாரோ? என்னை நலிகைக்காகப் போந்தாரத்தனை யன்றோ என்றும்
தர்மாபதேஸாத் த்யஜ்த: ச ராஜ்யம்
மாம் ச அபி அரண்யம் நயத: பதாதிம்”- என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 29.

————–

ந சாஸ்ய மாதா ந பிதா ந சாந்யா ஸ்நேஹாத் விசிஷ்டோஸ்தி மயா ஸமோவா
தாவத் த்வஹம் தூத ஜிஜீவிஷேயம் யாவத் ப்ரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய
–36-30-

திருவாய்மொழி – -5-4-3–“நசாஸ்ய மாதா” – பிராட்டி திருவடியைக் கண்ட பின்னர், பெருமாள் பக்கல் பிரணய ரோஷத்தாலே
‘இவன் அவர் வர விட்ட ஆள்’ என்று சீறிச் சில வார்த்தைகள் அருளிச் செய்ய,
‘தேவரீர் எழுந்தருளி இருந்த இடம் அறியாமல் இருந்தாரித்தனை அல்லது அன்பின் திறத்தில் ஊற்றம் போராமையோ,
அறிந்த பின்பு இனித் தாழ்த்தாராகி லன்றோ குற்றமாவது’ என்று,
அந்தச் சிவிட்கு ஆறும்படி சில வார்த்தைகளை விண்ணப்பம் செய்து,
பின்னையுந்தான், ‘அவரைப் பிரிந்து பத்து மாதங்கள் ஆயினவே, இவ்வளவும் முடிந்து போகாமல்
தரித்திருந்த தன்றோ தேவரும்’ என்பது
தனக்குக் கருத்து என்னுமிடம் தோற்ற இருந்தான் திருவடி;
அதுவோ உனக்கு நினைவு! வாராய், நாட்டார்க்கு, மாதா என்றும் பிதா என்றும் உடன் பிறந்தார் என்றும் பந்துக்கள் என்றும்
பல தலையாக இருக்கையாலே அன்பானது எங்கும் பாலி பாய்ந்திருக்கும்;
பெருமாள் அங்ஙன் அன்றிக்கே, எல்லார் பக்கல் செய்யும் அன்பையும் என் பக்கலிலே ஒரு மடையாகச் செய்து வைக்கையாலே,
எல்லாம் செய்தாலும், கடலை அணை செய்து பகைவர் கூட்டத்தைக் கிழங்கு எடுத்துத் ‘தண்ணீர் தண்ணீர்’ என்று வருகை தவிரார்;
தாபத்தாலே வருந்தினவன் விடாய்ப்பட்டுப் பந்தல் ஏற வரக் கொண்டு தண்ணீர்ச் சால் உருண்டு கிடந்தால் பிழையாதாமாறு போன்று,
அவர் இப்படி வரக் கொண்டு நான் இன்றிக்கே இருப்பேனாகில் பின்னை அவரைக் கிடையாது என்று,
அவருக்காக என்னை நோக்கிக் கொண்டிருந்தேன்; அவரைக் கண்ட பிற்றை நாள்-அநாதரித்து உபேஷித்தான் என்று அறிந்த பின்பு –
நான் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது என்றாளே அன்றோ.
“தூத” – முன்பு, “வாநர” என்பது போன்று சொல்லிப் போந்தவள்,
இப்போது அவர் பக்கல் உண்டான சிவிட்கு இவ்வளவும் ஏறிப் பாய்ந்து,
அவர் வரவிட வந்தவன் அன்றோ நீயும் என்றாளே அன்றோ–அவர் சம்பந்தம் சொல்லி தூத என்கிறாள்

வல் வினையேன் பெண் பிறந்தே மாயும் வகை அறியேன் –பீஷ்மன் முதலானோர்களாக வேணுமாகாதே:
ஞானமுடையவர்களாதல் ஸ்வதந்திரர்களாதல் செய்ய வேணும்.
அறிவிலிகளான பெண் பிறந்தார்க்கு நினைத்தபடி முடியப் போமோ.

———-

இதீவ தேவீ வசனம் மஹார்த்தம் தம் வாநரேந்த்ரம் மதுரார்த்த முக்த்வா
ஸ்ரோதும் புநஸ் தஸ்ய வஸோபிராமம் ராமார்த்த யுக்தம் விரராம ராமா
–36-31-

“இதீவ-மேலே நெடும் போது சில பாசுரமிட்டுச் சொல்லிக் கொடு போந்தான்;
பிரணய தாரையில் ஓடுமது இருடிகளாயிருப்பார்க்கு நிலம் அன்றே? இப் புடைகளிலே என்கிறான்
தேவீ – வல்லபைகளுடைய பரிமாற்றம் கடக்க நிற்பார்க்குத் தெரியாதே அன்றோ.
வசனம் மஹார்த்தம் – கடக்க நிற்பார்க்கே அன்று; தேசிகரானவர் தங்களுக்கும் தெரியாதிருக்கை.
தம் வாநரேந்திரம் – இவனோடு ஒக்கக் கடவார் ஒருவரும் இலர்.
சேஷத்துவத்திற்கு முடி சூட்டப் பட்டார் மஹாராஜரே யாகிலும், பாரதந்திரியத்தின் எல்லையிலே நின்றான் இவன் என்கை.
இவ் வளவிலே இவள் முகம் பார்த்து வார்த்தை சொல்லப் பெற்றிலர் அன்றோ அவர்.
மதுரார்த்தம் – நிலம் அன்று என்னாக் கை வாங்க ஒண்ணாதபடி இருக்கை.
உக்த்வா – அவனும் அவன் உடையவர்களும் வாழும்படி வார்த்தை சொன்னாள்.
ஸ்ரோதும் புநஸ் தஸ்ய வசோபிராமம் – ‘அழிந்தாரை ஆக்க வல்லன்’ என்னுமிடம் கண்டாள்;
தான் அழித்த தலை உண்டாம்படி வார்த்தை சொல்ல வல்லமை கேட்க வேணும் என்று இருந்தாள்.
நிர்த்தயர் ஸ்வார்த்தர் -வார்த்தை சொல்லி அழித்தது -அவை இல்லாமை வார்த்தை சொல்லுவான் என்று
எதிர்பார்த்து இருந்தது போலே இங்கும் பராங்குச நாயகி -நிர்தோஷராம் படி வார்த்தை சொல்லுகை –
ராமார்த்தயுக்தம் – இராமபிரானாகிற பிரயோஜனத்தோடு கூடியது;- தன் காரியம் செய்து தலைக்கட்ட வல்லான் ஒருத்தன்.
விரராம – நெடும்போது தான் வார்த்தை சொல்லுகையினாலும், ஸ்வாமி வார்த்தை சொல்லும் போது
மேலிட்டு வார்த்தை சொல்ல ஒண்ணாமையினாலும் பேசாதே இருந்து அவனுக்கு இடம் கொடுத்தாள்.
ராமா – இவ்விட்டு நீட்டுகை ஒழிய வார்த்தை சொல்லாதே இருக்கிற போதை அழகை
அவர் தாம் காணப் பெற்றிலோம்,” இவனும் அடர்த்து வார்த்தை சொன்னான்.
இவ் விட்டு நீட்டுகை ஒழிய-இவள் வார்த்தை நேராக பெருமாள் கேட்காமல் திருவடி மூலம் தானே கேட்கப் பெற்றார்-

————–

நத்வாமி ஹஸ்தாம் ஜாநீதே ராம கமல லோசநே –36-33-

திருவாய்மொழி – -10-8-9-நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே ராம கமல லோசனே-தேநத்வாம் நாநயதி ஆஸூ சசீமிவ புரந்தர -சுந்தர -36-33-
பிராட்டி திருவடியைப் பார்த்து அருளியது –
நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே-
தேவரீர் இங்கு இருப்பதனை பெருமாள் அறிய வில்லை -என்கிறபடியே-நடுவே சிலர் சொல்லும்படி ஆயிற்று-
எழுந்து அருளிய இடம் அறியாமையாலே-ஆறி இருந்தார் இத்தனை போக்கி –
அறிந்தால் ஒரு கணம் ஆறி இருப்பாரோ –இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேண்டுமோ –
கமல லோசனே-
உம்முடைய கண் அழகே அன்றோ பிரமாணம் –
ராம-
அவரை அறியாது ஒழிய வேண்டுமோ –
சிரஞ்ஜீவதி வைதேஹீ யதிமாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர 66-10-
கருத்த கண்களை உடைய சீதையைப் பிரிந்து ஒரு கணம் கூட உயிர் வாழேன் -என்றே அன்றோ அவர் இருப்பது –
ராம கமல லோசனே –கமலா பத்ராஷா ரம்யய்தி ராமயா –
அவரை அறியாமையும் இல்லை –
உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாமையும் இல்லை –
கமல லோசனே —
அன்றிக்கே-யார் எதிராகத் தான்-இக்கண் சிவப்பும் சீற்றமும் எல்லாம் -என்னுதல்
பிரணய ரோஷத்திலே நோக்கு-என்னுதல்-

———-

ந மாம்ஸம் ராகவோ புங்க்தே –36-41-

உண்ணாது உறங்காது –11-7-நாச்சியார்-உண்ணாது-
ந மாம்சம் ராகவோ புங்க்தே ந சாபி மது சேவதே-என்கிறபடியே
பார்த்து பரிந்தூட்டுமவள் போனால் -இனி யார் அவரைப் பரிந்தூட்ட –
மா மலர் மங்கை மணம் உண்டு இருந்தான் இறே
அவள் போனால் இவனுக்கு ஊண் இல்லை இறே –

உறங்காது –
அநித்ரஸ் சததம் ராம -என்கிறபடியே –
கண் உறக்கம் அற்று ஊண் உறக்கம் அற்று-

——

அ நித்ரஸ் ஸததம் ராம ஸூப் தோபிஸ நரோத்தம
ஸீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரன் பிரதிபுத்த்யதே
–36-44-

இன வேல் நெடும் கண்கள் –நாச்சியார்-5-4-
அநித்ரஸ் சத்தம் ராம -என்று அவன் படக் கடவ பாட்டைக் கிடீர் நான் படுகிறது
இக் கண்ணுக்கு இலக்கானார் படுமத்தை தான் படா நின்றாள் யாய்த்து
ராம அநித்ர
செல்வப் பிள்ளைகளாய் இருப்பார் பாதிப் போது நித்ரை யோடு யாய்த்து போது போக்குவது
இப்படி இருக்க நித்ரை இல்லை யாய்த்து

சிறிது போது உறங்கி சிறிது போது உணர்ந்து தான் இருப்பாரோ என்னில் –
சத்தம் அநித்ரஸ் ஸூ ப்தோஅபி ச –ஆனால் இது என்சொல்லிற்று ஆகிறது எனில் –
உணர்ந்து இருக்கச் செய்தே உணர்த்தி அற்று இருக்கும் படியைச் சொல்லிற்று யாயிற்று
பராகார்த்த அனுசந்தான பாவம் இருந்தபடி

நரோத்தம -அபிமத விஷயத்தை பிரிந்தால்
இப்படி அநித்ரையாலே நோவு படுக்கை காணும் புருஷோத்த மத்வம்-ஆவது-ந சே தேன விநா நித்ரம் லபதே புருஷோத்தமே -பால -19-29-

திருவாய்மொழி – -2-4-5–இவள் இராப்பகல் வாய் வெரீஇ
சீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரன் பிரதிபுத்யதே –என்று வாய் வெருவுவான் அவன் கிடீர்
அநித்ரஸ் சததம் ராம -நித்ரையோடே கால ஷேபம் பண்ண வேண்டும் செல்வுடையார் -செல்வம் -சம்பத் –சததம் அநித்ரராய் இருப்பர்-
ஸூப்தோபி ச – சததம் அனித்ர-என்று வைத்து –ஸூப்தோபி ச -என்கிறது
பராகர்த்த அனுசந்தான அபாவத்தைப் பற்ற –

ராமயதிதி ராம -ஸுவ வியதிரக்தரை ஆனந்திப்பிக்க -தான் தூங்கி ஆனந்தம் -அடைய விரோதம் -சிநேகத்துக்கு கொத்தை -தூங்குகிறார் –
வியத்திரிக்த பதார்த்தங்களில் கண் வைக்காமல் பிராட்டியையே நினைத்து இருப்பார் –சததம்  அனித்ர -எப்போதும் தூக்கம் இல்லாமல் –
கால விசேஷ நிர்த்தேசம் இல்லை -தூக்கமே தெரியாது என்பதால் –சததம்  –இப்பொழுது தூங்காமல் இருப்பதால் -நித்ரா அயோக்யதா –
காலை சந்த்யாவந்தனம் பண்ண வில்லை -காலையில் பண்ண வில்லை -என்பதே அர்த்தம் போலே
மகா ராஜர் இளைய பெருமாள் இடம் பிராட்டி நிமித்தமாக உசாவி -விசாரித்து துக்கம் மிக்கு மயங்கி தூங்கி -என்றவாறு
காதல் இன்மை என்பதும் இல்லையே –

நரோத்தம -அபிமத விச்லேஷத்தில் இங்கனே இருக்கையாலே புருஷோத்தவத்மம் ஆவது
இராப்பகல் –
பொய் நின்ற ஞானம் தொடங்கி -இவ்வளவு வாய் வெருவின வித்தை காணும்
வாய் வெரீஇ -வாய் வெருவி –
அவாதானம் பண்ணி சொல்லுகிறது ஒன்றும் இல்லை -வாசனையே உபாயாத்யராகச் சொல்லுகிறது இத்தனை –

————

ஸ மயா போதிதா ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தப –38-24-

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் –-திருவாய்மொழி – -5-8-1…-

பகைவர்களைத் தபிக்கச் செய்கின்ற ஸ்ரீராமனான அந்தப் பெருமாள்
என்னால் உறக்கத்தினின்றும் உணர்த்தப்பட்டார்” என்கிறபடியே,

வாயஸேந தத: தேந பலவத்க்லிச்யமாநயா ஸ மயா போதித: ஸ்ரீமாந் ஸுகஸுப்த: பரந்தப:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 24.
திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
சுலோகத்திலுள்ள “ஸ்ரீமாந்” என்ற சொல்லுக்கு, பாவம், ‘இவன் உணரில்’ என்று தொடங்கும் வாக்கியம்.

கிடந்த கிடைக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருத்தலின் ‘ஏரார் கோலம் திகழ’ என்கிறார்.
‘இவன் உணரில் செய்வது என்’ என்றுவயிறு பிடிக்க வேண்டி இருக்கை.

————

கஸ் க்ரீடதி ஸரோஷேண பஞ்ச வக்த்ரேண போகிநா –38-26-

மணியே மணி மாணிக்கமே மது சூதாபணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி  -11-8-8-

பரஞ்சோதி  —
பூ வலரும் போதை விகாசம் போலே
வார்த்தை அருளிச் செய்யும் போது-
திருமேனியில் பிறக்கும் செவ்வி காண வாயிற்று ஆசைப் படுகிறது –

கக்ரீடாதி -(ககா க்ரீடேதி -காகாஸூர வ்ருத்தாந்த ஸூந்த்ர -ஸ்லோகம் )
ஆஸ்ரித விஷயத்தில் உண்டான ஓரத்தாலே
அவர்கள் விரோதியைப் போக்குகைக்கு -நான் இருந்தேனே -என்கிற போதை
சீற்றம் தோற்றி யாயிற்று வார்த்தை அருளிச் செய்யும் போது இருப்பது

கக்ரீடாதி –
தோற்ற அரவிலே முடிக்க வல்ல தொரு மகா சர்ப்பம்
உறங்குகிறவற்றை எழுப்பி
அத்தோடு போது போக்கி பிழைக்கப் புகுகிறவன் தான் ஆர் –

சா ரோஷேண-
அதுக்கு ஆற்றல் உண்டாக பெற்றிடம் ஜீவிப்பார் உடைய பாக்யத்தாலே யாயிற்று –

பஞ்ச வக்த்ரேண
ஐந்தலை நாகம்

போகி நா –
அது எல்லாம் வேணுமோ
வடிவைக் காண அமையாதோ முடிகைக்கு –

ப்ரக்ருதயா தர்ம சீலரானவாறே இப்படிச் சொல்லுகிறார் –
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்து மர்ஹதி –
(ஆஸ்ரித பக்ஷ பாதி
ஆஸ்ரித விரோதிகள் இடம் கோபித்த இடம்
தர்ம சீலன் -ராமனுக்கும் பலிக்கும் -விபீஷணன் எண்ணம் )

———-

ஸ பித்ராஸ பரித்யக்த ஸூரைச் ச ஸ மஹர்ஷிபி
த்ரீந் லோகான் ஸம் பரிக்ரம்ய தமேவ சரணம் கத —
38-33-

ஸ்ரீ அமலனாதி பிரான்-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்-

வெண் பிறையன் துயர் –
தனக்கு தக்க வாதம் இறே
லோகத்துக்கு சங்கரனாய் இருக்கிறவனுக்கு வந்த துக்கம் இறே
இவன் தன்னுடைய கர்வத்தாலே ப்ரஹ்ம ஸிர க்ருந்தநம் பண்ணின வனந்தரம்
இவன் புத்ரத்வம் குலைந்தாலும் தான் பிதாவான படியாலே இவனை அழியாதே செருக்கு
வாட்டுகைக்காக –
கபாலீ த்வம் பவிஷ்யசி என்று ப்ரஹ்மா சபிக்க -இவன் கையிலே -முடை யடர்த்த
சிரம் ஏந்தி மூவுலகும் பலி திரிவோன் -என்கிறபடியே -கபாலத்தைக் கொண்டு பலி புக்கான
ஜெயந்தனைப் போலே த்ரீன் லோகான் சம்பரிக்ரம்ய -பண்ணிக் கொண்டு திருப் பாற் கடலிலே
சென்ற அளவிலே -இடர் கெடுத்த திருவாளன் -என்கிறபடியே -பிராட்டியும் தானுமாய் வந்து
துயரைத் தீர்த்தான் இறே –

திருவாய்மொழி – -3-7-8–ஸ பித்ரா ச பரித்யக்த ஸ ஸூரைச்ச ஸ மஹர் ஷிபி
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத
ஸ -பெருமாள் திரு உள்ளத்திலே தீரக் கழிய அபராதத்தைப் பண்ண -அவர் குபிதராய்
ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட -அது பின் தொடர்ந்து கொடு திரிய -ஆவாரார் துணை -என்கிறபடியே
ரஷக அபேஷை உடைய காகமானது
பித்ரா ச பரித்யக்த-பெற்றவர்களுக்கு பரமன்றோ ரஷிக்கை-என்று பார்த்து இந்த்ரன் பாடே சென்றான் –

இந்த்ரோ மகேந்த்ரஸ் ஸூர நாயகோ வா த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் -என்கிறபடியே
எட்டுக் கதிரும் விட்டு எரிகிற பெரிய மதிப்பும் தானும் ஆனாலும் ராவத்யனை ரஷிக்கை
அரிதாகையாலே பூதாநாம் யோவ்யய பிதா -என்கிறபடியே -நிருபாதிகன்- தாய்க்கும் தகப்பனுக்கும் ஆகாதே
சர்வ பூத ஸூஹ்ருதான அவர் அளவிலே பிரதிகூல்யம் பண்ணி அவர்க்கு அவத்யன் ஆனவன் அன்றோ –

இவன் இங்கு புகுருகை யாவது என் -சேந்த்ராய -எண்ணிலோ என்று பயப்பட்டு
புத்ர மித்ர களத்ரங்களோடே எல்லோரும் காண நாற் சந்தியிலே குட நீர் வழித்து விட்டான் –

ஸூ ரைச்ச-
மாதா பிதாக்கள் கை விட்ட வளவிலும் இவர்களுக்குஉபாத்யர்த்தமாக
பந்து வர்க்கமான தேவதைகள் கொடு போய் சீராட்டக் கண்டு போருமே
அந்த வாசனையாலே அவர்கள் பாடே சென்றான் -கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாத ரோஷச்ய சம்யுகே –
என்கிறபடியே அபராதம் அதுவாகையாலும் -பெருமாளுக்கு அஞ்சுகையாலும் -மாதா பிதாக்கள்
நேராக கை விட்டார்கள் என்று அறிகையாலும் அவர்களும் தள்ளிக் கதவடைத்தார்கள்

ச மஹர்ஷிபி –
இந்த்ரன் கை விட்ட த்ரிசங்குவையும் அகப்படத் தங்கள் தபஸை அழிய
மாறி ரஷித்து -ஆன்ரு சம்ச்ய பிரதாநராய் இருக்கும் ருஷிகள் பாடே சென்றான் -அவர்களும்
சத்ய ஹிம்சையிலே பண்ணுவதோர் ஆன்ரு சம்சயம் உண்டோ என்று கை விட்டார்கள்-

த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய-
தமப்பனுக்கு செல்லும் தேசம் ஆகையாலே ஆரேனும் ஒருத்தர் ஒரு காலாகிலும் புத்தி பேதம் பிறந்து
பரிக்ரஹிக்கக் கூடுமோ என்று த்ரைலோக்யத்திலும் தச்சன் கட்டின வாசல்கள் தோறும்
ஒருகால் புக்கப் போலே ஒன்பதின் கால் புகுந்து திரிந்தான் -அங்கு ரஷகர் ஆவாரைப் பெற்றிலன் –

தமேவ சரணம் கத-
கோபித்தாரே யாகிலும் நாராயணத்வ ப்ரயுக்தமான குடல் தொடக்கு உண்டாகையாலே
அவர்கள் முகத்தில் காட்டில் அம்பு விட்டவர் முகமே குளிர்ந்து இருக்கையாலும்
சக்ருதேவ பிரபன்னாய -ஏதத் வ்ரதம் மம -என்று அருளிச் செய்து வைக்கையாலும்
அந்த சீறின பெருமாளே அமையும் என்று அவரையே தனக்கு உபாயமாகப் பற்றினான் –

சர்வ பூதேப்ய –
என்கிறவிடத்தில் -சர்வ சப்தம் அசங்குசித உக்தி யாகையாலே
பிறரால் வரும் பயத்தையும் -தன்னால் வரும் பயத்தையும் ரஷகனான என்னால் வரும்
பயத்தையும் போக்கி ரஷிக்க கடவேன் என்றபடி-இப்படி இக்காகம் பட்டது பட்டு
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய -பண்ணித் திரிந்தான் இறே-

லோகத்துக்காக சம்ஹர்த்தாவாய் பெரிய மதிப்போடே கும்பீடு கொண்டு திரிந்து
ததாதர்சித பந்தாவாய்க் கொண்டு தன் புத்யா ஒருவனை சம்ஹரிக்கப் புக்குப் பட்டபாடு இறே இது-

‘அந்தக் காகாசுரன் தகப்பனாலும் மஹரிஷிகளோடு கூடியிருக்கின்ற தேவர்களாலும் விடப்பட்டவனாய் மூன்று உலகங்களிலும்
நன்றாகத் திரிந்து பின் அந்தப் பெருமாளையே புகலிடமாக அடைந்தான்,’ என்பது ஸ்ரீராமாயணம்.
‘பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றனாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை’ என்றார் திருமங்கை மன்னன்.
ஆக, இப்படி, எல்லா நிலைகளிலும் நம்பத்தகுந்தவன் சர்வேசுவரனே என்பதனைத் தெரிவித்தபடி.
ஸ்வச்தமான தசையில் நானே அறிவித்து வைத்தால் -ச பித்ராச -நோக்குமா போலே தான் தனக்கு உதவாத தசையிலும் உதவுவானே –
ஈஸ்வரன் -நாம் நமக்கும் ஆகாத அன்றும் -தஞ்சமாவான் தானே யாவான்
பெருமாள் பக்கம் அபராதத்தால் தமப்பன் கை விட்டான்
ச காரத்தாலே தாயும் கை விட்டாள்-
பற்றும் பொது அவள் முன்னாக பற்றும் -கை விடும் பொழுது அவன் விட்ட பின்பே இவள் விடுவாள்
வாத்சல்யம் உரைத்த இடத்திலே முந்துற விழுவது -அவள் காலிலே முந்துற விழுந்தான் –
அவள் சசிதேவி -தாயார்-மை எழுதி ஒப்பனை -த்வேஷித்தால் -விலகி -இவனும் குட நீர் வழித்து நின்றான் -நன்றாக விட்டான் பரித்யாகம் –
ஸூரைஸ்ஸ -தேவர்களும் -சஜாதீயர்களும் கை விட்டார்கள் -ச மகரிஷிபி -ஜீவ காருண்யம் உள்ளவர்களும் -கை விட்டார்கள் –
ஆன்ரு சம்சயத்துக்கு விஷய விவிஸ்தை உண்டே –
திரீன் லோகன் -திறந்து கிடக்கும் வாசல் தோறும் நுழைந்து திரியும் பதார்த்தம் -ஒன்பதின் கால்
புகப்புக தள்ளிக் கதவை அடைத்து
தமேவ சரணம் கத -பிரம்மாஸ்திரம் ஏவின -அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் அருள் நினைந்தே -அழும் குழவி அது போலே –
நம்பன் -விச்வச நீயன் -சர்வேஸ்வரன் -எல்லா அவச்தைகளிலும் இவனே –

திருவாய்மொழி – -9-1-மாதா பிதாக்கள் கை விட்ட ஜெயந்தனுக்கு ப்ரஹ்மா-தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -சுந்தர -38-33-
அந்த காகாசுரன் தமப்பனாலும் முனிவர்களாலும் தேவர்களாலும்-விடப்பட்டவனாய் மூன்று லோகங்களிலும் நன்றாக திரிந்து
அந்த பெருமாளையே சரணம் அடைந்தான் –

————–

ஸ தம் நிபதிதம் பூமவ் சரண்ய சரணாகதம்
வதார்ஹமபி காகுத்ஸ்த்த க்ருபயா பரிபாலயத்
-38-34-

திருவாய்மொழி – -2-7-6-வதார்ஹம் அபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-
காகுத்ஸ்த-தங்களிலும் கிருபையே விஞ்சி ரஷித்துக் கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்
வதார்ஹமான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் கண்னழிவு பண்ணுமவர் இறே-

குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7–‘ஸ :- பாதுகாவலே சொரூபமாக இருக்குமவர்,
தம் – தீய செயலிலே முதிர நின்ற அவனை,
நிபதிதம் பூமௌ – தெய்வத் தன்மையாலே பூமியிலே கால் வையாதவன் போக்கற்றுத் தரையிலே வந்து விழுந்தான்;
அன்றிக்கே, குழந்தை தீம்பு செய்தால் தந்தை தண்டிக்கத் தொடர்ந்தால், தாயின் காலிலே விழுமாறு போலே காணும்,
இவன் பூமியிலே விழுந்தது.
சரண்ய :-
ஏதேனும் தசையிலும் சரணமாகப் பற்றுதற்குத் தகுந்தவர்.
சரணாகதம் –
கண்வட்டத்தில் வேறு கதியில்லாமை தோன்ற விழுந்துள்ளவனை.
வதார்ஹமபி –
பெருமாள் சித்தாந்தத்தாலும் கொல்லுதற்கு உரியவனே; ஆனாலும்,
காகுத்ஸ்த : –
குடிப்பிறப்பால் வந்த நீர்மையாலே பாதுகாத்தார். ‘குடிப்பிறப்பு, தண்டிக்கத் தகுந்தவரைத் தண்டித்தற்குக் காரணமாய் இராதோ?’ என்னில்,
கிருபயா பரிபாலயது –
‘நாம் தொடங்கின கார்யம் பிரபலமான கர்மத்தாலே முடிக்க ஒண்ணாததைப் போன்று, அவரும் கிருபைக்குப் பரதந்திரப்பட்டவர்
ஆகையாலே நினைத்த காரியத்தை முடிக்கமாட்டார். அவன் கிருபை விளையும் பூமியைப் பற்றியவன் ஆனான்;
அதற்கு மேலே கிருபையும் விளைந்தது; இனி, அவர் எவ்வழியாலே தண்டிப்பார்?
ஆகையாலே, எனக்குக் குறை உண்டாகையாவது, பகவானுடைய கிருபை அளவிற்குட்பட்ட விஷயமாக அன்றோ?’ என்கிறார்.
(பெருமானுக்கு கிருபை விளையும் பூமி -பூமி பிராட்டி -சீதையால் – கிருபை விளைந்தது
எடுத்த கார்யம் செயல் முடிக்காமல் அன்றோ கிருபை தடுத்தது இங்கு )

———-

ஆந்ரு சம்ஸயம் பரோ தர்ம த்வத்த ஏவ மயா ஸ்ருதா –38-41-

கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்-9-3-4-

நமக்கே பணித்த –
ஆன்ரு சம்சயம் பரோ தர்மஸ்த்வத்த ஏவ மயா ஸ்ருத  –
கலக்கிற போதை சொல்லிற்று ஒரு வார்த்தை உண்டு
அதாகிறது –
சிலரோடு சிலர் கலந்து பிரிந்தால்
பின்னை அவர்கள் படும் வியசனம்  கண்டால்
நான் பொறுக்க மாட்டேன் காண்-
இது காண் என் பிரகிருதி  இருக்கும்படி -என்று கொண்டு சொல்லி வைத்தான் ஆயிற்று

பிரிந்து இவள் நோவு படுகிற போது-இது வன்றோ இவன் சொன்னது -என்று கொண்டு
பிரத்யபிஜ்ஞ்ஞை பண்ணி தரிக்கைக்காக
இது தான் ஓர் ஆளின் வாயில் இட்டு நீட்டுகை இன்றிக்கே
அவர் தம் வாயாலே சொல்ல
நான் என் செவியாலே கேட்டேன் -என்கிறாள் –

பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4-

கருளக் கொடியுடைய –
ஆர்த்த ரஷணத்துக்கு த்வஜம் கட்டி இருக்கிறவன்

புண்ணியன்
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம -சுத்தர -38-21-

நீரும் நானுமாய் ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளும் அளவாய் இருக்கச் செய்தே –
சம்ஸ்லேஷ தசையிலே -தர்மங்களில்
நீர் விரும்பி இருப்பது என் என்று கேட்டேன் -பிறர் நோவு படப் பொறுக்க மாட்டேன் –
பிறர் நோவு படப் பொறுக்க மாட்டாத இதுவே காண் நாம் வெளிறு கழிந்த தமமாக நினைத்து இருப்பது என்று அருளிச் செய்தீர்

த்வத்த ஏவ மயா ஸ்ருத –
இது தான் உம்முடைய ஆளான திருவடி வாயிலே இட்டு நீட்டுகை அன்றிக்கே
உம்முடைய வாயாலே அருளிச் செய்ய நான் செவியாலே கேட்டேன்
இது தான் பிறர் மேலே ஏறிட்டு நீர் நம்மைப் பிரிந்து நோவு பட விட்டீர் ஓம் காண் -என்று சொன்னார் ஆனார் அவர்
பிரிந்து நோவு பட விட்டு இருந்தான் என்னுமத்தைப் பற்ற அத்தைச் சொல்லுகிறாள் யாய்த்து இவள்

புண்ணியனை வரக் கூவாய்
பிறர் நோவு பட பொறுக்க மாட்டாதவன் நெஞ்சு திருத்த வேண்டா
நீ சென்று கிணுக்க அமையும் காண் அவன் வருகைக்கு -என்கிறாள் –
சிறிது உணர்த்தினாயாகில் -என்றபடி -அல்பம் ஸூசிப்பிக்க அமையும் –

————–

கௌசல்யா லோக பர்த்தாரம் ஸூஷுவேயம் மனஸ்விநீ
தம் மமார்த்தே ஸூகம் ப்ருச்ச சிரஸா ச அபி வாதய –
-33-56-

நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவுமாங் கொலோ? தையலார் முன்பே.திருவாய்மொழி – -5-3–7-

ஈண்டு நானிருந் தின்னுயிர் மாயினும் மீண்டு வந்து பிறந்து தன் மேனியைத்
தீண்ட லாவதோர் தீவினை தீர்வரம் வேண்டினாள் தொழுது என்று விளம்புவாய்- என்பது, கம்பராமாயணம்.

இதனால், மனைவிக்குரிய பிரணய ரோஷத்தால் அன்றிக்கே,
அஹம் சிஷ்யாச தாஸீச” என்கிறபடியே, சேஷத்வத்துக்குத் தகுதியாகச் சொன்னாள்- என்றபடி.

மநஸ்விநீ கௌசல்யா லோக பர்த்தாரம் யம் சுஷீவே
நாட்டில் பெண்கள் ‘இங்கு இருக்கும் நாள்களுக்கு நமக்கு ரக்ஷகனாய்ப் பின்பு நரகத்தில் புகாதபடி விலக்குவதற்கும்
ஒரு பிள்ளை வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெறுவர்கள்;
அங்ஙன் அன்றிக்கே, என் மாமியார் தன் நெஞ்சில் உண்டான பரந்த நோக்கத்தாலே, ‘உலகத்துக்கெல்லாம் ரக்ஷகனாக வல்லான்
ஒரு பிள்ளையைப் பெற வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெற்றார்; அவர் நினைவு தப்பலாமோ?
அந்த உலகத்துக்குள்ளே இருக்கிற ஒரு பெண் அல்லளோ நான்.
இனி, ‘நாட்டில் பெண்கள் கணவன்மார்கள் சமர்த்தர்களான போது ஆதரித்தும், சமர்த்தர்கள் அல்லரான போது உபேக்ஷித்தும்
போரக் கடவர்களாய் இருப்பர்கள் என்பது ஒன்று உண்டு; நீ எல்லா நிலைகளிலும் அவரை ஆதரித்துப் போருவாய்’ என்று
அவர் என்னைக் குறித்துச் சொல்லி விட்டார்; நானும் அப்படியே செய்து போரா நிற்க, கிண்ணகத்தில் குமிழிக் கீழே சாவி போமாறு போலே,
தாம் என்னுடைய ரக்ஷணத்தில் நெகிழ நின்றது அவர் நினைவு குறைவு பட்டது ஆகவோ என்று சொன்னேன் என்று சொல்லு.
தம் மம அர்த்தே சுகம் பிருச்ச –
எங்களுடைய ரக்ஷணத்துக்கு நாங்கள் பிரார்த்தித்துப் பெற வேண்டுவது ஒன்று இல்லையே அன்றோ,
அதுவும் அவர் நினைவில் உண்டு ஆகையாலே; இனி,கிரமப் பிராப்தி பற்றாமையால் உள்ளதே அன்றோ இப்போது படுகிறது.
தாம் உளராக எங்களுடைய ரக்ஷணம் தப்பாதே அன்றோ; ஆன பின்பு, தம்முடைய உண்மையை ஆகாசிக்கை யன்றோ இனி
எங்களுக்கு உள்ளது; ஆகையாலே, அங்குத்தைக்கு ஒரு குறையும் இல்லையே என்று கேட்டேன் என்று சொல்லு.
சிரசா அபிவாதய ச-
நாட்டார் அளவு அன்றிக்கே, தாம் விசேடித்து என்னைக் கைப் பிடிக்கையால் உண்டான வாசியை யான் பெறாத பின்பு,
நாட்டாரைப் போலவாகிலும் பெறக் குறை இல்லை அன்றோ.-சகாரம் உம்மைத் தொகைக்கு தாத்பர்யம் அருளிச் செய்கிறார் —
இனி நாட்டர் பெறுவது பெறப் பார்த்தால், அவர்கள் தம் பக்கல் செய்யுமத்தையும் செய்ய வேணுமே அன்றோ;
ஆன பின்பு, நான் என் தலையாலே தம் திருவடிகளிலே வணங்கினேன் என்று நீ எனக்காக
அவர் திருவடிகளிலே விழு என்றும் அருளிச் செய்தாள்.”-இது தான் ஊடுதலால் உண்டாகும் சீற்றம் தலை எடுத்துச் சொல்லுகிற வார்த்தையோ,
அபேக்ஷை தோற்றச் சொல்லுகிற வார்த்தையோ’ என்ன,
மேலே, திருவடி வந்த போது பிரணய ரோஷத்தாலே வந்த சிவிட்குத் தோற்றச் சொன்ன வார்த்தைகள் அடைய
மாறும்படி குளிர அவன் வார்த்தை சொல்ல,
பின்பு திருவுள்ளத்திலே ஓர் ஆறுதல் பிறந்து, பெருமாளைச் சேராமையால் உண்டான குறைபாடும் கிடக்க
அருளிச் செய்கிற பாசுரம்’ என்று அருளிச் செய்தார்.
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவாள் –

———–

ஜீவந்தீம் மாம் யதா ராம ஸம் பாவயதி கீர்த்திமாந்
தத் ததா ஹனுமன் வாஸ்ய வாஸா தர்மம் அவாப்நுஹி
–39-10-

திருவாய்மொழி – -6-8-பிறர் இழுக்கினைப் பொறாத குடிப்பிறப்புடையவரன்றோ. அதிலே தமக்கு வந்த துக்கத்தை நீக்குவதற்குச் சொல்ல வேண்டாவே.
கடலை அணை செய்து இராவணாதிகளை அழித்துத் தாம் வரக்கொள்ள, இத்தலை வெறுந்தறையாய்க் கிடவாமே செய்ய
நினைத்தாராகில் ஏற்கவே நீக்கித் தம் புகழை நோக்கிக் கொள்ளச் சொல் என்று சொன்னாள் அன்றோ;
அப்படியே இவளும் தன் நிலையை அறிவித்து விடுகிறாளாயிருக்கிறது.

—————

சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பர புரார்தந
மாம் நயேத் யதி காகுத்ஸ்த்த தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் —
39-40-

திருவாய்மொழி – -5-4–7-இவ் வார்த்தை சொல்லும்படி காணும் இவளுக்குப் பிறந்த நிலை வேறுபாடு, -த்ருட விஸ்வாசம் –
ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பர புரார்த்தந: மாம் நயேத் யதி காகுஸ்த்த:
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 30. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.
“சரைஸ்து ஸங்குலாம் கிருத்வா லங்காம் –
திருவடி, பிராட்டியைப் பார்த்து ‘பெருமாள் பக்கல் இனி எழுந்தருள அமையாதோ?’ என்ன,
இராக்ஷசர்கள் நெருங்கி யிருக்கிற இதனை இராம சரம் நிறைவுற்றதாக்கிக் காண் நாம் போவது,
வேற்று மனிதர் முகத்தில் விழித்துப் போகவோ?
பர புரார்த்தந:-
அவரோடே பகை கொண்டு இதற்கு முன்னர் உய்ந்து போனதும் ஒரு படை வீடு உண்டோ?
மாம் நயேத் யதி –
நயாமி பரமாம் கதிம்-மேல் கதிக்குக் கொண்டு போகிறேன்’ என்கிறவர் இரண்டு வார்த்தை சொல்லுவரோ?
காகுஸ்த்த :-
இந்திரனுடைய பகைவர்களையும் போக்குங்குடியிலே பிறந்தவர் தம் காரியத்தில் சோர நிற்பரோ?
தத் தஸ்ய சத்ருசம் பவேத்-
அவர்க்குத் தகுதியாக வுள்ளவற்றைச் செய்து போக வேண்டிய நாம், நம்முடைய ஆற்றாமையை நீக்குவதற்காக
அவர்க்கு நிறக் கேடானவற்றைச் செய்யவோ?”
இராமன் தேவியை ஓர் அரக்கன் பிரிக்க, அவள் சபித்துப் போனாள்’ என்னுதல்,
ஒரு குரங்கு மீட்டது’ என்னுதல் செய்கையாகிற இது, அவர் வில் வலிக்கு வசையாம் காண்;
அவர் வம்சத்துக்குக் கொத்தையாம் காண்;-வம்சம் -மூங்கில் –வில் -காகுஸ்தன் -சாடு – -வம்சி புல்லாங்குழல் –
அவர் விஷயத்தில் இராவணன் செய்ததனை நாமும் செய்யவோ?
இராம தனத்தை ‘என்னது’ என்றாரோடு ஒப்பர்கள் ஆவரே அன்றோ அவருடைய காத்தலைத்
தம் தலையிலே ஏறிட்டுக் கொள்ளுமவர்கள்.

அல்லன் மாக்கள் இலங்கை யதாகுமோ எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினாற் சுடுவேன் அது தூயவன் வில்லினாற்றற்கு மாசு என்று வீசினேன்.

அன்றியும் பிறிதுள்ள தொன் றாரியன் வென்றி வெஞ்சிலை மாசுணும் வேறினி
நன்றி என்பதம் வஞ்சித்த நாய்களின் நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ.

வேறு முண்டுரை கேளது மெய்ம்மையோய்! ஏறு சேவகன் மேனி யல்லால் இடை
ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண் எனக் கூறு மிவ்வுருத் தீண்டுதல் கூடுமோ?- என்ற கம்பராமாயணச் செய்யுள்கள்

எவையேனும் அச்சத்திற்குக் காரணங்கள் உள ஆனாலும் அஞ்சாதே இருக்கக் கூடிய இவள் பிரிவாற்றாமைக்கு
அஞ்சினபடியாலே அன்றோ
‘காப்பார் ஆர்’ என்ற இவ்வார்த்தை சொல்லியது.

————

யதா தம் புருஷ வ்யாக்ரம் காத்ரைஸ் சோகாபி கர்சிதை
ஸம்ஸ்ப்ருசேயம் ஸகாமாஹம் ததா குரு தயாம் மயி —
40-3-

எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே -திருவிருத்தம்-54 –

யதாதம் புருஷவ்யாக்ரம் (ஸூந் த்தர 40) -பருவம் கழிந்தது இறே
இனி இவர்க்கு சொல்லித்தான் செய்தேன் என்று இருக்க வேண்டா
நினைத்த போதே நினைத்தது எல்லாம் செய்து தலைக் கட்ட வல்ல  வாண் புலி –

காத்ரை –
கண்டாய் இறே
ஒரு நீர் சாவியை யாய்  இவை உறாவிக் கிடக்கிற படி
சிலர் பட்டினி விட சிலர் ஜீவித்தாவோபாதி -விடாய்த்த விக் கரணங்களை கொண்டு முடிந்து போய்- 
வேறு ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி இவரை அனுபவிக்க இருக்கை அன்றிக்கே-
விடாய்த்த இவற்றைக் கொண்டே ஸ்பர்சிக்கும்படி பண்ண  வேணும்

(பசித்த போதே உண்ண வேண்டும்
இந்த சரீரத்தோடு கூட்டிப்போக சொன்னதால் தானே அழகர்
ஆழ்வார் திருமேனியுடன் கூட்டிச் செல்ல விரைந்தான்
ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும் )

சகாமாஹம்-
அவரைப் போலே வரில் பொகடேன்-கெடல் தேடேன் – என்று இருக்கும்
அளவு அல்லேன் நான் –

(விருப்பம் நிறைவேறியவளாவேன் என்கிறாள்
பெருமாளோ -தர்மம் ஒன்றையே ஹேதுவாக எண்ணுவார்
பிரணயித்தவம் அடியாகச் செய்ய மாட்டாரே
ஐயர் சொல்லவே மணம்
அரும்பதம் விளக்கம்
ஆள் வர விட்டாரே -ஆசையுடன் தானே அனுப்பினார் -இங்கு என்னில்
அயோத்யையில் -கூட வருவேன் என்ற பிராட்டிக்கு
ஆண் உடை உடுத்த பெண் -சொல்ல வைக்க –
உனக்கு முன் நடப்பேன் கல்லையும் முல்லையும் எடுப்பேன் சொன்னதும்
நல்லது என்றார் அத்தனையே
ஆசைக் கணவன் வார்த்தை இல்லை
ஸ்திரமாக அழைக்க வில்லை அன்றோ
அதுக்கு மேலே
தன்னுடைய அம்பு நடையாடாத இடமாய் இருக்க இத்தனை நாள் ராக்ஷஸி கையில் நோவு பட வைத்தார்
இப்பொழுது தூது சுக்ரீவர் தர்ம காரியத்தால் தான் -என்றவாறு )

ததா குரு தயாம் மயி –
அவருடைய சக்தியில் குறை இன்றிக்கே இருக்க செய்தே –
இவ்வளவாக கார்ய கரமாக கண்டிலோம் –
உன் கிருபையாலே அதுவும் பலிக்கும்படி பண்ணித் தர வேணும்

(கிருபைக்கே இருப்பிடமான பிராட்டி திருவடியின் கிருபையை இரக்கிறாளே
அவன் நிரங்குச ஸ்வா தந்த்ரன்
திருவடி தானே ஆச்சார்யன்
வராஹ பெருமாள் பெருமாள் கிருஷ்ண சரம ஸ்லோகங்கள் -வார்த்தை -சொல் -பேச்சு நம்பி உள்ளேன்
அவை கார்யகரம் ஆகா விட்டாலும் பெரியாழ்வார் சம்பந்தம் வீணாகாதே
அவர் சக்தியில் குறை இல்லை
மத் பாபமே நிமித்தம்
கிஞ்சித் மஹ பாபம் பண்ணினவள் அன்றோ
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -)

எம்மை சேர்விக்கும் வண்டுகளே –
என்னை அங்கே சேர விடுகையே நிரூபகமாக உடைய வண்டுகள் அன்றோ -நீங்கள் –

ஸ்வாபதேசம்
இத்தால் தூத ப்ரேஷண வியாஜத்தாலே தம் ஆற்றாமையை
அவன் திரு உள்ளத்தில் படுத்துகிறார்

கார்யே கர்மணி நிர் திஷ்டே யோ பஹுந் யபி சாதயேத்
பூர்வ கார்யா விரோதேந ஸ கார்யம் கர்த்தும் அர்ஹதி
–41-5-

விடுத்த திசைக் கருமம் திருத்தி –திருப்பல்லாண்டு -9-
க்ரியதாம் -என்கிற சந்தேசமே தாரகமாக ஏவின கார்யத்தை செய்து தலைக் கட்டுகை –
ஸ்வாமி ஏவின கார்யத்தை குறையச் செய்யுமவன் அதமன் –
அத்தை குறையாமல் செய்து தலைக் கட்டுமவன் மத்யமன் –
அதுக்கு மேலே அதுக்கு அவிருத்தமான கார்யங்களையும் விசாரித்து செய்து தலைக் கட்டுமவன் உத்தமன் –
கார்யே கர்மணி நிர்த்ஷ்டேயோப ஹூந்ய பிசாதயேத்
பூர்வ கார்யா விரோதே ந ஸ கார்யம் கர்த்துமர்ஹதி -என்கிற திருவடி இ றே அவன் ஆகிறான்
பிராட்டி இருந்த இடம் அறிந்து வா -என்று விட –
இருந்த இடமும் அறிந்து -அவன் பலம் இருந்தபடி என் -என்று பெருமாள் கேட்டருளினால்
அறிந்திலேன் என்ன ஒண்ணாது -என்று அத்தலையிலே பல பரிஷையும் பண்ணி
ஊரில் அரணையும் தலை அழித்து -மூலையடியே போம் படி பண்ணி வந்தான் இறே

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-