Archive for the ‘தனி ஸ்லோக வியாக்யானம்’ Category

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு ஆதனூர்

March 23, 2024

மூலவர் -ஆண்டளக்கும் ஐயன் -/ புஜங்க சயனம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -அழகிய மணவாளன் -ஸ்ரீ ரெங்கம் போலவே –
தாயார் -ஸ்ரீ ரங்க நாயகி –பார்க்கவி என்றும் திரு நாமம்
விமானம் -ப்ரணவாரா விமானம்
தீர்த்தம் -ஸூ ர்ய புஷ்கரிணி
ஸ்தல வ்ருக்ஷம்–பாடலை வ்ருக்ஷம்
மங்களா சாசனம் –திரு மங்கை ஆழ்வார் –

ஆ -பசு -காம தேனு -இந்த ஷேத்ரத்தில் தவம் பெற்று சிறந்த கதி பெற்றதால் -ஆதனூர் -பெயர்
திருமங்கை ஆழ்வார் திருவரங்கத்தில் மதில் கட்டிய கடனுக்கு இப்பெருமாள் செல்வம் அளந்து கொடுத்து
கணக்கும் எழுதிய படியால் -மரக்கால் ஓலைச் சுவடி யுடன் எழுந்து அருளி இருக்கிறார் –
மண்ணை அளந்து கொள்ளக் கொடுக்க -சரியாக வேலை செய்தால் தங்கமாக தெரியும் -இல்லை என்றால் மண்ணாக தெரியும்
கணக்கும் வைக்க எழுத்து கோல்
ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயன் -அரசனாக ஆண்டு அன்னம் அளக்கும் -அளிக்கும் -ரக்ஷகன் –
பெருமாள் தலைக்குக் கீழ் ஒரு மரக்கால் படியை வைத்து இருக்கிறார்
அக்னி பகவானுக்கும் தன் சாபம் தீராத தவம் புரிந்த க்ஷேத்ரம் -கொள்ளிடம் காவேரி நடுவில் சேவை இங்கும் –
இந்திரனும் ஸ்ரீ மஹா லஷ்மி மாலையை மரியாதை குறைவுடன் நடத்திய சாபம்–துர்வாசர் பிருகு சாபம் -இரண்டும் சொல்வர்
இங்கே தவம் இருந்து தாயாரின் அருளை பெற்று தீர பெற்றான் –
ஸ்வாமி மலையில் இருந்து 3 கி மி தூரம் –

மூலவர் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ அழகிய மணவாளன்
தாயார் ஸ்ரீ ரங்கநாயகி, ஸ்ரீ பார்கவி, ஸ்ரீ மந்திர பீடேஸ்வரி, ஸ்ரீ கமல வாசினி
தீர்த்தம் ஸ்ரீ சூர்ய புஷ்கரணி
விமானம் ஸ்ரீ பிரணவ விமானம்
மண்டலம் சோழநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ கும்பகோணம்
நாமாவளி ஸ்ரீ ரங்கநாயகீ ஸமேத ஸ்ரீ ஆண்டளக்குமையன் ஸ்வாமிநே நமஹ

—————

அன்னவனை ஆதனூராண்டாளக்கு மையனை நென்னலை யின்றினை நாளையை நீர்மலை மேல் –பெரிய திருமடல் – 130-

என்னை மனங்கவர்ந்த ஈசனை – வானவர்தம்
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐ யனை”– பெரிய திருமடல் 126 – 129

இத்தலம் சுவாமி மலையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு உள்ளது. கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவு உள்ளது.
இத்தலத்து எம்பெருமானைச் சேவித்துவிட்டு இங்கிருந்து புள்ளம் பூதங்குடி திவ்ய தேசத்திற்கு நடந்தே சென்றுவிடலாம்.

ஆவாகிய காமதேனு மகாவிஷ்ணுவிடம் சரணடைய வேண்டுமென்று இத்திருத்தலத்தில் தவமிருந்து அது சித்தித்தது. காமதேனு தவமிருந்ததால்
ஆ+தன்+ஊர் ஆதனூராயிற்று. இங்குள்ள எம்பெருமானை ப்ருகு மஹரிஷியே பிரதிஷ்டை செய்ததாக ஸ்ரீபாஞ்ராத்ர ஆகமத்தில் உள்ள பௌஷகா
ஸம்ஹிதையின் மூலம் அறியப்படுகிறது.

இந்திரன் இத்தலத்தில் வந்துவேண்ட அவனது சாபம் தீர்ந்து இழந்தது பெற்றான். சிவன் பிரம்மாவின் ஒரு தலையைக் கிள்ள அது கையில் ஒட்டிக்
கொள்ள அதைச் சுட்டெரித்து சாம்பலாக்குமாறு சிவன் அக்னிதேவனிடம் செல்ல அக்னியால் அது முடியாமல் போனது மட்டுமன்றி அவனையும்
பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அப்பாபம் நீங்க அக்னி பகவான் இத்தலத்தில் கடுந்தவமிருந்து எம்பெருமான் காட்சி தந்து சாபம் போக்கினார்.

எல்லா தேவர்களுக்கும் அக்னி பதிலியாக இருந்தபடியால் அக்நிர்வை ஸர்வ தேவர் என்பர் இத்தன்மைத்தான அக்னியின் தோஷமும், இந்திரன்
சாபமும் நீங்கினமையால் இத்தலம் தேவாதி தேவர்களின் ஸ்தலமாக கருதப்படுகிறது.

ஆதிரங்கேச்வரம் வந்தே பாடலி வந ஸமஸ்திதம்
ப்ருகு, அக்னி, காமதேனுப்யோ தத்தாபீதம் தயாந்திரம்
விமானே ப்ரணவே ரங்க நாயக்யா ஸு ஸ மாசரிதம் ஸு ர்ய
புஷ்கர்னி திரே சேஷஸ்யோபரி ஸாயிநம்-

மூலவர்-ஆண்டளுக்கும் ஐயன், தலையின் கீழ் மரக்காலும் இடது கரத்தில் ஓலை எழுத்தாணியுடன், கிழக்கு நோக்கி பள்ளி கொண்ட திருக்கோலம்.
தாயார்- பார்க்கவி, மந்திர பீடேச்வரி கமலவாஸிநி. ரங்கநாயகி.
உற்சவர்– அழகிய மணவாளன் (ஸ்ரீரெங்கநாதன்)
விமானம்– ப்ரணவ விமானம்
வ்ருட்சம்– புன்னை, பாடலி
தீர்த்தம்– சூர்ய தீர்த்தம், சந்திர தீர்த்தம்

காட்சி கண்டவர்கள்–காமதேனு, ப்ருகுமுனிவர், அக்னி பகவான், திருமங்கையாழ்வார்.

இத்தலத்தில் காமதேனுவுக்கும், காமதேனுவின் புத்திரி நந்தினிக்கும் சிற்பங்கள் உண்டு.

ஸ்ரீரங்கத்திற்கு இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும் ஓடுதல் போன்று இத்தலத்திற்கும் 2 கல் தொலைவில் இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும்
ஓடுகிறது.–ஒரு காலத்தில் திருவரங்கம்போன்று இங்கும் 7 மதில்கள் இருந்ததாகவும் பிற்காலத்தே காலவெள்ளத்தே அழிந்துபட்டது என்றும் அறிய முடிகிறது.திருவரங்கம் கர்ப்பகிருகத்தில் அமைந்துள்ள இந்த இரண்டு தங்கத் தூண்களை மணத்தூன் என்றும் சொல்வார்கள். இதேபோன்று ஆதனூரிலும் எம் பெருமானின் கர்ப்பகிருஹத்திற்குள் இத்தூண்கள் உண்டு

மிகச் சிறப்புற்று விளங்கிய இக்கோவிலின் பழைய அமைப்பு பூமிக்கு அடியில் புதைந்துவிட அச்சமயம்-காஷ்மீர் தேசத்து ராஜாவின் புதல்விக்கு (பேய்) பிர்ம்மராட்சஸு பிடித்து, எவ்வளவு பாடுபட்டும் அதைத் தீர்க்க முடியாது அம்மன்னன் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவனது கனவில் தோன்றிய இப்பெருமான் இக் கோவிலை செப்பனிடுமாறு தெரிவிக்க, அவன் பரிவாரங்களுடன் வந்து தங்கி
இப்போதுள்ள மாதிரியை ஒத்துக்கட்டி முடிக்க அவன் மகளைப் பிடித்திருந்த  பிர்ம்மராட்சஸு ம் ஒழிந்தது

திருமுழிக்களத்து எம்பெருமானும் இப்பெருமானும் ஒருவரே என்பது ஐதீஹம்.
என்னை மனங்கவர்ந்த ஈசனையென்று திருமங்கை தனது
மங்களாசாசனத்தை இப்பெருமானுக்காக ஆரம்பிக்கிறார்.
என்னை மனங்கவர்ந்த என்று சொல்லி நம்மாழ்வார் திருமுழிக்களத்து எம்பெருமானுக்காக எடுத்தாண்ட
முழிக்களத்து வளத்தின் என்பதை இவர்-மூழிக்களத்து விளக்கினையென்று மங்களாசாசித்தார்.
மூழிக்களத்தின் வளமாவது – ஸம்பத்து- இங்கு ஆண்டளக்கும் ஐயன் என்பதே  ஸம்பத்திற்கு அடையாளமன்றோ
மஹாத்மாக்கள் விரஹம் ஸஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும்

திருமங்கையாழ்வார் அரங்கநாதனுக்கு திருமதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது சமயங்கையில் இருந்த பொருள் எல்லாம் தீர்ந்துவிட
கைங்கர்யத்திற்குப் பணம் இல்லையே என்று பெருமானிடம் வேண்ட-கொள்ளிடக்கரைக்குவா பணந்தருகிறேன் என்று சொல்ல
அவ்விதமே வந்து நிற்க, எம்பெருமான் தலைப்பாகை அணிந்து கையில் ஒரு எழுத்தாணி, மரக்கால் சகிதிமாய் ஒரு வணிகரைப் போன்று வர,
இவரைக் கண்ட திருமங்கை, யாரென்று வினவ, அதற்கு அந்த வணிகர் உம்பொருட்டே என்னை ஸ்ரீரங்கத்தில் உள்ள அழகிய மணவாளனே அனுப்பிவைத்தான் என்று சொல்ல,
சரி, அப்படியானால் சுவாமி, காலியான மரக்காலுடன்
வந்திருக்கிறீர்களே என்று கேட்க, அதற்கந்த வணிகர் இந்த மரக்காலைக் கையில் எடுத்து
வேண்டிய பொருளை மனதில் தியானித்து எம்பெருமானே சரண் என்று 3 தடவை சொன்னால் அப்பொருள் சித்திக்கும் என்று சொன்னார்.

அப்படியானால் இங்குள்ளவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும். இந்த மணலை அளந்து போடும் என்று கூறினார்.
அதற்குச் சரியென்று ஒப்புக் கொண்ட வணிகர் ஒரு நிபந்தனை விதித்தார். அவர்களின் கூலிக்காக இந்த மணலை நான் அளந்து போடுகிறேன். உண்மையாக உழைத்தோருக்கு பொன்னாகவும் சோம்பலுடன் ஏமாற்றியவர்களுக்கு மணலாகவே காட்சி தரும்
என்று கூறி அளந்து போட பெரும் பாலானோர்க்கு மணலாகவே தெரிய, இவன் மந்திரவாதி என்று பலர் அடிக்கவர,
வணிகர் மெல்ல நகர, திருமங்கை
பின்தொடர, இவருக்கு காட்சியளிக்க நினைத்த எம்பெருமான் மிகவிரைவாகச் செல்ல
திருமங்கை தமது குதிரையிலேறி பின் தொடர்ந்தார்.

இவ்விதம் ஓடிவந்து திருமங்கைக்கு காட்சி கொடுத்து மரக்கால், ஓலை, எழுத்தாணியோடு ஆதனூரில் புகுந்து கொண்டதாக ஐதீகம்.
அவ்வாறு ஓடிவரும்போது இவ்வூருக்கு (ஆதனூருக்கு) அருகில் உள்ள ஓர் ஊரில் ஓலை எடுத்து கணக்கு எழுதியதால் அவ்வூருக்கு ஓலைப்பாடி என்றும்
கம்பீரமாக நடந்துவந்த ஊர்க்கு விசயமங்கை எனவும், ஓடிவரும் போது திரும்பிப் பார்த்த ஊர் திரும்பூர் எனவும்,
திருமங்கையாழ்வார் விரட்டிக்கொண்டு வருகின்றானா இல்லையா என்று மயங்கி நின்ற ஊர்(மாஞ்சுபோனது) மாஞ்சேரி எனவும்,
மரக்காலுக்குள் கை வைத்த ஊர்-வைகாவூர், என்றும்-புகுந்தது பூங்குடி என்றும்,-அமர்ந்தது ஆதனூர் என்றும் கூறுவர்.

இத்தலத்தின் கோபுரத்தில் மஹாவிஷ்ணு சிலை உள்ளது. “ஒங்காரோ பகவான் விஷ்ணு” என்ற ப்ரமாணத்தின் பேரில் ப்ரணவ விமானத்தில் வாசுதேவன்
உள்ளான். இவன் திருவடி தெரிந்துவிட்டால் இந்த யுகமானது (கலியுகம்) முடிந்து பிரளயம் உண்டாகும். இந்தச் சிலை வளர்ந்து வருவதாக ஒரு ஐதீகம்.
இப்போது முழங்கால்வரை தெரிகிறது. இச்சிலை வளர்ந்து வருவதாக இங்குள்ள பெரியோர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீஇராமபிரான் இங்கே வந்து எனது சகாயான் இங்கு வந்தாரா என்றுகேட்டுத் தனது திருவடியை வைத்துவிட்டுச் சென்றதாகவும், வரலாறு. இந்த
அஞ்சநேயருக்கு “வீரசுதர்சன ஆஞ்சநேயர்” என்பது பெயர். ஸ்ரீராமன் திருவடியும், ஸ்ரீஆஞ்சநேயரும் இப்போது இங்கு உளர். சிறந்த
வரப்பிரசாதியாகத் திகழ்கிறார் இந்த ஆஞ்சநேயர்.

இடர் ஆன ஆக்கை இருக்க முயலார்
மடவார் மயக்கின் மயங்கார் -கடவுளர்க்கு
நாதன் ஊர் ஆதரியார் நான் எனது என்னார் அமலன்
ஆதனூர் எந்தை அடியார் –9-

அமலன்
ஆதனூர் எந்தை
அடியார் —பக்தர்கள் -இடர் ஆன ஆக்கை இருக்க முயலார் –
மடவார் மயக்கின் மயங்கார்
கடவுளர்க்கு நாதன் ஊர் ஆதரியார்-ஸ்வர்க்க லோகமும் விரும்பார்
நான் எனது என்னார் –
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் அருளுகிறார் –
காமதேனுக்கு பிரத்யஷம் -என்பதால் திரு ஆதனூர் -திரு நாமம் –

————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஶ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் செய்து அருளிய -ஶ்ரீ ராமாயண தனி ஶ்லோகங்களின் தொகுப்பு —

January 17, 2024

ஶ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்கிற மஹாசார்யர், ஆழ்வார்கள் எழுதிய திவ்ய ப்ரபந்தங்களுக்கு
அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் விளக்கவுரை எழுதியுள்ளார். ‘திருவாய்மொழியைக் காத்த குணவாளர்’ என்றும்,
‘திருவாய்மொழிப் பொருளைத் தேர்ந்துரைக்கவல்ல குரு’ எ ன்றும்
இவரைச் சிறப்பித்துச் சொல்கிறார் மணவாள மாமுனிகள் என்னும் ஆசார்யர்.
அபயப்ரதராஜர், வியாக்கியானச் சக்கரவர்த்தி என்றெல்லாம் சிறப்பாகக் கொண்டாடப்படும் இவர்,
நான்கு திசைகளிலும் நான்கு ஸிம்ஹாஸனம் பெற்றவர் என்று போற்றப்படுகிறார்.

இப்படிச் சொல்லப்படுகிற நான்கு ஸிம்ஹாஸனங்கள் யாவை?
1-நாலாயிர திவ்யப்ரபந்தங்களுக்கு இவர் அருளிச்செய்த வியாக்கியானங்கள் முதல் ஸிம்ஹாஸனமாகும்.
மற்றவை முறையே:2- ஶ்ரீராமாயணம், பாரதம் முதலியவற்றின் தேர்ந்த ஶ்லோகங்களின் வியாக்கியானங்கள்,
3-ரஹஸ்யக்ரந்தங்களின் வியாக்கியானம்,
4-ஆளவந்தார், எம்பெருமானார் போன்ற ஆசார்யர்கள் எழுதிய க்ரந்தங்களின் வியாக்கியானங்கள் ஆகும்.

ஶ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரையிலே நடுநாயகமாக விளங்குகின்ற ஶ்ரீராமாநுஜர்
தமது ஐந்து ஆசார்யர்களிடமிருந்து திவ்யப்ரபந்தங்கள், ஶ்ரீராமாயணார்த்தங்கள், ரஹஸ்யார்த்தங்கள்,
ஸ்தோத்ரார்த்தங்கள் முதலையவற்றைக் கேட்டு அறிந்துகொண்டார்.
ஆயினும் சீழ்ச்சொன்ன இந்த க்ரந்தங்கள் நம் போல்வார் எளிதில் கற்றுத் தெளிய வியாக்கியானங்களாக தம் பெருங்கருணையினால்
வெளியிட்டருளிய பெரியவாச்சான் பிள்ளையைப் ‘பரமகாருணிகர்’ என்றும் ‘அபாரகருணாஸாகரர்’ என்றும்  கொண்டாடுகிறார்கள்.
பேதை பாமரர்களும் ஶ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தின் பொருள்களை உணரும்படி பற்பல நூல்களை இயற்றி
இவர் உதவியதுபோலே வேறு எந்த ஆசார்யருமே செய்ததில்லை என்பதை எவரேனும் மறுப்பரோ?

திருமடந்தை மண்மடந்தை இருபாலுந்திகழ, நலமந்தமில்லதோர் நாட்டில் என்று தொடங்கி
ஶ்ரீராமாயணம் பாசுரப்படி அருளிச்செய்த இவர், ஶ்ரீராமாயணத்தில் ஆழங்கால் பட்டு அருளிச்செய்த
க்ரந்தங்களினுள் ஶ்ரீராமாயண தனிஶ்லோகீ என்பது தனிப்பெரும்பெருமை பெற்று விளங்குகிறது.
ஶ்ருதிகள், இதிஹாஸ புராணங்கள், தர்ம ஶாஸ்த்ரங்கள், காவியநாடக அலங்கார க்ரந்தங்கள், மீமாம்ஸா
முதலான ஶாஸ்த்ர க்ரந்தங்கள் முதலியவற்றிலிருந்து பற்பல விஷயங்களை எடுத்தெழுதியும்,
ப்ரமாணங்களை மேற்கோளாகக் காட்டியும் ஶ்ரீராமாயண ஶ்லோகங்களை விவரித்துத் தந்திருக்கிறார்.

ஶ்ரீராமாயணத்தில் மொத்தம் 24,000 ஶ்லோகங்கள் உள்ளன.
இவற்றுள், தனிஶ்லோகீ வியாக்கியானத்திற்கு இவர் எடுத்துக்கொண்டவை மொத்தம் 159 மட்டுமே.
பால காண்டத்தில் 6,
அயோத்யா காண்டத்தில் 14,
ஆரண்ய காண்டத்தில் 4,
கிஷ்கிந்தா காண்டத்தில் 4,
ஸுந்தர காண்டத்தில் 10,
யுத்த காண்டத்தில் 121;
ஆக மொத்தம் 159.
ஶ்ரீராமாயணம் ஒரு ஶரணாகதி ஶாஸ்த்ரம் என்பதால், யுத்த காண்டத்திலிருந்து  121 ஶ்லோகங்களை எடுத்துக் காட்டியருளியுள்ளார்.

———–

பால காண்டத்தில் 6,

அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம்
வசிஷ்டோபி மகா தேஜோ யே சேமே தபஸி ஸ்திதா தே அபி விதந்தி–பால – 19-14–

ஊந  ஷோடஸ வர்ஷோ மே ராமோ ராஜீவ லோசந ந யுத்த யோக்யதாமஸ்ய பஸ்யாமி சஹ ராஷசை–பால -20-2-

த்ரஷ்டும் சக்யமயோத்யாயம் நா வித்வான் ந ச நாஸ்திக
சர்வே நராச்ச நார்யச்ச தர்ம சீலாஸ் ஸூ சமயதா  –பால -6-8-

கௌசல்யா ஸூப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நரசார்த்தூல கர்த்தவ்யம் தைவமாஹ் நிகம் –23-2-

இயம் ஸீதா மம  ஸூதா சஹதர்ம சரீதவ
ப்ரதீச்ச சை நாம பத்ரம் தே பாணிம க்ருஷ்ணீஷ்வ பாணிநா –17-26-

————

அயோத்யா காண்டத்தில் 14,

கச்சதா  மாதுல குலம் பரதேன ததா அநக சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீத ப்ரீதி புரஸ்க்ருத –அயோத -1-1-

இச்சா மோஹி மஹா பாஹூம்  ரகுவீரம் மஹா பலம் கஜேந  மஹதா யாந்தம் ராமம் ராமம் சத்ரா வ்ருதா நநம –அயோத்யா -2-22-

ப்ரியவாதீ ச பூதா நாம் சத்யவாதீ ச ராகவ பஹூ ஸ்ருதா நாம வ்ருத்தா நாம் ப்ராஹ்மணா நாம் உபாஸிதா–அயோத்யா -2-33-

ப்ரியவாதீ ச பூதா நாம் சத்யவாதீ ச ராகவ பஹூ ஸ்ருதா நாம வ்ருத்தா நாம் ப்ராஹ்மணா நாம் உபாஸிதா–அயோத்யா -2-33-

யச்ச ராமம் ந பச்யேத் து யஞ்ச ராமோ ந பச்யதி நிந்திதஸ்  ஸ வசேஸ் லோகே ஸ்வாத் மாப்யே நம் விகர்ஹதே –அயோத்யா -17-14-

ராஜ்யஞ்ச தவ ரஷேயமஹம் வேலேவ சாகரம் ப்ரதிஜா நாமி தி வீர மா பூவம் வீர லோகபாக் –அயோத்யா -23-29-

கிம் த்வா மன்யத வைதேஹ பிதா மே மிதிலாதிப ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் –அயோத்யா -30-3-

ஸ ப்ராதுச் சரனௌ காடம் நிபீட்ய ரகு நந்தன ஸீதா முவாசாதியஸா ராகவஞ்ச மஹாவ்ரதம்–அயோத்யா -31-2-

பவாம்ஸ்து ஸ ஹ வைதேஹ்யா கிரிஸா நுஷூ ரம்ஸ் யதே அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதச்ச தே -அயோத்யா -31-25-

ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜநகாத் மஜாம் அயோத்யாமடவீம் வித்தி கச்ச தாத யதா ஸூ கம் -அயோத்யா -40-8-

யே து ராமஸ்ய ஸூஹ்ருதஸ் சர்வே தே மூட சேதச சோக பாரேண சாக்ராந்தாச் சயனம் ந ஐ ஹூஸ் ததா –அயோத்யா -41-20-

ராமம்  மே அநு கதா த்ருஷ்டி ரத்யாபி ந நிவர்த்ததே ந த்வா பஸ்யாமி கௌசல்யே  ஸாது மா பாணிநா ஸ்ப்ருஸ-அயோத்யா -42-34-

ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்த்ருதௌ-அயோத்யா -53-31-

விஷயே தே மஹாராஜ ராமவ்யசந கர்சிதா அபி வருஷா பரிமலா நாஸ் ஸ புஷ்பாங்குர கோரகா-அயோத்யா -59-4-

ஆசசஷே அத சத்பாவம் லஷ்மணஸ்ய மஹாத்மந பரதாயா ப்ரமேயாய குஹோ கஹ ந கோசர -அயோத்யா -86-1-

ஸூபகச் சித்ரகூடோ அசௌ கிரி ராஜோபமோ கிரி யஸ்மின் வஸதி காகுத்ஸ்த குபேர இவ நந்த நே –அயோத்யா -91-12-

—————–

ஆரண்ய காண்டத்தில் 4,

பாவஜ்ஞேந க்ருதஜ்ஞேந  தர்மஜ்ஞேந  ஸ லஷ்மண த்வயா புத்ரேண தர்மாத்மா ந சம்வ்ருத்த பிதா மம–ஆரண்ய -16-29-

தருணௌ ரூபசம்பன்னௌ ஸூகுமாரௌ மஹாபலௌ புண்டரீக விசாலாஷௌ சீரக்ருஷ்ணாஜிநாம் பரௌ–ஆரண்ய -19-14-

தம் த்ருஷ்ட்வா ஸத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம்  ஸூகாவஹம் பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே-ஆரண்ய -30-39-

அஸ்மின் மயா சார்த்த முதார  ஸீலா-சிலாதலே பூர்வமுபோப விஷ்டா காந்தஸ்மிதா லஷ்மண ஜாதஹாசா த்வாமாஹா ஸீ தா பஹூ வாக்ய ஜாதம் -ஆரண்ய -63-12-

————-

கிஷ்கிந்தா காண்டத்தில் 4,

பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத நிச்வாச இவ ஸீதாயா வாதி வாயுர் மநோ ஹர –கிஷ்கிந்தா -1-71-

பத்ம சௌகந்தி கவஹம் சிவம் சோக விநாசநம் தன்யா லஷ்மண சேவந்தே பாம்போ   பவன மாருதம் -கிஷ்கிந்தா -1-115-

நாந் ருக்வேத விநீதஸ்ய நாயஜூர்வேத தாரிண நா சாமவேத விதுஷ சக்யமேவம் ப்ரபாஷிதும் –கிஷ்கிந்தா -3-28-

த்வம் -அப்ரமேயச்ச -துராச தச்ச-ஜிதேந்த்ரியச்ச உத்தமதார்மிகச்ச – அஷய்ய கீர்த்திச்ச -விசஷணச்ச -ஷிதி ஷமாவான் -ஷத ஜோபமாஷ-கிஷ்கிந்தா -24-31-

————-

ஸுந்தர காண்டத்தில் 10,

துஷ்கரம் க்ருதவான் ராமோ ஹீநோ யத நயா ப்ரபு தாரயத் யாத்மநோ தேஹம் ந சோகே நா வசீததி-சுந்தர -15-23-

ராமஸ்ய வ்யவஸா யஜ்ஞா லஷ்மணஸ்ய ச தீ மத நாத்யர்த்தம் ஷூப்யதே தேவீ கங்கேவ ஜலதாகமே -சுந்தர -16-4-

ஹிமஹத நளி நீவ நஷ்ட சோபா வ்யசந பரம்பரயாதி பீட்யமாநா சஹ சரரஹி தேவ சக்ரவாகீ ஜனக ஸூதா க்ருபணாம் தசாம் பிரபன்னா –சுந்தர -16-30-

த்ருணமந்தரத க்ருத்வா பிரத்யுவாச ஸூ சிஸ்மிதா நிவர்த்தய மநோ   மத்த ஸ்வ ஜநே ப்ரீயதாம் ம்ந  -சுந்தர -21-3-

இஹ சந்தோ  ந வா ஸந்தி  ஸதோ வா நா நுவர்த்தஸே ததாஹி விபரீதா தே புத்தி ராசார வர்ஜிதா -சுந்தர -21-9-

மித்ரமௌபயிகம் கர்த்தும் ராம ஸ்தாநம் பரீப்ஸதா வதம் சா நிச்சதா கோரம் த்வயாசௌ புருஷரஷப –சுந்தர – 21-19-

சா திர்யகூர்த்வஞ்ச ததாப்யத ஸ்தாத் நிரீஷமாணா  தம சிந்த்ய புத்திம ததர்ச பிங்காதி   பதேர மாத்யம் வாதாத் மஜம் ஸூர்யமிவோத யஸ்தம் –சுந்தர -31-19-

—————-

யுத்த காண்டத்தில் 121;

ந மே துக்கம்   ப்ரியா தூரே ந மே துக்கம் ஹ்ருதேதி வா ஏததேவா நுஸோசாமி வயோ அஸ்யா ஹ்யதிவர்த்ததே –5-5-

ஸூநிவிஷ்டம் ஹிதம் வாக்ய முக்த வந்தம் விபீஷணம் அப்ரவீத் ப்ருஷம் வாக்யம் ராவண கால சோதித -யுத்த -16-1-

இத்யுக்த்வா பருஷம் வாக்யம் ராவணம் ராவணா நுஜ ஆஜ காம முஹூர்த்தேன யத்ர ராம ச லஷ்மண -யுத்த -17-1-

தம் மேரு சிகராகாரம் தீப்தாமிவ சதஹ்ரதாம் கக நச்தம் மஹீஸ் தாஸ் தே தத் ருஸூர் வாநராதிபா -யுத்த -17-2-

தம் ஆத்ம பஞ்சமம் த்ருஷ்ட்வா ஸூ க்ரீவோ வாநராதிப  வாநரைஸ் சஹ துர்த்தர்ஷஸ் சிந்தயாமாச புத்தி மான் -யுத்த -17-3-

சிந்தயித்வா முஹூர்த்தந்து வாநராம் ஸ்தாநுவாச ஹ ஹநூமத ப்ரமுகான் சர்வாநிதம் வசனமுத்தமம் -யுத்த -17-4-

ஏஷ சர்வாயுதோ பேதஸ் சதுர்ப்பிஸ் சஹ ராஷசை ராஷசோ அப்யேதி பச்யத் வமஸ்மான் ஹந்தும் ந சம்சய -யுத்த -17-5-

ஸூக்ரீவஸ்ய வச ஸ்ருத்வா சர்வே தே வாநரோத்தமா சாலா நுத் யம்ய சைலாம்ஸ் ச இதம் வசனமப் ருவன் –யுத்த -17-6-

சீக்ரம் வ்யாதிச  நோ ராஜன் வதாயைஷாம் துராத்மா நாம் நிப தந்து ஹதா யாவத் தரண்யா மலப தேஜஸ–யுத்த -17-7-

தேஷாம் சம்பாஷமாணா நாமான் யோந்யம் ஸ விபீஷண உத்தரம் தீரம் ஆசாத்ய கச்த ஏவ வ்யதிஷ்டத –யுத்த -17-8-

உவாசஸ மகாப்ராஜ்ஞ ஸ்வரேண மஹதா மஹான் ஸூ க்ரீவம் தாம்ஸ்ஸ சம்ப்ரேஷ்ய கச்த ஏவ விபீஷண -யுத்த -17-9-

ராவணோ நாம துர்வ்ருத்தோ ராஷசோ ராஷ சேஸ்வர தஸ்யா ஹமநுஜோ ப்ராதா விபீஷண இதி ஸ்ருத -யுத்த -17-10-

தோ ஸீதா ஜனஸ்தாநாத் த்ருதா ஹத்வா ஜடாயுஷம் ருத்தா ஸ விவஸா தீ நா ராஷசீ பிஸ் ஸூ ரஷிதா –யுத்த -17-11-

தமஹம் ஹேதுபிர் வாக்யைர் விவிதைஸ் ஸ ந்யதர்சயம் சாது நிர்யாத்யதாம் ஸீதா ராமயேதி புந புந -யுத்த -17-12-

ஸ ஸ ந ப்ரதி ஜக்ராஹ ராவண கால சோதித உச்யமாநம்  ஹிதம் வாக்கியம் விபரீத இவௌஷதம்-யுத்த -17-13-

ஸோ அஹம் பருஷித ஸ்தேந தாஸ வச்சாவ மா நித த்யக்த்வா புத்ராம்ஸ்ஸ  தாராம்ஸ்ஸ ராகவம் சரணம் கத –யுத்த -17-14-

நிவேதயத மாம் ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம் சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மநே  -யுத்த -17-15-

ஏதத்து வசனம் ஸ்ருத்வா ஸூ க்ரீவோ லகு விக்ரம லஷ்மணஸ்ய அக்ரதோ ராமம் சம்ரப்த மித மப்ரவீத் –யுத்த -17-16-

மந்த்ரே வ்யூஹே நயே சாரே யுக்தோ பவிது மர்ஹசி வா நராணாஞ்ச பத்ரம் தே பரே ஷாஞ்ச பரந்தப -யுத்த -17-18-

அந்தர்த்தா நகதா   ஹ்யதே ராஷசா காம ரூபிண ஸூ ராச்ச நிக்ருதி ஜ்ஞாச்ச தேஷு ஜாது ந விஸ்வ சேத்-யுத்த -17-19-

ப்ரணிதீ ராஷசேந்த்ரஸ்ய ராவணஸ்ய பவேதயம் அநு பிரவிஸ்ய சோஸ் மா ஸூபேதம குர்யான் ந சம்சய -யுத்த -17-20-

அதவா ஸ்வயமே வைஷ சித்ரமா சாத்ய புத்தி மான் அநு பிரவிச்ய விஸ்வஸ்தே கதாசித் ப்ரஹ ரேதபி -யுத்த -17-21-

மித்ரா டவீப லஞ்சைவ மௌ லம் ப்ருத்யபலம் ததா சர்வ மேதத் பலம் க்ராஹ்யம் வர்ஜயித்வா த்விஷத் பலம் -யுத்த -17-22-

ப்ரக்ருதயா ராஷசோ ஹ்யேஷா ப்ராதாஸ் மித்ரஸ்ய வை விபோ ஆக தஸ்ச ரிபோ பஷாத் கதமஸ் மிம்ஸ்ச விஸ்வசேத்  -யுத்த -17-23-

ராவணேந ப்ரணிஹிதம் தமவேஹி நிஸாசரம் தஸ்யா அஹம் நிக்ரஹம் மன்யே ஷமம் ஷமவதாம் வர -யுத்த -17-24-

ராஷசோ ஜிஹ்மயா புத்த்யாசந்திஷ்டோ அயம்  உபஸ்தித ப்ரஹர்த்தும் மாயயா சந்நோ   விஸ்வச்தே த்வயி ஸாநக -யுத்த -17-25-

ப்ரவிஷ்ட சத்ரு சைந்யம் ஹி ப்ராப்த சத்ருர தர்க்கித நிஹந்யா தந்தரம் லப்த்வா உலூகா நிவ வாய்ஸ-யுத்த -17-26-

வத்யாதாமேஷ தீவ்ரேண தண்டே ந ஸ சிவை சஹ ராவணஸ்ய நருஸம்ஸஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண-யுத்த -17-27-

ஏவமுக்த்வா து தம் ராமம் சம்ரப்தோ வாஹி நீ பதி வாக்யஜ்ஞோ வாக்ய குசலம் ததோ மௌ நமுபாகமத  –யுத்த –17-28-

ஸூ க்ரீவஸ்ய து தத்வாக்யம்  ஸ்ருத்வா ராமோ மஹா பல சமீபாஸ்தா நுவா சேதம் ஹநுமத் ப்ரமுகான் ஹரீன் –யுத்த -17-29-

யதுக்தம் கபி ராஜேன ராவணா வரஜம்பிரதி வாக்யம் ஹேது மதர்த்யம் ச பவத் பிரதி தச்சருதம்  -யுத்த -17-30-

ஸூஹ்ருதாஹி அர்த்த க்ருச்ச்ரேஷூ யுக்தம் புத்திமதா சதா சமர்த்தே நாபி சந்தேஷ்டும் சாஸ்வதீம் பூதி மிச்சதா –யுத்த -17-31-

இத்யேவம் பரிப்ருஷ்டாஸ்தே ஸ்வம் ஸ்வம் மதமதந்த்ரிதா சோபசாரம் ததா ராமமூசுர் ஹிதசி கீர்ஷவ –யுத்த -17-32-

அஜ்ஞாதம்  நாஸ்தி தே கிஞ்சித் த்ரிஷூ லோகேஷூ ராகவ ஆத்மானம் பூஜயன் ராம ப்ருச்சச்ய ஸமான்  ஸூ ஹ்ருத்தம் -யுத்த -17-33-

த்வம் ஹி சத்யவ்ரத   ஸூரோ  தார்மிகோ  த்ருட விக்ரம பரீஷ்யகாரீ ஸ்ம்ருதி மான் நிஸ் ருஷ்டாத்மா  ஸூ ஹ்ருத் ஸூ -யுத்த -17-34-

தஸ்மாத் ஏகைஸஸ் தாவத் பருவந்து சசிவாஸ் தவ ஹேதுதோ மதி சம்பன்னாஸ் சமர்த்தாஸ் ஸ புனஸ் ததா -யுத்த -17-35-

இத்யுக்தே ராகவாய அத  மதிமாநங்கதோ அக்ரத விபீஷண பரீஷார்த்தம் உவாச வசனம் ஹரி –யுத்த -17-36-

சத்ரோ சகாசாத் சம்ப்ராப்த சர்வதா சங்க்ய ஏவ ஹி விஸ்வாச யோக்ய சஹஸா ந  கர்தவ்யோ விபீஷண -யுத்த -17-37-

சாதயித்வா ஆத்மபாவம் ஹி சரந்தி சட புத்தய ப்ரஹரந்தி ஸ ரந்ரேஷூ ஸோ அனர்த்தஸ் தத்க்ருதோ பவேத் -யுத்த -17-38-

அர்த்தா நர்த்தௌ விநிஸ்சித்ய வ்யவசாயம் பஜேத ஹி குணத சங்க்ரஹம் குர்யாத் தோஷ தஸ்து விசர்ஜயேத்–யுத்த -17-39-

யதி தோஷோ மஹாம்ஸ் தஸ்மின் த்யஜ்யதாம விசங்கித குணான் வாபி பஹூன் ஜ்ஞாத்வா சங்க்ரஹ க்ரியதாம் ந்ருப -யுத்த -17-40-

சரபஸ் த்வத நிச்சித்ய சாத்யம் வசனம் அப்ரவீத் ஷிப்ரம் அஸ்மின் நரவ்யாக்ர சார பிரதிவிதீயதாம் –யுத்த 17-41-

ப்ரணிதாய ஹி சாரேண யதாவத்  ஸூஷ்ம புத்தி நா பரீஷ்ய ச தத கார்யோ யதா ந்யாயம் பரிக்ரஹ –யுத்த -17-42-

ஜாம்பவாம் ஸ் த்வத சம்ப்ரேஷ்ய சாஸ்த்ர  புத்த்யா விசஷண வாக்கியம் விஜ்ஞாபயாமாஸ குணவத் தோஷ வர்ஜிதம் -யுத்த -17-43-

பத்தவைராச்ச பாபாச்ச ராஷசேந்த்ராத் விபீஷண அதேச கால சம்ப்ராப்த சர்வதா சங்க்யதா மயம்–யுத்த -17-44-

ததோ மைந்தஸ்து சம்ப்ரேஷ்ய நயாபநய கோவித வாக்கியம் வசன சம்பன்னோ பபாஷே ஹேதுமத்தரம்–யுத்த-17-45-

வசனம் நாம் தஸ்யஷ ராவணஸ்ய விபீஷண ப்ருச்யதாம் மது  ரேணாயம் சனைர் நர பதீஸ்வர -யுத்த -17-46-

பாவமஸ்ய து விஜ்ஞாய தத்தவ தஸ் த்வம் கரிஷ்யசி யதி துஷ்டோ ந துஷ்டோ வா புத்தி பூர்வம் நரர்ஷப –யுத்த -17-47-

அத சம்ஸ்கார சம்பன்நோ ஹநுமான் சசிவோத்தம உவாச வசனம் ஸ் லஷ்ணமர்த்தவம் மதுரம் லகு –யுத்த -17-48-

பவந்தம் மதி ஸ்ரேஷ்டம் சமர்த்தம் வததாம் வரம் அதிசாயயிதும் சகதோ ப்ருஹஸ்பதிரபி ப்ருவன்-யுத்த -17-49-

ந வாதான்நாபி சங்கர்ஷான்நாதி க்யான்ந ச காமத வஷ்யாமி வசனம் ராஜன் யதார்த்தம் ராம கௌரவாத்–யுத்த -17-50-

அர்த்தா அநர்த்த நிமித்தம் ஹி யதுக்தம் சசிவைஸ் தவ தத்ர தோஷம் பிரபச்யாமி க்ரியா ந ஹ்யுபபத் யதே -யுத்த -17-51-

ருதே நியோகாத் சாமர்த்யமவ போத்தும் ந சக்யதே சஹஸா விநியோகோ ஹி தோஷவான் பிரதிபாதிமா –யுத்த -17-52-

சாரப்ரணிஹிதம் யுக்தம் யதுக்தம் சசிவைஸ் தவ அர்த்தஸ்யா  சம்பவாத் தாத்ரா காரணம் நோபாபத்யதே –யுத்த -17-53-

அதேசகாலே சம்ப்ராப்த இத்யயம்யத் விபீஷண விவஷா சாத்ர மேஸ்தீயம் தாம் நிபோத யதாமதி –யுத்த -17-54-

ஸ ஏஷ தேச காலஸ்ச பவதீஹ யதா ததா புருஷாத் புருஷம் ப்ராப்ய ததா தோஷ குணாவபி -யுத்த -17-55-

தௌராத்ம்யம் ராவணே த்ருஷ்ட்வா விக்கிரமம் ஸ ததா தவயி யுக்தமாகமநம் தஸ்ய ஸத்ருஸம் தஸ்ய புத்தித –யுத்த -17-56-

அஜ்ஞாதரூபை புருஷைஸ் ஸ ராஜன் ப்ருச்ச்யதாமிதி யதுக்தம் தத்ர மே ப்ரெஷா காசிதஸ்தி சமீஷிதா –யுத்த -17-57-

ப்ருச்சய மாநோ விசங்கேத சஹஸா புத்திமான் வச தத்ர மித்ரம் ப்ரதூஷ்யேத மித்யா ப்ரஷ்டு ஸூ காகதம் –யுத்த -17-58-

அசக்ய சஹஸா ராஜன் பாவோ வேத்தும் பரஸ்ய வை அந்த ஸ்வ பாவைர் கீதைஸ் தைர் நை புண்யம் பஸ்யதோ ப்ருசம்  -யுத்த -17-59-

ந த்வஸ்ய ப்ருவதோ ஜாது லஷ்யதே துஷ்டபாவதா பிரஸன்னம் வதனம் சாபி தஸ்மான்மே நாஸ்தி சம்சய -யுத்த -17-60-

அசங்கிதமதி ஸ்வஸ்தோ நஸட பரிஸர்ப்பதி ந சாஸ்ய துஷ்ட வாகஸ்தி தாஸ்மான் நாஸ் தீஹ சம்சய –யுத்த -17-61

ஆகாரஸ் சாத்யமாநோ அபி ந சக்யோ விநி கூஹிதும் பலாத்தி விவ்ருணோத்யேவ   பாவ மந்தர்க்கதம் நருணாம் -17-62-

தேச காலோபபன்னம் ச கார்யம்  கார்யவிதாம் வர சபலம் குரு தே ஷிப்ரம் பிரயோகேணாபி சம்ஹிதம் -17-63-

உத்யோகம் தவ சம்ப்ரேஷ்ய மித்யாவ்ருத்தம் ச ராவணம் வாலி நஞ்ச ஹதம் ச்ருத்வா ஸூ க்ரீவம் சாபி ஷேசிதம் -17-64

ராஜ்யம் ப்ரார்த்தயமா நஸ்து புத்தி பூர்வமிஹா கத ஏதாவத்து புரஸ் க்ருத்ய வித்யதே த்வச்ய சங்க்ரஹ –17-65-

யதா சக்தி  மயோக்தம் து ராஷஸஸ் யார்ஜவம்  ப்ரதி பிரமாணம் த்வம் ஹி சர்வஸ்ய ஸ்ருத்வா புத்தி மதாம் வர 17-66-

அத ராம பிரசன்நாத்மா ஸ்ருத்வா வாயு ஸூ தஸ்ய ஹ ப்ரத்ய பாஷத துர்த்தர்ஷ ஸ்ருதவாநாத்மநி ஸ்திதம் -18-1-

மமாபி து விவஷாஸ்தி காசித் பிரதி விபீஷணம்  ஸ்ருத மிச்சாமி தத் சர்வம் பவத்பி ஸ்ரேயசி ஸ்திதை- 18-2-

மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேதத கர்ஹிதம் -யுத்த -18-3-

ஸூ க்ரீவஸ் த்வத தத் வாக்யம் ஆபாஷ்ய ச விம்ருஸ்ய ச தத ஸூ பதரம் வாக்யமுவாச ஹரி புங்கவ -யுத்த -18-4-

ஸூ துஷ்டோ வாப்யதுஷ்டோ வா கிமேஷ ரஜ நீசர ஈத்ருசம் வ்யசனம் ப்ராப்தம் ப்ராதரம் ய பரித்யஜேத் கோ நாம ஸ பவேத் தஸ்ய யமேஷ ந பரித்யஜேத் -யுத்த -18-5-

வாநராதிபதேர் வாக்யம் ஸ்ருத்வா சர்வாநுதீஷ்ய ச ஈஷது தஸ்மயமா நஸ்து லஷ்மணம் புண்ய லஷணம் இதி ஹோவாச காகுத்ஸ்தோ வாக்யம் சத்ய பராக்ரம -யுத்த -18-6/7-

அநதீத்ய ச சாஸ்த்ராணி வ்ருத்தான் அநுபசேவ்ய ச ந சக்யம் ஈத்ருசம் வக்தும் யதுவாச ஹரீஸ்வர–18-8-

அஸ்தி ஸூஷ்மதரம் கிஞ்சித் யதத்ர ப்ரதிபாதி மே ப்ரத்யஷம் லௌகிகம் வாபி வித்யதே சர்வ ராஜஸூ  -18-9-

அமித்ராஸ் தத் குலீநாஸ்ச ப்ராதிதேஸ் யாஸ்ச கீர்த்திதா வ்யச நேஷூ ப்ரஹர்த்தாரஸ் தஸ்மாத யமிஹா கத –18-10-

அபாபாஸ் தத் குலீ நாச்ச மாநயந்தி ஸவகான் ஹிதான் ஏஷ ப்ராயோ நரேந்த்ராணாம் சங்க நீயஸ்து சோபந –யுத்த -18-11-

யஸ்து தோஷஸ் த்வயா ப்ரோக்தோ ஹ்யாதா நே அரிபலஸ்ய ச தத்ர தே கீர்த்தயிஷ்யாமி யதா சாஸ்த்ரமிதம் ச்ருணு–18-12-

ந வயம் தத் குலீ நாஸ்ச ராஜ்ய  காங்ஷீ ச ராஷஸ பண்டிதா ஹி பவிஷ்யந்தி தஸ்மாத் க்ராஹ்யோ விபீஷண–18-13-

அவ்யாக்ராஸச பிரதுஷ்டாஸ்தே ந பவிஷ்யந்தி சங்கதா ப்ராணா தஸ்ச மஹா நேஷஸ்  ததோ அஸ்ய பயமாகதம் இதி பேதம் கமிஷ்யந்தி  தஸ்மாத் க்ராஹ்யோ விபீஷண –18-14/15-

ந சர்வே பிராதரஸ் தாத பவந்தி பரதோபமா மத்விதா வா பிது புத்ரா ஸூ ஹ்ருதோ வா பவத்விதா -18-16-

ஏவமுக்தஸ்து ராமேண ஸூ க்ரீவ சஹ லஷ்மண உத்தாய ஏதம் மஹா ப்ராஜ்ஞ ப்ரணதோ வாக்யம் அப்ரவீத்  –18-17-

ராவணேந  ப்ரணிஹிதம் தம வேஹி நிசாசரம் தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே ஷமம் ஷமவதாம் வர -18-18-

ராஷஸோ ஜிஹ்மயா புத்த்யா சந்திஷ்டோ அயம் இஹா கத ப்ரஹர்த்தும் த்வயி விஸ்வஸ்தே  ப்ரச்சநநோ மயி சா நக லஷ்மணே வா மஹா பாஹோ ஸ  வத்ய ஸசிவை ஸஹ –18-19-

ஏவமுக்த்வா ரகு ஸ்ரேஷ்டம் ஸூ க்ரீவோ வாஹிநீபதி வாக்யஜ்ஞோ வாக்ய குசலம் ததோ மௌநமுபாகமத் –18-20-

ஸூக்ரீவஸ்ய து தத்வாக்யம் ராம ஸ்ருத்வா விம்ருஸ்ய ச தத ஸூ பதரம் வாக்யமுவாச ஹரி புங்கவம் -யுத்த -18-21-

ஸூதுஷ்டோ வாப்யதுஷ்டோ வா கிமேஷ ரஜநீசர ஸூ ஷ்மம ப்யஹிதம் கர்த்தும் மமாசக்த கதஞ்சன –18-22-

பிசாசான் தாநவான் யஷான் ப்ருதிவ்யாஞ்சைவ ராஷசான் அங்குள் யக்ரேண தான் ஹன்யாமிச்சன்  ஹரி கணேஸ்வர –18-23-

ஸ்ரூயதே ஹி கபோதேந சத்ரு சரணமாகத அர்ச்சி தஸ்ச யதா ந்யாயம் ஸ்வஸ்ச மாம் சைர் நிமிந்த்ரித –18-24-

ஸ ஹி தம் பிரதிஜக்ராஹ பார்யா ஹர்த்தார மாகதம் கபோதோ வானர ஸ்ரேஷ்ட கிம் புநர் மத விதோ ஜன –18-25-

ருஷே கண்வஸ்ய புத்ரேண கண்டு நா பரமர்ஷிணா ஸ்ருணு காதாம்   புரா கீதாம் தர்மிஷ்டாம் சத்யவாதி நா –18-26-

பத்தாஞ்ஜலிபுடம் தீநம் யாசந்தம் சரணாகதம் ந ஹந்யாதா ந்ருசம்ஸ் யார்த்தமபி சத்ரும் பரந்தப–18-27-

ஆர்த்தோ வா யதி வா த்ருப்த பரேஷாம் சரணாகத அரி பிராணான் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மநா –18-28-

ஸ சேத் பாத்வா காமாத்வா மோஹாத்வாபி   ந ரஷதி ஸ்வயா சக்த்யா யதா தத்வம் தத்பாவம் லோக கர்ஹிதம் –18-29-

விநஷ்ட பஸ்யதஸ்தஸ்ய ரஷிண சரணாகத ஆதாய ஸூ க்ருதம் தஸ்ய சர்வம் கச்சேத ரஷித -18-30-

அஸ்வர்க்யம் அயஸஸ்யம் பலவீர்ய விநாசனம் -18-31-

கரிஷ்யாமி யதார்த்தம் து கண்டோர் வசனம் உத்தமம் தர்மிஷ்டம் ஸ யசஸ்யம் ஸ ஸ்வர்க்யம் ஸ்யாத்து பலோதயே -18-32-

ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே அபயம் சர்வ பூதேப்யோ ததாம்  யேதத் வ்ரதம் மம –யுத்த -18-33-

ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தமஸ் யாபயம் மயா விபீஷணோ வா ஸூ க்ரீவ யதி வா ராவண ஸ்வயம் –18-34-

ராமஸ்ய து வச  ஸ்ருதவா ஸூக்ரீவ ப்லவகேஸ்வர பிரத்யபாஷத காகுத்ஸ்தம் சௌஹார்த்தே நாபி சோதித–18-35-

மம சாப்யந்தராத் மாயம் ஸூத்தம் வேத்தி விபீஷணம் அநுமாநாச்ச பாவச்ச சர்வத ஸூ பரீஷித   –18-37-

தஸ்மாத் ஷிப்ரம் சஹாஸ்மாபிஸ் துல்யோ பவது ராகவ விபீஷணோ மகா ப்ராஜ்ஞ சகித்வஞ்சாப் யுபைது ந–18-38-

ததஸ்து ஸூக்ரீவவசோ நிசம்ய தத் ஹரீஸ்வரேணாபி ஹிதம் நரேஸ்வர விபீஷணேநாஸூ ஜகாம சங்கமம் பதத்ரி ராஜேன யதா புரந்தர  18-39-

ராகவேண அபயே தத்தே  சந்நதோ ராவணாநுஜ விபீஷணோ மகாப்ராஜ்ஞோ பூமிம் சமவலோகயன் காத் பபாதாவநிம் ஹ்ருஷ்டோ பக்தைரநுசரை சஹ -19-1-

ஸ து ராமஸ்ய தர்மாத்மா நிபபாத விபீஷண பாதயோ சரணான் வேஷீ  சதுர்ப்பி சஹ ராஷஸை–19-2-

அநுஜோ ராவணஸ் யாஹம் தேந சாஸ்ம்யவமாநித பவந்தம் சர்வ பூதா நாம் சரண்யம் சரணம் கத –19-4–

பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச த நாநி ச பவத்கதம்  மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநி வை –19-5-

தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா ராமோ வசனம் அப்ரவீத் வசஸா சாந்த்வயித்வைநம் லோசநாப்யாம் பிபந்நிவ–19-6-

ஆக்யாஹி மம தத்த்வேந ராஷஸாநாம் பலாபலம்–19-7-

ராஷஸா நாம் வதே சாஹ்யம் லங்கா யாஸ்ச பிரதர்ஷணே கரிஷ்யாமி யதாப்ராணம் பிரவேஷ்யாமி   ச வாஹிநீம் –19-23-

சாபமாநய சௌமித்ரே ஸராம்ஸ் சாஸீ விஷோபமான் ஸாகரம் சோஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா –21-22- –

வ்யக்தமேஷ மஹோ யோகீ பரமாத்மா ஸநாதந அநாதி மத்யநித நோ மஹத பரமோ மஹான்–114-14

தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ ரஜய்ய சாஸ்வதோ த்ருவ- -114-15

மா நுஷம் வபுராஸ்தாய விஷ்ணு சத்யபராக்கிரம சர்வை பரிவ்ருதோ தேவைர் வா நரத்வமுபாகதை- -114-16

சர்வ லோகேஸ்வர சாஷால் லோகா நாம்ஹித  காம்யயா சராஷஸ பரீவாரம் ஹதவரம் ஸ்த்வாம் மஹாத்யுதி– -114-17–

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் பிலவங்கம கார்யம் கருண கார்யேண ந கச்சின் நாபராத்யதி –116-44-

————–

உத்தர காண்டம்

ஸ்நேஹோ  மே பரமோ ராஜன் த்வயி நித்யம் ப்ரத்திஷ்டித பக்திஸ்ஸ நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி –உத்தர -40-16-

—————-
ஆக மொத்தம் 159.
ஶ்ரீராமாயணம் ஒரு ஶரணாகதி ஶாஸ்த்ரம் என்பதால், யுத்த காண்டத்திலிருந்து  121 ஶ்லோகங்களை எடுத்துக் காட்டியருளியுள்ளார்.

—————————————

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ சீதா ராம ஜெயம் –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது–பாபாநாம் வா ஶுபா4நாம் வா–யுத்த காண்டம் ஸர்க்கம்-116; ஶ்லோகம்-44-

January 17, 2024

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் பிலவங்கம
கார்யம் கருண கார்யேண ந கச்சின் நாபராத்யதி –116-44-

பாபாநாம் வா ஸூபாநாம் வா -பாபிகள்  விஷயத்திலும் புண்ணியவான்கள் விஷயத்திலும்
வதார்ஹாணாம் -கொல்லத் தக்கவர் விஷயத்திலும்
பிலவங்கம-வானரனே
கார்யம் கருண கார்யேண-நல்லோனாலே கருணை யானது செய்யத் தக்கது
ந கச்சின் நாபராத்யதி-எவனும்  குற்றம் செய்ய வில்லை எனபது இல்லையே –

அவதாரிகை –
ராவணனும் பட்டுப் பெருமாளும் விஜயிகளானார்என்று பெரிய பிரியத்தைப் பிராட்டிக்குத் திருவடி விண்ணப்பம் செய்ய
பிராட்டியும் ப்ரீதி பிரகர்ஷத்தாலே விம்மல் பொருமலாய் ஸ்தப்தையாய் இருக்க
இவனும் விக்கலுக்கு வெம்மாற்றம் போலே
கிந்நு சிந்தயசே தேவி கிம் தவம் மாம் நாபி பாஷசே -116-16- என்று
பெரிய பிரியத்தை விண்ணப்பம் செய்த எனக்கு ஒரு மறு மாற்றம் சொல்லாதே தேவர் எழுந்து அருளி இருக்கிற இருப்பு என் தான் -என்று திருவடி விண்ணப்பம் செய்ய
பிராட்டியும் உனக்கு சத்ருசமாகத் தரலாவது ஓன்று இல்லாமை காண்நான் பேசாது இருந்தது என்ன
இவனும் இவ்வளவில் நம் அபேஷிதத்தை விண்ணப்பம் செய்து கொள்வோம் என்று பார்த்து
தேவரை சுற்று முற்றும் நலிந்த ராஷசிகள் ஆகிறார்-க்ரூரைகளாய் தத் அநு குண பாவைகளாய் ஆயிற்று –
ராவணனுக்கு முன்னே கொல்ல வேண்டுவது இப்பெண் பிள்ளைகளை யாயிற்று –
அவனும் இவர்களோபாதி கேடன் அல்லன் –
இவர்கள் இப்போது பாம்பு படம் அடங்கினால் போலே இருக்கிறார்கள் அத்தனை ஆயிற்று
இவர்களை பஹூ பிரகாரமாக ஹிம்சிக்கப் பாரா நின்றேன் –
முஷ்டிபி பாணிபிஸ் சைவ -116-33- என்று கையாலே குத்தியும் காலாலே துகைத்தும் நகங்களாலே சேதித்தும் பற்களாலே கடித்தும் துடித்தும்
சின்னம் பின்னம் சரைர் தக்தம் -94-22-என்று பெருமாள் திருச் சரங்கள் செய்தது எல்லாம் நானே பண்ணப் பாரா நின்றேன்
முன்பு வந்த போது இடம் இல்லாமல் விட்டுப் போனேன் இத்தனை
இப்போது எனக்கு எல்லா பிரத்யுபகாரங்களும் பண்ணி அருளிற்று ஆகலாம் -இத்தனையும் திரு உள்ளமாக வேணும் -என்ன -பாபா நாம் வா -என்று அருளிச் செய்கிறாள் –

பாபாநாம் வா ஸூபாநாம் வா –
இவர்கள் நீ நினைத்து இருக்கிறபடியே பாபைகள் ஆக வுமாம் –
நான் நினைத்து இருக்கிறபடியே ஸூபைகள் ஆக வுமாம் –
அது தானே யன்றே உத்தேச்யம் –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்றால் போலே அழுக்கு உடையவன் அன்றோ குளிக்க ப்ராப்தி யுடையான்
அவர்கள் பாபைகள் ஆகில் அன்றோ நாம் முகம் கொடுக்க வேண்டுவது
சுபைகள் ஆகில் உன் வால் வேணுமோ –அவர்கள் புண்யங்களே கை கொடுக்குமே –
கை முதல் இல்லார்தார்க்கு அன்றோ கை முதலாக வேண்டுவது -என்றாள்-

வதார்ஹாணாம்
தண்ட்யனை தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிரவும் சொல்லுகிற தர்ம சாஸ்திரம் தேவரீரைத் தோற்றி கிழுத்துப்  பொகடக் கடவதோ -என்கிறாள் –

ப்லவங்கம்-
பின்னையும் அவன் புத்தி திரிய விடாமையாலே -ஹரி ஹரி -என்கிறாள் –
அன்றிக்கே -ப்லவங்கம் -என்று
நச்சினத்தை நச்சும் ஜாதி யானமை கண்டோம் -என்கிறாள் –
வசிஷ்ட ப்ரப்ருதிகள் மந்த்ரிக்கும் படியான இஷ்வாகு வம்சத்தில் பிறந்தாய் அல்லை –
யோகிகளாய் ஜனக குலத்திலே பிறந்தாய் அல்லை –
காட்டிலே பணை யோடு பணை தாவித் திரிகிற ஜாதியிலே இ றே பிறந்தது –
அங்கன் ஒத்தாருக்கு சரணாகதியோட்டையது தெரியாது -என்கிறாள் –
வா நரோத்தம -16-18-என்றவள் தானே இ றே ப்லவங்கம் -என்றாள்
ராஜாக்க்களுமாய் மூலையடியெ நடக்க யுரியருமாய் இருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்
நீ வா நர ஜாதியாய் இருந்து வைத்து இங்கனே கோபிக்கக் கடவையோ –

கார்யம் கருண கார்யேண –
இவர்கள் புண்ய பாபம் கிடக்க இப்போது ஓடுகிற தய நீய தசையைப் பாராய் –
இவர்களுக்கு ஒரு ரஷகன் அல்லையே
இப்போது இவ்வளவிலே நாம் இரங்க வேணும் காண் –
ஆர்யேண-நல்லோனாலே –
இவை எல்லாம் இப்போது நான்  கற்பிக்க வேண்டும்படி யாவதே உனக்கு –
ஆர்யேண-
ஐந்த்ரவ்யாகரண  பண்டிதன் என்கிறது பொய்யோ –
அவையும் எல்லாம் கற்றுக் கேட்டு இருக்கச் செய்தேயும் இப்போது ராம கோஷ்டியில் பரிசயமான படி யாகாதே
அந்த கோஷ்டியில் பரிசயம் பழக்கம் இ றே நீ இங்கனே சொல்ல வல்லை யாயிற்று
நான் பிரிந்த பின்பு அக் கோஷ்டி இங்கனே நீர்த்தது ஆகாதே -நீர் விடப் பட்ட பால் போலே -என்று கருத்து –
ந கச்சின் நாபராத்யதி -குற்றம் செய்யாதவன் ஒருத்தனும் இல்லை –
சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார் –
திரை நீக்கிக் கடலாடப் போமோ
நல குதிரையாக பாவித்து இருக்கிற பெருமாள் தான் குற்றவாளர் அல்லரோ
நான் தான் குற்றப்பட்டவள் அல்லேனோ-
பெருமாள் குற்றவாளர் ஆனபடி என் என்னில்  -தாம் காடேறப் போனார் -அவர் பின்னே மடலூருவாரைப் போலே இளைய பெருமாளும் போந்தார்
தம்மோடு ஏகாந்த போகம் பண்ணக் கடவதாக இலையகலப் படுத்திக் கொண்டு நானும் போந்தேன்-
என்னைப் பிரிந்து பத்து மாசம் இருந்தார்
நான் வராவிட்டால் தன்னதோரம்பு இயங்க மாட்டாமை இல்லை இ றே
இவ்வழி இத்தனை நாள் பிரிந்து இருக்க வல்லரான போதுபெருமாள் பக்கலிலே யல்லவே குற்றம்
பார தந்த்ர்யத்துக்கு அநுகுணமாக பேசாது இராதே அது தன்னைச் சொன்ன என் பக்கலில் அன்றோ குற்றம்
இந் நாயகன் சொன்ன கார்யம் செய்த அடியாரை தண்டிக்கப் பார்த்த அன்று பெருமாள் அருளிச் செய்த கார்யம் செய்யப் போந்த உன்னை முற்பட தண்டித்து கொண்டு அன்றோ
ராவணன் சொன்ன கார்யம் செய்த இவர்களை தண்டிப்பது
ஆகையால் நீ அல்லையோ குற்றவாளன்
எல்லாப் படியாலும் பெருமாள் ஒரு விஷயத்தை முனிந்த அன்று ஆற விடுகைக்கு நான் உண்டு
நானும் அவர் வழி யோடு போக வேண்டி இருந்த அன்று எனக்கு நீ யுண்டு -என்று இருந்தேன்
நீயும் இங்கனே யானால் அபராதம் செய்வார்க்குப் புகலாவார் உண்டோ -என்கிறாள் –

அஜ்ஞாத நிக்ரஹ -கோபம் என்பதையே அறியாதவள் -நம் போல்வாருக்கு தஞ்சம் ஆவது பெருமாள் உடைய சரம ஸ்லோகம் அன்று
பிராட்டி யுடைய இந்த சரம ஸ்லோகமே நமக்கு தஞ்சமாகக் கடவது –

மாதர் மைதிலி  ராஷசீஸ் த்வயி ததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரஷந்த்யா பவநாத்மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா
காகம் தம் ச விபீஷணம் சரணமித் யுக்தி ஷமௌ ரஷத
ஸா ந சாந்திர மஹாக ஸ ஸூ காது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ-ஸ்ரீ குணரத்ன கோசம் -50-

—————————————

பாபாநாம் வா ஶுபா4நாம் வா வதா4ர்ஹாநாம் ப்லவங்க3|

கார்யம் கருணமார்யேண   கஶ்சிந் நாபராத்4யதி ||

பொழிப்புரை:
வானரனே! பாபிகள் விஷயத்திலும், புண்ணியவான்கள் விஷயத்திலும்,கொல்லத்தக்கவர் விஷயத்திலும்
நல்லோனாலே கருணையானது செய்யத்தக்கது. எவனும் குற்றம் செய்யவில்லை என்பது இல்லையே.

இராவணன் அழிந்து, இராமபிரான் போரில் ஜயித்தார் என்னும் இனிய செய்தியை ஸீதா பிராட்டியிடம் அநுமன் விண்ணப்பம் செய்ய,
பிராட்டியும் உகப்பின் மிகுதியாலே, விம்மல், பொருமல்கள் ஏற்பட்டு செயலற்றவளாயிருக்க, ‘தேவி! என்ன நினைக்கிறீர்? தேவரீர் எதனால் என்னோடு பேசவில்லை?’
[கிந்நு சிந்தயஸே தே3வி, கிம் த்வம் மாம் நாபி4பா4ஷஸே; யுத்.கா. 116-16 ] என்று வினவினான்.
தேவியும் பதிலிறுத்தாள்
‘நீ செய்த பேருபகாரத்துக்குத் தக்கபடி தரக்கூடியதொன்றில்லையே என்று நினைத்தே பேசாமலிருந்தேன்’ என்று கூற
அநுமனும், ‘தேவரீரைச் சூழ்ந்திருந்து துன்புறுத்திய இந்த அரக்கிகள் ராவணனைக் காட்டிலும் கொடியவர்கள்,
ராவணனுக்கு முன்னமேயே இவர்களைக் கொன்றிருக்க வேண்டும். ராவணன் இப்பொழுது உயிருடன் இல்லை என்பதனால் அடங்கி இருக்கிறார்கள்.
இவர்களை என் கையால் துன்புறுத்திக் கொல்வதற்கு தேவரீர் அநுமதி தரவேண்டும்
பகவானிடம் அபசாரம் செய்தவர்களையும், பாகவதாபசாரம் செய்தவர்களையும் தண்டிக்கும் ரீதியிலே தண்டிக்க முயற்சிக்கிறேன்.
முன்பு வந்தபோது அவகாஶமின்மையாலே விட்டுப்போனேன்.
இபோது இந்த வரத்தை எனக்குக் கொடுத்தருள வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார்.
இதைக் கேட்ட பிராட்டி பதிலிறுக்கும் வண்ணம் இந்த ஶ்லோகத்தை அருளிச் செய்கிறார்.

பாபிகளானும், பரிஶுத்தர்களானாலும்
(பாபாநாம் வா ஶுபா4நாம் வா) நீ நினைக்கிறபடி பாபமே செய்தவர்களாக இருப்பினும் சரி,
நான் நினைத்தபடி பரிஶுத்தர்களாக இருப்பினும் சரி, எப்படியிருந்தாலும் கருணை காட்டவேண்டியதே.
பரிஶுத்தர்களாகில் கருணை காட்டவேண்டும் என்பதை நீயே அறிவாய்.
பாபிகள் பக்ஷத்திலும் கருணையே காட்டப்படவேண்டும் என்பதை நான் இப்போது நிரூபித்துக் காட்டுகிறேன்.
‘கருணை காட்டுவதற்கு மஹாபாபிகள் கிடைக்கமாட்டார்களா?’ என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் நல்லோர்கள்.
‘குற்றமுளதாகில் மிகவும் நன்று’ [ தோ3ஷோ யத்3யபி தஸ்ய ஸ்யாத்; யுத்.கா.18-3] என்ற இராமபிரானைப் போலே,
அழுக்குடையவனைத்தானே குளிப்பாட்ட வேண்டும்.  அதுபோலவே பாபமாகிற அழுக்குடையவர்கள் அகப்பட்டால்,
கருணையான குளிர்நீராலே அவர்களைக் குளிப்பாட்ட வேண்டியிருக்கும்.
ஆகையால் ராக்ஷஸிகள் பாபம் செய்திருப்பதால்தான் அவர்களுக்குக் கருணை முகம் காட்டவேண்டும்.
பாபமற்றவராகில் அவர்கள் தாமாகவே கடைத்தேறிவிடுவார்கள்.
தங்களைக் கடைத்தேற்றிக் கொள்ளத் தம் கையில் ஒன்றும் இல்லாதவர்களையன்றோ நல்லோர்கள்  கைதூக்கி விடவேண்டும்.
இதைக்கேட்ட அநுமன், ‘அப்படியென்றால் தர்ம ஶாஸ்திரங்களைத் தூக்கி எறிய வேண்டுமோ?’ என வினவ,
அதற்கு பிராட்டி சொன்னாள், ‘கொல்லத்தக்கவரானாலும் (வதா4ர்ஹாணாம்) நீ சொன்னது ஸாமாந்ய ஶாஸ்திரம்’.
ஆகையால், கொல்லத்தக்கவனாயினும் ஶரணமடைந்தவனைக் கைவிடுவதில்லை’
[தஸ்மாத3பி வத்3யம் ப்ரபந்நம் ப்ரதிப்ரயச்சந்தி; யஜு.ஸம்.6-5-20] என்கிற விஶேஷ ஶாஸ்திரத்தைக் கிழித்துப் போடவேண்டுமே’.
ஸாமாந்ய ஶாஸ்திரத்துக்கும், விஶேஷ ஶாஸ்திரத்துக்கும் விரோதம் வந்தால், ஸாமாந்ய ஶாஸ்திரத்தைத் தள்ளி
விஶேஷ ஶாஸ்திரத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்கிறாள் பிராட்டி.
இதைக் கேட்டும் அநுமன் தன் கருத்தை மாற்றிக் கொள்ளாமையாலே, பிராட்டி, ‘ஹரி, ஹரி’ என்கிறாள்.
பிடித்த பிடியை விடாத உன் குரங்கு புத்தியைத்தான் உன் செயலில் காண்கிறேன்.
வஸிஷ்டர், வாமதேவர் முதலானோர் மந்த்ராலோசனை வழங்கக்கூடிய இக்ஷ்வாகு வம்ஶத்தில் பிறந்தவன் அல்லையே நீ.
கர்மயோகியான ஜனகரின் வம்ஶமுமன்று.
காட்டில் கிளைக்குக் கிளை தாவித்திரியும் ஜாதியிலன்றோ நீ பிறந்தது!
அப்பேர்பட்ட உனக்கு ஶரணாகதியின் பெருமை எப்படித் தெரியும்?
பேருபகாரம் செய்த அநுமனை இப்படிப் பிராட்டி நிந்திக்கலாமோவெனில்,
அன்று அவன் செய்த பேருபகாரத்துக்குத் தோற்று ‘வானரோத்தம’ என்றவள்,
இன்று அவன் அடாத செயல் புரிவதில் பிடிவாதமாய் இருப்பதைக் காண்கையாலே, அவனைத் திருத்துமுகமாக
‘குரங்கே’ என்று நிந்திக்கிறாள் என்று கொண்டால் குற்றமில்லை.
ராஜாவாய், இஷ்டப்படி நடக்கத்தக்க ஸ்வாதந்த்ரியமுடைய இராமபிரானும் எங்கள்முன் இத்தனை கோபமாகப் பேசியறியார்.
நீ கேவலம் ஒரு குரங்காயிருந்து என்முன்னம் இத்தனை கோபமாய்ப் பேசலாமோ?

நல்லோனால் கருணை காட்டப்படவேண்டும் (கார்யம் கருணமார்யேண).
இவர்களுடைய புண்ணிய பாபத்தைப் பற்றிய ஆராய்ச்சி இப்போது எதற்கு? அது நிற்க.
இப்போது இவர்களுடைய வருந்தத்தக்க நிலையைப் பார். உன்னைப்போல் ஒருவன் இவர்களைத் துன்புறுத்தினால், ரக்ஷிப்பதற்கு இங்கு ஒருவருமில்லை.
இப்படிப்பட்ட ஸமயத்தில் இவர்களுக்காகவன்றோ நாம் இரங்க வேண்டும்.
நல்லோனன உனக்கு நான் இப்போது இவையெல்லாம் சொல்லித்தரவேண்டியுள்ளதே!
நீ ஐந்திர வியாகரணம் கற்றிலையோ? இப்படி எல்லா ஶாஸ்திரமும் கற்றிருந்தும், ராம கோஷ்டியில் பழகின பின்னர் இத்தன்மையுடையனானாய் போலும்!
நான் பிரிந்த பின்னர் பெருமாளுடைய கோஷ்டி நீர் விடப்பட்ட  பால்போலே தரம் குறைந்து போயிற்று போலும்!

குற்றம் செய்யாதவன் ஒருவனுமில்லையே (ந கஶ்சிந் நாபராத்4யதி)
இந்த உலக வாழ்க்கையில் குற்றமில்லாதவர் யார்?
அலைபோனபின்பு கடலில் குளிக்கலாம் என்று சொல்லமுடியுமோ?
அதுபோலவே, குற்றமில்லாதாரைப் பார்த்து கருணை காட்டுவேன் என்று சொன்னால்,
கருணை காட்டுவதற்கு ஒருவருமே அகப்படமாட்டார்களன்றோ?
குதிரைகளில் சிறந்த குதிரை ‘நற்குதிரை’ என்பதுபோலே, ‘நன்மனிதர்’ என்று மனிதரில் சிறந்தவராகத் வேஷமிட்டுக்
கொண்டிருக்கும் இராமபிரான் மட்டும் குற்றம் செய்யாதவரா?
நான்தான் குற்றம் செய்யாதவளா?
நீதான் குற்றம் செய்யாதவனோ?

ராமபிரான் என்ன குற்றம் செய்தார்-எனில்,
அவர் காடு சென்றார். மடலூருவாரைபோலே இலக்ஷ்மணனும் இவர் சென்றவிடமெல்லாம் சென்றார்.
இராமபிரானோடு காட்டில் இஷ்டப்படியெல்லாம் திரிந்து விளையாடலாம் என்று நானும் அவரைப் பின்தொடர்ந்தேன்.
இப்படிப்பட்ட என்னைப் பிரிந்து பத்து மாஸம் இருந்தார்.
ஓர் அம்பைவிட்டு ராவணனை நினைத்த மாத்திரத்தில் ஏன் மாய்க்கவில்லை?
இதைச் செய்ய வல்லவராயிருந்தும் என்னைப்பிரிந்தே இருக்க வல்லவரானபோதே பெருமாள் குற்றம் செய்தவர் என்பது தெரியவில்லையா?

என்னுடைய பாரதந்திரியத்துக்குத் தக்கவாறு அவர் என்ன செய்தபோதிலும் நான் பேசாமலிராமல்,
அவர் குற்றத்தை உன்னிடம் சொன்னபோதே, நானும் குற்றவாளியாகிறேன்.

தன் தலைவனான ராவணன் கட்டளையை நிறைவேற்ற இந்த அரக்கிகளை நீ தண்டிக்க நினைத்தால்,
முதலில் நீ உன் தலைவனான ராமனின் கட்டளையைச் செய்வதால் உன்னையன்றோ முதலில் தண்டிக்க வேண்டும்!

ஆகையால், நீ சொல்லுகின்ற காரணத்தை வைத்துக் கொண்டு பார்த்தால் நீயும் குற்றம் செய்தவனாகிறாய்.

ஆகவிப்படி, ராமபிரானும், நானும், நீயும் குற்றவாளிகள் ஆனபடியால், உலகில் குற்றம் செய்யாதவர்கள் யார்?
அதாவது, எல்லாவிதத்திலும் ஒரு சேதனனைப் பெருமாள் கோபித்தபோது, அந்தக் கோபத்தை ஆற்றிவிடுவதற்காக (புருஷகார பூ4தையான) நான் உண்டு.
நானும் அவர் வழியிலே சென்று ஒரு சேதனனைக் கைவிடுமேயானால் ஆசார்யனான நீ உண்டு
அச்சேதனனையும் எங்களையும் திருத்திச் சேர்ப்பிப்பதற்கு என்று நினைத்திருந்தேன்.
நீயும் இப்படிக் கருணையற்றவனானால் குற்றம் செய்தவற்கு யார் புகல்? என்கிறாள்
கோபம் என்பதையே அறியாதவள் (அஜ்ஞாத நிக்3ரஹா), கருணையே வடிவெடுத்தவள் (கருணா) என்று ஶாஸ்திரங்களில் பேசப்படும் பிராட்டி.

அரக்கிகளிலும் கொடிய நம்மைப் போன்ற மஹாபாபிகளுக்குத் தஞ்சமாவது பெருமாளுடைய சரமஶ்லோகங்களல்ல; பிராட்டியினுடைய இந்தச் சரமஶ்லோகமே நமக்கு எப்போதும் தஞ்சமாகக் கடவது.

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ சீதா ராம ஜெயம் –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண -அபய பிரதான சாரம் -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -ஸக்ருதேவ ப்ரபன்னாய –யுத்த -18-33 —

January 17, 2024

ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம்  யேதத் வ்ரதம் மம –யுத்த -18-33-

ஸக்ருதேவ -ஒரு தரமே
ப்ரபன்னாய -பிரபத்தி பண்ணினவன் பொருட்டும்
தவாஸ் மீதி ஸ யாசதே -தவ -உனக்கு அடியேனாய் -அஸ்மி -ஆகிறேன் -இனி -என்று -யாசதே -யாசிக்கிறவன் பொருட்டும்
சர்வ பூதேப்யோ-எல்லா பிராணிகள் இடத்தில் நின்றும்
அபயம் -பயம் இன்மையை
ததாமி-பண்ணிக் கொடுக்கிறேன்
யேதத் வ்ரதம் மம –இது எனக்கு விட முடியாத சங்கல்பம் –

அவதாரிகை –
இப்படி சொன்ன இடத்திலும் மஹா ராஜர் நேராகத் தெளியாதே சலித ஹ்ருதயராய் இருக்கிற படியைக் கண்டு அருளி
ப்ரக்ருத்யநுகுணமாக ப்ரபன்ன பரித்ராண பிரதிஜ்ஞையைப் பண்ணி அருளுகிறார் -ஸக்ருதேவ -என்கிற ஸ்லோகத்தாலே –
மித்ர பாவேந -என்கிற ஸ்லோகத்தில் பிரகிருதி -தன்மையை -அருளிச் செய்தார் –
இதில் தத் அநு குணமாக பிரதிஜ்ஞையைப் பண்ணுகிறார்-
ஸக்ருதேவ ப்ரபன்னாய-
ஸக்ருச் சப்தத்துக்கு -சஹஸா ஆதேஸமாய் –சஹ சைவ ப்ரபன்னாய -உடனே-என்கிறபடி
அதாகிறது -தன் அயோக்யதையைப் பார்த்துத் தே-இது ஆள்வான் நிர்வாஹம் –
கீழ் அநாதிகாலம் சம்சரித்துப் போந்தவன்  மேல் அநந்த காலம் பல அநு பவம் பண்ணப் புகுகிறவன் ஆகையாலே
யாவதாயுஷம் அநு வர்த்தித்தாலும் -சக்ருத் -என்கைக்கு போரும் அத்தனை அன்றோ -என்று எம்பார் நிர்வாஹம் –
ஈஸ்வர விஷயீ காரத்துக்கு ஒரு கால் அமையும்
ஆவர்த்திக்கிறது உபாய வைபவத்தால் வந்த ரஸ்யதை யாகையாலே -என்று பட்டர் நிர்வாஹம் –
ஸக்ருதேவ -என்கையாலே உபாயத்துக்கு விஹிதமான அசக்ருதா வ்ருத்தியை வ்யாவர்த்திக்கிறது –
தவாஸ் மீதி ஸ யாசதே –
இதுக்கு மேல் உனக்கு அடியேனாக வேணும் என்று உபேயத்தையும் ப்ரார்த்திக்குமவனுக்கு –
ஸக்ருதேவ  ப்ரபன்னாய -என்கிறது பிரபத்தி
தவாஸ் மீதி ச யாசதே -என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தால் -அநவரத பாவநா ரூபமான பக்தியைச் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி-
சர்வ பூதங்கள் நிமித்தமாக பய நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுப்பன் –
பீத்ரார்த்தா நாம் பய ஹேது -பாணினி ஸூ த்த்ரம் -1-4-25-
இதி  ஹேதௌ பஞ்சமீ –
மஹா ராஜர் எதிரிடிலும் காட்டக் கொடோம் என்றபடி
யேதத் வ்ரதம் மம —
நமக்கு அநு பால நீயமான சங்கல்பம் இது
அமோக சங்கல்பரான நமக்கு சங்கல்பங்கள் அடையக் குலையிலும் குலையாத சங்கல்பமாகும் இது –

————————————————————————————————————————————————————————————-

தனி ஸ்லோக- வியாக்யானம்-

அவதாரிகை –
ஸ ராவண -யுத்த -11-33-என்று பெருமாளும் பரிகரமுமாகக் கடல் கரையிலே குறுகி வந்து விட்டார்கள என்று கேட்ட ராவணன்
சசிவசா மந்த மந்த்ரி புரோஹிதாதி வர்க்கத்தைக் குறைவறக் கூட்டி
பவித்பிர் -12-26-என்று நியமித்து கார்ய விசாரம் பண்ணுகிறவன்
தான் செய்து நின்ற நிலைகளையும் செய்ய வேணும் கார்யங்களையும் சொல்லி
தஸ்ய காம பரி தஸ்ய -12-27-என்று இத்தைக் கேட்ட கும்ப கர்ணனும் குபிதனாய்
யதா து ராமஸ்ய -12-28-என்று இவன் அபஹரித்த வன்றே இப்படி விளையும் என்று அறுதி இட்டோமே என்று
ஸ்வ புத்தி சம்வாதத்தை சம்வதித்து
சர்வமேத -12-29-என்று செருக்கி நான் செய்த வற்றுக்கு ஒப்புண்டோ என்ற ராவணனை  அதி ஷேபித்து
எங்கள் சொல் கேட்டுச் செய்ய இருந்தாய் ஆகில் இந்த சீதா அபஹாரத்துக்கு முன்பே அன்றோ செய்வது -என்றும்
ய -பஸ்சாத்-12-32- என்று பூர்வ உத்தர கார்யங்களை க்ரம ஹீனமாகப் பண்ணுகிறவன் நயாப நயங்களை அறியான் என்றும்
திஷ்ட்யா-12-34-என்று நஞ்சூட்டின பழம் போலே இனியராய் இருக்கச் செய்தேயும் அறக் கொடியர் பெருமாள்
அவர் உன்னைக் கொல்லாது ஒழிந்தது உன் புண்யம் -என்றும்
அதில் கோபித்து இவன் வெறுக்க ஒண்ணாது என்று சமீ கரிஷ்யாமி -12-35-என்று
பள்ளத்துக்கு மேட்டை நிரவுமா போலே உன் அநீதியை என் தோள் வலியாலே ஒக்க விடுகிறேன் -என்று சமாதானம் பண்ண
மஹா பார்ச்வனும் அவனுக்கு பிரியமாக சில வார்த்தைகளைச் சொல்லி -நிசாசர-14-1- என்று
அவர்கள் நிரர்த்தகமாகப் பிதற்றின வார்த்தைகளைக் கேட்டு விபீஷணப் பெருமாள் ஹிதரூபமாக
வ்ருதோ-14-2-என்று பாம்போடு ஒரு கூரையிலே பயிலுவாரைப் போலே -பெரிய திருமொழி -11-8-3-சீதை யாகிற பெரும் பாம்பின் அருகே கையை நீட்டுவார் உண்டோ –
யாவந்த -14-3/4-என்று தொடங்கி-குரங்குகள் கடலை அடைத்துப் படை வீட்டை அடைக்கப் பார்க்க புகுகிறார்கள்
ராம சரங்கள் குறும் தெருவும் நெடும் தெருவுமாக புகுந்து தலைகளைத் திருகப் புகுகிறது
அதுக்கு முன்னே பிராட்டியைப் பெருமாள் பக்கலிலே போக விடாய்-என்றால் போலே சில வார்த்தைகளைச் சொல்ல
ப்ரகுஅச்த இந்த்ரஜித் ப்ரப்ருதிகளும் அதுக்கு விபரீதமாக சில வார்த்தைகளைச் சொல்ல
ஸ்ரீ விபீஷணப் பெருமாளும் குபிதராய் -ந தாத -15-9/10/11-என்று தொடங்கி உனக்கு இவற்றில் அபியோகம் இல்லை
பெற்ற பிள்ளை நீ தான் புத்ரன் என்று ஒரு சத்ருவாய் இருந்தாய்
தகப்பனார் அனர்த்தத்தை இப்படி இசைவார் உண்டோ
சத்ருக்களைக் கொல்லில் முற்பட உன்னைக் கொல்ல வேண்டும் என்று வார்த்தை சொல்லி
த நாநி -15-14-என்று உபஹார புரஸ் சாரமாகப் பிராட்டியை உடையவன் வசத்திலே விட்டு உங்கள் முடியோடு நெஞ்சாறல் கெட்டிருக்கப்  பாருங்கோள்-என்றுசர்வர்க்கும் ஹிதம் சொல்ல
இத்தைக் கேட்ட ராவணன் ஸூ நிவிஷ்டம் -16-1-என்று இப்படி ஹிதம் சொன்னால் என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -திருவாய்-2-7-8–என்றும்
அறியாதன அறிவித்த   அத்தா நீ செய்தன -திருவாய் -2-3-2- என்றும்
காலிலே விழப் பிரார்தமாய் இருக்க தன் வசம் இன்றியிலே கால பரவசனான படியாலே பருஷங்களைச் சொல்லி
த்வாம்  து திக் குல பாம்சனம் –16-16-என்று திக்கரிக்க
உத்பபாத கதா பாணி -16-17-என்று
சோதர ப்ராதாவுமாய் ஹித உபதேசம் பண்ணின என்னை இப்படிச் சொன்ன இவன் என் படப் புகுகிறான் -என்று
தளர்ந்து தடியூன்றி எழுந்து இருந்து தனக்கு பவ்யராய் இருப்பார் நாலு பேரோடு கிளம்பி
ஆத்மானம் -16-26- என்று நாலு வார்த்தை சொல்லி
ஆஜகாம முஹூர்த்தே ந -17-1-என்று
நின்றவா நில்லா நெஞ்சு -பெரிய திருமொழி -1-1-4-புரிவதற்கு முன்னே தம்பி சொல்லு ஜீவியாத ராவண கோஷ்டியில் நின்றும்
தம்பி சொல்லு ஜீவிக்கிற ராம கோஷ்டியை நோக்கி வந்து
நிவேதயாத மாம் ஷிப்ரம் ராகவாய மகாத்மனே -17-15-என்று
நெறி கெட மடுத்துக் கொண்டு  புகலாகாது
அதி சங்கையும் பண்ணுவார்கள்
த்வார சேஷிகளை கொண்டு பெருமாளுக்கு விண்ணப்பம் செய்து ஆனய-18-34-என்னப் புக வேணும்  என்று நின்ற நிலையிலே நின்று விண்ணப்பம் செய்ய
இத்தைக் கேட்ட மஹா ராஜர் -யேதத்து -17-16-என்று இவன் வார்த்தையைக்  கேட்டு
பெருமாள் முற்பாடராய் வருவதற்கு முன்னே தாம் நடை இட்டுச் சென்று ராஜ்ய கார்யங்கள் விசாரிக்க வேண்டாவோ -ஓய்ற்றரியோ போக விட வேண்டாவோ -நம்மிலும் அவர்கள் முற்பட்டார்கள் –
ப்ரணிதீ -17-20-என்று இங்கு ஆகாசத்திலே   நிற்கிற இவன் ஒற்றனாக வேணும்  -ராவணன் தமி -மூர்க்கன் -நலிய வந்தவன்
இவனைக் கழுத்திலும் காலிலும் கோக்க அடுக்கும் -எனபது -அது பெருமாள் செவிக்குப் பொறுத்த வாறே -வந்தவனையும் அவனையும் கொள்ள பிராப்தம் -என்று சொல்ல
இத்தைக் கேட்டு அருளின பெருமாள் திரு உள்ளம் தளும்பி முதலிகளைப் பார்த்து -யதுக்தம் -17-30-என்று முதலிகளைப் பார்த்து
தோழனார் ராஜாக்களாய்ச் செருக்கிச் சொன்ன வார்த்தையை சரணாகத ரஷணம் பண்ணின ஜாதியிலே பிறந்த நீங்களும் கேட்டிகோளே-உங்கள் நினைவுகளை சொல்லுங்கோள்-என்ன
ஸ்வம் ஸ்வம் -17-32-என்று மாட்டார்கள் -மகா ராஜர்க்காக மாட்டார்கள் உபயாவிருத்தமாகப் பரீஷித்து
ஒழுக விசாரித்துக் கைக் கொள்ள பிராப்தம் -என்று சொல்லித் தலைக் கட்ட –
இத்தைக் கேட்ட திருவடியும் எழுந்து இருந்து ந வாதான் -17-50-என்று இப் பஷங்களை அழிக்கப் புகுகிறவன் ஆகையாலே
சிலரோடு பிணக்கு யுண்டாய் அல்ல -சிலரோடு வெறுப்பு யுண்டாய் அல்ல -எல்லார்க்கும் மேலாய் நியாமகனாய் அல்ல -பிரதிபன்ன வாதி யல்ல –
அப்யஹம் ஜீவிதம் ஐ ஹ்யாம்  -ஆரண்ய -10-19-என்கிற பெருமாளை இழக்க வரும் என்று பெருமாள் பக்கல் ஆதாரத்தால் சொல்லுகிறேன் -என்று அவை அடக்கம் சொல்லி
புகுர விட்டால் பரீஷிப்பது -பரீஷித்தால் புகுர விடுவது என்று அந்யோந்ய ஆஸ்ரயணம் வரும்
தாத்ரா -17-58-என்று சாம பேதம் பண்ணிக் குலைத்து அழைக்க ப்ராப்தமாய் இருக்க
தன்னடையே விஸ்வசித்து வந்தவனை அதிசங்கை பண்ணினால் குலைந்து போம் அப்போது ராஜ நீதி அல்ல -சாஸ்திர விருத்தம் -என்று பர பஷ தூஷணம்  சொல்லி
ந த்வச்ய-17-60/61-என்றும் இப்புடைகளிலே ஸ்வ பஷ ஸ்தாபனத்தையும் பண்ணி
திரு முன்பே நாமும் சில அறிந்தோமாகஒண்ணாது என்று யதா சக்தி -17-66-என்று
அடியேனுக்குத் தோன்றின அளவு விண்ணப்பம் செய்தேன் இத்தனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் இவ்வுலகத்து எல்லாம் அறிவீர் -என்று தேவரீர்திரு உள்ளத்தில் அகலத்துக்கு இது எங்கே -இனி திரு உள்ளமான படி செய்து அருளீர் என்று தலைக் கட்ட
அத ராம-18-1-என்று  காற்றின் மகனான திருவடியாலே லப்த சத்தரான பெருமாள் தன் திரு உள்ளத்தில் கிடந்தது அருளிச் செய்வதாகக் கோலி
மித்ர பாவேந -18-3-என்கிற ஸ்லோகத்தாலே
மித்ர பாவேந சம்ப்ராப்தன் சதோஷனே யாகிலும்    கை விடேன் என்று சொல்லி
தஸ்யாநு பந்தா பாபமாந சர்வே நச்யந்தி தத் ஷணாத்-அஹிர்புத்த -37-33-என்று பிரபன்னன் ஆனபோதே நிர்த்தோஷன்
இப்படி -பிரபன்னனாய் நிர்த்தோஷன் ஆனவனுக்கு -உம்மாலும் என்னாலும் பிறராலும் வரும் பயன்களைக் போக்கக் கடவேன் -என்கிறார் இந்த ஸ்லோகத்தால்
வேதோ உபப்ப்ரும்ஹணா ர்த்தாய தாவக்ராஹயாத பிரபு -பால -4-6-என்று வேத ப்ரும்ஹண ப்ரவண ப்ரபந்தம் அன்றோ இது
இவ்விடத்தில் உபப்ரும்ஹிக்கிற வேதார்த்தம் எது -வேத வாக்கியம் தான் எது -என்னில் –
தம் ஹி தேவமாத்மபுத்தி பிரசாதம் முமுஷூவை சரணம் அஹம் ப்ரபத்யே -ஸ்வே-6-18-என்றும்
ப்ரயத பாணி சரணமஹம் ப்ரபத்யே ஸ்வஸ்தி சம்பாதேஷ்வபயம் நோ அஸ்து-ருக்வேத -என்றும் சொல்லுகிற
பிரபத்புபாய வைபவம் இவ்விடம் உபப்ரும்ஹிக்கிறது
வாக்யமும் ப்ரயதபாணி சரணமஹம் ப்ரபத்யே என்கிற இது சரனௌ சரணமஹம் ப்ரபத்யே –என்று த்வயம்
சரணம் காடம் நிபீட்ய–அயோ என்றும் திருவடிகளைக் கையாலே பிடிக்கும் போது ஸூ த்த ஹச்தனாக வேணும்
அந்தஸூ த்த ஹஸ்ததையாவது -சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்றும்
பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகீன் குரூன்
ரத் நாதி  தந தான்யாநி ஷேத்ராணி ச க்ருஹாணி ச
சர்வ தர்மாமச்ச சந்த்யஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான்
லோக விக்ராந்த சரணு சரணம் தேவராஜம் விபோ -விஹா கேஸ்வர சம்ஹிதை -என்றும்
வீடு மின் முற்றவும் -திருவாய் -1-2-1- என்றும் மற்றாரும் பற்றிலேன் -பெரிய திருமொழி -8-10-5-என்றும் உபாயாந்தரங்களை விட்டுப் பற்றுகை –
அத்தை இ றே ப்ரயதபாணி -என்கிறது –
மாம் வ்ரஜ -சரணம் ப்ரபத்யே -பிரார்த்தனா மதி சரணாகதி -என்று உபாய பிரார்த நாரூப ஜ்ஞானத்தை -சரணம் பிரபத்யே -என்கிறது –
இவ்வாக்யத்தை இந்த ஸ்லோகம் உபப்ரும்ஹித்தபடி ஏன் என்னில்
சக்ருத் ஏவ -என்கிற பதங்களால்  அசக்ருதாவ்ருத்தி சாபேஷையான பக்தியை வ்யாவர்த்திக்கையாலே சர்வ தர்ம தாக பூர்வகமான ப்ரயுத பாணி என்கிற பதத்தையும்
பிரபன்னாய-என்கிற பதத்தாலே சரணம் பிரபத்யே -என்கிற பதங்களையும்
த்வாஸ் மீதி ச யாசதே -என்கிற பதங்களாலே ஸ்வஸ் த்யஸ்து -என்கிற பதங்களையும்
அபயம் ததாமி -என்கிற பதங்களாலே அபயமஸ்து-என்கிற பதங்களையும் உபப்ரும்ஹிக்கிறது
ஆகிறது -ப்ரபத்யே  என்கிற பிரபதன தசையில் ஏக வசனமாய் இரா நின்றது
பல தசையிலே ந என்று-எங்களுக்கு என்று – பஹூ வசனமாய் இரா நின்றது -இது செய்யும்படி ஏன் என்னில்
வைஷ்ணவோ ந குலே ஜாத என்று ஏக வசனமாகச் சொல்லி
தே சர்வே முகத்திமா யாந்தி -என்று பஹூ வசாமாகவும்
யே ச வைஷ்ணவ சம்ஸ்ரயா தே நைவ தே பிராஸ் யந்தி -என்று ஏக வசன பஹூ வசனங்களாலும்
இப்படி பஹூ பிரமாணங்கள் உண்டாகையாலும் –
லோகத்தில் ஒருவன் ராஜ சேவை க்ருஷ்யாதிகளைப் பண்ண
அவன் யதன பலமான அன்ன தான தான்யா வஸ்த்ராதி பலங்களை அவன் அபிமானத்திலே பார்யா புத்திர சிஷ்ய தாசாதிகள் வருத்தமற புஜிக்கக் காங்கையாலும்
இப்படி லோக வேதங்களிலே அநு பூத சரமாகையாலே
ஒருவன் பிரபன்னனாக அவன் அபிமானத்திலே ஒதுங்கினார்க்கு எல்லாம்  பலமாகக் கடவது -என்கிறது –

ஆகிறது -பிரபத்த்யுபாயம் எனபது எம்பெருமான் உபாயம் என்பதாகா நின்றது –
பிரபத்தியாவது -த்வமேவோ பாய பூதோ மே பவதி -ப்ரார்த்த நா மதி -சரணாகதி -என்று
சேதனனுடைய ப்ரார்த்த நா ரூப ஜ்ஞானமாய் இரா நின்றது –
எம்பெருமான் ஆகிறான் ப்ரார்த்த நீயானாய் இருப்பான் ஒருவன் பரம சேதனனாய் இரா நின்றது -இது செய்யும்படி என் என்ன –
ப்ராம்ருஷ்ட லிங்கம் அநு  மானமாய் இருக்க -லிங்க பராமர்சோ அநு மானம் -என்று  பராமர்ச ப்ராதான்யத்தைப் பற்ற ஔ பசாரிகமாகப் பராமர்சத்தைச் சொன்னால் போலவும்
நீலாம் ஜ்ஞானம் பேதம் ஜ்ஞானம் என்றால் ஜ்ஞானத்துக்கு ஒரு நைல்ய பீதி மாதிகள் அற்று இருக்க விஷயகதமான நைல்ய பீதி மாதிகளை விஷயியான ஜ்ஞானத்திலே உபசரித்து
நீளம் ஜ்ஞானம் பேதம் ஜ்ஞானம் -என்றால் போலேயும் ச்வீகார ப்ராதான்யத்தைப் பற்ற சவீ கார விஷயமான பகவத் கத உபாய வ்யவஹாரத்தை விஷயியான ச்வீகார ரூப பிரபத்தி ஜ்ஞானத்திலே உபசரித்து சொல்லுகிறது ஆகையால் ஒரு விரோதமும் இல்லை –

மலை நெருப்பை யுடையது புகை இருப்பதால் -அநு மானம்
மலை -பஷம்
-நெருப்பு சாத்தியம்
ஹேது -லிங்கம் -அடையாளம் காரணம் -ஆகிறது-ஸ  ஸ்வேநைவ பலப்ரத ஸ்வே நைவ நாராயண -அனர்க்க ராகவம் -3-20-என்றும்
மாம்  வ்ரஜ -ஸ்ரீகீதை -18-66-என்றும்
மாமேவைஷ்யசி -ஸ்ரீ கீதை -18-65-என்றும்
இறைவா நீ தாராய் பறை -என்றும்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நான் ஆட் செய்யோம் -என்றும்
எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்று இ றே சொல்லுகிறது -அந்த உபாய உபேயங்கள் ஆகிறது கார்ய காரணங்கள் இ றே
யத நந்தரம் யத்த்ருச்யதே தத் தஸ்ய காரணம் -என்றும்
நியத பூர்வ பாவி காரணம் -என்றும்
பூர்வ பாவியுமாய் பூர்வ காலத்திலேயே சத்துமாய் இ றே காரணம் இருப்பது
நியத பஸ்சாத் பாவித்வம் ச கார்யத்வம் -என்றும்
ப்ராக சத்  சத்தா யோகித்வம் கார்யத்வம் -என்றும்
பூர்வ காலத்திலேயே சத்துமாய் இராதே
அத்தாலே பிறக்கக் கடவதுமாய் பஸ்சாத் பாவியுமாய் இ றே கார்யம் இருப்பது
இப்படி இருக்க
நித்யம் விபும் -என்றும்
சத்யம் ஜ்ஞானம் என்றும்
ஏகமே யத்விதீயம் -என்றும்
நித்யமுமாய் ஏகமுமாய் இருக்கிற பகவத் வஸ்துவுக்கு பரஸ்பர விருத்தமான பாவ அபாவத்மகத்வம் கூடும்படி என் -என்னில் –
ஸ தேவ சோம்யேத மக்ர ஆசீதே கமேவாத் விதீயம்ம்,-என்றும்
அவிகாரமுமாய்  நித்யமுமாய் ஏகமுமான ப்ரஹ்மத்துக்கு
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ஸ வ்ருஷ ஆஸீத் -என்றும்
ஸோ ஆகாமயத பஹூச்யாம் ப்ரஜாயேயேதி -என்றும்
ஸ ஏவ ஸ்ருஜ்ய ஸ ஸ சரக்க கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ஸ பால்யதே -ஸ -என்றும்
த்ரிவித காரணத்வமும் சருஷ்டுஸ்ருஜ்யத்வமும் பரஸ்பர விருத்தமுமாய் இருக்க
ஸூ ஷ்ம சிதசித் விசிஷ்ட பிரமம் காரணம்
ஸ்தூல சிதசித விசிஷ்ட ப்ரஹ்மம் கார்யம் -என்று
அவ்விருத்த தர்மங்கள் விசேஷணங்களிலே யாய் -விசிஷ்ட ஐக்யத்தாலே நிர்வஹித்தால் போலே
இங்கும் -தாது ப்ரசாதான் மஹிமா நமீ சம்-என்றும்
தஸ்மின் பிரசன்னே க்லேச  சங்ஷய -என்றும்
ப்ரஹர்ஷயாமி-என்றும்
த்வத் ப்ரீதயே-என்றும்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் வியக்க இன்புறுதும்-என்றும்
பிரசாத விசிஷ்டன் உபாயம்
ப்ரீதி விசிஷ்டன் உபேயம்
என்று விசேஷண பேதம் கிடக்கச் செய்தே விசிஷ்ட ஐ க்யத்தாலே
உபாய உபேய எம்பெருமான் என்கிறது ஆகையாலே எல்லாம் கூடும்
இரக்கம் உபாயம் -இனிமை உபேயம் -என்று இ றே ஜீயர் அருளிச் செய்யும் படி –

அநந்ய சாத்யே ஸ்வா பீஷ்டே -என்று பிரபத்யாதி சாத்யம் இ றே மோஷம்
சாத்யம் ஆவது முன்பு இன்றியிலே பின்பு உத்பன்னம் ஆவது
உத்பன்னச்ய வினாச யோகாத் -என்று உத்பன்னமாய் நசிக்கும் ஆகில் உபேயமான பகவத் ப்ராப்தி ரூப மோஷ நசிக்குமாய் இருந்ததே என்னில் நசியாது
இதுக்கு இரண்டு பிரகாரம் உண்டு –
அதில் ஓன்று சாத்யம் தான்- உத்பாத்யம் என்றும் -ப்ராப்யம் என்றும் -விகார்யம் -என்றும் சம்ஸ்கார்யம் -என்றும் நாலு பிரகாரமாய் இருக்கும்
உண்டு பண்ணப் படுவது -அடையப்படுவது -விகாரம் அடைவிக்கப் படுவது -சம்சரிக்கப் படுவது -சாதிக்கப் படுபவை நான்குவகை –
அவற்றில் உத்பாத்யமாவது -கடம்  கரோதி -படம் கரோதி போலே முன்பு இன்றியிலே பின்பு உண்டாவது
ப்ராப்யம் ஆவது -க்ராமம் கச்சதி ராஜா நம் கச்சதி -என்றும் காம் தோக்தி பய -என்று முன்பே சித்த ரூபமான வஸ்துவை அதிகாரிக்கு இடுகை –
விகார்யம் ஆவது -ஷீரமப் யஞ்ஜயதி -என்றும் தரபுசீசே ஆவர்த்தயதி -பாலைத் தயிர் ஆக்குகையும் ஈயங்கள்  உருக்குகையும்
சம்ஸ்கார்யம் ஆவது வ்ரீஹீன் ப்ரோஷதி -என்றும் வ்ரீஹீ நவ ஹந்தி -என்று தன்னைக் கார்யாந்தர யோக்யமாகப் பண்ணுகை-மந்திர ஜலத்தால் பிரிஷித்து -நெல்லை உரலில் இட்டு குத்தி போல்வன
இங்கும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும்
பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்றும்
பரம் ஜ்யோதிரூப சம்பாத்திய -என்றும்
உன்னை எய்தி -என்றும்
பண்டே சித்த ரூபனான பரமாத்மாவை இவன் கிட்டுகையாலே ப்ராப்யம் நித்தியமே யாகிறது
இனி மற்றை இரண்டாவதுபிரகாரம் -நிதிப் நித்யா நாம் -என்றும் அஜோஹ்யேக-என்றும்
ந ஹாய் விஜ்ஞாதூர் விஜ்ஞாதேர் விபரிலோபோ வித்யதே -என்றும்
பர நல மலர்ச் சோதி -என்றும்
ஆத்மாக்கள் நித்யர் ஆகையாலும் இவர்களுக்கு தர்மமான ஜ்ஞானா நந்தாதிகள் நித்யங்கள் ஆகையாலும்
தமஸா கூட மக்ரே பிரகேதம் -என்றும்
தயா திரோஹிதத் வாச்ச சக்தி ஷேத்ரஜ்ஞ  சம்ஜ்ஞிதா-என்றும்
ஆத்ம ஸ்வரூப   தர்மங்களுக்குத் திரோ தாயகமாய் பிரகிருதி சம்சர்க்கம் போய்
ஸ்வே ந ரூபே ணாபி நிஷ்பத்யதே -என்றும்
ஆவுர்ப்பூதஸ்வ ரூபஸ்து-என்றும்
அவபோதா தயோ குணா பிரகாஸ் யந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவாத்மநோ  ஹி தே-என்றும்
ஸ்வா பாவிகாரம் விஸ்த்ருதமாய் உத்பாத்யம் அன்றிக்கே ஒலிகையாலும் நித்யம் ஆகிறது என்ற பிரகாரம் –
அவையும் அப்படி ஆகிறது -இப்பிரதேசம் பிரபத்த்யுபப்ரும் ஹணம் பண்ணுகிறதாகில்
அஹம் அஸ்மா அபராதானாம் ஆலய –என்கிற  பிரபத்தி லஷணம் கிடந்ததோ என்னில்
ராவணோநாம துர்வ்ருத்தோ -17-19-என்று ராவண சம்பத்தாலும்
பீஷ யசே ஸ்மபீரோ-15-4-என்று நாம நிர்வசனத்தாலும் ஸ்வ தோஷத்தை முன்னிடுகையாலே -அஹம் அஸ்ம்ய  அபராதானாம்  ஆலய -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
ராஜ்யம் ப்ரார்த்தயமா நச்ச-17-65- என்று தனக்கு ராஜ்யம் வேண்டி வந்தவனாய் பெருமாளுக்கு கிஞ்சித்காரம் பண்ண வந்தவன் அல்லாமையாலே அகிஞ்சன -என்னும் அர்த்தம் சொல்லுகிறது
த்வாம் து திக் குல பாம்சநம் -16-15- என்று தள்ளி விடும்படி ஸோ தரப்ராதாவுக்கு உட்பட ஆளன்றிக்கே போருகையாலே அகதி என்னும் அர்த்தம் சொல்லுகிறது
பவந்தம் சரணம் -19-4- என்கையாலே  த்வமேவ   உபாய பூதோ மே பவதி  ப்ரார்த்த நா மதி சரணாகதி -என்னும் அர்த்தம் சொல்லுகிறது
பாதயோ சரணான் வேஷீ நிபபாத -19-2- என்கையாலே  சா தேவே அஸ்மின் பிரயுஜ்யதாம் -என்னும் அர்த்தம் சொல்லலுகிறது
ஆகையால் இது நேராகக் கிடந்தது
ஆநு கூல்ய சங்கல்பாதிகளும்  கிடந்ததோ என்னில் -இந்த லஷணமும் புஷ்கலம்
ஆத்மாநாம் -16-25-என்று ராவணனுக்கும் படை வீட்டுக்கும் நன்மையை ஆசாசிக்கையாலே ஆநு கூல்ய சங்கல்பம் சொல்லிற்று
உத்பபாத கதா பாணி -16-16- என்று கையிலே தடி இருக்க பரிபவித்தனை கரைய வடித்து போராமையாலே ப்ராதி கூல்ய வர்ஜனம் சொல்லிற்று –
வாலி நஞ்ச –17-6-என்று ஸோ தா ஹரணமாக ராஜ்யம் த்ரவ்யம் என்று அறுதி இட்டு வருகையாலே ரஷிஷ்யதீதி விஸ்வாசம் சொல்லிற்று
பவந்தம் சரணம் கத -19-4-என்று சொல்லுகையாலே கோப்த்ருத்வ வரணம் சொல்லிற்று
பவத்கதம் -19-5-என்று அகில பர சமர்ப்பணம் பண்ணுகையாலே ஆத்ம நிஷேபம் சொல்லிற்று –
பிராணா தச்ச-18-14-என்று ஸ்வரத்தில் தளர்த்தியாலும்
சீக்ரம் -17-7- என்று பெருமாள் பக்கல் போக ஒண்ணாத படி நடு வழியிலே கொல்ல நிற்கையாலும்
தைந்யம் கார்ப்பண்யம் உச்யதே -என்கிற கார்ப்பண்யம் சொல்லிற்று
ஆகையாலே இந்த லஷணமும் புஷ்கலம் –

இப்படி
புஷ்கல லஷணையான பிரபத்தியைப் பண்ணி
இதுக்குப் பலமாக கொள்ளைக் குப்புக்கு கூலம் எடுத்தவோ பாதி
நாம் இருக்க பலாந்தரங்களை ஆசைப்படாதே  நம்மையே உகந்து வந்தவனுக்கு சகல பய நிவ்ருத்தியும் பண்ணுவேன்
இது நமக்கு வ்ரதம் என்கிறார் இந்த ஸ்லோகத்தாலே –

———————

இப்படி அபய பிரதானம் பண்ணுவது ஆருக்கு என்னில் –
சக்ருதேவ பிரபன்னாய –
ச லஷண பிரபத்தி பண்ணினவனுக்கு -அதாவது -சக்ருதேவ பிரபன்னனாய் இருக்கை-
சக்ருத்-தனக்குப் பொருள் என் என்றால் –
ஆவ்ருத்தி ரசக்ருதுபதே சாத் -என்றும் அநேக ஜன்ம சமசித்த -என்றும் பக்தி போலே ஸ்வரூப நிஷ்பத்தியும் பல நிஷ்பத்தியும் சிரகால சாதியை யன்றிக்கே
தத் த்வயம்  சக்ருத் உச்சாரோ பவது -கடவல்லி -என்றும்
உபாயோசயம் சதிர்த்தஸ்தே ப்ரோக்த சீக்ர பலப்ரத-லஷ்மி தந்த்ரம் -17-76-என்றும்
ஸ்வரூப நிஷ்பத்தியும் பல நிஷ்பத்தியும் ஒரு காலேயாய் இருக்கை –
சக்ருதேவ -என்கிற அவதாரணம் -பிரபன்னனே-என்றும்
ஒருகாலே -இருகால் மாட்டில்லை -என்றும் அயோக வ்யவச் சேதமோ -அந்யயோக வ்ய்வச் சேதமோ
சங்கு வெளுப்பே –அயோக வ்யவச் சேதம் -அப்பொருள் அங்கெ இருக்கிறது போலே
பார்த்தன் ஒருவனுமே வில்லாளி –  ஒருவன் தான் என்பதை குறிக்கும் அந்ய யோக வயவச் சேதம் –
பிரபன்னனே -என்ற போது பிரபன்னனை அநு வதித்து அவனுக்கு அபய பிரதானம் பண்ணுவன் என்று வாக்யத்துக்கு விதேயம் இத்தனை போக்கி
பிரபன்னனோ அபய பிரபன்னனோஎன்று விமர்சமாய் பிரபன்னனே என்று விதயம் அல்லாமையாலும் -அயோக வ்யவச் சேத பொருள் பொருந்தாது
சக்ருச்சாரோ பவதி -என்றும் சக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்த -என்றும் பிரபத்தியாகில் சக்ருத் பிரயோஜ்யையாய் -அசக்ருத் பிரயோஜ்யை அல்லாமையாலே சக்ருத்தா வ்ருத்தியாய் இருப்பதொரு பிரபத்தியில் வ்யவச் சேதம் இல்லாமையாலும்
அயோக வ்யவச் சேதம் இல்லாமையாலும்
அபயங்கதோ பவதி என்று அப்பிரபன்னனான   பக்தி நிஷ்டனுக்கும்  அபாய பிரதானம் பண்ணின படியாலே அந்ய யோக வ்யவச் சேதம் அல்லாமையாலும்
வ்யாவர்த்தம் இல்லை என்று இட்டு வ்யர்த்தம்
இனி சக்ருதேவ -என்று இங்கே கூட்டின போது-சக்ருதேவ குர்யான் ந அசக்ருத் -என்று
பிரபத்தி ஸ்வரூப அபிதானம் பண்ணுகிறது அன்றிக்கே
பிரபன்னன் அநூத்யனாய்
அபாய பிரதானத்திலே  தாத்பர்யம் ஆகையாலே சக்ருத்தோடே கூட்டிலும் வ்யர்த்தம்
இந்த உபபத்திகளாலே சக்ருத் பிரயோகமும் வ்யர்த்தம்
சக்ருதேவா பயம் ததாமி -என்று இங்கே அன்வயித்தாலோ   என்னில்
ஒரு சரீரிக்குப் பிறக்கக் கடவ பயன்கள் எல்லாம் ஒரு காலே சஹிதமாய்  அவற்றினுடைய நிவ்ருத்தியை ஒரு காலே பண்ணுகிறதல்ல-
பூத காலத்தில் பயங்கள் பண்டே அனுபவித்துப் போயிற்றன –
ஆகாமி காலத்தில் பயங்கள் உத்பன்னம் அல்லாமையாலே நிவ்ருத்தி இப்போது பண்ண ஒண்ணாது
இன்னமும் ததாமி -என்று ப்ராரப்தமாய் -நிகழ கால பிரயோகம் -பரிசமாப்தம் அல்லாத பயங்கள்  உத்பன்னங்கள் அல்லாமையாலே மேல் வரும் அவை அடைய வர வரப் போக்குகிறேன் என்கிற வர்த்தமானத்துக்கும்
ஒரு கால் என்கிற சக்ருத் பதத்துக்கும் வ்யாஹதியும் வரும்
அபாய பிரதானம் பண்ணுகிற இன்று தொடங்கி ராவண வத பர்யந்தமாகவும் பயங்களுக்கும் பரிஹாரங்களுக்கும் அவதி இல்லாமையாலே அனுஷ்டான விருத்தமும் ஆகையாலே
சக்ருத் என்றும் ஏவ என்றும் ப்ரஸ்துத பதங்களுக்கு வையர்த்யம் வரும் என்னில்
வாராது –
1- சக்ருத் ஏவ –
பிரபன்னன் என்றார் பெருமாள் –அதுக்கு அனுபபத்தியாக மஹா ராஜர் சக்ருத் பிரயோஜ்யை யான ப்ரபத்தியை –
ராகவம் சரணம் கத –17-14- என்றும்
பவந்தம் சரணம் கத-19-4- என்றும்
பாதயோ சரணான் வேஷீ நிபபாத -19-2- என்றும்
முக்கால் பண்ணி பிரபத்தி லஷண ஹாநியும்
ப்ரபத்த்ரு ஸ்வரூப ஹாநி யும்
பிரபத்தவ்ய ஸ்வரூப ஹாநி யும் -பண்ணினான் என்று தூஷணம் சொல்ல
சக்ருதேவ பிரபன்னாய -அவன் பலகால் பண்ணிற்று இலன் -ஒரு கால் பண்ணினான் -என்கிறார்-
நாலு மூன்று பண்ணை பண்ணிற்றாக எடுத்த பிரமாணங்கள் செய்யும்படி என் என்னில்
ராஷசோ -17-5- என்று அபிசாபம் -கடும் சொல் -சொன்ன உங்களைப்   பார்த்து
ஸோ அஹம் —ராகவம் சரணம் கத -17-14- என்கிறபடி விரோதியாய் வந்தவன் அல்லேன்
அவன் தானே பரிபவித்து போகச் சொல்ல -அவனோட்டை சம்பந்தங்களையும் விட்டு பெருமாளை சரணம் புக வந்தேன்
என்று தன அருள்பாடுசொன்னான்  முற்பட -சரணம் கத-என்கிற நிஷ்டை
உம்முடைய வார்த்தைகளாலே கலங்கினோமே என்று சங்கித்து நம்மைத் தெளிய விடுகைக்கு
பவந்தம் சரணம் கத -என்று விண்ணப்பம் செய்த படி
பாதகனாய் வந்தவன் அல்லன்  உம்மை சரணம் புகுவதாக வந்தவன் என்று நமக்கு பட்டாங்கு சொன்னான் இரண்டாம் பண்ணை –
ஆ நய-18-34-மேல் -என்று நாமும் அழைத்து அஸ்மாபிஸ் துல்யோ பவது –18-38-என்றும்
ஸ்கித் வஞ்சாப்யுபைது ந-என்று நீர் அனுமதி   பண்ணின பின்பாயிற்று –
காத் பபாதாவ நிம் -19-1- என்று பூமியிலே இழிந்து
பாதயோ சரணான் வேஷீ நிபபாத -19-2-என்று நம் காலிலே விழுந்தது ஆகையாலே ஒரு காலே யாயிற்று அவன் சரணம் புகுந்தது –
ஒரு ஹானியும் பண்ணிற்று இலன் -என்கிறார் -ஆகையாலே சக்ருதேவ -என்கிற பதம் பிரயோஜனம் ஆகிறது
2-அன்றியிலே -சக்ருதேவ பிரபன்னாய -என்று
அநேகஸ்மாத வ்யாவ்ருத்தோ தர்ம –அநேக தர்ம -என்கிறாப் போலே
சக்ருத்வ நிச்சித்ய ப்ரபன்னன்-என்றாய் -மத்யம பத லோபி யான சமாசமாய் -விசார்யா ச புன புன -என்று
துஷ்டனோ அதுஷ்டனோ -மித்ரனோ அமித்ரனோ வத்யனோ அவத்யனோ -ச்வீகாரனோ பஹிஷ்கார்யானோ
என்று நாம் பட்டால் போலே லங்கா மித்ர நாதிகளை விடுவேனோ பற்றுவேனோ
ராவணனை விடுவேனோ பற்றுவேனோ -போகிற இடத்தில் கைக் கொள்ளுவார்களோ தள்ளுவார்களோ ராஜ்யம் கிடைக்குமோ கிடையாதோ என்று
இப்புடைகளிலே பஹூ முகமாய் விசாரித்து அளப்பது முகப்பதாகை அன்றிக்கே
சக்ருத் சமீஷ்யைவ  ஸூ நிச்சிதம் ததா -யுத்த -12-28-போலே ஒரு காலே அறுதியிட்டு வந்தவன் என்கிறார் ஆகவுமாம் –
3- அன்றியிலே சஹஸா சப்தத்துக்கு சக்ருதேசமாய் -சஹஹைவ பிரபன்னாய -என்றாய் -அதாவது ஆஜகாம முஹூர்த்தேந -17-1-என்றும்
ஒல்லை நீ போதாய் -என்றும் சொல்லுகிறபடியே -நின்றவா நில்லா நெஞ்சில் பிறந்த ஆநு கூல்யம் புரிவதற்கு  முன்பே வந்தான் -என்கை
4- அன்றியிலே -சரணாகத ரஷணம்பண்ணுகிறீர் ஆகில் அடியேன்
சஹஸா பிரபன்னாயா -என்று ஒன்றையும் நிரூபியாதே சாஹசிகனாய் வந்தான் -அதாவது
ராவணன் கோஷ்டியில் நின்று கடல் கரையில் இருக்கிற பெருமாளை சரணம் புக்கால் அவர் பிடித்துக் கொண்டு போய் விலங்கிலே இடில் செய்வதென் -என்று
பயப்படாதே பட்டது படுகிறது என்று அவன் வந்த சாஹசம் காணும் என்கிறார் ஆக வுமாம் –
5- இப்படி  சரணாகதியில் சர்ப்பம்ருதி யுண்டோ என்ன -சஹாச பிரபன்னாய –
அன்று ஈன்ற கன்றுக்காக முன்னீன்ற கன்றைக் கொம்பிலும் குளம்பிலும் கொள்ளும்  தாயைப் போலே பால்பாயப் பாய சரனாகதனாய் பலமும் பெறாத இவனுக்கே
யாம் அத்தனை போக்கி பூர்வ சரணாகதனாய் ராஜ்ய தார பலமும் பெற்ற உமக்காகோம் –
இப்படியாவது அவன் தான் சரனாகத்தான் ஆகில் அன்றோ –
சீக்ரம் 17-7- என்றும் வத்யதாம் -17-27- என்றும்
நாங்கள் சொன்ன வார்த்தையிக் கேட்டு வெருவிப் போக நிற்கிறவன் அன்றோ -என்ன
1- பிரபன்னா யைவ –
நாம் இப்படி விபரத்தி பின்னர் ஆனா அளவிலும் அவன் பிரபண்ணனே -போகான் காணும் -என்கிறார்
பிரபன்னனே காணும் என்று அருளிச் செய்யா  நின்றீர் -அவன் பக்தி நிஷ்டனைப் போலே அங்கமாக சில தர்ம அனுஷ்டானம் பண்ணி -ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ -14-3/4- என்று நல்வார்த்தி சொல்லுவதும்
தூத வதம் ஆகாது என்பதும் -தன் மகள் அநலையை இட்டு நல் வார்த்தை சொல்லுவதுமாய்
அநேகம் புனஸ் சரணம் பண்ணி அன்றோ வந்தது -ஆனபின்பு அவன் பக்தி நிஷ்டன் என்றார் மஹா ராஜர் -பெருமாள் -2- பிரபன்னா யைவ –
அவன் நல் வார்த்தை சொல்லிற்று நமக்காக அல்ல –
விபீஷணஸ்து-17-24-என்று ப்ரக்ருத்யா தார்மிகன் ஆகையாலும்
குருத்வாத்தி தமிச்சதா -என்று தமையன் விஷயத்தில் ஹித பரன் ஆகையாலும்
ஆநு கூல்யச்ய சங்கல்ப -என்று பிரபத்த்யாதி காரியாகச் சொன்னான் இத்தனை –
ஆகையால் இது அந்யா சித்தம் -பக்தி நிஷ்டன் என்ன ஒண்ணாது
சேனயோர் உபயோர் மத்யே ரதம் சதாபய -ஸ்ரீ கீதை -1-21-என்று பள்ளரும் பறையரும் பார்ப்பாரும் பார்க்கருமான இரு படைக்கு நடுவே தேரை நிறுத்திச்
சரம ஸ்லோகம் உபதேசித்த போது அர்ஜுனன்
எங்கே குளித்து குலை  குடுமியும் தோதவத்தியுமாய் நின்றான் –
-வெளுத்த உடுப்பை -தோதவத்தித் தூய மறையோர் -பெரியாழ்வார் -4-8-1-
இன்னமும் உறங்குதியோ -என்ன நங்கைமீர் போதர்கின்றேன் -என்றும்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் -என்றும்
திருவாய்ப்பாடியிலே பெண்கள் நோன்புக்கு போகிற போது அனந்தலிலே-தூக்கக் கலகத்தாலே -கண்ணையும் கடை வாயையும்
துடைத்து வந்தார்கள் அத்தனை போக்கி எந்த உவர்க் குழியிலே குளித்து வந்தார்கள் –
அப்படியே இவனும்  -யோ விஷ்ணும் சததம த்வேஷ்டிதம் வித்யா தந்த்யரே தசம் -என்று
விஷ்ணு த்வெஷியாய் கர்ம சண்டாளனான ராவணன் கோஷ்டியில் நின்று போருகிற போது
கஸ்ய ஏவ வ்யதிஷ்டத -17-8-என்று ஆகாசத்திலே நின்றான் இத்தனை போக்கி என்ன கடலாடி புனலாடி வந்தான்
யதஹரேவ விரஜேத் ததஹரேவ பிரவ்ரஜேத்-ஜாபால உபநிஷத் -என்றும்
நாஸ்தி  நஷத்ர சம்பந்தோ ந நிமித்த பரீஷணம் ஸ்ரத்தைவ காரணம் நித்ய மஷ்டாஷர பரிக்ரஹே-நாராதீய கல்பம் -என்றும்
போதுவீர் போதுமினோ -என்றும்
ருசி பிறந்த போதே வந்தான் அத்தனை –
கங்கை ஆடுவாருக்கு ஒரு உவர் குழியிலே குளிக்க வேணுமோ
பகவான்  பவித்ரம் வாசு தேவ பவித்ரம் -பவித்ராணாம் பவித்ரம் – பாவனா சர்வ லோகா நாம் த்வமேவ ரகு நந்தன -என்று
பேசப்பட்ட நம் பக்கல் வருகிறவனுக்கு பெரு புரச் சரணம் வேண்டா -ப்ரபன்னன் ஆகில் -என்கிறார்
அது இருந்தபடி ஏன் –பக்திக்கு சாஸ்திர விஹிதம் வர்ணாஸ்ரம தர்மங்கள் உண்டாய் இரா நின்றது -இதுக்கு
சர்வ தரமான் பரித்யஜ்ய -என்று உள்ள தர்மங்களையும் விடச் சொல்லா நின்றது
ஆகையாலே பிரபத்தியில் பக்தி விலஷனையாய் தொடரா நின்றதீ என்னில் -அது சொல்ல ஒண்ணாது
சப்த பிரமாணகே  ஹ்யர்த்தே யதாசப்தம் வ்யவஸ்திதி-என்று சாஸ்திர பிரமாண கரானால் அது சொன்ன படி கொள்ளக் கடவோம்
அதாவது -பஹவோ ஹி யதா  மார்க்கா  விசந்த யேகம் மஹா புறம் -ததா ஜ்ஞாநாநி  சர்வாணி ப்ரவிசந்தி தமீச்வரம் -என்று
ஓர் ஊருக்குப் போகா வென்றால் பல வழியாய் இருக்குமாப் போலே
பகவத் ப்ராப்திக்கு பல உபாயங்கள் உண்டு என்று சொல்லி
ஒரு உபாயம் ஸ்வயம் அசக்தம் ஆகையாலே சில சஹ கார்யாந்தரங்களை விதித்து –
ஒரு உபாயம் சர்வ சக்தி யாகையாலே சஹ கார்யாந்தரங்களை வேண்டா என்கிறது
பிரகார பேதத்தாலே ஒன்றுக்கு ஓன்று வை லஷண்யம் வாராது
ஸ்வரூப நிரூபக தர்மங்கள் என்றும் நிரூபித்த ஸ்வரூபத்துக்கு விசேஷ சமர்ப்பக தர்மங்கள் என்றும் யுண்டு
அநேக விசேஷ சமர்ப்பகங்களைப் பார்த்தால் பிரபத்தியே விலஷனை -எங்கனே என்னில்
ஸோ அன்வேஷ்டவ்ய ச விஜிஜ்ஞாசி தவ்ய-என்றும்
ப்ரஹ்ம விடாப் நொதி பரம் -என்றும்
ஜ்ஞாத்வா தேவம் முச்யதே சர்வபாசை -என்றும்
தமேவைகம் ஜானதாத்மானம் அந்யா வாசோ விமுஞ்ச்சத அம்ருதச்யைஷ சேது -என்றும்
முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே -என்றும் வேதாந்த விஹிதத்வமும் மொஷாதி சாதனத்வமும் ஒத்து இருக்கச் செய்தேயும்
பக்த்யாபாய ஸ்வரூபம் போலே சாத்திய பக்தயேக சோசா என்று இவனாலே சாத்தியமாக அன்றிக்கே பிரபத்ய்யுபாய ஸ்வரூபம்
சித்தரூபம் பரம் ப்ரஹ்ம -என்றும்
நித்யம் நித்யாக்ருதிதரம் -என்றும்
பண்டே சித்த ரூபமாய்   த்யாயீத -என்றும்- தருவா  ஸ்ம்ருதி என்றும்
ஸ்ம்ருதி சந்தான ரூப ஜ்ஞானமாய் அசேதனமாகை அன்றிக்கே
யஸ் சர்வஜ்ஞ சர்வவித் -சத்யம் ஜ்ஞானம் –சர்வம் சர்வத்ர சர்வதா ஜாநாதி -என்று
ஜ்ஞாதாவாய் சதாதன ஜ்ஞான ஸ்வரூபமாய்   -சுவீகரிக்கும் இடத்தில்
ஆவ்ருத்திர சக்ருதுபதேசாத் -என்று அநேக ஜன்ம சித்தமாய் சிரகால சாத்தியமாய் இருக்கை அன்றிக்கே
தத் த்வயம் சக்ருத் உச்சாரோ பவதி –உபாய பூதோ மே பவதி  ப்ரார்த்த நா மதி சரணா கதி –
தஸ்ய தாவதேவ சிரம் -யாவததிகாரம் -என்று விளம்பித பலப்ரதமாகை அன்றிக்கே
உபாயோ அயம் சதுர்த்த் தஸ்தே ப்ரோக்த சீகர பலப்ரத –
தாவதார்த்திஸ் ததா வாஞ்ச தாவன் மோஹஸ் ததா ஸூ கம் யாவன்னயாதி சரணம் -என்று
சீகர பல பிரதமாய்
தபஸா அ நாஸ கேன் -யஜ்ஞோ தானம் தபஸ் சைவ -பஞ்சாக் நயோ யே ச திரிணா சிகேதா -தபஸ் சந்தாப லப்தச்தே ஸோ அயம் தர்ம பரிக்ரஹ –
கார்யஸ் த்ரிஸ்வபி ஷேகச்ச காலே காலே ச நித்யச-என்றும்
ஓதி ஆமாம் குளித்து உச்சி தன்னால் ஒளி மா மலர்ப்பாதம் நாளும் பணிவோம் -என்றும்
மாரி கோடை இன்றியிலே  உப்பு நீரிலும் உவர் நீரிலும் சுட்ட நீரிலும் சுனை நீரிலும் தோய்ந்தும் க்லேசிக்கும்படி யாகை அன்றிக்கே
ஆனந்தோ ப்ரஹ்ம –ஆனந்தம் ப்ரஹ்ம –கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -என்றும்
சர்வகந்த சர்வராசா என்றும் ஸூ கரூபமாய்
மித்யா பிரயிக்தோ யஜமானம் ஹி நஸ்தி -என்றும்
ஜ்ஞான தோஷ பரிப்ரஷ்டஸ் சண்டாளீம் யோனி மா கத -என்றும் அல்ப்பம் தப்பில் கர்த்தா நசிக்கை அன்றிக்கே
யதா ததா வாபி சக்ருத் க்ருதோஞ்சலி ததைவ முஷ்ணாத்ய ஸூ பான்ய சேஷத ஸூ பாநி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே -என்றும்
துராசாரோபி சர்வாசீ கருதக் நோ நாஸ்திக புறா -சமாஸ்ரயே தாதி தேவம் சரத்தா சரணம் யது நிர்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன -என்றும்
பயனன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் -என்றும்
அடைவு கெடப் பண்ணினாலும் தோஷங்களைப் போக்கி திருத்தி அனுஷ்டாதாவை உஜ்ஜீவிப்பிக்கக் கடவதாய்
அவித்யயா ம்ருத்யும் தீர்த்தவா வித்யயா   அம்ருத மஸ் நுதே -என்றும்
கஷாய பக்தி கர்மாணி ஜ்ஞானம் து பரமாகதி -கஷாய கர்மபி பக்வே ததா ஜ்ஞானம் ப்ரவர்த்ததே-என்றும்
தரத்தும் ம்ருத்யு மவித்யயா -என்றும் -ஸ்வ உத்பத்தி பிரதிபந்தக நிவர்தகமாய்
அந்தவதே வாஸ்ய தத்பவதி -என்றும்
ந ஹ்யத்ருவை பராப்யதே -என்றும் பலவா ஹ்யேதே அத்ரூடா யஜ்ஞரூபா -என்றும் நச்யத் த்ரவ்ய உபகரணமாய்-நச்வர க்ரியாரூபமுமாய் -ஸ்வயம சக்த தேவதாத்மகமுமாய் ஸ்வர்க்க பசு புத்ராதி  சாதாரணமான கர்மாதிகளை அங்கமாக அபேஷிக்கை அன்றிக்கே
தமேவைகம் ஜானதாத்மான மன்யா வாசோ விமுஞ்சத் -என்றும்
சர்வ தர்மான்பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ -என்றும் ததே கோபாயதாயாச்ஞா  -என்றும்
மாமேவைஷ்யசி என்றும்
சிருஷ்டியில் த்ரிவித காராணமும் தானே யாகிறாப்  போலே
ஆத்யந்திக பிரளயமான மோஷத்திலும் அங்கமும் அங்கியும் உபாயமும் உபேயமும் ஒன்றேயாய்
சர்வ முக்தி வை ஷம்யம் நைர்க்ருண்யாதிகள் வாராமைக்காக அதிகாரி ஸ்வரூப யோக்யதாபாதகமான ஆநு கூல்ய சங்கல்பாதி மாத்ர சாபேஷையாய்
இப்படிக்கொத்த அநேக குண பௌஷ் கல்யங்களாலே பக்தியில் பிரபத்தியே அத்யந்த விலஷணை -இப்படிகொத்த பிரபத்தியைப் பண்ணினவனுக்கு –
3- பிரபன்னா யைவ –
மந்திர வ்யூஹே நயே சாரே யுக்தோ பவிதுமர்ஹதி-17-18–என்று கர்ம யோக நிஷ்டரான உமக்கும் ஆகோம்-
ஜாம்பவாம்ஸ் த்வதசம்ப்றேஷ்ய சாஸ்திர புத்த்யா விசஷண   -17-43-என்கிற ஜ்ஞான யோக நிஷ்டரான ஜாம்பவானுக்கும் ஆகோம்
பக்திச்ச நியதா வீர -உத்தர -40-16-என்கிற பக்தி யோக நிஷ்டரான ஹனுமானுக்கும் ஆகோம்
ராகவம் சரணம் கத -17-14- என்று பிரபன்னனான விபீஷணனுக்கே ஆகக் கடவோம்  –
4- பிரபன்னா யைவ –
அகார்த்தாயைவ -அஷ்டச்லோகீ-3 என்றும்
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -திருவாய் -2-9-4-என்றும் அவன் நமக்கேயாய் இருக்குமா போலே
எனக்கே தந்தைத் தந்த கற்பகம் -திருவாய் -2-7-11-என்று அபியுக்தர் சொன்னபடியே பிரபன்னனுக்கே யாகக் கடவோம்
அவன் பிரபன்னனாவது ஷூத்ர பிரயோஜனத்துக்காக அன்றோ
ராஜ்ய -17-66-என்று உம்முடையஹ்னுமான் அன்றோ சொன்னான் -என்ன
1-தவாஸ் மீதி ச யாசதே -உனக்கே யாவேன் என்று யாசிப்பவனுக்கு
அநந்ய பிரயோஜனநாயே வந்தான் காணும் -என்கிறார்
அதாவது-ச காரம் அவதாரண அர்த்தமாய் -தூத வதம் ஆகாது என்று தனக்குப் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரமாக ராஜ்யம் கொடுக்க வேணும் என்று  அபிப்ராயமாக ஹனுமான் சொன்னான் அத்தனை போக்கி
விபீஷணன் சொன்னானோ –
ந தேவலோகா க்ரமணம் நா மரத்வமஹம் வ்ருனே ஐஸ்வர்யம் வாபி லோகா நாம் காமே ந த்வயா வி நா -என்றும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய் -5-8-3- என்றும் லஷ்மணனும் சடகோபனும் சொன்னால் போலே
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச -17-14- என்றும்
பரித்யக்தா -19-5-என்றும் புறம்பு உள்ளவற்றை அடைய விட்டுச்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் தாமேயாக-திருவாய் -5-1-8- வந்தவன் -என்கிறார் –
2- தவாஸ்மீதி ச யாசதே –
தவை வாச்ம்யஹ மச்யுத -என்றும்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்றும் அநந்ய பிரயோஜனனாயே வந்தான் –
3- தவாஸ்மி
ந மம-ந ராவணஸ்ய-ஸ்வா தந்த்ர்யமும் இல்லை -பர பாரதந்த்ர்யமும் இல்லை
மத பாரதந்த்ர்யமே ஏவ ஸ்வரூபம் -என்று வந்தவன் –
4-தவைவாஸ்மி-
அவன் நம்மை நோக்கி தவைவாஸ்மி -என்றான் -நாமும்
புக்த்வா ச போகான் விபுலான் ததோ அந்தே மத பிரசாதாதாதா -மம அநுஸ்மரணம் ப்ராப்ய மம லோகம் ச கச்சதி -என்றும்
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய்-பெரிய திரு மொழி -5-8-5-என்று லாங்கா ராஜ்யமும் கைங்கர்ய சாம்ராஜ்யமும் -தவைவாஸ்து -என்னக் கடவோம் –
ஸ்ரீ மதா ராஜராஜோ லங்காயாம் அபிஷேசித-யுத்த -28-27-என்றும்
விபீஷண விதேயம் ஹி லங்கா ஐஸ்வர்யம் இதம் க்ருதம் -யுத்த -116-13-என்றும்
லப்த்வா குலதனம் ராஜா லங்காம்   ப்ராயாத விபீஷண -யுத்த -131-9-என்றும்
இப்படி இரண்டும் கொடுத்து விட்டு அருளினான் இ றே-
குலதனம் என்னக் கோயில் ஆழ்வாரைக் காட்டுகிறபடி   என்-என்னில்
இதம் விமானம் ஆச்சர்யம் இஷ்வாகு குலதைவதம் -என்றும்
மநு வம்ச ப்ரசூதா நாம் ஷத்ரியாணாம் இதம் தனம் காமகம் காமதம் விமானம் ரங்க சம்ஜ்ஞிதம்-என்றும்
உப புராணத்திலும் ப்ரஹ்மாண்ட புராணத்திலும் ஸ்பஷ்டமானத்தை இங்கே அநு வதிக்கிறது ஆகையாலே குறை இல்லை –
5- தவாஸ்மி –
ஸ்தித மாத்மநி  சேஷத்வம் -என்றும் -ஸ்வத்வமாத்மநி சஞ்ஜாதம -என்றும்  -ஆத்மதாஸ்யம் -என்றும்
ஆத்மசத்தையுண்டாகிற போதே சேஷமாய் அன்றோ இருப்பது –
6- தவாஸ்மி –
அஹம் ப்ரஹ்மாஸ்மி -போலேசாமா நாதி கரண்யத்தாலே சொன்னாலும் சேஷ சேஷி பாவம் சித்திக்கும் இ றே
அப்படிச் சொல்லாதே வ்யதிகரணமாகச்  சொல்லிற்று -பூர்வாபரங்களாலும் பிரமாணாந்தரங்களாலும் உபபாதிக்க வேண்டி ஆபாதத்தில் ஸ்வரூப ஐக்கியம் போலே தோன்றி பிரமிக்க ஒண்ணாது என்று ஜீவ பரமாத்மா பேதமும் வ்யக்தம் ஆகைக்காக
1-இதி –
இப்பாசுரம் ரசித்த  படியாலே -தவாஸ்மி-என்ற  பிரகாரத்தைச்  சொல்லுவதே -என்று அநுபாஷித்து ப்ரீதராகிறார் –
2- இதி –
இத்யாஹா மால்யோப ஜீவந-என்றால் போலே யாராகச் சொல்லக் கடவ பாசுரத்தை யார் சொல்லுகிறார் –
புலஸ்த்யன் புல ஹாதிகள் இதி ஹாசமாகச் சொல்லக் கடவ பாசுரத்தை ஒரு ராஷசன் சொல்லுவதே –
-ச –
உபாய மாத்ரத்தை அபெஷித்து விடாமே பலத்தையும் வேண்டுவதே -என்று சமுச்ச்யார்த்த மாக வுமாம்
–1-தவாஸ்மீதி ச –
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா-என்று பல சதுஷ்ட்ய சாதாரணமான உபாயத்தை அபேஷித்தால் உபேயங்களில் த்ரிவர்க்கத்தை அபேஷியாதே பரம புருஷார்த்தமான அபவர்க்கத்தை அபேஷிப்பதே-
2- தவாஸ்மீதி ச –
பூர்வார்த்தத்தில் உபாயத்தை அபேஷித்து-சரணாகதனாய்ப் போகாதே -உக்த அர்த்தத்தில் கைகர்யத்தையும் அபேஷித்து த்வய நிஷ்டன் ஆவதே –
3-தவாஸ்மீதி ச –
த்வாஸ்மீத் யபி என்றாய் -அதாவது -பரிபாலய நோ ராஜன் வத்யமாநான் நிசாசரை-என்ற ரிஷிகளையும்
த்ராணகாம இமாம் லோகம் சர்வம் வை விசசார ஹ -என்றும்
தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -என்ற ஜெயந்தனைப் போலே ஷூத்ர சரீர ரஷணத்துக்காக அன்றிக்கே -ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தமான நம்மை -என்கை-
ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தம் -ஸ்ரீ மதே நாராயணாய -என்றும் –
சஹ வைதேஹ்யா–அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருவருமான சேர்த்தியிலே அன்றோ –
தனித்து இருக்கிறது உமக்கு சேஷமானால் ஏகா யனனாகானோ -என்ன –
பித்ரா ச பரித்யக்த -என்கிற இடத்தில் -மாத்ரா ச பரித்யக்த -என்று அநுக்த சமுச்சயமானால் போலே இங்கும் தவாஸ்மீதி ச -என்றது –
வைதேஹ்யாஸ் சாஸ்மி அநுக்த சமுச்சயமாய் மிதுன விஷயத்திலே காணும் அபேஷித்தது என்கை-
அன்றியிலே-
உங்களைப் போலே சாகா ம்ருகமாய் சாகைக்கு மேலே சஞ்சரிக்கை அன்றிக்கே
அக்னி ஹோத்ராச்ச வேதாச்ச ராஷசானாம் க்ருஹே  க்ருஹே -என்றும்
ஸூ ஸ் ராவ ப்ரஹ்ம கோஷாம்ச்ச விராத்ரே ப்ரஹ்ம ரஷசாம் -என்றும்
அகத்துக்கு உள்லேசாகா சஞ்சாரியாய் -வேதம் ஓதி -இருப்பவனுக்குத் தெரியும் காணும்
அதாவது -ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்றும்
நித்யைவைஷாநபாயிநீ  -என்றும்
அனன்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -என்றும்
அப்ருதக் சித்த நித்ய தர்மமே-ச -வ்வுக்கு உள்ளே உண்டு என்று அறிந்து சொன்னான் காணும் -என்கிறார் ஆக வுமாம் –
இப்படி  எல்லாம் அறிந்து இருக்கிற இவன் பர தந்த்ரனாய் செய்தபடி கண்டிருக்க ப்ராப்தம் இத்தனை போக்கி நிர்பந்திக்கப் பெறுமோ -என்னில்
1- யாசதே –
தனக்கு இது அபிமதம் என்னும் இடம் தோற்ற இரந்தான்-இத்தனை –
2- யாசதே –
ரஷா பேஷாம் ப்ரதீஷதே -என்றும்
அர்த்திதோ –ஜஜ்ஞே -என்றும்
வேண்டித் தேவர் -இரக்க-திருவாய் -6-4-5-என்றும்
அத்தலையிலே இரப்பை நாம் பாரித்து இருந்த படியாலே இரந்தான் –
3- யாசதே –
கதாஹமை காந்திக நித்ய கிங்கரர் பிரகர்ஷ்யிஷ்யாமி -ஸ்தோத்ர ரத்னம் -46-என்றும்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -திருவாய் -3-3-1- என்றும் பிரார்த்திக்கிறான்
அவன் கண் குழியும் பையாப்பும் கண்டால் ஆர்க்கு மறுக்கலாம்
இப்படி இருந்தால்  அவனுக்குச் செய்து அருளப் புகுகிறது ஏது என்னில்
1-அபயம் ததாமி –
அத ஸோ பயங்க தோ பவதி -என்னும்படி பண்ணுவன்
அபயம் -தத் அந்ய– தத் அபாவ -தத் விரோதிகளை இ றே கூட்டுவது –
ஆகையால் -2-தத் அந்யமான  மங்க ளங்களை கொடுப்பன்
3-தத் அபாவமான அச்சம் இல்லாமையைப் பண்ணுவன்
4-பரகரிஷ்யமான ஆபச் சிந்தை இ றே பயம் -தத் விரோதியான இவன் புஜபல ரஞ்சிதரான பரரால் பண்ணப் படுகிற உபகார சந்துஷ்டியை உடையவனாம் படி பண்ணுவன் –
5-அபயம் –
அதீதே ஸோ க வர்த்தமா நே வ்யதா ஆகாமி நி பயம் -என்று இ றே லஷணம்
சோகம் இறந்தகால துன்பம் –வ்யதை-வதை – நிகழ் கால துன்பம்  -பயம் வரும்கால துன்பம்  –
ஆகையால் மேல் ஒரு அநர்த்தம் வாராதபடி பண்ணுவன் –
ஆர் நிமித்தமாக-பய நிவ்ருத்தி பண்ணுவது -என்ன –
1- சர்வ பூதேப்ய –
ஏதேனுமாக பய ஸ்தானமாய் உள்ளவை எல்லாம் -நிமித்தமாக –
2- சர்வ பூதேப்ய –
பூதங்கள் ஆகின்றன அசித் சம்ஸ்ருஷ்டங்கள் இ றே-அதாவது தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராத்மகமாய் இ றே இருப்பது –
இவை இத்தனையும் நலியாதபடி பண்ணுவன் –
3- சர்வ பூதேப்ய –
ராவணனால் பட்ட  பரிபவத்தாலே -அவன் தம்பி என்றும் இந்த்ராதிகளால் வருமது-
நம் பக்கலிலே பரிவாலே  -வத்யதாம் -17-27-என்று திர்யக்கான உம்மால் வருமது –
ராவண விஜயத்தாலே பரிபூதரான மருத்தன்  தொடக்கமான மனுஷ்ய ராஜாக்களால் வருமது –
பீடத்தோடு பிடுங்குண்ட ஸ்தாவரமான கைலாசம் அடியாக வரும் இவ்வாபத்தை அடியைப் பரிஹரிபபன்-
4- சர்வ பூதேப்ய –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-11- என்றும்
பௌதிகா நீந்த்ரியாண் யாகூ-என்னும் பிரக்ரியையால்
ப்ருதிவ்யாதி பூத கார்யமான சரீரேந்த்ரிய விஷயாதிகள் நலியிலும் பரிஹரிப்பன் –
5- சர்வ பூதேப்ய –
நானே நாநா வித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2- என்ற உன்னால் வரும் பயமும்
ஜகத் சசைலபரிவர்த்தயாமி -ஆரண்ய -64-7- என்றும்
ஷிபாமி -ந  ஷமாமி -என்றும் நம்மால் வரும் பயமும்
ஹிரண்ய ராவனாதி பித்ரு பிராத்ரு திகளால் வரும் பயமும் பரிஹரிபபன்
5- சர்வ பூதேப்ய –
என்று அசேதனமான பாபங்களும் -அவ்வோ பாபங்கள் அடியாக  பாதிக்கும் ஜந்துக்களும் -இதடியாக வரும் பயமும் அடையப் போக்குவான்
இப்படி பீத்ரார்த்தானாம் பய ஹேது -பஞ்சமி யாக வுமாம்
அன்றியிலே
சதுர்த்தியாய் -பிரபன்னனாய் -தவாஸ்மீதி ச  யாசதே -என்று சரனாகதனாய் -பலார்த்தியான விபீஷணன் ஒருவனுக்குமோ  பய நிவ்ருத்தி பண்ணுவன் -என்றால்
இதி ச -என்கிற சவ்வை இங்கே கூட்டி
6-சர்வ பூதேப்யச ச –
அவனுக்கே அல்ல -சதுர்ப்பிஸ் சஹ ராஷசை -17-5- என்று அவனோடு கூட வந்தவர்களுக்கும் -அவர் தங்களைப் பற்றினார்க்கும் -அபய பிரதானம் பண்ணுவன் என்றாக வுமாம் –
பய நிமித்தம் சொல்ல வேண்டாவோ -என்னில் -ராகவேணாபயே தத்தே -19-1-என்கிற இடத்தில் உண்டோ
பயம் பா நாம்ப ஹாரிணி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-36-என்கிற இடத்தில் உண்டோ
அது தன்னடையே வரும் –
அன்றியிலே -பிரபன்னாய -என்று பிரபன்னருக்கயோ பண்ணுவது -பக்தி நிஷ்டருக்கும் புருஷகார நிஷ்டருக்கும் இல்லையோ –
7- சர்வ பூதேப்ய –
பக்தி நிஷ்டரோடு புருஷகார நிஷ்டரோடு வாசி அற-அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத சந்தமேனம் ததோ விது-என்று
பகவத் ஜ்ஞானத்தாலே சத்தை பெற்றார் எல்லார்க்குமாம்
இப்படி கைம்முதல் உடையரான விலஷண அதிகாரிகளுக்கோ கொடுத்து அருளுவது –
சரணாகதர் -பக்தர் -ஆச்சார்யநிஷ்டர் -பகவத் ஞானம் உள்ளோர்  -போன்றாருக்கு மட்டுமா -கிம் பஹூ நா-பல சொல்லி என்
8-சர்வ பூதேப்ய
ச லஷண உபாய நிஷ்டராக வேண்டா -அதிப்ரசங்கம் வாராதபடி பவத் விஷய வாசிந-ஆரண்ய -1-20- என்று நம் எல்லைக்குள் கிடக்கையே உள்ளது –
யதி வா ராவண ஸ்வயம் -18-34- என்று சத்ருவான ராவணனோடு
பாத மூலம் கமிஷ்யாமி யா நஹம் பர்யசாரிஷம் -ஆரண்ய -4-14- என்று-உதாசீனையான சபரியோடு
ஆவஹத் பரமாம் கதிம் -கிஷ்கிந்தா -17-8-என்று மிருகமான வாலியோடு
கச்ச லோகா ந நுத்தமான் -ஆரண்ய -68-30- என்று பஷியான ஜடாயுவோடு
பாஷாண கௌதம வதூ வபுராப்தி ஹேது -என்று ஸ்தாவரமான அஹல்யா சிலையோடு
பிரதிபேதே ஸ்வ மாலையம் -சுந்தர -38-38- என்று ஜங்கமமான ஜெயந்தனோடு
புற்பா முதலாப் புல் எறும்பாதி ஓன்று இன்றியே -நற்பால் அயோத்தியில் வாழும்
சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் -திருவாய் -7-5-1-என்று த்ருண குல்ம வீருதாதிகளோடு
பிதாமஹபுரோகாம்ஸ் தான் –பால -15-26-என்று அடியிலே நம்மைப் பெற வேணும் என்று அபேஷித்த ப்ரஹ்மாதிகளோடு
வாசி அற -ப்ரஹ்மாதி பிபீலீகாந்தமான  சர்வ வச்துக்களுக்குமாம்
இவர்களுக்கு செய்து அருளுவது என் என்னில்
1- ததாமி –
த்யாகமும் அல்ல -ஔ தார்யமும் அல்ல -உபகாரமும் அல்ல -தானமாகவே பண்ணுவேன் –
த்யாகமாவது -கீர்த்தி முத்திச்ய யோகயே  யோக்ய  சமர்ப்பணம் -என்று பிறர் அபேஷித்ததை கீர்த்தி பலமாக பசையறக் கொடுக்கை
ஔ தார்யமாவது -சர்வ விஷய விதாரணம் ஔ தார்யம் -என்று விஷய வைஷம்யம் பாராதே முலைக் கடுப்பு தீரச் சுரக்குமா போலே தன் பேறாகக் கொடுக்கை
உபகாரமாவது -பிரத்யுபகாரதியா பந்து க்ருதிருபகார -என்று பிரத்யுபகார பிரயோஜனமாக ஆசன்னருக்குக் கொடுக்கை –
அத்ருஷ்ட முத்திச்ய யோகயே யோக்ய சமர்ப்பணம் தானம் -என்று விலஷண விஷயத்தில் விலஷண பதார்த்தங்களை அத்ருஷ்ட பலமாகக் கொடுக்கை
2- ததாமி –
மோஷயிஷ்யாமி போலே -தாஸ்யாமி-என்று கால விளம்பனம் பண்ணோம் -வரும்கால பிரயோகம் செய்ய மாட்டேன்
3- ததாமி -கொடுக்கிறேன் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ   பவதி -போலே -உபாசன ப்ராரம்பே மோஷ ப்ராரம்ப -என்று அவன் நம்மை நோக்கிக் கிளம்பின போதே நாமும் உபக்ரமித்தோம்
இது யாவதாத்மா பாவியாகக் கடவது
ப்ராரப்தோ ஸ்பரிசமாப் தஸ்ச வர்த்தமான -தொடங்கியதாய்முடியாமல் இருப்பது ங்கள் காலம் -இ றே-
4- பிரபன்னாய ததாமி –
நியாச மேஷாம் தபஸா மதிரிக்தமா ஹூ -என்றும்
தேஷாம் து தபஸாம் நியாச மதிரிக்தம் தபஸ்ருதம் -என்றும் –
இதர உபாயங்களில் பிரபத்தி விலஷணை யானால் போலே –
நார் ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடிதமீமபி -என்று அல்லாத அதிகாரிகளில் ப்ரபன்ன அதிகாரி விலஷணனாய் இ றே இருப்பது –
இவ்விலஷண அதிகாரியைக் கண்டால் தானம் பண்ணாது இருக்கப் போமோ –
அது தான் பாஷிகமோ -நியமம் உண்டோ -என்னில்
1- ஏதத் வ்ரதம் மம-
இது நமக்கு நியத அநு ஷ்டேயம்-
2-ஏதத் -பிரபன்னனுக்குப் பண்ணுகிற அபய பிரதானம்  -அநு பல நீயஸ் ஸ-என்று ஏறிட்டுக் கொண்டால்
முடியும் அளவும் விடாதே நடக்குமது இ றே வ்ரதம் ஆகிறது
ந து பிரதிஜ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விசேஷத -ஆரண்ய -10-19-என்று அடியிலே சொன்னோமே
3-ஏதத் வ்ரதம் –
பரித்ராணாய சாதூநாம் –சம்பவாமி –ஸ்ரீ கீதை -4-8-என்றும்
சரீரக்ர ஹணம் வ்யாபின் தர்மத் ராணாய கேவலம் – ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-1-50-என்றும்
பொழில் ஏழும் காவல் பூண்ட -திரு நெடும் -10-என்றும்
காக்கும் இயல்விணன் -திருவாய் -2-2-9- என்றும்
இது நமக்கு சத்தா பிரயுக்தம் –
இது அனுஷ்டேயம் ஆருக்கு என்ன
1- மம-
அர்த்திதோ மா நுஷே லோகே -அயோத்ய -1-7-என்றும்
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் -திருவாய் -6-4-5- என்றும் பராபேஷையாய் அதுக்கு இட்டுப் பிறந்த நமக்கு –
2- மம –
ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கும் பணி அல்ல -சம்ஹர்த்தாவான ருத்ரனுக்கும் பணி யல்ல
நஹி பாலன சாமர்த்யம் ருதே  சர்வேஸ்வராத்ஹரே -ஸ்ரீ விஷ்ணு புறா -1-22-21- என்றும்
ரஷார்த்தம் சர்வ லோகா நாம் விஷ்ணுத்வம் உபஜக் மிவான் -உத்தர -104-9-என்றும்
ரஷணை நமக்கே பணி என்கிறார் –
3- மமைதத் வ்ரதம் –
நம் பக்கல் பரிவாலே விலக்குகையும் உனக்குப் பணி யானால் போலே ஆ ஸ்ரீ தா ரஷணமும்  நமக்குத் தொழில் காணும்
4- ஏதத் வ்ரதம் மம –
சதா மேத்த கர்ஹிதம் -18-3-போலே சத்தா பிரயிக்தத்துக்கு பிரயோஜனம் இல்லை
செய்யாத போது கபோத வானர விச்வாமித்ராதிகள் இருந்து எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம் என்று கதவை அடைப்பார்கள்-
அது செய்யாதே சாது கோட்டியுள் கொள்ளப் படுகிறதே பிரயோஜனமாக இது நமக்கு அனுஷ்டேயம் என்கிறார்
5-ஏதத் வ்ரதம் மம –
இது நமக்கு அனுஷ்டேயம் -இத்தத் தலைக் கட்டித் தாரீர் என்று மஹா ராஜரை இரக்கிறார்-
இப்படி பெருமாள் மஹா ராஜரைப் பார்த்து அபய பிரதானம் பண்ணி ஆ ஸ்ரீ தனான விபீஷண ரஷணம் பண்ண வேணும் என்று
இந்த ஸ்லோகத்தில் தாத்பர்யார்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————————

ஸக்ருதே3 ப்ரபந்நாய தவாஸ்மீதி  யாசதே|

அப4யம் ஸர்வ பூ4தேப்யோ 3தா3ம்யேதத்3 வ்ரதம் மம ||

பொழிப்புரை:
ஒரு முறையே ப்ரபத்தி பண்ணினவன் பொருட்டும்,  உனக்கு (அடியேனாய்) ஆகிறேன் என்று யாசிக்கிறவன் பொருட்டும்
எல்லா பிராணிகளிடத்திலிருந்தும்  பயமின்மையைப் பண்ணிக்கொடுக்கிறேன். இது எனக்குவிடமுடியாத ஸங்கல்பம்.

விபீ4ஷணன் ஶரணாக3திக்கு வந்த ஸமயம், ஸுக்3ரீவன் அந்த ஶரணாக3தியை ஏற்கக்கூடாது என்று பேசி வந்த நிலையில்,
பெருமாள் தன் தன்மைக்குத் தகுந்தபடி ஶரணாக3திரக்ஷண ப்ரதிஜ்ஞையைச் செய்தருளுகிறார்.
‘நண்பனின் பா4வத்தோடு வந்த இவனை (விபீ4ஷணனை) தோஷமிருந்தாலும் கைவிடேன்’
[மித்ர பா4வேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கத2ஞ்சந । தோ3ஷோ யத்3யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமேத3தக3ர்ஹிதம்।। யுத்.கா. 18-3 ]
என்று முன்னம் தன் தன்மையைத் தெரிவித்தார். இங்கு அதைத் தொடர்ந்து, அத்தன்மைக்கேற்ற
பிரதிஜ்ஞை செய்வதால், இவ்விரண்டு ஶ்லோகங்களும் ராம சரம ஶ்லோகங்கள் எனப்படுகின்றன.

ஸஹஸா (சடக்கென) என்கிற ஶப்3த3த்துக்கு
‘ஸக்ருதேவ’ என்கிற ஶப்3த3ம் வருகையாலே, ஸக்ருதேவ ப்ரபந்நாய என்பதற்கு, ஒரு தரம் ஶரணம் புகுந்தவனுக்கு,
அல்லது சடக்கென ஶரணம் புகுந்தவனுக்கு என்று இருவிதமாகவும் பொருள் கொள்ளலாம்.
தனது அயோக்யதையை எண்ணித் தயங்கி நிற்காமல், ஸ்வாமியினுடைய குணங்களையே முன்வைத்து
சடக்கென ஶரணம் புகுதல் என்பது கூரத்தாழ்வான் நிர்வாஹம்.
ஒரு தரம் என்று பொருள் கொண்டால், அதற்கு எம்பார் என்னும் ஆசாரியர் விளக்கம் கூறுகிறார்.
இதுவரை ஸம்ஸார ஸாக3ரத்தில் மூழ்கியிருந்தவன் ஶரணாக3தி செய்த பிறகு முடிவிலாக்காலம்
ப4க3வத3நுப4வமாகிற ப2லத்தைப் பெறப்போகிறான் என்பதாலே, ஆயுளுள்ளவரை பலமுறை ஶரணம் புகுந்தாலும்,
முதல்முறை ஶரணாக3தி செய்தவுடன் ப4க3வத3நுப4வம் பெறுவதாலே ஒரு தரம் என்று பொருள் கொள்வதில் குறையில்லை.
அடுத்து, கீழ்ச்சொன்ன இரு பொருட்களையும் ஒருசேர அநுபவிக்க பராஶர பட்டரின் நிர்வாஹம் காணலாம்.
ஒரு தடவை என்பது ஸர்வேஶ்வரன் இவனை ஸ்வீகரிப்பதற்கு ஒரு முறையே போதுமானது என்பதைக் காட்டுகிறது.
எவ்வாறு த்வயத்தை ஆயுளுள்ளவரை அதன் இனிமையின் பொருட்டு ப்ரபந்நர்கள் பலமுறை அநுஸந்தா4நம் செய்கிறார்களோ
அதுபோலே இங்கேயும், ஒருதரம் ப்ரபத்தி செய்தால் போதாது என்கிற நினைவாலே யல்லாமல்
இனிமை கருதிப் பலமுறை செய்யலாம் என்றும் நிர்வாஹம் செய்யலாம்.

விபீ4ஷணன் ஶரணாக3திக்கு முன்பாக, இராமபிரான் அருகே இருந்த அநுமன், ஜாம்ப4வான், ஸுக்3ரீவன், லக்ஷ்மணன்
முதலானோர் அவரவர் உள்ளத்தில் நினைத்திருந்ததை இராமபிரானிடம் தெரிவித்தனர்.
அவர் ஒவ்வொருக்கும் தக்கவாறு ஸமாதா4நம் சொல்கிறார் இராமபிரான்.

‘அவன் ஶரணமடைந்தது தாழ்ந்த பலனைக் கருதியன்றோ? அரசை வேண்டி புத்தி பூர்வமாகவே இங்கு வந்தான்’
[ராஜ்யம் ப்ராத்த2யமாநஶ்ச பு3த்3தி4பூர்வமிஹாக3த: யுத்.கா. 17-65] என்று அநுமன் சொன்னான்.

இதற்கு ஸமாதா4நமாக இராமன் சொன்னவை.

1) உனக்கேயாவேன் (தவாஸ்மீதி ச யாசதே)
என்னைத் தவிர வேறு பலனைக் கருதாதவனாகவே வந்தான் என்கிறார்.
தூதனைக் கொல்லலாகாது என்று எடுத்துக்கூறித் தன்னை அன்று ராவணன் ஸபையிலே காத்துக்கொடுத்த
விபீ4ஷணனுக்குக் கைம்மாறாக ராஜ்யத்தைக் கொடுக்கவேண்டும் என்ற கருத்திலே
‘ராஜ்யத்தை வேண்டி வந்தான்’ என்று அநுமன் சொன்னானேவொழிய, விபீ4ஷணன் தன் வாயாலே ராஜ்யம் வேண்டும் என்று சொன்னானோ ?
‘உன்னாலல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்’ [திருவாய் 5-8-3] என்று நம் ஶடகோபன் சொன்னாற்போலே
‘பெண்டு பிள்ளைகளை விட்டு’ [த்யக்த்வா புத்ராம்ஶ்ச தா3ராம்ஶ்ச; யுத்.கா.17-14 ] என்றும்,
‘என்னால் லங்கையும், செல்வங்களும், நண்பர்களும் விடப்பட்டனர். என் உயிரும் அரசும் செல்வமும் தேவரீரிடத்திலேயே உள்ளது’
[பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச த4நாநி ச । ப4வத் க3தம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸுகா2நி வை।। யுத். கா. 19-5] என்றும்
மற்ற பலன்கள் அனைத்தையும் விட்டு,
‘சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும் மேலாத்தாய் தந்தையும்’ [திருவாய் 5-1-8]ஆகிய
எல்லாம் இராம்பிரானே என்று நினைத்து வந்தவனன்றோ விபீ4ஷணன் என்கிறார்.

2) ‘உந்தன்னோடு உற்றோமேயாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்’ [திருப்பாவை 29] என்று கைங்கர்யத்தையன்றி வேறு பலனை அறியாதவனாய் வந்தான்.

3) உனக்கேயாவேன் என்று சொல்லி வந்தது, ‘எனக்காக ஆகேன், ராவணனுக்கும் ஆகேன்’ என்று பொருள்படும்படி, ஸ்வாதந்த்ரியமும், பிறருக்கு பாரதந்த்ரியமும் இல்லாமல், எனக்குப் பரதந்திரனாயிருப்பதை மட்டுமே நினைத்து வந்தவன்.

4) விபீ4ஷணன் உனக்கேயாவேன் என்றான். அதற்கு நாமும், ‘போகம் நீ எய்திப் பின்னும்  நம்மிடைக்கே போதுவாய்’ [பெரிய திருமொழி 5-8-5] என்றும், ‘இலங்கை முடிசூடும் அரசும், அடிசூடும் அரசும் உனக்கே ஆகக்கடவது’ என்போம்.

5) ஆத்மாவிடம் ஶேஷத்வம் இயற்கையாகவே உள்ளது. ஆத்மாவிடம் உடைமையாயிருக்கும் தன்மையும் இயற்கையிலே உள்ளது. இப்படி ஆத்மஞாநம் வந்த அளவிலே ஶரணாக3திக்குப் பாத்திரமானவன்.

6) உபாயமாக மட்டும் என்னை வரித்தது மட்டுமின்றி, பரமப2லமாகிற கைங்கர்யத்தையும் சேர்த்து அபேக்ஷித்தான்.

7) ‘நாலுவகைப்பட்ட ஜனங்கள் என்னிடம் பக்தி செய்கிறார்கள்’ [சதுர்விதா4 ப4ஜந்தே மாம் ஜநா: கீதை 7-16] என்கிறபடி, நாலு ப2லத்துக்கும்  உபாயமான என்னைப் பற்றும்போது, உபேயங்களில் மற்ற மூன்றையும் விரும்பாமல், பரம புருஷார்த்தமான மோக்ஷத்தையன்றோ விரும்புகிறான்.

8) ரிஷிகளைப்போலே ஶரீர ரக்ஷணத்திற்காக மட்டும் [பரிபாலய நோ ராஜந் வத்4யமாநாந் நிஶாசரை: ஆர.கா. 6-19] என்று கேட்காமல், ‘மூன்று உலகும் சுற்றிவிட்டுக் காப்பார் வேறு எவருமிலர் என்று அறிந்து என்னிடம் ஶரண் புகுந்த காகாஸுரன்’ [த்ரீன் லோகான் ஸம்பரிக்ரம்ய தமேவ ஶ்ரணம் க3த: ஸு.கா. 38-34 ] போலன்றியும் ஸ்வரூபத்துக்குத் தக்கப2லனான என்னையன்றோ ஶரண் புகுந்தது?

9) ‘தவாஸ்மீதி ச’ என்னுமிடத்தில், ‘ச-காரம்’ இருப்பதால், பிராட்டியையும் சேர்த்து மிதுன விஷயத்திலேயே கைங்கர்ய ப்ரார்த்தனை இருக்கிறது என்கிறார்.

10) ‘உங்களைப் போலே மரத்துக்கு மரம் தாவும் குரங்கு ஜாதியில் இல்லாமல், வேதமறிந்த ப்ராம்மணனாக அல்லவோ இருக்கிறான்’.
‘ஶ்ரத்தை எனப்படும் பிராட்டியின் சேர்த்தியால் பெருமான் தேவனாகிறான்’ [ஶ்ரத்3த4யா தே3வோ தே,வத்மஶ்நுதே; யஜுர். காடகம் 3-3-9-12 ],
‘ஜகந்மாதா என்றும் இருப்பவள்; பிரானை ஒருகணமும் பிரியாள்’ [நித்யைவேஷா அநபாயிநீ; வி.புரா. 1-8-17] என்றபடி
சகாரத்துக்குள்ளே பிராட்டியின் ஸம்பந்தமும் உண்டு என்று அறிந்து சொன்னான் என்றும் கொள்ளலாம்.

இவ்வளவு பக்ஷபாதம் அவனிடமிருந்தால் அவனுக்கு என்ன செய்யப் போகிறீர்? எனில்,
‘அப4யம் அளிக்கப் போகிறேன்’ (அப4யம் த3தா3மி) என்கிறார்.
அதற்குப்பின் அவன் ப4யமற்றவனாகிறான் [அத2 ஸோப4யங்க3தோ ப4வதி; தைத். ஆ.7 ] ந-ப4யம் என்பது அப4யம் என்று வ்யுத்பத்தி சொல்லியிருப்பதால்,
‘நஞ்’ என்கிற உபஸர்க3த்துக்கு வேறுபாடு, இல்லாமை, விரோதி4 என்கிற மூன்றுவிதமான பொருட்கள் சொல்லப்பட்டுள்ளன.
1. ப4யத்தினின்றும் வேறுபட்ட மங்களங்களைக் கொடுப்பேன்.
2. ப4யமே இல்லாமையாகிற ப4யமின்மையைக் கொடுப்பேன்.
3. விரோதி4களால் எதிர்காலத்தில் ஏற்படும் ஆப4த்தின் நினைவே நிகழ்காலத்தில் ப4யமாக இருப்பதால்,
எதிரிகளால் செய்யப்படும் உபகாரத்தினால் உண்டாகும் த்ருப்தியாக ஆகும்படி செய்வேன்.
அதாவது, இனி வரும் காலமெல்லாம் ஒரு துன்பம் வராதபடி பண்ணுவேன் என்று கொள்ளலாம்.

யாரால் வரும் ப4யத்தைப் போக்குவது? எனில்,
எல்லா பூ4தங்களினின்றும் (ஸர்வ பூ4தேப்4ய:)
ப4யமளிப்பது எதுவாயினும், வரக்கூடிய ப4யத்தைப் போக்குவேன்.
அசேதநங்களோடு தேவர், விலங்கு, மநுஷ்யர், ஸ்தா2வரம் முதலான நான்கு வகை பூ4தங்களினின்றும் வரும் துன்பங்களைப் போக்குவேன்.
பஞ்ச பூ4தங்களாலான தே3ஹத்தால், பஞ்ச பூ4தங்களால் போஷிக்கப்படுகிற இந்திரியங்களால் வரும் துன்பங்களைப் போக்குவேன்.

இதுவரை பூ4தேப்4ய: என்பதை ஐந்தாம் வேற்றுமையாகக் கொண்டு பொருள் சொல்லப்பட்டது.
இதேபோல், பூ4தேப்4ய: என்பதை நான்காம் வேற்றுமையாகக் கொண்டால், வேறு விதமாகவும் பொருள் சொல்லலாம்.

அப4யம் உனக்கு ஒருவனுக்கு மட்டுமின்றி உன்னுடன் வந்த நால்வருக்கும்
[சதுர்பி4ஸ் ஸஹ ராக்ஷஸை: யுத்.கா. 17-5] என்று ப3ஹுவசனத்தில் பொருள் கொள்ளலாம்.
மேலும், ஶரணாக3தன் மட்டுமின்றி, பக்தி நிஷ்டர், ஆசார்ய நிஷ்டர் மற்றும் ப்ரஹ்ம ஞாநிகள் என்று
அனைவருக்கும் என்றும் ப3ஹுவசனத்தில் பொருள் கொள்ளலாம்.
‘புற்பாமுதலாப் புல்லெறும்பாதி ஒன்றின்றியே நற்பாலயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்குய்த்தவன்’ [திருவாய் 7-5-1] என்று

———————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –மித்ரமௌபயிகம் கர்த்தும்–சுந்தர – 21-19-

January 17, 2024

மித்ரமௌபயிகம் கர்த்தும் ராம ஸ்தாநம் பரீப்ஸதா
வதம் சா நிச்சதா கோரம் த்வயாசௌ புருஷரஷப –சுந்தர – 21-19-

மித்ர மௌ பயிகம் கர்த்தும்-மித்ரம் கர்த்தும் ஔ பயிகம் -நண்பனாகச் செய்து கொள்ளத் தகுந்தவர் –
ராம -ஸ்ரீ ராம பிரான்
ஸ்தாநம் பரீப்ஸதா-உன் குடியிருப்பை விரும்புகிறவனாயும்
வதம் சா நிச்சதா கோரம் -கோரம் வதம் அ நிச்சதா -பயங்கரமான சாவை விரும்பாதவனாயும் இருக்கிற
த்வயா -உன்னாலே
அசௌ புருஷரஷப -இந்த புருஷ ஸ்ரேஷ்டரான-
அவதாரிகை –
அசோகவ நிகையிலே எழுந்து அருளி இருக்கிற பிராட்டி சந்நிதியிலே ராவணன் சென்று
தன்னுடைய அபி ஜன வித்யா விநோதங்களில் நாட்டாரைக் காட்டில் தனக்குள்ள மினுக்கத்தைச் சொல்லியும்
பஹூ விதமான ஷேத்ர தன தான்ய ரத்ன வஸ்த்ர பூஷண பரிகர பரிபர்ஹா   தாச தாசிகளைத் தருகிறேன் என்றும்
பிராட்டி நிலை பேர்க்கலாமோ என்று ஏற்றி வார்த்தை சொல்ல
பிராட்டியும் இவன் சொல்லுகிறவை ஒன்றையும் பாராதே இவனுடைய அனர்த்தத்தையே பார்த்து
இவனுக்கு ஒரு நல் வார்த்தை சொல்லுவார் இல்லாமை இ றே இவன் இப்படி பிதற்றுகிறது என்று
ஆசார்ய பரம்பரா வதியாய் பரமாசார்ய பூதை யாகையாலே இவனுக்கு ஹிதம் சொல்லுகிறாள்
சொல்லுகிற இடத்தில்
த்ருண மந்தரத க்ருத்வா -சுந்தர -21-3-என்று
1-பரபுருஷ முகம் பார்த்து வார்த்தை சொல்லக் கடவதல்ல என்னும் மர்யாதையாலே யாதல்
2-த்ருணத்தோ பாதியும் அவனை மதியாமையாலே யாதல்
3-அசேதனமான இத்துரும்பு  பிரதிபத்தி பண்ணினால் அன்றோ நான் சொன்ன வார்த்தையை இவன் பிரதிபத்தி பண்ணுவது என்னும் நினைவாலே யாதல்
4-யம் தவம் தேவி நிரீஷசே ஸ குலீன ஸ புத்தி மான் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-என்று தான் பார்த்தவர்கள் புத்தி யுக்தர்ஆவார்கள் என்னும் நினைவாலே யாதல்
5- பெருமாள் துரும்பைக் கொண்டு காகத்தை ஓட்டினால் போலே இவளும் இத்துரும்பைக் கொண்டு இவனை ஓட்ட வேணும் என்னும் நினைவாலே யாதல்
6-ஸ்ருகாலசசம் போலே பசு பிராப்யனான நரி முயல் போலே -பிராணியை ஒத்த -உனக்குப் போக்யம் இது அன்றோ என்னும் நினைவாலே ஆதல்
7-சீதோ பவ ஹனூமத -என்று தாஹகமான அக்னியை சீதளமாகப் பண்ணப் புகுகிறாப்   போலே  -அசேதனமான துரும்பை சேதனமாகப் பண்ணுவோம் என்னும் சங்கல்பத்தாலே ஆதல்
8-ஆசன்னமாய் -அருகில் இருக்கும் இவனுக்கும் நமக்கும் ஒரு வ்யவதானம் -தடை -வேணும் என்னும் நினைவாலே ஆதல்
9-துரும்பைத் தூணாக்கி அத்தூணில் நின்றும் ராகவ சிம்ஹத்தைப் புறப்படுவிக்க வேணும் என்னும் நினைவாலே யாதல்
10-மித்ர மௌ பயிகம் -அநிச்சதா-என்று சொல்லப் புகுகிற இவள் வீர பத்நியாகையாலே இப்புல்லைக் கவ்வி
அவ்வாண் பிள்ளை காலிலே விழ என்னும் நினைவாலே யாதல்
11- என்னைப் போரப் பொலியச் சொன்ன உன்னையும் நீ அடுக்கின தன தான்ய ரத்ன வஸ்த்ராதிகளையும் இத் துரும்போ பாதி காண் நினைத்து இருப்பது
என்னும் நினைவாலே யாதல்
துரும்பை முன்னே பொகட்டு
நாஹ மௌபயிகீ பார்யா பர பார்யா சதீ தவ -சுந்தர -21-6-என்று
இத்துர் புத்தி உனக்கு ஆகாது காண்
ஸ்வேஷூ தாரேஷூ ரம்யதாம் -சுந்தர -21-8-என்று உனக்கு வகுத்த பெண்டுகள் வயிறு எரியாதபடி அவர்களோடு பொருந்தி  வர்த்திக்கப் பாராய் -என்று சொல்லி
இஹ சந்தோ நவா ஸந்தி-சுந்தர -21-9-என்று
பள்ளரும் பறையருமாய்ப் பெரும் பரப்பான இத்தேசத்துக்கு உள்ள ஒருவன் அனர்த்தப் பட்டால்
இங்கனே செய்யல் ஆகாது காண் என்று ஹிதம் சொல்லி மீட்கைக்கு ஒரு நன் மனிதர் இல்லை யாகாதே –
வா ஸந்தி ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தொடக்கமான பரம தார்மிகர் உண்டாகையாலே சத்துக்கள் இல்லை என்ன ஒண்ணாது –
உண்டு
சதோ வா நா நுவர்த்த சே – என்றும்
பிரணி பாதேன பரி பிரஸ்நேந சேவயா உபதேஷ் யந்தி -ஸ்ரீ கீதை -4-84-என்று
தங்கள் காலிலே குனிந்து அனுவர்த்திக்கிறவர்களுக்கு இ றே அவர்கள் நல்லது சொல்வது
அப்படிக்கு அவர்கள் காலிலே குனிந்து அறியாயோ
அடியே தொடங்கிநீ இவ் ஊரில் இருந்தவள் அல்ல -நேற்று வந்த நீ குனியேன் என்று அறிந்த படி என் என்ன
ததாஹி விபரீதா தே புத்தி -உன் புத்தியின் பொல்லாங்கு தானே அதைச் சொல்லுகிறது காண் என்ன
புத்தியின் பொல்லாங்கு அறிக்கைக்கு நீ அந்தர்யாமி அன்றே -என்ன
ஆசாரவர்ஜிதா -உன்னுடைய அனுஷ்டானத்தாலே அநு மித்தேன் காண் என்று
ஹிதம் சொல்லுமவர்கள் சொல்லாத படியான இவனுடைய துராசாரத்தைக் கண்டு வெறுத்து
இனி ஒருவரையும் அநு வர்த்திக்க வேண்டா –
அனுவர்த்தன நிரபேஷமாக நான் உனக்கு ஹிதம் சொல்லுகிறேன்
நான் சொன்னபடியே அனுஷ்டிக்கப் பாராய் -என்கிறாள் –

வியாக்யானம் –
ஆமாகில் அனுஷ்டிக்கிறேன் -அந்த ஹிதம் தன்னைச் சொல்லல் ஆகாதோ -என்ன
1-மித்ரமௌபயிகம் கர்த்தும் ராம –
பெருமாளோடு உனக்கு விரோதம் பண்ணினால் பலியாது
அவரோடு உறவு பண்ணக் காண் அடுப்பது -என்கிறாள் –
2-மித்ரமௌபயிகம் கர்த்தும் ராம –
தீரக் கழிய அபராதம் பண்ணின உனக்கு அவர் திருவடிகளிலே சரணம் புக வேணும் காண்
மித்ரம் என்னா நிற்கச் செய்தே சரணம் என்பான் என் என்னில்
மேல் ஸ்லோகத்தில்
விதித சஹி தர்மஜ்ஞ  சரணாகத வத்சல தேந மைத்ரி பவது தே -சுந்தர -21-20-என்று
அவர் சரணாகத வத்சலர் காண் ஆனபின்பு நீயும் சரணம் புகை என்ற அர்த்தத்திலே மைத்ரி சப்த பிரயோகம் பண்ணுகையாலே –
சரண சப்த பர்யாயமாகக் கடவது –
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் சகயம் ஆத்மநிவேதனம் -பாகவத -7-5-23-என்று
சக்யத்தை பக்தி பிரகாரமாகவும் சொல்லிற்று இ றே
ஆகையாலே அவரை சரணம் புகை -என்கிறாள் –
தமேவ சரணம் கச்ச சர்வ பாவென பாரத -ஸ்ரீ கீதை -18-62-என்று பிராட்டியைப் போலே தார்மிகராய் இருப்பார் வேறு சிலரும் இப்பாசுரம் சொன்னார்கள் இ றே
ஆனால் நேர் கொடு நேர் சரணம் என்னாதே -மித்ரம் என்பான் என் என்னில்
ஷூத்ரரைப் போலே தம்தாமை உயரப் பார்த்து பிறரை தண்ணியராகசொல்லும்படியான புன்மை இல்லாத பிராட்டி நீர்மையாலே சொல்ல்லுகிறாள்
இவள் அன்றே இப்படி சொன்னாள்-
பெருமாள் தாமும் ராஷசனை மித்ர பாவேன-யுத்தம் -18-3-என்றும்
ஒரு குரங்கை சகா ஸ மே-என்றும்
ஒரு ஒட்டையோடக் காரனை ஆத்மசக சகா -யுத்தம் -128-4 என்றும்
உகந்த தோழன் நீ -பெரிய திரு -5-8-1- என்றும் அருளிச் செய்தார் இ றே
இன்னம் ஒரு ஆகாரத்தாலே மித்ர சப்தம் சொல்லுகிறாள்
அது என் என்னில்
ந நமேயம் -யுத்த -36-13-என்று வணங்கமில் அரக்கனை துர்மாநியான இவனை சரணம் புகை என்றால் இசையான் என்னுமத்தாலே தோழமை கொள்ளாய் என்கிறாள்
3-மித்ரமௌபயிகம் கர்த்தும்-
மிதாத் த்ராயத இதி மித்ரம் -என்று-ஞிமிதா சிநேக நே –என்கிற தாதுவிலேயாய்
பெருமாளுக்கு த்வேஷ விஷயம் ஆகாதே சிநேக விஷயமாகை அழகிது காண்
நேராக இவருக்கு சத்ருவுமாய் பிரபலனுமாய் இருக்கிற நான்
சாபேஷனாய் பெருமாளுக்கு த்வேஷ விஷயமாகாதே இவர் பக்கல் உறவு கொண்டாடப் புகுகிறேனோ -என்ன
4-மித்ரமௌபயிகம் கர்த்தும்-
இப்படி ப்ராதி கூல்யம் பண்ணின உனக்கு பத்தும் பத்தாக உறவு செய்தற வேணும் காண்
இது பண்ணினால் பிரயோஜனம் என் என்ன
5-மித்ரமௌபயிகம் கர்த்தும்-
உன் பிராண ரஷணத்தில் விநியோகம் கொள்ளலாம்
ஔ பயிகம் -உபாய
இம்மித்ர கரணம் உன்னுடைய உஜ்ஜீவனத்துக்கு உபாயம்
உபாயாத் ஹ்ரச்வத் வஞ்ச -என்று உபாய சப்தம் உபய சப்தமாய் ஸ்வார்த்தே டக்காய் இகா தேசமாய் ஆதி வ்ருத்தியாய் அகாரலோபமாய் ஔ பதிகம் என்று பதம் ஆகிறது
இப்படிக்கு இது உபாயம் என்னும் இடம்
ஸ்தானம் பரீப்சதா வதஞ்சா நிச்சதா -என்று மேலே பலம் சொல்லுகையாலே ஸ்பஷ்டம் இ றே

ஆனால் நான் உறவுக்கு இசையைக் கொள்ள முகம் தாராதே பிரதாபிகளாய் உதறிலோ -என்ன
1- ராம -வரையாதே பொருந்தும்படியான நீர்மை  யுடையவர் காண்
2- ராம –
கை வர்த்தரோடும் காகத்தோடும் குரங்கோடும் உறவு செய்கிறவர் இத்தனை யோக்யதை யுடைய உன்னை விடுகிறாரோ
3- ராம –
நீ அல்லேன் என்னிலும்
யதி வா ராவண ஸ்வயம்  ஆநயைநம் -யுத்த -18-25- என்று அழைத்து விடுவது
ஆபத்து முடுகினவாறே
கச்ச -யுத்த -59-143 என்று விட்டு அடிப்பதாகிற பெருமாள்
இத்தனை நீ இசைவாய் ஆனால் விடுகிறாரோ
4- ராமோ மித்ரம் கர்த்தும் ஔ பபிகம் –
துர் ஹ்ருதயராய்துர்  உபதேஷ்டாக்க்களுமான ப்ரஹச்தாதிகளை விட்டு
ஸூ ஹ்ருதம் சர்வ பூதா நாம் –ஸ்ரீ கீதை -5-29- என்றும்
நிவாச சரணம் ஸூ ஹ்ருத்  -ஸூ பால -என்றும் சொல்லுகிற
சர்வ பூத ஸூ ஹ்ருத்தான பெருமாளோடு உறவு செய்யப் பார்
5- ராம –
ராமயதீதி ராம
நேய மஸ்தி புரி லங்கா ந யூயம் ந ஸ ராவண -சுந்தர -43-25-என்று
உன்னை விட்டு அகன்று நிற்கிற உன்னுடைய ஊரும் உறவு முறையும் உன்னுயிரும் உன் பக்கலிலே
பழைய படியே பொருந்தும்படி பண்ண வல்லர் காண்

பண்டே என்னதாய் இருக்கிற வற்றை இவர் பொருந்தும்படி தரிக்கப் பண்ண வேணுமோ என்ன
1-ஸ்தாநம் பரீப்ஸதா வதம் சா நிச்சதா –
இதுக்கு முன்பு உன்னதே யாகிலும்
உன் குடி இருப்பும் பிராணனும் மேலும் வேண்டி இருந்தாய் ஆகில் அவரைப் பற்ற அடுக்கும் –
2-ஸ்தாநம் பரீப்ஸதா-
ஸ்தானம் -ஆவாச -இருப்பிடம்
அபி ஷிச்ய ஸ லங்கா யாம் ராஷா சேந்தரம் விபீஷனம் -பால -1-85-என்று
உன் தம்பிக்கு இப்படை வீடு கொடுக்க வாயிற்று புகுகிறார்
அது செய்யாதபடி
நீயே இப்படை வீடு ஆளவேண்டி இருந்தாய் ஆகில் -என்றுமாம்
3-ஸ்தாநம் பரீப்ஸதா-
ஸ்தானம் -ஸ்திதி -நிலை நிற்பது
தரீன் லோகன் சம்பரிக்ரம்ய- சுந்தர -38-33- என்று
காக்கை போலே கண்ட இடம் எங்கும் பரந்து திரியாதே நிலை கொள்ள வேண்டி இருந்தாய் ஆகில் -என்றுமாம் –
4-ஸ்தாநம் பரீப்ஸதா
ஸ்தானம் -சமஸ்தானம் அதாவது சதுரங்க பரிகரமும் நீயும்
கோப்புக் குலையாமல் இருக்க வேண்டி இருந்தாய் ஆகில் -என்றுமாம் –
5- ஸ்தாநம் பரீப்ஸதா-
ஸ்தானம் -அதிஷ்டானமாய் -ஆஸ்ரயம் –
ஸவாம்ய மாத்ய ஸூ ஹ்ருத் கோசாதி யாகிற
ப்ரஹச்தாதி மந்த்ரி வர்க்கமும் கும்பகர்ண இந்த்ரஜித் பிரமுகரான பிராத்ரு புத்ராதி வர்க்கமும்
தேடித் படைத்த அர்த்தமும்
இது நெடும் காலம் குடியாக்கின படை வீடும் ஆகிற இவ் வதிஷ்டானம் குலையாமல் இருக்க வேண்டி இருந்தாய் ஆகில் என்றுமாம்
படை வீடும் அதிஷ்டானமும் பார்த்து இருக்கிறேனே
வேறே ஓர் இடத்தில் போயிருக்கிறேன் என்ன
ஸ்தானம் பரீப்சதா –
பரித ஸ்தானம் ஈப்சதா -என்றும்
ரசாதலம் வாப்ரவிசேத பாதாளம் வாபி ராவண -பிதாமஹச காசம் வா ந மே ஜீவன் ஹி மோஷ்யதே-யுத்த -19-20-என்று
பூமி தன்னிலும் மலை மு ழைஞ்சுகளிலும் போகவுமாம்
உனக்கு ஜன்ம பூமியான பாதாளத்திலே போகிலுமாம்
உன்னை இப்படி வரம் தந்து வாழ்வித்த பிரம்மா லோகத்திலே போகிலுமாம்
அவ்வோ இடங்களில் உனக்கு உயிர் கொண்டு நிற்க ஒண்ணாது
சுற்றிலே போய் இருக்கப் பார்த்தாயாகிலும் அவர் உறவாக வேணும் காண்-

பிரசித்த ஸ்தலங்களிலே போயிருக்கிற போதன்றோ அவர் வேண்டுவது
அஜ்ஞாத வாசமாக ஓரிடத்திலே மறைய இருக்கிறேன் என்ன
1-வதம நிச்சதா –
உன்னை உயிர் உடன் விடில் அன்றோ நீ ஒளிந்து இருப்பது
அப்படி சாகாமல் இருக்கைக்கு வேண்டி இருந்தாய் ஆகிலும் அவரைப் பற்ற வேணும் –
2-வதம நிச்சதா –
ஒரு வ்யாத்யாதிகளால் பிறக்கிற மரணமொழிய ஒரு சத்ரு பலத்தினாலே புகுந்து தலை அறுப்புண்டாய் என்கிற பரிபவம் வாராதே ஒழிய வேண்டி இருந்தாய் ஆகில் என்றுமாம்
வீரனுக்கு சத்ருவின் கையில் படுகை அன்றோ தரம் -என்கிறாய் ஆகில் –
3- கோரம் வதம் நிச்சதா –
நாட்டாரைப் போலே சாமாறு சாம் போதும் அவரைப் பற்ற வேணும் காண்
4- கோரம் வதம் –
உன்னைக் கொல்லும் போதும் எளிதாக விடுவாரோ -ஆளை வரவிட்டு நிலை நாட்டி அந்த தூதனைக்
கொண்டு தறைக்கீடாகத் தோப்பை முறித்து உன் பசலைத் திருகி உன் ஓலக்கத்திலே மதியாதே புகுந்து
தன் நாயன் பெருமையையும் உன் தாழ்வையையும் சொல்லி
உன் படை வீடு பொறியும் புகை எழும்படி சுட்டுக் கரிக் கூடாக்கி மீண்டு வந்து விசேஷம் சொல்லும்படி பண்ணி
அனந்த பரிகரத்தை யுடைத்து
காண்பாரைக் காண்பித்துக் கொண்டு உன் ஆழிய நெஞ்சிலே கழித்தால் போலே உனக்கு நீர்ச் சிறையான கடலிலே
கல்லிட்டு அடைத்து பெரு வழி யாக்கி -குரங்குகளை கால் நடையே அக்கரைப் படுத்தி
உன் படை வீட்டை அடை மதிள் படுத்தி நீ ஆண்ட பரிகரம் அடைய வெறும் த்றையாக்கி
உன் உறவு முறையாரை மூக்கை அறுப்பது தோளைத் துணிப்பது காலைத் தறிப்பது தலையை அறுப்பதாய்
பனம் கனி உதிர்த்தால் போலே உன் தலைகளை உதிர்ப்பது
தோள்களை கழிப்பது உடலைத் துளைப்பது
இவ் வுதிரக்கு கூறையை உன் பெண்டுகளுக்கு கட்டுவதாக
கச்ச –யுத்தத் -59-143-என்று விட்டு அடிப்பதே
இப்படி சித்ரவதம் பண்ணிக் காண் உன்னை அவர் கொல்லுவது
இப்படிக்குக் கொடும் கொலை வேண்டிற்றிலை யாகில் அவரைப் பற்று என்றாகவுமாம் –

இவர் வெறுத்த மனிதர் இதற்கு முன் இப்படிப் பட்டார் உண்டோ -என்ன
1- த்வயா –
இப்படி வேறு ஒருவர் இத்தனை அபராத பண்ணினாரும் இல்லை
இப்படி பட்டவர்களும் இல்லை
ஆததாயியாய் அசஹ்ய அபசாரம் பண்ணிச் சித்ரவத ப்ராப்தனான உனக்கு இத்தனையும் வேணும்
2- ஸ்தானம் பரீப்சதா வதஞ்சா நிச்சதா த்வயா –
நீ இருக்குமாறு இருக்கும் போதும் அவர் வேணும்
நீ சாமாறு சாமபோதும் அவர் வேணும்

அவர் தாம் இங்கே சந்நிஹிதராக வேண்டாவோ -என்ன
1- அசௌ-
இந்தா இங்கே
இத்தால் இங்கே நிற்கிறார் -என்கிறாள்
2- அசௌ –
ராமமேவா நு பச்யதி -சுந்தர -16-25- என்றும்
ராமேதி ராமேதி சதிவ புத்தா விசிந்தய -சுந்தர -32-11- என்றும் எப்போதும் பெருமாளையே பாவிக்கையாலே
உரு வெளிப் பாடாய்த் தனக்கு எப்பொழுதும் சந்நிஹிதராய் இருக்கையாலே இவர் -என்று காட்டுகிறாள்
இவனுக்கு இதுக்கு முன் அவரோடு வாசனை இல்லாமையாலும்
சிநேக பூர்வா நுத்யானம் இல்லாமையாலும்
அந்ய பரநாகையாலும் தோற்றாது இ றே
பிரதி கூலனான மாரீசனுக்கு வாசனை யுண்டாகையாலே-வ்ருஷே வ்ருஷே ஹி பச்யாமி -ஆரண்யம் -39-14- என்று
பார்த்த பார்த்த இடம் எங்கும் பெருமாளாய்த் தோற்றிற்று இ றே-
ராவணன் தானும் பூசலிலே வாசனை பண்ணின பின்பு திருச் சரங்கள் நெஞ்சிலே பட்டு
ஸ்மரன் ராகவ பாணா நாம் – யுத்தம் -60-3- என்று நினைத்துக் கொண்டு பட்டான் இ றே –
3- அசௌ-உவர் –
சந்நிஹித தேச வர்த்த கால சம்பந்தியை இ றே -அயம் -இங்கே -எனபது
இங்கு புத்தியில் அதூரத்வத்தாலும் தேச கால விப்ர கர்ஷத்தாலும் அதூர விப்ர கர்ஷ வாசி யான அத-ச்ச் சப்தத்தாலே சொல்லுகிறாள் –
4-அசௌஇவர்
அச்யா தேவ்யா மனஸ் தஸ்மின் தஸ்ய சாஸ்யாம் ப்ரதிஷ்டிதம் -சுந்தர -15-52-என்றும்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னிலிட்டேன் -பெரியாழ்வார் -5-4-8- என்றும் சொல்லுகிறபடியே
இருவர் திரு உள்ளமும் இருவர் பக்கலிலே தட்டு மாறிக் கிடக்கையாலே பிராட்டிக்கு ஒரு போகியாகத்   தோற்றக் குறை இல்லைஇ றே –

ஆசன்னராக்கி அவரைப் பெறும்போது நான் பண்ணின விரோதங்களை நினைத்து விக்ருதரராய் இருக்கிறவர் என்னைக் கைக் கொள்ளுவாரோ -என்ன
1- புருஷர்ஷப –
செய்தார் செய்த குற்றங்களை நினைத்து இருக்குமவர் அல்லர்
பிழை அறியாத பெருமாள் கான் –
2- புருஷர்ஷப –
அவிஜ்ஞாதா -என்றும்
ந ஸ்மரத் யப காராணாம் சதமப்யாத் மவத்தயா -அயோத்யா -1-11- என்றும்
அபராதா நபிஜ்ஞ  சந் சதைவ குருதே தயாம் -என்றும் கவி பாட்டுக் கொண்டவர் காண்-
3- புருஷர்ஷப –
பிழை யறியாத வாழவே யல்ல
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-யுத்த -18-3- என்றும்
குன்றனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும் -முதல் திரு -11-என்றும்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே -திருச்சந்த -111-ளும் படியான உத்தம புருஷர் காண் –
பிழை அறியுமவன் -அதமன் -பிழை அறியாதவன் மத்யமன் -பிழையை நன்மையாக கொள்ளுமவன் உத்தமன் –
4- புருஷர்ஷப –
யதிவா ராவண ஸ்வயம் -யுத்த -18-33-என்றும்
கச்சா நு ஜா நாமி -யுத்தம் -59-143-என்றும்
பிரதிகூல தசையிலே யகப்பட உன்னை ரஷிக்கைக்கு அழைத்து விடுவது -போக விடுவதாகப் புகுகிறவர்
நீயும் அனுகூலித்தால் விடுவரோ –
5- புருஷர்ஷப –
நீ புருஷர்களில் அதமனாய் இருக்குமாபோலே காண்
அவரும் புருஷர்களில் உத்தமனாய் இருக்கும் படி –
6- புருஷர்ஷப –
புருஷோத்தம -என்றபடி
அதமனாகிறான் -செய்த குற்றத்தை நினைத்து இருக்க்குமவன்
மத்யமனாகிறான் -குற்றத்தை நாளோட்டத்தோடே பொறுக்குமவன்-
உத்தமன் ஆகிறான் குற்றம் காண்பான் என் மறப்பான் என் என்று முதலுக்குக் காணாதவன்
6- புருஷர்ஷப –
இப்படி அனுகூலியாத பஷத்தில்  அவருடைய சாரங்க வ்யாபாரத்தாலே  உனக்கு வ்யாபாதனம் என்று நினைத்து இரு –
7- புருஷர்ஷப –
அவருடைய கொம்பாலே உனக்குக் கொலை என்று நினைத்திரு –

இத்தால்
இவனுக்கு இப்படி உபதேசம்  பண்ணும் படியான பிராட்டியினுடைய
நீர்மையின் ஏற்றமும்
இப்படிப்பட்ட இந்த நீர்மையை யகப்படக் கை தப்பும் படியான
ராவணனுடைய பாப ப்ராசுர்யமும் சொல்லிற்று ஆயிற்று –

————

மித்ரமௌபயிகம் கர்த்தும் ராமஸ்தா2நம் பரீப்ஸதா|

வத4ம் சாநிச்ச2தா கோ4ரம் த்வயாஸௌ புருஷர்ஷப4: ||

பொழிப்புரை:  குடியிருப்பை விரும்புகிறவனாயும், பயங்கர சாவையும் விரும்பாதவனாயிருக்கிற உன்னாலே இந்த புருஷஶ்ரேஷ்டரான இராமபிரான் நண்பராகச் செய்து கொள்ளத் தக்கவர்.

கீழ்ப்பாட்டில் ஹித வர்த்தைகளைச் சொல்லப்புகுந்த பிராட்டியார்  மேன்மேலும் ராவணனுக்கு நல்வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினார்.

‘ராமபிரானிடம் நட்பு செய்தலை உபாயமாக்  கொள்’ (மித்ரமௌபயிகம் கர்தும்)

1.–ராமபிரானிடம் நீ விரோதம் செய்து கொண்டு உனக்கு ஒரு நன்மையும்  ஆகப்போவது இல்லை. அவரோடு உறவு செய்து கொள்வதே உனக்கு நன்மை தரக்கூடியது.

2–பரிபூர்ணமாக அபசாரப்பட்ட நீ அவரது திருவடிகளிலே ஶரணாகதி செய்வதே உசிதம்.
‘மித்ரம் கர்தும்’ என்று நண்பணாகச் செய்து கொள்ளச் சொல்லியிருக்க ஶரணம் புகுதலைச் சொல்வானென்?
அடுத்த ஶ்லோகத்தில், ‘அவர் தருமமறிந்தவராகவும், தன்னை ஶரணமடைந்தாரிடம் அன்புடையவராகவும் பெருமை பெற்றவர்.
அவரோடு உனக்கு நட்பு உண்டாகட்டும்’ [விதி3த: ஸஹி த4ர்மஜ்ஞ: ஶரணாக3த வத்ஸல:। தேந மைத்ரீ ப4வது தே ஸு.கா. 21-20 ] என்று
அப்பெருமான் ஶரணாகதரிடம் வாத்ஸல்யமுடையவர். நீயும் அவரை ஶரணமடைவாயாக என்று பொருள் பட ‘மைத்ரீ’ என்கிற ஶப்3தத்தைப் ப்ரயோகிக்கிறாள்.

3-[அர்ச்சநம், வந்த3நம், தா3ஸ்யம், ஸக்2யம், ஆத்மநிவேத3நம் [பா4க3வதம் 7-5-23] என்று நட்பை பக்தியின் வகையாகச் சொல்லியதாலே,
ஸாத்3ய ப4க்தியாகிற ப்ரபத்தியிலும் அடங்குமன்றோ நட்பு?
ஶரணமடை என்று நேரிடையாகச் சொல்லாமல், நட்புகொள் என்று பிராட்டி மட்டுமல்லாமல், ராமபிரானும் நட்பினை உயர்வாகச் சொல்லியிருக்கிறான்.
விபீ4ஷண ஶரணாக3தியின் போது, நண்பணாக வந்தவனை ஒருபோதும் கைவிடேன்
[மித்ர பா4வேந ஸம்ப்ராப்தும் ந த்யஜேயம் கத3ஞ்சந; யுத்.கா.18-3 ] என்றும்,
ஸுக்ரீவனை [ஸகா2 ச மே ]என்றும்,
குஹன் என்னும் ஓடக்காரனை [ஆத்மஸம: ஸகா2; யுத்.கா. 128-4] என்றும் அருளிச் செய்தாரன்றோ?

4-வணங்காமுடியாய் [ந நமேயம்; யுத். கா. 36-13 ] என்றிருக்கிற அரக்கனை ஶரணம் புகு என்றால்,
இணங்கமாட்டான் என்பதனால், ‘நட்பு கொள்வாய்’ என்று அறிவுரை சொன்னாள்.
5–ஆபத்திலிருந்து ரக்ஷிக்கிறவன் நண்பன் [மிதாத் த்ராயத இதி மித்ரம் என்பது மித்ர ஶப்தத்தின் வ்யுத்பத்தி ]
ஆகையால், இவரை நண்பராகக் கொள்வது உனக்கு உசிதம் என்றாள்.

6-உபாயமாக (ஔபயிகம்) அதாவது உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுவதே உனக்கு உபாயம்.
ஒருவேளை நான் நட்பு பாராட்டியும், அவர் என்னை ஏற்றுக்கொள்ளவில்லையானால் என்செய்வது என்ற ஸந்தேஹம் உன் மனத்தில் எழுந்தால்,
ரமிக்கச் செய்பவன் ராமன் [ரமயதீதி ராம:] என்பதை மறந்துவிடாதே.
வரம்பில்லாமல் ஜனங்களுடன் ஒருவனாய்க் கலந்து பரிமாறும் ஸௌஶீல்ய குணத்தாலே,
ஓர் ஓடக்காரன், குரங்கு, காக்கை என்று வாசியில்லாமல் ரமித்து நட்புறவு கொள்பவர்.
பிரமனின் பேரனாகவும், வேதமோதியவனாகவும் இருக்கக்கூடிய உன்னைக் கைவிடமாட்டார்.

ராவணாயிருந்தாலும் அழைத்து வா [யதி3 வா ராவண: ஸ்வயம் ஆநயைநம்; யுத்.கா. 18-35 ] என்று சொல்லக்கூடியவர்;
எல்லா ஜீவராஶிகளுக்கும் நன்மை செய்பவன் என்று தன்னைப்பற்றிச் சொல்லக்கூடியவர் [ஸுஹ்ருத3ம் ஸர்வ பூ4தாநாம்; கீதை 5-29 ];
ராமனை விரோதித்துக் கொண்டால், நீ இறப்பது நிச்சயம், ‘இந்த லங்கையும், ராக்ஷஸர்களும், நீயும் அழிந்துவிட்டீர்கள்’
[நேயமஸ்தி புரீ லங்கா ந யூயம் ந ச ராவண: ஸு.கா. 43-25]
ஆகவே இந்த ஊரும், உறவினரும், உன் உயிரும் உன்னிடமே தங்கியிருக்கச் செய்து ரமிக்கவல்லவர் அவர்.[ரமயதீதி ராம:] என்று முன்னமே சொன்னபடி.

குடியிருப்பை விரும்புவாயானால் (ஸ்தா2நம் பரீப்ஸதா)

அதாவது,
1-இங்கே ஸ்தா2நம் என்பது இருப்பிடமான லங்கா ராஜ்யத்தைக் குறித்தது.
உன் தம்பி விபீ4ஷணனுக்கு இந்த ராஜ்யத்தைக் கொடுக்கப்போகிறார்.
[அபி4ஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம்  விபீ4ஷணம்; பா3.கா 1-85 ]
அப்படி செய்யவிடாமல், நீயே லங்கா ராஜ்யத்தை அநுபவிக்க ஆசையுடையவனாய் இருந்தால், என்ற பொருளில் சொல்லப்பட்டது.

2-ஸ்தா2நம் என்ற சொல்லை நிலைத்து நிற்பது என்கிறபடி பொருள் கொண்டால்,
இப்படி நீ நின்ற இடத்திலிருந்தே இராமனை ஶரணடைவாயாக.
மூன்று உலகும் சுற்றித் திரிந்து [த்ரீன் லோகான் ஸம்பரிக்ரம்ய; ஸு.கா. 38-33 ] இறுதியில் வேறு போக்கிடமின்றி
இராமன் திருவடிகளில் வீழ்ந்த காகம் போலல்லாமல் (ஸ்தா2நம்) நின்ற இடத்திலிருந்தே ஶரணடைவாயாக.

3-ஸ்தா2நம் என்பது ஸம்ஸ்தா2நத்தையும் (கட்டுக்கோப்பு) குறிக்கும்.
தேர், யானை, குதிரை, காலாள் என்கிற சதுரங்க ஸேனையுடன் கூடிய நீ இந்தநிலை மாறாமல்
கட்டுக்கோப்பு குலையாமல் இருக்க வேண்டின், என்றொரு பொருள்படும்.

4-ஸ்தாநம் என்பது அதி4ஷ்டா2நத்தையும் (ஆஶ்ரயம்) குறிக்கும்.
அரசன், மந்திரி, நண்பர்கள், அரண்மணை, பொக்கிஷம், ஸேனை முதலியவை உனக்கு ஆஶ்ரயமான ராஜ்யத்தின் அங்கங்கள்.
இவை அழியாமல் இருக்க வேண்டின், என்றொரு பொருளும் கொள்ளலாம்.

5-ஒருவருமறியாமல் ஓடி ஒளிந்துவாழ ஆசைப்பட்டாலும், உன்னை உயிரோடு விட்டாலன்றோ ஒளிந்து கொள்வது?
உயிர்வாழ வேண்டின், என்றொரு பொருளும் கொள்ளலாம்.

உன்னை உயிரோடு விட்டாலன்றோ மற்றைச் செயல்களைச் செய்வது?
நீ கோ4ரமான முடிவை எதிர்கொள்வாய் (வத4ஞ்சாநிச்ச2தா கோ4ரம்). கோ4ரமான சாவை நீக்கி உலகத்தாரைப்போலே
இயற்கையாகச் சாகும் காலத்தில் சாகவேண்டியிருப்பாயாகில், அவரை ஶரணம் பற்ற வேண்டும்.
அப்படியில்லை எனில், தன் தூதனை இலங்கைக்கு அனுப்பி, அஶோகவநத்தை அழித்து, அரக்கர்களைக் கொன்று,
லங்காபுரிக்குத் தீயிட்டு, போரில் ஸேனை முழுவதையும் வென்று, உன் தலைகளை உதிர்த்து, உன் மனைவியரிடம் சென்று
ரத்தம் தோய்ந்த உன் உடலைக் காட்டு என்று உன்னைத் திருப்பி அனுப்பி, இம்மாதிரி சித்திரவதை செய்து உன்னைக் கொல்லப்போகிறார்.
இப்படிப்பட்ட கோ4ரமான வத4த்தைத் தவிர்க்க நீ ஆசைப்பட்டால் அவரை ஶரணமடைவாயாக.

ஶரணமடைவாயாக என்று சொல்லுகிறீர்களே, அவர்தான் இங்கு இல்லையே என்று கேட்பாயாகில், இதோ இங்கிருக்கிறார்;
இவரை (அஸௌ) ஶரணடை என்கிறாள். ராமனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் பிராட்டி
[ராமமே வாநுபஶ்யதி; ஸு.கா. 16-25] ‘ராம, ராம என்று புத்தியாலே எப்போதும் நினைத்து’
[ ராமேதி ராமேதி ஸதை3வ பு3த்3த்4யா விசிந்த்ய; ஸு.கா. 32-11 ] என்று எப்போதும் ராமனையே தியானித்திருக்கையாலே
உருவெளித்தோற்றமுண்டாகித் தனக்கு எப்போதும் அருகிலேயே இருப்பதாலே ‘இவர்’ என்கிறாள்.
இந்த தேவியின் மனம் அவரிடமு
[அஸ்யா தே3வ்யா மநஸ்தஸ்மின் தஸ்ய சாஸ்யாம் ப்ரதிஷ்டி2தம்; ஸு.கா. 15-52 ] என்றும்,
‘உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்; உன்னையும் என்னிலிட்டேன்’ [பெரியாழ்வார் திரு.5-4-8]என்றும் சொல்லுகிறபடியே
இருவர் திருவுள்ளமும் மற்றவர் பக்கம் மாறிக் கிடக்கையாலே பிராட்டி ஏக போகமாக காணக் குறை வில்லை யன்றோ!

புருஷர் தலைவர் (புருஷர்ஷப4: )
தான் செய்த குற்றங்களைக் கண்டும் இராமன் தன்னை மன்னித்தருள்வானோ என்று ராவணன் நினைத்திருந்தால்,
அதற்கும் ஸமாதா4நம் சொல்வதுபோல் மேற்கொண்டு சொல்லுகிறாள்.
தீங்கு புரிந்தர்வர்களின் தீங்குகளை எண்ணியிருக்கும் ஸாதா4ரண புருஷன் அல்லன்;
பிழையறியாத பெருமாளாகையாலே, குற்றங்களை அறியாதவர் [அவிஜ்ஞாதா; விஷ்ணு ஸஹஶ்ர நாமம்]
எனவே புருஷர் தலைவன் ஆவான். பிழைகளை அறியாதது மட்டுமன்று. அவனுக்கு தோஷமிருந்தாலும் மிக நன்று
[ தோ3ஷோ யத்3யபி தஸ்ய ஸ்யாத்; யுத்.கா. 18-3] என்றும்,
குன்றனைய குற்றம் செயினும் குணங்கொள்ளும் [முதல் திரு. 11] என்றும்,
செய்த குற்றம் நற்றவமாகவே கொள்ளும் ஞாலநாதனே [திருச்சந்த-111] என்றும்
அவர் புருஷோத்தமராகிறார்.
பிழையை அறிபவன் அத4மன்.
பிழையை அறியாதவன் மத்4யமன்.
பிழையை நன்மையாகக் கொள்பவன் உத்தமன் ஆகிறான்.

இந்த ஶ்லோகத்தால் இவனுக்கு உபதே3ஶம் பண்ணும்படியான பிராட்டியினுடைய நீர்மையும், கருணைப்பெருமையும்,
இப்படிப்பட்ட இக்கருணையாலும் கரையேறமுடியாதபடி கைதவறிப் போம்படியான ராவணனுடைய பாவ மிகுதியும்  சொல்லப்பட்டது.

————-———————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –த்ருணமந்தரத க்ருத்வா–சுந்தர -21-3–

January 17, 2024

த்ருணமந்தரத க்ருத்வா பிரத்யுவாச ஸூ சிஸ்மிதா
நிவர்த்தய மநோ   மத்த ஸ்வ ஜநே ப்ரீயதாம் ம்ந  -சுந்தர -21-3-

த்ருணம் -புல்லை
அந்தரத -தனக்கும் ராவணனுக்கும் இடையிலே
க்ருத்வா -இருக்கும்படி செய்து
பிரத்யுவாச -பிராட்டி பதில் சொன்னாள்
ஸூ சிஸ்மிதா-பரி சுத்தமான புன்சிரிப்பை யுடையவளாய்
நிவர்த்தய-திருப்பிக் கொள்
மநோ -மனத்தை
மத்த -என்னிடத்தில் இருந்து
ஸ்வ ஜநே-உன் மனைவியர் இடத்தில்
ப்ரீயதாம் ம்ந-ப்ரீதி பண்ணட்டும்

த்ருணம் மந்தரத க்ருத்வா பிரத்யுவாச ஸூ சிஸ்மிதா
நிவர்த்தய மநோ   மத்த ஸ்வ ஜநே ப்ரீயதாம் ம்ந
அவதாரிகை –
ஸ்ரஸ்தா மால்யாம் பரதரோ வைதேஹீ மநு சிந்தயன் ப்ருசம் நியுக்தஸ் தச்யாஞ்ச மத நேந மதோத் கட -சுந்தர -18-4-என்று
உறங்கி உணர்ந்து எழுந்து இருந்த ராவணன் மதன பரவசனாய்
தீபிகா காஞ்ச நீ காச்சித் -சுந்தர -18-10-11-12-13-14-என்று
கனக தீபிகா களா சீ வாலவ்யஜன தாள வ்ருந்த  ப்ருங்கார சாமார ரமணீ யத்வஜ சத்ராதி பரி பர்ஹங்களைக் கொண்டு அங்க நா சதம் சேவிக்க
ராவணஸ் யோத்தமா ஸ் த்ரிய-சுந்தர -18-15-என்று பிரதான மகிஷிகளிலே சிலர் பின் செல்ல நிதர அசேஷ மந்த கதியாய்க் கொண்டு அசோகா வநிகையில் செல்ல

க்ருபாளுவான பெருமாளுக்கு -ராமஸ்ய வ்யவஸா யஜ்ஞா -சுந்தர -38-35-என்று கருத்து அறிந்த மகிஷி யாகையாலும்
தவம் மாதா சர்வ லோகா நாம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-126-என்றும்
அகில ஜகன் மாதரம் -சரணாகதி கத்யம் -என்றும்
உபாய பூதஸ்ய வல்லபா ப்ராப்தி யோகி நீ -பாஞ்சராத்ரம் -என்றும்
லஷ்மீ புருஷ காரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி -பாஞ்சராத்ரம் -என்றும்
விசேஷித்து புருஷகாரம் ஆகிற சம்பந்தத்தாலும்
தன பரி பவங்கள் கிடக்க இவ்வநர்த்தத்தைக் கண்டு பிராட்டியும் இவன் சொன்னவற்றுக்கு பிரதி வசனமும்
ஹிதமும்
சொல்லுகிறார் இஸ் சர்க்கத்தாலே-

காமயே த்வாம் விசாலாஷி -சுந்தர -20-3- என்றும்
யத் யத் பச்யாமி தி காதரம் சீதாம் ஸூ சத்ருசா  நநே
தஸ்மின் தஸ்மின் ப்ருது ஸ்ரோணி சஷூர் மம நிபத்யதே -சுந்தர -20-15-என்றும்
ஸ்வ சாபலம் சொன்னவற்றுக்கு
நிவர்த்தய மநோ மத்த -21-3- என்றும்
சாது தர்ம மவே ஷஸ்வ ஸாது ஸாது வ்ரதம  சர – சுந்தர -21-7- என்றும்
பொல்லாங்குகளைத் தவிர்த்து நன்மைகளை ஆசரி என்று உத்தரம் சொல்லியும்
புங்க்க்ஷ்வ போகான் யதா ஸூ கம் -சுந்தர -20-35- என்றும்
ஏக வேணி தாரா சய்யா த்யானம் மலி நம்பரம் அஸ்தா நேப்யுபவாசச்ச நைதான் யௌபயிகா நி தே-சுந்தர -20-8- என்றும் சொன்னதற்கு
அகார்யம் ந மயா கார்யமேக பத்ன்யா விகர்ஹிதம்
குலம் சம்ப்ராப்தயா புண்யம் குலே மஹதி ஜாதயா-சுந்தர -21-4-என்றும்
நாஹம் ஔபயிகீ பார்யா பரபார்யா சதீ தவ  -சுந்தர -21-6 என்றும் உத்தரம் சொல்லியும்
அசக்ருத் சம்யுகே பக்நா நா  மயா விமருதி தத வஜா
அசக்தா ப்ரத்ய நீ கேஷூ ஸ்தாதும் மம ஸூ ரா ஸூ ரா -சுந்தர -20-20- என்று
தன் ஆண் பிள்ளைத் தனம் சொன்னதற்கு
ஜனஸ் தானே ஹதஸ் தானே நிஹதே ரஷ சாம்பலே
அசக்தேன த்வயா ரஷ கருதமேதத சாதுவை
ஆஸ்ரமம து தயோ ஸூ ந்யம் பிரவிச்ச நரசிம்ஹயோ
கோசரம கதயோர் ப்ராதரோ ரபா நீதா த்வயாதமா
நஹி கந்த முபாக்ராய ராம லஷ்மண யோஸ் த்வயா
சகயம் வந்தர்சனே ஸ்தாதும் ஸூ நா சார்தூல யோரிவ -சுந்தர -21-29/30/31-என்றும்
பெருமாள் கண் வட்டத்திலே நிற்கும் நீ தப்புவையோ
புலி முன்னே நிற்கும் நாய் போலே
பதினாலாயிரம் பேரைத் தனியே நின்று கொன்று சூறை யாடின -கூறை யாடின -தனி வீரத்துக்கு
பிரதிக்ரியையாக மாரீசனைக் கொண்டு நீ பண்ணின க்ருத்ரிமத்திலே கண்டிலோம்
அவ வாண் பிள்ளைகள் நாற்றம் கேட்டு நின்றால் பின்பன்றோ உன்னுடைய வெற்றியும் ஆண் பிள்ளைத் தனமும் காணலாம் -என்று
பெருமாளுடைய பிள்ளைத் தனமும் பேசி உத்தரம் சொல்லியும்
லோகேப்யோ யா நி ரத் நானி சம்ப்ரமத்யா ஹ்ருதா நி மே
தானி தே பீரு சர்வாணி ராஜ்யம் சைததத ஹஞ்ச தே -சுந்தர -20-18-என்றும்
யானி வைஸ்ரவணே  ஸூ ப்ரூ ரத் நானி ச தாநானி ச -சுந்தர -20-33-என்றும்
ராஜ்ய ரத்ன தான தான்ய பத்த நாதிகளைத் தருகிறேன் -என்று ப்ரலோபித்தற்கு
சக்பா லோபயிதும் நா ஹமைச் வர்யேண தநேந வா
அனந்யா ராக வேணாஹம் பாஸ்கரேண  பிரபா யதா -சுந்தர -21-15–என்றும்
யம் த்வம் தேவி நிரீஷசே ச ச்லாக்ய ச குணீ தன்ய ச குலீன ச புத்திமான் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-131- என்றும்
மஹா தனத்தைப் பிரியாதே இருக்கிற என்னையா நாலு காசிட்டு வசீ கரிக்கத்தேடுதி -என்று உத்தரம் சொல்லியும்
பஹூ மன்ய ஸ்வ மாம் -சுந்தர -20-3- என்றும்
மாஞ்ச புங்ஷ்வ யதா ஸூ கம் -சுந்தர -20-33- என்றும் என்னையும் ஆதரித்துக் கொண்டு அணைய வேணும் காண் என்றதற்கு
உபதாய புஜம் தஸ்ய லோகா நா தஸ்ய சதக்ருதம் கதம் நாமோ பதாஸ்யாமி புஜமன் யஸ்ய கஸ்ய சித் -சுந்தர -21-16- என்று
அணிமிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய்-திருவாய் -10-3-5- என்று
எல்லாரும் தலையாலே சுமக்கும் படியான உலகுடைய பெருமாள் தோளிலே தலைவைத்த நான்
வேறு ஒரு ஷூ த்ரனைத் தீண்டுவதோ -என்று உத்தரம் சொல்லியும்
பஹூ மன்யஸ்வ மாம் -சுந்தர -20-3-என்றும்
நஹி வைதே ஹி ராமச் த்வாம் த்ரஷ்டும் வாப்யுபலப்ச்யதே -சுந்தர -20-27- என்றும்
ந சாபி மம ஹஸ்தாத் த்வாம் ப்ராப்து மர்ஹதி ராகவ -சுந்தர -20-28- என்றும்
என் கையிலே அகப்பட்ட உன்னைப் பெருமாள் காணவும் கிட்டவும் வல்லரோ-என்பதற்கு
அப நேஷ்யதி மாம் பார்த்தா தவத்த சீக்ரமரிந்தம-
அ ஸூ ரேப்ய ஸ்ரீ யம் தீப்தாம் விஷ்ணுஸ் தரிபிரிவ க்ரமை-சுந்தர -21-28-என்று
அ ஸூரா பஹ்ருத ஸ்ரீ யை மீட்டால் போலே    உன்னெதிரே என்னையும் மீட்கப் புகுகிற படி பார் -என்று உத்தரம் சொல்லியும்
ருத்தும் மமா நு பசய த்வம் ஸ்ரீ யம் பதரே யசச்ச மே -சுந்தர -20-25- என்று
என் ஐஸ்வர்ய சம்பத் கீர்த்திகளைப் பாராய் -என்றதற்கு
சம்ருத்தா நி வினச்யந்தி ராஷ்ட்ராணி ந கராணி ச
ததேயம் த்வாம் சமா சாத்ய லங்கா  ரத்னௌ க சங்குலா  அபராதாத் தவை கஸ்ய நசிராத வின சிஷ்யதி -சுந்தர -21-12-என்று
நசியாத இவை யடைய நசிக்கப் புகுகிறபடி பார் -என்று உத்தரம் சொல்லியும்
நிஷிப்த விஜயோ ராமோ கத ஸ்ரீர் வன கோசர வ்ரதீ ஸ்தண்டி லசாயீ ச சங்கே ஜீவதி வா ந வா -சுந்தர -20-26-என்று
ப்ரஷ்டைச்வர்யராய் சத்தை தன்னிலே யகப்பட சந்தேஹிக்கும் படி இருக்கிறார்  -என்று சொன்னதற்கு
ஷிப்ரம் தவ ச நாதோ   மே ராம சௌமித்ரிணா  சஹ
தோய மல்பமிவாதித்ய ப்ராணா நா தாஸ்யதே சரை -சுந்தர -21-33- என்று
அவர் தம்பியும் தாமுமாக உன் தலையை அறுத்து ஸூகமாய் இருக்கப் புகுகிறபடி பாரீர் -என்று உத்தரம் சொல்லியும்
ந ராமஸ் தபஸா தேவி ந பலேன ந விக்ரமை
ந தா நே ந மயா துல்யஸ் தேஜஸா யசசாபி வா -சுந்தர -20-34- என்று
புஜ பல விக்ரமதந தேஜ கீர்த்திகளாலே நமக்கு ஒரு தரம் போராது என்று சொன்னதற்கு
வர்ஜயேத் வஜ்ர முத்ஸ்ருஷ்டம் வர்ஜயே தந்த கச் சிரம்
த்வத் விதம் ந து சங்க்ருத்தோ லோகா நா தஸ் ச ராகவ
ராமஸ்ய தனுஷ சப்தம் ச்ரோஷ்யசி த்வம் மஹாஸ்வ நம
இஷவோ நிபதி ஷயந்தி ராம லஷ்மண லஷணா -சுந்தர -21-23/24/26-என்று
பெருமாள் ஆண்மைக்கு நீ தோற்றினால் உன்னை உயிர் உடன் விடுவாரோ
அவர் தாம் வேணுமோ
அவருடைய வில்லில் சிறு நாண் ஒலி யைக் கேட்டுப் பொறுத்தால் அன்றோ
திரு நாமம் சாத்தின அம்புகள் அன்றோ காட்டு காட்டு என்று சொல்லுகின்றன -என்று உத்தரம் சொல்லியும்
இப்படி இவனை மீட்கலாமோ என்று பார்க்கிறாள் இஸ் சர்க்கத்தாலே –

முதல் ஸ்லோகத்திலே
தஸ்ய தத வசனம் ச்ருத்வா ஸீதா ரௌத்ரச்ய ரஷச ஆர்த்தா தீநஸ் வரா தீ நம பிரத்யுவாச ச நைர் வாச -சுந்தர -21-1- என்று
கொடியானான பையல் வார்த்தையைக் கேட்டுத் தான் சில வார்த்தை சொன்னாள்-என்கிறது
இரண்டாம் ஸ்லோகத்திலே –
துக்கார்த்தா ருததீ ஸீதா வேபமா நா தபஸ்விநீ சிந்த யந்தி வராரோஹா பதிமேவ பதிவ்ரதா -சுந்தர -21-2- என்று
பதிரேகா கதிஸ் சதா -என்றும்
கதி என்றும் தானாவான் -நாச் திரு -8-9-என்றும்
எல்லா அவஸ்தையிலும் ரஷகர் பெருமாள் ஆகையாலே நீ இப்படி படாத படி ரஷித்துக் கொள்ளீ-என்றாள்-
இந்த ஸ்லோகத்திலே
அவர் தூரஸ்தர் வந்து ரஷிக்கும் தனையும் இவனுக்கு ஹிதம் சொல்லி மீட்கலாமோ என்னும் நினைவாலே
கிடந்த துரும்பை முன்னே பொகட்டு என் பக்கல் நின்றும் உன் நெஞ்சை மீட்டு
வகுத்த உன் பெண்களோடு பொருந்தி வர்த்திக்கப் பார் -என்கிறாள்-

வியாக்யானம் –
1-த்ருணமந்தரத க்ருத்வா பிரத்யுவாச
வார்த்தை சொல்லுகிற இடத்தில் துரும்பை முன்னே பொகட்டுச் சொன்னாள் –
வார்த்தை சொல்லுவார்க்கு எல்லாம் அங்கன் அன்றே துரும்பு போடுகை-
இதுக்கு வாசனை என் என்னில்
ஆசனம் அன்னம் உதகம் தேயம் -ஆபஸ்தம்ப -2-4-1-என்று ராஜாக்களுக்கு   ஆசனம் இடுகை விஹிதம் ஆகையாலும்
உபசரித்தாள் தான் பிரசன்னனாய் மீளுமோ என்கிற சங்கை யாலும்
அபாவே பூமிருதகம் தருணா நி -ஆபஸ்தம்ப -2-4-14-என்கிற மர்யாதையாலே ஆசனம் இட்டாள்  ஆகவுமாம்
2-த்ருணமந்தரத க்ருத்வா –
ருஜூ ப்ரணாம க்ரியயைவ தன்வீ ப்ரத்யாதி தேச -ரகுவம்சம் -6-25-என்று
நெஞ்சில் இருக்கிறதற்கு அந்ய வதுபசரித்தால் -இவள் விரக்தை என்று நிராசனாமோஎன்கிற நினைவாலே ஆகிலுமாம் –
அன்றியிலே –
3-த்ருணமந்தரத க்ருத்வா –
சமீபமுபா சங்க்ராந்தம்-சுந்தர -18-25-ஏற்று அணுக விடாதே ராவணன் ஆசன்னனாகப் புகுந்த படியாலே வ்யவதானம் வேண்டி தா அபி ஜாயதே -என்கிற ந்யாயத்தாலே துரும்பை நடுவே  பொகட்டாள் ஆகவுமாம் –
அன்றியிலே –
4-த்ருணமந்தரத க்ருத்வா –
ந பரமுக நிரீஷணம் நாபி சம பாஷணம்-என்று
ஸ்திரீகளுக்குப் பர புருஷ நிரீ ஷணம் பண்ணுதல் -வார்த்தை சொல்லுதல் செய்யலாகாது
ஆகையாலே தருணத்தை முன்னே பொகட்டு அத்தை வ்யாஜீ கரித்து அவன் உபஸ்ரோதா வாகைக்கு ஆகிலுமாம்
அன்றியிலே –
5-த்ருணமந்தரத க்ருத்வா —
பத்ய முக்தம் விசஷணை ராஷசா நாம பாவாய த்வம் வா ந பிரதிபத்யசே -சுந்தர -21-10- என்று
பண்டும் ஹித பரரான அகம்பன மாரீச மால்யவத் பிரமுகர் சொன்ன வார்த்தையும் கேட்டிலை
இப்போது இத் துரும்பு பிரதிபத்தி பண்ணில் இ றே நீ பிரதிபத்தி பண்ணுவது என்று
நிதர்சன ம்  சாராணாம் லகுர் பஹூ தருணம் நர -மாகம் -2-50-என்று
த்ருஷ்டாந்தீ கரித்துப்  பொகட்டாள் ஆகவுமாம் –
6-த்ருணமந்தரத க்ருத்வா –
அருமந்த அர்த்தத்துக்கு பிரதிபத்தாவாக வேணும் என்று
ச குலீன ச புத்தி மான் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-131- என்று
தான் பார்த்தவை   புத்தி யுக்தங்கள் ஆகையாலே ப்ரதிகூலியாத தருணத்தை சேதனம் ஆக்குவோம் என்னும் நினைவாலே யாகவுமாம்
7- த்ருணமந்தரத க்ருத்வா –
தருணத்தை சேதனம் ஆக்கி ஸ்வ சக்தியை இட்டு இந்த வைபாவத்தாலே பீதனாய் மீளுமோ என்கிற நினைவாலே ஆகவுமாம் –
8- த்ருணமந்தரத க்ருத்வா –
அஜ்ஞனாய் இருக்கிற உன்னை
த்ருணமிவ லகு  மே நே -என்று இத் த்ருணத்தோ பாதியாக நினைத்து இருப்பது என்று பொகட்டாள் ஆகவுமாம் –
9- த்ருணமந்தரத க்ருத்வா –
ஹ்ருதயே க்ருத்வா -அந்தர சப்தம் -நெஞ்சைக் குறிக்கும் -என்று கொண்டு
பிரதிகூலா சரணம் பண்ணாத இவ்வளவாலே தருணத்தை குவாளாக நெஞ்சில் கொண்டு
ந த்வா த்ருணத்வம் மன்யே -ந த்வா த்ருணாய மன்யே மஹா பாஷ்யம் -2-13-17-என்னுமா போலே
உன்னை இத் துரும்போ பாதியாகவும் நினைத்து இரேன் காண் -என்றாகவுமாம்
10- த்ருணமந்தரத க்ருத்வா –
அஜ்ஞனாய் இருக்கிற நீ
ஜ்ஞா நே ண ஹீந ப ஸூபி சமா ந-நரசிம்ஹ -16-13-என்று
இப்புல்லைத் தின்கிற பசு அன்றோ என்று பொகட்டாள் ஆகவுமாம்
11-த்ருணமந்தரத க்ருத்வா —
த்வம் நீஸ் சசவத் ஸ்மிருத -சுந்தர -22-16- என்றும்
யதந்தரம் சிம்ஹாஸ் ருகாலயோர் வ நே -ஆரண்யம் -47-45-என்றும்
திர்யக் ஜாதீயனான உனக்கு போக்யம் புல்லன்றோ-
நாஹ மௌபயிகீ பார்யா பரபார்யா சதீ தவ -என்கிற நான் ஆமோ என்று பொகட்டாள் ஆகவுமாம் –
12- த்ருணமந்தரத க்ருத்வா —
விசித்ராணி ச மால்யாநி  சாந்த நான்ய கரூணி ச
விவிதானி ச வாஸாம்சி திவ்ய அந்ய ஆபரணாநிச -சுந்தர -20-33- என்றும்
யாநி வைஸ்ரவணே  ஸூ ப்ரூ ரத்நானி ச தநா நி  ச -சுந்தர -20-33- என்றும் -என்றும்
நீ அடுக்கின வற்றை இத் த்ருணத்தோ பாதியாகக் காண் நினைத்து இருப்பது என்று பொகட்டாள் ஆகவுமாம் –
13-த்ருணமந்தரத க்ருத்வா —
தாரயத் யாத்மா நோ தேஹம் தத் சமாகம காங்ஷிணீ -சுந்தர -16-24-என்று
அவர் வருவாரோ என்கிற நசையாலே இருந்தேன் அத்தனை
உத்பத்ய வேண் யுத்க்ரத நே ந ஸீ கிராமஹம் கமிஷ்யாமி யமச்ய மூலம் -சுந்தர -28-17- என்றும்
தருணம் ஸூ ரஷ்ய ஜீவிதம் -என்றும்
த்ருணத்தோபாதி உயிரில் சரக்கில்லை காண் முடியப் காண் புகுகிறேன் என்று  பொகட்டாள் ஆகவுமாம்-
14-த்ருணமந்தரத க்ருத்வா —
லங்கா  ரத்னௌ கே சங்குலா  அபராதாத் தவை கஸ்ய நசிராத் வின சிஷ்யதி -சுந்தர -21-22-என்று
உன் குற்றத்தாலே இலங்கை நசிக்கப் புகுகிறது
அப்போதைக்கு இத்துராலைத் திரட்டி ஒரு குடிலைப் பண்ணிக் கொள்ள வல்லீ-என்று பொகட்டாள் ஆகவுமாம் –
15-த்ருணமந்தரத க்ருத்வா —
தருண  உலப ந்யாயத்தாலே சாமான்ய விசேஷ ரூபமான கார்யங்களை உபதேசிக்கிறேன் காண் -என்றுமாம் -உலபம் -கொடி
16-த்ருணமந்தரத க்ருத்வா —
நீ உபதேசிப்பது அவர் என் குற்றங்களைப் பொறுக்கில் அன்றோ -என்று நினைக்கிறானாக கருதி
கடலிலே இத்துரும்பைப் பொகட்டால் இது நடுக்  கிடவாதாப் போலே
அவர் திரு உள்ளத்திலே கிடவாது காண் –
ந  ச்மரத்யப காராணாம் சதமப்யாத்மவத்தயா – அயோத்யா -1-4- என்று பிழை அறியாத பெருமாள் காண் -என்கிற நினைவாலே யாகிலுமாம்
17-த்ருணமந்தரத க்ருத்வா —
நடுக் கிடந்த துரும்பை எடுத்துப் பொகட்டு இப்படியே
ஈர்ஷ்யா ரோ ஷௌபஹிஷ்க்ருத்ய -அயோத்யா -27-7-என்று நெஞ்சில் ரோஷாதிகளைப் பொகட்டு அவரைப் பற்று என்றாள் ஆகவுமாம்
18-த்ருணமந்தரத க்ருத்வா —
மித்ர மௌபயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா வதஞ்சா நிச்சதா கோரம் -சுந்தர -21-19-என்று
உன் குடியிருப்பும் உன் உயிரும் வேண்டி இருப்பதாகில் இப்புல்லைக் கவ்வி
அவ வாண் பிள்ளை காலிலே விழாய் என்று பொகட்டாள் ஆகவுமாம்
19-த்ருணமந்தரத க்ருத்வா —
துரும்பை தூணாக்கி அத தூணிலே ராகவ சிம்ஹத்தை புறப்பட விட்டுப் பொல்லாங்கு நினைத்த
நெஞ்சைப் பிளப்பிக்கும் நினைவாலே ஆகிலுமாம்
20-த்ருணமந்தரத க்ருத்வா —
தருண லோஷ்டாதிகளை முன்னே முடி எறிந்து பிரதிஜ்ஞை பண்ணக் கடவது இ றே
அந்த மர்யாதயாலே துரும்பை முன்னே எறிந்து
ஷிப்ரம் தவ ச நா தோ மேராம சௌமித்ரிணா சஹ
தோய மல்பமிவாதி தய ப்ராணா நாதாஸ் யதே ஸ்ரை-சுந்தர -21-83-என்று
உன் உயிரைத் தீண்டார் -கோலிட்டுக் குத்தி எடுத்துப் போகப் புகுகிற படியைப் பார் என்று பிரதிஜ்ஞை பண்ணுகிறாள் ஆகவுமாம்
21-த்ருணமந்தரத க்ருத்வா —
கிள்ளி-என்று கொண்டு-ந சாபி மம ஹஸ்தாத் த்வாம் ப்ராப்தும் அர்ஹதி ராகவ -சுந்தர -20-28- என்ற உன் முன்னே
அப நேஷ்யதி மாம் பார்த்தா தவத்த சீக்ரமரிந்தம-சுந்தர -21-28-என்று உன்னைத் தலை அறுத்துக் கொண்டு போகப் புகுகிறபடி பாராய் என்றாகவுமாம்
22-த்ருணமந்தரத க்ருத்வா —
விப்ர பீடாகரம் சேத்தியா மங்கம் ப்ராஹ்மணஸ்யது-என்று சாஸ்திரம் சொல்லுகையாலே
ப்ருங்கார தாரா ரோத்து ச்ச சூ க்ரச்யாஷி ச தஷிணம் பவித்ரஸ்ய சிரோக்ரேண ஷோபயாமாச வாமன -என்றும்
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய -பெரியாழ்வார் -1-8-7-என்றும்
துரும்பாலே சுக்கிரன்  கண்ணைக் கலக்கினால் போலே
தஸ்மின் தஸ்மின் ப்ருச்ரோனி சஷூர் மம நிபதயதே -சுந்தர -20-15-என்று
பரதார தர்சனம் பண்ணின உன் கண்ணைத் துரும்பை இட்டுக் கலக்குகிறேன் -என்றாகவுமாம்
23-த்ருணமந்தரத க்ருத்வா —
ச தர்ப்பம் சம்ச்தராத் க்ருஹ்ய -சுந்தர -38-30-என்றும்
ஹி நச்து ஸ்ம ச தஷிணம் -சுந்தர -38-37- என்று
தர்ப்பத்தை இட்டுக் கண்ணறையனான காகத்தைக் கண்ணரை யாக்கினால் போலே
இத் துரும்பை இட்டு உன் கண்ணைக் கலக்குவிக்கிறேன் -என்று  பொகட்டாள் ஆகவுமாம் –
24-த்ருணமந்தரத க்ருத்வா —
நர நாராயணர்களில் நாராயணன் இஷீகத்தைக் கொண்டு டம்போத் பாவனை கொன்றால் போலே இத்துரும்பை இட்டு உன்னைக் கொல்லுகிறேன்-என்று  பொகட்டாள் ஆகவுமாம் –
25-த்ருணமந்தரத க்ருத்வா —
சீதாயாஸ் தேஜஸா தகதாம் -சுந்தர -51-36-என்றும்
ந த்வா குர்மி த சக்ரீவ பாச்ம பச்மார்ஹா தேஜஸா -சுந்தர -22-20- என்றும்
என் பாதி வ்ரத்ய தேஜஸ் ஸிலே இத்தூரலை இட்டு மூட்டி உன்னைச் சுடுகிறேன் என்று  பொகட்டாள் ஆகவுமாம் –
26-த்ருணமந்தரத க்ருத்வா —
க்ருதி சேத நே -என்கிற தாதுவிலேயாய் கிடந்த துரும்பை நடுவே கிள்ளிப் பொகட்டு
இப்படியே அங்குள் யக்ரேண தான்ஹன்யாம் -யுத்தம் -18-24- என்றும்
பொல்லா  அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -திருப்பாவை-13- என்றும் சொல்லுகிறபடியே
உன் தலையைக் கிள்ளிப் போக்குவிக்கிறேன் -என்று  பொகட்டாள் ஆகவுமாம் –
ஆக இப்படி துரும்பைப் பொகட்டு மேல் செய்தது என் என்னில்
1-பிரத்யுவாச –
பிரதி வசனம் பண்ணினாள்
2- பிரத்யுவாச
கேட்ட வார்த்தைக்கு உத்தரம் சொன்னாள்
அவன் சொன்ன வற்றுக்கு இசைந்து ஓம் என்றாலும் உத்தரமாம் இ றே
அப்படியோ என்னில்
3- பிரத்யுவாச –
பிரத்யாக்யானம் பண்ணினாள் -மறு வார்த்தை
அதாவது -நாஹம் ஔபயிகீ பார்யா-சுந்தர -21-6-என்றும்
ந மாம ப்ரார்த்தயிதும் யுக்தம் ஸூ சித்திமிவ பாபக்ருத் அகார்யம் ந மயா கார்யம் -சுந்தர -21-4-என்றும் பிரதி ஷேதித்துச் சொன்னாள்
4- பிரத்யுவாச –
நிஷேதித்த அளவன்றிக்கே பிரதி கூலமாகவே சொன்னாள் -அதாவது
ப்ராணா நாதாஸ் யதே சரி -சுந்தர -21-33- என்றும்
ராஷ சேந்திர மகா சர்ப்பான் ச ராம கருடோ மகான் உத்தரிஷ்யதி வேகேன-சுந்தர -21-27- என்றும்
அவனுக்கு பருஷமாகவே சொன்னாள் -பொறுக்க ஒண்ணாத படி வார்த்தை சொன்னாள் –
உவாச –வசபரிபாஷணே- பரக்கச் சொன்னாள் -ஒரு வார்த்தை சொன்னாள் ஆகை அன்றிக்கே
பரித-
பரக்க விட்டு வார்த்தை சொன்னாள் -அதாவது –
சாது தர்ம மவே ஷஸ்வ சாது சாது வ்ரதம் சர -சுந்தர -21-7- என்றும்
யதா தவ ததான் யேஷாம்தாரா ரஷ்யா நிசாசர-சுந்தர -21-14- என்றும் பொறுமை சொல்லியும்
ஏவம் த்வாம்  பாப கர்மாணம் வஷ்யந்தி நிக்ருதா ஜனா
திஷ்ட்யைதத் வ்யசனம் ப்ராப்தோ ரௌத்ர இத்யேவ ஹர்ஷிதா -சுந்தர -21-14-என்று
ஹ்ருதய பேதம் பிறக்கும் படி சொல்லியும்
மாஞ்சாச்மை பூத்வா நிர்யாதயிதுமர்ஹசி -சுந்தர -21-22- என்றும்
விதித சஹ தர்மஜ்ஞ சரணாகத வத்சலா தேன மைத்ரீ பவது -சுந்தர -21-20- என்று
ஜ்ஞான தானம் பண்ணியும்
அந்யதா த்வம் ஹி குர்வாணோ வதம் ப்ராப்ச்யசி -சுந்தர -21-33 என்றும்
ப்ராணா நாதச்யதே சரை- -சுந்தர -21-33 என்றும் தண்டம் சொள்ளையும்
இப்புடைகளிலே
சாம
பேத
தான
தண்ட
ரூபமான சதுர் உபாயங்களையும் சொன்னாளே-

இப்படிக்கன்றி சொல்லுகிற போது முக விகாசம் இருந்த படி என் என்னில்
1-ஸூ சிஸ் மிதா –
எதிரி கனவியனாகில்-தர்மம் வீர்யம் பலம் இவற்றால் கணத்தவனாக -இருந்தால் அன்றோ  இ றே
சம்ரம்பம் பண்ண வேண்டுவது – கோபம் போன்றகுணன்களைக் காட்ட வேண்டியது
அநீதி யாலே தன்னடியே  நசிக்கப் புகுகிற இவன் இ றே இப்படிச் சொல்லுகிறான் -என்று சிரித்தாள்
2- ஸூ சிஸ் மிதா —
ஹ சந்நிவ ந்ருபோ ஹந்தி -என்று ராஜாக்கள் குற்றவாளரை வெட்டி வைக்கச் சொல்லும் போதும் சிரித்து இ றே சொல்லுவது –
இவள் தானும் -அபிஜ்ஞா ராஜ தர்மாணாம்-அயோத்யா -26-4- என்று ராஜ மரியாதை அறியுமவளாய் ராஜ புத்ரியுமாய் ராஜ மஹிஷியுமாய் இ றே இருப்பது
அவன் தருகிறேன் என்ற தான தான்ய ரத் நாதிகளைக் கேட்டு ஸ்திரீ சாபல்யத்தாலே உகந்து சிரித்தாளோ என்னில்
3- ஸூ சிஸ் மிதா –
அர்த்த சாப்ள நிபந்தனம் அல்ல வைராக்ய நிபந்தனம் என்கிற பாவ சுத்தி சிரிப்பின் படியிலே காணலாய் இருந்தது
4-ஸூ சிஸ் மிதா —
ஆஸ்ரமம் து தயோ ஸூ ந்யம் பிரவிச்ய நரசிம்ஹயோ கோசரம் கதயோர் ப்ராத்ரோர்ப நீதா த்வயாதம -சுந்தர -21-30- என்று
அவ் வாண் பிள்ளை முன்னேறித் தோற்பித்து என்னைச் சிறை கோலமாட்டாத அபாலன் தான் கிடீர்  –
ந ராமஸ் தபஸா தேவி ந ப லேந ந விக்ரமை
ந த நேந மயா துல்ய -சுந்தர -21-33-என்று
பெருமாளைத் தரம் அல்லர் என்கிறான் என்று சிரித்தாள்
5-ஸூ சிஸ் மிதா –
வதம் ப்ராப்ச்யசி -சுந்தர -21-23- என்று கழுகும் பருந்தும் கவ்வக் கிடக்கிறவன் தான் கிடீர்
சங்கே ஜீவதி வா ந வா -சுந்தர -20-26- என்று பெருமாள் திரு மேனிக்குத் தீங்கு சொல்லுகிறான் -என்று சிரித்தாள் –
6-ஸூ சிஸ் மிதா –
விபீஷண  விதேயம் ஹி இலங்கைச் வர்யமிதம் க்ருதம் – யுத்த -116-13- என்றும்
ஸ்ரீ மதா ராஜ ராஜேன லங்காயா ம்பி ஷேசித -யுத்த -28-27-என்று
விபீஷணனுக்குப் பெருமாள் கொடுத்த ஐஸ்வர்யத்தை இ றே
ருத்திம் மமா நு பஸ்ய த்வம் ஸ்ரீ யம் பத்ரே  -சுந்தர -20-25- என்று தன்னதாக பிரமித்துப் பிதற்றுகிறான் என்று சிரித்தாள் ஆகவுமாம்
7-ஸூ சிஸ் மிதா –
உபதாய புஜம்  தஸ்ய லோக நாதச்ய சதக்ருதம் கதம் நாமோ பதாஸ் யாமி -சுந்தர -21-16- என்று இருக்கிற என்னை இ றே இப்பையல்
மாஞ்ச புங்ஷவ -சுந்தர -20-33- என்று பிதற்றுதல் -என்று சிரித்தாள் ஆகவுமாம்
8-ஸூ சிஸ் மிதா –
குசலீ யதி காகுத்ச்த கிந்நு  சாகர மேகலாம்  மஹீம் தஹதி -சுந்தர -36-13-என்று பெருமாள் குறி யசங்கா தே இருக்க நானோ இவ்விருப்பு இருப்பேன் என்று
தத சா ஹ்ரீமதீ -சுந்தர -36-6-போலே வ்ரீளா ஸ்மிதம் பண்ணினாள் ஆகவுமாம் –
அன்றியிலே
9-ஸூ சிஸ் மிதா –
ததோ மலிந சம்வீதாம் -சுந்தர -15-18-என்றும்
மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப்புறம் வெளுத்து -நாச் திரு -1-8-என்றும்
விரஹ விஷண்ணை  யாய் இலையமுது செய்யாமை யாலே ஸ்மிதம் பண்ணின போது
வெளுத்த திரு முத்து ஒளியை உடையளாய் இருந்தாள் என்றுமாம்
10-ஸூ சிஸ் மிதா –
என்று பிராட்டியை அபஹரித்தான் என்று கேட்ட போது
க்ருதம் கார்யமிதி  ஸ்ரீ மான் வ்யாஜஹார பிதா மஹா -ஆரண்ய -52-13-என்று
இனி ராவணன் பட்டான் என்று ப்ரஹ்மா பிரியப் பட்டால் போலே இவளும் இவன் அபராதம் பண்ணின போதே பட்டான் என்று
ப்ரீதி ஸ்மிதம் பண்ணினாள் ஆகவுமாம் –

இப்படி ஸ்மிதம் பண்ணிச் சொன்ன பாசுரம் ஏன் என்னில்
நிவர்த்த யேத்யாதி-
அக்ருத்யங்களை தவிர்த்து
க்ருத்யங்களை அனுஷ்டி -என்கிறாள் –
1-நிவர்த்தய மந-
மநோ வியாபாரம் ஆத்மா தீனம் அன்றோ -ஆனபின்பு நெஞ்சை மீள் -என்கிறாள்
2- மநோ நிவர்த்தய –
நல்ல குதிரை யாட்கள் குதிரையைக் கசை தாங்குமா போலே
மந  ப்ரவாஹத்தை மீட்கப் பார் –
3- மநோ நிவர்த்தய –
மநோ ஹி ஹேது சர்வேஷாம் இந்த்ரியாணாம் ப்ரவர்த்தநே  என்கிறபடியே –
கொத்து முதலியான மனஸை மீட்கவே பாஹ்ய இந்த்ரியங்களும் மீளும் காண்
4-நிவர்த்தய ம ந –
உன் நெஞ்சை மீட்டு பிராணன்களை மீட்டுக் கொள்ளாய்-
4- நிவர்த்தய ம் ந –
ஆத்மைவ ஹ்யாத்மாநோ பந்து ராத்மைவ ரிபுராத் மந -ஸ்ரீ கீதை -6-5-என்று நித்ய சத்ருவை ஜெயிக்கப் பாராய்
5-மநோ நிவர்த்தய –
நாட்டில் வேகவத் பதார்த்தங்களுக்கு மநோ ஜவம் என்று திருஷ்டாந்தம் சொல்லலாம் படி
கடுவிசையாய் ஆயிற்று இருப்பது -கை கழிந்தால்   மீட்க ஒண்ணாது
கரணாதிபனான நீ மீட்கப் பார்
மம த்வச்சா நிவ்ருத் தஸ்ய ந ப்ராவர்த் தந்த வர்த்தம நி -அயோத்யா -59-1- என்று
அஸ்வ ஹ்ருதயம் அறியும் ஸூ மந்தரன் தப்பச் சொன்னான்  இறே-

கிடக்கிற ராஜ கார்ய மேடு பள்ளமும் மந பிரவ்ருத்தியைத் தவிரப் போமோ -என்ன –
1-மத்தோ நிவர்த்தய –
புறம்புள்ளவற்றை  தவிரச் சொன்னேனோ -என் பக்கலில் நின்றும் மீள்
2-மத்தோ நிவர்த்தய –
பஞ்சாஸ் யாமிவ பன்னகீம் -சுந்தர -51-23-என்று விஷவத் பதார்த்தங்கள் போலே உனக்கு விநாச ஹேதுவான என் பக்கல் நின்றும் மீள்
3- மத்தோ நிவர்த்தய –
நயந்தி நிக்ருதி ப்ரஜ்ஞம் பரதாரா பராபவம் -சுந்தர -21-9- என்று
எப்படியும் பரிபவ  சீலைகளாய் யாயிற்று பரதாரம் இருப்பது
ஆனபின்பு என் பக்கல் நின்றும் மடை மாறாய்-

உன்பக்கல் நின்றும் மாறினால் மனஸ் ஸூ நிர் விஷயமாய் இருக்குமோ என்னில்
1-ஸ்வ ஜநே ப்ரீயதாம் –
வகுத்த விஷயத்திலே உகக்கும் படி பாராய்
2-ஸ்வ ஜநே ப்ரீயதாம் –
ஸ்வேஷூ தாரேஷூ ரதிம்  நோபலபாம் யஹம் -சுந்தர -20-30- என்கிற நினைவை மாறி
ஸ்வேஷூ தாரேஷூ ரம்யதாம் -சுந்தர -21-8- என்கிறபடியே
அக்னி சாஷிகமாகக் கைப்பிடித்த தர்ம தாரங்களை ரமிக்கப் பார்
3-ஸ்வே ஷூ தாரேஷூ-
விஜாதீயரான மனிதரை விட்டு
சஜாதீயர்களான ராஷச ஸ்திரீகளோடே புஜிக்கப் பார் –
ப்ரீயதாம் -என்று ராக ப்ராப்தமாக வருமத்தை பலத்திலே ச்நேஹிப்பிக்கலாமோ என்னில்
ப்ரீயதாம் என்று பிரசாதிக்கிறாள்
மந ப்ரீயதாம் –
நீ பிரியப் பட்டாய் ஆகில் மனஸ் ஸூ தான் பிரியப் படுவதாக –
ஸ்வ ஜநே -என்று விஷய சப்தமி -ஏழாம் வேற்றுமை -யாகை அன்றிக்கே
அதி கரண சப்தமி யாக்கி ஸ்வ ஜனத்தில் வர்த்திக்கிற மனஸ் ஸூ பிரியப் படுவதாக என்று பொருளாம் –
அதாவது -தாஸ்த்வாம் பரிசரிஷ் யந்தி -சுந்தர -20-32- என்றும்
யாவத்யோ மம சர்வாசாம் ஐஸ்வர்யம் குரு ஜானகி -சுந்தர் -20-31-என்றும்
என்னை அவர்கள் சேவிக்கும் படி சொன்ன படியாலே அவர்கள் வெறுத்தாயிற்று இருப்பது
அது தவிர்ந்து உன்னளவிலே அவர்கள் நெஞ்சு குளிரும்படி பண்ணு என்றுமாம் –
4-ஸ்வ ஜநே மந ப்ரீயதாம் –
ஸ்வ ஜனத்தில் மனஸ் ஸூ பிரியப் படுவதாக
ஸ்வ ஜனத்தினுடைய மனஸ் ஸூ என்றபடியே
பரி பூதா விஷண்ணா சேத பார்யா பர்த்தா விநச்யதி -என்று
நீ பண்ணின பாராமையாலும் உபேஷையாலும் அவர்கள் வெறுத்தால் உனக்கு அநர்த்தம் வரும்
அது வாராதபடி அவர்கள் நெஞ்சு குளிரும்படி நிவர்த்தய -என்றாகிலுமாம்-

மத்தோ மநோ நிவர்த்தய
த்யேயோ நாராயணஸ் சதா -பாரதம் -ஆநு -என்றும்
த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயண -நாரசிம்ஹ புராணம் என்றும்
ச்ம்ருதோ யச்சதி சோபநம்  -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-78-என்றும்
ராமேதி ராமேதி சதைவ புத்த்யாவி சிந்தய -சுந்தர -33-11- என்றும்
ஜகாம மநஸா ராமம் -சுந்தர -15-54- என்றும்
நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் -பெரியாழ்வார் -5-4-8-என்றும்
அடிகள் தம் அடியே நினையும் அடியவர் -பெரிய திரு -2-6-10-என்றும்
உஜ்ஜீவனமான விஷயத்தை அநவரத பாவனை பண்ண ப்ராப்தம் அத்தனை போக்கி
அநர்த்த ஹேதுவாக என்னை நினையாதே காண்
நிவர்த்தய
ப்ரவ்ருத்தி தர்மம் ஒருகாலும் ஆகாது
நிவ்ருத்தி தர்மமே உத்தாரகம் காண் –
மநோ நிவர்த்தய –
நிவ்ருத்திக்கு விஷயம் நிஷித்தம்
பிரவ்ருத்திக்கு விஷயம் சம்சாரம்
ஆனபின்பு நிஷித்தங்களை விட்டு விஹிதங்களிலே ப்ரவர்த்திக்கப் பார் –

ஆக
இந்த ஸ்லோகத்தாலே
ஸ்வ அநர்த்தம் கிடக்க -பர அநர்த்தம் பொறுக்க மாட்டாத பிராட்டியுடைய
நீர்மையும்
கிருபையும்
சொல்லுகிறது –

——————————————

த்ருணமந்தரத:க்ருத்வா ப்ரத்யுவாச ஶுசிஸ்மிதா |

நிவர்த்தய மநோ மத்தஸ்வஜநே ப்ரீயதாம் மந:||

பொழிப்புரை:
தனக்கும் ராவணனுக்கும் இடையில் புல்லை இட்டு, பரிஶுத்தமான புன்சிரிப்புடையவளாய் பிராட்டி பதில் சொன்னாள்,
‘என்னிடத்திலிருந்து மனத்தைத் திருப்பிக்கொள். உன் மனைவியரிடத்தில் உன் மனம் ப்ரீதி கொள்ளட்டும்’

காமம் தலைக்கேறி பிராட்டியிடம் தகாத வார்த்தைகளைச் சொன்ன ராவணனிடம், மேற்சொன்ன அறிவுரையைப்  பிராட்டி சொல்வதாக அமைந்துள்ளது இந்த  ஶ்லோகம்.

பதில் வார்த்தை சொல்லுவதற்கு முன் தனக்கும் ராவணனுக்கும் நடுவே ஒரு புல்லைப் போட்டுவிட்டுச் சொன்னாள்
(த்ருண மந்தரத: க்ருத்வா). இதற்குக் காரணமென்? பெரியவாச்சான் பிள்ளை இதற்கு 28 வகையான காரணங்கள் எடுத்துரைக்கிறார்.

1-ஆபஸ்தம்ப ஸூத்திரத்தின்படி ‘அரசர்களுக்கு ஆஸனமும், அன்னமும், நீரும் அளிக்க வேண்டும்’ [ஆ.ஸூ.2-4-1].
இவை இல்லாத பக்ஷத்தில் பூமியையோ, நீரையோ, புல்லையோ கொடுக்கலாம்’ [ஆ.ஸூ.2-4-14] என்றபடி, புல்லை ஆஸனமாக இட்டாள்.

2-அவன் நெஞ்சிலிருக்கிற ஆசைக்கு ஒவ்வாதபடி, பரபுருஷனை உபசரிப்பதுபோல புல்லையிட்டால்,
‘இவள் நம்மிடம் ஆசையில்லாதவள்’ என்று அவனும் விலகிப்போவான் என்ற நம்பிக்கையுடன் புல்லை ஆஸனமாக இட்டாள்.

3-ராவணனை அணுக விடாமல் தடுப்பதற்காக புல்லை இட்டாள். புல்லினாலோ, நீரினாலோ கோஷ்டி வேறுபாடு உண்டாகிறது
[ஸ்தம்பே3ந ஸலிலேந வா பங்க்திபே4தோ3பி4ऽஜாயதே] என்கிற நியாயத்தின்படி செய்தாள் என்றும் கொள்ளலாம்.

4-‘பெண்களுக்குப் பரபுருஷனை உற்றுப் பார்ப்பது, பேசுவது செய்யத் தகாதவை’ என்ற காரணத்தாலே, புல்லை
முன்னே போட்டு அதை ஒருவியாஜமாக வைத்துப் புல்லோடு பேசுவதுபோல், பேசத் தொடங்கினாள்.

5-நல் வார்த்தைகளை அஸுரர்கள் கேட்பதில்லை. அகம்பனன், மாரீசன், மால்யவான் போன்றோர் சொன்ன அறிவுரைகளையும் நீங்கள் கேட்கவில்லை.
இப்போது இந்தத் துரும்பு கேட்டாலன்றோ நீ கேட்கப்போகிறாய் என்று ராவணனைப் புல்லுக்கு உபமானமாகக் கொண்டு பேசினாள்.

6-நான் சொல்லப் போகும் அரு மருந்தான என் வார்த்தைகளைக் கேட்பதற்கு, தன்னால் கடாக்ஷிக்கப்பட்ட அசேதநப் பொருளாயினும், புத்தியுடையவை ஆகுமாலே,
[ஸ குலின: ஸ பு3த்3தி4மான்; விஷ்ணு புரா. 1-9-131] ராவணனைப்போலன்றிக்கே ஒரு தீங்கும் செய்யாத புல்லொன்றினை இட்டாள்.

7–புல்லைத் தன் ஶக்தியினாலே அறிவுடையதாக்கி, இந்த ஶக்தி பெருமையைக் கண்டு ராவணன் பயந்து மீள்வனோ
என்று என்கிற நினைவாலே புல்லை இட்டதாகவும் கொள்ளலாம்.

8-அறிவற்றவனாக இருக்கிற உன்னை இந்தப் புல்லைப் போலே [த்ருணமிவ லகு4 மேநே] தாழ்ந்த பொருளாக நினைத்திருந்தாள் என்று சொல்லுமாப்போலே புல்லை இட்டாள் என்றும் கூறலாம்.

9-‘அந்தர’ என்னும் ஶப்3த3ம் நெஞ்சைக் குறிக்குமாதலால், ‘அந்தர க்ருத்வா’ என்பதற்கு, ‘நெஞ்சில் கொண்டு’
தீங்கு செய்யாத காரணத்தினால் இந்தப்புல் மேன்மை பெற்றது என்று நெஞ்சிலே நினைத்து,
தீயவனான உன்னை புல்லாகக் கூட மதிக்க வில்லை என்னும்படி புல்லை இட்டாள் என்றும் சொல்லலாம்.

10-‘அறிவற்றவன் மிருகத்திற்கு ஒப்பானவன்’ [ஜ்ஞாநேந ஹீந: பஶுபி4: ஸமாந: நரஸிம்ஹ 16-13 ] என்றபடி,
நீ இந்தப் புல்லைத் தின்பாயாக’ என்று சுட்டிக் காட்டுவதுபோல், புல்லை இட்டாள்.

11-‘நீசனே, நீ முயலைப் போன்றவன்’ [த்வம் நீச ஶஶவத்ஸ்ம்ருத: ஸு.கா. 22-16] என்றும்,
‘காட்டிலுள்ள சிங்கத்துக்கும் நரிக்கும் உள்ள வேறுபாடு இராமபிரானுக்கும் உனக்கும் உண்டு’
[யத3ந்தரம் ஸிம்ஹஸ்ருகா3லயோர் வநே; ஆர.கா.47-45] என்றும்
மிருக ஜாதியைச் சேர்ந்த நீ இந்தப் புல்லை உணவாகக் கொண்டு இன்புறலாம். ‘பிறன் மனைவியாயிருக்கும் நான் உனக்கேற்றவள் அல்லள்’
[நாஹமௌபயிகீ பா4ர்யா பரபா4ர்யா ஸதீ தவ; ஸு.கா 2-16 ] என்று புல்லை இட்டாள்.

12-‘விசித்திரமான மாலைகள், சந்தனக் கட்டைகள், அகிற்கட்டைகள், விதவிதமான வஸ்திரங்கள்,
தேவலோகத்தைச் சேர்ந்த ஆபரணங்கள் ஆகியவற்றை அடைவாயாக’
[விசித்ராணி ச மால்யானி சந்தனாந்யக3ரூணி ச விவிதா4நி ச வாஸாம்ஸி தி3வ்யாந்யாப4ரணானி ச; ஸு.கா 20-33 ] என்றும், ‘
அழகிய புருவமுடையவளே! குபேரனிடமுள்ள ரத்தினங்களையும், தனங்களையும் நீ அடைவாயாக’
[யாநி வைஶ்ரவணே ஸுப்4ரூ ரத்நாநி த4நாநி ச; ஸு.கா. 20-33 ] என்றும்,
நீ வாயாலே அடுக்கினவைகளை இந்தப் புல்லுக்கு ஸமமாகவன்றோ நினைக்கிறது என்று புல்லை இட்டாள்.

13-‘இராம பிரானை விரும்பித் தன் தேஹத்தைத் த4ரிக்கிறாள்’
[தா4ரயத்யாத்மனோ தே3ஹம் தத் ஸமாக3ம காங்க்ஷிணீ; ஸு.கா.16-24 ] என்று இராமபிரான் வருவாரோ என்ற எதிர்பார்ப்பில் உயிர் த4ரித்திருந்தேன்.
‘மயிர் முடியைக் கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு விரைவில் யமனுலகு செல்லப்போகிறேன்’
[உத்3ப3த்4ய வேண்யுத்3க்3ரத2நேந ஶீக்4ரமஹம் க3மிஷ்யாமி யமஸ்ய மூலம்; ஸு.கா. 28-17] என்றும்,
ஶூரனுக்கு உயிரும் புல்லுக்கு ஸமமாகும் [த்ருணம் ஶூரஸ்ய ஜீவிதம்] என்றபடி புல்லை இட்டாள்.

14-‘ரத்னங்களின் கூட்டங்கள் நிறைந்த இந்த இலங்கை, உன் ஒருவனுடைய தவறாலே விரைவில் அழியப் போகிறது’
[லங்கா ரத்னௌக4ஸங்குலா அபராதா4த் தவைகஸ்ய நசிராத்3 விநஶிஷ்யதி; ஸு.கா. 21-12 ] என்று
உன் குற்றத்தாலே இலங்கை அழியப்போகிறது. இந்தப் புல்லைக் கொண்டு ஒரு குடிசையைக்கட்டிகொள் என்று
பரிஹாஸ பு4த்3தி4யினால் சொல்வதுபோல் புல்லை இட்டாள்.

15-ஒரு த்ருணமாகத் தோன்றும் இந்தச் சிறு தாவரம், கப்பும் கிளையுமுள்ள ‘உலபம்’ என்கிற கொடியாகப் படரும் நியாயத்தாலே,
[த்ருணோலப] த்ருணத்திற்கு இடமான இந்த ஶ்லோகத்தாலே ‘உன் மனதை உன் மனைவிமாரிடம் திருப்பு’ என்று
சுருக்கமாகச் சொல்லி, உலபத்திற்கு ஒப்பாக மேல்வரும் ஶ்லோகங்களில் உனக்கு மேன்மேலும்
உபதேஶிக்கப்போகிறேன் என்று பொருள் படுமாறு புல்லை இட்டாள்.

16-‘ராமனோடு நட்பு கொள்ள வேண்டும் என்று நீ எனக்கு உபதேஶிக்கிறாயே, ஒருவேளை இராமன் என்னை ஏற்றுக் கொள்வானோ?’
என்கிற ஸந்தேஹம் ராவணன் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கும் என்று எண்ணி,
‘கடலிலே இந்தத் துரும்பைப் போட்டால், எவ்வாறு அது கரையிலே ஒதுக்கப்படுமோ,
அவ்வாறு குணக் கடலான இராமனிடத்தில் உன் குற்றம் இருந்த இடம் தெரியாமல் ஒதுங்கிவிடும் என்று சொல்லும்படி புல்லை இட்டாள்.

17-அந்தரத: க்ருத்வா என்பதை ‘நடுவுலிருந்து எடுத்து வெளியே போட்டு’ என்று பொருள் கொண்டால்,
எனக்கும் உனக்கும் நடுவே கிடந்த துரும்பை எடுத்துப் போட்டது போல், பொறாமையையும், கோபத்தையும் வெளித்தள்ளி
[ஈர்ஷ்யா ரோஷௌ ப3ஹிஷ்க்ருத்ய; அயோ.கா. 27-7]
தாய் தந்தையர் போலுள்ள எங்களிடம் சேரவொட்டாமல் செய்கின்ற காமம், வெகுளி இவற்றைத் தள்ளி
இராமபிரானின் திருவடியை அடைவாயாக என்று சொல்லும் வண்ணம் புல்லை இட்டாள்.

18-‘குடி யிருப்பை விரும்பினாயாகில், கோரமான முடிவை விரும்பாதிருந்தாயாகில், நீ இராம பிரானை நண்பனாகக் கொள்வது தக்கது’
[மித்ரமௌபயிகம் கர்தும் ராம: ஸ்தா2நம் பரீப்ஸதா। வத4ஞ்சா நிச்ச2தா கோ4ரம்; ஸு.கா. 21-19 ] என்று சொல்லி,
இந்தப் புல்லைக் கவ்வி, அதாவது கீழே விழுந்து இராமபிரானின் திருவடிகளில் ஶரணாகதி செய்து,
வாழ்ந்து போ என்று சொல்லும்படி புல்லை இட்டாள்.

19-துரும்பிலும் இருப்பானாய், தூணிலும் இருப்பானான ஒருவன் ஆகையினாலே, துரும்பைத் தூணாக்கி,
அதனின்று ராகவஸிம்ஹத்தை வரச்செய்து, அன்று இரணியன் மார்வத்தைக் கீண்ட ஆளரியாய் தீங்கு நினைத்த
நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்று சொல்வதுபோலே புல்லை இட்டாள்.

20-புல், மண்ணாங்கட்டி முதலியவற்றை முன்னே எறிந்து ப்ரதிஜ்ஞை செய்வது உலக வழக்கம்.
அது போலவே, துரும்பை எறிந்து, ‘நீரை வற்றச் செய்யும் ஸூரியனைப் போலே, லக்ஷ்மணனுடன் கூடிய இராமன்
உன் உயிரை வற்றச் செய்வான்'[க்ஷிப்ரம் தவ ஸ நாதோ2 மே ராம: ஸௌமித்ரிணா ஸஹ।
தோயமல்பமிவாதி4த்ய: ப்ராணாநாதா3ஸ்யே ஶரை: ஸு.கா. 21-83] என்று சொல்லுமாப்போலே புல்லை இட்டாள்.

21-க்ருதி சே2த2நே என்ற தா4துவின்படி, ‘க்ருத்வா’ என்பதற்கு ‘கிள்ளி’ என்று பொருள் கொண்டு,
எப்படி இந்தப் புல்லை கிள்ளினேனோ அதேபோல், உன் தலையையும் கிள்ளி, எதிரிகளை அடக்கும் என் கணவர்
[அபநேஷ்யதி மாம் ப4ர்த்தா த்வத்த: ஶீக்4ரமரிந்த3ம: ஸு.கா. 21-28]
உன்னிடமிருந்து விரைவிலேயே மீட்டுச் செல்வார் என்கிறபடி, புல்லை இட்டாள்.

22-உயர்ந்தவனைத் துன்புறுத்தும் தாழ்ந்தவனுடைய அங்கம் அழிக்கத்தக்கது என்று ஶாஸ்திரம் சொல்லுகையாலே,
வாமனாவதாரத்தில் ஶுக்ரனின் கண்ணைப் புல்லால் கீண்டியது போல்,
[சுக்கிரன் கண்ணால் துரும்பால் கிளறிய; பெரியாழ்வார் திரு.1-8-7], ஸீதையைப் பார்த்து,
‘உன் திருமேனியில் எந்தெந்த அவயங்களைக் காண்கிறேனோ அங்கெல்லாம் என் கண் ஈடுபடுகின்றது’
[யத்3யத் பஶ்யாமி தே கா3த்ரம் ஶீதாம்ஶுஸத்3ருஶாநநே। தஸ்மிந் தஸ்மிந் ப்ருது2ஶ்ரோணி சக்ஷுர் மம நிப3த்4யதே।। ஸு.கா. 20-15]
என்று சொன்ன உன் கண்ணை இந்தத் துரும்பால் கலக்குகிறேன் என்னும் கருத்தாலே புல்லை இட்டாள்.

23-காகாஸுரன் என்னைத் துன்புறுத்தியபோது, இராமபிரான் ஒரு புல்லை எடுத்து ப்ரும்மாஸ்திரத்தை உச்சரித்தார்
[ஸ த3ர்ப4ம் ஸம்ஸ்தராத்3க்3ருஹ்ய ப்3ராஹ்மேணாஸ்த்ரேண யோஜயத்; ஸு.கா. 38-30].
அந்தத் துரும்பு அக்காக்கையின் வலது கண்ணை வாங்கியது [ஹினஸ்தி ஸ்ம ஸ த3க்ஷிணம்; ஸு.கா. 38-37].
அதுபோலே, இத்துரும்பை இட்டு உன் கண்ணை இராமபிரான் கலக்கும்படி செய்கிறேன் என்று புல்லை இட்டாள்.

24-நர நாராயண அவதாரத்தின் போது, நாராயணன் டம்போத்பவன் என்ற அஸுரனை ஒரு துரும்பால் கொன்றான்.
இந்தவிருத்தாந்தத்தைச் சுட்டிக்காட்டி, புல்லை இட்டாள்.

25-என் கற்பு என்கிற நெருப்பிலே இந்தத் துரும்பைப் போட்டு மூட்டி எழுகின்ற கனலிலே உன்னைச் சுட்டெரிக்கிறேன்
என்று சொல்லுமாபோலே, புல்லை இட்டாள். ‘ஸீதையின் பாதிவ்ரத தேஜஸ்ஸாலே எரிந்துபோன இந்த இலங்கையைப் பார்’
[ஸீதாயாஸ் தேஜஸாம் த3க்3தா4ம்; ஸு.கா. 51-36 ] என்று பின் வரப் போகிற நிகழ்வுகளை முன்னமேயே உணர்த்தும் வகையாக அமைந்த விளக்கம் இது.

26-மேலும், ‘சாம்பலாக்கத் தக்க பத்துத்தலையனே! இராமபிரானின் ஆஜ்ஞை இல்லாததால்,
என் பாதிவ்ரதாக்நியால், உன்னைச் சுட்டெரிக்கமால் இருக்கிறேன்’
[ந த்வா குர்மி த3ஶக்3ரீவ ப4ஸ்ம ப4ஸ்மார்ஹ தேஜஸா; ஸு.கா.22-20] என்று சொல்லி, நான் நினைத்தால்,
இப்பொழுதே உன்னை எரித்துவிடுவேன் என்று புல்லை இட்டாள்.

27-‘க்ருதி சே2த3நே’ என்கிற தா4துவிலுருந்து ‘க்ருத்வா’ என்ற பத3ம் வந்ததாகக் கொண்டால், புல்லை நடுவே கிள்ளி என்று பொருளாகிறது.
இந்தத் துரும்பை எப்படி விரல்நுனியால் கிள்ளிப் போடுகிறேனோ
[அங்கு3ள்யக்3ரேண தாந் ஹந்யாம்; யுத்.கா.18-24]அவ்விதமே, உன் தலையையும் கிள்ளி எறிவேன்
[பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்து; திருப்பாவை 13] .

பதிலுரைத்தாள் (ப்ரத்யுவாச) என்று சொல்வதில்,
ப்ரதி என்னும் பதத்திற்கு, பதில் (உத்தரம்) சொல்லுதல், மறுவார்த்தை சொன்னாள் (மறுத்துரைத்தாள்) என்றும்,
ப்ரதி என்பதை ப்ரதிகூலம் என்று கொண்டு, பதிலுரைத்தாள் என்றும் சொல்லலாம்.
வச-பரிபா4ஷணே என்ற தா4துவின்படி, உவாச என்பதை பரக்க பரிபா4ஷணம் செய்தாள் என்று பொருள் கொள்ளலாம்.
ஒரு வார்த்தை, இரண்டு வார்த்தை மட்டும் சொல்லாமல், விஸ்தாரமாக ஸாம, தா4ந, பே3த4, த3ண்ட என்கிற
நால்வகை உபாயங்களையும் முயன்று அறிவுரை சொன்னாள்.
‘நல்லோர்களின் தருமத்தைக் கவனிப்பாயாக. நல்விரதங்களை நன்றாக அநுஷ்டிப்பாயாக.
அரக்கனே, உன் மனைவியைப் போலவே மற்றவரின் மனைவியரும் ரக்ஷிக்கத்தக்கவரன்றோ?’
[யதா2 தவ ததா2ந்யேஷாம் தா3ரா ரக்ஷ்யா நிஶாசர; ஸு.கா.21-7] என்று ‘ஸாமம்’ என்னும் உபாயத்தைப் பற்றி நின்றும்,
‘உன்னால் வஞ்சிக்கப்பட்ட ஜனங்கள் தெய்வச் செயலாலே இக் கொடியவன் இந்தத் துன்பத்தை அடைந்தான் என்று ஆனந்தம் அடைந்து,
உன்னைப் பாவி என்று சொல்லப்போகிறார்கள்’
[ஏவம் த்வாம் பாபகர்மாணம் வக்ஷ்யந்தி நிக்ருதா ஜநா: । தி3ஷ்ட்யைதத் வ்யஸநம் ப்ராப்தோ ரௌத்3ர இத்யேவ ஹர்ஷிதா:।। ஸு.கா 21-14]
என மனமாறுபாடு பிறக்கும்படி பே4த வார்த்தைகளைச் சொல்லியும்,
‘இந்திரியங்களை அடக்கியவனாய், என்னை இராமபிரானிடம் சேர்க்கக் கடவாய்; அந்த இராமபிரான் தருமமறிந்தவர்;
ஶரணாகதரிடம் வாத்ஸல்யமுடையவர்; அவரோடு நட்பு உண்டாகட்டும்’
[மாஞ்சாஸ்மை ப்ரயதோ பூ4த்வா நிர்யாதயிநுமர்ஹஸி; ஸு.கா. 21-22, விதி3த: த4ர்மஜ்ஞ: ஶரணாக3த வத்ஸல: தேந மைத்ரீ ப4வது; ஸு.கா.21-20]
என்று ஞானதா4நம் செய்தும், ‘வேறுவிதமாகச் செய்தால் மரணமடைவாய்’ [
அந்யதா2 த்வம் ஹி குர்வாணோ வத4ம் ப்ராப்ஸ்யஸி; ஸு.கா. 21-23] என்றும்,
‘உன் உயிரை அம்புகளால் எடுக்கப்போகிறார்’ [ப்ராணாநாதா3ஸ்யதே ஶரை: ஸு.கா. 21-33] என்றும்
தண்டம் சொல்லியும், இம்மாதிரி ஸாம, தா4ந, பே4த த3ண்டமெனும்
நாலு உபாயங்களையும் பின் பற்றி வார்த்தை சொன்னாள்

.

இத்தோடல்லாமல், இதைச் சொல்லுகிறபோது இருந்த முகமலர்ச்சி என்னே! பரிஶுத்தப் புன்னகை உடையாள் (ஶுசிஸ்மிதா).

1) எதிரி தருமம், வீரியம், பலம் இவற்றுள் கனத்தவனாக இருந்தாலன்றோ கோபத்தைக் காட்டுவது? தன் அநியாயத்தாலே தானே அழியப்போகிற க்ஷுத்3ரன் என்று நினைத்து சிரித்தாள்.

2) அரசர்களும் சிரித்துக்கொண்டே தண்டனை வழங்குவதுபோல், ராஜ த4ர்மம் அறிந்தவளாகையால் [அபி4ஜ்ஞா ராஜத4ர்மாணாம்; ]  ஜநகராஜ புத்ரியும், ராஜமஹிஷியுமாயிருப்பவள் ஆதலால், சிரித்துக்கொண்டே சொன்னாள்.

3) ராவணன் தருகிறேன் என்ற த4நம், தா4ந்யம், ரத்தினம் முதலியவற்றை எண்ணி அவற்றிலுள்ள பிரியத்தால், ஆசையுடன் சிரித்தாளோவென்னில், இந்தப் புன்னகை பொருளாசையால் ஏற்பட்டதன்று. வைராக்கியத்தால் ஏற்பட்ட பரிசுத்தப் புன்னகை.

4) ‘தவத்தாலும், பலத்தாலும், வீரத்தாலும், த4நத்தாலும் இராமன் என்னையொத்தவன் அல்லன்’ [ந ராமஸ்தபஸா தே3வி ந ப3லேன ந விக்ரமை: । ந த4நேன மயா துல்ய: ஸு.கா. 21-30] என்று சொல்லுகின்ற நீயோ அவர்கள் இருவரும் இல்லாத நேரத்திலன்றோ என்னைக் கவர்ந்தது? இந்தச் செயல் நீ எவ்வளவு பலமற்றவன் என்பதைக் காட்டவில்லையோ என்றவாறு புன்னகை புரிந்தாள்.

5) இன்னும் சில நாட்களில் காக்கையும், கழுகும் கவ்வும்படி கிடக்கப்போகும் நீ இன்று, ‘ராமன் உயிரோடு இருக்கிறானோ இல்லையோ’ [ஶங்கே ஜீவதி வா ந வா; ஸு.கா. 20-26] என்று கேட்பது மிகவும் சிரிப்பிற்கிடமாய் இருக்கிறது என்று தோற்றச் சிரித்தாள்.

6) இந்த இலங்கையையும், அரசுப்பதவியையும் விபீஷணருக்குத் தந்து முடிசூட்டினான் இராமன். இதனை அறியாமல், இந்தச் செல்வங்கள் அனைத்தும் உன்னுடையதென்று [ருத்3தி4ம் மமாநுபஶ்ய த்வம் ஶ்ரியம் ப4த்3ரே; ஸு.கா.20-25 ] என்கிற ப்4ரமையில் இருக்கிறாய் போலும் என்று தோற்றச் சிரித்தாள்.

7) ஸர்வலோக நாயகனான அவருடைய தோள்களில் சாய்ந்திருக்கும் என்னைப் பார்த்து, ‘என்னையும் அநுபவித்துக்கொள்’ [மாம் ச பு4ங்க்ஷ்வ; ஸு.கா 20-33] என்று நீ பிதற்றுவது சிரிப்பிற்கிடமாயிருக்கிறது.

8) காகுத்தன் க்ஷேமமாக இருந்தாராகில், இந்த உலகத்திக் கோபத்தால் ஏன் இன்னும் எரிக்காமலும், என்னை மீட்காமலும் இருக்கிறார் என்று வருந்தியிருந்த ஸீதையிடம், அநுமன் இராமபிரானின் க்ஷேமத்தைத் தெரிவித்ததும் மகிழ்ச்சியால் சிரித்தாள்.

இப்படிப் புன்சிரிப்பு சிரித்துச் சொன்ன வார்த்தை என்ன? செய்யத்தகாததைக் கைவிட்டு, செய்யவேண்டியதைச் செய் என்பதாம்.
‘உன் மனத்தை என்னிடமிருந்து திருப்பு. உன் மனைவியரிடம் உன் நெஞ்சு ப்ரீதி அடையட்டும்.’
நெஞ்சை அங்கும் இங்கும் அலைக்கழிக்கவிடாமல் மீட்பாயாக [மநோ நிவர்த்தய]. மனமாகிய குதிரையை அடக்கம் என்கிற கடிவாளமிட்டு மீட்பாயாக.
‘அநுகூலமான நெஞ்சே ஆத்மாவுக்கு உறவினன். ப்ரதிகூலமான நெஞ்சு ஆத்மாவுக்கு எதிரி’ என்கிற
[ஆத்மைவ ஹ்யாத்மநோ ப3ந்து4ராத்மைவ ரிபுராத்மந: கீதை 6-3] கீதா வாக்கியத்தின்படி, என்றும் சத்துருவாய் இருக்கும் உன் நெஞ்சை ஜயிக்கப்பார்.
ஐந்துதலை நாகம் [பஞ்சாஸ்யாமிவ பந்நகீ3ம்; ஸு.கா.51-23] போன்று உன் அழிவுக்குக் காரணமான என்னிடமிருந்து உன் நெஞ்சைத் திருப்பு.
‘அறிவுகெட்டவனை அயலார் மனைவியர் அவமானம் செய்துவிடுகின்றனர்’ [நயந்தி நிக்ருதிப்ரஜ்ஞம் பரதா3ரா: பராப4வம்; ஸு.கா. 21-9]
என்கிறபடி என்னிடம் பாயும் உன் மநப்ரவாஹத்தை மடையடைத்துவிடு.

(ப்ரீயதாம்) ப்ரீதியடையட்டும் என்கிற சொல்
உன் மனைவியருடன் (ஸ்வஜநே) என்ற பத3த்துடன் இணைந்தும்,
அல்லது மனம் (மந: ) என்ற பத3த்துடன் இணைந்தும்
இரண்டு விதமாகப் பொருள் கொள்ள ஹேதுவாக இருக்கிறது.
‘உன்னைப் பார்த்தபின்பு, என் மனைவியரிடம் ப்ரீதி கொள்ளவில்லை’
[ஸ்வேஷு தா3ரேஷு ரதிம் நோபலபா4ம்யஹம்; ஸு.கா. 20-30] என்கிற நிலையை மாற்றிக்கொண்டு,
‘உன் மனைவியரிடமே இன்புறுவாயாக’ [ஸ்வேஷு தா3ரேஷு ரம்யதாம்; ஸு.கா. 21-8] என்று ஒரு பொருளைக் கொள்ளலாம்.
‘நான் ப்ரீதியடைந்தாலும் என் நெஞ்சம் ப்ரீதியடைகிறதில்லை’ என்றால்,
நீ ப்ரீதி அடைந்தால் உன் நெஞ்சமும் ப்ரீதியடையட்டும் என்று அநுக்ரஹிக்கிறாள்.

ஆக, இந்த ஶ்லோகத்தால், தனக்குத் துன்பமிருக்கும்போதும் பிறர்துன்பம் பொறுக்கமாட்டாத பிரட்டியுடைய ஸௌலப்யமும் கருணையையும் சொல்லுகிறது.

———————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –துஷ்கரம் க்ருதவான் ராமோ-சுந்தர -15-23-

January 17, 2024

துஷ்கரம் க்ருதவான் ராமோ ஹீநோ யத நயா ப்ரபு
தாரயத் யாத்மநோ தேஹம் ந சோகே நா வசீததி-சுந்தர -15-23-

துஷ்கரம் க்ருதவான் ராமோ -ஸ்ரீ ராமபிரான்  செயற்கரிய செயலை செய்தார்
ஹீநோ யதநயா ப்ரபு -அநயா ஹீ ந -ப்ரபு -இந்த சீதா தேவியைப் பிரிந்து இருந்த போதிலும் பிறர் வருத்தம் அறியாத ப்ரபுவாய்
தாரயத் யாத்மநோ தேஹம் -ஆத்மந   தேஹம் -தாரயதி யத் -தன் திருமேனியைத் தரிக்கிறார் என்பதுவும்
ந சோகே நாவசீததி-சோகேந ந அவசீததி யத் -துன்பத்தால்-நசிக்க வில்லை என்பதும் செயற்கரிய செயல் –

அவதாரிகை –
அந்யத்ர பீஷ்மாத் காங்கேயா  தந்யத்ர ச ஹநூமத -ஹரிணீ குரமாத்ரேண சர்மணா மோஹி தம் ஜகத் -என்று
பீஷ்மனோடு ஒக்க மான் குளப்படியோடு ஒத்த ஸ்திரீயின் அவயவ விசேஷத்தில் அகப்படாதே
அத்யந்த விரக்தனான திருவடி அகப்பட பிராட்டியைத் திருவடி தொழுது
பிராட்டி வை லஷண்யத்தையும்
இவள் எழுந்து அருளி இருக்கிற தைன்யத்தையும் கண்டு
இவளை இப்படி இருத்துவதே -என்று
பெருமாளை சிஷ்ட கர்ஹை பண்ணுகிறான் –

துஷ்கரம் க்ருதவான் ராமோ-
நாம் பெரிய கடலைக் கடந்து அரும் தொழில் செய்தோமாக நினைத்து இருந்தோம் –
பெருமாள் நம்மிலும் அரும் தொழில் செய்தாராய் இருந்தது –
1-ராம –
ஏக தார வ்ரதராய்
பிராட்டியை ஒழிய வர்த்தியாத பெருமாளுக்கு துஷ்கரம் பிரணயிகளாய்ப் பிறந்தாராகச் செய்ய அரிது ஒன்றைச் செய்தார்
துஷ்கரம் –
காட்டுக்குப் போகிற போது அகப்பட கூடக் கொண்டு போன பெருமாள் தமக்கும்
இதுக்கு முன்பு செய்ய வரிது
இஸ் சாஹசத்தைச் செய்யக் கோலி தவிர்ந்தாரோ என்னில்
க்ருதவான்
பத்தும் பத்தாக அனுஷ்டித்திலரோ
இப்படி இவர் செய்தது தான் ஏது என்னில்
2-ராம –
பிராட்டியைப் பிரிந்து குறி அசங்காமல் இருந்தார்
3-ராம –
பிராட்டியைப் பிரிந்தால் புகர் அழிந்து எழில் குலைந்து முகம் வெளுத்து உடம்பு இளைத்து
இட்ட கால் இட்ட கைகளாய் -திருவாய் -7-2-4-இருக்க வேண்டாவோ –
இத்தைப் பற்ற இ றே பிராட்டியும்
கச்சினன தத்தேம சமாந வர்ணம் தஸ்யா நநம் பத்ம சமாந கந்தி -சுந்தர -37-28-என்று
அம்முகத்தில் ஒளியும் மணமும் மாறாதே  -பொன் போல ஒளியும் -தாமரை போலே மணமும் -செல்லா நின்றதோ என்று கேட்டது
4- ராம –
பொடி மூடு தணலாய் இருந்தார்
வடிவில் பச்சையைக் காட்டித் துவக்குக் கொண்டு போய் நடுக் காட்டிலே தள்ளுவதே –

கர்மத்தாலே அபஹ்ருதை யானாள் அல்லது இவர் தள்ளினாரோ -என்ன
இவளைக் கண்டு வைத்தால் அவர் தாம் அகலப் பெறுவாரோ
1-ஹீநோ யத நயா-
இவர் இவளை விட்டு மான் பின்னே போகப் பட்டன்றோ இவ்வபஹாரம் தான் பிறந்தது –
2-அநயா ஹீந –
இறையும் அகலகில்லேன் -திருவாய் 6-10-10–என்கிற இவளையா பிரிவது
3-அநயா ஹீந –
மதுப்பினுடைய நித்ய யோகத்தையும் குலைத்திலரோ
4-அநயா ஹீந —
அநந்ய பாவாம நு ரக்த சேத நாம் த்வயா விஹீ நாம் மரணாய நிச்சிதாம் -அயோத்யா -27-22-என்று
சொன்ன இவளை யன்றோ பிரிவது
5- அநயா ஹீந —
ச்ரத்தயா தேவோ  தேவத்வமச்நுதே -யஜூ காட -3-3-என்றும்
அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18-என்றும்
அனந்யா ராகவேணாஹம பாஸ்கரேண ப்ரபாயதா -சுந்தர -21-16-என்றும்
எல்லாப் படியாலும் தனக்கு மினுக்கம் உண்டாக்குகிற இவளையா விடுவது-
1-ப்ரபு-
ஒன்றும் அறியாதாரே இருந்தார் –
ப்ரபுத்வமாவது அறியாத்தனம் இ றே-
2- ப்ரபு –
மேன்மை யுண்டு இத்தனை போக்கி நீர்மை இல்லையே இருந்தது
3- ப்ரபு –
ஆனை குதிரை கட்டவும்
படையாளவும்
கணக்குக் கேட்கவும்
ஆயுதம் வஹிக்கவும்
கற்றார் இத்தனை போக்கி பிரணயித்வத்தில் புதியது உண்டிலராய் இருந்தது
4-ப்ரபு –
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் -நாச் திரு -13-1-என்றும்
பஹூதா விஜாயதே -புருஷ ஸூ க்தம் -என்றும்
ப ஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி -ஸ்ரீ கீதை -4-5-என்றும்
பிறப்பில் பல்பிறவிப் பெருமான் -திருவாய் -2-9-5-என்றும்
பிறக்கிற பிறவி வெள்ளத்தில் ஒரு பெண் பிறவி பிறந்தானாகில்  இ றே
இவ்வினையாளனாய் பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் அறிவது-

இப்படி பிரபுக்களாய் இவர் செய்ததுஎன் என்னில்
1-தாரயத் யாத்மநோ தேஹம் –
பிராட்டியைப் பிரிந்த பெருமாள் கடலிலே புக்காராய் முடிந்தார் என்று பேர் படைக்க வேண்டாவோ
2-தாரயதி –
தரித்து இருப்பதே
இத்தனை போது சத்தை அழிய வேண்டாவோ
நித்தியமான ஸ்வரூபத்தை அழிக்கப் போமோ -என்ன
3-ஆத்மா நோ தேஹம் –
நித்தியமான ஸ்வரூபம் இருக்க
இச்சா க்ருஹீதாபி மதோருதேக-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84-என்று
வந்தேறியான உடம்பை விடலாகாதோ –
நித்யம் நித்யாக்ருதிதரம் -சாத்வதம் -என்று  -ஸ்வரூபத்தோபாதி ரூபமும் நித்யம் அன்றோ என்ன
4-ராம ஆத்மா நோ தேஹம் –
அப்ராக்ருதமான சரீரத்தைச் சொன்னேனோ –
ஆதி அஞ்சோதி வுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த படியை விட்டால் ஆகாதோ
5- ஆத்மா நோ தேஹம –
தாம் ஒரு பிராட்டி யாய்-
பராதீ நா ஸ்த்ரிய சர்வா -என்றும்
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே -திருவாய்-5-4-3-என்றும்
பரத்ரவ்யமாய் நோக்கி  இருக்கிறாரோ
தம்மைத்தான உடம்பைப் போக விட்டால் ஆகாதோ
6- ஆத்மா நோ தேஹம்
தம்முடம்பு தம்மதோ
பக்தா நாம் -ஜிதந்தே -1-5-என்று பிறரது அன்றோ
பிறர் உடம்பை என் செய்யச் சுமக்கிறார் –

அவர் செய்வது என் முடிக்கைக்கு கருவி இல்லை யாகில் -என்ன
1-ந சோகே நா வசீததி-
சோகம் இருக்க வேறு கருவி வேணுமோ –
2- ந சோகே நா வசீததி-
சோகாக்நி பிரதஷ்யதி -என்று சோகம் ஆகிற பெரு நெருப்பு இருக்க வேறு கேட்க வேணுமோ –

——————

து3ஷ்கரம் க்ருதவாந் ராமம் ஹீநோ யத3நயா ப்ரபு4: |

தா4ரயத்யாத்மநோ தே3ஹம்  ஶோகேநாவஸீத3தி ||

பொழிப்புரை:
ஶ்ரீராமபிரான் செயற்கரிய செயலைச் செய்தார். இந்த ஸீதாதேவியைப் பிரிந்திருந்த போதிலும்,
(பிறர் வருத்தமறியாத பிரபுவாய்) தன் திருமேனியைத் த4ரிக்கிறார் என்பதுவும்,
துன்பத்தால் நஶிக்கவில்லை என்பதுவும் (செயற்கரிய செயல்கள்).

அஶோக வனத்தில் பிராட்டியின் பெருமையைக் கண்டும், அவள் எழுந்தருளி யிருந்த நிலைமையைக் கண்டும்
அநுமான் இப்படி எண்ணிச் சொல்கிறார். நான் பெரிய கடலைக் கடந்து அரிய பெரிய செயலைச் செய்துமுடித்துவிட்டதாக நினைத்திருந்தேன்.
ஆயின், இராமபிரான் என்னிலும் அரிய காரியத்தைச் செய்தாரென்று இப்போது தெரிகிறது.
ஏகதா4ரவிரதன் என்று பிரஸித்3தி4 பெற்ற ராமனுக்கு இவளைப் பிரிந்திருப்பது அரிய செயல். செய்யவரியதை
(துஷ்கரம்) இதுக்கு முன்பு இவருக்கும் இக்காரியம் செய்யமுடியாது.
அதனாலன்றோ காட்டுக்குப் போகும் போது இவளைத் தன்னுடனே கூட்டிக் கொண்டு போனார்.
இந்த ஸாஹஸமான காரியத்தைச் செய்தே முடித்து விட்டார் (க்ருதவாந்).

இவர் இப்படி செய்தது தான் ஏதென்னில் ராமனாக (அழகனாக) இருந்ததே முதல் குற்றம்.
பிராட்டியைப் பிரிந்த பின்னர் ஒரு சிறிதும் மாறுபட வில்லை.
பிராட்டியைப் பிரிந்து ஒளி யிழந்து, அழகு குறைந்து, முகம் வெளுத்து, உடல் இளைத்து
‘இட்டகால் இட்டகையளாய்’ [திருவாய் 7-2-4] என்கிறபடியே கை, கால்களை அசைக்கமுடியாமல் இருக்க வேண்டாவோ?
அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமலிருந்தாரே! நிறத்தை இழக்காமல் குணத்தை இழந்தாரே.
இத்தை நினைத்தன்றோ பிராட்டியும், அவருடைய ‘திருமுகம் பொன்போல் ஒளிவீசுவதாய், தாமரைபோல் மணம் கமழ்வதாயுமுள்ளதா?’
[கச்சிந்ந தத்3தே4மஸமாந வர்ணம் தஸ்யாநநம் பத்3ம ஸமாந க3ந்தி4; ஸு.கா. 36-28] என்று
முகத்தில் ஒளியும் மணமும் மாறாதே இருந்ததோ என்று கேட்டது!
ராமன் அழகில் அழகியவரா யிருந்தாரே ஒழிய நெஞ்சில் ஈரமில்லை. நீறு பூத்த நெருப்பாயிருந்தார்.
வடிவழகைக் காட்டி ஈடுபடுத்திக் கொண்டு போய் நடுக் காட்டில் தள்ளி விடுவதே!

‘என்னுடைய பெரிதான பாபம் ஒன்று இருக்கிறது. இதில் ஸந்தேஹமே இல்லை’
[மமைவ து3ஷ்கரம் கிஞ்சித் மஹத3ஸ்தி ந ஸம்ஶய: ஸு.கா 38-48] என்று பிராட்டி அருளிச் செய்தபடி,
தன் கர்ம பலனாய் அபஹரிக்கப்படாளேயன்றி இவரால் தள்ளிவிடப்படவில்லை;
‘இறையும் அகலகில்லேன்’ [திருவாய் 6-10-10] என்ற இவளையா பிரிந்து செல்வது?
‘ஶ்ரீமந்நாராயண’ [த்வயம்] என்கிற ததத்தின் ‘மதுப்’ ப்ரத்யயத்தினால் சொல்லப்படும் நித்யயோகத்தையும் (பிரியாதிருக்கும் தன்மை) அழித்து விட்டாரே!
‘வேறொன்றையும் நினையாதவளும், உம்மிடமே ஈடுபட்டவளும், உம்மைப் பிரிந்தால் இறப்பதென்று உறுதி
பூண்டவளுமான என்னை உம்முடன் காட்டுக்கு அழைத்துச் செல்வீர்’
[அநந்ய பா4வாமநுரக்தசேதஸம் த்வயா வியுக்தாம் மரணாய நிஶ்சிதாம்; அயோ.கா. 27-22] என்று சொன்ன இவளையன்றோ பிரிந்து விட்டார்!
‘ஶ்ரத்தை எனப்படும் ஶ்ரீதேவியாலே தேவனான நாராயணன் தேவனாயிருக்கும் தன்மையை அடைகிறான்’
[ஶ்ரத்3த4யா தே3வோ தே3வத்மஶ்நுதே; யஜு.காட 3-3] என்றும்,
‘ஜனகராஜன் திருமகளைத் தன்னுடையவளாகக் கொண்ட தத்துவத்தின் தேஜஸ் அளவிடவெண்ணாதது’
[அப்ரமேயம்ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா; ஆர.கா. 37-18] என்றும்,
‘ஸூரியனை விட்டுப் பிரியாத ஒளி போல் ராமனை விட்டுப் பிரியாதவள் நான்’
[அநந்யா ராக4வேணாஹம் பா4ஸ்கரேண ப்ரபா4யதா2; ஸு.கா.21-16 ] என்றும்
எல்லா விதத்திலும் தனக்குப் பெருமை தருகிற இவளை யன்றோ விடுவது!

பிறர் காரியம் ஒன்றும் அறியாத பிரபுவாக இருந்தார் (ப்ரபு:)
பிரபுக்களாயிருப்பவர் பிறர் வருத்தமறியாதவர்களாயிருப்பதையே உலகில் காண்கிறோம்.
பிரபுவாக இருப்பவரின் மேன்மை இருந்ததே வொழிய நீர்மை இருக்கவில்லை.
அரசர்க்குரிய காரியங்களிலே ஈடுபட்டாரே யன்றி, ப்ரணயித்துவத்திலே
‘பெண்ணின் வருத்தமறியாத பெருமான்’ [நாச்.திரு.13-1] என்ற பெருமையுடனே இருந்தார்.
‘பிறப்பில் பல்பிறவிப் பெருமான்’ [திருவாய் 2-9-5] என்றபடி பல அவதாரங்களைச் செய்திருப்பினும்,
ஒரு பெண் பிறவியாகிலும் எடுத்திருப்பானே யாகில் பெண் பிறந்த வருத்தம் அறிவான்!

இப்படிப் பிரபுவாய் இருந்துகொண்டு இவர் செய்தது என்னவெனில்,
தனது தேஹத்தைத் த4ரித்துக் கொண்டதே [தா4ரயதாத்மனோ தே3ஹம்; ] ஆகும்.
பிராட்டியைப் பிரிந்த ராமன் கடலிலே புக்கு இறந்தார் என்ற பெருமையன்றி இன்னமும் தனது தே3ஹத்தைத் த4ரித்து நிற்கிறாரே!
நித்யமான ஸ்வரூபமும் அல்லதே இந்த அவதாரம்.
ராமபிரான் தன் தே3ஹத்தை ப்ரகிருதி தே3ஶத்தின் ஸம்பந்தமற்ற பரமபத3த்திலே வைத்து,
[ஆதியஞ்சோதி உருவை அங்குவைத்து இங்குப்பிறந்த; திருவாய்: 3-5-5] என்கிறபடியே இங்குப் பிறந்தவனன்றோ!
‘மாயும் வகையறியேன் வல்வினையேன் பெண்பிறந்தே’ [திருவாய்: 5-4-3] என்று பர த்3ரவ்யமாய் நினைத்திருக்கிறாரோ?
அவர்தான் ஸ்வதந்த்ரராயிற்றே! ஒருவேளை தம்முடம்பு தம்மதோ, பக்தர்களுடையதன்றோ!
[ந தே ரூபம்  ப4க்தாநாம்; ஜிதந்தே; 1-5] என்ற ஸந்தேஹம் வந்திருக்குமோ?
அப்படியானால் பிராட்டியான ப4க்தைக்காகவன்றோ? அவளுக்காகாதபின், இன்னும் ஏன் தம்முடம்பைத் த4ரித்துக் கொண்டிருக்கிறார்?
உடம்பைப் போக்கிக் கொள்ள வழி தெரியாமல் இருக்கிறாரோ?
ஶோகம் என்னும் நெருப்பு சுட்டெரிக்க [ஶோகாக்3நி: . . . ப்ரத4க்ஷ்யதி; அயோ.கா.24-8] இருக்கும்போது,
இன்னும் ஶரீரத்தைவிட வேறு ஸாத4நம் வேண்டுமோ?

———————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது–த்வம்ப்ரமேயஶ்ச து3ராஸத3ஶ்ச–கிஷ்கிந்தா காண்டம் ஸர்க்கம்-24; ஶ்லோகம்-31-

January 17, 2024

த்வம்ப்ரமேயஶ்ச து3ராஸத3ஶ்ச ஜிதே3ந்த்ரியஶ் சோத்தமதா4ர்மிகஶ்ச|

அக்ஷய்யகீர்த்திஶ்ச விசக்ஷணஶ்ச க்ஷிதிக்ஷமாவாந் க்ஷதஜோபமாக்ஷ ||

பொழிப்புரை:
ரத்தம்போல் சிவந்த கண்களையுடய ஶ்ரீராமபிரானே!
நீர் அளவிடவொண்ணாதவராயும், கிட்டவொண்ணாதவராயும், ஜயிக்கப்பட்ட இந்திரியங்களை உடையவராயும்,
சிறந்த தர்மத்தை உடையவராயும், அழிவற்ற புகழை உடையவராயும், அதிஸம்ர்த்தராகவும்,
பூமியைப்போன்ற  பொறுமை மிக்கவராயும் இருக்கிறீர்.

வாலி வதம் ஆனபின், வாலியின் மனைவியான தாரை இராமபிரானைக் கண்டு இவ்வாறு கூறும் செய்தியாக அமைந்துள்ள ஶ்லோகம் இது.
கணவனைக் கொன்றவன் என்ற கோபத்துடன் வந்தவள், ‘நீ’ [த்வம்] என்று ஒருமையுள் விளிக்கத் தொடங்கி,
மேலே பேசும்பொழுது, ராமபிரானின்  ஸாந்நித்ய விஶேஷத்தால், ராமனது கல்யாண குணங்களைப் போற்றிப் பரவத் தொடங்குகிறாள்.

அறிதற்கரியவன் [அப்ரமேய:]
1. உம்முடைய பெருமையையும் அறியாமல், என்னுடைய சிறுமையையும் அறியாமல் இந்திரியங்களாலே
உம்மை அநுபவித்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். அப்படி அநுபவிக்கமுடியாததாக இருந்தது.
2. இதை நான் மட்டுமன்று, வேதங்களும் சொல்கின்றன. ‘நான் அறிவேன்’ [வேதா3ஹம்; பு.ஸூ] என்று தொடங்கிய வேதமும்,
படிப்படியாக ‘பெரியவனை’ [மஹாந்தம்; பு.ஸூ]  என்றும்,
‘அவனை இவ்வளவென்று அறிபவன் யார்?’ [க இத்தா2 வேத3?] என்றும் அறியமாட்டாமல்
மீளும்படியன்றோ உமது மேன்மை இருக்கிறது.
3. ப்ரமைக்கு விஷயமானவன் ப்ரமேயன்.
ப்ரமையாவது-உண்மையான அநுபவம். ப்ரத்யக்ஷம், அநுமானம், ஆகமம் என்ற மூன்று வகைப்பட்ட பிரமாணங்களால் பிறப்பது அறிவு.
இவை மூன்றுக்கும் அப்பாற்பட்ட விஷயமாக நீர் இருக்கிறீர், எனவே அப்ரமேயன்.
எங்ஙனேயென்னில்,
கண்ணுக்குப் புலப்படாதவன், கட்கிலீ [திருவாய் 7-2-3] என்றும்,
உவமை சொல்லி அநுமானிக்கலாமென்னில், ஒத்தார் மிக்காரிலையாய மாமாயா [திருவாய் 2-3-2] என்றும்,
ஸாமாந்யமாகவோ, விஶேஷமாகவோ உவமை சொல்லமுடியாது
மேம்பட்டிருப்பவனாகையாலும், ‘எந்தப் பரம்பொருளிடமிருந்து, மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அறியமுடியாமல் திரும்புகின்றனவோ’
[யதோ வாசா நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ; தை.ஆ.9], ‘பரம்பொருள் இப்படிபட்டது மாத்திரமன்று;
இதைப்போல் வேறில்லை’ [நேதி, நேதி; ப்ருஹ.1-3-6], ‘ஞானிகள் மனத்தோடுகூடிய மற்ற இந்திரியங்களால் இவனை அறியமாட்டாராகையால்,
இவனைப் பற்றி நினைக்கும்போது மௌனத்தையே அடைகிறார்கள்’
[யதோ ந வேத3 மநஸா ஸஹைநமநுப்ரவிஶந்தி ததை2வ மௌநம்] என்று வேத3ங்களும் அளவிட்டறிய மாட்டாமையாலே,
ஆகமத்தாலும் அறிய முடியாதவராயிருக்கிறீர்.
4. உனக்கே நீ அறியவெண்ணாதவன். ‘அப்பரமன் தன்னைத் தானே அறிவனோ மாட்டானோ அறியோம்’
[ஸோ அங்க3 வேதி3 யதி3 வா ந வேத3; தைத். ஸம் 2-8-9] என்றும்,
‘தனக்கும் தன் தன்மை அறிவரியானை’ [திருவாய் 8-4-6] என்றும் இயற்கையையாகவே எல்லாம் அறிந்த நீர்
உம்மாலே அளவிட்டு அறியப்படுவீரோ?
5. காலத்தாலளவு, தேஶத்தாலளவு, வஸ்துவாலளவு என்னும் மூவகை அளவுகளும் இன்மையாலே அளவிடவெண்ணாதவன்.
நித்யனாகையினால் காலத்தால் அளவில்லை;
ஸர்வவ்யாபியாகையாலே தேஶத்தால் அளவில்லை;
எல்லாப் பொருளோடும் ஒரே வேற்றுமையில் சொல்லத்தக்க ப்ரகாரி இல்லாமையாலே வஸ்துவால் அளவும் இல்லை.
ஆக இப்படி மூவகை அளவுகளாலும், பத்தர், முக்தர், நித்யர் என்கிற மூவகைச் சேதனருக்கும்
மனம், வாக்கு, காயம் என்னும் மூவகைக் கரணங்களாலும், முக்காலங்களிலும் அளவிடவொண்ணாதவன்.
6. ‘எய்தா நின்கழல்’ [திருவாய் 2-9-2] என்கிறபடியே, என் முன் நிற்பினும் அடையற்கரியவர் நீர்.
‘கண்ணால் காண்பரியன்; ஸுத்தமான மனத்தாலே காணத்தக்கவன்’ [ந சக்ஷுஷா க்3ருஹ்யதே மநஸா து விஸுத்3தே4ந; வ்யாஸ ஸ்ம்ருதி]
என்ற ப்ரமாணமும் நிரங்குஶ ஸ்வதந்த்ரரான உம் விஷயத்தில் பொய்யாயிற்று.
7. கையும் வில்லுமாய் காட்சியளிக்கையால் எளிமை தோற்ற நின்றாலும்,
[அவஷ்டப்4ய ச திஷ்ட2ந்தம் த3த3ர்ஶ த4நுர்ஜிதம்; கிஷ்.கா. 19-25] மூலப்ரகிருதிக்கும் மேம்பட்டவராய்,
எல்லாவற்றுக்கும் ஆதாரராய், சங்கு சக்கர கதைகளை தரிப்பவராய் இருக்கும் விஷ்ணுவே நீர்
[தமஸ: பரமோ தா4தா சங்க2 சக்ரக3தா3த4ர: யுத்.கா.114-115].
8. நீர் அறிதற்கரியவர். பரத்வத்தைத்தான் அறியமுடியாதென்று நினைத்திருந்தோம்;
மனிதனாக அவதரித்து நிற்கும் உம்முடைய ஸௌலப்யமும் அறியவொண்ணாததாயிற்று.
9. ஸேனை முதலான அரசர்க்குரிய பரிகரங்கள் இல்லாமையால் தனிமைப்பட்டவர் போலிருக்கும் நீர்
‘தேஜோ விஶேஷத்தாலே ஸேனைகளால்  சூழப்பட்டவர்கள்போல் இருந்தனர் அவ்விருவரும்’
[அநுபா4வ விஶேஷாத் து ஸேநாபரிவ்ருதாவிவ; ரகுவம்ஶம் 1-37] என்கிறபடியே
அளவற்ற படைபலத்தை உடையவரைப்போலே அறியமுடியாதவராயிருந்தீர்.
10. தந்தையின் கட்டளையால் காட்டில் வாழ வந்தீர். ஆயினும் கர தூஷணாதிகள், கபந்தன் வாலி
இத்யாதிகளைக் கொன்று குவித்தீர். உம்முடைய நோக்கம் அறிதற்கரியது.

கிட்ட வொண்ணாதவன் (துராஸத:)
தர்மாநுஷ்டானங்களைச் செய்பவருக்கே பரம புருஷன் ஆராதிக்கத் தகுந்தவன் என்றிருக்கு, வழிதடுமாறி வந்தோர்க்கு என் செய்ய?
ஜ்ஞாந ஶக்த்யாதி குணங்கள் நிறைந்தவனே! அடியவரைக் கைவிடாதவனே!
விவேகமில்லாமையாகிற மேகங்களாலே இருளடைந்த திசைகளை உடையதும், பலவிதமாக இடைவிடாமல் துன்பங்களைப் பொழிகின்றதுமான
ஸம்ஸாரமாகிய மழைக் கால இருளிலே நல் வழியிலிருந்து தவறின அடியேனை நோக்கியருள்வாயாக
[அவிவேக . . . பத: ஸ்கலிதம் மாமவலோகயாச்யுத; ஸ்தோ.ரத். 49] என்றும்,
‘பாவியேன் பல காலும் வழி திகைத்து அலமருகின்றேன்’ [திருவாய் 3-2-9].
இங்கு, துராஸத என்னும் பதத்தில், ஆஸத என்றால்-‘நெருங்குதல்’ ;
தா4து பாட2த்தில் (ஷத்3 –ஆஸத்3) என்பதற்கு, பொடியாக்குதல், தொலைவு தூரம் தள்ளிவிடுதல்,
முடித்துவிடுதல் ஆகிய மூன்று பொருட்கள் உள்ளன.
தன் கணவனைக் கொன்றவனை எதிர்த்து வந்தவளான தாரை, இராமபிரானை முதலாவதாக ‘பொடித்துவிடலாம்’
என்று எண்ணினால், இவனோ மிகவும் ஸூக்ஷ்மமாயிருப்பதனால் [முண்டக உப. 1-1-6; ஸஸூக்ஷ்மம்]
ஸ்தூல வஸ்துக்களை பொடி யாக்குவது போல் இவனைப் பொடி யாக்க முடியாது;
இரண்டாவதாக, இவனைத் தொலை தூரம் தள்ளி விடலாம் என்றாலோ, இவனோ ஸர்வவியாபியாக இருப்பதால்
[முண்டக உப.1-1-6; விபு4ம்] உடல் மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் என்பதால் இவனைத் தூரத்தில் தள்ளவும் முடியாது;
மூன்றாவதாக, ஒரு வழியாக முடித்து விடலாமென்றாலோ, என்றுமிருப்பவனை, எக் காலத்திலும் அழியாமல் இருப்பவனை [முண்டக உப.1-1-6; நித்யம்]
ஒரு காலத்திலும் அழிக்க முடியாது என்று அறிந்தாள் தாரை.

புலன்களை வென்றவர் [ஜிதேந்த்ரிய:]
இப்படி மேலே சொல்லப்பட்ட அறிய முடியாமை, அடைய முடியாமை என்னும் பெருமைகளாலே கர்வம் கொண்டவராய்
பரதாரமாகிய என்னையும், என் கணவரைக் கொன்று ராஜ்ஜியத்தையும் பிடுங்கி ஆளவந்தீர் என்று அபவாதம் சொல்லவரினும்,
ராஜ்ஜியத்தை ஸுக்ரீவனுக்குக் கொடுத்து, புலன்களை வென்றவராகவ அல்லவோ இருக்கிறீர்!
‘ராமன் பிறர் மனைவியரைக் கண்ணால் கூடக் காண்பதில்லை’ [அயோ.கா. 72-49; ந ராம: பரதாராம்ச்ச சக்ஷுர்ப்4யாமபி பஶ்யதி] என்கிறபடியே
இத்தனை நேரம் நான் நிற்கும் போதும் என்னை முகம் நிமிர்த்திப் பாராமல் நிற்பதே! என்ன வைராக்யமுடையவரோ இவர்? என்கிறாள்.
‘மனனுணர் வளவிலன் பொறி யுணர் வவையிலன்’ [திருவாய் 1-1-2] என்று சொல்லுகிறபடியே
உலகத்தாருடைய உள்ளிந்திரியமான மனத்துக்கும், வெளியிந்திரியங்களான மெய்,வாய், கண், மூக்கு, செவி
இவை அனைத்துக்கும் அடையமுடியாதபடி அவற்றை வென்றிருப்பவன்.
ராஜ்ஜியத்தையும், மனைவியையும் இழந்திருக்கும் நீர் பிறருடைய ராஜ்ஜியத்திலும், மனைவியிடமும்
ஆசை கொண்டு வந்தீர் என்று நினைத்தோம், நீங்களோ புலன்களை வென்று அவற்றில் ஆசையின்று இருக்கிறீர்.

உயர்ந்த தர்மமிக்கவன் [உத்தம தா4ர்மிக:]
இப்படி வைராக்யத்தோடு இருக்கிறவர் நம்மை துன்புறுத்துவானேன்?
பிறரைக் காரணமில்லாமல் இம்ஸிக்கும் அதார்மிகரோ? என்னில்,
வாலியைக் கொன்றது பிறருக்கு செய்யும் உபகாரமல்லவோ இருக்கிறது!
தன் நன்மையைக் கருதி தர்மம் செய்பவன் அத4மன்.
தனக்கும் பிறர்க்கும் நன்மை தேடுபவன் மத்4யமன்.
பிறர் நலனில் மட்டும் கருத்துடன் செயல் படுபவன் உத்தம தா4ர்மிகன்.
ஸாமாந்ய த4ர்மத்தில் ஊன்றி நிற்பவர் தா4ர்மிகர்.
விஶேஷ த4ர்மத்தில் ஊன்றியிருப்பவர் சிறந்த தா4ர்மிகராகிறார்.
‘இரக்கமே மேலான த4ர்மம்’ [ஆந்ருஶம்ஸயம் பரோ த4ர்ம: ஸு.கா. 38-14] என்று துன்புற்றவரைக் கண்டால்
’ ஐயோ’ என்று நினைத்திருக்கும் இரக்கம் ஸாமாந்ய த4ர்மமாகும்.
தன்னை யடைந்தவர்களுக்கு ஓர் ஆபத்து உண்டானால், அவர்கள் விஷயத்தில் ஆபத்தை விளைவித்தவரிடம்
ஸாமாந்ய த4ர்மமான இரக்கத்தை விட்டு, அவர் மார்பிலே அம்பை எய்தி ஆபத்தை நீக்கிக் கொடுக்கை விஶேஷ த4ர்மமாகும்.
மேலும் தம்பியின் தாரத்தை அடைந்தவனுக்கே வதமே தண்டனை [தஸ்ய த3ண்டோ3 வத4: ஸ்ம்ருத: கிஷ். கா 18-23 ]
என்று தண்டனை அளித்துப் பரிஶுத்தப் படுத்துவதால் விஶேஷ தர்மமாகிறது.

அழியாப் புகழாளர் (அக்ஷய்ய கீர்த்தி:)
சிறப்புக்கு ஸாதநமான த4ர்மம் மாத்திரம் இவரிடம் உள்ளது, த4ர்மப2லமான புகழ் இல்லயோ? என்று ஐயப்பட்டிருந்தேன்,
[தஸ்ய நாம மஹத்3யஶ:] என்ற உபநிஷத வாக்கியத்தாலும்,
‘நிகரில் புகழாய்’ [திருவாய் 6-10-10 ] என்றும் சொல்கிறபடியும்
‘மன்னுபெரும்புகழ்’ [நாச். திரு 5-1] உடையவராய் இருக்கிறீர்.
மறைந்து நின்று கொன்றீர், தோ3ஷமற்ற மிருகத்தைக் கொன்றீர், பலனற்ற கொலையைச் செய்தீர் என்று
பழிகளைச் சொல்லி உங்கள் புகழுக்கு அபவாதம் செய்யலாமென்றாலோ
‘அரசர்களுக்கு மிருக வேட்டையும் மறைந்து நின்று கொல்வதும் நியாயம்’ என்றும்,
‘நல்ல நெஞ்சை யுடைய தம்பியாய் ஶரணமடைந்தவனான ஸுக்கிரீவனுக்குத் தீங்கிழைக்கையாலே பாவியைக் கொன்றேன்’ என்றும்
‘குடிகளின் நன்மைக்காக து3ஷ்ட மிருகத்தைக் கொன்று பலனுள்ள வதத்தைச் செய்தேன்’ என்றும் எதிரி
பதிலுரைக்க முடியாத வண்ணம், பழிசேராத வகையில் காரியம் செய்தீர் ஆகையால், அழியாப் புகழாளர் ஆவீர்.

இப்படி மாறாத புகழ் பெறக் காரணம் என்ன? என்று ஆராய்ந்து பார்த்தால்,
புகழைக் கொடுக்கும் காரியங்களைத் தொடங்குவதற்கு முன்பிருந்தே ஆராய்ந்து செய்யும் ஆராய்ச்சியாளராக
அதிஸமர்த்தராக  (விசக்ஷணச்ச) இருந்தீர்.
எந்தப் பரமபுருஷன் எல்லாப் பொருள்களின் ஸ்வரூபஸ்வபாவங்களை அறிவனோ [யஸ் ஸர்வஞ: ஸர்வவித்; முண்.உப 1-1-10],
பரமபுருஷனுக்கு இயற்கையான அறிவு, பலம், செயல் ஆகியவை இருப்பதாகக் கேட்கப்படுகிறது [ஸ்வபா4விகீ ஜ்ஞாநப3லக்ரியா ச;  ஶ்வே.உப.6] என்கிறபடியே
எல்லாமறிந்த உமக்கு பழிசேராத வகையில் எல்லா கேள்விகளுக்கும் நியாயமான பதில்கள் சொல்வது பெரிய அதிஶயமே கிடையாது.
வாலி-ஸுக்ரீவ யுத்தத்தின் போது, அடையாளம் காண்பதற்கு ஸுக்ரீவன் கழுத்தில் மாலையணிவித்து
இவ்விருவரினிடையே வேறுபாடு தெரியும் வண்ணம் செய்தமை நீர் அதி ஸமர்த்தர் என்பதற்கு நல்ல உதாரணம்.

இப்படி அதி ஸமர்த்தரானால், ‘ஶத்ரு குலத்தைச் சிறிதளவும் விட்டு வைக்கக் கூடாது’ [ஶத்ரோ: ஶேஷம் ந ஶேஷயேத்; ]என்றும்,
‘புத்திர, பௌத்திர, மந்திரி, தாயாதிகளோடு ராவணனைக் கொல்வேன்’ [ஸபுத்ர பௌத்ரம் ஸமாத்யம் ஸமித்ரம்ஜ்ஞாதி ஸபா4ந்தவம் ஹத்வா; பால.கா.15-27]
என்ற வசனங்களின்படி வாலியைக்கொன்று, அங்கதனையும் அழிப்பீரோ என்று பயந்தோம்.
நீங்களோ பொறுமையில் பூமியையும் விஞ்சும் வகையாகவல்லவோ புவிப் பொறை யாளராக (க்ஷிதிக்ஷமாவாந் ) இருக்கிறீர்!

‘என்னிடத்தில் இப்படிப்  பொறுமை காட்டுவதற்கு காரணம் என்ன?’ என்று ஆலோசித்தேன்.
‘உயிக்கெல்லாம் தாயாயளிக்கின்ற தண்டாமரைக் கண்ணன்’ [பெரிய திரு. 7-2-9] என்று
எல்லோரையும் காக்க வந்த ஐஶ்வர்யத்தைக் காட்டும் இந்தக் கண்களின் பெருமை இருந்தபடி என்ன ஆச்சர்யம்!
வாலியைக் கொன்ற போது கோபத்தால் கண்ணில் ரத்தம் ஏறிய சிவப்பு (க்ஷதஜோபமக்ஷ) [ராம: ரக்தாந்த லோசன: யுத்.கா. 21-13]
இன்னும் மறையாமலிருக்க, என்பால் பொறுமையைக் காட்டியது என்ன வியப்பு!
ஓரம்பால் வாலியைக் கொன்றீர் என்கிற விஷயமறிந்து இங்கு வந்து பார்த்தால்,
ஓரம்பால் அன்று, சிவந்த இந்த கண்களே வாலியைக் கொன்றன என்னுமாபோலே இருக்கிறதே!
அந்த பரம புருஷனுக்கு ஸூரியனால் மலர்ந்த வெண்டாமரைக் கண்கள் [யதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ; சாந்.உப. 1-7]
என்று மிகமலர்ந்த  உம்முடைய கண்களுக்கு சிவப்பு இயற்கையானது; கோபத்தால் வந்தேறியிருப்பதன்று.
இந்தக் கண்கள் ஸீதாப்பிராட்டியாரின் பிரிவுத்துன்பத்தால் விளைந்த துன்பக்கண்ணீரால் சிவந்தனவோ?
வாலியிடம் கொண்ட கோபத்தால் சிவந்தனவோ? ஸுக்ரீவனிடம் அன்பாலே சிவந்தனவோ? என்று அறிய முடிய வில்லை.

விஷ்ணு புராணத்திலே ‘ஞானம், ஶக்தி, பலம், ஐஶ்வர்யம், வீர்யம், தேஜஸ் என்கிற ஆறு குணங்களும் பகவான்
என்னும் ஶப்தத்தால் சொல்லப்படுகின்றன’ [ஞானஶக்தி ப3லைஶ்வர்ய வீர்யதேஜாம்ஸ்யஶேஷத:  வி.புரா.6-5-79]
இவற்றை முறையே அயோத்யா காண்டத்தில், ‘பிறரை ஹிம்ஸிக்காமை, இரக்கம், ஆர்த்தநாதம் கேட்கை,
ஸௌஶீல்யம், வெளியிந்திரியங்களை அடக்குகை, மனதையடக்குகை’ என்று காட்டி,-இவை  இராமபிரானை அலங்கரிக்கின்றன
[ஆந்ருஶம்ஸ்யம்நுக்ரோஶ: த்4ருதம் ஶீலம் த3ம: ஶம:। ராம: ஶோப4யந்த்யேதே ஷட்3கு3ணா புருஷோத்தமம்।। அயோ.கா. 33-12] என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதேபோல, இங்கே சாந்தோக்யத்தில் சொல்லப்பட்ட எட்டு குணங்களின் ‘பாபமற்றவன், கிழத்தனமற்றவன்,
சாவற்றவன், துன்பமற்றவன், பசியற்றவன், தாகமற்றவன், வீணாகாத விருப்பங்களை உடையவன், வீணாகாத ஸங்கல்பங்களை உடையவன்’
[அபஹதபாப்மா, விஜரோ, விம்ருத்யு:, விஶோக:, விஜிக4த்ஸ:, அபிபாஸ:, ஸத்யகாம:, ஸத்யஸங்கல்ப: சாந்தோ. 8-7-1]
என்பனவற்றின் ஒரு சேர பூர்த்திக்கு அப்ரமேயம் முதலான எண் குணங்களைச் சொல்லுகிறார்.

—————-———————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –தம் த்ருஷ்ட்வா ஸத்ரு ஹந்தாரம்-ஆரண்ய -30-39–

January 17, 2024

தம் த்ருஷ்ட்வா ஸத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம்  ஸூகாவஹம்
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே-ஆரண்ய -30-39-

தம் த்ருஷ்ட்வா -அவ்விராமனைப் பார்த்து
ஸத்ரு ஹந்தாரம் -எதிரிகளை அழித்தவரும்
மஹர்ஷீணாம்  ஸூகாவஹம் -மகார்ஷிகளுக்கு ஸூ கம் அளிப்பவருமான
பபூவ -சத்தை பெற்றாள்
ஹ்ருஷ்ட்வா -ப்ரீதி அடைந்தாள்
வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே-ஸீதா பிராட்டி கணவனான அவரை நன்கு தழுவினாள்-

அவதாரிகை –
சதுர்தச சஹஸ்ராணி ரஷசாம்  பீமா கர்மாணாம் ஹதான் ஏகேன மாநுஷேண பதாதி நா-ஆரண்ய -26-35-இதி பிரக்ரியையாலே
ராஷச வேட்டை யாடின பெருமாளுடைய யுத்தாயாச பரிஸ் விந்னமான திரு மேனியில்
ராஷச சர வ்ராத வ்ரணாரோபண திவ்ய ஔஷதமான காடா லிங்கனத்தைப் பண்ணி
பிராட்டி சத்தை பெற்றாள் -என்கிறது –

1-தம்-
ஸ்தரியம் புருஷ விக்ரஹம் -அயோத்யா -30-3- என்று விண்ணப்பம் செய்ய வேண்டும்படி
ராஷச பூயிஷ்ட மான தேசத்தில் உன்னைக் கொண்டு போக அஞ்சுவேன் -என்றவரை –
2-தம் –
ஸ்தரியம் புருஷ விக்ரஹம் -அயோத்யா -30-3- என்று பிராட்டி வாயாலே அநநுமதமாக ஆண்ட அன்று துடங்கி திரு உள்ளத்திலே கருவி இருந்தது –
பதினாலாயிரம் ராஷசரையும் முடியும் உடலுமாகத் தறித்து
உதிர வெள்ளத்திலே  மிதக்க விட்டுப்
பிராட்டியைக் கையைப் பிடித்துக் கொண்டு காட்டினவரை
3-தம் –
ஆதித்ய இவ தேஜஸ –சுந்தர -34-28-இத்யாதிப்படியே
வீரப்பாட்டுக்கு சிறு விரல் முடக்கும் படி அவதீர்ணரானவரை
4-தம் –
படுக்கைத் தலையிலே விடு பூ விழுந்து திரு மேனி சிவக்கும் சௌகுமார்ய அதிசயத்தை யுடையவரை
5-தம்-
உகப்பாலே அடுத்துப் பார்க்கில் நாயனமான தேஜஸ் ஸூ க்கும் அசதானமான திரு மேனியை யுடையவரை –
6- தம் –
ரிஷிகளுக்குபண்ணின பிரதிஜ்ஞ்ஞையை கடலோசை யாகாத படி தலைக் கட்டுகையாலே
பூர்ண மநோ ரதரானவரை
7- தம் –
ரத்ன கசிதமான பொன்னரி மா மலை போலே சத்ரு சர வ்ராத வ்ரஹாங்கிதமான
திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவராய் உள்ளவரை –

1-த்ருஷ்ட்வா –
கருமுகை மாலையைப் பன்னீரிலே தோய்த்து எடுப்பாரைப் போலே
யுத்தாயாச பரிஸ் விந்னமான திரு மேனியைத் தன பார்வை யான பன்னீராலே வழிய வார்த்து –
2- த்ருஷ்ட்வா –
ஆதாபிபூதருடைய சீத தடாகப் பிரவேசம் போலே
ராஷசாச நிகராபி பூதமான திருமேனியைத் தன் பார்வை யாகிற
பூர்ண தடாகத்திலே தோய்த்து எடுத்து –

ஸத்ரு ஹந்தாரம் –
ப்ரதிபஷ நிரசனத்தாலே வந்த புகருடைமை
சமோஹம் சர்வ பூதேஷு -ஸ்ரீ கீதை -9-29-என்கிற பெருமாளுக்கு சத்ருக்கள் உண்டோ என்னில்
ஜ்ஞாநீ த்வாத்மைவ -ஸ்ரீ கீதை -7-18-
த்விஷ தன்னம் ந போக்தவ்யம் த்விஷ நதம்நைவ போஜயேத் பாண்டவான்
த்விஷசே ராஜன்  மம ப்ராணா ஹி பாண்டவா -பாரத -உத் 74-27-இத்யாதிகளாலே
ஆ ஸ்ரீ த விரோதிகள் தனக்கு விரோதிகளாம் அத்தனை இ றே-

1-மஹர்ஷீணாம்  ஸூகாவஹம்-
யுத்த ப்ராரம்பம் துடங்கி கிம் பவிஷ்யதி -என்று வயிறு பிடித்து
துக்கிதராய் இருந்த மஹா ரிஷிகளுடைய பயம் தீர
சத்ருக்கள் அடங்கக் கொன்று
அவர்களுக்கு ஸூ காவஹராய் இருப்பவரை –
2-மஹர்ஷீணாம்  ஸூகாவஹம்–
தம்முடைய போஷ்ய குடும்பத்துக்கு ஸூ கத்தைப் பண்ணி
தம்முடைய -பிராட்டியையும் சேர்த்து –
சத்திக்கு ஆபாதகரனவரை-

பபூவ –
மாலையும் மனமும் போலே அத்யந்தம் ஸூ குமாரரான விக்ரஹத்தையும்
ஸ்வபாவத்தையும் யுடைய பெருமாள் –
கடிந காத்ர ஸ்வ பாவரான முரட்டு ராஷசரோடேயுத்தம் ப்ராரம்பித்த போது துடங்கி –
பிரேம அதிசயத்தாலே மாண்டு கிடந்த பிராட்டி
திரு மேனியிலே தீங்கு இன்றியிலே நின்ற பெருமாளைக் கண்டு சத்தை பெற்றாள் -என்கிறது-

-ஹ்ருஷ்ட்வா-
தர்மி யுண்டானால் தர்மம்  பிறக்கக் கடவது இ றே
ராம சௌந்த்ர்யத்தைமுழுக்கக் கண்டு திரு உள்ளம் ஈடுபட்ட படி –

1-வைதேஹீ –
ஐயர் வயற்றிலே பிறந்திலேன் ஆகில் எனக்கு இப் பேறு இல்லையே
2-வைதேஹீ –
இக்குடியில் பிறந்திலேன் ஆகில் பெருமாள் என்னைக் கைப்பிடியாரே –
3-வைதேஹீ –
இந்நிலத்தில் பிறந்திலேன் ஆகில் இவ்வில்லோட்டை சௌ ப்ராத்ரம் கிடையாதே –
அவில்லோட்டை சௌ பிரார்த்ரம் இல்லையாகில் வீர்ய ஸூ ல்கையாக -இவ்விவாஹம் -இவ்வாகாரம் -கூடாதே
4-வைதேஹீ –
தநுர் பங்க மாத்ரத்திலே என்னையும் தம்முடைய வம்சத்தையும் பெருமாளுக்கு அடிமையாக எழுதிக் கொடுத்த ஐயர்
இந்த ஆகாரம் கண்டால் என்ன படுவரோ –
5- வைதேஹீ –
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-அயோத்யா -3-29-என்றபடியே
சர்வ லோக ஆகர்ஷகமான இந்நிலையை ஐயரை ஒழிய நான் காண்பதோ என்று பித்ரு ஸ்ம்ருதி பண்ணுகிறாள்-

பர்த்தாரம் –
பாணிக்ரஹண வேளை துடங்கி பதித்வ பிரதிபத்தி பண்ணிப் போந்தாள்-
இப்போது இ றே தாத்வர்த்தம் ஜீவித்தது-

பரிஷஸ்வஜே-
சஸ் வஜே -ஆலிங்கனம் பண்ணினாள்-
1-பரிஷஸ்வஜே–பரி பூரணமாகத் தழுவினாள்
2-பரிஷஸ்வஜே–பர்யாப்தமாகத் தழுவினாள்
தழும்பு மாறும் அளவும் தழுவினாள்
சரவ் ரணங்களாலே வந்த தழும்பு எல்லாம் மாறும் அளவும் திரு முலைத் தடத்தாலே வேது கொண்டாள் –
தான் கை கண்ட மருந்து இ றே
சர வ்ரணங்களுக்கு ஆலிங்கனமாம் இடத்தில் ஐந்தோடு ஐநூறோடு வாசி இல்லையே –
அந்தரங்கர் உள்ளுற எய்த புண்ணுக்கு மருந்தான இது .
தோல் புரை எய்த புண்ணுக்கு மருந்தாகச் சொல்ல வேணுமோ -என்று இருந்தாள்-
ஒரு கொடியாகில் கொள் கொம்பைத் தழுவி அல்லது நில்லாதிறே-

பர்த்தாரம் பரிஷஸ்வஜே –
நித்ய சம்யோக ஸ்திதி ரூபமான பர்த்ருத்வாகாரம் ஒரு கொள் கொம்புக்கு உண்டானால் –
கோல் தேடி யோடும் கொழுந்து -இரண்டாம் திரு -27-
ததாதாரமாய்க் கொண்டு கொள் கொம்பை மூட்டப் படர்ந்து அத்தைச் சிறப்பித்துக் கொண்டல்லது
ஸ்வரூபம் இல்லையே பார்யாத்வா காரமான கொடிக்கு-
பர்த்தாரமவ லம்ப்யைவ பார்யாயா ஸ்திதி ரிஷ்யதே
அவலமப்யதருமம் வல்லி ஸ்தீயதே ந வினா த்ருமம்-என்னுமா போலே –

தம் -என்கிற பதம் பெருமாளுடைய சர்வாகாரங்களையும் காட்டுகிறது
த்ருஷ்ட்வா -என்கிற பதத்தால் பெருமாளுடைய சர்வாகாரங்களையும் நோக்கிக் காணக் கண்ணுடையாள் பிராட்டி -என்கிறது –
சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூ கவாஹம் -என்கிற பதங்களாலே
தன்னோடு குடல் துவக்கு யுண்டான சேதனர்க்கு அநிஷ்ட நிவ்ருத்தியையும்
இஷ்ட பிராப்தியையும் பண்ணின போது அல்லது இவரைக் -இவனைக் -இவளைக் -காண கண்ணில்லை -என்கிறது
பபூவ -அத்தலைக்கு அதிசய அவஹையாய் சத்தை பெற்ற படி
ஹ்ருஷ்டா -ஸதிதர்மிணி தரமாச் சிந்தயந்தே -தர்மியான தான் சத்தை பெற்ற பின்பு தர்மமான உகப்பு தானாகவே யுண்டாயிற்று
பர்த்தாரம் -தன் கார்யம் சுமந்து நடத்தினார் என்கிறாள்
தன் கார்யம் சுமந்து நடத்துகை யாவது
பிதுர் தச குணம் மாதா -என்கையாலே -தன் புத்திர ரஷணம் பண்ணுகை இ றே
பரிஷஸ்வஜே -ஆ ஸ்ரீ த ரஷணத்தால் வந்த களிப்புக்கு போக்கு வீடு
ஆலிங்கனம் போலே இருந்தது
அவருக்கும் பிரயோஜனம் அது போலே காணும் –

—————————————————————

தம் த்3ருஷ்ட்வா ஶத்ரு ஹந்தாரம் மஹர்ஷீநாம் ஸுகா2வஹம் |

3பூ4வா ஹ்ருஷ்டா வைதே3ஹீ 4ர்த்தாரம் பரிஷஸ்வஜே ||

பொழிப்புரை:
எதிரிகளை அழித்தவரும் மஹரிஷிகளுக்கு ஸுகம் அளிப்பவரும் அவ்விராமபிரானைப் பார்த்து,
ஸீதாப்பிராட்டி ஸத்தைப் பெற்றாள். ப்ரீதியடைந்தாள்; கணவனான அவரை ஆரத்தழுவினாள்.

பதினான்காயிரம் அஸுரர்களைக் கொன்ற வீரனான இராமபிரான்
[சதுர்த3ஶஸஹஶ்ராணி ரக்ஷஸாம் பீ4மகர்மணாம் ஹதாக்யேகேந ராமேண மாநுஷேண பதா3தி3நா; ஆர.கா. 26-35] என்கிறபடியே
ராக்ஷஸ வேட்டையாடி நின்ற ராமபிரானுடைய, யுத்தத்தால் வேர்த்திருந்து களைப்படைந்திருக்கும் திருமேனியில்
ராக்ஷஸர்களின் அம்புக் கூட்டத்தால் ஏற்பட்ட புண்களுக்கு அரு மருந்தாயிருக்கும் தன்கா3டா4லிங்கனத்தைச்
(இறுக அணைத்தலான செயலை) செய்து பிராட்டி ஸத்தை பெற்றாள் என்கிறது இந்த ஶ்லோகம்.

‘ஆணுருக்கொண்ட பெண்ணாகிற உம்மை மாப்பிள்ளையாகப் பெற்ற தந்தையார் என்ன நினைப்பார்?’
[ஸ்த்ரியம் புருஷவிக்3ரஹம்; ஆர.கா. 30-3] என்று பிராட்டி விண்ணப்பம் செய்யவேண்டும்படி
‘அரக்கர்கள் நிறைந்த தேஶத்தில் உன்னை அழைத்துப் போக அஞ்சுகிறேன்’ என்றவரை,
‘ஆணுருக் கொண்ட பெண்’ என்று உள்ளத்தில் நினையாவிடிலும், வாயாலே சொன்ன அன்று முதல்
தன் நெஞ்சிலே வைத்திருந்து பதினாலாயிரம் ராக்ஷஸர்களையும் தலைவேறு உடல்வேறாகச் செய்து,
பிராட்டியைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று, ‘ஆணுருக்கொண்ட பெண்ணின் செயலைக் கண்டாயோ?’
என சொல்லாமல் சொல்லிக் காட்டினான் இராமபிரான்.

ஸூர்யனைப்போலே தேஜஸ்ஸையுடைய இராமபிரான் [ஆதி3த்ய இவ தேஜஸ்வீ; ஸு.கா.34-28] என்ற ஶ்லோகத்தில் சொன்னபடியே
வீரர்களில் முதலில் எண்ணத்தகுந்தவராக அவதரித்தவன் இராமபிரான்.
பள்ளியறையின் மேற்கட்டியிலிருக்கும் பூவிதழ்கள் பட்டுக் கன்றிச்சிவக்கும் மென்மை உடையவன்;
கண்களால் உற்றுப்பார்க்கின் அதனால் கன்றும் திருமேனி உடையவன்;
‘உற்றார் உறவினரோடு இராவணனை அழித்து உங்களைக் காக்கிறேன்’ என்று வசனபத்3த4னாக இருந்து
இன்று பதினாலாயிரம் ராக்ஷஸர்களை வத4ம்செய்து எதிரிகளின் அம்புக்கூட்டங்களால் உண்டான புண்களைத்
தாங்கிய திருமேனியை  உடையவாராய் இருந்தவரை தன் பார்வை (த்ருஷ்ட்வா) என்னும் பன்னீரால் நீராட்டினாள் ஸீதை.

(ஶத்ருஹந்தாரம்)
‘நான் எல்லா ஜீவராஶிகளிடத்திலும் ஒருபடியாய் இருப்பவன்’ [ஸமோஹம் ஸர்வ பூ4தேஷு; ப4க3.கீ3தை: 9-29]
என்றிருப்பார்க்கு எதிரிகள் உண்டோ? என்னில்,
தன்னுடைய அடியார்களுக்கு விரோதிகள் ஆஶ்ரித விரோதிகள்,
தனக்கும் விரோதிகள் என்றிருப்பவன் எம்பெருமான் அல்லனோ?

(மஹர்ஷீணாம் ஸுகா2வஹம்)
மஹரிஷிகளுக்கு ஸுகம் அளிப்பவரை;
சண்டை ஆரம்பித்தது முதல், ‘என்ன நிகழுமோ?’ என்று வயிறு கலங்கியிருக்கும் மஹரிஷிகளுடைய பயம்
தீரும்படி எல்லா எதிரிகளையும் அழைத்து அவர்களுக்கு ஸுகம் அளிப்பவரை;
‘உம் தேஶத்திலே உம்மை அண்டி வஸிக்கும் நாங்கள் உம்மாலே ரக்ஷிக்கப்படவேண்டியவர்கள்’
[தே வயம் ப4வதா ரக்ஷ்யா ப4வத்3 விஷய வாஸிந: ஆர.கா. 1-26] என்கிறபடியே
தம்மால் போஷிக்கப்படவேண்டியவர்களான மஹரிஷிகளுக்கு ஸுகமளித்துத் தம்முடைய ஸ்வரூபத்தை உண்டாக்கிக் கொண்டவரை

(ப3பூ4வ)
பூ4 ஸத்தாயாம் என்கிற தா4துவின் படி ஸீதை ஸத்தை பெற்றாள் என்று நிர்வாஹம்.
ஸௌகுமார்யாதி ஸ்வபா4வங்களையுடைய இராமபிரான் முரட்டு மேனியும் தன்மையுமுடைய அரக்கர்களோடு
யுத்தம் செய்ய ஆரம்பித்ததிலிருந்தே அன்பின் மிகுதியாலே ஸத்தை அழிந்துகிடந்த பிராட்டி
திருமேனியிலே ஒருதீங்குமின்றியிருந்த பிரானைக் கண்டு ஸத்தை பெற்றாள் என்கிறது.

(ஹ்ருஷ்டா)
உகந்தாள்: தர்மிக்கு ஸத்தை உண்டானால், தர்மம் தானாகவே ஸத்தை பெறும் என்னுமாப் போலே,
இராமனுடைய பூர்ணமான வடிவழகைப் பார்த்து ஸத்தை பெற்ற பின்பு, தர்மமான உகப்பு தானாகவே உண்டாயிற்று.

(வைதேஹீ)
பிராட்டியானவள் இந்த ஸமயத்தில் தன் நற்குடிப்பிறப்பை அநுஸந்திப்பதால், வால்மீகி பகவான் ‘வைதேஹீ’ என்று அறுதியிடுகிறார்.
விதேஹ ராஜனுக்குப் பெண்ணாகப் பிறந்திருக்கவில்லை என்றால், இப்பேறு எனக்கு இல்லாமலன்றோ போயிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறாள்.
விதேஹராஜனுக்குப் பிறந்திருக்கவில்லை என்றால், இக்ஷ்வாகு வம்ஶத்தில் தொன்றிய இராமனைக் கைப்பற்றியிருக்க முடியாது.
வேறு ஒரு நாட்டில் அரசிளங்குமரியாகப் பிறந்திருந்தாலும், ஶிவ தநுஸ்ஸுடன் ஸம்பந்தமிருந்திருக்காது;
வில்லை முறித்த வீர்யத்திற்குப் பரிசாக ஏற்பட்ட ராம விவாஹமும் நடந்திருக்காதன்றோ?
வில்லை ஒடித்ததற்கு விதேஹ வம்ஶத்தையே அடிமையாக எழுதிக் கொடுத்தும், என்னையும் கொடுத்த தந்தை
இப்படி பதினாலாயிரம் அரக்கரை ஒருவராய்க்கொன்று நிற்கும் இந்த நிலையைக்கண்டால் என்ன பாடுபடுவர்?
‘ஆண்களையும் வஶீகரிக்கும் அழகும், வண்மையும் பொருந்தியவன் இராமன்’ [பும்ஸாம் சித்தாபஹாரிணம்; அயோ.கா. 3-29] என்கிறபடியே
ஆண், பெண் வாசியில்லாமல் எல்லோரையும் ஈடுபடுத்தும் இவருடைய இந்நிலமையை நான் மட்டும் எவ்வாறு அநுபவிப்பது,
என் தந்தையும் காணவேண்டாவோ? என்று தந்தையையும் நினைவு கொள்கிறாள் இங்கே.

(ப4ர்த்தாரம்)
இராமபிரானைக் கைப்பிடித்ததிலிருந்தே, இவன் என் கணவன் என்று நினைத்திருந்தவள் பிராட்டி.
ஆயினும், இப்போது, ‘ப்4ரூ ப4ரணே’ என்ற தா4துவின் படி, ப4ர்த்தா-ப4ரிப்பவன் -ரக்ஷிப்பவன் என்பது பொருளுடைத்தாயிற்று.

(பரிஷஸ்வஜே)
நன்றாக ஆலிங்கனம் செய்தாள். ‘பர்யாப்தம் யதா2 ப4வதி ததா2 ஸஸ்வஜே’ போதுமென்று சொல்லும்படி தழுவினாள்.
அம்புபட்ட புண்ணுக்கு ஆலிங்கனமே கைகண்ட மருந்து என்று பிராட்டியே பல ஸமயங்களில் அநுபவித்தறிந்த விஷயமாயிற்றே. ‘
கோல்தேடி ஓடும் கொழுந்து’ [இர.திரு.27] என்கிறபடியே ஒரு கொடியாய் இருப்பது ஒருகொள்கொம்பைத் தழுவினாலல்லது நிலைநிற்காதே.
கணவனைப்பற்றி நிற்கும் தன்மையே மனைவிக்கு ஸ்வரூபம் எனப்படுகிறது.

தம்–
(அவரை) என்னும் சொல் இராமபிரானுடைய சௌர்யம், வீர்யம் முதலிய எல்லாத் தன்மைகளையும் காட்டுகிறது.

த்ருஷ்ட்வா–(
பார்த்து) என்கிற பதத்தாலே, ‘ராமபிரானுடைய எல்லாத் தன்மைகளையும் நன்றாகக் காணலாம்படியான
கண்களை யுடையவள் பிராட்டியே’ என்று உணர்த்தப் படுகிறது.

ஶத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்–
(ஶத்ருக்களை அழித்தவரை, மஹர்ஷிகளுக்கு ஸுகம் அளித்தவரை) என்கிற பதங்களாலே
‘தங்கள்  பிள்ளைகளான சேதநருடைய துன்பங்களைத் துடைப்பதும், இன்பத்தைப் பெருக்குவதும்
செய்யாத போது, பிராட்டி இராமபிரானைக் காண விரும்ப மாட்டாள்’ என்று சொல்லப்படுகிறது.

பபூவ–
(ஸத்தை பெற்றாள்) தன் பார்வையாகிற பன்னீரால் குளிப்பாட்டுவதன் மூலம், இராமபிரானுக்குச்
சிறப்பை விளைவிக்கையாலே, தன் ஶேஷத்வஸ்வரூபம் பெற்றாள் என்கிறது.

ஹ்ருஷ்டா–
(உகந்தாள்) ‘த4ர்மி ஸித்3தி4த்தபிறகே த4ர்மங்கள் ஆராயப்படுகின்றன’ என்கிற ந்யாயத்தாலே,
த4ர்மியான தான் ஸத்தைப்  பெற்ற பின்பு த4ர்மமான உகப்பு தானாகவே உண்டாயிற்று.

வைதேஹீ–
தந்தை விஷயமாக நெஞ்சாலே நன்றி செலுத்துகிறாள்.

ப4ர்த்தாரம்–
(ப4ர்த்தாவை) குடும்பத்தைக் காப்பவன்;
பிள்ளையை ரக்ஷிப்பதைத் தன்னுடைய பொறுப்பாகக் கருதுபவள் தாய் அல்லவா?
எனவே தன்னுடைய கடமையைத் தன்மேல் ஏற்றிக்கொண்டு நடத்திக் கொடுத்ததால், அதாவது
மஹர்ஷிகளை ரக்ஷணம் பண்ணியபோது, ‘என் காரியத்தை தனது பொறுப்பாகச் சுமந்து நடத்தினார்’ என்று அநுஸந்திக்கிறாள்.

பரிஷஸ்வஜே–
(நன்றாகத் தழுவினாள்) பிராட்டி பிரானைத் தழுவியதைப் பார்த்தால், உடம்பு நோவநின்று எதிரிகளை அழித்ததற்கு,
இவ்வாலிங்கனத்தையே இராமபிரானும் ப்ரயோஜனமாகக் கருதுகிறார் போலும்.

————–———————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -தருணௌ ரூபசம்பன்னௌ ஸூகுமாரௌ-ஆரண்ய -19-14–

January 17, 2024

தருணௌ ரூபசம்பன்னௌ ஸூகுமாரௌ மஹாபலௌ
புண்டரீக விசாலாஷௌ சீரக்ருஷ்ணாஜிநாம் பரௌ–ஆரண்ய -19-14-

தருணௌ -வாலிபர்களாய்
ரூப சம்பன்னௌ -அழகு நிறைந்தவர்களாய்
ஸூகுமாரௌ -மிகவும் மிருதுவான தன்மையை யுடையவர்களாய்
மஹாபலௌ-பெரிய பலத்தை யுடையவர்களாய்
புண்டரீக விசாலாஷௌ-தாமரை போல் பரந்த கண்களை யுடையவர்களாய்
சீரக்ருஷ்ணாஜிநாம் பரௌ-மரவுரியையும் மான் தோலையும் உடுப்பாக யுடையவர்களாய் –
ராம லஷ்மணர்கள் இருக்கிறார்கள் –

அவதாரிகை –

ஸ ஹி தேவை ருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி
-அர்த்திதோ மா நுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு ஸ நாதன-அயோத்யா -1-7-என்கிறபடியே
தச கண்ட குண்டித சக்திகளான தேவர்கள் ராஷசர்கள் உடைய ரஜஸ் ஸைப் போக்கும்படி
ரஜோ தூஸரமான வடிவுகளும்
ராஷச ஸ்திரீகள் மாங்கல்யங்கள் வாங்கும்படி கழுத்திலே கட்டின கப்படங்களும் -தோற்றவர்கள் கழுத்தில் அணியும் சக்கரங்கள் –
ராவண பந்தி க்ருதைகளான தங்கள் ஸ்திரீகளுடைய விரித்த தலை
விமுக்த்த கேச்யோ துக்கார்த்தா -யுத்த -115-2-என்று ராஷசிகள் தலையிலே யாம்படி தாங்கள் விரித்த தலை மயிரும்
ஹா புத்ரேதி ஸ வாதிந்யோ ஹா நாதேதி ஸ சர்வச -யுத்த -113-9-என்கிறபடியே
அவர்கள் முகங்களிலே விலாபாஷாரங்களாம்படி தங்கள் முகங்களிலே ஸ் புரிச்கிற சரணஷா ரங்களும்
உத்த்ருத்ய சபு ஜௌகாசித் -யுத்த -113-9-என்கிறபடியே
அவர்கள் கையெடுத்துக் கூப்பிடும்படி தாங்கள் கொடுத்த அஞ்சலி புடங்களும்
ஸ்நாபயந்தீ முகம் பாஷ்பைஸ் துஷாரைரிவ பங்கஜம் -யுத்த 113-10-என்கிறபடியே
அவர்கள் கண்களிலே கண்ணீர் பாயும்படி தாங்கள் கண்ணும் கண்ணீருமாய்
தஸ்மின் நவசரே தேவா பௌலச்த்யோ பப்லுதா ஹரிம்
அபி ஜக்மூர் நிதாகார்த்தா சாயா வ்ருஷமிவாத் வகா -ரகுவம்சம் -10-5-என்றும்
சகோரா இவ சீதாம் ஸூம் சாதகா இவ தோயதம்
அத நா இவ தாதாரம தேவா ஜக்மூர் சனார்த்த நம – என்றும் சொல்லுகிறபடியே
அஸ்வத் ராந்தர் ஆனவர்கள் சாயா வ்ருஷத்தை சென்று சேருமா போலேயும்
சகோரங்கள் ஆனவை சரச் சந்த்ரனை அணுகுமா போலேயும்
சாதகங்கள் ஆனவை வர்ஷூக வலா ஹகங்களை சென்று கிட்டுமா போலேயும்
தரித்ரரானவர்கள் தாத்தாவைச் சென்று கிட்டுமா போலேயும்
ஸ்ரீ யபதியைச் சென்று கிட்டி
தம ப்ருவன் ஸூ ரா சர்வே சமபிஷ்டூய சநநதா-பால -15-17-என்று
ஸ்தவ ப்ரியனானவனை ஸ்தோத்ரம் பண்ணுவார்களாக தொடங்கி
சதைக ரூப ரூபாய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-1- என்று அவிக்ருதரான தேவர்
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா -திருவாய் -7-5-2- என்கிறபடியே
அழிவுக்கிட்டு
த்ரிபாத் விபூதியிலே இருக்கக் கடவ தேவர்
சதுஷபாத்தாய் ஹிரண்யா ஷஷபணம் பண்ணிற்றும்
கேவலம் த்ரியக்த்வத்தாலே போராது என்று நரம் கலந்த சிங்கமாய் ஹிரண்ய நிரசனம் பண்ணிற்றும்
மஹதோ  மஹீயான் -என்கிற வடிவைக் குறள் உருவாக்கி
அல்லி மலர் மகள் போக மயக்குகளை -திருவாய் -3-10-8-மறந்து ப்ரஹ்ம சாரியாய்
தத் யாந்ந ப்ரதிக்ருஹ்ணீயாத்  ந ப்ரூயாத் கிஞ்சித ப்ரியம்
அபி ஜீவித ஹேதோர் வா ராம சத்ய பராக்ரம -சுந்தர -33-26-என்றும்
கோ சஹச்ர ப்ரதாதாரம் -யுத்த -21-8- என்றும்
அலம் புரிந்த நெடும் தடக்கை அமரர் வேந்தன் அஞ்சிறைப் புள் தனிப்பாகன் -திரு நெடு -6- என்றும் சொல்லுகிறபடியே
ப்ரஹ்மாத் யனேகா பதப்ரதரான தேவர்
மகாபலி பக்கலிலே பதத்ரயத்தை அர்த்தித்தும்
ப்ராஹ்மாணோஸ்ய முகம் ஆஸீத் பாஹூ ராஜன்ய க்ருத-புருஷ ஸூ க்தம் -என்று
ப்ரஹ்ம ஷத்ரங்களுக்கு உத்பாதகரான தேவர்
பித்ர்யமம் சமுபவீத லஷணம் மாத்ரு  கஞ்ச தநு ரூர்ஜிதம் தத்த -ரகுவம்சம் -11-64- என்கிறபடியே
ஜமதக்நி ரேணுகைகள் பக்கலிலே ப்ரஹ்ம ஷத்ரியராய் வந்து தோன்றி இருப்பத்தொரு கால் துஷ்ட ஷத்ரியரைப் பரசுவுக்கு ப்ராதரசநம் ஆக்கிற்றும்
பக்தாநாம் -ஜிதேந்தே -என்றும்
வரத சகல   மேதத் சமச்ரிதார்த்தம சகரத்த -ஸ்ரீ வர ஸ்தவம் -68-என்றும்
அடியோங்களுக்காக அன்றோ என்று ஸ்தோத்ரம் பண்ணி
சாபமா நய -யுத்த -21-22-என்று கையிலே ஆயுதம் எடுக்கும் படி
தங்களுடைய வஜ்ர பரசு தண்ட பாசாத்யா யுதங்களை பொகட்டும்
அவன் சாகரம் ஷோஷயாமி -யுத்த -21-22- என்னும்படி கண்ணீரைக் காட்டியும்
ஸூ கிரீவம் சரணம் கத -கிஷ்கிந்தா -4-19-என்றும்
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி -யுத்த -19-30-என்றும்
அவன் சரணம் புகும்படி தாங்கள் சரணம் புக்கும்
அஞ்ஜலிம் ப்ராங்முக க்ருத்வா -யுத்த -21-1-என்று அவன் அஞ்சலி பண்ணும்படி தாங்கள் அஞ்சலி பண்ணியும்
ப்ரஸீ தந்து பவந்தோ மே-ஆரண்ய -10-9- என்று அவன் ஸ்தோத்ரம் பண்ணும் படி தாங்கள் ஸ்தோத்ரம் பண்ணியும்
சர்வே சந்நதா-பால -15-17-என்று தமையனான இந்த்ரனும் முர்பாடநாம் படி திருவடிகளிலே நம்ரராய்
ந நமேயம் -யுத்த -36-11-என்று இருக்கிறவர்களை தலை அழித்துத் தர வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய
பரமகாருணிகனான சர்வேஸ்வரனும்-நித்ய அநபாயிநியான பிராட்டியும்
பிதரம் ரோசசயாமாச ததா தசரதம் ந்ருபம்-பால -15-21- என்றும்
ஜன்கச்ய குலே ஜாதா-பால -1-27- என்றும் சொல்லுகிறபடியே
தாம் தாசரதியாயும் அவள் ஜனககுல ஸூ ந்தரியாயும் திருவவதரித்து
இருவரும் இரண்டு இடத்திலுமாக வளர்ந்து அருளுகிற காலத்திலேயே
இம்மிதுனம் இப்படி அகல விருக்கப் பெறாது
இப்படி அகல விருந்த போது ரஷகர் ஆகாமை அன்றிக்கே
புரேவ மே சாருத தீம நிந்திதாம் திசந்தி ஸீதாம யதி நாதா மைதிலீம்
சதேவ கந்தர்வ மநுஷ்ய பன்னகம் ஜகத் சசைலம் பரிவர்த்தயாம் யஹம் -ஆரண்ய -64-78-என்றும்
குசலீ யதி காகுத்ஸ்த கிம் நு சாகர மேகலாம்
மஹீம் தஹதி காகுத்ஸ்த க்ருத்தஸ் தீவ்ரேண சஷூஷா-சுந்தர -36-13-என்றும்
உவர்கள் தங்களாலே ஜகத்துக்கு அழிவு வரும் என்றும் சேர்ந்த போது
ஆவாபயாம் கர்மாணி கர்த்தவ்யானி பிரஜாச் சோத்பாதயித வ்யா-என்றும்
உபேதம் சீதயா பூயச்  சித்ரா சசினம் யதா  -அயோத்ய -16-8- என்றும்
ஜகத்துக்கு மங்கள வஹமாய் இருக்கையாலும்
இம்மிதுனத்தை சேர்க்க வேணும் என்கிற அபிசந்தியாலும்
விநாசாய ஸ துஷ்க்ருதாம் -ஸ்ரீ கீதை -4-8-என்றும்
சம்பவாமி யுகே  யுகே -ஸ்ரீ கீதை -4-6- என்றும்
யஜ்ஞ விக் நகரம் ஹன்யாம்-என்றும்
அவருடைய அவதார ரஹஸ்ய சங்கல்பத்தை  அடி ஒற்றினவன் ஆகையாலும்
விச்வாமித்ர பகவான் ஆனவன் தசரத ரத்னாகரத்தைக் கிட்டி ராம ரத்னத்தை அபெஷிக்க
அவனும் வாத்சல்யத்தாலே மதி எல்லாம் உள் கலங்கி -திருவாய் -1-4-3- பெருமாளை உள்ளபடி அறியாதே
ஊந ஷொடச வர்ஷோ மே -பால -20-2- என்று இன்னம் பதினாறு பிராயம் நிரம்பிற்று இல்லை –
பால ஆஷோட சாத் வர்ஷாத் பௌ  கண்டச்சேதி கீர்த்யதே -என்கிறபடியே
அப்ராப்த வ்யவஹாரராகையாலே தனித்து ஒரு கார்யத்துக்கு ஆள் அல்லர்
சதுரங்க பலைர்யுக்தம மயா ஸ சஹிதம் நய-பால -20-10- என்கிறபடியே
முது கண்ணாக என்னையும் கூட்டிப் போ -என்ன
விச்வாமித்ரனும்
இவர் பருவத்தின் சிறுமை கண்டோ நீ வார்த்தை சொல்லுகிறது –
சிருமையுன் வார்த்தையை மாவலி இடைச் சென்று கேள் -பெரியாழ்வார் -1-4-8-என்று முறித்தாய் ஆகில்
வசிஷ்டோபி மஹா தேஜோ யே செமே தபசி ஸ்திதா -பால -19-15-என்று
அறியுமவர்களாய் சந்நிஹிதருமாய் பலருமான இவர்களைக் கேட்க மாட்டாயோ என்று
ஈடேற்றி இசைவிக்க -இவனும் இசைந்து
ஸ புத்ரம் மூர்த ந்யுபாக்ராய ராஜா தசரத ப்ரியம்
ததௌ குசிக புத்ராயா ஸூ ப்ரீதே நாந்த ராதம நா -பால -22-3-என்று
இவனுக்கு இஷ்ட விநியோக அற்ஹமாய்
பிள்ளைகள் இருவரையும் கொடுக்க
அவனும் ராம லஷ்மனர்களைக் கொண்டு போய்க் கர்ம ஞானங்களாலே அவித்யையை நிரசிக்குமா போலே
அவர்களை இடுவித்து தாடகையை நிரசிப்பித்து
அநந்தரம்
அவித்யா சஞ்சிதமாய் புண்ய பாப ரூபமான உபயவித கர்மங்களையும் போலே
தாடக ஜநிதர்களான ஸூ பாஹூ மாரீசர்களையும் அளித்து
அது தன்னில்
உத்தர பூர்வாக யோராச லேஷ விநா சௌ -ஸ்ரீ ப்ரஹ்ம சூத்ரம் -4-1-13-என்னுமா போலே
ஒருத்தனைக் கொன்று ஒருத்தனை அக
ஸ்ரீ யம் இச்சேத ஹூதாச நாத் -ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணம் -என்றும்
ஜாத வேதோ மமாவஹா லஷ்மீம் -ஸ்ரீ ஸூ க்தம்-1- என்று
லஷ்மியைப் பெரும் போது அக்னி புரச்சரமாகப் பெற வேண்டுகையாலே
விச்வாமிதரேண சஹிதோ யஜ்ஞம் த்ரஷ்டும் சமாகத -அயோத்யா -118-44- என்று
ஜனகனுடைய யஜ்ஞ சமயத்திலே சென்று
அக்னி த்ரவ்யங்களைப் பாவித்து
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் -திரு நெடு -13-என்று சொல்லுகிறபடியே
ரௌ த்ரமான வில்லை அழைப்பித்து தேவதாந்திர ஸ்பர்சத்தாலே வண்ட அதினுடைய தோஷம் போம்படி திருக்கையிலே வாங்கி
குணாரோபணம் பண்ணி -நாண் ஏற்றி –
பங்க ஸூ ல்கையான பிராட்டியையும் கைப் பிடித்து மீண்டு வருகிற அளவில்
ராமத்வம் ஈரசு பட்டதோ என்று அதி குபிதனாய் வந்த பரசுராமனைக் கண்டு
புத்திர வத்சலனான சக்ரவர்த்தி சகிதனாய்
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி -யுத்த -18-34- எண்ணக் கடவ பெருமாள் தமக்கு அதி சங்கை பண்ணி
பாலா நாம் மம புத்ராணாம் அபயம் தாதும் அர்ஹசி-பால -75-6- என்று
பேர் வாசிக்கு பிணங்கி வந்தவன் ஆகையாலே பெருமாள் திரு நாமம் சொல்ல அஞ்சி சாதாரணமாக என் பிள்ளைகளுக்கு
அபார பிரதானம் பண்ண வேணும் என்று இரக்க
இவ்வார்த்தையைக் கேட்டு ப்ரவர்க்யம் போலே கிளர்ந்து எரிகிற இவனைக் கண்டு தனிய விடுவோம் என்று பார்த்து
வசிஷ்டாதி ரிஷிகளும்
தம் த்ருஷ்ட்வா பீமா சங்கா சம ஜ்வலந்தம் இவ பாவகம்
ருஷயோ ராம ராமேதி வசோ மதுரம ப்ருவன் -பால -74-21/22-என்கிறபடியே
உன்னை ஒழிய ராமாந்தரம்   உண்டோ என்றுபெருமாளுடைய ராமத்வத்தையும் அவன் தலையிலே இரட்டிக்க மாட்டெறிந்து
நெருப்பிலே நீரைச் சொரிவாரைப் போலே குளிர வார்த்தை சொன்ன இடத்திலும்
அவன் ஜானதக்நி யாகையாலே -ஜமதக்னி புத்திரன் -ஆறாத நெருப்பு -இரண்டு அர்த்தங்கள் -ஆறாமையாலே-
பெருமாளும் இவன் கையிலே இந்தக் காஷ்டம் -கட்டை -வில் குச்சி -விறகு -இரண்டு அர்த்தங்கள் –
இருக்கை யாலே இ றே இவன் எரிகிறது என்று பார்த்து
மேல் எழுந்த ஷத்ர தேஜஸ்ஸோடே -உயரக் கிளம்பின -வந்தேறியான -அத்தை வாங்கி
சஹஜமான ப்ராஹ்மாண்யமே சேஷிக்கும் படி பண்ணி
அஷயம் மது ஹந்தாரம் ஜா நாமி த்வாம் ஸூ ரோத்தமம்
தநுஷோ அஸ்ய பராமர்சாத் ஸ்வ ஸ்திதே அஸ்து பரந்தப-பால -76-17- என்று
அவனும் தன் ஸ்வாபாவிகமான ப்ராஹ்மண்யத்துக்கு ஈடாக ஸ்வஸதி சொல்ல -மங்களா சாசனம் பண்ண
தன்னுடைய வைஷ்ணவமான வில்லை வாங்குகையாலே
பெருமாளுடைய வைபவம் சர்வ லோக சித்தமாம் படி மழு ஏந்திப் -ஆணை இட்டு -மழு ஆயுதம் ஏந்தி -போக
பெருமாளும் -ப்ராஹ்மணோ  சீதி பூஜ்யோ மே -பால -76-6-என்று இவன் ஸ்வ ஸ்தி சொல்லுகையாலே
பிராமணன் என்று அறுதி இட்டு
அறுகும்-தர்ப்பம் -தாளியையும் -கொடியையும் -பறித்து
இவன் காலிலே போகத்துக் கும்பிட்டு
மாரில் நூலே கடகாக விட்டு ரஷித்து
மீண்டு திரு அயோத்யையிலே புக்கு
இச்சரக்கு பெறுகைக்கு பட்ட வருத்தம் அறியுமவர் ஆகையால் இவள் சீர்மையை அறிந்து
ராமஸ்து சீதயா சார்த்தம் விஜஹார பஹூன் ருதூன் -பால -77-26-என்கிறபடியே
பெருமாளும் பிராட்டியும் இனிது அமர்ந்து எழுந்து அருளி இருக்கக் கண்ட ஸ்ரீ பூமிப் பிராட்டி யானவள்
லோக பாலோப மம நாத மகாமயத மேதி நீ -அயோத்யா -1-34/2-48-என்று தானும் நாச்சியாரோபாதி அம்ச பாகிநி யாகையாலும்

யதா து பார்க்கவோ ராமச் ததா  சீத் தரணீ த்வியம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-143-என்று
தனக்கு வகுத்த பரசுராமாவதாரத்தின் உடைய தேஜஸ்ஸூம் இங்கே சங்க்ரமிக்கையாலும்
தன் கூற்றுக்கு ஒக்கப் பெருமாளை ஸ்வயம் வரமாக வரிக்க
ராஜாவும்
இது காந்தர்வமான விவாஹமாக ஒண்ணாது
சமந்தரமாகக் கரக் க்ரஹணம் பண்ணி வைக்க வேணும் -என்று பார்த்து
பௌரஜாநபத மந்த்ரி புரோஹிதர்களைத் திரட்டி மந்தரித்து
மந்திர யித்வா ததச்சக்ரே நிச்ச யஜ்ஞ ஸூ நிச்சயம்
ச்வ ஏவ புஷ்யோ பவிதா ச்வோ அபி ஷிஞ்சாமி நே ஸூ தம்
ராமம் ராஜீவதாம் ராஷம் யௌவராஜ்ய இதி பிரபு -அயோத்யா -4-3–என்கிறபடி
சம்பன்ன நஷத்ரமான பூசத்திலே பெருமாளை அபிஷேகம் பண்ணக் கடவது என்று நிச்சயித்து  பண்ண –
ஸோ அஹம் விச்ரம் இச்சாமி -அயோத்யா -2-10- என்றும்
யௌராஜ்யேன சமயோக்து மைச்சத்-பால -1-21- என்றும்
நாட்டாரோடு ராஜாவோடு பண்ணின ஆசைப்பாடுகள் தாங்கள் பண்ணினது ஆகையாலே -எண்ணின   வாறாக இக்கருமங்கள் -திருவாய் -10-6-3-என்கிற படியே –
அசத்ய சங்கல்பமாய்
ஆவாஹம் த்வஹம் இச்சாமி பிரதிஷ்டம் இஹ  கா நநே -ஆரண்ய -5-34/7-14-என்றும்
தபஸ்வி நாம் ரணே சத்ருன் ஹந்தும் இச்சாமி ராஷசான் -ஆரண்ய -6-25-என்றும்
சத்யா சங்கல்பரானவர் தம்முடைய சங்கல்பமே சங்கல்பமாம் படி
கைகேயி மந்த்ர அந்தர்யாமியாய் நின்று கலக்கி
காட்டிலே எழுந்து அருளி தண்ட காரண்ய வாசிகளான பரம ரிஷிகளைக் காணும் போது
ரிக்த ஹஸ்தேன நோபேயாத் -என்கிறபடியே வெறும் கைக் கொண்டு காணலாகாது என்று பார்த்து
விராத வத புரஸ் சரமாகச் சென்று காண
அவர்களும் மகா ராஜரைப் போலே பெருமாளுடைய வீர்யத்திலே அதி சங்கை பண்ணிப் பரீஷித்துத் தெளிய வேண்டாதபடி விராதவதத்திலே த்ருஷ்ட உதாஹரணர் ஆகையாலே விநீதராய் வந்து
பரி பாலய நோ ராம வதயமா நான் நிசாசரை-ஆரண்ய -6-19-என்று எங்களை ரஷிக்க வேணும் என்று சரணம் புக –
பவதா மாத்த சித்த்யர்த்தமாக தோஹம்யத்ருச்சயா -ஆரண்ய -7-24- என்று ஓம் கொடுத்து
ஜாகாம சாஸ்ரமாம் ஸ்தேஷாம் பர்யாயேண தபஸ்வி நாம் -ஆரண்ய -11-24-என்கிறபடியே
சரபங்க  ஸூ தீஷ்ண அகஸ்த்ய தத் பிராத்ரு பிரமுகரான ரிஷிகள் ஆஸ்ரமத்திலே பர்யாயேண எழுந்து அருளி இருக்கிற
பெருமாள் அகஸ்த்யர் உபதேசத்தாலே கோதாவரீ தீரமான  பஞ்சவடி பரிசரத்திலே பர்ணசாலையும் சமைத்து
ச ராம பர்ணசாலா யாமாஸீநஸ் சஹ சீதயா
விரராஜ மஹாபா ஹூ ச்சித்ரயா சந்த்ரமா இவ –
லஷ்மணேன சஹ ப்ராதரா -ஆரண்ய -17-4-என்று
நாச்சியாரோடும் இளைய பெருமாளோடும்கூட இனிது அமர்ந்து எழுந்து அருளி இருக்கிற அளவிலே
தமதேசம் ராஷசீ காசிதா ஜகாம யத்ருச்சயா -சா து ஸூர்ப்பணகா நாம -ஆரண்ய -17-5-என்று
சூர்பணகை யாய் இருக்கிற ராஷசி யானவள் யாத்ருச்சிக ஸூ க்ருதம் அடியாக வந்து கிட்டி
ப்ராப்த விஷயமாய் இருக்கச் செய்தேயும் கடகனான ஓர் ஆச்சார்யன் அடியாக
விசேஷ ஜ்ஞானம் பிறவாமையாலே
புருஷகாரம் முன்னாக பற்றாத அளவன்றிக்கே அவ்விஷயத்திலே அசஹ்ய அபசாரத்தைப் பண்ணி
ந ஷமாமி  -க்கு இலக்காக
இத யுக்தோ லஷ்மணஸ் தஸ்யா கருத்தோ ராமஸ்ய பசித
உத்த்ருத்ய கட்கம் சிச்சேத கர்ண நாசம் மஹா பல-ஆரண்யம் -18-21- என்றும்
கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காதிரண்டும் ஈரா விடுத்து -சிறிய திருமடல் -39-என்றும்
காதோடு கொடி மூக்கன்று உடன் அறுத்த கைத்தலத்தா -பெரிய திருமொழி -7-4-3- என்றும் சொல்லுகிறபடியே
தஷிண பாஹூ வான இளைய பெருமாளாலே தாம் கை தொடராய் வைரூப்யத்தை விளைப்பிக்க
விரூபணஞ்சாத்மநி சோணி தோஷிதா சசம்ச சர்வம் பகி நீ கரஸ்யசா -ஆரண்ய -18-26- என்று
வார்ந்த மூக்கும் வடிகிற உதிரமுமாய் தன் ப்ராதாவான காரனுக்கு அறிவிக்க அவனும் குபிதனாய்
வ்யக்தமாக்யாஹி கேன த்வமே வம்ரூபா விரூபிதா -ஆரண்ய -19-2-என்று
உன்னை இப்படிச் செய்தவர்கள் யார் என்று தெளியச் சொல் என்று கேட்க
அவர்களை இன்னார் என்று அடையாளம் தெரியச் சொல்லுகிறாள்
தருனௌ-என்று தொடங்கி-
புத்ரௌ தசரதஸ் யாஸ்தாம் ப்ராதரௌ ராம லஷ்மனு-ஆரண்ய -19-15-என்று
இன்னார் மகன் என்றும் இன்ன பேரை யுடையவன் என்றும் சொல்ல ப்ராப்தமாய் இருக்க
தருனௌ ரூபா சம்பன்னௌ-என்று பருவத்தை இட்டுச் சொல்லுவது
வடிவு அழகை இட்டுச் சொல்லுவது என் என்னில்
இவளுக்கு வைரூப்யம் பிறந்தது அத்தனை போக்கி வைராக்கியம் பிறந்தது இல்லைஇ றே-
ஆகையாலே காம மோஹிதா -ஆரண்ய -17-9- என்கிற தன் அபி நிவேசம் வடிவிட்டு ப்ராதாக்கள் முன்னென்று பாராதே தன்னுடைய ஹ்ருதகதத்தைச் சொல்லுகிறாள்
அனுகூலர் ஆகிலுமாம் பிரதிகூலர் ஆகிலுமாம் இவ்விஷயத்தில் அகப்பட்டவர்களுக்கு பணி இ றே இது –
யானி ராமஸ்ய சிஹ் நாநி -சுந்தர -35-3- என்று அடையாளம் தெரியச் சொல் -என்று பிராட்டி திருவடியைக் கேட்க
த்ரிஸ்  ஸ்திரஸ் த்ரிப்ரலமபச்ச -சுந்தர -35-27- என்று சொல்லுவதற்கு முன்னே
ராம கமல பத்ராஷ சர்வ சத்வ மநோ ஹர -சுந்தர -35-8-என்று சொன்னான் இ றே –
இவை தனக்கு பிரயோஜக ரூப நாமங்கள் சொல்ல வென்றும் உண்டு இ றே
அதிலே ரூபாணி விசிதய தீர நாமா நி க்ருத்வா -புருஷ ஸூக்தம் -என்கிற கிராமத்திலே பிரதமபாவியான ரூபத்தை முற்படச் சொல்லுகிறாள் ஆகவுமாம்
அன்றியிலே
ஸூ ப்த ப்ரமத்த குபிதா நாம பாவ ஜ்ஞானம் த்ருஷ்டம் -என்று குபிதை யாகையாலே ஹ்ருத்கதார்த்தத்தை
அவசமாக தன்னையும் அறியாமல் வெளியிடுகிறாள் ஆகவுமாம்
இதிலே -ராமமிந்தீ வரச்யாமம கந்தர்ப்ப சத்ரு சப்ரபம்
ப்பூ வேந்த்ரோபமம் த்ருஷ்ட்வா ராஷசீ காம மோஹிதா -என்கிறபடியே
தான் அவரைக் கண்டு காமுகையாவதற்கு அடியாய் இருப்பதொரு ஆகர்ஷகமான ஆகாரமும்
தன் பரிபவத்தால் உண்டான கோபாதி சயத்தாலே
தயோஸ் தச்யாச்ச ருதிரம் பிபேயமஹம்-ஆரண்யம் -19-20-என்றும் சொல்லுகிறவள் ஆகையாலே
கோயமேவம் மஹா வீர்ய -ஆரண்ய -19-6-என்று இவர்களை அளவிட மாட்டாதே அருகிருக்கிற ப்ராதாவான கரனுக்கு
பலமூலா ஸி நௌ தாந்தௌ தாபசௌ தர்ம சாரினௌ-ஆரண்ய -19-15-என்று
அவர்கள் எளிமை சொல்லுகிறதோர் ஆகாரமும்
ராமஸ்ய ச மஹத் கர்ம மஹாம் சதரா ஸோ அபவந்மம-ஆரண்ய -21-10-என்று இவர்களுக்கு
அஞ்சினவள் ஆகையாலும் அவன் நெஞ்சில் எரிச்சல் பிறக்கைக்காகவும்
புத்த்யாஹ  மநு பச்யாமி ந த்வம ராமஸ்ய சமப்ரதி
ஸ்தாதும் பரதிமுகே   சக்தஸ் சசாபசைய மஹா ரணே -ஆரண்ய -21-16-என்று
கையும் வில்லுமாய் அவ்வாண் பிள்ளை புறப்பட்டால் நீயோ அவர் முன்னே நிற்கிறாய் என்று
அவர்களுடைய ஆண்மை சொல்லுவது ஆகாரமும்
ஆக ஆகாரத்ரயமும் விவஷிதம் –

வியாக்யானம் –
அதில் முற்பட ஆகர்ஷக ஆகாரத்தில் யோஜனை இருக்கிறபடி –
தருனௌ ரூப சம்பன்னௌ ஸூ குமாரௌ மஹா பலௌ
புண்டரீக விசாலா ஷௌ சீரச்ருஷிணாஜிநாம்பரௌ-
அவர்களுடைய
பருவம் இருக்கிறபடியும்
வடிவு அழகு இருக்கிறபடியும்
செயலிருக்கிறபடியும்
மிடுக்கு இருக்கிறபடியும்
கண் அழகு இருக்கிற படியும்
ஒப்பனை அழகு இருக்கிறபடியும்
அவர்கள் இருவருக்கும் உண்டு இத்தனை போக்கி -வேறு ஒருவருக்கும் இல்லை கான் -என்கிறாள் –
என்னை இது விளைத்த ஈரிடண்டு மால் வரைத் தோள் மன்னன் -பெரிய திரு மடல் -என்று
என்னை அகப்பட இப்படி யாக்கிற்று அந்த குண சமுதாயம் அன்றோ –
1-தருனௌ –
யுவா குமார -ருக் -2-8-25-என்றும்
ய பூர்வ்யாய வேதசே நவீயசே ஸூ மஜ்ஜா நயே விஷ்ணவே ததாசதி யவீயசே -யஜூ ஆ -2-4-3-29-என்றும்
அரும்பினை அலரை-பெரிய திருமொழி -7-10-1-என்றும்
வேத சித்தமான அர்த்தத்தை இவளொரு ராஷசி கையாட்சியாகச் சொல்ல்லுகிறாள் இ றே-
இது தான் ராஷசிகளுக்கு பணியாய்இருந்தது இ றே –
வ்யகதமேஷ மஹா யோகீ பரமாத்மா சநாதன
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர -யுத்த -114-14-என்றாள் இ றே  மண்டோதரியும்
2-தருனௌ –
முக்தரானவர்களோடு பத்தரானவர்களோடு தசரத  வாமதேவாதிகளோடு வாசி அற
கரியான் ஒரு காளை–பெரிய திருமொழி -3-7-1-என்றும்
கோவிந்தன் என்பானோர் காளை புகுதக் கனாக் கண்டேன் -நாச் திரு -6-2-என்றும்
பிரணயிநிகளை அகப்படுத்திக் கொள்ளுவது பருவத்தை இட்டே இ றே
அப்பருவத்தில் ஆயிற்று இவளும் ஈடுபட்டது
3-தருனௌ –
இவள் பத்த பாவை யாயிற்று பெருமாள் பக்கலிலே யாகில் வைரூப்யம் விளைந்தது இளைய பெருமாள் பக்கலிலே யாகில்
இரண்டு பஷத்திலும் ஒருத்தரே அமைந்திருக்க த்வி வசனமாக சொல்லுவான் என் என்னில்
அந்யோந்ய சதருசௌ வீரௌ-கிஷ்கிந்தா -3-12- என்று அழகுக்கும் ஆண் பிள்ளைத் தனத்துக்கும் ஒருவருக்கு ஒருவர் குறையாமையாலும்
க்ருததா ரோஸ்மிபவதி பார்யேயம் தயிதா மம-ஆரண்ய -18-2-என்றும்
ஸ்ரீ மா நக்ருத தாரச்ச லஷ்மணோ நாம வீர்ய வான்
அபூர்வ பார்யா ப்ரார்த்தீ ச தருண பிரிய தர்சன
ஏனம் பஜ விசாலாஷி பாத்தாரம-என்றும்
நான் க்ருத விவாஹனுமாய் ஸ்நிகத பார்யனுமாகையாலே உனக்கு யோக்யன் அல்லன்
இவன் அக்ருத விவாஹனுமாய் விவாஹம் பண வேணும் என்கிற ஆசையை யுடையனுமாய் இருக்கிறான்
ஆனபின்பு இவனை பர்த்தாவாக வரி -என்று பெருமாள் திரு உள்ளமாக
அவ்வழியாலே இளைய பெருமாள் பக்கலிலே இவள் பத்த பாவையாக
கதம் தாஸ ஸய மே தாஸீ பார்யா பவிது மர்ஹசி
ஆர்யச்ய த்வம் விசாலாஷி பார்யா பவ யவீ யஸீ-என்று
அவர் அடிமையான எனக்கு ஸ்திரீ யானால் நீயும் அடிமையாவாய் இத்தனை
அது ந நமேயம் து கஸ்ய சித் -வணங்கல் இலி வரக்கரான உங்களுக்கு சேராது
நாச்சியாராக வாழலாம் படி அவர் தமக்கு இளைய நங்கையாராகப் பாராய்  -என்று இளைய பெருமாள் சொல்ல பெருமாள் பக்கலிலும் துவக்குண்டு இப்படி பத்த பாவை யாகையாலும்
வைரூப்ய கரணத்திலும் -விரூபயிதும் அர்ஹசி-ஆரண்ய -18-20-என்று பிரயோஜன கர்த்தாவாயும்
உத்தருத்ய கட்கம் சிச்சேத கர்ண நாசம மஹா பல-ஆரண்ய -18-21-என்று
இருவரையும் கூட்டாகச் சொல்லுகிறாள் ஆகையாலும்
இங்கு இருவரையும் ஒக்கச் சொல்லுகிறாள்
4-தருனௌ-
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்  -என்னுமா போலே ஒருவர் இருவராய் வந்து அன்றோ என்னை ஈடழித்தது-
5- தருனௌ –
தம்பி தமயனானால் பர்வத்திலேயும் சிறிது வேறுபாடு காணலாம் இ றே
அப்படி அன்றியிலே ஒரு படியாய்க் காண்இருக்கிறது
புனர்பூசம் பூசமாய் பின்னாளும் முன்னாளும் ஆனால் அத்தனை வாசி தெரியாது இ றே –

இப்படி பருவத்தை யிட்டு மயக்கும் இத்தனையாய் வடிவு தன்னைப் பார்த்தால் போலியாய் இருக்குமோ என்னில்
1- ரூப சம்பன்னௌ-
ரூபத்தைப் பார்த்தால் அழகு வேண்டி இருப்பார்க்கு அவர்கள் பக்கலிலே இரந்து கொண்டு போக வேண்டும்படியாய்க் காண் கூடு பூரித்துக் கிடந்தபடி
2- ரூப சம்பன்னௌ –
காமனார் தாதை -பெரிய திருமொழி -1-1-3-என்று அந்த காமன் அகப்பட
அங்கா தங்காத் சம்பவசி -மந்திர பிரச்னம் -2-11-33-என்று இவர் திரு மேனியில்
ஏக தேசத்தில் உத்பன்னன் ஆகையால் அன்றோ  அவ் வழகு தான் யுண்டாயிற்று
3- ரூப சம்பன்னௌ –
உத்பன்னம் த்ரவ்யம் ஷணம்நிர்க்குணம் திஷ்டதி -என்கிறபடியே முற்பட ஆஸ்ரயம் யுண்டாய் -அதிலே குணங்கள் யுண்டாகை அன்றிக்கே
ரூப தாஷிண்ய சம்பன்ன ப்ர ஸூதா -சுந்தர -35-8-என்கிறபடியே
ரூபத தாஸ்ரயங்கள் சஹ உத்பன்னங்களாய் காண் அவர்கள் பக்கல் இருக்கிறது –
4-ரூப சம்பன்னௌ-
வடிவுடை வானோர் தலைவனே -திருவாய் -7-2-10- என்றும்
அச்சோ ஒருவர் அழகிய வா -பெரிய திருமொழி -பெரிய திருமொழி -9-2-என்றும்
என் முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாய்  -பெரிய திருமொழி -3-6-9-
காரார் திருமேனி கண்டதுவே காரணமா பேராப் பிதற்றாத் திரி தருவான் -சிறிய திருமடல் -என்றும்
ராமேதி ராமேதி சதைவ புத்த்யா விசிந்த்யா வாசா ப்ருவதீ -சுந்தர -32-11-என்று
பெண் பிறந்தாரைப் பிச்சேற்றி வாய் வெருவப் பண்ணும் வடிவு காண் அவரது
இவர்கள் இருவருடையவும் வடிவு அழகிலே காண் நான் உழலுகிறது –

இவ் வழகேயாய்-அணைத்துப் பார்த்தால்  உறைத்து இருக்குமோ என்னில்
1- ஸூ குமாரௌ
முரட்டு ராஷசரான உங்களைப் போலே அன்று காண்-அவர்கள் மார்த்வம் இருக்கிறபடி –
பூவிலே அணைந்தால் போலே காண் இருப்பது –
திருஷ்டாந்தம் சொல்லுமவர்களும்
அதஸீ புஷ்ப சங்கா சம -பாரதம்-சாந்தி -46-118- என்றும்
ராமம் இந்தீவரச் யாமம் -ஆரண்யம் -17-9-என்றும்
பூவைப் பூ வண்ணா -என்றும்
காயம் பூ வண்ணா -என்றும் புஷ்பத்தை இட்டு இ ரே சொல்லிற்று
2- ஸூ குமாரௌ –
வடிவு இணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -திருவாய் -9-2-10-என்று பூவில் பரிமளத்தையும்
மண்ணில் பரிமளத்தையும் உபாதாநமாக யுடைய பிராட்டிமாரும் அகப்பட அணைக்கை அன்றிக்கே
அடுத்து அடுத்து பார்க்கவும் போராத -பொறாத -படியாய்க் காண் அவர்கள் மார்த்த்வம் இருக்கும் படி –
3- ஸூ குமாரௌ –
நடந்த கால்கள் நொந்தவோ -திருச் சந்த -61- என்றும்
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ அன்றேல் இப்படிதான் நீண்டு தாவிய அசைவோ -என்றும்
தாளால் உலகம் அளந்த அசைவே கொல்-என்றும்
ஸ்வா பாவிகமான வியாபாரமாகப் படத் திரு மேனிக்குப் பொறாது என்று அனுகூலர் வயிறு பிடிக்கும் படியாய்க் காண அவர்கள் மார்த்த்வம் இருக்கும் படி –
4- ஸூ குமாரௌ –
திவ்யனான காமன் ஒருவன் இ றே
இவர்கள் பௌ மராய் இருப்பார் இரண்டு காமராய்க் காண தோற்றுகிறது-
5- ரூப சம்பன்னௌ ஸூ குமாரௌ –
அவன் அனங்க னாய் இ றே இருப்பது
கந்தர்ப்ப இவ மூர்த்தி மான் -சுந்தர -34-30- என்கிறபடியே
ரூபவான்களாய் காண இந்தக் காமர்கள் இருப்பது
ராம மன்மத சரேண தாடிதா துஸ் ஸ்ஹேந ஹ்ருதயே நிசாசரீ-ரகுவம்சம் -11-20-என்று
காமனாகவே பரிக்ரஹித்துச் சொன்னான் இ றே –

இப்படி எழிலும் அழகுமாய் தூரத்திலே அகப்படுத்தும் அளவேயாய்-கிட்டி அனுபவிக்கப் பார்த்தால்
உடல் கொடுக்க -ஆடல் கொடுக்க-சம்ச்லேஷிக்க – மாட்டாத துர்ப்பலராயோ இருப்பது -என்னில்
1-மஹா பலௌ-
வையாத்யத்தில் வந்தால் தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7–என்றும்
வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளை-பெரிய திருமொழி -8-3-1-என்றும்
பெண் பிறந்தோர் தோற்று எழுதிக் கொடுக்கும் படியாய்க் காண் இருப்பது
2- மஹா பலௌ-
ராமஸ்து சீதயா சார்த்தம் விஜஹார பஹூன் ருதூன் -பால -77-26- என்றும்
மைந்தனை மலராள் மணவாளனை -திருவாய் -1-10-4- என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ருங்கா ரத்தில்   வந்தால் அநேக ருதுக்களை ஒருபடிப்பட நடத்தா நின்றாலும்
எதிர்த்தலை அப்ரதானமாம் படி  காண் அவர்கள் பிராபல்யம் இருக்கும் படி –
அன்றிக்கே
3- மஹா பலௌ –
காதல் கடல் புரையவிளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் தோழி கடியனே -திருவாய் -5-3-4-என்கிறபடி
பருவத்தையும் வடிவு அழகையும் செவ்வியையும் இட்டுப்
பிறரை படுகுலைப் படுத்தித் துடிக்கும் படி பண்ணி பின்னை அவர்கள் நினைவில் ஓரடியும்
புகுராத படியாய்க் காண் அவர்கள் அத்யவசாய பிராபல்யம் இருக்கும் படி என்னவுமாம் –

ஆக இப்படி சமுதாய சோபையிலும்-அவயவ சோபை மட்டமாய் இருக்குமோ என்னில் –
1- புண்டரீக விசாலாஷௌ-
அது கண் அழகைத் தப்பினால் அன்றோ வேறொரு அவயவத்தில் இழிய ஓட்டுவது –
2- புண்டரீக விசாலாஷௌ-
அவை -யௌவனம் -வடிவழகு -மென்மை-பலம் – எல்லாம் கிட்டினால் அழிக்குமவை-
இனி இது அங்கன் அன்றிக்கே தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி -திருவாய் -9-9-9-என்றும்
தாமரைக் கண்கள் கொண்டீர்தியாலோ -திருவாய் -10-3-1-என்றும்
தூரத்திலே தோற்றின போதே அழிக்கும் படியாய்க் காண் கண்கள் இருப்பது
3-  புண்டரீக விசாலாஷௌ-
புண்டரீகம் சிதாம்போஜம் -அமர -1-10-41- இ ரே
சம்ரக்த நய நா கோரா -ஆரண்ய -20-12- என்று உங்களைப் போலே எரி விழியாய் இருக்கை அன்றிக்கே
ஸூ பிரசன்னத வளமான அக்கண்கள் இருந்தபடி காண்
4-  புண்டரீக விசாலாஷௌ-
ரஷண உபயோகியான கரு விழியும் செவ்விழியும் கண் பரப்பும் –
தமோ குண உத்ரேகத்தால் நித்ராகஷாயிதம் ஆதல்
ரஜோ குண உத்ரேகத்தாலே கோப சம்ரக்தமாதல் அன்றிக்கே
சத்வ பிரசுரர் ஆகையாலே அவர்களுடைய த்ருஷ்டி பிரசாதமும் இருந்த படி காண் –
5-புண்டரீக விசாலாஷௌ-
அவர் தாம் ஆத்மானம் மானுஷம் மன்யே -யுத்தம் -120-11-என்று தம்மை மறந்தார் ஆகிலும்
யதா கப்யாசம் புண்டரீகமேவ மஷி ணீ-சாந்தோக்யம் -1-7- என்கிறபடியே
அகவாயில் கிடந்த பரத்வத்தைக் கோட் சொல்லித் தாரா நின்றது ஆய்த்தும் கண்கள் தான் –
6-புண்டரீக விசாலாஷௌ-
பாற் கடல் போலே அக்கண்களுக்கு உள்ள அகலம் ஒருவரால் கரை காண ஒண்ணாத படியாய்க் காண் கண்கள் இருப்பது –
7-புண்டரீக விசாலாஷௌ-
கண்ணில் யுண்டான தெளிவுக்கு புண்டரீகத்தை ஒரு போலி சொன்னோம் இத்தனை போக்கி
அகலத்தைப் பார்த்தால் கடலில் புக்கார் கரை காண மாட்டாதே மயங்குமா போலே
புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட வப் பெரிய வாய கண்கள் -என்னும் இத்தனை போக்கி வேறொரு பாசுரம் இட ஒண்ணாது காண் –
8-புண்டரீக விசாலாஷௌ-
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி -7-1-9- என்றும்
தடம் கொள் தாமரைக் கண் விழித்து–இடம் கொள் மூவுலகும் தொழ இருந்து அருளாய் -திருவாய் -9-2-3- என்றும் சொல்லுகிறபடியே
பத்த முக்த நித்யாத்மகமாய்
த்ரிவித கோடியானஉபய விபூதியும் ஏக உத்தியோகத்திலே கடாஷிக்க வற்றாய் காண் கண்கள் இருப்பது
9-மஹா பலௌ புண்டரீக விசாலாஷௌ-
பலத்தைக் காட்டி அவர்களைத் தோற்பித்து-அவர்களை ஜிதந்தே புண்டரீகாஷா -ஜிதந்தே -1-1-என்றும்
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் கலைமகனை -திருவாய் -2-7-3-என்றும்
எழுதிக் கொள்வது கண் அழகை இட்டு இ றே-
10- மஹா பலௌ புண்டரீக விசாலாஷௌ-
அவர்கள் அளவிலே ஈடுபட்டவர்கள் நேராகக் கை வாங்க மாட்டாதே
அவலோக நாதா நேந பூயோ மாம் பாலய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-16- என்றும்
தாமரைக் கண்களால் நோக்காய் -திருவாய் -9-2-1-என்றும்
தெரிய நசை பண்ணிக் கால் கட்டும்படி பண்ணுவது இக்கண் களில் தண்ணளி காண் –
11- புண்டரீக விசாலாஷௌ-
ஸூ குமாரௌ -என்கிற பதத்தாலே காமர்கள் என்று சொல்லிற்று இ றே
ஆனால் புஷ்ப பாண ராக வேணுமே
அப்படிக்குக் கண்டது என் என்னில் -கடைக்கண் என்னும் சிறைக்கோலால் நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையம் தளர்ந்து நைவேனை -நாச் திரு -13-3-என்னும்படி -என்னை நிலை குலைத்த புஷ்ப பாணங்கள் இருக்கிறபடி காண் –

அவ்வவய சோபை மாத்ரத்தாலேயோ அகப்படுத்துவது -என்னில்
1-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
ஒப்பனை அழகாலும் அழிப்பார்கள் காண் அவர்கள் என்கிறாள்
2-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
செவ்வரத்த வுடையாடை அதன் மேல் ஓர் சிவளிக்கைக் கச்சு -பெரிய திரு -8-1-7-என்கிறபடியே
உள்ளுடுப்பது மரவுரி -மேல் சாத்துவது கலைத் தோலுமாயிற்று-இருப்பது
3-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
தாருண்யாதியான  குண சமுதாயத்தை -யௌவனம் -வடிவழகு -மென்மை -பலம் -கண்ணழகு -என்னும்
சமுதாயத்தை பொதிந்த ஒரு கிழிச் சீரை இருந்த படி காண் –
4-தருனௌ-ரூப சம்பன்னௌ-ஸூ குமாரௌ -மஹா பலௌ-புண்டரீக விசாலாஷௌ    சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
கிமவ ஹி மதுராணாம்மண்ட நம நாக்ருதீ நாம் -சாகுந்தலம் -1-19-என்கிறபடியே
வறை முறுகலான  ரிஷிகளும் அகப்பட விக்ருதராம் படி இருக்கக் கடவ
அம்மரவுரியும் தோலும் அவர்கள் வடிவிலே சேர்ந்த படியாலே அழகு பெற்று இருந்தபடி -காண் –
5- சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ
ஏதேனுமாக அங்கே சாத்த அமையும் இ றே -ஆகர்ஷகமாகைக்கு
தாஸாமா விர பூச் சௌரி ஸ்மயமா நமுகாம்புஜ பீதாம் பரதர ச்ரக்வீ சாஷான் மன்மத மன்மத -ஸ்ரீ பாகவதம் -10-32-2- என்கிறபடியே
பீதக வாடை யுடை தாழ விருந்தாவனத்தே கண்டோமே -நாச் திரு -14-5-என்றும்
செய்யவுடையும் திருமுகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு -பெருமாள் திரு -6-7-என்றும்
பெண் பிறந்தார் வாய் புலர்த்தும் படியாய்க் காண் உடை அழகு இருப்பது
6-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை யுடுத்துக் கலத்ததுண்டு -திருப்பல்லாண்டு -9-என்று
ச்வரூபஜ்ஞர்ஆசைப்படுவதும்
பெருமான் அறையில் பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே-நாச் திரு -13-1-என்று
போகபரர் ஆசைப்படுவதும் பரிவட்டத்தை இ றே –
7-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ–
ரூப சம்ஹ நநம் லஷ்மீம் சௌகுமார்யம் ஸூ வேஷதாம் தத்ரு ஸூர் விஸ்மிதாகாரா-ஆரண்ய -1-13- என்று
ஸ்வரூப த்யானபரரான ரிஷிகள் அகப்பட இவிக்ரஹ குணத்திலே உடை குலைப்படா நின்றார்கள்
கன்யா காமயதே ரூபம் -என்றும்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ -பெரிய திரு -8-1-8-என்றும்
உடம்பை உகக்கக் கடவ ஸ்திரீகள் ஆழம் கால் படச் சொல்ல வேணுமோ –

எளிமை சொல்லுகிற யோஜனையில்
1-தருனௌ –
அவர்கள் பக்கலிலே சரக்குண்டாக நினைத்து இருக்க வேண்டா காண்-
ந யுத்த யோக்யதாமச்ய பச்யாமி -பால -20-2-என்கிறபடியே
பூசலுக்கு ஆளாகாதார் சில பாலராய்க் காண் இருப்பது
நானேயோ இது சொன்னேன் –
பாலோ ஹ்யக்ருத வித்யச்ச ந ச வேத்தி பலாபலம்
ந சாஸ்திர பல சம்பன்னோ ந ச யுத்த விசாரத -பால -20-7-என்று பெற்ற தகப்பன் அகப்பட நெஞ்சாறல் பட்டிலனோ –
2- தருனௌ –
யௌவனே விஷயை ஷிணாம்-ரகுவம்சம் -1-8-என்கிறபடியே அந்ய பரராய் திரிகிரவர்களுக்கும் ஒரு பூசல் உண்டோ பொருவது

பாலரான இவ்வளவும் அன்று காண் –
1-ரூப சம்பன்னௌ-
கன்யா காமயதே ரூபம் -ஸூ பாஷிதம் -என்றும்
ரூபேண வநிதா ஜனம் -என்றும் ஸ்திரீகள் அகப்படுகைக்கு
மேனி மினுக்கி திரியும் அத்தனை போக்கி
புருஷர்கள் அகப்ப்படும்படியான ஆண்மை யுடையவர்கள் அல்ல காண்
2- ரூப சம்பன்னௌ –
மூங்கில் பொந்து போலே தொழில் பச்சை இத்தனை போக்கி அகவாயில் உள்ளீடு இல்லை காண் –

அதுக்கடி என் எனில்
1-ஸூ குமாரௌ-
ஸ்ரீ மத் புத்ரர்கள் ஆகையால் செல்வப் பிள்ளைகளாய்க் காண் இருப்பது
2- ஸூ குமாரௌ –
பரஸ்வத ஹதச்யாத்ய மந்த பிராணச்ய பூதலே -ஆரண்ய -22-5-என்கிறபடியே
கடைக் கண் சிவந்து நீ பார்க்கும் பார்வையிலே மாயும்படி இருக்கிறவர்களோ
உன்னுடைய அத்யுக்ரமான ஆயுதங்களைப் பொறுக்கப் புகுகிறார்கள்

வடிவைப் பார்த்தால் திறவியர் அல்லராகிலும்  கார்யத்தில் வந்தால் திறவியராய் இரார்களோ என்னில்
1- மஹா பலௌ-
பல ஹீனர் ஆனவளவே அன்று காண் –
க்ரமாகதமான ராஜ்யத்தை கொடுக்கச் செய்தேயும் அகப்பட ஆள்மாட்டாதே ஒதுங்கி
பெண்டாட்டிக்கு அஞ்சி பொகட்டுப் போரும்படி அந்ய நதா பலராய்க் காண் இருப்பது
அன்றியிலே
2- மஹா பலௌ-
பலவான்கள் தான் ஆனாலும் இவர்கள் இருவரும் இத்தனை போக்கி
இவைகளுக்கு பலமாய் வரப் புகுகிறார்கள் உண்டோ
த்ருஷ்ட்வா தத்ர மயா நாரீதயோர் மத்யே ஸூ மத்யமா -ஆரண்ய -20-17-என்கிறபடியே
கால் கட்டாம் படி குழைச் சரக்கை இருப்பாள் ஒரு பெண்டாட்டியையும் முதுகிலே கொண்டு
திரிகிறவர்களோ பூசல் ஆடப் புகுகிறார்கள் –

பூசலாட மாட்டார்கள் அறிந்தபடி என் என்னில்
1-புண்டரீக விசாலாஷௌ-
விளைவது அறியாமையாலே -இவளுக்கு வைரூப்யம் விளைத்தோம்
மேல் என்னாகப் புகுகிறதோ என்று அவர்கள் வெளுக்க வெளுக்க விழிக்கிறது விழியிலே கண்டேன் காண் –
2- புண்டரீக விசாலாஷௌ-
நீரில் தாமரையை வறளிலே இழுப்பாரைப் போலே தன்ன்லமான நாட்டுக்கு அவர்கள் ஆளித்தனை போக்கி
வேற்று -வெற்று-நிலமான -காட்டுக்கு அவர்கள் ஆளல்லர்
என்னும் இடம் அவர்கள் கண்கள் தானே சொல்லித் தருகிறன காண் –

அவர் தாங்கள் அசக்தர் ஆனால் ஐச்வர்யத்தாலே படை யாண்டு போரத்  தட்டென்-என்று இருக்க வேண்டா –
1-சீர கிருஷ்ணாஜிநாம்பரௌ-
உடுக்கைக்கு ஒரு புடவை அகப்படல் அன்றியிலே காட்டில்
மரத் தோலையும் மான் தோலையும் உடுத்தித் திரிகிறவர்களோ காசு நேர்ந்து படையாளப் புகுகிறார்கள் –
2-சீர கிருஷ்ணாஜிநாம்பரௌ-
உடுக்கிற புடைவை இரண்டும் ஏக ஜாதீயமாகப் பெற்றதோ –
உள்ளுடை ஒன்றும் மேலுடை ஒன்றுமாய் அன்றோ இருக்கிறது –
3-சீர கிருஷ்ணாஜிநாம்பரௌ-
ஸ்தாவரம் ஓன்று கொடுக்க
ஜங்கமம் ஓன்று கொடுக்க
இப்படி பலர் பக்கலாக  இரந்து அன்றோ இது தானும் உடுக்கிறது –

பௌருஷ உபபாதன யோஜனையில்
1- தருனௌ-
ஊந ஷோடஸ வர்ஷ -பால -20-2–எண்ணும்படியான பிள்ளைப் பருவமும் அன்றியிலே
அநேக வர்ஷசாஹஸ்ரோ வ்ருத்தஸ் த்வமஸி பார்த்திவ -அயோத்ய -2-21-என்னும்படி முதிர்ந்த பருவமும் அன்றியிலே
பூசல் என்றால் காட்டு காட்டு என்று வரும்படியான நல்ல பருவம் காண்-
2- தருனௌ –
யௌவநே விஷயை ஷிணாம்-ரக்வம்சம்-1-8-என்றும்
ராஜ்ய காம விஷயா விபேதிரே-என்றும்
பவத் விஷய வாஸிந -என்றும்
விஷய சப்தம் ராஜ்ய வாஸி யாகையாலே
இன்னம் ராஜ்ஜியம் கொள்ள வேணும் என்று மேலே விஜிகீ ஷூ க்களாம் பருவம் காண் –
3- தருனௌ –
இப்பருவம் யுடையார் ஒருவர் அமைந்து இருக்க இருவர் கூடினால் இயலாதது உண்டோ –

இப்பருவமும் யோக்யதையுமாய் வடிவு பார்த்தால் இவர்கள் என்ன பூசல் பொருவது என்னும்படி ஆபாசமாய் இருக்குமோ -என்னில்
1-ரூப சம்பன்னௌ-
சிம்ஹோ ரச்கம் மஹா பாஹூம் -ஆரண்யம் -17-7-என்கிறபடியே
வேறொரு ஆயுதம் வேண்டாதபடி அவர்கள் தோளையும் மார்பையும் கண்ட போதே எதிரிகள் கால்
வாங்கும் படியாய்க் காண் இருப்பது
2- ரூப சம்பன்னௌ –
ரூபம் என்று மதிப்பாய் இப்பருவம் கொண்டு அநுமிக்கை  அன்றிக்கே
கதவா சௌமிதரி  சஹி தோ நா விஜித்ய நிவர்த்ததே -அயோத்யா -2-37-என்றும்
யசச சசைக பா ஜனம்-கிஷ்கிந்தா -15-19- என்றும் சொல்லுகிறபடியே
அயோத்யா பரிசாரம் துடங்கி ஸூ பாகூ மாரீசாதி வதம் பண்ணினத்தாலே
பெ ரு மதிப்பராய் இருக்கிறவர்கள் அல்லவோ -என்றாகவுமாம் –

இப்படி விரோதி வதம் பண்ணும் இடத்தில் வருத்தத்தோடு க்லேசித்தோ பண்ணுவது -என்னில்
1-  ஸூகுமாரௌ-
அவர்கள் ஆண்மைத் தனத்தில் வந்தால் ஒரு வகைக்கு சிறிது சொல்லலாம் இத்தனை போக்கி
வடிவு அழகைப் பார்த்தால் பஹூ முகமாய் பொல்லாதாய் இருக்கை அன்றிக்கே
அத்யந்தம் அபி ரூபமாய்க் காண் இருப்பது -ஸூ -மிகவும் பொருளில்
2- ஸூ குமாரௌ-
அவர்க்களுமாய்ச் சீறிப் புறப்பட்டார்கள் ஆகில் முன்னே வந்த நாலிரண்டு பேரைக் கொன்று விடும் அளவேயோ
கு -சப்தம் பூமியில் உள்ளார் என்னும் பொருளில் –
சதேவ கந்தர்வ மனுஷ்ய பன்னகம் ஜகத் ச சைலம் பரிவர்த்தயாமி -ஆரண்யம் -64-78-என்றும்
சாகர மேகலாம் மஹீம் தஹதி கோபே ந -சுந்தர -36-13-என்றும் பூமியை இருந்ததே குடியாக நசிப்பியார்களோ –

இப்படி நசிப்பிப்பது எது கைம்முதலாக-என்னில்
1- மஹா பலௌ-
தோள் வலியே கைம்முதலாய்க் காண் இருப்பது
2- மஹா பலௌ –
மஹச் சப்தத்தாலே கேவலம் பாஹூ பலமே யன்று
மநோ பலம் யுடையவர்கள் –
கேவலம் மநோ பலமே அன்று
பஹூ பலமும் யுடையவர்கள் -என்று இரண்டையும் நினைத்துச் சொல்லுகிறாள்
3- மஹா பலௌ –
உன்னுடைய சதுரங்க பலமும் அசத் கல்பமாம் படி காண் அவர்கள் பலத்தின் மிகுதி இருக்கும் படி
4-மஹா பலௌ –
நெடும் போது யுத்தம் பண்ணினாலும் ஸ்ரமம் தட்டாத படி பலாதி பலைகள் என்கிற வித்யைகள் உடையராய்க் காண் இருப்பது
விஸ்வாமித்ரர் இடம் பலை அதிபலை என்னும் வித்யைகள் கற்றவர்கள் அன்றோ-

இப்படி ஸ்ராந்தி தட்டாது என்று அறிந்த படி என் என்னில் –
1-புண்டரீக விசாலா ஷௌ-
வேற்று -வெற்று-நிலமான இக்காட்டிலே திரியச் செய்தேயும் தன்னிலத்திலே நின்ற
தாமரைப் போலே அக்கண்ணில் செவ்வி தானே சொல்லா நின்றது காண்
2-புண்டரீக விசாலா ஷௌ–எதிரிகள் என்றால் அவர்கள் பக்கலிலே ஒரு கௌ ரவத்தைப் பண்ணிச் சிறுத்தல் பெருத்தல் செய்கை அன்றிக்கே
அவிக்ருதமாய்க் காண் கண்கள் இருப்பது
3-புண்டரீக விசாலா ஷௌ–
ப்ரீதி விஸ் பாரிதே ஷணம்-என்று எதிரிகளைக் கண்டால் உறாவுகை அன்றிக்கே
மேனாணிப்பாலே ஒரு காலைக்கு ஒரு கால் விஸ்த்ருதங்களாய்க்  காண் கண்கள் இருப்பது –

எதிரிகள் என்றால் இப்படி முகம் மலருகைக்கு அடி என்ன –
பூசலுக்கு என்று கட்டி யுடுத்து
சன்னத்தரானால் அன்றோ அப்படியே இருக்கலாவது
அனவசரத்தில் வந்து தோற்றினார் யுன்டாகில் செய்யுமது என் என்னில்
1- சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
சன்னத் தௌ விசரிஷ்யத -என்கிறபடியே உள்ளுடையும் இறுக்கி
உடும்புக்கீடும் இட்டு சந்னத்தராய்க் காண் அவர்கள் இருப்பது
2-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ–
காட்டிலே சர்வவித சத்வங்களையும் வேட்டையாடித் திரிகிறவர்கள் ஆகையால்
உடைத் தோலும் மரச் சட்டையுமாயக் காண் அவர்கள் இருப்பது –

ஆக இப்படி –
சத்யேன லோகன் ஜயதி தீநான்  தாநேந ராகவ
குரூன் ஸூ ச்ரூஷ்யா வீரோ தநுஷா யுத்தி சாத்ரவான் -அயோத்யா -12-29-என்கிறபடியே
அபலைகளை -அழகாலே அழித்தும்-தருனௌ-ரூப சம்பன்னௌ-ஸூ குமாரௌ-என்பதாலே
அரிகளை பலத்தாலே அழித்தும் -மஹா பலௌ-என்பதாலே
அகதிகளை அருளாலே அழித்தும் -புண்டரீக விசால ஷௌ-என்பதாலே –
தக்கார்க்குத் தக்க கருவிகளை உடையவராய்க் காண் அவர்கள்  இருப்பது –
ஆனபின்பு –
வல்லாளன் தோளும் வாளரக்கன்  முடியும் தனை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் -பெரியாழ்வார் -4-2-2- என்கிறபடியே
நான் மூக்கு அறுப்புண்டு போமித்தனை போக்கி
அவர்களோடு புக்கால் பலியாது காண் என்று பரிபவித்துச் சொல்லுகிறாள் -கரனை அவமதித்துச் சொல்லுகிறாள் –

———-

தருணௌ ரூபஸம்பந்நௌ ஸுகுமாரௌ மஹாப3லௌ|

புண்ட3ரீக விஶாலாக்ஷௌ சீரக்ருஷ்ணாஜிநாம்ப3ரௌ ||

பொழிப்புரை:
[காதும் மூக்கும் அறுபட்டு தன் தமையனார்களிடம் சென்று முறையிடும் சூர்ப்பணகா என்னும் அரக்கியின் வாக்காக அமைகிறது இந்த ஶ்லோகம்].
வாலிபர்களாய், அழகு நிறைந்தவர்களாய், மிகவும் மிருதுவான தன்மையை உடையவர்களாய்,
பெரிய பலத்தை உடையவராய், தாமரை போன்ற மலர்ந்த கண்களை உடையவராய்,
மரவுரியையும், மான்தோலையும் உடுப்பாக உடையவர்களாய் [ராம லக்ஷ்மணர்களைக் காண்கிறேன்.]

தருணௌ:
அவர்களுடைய பருவமிருக்கிறபடியும், வடிவழகு இருக்கிறபடியும், செயலிருக்கிறபடியும், மிடுக்கிறபடியும்,
கண்ணழகு இருக்கிறபடியும், ஒப்பனை இருக்கிறபடியும் கண்டு அவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை கண்டு சொல்வதாக அமையப் பெற்றது.
இந்த உருவமைப்பும் இளமையும் வேறொருவருக்கும் இல்லை காண்.
‘என்னை இது விளைத்த ஈரிண்டு மால் வரைத் தோள் மன்னன்’ [பெரிய திருமடல்] என்று
என்னை இப்படி காதல் வயப்படும் செய்திட்டது இந்த குணஸமுதாயமன்றோ!
வேதங்களில் சொல்லப்பட்ட ‘யுவாகுமார:’ என்றும்,
‘அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை’ [பெரி.திருமொழி 7-10-1] என்றும்
அரக்கியான இவள் சொல்லுவதே!
மற்றுமொரு அரக்கியான மண்டோதரியும் ‘ இந்த ராமன் பெருந்தவத்தை உடையவராயும், மூலப்ரகிருதியைக் காட்டிலும் மேம்பட்டவராயும்,
சங்க சக்கரங்களைத் தரிப்பவராயும் காண்கிறேன்’ என்றாளிரே! [யுத்.கா.111-14].
‘கரியானொரு காளை’ [பெரிய திரு.3-7-1] என்றும்,
‘கோவிந்தனென்பானோர் காளை புகுதக் கனாக் கண்டேன்’ [நாச்.திரு.6-2] என்றும்
முக்தரையும், பக்தரையும் எம்பெருமான் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது தன் பருவத்தைக் காட்டி யன்றோ!

மேற்சொன்ன பருவத்தில் ஈடுபட்ட இவள், ராமனிடத்திலே முதலில் ஈடுபட்டாளாகையால்,
அவனை மட்டும் ஒருமையில் சொல்லாமல் இருவரையும் சேர்த்து இருமையில்  சொல்வானென்? என்பதற்கு
ஒரு ரஸமான வியாக்கியானத்தை அருளிச் செய்கிறார் பெரியவாச்சான்பிள்ளை.
அழகுக்கும் ஆண் பிள்ளைத் தனத்துக்கும் ஒருவர்க்கொருவர் குறையாதவர்கள்
ஆகையாலும், ‘நான் திருமணமானவன்; இவள் மனத்துக்கினிய மனைவியாவாள்’
[க்ருத தா3ரோஸ்மி,  ப4வதி பா4ர்யேயம் த3யிதா மம; ஆர.கா.18-2] என்று சொல்லி மறுத்து,
அவளை லக்ஷ்மணனிடம் அனுப்பிவைக்க அந்த அரக்கியும் இளையபெருமாளிடம் ஈடுபட்டாள்.
ஆனால், அவனோ, ‘என்னை நெருங்காதே! நானோ என் தமையனாருக்கும் தாயான ஸீதாபிராட்டிக்கும்  அடிமைத் தொழில் புரிபவன்;
என்னை மணந்து நீயும் அடிமையாக ஆவாயோ? நீயோ ராணியாகத் தகுந்தவள்.
எனவே தமையனாரிடமே மீண்டும் செல்’ என்று சொல்ல அவள் ராமனிடம் மீண்டும் ஈடுபட்டாள்.
ஆக இப்படி இருவரிடமும் ஈடுபட்டதால் அவர்களை இருமையில் சொன்னாள் என்று கொள்ளலாம்.
மேலும், ராமன் லக்ஷ்மணனைப் பார்த்து, ‘லக்ஷ்மணா, இவளை அங்கபங்கம் செய்வாயாக
’ [விரூபயிதுமர்ஹஸி; ஆர.கா 18-20] என்று ராமன் கார்யம் செய்விப்பனாகவும்,
உடனே ‘பலவானான லக்ஷ்மணன் கத்தியை உருவிக் காதையும் மூக்கையும் அறுத்தான்’
[உத்3த்4ருத்ய க2ட்க3ம் சிச்சே2த3 கர்ணநாஸம் மஹாப3ல: ஆர.கா 18-21] என்று கார்யம் செய்து முடிப்பவனாகவும்,
ஆக இப்படி இருக்கையாலே, ‘அந்தப் பெண்ணிற்காக அவ்விருவராலும் நான் இந்த நிலையை அடைவிக்கப்பட்டேன்’
[தாப்4யாமுபா4ப்4யாம் ஸம்பூ4ய ப்ரதமதா3மதி4க்ருத்ய தாம், இமாமவஸ்தா2ம் நீதாஹம்; ஆர.கா. 19-18] என்று
இருவரையும் கூடச் சொல்லுகிறவளாகையாலே, இருமையிற் சொல்லுகிறாள் என்று கொள்ளலாம்.
‘இருவராய் வந்தார்; என் முன்னே நின்றார் [திருநெடு.21] என்னுமாப்போலே
ஒருவரே இரண்டுருக் கொண்டு வந்ததுபோல் வந்தன்றோ என்னை ஈடழித்தது!
தம்பி தமையனிடம் சிறிதேனும் வயது வேறுபாடு காணலாமென்னிலோ,
இவர்கள் அடுத்தடுத்த நாளில் பிறந்தவரன்றோ, எங்ஙனம் வேறுபாடு காண்பது? பருவத்திலேயும் சரி நிகர் ஸமானமானவரன்றோ!

ரூபஸம்பந்நௌ:
இவர்களது இளமை கண்டு மயங்காது, வடிவு தன்னை நோக்கினால், அழகு வேண்டியிருப்பார் இவர்களிடம் வந்து
யாசித்துப் பெற்றுப் போகலாம்படி இருக்கும் அழகு தான் என்னே!
‘காமனார் தாதை’ [பெரிய திருமொழி 1-1-3] என்கின்ற அந்த மன்மதனும் இவனுடைய ஒரு பகுதி அழகைப் பெற்றல்லவோ மன்மதனாகிறான்!
ராமன் ‘ரூபதாக்ஷிண்யங்களோடே பிறந்தவர்’ [ரூப தாக்ஷிண்யஸம்பந்ந: ப்ரஸூத:, ஸுந்.கா. 35-9].
மேலும், ‘வடிவுடை வானோர் தலைவனே’ [திருவாய். 7-2-9] என்றபடியும்,
‘அச்சோ ஒருவர் அழகியவா’ [பெரிய திருமொழி 9-2] என்றபடியும்,
‘என்முலையாள ஒருநாள் உன் அகலத்தால்  ஆளாய்’ [பெரிய திருமொழி 3-6-9] என்றபடியும்,
‘காரார் திருமேனி கண்டதுவே காரணமா பேராப் பிதற்றா திரிதருவன்’ [சிறிய திருமடல்] என்றபடியும்,
‘எப்பொழுதும் ராம,ராம என்றே மனப்பூர்வமாய் ஸ்மரித்து, வாயினாலும் அவரையே கூறுகிறவள்’
[ராமேதி ராமேதி ஸதை3வ பு3த்3த்4யா விசிந்த்ய  வாசா ப்3ருவதி தமேவ; ஸுந்.கா 32-11] என்றபடியும்
பெண் பிறந்தாரைப் பிச்சேற்றி வாய் வெருவப் பண்ணும் வடிவன்றோ அவரது வடிவம்! அவர் தம்பியன்றோ மற்றவர்?
இவர்கள் இருவரின் வடிவழகிலே தான் நான் உழலுகிறது என்கிறாள் ஸூர்ப்பணகை.

ஸுகுமாரௌ:
‘உருவுடையார்’ என்று சொல்லப்பட்ட அழகு மட்டுமில்லாமல், அணைப்பதற்கும் மென்மையாய் இருப்பவர்கள்.
உங்களைப்போலே காடின்யமுடையவரல்லர் காண்; அவர்களுடைய மென்மையிருக்கிறபடியைப் பார்த்தால், பூவிலே அணைந்தாற்போலன்றோ இருப்பது!
பரமபுருஷனின் திருமேனிக்குத் த்ருஷ்டாந்தம் சொல்லும் போது காயாம்பூவை அன்றோ சொல்வது உண்டு.
‘அதஸீபுஷ்ப ஸங்காஶம்’ என்றும்,
‘பூவைப்பூவண்ணா’ என்றும்
‘காயாம்பூவண்ணா’ என்றும் புஷ்பத்தை ஒப்பாகக் காட்டியே சொல்லிற்று.
‘வடிவிணை யில்லா மலர்மகள், மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி’ [திருவாய் 9-2-10] என்று
பூவில் பரிமளத்தையும், மண்ணில் பரிமளத்தையும் உபாதாநமாகவுடைய பிராட்டிமாரும் அகப்பட அணைக்கையன்றிக்கே,
அடுத்தடுத்துப் பார்க்கவும் பொறாதபடியாய் அவர்கள் மென்மை இருந்தபடி.
‘நடந்த கால்கள் நொந்தவோ’ [திருச்சந்த-61 ] என்றும்,
‘அடியார்  அல்லல் தவிர்ந்த அசைவோ, அன்றேல் இப்படிதான் நீண்டு தாவிய அசைவோ?’ என்றும் [திருவாய் 8-3-5],
‘அன்று இவ்வுலகமளந்த அசைவே கொல்’ என்றும் [மூ.திரு.34]
இயற்கையாய் திருமேனிக்கு ஒவ்வாது என்று ஆஶ்ரிதர்கள் வயிறு நோவும்படி மென்மையுடைய திருமேனி என்றபடி.

மஹாபலௌ:
இப்படி இளமையினால் வடிவும் அழகும் ஒன்று சேர தூரத்திலே நின்று பார்ப்பவர்களை மட்டும்
ஈடுபடுத்துவதாய் மட்டுமின்றி வலிமிக்கதோர் தேஹம் பொருந்தியவராயும் காண்கிறாள்.
‘தோற்றோம் மடநெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு’ என்றும் [திருவாய் 2-1-7],
‘வரையெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என்வரிவளை’ என்றும் [பெரிய திரு 8-3-1]
பெண்பிறந்தார் தோற்றுப்போய் எழுதிக்கொடுக்கும்படியாய் அன்றோ இருப்பது!
‘ஸீதாபிராட்டியோடு இராமபிரான் பல வருஷங்கள் இன்புற்றார்’ என்றும்
[ராமஸ்து ஸீதயா ஸார்த4ம் விஜஹார ப3ஹூன் ருதூன், ரா. ஆர.கா.  ]
‘மைந்தனை மலராள் மணவாளனை’ என்றும் [திருவாய் 1-10-4]
‘மைந்தனை’-வலிமிக்கவனை என்றும் சொல்லுகிறபடியே  சிருங்கார ரஸம் அநுபவித்தாலும்,
நாயகியானவள் அப்ரதா4நையாம்படி [ஸஹயுக்தே ப்ரதா4நே என்னும் பாணினி ஸூத்ரத்தின்படியும்],
தான் ப்ரதா4நராகவன்றோ இருப்பது!
‘காதல் கடல்புரைய விளைவித்த காரமர்மேனி நங்கண்ணன் தோழி, கொடியனே’ என்கிறபடியே [திருவாய்: 5-3-4]
யௌவனப் பருவத்தையும், வடிவழகையும், மென்மையையும்  காட்டி, வெட்டுண்ட வாழைக் குலை போலே விழுந்து துடிக்கும்படி பண்ணி,
அதற்குப்பின் அவருடைய நினைவுக்கும் எட்டாதவராம்படியான பெரிய மனோ பலத்தைக் [மஹாபலௌ] கொண்டவர்கள் என்றும் கொள்ளலாம்.

புண்டரீக விஶாலாக்ஷௌ:
ஸமுதாய ஶோபை இவ்வாறிருக்க, அவயவ ஶோபையில் ஏதேனும் குறையிருக்குமோ வென்னில்,
‘தாமரைத் தடங்கண்ணர்’ என்றபடி அவன் கண்ணழகைத் தப்பினாலன்றோ வேறொரு அவயவத்தில் ஈடுபடுவது?
யௌவனம், வடிவழகு, மென்மை, பலம் இவையெல்லாம் அணுகினால் அழியக் கூடியவை.
இக் கண்ணழகோ வென்னில் அப்படி யல்லாமல், ‘தூதுசெய் கண்கள் கொண்டு ஒன்று பேசி’ என்றும் [திருவாய் 9-9-9]
‘தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ’ என்றும் [திருவாய் 10-3-1]
தூரத்திலே தோன்றிய போதே அழிக்கும்படி யன்றோ கண்களிருப்பது!
‘ஸம்ரக்தநயநா: கோரா:’ [ஆர.கா.20-12] என்று உங்களைப்போலே எரி விழியாயிருக்கை யன்றிக்கே,
‘புண்டரீகம் ஸிதாம்போஜம்’ என்னுமாப்போலே அக் கண்களிருந்தபடி காண் என்று ஸூர்ப்பணகை தன் அண்ணன்மார்களிடம் கூறுகிறாள்.
‘என்னை மனிதனாகவே நினைக்கிறேன்’ என்று [ஆத்மாநம் மாநுஷம் மன்யே; யுத்.கா.129-11] தம்மை மறந்தாராகிலும்,
‘அப்பரம புருஷனுக்கு ஸூர்யனால் மலர்ந்த தாமரை புஷ்பங்கள் போலே இருகண்கள் உள’
[தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ; சாந்.1-7] என்கிறபடியே
உள்ளே கிடந்த பரத்வத்தைக் கண்களே வெளிக் காட்டித் தருகின்றன.
பாற் கடல் போல் அக் கண்களுக்குள்ள அகலம் ஒருவரால் கரை காண வொண்ணாது.
கண்ணிலுண்டான தெளிவுக்குத் தாமரையை ஒரு போலியாகச் சொன்னது போல், கடலில் புக்கார் அதன் கரைகாணாதார் போலே,
‘புடை பரந்து, மிளிர்ந்து செவ்வரியோடி, நீண்ட அப்பெரியவாய கண்கள்’ [திருப்பாணாழ்வார்-அமலனாதிபிரான் -8]
வேறொரு பாசுரமிடவொண்ணாது காண்.
‘தாயாயளிக்கின்ற தண்டாமரைக் கண்ணா’ என்றும் [பெரிய. திரு. 7-1-9],
‘தடங்கொள் தாமரைக் கண்விழித்து’ என்றும் [திருவாய் 9-2-3] சொல்லுகிறபடியே,
பக்தர், முக்தர், நித்யர் என்று மூவகைப்பட்ட உபய விபூதியையும் ஒரு பார்வையிலே கடாக்ஷிக்கவல்ல பரந்த கண்களாயிருப்பது!
பலத்தைக் காட்டி அவர்களைத் தோல்வியுறச் செய்து, ‘தாமரைக் கண்ணனே நீ என்னை ஜெயித்தாய்’ [ஜிதந்தே புண்டரீகாக்ஷ; ஜிதந்தா 1-1] என்றும்
‘தாமரைக் கண்ணனை, விண்ணோர் பரவும் தலைமகனை’ [திருவாய் 2-7-3] என்றும்
அவர்களை அடிமை யாக்கிக் கொள்வது கண்ணழகைக் காட்டி யன்றோ?

அவர்கள் பலத்திலே ஈடுபட்டவர்கள், பலத்தைக் கண்டு பயந்து விலகாமல்,
‘அச்சுதனே, மறுபடியும் கடாக்ஷிப்பதன் மூலம் என்னைக் காப்பாற்றுவாயாக’ [அவலோகநதானேன பூயோ மாம் பாலய; விஷ்.புரா. 1-20-16] என்றும்,
‘புண்டரீகாக்ஷனே என்னைக் காப்பாற்று’ என்றும் [புண்டரீகாக்ஷ ரக்ஷ மாம்; பாரதம், ஸபா-96]
‘தாமரைக் கண்களால் நோக்காய்’ [திருவாய் 9-2-1] என்றும்
அன்புசெய்து பகவானையே மறுபடியும் கட்டித் திரியும்படி செய்வன அக்கண்களில் வழியும் இரக்கமன்றோ!
ஸுகுமாரௌ என்ற பதத்தால்
இவர்களை மன்மதர்கள் என்று சொல்லிற்றே, அப்படியென்றால் புஷ்ப பாணர்களாக இருக்கவேண்டாவோ?
‘கடைக்கண் என்னும் சிறைக்கோலால் நெஞ்சு ஊடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை’ [நாச்.திரு.13-3] என்னும்படி
என்னை நிலை குலைந்து போகும்படி புஷ்ப பாணங்கள் இருந்தன காண்.

சீரக்ருஷ்ணாஜிநாம்பரௌ:
அவயவத்தின் அழகினைக் காட்டியே அகப்படுத்துவது சிறப்பைத் தருமோ என்னில்,
ஒப்பனை அழகாலும் அவர்கள் மனத்தைக் கொள்ளை கொள்வர் என்கிறாள் ஸூர்ப்பணகை.
‘செவ்வரத்த உடையாடை அதன்மேலோர் சிவளிகைக் கச்சு’ [பெரிய திருமொழி 8-1-7] என்று சொன்னாற்போலே,
உள்ளுடுத்துவது வரவுரி, மேற்சாத்துவது கலைத்தோல் அன்றோ.
இளமை, அழகு, மென்மை, பலம், கண்ணழகு என்னும் குணக்கூட்டங்களாகிற ரத்தினங்களை முடிந்திருக்கும் துணியிருந்தபடி,
அழகிய உடலுக்கு எதுதான் அலங்காரமாகாது?
[கிமிவ ஹ மது4ராணாம் மண்ட3நம் நாக்ருதீனாம்; ஸாகுந்தலம் 1-19] என்றபடியே
கடின ஹ்ருதயரான ரிஷிகளும் ஈடுபடும்படியாக அம்மரவுரியும் மாந்தோலும் இயற்கையிலேயே
அழகர்களான அவர்கள் திருமேனியில் சேர்ந்தபடியாலே அழகுபெற்றிருந்தபடியைப் பார்.
ஏதாயிருந்தாலும் பரம புருஷனுடைய திரு மேனியில் சாற்றி யிருந்தால், காண்பார் நெஞ்சை இழுப்பதாகவே அன்றே இருக்குமன்றோ!
‘புன்சிரிப்புடன் கூடிய திருமுகத் தாமரையை உடையவனாய், பீதகவாடை உடையானாய்,
வநமாலையால் அலங்கரிக்கப் பெற்றவனாய், ஸாக்ஷாந் மந்மதனுக்கும் மன்மதனாயுள்ள க்ருஷ்ணன்
அந்த கோபிகளுக்கிடையில் தோன்றினான்’
[தாஸாமாவிரபூ4ச்சௌ2ரி: ஸ்மயமானமுகா2ம்பு4ஜ: பீதாம்ப3ரத4ர ஸ்ரக்3வீ ஸாக்ஷாந் மந்மத2 மந்மத2: ஶ்ரீமத்பாகவதம் 10-32-2] என்கிறபடியே
‘பீதகவாடை உடைதாழ ப்ருந்தாவனத்தே கண்டோமே’ [நாச் திரு. 14-5] என்றும்,
‘செய்ய வுடையும் திரு முகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு’ என்றும் [பெருமாள் திரு 6-7]
பெண்கள் வாய் வெருவும்படி யன்றோ உடையழகிருப்பது!
இதுமட்டுமன்று. ‘உடுத்துக் களைந்த நின்பீதகவாடை உடுத்து’ [திருப்பல்லாண்டு-9] என்று
பெரியாழ்வார் போலும் ஸ்வரூபஞானமுடையவர்களும் ஆசைப்படுவதும்,
‘ பெருமான் அரையில் பீதகவண்ணவாடை கொண்டென்னை வாட்டந்தணிய வீசீரே’ [நாச். திரு 13-1] என்று
ஆண்டாளைப் போலே போகத்தை விரும்பும் நாயகிகள் ஆசைப்படுவதும் திருவரையில் சாற்றிய வஸ்திரத்தையே ஆகும்-

ஆக, இராமபிரான் உண்மை உரைப்பதாலே உலகோரை வசப்படுத்துகிறான்.
எளியோரை தானத்தாலே தோற்பித்துக் கொள்கிறான்.
பெரியோர்களைக் கைங்கர்யத்தில் ஈடுபடுத்துகிறான்.
எதிரிகளை வில்லாலே வெற்றி கொள்கிறான்
[ஸத்யேன லோகான் ஜயதி. தீ3நான் தா3நேன ராக4வ: । கு3ரூன் ஶுஶ்ரூஷயா வீரோ த4நுஷா யுதி4 ஶாத்ரவாந்।। அயோ.கா. 12-29] என்கிறபடியே
‘தருணௌ ஸுகுமாரௌ ரூபஸம்பந்நௌ’ என்னும்
அழகாலே அபலைகளான பெண்களை வெற்றி கொண்டும், எதிரிகளை, ‘மஹாபலௌ’ என்கிற பதத்தாலே ஜெயித்தும்,
கதியற்றவர்களை ‘புண்டரீகவிஶாலாக்ஷௌ’ என்கிற கண்களிலிருந்து பொழியும் அருளாலே ரக்ஷித்தும்,
இம்மாதிரியாக அவரவர்களை வெற்றிக் கொள்ளத் தகுந்த அழகு.
ஆகையால், ‘நான் மூக்கறுப்புண்டது போலே, நீயும் தலையறுப்புண்டு போவாயேயொழிய
அவர்களோடு சண்டை செய்யப் புகுந்தால் பலிக்காது காண்’ என்று கரனை அவமதித்துச் சொல்கிறாள்.

———————————————————————————————————————————————————————————————————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்