Archive for the ‘கண்ணி நுண் சிறு தாம்பு’ Category

ஸ்ரீ சடகோபர் அந்தாதி -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

January 15, 2023

இராமன் திருக்கதையில் கம்ப நாடன் கவிதை போல் கற்றோர்க்கு இதயம் களியாதே–
இராம காதையைச் சொல்லுதற்குக் காப்பாக இருப்பது குருகை நாதன் குரை கழலே
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
நம் சடகோபனைப் பாடினாயோ என்று திரு அரங்கன் திரு ஆணையைத் தலை மேல் கொண்டு ஆழ்வார் நூற்று அந்தாதி என்னும்படி சடகோபர் அந்தாதி
பக்தியே ஸ்ருங்காரமாக அகத்துறை பாடல்களும் இதில் உண்டே
ஆழ்வார் திரு நகரியில் -இராப்பத்து இறுதி நாளில் -ஆழ்வாரும் பொலிந்து நின்ற பிரானும் திருச்செவி சாத்தி அருளுகிறார் –

ஸ்ரீ இராமாயணம் இயற்றிய ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் எழுதிய ஒன்பது நூல்களுள் ஸ்ரீ சடகோபர் அந்தாதியும் ஒன்றாகும்.
சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார்.
இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.
இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.
இவரது வேறு நூல்கள் ஸ்ரீ ஏரெழுபது, ஸ்ரீ சரசுவதி அந்தாதி, ஸ்ரீ திருக்கை வழக்கம் முதலியவை.

—————

நம்மாழ்வாருக்கு பல திரு நாமங்கள் உண்டே
சடகோபன்
மாறன்
காரி மாறன்
பராங்குசன்
வகுளாபரணன்
குருகைப் பிரான்
குருகூர் நம்பி
குரு கூரான்
திருவாய் மொழிப் பெருமாள்
பொருநல் துறைவன்
குமரித் துறைவன்
பவ ரோக பண்டிதன்
முனி வேந்து
பர ப்ரஹ்ம யோகி
நாவலர் பெருமான்
ஞான தேசிகர்
ஞானப்பிரான்
தொண்டர் பிரான்
நா வீறர்
திரு நா வீறுடைய பிரான்
உதய பாஸ்கரர்
வகுள பூஷண பாஸ்கரர்
ஞானத் தமிழுக்கு அரசு
ஞானத் தமிழ் கடல்
மெய்ஞ்ஞான கவி
தெய்வ ஞானச் செம்மல்
நாவலர் பெருமான்
பாவலர் பெருமான்
வினவாதுணர்ந்த விரகர்
குழந்தை முனி
ஸ்ரீ வைஷ்ணவ குல பதி
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்

—————-

இரணியன்  வதைப்படலத்தில்
நசை திறந்திலங்கப்பொங்க -என்று தொடங்கும் பாசுரத்தை ஆரம்பித்தது
திசை திறந்து அண்டம் கீறிச் சிரித்தது செங்கட் சீயம் -என்று பாடும் பொழுது
கோயில் வடக்கு வாசலில் உள் கோபுரத்தில் ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு எதிரே இருக்கும்
செங்கல் சுண்ணாம்பினால் அமைந்து இருந்த நரஸிம்ஹ திரு உருவம் உயிர் பெற்று தலையை அசைத்ததாம்
இப்பொழுது -இவரே மேட்டு அழகிய சிங்கராகப் -பிரதிஷ்டை செய்யப் பெற்று ஆராதிக்கப் படுகிறார்
இத்தைக் கண்ட ஸ்ரீ மன் நாதமுனிகள் ஸ்ரீ கம்ப நாட்டாழ்வானுக்குத் தீர்த்த பரிவட்டம் பிரசாத்திப்பித்து அருள
திருக் கோயிலுக்குள் கூட்டிச் செல்ல-நம்பெருமாள் அர்ச்சகர் மேல் ஆவேசித்து –நம் சடகோபனைப் பாடினாயோ -என்று கேட்டதால்
அன்று இரவே பாடின பின்பே அரங்கனைச் சேவிக்கச் சென்றாராம் –

—————————————–

சிறப்புப் பாயிரம்

தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
நாவில் சிறந்த மாறற்குத் தக்க நன் நாவலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.

தெய்வங்களில் சிறந்தவன் ஸ்ரீ திருமால்!–அனைத்துக்கும் அந்தர்யாமியாய் இருப்பவன் இவன் ஒருவனே
அவனுக்குத் தக்க தெய்வீகமான கவிஞன் பலவிதமான பா வகைகளை ஸ்ரீ திருவாய்மொழியில்
சிறப்பாக அமைத்த பண்டிதனான ஸ்ரீ நம்மாழ்வாரே!
நா வண்மையில் சிறந்த அந்த ஸ்ரீ மாறன் சடகோபன் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தக்க நா வண்மை கொண்டவன்
தாமரைப் பூவில் வாழ்வான்-அமர்ந்த பிரமனை ஒத்த ஸ்ரீ கம்ப நாட்டாழ்வானே!-பாகவத நிஷ்டையால் மதுரகவி ஆழ்வாருக்கு ஒப்பு என்றுமாம்

அகத் துறையிலும் புறத் துறையிலும் பாடி புலமைக்கு வெள்ளிக் கம்பம் நாட்டியவன்-

இது முதலில் வெண்ணையூர் நாடாக இருந்தது பின்பு கம்பர் பெயரால் கம்ப நாடு ஆயிற்று என்பர்

மால் -பெருமை கறுமை வ்யாமோஹம்-

மாலே மணி வண்ணா
மால் என்னை மால் செய்தான்
திருமாலே கட்டுரையே
கவி -க்ராந்த தர்சீ

திரு -அழகு
வாய் மொழி -வினைத்தொகை -வாய்க்கிற -வாய்த்த -வாய்க்கும் -முக்காலத்துக்கும் எம்பருமானுக்குப் பொருத்தமான
வாய்மை -கடைக் குறைவாய் உண்மையான -ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை யதாவாக பேசும் மொழி

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா காம ஸங்கல்ப வர்ஜிதா-
ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம் தமாஹு பண்டிதம் புதா—৷৷4.19৷

எவனுக்கு எல்லாக் கர்மங்களையும் பற்றிய முயற்சிகளும் பலன்களில் பற்று அற்றவையாக இருக்கின்றனவோ –
அறிவாளியான அவனையே ஞானம் ஆகிய நெருப்பால் எரிக்கப்பட்ட வினைகளை உடையவனாக தத்வம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்

—————-

ஆரணத்தின் சிரமீது உறை சோதியை ஆந்தமிழால்
பாரணம் செய்தவனைக் குருக்ஷரனைப் பற்பல வா
நாரணனாம் என ஏத்திக் தொழக் கவி நல்கு கொடைக்
காரணனைக் கம்பனை நினைவாம் உள் களிப்புறவே.

பாரணம் -பாரணா பாராயணம் -உணவு -மீண்டும் மீண்டும் திருப்தி அடையும் வரை படித்தல்
நெறி வாசல் தானேயாய் நின்றானை -பற்றற்றானைப் பற்றி
அவன் அருளாலேயே அவனை அடக்கி தம் வசம் ஆக்கிக் கொண்டார் ஆழ்வார் -பராங்குசன் அன்றோ

————–

நம் சடகோபனைப் பாடினையோ என்று நம் பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால் கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித்துறை நூறும் தெரியும் வண்ண
நெஞ்சு அடியேற்கு அருள் வேதம் தமிழ் செய்த நின்மலனே 

——————–

நாதன் அரங்கன் நயந்துரை என்ன நல் கம்பன் உன் தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும் படி யெனக்கு உள்ளத்தனை யருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருளே இது என் விண்ணப்பமே.

————–

தற்சிறப்புப் பாசுரம்

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.

————–

நூல்

வேதத்தின் முன் செல்க மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக் கடல் எங்கள் தென் குரு கூர்ப் புனிதன் கவி ஓர்
பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே. 1-

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் -என்று ஸ்வரூபத்தை முழுவதுமே  அடியிலே காட்டி அருளினார் அன்றோ

மெய்யுணர்ந்தோர் -தவத்தால் பெற்ற அறிவுடையரான வ்யாஸ அம்பரீஷ ஸூக ஸுகனாதி –
முதலோர் இந்த்ராதிகள்

————

சுடர் இரண்டே பண்டு மூன்றாயின துகள் தீர்ந்துலகத்து
இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன எம் பிறப்பை
அடர் இரண்டாம் மலர்த் தாள் உடையான் குருகைக் கரசன்
படர் இருங் கீர்த்திப் பிரான் திருவாய் மொழிப் பாவொடுமே. 2-

ஸூர்ய சந்திர சுடர் போல் களங்கம் இல்லாத திருவாய் மொழிச் சுடர் ஸர்வருக்கும் உப ஜீவியம்
அவையோ ஒன்றை அலற்றும் மற்ற ஒன்றை மொட்டுவிக்கும்
பண்டு இரு சுடர் என்றது –
ராம திவாகரனான வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காயும்
அச்யுத பானுவாக இருந்த ஆயர் தம் குல விளக்காயும் என்றுமாம்

ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு-போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி-விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே–ஆச்சார்ய ஹ்ருதயம் -சூரணை -83-

———

பா வொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்
நா வொடுக்கும் நல் அறி வொடுக்கும் மற்றும் நாட்டப் பட்ட
தே வொடுக்கும் பர வாதச் செரு ஒடுக்கும் குருகூர்ப்
பூ வொடுக்கும் அமுதத் திரு வாயிரம் போந்தனவே. 3-

நாட்டப்பட்டதை தேவு -செரு -இரண்டுக்கும் கொண்டு -அவர்கள் பரன் திறம் அன்றி மற்று இல்லை என்றும்
ஈஸ்வரோஹம் என்று இருப்பார் கர்வங்களையும் ஒடுக்கும் நாட்டப் பட்டதே –
ஒடுக்கும் என்றது அடக்கும் என்றும் கண்டித்து அகற்றும் என்றுமாம்

குருகூர்ப் பூ –திருக்குருகூர்ப்பதியிலே ஆழ்வாரது திரு வாய் மலரிலே
பா ஒடுக்கும் -செய்யுள் இலக்கணங்களை எல்லாம் அடக்கி இருக்கும்
நா -புறச்சமயிகளின் நாவை

———

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தரும நிறை
கனமாம் சிலர்க்கு அதற்கு காரணமாஞ் சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்கு அதற்கு எல்லையுமாம் தொல்லை ஏர் வகுள
வன மாலை எம்பெருமான் குருகூர் மன்னன் வாய் மொழியே. 4-

தரும நிறை கனமாம்-தர்மங்கள் எல்லாம் நிறைந்த கூட்டமாகும்

கனமாம்-பெரும் சிறப்பாகும்
தனம் -இம்மைப் பயனுக்கும்
தவம் =மறுமைப் பயனுக்கும்
திருவாயமொழி இரண்டுக்கும் என்றபடி

ஆரணம் -வேதம்
ஆரண இனம் -வேத சாகை
அதற்கு எல்லை -வேதாந்தம் -உப நிஷத்

வைஸ்யருக்கு தனம் -ப்ராஹ்மணர்க்கு தவம் -ஷத்ரிய சூத்ரருக்கு தர்மம்

வனமாலை -ஆறு ருதுக்களிலும் மலரும் எல்லாப் பூக்களையும் கொண்டு அமைத்து மூலம் கால் வரை தொங்கும்
ஆஜானு வம்பினி மாலா ஸர்வ ருது ஷு சரம உஜ்வலா
மத்யே ஸ்தூல கதம்பாட்யா வனமாலேதி கீர்திதா -இவ்விதமானது ஸ்ரீ வைகுண்டத்தில் தானே உள்ளது

வாட்டமில் வனமாலை மார்வனை –

பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் தொண்டரடிப்பொடி ஆழ்வார்

இத்தையே கம்பர் கும்பகர்ணன் வதைப்படலத்தில் -103 பாசுரத்தில் –
என்னலும் இருது வெல்லாம் ஏகின யாவும் தத்தம்
பன்னமரும் பருவம் செய்யாயோகி போற் பற்று விட்ட
பின்னரும் உலகம் எல்லாம் பிணி முதற் பாசம் வீசித்
துன்னமே தவத்தின் எய்தும் துறக்கம் போல் தோன்றிற்று அன்றே-

———–

மொழி பல ஆயின செப்பம் பிறந்தது முத்தி யெய்தும்
வழி பல வாய விட்டொன்றா அது வழுவா நரகக்
குழி பல ஆயின பாழ் பட்டது குளிர் நீர்ப் பொருநை
சுழி பல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே. 5-

குளிர் என்றது தன்னிடம் அமிழ்ந்தோருடைய உடலுக்கும் உயிருக்கும் உள்ள வெப்பங்களைப் போக்கி
உள்ளும் புறமும் குற்றமற்றவராக ஆக்கியதைக் குறிக்கும்
திருச் சங்கணித் துறையில் நீராடுவது அருள் ஒழுகும் தாமரைச் செங்கண்ணான் குணக் கடலிலே ஆடுவதே யாகும்

மொழி -பதம் என்று கொண்டு -கடப்படாதி சர்வ ஸப்த வாஸ்யன் ஒருவனே என்றுமாம்

———–

தோன்றா உபநிடதப் பொருள் தோன்றல் உற்றார் தமக்கும்
சான்றாம் இவை என்ற போது மற்றென் பல காலும் தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத்தின் மும்மைத் தமிழை
ஈன்றான் குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக் கவியே. 6-

தோன்றல் உற்றார்–மதுரகவி ஆழ்வார் நாதமுனிகள் போல்வார்

த்ரயீ -ருக் யஜுஸ் சாமம் -என்று மூன்றுமாம் –
பேத அபேத கடக ஸ்ருதிகள் என்று மூன்றுமாம்
இயல் இசை நாடகம்
தத்வ ஹித புருஷார்த்தம்
கர்ம ஞான பக்திகள்
ஸ்வரூபம் உபாயம் புருஷார்த்தம்
சித் அசித் ஈஸ்வரன் -தத்வ த்ரயங்களையும்
ரஹஸ்ய த்ரயங்களையும்

———–

கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான் சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே. 7-

கவிப் பா அமுதம் -பாடலாகிய பரவிய –
பாடல் சோறு -இசை கறி அமுது -சேர்த்து குவிப்பான் -சமைத்துக் குவிப்பவரும்
குமரி கொண்கன்-குமரி நாட்டுத் தலைவருமான
புவிப் பாவல-பூமியில் உள்ள வித்வான்களுக்கு
செவிப் பால்–காதுகளின் வழியே

நிலத்தேவர் காதுக்குள் புகுந்து -உள்ளத்துள் நின்று நாவிலே தித்திக்கும் அன்றோ-

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் என்றபடி –

———

தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே. 8-

குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே.
தித்திக்கும் -இனிமையான
மூலத் தெளி யமுதே -காரணமான தெளிந்த அமுதேயாகும்-சாவா மருந்தான அமிர்தமும் இதுக்கு ஒப்பு அல்ல என்று எதிர்மறை ஏவகாரம் -உடம்பைப் பூண் கட்டிக் கொடுக்கும் அது பக்திக்கும் பனுவலுக்கும் முக்திக்ம்கு மூலமாகாதே
யுண்டு தெய்வ மென்பார்–தெய்வம் உண்டு என்பார் -ஆஸ்திகர்
பத்திக்கு மூலம் -பக்திக்கும் இதுவே காரணம்
பனுவற்கு மூலம் -வரலாற்று முறையில் பாடும் நூல்களுக்கும் மூலமாகும்
பவம் அறுப்பார் முத்திக்கு மூலம்—பிறவியைப் போக்கத் துணிந்தவர்கள் மோக்ஷம் அடைவதற்கும்
முளரிக்கை –தாமரை போன்ற கைகளும்
வாணகை –வாள் நகை -ஒளி பொருந்தின பற்களும் கொண்ட
மொய் குழலார்-நெருங்கிய கூந்தலையுடைய மாதர்கள் இடத்து ஆசையை
அத்திக்கு மூலம் -போக்குகைக்கும் மூலம்

அத்தி -கற்பு -கண்ணன் பால் காமம் -என்ற கற்பு நெறிக்கு மூலம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளே -என்றவாறு –

———-

ஆயிரம் மா மறைக்கும் அலங்காரம் அருந் தமிழ்க்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்கு எல்லாம்
தாய் இரு நாற் றிசைக்குத் தனித் தீபந் தண்ணங் குருகூர்ச்
சேயிரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே. 9–

மறைக்கும் அலங்காரம்-சாமவேதத்துக்கு பூஷணம்
மறைந்து கிடந்த பொருள்களை அனைவரும் அறியும்படி செய்து அருளியதால் பூஷணமாகும்
பனுவல் -ஆகமம் –பனுவலின் வகைகள் -அற நூல் பொருள் நூல் காம நூல் வீட்டு நாள் போல்வன
இவை நான்குமே திருவாயமொழியில் பரக்கத் காண்பதால் தாய் என்கிறார்

கவி -கேள்வி -நூல் -என்கிற பொருளில் வந்தது
கிழக்கே மேற்கே சந்த்ர ஸூ ர்யர்கள் -வடக்கே துருவ மண்டலம் -தனித்தனி தீபம்
திருவாய் மொழி தீபமோ எண் திசையும் எல்லாக் காலத்திலும் வீசும் அன்றோ

இரு நாற் றிசைக்குத் தனித் தீபம் -இரு நான்கு எட்டுத் திக்குகளுக்கும் தீபம் -எண் திசையும் அறியும்படி இயம்பிப் பரப்பினார் அன்றோ மதுரகவியாழ்வார்

ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரம் -நான்கு வித கவிகள்-படிச் சந்தம்-ஒப்புக் காண்பதற்கு உரியனவாம்

இரு மா மரபுகள் -கர்ம ஞான மார்க்கங்கள் -ஞானம் அனுஷ்டானங்கள் இரண்டிலும் ஸ்ரேஷ்டர்

இரு மா மரபும் செவ்வியான்-தாய் தந்தையர் இரண்டு வழியும் தொண்டர் குலமாகிய செவ்வி என்றுமாம்

———

செய் ஓடு அருவிக் குருகைப் பிரான் திரு மாலை நங்கள்
கை ஓர் கனி எனக் காட்டித் தந்தான் கழற்கே கமலம்
பொய்யோம் அவன் புகழ் ஏத்திப் பிதற்றிப் பித்தாய்ந் திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே. 10–

செய் ஓடு அருவிக் குருகை–வயல்களில் அருவி நீர் ஓடிப் பாய்கின்ற குருகூர்

செய் ஓடு அருவி-உருவகமாய் -ஞானிகள் மனமாகிய விளை நிலங்களில் ஆழ்வார் சொல் பெருக்கு எடுத்து
ஓடிப் பாய்ந்து திருமால் பக்தி என்னும் பயிர் முளைத்து ஓங்குகிறது என்றவாறு
விதையாகி நற்றமிழை வித்தி என் உள்ளத்தே நீ விளைத்தாய்
திருமால் இத் தகையவர் என்று கையில் கனி என நிற்கும்படி யாயிற்றே

கைத் தலத்து அமலகம் எனக் கண்டு கொள் -என்று
கையில் கனி என்னைக் கண்ணனைக் காட்டித் தந்தார் அன்றோ

ஆழ்வாரை முக்கரணங்களால் ஸ்துதிப்பவர் உள்ளத்திலே அவரது கருணா ப்ரவாஹம் பரவும் அன்றோ
மாயோனைக் கையில் கையில் கனி என்னும் படிக் காட்டித் தந்து பக்திப் பயிரை விளைவிக்கும்-

———-

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழு மாக் கமலம்
சேற்றில் பொதி யவிழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே. 11-

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை-அநந்தாவை வேதா
வேற்றில் -வேரில் -என்பதன் விகாரம் -பல சாகைகள் கொண்ட வேதங்களின்
மூலப் பொருள்கள் அனைத்தையும் திரட்டி விட்டான் என்றுமாம் –
விழுமாக் கமலம்விழு -யாவராலும் விரும்பத்தக்க –மா -பெரிய –கமலம் -தாமரை ஸஹஸ்ர பத்ரம் கமலம் -ஆழ்ந்த நீரிடையே உண்டாகும்
எறி நீரில் எழு நாள கந்த மலர் –மாரீசன் வதைப் படலம் -53-பாயிரம்

———

இயல் இடம் கூறல்-

பொருள் -அகப்பொருள் –
திணை -உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி –பாங்கற் கூட்டம்
துறை -இயல் தென்றல்

இலவே இதழுளவே முல்லை யுள்ளி யம்பும் மொழியும்
சிலவே அவை செழுந் தேனொக்குமே தமிழ்ச் செஞ் சொற்களால்
பல வேதமும் மொழிந்தான் குரு கூர்ப் பதுமத்து இரண்டு
சல வேல்களும் உளவே யது காண் என் தனி யுயிரே. 12-

பல வேதமும்
தமிழ்ச் செஞ் சொற்களால்
மொழிந்தான்
குரு கூர்–குருகூர் பதியிலே
நண்பனே
பதுமத்து-தாமரை மலரிலே
இதழ் -சில இதழ்கள்
இலவே –நிறத்தில் முள்ளிலவ மலரேயாம்
உள் -அந்த இதழ்களுக்கு உள்ளே
முல்லை உளவே -முல்லை அரும்புகளும் சில உள்ளன
யுள் ளியம்பும் மொழியும் சிலவே-அவைகளில் இருந்து சொல்லப்படுகின்ற வார்த்தைகளும் சில வுண்டாம்
அவை செழுந் தேனொக்குமே
இன்னும் அத் தாமரை மலரிலே
இரண்டு சல வேல்களும்–அந்தப் பெண் எனது உயிர் ஆவாள்
காண்-நீ சென்று அதனைப் பார்
தன்னை வசப்படுத்திய அவள் முகம் தாமரை –
அவள் விழிகள் சல வேல்கள்

ஆழ்வார் இடம் ஞானக் காதல் கொண்ட தலை மகனாகிய பாகவதர் பித்தால் பிதற்றி அவர் திரு வுருவத்தைத்
தன் உயிர்க்கு அடைவிடம் என்று அகத் துறையில் பேசும் படி போகத்தில் ஈடுபட்டு நிற்கும் நிலையைச் சொன்னபடி –

———

உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சட கோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே. 13-

இந்திரிய பொறி வாயிலாய் உயிர் இன்ப துன்பங்களை அடைவதையும்
அறிவு வாயிலாய் உடல் உணர்ச்சி யுறுவதும் சொல்லப் பட்டது –
திருவாய் மொழி தாபாத் த்ரயங்களையும் போக்கி வேரைக் களைவதால் நோய் முதலியவை தானே அற்றுப் போம்
செயிர் -நோய் -ஊனம் -குற்றம் கோபம் துன்பம் சினம் போன்ற மற்ற பொருள்களும் பொருந்தும்

சந்தோடு அயிர் உருக்கும் பொருநல்–சந்தன மரங்களுடன் நுண் மணலையும் கொணர்ந்து கரை ஓரங்களில் ஒதுக்கித்த தள்ளும் தாமிரபரணி

———

அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே. 14-

அந்தம் இலா மறை–அநந்தாவோ வேதா -பரத்வாஜோ அத்திரி –மூன்று மலைகளைக் காட்டிக் கைப்பிடி என்ற விருத்தாந்தம்

நிலத்தேவர் –பூ ஸூரர் -அர்ச்சா திருமேனி என்றுமாம்
பந்தம் -தொடர்பு -வெளிச்சம் -உறவு
விழா -விழுந்து -பொங்கி வழிந்து -குறையாமல் தவறாமல் பாசுரங்கள் தோறும் ஓடும்
பண்ணவன் -முனிவன் குரு ஆசிரியன் தேவன் கடவுள் போன்ற பொருள்கள் உண்டே –
திருவாய் மொழி இல்லாமல் இருந்தால் உத்ஸவாதிகள் சோபை இழந்து இருக்குமே –

———

பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித் தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே. 15–

வண்ண -ராகம் -குணம் -வடிவு -செயல் விதம் அழகு -போன்ற பொருள்கள்
எண்ணம் -ஆலோசனை கிலேசம் விசாரம் கவலை மதிப்பு நினைத்தால் போன்ற பொருள்கள்

———-

கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் குளிர் சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே. 16–

நடலை -நடுக்கம் -கபடம் -பொய் -வஞ்சனை -வருத்தம்
களித்தல் –மதத்தல் -செருக்குதல் -மயக்குதல்
திடல் -மலை -மேடு

கடலை வேதமாகவும் -அமுதத்தைத் தேனாகவும் -அமரர் அடியாராகவும்- சங்கினான் நாயகனாகவும்- உவமித்த படி
இது எடுத்துக் காட்டு உவமை அணி யாகும்

————

நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் பிறவி யெனும்
நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே. 17-

பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர்ச் சோறும் உண்டற்கு வேண்டி நீ யோடித் திரியாதே –-பெரியாழ்வார்
திருவாய் மொழியைக் கற்கவே பிறப்பு இறப்பு என்னும் நோய் தன்னடையே போயிற்றே-

———-

சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத் திருக்கை
சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே. 18–

திருக்கை -திருகி நிற்கும் தன்மை -நிலை -கோணல் –சேதித்தல் -போக்குதல் -கோணலை நிமிர்த்தல் –சமயத் திருக்கை–புற மதங்களின் மாறுபாடுகளை
முதல் பாசுரமே அகாரம் உகாரம் மகாரம் சேர்த்து ப்ரணவார்த்தம் காட்டி அருளினார் அன்றோ

நீ யாதி பரம்பரமும் நின்னவே யுலகங்கள்
ஆயாத சமயமும் நின்னடியவே அயலில்லை -கம்பர் விராத ஸ்துதியில்

————-

சொல் என்கெனோ முழு வேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கெனோ மறை நேர் நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக் கனி யென்கெனோ புகல
வல் என்கெனோ குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே. 19-

கல் படிக்கற்கள் என்றபடி
முதிர் ஞானக் கனி-ஞான முதிர் கனி -ரிஷிகள் மனங்களில் பூத்து -எடுத்துக் காய்த்த ஞானம் ஆழ்வார் திரு உள்ளத்தில்
பதிந்த பின் முதிர்ந்து பழுத்து இனிமை யுடைய கனியாயிற்று

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் –விதையாக
நல் தமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகக் கலந்து -நான்முகன் -81-

நல் தமிழ் -முதிர விளைந்த விதைக்கு வைத்த தமிழ் –
ஆழ்வார் திரு உள்ளத்தில் ஞானம் முதிர்ந்து கனியாகி
முளைத்துப் பயன் தரும் விதைகளாகிய அருளிச் செயல் பாசுரங்களைச் சொரிந்தன -என்கிறார்
———–

பொருள் -அகப்பொருள்
திணை –பாலை
கிளவி -கற்போடு புணர்ந்த கௌவை
துறை -கலந்து உடன் வருவோர் புலம்பல் தேற்றல்

மாறன் திருவருளின் வந்து அடையாதாரை நொந்து-அடைந்தவர் பெரும் பேற்றை -அகத்துறைப் படுத்தி இனி பேசுகிறார்

செல யுணர்த்திச் செவிலியைத் தேற்றுதல்

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சி யம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே. 20-

மாலைக் குழலி–உகந்து அலர் சூட்டி உள் மகிழ்ந்து இருந்து புறப்பட்ட பின்பு இவர்கள் கண்டதால் இந்தப் பத பிரயோகம்
வில்லியும்-கோதண்ட பாணியான தலைவனும் -எதிரே வந்த சிம்ஹத்தைக் கொன்று அவள் அச்சம் போகும்படி வில்லில் நாண் ஏற்றிச் சென்றபடி
இது கண்டவர் கூற்று
கேட்பவள் -செவிலித்தாயார்
இடம் -முன்னிலை
காலம் -நிகழ் காலம்
மெய்ப்பாடு -பெருமிதம்
பயன் -செவிலியை மீள உரைத்தல் -ஆதலால் நீ மீள்வாயாக-என்பது எஞ்சி நின்றது –

பாலைத் திணை என்னும் அகத்துறை
மாறனை வாழ்த்தி வழி படாதார் தேக யாத்திரை உடலுக்கும் உயிருக்கும் யாதொரு ஆறுதலும் இன்பமும் இன்றி நடக்கும் வாழ்வே –
ஆழ்வாரை அறிந்த தலைவனும் தலைவியும் திருக்குருகூர் சென்று சேர்ந்து இருப்பது திண்ணம் என்று செவிலித் தாய் தாயாருக்குச் சொல்வது

————

பொருள் -அகப்பொருள்
திணை –குறிஞ்சி
கிளவி -வரைவு கடாதல்
துறை -நெறி அருமை கூறி வரவு விலக்கல்

பாங்கி நெறி அருமை கூறித் தலை மகனை வரவு விலக்குதல் –

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் தளிர் மெல்லடித் தண்
மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினை தோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை மலை யவனே. 21-

குறிஞ்சி திணை -அகத்துறை

மூரல் குறிஞ்சி நகை–குறிஞ்சி அரும்பு போன்ற பற்களை யுடைய தலையினது -மூரல் எறும்புக்கு ஆகு பெயர்
முடுகும் -விரைந்து வருகிற
சூரல் குறிஞ்சி நெறி-பிரப்பங்காடுகள் நெருங்கிய மலை வழியை
வாரல்–நீ வாராது நீங்குவாய்

கூற்று -தோழி கூற்று
கேட்போன் -தலைவன்
இடம் -முன்னிலை
காலம் -எதிர்காலம்
மெய்ப்பாடு -அச்சம் சார்ந்த பெருமிதம்
பயன் -வரைவு கடாதல்

இதர ஸம்ப்ரதாயத்தார்கள் செல்லும் மார்க்கம் தீய வழி என்று அவர்களையும் நல் வழிப் படுத்தி
அடுத்த பாசுரத்தில் ஆழ்வார் திருவடிகளை சேர்ந்து உஜ்ஜீவியுங்கோள் என்று உபதேசிக்கிறார் –

திருவாணை நின்னாணை போல் திருக் குருகைப் பிரான் மீது ஆணை என்கிறார்-

———–

மலை யாரமும் கடல் ஆரமும் பன் மா மணி குயின்ற
விலை யாரமும் விரவுந் திரு நாடனை வேலை சுட்ட
சிலையார் அமுதின் அடி சட கோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே. 22–

பூமா தேவியின் திரு மார்பு போல் பாண்டிய நாடு சந்தனம் முத்து மாலை மணி மாலைகள் நிறைந்தது
மலை யாரம் கடல் யாரம் இத்யாதிகளால் குறிஞ்சி மருதம் நெய்தல் முல்லை நிலங்கள்

விசேஷ வளப்பங்கள் உடைய நாடாய் இருக்கும் என்று குறிப்பு —

மலையில் சந்தன மரமும் -கடலில் முத்துக்களும் -நிலத்தில் சிறந்த இரத்தனங்களும் -மூவகை ஹாரங்கள் பொருந்திய பாண்டிய நாடு
விலை யாரமும்-என்று இந்திரன் கொடுத்த மாலையையும் உடைய பாண்டிய நாடு
கோவா மலையாரம் கோத்த கடலாரம் தேவர் கோன் பொன்னாரம் தென்னவர் கோன் மரபினமே -சிலப்பதிகாரம்
வேலை சுட்ட சிலையார்–சமுத்திர ராஜனை சாபமானம் கொண்டு அச்ச மூட்டிய சக்ரவர்த்தி திருமகன்
சிலையார் அமுதின் அடி சட கோபனை-வில்லார் அமுது ராம நாம அடிகளான அமுதம் என்றுமாம்

தலையார் -பாகவத நிஷ்டர்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
இந்த பாகவத நிஷ்டையால் வரும் பயனைப் பெற நூலில் நிஷ்டராக வேண்டும் என்கிறார் அடுத்த பாசுரத்தில்

————

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் எழில் குருகூர்
நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே. 23-

ஏறு ஏழு அடர்த்த கண்ணனின் திருநாடும் வேண்டேன்-நாம் -தெளிவு அடைந்த மகிழ்ச்சியால் தன்மைப் பன்மை
கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயனை விட
திருவாய் மொழி பாவின் இன்னிசை பாடித் திரிவதே வேண்டும் என்கிறார் –

———–

சித்தர்க்கும் வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர் கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே யன்றி பண்டு சென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித் தொகையே. 24–

பகவர்க்குமே–பிரிநிலை ஏவகாரம் —பகவர் -வீரம் கீர்த்தி வைராக்யம் இவற்றில் சிறந்தவர்

ஸாம காயந் நாஸ்தே -சாமவேதத்துக்கு நிகரான திருவாய் மொழி பாடும் இன்பம்
அந்தமில் பேர் இன்பம் இங்கேயே கிடைக்கப் பெற்றதாகும் என்கிறார்-

———–

தொகை உளவாய பனுவற் கெல்லாம் துறை தோறும் தொட்டால்
பகை யுளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான் மறையின்
வகை யுள வாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே. 25-

தொகை உளவாய பனுவற் கெல்லாம்–சேர்க்கப் பட்டுள்ளவன வாகிய சாஸ்திரங்களில் எல்லாம்
தொட்டால்–உற்று நோக்கினால்
பகை யுளவாம்-பரஸ்பர விரோதம் உள்ளனவாம்
வாது உளவாம் -விரோதங்களும் உள்ளனவாகும்
விழுத் தமிழ்க்கே–சிறந்த தமிழ் பாடல்களில்
வந்த வந்திடத்தே மிகை யுளவாம்–பார்த்த பார்த்த இடங்களில் எல்லாம் மேம்பாடுகளே உள்ளவை யாகின்றன –

திருமாலே தத்வம்
சரணாகதியை ஹிதம்
கைங்கர்யமே புருஷார்த்தம்
அர்த்த பஞ்சக ஞானம் தெளிவாக அருளும் திருவாய் மொழி -வேத வாதுக்கள் -குறைகள் -ஒன்றுமே இல்லையே –

———–

விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் மெய் உற வந்து
அழுப்பாது ஒழிமின் அரு வினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகு சங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக் கொழுந்தே –26-

மெய் உற வந்து அழுப்பாது ஒழிமின்–மெய்யாகவே எங்களை வந்து கிட்டி அப்பால் நீங்கி விடுங்கள்
ஊர்ந்து வருகிற சங்குகளை உழுது வருகிற கொழுவானது –கொழு -கலப்பைப் படை வாள் நுனியில் தைக்கும் இரும்பு
வயிற்றில் குத்தித் தள்ளுவது போல்
அடர்ந்து வரும் வினைகளை ஆழ்வார் கருணை சென்று அழிக்கும் என்பது தொகை மொழியின் கருத்து
இள நாகு –மீமிசைச்சொல்
கொழுந்து –உவமை ஆகு பெயர் –ஆயர் குலக் கொழுந்து அன்றோ

ஆழ்வாரை ஆஸ்ரயித்த எங்களுக்கு புண்ய பப வல் வினைகாள்
உங்களுக்கு எம்மிடம் கார்யம்  இல்லை –இனி எமக்கு ஏது பிறவித் துயர்

————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -மாலை பெறாமல் வருந்தித் தலை மகள் ஏங்கியது அறிந்த பாங்கி புலம்பல்

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு தோழி இரங்குதல்

கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் விறல் மாறனென்றால்
அழும் தோள் தளரும் மனமுருகும் குருகூர் அறையில்
எழுந்து ஓடவுங் கருத் துண்டு கெட்டேன் இவ் இளங் கொடிக்கே. 27–

விறல் -பெருமை -வலி -வீரம்
அழும் தளரும் உருகும்-அஃறிணையில் குறிப்பது -இவள் மயங்கி ஜடமாய் இருந்தாலும்
மெய்ப்பாட்டாலேயே வரும் மாறுதல்கள் –

முகையு மெல்லாம்–அரும்புகளும் மற்றுள்ள மலர்க் காய்களும்
கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்–மிகக் கொய்யும்படியாக மகிழ மரத்தின் கீழ் சென்று
குருகூர் அறையில்–குருகூர் என்று யாரேனும் சொன்னால்
கருத் துண்டு–நினைவு யுண்டாய் இருக்கிறது
இளங் கொடிக்கே–காமத்துக்கு ஆற்றாதவள்
கெட்டேன்–தோழி செய்யும் உபசாரங்கள் எதுவுமே இவள் ஆற்றாமையைக் குறைக்க பயன் பெறவில்லையே

தோழி செய்யும் உபசாரமாவது —
மலர் அணையிலும் சந்திரகாந்தச் சிலையிலும் படுக்கச் செய்தலும்
கொங்கைகளிலே தளிர்களையும் சந்தனத்தையும் பிறவற்றையும் அப்புதலும்
பன்னீர் தூவுதல் போன்றவை

இதில் கிளைவித் தலைவனது இயல் பெயரைக் கூறினமையால் அகப் பொருள் ஆகாமல் அகப் புறப் பொருள் ஆகிறது
கையற்றுப் புலம்புதலால் கந்தருவத்தின் நழுவிய பெரும் திணை யாயிற்று

தலைவன் வருவதற்கு அடையாளமாக முன்னால் மாலையை வர விடுக்க வில்லையே என்று வருந்திய
தலைவியின் வருத்தம் கண்ட தோழி புலம்பினாள் என்பதே துறையின் கருத்து –

————

கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் இனிக் கொடுங் கூற்றினுக்கோ
அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே. 28–

முடி எடுத்துக் கொண்ட –பக்தி மேலிட்டு தலையிலே அஞ்சலி செய்து கொண்ட-
அந்தணர்–அழகிய தண்மை யுடைய எல்லா உயிர்களிடமும் அன்பு பொருந்திய மேலோர்களுடைய
ஆரணத்தின் படி எடுத்துக் கொண்ட மாறன்–நான்கு வேதங்களையும் நான்கு திவ்ய ப்ரபந்தங்களாக தமிழ் செய்த மாறன் என்றபடி

மாறன் அடியார்களின் விஜய த்வஜத்தைத் தூக்கிக் கொண்டு -பக்த தாஸ்ய நிஷ்டையைப் பறை சாற்றிய பின்பு
எமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லையே

———–

என் முடியா தெனக்கி யாதே அரியது இராவணன் தன்
பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான் பொருநைந் துறைவன்
தன் முடியால் அவன் தாள் இணைக் கீழ் எப் பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே. 29–

தன் முடியால் அவன் தாளிணைக்கீழ்நின்னில் சிறந்த நின் சேவடி இணை -பரிபாடல்

வில்லன் -கோதண்ட பாணியான சக்ரவர்த்தி திருமகன்
அவன் தாள் இணைக் கீழ்–தன் முடியால்–அவனது திருவடித் தாமரைகளைத் தலையாலே வணங்கி

எப் பொருளும்-முதல் கடவுளாகிய மாயோன் நிலையும் -அவனை அடையும் நெறியும் -அடைவதற்கு உரிய உயிர்களின் நிலையும்
அடைவதற்கு உண்டாகும் விரோதிகள் நிலையும் -அடைவதால் வரும் பேறும்

திருச் சங்கணித்துறைக்கு அதிபதியாய் தனது திருவாய் மொழியாகிய ஓடத்தில் ஏறும்
உயிர்களை எல்லாம் கடத்தி விடுவார் என்பது திண்ணம் அன்றோ

———–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தே னென்னை நல் வினையாம்
காட்டில் புகுத விட்டு உய்யக் கொள் மாறன் கழல் பற்றிப் போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை மறை மெய் எனிலே. –30–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர்-நெற் போரில் நாரை முதலிய பறவைகள் உறங்கும்
தாம் கவலை அற்று அந்தமில் பேர் இன்பம் பெற்று நித்ய வாஸம் செய்யப் போவதற்கு இந்த உவமை
வழுதி நாட்டில்–பாண்டிய நாட்டில் -கொடை யுடையவனுக்கும் பெயர் -தவறால் மோக்ஷ இன்பம் அளிப்பவர் என்பதால் இப் பெயரால் குறிக்கிறார்
ஆளும் புகுதற்கும் -உம்மைத் தொகைகள் -இறந்து தழுவிய எச்சப் பொருள்கள்

பாரதந்தர்ய ஞான சித்தியை –காட்டில் புகுத விட்டு -என்று மாறன் செயலாக -உய்யக் கொள்ள அவன் ஸங்கல்பித்தான் –
நல்வினையாம் காட்டில் புகுத விட்டான் -காரண கார்யங்கள் உபாயமும் உபாயமும் அவரே
ரக்ஷண ஸங்கல்ப ஞான ஸூர்ய உதயத்தால் ஸாத்விக அஹங்காரத்தால்
இனி எனக்கு செய்ய வேண்டுவது இல்லையே–பாகவத நிஷ்டையே சரம அவதி அன்றோ –

————

மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய்யும் ஐயன்  தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே. -31-

புலமை செய்யும் ஐயன்–தன்னை அடைந்தவர்களுக்கு உபதேஸித்து அருளும் தலைவர்-ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
ஐயன் -எல்லாரிலும் மேலானவன் என்றபடி –
மெய்யும் மெய்யாது –தத்வத் பொருள்கள் எல்லாம் உண்மையாக விளங்கிற்று
பொய்யும் பொய்யாது –தார புத்ர தனாதி ஏஷணாத் த்ரவ்யங்களான -பொய்ப் பொருள்களும் பொய்யாகவே யாதாத்ம்யமாகவே விளங்கிற்று
வேறு படுத்து–இங்கனம் வேறுபடுத்தி பகுத்துக் காட்டி
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது–பிழைப்பதற்கு உரிய –பரம பதத்தை நாடும் வெளியாகிய -உண்மையான தந்திரமும் வந்து பொருந்திற்று
கொய்தற்கு ஏற்ப வினையைப் பகை என்னாமையால் இது ஏக தேச உருவக அணி

தனித் தாள் -ஒப்பற்ற ஸஹாயாந்தர நிரபேஷ திருவடி இணைகள்
ஐயன் -ஆர்யன் வடமொழி திரிபு -மேம்பட்டவன்
புற மத நிரசனமும் ஸ்வ மத ஸ்தாபனமும் செய்து அருளி -ப்ரபந்ந ஜன கூடஸ்தர் –

————-

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே. 32–

திருவாய் மொழியின் அனுசந்தானத்தால் பெற்ற உணர்வும் அறிவும் எத்தகையது என்பதை விளக்குகிறார்

————-

உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே. 33–

முக்குறும்பு -காமம் வெகுளி மயக்கம் -உயர் குடிப்பிறப்பு கல்வி சீலம் தனம் இவற்றால் வரும் கர்வம்
திருவாய் மொழி ஒருவர் சொல்ல-அத்தைக் கேட்டவர்களும் முக்குறும்பு அறுப்பார்களே
ரோம கர்ஷணம் நேத்ராம்பு பதனம் -தானாகே வருமே

————–

அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே. 34–

மற வாதியர் முதல் மகரக் குழையான் வரை-சந்தித்தது என்று நிரசித்ததையும் பொருந்தியதையும் -காட்டும்

———-

சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. 35–

சந்திப்பதம்-ஸமஸ்த பதம் – -தொடர் மொழி -வெவ்வேறு இடங்களில் பொருத்தி
பல பொருள்கள் தரும் படி பங்க்தி -அபூர்வ பொருள்கள் வருமே-

இவற்றை அனுபவிக்க ததீய பர்யந்தம் சேஷத்வம் வேண்டுமே
இவருக்கு மதுரகவி ப்ரக்ருதிகளே தேவர் ஆவார்

பல் அலங்காரப் பொருளும்-பலவகைப்பட்ட அணி இலக்கணப் பகுதிகளும் –உவமை முதலிய அணியியல் பொருந்திய பொருள் இலக்கணம் என்றுமாம்
தேவரையே–பூ ஸூரர்களாலும் வணங்கப்படுபவர் அன்றோ
சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும் பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்-பஞ்ச லக்ஷணங்களும் படித்து உழல்கின்ற புலவர்களே
திவ்ய தேசத்தை மட்டுமே சிந்திக்க முக்தியே ஸித்திக்குமே
ஆட் செய்யக் கிட்டா விடுனும் ஆழ்வாரது அடியார்களைத் தரிசித்த மாத்திரத்தாலேயே முக்தி ஸித்துக்குமே

————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -கந்தருவத்தின் நழுவிய பெரும் திணை
கிளவி –அறத்தொடு நிற்றல்
துறை பாங்கி செவிலி யர்க்கு அறத்தொடு நிற்றல்

பாங்கி வெறி விலக்கிச் செவிலியருக்கு அறத்தொடு நிற்றல்

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
ஏ வரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே. 36–

கம்பர் காதல் ஆழ்வார் மேல் என்றும்
மும்மூர்த்திகள் இடமும் அவர்களில் மேம்பட்ட ராமன் இடமும் இல்லாத காதல் என்றும்
அறியாத கட்டுவிச்சி பாசுரம்-

ஏ வரை ஏறி மொழிகின்ற போது –பெருமை மிக்க நம் குறிச்சியில் வந்து சொல்லுகிற காலத்தில்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் –விஸ்லேஷத்தால் அணிகள் அணியாமல் மலர்கள் மட்டும் சூடப் பெற்ற கூந்தலை யுடைய தலைவியது மனத்தில் -இத்தால்
தெய்வத்தால் தீண்டப் பெற்றவள் அல்லள் -தெய்வம் தீண்டினால் பூவைச் சூடும் அறிவு பெறாள் அன்றோ

தலைவியின் அபிப்ராயம் அறிந்த தோழி தாய்மாற்கு அறிவித்தல் துரையின் கருத்து

————-

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே. 37–

அற ஆ அவை சொல்லவே சுரக்கும் -தர்ம ரூபமாகிய பசுக்களைப் போல்
ஐஹிக ஆமுஷ்மிக மோக்ஷ பயன்களை எல்லாம் பொழியும் –

புறச் சமயத்தார் நூல்கள் மலட்டுப் பசு போல் பயன் கூடாதது மட்டும் அன்றி படித்தவர்களுக்கு நரகத்தையும் கொடுக்கும் –
இப் பாடல் உருவக அணி

————-

பொருள் -புறப் பொருள்
திணை -பெரும் திணை
கிளவி -இரு பாலில் பெண்பால் கூற்று
துறை -தலைவி மடலூரத் தோழி சாற்றுதல்

மடலூரத் துணிந்த தலை மகளின் வழி ஒழுகித் தோழி இரங்குதல் –

கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே. 38–

ஏடு -பனை ஓலை -பெண் நிலை எய்தி மடலூர ஒருப்படுகிறார்
கை தலைப் பெய்தல் -குருவை நினைத்து சொல்லி தலையில் கை கூப்பிய கை யுடையராகை

குருகூர் என்னும் ஆறு அறியாப் பைதலைக் –குருகூர் என்று சொல்வதற்கும் தெரியாத என் தலை மகளை
கோகு உகட்டிட்டு –தன் தோள்களைத் தட்டிக் கொண்டு
ஏட்டில் -பனை மடலாகிய குதிரையில்
ஏற்றிய பண்பனையே–ஏறும்படி செய்த இயல்புடைய தலைவனை -நம்மாழ்வாரை
பைதல் –ஆண்பால் சிறுவனுக்கும் துன்பத்துக்கு பெயர் -தலைவி பால் அன்பு மிகுதியால் பெண் பாலை ஆண்பாலாக பைதல் என்கிறாள்

———–

பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே. 39–

தபஸ்விகளின் கண் -ஞான த்ருஷ்ட்டி -மனம் -முக்காலமும் அறிதல் –
கண்ணும் மனமும் செவியும் கூறியதால் மெய்யும் நாக்கும் பொறிகளும் தவம் செய்தன
அனைத்து தவங்கள் பலமே திருவாய் மொழி

இத்தால் பண்ணும் இன்றியமையாதது என்றும் காட்டப்படுகிறது

———-

காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே. 40–

ஆலிலை அன்ன வசம் செய்து வித்தாக பல அவதாரங்கள்
ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹமும் அதே போல் வித்து -ஞான மூர்த்தியே கொடியில் விளைந்த பலம் -என்கிறார்
திருவாய் மொழி பாசுரங்களே ஓடிய கொழுந்து -அதன் பர்யவசாயம் அர்ச்சிராதி கதியை விளக்கும்
சூழ் விசும்பணி முகில் முனியே நான்முகனே நிகமன தசகங்கள்
குணம் கடந்த மூலம் -விரஜைக்கு அப்பால் உள்ள ஸ்ரீ வைகுண்ட ஆதி மூர்த்தி என்றும்
முக் குணங்கள் கடந்த திருமந்திரம் என்றுமாம்-

———–

மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே. 41–

பார்த்தற்கு -என்று உலகோர் காண என்றும் அர்ஜுனனுக்கும் என்றுமாம்
நாராயணனை வியாசரும் ஆழ்வாரும் முழுவதுமாகவே கண்டார்கள்
ப்ரஹ்ம ஸூ த்ரம் ஸ்ரீ பகவத் கீதை இவற்றுக்கு புற மதஸ்தர்கள் வாதம்
பூர்வ பக்ஷங்களைக் காட்டி அவற்றைப் போக்கி முடிவாக ஸ்வ சித்தாந்தம் பண்ண ஸ்ரீ பாஷ்யகாரர் வேண்டிற்று

மூர்த்தத்தினை–உயிர் நிலையினையும்
பாரதத்தைப் பணித்தானும்–கீதை அடங்கிய மஹா பாரதத்தை வெளியிட்டு அருளிய -வ்யாஸ பகவானும்
உயிர் நிலை உலக நிலை ப்ரஹ்ம நிலை ஆகிய தத்வ த்ரயங்களையும் ப்ரஹ்ம ஸூத்ர முகேந வெளியிட்டு அருளிய வியாஸ பகவானும்
நின்ற வார்த்தை -நிலை பெற்ற திருவாய் மொழியை யுடைய
வேதம் மீமாம்சை ப்ரஹ்ம ஸூத்ரம் அனைத்தும் வெளியிட்ட பொருள்களை வியக்தமாக வெளியிட்டு அருளிய ஆழ்வார்
மஹா உபகாரகராய் உலகுக்கு நன்மை செய்து அருளியவர் என்றதாயிற்று –

நின்ற வார்த்தை -என்று யாராலும் அசைக்க முடியாமல் ஸ்திரமான பிரமாணங்கள்
எவ்வித சங்கைகள் இல்லாமல் நாதமுனிகளுக்கு அருளி இவர் இசை அமைத்து நமக்கு அருளினார்
ப்ரஹ்ம குணக்கடலில் ஏழு உலகத்தாருக்கு குடைந்து ஆடி மகிழ்ந்து பரி சுத்தமாக்கும் தீர்த்தங்கள் ஆயிரம் அன்றோ
ஸ்ரீ ரெங்கநாதன் வளம் மிகு தமிழ் மறை மொழிந்து உயர் பதின்மர் ஆடும் குணக்கடல் அன்றோ

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-

———–

பொருள் -அகப்பொருள்
திணை –பாலை
கிளவி -பொருள் வயிற் பிரிவு
துறை -நெஞ்சோடு மறுத்தல்

பொருள் வயிற் பிரியும் தலைவனுக்குத் தோழி தலைவியின் ஆற்றாமை கூறுதல்

பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே. 42–

நெஞ்சமே
குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள்–தலைவியின்
கண்ணின் கடை திறந்து–கடைக் கண்ணைத் திறந்து கொண்டு
ஆறுபட்டுக்–ஒரு ஆறாகி
வெளி பரந்து -வெளியில் பரவி
குருளைச் சுமந்து –காட்டில் விலங்கின் குட்டிகளை அடித்துக் கொண்டு
ஓட் டரும் –ஓடி வருகின்ற -ஓட்டம் தரும் என்பதின் விகாரம் –
கொள்ளை வெள்ளம்–மிகுதியான கண்ணீர் வெள்ளமானது
உருளைச் –சக்கரங்களை யுடைய
சுடர் மணித் தேரை -இரத்தினங்கள் பிரகாசிக்கின்ற என்னுடைய தேரை
வந்து உதைக்கின்றதே–வந்து தடுக்கின்றதே
அந்தோ –ஐயோ
பொருளைச் சுவை யென்று –பொருளை சிறப்புடையது என்று கொண்டு
போவ தெங்கே –எப்படி நான் போகலாகும்

ஆழ்வார் அருளை சுமந்தவளாது கண்ணீர் வெள்ளம் தடுக்க
அதற்குத் தப்பி நாம் எவ்வாறு பொருளை சன்பாதிக்கப் போவோம் என்று
நெஞ்சோடு கூறி செல்வது தவிர்த்தான்

பிரிவாதலால் பாலை யாயிற்று
மெய்ப்பாடு -அசைவு பற்றி பெருமிதம்
பயன் -நெஞ்சோடு கூறி ஆற்றுதல்

———

பொருள் -அகப்பொருள்
திணை -குறிஞ்சி
கிளவி -இருவருமுள வழி யவள் வரவு ஊர்தல்
துறை -ஆடிடம் புகுதல்

மருங்கு அணைதல் –

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே. 43–

மாறன் குருகை வஞ்சி-இம்மாதின்

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் –தோன்றி மார்பில் அடி பரந்து பெருத்தன
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் –செவ்விய மின்னல் போன்ற இடைக்கு நிலை நிற்கக்கூடிய
சிக்கனவு உண்டோ -அக் கொங்கைகளைத் தாங்கும் வலிமை யுண்டோ -இல்லை என்றவாறு
என்றால்-கொங்கைப் பெருமனும் இடையின் துவட்சியும் இப்படி என்றால்

கொந்து அடிக் கொண்ட குழலும் -பூம் கொத்துக்கள் சூடப்பெற்ற தலை மயிரும்
கலையும் -இடையில் கட்டிய சேலையும்
குலைந்தலைய–நிலை குலைந்து சொர
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது -இவள் பந்து அடிக்கும் போதெல்லாம் என் மனம் துடிக்கின்றது

மெய்ப்பாடு -உவகை
பயன் -தலை மகளைச் சார்தல்

கொங்கை -பக்தி
மதுரகவி ப்ரக்ருதிகளின் ஆழ்வார் மேல் உள்ள பக்தி முதிர்ந்து அவர்கள் உகந்து ஈடுபட்டுச் செய்யும்
பல கைங்கர்யங்களை வைராக்ய ஸம்ருத்தி பூர்வகமாக செய்யும் அவர்கள் சீல குணங்களில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய-என்றது அனைத்தையும் அர்ப்பணம் செய்து அடியாருக்கு என்றே முயன்று நிற்றல்
பந்து அடித்தல் -விரைந்து பல பல தொண்டுகள் முயன்று ஆற்றுதல்

———

கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே. 44–

சின வாரணம் -மத யானை-சடவாயுவைக் கோபித்தவர் அன்றோ

கன வாயினவும்கனவு ஸ்வப்ன தசையையும் ஆயினவும் -என்று முன்பும் பின்பும் உள்ள அவஸ்தைகளையும்
ஆயவையும் -துர்யாதீதி அவஸ்தைகளையும் -இவற்றின் உட்பகுதிகள் பலவாதலால் பன்மைப் பத பிரயோகம்
வீசிய -கடந்த
வினவா துணர்ந்த விரகன் -மயர்வற மதிநலம் அருள பெற்றவர் அன்றோ

துரீயம் -சமாதி நிலை -யான் அறியும் சுடராகி நிற்றல் -ஆத்ம ஸ்வரூபம் கண்டு மனமும் சொல்லும் செயல் இழந்து நிற்கை
நினைக்கவும் சொல்லவும் வேறே பொருள் இல்லை என்பதையே மன வாசகங்களை வீசின நிலை என்கிறார்
அதையும் கடந்த நிலையில் வேதப் பொருள்கள் எல்லாமே தாமாகவே தோன்றுதலை வேத சாஷாத்காரம் அடைந்தார் ஆழ்வார்
ஸர்வ வேத வித்தானார் –

———–

சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே. 45–

ஆயிரம் -எண்ணிறந்த -அநந்தாவை வேதா –
ஆழ்வார் அருளிச் செய்து காட்டிய பகவத் ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களும் அநந்தம் அன்றோ –

————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -நெய்தல்
கிளவி -தூதில் பிரிவு
துறை –காமக் கிழத்தி காதல் நிலை கண்டு தாமக் குழலி பாங்கி தளர்தல்

தோழி இரங்கல் –

அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே. 46–

முரிவளை முத்தும் –வளைந்த சங்கு பெற்ற முத்தும்
சினையும் –அன்னப்பறவை ஈன்ற முட்டையும்
மயங்க -வேறுபாடு தோன்றாமல் கலந்து இருக்க
அவற்றை ஈன்ற
வரி வளையும் –கோடுகளையுடைய சங்கும்
அன்னமும் -அன்னப் பறவையும்
முறை செறுத்து –முறையே கோபித்து
தம்மிலே –தங்களுக்குள்ளே
வழக்காட –விவகாரம் பேச
அப்பொழுது
வலம் புரிவளை –வலம் புரிச் சங்கானது
யூடறுக்கும் -அவ்விரண்டின் நடுவிலே சென்று அந்த வழக்கைத் தீர்த்து விடுகிற
குருகூர் எம் புரவலனே-எமது இறைவனான ஆழ்வார்
அரிவளை -வண்டுகள் வளைத்து மொய்க்கப் பெற்ற
பொன் மகிழ் -பொன் போன்ற தமது மகிழம்பூ மாலையை
ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து–மாலைக் காலத்தில் வந்து ஆராய்ந்து அணிந்த ஆபரணங்களை யுடைய தலைவிக்குக் கொடுத்து அருளுவாரோ

இரங்குதலால் திணை நெய்தல் ஆயிற்று

முத்துக்களும் அன்னங்களும் தங்கள் முட்டைகள் கலந்து எவை என்று அறிய முடியாமல் சண்டை இட
சங்கின் தலைவனான வலம் புரி வந்து தீர்க்க -ஆழ்வார் தாம் அணிந்த மகிழம் பூவைத் தந்து என் துயரம் தீர்க்கிறார் அல்லை –

இச் சிப்பி ஆயிரமே சூழ்ந்தது இடம் பூரி என்று கூறும்-ஒப்பில் சங்கு ஆயிரம் சூழுறும் வலம் புரி என்று ஓதும் –நிகண்டு –

ஆயிரம் சிப்பிகளில் ஓன்று இடம் புரியாகும்-ஆயிரம் இடம் புரிகளில் ஓன்று வலம் புரி யாகும் –

சிப்பி உலகோர் –அன்னம் ஆச்சார்யர்
வெறும் ஜடங்களை உங்கள் தாய் தந்தையருக்கு கொடுத்து உதவி
ஞான கர்ப்பம் முதிர்ந்து வரும் அதிகாரிகளை ஆழ்வாருக்குப் பாத்யம் என்கிறார்

————

பொருள் -அகப்பொருள்
திணை -நெய்தல்
கிளவி –ஒரு வழித் தணத்தல்
துறை -சென்றோன் நீடலிக் காமம் மிக்க கழி படர் கிளவி

தலைவி கடலை நோக்கித் தேர் வழி தூரல் என்றல் –

புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கரை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே. 47–

எம் முறு பிறவித் துரை –எம்முடைய மிக்க விரைந்து போற்றுகிற பிறவிகளை
துடைத்து ஆட் கொண்ட தொண்டர் பிரான்–போக்கி அடிமை கொண்டு அருளிய அடியார் ஜன கூடஸ்தரான ஆழ்வாருக்கு உரிய
துறை நீர்ப் பொருநை கரை துடைக்கும் கடலே –கரையை மோதுகின்ற ஸமுத்ரமே
புரை துடைத்துப் –எனக்குள்ள காமமாகிய துன்பத்தைப் போக்கி
பெரும் பொய்யும் துடைத்துப் –தாம் சொல்லும் வார்த்தைகளில் பொய்யில்லாதபடி போக்கி
பிறர் புகலும்-அயலார் கூறுகின்ற
உரை துடைத்து -பழிச் சொற்களுக்கும் இடம் இல்லாதபடி போக்கி
அங்குள்ள –புன்னை மரச் சோலையாகிய அவ்விடத்திலே யாம் கட்டியுள்ள
வூசல் –அறுந்து போன கொடி ஊஞ்சலை
துடைத்த-மீண்டும் கட்டி அதில் உள்ள வருத்தத்தைப் போக்கினை
துடையேல் அன்பர் கால் சுவடே.-தேர்க்கால் சென்ற வழியை அளித்து விடாதே கொள்

காற் சுவடு -பாகவத சன்மார்க்க வாழ்க்கை நெறி -பூர்வை பூர்வதாம் க்ருதம் –
பொருனைக் கரை -வேத ஸாஸ்த்ர விஹித ஆஞ்ஞா
கடல் -ஆஸ்ரிதர் பக்திக் கடலும் ஆழ்வார் கிருபைக் கடலும்

இரங்குதலால் -நெய்தல் திணை யாயிற்று
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடல் ஓதம் –

—————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -நெய்தல்
கிளவி -ஒரு சார் பகற்ப குறி
துறை –பாங்கி புலம்பல்

செவிலித் தாய் நல் தாய்க்கு இருவர் காதலும் உரைத்தல் –

சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே. 48–

நங்காய்
படர் அந்தி வானம் இருள்கின்றதே
இரண்டு கவடிறக் –தலையில் கதையாய் யுள்ள இரண்டு கட்டுத் தறிகளையும் ஓடியும்படியாக
உட்பகை புறப்பகை யாகிய இரண்டு வஞ்சனையும் அழி பட என்னவுமாம் –
கட்டிய பாசத் தளைக்–கட்டி இருக்கும் அன்பாகிய சங்கிலிகளை
கண் பரிந்து–அறுத்து எறிந்து
தொடர் ஆசைக் களிற்றைத் -தன்னைத் தொடர்ந்த ஆசையாகிய யானையை
சுவடிறக்கத்–அடிச்சுவடு தெரியாமல் ஓடிப்போம் படி
தொடர்ந்து -பின் தொடர்ந்து வெருட்டி
சங்கக் குவடிறக் –தமிழ்ச் சங்கமாகிய மலையானது சிதறும்படி
குத்திய –குத்திப் பெயர்த்த
மாறப் பெயர்க் –மாறன் என்னும் பெயருடைய
கொலை யானை –கொலை செய்ய வல்ல யானையானது -பொய்ச்சமயங்களை அழித்ததனால் கொலை யானை
இங்கு முற்று உருவகம்
இன்று
இவடிறத்து ஒன்றும் -இவள் நிமித்தமாக வருமோ

இரங்குதலால் -திணை -நெய்தலாகும்

ஆசைக்களிறு -மத களிறு ஐந்திணையும் சேரி திரியாமல் செந்நி றீ இ -இவை அடியாக
வரும் பிறப்பு சூழலைத் தொலைக்க வல்லது ஆழ்வார் கிருபை
இரண்டு சுவடு -ஸஞ்சித ஆகாமி -ஸம்ஸாரத்தில் கட்டி வைக்கும் கயிறுகள்
சங்கக் குவடு இறக் குத்திய -சங்கப் புலவர்களை வென்று ஆட் கொண்டாரே

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து ––நான்முகன் -81-

————-

இருளாய்ப் பரந்த உலகங்ககளை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே. 49–

பொருளைக் காட்டும் இரவி போல் பரனைக் காட்டும் ஆழ்வார் அனைவருக்கும் பொதுவாக நிற்பவர் –
புற சமய மாய இருளைப் போக்கி அருளும் பராங்குசன் மறுமை யுண்டாக்கும் மயக்கம் தீர்த்து அருளுபவர்

————

அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே. 50–

குருகூர் நிலத்தை என்றது திருக்குருகூரையும் ஆழ்வார் வகுத்த நெறியையும் –
ஆழ்வார் இடம் அநந்யார்ஹமாய் இருப்பதே கற்பு -அறிவாளிகளின் கொள் கொம்பு
ஆழ்வார் திருவடி இணைகளையே பிடித்து அருளிச் செயல்களில் மண்டி மற்ற வற்றை திரஸ்கரித்தலே அறிவின் ஸ்ரேஷ்டம்

————–

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே. 51–

பிறர் பால் வெறும் பாக் கிளத்தி மெலிகின்ற என்னை -அந்நியர் இடத்தில் பயன் அற்ற பாடல்களை பாடி தளர்கின்றேனும்
இம்மைப்பயன் பெறவே இவை ஆகவே வெறும் பா அன்றோ இவை
அமரர்க்கும் ஏற விட்டான்–தேவர்களுக்கும் மேலாகச் செய்து அருளி விட்டார்
ஆகையால்
பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே–ஒருவர் பெறக்கூடிய செல்வம் உள்ள காலத்தில் -அதற்கு ஒரு கெடுதியும் உண்டாகுமோ
ஆகாது என்றபடி
இந்த முதல் அடி வேற்றுப் பொருள் வைப்பு அணி

காமம் வெகுளி மயக்கம் –முக் குறும்புகள்
முப்பகை -மனம் மொழி செய்கை களால் அற நெறி நழுவும் நிலை
குலம் கல்வி செல்வம் பற்றிய கர்வமும் முக் குறும்பு -முப்பகை
மன் -ஆழ்வாரே உபய விபூதி நாதன் -இங்கு தானே ஈர் அரசு பட்டு இருக்கும்
எறும்பு போன்ற நீசனான அடியேனை ஆட் கொண்டு உயர் நிலை அளித்து அருளினார் –

———–

குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே. 52–

யுள்ளும் சுற்றும் இருகூர் வினையும் அறுத்து-உள்ளேயும் சுற்றிக் கொண்டு இருக்கிற மிகுந்த புண்ய பாப ரூபமாகிய இரண்டையும் போக்கி
இறப் பார்க்கும் இயற்கை–அவைகள் அழியும்படி யாகப் பார்க்கின்ற இயற்கையானது

திருக் குருகூர் வாசிகளுக்கு -அருகில் உள்ளோருக்கும் கூர் வினைகள் அடியோடு அறுபட்டுப் போவது அருமை அல்லவே

———–

பொருள் –அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -மாலையால் வந்த வருத்தம் உரைத்தல்

தலைவன் பிரிந்த நிலையில் ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்

அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே. 53–

அன்றாத அன்றிலையும் அன்று வித்து–பகைமை கொள்ளாத அன்றில் பிறையையும் பகைமை ஆக்கி

ஆஸ்ரித்தவர்களுக்கு பழ வினை முழுதும் தொலைக்க வல்ல –
பிரிவாற்றைமை தணிக்க வல்ல -வகுள மாலை அளிப்பானா என்று ஏங்குகிறாள்

———

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே. 54–

நித்ய விபூதியைக் கொடுக்கும் என்பதால்-இன்னமுதே
ஏறே-இன்னமுதே-ஆணிப் பொன்னே -இம் மூன்றும் உவமை ஆகு பெயர்
தகும்–இது தொழில் பெயராய்த் தேற்றப் பொருள் பட்டு நிற்கும் சொல்

வித்யா கர்வத்தை யுடையோர்க்கு பயங்கரராயும் –
ப்ரயோஜனாந்தர பற்று அற்றவர்களுக்கு இணைத்து தன்னுடன் பற்று உண்டாக்கி அருளி
ஸம்ஸாரிகளுக்கு பெற அரும் செல்வமாக ஆழ்வார் உள்ளார் என்கிறார்

————

பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை(ஐ) யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. 55–

தென்னை(ஐ) யுரைக்கும் –தென் திசைக்கண்ண தாகிய அழகிய தமிழ் மொழிக்கும் –
ஐ உரை -சிறந்த பொருள் இலக்கணத்தைத் தன்னிடத்தில் கொண்டு இருத்தலால் -ஐ உரை -என்கிறார்
இயற்கும் –அதன் பக்தியாகிய இலக்கணத்துக்கும்
இசைக்கும் –இசைத் தமிழுக்கும்
சிகாமணியே -ஸிரோ ரத்னம் போன்றவரே

இதில் முதல் அடி எடுத்துக்காட்டு உவமை அணி

ஆணிப்பொன் போல் நீரே ஸ்ரேஷ்டர்
உமது தேஜஸ்ஸில் சிறிய பிரதிபலிப்பே மற்றவர் தேஜஸ் என்கிறார்-

———-

மறம் -பல் வரிக்கூத்தில் ஓன்று
மறவரின் மகளை விரும்பி விட்ட அரசனது தூதனை நோக்கிக் கடிந்து மறவர் இயல்பு தோன்றக் கூறுவது

மகட் பாற் காஞ்சி -நின் மகளை எனக்குத் தருக என்ற அரசனிடம் மாறுபடுவது

மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே. 56–

மணித்தார் -முத்து மாலை அணிந்த பாண்டியன் ஆணையும் செல்லாமல்
மோக்ஷ ப்ராப்த்தியே பரம புருஷார்த்தம் என்று இருக்கும் -ஸூத்தாந்த ஸித்தாந்திகள் –
அந்தப்புர கிங்கரர்களான -அடியார் பக்கலிலே ஆழ்வார் ஆணையே செல்லும் என்கிறார் –

ஆசு -ஆழ்வாருக்கு அடிமை என்று அறிந்தும் பெண் கேட்க வந்த குற்றத்தை ஆசு என்கிறார்
கொள்ளும் கொள்ளும் -வெகுளி பற்றி வந்த அடுக்கு
பாவை -உவமை ஆகு பெயர்
இது கொல்லி மலையில் தேவரும் முனிவரும் சேர்ந்து உறையும் காலத்து அங்கு வந்து துன்புறுத்தும் அசுரரை மயக்க
வேண்டித் தேவ தச்சனால் யந்திரத்தோடு செய்து வைத்து இருந்த ஒரு பெண் வடிவம்
இது அசுரரைக் கண்டால் சிரித்து மயக்கிக் கொல்லும்

———–

பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே. 57–

பாவைத்-எங்கும் பரவி நிற்கும் பொருள் தோன்ற –பா –என்கிறார்
போதா அமுதை-கடலில் இருந்து வந்த உப்புச் சாற்றில் வியாவ்ருத்தி -கொள்ளக் கொள்ளக் கோதிலா இன்னமுதம் அன்றோ

கோவைப் பணித்த எம் கோவை–காம தேனுவை ஒத்த எங்கள் ஸ்வாமியாக ஆழ்வார்

ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு ஆழ்வார் திருவாய் மொழி பால் அன்றோ –
இன் கனி -கற்பகப்பூ அம்ருதம் வேதப்பொருள் சுரக்கும் காம தேனு அருளிய என் கோ திருக்குருகூர் மன்னன் பற்றிய
இந்த சடகோபர் அந்தாதியும் திருமடல் தனிப் பாடல்களுமே கம்பருடைய சரம அருளிச் செயல் என்பர் –

————-

நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே. 58–

இதன் கடையடி எடுத்துக்காட்டு உவமை அணி

உலகோர் உஜ்ஜீன அர்த்தமாக அருளிச் செய்த ஆழ்வார் அருளிச் செயல்கள் ஏற்றம் -என்று என்றும் நீடித்து
நின்று உலகோரை ரஷித்து அருளும் –
மன் புகழ் பெருமை நும் கண் மரபினோர் புகழ்கள் எல்லாம் உன் புகழ் ஆக்கிக் கொண்டாய்
உயர் குணத்து உரவத் தோளாய் -குகப்படலாம் -36-போல் இதுவும் –

————

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார் குமரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே. 59–

அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே--இங்கு ஸ்துதித்தது அன்றியும் என்று இறந்தது தழுவிய எச்சப் பொருளது

உபய விபூதி நாதனே அனைத்தும் ஆழ்வாருக்கு ஆக்கி அருளினான்
இங்கும் அங்கும் அவருக்கே ஆட் செய்வேனாக அடியேனை ஆழ்வாரே ஆக்கி அருள வேண்டும்-

————–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே. 60–

இறப்பு என்னும் பயத்தை விட்டாய் இராமன் என்பானைப் பற்றி -கும்ப கர்ணன் வதைப்படலாம் -132-
ஆழ்வார் திருவடிகள் அடியேன் தலை மேல் பதிந்து மாறன் திரு நாமமே ஜபித்த பின்பு யம படர் அடியேனை அணுகுவாரோ

————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -பெரும் திணை
துறை -மாலை பெறாமல் வருந்துவது உரைத்தல்

தலைவனைப் பிரிந்த தலைவி தென்றலுக்கு வருந்தி இரங்குதல் –

கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே. 61–

தென்றலை மன்மதனுடைய தேர் என்பர்-

இனி யான் உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன் என்பதை யடக்கி பசியட நிற்றல் என்ற மெய்ப்பாடு தோன்றி நின்றது

————-

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே. 62–

தென் தலை ஆழ்வார் அருளிச் செயல் தென் திசை தோன்றிய உபநிஷத் அன்றோ
மன் தலை -நம்மாழ்வார் வாக்கில் வந்த உபநிஷத்துக்களின் ஆழ்ந்த பொருள்கள்

நியாயம் நெறியை–தர்க்க நிர்ணயத்தாலும் பரத்வ நிர்ணயம் செய்து அருளியவர் அன்றோ
மதுரகவியை-இனிமையான திவ்ய பிரபந்தங்கள் -வேதம் போல் இல்லாமல் சர்வாதிகாரம்
இவற்றை அத்யயனம் செய்தவர்களே எம்பிரான்கள்
அவர்களையே நாவால் பாட புகழ் பாட நான் கடமைப்பட்டுள்ளேன் -என்கிறார்

————-

உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே. 63–

கோடல்–வெண் காந்தள் -கார்த்திகை மாதத்தில் பூக்கும் மணம் இல்லாத பூ
இதே போல் பிறர் கவிகளும் சொல் சுவை பொருள் சுவை இல்லாமல் பயன் அற்றதாய் விடும்

தெய்வக்கவி -தோண்ட தோண்ட ஆழ்ந்த புது அர்த்தங்கள் ஸ்புரிக்கும் -ஊற்று தரும் இனிய நீர் போல்
கல்வி -கல் தோண்ட –வி தொழில் பெயர் விகுதி

————

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே. 64–

கெண்டை மீன்கள் துள்ளி தேன் கூட்டு உடைந்து வயல்களில் தேன் பெருகுவது போல்
குருகூர் மஹிமையைக் கூறுவதால் நம்மாழ்வார் கருணையாகிய தேன் வெள்ளப் ப்ரவாஹம்
உங்களுக்கு நிரம்ப உண்டாகிப் பரவும் என்பது தொகை மொழியின் கருத்து

குருகூர் வளம்-ஆழ்வார் என்றும் அவர் அருளிச்செயல்கள் என்றும் படுமின் -ஆழ்ந்து அனுபவியுங்கோள்
இந்த வளம் நினைத்தாலே திரு அஷ்ட ஐஸ்வர்யம் பொங்கும் -இரு வினை அகலும் -மேன்மை எல்லாம் கிட்டும்

————-

பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே. 65–

கறங்கன்ன வாழ்க்கையை-காற்றாடி போன்ற பிறவிச் சூழலை

ஆன்மாவைக் குவளை என்கிறார் -சாம்சாரிக தசை மாயையில் ரமிக்கும்
உலக இன்பம் சந்த்ர வெளிச்சத்தில் குவளை மலரும் –
ஆழ்வாராகிய வண்டு பகவத் குணமாகிய தேனை உண்டு அருளிச் செயல்கள் பாடி சுழன்று வர இறக்கை காற்று வெளிச்சத்தால்
குவிந்து இருக்கும் குவளை மெதுவாக நெகிழ்ந்து உணர்வு ஏற்பட்டு உஜ்ஜீவனம் அடைகிறது
1-ஆச்சார்யர் கீழ் போல் முன்னோர் மொழிந்த முறையில் உபதேசம்
2-பூ கொய்யும் பெண் போல் உபதேசங்களை அறிந்து உபதேசிப்பர்
3-ஹம்சம் போல் சாரங்களை உபதேசிப்பர்
4-வண்டு போல் அமுதம் உண்டு பாடி அனுபவித்து -அதில் விமுகரானவர்களையும் திருத்தி பணி கொள்வர்
இப்படி நான்கு விதம்

————-

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -பெரும் திணை
துறை -வேலமர் கண்ணி மாலை யம் பொழுது கண்டு ஏங்கியது அறிந்த பாங்கி புலம்பல்

விஸ்லேஷத்தில் மாலைப் பொழுதுக்கும் இருளுக்கும் தலைவியின் ஆற்றாத துயர் கண்டு தோழி இரங்கல்

விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே. 66–

விட வந்தகார வெம் பாலிற் –கொடிய நஞ்சு போன்ற இருட்டையுடைய இராக்காலமாகிய பகுதியிலே
வெம்மையை மெல்லியலுக்கு இடர் என்பதுடன் கூட்டிப்பொருள்
மெல்லியல் -காமன் கொடுமைக்கு ஆற்றாதாள்
பராங்குசர் -துன்பம் செய்யும் காமனை அடக்க வல்லார் என்றவாறு

—————

பொருள் -அகப் பொருள்
திணை –பாலைத் திணை
கிளவி –உடன் போக்கு -உட்பகுதி -தேற்றல்
துறை -தலைவிக்குத் தலைவன் தன் பதி அணுகினமை சாற்றல்

உடன் போக்கில் தலைவன் தலைவிக்குத் தன் நகர் அணிமை கூறல் –

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே. 67–

சரவாதம் -பாலை நிலம் -தடம் பணை -சோலை சூழ்ந்த வூர்
மருதம் தாண்டி விட்டோம்
ஓர் அம்பு போய் விழும் தூரத்தில் நாம் உள்ளோம் பைய நட

இது உருவக அணி

இடையில் எதிர்த்த சிம்மம் போன்றவற்றை அம்பால் எறிந்ததனை தலைவி அறிந்தவள் ஆகையால்
அம்பின் வீழ்ச்சியைக் குறித்து சரவாதம் என்கிறான்
தடம் பணை அருகில் இருப்பதாகக் கொண்டு இனி மருத நிலமே என்கிறான்

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —திரு விருத்தம் -26-பாசுரம் போல் இங்கு

————-

பொருள் -அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை –பா கொத்த சொல்லி பைந்தொடை பெறாள் -மேகத்தைத் தூது போக விடுத்தல்

பிரிவாற்றாது வருந்தும் தலைவி கார் கண்டு கலங்குதல் –

தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே. 68–

பனி தோய்ந்திடு மேகங்களே–விடாமல் மழை பெய்வதை மேற்கொண்டுள்ள ஆகாசத்தில் செல்லும் மேகங்களே
பனி -குளிர்ச்சியுமாம்
எனது ஆற்றாமையை ஆழ்வாருக்கு அறிவிப்பீர்
நீங்கள் இங்கே பொழிவதனால் பயனில்லை
அவருடைய மலையில் ஏறி மழை பெய்யத் தொடங்கினால் அவர் நும்மைக் கண்ட வுடன் விரஹ மேலீட்டால் தாமே என்னிடம் வந்து அணைவார்

விரஹ தாபத்தால் மேகக் கூட்டம் இவளுக்கு விஷங்கள் பருத்து உயர்ந்து வானில் பரவியது போல் உள்ளதே
அஷ்ட நாகங்கள் -வாசுகி -அநந்தன் -தக்ஷன் -சங்க பாலன் -குளிகன் -பதுமன் -மஹா பதுமன் -கார்க்கோடன் –
இவர்கள் காஸ்யப கத்ரு மக்கள்
ஆழ்வார் சூடிக் களைந்த வகுள மாலையே இவள் வெப்பம் தணிக்கும் –

—————-

பொருள் –அகப் பொருள்
திணை –முல்லை
கிளவி -வரை விடை வைத்துப் பொருள் வயிற் பிரிதல்
துறை -தலைவன் மேகம் தன்னொடும் சோகம் கொண்டு அவன் சொல்லல்

பொருள் வயில் பிரிந்து சென்று மீளும் தலைமகன் முகிலொடு கூறல் –

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே. 69–

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது –வழியிலே கண்டு வார்த்தை சொன்னேன் என்று நினைக்காமல்
நீங்கள்
மெய்யன் குருகூர்ப் பாகத்தை –திருவாய் மொழியை-பாகம் -சுவையை யுடைய திருவாய் மொழிக்குப் பண்பு ஆகு பெயர்
ஆற்றும் சொல்லாளைக் -ஒத்து இருக்கும் சொல்லை யுடைய எனது தலைவியை-அவள் சொற்களைக் கேட்டாலே உங்களுக்கு பெரும் பேறு கிட்டுமே
கண்ணீரின் துளி பரந்த மோகத்தை -கண்ணில் நின்று உண்டாக்கிய நீர்த்துளி மிக்குள்ள என் பால் எழுந்த காம விரஹத்தை
ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச் சோகத்தை ஆற்றிக் கொண்டே -அவள் மனதில் உண்டாக்கிய சோர்வை சாந்தப் படுத்திக் கொண்டு பிற்பாடு
துளித் தூவத் தொடங்குகவே–மழை பெய்ய ஆரம்பிப்பீர்களாக -பெரியதாக மழை பெய்வீர்களாகில் அவளுக்கு குளிரத் தொடங்கும் –

தலைவியின் மோகத்தை காலம் தாழ்த்தாது தணியுங்கோள் என்று மேகத்துக்கு கட்டளை

————

மதங்கு -மதங்கம் — மதங்கியார் -மண்டலம் சுற்றுதல் –

தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே. 70–

மதங்கம் -நாட்டியக்கலை -அக நிகழ்ச்சியை புற உறுப்புக்களால் வெளியிடுதல்
கூடு பாணி யின் இசையோடு முழவொடும் கூட்டித் தோடு சீர் அடி விழி மனம் கை கொடு சேர்த்தி ஆடல் -கம்பர்
இதன் அங்கங்கள் ஒன்பது
சுருதி பாட்டு தாளம் காலடி விழி மனம் கை சீர் தோடு -என்பன
சீர் -பிடிகளின் அமைப்பு -தோடு -அவர்களை வரிசைப்படுத்தி ஆடும் முறை
இங்கு மதங்கி– ஆழ்வார் அருளுக்குப் பாத்ரமான பாகவதர்
அவர் அழகு ஞான சம்ஸ்காரம் -ஆட்டம் -அனுஷ்டானம்
இவற்றைக் கண்டால் அகல ஒண்ணாது – மயங்கி ஈடுபடுவோம் –

————-

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே. 71–

பதிகம் அதிகம் -இரண்டிலும் ஓசை நயம் பற்றி க -யாவாகத் திரிந்தன
ஓங்கு ஒளி உள்ளிருட்டைப் போக்கி ஆத்ம ஞானத்தையே சொல்லும்
அந்தமில் ஒளி -மோக்ஷம்
பூசுரர்க்கே பிரிநிலை ஏவகாரம்

பொதியம் தருநதி–பொதிகை மலையில் அகஸ்தியர் இடம் இருந்து பிறந்த தமிழ் இலக்கணம் உலகை வாழ்விப்பது போல்
தாமிரபரணி நதியும் பொதிகை மலையில் இருந்து பிறந்து வாழ்விக்கிறது
பூ ஸுரர் -வேதப்பொருளைக் கண்டு மகிழ்பவர் அந்தணர் ஆதலால் அவரே தனது பெருமையை அறிய வல்லவர் என்றவாறு

————-

பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே. 72–

கண்டீர் -அடி தோறும் உறுதிப்பாட்டை வலியுறுத்தும்
கற்பகச் சோலை நம் ஆழ்வார் –
மித்யா வாதிகளுக்கு வாய்ப்பூட்டு போடுபவர்
மாயாவாதிகளான அருகருக்கு வெட்டரிவாள்
திவ்ய ஸ்வ மத அநுசாரி தொண்டர்களுக்கு கூடஸ்தர் -ஆள் படுத்தி அருளுபவர்
இவை எல்லாம் கண்டு அறிந்தீர்கள் அன்றோ

————

கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே. 73–

ஓயாமல் பருக வேண்டியதனால் முகந்து கொடு நிற்றும் என்கிறார்
விற்றல் -அடியாருக்கு அடியாராக்கி அருளுதல்
விலை கொள்ளுதல் -அவ்வடியாரையும் தம் அடியார் ஆக்குதல்
திருவாய் மொழியை வெள்ளமாக்கி அதற்கு ஏற்ப முழுவதும் உருவகம் செய்தலால் முற்று உருவக அணி

மாறன் அருளிச் செயல் வெள்ளப் பெருக்கே அஷ்டாங்க யோக சித்தி பெற வைக்கும்
1-நாள் தோறும் காதாரக் கேட்போம்
2-பருகிக் களிப்போம் -சுவைப்போம்
3-உள்ளத்தில் முற்றச் செய்வோம்
4-முழுவதும் விழும்படி கொட்டு விழுவித்து மகிழ்வோம்
5-அந்த வெள்ளத்தில் விழுந்து முழுகி விளையாடிக் களிப்போம்
6-அதை முகந்து மேலே கொட்டிக்கொண்டு வேறே எத்தாலும் பாதிக்கப்படாமல் இருப்போம்
7- அந்த வெள்ளத்திலே நீந்தி விளையாடிக் களிப்போம்
8- அவனுக்கே அற்றுத் தீர்ந்து ஆட் செய்து களிப்போம்
இது விசேஷ அஷ்டாங்க யோகமோ
மாறன் எம்மை வாங்கவும் விற்கவும் பெறுவர் என்று பறை சாற்றுவோம்

————–

பொருள் –அகப் பொருள்
திணை –உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி –இடத்தலைப்பாடு
துறை -கண் நயந்து உரைத்தல்

தலைவியின் கண் அழகு கண்டு வியந்த தலைவன் கூறுதல்

வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே. 74–

தலையின் அவயவங்கள் மலர் போல் தோன்றுவதால் -மலர் நிறைந்த கொம்பு என்கிறான்
கடலினும் பெரிய கண்கள் -கம்ப ராமாயணத்தில் உண்டே
இத்துறை முழுவதும் ஐய உவமை
மெய்ப்பாடு -பெருமிதம் -உவகையுமாம்
பயன் -கண் சிறப்பு உரைத்தல் ஹேதுவாக தலைவியைச் சார்தல்

முகம் கமலம் -கண் இணைகள் அதில் நீர் நிலைகள்
வதனம் மைதீர் கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள்
அன்றி சந்திரன் குறை யாகிய முயல் நீங்கி பூர்ண சந்திரன் இவள் முகத்தில் கள்ளமாகப் பரந்ததுவோ
அன்றி என் கள்ள மனம் தான் கறுப்பான கண்களாக இடம் கொண்டதோ -யான் அறியேன் –

————–

ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே. 75–

க்ஷேத்ர வாசமே உறுதி பயக்கும் உபாயமாகும்
ஆழ்வார் கடாக்ஷம் பெற பாக்யம் செய்து இருக்க வேண்டுமே
பெற்றால் தப்பான மயக்கங்கள் எல்லாம் தீரும் -கோணல் புத்தி போம் -கண் கூடாக தீவினைகள் போம்

திருக்கு அறும் –மாறுபாடுகள் நீங்கி விடும்
வாரும் என்பதற்கு நீங்கள் என்பதைத் தோன்றா எழுவாயாக்கிக் கொள்ள வேண்டும்
சொன்னேன் -தெளிவினால் வந்த கால வழு வமைதி

————–

பொருள் –அகப் பொருள்
திணை –மருதம்
கிளவி –பரத்தையில் பிரிவு
துறை –காமக்கிழத்தி மைந்தனை எடுத்தல்

அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே. 76–

அறு வகை சமயங்கள்
சவ்ரம் -வை நாயிகம் -சுப்ரமண்யம் -ஆக் நேயம் -வைஷ்ணவம் -பாசுபதம்
இவைகள் முறையே சூர்யன் -விநாயகர் -சுப்ரமணியன் -அக்னி -விஷ்ணு -சிவன் -அதி தெய்வங்கள்
சங்கர பாஸ்கர யாதவ பாட்ட பிரபாகர் தங்கள் மதம் என்றும் உண்டே
பொருவரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளீர்
இருவினையும் யுடையார் போல் அருந்தவறின்றி யற்றுவார்
திரு உறையும் மணி மார்பன் யுனக்கு என்னை செயற் பால
ஒரு வினையும் மறியார் போல் உறங்குதியால் உறங்காதாய்
ஆழ்வாரைச் சேர்ந்த நம்மை ஷூத்ர மார்க்கத்தில் நடப்பவர் தீண்டுவாரோ

கூற்று -காமக் கிழத்தி கூற்று
பயன் -காமக் கிழத்தி மகிழ்தல்

———-

தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே. 77–

ஆழ்வார் திவ்ய மங்கள திரு யருவோடே வாழ்ந்த காலத்தில் நான் பற்றிக் கொள்ளாத பிறவியோடே இருந்து கெட்டேனே –
அப்போதே அந்தத் திருவடிகளைப் பற்றி -அதையே சிந்தித்து உய்ந்து போகாமல் கெட்டேனே
அவர் பாவனப் படுத்தி என்னைத் தீ மனம் கெடுத்துபாவகன் -அக்னி -தூய்மைப்படுத்துவன் –
மருவித் தொழும் மனமும் தந்து அருளி இருப்பாரே

———–

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே. 78–

பாவகத்தால்–அம்சத்தினால்
கோவகத்தாற் கன்றி—-மேலான இடத்தை யுடையவர் -நித்ய ஸூரியான ஆழ்வாருக்கு அல்லாமல்

ஆழ்வார் 11 அவதாரம் –தானே தன்னைப் பாடிக் கொண்டார்
அவனைப் போலவே அநுகாரம் -கடல் ஞாலம் செய் தேனும் யானே என்னும் -உண்டே –

———–

குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே. 79–

இயலிசைக்கே–இலக்கணமும் பண்ணும் அமைந்த திவ்ய ப்ரபந்தங்களாலே —இயல் இசை -சினை ஆகுபெயர் –
மெய் கண்டு–ஆசிரியருக்கு கைங்கர்யங்கள் செய்து அவர் மூலம் திவ்ய ப்ரபந்தங்களில் தத்வ அர்த்தங்களையும் யதாவாகத் தெரிந்து கொண்டு

அருளிச் செயல்களை அறியாமல் அலகிடுதல் மெழுகிடுதல் கோலமிடுதல் செய்வார்களும்
அதிகார சம்பத்தி உண்டாகி மெய்யுணர்வு பெற்று உஜ்ஜீவனம் அடைவார்கள் அன்றோ
அதே போல் அடியேனும் ஆனேன் என்கிறார்

———–

பொருள் –அகப் புறப் பொருள்
திணை –கைக்கிளை
துறை -காட்சி ஆண்பால் கூற்று

தலை மகளைத் தலை மகன் கண்ணுற்று இஃது ஒரு வியப்பு என்றால் –
ஒரு தலைக் காமம்-கைக்கிளைத் திணையின் முதலான காட்சி என்னும் துறை இது

இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–80–

தனுவைப் பதித்து –இரண்டு விற்களை அமைத்து
முத்தங்குயிற்றி–முத்துக்களை பதித்து
கயலைக் கிடத்தி–இரண்டு கயல் மீன்களை வைத்து

களங்கம் துடைத்த மதி– முகத்துக்கும்
தனு -புருவத்துக்கும்
முத்துக்கள் -பற்களுக்கும்
கயல்கள் -கண்களுக்கும்
உவமை யாதலால் இவை அனைத்தும் உவமை ஆகு பெயர்கள்

பயன் -வியப்பினால் உள்ள மகிழ்ச்சி

கைக்கிளை அகத்துறை
திருக்குருகூரில் அவதரித்த சந்திரனே இவர் -களங்கம் அற்ற பூர்ண சந்திரன்
அப்ராக்ருதமான தெய்விக நிலை

————

இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே. 81–

இருப்பின் கிட்டத்திலும் வலியாரும்–இரும்புகள் உருக்குகின்ற உருக்குக் கிட்டானைக் காட்டிலும் வலிய நெஞ்சு உடையவரும்
ஓடைப் பழனத்திலும்–ஓடையாகிய பழனம் என்று கொண்டு இரு பெயர் ஒட்டு -நீண்ட வயல் என்ற பொருள் என்றுமாம்
இட்டத்திலும்–கருத்துக்களைச் சொல்லும் இடத்திலும்
பட்டத்திலும்-பட்டக் கால்களிலும் -தண்ணீர் பெருகும் காலத்தில் மட்டுமே ஏறிப் பாய்கிற மேட்டு நிலம்
ஏற்றத் தாழ்வு இல்லாமல் மீன்கள் பாய்தல் போல் ஆழ்வார் குண விசேஷத்தால் அறிந்தவரும் அறியாதவரும் கொடிய நெஞ்சுடையவரும் உருகுவார்கள் அன்றோ

திருக்குருகூர் வளம் பேசும் பாசுரம்
மனம் புத்தி செயல் எல்லாவற்றிலும் இரும்பு போல் வலிய நெஞ்சினாரையும் உருக வைக்கும் அருளிச் செயல்கள்

————

குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–

பெருந் தண் வகுள மணம் வேண்டும் –பெரிய குளிர்ந்த மகிழ மலரின் மணம் விரும்பி உறைகின்ற
தண் தெரியல் பெருமான் –குளிர்ந்த மாலையுடைய ஆழ்வாரது
செய்யுள் மா மணியின் கணம் –பாடல்களாகிய இரத்தினைக் கூட்டத்தை
வேண்டும் என்றறிவாரைக் –கற்க வேண்டும் என்று அன்புடன் படித்து அறிந்தவரை
கண்டால் –தர்சித்தால்
குணம் வேண்டுமே –அவர்களுக்கு நற் குணங்கள் வேண்டுமோ -வேண்டாமே
நற் குலம் வேண்டுமே -நல்ல குலமாக இருக்க வேண்டுமோ -வேண்டாமே
யக்குலத் தொழுக் காம்-அக் குலத்துக்கு உரிய நடையாகிய
பிணம் வேண்டுமே –பயன் அற்ற பிணம் போல்வதும் வேண்டுமோ -வேண்டாமே
செல்வப் பேய் வேண்டுமே -பொருளாகிய பிசாசுசம் வேண்டுமோ வேண்டாமே
ஆதலால்
சென்று கைத் தொழுமே–உடனே அருகில் சென்று கை கூப்பி வணங்குங்கள்
திருவாய் மொழியை அன்புடன் படிப்பவர்களைக் கண்டால் அவர்கள் குளம் இத்யாதிகளை பார்க்காமல் உடனே சென்று வணங்குங்கல்

குணம் குலம் ஒழுக்கம் செல்வம் அனைத்தையும் அருளும் ஆழ்வார் அருளிச் செயல்கள்
ஆழ்வார் அருளிச் செயல் அனுபவமே வேண்டும் என்று இருப்பாரே நாடிச் சென்று ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்போம்

————-

தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென் நாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே. 83–

கோ என்னும் எழுவாய் ஆம் என்னும் ஆக்கத்தைக் கொண்டு முடிந்தது

என்னைப் பிறப்பு அறுத்தான் -அவன் கீர்த்தியையே பாட வைத்து என் நா தழும்பு ஏறச் செய்தான்
மனம் மொழி செயல்கள் வேறே எங்கும் பட்டி மேயாதபடி தனக்கேயாம்படி நல் அருள் செய்தான்
குன்ற மாடத் திருக்குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்விலன் காண்மினே –

———–

பொருள் -அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
கிளவி –அறத்தொடு நிற்றல்
துறை –செவிலி நல் தாயத்து அறத்தொடு நிற்றல்

நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்

பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே. 84–

தாமிரபரணி நீர் ஆழ்வார் அருள் கரை கடந்து அலை வீசி ஸகல தாபங்களையும் குளிரச் செய்யுமே –
திருக்குருகூர் பெயர் கேட்ட மாத்ரத்திலே கண்கள் நீர் சொரிந்து உள்ளமும் உடலும் உருகுமே
மகிழ மலரை-மரத்தையே – சூடிக் கொள்ளப் பாரிக்கிறாள்

இப்படி அன்றி -உன் மக்கள் கருத்து இது -என்று வருவித்து முடிக்கவுமாம்

————-

பொருள் -அகப் பொருள்
திணை -உரிப்பொருளாற் பாலை
கிளவி –உடன் போக்கு
துறை -பாங்கி தலைவனை உடன் படுத்தல்

தலைவனை நோக்கித் தோழி தலை மகளை உடன் கொண்டு போகச் சொல்லுதல் –

கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற் கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே. 85–

ஒரு மணம்–பிரமம் -பிராசாபத்தியம் -ஆரிடம் -தெய்வம் –
காந்தர்வம் -அசுரம் இராக்கதம் பைசாசம் போன்ற
எட்டு வகை திருமணங்களில் இது காந்தர்வ மணம் ஆகும்-இவளைக் கைக் கொண்டு செல்வீராக

பாகவத நிஷ்டையில் ஆழ்ந்த –கொண்ட பெண்டிர் உடன் இல் வாழ்க்கையும் மெய்யுணர்வைத் தரும் –
அது ஆழ்வார் திருவடி பலத்தால் உண்டாகும்
நீரின் நிறை என்பதை ஒழுக்கத்தின் நிறை -கற்புடைமை -இரட்டுற மொழிதலாகும்
இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நிறை துணை
ஆழ்வார் திருவடி சம்பந்திகள் கைங்கர்ய ஸ்ரீ யில் ஈடுபடுத்தி உய்யச் செய்யும்
ஆழ்வார் அடியார்களான தேன் கிடைத்து அந்தமில் பேர் இன்ப பெரு வீட்டு இன்பமும் பெறப் பெறுவீர்

———–

கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே. 86–

குணம் -ஆழ்வார் அடியார்களின் -ஸ்வரூப ரூப சேஷ்டிதங்களுக்கும் உப லக்ஷணம்
நாட்டம் -ஆழ்வார் ஆச்சார்யர்கள் தனியன்கள் வாழித் திரு நாமங்கள் சொல்லி ஆனந்த அனுபவ பரிவாஹம்
ஆழ்வாரை அனுபவிக்கும் கூட்டங்களில் அனுபவ கண்ணீர் பெருகி ஓடக்கண்ட இந்த பேறு வீட்டின்பத்தையும் உறுதி செய்யுமே

————–

பொருள் -அகப் பொருள்
திணை –குறிஞ்சி
கிளவி –வரைவு முடுக்கம்
துறை –தினையொடு வெறுத்து வரைவு கடாதல்

பகல் குறியில் தலைமகனுடன் தலை மகளைச் சேர்த்து வைத்த தோழி
பின்பு தலைவன் சிறைப் புறமாக அவன் செவிப்படுமாறு தினையோடே வெறுத்து வரைவு கடாதல்

விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் கார்ப் புனமே. 87–

தென் பாலை வழி -யமபுரத்துக்குச் செல்லும் கொடிய வழி-கார்ப் புனமே–பெரிய தினைக் கொல்லையே
இங்குள்ள தினைப்புனமே எங்கள் வினைகளை அகற்ற வல்லதாய் இருக்குமே-

———–

தலைவன் வரும் புனல் கண்டு வருந்துதல் –

புனம் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே. 88–

முற்றிய விளைவை உடையவர் கொண்டு போனார்கள் -வெறும் கட்டையாக நீ அழிய வேண்டியது தான்
ஆழ்வார் திருவடி சம்பந்தத்தாலும் அருளிச் செயல்களின் உணர்வினாலும் வினை விளைவுகள் எல்லாமே அறுபட்டுப் போய் உடல் அழிந்து ஆத்மா உஜ்ஜீவனம் அடைவதைக் காட்டும்
புனம் பாழ் படுத்து என்று மறு பிறப்பு இல்லை என்றது
மனம் பாழ் படுத்தது என்றது உலக நினைவுக்கு சற்றும் இடம் இன்றிக்கே நெஞ்சு நிறையப் புகுந்தான்

திருமால் இருஞ்சோலை என்றேன் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் போலவே –
இங்கு புனம் என்றது வினை விளையும் இடமான உடலைச் சொன்னவாறு
ஏவினார் கலியார் நலிக என் தன் மேல் எங்கனே வாழுமாறு
ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா -பெரிய திருமொழி -1-6-8-
நின்றான் குன்று -அசலம் -உறுதியைச் சொன்னவாறு
எவ்வளவு தடைகள் இருந்தாலும் சலியாமல் கரை ஏற்றியே தீருவான்
கதிரும் இல்லாமல் என் தலைவியும் இல்லாமல் நீ பாழாகி விட்டாய் தினைப்புனமே -இனி நீ வாழ மாட்டாய் –

———-

பொருள் –அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -மையுறு கண்ணி கையற வெய்தக் கண்ட தோழி யுட்க்கொண்டு புலம்புதல்

பிரிவு ஆற்றாத தலைவி அன்றிலின் குரல் கேட்டு அயர்தல்–

தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே. 89–

தினை -மிகச் சிறிய –பனை -மிகப் பெரிய-கூவி என்னை நலியும் அன்றில் பறவைகளுக்கு இடம் கொடுக்கும் பனை அன்றோ
அன்றில் -பனை -மகிழ மலர் -இவை எல்லாம் காம உத்தீபனம் அன்றோ

————

பொருள் –அகப் பொருள்
திணை –குறிஞ்சி
கிளவி -பிரிவுழிக் கலங்கல்
துறை -கண் படை பெறாது கங்குல் நோதல்

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே. 90–

மூன்றையும் வேரினோடும் பறித்து–காமம் வெகுளி மயக்கம் -முக்குறும்பையும் ச வாசனமாகப் போக்கி அருளி
வகையாய் வருவன யாவையும் மாற்றி--ஆகாமிய சஞ்சித பிராரப்த கர்மங்கள் எல்லாவற்றையும் போக்கி அருளி

ஆழ்வார் திரு நாமம் -சடகோபன் -ஸக்ருத் உச்சாரணம் -ஒன்றே வினைகளைப் பாற்றி
முக் குறும்புகளையும் அறுத்து தாபத் த்ரயங்களையும் போக்கி அருளும்
சங்கீர்த்திய நாராயண ஸப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் ஸூ கினோ பவந்து –
மீண்டும் தீ வினைகள் புகா வண்ணம் அருளும்
காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள் மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -பெரிய திருவந்தாதி -22-
வினைகாள் உமக்கு இனி வேறு இடம் தேட வேண்டும் –பிள்ளை அந்தாதி –

————

பொருள் -அகப் பொருள்
திணை –உரிப்பொருளால் நெய்தல்
கிளவி –வரைவு கடாதல்
துறை –தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி செப்புதல்

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு பாங்கி இரங்குதல்

பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே. 91–

தலைவன் ஒரு புறமாக வரும் பொழுது அறியாதவள் பொல்லாத தலைவியின் விஸ்லேஷ விரஹ தாபத்தைத்
தோழி சொல்லுவதால் தலைவன் கேட்டு விரைந்து வருவான் ஆதலால் வரைவு கடாதல் கிளவியும் துறையும் ஆயிற்று

————-

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே. 92–

இருமையும் தீர்ந்த பிரான்--யானே என் தனதே என்று இருந்த அஹங்கார மமகாரங்களைப் போக்கி அருளிய ஆழ்வார்
தாவில் அரும் பொருள் –கெடாத அரிய செல்வமான பரம புருஷார்த்தம்
யான் எனது என்னும் செருக்கு அறுந்தாலே வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகுவோமே

கைங்கர்ய ரூபமாகவே கர்மங்களை செய்யவே பிறவி சக்கரம் ஒழியும் என்கிறார்

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-

————–

பொருள் –அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -இரவு உறு துயர இகுளைக் கூறல்

இருளுக்கு ஆற்றாத தலைவியைக் குறித்துத் தோழி இரங்குதல் –

அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. 93–

கரும்பு ஒக்கும்–கரும்பு போல் இனியது என்னாமல்-ஆழ்வார் அருளிச் செயல்கள் போல் கரும்பு இனியது என்கிறார்

ஆயிழை –வினைத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
துயரைச் செய்கின்ற இருளைத் துயர் என்றது குறிப்பு மொழி

————-

அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே. 94–

மோக்க மாலை–மோக்ஷ மாலை -திருவாய் மொழிக்கு திருநாமம் சாத்தி அருளுகிறார்

—————

தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. 95–

அருளிச் செய்சல்களைக் காதாலே கேட்பதுவும் -நாவால் பாடுவதும் -பொருள் அறிந்து இயங்கவதும் விட
வேறே சிறந்த தபஸ் உண்டோ

————

பொருள் –அகப் பொருள்
திணை –நெய்தல்
கிளவி –இடந்தலைப்பாடு
துறை -புகழ்தல்

தலைவன் தலைவியின் நோக்கினாலாய வருத்தம் கூறுதல்

உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே. 96–

உண்டாட் டியலும்–மகிழ்ச்சி கொண்டு திருக் கூத்துக்கள் மூன்றினையும் செய்து அருளிய
அல்லியம் –மல் –குடம் -என்னும் மூன்று திருக் கூத்துக்கள்
அல்லியம் -குவலயாபீடத்தின் தந்தங்களை முறித்த பொழுது ஆடிய கூத்து
மல் ஆடல் -மல்லர்களை முடித்து ஆடியது
குடம் -வாணாசுரனை வென்ற மகிழ்ச்சியால் தெருவில் குடக் கூத்து ஆடியது
இவை மூன்றும் புறக் கூத்துக்கள் –

திருமாலுக்கு அடிமை
பரத்வத்தில் விஷ்வக் சேனராக
இங்கு நம்மாழ்வாராக
ஆஸ்ரிதர்களுக்கு பரமாச்சார்யராக
திருச்செங்கண் -இத்தையே பெயராக திருச் செங்கணித்துறை
இங்கு துள்ளும் கயல்களும்  தன் பால் ஆதரம் வைக்கும் கமலச் செங்கண் அழகு அன்றோ

———–

பொருள் -அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -மாலை பெறாது வருந்திய தலைவி காதல் கைம்மிக்கு கையற யுரைத்தல்

பிரிவு ஆற்றாது வருந்தும் தலைவி இரங்கல் –

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே. 97–

காம நோய் கொண்டாருக்கு நிலவு வெயில் போல் சுடுமாதலால் தீ என்கிறார்
பேய்க்கு பனை மரத்தை உவமித்தார்
கரு நெடும் பனங்காடு முழுமையும் காலும் கையும் யுடையன போல்வன -கலிங்கத்துப் பரணி
மெய்ப்பாடு -அழுகை
பயன் -ஆற்றாமை நீங்குதல்

புலி புண்டரீகம் தாமரை லஷித லஷணம்

————

இதுவும் அது-பொருளும் திணையும் துறையும் கீழ் பாசுரம் போலவே –

வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு தட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே. 98–

கொடுங்கோகு தட்டி -வளைந்த தோள்களைத் தட்டிக் கொண்டு
சல்லம் புலி யிட்டு -முள்ளம்பன்றி போல் ஒத்து

தாயைப் புலி என்று அதற்கு ஏற்பப் பாய்கின்றது என்றதனால் உருவக அணி
விரஹம் கொண்டு கலங்கி விழுதலால் தாய் புலி போல் பாய்கின்றாள் எனவும்
அவள் வார்த்தை முள்ளம்பன்றி யுடைய முள் போல் தைக்கின்றது எனவும்
சந்திரனது நிலவைக் கண்டு அதுவும் விரஹத்தை அதிகரித்தலால் அதுவும் தோன்றிற்று என்று வருந்திக் கூறுகிறாள் –

———–

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே. 99–

நாற்று இட்டு நெல் பயன் கொள்ளுவது போல்
திருவாய் மொழி எனது மனத்தில் இருப்பதால் இப் பிறப்பால் இன்னும் வினைகளைச் சேர்க்க முடியாதே

திருவாய் மொழி அனுசந்தானம் என்னுள் நிறைந்து உள்ளதால் பிரமன் என்னை மீண்டும் படைக்க வல்லன் அல்லன் என்கிறார்

—————-

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள். 100–

மனை பெரும் செல்வம் வாழ்வு பசு பத்னி சுதன் ஆலயம் -சர்வமும் ஆழ்வாரே-மற்றை வாழ்வு -சுற்றத்தார் சேர்க்கை -எண் வகைப் போகம் தசாங்கம் போல்வன
மாதா பிதா யுவதியை தனய விபூதி -எல்லாம் எனக்கும் எனது சந்ததியாருக்கும் ஆழ்வாரே -ஆளவந்தார்

——–

மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே

மன்றே புகழும் மாறனை
மன்றே புகழும் மதுர கவிப் பெருமாள்
மன்றே புகழும் தென் தமிழ் தொடையில் ஒன்றே பதிகம்
மன்றே புகழும் பதிகம் யுரைத்தவன் பொன்னடி
மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல்
மாறனை முன் சென்றே மதுர கவிப் பெருமாள் –சாஷாத்தாக அனுபவிக்கப் பெற்றார் –முன் சென்று –
அவர் பொன்னடி உற்று நின்ற திரு வழுந்தூர் வள்ளல்
இவர் இடம் செய்த பிரபத்தி பலனாகவே உதித்த இப் பிரபந்தம் என்றபடி

கம்பன் பிறந்தவூர் காவேரி தங்குமூர்
கும்ப முனி சாபம் குலைந்தவூர் -செம் பதுமத்து
தாதகத்து நான் முகனும் தந்தையும் காணா நான் மறையை
ஓதுவித்து வாழும் அழுந்தூர்

இவர் காளி தேவிக்கு அடிமை செய்தவர் ஆதலால் அவளையே பந்தம் பிடிக்கச் சொல்லி கம்ப ராமாயணம் இயற்றினார்
ஒற்றியூர் காக்க யுறைகின்ற காளியே
வெற்றியூர் காகுத்தன் மெய்ச்சரிதை பற்றியே
நந்தன எழுதுதற்கு நல்லிரவில் மாணாக்கர்
பிந்தாமல் பந்தம் பிடி

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-91-100- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

August 5, 2021

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு பாங்கி இரங்குதல்

பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே. 91–

பருகின்றது இருள் -இருட்டோ வந்து நிறைகின்றது
போகின்றது வண்ணம் பூவை -இவளது நல்ல நிறமோ நீங்குகின்றதே
கண்ணீர் உருகின்றது -கண்ண நீரும் பெருகுகின்றதே
தென்று உயிர் ஓய்கின்றதால்-இக் காரணங்களால் எனது உயிர் சோர்வடைகின்றது
மேன் மேலும் காதல் தருமவரே–அபிநிவேசத்தை வளர்த்து அருளும் அவரே
உலகு ஏழுமுய்யத் தொகுகின்ற ஆயிரம் சொன்னோன்–தொண்டர்க்கு அமுதால அருளிச் செய்த ஆழ்வார்
குருகைச் சொல்லால் விளங்கத் தகுகின்றனர் அல்லர் -கீர்த்தியால் விளங்கத் தக்கவர் அல்லர்

இன்னமும் பூர்ண கடாக்ஷம் பெறாத குறையால் அலற்றுகிறார்

———

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே. 92–

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளும் -தர்மம் அர்த்தம் காமம்
தணவாக் கருமமும் ஆகிய -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமும்
காரணம் கண்ட அக் காரணத்தின்–அந்த பர ப்ரஹ்மம் போலவே
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்து–அனைத்திலும் பெரிய மஹா மாயை என்னும்
பிரகிருதி சம்பந்தமும் அதனால் வரும் மாறுபாடும் இல்லாமல்
உறு பேதம் செய்யம் இருமையும் தீர்ந்த –இருவித கர்மங்களையும் தொடரப் பெறாத
பிரான் சட கோபன் தன் இன்னருளே.–ஆழ்வாரது பரம காருண்யமே காரணம் –
இவை பத்தும் வல்லார் உலகில் எனது பெரும் செல்வராய்த் திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்களே

———–

இருளுக்கு ஆற்றாத தலைவியைக் குறித்துத் தோழி இரங்குதல் –

அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. 93–

இயலோடு இசையின் பொருளில் சிறந்த -இயல் தமிழ் பொருள் அமைதியிலும் இசைத்தமிழ் பொருள் அமைதியிலும் சிறப்புற்ற
குருகையர் கோன் யாழினிசை வேதத்து இயல் –
அலங்கார வல்லியின் -அலங்காரங்கள் அமைந்த பூங்கொடி போலும் படி
கடவல்லி ப்ரஹ்ம வல்லி ஆனந்த வல்லி போல் அலங்கார வல்லி
போக்கில் உள்ளம் தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. –நம்மாழ்வார்
ஆயிழைக்கு —ஆழ்வார் திரு உள்ளம் மகிழும்படி ஆத்ம குணம் நிறைந்த தலை மகளுக்கு –
அருளில் சில மகிழா ஈவர் கொல் -கருணையால் மகிழம் பூவைத் தந்து அருளுவாரோ –
அந்தி வந்த இருளில் பிறிது துயரும் உண்டோ -மாலைப் பொழுதில் இருள் போல் வேறே ஓன்று உண்டோ -இல்லை என்றபடி –

———-

அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே. 94–

அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்-ப்ரஹ்மாதிகளுக்கும் மற்ற தேவர்களுக்கும்
பவரே கை யுற்று என் -பிறப்பு வகை நேர்ந்து என்ன பயன்
படர் நீரின் இட்ட நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் -நீரில் மேல் எடுத்திய புது எழுத்துக்கள் போல்
நிலை இல்லாத பிரபஞ்ச விஷயங்களை மனம் கொள்ளும்படி செய்தது அல்லால்
பணி கொள்ளுமோ -நித்ய கைங்கர்யம் செய்தலைப் பெறுமோ
அவர் எவரே -அவர்களில் எவர் தாம்
நம்பி மாறனைப் போல் திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே-நம்மாழ்வார் போல்
மோக்ஷ ஸாஸ்த்ரம் அருளிச் செய்தவர் யாரும் இல்லையே –

———-

தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. 95–

தம்மை ஒறுத்து-தங்களை வருத்தி
தவம் செய்வதும்
தழல் வேள்வி முடிப்பதும்
எவன் செய்யும் -இது நல்ல பயனைக் கொடுக்கும்
அவம் செய்கை மாற்றச்–கொடிய கர்மங்களை ஒழிக்க
மெய்யன் குருகைப் பிரான் -உண்மைப் பொருளை உண்மையாக அறிந்த ஆழ்வார்
எம்மை இன்னம் ஒரு பவம் செய்கை மாற்றிய பண்டிதன் -இனி சம்சாரத்தில் இருக்க ஒட்டாமல் இருக்க
வண் தமிழ்ப் பாவம் உண்டே-திவ்ய ப்ரபந்தகளும் இருக்கின்றனவே
செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. –காதுகளும் நாக்கும் அர்த்த பஞ்சகம் அறிய அறிவும் உண்டே –

நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உறையுண்டு
மூவாத மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என் ஒருவன்
தீக்கதிக் கண் செல்லும் திறம் –பொய்கையார்

———-

தலைவன் தலைவியின் நோக்கினாலாய வருத்தம் கூறுதல் –

உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே. 96–

உண்டாட் டியலும் திருமால் –திரு விளையாடல்களை யுடைய ஸ்ரீ யபதி யுடைய –
அலகிலா விளையாட்டுடைய தலைவருடைய
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே
உருவை -திவ்ய மங்கள விக்ரஹங்களை
உயர்த்து-மோக்ஷ சாதனம் என்று வெளியிட்டு அருளி
உலகைத் தொண்டாட்டிய -கைங்கர்யங்களிலே உலகோரை மூட்ட
வந்து தோன்றிய தோன்றல் -திரு அவதரித்த ஆழ்வார்
துறைக் குருகூர்-திருச்சங்கு அணித் துறையிலே
நண்டாட்டிய நங்கை -திருக்கை வளையல்களை ஓசை எழுப்பி வரும் இவளது
நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம் திண்டாட்டிய கண்கள் போல் -திருக்கண்கள் போல் –
ஞான விசேஷங்களையே திருக்கண்கள் என்பரே
செய்யுமோ கயல் தீங்குகளே.-கயல் மீன்கள் வருந்தச் செய்ய வல்லவே –

———-

பிரிவு ஆற்றாது வருந்தும் தலைவி இரங்கல் –

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே. 97–

இந்த நுண் பிறவி-இந்த எளிய பிறப்பாகிய
மாயைக் கிழியைக்-மாயா ரூபமான ஆடை எமது உயிரைப் போர்த்து உள்ளதை
கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே–திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வல்ல ஆழ்வார்
தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்-நெருப்பைப் பிளந்து ஒரு பிறைச்சந்திரனாக செய்தது அல்லாமல்
அன்றில் பனை-அன்றில் பறவைக்கு இடம் கொடுக்கும் பனை மரத்தை
பேயைக் கிழித்தென பிளவார்-பேயைக் கிழிப்பது போல் பிளந்தார் இல்லையே
உளவாம் நோயைக் கிழிக்கும் வகுளம் நல்கார் -பிரேம நோயைப் போக்கும் மகிழம் பூ மாலையையும் தர மாட்டார்

——–

இதுவும் அது –

வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு கட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே. 98–

அம் புலி முக -நீரில் பொருந்திய தாமரை திரு முகத்தில் உள்ள
வாயில் கரும்பின் -திருவாய் மொழியாகிய அம்ருதம் கொண்டு
வல் மறு பிறப்பைக்-விரைவிலே மறு பிறப்பை ஒழித்திட்ட
அம்புலி -அழகிய ஸிம்ஹம் போன்ற ஆழ்வார்
யோர் வகுளம் கொடார்- அத்விதீயமான மகிழம் பூ கொடுக்க மாட்டார்
கொடுங்கோகு உகட்டிச்-கொடுமையான முறை கேடு தலைக்கு ஏறி -அக்கிரமம் விஞ்சி
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது –முள்ளம் பன்றி போல் எதிர்த்துப் பாய்வதாகிய
தாயென்றிங்கோர் இல்லம் புலியும்-வீட்டுப்புலியும்
இங்கு உண்டு -இவ்விடத்தில் என்னை வருத்திக் கொண்டு உள்ளது
இதற்கும் மேல்
கொல்லம் புலி மீள எழுகின்றதே–வானத்திலும் ஓர் அம்புலி என்னை வறுத்த மீள தோன்றுகிறது
சந்த்ர உதயம் அலாப தசையில் விவேகமும் பாதகமான படி –

———

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே. 99–

புகழ் மெய்ப் புலவோர்-தத்வ ஞானிகள்
தொழுதியல் –வணங்கி அடியார்களாகி
நாயகன் -தலைவன் -ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை வழுதி நன்னாடன் –அக்னி கார்யம் விடாத நீர் வளம் மிக்க
திருக்குருகூரிலே திரு அவதரித்த ஆழ்வார் அருளிச் செய்த
திருவாய் மொழி எம் மனத்தனவே.–திருவாய் மொழியை மனத்திலே நிலை கொண்டு
ஆதலால்
எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் -பிரமன் எழுதிய ஆயுஸ்ஸூ காலமும்
அநாதி கால கர்மங்களும் அடியேனை பிறவிச் சூழலில் சிக்க வைக்க மாட்டாவே
ஏதமிழ் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாறே
இப்பத்து அரு வினை நீறு செய்யுமே

———

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள் விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள். 100–

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை-ஆகிய இவை எல்லாம்
நினையும் பதம் என -ஆழ்வாரை நினைக்கும் அது ஒன்றே ஆகும்
நின்ற பிரான் குருகூர் நிமலன்-ப்ரபந்ந ஜன கூடஸ்தராக நிற்கும் ஆழ்வார்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் -அஞ்ஞான அந்தகாரங்களைப் போக்கும் படியாகவும்
பொருள் விளங்கி-யதார்த்த தத்வ அர்த்தங்கள் விளங்கும் படியாகவும்
வினையும் திரி வுற்றன -கர்ம சமூகங்களும் அழியும் படியாகவும்
குற்றம் நீங்கின வேதங்கள்.-தெளியாத மறை நிலங்கையும் தெளியும் படியாகவும் அமைந்தனவே –

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மீலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேன மத அந்வயாநாம்
ஆத்யஸ்யன குல பதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இன் நீண் நிலத்தோர்
அறி தர நின்ற இராமானுசன்

———

மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே –

இது திரு நாமப்பாட்டு –
மார்க்க தர்ஸீ மஹ ரிஷி –
இப்பாடலைப் பாடினவர்களும் ஓதினவர்களும் ஆழ்வாரது
பொன்னடி பேற்றைப் பெறுவார் என்று பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-81-90- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

August 5, 2021

இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே. 81–

கேணியிலும்-கிணறுகளிலும்
பட்டத்திலும்-பெருக்குக் காலத்தில் நீர் ஏறிப் பாயும் பட்டக் கால்களிலும்
பைந் தடத்திலும் -பசுமையான தடாகங்களிலும்
ஓடைப் பழனத்திலும்-நீரோடை சூழ்ந்த வயல்களிலும்
குட்டத்திலும் -ஆழமான குட்டை களிலும்
கயல் பாய் -நீர் வளத்தால் கயல் மீன்கள் பாய்ந்து குதிக்கப் பெற்ற
குரு கூரர் குணங்களுக்கே. -நம்மாழ்வாருடைய கல்யாண குணங்களுக்காகவே
இருப்பின் கிட்டத்திலும் வலியாரும்-இரும்பு உருக்கிய உருக்குக் கிட்டத்தை விட வலிய கல் நெஞ்சு உடையவரும்
இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் உருகுவர் -தம் தம்முடைய மனம் புத்தி சித்தம் என்னும்
அகக் கரணங்களில் கரைவார்கள் –

இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
இரும்பாகில் அக்னியாலே நிமிர்த்துக் கொள்ளலாம்
இது ஒருபடியாலும் திருத்த ஒண்ணாது என்கை

கடின ஸ்தலத்தில் வர்ஷித்தால் காடின்யம் அடங்க நெகிழிச்சிக்கு -உறுப்பு ஆமாப் போலே
விஷயாந்தரத்தாலே மனஸூ அதி கடினமானாலும் சிதிலமாம்படி வயிர உருக்காய் இறே
பகவத் ப்ரபாவம் இருப்பது –

ஆழ்வாரது திரு அருள் பெருக்கால் -இடையறாத நீர்ப்பெருக்கால் மேடு பள்ளம் வாசி இன்றி
எங்கும் ஒக்கக் கயல் பாய்தல் போலே
வலிய நெஞ்சினாரும் மெல் நெஞ்சினாரும் வாசி அற உருகுவார்களே –

———

குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–

பெருந் தண் வகுள மணம் வேண்டும் –மகிழ மலர்களின் வாசனை -அனைவராலும் விரும்பப்படுகிற
தண் தெரியல் பெருமான் செய்யுள் –ஆழ்வாரது திவ்ய பிரபங்தங்கள் ஆகிய
மா மணியின் கணம் வேண்டும் என்றறிவாரைக் -ரத்னக் கூட்டங்களை தமக்கு இன்றியமையாதவை என்று அறிந்து ஓதி உணர்பவர்களை
கண்டால் சென்று கைத் தொழுமே–நீங்கள் எங்கே கண்டாலும்-உடனே அருகில் சென்று கை கூப்பி வணங்குங்கோள்

தொழும் -பன்மை ஏவல்
குணம் வேண்டுமே -நல்ல குணங்கள் வேண்டுமோ
நற் குலம் வேண்டுமே -நல்ல குலங்களில் பிறக்க வேண்டுமோ
யக்குலத் தொழுக் காம் பிணம் வேண்டுமே -அதுக்குத் தக்க ஆசாரமாகிய பிணம் வேண்டுமோ
செல்வப் பேய் வேண்டுமே -செல்வப் பொருளாகிய பேய் வேண்டுமோ
ஒன்றுமே வேண்டாம் என்றவாறு

அவாவில் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –
இப் பத்து அறிந்தார் தொண்டர் வாழ்வது சூழ் பொன் விசும்பே -என்றவாறு

———-

தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென்னாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே–83-

தொழும் பாக்கிய -உயிரைத் தனக்கு அடிமையாகச் செய்த
வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று -அநாதியான -பிறவிச் சூழல் நடுவில் இருந்து
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் –மீண்டு உய்யும் படியான அத்ருஷ்டத்தை யுடையதாம் படி செய்யவும்
தென்னிய லோடிசைந்து கெழும் பாக்–அழகிய இலக்கணங்களோடே கூடிய திவ்யப் ப்ரபந்தங்களிலே
கெழுமிய கீர்த்தியை -எம்பெருமானுடைய புகழை
நாளும் கிளத்தி யென் நாத் தழும்பாக் கவும் -நாளும் சொல்லிச் சொல்லி நாவில் தழும்பு ஏறும்படி செய்யவும்
வல்ல கோ சட கோபன் தயா பரனே-திறமை கொண்ட ஸ்வாமி -கருணையே வடிவானவர்

தயா பரன் -பரம தயாளு
முக்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரம் என்றாரே முன்னமே
செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத்துற்று
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றி

—————-

நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்

பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே.–84-

நங்காய்
பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் –யாரேனும் தலைவனது ஊர்ப் பெயரைச் சொன்ன மாத்திரத்திலே
நின் மகள்
கண் பனிக்கும்-கண்ணீர் பெருக்குகின்றாள்
கரம் தலைக் கொள்ளும் -கைகளைக் கூப்பித் தொழுகிறாள்
உள்ளும் உருகும் -மனமும் கரைந்து நீராகுகிறாள்
கவியால் உலகைப் புரந்து –திவ்ய ப்ரபந்தங்களால் உலகை ரக்ஷித்து
அலைக்கும் வினை தீர்த்தான் -கருமங்களைப் போக்கி அருளும் தலைமகனது
புனை மகிழ் பூவுமன்றி– மகிழ மலர்களை சூடிக் கொள்ளுவது மட்டும் அல்லாமல்
மரந்தலைக் கொள்ளவும் போது -மகிழ மரத்தைச் சார்ந்து அத்தையும் தலை மேல் கொள்ளச் செல்கிறாள்
உன் மகள் கருத்தே.

தாராயினும் தழை யதாயினும் தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
ஆழ்வார் சம்பந்தத்தை நேராகவோ அடியார்கள் மூலமாகவோ பெற ஆசை விஞ்சி உள்ளபடி
ஆழ்வார் அடியார்கள் வாழும் இடங்களையும் தலை மேல் கொள்ளுகிறார் என்றபடி –

—————

தலைவனை நோக்கித் தோழி தலை மகளை உடன் கொண்டு போகச் சொல்லுதல் –

கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற்கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே. 85–

கருத்தில் கருணை வைத்து -திரு உள்ளத்தில் பேர் அன்பு கொண்டு
ஏகும் இவளோடு-இம்மங்கை யுடன் செல்லக் கடவீர்
இதுவும் -இவ்வாறு இவளைக் கைப் பற்றுவதும்
கலை மறையோர் திருத்திற்று ஒரு மணம் -ஸாஸ்த்ரம் வல்லவர் அமைத்த விவாஹங்களில் ஒரு வகை
அன்றியும்
தீரும் தின மயல் -நாள் தோறும் இருவருக்கும் உள்ள மயக்கமும் நீர் இவளைக் கொண்டு போக நீங்கி விடுமே
நீரின் நிறை-நீர் வளத்தால் நீர் அருகில் முளைத்து நிறைந்துள்ள
முருத்தின் செருந்து -வெண்மையாக அடிக் குருத்துக்கள் உடைய செருந்தி கோரைகள்
அயலே கரும்பின் குருத்தில் -அருகில் உள்ள கரும்பின் குருத்துக்களில்
முயல் பிரசம் வைக்கும் -முயல் கூடான சந்த்ர மண்டலம் போல் தேன் கூடு கட்டப் பெற்ற
குருகூர் சென்று கூடுமினே–இவளை அழைத்துக் கொண்டு போவீராக —

கரும்பினிடைத்தேறல் -கலியன்

சாஸ்திரம் அஷ்ட வித மணங்களைச் சொல்லும்
ப்ராமம் -பிரஜா பத்த்யம் -ஆர்ஷம் -தேவம் -காந்தர்வம் -ஆசுரம் ராஷாஸம் -பைசாஸம்

சேஷி பேற்றுக்கு உகப்பானும் அவனே -ஆகவே இவருடைய முயலும் தீருமே –

———-

கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே. 86–

கூட்டங்கள் தோறும் -தாம் கூடும் பொழுது எல்லாம்
குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்-ஆழ்வாருடைய திவ்ய குணங்களையே கூறும் அடியார்கள்
ஈட்டங்கள் தோறும் -கூட்டங்களில் எல்லாம்
இருக்கப் பெற்றேம் -கூடி இருக்கப் பெற்றோம்
இருந்து -இவ்வாறு அடியார் கூட்டங்களில் கூடி இருந்து
எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் -ஆனந்தக் கண்ணீர் பெருகப் பெற்றோம்
இனி மேல்-இவ்வாறு ஆன பின்பு
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே -பரமபதத்தில் எங்களை சார்ந்தவர்களுக்கு
பெரும் போகம் விளைகின்றதே–பேர் இன்பம் நலம் நிகழா நின்றது –
விண்ணுளாரிலும் சீரியர் அன்றோ –

————

பகல் குறியில் தலைமகனுடன் தலை மகளைச் சேர்த்து வைத்த தோழி
பின்பு தலைவன் சிறைப்புறமாக அவன் செவிப்படுமாறு தினையோடே வெறுத்து வரைவு கடாதல்

விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் காப் புனமே. 87–

கிளையாம் பிறவித்-மேலே மேலே தொடரும் பிறவி சூழலில்
தளை யாசழியத் -பந்தமாகிய குற்றம் போகும்படி
தடுத்துத் -போக்கி
தென் பாலை வழி தடுத்துக் – தெற்குத் திக்கில் -பாலை நில வழியையும் தவிர்த்து
களை ஆசறத் தடுத்து -களைகளை முற்றும் போக்கி
ஆண்டான் குருகையின் காப் புனமே.–ஆழ்வாருடைய திருக்குருகூரைச் சேர்ந்த தினை புலமே
தினையின் கிளையாக் கிளர விளைகின்றதால் -தினைப் பயிர்கள் மிகைத்து வளர்ந்து கதிர் முற்றிப் போகின்றதே
விளையா தொழிய மருந்தும் உண்டே -இப்படி முற்றாமல் கதிர் பரிந்தபடியே இருக்க ஏதேனும் மருந்து உண்டோ
நித்ய விபூதி அனுபவம் தந்து அருள வேண்டும் என்றவாறு –

————–

தலைவன் வரும் புனல் கண்டு வருந்துதல்

புனல் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே. 88–

வழுவா நரகத் தினம் பாழ் படுத்த –நரபலி அடியார்களுக்கு இல்லாத படி செய்து அருளும்
பிரான் சட கோபன் இன்னாக் கலியின் சினம் பாழ் படுத்த நின்றான்–உபகாரகர் -காளி கோலாகலம் அடக்கி அருளிய ஆழ்வார்
குன்று சூழ்கின்ற செந்தினையே.-பொதிகை மலை சார்ந்து விளைந்த சிவந்த தினையே
புனல் பாழ் படுத்துப் -கதிர் கொய்து விட்டதால் -கொல்லையைப் பாழாக்கி
புகழ் பாழ் படுத்தல்லால் -உனது கீர்த்தியையும் பாழாக்கி
அத்தோடு நில்லாமல்
புகுந்தென் மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே -எனது மனத்தையும் சார்ந்து பாழாக்கினாயே -வாழி
கம்பத்து அந்தரங்கம் சிவந்த தினை-
தூராத மனக்காதல் –பலவும் பாடி ஆறாத மனக்களிப்போடே -இருந்தமை

———-

பிரிவு ஆற்றாத தலைவி அன்றிலின் குரல் கேட்டு அயர்தல்–

தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே. 89–

மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் — தன்னை நிஷேதித்த கொடியவளான திருத்தாயார் உறங்கினாலும்
தன் வாய் அடங்கா வினை ஒன்றிய அன்றிலுக்கு –அன்றில் பறவைக்கு
இடம் காட்ட விரிதலைய பனை யன்றியும் உளதோ -தங்க இடம் கொடுத்த விரிந்த தலையை யுடைய பனை மரமும்
தமியேற்குப் -தலைவனைப் பிரிந்து தனித்து இருக்கும் எனக்கு
தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்-ஆழ்வாரின் மேல் உள்ள காதலால்
பழம் பகையே–வேறே பழைய பகை இல்லையே

———

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே. 90–

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து-காமம் கோபம் மயக்கம் மூன்றையும் அடியோடு ஒழித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி -இதன் மூலம் வரும் கர்மங்கள் பிறவிகளை இவற்றை தமக்கும் உலகோருக்கும் போக்கி அருளி
சஞ்சிதம் ப்ராரப்தம் ஆகாமியம்-என்று வகை வகையாக வருமே இவற்றின் அடியாகவே
இவ் வையமுய்யத் தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் –ஆழ்வாரது திரு நாமம் சொல்லவே
சூழ் பனியின் புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே.–அஞ்ஞானம் இருள் சவாசனமாகப் போகும் நாளும் என்று வருமோ
இருள் தரும் மா ஞாலத்தில் பிரிவாற்றாமையால் ஆற்றாமை விஞ்சி வாய் விட்டுக் கூறி அலற்றுகிறார் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-71-80- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

August 4, 2021

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே. 71–

பொதியம் தரு -பொதிய மலையால் கொடுக்கப் பட்ட -அதிலிருந்து தோன்றும்
நதி யங் குருகூர் எந்தை -ஆழ்வாரது திவ்ய ஸூக்திகளை
பூசுரர்க்கே
பதியந் தமிழ் என்ன –மேலோட்டமாக பார்ப்பவர் தமிழ் பதிகங்கள் என்பர்கள்
நான்மறை என்ன –ஆழ்ந்து நோக்குபவர்கள் நான்கு வேதங்களே இவை என்பர்கள்
இப் பார் புரக்கும் மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன –ப்ரயோஜனாந்த பரர்கள் உலோகோரை
நல்வழிப்படுத்திப் பாதுகாக்கவும் வரம்பில்லா ஞானமாகிய ஒளியை வெளிப்படுத்தும் ஆரங்கள் என்று சொல்லும்படியாகவும்
மறை தமிழின் அதியம் தரும் கவி ஆயிரம் செய்து –வேதம் தமிழ் செய்த மாறன் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழிகளும்
பூ சுரருக்கு அளித் தானமுதம்-நிலத்தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -தொண்டர்க்கு அமுதமாய் அருளினான்

பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் கழித்து அருந்த நிறைப்பதற்கு அன்றோ அமுதமாய் அருளினான்

———

பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே. 72–

குருகூர் வந்த கற்பகமே.
பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் -ப்ரசன்ன புத்தர் மாயாவதி போன்ற மதஸ்தர் வாத வித்வான்களுக்கு பூட்டு போன்றும்
பொய்ச் சமயம் மித்யா வாதம் மாயா வாதம்
போக்கு வல்வாய் வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு -சமணர்களுக்கு மாறுபாட்டை போக்கும்
கூர் வாயை யுடைய வாட்சி-மரத்தைச் சீவும் – கருவியாகவும்
அது மரக் கோணலைத் தீர்ப்பது போல் இது மனக் கோணலைத் தீர்க்கும்
வாள் என்று கொண்டு சி பகுதிப் பொருள் விகுதி என்றுமாம்
மன் உயிர் கட்கு ஆட்சி கண்டீர் -உலகில் நிலை பெற்ற உயிர்களுக்கு அழிவற்ற பொருளாகவும்
ஜீவாத்மாக்கள் நித்யம் என்பதால் மன்னுயிர்
ஜீவ ராசிகளை ஆளுபவர் என்றுமாம்
தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் -அடியவர்களுக்குப் பேரின்பப் பெருக்காகவும்
அறிவைக் காட்சி கண்டீர் -அவர்கள் அறிவுக்கு காணத்தக்க பொருளாகவும்
ஞான ஸ்வரூபமான பர ப்ரஹ்மத்தை விசத தமமாக அறிந்தவர் என்றுமாம்
பரவும்
ஆகவே பரவும் -வணங்கி புகழ்ந்து வழி படுங்கோள் என்று உபதேசிக்கிறார்

———

கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே. 73–

எம்மை விற்றும் விலை கொள்ளவும் உரியான்-எங்களை விற்கவும் வாங்கவும் உரியவர் —
ஆழ்வாருக்கு அத்யந்த பரதந்த்ரராய்
விலை கொள்ளுதல் -விலைக்கு கொள்ளுதல்
மாறன் கவி வெள்ளத்தையே.–ஆழ்வாரது அருளிச் செயல் பிரவாஹத்தை
யாம் நிதம்–யாம் நாள் தோறும்
கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் -ஓதியும் பிறர் ஒதக் காதில் நன்றாகக் கேட்டும் குடித்து மகிழ்வோம்
உள்ளே முற்றும் உகப்பெய்தும் -அகத்திலே அவ்வெள்ளம் முழுவதும் விழும்படி ஊற்றிக் கொள்வோம்
மறந்து விடாமல் மனதிலே நிரம்பப் பதிந்து வைத்துக் கொள்ளுதல்
மூழ்கிக் குடைதும் -அவ்வெள்ளத்திலே அமிழ்ந்து நீராடுவோம்
முகந்து கொடு நிற்றும் நிலையுற -அப்பெருக்கை மொண்டு எடுத்துக் கொண்டு நிலை பெற நிற்போம்
அப்பொருளை பாராட்டி தாம் உபயோகிக்குமாறு தேக்கிக் கொள்ளுதல்
நீந்துதும் -அவ்வெள்ளத்தில் நீந்துவோம் -அவற்றில் ஈடுபடுதல்

———–

தலைவியின் கண் அழகு கண்டு வியந்த தலைவன் கூறுதல் –

வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே. 74–

இவை
வெள்ளம் பரந்தனவோ கமலத்து -செந்தாமரை மேல் பிரவாகம் பரவியதாமோ
அன்றி வெண் மதி மேல் முயல் நீக்கி கள்ளம் பரந்தனவோ -சந்திரனின் களங்கத்தை நீக்கி களவுத் தொழில் பரம்பியதாமோ
கருமை நிறத்தை களவு என்பது கவிகள் மரபு
கவிக் கரசன் தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் -பூம் கொம்பு போன்ற இந்த மங்கையுடைய
ஆழ்வார் திரு நா வீறு உடைய பிரான் என்பதால் கவிக்கு அரசன் என்கிறார்
செம் முகத்து எம் உள்ளம் பரந்தனவோ -சிவந்த திரு முகத்திலு திரு உள்ளம் பரவியது
கண்களோ -கண்களே தாமோ -உபமானங்கள் உபமேயத்து அளவு போதாமையாலே அவை தம்மையே சொல்லிற்று
ஒன்றும் ஓர்கிலமே.-ஒன்றையும் துணிவாக அறிகின்றிலோமே

ஐய உவமை அணி
திரு உள்ளம் காம மயக்கத்தால் இருந்து அன்றோ போனது
தலைவன் நெஞ்சோடு கூறிக்கொண்டது
நலம் பாராட்டு துறை
கண் அழகு -ஞான வைலக்ஷண்யம்
இவருக்கு பேர் அறிவு ஆழ்வாரது சங்கல்பத்தாலே
இதயக் கமலத்திலே எழுந்து பொங்கும் ஞான வெள்ளத்தை -வெள்ளம் பரந்தனவோ கமலத்து என்கிறார் –
இந்த தெளிந்த ஸூத்த ஞானம் பரமாத்மாவின் திரு உள்ளத்தையும் வசீகரிக்குமே -ஆகையால்
வெண் மதி மேல் முயல் நீக்கிக் கள்ளம் பரந்தனவோ -என்கிறார் –

—————-

ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே. 75–

ஓரும் தகைமைக்கு உரியாரும் -தத்வப் பொருளை ஆராயும் தன்மைக்கு உரியவர்களும்
ஓங்கிய ஞானியரும்-அங்கனம் ஆராய்ந்து தெளிந்து உயர்ந்த ஞானத்தைப் பெற்றவர்களும்
கேள்வி -ஞானம் அனுஷ்டானங்கள்
விமர்சம் -ப்ரமாணங்களைக் கொண்டு தெளிய ஆராய்தல்
இவை இரண்டையும் முதலில் சொல்லி அவர்களிலும் மேம்பட்ட ஓங்கிய ஞானியரை –
பாவனை -இடையறாமல் சிந்தித்தல் -உடையாரை அடுத்து சொன்னவாறு

சாரும் தனித் தலைவன் சட கோபன் -சரணம் அடையப்பெற்ற ஒப்பற்ற ஆழ்வார் திரு அவதார ஸ்தலமான
தடம் பதிக்கே வாரும் -வாருங்கோள்
அங்கே வருவீர்களானால்
உமக்கொரு உறுதி சொன்னேன் -கேட்டு உய்வீராக
மயக்கமெல்லாம் தீரும் -விபரீத ஞானம் எல்லாம் போகுமே
திருக்கு அறும் —செருக்கு வஞ்சகம் போன்ற மாறுபாடு நீங்குமே
சிந்தை செவ்வே நிற்கும் -மனம் கோணாமல் நல் வழியில் நிலை நிற்கும்
தீங்கு அறுமே-தீ வினைகள் எல்லாம் தொலையுமே –

திவ்ய தேச மஹிமையை அறிவித்தவாறு

———–

அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே. 76–

அறு வகையாய சமயமும் –ஆறு வகையான சமய நூல்களும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே-ஒருங்கே ஒழிவித்து -தம் தமக்குத் தோன்றியபடி
பொருள் விரிவு முழுவதையும் ஒரு சேர போக்கி
பெறு வகை ஆறெனச் செய்த –முக்தி பெரும்படியான வழி இது என்று திவ்ய பிரபந்தகள் அருளிச் செய்த
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய்
பிரான் குருகூர்ப் பிறந்த சிறு வகையார் அவரைத் தொழுதோம் -மூர்த்தி சிறுத்தும் கீர்த்தி பெருத்தும் –
சிறு மா மானிசராய்த் தோன்றி நம்மை ஆண்டு அருளிய ஆழ்வாரை வணங்கினோம்
ஐவகைத் தாம்புலனும் எம்மைத் தீண்டுகவே.–மெய் வாய் கண் மூக்கு செவி -ஐம் பொறிகளாலும் உண்டாகும்
ஸ்பர்ச ரஸ ரூபம் கந்தம் ஸப்தம் போன்ற ஐந்து வகைப் புலன்களும் எம்மைச் சார்வனவாக –
அவற்றைக் குறித்து அஞ்ச வேண்டாமே

சடகோபர் எம்மைத் தீண்டுகை என்று தலைமகள் பிரணய ரோஷம் அடைந்து
நீங்கப் பெற்றதாகவும் இதற்குப் பொருள் சொல்வர்

சிறு மா மானிடராய் ஆழ்வார் அடியார்களையும் சொன்னவாறு
வழுதி நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தேன்-என்றாரே –

————–

தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே. 77–

வினையேன் இவ் வெறும் பிறவி ஆண்டில் பிறந்த அக் காலத்திலே –பயன் அற்ற இந்தப் பிறவியாக
அவ்விடத்தில் பிறந்த அக்காலத்திலேயே
அன்பனாய் அணி நீர்ப் பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே–ஆழ்வாருக்கே பக்தனாகி
உருக் காட்டுதல் -ரூபத்தைத் தோன்றுவித்தல் -இச்சா வடிவம் எடுத்து ஆவிர்பவித்தல்
பாவகற்கே-பரிசுத்தராக்குபவர் -ஜ்யோதி ஸ்வரூபமான ஆழ்வாருக்கு

மதுர கவி ஆழ்வார் இந்த தேஜஸ்ஸூ பார்த்தே இவரை வந்து சேர்ந்தார் அன்றோ
ஆதலால் அவருக்கு பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே-என்பது பொருந்துமே
தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் -அடையப் பெற்றேன் அல்லேன்

பழுதே பல பகலும் போக்கினேன் -அஞ்சி அழுகிறார்
வேண்டிய அனைத்தையும் தர வல்லவர் ஆழ்வார் என்பதாலேயே –
சிந்தித்ததையே வேண்டிக் கொளப் பெற்றிலேன் -என்கிறார்
இங்கு சிந்தித்தது முக்தியையே இவருக்கு –

————–

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே. 78–

பாவகத்தால் -தனது தோற்றத்தைக் கண்டு அதனால்
தனது தூய்மை செய்து அருளும் தன்மையால்-பாவனத்வத்தால் – என்றுமாம்
தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப் பூவகத்தார் அறியாத வண்ணம் –திருமாலது பதினொன்றாவதாகிய
திருவவதாரமே என்று அறிந்து கொள்ளாத படி

வங்கி புரத்து நம்பி -ஆழ்வார் ப்ரபாவத்தாலே எம்பெருமானே இவ்வாறு திரு அவதரித்தார் என்னலாம் படி என்று அருளிச் செய்வார்

தன்னையே புகழந்து நாவகத்தால் கவி ஆயிரம் பாடி -தன்னையே தான் ஸ்துதித்து -திருவாய் மொழி அருளிச் செயலை அருளிச் செய்து
தானே யான் என்பானாகத் தன்னைத் தன்காண் துதித்து
யானாய்த் தன்னைத் தான் பாடி
நாராயணா அடியேன் நாடும் தமிழ் வேத பாராயணா சடகோபா -பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
திருப்புளிய மரம் ஆதி சேஷன் அம்சம் தானே
அத்ரி ஜமதக்கினி -ப்ராஹ்மண -தத்தாத்ரேயர் -பரசுராமன் முதல் யுகத்தில்
சக்ரவர்த்தி திருமகன் க்ஷத்ரியர் அடுத்த யுகத்திலும்
வைஸ்ய யதுகுல கண்ணன் அடுத்தும்
கலியுகத்தில் ஆவேச அவதாரம் -வேத வியாசராய் வேதங்களை வெளியிட்டு அருளினால் போல் திவ்ய பிரபந்தங்களை
வெளியிட்டு அருளவே அன்றோ இவர் திரு அவதாரம் –

நடித்து -வேறான ஒருவரைப் போலவே தம்மைக் காட்டி அருளி
கும்பிடு நட்டமிட்டு ஆடி -அந்தக் கூத்தாடி என்றுமாம் –
அளித்த-திவ்ய பிரபந்தங்கள் மூலம் லோகத்தாரை ரஷித்து அருளி

கோவகத்தாற் கன்றி -திருமாலாகிய ஆழ்வாருக்கே குற்றேவல் செய்யாமல்
கோ அகம் -மேலான இடம் -ஸ்ரீ வைகுண்டம்
கோபகம் -ரக்ஷிப்பவர் என்றுமாம்
என் புறத்தார் செய் குற்றேவல்களே-அந்நியர்களுக்கு செய்யும் கிஞ்சித்காரம் ஒரு நல் பயனையும் அளிக்க மாட்டாவே –
தேவதாந்த்ர பஜனத்தால் என்ன பலன் என்றவாறு

————

குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே 79–

குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே-பண் அமைதியோடு கூடிய இயல் தமிழ் அருளிச் செயல்களினால்
பண்ணார் பாடல் இன் கவிகள் அன்றோ -குருகையர் கோன் யாழினிசை வேதத்தியல் அன்றோ –
யான்
மெய் கண்டு-தத்வார்த்தங்களும் உணர்ந்து
கை கொண்டு கும்பிட்டு -கைகளால் வணங்கி
குற்றேவலும் செய்தும் -கைங்கர்யமும் செய்து
அன்பு பெற்றேன் –ஆழ்வாரது கருணையையும் பெற்றேன்
என் போல் எவர் பேறு பெற்றார் -இப் பேறு என்னைப் போல் பெற்றார் யாருமே இல்லை என்னும் படி அன்றோ இப் பேறு
இது அன்றி
பின்னையே பிறந்து-ஆழ்வார் திரு அவதாரத்துக்குப் பின்பு பிறந்து
வெற்றேவலின் நின்ற -தேவதாந்த்ர கைங்கர்யங்கள் செய்து
பொய்யன்பர் தாங்களும் -திரிபு உணர்வுடைய தொண்டர்களும்
மெய் யுணர்ந்தார் எற்றே -ஆழ்வார் அருளிச் செயல்களால் தத்வ ஞானம் பெற்றார்கள் -அறிந்து கொண்டார்களே என்ன வியப்பு –

————

தலைமகளைத் தலைமகன் கண்ணுற்று இஃது ஒரு வியப்பு என்றால் –
ஒரு தலைக்காமம்-கைக்கிளைத் திணையின் முதலான காட்சி என்னும் துறை இது

இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–80–

இன்னிசையைப் புணர்த்து-இனிமையான பண் இசைகளை அமைத்து
இயலைத் தொடுத்து -இயல் தமிழ் பாசுரங்களைப் பாடி
எம்மை யிப் பிறவி மயலைத் துடைத்த –எமது இந்தப் பிறப்பு துன்பங்களைப் போக்கி அருளிய
பிரான் -உபகாரகராகிய நம்மாழ்வாருடைய
குருகூர் –திருக் குருகூரிலே
மதியைக் கொணர்ந்து-சந்த்ர மண்டலத்தைக் கொண்டு வந்து
முயலைத் துடைத்துத் -அதன் நடுவில் உள்ள முயல் என்னும் களங்கத்தைப்[போக்கி
தனுவைப் பதித்து -அதில் இரண்டு விற்களைப் பதிய வைத்து
வில் போலே வளைந்து ஆடவர் நெஞ்சு உறுதியைப் போக்கும் ஆற்றலுடைய புருவங்களின் சிறப்பைக் கூறியவாறு
முத்தங்குயிற்றிக்-முத்துக்களை பதித்து -வெண்மையான பற்களை சொன்னவாறு
கயலைக் கிடத்திக் கொள் -இரண்டு கயல் மீன்களையும் வைத்து –பிறழுகிற கண்களை சொன்னவாறு
சாளரத்தூடு கதவிட்டதே.-பலகணியுனுள்ளே-அச் சந்த்ர மண்டலத்தை நிறுத்தி -புறத்தே கதவு அமைக்கப் பட்டதோ
இத் தோற்றம் எனத் தோன்றா எழுவாய் வருவித்து முடித்துக் கொள்ள வேண்டும் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-61-70- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 24, 2021

தலைவனைப் பிரிந்த தலைவி தென்றலுக்கு வருந்தி இரங்குதல் –

கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே. 61–

கூறப் படா மறையின் பொருள் கூறிக் -தெளியா மறை நிலங்களை தெளியும்படி அருளிச் செய்து
குவலயத்தோர் மாறப் படா வினை மாற்றிய -பண்டை வல் வினை பாற்றி அருளிச் செய்து
மாறன் மகிழலங்கல் நாறப் படா நின்ற போது –மகிழம்பூ மணம் வீசப்பெறும் காலத்தில்
அமுது ஆகும் -தென்றல் காற்று அமுதம் போல் இருக்கும்
அதன்றி நஞ்சம் தேறப் படாது –அம்மணம் பெறாத போது விஷம் போலே கொடுமையாக இருக்குமே
கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே–ஆகவே தென்றல் காற்றை நம்பப் போகாதே

கெட்டேன் -மிக்க இரக்கத்தால் கூறும் வார்த்தை
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வில்லை -பெரியாழ்வார்
தென்றலும் தீயினும் கொடி தாம் -கலியன்

லௌகிக பதார்த்தங்கள் ஆழ்வார் சம்பந்தத்தால் உபாதேயமாகவும்
இல்லையாகில் த்யாஜ்யமாகவும் இருப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –

———–

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே. 62–

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை -தெண் திசை உண்டாக்கிய உபநிஷத்தும்
என் தீ வினையை நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை –எனது கர்மங்களைப் பாற்றி அருளி
பொருந்திய நீதி மார்க்கம் யுடையதுமாய்
நிறை குருகூர் மன்றலைத் தோன்றும் மதுரகவியை –எல்லா வளங்களும் நிறைந்த திருக்குருகூரில் அவதரித்த
ஆழ்வார் பக்கல் உண்டான சொல்லிலும் பொருளிலும் இனிய பாசுரங்களை
அலைத்து நின்று என்றுமாம் –
மனத்துள் வைப்பார்-ஓதி உணர்ந்து தம் மனதில் வைத்துக் கொள்பவர்கள்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் -என் சென்னியில் வைத்து விளங்கும் என் தலைவராவார்
என் நாவுக் குரியவரே.-என்னால் ஸ்துதிக்கப் படுமவரும் அவரே

அப்பனைப் பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர் மறுமையும் இம்மையும்
நம்மை அளிக்கும் பிராக்களே –
ஆழ்வார் அடியார் அடியார் அடியோங்களே என்கிறார்

————-

உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே. 63–

பிறர் புன் கவி -மற்றவரின் புல்லிய பாடல்கள்
உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என –உரிக்கப்படுகின்ற வெண் காந்தளின் பெரிய கிழங்கு போல்
காந்தம் -கிழங்கு
ஒன்றுமின்றி விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் –வகுத்து நோக்க நோக்க சாரம் ஒன்றும் இல்லாமல்
மிகவும் பயன் அற்றவையாய் போய் விடும்
மெய் தெரிக்கின்ற கோச் சடகோபன் –உண்மைப் பொருளையே உணர்த்தும் ஆழ்வார்
தன் தெய்வக் கவி -யுடைய திவ்ய ப்ரபந்தங்களோ
தோண்டச் சுரத்தலினே–ஆழ்ந்து நோக்க நோக்க மென்மேலும் நற்பொருள் இடையறாது வெளிப்படுதலால்
புவியில் சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் -நுண்ணிய மணல் பாங்கில் நீரூற்றைப் போன்று இருக்கும் –

தொட்டனைத்து உறும் மணல் கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊரும் அறிவு

————–

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே. 64–

திரக்கும் -உறுதி பெற்ற -நன்கு வளர்ந்து முதிர்ந்த –ஸ்திரம் -வடமொழி
கழை நெடுந் தாளில் -நீண்ட கருப்பந்தண்டிலே
கழை-மூங்கில் என்றுமாம் -மருத நிலா வருணனைக்குச் சேராது
தொடுத்த செந் தேன் -கட்டிய சிவந்த தேனையுடைய கூடுகள்
கயல் குதிப்ப உடைந்து-கயல் மீன்கள் துள்ளி விழும் போது அவை படுதலால் உடைபட்ட
பரக்கும் –தேன் பரவிப் பாயப் பெற்ற
பழன வயல் குருகூர் –கழனி களை யுடைய மருத நிலம் சூழ்ந்த ஆழ்வார் திரு நகரி யுடைய
வளம் படுமினே-மஹிமையை கவி பாடி ஸ்துதியுங்கோள் –
அங்கனம் பாடினீராகில் உங்களுக்கு
சுரக்கும் திருவும் -கைங்கர்ய ஸ்ரீ வளரும்
வறுமையும் தீரும் –தரித்திரம் நீங்கும் -சம்சாரம் தொலையும்
தொடக்கு விட்டுக் கரக்கும் இருவினை –புண்ய பாப இரு வினைகளும் தொடர்ச்சி நீங்கி
இருந்த இடம் தெரியாதபடி அழிந்து விடும் –
தொடக்கு –கட்டு -பந்தம்
மேன்மையும் காணும்–எல்லா மேன்மைகளை உண்டாகும் –

———–

பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே. 65–

இச் சுழல் பிறவி ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை –காற்றாடி போன்று கர்மங்களால் உண்டாகும் பிறவிச் சூழலை
நீக்கி யுணர்வுதவி-அடியார்களுக்கு போக்கி அருளி நல் ஞானத்தையும் அருளி
வீடும் திறந்து தந்தானை –ஸ்ரீ வைகுண்டமும் கொடுத்து அருளி
பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் -வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டு
பாடும் -பக்கம் முழுவதும் என்றுமாம் –
பைந் தாள் குவளை யோடும் கறங்கும் -பசுமையான நாளத்தை யுடைய குவளைகளின் இதழ்களும் சுழலப் பெற்ற
குருகைப் பிரான் எந்நான்றும் விடகிலமே.–திருக் குருகையில் திரு அவதாரம் செய்து அருளிய ஆழ்வாரை விட்டுப் பிரிய மாட்டோம்

——-

விஸ்லேஷத்தில் மாலைப் பொழுதுக்கும் இருளுக்கும் தலைவியின் ஆற்றாத துயர் கண்டு தோழி இரங்கல்

விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே. 66–

விட வந்தகார –கருமையாலும் கொடுமையாலும் விஷம் போன்ற இருளை யுடைய
வெம் பாலிற் -கொடிய இரவாகிய காலப்பகுதியில்
பராங்குசர் மெல்லியலுக்கு இடர் வந்ததால் என்று இரங்கிப் புணர்ந்திலர் –மனம் இரங்கி வந்து கூடினார் அல்லர்
இன்று இவ் வந்தி வந்து பட –மாலைப்பொழுதாகிய பெரும் தீயும் வந்து சேர
அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே.–இருளாகிய பெரும் புகை எங்கும் பரவி
இன்னுயிரை அட வந்த காலன் கொலோ அறியேன்

——————

உடன் போக்கில் தலைவன் தலைவிக்குத் தன் நகர் அணிமை கூறல்

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே. 67–

சுருதிப் பசுக்கள் சுரவா தவற்றைச் சுரப்பித்து-வேதப்பொருளாகிய பாலை எளிதில் சுரக்கும்படி செய்து
அவை சொரியும் பொருள் பால் –தத்வப் பொருளாகிய பாலை
கரவாது உதவிய மாறன் –லோபம் செய்யாதே திவ்ய பிரபந்தங்கள் மூலம் அனைவருக்கும் கொடுத்து அருளிய ஆழ்வாருடைய
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபன் அன்றோ
கவி அனையாய் – ஆழ்வாருடைய திவ்ய பாசுரங்களை ஒத்த சிறப்பையும் இனிமையும் யுடைய மங்கையே
இனி இப்புறம் ஓர் சர வாதம் -இனி எனது ஊருக்கு இப்பால் செல்ல வேண்டிய இடம் ஓர் அம்பு வீழ்ச்சி அளவு தான்
சர பாதம் -சர வாதம் என்று விகாரப்பட்டுள்ளது-சர பாத ஸ்தானம் -எய்த அம்பு விழும் தூரம்
அப்புறம் அ தட பணையே காண் –அதற்கு அப்பால் முன்பு நான் சொல்லி இருக்கிற எனது ஊரின் எல்லை யாகிய மருத நிலமே காண்
ஆகவே
இனி பரவாது கேட்டு பைய நட -விரைவு கொள்ளாமல் நான் சொல்லும் வார்த்தையை கேட்டுக் கொண்டு மெல்ல நடப்பாய்
புணர்ந்து உடன் போந்த தலைமகன் நடந்து இளைத்த தலைவியைக் குறித்து இடந்தலைப் பெய்தமை சொன்ன பாசுரம் –
சம்சார மார்கத்தைக் கடந்து ஸ்ரீ வைகுண்டம் அழைத்துச் செல்லும் ஆழ்வார் அந்த ஸ்தானம் அணித்தமையைச் சொன்னவாறு –

——————-

பிரிவாற்றாது வருந்தும் தலைவி கார் கண்டு கலங்குதல் –

தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே. 68–

தடம் பணைத் –அகன்ற வயல்களை யுடையதும்
தண் -நீர் வளத்தால் குளிர்ச்சியானதும்
பொருநைக் குருகூரர் –ஆழ்வாருடைய
தகை வகுள வடம் –அழகிய மகிழம் பூ மாலையை
எவ்வகைத் தாபத்தையும் தணிக்க வல்ல வகுள மாலை அன்றோ
பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் –பாங்கிமார் கொணர்ந்து பருத்த எனது கொங்கைகளிலே வைக்கின்றார் இல்லை
மற்றை மாலை யெல்லாம் உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் –மற்ற மாலைகள் அனைத்தும்
விரஹ தாபத்தால் வெந்து பொடியாய் உதிர்ந்து விடும்
இந்நிலையில்
பனி தோய்ந்திடு மேகங்களே–நீர்த்துளி நிறைந்த மேகங்களோ
ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த விடம் பணைக் கொண்டனவே -கொடிய ஐந்து பாம்புகள் ஒருங்கே உமிழ்ந்த விஷங்கள் போலெ திரண்டனவே
கொடிய ஐந்தலை நாகம் என்றுமாம் –
பொருள் ஈட்டி பின்பு கார் காலத்தில் மீண்டு வருவதாக சொல்லிப் போந்த தலைமகன் வாராமையாலே
ஆழ்வாருக்கு போலியான மேகங்கள் இந்நிலையில் வருத்தத்தை மிகுவிக்கும் -போலி கண்டு அழிதல் –

————-

பொருள் வயில் பிரிந்து சென்று மீளும் தலைமகன் முகிலொடு கூறல் –

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே. 69–

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது –மேகங்கள் ஆகிய உங்களை இடை வழியிலே கண்டு
செய்தி கூறினேன் என்று இதனை ஒரு இழிவாக நீங்கள் நினையாமல்
மெய்யன் குருகூர்ப் பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் –உண்மைப் பொருளையே உணர்த்தும் ஆழ்வாரது
மிக இனிய சொற்களை யுடைய என் காதலியை
கண்ணீரின் துளி பரந்த மோகத்தை ஆற்றிக் கொண்டே –விஞ்சியுள்ள மோஹத்தை தணிவித்துக் கொண்டே
நீங்கள் சமீபிப்பவர்களாய்
கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச் சோகத்தை ஆற்றிக் கொண்டே –நீங்கள் வருகிற வழியில் நான்
மீண்டு வருவதைக் கண்ட செய்தியைச் சொல்லி அவளது விரஹ வேதனையை சாந்தப்படுத்திக் கொண்டே
துளித் தூவத் தொடங்குகவே.-மழைத் துளி பெய்யத் தொடங்குவீர்களாக
மேகங்களை பாகவதர்களாக சொல்லாத தட்டில்லையே
ஆழ்வார் வரை அறிவித்து ஆஸ்வாசப்படுத்த சொன்னபடி

——————

மதங்கு -மதங்கம் — மதங்கியார் -மண்டலம் சுற்றுதல் –

தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே. 70–

சவையீர்–சபையில் உள்ளவர்களே
சொல்லு கின்றேன்-நான் உங்களுக்கு ஒரு உறுதி சொல்கின்றேன் -கேளுங்கள்
மதங்கி–ஆடல் பாடல் வல்ல ஓர் இள மங்கை
நடம் தொடங்கு கின்றாள்–கூத்தாடத் தொடங்குகின்றாள்
குருகூரர் தொழா மடங்கு கின்றாள் –ஆழ்வாரை தொடக்கத்திலே தொழுது திரைக்குள்ளே திரும்பிச் செல்லுகின்றாள்
மண்டலம் சுற்றி யாடுகின்றாள் -மண்டலமாக அங்கேயே இருந்து சுழன்று கூத்தாடுகின்றாள்
விடங்கு கண்டார் பிழைப்பார் -இந்த மதங்கியின் அழகைக் கண்டு காதல் நோயால் மரண வேதனைப்படாது
பிழைப்பவர் எவர் -எவரும் இல்லை என்றபடி
இந்த படங்கு விண்டால் உம் பதிகளுக்கே பின்னைப் போக ஒண்ணாது –இந்தத் திரையை வாங்கி விட்டால் –
அவளது அழகைக் கண்டு மோஹித்து விழாமல் உங்கள் ஊருக்குப் போக முடியாதே
ஆதலால்
விரைந்து ஏகும் -யாத்திரை வாங்குவதற்கு முன்னே அப்பால் போய் விடுங்கோள் –

பக்தி அதிசயத்தைக் கண்டவர் இவர் பக்கல் ஈடுபடுவதை விட்டு
பிரபஞ்ச விஷயங்களில் செல்ல இயலாமையைச் சொன்னவாறு

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-51-60- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 23, 2021

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே. 51–

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே -அதிர்ஷ்டம் இருக்கும் போதும் அந் நன்மை மிகுதி நேராமல் தவறுதல் உண்டோ -இல்லை என்றபடி
பிறர் பால் வெறும்பாக் கிளத்தி -மற்றவர் மேல் பயன் இல்லாத பாடல்களைப் பாடிக் கொண்டு
மாரி அனைய கை–மால் வரை ஒக்கும் திண் தோள் என்று பாரிலோர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே -திருவாய் மொழி

மெலிகின்ற -திரிந்து இளைக்கின்றவனும்
என்னை வினை கொடுப் போய் எறும்பாக்கிய தமியேனை -தீ வினைகளால்
வலிய இழுத்துக் கொண்டு சென்று எறும்பு போல் எளியவனாக்கி -வேறு கதி அற்றவனான என்னை
இரும் பாடு எரி கொள்ளியினுள் எறும்பு போல் உருகா நிற்கும் என்னுள்ளம் -கலியன்

குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து-தீமைகள் செய்யும் படியான மூன்றுவகை பகைகளையும்-
காமம் கோபம் மயக்கம் -போன்றவை -வித்யா மதம் குல மதம் சீல மதம் -உயர் பிறப்பு மதம் -போல்வனவும் – போக்கி
ஆண்ட குருகை மன்னே-கைங்கர்ய ஸ்ரீ யும் அளித்து அருளி
அமரர்க்கும் ஏற விட்டான்-தேவர்களிலும் மேலாக்கி அருளி விட்டான் –

விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -என்றுமாம் –

அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –

———-

குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே. 52–

எம்மை யுள்ளும் சுற்றும்–ஜீவாத்மாக்களான நம்மை -புறத்தே அன்றே அகத்தும் சூழ்ந்து உள்ள
இருகூர் வினையும் அறுத்து-மிகுதியாக புண்ய பாப இருவகை கர்மங்களையும் துணித்து
சஞ்சிதம் ப்ராரப்தம் ஆகாம்யம் அனைத்தையும் என்றுமாம்

இறப் பார்க்கும்-அவ்வினை மரத்தை வேரோடு அழியும் படி செய்வதான
பார்த்தல் -செய்தல் என்ற பொருளில் வந்தது இங்கு
இயற்கை-தன்மை கொண்ட
குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி -ஆழ்வார் அடியார் குழாங்களுடன் கூடி
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -ஸ்ரீ மன் நாதமுனிகள் -ஸ்ரீ பராங்குச தாஸர் போல்வார்
அன்புற்று-அவர்கள் பக்கல் அன்பு பூண்டு அவரகள் அன்புக்கும் அபிமானத்துக்கும் இலக்காகியும் என்றுமாம்

இன்புற்று -பாட பேதம் –
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே -அவர்களுடன் நித்ய வாஸம் செய்பவர்களுக்கும் உள்ளதேயாம்
தொண்டக்குடியாக இருந்தால் என்றபடி
மற்றும்
யவ்வூர் அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே–சமீபத்தில் உள்ளாருக்கும்
அடுத்து அடுத்து வேறு ஊரில் உள்ளாருக்கும் உண்டே

அருகு ஊர் -நவ திருப்பதிகள்
அசலூர் -திரு வழுதி வள நாட்டில் உள்ளவை
அதன் அயலார் -ஆழ்வார் சம்பந்தம் உடையார் அனைவரும்
இரண்டு ஏவகாரங்களும் தேற்ற ஏவகாரம்

———-

தலைவன் பிரிந்த நிலையில் ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல் –

அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே. 53–

அன்றாத அன்றிலையும் அன்று வித்து -எவருடன் பகை கொள்ளாத அன்றில் பறைவையுடனும் இப்பொழுது
என்னுடன் பகை கொள்ளும் படி செய்து அருளி
குருகு -கிரௌஞ்சம் -எப்பொழுதும் இணையுடனே இருக்குமே
அன்றுதல் – பகைத்தல்
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டனை -கலியன்
என்னை அன்னையுடன் பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் -என்னுடைய செவிலித் தாயுடன் மாறுபடத்
தகாத வகைகளில் எல்லாம் மாறுபாடச் செய்வித்து அருளி
பிழைக் கொழுந்தை ஒன்றாத வண்ணம் -இளஞ்சந்த்ரனை என்னுடன் வேறுபாடு கொள்ளும்படி
உபாயம் இயற்றியது –சூழ்ச்சி செய்து அருளியது
யாதோ என்னில்
ஊழ் வினையை வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே–விதியை வென்ற ஆழ்வாருடைய
மகிழம்பூ மாலையே தவிர வேறே ஒன்றும் இல்லையே

ஆழ்வார் மனக் கண்ணில் தோன்றி பாஹ்ய ஸம்ச்லேஷம் பெறாமல் வருந்தி அருளிச் செய்யும் பாசுரம் இது –

———–

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே. 54–

செந் தமிழ்ப் புலவர்க்கு ஏறே -கவி ஸிம்ஹமே
எதிகளுக்கு இன்னமுதே–ராமானுஜர் போல்வாருக்கு ஆராவமுதமே
எறி நீர்ப் பொருநை ஆறே தொடர் குருகூர் -அலை வீசுகின்ற நீர்ப்பெருக்கை யுடைய தாமிரபரணி
இடையறாது பாயப்பெற்ற திருக்குருகூரில் திரு அவதரித்த
மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே–வைதிகர்கள் பெறாப் பேறாகப் பெற்ற மாற்று உயர்ந்த அரும் பொன் போன்றவரே
வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனல் -இவன் சிறப்பாக அன்பு உள்ள அடியவன் என்று என்னைக் குறித்து மனப் பூர்வகமாக நம்ப மாட்டேன் என்று கொள்ளாதே
அது தேறத் தகும் -அங்கனம் மெய்யடியவனாக என்னை நீ நம்பத்தகும்

———–

பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. 55–

பெருந் தண் குருகூர்-மகிமையுடைய -நீர் வளம் மிக்கு குளிர்ந்த திருக்குருகூரில் திரு அவதரித்த
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. -இயல் தமிழுக்கும் இசைத் தமிழுக்கும்
தலையில் அணியும் ரத்ன ஆபரணம் போல் அனைவராலும் கொண்டாடப்படுபவரே
பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே –மாற்று அறிய பொன்னோடே அன்றோ பொன்னை உரைத்துப் பார்ப்பது
அங்கனம் நோக்கப் புகும் இடத்து
உயற் நாற் கவியும் பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் — –எல்லை நிலமாகச் சொல்லத் தக்கது அல்லால்
புலமைக் கொருவர் உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ –உமக்கு ஈடாக மாற்று சொல்ல ஒருவரும் இல்லையே

தமிழுக்கு தென் மொழி -தென் சொல் -தென் காலை போல் தென்னுரை என்றும் உண்டே
ஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு -பெரிய திருமடல்
குருகையர் கோன் யாழின் இசை வேதத்து இயல் -என்பதால் சிகாமணி

———–

மகட் பாற் காஞ்சி -நின் மகளை எனக்குத் தருக என்ற அரசனிடம் மாறுபடுவது

மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே. 56–

எம் தீ வினையைத் துணித்தான்–கர்மங்களைப் போக்கி அருளியவரும் –
பண்டை பல்வினை பாற்றி அருளியவர் அன்றோ
தமிழால் சுருதிப் பொருளைப் பணித்தான்-வேதம் தமிழ் செய்து அருளியவரும் –
அவ்வருமறையின் பொருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அன்றோ
குருகைப் பிரான் பணி யன்றெனில் –அவர் கட்டளை அன்றாயின்
மணித் தார் அரசன் தன் ஓலையைத் –இரத்தின மாலை அணிந்த அரசனது திரு முகத்தை
தூதுவன் வாய் வழியே திணித்து -தூதன் வாயினுள்ளே புகுத்தி அவன் வாயை அடைத்து
ஆசழியச் சிதைமின் தலையை -பெண்ணைக் கொடு என்று
கேட்ட குற்றம் தீருமாறு -அத் தூதன் தலையைத் துணுத்திடுங்கோள்
கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே-எம் குருகைப் பிரான் அன்றி மற்ற ஓர் அரசன் எமது பெண்ணைக் கொள்வான் போலும்
பாவை -சித்திரப் பிரதிமை -கண் மணிப் பாவை –கொல்லிப் பாவை போல் –

———–

பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே. 57–

பழத்தைப் -கனிந்த பலம் போன்ற இனிமை யுடையதும்
பசும் கற்பகத்தின் பூவைப் -வேண்டுவார் வேண்டுவற்றைக் கொடுப்பதாலும் அனைவரும்
தலை மேல் கொள்ளும் சிறப்பினாலும் கற்பக வ்ருக்ஷத்தின் மலர் போன்றதும்
பொரு கடல் போதா அமுதைப் -அலை மோதும் பாற் கடலில் நின்றும் தோன்றாத ஆரா அமுதமாயும் –
இல் பொருள் உவமை இது
பொருள் சுரக்கும் கோவைப் -நல்ல பொருளை சுரக்கும் காம தேனு வாகவும்
திருவாய் மொழிப் பாவைப் பணித்த எம் கோவை -திருவாய் மலர்ந்து அருளிச் செய்த எமது ஸ்வாமியான ஆழ்வாரை
யல்லா -அல்லாமல் பிறரை முன்பு கவி பாடிய
என்னைக்
குற்றம் கண்டென்-இவரை முன்னமே பாடாத குற்றம் யுடையவனாக உணர்ந்து
மற்றை நாவலரே என் நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ -மற்றைப் புலவர்கள் எனது நாக்கைத் பிடுங்கினாலும் நல்லவர் அல்லரோ
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அது குறித்து அனுதாபம் கொண்டு அக்கழிவு இரக்கத்தால் கூறியது இது –
நாவலர் -கவனம் பிரசங்கம் போதனை முதலிய நாவின் வன்மை யுடையவர் என்றவாறு –

———-

நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே. 58–

நாவலந் தீவில் –அம் நாவல் தீவில் -அழகிய ஐம்பூத் வீபத்தில்
கவிகள் எல்லாம் சில நாள் கழியப்–பிறர் பாடிய பாடல்கள் சில நாள்கள் கழிகிற அளவிலே
பூவலந் தீவது போல்வ அல்லால் -மலரின் மணம் மென்மை முதலிய சிறப்புக்கள் கெட்டு அழிவது போலேத் தாம் கெட்டிடுமே யல்லாமல்
குருகூர்ப் புலவன் கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் -பண்டை வல் வினை பற்றி அருளும் ஆழ்வார் பாசுரங்கள் போல்
எங்கும் போய்க் கெழுமிக்-எல்லா இடங்களிலும் பரவி
வெள்ளம் கோளிழைத்தே–வெள்ளத்தைப் போவதாய்
ஆழ் பொருளான பரமாத்மாவைத் தெளிவாகக் காட்டி அருளும்
பிரளய வெள்ளத்திலும் அழியாமல் நிலை நின்று
அதுக்கும் மேலே
கூவலந் தீம் புனலும் கொள்ளும்மே –கிணற்றில் உள்ள அழகிய இனிய நீரையும் கொள்ள மட்டுமோ -மாட்டாது என்றபடி
கிணற்று நீர் -போல் அந்தர்யாமித்வத்தையும் விளக்கிக் காட்ட வல்லது -என்றபடி

————–

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார்க்கும ரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே. 59–

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை -அபவ்ருஷேயமான நித்யமான வேதங்களை
இன் தமிழால் குழைந்தார் -தமிழால் தளைக்கச் செய்து அருளியவரும் –
குருகையிற் கூட்டம் கொண்டார்-திருக் குருகையில் சேர்ந்த -திரு அவதரித்தவரும் —
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருடனும் இங்கேயே சேர்ந்து அவருக்கும் அருள் புரிந்தார்
குமரித் துறைவர்-கன்னியாகுமரி என்னும் தீர்த்தத்துக்கு உரியவருமாகிய ஆழ்வார்
பாண்டிய மன்னனை -குமரித் துறைவன் என்றும் கன்னித் துறைவன் என்றும் சொல்வது உண்டே
வானின் வரம்பிடை நின்று–பரமபதத்தை எல்லையில் நின்று கொண்டு
மழைத்தார் தடக் கைகளால் என்னை அழைத்தார் -மேகம் போன்ற வண்மையான திருக்கைகளால்
என்னை அவ்விடத்துக்கு வா என்று அழைத்தார்
அறிவும் தந்தார் -அது மாத்ரமும் இல்லாமல் அங்கு செல்லுவதற்கு உரிய தத்வ ஞானத்தையும் தந்து அருளினார்
அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே–ஆதலால் இங்கு அர்ச்சா ரூபியான ஆழ்வாருக்கு
கைங்கர்யம் செய்வதோடு நிற்காமல் அங்கும் சென்று அவருக்கே அடிமை செய்வேன் என்கிறார் –

———–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே. 60–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தேன் –அடிமைத் தொழில்கள் அனைத்தையும் செய்து
ஆழ்வார் திருவடி இணைகளை அடைந்தேன்
அதன்றித்-அது மட்டும் அல்லாமல்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் –திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொருத்தப் பெற்றேன்
தண் குருகூர் நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் –ஆழ்வார் திரு நாமத்தையும் வைபவத்தையும்
திரு அவதார ஸ்தல மஹாத்ம்யத்தையும் பாராட்டிக் கூறினேன்
இனி-இப்படி ஆழ்வாரை சரண் அடைந்து ஏற்றிய பின்பு
நாட் குறித்துக் கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே–யம பயம் தான் உண்டோ
உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறு கப் பெறா

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-41-50- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 23, 2021

மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே. 41–

மூர்த்தத்தினை–ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும்
இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற தீர்த்தத்தினைச் –ஸமஸ்த உலகங்களும் அடங்கும் இடமான
ஸ்வயம் பரிசுத்தமான பர ப்ரஹ்மத்தின் தன்மையையும்
செய்ய வேதத்தினைத் -செவ்வியை யுடைய வேதங்களையும்
திருமால் பெருமை பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் –ஸ்ரீ கீதாச்சார்யன்
அர்ஜுனனுக்கு உபதேசித்து அருளிய ஸ்ரீ பகவத் கீதையை யுள் அடக்கிய மஹா பாரதத்தை
பணித்தானும் -அருளிச் செய்த வேத வியாச பகவானும்
நின்ற வார்த்தைக் குருகைப் பிரானும் -நிலை நிற்கும் திவ்ய ஸூ க்திகள் அருளிச் செய்து அருளிய ஆழ்வாரும்
நின்ற வார்த்தை -நிலை பெற்ற புகழ் என்றுமாம் –
ஆகிய இருவருமே
கண்டான் அம் மறைப் பொருளே-ரஹஸ்ய வேத ஸாரார்த்தங்களை அறிந்தவர்கள்
பணித்தானும் கண்டான் -குருகைப் பிரானும் கண்டான் என்றவாறு –

———

பொருள் வயிற் பிரியும் தலைவனுக்குத் தோழி தலைவியின் ஆற்றாமை கூறுதல் –

பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே. 42–

குரு கூர்ப் புனிதன் அருளைச் சுமந்தவள் -ஆழ்வாரது கருணையை மிகுதியாகப் பெற்றவளான தலை மகளினது
கண்ணின் கடை -கண்களின் நுனி இடத்தை
திறந்து -திறந்து -அவ்வழியாக வெளிப்பட்டு
ஆறுபட்டுக்–ஒரு ஆறாகி
குருளைச் சுமந்து வெளி பரந்து ஓட்டரும்–பலவகை விலங்கின் குட்டிகளை இழுத்து மேற் கொண்டு
வெளியான நிலம் எங்கும் பரவி ஓடுவதான
கொள்ளை வெள்ளம்-மிகுதியான கண்ணீர்ப் பெருக்கானது
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே.–சக்கரங்கள் பூண்ட -ரத்தினங்கள் பதித்த
தலைமகன் தேரை வந்து மோதுகின்றதே
பிரயாணத்துக்குத் தடை செய்கின்றது என்றவாறு

இங்கனமாக
பொருளைச் சுவை யென்று போவ தெங்கே –தலைமகன் செல்வதை இனியது என்று எண்ணி –
அதன் பொருட்டு இவளைப் பிரிந்து செல்வது எவ்வாறு என்றவாறு –

கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்-என்றதும்
தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே-என்றதும்
அதிசய யுக்தி வகையால் கண்ணீர்ப் பெருக்கை காட்டியவாறு –

உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற -பெரியாழ்வார் –
ஓட்டம் தந்து என்பதையே ஓட்டந்து என்று விகாரப்பட்டது

ஆழ்வார் கம்ப நாட்டாரை விஷயீ கரித்து திவ்ய தேச யாத்திரை செர்ல்ல யத்தனிக்க
அப்பிரிவை ஆற்றாது நின்ற நிலையை அன்பர்கள் ஆழ்வார் பக்கலிலே
விண்ணப்பம் செய்தல் இதுக்கு ஸ்வா பதேசம் –

————

மருங்கு அணைதல் –

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே. 43–

மாறன் குருகை வஞ்சி-ஆழ்வார் திரு நகரியிலே வஞ்சிக்கொடி போல் உள்ள இந்த இளைய மாதினிடத்தே
கொங்கைகள் -வந்து அடிக் கொண்டன -கொங்கைகள் -மங்கைப் பருவம் தோன்ற
வளர்ந்து மார்பின் இடம் எல்லாம் தம்மிடமாகக் கொண்டன
இங்கனம் தனது பாரம் மிக்கதானால்
கொந்து அடிக் கொண்ட சூழலும் கலையும் குலைந்தலைய–பூங்கொத்துக்கள் நிறைய சூட்டப் பட்ட கூந்தல் பாரமும்
உடுத்த ஆடையும் நிலை குலைந்து சோருமாறு -இம் மெல்லியலாள்
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது –இவள் இடைக்கு என்னாகுமோ என்று
நெஞ்சம் பட பட என்று துடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே.–செவ்விய மின்னல் போன்ற இவள் இடைக்கு
இப்பாரங்களை -துவளாது நின்று -சுமக்கும் வல்லமை இருக்குமோ

வாடிடை நோக்கி வருந்தினன் போல் ஆடமை தோழியை ஆர்வமோடு அணைதல்

இவரது பக்தி வளர்ச்சியும் ப்ராணாமம் முதலிய முயற்சிகள் நிலை குலையும்படி நேர்கிற
பிரபஞ்ச போக லீலைக்கு அவர் உரியர் அல்லாமையும்
அவரது வைராக்யத்தின் முதிர்ச்சியையும் பாராட்டிக் கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்

இடை அழகு -ஒன்றும் பொறாத வைராக்யத்தையே காட்டும்
வேறு ஒன்றின் தொடர்பு உண்டானால் இடையே இல்லாதபடி இடையறாத அன்பின் மிகுதியைக் காட்டும்
கொங்கை பக்தி -பகவத் பாகவத அனுபவ உபகரணம்
வந்து அடிக் கொள்ளுதல் –அதன் முதிர்ச்சி -பரம பக்தியாக பரிணமித்தல்
கொந்து அடிக் கொண்ட குழல் -விதி முறைப்படி செய்யும் பிரணாமம்

—————

கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே. 44–

கன வாயினவும் -ஸ்வப்ன அவஸ்தையின் வகைகளும்
துரியமும் –துரிய அவஸ்தையும்
ஆயவையும் கடந்து-மற்ற அவற்றின் இனமான ஜாக்ரத ஸூஷ்ப்தி அவஸ்தைகளையும் கடந்து
மன வாசகங்களை வீசிய -மநோ வாக்குகளைக் கடந்த
மாறனை –ஆழ்வாரை
மா மறையை வினவா துணர்ந்த விரகனை -எம்பெருமானாலேயே மயர்வற மதி நலம் அருளப்பட்ட ஆழ்வாரை
வெவ் வினையைத் தொலைத்த சின வாரணத்தைக் –யானை போன்றவரும் -சடகோபர் அன்றோ
குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே–ஆழ்வாரை சரணம் அடைந்தோமே
ஆழ்வார் திருவடிகளே சரணம் -என்றபடி

———

சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே. 45–

அவ் வரியினுக்கே–அந்த ஸ்ரீ ஹரி -ஸ்ரீ மன் நாராயணனுக்கு
வேதம் செப்பும் பேராயிரம் -நாமோ ஸஹஸ்ரவான் -பேர் ஆயிரம் உடையான் அன்றோ
திண் பெரும் புயம் ஆயிரம் –தோள்கள் ஆயிரத்தாய்
பெய் துளவத் தாரார் முடியாயிரம்– திருத்துழாய் மாலை பொருந்திய முடிகள் ஆயிரத்தாய்
இப்படி அனைத்துமே ஆயிரமாக -எண்ணிறந்தவையாக -அமையப் பெற்ற எம்பெருமானுக்கு
குரு கூர்ச் சட கோபன் சொன்ன ஆரா அமுதம் கவி ஆயிரம் –வான் திகழும் சோலை மதிள் அரங்கன்
வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் –
மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் –
சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு -மற்றும் இவருக்கு சேராத பொருள் உண்டோ –

————

தோழி இரங்கல் –

அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே. 46–

முரிவளை முத்தும் -பெரிய சங்கினால் பெறப்பட்ட முத்தும்
சினையும்-அன்னப்பறவை ஈன்ற முட்டையும்
மயங்க-நீர்த்துறையிலே கலந்து மாறாடினவாக
அவற்றைக் குறித்து
வரி வளையும் அன்னமும் -உள் சுழியை யுடைய சங்கும் அன்னப் பறவையும்
முறை செறுத்து தம்மிலே வழக்காட–ஒன்றன் பொருளை மற்றது தன்னது என்று மயங்குவதால்
நீதி முறை கடந்து தமக்குள்ளே -ஒன்றோடு ஓன்று வழக்காட
வலம் புரிவளை யூடறுக்கும்–வலம்புரி சங்கு சென்று நாடு நின்று அவற்றின் போரை விலக்குவதற்கு இடமான
குருகூர் எம் புரவலனே.-ஆழ்வாரான நம் தலைவர்
அந்தி வந்து-இன்று மாலைப் பொழுதில் மீண்டு வந்து
அரிவளை பொன் மகிழ் -வண்டுகள் சூழ்ந்து மொய்க்கப் பெற்ற அழகிய தனது மகிழம்பூ மாலையை
அரி வளை -தான் கவர்ந்த அபஹரித்த வளை என்றுமாம்
ஆயிழைக்கு ஈயும் கொல் -தேர்ந்து எடுத்து அணிந்த ஆபரணங்களை யுடைய இம்மட மங்கைக்குக் கொடுத்து அருள் வானோ

கம்ப நாட்டாழ்வாருக்கு மனக்கண்ணில் சேவை சாதித்து மறைந்த ஆழ்வார் இடம் பிரிவாற்றாமையாலே
அவர் ஸதா ஸாந்நித்யத்தை அபேக்ஷித்து ஆதாரத்தோடு கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்
அரிவளை பொன் மகிழ்–சார க்ராஹிகள் மிக விரும்பி விடாத தம் காட்சி இன்பம்
ஆயிழை -ஆத்ம பூஷணம் -ஸத்குணவாதி
அந்தி வருதல் -உரிய சமயத்தில் உபேக்ஷியாது வருதல் –

——–

தலைவி கடலை நோக்கித் தேர் வழி தூரல் என்றல்

புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கடை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே. 47–

புரை துடைத்துப் –ஐம் புலன்களால் உண்டாகும் குற்றங்களை போக்கி
பெரும் பொய்யும் துடைத்துப் -அவற்றுக்கு மூல காரணமான மகா மாயையும் போக்கி
பிறர் புகலும் உரை துடைத்து -புற சமயத்தார் வாதங்களை பொருந்தாமை காட்டிக் கழித்து
அங்குள்ள வூசல் துடைத்து -பரதத்வ நிர்ணயத்தில் தடுமாற்றத்தையும் தீர்த்து
எம் முறு பிறவித் துரை துடைத்து ஆட் கொண்ட -பிறவித்துயர் தீர்த்து கைங்கர்யமும் கொண்டு அருளிய
தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை-ஆழ்வார் திருமஞ்சன துறையுடைய தாமிரபரணி
கடை துடைக்குங் கடலே -பெரு வெள்ளமாக வந்து கரையை உடைக்கப் பெற்ற கடலே
துடையேல் அன்பர் கால் சுவடே.-கருணையால் நிர்ஹேதுகமாக சம்ச்லேஷித்து சென்ற தலைவனது
திருவடிச் சுவட்டை அழித்திடாதே

ஸம்ஸார ஆரணவத்தை நோக்கி கம்ப நாட்டாழ்வார் தமது மநோ ரதம் அழியாமல் இருக்க
பிரார்த்திப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –
கடலில் நதி கலப்பது -ஆழ்வார் சம்பந்தத்தை இந்த லீலா விபூதிக்குக் காட்டி உறவு கொண்டாடின படி

———————

செவிலித்தாய் நல் தாய்க்கு இருவர் காதலும் உரைத்தல் —

சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே. 48–

நங்காய்-செவிலித்தாய் நல் தாயை விளித்து
இரண்டு கவடிறக் -தனக்கு முன்னும் பின்னும் உள்ளனவாய்த்த தன்னைக் காட்டுதற்கு ஆதாரமான மரத்தறிகள் இரண்டும் ஓடிய
உள் பகை புறப்பகை -வஞ்ச வர்க்கம் இரண்டும் அழிய என்றவாறு தலை மகன் பக்ஷத்தில்
கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து -தன்னைக் கட்டிய கால் விலங்காகிய சங்கிலியின் பொறுத்து வாயைத் துணித்திட்டு
சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்து -மத ஜலம் பெருகுகிற அடையாளம் மிகுதியாகத் தொடர்ந்து
இருக்கப் பெற்ற திக்கஜத்தை நாடிச் சென்று -அதனோடு போர் தொடர்ந்து
சங்கம் குவடிறக் குத்திய -அழகிய மலைச் சிகரங்களை ஓடியுமாறு -தந்தங்களினால் குத்திய
மாறப் பெயர்க் கொலை யானை -மாறன் என்னும் பெயரை யுடைய கொல்லுதல் வல்ல யானையானது
படர்ந்தி வானம் இருள்கின்றதே–பிரிந்தாருக்குத் துன்பத்தைச் செய்கின்ற சாயம் காலத்திலேயே இருள் அடைகிற அளவிலே
இவள் திறத்து ஒன்றும் -இவள் பக்கல் தவறாது வந்து சேர்ந்து விடும்

ஆழ்வார் உரிய காலத்தில் வந்து கைக்கொள்ளுவார் என்பதே ஸ்வா பதேசம் –
கொலையானை -ராமானுஜ முனி வேழம் போல் -வி பக்ஷிகளை சித்ரவதை பண்ணவும்
தாம் பரிக்ரஹித்தவர்களை பட்டாபிஷேக யோக்யராம் படி பண்ணவும் வல்லவர் –
இந்த யானைக்கு மதம் -ப்ரஹ்மானந்தம்
சங்கக் குவடிறக் குத்திய மாறன் -சங்கப்பலகையில் கண்ணன் கழலிணை -ஏத்தி புகழ்ந்த ஐதிக்யம் அனுசந்தேயம்

———–

இருளாய்ப் பரந்த உலகங்களை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே. 49–

இருளாய்ப் பரந்த -இருள் மிக்குப் பரவப் பெற்ற
உலகங்களை -நில உலகத்தின் பகுதிகளை எல்லாம்
விளக்கும் -இருள் ஒழித்து விளங்கச் செய்கின்ற
இரவி-ஸூர்ய மண்டலம்
பொது நிற்றலின்-எல்லா வுயிர்கட்க்கும் பொதுப்பட உதவி செய்து நிற்றலால்
பொருளாய்ப் பரந்தது –உலகம் முழுவதும் காணப்படும் பொருளாய் விளங்கிற்று
அது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் –பலரும் மருளும்படி பரவுகிற மாயையினால் ஆகும் சோர்வு இல்லாத மாறன் கருணையினால்
சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே.–ஸ்ரீ மன் நாராயணன் உளன் என்று அறிந்து கொண்டனவே
வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ

——–

அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே. 50–

அறிவே -எனது உணர்வே
மற்றை ஆகம வாதியரைச் செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது–வேதம் இருக்க அதனை விட்டு
அதற்கு மாறான ஆகமங்களை ப்ரமாணமாகக் கொண்டு துர்வாதம் செய்பவராகிய புறச் சமயத்தாரை சேர்வேன்
என்ற தீய சிந்தனை ஒன்றையும் கொள்ளாமல்
செய்தாரை யில்லா நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப் பிறிவேன் எனவும் எண்ணாது -தன்னைச் செய்தவர்
எவரையும் உடையது அல்லாததும் சன்மார்க்கத்தையே போதிப்பதுமாகிய வேதத்தில் ஊன்றி
பரதத்வத்தை அறிந்தவராகிய ஆக்வாறது திரு அவதார ஸ்தலமான திருக்குருகூரை விட்டுப் பிரிய எண்ணவும் செய்யாமல்
தென்னை வீடு பெறுத்தினையே-நீ முக்தி பெறவும் செய்து அருளினாயே -அந்த மஹா உபகாரகத்துக்கு
உனைத் தொழுதேன் –
உன்னை நான் நமஸ்கரித்தேன்

நெஞ்சமே நல்ல நல்ல உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் போல்
இங்கு தமது உணர்வைக் கொண்டாடுகிறார்

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-31-40- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 22, 2021

மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய் மெய்யன் தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே. 31-

உறு வினையைக்-மிக்க கருமங்களை
கொய்யும் -அறுத்து ஒழிக்கின்ற
மெய் வாள் வலவன் –ஸத்ய வாக்காகிய வாள் படையின் தொழிலில் வல்லவரும்
குருகைக் கரசன் -திருக்குருகூருக்குத் தலைவரும்
புலமை செய் மெய்யன் தனக்கே -ஸ்வரூப ஞானம் உபதேசித்து அருளும் பிரதம ஆச்சார்யரான ஆழ்வாருக்கே
தனித் தாளன்பு செய்த பின்னே.–ஒப்பற்ற திருவடிகளில் நான் பக்தி செய்த பின்பே
எனக்கு
மெய்யும் மெய்யாது -உண்மைப்பொருளும் உண்மையாக விளங்கிற்று –
மெய் -ஜீவ பரமாத்ம ஸ்வரூபங்கள்
பொய்யும் பொய்யாது -பொய்மைப் பொருள்களும் பொய்யாகப் புலப்பட்டன
பொய் -தேகம் பிரகிருதி -பொய் நின்ற ஞானம் போல்வன
வேறு படுத்து-இங்கனம் பகுத்து அறிந்த பின்பே
உய்யும் -ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு உரிய
மெய்யாய உபாயம் வந்துற்றது -உண்மையான உபாயமும் எனக்கு வந்து ஸித்தித்தது

————-

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே. 32–

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர-ஸ்ரீ யபதியை -செய்யன் கரியன் என்று ஆராய்ந்து அறிய
செய்ய வாய் செய்ய கண் செய்ய கால் செய்ய கை -செய்ய அவயவங்களையும்
நீல மேனி கருமையும் ஆராய்ந்து அறியார்கள் அன்றோ
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-7-என்றால் போலே
அடையாளங்களைத் திருந்தக் கண்டு
வய்யம் கரி யல்ல -வையகத்து உயிர்கள் சாக்ஷி யாக மாட்டாதே
மாட்டா மறை -வேதங்களும் அப்படியே
அவன் ஸ்வரூபத்தை இன்னது இப்படிப்பட்டது என்று உரைக்க சக்தி கொண்டவை அல்லவே
யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்டதே
ஆகவே
மதுரக் குருகூர் அய்யன் கவி யல்லவேல் –ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்கள் இல்லாமல் போயிருந்தால்
இவ் வுயிர்களுக்கே. பிறவிக் கடலாழ்வது அல்லால்-உயிர்கள் எல்லாம் பிறவிக் கடலில் ஆழ்ந்து போவது அல்லாமல்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் -உஜ்ஜீவன உபாயம் ஒன்றுமே யான் கண்டேன் அல்லேன்

—————

உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே. 33–

உயிர்த் தாரையில் புக்கு உறு –உயிர் செல்லுகிற வழியிலே உடன் சென்று கூடுகிற
குறும்பாம் ஒரு மூன்றனையும்–முக்குறும்புகளையும்
செயிர்த்தார் -வெறுத்து ஒழித்தவராகிய
குருகை வந்தார் திரு வாய்மொழி -திவ்ய பிரபந்தங்களை
செப்பலுற்றால்-ஓதி உணரத் தொடங்கினால்
எங்கள் அந்தணர்க்கே–எங்களை ஆள உரியவர்களாக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஸ்ரீ மன் நாதமுனிகள் போல்வார்
மயிர் தாரைகள் பொடிக்கும் –உடம்பில் உள்ள மயிர் ஒழுங்குகள் சிலிர்ப்பு கொள்ளும்
கண்ணீர் மல்கும் –ஆனந்தக் கண்ணீர் நிறைந்து பெருகப் பெறும்
மா மறையுள் அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் –பொருள் உணர்த்துவதற்கு அரிய பெருமையை யுடைய
வேதங்களின் கருத்துக்களில் புற சமயத்தார் சந்தேகித்த அர்த்தங்கள் எல்லாம் விளங்கும்

—————-

அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே. 34–

அந்தணர்க்கோ -வேதியர்கட்காகவோ
நல் அருந்தவர்க்கோ -சிறந்த தபஸ்ஸூக்கள் செய்பவர்கட்காககோ
அன்றி யோகியராய் வந்தவர்க்கோ -அல்லது யோக அப்யாஸம் செய்பவர்கட்காகவோ
மறம் வாதியர்க்கோ -பிணக்கர்களாய் புற சமயத்தார்கட்காகவோ
மதுரக் குழை சேர் சுந்தரத் தோளனுக்கோ –ஸ்ரீ மன் நாராயணனுக்கட் காகவோ
அவன் தெண்டர்கட்கோ -அவன் அடியார்களுக்காகவோ
சுடர் தோய்-சந்தன ஸூர்யர்கள் விண் ஒளி கள் தன் மேல் படும்படி
தொடர்பு உயர்வு நவிற்சி அணி -சோலைகளின் மிக்க உயர்ச்சியைக் காட்டும் –
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே.–ஆழ்வாரது திரு அவதாரம் –
இவர்களுக்கு எல்லாம் தனித்தனியே ப்ரயோஜன கரமாம் படி அன்றோ இவரது ஆவிர்பாவம்
எனவே இவ்வாறு விகல்பித்து அருளிச் செய்கிறார் –

————-

சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. 35–

சந்ததியும் -எழுத்து புணர்ச்சி இலக்கணத்திலும்
சந்திப் பதமும் -அங்கணம் புணர்வதற்கு உரிய பாதங்களின் இலக்கணத்திலும்
அவை தம்மிலே தழைக்கும் பந்தியும் -அச் சொற்களில் மிக்கு விளங்குகிற பொருள் இலக்கண வகைகளிலும்
பல் அலங்காரப் பொருளும் -பலவகை அலங்கார அணி இலக்கண விஷயங்களிலும்
பயிலுகிற்பீர்-பழகுகிற இலக்கண புலவீர்காள்
தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. –திருக்குருகூரை சேவித்து
வந்தியும் -நமஸ்கரியுங்கோள்
வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்-அந்த ஆழ்வார் அடியார்களை வணங்குகிற ஸ்ரீ வைஷ்ணவர்களை
வணங்கும் விதத்தை அறிவீர்கள்
சிந்தியும் -அவர்களை தியானமும் செய்யுங்கோள் –

———-

பாங்கி வெறி விலக்கிச் செவிலியருக்கு அறத்தொடு நிற்றல்

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே. 36–

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்–தெய்வ ஆவேசம் கொண்ட கட்டு விச்சியை சீர் கெடுத்து விட்டீர்கள்
பூவரை ஏறிய கோதை –மலர்களை அளவாகச் சூட்டப் பெற்றுள்ள கூந்தலுடைய இவ்விள மங்கையுடைய
யுள்ளம் புகுந்தார் எவர் என்று -மனத்தில் புகுந்து வறுத்துபவர் யார் என்று நீங்கள் வினவியத்தைக் குறித்து
அக்கட்டுவிச்சி
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று -நமது உறை யுள்ளின் எல்லையில் ஏறி-
கட்டுவிச்சி கட்டேறி போல் – வந்து விடை கூறுகிற போது சொன்னது
இறைவர் மூவரையோ -த்ரிமூர்த்திகளையோ
குரு கூரரையோ -ஆழ்வாரையோ
சொல்லும் முந்துறவே. –என் முன்னே சொல்லுங்கோள்

தேவு மற்று அறியேன் –மதுரகவி நிலையைப் பெற்ற கம்ப நாட்டாழ்வார்

—————-

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே. 37–

துறவாதவர்க்கும் -இல்லத்தாருக்கும்
துறந்தவர்க்கும் -துறவறத்தாருக்கும்
சொல்லவே சுரக்கும்-ஓதும் அளவிலேயே சகல புருஷார்த்தங்களையும் அளிக்கும்
அறம் ஆ அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க -பரம தர்ம ரூபமான ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்கள் சிறப்புற்று இங்கே இருக்க
அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி–மலட்டுப் பசுவை பலன் தருவதாகக் கொண்டு
கறவாக் கிடப்பர் -கறந்து கொள்ள முயல்வர்
அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே.-அங்கு கை நோவப் பெறுவது பலன் ஒன்றுமே இல்லையே –
இது என்ன பேதைமை
குரு பரம்பரை உள்ள ஸம்ப்ரதாயத்து பால் அன்றோ இது –

————-

மடலூரத் துணிந்த தலை மகளின் வழி ஒழுகித் தோழி இரங்குதல் –

கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே. 38–

குருகூர் என்னும் ஆறு அறியாப்–தலை மகன் இருக்கும் திவ்ய தேசப் பெயரையும்
வாயினால் சொல்லும் விதத்தையும் அறியாது இருந்த
பைதலைக் -இளைமை யுடைய இம்மகளை -சிறு கிளிப் பைதலே -திருவாய் மொழியிலும் உண்டே
கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய –முறை கேடு தலைக்கு ஏறி பனை மடல் குதிரையின் மேல் ஏறுமாறு செய்த
கோகு உகட்டுதல் –கும்பிடு நட்டமிட்டு ஆடி கோகு கட்டுண்டு உழலாதார் –திருவாய் மொழியிலும் உண்டே
கோகு -அடைவு கேடு
உகட்டுதல் -தலை மண்டியிடுதல் -மேலிடுதல்
பண்பனையே–குணத்தை யுடைய தலை மகனை -எதிர்மறை லக்ஷணம்
சென்று–அவனது ஊருக்கு யாம் சென்று
கை தலைப் பெய்து –கைகளைத் தலை மேல் வைத்துக் கொண்டு
அரும் பூசலிட்டுக் -பொறுத்தற்கு அரிய பேர் ஆரவாரத்தைச் செய்து
கவியால் உலகை உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ -ஆழ்வார் பாசுரங்களால் உலகத்தின் துன்பம் தீர்ந்து
வாழுமாறு செய்தனன் என்பதையும் பொய் என்று சொல்லி முறையிடுவோமோ
அவ்வூர் அறிய வைதலைத்து ஏசுதுமோ -அங்குள்ளார் அனைவரும் அறியும்படி நிந்தித்து கலக்கம் விளைத்துப் பழிப்போமோ

கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே
கம்ப நாட்டாழ்வாருக்கு ஆழ்வார் முதலிலே பக்தியை உண்டாக்கி -அதனை அபிவிருத்தியாம்படி செய்து –
அவரை பிரபந்தம் பாடும்படி செய்வித்தது ஆழ்வாரது திரு அருளே –
ஸாந்நித்யம் கால விளம்பம் பொறாமல் -இவ்வாறு கூறும் வகையால் அவரை ஆற்றுதல்

—————

பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே. 39–

மகிழ் மாறன் செய்யுள் எண்ணும் தகைமைக்கு -திவ்ய பிரபந்தங்களை சிந்தனை செய்வதாகிய பெருமைக்கு
உரிய மெய் யோகியர்-ஏற்ற ஞான பக்தி யோகங்களை யுடையவர்களுடைய
பாவின் இன்னிசை பாடித்திரிவனே -மதுர கவி ஆழ்வார் -அருள் பெற்ற நாதமுனிகள் போல்வாருடைய
ஞானம் என்னும் கண்ணும் மனமும் செவியும் – –அறிவாகிய அகக் கண்ணும் -மனமும் -காதுகளும்
தவம் செய்த காலத்திலே
பண்ணும் தமிழும் -குறிஞ்சி முதலிய பண்களும் தமிழ் மொழியும் தவம் செய்தன
பழ நான்மறையும் மண்ணும் விசும்பும் தவம் செய்தன –

———-

காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே. 40–

கடை நாள்–கல்பாந்த காலத்திலே
ஆலத்திலே துயின்றோர்–ஆலிலையில் யோக நித்ரை செய்து அருள்பவரான எம்பெருமான்
கொண்ட–கரும வசத்தால் அன்றியே இச்சையாலே எடுத்துக் கொண்ட
ஐ யிரண்டா யமைந்த கோலத்திலே –தசாவதாரங்களிலே
முளைத்து–அடிக் கொண்டு
கொழுந் தோடி-கொழுந்து விட்டு வளர்ந்து
குணங்கடந்த மூலத்திலே செல்ல மூட்டிய -இழி குணங்களைக் கடந்த ஆதி மூலப் பெருமாளாகிய
அந்த ஸ்ரீ மன் நாராயணன் பக்கலிலே -பலரும் செல்லுமாறு —
தமது திவ்ய பிரபந்தம் மூலமாக பலருக்கும் ஆதரத்தை உண்டாக்கி அருளிய
ஞானத்து எம் மூர்த்தியையே–தத்வ ஞான பரி பூர்னரான ஆழ்வாரையையே
குருகூர் புக்குக் கைக் கொண்மினோ -கால விளம்பம் இன்றி -பழுதே பல பகலும் போக்காது –
திருக்குருகூர் சென்று சரண் புக்கு உஜ்ஜீவியுங்கோள்
ஞானத்தை மூட்டிய ஆழ்வார் என்றுமாம் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-21-30- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 22, 2021

பாங்கி நெறி அருமை கூறித் தலை மகனை வரவு விலக்குதல் –

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் தளிர் மெல்லடித் தண்
மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினை தோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை மலை யவனே. 21–

மலை யவனே-மலைக்கு உரியவனே
சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் -குறிஞ்சி நிலத்து சோலையிலே
தளிர் மெல்லடித் தண் மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு -கண்ணுக்கு இனிய பற்களையும் –
குறிஞ்சி என்னும் பண் போல் இனிய சொற்களையும் புன் சிரிப்பையும் யுடைய தலைவியின் முகத்தைப் பார்க்க
நீ முடுகும்–நீ விரைந்து வருவதாகிய
சூரல் குறிஞ்சி நெறி -பிரப்பங்காடு மிக மலை வழியை
நினை தோறும் துணுக்கு எனுமால்-நினைக்கும் தோறும் திடுக்கிட்டு அஞ்சுவதாய் இருக்கும்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை –ஆதலால் ஆழ்வார் மேல் ஆணை -இனி நீ இங்கனம் வர வேண்டா –

பகல் குறி -இரவுக் குறி -ஏகாந்தத்தில் தலைமகனை சந்தித்தல்
ஆறு பார்த்து உற்ற அச்சக் கிளவி -அகத்துறை
இதன் பயன் -வெளிப்படையாக வந்து மணம் புரிய வற்புறுத்தல்
குறிஞ்சி -மலையும் மலை சார்ந்த இடமும்-புணர்ச்சிக்கு உரிய இடம்

தமோ குண பிரசுரராய்
சம்சார மார்க்கத்தில் இருந்து மேற்பட்ட இடத்தில்
ஆழ்வார் பக்கல் பக்தி செய்து ஒழுகுகிற பாகவதர்களை நோக்கி
அன்பர்கள் இக்களவு ஒழுக்கைத்தை விட்டு
பிரபத்தி மார்க்கத்தில் நின்று அந வரத பாவனை செய்வதை வறுபுறுத்துவது இதன் ஸ்வா பதேசம் –
ஸ்ரீ வைஷ்ணவர்களை கிளவித் தலைமகனாக கொள்ளுதல் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மாயப்பிரான் அடியார் குழாம் உடன் கூடுவது என்று கொலோ -போல் –

————-

மலை யாரமும் கடல் ஆரமும் பன் மா மணி குயின்ற
விலை யாரமும் விரவுந் திரு நாடனை வேலை சுட்ட
சிலையார் அமுதின் அடி சட கோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே. 22-

மலை யாரமும் -பொதிய மலையில் உண்டாகிற சந்தன மரமும்
கடல் ஆரமும் –கடலில் தோன்றுகிற முத்துக்களும் -பூழியர் கோன் தென்னாடு முத்துடைத்து அன்றோ
பன் மா மணி குயின்ற விலை யாரமும் -ரத்தினங்கள் பதிக்கப்பட்ட விலை மிக்க ஹாரங்களும்
விரவுந் திரு நாடனை –பொருந்திய சிறந்த பாண்டி வள நாட்டில் திரு அவதரித்தவரும்
வேலை சுட்ட சிலையார் அமுதின் அடி சட கோபனைச் –சமுத்திரத்தை ஆக்நேய அஸ்த்ரத்தால் வேகச் செய்த
சாரங்க பாணியின் திருவடி நிலைகளான ஆழ்வாரை
சென்று இறைஞ்சும்–போய் வணங்குகிற
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே- தலையை யுடைய அவரே எம்மை அடிமை கொள்ளும் தவச் செல்வர் ஆவார்
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் போல்வார்
கற்றார் பரவும் ராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவர் அவர் எம்மை
நின்று ஆளும் பெரியவரே -ராமானுஜ நூற்றந்தாதி பாசுரத்தை ஒட்டியே இப்பாசுரம் –

————-

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் எழில் குருகூர்
நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே. 23-

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் -இந்திராதி தேவர்கள் எங்கள் ஸ்வர்க்க லோகம் வருவாய்
என்று வேண்டும்படி மேம்பட்ட பதவி கிடைப்பதானாலும்
பூந்தொழுவின் வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் –செருக்கு கொண்ட -ராஜஸ குணம் மிக்க
எருதுகளை அடக்கி நப்பின்னைப் பிராட்டியை அடைந்த திருமாலது ஸ்ரீ வைகுண்டமே பெறினும்
எழில் குருகூர் நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும் -எப்பொழுதும் திருவாய் மொழி யாகிய
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே–அமுதத்தை பருகி களித்துத் திரியும் பேறே எனக்கு சித்திக்க வேண்டும் –
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே

———-

சித்தர்க்கும் வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர் கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே யன்றி பண்டு சென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித் தொகையே. 24-

சடகோபன் மொழித் தொகையே.
சித்தர்க்கும் -அணிமா மஹிமா இத்யாதி யோக சித்திக்களைப் பெற்றவருக்கும்
வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் -வேதாந்தம் அறிந்தவர்களுக்கும்
செய்தவர்க்கும்-தவம் செய்தவர்களுக்கும்
சுத்தர்க்கும் -மனம் மொழி மெய்-த்ரிகுண ஆர்ஜவம் உள்ளோருக்கும்
மற்றைத் துறை துறந்தோர் கட்கும் -இல்லறம் கடந்து சந்யாச ஆஸ்ரமம் கொண்டவர்களுக்கும்
தொண்டு செய்யும் பத்தர்க்கும் -பகவத் பாகவத சேஷ பூதர்களாய் அடிமை செய்வார்களுக்கும்
ஞானப் பகவர்க்குமே யன்றி –தத்வ ஞானம் யுடைய பெரியோர்கட்க்கும் அல்லாமல்
ஞானம் பலம் வீர்யம் ஐஸ்வர்யம் சக்தி தேஜஸ்ஸூக்கள் உடைய பகவர்
பண்டு சென்ற முத்தர்க்கும் இன்னமுதம் –முக்தர்களுக்கும் இன்னமுதம் போல் இனிய சுவை விளைப்பதாம்

——–

தொகை உளவாய பணுவற் கெல்லாம் துறை தோறும் தொட்டால்
பகை யுளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான் மறையின்
வகை யுள வாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே. 25-

தொகை உளவாய பணுவற் கெல்லாம் -தொகுதியாக உள்ள மற்ற சமய நூல்களுக்கு எல்லாம்
துறை தோறும் தொட்டால்-இடம் தோறும் ஊன்றி நோக்கினால் -அவற்றில் உள்ள பொருள்களை எல்லாம் ஆராய்ச்சி செய்தால்
பகை யுளவாம் -முன்னுக்கு பின் வருத்தமாகவும் -வேத விருத்தமாகவும் உள்ளனவாம்
மற்றும் -மேலும் இது அன்றியும்
பற்றுளவாம் பழ நான் மறையின் வகை யுள வாகிய வாதுளவாம் -வேத விருத்தமான உள்ள சொற் போர்களும் உண்டாகும்
வந்த வந்திடத்தே மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே- இங்கேயோ எதிர் வாதம் ஒன்றுமே இல்லாமல்
விசேஷ அர்த்தங்கள் பார்த்த பார்த்த இடங்களில் அமைந்து இருக்கும்

————-

விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் மெய் உற வந்து
அழுப்பாது ஒழிமின் அரு வினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகு சங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக் கொழுந்தே 26-

அரு வினைகாள்
இள நாகு சங்கம் கொழுப்பாய் மருதம் சுலாம்-இளமையான பெண் சங்குகள் உடன் ஆண் சங்குகள் மருத நிலத்திலே திரியப் பெற்ற
கொழுப்பாய் மருதம்-கொழு பாய் மருதம் -கலப்பைக்காறு உழுது பாயப்பெற்ற வயல்கள் என்றுமாம்
குருகூர் எம் குலக் கொழுந்தே –பிரபன்ன ஜன கூடஸ்தரே
தொண்டக் குலத்தின் பேருக்கு காரணமானவர் ஆதாலால் கொழுந்து என்கிறார்
எம் குலக் கொழுந்து இராமானுசர் என்பதற்கு வியாக்கியான ஸ்ரீ ஸூ க்திகள்
வ்ருஷமாய் பலிக்கைக்கும்
கொடியாய்ப் படர்ந்து பலிக்கைக்கும் மூலமான கொழுந்து ஆகையால்
எம் குலத்துக்கு எல்லாம் மூலமானவர் என்றபடி

அன்றிக்கே
எம் குலம் அடங்கலும் ஒரு வேராய் -அதுக்கு எம்பெருமானார் கொழுந்தாய்க் கொண்டு
வேருக்கு வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே
எங்கள் குலத்துக்கு ஒரு குறை வந்தால் முற்படத் தம்முடைய திரு முகம் வாடி இருக்குமவர் என்றுமாம் –
உம்மை அப்புறத்தே இழுப்பான் ஒருவன் வந்து -உங்களை இழுத்து அப்புறத்திலே எறிய வல்ல ஒருவராய் எழுந்து அருளி
ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியில் இருந்து ஆட்டைப் பற்றி புலி இழுப்பது போல் இழுக்க வல்லவராய் வந்து
இன்று நின்றான்-இப்பொழுது எமது திரு உள்ளத்திலே நின்று அருளினார்
விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் -இனி மேல் எம்மை பிறவித் துன்பத்தில் விழுத்த வல்லவர் எவரும் இல்லை
ஆகவே
மெய் உற வந்து அழுப்பா தொழியின் -எமது உடம்பில் பொருந்த வந்து வருத்தாமல் நீங்கிப் போகுகங்கள்
மெய்யாக அழுப்பாது ஒழிமின் -என்றுமாம் –

பெற்றம் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்று இல்லை கண்டீர் நடமின் -என்றும்

திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறு என் நம் மேல் வினை -என்றும்

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன் —
ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரை கிடக்கும் உள்ளத்து எனக்கு -என்றும்

இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன் ஆறு வினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -என்றும்
உள்ள அருளிச் செயல்கள் இங்கே அனுசந்தேயம் –

———-

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு தோழி இரங்குதல் –

கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் விறல் மாறனென்றால்
அழும் தோள் தளரும் மனமுருகும் குருகூர் அறையில்
எழுந்து ஓடவுங் கருத் துண்டு கெட்டேன் இவ் இளங் கொடிக்கே. 27-

இந்த மெல் இயலாள்
கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் –மகிழ மரத்தினது கொளுத்தும் இலையும் அரும்பும்
உட்பட எல்லாவற்றையும் தனக்கு கொண்டு தர வேண்டுவாள்
கொய்ம் மகிழ்க் கீழ் விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் –மலர் கொய்வதற்கு உரிய மகிழ மரத்தின் கீழ் உதிர்ந்து –
காற்றின் விசையால் எப்புறத்தும் ஓடுவதான சருகு ஒன்றை யாயினும் பெற்றாள் இல்லை
விறல் மாறனென்றால்-பெருமை யுடைய மாறன் என்று தலைமகன் பெயரைச் சொன்னால் தலை மகன் பெயரைச் சொன்னால்
அழும் -ஆற்றாமையால் அழுவாள்
தோள் தளரும் –தோள்கள் தளரப் பெறுவாள்
மனமுருகும் -நெஞ்சு உருகப் பெறுவாள்
குருகூர் அறையில் –அவரது அவதார ஸ்தலப் பெயரைச் சொன்னால்
இவ் இளங் கொடிக்கே எழுந்து ஓடவுங் கருத் துண்டு – இவளுக்கு எழுந்து இருந்து இங்கு இருந்து
அவ்விடத்துக்கு ஓடிச் செல்லவும் எண்ணம் உண்டாகிறது
கெட்டேன்

பாட்டுடைத் தலைவனே கிளவித் தலை மகன்

தெய்வத் தண் அம் துழாய்த் தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும்
கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -என்றும்
சீரார் இதழ் பொழில் மாலிருஞ்சோலையில் செல்வர் செங்கண் போரார் தாள் புனை தழை தொடுத்த
நாரார் இதாகில் பிழைப்பு அரிதாம் எங்கள் நன்னுதற்கே -என்றும்
உள்ள அருளிச் செயல்கள் அனுசந்தேயம் –

கம்ப நாட்டாழ்வார் ஆழ்வார் திருவடிகளில் சேர்ந்து இருக்கப் பெறாது வருந்தும் நிலையில்
அவருடன் நேராகவாவது இடையிட்டாவது சம்பந்தம் பெற்ற பொருள் யாதாயினும் ஒன்றை
அவருடைய பிரசாதமாகப் பெற்று ஆறி இருக்கக் கருதி வேண்டுதலையும்
அங்கனம் ஒன்றும் அவருக்கு கிடைத்திடாமையும்
ஆழ்வாருடைய திரு நாமத்தைச் சொல்லும் போது எல்லாம் பக்தி பரவசராய்
அழுது உடல் சோர்ந்து மனம் தளர்தலையும்
அவரது திவ்ய தேசத்துக்கு விரைந்து செல்ல விரும்புதலையும்
அன்பர்கள் பாராட்டி
இனி இவருக்கு என்னாகுமோ என்று இரங்கிக் கூறுதல்
இதற்கு ஸ்வாப தேசம் –

———

கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் இனிக் கொடுங் கூற்றினுக்கோ
அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே. 28-

ஆரணத்தின் படி எடுத்துக் கொண்ட -வேதம் போலவே சாரமான அர்த்தங்களைத் தேர்ந்து எடுத்துக் கொண்டு
அருளிச் செய்த –வேதம் தமிழ் செய்த மாறன் அன்றோ
மாறன் என்றால் -மாறன் என்னும் திரு நாமம் உடையவர் என்று யார் சொன்னாலும்
அவரைக் குறித்து
பதுமக் கரங்கள் முடி எடுத்துக் கொண்ட -தாமரை போன்ற தமது கைகளைக் குவித்து அஞ்சலி பந்தத்தை
தமது சிரஸில் மேல் கொள்ளும் தன்மையரான
அந்தணர் தாள் -ஸ்ரீ வைஷ்ணவர் திருவடிகள்
என் முடி -எனது சிரஸ்ஸின் மேல் கொள்ளப் படுபவனவாம்
எனவே. -என்று சொல்லி
கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் -பாகவதருக்கு வழித் தொண்டன் யான் என்று வெளியிடுமாறு
விருதுக் கொடி பிடித்துக் கொண்டு நின்றேன்
இனிக் -இவ்வாறு ஆழ்வார் அடியார் அடியார்குத் தொண்டனான பின்பு
கொடுங் கூற்றினுக்கோ அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் -யமனுக்கு என் பக்கல்
ஒரு காலடியாவது எடுத்து வைத்து வருதல் கூடுமோ

———–

என் முடியா தெனக்கி யாதே அரியது இராவணன் தன்
பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான் பொருநைந் துறைவன்
தன் முடியால் அவன் தாள் இணைக் கீழ் எப் பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே. 29–

இராவணன் தன் பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான்– தலைகளைத் துணித்து அவற்றைக் கொண்டே
ஆழ்ந்த கடலை நிரம்பி விட்ட ஸ்ரீ கோதண்ட பாணி அடியவராக
பிரமன் வரத்தால் மீண்டும் மீண்டும் தலை முளைக்கச் செய்ததே இதற்காக அன்றோ
பொருநைந் துறைவன் -ஆழ்வார்
அவன் தாள் இணைக் கீழ்–ஸ்ரீ யபதியின் திருவடி இணைக்கீழ்
தன் முடியால் -தனது சென்னியால் வணங்கி
சொல் முடியால்-திருவாய் மொழி சேர்க்கையால்
எப் பொருளும் தழீஇச்-முமுஷுவுக்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் –
அர்த்த பஞ்சகங்களையும் -ஒருங்கு தொகுத்து
அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே.–பா மாலையை சூட்டி அருளி சமர்ப்பிக்க
இப்படிப்பட்ட ஆழ்வாருக்கு அடிமைப்பட்ட பின்பு
என் முடியா தெனக்கி -எனக்கு அசாத்தியமாக இருப்பது யாது -ஒன்றுமே இல்லையே
யாதே அரியது -எனக்கு சிரமம் பட்டு சாதிக்க வேண்டியது தான் ஏது -ஒன்றுமே இல்லையே –
வேண்டிய நற் பயன்கள் எல்லாம் தவறாமல் எளிதில் கை கூடும் அன்றோ –

———–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தே னென்னை நல் வினையாம்
காட்டில் புகுத விட்டு உய்யக் கொள் மாறன் கழல் பற்றிப் போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை மறை மெய் எனிலே. 30–

சூட்டில்-நெல் போர் களிலே
குருகு -மருத நிலத்துப் பறவைகள்
உறங்கும் -நிர்ப்பரமாக இனிது உறங்கப் பெற்ற
குருகூர் தொழுதேன் —ஆழ்வார் திரு நகரியை சேவிக்கப் பெற்றேன்
வழுதி நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தேன் –இங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கைங்கர்யங்களும் செய்யப் பெற்றேன்
மறை மெய் எனிலே.–வேதங்கள் ஸத்யமாகுமானால்
மெய் -யதார்த்த பிரமாணம்
என்னை நல் வினையாம் காட்டில் புகுத விட்டு –என்னை நற் செயகைகள் ஆகிற தவ வனத்தில் செல்ல விட்டு
நல் வினை -பிரபத்தி மார்க்கம்
சரணாகதி சாஸ்திரமான ஸ்ரீ கம்ப ராமாயணம் சாதிக்கச் செய்தவரும் ஆழ்வாரே என்கிறார்
உய்யக் கொள் -யான் ஈடேறுமாறு என்னை ஆள் கொண்டு அருளுகிற
மாறன் கழல் பற்றிப் போய் -ஆழ்வார் திருவடிகளை சரண் புக்க பின்பு
மாறன் கழல் பற்றி குருகூர் தொழுதேன் ஆளும் செய்தென்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை -ஸ்ரீ வைகுண்டம் சேர்வதற்கு பிரதிபந்தகம் ஏதேனும் உண்டோ
இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடும் தருமே –

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-11-20- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 21, 2021

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழுமாக் கமலம்
சேற்றில் பொதிய வீழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே. 11-

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள் வேற்றில்–ஓதி உணர அரியதாகவும்
அநந்த சிறந்த பலவகைப்பட்ட வேதங்கள்
நஹி நிந்தா நியாயத்தால் வேதங்களைப் பழித்தார்
செஞ் சொற் பதிகம் நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு ஒரு ஆத்மாவுக்கு ஹித அம்சத்துக்கு
ஒரு பாட்டே அமையும்படி யாயிற்று இவர் பாடி அருளியது -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –

————-

இயல் இடம் கூறல்

இலவே இதழுளவே முல்லை யுள்ளி யம்பும் மொழியும்
சிலவே அவை செழுந் தேனொக்குமே தமிழ்ச் செஞ் சொற்களால்
பல வேதமும் மொழிந்தான் குரு கூர்ப் பதுமத்து இரண்டு
சல வேல்களும் உளவே யது காண் என் தனி யுயிரே. 12-

தமிழ்ச் செஞ் சொற்களால் பல வேதமும் மொழிந்தான்
குரு கூர்ப் பதுமத்து இதழ் இலவே -தாமரை மலரில் இதழ்கள் இலவ மலரே போலும் -திருவாய் இதழ்களைச் சொன்னவாறு
அவ்விதழ்களின் உள்ளே
முல்லை யுளவே -முல்லை அரும்புகள் உள்ளனவே -வெண்ணிற பற்களைச் சொன்னவாறு
உள் இயம்பும் மொழியும் சிலவே -அவற்றுள் பேசப்படும் பேச்சுக்களும் சிலவே
உண்டு
அவை செழுந் தேனொக்குமே -அந்த சின் மொழிகள் தாம் சுவை மிக்க தேனே போலும்
மற்றும் அந்தத் தாமரை மலரில்
இரண்டு சல வேல்களும் உளவே -அசைகின்ற இரண்டு வேலாயுதங்களும் உள்ளன
யது காண் என் தனி யுயிரே–இவை அனைத்தும் யுடைய அந்த உருவம் தான் எனது உயிர் போன்ற காதலி என்று நீ உணர்வாய் –

இயற்கைப் புணர்ச்சி -தெய்வப் புணர்ச்சி -முன்னுறு புணர்ச்சி
இயல் இடம் கூறல் துறை
கலந்து பிரிந்து மீண்டும் கலக்க வரும் தலைமகன் பாலகனுக்கு –
என்னால் காணப்பட்ட வடிவுக்கு இயலிவை இடம் இது -என்று கூறுதல்

முல்லை பதுமம் வேல் –உருவக உயர்வு நவிற்சியால் உபமேயத்தின் மேல் நின்றன –

ஆழ்வாருடைய திரு முக மண்டல திவ்ய ஸுந்தர்யத்தையும்
கூரிய ஞான விகாஸத்தையும்
திருவாய் மலரின் செவ்வியையும்
அதன் அகத்தே விளங்கும் ஸூத்தமான தந்த பங்க்தியையும்
தீம் சொற்களையும்
கண்டு ஈடுபட்ட பாகவதர் உசாவியா அன்பர்களுக்கு எடுத்துக் கூறுவதே இதுக்கு ஸ்வா பதேசம் –

————–

உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சட கோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே. 13

திருடித் திருடித் தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சடகோபன் –திருவடி நிலையான ஆழ்வார் –
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் அன்றோ
சந்தோடு அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை –பரிமளத்தால் சந்தனத்தையும்
இனிமையால் சக்கரையையும் -தோற்கச் செய்யும் தாமிரபரணி
அம் தமிழே.உயிர் உருக்கும் -பக்திப் பெருக்கால் உயிரை உருகச் செய்யும்
புக்கு உணர்வு உருக்கும் -உடலினுள் புக்கு அகத்தின் உறுப்பான மனத்தை ஆனந்த அதிசயத்தால் கரையச் செய்யும்
உடலத்தினு ள்ள செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும்
குற்றமே புருஷ வடிவம் கொண்ட தேக சம்பந்தத்தால் காம க்ரோதாதிகளைப் போக்கும் –

——–

அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே. 14

தமிழார் கவியின்–ஆர் தமிழ் கவியின் -இலக்கணம் நிரம்பிய தமிழ் பாடல்கள் –சீர் கேடு இன்றி ஒழுகுதல் -போலே
பந்தம் விழா ஒழுகும் –முறை தவறாமல் நித்ய நைமித்திக உத்ஸவங்கள் நடக்கப் பெற்ற
குருகூர் வந்த பண்ணவனே–பெரியவர்
அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை–அநந்த சாகைகள் கொண்ட வேத ஆழ்ந்த அருமையான -சார அர்த்தத்தை
செந் தமிழாகத் திருத்திலனேல் -திவ்ய பிரபந்தங்களை அருளிச் செய்து இரா விடில்
நிலைத் தேவர்களும் தந்தம் விழாவும் அழகும் என்னாம் –ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஸ்ரீ கோயில் உத்ஸவங்களும்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யும் என்னாகி முடியும் –

அறியக் கற்று வல்லார் வைஷ்ணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே –

மண்ணாடின சக்ய ஜலம் தோதவத்தி சங்கணி துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய்
அந்தஸ் ஸ்தத்தத்தை காட்டுமா போலே
அல்ப ஸ்ருதர் கலக்கின சுருதி நன் ஞானத் துறை சேர்ந்து
தெளி உற்று ஆழ் பொருளை அறிவித்தது–ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -71-

(ஸஹ்யம் -மேற்குத் தொடர்ச்சி மலை / தோதவத்தித் துறை -திருவரங்கத்தில் திருக் காவேரித்துறை –
தோதவத்திகளின் துறை -தூயதாகத் தோய்த்து உணர்த்தின வஸ்திரங்களை யுடையவர்கள் -/
சங்கணி துறை -ஆழ்வார் திருநகரியில் தாமிரபரணி நீர்த்துறை /அந்தஸ்தத்தை -உள்ளே கிடைக்கும் பொருளை-
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிக்கின்றோமே –ஸ்ரீ தேசிகன் –
திருவாய் மொழி செப்பலுற்றால் அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே -ஸ்ரீ கம்பநாட்டாழ்வார்- )
( தூயானை தூய மறையானை –பிரமேயம் பிரமாணம் சாம்யம் -உபய லிங்கம்-அகில
ஹேய பிரத்ய நீகம் -கல்யாணை கதா -அப்பருஷேயத்வம் நித்யம் இரண்டும் இதுக்கும் –
ஸமஸ்த சப்த மூலத்வாத்-வாஸ்ய வாசக சம்பந்தம் -ஜகத் காரணத்வம்/
பிரமேயம் கண்ணன் இரு தாய் தந்தை -ஈன்ற முதல் தாய் சடகோபன் வளர்த்த தாய் ராமானுஜன் )

மேகம் பருகின சமுத்ராம்பு போலே
நூற் கடல் சொல் இவர் வாயான வாய்த் திருந்தின வாறே
சர்வதா சர்வோப ஜீவ்யம் ஆமே –சூரணை -72-
( ஸ்ரீ லஷ்மீ நாதாக்ய சிந்து -சடரி பு ஜலத-ப்ராப்த காருண்ய நீரம் மேகம் பருகின சமுத்ராம்பு )

————

பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித் தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே. 15-

இயலோடு இசையின் வண்ணப் படைக்கும் -இயல் இசை துறைகளான சேனைகளுக்கு
தனித் தலை வேந்தன்–ஒப்பற்ற தலைமை பூண்ட அதிபதி –
மலர் உகுத்த சுண்ணப் படர் -பூக்கள் சிந்திய மகரப்பொடிகள் பரவப் பெற்ற
படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே.–மருத நிலத்தூராகிய திருக்குருகூரிலே திரு அவதரித்த ஆழ்வாரது சொல் கடல்
பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் –நூதனமாகச் செய்யப்பட வேதங்களும் உண்டோ என்று பலராலும் கருதப் படுமாறு
சொல் திகழச் செய்தான் -திவ்ய பிரபந்தங்களை அருளிச் செய்து தமிழ் சொற்களை அருளினார்
எங்களைப் பணி கொள் என்று அன்றோ தமிழ் சொற்கள் ஆழ்வாருக்கு கைங்கர்யம் செய்யப் பாரித்தன
சொல் இகழச் செய்தான் -பகவத் விஷயங்களை அருளிச் செய்து
விஷயாந்தரங்களை இகழப் பண்ணி அருளினான் –என்றும் உரைப்பார்

——–

கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் குளிர் சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே. 16-

களித்தார் குடலைக் கலக்கும் –செருக்கிய பகைவருடைய குடலை அச்சத்தால் கலங்கச் செய்கின்ற
குளிர் சங்கினான்-குளிர்ந்த ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் உடைய திருமால்
கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான்
அதே போலே
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே–பிறப்பு ஒழித்து அடிமை கொண்டு அருளினை ஆழ்வார்
குறையா மறையின் திடலைக் கலக்கித் -ஏறுவதற்கு அரிய வேதமாகிய மேட்டை அளவின்மையை ஒழித்து அளவுடைமையாக்கி
திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்–தொண்டர்க்கு அமுது ஈந்து அருளினார்
மலை மேட்டிலே தேன் கூடுகள் இருக்கும் அன்றோ
எடுத்துக்காட்டு உவமை அணி

——–

நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் பிறவி யெனும்
நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே. 17–

நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்-அவர்கள் கழித்த சேஷத்தை விரும்பி
ஆழ்வார் அடியார்கள் சேஷம் உண்டு இருந்தேன் ஆகில் உய்ந்து இருப்பேனே –
வாய்க்கும் குருகைத் திரு வீதி எச்சிலை வாடி யுண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் அளித்தால் பழுதோ பெருமாள் மகுடம்
சாய்க்கும் படிக்குக் கவி சொல்லும் ஞானக் கடலே –
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் -பல இடங்களிலும் ஓய்வின்றி அலைந்து திரியும்
இழிந்த பிறப்பை யுடையனான என்னை
பிறவி யெனும் நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்–
இப்பத்தும் பிறப்பு எனும் நோய் அறுக்கும் என்னும் படி உமது திருவாய் மொழிப் பிரபந்தத்தை
நோக்கும் படி பண்ணி அருளிய உனக்கு
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே-தாஸனான அடியேன்
முன்பு செய்த ஸூஹ்ருதம் யாதோ –

———–

சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத்து இருக்கை
சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே. 18–

எங்கோன் தமிழ்ச் சொல் எனவே.–ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்கள் போலவே
உங்கள் வேதம் பர தத்துவத்தைச் சாதிக்குமே –பர ப்ரஹ்மத்தை நிலை நிறுத்தி சாதிக்குமோ
சமயத் திருக்கை சேதிக்குமே –புற பாஹ்ய குத்ருஷ்டிகள் மதங்களை சேதித்து ஒழிக்குமோ
ஒன்று சிந்திக்குமே -யாதானும் ஒரு விஷயத்தை ஆய்ந்து ஓய்ந்து உணர மட்டுமோ
யதனைத் தெரியப் போதிக்குமே -அத்தைப் பிறருக்கு விளங்க உணர்த்த மாட்டுமோ
எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே -எவ்விடத்தும் சிறந்து யாவருக்கும் பொதுப்பட நிற்கும் உண்மையான விஷயத்தையும்
அதற்கு மாறான பொய்யான விஷயத்தையும் பகுத்து ஆராய மட்டுமோ –
மாட்டாது என்றவாறு

————-

சொல் என்கெனோ முழு வேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கெனோ மறை நேர் நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக் கனி யென்கெனோ புகல
வல் என்கெனோ குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே. 19-

குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே–ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்களை
திருவடிகளில் சாத்தப்படும் பூ மாலை போல பா மாலை அன்றோ
அடி சூட்டலாகும் அந்தாமமே
சொல் என்கெனோ -எல்லா இலக்கணங்களும் அமைந்த சொல் என்பேனோ –
எம்பெருமானுடைய புகழ் என்பேனோ என்றுமாம்
முழு வேதச் சுருக்கென்கெனோ -வேத முழுவதுக்கும் சார ஸங்க்ரஹம் என்பேனோ
எவர்க்கும் நெல் என்கெனோ -அனைவருக்கு ஜீவன உபாயமான நெல் என்பேனோ
தேக யாத்திரைக்கு நெல் போலே ஆத்ம யாத்திரைக்கு ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்கள் அன்றோ
உண்ணும் நீர் என்கெனோ -இன்றியமையாத தீர்த்தம் என்பேனோ
மறை நேர் நிறுக்கும் கல் என்கெனோ –தராசுத் தட்டில் வேதத்துக்கு சமமாக வைக்கும் கல் என்பேனோ
முதிர் ஞானக் கனி யென்கெனோ -முதிர்ந்த தத்வ ஞானப் பழம் என்பேனோ
புகல வல் என்கெனோ -அதன் திறத்தை உள்ளபடி எடுத்துச் சொல்ல வல்லமை எனக்கு உளதோ என்பேனோ
பலபடியாக விகல்பித்துச் சொல்லும் படி அன்றோ ஆழ்வாரது பிரபாவம் –

———

செல யுணர்த்திச் செவிலியைத் தேற்றுதல்

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சி யம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே. 20-

மாலைக் குழலியும் –தலை மகளும் -கூந்தல் அழகால் தலைமகனை வஸீ கரித்தவள்
வில்லியும் -ஸ்ரீ கோதண்ட பாணியான தலைமகனும்
ஆகிய இருவரும்
மாறனை வாழ்த்தலர்போம் பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் –ஆழ்வாரை வாழ்த்தாதவர்கள் செல்லும்
பாலை நிலமாகிய கொடும் சுரத்தை இன்றைப் பகலிலேயே கடந்து சென்று
ஆழ்வாரை வாழ்த்தாதவர்கள் மறுமைப் பயனே அன்றி இம்மைப் பயன்களையும் இழப்பார்களே
கடந்து ஏகி-கடத்தற்கு அரியனவாக இருந்தும் எளிதில் கடந்தனர் என்றவாறு
பணை மருதத்து-விளை நிலமாகிய மருத நிலத்திலே
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை -கரும்பை ஆட்டும் ஆலையின் நரேல் என்று ஒலிக்கிற ஓசைக்கு
அஞ்சி -பயந்து -பூனையின் குரல் என்று அஞ்சுமாம் -மயக்க அணி தொக்கி நிற்கும்
யம்பொன் சாலைக் கிளி உறங்காத் -கிளிகள் நித்ரை கொள்ளாத
திரு நாட்டிடம் சார்வார்களே–சிறந்த பாண்டி வள நாட்டின் எல்லையில் சேர்வார்கள் –

திருவடி இணைகளை தமது சென்னியில் பொருத்தி
அந்த ப்ரணாமத்தால் அவனை வஸீ கரித்து
தம்மைப் போன்ற அடியார்கள் இடரைத் தீர்த்து ரக்ஷணத்துக்காக ஸ்ரீ கோதண்டம் எப்போதும்
திருக்கையில் ஏந்தி உள்ள எம்பெருமானை தர்சித்து
அவரைப்பிரிந்து தரிக்க மாட்டாதவராய் அவரைப்பின் தொடர்ந்து
ஸம்ஸாரத்தை தத்வ ஞானத்தால் கடந்து நிரதிசய அந்தமில் பேரின்பம் தரும் ஸ்ரீ வைகுண்டம் அடைவார் என்று
இவரது வை லக்ஷண்யம் கண்ட உலகத்தார்
அவர் பக்கலில் பரிவையுடைய ஞானியருக்குக் கூறுவதே இதற்க்கு ஸ்வா பதேசம் –

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்