Archive for the ‘Namm Aazlvaar’ Category

எங்கும் எதிலும் எதாகவும் எப்போதும் நிறைந்த ஓர் தனிப் பேர் வித்து–

June 8, 2026

கடவுள் – வித்து

ஊழிதோ றூழி… … …யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து இரும்பொருட்
கெல்லாம் அரும்பெறல் தனிவித்து ஒருதானாகி……– திருவாசிரியம் – 4

தானே தனித்தோன்றல் தன்னொப்பொன் றில்லதான்
தானே பிறர்கட்கும் தனித்தோன்றல் – தானே..

வைப்பாம் … …
எப்பால் யவர்க்கும் நலத்தால் உயர்ந்துயர்ந்து
அப்பாலவன்

இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்…

ஒக்கலை வைத்து … …
ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன்

ஓவாத் துயர்ப்பிறவி … …
மூவாத் தனிமுதலாய் 

சீர்மைகொள் வீடு சுவர்க்க நரகீறா
ஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும்
வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனிநின்ற
கார்முகில்போல் வண்ணன் …

எங்கும் எதிலும் எதாகவும் எப்போதும்

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்–கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞானவெள்ளச் சுடர் மூர்த்தி…

அமைவுடை அறநெறி … … … …
அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே.–

என்னுள் கலந்தவன் … … … …
மன்னு முழுவே ழுலகும் வயிற்றினுள்
தன்னுள் கலவாத தெப்பொருளுந் தானிலையே–

எப்பொருளுந் தானாய்… வானத்தும் வானத்துள் ளும்பரும்
மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்தானத்தும் எண்டிசையும் தவிராது
நின்றான் தன்னை…

எங்குவந் துறுகோ என்னையாள் வானே ஏழுல கங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருளுள வேனும் அவையுமோ நீயின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே –

பூவைகள் போல்……………..
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் …வான்புலன் இறந்ததும் நீயே.

துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினையாய் உல கங்களுமாய்
இன்பமில் வெந்நர காகி இனியநல் வான் சுவர்க் கங்களுமாய்
மன்பல் உயிர்களு மாகிப் பலபல மாய மயக்குக்களால்
இன்புறும் இவ்விளையாட்டையானைப் பெற்றேதும் அல்லலிலனே.

யானுநீ தானே யாவதோ மெய்யே அருநர கவையும் நீ ஆனால்
வானுயர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் எனிலும்
யானுநீ தானாய்த் தெளிதொறும் நன்று மஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் அருளுநின் தாள்களை எனக்கே-

எங்குமுளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யாலென் றிரணியன் தூண்புடைப்ப
அங்கப் பொழுதே அவன்வீயத் தோன்றிய என்
சிங்கப் பிரான்பெருமை ஆராயும் சீர்மைத்தே.

யானே என்னை … … .யானே நீஎன் னுடைமையும் நீயே…

என்னை முற்றும் உயிருண்டு என்மாய ஆக்கை இதனுள் புகுந்து
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் …

இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை என் னுள் வைத்தான்.. 

மாயம் செய்யேல் … … நேசம் செய்து உன்னோடு என்னை
உயிர் வேறின்றி ஒன்றாகவே

ஊனில் வாழ் உயிரே… …தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே
கலந்தொழிந்தோம்கூசம் செய்யாது கொண்டாய் 

எனதாவி யுள்கலந்த பெருநல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்தொழிந்தேன் இனிமீள்வ தென்பதுண்டே
எனதாவி ஆவியும்நீ பொழிலேழும் உண்ட எந்தாய்
எனதாவி யார்யானார் தந்தநீகொண் டாக்கினையே.

பற்ப நாபன்… … …
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டெனக்கே தன்னைத்தந்த
கற்பகம்..

உணர்வி லும்பர் … … … யானும் தானா யொழிந்தேனே.

என்னுடைக் கோவலனே…
உன்னுடைச் சோதிவெள்ளத் தகம்பால் உன்னைக்கண்டு…
என்றைக்கு மென்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கிஎன் னால்தன்னை
இன்தமிழ் பாடிய ஈசனை-

தாள்களை எனக்கே…
தோள்களை யாரத் தழுவிஎன்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ.

ஆறெனக்கு… … … எனதாவியும் உனதே…ஏகமூர்த்தி… … … உன்
ஆகமுற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.

மாயனென்… … …காயமும் சீவனுந் தானே…

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள்நீர் மல்கி

அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்
இன்றேநாம் காணா திருப்பதுவும் – என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும்
உட்கண்ணேல் காணும் உணர்ந்து.

மனனக மலமற மலர்மிசை எழுதரும்
மனனுணர் வளவிலன் பொறியுணர் வவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனனில னெனனுயிர் மிகுநரை இலனே.

நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யான் எனதாவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானமில்லை நாடோறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்க மின்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்தறிந்தே.

கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலமில் நரகமும் யானே என்னும்
கோலந்திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலங்கொள் உயிர்களும் யானே என்னும்
கோலங்கொள் தனிமுதல் யானே என்னும்

நாழாலமர் … …
பாருநீ வானுநீ காலுநீ தீயுநீ
நீரும்நீ யாய்நின்ற நீ.

கண்ணுள்ளே… …
மண்ணும் நீரும் எரியும்நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம்பிரானையே.

தளர்வின்றி…
வளரொளி ஈசனை மூர்த்தியைப்
பூதங்கள் ஐந்தை இருசுடரை…

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்…என்று கொல் சேர்வது… …
… … நிலநீர் எரிகால் விணு உயிர்
என்றிவை தாம்முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ…

பிறந்த மாயா … …
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவு மாய பெருமானே..

ஏகமூர்த்தி இருமூர்த்தி … ….. ஐந்து பூதமாய் இரண்டு சுடராய்…

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல்வண்ணனேறக் கொலோ
காண்கின்ற உலகத்தீர்க் கென்சொல்லுகேன்
காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றவே.

புகழுநல் லொருவனென்கோ பொருவில்சீர்ப் பூமி யென்கோ
திகழும்தண் பரவை யென்கோ தீயென்கோ வாயு வென்கோ
நிகழுமா காச மென்கோ நீள்சுட ரிரண்டு மென்கோ
இகழ்விலிவ் வனைத்து மென்கோ கண்ணனைக் கூவு மாறே.

மூவுலகங் களுமாய் அல்லனாய் உகப்பாய்…

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலும் ஆகான் உளனல்லன் இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே

நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவையல் லனுமாய்.

விண்மீ திருப்பாய் மலைமேல் நிற்பாய் கடல்சேர்ப்பாய்
மண்மீ துழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்…

அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான்…

பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்தவண் டமிதென நிலவிசும் பொழிவற
கரந்தசில் இடந்தொறும் இடந்திகழ் பொருள்தொறும்
கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே.

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீயின்னே
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யேபோ லிவற்றுள் எங்கும் கண்டுகொள்
இறந்து நின்ற பெருமாயா உன்னை எங்கே காண்கேனே

போர விட்டிட் டென்னை நீபுறம் போக்கலுற்றால் பின்னையான்
ஆரைக் கொண்டெத்தை அந்தோ எனதென்பதென் யானென்பதென்
தீர இரும்புண்ட நீரது போல என்னா ருயிரை
ஆரப் பருக எனக் காரா வமுதா னாயே.

திடவிசும் பெரிவளி நீர்நிலம் இவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே.

இலனது வுடையனி தெனநினைவ் வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்.

புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த அந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே.

யாருமோர் நிலைமையனென வறி வரிய எம்பெருமான்…

உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்த இந்நிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர்வரிது…

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலரென்றும் காண்டோறும் – பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.

பெய்வளைக் கைகளைக் கூப்பிப் பிரான்கிடக் குங்கட லென்னும்
செய்யதோர் நாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தியீ தென்னும்
நையுங்கண் ணீர்மல்க நின்று நாரண னென்னுமன் னேஎன்
தெய்வ வுருவில் சிறுமான் செய்கின்ற தொன்றறியேனே

அறியும்செந் தீயைத் தழுவி அச்சுத னென்னும் மெய்வேவாள்
எறியும்தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தனென்னும்
வெறிகொள் துழாய்மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே

ஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணி வண்ணனே என்னும்
நின்றகுன் றத்தினை நோக்கி நெடுமாலே வாவென்று கூவும்
நன்றுபெய் யும்மழை காணில் நாரணன் வந்தானென் றாலும்
என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத் தையே.

கோமள ஆன்கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும்
போமிள நாகத்தின் பின்போய் அவன்கிடக் கையீ தென்னும்
ஆமள வொன்று மறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால்செய்து செய்கின்ற கூத்தே.

திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே யென்னும்
உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந் தானென்று துள்ளும்
கருவுடைத் தேவில்க ளெல்லாம் கடல்வண்ணன் கோயிலே யென்னும்
வெருவிலும் வீழ்விலு மேவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.

விரும்பிப் பகைவரைக் காணில் வியலிட முண்டானே என்னும்
கரும்பெரு மேகங்கள் காணில் கண்ணனென் றேறப் பறக்கும்
பெரும்புல ஆநிரை காணில் பிரானுள னென்றுபின் செல்லும்
அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின் றானே.

மேகங்க ளோவுரை யீர்திரு மால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுக்களுக் கெவ்வாறு பெற்றீர் உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்துநன் னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள்பெற்றதே.

வண்டுக ளோவம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்தி லொண்பூ
உண்டுக ளித்துழல் வீர்க்கொன் றுரை க்கியம் ஏனமொன்றாய்
மண்துக ளாடி வைகுந்தமன்னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும் மலருள வோநும் வியலிடத்தே.

ஆழ்வார் திருப்பதிகட்குச் செல்லும்போது முதலில் இயற்கை வளம் காட்சியளிக்கும். அதனை அவர் இறையின் மேனியாக் கருதி வருணிப்பர்; பின்னே உயிராகிய மூர்த்தியைப் போற்றுவர்.

சொன்னால் விரோதம் … … …
தென்னா தெனாவென்று வண்டு முரல் திருவேங்கடத்து
என்னானை… 

ஆரா அமுதே … … …
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் ..

மானேய் நோக்கு நல்லீர் … … …
வானோர் வண்கமு கும்மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ்திரு வல்லவா ழுறையும்
கோனாரை .

என்றுகொல் தோழிமீர் … … …
பொன் திகழ் புன்னைமகிழ் புதுமா தவிமீ தணவி
தென்றல் மணங்கம ழுந்திரு வல்லவாழ் நகருள்
நின்ற பிரான்

நிச்சலும் …
பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதண வும்தண் திருவல்லவாழ்
நச்சர வின் அணை மேல்நம் பிரானது நன்னலமே.

காண்பதெஞ் ஞான்று… …
பாண்குரல் வண்டினொடு பசுந்தென்றலு மாகியெங்கும்
சேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ்
மாண்குறள் கோலப்பிரான்

பாதங்கள் … … …
ஓத நெடுந் தடத்துள் உயர்தா மரைசெங் கழுநீர்
மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ்
நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான் தன்னை

நாடொறும் … …
ஆடுறு தீங்கரும்பும் விளைசெந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ் தண்திருவல்லவாழ்
நீடுறை கின்ற பிரான்

கழல்வளை … …
குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி
மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்
சுழலில் மலிசக்கரப் பெருமான்.

உணர்த்த லூடல்… …
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண்டுழாய் முடி நம்பெருமானை.

நோக்கும் பக்கமெல் லாம்கரும்பொடு செந்நெ லோங்கு செந்தாமரை
வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை வண்துலை வில்லி மங்கலம்..

காலம் பெற … …
கோலச்செந் நெற்கள் கவரிவீசுங் கூடுபுனல் திருப்பேரையிற்கே.

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ …

மாயோனிகளாய் … ….. … எல்லாம் எவ்வுயிர்க்கும் தாயோன் ..

நீயும் நானும் … …தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே.

ஒத்தார் … அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா ..

போகின்ற … … தாய் தந்தை உயிர் ஆகின்றாய்…

மேலாத்… …மேலாத் தாய் தந்தையும் அவரே…

முந்தைத் தாய் தந்தையே முழுவேழுலமுண்டாய்…
சிந்தையாலும் … தேவபிரானையே
தந்தை தாயென்றடைந்த வண்குருகூரவர் சடகோபன்…

தாம்பாலாப்… …
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தாஉன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு.

கண்ணுஞ்செந் தாமரை கையும் அவைஅடி யோஅவையே
வண்ணம் கரியதோர் மால்வரை போன்று மதவிகற்பால்
விண்ணும் கடந்தும்ப ரப்பால்மிக்குமற்றெப் பால்யவர்க்கும்
எண்ணு மிடத்ததுவோ எம்பிரான தெழில்நிறமே.

நிறமுயர் கோலமும் பேருமுருவும் இவையிவையென்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கங் கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக்காய்நின்ற தன்றி ஒன்றும்
பெறமுயன் றாரில்லை யால் எம்பிரான் பெருமையையே.

உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்பின வாம் எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான் றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன் உயிராயின காவிகளே.

செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதி சூடிஅஞ் சுடர்மதி யம்பூண்டு
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம்…

கடலோன் கைம்மிசைக் கண்வளர் வதுபோல்
பீதக ஆடை முடிபூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப்
பச்சை மேனி மிகப்ப கைப்ப
நச்சுவினைக் கவர்தலை அரவின் அமளிஏறி
எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர்முதல் அனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
மூவுல களந்த சேவடி யோயே.- திருவாசிரியம் – 1

நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிரொளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓ ராலிலைச் சேர்ந்தஎம்
பெருமா மாயனை
 அல்லது
ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே.-திருவாசிரியம் – 7–

முதலாம் திருவுருவம் மூன்றென்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கு மென்பர்…

தானோ ருருவே தனிவித்தாய் தன்னில் மூவர்…

மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை…

தஞ்சமாகிய… …
… … மூவர் தம்முள்ளும் ஆதியை…

தேவர் முனிவர்க் கென்றும் காண்டற் கரியன்
மூவர் முதல்வன் ஒருமூவுல காளி…

யாருமோர் நிலைமையன் எனவறி வரியஎம் பெருமான்
யாருமோர் நிலைமையன் எனவறி வெளியஎம் பெருமான்
பேருமோர் ஆயிரம் பிறபல வுடையஎம் பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே’

வரிவளையால்… …
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்தேத்தும்
விரிபுகழான்… .

பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகனவனே…

தளர்ந்தும்… …
கிளர்ந்து பிரமன் சிவனிந்திரன்விண் ணவர்சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே

நோலா தாற்றேன்… …. …
நீலார் கண்டத் தம்மானும்
நிறைநான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர்சூழ
விரும்பும் திருவேங் கடத்தானே

பராபரன்
புரமொருமூன் றெரித் தமரர்க்கும் அறிவீய்ந்து
அரனயனெனவுல கழித்தமைத் துளனே

என்னப்பன் எனக்கா யிகுளாய்
என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப் பனுமாய்…

திண்ணன் வீடு முதல்மு ழுதுமாய்
எண்ணின் மீதியனெம்பெருமான்
மண்ணும் விண்ணுமெல் லாமுட ணுண்ட நங்
கண்ணன ல்லதில்லையோர் கண்ணே.

வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேனல்லேன்
ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக்கேயுளன்
சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள்ளென்று வீடும்தரும் நின்று நின்றே.

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர்விழிய
தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல்செய்தேற்
கெண்ணம் புகுந்து அடியனோ டிக்கால மிருக்கின்றதே.

அந்தாமத் தன்புசெய்தென் ஆவிசேர் அம்மானுக்கு
அந்தாம வாழ்முடிசங் காழிநூ லாரமுள
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தா மரையடிகள் செம்பொன் திருவுடம்பே

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப் பறுக்கு மப்பால்
திண்ணநாம் அறியச் சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமர ராவார்.

அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
அறியா மாமாயத் தடியேனை வைத்தாயால்
அறியா மைக்குறளாய் நிலம்மாவலி மூவடிஎன்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவி உள்கலந்தே.

எழுமைக் குமென தாவிக் கின்னமு தத்தினை எனதாருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணி வண்ணனைக் குடக்கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கனியினைத்
தொழுமின் தூய மனத்தரா யிறையும் நில்லா துயரங்களே.

கோலமே தாமரைக் கண்ணதோ ரஞ்சன
நீலமே நின்றென தாவியை ஈர்கின்ற
சீலமே சென்றுசெல் லாதன முன்னிலாம்
காலமே உன்னைஎந் நாள்கண்டு கொள்வனே.

உரைக்க வல்லேனல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்க ணென்று செல்வன்நான் காதல் மையலேறினேன்
புரைப்பிலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்.

மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்…

வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்கும்நின்னோரையில்லாய் நின்கள் வேட்கை எழுவிப்பனே.

அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின் றனரே.

பிணக்கற அறிவகைச் சமயமும் நெறிஉள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு
உணக்குமின் பசையற அவனுடை உணர்வு கொண் டுணர்ந்தே.

யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந்தோறும் தோய்விலன்…

மாட்டாதே யாகிலும் இம் மலர்தலைமா ஞாலம்நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம்வைக்க
மாட்டாத பலசமய மதிகொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டேநீ மனம்வைத்தால் மாஞாலம் வருந்தாதே.

அறிவினால் குறைவில்லா அகல்ஞானத் தவரறிய
நெறிஎல்லாம் எடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி…

எங்குவந் துறுகோ என்னையாள் வானே ஏழுல கங்களும் நீயே
அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருளுள வேலும் அவையுமோ நீ இன்னேயானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான்புலன் இறந்ததும் நீயே.

உருவாகிய ஆறு சமயங்கட் கெல்லாம்
பொருவாகி நின்றானவன்

இறுக்கும் இறையிறுத் துண்ண எவ்வுல குக்கும் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வ நாயகன் தானே
மறுத்திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்ம்மினீரே.

உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந் நிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர்வரி துயிர்காள்
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து அரிஅயன் அரன் என்னு மிவரை
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே.

மும்மூர்த்திகளைப் பிர்மா – விஷ்ணு – ருத்ரன் – என்று நாம் சொல்கிறோம்; சிலர், பிதா – குமாரன் – பரிசுத்த ஆவி – என்கிறார். அவர்கட்கு இன்னும் வெவ்வேறு பெயர்களும் உலகில் உரைக்கப்படுகின்றன. அவைகளிற் சில வருமாறு: ஒஸிரிஸ் – ஐஸிஸ் – ஹோரஸ் (எகிப்தியர்); ஓடின் – பிரீயா – தார் (ஸ்காண்டிநேவியர்); ஆனு – இயா – பேல் (அஸ்ரியர்); தௌலாக் – பான் – மொல்லாக் (துருயுதர்); அமிர்தாப்பர் – அவலோகீதீசுரர் – மஞ்ஜுசுரி (வட புலப்புத்தர்); கேதர் – பினா – சொக்மா (யூதர்); அஹுரமஜதர் – மித்திரர் – அஃரிமான் (பாரஸீகர்). உண்மை ஒன்று. அது பலவிதமாக வழங்கப்படுகிறது

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அண்ட கோளத்தார் அணு – (ஸ்ரீ அண்ட கோள மெய்ப் பொருள்)ஸ்ரீ நம்மாழ்வார் அகவல்–

June 7, 2026

இது ‘மயர்வற மதிநலம்’ அருளப் பெற்ற நம்மாழ்வார் தங்காலத்துக் கூடலிற் குழாங் கொண்டு தமிழாராய்ந்த நல்லிசைப் புலவர்க்கு எழுதி யருளிய திருப்பாசுரம் என்பது, கூடலழகர் புராணத்தில் ‘அண்ட கோளத்தாரென்னு மாரியத் தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்’ என வருங் கடவுள் வணக்கப் பாடலால் (13) துணியலாகும்.

அண்ட கோள மெய்ப் பொருள்-ஸேது ஸம்ஸ்தான மஹா வித்வானும் பாஷா கவி சேகரரும் அண்ணாமலை சருவகலாசாலைத் தமிழாராய்ச்சியாளருமாகிய ஸ்ரீ ரா. இராகவையங்கார்
ஸ்வாமிகள் எழுதியது- சென்னைத் திருவல்லிக்கேணி ஸ்ரீ வேத வேதாந்தவர்த்தனீ மகா சபையாரால் -1934.-வெளியிடப்பெற்றது-

அண்ட கோளத்தாரணு’ என்ற பாசுரம், ‘ஆழ்வார் சங்கத்தார்க்கு எழுதிய அகவல்’ என்ற தலைக்குறிப்புடன், ஆழ்வார் திருநகரித் தாயவலந்தீர்த்தான் கவிராயரவர்கள் வீட்டிற்கிடைத்த ஒற்றையேட்டில் முதன்முதல் என்னாற் காணப்பட்டது. அதனை மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திரிகை தொகுதி 3, பக்கம் 405ல் வெளியிட்டுள்ளேன். அப்பாசுரத்துக்கு அக்காலத்துப் பொருள் காண்டல் அரிதாயிருந்தமையால் ‘இதன் பொருள் இப்போது நன்கு விளங்கவில்லை’ என்ற குறிப்பும் ஆங்குத் தரப்பட்டுள்ளது. அப்பாசுரத்தைப் பற்றி நெடுங்காலம் யான் சிந்தித்து வந்ததில், சிலவாண்டுகட்குமுன் அதன் உண்மைப்பொருள் இஃதென்பதை உணரலாயினேன்.-அப்பாசுரத்தின் சொற்றொடர்ப் பொலிவினையும், அதனுளடங்கிய அரிய பெரிய வடமொழிப்பொருளின் மாட்சியையும் நோக்குமிடத்து அஃது ஆழ்வார் அருளிச் செயலாதற்குரிய எல்லாத் தகுதியும் வாய்ந்தது என்று சொல்லத் தடையில்லை. சங்கப்புலவர்கள் தம்மைப் பெரிதும் மதிக்கும்படி ஆழ்வார் செய்வித்த செய்தியைக் குருபரம்பரை நூல்களும், ‘அண்டகோளத்தாரென்னு மாரியத் தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்’ (கடவுள் வணக்கம், 13) என இற்றைக்குச் சில நூற்றாண்டுகட்கு முற்பட்டவராகத் தெரியும் கூடற்புராண ஆசிரியரும் கூறுவது, ஆழ்வார் அருளியதே இப்பாசுரம் என்பதை வலியுறுத்தல் காணலாம்.இவ்வரிய பெரிய பாசுரத்தை யான் பலகாலும் சிந்தித்துக் கண்ட கருத்துக்களை இப்புத்தகத்தில் விளங்க விரித்துள்ளேன். என்னால் விரிய உபந்யஸிக்கப் பெற்ற இப்பாசுரார்த்தத்தைக் கேட்டு மகிழ்ந்த சென்னைத் திருவல்லிக்கேணி ஸ்ரீ வேதவேதாந்த வர்த்தனீ மஹாஸபையார், இதனைப் பலரும் அறிய வெளியிடவிரும்பியவாறு, அச்சபையின் பிரசுரமாக இஃது இப்போது வெளியிடப்பெறுகின்றது. இதனை அச்சிடற்குரிய பொருளை முன்வந்துதவிய, திருவல்லிக்கேணி: ஸ்ரீபார்த்தசாரதி சந்நிதி டிரஸ்டிகளில் ஒருவரான ராவ்பஹதூர் ஸ்ரீமான். வி. ரங்கநாதம் செட்டியார் அவர்கட்கும், அம்மஹாசபையார்க்கும் என் மனமார்ந்த பெருநன்றி உரியதாகும்.–ஸ்ரீ ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள்-

சீரண்ட கோளத் திருப்பாட் டுரையிதென
யாரும் தெளிய வியம்புகேன் – பாரிற்
றெருள் காட்டும் வேதச் செழுந் தமிழ் நா வீறன்
அருள் காட்ட மெய்ம்மை யறிந்து–
தற் சிறப்புப் பாயிரம்

அண்ட கோளத் தாரணு வாகிப்
பிண்டம் பூத்த பேரெழி லொருமை
யீருயிர் மருங்கி னாருயிர் தொகுத்து
நித்திலத் தன்ன வெண்மணற் பரப்பில்
வேரும் வித்து மின்றித் தானே   (5)
தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர
மூவழி முப்பழ முறைமுறை தருதலி
னென்றுண் டொண்சுவை தருவது மற்றது
கல்லி னெழுந்து கடலி னழுந்தி
யறுகாற் குறவ னீரற விளைக்குஞ்  (10)
செறி பொழிற் குப்பை தருகட் பொன்றுவித்
தறுகோட் டாமா விளைக்கு நாட
னவனே தலையிலி யவன்மகண் முலையிலி
தானு மீனா ளீனவும் படாஅ
ளெழுவர் மூவர் சிறுவரைப் பயந்தன (15)
ளவளிவ ளுவளென வறிதல்
துவளறு காட்சிப் புலவரது கடனே.
–ஆழ்வார் சங்கத்தார்க்கு எழுதிய அகவல்-

 அண்டகோளத்து ஆரணு ஆகி என்பது அண்டகோளத்தினுடைய அரிய அணு வளர்ந்து என்றவாறு.-ஆகல் – வளர்தல்; பரிணமித்தல்; வளர்தற்குக் காரணமாகிய ஊழினை ‘ஆகலூழ்‘ (திருக்குறள் – 372) என்பதனாலறிக. பின்னும் பிரிக்கப்படாத பரமாணு என்பதறிய ஆரணு என்றார். பரமாணு இரண்டு கொண்டது அணு என்பது வடநூற் கொள்கை (பாகவதம்). அண்டகோளத்து ஆரணு – அண்டகோளமாகிய பிரபஞ்சத்தின் இறுதியம்சமாகிய பரமாணு. அஃது ஆகி என்றது அஃது அண்டகோளமாக வளர்ந்து எ-று. ஆலின் வித்து வளர்ந்து என்றால் ஆலின்வித்து ஆலாக வளர்ந்து என்று பொருளாதல் போல இதனையும் கொள்க. பிரபஞ்சத்தின் இறுதி நிலை (இதுவே படைப்பிற்கு முன்னிலை யுமாகும்) பரமாணுவே என்பதை ஸ்ரீ பாகவதம் 3-ஆம் ஸ்கந்தம் (11 – 1) ‘பிரபஞ்சத்தின் இறுதியமிசம் பரமாணு என்றறியப்படுவது’ என விளக்கியவாற்றான் உணர்க. மேற்படி 3-ஆம் ஸ்கந்தம் 11

பிண்டம் பூத்த பேரெழி லொருமை என்பது சராசர ரூபமான பிராணிகள் மலர்தற்குக் காரணமான பெருமையோடு கூடிய நலத்தையும் ஏகத்வத்தையுமுடைய எ-று.-ஆம் அத்தியாய முடிவில் ‘ஐம்பது யோசனை அகலமுள்ளதும் மேன்மேலும் பதின்மடங்கு அதிகமுள்ள விசேஷண முதலியவற்றால் வெளியிற் சூழ்ந்ததுமாகிய இவ்வண்டகோசமும் இன்னும் மற்றுமுள்ள பல்கோடி யண்டங்களும் எந்த வஸ்துவினிடம் பிரவேசித்துப் பரமாணுவாகக் காணப்படுகின்றனவோ அந்த வஸ்துவைக் காரணங்கட்கெல்லாம் காரணமெனவும், புருஷனும் மஹாத்மாவுமாகிய விஷ்ணுவின் ஸ்வரூபமெனவும், அக்ஷரமாகிய பரப்பிரமம் எனவுங் கூறுகின்றனர்’ என்று வருதலான் இதனுண்மை நன்கறியப்படும். பலகோடி அண்டகோள வரிசைகளும் பரதெய்வத்தினிடம் பரமாணுவாக ஒடுங்கிக்கிடந்து பின் அவன் ஸங்கல்பத்தாற் பரிணமித்து அவ்வண்ட வரிசையாதலையே இங்குக் குறித்தாரென்பது ஜகத்காரணமாகப் பரப்பிரமத்தைக் கூறுதல் கொண்டு எளிதிலறியப்படும். ‘ஆகி’ என்று பரிணமித்தல் கூறுதலான் இவ்வாரணு உயிரணு ஆகாமை நன்கறியலாகும். பிரபஞ்சமாகிய பரமாணுவுக்குப் பரிணாமம் உள்ளதல்லது, அணுவாகிய ஆத்மாவிற்கு அஃதில்லாமை தெளிக. ‘அண்டகோளத்து ஆரணு’ என்புழி அத்துச்சாரியை ‘காமத்துக் காழில்கனி’ (திருக்குறள் – 1191) என்புழிப்போல அல்வழிச்சாரியையாகக் கொண்டு அண்டகோளமாகிய அரிய அணு எனினும் இழுக்காது. ஆகிப் பூத்த மரம் என இயையும்.

ஈருயிர் மருங்கின் ஆருயிர் தொகுத்து என்புழி, ஈருயிர் மருங்கின் என்பது இருவகைப்பட்ட உயிர்களின் பக்கத்தில் எ-று.-மோக்ஷாநந்தத்திற்கு உபகாரமாகிய தெய்வ ஸம்பத்தையுடைய உயிர் என்றும், ஸம்ஸார பந்தத்திற்கு உபகாரமாகிய ஆஸுர ஸம்பத்தையுடைய உயிரென்றும் வகுக்கப்பட்ட இருவகை உயிர்களின் பக்கலில் என்று கொள்க. ஸ்ரீகீதை பதினாறாம் அத்யாயத்தில் ‘இவ்வுலகிற் பிராணிகளின் ஸ்ருஷ்டி, தேவர்களின் ஸ்வபாவ முள்ளதென்றும், அஸுரர்களின் ஸ்வபாவமுள்ளதென்றும் இருவகைப்படும்’ என்று பகவான் அருளிச்செய்ததை ஈண்டைக்கு நோக்கிக் கொள்க. இனி ஈருயிரென்றது ஸ்ரீகீதை ஏழாம் அத்யாயத்தில் பகவானைத் தொழாரும் தொழுவாருமாகிய ‘துஷ்க்ருதிந: ஸுக்ருதிந:’ என்று கூறப்பட்ட இருவகை உயிர்களை எனினுமாம். தொழாராகிய துஷ்க்ருதிகள் நராதமர், மாயை கவர்ந்த மதியினர், அஸுரஸ்வபாவமுள்ளவர், மூடர் என்று நால்வகையினர் எனவும், தொழுவாராகிய ஸுக்ருதிகள் ஆர்த்தன், ஜிஜ்ஞாஸு, அர்த்தார்த்தி, ஞானி என நால்வகையினர் எனவும், இவருள் ஞானி அத்யர்த்த ப்ரியனான மேன்மையனெனவும், அப்பெருந்தகையோன் கிடைத்தற்கரியோனெனவும், அவனே ஸர்வம் வாஸுதேவனென்னும் ஞானவான் எனவும் அருளிச் செய்தலால் தொழாரும் தொழுவாருமாகிய இருவகை உயிர்களின் பக்கலில் என்றாலும் பொருந்தும்.

‘ஆருயிர் தொகுத்து’ என்றது கிடைத்தற்கரிய உயிர்களாகிய தெய்வஸம்பத்து நிறைந்த ஞானிகளாகிய பரமைகாந்திகளைத் தன்னடிநீழலிற் குழாங்கொளச் செய்து என்றவாறாம். ஆருயிர் – ‘ஸமஹாத்மா ஸுதுர்ல்லப:’ என்றபடி தனக்குங் கிடைக்கரிய மஹாத்மாக்கள் எ-று. வாஸுதேவ தருச்சாயையை விட்டுப் புறம்போகாத பெருந்தகையார் அவரே என்க. மஹாத்மா என்பதே ஆருயிர் எனப்பட்டதெனினும் பொருந்தும். தொகுத்து என்றதனால் கிடைத்தற்கரிய இப்பரமைகாந்திகளைத் தன்னடி நீழலில் திரள்வித்தது பகவத் ப்ரயத்நமென்று காட்டியவாறு. ப்ருஹ்ம ஸூத்ர பாஷ்ய முடிவில் ‘அத்யர்த்தப் பிரியம் ஞாநிநம் லப்த்வா‘ (இவ்வளவென்று சொல்லற்கரிய ப்ரீதியுடையவனாகிய ஞானியைத் தன் பேறாக அடைந்து) என்று ஸ்ரீ பாஷ்யகாரர் உரைத்தருளுதலான் அளவிடப்படாத பிரியனாகிய ஞானியைப் பரதெய்வம் தன் லாபமாக அடைதல் கருத்தல்லது ‘ஞானி பரதெய்வத்தை அடைந்து’ என்பது ஆழ்வார் கருத்தாகாமை கண்டுகொள்க

இனி, ஈண்டு மருங்கு என்றது சுற்றம் எனக் கொண்டு, இருவகையுயிராயுள்ள சுற்றத்திற் கிடைத்தற்கரிய தன் ஆத்மஸமாநரான அரியஞானிகளைத் தொகுத்து எனினுமாம். ‘ஞானீ த்வாத்மைவ மேமதம்’ (ஞானியோ என்னுயிரே யென்பது என் கொள்கை) என்னும் ஸ்ரீ கீதையால் ஞானி பகவானுக்கு ஆத்மாவாதல் தெளியலாம். தீயவுயிரையும் சுற்றமென்றது, வெறுக்கின்ற அவர் பாலும் உறைதலானும் அவரையும் சன்ம சன்மாந்தரங் காத்துச் சேறலானும், அவர்க்கும் அருள இருக்குந் தாயும் தந்தையும் தானாதலானும், அவரையும் மகவென்று கருதித் திருத்தமுயறல் காட்டியவாறு. ‘தாய் தந்தை எவ்வுயிர்க்குந் தான்’ என் இவ்வாழ்வாரே அருளிச்செய்தலானிதனுண்மையுணர்க. ‘பிதா மாதாச ஸர்வஸ்ய’ என்பது மஹாபாரதம். சுத்த ஸத்வ நிஷ்டரான பரமைகாந்திகளைத் தொகுத்து நித்திலத்தன்ன வெண்மணற் பரப்பிற் றொன் மிகு பெருமரம் என இயைக்க. தொகுத்துப் பரப்பில் மிகு மரம் என்க.

4. நித்திலத்தன்ன வெண்மணற் பரப்பில் என்றது முத்துக்களை யொத்த வெண்மையான ஒளியையுடைய பரந்த மணற் பிரதேசத்தில் எ-று.-வெண்மையும், ஒண்மையும், குளிர்த்தியும், உயர்த்தியும், தூய்மையும், அருமையும் முதலிய சிறப்பால் நித்திலத்தன்ன என்றார். வெண்மணற் பரப்பு என்றது ச்வேதத்வீபம் எ-று. இது, திருப்பாற்கடலின் வடகரையிலுள்ள மஹா பரிசுத்த ஸ்தல விசேஷம். திருப்பாற்கடல் கொழித்த நித்திலத்திற்கும் இப்பரப்பில் வெண்மணற்கும் வேற்றுமை காண அரியதாய் ஒரே சுவேதமயமா யுண்மையால் இவ்வாறு கூறப்பட்டது. இதனைப் பாரதம் சாந்திபருவம் (343) ‘பாற்கடலின் வடபாகத்திற் பேரொளி நிறைந்த ச்வேதத்வீபம் இருப்பது; அங்குள்ள மக்கள் சந்திரனையொத்த காந்தியினர்; நாராயண பராயணர்; அவ்வன்பர் புருஷோத்தமனை ஏகாந்த பாவனையாலடைந்தவர்; பொறிகளால் வேறொன்றும் நுகராதவரும், உண்ணாதவரும், அசைவற்றவரும், நறுமணங்கமழ்பவரும், ஏகாந்திகளு மாவர்’, என வருவனவற்றா லறிக. இந்த த்வீபத்திற்கு நாரதமஹருஷியானவர் தெய்வகிருபையாற் சென்று ஈங்குள்ள அநிருத்த மூர்த்தியைப் பலபடியாக ஸ்துதித்ததும் பரமைகாந்திகளைத் தரிசித்து ஆச்சரியமடைந்ததும் பிறவும் அப்பருவத்தே கண்டு கொள்க. -இனி ஸஹஸ்ரநாம த்யான சுலோகத்தில் ‘க்ஷீரோதந்வத்ப்ரதேசே’ என்பதில் திருப்பாற்கடல் வடகரையில் மணி விளக்கெடுக்கும் மணற்பரப்பில் நித்திலமாலையணிந்த அணையில் இம்மூர்த்தி எழுந்தருளி இருப்பது கூறுதலான், அதற்கியைய நித்திலப் பரப்பில் எனவும் அன்ன வெண்மணற் பரப்பில் எனவும் கூறினு மமையும். அன்ன வெண்மணல் – அத்தகைய வெண்மணல்.

5. வேரும் வித்தும் இன்றி = தான் நிலைபெறுதற்குக் காரணமான மூலமும், தானுண்டாதற்குக் காரணமான பீஜமும் தானே யன்றி வேறில்லாமல் எ-று.-வினைகளையே வேராகவும், அவ்யத்தத்தை வித்தாகவும், பிறவிகளைக் கிளைகளாகவும் கொண்ட ஸம்ஸார வ்ருக்ஷத்தின் (ஸ்ரீகீதை; விஷ்ணு புராணம் ௭ – ஆம் அத்யாயம்) இது வேறாய பரப்ருஹ்ம வ்ருக்ஷம் என்பது தோன்ற வேரும் வித்தும் இன்றி என்றார். எல்லாப் பொருட்குந் தானே வேரும் வித்துமாகு மென்றவாறு. இத்தன்மையை,-‘வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனி நின்ற கார்முகில் போல்வண்ணன்‘ (திருவாய்மொழி, 2,8,10) என்று பணித்தலாறிக. ஸ்ரீ கீதையிலும் ‘பீஜம்மாம் ஸர்வ பூதாநாம்‘ (எல்லாப் பிராணிகட்கும் வித்தாகிய என்னை) என்பதனால் எல்லா பிராணிகட்குந்தானே வித்தாயிருத்தலைப் பகவான் வெளியிட்டருளினான். ‘எல்லாப் பொருள்கட்கும் வித்தாய்’ ‘தானோருருவே தனிவித்தாய்’ (திருவாய்மொழி, 1 – 5 – 2, 4) என்று பணித்தல் காண்க. ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் ஸம்ஸார வ்ருக்ஷத்திற்கு அவ்யக்தத்தை வித்தென்று கொண்டு, வித்துண்டாதற்கு ஆகாயம் காலம் முதலிய காரணமாதல் போல, அஃதுண்டாதற்கு ஸ்ரீஹரிபகவான் காரணன் என்பர் (ஏழாம் அத்யாயம் பார்க்க). இதனால் அவ்யக்தத்தின் பரிணாமத்திற்கு இறைவன் காரணனாதல் அறியலாம்.

5 – 6 தானே தன்னிலையறியா – ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான தானேயும் தன் ஸ்வபாவ மகிமை அறியலாகாத எ-று.-தன்நிலை – தன் தெய்வநிலை: ‘-துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே
.–திருவாய்மொழி (3, 10, 6); அஃது அநந்த கல்யாண குணமுடைமை. அஃது அவனால் இவ்வளவென்றறியப் படுமாயின் அநந்தம் என்று முழங்கிய சாஸ்த்ரங்கள் வீணாகுமென்க. ஒருவன் தன்கண் அச்சமும் தன் வலியில் ஐயமும் உள்ள போதன்றே தன்னை அளந்தறியப்புகுவான்? அவ்விரண்டுமில்லாமையால் தன்னிலையை அளந்தறிதலே யில்லாமை அறிக. அசித்தினும், பத்தர் முக்தர் நித்யர் எனப்பட்ட ஆத்மாக்களினும் வேறாய்ப் பிரிப்புண்டு அவற்றிற்கு ஈசனான தானே அறியலாகாத என்றவாறாம். அறியா மரம் என இயையும். ‘தனக்குந்தன் றன்மை யறிவரியானைத் தடங்கடற் பள்ளியம்மானை’ எனத் திருவாய்மொழியில் (8, 4, 6) வருவதான் இதனுண்மை யுணர்க. ஆண்டு, ஈட்டில் நம் பிள்ளையாசிரியர், இத்திருப்பாட்டின் கருத்தொடு பொருந்தவே ‘ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான தன்னாலுந் தன்னைப் பரிச்சேதிக்கப் போகாது ஸ்வேத த்வீபவாசிகள் ஆஸ்ரயிக்கைக்கு …. திருப்பாற் கடலிலே கண்வளர்ந்தருளினவனை‘ என வ்யாக்யானமிட்டது காண்க.

இனி யஜுர்வேத காடகத்தில் ‘த்வமேவத்வாம் வேத்த யோஸி ஸோஸி (நீ யாராயுள்ளனை அவனாயுள்ளனை யென்று நின்னை நீயே யறிகிற்வை) எனவும், ஸ்ரீகீதையில் (10 – 15) ‘நீ நின்னை ஸ்வயமாகவே நின்னறிவால் அறிகின்றனை’ எனவும், பரிபாடலில் (3) ‘நின்னைப் புரைநினைப்பினீயல துணர்தியோ’ – நின்னை உயர்வுகூறக் கருதின் அது நீயே யுணரினல்லது பிறரானுணரப்படுதியோ (பரிமேலழகருரை) – எனவும் வருதலான் ஈண்டுத் தானே தன்னிலையறியா என்பது தன்னியல்பு தானே யறிந்து எனக்கருதினாரெனினு மிழுக்காது. இதற்கு அறியா மிகு மரம் என இயைக்க. இவ்வாறு பிறர் அறியாமைக்குக் காரணமிவையென, தொன்மிகுபெருமரம் என்று இப் பரப்ருஹ்ம வ்ருக்ஷத்தை விசேடிக்குமாற்றால் விளக்குகின்றார்.

6. தொன்மிகு பெருமரம் என்பது அநாதியே மிகுத்த பெரிய பர ப்ருஹ்மமாகிய வ்ருக்ஷம் எ-று.-காலத்தாலும் தேசத்தாலும் வஸ்துவாலும் பரிச்சேதிக்கப்படுவதொன்றன்றே ஒருவர் அறிவிற்கு விஷயமாவது? இஃது அம்மூன்று பரிச்சேதமும் கடந்துள்ளதென்று இவ்விசேடண்ங்களாற் கொள்ளவைத்தவாறாம். தொன்மரம் என்றதனால் காலவளவையைக் கடந்ததென்றும், மிகுமரம் என்றதனால் தேசவளவையைக் கடந்ததென்றும், பெருமரம் என்றதனால் வஸ்து அளவையைக் கடந்ததென்றும் தெளிவித்தது கண்டுகொள்க. ‘ப்ருஹத் ரூப:’ என்னுந் திருநாமம் பற்றிப் பெருமை வஸ்துபரிச்சேதங் கடந்ததுக்கு ஆயிற்று. ‘இனைத்தென வெண்வரம்பறியா யாக்கையை’ என்பது பரிபாடல். இதற்குப் பரிமேலழகர் ‘இனைத்தென எண்ணும் எண்ணிற்கு எல்லை யறியப்படாத வடிவினை யுடையை‘ என்றுரைத்தலானறிக. இக்காலத்ததென்றும், இவ்விடத்ததென்றும், இப்படித்தென்றும் அறியலாகாததென்று குறித்ததெனக் கொள்க.

மரம் என்பது உவமையாற் போந்த பெயர்; தன்னடி நீழலிற் புக்கார் பயன்றுய்த்து வாழ நிற்கும் மரம் போலுதலான் இறைவனை மரமாக்கினார். ‘அருஞ்சுரத்து மரம் போல அடைந்தார்க்களித்தல் அவற்கியல்பு‘ என்பர் நச்சினார்க்கினியர் (சீவகசிந்தாமணி, 3). ‘வாஸுதேவதரு’ என்ப. வ்ருக்ஷ: என்பது, இறைவன் ஆயிரநாமத்துளொன்றாதல் காண்க. ஸ்ரீ பராசரபட்டர் ‘உயிர்கட்கு ஜீவனமாகி அவ்வுயிர்கள் தனக்கிழைக்கும் அபராதங்களைப் பொறுத்து நிற்றலான் மரம்‘ என்று பெயராயிற்றென்றார். மூன்றுலகிற்கும் நிழல் செய்தலான் இறைவன் ‘பூர்புவஸ்வஸ்தரு:’ என்று பெயர் சிறப்பன் என்பதும் அவ்வாயிர நாமத்தே கண்டது. ப்ரமாணங்களிற் றலைசிறந்த வேதம் ‘வ்ருக்ஷ இவ ஸ்தப்தோ திவிதிஷ்டத்யேக:‘ என்று முழங்கிற்று. ஒருவன் மரம் போல அசையாது திவ்ய லோகத்திலுள்ளானென்பது இதன் பொருள். வால்மீகி பகவானும் தாரை கூற்றால் ‘நிவாஸ வ்ருக்ஷஸ் ஸாதூநாம்‘ (ஸாதுக்களுக்குப் புகலிடமான மரம்) என்று பெருமாளைக் கூறினான். ‘ப்ரஹ்மதரு’ என்று ப்ரஹ்லாதாழ்வான் கூற்றில் வைத்துப் பராசர பகவான் வெளியிட்டு அதனினின்று முக்தியென்னும் பழம் விழுவதென்னுங் கருத்தால் ‘முக்தி பல ப்ரபாத:’ என விளக்கியருளியதையும் ஈண்டைக்கு நோக்குக. இவ்வாழ்வார் திருப்பாட்டிற்கு இப்பராசரர் கருத்தே உடன்பாடாகும்.-இம்முன்னோர் மொழி பொருளைப் போற்றியே இவ்வாழ்வார் ‘மரம்’ என்றாரென்க. ‘என்னை ஆக்கிக் கொண்டெனக்கே தன்னைத் தந்த கற்பகம்‘ என்பதும் மரங்களினுயர்ந்ததாகக் கூறியதாகும்.

அன்றியும் ஈண்டு ஸ்வேதத்வீபத்து அநிருத்த மூர்த்தியை ‘மரம்’ என்றது, அம்மூர்த்தி பச்செனத் தழைத்த திருவடிவுடையனாதல் பற்றியென்று கொள்ளத்தகும். பரிபாடலின் கண் அநிருத்தமூர்த்தியைப் ‘பைங்கண் மாஅல்‘ என்றதனையும் அதற்குப் பரிமேலழகர் ‘பசிய உடம்பினையுடைய அநிருத்தனே’ என உரை கூறியதனையும் நோக்கித் தெளிக. ( ஈண்டே ‘பொன்கட்பச்சை’ என்புழிச் ‘சிவந்த உடம்பினையுடைய காமனே’ எனவுரைத்துப் ‘பச்சை யென்பது ப்ரத்யும்நனென்னும் வடமொழித் திரிபு’ என விளக்கியதனையும் நோக்கிக் கொள்க.)பிற்காலத்தவரும் இக்கருத்தே தழுவி ‘அத்தியின் மத்தியிலே … நித்திரைகொள்ளுந் தமாலத்துருவன்’ (அழகர் கலம்பகக் காப்பு) எனப்ப் பாடியதனையுங் காண்க. மஹாபாரதம் சாந்திபர்வத்தில் நாரத மஹருஷி ஸ்வேதத்வீபஞ் சென்று இம்மூர்த்தியை ஸ்துதித்த ஸ்தோத்திரத்தில் ‘வநஸ்பதயே நம: (வனங்கட்குப் பதியாகிய பெரு மரத்திற்கு நமஸ்காரம்) என வருதலும் ஈண்டு நினைக்கத்தகும்.

‘மனிசரு மற்று முற்றுமாய்‘ என்னுந் திருவாய்மொழி யீட்டில் ‘தடங்கடற் சேர்ந்த பிரானை’ என்புழி நம்பிள்ளை ஆசிரியர் – ‘திருப்பாற்கடலிலே அநிருத்த ரூபியாய்க் கொண்டு கண்வளர்ந்தருளுகிற இடம் அவதார கந்தமிறே (அவதாரங் கிளைத்தற்குரிய கிழங்கு-கந்தம் – கிழங்கு. அவதார கந்தம் – அவதார மூலம். கந்தம் மூலம் கிழங்கு மூன்று மொருபொருளன.); வெள்ளத்தரவிற் றுயிலமர்ந்த வித்திறே‘ என்று அருளிச் செய்ததனையும் ஈண்டைக் கேற்ப நோக்கிக் கொள்க. ப்ரச்நோபநிஷத்தில் ‘ஒரு விருக்ஷத்திற் பல பறவைகளுந் தங்கியிருத்தல்போல உலகெல்லாம் பரமாத்மாவினிடத்துத் தங்கியிருப்பன’ என்பதனால் இஃது உவமையாற் போந்த பெயரென்பது அறியப்படும். விஷ்ணுபுராணத்தும், மகாவிஷ்ணு விருக்ஷம் என்றும், ஸ்ரீதேவி அதன்கட் படர்ந்த கொடி என்றும் பராசரபகவான் அருளிச் செய்தான் (1, 8). மரம் தன் பழத்தைத் தானுண்ணாது தன்னையடைந்த உயிர் உண்ணநிற்றல்போல இறைவனுண்மை உணர்ந்துகொள்க. ‘பெருமரம்’ என்புழிப் பெருமை தான் பெரியதாயிருப்பதனாலும், தன்னையடைந்ததைப் பெரிதாக்குதலாலும் உள்ளது என்பர். இதனை விஷ்ணுபுராணத்தில் ப்ருஹ்ம சப்தத்திற்கு ஸ்ரீ பராசர பகவான் ‘பெரிதாதலானும் பெரிதாக்குதலானும் ப்ருஹ்மம் என்று அறியப்படுவது’ என்று கூறியதனாலும் உணரலாம். வெண்மணற் பரப்பில் வேரும் வித்துமின்றி ஆரணுவாகிப் பிண்டம் பூத்த தன்னிலையறியாத் தொன்மிகு பெருமரம் என்க.

7. மூவழி முப்பழம் முறைமுறை தருதலின்: மூவழி – ஐச்வர்யகதி, ஆத்மகதி, பரமாத்மகதி என்ற மூன்று நெறியில்: அசித்து சித்து பரதெய்வம் என்ற மூன்றேயுண்மையால் அவற்றை யடையும் நெறிகளும் மூன்றேயாயின. ஐச்வர்யம் – இனிய தேஹவிசேஷமும் அஃது அநுபவித்தற்கினிய தாரக போஷக போக்யங்களும் ஆக அசித்துப் பரிணமிப்பதேயாகும்; இவை இந்திரச் செல்வம் முதலியன என்க. ஆத்மகதி என்பது கைவல்யமார்க்கம்; கேவலம் ஆத்மாவை அநுபவித்தற்குரிய வழி எ-று. பரமாத்மகதி – நிரதிசயாநந்தமான மோக்ஷ மார்க்கம். இந்நெறிகளிற் செல்லும் அதிகாரியும் மூவகையினர் என்பர். ஆர்த்தனும் அர்த்தார்த்தியும் என் இருவகைப்படும் ஐச்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும், மோக்ஷார்த்தியுமென மூவகைப்படுதல் -ஸ்ரீகீதை ஏழாம் அத்யாயத்திற் கண்டது. இம்மூன்றதிகாரிகட்கும் ஈச்வரனைப் பக்திபூர்வகமாக அடைதல் வேண்டப்பட்டதாகும். எங்ஙனம் ஒரு மரத்திலுண்டாகும் பல்வகைக் கனிகளை அடைய விரும்பின பலரும் அம்மரத்தை ஆச்ரயிப்பது இன்றியமையாததோ, அங்ஙனமே இம்மூன்றதிகாரிகளும் தாம்தாம் அடைய விரும்பிய பலன்களை எய்தற்குப் பலப்ரதாதாவாகிய ஈச்வரனை அடைதல் இன்றியமையாததாகுமென்றுணர்க. அவர் கருதிய பலன்கள் வேறேனும், இம்மூவரும் ஆச்ரயிக்கவேண்டிய இடம் ஒன்றேயாதல் நன்கு துணிக. இதனாலன்றே, ஆளவந்தாரென்னும் பெரியார் ‘பக்தியோகமே இம்மூன்று பலன்களுக்கும் காரணம்’ என்று கீதார்த்தஸங்க்ரஹத்தில் (௨௭) விசதமாக அருளிச்செய்தார். இதனை, ‘பக்தியோகஸ்ததர்த்தீசேத்’ என்பது முதலாக வருமிடங்களிற் கண்டுகொள்க. ஸ்ரீ கீதாபாஷ்யத்திலும் ஸ்ரீ பாஷ்யகாரர் ‘தேஷாம் ஜ்ஞாநீ’ என்கின்ற ச்லோக விளக்கத்தில் ‘ஞானிக்கு என்னொருவனிடத்திற் பக்தி, மற்றை இருவர்க்குமோவெனின் தங்களிஷ்ட பலத்திலும், அவற்றிற்கு ஸாதனமாகையாலே என்னிடத்திலும் பக்தி’ என்று பக்தியையே இம்மூன்றற்கும் ஏதுவாக்கி அது வித்யாஸ பலன்றருவது இவ்விதமென்றுங் கூறியருளினார்.

மஹாபாரத்தத்திலும் ‘சதுர்விதா மமஜநா பக்தா:’ என்று, ஸ்ரீகீதையிற் சொல்லியபடியே, ஐச்வர்யார்த்தியை ஆர்த்தன், அர்த்தார்த்தி என இருவகைப்படுத்து மற்றை யிருவரொடுங் கூட்டி, நால்வரும் என் பக்தர்கள் எனக்கூறியுள்ளதும் காண்க. இவற்றாற் கர்மத்தையே முக்யமாகக் கொண்டு அதனடியாகப் பிறந்த ஞானந் துணையாக ஐச்வர்யங்களை விரும்பி ஈச்வரனை உபாஸிக்கும் பக்திமார்க்கம் ஐச்வர்ய கதி என்றும், ஞானத்தையே முக்யமாகக் கொண்டு கர்மந்துணையாக ஆத்மாவை அடைய விரும்பி ஈச்வரனை உபாஸிக்கும் பக்தி மார்க்கம் கைவல்யகதி என்றும், கர்மஞானங்கள் துனையாக ஈச்வரனையே யடையவிரும்பி அதனையே உபாஸிக்கும் ஏகபக்திமார்க்கம் பரமாத்மகதி அல்லது மோக்ஷகதி என்றும் நன்கு துணிந்துகொள்க. ‘நோற்ற நோன்பிலேன்’ என்னுந் திருவாய்மொழி யீட்டில் நம் பிள்ளை யாசிரியர் ‘ஞான கர்மங்களிரண்டுங் கூடினாற் பக்தி கூடியல்லது நில்லாது’ என்று உரைத்ததனையும் தெளிய நோக்கிக் கொள்க. இதனாலன்றே ஆளவந்தார் கீதார்த்த ஸங்க்ரகத்தில்,’

முப்பழம் – ஐச்வர்ய சுகம், கைவல்ய சுகம், மோக்ஷ சுகம் என்ற் மூன்று கனிகளை எ-று. இம்மூவகையை‘ப்ருஹ்மணோஹி ப்ரதிஷ்டாஹம்‘ என்னுங் கீதையின் பாஷ்யத்திற் காண்க.
இறவாதுவி காரம்மிலை யாகும்பிர மத்திற்
கெவ்வேதுவின் யான்றங்கிட னவ்வேதுவி னழியா
அறனால்விளை தற்கும்மொரு முடிபேதுணி புடையா
ரடையின்ப மதற்குந்நிலை யிடனாகுவ லம்மா’
-என்பது கீதைப்பாடல்.முறைமுறை – அவரவர் அர்த்தித்த கிரமங்களில் எ-று. அதிகாரியும் பலராய் அவர் விருப்பமும் பலவாதலின் முறைமுறை என்று அடுக்கினார்.
மறைமுறையால் வானாடர் கூடி – முறைமுறையின்
தாதிலகு பூத்தெளித்தா லொவ்வாதே
‘ (பெரியதிருவந்தாதி – 61) என்பது போலக் கொள்க. முறை என்று நூற்குப் பெயராதலான் முறை முறை என்பது நூன்முறையென்றால், அவனிட்ட வழக்கு சாஸ்த்ரம் என்பதாகாது சாஸ்த்ரமிட்ட வழக்கிலே அவன் தருவதாய் இறைவனுக்குத் தலைமை கூறாது சாஸ்த்ரத்திற்கே அவனினுமிகுத்துத் தலைமை கூறுவதாக முடியும். அன்றியும் சாஸ்த்ரம், பரதெய்வத்திற்கும் அதன் செயற்கும் ஞாபகவேதுவல்லது காரகவேது ஆகாமையு முணர்க (வாய்மொழியோடை மலர்ந்த தாமரைப்பூ’ என வரும் பரிபாடலிற் பரிமேலழகர் ‘தாமரைப்பூ படைப்பிற்கு முதலாக வந்து மலரும் என்பதற்கு வேதம் ஞாபகவேதுவாதலின்’ எனவுரைத்தது காண்க). சாஸ்த்ரத்திற்கும் பரதெய்வம் எட்டாதது என்று கூறுதலானும் பரம்பொருளின் தலைமை யுணரப்படும். தருதலின் = தருதலான் எ-று. தருதற்கண் எனினும் அமையும். தருதலான் ஒன்றுண்டு ஒண்சுவை தருவது என இயையும். ஈதலின், கொடுத்தலின் என்று உயர்த்தியும் தாழ்ச்சியும் தோன்றக்கூறாது ‘தருதலின்’ என ஒத்தோன் கூற்றாற் கூறியது, இறைவன் தன்னடைந்தார்க்குத் தன்னையே ஒக்க அருள் செய்தல் குறித்த தென்றுணர்க. ‘வீடும்பெறுத்தித் தன்மூவுலகுக்குந்தரு மொருநாயகமே’ (திருவாய்மொழி ௩ – ௧0 – ௧௧) என வரும் ஆழ்வார் திவ்ய ஸூக்திகளால் இதனுண்மை யுணர்க. ஒருநாயகம் ஈச்வரனுடையதாதல் தெள்ளிது. தன்னொக்க அருளலால் அஃது இவனுக்காயிற்றென்று உணர்க. தன் மூவுலகு என்றதனால் ஐச்வர்யம் ஈச்வரனதாதல் தெளியலாம். ஐச்வர்யம் என்ற சொல்லே இவ்வுண்மையை விளக்கும்.

ஒன்றுண்டு ஒண்சுவை தருவது – ஒண்மையொடு கூடிய இனிமையைத் தருவது ஒன்று உள்ளது எ-று.-ஒண்மை – ‘ஒளிக்கொண்ட சோதியுமா யுடன்கூடுவதென்று கொலோ’ என்ற திருவாய்மொழியிற் கூறியருளியபடி, ஜ்யோதிர்மயமான முக்தஸ்வரூபத் தன்மை. ஒண்மை தருவது கூறியதனால் இவ்விருக்ஷம் ஜ்யோதிர்விருக்ஷம் என்பது உய்த்துணரலாகும். சுவை – பரமஸாம்யமான நிரதிசயாநந்த ஸுகம். ஈண்டே தருவது கூறியதனால் இச்சுவை பரமஸாம்யமாதல் நன்கு துணியப்படும். ‘தம்மையே யொக்க வருள்செய்வர்‘ எனவும் ‘நிரஞ்சன: பரமம் ஸாம்யம் உபைதி’ எனவும் ‘போகமாத்ர ஸாம்யலிங்காச்ச’ எனவும் ‘பரஞ்ஜ்யோதிருபஸம்பத்ய‘ எனவும் வருமிடங்கள் நோக்கிக் கண்டு கொள்க. இதனால் இது மோக்ஷமாகிய பேரின்பமென்று குறித்தார்.- 

9 – 11. கல்லின் எழுந்து கடலினழுந்தி அறுகாற்குறவன் நீரற விளைக்கும் செறிபொழிற் குப்பை தரு கட்பு – இதன்கண், அறுகாற்குறவன் – அறுகாற்கு உறவன் என்றவாறு. அறுகால் – ஆறு வாய்க்கால்; ஆறு வழி எனினுமமையும். இவை ஆறிந்திரியங்களென்றவாறு. ஆறிந்திரியங்கள் – மெய் வாய் கண் மூக்குச் செவி மனம் என இவை; ‘இந்திரியாணி ஷட்’ (பொறிகள் ஆறு) என்பது வடநூல் வழக்கு. கீதாசாரியனும் ‘மநஷ் ஷஷ்டாநீந்த்ரியாணி’ என அருளிச்செய்தான். ஆறிந்திரியங்கட்கும் உறவு பூண்டவன் பத்தாத்மா எனவறிக. இவன் உடம்பைவிட்டுப் புறப்படும்பொழுதும் இவ்வாறிந்திரியங்களையும் விடாது உடன் கொண்டு சேறலான் இவற்றிற்குச் சிறப்பாக உறவுபூண்டவன் என்று பெயர் பெற்றான். இவ்வுண்மையை,

பொறியீச் சுரனா முயிரெவ் வுடலிற்
புகுவானெதினின் றுபுறப் படுவான்
எறிகால் தொடுமவ் விடனின் றுமணத்
தினையீர்ப் பதுபோ லிவனீர்த் தெழுமே
(கீதை – ௧௫ – ௮)என வருங் கீதைப்பாடலா லறியலாகும். ஜனன மரணங்களிற் சீவன் இந்திரியங்களுடன் வருவது போவதாயிருக்கு மென்பது ப்ருஹ்மஸூத்ரபாஷ்யத்து, இரண்டாம் அத்யாயம் நான்காம் பாதத்திலும், மூன்றாம் அத்யாயம் முதற்பாதத்திலும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டது. இந்திரியங்களை வேதம் ‘தசமே புருஷேப்ராணா: ஆத்மைகாதச’ ‘சீவனிடத்தில் இந்திரியங்கள் பத்து, மனம் பதினொன்றாகும்’ என்றதினால் இந்திரியங்களை ப்ராணபதத்தால் கூறுதல் நோக்கி அதன் மொழிபெயர்ப்பாகிய ‘கால்’ என்பதனாற் பாடியருளினாரெனினும் ஸமஞ்ஜஸமே யாகும். பதினோரிந்திரியங் கூறியிருப்ப ஆறிந்திரியங்கட்கே உறவுள்ளவன் என்றது, கருமேந்திரியமைந்தும் சரீரத்துடன் உண்டாய் அதனோடு இறுதியில் நசித்துவிடுமென்று வ்யாஸ பகவான் ப்ருஹ்மஸூத்ரத்தில் அருளிச்செய்தது பற்றியென்று துணியப்படும். இதனை ‘ஹஸ்தாதயஸ்து ஸ்திதேதோ நைவம்’ என்பதற்கு ஸ்ரீ பாஷ்யகாரர் உரைத்தருளிய வாற்றானுணர்க. இதனால் இவ்வைந்தையுங் கொள்ளாது ஆறிந்திரியங்கட்கே உறவுள்ளவன் என்றார் என்க.

கல்லின் எழுந்து கடலின் அழுந்தி நீரற என்பது, மலையிடை நின்றும், கடலிடை மூழ்கியும் பசையற உணக்குதலான் எ – று.-இவற்றால் இந்திரியங்கட்கு உறவு பூன்ட பத்தாத்மா ஐச்வர்ய காமனாய் அஃதெய்தற்கு உபாயமாகத் தீர்த்தம் படிந்தும், மலையிடைத் தனி நின்றும், நெருப்பிடை நின்று பசையற வுணக்கியும் தவஞ்செய்தல் முதலிய கர்மங்களைக் குறித்தாராவர். இதனை-பொருப்பிடையே நின்றும் புனற்குளித்து மைந்து நெருப்பிடையே நிற்கவுநீர் வேண்டா‘ (மூன்றாந்திருவந்தாதி – ௭௬)என வரும் பாசுரங்கொண்டுணர்க. எழுதல் – இராது நிற்றலாதலானும், கல் – பொருப்பாதலானும் ‘பொருப்பிடையே நின்றும்’ என்பதனையே ‘கல்லின் எழுந்து‘ என்பதனாற் கூறினார். ‘கல்லுங் கனைகடலும் வைகுந்த வானாடும்‘ (பெரிய திருவந்தாதி 68) என்புழிக் கல் என்பது பொருப்பாதல் காண்க. ‘வடபெருங்கல்’ எனப் புறப்பாட்டினும் இமயமலையைக் கூறுதல் காணலாம். புனற்குளித்து மென்பதனையே ‘கடலினழுந்தி’ என்று கூறிக்காட்டினார். தீர்த்தங்களிற் றலை சிறந்ததாகலின் கடலைக் கூறினார். ‘நீண்ட தோள் மால் கிடந்த நீளகடனீ ராடுவான், பூண்டநா ளெல்லாம் புகும்’ (மூன்றாந்திரு. 69) என்றபாசுரத்தால் இதன் உயர்த்தி நன்குணரலாகும். அழுந்தல் – மூழ்குதல். நீரற என்பது பசையற உணக்குதலாதலான் நெருப்பிடை நிற்றல் கூறினார். பரமைகாந்திகள் வேண்டாவென்று தள்ளியவற்றை இப்பத்தாத்மா ஐச்வர்ய காமனாய்ச் செய்தொழுகுமாறு கூறப்பட்டது. ‘நீரற’ என்பது பசையற வுணக்குதலைக் குறிப்பதாதல் ‘முழூஉவள்ளுர முணக்குமள்ள‘ (புறம் 219) என்று கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானை நல்லிசைப்புலவர் பாடியதனான் நன்கறியலாகும். ஐச்வர்யகாமன் பல்வகைக் கர்மங்களையே தலையாகக் கொண்டு காயம் வாட்டுதலை-படிமன்னு பல்கலன் பற்றோடறுத் தைம்புலன் வென்று
செடிமன்னு காயஞ்செற்றார்களு மாங்கவனை யில்லார்
குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியு மீள்வர்கள்’
–4-1-9-

விளைக்கும் செறி பொழிற் குப்பை தருகட்பு – (அறுகாற்கு உறவன்) இவ்வாறு எழுந்து அழுந்தி நீர் அறுதலான் அவற்றின் பயனாக விளைக்கின்ற செறிந்த கற்பகச் சோலை உதிர்த்த குப்பைகள் தரும் வஞ்சம் எ-று. பொழில் என்றது, கற்பக முதலிய ஐந்தருக்களுள்ள சோலையாதலான். இதனைக் கற்பகச் சோலை என்பது தலைமையான வண்மை பற்றி. ஈண்டுக் கூறிய இந்திரச் செல்வம்,-‘இன்றளிர்க் கற்பக நறுந்தேனிடைதுளிக்கு நிழலிருக்கை’-என்பதும், அதுவும் அவ்வைந்தருச்சோலை யுதிர்த்ததென்பதும், நல்லறிவாளர் கண்டுகைவிட்ட மயல் (துரால்) என்பதும் தோன்றச் செறிபொழிற் குப்பை என்றார். ‘குப்பை கிளர்ந்தன்ன செல்வத்தை’ என்பது இவர் திருவாக்கு. இது, நல்கிய இறைவனை ஆங்கு மறப்பித்தலானும் புண்ணிய கர்மம் நசித்து மண்ணிடைத் தோன்றியவிடத்தும் அச்செல்வத்திற்கே வாசனையால் முயலச்செய்தலானும், ‘குப்பை தருகட்பு’ என்றார். கட்பு – களவு, வஞ்சம் எ – று. ‘செல்வம் வந்துற்ற காலைத் தெய்வமுஞ் சிறிது பேணார்’ என்ப. (பாரதம்)’வியன் மூவுலகு பெறினும் போய்த் தானேதானேயானாலும்’ (திருவாய்மொழி 8 – 10 – 2) என்று ஐச்வர்ய கைவல்யங்களைக் கூறியவிடத்து ஐச்வர்யார்த்தி மூவுலகும் அருமையிற் பெறுதல் கூறியதேனும் ஈண்டுத் தலைமைபற்றி இந்திரச் செல்வமே கருதினாரெனக் கொள்க.

இனி, இதற்கே வேறோருரை கூறுதும். அறுகாற்கு உறவன் என்புழி அறுமீனாய்க் கால்வடிவாகவுள்ள உரோகிணிக்கு உறவுபூண்ட சந்த்ரன் எ-று. உரோகிணி ஆறாய்ச் சகடம் எனப்பெறுதலும் சந்த்ரனுக்கு அதிகப்பிரியையாதலும் நூல்களிற் காணலாகும். இஃது அறுமீன் எனவும் பெயர் பெறுமென்பது ‘அறுமீனினைவனள்’ என வரும் அகநானூற்றின் குறிப்பில் ‘அறுமீன் – உரோகிணி’ எனக் கூறியதனானறிக. கால் – உருளை. ‘சகடக்கால்’ (நாலடி) எனவும் ‘கால்பார்கோத்து ஞாலத்தியங்கும்‘ (புறம். 185) எனவும் வருவன காண்க. வ்ருஷப வீடு சந்த்ரனுக்கு உச்சஸ்தானமாதலின் ஆண்டுள்ள உரோகிணியின்பால் அவன் மிகவும் உறவுள்ளவனாயினன் என்பர். ரோஹிணீசன் ரோஹிணீ நாயகன் என்பன சந்திரன் பெயர்களாகும்-இவன் நீரறஎன்றது, இவன் உடலமிழ்தத்தைத் தேவர் பருகலான் இவன் அமிழ்தம் அற என்றவாறாம். இவ்விதம் சந்த்ரன் அமிர்தமயமாய்க் குளிர்ந்த ஜலபரமாணுக்களாலே சுக்ல பக்ஷத்தில் தேவர்களையும் கிருஷ்ண பக்ஷத்தில் பிதுர்க்களையும் திருப்தி செய்கின்றான் என்று புராண ரத்னம் கூறுதலை நோக்குக (விஷ்ணுபுராணம் 2 – 12). இத் தேவர் வளர்ச்சிக்கு ஒருவன் உடல் தேயவேண்டுவதென்று குறித்தவாறாம்

இனிக் கல்லினெழுந்து கடலின் அழுந்தி என்பதனைக் கடலினழுந்திக் கல்லினெழுந்து என மாறிக் கூட்டுக. சிந்தாமணிப் பதிகத்திற் ‘குணமாலையை வைதுமாறி’ என்பதனை ‘மாறி வைது’ என மாறிக் கூட்டியதுபோல ஈண்டுங் கொள்ளற்பாலது; இவ்வளர்ச்சியும் நிலைபேறுடையதில்லையென்று இதிகாசங் காட்டியது இஃதென்க. இவ்விந்திரச் செல்வம் துர்வாஸ முனிவர் சாபத்தாற் கடலினழுந்தி மந்தரமென்னுங் கல்லானெழுந்து சந்த்ரன் நீரற விளைக்கும் செறிபொழிற்குப்பை என்றவாறாம். சந்த்ரன் விளைக்கும் பொழில் என்க. சந்த்ரன் தன் அமிழ்தம் அறா நிற்கவும், விளைக்கின்ற கற்பகச்சோலை எ-று. ஓஷதீசன் சந்த்ரனாதலான் அவன் விளைக்கும் பொழில் என்றார். இச் செல்வம் சந்த்ரன் விளைப்பதென்றாலும் இழுக்காது; என்னையெனிற் கூறுவேம். வீடு புகுதற்குரியது அர்ச்சிராதிகதியென்றும் சுவர்க்கம் புகுதற்குரியது தூமாதிகதி என்றும் வேதம் கூறும். இவ்விருகதிகளுள் ஐச்வர்யார்த்திகள் புகும் தூமாதிகதி, முதலிற் சந்த்ரனிடம் புக்கு அப்பாற் சுவர்க்கம் போகும் முறைமைத் தாதலின் ‘சாந்த்ரமஸம்’ என்று வழங்கப்படும். இச்செல்வம் திங்களாகிய உண்டியால் அமைவதனாலும் இதனுண்மை யுணர்க. பரிபாடலில், ‘நிறைமதி யுண்டி யமரர்க்கு’ எனவும், ‘அமரருண்டி மதி‘ எனவும், ‘மதியுண் அரமகள்‘ எனவும் வருவனவற்றால் தேவர்க்குத் திங்களுணவாதல் காணலாம். இச் செல்வம் குப்பையாதலும் கட்பு ஆதலும் இவ்வுரைக்கும் ஒக்கும்.

11 – 12. ஒன்று வித்து அறு கோட்டு – பிறிதொன்று வித்து அற்ற குற்றமுடைத்தென்றவாறு.-இது கைவல்யார்த்தியின் பலனாதல் காட்டுவாராய் வித்தற்ற தோஷமுடைத்தென்று கூறினார். கோள் – குற்றம். தாளையுடையது தாட்டு என வருவதுபோல இதனையுங் கொள்க. வித்து என்பது பெரிய மரத்தையுந் தன்னுட் சூக்குமமாய் அமர்த்திக்கொண்டு, வாய்த்தவிடத்து அம்மரமாய்ப் பரிணமிப்பதற்குக் காரணமாய தொன்று. இதனை ‘நீல நிறத்து நெடுந்தகை வந்தோர், ஆலமர் வித்தினருங்க் குறளானான்‘ எனக் கம்பநாடர் கூறுதலானறியலாம். ஈண்டுத் தன்னிலையறியாத் தொன்மிகுபெருமரம் இக்கனியினுள்ளே சூக்குமமாகவும் இல்லாமையால், எப்பொருட்கும் வித்தாய தனிமுதல் இல்லாமல், கேவலந் தன்னைத்தானே அனுபவிப்பதாகலின், தெய்வமில்லாமையைக் குற்றமாகக் கொண்டு கூறினார். ‘தானோருருவே தனிவித்தாய்‘ (1, 5, 4) என்னுந் திருவாய்மொழியிலே இறைவனே வித்தாகக் கூறப்படுதல் காணலாம்.


‘பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து பின்னும்
இறக்கவு மின்புடைத்தா மேலும் – மறப்பெல்லாம்
ஏதமே யென்றல்லா லெண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே யேத்தாப் பகல்’
(பெரிதிருவந். 80)என்பதனாற் கைவல்ய சுகத்தின் சிறப்பெல்லாம் விசதமாக எடுத்தோதி, அதன்கட் பரதெய்வத்தை யேத்தாத மறப்பே பூர்ணமென்றும் அஃது ஏதமே என்றும் தேற்றமாக உரைத்தருளியதுகொண்டு இங்கும் குற்றமுடைத்தென்று தெளிவித்தார். ஏதம், குற்றம், கோள் என்பன ஒரு பொருளன. ஏதம் – துன்பம் எனினுமமையும்.-நிற்கின்ற தெல்லா நெடுமாலென் றோராதார் கற்கின்ற தெல்லாங் கடை’ (இரண்டாந்திரு. 54)-ஆதலான், இவர்க்குக் கைவல்யசுகம் கடையாயிற்று. இந்திரச் செல்வம் பெற்றவன் தன் புண்ணியம் நசித்துப் பின் மண்ணிற் பிறத்தலான் ஒருகால் தெய்வத்தை நினைந்து வீடெய்த அவகாசமுண்டு. இக்கைவல்யசுகத்திற் பட்டானுக்கு மீண்டும் பிறத்தலின்மையால், தெய்வ நினைப்பிற்கே அவகாசமில்லை யென்று கொண்டு கடையாக்கினார். ‘அமரர் கழல்தொழுது நாளும் இடைநின்ற வின்பத்த ராவர்‘ (இரண்டாந் திருவந்தாதி, ௧௧) என்பதனால் தேவர்க்குக் கடவுள் கழறொழுதலுண்மையும் அவர் இடைநின்ற இன்பத்தராதலும் உணர்ந்துகொள்க. இதற்கு வேறுகூறலு முண்டு.-இனிக் கைவல்யத்தைத் தோடற்ற நெல்வித்திற்கு (௧, ௨௨) விஷ்ணுபுராணத்தில் உவமித்தலான், அதனையே ஈண்டுத் தழீஇயினாரெனக் கொண்டு ‘வித்தறு தோட்டு’ எனப்பாடம் ஓதி, ஒன்று அறுதோட்டு வித்து என்றாலும் நன்கு பொருந்தும். ‘நாற்கூற்றே மருந்து’ (திருக்குறள். ௬௫0) என்புழிப்போலத் தோட்டது என்பது தோட்டு என விகாரமாயிற்றெனினும் இழுக்காது.

12. ஆமா விளைக்கும் நாடன் என்பது, இங்ஙனம் ஆமாறு நாடு விளைப்பவன் எ – று. ஆம் ஆறு என்பது ஆமா என வந்தது செய்யுள் விகாரம். ‘தேறுமா செய்யா அசுரர்களை‘ (பெரிய திருவந்தாதி, ௩௩) என இவ்வாழ்வாரே வழங்குதல் கண்டு கொள்க; ‘ஆமாறொன்றறியேன்’ (திருவாய், 4, 9, 2) என்பது இவர் வழக்கேயாம். இங்ஙனம் ஆகும் ப்ரகாரத்திலே (ஆம் ஆற்றிலே) விளக்கும் நாடன் என்க. ஜகத் சிருஷ்டி செய்பவன் எ – று. விளைக்கும் நாடன் என்பதனை நாடுவிளைப்பவன் என்று கொள்க; ‘செய்த வேள்வியர்’ (திருவாய் 5,7,6) என்பதனை வேள்வி செய்தவர் என்று கொள்வது போல. இவ்வழக்கு வடநூலிலே மிகவும் பயில்வதொன்று; பெருந்தமிழ்நூல்களிலும் ஆங்காங்குக் காணலாம்.

நாடு விளைப்பவன் – உலகு படைப்பவனாகிய பிரமன். நாடு உலகிற்காதல் ‘நாட்டைப் படையென் றயன்முதலாத் தந்த‘ என்னும் நாச்சியார் திருமொழியால் (14,9) அறிந்துகொள்க. இறைவன் ஆணையாற் பிரமன் நாடு விளைப்பது இம்மூன்று பெரும்பலன்களுள் ஒன்றேனும், உயிர்கட்கு ஆமாறன்றி வேறில்லை யென்பது கருத்தாகும். ஸ்ரீமத் பாகவதத்தில் (11 – 3 – 7) ‘ஆதிமூர்த்தி ஜீவனுக்கு உயர்ந்த ஸித்தி உண்டாம்பொருட்டுப் பூதங்களாற் பிராணிகளைப் படைத்தான்‘ என வருதலானும் உணர்க.-உய்யவுலகு படைத்து‘ எனப் பெரியாழ்வார் திருமொழியிலும் (1, 6, 1)-படைத்திட்ட திவ்வைய முய்ய முனநாள்
பணிந்தேத்த வல்லார் துயராயவெல்லாந் துடைத்திட் டவரைத் தனக்காக்கவென்னத் தெளியா
‘-எனப் பெரியதிருமொழியிலும் (10, 6, 7) வருதல் கொண்டு இவ்வுண்மை அறிக. உயிர்கட்கு அநுகூலிக்கவே உலகு விளைப்பதல்லது ப்ரதிகூலிக்கவில்லையென்பது கருத்து. இங்ஙனம் மாக்கதிக்கணாமாறு நாடு விளைப்பவனாகவும் ‘என்னொருவர் தீக்கதிக்கட் செல்லுந்திறன்’ எனப் பெரியோரிரங்குதலான் இஃதெளிதிலறியலாம். தீக்கதி புகுவது உயிர்கள் தம் தீயவினையால் என்றறிக.

‘நாவாயி லுண்டே நமோநார ணாவென்று
ஓவா துரைக்கு முரையுண்டே – மூவாத
மாக்கதிக்கட் செல்லும் வகையுண்டே யென்னொருவர்
தீக்கதிக்கட் செல்லுந் திறன்
‘ (முதற்றிருவந்தாதி, 95)-என்னும் பாசுர நோக்கிக் கொள்க. வாய் படைக்கப்பட்டுள்ளது; அதன்கண்ணே நாப் படைக்கப்பட்டுள்ளது; நாரணா என்றுரைக்கும் உரை நித்யமாகவுள்ளது. இந்நாவையும் இத்திவ்ய நாமாவையுஞ் சேர்த்தால் ‘மாக்கதிக்கட் செல்லவகையுண்டே’ என்றோதியவாறாம். ஈச்வரன் உடம்பைப் படைப்பது பந்தம் ஒழிதற்கேயன்றி வேறொன்றற்கில்லை யென்பது.-ஆப்பங்கொழியவும் பல்லுயிர்க்கும் – ஆக்கை கொடுத்தளித்த கோனே குணப்பரனே யுன்னை விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்‘ (நான்முகன் றிருவந்தாதி, 93)என்பதனாலறியலாம். இத்துணையுங் கூறியவாற்றால் படைப்பவன் உலகு விளைப்பது, உயிர்கள், முற்கூறிய மூன்று கதிகளிலும் ஆமாறல்லது நரகிற்போமாறில்லையென்று துணிந்து கொள்க.

இவனைப் பரமேஷ்டி, சுவயம்பூ என்பதுபற்றித் தன்னிற் றலைமை வேறில்லானென்று பொருள் கொள்ளலாமேனும், பின் முலையிலி என்று உறுப்புப்பற்றி வந்தததனோ டொருபடித்தாய் இயைபுள்ளதாகாமை யுணர்க. ஜகத்சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமன், முதல்முதல் அநிருத்த மூர்த்தியிடத்தே தோன்றினானென்பது மஹாபாரதம் சாந்தி பர்வம் – ‘அநிருத்தாத் ததா ப்ரஹ்மா தந்நாபி கமலோத்பவ:’ எனவரும் வாக்யத்தால் அறியப்படுதலான் ஸ்ருஷ்டியினாரம்பமும் இத் தொன்மிகு பெரு மரமாகிய அம்மூர்த்தியின்கண்ணே நிலையுறுவ தாதலால் இயைபு காணலாகும்.13. அவனே தலையிலி என்பது உலகு விளைப்பவனாகிய அப்பெரியோனே தன் தலையிழந்தவனாயினான் எ – று.-நாடன் என்பதன்பின் அவனேயென அடுத்து வேண்டாத சுட்டுச்சொல் வந்தது, முன்னே எல்லாருடைய தலைகளையும் தன் தலைகளையும் படைக்கும் அவனே பின்னே தலையில்லையாயினான் என்று குறிக்கொள்ளுதற்கென அறியலாம். சிந்தாமணிப் பதிகத்தில் (4) ‘தேவிபோகி…சுடுகாடவள் சேர்ந்தவாறும்’ என்புழி ‘தேவியவள்’ என வந்தது, முன்னே இன்னமிழ்தாயினவள் பின்னே இங்ஙனஞ் சுடுகாடுபுக்காள் என உணர்த்தற்கு என்பதுபோல இதனையுங்கொள்க.-பிரமன் பலதலை படைத்துக்கொண்ட செய்த மத்ஸ்ய புராணம் ௩-ஆம் அத்யாயத்திற் (30 – 41) கண்டது. ஆண்டு இவன் தன்னுடம்பிற் றோன்றிய ஸரஸ்வதியைக் கண்டு காமித்தான் என்றும், இவனைக்கண்டு ஒவ்வோர் திசையிலும் அவள் ஒதுங்கினாள் என்றும், ஒதுங்கியதிசையெல்லாம் இருந்தபடியே தலையைப் படைத்துக்கொண்டு நோக்கினானென்றும், அதுகண்டுஸரஸ்வதி வானம் புகலாயினள் என்றும், அவள் வான்புகுதலைக் காண உச்சியில் ஐந்தாந்தலை படைத்து நோக்கினான் என்றும், இவ்வாறு ஐந்தலையன் ஆயினானென்றும், ஐந்தாந்தலையைச் சடைகளான் மறைத்திருந்தானென்றும் கூறுதல் காணலாம். இவன் ஐந்தலை வரலாறு இப்புராணங் கூறுதல் கொண்டு, இவன் முதற்கண்ணே நான்கு மில்லனாயிருந்தானென்று உய்த்துணரலாகும்.-கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும்’ (குறள், 1101) ஐம்பொறியுமுள்ள உத்தம அவயவம் இல்லான் என்றது, இவன் காமபோகந்துய்த்தற்கேற்ற உறுப்பே இல்லையாயினான் என்பது கருதிற்று. ‘ஐம்புலனு மொண்டொடிகண்ணே யுள’ என்பது திருக்குறள். பின் பிரமசிரசு கிள்ளப்பட்டுச் சிவபிரான் கையது ஆயிற்று எனப் பன்னூலினுங் கேட்கப்படுதலான், தலையிலி என்றார். ‘கபாலநன் மோக்கத்துக் கண்டு கொண்மின்’ (திருவாய்மொழி. 4 – 10 – 4) என்புழி, நம்பிள்ளையாசிரியர் ‘ஒருவன் தலைகெட்டு நின்றான்’ என்று உரைத்ததனாலும் ‘தலையிலி’யாதலுணர்க; ‘வாணன் கையிழந்து நின்றான்’ என்பதுபோல இதனையும் கொள்க.

இவனைப் பரமேஷ்டி, சுவயம்பூ என்பதுபற்றித் தன்னிற் றலைமை வேறில்லானென்று பொருள் கொள்ளலாமேனும், பின் முலையிலி என்று உறுப்புப்பற்றி வந்தததனோ டொருபடித்தாய் இயைபுள்ளதாகாமை யுணர்க. ஜகத்சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமன், முதல்முதல் அநிருத்த மூர்த்தியிடத்தே தோன்றினானென்பது மஹாபாரதம் சாந்தி பர்வம் – ‘அநிருத்தாத் ததா ப்ரஹ்மா தந்நாபி கமலோத்பவ:’ எனவரும் வாக்யத்தால் அறியப்படுதலான் ஸ்ருஷ்டியினாரம்பமும் இத் தொன்மிகு பெரு மரமாகிய அம்மூர்த்தியின்கண்ணே நிலையுறுவ தாதலால் இயைபு காணலாகும்.-‘தேவுமெப் பொருளும் படைக்கப் பூவினான்முகனைப் படைத்த தேவன்’ (திருவாய், 2,2,4)என்பதனால் இப்படைப்பின் மூலம் ஸர்வேச்வரனிடத்திலே நிலைபெறுவது என்க.

13. அவன் மகள் முலையிலி = அப்பிரமனுக்கு மகளாய்த் தோன்றிய ஸரஸ்வதி ஸ்தனமில்லையாயினாள் எ – று.-பிரமன் தவத்தால் அவன் திருமேனியிற் றோன்றினாள் என்றும், இவள் அவனுக்கு மகளேயாகவும் இவளெழிலான் மனங்கவரப்பட்டுக் காமித்தானென்றும், அது கண்டு பிரமபுத்திரராகிய மகருஷிகள் பிரமனை வெறுத்தனரென்றும் மத்ஸ்யபுராணமும் ஸ்ரீபாகவதமும் நன்குவிளக்குதலான், , இவள் பிரமனுக்கு மகளேயாதல் தெள்ளிது. தமிழில் மகள் என்பது மனைவிக்கும் பெயராதலின், பின் அவன் இவளை மனைவியாக விழைந்ததற்கும் பொருந்தவே ‘அவன் மகள்’ என்று ஈண்டுக் கூறப்பட்டது என்பது பொருந்தும்.-இவளை முலையிலியென்றது, இயலும் இசையுமல்லது வேறு ஸ்தனமில்லாமையா லென உய்த்துணரலாகும். ‘ஸங்கீதமபி ஸாஹித்யம் ஸரஸ்வத்யா: குசத்வயம்’ என வரும் வடமொழிவழக்கானுணர்க. ஸரஸ்வதி ஞானசக்தி என்பது நூல்களின் றுணிபு. ‘ஞானமுதல்வி’ என்பர். ஞானங் காமத்தைத் தொலைக்குமே யல்லது அதனை யுண்டாக்கமாட்டாது. ‘கற்றவர் ஞானமின்றேற் காமத்தைக் கடக்கலாமோ’ என்று கம்பநாடர் பாடுதலானும் இஃதுணரலாகும். இங்ஙனங் காமஞ் செய்யாது ஞானமே செய்தலான் இவளை முதிர்ந்த மூதாட்டியாகவே வருணிப்பர். முலையின்மை காமமின்மைக்கு அடையாளமெனினும் பொருந்தும். ‘முலையிரண்டு மில்லாதாள் பெண்காமுற்றற்று’ (திருக்குறள், 402) என்பதனான் இதனை யுய்த்துணர்க. முலையென்றது ‘காமாநுபோகத்தை’ என்று தக்கயாகப்பரணி உரைகாரர் வெளியிடுவதுங் காண்க. இவளையே பெரியபிராட்டியார் அமிசமான ஆத்மவித்யாரூபிணியாகக் கொண்டு உபாஸிக்குமிடத்து வ்ருத்தையாக வழங்குவது ‘ஸாயம் ஸரஸ்வதீம் ச்யாமாம்; நமாமி விஷ்ணுதைவத்யாம் வ்ருத்தாம் கருடவாஹநாம்’ என வருந் தியானத்தால் உலகம் அறிந்தது.

நூல்வலையிற் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்‘ (நான்முகன்றிரு. 40) என்பதனாற் பெரியபிராட்டி வித்யாரூபிணியாதல் தெளியலாம். வாராமுலைமாதர் பேதையர் என்றும், வருமுலை மாதர் யுவதிகள் என்றும் வந்தமுலைமாதர் பேரிளம்பெண்டிர் என்றும், வந்து முலையில்லையாயினார் வ்ருத்தையள் என்றும் தெரிந்துகொள்க.
ஈட்டினரும் பதத்திற் சீயர் ‘யௌவன சூசகமான முலையானவை‘ என உரைத்ததனாலும் இதனுண்மை யறியலாகும். (திருவாய்மொழி 4 – 6 – 10). பெரிய பிராட்டியார் ஆத்மவித்யாரூபிணியாதல் விஷ்ணு புராண ஸ்ரீஸ்துதியிற் கண்டது.-இவ்வாறு தலைவனுந் தலைவியும் முறையே தலையிலியும் முலையிலியுமாதலே யன்றி இத்தலைவி –

14. தானும் ஈனாள் ஈனவும் படாஅள் என்றது இவள் தானும் ஒரு ப்ரஜையைத் தன்னினின்று ப்ரஸவிக்கமாட்டாள், ஒருவராற் ப்ரஸவிக்கப்படவுமாட்டாள் எ – று.ஈனாள்…படாஅள் என ஈண்டுக்கூறியதன் காரணம் நுணுகி நோக்கிற் புலனாம். எவ்விதத்தினும் எவரானும் தவறாதவன் என்றுணர்க. (மஹாபாரதம், சாந்தி 353). இவள் வாக்தேவியாய்ச் சப்தமே வடிவாயுள்ளவளாதலின் உலகிற் பெண்டிர்போலக் கருவுயிர்த்தலில்லை எ – று. இவள் வடிவான சப்தம் பரப்ருஹ்மத்துக்கு ச்வாஸமாய் நித்யமான வேதவாக்யமாதலான், ஈனவும் படாஅள் என்றாரென்ன. ஈனப்பட்டால் நித்யமாதல் கெடும்; ‘ஏதத் நிச்வஸிதம்’ என்பது ப்ருஹதாரண்யக சுருதி. இவ்வாறே ஸுபாலசுருதியுங் கூறிற்று. இங்ஙனம்

15. எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் – எழுவரும் மூவருமாகிய பதின்மர் ப்ரஜைகளைப் பெற்றனள் என்று வியப்புச் சுவைபட உரைத்தார். தசப்பிரமாக்களைப் புத்திரராக அடைந்தாள் என்பதைக் குறித்ததாம். காமாநுபவபோக ஸூசகமான முலையில்லாளாகியும், காமாநுபோகந் துய்த்தற்குரிய ஐம்பொறியுமுள்ள உத்தம அவயவவிசேட மில்லாதவனைக் கலந்து – வேதம் ஒவ்வொரு சுமங்கலையும் அடைய வேண்டி ஆசீர்வதித்த – பத்துமக்களையும் பயந்தனள்; இது வியப்பாகும் என்பதாம்.வேதம் பத்து மக்கள் பெறுபடி வாழ்த்தியது ‘தசாஸ்யாம் புத்ரா நாதேஹி பதிம் ஏகாதசம் க்ருதி’ என்னும் வாக்யத்தாலறிந்தது; ‘பதின்மர்மக்களைப் பெற்று பதியைப் பதினோரா மகவாகச் செய்க’ என்பது இதன் பொருள்.உள்ளவளாகியும் –

இவள், பிரமாவின் சக்தியாய் அவன் உள்ளத்தமர்ந்து அவன் மானஸபுத்ரர்களான பிரமர்பதின்மரை உண்டாக்கியபடியால் இங்ஙனங் கூறினார். பிரமதேவனுடைய புத்ரர்கள் பதின்மர் என்பதும், அவர் இவரிவர் என்பதும் ஸ்ரீமத் பாகவதம் 3 – ஆம் ஸ்கந்தம் (12 – 22) ‘மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்த்யர், புலஹர், க்ரது, ப்ருகு, வஸிஷ்டர், தக்ஷர், பத்தாமவராகிய நாரதர்‘ என்பதனால் அறிக. இவருள் ப்ருகு, மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், க்ரது என்னும் இவர் ஸப்த ப்ரஹ்மாக்கள் என்று ஸ்ரீ பாகவதத்தில் (11 – 14 – 4) ஒரு தொகையாக வழங்கப்படுதலான் எழுவர் மூவர் என்று பிரித்துரைத்தார். பத்தினை மூன்றும் ஏழுமாக எண்ணிக் கோடலும் பண்டை வழக்கேயாகும். ‘முடிப்போது மூன்றேழென் றெண்ணினான்’ (மூன்றாந் திருவந். 77) என்று பெரியார் பணித்தலானறிக.-பிரமசக்தியாய்ப் பிரமனினைவி லமர்ந்து இப்பதின்மரையுந் தோற்றுவித்தலாற் பயந்தனள் என்றார். ‘திதியின் சிறுவர்’ என்புழிப் போலச் சிறுவர் என்பது மக்களுக்காயிற்று.

உலகத்தை அபிவிர்த்தி செய்யவும், உயிர்கட்கு ஞானோதயஞ் செய்யவும், ஆசாரத்தை அநுஷ்டிப்பித்துத் திருத்தவும் இவரைப் பயந்தனள் என்று கருதிக் கூறினார். ‘மலர்மிசை முதல்வனு மற்றவனிடைத்தோன்றி, யுலகிருளகற்றிய பதின்மரும்’ எனப் பரிபாடலின் வருவது கொண்டு இதன் உண்மையுணர்க. ‘சிந்தாதேவி‘ (சிலப்பதிகாரம்) என்பதும் புலமாமகள் என்பதும் (சிந்தாமணி) இவள் பெயராதலால், பிரமன் நினைவிலமர்தல் அறிக. இப்பதின்மரும் பிரமன் நினைவிற்றோன்றியோர் என்பது ‘விதியின் மக்களும்’ (பரிபாடல், ௩) என்புழி ‘ஆதிப்பிரமற்கு நினைவிற்றோன்றிய பிரமர் பதின்மருள்’ எனப் பரிமேலழகர் உரைத்ததனான் உணரலாம்.இனி இரட்டுறமொழிதலான், ஸரஸ்வதியாகிய வித்யா லக்ஷ்மி எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் என்று கொண்டு, மூன்றும் ஏழுமாய் அக்ஷரவொலிவடிவாய் நுண்ணியவாய் திருமந்திரம்பத்தெழுத்துக்களையும் உலகுய்ய உதவினள் எனினும் நன்கு பொருந்தும்.அகார உகார மகாரமாகப் பிரிப்புண்பதுபற்றி ப்ரணவத்தை ‘த்ர்யக்ஷரீ’ ‘த்ரிவ்ருத்’ என வழங்குதலான் அஃது மூன்றாதல் தெள்ளிது. எஞ்சிய ‘நமோ நாராயணாய’ என்பது ஏழாதல் கண்டுகொள்க. அச்க்ஷரங்கள் தேவதைகளின் வடிவாதலும் உயர்த்தியும் நோக்கி உயர்திணையாற் கூறினார். ‘இசைத்தலுமுரிய வேறிடத்தான‘ (தொல்காப்பியம்) என்பது, இலக்கணம்.இங்ஙனம் மறைத்துக் கூறியது, மறையிற் றலைசிறத்தல் பற்றியும் இதன் கௌரவம் பற்றியும் எனக் குறிக்கொள்க. இதன் அநுக்ரக விசேடம் ப்ரஹ்லாதாழ்வான் முதலியோரிடம் நன்கு காணலாம். அக்ஷரங்கள் தெய்வவடிவே என்பதும் அவ்வவ் வக்ஷரங்கட்கு அதிதெய்வம் இவையென்பதும் அக்நிபுராணம் கூறிற்று. தமிழிலும் பாட்டியலிற் காணலாம். மந்த்ரகாரிணி ஸரஸ்வதி என்பது பற்றி இவ்வாறு கூறப்பட்டது.

16. அவள் இவள் உவள் என அறிதல் – இவ்வாறு இருடிகளையும் திருமந்த்ரத்தையும் உலகுய்யப் பயந்த அத்தகையள் ஸரஸ்வதியென இலக்குமியென ஒருபடியாகத் துணிதல் எ-று. உவள் – உகாரார்த்தமா யுள்ளவள்; இலக்குமி என்பது திருமந்த்ரார்த்தத்தால் ஸம்ப்ரதாயஸ்தர் பலரும் நன்கறிவர். அவள் ஒழிந்த இவள் ஸரஸ்வதி என்பது தெள்ளிது. இது பிரமன் மகளாதலானும் நன்கறிந்ததாம். உபகாரஸ்ம்ருதி செய்ய வேண்டுதலின் அறிதல் இன்றியமையாதென்று கருதிக் கூறினார். பத்தெழுத்தினையும் உலகில் வெளியிட்ட இருடியர் இப்பதின்மர் எனக் கருதினாரோ என ஊகிக்கவும் இடனுண்டு. இருடி, மந்த்ரம், தெய்வம் மூன்றும் ஸர்வதா உபாதேயமாகக் கடவன வென்பது நம் பெரியோர் திருவாக்காதலான், அவற்றையே இவரும் ஞாபிக்கின்றார் எனக் கொள்ளலுமாம்.

17. துவளறு காட்சிப் புலவரது கடனே – துவட்சியற்ற அறிவினாற் புலவரென்று பெயர்சிறந்தாரது கடப்பாடேயாம் எ – று.புலவரது கடன் என்றது, மஹாபாரதத்தில் ‘வித்வத் ஸம்ரக்ஷணம்‘ என ஓர் பகுதியுண்டு – அதன்கண், வித்வான் அஷ்டாக்ஷர ஜபபாராயணனாக இருத்தல் கூறப்பட்டுள்ளது. அவ்வுண்மையை அச்சங்கப்புலவர்க்கு அறிவுறுத்துவாராய்க் கடன் என்றுரைத்தருளினாரென்க. துவளல் – வாடுதல். துவளறு காட்சி – யதாவஸ்திதஞானம். அஃதாவது பொருளியல்புள்ளவா றுணரும் நுண்ணறிவு. புலவர் என்புழிப் புலம் அறிவாதலிற் காட்சிப் புலவர் என்பதற்கு இவ்வாறு கூறப்பட்டது. அன்றியும் இச்சங்கப்புலவர் ஸரஸ்வதி அம்சமென்ப வாதலான் அவள் பயந்த இருடியரையும், இலக்குமியின் வடிவாகிய அவளே பயந்த திருமந்த்ரத்தையும், அது கூறும் வாசுதேவ தருவையுமல்லது தஞ்சம் வேறில்லையென்றும் உய்த்துணர வைத்தவாறாம்.

பரமாத்ம சக்தி பலபல படியாகக் கேட்கப்படுவது’ என்பது வேதமாதலின், அவள் இலக்குமியாகவும் ஸரஸ்வதியாகவும் நூல்கள் கூறுமென் றுணர்க. நாமங்கையே, நாவினுணின்று மலரு ஞானக் கலைகளுக்கெல்லாம் ஆலியும் ஆக்கையும் இறைவன் றானே (திருவாய் 1, 9, 8) என்று ஞாபித்து, அவ்விறைவனையும் அவள் பரிகரத்தையும் பாடுக என்று அருள் செய்தாள் எனக் கருதி உபகாரஸ்ம்ருதி பண்ணிய பெரியாரும் நம் ஆழ்வார்களி லுண்டு.

நாம்பெற்ற நன்மையு நாமங்கை நந்நெஞ்சத்
தோம்பி யிருந்தெம்மை யோதுவித்து – வேம்பின்
பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்
றருணீர்மை தந்த வருள்’
–என பூதத்தார் அருளிச்செயலானறிக. ஸரஸ்வதியே வேத மந்த்ரகாரிணியென்று தக்கயாகப்பரணி உரையாசிரியர் உரைப்பர் (தாழிசை, 593). இவற்றாற் பயந்தவள் இவள் என அறிதல் கடனென்றார்.

இனி நாமங்கையும் அறிந்தோதற்கரிய பொலிவுடையன் இறைவனென்று பாடியருளிய பெரியாரு முண்டு. இதனை ‘நாமங்கை தானு நலம்புகழ வல்லளே, பூமங்கை கேள்வன் பொலிவு’ (மூன்றாந் திருவந்தாதி, 57) என்பதனால் அறியலாம். தான் நன்கறியாததொன்றை உலகிற்கோதவல்லவள் இவளில்லை யன்றே? ஆதலால் வித்யாலக்ஷ்மியாகிய பூமங்கை தான் தன்கேள்வன்படி உணரவல்லள்; உவள்தான் நம்வினை தீர்த்து அவனை உணர்த்தவல்லள்; ஆதலான் ‘உவளென அறிதல் கடன்’ என்றார். இவ்விருவரும் பரமாத்ம சக்தி பேதமாதலின் எங்ஙனம் அறியினும் பயனுண்டென்பது கருத்து.

இனி எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் எவள் அவள் பிரமற்கு மகளென மனையாட்டியென அறிதல் புலவர் கடன் என்றாரென்றலும் ஒன்று.பராசக்தியியல்பு பலபடியாதல் பிறர்க்கு மொக்கும். இதனை ‘அவளத்தனா மகனாந் தில்லையான்’ எனத் திருக்கோவையினும் ‘அனகநாடற் கெம்மன்னை, மனைவி தாய் தங்கை மகள்’ எனச் சிதம்பரச் செய்யுட்கோவையினுங் கூறுதலானுணர்க. ஸரஸ்வதி பரமாத்மசக்தி யென்பதும் அவள் பிரமனுக்குப் புத்திரியாயினாள் என்பதும் தொன்னூற் துணிபு. இவ்வாறே மஹாபாரதம் சாந்திபர்வம் மோக்ஷதர்மத்தில் ‘பிரமாவின் புத்திரியாகிய என்னுடைய ஸரஸ்வதீதேவியானவள் தவறாதவள், சத்தியமுள்ளவள்’ எனப் பகவான் அருளிச்செய்தலானும் உண்மையறிக. இனி,-கண்ணன் கழலிணை, நண்ணு மனமுடையீர்
எண்ணுந் திருநாமந், திண்ண நாரணமே
‘ (10,5,1)என்னுந் திருவாய்மொழி எழுதிய திரு ஏட்டினைச் சங்கப்பலகையின்மேல் வைக்க அப்பலகை அத்திருவேட்டளவிற் சுருங்கிப் பிறர் இதனோடொக்கவிருக்க இடந்தாராது இதன் தெய்வச்சிறப்புணர்த்தியது என்று குருபரம்பரையிற் கேட்கப்படுதலான், அதற்கியைய, அப்புலவர் ஆராய்ந்து துணிய எழுதியருளிய இத்திருப்பாட்டும் அத்திருநாம மந்த்ரத்தையும் அதைப் பயந்த பராசக்தியையும் அதற்குரிய பரதெய்வத்தையும் தலைமையாகக் கொண்ட தென்று உய்த்துணர்ந்து கொள்க.

பரமகாருணிகரான நம்மாழ்வார் தாம் பெற்ற பேறு எல்லாப் புலவர்க்குமாமாறு, ஸகல சாஸ்த்ரார்த்தங்களும் ஆடிநிழலினடங்கவைத்து மெய்ப்பொருள் தேற்றிய வித்தகத் தனிப்பாட்டு இஃதாகும். இங்ஙனம் வடநூற்பொருளையே யுடைய தமிழ்ப்பாட்டாதலின் இதனை ‘ஆரியத் தமிழ்’ என்று கூடலழகர்புராணமுடையார் கூறினாரென்க. வேதப்பொருளேயுடைய தமிழை ‘வேதத் தமிழ்’ என்பதுபோல இதனையுங் கொள்க.

ஈயா டுவதோ கருடற் கெதிரே யிரவிக் கெதிர்மின் மினியா டுவதோ
நாயா டுவதோ வுறுமிப் புலிமுன் நரிகே சரிமுன் னடையா டுவதோ
பேயா டுவதோ வெழிலூர் வசிமுன் பெருமா னடிசேர் வகுளா பரணன்
ஓரா யிரமா மறையின் றமிழின் ஒருசொற் பொருமோ வுலகிற் கவியே’
-என்பது சங்கத்தார் இவ்வரிய பாசுரத்தை வியந்து ஆழ்வார் திவ்யபிரபந்தத்தைப் புகழ்ந்துபாடிய பாட்டாகும்.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சடகோப திவ்ய சரித்திரம்-பகுதி-3-

June 4, 2026

திராவிட வேத மருளிய படலம்‌

ஐயரிமைக்‌ கண்ணுறுந்தன்‌ றேவியார் சென்‌ றாரி யன்றே வியினொடு மோரமுத கூபத்‌
தெய்தியந்நீர்‌ மொண்டிடும் போழ்‌ தவள்‌ பொன்‌ றோண்டி யிடித்தது
துய்யவனச்‌ செயலறிந்தம்‌ மனைவி நீத்துத்‌ துரிய நிலை பெற்றெதிக டோன்ற லானோன்‌
செய்ய மலர்ச்‌ சேவடி நஞ்‌ சென்னி சேர்த்துத்‌ திரவிட வேதப் பட லஞ்‌ செப்புவாமே –1-

இன்ன வாறு நூற்‌ றெண் பதி மாயனு மன்னி யேபுளி நீழலில்‌ வைகுற
வன்னவர்க ளடி பணிந்‌ தாய் மலர்க்‌ கன்னி யந்தொடைக்‌ காரி குலப் பிரான்‌ –2-

வார ணம் முனம்‌ வாவியின்‌ கண் பரனார ணனென்‌ றதை வெளி நல்கல்போ
லாரணத்தி னரும்‌ பொரு ளாய்ந்துல கோர ணத் தமி ழோதலுற்‌ றானரோ–3-

முற்றிலுந் துறத்‌ தற்குள முன்னினோர்‌ சுற்ற மற்றுந்‌ துறப்பதை மானவே
வெற்றி மாலருள்‌ மேவ விரோதியாம்‌ பற்ற றற்குளம்‌ பற்றின னாகியே–4-

அருத்தி மீக்கொண்‌ டடி முடி யொன்றிலா விருக்கு வேதத்‌ தியைந்த பொருளெலாஞ்‌
சுருக்கி யின்றமிட்‌ டூக்கிலன்‌ பாய்த்திரு விருத்த நூறு விளம்பினன்‌ மாதரோ–5-

மாசில்‌ சோதி மணி வண்ண னென்பவ நாச னாதன்‌ குணாநு பவந் தருஞ்‌
தேசு லாமெசு சைத்தமிழேழ்‌ திருவாசி ரீஇயத்‌ தறைந்தன னன்புற–6-

இக்‌கி னின்புற்‌ றினிக்கக் கொண்‌ டாடிய வக் குணாநு பவத்தெழு மார்வமே
மிக்க தர்வண வேத மந்தாதியாத்‌ தொக்கி யெண்பத்தி னேழ் தொடை சொற்றனன்‌–7-

அந்த வார்வத்‌ தழுந்தி யணி நலமந்த மற்ற வளம்பதிக்‌ கேகுவான்‌
சிந்தை யுட்கொடு சிர்கொள்‌ சரம ப்ரபந்த மொன்று பகர்ந்திட வுன்னியே–8-

மாயி ருங்கடன்‌ மானிலத்‌ தோங்கிய தூய சாமப்‌ பொருளைச்‌ சுருக்கியோ
ராயி ரத்தொரு நாற்றிரண்‌ டாய பா வேய தாந் திரு வாய்மொழி யென்றரோ–9-

பேரு றும்பிர பந்த மதிற் பிரான்‌ நார ணனென்ற தும்முயிர்‌ நாடிடுஞ்‌
சீரு மன்னவன்‌ செய்கு முபாயமுமேர் கொணாடினை யீதலு மோதினான்‌–10-

இத்தகுந்‌ திரு வாய்மொழி யீரைந்து பத்தி லொன்றிரண்‌ டும் பரன்‌ பாரினின்‌
மத்த ளைக் குறி வாய் வைத்த மாயனீர்‌ நத்தி சையுமென்‌றே நிலை நாட்டினன்‌–11-

விரிக்கு மூன்றுடன்‌ மேவிய நான்கினின்‌ முருக்க விழன மொய்ம்பனைப்‌ பாருளீர்‌
பெருக்கு நும்முளப்‌ பேதைமை நீக்கியின்‌ றருத்‌தி செய்யுமென்‌றே யறி வித்தனன்‌–12-

மற்று மைந்துட னாறிலம்‌ மாயனாங்‌ கற்றை வார் குழற்‌ கன்னி கொண்‌ மார்பனை
வுற்றி டற்குள்‌ ளுபாய முரைத்தனன்‌ சிற்றிலைப் புளி வாழ் தரு செம்மலே—13–

கேடி லேழுட னெட்டிற்‌ கிளர் தரு வீடு சேர விரோதிக ளாமவை
நாடி வென்று நசைவில்‌ லவனடி கூட வேணுமென்‌றே தமிழ்க்‌ கூறினான்‌–14-

ஒன்பதோடு முயரொரு பத்தின லன்பர்‌ சேரவ்‌ வணிந கருய்த்திடு
நன்பி னோடு பலனையு நானிலக்‌ தின்ப மாக விசைத்தன னன்றரோ-15–

அத்த குந் திரு வாய்மொழி யை யிரு பத்து ளொவ்வொரு பத்தின்‌ ப்ரபாவம
குத்து வந்தனைக்‌ கூறுவங் கேட்டவை பித்த ரேஞ் சொற்‌ பெரியோர்‌ பொறுப்பரே –16–

பண்ண மைந்தவப்‌ பா முதற்‌ பத்தினிற்‌ கண்ணனே பர னென்று கழறி மற்‌ றெண்ணு மோரிரண்‌ டெவ்வுயிர்‌ கட்கு மவ்‌ வண்ணலே யினி யானென்‌ றறைந்தனன்‌—17-

பின்னு மூன்றினிற்‌ பேரரு ளான் குணந்‌ தன்னையே யுயிர்‌ சாற்றிடு மென்றதும்‌
உன்னு நான்கு ளுயிரவன்‌ றன்னையே மன்னு மென்றும்‌ வாய்ப்ப விளம்பினான்‌-18-

ஏயு மைந்தினி லெம் பெரு மானே யுபாய மாமுயிர்க்‌ கென்று பகர்ந்த பின்‌
னாயு மாறினி லாருயி ருய்குவான்‌ மாய வன் செய்‌ யுபாயம்‌ வழங்கினான்‌-19-

மற்று மேழினில்‌ மாயனைச்‌ சேருதற்‌ குற்றிடும் பல்‌ விரோத முரைத்து நற்‌
சொற்றி கழ்ந்தடெட்‌ டிற் சொல்‌ விரோதிக ளற்றிடும் மென்‌ றறைந்தன னன்றரோ–20-

பாகு நேரொன்‌ பதிற் றிரு வாளனா லாகு லாப மறைந்தொரு பத்திறான்‌
சோக மோகந்‌ தொலைத்தவர்‌ வாழ் திரு மாக மானிலம்‌ வைகிய தோதினான்‌ –21–

புத்தமுதின்‌ சுவை மறையின்‌ பொருள் கொள் சர ம ப்ரபந்தம்‌ பொலியு மொவ்வோர்‌
பத்துறு மொவ் வொரு திருவாய்மொழி யெனும்பேர்‌ கொளு மினிய
வத்தமதெம்‌ மறிவளவில்‌ வினவியமாத் திரந் தொகுத்திங் கறிவித்‌தோமால்‌
முத்தர்களுக்‌ கிடக்கை வலக்‌ கை தெரியா மூடனெறி மொழியுமாறே–32-

உயர்வறவென்‌ தெடுத்த திலச்‌ சாமமுத லக்கர முனொளிரக்‌ காட்டி
யயர்வறுமால்‌ கல்யாண குணமனைத்தும்‌ பாகதர்க ளறியச் செய்து
மயர்வறுமா னில வுயிர் நா யகமிதுவோ வதுவோ வென மயங்கு நெஞ்சத்‌
துயரற மா மருதிடை போங்‌ கண்ணனையே பரத்வமெனத்‌ துலக்கி னானால்‌–33-

வீடுமின்முற் றமென வெடுத்‌ கருடிருவாய்‌ மொழியிலரும்‌ விமலனாமக்
கேடில்பர மன் றனை மா னில வுயிர்காள்‌ ப்ரபத்தி பண்ணிக்‌ கிட்டி மேலை
நாடடைமி னென்றுடன் பத்‌ துடை யடியென்‌ றெடுத் தினிய நயநக்‌ கஞ்சக்‌
காடுடைய னளை திருடிப்‌ பிணிப் புணலெத்‌ திறமெனமோ கத் தாழ்ந்‌ தானால்‌–34–

மாதமிரு மூன்‌றவன் செள லப்ய குண வாரிதியின்‌ மடிந்து பின்னச்‌
சீதரனுள்‌ ளுகந்தருளத்‌ தெளித்து முளத்‌ தாராது செப்பி யம் பொற்‌
போது றுமின்‌ னவள் கொழுநன்‌ றன்னடியா ரெவை செயினும்‌
கோதறு செள லப்ய குண னெனவு மச் சேடக் கவியிற்‌ கூறினானால்‌–35-

அஞ்சிறையென்‌ றருடிருவாய்‌ மொழியதனில்‌ பிராட்டியின தவத்தை பூண்டாங்‌
கெஞ்சலில் விண்‌ ணாடுடைய னபராத சகத்துவமே யேதுவாக
நெஞ்சுறக் கொண்‌ டவனடியிற்‌ றனாதுறு கண்‌ முழுமை யும் போய்‌ நிகழ்த்தமின்‌று குஞ்சினுக் கென்றுழ விறலைக் கடை யொதுக்குங் குருகினங்காள்‌ கூறீ ரென்றான்‌ –36-

வளவேளென்‌ ஐருடிருவாய்‌ மொழி யதனின்‌ மாறனை முன்‌ மருவி நீக்குந் தளவாயொன்‌ றமையா துண்‌ மம்மர் கொளச்‌ குருகினஞ்சந் தனுப்ப மாயோன் இளவேய்மென்‌ றோளிணையா ளூடலறச் சூடுவமென்‌ றிசைந்‌தீண்‌டேகிக் களப நறுங்‌ குய மருவும்‌ மவனருளே யுலகறியக்‌ கழறினானால்‌ —37-

பரிவதிலீ சனையெனுமோர்‌ பதிகமதி லார் கலி சூழ் பாரிலுள்ளீ
ரரிகுணமீ தென்றறியா துள மயங்‌கிக்‌ கொடிய பவத்‌ தழ றாழ்கின்றீர்‌
சரியலவப்‌ பரமனுந்து ராராத்திய னன்‌ றவனைச்‌ சார்ந்து வாழ்த்தி
யிரு விசும்பிற்‌ பிறப்பிலரா யுச்‌சீவியுங்களென விசைத்தா னன்றே–38-

பிறவியெனும்‌ பதிகமதி லெம்பெருமான்‌ ஸ்வாராத்யனாம்‌ பேணித் தூய
நறவுகுபன்‌ மலர்கொடு பூசியுமவனா ராதனையு நனிசுகந்தகந்
தற நெறியே வுருவமதா யொளிருமெனப்‌ பாரறிய வறிவித்‌ தானால்‌
மறலியை வென்‌ றடுவெளிக ளுடைய நங்கை திரு வயிறு வாய்த்தோ னம்மா–39-

ஓடும்புள்‌ ளேறி யெனும்‌ பதிகமதி லக் குணங்க ளுந்தி பூத்த
மோடம் பொன்‌ வரை நகலத்‌ திரு மணவாளன் கரண மூன்‌றுமொன்‌றாய்க்‌ கோடின்றிப்‌ பரிசுத்த மா மடியார்‌ தமை யுகந்து கூடு மென்றாங்‌
காடும்புற்‌ கொடி பரித்த வழுதி குலத்‌ தரசுசுத னறிவித்‌ தானால்‌–40-

இவையு மவையு மென வருளுந்‌ திருவாய்‌ மொழியி னிசைத்த வண்ண
நவையறுமெய்ய டியனெனத்தம்‌ மிடத்‌ தெம்பெருமா னனியுகந் தாங்‌
கவையவங் கண் முழுமை யினாற்‌ சாத்மிக்க சாத்மிக்க வணைத்த தான சுவையினை முந்‌ நில மறியச்‌ சொற்றனனிக்‌ கலி கெட வந்துதித்தானன்றே–41-

பொருமானீள்‌ படை யெனும பதிகமதி லெம்‌ பெ ருமான் நற்‌ புலவி நீங்கி நிருகேதுக கடாட்சமருள்‌ வைபவ மிம்‌ மானிலத்தி னிகழ்த்தினானா
லொரு கோடி கயல் புரளுந்‌ திரை கொள் பொரு நற்றுறைவோ னொளிரு மாடக்‌
குருகூரன்‌ சட வாயு வணுகாது நிரசித்த குழகன்‌ றானே–32-

இரண்டாம்பத்து

மன்னுமவ்‌ விரண்டாம்‌ பத்தில்‌ வரு முதற்‌ பதிகத்‌ தெம்மான்‌
பின்னு மூடியதிலார்த்தி பெருகி நாயகியாய்‌ நின்று
தன்னை நேர்‌ சேதந அசேதனங்களை நினைத்து நீவி
ரென்னின் மாறனை வேட்டீர் கொலென்ன வருந்தி யதுரைத்தான்–33-

திண்ணெனும்‌ பதிகத்‌ தார்த்தி தீர் தரக்‌ கூட்டலாலப்‌
பண்ணவன்‌ குண சமர்த்திக்‌ கேதுவாம்‌ பரத்வ முன்னீர்‌
மண்ணிடை யவதாரத்தில்‌ மலர் தரு நலங்க ளெல்லாம்‌
நண்ணுமென்‌ றவன் பரோப தேசமு நவின்றான்‌ மாதோ–34–

ஊனில் வாழ்‌ பதிகத்தந்த வுரகமெல்‌ லணையான்‌ றன் கு
ணானுபவ விரோதஞ் செய்‌ நவை கொள்‌ சம்சார நீத்‌து
வானுளோர்‌ பரவு நித்ய சூரிக ளோடு வாழ்வன்‌
யானெனும்‌ குறிப்பை வையத்‌ தியாவரு மறியச்‌ சொன்னான்‌–35-

ஆடி ஆடி யெனுந் தூய பதிகத்தக்‌ குறிப்பண்‌ ணாது
ணாடி நெஞ்‌ சுழன்று மாற னாயகி யவத்தைக் கொண்டு
வாடி மோகித்திருக்கும்‌ வண்ணம தறிந்து தாய் பார்‌
தோடவிழ்‌ துளவினான் முன்‌ சொல்ல ரங் கருளினாரால்‌–36-

அந் தாமத்‌ தன்பெனுஞ் சொற்‌ பதிகத்த வவத்தை போக
வந்துடன்‌ சம்சிலேடித்த மாயவன்‌ ஸெளந்தர்யத்து
நந்தலி னித்யமுத்தர்‌ நல்கிய சேவை யுள்ளுஞ்‌
சிந்தை சென்‌றனுபவித்த செவ்வியை விளம்பினானால்‌–37-

வைகுந்தா வென நின்‌ றோதும்‌ பதிகமான்‌ மாறனீங்கல்‌
செய்குமோ நமை விட்‌ டென்று திகைத்ததின்‌ சங்கை பண்ணப்‌
பெய்குமா முகிலே யென்றும்‌ பிரிகலே னுனையா னென்றும்‌
மொய் குழல்‌ நங்கை பாலன்‌ மொழியமான்‌ மழ்ச்சி சொன்னான்‌ –38-

மேதகு கேசவன் றன்‌ பதிகமவ்‌ விபுத னாந் துவாதச நாம னான மாதவ னருளி னானம்
தீதில் சம்‌ பந்தா சம்பந்திகளு முச்‌சீ வித்தாரென்‌ றோதினான்‌ கலிகெடற்கிவ்‌ வுலகிடை யுதித்த நம்பி -39-

அணைவெனும்‌ பதிகத்‌ தெம்மா னருளிய செவ்வி யோர்ந்து
தணிவில் பற்‌ பலசம்சாரி தயங்கு முன்‌ மருள்கெடத் தன்‌
ணிணையில்சம்‌ பந்தியாக விசைய மோக்கப் பரத்தைப்‌
பணித்தனன்‌ றிருந்த வின் சொற்‌ பாவலர்க்‌ கரசரேறே -40-

பண்ணமைந் திலகுமெம்மா வீடெனும்‌ பதிகந் தன்னி
லண்ணறன்‌ சம்பந்திக்கு மழிவில் விண்‌ ணடளிப்பா
னெண்ண நின்‌ ப்ரீதிக்கன்றி யென் பொருட்‌ டளிக்க வேண்டாம்‌
கண்ணநீ யெனக் கைங்கர்ய நிச்சயம்‌ கழறினானால் –41–

கிளெரொளி யிளமை யென்று கிளத்திய பதிகத்‌ திம்மெய்‌
தளர்முன முயிர்களன்று சாற்‌ று கைங்‌ கர்ய சித்திக்‌
கிளமதி தவழும்‌ பொன் கோட்‌ டெழில் கொள் மா லிரும் பூஞ்‌ சோலை
வளர் திரு மலையைச்‌ சென்று மருவுமென்‌ றருளிச்‌ செய்தான்‌–42-

மூன்றாம் பத்து-

முத்தமிழின்‌ சுவைக் கடலைக்‌ கடைந்து கொள்ள முதவினிய தாந் திரு வாய்‌ மொழியின்‌ மூன்றாம்‌
பத்தின் முடிச்‌ சோதி யெனும்‌ பதிகந் தன்னிற்‌ பனி மலர்க்கார்‌ மரு விடபப்‌ பருப் பதத்தார்‌
மைத்தகரு மாமுகினேர்‌ வண்ண னெம்மான்‌ மாலழகன்‌ செளந்தர்ய வலையுட்‌ பட்டுச்‌
சித்தமிவண்‌ டிரும் பாதங்‌ கீடுபட்ட செய்தி யுல கோரறியத்‌ தெரிவித்தானால்‌–43-

முன்னீரென்‌ றருடிவாய்‌ மொழியின்‌ மாறன்‌ முனமழக ரெழிற்‌ கடலின்‌ மூழ்கிக்‌ கங்கு
றன்னை யறி யாதுழன்ற னுபவித்தற்‌ கசக்தி வருவது காண்‌ சங்கோ சம்மென்‌
றுன்னியதில்‌ வ்யாமோகித்‌ திருக்க மாயோ னுற்றி தற்கென்‌ னீயழுங்‌க லுலக மேத்‌தும்‌
பொன்னி வரும் வடமலை சென்றணை யடைந்து புல்லுவா யெனுமருளைச்‌ சொல்லினானால்‌–44-

ஒழிவில் காலமென வருள் பதிகந் தன்னில் உலா மகிழ்ந்து ஆதரத்துடன் நம் உயிர்காள் இன்றே
யழிவிறிரு வேங்கடவெற்‌ புடையான்‌ றன்பா லடைந்தவன் காற் றுணை யினை வாக் கக மெய்ம்‌ முன்றாற்‌
றழுவியிடம்‌ பொருளே வல்‌ கொண்டு யாமுஞ்‌ சகல வித கைங்கர்யஞ்‌ சமர்த்தியாக
வழுவறு மெய்த்‌ தொழும்பு புரிந்திடுவா மென்ன வழுதியர் கோன்‌ காரி சுதன்‌ வழங்கினானால்‌–45-

புகழநல்லொ ருவனென்னும்‌ பதிகந் தன்னில்‌ பூமகள் கோன்‌ சர்வமு மாய்ப்‌ பொலியும்‌ தன்மை
யகமகிழ்ந்தின்‌ புற வளிக்கு மணங்கி யானவ்‌ வண்ணறனை யெக்‌ குணங் கொண்‌ டழைப்பே னென்ன
மிக மலைந்து தேர்ந்தவன் சேவடியிற்றாழ்ந்து விருப்பொடு வாசிக வடிமை வியப்பதாக
விகல் கெட முப்‌ பொழுது மடைந்தியற்றி வாழு மிறுமாப்பை, யுல கறிய விசைத்தானன்றே –46-

மொய்ம்மாம்பூம்‌ பொழிலெனுஞ் சொற் பதிகத்‌ தாழ்ந்த முன்னீரிற்‌ றிருவணை செய்‌ முகுந்தன்‌ வெய்ய
கைம்மாவுக்‌ கருள் புரி நங்‌ கண்ணற்‌ கன்பாய்க்‌ கைங்கர்யம்‌ புரியுமவர்‌களைக் கொண்‌ டாடி
யெம்மானைப்‌ பரவாது பணியுஞ்‌ செய்யா திருக்குமவர்‌ தமை யிகழ்ந்‌ தங்‌ கியம்பினானால்‌
அம்மானைக்‌ காளையரை யளித்த பெம்மான்‌ ௮பராவதாரமிவ ணடைந்‌ தகோவே–47-

செய்ய தா மரைக் கண்ணெனும்‌ பதிகந்‌ தன்னிற்‌ றேசுறுமானில வுயிர் செய்‌ திருப்பணிக்கு
மெய்ய பர வ்யூகமொடு விபவாந்தர்யாமிய துகளையஅபவிக்கன்மிகவும்‌
துய்ய பரா தீனமுறு மர்ச்சை யென்னிற்‌ சுலபமதா மென வுலகிற்‌ றுலக்கினானான்‌ மைய வரி வண்டு பொடி யாடு நிம்ப மாலை யுறுங் காரி சுத மாறன் றானே–48-

பயிலுஞ்‌ சுடரொளியெனும்‌ பதிகம் தன்னிற்‌ பல கோடி யண்ட ரண்டப்‌ பரப்பை யீன்ற
வெயிலந்‌ திகிரிகொடிர வாக்குமெந்தை மெய்யடியிற்‌ கைங்கர்யம்‌ விரும்பி நாளுஞ்‌
செயுமன்பர்‌ தன்னடியார்க்‌ கடிய ரெற்கா சிரியரேனப்‌ பாகவத சேடத்வத்தை
யுய வென்றார்‌ கலிப்புவியு ளறிவித்தானா லுயர் புளிக்கா வணத்துறை யு மொருவன்றானோ-49-

முடியானென்‌ நினிதருளும்‌ பதிகந்‌ தன்னின்‌ முன்னுரைத்த சேடத்வ முறைமை யாலோர்‌
பிடியின்றிப்‌ போதமுறா தவன் குணத்தின்‌ பீடுடைய ஸ்மாரகமாய்ப் பேர்ந் தாட்‌ செய்ய
வடிவுறுமோ ரிந்த்ரியம் பஞ்‌ சேந்த்ரியத்தின்‌ மருவுதலை வேட்ட தென வழங்கினானால்‌
குடிகுடியாட்‌ செயுமடி யார்க்‌ கழிவினாடு கொடுத்தருளும்‌ வரையாது கொடுக்கும்‌ கொண்டல்–50-

சொன்னால்வி ரோதமெனும்‌ பதிகன் தன்னிற்‌ சொற்றெரி நாவலிற்‌ பிறரைத்‌ துதித்துப்பாடி
லென்னாகு மப்பொருள்வந்‌துமதுகால மெதுவரைப்போமது வெழிலி யெழுமின்னென்று
தன்னோடு மிணைந்‌து பிறப்‌ பிலியாய்‌ நிற்குஞ்‌ சார்ங்கனிருந்‌ தாளிணையிற்‌ சாற்றுவீரேற்‌
றென்னா வென்‌ றளி முரலுந்‌ துளவத் தண்ணல்‌ சேணுலுகி னித்தியராய்த்‌ திரிவீரென்றான்‌–51-

சன்மம்‌ பலபலவெனும்‌ பதிகத்தின் முன்‌ சாற்றிய லெளகீகவி தங்களுள்ளம்‌
வன்மீனுக்‌ கிடருறுத்தி யானை காத்த மாயவன் பால்‌ மருவுதலின்‌ மாறக்‌ கண்டாற்‌
கன்போடப்‌ பரமனடித்‌ துணையிற்‌ செய்யு ளாக்கெதிற்‌ ருமடையு மபீட்ட முற்று
மென்போடுள்‌ ளுருகியவ ரறிவான்‌ வேண்டி யிசைத்தனன்றென்‌ குருகூர் வந்திருந்த கோவே–52-

நாலாம்‌ பத்து
ஒருநான்கு பத்திலுறு மினிய தீஞ்சொல்‌ லுகளொரு நாயகப்பதிகத்‌ துலகு ளோர்கா
ளிருமாநி லம் பரவு நிதி படைத்திவ்‌ வெறி கடற்பா ரொரு குடைக்‌கீ
மருவாரைந்‌ தரு நிழலிந்த்‌ ராணி கூடும்‌ வாழ்வுறினும்‌ நச்வரமா மறையும்‌ காணாத்‌
திருமாது கேள்வனது பவமே நித்யஞ்‌ சேருவீ ரவனடியிற்‌ றிருகாதென்றான்‌.–53-

பாலனா யெனுந்திருவாய்‌ மொழியின்‌ முன்னம்‌ பகருபதே சம்பலி யாப்‌ பரமன்‌ றன்பாநற்
சாலபினி வேசமடைந் துள மயங்‌கித்‌ தண்ணளியாய்‌ முனஞ்செயவ தாரத்‌துள்ள
சீல முழுவது முகந்தெற்‌ கருள வேண்டுந் தென்னிலங்கை யீடழித்த திறத்தோ யென்றான்‌
காலனகர்‌ பாழ்பட வண்‌ புளிக்குட்‌ டென்பாற்‌ கருணை முகம்‌ வைத்‌தமர்ந்த கழகனம்மா–54-

கோவைவா யாளெனுஞ்சொற்‌ பதிகந் தன்னிற்‌ கொன்றை முடி.யோனிரப்பைத்‌ தொலைத்தாங்‌ கின்னும்‌
மேவாது குருதியருள்‌ பரமன்‌ முன்னம்‌ மேவு திரு வவதார விதங்கள் காட்ட
நாவாய் கொண்‌ டவன் குணம் பற்‌ பலவுஞ்‌ சொல்லி நாடுமதி ப்ரீதியினை நவின்றா னெங்குந்
தேவாகு மவனே யிவ்‌ வுலகு முய்யச்‌ சென்று மகிழ்‌ மாறனெனச்‌ செனித்தோ னன்றே–55-

மண்ணையிருந் தென்றருளும்‌ பதிகத்‌ தந்த மால வதாரங்களெலாம்‌ வழங்கி யேகத்‌
துண்ணென மா றனுமணங்கி னவத்தை கொண்டுட்‌ சோகித்தங்‌கெவை யவன்‌ றன்‌ சோதி யுள்ள
கண்ணுறுமோ வவை திருமாற்‌குரிய வென்‌று கதறி யுளம்‌ புலர்ந்து மிகக்‌ காதல்‌ கொள்ளும்‌
வண்ணமறிந் தீன்றவளுஞ்‌ சேடிமார் முன்‌ வழங்கலென வுரைத்தனனுண்‌ மயர்வற்றோனே –56-

வீற்றிருந்தே ழுலகமெனும்‌ பதிகத்‌ தந்த வெய்யமய றீர் தரவே விமலன்‌ முன்னா
ணூற்றுவர்பாற்‌ சந்துபட நடந்தோன்‌ மாதர்‌ நுண்டுகிலைக்‌ கவர்ந்து தரு நுதியில்‌ வைத்தோன்‌
மாற்றறு மெய்த்‌ தவ வாய்மை நித்யமுத்தர்‌ மாடடரத்‌ திருவினோடு மருங்கி லீண்டப்‌
போற்றியுள மதிழுமதி ப்ரீதி தன்னைப்‌ புங்கவ னானில மறியப்‌ புகன்றான்‌ மாதோ–57-

தீ ர்ப்பாரென்‌ றினிதருளும்‌ பதிகத்‌ தெந்தை சேவை யளித்‌ துடன்‌ மறையத்‌ தீரா மையல்‌
போர்ப்பாளாய்ச்‌ சோகமுறத்‌ தாயரீது புன் சமயத்‌ தேவர் செயல்‌ போக்க வென்று
பார்ப்பாரா கிற பொழுதத்‌ தலைவி தோழி பாகவத கீர்த்தனையும்‌ பாதத்‌ தூளுஞ்
சேர்ப்பீரே லிவள்பிணிக்கு மருந்தா மென்னச்‌ சேர்க்கவது தீர்ந்த தெனத்‌ தெரிவித்‌தானால்‌ –58-

சீல மிலா வெனுந் திருவாய்‌ மொழியிற்‌ சோகந் தீர்ந்துடனெம்‌ பெரு மானுந் திவ்யரூபஞ்‌
சாலவெனக்‌ களித்தருளுள்‌ ளிரங்கி யார்க்குந் நாயகனெ பகற்‌ றடங் கண்‌டுஞ்சா
தோல மோடங்‌ கவன் குணம் பற்‌ பலவுஞ்‌ சொல்லி யுலை மெழுதிற்‌ கரைந்தழைத்த துறழச்‌ சொற்றா
னீலமணித்‌ திரளனைய கூந்தற்‌ செவ்வாய்‌ நேரிழை கொ ணங்கைசுதனிமலன்‌ றானே –59-

ஏறாள மிறையெனுஞ்சொற்‌ பதிகத்‌ தெந்தை யிரவு பகல்‌ விழி பொருந்தா திரங்‌கக் கூவ
மாறாதங்‌ கொளித்தமையா லவலுகந்‌து மருவ வுரித்‌ தாதிய வாத்‌ மாத்மியங்க
டேறாதெற்‌ குலகவர் போல்‌ வேண்டாமென்று திரஸ்கரித்த மாற் மிவண்‌ டெரிவித்‌ தானால்‌
வீறாரு மதகரிவாண்‌ மருப்பொசித்த வேந்தனடி யே பரவும்‌ விமலன்‌ றானே–60–

நண்ணாதா ரென்றருளும்‌ பதிகத்‌ துன்க ணண்ணியவெவ்‌ வூடலையு நனிபொறுப்பேன்‌
கண்ணானின்‌ னிடத்திலதி விமுகரான காமர் கொள்‌ சீவரைப்பார்க்‌க க்‌ கருத்திற்‌ சற்று
மெண்ணேனிவ்‌ வுடற்பொறைவிட்‌ டகலச்‌ செய்வா யேழுலகுங்‌ கண்டிடவா யிடைநின்‌ றாம் பற்‌
பண்ணாளா வென்றவன் சே வடியை வாழ்த்திப்‌ பற்றியவா றினிய சமிழ்ப்‌ பகர்ந்தான்‌ மாதோ–61-

ஒன்றுந்தே வென்றருளும்‌ பதிகத்‌ இந்த வுலகிலுள சேகனர்பா லுகந்து பின்னு
நன்றல நீர்‌ பிறதெய்வ நயக்கும்‌ வாய்மை காரணனே பரமனென நால் வேதங்க
ணின்றுமுறை யிடலறியா துழன்று கெட்டீர்‌ நீக்யெதை யினி யேனு நிமலன்‌ செம்பொன்‌
குன்றநிகர்‌ மணிகொணெடு மாட மோங்குங்‌ குருகையர்க்காட்‌ செய்யுமெனக்‌ கூறினானால்‌-62-

இத் திருவாய்‌ மொழியினை மாறனு முகந்தங்‌ கியம்பலுமச்‌ சுவை செவியா லினிது மாந்தி
வித்தகன் நம்‌ பொலிந்து நின்ற பரமனெஞ்சம்‌ வியந்ததற்கோர்‌ கைமாறு விருதீவான்றன்‌
சித்தமதி லுன்னியனத் துவசம்‌ வண்டார்‌ செய்ய மடழ்த்‌ தொடையலுமச்‌ செவ்வி யோன்பான்‌
மத்தகசத்‌ துறுகணறச்‌ செய்தோ னீந்து வகுள பூடணனெனப்‌ பேர்‌ வழங்கப்‌ பெற்றான்‌–63-

ஜந்தாம்‌ பத்து

கையார் சக்‌ கரத்தனெனும்‌ பதிகத்‌தி யானுட்‌ கருத்துறு மெய்ப்‌ பத்தியிலாக்‌ கபட னாக
மெய்யாய தொழும்பரினு மவன்‌ றன்‌ னாமம்‌ விளம்பியொரைம்‌ பொறிப்பாக்ய விடய மாக்கும்‌
பொய்யேனுக்‌ குகந்தவன்‌ ஸ்வா பவந் தன்னைப்‌ போரவளித்‌ தனனென்‌ று புகழ்ந்து தன்பாற்‌
செய்யாளுக்‌ குகந்தவரை மார்ப னெங்கோன்‌ செய்யுபகார ச்ம்ருதி யைச்‌ செப்பினானால்‌–64-

பொலிக பொலிகவென வருள் பதிகத்‌ திற்றாம்‌ போர வுகந்‌ தருளிய மெய்ப்‌ போதத்தாலே
பலவிதங்கொ ளுளமொருக்கிற்‌ றிருந்தி வாழும்‌ பாகவத ரோடு தம்‌ ப்ரபாவ நோக்க
மலிவுடனிங்‌ கெழு நித்ய முக்தர்‌ தம்மை மங்களா சாசனம்‌ புரிந்த வகையுஞ்‌ சொல்லிக்‌
கலிகெடுமென்‌ றுரைத்துடன்‌ காடாய முக்கோல்‌ கைக் கொளெதிபதி வடிவுங்‌ காட்டினானால்‌–65–

மாச றுசோ தியென வருள்‌ பதிகத்‌ தெந்தை மாதவன் விச்‌ லேடமதை மனத்துட்‌ கொண்டு
பாசிழை கொ ணாயகி தன்‌ மைத்தாயீண்டிப்‌ பாரிலலர்‌ தூற்றிய வெம்‌ பழிக்கென்‌ செய்வேன்‌
பேசவரி தாய கொடுந் தொழில தான பெண்ணை மட லூர்வனெனப்‌ பிதற்றினனா
லாசறு பெண்‌ பேதை முத லன்பரியாரு மறிதர லாம்படி புளிக் கீழமரும்‌ வேந்தே–66-

ஊரெல்லா மெனவருளும்‌ பதிகத்‌ தன்முன்‌ னுன்னு மட லூர்வதற்கு மொண்ணா தாகி) காரெல்லா மொருபடிகொண் டிருந்த தென்னக்‌ கங்குலிடை தனித்‌ திரவு யங்‌ கழியா தின்று
பாரெல்லா முண்டுமிழ் நங்‌ கண்ண னான பண்ணவன் வா ராமையிற்‌ பலுகிற்‌றென்றச்‌
சீரெல்லா முரைத்துரைத்து வருந்தா நின்ற செயலெனப் பா ரவரறியத்‌ தெரித்தான்‌ மன்னோ—67-

எங்கனேயோ வெனுந்திருவாய்‌ மொழியிலந்த விரவுகழிந் துதய னும் வந் தெழுந்த தற்பின்‌
மங்குறவழ்‌ மணி மாடக்‌ குறுங்கை நம்பி வழங்கிய சே வையிலழுங்கு
கொங்குலவோ தியை யனைமார்‌ புலம்ப லென்னீ கோற்றொடி யென்‌றே முனியக்‌ குணத்தின்‌ மிக்கா
ளங்க வன்பா லென் மனமுங்‌ கண்ணு மோடி யடைந்த முனியீரெனுமா றறிவித்தானால்‌–68-

கடன்ஞால மெனவருளும்‌ பதிகத்‌ தெம்மான்‌ காட்சி யளித்‌ துடன்‌ மறையக்‌ காதல்‌ கொண்டு
குடமனைய நகிலமரி மைக்கட்செவ்வாய்க்‌ கோபியர் கண்‌ ணனில் லீலை கொண்டா லன்ன
மடவரலா யப் பரமன்‌ லீலை முற்றும்‌ மனமகழ்ந்தங்‌ கனுகரித்த வகைய தாகப்‌ படவரவத்‌ தரசவனே யவதரித்த பனிமலர் சூழ் புளி நிழலோன்‌ பணித்தா னன்றே,–69-

நோற்றநோன்‌ பெனவருளும்‌ பதிகத்தின் முன்‌ னுவலுமநு கார மென்ற நொய்மை தீர்ந்து
மாற்றரிய திருநாடு ததி பாண்டற்கு வழங்கருளா யுனைப் பிரிந்தோர்‌ மாத்திரைப் போழ்‌
தாற்றேனுன்‌ திருவடியே யுபாய மென்‌றுள்‌ ளன்பொழுகச்‌ செஞ்‌சாலி யரியினூடு
சேற்றுறு தாமரை மலர் சீவரமங்கைக்குட்‌ சீதரன் றாள்‌ பற்றியதைச்‌ செப்பினானால்‌–70-

ஆராவ முதமெனுஞ் சொற்‌ பதிகத்தங்கு மடைந்து பல சித்தியிலா ததினானொந்து தீராத வாசையொடு செழு நீர்ப்‌ பண்ணைத்‌ திருக் குடந்தை யெம்‌ பெருமான்‌ திருப் பாதத்தி
னீராயலைந்து கரைந் துருகித்‌ தன்னுண்‌ ணின்றிடுமாக்‌ ருந்தநத்தை நிகழ்த்தி மாயன்‌
காராருந் திருமேனி யம்மான்‌ கண்ணன்‌ கழலிணை பற்‌ றிய வாய்மை கழறினானால்‌–71–

மானேய் நோக்‌ கெனுந் திருவாய்‌ மொழியிலந்த மாதவனும்‌ பல சித்தி வழங்கா துள்ளந்
தேனார் பூஞ்‌ சோலைகள்‌ சூழ்ந் தணி கொண் மாடத்‌ திருவல்ல வாழ்‌ புகப் போய்த்‌ திகைத்து வீழ்ந்தக்‌
கோனார்செம்‌ பதும மல ரடியை வாழ்த்திக்‌ கூடியது பவிப்பதென்று கொல்லோ வென்று
கானாரும்‌ பிடி நடைகொ ளீ குளைமார் முன்‌ கழறியவா றுரைத்தனன்‌ வெங் கலி வென்றோனே–72–

பிறந்தவாறு மெனவருள்‌ பதிகத் தென்‌ றும்‌ பேணியவா சையிற்‌ பலனைப்‌ பெறற்கில்லென்‌ று
சிறந்தவவ தாரங்க டோறுஞ் சென்‌று சீர் கெழு குணானுபவஞ்‌ செய்ய வுள்ளம்‌
மறந்து மலைந்‌ தலையாத பக்தி நாளும்‌ மாறாமற்‌ றருக வென மறிகடற்‌ கண்‌
ணிறந்த குரு மகனைத் தக்‌ கணைக்கன்‌ றீந்த வெம்பெருமான்‌ றனக்குரைத்த இசைத்தான்‌ மாதோ–73-

ஆறாம்‌ பத்து

வைகலெனும்‌ பதிகமவ தாரமதில்‌ இட்ட சித்தி வராமை பின்னு
முய்வர்தொழு மர்ச்சாவ தாரமதி லுளமனைத்து மூன்றி வண்டார்‌
கொய் மலர்க்கா வின மருவு திருவண்வண்‌ டூருறையும்‌ கோவலன் பாற்‌
செய் மருவு புள்ளினஞ்சந்‌ தனுப்பிபவாறு லகறியத்‌ தெரிவித்தானால்‌–74-

மின்னிடையென்‌ றருள்பதிகத்‌ தத்தூதி லெம்பெருமான்‌ மிகவொ ளித்துத்‌
தன்னுழையி லினிதுவர லறிந் துமக்குப்‌ பலவாய சலவேன்‌ மைக்‌கட்‌
கன்னியரங்‌ குளரவர்நீத்‌ திவணேக லென ப்‌ரணய கலகத்தாலே
பன்னகமீ நடித்தவனைத்‌ திரஸ்காரம்‌ பண்ணினதைப்‌ பகர்ந்தான்‌ மாதோ–75-

நல்குமவப்‌ பதிகம ப்ரணயகலக விருத்தமதா நலிவி றம்மைப்‌
பல்கதிரு மதியுமினி மினியெனவாஞ்‌ சேணுலகப்‌ பரம னண்ணார்‌
வெல்லு முயர் விருத்த விபூதிகளு மெனைக் கைக் கொள்ள மேவினானென்‌
றெல்ல வரு மறிவுறவே யுடைய நங்கை யீன்ற சுத னிசைத்தானம்மா–76-

குரவையெனும்‌ பதிகமதி லவ்வாறு கூடிய நங்‌ கொண்டல்‌ வண்ணன்‌
பரவையிற்க ணைவர் கொடி பாஞ்சாலிக்‌ களவில் கலை பல்கச் செய்தோ
னரவணையான்‌ குரவை முத லாடிய பல்‌ லீலைகளு மநு சந்தித்தாங்‌
கிரவு பக லகமகழ்ந்து ப்ரீதி யடைந்‌ததை யறிய வியம்பினானே—-77-

துவளிலெனும்‌ பதிகமதவ்‌ வதுபவத்தோர்‌ விச்லேடர்‌ தோன்றி மாதாய்ச்‌
சலிகெட மோகங் கொடு தண்‌ தொலை வில்லி மங்கல மால்‌ சரணைப்‌ பற்று
மவை யறியா தனை முனிய வதைமறுக்கப்‌ போகாதங்‌ கவளவாவை
யிவஎளவுமெண்‌ ணாது வீடு மென் றிகுளை சொல்வதென விசைத்தான்‌ மாதோ–78–

மாலுக்கென்‌ றருள்பதிகத்‌ திவ்வாறு வருந்தியுமான்‌ மருவானாகக்‌
கோலுகக்கத்‌ தரிவைவிர கார்த்தியின லுடலசந்து குறையச்‌ செம்‌பொன்‌
னீலக்கல்‌ லிழைதரள வடமொடு சங்‌ கெழில்‌ பலவு நில்லா தாகிக்‌
காலக்கண்‌ டனை வருந்திச் சொல்லுஞ்‌ சொல்லாக முனங்‌ கழறினானால்‌–79–

உண்ணுஞ்சோ நென்றருளும்‌ பதிகமதிற்‌ றாய்சோக முறவன்னா டன்‌
பெண்ணுஞ்‌ சோகந் தெளிந்து தாரக போஷக போக்யம்‌ பின்னு மெல்லாங்‌
கண்ணன் றா னென்றனக்கென்‌றே திருக்கோளூர் செலத்தாய்‌ கலக்‌கந்‌ தீர்ந்து
திண்ணங் கொண்டென் மகளவ் வூரடைந்தா ளெனுமாறு செப்பினானால்‌–80-

பொன்னுலகாளீ ரெனுஞ் சொற்‌ பதிகமதவ்‌ வணி நகர்க்குப்‌ போவே னென்று
மன்னிய காற்‌ பலகானி யாறுபோக மாளாது மலைந்தாங்‌ குற்ற
வன்னமொடங்க குருகினங்கா ளுமக்கிரு விபூதியு நானளிப்பன்‌ றுத்திப்‌
பன்னகமீத்‌ துயில் பரம பத நாதற் குரையுமெனப்‌ பகர்ந்தான் மாதோ–81–

நீராயென்‌ றிடு திருவாய்‌ மொழியினிற்‌ சந்தனுப்பியுமா னிகழானாக
வாராயென்‌ றழைத்திடு தங்‌ குரலறிவா ருள முருகு மாறு மெய்ய
பேராயிரங் கொளு மெம்‌ பெருமாற்கு முத்தருறை பெரு நாட்டிற்குந்
தாராள மாயடைய வோல மிட்டங்‌ கழைப்பதெனச்‌ சாற்‌ றினானால்‌–82–

உலகெனுஞ்சொற்‌ பதிகமதிற்‌ றாமுறுமா க்ருந்த நத்தி லுண்மை சொல்ல
நிலையொடுறும்‌ பொருட்டுயர் விண்‌ ணாடகன்றித்‌ திருமலையந் நெடு நாடாக
நலமுறநிற்‌ றனமென வின்‌ னோனு மலர்‌ மேலுறையு நங்கை தன்னை
யலைவறு மெய்க்‌ காரணமாய்க்‌ கொண்டவன்றா ளடைந்த மென வறிவித்தானால்‌-83

எழாம்‌ பத்து

உண்ணிலா விய பதிகத்‌ தோத நீர்‌ வண்ணனரு
ணண்ணிலா தார்த்தி கொடுன்‌ னளினமலர்ச்‌ சேவடியை
யண்ணிலா திந்த்ரியத் தெக்‌ காலமளவும்‌ மழுங்கப்‌
பண்ணினா யென்று மனப்‌ பாதையறி வித்தனனால்–84-

கங்குல்லெ னும்பதிகத்‌ திவ்வாறு காதல்‌ கொள
வங்கவடாய்‌ செம்பொன்‌ னரங்கன்‌ றனைக் குறித்திம்‌
மங்கை யுய்யற்‌ கெவ் வண்ணம்‌ வைத்தீர் சங் கற்பமெனப்‌
பங்கமறக்‌ கேட்டுருகும்‌ பான்மை யறிவித்தனனால்‌–85-

வெள்ளை யெனும் பதிக மெய்த்தா யிவை யுரைக்கக்‌
கள்ளவிழ் பூங்‌ கோதை கொளுங்‌ காதறெளிந் தருகாம்‌
பிள்ளைக் குழாங் கொடிருப்‌ பேரை செல்லு வேனெனத்தாய்‌
தள்ள நிராகரித்துச்‌ சாருவதாகப் பகர்ந்தான்‌–86–

ஆழிப்‌ பதிகத்‌ தவன் பிரிவிற்‌ றுன்பமுறப்‌
பாழியந்தோண் மாயன்‌ பண்டை யவதார மெல்லாம்‌
வாழியின மாறனுக்கு வந்துதவச்‌ சிந்தித்துச்‌
சூழக்‌ குணத்தியல்பு சொல்வதென வோதினனால்‌–87–

கற்பாரெனும் பதிகங்‌ காண் விஜயோபா தாநக்‌
சிப்பாலி ராம க்ருஷ்ண ரென்னு மவதார நிற்கத்‌
தப்பாக வே பிறரைத்‌ தாழ்வதிலென்‌ னென்றுடன்றான்‌
முப்போது மால் குணத்தின்‌ மூழ்கியவா றிங்குரைத்தான்‌–88-

பாமரு வென்றோதும்‌ பதிகத்‌ தவன் குணமுண்‌
ணா மருவி யும் மெதிரி னண்ணா ததினாலுன்‌
றே மலர்த்தா ளெப்போது சேர்வே னென வுருகா
ஏமுறுமாக்ருந்தன மியற்றியதையே பணித்தான்‌ –89–

ஏழையெனும்‌ பதிகத்‌ திவ் வணமாக்ருந்‌த நங்கேட்‌
பாழியான்‌ றன்ன வுரு பாக்ய சம்சிலேட மின்‌றித்‌
தாழ மனமுருகித்‌ தன்னுள்‌ வருத்த மெலாந்‌
தோழியர்க்கு மன்னையர்க்கும் சொல்லுவதாகப்‌ பணித்தான்‌ –90-

மாயா வெனும் பதிகத்‌ திவ்வாறுளம் வருந்து
நாயேனை யிவ் வுலக நண்ண வைத்த தென்னெனப்பார்‌
தாயோன் விசித்திர விபூதி தனைக் காட்டச்‌
சேயோன்‌ மகிழ் மாறன்‌ சிந்தை மகிழ்‌ வைப் பகர்ந்தான்‌ –91-

என்றை தனி லென்னை யிவ ணேன் வைத்தா யென்ன வெற்கு
மொன்றடியார்க்‌ குந் தமிழ் நீ யோத வைத்‌த தென்னலுமக்‌
கன்‌று குணிலா யெறியுங்‌ கண்ணனுரைக்‌ குப் பதிலெந்
நன்றி புரி வேனென வுண்‌ ணலியும் வகை யுரைத்தான் -92–

இன்பமென்லும் பதிகப்‌ திவ்வா றுபகரித்த
மின்பொலியு மார்பனுறை மெய்த் திருவாறன் விளைக்கு
ளன்புடன் சென்‌ நின் றமிழை யரங்கேற்ற வேணுமென
வென்புருகு மார்த்தியினை யீங்கருளிச்‌ செய்தனனே–93–

எட்டாம் பத்து-

தேவிமா ரெனும்பதிகத்‌ தப்பதிக்குச்‌ செல முடியா திடை தருகித்‌ திருமா துண்மை
மேவு புரு டாகார பூதை யாக மெய் யுறு மாச்ருத பார தந்த்ரிய முற்றும்‌
பாவுதலிற்‌ றமக்கினிய பலனில்லென்று பன்னு குண மேற் சங்கை பண்ண மாயோ
னாவலிற் றன்‌ கல்யாண குணங்கள்‌ காட்ட வதி சங்கை தீர்ந்துகந்த தருளினானே –94-

நங்களெனும்‌ பதிகத் தெம்‌ பெருமான்‌ றன்முனளின முகங்‌ காட்‌ டாது நலியச்‌ செயய
லெங்கனமற்‌ றவனறியச்‌ சஞ்சா ரத்தி னியற்கை யுள தோ வென்‌ றிரங்கி மிக்கச்‌
சங்கை கொடெற்‌ கவை மிகவும்‌ தியாச்சய மென்று தாயருயிர்த்‌ தோழி பல தாதி மார்முன்‌
னுங்களோ டெமக்கனிப் பற்‌ றில்லை யென்றாங்‌ கோதியதாய்க்‌ காரி சுதனுரை செய்‌ தானால்‌–95–

௮ங்கெனுஞ் சொற்‌ பதிகமதிற்‌ பற்றில்‌ லென்றாங்‌ கறைந்திடமா லவனுளத் துற்‌ றருளே செய்யச்‌
சுங்கையிலன்‌ னோனெழி லெவ் வநமுங் கண்டு தானழுங்குந் துயர் மறந்து தனை யல்லாதிம்‌
மங்கை மண வாளனதி ரூபத்துக்கு மங்களா சாசன பரரில்‌ லென வருந்தப்‌ புங்கவ நித்திய முத்தர்‌ முழூட்சு வுண்டுட்‌ புலரலென மகிழ்ந்த வகை புகன்றானம்மா-96-

வார்கடா வியென வருட்‌ பதிகத்‌ தெந்தை மாறனுமக்‌ இன்ன முள மலையுமென்‌று
சீர் கெழுதன்‌ வீர்ய சக்தி குணங்கள்‌ யாவுஞ்‌ சேவை பர சமர்த்தியை யுந்‌ தெளியக்‌ காட்டி
யேர் கொள் பொழிற்‌ றிருச் செங்குன்‌றூரில் வாழு மெம்பெருமான்‌ பயமறச் செய்‌ யியற்கை சொன்னான்‌
கார்கொளுமைம்‌ பாலுடைய நங்கை யீன்ற கண் மணி நாற் கவிப்‌ புலவர்‌ களிக்கும் வேந்தே–97-

மாயக் கூத்‌ தா வெனுஞ் சொற்‌ பதிகத் திந்த வாறு பயம்‌ போக்கியது மான சத்தி
னாயவநு பவமாத லாற் பாக்யத்தி னநுபவமே வேண்டு மென வதி சங்‌கித்து
தாயவனெம்‌ பெருமானை வணங்க மிக்கச்‌ சாக்ஷாத்‌ கரிக்க வெனத்‌ தாமுந் தன்பான்‌
மேயபுல னுங் கரைந்தங்‌ கழைத்த வாறிம்‌ மேதினியோ ரறிதரவே விரித்தான்‌ மன்னே–98–

எல்லியுங் கா லென வருளும்‌ பதிக மாற னிவ்வாறு கூப்பிட மாலிவ னின்‌ மிக்க வல்லல் கொளுந் திருஷ்ணையதாய்‌ வருந்தி யன்னோன்‌ ஆக்ரோசம்‌ பண்ணு முன மடைந் தோமில்லை
வல்லை யதற்‌ கிதமாகப்‌ போனான்‌ மாறன்‌ மாலுறுவ னென்று திருக்‌ கடித்தானம் போய்ச்‌
சொல்லுவமால்‌ சாத்மித்த பின்பென்றேகுஞ்‌ சூட்சி யறிந்‌தக மகிழச்‌ சொற்றான்‌ மாதோ–99-

இருந்தெனுஞ்சொற் பதிகமதி லுகந்து மாறனேர் கொடிருக்‌ கடித்‌ தானத்‌ திருடி கேசன்‌
பொருந்தியுள மகிழ்ந்‌து தம தூடனீங்கப்‌ புல்லியது சொப்பனமோ பொய் மாலோ வென்
றருந் துயருற்‌ றிவை சொப்ன மோகமன்றென்‌ றதி சங்கை தீர்ந்துடனங்‌ கதிமால் கொள்ளத்‌
திருந்தியவன்‌ றனை யடைந்த தருளிச் செய்தான்‌ றென் குருகூ ரவதரித்த செவ்வியோனே–100–

கண்கள்‌ சிவந்தெனும் பதிகத்‌ ததிமாலுற்ற கண்ணனவ யவங்களிலுங்‌ கலன்களூள்ளும்‌
வண்ணமதி லும் மனமுங்‌ கண்ணு மாழ்ந்து மாதமிரு மூன்றளவும்‌ வாரா நிற்கத்‌
தண்ணளியோ னருள்‌ கொடு பின்‌ மீண்டம்‌ மாறன்‌ சர்வ ஸ்வா மித்வமதைச்‌ சாற்றினானாற்‌
பண் கொளுமென்‌ மொழி யுடைய நங்கை யீன்ற ப்ரபந்ந ஜன கூடனருட்‌ பரமன் றானே–101–

கருமாணிக்‌ கமலை யெனும்‌ பதிகத்‌ திந்தக்‌ கண்ணனடி சேடத் வக்‌ கனிவினாலள்‌ ளூருகாநின்‌ றெப்பொழுதுந் தனை மறந்தோ ரொண்டொடி யினவத்தை கொடவ்‌ வுததி வண்ணன்‌
றிருமாலின்‌ குணங்களிலீ டுபடா நின்ற செயலை யுயிர்த்‌ தோழியர்க டெரிந்து தாய்க்குன்‌
னருமாது படு துயர மறிதி யென்றங்‌ கறைவதெனப்‌ பாரறிய வறிவித்தானால்‌–102-

நெடுமாலுக்‌ கடிமை யெனும்‌ பதிகத்‌ தெந்தை நித்திய சூரிகள் பரவு நிமல னேழ்ப
கடுமாயத்‌ தொலைத்தணங்கை மணந்த வென்றிக்‌ கண்ணனுடைக்‌ கல்யாண குணத்திலீடு
படுமாயத்‌ தடியருக்கு மடியர்‌ செய்ய பதமலரென்‌ னுயிர் நிலையாய்ப்‌ பரித்தே னென்றான்‌
சுடுமாதித்‌ தனுக்க விழா விதய கஞ்சந் தோடவிழ வுதித் தருளுஞ்‌ சுடரோனன்றே.-103-

ஒன்பதாம்‌ பத்து-

கொண்ட பெண்டிர்‌ மக்க ளென்னுங்‌ கோதறு பதிகத் திந்த
மண்டலத் துள்ளீ ருங்கண்‌ மனை யுற முறையார்‌ வாழ்வுங்‌
கண்ட மாத்‌ திர மல்‌ லாது கடிப்பதிங் கிறையு மின்னந்
தண்டயி ருலகுண்‌ டோன்ற ன்றாட்டுணை யல தென்றானே–104-

பண்டைநா ளென்னு மின்சொற்‌ பதிகமம்‌ புளிங்குடிக் கண்‌
விண்டுவைப்‌ பரமனாகுங்‌ காசினி வேந்தை மாறன்‌
கண்டு நின்‌ னுறவின்‌ மெய்ய காரிய மனைத்துந் தந்‌துன்‌
னண்டையி லிருத்தி நல்வாழ்‌ வருடி யென்‌ றறிவித்தானால்‌–105–

ஓராய பதிகத்‌ தந்த வொண் சுட ராழி மாய
னேராய் நீ வேண்டும்‌ யாவு நின்னுளப்‌ படியே செய்வம்‌
நாராயணனு நானென்று நல்லுற வதனைக்‌ காட்ட
வாராத சீலத்‌ தற்கா றாழ்ந்ததா யருளினானால்‌–106–

மையாரும்‌ பதிக மென்னும்‌ வண்டமிழ்த்‌ தொடையி லந்தக்
கையாழிள்‌ சங்கு வேந்தைக்‌ காண வென்‌ றதிமால்‌ கொண்டு
நையாநின் றினித ழைத்தந் நாரணன்‌ றனைக் காண்‌ குற்றங்‌
குய்யா நின்‌றுகந்த தாய வுண்மையை யறிவித்தானால்‌–107–

இன்னுயிர்ச் சேவல் என்று அங்கு இனிதருள் பதிகத் தெந்தை
பொன்னவள்‌ கொழுநன்‌ கூடிப்‌ போயபி னதிமாலுற்று
மன்னிய குருகீ ரென்றன்‌ மாதவன்‌ வருக வென்‌றுங்‌
கன்னியம்‌ பேடை யோடு கரைமினென்‌ தறிவித்தானால்‌-108-

உருகுமா னெஞ்சு மென்றங்‌ கோதிய பதிகத்‌ தென்னுட்
டிருகுமாய்த்‌ திடுபுள்‌ ளூருந்‌ தேவனின்‌ செயல்களெண்ணிப்‌
பெருகுமால்‌ வேட்கை கொண்டு பேசிய தழீஇய தன்மை
முருகுமா மகிழலங்கன்‌ மொய்ம் பனீண்‌ டறிவித்தானால்‌–109-

எங்கானற்‌ பதிக மாற னேந்திழை யவத்தை கொண்டெற்‌
கங்காய காதன்‌ மாற னழகென வவை பற்‌றா சாய்ச்‌
செங்கானன்‌ னாரையீர் தென்‌ றிரு மூழிக்‌ களத்துள்‌ ளோன் பா
னங்காத லுரைமி னென்று நவின்றவா றறிவித்தானால்‌–110–

அறுக்குமப்‌ பதிகத்‌ தின்முன்‌ னனுப்புந் தூதரியைத்‌ தன் முன்‌
குறுக்குமுன்‌ மிக விளைத்‌தக்‌ கோவலன்‌ நிரு நாவாய
னுறற்கு நாளுள தோமாயற்குரிய தொண்டி யற்‌றுவேனோ
மறுப்பனோ வன்னோ னென்றுண்‌ மனோ ரத மறிவித்தானால்‌–111–

மல்லிகைப்‌ பதிக மாறன்‌ மடவர லாகி யந்தி
புல்லிய வாடை தங்கள்‌ பூவணை யன்றில்‌ வேயின்‌
சொல்லியல்‌ கடல்வே டாயர்‌ தோழிசாந் தணி வெறுத்தாங்‌
கல்லிருந் தரியைக் கூவி யழுங்கலாய்ப்‌ பகர்ந்தான்‌ மாதோ–112-

மாலை நண்‌ ணி யெனுந்‌ தூய வண்ட மிழ்ப்‌ பதிக மாற
னோலையார்‌ கலிசூழங்க ணுல குளீர்‌ கண புரத்து
நீலமா மலை போ னின்ற நிமலனை வணங்கீர்‌ துஞ்சுங்‌
காலை விண்‌ ணாடளிக்குங் கருதுமென்‌ றருளினானால்‌-113–

பத்தாம்‌ பத்து–

தாள தாமரை யாம்பதி கந்தனில
வாளை பாய்தட மல்குதிரு மோகூர்க்‌
காள மேகங்‌ கழல்பணிந் தால்வழிக்‌
காளு நற்றுணை யாமென்‌ றறைந்தனன்‌–114–

கெடுமி டர்ப் பதிகங் கிளர்‌ மாட மார்ந்‌
தடர னந்த புரத்தது கூலரை
மடம றும்பன்‌ மயக்கு மறச்செயு
நடலை தீர்ந்தவ ணாடு மென்‌ றோதினன்‌–115–

வேய்மரும்பதி கத்தவன்‌ மேனகர்‌
தாமடைதற்‌ கிலாததிற்‌ றம்மையிப்‌
பூமி வைக்குமோ வென்று புலர்ந்துபின்‌
மாம ணாற்ற மகிழ்ந்ததை யோதினான்‌–116–

சார்வெ னும்பதி கத்துமுன்‌ சாற்றிய ‘
சீர்கொள்‌ பக்தி பலத்துடன்‌ சேர்ந்ததாற்‌
சோர்வி லததைத்‌ தொல்லுல கத்தினுக்‌
கார்வ மோடிங்‌ கறைந்தன னன்றரோ—117–

கண்ண னாம்பதி கந்தனிற்‌ காரினேர்‌ வண்ண மேனிகொண்‌ மாயனை வாழ்த்துறுந்‌
திண்ணமேவுநர்‌ சீர்த்தி தனைப் புவிக்‌ குண்ணெ கிழ்ந்திங்‌ குரைத்தனன்‌ மாறனே–118-

அருளெ னும்பதி கத்தவ னன்பினு
லிருள் செ றிந்த தம்‌ மென்புட றன்னொடு
மருவு பொன் மதில்‌ வாட்டா றடைவமென்‌
றுருகி நெஞ்சொ டுரைப்பன வோதினான்‌–119–

செஞ்சொ லாம்பதி கத்திறன்‌ சிர் கொண் மெய்‌ வஞ்ச மோடரி வாஞ்சை வைத்‌ தாளமால்‌ விஞ்சியே கலக்‌ தாய்ந்து பின்‌ விட்டதை யெஞ்சிலாதிங்‌ இசைத்தனன்‌ மாறனே.–120-

மன்றிருப்பேர்‌ நகருறை மாறனக்‌
கின்று மாற னிசைத்திலன்‌ பாவெனச்‌
சென்‌ று ழன்றவன்‌ சிந்தை நிறைவுற
வொன்ற வெந்தை யுகந்துபி னோதுவான்‌.–121-

திருவெனும் பதி கந்தனிற்‌ செந்திரு
மருவு மார்பன்‌ மகிழ்ந்து வியத்தல் கண்‌
டுருவி னோய் முன்‌ னொழித்தின்று சேறுத
லருமை யோ வென்‌ றழுங்கிய தோதினான்‌-122-

சூழ்ந்தெ னும்பதி கத்தரி சூரிகள்‌ வாழ்ந்தி டும்பதி யின் வழி காட்ட வாங்‌ காழ்ந்து முற்று மனுபவித்‌ தண்ணறா டாழ்ந்த வாறிவண்‌ சாற்றினன்‌ மாதரோ.–123-

முனிய தாம்பதி கத்துமுன்‌ னின்பு போய்த்‌
தனிய தாகத்‌ தளர்ந்து தெளிந்து பின்‌
னனிய தாம்பர மபக்தி யானைந்தப்‌
பனி கொண்‌ மாயனைப்‌ பற்றிய தோதினன்‌–124–

இந்த வாறெழு தா முறை யின் பொரு
டந்த போழ்து மதுர கவித்தவன்‌
சிந்தை கூர்ந்தவன்‌ சேவடி யுன்னுபு
நந்த லின்றி நனிவரைந்‌ தானர–125-

திராவிட வேத மருளிய படலம் முற்றும்‌-

திரு வர்ச்சைப்‌ படலம்‌

தீதறு மெய்ஞ்‌ ஞான நிறை யாள வந்தார்‌ திருவுளத்து முன்னியவை செய்யு முன்பே
மாதவன்றன்‌ னுலகருளச்‌ சரம பிம்ப மலர்க்‌ கையிடை விரன் மூன்று மடித்துக்‌ காட்டிப்‌
போதர மெய்ச்‌ சிச்சர் மனம்‌ வருந்த வெல்லை போந்து விர னிமிர்த் தருணம்‌ புநிதனாக
வாதவனிற்‌ றோன்று மெதி பதி தாள்‌ வாழ்த்த யர்ச்சை யெனும்‌ படலமதை யறிவிப்‌ பாமால்‌–1-

எம்மாற னைத் தடிந் தின்‌ றிணை யடிக்காட்‌ கொண்டருளு மெழில்‌ கொள்‌ சோதி
யம் மாறன்‌ றனைப்பணிவோர்க்‌ கின்னமுதச்‌ சடகோப னருள் சேர்‌ கொண்ட
றெம்மாறுஞ்‌ செந்தமிழோ ராயிரமுஞ்‌ செய்துகந்த செயற்குத் தூய
கைம்மாறு செய்தருள்வா னெனப் பரம வானாட்டிற்‌ கருணை பூத்தோன்‌–2-

தெள்ளமுதத்‌ திருமகளம்‌ புவிமாது மிருமருங்குந்‌ திகழத்‌ தூய
வள்ளயில்சே ரைம்படையு முறை முறைநின்‌ றருளி செய்ய மருவுந் தீய
பள்ளவினைச்‌ தொடரறுத்த நித்யர் குழாம்‌ புடை பரந்து பல்லாண்‌ டேத்தப்‌
புள்ளரசன்‌ மீத் தோன்றி முன்போல விண்ணகத்திற்‌ பொலிந்தான்‌ மாதோ–3–

விண்ணகத்திற்‌ றோன்றி யிவ்வா றடல் வாண னயிரந்தோள்‌ வீட்ட நாதன்‌
பண்ணமைந்த பைங்கமலத்‌ தாளேறு வரையகலப்‌ பரமன்‌ சேவை
தண்ணளியோ டீந்தருளப்‌ பாந்தண்முடி மீக்கிடந்து தயங்கு ஞாலத்‌
துண்ணயந்த வெவ்வினை தீர்த்‌ தருண் ஞான தேசிகனு முவந்து கண்டே–4–

மருவாருந் துளவமுகி லைக்கனிவாய்‌ முடியார வணங்கி வாழ்த்தி
வுருகாநின்‌ றிடவரிதன்‌ சேவை யளித்‌ தணி நகர்செல்‌ லுழியந்‌தோ நின்‌
றிருவாணை நின்னாணை கண்டாய் போ கேலுனது திருநா டெற்குத்‌
தருவாயென்‌ றாரணமுந் தேடறியா வடி பரவிச்‌ சாற்‌றுவானால்–5–

குருதிவெளென்‌ பசை நரம்பு செறி தசை சர்‌ மங்கொளுடற்‌ குரம்பை யின் கண்‌ ணரைபிணி கொண் டது குறிக்‌ காறளர்க்து கோலூன்றி நனி வருந்தி
மருள்‌ கொளுமிப்‌ பிறப்பிலினு முழன்‌ றிடிலயா னுய்வதற்கென்‌ வழி யுண்டோதாய்‌
சுருதியொடோ திமமுயர்த்தோ னரனமரர்‌ தேடறியாத்‌ தூய்மை யோனே–6-

என்ன லுமா லுமதருளிம்‌ மெய்யடியர்ம. துர கவிக்‌ இசைய வீண்டு
முன்னுளமூ வர்களுடன் மற்‌ றவருரைசெய்‌ செந்தமிழின்‌ மொழியு நீவிர்‌
சொன்ன மறை நான்னெரும்‌ பொருளுடன் பின்‌ னவருரைக்குந் தொடையு மோதி
மன்னுமிவ ணெனவுமலைந் தடியனுள மருவாதிவ்‌ வளநா டென்றான்‌–7-

இவ்வணமா லுடன்வகுள பூடணன்றன்‌ ஸனுளவிருப்‌ப மினிது கூற வவ்வியினின்‌ மதுரகவி யும் மெனைக் கைக்‌ கொண்ட கன்றாலடியே னுய்வன்‌
பவ்வ நெடு வரி விழி கொ ணங்கைகுமா ராவெனுமுன்‌ படியுளோர்க்குச்‌
செவ்வியினான்‌ மறைத் தமிழை நீயலதிங் கெவரிருந்து தெரிவிப்‌பாரால்‌–8-

என்‌ றிடவுள்‌ ளுழன்‌ று தெளிந் தடி பரவிக்‌ குடி மறவா திளமையான
கன்றை மறந்‌ தனை பிரிதலுலகியல் போ தம் மகவைக்‌ களைந்தின்‌ போகந்
துன்றிய நற்‌ கனியமுதா ரடிசிறனை யுண்கிலதிற்‌ சுவை யேதெனு
மொன்றிடுமோ தந்தையருக்‌ கவைசிவண வெனைப் பிரித லொவ்வா தென்றான்‌–9–

மத்தளைவாய்‌ வைத்த கரு முகில் புரையுந்‌ திருமேனி மாயன்‌ றுய்ய
புத்தமுதிற்‌ றெளிதமிழா யிரமருணன்‌ னாவீறு போத நும்மை
நத்திய மெய்‌ யடிம துர கவியுழுலா திவணிருநா நவின்ற வண்ண
நித்தியமா கப்பொலிந்திங் குமதுதிரு முன்னரிலே நிற்போமென்றான்‌–10-

அம்புவியிற்‌ கலிகெடுமென்‌றுரைசெய் மகி ழலங்கலுறு மஞ்ச வூர்‌தி
யெம்பெருமான்‌ றிருவுளத்தின்‌ படி திருந்தி மதுரகவி யிடையா வண்ண
மூம்பருல கோடு புவிக்‌கா முதல்வ னீயே யென்‌ றுரை த்துகந்து
தம்பது மக்‌ கட்கடையாற்‌ குளிர விழித்‌தவன் கனியச்‌ சாற்‌றினானால் –11-

தென்றிசைமார்த்‌ தாண்டனுரு வாயுதயஞ்‌ செய்ததுவுந் திருப்‌ புளிக் கீழ்
ஓன்றியொரு பதினாரூண்‌ டளவின மக்‌ கோர் மறுசொல்‌ வுரைத்த வாறும்‌
பொன்றிலரு நான்மறையின்‌ பொருளினைச் செந் தமிழ்த் தொடை யிற்‌ புகன்ற வாறு
மின்று திரு மாலினுட னேகலந்திங்‌ கவனருளுக்‌ கிசைந்த வாறும்‌–12–

எண்ணி நெடு மாலிலிவனே பரமென்று றுதகொடுள்ளி னினிய பக்தி
பண்ணியவன்‌ றாளிணையி லாரியனே தெய்வமென்றிப்‌ படியோர்‌ காணக்‌
கண்ணிநுணென்‌ றொருப திக நாவீற னம் மதுர கவியோ வென்னத்
தண்ணமுதைக்‌ கடைந்தெடு வெண்‌ சுதையிலுமின்‌ சுவை யொழுகச்‌ சாற்றினானால்–13-

இன்னணஞ்சின்‌ னாள்வரை முப்‌ போதுமவன்‌ தாளிணையை யிறைஞ்‌ ச மாற
னன்னவற்கோர்‌ நாடனிலிக்‌ கலி விபவத்‌ தியாமிருப்ப தழக தல்ல
பொன்னி வருந் தென்மலை நின்‌ றகிலுரிஞ்சிப்‌ புனல் பரக்கும்‌ பொருந லாய
நன்ன தி நீர்‌ கொடுவெனினே ரர்ச்சையியற்‌ றிடுவை யென நவின்‌ றான்‌ மாதோ –14–

அம்மொழி கேட்‌ டெவ் வகையந் நீரை யெடுத்‌ தமைத்திடுத லருடி யென்ன
மைம்முகிலூ ரும்புளிக்கா வண மகிழ் மா றனுமிவனை மகிழ்ந்து நோக்கி
யிம்மணனா றும்புனற டாவினிறைத்‌ தடிலெருவை யினிதுண்‌டாகுஞ்‌
செம்மலுளோ யதை யெடுத்தந் நீரில் விட நம்முருவிற்‌ றிகழு மென்றே –15–

ஓத வுள்லி லுவகையம்‌ பேரலை மோத மாறன்‌ மொழிந்த மொழிப்படி
வேத நாவர்‌ மிடைந்து செலத் திரைச்‌ சீத நீர்ப் பொரு நாநதி சென்றரோ–16-

பொற் கு டத்திற்‌ புனல் கொடு நான் மறை விற்ப னர்கள்‌ விளம்பிட மும்மத
வெற் பொ ருங்களி றின் பிடர்‌ வைத்துல கற்பு தங்கொள வார்த்தெழப்‌ பல்லியம்‌–17-

காவி யொண் கண்‌ கணிகைய ராட விண்‌ மேவு வோர்கள்‌ வியந்து நறு மலர்‌
தூவ மாடங்கொ டோரண வீதி வாய்‌ மாவ லங்கொடு மாறளி மேவியே–18-

சந்த கிற்றேவ தாரமெனுந்தறும்‌ மிந்த னம் மிட்‌ டெரிவளர்த்‌ தப்புனற்‌
பைந்த மனியப்‌ பாத்திரத்‌ திட்டுயர்‌ சிந்தெழுங் கதிர்ச்‌ சென்னிறச்‌ செம்புற–19-

அட்ட பின்மற்‌ றமுது கொள்‌ பொன்றடா விட்ட நீர் குளிர மேயபி னோக்கலு
மட்டு லாமரை மாமலர்க்‌ கை குவிந்‌திட்ட தோருரு வெய்திடக்‌ கண்டனன்‌–20-

காண்ட லும் முட்‌ கலங்கிப்‌ பதறியங்‌ காண்ட கை முன்‌ னடைந்தடி சென்னியிற்‌
பூண்டென்‌ குற்றம்‌ பொறுத்திடு வாயென வேண்டிப்‌ பின்னும்‌ விளம்பினன்‌ மெய்த்தவன்‌–21-

சொன்ன சொற்படி சோர்வணு வின்றியா னின்ன காலை யியற்றின னின்னுருத்‌
தன்னை யன்றிச்‌ சமைந்தது வேறுரு வென்ன காரண மென் பிழை யென்னவும்‌–22-

கார்கொள்‌ வெங்கலி யுங்கெடுங்‌ காணுமென்‌ றேர்கொள்‌ பா முன்‌னிசைத்து நான்‌ காட்டிய
பார்கொள்‌ மாக்கள்‌ பராவும்‌ பவிஷ்யதா சார்ய னாமிவ னென்றுபு சாற்றியே–23-

மண்ட லத் துண்‌ மருள் கொள்‌ பிறமத கண்ட னஞ் செய வுங் கலி காயவு
மண்டர்‌ நாத னருளில்‌ வருந்திரிதண்ட மாருந்‌ தவத்திறை யென்றனன்‌–24-

அன்ன மாறனை வாழ்த்தி யணி மகிழ்‌ மன்ன னின்னுரு வாய்ப்ப வமைத்திடற்‌
இன்னருள்புரி வாயென வேந்தலு முன்னி யன்பனை நோக்கி மொழிகுவான்‌–25-

முன்னி னப்புனன்‌ மொண்டுவந் தட்டிடிலென்னி னேருரு வெய்துமென்‌ றோதலு
மன்ன மாறனை வாழ்த்தி யணிநல மன்னு மாதவ ரோடு மகிழ்ந்தரோ–26-

கங்‌கிரும ருங்குமடர்‌ சங்கின முழன்று கக்கிய மணித்திர ளுகுத்து நில மெங்கும்‌ [ பொங்கு கதிர்‌ தங்கு முயர்‌ திங்களி னிலங்கும்‌ பொற்புறுதி ருப்‌ பொருந ந ற்புனல் கொணர்ந்தாங்‌
கிங்கிதமோ டங்கரிய மங்கள மு கூர்த்தத்‌ திப்புனலை யட்டுமுனி னப்பினில்‌ விடுக்கத்‌
துங்கவனெ ருங்குகுழ னங்கையருள்‌ பாலன்‌ சோதி வடி வாகியது மாதவ னறிந்தான்‌–27-

விண்டலநி ரைந்த பல வண்டமு முகாந்த மேவு பெரு வாரியினி னோவுமென நாடி
யுண்டுமிழ்‌ தருங் கருணை மண்டு திரு மாலே யுற்றடைய நங்கை வயி னற்ற நயனாகிக்‌
கொண்டறவழ்‌ திந்‌திரிணி யண்டி மறை யோ தெங்‌ குருவினுரு மன்னவொளி ரெருவையை யளித்த
வண்டலுறு தண் பொருநல்‌ கொண்ட புக ழாரும்‌ வளத்தினை யறிந்‌து பு கிளத்தலரி தம்மா -28-

பொன்னிமு தலாய பல தன்னதியி லாடிற்‌ புலப்படுமு டற்குறும லத்தினை யறுத்‌து மன்னுமிக நல்லறிவு மிந்நதியி லாடில்‌ வழுத்துமு னழுக்கறு மொழுக்கமுட னுள்ளம்‌
பன்னு கலை யாதுமுறு மின்னருளி னாற்புட்‌ பகத்தனெனவே பொருலி கத்தினி லடைந்தே
துன்னுமக வாழ்வுறுவர்‌ பின்னுயிர் கழன்றாற்‌ சொற்றெரி யணைக்‌ கடவுள்‌ பற்றுவ னுகந்தே -29-

உப்பய முடுத்திலகு வைப்புயி ரனைத்தும்‌ முய்ய வென வேதமுள செய்ய பொரு ளெல்லாம்‌
துப்பமை தமிழ்ப்பட வுரைப்பபென நாடிச்‌ சூழரவ தாயபுளி நீழலி லுறும் மெம்‌
மப்பனுரு விற் பொருந றுப்பெருவை தந்த வந்நிலைமை யாற்றாம் ப்ர வன்னியென நாம
மிப்பொரு விலாறுறு மெனப் பிறவி யாய வேதமறு மாதவனு மோதின னுகந்தே –30-

இப்பெய ருறும் பொருந லப்பினி தளித்த வென்று நிகர்‌ நின்றோ ளிரு மன்றன் மகிழ்‌ மாலைத்‌
துப்பனுரு வைவிழிக ளிப்ப மிக நோக்கித்‌ துய்யவடி வாயதென மெய்யனு மகிழ்ந்தவ்‌
வொப்பரி யதாய வடி வைப்பணிகொ ளும்மா லூர்சினைய டர்ந்து மலரார் புளி நிழற்‌ கீழ்ச்‌
சிற்பரம னங்கை யருள்‌ கற்பக மிணைந்த சேவடி வணங்கு பு வம்மா வடிவை வைத்தான்‌ –31-

எந்தையேநீ யுந் தருளி லந்தமோட மைந்த திக்கரண முற்றொளிரும்‌ விக்கிரக மென்று
வந்தனை புரிந்தினிதின்‌ சிந்தை யரு ணந்தா மாறவென வோதலுநா வீறனு முணர்ந்தச்‌
சுந்தரமி குந்தவடி வந்தனை யணைந்தே சுப்பிரம தென்றதில நுப்‌ பிரவேசிக்க
முந்தவிப வந்தரை படிந்த வுயர் வந்தோர்‌ மொய் தரு மலர் மழைகள்‌ பெய்தனர்க ளம்மா –32-

இன்னண நிலம் படியு முன்னை விபவத்தை யெல்லை யறு ஞான முனி வல்லை யி லடக்கிக்‌
கன்னவில் புயன் வழுதி மன்னர் மர புற்றோன் காரி மக ராசனருண்‌ மாரி சொரி கொண்டல்‌
பொன்னணி நெடும் புரிசை மின்னிய விமானம்‌ போதவு மமைத்த ருணி கேதந மதற்குண்‌
மன்னுறவ மைத்தன னெற்‌ றன்னை நிகர்‌ மாறன்‌ வண்மை யு று தானான தன்மையினை யன்றே –33

வீசுதிரை சூழ் புண ரி தூசென வுடுத்த மேதினியி னங்கவியை யோதுபு சிறந்தாம்‌
காசிலுயிர்‌ பாலிருகை பாசம தெடுத்தே யந்தக வரேலடையி னந் துவை நீ யென்ற
வாசிமுக மாகவொளி வீசுபரி யங்க மத்தியி லெழுந் தருள வித்‌தரை யிலங்கத்‌
தேசிக முறுங்கலை பன்‌ மாசறு கலன்க டிவ்விய மகிழ்த் தெரியல்‌ செவ் வியி னணிந்தே —34-

அன்றுமுதன்‌ மன்றன் மகிழ்‌ துன்று நற விண்டை யண்ணலுறு மர்ச்சையினை நண்ணுபு வணங்கி
நின்று தின மொன்று மதி குன்றில் வருடத்து நிச்சலம தாயபல வுச்‌சவ நடாத்திக்‌
கன்று குனி லென் றெறியு மின்றிகழு மார்பன்‌ காணி பொரு ளீன்றவர்கள்‌ பேணு மனை வாழ்வா
மென்றிவை னைத்து மறை யின் றமிழு ரைத்தோ னிணைப்பத மெனத்துதி பணித்தவ ணிருந்தான்‌ —

திரு வர்ச்சைப்‌ படலம்‌ முற்றும்‌-

பரவாத கண்டனப்‌ படலம்‌–

தாரிலுயர்‌ யாதவ ப்ர காசிக்‌ கெண்ணை தாக்கொருகா ளவன் கப்யா சமெனும்‌ வாக்ய
நீர்மைகெடப்‌ பொருள்‌ சொலவின்‌ னவனோ ராக்கண்‌ ணீரனலிற்‌ குறங்கு குப்ப நீச னோர்ந்திச்‌
சீரவனனஞ்‌ சமயமடு மென்‌று கொல்வான்‌ சேணத செல்‌ லுழி யெம்‌பார்‌ தெரிக்க நீங்கி
யேருறுமத்‌ திகிரியன் வந் தழைக்கச்‌ சென்ற விளையாழ்வா னடித்‌ துணையை யிறைஞ்சு வாமால்‌ –1–

இம் மா மது ரக வித்தவ விறையோனுற வவனி
னம் மாமலர்ச்‌ சரணைப் பணி யடியானொரு மறையோன்‌
கைம்மாவிடர்‌ கெடு சக்கிரி கருதும் பதி தொறும் போய்ப்‌
பைம்மாமுகி லுருவத்தனைப்‌ பணி வானவண்‌ சென்றே –2–

செந்தாமரை மகள் மேவிய திருமாலினி தமரு
மிந்தாரணி மணி மேடை யின்‌ னெழிலார் பதி தொறுமே
வந்தாழி கொ ளளியோனடி மருவாவரு வழியிற்‌
கொந்தாரலர்‌ செறி சோலை கொள்‌ கூடற்பதி யுற்றான்‌ –3–

விண்டோயுத யனை நேர் கதிர்‌ விடு மாமணி கனகங்‌
கொண்டாரண மென வெல்லையில்‌ குலவு மெயிற்‌ சிகரி
மண்டேர்‌சன கரமே வுபு மதுவார்கடி பெருகுந்‌
தண்டாமரை மகணாயகன்‌ றனையே துதி புரிவான்‌ –4–

கருமாமுகி லுருவா பொழி கருணைப் பெரு மழையாய்‌
திருமாமகள கணவா வென வேதந் தமிழ்‌ செய்யும்‌
பெருமான் பர வடியாயொளிர்‌ பேராயிர முறு மெம்‌
மொரு மா மணி முதலே யென வுருகும் வயி னவணே–5–

வாதம்புரி சங்கத்தொரு வல்லோனதை வினவா
வேதந்தமிழ்‌ செய்தோனென விருதோதனை யவனா
லோதங்கவி சங்கத்தின மொவ்வாவகை யறியா
தேதிங்கன முரையாடினை யினி நீ விடுகென்றான்‌–6–

அப்பத்தனின்‌ செவிவாய்சுடு மழனேரது படியச்‌
செப்பற்கவ னடல் வெந்துயர்‌ செறிவாரிதி முழுகி
வைப்பிற்றிக ழணி பற்பல வளமாநிதி நிறைவுற்‌
றொப்பற்றொளிர்‌ குருகாபுரி யொல்லைப் பொழுதற்றே –7–

செங்கட்பிடி நடைநுண்டுடி சிவணும்மிடை யுடைய
நங்கைக் கரு மகனாகிய நாவீ றனை யடையா
வெங்கட்கரு முதலீரிரு வெழுதா முறை முழுது
மங்கட்படி யறியத் தமிழ தனிற்றரு மழகா -8-

தெதிபாண்டனுக்‌ கருள்‌ வானவன்‌ சிறு கூறையி லுறைமால்‌
பதி தோறம டியன்மேவுபு பரிவாலடி தொழுதேர்‌
மதுராபுரி யடையாவவண்‌ மாலைத் தமிழ்‌ மறையாற்‌
றுதி செய்யுளி யக மேவிய தூர்த்தன் பிற வாதி –9–

உன்னாலுரை கவி யென்றிறை யுன்னாததை யிழிவு
சொன்னானென வவணிற்றிடு துயர் சேர் மொழி யுரையா
மன்னாவினி யவனெவ்வீடும்‌ வகையே யரு ளிலையே
லென்னாவிகொ ளென மாறனி னெதிரிற் படுத்‌ தனனால்‌ –10-

உண்ணலோ டுறக்க மற்றாங்‌ கொருவன் ப்ரா யோபவேசம்‌
பண்ணின வசை யுளோர்ந்‌து பராங்குச னுவகை பூத்துத்‌
துண்ணெனச்‌ சிச்சனாம மதுரகவி யழைத்த வ்வன்ப
னெண்ணம தனை த்து மோதி யெழுதினன்‌ னிருபமம்மா–11-

கரைந்துள முருகுங்‌ கண்ணன்‌ கழலிணை யெனுமோர்‌ பாவை
வரைந்தொரு முடங்க லாக்கி மதுரை போ யிஃதைச்‌ சங்கத்
தரங்க நீர்ப்‌ பலகை வைக்கிற்‌ றாழுவ ரன்னோ ரென்றிவ்‌
வுரங்கொணெஞ்‌ சவன்பா னீபோ யுணர்த்தென வளித்து ரைத்தான்‌ -12–

செல்லடர்‌ புளிகொண்‌ மாறன்‌ றிருமுக முனி கொண்‌ டந்த
நல்லறி வாள னோக்கி நனி மகழ்ந் தெழுப்பி மாறன்‌
சொல்லிய தனைத்து மோதித்‌ துதித்திட வவனும்‌ போற்றி
வல்லையின்‌ மதுரை சென்றான்‌ மலி கதிர்‌ கடலுட்‌ சென்றான்‌–13–

தோட்டடர்ந் தளிமுரன்‌று துன்னுதார்‌ மகிழ் கொண்‌ மார்பன்‌
பாட்டுறு நிருபங்‌ கொண்ட பாகத னறிய வெய்ய
கோட்டமார்‌ மனத்துச்‌ சங்கக்‌ குழுஉக்களின்‌ கருத்தீ தென்று
காட்டுவா னெழுந்த தன்ன காரிருட்‌ படர்ந்த தன்றே –14–

அன்றிர வவணோ ரில்லத்‌ தந்தணன்‌ றுயின்று நீங்கத்‌
துன்று சங்‌ கத்தோர்‌ நெஞ்சஞ்‌ சூறிருட்‌ பிழம்பிப்‌ பாவா
மென்றினா லறுமென்‌ றே முன்‌ னியம்புவா னெழுந்த தன்ன
குன்றிலாக்‌ கதிரோன்‌ றுய்ய குண புலத்‌ தெழுந்தானன்றே–15–

கொங்கலர்‌ நறவு காலும்‌ குளிர் மலர்‌ வாவி யாய
வங்கடைந் தெமது பெம்மா னாரணந்‌ தமிழாய்ச்‌ செய்தோன்‌
பொங்குபா மகிமை காண்பான்‌ புலவரீர்‌ நீங்கள்‌ வைகுஞ்‌
சங்கமாம்‌ பலகை தன்னிற்‌ சற்றிடங்‌ கொடுப்பீ ரென்றான்‌–16–

அன்னதை வினவா வன்னோ ரந்தணன்‌ சிறுசுருட்கு
மின்னுமப்‌ பலகை யிற்றாம்‌ விலகிச்சற்‌ றிடங் கொடுக்க
மன்னுவ்‌ வேத நாவன்‌ வகுள பூ டணனை நெஞ்ச
முன்னியம்‌ முடங்க றன்னை முடியினின்‌ றிருகை யேந்தி–17–

ஆங்குறு புலவ ராய ரஜோ குணத்‌ தவர்க ணோக்கப்‌
பாங்குட னிருத்தச்‌ சங்கப்‌ பலகையு மூவகை பூத்துத்‌
தாங்கி மீ தரும மும்மைத்‌ தமிழுறு குழூஉக்கண்‌ முற்றும்‌
வீங்குநீ ரதனுள்‌ வல்லை விழும்படி. சுருங்கிற்‌ றன்றே –18–

புடத்தில் வைத்‌ தெடுக்கக்‌ கட்டைப்‌ பொன்னு மாற்‌ றதிக மா போற்‌
றடத்து வீழ்த்‌ தோலை தன்னாற்‌ றம்முள மலமு நீங்க
விடக்கரு தாமுன்‌ புன்மை விளம்புநா வூமை யாதி
யிடக் கரற்‌ றறிவு மீக் கொண்‌ டெய்தினர்‌ கடைமீதன்றே –19–

வந்தனர்‌ வகுள மார்பன்‌ வரைந்திடு நிருபஞ்‌ சென்னி
நந்துத லின்றிச்‌ சூடி நாமெனு மகங்கா ரத்தின்‌
பந்தன முண்டு நாயேம்‌ பரிபவப்‌ பட்டோ மின்றியா
முய்ந்தன மென்று தம்முள்‌ ஞன்னுபு வணங்கிப்‌ பின்னர்‌–20-

மைப்படி மேனி செந்தா மரை விழி மாலே வந்தே
ரிப்படி தன்னின்‌ மாற னெனவவ தரித்த நங்க
ளப்பன தடியிற்‌ றாஞ்செய்‌ ய பாரத க்ஷமை செய்‌ வான் சங்‌
கப்புல வோர் கண்‌ முற்றுங்‌ கருத்துற முன்னி மன்னோ –21-

சிந்துகு ழுலகிற் காரி சிறுவனால்‌ விடுக்க வந்த
வந்தண்‌ னுபய பாத மன்பொடு பராவி யன்னோன்‌
முந்துற நடக்கப்‌ பின்னே முடுகியவ்‌ வூமை யானோர்‌
சந்தனப்‌ பொதும்பர்‌ சூழ்தென்‌ குருகையிற்‌ சார்ந்தா ரன்றே–22-

சிற்றிழை நுசுப்பு நங்கை திரு வயி றுதித்த செல்வன்‌
பொற்றளி வலம தாகப்‌ போந் தவன்‌ முன்னே சென்று
கற்றிலே நீ சொல்‌ வேதக்‌ கவியினிற்‌ பரம பக்தி
யுற்றிலே நாயே மென்றுள்‌ ளுன்ன வூமையு மகன்ற–23-

கண்ணினுண்‌ சிறுத்தாம்‌ போதுங்‌ கவி வலர்‌ பணி பாதத்தை
யுண்ணெகிழ்‌ வுடனே பல்கா னாத்தழும்‌ பெழவே வாழ்த்தி
நண்ணினா ரடிமை பூண்டார்‌ நைச்யாநு சந்தா னத்தைப்‌
பண்ணினா ரவன் கழற்கோர்‌ பாமல ரருச்சித்‌ தாரால்‌ –24–

ஈ யாடுவதோ கருடற்‌ கெதிரே யிரவிக் கெதிர் மின்‌ மினியா டுவதோ
நாயாடுவதோ விறு வெம்‌ புலிமுன்‌ நரி யாடுவதோ நர கே சரிமுன்‌
பேயாடுவதோ வழகூர்‌ வசி முன்‌ பெருமான்‌ வகுளா பரண ருள்‌ கூர்ந்‌
தோவா துரையா யிரமா மறையின்‌ ஒரு சொற் பெறுமோ உலகிற்‌ கவியே–25-

என்றேய்‌ சுடர் கொள்‌ வகுளா பரணன்‌ னிரு தாமரை நே ருறு தா ளிணையிற்‌
பொன்றா தவர் தம்‌ மவரில்‌ லொருவர்க்‌ கொருவர் தெரியாப்‌ புகலின்‌ கவிதா
னொன்றாகிய தீ தவனின்‌ னருளென்‌ றுவவைக்‌ கடலுற்‌ றவருள்‌ ளறிய
முன்றா மிழை தீ மையினைப்‌ பல்கான்‌ முன்னிப்‌ புகலா மன்னுங்‌ கவியோர்‌ –26–

இந் நாள்‌ வரையிவ்‌ வகை சென்‌ றெவரும்‌ மெதிரா நமையின்‌ றெழிலார்‌ வகுள
மென்றா ரணியோ னொருவாய்‌ மொழியால்‌ வென்றா னதனால்‌ விரிநீ
மன்னா கு பராங்கு சனா மெனவே வழுவா தொரு பே ரழியா துரையா
வன்னோ ரிவனின்‌ கழலே பரவா வணிமா மதரைப்‌ பதயே கினரால்‌–27–

சங்கத்‌ தவரிற்‌ பதினெண்‌ மதருந்‌ தாமென்‌ றுறு மித்‌ தனியே தனிவந்
திங்குற்‌ றிடமா மகிழம்‌ புயனின்‌ னேவல்‌ கொடுவம்‌ முனியும்‌ மவரைப்‌
பங்கப்‌ படவென்‌ றவனின்‌ கழலே பரவும்‌ படி. செய்‌ திவணிப்‌ படியே
துங்கத்‌ தவனென்‌ றிடவே வதியாச்‌ சோதித்‌ திருநா டேகுற்‌ றனனே –28-

பரவாத கண்டனப்‌ படலம் முற்றும்‌-

திரு நாத முனிப்‌ படலம்‌

தென் புதுவா புரி மடக் கோ தைப் பிராட்டி செந்தமிழிற்‌ காட்டு வணஞ்‌ சேவெற்‌ போர்க்கு
ளன்பினோட மக்கார வடிசினூறு கடாரஞ் செய்‌ தருளி யெழுந் தவ்வூரேகப்‌
பின்னவளு நல் கோயி லண்ணனென்றோர்‌ பேர் வழங்கக்‌ கொண்‌ டருளெம்‌ பெருமா னார் தம்‌
நன்கமல மாமலர்‌ த்தாள்‌ சென்னி கொண்டு நாதமுனிப்‌ படலமதை நவில்குவாமால்‌–1–

முருகு விண்ட மா மகிழணி நின்மல முதல்வ
னருளி னல்வழி நின்றவம்‌ முனிவர னழிவி
றிரு மடந்தையுள்‌ ளுகந்துறை திரு மரு மார்பன்‌
பெரு விசும்படைந் தநேக நாட்‌ சென்றதன்‌ பின்னர்‌ -2–

அந்த மாமுனி வரன்றன தடிபணிந்‌ தன்னான்‌
சிந்தையே மகிழ்‌ தரப் பணி விடை பல செய்து
வந்த நான்மறைச்‌ சீடனின்‌ மரபுழித்‌ தோன்றும்‌
விந்தை சேர் பராங்‌ குச நம்பி யென்னுமோர்‌ விமலன்‌–3–

பையராமுடி மிசை யுறக்‌ கிடந்த பா ரதனிற்‌
றுய்ய மாவிசை தாங்கிய மது மகிழ்த்‌ தொடை சூழ்‌
செய்ய மார்புடைப்‌ பரன்றனக்‌ கம் முனி செய்த
பொய்யிலா வகை தானு நன்‌ கியற்றினன்‌ போந்தான்‌ –4–

ந்த வாறு பராங்குச நம்பியு மியற்றி
வந்த நாண்மதுரச் செயுண்‌ மாமுனி வரன் போ
மந்த நாண் முத லாக முற்‌றோன்‌றிய மகிழ் கொ
ணந்த மாறனை முதலிய நின்மலர்‌ நவின்ற–5–

இனிய செந்தமிழ்‌ மறை யெலா மிருநில வரைப்பி
னனியு மோதுவித்‌ திடுவர்க ளின்மையி னாலுங்‌
கனிவி னவ்வண மோதுவித்‌ திடினுநி கரிலாப்‌
புனித ராகியிங்‌ குற்றவவ்‌ விமலர்கள்‌ பொருந்தி –6–

மன்னும்‌ விந்தையை யோர்ந்தியா முணர்ந்தடின்‌ மடிவா
மென்னவே மனத் தெண்ணம தெழுந்ததினாலும்‌
உன்னவே பர கதியினை யுகந்தினி துதவு
மன்ன செந்தமிழ்‌ மறை யெலா மழிந்தன வன்றே –7–

இருநிலந்தனி லிவ்வணந்‌ தமிழ்மறை யெல்லா
மருவலின்‌ நியே மலினமா யழி தருஞ்‌ செயலைத்‌
திருமலிந்தணி சிறந்தொளி மிகுந்துபு திகழும்‌
பருமை தங்கு வைகுந்தமா நகரெனும் பதியில்‌–8–

அண்ட கோளம தழிதரு முடிவினு மழிவி றோண்டர் தங்குழா மிருமருங்‌ கினு மிகச்‌ சூழ்ந்தே
வண்டலர்க்கர முகிழ்த்தன ரிறைஞ்சியே வாழ்த்த வெண்டரும்‌ பணா முடியரா வணைய தன்‌ மிசையே —9-

அஞ்சநந் திகழ்‌ தரு முகிற்‌ குலமளி யலம்புங்‌
கஞ்ச நாண் மலர்‌ பூத்தலர்ந் தென வுருக்‌ கலந்த
விஞ்சு வாணிதம்‌ பெருகு பைந்‌ துளவணி விமல
னெஞ்சி னானில வலயமுன்‌ னிகழ்ந்ததை நினைவான்‌ –10-

அறிவி லாதுயி ரடங்கலும்‌ பவக்கட லாழ்ந்து
சிறிது மோரிடம்‌ தங்குறு துறமுறுஞ்‌ செயலை
நெறியி னோர்ந்தது தவிர்ந்து நற்‌ பரகதி நேர்வா
னறிய வாரணந்‌ தனைத் தமிழதனினா னவின்றும்–11-

உணர்கிலாது பின்‌ னும் கொடும்‌ பவந்தனி லுழன்று
புணரு நந்தமை யறிகிலா வகைய பொருவில்‌
குணமு றுந் தமி ழோதூவித்‌ திடுவர்கள்‌ குரைநீ
ரணவு பாரிடத்‌ தின்மையி னென்றுளி யருள்வான்‌–12-

மூல மென்றொரு காலழைத்‌ திடுவதன்‌ முன்னர்‌
நீல மாமுகி லென்ன வக்‌ கரிமுன ணிமலன்‌
றாலம்‌ வாழுயிர்‌ தமைப்பினுந் திருத்து வான்‌ றகைசேர்‌
சீல மாய வித்தகையன செய்குவன்‌ நேர்ந்தே–13–

கான மாமல ராடன திணையடி கருதுஞ்‌
சேனை நாயகன்‌ றனதருள்‌ வழியுறச்‌ செல்லு
மூன மேதுமி லமைச்சராங்‌ கஜாநநர்‌ தம்மை
யான நாதனு நோக்கியின்‌ னுரை செய்வா னன்றே–14–

ஈர நீர்புடை சூழ்தரு முலகுயி ரெல்லாம்‌
பார மாய பழவினை பற்றறுத்‌ துய்வான்‌
சீர தாகுமுன்‌ னிகழ்த்திய மறைத் தமிழ்‌ தெரிப்பா
ராரு மின்மையி னாலவ ணெழுந்தினி தடைந்தே–15–

அரிய செந்தமிழ்‌ மறை யெலா மினிதெடுத்‌ தருளி
வருதி யென்றுரை செய்யலு மாமலர்‌ மடந்தை
பொருது மார்புடைப்‌ புங்கவ னடியிணை போற்றிக்‌
கரியி னாநநமுடை யருங் கழறுவ ரன்றே-16-

உறழ்வி னின்னுரை மறுத்திட வல்லவ ருளர்கொ
லிறைவ வவ்வண முலகிடை யுதித்தலு மெமக்காங்‌
கறிவு தீர்ந்திடு மாதலி னத் தமி ழனைத்து
நெறியி னோர்ந்திடும்‌ வண்ணம தியாதென நிமலன்‌–17–

நினக்கெ னன்னது நந்தமக்‌ கன்று கொ னிகழு
மனத்தி னுற்றவக்‌ கவலை யற்‌ றேகுதி மருவுங்‌
கனத்த பாரிடத்‌ ததற்கு நல்‌ வழியினைச்‌ காட்டா
வுனக்கு நல்லரு ளாங்குமீ குவமென மொழிந்தான்‌–18-

மறைக ளாலுநன்‌ களப்பதற்‌ கரியமா மருமா
னறழைவிளங்கிய மலரடி வாழ்த்தினர்‌ நவையிற்‌
கறைவிளங்கிய பையயராத்‌ தாங்கிய கடல்சூழ்‌
தறையிடத்தினிற்‌ றோன்றுவா னெழுந்தனர்‌ தாமே–19-

குட கிழிந்த கரு முருகு சந்தினொடு கொண்டு வெண்டிரை எறிந்து நீள்‌
தடமு றுந்‌ கரைகட கர வண்டல் படு தண்ணரும் புனல்‌ பரந்து சேர்
புடவி யின் மகிமை பெருகு மொன்‌ றிணையில்‌ பொன்னி நல்வளஞ்‌ சுரந்திடுந்
திடமிகுந்த புய லணவு பைம் பொழில்‌ சிறந் துயர்ந்திடு மரும்பதி–20–

எண்ணிறந்தவள மேவு தண் கழனி யேடலர்ந்தமரை மீதிலே
நண்ணி வெண்பணில மீனு மொண்டரள நாறு நுண்ணிலவு வீசவே
பண்ண மைந்தகளி வண்டினங்கள் படர்‌ பாவு செங்குமுதம்‌ வாய் விளும்
விண்ணி வந்து பல மேடை நின்றொளிரும்‌ வீர நாரண புரமரோ –21-

வச்சிரத்தினி லிழைத்த பற் பல வரைக் குலங்கணிகர்‌ மாடமு
முச்சிவிட்புல முகட்டினிற் படியு மொப்பருஞ்சின கரங்களுங்‌
கச்சறுக்கு நகிலத்‌து மங்கையர்‌ களிப்புடன்பயிலு சாலையும்‌
நச்சி யந்தணர்க ணிச்சலும் மரிய நற்றவம் புரி யிடங்களும்‌ –22-

வண்டினம் பல மருங்கணைந்து முரன்‌ மா மலர்ப் பொழிலு விண்ணு லாங்
கொண்டல் வெண்டிரையி னுள்ளி வந்து புனல்‌ கொள்ளுறுந் தகைய கன்றவாம்‌
விண்டு புண்டரீ க மங்கைமார் முகம்‌ விளங்கு மெண்ணறு தடங்களும்‌
தண்டருந் நறை தயங்கு தண்டுளப நந்தனங்கள்பல கோடியும்‌ –23–

சக்ரவாள கிரி யொத்‌துயர்ந்திலகு சதுர மா மதி லினங்களும்‌
புக்கு மா மலரி னட்டலக்குமி பொருந்தி மட்டில் பல வாவண
மிக்க வீ திகள னந்தமுங்கனக வீறு கொண்ட விரதங்களு
மிக்கணிப்பரு வளத்தின் மிக்குய ரெழின் மிகுத் தவ நகர்க்கணே–24–

நச்சியுற்றினிது வைகுமந்தணர்‌ த நற்பருங்குல மத ற்குளே
வெச்சடுத்திடு பவக் கடற்றனில்‌ வீழுந்து நொந்துற வழிந்திடு
மிச்சகத்‌ தயி ரனைத்து நற் கதி யெழக் கடுக்கலி யுகத்தினின்‌
முச்சகத்திரமு மிருசதத்தொடிரு பத்திரண்டினி லிரண்டுமே –25–

ஒன்றுமிந்தவரு டங்கள்‌ சென்ற பின்‌ முறுவதானசுப கிருது யாண்‌
டன்றி நன்மிதுந மென்னு மாதமுட னணிய பூரணையு மென்றுமே
பொன்றிறன்மையபு தன்‌ றன் வாரமு மிணைந்த தானவ றுடந்தனி லென்றெனும்படி யுகந்துதித்தன ரெம்‌ மிருள் களைந்தருள வென்பரால்‌–26-

௮நகனின்னருளில்‌ வந்‌ துதித்தருள்‌ கஜாந நத்தவரு மிம்பரா
லினிய தன்மையஸ்ரீ ரெங்க நாதமுனி யென்று நாமமது பெற்றனர்‌
முனிவில்‌ சிந்தை யுடை நிபுணராகி மறை முற்‌று நன்கினி துணர்ந்து மே
தினி முதன்மை திரி லோக மெங்குமிசை சென்றுலாவுற வளர்ந்தனர்‌.–27–

இக்கணிப்பினிலை யுற்றடுத் துவள ரெட்டருந் தகைய வப்பரர்‌
முக்குணத்தினு முதற் குணத்துடை முதற் பரத்த வரி பத்தியே
மிக்கெழிற் படரு மத் திருப்பதியில்‌ விட் புலத்தெழு முகிற் குலம்‌
புக்கெனத்தளி யிடத்தினிற் பொலி பொருப்புயர்ந்த புய மன்னனார்‌–28-

போத னைம்முகன் மு தற் படுங் கடவுள்‌ போற்றருந் தகைய பாதமே
மாத னம்மென மனத்‌தி னுட்கொடு வணங்‌கி நன்குற வழுத்தியே
வேத நன்மறை வழாத வவ்விறை விருப்புடனக மகிழ்ந்திட
வேத நைந்த பல வாய தொண்டுகளிழைத்‌து வந்தனரு ளன்பினால்‌.–29–

இன்ன வாறனைய ரெங்க நாதமுனி யென்னு மந்த மறை யாளரு மா
மன்ன னார் தமது தொண்டி னல்வழியில்‌ வந்த நாளிலொரு வைகன்‌
றுன்னு மா நகர் தொ றும் பணிந்து வர மன துளித்தமது தெய்வமா
மன்ன மாயனை வணங்‌கி நின்றெதிரி லறிய வின்ன மொழி யுரை செய்வார் –30-

கிட்டு வார்வினை யறுத்து வாழ்வருள்‌ கிடைப்பிலா மணி நிறத்தனே
வட்டவாரித யுடுத்த மானில வரைப்பினிற் கொடு நடத்தை சேர்‌
துட்டரானவர்‌ துடிப்ப நூறிவெகு சிட்டர் பாலன மியற்றுவா
னிட்டமாக முன்‌ னுதித்‌து வந்தெழின்‌ மிகுத்து யர்ந்த மது ராபுரி–31–

கோவருந்‌ தகைய கோகுலம் பொருவில்‌ கோவருத்தன முடன் விருந்
தாவனம் பிரிதி துவாரகை பதரி தாரு மிக்க திரு வேங்கட
மே வயோத்‌தி யணி நைமிசாரணியம்‌ விந்தை யின்னமுத லான சீர்‌
பாவுறும் வட புலத்தினின்‌ றிசை பரந்த நற் பதி தொறுஞ்செலா –32–

அங்கி லங்குன்வடி வங்கள் கண்டினி தகங் குளிர்ந்‌திட வணங்கியே
யிங்கெழுந்‌து வர வரமுகந்தருள்‌ செ யென்‌ றிறைஞ்சியய னின்றிடச்‌
சங்குடன்றி விரி தண்டு வாள்‌ வரிவில்‌ தங்கு செங்கமல மன்னனார்‌
புங்க வன்னவரை நன்‌கினவ்வகை புரிந்தி வன் கடிது செல்கெனா–33–

முன்னு மர்ச்சக முகேந வின்னண மொழிந்திடக்‌ கடிதெழுந்து போய்‌
மன்னு முத்தர திசைக்கணின்‌ றிசை மலர்ந்திலங்குறு வதானவா
மன்ன திவ்ய பல தேச மெங்கிலு மடைந்திறைஞ்சி விரை வாகியே
பின்னெழுந்‌து தம நாடு செல்லுழி பிறங்கு மன்ன மறையாளரே –34–

ஓடு தெண்டிரை யரும் பொ னொண்மணி யொதுக்கு பொன்னி வளம்‌ மன்னு சோ
ணாடி லங்குறு மரங்கமே முதல நற்றலந்‌ தொறும்‌ வணங்கியே
மாடணிந்தபுனன்‌ மானிலந்தனின்‌ மலிந்த வெவ் வினை யறுத்தருள்‌
கோடில்‌ சிந்தையரும்‌ வந்த ணைந்தனர்‌ குடந்தை யென்றுரை யரும்ப தி –35–

அயனெ னுந் தகைய வேள்வி யந்தணர்க ளாரணத்‌ தொலியு மணி யறா
வியனி டந்தழுவு மாவ ணத்தொலியு மேவரும்‌ பல வளங்கள் சேர்‌
புயலி ணைர்தமணி மாட நன்மறுகு பொங்கு மங்கல விழாவெழு
மயர்வில்‌ சும்லையு மளாவி வெண்டி ரைய வம்பினோடி கலி யார்க்குமால்‌–36–

அருமறைக்குரிய புனிதர்‌ நித்தமு மமைக்கும்‌ வேள்வி யெழு மாவியும்‌
இரு தனப்பொறையி னொசி யிடைச்சிய ரெழிற் றருங் குழலருத்து நீன்‌
முருகடுத்தொளிரு மகரு நற் புகை யுண்‌ முற்று மொன்றி விணகத்‌தெழ
வரு முகிற் குலமி தென வுறக் கருதி மஞ்ஞை நின்‌ றசை தரும் பொழில்‌–37–

அணிபெருகுதிரைக ளொன்றுமா லலவிர்மணி யுகுபொனி தன்னிலுந்
திணிபெரு முயர்திரு மாளிகை செறிதரு மறுகிலு மின் புனல்‌
பணிமதி யணிசடை யோன்நலம்‌ பற்று பரன்‌ றளி மீதிலும்‌
தணிவரு கலியென மைம் முகி றடமுளிறங்‌கி மடுக்குமால்‌–38-

பானல மருவிடு மீர்தன பாரம தொசியு மருங்குலார்‌
கானலர்‌ குழலிய ரின்சொலுங்‌ கடிமலர்‌ நிறை தரு வாவியும்‌
வானக முகிறவழ்‌ சோலையு மா மறை வேதிய ருள்ளமுந்
தூநகை மாடமு மினமுறத்‌ துளி மலர்க்‌ கண்ணனை நாடுமால்‌ –39-

இளையன பெருவள மிடையுமவ்‌ வெழினக ரிடை நவ மாமணி
புநை புரி சையுமெண்‌ விமானமும்‌ பொன்னகர்‌ மிசை யுறு சிகரியும்‌
வனையுமி னொளிமிகு தூபியு மலிந்து சிறந்தடு கோயிலை
யனைய நின்‌ மலருமடைந்தன ரகமெழு மோகையோ டென்பரால்–40-

அன்னவிருந்தளி தன்னிலோ ரஞ்சன வெற்புக்‌ கிடந்ததை
யென்ன மலர்க்கண்‌ வளர்ந்தரு ளெந்தமை யாளுடை நின்மலன்‌
கொன்னவிலுமயி னேர்விழிக்‌ கோமள வல்லி புணர்ந்தவன்‌
முன்னரடைந்தடி தாழ்ந்தனர்‌ மூவுலகும் மிசை கொண்டனர்‌ –41–

அண்டமடங்கலு நின்றரு ளன்ன பரன்றன மாமணி
கொண்டொளி வீசபி டேகமொண்‌ கோடிய செஞ்சிலை யின்னுதல்‌
கண்டவர்‌ சிந்தை கவர்ந்திடும்‌ கருணை மிகப் பொழி யுந்தகை
புண்டரிகம் புரை கண் குளிர்‌ பூரண சந்திர வானனம்‌ –42–

குடந்தை கிடந்தருள்‌ கொள்கை யென்‌ கோல வெனும்‌ மழிசைப் பிரா
னிடந்தனி லின்னுரை யாடவே யெழுந்த வெழிற் கனி வாய் வரைத்‌
தடந்தனி யம்புய மைம்படை தாங்கிய செங்கர மா மலர்‌
மடந்தை வதிந்தருண்‌ மார் பொளிர்‌ மாடுடை மேவிய சீரரை –43–

புண்டரி கன்வதி நாபியே போந்தடை வார் பிற விப் பிணி
கண்டி மருந்தென வாகுமீர்ங்‌ கமல மலர்ப்பத மின்னவை
மண்டி மனத்தி லெழக்களி கண்டு கணுற்று வணங்கியே
யண்டரு மா மறை முற்றையு மறிந்தரு ளன்னவர்‌ நின்றனர்‌ –44-

நம்பர மாரிய ராயவந் நவையில்‌ பெருங் குண ரிவ்வண
மம்பர மன்றனை யேத்தியே வங்கய னின்‌ றிடும்‌ வேலையோர்‌
வம்பறு வந்தி இனம் வரு மாறுபோலன்று மடைந்தன
ளெம் பெரு மானிரு தாமரை யென்னு மடித்துணை போற்றியே–45–

ஏவன கண்டிரு நண்பனவ்‌ வெம்பெரு மான்றன மீதிலே
மாவமு தத்து மினித்ததாய்‌ மா மகிழ்‌ மாறனுரைத்தவாம்‌
மேவரு நற்றகை யாயிர மென்றமிழ்‌ மாமறை தன்னுளா
ராவமு தென்னு மரும் பதி கந்தனை யார நவின்றரோ –46–

முன்னுற நின்றிட வன்னவர்‌ முன்னு முணர்ந்தவை தம்முளே
மன்னும ரும்பொரு டன்னையே வழாம லுணர்ந்தன ராசியே
பன்னிவை யாயிர முள்ளிவை பத்தெனு மஞ்சட கோபனே
சொன்ன தெனுமிவை தம்முளே தோன்றலினன் கறி வேனெனா–47–

அன்னவ டன்னை யடுத்திவை யாயிர முட்குறை வாகலா
லின்னவை சொற்றனர்‌ யார் கொலோ விப் பிர பந்த மனைத்துமே
நின்னிட முண்டு கொ லன்றி நீ நெறியி னுணர்ந்தனை யோவயன்‌
மன்னிய புத்தக மேலுமுண்‌ டோவென வின்சொல்‌ வழங்கினார்–48-

சொற்ற சொலைச் செவி யோர்ந்தனார்‌ துணை யடி யைத் தொழு துரை
ணற்றவ தென்குரு கூரெனு நகரத னுட் சட கோபனென்‌ செய்வா
றற்றை யுதித்து மறைப் பொரு ளனைத்து மருந் தமிழான் முனா
ளுற்று விரித்தன ரென்று முன்‌ னோருரை செய்குவ ராதலால்‌ –49–

அத்தமி ழாயிர முள்ளிவை யன்‌ றடி யேனறி யேனயற்‌
புத்தக மும்மிலை முற்றுணர்‌ புனிதரு மிங்கிலை யென்றனள்‌
அத்தன்‌ மறைத்தளி வாழுமா ராவமுதன்‌ பதமாமலர்‌
சித்தமுகந்து வழுத்துறாச்‌ சிறியர்‌ முகத்து விழித்திடாள்‌ –50-

அன்ன வின்சொ லறிந்தன ராகியே
யின்ன செந்தமிழ்‌ மாமறை யாவுமே
மன்னி வைகும்‌ வளநகர்‌ யாதென
வுன்னி யுன்னி யுருகினர்‌ நின்றோ–51-

தேறி யுள்ளமிச்‌ செந்தமிழ்‌ தம்மைமுற்‌
கூறு மச்சட கோப னுதித்தருண்‌
மாறி லாவள வண்குரு கூரெனும்‌
வீறு கொண்டு விளங்கு பதிக்கணே –52–

அன்றி யெங்கு மிருப்பரி தாகுமா
லின்று சென்றறி வேனென வேமன
மொன்றி வேக முடனெழுர்‌ தோகையிற்‌
றென்றி சாமுகஞ்‌ சென்றனர்‌ நோக்கியே–53-

பாட்டு வண்டு படும்பல பூம்பொழிற்
கூட்ட மன்னக்‌ குருகை யடைந்தனர்‌
வாட்ட மின்மகிழ்‌ மாற னருள்வடப்‌
பூட்டி. முக்கப்‌ பொருவில்‌ குணத்தரே–54-

மெலிந்து சென்றருண்‌ மேதகு சிந்தையோ
ரலிந்து சேரு மகன்மணி யாலய
மலிந்து செங்கம லங்கள்‌ வருமுகிற்‌
பொலிந்து நின்ற பிரானடி போற்றியே–55-

வேலை சூழ்தரு மேதிநி மீமிசை
சால வேயரு டந்த கடிமழ்‌
மாலை கூடிய மாறனை யுந் தொழாச்‌
சீல மோடுட்‌ செழித்துமு னின்றரோ–56-

தூநகும்மணி துன்றபி டேகமும்‌
வான வாவு மதியைப்‌ பழீசெயு
மோன மாய முகமும்‌ கருணை சேர்‌
தேன வாவுந் திருமலர்க்‌ கண்களும்‌-57-

வாம விற்புரு வங்களு மாசிலாத்‌ து மறைத்தமிழ்‌ சொற்ற செழுந்துவர்க்‌
காம ரொண்கடி கைக்கிணை வாயுமுள்‌ ளாம ணித் திரு வார முறுவலும்‌–58-

துய்ய மாமகழ்‌ துன்றிய மார்பமுஞ்‌
செய்ய சின்முத்‌ திரைக்கர முந்தொழு
மெய்ய ருக்குயர்‌ வீட்புல மீதலால்‌
வய்ய கம்புகழ்‌ மாமலர்ப்‌ பாதமும்‌–59-

விண்ட லத்தெழு வெஞ்சுடர்‌ வானவன்‌
மண்ட லத்திடை வந்தன னென்னவே
யொண்டு லங்கு மொளித்திரு மேனியுங்‌
கண்டு கண்டு களிக்கட லாழ்ந்தனர்‌–60-

யோக நன்னிலை யோரவர்‌ மாறனை த்‌
தாக மோடித்‌ தகையின்‌ வழுத்தியே
மேக மீச்செல்‌ விமானந்‌ தனைவல
மாக வந்து மகிழ்ந்த னராகியே–61-

பந்த மாய பழைய வினையறுக்‌
தெந்த மக்கரு ளின் வகு ளப்பிராற்‌
கந்த மற்ற வணி பெருந் தொண்டுகள்‌
புந்தி யோடு புரிந்தனன்‌ வந்திடும்‌–62-

அப்ப ராங்குச நம்பி யடுத்தனா
னைப்ப ராவி யினைய நவில்வரா
லிப்ப ராவு மண்ணேழிலு நின்ற சீர்த்‌
துப்ப ராயவத்‌ தூ நெறி யாளரே–63-

வாச மன்மகிழ்‌ மாறன்‌ முதலியோர்‌
பேசு செந்தமிழ்‌ யாவுமிப்‌ பேர் நக
ராசி லோங்குவ துண்டுகொ லன்‌ றுஸ்ரீ
கோச முண்டுகொல்‌ கூறுதி ரென்றனர்‌–64-

சொற்ற சொற்ச டுளைச்செவி யேறு முன்‌
மற்ற னானும்‌ வழங்குவன்‌ சிற்பக
லுற்ற தாண்டுபி னோய்ந்து மலினமா
யிற்றை நாளிவ ணே து மிலையெனா–65–

பின்னு மோதுவன்‌ பெய்மது மாமதிழ்‌
துன்னும்‌ மார்புடைத்‌ தோன்ற லடிபணிந்
தன்ன வன்ற னருளிற்‌ பர கதி
மன்னி வைகும்‌ மதுர கவியெனும்‌–66-

எங்க ளாரிய னிங்கு விபவமாய்த்‌
தங்கு நாளிற்‌ றரணி யெலாமிசை
பொங்கு மாறப்‌ புனிதன்‌ விடயமாய்ப்‌
பங்க மின்றிப்‌ பரிவி னவின்றவாம்‌–67-

கண்ணி நுண் சிறுத்‌ தாம்பெனுங்‌ கானறை
யுண்ண யப்புறு மோர்பதி கம்மனான்‌
விண்ணி னிற்செலும்‌ வேலையிற்‌ சீடராய்‌
நண்ணினர்க்கு நவின்தன னன்பினால்‌–68-

அன்ன சீடர்‌ மரபின னாகலா
லென்னி டத்தது வன்றிமற்‌ நின்றெனாப்‌
பின்னுங்‌ கேட்டி யென்றாங்குப்‌ பிதற்றுவா
னின்ன வந்தமி ழின்குண மியாவுமே–69-

இப்பதிகத்‌ து று மகிமை யெனையோ வென்னி லின்றதையு முரைத ருவனிசைந்துகேட்டீ
யொப்பற விட்‌ புலமுகடுங்‌ கிழிய வப்பா லோங்கு புளிக்‌ காவணத்து ளூறையுஞ்‌ சீதத்‌
துப்புறுபாட்‌ டளிமுரலத்‌ துளிக்குந் தண்டேன்‌ றூங்கு மகிழ்த்‌ தொடையகலஞ்‌ சூடுமெம்மா
னப்பறுவா ட்கமலமுகத்‌ தெதீரே நந்தண்‌ ணரிய குசத்‌ திழைதவிசட்‌டதன் மேல்‌ வைக–70-

புல்லியவைம்‌ பொறி வழியிற்‌ போக்கா தேக புந்தியுடன்‌ புண்ணியராய்ப்‌ பொருந்தி யன்ன
சில்லியறற்‌ குழலுடைய நங்கை மாது திரு வயிறு வாய்த்தோனைச் சிந்தை செய்யா
யெல்லியினும்‌ பகலினுமோ ரணுவு நீங்கா திருந்தனரா யோகியர்கட்‌ கிணையாய்‌ மன்னிச்‌
சொல்லருபே ரானந்தக்‌ கடலுட்‌ டாழ்ந்து சோர்விலரும்‌ தகைமை யவப்‌ பதிகந்‌ தன்னை–71-

பன்னரிய நற்றேவ கானத்‌ தோடும்‌ பன்னீராயிர முருவே பகர்வராகினாங் கன்‌னோர் தம்‌
லன்ன செயற்‌ கதி யோகை கொண்டானாகி யணி கிளரச்‌ சடகோப
முன்னரெழுந்த தருள் புரிவா னெனவே முன்னோர்‌ மொழிந்தனரா லிங்‌கிது தான்‌ முறையோ வென்ன
மன்னு பராங்‌ குச நம்பி வழங்கினானான்‌ மாமறையின்‌ பொருளுணரம்‌ மதி வல்‌ லோர்க்கே–72-

சொற்றமொழி யிரு செவியு ளேறா முன்னர்த்‌ தூய மனத்‌ ததியோ கை தூங்கத்‌ தூங்கப்‌
பற்றறு பராங்குசனைப் பற்றற்‌ கன்ன பதிகமே பணி புருட கார மென்னாப்
புற்றளரு நெஞ்சுடைய புனித ரன்னோன்‌ பூங்கமலத்‌ தாளிணையைப்‌ போற்றா நின்றே
மிற்றை யுகந்‌ தன்னதை நுந்‌ தாசனேற்கின்‌ றீந் தருள்வீ ரெனவின–73-

மிக வணக்கத்‌ தடி வணங்கி நிற்குமன்ன விமலர்‌ தமை யன்னோனும்‌ வியந்து நோக்கி
நிகரறு மப்‌ பதிகமதற்‌ நின்மலர்க்கு நிகழ்த்துவனென்‌ றுபதேச நெறியா னாங்குப்‌
புகரறு தன்‌ னாரியனை நெஞ்சுட்‌ கொண்டு போதனை செய்‌ தருளின னாற்‌ புலம்போ மார்க்கத்‌
தகமதனைச்‌ செலுத்தலிலா வளவில்‌ யோக வருநிலை தேர்ந்தினி துணர்ந்த வன்னோர்க்‌ கன்றே–74-

துன்னு றுந்தகை யன்ன நற்‌ பாவைத் தூய னாமப்‌ பராங்குச நம்பி
தன்னி டந்தனி லின்னன மாகத்‌ தகையி னோர்ந்‌து தெளிந் தன ராதி
யன்ன வன்றன தின்னரு டன்னா லந்த ரங்க முகந்தனர்‌ சென்றார்‌
மன்னு மாமல ரன்ன மணந்த மன்ன னாரடி நன்குற வுன்னி–75-

தேவ கானங்‌ கடிதினிற்‌ சென்று தேர்ந்து ணர்ந்திவ ணார்ந்தன ரகிச்‌
சேவி யார்மன மேவரி தாகுஞ்‌ செய்ய மாமகி ழையனின்‌ முன்ன
ரோவில்‌ சிந்தையத்‌ தூயனுகந்தன்‌ றுரை செய்‌ வண்ணம்‌ புரை செகு மன்ன
பாவி னங்களை யாவருங்‌ கேட்பப்‌ பாட லுற்றனர்‌ பீடுடன்‌ மன்னோ–76–

மாட லர்ந்த பணாடவி தாங்கும்‌ வாரி சூழ்தரு பாரிட மெங்கும்‌
வீட லர்விசை நாடிய நன்னா வீற னென்ற வம்‌ மாறனின்‌ முன்னர்ப்‌
பீடி, லர்மனக்‌ கோடறுறந்த பேரருட்டழை சீருறு மன்னோர்‌
பாடு மின்னிசை யீடிலமுதம்‌ பரிந்து ஈன்கு சொரிந்தன ரன்றே–77-

வான்பயி லமரர்‌ யாரு மறுவிலா ரிசைக்குந் துய்ய
தேன் பயி லினிய கானஞ்‌ செவியிடை யடையா முன்ன
ரூன்பயில்‌ குலிசப்‌ புத்தே ளோங்கவை யிடத்தி யாழ்‌ வல்லோன்‌
றான் படர்ந்‌ தனனோ வென்னச்‌ சாற்றினர்‌ விரையச்‌ செல்வார்‌ –78–

வாரிசூ ழுலக முய்ய வந்தரு ணிமலர்‌ செய்யுஞ்‌
சீரிய கான மோர்ந்து சிறிது நீங்‌ கரிய வாதி
யேரி மிரசுண மெல்லா மிருஞ்சிறைப்‌ பந்தர்‌ வீசிக்‌
காரிரு விசும்பி னூடே கவிந்தன சுழலு மாதோ–79-

முல்லைய நிலத்தின்‌ மாயோன்‌ முற்குழற்‌ கானஞ்‌ செய்யு
மெல்லையன்‌ னேனைச்‌ சூழ்ந்த வியல்பென நிரைக ளெல்லா
நல்லிசை செலியி னோரா நாற்றிசை மருங்குந் தீட்டுஞ்‌
சொல்லிலோ வியமே யென்னத்‌ துன்னின மலியுமாதோ –80–

மைப்புய லூர்தி செய்ய மலர் புரை விழிகளே போற்‌
செப்பறு முடல மெல்லாஞ்‌ செலியிலே னென்பான் சேடன்‌
ஒப்பிலாச்‌ செலிய நேக முற்றமை பலித்த தென்னாத்‌
துப்புறுங்‌ களியி னழ்வான்‌ றூய வவ்‌ விசை கேட்‌ டம்மா -81–

மானினங் கரடி வேழம்‌ வரிப்புலி யரிமா னின்ன
வான்பல விலங்‌ யாவு மறிவிழந் திரையுந்‌ தேடா
தூனமி லெழுவை மான வுற்ற வவ்‌ விடத்தே நிற்கு
மீனரை யணுகா வன்னோ ரிசையமு தருந்தி மாதோ –82-

தண்ணளி சுரக்கு மன்ன தகையினா ரிசைக்குங்‌ கானம்‌
விண்ணக முழுது மேவி விரவி நிற்‌றலினாற்‌ றுய்ய
பண்ணமை துளவத்‌ தெம்மான்‌ பண்டிட மெங்குந் தாய
வண்ணமுற்‌ றொளிருஞ்‌ செய்ய மலர்ப்பத மொக்கு மம்மா –83–

காரணத்‌ துதித்த வன்னோர்‌ கழறிசை யொன்றே யெல்லாப்‌
பாரண வுயிர்க டம்மைத்‌ தன் வசப்‌ படுத்த லாலே
சீரணம்‌ கயனும்‌ வீயச்‌ செறிதரு முடிவிற்‌ றன்பா
னாரண னனைத்துங்‌ கொள்ளு நவை யிலாத்‌ தகைமை யொக்கும்–84-

அவ் விம லன் செய்‌ கான மணிந்தன ராகி மண்ணோ
ரெவ் விடந் தனிலீ தென்னா விரங்கினர்‌ செவிசெய்‌ நோன்மை
யொவ்வவிவ்‌ விசை வலானை யுற்று நோக்‌ குறவே கண்கள்‌
செவ்விதிற்‌ புரிய கில்லாச்‌ செய்கையி னயர்வ ரன்றே–85-

பாதவஞ்‌ சலியா வாங்குப்‌ பறவைகள்‌ சிறிதுங்‌ கூவா
வாதவ னிவனே குங்கா லன்றென விரையச்‌ செல்லான்‌
போதவந் தணர்க ணாவும்‌ புரிகில வேத வோதை
தீதவம்‌ படுத்‌துங்‌ கானச்‌ சிறை வலை யகட்ட வம்மா–86-

மாரத மொழுக வன்னோர்‌ வழங்கிசை செவியி னாரா
நாரதன்‌ முதலா யாழின்‌ நல் வளந்‌ தெரியும்‌ வல்லோர்‌
போர வுள்‌ ளுடைந்து நாணம்‌ பூண்டி னி திருப்பரென்றா
லாரதன்‌ மகிமை தேர்ந்திங்‌ கறைய வல்‌ லவர்க ளம்மா—-87-

இவ்வகைத்‌ தாய கானத்‌ தெண்ணருந் தகமை சேரத்‌
திவ்லிய மதரப்‌ பாவைத்‌ தீஞ்சுவை யொழுக வன்னோ
ரொவ்வ நாற்‌ பத்தைந் தென்றங்‌ கோதுநா ளளவாய்ச்‌ சொன்ன
வவ்வண மாகப்‌ பன்னீ ராயிர முருச் செபித்தார்‌–88–

இணையிலா ரிசைத்த தேவ வின்னிசைக்‌ குகந்தா னாகிக்‌
கணையென மிளிர்ந்து நீண்ட கண்ணுடை நங்கை பால
னணை வரு மதிர்ச ன யகல்விசும்‌ பகட்டிற்‌ றோன்றுங்‌
குணமுறுந்‌ தொனியி னின்று குளிர்ந்தன னுரை சொய்‌ வானால்‌–89–

என்னகொல்‌ வெகுவாய்‌ நீரில்‌ கெந்தமைக்‌ குறித்தி யாரும்‌
பன்னுதற்‌ கருமரேகம்‌ பகலிமைப்‌ பொழுது நீங்காத்‌
துன்னியே யருமை யான தொழிலினைப்‌ புரிந்தீ ரென்ன
வன்னவர் செவியுட்‌ கேட்ப வறைந்தன னினிதி னம்மா—90-

அவ்வுரை செவியிற்‌ கேட்டவ்‌ வநகருங்‌ களிதுலங்கிச்‌
செவ்வியின்‌ வணங்கி நாயேன்‌ செந்தமிழ்‌ மறைகணான்கு
மெவ்வமின்‌ றுணர வென்‌ றிங்‌ கியைந்தன னடிய னேன் செய்‌
வெவ்வினை கழற வோத வேண்டு நாவீ ற வென்ன–91–

மாமகிழ்‌ மாறனுள்ள மகிழ்ந்துரை செய்வ னன்பா
நாமுனக்‌ கெதிரி னின்று நவிலுத லறமன்‌ றர்ச்சை
தூ மலர்‌ வாய் திறந்து சொல்லுவந் திரையி னப்பால்‌
நீ மனங்‌ களிப்பக்‌ கேட்டு வரைந்திடு நிமல வென்றான்–92–

என்ன லு மாடிப்‌ பாடி யிரு நிதி கிடைத்த தென்ன
மன்னு மா நந்த மென்னும்‌ வாரிதி படிந்து மாறன்‌
சந்நிதி யருகிற்‌ சென்று சரண் பணிந் தருடி யென்னக்‌
கன்னலு மமிழ்ந்து மேய்ப்பக்‌ கழறினன்‌ மறை நான்‌ கன்றே—93-

தூயமா தவத்து வைகும்‌ பதின்மர் சொற் றமிழு மாநா
லாயிர முரைத்துத்‌ தேவ கானமிங் கமுதி னேய்ப்ப
நீயிவ ணிசைத்த தாலே நிற்கு நாதமுனி யென்றே
ரேயு நா மமுமளித்தங்‌ கின்புற விருந்த பின்னர்‌–94-

நாதமா முனியுஞ்‌ சொன்ன நான் மறைப்‌ பொருளு மோர்ந்து
போதமுற்‌ றமலன்‌ செய்ய பொன்னடி பணிந்து நாயேன்‌
மாதவ மிழைத்த தாலிம்‌ மாறனுள்‌ ளுகந்து நாவா
லோதின னம்போற்‌ பாரி லொருவரில்‌ லெனவுங் கொண்டான்‌–95–

கருத்தி னிற்கடிய வன்பு கொண்டிலகு கண்ணகத்‌ துயிர்கள்‌ யாவையுந்
திருத்தி நம் ஸமய நிலை நிறுத்‌து பு திகைப் புறும் பல மதம் செகுத்‌
தருத்தி யொன்றபய மறை நிறுத்தி யு மநேக வைகலி வண்‌ வைகுவா
ருரைத்த விப் பெருந் தகை தனக்குரிய யோகி யாகுமிவ ரென்றனன்‌–96–

மறுவளரு மறுகால் வண்‌ டினங்கள்‌ பாட மடை திறந்தின்‌ மது வொழு கும்‌ வகுள மார்பத்‌
திருவளரு மெங்கோனிவ்‌ வண்ண மாகத்‌ திரிதண்ட மேந்துமெதி சேகரன் றன்‌
னருவள மெல்‌ லா மொழியா தன்னோர்க் கோதி யதிரிசனா மாறன் மவு னமதாங்‌ காலை
பொருவரு நன்‌ னிலை பிறழா திலகு மன்ன புனிதரங்க நாதமுனிப்‌ புகழ்சேர்‌ தூயர்‌–97–

தாயிழந்த சேய் போலு மெழிலி நீங்குஞ்‌ சாயலுறு மயில் போலுற்‌ தயங்கி வாடிச்‌
சேயிதழ் நன்‌ மரை மலர்க்கண்‌ பனிப்பத்‌ துய்ய திரை யுடுமா னில வலையஞ்‌ செழிப்புற்‌ றோங்க
வேயிருந்தோ ணங்கை திரு வயிற்று ணின்றே விண் சுடரோ னென வெழுந்து விளங்குஞ்‌ ஜோதி
மாயமறு மெய்யறிவின்‌ றளித்த கோவே மதியிலியேன்‌ மனம் புகுந்து வளருந் தேவே–98-

கருணை பொழி விழி முதலே நடு வீறில்லாய்‌ கலி வைரி புன் சமயக்‌ கலகர்‌ தீய
வருமொளியே வழுதி குல வாழ்வே துய்ய வண்டுளவப்‌ புயலாதி வழங்கு மஞ்சத்‌
திருவளருக்‌ துவசத்தா யரிய நான்கு செழு மறையைச்‌ செந்தமிழ்‌ செய்‌த தேவே
யுருகுமன வன்பர்களுக்‌ கன்றி யெட்டா வுத்தமமே யென்று பல வுரையா வேத்தி–99-

அடங்கரு மெம்ஞ்‌ ஞான முறு மனைய கோவா மமலனுக்கே பற்பல வுத்‌ தவங்கள்‌ செய்வான்‌
றொடங்கி யுயர்‌ குறுங்குடி வாழ்‌ நம்பி வந்தான்‌ தொன்னிலங்க ளுய்ய வந்த தோன்றல்‌ வந்தான்‌
மடந்தையர் தந்‌ திலக நங்கை மைந்தன்‌ வந்தான்‌ வழுதி குலத்‌ தொரு முதல்வன்‌ வந்தான் வந்தான்‌
ஓடுங்கலறுஞ்‌ சடவைரி வந்தா னோங்கு மாறனெனும்‌ திருப்பெயர்‌ கொளொருவன்‌ வந்தான்‌—100-

அனை முலையை யுண்ணாது கடந்தா னவ் விண்ணவிர் புளிக்கா வணத்தி லினி தமர்ந்தான் வந்தான்‌
வனையிசை மதுரகவிதம்‌ பெருமான்‌ வந்தான்‌ வண்மை கொள்‌ பராங்குசனே வந்தான்‌ வந்தான்‌
புனையுமது மலி வகுளா பரணன்‌ வந்தான்‌ பொரு விலருஞ்‌ சடகோபன்‌ போந்தான்‌ போந்தான்‌
நினை வரு மெய்ஞ்‌ ஞாந நநம்‌ மாழ்வார்‌ வந்தார்‌ நீசமுறும்‌ பரமதம்‌ வென்‌ னிமலன்‌ வந்தான்‌–101–

குயினினனால்‌ பொழிற் குருகூர்‌ நம்பி வந்தான்‌ கோதறு நா வீறனெ னுங்‌ கோமான்‌ வந்தான்‌
செயிர் மறுகுங்‌ கலி வைரி வந்தான்‌ வந்தான்‌ செழும் வேதற்‌ தமிழ்‌ செய்த செல்வன்‌ வந்தான்‌
எயிலெழு கொண்‌ டொளிரரங்கத்‌ தீசன்‌ கொங்க மீர்ங்கமலத்‌ தடி யாரு மிறைவன்‌ வந்தான்‌
மயர்வறு நம்‌ பொய்கை முத லாழ்வார்‌ தம்மை மகிழ்ந்த வய வங்‌ கொண்ட மன்னன்‌ வந்தான்‌ –102–

வண்டலம்பும்‌ பொழில் வழுதி நாடன்‌ வந்தான்‌ மறையவர் தம்‌ மனத்‌திருந்து வளர்வான்‌ வந்தான்‌
குண்டுபடு பேரகழி வளருங்‌ கோமான்‌ குளிர் மதமோங்‌ குறவந்த குமரன்‌ வந்தான்‌
விண்ட புனற்‌ றண் பொருநைத்‌ துறைவன்‌ வந்தான்‌ வேட்டவர் தம்‌ வினை யறுத்தாள்‌ விமலன்‌ வந்தான்‌
பண்டு நன்னாத முனியென்ப ரர்க் குகந்து பண்டைய நாலாயிரமும்‌ பகர்ந்தான்‌ வந்தான்‌–103–

என்றுபல சின்னங்க ளியம்பி யார்ப்ப வெழிலியென மங்கல பல்‌ லியமு மேங்க
பொன்ற யுவா னவருகந்து மலர் மந்‌ தாரம்‌ பொழிதர மண்‌ ணோர் குழுமிப்‌ புகழ்ந்து போற்ற
மன்றறரு மணி மாட மோங்கித்‌ தோன்று மணிநகர முழுதுமரு வளங் கொண் டோங்க நடாத்தி வந்தார்‌–
நன்று மன திடை மிகவா னந்தங்‌ கொண்டு நாடோறும்‌ பற்பல் விழா நடாத்தி வந்தார்–104-

இங்குள மகிழ்ந்திவணம்‌ ரங்க முனி யெந்த மிறைவனெனு மந்தண்‌ மகிழ்‌ நற வொழுகு மார்பற்‌
கங்கமல மொன்று முக நங்கை யணி பாலற்‌ களப்பறு ப லுச்சவ நடத்தி யருள்‌ மாறன்‌
பொக்கணி மி குந்தினி திலங்குறு மடிக்கே பொற் புறுப றொண்டு களை யற்புடனி யற்றாத்‌
தங்கி யவ ளந்திகழு மிங்குதிரமாகத்‌ தரித்திடுவ மென்றுத மனத்தி லெணி யுற்றார்‌–105-

ஆர்வமொடு மிவ்வணம னோர் வருகு நாளி லட்ட திசை பொங்கிசை தம்‌ மிட்டதெய்வ மாகுங்‌
கார்வளரு மோதிமினை நேர்வுறு மருங்குற்‌ கற்புமிகு பொற்றிருவி னற்புடைய மன்ன
னார்வளரு மன்பினொடு மோர் பகல்‌ கனாவி னத்‌து திகிரிப் படை கொள்‌ சுத்த வுரு வோடு
நீர்வளரு மப்பரர்மு னேர் பெறவ டைந்தே நின்‌ நினைய பற்பல சொல்‌ சொற்றிடுவரம்மா–106-

திரைக் கட லரைக்குடு தரைக்குளிசை கொண்டோய்‌ சிறு பர வாதி யர்கள்‌ வீறினை யடக்கும்‌
விரைத்தனி மிழ்த் தொடையு ரத்தணியு நந்நா வீறனென நாம முறு மாறனை யடுத்தே
மரைத்‌ துணையை நேரடி சிரத்திடை புனைந்தே வணங்‌ மிக வேண்‌டிட விணங்கியவன்‌ வந்தங்‌
குரைத்‌திட மறைத் தமிழ்‌ சிரத்தையொடு கேட்டு ளுகந்திட விருப்‌ புள தவந்தனை யொழுக்கும்‌-107–

நந்தம்வள நன்னக ரடைந்திடுதி யென்றே நவின்றிடவு மொப்பரு கவின்றழையுமாற
னந்தமிழ்‌ மறைப்பொரு ளுகந்தினி துரைத்தா னடிக்கினிய வன்பவர்‌ திடுக்கென விழித்தே
சிந்தை தனி லுன்னியுட னிந்தநகர்‌ செல்வான்‌ சிதைவறு கதிர்க்‌ கடவு ளுதயமு னெழுந்தே
நிந்தையறு தண் பொருநல்‌ வந்து புன லாடி நித்திய கடன்களை முடித்துட னெழுந்தே.–108–

செந்தழ னிறத்த பல சந்த மணி மேவித்‌ தினகரனை யொத்திலகு சினகர மடைந்தே
நந்திறைவ னுக்கருள்‌ புரிந்துதவு மாதி நாதனை யிறைஞ்சி வலமேத மிலடைந்தே
யிந்து தவழ்திந்திரிணி மேவலு முகந்தே விருந்தருளு நங்கையி னருந்தவ மெழுந்த வந்தமறு மெந்தைமு னடைந்தனையர்‌ தாமு மப்பரம னொப்பறு மலர்ப் பத மிறைஞ்சா–109–

மாவல நிறத்திலணி கோவலாம்‌ மாதி மாலினை வழுத்து றவே கோலிமுன மொன்றுந்‌
தேவென வுரைத்த பதி கந்தனை வினாவிச்‌ செப்பமோ டளித்தபரி சர்ச்சையிலு மாறன்‌
மேவிய நன்‌ னித்திய வி பூதியொடு லீலா விபூதியிலு முள்ள பல சேதநர்‌ களுய்யக்‌
கோவென விருந்து நனி போதக மெனுஞ் செங்‌ கோலினை நடாத்தி வருகின்றன னுகந்தே–110–

வானவர்கள்‌ சித்தர் பல தானவர்க ணித்தம்‌ வந்தடி பணிந்‌ து மலர்‌ சிந்தியே வழுத்த
நானில மதற்குளுள மானிடர்களெல்லா நாடொறு மெழுந்தபு பலாண்டிசை பயின்றே
தேனுகு மலர்ப் பத முறத் தொழுது நிற்கத்‌ தேவ ரடி யார் நடன கீதமு முழங்கக்‌
கோனென விருந்து தமி ழாரணம்‌ விளங்கக்‌ கொண்டிரு விபூதி புரிகின்றன னுகந்தே–111–

திரு நாதமுனிப் படலம் முற்றும்‌

ஸ்ரீ சடகோப திவ்ய சரித்திரம்‌ முற்றும்‌-


——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீசடகோப திவ்ய சரித்திரம்-பகுதி-2-

June 2, 2026

திருப் புளிப்‌ படலம்‌

பருமா னிலத்தி லடர்நீச முற்ற பரவாதி யர்க்கியமனாய்க்‌
திருமாதிருக்கு மணிமார்பருக்க திக நேசருக்கினியவாங்‌
குருவாயுதித்த வெிராசன்‌ மெச்சு குண சீல னித்தனடியா
மிரு தாமரைச் செம்‌ மலரே மனத்து ளெளியே மிருத்தி நினைவாம்–1-

மதியோடருக்க ரிருபாடு முற்று மருமாமரைச்‌ செம்மலரே
பொதிநீல்வரைக்கு நிகராகி நின்ற பொருவான தற்ற பெருமா
னெதிரே திருக்கு முதவாய் முகிழ்த்த வெழில் கால்‌ கிடத்தி யிறையும்‌
நிதியாலிழைத்த கடமாமுலைப்‌ பெணிதியோடு மெச்சு பொழுதில்–2-

இமையோர் வணங்க முனிவோரிறைஞ்ச விறையோரிதென்கொல் விபரீ
தமதாயதென்று வகையோடிரங்க வடியார்கள்‌ சங்க மறை சொல்‌
விமலாதிமன்‌ற னருளானதின்‌று வெளியானதென்று மகிழக்‌
கமமாய துன்ப நிறை வாரி நின்று கரை காண வன்பர் கணமே–3-

மிடியே மிகுப்ப வதினோ மவர்க்கு மிளிர்மா னிதிக்‌ குவையுமே
னெடுநாடிருக்‌ லெயர்‌ வோடிருக்கு நிலமானிடர்க்‌ கிருகணு
மிடைசேர்‌ தரக்கொ ளவரோகை தற்கு மினிதே யிரட்டி யயில்வே
லுடையானொடுற்ற விள வாணகைக்கு மொழியா மகிழ்ச்சி எழவே–4-

தரைமீது சற்று மசையாது வைத்த தலமே கிடக்கு முளைதான்‌
புரை தரு மத்த வளையாதி மைத்த புகழ் சாயல்‌ கண்டு மகிழ்வான்‌
மரைநே ரரிக்க ணுறவே விழித்து மணி வாய்‌ திறந்து பொதுவர்‌
நிரையே களிக்க வவர்பாலுதித்து நெடு நா டவழ்ந்த தெனவே–5-

இருதோள்‌ குலுங்க விருகா தணிந்த வெழிலே மிகுந்த மணி சேர்‌
தருநீடு குண்டலமராக வொண்வி றரலோடிலங்க வவிருந்‌
திருமார்‌ பணிந்த வணியே சரிந்து செகமீ திழிந்து புரளச்‌
சுருணாறு குஞ்சி மிசையார் கலன்‌கடொடை யோடசைந் தொளிரவே–6-

பிறையோ டிகற்றரு மனோகரத்தின்‌ பிழை தீர்‌ நுதற்க ணணியு
நிறைவா லொளித்‌ தரளமே யிழைத்த நெடிதாய சுட்டி யலைய
விறையா மடிச்செ நறையோடு புத்து றிரு தாமரைச்செ மலர்மே
லுறை யோதி மத்தண்‌ சிறை யோதி மப்புள்‌ ளொலீயே தரக்க லெனவே–7-

எணிலாத தன்மை யுறுபார வண்ட மிசையா வடங்கு மிடமா
மணிமேவு பண்டி யரைசேர்‌ சதங்கை யொடு கீழ்‌ சரிந்து புரளப்‌
புணராய செந்துவரை நேரிலங்கு புகழ் தாளி னங்குலிகளொ
ணிணர்கோடை யங்கையுடன்‌ மாமுழந்து மிடவே சிவந்த நிறமே–8-

திருமாமடந்தை புவிமாது செவ்வி திகணீளை தங்களுடனே
யொருநீல விண்டு நிகராக நின்ற வொளிராதி தன்னை வலமா
யருகே தவழ்ந்து வரு போதிலய் யனனையோடு தந்த மரெலாம்‌
பெரு கோகை மண்டி யெழ நீடு கண்டு பினிலே தொடர்ந்‌து வரவே–9-

எழிலே மிகுந்த மதவேளு மண்டி. யெதிர்காணுறிற்றன்‌ வடிவவ்
வுழியார வெள்ளி யணை வானோர்‌ பெண்மை யுறவே விருப்புளடையக்‌
கழிதே லங்க வருளாதி நின்று களி நீடிடத்தின்‌ வடபால்‌
வழியாகி நின்ற மதி மேவு திந்திரிணி நீழலுற்‌ றனனரோ–10-

மாக னகக் கலை சூழரையிற்புனை மாறனணைத் தலமா
நாக மதைக்கலி யேகுது முற்பட ஞாலமடுத்‌ தெகின
மாகி யுதித்திடு போதி யெனச்சொல வார வழுத்‌தி விரைந்
தேகி யுரைப்படி. யாய திருப்புளி யேர்தகை சிற்பகர்வாம்‌.–11-

கஞ்ச மலர்த்தவி சந்தர முற்றெழு கண்ணோரு வெட்டனொடு
மஞ்சி னிறத்தடை கண்டர்‌ தமக்கு மகிழ்ந்தினி தெட்டரிதா
யெஞ்சலினித்திய வும்பரிலுற்றிட மெங்கும்‌ விரிந்‌ திடலா
லஞ்சயினற்படை யங்கை தரிக்கு மரிந்தம னொக்குமரோ–12-

வானக மண்டல மோர்கையின்‌ மன்னிய வாணி தனத்‌ திசையா
மேனனிகொண்டிடு மோதி மனண்ணிய வேலை யுயிர்ப் படையா
நானன்‌ முகங்களு நாடி யிரும்மரி தாமரை பெற்றிடலாற்‌
றானவருங்‌ கமலாலய மன்னு பிதாமக னொக்குமரோ.–13-

வானதி தன்னுடன்‌ மீத விரும்பிறை வான்முக மஞ்சுறலா
லூனமிலங்கமலாதன மன்னய னோர் தலை தங்குறலாற்‌
றூனகு கொன்றையு மாடரவுந் தலை சூடியை யொன்றுமதே
ஞானமிகுந்தந மாறனுகந்தன னாடிய திந்த்ரிணியே.–14-

வென்றிமிகுத்திடு மங்கதமுற்று விளங்கு பதிக்குமடி
நின்றெவருக்கு மகிழ்ந்தினி தெட்டி னிமிர்ந்து சலிப்படையா
வன்றிறலிற்படுமண்ட முகட்டிடை மன்னி யுணிற்குமதை
யென்ற முறச்சரிவின்றி நிறுத்தெழு வென்னு முரைக்குறழா–15–

கொண்டபசுஞ்சுடர்‌ விண்டுவையுஞ்‌ சிறுகுன்‌று கடம்மையுமே
கண்டதை யொன்று மணங்கையினன்‌ கவிகை யெனும்‌ வண்ணமுற
வண்ட மடங்க லு மண்டி விரிந்தெழு மந்தர மாந்தனையும்‌
வண்டலையும்‌ பல தண்டலைதம்மையு மன்னவே கண்டிடிலே.–16-

காயொடடை திரள்‌ சேர்தரு நற்கனி காண மிகுக்குமலர்‌
தூயமிகக்கெழு காலடி பட்டுயர் சோர்வி றிசைத்‌ திசைப்போ
யோயடை யுற்றிடு மோவல துக்கு விணோடுநதிக்குள்‌ விழா
மேயலை கிட்டுமோ வோர்கில மித்தரை வீழ்தரலற்றனவே–17-

ஆருமலர்க்கணணாலு மளப்பரி தாய் முடிவற்றி மிருஞ்‌
சாருமெணற்றப லாயிர மற்படு சாகை தழைத்திடலா
லாரணமொக்கு மலாமலு மற்று வலாரி நிகர்க்குமதே
சேருமை யுற்றொளி சேர்சசி தொட்டுயர்‌ சேணகருற்றிடலால்‌–18-

வாரிகலிங்க மெனா வரை கொண்டிடு மானில மண்டிமிரு
மாரிருள்‌ வெம்பகை போழ்தர வெங்கதி ராமசி கொண்‌ டெழுகுஞ்‌
சூரிய னொன்றினராவித னுண்ணுழை தோறு மெஞ்ஞான ரவி
சாரொளியா லொரு தீபமெனும்படி. தானொளி தந்திடுமால்‌–19-

பாயுமிதிற்‌ சிறிதேனு முரைத்திடில்‌ பாருள மட்டுமிழி
வாயுவுடற்படு நோய்களனைத்தும்‌ வராமலடர்த்திடமாற்‌
றீயகனற்‌ கணுவேனுமிதிற்‌ படில்சேகுரு கப்‌ புனல்க
ளேயது வெத்தல மோவவ்விடத்தினி லேற விடுத்திடுமால்‌–20-

யோகவருங்‌ கொடி தாய தொழில் புரிவோர்களு மிவ்வழியா
யேக வரும் பொழு தீதவர்கண்படி லேய பவந் தொலையும்‌
ஆகவ நன்னகர்‌ மேவி விளங்குவராகில்‌ விளம்புவர்‌ யார்‌
தாகமொடும்‌ வழிபாடு செயும்‌ மவர் தாமடையும்‌ திறனே-21-

தாறுபடுங்கமுகேர்பெறு தெங்கொடு சாமரையிற்‌ பொலியச்‌
சீறி மலர்ந்தகல்‌ வானுயருங் கவிர்தேரின்‌ விளக்கொளிரச்‌
சூறடி விண்டவழ்‌ சோலையெறுழ்‌ மனர்தாழ்ம்‌ தயனிற்பவன
மாறனெனும்படி பூவரசுற்றிடும்‌ வாளர வப்புளியே–22-

அத்தனறா மாவலி பான்‌ மூவடி. மண்‌ வாங்ய நாள னைத்துந் தள்னுள்‌
வைத்தடக்கு மலரடியே மானவிரு வானமெலா மலர்ந்து நீண்ட
இத்தகைய புளிநீழற்ற வழ்ந்‌ தோடிச் சென்‌ றணைந்‌ தவிள வலாய
முத்தி நிலமடி தொழுவோர் தமக்கருளும் பரன தன்‌ றன் மூலம் சேர்ந்தான்–23-

பாரடையிற்‌ பரகதியிற்‌ சேர்த்தருள்வாம்‌ வடபாற்கட்‌ பரிந்துமுன்‌ போய்‌ ஓரடியிட்டினிவரவின் றொழுதிரெனத் தென் புறத்துற்‌றுறையும்‌ தீய
காரடமற்படு முடலத்தே மனருங்‌ கொடுந்‌ தமரைக்‌ காய்வான்‌ போலச்‌
சீடரப்புளி வேரிற் சென்ற பரன்‌ றெக்கண மாந் திசையை நோக்கா–24-

ஐம்புலமாயந்தனை நிராகரிக்கும்‌ யோகியர்கட்‌ ௧ றிவிப்பான்‌ போற்‌
செம்பது மாதனந்தரித்‌துட் கரிகாப் புடையகலாச் செழித்து நீண்டு
வம்புறுமற்கமல நறும் போதெனவே யிடையிடைசெவ்வரிகளோடிப்‌
பம்பருட்‌ கணிணைபிறழா தெழிலாரு நாசி நுனி பார்த்துமாதோ–25-

வடமேருப்‌ பொன்கிரி நின்றிழிதரு பல்லருவியென வயங்குமார்பி
னிடமே வொண்ணிலவு மிழும்‌ வெண்டரள மணியார மிலங்கவே நேர்
படமேலி நிமிர்ந்த மிருமரகத நல்வரைய தனுட்‌. படிர்த சோதித்‌
தடமேய செங்க தரிற்‌ றிருமேனி யொளி செய்யச்‌ சலியானாகி–26-

பல்லாயிரங்கோடி யண்டமு மவ் வண்டத்துட்‌ பரந்து வாழு
மெல்லாமுந் தானாகி நின்றருளு முதலாய வெழில் கொள்‌ சோதி
வில்லாரைம்படையாதி நிர்மலனே பரமாயவிமல னென்ன
மல்லாரும்‌ வலது கரத்தில்‌ குசின்முத்திரை தரித்து வயங்கிமாதோ–27-

மற்றோர்‌ செங்கர கமல முன்னொரு நாட்‌ டோன்றிய வம் மலரே யன்னப்‌
பொற்றோ யுமப் போதிற்‌ புடை பரந்த வுந்தியின் மேற்‌ பொருந்தச்‌ சேர்த்தி யுற்றோடும் பேருயிர்ப் புள்ளு ற வடக்கி யாம்பலம்போ துறழ்வாய்மூடி
முற்றோகை யொளி பரந்‌து வாண் முக நின்றொளி செய்ய மோனமாகி.–28-

அகலுகில்லேனிறையு மெனத்‌ திருமாதுள்ளுற மகிழ்வுற்ற மருமார்‌ சகமுழுதுந் தன்னுளுறக்‌ தானடக்குந் தாட் கமலத் தார்வம்‌ வைத்துப்‌ பன்
பகர்தரக்‌ கண்ணகத்‌ துழலு மிரு வினையாம்‌ பவந் தொடைத்துப்‌ பாநாடீயும்‌
நிகரிலருர்‌ தகைய வட்டாக்‌ கரப்பொருளே தாரகமாய்‌ நெஞ்சுட்‌ கொண்டு–29-

உருகிய பேரன்பினொடும் வந்தணைந்தா ரிருவினை யீர்த்‌து யர்வானீயத்‌
தருமுதலே மெல்லணையா யந்நிழலே மேனிழற்றுஞ்‌ சத்திரமாகப்‌
பெருகிய மெய்ஞ்ஞானச் செங்கோலோச்சி வீற்றிருந்து பிறங்னானா
லிரு நிலங்கொள்‌ மருளகலச்‌ செங்கதர் போற்‌ றென்பாலி லெழுந்தானம்மா–30-

இவ்வணம்‌ வீற்றிருந்‌ தருளுமேந் தறனைக் கண்‌ டெளிதி னெடுப்பா னெண்ணிப்‌
பவ்வங்கொளலை வாரி தன்னிலும்‌ பேருவகை வெள்ளம் பம்பி யோங்‌கச்
செவ் வண்ணந் திகழ் சுடரோன்றனை மின்சேருந்‌ தகையிற்‌ றழுவினாளான்‌
மைவ்‌ வண்ணந் திகழோதிப்‌ பொன்னுடைய நங்கை யெனு மடந்தை தானே—31-

கையாரத்‌ தழுவியணைத்‌ தெடுத்தளவிற்‌ பேர்வரைபோற்‌ கனப்ப நோக்கி
யையோ வீதென்கொலெனப்‌ பதைபதைப்புற்‌ றசைத்‌ தெடுத்து மசையா னாகி
மெய் சோரக் கை சோர மாழாந்து வாய் குழறி மிகவே விம்மி
மையோதி யெழுதியவோர்‌ சித்திரம் போலத்‌ தனையு மறந்தான் மன்னோ–32-

மருவிரியுங் குழலுடைய நங்கை யெனும் மட மாதோர் வண்ணந்தேறிப்‌
பொருமலொடு விம்மலு மென்மே லெழவுள்ளுற வடக்கிப்‌ பொரு வேற்‌ கண்ணின்‌
றருவியெனப்‌ புனல்சோர வாம்பலென வாயங்‌ காந்தறைந் தாண்‌
விரு நிலனும்‌ பெரு வானுங்‌ கருதுறவே யிசை வாய்ந்த விறையோற்‌ கன்றே–33-

போதகமோடிகல்‌ வேடற்‌ இருவானமீந்து முகிற் பொலிந்‌து நின்ற நாதனருட்‌ பல்காற்‌ சிந்தித்‌ தோகை மீக்கிளர்‌ நனியுந்தேசார்‌காதலனின்‌ றிங்கோடி த்‌ தவழ்ந்ததுவே பெறும் பேறாய்க் கருதி நின்ற சீத நறுங்‌ களி வண்டு பாண் முரலுந்‌ தொடை யகலத் திறல் வேற்‌ கோமான்‌–34-

பருந்தாரயில் வாட்‌ படை விழியாள்‌ பரிவிற்‌ சோர்வுற்‌ றுரைத்த
திருந்தாரங்கை வேனுதி போற்‌ செவியினாடே நுழைதரலும்‌
வருந்தா நின்றுள்ளினி திரங்கி மாழாந் தீ தென்‌னதிசயமென்‌
றருந்தாட்‌ கமலத்‌ தவிர் கழல்‌ களதிரக் கடிதிற்‌ குறுகினனால்‌–35-

மழஞ்சே றொளிவிட் டெழுங் கதிரை வளையுமூர்‌ கோள்‌ சூழ்ந்ததெனக்‌ குழைஞ்சேயுள்ளந் திருந்தலர்க்குக்‌ கொடுமை கூருங் கொலைவேலான்
பழஞ்சேயாம்பற்‌ றுவர்‌ வாய பாலனாமப்‌ பரனைத் தன்‌
முழைஞ்சேயேம வரை யன்ன மொய்ம்பாற்‌ றழுவி யெடுத்தனனால்–36-

தண்ணென்‌ நதி சூடிறையன்னான்‌ றாதையாய தாட்கமலத்‌
தண்ண றன்னோடும்ப ரெல்லாமறியச்‌ சுடரை யெடுத்தளவிற்‌
றிண்ணஞ்‌ சிகரம் போற்‌ கனப்பச்‌ செழியர்‌ கோமான் றிறலழிந்து
கண்ணிலாதான்‌ பெற்றிழந்த காட்சி யண்ணலா யினனால்‌–37-

மன்னர்கோமா னெடுத்ததற்‌ பின்‌ மாழாந்துருகிக்‌ தமர்குழுவுந்‌
துன்னுங்‌ கதிர் வேன ராதிபருந்‌ துணைமென்கொங்கை நுண்மருங்கு
லின்னல்கூரப்‌ பணைத் தண்ணாந் திறுமாந்திருக்குங்‌ குவடிணையா
மன்னம் போலு நடையாரு மசைத்‌ தசைத்துப்‌ பார்த்தனரால்‌,–38-

தம்மாலாகுந் திறத்தினொடுந்‌ தழுவி யசைத்‌ துப்‌ பார்த்தளவிற்‌
செம்மா மேனித்‌ தனி முதல்வன்‌ சிறிதுஞ்‌ சலியாலகை நோக்கா
நம்மாலாகா வகையன்றி தாறுங்கதிர்காலிப்‌ புதல்வன்‌
செம்மாந்‌ திருக்கும்‌ களியானைத்‌ திரட்குமசையா னென்றனரே–39-

சனித்தநாட்‌ டொட்டின்‌ றளவுஞ்‌ சலியாத ணுவுமதி விரைவி
லினித்த செவ்வாய்‌ கண்டிறந்‌ தின்றெளி திற்றவழ்ந்திங்‌ கோடியதால்‌
பனித்த நெஞ்சில்லாதார்‌ தம்‌ பார்வை யெச்சிலெய்தியதோ
தனிச் செஞ்சுடரே யெனவொளிரித்தனைய ற் கென்பார் சிலரன்றே–40-

மருந்தனின்சொற்‌ நிருமாது வளரு மணிமார்பன்‌ கொல்லோ
திருந்து, தனிச்‌ செங்கோ னடத்துஞ்‌ சேனை முதல்வன்‌ தான்‌ கொல்‌லோ
கருந்தண்ணீர்‌ மண்ணிடத்தேதோ காரண த்தின்‌ பொருட்டாக
அருந்தவத்‌ திம்மன்னவன்‌ பா லடைந்தார்‌ கொல்லோ வென்பாரால்‌–41-

தேனார்கமலத்‌ திருமகட்குந் திரைப்பார்‌ மகட்குந் தனிச்‌ செல்வக்‌
கோனாதனுக்குக்‌ குடிகுடியாட்‌ சேய்யுஞ்‌ செழியர்தங்‌ கோமான்‌
மேனாளிழைத்த மெய்த்‌ தவங்கள்‌ விளங்க முற்று முடித்திலனோ
ஏனாமிவ்வாறிப்‌ புதல்வற்‌ இருக்கும்‌ திறனென்பார்‌ சிலரே—42-

வாளை கமுகு மடல்‌ கீறு வயல்சூழ்‌ குருகாபுரி யளிக்குங்‌
காளையன்னா னிம்மை தனிற்‌ கணமும்‌ தீமை நினையானாய்‌
வேளை மூன்று மெய்யறமே விளங்கச்‌ செய்தான்‌ யாம றநிவோங்‌
கோளை யெய்திக்‌ கொடுமை யன்னன்‌ கொண்டதிறனெ னென்பார்‌ சிலரே–43-

வியனார்ப தம மென்போதே மிளிருங்‌ கண்கால்‌ கரமாயு
முயர்வா னிலவினேர்‌ மதியே யொளிமா முகமாயும்‌ படைத்தே
யியலாரிப்‌ பாலகன்‌ றனக்கங்‌ கிவ்வாற ளித்தவீர்ங்கமலத்‌
தயனே கொடிய பாவியென வறைவா ருள்ளங் கரைவால்-44-

என்று கூறுமொழிகளைக்‌ கேட்டி றுமாந்‌ திணைந்த வன்னமுலை
துன்றுங்குழ னங்கை மாதுர்‌ தோன்ற றானு முள்ளுடைந்து
கன்றிமாழாற்‌ தனராடிக்‌ கண்ணீர்‌ தமை மஞ்சன மாட்டக்‌
குன்றுபோலப்‌ பொலிந்து நின்ற கோமான்‌ முன்னரிவை சொல்‌வார்–45-

கொண்டலிற்‌ பொலிந்து நின்ற கொழுஞ்சுடர்ப்‌ பரிதி வேந்தே
வண்டர்தந்‌ துயரந்திர வகலிடத்து தித்த கோவே
பண்டொரு விலங்கிற்கோடிப்‌ பாலனம்‌ புரிந்த வுன்றன்‌
மண்டரு ளினையின்‌ றெங்கண்‌ மறைத்தனை யெம்பான்‌ மன்னோ–46-

வழிவழி நினக்காட்‌. செய்து வர்த வல்வினையே மின்று
கழிபெருங்‌ கொடிய துன்பக்‌ கடலிடையாழ்த னன்றே
பழிவழி யொழுகா வன்பர்‌ படுந்‌.துயர்‌ காப்பா யென்று
மொழிவது பொய்யதாமோ முதற்பரம்‌ பொருளிரங்காய்‌–47-

அறிவிலாச்‌ சிறியரே போலெதுவு நின்னடியலாது
பிறி துயர்‌ நினைந்ததுண்டோ பெருந்துய ருழன்று வாடுங்‌
குறியினைப்‌ புரிவதென்னோ குணப்பெருங்‌ கடலேநாவி
செறிகுழற்‌ றிருமணாளா செழிக்க வின்னருள்‌ செய்வாயே–48-

அருளிழிந் தொழுகு தாதை யன்னை மெய்ஞ்ஞான மோதுங்‌
குருமுத னைத்து நீயாய்க் கொண் டினிதிருக்கு மெம்பாற்‌
பெருகிய வருள்‌ செய்யாதே பிறங்கு மெய்ப்பொருளே மேன்மேல்‌
வருதுய ரதனின்‌ மூழ்க வைக்தனை யென்கொலின்றே–49-

வன்புறு மனத்தேன்‌ நின்பான்‌ மனிமக வருள்வா யென்ன
வன்புடன்‌ வேண்டுங்காலை யளித்திடா தொழியின்‌ மேவுந்
துன்பமொன்‌ றதுவே யாகுந் தூய்மறைப் பொருளே யன்றி
யின்ப மதருள்வான்‌ போல விடர்‌ பல விளைத்ததென்னோ–50-

மூல மென்றொருகாற்‌ கூவு முன்னரே யடைந்தோர் மாவி
னேலஞரொழிந்தா யின்றிவ்விளி வரலிடரின்‌ மூழ்கச்‌
சாலவு முழன்‌ற நேகந் தர முனை யழைத்து மென்னோ
வாலடை துயின்ற கோவே யருள் செயா திருந்தவாறே–51-

உள்ள நெக்குருகி யிவ்வாறொலி திரைப்‌ பரவை ஞாலத்‌
தெள்ளருஞ்‌ சிறப்பு வாய்ந்த வெரி மணிப்‌ பூணாரேத்தப்‌
புள்ளுயர்‌ கொடியனாங்குப்‌ பொலிந்தருள்‌ புரியானாகத்‌
தள்ளருந்துயரவாரி தன்னுளாழ்ந்‌ திருந்தாரன்றே–52-

வரிசிலைச்சுவடு தோய்ந்த வரை பொருவயிர த்திண்டோட்‌
குரிசிலாண்‌ டகைமையாலுட்‌ கொள்ளஞ ரடக்கா நின்றான்‌
பெரிய வாட்டடங்கணல்லாள்‌ பேதைமைக்‌ குணத்தாலன்ன
துரியனைக்‌ கண்டி கண்டு துயருளாழ்ந்தினைய சொல்வாள்‌-53-

நஞ்சிற்‌ பொலிகண்‌ ணங்கையர்‌ நகை கண்டயல்‌ சூழ்ந்தே
கொஞ்சத்தனி மஞ்சத்திடை குலவித்துயில்‌ வளர்ந்தென்‌
நெஞ்சத்‌ துயரகலக்‌ களிநிலைபெற்றிட வருளா
விஞ்சுற்றுயர்தருமித்தரு வேருற்ற தென் மதலாய்‌–54-

தளிர்மெல்லடி தனவைப்‌ பழி நுதலாய்‌ குல மதலாய்‌
மிளிரொண்மணி மனைவாய்ப்‌ பவ வினையாள்‌ செயவிழைவா
லொளிமேனி சற்றசையா விடு முழையே கிடந்தனையே
யெளிதாயிவனுறவே யெழுமிகல்‌ வந்த தெனிறையோய்‌–55-

இருகட்புல னில்லாதவர்க்‌ கிடையே யளித்‌ தன்றே
பருகுற்றிடு வகைபோ லொளிர்‌ பனிமாமதி நுதலாய்‌
மருவுற்றெழு களியுட்கொளும்‌ வகையே தவழ்‌ நடைசெய்‌
துருகித்‌ துயருற வென்னதை யுடனே கரந்தனையே–56-

பழுமாமர விலைமேலோரு பகலோர்‌ சிறுமகவாய்த்‌
தழுவாவிழி துயில்வோனருட்‌ டகையால் வரு மகனே
யெழுநீள்பசியதனான்மல ரெழில் வாய் திறந்‌ தினிதா
யழு மோசையை யெளியேன் செவி யடையுந் திற னென்றே–57-

துனியே மிகு மா பாதகத்‌ தொழிலே யரு வினையே
னினிதாய்‌ மடிமிசை வைத்‌ தம மிழிபானிறை வூட்டக்‌
கனிவாய் திறந்‌ துண வென்றுகொல்‌ களியோடது காண்பேன்‌
பனிமாமதி மரபூடெழு பகல்‌ போலொளிர்‌ மகனே–58-

இங்குன்றன தணியும்‌ பெருவெழிலார்மதி முகமும்‌
பொங்குஞ்செழு வகுளப்புயம்‌ பொருவு நயநயுக
முங்கண்டவர்‌ கண்ணெச்‌ சிலதுடையப்பல காப்புத்‌
தங்கும்படி செயவென்றெழு தருவா யொளி யுருவே–59-

கோடுஞ்சிலை நுதலாயணி குழையார்கன மரும்பப்‌
பாடுள்ள விர்‌ பனி தூங்கவே செங்கீரைய தொன்றி
யாடும் பருவ மிதாகலினரிதாய தொல் வினை யேன்‌
நீடுந்துயரது தீர்தர நீ யென்று புரிவாய்‌.–60-

துன்றுங் குழன் மட மங்கையர்‌ சூழ்வுற்றனர்‌ தாலோ
வென்றுன்றனை யாட்டச்சுட ரெறிமா மணியதனா
லொன்றும்படியிழை தொட்டிலிலோடித்‌ தவழ்ந்தேறி
மின்‌ றுன்றிய கழலாய் மலர்‌ விழி யென்று கொ றுயில்வாய்‌–61-

என்றென்‌ வயிறிடை நின்று நீ யிவண் வந்‌ துதித்தனையோ
வன்றொன்றியே யிது நாள் வரை யஞரிற்பட மூழ்கு
முன்றன்றவ முது தந்தையு முறவோர்களு மியானுங்‌
குன்றில்‌ களி கொள வென்று கொல்‌ சப்பாணி கொட்டுவையே—62-

சித்தந் தனிலுறு வெந்துயர்‌ தீரக்களிசேரக்‌
கத்துந் திறலதுகண்டு நீயினியாகிலுங் கனிவாய்‌
முத்தந் தர வெழுவாய் தரு மூலத் துறைவோ யென்‌
புத்தென்‌றுரை நரகப்பிணி போகப்பணி மகனே–63-

விட்டுக்கதிர்‌ பொலியுஞ்சுடர்‌ மிளிரும்‌ பசுமுகிலு
மெட்டிக்கு மகிழ வந்தென விவரிம்மர முறை வோய்‌
வட்டச்‌ சிறு பறை கைக்கொடு வரு சிற்ற வருடனே
கொட்டித்‌ திரிதரலென்‌று கொல்‌ கொடியே னிடர் கெடவே–64-

தாராகண நடு நின்றோளிர்‌ தருமாமதி யெனவே
வேரார்‌ தருசிறு பாலகரிடை மன்னுற வெய்தி
வாரார் முலை மடவார் மலி மறு கூடொளிர்‌ சிறிய
தேரார விடுத்‌ தென்று கொறிரிவா யொளியுருவே–65-

வரமாமலரிணை நேரடி மணி நூபுரமொலியே
தரநாடொறும்‌ விரைவோடியே தள வெண்ணகை யிளையார்‌
பரவாவகன் மறு கூடிழை பயில்‌ சிற்றில் கண்‌ முழுதுந்
திரமாக வெனொரு பாலக சிதைத் தென்று கொல்‌ வருவாய்‌.–66-

அணிமாநகருறைவோர்‌ பல ரடையா வெனதிடையே
மணிவார்‌ குழையுடையாயுனன்‌ மகனா டொறுமளவில்‌
திணியோடின றருவம்புகள்‌ செய்கின்றன னெனவே
பணியாவெழ விறை யென்ற.கொல்‌ பயில்வாய்‌ மறுகிடையே–67-

பெருநீருலகிடை மாமகள்‌ பெருமானுயர்‌ மதமே
மருவாமலி, தரவே செயுமனர்‌ கோனளி மகனே
திருமாதுறுமணி மாளிகைத்‌ திருவே முதன் மருவா
திருமாமரநிழல்‌ வைகுறுமிதுவோவுன விதியே–68-

கடல்வேலை கடந்தாலென விழிநீரிருபுடையும்‌
விடவே யெரிதரு வெங்கனலிடைமென்றளி ரெனவே
யுடல்சோர்‌ தரமாழாந்தினி துருகுஞ்‌ செயல் கண்டு
மிடரேனென வுரையாடலை யிதுவோ வுன தறமே–69-

மிகவே நறை யுகு மாலுகவிரி மாலையினிறையோய்‌
மகனே யருமகனேயென மதசோர்தரல்‌ கண்டே
யுகவாவெனதனைநீ யினி யுருகே லென வுரையா
வகமேவிய துயர் தீர் தர வருளாதது தகவோ–70-

நகுமின் சுதரிசனன் பத நளினங்களை மறவேந்
தகவெந் துயர் கொள மன்னுயிர் தமை யெங்‌ கணு நலியே
மிகு நல்லற வினை யன்‌றியே புரியோ மொரு வினையுஞ்‌
செகுவெந் துயரிடை மூழ்குறு செயலென்ன கொல் விதியே–71-

கொலை பழுத்தொழு கூன்‌ வைவேற் கொற்றவர்‌ குழுமி நந்தந்‌
தலைமகனிவனே யென்று தாங்கருந் திறைகள்‌ கொண்டு
சிலை நுதற்றிருவே யுன்றன்‌ நிருவடி போற்றா நின்றார்‌
உலைவு றென்‌றுயரந் தீர வுகந்ததைக் கண்ணாற் பாராய்‌-72-

சிற்றிடைக் கன்னிமாருன்‌ சீரடிச்சுவடு காண்பான்‌
முற்றிலந் தூதை கொண்டிம்‌ மூதெகினத்தி னீழற்‌
சுற்றிலுஞ் சிற்றில் செய்து துன்னி நின்றார்‌ நீயத்தைப்‌
பற்றுமென்‌றுயரந்‌ தீரப்‌ பணி மலர்க் கண்ணாற்‌ பாராய்‌-73-

செவ்விய வொளி கொள் மேனிச் செல்வனோர்‌ வளர் வெண்டிங்கட்‌
கொவ்வ நாடொரும்‌ பூரித்து முடல்‌ சிறி தசையானாக
வவ்வணமிருப்பக் கண்டே யறற் குழஞரிலாழ்ந்தாங்
கிவ்வணம் பருவந்தோறு மிரங்கி யுள்ளுருகா நின்றார்‌—74-

எல்லியும் பகலு நீங்கா தியாவருமிருப்பச்‌ செம்பொற்‌
சில்லியங் குழலாணங்கை செவ்வி யிற்றினங்கடோறு
மில்லகந்தனிலே முன்னரியற்றிய வாறு போல
வல்லியல் கமலக் கண்ணாற்‌ கவ்விடத்தி யற்றா நின்றாள்–75-

வண்டலைந்திழி தேனுண்டு மருவுதாரிமிரு மார்பக்‌
கொண்டலைப் பொருவும்‌ வண்கைக் கோமகன்‌ குழவி தன்னைக்‌
கண்டு கண்டுருகித்‌ துன்பக் கடற்கரை காணானாகிப்‌
பண்டருங் குறுங்கை வாழும்‌ பரமனதுரை மறந்தே-76-

நச்சினர் வினையை நீக்கும்‌ ஞான தேசிகனெடுப்பான்‌
வைச்ச பண்டிதர்களாலு மந்திரத் தலைவராலும்‌
வெச்சுறு முத்தீ யோம்பும்‌ வேத வந்தணர்களாலும்‌
பச்சிலை வகை யினாலும்‌ பார்‌த்தனனிருந்தா னன்றே-77-

நீருலாம்பொருனை நாடனெஞ்சிடர்‌ நிறைய நாளு
மேருலாங்குழவி தன்னை யெடுத் தினி தளிப் போர்க்கென்றன்‌
சீருலாந் தரணியாவுஞ்‌ சிறப்புடன ளிப்பேனென்ன
வோருரைவழங்கி யன்னோரு றும்‌ வழி பாரா நின்றான்‌-78-

ஞானவாரமுத முண்டு நாடொறு மவயவாதி
வானவாந் தருக்களே போல்‌ வளர்தரத் தருவின் மூலத்
தேனலம் பொருந்த யோகி யென வினி தமர்ந்‌து வாமு
மூனமிலாத வெந்தை யொளித்திர மேனி தன்னில்‌-79-

விரைக்கருங்குழலாணங்கை வேந்தர் கோன்‌ முதலயாரு
நிரைக்குலந் தமது கன்றை நீங்கிலா வகை போற் சூழ்ந்தே
யுரைக்கரும் பதினாருண்டீ யுடனெறும்‌ பணுகா வண்ண
மரைக் கணப் பொழுது நீங்கா தன்னவ ரிருந்தா ராங்கே–80-

திருப் புளிப் படல முற்றும்‌-

திரு மதுரகவிப்‌ படலம்‌-

பைத்தலை யாவந்‌ தாங்கும்‌ பாரிடத்‌ துயிர்கட்‌ கெல்லா
மெய்த்தகு முகலேய்‌ மேனி மாயனெம்‌ பெருமான்‌ றன்னைக்‌
கைத்தலத்‌ தமர்ந்த நெல்லிக்‌ கனி யெனக்‌ காட்டித்‌ தந்த
மெய்த்தவ னெதிராசன்‌ றன்‌ விரை மலரடி யுட்‌ கொள்வாம்–1-

கர கமலங்கள்‌ கூப்பிக்‌ கை தொழு மவர் தம்‌ தீய
நரகவித்‌ தருள்வான்‌ ஞான நாதனிவ்‌ வாறிருக்க
குரகத முகத்தாற்‌ கன்பாங்‌ குமுத கணாம்சராம் ம
துரகவிப்‌ பெருமாள்‌ வந்து தோன்றிய விபரஞ் சொல்வாம்‌–2-

உலகெனு மடந்தைக்‌ கோங்கு முருவமை யவயவாதி
யலகிலா வளஞ் சேர்‌ தேய மவற்றுளிப்‌ பாண்டி நந்நா
டிலகொளி வதன மந்த வெழின் முகங்‌ கவினத்‌ தீட்டும்‌
திலகம தென்னகத் தோன்றித்‌ திகழ்தருந் திருக்கோளூரே-3-

அத்தமா னிறத்து வேதத்‌ தந்‌தணன்‌ முதலாந்‌ தேவர்‌
தத்தமானியை யெடுத்துச்‌ சாற்றிடக்‌ கமல மென்போ
துய்த்தமா னிலமான்‌ செய்ய வொளியடி வருடப்‌ பாம்பில்‌
வைத்தமா னிதி மலர்க்கண்‌ வளர்தருந் திருக்கோளூரே–4-

மாகய மருப்புமாய்த் தான்‌ மலரடி. வணங்குந் தூயோ
ரேகய வேள்வி யாற்ற வெழுந் தடர்‌ கரிய தூமம்‌
ஆகயம்‌ படரக்‌ கண்டே யணி முகிற்‌ குலங்களென்னாக்‌
கேகயம்‌ பல நின்‌ றாடிக்‌ கிளர்தருந் திருக்கோளூரே –5-

அமலமுற்‌ நிடலான்‌ மீதி லணிமை தங்குறலான்‌ மீவான்‌
கமலக ணுறலா னற்பொற்‌ கலை தரித்‌ திடலான் மண்ணின்‌
குமரர் கண்‌ணிணைக்கு மெட்டாக்‌ கொள்கையா லொளிரு மாடம்‌
விமல விண்டு வினை யொப்பாய்‌ விளங்ககுறுந் திருக்கோளூரே –6–

எங்கண்மா னகர் போந்‌ தெந்த மிறையடி வண்டி யேகுஞ்‌
சங்கரன்‌ றனைநீ தாகத்‌ தருக்குட னெம் போனிற்குந்‌
துங்க நன்‌ றெனவான்‌ கைலைத்‌ தொல் கிரி யினை நக்கென்னாத்‌
திங்களஞ்‌ சவீசேர்‌ மாடம்‌ திகழ் தரும்‌ திருக்கோளூரோ–7-

இத்திரு நகரில்‌ வேத வெழிற்‌ பெருங் குலத்துட்டு வாப
ரத்தின தந்த மாகு மணிய விக்கிரம வாண்டிற்‌
சித்திரை மாதத்‌ தோடு சேர்ந்த சுக்கில பக்கச்‌ச
துர்த்த சித்‌ திதியுஞ்‌ சுக்ர வாரமுங்‌ கலந்ததாகும்‌–8-

சித்திரை நாளி லாசான்‌ சிச்சரி னியல்பு மன்னோர்‌
பத்தியும்‌ விசுவாசத்தின்‌ பான்மையு நிலத்‌ து வாமும்‌
புத்தியி லுயிர்கட்‌ கன்பாய்ப்‌ புகழ் பெறக்‌ காட்டித்‌ தூய
முத்தியின்‌ விளைவை நல்க முதற் பரம்‌ பொருளா லன்றே–9-

இருணலி தரக்கால்‌ சோதி யிளங்கதி ருதையமுன்ன
ரருணனா ருதிந்குந் தன்மை யாமெனப்‌ பரவை ஞால
மருணசிப்‌ படைய ஞான வாரமு தருளுஞ் செம்பொன்‌
வருணநங்‌ காரிமாறன்‌ வருமுன்‌ மெழுந்த வள்ளல்‌.–10-

முடிவிலின்னவனால்‌ வேத முற்றணர் திறத்தைக்‌ கூறிற்‌
கடிமலர்‌ கமலச் சேக்கைக்‌ கண்ணவற் கிழுக்குண்டாமா
லொடி திரைப்‌ பரவை ஞாலத்‌ துயிர் கண் மேல்‌ வைக்கு மன்பாற்‌
படி முழு தளந்து கொண்ட பரமனே யனை யனாவான்‌–11-

பண்டரும்‌ பரம வேதவிதிப்படி பரித்த முந் நூல்‌
விண்டலத்‌ தெழுந்துலாவு மின்னெனப்‌ பிறழு மார்பன்‌
வெண்டிக ழூர்த்த புண்ட்ர மேவிய னுதலான்‌ சேந்த
மண்டு பொற்‌ சடிலத்‌ தாலே வயங்கு சேகரத்தினானே–12–

பரந்த வணையான்‌ செய்ய பத கமலங்க ளல்லாற்‌
புரந்தர னீறாய்‌ வேதப் புனிதனே முதலாந் தேவர்‌
வரந்தர வல்லே மென்ன வந்து முன்‌ னிற்பாரேனுங்‌
கரந்தலை குவித்துச்‌ சற்றுங்‌ கணித்திடாக்‌ கருத்தனம்மா–13-

கொல்லு நஞ்‌ சடக்கு கண்டக்‌ குழகனு மறை வலானும்‌
வெல்லுதற்‌ கரிய காம வெகுளிக ளவிக்கு நீரான்‌
புல்லிய நெறியி னாளும்‌ பொறி புலன்‌ றமைப் போக்‌காது
சொல்லிய வறத்தினிற்குந்‌தூய நன்மனத்‌ தனம்மா.–14-

சென்னிகழ்‌ வடைத லாகச்‌ செப்பிய கால மூன்று
முன்னி யுள்‌ ளறியும்‌ ஞானத்‌ துறுதி கொண்‌ டுயர்வு பெற்றோன்‌
பன்னுதற்‌ கரியவாய பதும வாதனத்‌ தட்டாங்க
மன்னிய யோகத்‌ தின்‌ கண்‌ வரம்பினான்‌ மகிழ்வு கொண்டோன்‌–15–

இன்ன தன்மைய மதுரகவிப் பெருமா னெண்ணுதற்கரிய வேதாந்தத்‌
தன்னியல் புணரு நிபுணனாய்ச் சத்வந் தலை யெடுத் தெவருமோர் தரமு
ளுன்னிய வளவிற்‌ பரகதி யுதவயோத்தியே முதற் றிரு மடந்தை
மன்னியோ ரிறையு மகல்கிலா மருமன் வளர்தரும்‌ பத தொறுஞ்‌ சென்றே–16-

விழுத்தகு மூவகை யுள்ள நெக்‌ குருகி விரைமல ரருச்சனைபுரியா
வழுத்தியாங்‌ குளவாம்‌ புனித நற்‌ றிவலை வானக முகடு தைவரவே
கொழுத்தலை யெறியுங் கங்கையை முதலாக்‌ கொண்ட பற்பல நதிபடிந்து
பழுத்த மெய்ஞ்ஞான நிலை யுணர்ந்‌ தநேகம் பகல் வட புலத்திருந்தனனால்‌.–17-

அங்கரு முனிவ னிவ்வண மிருப்ப வணிய வைகுந்த நன்னாட்டிற்‌
பொங்கருட்‌ பரம வுருவினித்தியர்கள்‌ புடை பரந்‌ திறைஞ்சினர்‌ பொலிய
சங்குடன்‌ றிகரி வாள் கதை வரிவிற்‌ றாங்கி வீற்றிருந்தரு ணிமலன்‌
செங்கையிற்‌ பிரம்பொன்‌ றேந்தி நன்களிக்குஞ்‌ சேனையர்‌ தலைவனைக் கூவி–18-

இன்றெழும்‌ துலூற்‌ றீ யிருட்‌ பிழம்பை யிகலறத்‌ துடைத்தருள்‌ புரிவான்‌
சென்றுந மமிசைபூதரா யுதித்துத்‌ திருப்புளியடியில் யோகியரா
யொன்றிய பதமாசனந்தரித்‌ திருக்கு மொப்பிலா மாறனுக்கின்றே
பொன்மக ளிடமுன்னீர்ப் பெரும்‌ தகையைப் போற்றிரு விலச்சினை முதலா–19-

மந்திர வுபதேசமும்புரிந் திவணீர்‌ வருதிரென்‌ றுரைத்திட விரைவிற் சிந்தையுள்‌ ளுவகை கொண்டன னிவணந் திந்த்ருணி யடியில்‌ வீற்‌றிருக்கும்‌ நந்த மதிறையாங் கொந்தவிழ்‌ குழலி னங்கை தன்‌ திரு வயிறுதித்த சுந்தர வதநற்‌ கவ்வணம்‌ புரிந்து தொன்னக ரடைந்தனன்‌ றூயோன்-20-

சங்கொடும்‌ புனிதத்‌ திகிரியும்‌ தாங்கித்‌ தயங்குறு மூர்த்த புண்டரனாய்‌
மங்கலி லதிதேயோ மயனாய்‌ நின்மலனுமாய் வீற்றிருந்தனனால்‌
பொங்கலைப்‌ புணரி நிலந்தனி புரக்கும்‌ புரவல னியற்றருந் தவத்தில்‌
வெங்கலி கரப்ப வந்தெழுந்தருளும்‌ விமல மெய்ஞ்‌ ஞான நாயகனே–21-

இருந்தரு டரவிங்கணை யிலான்‌ முன்ன ரெழுந்தன னுத்தரதிசை யிற்‌ றதா
பொருந்திய மதுர கவியெனும்‌ பெயர் கொள்‌ புனித மெய் யற நிலை பிறழா
வருந்தவ முனிவ னொருபக லிரவி லனை பிரிந்த லமருகன்‌ றின்‌
வருந்தியுள ளுருகி யணி திருக்கோளூர் வணங்கினன்‌ தென்றிசை நோக்கா–22-

நோக்கலு மிவணந் திருப்புளி யடியி னுவலருந் தகையின்‌ வீற்றி ருக்கு
மாக்கவி னிமல மாறனன்னவன்றன்‌ மணி விழி யிணையினுக்‌ கல்‌லாற்
றாக்குற வெவர்க்குந் தோற்றில னாகித்‌ தள தளப்‌ புடனெழுமுதைய
நீக்கருஞ்‌ சவி கொள்‌ கதிரெனப்‌ பொலிந்து நின்றிடக்‌ கண்டனன வனும்‌–23-

காண்டவச்‌ செழுமி னொளியிடுஞ்‌ சுடரைக்‌ கடிய வெங்கானக மதனிற்
றாண்டி நின்‌ றெரியு மங்கி கொ லலது தட நகர்‌ வேவுறக்‌ கனன்று
நீண்டு பற்றிடு செங்‌ கனல்‌ கொலோ வென்ன நெஞ்சயிர்ப்‌ புடனி ருந்தனனால்‌
மாண்டகு மினிய தமிழ் மறை யுரைத்த வன்றன தடி பணிந் துய்ந் தோன்‌–24-

இவ்வண மிரண்டு மூன்று நா ளளவா யெண்ணியு மவ்வொளி மழுங்கா
தவ்வண மிருப்ப வென் விழிப்‌ புலனுக்‌ கன்றிமற்‌ றியாவர்‌ கண்ணிணைக்கு
மொவ்வுத லின்றி யொளி யுட னிலங்க லென்னகொ லிதுவெனக்‌ கலங்கிச்‌
செவ்விய நெறிகொண்‌ முனிவரன்‌ பின்னுர்‌ திரு வினாயகன்‌ செய லென்னா.–25-

நன்றுகொ லிதனைக்‌ கண்ணுறி லழியா நவையிலா வொளியதா யிலங்கு
கின்றது கணமுந் தங்குறா விரைவிற்‌ கிளம்பியான்‌ சோதனை
சென்‌றிவ ணடைவ னெனத்திரங்‌ கொடுதொ றென்முக நோக்‌கின னெழுந்தான்‌
மன்றலந்‌ துளவத்‌ தாரினா னடியர்‌ மலரடி யன்‌றி மற்றுன்னான்‌–26-

உதைய வெங்கதிரி னொளி விடுஞ்‌ சுடரை யொன்றுற நோக்கியச்‌ சுடரே
சிதைவினன்‌ னெறியாக்‌ கொண்டிரா முழுதுஞ்‌ சென்று சென்றரும்பக றொருங்கண்‌
டதைமலர்‌ வளரச்‌ செயதிடை யுறு நற்‌ றலந் தொறுஞ்‌ சோதனை புரிந்து
புதை யிருட்‌ பிழம்பு சீத்தொளிர்‌ மாடம்‌ பொலி திரு வரங்கம் வந்தடைந்தான்–27-

அத் திரு நகரி லரங்கனை வணங்கி யற்றைய பகலினைக்‌ கழித்து
நத்தம் வந்தடைய வாய்ந்தன னவணந்‌ நகை விடுஞ்‌ சோதியே பின்னு
மத்திசை யொளிர வெழுந்தனன்‌ விரை விலடவி வெற்பகன்‌ றிருங் கரையைக் குத்திரு்‌ந் திரை கொள்‌ பொருனை சூழ்‌ தருமிக்‌ குருகை மானகரம்‌ வந்தடைந்தான்‌-28-

எழுந்தரு டரவு மவ்வொளி மறைய விரும்பல தருவினான்‌ மறைந்து
மழுங்கியது கொலோ வெனும்பினுந்‌ தென்பால்‌ வந்தனன்‌ வட புலத்‌ தொளிரத்‌
தொழுந்தகை யுடையவ்‌ வருந்தவ முனியித்‌ தொன்னக ரிடத்ததீ தென்ன
வழுந்தினன்‌ களியி லடைந்தன னிவணே யடைதலு மறைந்த தவ்‌ வொளியே–29-

வந்த வருந்தவ மாமுனி வோனு
மிந்த நகர்க்கு ளேதேனும்‌ விசேடம்‌
விந்தையி னுண்டுகொ லென்ன வினாவச்‌
சிந்தை யுவந்தனர்‌ செப்புவர்‌ மன்னோ,–30-

எந்தம்‌ விளங்கயி லேந்திறை வோனே சந்தத முஞ்செய்‌ தவத்தினின்‌ மாயோ னந்தமிலண்ணறன்‌ னின்னரு ளாலே மைந்தனும்‌ வந்து பிறந்தன னன்றே.–31-

தோன்றிய வன்று தொடங்கியி தீறா யான்ற வரும் பதி னாறெனு மாண்டாய்‌
வான்றழை வெஞ்சுடர்‌ வானவ னே போற்‌ கான்ற கவின்றிகழ்‌ காண்டகு மேனி,–32-

சற்றுமசைத்திலன்‌ றாமரை யங்க ணுற்று விழித்தில னொள்ளிய செம்மை
முற்றியவாயது மூடுத லின்றிப்‌ பற்றிழையான்‌ முலைப் பாலு மருந்தான்‌–33-

தீண்டரு மெய்த்தவ செப்பிய தன்றி யாண்டு தோறுங்கவி னங்கம்‌ வளர்ந்தே
நீண்டிட வோர்தரு நீழ லிடத்தே மாண்டக வைகினன்‌ மைந்தனு மன்றே.–34-

அன்றுமுதற்கொ டருந்திறல்‌ வேலோ னின்றள வாக வெழுந்தரு ளூன்போற்‌
சென்றவ ராய செழுந்தவர்‌ தம்மாற்‌ குன்றி னிதிக்குவை கொள்ள வளிப்பேன்‌.–35-

என்னவுரைத்தன னிந்நெடு நாளாய்த்‌ துன்ன வருட் கொடு பார்த்தனன்‌ றுய்ய
வன்னவ ராலு மசைந்தில னாக மன்னிய வின்னலின்‌ மாழ்கின னன்னோன்‌–36-

என்றுரை செய்தன ரின்றத னைப் போய்‌ நன்றறி வேனென நாறிய மாடங்
குன்றென நின்றொளிர்‌ கோமறு கின்கண்‌ சென்று நடந்தனன்‌ றீதில் குணத்தோன்‌–37-

வருந் தவனைச் செழு மாமறு கிற்கண்‌ டரந்தை யழுங்கினனன் னவர்காணா
இருந்தவெழிற் புயவேந்தலிடம் போய்‌ விரைந்தனர் சென்‌ற விளம்பினரன்றே.–38-

கேட்டள விற்பொன்‌ கிரிப்பெரு மொய்ம்பின்‌ வாட்டகை மன்னன்‌ மதிக்கடலாய
கூட்டவமைச்சர்கள்‌ கூட்டி வரத் தீ வீட்டிய லற்கெதிர்‌ மேவின னன்றே–39–

இந் நக ருக்குணி யெய்துற வென்றன்‌ முன்னரிழைத்த முதற்றவ மேயென்‌
றன்ன முனிப்பர னாய்மல ரன்ன மன்னுமடித்‌ துணையார வழுத்தி–40-

ஆக்கமு றும் முடை யார வொடுக்கி நீக்கரும்‌ வெந்துயர்‌ நீடின னிற்கும்‌
வீக்கவடற்புய வேந்தனை யன்னோ னோக்கின னின்று நுவன்றிட லுற்றான்–41–

நெய்கதழ்‌ வேலநின்‌ னெஞ்சிடர்‌ கொள்ளுஞ்‌ செய்கை யதென்ன கொல்‌ செப்பு தி யென்னப்‌
பொய்கை தனிற்பல புட் செறி பாண்டி மொய் கவினுற்று முதிர்ந்திடு நாடன்‌.–42-

மைந்த னிலாது வருந்திய தாதி யந்த மராத்தி லடைந்ததை யீறாய்‌
விந்தை யினங்கிடை மேவிய வெல்லாஞ்‌ சிந்தை மயக்கொடு செப்பினனன்றே.–43-

இந்த வாறிரு நிலந்தனி புரந்தரு ளிறையோன்‌ சந்த மாமுடி மன்னவன்‌ சாற்றின னிற்ப
வந்த மாமுனி யருண்முக நோக்கினராகி அந்த மாமதி யமைச்சர் நின்‌ றறைகுவர்‌ மாதோ,–44-

அரிய மாமறைப்‌ பொருளெலா மினிதுணர்ந்‌ தரியாந்‌ துரிய மால்பத மன்றி மற்‌ றுணர் தராத்‌ தூயோய்‌
விரிய காதமென்‌ மேலெழுந் துயரெனு மிகுந்த கரிய வார் கலிக்‌ கரை பெறாதுழன்றுயர்‌ கடையோம்‌–45-

களிப்பெனும்பெரு மதுக் கட லாழ் தரக்‌ கமலத்‌ தளிர்க்கு மெல்லடிக்‌ குமரனத் தருநிழல்‌ விட்டெங்‌
களிக்குலம்படு மாம்பலம்‌ போதினுக்‌ கரிய நளிக் கனிக்கிணை வாய்‌ திறந்‌ தொரு மொழி நவில–46-

விருப்புளிப்புரிரந் தருளுவ தன்‌ றிமேல்‌ வேங்கைப்‌
பொருப்பு விட்ட பைங்‌ரியெனத் தனியிடை பொலியுந்
திருப்புளித் தலத்‌ திருந்தெடுத்‌ தன்னை தன்‌ செமுலை
யருப்புளிற்பெரு கமுதுண வருள்‌ செய வேண்டும்‌–47-

இவ் வணம்புரி்‌ந் திடிலொரு சூச்சியு மேறாச்‌
செவ் வணந்திகழ்‌ சடிலசேகர வருந் திறலோய்‌
பவ்வ வெண்டி ரைப்‌ பரவை மா னிலந்தனி புரக்குங்‌
கவ்வை யின்னக ரன்புட னளித்தகங்‌ களிப்ப–48-

மண்டலேசுர ரனை வரு நின்னடி வணங்கப்‌
பண்டை யாய்வழி வருமுடி சூட்டினர்‌ பரவுக்‌
கொண்ட தோரரி யணைமிசை யிருத்தினங்‌ கொடியேந்
தொண்டு செய்தனம்‌ வருகுவ மென்றுபு சொற்றார்–49-

சொற்ற வம்மொழி யிரு செவி வெதுப்புறத்‌ தூய்மை
யுற்ற மாமுனி வரனவ னுறைவிட மதனை
யிற்றை நீரது காட்டுமி னிவ்வண மியற்றிப்‌
பிற்றை யானது கொள்ளுவ னென்மொழி பெய்தான்‌–50-

என்ற மாமுனி வரன்றனை மிறையவர்க்‌ இறையோன்‌
துன்று பற்பல மங்கல முரசினந் தொனிப்ப
நன்று கொண்டினி தேகியத்‌ தருநிழ னவையின்‌
றொன்றி வைகிய வொளியினைக்‌ காட்டின னுகந்தே,–51-

முன்னம்‌ தாயினை நீங்கிய முலை விடாக்‌ கன்று
பின்னம்‌ காண்குறு வகை யெனப்‌ பெய்யொளி பிறங்க
மன்லுர்‌ தாரு நன்‌ னிழலிடைக்‌ கதிரென வைகும்‌
பொன்னந் தேசினம்‌ மாறனைக்‌ கண்டனன்‌ புனிதன்‌-52-

வண்டு சூழ் மகிழ்‌ மாறனைக்‌ காண்டலும்‌ வதநம்‌
விண்டலர்ந்திட லாலவன்‌ முகமது விளங்கும்‌
புண்டரீகமென்‌ பத ற்குமம்‌ மாறனைப்‌ பொருவி
லண்ட யோனி யென்‌பதற்கு மிங்கைய மில்லம்மா–53-

மோன மாகியோகத்தினி திருந்தருண்‌ முதல்வ
னான நாதனைக்‌ காண்டலு மன்னவ னருளால்‌
ஞான முன்னைய துதயமா குற முனி நளினத்‌
தேனவாமலர்த்‌ தாட்டுணைச்‌ சடை முடி தீண்டி –54-

இப்பெருந்தனிச்‌ சோதியோ வென்றன திதயற்‌
துப்பனன்‌ மெழு கெனவுருக்‌ கியதெனுந் தூய
முப்பரஞ்சுடர்‌ தம்மிலு முதற் சுட ரிதுவென்‌
றப் பராங்குசன்‌ குணனெலா மெடுத்தெடுத்‌ தறையும்‌.–55-

கண்ணுகர்ந்தவர்‌ தம்மிலுங்‌ களி நறா வருந்தி
யுண்ணெகிழ்ந் து நின்‌றாடுறும்‌ பாடுறு முயர் யாழ்ப்‌
பண்னுலாமொழி நங்கை கொண் மகிமை யிப்‌ பரவை
நண்ணு மானிலத்‌ துற்றவர்‌ யாரென நவிலும்‌.–56-

அங்கு மிங்குமா யெழுந்தெழுர்‌ தேமுறு மமல
னிங்கு தோன்றுதற்‌ கெத்தவ மிழைத்த திவ்‌ வெறிநீர்‌
தங்கு மானில மென்னுமியான்‌ பெற்றிடுந்‌ தகையிற்‌
பொங்கு பேறியார்‌ பெற்றவ ரெனத்தனைப்‌ புகழும்‌.–57-

மருப்படுங்கம லாநந மலருமாநதந்தப்‌
பெருக்கி னீடுகட்‌ புனலிடை மூழ்குறும்‌ பிதிருந்
திருத்தகும்புய வரைகள்‌ பூரிப்புடன்‌ றிகழ
விருப்பினாற் புள காங்‌கித மடைதர வியக்கும்‌–58-

இத்தரைக்குள் யா னியற்றிய தவப் பல னின்றே
முத்தி யின்விளை யதனை யீந்தது வென மொழியும்‌
பித்தடைந்தவ ரென்ன மெய்‌ மறந்தளி பிதிருங்‌
கொத்து நன்மலர்‌ கொய்து கொய்‌தெறி தரு மன்றே.–59-

இவ்வணம்பர மானந்தக்‌ கடலத னிடையே
யவ்வரந்தரு முனிவரன்‌ மெய் மறந்‌ தாழ்ந்து
செவ்வை யின்னகந் தெளிந்து பின்‌ றோத்திரஞ்‌ செய்வான்‌
கொவ்வை வாயுடை நங்கை தன்‌ குலக்கொழுந் தனையே,–60-

செஞ்சுடர்‌ போலொளி செய்‌தே சுறு மெய்ப் பொருளே
மஞ்செனவே யணி சேர்‌ மானிற மெங்குரையாய்‌
விஞ்சகல் மார்பிடையே மேவி விளங்குறு பொற்
கஞ்சமலர்த் தவிசார் காரிகை மெய்த்‌ தவனே-61-

பொங்கட லாரவுணர்‌ பொயொழியப்‌ புவியில்‌
வெங்கதழ்‌ வாளமரில்‌ வீசு செழுந்திகிரி
சங்குட னொண் கதை வாள்‌ சார்ங்க மெனுந்தவர் மற்‌
றெங்கிவை வைத்தனையோ வென்றனை யாளொளியே–62-

மந்தர மாமலையின்‌ வாகொரு நான்கிலுனுங்‌
சுந்தர மோடடல்சேர்‌ தோளிணை பெங்கு கொலோ
இந்தள ராகமிசைத்‌ தின்னளி பல்லடருங்‌
கந்தமுறுந் துளவக்‌ கண்ணிகளெங்கு கொலோ–63-

பாதக வெவ்வீனைகள்‌ பாரிடம்‌ விட்டகலத்‌
தீதறு மெய்யறிவார்‌ தேசிடு மாதவனே
மாதக வாயுறுசீவத்ச மெனும் மருவும்‌
பீதக மெய்யொளி சேர்‌ பீடுடை யெங்கு கொலோ—64-

செஞ்சரண்‌ வீழ்சுரர் நோய்‌ தீர் தர மண் கொளு நாள்‌
விஞ்சகல்‌ வான்முகடுமே வர நின்றது தான்
எஞ்சலி னன் மணியா லிழை பல பூண்டிகழிக்‌
குஞ்சி கொலோ வழுதிக்‌ கோமகனே யுரையாய்‌—65-

நாடிய வாசமுறு நான நறுந் திலகம்‌
பீடிய லாவணியப்‌ பெய்யொளி செய்வது தான்‌
நீடிய வெண்ணிலவி னேரவிர்‌ புண்டரமரர்‌
கோடிய செம்பிறை நேர்‌ கொண்டொளிரிந் நுதலே—66-

அண்டர்‌ தொழக்குளிர வன்றருள்‌ செய்தது தான்‌
வண்டலர்‌ செங்கமல மான மிளிர்ந்தரிகள்‌
கொண்டு பரந்தணிசேர்‌ குழைகளி னோடி சலிக்‌
கண்டவர்‌ கண் கவரிக்‌ கண்ணிணையே கொலரோ–67-

கோவியர்‌ மத்தளைபால்‌ கொண்டினி துண்டது தான்‌
காவிய நீள் விழி நங்கைக்குயர்‌ மாமதலாய
தூவிய னற்பவளத்‌ துண்ட மிரண்டதனைச்‌
சீவியிணை த்ததெனத்‌ திகழுமிவ்‌ வாய் கொலரோ–68-

முன்னொரு வாரணமே முலமெனுஞ் சொலையே
மன்னுற வேற்றத தான்‌ மா மறை யாலுணராய்‌
நன்னய நான் மகர குண்டல நின்றினிதூ
சன்னளி யாடுறமிக்‌ காது கொல்‌ சற்றுரையாய்‌–69-

விழுத்தகு வால் வளையை வென்‌று பசுங்கமுகிற்‌
பழுத்தணி கொண்டு பள பளப் புட னோங்குறுமிக்‌
கழுத்து கொ லண்டமெலா முண்டு களித்ததுவே
கொழுத்தலை மண்டு புனற்‌ கூர் பொருனைத் துறையாய்‌–70-

விண்ணவருக்கனிய வெண் சுதை யீந்தருள்வான்‌
தண்ணலையைக் கடையுஞ்‌ சார் தகை யுற்றது தான்‌
வண்ணமுறுங் கிரிபோன்‌ மல்லோடு பேரணியு
தண்ணிய விப்புயமோ நங்கை கண்‌. மா மணியே,–71-

சந்தமுறும்பசிய தாமரை யோடிகல
விந்தை சின்‌ முத்திரையை மேவிய விக்கரமோ
நொந்தக நைந்தரனார்‌ நுன் சரணே சரணாய்‌
வந்தடி வீழ்தருமுன்‌ மாபலி யிட்டதுவே,–72-

துண்ட நறுந்துவரோ தூய்மை யருங் கமலம்‌
விண்டிதழோ வெனவே விளங்கணி யிவ் விரறான்
மண்டு நிரைக்குலம் விண்‌ மாரி நெருங்குதலைக்‌
கண்டழு கால் வரையைத்‌ தாங்கி யளித்ததுவோ–73-

நிம்பவலங்கலொடு நீண் மணி யார முநி
ரம்பி நிதிக் கிரிபோ லகன்றொளி ரிம் மருமப்‌
பம்பிடமேகொலரும்‌ பைங் கமலத்திடை வாழ்‌
வம்பு மலர்க் குழலாள்‌ வாழ்வினுகக்குமிடம்‌–74-

குயிற்றிட மேதினியிற்‌ கோதறு மெய் யறிவைப்‌
பயிற்றிட வேவிய வெம்‌ பரம்பொருண்‌ முத்திரையைக்‌
கயிற்றிட மேகொளிறை கவின்மிக வார்ந்தொளிரிவ்‌
வயிற்றிட மேகொலுயிர்‌ வைத்து வளர்த்ததுவே–75-

அங்கம லாதனனை யன்றருள்‌ செய்தது தான்‌
துங்கம லாதவனார்‌ தோன்றின ரென்ன வொளி
பொங் கமலாதடையிற்‌ பூம் புனலிற் சுழிபோற்‌
பங்கம லாதளிசேர்‌ பாவுமிவ்‌ வுந்தி கொலோ–76-

பார்த்தனணிந்த செழும்‌ பைந் தொடை யுங்கனத
தீர்த்தமு மன்றரனார்‌ செஞ்சடை மீதுறவே
சேர்த்தது தானெழிலச்‌ செய்ய மலர்க் கழலோ
நீர்த்தல மேழிலுமே நின்ற புகழ்ச்சுடரே.–77-

ஏறுட னம்பதும விரேகை பரந்த மலர்‌
வீறுகெடுத்து மணி மேவி யடைந்தவர் நோய்‌
மாறுபடுத்தி யருண்‌ மா மலரிவ்வடியோ
வீறிலிரும் புவி மண்‌ டாவி யளர்ந்த துவே,–78–

சேய மணிச் சடிலச்‌ சேகர னிவ்வனமா யேயரியன்‌றி விழி யேனெனு மக்குறியே மேயவனாகிய நா வீறனை யுன்றனரு மாயமதைத் தெரியும்‌ வல்லவர்‌ யார் கொலெனா-79-

பற்பல தோத்திரமுஞ்‌ செய்து பரன் செயலைக்‌
கற்புடை நங்கை முதல்‌ கண்டு மகிழ்ந்திடுவான்‌
சிற்பரனுக்கணிசேர்‌ செவிப்புல னுண்டுகொலென்‌
றற்பக நின்றெழவே யம்முனி வோரிறையே–80-

அடுத்த திரைக்கடன் மண்‌ ணதிர்ச்சி மிகுந்திடவே
யெடுத்தோரிருங்கலை முன்‌ னே யெறியக்‌ குணமே
கொடுத்தருள்‌ செய்தெளியேங்‌ கோது தொலைப்பவனுந்‌
திடுக்கென வேவிழிக டிறந்தன னோக்கினனால்‌–81-

நீக்கமருங்களியி னாழ்ந்தன னின்றெ வரு
நோக்கினர்‌ மன்னுறவே நோன்மையி னேழுலகு
மாக்கிய நல்லிசைகொ ளவ்வரு மா முனிவன்‌
வாக்கிவ னுக்குள கொலென்‌று மகிழ்ந்தனனாய்‌-82-

சித்தின் வயிற்றிடையே சிறிய துதித்திடிலே
யெத்தை யருந்தியது வெங்கு கிடக்குமென
வத்தை யருந்தியது வங்கு கிடக்குமென
வித்தக னன் பொடுவாய்‌ விண்டுரை செய்‌ தனனால்‌ -83-

அதுல னுரைத்திடு மம்மொழி தன்செவி யடையா முன்‌
மதுர கவித்தவ னெந்தை யடித் துணை மலர் வாழ்த்திச்‌
சதுமறை யுட்பொருண்‌ முற்றுமோ ரிம்மொழி தனிலொன்றி
யது வென வுட்கொடு கந்தன னங்ங னிருக்குங்கால்‌–84-

வந்தடி சென்னி புனைந்தவர்‌ வெவ் வினை மருவாதே
விந்தையி னின்ப முகந் தரு ணன் மகிழ்‌ விரை மார்பன்‌
இந்தை யுவந்து விளம்பிய வம்மொழி செவியோரா
வந்தர நின்று பொழிந்தனர்‌ விண்ணவ ரலர்மாரி-85-

மல்லட ரும்புய நின்மல னன்று மகழ்ந்தீயு
நல்லமு அண்டு வியந்தவி ணும்பரி னனியேயு
மல்லலெனுங்கட றன்னி லழுங்கிய வனைவோருஞ்‌
சொல்லமு தஞ்செவி யுண்டு களித்தனர்‌ துணிவுற்றார்‌–86-

எத்திசை யுந்தனி நின்று புரந்தரு ளிறையோனோ
டுத்தி யுறும் பணி நுண்ணிடை நங்கையு முடனாகப்‌
பித்தரெனும்படி தம்மை மறந்தனர்‌ பேரோகை
யத்தி யழுங்‌கி மயங்கி யுணர்ந்தனராய் நின்றே-87-

அங்கை யெனும் மலர்‌ சென்னி புனைந்தன ராயம் பொன்‌
றங்கிய செஞ்சடை கொண்டெழுமம்முனி தனையார
வெங்கடம்‌ வெந்துயர்‌ மங்க வெழுந்தரு ளிறைபோற்றி
யங்கச னுந்திய வெஞ்சரம்‌ வெனறவ வருள் போற்றி–88-

வய்யக மெங்கு மலிந்து பிறங்கிசை வளர்ந்தோங்கப்‌
பொய்யிலருந்தவ மெண்ணில்‌ புரிந்த புனித போற்றி
வெய்ய கொடும் பவ மெவ்வுயிரும் விட மேவாவந்
தய்யமறும்படி மெய்யறி வின்‌றருளடி போற்றி-89-

என்று வணங்கெ ருள்ள நிரம்பி யெழுந்தோகை
யொன்றுற நின்றிட மன்ற லுறுங்குழன்‌ மட மாதர்‌
வன்றிறலின் மணி மண்டபமெங்கு மலிந்தோங்கிக்‌
குன்றின் மிகுந்தெரு வெங்கு முளங்களி கொண்டாராய்‌–81-

விந்தையலங்கிர்த நன்கு புரிந்தனர்‌ மென்மேலுஞ்‌
சந்தன நன்புனு கின்பணி நீர் மலர்‌ தயிர் நெய் பால்‌
புந்தியிலன்பு மிகுந்து பொழிந்தனர்‌ பொருவில்லா
மைந்தனுதத்தரு ளன்றினு மினறெண்‌ மடங்காக,–82-

இவ்வண மெண்ணி லருந்தகை யந்நக ரெல்லோரு
மெவ்வமி லுள்ள மகிழ்ந்தனர்‌ வைகுற விகல் சேருந்‌
தெவ்வர் கடம்முயிர்‌ தனஜொளி மண்டிய திறல்வேலான்‌
முவ்வுல கும்புகழம் முனி தன்னடி. முடி தாழ்ந்தே–83-

மின்னவிருஞ்சடை மன்னு மருந்தவ வினையேன் முன்‌
சொன்ன வணந்திரை மண்டி யெழுங்கடல்‌ சூழும் பரர்‌
நின்னததன் கண்‌ மலிந்து பிறங்கிய நிதி யெல்லா
முன்னது வின்று நீ கொள்ளுதி யென்றவனுரை செய்தான்‌–84-

அவ்வுரை தன்னை யுணர்ந்து மறிந்தில னெனவே யவ்‌
வெவ்வமி னன்னெறி கொண்ட வருந்தவ னிடை வைகப்‌
பவ்வவருங்கடன்‌ மண்டனி நின்றளி பகல் வேலான்‌
செவ்விய வன்னவன்‌ முன்பினு மின்னுரை செய்வானால்‌–85-

இன்று கொடும்பவ வல் வனை யேன் சொலை யேறாதே
யொன்றிய தென்னென வன்பு மிகுந்தன னுரைசெய்யத்‌
துன்றிய மின்னவி ருஞ்சடை கொண்டு துறந்தெல்லாம்‌
பின்றவ நல்விர தங்கொ டெழுந்தவர்‌ பிழை யில்லோய்‌–86-

மன்னவர்‌ தம் வினை கொண்டு மகிழ்ந்திட வகை நன்றோ
வின்னமு துண்டவர்‌ வெங்கடு வுண்பர் கொலெனவே முன்‌
றென்ன முகந் தனில்‌ வெங்கதர்‌ கண்டெழு சீராளன்‌
சொன்ன துணர்ந் தெழின்‌ மன்னவர்‌ மன்னவன சொல் வானால் –87-

சங்கென வெண்ணில வுந்தி யிலங்கு பறவ யோகி
ருங்குல தன்மமி தென்னிலெ மைந்தனை யுற நன்றாய்ச்‌
செங்கனி மென்றுவ ரென்ன விளங்குறு செவ்வாயை
யிங்கு திறந்து சொ னன்கு மொழிந்திட விறை செய்யா–88-

அப்புமலர்க்சண்‌ விழித்திட வின்னுமதருள் செய்தே
யொப்பிலிவன்‌ றனை யன்னை முலைப்பய முண வோங்கு
மிப்புளி நின்று மெடுத்தெமிடந் தனி லினி தீந்து
செப்பரு வாழ்வை யளித்தரு ளென்றுரை செய்தானால்‌-89-

திரு மதுரகவிப்‌ படலம்‌ முற்றும்‌.

பதின்மர்‌ திரு வரன் முறைப்‌ படலம்‌

ஆடரவத்‌ தமளி துயி லரங்கன் செய்ய வடி பரவக்‌ கூரேச னடைய மேலை
வீடுமக்கின்‌ றளித்தனமென்‌ றரங்கன் சொல்ல விபுதனென்‌ சம்பந்தா சம்பந்திகட்குன்‌
நாடிடந் தந்தருடி யென வுரைத்‌துக்‌ கைக் கொ ணன்மையிற்‌ காடாயமுயர்‌ நனிவீ செந்தை
சேடமுனி கழல் பணிந்து பதின்மர் தங்க டிரு வரன்முறைப்‌ படலஞ்‌ செப்புவாமால்‌–1-

இன்னணங்‌ குரிசி லுரை செவி யுணர்ந்தாங்‌ கேதிலாத்‌ தவமுனி யுகந்து
தென்னனின்‌ மகவென்‌ றுள்ளினை யதுவோர்‌ தேவரா சியமெனத்‌ திரண்ட
கன்னவிறிறற்‌ றோட்‌ காளைமன்‌ மதுர கவி யடி பணிந்ததை யருடி
யென்னலு முன்னாண்‌ டறிந்தவை முழுது மியம்பின னெவர்களு மறிய–2-

தாதளைந்தின வண்‌ டூது பைந் துளபத்‌ தாரினன்‌ கரைக்கள னூர்திப்‌
போதவற்‌ கரு நான்‌ மறையன வடிவிற்‌ போதமுற்‌ றிடவருள்‌ புனிதன்‌
ஆதவனெளி கெட்‌ டிர வுறப்‌ பகலி லாழி கொண்‌ டெறி தருக படன்
வாத முண்‌ ணரவப்‌ பணாடவி நடித்த மாயவன்‌ பர வாசு தேவன்–3-

செங்கதிர்‌ மதிமின்‌ மினியென வொளி கொள் சேணுறு நித்தியரான்றிப்‌
பங்கய னரனிந்‌ திரன் முத லறியாப்‌ பதத்தவ னுள்மகிழ்ந்‌ து லகோர்‌
நங்கழ னிலைபெற்‌ றின்புற வவர்த நவை கொள்வெவ்‌ வினைத் தொட ரகலச்‌
சங்கையி லவதாரங்கள்‌ செய்துரைத்த சது மறை விதி வழி யனைத்தும்‌-4-

கற்றிடற்‌ குரிய ரெவர்க்கு முட்‌ பொருள்கள்‌ கசடற வெளிப்பட லரிதாய்‌
மற்றுளோ ருள்ளற்‌ கறமில தாகி வழங்கலி லவரெவாறுய்வார்‌
இற்றை நாடொடங்கி யாவரு மஃதை யெளிதினி லறிவதற்‌ கினிய
சொற்றருந் தமிழி லருமறைப்‌ பொருளைச்‌ சொற்றிடி லுய்வரென்‌ றெண்ணி-5–

பைத்தலை யரவுக்‌ கரசனோ டினிய பரிகர மனைத்தையும்‌ விளித்தங்
கத்திசூழுலகின்‌ முன்பினு மமிச மவதரித்‌ திடப்புரிந் தறநூன்‌
முத்தமிழதனிற்‌ றெளிதரப்‌ பொருளை மொழிந்து வெம்‌ பிறமத நெறிகொள்‌
சித்தர்களெளிதிற்‌ பரமிதென்‌ றறியச்‌ செய்திடச்‌ செவ்லியிற்‌ செய்மின்‌–6-

என்றவர்க்‌ குரைத்திவ்‌ வுலகுயக்‌ கருது மெம்பிரான்‌ சரபசங்கார
வென்றி கொளுகிரி னரகரி யெனுமம்‌ மேதகு விமலனுள்‌ ளுகந்தே
இன்று நீ செய்த தவத்தினு முன்னா ளெய்து மாதவத்தினு முனக்கு
மன்றலங்‌ குழவி யெனப் புகழுடைபோய்‌ மலடற வுதித்தன னென்‌றான்‌–7-

மாமுனி யுரைத்த வுரை செவி யுணரா வாம்பரி மன்னர் கோனயந்து
தேமலர்த்துள வினானருட்‌ பெறுமச்‌ சேடன் மற்‌ றுள பரிகரங்க
டாமினி துதித்த தெவ்விட மவர்கள்‌ சாற்றிய நூல்கள் யா வெனவும்‌
நாமவேன்‌ மன்னா நினக்கறி வுறயா னவில் குவ னென நவில்குவனால்‌-8–

முதலாழ்வார்கள்‌

தண்டுழாய்‌ மார்பன்‌ பாஞ்ச சன்னி யாழ்‌ வானு மிந்தத்‌
தொண்டை மானிலப்‌ பெண்‌ கண்டந் துலங்கு மங்கலமே யென்ன
வண்ட மொடிலகு மிஞ்சி யத்திமா நாகந் தன்னுட்‌
கொண்டலார் கலியென்‌றுள்ளிக் குளிர் புனற் பருகும் பொய்கை–9-

தோடலவிழ்ந் தொழுகு செந்தேன்‌ றும்பிதங்ளேயோ டுண்டு
பாடொலி கறங்குஞ்‌ செய்ய பங்கய மலரினுள்ளே
கேடி றுவா பராந்தங்‌ கெழு முசித்தார்த்தி தன்னி
னாடுமைப் பசியிற் சுக்ல பக்கமு நயந்த காலை–10-

ஓணமோ டார னன்ன ளொன்றிய தினத்தி லாங்கு
மாணமர்‌ குழவி யாயவ்‌ வளநகர்‌ வதிந்து நாம
நீணிலத்தவர்கள்‌ பொய்கை யாரென நிகழ்த்த மேலோர்‌
பேணிய புவிகள்‌ முற்றும்‌ வலஞ் செய்வான்‌ பெயர்ந்தான ன்றே–11-

திண்டிறற்‌ கதையு முன்னஞ்‌ செப்பிய திருநா டுள்ளே
வெண்டிரைக்‌ கரங்கண்‌ முத்தம்‌ வீசுமம்‌ புதிக்கங்‌ குற்ற
துண்ட வெண்‌ பிறை யோனென்னச்‌ சுதையவிர்‌ மாட மல்லை
வண்டிமிர்ந்‌ தடருத்யான வனத்துறு குருக்‌கத்திக் கண்‌–12-

வாய்ந்த பொன்‌ மலரிலக்த யுகமொடு வருட மாதத்‌
தேந்திடு புதன விட்டத்‌ திளமக வுருவாய்‌ நாம
மாய்ந்த பேருலகர்‌ பூதத்‌ தய்யனென்‌ றழைக்க முன்னீர்‌
தோய்ந்த மாநில மன்னோனும்‌ வலஞ் செய்வான்‌ றொடங்கிச் சென்றான்‌–13-

நாந்தக மதுமுன்‌ சொன்ன நாட்டெறி கடற்‌ கரைக்கண்‌
மாந்தளி ரனைய மேனி மாதரார்‌ மயிலை தன்னிற்‌
பாந்தளிற்‌ பயிலு மாதி கேசவப்‌ பெருமாள்‌ கோயி
லேய்ந்த நீள்‌ புனல் கொள்‌ கூபத்‌ திருந்த செவ்‌ வல்லிப் போதில்‌–14–

முன்னிருவருக்கு மாங்கு மொழி யுக வருட மாதம்‌
தன்னிலந்‌ தசமி பொன்னாட்‌ சதையம்‌ வந்‌ துதித்த நாம
மின்னிலத்‌ தவர்கள்‌ பேயரென்றிட முதிர்ந்த ஞான
மன்னியவாறு பூமி வலஞ் செய்வான்‌ றொடங்கிச் சென்றான்‌–15-

முனம் புவி வலஞ் செயச் சென்‌ மூவரிற்‌ பெரியோன்‌ செய்யி
லனம்பயில்‌ கோவ லற்றோ ரம்மையார்‌ மனைக் கண்‌ சென்றித்‌
தினந்துயில்‌ வுறவெற்‌ கும்மி லிடமருள்‌ செய்வீ ரென்ன
மனமகிழ்ந் தவளத் தொண்டன்‌ மலரடி பரவிச்‌ சொல்வாள்‌–16-

அய்யவிக்‌ குடிற்கு டிண்ணை யொருவருக்‌ கணையா மற்று
மெய்யவரிருவராகில்‌ வீற்றிருந்‌ திடலா மூன்று
துய்யவராகின்‌ மாயன்‌ றொடர நிற்றிடலா மென்னப்‌
பொய்யிலாள்‌ மனைக்கு ளன்பிற்‌ புகுந்து கண்டுயிலுங்‌ காலை–17-

பூதமா முனிவ னின்னோன்‌ போலவே வினவி வந்தம்‌
மேதகு விமலனோடு வீற்றிருந் தருள மற்றும்‌
கோதிலா னொருவ னன்னோன்‌ போல மேய்‌ வினவிக்‌ கூட
வேதிலார்‌ மூவராகி யிசைந்து நின்‌றிடு மவ்வேலை–18-

நள்ளிருட்‌ பிழம்பி னாங்கு நனிபடர்‌ தர வவ்வேலை
கள்ளிருந் தொழுக வண்டர்‌ காமரு பெடையோ டுண்டு
கொள்ளரும்‌ பார்ப்பு முண்ணக்‌ கொடுத்‌து வாழ் துளவக்‌ தெந்தை
ஜெள்ள லாரிடைக்க ணின்று நெருக்கிட வவருஞ்‌ சொல்வார்‌-19-

அய்ய மூவரின்‌ முன்னோனங்‌ கடை தரு மிருட்குலங்க
ணைய வென்‌ றாழி யான்ற னளீரடிக்‌ கமலப்‌ போதில்‌
வையமோர்‌ தகழி யாக வாரிதி நறு நெய்‌யாக
வெய்யவன்‌ விளக்கதாக விருப்புட னேற்றினானால்‌–20-

பின்பிரு வருக்குண்‌ முன்னோன்‌ பேரிருட்‌ பிழம்பு துஞ்ச
வன்பொரு தகழி யாக வார்வமே நறு நெய்‌யாக
வின்புறு சித்தை யந்நெய்‌ யிடுதிரி யாகப்‌ போத
நன் மணி விளக்கதாக நாரணன்‌ கழலிற்‌ சூட்ட–21-

துன்னிய விருள் கணீங்கித்‌ துளவினான்‌ கலுழன்‌ மீதங்‌
கன்னவர்க்கெதிரில்‌ காட்சி யளித்திட வவருட்‌ பின்னோன்‌
மன்னிய திருவைக்‌ கண்டேன்‌ மாசில் பொன்‌ மேனி கண்டேன்‌
பின்னுமைம்‌ படை கைக்‌ கண்டேன்‌ பேரருட்‌ கடலென்றோதி –22-

மூவரொன்‌ றாகி யார்க்கு முதல்வனை வித யீசற்குந்
தேவனைக்‌ கமலவீட்டுச்‌ செல்வி நாயகனை வாழ்த்தி
மேவுபு வணங்க யன்னோன்‌ விரிபுகழ தனினெஞ்ச
வாவுற வேதாந்தார்த்தம்‌ வண்டமிழ்த்‌ தொடை செய்தாரால்‌–23–

அத்திரு நாட்டில்‌ மாயன்‌ நிருவாழி யாழ்வான்‌ மெய்யர்‌
நித்தமைந்‌ தழலை யோம்பு நீணகர்‌ மழிசை தன்பாற்‌
பத்துடை யடியர்‌ மேலாம்‌ பார்க்கவ ரிடி தன்றேவி
மைத்தகோ திசுக வின்சொற்‌ கனகாங்கி மணி வயிற்றில்‌–24-

செப்புறு விபவாப்தத்துட்‌ செயிரறு மகர சுக்லத்‌
தொப்பறு தசமி பொன்னா ளுற்றிடு மக நாளெங்கு
மற்புத மெனவோர்‌ பிண்ட மாய வதரிக்க நொந்தம்‌
மைப்படி குழலியோடவ்‌ வரமுனி யதை யெடுத்தே–25-

வனத்துறு யிரப்புத்‌ தூற்றில்‌ வைத்தவ ரேகப்‌ பின்பு
வனத்துளோர்‌ தமைப்புமக்கு மலரவ ளருளினாலே
வனத்துறு புணரி சூழ் குவலயமா ததனைக்‌ காக்க
வனப்புறு குழவி போல வடிவமைந்‌ தழுமவ்‌ வேல்வை -26-

அந் நக ருறையு நெய்யா ராழியா னறிந்து சென்று
தன்னிரு கண்களாரத்‌ தழிஇய ருளமுத மூட்டி
மன்னு தன்‌ வடிவு காட்டி மாயனுண்‌ மகிழ்ந்து போய
பின்னரம்‌ மகவு தாயைப்‌ பிரிந்த கன்‌றனைய வேங்க -27-

அற்றைநா ளரிதா சென்னு மருட்டிரு வாள னென்னும்‌
வெற்றி வேந் தொருவ னன்பின்‌ மேவவவ்‌ வனத்து முன்செய்‌
நற்றவ மதனாற்‌ கண்ட நாகிளங்‌ குழவி செங்கை
பற்றி யுண்‌ மகிழ்தன்‌ றாரப்‌ பங்கயச்‌ செல்விக்‌ கீந்தான்‌ -28-

கொந்தவி சளக பாரக்‌ குவிமுலை மடமா னோக்கி
வந்தியா கையிலன்‌ போடு வாங்கி யுள்‌ளு வகை பொங்கக்‌
கந்துக நகிலங்‌ கொண்டு கான்முளை மலர்‌ வாய்‌ வைக்கச்‌
செந்தளிர்‌ மேனி கொள்ளச்‌ செல்வனும்‌ பருகா துற்றான்‌ –29–

என்ன காரணமோ வென்றங்‌ கிருவரும்‌ வருந்தா நிற்க
மன்னுமவ்‌ வூரினான்காந் வருணத்தோர்‌ திருமா னேய
னுன்னி யிப்‌ புதுமை கேளா வுளங்கனிந் தினிய தீம்பால்‌
கன்னியங்‌ குழவிக்‌ கென்று காய்ச்சிவந் துதவ வுண்டான்‌–30-

நாடொறு மன்பி னன்னோ னல்க வுண்‌ டிடுமோர்‌ நாளிற்‌
கோடிலா னுளமீ தென்றுட்‌ குறித்ததி லிறையுட்‌ கொண்டிச்‌
சேடமுண்‌ டிடினிற்‌ கொன் போற்‌ சிறுவனுண்‌ டாகு மென்ன
நீடிய களி கூர்ந்‌ துண்டந் நேயனுங்‌ குழவி யீன்றான்‌ –31–

மண்ணுளோர்‌ புகழப்‌ பன்னீ ராண்டவண்‌ வதிந்து வெவ்வே
றெண்ணமுற்‌ றிதர மாய சமயம தியல்பு கோக்க
நண்ணியங்‌ குளதே வெல்லா நலிதர வறிதல்‌ காணப்‌
பண்ணவ னாழி யானே பரமென வுறுதி கொண்டே –32–

மருமலர்‌ நறவ மாந்தி வண்டிமிர்ந்‌ தடருஞ்‌ சோலைத்‌
திருவலிக்‌ கேணி தன்னிற்‌ சென்ற மெய்ப்‌ பொறி யடக்கிக்‌
குருமணி வண்ண னுன்னிக் கொடுந்தவ முஞற்று நாளி
லெருது வெந் கொடு முக்‌ கண்ணா னெய்தின னுமை யோடன்றே–33-

வெறுமையா லறுவை கீறி வேளை போக்கிடப்‌ பொருத்து
மறிஞரை யுமைகாண்‌ குற்றிவ்‌ வறியனுக்‌ கருள்வா யின்று
தறுகண்வெங்‌ கயத்தோ லன்பா சார்ந்தென மறுக்கத்‌ தாழ
மறுவிலான்‌ முனவன்‌ நண்ண மதித்திடா திருந்துந் தேறான்‌ –34-

மாசிலாய்‌ நினது ளென்சொல்‌ வழங்குவ னெனவீ டென்ன
வாசிலா ததற்கு நாமோ ரதிகாரி யில்லை யென்னத்‌
தேசிக னகைத்தாங்‌ கேநின்‌ சீர்மை யிக்கலை பொருத்து
மூசிபோம்வழி நூலேனு முடன்‌ செலற்‌ குதவா யென்ன –35-

முக்கணான்‌ பரிகசித்தா னிவனென முனிந்து வெய்ய
வக்கனிக்‌ கணை விழிப்ப வவன்றவத்‌ தழலை யேவ
விக்கி நொந்‌ துயரேழ்‌ மால் பெய்‌ வித்‌ தும தவியா தெண்ணி
நக்கனும்‌ பக்தி சார நாமமிட்‌ டேகினானால்‌–36-

இத்தகை மழிசை வேந்த னிணைமரு திறுத்த வேந்தே
மத்தளை தயிர் பாலுண்ட மாயனே பரனென்றோ துந்
தத்துவப்‌ பொருளு மாறு சாத்திரப்‌ பொருளு மோர்ந்து
முத்தமிழதனில்‌ யாரு மொழி தரப்‌ புகன்றான்‌ மாதோ –37–

காரமர்‌ மேனி நங்கள்‌ கண்ணனின்‌ கவுத்துவாம்சத்‌
தார் கலி பரசு ராம னாணையி லொதுக்கித்‌ தந்த
கேரள நாட்டு மாதர்‌ கிளரொளி வதன நோக்கி
மாரவேண்‌ மயல் கொள்‌ வஞ்சிக்‌ களநக ரரசுகந்து–38-

அகனில முழுதுமோச்சு மரசனாங்‌ கொருவன் பால
வுகமுறு பராபவத்து ளோங்கிய மாசிச் சுக்லத்‌
திகல் கெடு தசமி பொன்னா ளெய்திய புனர் பூசத்திற்‌
பகலவ னொளியே யன்ன பைங் கதிர்க்‌ குழவியானான்‌–39-

சேரனுக்‌ கிள வலாகச்‌ செனித்‌ துவெண்‌ டிருமண் காப்பு
நேர்கொள் வைணவர்க ளோடு நித்தலும்‌ ராம காதை
யோரு நாட்‌ கரனோடெந்தை யொருவனாய்ப்‌ பொருதுங்‌ காதை
போரவு மொழியக்‌ கேட்டுப்‌ பொருதுவன்‌ கரனோடென்‌றே –40-

வழிகொடு கடந்த போத மைச்சரான்‌ மறை வலார்கள்‌
பழிபடு கரன் மற்‌ றுள்ள பரிகர மழிந்தாரென்று
மொழி தரு காதை சொல்ல முழக்கு பேரிகையை யென்‌ று
கழுகுலா மயிற்கை வேந்தன்‌ களிப்புடனிருந்தானம்மா–41-

இன்னவா றியைந்த வாய்மை யேதிலா வுழைய ரோர்ந்து
மன்னனுக்‌ கிவ்வா றோதும்‌ வைணவர்‌ நீக்க வென்று
ளுள்ளியவ்‌ வினன் செய்‌ பூசைக்‌ குரிய தென்‌ னரங்கன் சாத்தும்‌
பொன்னணி யாரந் தாமே கவர்ந்து பின்‌ புகலலுற்றார்‌–42–

கடகரி மருப்பொசித்த கண்ணன்‌ முத்தாரந்‌ தன்னை
மட மிலா விபுதராநின்‌ வைணவர்‌ கவர்ந்தா ரென்ன
வடலரசவர்கள்‌ செய்யா ரென்றுரை யாடிப் பாந்தட்‌
குடமதுட்‌ கையிட்‌ டன்னோர்க்‌ குறுதியே கூறினால்‌–43-

இனையன விழைத்த பேர்க ளுழையரென்‌ நினனுளெண்ணி
வனமணி மார்ப னெந்தை மாமதி லரங்க மேவித்‌
தனைக் குல சேகராழ்வா ரென்று பேர்‌ சாற்றப்‌ பெற்று
முனமுள ராம காதை மொழிந்தனன்‌ றமிழி லன்றே–44-

கள்ளவி ழளகபாரக்‌ கடைசியர்‌ களை கொய்‌ வேலை
பள்ளநீர்ப்‌ பழன முற்றும்‌ பங்கயல்‌ குமுத நீலத்‌
தொள்ளிய வுருவிற்‌ காட்ட வோதையிட்‌ டலமார்ந் தெங்குங்‌
கொள்ளை வண்‌ டுள மயங்குங்‌ கோமகன்‌ வழுதி நாட்டில்‌–45–

அல்லியங்‌ கோதை மாதரகனிலா மணி மாடஞ் சேர்‌
வில்லிபுத்தூரின்‌ மெய்ய விப்பிரர்‌ குலத்து முன்னஞ்‌
சொல்லு நற்‌ குரோதனத்திற்‌ றோன்‌றிய மிதுன சுக்லச்‌
செல்வ நற் பலகோளேகாதெசிகொள்‌ ஞாயிறு நன்னாளில்‌–46-

சோதிநாட்‌ கருடன்‌ சேயாய்ச்‌ தோன்றியப்‌ பருவஞ்‌ சென்று
நீதி நூ லனைத்தும் மோர்ந்து நிலமலர நந்தனான
வாதிமா லடியர்‌ தம்பா லன்பு பூண்‌ டவன் பதத்திற்‌
போது நந்தவனம்‌ வைத்துப பூந் தொடை யளித்து வந்தான்‌–47-

ஆவலிற்‌ றுளபமற்று மமுதுகு மலர்கள்‌ கொய்து
மாவல மார்பன்‌ செய்ய மலரடி சூட்டு நாளிற்‌
சீவல தேவனென்னுந் தென்னர்கோன்‌ பரமதாய
தேவினைத்‌ தெரிவா லுள்ளந்‌ திகைத்திருங்‌ கவலை பூண்டே–48-

ல்வியின்‌ முதிர்ந்து ஞானக்‌ கடலெனக்‌ கருணை பூத்த
செல்வ நம்‌ பியினைக் கூவித்‌ தேவினுட் பரமீதென்று
சொல்வதற்‌ குலகுளோரிற்‌ றுளக்கறு மறை மற்‌றுள்ள
பல்வகை நூல்களாய்ந்த பாவலர்த்‌ தேர்மினென்றான்‌–49-

இன்னிலத்‌ தியாவரேனு மிணையிலாப்‌ பரமீதென்று
நன்னெறி மநு நூன்‌ மற்று நான் மறை யெவையாலேனு
மன்னிடப்‌ பிரதிபாதிக்க வல்லரே லளவிலிந்தப்‌
பொன்னுறு கிழி யறுத்துப்‌ போவரென்‌ றறிவித்தானால்‌–50-

கற்றறிவாளர்‌ பல்லோர்‌ கசடற வறிந்தீ தென்று
சொற்றிடற்‌ கரியதாகச்‌ சோர்வுறப்‌ புதுவை வாழு
மற்றுறந்‌ திடவென்‌ றோட்டும்‌ வடபெருங்‌ கோயிலுள்ளா
னற்றை நா டொடையல்‌ சூட்டவ்‌ வன்பனின்‌ கனவிற்‌ சொல்வான்‌–51-

வார்ந்த வேல்‌ வழுதி கூடன்‌ மன்னர் கோன்‌ பரமீதென்‌ று
தேர்ந்திட வறிவிப்‌ போரிக்‌ கிழியறச்‌ செய்வாரென்‌ று
நேர்ந்தவ னாற்றி னான்‌ நிருபன தவைக்க ணீயுஞ்‌
சார்ந்திதென்‌ றறிவித்துப் பொன்‌ றனை யறுத்‌ திவணேகென்றான்‌–52-

கொழுஞ்சுட ரனைய நேமிக்‌ கோவல னுரைப்பவன்னோன்‌
அழுங்கி யு னடியிலன்பி னாய் மலர்‌ த்‌ தொடையல்‌ சூட்டுந்
தொழும்பல தறியா யான் மெய்ச்‌ சொரூபமீ தென்பான்‌ கொட்டுத்‌
தழும்பினைக்‌ காட்டி வீட்டத்‌ தக்கதோ கிழியை யென்றான்‌–53–

மெய்ய நின்‌ கவலை மாற்றி வேந்தன தவைக்கண் வாதஞ்‌
செய்யு நா ளெழுந்து யானுன்‌ சிந்தை வந் திருப்ப னஞ்ச
லய்யவென்‌ றிட வவ்‌ வன்ப னரசர் கோணவைக் கண் சென்று
பையராத்‌ துயிலு மாலே பரமென வறிவித்தானால்‌–54–

கொய்யுளைப்‌ பரிவேந் தன்னோன்‌ கூறிய தோர்ந்து பின்னுங்‌
கையிலங்‌ காழி மாலே பரமெனக்‌ கழறும்‌ வாய்மை
மெய்யெனில்‌ கிழி யறுந்து விழுமெனச்‌ சமையமெல்லா
நைய வீழ்ந்தது வெல்லோர்க்கு நாரணன்‌ பரமனென்ன–55-

மீனகேதனனுகந்தவ்‌ விபுதனைக்‌ களிற்றி லேற்றித்‌
தானைபின்‌ றொடர வீதி தனை வலம்‌ வருங் காலத்தில்‌
வானினான்‌ முகன் வேய்‌ முத்தன்‌ வார் தொழக்‌ கலுழன்மீது
தேனிறை துளவத்‌ தெந்தை சேவை தந் தருளக் கண்டே–56–

கூடினான்‌ களிதுலங்கக்‌ குணமிகு பரமன்‌ தாளைச்‌
சூடினான்‌ றுதி பல்காலுஞ்‌ சொல்லினான்‌ றுளங்‌கி நெஞ்சம்‌
வாடினா னிவர்கண்‌ ணீறு வருமெனத்‌ திருப்பல்லாண்டு
பாடினா னெவர்க்கு நீயே பரமெனத்‌ தொழுதான் மாதோ–57-

பொன்னவள்‌ கொழுநன்‌ வாழ்த்திப்‌ போனபின்‌ புனிதனாகும்‌
பின்னமி லிவர்க்குப்‌ பட்டர்‌ பிரானென நாமஞ்‌ சாத்திக்‌
கன்னவி றிரடோட்‌ காளை கனிந் திவர்க்‌ கடிமையாக
மன்னுமிவ்‌ வுலகிற்‌ பாக வத மியற்‌ றமிழ்செய்தானால்‌-58-

இளையவன்‌ புதுவை சென்றாங்‌ கெந்தைபான்‌ முன்னினந்தா
வனமதுபுரந்து செய்ய மலரளித்‌ திடுமோர் நாளிற்‌
கனவண னருளா னீளை கடிவனத்‌ துளவத் தூற்றிற்‌
சினமக ளுருவதாகத்‌ திருவின் வந்‌ தவதரித்தாள்‌–59-

மண்டமர்‌ கடந்த வாழி வடபெருங்‌ கோவிலார்க்குத்‌
தண்டுள வெடுக்குங்‌ காலத்‌ தளிர் நிறக்‌ குழவி தன்னைக்‌
கண்டுட னெடுத்து வந்து கனிவுடன்‌ வளர்க்க வன்னாள்‌
கொண்டலிற்‌ சுருளுங்‌ குஞ்சிக்‌ குழவி போய்ப்‌ பருவமுற்றான்‌–60-

ஒடரித்‌ தடங்கணாளவ்‌ வொளிமணி வண்ணற்‌ கன்னோன்‌
ஜோடவிம்‌ மலர்கள்‌ கொய்து தொடுத்து வைத்‌ தயல்‌ போங்‌ காலை
நாடியுள்‌ ளுகந்து நீண்ட நள்ளிரு ளளகந் தன்னிற்‌
சூடிநீர்க்‌ கிணற்றிற்‌ பார்த்துச்‌ சுற்றி வைத்‌ திடுமோர் நாளில்‌–61-

தார்வட பத்திரற்குச்‌ சாத்தவன்‌ னோனெடுக்க
வார்குழலிருப்ப நோக்‌கி மதி மலைந்‌ துழன்‌ று கெட்டுச்‌
சீர்கெழிம்‌ மடமான்‌ செய்த செய்கை யென்‌ றறிந்து மற்று
மேர் கொடே மலர் கொய்‌ தெந்தை யிணை யடி புனைந்தான்‌ மன்னே–62-

அம்மல ரணிந்த மாலவ்‌ வடியனின்‌ கனவிற்‌ சென்றப்‌
பொம்மல் வெம்‌ முலையாள்‌ சூடும்‌ போதுகந்‌ தளித்திடாதிச்‌
செம்மல ரளித்த தெற்குத்‌ திருவுள மிலையென்றேக
விம்மறை யோனு மன்னா ளிந்திரை யாமென் றெண்ணி–63-

படத்தர வணையானுள்ளப்‌ படிமல ரளித்துச்‌ சூடிக்‌
கொடுத்தவ ளென்று காமங்‌ கொழுங்கயற்‌ கண்ணிக் கீந்தான்‌
மடக்கொடி யுகந்‌து பொன்னி யரங்கனை மணந்து முன்னீ
ரிடத்‌ துப நிடதார்த்தத்தை யிசைத்தன டமிழிலன்றே–64-

கடி கொள் சந்தகிலுருட்டுங்‌ காவிரி நதிநீர்‌ சூழத்‌
தொடுநிரை விளைவாஞ்‌ சாலிச்‌ சோழநாடதனுள்‌ மண்டங்
குடிநக ருறையும்‌ விப்ர குலத்திலோர்‌ வனமாலாஞ்சத்‌
தடியர்பாற்‌ கலியுகத்தி லழகிய தனுமாதத்தில்–65-

கேட்டை நாளவதரித்‌துக்‌ கிளரொளி மகவாய்‌ ஞான
நாட்டமார்‌ விப்ர நாரா யணனென நாமம் பெற்று
வாட்டமின்‌ மறை கண்‌ மற்றை மனு முத னூல்க ளோர்ந்து
கோட்டமின்‌ மனத்தா னென்று கூறிட வதியுமெல்லை–66-

மஞ்சுயர்‌ மாட நீண்ட மாமதி லரங்கஞ்‌ சென்றோ
ரஞ்சன வண்ணன்‌ செம்பொ னடி யிணை வணங்க மாயோன்‌
கஞ்ச நீண்‌ மலரரிக்கட்‌ கடையரு ளளித்தன்‌ னோன்ற
னெஞ்சினைக்‌ கவர்ந்து தன்பா னே யவா னாக்கினானால்‌–67–

அற்றைநாண்‌ முதலன்னோ னெம்‌ மரங்கனே யரணென்‌
றுள்ளிற்‌ பற்றிமா மலர் கொணந்தா வனமது பரிவாய்‌ வைத்து
நற்றொடை யளித்துச்‌ செல்லு நாளொரு தினத்திலந் நா
டுற்றிடு திருக் கரம்ப னூரில் வாழ்‌ கணிகைமானாள்‌–68-

காவிவென்‌ றகன்று நீண்ட கயற்கணர்‌ துவர் வாய்த் தேவ
தேவகி யெனும் பேர்‌ கொள்ளுந்‌ தெரிவையு மிகுளை மாரு
மாவலி னிசளை யென்றோ ரணி நகர்க்‌ கரசன் பாற் சென்‌
றேவல்கள்‌ புரிந்து தன் பொ னெழினகர்க்‌ கெய்துமாறில்‌–69-

இவ்வெழில்‌ வனங்கண்‌ டுட்சென்‌ றெய்திரு வளநோக்‌ குங்கா
னவ்விகொணயரநி விப்ர காரணன்‌ றன்னைக்‌ காணச்‌
செவ்வியோ னிவளை யோர் கண்‌ டிரும்பியும்‌ பாரா நிற்க
வவ்வணி மாதுக்‌ குற்ற பின்னவ ளறை கின்றாளால்‌–70-

மைப்படு குழலி யிந்த வையகத்‌ தெவரையும் யான்‌
கைப்படுத்‌ துவனென்‌ நென்பாற்‌ கழறினை யலவோ விந்தத்‌
துப்பனை வசஞ்செயின்னீ தொழில் வல வேசி யென்ன
வெப்படி யேனு நங்கா யிவனை யென்‌ வசப்படுப்பேன்‌–71-

சூளென வுரைக்க மற்றோர்‌ தொன்னக ரடைய வீண்டு
வாளரி மதர்க்கட்‌ டேவ தேவகி வஞ்சமுற்று
நீளலர்‌ வனத்‌துக்‌ சுன்னோன்‌ பரிவுட னீரிறைக்கும்‌
வேளை பார்த்‌ திவளங்‌ குற்றம்‌ மடையினை விலக்கி வந்தாள்‌ –72-

இன்னணஞ்‌ சிலநாட்‌ சென்றவ்‌ வேதிலா னீயாரென்ன
நன்னய நிதி வெறுத்து நாயினேன்‌ பரனைக்‌ காண்பா
னுன்னடி பணிந்து சந்ம முய்ந்திட வந்தேனென்ன
வன்னவ னிசமென்‌ அள்ளி யவ்வனம்‌ பயிலுங் காலை–73-

வருடமோ ரிரவிற்‌ பெய்ய மறைவலான்‌ சிறுகுடிற்கு
ளிருடிபோல்‌ வேடங்கொண்ட விவளையான்‌ அழைக்க வந்தெ
னருடருக்‌ தவனே நின்றன டியினை வருடல்‌ செய்வேன்‌
முருடனே னென நயந்து முனிவனை வசஞ் செய்தாளால்‌–74-

அன்றுதொட்‌ டவளை யின்னே னிறையள வகலானாகிப்‌
பின்றொடர்ந்‌ தேக வன்னாள்‌ பின்னவள்‌ வியந்த பின்னர்ப்‌
பொன்தரத்‌ தரமிலாய்நீ போவெனப்‌ புகல மின்னாண்‌
முன்‌ றில்வற்‌ தணுகி யென்னோ முடங்கி நெஞ்‌ சுருகுங் காலை–75–

வாவிசூழரங்கன்‌ றன் பொன்‌ வட்டிலை யெடுத்தன்னோனா
லேலிய தூதன்‌ போல வெய்திய வேசி தன் முன்‌
மேவி வட்‌ டிலை யுன்‌ விப்ர நாரணன்‌ கொடுத்து விட்டா
னாவியி னவனைக் கூவி யணை கெனக்‌ கொடுத்த கன்றான்‌–76–

அன்னவன்‌ கொடுத்தகன்ற வனந்தர மவனைக்‌ கூவிப்‌
பின்னமி லணைந்து மற்றும்‌ பிற்றை நாள்‌ வெறுக்க வாங்கு
பொன்னரங் கேசன்‌ கோயிற்‌ பொலன் கொள்‌ வட்டிலைக்‌ காணாதீ
தென்ன காரண மென்றேங்கி யிறைவனுக்‌ கறிவித்‌ தாரால்‌–77-

செம்பியன்‌ சினத்தக்‌ கோயிற்‌ சேவக ரனைவோர்க் கூவி
யெம்பிரான்‌ வட்டி றன்னைக்‌ கவர்ந்த தாரியம்பீ ரென்று
வெம்பிட வருத்துங்காலவ்‌ வேசையின்‌ றூதி சென்றெம்‌
வம்பவிழளகத் தேவதேவகி மடமான்‌ கண்ணே—78-

அடுத்தவ னொருவன்‌ விப்ர நாரண னவன் றன்‌ றூதாய்‌
விடுத்தவ னொருவ னோர் பொன்‌ மேய வட்டிலைக் கைக்‌ கொண்டு
கொடுத்தன னதுவோ வென்று கூறு முன்‌ படை திரண்டவ்‌
வடுக்கணி மனைசோதித் தவ்‌ வட்டிலை யெடுத்தாங் கெய்தும்‌–79-

துப்பனை யழைத்து நின்றன்‌ றாதனார்‌ கவர்ந்த தென்னீ
செப்புவா யெனவுமன்னோன்‌ செப்பலென்‌ றூதுமில்லை
யிப் பொன்‌ வட்டிலையும்‌ யானிங்‌ கெடுத்ததி லென வேந் துள்ளம்‌
வெப்பியன்‌ னோனைக்‌ காவற்‌ படுத்திட விளம்பிச்‌ சென்றான்‌–80-

பொன்னிசூழரங்கனிந்தப்‌ புனிதனொன்‌ றறியான்‌ யானே
யன்னவ ளிடத்திற்‌ சென்றிவ்‌ வட்டிலை யளித் தன்னோன்ற
னன்னயத்‌ தூதனென்று நவின்றன னென்று வைவேன்‌
மன்னவ னருகிற்‌ சென்று கனவுரை வழங்கனானால்–81-

கேட்டமன்‌ னவனாமென்ன கேடிழைத்‌ தனமென்‌ றுள்ளம்‌
வாட்டழுற்‌ றவணெழுந்தம்‌ மறை வலான்‌ சிறையை நீக்‌கிக்‌
கோட்டமின்‌ மனத்தனோ யென்‌ கொடும்பிழை பொறுத்தி யென்று
தாட்டுணை தழுவ வன்னோன்‌ றன்பிழை குறித் தயர்ந்தே–82-

முன்னினந் தவனம் வைத்தம்‌ முகிழ் மலர்த்‌ தொடையல்‌ சூட்டித்‌
தென்னரங்‌ சேசன்‌ மெய்ய திருவடித்‌ தொழும்பனாகி
யன்னவ னடியவர்க்கு மடியர்காற்‌ றுகணாமங்கொண்
டின்னியல்‌ வேதாந்தார்த்த மிசைத்தனன்‌ றமிழிலன்றே–83-

ஒதமா னீர்கொள்‌ பொன்னி யுலவு தண்‌ சோழ நாட்டின்‌
மாதவர்‌ வேள்வி நாளும்‌ வளர்த்திடு முறந்தை தன்னிற்‌
சீதவா ரங்கொழிக்குஞ்‌ செய்யுறு கதிரினுளளே
கோதறு கலி யுகத்திற்‌ கூறு துன்‌ மதியப்தத்தில்‌–84–

விருச்சிக மதியிற்‌ புந்தி விமாநநாள்‌ ஸ்ரீவத்ஸாஞ்சத்‌
துருக்கிளர்‌ மதலை யாயங்குதித்தழ வுழவன்‌ காணாத்‌
தருக்குடனெடுத்தச் சேயைத்‌ தன் மனை வளர்க்கச் சேயுந்‌
தெருட்சியின் முதிர்ந்த ஞானச்‌ சிந்தையாய் வளர்ந்து பின்னர்‌–85-

நித்தனு மரங்கத் துற்றுத்‌ திரு முகத்‌ துறைக்கு நேர் நின்‌
றத்தனை மனத்துட்‌ கொண்டம்‌ கவன் குணம்‌ பலவும்‌ சொல்லிப்‌
பித்தரிற்‌ கடையனேனென்‌ பிறப்பறுத்‌ தருள்வா யென்று
புத்தல ரடிவணங்கிப்‌ போரு நாளொரு நாளாங்கே–86–

போதுலாம்‌ பொதும்பர்‌ சூழும்‌ பொன்னரங் கேசனாரக்
கோதிலாற்‌ கருள்வானெண்ணிக்‌ குண மிகு முனிவனாகும்‌
வேத சாரங்கன்‌ றன்பான்‌ மேவு புகன வினீநஞ்‌
சீதவார்‌ புனலலைக்குந் திரு முகத்‌ துறைக் கண்‌ சென்று –87–

அங்கிருந் தொரு வனம்பா லன்பினின்‌ றகலா னாடகிச்‌
செங்கர முடி மேல்‌ வைத்தித்‌ திசை தொழு திறைஞ்டு நிற்கும்‌
புங்கவன்‌ றனை நின்றோளிற்‌ பொலிய வைக்‌ திவண் வாவென்‌று
வங்கமா கடல் கடைந்த மாயவனருளிச்‌ சென்றான்‌–88-

அவ்வுரை முனிவன்‌ கேளா வன்புடனெழுந் தாங்குற்ற
செவ்வியோன்‌ றனை யழைப்பச்‌ சிறியனான்‌ புலை யனையா
எவ்வண மெழுவேனென்ன விசைத்தனன்‌ றிருத் தோளேற்றிப்‌
பவ்வநீ ரணை படுத்த பாழியான்‌ றிருமுன்‌ புய்த்தான்‌–89-

வண்டின முரலுந்தாம வனமணி மார்பன்‌ றன்னைக்‌
கண்டுள நிறையாநந்த நீரிரு கண்ணுங்‌ காட்ட
வண்டர் நாயகனை வாழ்த்தி யவனருளமுத மாந்திப்‌
பண்டு போம்‌ பொருள் கிடைத்த படி யுள மகிழ்ந்தா னன்றே–90-

மாட மாளிகை யரங்க மறைவலா ரிவனை வாழ்த்திக்‌
கோடுடைப் பரனுக்குற்ற குணங்களி லீடுபட்டுப்‌
பாடலி லுனக்கு நாமம்‌ பாண் பெரு மாளென்‌றோத
வீடிலான்‌ வேதாந்தார்த்த மிசைத்தனன்‌ றமிழிலன்றே–91–

கொல்லுலைப்‌ படுவே லங்கைக்‌ கோமகன்‌ வதி சோணாட்டுட்‌
சில்லரிச்‌ சிலம்பு மாதர்‌ செறி தரு குறையலூரி
லல்லி நற்‌ கமலக் கண்ண னழகிய தனு வஞ்சத்தின்‌
மல்லலங்‌ கலி யுகத்தில்‌ வரு நள வருடமன்னோ–92-

பொங்கு கார்த்திகை யுவாவிற்‌ பொன்னெரி நாளினல்ல
மங்கல யோக நான்காம்‌ வருணம துதித்து நாமம்‌
நங்குல நீல னென்று நவின்றிட வளவன்‌ றன்னாற்‌
சங்கையி னிதிபடைத்தோர்‌ தரணியும்‌ புரந்து வந்தான்‌–93–

ஆவியி லுலக மோம்பு மவன் றிரு நகரி லுள்ளோர்‌
வாவியி லரம்பை மாதர்‌ வைகலு மாட வோர்நாட்‌
கூவிளங்‌ கனி மென்‌ கொங்கைக்‌ கொடி யிடைக்‌ கமல மாது
மேவியிப்‌ புவிமானென்ன வியந்து நீராடி னாளால்‌–94–

அன்னவ ளடைதலோடு மரம்பைய ரகலக்‌ கண்டார்‌
பொன்னவ டனிக்க வாங்கோர்‌ புனிதன் வந் திவளை நோக்கா
நின்னிட மெவணின்‌ பேரென்‌ னிற்றலென்‌ றனித்திங்‌ கென்னக்‌
கன்னலிற்‌ கனிந்த தீஞ்சொற்‌ கன்னியும்‌ கழறு வாளால்‌-95-

நாக மங்கையரோ டிங்கு நணுகின னெனை யன்னோர் விட்‌
டேகின ரினியுன்‌ பண்டி யெய்திய மகள் யா னென்னக்‌
கேகையச்‌ சாயன்‌ மாதைக்‌ கிழத்தி பா லளித்து நாளும்‌
பாகமா ரமுத மூட்டிப்‌ பரிவுடன்‌ வளர்க்குங்‌ காலை–96-

நீலனவ்‌ வநகன்பாலோர்‌ நேரிழை யியைந்‌து வாழுஞ்‌
சீலம தறிந்தனாளைத்‌ திருமணஞ்‌ செய்ய வென்று
கோலியாங்‌ கணுகிச்‌ செம் பொன்‌ குறை வறக்‌ கொடுக்க வன்னோன்‌
னேலவார்‌ குழலி யுள்ள மென்றவ னியம்பப் பின்னர்–97-

குருகுலாமயிற்கை வேந்தன்‌ கோகில மொழியைக் கேட்கத்‌
திரு விலச்சனை யுண்டாகிற்‌ செய்வனென்றுரைப்பச் சென்று
மருமலர்ப் பொதும்பர் சூழு மாமதி னறையூர் நம்பி
யருளினன்‌ றிருமுன் பெற்றீண்ட டைதலு மவள் பின்‌ சொல்வாள்‌–98-

வான்றொடை புனை நாட்‌ டொட்டோர்‌ வருடமதளவுமெற்கோர்‌
நோன்பது வைணவர்க்கு ணூறு பேரழைத்து நித்தம்‌
பான்மிசை கருனை மற்றும்‌ பல மளித்‌ தவருண்பிக்கி
னானுனை மணப்பே னென்ன நன்றென மணஞ் செய்தானால்‌–99-

மன்றலா னது தொட்‌ டன்னோன்‌ வைணவர்க் களித்துக் காணாக்‌
குன்றிய நிதியோ னாயுட்‌ குழைவது வளவன்‌ கேட்டு
யின்‌று நந் நிலுவை வாங்க யேகு மென்‌ றுரைக்கத் தூதர்‌
சென்றிட முனிந்தி லென்னச்‌ செம்பியன்‌ சிறையிலிட்டான்‌—100-

வெம்பிய சிறையி லன்னோன்‌ வெதும்ப நும்‌ வேக்கிறைக்கும்‌
வம்பவிழ்‌ கமலத் தொங்கல்‌ வைணவர்‌ வேழ்விக்கும் யான்‌
அம் பொன தளிப்பே னென்றங்‌ கத்தி மா நகரத்‌ தெம்மா
னெம்பதிக்‌ கேகென்‌ றன்னோற்‌ கியம்பினன்‌ கனவிலன்றே–101-

அக்கன வறியா நீல னத்திமா நரகம்‌ வந்து
மிக்க நும்‌ பகுதி கோடி வேந்தென விசைந்தவ்‌ வூருட்‌
புக்க நன்‌ னிதி காணாது புலர்ந்திடக்‌ கனவில்‌ வந்து
சக்கரத்‌ தெந்தை காட்டுந் தனத்தவர்க்‌ குளதளித்தான்‌–102-

மற்ற நன்னிதியு முன் போல்‌ வைணவர்க் களிக்கக் காணா
துற்றிட வழிப் பறி செய்‌து,தவவவ்‌ வேள்விக்கோர் நாள்‌
சொற்றெரி வீழி துயின்ற மாயவன்‌ றிருவினோடு
விற்றிரட்‌ பணி பூண்‌ டாற்றின்‌ மேவினன்‌ கிழவோரன்ன–103-

அன்னவ ரடைய நீல னகமகிழ்ந் தணுகி வல்லை
பொன்னணி பறித்தன்‌ னோர்தம்‌ பொற் கலை விரித்து வைத்து
பன்னக நடித்த பொற்றாட்‌ பவள மெல்‌ விரலின்‌ மிஞ்சி
தன்னை வெள்‌ ளெயிற்றால்‌ வாங்கித்‌ தானைவைத்‌ தெடுக்குங் காலை–104-

அந்தர மசைபட்டாலு மசை படா விதனை யோர்ந்து
கந்துகக்‌ களினு போல்வான்‌ காய்சினத்‌ தவனை நோக்கி
மந்திர முணர்ந்தாய்‌ கொல்லோ மறை வலா வதையான்‌ றேறத்
தந்திடில்‌ விவெனென்னச்‌ சக்கரத்‌ தெந்தை சொல்லும்–105-

வழிப்பறிக்‌ கபடர்‌ மேலாம்‌ வள்ளலிம்‌ மந்திரந் தான்‌
விழுமிய ததினாலிந்த மென் மலர்‌ வாவி யுண்ணீ
முழுகி நாமமு மணிந்‌துண்‌ மொய்த்தவன்‌ பகலத்‌ தென்னை
தொழுது பின்‌ வினவிற்‌ சொல்வன்‌ றூய வென்னலு மிசைந்தான்‌–106-

மாதவ னடியை வாழ்த்தி வலச் செவி கொடுக்க வன்னோன்‌
கோத றட்டாக் கரத்தைக்‌ கூறவு மிருளகன்று
போதமுற்‌ றெனை யிவ்‌ வாறிற்‌ போந்துனதடிக் காட் செய்த
நாதனே கண்டு கொண்டே னாரண னாமமென்றே–107–

சூடினான்‌ மடி மாங்காயிட்‌ டடியனை வழித் தொண்‌ டாக்குங்‌
கோடுளாய்‌ மாதரார்தங்‌ கூர் விழி வலையிற்‌ பட்டு
வாடினேன்‌ வாடி யென்றும்‌ வருந்தினே னெனப்‌ பாமாலை
பாடினான்‌ பரமீதென்று பாருளோர்‌ தெளிய மாதோ–108-

பொன்வரைக்‌ குடுமி மீதூர்‌ புயலெனக்‌ கலுழன்மீது
கன்னியர்‌ அளவினானுங்‌ காட்சி தந்தருளிப்‌ பின்னர்‌
மன்னு நங்‌ கலிய னென்று நாமமும் வழங்கிச்‌ செல்ல
வின்னவ னுகந்தம்‌ மாயன்‌ பதிதொறு மிறைஞ்ச வென்றே–109-

நாடிப்பல்‌ பதிகஞ்‌ சொல்லி நாற் கவிப்‌ புலவனென்று
நீடிய விருது பெற்று நிகழுறும் பொழுது கொன்றை
சூடியின்‌ கழல் சம்பந்த தூதனாங் கொருவன்‌ செல்லா
ஏட வெம்‌ மிறை போலிந்த விருதுனக்‌ கிசையாதென்ன–110-

கலியனீ தறிந்திவ்‌ வண்ணம்‌ விருது கொள்‌ கவியின்‌ மிக்க
வலியன தவைக்கண்‌ சென்றியாம்‌ வாதமே புரிவ மென்று
சொலிவரு மிவனை யன்னோன்‌ றூயனென்‌ றறியானாி
வெலுவமென்‌ றெண்ணி நீயோர்‌ குறளினை விளம்பென்றானால்‌–111–

இந்தவா றுரைப்ப நெஞ்சத்‌ தேதிலாக்‌ கலியனோர்ந்தே
யந்தமா நகர்க்குள்‌ வைகும்‌ வைணவத்‌ தம்மை யாரை
யெந்தமக்‌ குமது பூசை யெம்பிரான்‌ றனை நீர் சற்றே
தந்திடு மெனக்கைக்‌ கொண்டச்‌ சார்ங்கனை யெதிரில்‌ வைத்தே–112-

ஒருகுற ளென்றெடுத்துப்‌ பதிகமொன்‌ றுரைத்துத்‌ தான்கொள்‌
விருதுகள் அனைத்தையும் கூறி வென்ற பின் இவனை யன்னோன்
திருவடி வணங்கி நாயேன்‌ செய் பிழை பொறுத்தி யென்று
பருதி முன்‌ சசியினின்று பரகால னென்று போனான்–113-

நாரணன்‌ பதிகடோறு நாடியன்‌ னவனும்‌ வாழ்த்தி
யாரணப்‌ பொருளீ தென்றுள்‌ ளறிந்து பற்‌ பதிகமாக
பாரணு முயிர்கள்‌ செய்ய பழ வினை யறுத்துய்தற்‌குக்‌
காரணமாகச் செய்தான் கலியனும்‌ தமிழின் மன்னோ–114-

திருப் புளி யாழ்வார்‌

நன்னய துவாபர சயத்தினலி வில்லா மன்னு மிதுநத்தில்வரு மாசிறிரு மூலம்‌
பன்னக வரோதய னுகந்து பனி மாலூ ரின்னறு மலர்ப் புளி யுருக் கொடி வனுற்றான்‌-115-

இங்கன முரைத்தடு ப்ர பந்நர்களிவர்க்கே
யங்கமென வுற்றிடுவ ரண்ணலினி நீ யிப்‌
புங்கவனை நம் புதல்வ னென்று புகலாது
வங்கமவி பவ்வமதி மாயனென வெண்ணீ -116-

கற்றின மறித்ததோர்‌ கழைத்தலை யிடத்தும்‌
புற்றரவ மீதும் விழி போதவள ரெந்தை
சிற்‌றுருவினேரிலிவன்‌ சென்‌று தனடிக்காட்‌
பற்றிய நின்‌ பேரினுயர்‌ பாரிலெவருள்ளார்‌–117-

வாரிச நிகேதனன்‌ மலைத் தெரிவை பாகன்‌ ஈரிமு மறைக்குவடு மின்னு மறியாத
சூரிகள்‌ பராவுமிவன்‌ றொண்டு புரிகின்ற வாரிய நினாது புக ழாருரை செய்கிற்பாற்‌,–118-

வெஞ்சமர்‌ கடந்தவிறல்‌ வேக்தென விளம்ப
நெஞ்சிரு ளகன்‌ றுவகை நீள்கடலழுந்தா
வெஞ்சலிலிவன்பர னெனும்வகை தெரிந்தே
வஞ்சலி புரிந்திறைவ னம்முனி பணிந்தான்‌-119-

இத்தகைமை யுற்றபுக ழெய்து முதிர்‌ ஞானத்‌
தத்துவ முனிப்பர னடித்துணை யிறைஞ்சா
நத்தியுல காய சட நாசனென நாமம்‌
முத்தி தருகானரு முதற்கினி தளித்தே–120-

எம்பிறவி வெவ்வலை யிறக்கருணை கூரும்‌
நம்பி யருள் செய்த மொழி நாயினன்‌ மறந்தே
வம்புலவு பைந் துளவ மாலை யணி மார்பா
கொம்புலவு திந்தரிணி கொண்ட சடகோபா–121-

கண்ண நினை யிவ்வுலகர்‌ காள்‌ முளையினெஞ்சத்‌
தெண்ணி யடியன் பிழை யிழைத்தது பொறுத்தி
விண்ணவிர்‌ திருப்புளி வியந்த பெருமானே
தண்ணளி யெனுங்கட றதும்பு சடகோபா–122-

என்‌றுபல வாறுள மியைந்து பணி மாறி நன்‌று புரி யாத பவ நாடி நனி செய்யுந்
தன்றனைய னாயவன்‌ சனித்த வரு ளோரா நின்று பு திகைத்து பு நினைந்து பு மகிழ்ந்தே–123-

என்னை யுல கோர்பொரு ளெனத் திரு வுளத்தி
துன்னி யருள்‌ வான் வயி றுதித்த பெருமானா
நின்னை மக வென்ற பிழை நீ பொறு வெனத்தார்‌
மன்னவ னிரந்‌து பு மலர்க்கழல்‌ பணிந்தான்‌–124-

அன்னவ னிறைஞ்சலு மருட்கொடளி சூழாத்‌
தென்னவெனு மாலையன்முன்‌ செய்யு மவதாரந்‌
தன்னை முழு தும் மவன்‌ றனா துளம்‌ வியப்பப்‌
பின்னமி லளித்தனன்‌ பிறப்பினை யறுப்பான்‌–125–

தாறுகொள்‌ மதக்கரி தடிந்த விறை தந்த
வீறிலவ தாரமதி லின்புற வுளங்கண்‌
மாறில் வகை பற்றவுடன்‌ வாய் புகழ வென்போற்
பேறுறுவ ரார் கொலெனவே பெரிதுவந்தான்‌.–126-

இன்னண நவின்‌ றுவல மெய்தியிம மால்கொண்
மின்னெனு நுடங்கடை விழிக்கரு விளைப்பூ
கன்னியுட னப் பரன்‌ கழற்றுணைபணிந்தே
நன்னக ரடைந்து நித நாடுவர் தொழற்கே–127–

பதின்மர்‌ திரு வரன்முறைப்‌ படலம் முற்ரம்

நூற்றெட்டுத்‌ திருப் பதிப்‌ படலம்‌

திரு மகழ்‌ மார்பரங்கன்‌ நிருவடித்‌ துணையதாகு
மருமகிழ்‌ மாலை மாறன்‌ மலர்ப் பதத்‌ தினிதுவாழு
மிருமகி தலத்துளோங்கு மெதிபதி சரணம் போற்றி
யருமகிமைய நூற்றெட்டா மரும்பதிப்‌ படலஞ்‌ சொல்வாம்‌–1-

குருதிகொப்பளிக்கும்‌ வைவேற்‌ கொற்றவன்‌ றேவிசேரப்‌
பருதியிற்‌ றிகழு மேனிப்‌ பரமனை யிவ் வாறாகக்‌
கருதிநித்தமும்‌ போந்தன்னான்‌ கழறொழு தினிய செய்யுட்‌
டருதவத்‌ திறையை நீ கொள்‌ தகையார் பெற்றாரென் றேத்தி–2-

அண்டமு மண்டத்துற்ற சராசர மனைத்து மாகும்‌
புண்டரீகக்கண்‌ ணாழிப்‌ புங்கவன்‌ போந்து போந்திவ்‌
வெண்டிசை போற்றச்‌ செய்த வெழில் விபவாவதாரந்
தண்டரை யின்றர்ச்சாவதாரமாய் விளங்கலாலே–3–

அன்னது நிகர்ப்ப நம்பா லடைந்தவதாரஞ்‌ செய்த
பன்னருஞ்‌ சிறப்புற் றோங்கிப்‌ பரமனு மிவ்வாறாவா
னென்ன மண்ட லங்கள்‌ காக்கு மெழின் முடி மன்னர் போந்தே
சென்னி தாழ்ந்‌ திறைஞ்சும்‌ வேந்தன்‌ றிருவுளத்‌ தெண்ணா நின்றே–4-

பொனனக ரிமையோர்‌ போற்றப்‌ பொலிந்து நின்‌ றருளுமாதி
சினகரத்தினுக்குத்‌ தெற்கிற்‌ றிகழ் திருப்‌ புளியின்‌ கீழ் பா
லன காற்‌ புளத்து வாழு மனைய மாறனுக்குக்‌ கோயில்‌
கனக ரத்தினத்தினாலே கவின் பெற வமைத்துப்‌ பின்னர்‌–5–

சங்கராசனுக்கு முத்தித்‌ தலமுகந் தளித்த வாதிப்‌
புங்கவன்‌ மிக்க வாதிப்‌ புனிதன்‌ றன்பாற்‌ றனாது
தங்கு நீர்‌ வளங் கொண்டோங்குந் தரை யெழி னகராங்குள்ள
மங்கல நிதிபூண்‌ மற்றும்‌ வளமெலா முகந்து நல்கி–6–

பாட்டளி துதைந்து பாடும்‌ பனிவளர்‌ வகுளத்‌ தெம்மான்‌
றாட்டுணை கருதியன்னோன்‌ றழை விழிக்‌ கருணையாலே
வாட்டடங்‌ கண்ணாணங்கை மாதொடுஞ்‌ சின்னாளீங்கு
வேட்டனன்‌ வைகி வேந்தன்‌ விளம்பரும்‌ பதியிற் சேர்ந்தான்‌–7-

அனையவ ரிவ்வாருக வணி பெருஞ்‌ சுடர் கொள்‌ மேனி
புனை தரும்‌ வகுளத்‌ தெம்மான்‌ பொற்றிரு வடித் துணைக்கே
தனை நிகர்‌ மதுரச்‌ செய்யுட்‌ டவப்பிரான்‌ பலவாறாய
நினைவரு மடிமை செய்யா நின்‌று முன்‌ னினைய சொல்வான்‌–8-

எளியனா மடியேற்‌ ஒன்று ஹித புரு டார்த்த தத்வங்‌
களை விளக்‌ குறு விசேடார்த்‌ தங்களை யெல்லாங்‌ கைசே
ருள மயக்‌ கறவே யுள்ள முகந்துரைத்‌ தருடி. யென்றே
வள மலர்க்‌ கரங்கள்‌ கூப்பி வணங்‌கினன்‌ வழங்கினானால்‌–9–

இன்னணம்‌ பரமன்‌ முன்ன ரிசைத்தன னிற்குங்காலை
அன்னு மெய்ஞ்ஞான நித்ய சூரி கடமக்கிலாது
பின்னெவர்களுக்கு மெட்டாப்‌ பேறுரித்‌ தாகி யோங்கும்‌
தன்னிக ரில்லா வைகுந் தத்தினிற்‌ பொலிந்து வாழும்‌–10-

திரு வினாயக னொண்போதின்‌ செல்வனன்‌ றிட்ட சாப
மிருவிநாயகன்‌ றாதைக்கன்‌ றீர்த்தவன்‌ கமல பாத
மருவினாய கருவோட்டி வானுகந் தளிக்கு மெம்மான்‌
பொரு வினாயக மாறற்குப்‌ புகழ்ந் தெதிர்‌ விழி கொடுப்பான்‌–11–

கருத்தினிற்‌ கருதா முன்னர்க்‌ கலுழனு முன்னர்‌த் தோன்ற
வெருத்தமீ தலரின்‌ மேன்மா திரு நில மாது நீளை
யருத்தி யி னுடன் வந்தேற வவிர் பொலன்‌ கிரியின் மீது
கருத்ததோர் வெற்‌ புவந்து கலந்தெனத்‌ திகழத் தோன்றி–12–

இருமருங் கினிது வாழு மிந்திரை முதலா மூவர்‌
கரு விழி யெனுங்கார்‌ வண்டின்‌ கண் முக மலரின் வீழப்‌
பொருதயிற்‌ றிகிரி யாதி பூங்கரத்‌ தடக்குந்துய்ய
செருவிகற்‌ படை களைந்து முறை முறை திகழ்மின் காட்ட–13–

அங்கையிற்‌ பிரம்பொன்‌ றேந்தி யண்டாண்ட முழுதுங்‌ காக்கும்‌
பொங்கருட்‌ சேனை நாதன்‌ புகழ்ந்தனன்‌ முன்னரேகத்‌
துங்கலில்‌ வினை தீர்‌ நித்ய சூரிகள்‌ நெருக்கிப் பக்க
மெங்கிலுஞ்‌ சூழ்ந்து சென்னி யெழிற்கா முகிழ்த்தாராகி –14–

பாயிர மறைகணான்கும்‌ பாடுறப்‌ பலர்கள்‌ சில்லோ
ராயிர ஈாமங்‌ கூறி யடியினை பணிந்தாரேத்த
தூயவர்‌ சிலர் ப்ர தாபஞ்‌ சொல்லியங் கர முகிழ்த்தா
ராயவண்‌ வெகுபராக்கென்‌ றன்னவ ரெழுச்சி கூர–15–

தாணுவயனே முதலர்‌ காணரிய மாயன்‌ றனக்கு விழி யிற்றுறு மெனத்தமதுளத்தே |
பூணரிய சங்கைகொடு மாணுறு மநேகர்‌ பொங்கு பல வாழியொடு மங்கள முரைப்பச்‌
சேணிமிரு வெண்மதியின்‌ வாணில வெறிக்குஞ்‌ சித்திர மிழைத்தபல சத்திர மெடுத்தே
யேணுடைய இற்சிலர்க ணீணசையி னொடு மெழிற்றிரு வொண்‌ மேனி யினிழற்றினர்கள்‌ செல்ல–16-

ஆமவர்க ளிற்சிலர் க டேமருவுமென்பூ வாசறுமி னாசை யுறு தூசி னொடு சுண்ணம்‌
பூமருவு மங்கை கொட மா மணமும்‌ வீசப்‌ போதமிக வுற்ற சிலர்‌ போதவு மிரட்டும்‌
காமரொணி லாவுலவு சாமரைக ளன்னான்‌ காயமெனு மார்கலியின்‌ மேயகவினங்கத்‌
தாமரையை நாடி வரு கோமள மிகும்புட்‌ சாதியி னுயர்ந்த பல வோதிமநிகர்ப்ப–17-

மந்தவிள மாருத மிகுந்தடைய வால வட்டமல ரங்கைகொடு சிட்டர் பலர் வீச
விந்தை யுறு பற்பலர்கள்‌ சிந்தை மகிழ்‌வோடும்‌ விசித்திர விநோத வொண்‌ விசுத்த விருதுக்க
ளந்தமற வங்கை கொடு முந்தினர்‌ நடப்ப வற்புத மிகுந்தணிய பொற் புலவு மின்னா
ரெந்தையி னருங்குண முகந்‌ தினி துரைத்தே யின்னிசை யிசைத்‌தனர் கண்‌ முன்னுற நடப்ப–18-

௮ண்ட பகிரண்டமுமு துண்ட விறை வந்தா னக்கனய னுக்கரிய விக்கிரமன்‌ வந்தான்‌
முண்ட கமின்‌ மார்பினிடை கொண்டபரன்‌ வந்தான்‌ முற்றுமுயிர்‌ தானாக வுற்றவ னடைந்‌தான்‌
பண்டைமறை நாலினிலுங்‌ கண்டறிய கில்லாப்‌ பராதீன மற்றிலகு புராதன னெழுந்த
னெண்டிசையு மண்டிசைகொள்‌ கொண்டல் வணன்‌ வந்தா னென்று பல நற்கின ஈயின்‌ றன கறங்க–19-

ஆடக மணிக் குழைகள்‌ பாடலை தரப்பொன்‌ னரத்தவொ ணரிப்பரி புரத்தொலி கறங்க
பாடக வடித்துணையி டக ஈடித்தே பான்மொழியர்‌ சிற் சிலர் கண்‌ மேன்மையி னடப்ப
மாடக முடுத்ததிரை நாடிய முழக்கோ மாறரிய கோடையிடி யேறது கொலென்ற
நீடக மயிர்ப்புறவே கோடணிய காள நிகழ்த்தரிய பல்லிய மிகுத்தன கறங்க-20-

இன்னன வளங்களய முன்னின நடப்ப வெங்கிலு நிறைந்‌ துறையு மங்கள முகுந்தன்‌
பன்னக முடித்தலய னின்னலொழி யெம்மான்‌ பங்கய வரும் பனைய கொங்கை யயிராணி
மன்னவன்‌ முதற்சுரர்க டன்னடி வணங்க வந்தருள்‌ புரிக சவ னெழுந்தனன்‌ விரைந்தே)
தன்னை நிகராய சுட ரென்னவொளி பொங்கிச்‌ சந்தமுறு மாறனெதி ரந்தர நிறைந்தான்‌–21-

வாரண மளித்தருளு நாரணனிவ்‌ வாறு வானக மிசைப் பொலிய வானகு மகழ்ப்பூந்
தாரணியு மார்பனிசை தாரணி யுயர்ந்தோன்‌ றன்னடி வணங்குமவர்‌ துன்னு வினை தீர்ப்பான்‌
சீரணிய பொற் கமல வேரணிப கண்கடிறந்து வகை நீர் மடை திறந் தொழுக நீல்வா
ணேரணவு குஞ்சி மிசை யாரமலரங்கை நிகழ்த்தரிய வன்பொடு முகிழ்த்தன னுவந்தே –22-

செங்கவி னுறு பைங்‌ கமலம் வீற்‌றிருக்குந் திருமக ணாயக னெம்மான்‌
சங்குடன்‌ பதும விரேகைகள்‌ பரந்து தாமரை மலரொடு மிகலிப்‌
பொங்குமெய்‌ யுளவன்‌ பொடு தொழு மவர்கள்‌ பொருந்‌த வெம்‌ பவப் பிணி மருந்தா
யங்கண் மா ஞால மகலிரு விசும்பு மளந்த பொற்‌ றிருவடித்‌ துணையும்‌ –23-

வானகத்‌ தவிருஞ்‌ செக்களை யனைய வயங்குமாற்‌ றுயர்ந் தொளிர்‌ பசும்பொன்‌
னான நற்‌ கலையை நன்மருங்‌ கலைப்ப வணிந்தெழிலுறுதிரு வரையு
மூனமி லொருநான்‌ முகத்தனை யளிக்கு மொளி கொள் பைங் கமல முன்‌ னளித்த
கானகு மலரிற்‌ புடைபரந்‌தகன்று கவினுறு நாபிநற்‌ றலமும்‌ –24-

அழிவுறு முடிவி லெண்ணிலண்‌ டாண்ட மதனுள சராசரத்‌ தொகை கண்‌
முழுமையு நெருங்கி யடங்குறு மிடமா மொய்யொளி யுதர பந்தனமும்
வழுவறுஞ்‌ சரச வீட்ட ர சுகந்த மாணிழை மடந்தையுள்‌ ளூகந்தெப்‌
பொழுது முள்‌ வதியு மஞ்சன வரையிற்‌ பொற்புறு மார்பின திடமும்‌ –25-

அத்திரு மருமத்‌ துற்றினி திவகு மணியபொன்‌ முப்புரி யிழையும்‌
நத்திவண்‌ மனக்க ளிணைந்திசை முரன்று நறைத் துளி யுண்டடை கிடக்கப்‌
பத்தெனும்‌ இசையு மணம் புகுந் தொளிரப்‌ பரவு வண்‌ டிருத் துழாயணியு
மத்தியி னிலகுங்‌ கெளத்துவ மணியும்‌ வற்சமென்‌ றுரை திரு மருவும்‌ –26-

ஒன்னல ருதிர மலகையுண்‌ டுவப்ப வுதவிய திதிரியை முதலா
மன்னுமைம்‌ படைக டாங்கி நன்‌ கமல மலரெனச்‌ சிவந்தொளிர்‌ கரமு
மின்னொளி கதுவு மங்கத மணிந்து வெற்பிரு நான்கொடு மிகலிப்‌
பொன்னக ருவப்பப்‌ புணரி முன்‌ கடைந்து பொற்புறு மீரிரு புயமும்‌ –27-

அண்டமுண்‌ டுகந்த கண்டமுங்‌ கரந்தன்‌ றாய்ச்சியர்‌ மத்தளை தயிர்‌ பா
லுண்டு விண்‌ டிலகு முண்டக மலரி னொளிர்ந்தனி யரக்கெனச்‌ சிவப்புட்‌
கொண்டு கண்‌ டவர் கண்‌ கவர்ந்திடு வாயுங்‌ கோமள மிகுந்தகன்‌ றருளுண்‌
மண்டு செங்‌ கமல மலரினுக்‌ கிணை செவ்‌வரி பரந்‌ துயர்ந்த கணினையும்‌–28-

வாமவிற்‌ புருவத்‌ துணையும் வெண்‌ பிறையின்‌ மலிந்த நன்‌ நுதற்றிகழ் நான
நாமமுங் கமல மலரெனப்‌ பொலிந்து நவை யிலா வட்ட வொண் மதியிற்
றூமலி கவினுற்‌ றிலகு மாநநமுந் துன்றிய கதிர் மணி முடியு
நீமநற்‌ பசிய மரகத மலையை நிகர்த்தில கருந் திரு வுருவும்‌ –29-

இரு மருங்கிலு மஞ்‌சலி புரிந்தனர் வீற்‌ றிருந்தரு ளினியசொற்‌ கனி வாய்த்‌
திருமகண்‌ முதலா மூவர் தங்‌ கனகந்‌ திகழு சுந்தரமு மன்னவர் தம்‌
பெருகிய வணியின்‌ விநோதமு நிமலன்‌ பிழை யறு குணத்தினி தியல்பும்‌
பொருவரும்‌ வகுள பூடண னுகந்து புகழ்ந்தனன்‌ கண்டு கண்டுருகா–30-

இவ்வண மாநந்‌ தத்துட னிமல னெண்ணிறிவ்‌ யாத்தும ஸ்வரூப மம்மா
திவ்ய மங்‌கள விக்கிரக திவ்ய தேவி பூடணா யுத திவ்ய
வெவ்வமில்‌ குண சேட்‌டி தங்களை யுமுளஞ்‌ சிறந்தநு பவித்துந
னவ்வநு பவத்தை வெளியிடுஞ்‌ சர்வ வாரணத்‌ தந்த சாரமதாம்‌–31–

அருந்தகைய திருமந்திரார்த்‌ தத்தை யடக்கி நால்‌ வேதசாரமதாந்
துரிதமி லீரிரண்டு ப்ரபந்தத் தொடர்பினால்‌ விளக்கிட மனத்துட்‌
கருதுமு னனைய மாறனுக்குகந்து கருணையிற்‌ சேவை சாதிப்பான்‌
றிருவளர்‌ நித்ய சூரிகளெ வருஞ்‌ சென்றனர்‌ திருப்புளி மருங்கே–32-

இருவி னைத் தொடரின் செய லற்றுயர்‌
திருவுறக் கடை சென்றவ ருமிவ்வூர்‌
வருத லுற்றன ராயினம்‌ மன்னகர்‌
பெருகு சீரெவர்‌ பேசுக்‌ தகையரே-33–

அந்த நித்திய சூரிக ளன்னவே
மிந்த மானிலத்‌ தேய்பதி தோறும் வாழ்‌
கந்த மார்வனக்‌ கண்ணி கொள்‌ யாவரும்‌ ்‌
வந்து சேவை வழங்கிட லாயினார்‌–34-

பெருவரங்கள்‌ கருது மன்பர்‌ பெற வழங்கு வகுளநங்‌
குருவரங்கொள்‌ கவியிலன்பு கொடுவ வண்‌ முனரனய
னிருவரங்க ளமுதமண்டி யெழுகு பொன்னி வலம்‌ வருந்‌
திஸருவரங்க ந௧ருறங்கு திருவரங்க னெய்தினான்‌ –35–

மருவரு நூறிதட் கமல மன்னி கர்மா றன்‌றருவின்‌
மருவரு நூலினிதுணர்வான்‌ வந்தனனன்‌ னானெதிரே
திருவுறையூ ரியறுளவந்‌ திகழ்ந்தலையு மணி மார்பத்‌
திருவுறையூ ரெனும் பதியிற்‌ சிறந்துறையு மிறையோனும்‌–36-

கருத்தஞ்ச வானோ ருருக்கும் பொ னாமன்‌ கணத்தின் மு னேதுஞ்சவே
வருத்தஞ்செய்‌ மாய னருக்கன் குலாவு மணிப் பொன்னின்‌ மாடங்கள்‌ சேர்
திருத் தஞ்சை யாய நகர்க் கண்ண மாலுஞ்‌ சிறைப் புள்ளின்‌ மேனாடின
னிருத்தஞ்செ யாகன்‌ றமிழ்ச் செஞ்சொன்‌ மாறன்‌ றமர்க்கன்பர்‌ நேயன் முனே–37-

அருவன்‌ பிலியா மரவின்‌ றலை மேற்‌ பெருவன்‌ பினினா டிய நம்‌ பெருமான்‌
திரு வன்‌பிலில் வாழ்‌ தேவு முவண வொருவன்‌ பிடர்மே லுற்றானிவணே—38-

கருக்க ரும்படர்‌ கண்ட னாதிதே வருக்க ரம்பட வாண னாயிரங்‌
குருக்க ரம்பக லாழி கொண்டரி திருக் கரம்பனூர்த்‌ தேவு மெய்தினான்‌.–39-

புள்ளறை யும் பொழில்‌ பொன் மதில்‌ வானை நள்ளறை கூவவி ணாமய வெனவாம்
வெள்ளறை மாயனு மேவின னம்பொற் கள்ளறை வந்த கருங்குழலோடு–40-

பொருப்புள்ளம்‌ பூதப்‌ படையாற்கெட்‌ டாதென்றும்‌ போற்றடியார்‌
விருப்புள்ளம்‌ பூதல மாதின்‌ விளங்கவினார் முகமாந்‌
திருப்புள்ளம்‌ பூதங்‌ குடிவிற்‌ றிகழ் ராமனும் பொழிலிற்
கருப்புள்ளம்‌ தங் குரு கைம் மாறற்‌ கீந்தனன்‌ காட்சியதே–41-

திருப்பே ரொருக்கா னினைப்போர்‌ திருக்கே திரித்தாண்மகிழ்‌
மருப்பே ரளித்தா ருடைக்கோ னெதிர்க்கே வரத் தேறினான்‌
திருப்பேர்‌ நகர்க்கோ ரிறைச்சேர்‌ தடத்தே திகைத்தே யழை
மருப்பேர்‌ கரித்தோ மொழித்தா னிருக்கே வழுத்தாதியே–42-

மருவாத வல்வினை மாறருளாத்‌ திருவாத வனேரணி கொண்டவன் முன்‌
திருவாதனூர்‌ மேவிய சீதரனும்‌ பெருவா தமோடு பிறங்கனனால்‌–43–

செருவழுந் திறலுடைய ராகிடுந் தீய பிணி மருவழுந்‌ திட வவுணர்‌ வளை திரிக்‌ தெறியு மணி
திருவழுந்‌ தூரிறையு மேயினன்‌ செய்ய மகிழ்‌ மருவழுந்‌ திய வணி கொண்‌ மார்பினன்‌ முனரரோ–44-

தருச்சினை மலராற்‌ செய்ய தாட்டுணை மலரின்‌ மீதே
யருச்சனை புரிந்து வானோ ரக மகிழ்ந் திறைஞ்சி யேகத்‌
திருச் சிறு புலியூர்‌ வாழும்‌ தேவனெம்‌ பெருமான்‌ றானு
முருச்சிறைப்‌ புட்பான்‌ மாறற்‌ குதவினன்‌ சேவை மன்னோ –44-

சூறை யாகத்‌ துதைந்தெழு தீயவர்க்‌ கிறை யாக்கி யிருந்தவனாந் திருச்‌ சேறை
யாயனுஞ்‌ சென்‌றன னந்தமிழ்‌ வீறை யாரும்‌ விமலன்‌ றிருமுனம்‌–45–

உருத்தலைச் சங்‌கம் புதிய வொன்றால் எரித்தரக்கர்
கருத்தலைச் சங்கவர் திறளைக் கண்டனஞ் செய்‌ தினிதுகந்த
திருத்த லைச் சங்‌ க நாண்மதியத்‌ தேவர் பிரா னும் மடைந்தான்‌
குருத்த லைச் சங்கப்புலவோர்‌ கொண்ட செருக்‌ கடர்ப்பான் முன்‌-46-

சீர்‌ திருக்‌ குடந்தை மானகர்க்‌ கமர்ந்த தேவனற்‌ புளென்ற வாகன
வூர் திருக்‌ குடந்தை யோர் கணத்‌தின் முன ரோகை யுற்றெழுந்து நாடினான்‌
பார் திருக்‌ குடந்தை யானவர்‌ கருதும் பராங்குசற்‌ குறுண்‌ மைசேரிடை
வார் திருக்குடந்தை மாதனத்து நங்‌கை வாழ்வினுக்‌ குகந்து முன்‌னரோ–47-

தருக்கண்டி யானை யிடர்‌ தந்துகன்‌ மடந்தை யுருக்கண்டி யாரதிவ ளோதுமுனி யென்ற
திருக்கண்டி யூரிலுறை தேவனு முகந்தெங்‌ கருக்கண்டி மாறனுயர்‌ கண் முன மடைந்தான்‌–48-

மண்ணக முறும் வினை வரைந்தருளு மாறன்‌ கண்ணக முன்‌ னண்ணினன கங்களி சிறப்ப
விண்ணகர மெண்ணறிரு விண்ணகர நண்ணுந் தண்ணகமலம் புரை தடங்கணிறை யோனும்‌ –49-

கருதிருக்‌ கண்ணறனை நில வுயிர்க்‌ கங்கை யுறு கனி யெனத் தந்த மகிழ்தேன்‌
றரு திருக்‌ கண்ணி புனை யளி புயத்‌ தெந்தை யெழு தளவிரைச்‌ செங்‌ கமல நே
ரிரு திருக்‌ கண்ணவுயர்‌ கருடனற்‌ கந்தர முளிசை கரப்‌ பொன்னி னோடு சென்‌
றொரு திருக் கண்ணபுர வள நகர்க்‌ கண்ணவனு முயர்புளிக்‌ கண்‌ மருவினான்‌.–50-

அருவாலில்‌ வளர்ந் தொ ணடி.ப்பொடியா லுருவா லிகைதற்‌ குதவுற்‌ றெணிலாக்‌
குருவா லிபர்‌ தங்கள்‌ குழா மலியுந்‌ திருவாலி வாழ் தேவனுஞ்‌ சென்றனனால்‌.–51-

பாகை யினிப்படு பான்மொழி மின்னா ரோகை யின் மாளிகை யும் பரு லாவ
வாகையின்‌ மின்னென லாகும்‌ வளங் கொள்‌ நாகையி னாதனு நாடின னம்மா–52-

மறையூ டு வதிந்‌ தருளெம்‌ பெருமானறையூ ருறை நம்‌பியுமெய்தினனாற்‌
நிறையூ கமனேரலருக்‌ கயிலிற்‌ கறை யூறிய காரிகுலச்‌ சுதன்முன்‌–53-

வெந்திற லுறுந் திதிரி நந்துவி லருங்கதை விளங்கு வடிவாள்‌
சந்தம லரங்கைக டயங்கமரு வண்டுமுர றண்டுளவமுஞ்‌
செந்திரு மடந்தையு முரந்தனில்‌ வயங்க நொடி சென்‌ றனனரோ
நந்திபுர விண்ணகர வெந்தையு மினங்கையரு நந்தனெதிரே–54-

அருவிந்தள மளிபாடுசெ யடருங்களை கடியு மிருவிந்தள முலையார்மரை யெழில் செந் துவர்‌ குவளை
வருவிந்தன முகம் வாய்விழி யென வேகரை மருவுந்‌ திருவிந்தளூருறை மாயனுஞ்‌ சென்றானவன் முனமே–55-

குருச்சித்‌ தரமா ளிகை மிசையே கொண்டல்‌ வந்து கண் படுக்குந்‌
திருச்சித் திர கூடத்தமர்ந்த சீமானும் போந்தான் மலரா
லருச்சித்‌ திரவெ ணீங்காத வன்பர்‌ கொண்ட வெவ்வினையை
வருச்சித்‌ திரங்கு நங்கோனாம்‌ வகுளாபரணன்‌ றிரு முன்னர்‌-56–

காரா மணிச்சுனை கலக்க முகை விண்டே வாரா மதுத்தளி மலர்த்தவி சுகந்த
தாரா மடுத்தன தழைத்திடு வளஞ்சேர்‌ சீராம விண்ணகரச்‌ சீதரனுமுற்றான்‌–57-

ஏடலார் குழ னங்கை தன் சுத னெந்தை யஞ் சட கோபனின்‌
பாட லார் தமி ழாசை யான் மிகு பரிவதோடு முன்‌ மருவினா
னாட லாருர காசனன்பிட ராரவேறியே நேரிலாக்‌
கூட லூரெனு மாவளப்பதி கொண்டவன்‌ றுயர் விண்டவன்‌–58-

வண்ணங்‌ குலையா தமடந் தையர்மா றிண்ணங்‌ குலை யன்‌பர் செருக்‌ கருவா
னெண்ணங்‌ குடியா னுமுனெய்‌ தினனாற்‌ கண்ணங்‌ குடி நின்று ககப்‌ பிடர்மேல்–59-

வண்ண மங்கல மாமலர்‌ மேவிய வெள்ளை யன்ன விராசிக ளாதவ
மன்னை வெஞ்சமர்‌ வேளையி லே மறை மாயோனின்‌
றண்ண மங்கையி னாமயவால்வளை யென்ன நன்கணி யோடு முலாவிடு தங்கு பல்வள நீள் பணை சூழ் தரு தாரார்‌ சீர்க்‌
கண்ண மங்கையி னோகையினோடுறை யன்பர்‌ தங்களி னாவியுமேவன கன்கணண்ணபி டேகமனாளொடு கானாரும்‌
விண்ண மங்கைகு லாவிய காவின மன்னுமங் குரு காபுரி மாறனின்‌ மென் கண் முன்னணி சேவை தரா புளின்‌ மேலானான்‌–60-

உருக்கவித்‌ தலத்‌ துளோடு மும்பரு நடுங்கவே
செருக்கவித்‌ தலங்கைமன்‌ செருக்கழித்த வாதியாந்‌
திருக்கவித்‌ தலத்‌ துகந்த தேவுமெய்தி னம
தருக்கவித்‌ தலங்கெடுத்த தன்னிகர்க்கு மாறன் முன்‌–61-

வள்ளி யங்குழை யின்சொன்‌ மடந்தையர்‌ கள்ளி யங்குங்‌ கவின் குரு காரின்முன்‌ பள்ள யங்குடி கொண்ட பரவைசெய்‌ வெள்ளி யங்குடி மாயனு மேவினான்‌–62-

அணிமாடத்‌ திடை யிருந்த லைம்பால் கொண்‌ மாதர் செயுந்‌
திணி மாட கத்தியாழ்ப் பண்‌ செவியின் மடுத்‌ தகணமெலா
நணி மாட கத்துலவு நாரியர் கண்‌ டினிதுவக்கு
மணி மாடக்‌ கோயிலுறை மாமகணாதனு மடைந்தான்‌–63-

நந்தமர்‌ முன்கை மின்னிடை மாதர்‌ நடை கண்டே
வந்‌துறை யும்ப லஞ்சம னத்தே வட்கிப்போம்‌
விந்தை வைகுந்த விண்ணகரத்தே விளைவோடா
ரந்தமி லானு மிந்திரை யோடடைந்தானால்‌–64-

வரிமேய விளமுசுவு முழவோர்‌ கண்டார்‌ வளைகொடெறி தரவது தென்‌ மரமேறாவெண்‌)
கரிமேய விண்ணகர மிசையிற்‌ றாவிக்‌ கற்பகக்கா வூடொளியுங்‌
லரிமேய விண்ணகரத்‌ திறையும்‌ போந்தா னன்பர் குழா மிடுபதக மாகும் பாரப்‌ பரிமேய விறை யளவுஞ்‌ சகியா நம் பராங்குசன் நன்‌ குரைசெய்தமிழ்‌ பரிந்துளோர்வான்‌–65-

ஆவனார்தொக லார்மன வன்பர் தங்‌ காவ னார் தொடு கண்ணி மகிழன் முன்‌
மாவ னார் தொகை யுற்று மகிழ்ந்து வாழ்‌ தேவனார் தொகைச்‌ செல்வனு மெய்தினான்‌–66-

வருடோத்தவ மாதோத்தவ மகிழ்வோடு செ யது விண்‌
வருடோத்தரம்‌ புரியப் பசு மலை யிற்றி கழுறு வண்‌
புருடோத்தம மெனவே யுரை பொரு வின்னக ரிடை வாழ்‌
புருடோத்தம னுஞ்சென்றனன்‌ பொலிவா ருவணத்தே–67-

பம்பு செங் கதிரோன்‌ றன்னைப்‌ பாயிரு ளனைத்து மொன்றி
வம்பற வுறவு செய்வான்‌ வருந்தகை யனைய மாற
னம்பொன்செ யுருவந் தாங்கு மமலனின்‌ றிரு முன்‌ பாகச்‌
செம்பொன்செய்‌ கோயில்‌ வாழும்‌ திரு வினாயகனும்‌ போந்தான்‌–68-

வெற்றி யம்பலத்‌ தாடும்‌ விளங்கனல்‌ நெற்றி யம்பலர்‌ நேர் சடை யாற் கருள்‌
பெற்றி யம்பலரும் பரன்‌ பேரருட்‌ டெற்றி யம்பலத்‌ தேவனு மெய்தினான்‌-69-

அருமணிக்‌ கூட லுற்ற விர்தரத்‌ துடைய நங்கைக்‌ கொரு மணிக்‌ கூடற்‌ சங்க மொழிப்பவ னுரை நூலோர்வான்‌
பெருமணிக்‌ கூடத்‌ தோடும்‌ பிறங்கு மாடங்களோங்குந்‌ திருமணிக்‌ கூடத்‌ தானுஞ்‌ சென்றனன்‌ கடிதினம்மா–70-

நெருக்கா வளவில்‌ நிரை மேய்த்து நேர்ந்தங்‌ கிகலுந்‌ தீ யோரைக்‌
கருக்கா வளவிற்‌ சென்றாயர்‌ கன்னி மாரோ டினிதாடும்‌
திருக்கா வளம் பாடிக் குறையுஞ்‌ செங்கட்‌ டிருமாலும் போந்தான்‌
பெருக்கா வளமார்‌ தென் குருகைப்‌ பெருமான்‌ வகுளப்‌ பரன்‌ முன்னே –71-

எள்ளக்‌ குளத்தினை யினித்த சொலரும்பிக்‌
குள்ளக்‌ குளத்தியர்‌ குருடேந் திட வரால்கள்‌
பள்ளக்‌ குளத்திடை பரந் துயர்‌ குதிக்கும்‌
வெள்ளக்‌ குளத்திலுரை மெய்யனு மடைந்தான்‌.-72-

சுருப்பார்த்‌ தலம்பு பொழில்‌ சூழ் குருகை மாறன் பால்‌
விருப்பார்த்‌ தநெஞ்சடியார்‌ வெவ் வினை தீர்ப்‌ பான் முன்னர்‌
மருப்பார்த்‌ ததண்டுளவ மாலையணி மார்பிலங்கத்‌
திருப் பார்த்தன்‌ பள்ளி யுறை தேவ பிரானும் மடைந்தான்‌–73-

இருமா னிலம்பரவு மகிழ் மார்ப னின் வாயி லினிதாயெழு
மொருமா வளங் கொள் கவி பெற வேணு மென்றேகி யுயர் மேவு தண்‌
முருகா ரரும்பு விரி புளி மேவி னன் கரிய முகின் மேருவின்‌
வருமாறு புண் மீது திருமா லிருஞ்சோலை வளர் மாயனே–74-

சினத் திருக் கோட்‌ டிபமலற மருப் பொசித்த திருக்கரன்ற னடிபரவு்‌ந் திறத்தினோருண்‌ மனத் திருக்கோட்‌ டிடுங் கருணை வரதன் செய்ய மரைத் திருமா மகளுகந்த வரை நேர் மார்பன்‌
முனத் திருக்கோட்‌ டினை யுறுவெற்‌ பெடுத்தானுய்ய முகிறடுத்தோன்‌ பழமறை தேர்‌ முதுவோர் வாழுந்‌
தனத் திருக்கோட்‌ டி யெனு மணி நகர் வாழெந்தை செளமிய நாராயணனுஞ்‌ சார்ந்தான்‌ மன்னோ–75–

வையமுறு மாருயிர்கள்‌ செய்யும் வினை யோடி யுயர்‌ வானி லடையா
வுய்யும் வகை யாக வரு மய்யனருண்‌ மாறனுரை யொன்று பெறவே
பையரவ மீது துயின்‌ மைய வரி மூசி யடர்‌ பாசொளி துழாய்‌
மெய்ய மலை யாளனிவண்‌ செய்ய மலர்‌ மாதினொடு மேவினனரோ–76-

செல்லாரு மாறுறுவ ரெல்லாரு மேபரவு தீந்தாமமார்‌
சல்லாப மாறனுரை யில்லார்வ மொடுகட றான்றீய வெய்‌
வில்லாளி யேழிடப மல்லோடு காயும் வலி வேந்தாகு மெம்‌
புல்லாணி மாயவனும்‌ மல்லாரு மோதியொடு போந்தனரோ–77-

எருத்தண லமரர்‌ யாரு மியாங்களுச்‌ சீவித்தற் கெங்‌
கருத்தண்கா வென நின்‌ றேத்தக்‌ கருணை கூர்ந் தருளினானை
மருத்தண்கா வுகு செந் தேனால்‌ வானுற வளருஞ்‌ செந்நெற்‌
றிருத்தண்கா லுறையு மம்பொற் றிருமகட்‌ கிறை வந்தானால்‌–78-

குன்றுறழ்‌ மாடம்‌ பம்பிய வீதிக்‌ குருகூரில்‌ வென்றி கொண்‌ மாறன்‌ செந்தமிழ்‌ தானும்‌ வியந்தே விண்‌
பொன்றல மேவர்‌ தண் புளி நீழற்‌ பொலிவானான்‌ றென்றிரு மோகூ ரம்பதி வாழும்‌ திருமாலே–79-

தோடவிழும்‌ நிம்பத்‌ தொடைசூழ்‌ வழுதியர் முன்‌ டிப்‌ பரம்பொருணந் நாரணனா மென்றுரை த்தோன்‌
பாட லுகந்தருளும்‌ பானீய மாலுருவோன்‌ கூடலழகன்‌ கருடன்‌ கூடி யிவண்‌ சென்றனனால்‌–80-

சழக்கறு நீருலவு பெரு வராற்க டுள்ளிச்‌ சாடிடத்தீம்‌ பல வுதிர்க்‌கத்‌ தகர்ந்து வீழும்‌ பழப்பொறைகங்‌ குறுவேழ நுதியிற்‌ றூங்கும்‌ பைந்தேனி ரூலு டையப்‌ படியமேதி
வழுக்குற வண்‌ டர் மிகு பூங்‌ கழனி சூழ்ந்த வண் புதுவா புரி வளரு மலர் வாவிக் கண்‌ புழைக்கை யிடர்‌ கெட வஞ்ச லென்று வந்த பொன்னவள் சேர்‌ வடபத்ர சயநன்‌ போந்தான்‌–81-

சிலைவில்லி மங்கலமை நுதலோதி நங்கை யருள்‌ சிறுவோனருள்‌
கலைவில்லி மங்கல நகரில் வந்தனன் கரிய களனென்‌ ற பொன்‌
மலைவில்லி மங்கலம ழிய வென்ற செம்பதும மகள் மொய்ம்பனார்‌
தொலைவில்லி மங்கலம தனிலொன்று தும்பியிசை துளவத்தனே–82-

௮ரமங்கை நிகர் கொங்குண்‌ குழனங்கை சுதனன்பு ளடியர்க்குவிண்‌
சரமங்கை தருமின்ப னொரு செஞ்சொல்‌ பெறவென்று தனிவந்தனன்‌
வரமங்கை நகரொன்று திரு நண்ப னென தென்‌ று வரு பொன்னவன்‌
னுரமங்கை கொடு விண்ட நரசிங்கன்‌ வலி கொண்ட வுவணத்தனே–83-

தென்றிருப்பே றையில்வளர்‌ சீதான்‌ றன்றிரப்பே ருரைப்பவர்‌ தங்களுக்‌
கொன்றிருப்பே யுதவுவன்‌ மாறன் வாய்‌ துன்றிரும்பே ருரை பெறத்‌ தோன்றினன்‌.–84-

மருவை குந்தளம னுடைய நங்கைவயின்‌ வந்தவன்‌ னினிய சந்தமா
குருவை குந்தமிளிர்‌ நறுமை கண்டகுதை யுள்ளியே மிகவு நள்ளிடார்ப்‌
பொருவை குந்தனருள்‌ சிவனிரந்த பலி பொன்றிடக்‌ குருதி தந்தவன்‌
றிருவை குந்தநக ருறைவை குந்தனிவன்‌ சென்றனன்‌ கருட னொன்றியே-85-

மருப்புளிக்கண்‌ வளர்பவன்‌ பாவினில்‌ விருப்புளித்தன்‌ விறற்புய மால் வரை
யுருப்புளின்‌ மிசை யொன்றி மிக் கொல்லையிற்‌ றிருப் புளிங்குடிச்‌ சீதரன்‌ சென்றனன்‌–86-

மருமலர்‌ நிம்பத்‌ தொடையணி தென்ன வரேரதயனாங்‌ குருகுல வங்கைப்‌ படையுறு காரி குமாரனரு
ளருமறை யின்சொற்‌ றமிழ் பெற வுன்னி யடைந்தனனாற்‌ றிருமக ளன்பன்‌ வர குண மங்கைத்‌ திருமாலே–87-

மருக்கு லாமகிழ்‌ மார்பினன்‌ செய்யுள் வேட்‌ டிருக்கு ளுமெந்தை யின்புறுந் தொண்டதாய்க்‌
கருக்குளன்றிக்‌ கடத்துங்‌ கருணையோன்‌ றிருக் குளந்தைப்‌ பதியவன்‌ சென்றனன்‌–88-

மன்றன்‌ மா மகிழ்‌ மார்பினன்‌ செய்யுள் வேட்‌ டொன்றி னன் புளி யொள்ளயில்‌ வேற்கலி
கன்றி விண்ணகர்‌ கண்ட குறுங்குடி நின்ற நம்பியு கந்து நிகழ்ந்தரோ-89-

மஞ்ச னந்தவழ்‌ தண்டலை வாவி சூழ்‌ மாட மார் திருக்‌ கோளூ ரகந்தனி
னஞ்ச னந்தன்‌ றுயிறரு மாமுகி னாயகன் வைத்த மாநிதி நாதன்‌ வெங்‌
கஞ்ச னந்த வுதைத்தவன்‌ பிங்கலற்‌ கான செம்பொ னளித்தினுங்‌ காணுவா
னஞ்ச னந்தங்‌ கரங்கொடு நோக்குவா னவலோடிங் கடைந்த னன்‌ மாதரோ –90-

திருவ னந்த புரமுகந்த செமலருந்தி யிறைவனா மருவ னந்த ழுவுமலங்க லணி முகுந்த னணுகினான்‌
கருவ னந்த வெமையுகந்த கருணை நங்கை யென வுரை யொருவ ளந்த னருமை நந்த னெளி சுதந்த்ர னெதிரரோ–91-

திண்பரி சாரங்‌ கங்கர மேவுந் திறலோனேர்‌
வண்பரி சார மன்னிறை யோனெம்‌ மன மேவு
நண்பரி சாரங்‌ கொண்டுயர்‌ பாவி னசைவைய்யா
வெண் பரி சாரர்‌ தந் திகழ்‌ மாற னெதிரானான்‌–92-

பனித் திருக் கார்த்‌ தொலி கெழு தண்‌ பரவை யூடே யினிது வளர்‌
தனித் திருக்காட்‌ கரையோனுந்‌ தந்தான் சேவை யுகந்தடியார்‌
துனித் திருக்கா றலைத்தரிய துணைத்தா ளருளு மணித்தான் வாய்க்‌
கனித் திருக்காரக மேவிக்‌ கவினார் குருகாபுரிச்‌ சுடர்க்கே–93-

காழிக்‌ கடாபணை சூழத்‌ திகழ் குருகாபுரிவாய்‌
வாழிக்‌ கலியடன்‌ மாறற்‌ கருள்புரி வானுகவா
முழிக்‌ கள நக ராழிக்‌ கரனளி மூசழகார்‌
சூழிக்‌ கமலவ ளோடுற்‌ றனனுயர்‌ தூய்ப்புளியே–94-

குருப்புலி யோநி வழிப்பிறவாது குலைத்தெமை யாளு மகிழ்‌
மருப்புலி யூறு மதுத் தொடைமார்பன்‌ வழுத்திடு பாவுணர்வா
னிருப்புலி யானை யுரித்தணி யாடை யிடைக்கணி வோனயர்‌ தீர்‌
திருப்புலி யூரனிவற்கு முனேர்பு திருப்புளி நாடினனால்‌-95-

இங்குன்‌ ரூளே சரணமென்று ளெண்ணா வந்திங்‌ கடிதொழுவோர்‌
வெங்குன்‌ றாத வினை தீர்ப்பான்‌ விரையார்‌ வகுளத்‌ தார்க்கோ முன்‌
செங்குன்‌ றூரென்‌ றுரை சேருந் திருவாழ்‌ நகரு ளினிதுறையு
மங்குன்‌ றூராற்‌ கரியானும்‌ மடைந்தான்‌ பாக்க ணசை கொண்டே-96-

காவாயென வணிவானவர்‌ கண மோடினி தடையா
பூவாயடி தொழவே யவர்‌ புரை தீர் வருட்‌ டருபுள்‌
நாவாயிடை யமர் மாயனு நலமார் தமிழ்‌ நசையாற்‌
றேவாயந மகிழ் மாலை சொல்‌ செவியோன் முன நணினன்‌–97-

குருவல்ல வாவு முலை யுடை நங்கை பாலனுயர்‌ குணமொன்று பாவி னசையாய்ப்‌
பொருவல்ல வால் வகுள வணிகொண்ட, மாறனெதிர்‌ பொதி யன்பி னாடினனரோ
வொருவல்ல வாவெமைமு னருள்செய்த வாவெனவிண்‌ ணுளர்வந்‌து தாழ நிதமுந்‌ திருவல்ல வாழுறையு முகிலெள்ளு மேனியிறை திரை பொக்கு வாரி யணையான்‌–98-

தண்டா தரிக்கமல வண்டான முற்றதிரு தன்மார்‌ பிருக்கு மிறை யோன்‌
மண்டா தரிக்கமுகில்‌ விண்டாற டுத்தவன்வண்‌ வண்டூரி னித்த மிமையோர்‌
விண்டா தரிக்கவருள்‌ கொண்டா தரித்தவன்வி ரைந்தேக மைப்பு னலிதா னண்டா தரிக்கமல ரொண்டாள ளிக்கு மகிழந் தாரன்‌ முற்கணினனால்‌.–99-

சூட்டோதி மந்தமது போட்டோடிணைந்‌ அலவு தோட்டோ டவிழ்ந்த மலர்நீர்‌ மாட்டோதி மங்கையர்கள்‌ வேட்டாடு கின்ற திரு வாட்டாற தென்‌றுரை செயுந்‌
கோட்டோதி மந்நிலவு நாட்டானு மம்மமவிர்‌ கோட்டானை நங்கை புதல்வன்‌
பாட்டோது வன்னமது பாட்டே யுகந்தெனவுப்‌ பாட்டோ னடைந்தனனரோ.–100-

பெருவித்து வக்கோட்டி பெருகித் தமிழ்ச் சூட்டு குருகைப்ப ரற்கேத்து மடியர்க்கு நோய்க்‌
கருவித்து வக்கோட்டி யழிவிற்‌ கதிக்காட்டு கருணைக்கடற்கேற்ப வெதிருற்றனன்‌
றிருவித் து வக்கோட்டிலிறை யுட் கருக்கோட்டன்‌ செருவிற்‌ றலைக்‌ கோட்டு மதவெற்பினை
மருவித்து வக்கோட்டி கலி முற்ப றித்தாட்ட மதுமுற்றளிப்பாட்ட துளவத்தனே–101-

துருக்கடித்‌ தானத்த வரைக்கு முற்‌ காலத்தி றொனித்தழைக்‌ காமுற்று யரையட்டவன்‌
திருக்கடித்தானத்தன்‌ வனத் தனித்‌ தாமத்தன்‌ சிறைக்ககத் தேறித்த ணெகினத்துவேர்‌
நெருக்கடித்‌ தானத்த மருக்கனைப்‌ போலுற்ற நிதிக்கருத்‌ தேவைக்கு மடி யர்க்குறுந்‌
தருக்கடித்‌ தானத்தன்‌ மகிழ்ப்பனித்‌ தாமத்தன்‌ சடத்தினைக்‌ காய்நித்த னெதிருற்றனன்‌–102-

மாறன் விளை யாடி மலர்‌ மாதுவள சேர் குருகை மான கருணா
வீறன்விளை சாரமுறு பாவினசை யோடவன்முன்‌ மேவினனிலா
நீறன்விளை யாநநச ரோருக நிகேதனனு நேடரியனா
மாறன்விளை யாகுநகர்‌ நாடிநிதம்‌ வாழுமுத லாயபரனே–103-

இருவிசும்பிடை யமரரும்பர வெம துநம்பிமெய்‌ வாதனால்‌
பொருவிலின்கவீ பெற வெழுந்‌துயர்‌ புளியிலொன்‌ றின னளிகுலா
மருவிரிந்து நறவுகும் புது மலரடர்ந்திவர்‌ சோலை சூழ்‌
திருவயிந்திர புரமெனும் பதி திகழுமம்புய லொருவனே–104-

மாவ டம்பமொளி ரோவி யத்‌ துலவு:மங்கை யாருடைய நங்கை சேய்‌
பாவ லம்பெறவு ளாவ லின் வினதை பால னேறிமிக வோலமாய்‌
நாவ லம்புவியுண்‌ மேவு முவர் முன நண்ணியே கிருபை பண்ணினேன்‌
கோவ லம்பதியின்‌ மாவலன்‌ கருணை கூடினோன்‌ புளியி னாடினான்‌—105-

மச்ச விழி நங்கையருள் எச்சமொரு செந்தமிழ் வழ ங்குமெனவே
யிச்சையொடு கந்துமதிர்‌ கச்சணி குறுங்கணுறு மிந்திரையொடு
கச்சி நகர் நின்று அருளும் அச்சுதன் அன்று துயர்‌ கடிந்த வலியோ
னச்சரவ மீது துயில்‌ பச்சை முகிலும் புளியி னண்ணினனரோ–106-

பெருவட்ட புயகரனங்‌ கமல னாதிப்‌ பெரும் தேவ ராசுரர் தமைப் பிலத்தில்‌ வீழ்த்தப் பொருவட்ட புயகரம்ய வணையா யென்றே போந்தனர்க ளனுதினமும்‌ போற்றி யேகத்‌
திருவட்ட புயகரமென்‌ றுரை சேர் திவ்ய தேசமகிழ்ந் தினிதுறையுந் திருமால்‌ வந்தான்‌
கருவட்ட புயகரலா வன்பர்‌ தம்பாற்‌ கண்ணருள் செய்‌ தருண் மாறன்‌ கண் முனம்மா–107-

பண்காம்‌ பிற்‌ றெரித்திடு செம்‌ பவள வாயன்‌ பைம் பொனிறைத்‌ தொளிர் மாடப்‌ பருப்பதஞ்சூழ்‌
பண்காம்‌ பிற்‌ றெரித்திடு செம்‌ பவள வாயன்‌ பைம் பொனிறைத்‌
தண்காவி னின்றருளெம்‌ பெருமா னொல்லைச்‌ சழக்கறு புட்‌ பிடரேறிச்‌ சார்ந்தான்‌ மிக்கு
வண்காரி மாறனுரை யாரணத்தின்‌ வண்டமிழ் கேட்‌டுகந்திடமின் மருவி மாதோ–108-

மஞ்சினம் தெண்‌ முதிர்ந்துளையா வுயிர்க்கு முத்த மல்கு மணி மாட மிசை மடவார்‌ நின்று
நஞ்சினுங்கா ரளகமுண வூட்டுந் தூம நனி கெழுமி யாசை யெலா நறைய தாக்கும்‌
வெஞ்சினமற்‌ றற நெறிக்கண்‌ ணகலார்‌ வாழும்‌ வேளூரை யாளரியு மேவினானால்‌ செஞ்சிலம்பா ருடைய நங்கை வயிறு வாய்த்தோன்‌ செந்தமிழ் கேட்‌டுகந்திடப் புட்‌ செலுத்தி மாதோ–109-

உருப்பாட கத்தடிய நங்கைக்‌ குயர்மகவாய்‌
விருப்பாடகத்தடியார்‌ வெவ் வினை தீர்‌ மாறனெ திர்‌
பொருப்பாடகத்தனுவான்‌ சிலை யிறுத்த புங்கவனாந்‌
திருப்பாடகத் துறையுஞ்‌ ஸ்ரீதரனுஞ் சென்றனனால்‌–110-

சூர கந்தடிந்‌ தோனுயிர்த்‌ தோன்றனைச்‌
சேர கந்தணித்‌ தோன்செழுஞ்‌ சோலை சூழ்
நீர கந்தனி நின்றருள மால் குரு
கூர கந்தனிற்‌ கூடினன்‌ மாதரோ–111-

முத்தனைய வெண்ணகை செம்‌ பவளவாய் கொண்‌ முகிழ்‌ மலர்க்‌ கைக்‌ கடைகியர்தமுகமாய்‌ நின்று
மத்தமுடன்‌ களைகடிய வவர் முகந் தா மரை யெனவோ திம மயங்கு வளைமென்‌ சாலி
நித்கிலமார்ந் திலகு பழ னங்களார்ந்த நிலாத்திங்கட்‌ டுண்டத்து நெடுமால் முன்ன
மத்திவிளித்‌ திடுமுனஞ் சென்‌ றருள்வோன் மாற னாரணச் செந் தமிழ் தருமென்‌ றடைச்தான்‌ மாதோ–112–

வம்பு லாவு மகிழ் மலர்த்‌ தாரினான்‌ பம்பு மாமறைப்‌ பாவில வாவியே
உம்பர்‌ போற்று நம்‌ மூரக மால்‌ முனம்‌ தும்பி காத்தவன்‌ றோன்றினன்‌ மாதரோ —113-

வண்ணமுறு மாதவர்செய்‌ வேள்வி தோறும்‌ வழங்குறுமா குதிய வியை வாங்க நாளும்‌
விண்ணவர்தங்‌ குழூஉக்கணிரைந் தணி கொண்‌ மாட வெஃகாவிற் துயிலமரும்‌ வேந்தன்‌ வாசச்‌
சுண்ணமனைர்‌ தளி பெடையோ டமுதமுண்ணுந்‌ துளவலங்க லாடுதிருத்‌ துலங்கு மார்ப
னண்ணலரு ளிலகு மயிற்‌ காரி சூனு நாவீறற்‌ கருள்புரிவா னண்ணி னால்‌,–114-

இருக்கார கங்கனியாப்‌ புல்லரிடந் தன்னடியே யிறைஞ்சு மெய்யன்‌
பருக்கார கங்கடிவார்‌ தானெனதென்‌ றிடுங்கனகன்‌ பருமார்‌ பத்துட்‌
பெருக்கார கங்கலுழக்‌ ண்டவன் சேயினை மருவும்‌ பெற்றி யோர்‌ தென்‌
றிருக்கார கங் கருதும்‌ பொன்னவள் காந்தரு முகந்து சேர்ந்தாரன்றே–115-

உருக்கார்வா னந் தணிவார்‌ தன்னடியார்‌ செய்த பிழை யுகந்தன்‌ னோரைத்‌
கருக்கார் வானந் தருவார்‌ மறந்தொரு காற்‌ றமை யெணினுங்‌ கருணை செய்வார்‌
மருக்கார்வா னந் தவழுந்‌ தண்டலைசூழ்‌ மணிமாட மல்க யோங்குந்‌
திருக்கார்வா னந் தனில் வாழும் பரந்தா மரும் புளிக் கண்‌ சேர்ந்தார்‌ மாதோ–116-

அண்டர்‌ நாய கன் கபாலி யம்புயத்தி னன்றொழும்‌
புண்ட ரிக மந்திரங்கொள்‌ பூவை வாழு மார்பினான்‌
கண்டல்‌ வேலி நின்றிலங்கு கள்‌ வனூரு மாயவன்‌
வண்டு லாவ லங்கலாட வந்தனன் புள்‌ ளொன்றியே–117-

குருப்பவள வண்ணவத ரத்துடைய ஈங்கையருள்‌ குமரன்‌ செஞ்‌ சொல்‌
விருப்பவள வண்ண றனை முப்போதும்‌ வந்தனை செய்‌ விபுதர்‌ தாயர்‌
கருப்பவள வண்ணவிடா தருள்புரிவோன்‌ கனக மதிற்‌ ககனமோங்‌குந்
திருப்பவள வண்ண நக ருறை கருமா முகலுருவன்‌ சேர்ந்தானன்றே–118-

வண்டொடுதே னினமுல்கே சர நறுந்தா ரிலகு புய மாறன்‌ செஞ்‌சொற்‌
ணுற்றான்‌ தண்டமிழ்கேட்‌டுகந்திடப் புட்‌ பிடரேறி யரவெகினைத்‌ தருக்க
புண்டரிகத்‌ தாளிறை மெய்‌ யடியர் பணிக்‌ குடனுருகப்‌ புரக்கும்‌ போதத்‌
திண்டிறலார்‌ பயில் பரமேச்‌ சுரவிண்ண நகரில் வரு திருமான்‌ மன்னோ-119-

உட்புல னெனுமோர்‌ பாகனூ ணுதிர வுடலெனு நாப்பணி லுறச்‌ சேர்
கட்செவி நாசி வாயெனு நான்கு கற்கி வாய்‌ மதிக்கருள்‌ பூட்டி
நுட்ப நூலுரைக்கு மறநெறி செலுத்து நுவலரு மறையவர்‌ வளர்‌ சீர்ப்‌
புட்குழி நெடுமால்‌ சடகரிக்‌ கருள்வான்‌ போந்தனன்‌ போரகெஞ்‌சுகந்தே–120-

நன்றி யோர் தொழு நாயகன்‌ வெஞ்சட வென்றி மாறன்‌ விழுத்தமிழ்‌ வேட்டி வண்‌
சென்ற னன்னறை சேர் மலர்க்‌ காவொளிர்‌ நின்ற வூருறை நின்மல மாயனே–121-

பருமணி யிமைக்குஞ்‌ செஞ்சூட்‌ டராவணைப்‌ பரம னீலக்‌
குருமணி வண்ண னெவ்வுட்‌ கோவல’ னடைந்தா னொன்னார்‌
மருமமுண்‌ டொளிரும்‌ வைவேற்‌ காரி சேய்‌ மாறனாவா
லொருகவி பெற வென்‌ றுன்னா வுவணன்‌ மொய்ம்‌ புந்தி மாதோ–122-

கார்மலை மேனி வேங்கட்‌ கடகரி மருப்பொசித்துப்‌
போர்மலை முனிந்த சீற்றப்‌ புயவலிக்‌ குரிசில்‌ வண்மை
நீர்மலை யாதி செல்வி நீளையுற்‌ றெழுந்தான்‌ முத்து
வார்மலை யுடைய நங்கை மகவினுக்‌ கருள வென்றே-123-

கொந்து லாநெடுங்‌ குந்தள நங்கை சேய்‌ செந்த மிழ்த் தொடை சிந்தை யுள்‌ ளுன்னியே
யந்த ணாளரமருந் திருவிட வெந்தை வாழ் தரு விண்டுவு மெய்தினான்‌–124-

இருக்கடன்‌ மல்லைந் திலக கணந் திகழ் மா றன் கவிவேட்‌ டிசைக்கு மென்றுட் டருக்கடன்‌ மல்லைப்‌ பொருவா குவலியுளோ யனநடைப் பொன் றரப்‌ பெண்ணாள் பா
கருக்கடன்‌ மல்லைத்‌ தொலைத்தா யருளெமக்கென்‌ றும்பர்தொழுங்‌கடிகொள்‌ செம்பொன்‌
றிருக்கடன்‌ மல்லைப்‌ பதி வாழெம்‌ பெருமா னெகின நிழற்‌ சென்றான்‌ மாதோ–125–

மருவல்லிக்‌ கேணிளநீ ரளக மொழி முலை நங்கை மடமா னென்னு
மொருவல்லிக்‌ கேசுதன் மா றன் கவி வேட்‌ டளைசுவைப்பா லுடனே வெண்ட
யிருவல்லிக்‌ கேகி யுறிக்‌ கண்கவர்வோன்‌ மணிமாட மிலங்கும்‌ வண்‌மைத்
திருவல்லிக்‌ கேணி வள ரெம் பெருமான்‌ புட்கடவிச்‌ சென்றான் மாதோ-126-

முடிகை கூப்பு முள்கனிந்த மொய்த்த வன்பி னோர்கள் பால்‌
மடிகை யோடு யிர்ப்பறுக்கு மாறனின்‌ சொல் வாவியே
சுடிகை யோதி மத்தனன்ன வேதியர்கள்‌ சூழ்‌ திருக்‌
கடிகை மாநகர்க்குள்‌ வாமுங்‌ கண்ணனெய்தினனரோ-127–

சஞ்ச ரீகவிழி நங்கை பாலிலவ தரித்தவன்‌ சடமரித்தவன்‌
செஞ்சொ லாயதமி ழொன்ற வாவியுயர்‌ சிற்றி லைப்புளியு ளுற்றனன்‌
வஞ்ச மாயை யொரு கஞ்ச னே வுமத மத்த கக்கரியு தைத்தவன்‌
கஞ்ச மாதுவளர்‌ நெஞ்சி னானடியர்‌ கற்பகன்‌ னரவ வெற்பனே-128-

நங்கையார்‌ குழவி யின் சொ னாடி வந் தடைந்தா னும்ப
ரெங்கணா யகவென்‌ றேத்து மிகன்மதக்‌ கரியி னீட்டம்‌
தங்க நாயகி களோடு தனித்தனி வதுவை யாற்றும்‌
சிங்க வேழ்‌ குன்றில்‌ வாழுந் தெய்வ நாயகனு மாதோ–129-

மற்புனை யிலங்கை மூதூர்‌ வள்ளல்கம்‌ பத்துவீழ
விற்புனைந் தெழில் கொள்‌ தோளான்‌ மிளிர் நிலா மணி மாடத்தி
னற்புத மிகுமயோத்தி யாண்டகை யடைந்தா னின்பா
கற்பழ மொழிச்சி நங்கை கண்மணி கவி வேட்‌ டன்றே–130-

பொருந்தலரூ ணுண்டொளிரு மயில் வேற்காரி பு.தல்வனடி.யார்க்கு வினை பொருந்தா தேக
மருந்தனைய திருவடியோ னெகினத்‌ தங்கா வணனிறைக் கீழ்ச் சடவைரி மலர்வாய்ச்‌ செஞ்சா
லருந்தமிழ் வேட்‌டிந்திரையோ டெழுந்தா னக்கன்‌ ௮டற்பதுமா சுரற்குழலா வலைய வாங்கோர்‌
திருந்கணிமா தாகியனோன்‌ முனிந்த சோலை சேர் நைமி சாரணியத் திருமால்‌ மன்னோ–131-

நள்ளிரு ளளகபார நங்கையார்‌ மகவின்‌ சொற் கொண்
டுள்ளுகர்‌ தருள்வான்‌ புள்ளி னொல்லையி னெழுந்தான்‌ றொல்லை
பொள்ளனால்‌ கரவெற்‌ பாண்ட புங்கவன்‌ பவளத்‌ துண்டக்‌
கிள்ளை சேர்‌ பொழில் கொள்‌ சாளக்‌ கிராம நின்‌றருள் வோனன்றே–132-

மதரிரு விழிக்க ணங்கை மதலை வாய்ப்‌ பனுவல்‌ வேட்டுச்‌
சிதறியாச்‌ சியத்தை யுண்ட சீதரன்‌ பெரு மழைக்குப்‌
பதறியாச்‌ சிரமத்‌ தெய்தப்‌ பருமலை யெடுத்துக்‌ காத்த
வதரியாச்‌ சிரமத்‌ துற்ற மாயவ னெழுந்தான்‌ மன்னோ–133-

கொண்டலைந்‌ தரு நே ராங்கைக்‌ குரிசினன்‌ னெறிவாய்‌ நின்று
விண்டிலான்‌ காரி சூனு விளம்புறு பனுவல்‌ வேட்டீண்‌
டண்டின திரைக டோறும்‌ ஆரமீன்‌ றிடு கங்‌கைக் கண்‌
கண்டமா நகரின்‌ வாழுங்‌ கண்ணனு மெழுந்தான்‌ மன்னோ–134-

குருதிதோ யயில்வே றாங்குங் கொற்றவன்‌ காரி சூது
சுருதிதோய்‌ தமிழ் வேட்‌ டைவர்‌ தூதனாம்‌ விசையன்‌ போரில்‌
பரிதோ யிரத மூரும்‌ பாகனா மறையோர்‌ வாழும்‌
பிரிதிதோ யிலங்கை செற்ற பீடுளோ னெழுந்தா னம்மா–135-

விடமெனக்‌ கருத்து நீண்ட வேல் விழி யுடைய நங்கை
யிடமவ தரித்த செல்வ னின்னுரை கழறு மென்றே
குடவர்தம்‌ மனையில்‌ ரெய்பால்‌ கொள்ளை கொண்‌ டறியே னென்னும்‌
வடமது ரையினில்‌ வாழும்‌ மாயவ னெழுந்தான்‌ மாதோ –136-

கண்டு வரார்தமை யண்டகிலார் வினை கண்டிந மாறனெரி
பண்டு வராடை மண்‌ மண்டிசை யானுரை பண்டறு பாவினசை
கொண்டு வராலினம்‌ விண்டல மூடு செல்‌ கண்டுறு நீர் புடை சூழ்
வண்டு வராபதி விண்டுவும்‌ மேவினன்‌ மண்டல மேழ்புகழ–137-

ஆடி நேர்‌ கொடி றிரண்டு மணி செய்யு முடைய நங்கை
தோடவள்‌ கமலப் பண்டி தோன்றிய சிறுவன்‌ செஞ்சொல்
நாடி நன்‌னெறி வாய்‌ நின்‌ற நந்தர் கோன்‌ மதலை யாயர்‌
பாடி வந்‌ தருள்வோன்‌ யார்க்கும்‌ பரமனு மடைந்தான்‌ மன்னோ -138-

சேற்கடல்‌ விளக்கு முண் கட்‌ சேயிழை யுடைய நங்கை
சூற் கடங்‌ குறவெ ழுந்த தோன்றனல்‌ லுரைவேட்‌ டங்கை
வேற்கட மதமா வாணன்‌ விறற் புயந்‌ துணித்தம்‌ பைவாய்ப்‌
பாற்கடல்‌ துயிலு மாதிப்‌ பரமனு மெழுந்தான்‌ மாதோ–

நூற் றெட்டுத்‌ திருப்பதிப்‌ படலம்‌ முற்றும்‌-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீசடகோப திவ்ய சரித்திரம்-பகுதி-1-

May 28, 2026

ஸ்ரீ சடகோப திவ்ய சரித்திரம் / திருக்குருகூர் நித்தியவாசியும் தமிழாசிரியரும் உபயகவி வித்வானுமான உ. வே. தேவராஜய்யங்கார் ஸ்வாமிகளென்ற தேவராஜ பாரதிகளால் (தேவேச) இயற்றப்பட்டது ; சுவடியாயிருந்ததை மேற்படியார் மாணாக்கரும் ஆழ்வார்திருநகரி ஸ்வாமி ஆதிநாதராழ்வார் .. பெரியன் தேசிகமய்யங்காரென்ற பெரியன் வெங்கிட்ட நாராயணய்யங்கார் குமாரர் பெரியன் வெ. நா. ஸ்ரீநிவாஸனால் எடுத்தெழுதப்பட்டு ; R. ஸ்ரீநிவாஸய்யங்கார் ஸ்வாமிகளால் தகுந்த ஆதாரங்களுக்கிணங்க பார்வையிடப்பட்டு படங்களுடன் … அச்சிட்டு வெளியிடப்பட்டது

உலக மீரேழினுள்ளவும்‌ பரூர்வன வேயாதி
யலகிலா வுயிர்கட்கெல்லா மக மொடு புறமாய்‌ நின்றங்‌
கிலனுளனெனு முரைக்கு மிசைந்து சாத்விகர்கள்‌ போற்றும்‌
வலமுறு திரு வைகுந்த மாயவனுகந்து முன்னாள்–1-

அரவரசழைத்து நீ யிவ்வவனி போயிரு நூறாண்டு
பரமதங்களைக் கடிந்து பாடிய முரைத்‌து வாவென்‌
றுரை செயப்‌ பெரும்பூதூர்‌ வந்துதித்து நூற்றிருபதேழிற்‌
பரன்‌ றணவாற்ற கல்லாப்‌ பரமனோடெழுந்த வேலை -2-

குரகதக்‌ கயவாய்‌ விண்ட கோவலனெதியை நோக்கித்‌
திரை கடலுலகில்‌ முன்போற்‌ சென்‌றவதரித்து நும்மை
மருவிய நிலுவை நீக்கி வாருமென்‌ றுரைப்ப நாமம்‌
வரா வர முனியென்றோத வைணவர்‌ குலத்து மன்னோ-3-

தாதுரு நறை வண்டுண்டு ததை மலர்ப்‌ பழனஞ்‌ சூழுங்‌
கோதிலா மறையோர்‌ வாழ்‌ தென் குருகை வந்தவதரித்து
மாதுலர்‌ க்ரகம்‌ போய்‌ வாழ்ந்து மற்ற மீண்டணுகிமாற
னோது செந்தமிழ்‌ வேதார்த்த முரைத்தரும்‌ பொருட்டே னுண்ணும்‌-4-

காலையோர்‌ புனிதன்‌ ஞாதில்‌ காரனாண்டிறந்த வாய்மை
சீலே மாதவனுக்‌ கோதத்‌ தீம்‌ பயனுகருங்‌ கன்றைக்‌
கோல வானினத்தினின்‌று கூட்டறப்‌ பிரித்ததே போற்‌
சால நொந்திறந்தோர்க்‌ காகுஞ்‌ சடங்கினைக்‌ கழித்த பின்னர் -5-

இல்லறத்‌ தியலிலின்ன மியைந்திடிற்‌ பரநாடேகத்‌
தொல்லை மிக்குறு மென்றெண்ணித்‌ துரியமா மனுநூலாதி
வல்ல மெய்ப்‌ புனிதனாயெண்‌ வாரணமெனவும்‌ போதத்‌
தெல்லையில்‌ குணத்தின் மிக்க வெண்மரோ டியையுங் காலை -6-

கனிந்தள முருக யட்டக சங்களம்‌ முனிதாள்‌ சென்னி
புனைந்து நாவீறன்‌ மற்றும்‌ புனிதர்‌ வைபவங்கள்‌ கேட்க
நினைந்தன முரைத்தியென்ன நிமலனவ்‌ வடியர்‌ தங்கள்‌
மனங்களி துளங்கச்‌ சொன்னான்‌ மணிப்‌ பிரவாளம்‌ தன்னில்–7-

என்ன மாதவத்து வைகும்‌ மணவாள வெதியும ப
னன்னிலை யுணருமட்ட கசங்களு நனியுகப்பச்‌
சொன்ன செஞ்சொற்களாய குரு பரம்பரையைக்‌ கேட்டல்‌
கன்னவ ராகந்தானந்த வார்கலி படிந்தாரன்றே –8-

கோதி லந் நூற்கு நாமங்‌ குருபரம்‌பரை யென்‌ றோதி
மாதவ னுரைத்த வாய்மை மறையொடுந் தமிழுஞ்‌ சேர்ர்த
தாதலி னுணரவல்ல வதிகாரிக்கன்‌ றி மற்றோ
ரோத வொண்‌ ணாததாலு முகமற்‌றி ருத்தலானும்–9-

உயக்கருத்‌ துடையரா ய்வறந் துளங்களிந் துணர்வோர்க்‌ கெல்லா
மயக்கறவ குளமாலை வரதனா வீறன்‌ மற்றுந்‌
துயக்கறு பதின்மர்தங்‌ கடூய நற்‌ காதை முற்று
மியற்றமிழ்‌ தன்னிற் பேர்த்திங் கின்புற விசைப்பீ ரென்ன–10-

பத்துநூற்‌ றொருநாற்பத்‌ தேழாண்‌ டிடபமதாந்‌ திங்க
ளூத்திரட்டாதி நன்னாளந் நகருறு தேவேச
வித்தகன்‌ சடகோபன்‌ றிவ்விய சரித்திர மென்றோதி
அத்தனங் கூரத்தாழ்வான்‌ றளியாங் கேற்றினானே–11-

மேதகு சடகோபன்‌ திவ்விய சரித்திரத்‌தைக் கேட்போர்‌
மாதகவுடை யோராக மாநிலமிருந் திகத்தி
லேதமில்குண ராய்மக்க ளிரு நிதிபெற்‌று மாற
னோதிய தமிழ்‌ வேதத்தாற்‌ பரத்தினில் உய்குவாரே-12-

கேட்டவர்‌ படித்தோர்‌ முற்றுங் கிளத்‌தினர்‌ வரைந்தோ ருள்ளங்‌
கோட்டமில்‌ குணராய்ச்‌ செல்வங்‌ கொடுத்ததைப்‌ படிப்பித்தோரிவ்‌
வேட்டினைப்‌ பரிபாலித்‌ தோரேனு நான்முகன்‌ போற்றெந்தை
தாட்டுணை பரவிச்‌ செய்யாடன்னொடும வாழ்வர் அன்றே–13-

நீர்மைகொண்‌ மெய்யடியர்‌ பரவடியுஞ்‌ செய்ய நிறங்கொடு பொற்றிருவரை யினிலவுந் தூசும்‌,
மார்பிலகு மணிவடமும்‌ திகழ்மு நூலும்‌ மரை மலர்ச்‌ செங்கரத்தனிடை வளர் முக்கோலுஞ்‌
சீர்கெழு பாடிய முரைத்த பவளவாயுஞ்‌ சேதனர்‌ பாலருளொழுகு திருக் கணோக்கும்‌,
ஏர்கொடிரு முகத்தொளியு மிலங்கநின்ற வெதிராசன்‌ விரை மலர்த் தாளிறைஞ்சி வுய்வாம்–1-

மதுரவின்‌ கதையின்‌ மேலாய்‌ மறைத்தமிழுரைத்த ஞான,
அதுலன்றன்‌ சரிதை கூற அருந் துணையாகும்‌ வாசப்‌,
பதுமமேலயற்கு மேனாட்‌ பாலனத்‌ துருவமகிச்‌,
சதுமறை நவின்ற மாயோன் றாட்டுணைக்‌ கமலப் போதே–2-

மணிகொள் நெடும் திரையாழிப்‌ புடவிமாது மதிமுகவொண்டிலத மென வயங்கு மாடத்‌,
தணிதிகழ்‌ தென் குருகை யினாவீற மாற னருண் மாரி வைபவமெம் மறிவாற்‌ சொல்லத்‌;
துணிகுவ மின்னமுதி லெழு திருவே பிம்பத்‌து வரிதட் செந் தாமரை மேற்‌ றுலங்குமானே
பணிமொழி மென்குமிழ்‌ மறிந்து குழைபாய்வை வேற்‌படை மதர்க்கட் கடையருணீ பாலிப்பாயே–3-

தேனுகும்‌ பொழிற்‌ றென்‌ குருகாபுரி,
ஞான தேசிகனன்‌ புகழோத மீ
வான நாடுறை மாமகிழ்‌ காற்றுணைச்‌
சேனை நாதன்‌ றிருவடி யுன்னுவாம்–4-

அற்றவ னுருவமாகி யனேக நூலுலகுக்‌ கீந்து,
மற்றடந் திரடோள்‌ வேந்தாய்‌ வனம்‌ புகுந்தரக்க ரீட்டஞ்‌
செற்ற பினைவர்‌ கட்காய்ச்‌ சிறிய தூதெழுக்து பின்னர்ச்‌
சிற்றிலைப்‌ புளிக்குள்‌ வந்த செல்வனை மனத்துட்‌ கொள்வாம்–5-

சீராரும்‌ பொய்கையர்‌ பூதத்தார்‌ மபயார்‌ திருமழிசைப் பரன்‌ வகுளச்‌ செல்வன்‌ கோளூர்‌
ஏராரும்‌ மதுரகவி முனிவன்‌ சேரர்க்‌ கிறைவனருட்‌ பாகவத ரிரு தாட்டூளி,
பாராரும்‌ வழுதியர்‌ முன்‌ கிழி யறுத்த பட்டர்‌ பிரான்‌ கோதை யருட்‌ பாணன்‌ கையிற்‌, கூராரும்‌ வேற்‌ கலியனின்னோர்‌ செய்ய குரைகழலெம்‌ முடிக்‌ கணியாய்ச்‌ கூட்டுவாமால் -6-

கண்ணினுண்‌ சிறுத்தாம்போதிக்‌ காரி சேயருள்‌ பெற்றுய்ந்த
அண்ணன்‌ மெய்ப்‌ போத நாதமுனி திருவடியுஞ் ஞானம்‌,
நண்ணிய வுய்யக் கொண்டார்‌ நலந்திகழ்‌ மணக்கால் நம்பி,
தண்ணிய வாள வந்தார்‌ தாளிணை மலருங்‌ கொள்வாம்–7-

நறைத்துள வலங்கன்‌ மார்பன்‌ நாண்மல ரடியினான்கு
மறைத்தமி ழுதவு ஞான வகுளபூ டணனை வாழ்த்தக்‌
கறைத் தலைப்‌ பணிமன்னேயிக்‌ காசினியதனின்‌ முக்கோல்‌
இறைத்தவ னாகி வந்த வெதிபதி கழலுட்‌ கொள்வாம்–8-

எண்டிசையோரும்‌ புகழப் பணிமன்னே யிங்‌ கெதிபதியாய்ப்‌ பர சமயத்‌ திருளை வென்று
புண்டரத்தை நிலை நிறுத்தச்‌ கிரிமி கண்ட பூபதியும்‌ சிவமலதோர்‌ பொருளிலென்‌ று மண்டலத்துள்‌ ளோர்களிடத் தொப்பம்‌ வாங்கி மாமுனிவன்‌ பாலனுப்ப மகிழ்ந்து நோக்கிக்‌
கொண்டல்‌ வண்ணனே பரமாய்க்‌ குறித்தனுப்புங்‌ கூரத்தாழ்‌ வானடியே கூடுவாமே–9-

வாரிதிகலையிற்‌ சூழிம்மானில மாந்தருள்ளக்‌
காரிருட்‌ பிழம்பு தஞ்‌ சக்கதிர்‌ பதினெட்டு நேரச்‌
சிர்கொளட்‌ டா தசத்துள்‌ சிறப்புறு ரகசிய மோதெம்‌
மாரியன்‌ பிள்ளைலோகா சாரிய னருட்பெற்‌ றுய்வோம்–10-

வண்டின முரன்‌ றிந்தள விசை பயிலு மருமலர்த்துள வினான்‌ மதக் கூழ்த்‌
தெண்டிரை கொ ழிக்குங்‌ கருங்கடற்‌ புவியாஞ்‌ செறு விடைப்‌ பரமதக்‌ களையைக்‌
கண்டறக்களைந்‌ தின்னருட் புனல்‌ விடுத்துக்‌ கணந் தளர்வடை வுறா வளர்ப்பான்‌,
தண்டலை யுடுக்குற்‌ தூப்பில்‌ வந்துதி வேதாந்த தேசிகனடி தாழ்வாம்–11-

தேனினமுரன்றுபாடும்‌ மடிழ் மலர்த் தெரியல் வேய்ந்த,
ஞானதேசிகனுரைத்த நான்மறைத்‌ தமிழ்ச் சுடர்க்கு,
மேனியைத் தகழியாக்கி மெய்யறி விடு நெய்யாக்கி,
மானிலம் விளங்கச் செய்த வரவர முனி தாட்கொள்வாம்–12

நந்தணிமகர யாழ்க்கை நங்கையார்‌ குழவீ சீர்த்தி,
செந்தமிழதனினாயேன்‌ செட்‌ புவானெடுத்துக் கொண்ட
தந்தகன்‌ ககனமீனை யய்ய மற்றெணுவே னென்ன,
வந்த வாறமையுமுன்னீர்‌ வையக மதினின்மாதோ–1-

நூற்றிதழ்க்‌ கமலத்தோனு னுவலுதற்‌ கரியதான,
மாற்றருந் தகை கொண்டோங்கு மாறன் றன்‌ சரிதை தன்னைத்‌,
தேற்றமின்‌ மனத்து நாயேன்‌ செப்புவான்‌ றொடங்கலீங்கோர்‌
ஆற்தினுண்‌ மணலையோர்‌ சேயளப்பதற்க்‌ கெழு தலேய்க்கும்–2-

விண்ணவர்க்‌ கரிய மாறன்‌ மேம்படு புகழைப்‌ பாரில்‌,
னுண்ணியல்‌ புடைய நாயேனு வலுவானெடுத்துக்‌ கொண்ட
தெண்ணியார்‌ கலி நீர்‌ முற்று மேந்திளங்‌ குழவி யொன்று
அண்ணி நுண்‌ மூழை தனைனா லளப்பதை நிகர்க்கு மாதோ–3-

கரும்பினுரு வங்கோணி லதினுள்‌ ளாருங்‌ கனிந்த சுவையினை யறிந்தோர்‌ களைவார்‌ கொல்லோ ,
விரும்பிய கண்டுருக்‌ கரடு முரடதென்று, விலக்குவரோ வறிவுடையோ ரவைகள்‌ போல,
விரும்புவி யிற்றமியே னாலுரைக்கும்‌ பாக்களிழி வெனினு மகிலுறைந்த வேதிலாவண்‌
பெரும்‌ புகழ்‌ நஞ்‌ சடகோபன்‌ காதை கண்டு பேணுவரே புலமை கொணற்‌ பெருமை யோரே–4

பாண்டி நாட்டு திருப்பதிப்‌ படலம்‌
சீர்வள ரெதிராசன்‌ பொற் றிருவடிக் கமலம்‌ போற்றிக்‌
கார்வளர் மேனியெம்மான்‌ கண்ணை யுற்றுயிர்களுய்ய
ஏர் வளர் மாறனாக வெழுந் தவதாரஞ்‌ செய்யும்‌
பார் வளரிசை கொள்‌ செல்வப் பாண்டி நாட்டணி விரிப்பாம் -1-

உலகெலாந்‌ தனிபுரக்குமுயர்‌ மழை முகிற்‌ குழாங்கள்‌
அலைவிலாதரியதீம்‌ பயோததி யென வானார்ந்து
பலவளம்பெருகு தெண்ணீர்ப் பரவை நீர்பருகிச்‌ சூலாய்‌
நிலவிய தரள மீனுநீனிறக்‌ கடல்போன் மீண்ட-2-

திரு மகிழலங்கன் மார்பன்‌ றிருவடித் துணைக் காட் செய்வான்‌
கருமிடற்றரனார்‌ வாழ் வெண் கையிலை யென்‌ கிரி யெழுந்து
வருவபோன் முகிற்‌ குழாங்கள்‌ வானிடை. யடர்ந்து வாரிப்‌
பொரு திரை யருந்தி நீலப் பொருப்பென மீண்டவம்மா–3-

அலம்பு வண்டிருந்த தார்‌ நம்மரிந்த மனலரே யங்கைத்
தலமமர்‌ திகிரி மானத்‌ தடித்தியங்‌க வன்றனாம
வலம்புரித் தொனியே யென்ன வாணிடை யதிர்ந் திளங்காற்‌
சிலம்பிடை யவன்றன்‌ சாபமுமிழ்‌ கணைத் திரள் போற் பெய்த–4–

மந்தர கிரியை வென்று மல்லடர்த்‌ துயர்ந்து நீண்ட,
சுந்தரத்‌ திருத்தோளண்ணல்‌ சுடு சரந் துரந்து மேனாட்‌,
கந்தர வடி.வரக்கர்‌ களைகளைக்‌ களையக்‌ கண்டே,
யந்தரத்‌ திமையோர்‌ தூற்று மலர்‌ மழை யென வான்‌ பெய்த–5-

விரிதரு முகட்டின்‌ மீது விடாதுறப்‌ பொழியும்‌ தாரை
அரிய விண்ணுலகத்தான வமரரிவ்‌ விளங்‌ கானச்சி
யுரிய தன்னகர்க்குச்‌ சேர வுயரு மிம்‌ மலையைக்‌ கொள்வான்‌
சொரிதரு வடங்கள்‌ போலத்‌ துலங்கின துதைந்து மாதோ–6–

துவளிலாடக முகட்டிற்‌ றோன்று பல்லருவி யீட்டங்‌
கவளமும்‌ மதப்புழைக்கைக்‌ கரிகட மருப்பு குக்குறந்
தவள வொண்டராள மீர்த்துச்‌ சங்கையி றருக்கள்‌ சாடிக்‌
குவலயத்‌ திளஞரோகை கொள்ள வந்திழித்த வம்மா–7-

மண்ணிடை யிழிந்த தோயம்‌ வாரணத்தினமு மானு
மெண்ணிடற்‌ கரியதாய விடபத்தின்‌ குழுவு மீர்த்துப்‌
புண்ணியம்‌ புரிவார்‌ நெஞ்சம்‌ போலெங்கு நிரவி வந்து
தண்ணிய திரைகண்‌ மோதுந் தாம்பர வன்னி சேர்ந்த–8-

தடந்திரைக்‌ கரத்தின்‌ வாரித்‌ தரளமா மணிகள்‌ வீசி
யடர்ந்த வன்னீத்தத்‌ தூடே யமிழ்ந் தெழு மரத்தின்‌ றோற்றம்‌
மிடைந்த வைம்‌ படைகளேந்தும்‌ விமலன்‌ பாற்‌ கடலை வேண்டிக்‌
கடைந்திடுங்‌ காலத்துற்ற கற்பகத்‌ தருவைப்‌ போன்ற–9-

கோடி னோடந் திகிரியுங்‌ கொண்டுமால்‌
ஈடி றாமரைக்‌ கண்ணிடை யிற்பசு
மாடு மேவி மறிகடற்‌ சேர்தலால்‌
ஓடுமப்‌ புனல்‌ நாரண னொக்கு மால்–10-

மலை களைந்திடை மாதரைச்‌ சேர்ந்து மீ
துலை குருந்த மொசித்து மருதிற்‌ போய்‌
விலை யுயர்ந்திடு மான்பின மேவலால்‌
அலை கொளப் புனல்‌ கண்ணனை யன்னதே–11-

ஆன வெள்ள மரி புலி வேங்கை மான்‌
றான வாரணஞ்‌ சம்பு எண்‌ கேனமே
ஏனல்‌ சந்தக லின்வகுளஞ்‌ செருக்‌
கூனமில்‌ பல வோங்கும்‌ வளை புனை–12-

குங்குமம்‌ சண்பகம்‌ பனை கோங்கில
வங்க மேலம்‌ வசம்‌ பொடு சாதி மா
பங்கம மற்றிடு பற்பல பாதவ
முங்கணிப்பில்‌ விலங்குகளுங் கொடு–13-

ஏக்க மொடு மெயின ரெயிற்றியர்‌
தாக்கருந் துயர்‌ தன்னிலழுங்கிட
வாக்கு செந்தினை யாரிடி தன்னெடுந்
தேக்கிலைக்‌ குடில்‌ சேரவரன்றியே–14-

செறிந்து பற்பல நல்வளஞ்‌ சேர்‌ தரும்‌
குறிஞ்சி விட்டுக்‌ கொடுங்க ணரவமும்‌
நெறிந்திரிந்திட நின்றெரி வீசியுள்‌
வறண்ட பாலையில்‌ வந்து கலந்ததே–15-

அன்னிலத்தைக்‌ குறிஞ்சிய தாக்கியே
மன்னு மாங்குள யாவும்‌ வரன்றியே
துன்னு முல்லை நிலத்திடைச்‌ சூழ்ந்ததாற்‌
தன்னிகர்த்திடும்‌ தாம்பிர வன்னியே–16-

அண்டர்வெள்ள மலமர வன்னவர்‌
மண்டுபாடி வயின்புகுந்‌ தாங்குள
தண்டுளித் தயிர்த்தாழி யளை நெய் பால்‌
கொண்டு வெண்ண திக் கோலந் திகழ்ந்ததே –17-

மல்லலான்‌ விடை மற்றிளங் கன்றுடன்‌
முல்லையங் குழலாயர்‌ முகிழ் முலை
வல்லிமார்கள்‌ வனையும்‌ பணி துகில்‌
மெல்ல மெல்ல வுண் மேவி வரன்‌றியே–18-

மற்றுமுள்ள வளங்களை வாரியே
கொற்ற வெண் குடைக்‌ கோமகன்‌ காரிதன்‌
நற்றவத்துதி நந்தன்‌ புகழென
வெற்றுநீர்‌ மருதத்திடை யேய்ந்ததே–19-

மருப்பொடிக்‌ கமழுஞ் சோலை வான்றருக்‌ குலங்கள்‌ சாடிச்‌
சுருப்பொடு மயில்களாங்குச்‌ சூழ் தரும்‌ பறவை பாய
விருப்பொடு காக்கு மள்ளர்‌ வெள்ளங்கள்‌ வெருக்‌ கொண் டோடக்‌
கருப்பொடித்‌ தயல் சூழ் வாளை கம்புளாரங் களீர்த்து–20-

மள்ளர்‌ தம்‌ சேரி யன்னோர்‌ வளர்த்திடு மெகினங்‌ கோழி
புள்ளின மிடப மேடம்‌ பூங்கிடிக்‌ குருளையோடு
விள்ளு முக்கனிகளீர்த்து வேரி முண்டகக்‌ காடூடுற்‌
அள்ளிதழ்த்‌ தேனினோடு மொன்றிச்‌ செந்நிறத்ததாகி–21-

கொங்க விழி ரதத்தேனைக்‌ கொள்ளை கொண்டளிகள்‌ பாடும்‌
பங்கய வாவி தோறும்‌ பரந்து நித்திலங்க ளீனுஞ்‌
சங்குலாம்‌ பணை கடோறுந் தடையறப்‌ படிந்து நீலத்‌
துங்க வெண்டிரை கண்‌ மோதுந்‌ தூய நீர்க்‌ கடலுட்‌ சேர்ந்த–22-

தேர்ந்‌ துணர்ந்தோர்த நெஞ்சிற்‌ றெளிவுறக்‌ நீத்த நீடு
வார்ந்தலை யகடு கீண்டு வகிர் தர வொதுக்கல்‌, வெம் போர்‌
ஆர்ந்த தோள வுணன்றன்னை யரி யுருவாகி யெம்மான்‌
ஈர்ந்தணி பூண்ட மாலை யெழிலினைப்‌ பொருவு மாதோ–23-

நாடுகடோறம்‌ பாய்ந்த நறம் புன றடையாயுள்ள
கோடுக ளனைத்துஞ்‌ சாடிக்‌ குமுறிடு மொலியுஞ்‌ செந்தேன்‌
ஓடு தண்டலைகள்‌ யாவு மொண் சிறை யறு காற்‌ றும்பி
பாடு மத்தொனியு மாங்குப்‌ பரந்தன வெங்கு மாதோ–24-

கட்கடை குழையைத்‌ தாவுங்‌ கடைசியர்‌ குழுவினோடும்‌
உட்களி தூங்க மள்ள ருண்ணுதற்‌ கமைத்த வூனை
மட்கலத்‌ தெடுத்து மீது வைத்தல ரணையின்‌ மேய
புட்குல மிரிய வந்து புகுந்தன ரனந்தர்‌ மாதோ,–25-

வெட்டுவர்‌ சுமப்பர்‌ வாரி வீசுவர்‌ வரம்பை நேராய்க்‌
கட்டுவர்‌ மிதிப்‌ர்‌ கோட்டுக்‌ கரு நிறப்‌ பகட்டினத்தை
மட்டறப்‌ பூட்டிச்‌ சாறு வார்கரும பொடித்‌ தனேகர்‌
எட்டு மாதீரமுமஞ்ச வேரடித்‌ துழுவர்‌ மாதோ–26–

முருகவிழ்‌ கமலப்போதின்‌ முத்தனம்‌ வளைகளீனக்‌
குருகு தன்‌ கருவாமென்றே குறித்து வெண்‌ சிறகான்‌ மூடி
அருகிருந் தடை கிடக்கு மகன பணைத்‌ தலத்து வானெற்‌
பெருக வென்‌ றகத்திலுள்ளிப்‌ பெய்குவ ரெங்கும் வித்தே–27-

பருமருங்‌ குடை நற்‌ பாகற்‌ பழங்‌ கனிந்திழிந்த தேனும்‌
மரு,மலர்‌ விரியுஞ்‌ சூத வார் கனித்‌ தேனு மீத
விரு மரம்பையின்‌ பலங்கள்‌ வீழ்ந்திழி தேனும்‌ பாயத்‌
திரு மகிழலங்கன்‌ மார்பன்‌ கீர்த்தி போல்‌ வளருஞ் செந்நெல்–28-

இற்றொடி னுழை நுசுப்பு மிரணியத் துகளை நேர்தே
மற்றொடு தனப்‌ பொருப்பும்‌ வாள்‌ பொரு விழியும்‌ பெற்ற
பொற்றொடிக்‌ கடைசி மார்கள்‌ பூந் துகிற்‌ கொடிமென்‌ பூவி
வற்றொடு களைகள்‌ யாவும்‌ வரைந்து பின்‌ குரவை செய்வார்–29-

வரி வளை யலறி யீன்ற மணிதிகழ் கழனி தோறும்‌
விரிகளை கடியு மாதர்‌ விளங்கு நன்‌ முகத்தை நோக்கி
உரிய மா மதியமென்ன வுண்ணெகிழ்ந் தலரு மாம்ப
றரியல னெழுந் தானென்னத்‌ தாமரை மலர்‌ வாய்‌ மூடும்–30-

அந்தரத்‌ தடர்ந்த வாச வைந்தரு நீழல்‌ வைகுஞ்‌
சந்த வானினங்‌ கறிக்கச்‌ சலிப்புறு தோங்கித்‌ திண்டோள்‌
மைந்தரைக்‌ கண்ட கற்பு மகளிர் தங்‌ குழுக் கணாணிக்‌
கந்தரஞ்‌ சாய்ப்பதே போற்‌ கவிழ்ந்தன சாலி யெங்கும்–31-

அகட்டிரசித மீன்றாவ வரிந்தரி யனைத்தும்‌ வாரிச்‌
சகட்டினு மெருத்தின் மீதுந் தலையினுக்‌ கொடு போ யண்ட
முகட்டினிற்‌ படியப்‌ பல் போர்‌ மூட்டியே பிணை யனீலப்‌
பகட்டின மனந்தம்‌ பூட்டிப்‌ பற் பலர்‌ தெழிப்பர்‌ மாதோ–32-

உளங்களி தூங்கவாரு மொண்டொடித்‌ திரளினோடுரந்
தளந்தளமாக வெங்குஞ்‌ சார்ந்த நெற் பொலியை வாரிக்‌
களங்களைப்‌ புதுக்கித்‌ தூய காற்றினிற்‌ றூற்றிப்‌ பின்ன
ரளந் தளந்‌ தவர் கடங்க ளகத்தினிற்‌ கொணர்வர்‌ தாமே–33-

காவியும்‌ கடையு நேமிக்‌ ககமுமென்‌ கமலப் போதுந்
தா விடுஞ்‌ சினை வராலுஞ்‌ சைவலத்‌ துணரு ஞண்டு்‌ந்
தூவியவனமு மீனுந் தூய தெண்‌ டிரையுங்‌ காட்டி
வாவிக ளனைத்து மாதர்‌ வடிவெனப்‌ பொலியு மாதோ–34-

தாதினி னிறையு மம்பொற்‌ றடத்தினிற்‌ றிகழ் வெண்கஞ்சப்‌
போதினி லினிதமர்ந்து பொலிவுறு மனத்தின்‌ றோற்ற
நீதி நின்‌ றுயர்ந்த மாற னிகழ்த்து மத்‌ தமிழை யோர்வான்‌
மேதினி தன்னில் வாணி மெய்த்தவம்‌ புரித லொக்கும்–35-

வெடித்திடுஞ்‌ சினைவரால்‌ போய்‌ வெண் மதிச்‌ சசத்தைக்‌ கீறி
வடித்திடு மமுதத்தோடும்‌ வாரணிந்‌ தடர்ந்த கொங்கைத்‌
தொடிக்கைய ரிருண்ட கூந்தற்‌ சொரிந்தடு நறவு மொன்றி
மடித்தலை யெறிந்தனேக மாநதிக் கிணையா யோடும்–36-

கயமெலாம்‌ பறவை கூடும்‌ காவெலா மயில்களாடும்‌
வயலெலாங் கரும்பு நீடும்‌ வரம்பெலாந்‌ தேன்களோடும்‌
வியன்றருக்‌ குலங்களெல்லாம்‌ விளரி வண்டினங்கள்‌ பாடும்‌
அயலறப் பெருகி நாடு மரும்புனல்‌ குவடு சாடும்–37-

கணையினுங்‌ கொடியதாகுங்‌ காவியம்‌ கருங்கட்‌ செவ்வாய்த்‌
துணையிள முலைக்கரும்பொற்‌ றொடி யுழத்‌ தியரின்‌ வெள்ளம்‌
பணையிடத்‌ தடர்ந்து செய்யும்‌ பணை யிகழ்‌ குரவையோடு
இணை தட வொலிகளெங்கும்‌ கெழுமியார்‌ கலி போலார்க்கும்–38-

வாளை விண்‌ முகடு தாவு மாமரங்கனிக டூவும்‌
வேளை மாங்குயில்கள்‌ கூவும்‌ வெள்ளனம்‌ வயல் கடாவு
நீளரி மலர்த்‌ தேனுண்ணு நீர்முகில்‌ பொழின்‌ மேனண்ணும்‌
பாளைகள்‌ மிகவுமொன்றும்‌ பனி வளர்‌ கமுகின்‌ கண்ணும்–30-

தாமரைத்‌ தடங்கடோறும்‌ தடமுலை மடவாரீட்டம்‌
பூமலர்க்‌ கழனி தோறும்‌ பூங்கரு வண்டுப்‌ பாட்டம்‌
தேமரு பொழில் கடோறும் செழிப்புறு மயில்களாட்டம்‌
தோமறநோக்கும்‌ பக்கந் தோறும் பன்‌ மலர் சேர்‌ தோட்டம்–31-

குடங்கையினகன்று கொலைத்‌ தொழில்‌ புரியுங்‌ கூற்றினைப்‌ பழித்த வெவ்‌ விழிகொண்
மடந்தையரிருண்ட குழற்றிரட்‌ கருத்து மணந் திகழகிற் புகை ககனத்‌
தடர்ந்தன விமையா தவர்கள்‌ கண்‌ ணெச்சின்னாட்டணி யழித்திடா நீலப்‌
படந்தனை விரித்து மறைத்தன கடுப்பப்‌ படர்ந்தன விண்ணிட மெல்லாம்–32-

வண்டலம்பிடு பூந்தண்டலை யுகுதேன்‌ வழிந்து பாய்வுற வளர் கன்னல்‌
அண்டர்‌ தம்பதியிலடைய வாங்குலவு மானினங் கறித்திடச் சிதறி
எண்டிசை யிடங்கண்‌ முழுவது மறைய வெழின் மணி யினங்கள் வீழ்‌ தோற்றம்‌
விண்டலத்‌ திரவி தனக்‌ குடைந் துடுக்கள்‌ வெடித்து வீழ்ந்திடுதலைப்‌ பொருவும்–33-

போதலர்ந்திரத நறவிழிந்தொழுகு புனிதமா முல்லைய நிலத்தில்‌
யாதவரியற்றுல்‌ குழலிசை யினைக்கேட்‌டைம் பொறி வழி யுளஞ்‌ செலுத்தா
மேதகு தவரு மெய்யறி விழந்து மேலை நாளி ருந்தமை கருதி
மாதவ னெழுந்தா னெனவவன்‌ றனையே மருவியின்‌ புறுவமென்‌ றெழுவார்–34-

எழலிகண் படுக்குந் தண்டலை யரங்கி லிவர் முருக்‌ கலரொளி விளக்கவ்‌ வுழிவிளங்‌ கிட வொண்‌ சிறை யறு பதங்களுறு அமளிக்‌ குலங்கள்‌ பண்‌ணியற்ற
பழியிலன்‌ புறு மேன்மையரென விருந்தொண்‌ பறவை கண்‌ மகிழ்வுற விமையா
விழி கொளுஞ் சிகிகள்‌ பயிலின மடவார்‌ விழைவொடு நடிப்பன நடிக்கும்–35–

அஞ்சனமணிந்து விடத்தினிற்‌ கருத்தை யரி பரந்‌ தகன்ற கண்‌ மடவார்‌
மஞ்சனம்‌ புரிநீ ரருவி பாய்ந்திட நெல்‌ வளர்வன வகன் பணை முழுதும்‌
பைஞ்சிறைக்‌ கிளியும்‌ பூவையுமிருந்து பாடுவ சோலை கடோறும்‌
கஞ்ச நன்‌ மலருங்‌ காவியுந் திகழ்வ கயந் தொறும்‌ வழுதி நாட்‌டகத்தே–36–

காவினிற்‌ றிகழும்‌ பலவினற்‌ கனியைக்‌ கறித்தொரு
பாகமாய்க்‌ குரங்கொன்‌ றாவலிற்‌ புசித்து விட்டிட வதனை யருகெழுந்‌ தொருகரு முசுவும்
வாவிமுன்கறித்த விடத்தினைப்‌ பிடித்து வாயை வைத்‌ தருந்துதல்‌ கதிர்கா
றேவிருட்‌ பகையைக்‌ கரும்பை யிராகு சினங் கொடு தீண்டுதல்‌ கடுக்கும்–37-

அற்புத மிகுந்த விரு நிதி யுறலா லம்புயத்‌ திருமகிழ்‌ வுறலால்‌
பற்பல வண்ட ருகப்புடன்‌ மிடைந்து பரிந்துரை பான்மையான்‌ மின்னார்‌
கற்பக மருவுந் தன்மையா லெவருங்‌ கணிப்பரு முயர்ச்சி யினாலும்‌ பொற்பினின்‌ மிகுந்த பொன்னகர்க்‌ கிணையாய்ப்‌ பொலி தரும்‌ பாண்டி நன்னாடு–38-

உந்திமே லொருநான்‌ முகனை முன்‌ படைத்தன்‌ னோன் றனைக் கொண்டு வெண்ணீற்றா
னிந்திரன்‌ முதலாந்‌ தேவரை யுலகத்‌ செண்ணருஞ்‌ சராசரத்‌ தொகையைத்‌
தந்திடப்‌ புரிந் தங்கவை தொறு நிறைந்‌து சாக்ஷியா யிருந்தருள்‌ பெருமான்‌
வந்து தித்தருளும்‌ பாண்டி நாடதனுள்‌ வளத்தினை யுரைத்திடற்‌ பாற்றே–39-

பாண்டிய நாட்டுத்‌ திருப்பதிப்‌ படலம் முற்றும்

திருநகரப்‌ படலம்‌

தண்டலை சூழ்ந்தில குறு சாளக்கிராமஞ்‌ சார்ந்துழியோர்‌ பதினூறு சயினர்‌ வந்தாங்
கண்டியெம்மோ டடல்வாதம்‌ புரிவீ ரென்ன வன்னவர்க்கா யிரம் பணங்கொளரவாய் நின்று
புண்டரிகத்தாளவனைப்‌ பரமதாக்கி போதவலர்‌ தன்னடிக்கட்‌ பொருத்து ஞானத்‌ திண்டிறல்‌ கொளெ திராஜன்‌ கழலை வாழ்த்தித்‌ திருநகரப்படல மதைத்‌ தெரிவிப்பாமால் –1-

சங்கமீனுந்தரள நிலவுல
கெங்கு மாரகழின்புடை யேய் பொலன்‌
றுங்க நீளெயில் சூழ்‌ குருகாபுரி
பொங்கு வாசவன்‌ பொன்னக ரொக்குமால்–2-

வச்சிரத்தி னிடைக்கிடை மாடுபெய்‌
மச்சிவர்ந் தொழிர்‌ மாளிகையும்‌ பளிக்‌
குச்சிமேய வுயர்‌ மணி மேடையும்‌
பச்சையாமறையும்‌ மடைப்பள்ளியும்–3-

பம்பரத்தை நிகர்த்த பயோதரக்‌
கொம்பனார்கந்து கம்பயில்‌ கூடமும்‌
வம்புலாந்‌ அணர்‌ மஞ்சமு மாமணித்‌
தம்பநாட்டுஞ்‌ சயனத்‌ தலங்களும்–4-

பீதகத்திற்‌ சமைத்தொளிர்‌ பித்தியுங்‌ கோதறும்‌ வயிடூரீய கும்பமுற்‌
றாதவன்‌ றொட்டவிர்ந்த சிகரியும்‌ மேதகத்தின்‌ விமானமுங்‌ கோயிலும்–5-

கள்ளலம்பு,கருங்குழல்‌ வாணுதல்‌
அள்ள யிற்க ணடர்க்தெழு மா முலை
கிள்ளையின்‌ சொற்கிளவிநன்மாதர்க
டுள்ளீயாடிடு தோரண வாயிலும்–6-

வானிறாவு கயற் கொடி வைகிய பானிலாமணி மேடையின்‌ பந்தியுந்
தூனிறத் தண் மதி முகத் தோகைமார்‌ கானிசைக்குங்‌ கருமணிச்‌ சாலையும்–7-

பன்னிறக்‌ கதிர்வீசும்‌ பரப்பினாற்‌ றுன்னிராவும்‌ பகலும்‌ துலங்கிடா
நன்னகர்த்‌ தெருவீதி நலத்தையா மின்னதென்றிங்‌ கெடுத்‌ துரைப்பாமரோ–8-

விந்தையிற்‌ சிறவோர்‌ விளையாடிடத்‌ தந்தவாழி சமைத்து று தேரினிற்‌
பந்தனஞ்செய்‌ பரியின்‌ விலாழிநீர்‌ சிந்தவீதியிற்‌ சேறுறு மாதரோ–9-

சீதவாரம்‌ திமிர்ந்த சிமிழ்முலை மாதர் வீணை மலர்க்‌ கைபிடித்து நற்‌
கீதமோ தொலியுங் ளர்‌ மாதவர்‌ வேத கோடமு மேய தவ்‌ வீதியே–10-

தூலை யுற்று நுடங்கிடை மாதரை வேலை யுற்று மிளிர்க்தகை வீரர் கண்‌
மாலையிட்டு மணம்புரி பல்லிய மோலை யுற்ற கடலொலி யொக்குமே–11-

கெண்டையொண்‌ கட்கிளி மொழிமா தரின்‌ கொண்டை கொண்டவிர்‌ கோதை நறவுக வண்டலிட்டு மறுகு வழுக்கமே வொண்டொடித்‌ திரள்யாஞ்‌ சொல வொண்ணுமோ-12-

நீனிறக்கற்‌ சகர நிறைத்தெழு மேனிலைக் கண்‌ மிளிர் கயற் கேதனர்‌
தேனினின்‌ சொற்றெரிவையர்‌ கட்கிணை தானிருக்கத்‌ தவஞ்செயன்‌ மானுமே–13-

ஒள்ளிருஞ்சுதை மாட த்தினுற்றவிழ்‌ நள்ளிருட்‌ குழனங்கை முகத்தொளி
வெள்ளி வெற்புயர்‌ வெண்மதி மாமுகிற்‌ குள்ளிருந்து வெளிப்பட லொக்குமோ–14-

பூவணத்தரளத்திற்‌ பொலிந்தடர்‌ காவணத்தின்‌ கவின்றிகழ்‌ பற்பல
வாவணத்துளமைந்த சிறப்பையிப்‌ பாவணத்திற்‌ பகர்ந்திடற்‌ பாலதோ–15-

ஆரநானமலர்ந்த நறைகொள்கர்ப்‌ பூரநீள்விலைப்‌ பொற்றுகி றாவுழைக்‌
கோரமா னிடபங்‌ கலை கோரதம்‌ வாரணங்கண்‌ மலிந்தது கூலமே–15-

சிந்தியாது பொய்‌ செப்பு தலில்லரிச்‌ சந்திரன்‌ றனிற்றாழ்‌ குனரின்‌ மதி
மந்தராய்த்‌ திரிவாரிற்சுரகுரு வந்தணன்‌ றனிற்றாழ்‌ குனரற்றதே–16-

இன்னலுற்‌ நிரப்‌ போர்க்கிறை யீ விலாப்‌ பொன்னை வைத்துப்‌ புகல்‌ சொல்லும்‌ புல்லரி
லன்ன முற்றுறங்கும்‌ பணை யங்கர் கோன்‌ கன்னனுக்குக்‌ கடையின ரில்லையால்–17-

விட்பரந்த புகழ்ப்பெரு மேன்மையர்‌ திட்புயச்‌ சிறுவோர்‌ சிலர்‌ சேவறாள்‌
முட்பொரும்‌ படைகட்டி முயலொலி மட்கலைக்‌ கெதிர்‌ மாறுகொ ளோலமே–18-

மின்னி னுண்ணிடை மெல்லியலார்கடம்‌ மன்னனோடு மகிழ்ந்து புணர்ந்திட
வன்னை யில்விட்‌ டவரவ ரிற்‌ புகல்‌ பொன்னினாள் வந்து புக்கது போன்றதே–19-

காதலன்‌ பொற்கலையை நெகழ்த்தமெல்‌ லோதிநாணி விளக்கை யொளிக்கவம்‌
மாது பூணு மணியொளி வீசிடப்‌ போத வெட்கிக்‌ கரங்கண்‌ புதைக்குமால்–20-

மானறுங்குழல்‌ மங்கைய ரன்பரோ டானவின்ப மனைத்து மிகுளையர்‌
பானவில்கப்பசியுறு மிற்புலி மோனமோடுண்‌ முழுமையும்‌ நோக்குமே–21-

காவி நோக்கியர்‌ காதல ரூடலின்‌ மேவுமாமணி மேடை யொளித்திட
வாவலோடெழுந்தாட வரன்னரென்‌ றோவியந்தொழ வுன்னி நகைப்பரால்–22-

வற்றனத்‌து மடந்தையர்‌ மாடமூ டுற்றுநாளு முடுபதி தான்செலப்‌
பெற்றதாலவட்‌ பெய்விளக்‌ காவியாற்‌ கற்று மெய்யைக்‌ களங்க மென்பார்களே–23-

கோலமாடக்‌ குழுக்குண்‌ மடந்தையர்‌ சாலவாயற்‌ றிறந்து தனித்தனி
வேலினேர்‌ விழிநோக்கொளி வீதிவாய்‌ நீல மா மலர்த்‌ தோரண நேர்ந்தவால்–24-

அஞ்சினாறும்‌ புனுகு மணிந்து வா சஞ் சிறந்த குழலியர்தத்தை பாற்‌
செஞ்சொனாமம்‌ பயிற்றச்‌ செலற்கது பஞ்சரத்துட்‌ பதுங்கு மணத்தினால்–25-

தென்‌ றமிழ்‌ வட நூறெரி வோர்கடம்‌ முன்றிறன்னிற்‌ புராண முதுப்பொருள்‌
பொன்றிலாது புகன்றிட மாந்தர்கள்‌ சென்று கேட்டுத்‌ தினமு மகிழ்வரால்–26-

மானநீர்ப்‌ பொருணா நதியின்‌ வடக்‌ கானினேறரன்‌ கோயிலமைந்ததான்‌
மேனிலைத்‌ தென் விரசைக்‌ கவாசியா ஞான நாடெனலா மிந் நகரையே–27-

ஏறுமிவ்‌ வளங்கொள்குரு காபுரியி னூடே யீறிலொளி வீசு பொனியற்றெழு நிரைத்த
வீறணியு மண்டபமுண்‌ மேவி யருள் காரி மாறனரி யாதன மகழ்ந்தினி திருந்தான்–28-

வாமரைநிகர்‌ த்தவீழி மங்கைய ரனேகர்‌ சாமரையிரட்ட வெகுதாதியர்கணின்‌று தாமரையலர்க்கு நிகர் தாளிணை பெயர்ப்பத்‌ தூமறை நல்‌ வேதயாக டோததிர மியம்ப–29-

வைரமுடி சூடுதிணி மன்னவர்‌ கடங்கள்‌ செயிரினை யெடுத்தினிது செப்பிட மருங்கே
யுயிரனைய மந்திரிக ஞற்றவை யுரைப்ப மயினிகர்‌ கருங்குழல் கொண்‌ மங்கையர்கள் பாட–30-

வலங்கொள்‌ தட மார்பினிடை வண்டிமிரு நிம்ப வலங்கலொடு வெண்டரள வாரமு மிலங்க
விலங்கரிக ளொண்புய மிடைந்த வலயங்கள்‌ இலங்குற வெண்‌ மண்ணுத லிருந்தொளி தயங்க–31

அளக்கரு மளக்கரி னதிர்முரசொலிப்ப விளக்கொளி யயிற்படை விரற்பதுமமின்ன தளத்துள வலங்கலணி தாயமுகிலே வந்‌ துளத்தினிதுறக்‌ குழைகளொண்‌ சுடரெறிப்ப–33-

கொந்தலரு மோதியர்கள்‌ கும்பமொடு தீபம்‌ வந்தினிதெடுப்ப மதி வாணில வெறிக்கும்‌
சுந்தர மணிக் கவிகை சூழவதனீழல்‌ இந்திரனெனப்‌ பெரிதிருந்தனன்‌ மகிழ்ந்தே–34-

வாசமலர்‌ கொண்டடரு மங்குலினிருண்ட கேச மட மங்கையர்‌ கிளர்ந்தொளிருமம்பொற்‌
றூசுடனெய்‌ வாசமணி சுண்ணமு மெடுத்தே வீசவடன்‌ மைந்தர் பலர்‌ மெல்லடியில்‌ வீழ–35-

பட்டமறு வற்றருள்‌ பரந்தெழு நிலாவின்‌ வட்டமதி யொத்தொளி செய்‌ வத்திர மிலங்க
மட்டுறுமலர்க்கமல மானவிரு கண்ணின்‌ றெட்டிசை தழைத்திட வருட்டிரை யெறிப்ப–36-

இவ்வண மகிழ்ந்தினி இருந்தருள்‌ சுரந்து நவ்விநயநத்‌துடைய நங்கை யொடு நீலப்‌
பவ்வவலை சூழ்புவி பரித்து முறை செங்கோற்‌ செவ்விதினி யற்று பொழு துற்ற துரை செய்வாம்–37-

திருநகரப்படல முற்றும்‌

திருக்குறுங்குடிப்‌ படலம்‌

வெண்டி ரை கறங்குங்‌ கடனிலவரைப்பின்‌ மிடைந் துயிர்ப்பயிர்‌ கொடுங்க கலியாம்‌
அண்டு வெம்‌ கதிரான்‌ மிக்குடல் வெ தும்பி யழிதரா தல் கலின்ஞான
மண்டு விண்‌ மாரி பெய்தருளியரா மானுசன்‌ றாட்டுணை வணங்கி கொண்டல் கண் படுக்கும்‌ தண்டலை யுடுத்த குறுங்குடிப்‌ படலமின்‌ றுரைப்பாம்–1–

பொங்கு நீ டிரைகொ ளு வரியந்தானைப்‌ பூவை மெய்‌ வழியிலோர்‌ குடைக்கீழ்த்‌
தங்க வைத்‌ தனேக நாளர சியற்றித்‌ தனையனில்லாமையின்‌ மெலிந்து
கங்குலிற்‌ கரிய கூந்தலந் துவர் வாய்க்‌ கயற் கணங்‌ கற்பு று நங்கை
பங்கய மலரின்‌ முகமதி நோக்கிப்‌ பார்த்திபன்‌ மொழி சில பகர்வான்‌–2-

இழையிடை புகுதற்கிட மிலா தடர்ந்த . விளமுலை துடி யினே ரிடைநால்‌
புழை நெடுங் கரமென்‌ பிடிநடைத்‌ திருவே பொற் கலத்‌ தடிசிலிற்‌ சிறுகை
தழைவுற வளைந்தங்‌ கிளநகை புரிந்து தவழ்நடை பயிற்றிடு மழகார்‌
மழவிளஞ்‌ சேய்க டமைப் பெ றாதுற்ற வாழ் விருந்‌ தென் பய னென்றான்–3-

சிற்றெரும்‌ பணியி னடப்பன கடுப்பச்‌ சிறுமயி ரொழுங்குமே கலைசூழ்‌ புற்றரவல் குற்‌ றமனியக்‌ கொடியே பொன்னக ரமிழ்தினு மினிமை-யுற்றமென்‌ குதலைச்‌ சிறுவர் கண்‌ மிழற்று மொருசொலிச்‌ செவிப் புலத்‌ தேர்க்கப்‌ பெற்றில ரன்றோ மகர யாழ்‌ முழலைப் பேசு வரினிதெனப்‌ பிறர்க்கே–4-

துப்பித டளவின்‌ முகை யணி முறுவற்‌ றோகை நன்‌ னெறியிலோர்‌ மகவைக்‌
கைப்பெறினேழு பிறப்பினு , மியற்றுங்‌ கடும் பவந்‌ தொலைத்து மா விரசைக்‌
கப்புற மிருத்து மெனிற்புவி துறந்தா ரணிய முற்‌ றைம்பொறி யடக்கித்‌
தப்பில துடலங்‌ கருக வைம்‌ தழலுட்‌ டவஞ் செய றரும் பய னெவனோ.–5-

ஐங்கணைக்‌ குறிசில்‌ வசந்த மண்டபமுற் றணிசெயு மரம்பையங்‌ குறங்கும்‌
பங்கய மலரின்‌ மிதிக்குமுன்‌ சிவக்கும்‌ பதமுநின்‌ றொளிகொள்‌ பெண்‌ மயிலே
செங்கர மதனா லபனருள்‌ கொடு நஞ்‌ சென்னியிற்‌ பொறித்தடும்‌ பொழுது
சங்க நன்‌னிதியுந் தரணியும்‌ பெறுவீர்‌ தனைய ரில் லென வெமுதினனோ–6-

இந்திர தனுவை நிம்பபத்‌ திரத்தை யிகல் செயும்‌ புருவ நற்‌ கமுகின்‌
கந்தரம்‌ வருக்கைக்‌ கனி மொழித்‌ திருவிக்‌ காசினி யதனுணம்‌ மரபில்‌
வந்த திண்‌ டிரடோள்‌ மன்னரி லெவரு மகவின் நல்‌ வாழ்வுற நமக்குச்‌
சந்ததி யிது நாள்‌ வரையிலா ததற்கென்‌ றாழ் வினைப்‌ புரிக்தன மென்றான்–7-

வண்டினம்‌ பெடைக ளுடனிரும்‌ தமுதுண்‌ மருமலர்த்‌ தொடை யணி குழலாய்‌
கண்டினு மினிய மழலை மென்‌ மொழி கொள்‌ கான்முளைப்‌ பொருளிது நாளுங்
கொண்டிலா துணவு முறக்கமும்‌ பெரிதாய்க்‌ குவிமுலைப்‌ போகமே நுகர்ந்து
தெண்டிரைக்‌ கடல் சூழ்‌ புவியு நன்‌ னிதியுசந் திறமென வாழ்ந்தன மென்றான்–8-

இவ்வின மெலிந்து பகையின ருதிர அம் மிருஞ் சிறைப்‌ புள்ளினுக்‌ கிரையாய்‌
வவ்வு மொள் ளயில் வேற்‌ படை யுறு மங்கை மன்னவனுரைத்த சொல்‌ வினவி
நவ்வியை னச் சுணங்கணிர்‌ தடர்பொன்‌ னக கெனத்‌ திமிர் முலை வனசச்‌
செவ்வி கொள்‌ வதன வனநடைத் தெரிவை செப்புவள் சில மொழி யன்றே -9-

இன்னல ரெனுமும்‌ மதமுகும்‌ புழைக்கை யிபமெனுங்‌ குழுவினுக்கரியாம்‌
மன்ன வெவ்‌ வுலகு மகவிலார்‌ தமக்கு வலி கொள் புத்‌ தெனு நர கென்று
நன்னெறி யுணரு மறிஞர்‌ நின்னவை யினவில் வதைக்‌ கேட்டு நாமிதுநா
ளுன்னின மிலையப்‌ பொருளிலா தெவ்வாழ்‌ வொன்றினும்‌ பயனிலை யென்றாள்–10-

என்று மன்னவனு மங்கையுள்‌ சிலநா ளிரங்‌யிந்நாள்‌ வரை யினுநாஞ்‌
சென்றமுப்‌ பொழுது மிடைவிடா திழைஞ்சுஞ்‌ செழுங்கரு முகிலெனப்‌ பொலிந்து
நின்ற நம்‌ பெருமான்‌ றனதடிபரவி நிகழ்த்‌ துவ மின்றவ னமக்கு
மன்றலங்குழலா யஞ்சலென்றருளி மகவர மளித்தருள்‌ குவனேல்–11

வந்தரசியற்றி வாழ்குவ மாங்கம்‌ மகவர மளித்திடா னெனினாஞ்‌
சுந்தரவதனத் தெரிவை யந்கெறியே சூழிருஞ்‌ சடைமுடி. தாங்கிச்
செந்த ழலிடை நின்றருந்தவம்‌ புரிவோர்‌ செறியுமக்‌ கான மேகுவமென்‌
றந்‌ தமன்‌ னவர்கோன்‌ மங்கை பாலுறுதி யறைந்தவ ளுடன்‌ றளிக்‌ கெழுந்தான்–12–

கஞ்ச நன் மலரை யனைய வானனத்துக்‌ கன்னிய ரிருவர் முன்‌ னெதிர
மஞ்சினு மிரட்டி யதிர் குரன்‌ முரசும்‌ வலம் புரிச்‌ சங்கமு மொலிப்ப
வெஞ்சலி னிறை நீர்த்‌ தசம்புடன் மலரு மினிய நற்‌ கனிகளும்‌ வரமுன்‌
அஞ்சுக மொழிமின்‌ னணங்குமன்‌ னவனு மறிந்தறிந்‌ தக மதிழ்ந்தனரால்–13-

பன்னகமிசை நின்றெழுந்து மேனிவந்த பருமணிப்‌ புரிசையும்‌ பரந்த
மின்னொளி விரிக்கு மாட மண்டபங்கண்‌ மிடைந்த பன்‌ மறுகையுங்‌ கடந்து
கன்னலி னமிழ்திற்‌ கனிந்த மென்‌ றீஞ்சொற் கரும்புய னிகருமொண்‌ கூந்த
லன்ன மென்‌ னடையி னணங்கு மன்னவனு மன்பினத்‌ தளிவலம்‌ வந்தார்–14-

செய்ய வொண்‌ கமல மலர்த்தவி சுகந்த திசைமுகத்‌ தயனுறு மிடர்தீர்ந்
துய்ய விண்‌ ணமரர்‌ மஞ்சன முதலா வுள்ளன வெடுத்தினி தளிப்ப
மெய்யவன்‌ பொடுமா ராதன மியற்ற விண்டொட ராசையங்‌ கிரியோர்‌
துய்ய வண்‌ டினங்க ளிசை செய் பைந்‌ துளவத்‌ தொடையல் கொண்‌ டடியிணை பணிய–15-

ஒன்னல ரெனும்வெற்‌ திரைக்கட லினை யுண்‌ டொளிருமொண்‌ டிகிரி முன்‌னடையின்‌
இன்னொளி மழுங்கிப்‌ பரிபவ முறுவ மென்றுரு மாறி வந் தருக்கர்
பன்னிரு வருமுள்‌ ளுவந்திறைஞ்சி யடர்‌ பவரையோ லக்கமா யிருமின்‌
என்னவொ ரிருகை குவித்து வேகு பராக்‌ கென்றவர்‌ கட்டியம்‌ மியம்ப–16-

புகரில்‌ யாழெடுத்து மாடக முருக்கிப்‌ புரிரரம பிசைத்திசை நிறுவப்‌
பகரெழு வகையி னிசைகளை முறையிற்‌ பாணியிற்‌ சுதையினு மினிதாய்‌
அகமகிழ்‌ வொடுமக்‌ கின்னா ரியற்ற வவிர்ந்த செஞ்‌ சடை முடி தரிக்கு
நிகரிலாப்‌ ப்ருகு மார்க்கண்டரு மருங்கி னெடிய மா மறையினிற்‌ புகழ-17-

முருகு கொப்பளிக்க நறவுகுந் துளவ முடியினிற்‌ புடைபரந்‌ தளிக
டுருவிமுன்‌ னடிக்கு மரமபையர்‌ தமக்குச்‌ சுருதியி னின்னிசை பயில
விருவிசும்‌ பகட்டூ ரிருளினிற்‌ கிளர்வுற்‌ றெழுந்த வெண்‌ பிறை திகழ்‌ மறுவின்‌
றிரு நுதற்‌ றலத்துட்‌ செழு மணங்‌ கமழுந்‌ தென் கலைப்‌ புண்டரா மொளிர–18-

செவ்வரியோடிப்‌ புடை பரந் தெழுந்து செவி யொடும்‌ பொருதிக்‌ காண்பவர்‌ கண்‌
வவ்வுறு நீரதாகி நீண்டகன்று மானிலத்‌ துறு முயிர்ப்‌ பயிர்கள்‌
வெவ் வினை யொழியத்‌ தண்ணளி கொழித்து வீளங்கிருங்‌ கண்ணிணை விமலன்‌
பவ்வவார்‌ கலியுட்‌ கிளர்ந் தெழுந் தகையோ பங்கயமோ வெனத்திகழ.–19-

வாட்டடம்‌ பொருந்து மதிமுக மதனுண்‌ மலர்ந்த செலங் கமலமோ வதனுட்‌
காட்டிடும்‌ பவளக் கடிகையோ வெனக் கண்‌ கவர்ந்திடு வாயித ழிலங்க
கோட்டிரு மலையிற்‌ சினந்தெதிர்‌ பொருதக்‌ கொழுஞ் சுட ரருக்கரோ ரிருவர்‌
ஈட்டு வெவ்வினையி னெழுந்தனர்‌ கடுப்ப விலங்கிட மகர குண்டலமே–20-

பொங்கலைப்‌ புணரி நிலந்தனைக்‌ கவர்வான்‌ பொதிந்தெழுங்காலையிற்‌ கிளரும்‌
வெங்கனல்‌ கடுப்பத்‌ திகிரியு மொளிர் வெண்‌ விதுவெனச்‌ சங்கமும்‌ விளங்கக்‌
கங்குலிற் கரிய மலை யெனப்‌ பரந்து கவினுறு மார்பிடைச்‌ செழுநீன்‌
மங்குலிற்றிகமு மின்னெனத்‌ துவளும்‌ வயங்கு முப்புரி யிழை யிலங்க -21-

துங்க முற்றமர்ந்த குடக்கெனும்‌ திசையிற்‌ றோன்றி யம்‌ புயலின்‌கீ ழுதிக்குஞ்‌ செங்கணிற்றுலங்குஞ்‌ செக்‌ கரினரை யிற்‌ செழும் பொற்‌ பீதாம்பர மிலங்க
விங் கருமுகிலினிவ்வணம்‌ பொலிந்த நின்ற மெய்ப்‌ பரன்றிரு முன்னர்‌
௮ங்கடற்‌ றழைத்த வருள்‌ கொண்‌ மன்னவனு மரிவையோ டினிது வந்தடைந்தான்–22-

அண்ட மா யண்டத்துட்‌ பொருளாகி யரிய நான்‌ மறைக்கு மெட்டாத
புண்டரீ கங்கொ ணயன வெம்‌ பெருமான்‌ பொலிந்து நின்‌ றருள் பிரான்‌ றிருத்தாள்‌
கண்டவர்‌ தாளுந்‌ தடக்யைக்‌ கூப்பிக்‌ கவினொளி விரித்திடும்‌ பல்பூண்‌
மண்டல மாது புனை தர வீழ்ந்து வணங்குபு நின்றன ரன்றே–23-

கருந்தட மலையிற்‌ பொலிந்து நின்றருளுங்‌ கருணை யங்‌ கடலினை நோக்கிப்‌
பொருந்தல ருரத்தி னுதிரமுண்‌ டொளிரும்‌ பொரு வயிற்‌ படை கொண்‌ மன்னவனு
மருந்தினு மினிய மொழி நெடுங் கருங்கண்‌ மங்கையு மிருகணீர்‌ பொழிய
வருந்தி நின்‌ றிரங்கி யிரு கை மேற்‌ குவித்து வழுத்துவர்‌ விழுத்தகு மொழியே–24-

அண்டமு மீரேழுலகும்‌ படைத்த னாளி லதிர் சனா யிப்பதியு ளமர்ந்தாய்‌ பின்பு
முண்டகத்தி னான்‌முகனைப்‌ படைத்தன்னோனை முன் படைத்த வுலகளிக்க முதல்வனாக்கத்‌
திண்டிறமில்‌ லாதவனுன்‌ னடியை யுள்ளித் திருவட்டாக்‌ கரப் பொருளை சிந்தை செய்ய
வண்டிமிருந்‌ துளவலங்கன்‌ மார்பிலங்க மா மகள்‌ பூ நீளையுடன்‌ வந்த கோவே–25-

வெந்தறுக ணால் வாய்மும்‌ மதப் புழைக்கை வேழத்தை விற் படைக்கை வேடன்‌ சீறி
வந்தடரக்‌ கடமகன்று நெடுந் தூரங் கொள் வழி துரத்தி யிப்பதிக்கண் வர வன்னோனைத்‌
தந்த மதனாலுறுத்த வவனுங் குத்தத்‌ தந்தியுமக்‌ குறவனு மித்‌ தலத்தின்‌ மாள
விந்திர னந்தகன்‌ றூதர்க் கலை யென்றுந்‌ தனிணை யடிக் காட்‌ செய்‌து கந்த வெழிலிண்ணா–26-

வேதங்க ளீரிரண்டுஞ்‌ சிச்சர்கட்கோர்‌ விப்பிரர் பன்‌ னாள் வரையும்‌ விளம்பிப்‌ பின்னும்‌
போதமிலா னதிலொருவ னிருக்கை நோக்கிப்‌ புங்கவனும்‌ புன் பிறப்பிற்‌ போவாய்‌ நீ யென்‌
றோதவவ னூரினம் விட்‌ டயலூர்க்கேதி யுன்றளி சூழ் புறம்‌ பிடுங்கி யுடலம் பேணப்‌
பேதமிலா தென தடிய னவனென றுன்னிப்‌ பின் பிறப்பில்‌ வீடளித்த பெருமையோனே–27-

வானவரும் தவளமத வாரணங்கொள்‌ வாசவனும்‌ புயவலி போய்‌ வதியுநாட்டைத்‌ தானவர் முன்‌ பறி கொடுத்தங்‌ கமல யோனி தனைத் தொழ வங்‌ கவனவர் கடம்மை சோக்கி
மானிலத் திற்றிரை கொள்‌ பொருனைக் கவாசி வனமதில்‌ நம்மா லுகந்‌ து வளர்கின்றானீர்‌
தேனின் மலர்‌ கொடுதொழுமென்‌ றுரைக்க வந்து தேவர் தொழ வவர்க்கருளுஞ்‌ செவ்வியோனே–28-

சங்கனெனு மறையோன்றே விருவரோடுன்‌ றனைச் சரியென்‌ றெணியாசை தன்னைக் காக்கப்‌
பொங்கு தவஞ்‌ செய்திட நாரதனுழன்று போந்தவனை வாரணமாய்ப்‌ போவாயென்ன
வங்கவனம்‌ முனிவனை யேத்திட மெஞ்ஞான வறிவுணர்வாய்‌ நீ யென்ன வவனும்‌ பின் போய்‌
வங்கமலி யார் கலியுட்‌ சங்கமாயுன்‌ மலரடி வந்தேத்த வருண்‌ மனத்தினானே–29-

அண்டமு மவ்வண்டத்து ளுலவுந் தீயு மலைகடலு மனிலமுமோ ரணுவின்மான
வுண்டு வந்தோ ராலடையிற்‌ பாலனாகி யோகந பநந் துயில வுந்தி தோன்று
முண்டக மென்மலரதி னான்முகத்தோன்‌ றன்னை முன் படைத்தாங் கவற்குனையே மூல மென்னும்‌
பண்டை யிருக்காதிய நான்மறை யனைத்தும்‌ பானிறங்‌ கொளோதிமமாய்ப்‌ பகர்ந்த கோவே–30-

பன்றி யுருக் கொண்டு திரைக்கடல்‌ சேர்‌ மண்ணோர்‌ பருமருப்பிற்றுகளினைப்போற்‌ பரித்து வந்தாய்‌
வென்றி கொளும்‌ வழுதி வள நாடன்றுய்ய மெய்மை யறற்தாங்‌கி சக்ர பாணியாருள்‌
துன்றொளிர் வேலச்சுதர்‌ தாமரைக் கண்ணர்‌ பொற்‌ செங்கணர் பொற்‌ காரிகையா ரெந்தை முன்னோர்‌
குன்றலிலா வழி வழி சந்ததிகளன்பிற்‌ கொடுத் தடிமை கொண்ட பெருங்குணக்‌ குன்றோயே–31-

பொங்கலை நீராழியினைப்‌ புடையுடுக்கும்‌ புவி மகளைக்‌ குடை நிழலிற்‌ புரக்குங்‌ கோவும்‌,
புங்கவிழித்‌ தெரிவையு மித்துதி மொழிந்து புத்தெனு மக்கொடு நரகப்‌ புவியிலெம்மைத்
தங்கவிடா தீடேற்றிக்‌ கதி யளிக்குந் தனையரெமக்‌ கருளென வஞ்சன வெற்பூடே
செங்கமலக்‌ காடுடனோர்‌ மதியுங்கூடிச்‌ செறிந்ததென நின்றவன் முன்‌ செப்பினாரே–32-

தன்னெறிவா யுலகமெலா மோச்சுஞ்‌ செங்கோல்‌ நலமுறு வேந் தினைய மொழி நவிலப் போதின்‌
மின்னுறையு மார்பனணி யாழி சங்கு வில் கதை நாந்ககப்‌ படை கொள்‌ விமலன்‌ கொண்மூ
வன்ன வருள்‌ சுரந்து பொலிந்தோங்கி நின்ற வாதிமா லதரிச வாக்காகச்‌ செம்பொன்‌
மன்னு மணி மாடத் தென்‌ குறுங்கை செல்வீர்‌ மகவளிப்போமென வொருசொல்‌ வழங்கினானே–33-

என்னவெழு மம்மொழி கேட்டிரு புயமு மிருவரையை
மன்ன நெடி தோங்கி யிவண்‌ மனமகிழ்வுற்‌ றிறைஞ்சினனாய்‌
கொன்னவிலு மயிற்படையைக்‌ கொடு மடையா ரிகலடக்கம்‌
மின்ன விரு மணிமுடியான்‌ மின்னினை நேரிடையினொடு–34-

அருமறையு மளவிடுதற்‌ கரிய வொரு தனிப்பொருளாய்க்‌
கரு முகிற்போற்‌ பொலிந்து நின்ற கருணை யமுதினை வலமாய்‌
மருமலரு நிம்பமணி மதர் நெடுந்தோண்‌ மன்னன் மனத்
தெருமர லற்றெழில்‌ விரச சினகர முன்‌றிலி லணைந்தான்–35-

உலகமெலாம்‌ பொது நீக்கி யொரு தனி நாயகம்‌ புரக்கு
மிலகுமணிப்‌ பூண்டிகழு மெழில் கனகத்‌ தடவுரக்கா
வலன முறை யிற் கடிது வருதிரெனச்‌ சாற்றிடலு
மலகிலற நெறி யமைச்ச ரனைவரும்‌ வந்தடைந்தனரால்–36-

வந்தடைந்த வமைச்சரனை வருமரசர்‌ கோனொலிக்குஞ்‌
சந்தமுறு மொண் கழல்க டயங்குமலர்த்‌ தாடொழுது
சிந்தையுவந்‌ துடை யொடுக்கித்‌ திகழ் கரத்தின்‌ வாய் புதைத்து
முந்து நிற்ப மன்னனவர்‌ முக நோக்கி விளம்ப லுற்றான் -37-

வண்டினங்க ளிசைபாட மஞ்ஞையெலாம்‌ கண்ணுளர் போற்‌
றண்டலைவாய்‌ நடனமிடுந்‌ தண் குறுங்கை மா நகரு
ளெண்டிசையும்‌ போற்றி செயு மெம்பெரு மானெந்தமை யாட்‌
கொண்டு வழி வழி யருளுங்‌ கோதிலாச்‌ சுடர் மூர்த்தி–38-

அண்ட மெலா மளித் தருளின்‌ னருளாழி யண்ணறனைக்‌
கண்டுதெரி சித்திருகண்‌ களிப்புறயாஞ்‌ செல்வதினான்‌
மண்டு திரைக்‌ கடலனைய வரும்‌ படைகளைக்‌ கடிது
கொண்டூ வருகுதிரென்னக்‌ கோமானு முரைத்தனனால்–39-

ஒன்னலர் தம்‌ மணி முடிக ளூரஞ்சுதா ளரசர்பிரான்‌
சொன்ன வுரை கேட்டிருதாட்‌ டுணையுமுடியிற்‌ புனைந்து
நன்னெறியிற்‌ றிகழமைச்சர்‌ நவையிலா விரைவினொடு
மின்னவிரச்‌ சினகரத்தை விட்‌ டினிது சென்றனரால் -40-

கூம்போடி வான்முகடு கூடு நெடுந் தேர்முதலா
யாம் பேர்‌ படைக்கலங் கொண்‌ டரசர் பிரான்‌ திரு முன்னர்த்‌
தாம் போய்‌ வணங்கி நன்கு சாற்ற வவர்முக நோக்கித்‌
தேம்பாடு வண்டிணை தார்த் திருமார்பன்‌ செப்பலுற்றான்–41-

இப்பெருநம்‌ படையொடு முன்‌ னேகுதிரென்‌ றவர்க்கருளி
ஒப்பில்லாப்‌ பரிபூட்டி யுயர் மணித் தேர்‌ கொணர்தி யெனச்‌
செப்பிடச்‌ சாரதி நொடியிற்‌ சென்‌ றிறைவர்‌ கோனுரைத்த
வப்படியம்‌ பொற்றேர் கொண்‌ டரசர் பிரானடி தொழுதான்–42-

மஞ்செனவள்‌ வார்முரசும்‌ வால்வளையு நின்றதிரத்‌
தஞ்சமென வந்தடைந்தார்‌ தமக்கருளுங்‌ கருணை வள்ளல்‌
பஞ்சினை நேரடித் துவர் வாய்ப்‌ பணி மொழி யன்னாளினொடு
விஞ்சொளிருந்‌ தேரேறி விரைந்து பெரும்படை கலந்தான்–43-

மின்னொளி ததும்பியணி கொண்டவிர தந்தனை விரைந்து கொடுபோய்‌
மன்னவ னரும்படையி றன்ன விரு பங்கிலும்‌ வளைந்து வருமால்‌
சொன்ன பணி செய்யுமதி மந்திரி யருந்திய துரங்க கணமு
முன்னத மிகுந்த புய மைந்தர் நடவும்‌ திகிரியும்‌ பலவரோ–44-

சுந்தர ரதந்தனை விரைந்தரசியங்க வயறுன்னி மயில்போற்‌
கந்தர நறுங்குழல்‌ மடந்தைய ரடர்ந்தரிய கவரிவிசிற
வந்தவ னுகந்த பணி தந்‌தடி பணிந்து வரு மைந்தர் பலர் சூழ்ந்‌
தந்தர மெழுந்தணி புரந்தரன்‌ வருங்கவி னடைந்தனனரோ–45-

முத்தின நிறைத்தொளிர்‌ மணிக்குவை யழுத்தி வெளி முற்று மொளிரும்
சத்திர மெடுப்பவர்கள்‌ சுற்றிலு நிழற்றவய றத்ததிமென
மத்தள மடிக்கவின்‌ மொழிச்சியர் நடிக்க விதழ்வைத்து வெகு பேர்‌
நத்தின முழக்க வமுதத்தினி தொலிக்குமுயர்‌ நாகாசுரமே–46-

வெண்டரள மண்டியணி கொண்டொளிரு தண்டிகையுண்‌ மென்‌ சிறைகொளும்
வண்டர் நற வுண்டுகுதி கொண்டுலவு தண்டெரியல்‌ மந்திரிகள்‌ சூழ்ந்
தண்டை தனின்‌ மிண்ட வுயர்‌ புண்டர மணிந்திலகு மந்தணர் குழாங்
கொண்டனிற வெந்தறுகண்‌ தந்திமிசை யுந்தி வரல்‌ கோடி யுளவே–47-

குந்தமொடு சூலமயி றண்டு சிலை வாளி கதை கொண்டெ றிதிரைச்‌
சிந்து வென லாகவெழு கம்பலை கொள்‌ சேனை பல சென்றடருமா
லிந்து முறி வாணுதன்‌ மடந்தையர்‌ விலோசன மிருந்தொளிசெய
வந்‌ துலவு மீனென விருங்கயல்கொள்‌ கேதன மலிந்தனவரோ–48-

சித்திர மிழைத்த கனகப்படமுகக்‌ கரி கதித்த திரளி
றத்தி வருமொப்பில வெணற்ற தவளத் துரகதத்‌ தொகுதிகள்‌
அத்திரவிழிப்புவி மகட்குடை யெனப் பொலியு மற்புதமிகு
நத்தின மிகச்செ றியு மத்தியிடை. யெற்றலை யினைப்‌ பொருவுமால் -49-

சந்திர விருங்கவிகை யின்னிழலிறங்குறு மதன்‌ றனணியார்‌
தந்தமடமங்கையருடன்‌ கரியினந்தர மிசைந்து வருவோர்‌
சுந்தர மிகுஞ்‌ சசி மடந்தையருடன்‌ கரிய துன்னி யெழு சூழ்‌
கந்தர மமர்ந்து வரு மிந்திர ரனந்தரி னிகர்ந்திடுவரால்–50-

முத்தின மிகுத்தடு கடற் புவியினைப் பொதுவின்‌ முற்‌ றுமளிகோன்‌
சுத்தமரையைப்‌ பொருமடித்‌ துணையினைத் தொழுது சுற்றி வருமின்‌
பத்தியினயிற் படையினைக் கரமதிற் கொணிரு பத்திறலினோ
ரத்தமு ளிரத்தின மிழைத்த சிவிகைக்குழு வெணற்றவையரோ–51-

சுத்தவமுதத்தினு மினித்தமொழி வைத்த பல சொற் கவிகளால்‌
வித்தகமிகுத்திடு குணத்தரசனைத்‌ துதி செய்‌ விற்பனர்களைக்‌
கைத்துணை குவித்தவனெழுச்சியை யுரைத்து வரு கட்டியர்களை
யித்தனை யெனத் தெரித லுற்றினி துரைக்கும்‌ தெமக்கரிதரோ–52-

எண்டிசையு மண்டி வருகின்ற விவரும் படை யெழுந்து களெலாம்‌
விண்டல மடர்ந்திட மிகுங்கதிர்‌ மறைந்திட விரிந்தொளிசெயும்‌
வெண்டரள மென்னகை மடந்தையர்‌ கலன்களு மிடைந் திருமணி
கொண்ட விரதங்களு மனந்தமரி யின்னொளி மிகுந்‌ திடுமரோ–63-

பங்கய வரும்பினொ டெதிர்ந்தடி பரந்தணி செய்‌ பம்பரநிகர்‌
கொங்கையர்‌ கமுங்குழலிழிந்த மகரந்த மிரு கும்ப மிசையார்‌
துங்கமுறு தந்திகள்‌ பொழிந்திடு மதங்களொடு துன்றிவிரவி
யெங்கு மிகு பங்கமிடு மென்னிலவை யின்‌ கண மியம்ப வெளிதோ–64-

தண்டிரை கொ ளங்கடலை யன்ன விரு பங்கில்‌ வரு தண்டுகளு நீர்க்‌
கொண்டலி னிருண்டுவரு தந்தமுறு தந்தியின் மிகுந்த குழுவும்‌
விண்டொடர்‌ பொலன் குவடை யன்ன விரதங்களு மிசைந் து வரவி
வண்டமுழு துந்துதி குறுங்கை நகரந் தனை யடைந்தனனரோ–65-

நனை விண்ட நறுங் கமலப்‌ பிரசஞ்‌ சினை கொண்ட செழுங் கய லுண்டுகளுங்‌
கனை கொண்ட கருங்கடனேரகழைப்‌ புனைகின்ற பொலன் மதில்‌ வானுறுமே-66-

புயலுற்ற பொலன்மணி மாளிகைகள்‌
கயலுற்ற கருங்கணுடங்‌ கிடையார்‌
மயலுற்ற மதன் சமர்‌ வென்றும௰ழ்‌
செயிரற்றொளிர்‌ மேனிலை சேணுறுமே–67-

பண்ணுற்ற மொழிச்சியர்‌ பற்பலர்க
ணண்ணித்தின நற்கழல்‌ பந்துபயில்‌
விண்ணுற்று மிளிர்ந்தடர்‌ கூடமிகுந்
தெண்ணற்ற திருந்தணி செய்‌ திடுமால்–68-

வாரூடு கிழிக்கு மதர் முலைமின்‌
னாராடிடு நாடக சாலைகளுங்‌
காரான கருங்குழலார்களிசை
யாராயு மரண்மனையும்‌ பலவே–59-

அமிழ்தத்‌துமினித்த வருஞ்சுவை முத்‌
தமிழ் கற்றிடு சாலையுமால்புகழோ
து மறத்தினுருக்கிளர்‌ தூய் மறை நான்‌
குமுணர்த்திடு கூடமுமாயிரமே–60-

மணிவார்‌ கொடிறுக்கிய மாமுரசைக்‌
குணிலாலே துவைத்திடு கோடணையு
மணியாழிசை யார்வமு மார்ந்திலகுந்
துணி வீசிய தோரண வாயிலெலாம்–61-

கஞ்சப்‌ பெணுளங்‌ களிசெய்‌ கணவன்‌
விஞ்சக்‌ கதிர் வீசுபொ னிஞ்சயும் வெம்‌
நஞ்சத்தனரன்‌ முடிகாணரிதாய்‌
விஞ்சித் திகழ்‌ கோபுர மேலுறுமே–62-

மீனந்தவழ்‌ மாடமிசைத் திமிர்பாற்‌
றூ நன்கொடியாடுத றொன்னகர் வாழ்‌
மானின் மகவாமென வெண்கையினால்‌
வானொன்றுவர்‌ கூவுதல் மானுமரோ–63-

முருகூரு நிம்பமல ரணியா னெழுந்தருளன்‌ முனமே யறிந்திநகர்வாழ்‌
இருநாக மன்ன விரு தனபார மங்கை யரு மிகலாரு மைந்தர் குழுவுந்
திருமா துறுந்தவள மணிமாட மண்டியணி செயும்‌ வீதியெங்கு நடுவார்‌
மருவேரி யம் மடல்‌களொடு பூக முங்கழையு மதியேற ரம்பைகளுமே–64-

கருமா முகிற் படியு மிருவான கட்டுற மகர தோரணங்க ளிடுவார்‌
பருவா னிறத்தரள மணிவா யமைத் தொளிகள்‌ பரிகா வணங்க ளிடுவார்‌
அருமா டகத் தகழி யிடையா நெயிட்டு வெயிலளி தீப மெங்கு மிடுவார்‌
விரிவா னகர்க்குமிடர்‌ தருவீதி முற்றவுமி விதமா யியற்று பொழுதில்–65-

உலகேழுமுற்ற முடிவுறு நாளினிற்‌ கிளரு முவராழி கட்‌ கிணை யெனப்‌
பலமாரு மப்படைக ளிருநா றிசைக் கண் வரை பரவா வரச் சுடர்‌ கொளுஞ்‌
சலமா றையிற் படை கொள்‌ வயவார் முதற்‌ றலைவர்‌ தமை யிடழித்திடு புர
வலனீ டிரத்னமணி யதனா லிழைத்த நகர்‌ மதில்‌ வாயினிற்‌ குறுகினான்–66-

இனனீதி யுற்ற வறு தொழிலோ ரிருக்கொலியொ டெதிர் காண்‌ வரக்கரிய சூற்‌
கனமீதினிற்‌ படியு மணிமாட மட்டில் பல கவின்வீதி பிற்பட வொளிர்‌
முனமே யுரைத்த நெடுமதி லாலையத்தினகன்‌ முது வாயிலிற்‌ சிகர வொண்‌
டன மேருவைப்‌ பழி செயணி தேர்‌ நடத்தி யடறளமோடு முற்றனனரோ–67-

அடலாழி யுற்ற கர னடியா ரடிக்கமல மகலா மனத்தி னிறையோன்‌
கடனீ டிரட்டியக லிகறானை கட்கவணி கவின் வாயி னிற்பவருளி
விட தேர் நிறுத்தி நிலவுமிழ்‌ மாமதிக்கு நிகர்‌ விரியான னத்தினணியார்‌
மடமாது பிற் செலமி னொளி வீசுமத்தளியை வலமாக வுற்றனனரோ–68-

மரையா தனத்திலுறை யொருநான்‌ முகத்தவனு மறையோதி நிற்பவடல்கொ
ளுரையோதி மத்தனைவிலெனவே பரித்தவர னுறுகாதன்‌ மக்களுடனே
விரையாரலர்த்துளவ முடியாயெமக்கருடி வினையே மடைக்கலமெனத்‌
தரைமீதினிற்‌ றொழுது பலவாய நற்றுதிக கடகையோடி யற்றி மகிழ–69-

அகல்வா னகத்‌ துறையு மிமையோர் கணத்தி னெடு மயிராவதத்தின்‌ மிசையூர்‌
இகன்மா மலைச்சிறைகடுணி தூ றையிற் குவிச மெழிலார்‌ கரத்திற் திகழ
மகவானடுத்தினிய நறையோடு கற்பகமென்‌ மலரா லருச்சுனை செயத்‌
தகவாத ரத்தினொடு விரிசாம நற் சுருதி தனை யோதிடத்தவர்களே–70-

மருவார்‌ கமலங்கள்‌ மலர்ந்த நெடுங்‌ கருமாமுகின்மீது கவின்றிகழ
வொருகோடி யருக்க ருதி த்தனெரென்‌ திருமா முடியொன்‌று திகழ்ந்திடவே–71-

வருசூரிய மண்டல மத்தியனென்‌ றருமாமறையான தறைந்தவெனப்‌
பெரியோர்க ளுரைத்திடு பெற்றியையா முருவாக முனந்தெரி வுற்றன மால்-72-

செடியாதுமிலாது செழித்த நுதற்‌ கடி நான முறுந்தில கத்‌ தினொடும்‌
வீடுதண்சுடர்‌ வெண்பிறை யொன்றுளதேல்‌ வடிவேறெனை மானுமென திகழ–73-

மாசற்றமுண்‌ மேவி மலர்ந்த விருந் தே சுற்றணி கொண்ட செழும்‌ முகமெம்‌
மீசற்கிணை யுண்டெனி லென்றனை நேர்‌ பேசத்‌ தகுமென்று பிறங்டவே–74-

மரைமா மலரென்ன மலர்ந்தவிர்செவ்‌ வரிமீது பரந்த வருட்கணிணை
தரைவாழு முயிர்ப்‌யிர்‌ தான் வளரப்‌ புரைதீ ரருண் மாரி பொழிந்திடவே–75-

நகுவொண்கதிரம்‌ பொனின்மாமணியால்‌ வகுவங்கத மிட்டுயர்‌ மாநகருட்‌ டகுவைந்தருவின்‌ றிகழ்சாகை நிரை நிகரென்னவே நாற்புய நின்றொளிர–76-

வாடாதமரைத்திரு மாமலரை சாடா விலகங்கை கடம்மிலக
லாடாழியொ டொண்‌ கதை யந்தனுவா ணீடாய வலம்புரி நின்றொளிர–77-

சிறையோதிமமேல்‌ வருசேவனொடுங் கறையாய களத்தரனே முதலோர்‌
அறியாது விளங்கு மடித்துணையா நெறியாக நிகழ்த்‌துவ தெவ்வினையே–78-

அந்தப் படிகத்‌ தமையத் தளியுள்‌ ளிந்தப்படி யேய்ந்திடு நம்‌பிமுனஞ்‌
சிந்தப்படி கண்ணொடு தெவ்வரெலா மந்தப்படி யாளிறை வந்தனனால்–79-

காசத்த மனத்தரி காணமுன மாசத்த மனத்தி சூழ்‌ மானிலமு
ணேசத்த மனத்திறை நேரவுமெற்‌ றேசத்த மனத்தி றிகழ்ந்ததுவே.–80-

ஓலைப்புனல்‌ சூழ்‌ புவியோம்பிடு செங்‌ கோலைத்‌ தரிகோன்‌ பவனிக்‌ கெழுமக்‌
காலைக்குமுனே குறு கட்டியரின்‌ மாலைப் பொழு தெற்கு முன்‌ வந்ததுவே–81-

கூவற்ற குயின்னட மற்ற மயில்‌ வாவற்றிர ளூண்ணிரை வைகுமிட
மேவச் செல்லுற்றன மென்‌ கவிக டாவற்ற தடம்பொழி றன்னிலரோ–82-

வீசக்கரவாக விரும்பியணை நேசப்பெடை நீங்க மென்குமுத
மாசைத்‌ தனி யன்பர்வரக்‌ களிகொள்‌ வாசக்‌ குழலாரின்‌ மலர்ந்தனவே–83-

பரிவிற்‌ புணர்பான்மைய வன்பர் தமைப்‌ பிரிவுற்றவர்‌ பேது ற வெங்குள ரென்‌
றரிபற்று மலர்க்கணை யைந்துகொடு திரிவுற்றனன்‌ சித்தச னெங்குமரோ–84-

இவ்வாறு தூலங்குறு மெல்லிலடற் றெவ்வானவர்‌ சிந்தை கலங்க வொளிர்‌
வெவ்வாழி விளங்குகை நம்பியம ரவ்வாயி னிகழ்ந்த தறைந்‌திடுவாம்‌.–85-

திருக்‌ குறுங்குடிப்‌ படலம்‌ முற்றும்‌,

வரம்‌ வேண்டுகோட்‌ படலம்‌

தேனுகு பூம்பொழி லிடைமாடக்‌ களாருத்‌ திருநாராயணபுரத்திற்‌ சிச்சர்கூடி
ஞானமுனி நின்னுருப்‌ போலர்ச்சை யொன்று நாங்களியற்றியதினடி நாளுந் தாழ்ந்தெம்‌
மூனமற வேண்டுமெனப்‌ பணியச்‌ செய்வித்‌ துடையவரோ வென்றதை மாற்‌ றுரைக்கச்‌ செய்ரா
மானுசன்றாளிணை மலர்நஞ்செ ன்னி சூடி வரம்வேண்டுகோட்‌ படலம்‌ வருவிப்பாமால்–1-

கொந்துற்ற குழற்கொடி நேரிடையு வந்துற்‌ றமரு மரைமாமலரின்‌
பந்திச்‌ செழு மாமுகில்‌ பார்த்தனரால்‌ வந்திக்கு மறைப் பொரு டன்னைமுனே–2-

வெண்ணித்தில வொண்வட பேழுதலா மண்ணிற்பட வீழ்ந்து வணங்கி யிரு
கண்ணிற்‌ புனலோடு கனிந்‌ துருகி நண்ணிப்‌ பறுதிப்பை நவின்‌ றிடுவார்‌-3-

அற்புக்கொரு வாழியினான வளாய்ப்‌ பற்பத்‌ தளிமேவிய பாலின்மொழி
கற்புத்‌ திருமங்கை கவின்றிகழ விற்பத்தொடு மெய்மணிமார்‌ புடையாய்–4-

மஞ்சிற்‌ கரிவாவென வந்தருள்வான்‌, கஞ்சத்‌ தடமேவிய வெங்கரவைத்‌
துஞ்சக்கனனின்‌ றெரி தூய்மை யுறும்‌அஞ்சக் கரம்‌ வீசி யறுத்தவனே–5-

அரிதாய பலாயிர வண்டமெலாம்‌ விரிவாக வீடுத்தி டுனக்‌ கடியேந்‌
தரிகான்முளை தன்னை யெமக்கருளல்‌ பெரிதோ விது வென்று பிறழ்ந்தனனே–6-

இன்னவாறுள மின்புற்‌ நிறையுமா றன்னை வாழ்த்திக்‌ தளிவலமாய் முகின்‌
மின்னையே மிடை மெல்லியலோடுதான்‌ மன்னி கேதனம்‌ வந்தணைந்‌ தானரோ–7-

மாலதிக்கிணை யாதிய வாலனம்‌ பால சர்க்கரை நெய்யொடு பாகமாய்‌
வேலை மாய னமுது செய்‌ மிச்சிலை கோலமோடுண்‌ டருந் துயில்‌ கொண்டனன்–8-

அனனடைப்‌ பொன்னணங்குறு நம்பியவ்‌ வினனிடங்‌ கனவிலுனக்‌ கஞ்சவா
கனனரும்‌ பொருடந்தவன்‌ காதலார்‌ தனைய னற் பொருடந்தில னென்றனன்–9-

சொன்ன வாய்மை துளைச் செவி யேறுமுன்‌ மன்ன னுள்ள மலங்கி
பொன்னினோடு புலரி நீராடிமால்‌ சந்ததிக்குட்‌ புகுந்தினல்‌ சாற்றுமால்‌–10-

மெச்சயன்‌ மதமேவ மறையை நின்‌ னிச்சையா லசைரர்‌ சென்‌ றெடுத்‌ தெழற்‌
கச்சமுற்ற வவன்‌ றுயராற்றுவான்‌ மச்ச ரூப மெடுத்தருள்‌ மாயனே–11-

இமையவர்‌ திரண்டின்புற வின்சுவை யமுதமீயெமக்‌ கண்ணலெனச்‌ சொலச்‌
சிமையம்வெந்‌நறச்‌ சேர்த்திட வாரியுட்‌ கமடமாதிய கார் முகில்‌ வண்ணனே–12-

இரணியாக்க னுயிர்க்கிடர்‌ செய்குவான்‌ தரணியைக்‌ கொடு பாதலந்தான்‌ செல
வரணியாவெனு மன்பர்க்கருள்‌ செய முரணியங்டியாய்‌ வரு முர்த்தியே–13-

பாரினுட்‌ பரநா மலதில்லை யென்‌றாருயிர்‌ முன்னறைந் துரையீரெனுங்‌
கூரயிற்‌ கனகன்‌ னுயிர் கோறவே நாரசிங்கம தாய் வரு நம்பியே–14-

திறமிலா மையிற்றேவ ருலகையும்‌ மறமுறும்‌ புயமாவலிகைக்‌ கொளத்‌
தறையும் வானு நின்றாளிணையே தொழக்‌ குறளுருக்‌ கொண்டருளிய கொண்டலே–15-

அத்தி சூழு மிலங்கை யரசனான்‌ மெத்தவாற்றன்‌ மெலிந்துள சந்துமா
கத்துளோருன்‌ கழறொழவன்‌ றுகா குத்தனாய்‌ வந்தருளிய கொண்டலே–16-

மண்ணகப்பெண்‌ வருந்த நினைத்தொழு தண்ணலென்‌ பொறை யாற்றுவை யென்‌ றலும்‌
மூண்ணெகிழ்ந்தம்‌ குகந்தெழிலான்‌ மிகும்‌ கண்ணனாகி யருளிய கர்த்தனே–17-

பாருளோர்‌ வெம்பவத்தளை பூண்டுனைச்‌ செர்கிலாது புன்றீய மதாந்தராய்‌
நீர்மை குன்றிட நீயவர்க்‌ கின்னருள்‌ கூரவே கற்கியாய் வரு கொண்டலே–18-

பழுதி லெண்டிசையோர்‌ புகழ்‌ பண்பறா வழுதி மன்னர்‌ மரபிலுதித்த யான்‌
எழுதலை முறையா யுனையே தொழ மழலை நன்மக வில்லெனன்‌ மாட்சியோ–19-

ஊழ்வினைப்‌ பயனோ வலதும்பர்‌ பாற்‌ றாழ்வு செய்தனனோ பற்றளிகளாம்‌
வாழ்வகற்றி வதிந்தனனோவல தேழை மாந்தர்க்கிட ரிழைத்தேனரோ–20-

பொம்மலுண்ணக்‌ கலத்துறு பூசுரர்‌ தம்மையேகக்‌ கடிந்தனனோ தமிழ்ச்‌
செம்மலார்ந்த கொழுநனைச்‌ சேர் தருமைம்‌ முகிற் குழல்‌ வாழ்வறித்தேனரோ–21-

மண்டலத்‌ துண்மகவுறு மாந்தரைக்‌ கண்டு நெட்டுயிர்ப்‌ புற்றனனோகரங்‌
கொண்டு பாலிறையேனுங்‌ குழவி கட்‌ குண்டுகக்க வுதவின னில்லையோ–22-

வேதியர்‌ பெரியோர்கள்‌ வியந்ததங்‌ காதலாரைக்‌ கருதினனோ வயல்‌
மாதரோடு மருவிக்‌ கருவையுந் தீதெணாது செகுத்தனனோ கொலோ–23-

ஊதியத்திலவாவி யுலகமொவ்‌வாத பொய்மை வழங்னெனோபலி
யாதுலர்‌ முன்னளிக்குவ னென்றலைத்‌ தேதுமில்‌லு மக்கேகுமினென்‌றெனோ–24-

கொஞ்சமேனு மிரக்கங்‌ கொளாதுயி ரஞ்ச வீண் கொலை யாற்றினனோ வெனைத்‌
தஞ்சமாகுற்‌ தமர்க்கருள்‌ செய்வபோல்‌ வஞ்சமே செய் மனத்தினனே கொலோ–25-

பெற்ற வின்பயம்‌ பேரிளங்‌ கன்றுணச்‌ சற்று மின்றித்‌ தகைந்து கறந்துவாக்
குற்றசங்க மொழித்து மதுவினைக்‌ கற்றிலாரிற்‌ கருதி யுண்டேன்‌ கொலோ–26-

மெய்வருந்த விழைத்திடு வேலையர்க்‌ கெய்து கூலி கொடுத்தன வில்லையோ
செய்யெனாமுனஞ்‌ செய்தவர்‌ நன்றி யுண்‌மையிதாக மறந்தனனே கொலோ–27-

ஆறிலொன்‌ று கொளா துறுத்‌ தாசையால்‌ ஊறு செய்துல கோம்பினனோதவத்‌
தேறுபோல்வர்க ளெய்திடில்‌ யான் கொடுஞ்‌ சேறு சேர வெழாதிருந்தேன் கொலோ–28-

முன்னியற்றுக்‌ தவமுடி வில்லையோ பின்னிழைத்திடும்‌ பேறுங்‌ குறைந்ததோ
வின்னிலத்திலி யாங்கள்‌ மலடராய்‌ மன்னவென்று வரங்கொணர்ந்‌ தேமரோ–29-

அன்று வேழ மழைக்கு முனாவலாய்ச்‌ சென்று றூஉகண்‌ செகுத்துத்‌ துரோபதைச்‌
கொன்றவாடை வுதவிய நின்னருளின்‌ றெமக்கிலதாயதெ னேந்தலே–30-

இப்படிக்‌ குரிசி லுள்ள த்திருந்த வெந் துயரமெல்லாம்‌
மைப்புயலுரு வோனக்கன்‌ மலமறக்‌ குருதி யீந்த
நப்பின யணங்கு கேள்வ னம்பி காற்றுணையில்‌ வீழ்ந்து
செப்பினனழுங்கிப் பல்காற்றிருக்கு நீர் கலுழமாதோ–31-

மண்ணினன்‌ களைகணீ யென்‌ றலமரு மாண்பு நோக்கிப்‌
புண்ணியவெதவேந் தன்பிற்‌ பொறிக்கும்‌ புண்டரமிலங்கத்‌
தண்ணளிக் கடலா னம்பிதனாதுள மகிழ்ந்‌திவ்‌ வேந்தின்‌
கண்ணினுக்‌ கணியனாய் நின்‌ றீனிய சொற்‌ கழறுவானால்–32-

மானிலத் துறவிலார் தம்‌ மண்டமர்கடந்த வொள்வேல்‌
மீனவன்‌ மரபுட்டோன் றும்‌ வேந் துனக்குரிய சேயாய்‌
நானடைகுவனின்‌ சோக நவையற மகிழ்ந்தெல்லீருந்
தேனின முரலுஞ்‌ சோலைக் குருகை சென்றிடுமின் என்றே–33-

மாயவனுரைத்த மாற்றம்‌ வள்ள றன்‌ செவியுறாமுன்‌
வேயுறழ்‌ புயமிரண்டு மேருவினிமிரச் செய்யாள்‌
நேயனேவன்மீ னட்ட நேமியா யுலகமுண்ட
தூய கந்தரத்தா யென்றே துதிபல வியம்பி நின்‌றான்–34-

பாடினா னாடினான்‌ செம்பதமலரணி முடிக்கட்‌
சூடினா னாழியானின்‌ சுதனெனுங்‌ கருணையே கொண்‌
டாடினானணியனா மவ்வாண்டகை வடிவு நோக்கங்
கூடினான்‌ றொழதா னின்பக்‌ குளிர் கடல்‌ முழுகி நின்றான்–35-

விஞ்சை யரியக்கர்‌ விண்ணோர்‌ விரை கொளைந் தருவின்‌ பூவான்‌
மஞ்சன மாரி பெய்ய மண்ணுளோரிறைஞ்சி யேத்த
கஞ்ச மின்னிலகும்‌ திண்டோட்‌ காரியார்க்‌ கருளீந் தன்று
குஞ்சரத்து றுகணீத்த கோவலன்‌ கோயில் புக்கான்–36-

மாமனங்‌ கதர்சனாக மறைந்த பின்‌ குருதி தோய்ந்த
நாம வேலிறையுங் காதனங்கையு மிக மகிழ்ந்து
தேமலர்த்‌ துளவினான்‌ றன்‌ சினகரம்‌ வலமதாய்த்தன்‌
றாமமுற்றடிசி லுற்றுத்‌ தளத்துடனிருந்த பின்னர்–37-

பிழையறப்‌ புவிபுரக்கும்‌ பேரருட்‌ ஞரிசினீதி
யுழையரை விளித்து யூகமொலி கடற்றிரளே யின்பந்
தழை வுறச் செய்து பிற்றைப்‌ புலரியிற்றருதிர்‌ நீவிர்‌
குழை பொரு கயற் கணார்‌ வாழ் குருகையா மடைதற் கென்றான்–38-

ஆங்கரசியம்பா முன்னரறிவின்மிக்‌ கமைச்சரெல்லாம்‌
பாங்குறு மிரதமியானை பாய் பரி படைக் குழாங்க
ளீங்கு வந்தடைந்த தெந்தாயினி யருளென்னே யென்று
வீங்கிய குவவுத் திண்டோள்‌ வேந்தனுக்‌ கறிக்கை செய்தார்–39-

மந்திர மறையோர்‌ வாழ்த்த மங்கள வியங்களார்ப்ப
பந்தையொத்‌ தெழுந்த கொங்கைப்‌ பரத்தையர்‌ நடிப்ப மன்னன்‌
பைநதுள வலங்க னம்பி பங்கயப்‌ பதமுட்கொண்டு
வந்தனை புரிந்து பொற்றேர்‌ மங்கையோ டேறினானால்–40-

வாளரி மதர்க்க ணல்லார்‌ வயங்கு சாமரமிரட்ட
காளமும்‌ முரசு சங்குங்‌ கறங்க வானிலவு காலுங்
கோளகை கவிகை யேந்‌திப்‌ படைகளின்‌ குழு முன் செல்ல
வாளி மொய்ம்பினனும்‌ பொற்றே ரணி கொள்‌ வாம் பரி நடாத்தி–41-

குதி தோய்ந்தொளிரும்‌ வெற்றிக் கொற்ற வேற்‌ கலியனன்பர்க்‌
கருணிதியமரு மவ்வூர்க்‌ கண் மறுகதனைத் தாண்டி
இரு விசும்பணவு செம்பொனெயில கழியையு நீங்கித்‌
திரு மகிழ்ந்‌ துறையு மார்பன்‌ செழும் பணைத் தலமடைந்தான்–42-

தூய தாமரைத்‌ தடத்தையு மத்தடந் தோயு
மாயந் தன்னையு மணிமலர்க்‌ காவையு மயலி
னேய தண்பணை களையு மற்‌றுள வள மெல்லாம்‌
ஏயவோகையி னணங்கிலுக் கிறையவன்‌ காட்டும்‌–43-

அங்கயத்‌ தடைந் தரிவையர்‌ தேர் நிமிர்ந் தாடச்‌
செங்கயத்தடி முகத்தொரு தனமு மேற்றெரிதல்‌
வெங்கயத்தடர்‌ முலையினா யாங்கதில்‌ விளங்கும்‌
பங்கயத் தட மலர்‌ முகை போன்றன பாராய்–44-

வடு வகிர்க் கிணையாய கண்‌ ணணங்குசின்‌ மடவார்‌
இடுபுனற்‌ குடைந்தேந்து பின் குழலில்‌ வைத்திடு தேன்‌
விடு வெண்‌ டாமரைப்‌ போது சூற் கொண் முகின் மீதில்‌
படுமுடுக்கணம்‌ போன்‌ றினி திலங்குவ பாராய்–45-

மாங்குயிற்‌ சொலி னன்னவர்‌ குடைந்தெழ மறைக்குந்
தேங்குழற்றிர ளொதுக்கிடத்‌ தெரியும்‌ வத்‌ திரந்தான்‌
ஈங்கெழிற்‌ கொடியிடையினாய்‌ மேற்பட ரெழிலி
நீங்க வுட்‌ டெரி வெண்மதி நிகர்த்தன பாராய்‌–46-

அனிச்சப்போது மெனஞ்சத்தின்‌ றூவியுமழுத்தி
நனிச் சிவப்புறும்‌ மடியினாய்‌ நாரந் தோய்வான்‌ செல்‌
கனிச் செவ்வாயினர்‌ சிலம்பொலி கேட்டனக்‌ கணங்கள்‌
பனிச்சையோடு தம்‌ மினமெனத்‌ தொடர்வன பாராய்–47-

கருமுகிற்குழலா யொரு கன்னி செங்கமல
மருவை யோருவானாசி வைத்திட முக மதி யென்‌
றருகு கூம்புமம்‌ மலரினைக்‌ காணி லதன்னார்‌
திருமுகத்தினுக்‌ கடையு நாணென்னலாந் தெரிவாய்–48-

கோங்கு கொங்கைகள்‌ காட்ட நன்முருக்‌ இதழ் காட்ட
மாங்குயின்‌ மொழி காட்ட மாவடு விழி காட்டத்‌
தேங்குழைத் தளிர்‌ திருவுருக்‌ காட்டிடச்‌ சிறந்து
பாங்கரும்‌ பொழின்‌ மடந்தையர்‌ போன்றன பாராய்–49-

விரியறத்தின ரரும்பொருள டையுமவ்வேலை
யரியதாயதம்‌ முறவினை த்‌ தழுவுத லனையக்‌
கரியவாயசந் தானுணும்‌ மிரையினைக் கண்டே
யுரியதன் கிளைகூவுவ காண்டி யொண்டொடியே–50-

தேகி யென்றவர்க்‌ கிம்மியு மளித்திடாச்‌ சிறிய
ராகி நின்‌றவ ரரும் பொருளாக்கிக்‌ காப்பது போல்‌
கோகிலத்தினன்‌ மொழி மினாய் தேன் கணங்‌ கொழுந்தே
னேகி யெங்கனு மீட்டி வைத்‌ திருப்பன பாராய்‌–51-

வயற்றலந்‌ தொறு மடர்ந்த பைங் களைகளை மாய்க்கும்‌
புயற்றருங்குழலுழத்தியர்‌ கண்ணெழிற்‌ பொலிய
வயிற்றிரிந் திடும் புட்‌ குலமவாவொடு மடைந்து
கயற்றிரள்களென்‌ றேங்கி யங் கிருப்பன காண்டி–52-

இன்ன தன்மைய வளனெலா மெடுத்தெடுத்‌ தொளிரும்‌
பொன்னின் மா மெளலி மன்னவன்‌ புயற் கருங் குழற்பைங்‌
கன்னனன் மொழிக்‌ கனி யிதழ்க்‌ குரைத் துரைத் துகந்து
செந்நென்‌ மன்னிய பணை பொழிற் பின்னிடச் சென்றான்–53-

பெருகு மார்கலிக் கணை யெனப்‌ பெருந் தவப்‌ படைகள்‌
வருக நாற்றிசைப்‌ புறத்தினு நண்ணி வெண் மருப்பார்‌
பொருகை மாமதக் குஞ்சரம்‌ புரை பவனுயர்ந்து
குருகை மா நகரர் தனைக்‌ குறுகினனன்றே–54-

ஆதி நான்மறை யந்தண ரோதிட மடவார்‌
வீதி யெங்கணு மயினிநீர்‌ சுழற்றிட வினிதன்‌
மாதினோடு பன்மாமணி மறுகெலாங்‌ கடந்து
கோதிலாத தன் கோயிலைக்‌ குறுகினன்‌ கோமான்–55-

இருந்ததானைகட்‌ கொருவிடை கொடுத்தினி திறையோன்‌
பொருந்து நீண் முகிற்‌ பொலிந்து நின்‌றருளிய பெருமான்‌
றிருந்து சேவடி யனு தினந் தொழுது மண்‌ சிறிதும்‌
வருந்து றாதுள மகிழ்ந்‌ தரசி யற்றியே வந்தான்–56-

கந்‌தமாலுகக்‌ கண்ணி கொள்‌ காவலனினிதின்‌
இந்தவா றரசியற்றி நுண்ணிடையிற விணைந்த
சந்தவார் முலைத்‌ தையலோடினிது வாழ்வுறு நாள்‌
வந்தவாறெடுத்‌ தியம்பிட லுற்றனன் மன்னோ

வரம்‌ வேண்டு கோட்‌ படலம்‌ முற்றிற்று

திரு வவதாரப் படலம்‌

வாதினான்‌ மிகு வாதியர்‌ தங்களை
நீதி நூல்‌ கொடுவென்று நினைப்பருஞ்‌
சேதி நீளெர்திரத்தினி லிட்ட நங்‌
கோதில்‌ ராமானுசன்‌ பதங் கொள்ளுவாம்–1-

ஆரஞ்‌ செய்ய வலரனமோடுச
கோரஞ்‌ செய்மன்‌ குருகையுண்‌ மாறனாய்‌
நீரஞ்‌ சேயவ ணேய னடைந்தவ
தாரஞ் செய்படலந்தனைச்‌ சாற்றுவாம்–2-

வையமோர்குடை நீழலிற்‌ வைத்தெழிற்‌
றையலோடு தருக்குற வாழுநாட்‌
பொய்யிலா தவப்‌ பூவை வயிற்றிடை
துய்ய சூற்குறி தோன்‌ றிய தற்பமே–3-

மங்கலஞ்செய மாமல ரன்னவே ,
பொங்கருட்‌ பொலிவுற்ற பொலன்முக
மெங்கும் வெள்‌ ளியவாகி யிலங்கு மொண்‌
திங்களென்னத் திகழ்ந்தது மாதரே–4-

மட்டுவாரு மரையின்‌ முகையெனப்‌
பட்ட வார் கொ டணிந்த பயோதரங்‌
கட்டலிழ்ந்த வக்‌ கானின்‌ மலரென
வட்டமிட்டு மணிக்கண்‌ கறுத்ததே–5-

துங்க வேலைச்‌ சுடுசரந் தன்னை யொண்‌
கொங்கவிழ்ந்த குவளை யம்‌ போதை வெல்‌
லுங் கருங்கண்‌ குழைந்து டல் ரோமமெய்‌
௮ங்கமெங்கு மழகிற் பொடித்ததே–6-

ஒது மோகை யடக்க வடங்ககில்‌
லாது மேற்க சிவார்ந்தது போலவே
கோதினீலக் குழற்‌ கொடி நேரிடை
மாதின் மேனி வெளிர்ப்பு மலிந்ததே–7-

தொன் மரத்தி னிலையிற் றுலங்குறு நன்மைப்‌ பண்டி நலத்திற்‌ கனத்ததவ்‌
வின் மலிந்த நுதற்‌ கொடி மின்‌னெனுந் தன்மையான விடையுந் தடித்ததே–8-

தண்ணிலாவின்‌ தரள மணி யென வண்ணி யெங்கும்‌ சுவேத மரும்பிய
துண்ணி வந்த நரம்புடம் பெங்கிலும்‌ மண்ணுவப்ப மலிந்து பசுத்தவே–9-

நலந்தருங்கொடி நைந்த விடைச்சிதன்‌
புலங்கொண் மேனியிற்‌ போர்த்த பசுநரம்‌
பிலங்கு பொற்றிருப்‌ பாவை யிடையிடை
துலங்கிழைத்த மரகதந் தோன்றுமால்–10-

செயிரறும்‌ பலதேசிக நற்கலன்‌
பயில் வுறுந்தன பார வரைமிசை
யயர்விலேற வமைத்த படியெனும்‌
வயிறணிந்த மடிப்பு மறைந்தவே–11-

அண்டமு மதனுட்‌ பொருளி யாவையும்‌
உண்டகட்டிலடக்கு மொருவனே
கொண்டன்‌ மைக்குழற்‌ கோற்றொடி மாது தன்‌
பண்டி வந்‌து படிந்தன னென்பரால்–12-

தேங்கொள்‌ செங்கம லாதனன்‌ றேடரும்‌
பூங்கழற்றனிப்‌ போற்றிருந்தான்‌ றனை
பாங்கு பெற்ற பசுங்கொடி. மாது தான்‌
றாங்கி நிற்கத்‌ தவமென் செய்தாளரோ–13–

கன்னி பண்டியைக்‌ கான வடமாகவே
முன்னரே யுவமிப்பர்‌ முறைமையால்‌
பொன்னுடைப் பரன்‌ போந்தனன்‌ வைகலா
லன்னதேதிரமாக வமைந்ததே–14-

வேதமோதிய வேதி யருந் தவப்‌
போத ஞானப்‌ புனிதரும்‌ போந்து போற்‌
தோது மன்னவர்க்குற்ற சடங்கெல
மாதந்தோறு மடவரற்‌ காற்றினார்–15-

குமுதவாய்க்‌ கொடிக்‌ குற்றிடைப்‌ பாங்கிமா
ரமுதினுமினிதாக வமை பல்வி
தமுதிருண்டிதர வெறுத்தும் முணா
துமுதகங்‌ கணந்தோறு மருந்தியே–16-

மாத மைந்தினோ டைந்து மலிந்த பின்‌
றீதமைந்‌தித்‌ திரை நெடு மண்ணெலாம்‌
பேதமைய்யிற்‌ பிழைப்பரிதாமெனப்‌
போதமைந்த னுருக்கொடு போந்தரோ–17-

பேதியாது பிறங்குமெய்ஞ்‌ ஞானத்தைப்‌
போதியா நற்பதந் தனிற்‌ போக்குவா
னோதிருக்கு மறத்தெரிந்தோர்கிலா
வாதியான பரஞ்சுடரண்ணலே–18-

சந்த நீண்முடி மன்னன்‌ றவத்தனால்‌
இந்தமாதி னெழில்மிகு பண்டியில்‌
வந்தடங்கி யிருக்கு மகிமையாம்‌
விந்தை தன்னை வியப்பொடு நோக்குவான்–19-

கந்தரத்திற்‌ றுலங்கு களத்தனொ
டுந்திமா மலரோனை முதலவா
னந்தரத்திறை யோனொ டமரரும்‌
வந்துநாளும்‌ வணங்கித்‌ துதிப்பரால்–29-

வானக முகட்டின் மீது வயங்கு பொன்‌ முடிகளோங்கத்‌
தேனக மலர்த்தாட் சேடன்‌ செகத்துறப்‌ பொலிந்து நின்ற
நீனக முலையிம்‌ மாதின்‌ நெருங்குறு வயிற்றிற் போந்த
தீனரைக்‌ கலவாச்சோதி யெவ்வண முரைத்தி யென்பார்–21–

அண்டமு மதனுள்ளான வலை புனற் ககனநேமி
மண்டெரி யனிலமற்று மனிதர் புள்‌ விலங்கி யாவும்‌
உண்ட கட்டிடையே வைத்த வொருவனே மடமினாடன்‌
பண்டியுளடங்கி நிற்கும்‌ பரிசெவன்‌ பகரா யென்பார்–22–

தொலைவறு நிலையதாகத்‌ துலங்குறு பூதமைந்‌து
நிலை திரிந் திருக்கு மூழி நெருங்கிய வேலை தன்னில்‌
உலை வுருவனைத்தும்‌ பண்டி யுள்ளுற வடக்கியாலி
னிலையதன்மீ வளர்ந்தார்க்‌ கீதென வரிதோ வென்பார்–23–

திங்களின்‌ மரபிற்‌ றோன்றித்‌ திரை நெடு நேமி யாண்ட
பொங்கு வேல்‌ வழுதி மன்னர்‌ புரிந்த மெய்த்தவமோ வென்பார்‌
இங்கணீவ் விறையோன்‌ செய்த வெழிற்றவப்பேரே யென்பார்‌
மங்குனேர் குழலாள்‌ பெற்ற மகிமையே மகிமை யென்பார்–24–

எம்மை யாளுடைய வீசனிங்கு வந்‌ துதித்தலாலே
விம்மூநீர்ப்பொருனை யேயவ்‌ விரசையா மென்பாரீங்கே
இம்மியுமகலா வாழ்வுற்றிருந்திடு மவரே நித்யர்‌
பொம்மலி நகரே யந்தப்‌ புனித வைகுந்த மென்பார்–25–

கோதகமுடையராகிக்‌ கொடுந் தொழில்‌ கொலைகளாதி
பாதகம்‌ புரி்ந்து நாளும்‌ பழிப்புறு நிலையரேனுந்‌
தீதகற்றிடு மித்தூய திருநகரடையி லன்னோர்‌
மாதக வுடையராகி வாழ்வர்‌ விண்ணாட்டி லென்பார்–26–

மண்ணிழை தவமோ மற்ற மானிடர்‌ தவமோ மீதின்‌
விண்ணவர்‌ தவமோ வேள்வி வேதியர்‌ தவமோ தென்பால்‌
நண்ணினர்‌ தவமோ விந்த நகரிழை தவமோ யாரும்‌
எண்ணரிதாய சோதி யிங்கு வந்‌ துதிப்ப வென்பார்–27–

இவ்வணமடைந்து நாளுமிமையவர்‌ வணங்கி யேகப்‌
பவ்வமைக்கடனே ரங்கட் பனிமொழிக்‌ கரியகூந்தற்‌
கொவ்வை வாய்த்‌ தெரிவை யாகங் குழையெனக்‌ குழைந்‌ துவாடி
வவ்வி நேர்விழி கொள்‌ பாங்கிமா ரிருபுறமும் தாங்க–28-

மெலமெல நடப்பாளொல்கி மீளவுமடைந்து சோர்வாள்‌
அலணை யொண்‌ கூந்தல் சோர வலமரலடைவாள்‌ யாருஞ்‌
சலம் வர முனிவா ளன்னாள்‌ சார்துய ருரைக்கலாமோ
தலமிசை யிருந்திவ்வாறு தளர்வொடு வருந்து மெல்லை–29–

விண்டல வெளியி னின்று விளம்பிய வமர ரெல்லாம்‌
கண்டரு மறைக ணின்றுங்‌ கருது தற்‌ கரியசோதி
மண்டலத்‌ துதிக்கும்‌ வேலை வந்ததின்‌ றெனவுள்‌ ளோகை
கொண்டு நம்‌ வினைக ளெல்லாம் குடியொடுந்‌ தொலைந்தது என்னா–30-

அடக்கருமுவகை வெள்ளத்‌ தாழ்ந்தன ராகப்‌ பாவத்‌
தொடக்கறுத்‌ துய்ந்தோமென்னத்‌ துணைக் கர முடியிற்கூப்பி
யிடக்கறத்‌ தொழுவ ரோரா யிரமறை நவிலு நாமம்‌
விடக்கருத்‌ திலர்களாகி விளம்புவர்‌ குணங்களெல்லாம்–31–

ஆடுவர்‌ கள்ளுண்டாரின்‌ மெய் மறந்‌ தறிவுசோர்ந்து
பாடுவர்‌ மறைகணான்கும்‌ பற்பல தரமானந்தத்‌
தோடுகட்புனலில்‌ மூழ்கி யுருகுவ ரினிதி னுள்ளம்‌
பீடுற விமையா நாட்டம்‌ பெற்றமை பலித்த வென்பார்–32–

இருவிசும்‌ பகட்டுள்‌ வானோ ரிவ்வண்ண மாடிப்‌ பாடி
மருவிரி தருமந்தார மலர் கொடு சொரியச் சோதித்‌
திருமுகத் தரம்பை மாதர் செருக்குடனடிப் பயாரு
முருகயா ழெடுத்தியக்க ருகந்தன ரிசைகள் பாட–33–

அடல்கெழு வாணனாரோ ராயிரங்‌ கரங்களாலுந்
திடமுட னடிப்ப வார்க்கு மொலியெனத்‌ தெருவிலூடே
குடமுழாத்‌ தொனி முழங்கக்‌ கொடும் பவத்‌ தொடரறுத்துக்‌
கடம்படு முனிவோ ருள்ளக்‌ கவலை யற்‌று வந்து வாழ்த்த–34–

நவமணிக்‌ காளஞ்‌ சின்ன நவையிலா முரசத்தோடும்‌
தவள வொணிலவு காலுஞ்‌ சங்கமு முகிலினார்ப்பப்‌
பவள வாய்க்‌ கரிய கூந்தற்‌ பைந்தொடி சுதையி னின்சொற்‌
குவளை யொண் கண்ணா ருள்ளங்‌ குளிர்ந்து மங்கலங்கள் பாட–35-

வழக்கிடப்‌ பலநூ லாய்ந்தும்‌ வாய்மை கொ ணிலையைத்‌ தேறாச்‌
சழக்குறு புலவோ ருள்ளந் தன்னின்‌ மெய் யறிவு தோன்ற
இழக்க வெவ்‌ வினைகளெல்லா மெத்திற முடையாரேனுந்
தொழக் கருத்‌ துடையராகுந் துணிவரு டேவேயாகி–36–

நண்ணிய கலியி னாற்பத்து மூன்றா நாளென நவில்பிர மாதிப்‌
புண்ணிய வாண்டிற்‌ புனித வைகாசிப்‌ பூரணை வெள்ளியுங் கலந்த
வெண்ணிய திருவிசாக நன்னாளி லெறி திரை யறி துயின்‌ மாலே
விண்ணெழுமுதைய விரவி போன்‌ றுலதில்‌ விளங்கிழை வயிற்றினின்‌ றுதித்தான்–37–

பொங்கு வெண்‌ டிரை கொ ளிருநில வரைப்பிற்‌ போற்றுறு மடியவர் முகமாம்‌
பங்கயமலர்கள்‌ விகசித மடையப்‌ பரமத விருளின மிரிய
விங்குழலுயிர்கள்‌ பவப் புனல்‌ சுவற வெண்ணரு மளிமுரன்‌ றிருந்தேன்‌
சங்குறும்‌ வகுள பூடண பாஸ்கரோதய மாயது பாரீர்‌–38-

கணிப்பெரு நிலைய வாரண நான்குங்‌ கருதி நின்‌ றளவிடற்கரிய
திணிப் பெருந் திரடோடிரு முத றலைவன்‌ செழியனன்னுதற்‌ சிறு மகவாய்ப்‌
பணிப்பெருஞ்‌ சுடிகை மிசையுறக்‌ கிடந்த பாரிடத்‌ துதித்தன னென்றான்‌
மணிப் பெரு முடிய மன்னர் கோ னிழைத்த மாதவ மியம்பிட லெளிதோ–39-

மதித்திட வெவரு முதித்தவக்‌ கணமே வருசட வாயுவைத்‌ தடுத்துக்‌
கதித்த மெய்ஞ்‌ ஞானக்‌ கடலிடை முழ்கிக்‌ கண்ணிணை யுற விழி யாதுஞ்‌
சதிர்த்திருப்‌ பவளவாய்‌ திறவாதுந் தரையிடை யசை வறக்‌ கிடந்த
வெதிர்த்த செஞ்‌ சுடரின்‌ றேசுறுங்‌ குழவிக்‌ கிகுளைய ரினை யன புரிவார்–40–

இள நிலவெறிக்கும்‌ பிறையினைப்‌ பழித்தங்‌ கிலங்குறு நுதற்றலந் திருத்தித்‌
தளதளப்‌ புடனுட்‌ டிரண்டழ கொழுகித்‌ தயங்கிடு நாசியை யுறுவி
வளமை நற்‌ கரமு மணி முழந் தாளும்‌ வகை யுறக்‌ கை கொடு முறுக்கிக்
கிளர்தரு மம்பொற்‌ கோடிகத்‌ தேந்திக்கெழீ இயபொற் சுண்ண நீராடி–41–

நறிய பொற்‌ கலையின்‌ மெய்யது துடைத்து நாபிநற்‌ றலமுற நோக்கிச்‌
செறி மயிர்‌ மணி யுச்சியினெயும்‌ பொத்தித்‌ திகைத்தயர்‌ வதிகரித்திருந்த
மறிமரு ணோக்கின்‌ மடவர றன்பால்‌ மைந்தனை மலர்க்கரத்‌ தேந்தி
வெறி மலர்க்‌ கூந்தற்‌ குவளை யொண்‌ கண்ணார்‌ விழைவொடு மளித்தனரன்றோ–42-

வாங்கிய வளவிற்‌ படுதுய ரனைத்து மாள மென்‌ மேலறப்‌ பெருகித்‌
தேங்கிய வுவகைக் கடலிடை யாழ்ந்து செழிய தன்‌ மடித்தலத் திருத்திப்‌
பூங்கரும்‌ பனுக்கு மொழிச் சிறு விடைவிற்‌ புருவமெல்‌ லியலுறுமணங்கு
கோங்கரும்‌ பனைய விள முலை பிடித்தக்‌ குழவி தன்‌ வாயிடை வைத்தாள்–43–

வைத்தவார்‌ தனத்துக்‌ கலசம தருந்தா வரவாப்‌ பருமிதமடைய
வித்தகைக்‌ குழவி யிருநிலவரைப்பி லிருப்பது முளது கொல்‌ லென்னப்‌
புத்தகமனைய புறவடித் துவர் வாய்ப்‌ பூவை யுண்‌ மழுங்கி யிங்‌ கிருப்ப
மத்தகக்‌ களிற்ற மன்னர் கோ னுணர்ந்த வண்ணமு மிழைத்தது முரைப்பாம்–44-

அடன்மிகுந்திகலு மவுணரை யடர்த்த வைம்படை தாங்கிய பெம்மான்‌
மடலுறுங்‌ கமல மலரடியகலா மனத்திறை யவனிடம்‌ பகர்வான்‌
றடமுலை வரையின்‌ வடமணிந்திலகு தையலாளி குளையர்‌ விரைந்தே
திடமிகுந்தொளிரும்‌ புயவலி யரசர்‌ திரண்டு சூழவை யிடை யடைந்தார்–45–

கொண்டலும்‌ தருவு நாணநன்‌ னிதி கைக்‌ கொண்டுகந் திரவலர்க்‌ களிக்கும்‌
வண்டின நெருங்கி யின்னிசை முரல மதுவிழி நிம்ப நற்‌ றாரான்‌
புண்ட ரீகங் கொள்‌ ளடியினை போற்றிப் பொற் புறும் சுணங்கவிர்‌ நகில
மிண்டை கொண் டிலகுங்‌ கருங்குழல் மடவா ரெதிர்வியந் தினிது நின்றனரால்–46–

வந்து தன்‌ கமலமலரடி வணங்‌கி வணக்கமோ டெதிருறு மடவார்‌
இந்து நன் முகங்கண்‌ டிங்கெழுந் தடைந்த தென்ன கொல் விளம்பு திரென்ன
விந்தையி னிலகு மணிமுடி வழுதி வேந்தர் கோன்‌ வினவு தன் முன்னர்‌
அந்த மன்னனுக்‌ கவ்விடைக்‌ கருங் கூந்த லணங்கினர்‌ விளம்பலுற்றனரால்‌–47-

வெஞ்சமத்‌ திகலு மடையல ராவி வேலினிற்‌ பறித்திடு மிறையோய்‌
மஞ்செனக்கரிய மலர்க்குழன்‌ மடந்தை மணிவயிற்றிடையி னின்றின்றே
செஞ்சுடர்‌ விரித்து வான்முகட்டொளிருந் தினகரர் கோடி யென்‌ றுரைப்ப
அஞ்சுடர்விரிக்கு மாண் மகவாகி யகலிடத்‌ தினி துதித்த தம்மா–48-

கண்ணிணை சிறிதும்‌ விழித்திலை வாயங் காந்தினி தரற்றவுமில்லை
யண்ண லஞ்சுடரி னணிதிருமேனி யசைத்திலை யஞ்சனின்‌ மகவு
முண்ணிகழ்ந் தொளிரு மாவியினோடு முற்றுறைகின்றது வென்னா
வெண்ணிகர்‌ குமிழ்மூக்‌ கன்னிய ருரைத்தாங்‌ கேகினை ரிறைவனைத்‌ தொழுதே–49-

கொடியென நுடங்கு மிடைக்கனித்‌ துவர்வாய்ச்‌ கோதைய ராண்மகவெனுமுன்‌
படியொடு கனகமணியிழை வலையம் பரித்தெழு வெனத்‌ திரள் புயங்கள்‌
வடிவு மிக்குயர்ந்த மேரு வென்‌றுரை செய்வரையென மிக்கினிதுயரக்‌
கடியயிற்‌ படைகொ ளிறையவ னோகைக்‌ கடலிடையாழ்ந் தனனாகி–50-

காதல னில்லாத்‌ தன்மையிற்‌ றுயரகே கடலிடை யாழ்ந்துளம்‌ வருந்தி
யீதள வாகக்‌ காலம தகற்றி யிருந்துமிக்‌ குழலுறு மெம்பாற்‌
போதவு மொளிரு மாண்மக வீந்த புனிதமைம்‌ முகனிறத்‌ தாதி
நாதனிங்‌ கதற்குண்டாய செய்கைகளு நல்கிலா திருப்பவ னல்லன்–51-

அன்றிநந் தமக்கோரருங்‌ கொடுந் துயர்க ளடைந்திடி லன்னவ னல்லால்‌
சென்றினி தொழுக்குந் தன்மைய ருளரோ செறி திரைப்‌ பரவை சூழுலகில்‌ என்றொளி விரிக்கு மயிற்படை தரித்த வெழின் முடி மன்னவர்‌ வணங்கக்‌
குன்றெனப்‌ பணைத்த புய வலி படைத்த கோமகன்‌ நிருவுளத்‌ தெண்ணா–52-

அருமறைக்குரிய வேள்‌வி யந்தணர்களாசிகள்‌ பற் பல நவிலத்‌
திருமுடி தரிக்கு மன்னவர்‌ தாழ்ந்து திரண்டு நான்மருங்கினு மேக
மருமலர்க்‌ கூந்தற்குவளை யொண் கண்ணார்‌ வானிறக்‌ கவரிகா லசைப்ப
வுருமெனத்தவள வலம்புரிக்குலமு முயர்‌ முரசினங்களுங்‌ கறங்க–53-

மிடைந்தொளிர்‌ தரளமணி யெடுத்தெறியும்‌ வெண்டிரைக்‌ தாம்பரவன்னி
யடைந்தரும்‌ புனலி லாடியுள்‌ ளுகந்து தென்கலைப்‌ புண்டரமணிந்து
குடைந்து வண்டிமிரு மருமலர்த்‌ தொடையல்‌ கொண்டகன்‌ றொளிருமார்‌ பிறையோ
னடைந்தனன்‌ விரைவில்‌ லுதையனைப்‌ பொருந்த னையனற்றிருமுகங்‌ காண்பான்–54-

செப்பெனப்‌ பரந்து மார்பிடம்‌ கவர்ந்து திரண்முலை மடமினா ருகந்தங்‌
கொப்பருங்‌ குழவிதனை யெடுத்‌ தளிக்க வொன்னல ருடறடி யிறையோ
னப்பரன்‌ றனது திருவுருவனைத்து மன்பொடு கண்டு கண்டுருகித்‌
துப்புறுஞ்‌ சுடர்கொளுதையனைக்‌ கண்ட தூய செங்கமல மொத்தனனால்–55-

உருமினு மிரட்டி மும்முரசினமு முயரிய சங்கமும்‌ பிளிற
௮ருமறைக்கிழவர வாவின தளவா யகத்திடைப்‌ பெருங்களிதுளும்பப்‌
பொருவிலுன்‌ சனகப்‌ பொருப்பெனக்‌ குவித்து வித்தினற்றானமும்‌ மிமிரு
மிரு நிதிக் குவையு மெண்ணிலா நிரையுமிசை பெறப்‌ புனலொடு மளித்து–56-

மெய்வகையுணரு முழையரைக்‌ கூவி விளங்கு நம்மரபினுக்குரிய
தெய்வமா மாதி நாயகனமருந் திருத்தளியே முதலாய
பொய்‌ வகையொழி நன்னாட்டினிற்‌ சிறந்து பொலியுமால்‌ சன்னதி தோறும்‌
மெய்வகை இருத்தி யாடை பூணிதிய மிகுநில முதற் சிறப்‌ பளிமின்‌–57-

ஆனினமுதல பற்பல வுயிர்க ளருந்திமெய்‌ விடாயது தணிப்பா
னீனிறக்‌ கடலினிரட்டிய தடமும்‌ நிகமநற்‌ சாலையுஞ்‌ சிகரம்‌
போனிகழ்‌ தருமாலயங்களு மெவரும்‌ புகழ்தரு மன்ன சத்திரமும்‌
மானயிவ வகையி னாயபோ லினும்ப லாயிர வறத்துறை யிழைமின்‌–58-

சிறையது விடுமின்‌ சிறைக்கள மெடுமின்‌ றிகழ் முடி மன்னவரளக்கும்‌
இறை விடு மீரேழாண்டயனிதிய மீட்டு மாயத் துறை விடுமின்‌
குறைவிலா நிதியவரையது திறந்து கோதறப்‌ பலவரு மெழுநா
ணிறை தருமளவும்‌ வெறுத்திட வகத்துணோ்ந்தவை யெடுத் யெடுத்‌ தளிமின்–59-

நண்ணிய தடந்தோட்‌ கொற்றவ ரிழைத்த நவையெலாம்‌ பொறுத்துறப்‌ பிணித்த
திண்ணிய கழல்யாப்‌ பற விடுத்‌ தவர் தந்‌ திரு நக ரடை தரச்‌ செலுத்திப்‌
பண்ணியற்றமிழின்‌ வகை நல முணரும்‌ பான்மை நம்‌ பேரவைப்‌ புலவோர்‌
உண்ணனி மகிழத்‌ துன்னெனக்‌ கலையு முரையுடன்‌ பணிகளு மளிமின்‌–60-

வெண்டிரை கொழிக்கும்‌ கருங்கட லுடுத்த மேதினியதனிடைச்‌ சிறந்த
திண்டிறற் புயத்த மன்னவ ருணர்வான்‌ றிருமுகங்‌ கடிதினி லனுப்பிக்‌
கொண்டல் கண்‌ படுக்கு மாட மா நகரங்‌ கோதற வலங்கரித்திடுவான்‌
அண்டுறுமாந்த ரறிதரமுரச மறைதரச்‌ செய்மினென்‌ றரைத்தான்–61-

இடியெனக்‌ கறங்கு மணிமுரசோதை யெழினகர்‌ மாந்தர்தஞ்‌ செவியிற்‌
கடிதினிற்‌ படுமு னளவிலா வோகைக்‌ கடலிடை யாழ்ந்தன ராகி
வடிவுறு மயில் வேலனைய கண்‌ மடவார்‌ மைந்தரோ டிணைந்திர வகற்றும்‌
படிமருத்‌ தொடையும்‌ யாயொளி விரிக்கும்‌ பற்பல வணிகளுமகற்றி–62-

மங்கையர்‌ நகிலப்‌ பொருப்பினுக் கணிந்‌த வாச நற்‌ கலவையின்‌ றுகளும்‌
கங்குலிற்‌ கரிய கூந்தனின்‌ நிழிந்த கான் மகரந்தமு மடங்க
வங்கமுன்றி றொறுங் குங்குமச்‌ செழுஞ் சேறது கொடு வழுக்குறத்‌ தெளிப்பார்‌ பொங்கிய சுடர்வே லிறை மகன்றன்பாற்‌ புதல்வன் வந் துதித்திடு மதிழ்வால்–63-

பத்தி யினிவந்து விசும்பக டுரஞ்சும்பரூ௨ மணிமாட பந்தியினற்‌
பித்தியின்‌ புறத்து மகத்திலும்‌ புதுவெண்‌ மெய்யொளிச்‌ சுதைகள்‌ தீற்றிடுவார்‌
நித்தில முறுவற்‌ கமலைவா ழகல நிருமலன்‌ றிரு வவதாரச்‌
சித்‌திர வகையே முற்றிலு முவந்து தீட்டுவர்‌ கவின் பெறமாதோ–64-

வெண்ணில வெறிக்குங் கையிலையின்‌ கிரியின்‌ மிசைப்பலகதிரெழுவனபோல்‌
திண்ணிய மாடமுகட்டிடையனந்தஞ்‌ செறி சுடர்த்‌ தூபிக ணிரைப்பார்‌
நண்ணிய குலிசத்‌ துவசமு முழுவை நாடிய கொடிகளு நடுவார்‌
தண்ணியவிதை வித்தரிய பாலிகைகள்‌ சதிருற வயின்வயி னிறைப்பார்–65-

மங்கல மகலாமறுகிட மெங்கு மணிநடைக்‌ காவண மிடுவார்‌
துங்கமென்பாளைக்‌ கமுகொடு சுவை கொள்‌ கன்னலுமினிமையிற்‌ கனிந்த
செங்கனித்தாறு படு விரிதலையுஞ்‌ சேட்பட வெழுத்‌ தொறு மமைப்பார்‌
சங்கையின்‌ மகர தோரண நிரைப்பார்‌ தமனியப்‌ பாவைகள்‌ தொடுப்பார்–66-

தேனினமுரன்றிந்தள விசை பயில செழு மணித்‌ தாம நாற்றிடுவார்‌
வானில வெறிக் குமார வாரமுமொண்‌ மரகதக்‌ கோவையும்‌ தொடுப்பார்‌
ஆனிழு துறப்பெய்‌ தருஞ்‌ சுடர் தருமொ ணஞ்சர விளக்கினமிடுவார்‌
கானிடு மலருந் தண் பனி நீருங்‌ கலவையுங்‌ குழம்பொடு மிறைப்பார்–67-

கரிய சூன்முகி லனையமும்‌ மதம் பொழி கரிகட்‌ குரிய வோடையு மேற்றவிசையு முறவமைப்பார்‌
விரியும்‌ வான் முக டிடிதரத்‌ தாவியு மீளும்‌ பரிகள்‌ பல்லணங்‌ கால் கழுத்தணிகளும்‌ படுப்பார்–68-

திவிய மாமணி யணிபெறக்‌ குயிற்றிய திகழும்‌
சவி கொண்‌ மாவிரதங்க ளெண்ணில நிரை தயங்க
விவுளி சேர்த்திரு மறுகிடை நிரைப்பரா லிரும்பொன்‌
அவிரு மேருபல்‌ லொரு வழிச்‌ சேர்ந்தன வனைய–69-

தவள வானில வுமிழ்‌ மணிமாட மேற்றாவத்‌
துவளிலாநறு மதிற்புகை வயின்வயின்‌ றொகுப்பார்‌
பவள வாய்க்கொடி நுண்ணிடைப்‌ பனிமொழிக்‌ கரிய
குவளை யொண் கணார்‌ குரவையாட்‌ டயருவர் கூடி–70-

முருகு சேரு மாலதிக்கலிகைக்‌ கிணை மூரல்‌
குருகு சேருமால்‌ வரையெனப்‌ பொலி தரக்‌ குவிப்பார்‌
கருணையோடு மற்‌ றரிய நற்‌ கனிவருக்க முநேர்‌
௮ருகுதோறஞ்‌ சிற்குன்றென வமைப்பர்க ளன்றே–71-

இனியவாய முக்கனிகளு மிடையிடை நிறைப்பார்‌
புனிதவாதர நிறைந்த வுள்ளத்தினர்‌ பொருந்தி
தனிவிருந்தினர்க்‌ கெதிர்கொடு சென்று நற்றகையாய்‌
மனி யுமக்கெமக்‌ கென்றுத மகங்கொடு வருவார்–72-

சேயதேறலி னறுகெய்பால்‌ தயிருடன்‌ சேர்ந்து
தூயமாமறுகெங்கணுந்‌ தொனியுறத்‌ துதைந்து
பாயவென்ன று மாகனகக்‌ கலம் பரப்பி
யேய நாரண னடி யருக்‌ கின்னமு திடுவார்–73-

தழனிறத்த நற்‌ நிகிரியு மிவுளியுந்தான
மழவிருங்கரிகளு முலைத்‌ தவரவர்‌ வருவார்‌
பழமை யாய பொற்‌ கலன்களை வெறுத்தலைம்‌ பாலார்‌
௮ழகினீடிய கலன்களைப்‌ புனைகுவரன்றே–74-

ஊறு தேன் பொழி மாலிருஞ்‌ சோலை வெற்‌ புயிர்த்த
நாறு சந்தன வரியமென்‌ றேய்வையின்‌ றீய
சேறு நூலிடை தேம்புறப்‌ பணைத்தருஞ்‌ சிகர
வீறு வாய்ந்தணைக்‌ தடர் தரு முலை முகட்‌ டணிவார்–75-

ஓங்குமாமதி வடந்தனைப்‌ புனை குவ ரொழுகுந்
தேங்கொள்‌ வண்டின மலை தர வோச்சி நீர் செழுஞ்சூ
றாங்குமால் குழல்‌ திருத்தியத்‌ தலைப்பணி சாத்தி
பூங்கொண்‌ மாலதி செவந்திநற்‌ பிச்சியும்‌ பொறுப்பர்–76-

ஏர வாணுதற்‌ சுந்தரத்‌ திலகம்‌ திடுவார்‌
போர வானில வெறியுநித்‌ திலச் சுட்டி புனைவார்‌
சூரவேளி கரம்பகத் தஞ்சனந் தோய்ப்பார்
ஆரவாரவம்‌ புதிக்கிரு வரம்பிட லனைய–77-

பொய்யமைந்க நுண்ணிடைக்‌ கணிமேகலை புனைவார்‌
துய்ய நற்பசுங்‌ கழையெனத்‌ திரளுறுந் தோளிற்‌
செய்யமாமணி குயிற்றிய வொண்கலன்‌ றிருத்திப்‌
பெய்யுமம்பொனிற்‌ றொடிபல முன் கையிற்‌ பெய்வார்–78-

கடி தினிற்றழ னிறத்த நற்‌ றளிர்நிறங்‌ கவற்று
மடிமிசைச்‌ செழுஞ்செய்ய பஞ்சின்‌ குழம் பணிவார்‌
வெடி கொளம்புய மிசையனஞ் சிலம்புவ வனைய
படிவுறுஞ்‌ சிலம்பொலி தரப்‌ பதமிசை யணிவார்–79-

மாடகத்த நன்மகரயா ழெடுத்திசை வகுப்பார்‌
பாடகத்தொடும்‌ பரிபுரத்‌ தொலியெழப்‌ பதம்பேர்த்‌
தாடகக்குழை யலைதரத்‌ தனித்தனி யரிய
நாடகத்தொழில்‌ நலந்தெரி மடந்தையர்‌ நடிப்பார்–80-

அந்த மாடவின்‌ னெழினகர்‌ மாந்தறா மடர்ந்த
சந்த வார்முலை மாதரு மகங்களி ததும்ப
இந்த வாறியற்றிய பின்ன ரக்கொடி யிடையார்‌
விந்தையோடு பொற் சுண்ண நீராடுற விழைவார்–81-

சாடிகொப்பரி சாருங்‌ குழிசியிப்‌
பீடியற்கலம்‌ பெய்திடி லற்பமே
நாடுமென்ன நளியும்‌ பொழிபுனல்‌
ஓடிடாம லொருங்குறத்‌ தேங்கவே–82-

பண்ணுலாவிய பாவினு மின்‌மொழி
விண்ணுலாவிய மின்னிடை மாதரார்‌
எண்ணிலாதவரேர்‌ மறுகெங்கணும்‌
வண்ண நீடு வரம்புகள்‌ கட்டினார்–83-

தமனியத்திற்‌ சமைத்த தளங்களாற்‌ கமவசந்தக்‌ கலவைக்‌ குழம்பினோ
டிம நறும்புன னெய்நல்லெண்ணை சுணம்‌ அமரு மத்தர்‌ புனுகு மென்னானமே–84-

வண்ணமுற்ற பொற்சுண்ண வனநறுந் தண்ண நீரிற்‌ றகையன மட்டிலா விண்ணின் மா நகரெங்கும்‌ விடுத்தனர்‌ பண்ணினின்‌ சொற் பனிக்‌ குழன் மாதரே–85-

சத்தவார்கட றானொருங்‌ குற்றபோற்
சுத்த வீதிகடோறு நன் மஞ்சனம்‌
பத்தியோடு பொழிந்த பின்‌ பான் மொழிக்‌
கொத்தலர்க்‌ குழற்கோதையர்‌ கூடியே–86-

இழையினுண்ணிடை நீவியிறுக்கி மென்‌
றழைசுணங்கின்‌ றனங்கள்‌ குலுங்குறாப்‌
பிழையில்‌ வம்பு பிணித்து மழைக்கரும்‌
குழறிருத்திற் கொண்டை யணிந்தரோ–87-

தந்ததாரைக்‌ குழலுச்‌ தமனிய
விந்தை தேர்கட்‌ சிவிறியு மின்ன்போ
லந்தமில்‌ புனலாடுங்‌ கருவியோ
டிந்து வின்னுத லேழையர்‌ தோன்றினார்–88-

இடக்கை பேரிகை யேய்ந்திடு திண்டிம
முடுக்கை பம்பை யுறுமி முரசொடுந்
தடக்கு தோறவில்‌ தமரவலம்புரி
திடத் திருச்சினந்‌ தேதிகக் காளாமே–89-

கூறிவாச்சியங் கொண்டு குணில்களா
லேறு சூன்‌ முகிறன்னி லிரட்டியே
நாறிசைக் கணு நண்ணி முழக்கிடச்‌
சாறினோதியர் தாம்‌ புனலாடுவார்–90-

கள்ளலம்புங் கருங்குழன்‌ மாதரார்‌
உள்ளலம்பிய வோகை கிளர்ந்தெழ
வெள்ளிடற்கிடனின்‌ நி மறுகடர்ந்
தள்ளி யள்ளியவர்‌ புனலாடுவார்–91-

கூந்தல் சோரக்‌ கொடியிடை சோர்தர்க்‌
காந்தளென்னக்‌ கரஞ்சிவப்‌ பேறவே
சாந்தணிந்த தனங்கள்‌ குலுங்குற
வாந்துருத்தி கொண்டாடுவர்‌ நீரரோ–92-

கலை நெகிழ்ந்தது காண்கிலர் கச்சுமென் முலை நெகிழ்ந்தது மோர்கிலர்‌ மொய்யொளி
யலையு மார மகன்ற துணர் கிலார் தலைமை சேர் புன் லாடுந் தருக்கினால்–93-

அத்தர்‌ பன்னீர்‌ புனுனோ டாரரெய்‌
யொத்து வாரி யொருவ ரொருவர்மேல்‌
லத்த நற்குழ லாலினி தாடுவார்‌
புத்தகத்தின்‌ புறவடி மாதரே–94-

அருத்தி யோடொ ரரிவைநன்‌ னெய்யைமா றொருத்தி வாயி லொழுக்க வுமிழ்ந்திட
றிருத்தன்‌ வாயெனுஞ்‌ செவ்வித ழாம்பல் பெய்‌ மருத் தண்‌டேற றனை நிகர்‌ மானுமால்–95-

கூந்தன்மீதிற்‌ குழல்கொடு பிச்சுநீ
ரேந்தி ளந்தனற்‌ தன்னி லிழிதரல்‌
சேந்த மேருத்‌ திரியின்‌ மீமிசை
போந்து மேகம்‌ பொழிதலை மானுமால்–96-

மாதர்பல்லோர்‌ மடந்தையின்‌ வான்முக மீதருங்குழல்‌ கொண்டு வீடும் புன
லோது வானெழு மொண்மதி வீசிய சீத வெண் கதி ரென்னத்‌ திகழுமால்–97-

விடவெண்‌ பால் கொடோர்‌ மின்னிடை மாதின் மேல்‌ லுடல் வெழுப்பினை யுற்றுடன்‌ றீர்தலாற்‌ புடவி யிற்பசும்‌ பொன்னினற்‌ பாவையைப்‌ படம் படுத்து பறிப்பதை யொக்குமால்–98-

நெஞ்சினிற்‌ பொழி நீரிரு கொங்கைமே லெஞ்சலான தற்‌ றேயிழிந்‌ தோடுறல்‌ விஞ்சடர்ந்தெழு விண்டுவின்‌ மேல் வழி யுஞ்சிறுதண்‌ ணருவியை யொக்குமால்–99-

படைக்கண்மங்கை பனிமுகம்‌ வீசுநீர்‌ தடுப்பவங்கைத்‌ தலம்பொதி தன்மரை
யிடக்குள்வீழு வெமைவருகத் தேன்மதி யடைக்கலம்மென்‌ றடைதலை மானுமால்–100-

சோதிமாமணி மாடங்க டுன்றிய
வீதி தோறும்‌ விழைவி னடர்ந்து முப்‌
போதுமீரறு வைகல்‌ புனலிடை
மாதராடி. மனக்களி யுற்றபின்‌–101-

வண்ணமாமறு கெங்கும்‌ வதிந்தபொற்
சுண்ணநீர்‌ தலைப்பெய்து துவன்‌றியே
தண்ணரும்‌ பொருனாநதி சார்ந்திரும்‌
பண்ணைவாயிட மெங்கும்‌ பரந்து போய்–102-

நலிகொள்‌ வெண்டிரை நண்ணி யதினுள
புலவு நீக்கிப்‌ புதுமண மீந்தவன்‌
சுலவு மிப்பி சரிமுக முண்ணச் செய்‌
உலவுமார முயிர்த்திடச்‌ செய்யுமால்‌ –103-

திரு வவதாரப் படலம் முற்றும்

‌-

நாம தேயப்‌ படலம்‌

கற்றவ னீராடவெழ முதலியாண்டான்‌ கையும் பின்‌ வடுகநம்பி கரமென்போதும்‌
பற்றியெழற்‌ காண்டானுள்‌ வெதும்ப வத்தைப்‌ பரிகரிக்க வவர்க்‌கிருதாம்‌ பரச்செம்‌ பீந்தாங்‌
கற்றநதிப்புனல்‌ கொணர்வித்‌ தஃதா னம்பி யாந்தரிகப்‌ பத்தி வெளி யறியச்‌ செய்த
நற்றவனெம்‌ மெதிராச னடியை வாழ்த்தி நாமதேயப் படல நல்குவாமால்–1-

மீனவன்குல வேந்தன்‌ வியந்துபஃ றான மந்தணர்‌ தாமுகக்கக்கொடுத்‌
தானபின்‌ பேரவை யெழுந்தாக்கொளிர்‌ வானரியணை மன்னினன்‌ மாதரோ–2-

ஆரியர்க ளறிஞர்‌ கணிதநூ
லோருவோர்‌ மெய்யுறுதிகொ ளாரணஞ்‌
சோர்விலா துணர்‌ தூய்மறை யாளர்‌ மற்‌
றே ரறா தொளி ரேந்தலுழையரே–3-

மற்ற நுட்ப மதியின ரானிறை
வுற்ற சங்கத்‌ துறவிலர்‌ மெளலிதோய்‌
பொற்றிருக்கழற்‌ பூப னுவகையாற்‌
சொற்றிடுஞ்சில தூய்மொழி யன்றரோ-4-

மன்‌ றுளோரெம்‌ மனமரை யின்முகை
யின்றலர்ந்‌ தொளி யெய்திட வெல்லிளங்‌
கன்றை நேர் வருகான்‌ முளைக்கியாது நா
மின்று நாம மிடுத லியம்புவீர்‌–5-

கொக்குமீதுறு கோகிலவின்‌ சொலார்‌
செக்கர்மாடத்‌ திருக்குருகாபுரி
புக்க நும்மைப்‌ புரக்கும்‌ புயலுக்கு
மிக்க வாதிப்பிரான்‌ றளிமேவியே–6-

பரவை சூழுல கோரடி பற்றிடக்‌
கரவினாலளந் தின்பருள்‌ கான்மலர்‌
சிரமணிந்தவன்‌ சீரருட்‌ பெற்றுடன்‌
மரபினாமம்‌ வழங்குதன்‌ மாண்பரோ–7–

பாதுகாத்துயிர்ப்‌ பாலருள்‌ கூர்ந்து நன்‌ னீதியாலுலகோச்சு நிருப நின்‌
றீதிலாத திருவுரை யுட்கொடீ தோதனோ மற்றுளப்படி செய்குதி–8-

இவ்வண மன்றுளார்சொல்‌ லியல்பினை யிறைவ னுள்ளிற்‌
செவ்வியி னமைத்து நந்தஞ் செய்தவத்‌ துதித்த சேய்க்குக்‌
கொவ்வையின்‌ கனிவா யின் சொற் கோங்கரும்‌ பனைய கொங்கை
நவ்விநேர்‌ விழியாய்‌ யாது சாற்றலா நாமமென்றான்–9-

நம்மகவெனவுமன்ன னவின்றிடப்‌ பெற்றோமென்று
செம்மலங்‌ கடலுளாழ்ந்து திரு முக மலர்ந்து நீருண்‌
மைம் முகிற்‌ குழலி வேந்தன்‌ மலரடி பரவி யின்பம்‌
விம்மியாழ்‌ குழலே யின்சொல்‌ விளம்புவள்‌ சிலது மன்னோ–10-

புத்தெனுங்‌ கொடிய சேறிற்‌ புகுந்துழன்‌ றழலுகின்ற
தத்தினை யறுத்து நம்பாற்‌ றனய சம்பத்‌தை யிந்த
வித்தகன்‌ பொலிந்து நின்ற மெய்ப்பர னமரரஞ்ச
நத்தினை முழக்கு மாதி நாதர்‌ சன்னதி முன்‌ சென்றே–11-

வஞ்ச மற்றுள த்தை யைவர்‌ வழி செலுத்தாது வாழ்த்து
நெஞ்சினர்‌ நாற்பொருட்‌ குணினைத்த தங்குவந் தளிக்கும்‌
கஞ்சனன்‌ மலர்த்‌ தாட்‌கீழிக்‌ கான்முளை வணங்கச்‌ செய்து
விஞ்சுநம்‌ மரபினாமம்‌ விளம்பலே விதி யென்றாளே–12-

கொங்கலர்க்‌ கருத்து மைம்பாற்‌ குவளை வாண்‌ மதரரிக்கண்‌
நங்கையா ருரைத்த வாய்மை நங்கருத்தியைந்த தென்றப்‌
புங்கவ னமைச்சர்க்‌ கூவிப்‌ பொரு கடற்‌ றானை சூழ
விங்கடைந்‌ திடுவீர்‌ பூமா திறைவனைத்‌ தொழச்‌ செலற்கே–13-

ஆண்டகை யியம்பாமுன்ன மரும்பொருண்‌ முகத்தி னோக்காற்‌
காண்டக விரைவிற்‌ செய்யுங்‌ கருணை கூருழையர்‌ சேனை
யீண்டவந்‌ தறிக்கை செய்தவ்‌ வின்னடி பரவ வண்டு
பாண்டருற்‌ துளவினானைப்‌ பணிந்திடற்‌ கெழுச்சி யானான்–14–

தண்ணுமை படகம்‌ பிலி தக்கை திண்டிமறந் தடாரி
மண்ணமை முழவு கேட்போர்‌ வள்ளின முவந்து கீதக்‌
கண்ணுகர்ந்‌ திடுபன்‌ னாகசுரமோ டெக்காளஞ்‌ சின்ன
மெண்ணில்‌ பல்லி யங்களெங்கு மெறி திரைக்‌ கடலினார்ப்ப–15-

கருவிளை குமிழி னொண்பூக்‌ கயிரவ மலர்களுட்‌ கொண்‌
மருமலர்க்‌ கமலமோர்‌ பொன்‌ கொடி மிசை மலர்ந்த தன்ன
திருமுகத்‌ தரிவை மார்வெண்‌ கவரியின்‌ சிறு கால்‌ வீசக்‌
குருமணி நிலவு காலும்‌ குழுஉக்‌ கொள்‌ வெண்குடை நிழற்ற–16-

மட்டவிழ்‌ குமுத வேந்துள்‌ வதியிரு முயனீத்‌ தூர்வான்‌
விட்டதி வெளிவந்தாக மீ திரு கயல்‌ கடாங்கி
யிட்டமோடுல வலன்ன வெழின்முக மடவாரால
வட்டமீயோட்டிகொண் டுண் மகிழ்ந்தரு கசைப்பர் மன்னோ–17-

மாசுறுங்‌ கலியின்‌ றீயவலிகெடு மெனவே வெள்ளை
வீசு தலனைய வான்‌மீ வெண்டுகிற்‌ கொடிகளாட
வேசி விண்ண ரம்பை மாதர்க்கின்புறு பரதங்காட்டுந்
தாசியரிசையினேர்ப்‌ பச்சதியிடை யடிகள்‌ பேர்ப்ப–18-

தேங்கமழ்‌ கமலப்‌ புத்தேள்‌ சேணிறை கலச யோனி
யாங்கவிர்‌ வேத நாவரரசர்‌ முத்தமிழ்‌ தேர்‌ வாணர்‌
பாங்குட னருகிலாரப்‌ பரவு பொற்‌ சிவிகை பம்ப்
வீங்குதிண்‌ குவவுத்‌ தோளார்‌ கட்டிய மியம்ப மன்னோ–19-

கங்குல வயிற்கை யொன்னார்‌ கணங்களின்‌ வலி மலைக்குத்‌
தங்கிய குலிகத்திண்டோட்‌ டானை முன்‌ மிடைந்து செல்லப்‌
பொங்கு செந்துக ளிவர்ந்து புயலெனப்‌ படரத்‌ தீய்க்கும்‌
வெங்கதிரவிந்து வானஞ்‌ செக்கரில்‌ விளங்கித்‌ தோன்ற–20-

தூயதீப்‌ புடத்திற்‌ பல்காற்‌ சுட்டசெம்‌ பொன்னிலும்பர்‌
மேயயாணரினாற்‌.செய்ய வில்லுமிழ்‌ மணியிடைக்‌ கண்‌
ணேயவிட்‌ டடைத்த தொட்டி லேற்றி யக்குழவி சூழ்ந்தாங்‌
காய மிண்டேகலென்மு னம்புலிக்‌ கண நேராமல்–21–

கோதில்பூற்‌ தொட்டி லூடு குயிற்று செம்‌ மணிவிற்‌ றோற்றம்‌
மாதவ னரசன்‌ சேயா வந்தவா றறிந்து போற்றப்‌
பாதலத்‌ தனந்தன்‌ றன்மெய்ப்படிவத்தை மறைத்தீண்‌ டேகச்‌
சோதி கொள்‌ சுடிகைநாறு மாமணிச்‌ சுடரி னேர்த்த–22-

இன்னணங்‌ குழவி தன்னோ டிறைவனு மெழுந்து செங்காற்‌
பொன்னனந்‌ துயிலுஞ்‌ சேக்கைப்‌ பூம்பணைக்‌ குருகை மேவிக்‌
கொன்னவில்‌ படைக்கணார்தங்‌ குழற்கிடு புகையின்‌ வாச
மன்னிய மறுகி லூடுண்‌ மதிழ்த. வலம்‌ வந்தானால்–23–

கூன்சுரி முகங்க ளீனுங்‌ கோதினித்திலங்க ணாற்றித்‌
தேன்பயி லலரி னாற்றுஞ்‌ செழிய காவண முகப்பில்‌
வான்றட வரம்பை நாட்டும்‌ வாயினின்‌ றயினிநீரைக்‌
கான்படு மழலைத்‌ தீஞ்சொற்‌ கன்னியர்‌ சுழற்றினாரால்–24–

கருமணி குயிற்று செம்பொற்‌ றகட்டுறம்‌ கடிகொண்‌ மாத
ரிருவரோ ரிருவராய்த்‌ தம்மின்‌ முனந்திக்‌ காப்பிட்டுப்‌
பருகவின்‌ னமுதிற்‌ சேயின்‌ படிவத்தி னெழினோக்‌ காற்பின்‌
றிருமினார்‌ சிலர்‌ கர்ப்பூர வாரத்தி தெரியச்‌ செய்தார்–25-

ஆரண மொருநான்‌ கோது மயனன வ றிஞரெல்லாம்‌
நாரணனாம. நாவின வின்றிறா கரத்திற்‌ செம்பொற்‌
பூரண கும்பங்‌ கொண்டிப்‌ பூதலத்‌ துயிருயச்செய்‌
காரணன்‌ மகவிற்‌ றோன்றப்‌ பெற்ற காவலனைக்‌ கண்டார்–26–

மட்டலிழ்‌ நறவமாந்தி வண்டிமிர்ந்‌ தடரு மைம்பாற்‌
கட்டழ கரம்பை மாதர்‌ கடுப்பவரடிகள்‌ பேர்ப்பக்‌
கொட்ட மிட்டமர ரீட்டங்‌ குல்யவென றமுதைத்‌ தால
வட்டம்‌ வைத்திடு புட்டோன்றல்‌ வாகனன்றளிக்குட்‌ சென்‌றான்–27-

அத்தினா புரத்து வாழருச்சுனற்‌ கறத்தினூல்‌
தத்துவத்‌ தரும்பொருள்‌ ரதத்தினிற்‌ றெரித்தவன்‌
மெத்தவுட்‌ புறத்துறிக் கிடைச்‌சி வைத்த வெண்ணை பா
னத்தி யுண்ட பூரணத்தி தேச லோக நாதனே–28-

எருதோ ரேழடர்த்து மாதொருத்தி பாலிணங்கினாய்‌
மருதினூடு போயிறுத்து மாயமாய்‌ வருந்தினாய்
குருதி தோயிபப்‌ பதிக்கிழிந்த தூது கூறினாய்‌
கருதி நின்‌ குணத்தை யார்‌ கணிக்க வல்ல வல்லரே–29-

தாலமீது நாத கேதனன்‌ முனந்தளர்ந்த பாஞ்‌
சாலி நாணழிந்திடாது தானை முன்‌ னளித்தனை
சில வேத வாணனெஞ்சு தேற வாக மோடவன்‌
பாலனீ நினாது தன்மை பார்‌ மதிக்க வல்லதோ–30-

இச்சையா லுளங்கனிச்‌ தெழுந்த வன்பினோடு நீ
மெச்சவே சுவைத்தடுங்‌ கனிக்குளின்பு விஞ்சினா
லச்சுதற்‌ கெனப்புறத்‌ தமைத்த செளரி யங்களை
யெச்சிலுண்டு வானளித்‌ தெழுந்த புண்டரீனே–31-

இன்னணம்‌ பொலிந்து நின்ற வெம்பிரா னிணைப்பதஞ்‌
சென்னியிற்‌ புனைந்து பின்‌ றுதித்துளஞ்‌ சிறப்புறத்‌
தன்னருங்‌ குலப்பெருஞ்‌ சுடர்ச்சுதன்‌ றனைப்புவி
மன்னனுண்‌ மழ்ந்தவன பொலன் கழல்‌ வணக்‌கியே–32-

புத்தெனுந் நராலையைப்‌ புடைத்தெமைப்‌ புறந்த வேய்‌
முத்தனோ டயன்‌ பராவு மூர்த்தி யாதி மூலமென்‌
றத்தனைப்‌ பழிச்சி மன்னவன்‌ றிருவருட்‌ கொடுண்‌
ணத்தியே மகற்‌ குகந்து நாம மோத லாயினான்–33-

தங்குலப்‌ புரோகிதன்‌ றனைக்‌ கோடேத மின்றியா
றங்கமைந்து வேள்வி நான்‌ மறைக்குடே ரகங்கொணற்
புங்க வேத வாணர் கூய்ப்‌ பொலிந்த பின் விதிப்படி
மங்களத்தி யங்கறங்க மாதவர்க் களிப்பனால்–34–

செம்பொனே ரிலங்கு பூணிவர்ந்து விண்‌ செறிந்தவிற்‌
பம்பு மாட கூட மாளிகைச்‌ செடெற்‌ பணைத்தல்
மம்பரஞ்‌ சுவைப்பயஞ்‌ செழித்தவா னிதிக்‌ குவை
இம்பரைந் தருக்கு நேர பீட்ட தான மீந்தனன்–35-

பொங்குவெண்‌ முனூலிலங்கு பூ சுரர்க்களித்த போழ்‌
தங்கை விட்ட நீருகுந் துலாயியாறு பாய்ந்தவண்‌
எங்கணும்‌ பரந்து தாம்ப்ரவன்னி யாயிழிந்ததே
லங்கவன்‌ செய்தான நேரிதாகு மென்ன லாகுமே–36-

எண்ணிறான மாதவர்க்‌ களித்து லோப மொன்றிலா
துண்ணெகிழ்ந்து நீதி நாலிலோது நேம கப்படி
நண்ணியே சடங்கினை நடத்தியன்பின்‌ வந்தெழுந்‌
தண்ணளிக்‌ கடற்கு வள்ளல்‌ சாத கர்ம மாற்றியே–37-

எறெறெருத்த மீதுறீச னுக்கய னிழைத்ததத்‌
தூறரித்த மால்‌ பதத்தி லொண்டமிழ்ப்‌ புனைந்து நா
வீறனாகு மெய்ப் பரன்‌ றனக்கவன்‌ குலப்பெயர்‌
மாறனென்று நாமமன்‌ வரோ தயன்‌ வழங்கனான்–38-

அந்தரத்தி னன்பனா யம்புயத்‌ தவன்‌ மறை
யெந்தை தாளுறற்‌ கொணாம லின்னு மேத்த நின்றவன்‌
றந்தையாகி மன்னவன்‌ றனக்கு நாம்‌ முந்தரில்‌
விந்தை சேரவன்‌ புகழ்‌ விளம்ப யாவர்‌ வல்லரே–39-

இன்னண நராதிபன்‌ பொலிந்து நின்ற வெம்பிரான்‌
றன்னருட்‌ கொடேதமார்‌ சடத்தினைச்‌ சினந்த தீங்
கன்னலின்‌ சொனங்கை கான்முளைக்‌ க நாம மோது நாள்‌
பொன்னகர்க்கு ளோருகந்து பூவின்‌ மாரி பெய்தனர்–40-

மண்ட லேசுரன்‌ கனிந்து மாறனைத் த ழீ இயெணி
லண்ட முண்டு மிழ்ந்த மாயனம்‌ புயப்‌ பதம்பராய்‌
விண்டடைந்த மாடமார்த மாளிகைக்குண்‌ மேவியே
கெண்டை யொண்‌ கண்‌ மாதினோடு கேண்மை யுற்‌ றுறைந்தனன்–41-

நாமதேயப்‌ படல முற்றும்‌,

ஆதிமால்‌ தரிசனப்‌ படலம்‌

பொன்பதி யெனவாம்‌ கோட்டிப்‌ புங்கவ நம்பி பாலீ
ரொன்பது தடவைக்‌ கப்பா லோதியந்‌ நூலையார்க்கு
மின்புற வளித்து நாம மெம்பெருமானா ரானோன்‌
றன்பத மலரைச்‌ சூடித்‌ தரிசனப்‌ படலஞ்‌ சொல்வாம்–1-

இன்னண முவகை மீதூ ரேந்தறம்‌ சேமக்‌ கோயின்‌
மன்னியந்‌ தமரினோடு மறுவிலா தறு சுவைக்க
ணன்னய மூரலுண்‌ டனந்தர முடைய நங்கை
தன்னருஞ்‌ சுதனைத்‌ தொட்டி லிடுதரத்‌ தலைமை சான்றாள்–2-

கொண்டலிற்‌ சுருளும்‌ குஞ்சி நித்திலக்‌ கொண்டை சேர்த்துத்‌
துண்டவெண்‌ பிறைநுதன்மீத்‌ துராயொளி துலங்கச்‌ சாத்திப்‌
பண்டமார்‌ சுடிகை யோடைப்‌ பற்பல மணி யிழைத்த
குண்டலம்‌ பிடிகஞ்‌ சாத்திக்‌ குலவு கண்டிகையும்‌ பூட்டி–3-

அம்புயத்‌ தொளிரும்‌ வைரத்‌ தழுத்து மங்கதமுஞ்‌ சாத்தி
வம்புறு நிம்ப மாலை மார்பிடை மதாணி சாத்தி
பம்பு மொண்‌ கதிருலாய காஞ்சியும்‌ பரிவிற்‌ பூட்டிச்‌
சம்பய னறியாத்தாளிற்‌ பரிபுரச்‌ சதங்கை சாத்தி–4-

பாடகங்‌ கொலுசு பாதப்‌ பவளமென்‌ விரலின்‌ மிஞ்சி
யாடகத்‌ தமைத்துப்‌ பூட்டி யங்குலிக்‌ காழி சேர்த்துக்‌
கோடு புன்னகமுஞ்‌ சாத்திக்‌ குதலைக்‌ ண்ணிக்‌ காயொடு
நீடர வடமும்‌ பூட்டி நிலவ மண்‌ டிலத மிட்டு–5-

அஞ்சன மகன்‌று நீண்ட வையரி விழிமேற்‌ றீட்டிக்‌
கஞ்ச மெல்லடியிற்‌ செய்ய மஞ்சொளி கதுவக்‌ கோட்டி.
வஞ்சர்‌ கண்ணீறு தையா வகை வலக்கதுப்‌ பினீல
நஞ்சிலுங்‌ கரிய மையா னலம் பெறக்‌ குறி யொன்றிட்டு–6–

காசறொண்‌ பிரவாளத்தாற்‌ கவின்‌ பெறக்‌ கடைந்த காலுட்‌
டேசிகத் திடைசலாகை சேந்த மாமணி குயிற்றிப்‌
பாசொளி பரந்த சட்டம்‌ பணித்துமா மரகதத்தில்‌
வீசுவிற்‌ றொடரு நாற்றி வீசித்த பொற்றொட் டிலேற்றி–7–

பற்பல நிலவு காலுஞ்‌ சூரிய படத்திற்‌ செய்ய
விற்புனை யேழடுக்கு மெத்தை மேல்‌ விரித்‌து வெண்பட்‌
டற்புத மலர்களாற்செய்‌ தணிகொண்மே லாப் பமைத்துய்‌
பொற்புறு தொட்டி லேற்றிப்‌ பூவை தாலாட்டு வாளால்–8-

பண்ணைவாய்‌ வளையு குத்த பன்மணி நிலவு காலுங்‌
கண்ணகன்‌ றொளிரு கூடற்‌ கா வலன்‌ மரபுளோரை
நண்ணுதற்‌ கரிய வைதரணிக்‌ கரை கடத்த வென்றிம்‌
மண்ணிடை யுதித்த வென்கண்‌ மணியே தாலோ தாலேலோ–9-

உலைபடா தொளிருஞ்‌ செம்பொ னுதயனாற்‌ கருகாமாலை
யலைபடா வமுத மாலை யடைதரா வினிய கன்னல்‌
கலைபடா மதியம்‌ வண்டர்‌ கவர்ந்கடா திஸ்னிய செந்தேன்‌
விலைபடா மணியேர்‌ நந்தா விளக்கே தாலோ தாலேலோ–10-

கோடரங்‌ குழையிற்‌ பாயக்‌ கூனிருலுடையத் தேனூர்‌
மாடவிர்‌ முகடார்‌ மந்த மாருத வரையாள்‌ கோவே
நீடிய திரைவாய்‌ முத்தை நேமியம்‌ பறவை காக்குந்‌
தோடவிழ்‌ கமல வைகைத்‌ துறைவ தாலோ தாலேலோ–11–

அள்ளலங்‌ கருஞ்சே றுற்ற வகன்பணை யுழவின்‌ மள்ளர்‌
உள்ளடி யுறுத்த நீல முகுமதுக்‌ குருகூர்‌ நம்பி
வெள்ள நீர்க்‌ கயல்க ணாக மேய வைந்தருவைச்‌ சாடித்‌
துள்ளூநீர்ப்‌ பொருனற்‌ சங்கத்‌ துறைவ தாலோ தாலேலோ–12-

இருநிலத்தறு விசிட்டாத்‌ துவைத முற்றிட வுயர்ந்த
திருமிகு மகர கேதுச்‌ செல்வனே வாசு தேவ
தருநிழ லண்ட முற்றுந் தங்கிய தன்ன முன்னீர்‌
வருபுவி யோர் குடைக்கீழ்‌ வளர்க்க வந்தவ தாலேலோ–13-

வாட்டடமங் கண்ணி யிவ்வாறுல கெலாம்‌ வயிற்றடக்கி
மீட்டுமிழ்ற்‌ தளித்தழிக்கும்‌ விருப்பு மாத்திரத்தி லோரும்‌
பாட்டுடைப்‌ பரனை முன்னாட்‌ பயிற்றிடு தவத்தி னாற்றா
லாட்டியுள்‌ ளுவகை பொங்க வங்கையி லெடுத்துப்‌ பின்னர்–14-

முன்னுளபடி மலர்க்கண்‌ முகிழ்த்தி யாம்‌ வீட்ட வாறே
நன்னய வணைகிடந்து நகிலமு முண்ணா தங்கந்
தன்னிலே யசைவு மெய்யிற்‌ றளர்ச்சியோ டழுகையின்‌றி
மன்னுநம்‌ மதலை போலே வையகத்துளதோ வென்றே–15-

அம்மமுண்‌ ணெனவே யங்கை யனகனை கிடத்தி வார்கொள்‌
கொம்மை வெம்முலை பிடித்துக்‌ குமுத வாய்‌ பொருத்த வப்பால்‌
செம்மையங்‌ கடைவாய்‌ முன்போ லோடுறத்‌ திகைப்புற்‌ றந்தோ
மைம்முகி லளகத்‌திரீ தென்னென வருந்தா நின்றாள்–16-

சுவர்க்க பூதலத்திற்‌ றோன்றி தூம்பயல்‌ வளைந்த தன்ன
விவர்தரு திருத்தோணல்லீ ரென்ன காரண முனான் செய்‌
பவமதின்‌ குறையோ வன்றிப்‌ பயிற்றிய தவத்துட்‌ கோதோ
வவனிமீ திவ்வாறெச்ச மாரேனும்‌ பெற்ற துண்டோ -17-

சசியலை தரவே செய்வ தனமுறு மடவீர்‌ சற்றும்‌
பதியினா லழவு மின்றிச்‌ சேனையும்‌ பருகாதாகி
அசதியு மில்லா தங்க மதிவளம்‌ பெருக முன்னீர்‌
வசுந்தரை பிறந்த மாதர்‌ மக்களைப்‌ பெறலு முண்டோ–18-

மைப்படு குழலீ ராயு மலரணை மீதியானங்‌
கெப்படிக்‌ கிடத்தினேனோ விசைந்து நாளெட்டானாலும்‌
அப்படி யிருக்க லல்லா லங்கமொன்‌ றசைவ மில்லா
திப்படி மீது மாத ரிளமக வுயிர்த்த லுண்டோ–19-

இண்டை கொண்டிலகு மைம்பா லிழைநுசுப்‌ பரிவையீர்‌ பொற்‌
றண்டை கிண்கிணி கறங்கத்‌ தவழ்ந்தடு சிறுசே யென்னைக்‌
கண்டு முன்‌வர வன்போடு கைகொடுதழா௮ தழுக்கா
றுண்‌ டெரிசின முள்ளோங்க வுற்றெடா திஸ்ருந்திட்டேனோ–20-

பல்லமம்‌ பகமொண்‌ மெளவ்வற்‌ பசிய கோரக வெயிற்றீர்‌
தொல்லை நாளளவுஞ்‌ சேயாற்‌ றுன்புறப்‌ பின்‌ றவத்தான்‌
மல்லலங்‌ குழவி தந்த மாமகணேய னிவ்வா
றல்லலுற்‌ றழுங்கச்‌ செய்ய வடிமையிற்‌ பிழையென்‌ னோவால்–21-

ஒரு குறங்கணை வாய்‌ வைத்தாங்‌ கொரு குறுங்கணை நெரூ உடித்‌
திருமுக மலர நோக்கிச்‌ சிறு நகை புரியாச்‌ சேயைக்‌
குருமணி கொழிக்கு முன்னீர்‌ குலவு மானிலத்‌ துளோர்கண்‌
மருமல ரளகபார வனிதையீ ரறிந்த துண்டோ-22–

வண்டு நாணுடைய வீரன்‌ வாளிபாய்‌ செம்புணாரச்‌
செண்டு மாமுலை கொண்டொத்திச்‌ செழிக்க வன்பரைச்சேர்‌ நல்லீர்‌
யெண்டிசை யிடத்திலுள்ளே குழவிகட்‌ கென்சேய்‌ நோய்‌ போ
லுண்டு கொல்‌ யான்‌ செய்‌ பாவத்துறுதி கொலறைதி ரென்றாள்–23-

பொற்றொடி கறங்கு முன்கைப்‌ பூவை யீரரியின்றாளுட்‌
பற்று மிவ்வுலகர்‌ செய்ய பாலனில்லா தழுங்கிப்‌
பெற்ற பினுவகை கொள்வர்‌ பேதையே னளவுமச்சே
யுற்று நீயழுங்‌ கென்றெம்மா னுந்தி யோன்‌ வகுத்திட்டானோ–24–

தையலார்‌ முழுகு சீறு தைத்ததோ வன்றி வேலன்‌
வெய்ய கண்ணோக்கோ வத்தி மேய புட்‌ சீரோ வென்று
வையுற விதற்குமுன்‌ னிவ்வன்கறுப்‌ பாடினானோ
தொயயில்‌ வெம்முலையீ ருற்ற சூழ்ச்சியை யறிந்திலோமால்–25–

கொங்கையின்‌ பொறை கண்டேங்கு கொடியிடை மடவீர்‌ சற்றுஞ்‌
சங்கை வேறுளவென்‌ றெண்ணிற்‌ றனுவிடை வாட்ட மில்லை
யங்கை யுள்ளங்கால்‌ வெப்ப மாறிலைச்‌ சரந்தாழ்வில்லை
விங்குள முச்சி தாழ்வு மெய்தில தென்னோ வென்றாள்–26-

மெதகு முனிவன்‌ பின்பேர்ய்‌ விறல்‌ கொடா டகையும்‌ அம்மம்‌
போத வந்துதவு சீற்றப்‌ பூதனை யாளையும்‌ பார்த்‌
தேதிவர்‌ பெண்பா லென்றங்‌ கெண்ணிடா தவர்‌ கடுஞ்ச
மோதுகன்‌ மனனோ நங்கை மொழியினுக்‌ கிரங்குவானே–27-

இன்னண முடைய நங்கை யுண விலாதிளைப்‌ புற்றோர்க
ணன்னய மூர றீம்பா னண்ணியு முணற்‌ கில்லாயி
னன்னவ ருறுக ணெவ்வா றடைவரோ வஃதினொந்து
மன்னனுக்‌ குரைப்ப வன்னோன்‌ வருந்தி யீ துரை செய்வானால்–28-

கொந்தார்‌ குழலெழி றோடணி குழையாய்‌ கலை குறையா
விந்தார்‌ முக மகவார்கலி மிரு மானிலர்‌ முளை போற்‌
செந்தாமரை விழிவா யவிழ்‌ செயுமென றெணி யிதுநாள்‌
வந்தோமினி முனமீ பெருமானே சரணெனவே–29-

என்போடுள முலைவாய்‌ மெழுகெனவே கரை தரவுள்‌
ளன்போடவ னிணைமாமல ரடி மீதினி லமரப்‌
பொன்‌ போலொளி ரிளமாறனைப்‌ புகவித்தடி பரவி
மின்போதரு முரனே யெனவினை செய்தன முனமே–30-

அடியோ மிது தரமோ நினையருளார்‌ கலியெனவிப்‌
படியோ டமரரு மாமறை பகரும்‌ முரை கெடுமே
அடிவார்‌ மரையுறைவோன்கடுக்‌ களனோடடி யறியா
வடிவாகிய முதலேயறு மனமேவிய துயரே–31-

என்றே பல துதி செய்திடி லிம்மா முலுருவோன்‌
அன்றே யருள்‌ புரிவா னிதிலயமே தவனடி வாய்‌
சென்றே அயர்‌ களைவோ மெழு தெரிவாயென விறைவன்‌
மன்றேறியோ ரிரதங்கொடு வாரும்மென வுரைத்தான்–32-

என்றே பல துதி செய்திடி லிம்மா முலுருவோன்‌
அன்றே யருள்‌ புரிவா னிதிலயமே தவனடி வாய்‌
சென்றே அயர்‌ களைவோ மெழு தெரிவாயென விறைவன்‌
மன்றேறியோ ரிரதங்கொடு வாரும்மென வுரைத்தான்–33-

மெய்‌ யொன்றிய மதயோருளை வீறன்‌ மாவணி திகழும்‌
வையந்தனை மறி தெண்டிரை மடைநின்றெழு புனனேர்‌
மொய்யன்‌ புறுபடை பல்லிய முழவார்ப்‌ பெழவுதவ
வய்யன்மன மகிழாவவ ணடைவான் மிசை யேறி–34-

தனையன்‌ றனையி பவென்‌ கொடுதளிர்‌ மெல்லடி மடமான்‌
மனனம்‌ தணிகர நங்கையு மதமந்திரி யுடனே
கனமொன்‌ றயரணி மேடைகள்‌ கவினா ரெயில்‌ சிகரி
யினமொன்‌ நியமற: கோடிறை யெய்தாச்‌ சினகரமே–35-

திதி மைந்தரின்‌ வலியால்வரர்‌ சேணாடரசிழவா
விதியே வலினிவண்‌ வந்தடி மேவும்பொழு துருவா
யெதிர்‌ வந்தவர்‌ வலியொன்‌றிட வினல்‌ வென்றிட வருளும்‌
புதுமென்‌ மரை மலராளிறை முன் போய்த்‌ துதி புரிவான்‌–36-

கண்ணனின்‌ னருளா லென்றுய ரறமுன்‌ கான்முளை யளித்தனை யதுவிம்‌
மண்ணக மடவார்‌ சிறுவரிற்‌ கருணை வார்விழி யவிழ்‌ தரா தம்ம
முண்ணிலா தவயவங்களு மசையா தொளி கொள்‌ செம்‌ பவள வாய்‌ திறவா
தண்ணலிப்‌ புதுமை யெற்கென நினைந்தோ வருளினை கருணை வாருதியே–37-

பாட்டளிமுரலின்‌ றளவணி முறுவற்பாசிழைக்‌ கமலவீட்‌ டரசி
மோட்டிள நூலமுழுந்திரு வரைகொள்‌ மொய்ம்பநன்‌ மசுவருளென்‌று
வேட்டிடக்‌ களப குங்குமஞ்‌ சுமந்த வேசரி யாக்கனிற்‌ கறமோ
வோட்டரும்‌ பிரசத்‌ துளவணி புயவீண்‌ டுனையலாற்‌ களை க ண்வேறி லையே.–38-

செப்புறழ்‌ நகில முருந்திள முறுவற்‌ சேலிணைக் கண்டுடி யிடைகொ
ணப்பினை பொருட்டேழ்‌ விடையட ராதி நாதனே யருள்‌ மழை முகிலே
மைப்படு வரை செங்கதிர் மத யிருபால்‌ வயங்க நின்றது வனவுருவத்‌
தப்பனே களைக ணீயலா தெற்‌கீங் காருளார்‌ கருணை வாரிதியே–39-

கோதறு மறைகணான்கின மறியாக்‌ குணமிகும்‌ பரமதாய்‌ விழியின்‌
சோதியா லெவரு மறிவதற்‌ கரிதாய்த்‌ துளக்கறு மன த்தினுக்‌ கெளி தாய்‌
நீதிகொ ளதமா யவைசெயும்‌ பொருளாய்‌ நிறைதரும்‌ குணமழை முகிலே
ஆதியே களைக ணீயலா தெற்கிங் காருளார்‌ கருணை வாரிதியே–40-

அண்டமாயண்டத்‌ தயனரன்‌ குலிசத்‌ தரசனா யவனவனுலகாய்ப்‌
பிண்டமாய்‌ விரிவாய்ப்‌ புலனொடு நிலனாய்ப்‌ பிறங்கன லொலியொடு விசும்பாய்ப்‌
பண்டமா யணுவுக்‌ கணுவதா யிவரும்பருப்பத மதற்கத னுருவாய்‌
மண்டல முழுதும்‌ நிறை தரும் பொருளே மாயனே கருணை வாரிதியே–41-

கண்ணிலா னொருவன்‌ நின்னடி. நிழற் கீழ்க்‌ கடுந்தவமுஞ்ற்றியெற்‌ இருகண்‌
நண்ணிட வருளென்‌ நிறைஞ்சிட வுருக்க ணல்கிய தொளிகொடா தனைய
வண்ணனின்‌ னருள்கொ டுதவுநம்‌ மகவீண்‌ டனை யதாயு றிலெவ ணருள்வாய்‌
வண்ணமால்‌ வரைசெங்‌ கரநுதி பரித்த மாயனே கருணே வாரிதியே–42-

கண்ணகன்‌ ஞாலத்தொரு பொறியிலிமால் கருணையாற்‌ பசுங்கனி
டுண்ணு நாட்‌ சுவையில்‌ லாகிலாங்‌ கஅவுற்‌ றுளபயனெவணது சிவண கைக்கொண்
வெண்ணுதற்கரிய மாமையங்‌ குழவி யீண்டெனக்‌ களித்தையதினைய
வண்ணமுற்றிடி லென்‌ பயனதற்‌ கருள்வாய்‌ மாயனே கருணை வாரிதயே–43-

வட்டவா ௬லகத்‌ தொருபசுங்‌ கொடிபன்‌ மகவுயிர்த்தட வதிலொரு வன்
துட்டனாயிடினு மாங்கவற்‌ குறுகண்‌ டோன்றிமிக்‌ குழல்பொழு தனை நெஞ்
சொட்டுமோ கடிய வதுவியல்‌ பன்றியோதநீர்‌ வண்ண நின்‌ னடியை
யெட்டுணைப்பொழுது நயந்துள முன்னா திருந்தெனோ கருணை வாரிதியே–44-

புத்தமு தூறுங்‌ கூபமு மடவார்‌ புனிதமாங்‌ கற்பினின்‌ றகலாச்‌
சித்தமு மாலே பரமெனக்‌ கருதிச்‌ செபதப கோம கேமனமு
மத்தமும்‌ படையு மடல்கெழு புயமிக்‌ காண்மையும்‌ படைத்து நின்‌ னடி சேர்‌
பத்தர்கணிடை யூறளித்திடுங்‌ கொடிய பாகுபா டொன்று றுமதனால்–45-

இஞ்சிசூழவரை வெல்வதற்‌ கெணிநா மெதிருநில்‌ வல்லைநங்‌ கழல்‌ வாய்த்‌
தஞ்சமென்‌ றடைவ ரருள்செய வேண்டுஞ்‌ சரியல வாங்கவர்‌ செயலை
வஞ்சமா யழிவுசெய்ய வென்றுன்னி மாவுரு வெடுத்தமு தனைத்துந்‌
துஞ்சிடப்‌ பருக யாசதாய்‌ மடவார்‌ தூய கற்‌ பதனையு மழித்தே–46-

போதவோர்‌ புத்தனாயவர்‌ பக்தி போக்கி யிவ்‌ வுலகிரதமதாய்‌
ஆதவன்‌ மதியந்‌ திகிரியா யொருநான்‌ காரணம்‌ பரியதாய்ச்‌ சூதன்‌
வேதனா யரனு மெதிரியாய்‌ மேரு வில்லதாய்‌ நாணும்‌ வாசுகியாய்‌
தீதறுவாளி நீயதாய்‌ வென்ற தேவவென்‌ பிழையதிற்‌ கொடிதோ–

தனியாழி சூழ வனியாளு மெந்தை சர ராம னான பொழுதோர்‌
முனிவாலிலக்கு வனை நீ முகத்து முனிலேன்‌ முனங்குருகைபோ
யினிதாயடர்ந்த புளியாவை நின்க ணெழுவாம்பி னென்ற வுரையே
யுனிமாயனம்பொன்‌ னடிவாய்‌ கிடத்து மொளி சேய்‌ செய் வாய்மை யறைவாம்

ஆதிமால்‌ தரிசனப் படலம்‌ முற்றும்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நம்மாழ்வார் மஹாத்ம்யம்

November 25, 2024

இன்றைய நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் திருக்குருகூர் என்று வழங்கப்பட்டு வந்தது. அவ்வூரில் வேளாளர் குலத்தைச் சேர்ந்த மாறன்காரி – உடைய நங்கை தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். உடைய நங்கையின் ஊர்திருவண் பரிசாரம். (இன்றைய திருப்பதிசாரம்). திருமணமான புதிதில் சில நாட்கள் நங்கை தன் சொந்த ஊரில் இருந்து வந்தார். மாறன்காரி அவரை அழைத்துக் கொண்டு குருகூருக்குத் திரும்பும் வழியில் திருக்குறுங்குடி தலத்தில் பெருமானைச் சேவித்து புத்திரப் பேறு அருளும்படி பிரார்த்தித்தனர்.அன்றிரவு தம்பதியினர் கனவில் குறுங்குடி நம்பி தோன்றி தாமே அவர்களுக்கு மகனாகப் பிறக்கப் போவதாக அருளினார். விடிந்ததும் தம்பதியினர் தாம் கண்ட கனவை கூறி மகிழ்ச்சி அடைந்தனர். பின்பு ஊருக்குத் திரும்பினர். சிறிது காலத்தில் உடைய நங்கை கருவுற்றார். ஆன்மாக்களின் உள்ளத்து இருள் நீக்கும் ஞான சூரியன் என நம்மாழ்வார் அவதரித்து அருளினார்.பெருமாள் முன்பு, “கலியுகத்திலே வடமொழி வேதங்களை தமிழில் உருவாக்க சடகோபன் என்ற பெயரில் அவதரிப்பேன்” என்று கூறியதுபோல, பாண்டியநாட்டில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் காரியர், உடையநங்கை தம்பதிகளுக்கு, அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, மகனாக வந்து அவதரித்தார்.
இந்நிகழ்வை ஆறாயிரப் படி குருபரம்பரைப் பிரபாவம் “எம்பெருமான் இவரிடத்திலே பாரெல்லாம் உய்யும் படி, சேனை முதலியாரை நம்மாழ்வாராக…….. நீங்காத உள்ளிருள் நீங்கிச் சோஷியாத பிறவிக்கடல் சோஷித்து விகசியாத போதிற் கமல மலரும்படி வகுளபூஷண பாஸ்கரோதயம் உண்டாய்த்து” என்று கூறும்.
பிறந்த நாள் முதல் சாதாரண மானிடக் குழந்தைகள் போல் ’முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை உண்ணாதே’ அவ்வாறு பிறந்த குழந்தை பாலுண்ணுதல், அழுதல் என எந்த இயற்கையான செயல்களையும் செய்யாமல்) இருந்தது. இந்தக் குழந்தை. விசித்திரமான இந்நிலையைக் கண்டு மனங்கலங்கிய பெற்றோர் குழந்தையை திருக்குருகூர் கோயில் கொண்டு வந்து, குருகூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆதிப்பிரான் சந்நிதி முன்பு குழந்தையை இட்டு வேண்டி நின்றனர். உலக இயல்புக்கு மாறாக இருத்தலால் குழந்தைக்கு ‘மாறன்’ என்றும் பாராங்குசன் என்றும் பெயரிட்டு பின்பு அக்கோயிலில் இருக்கும் ஆதிசேஷன் புளிய மரமாக உள்ளதிருப்புளிய மரத்தடியிலே பொன்னால் செய்த தொட்டிலில் கிடத்தி “எங்கள் குடிக்கரசே” என்று விசேஷ பிரதிபக்தி பண்ணிச் சேவித்துக் கொண்டு நின்றார்கள்

இந்நிலையில் சடகோபன் பிறப்பதற்கு முன்பாக, திருக்கோளூரில் பிறந்த மதுரகவி, திருமாலை வணங்கி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவரது வயலில் மேய்ந்த பசு மாட்டினை மதுரகவி விரட்ட, அப்பசு ஓடிய வேகத்தில் கால் இடறி கீழே விழுந்து இறந்தது. தான் செய்த பாவத்திற்கு வருந்திய மதுரகவி, அப்பாவத்தைப் போக்க எண்ணி புனித நீராடும் பொருட்டு வடநாட்டுப் பக்கம் செல்லத் துவங்கினார். அவ்வாறு வடக்கில காசியில் தவம் இருந்த ஒரு இரவு நேரத்தில், வானத்தில் பேரொளியைக் கண்டார். அந்த ஒளி செல்லும் பாதையிலேயே பல நாட்கள் நடந்து வந்து கொண்டே இருந்தார். அந்த ஒளியானது திருக்குருகூர் வந்ததும் மறைந்து போனது. ஜோதியாக வந்து தன்னை ஆட்கொண்டது திருக்குருகூர் புளிய மரத்து ஆழ்வார்தான் என்பதை மதுரகவி கண்டுகொண்டார்.
கண்கள் மூடி மௌனத்தில் இருந்த ஆழ்வாரைக் கண்டு வியந்து, ஆழ்வார் முன் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டார். ஆழ்வார் கண்மலர்ந்து பார்த்தார். மதுரகவி அவரை நோக்கி”செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்?”, இது வரை பேசாத ஆழ்வார் இவரின் வினாவிற்கு விடை யளிக்கும் வண்ணம் ” அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று இசைந்தார். மதுரகவி ‘இவரே நம்மை ஆளவந்த குருநாதர்’ என்று கருதி ’தேவு மற்றறியேன்’ என்று ஆழ்வார் திருவடியைச் சேவித்து நின்றார். ஆழ்வார் கூறிய பதில் சிறியதாக இருந்தாலும் அது அனைத்தயும் அடக்கிய தத்துவார்த்தமாக அமைந்திருந்தது. 

(மதுரகவிகள்-ஆழ்வார் உரையாடலின் பொருள் இது: அணு உருவாகிய ஆத்மா அறிவற்ற உடலில் கிடந்தால் எதை அனுபவித்து எங்கே கிடக்கும்?அந்த உடலிலேயே இருந்து இன்ப துன்பங்களை அனுபவித்து அங்கேயே கிடக்கும்.) மகான் மதுரகவி, தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி நம்மாழ்வாரை வேண்டினார். அவ்வாறே அவரை சீடராக ஏற்றுக்கொண்டு திவ்யப்பிரபந்தத்தை உபதேசித்தருளினார்.
அச்சமயம் நாராயணன் பிராட்டி உடன் பெரிய திருவடியாகிய கருடாழ்வார் மீது தோன்றி “தன்னுடைய ஸ்வரூப ரூபகுண விபூதி சேஷ்டி தங்களை எல்லாம் உகபதேசவ சாட்சாத்கரித்து அனுபவிக்கலாம்படி ஆழ்வார்க்கு மயர்வற மதிநலம் அருளினான்”. ஆழ்வாரும் பொன்னிலாமேனி மரகதத்தின் பொங்கிளஞ்சோதியாகிய பெருமானுடைய சகல கல்யாண குணங்களை அனுபவித்துமுடியாமல் அவன் அருளை அழகிய தமிழில் பாடி அருளினார்.

திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி இவற்றை ருக், யஜூர், சாமம், அதர்வணம் எனும் நால்வேதங்களின் சாரமாக அருளிச் செய்தார்.
எனவே சடகோபராகிய நம்மாழ்வார் வேதம் தமிழ் செய்த மாறன் என்ற புகழுக்கு உரியவரானார். அறிவாலும், ஞானத்தாலும், பக்தியாலும் சிறந்து விளங்கிய சடகோபரை அனைவரும் இவர் நம்மவர் என விரும்பி அழைக்க நம்மாழ்வார் என்ற பெயர் உருவானது. திருமால் இவருக்குத் தந்தருளிய மகிழமாலையை அணிந்திருந்த காரணத்தால், வகுளாபரணர் என்ற பெயரும் உண்டானது.

ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால் மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் பூதத்தாழ்வாரை தலையாகவும், பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும், பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும், தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும், திருமங்கையாழ்வாரை வயிறாகவும், மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு விளங்கினார்.

நம்மாழ்வார் 36 திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். 31 ஆண்டு காலம் இந்த புளிய மரத்தடியில் 36 பெருமாளைப் பற்றி பாடியதால் இந்த மரத்தினைச் சுற்றி 36 திவ்ய தேசப் பெருமாளின் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. நம்மாழ்வார், தனது 35-வது வயதில் இறைவனடி சேர்ந்தார். அவரது பூத உடல் பள்ளிகொண்டுள்ள இடத்தில் திருக்கோயில் அமைத்து வைகாசித் திருவிழாக் கொண்டாடினார் மதுரகவி ஆழ்வார். வட மொழியில் நான்கு வேதங்கள் உள்ளது போல் தமிழில் நான்கு வேதங்களை உருவாக்கியுள்ளார் நம்மாழ்வார். இவர் இயற்றிய திருவாய் மொழிதிராவிட வேதம் என அழைக்கப்படுகிறது.
மதுரகவிகளும் ஆழ்வார் திருவாக்குகளை கற்று ஊரும் நாடும் உலகும் அறிய வெளிப்படுத்தினார். நம்மாழ்வார் மறைந்த பிறகு அவரது பூத உடலை திருப்புளியின் அடியில் பள்ளிப்படுத்தி (சமாதி செய்து) அவருக்கு விக்கிரகம் செய்து சந்நிதி உண்டாக்கி விழாக்கள் எடுத்து சிறப்பித்தார் மதுரகவிகள்.

ஆழ்வார் திருநகரி என்னும் திருக்குருகூரில் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் பிறந்தது முதல் குழந்தைக்குரிய அழுதல், தாய்ப்பால் குடித்தல் போன்ற செயல்கள் செய்யாது வாட்டமின்றி இருந்தார்.

எனவே பெற்றோர் அக்குழந்தை பிறந்து, பன்னிரண்டாம் நாள் திருக்குருகூர்ப்பிரான் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். உலக வழக்கத்திற்கு மாறாகக் காட்சி அளித்த அக்குழந்தைக்கு மாறன் எனத் திருநாமம் இட்டனர்.

திருவரங்கநாதன், நம் ஆழ்வார் என்று அழைத்ததால் நம்மாழ்வார் என்பர். பெருமாள் கொடுத்த மகிழம்பூ மாலையை அணிந்தவர் என்பதால் மகிழ்மாலை மார்பினர் ஆனார்.

புறச் சமயங்களாகிய யானையை அடக்கத் தம் அருளிச் செயல்களை அங்குசம் போலப் பயன்படுத்திக் கொண்டவர். ஆகையால் பராங்குசதாசர் எனப் போற்றினர். சடகோபர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. நம்மாழ்வார் அருளிய நான்கு திவ்வியப் பிரபந்தங்களும் நான்கு வேதங்களின் சாரம் என்பதால் ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்றும் போற்றப்படுகிறார். இவர் ஸ்ரீ விஸ்வக்ஷேனாவின் அவதாரமவார்.

இவரின் ஆயுள் 32 ஆண்டுகள் என்றாலும், நான்கு வேதங்களை பற்றி எடுத்துரைக்கும் வண்ணம், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என நான்கு படைப்புகளை உருவாக்கினார். இதனால் இவரை ஜகத்குரு ஆசார்யன் ஸ்ரீ ராமானுஜர் “வேதம் தமிழ் செய்த மாறன்” எனப் பட்டம் சூட்டியுள்ளார். மேலும் நம்மாழ்வார் இயற்றிய ஸ்ரீ பகவத் விஷயம், சாம வேதத்தினை விளக்குவதாக உள்ளது. 

இவர் பெருமானின் மீது கொண்டிருந்த பக்தி, இவரை இவ்வாறு பாடவைத்ததோ?…

உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன் மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் அயர்வுறும் அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடரடி தொழுதெழென் மனனே” என்றும்.. 

திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசை படர்பொருள் முழுவதுமாய் அவை யவைதொறும் உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே” என்றும்… 

”கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே”என பரவசத்துடன் பாடி இறைவனடிக்கு சேவை புரிந்த இவர் ஸ்ரீ நாதமுனிக்கு நாலாயிரம் பாசுரமும் கிடைக்க வழி வகுத்தார்.

இயற்பெயர் : –

நக்ஷத்திரம் : விசாகம் 

மாதம் : வைகாசி 

சேக்ஷதிரம் : திருகுருஹூர் (ஆழ்வார் திருநகரி), 

திருநெல்வேலி – தமிழ்நாடு

பிரபந்தம் : திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி (பிற்காலத்தில் இவை அனைத்தும் சேர்த்து ஸ்ரீ பகவத் விஷயம் எனப்போற்றபட்டது)

ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!விசிஷ்டாத்வைதம் என இன்று வழங்கப்படும் வைணவம் ராமாநுஜரால் கட்டமைக்கப்பட்டதால் ‘எம்பெருமானார் தரிசனம்’ எனவும் ’ராமாநுஜ சித்தாந்தம்’ எனவும் போற்றப்படுகிறது. ராமாநுஜர் உருவாக்கிய வைணவ பக்தி மற்றும் தத்துவ இயக்கம் வடநாடு சென்று மாபெரும் பக்தி இயக்கமாக உருவெடுத்தது. நாமதேவர், சைதன்யர் என்று மகான்கள் பலர் தோன்றி அவ்வியக்கத்தை வளர்த்தெடுத்தனர். இம்மாபெரும் எழுச்சிக்கு வித்திட்ட ராமாநுஜர் விசிஷ்டாத்வைதத்திற்கான தத்துவக் கூறுகளை, ஆழ்வார்களில் தலையாயவரான நம்மாழ்வாரிடமிருந்தே பெற்றிருந்தார். வைணவ சமயத்தின் மூலமே நம்மாழ்வார் தான். எனவேதான் வைணவத்தில் அவருக்கு தனிச் சிறப்பு இருக்கின்றது. வைணவத்தில் கோயில் என்றாலே ஸ்ரீ ரங்கம் தான். ஆழ்வார் என்றாலே நம்மாழ்வார் தான். அவர் பெயரால் தான் திருக்குருகூருக்கு ‘ஆழ்வார்திருநகரி’ என்ற பெயர் வழங்கி வருகிறது. இந்தப் பெருமை நம்மாழ்வாருக்கு மட்டுமே உண்டு. பொதுவாகப் பெருமாள் கோயில்களில் உள்ள திருவடிக்கு சடாரி எனப் பெயர். இது சடகோபன் என்ற நம்மாழ்வாரைக் குறிக்கும். ஆனால் நம்மாழ்வார் சந்நிதியில் உள்ள சடாரிக்கு ‘ராமாநுஜன்’ என்பது பெயர். இதை ராமாநுஜரே ஏற்படுத்தினார் என்பது வரலாறு. இதிலிருந்து நம்மாழ்வார் மீதான ராமாநுஜரின் அளப்பரிய பக்தி நமக்குப் புலப்படுகிறது.
நம்மாழ்வார் 36 திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். அவர் இருந்த திருப்புளியடியில் அம்மரத்தைச் சுற்றியுள்ள சுவரில் 36 திவ்ய தேச பெருமான்களின் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன.
எல்லாத் திருக்கோயில்களிலும் வணங்கிய கைகளோடு இருக்கும் நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் சின்முத்திரையோடு ஞான உபதேசம் பண்ணும் திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.
திருப்புளி காய்த்தாலும் பழுக்காமல் பிஞ்சிலேயே உதிர்ந்து விடுகிறது. இதன் இலைகள் இரவில் குவிவதில்லை. எனவே இது உறங்காப் புளி எனப்படுகிறது. இது பல கிளைகள் விட்டு பரவி நிற்பதனால் ‘பொந்தாயிரம் புளியாயிரம்’ எனும் பழமொழி எழுந்தது.
நவதிருப்பதிகளிலும் நம்மாழ்வாருக்கு தனிச் சந்நிதி கிடையாது

நம்மாழ்வாரின் பெருமை:

சைவத்தில் நம்பியாண்டார் நம்பி திருமுறைகளைத் தொகுத்தது போல வைணவத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் நாதமுனிகள். 

1. காட்டு மன்னார் கோயில் எனும் தலத்தில் நாதமுனிகள் இருந்த போது மேல் நாட்டிலிருந்து வைணவ அடியார்கள் சிலர் மன்னாரைச் சேவிக்க வந்தனர். அப்போது அவர்கள் நம்மாழ்வாரின் “ஆராஅமுதே அடியேன் உடலம்” எனும் திருக்குடந்தை பாசுரத்தைப் பாடி சேவித்தனர். அதன் இறுதியில் “குருகூர்ச்சடகோபன், குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்” என்ற அடிகளைக் கேட்ட நாதமுனிகள்அடியார்களிடம் ஆழ்வாரின் ஆயிரம் பாடல்கள் பற்றியும் கேட்டார்.
அவர்கள் அந்த பத்துப் பாசுரங்கள் மட்டுமே தமக்குத் தெரியும் என்றும் ஆயிரம் பாசுரங்களும் குருகூரில் மதுரகவிகள் வழி வந்த பராங்குச தாசரிடம் மற்ற விவரங்கள் தெரிய வரலாம் என்றும் கூறினர்.

நாதமுனிகளும் குருகூருக்குச் சென்று பராங்குச தாசரிடம் விசாரித்தார். அவர் ”தற்சமயம் மதுரகவிகள் அருளிய ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ எனும் பத்துப் பாசுரங்கள் மட்டுமே உள்ளன, மற்றைய ஆழ்வார் பாசுரங்கள் அழிந்து போயின” என்று கூறினார். மேலும் ”கண்ணிநுண் சிறுத்தாம்பு” பத்துப் பாசுரங்களை 12,000 முறை ஓதினால் நம்மாழ்வார் தோன்றி அருள்வார் என்றும் வழி கூறினார். நாதமுனிகள் திருப்புளியடியில் ஆழ்வார் சந்நிதியில் அமர்ந்து 12,000 முறை ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாசுரங்களை ஓதினார். நம்மாழ்வார் அவர் முன் தோன்றி தாம் பாடிய பாடல்களையும் ஆழ்வார் பிறர் பாடிய பாடல்களையும் அவருக்கு அருளினார். நாலாயிரமும் நம்மாழ்வார் தந்ததுதான். எனவே தான் ஆழ்வாரின் தனியனில் “ நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே” என்று கூறியுள்ளனர்.

2. பன்னிரு ஆழ்வார்களுள் இவர் ஒருவரே ஆழ்வார் என்ற பெருமையையும், ஆசாரியர் என்ற பெருமையையும் உடையவர். வைணவ குருபரம்பரை திருமகள் கேள்வனாகிய திருமாலிடம் தொடங்குகிறது. திருமால், திருமகள், சேனைமுதலியார் ஆகிய மூவரும் பரமபதத்தில் இருப்பவர்கள். பூவுலகில் இப்பரம்பரை நம்மாழ்வாரிடம் இருந்தே தொடங்குகிறது. நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரியநம்பி, ராமாநுஜர் என்பது வைணவ குருபரம்பரை. ஸ்ரீவைணவத்தில் நம்மாழ்வாரே முதலும் முடிவுமாக இருக்கின்றார். இவர் ஆழ்வார்களுள் கடைசியும் ஆசாரியர்களுள் முதல்வரும் ஆவர்.
3. ஆழ்வார்கள் பிறரைப் போன்று தலயாத்திரை செய்யாமல் நம்மாழ்வார் தாமிருந்த திருப்புளியடியில் இருந்த படியே எல்லாத் திருப்பதி எம்பெருமான்களையும் பாடினார் என்பது வரலாறு. இவரது திருவாய்மொழி தனக்கு கிடைக்காதா என்று எல்லா தலத்து பெருமான்களும் ஏங்கினார்களாம். இதனை நம்மாழ்வார் தாலாட்டு எனும் நூல் “ சிலைக்கோல நெற்றித் திருமாது கேள்வர், இலைக்கொருவராக என்னைப்பாடு என்னைப்பாடு என்ன” என்று சிறப்பித்துக் கூறுகிறது.
4. வைணவம் அர்த்த பஞ்சகம் என்று 5 பொருளைக் கூறும். அவை: இறைநிலை, உயிர்நிலை, உபாயநிலை, விரோதிநிலை, புருடார்த்த நிலை என ஐந்து. இந்த ஐந்தையும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி கூறுகின்றது என்பது வைணவ மரபு. 1, 12, 18, 40 ஆகிய திருவாய்மொழிகள் இறைநிலையையும், 27, 38, 78, 79 ஆகியவை உயிர்நிலையையும், 2, 2, 331, 81 ஆகியன விரோதி சொரூபத்தையும், 47, 48, 49, 40 ஆகியன உபாய சொரூபத்தையும், 19, 23, 80, 93 என்னும் திருவாய்மொழிகள் புருடார்த்த நிலையையும் தெரிவிக்கின்றன.
வைணவத்தின் தத்துவக் கருத்துக்கள் ஆழ்வார்கள் பிறர் பாசுரங்களை விட நம்மாழ்வார் பாசுரங்களில் தான் அதிகம் காணப்படுகின்றன. இதிலிருந்துதான் ராமாநுஜர் விசிஷ்டாத்வைத தத்துவத்தை உருவாக்கினார். எனவேதான் ஆளவந்தார் நம்மாழ்வாரை “ குலபதி” என்று போற்றுகிறார். இதனையே பராசர பட்டர் ,

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும் தக்க நெறியும் தடையாகித் – தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்து இயல்
.-என்று ஏத்தினார்.
5. திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியன நம்மாழ்வார் அருளிச் செய்தவை. இவற்றுள் திருவாய்மொழி சாமவேத சாரமாகக் கருதப் படுவது. இதுவே ஆழ்வார் அருளியவற்றில் வைணவர்களால் உச்சிமேல் வைத்துக் கொண்டாடப்படுவது.

இத்திருவாய்மொழிக்கு மட்டும் கி. பி.12 ஆம் நூற்றாண்டு தொடங்கி 7 விதமானவியாக்கியானங்கள் (விரிவுரைகள்) தோன்றியுள்ளன. இவற்றுக்கு ‘ ஸ்ரீ பகவத் விஷயம்’ என்று பெயர். திருவாய்மொழியின் நுட்பங்களையெல்லாம் அனுபவிப்பதற்கு இவ்வுரைகளே பெருந்துணை செய்கின்றன. திருவாய்மொழி ‘ திராவிட வேத உபநிஷத்’ என்றே போற்றப்படுகிறது. இதன் சிறப்பை ‘ திராவிட வேதோபநிஷத் சங்கதி’, ‘ திராவிட வேதோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ என்ற வடமொழி நூல்கள் எடுத்துரைக்கின்றன.

இத்திருவாய்மொழி வடமொழி, தெலுங்கு , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது .

திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களும் திருமாலின் ஆயிரம் திருப்பெயரையும் பத்துப் பத்துக்களும் அவனுடைய பத்து அவதாரங்களையும் நினைவூட்டுவன என்பர் பெரியோர் .

6. ஆழ்வார்களை எல்லாம் நம்மாழ்வாருக்கு அவயவங்களாக ( உறுப்புகளாக) அமைத்து ஆழ்வாரை அவயவியாகச் சொல்வது வைணவ மரபு. அதன்படி,

நம்பெருமாள் – ( நம்மாழ்வரின்) திருமுடி
பூதத்தாழ்வார் – சிரசு
பொய்கை, பேயாழ்வார்கள் – கண்கள்
பெரியாழ்வார் – முகம்
திருமழிசையாழ்வார் – கழுத்து
குலசேகரர், திருப்பாணாழ்வார் – கைகள்
தொண்டரடிப்பொடியாழ்வார் – மார்பு
திருமங்கைமன்னன் – நாபிக்கமலம்
திருவடிகள் – மதுரகவி, நாதமுனிகள்

என்பதாக அமைவர்.

7. நம்மாழ்வார் அருளியவை நால்வேதம் எனவும் திருமங்கையாழ்வார் அருளியவை அதற்கான ஆறங்கம் எனவும் மணவாள மாமுனிகள் போற்றுகிறார்.

8. நம்மாழ்வார் பாசுரங்களில் கூறப்பட்டுள்ள திருமாலின் பெயர்களே அந்தந்த திருப்பதி பெருமான்களுக்கு இன்றளவும் வழங்கப்படுகின்றன. ‘ ஒன்றும் தேவும்’ என்னும் குருகூர் பாசுரத்தில் ‘ ஆதிப்பிரான் , பொலிந்து நின்ற பிரான்’ என்ற ஆழ்வாரின் வாக்குகளே ஆழ்வார் திருநகரியில் உள்ள பெருமானுக்குப் பெயராயிற்று. இவ்வாறே பிற திவ்ய தேசங்களிலும் கண்டு கொள்ளலாம்.

9. ” வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைக்கின்ற நம்மாழ்வார் பாடல்கள் 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் , தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய நாடு முழுமையிலுமே முன்னென்றும் கண்டிராத ஒரு புதிய பக்தி வெள்ளமும் சமய தத்துவப் பிரவாகமும் தோன்றி வளர்வதற்கு மூலமாயிருந்தன. இது தமிழருடைய ஒரு பெரும் சாதனை.” என்பார் பேரறிஞர் மு. அருணாசலம்.

10. நம்மாழ்வார் பிறந்து வளர்ந்ததனாலேயே திருக்குருகூர் ‘ ஆழ்வார்திருநகரி’ எனப் புகழ் பெறுவதாயிற்று.

11. ஆழ்வார் மாறன், காரிமாறன், சடகோபன், பராங்குசன், மகிழ்மாறன், வகுளாபரணன், திருக்குருகூர் நம்பி, குருகைப் பிரான், வேதம் தமிழ் செய்த மாறன், திருவாய்மொழிப் பெருமாள், திருவழுதி வளநாடன், நாவீறுடையான் எனப் பல பெயர்களால் போற்றப்படுகிறார்.

12. இவர் உலகனைத்துக்கும் ஞான உபதேசம் செய்கின்ற ஆழ்வார் என்பதனால் ‘ நம்மாழ்வார்’ எனப் படுகின்றார். நம்பெருமாள் என்ற திருமாலின் அருமைத் திருநாமத்தைப் போல நம்மாழ்வார் என்ற பெயரும் அமைந்துள்ள சிறப்பை மணவாள மாமுனிகள் தமது உபதேச ரத்தின மாலையில்(50)

நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
என்பது அவரவர்தம் ஏற்றத்தால்
“-என்று போற்றுகின்றார்.

உலக நடைக்கு மாறாக இருந்ததனால் ‘ மாறன்’ எனவும், மாறன் காரியார் புதல்வர் ஆதலின் ‘ காரிமாறன்’ எனவும், கர்ப்பத்திலிருக்கும்போது குழந்தைகளை அஞ்ஞானத்திற்கு ஆட்படுத்தும் சடம் எனும் வாயுவை கோபித்து ஓட்டியதால் ‘ சடகோபன்’ எனவும், குருகூர் பொலிந்து நின்ற பிரான் தந்தருளிய மகிழமலர் மாலையைத் தரித்ததனால் ’ மகிழ்மாறன்’,’ வகுளாபரணன்’ எனவும், பிற மதங்களாகிய யானைகளைத் தமது பிரபந்தங்களில் கூறிய தத்துவக் கருத்துக்கள் எனும் அங்குசத்தால் அடக்கியமையால் ‘ பராங்குசர்’ எனவும், பிரபக்தி மார்க்கத்தைப் பின்பற்றும் வைணவர் அனைவருக்கும் இவர் தலைவர் என்பதால் ‘ பிரபன்ன ஜன கூடஸ்தர்’ எனவும் போற்றப் பெறுகின்றார்.

13. மதுரகவிகள், திருவரங்கத்து அமுதனார், மணவாள மாமுனிகள், ஈசுவர முனிகள், சொட்டை நம்பி, அனந்தாழ்வான், பட்டர், அப்புள்ளார், வேதாந்த தேசிகர் முதலிய ஸ்ரீ வைணவப் பெரியோர்கள் நம்மாழ்வாரைப் பலபடியாகப் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

14. கி. பி. 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சடகோபர் அந்தாதி, நம்மாழ்வாரின் பெருமைகளை 100 பாடல்களில் எடுத்துரைக்கின்றது.

15. கி. பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஆழ்வார் பெயரால் மாறன் அலங்காரம், மாறன் அகப் பொருள், மாறன் பாப்பா இனம் என அணி, பொருள், யாப்பு இலக்கண நூல்களைச் செய்துள்ளார்.

16. வைணவராகிய பரிமேலழகர் தம் திருக்குறள் உரையில் இறைமாட்சி எனும் அதிகாரத்தின் அவதாரிகையில் ‘ திருவுடை மன்னரைக் காணில்’ என்றும், பற்றற்ற கண்ணே எனும் குறளுரையில் ’ அற்றது பற்றெனில்’ என்றும், ஆரா இயற்கை எனும் குறளுரையில் ’ களிப்பும் கவர்வு மற்றும்’ என்ற பாசுரக் கருத்தை ‘ களிப்புக் கவற்சிகளும் பிறப்புப் பிணி மூப்பிறப்புக்களும் முதலாயின இன்றி ‘ என்றும், ‘ நன்றாய் ஞானம் கடந்து போய்’ என்றும் திருவாய்மொழிப் பாசுரங்களை எடுத்துக் காட்டுகிறார்.

17. கி. பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவராயர் தமது மோகவதைப் பரணி, அஞ்ஞவதைப் பரணி, சிலேடையுலா ஆகியவற்றில் நம்மாழ்வாரைப் போற்றுகின்றார்.

அரையர் சேவையும் திருவாய்மொழியும்

ஆழ்வார்களின் பாசுரங்களை இசையுடன் பாடி அபிநயித்து அவற்றின் வியாக்கியானங்களை அழகுறப் பேசி நடிக்கும் கலைதான் அரையர் சேவை.
திருவரங்கத்தில் நம்பெருமாள் முன்பு ஒரு திருக்கார்த்திகைத் திருவிழாவின் போது திருமங்கையாழ்வார் தம்முடைய திருநெடுந்தாண்டகப் பாசுரங்களைப் பண்ணுடன் பாடி அபிநயித்தார். பின் பெருமாளிடம் அவர், “ மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று அத்யயன உற்சவம் நிகழும்போது நம்மாழ்வாரின் திருவாய்மொழியை வேதங்களுடன் கேட்டருளி வேத சாம்யமாக ஏற்றம் அருள வேண்டும்” என்று கேட்டார். பெருமாளும் சம்மதம் தந்தார்.

அன்று முதல் ஆழ்வார்திருநகரியிலிருந்து நம்மாழ்வார் விக்கிரகத்தை மார்கழி மாத சுக்ல தசமியன்று திருவரங்கம் கோயிலுக்கு எழுந்தருள்வித்தனர். நம்மாழ்வாரின் பிரதிநிதியாக மதுரகவியாழ்வார் இருந்து திருவாய்மொழியைப் பண்ணுடன் இசைத்து அபிநயித்தார். இதற்காக அவருக்கு “ திருவாய்மொழி விண்ணப்பம் செய்வார்” என்ற விருதினை நம்பெருமாள் வழங்கினார். இவ்விருதுப் பெயர் நம்மாழ்வார் திருவிருத்தத்தில் வரும் ‘ அடியேன் செய்யும் விண்ணப்பமே’ என்ற வாக்கிலிருந்து வந்திருக்கலாம்.

நாலாயிரத்தையும் நம்மாழ்வாரிடமிருந்து பெற்ற நாதமுனிகள் அதை இயலும் இசையுமாக வகுத்து தன் மருமக்கள் மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் இருவருக்கும் கற்பித்தார். அவர்களைக் கொண்டே திருவரங்கத்தில் மீண்டும் அரையர் சேவை நடைபெறச் செய்தார்.

மார்கழி அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் பகலில் நடப்பது பகல்பத்து. இதில் பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, பெருமாள் திருமொழி, திருமாலை, கண்ணிநுண் சிறுத்தாம்பு, பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம் அடங்கிய முதலாயிரம் பண்ணுடன் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும்.

திருமங்கையாழ்வாரால் முன்னமே ஏற்படுத்தப்பட்டு நின்று போயிருந்த திருவாய்மொழித் திருநாளை மீண்டும் நடத்தினார் நாதமுனிகள். இது மார்கழி சுக்லபட்ச ஏகாதசி முதல் 10 நடைபெறும். இந்நாட்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பண்ணுடன் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும். இது 10 நாட்கள் இரவில் நடைபெறும். எனவே ’ இராப்பத்து’ எனப்படுகிறது.

இதுவே ’ அத்யயனத் திருவிழா’ எனப்படும். நம்பிள்ளை ஈட்டுரையில் ‘ திருவத்யயனம்’ என இவ்விழாவைக் குறிப்பிடுகிறார்.

ஆழ்வார்திருநகரி, திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 3 திருப்பதிகளில் மட்டுமே அரையர் சேவை இப்போது நடைபெறுகிறது.

ராமாநுஜரின் நம்மாழ்வார் பக்தி:
ராமாநுஜர் குருகூருக்கு அருகில் உள்ள திருப்புளிங்குடியில் பெருமானைத் தரிசித்துவிட்டு வரும் வழியில் அங்கு வட்டாடிக் கொண்டிருந்த அர்ச்சகர் பெண்ணிடம் “ இன்னும் குருகூர் எவ்வளவு தூரம்?” என்று கேட்டார். அவள், “ ‘ கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரைகடல் வண்ணன் மேவி நன்கமர்ந்த வியன் புனல் வழுதி நாடன் சடகோபன்’ என ஆழ்வார் இவ்வூர்ப் பெருமானைப் பாடும் பொழுது சொல்லிய வண்ணம் கூப்பிடு தூரம்தான்” என்று சொன்னாள். இதைக் கேட்ட ராமாநுஜர் அவளை ஆழ்வாராகவே எண்ணி தரையில் வீழ்ந்து வணங்கினார்.

பின்பு குருகூரை நெருங்கிய போது ராமாநுஜர் தம்முடைய ஈடுபாட்டின் மிகுதியால் அதைப் பரமபதமாகவே கண்டு

இதுவோ திருநகரி ஈதோ பொருநல்
இதுவோ பரமபதத்தெல்லை – இதுவோதான்
வேதம் தமிழ்செய்து மெய்ப்பொருட்கும் உட்பொருளாய்
ஓதும் சடகோபன் ஊர்?-
என்று போற்றி மகிழ்ந்தனர்.

————–

நம்மாழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-16

1. ஸ்ரீவைகுண்டம் (அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோயில் (நவ திருப்பதி), ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி)

2. நத்தம் (அருள்மிகு விஜயாசனப் பெருமாள் திருக்கோயில் (நவ திருப்பதி), வரகுணமங்கை, நத்தம், தூத்துக்குடி

3. திருப்புளியங்குடி (அருள்மிகு காசினி வேந்தன் திருக்கோயில், (நவ திருப்பதி), திருப்புளியங்குடி, தூத்துக்குடி

4. திருத்தொலைவில்லி மங்கலம் (அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில் (நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி (திருத்தொலைவில்லி மங்கலம்), தூத்துக்குடி
4. திருத்தொலைவில்லி மங்கலம் (அருள்மிகு அரவிந்த லோசனன் திருக்கோயில், (நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி,(திருத்தொலைவில்லி மங்கலம்), தூத்துக்குடி

5. பெருங்குளம் (அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில், (நவ திருப்பதி), பெருங்குளம், தூத்துக்குடி)

6. தென்திருப்பேரை (அருள்மிகு மகா நெடுங்குழைக்காதர் திருக்கோயில்(நவ திருப்பதி), தென்திருப்பேரை, தூத்துக்குடி)

7. திருக்கோளூர் (அருள்மிகு வைத்த மாநிதிப் பெருமாள் திருக்கோயில்(நவ திருப்பதி), திருக்கோளூர், தூத்துக்குடி)

8. வானமாமலை (அருள்மிகு தோத்தாத்ரி நாதன் திருக்கோயில், நாங்குனேரி, திருநெல்வேலி)

9. திருப்பதிசாரம் (அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், திருப்பதிசாரம், நாகர் கோவில், கன்னியாகுமரி)

10. திருவட்டாறு (அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், திருவட்டாறு, கன்னியாகுமரி)

11. திருவனந்தபுரம் (அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம், கேரளா மாநிலம்)

12. ஆரம்முளா (அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில்,திருவாறன் விளை,பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்)

13. திருவண்வண்டூர் (அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர்,ஆழப்புழா, கேரளா மாநிலம்)

14. திருக்கடித்தானம் (அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம்,கோட்டயம், கேரளா மாநிலம்)

15. திருக்காக்கரை (அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில், திருக்காக்கரை,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)

16. திருச்செங்குன்றூர் (அருள்மிகு இமையவரம்பன் திருக்கோயில்,செங்கனூர், திருச்சிற்றாறு, ஆழப்புழா, கேரளா மாநிலம்)

——————–

நம்மாழ்வார் மற்ற ஆழ்வார்களுடன் சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-19

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் (5)

1. திருமோகூர் (அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர், மதுரை)
2. திருப்புலியூர் (அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில்,திருப்புலியூர், ஆழப்புழா, கேரளா மாநிலம்)
3. திருவல்லவாழ் (அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், வல்லப ÷க்ஷத்திரம், பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்
4. திருமூழிக்களம் (அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம்,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)
5. திருநாவாய் (அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்,மலப்புரம், கேரளா மாநிலம்)

நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார் (1)

1. ஆழ்வார் திருநகரி (அருள்மிகு ஆதி நாதன் திருக்கோயில், (நவ திருப்பதி), ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி)

நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் (1)

1. திரு விண்ணகர் (அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், ஒப்பிலியப்பன்கோவில், தஞ்சாவூர்)

நம்மாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. வெண்ணாற்றங்கரை (அருள்மிகு நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்கள், தஞ்சைமாமணி கோயில், தஞ்சாவூர்)

நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)

1. துவாரகை (அருள்மிகு கல்யாண நாராயணன் திருக்கோயில், துவாரகை, குஜராத்)
2. திருவடமதுரை (அருள்மிகு கோவர்த்தனன் திருக்கோயில், மதுரா, உ.பி.)

நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)

1. திருப்பேர் நகர் (அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர்)
2. திருக்குறுங்குடி (அருள்மிகு நின்ற நம்பி திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி)

நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. திருக்கண்ணபுரம் (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்)

நம்மாழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. அயோத்தி (அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத், உ.பி)

நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார் (1)

1. திருமாலிருஞ்சோலை (அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை

நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார் (1)

1. கும்பகோணம் (அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்)

நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)

1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்

நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)

1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்—
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

January 15, 2023

இராமன் திருக்கதையில் கம்ப நாடன் கவிதை போல் கற்றோர்க்கு இதயம் களியாதே–
இராம காதையைச் சொல்லுதற்குக் காப்பாக இருப்பது குருகை நாதன் குரை கழலே
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
நம் சடகோபனைப் பாடினாயோ என்று திரு அரங்கன் திரு ஆணையைத் தலை மேல் கொண்டு ஆழ்வார் நூற்று அந்தாதி என்னும்படி சடகோபர் அந்தாதி
பக்தியே ஸ்ருங்காரமாக அகத்துறை பாடல்களும் இதில் உண்டே
ஆழ்வார் திரு நகரியில் -இராப்பத்து இறுதி நாளில் -ஆழ்வாரும் பொலிந்து நின்ற பிரானும் திருச்செவி சாத்தி அருளுகிறார் –

ஸ்ரீ இராமாயணம் இயற்றிய ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் எழுதிய ஒன்பது நூல்களுள் ஸ்ரீ சடகோபர் அந்தாதியும் ஒன்றாகும்.
சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார்.
இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.
இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.
இவரது வேறு நூல்கள் ஸ்ரீ ஏரெழுபது, ஸ்ரீ சரசுவதி அந்தாதி, ஸ்ரீ திருக்கை வழக்கம் முதலியவை.

—————

நம்மாழ்வாருக்கு பல திரு நாமங்கள் உண்டே
சடகோபன்
மாறன்
காரி மாறன்
பராங்குசன்
வகுளாபரணன்
குருகைப் பிரான்
குருகூர் நம்பி
குரு கூரான்
திருவாய் மொழிப் பெருமாள்
பொருநல் துறைவன்
குமரித் துறைவன்
பவ ரோக பண்டிதன்
முனி வேந்து
பர ப்ரஹ்ம யோகி
நாவலர் பெருமான்
ஞான தேசிகர்
ஞானப்பிரான்
தொண்டர் பிரான்
நா வீறர்
திரு நா வீறுடைய பிரான்
உதய பாஸ்கரர்
வகுள பூஷண பாஸ்கரர்
ஞானத் தமிழுக்கு அரசு
ஞானத் தமிழ் கடல்
மெய்ஞ்ஞான கவி
தெய்வ ஞானச் செம்மல்
நாவலர் பெருமான்
பாவலர் பெருமான்
வினவாதுணர்ந்த விரகர்
குழந்தை முனி
ஸ்ரீ வைஷ்ணவ குல பதி
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்

—————-

இரணியன்  வதைப்படலத்தில்
நசை திறந்திலங்கப்பொங்க -என்று தொடங்கும் பாசுரத்தை ஆரம்பித்தது
திசை திறந்து அண்டம் கீறிச் சிரித்தது செங்கட் சீயம் -என்று பாடும் பொழுது
கோயில் வடக்கு வாசலில் உள் கோபுரத்தில் ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு எதிரே இருக்கும்
செங்கல் சுண்ணாம்பினால் அமைந்து இருந்த நரஸிம்ஹ திரு உருவம் உயிர் பெற்று தலையை அசைத்ததாம்
இப்பொழுது -இவரே மேட்டு அழகிய சிங்கராகப் -பிரதிஷ்டை செய்யப் பெற்று ஆராதிக்கப் படுகிறார்
இத்தைக் கண்ட ஸ்ரீ மன் நாதமுனிகள் ஸ்ரீ கம்ப நாட்டாழ்வானுக்குத் தீர்த்த பரிவட்டம் பிரசாத்திப்பித்து அருள
திருக் கோயிலுக்குள் கூட்டிச் செல்ல-நம்பெருமாள் அர்ச்சகர் மேல் ஆவேசித்து –நம் சடகோபனைப் பாடினாயோ -என்று கேட்டதால்
அன்று இரவே பாடின பின்பே அரங்கனைச் சேவிக்கச் சென்றாராம் –

—————————————–

சிறப்புப் பாயிரம்

தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
நாவில் சிறந்த மாறற்குத் தக்க நன் நாவலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.

தெய்வங்களில் சிறந்தவன் ஸ்ரீ திருமால்!–அனைத்துக்கும் அந்தர்யாமியாய் இருப்பவன் இவன் ஒருவனே
அவனுக்குத் தக்க தெய்வீகமான கவிஞன் பலவிதமான பா வகைகளை ஸ்ரீ திருவாய்மொழியில்
சிறப்பாக அமைத்த பண்டிதனான ஸ்ரீ நம்மாழ்வாரே!
நா வண்மையில் சிறந்த அந்த ஸ்ரீ மாறன் சடகோபன் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தக்க நா வண்மை கொண்டவன்
தாமரைப் பூவில் வாழ்வான்-அமர்ந்த பிரமனை ஒத்த ஸ்ரீ கம்ப நாட்டாழ்வானே!-பாகவத நிஷ்டையால் மதுரகவி ஆழ்வாருக்கு ஒப்பு என்றுமாம்

அகத் துறையிலும் புறத் துறையிலும் பாடி புலமைக்கு வெள்ளிக் கம்பம் நாட்டியவன்-

இது முதலில் வெண்ணையூர் நாடாக இருந்தது பின்பு கம்பர் பெயரால் கம்ப நாடு ஆயிற்று என்பர்

மால் -பெருமை கறுமை வ்யாமோஹம்-

மாலே மணி வண்ணா
மால் என்னை மால் செய்தான்
திருமாலே கட்டுரையே
கவி -க்ராந்த தர்சீ

திரு -அழகு
வாய் மொழி -வினைத்தொகை -வாய்க்கிற -வாய்த்த -வாய்க்கும் -முக்காலத்துக்கும் எம்பருமானுக்குப் பொருத்தமான
வாய்மை -கடைக் குறைவாய் உண்மையான -ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை யதாவாக பேசும் மொழி

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா காம ஸங்கல்ப வர்ஜிதா-
ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம் தமாஹு பண்டிதம் புதா—৷৷4.19৷

எவனுக்கு எல்லாக் கர்மங்களையும் பற்றிய முயற்சிகளும் பலன்களில் பற்று அற்றவையாக இருக்கின்றனவோ –
அறிவாளியான அவனையே ஞானம் ஆகிய நெருப்பால் எரிக்கப்பட்ட வினைகளை உடையவனாக தத்வம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்

—————-

ஆரணத்தின் சிரமீது உறை சோதியை ஆந்தமிழால்
பாரணம் செய்தவனைக் குருக்ஷரனைப் பற்பல வா
நாரணனாம் என ஏத்திக் தொழக் கவி நல்கு கொடைக்
காரணனைக் கம்பனை நினைவாம் உள் களிப்புறவே.

பாரணம் -பாரணா பாராயணம் -உணவு -மீண்டும் மீண்டும் திருப்தி அடையும் வரை படித்தல்
நெறி வாசல் தானேயாய் நின்றானை -பற்றற்றானைப் பற்றி
அவன் அருளாலேயே அவனை அடக்கி தம் வசம் ஆக்கிக் கொண்டார் ஆழ்வார் -பராங்குசன் அன்றோ

————–

நம் சடகோபனைப் பாடினையோ என்று நம் பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால் கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித்துறை நூறும் தெரியும் வண்ண
நெஞ்சு அடியேற்கு அருள் வேதம் தமிழ் செய்த நின்மலனே 

——————–

நாதன் அரங்கன் நயந்துரை என்ன நல் கம்பன் உன் தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும் படி யெனக்கு உள்ளத்தனை யருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருளே இது என் விண்ணப்பமே.

————–

தற்சிறப்புப் பாசுரம்

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.

————–

நூல்

வேதத்தின் முன் செல்க மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக் கடல் எங்கள் தென் குரு கூர்ப் புனிதன் கவி ஓர்
பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே. 1-

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் -என்று ஸ்வரூபத்தை முழுவதுமே  அடியிலே காட்டி அருளினார் அன்றோ

மெய்யுணர்ந்தோர் -தவத்தால் பெற்ற அறிவுடையரான வ்யாஸ அம்பரீஷ ஸூக ஸுகனாதி –
முதலோர் இந்த்ராதிகள்

————

சுடர் இரண்டே பண்டு மூன்றாயின துகள் தீர்ந்துலகத்து
இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன எம் பிறப்பை
அடர் இரண்டாம் மலர்த் தாள் உடையான் குருகைக் கரசன்
படர் இருங் கீர்த்திப் பிரான் திருவாய் மொழிப் பாவொடுமே. 2-

ஸூர்ய சந்திர சுடர் போல் களங்கம் இல்லாத திருவாய் மொழிச் சுடர் ஸர்வருக்கும் உப ஜீவியம்
அவையோ ஒன்றை அலற்றும் மற்ற ஒன்றை மொட்டுவிக்கும்
பண்டு இரு சுடர் என்றது –
ராம திவாகரனான வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காயும்
அச்யுத பானுவாக இருந்த ஆயர் தம் குல விளக்காயும் என்றுமாம்

ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு-போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி-விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே–ஆச்சார்ய ஹ்ருதயம் -சூரணை -83-

———

பா வொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்
நா வொடுக்கும் நல் அறி வொடுக்கும் மற்றும் நாட்டப் பட்ட
தே வொடுக்கும் பர வாதச் செரு ஒடுக்கும் குருகூர்ப்
பூ வொடுக்கும் அமுதத் திரு வாயிரம் போந்தனவே. 3-

நாட்டப்பட்டதை தேவு -செரு -இரண்டுக்கும் கொண்டு -அவர்கள் பரன் திறம் அன்றி மற்று இல்லை என்றும்
ஈஸ்வரோஹம் என்று இருப்பார் கர்வங்களையும் ஒடுக்கும் நாட்டப் பட்டதே –
ஒடுக்கும் என்றது அடக்கும் என்றும் கண்டித்து அகற்றும் என்றுமாம்

குருகூர்ப் பூ –திருக்குருகூர்ப்பதியிலே ஆழ்வாரது திரு வாய் மலரிலே
பா ஒடுக்கும் -செய்யுள் இலக்கணங்களை எல்லாம் அடக்கி இருக்கும்
நா -புறச்சமயிகளின் நாவை

———

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தரும நிறை
கனமாம் சிலர்க்கு அதற்கு காரணமாஞ் சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்கு அதற்கு எல்லையுமாம் தொல்லை ஏர் வகுள
வன மாலை எம்பெருமான் குருகூர் மன்னன் வாய் மொழியே. 4-

தரும நிறை கனமாம்-தர்மங்கள் எல்லாம் நிறைந்த கூட்டமாகும்

கனமாம்-பெரும் சிறப்பாகும்
தனம் -இம்மைப் பயனுக்கும்
தவம் =மறுமைப் பயனுக்கும்
திருவாயமொழி இரண்டுக்கும் என்றபடி

ஆரணம் -வேதம்
ஆரண இனம் -வேத சாகை
அதற்கு எல்லை -வேதாந்தம் -உப நிஷத்

வைஸ்யருக்கு தனம் -ப்ராஹ்மணர்க்கு தவம் -ஷத்ரிய சூத்ரருக்கு தர்மம்

வனமாலை -ஆறு ருதுக்களிலும் மலரும் எல்லாப் பூக்களையும் கொண்டு அமைத்து மூலம் கால் வரை தொங்கும்
ஆஜானு வம்பினி மாலா ஸர்வ ருது ஷு சரம உஜ்வலா
மத்யே ஸ்தூல கதம்பாட்யா வனமாலேதி கீர்திதா -இவ்விதமானது ஸ்ரீ வைகுண்டத்தில் தானே உள்ளது

வாட்டமில் வனமாலை மார்வனை –

பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் தொண்டரடிப்பொடி ஆழ்வார்

இத்தையே கம்பர் கும்பகர்ணன் வதைப்படலத்தில் -103 பாசுரத்தில் –
என்னலும் இருது வெல்லாம் ஏகின யாவும் தத்தம்
பன்னமரும் பருவம் செய்யாயோகி போற் பற்று விட்ட
பின்னரும் உலகம் எல்லாம் பிணி முதற் பாசம் வீசித்
துன்னமே தவத்தின் எய்தும் துறக்கம் போல் தோன்றிற்று அன்றே-

———–

மொழி பல ஆயின செப்பம் பிறந்தது முத்தி யெய்தும்
வழி பல வாய விட்டொன்றா அது வழுவா நரகக்
குழி பல ஆயின பாழ் பட்டது குளிர் நீர்ப் பொருநை
சுழி பல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே. 5-

குளிர் என்றது தன்னிடம் அமிழ்ந்தோருடைய உடலுக்கும் உயிருக்கும் உள்ள வெப்பங்களைப் போக்கி
உள்ளும் புறமும் குற்றமற்றவராக ஆக்கியதைக் குறிக்கும்
திருச் சங்கணித் துறையில் நீராடுவது அருள் ஒழுகும் தாமரைச் செங்கண்ணான் குணக் கடலிலே ஆடுவதே யாகும்

மொழி -பதம் என்று கொண்டு -கடப்படாதி சர்வ ஸப்த வாஸ்யன் ஒருவனே என்றுமாம்

———–

தோன்றா உபநிடதப் பொருள் தோன்றல் உற்றார் தமக்கும்
சான்றாம் இவை என்ற போது மற்றென் பல காலும் தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத்தின் மும்மைத் தமிழை
ஈன்றான் குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக் கவியே. 6-

தோன்றல் உற்றார்–மதுரகவி ஆழ்வார் நாதமுனிகள் போல்வார்

த்ரயீ -ருக் யஜுஸ் சாமம் -என்று மூன்றுமாம் –
பேத அபேத கடக ஸ்ருதிகள் என்று மூன்றுமாம்
இயல் இசை நாடகம்
தத்வ ஹித புருஷார்த்தம்
கர்ம ஞான பக்திகள்
ஸ்வரூபம் உபாயம் புருஷார்த்தம்
சித் அசித் ஈஸ்வரன் -தத்வ த்ரயங்களையும்
ரஹஸ்ய த்ரயங்களையும்

———–

கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான் சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே. 7-

கவிப் பா அமுதம் -பாடலாகிய பரவிய –
பாடல் சோறு -இசை கறி அமுது -சேர்த்து குவிப்பான் -சமைத்துக் குவிப்பவரும்
குமரி கொண்கன்-குமரி நாட்டுத் தலைவருமான
புவிப் பாவல-பூமியில் உள்ள வித்வான்களுக்கு
செவிப் பால்–காதுகளின் வழியே

நிலத்தேவர் காதுக்குள் புகுந்து -உள்ளத்துள் நின்று நாவிலே தித்திக்கும் அன்றோ-

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் என்றபடி –

———

தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே. 8-

குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே.
தித்திக்கும் -இனிமையான
மூலத் தெளி யமுதே -காரணமான தெளிந்த அமுதேயாகும்-சாவா மருந்தான அமிர்தமும் இதுக்கு ஒப்பு அல்ல என்று எதிர்மறை ஏவகாரம் -உடம்பைப் பூண் கட்டிக் கொடுக்கும் அது பக்திக்கும் பனுவலுக்கும் முக்திக்ம்கு மூலமாகாதே
யுண்டு தெய்வ மென்பார்–தெய்வம் உண்டு என்பார் -ஆஸ்திகர்
பத்திக்கு மூலம் -பக்திக்கும் இதுவே காரணம்
பனுவற்கு மூலம் -வரலாற்று முறையில் பாடும் நூல்களுக்கும் மூலமாகும்
பவம் அறுப்பார் முத்திக்கு மூலம்—பிறவியைப் போக்கத் துணிந்தவர்கள் மோக்ஷம் அடைவதற்கும்
முளரிக்கை –தாமரை போன்ற கைகளும்
வாணகை –வாள் நகை -ஒளி பொருந்தின பற்களும் கொண்ட
மொய் குழலார்-நெருங்கிய கூந்தலையுடைய மாதர்கள் இடத்து ஆசையை
அத்திக்கு மூலம் -போக்குகைக்கும் மூலம்

அத்தி -கற்பு -கண்ணன் பால் காமம் -என்ற கற்பு நெறிக்கு மூலம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளே -என்றவாறு –

———-

ஆயிரம் மா மறைக்கும் அலங்காரம் அருந் தமிழ்க்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்கு எல்லாம்
தாய் இரு நாற் றிசைக்குத் தனித் தீபந் தண்ணங் குருகூர்ச்
சேயிரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே. 9–

மறைக்கும் அலங்காரம்-சாமவேதத்துக்கு பூஷணம்
மறைந்து கிடந்த பொருள்களை அனைவரும் அறியும்படி செய்து அருளியதால் பூஷணமாகும்
பனுவல் -ஆகமம் –பனுவலின் வகைகள் -அற நூல் பொருள் நூல் காம நூல் வீட்டு நாள் போல்வன
இவை நான்குமே திருவாயமொழியில் பரக்கத் காண்பதால் தாய் என்கிறார்

கவி -கேள்வி -நூல் -என்கிற பொருளில் வந்தது
கிழக்கே மேற்கே சந்த்ர ஸூ ர்யர்கள் -வடக்கே துருவ மண்டலம் -தனித்தனி தீபம்
திருவாய் மொழி தீபமோ எண் திசையும் எல்லாக் காலத்திலும் வீசும் அன்றோ

இரு நாற் றிசைக்குத் தனித் தீபம் -இரு நான்கு எட்டுத் திக்குகளுக்கும் தீபம் -எண் திசையும் அறியும்படி இயம்பிப் பரப்பினார் அன்றோ மதுரகவியாழ்வார்

ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரம் -நான்கு வித கவிகள்-படிச் சந்தம்-ஒப்புக் காண்பதற்கு உரியனவாம்

இரு மா மரபுகள் -கர்ம ஞான மார்க்கங்கள் -ஞானம் அனுஷ்டானங்கள் இரண்டிலும் ஸ்ரேஷ்டர்

இரு மா மரபும் செவ்வியான்-தாய் தந்தையர் இரண்டு வழியும் தொண்டர் குலமாகிய செவ்வி என்றுமாம்

———

செய் ஓடு அருவிக் குருகைப் பிரான் திரு மாலை நங்கள்
கை ஓர் கனி எனக் காட்டித் தந்தான் கழற்கே கமலம்
பொய்யோம் அவன் புகழ் ஏத்திப் பிதற்றிப் பித்தாய்ந் திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே. 10–

செய் ஓடு அருவிக் குருகை–வயல்களில் அருவி நீர் ஓடிப் பாய்கின்ற குருகூர்

செய் ஓடு அருவி-உருவகமாய் -ஞானிகள் மனமாகிய விளை நிலங்களில் ஆழ்வார் சொல் பெருக்கு எடுத்து
ஓடிப் பாய்ந்து திருமால் பக்தி என்னும் பயிர் முளைத்து ஓங்குகிறது என்றவாறு
விதையாகி நற்றமிழை வித்தி என் உள்ளத்தே நீ விளைத்தாய்
திருமால் இத் தகையவர் என்று கையில் கனி என நிற்கும்படி யாயிற்றே

கைத் தலத்து அமலகம் எனக் கண்டு கொள் -என்று
கையில் கனி என்னைக் கண்ணனைக் காட்டித் தந்தார் அன்றோ

ஆழ்வாரை முக்கரணங்களால் ஸ்துதிப்பவர் உள்ளத்திலே அவரது கருணா ப்ரவாஹம் பரவும் அன்றோ
மாயோனைக் கையில் கையில் கனி என்னும் படிக் காட்டித் தந்து பக்திப் பயிரை விளைவிக்கும்-

———-

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழு மாக் கமலம்
சேற்றில் பொதி யவிழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே. 11-

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை-அநந்தாவை வேதா
வேற்றில் -வேரில் -என்பதன் விகாரம் -பல சாகைகள் கொண்ட வேதங்களின்
மூலப் பொருள்கள் அனைத்தையும் திரட்டி விட்டான் என்றுமாம் –
விழுமாக் கமலம்விழு -யாவராலும் விரும்பத்தக்க –மா -பெரிய –கமலம் -தாமரை ஸஹஸ்ர பத்ரம் கமலம் -ஆழ்ந்த நீரிடையே உண்டாகும்
எறி நீரில் எழு நாள கந்த மலர் –மாரீசன் வதைப் படலம் -53-பாயிரம்

———

இயல் இடம் கூறல்-

பொருள் -அகப்பொருள் –
திணை -உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி –பாங்கற் கூட்டம்
துறை -இயல் தென்றல்

இலவே இதழுளவே முல்லை யுள்ளி யம்பும் மொழியும்
சிலவே அவை செழுந் தேனொக்குமே தமிழ்ச் செஞ் சொற்களால்
பல வேதமும் மொழிந்தான் குரு கூர்ப் பதுமத்து இரண்டு
சல வேல்களும் உளவே யது காண் என் தனி யுயிரே. 12-

பல வேதமும்
தமிழ்ச் செஞ் சொற்களால்
மொழிந்தான்
குரு கூர்–குருகூர் பதியிலே
நண்பனே
பதுமத்து-தாமரை மலரிலே
இதழ் -சில இதழ்கள்
இலவே –நிறத்தில் முள்ளிலவ மலரேயாம்
உள் -அந்த இதழ்களுக்கு உள்ளே
முல்லை உளவே -முல்லை அரும்புகளும் சில உள்ளன
யுள் ளியம்பும் மொழியும் சிலவே-அவைகளில் இருந்து சொல்லப்படுகின்ற வார்த்தைகளும் சில வுண்டாம்
அவை செழுந் தேனொக்குமே
இன்னும் அத் தாமரை மலரிலே
இரண்டு சல வேல்களும்–அந்தப் பெண் எனது உயிர் ஆவாள்
காண்-நீ சென்று அதனைப் பார்
தன்னை வசப்படுத்திய அவள் முகம் தாமரை –
அவள் விழிகள் சல வேல்கள்

ஆழ்வார் இடம் ஞானக் காதல் கொண்ட தலை மகனாகிய பாகவதர் பித்தால் பிதற்றி அவர் திரு வுருவத்தைத்
தன் உயிர்க்கு அடைவிடம் என்று அகத் துறையில் பேசும் படி போகத்தில் ஈடுபட்டு நிற்கும் நிலையைச் சொன்னபடி –

———

உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சட கோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே. 13-

இந்திரிய பொறி வாயிலாய் உயிர் இன்ப துன்பங்களை அடைவதையும்
அறிவு வாயிலாய் உடல் உணர்ச்சி யுறுவதும் சொல்லப் பட்டது –
திருவாய் மொழி தாபாத் த்ரயங்களையும் போக்கி வேரைக் களைவதால் நோய் முதலியவை தானே அற்றுப் போம்
செயிர் -நோய் -ஊனம் -குற்றம் கோபம் துன்பம் சினம் போன்ற மற்ற பொருள்களும் பொருந்தும்

சந்தோடு அயிர் உருக்கும் பொருநல்–சந்தன மரங்களுடன் நுண் மணலையும் கொணர்ந்து கரை ஓரங்களில் ஒதுக்கித்த தள்ளும் தாமிரபரணி

———

அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே. 14-

அந்தம் இலா மறை–அநந்தாவோ வேதா -பரத்வாஜோ அத்திரி –மூன்று மலைகளைக் காட்டிக் கைப்பிடி என்ற விருத்தாந்தம்

நிலத்தேவர் –பூ ஸூரர் -அர்ச்சா திருமேனி என்றுமாம்
பந்தம் -தொடர்பு -வெளிச்சம் -உறவு
விழா -விழுந்து -பொங்கி வழிந்து -குறையாமல் தவறாமல் பாசுரங்கள் தோறும் ஓடும்
பண்ணவன் -முனிவன் குரு ஆசிரியன் தேவன் கடவுள் போன்ற பொருள்கள் உண்டே –
திருவாய் மொழி இல்லாமல் இருந்தால் உத்ஸவாதிகள் சோபை இழந்து இருக்குமே –

———

பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித் தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே. 15–

வண்ண -ராகம் -குணம் -வடிவு -செயல் விதம் அழகு -போன்ற பொருள்கள்
எண்ணம் -ஆலோசனை கிலேசம் விசாரம் கவலை மதிப்பு நினைத்தால் போன்ற பொருள்கள்

———-

கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் குளிர் சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே. 16–

நடலை -நடுக்கம் -கபடம் -பொய் -வஞ்சனை -வருத்தம்
களித்தல் –மதத்தல் -செருக்குதல் -மயக்குதல்
திடல் -மலை -மேடு

கடலை வேதமாகவும் -அமுதத்தைத் தேனாகவும் -அமரர் அடியாராகவும்- சங்கினான் நாயகனாகவும்- உவமித்த படி
இது எடுத்துக் காட்டு உவமை அணி யாகும்

————

நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் பிறவி யெனும்
நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே. 17-

பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர்ச் சோறும் உண்டற்கு வேண்டி நீ யோடித் திரியாதே –-பெரியாழ்வார்
திருவாய் மொழியைக் கற்கவே பிறப்பு இறப்பு என்னும் நோய் தன்னடையே போயிற்றே-

———-

சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத் திருக்கை
சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே. 18–

திருக்கை -திருகி நிற்கும் தன்மை -நிலை -கோணல் –சேதித்தல் -போக்குதல் -கோணலை நிமிர்த்தல் –சமயத் திருக்கை–புற மதங்களின் மாறுபாடுகளை
முதல் பாசுரமே அகாரம் உகாரம் மகாரம் சேர்த்து ப்ரணவார்த்தம் காட்டி அருளினார் அன்றோ

நீ யாதி பரம்பரமும் நின்னவே யுலகங்கள்
ஆயாத சமயமும் நின்னடியவே அயலில்லை -கம்பர் விராத ஸ்துதியில்

————-

சொல் என்கெனோ முழு வேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கெனோ மறை நேர் நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக் கனி யென்கெனோ புகல
வல் என்கெனோ குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே. 19-

கல் படிக்கற்கள் என்றபடி
முதிர் ஞானக் கனி-ஞான முதிர் கனி -ரிஷிகள் மனங்களில் பூத்து -எடுத்துக் காய்த்த ஞானம் ஆழ்வார் திரு உள்ளத்தில்
பதிந்த பின் முதிர்ந்து பழுத்து இனிமை யுடைய கனியாயிற்று

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் –விதையாக
நல் தமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகக் கலந்து -நான்முகன் -81-

நல் தமிழ் -முதிர விளைந்த விதைக்கு வைத்த தமிழ் –
ஆழ்வார் திரு உள்ளத்தில் ஞானம் முதிர்ந்து கனியாகி
முளைத்துப் பயன் தரும் விதைகளாகிய அருளிச் செயல் பாசுரங்களைச் சொரிந்தன -என்கிறார்
———–

பொருள் -அகப்பொருள்
திணை –பாலை
கிளவி -கற்போடு புணர்ந்த கௌவை
துறை -கலந்து உடன் வருவோர் புலம்பல் தேற்றல்

மாறன் திருவருளின் வந்து அடையாதாரை நொந்து-அடைந்தவர் பெரும் பேற்றை -அகத்துறைப் படுத்தி இனி பேசுகிறார்

செல யுணர்த்திச் செவிலியைத் தேற்றுதல்

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சி யம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே. 20-

மாலைக் குழலி–உகந்து அலர் சூட்டி உள் மகிழ்ந்து இருந்து புறப்பட்ட பின்பு இவர்கள் கண்டதால் இந்தப் பத பிரயோகம்
வில்லியும்-கோதண்ட பாணியான தலைவனும் -எதிரே வந்த சிம்ஹத்தைக் கொன்று அவள் அச்சம் போகும்படி வில்லில் நாண் ஏற்றிச் சென்றபடி
இது கண்டவர் கூற்று
கேட்பவள் -செவிலித்தாயார்
இடம் -முன்னிலை
காலம் -நிகழ் காலம்
மெய்ப்பாடு -பெருமிதம்
பயன் -செவிலியை மீள உரைத்தல் -ஆதலால் நீ மீள்வாயாக-என்பது எஞ்சி நின்றது –

பாலைத் திணை என்னும் அகத்துறை
மாறனை வாழ்த்தி வழி படாதார் தேக யாத்திரை உடலுக்கும் உயிருக்கும் யாதொரு ஆறுதலும் இன்பமும் இன்றி நடக்கும் வாழ்வே –
ஆழ்வாரை அறிந்த தலைவனும் தலைவியும் திருக்குருகூர் சென்று சேர்ந்து இருப்பது திண்ணம் என்று செவிலித் தாய் தாயாருக்குச் சொல்வது

————

பொருள் -அகப்பொருள்
திணை –குறிஞ்சி
கிளவி -வரைவு கடாதல்
துறை -நெறி அருமை கூறி வரவு விலக்கல்

பாங்கி நெறி அருமை கூறித் தலை மகனை வரவு விலக்குதல் –

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் தளிர் மெல்லடித் தண்
மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினை தோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை மலை யவனே. 21-

குறிஞ்சி திணை -அகத்துறை

மூரல் குறிஞ்சி நகை–குறிஞ்சி அரும்பு போன்ற பற்களை யுடைய தலையினது -மூரல் எறும்புக்கு ஆகு பெயர்
முடுகும் -விரைந்து வருகிற
சூரல் குறிஞ்சி நெறி-பிரப்பங்காடுகள் நெருங்கிய மலை வழியை
வாரல்–நீ வாராது நீங்குவாய்

கூற்று -தோழி கூற்று
கேட்போன் -தலைவன்
இடம் -முன்னிலை
காலம் -எதிர்காலம்
மெய்ப்பாடு -அச்சம் சார்ந்த பெருமிதம்
பயன் -வரைவு கடாதல்

இதர ஸம்ப்ரதாயத்தார்கள் செல்லும் மார்க்கம் தீய வழி என்று அவர்களையும் நல் வழிப் படுத்தி
அடுத்த பாசுரத்தில் ஆழ்வார் திருவடிகளை சேர்ந்து உஜ்ஜீவியுங்கோள் என்று உபதேசிக்கிறார் –

திருவாணை நின்னாணை போல் திருக் குருகைப் பிரான் மீது ஆணை என்கிறார்-

———–

மலை யாரமும் கடல் ஆரமும் பன் மா மணி குயின்ற
விலை யாரமும் விரவுந் திரு நாடனை வேலை சுட்ட
சிலையார் அமுதின் அடி சட கோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே. 22–

பூமா தேவியின் திரு மார்பு போல் பாண்டிய நாடு சந்தனம் முத்து மாலை மணி மாலைகள் நிறைந்தது
மலை யாரம் கடல் யாரம் இத்யாதிகளால் குறிஞ்சி மருதம் நெய்தல் முல்லை நிலங்கள்

விசேஷ வளப்பங்கள் உடைய நாடாய் இருக்கும் என்று குறிப்பு —

மலையில் சந்தன மரமும் -கடலில் முத்துக்களும் -நிலத்தில் சிறந்த இரத்தனங்களும் -மூவகை ஹாரங்கள் பொருந்திய பாண்டிய நாடு
விலை யாரமும்-என்று இந்திரன் கொடுத்த மாலையையும் உடைய பாண்டிய நாடு
கோவா மலையாரம் கோத்த கடலாரம் தேவர் கோன் பொன்னாரம் தென்னவர் கோன் மரபினமே -சிலப்பதிகாரம்
வேலை சுட்ட சிலையார்–சமுத்திர ராஜனை சாபமானம் கொண்டு அச்ச மூட்டிய சக்ரவர்த்தி திருமகன்
சிலையார் அமுதின் அடி சட கோபனை-வில்லார் அமுது ராம நாம அடிகளான அமுதம் என்றுமாம்

தலையார் -பாகவத நிஷ்டர்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
இந்த பாகவத நிஷ்டையால் வரும் பயனைப் பெற நூலில் நிஷ்டராக வேண்டும் என்கிறார் அடுத்த பாசுரத்தில்

————

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் எழில் குருகூர்
நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே. 23-

ஏறு ஏழு அடர்த்த கண்ணனின் திருநாடும் வேண்டேன்-நாம் -தெளிவு அடைந்த மகிழ்ச்சியால் தன்மைப் பன்மை
கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயனை விட
திருவாய் மொழி பாவின் இன்னிசை பாடித் திரிவதே வேண்டும் என்கிறார் –

———–

சித்தர்க்கும் வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர் கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே யன்றி பண்டு சென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித் தொகையே. 24–

பகவர்க்குமே–பிரிநிலை ஏவகாரம் —பகவர் -வீரம் கீர்த்தி வைராக்யம் இவற்றில் சிறந்தவர்

ஸாம காயந் நாஸ்தே -சாமவேதத்துக்கு நிகரான திருவாய் மொழி பாடும் இன்பம்
அந்தமில் பேர் இன்பம் இங்கேயே கிடைக்கப் பெற்றதாகும் என்கிறார்-

———–

தொகை உளவாய பனுவற் கெல்லாம் துறை தோறும் தொட்டால்
பகை யுளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான் மறையின்
வகை யுள வாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே. 25-

தொகை உளவாய பனுவற் கெல்லாம்–சேர்க்கப் பட்டுள்ளவன வாகிய சாஸ்திரங்களில் எல்லாம்
தொட்டால்–உற்று நோக்கினால்
பகை யுளவாம்-பரஸ்பர விரோதம் உள்ளனவாம்
வாது உளவாம் -விரோதங்களும் உள்ளனவாகும்
விழுத் தமிழ்க்கே–சிறந்த தமிழ் பாடல்களில்
வந்த வந்திடத்தே மிகை யுளவாம்–பார்த்த பார்த்த இடங்களில் எல்லாம் மேம்பாடுகளே உள்ளவை யாகின்றன –

திருமாலே தத்வம்
சரணாகதியை ஹிதம்
கைங்கர்யமே புருஷார்த்தம்
அர்த்த பஞ்சக ஞானம் தெளிவாக அருளும் திருவாய் மொழி -வேத வாதுக்கள் -குறைகள் -ஒன்றுமே இல்லையே –

———–

விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் மெய் உற வந்து
அழுப்பாது ஒழிமின் அரு வினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகு சங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக் கொழுந்தே –26-

மெய் உற வந்து அழுப்பாது ஒழிமின்–மெய்யாகவே எங்களை வந்து கிட்டி அப்பால் நீங்கி விடுங்கள்
ஊர்ந்து வருகிற சங்குகளை உழுது வருகிற கொழுவானது –கொழு -கலப்பைப் படை வாள் நுனியில் தைக்கும் இரும்பு
வயிற்றில் குத்தித் தள்ளுவது போல்
அடர்ந்து வரும் வினைகளை ஆழ்வார் கருணை சென்று அழிக்கும் என்பது தொகை மொழியின் கருத்து
இள நாகு –மீமிசைச்சொல்
கொழுந்து –உவமை ஆகு பெயர் –ஆயர் குலக் கொழுந்து அன்றோ

ஆழ்வாரை ஆஸ்ரயித்த எங்களுக்கு புண்ய பப வல் வினைகாள்
உங்களுக்கு எம்மிடம் கார்யம்  இல்லை –இனி எமக்கு ஏது பிறவித் துயர்

————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -மாலை பெறாமல் வருந்தித் தலை மகள் ஏங்கியது அறிந்த பாங்கி புலம்பல்

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு தோழி இரங்குதல்

கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் விறல் மாறனென்றால்
அழும் தோள் தளரும் மனமுருகும் குருகூர் அறையில்
எழுந்து ஓடவுங் கருத் துண்டு கெட்டேன் இவ் இளங் கொடிக்கே. 27–

விறல் -பெருமை -வலி -வீரம்
அழும் தளரும் உருகும்-அஃறிணையில் குறிப்பது -இவள் மயங்கி ஜடமாய் இருந்தாலும்
மெய்ப்பாட்டாலேயே வரும் மாறுதல்கள் –

முகையு மெல்லாம்–அரும்புகளும் மற்றுள்ள மலர்க் காய்களும்
கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்–மிகக் கொய்யும்படியாக மகிழ மரத்தின் கீழ் சென்று
குருகூர் அறையில்–குருகூர் என்று யாரேனும் சொன்னால்
கருத் துண்டு–நினைவு யுண்டாய் இருக்கிறது
இளங் கொடிக்கே–காமத்துக்கு ஆற்றாதவள்
கெட்டேன்–தோழி செய்யும் உபசாரங்கள் எதுவுமே இவள் ஆற்றாமையைக் குறைக்க பயன் பெறவில்லையே

தோழி செய்யும் உபசாரமாவது —
மலர் அணையிலும் சந்திரகாந்தச் சிலையிலும் படுக்கச் செய்தலும்
கொங்கைகளிலே தளிர்களையும் சந்தனத்தையும் பிறவற்றையும் அப்புதலும்
பன்னீர் தூவுதல் போன்றவை

இதில் கிளைவித் தலைவனது இயல் பெயரைக் கூறினமையால் அகப் பொருள் ஆகாமல் அகப் புறப் பொருள் ஆகிறது
கையற்றுப் புலம்புதலால் கந்தருவத்தின் நழுவிய பெரும் திணை யாயிற்று

தலைவன் வருவதற்கு அடையாளமாக முன்னால் மாலையை வர விடுக்க வில்லையே என்று வருந்திய
தலைவியின் வருத்தம் கண்ட தோழி புலம்பினாள் என்பதே துறையின் கருத்து –

————

கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் இனிக் கொடுங் கூற்றினுக்கோ
அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே. 28–

முடி எடுத்துக் கொண்ட –பக்தி மேலிட்டு தலையிலே அஞ்சலி செய்து கொண்ட-
அந்தணர்–அழகிய தண்மை யுடைய எல்லா உயிர்களிடமும் அன்பு பொருந்திய மேலோர்களுடைய
ஆரணத்தின் படி எடுத்துக் கொண்ட மாறன்–நான்கு வேதங்களையும் நான்கு திவ்ய ப்ரபந்தங்களாக தமிழ் செய்த மாறன் என்றபடி

மாறன் அடியார்களின் விஜய த்வஜத்தைத் தூக்கிக் கொண்டு -பக்த தாஸ்ய நிஷ்டையைப் பறை சாற்றிய பின்பு
எமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லையே

———–

என் முடியா தெனக்கி யாதே அரியது இராவணன் தன்
பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான் பொருநைந் துறைவன்
தன் முடியால் அவன் தாள் இணைக் கீழ் எப் பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே. 29–

தன் முடியால் அவன் தாளிணைக்கீழ்நின்னில் சிறந்த நின் சேவடி இணை -பரிபாடல்

வில்லன் -கோதண்ட பாணியான சக்ரவர்த்தி திருமகன்
அவன் தாள் இணைக் கீழ்–தன் முடியால்–அவனது திருவடித் தாமரைகளைத் தலையாலே வணங்கி

எப் பொருளும்-முதல் கடவுளாகிய மாயோன் நிலையும் -அவனை அடையும் நெறியும் -அடைவதற்கு உரிய உயிர்களின் நிலையும்
அடைவதற்கு உண்டாகும் விரோதிகள் நிலையும் -அடைவதால் வரும் பேறும்

திருச் சங்கணித்துறைக்கு அதிபதியாய் தனது திருவாய் மொழியாகிய ஓடத்தில் ஏறும்
உயிர்களை எல்லாம் கடத்தி விடுவார் என்பது திண்ணம் அன்றோ

———–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தே னென்னை நல் வினையாம்
காட்டில் புகுத விட்டு உய்யக் கொள் மாறன் கழல் பற்றிப் போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை மறை மெய் எனிலே. –30–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர்-நெற் போரில் நாரை முதலிய பறவைகள் உறங்கும்
தாம் கவலை அற்று அந்தமில் பேர் இன்பம் பெற்று நித்ய வாஸம் செய்யப் போவதற்கு இந்த உவமை
வழுதி நாட்டில்–பாண்டிய நாட்டில் -கொடை யுடையவனுக்கும் பெயர் -தவறால் மோக்ஷ இன்பம் அளிப்பவர் என்பதால் இப் பெயரால் குறிக்கிறார்
ஆளும் புகுதற்கும் -உம்மைத் தொகைகள் -இறந்து தழுவிய எச்சப் பொருள்கள்

பாரதந்தர்ய ஞான சித்தியை –காட்டில் புகுத விட்டு -என்று மாறன் செயலாக -உய்யக் கொள்ள அவன் ஸங்கல்பித்தான் –
நல்வினையாம் காட்டில் புகுத விட்டான் -காரண கார்யங்கள் உபாயமும் உபாயமும் அவரே
ரக்ஷண ஸங்கல்ப ஞான ஸூர்ய உதயத்தால் ஸாத்விக அஹங்காரத்தால்
இனி எனக்கு செய்ய வேண்டுவது இல்லையே–பாகவத நிஷ்டையே சரம அவதி அன்றோ –

————

மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய்யும் ஐயன்  தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே. -31-

புலமை செய்யும் ஐயன்–தன்னை அடைந்தவர்களுக்கு உபதேஸித்து அருளும் தலைவர்-ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
ஐயன் -எல்லாரிலும் மேலானவன் என்றபடி –
மெய்யும் மெய்யாது –தத்வத் பொருள்கள் எல்லாம் உண்மையாக விளங்கிற்று
பொய்யும் பொய்யாது –தார புத்ர தனாதி ஏஷணாத் த்ரவ்யங்களான -பொய்ப் பொருள்களும் பொய்யாகவே யாதாத்ம்யமாகவே விளங்கிற்று
வேறு படுத்து–இங்கனம் வேறுபடுத்தி பகுத்துக் காட்டி
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது–பிழைப்பதற்கு உரிய –பரம பதத்தை நாடும் வெளியாகிய -உண்மையான தந்திரமும் வந்து பொருந்திற்று
கொய்தற்கு ஏற்ப வினையைப் பகை என்னாமையால் இது ஏக தேச உருவக அணி

தனித் தாள் -ஒப்பற்ற ஸஹாயாந்தர நிரபேஷ திருவடி இணைகள்
ஐயன் -ஆர்யன் வடமொழி திரிபு -மேம்பட்டவன்
புற மத நிரசனமும் ஸ்வ மத ஸ்தாபனமும் செய்து அருளி -ப்ரபந்ந ஜன கூடஸ்தர் –

————-

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே. 32–

திருவாய் மொழியின் அனுசந்தானத்தால் பெற்ற உணர்வும் அறிவும் எத்தகையது என்பதை விளக்குகிறார்

————-

உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே. 33–

முக்குறும்பு -காமம் வெகுளி மயக்கம் -உயர் குடிப்பிறப்பு கல்வி சீலம் தனம் இவற்றால் வரும் கர்வம்
திருவாய் மொழி ஒருவர் சொல்ல-அத்தைக் கேட்டவர்களும் முக்குறும்பு அறுப்பார்களே
ரோம கர்ஷணம் நேத்ராம்பு பதனம் -தானாகே வருமே

————–

அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே. 34–

மற வாதியர் முதல் மகரக் குழையான் வரை-சந்தித்தது என்று நிரசித்ததையும் பொருந்தியதையும் -காட்டும்

———-

சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. 35–

சந்திப்பதம்-ஸமஸ்த பதம் – -தொடர் மொழி -வெவ்வேறு இடங்களில் பொருத்தி
பல பொருள்கள் தரும் படி பங்க்தி -அபூர்வ பொருள்கள் வருமே-

இவற்றை அனுபவிக்க ததீய பர்யந்தம் சேஷத்வம் வேண்டுமே
இவருக்கு மதுரகவி ப்ரக்ருதிகளே தேவர் ஆவார்

பல் அலங்காரப் பொருளும்-பலவகைப்பட்ட அணி இலக்கணப் பகுதிகளும் –உவமை முதலிய அணியியல் பொருந்திய பொருள் இலக்கணம் என்றுமாம்
தேவரையே–பூ ஸூரர்களாலும் வணங்கப்படுபவர் அன்றோ
சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும் பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்-பஞ்ச லக்ஷணங்களும் படித்து உழல்கின்ற புலவர்களே
திவ்ய தேசத்தை மட்டுமே சிந்திக்க முக்தியே ஸித்திக்குமே
ஆட் செய்யக் கிட்டா விடுனும் ஆழ்வாரது அடியார்களைத் தரிசித்த மாத்திரத்தாலேயே முக்தி ஸித்துக்குமே

————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -கந்தருவத்தின் நழுவிய பெரும் திணை
கிளவி –அறத்தொடு நிற்றல்
துறை பாங்கி செவிலி யர்க்கு அறத்தொடு நிற்றல்

பாங்கி வெறி விலக்கிச் செவிலியருக்கு அறத்தொடு நிற்றல்

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
ஏ வரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே. 36–

கம்பர் காதல் ஆழ்வார் மேல் என்றும்
மும்மூர்த்திகள் இடமும் அவர்களில் மேம்பட்ட ராமன் இடமும் இல்லாத காதல் என்றும்
அறியாத கட்டுவிச்சி பாசுரம்-

ஏ வரை ஏறி மொழிகின்ற போது –பெருமை மிக்க நம் குறிச்சியில் வந்து சொல்லுகிற காலத்தில்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் –விஸ்லேஷத்தால் அணிகள் அணியாமல் மலர்கள் மட்டும் சூடப் பெற்ற கூந்தலை யுடைய தலைவியது மனத்தில் -இத்தால்
தெய்வத்தால் தீண்டப் பெற்றவள் அல்லள் -தெய்வம் தீண்டினால் பூவைச் சூடும் அறிவு பெறாள் அன்றோ

தலைவியின் அபிப்ராயம் அறிந்த தோழி தாய்மாற்கு அறிவித்தல் துரையின் கருத்து

————-

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே. 37–

அற ஆ அவை சொல்லவே சுரக்கும் -தர்ம ரூபமாகிய பசுக்களைப் போல்
ஐஹிக ஆமுஷ்மிக மோக்ஷ பயன்களை எல்லாம் பொழியும் –

புறச் சமயத்தார் நூல்கள் மலட்டுப் பசு போல் பயன் கூடாதது மட்டும் அன்றி படித்தவர்களுக்கு நரகத்தையும் கொடுக்கும் –
இப் பாடல் உருவக அணி

————-

பொருள் -புறப் பொருள்
திணை -பெரும் திணை
கிளவி -இரு பாலில் பெண்பால் கூற்று
துறை -தலைவி மடலூரத் தோழி சாற்றுதல்

மடலூரத் துணிந்த தலை மகளின் வழி ஒழுகித் தோழி இரங்குதல் –

கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே. 38–

ஏடு -பனை ஓலை -பெண் நிலை எய்தி மடலூர ஒருப்படுகிறார்
கை தலைப் பெய்தல் -குருவை நினைத்து சொல்லி தலையில் கை கூப்பிய கை யுடையராகை

குருகூர் என்னும் ஆறு அறியாப் பைதலைக் –குருகூர் என்று சொல்வதற்கும் தெரியாத என் தலை மகளை
கோகு உகட்டிட்டு –தன் தோள்களைத் தட்டிக் கொண்டு
ஏட்டில் -பனை மடலாகிய குதிரையில்
ஏற்றிய பண்பனையே–ஏறும்படி செய்த இயல்புடைய தலைவனை -நம்மாழ்வாரை
பைதல் –ஆண்பால் சிறுவனுக்கும் துன்பத்துக்கு பெயர் -தலைவி பால் அன்பு மிகுதியால் பெண் பாலை ஆண்பாலாக பைதல் என்கிறாள்

———–

பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே. 39–

தபஸ்விகளின் கண் -ஞான த்ருஷ்ட்டி -மனம் -முக்காலமும் அறிதல் –
கண்ணும் மனமும் செவியும் கூறியதால் மெய்யும் நாக்கும் பொறிகளும் தவம் செய்தன
அனைத்து தவங்கள் பலமே திருவாய் மொழி

இத்தால் பண்ணும் இன்றியமையாதது என்றும் காட்டப்படுகிறது

———-

காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே. 40–

ஆலிலை அன்ன வசம் செய்து வித்தாக பல அவதாரங்கள்
ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹமும் அதே போல் வித்து -ஞான மூர்த்தியே கொடியில் விளைந்த பலம் -என்கிறார்
திருவாய் மொழி பாசுரங்களே ஓடிய கொழுந்து -அதன் பர்யவசாயம் அர்ச்சிராதி கதியை விளக்கும்
சூழ் விசும்பணி முகில் முனியே நான்முகனே நிகமன தசகங்கள்
குணம் கடந்த மூலம் -விரஜைக்கு அப்பால் உள்ள ஸ்ரீ வைகுண்ட ஆதி மூர்த்தி என்றும்
முக் குணங்கள் கடந்த திருமந்திரம் என்றுமாம்-

———–

மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே. 41–

பார்த்தற்கு -என்று உலகோர் காண என்றும் அர்ஜுனனுக்கும் என்றுமாம்
நாராயணனை வியாசரும் ஆழ்வாரும் முழுவதுமாகவே கண்டார்கள்
ப்ரஹ்ம ஸூ த்ரம் ஸ்ரீ பகவத் கீதை இவற்றுக்கு புற மதஸ்தர்கள் வாதம்
பூர்வ பக்ஷங்களைக் காட்டி அவற்றைப் போக்கி முடிவாக ஸ்வ சித்தாந்தம் பண்ண ஸ்ரீ பாஷ்யகாரர் வேண்டிற்று

மூர்த்தத்தினை–உயிர் நிலையினையும்
பாரதத்தைப் பணித்தானும்–கீதை அடங்கிய மஹா பாரதத்தை வெளியிட்டு அருளிய -வ்யாஸ பகவானும்
உயிர் நிலை உலக நிலை ப்ரஹ்ம நிலை ஆகிய தத்வ த்ரயங்களையும் ப்ரஹ்ம ஸூத்ர முகேந வெளியிட்டு அருளிய வியாஸ பகவானும்
நின்ற வார்த்தை -நிலை பெற்ற திருவாய் மொழியை யுடைய
வேதம் மீமாம்சை ப்ரஹ்ம ஸூத்ரம் அனைத்தும் வெளியிட்ட பொருள்களை வியக்தமாக வெளியிட்டு அருளிய ஆழ்வார்
மஹா உபகாரகராய் உலகுக்கு நன்மை செய்து அருளியவர் என்றதாயிற்று –

நின்ற வார்த்தை -என்று யாராலும் அசைக்க முடியாமல் ஸ்திரமான பிரமாணங்கள்
எவ்வித சங்கைகள் இல்லாமல் நாதமுனிகளுக்கு அருளி இவர் இசை அமைத்து நமக்கு அருளினார்
ப்ரஹ்ம குணக்கடலில் ஏழு உலகத்தாருக்கு குடைந்து ஆடி மகிழ்ந்து பரி சுத்தமாக்கும் தீர்த்தங்கள் ஆயிரம் அன்றோ
ஸ்ரீ ரெங்கநாதன் வளம் மிகு தமிழ் மறை மொழிந்து உயர் பதின்மர் ஆடும் குணக்கடல் அன்றோ

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-

———–

பொருள் -அகப்பொருள்
திணை –பாலை
கிளவி -பொருள் வயிற் பிரிவு
துறை -நெஞ்சோடு மறுத்தல்

பொருள் வயிற் பிரியும் தலைவனுக்குத் தோழி தலைவியின் ஆற்றாமை கூறுதல்

பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே. 42–

நெஞ்சமே
குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள்–தலைவியின்
கண்ணின் கடை திறந்து–கடைக் கண்ணைத் திறந்து கொண்டு
ஆறுபட்டுக்–ஒரு ஆறாகி
வெளி பரந்து -வெளியில் பரவி
குருளைச் சுமந்து –காட்டில் விலங்கின் குட்டிகளை அடித்துக் கொண்டு
ஓட் டரும் –ஓடி வருகின்ற -ஓட்டம் தரும் என்பதின் விகாரம் –
கொள்ளை வெள்ளம்–மிகுதியான கண்ணீர் வெள்ளமானது
உருளைச் –சக்கரங்களை யுடைய
சுடர் மணித் தேரை -இரத்தினங்கள் பிரகாசிக்கின்ற என்னுடைய தேரை
வந்து உதைக்கின்றதே–வந்து தடுக்கின்றதே
அந்தோ –ஐயோ
பொருளைச் சுவை யென்று –பொருளை சிறப்புடையது என்று கொண்டு
போவ தெங்கே –எப்படி நான் போகலாகும்

ஆழ்வார் அருளை சுமந்தவளாது கண்ணீர் வெள்ளம் தடுக்க
அதற்குத் தப்பி நாம் எவ்வாறு பொருளை சன்பாதிக்கப் போவோம் என்று
நெஞ்சோடு கூறி செல்வது தவிர்த்தான்

பிரிவாதலால் பாலை யாயிற்று
மெய்ப்பாடு -அசைவு பற்றி பெருமிதம்
பயன் -நெஞ்சோடு கூறி ஆற்றுதல்

———

பொருள் -அகப்பொருள்
திணை -குறிஞ்சி
கிளவி -இருவருமுள வழி யவள் வரவு ஊர்தல்
துறை -ஆடிடம் புகுதல்

மருங்கு அணைதல் –

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே. 43–

மாறன் குருகை வஞ்சி-இம்மாதின்

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் –தோன்றி மார்பில் அடி பரந்து பெருத்தன
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் –செவ்விய மின்னல் போன்ற இடைக்கு நிலை நிற்கக்கூடிய
சிக்கனவு உண்டோ -அக் கொங்கைகளைத் தாங்கும் வலிமை யுண்டோ -இல்லை என்றவாறு
என்றால்-கொங்கைப் பெருமனும் இடையின் துவட்சியும் இப்படி என்றால்

கொந்து அடிக் கொண்ட குழலும் -பூம் கொத்துக்கள் சூடப்பெற்ற தலை மயிரும்
கலையும் -இடையில் கட்டிய சேலையும்
குலைந்தலைய–நிலை குலைந்து சொர
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது -இவள் பந்து அடிக்கும் போதெல்லாம் என் மனம் துடிக்கின்றது

மெய்ப்பாடு -உவகை
பயன் -தலை மகளைச் சார்தல்

கொங்கை -பக்தி
மதுரகவி ப்ரக்ருதிகளின் ஆழ்வார் மேல் உள்ள பக்தி முதிர்ந்து அவர்கள் உகந்து ஈடுபட்டுச் செய்யும்
பல கைங்கர்யங்களை வைராக்ய ஸம்ருத்தி பூர்வகமாக செய்யும் அவர்கள் சீல குணங்களில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய-என்றது அனைத்தையும் அர்ப்பணம் செய்து அடியாருக்கு என்றே முயன்று நிற்றல்
பந்து அடித்தல் -விரைந்து பல பல தொண்டுகள் முயன்று ஆற்றுதல்

———

கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே. 44–

சின வாரணம் -மத யானை-சடவாயுவைக் கோபித்தவர் அன்றோ

கன வாயினவும்கனவு ஸ்வப்ன தசையையும் ஆயினவும் -என்று முன்பும் பின்பும் உள்ள அவஸ்தைகளையும்
ஆயவையும் -துர்யாதீதி அவஸ்தைகளையும் -இவற்றின் உட்பகுதிகள் பலவாதலால் பன்மைப் பத பிரயோகம்
வீசிய -கடந்த
வினவா துணர்ந்த விரகன் -மயர்வற மதிநலம் அருள பெற்றவர் அன்றோ

துரீயம் -சமாதி நிலை -யான் அறியும் சுடராகி நிற்றல் -ஆத்ம ஸ்வரூபம் கண்டு மனமும் சொல்லும் செயல் இழந்து நிற்கை
நினைக்கவும் சொல்லவும் வேறே பொருள் இல்லை என்பதையே மன வாசகங்களை வீசின நிலை என்கிறார்
அதையும் கடந்த நிலையில் வேதப் பொருள்கள் எல்லாமே தாமாகவே தோன்றுதலை வேத சாஷாத்காரம் அடைந்தார் ஆழ்வார்
ஸர்வ வேத வித்தானார் –

———–

சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே. 45–

ஆயிரம் -எண்ணிறந்த -அநந்தாவை வேதா –
ஆழ்வார் அருளிச் செய்து காட்டிய பகவத் ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களும் அநந்தம் அன்றோ –

————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -நெய்தல்
கிளவி -தூதில் பிரிவு
துறை –காமக் கிழத்தி காதல் நிலை கண்டு தாமக் குழலி பாங்கி தளர்தல்

தோழி இரங்கல் –

அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே. 46–

முரிவளை முத்தும் –வளைந்த சங்கு பெற்ற முத்தும்
சினையும் –அன்னப்பறவை ஈன்ற முட்டையும்
மயங்க -வேறுபாடு தோன்றாமல் கலந்து இருக்க
அவற்றை ஈன்ற
வரி வளையும் –கோடுகளையுடைய சங்கும்
அன்னமும் -அன்னப் பறவையும்
முறை செறுத்து –முறையே கோபித்து
தம்மிலே –தங்களுக்குள்ளே
வழக்காட –விவகாரம் பேச
அப்பொழுது
வலம் புரிவளை –வலம் புரிச் சங்கானது
யூடறுக்கும் -அவ்விரண்டின் நடுவிலே சென்று அந்த வழக்கைத் தீர்த்து விடுகிற
குருகூர் எம் புரவலனே-எமது இறைவனான ஆழ்வார்
அரிவளை -வண்டுகள் வளைத்து மொய்க்கப் பெற்ற
பொன் மகிழ் -பொன் போன்ற தமது மகிழம்பூ மாலையை
ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து–மாலைக் காலத்தில் வந்து ஆராய்ந்து அணிந்த ஆபரணங்களை யுடைய தலைவிக்குக் கொடுத்து அருளுவாரோ

இரங்குதலால் திணை நெய்தல் ஆயிற்று

முத்துக்களும் அன்னங்களும் தங்கள் முட்டைகள் கலந்து எவை என்று அறிய முடியாமல் சண்டை இட
சங்கின் தலைவனான வலம் புரி வந்து தீர்க்க -ஆழ்வார் தாம் அணிந்த மகிழம் பூவைத் தந்து என் துயரம் தீர்க்கிறார் அல்லை –

இச் சிப்பி ஆயிரமே சூழ்ந்தது இடம் பூரி என்று கூறும்-ஒப்பில் சங்கு ஆயிரம் சூழுறும் வலம் புரி என்று ஓதும் –நிகண்டு –

ஆயிரம் சிப்பிகளில் ஓன்று இடம் புரியாகும்-ஆயிரம் இடம் புரிகளில் ஓன்று வலம் புரி யாகும் –

சிப்பி உலகோர் –அன்னம் ஆச்சார்யர்
வெறும் ஜடங்களை உங்கள் தாய் தந்தையருக்கு கொடுத்து உதவி
ஞான கர்ப்பம் முதிர்ந்து வரும் அதிகாரிகளை ஆழ்வாருக்குப் பாத்யம் என்கிறார்

————

பொருள் -அகப்பொருள்
திணை -நெய்தல்
கிளவி –ஒரு வழித் தணத்தல்
துறை -சென்றோன் நீடலிக் காமம் மிக்க கழி படர் கிளவி

தலைவி கடலை நோக்கித் தேர் வழி தூரல் என்றல் –

புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கரை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே. 47–

எம் முறு பிறவித் துரை –எம்முடைய மிக்க விரைந்து போற்றுகிற பிறவிகளை
துடைத்து ஆட் கொண்ட தொண்டர் பிரான்–போக்கி அடிமை கொண்டு அருளிய அடியார் ஜன கூடஸ்தரான ஆழ்வாருக்கு உரிய
துறை நீர்ப் பொருநை கரை துடைக்கும் கடலே –கரையை மோதுகின்ற ஸமுத்ரமே
புரை துடைத்துப் –எனக்குள்ள காமமாகிய துன்பத்தைப் போக்கி
பெரும் பொய்யும் துடைத்துப் –தாம் சொல்லும் வார்த்தைகளில் பொய்யில்லாதபடி போக்கி
பிறர் புகலும்-அயலார் கூறுகின்ற
உரை துடைத்து -பழிச் சொற்களுக்கும் இடம் இல்லாதபடி போக்கி
அங்குள்ள –புன்னை மரச் சோலையாகிய அவ்விடத்திலே யாம் கட்டியுள்ள
வூசல் –அறுந்து போன கொடி ஊஞ்சலை
துடைத்த-மீண்டும் கட்டி அதில் உள்ள வருத்தத்தைப் போக்கினை
துடையேல் அன்பர் கால் சுவடே.-தேர்க்கால் சென்ற வழியை அளித்து விடாதே கொள்

காற் சுவடு -பாகவத சன்மார்க்க வாழ்க்கை நெறி -பூர்வை பூர்வதாம் க்ருதம் –
பொருனைக் கரை -வேத ஸாஸ்த்ர விஹித ஆஞ்ஞா
கடல் -ஆஸ்ரிதர் பக்திக் கடலும் ஆழ்வார் கிருபைக் கடலும்

இரங்குதலால் -நெய்தல் திணை யாயிற்று
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடல் ஓதம் –

—————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -நெய்தல்
கிளவி -ஒரு சார் பகற்ப குறி
துறை –பாங்கி புலம்பல்

செவிலித் தாய் நல் தாய்க்கு இருவர் காதலும் உரைத்தல் –

சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே. 48–

நங்காய்
படர் அந்தி வானம் இருள்கின்றதே
இரண்டு கவடிறக் –தலையில் கதையாய் யுள்ள இரண்டு கட்டுத் தறிகளையும் ஓடியும்படியாக
உட்பகை புறப்பகை யாகிய இரண்டு வஞ்சனையும் அழி பட என்னவுமாம் –
கட்டிய பாசத் தளைக்–கட்டி இருக்கும் அன்பாகிய சங்கிலிகளை
கண் பரிந்து–அறுத்து எறிந்து
தொடர் ஆசைக் களிற்றைத் -தன்னைத் தொடர்ந்த ஆசையாகிய யானையை
சுவடிறக்கத்–அடிச்சுவடு தெரியாமல் ஓடிப்போம் படி
தொடர்ந்து -பின் தொடர்ந்து வெருட்டி
சங்கக் குவடிறக் –தமிழ்ச் சங்கமாகிய மலையானது சிதறும்படி
குத்திய –குத்திப் பெயர்த்த
மாறப் பெயர்க் –மாறன் என்னும் பெயருடைய
கொலை யானை –கொலை செய்ய வல்ல யானையானது -பொய்ச்சமயங்களை அழித்ததனால் கொலை யானை
இங்கு முற்று உருவகம்
இன்று
இவடிறத்து ஒன்றும் -இவள் நிமித்தமாக வருமோ

இரங்குதலால் -திணை -நெய்தலாகும்

ஆசைக்களிறு -மத களிறு ஐந்திணையும் சேரி திரியாமல் செந்நி றீ இ -இவை அடியாக
வரும் பிறப்பு சூழலைத் தொலைக்க வல்லது ஆழ்வார் கிருபை
இரண்டு சுவடு -ஸஞ்சித ஆகாமி -ஸம்ஸாரத்தில் கட்டி வைக்கும் கயிறுகள்
சங்கக் குவடு இறக் குத்திய -சங்கப் புலவர்களை வென்று ஆட் கொண்டாரே

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து ––நான்முகன் -81-

————-

இருளாய்ப் பரந்த உலகங்ககளை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே. 49–

பொருளைக் காட்டும் இரவி போல் பரனைக் காட்டும் ஆழ்வார் அனைவருக்கும் பொதுவாக நிற்பவர் –
புற சமய மாய இருளைப் போக்கி அருளும் பராங்குசன் மறுமை யுண்டாக்கும் மயக்கம் தீர்த்து அருளுபவர்

————

அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே. 50–

குருகூர் நிலத்தை என்றது திருக்குருகூரையும் ஆழ்வார் வகுத்த நெறியையும் –
ஆழ்வார் இடம் அநந்யார்ஹமாய் இருப்பதே கற்பு -அறிவாளிகளின் கொள் கொம்பு
ஆழ்வார் திருவடி இணைகளையே பிடித்து அருளிச் செயல்களில் மண்டி மற்ற வற்றை திரஸ்கரித்தலே அறிவின் ஸ்ரேஷ்டம்

————–

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே. 51–

பிறர் பால் வெறும் பாக் கிளத்தி மெலிகின்ற என்னை -அந்நியர் இடத்தில் பயன் அற்ற பாடல்களை பாடி தளர்கின்றேனும்
இம்மைப்பயன் பெறவே இவை ஆகவே வெறும் பா அன்றோ இவை
அமரர்க்கும் ஏற விட்டான்–தேவர்களுக்கும் மேலாகச் செய்து அருளி விட்டார்
ஆகையால்
பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே–ஒருவர் பெறக்கூடிய செல்வம் உள்ள காலத்தில் -அதற்கு ஒரு கெடுதியும் உண்டாகுமோ
ஆகாது என்றபடி
இந்த முதல் அடி வேற்றுப் பொருள் வைப்பு அணி

காமம் வெகுளி மயக்கம் –முக் குறும்புகள்
முப்பகை -மனம் மொழி செய்கை களால் அற நெறி நழுவும் நிலை
குலம் கல்வி செல்வம் பற்றிய கர்வமும் முக் குறும்பு -முப்பகை
மன் -ஆழ்வாரே உபய விபூதி நாதன் -இங்கு தானே ஈர் அரசு பட்டு இருக்கும்
எறும்பு போன்ற நீசனான அடியேனை ஆட் கொண்டு உயர் நிலை அளித்து அருளினார் –

———–

குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே. 52–

யுள்ளும் சுற்றும் இருகூர் வினையும் அறுத்து-உள்ளேயும் சுற்றிக் கொண்டு இருக்கிற மிகுந்த புண்ய பாப ரூபமாகிய இரண்டையும் போக்கி
இறப் பார்க்கும் இயற்கை–அவைகள் அழியும்படி யாகப் பார்க்கின்ற இயற்கையானது

திருக் குருகூர் வாசிகளுக்கு -அருகில் உள்ளோருக்கும் கூர் வினைகள் அடியோடு அறுபட்டுப் போவது அருமை அல்லவே

———–

பொருள் –அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -மாலையால் வந்த வருத்தம் உரைத்தல்

தலைவன் பிரிந்த நிலையில் ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்

அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே. 53–

அன்றாத அன்றிலையும் அன்று வித்து–பகைமை கொள்ளாத அன்றில் பிறையையும் பகைமை ஆக்கி

ஆஸ்ரித்தவர்களுக்கு பழ வினை முழுதும் தொலைக்க வல்ல –
பிரிவாற்றைமை தணிக்க வல்ல -வகுள மாலை அளிப்பானா என்று ஏங்குகிறாள்

———

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே. 54–

நித்ய விபூதியைக் கொடுக்கும் என்பதால்-இன்னமுதே
ஏறே-இன்னமுதே-ஆணிப் பொன்னே -இம் மூன்றும் உவமை ஆகு பெயர்
தகும்–இது தொழில் பெயராய்த் தேற்றப் பொருள் பட்டு நிற்கும் சொல்

வித்யா கர்வத்தை யுடையோர்க்கு பயங்கரராயும் –
ப்ரயோஜனாந்தர பற்று அற்றவர்களுக்கு இணைத்து தன்னுடன் பற்று உண்டாக்கி அருளி
ஸம்ஸாரிகளுக்கு பெற அரும் செல்வமாக ஆழ்வார் உள்ளார் என்கிறார்

————

பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை(ஐ) யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. 55–

தென்னை(ஐ) யுரைக்கும் –தென் திசைக்கண்ண தாகிய அழகிய தமிழ் மொழிக்கும் –
ஐ உரை -சிறந்த பொருள் இலக்கணத்தைத் தன்னிடத்தில் கொண்டு இருத்தலால் -ஐ உரை -என்கிறார்
இயற்கும் –அதன் பக்தியாகிய இலக்கணத்துக்கும்
இசைக்கும் –இசைத் தமிழுக்கும்
சிகாமணியே -ஸிரோ ரத்னம் போன்றவரே

இதில் முதல் அடி எடுத்துக்காட்டு உவமை அணி

ஆணிப்பொன் போல் நீரே ஸ்ரேஷ்டர்
உமது தேஜஸ்ஸில் சிறிய பிரதிபலிப்பே மற்றவர் தேஜஸ் என்கிறார்-

———-

மறம் -பல் வரிக்கூத்தில் ஓன்று
மறவரின் மகளை விரும்பி விட்ட அரசனது தூதனை நோக்கிக் கடிந்து மறவர் இயல்பு தோன்றக் கூறுவது

மகட் பாற் காஞ்சி -நின் மகளை எனக்குத் தருக என்ற அரசனிடம் மாறுபடுவது

மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே. 56–

மணித்தார் -முத்து மாலை அணிந்த பாண்டியன் ஆணையும் செல்லாமல்
மோக்ஷ ப்ராப்த்தியே பரம புருஷார்த்தம் என்று இருக்கும் -ஸூத்தாந்த ஸித்தாந்திகள் –
அந்தப்புர கிங்கரர்களான -அடியார் பக்கலிலே ஆழ்வார் ஆணையே செல்லும் என்கிறார் –

ஆசு -ஆழ்வாருக்கு அடிமை என்று அறிந்தும் பெண் கேட்க வந்த குற்றத்தை ஆசு என்கிறார்
கொள்ளும் கொள்ளும் -வெகுளி பற்றி வந்த அடுக்கு
பாவை -உவமை ஆகு பெயர்
இது கொல்லி மலையில் தேவரும் முனிவரும் சேர்ந்து உறையும் காலத்து அங்கு வந்து துன்புறுத்தும் அசுரரை மயக்க
வேண்டித் தேவ தச்சனால் யந்திரத்தோடு செய்து வைத்து இருந்த ஒரு பெண் வடிவம்
இது அசுரரைக் கண்டால் சிரித்து மயக்கிக் கொல்லும்

———–

பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே. 57–

பாவைத்-எங்கும் பரவி நிற்கும் பொருள் தோன்ற –பா –என்கிறார்
போதா அமுதை-கடலில் இருந்து வந்த உப்புச் சாற்றில் வியாவ்ருத்தி -கொள்ளக் கொள்ளக் கோதிலா இன்னமுதம் அன்றோ

கோவைப் பணித்த எம் கோவை–காம தேனுவை ஒத்த எங்கள் ஸ்வாமியாக ஆழ்வார்

ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு ஆழ்வார் திருவாய் மொழி பால் அன்றோ –
இன் கனி -கற்பகப்பூ அம்ருதம் வேதப்பொருள் சுரக்கும் காம தேனு அருளிய என் கோ திருக்குருகூர் மன்னன் பற்றிய
இந்த சடகோபர் அந்தாதியும் திருமடல் தனிப் பாடல்களுமே கம்பருடைய சரம அருளிச் செயல் என்பர் –

————-

நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே. 58–

இதன் கடையடி எடுத்துக்காட்டு உவமை அணி

உலகோர் உஜ்ஜீன அர்த்தமாக அருளிச் செய்த ஆழ்வார் அருளிச் செயல்கள் ஏற்றம் -என்று என்றும் நீடித்து
நின்று உலகோரை ரஷித்து அருளும் –
மன் புகழ் பெருமை நும் கண் மரபினோர் புகழ்கள் எல்லாம் உன் புகழ் ஆக்கிக் கொண்டாய்
உயர் குணத்து உரவத் தோளாய் -குகப்படலாம் -36-போல் இதுவும் –

————

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார் குமரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே. 59–

அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே--இங்கு ஸ்துதித்தது அன்றியும் என்று இறந்தது தழுவிய எச்சப் பொருளது

உபய விபூதி நாதனே அனைத்தும் ஆழ்வாருக்கு ஆக்கி அருளினான்
இங்கும் அங்கும் அவருக்கே ஆட் செய்வேனாக அடியேனை ஆழ்வாரே ஆக்கி அருள வேண்டும்-

————–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே. 60–

இறப்பு என்னும் பயத்தை விட்டாய் இராமன் என்பானைப் பற்றி -கும்ப கர்ணன் வதைப்படலாம் -132-
ஆழ்வார் திருவடிகள் அடியேன் தலை மேல் பதிந்து மாறன் திரு நாமமே ஜபித்த பின்பு யம படர் அடியேனை அணுகுவாரோ

————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -பெரும் திணை
துறை -மாலை பெறாமல் வருந்துவது உரைத்தல்

தலைவனைப் பிரிந்த தலைவி தென்றலுக்கு வருந்தி இரங்குதல் –

கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே. 61–

தென்றலை மன்மதனுடைய தேர் என்பர்-

இனி யான் உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன் என்பதை யடக்கி பசியட நிற்றல் என்ற மெய்ப்பாடு தோன்றி நின்றது

————-

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே. 62–

தென் தலை ஆழ்வார் அருளிச் செயல் தென் திசை தோன்றிய உபநிஷத் அன்றோ
மன் தலை -நம்மாழ்வார் வாக்கில் வந்த உபநிஷத்துக்களின் ஆழ்ந்த பொருள்கள்

நியாயம் நெறியை–தர்க்க நிர்ணயத்தாலும் பரத்வ நிர்ணயம் செய்து அருளியவர் அன்றோ
மதுரகவியை-இனிமையான திவ்ய பிரபந்தங்கள் -வேதம் போல் இல்லாமல் சர்வாதிகாரம்
இவற்றை அத்யயனம் செய்தவர்களே எம்பிரான்கள்
அவர்களையே நாவால் பாட புகழ் பாட நான் கடமைப்பட்டுள்ளேன் -என்கிறார்

————-

உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே. 63–

கோடல்–வெண் காந்தள் -கார்த்திகை மாதத்தில் பூக்கும் மணம் இல்லாத பூ
இதே போல் பிறர் கவிகளும் சொல் சுவை பொருள் சுவை இல்லாமல் பயன் அற்றதாய் விடும்

தெய்வக்கவி -தோண்ட தோண்ட ஆழ்ந்த புது அர்த்தங்கள் ஸ்புரிக்கும் -ஊற்று தரும் இனிய நீர் போல்
கல்வி -கல் தோண்ட –வி தொழில் பெயர் விகுதி

————

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே. 64–

கெண்டை மீன்கள் துள்ளி தேன் கூட்டு உடைந்து வயல்களில் தேன் பெருகுவது போல்
குருகூர் மஹிமையைக் கூறுவதால் நம்மாழ்வார் கருணையாகிய தேன் வெள்ளப் ப்ரவாஹம்
உங்களுக்கு நிரம்ப உண்டாகிப் பரவும் என்பது தொகை மொழியின் கருத்து

குருகூர் வளம்-ஆழ்வார் என்றும் அவர் அருளிச்செயல்கள் என்றும் படுமின் -ஆழ்ந்து அனுபவியுங்கோள்
இந்த வளம் நினைத்தாலே திரு அஷ்ட ஐஸ்வர்யம் பொங்கும் -இரு வினை அகலும் -மேன்மை எல்லாம் கிட்டும்

————-

பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே. 65–

கறங்கன்ன வாழ்க்கையை-காற்றாடி போன்ற பிறவிச் சூழலை

ஆன்மாவைக் குவளை என்கிறார் -சாம்சாரிக தசை மாயையில் ரமிக்கும்
உலக இன்பம் சந்த்ர வெளிச்சத்தில் குவளை மலரும் –
ஆழ்வாராகிய வண்டு பகவத் குணமாகிய தேனை உண்டு அருளிச் செயல்கள் பாடி சுழன்று வர இறக்கை காற்று வெளிச்சத்தால்
குவிந்து இருக்கும் குவளை மெதுவாக நெகிழ்ந்து உணர்வு ஏற்பட்டு உஜ்ஜீவனம் அடைகிறது
1-ஆச்சார்யர் கீழ் போல் முன்னோர் மொழிந்த முறையில் உபதேசம்
2-பூ கொய்யும் பெண் போல் உபதேசங்களை அறிந்து உபதேசிப்பர்
3-ஹம்சம் போல் சாரங்களை உபதேசிப்பர்
4-வண்டு போல் அமுதம் உண்டு பாடி அனுபவித்து -அதில் விமுகரானவர்களையும் திருத்தி பணி கொள்வர்
இப்படி நான்கு விதம்

————-

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -பெரும் திணை
துறை -வேலமர் கண்ணி மாலை யம் பொழுது கண்டு ஏங்கியது அறிந்த பாங்கி புலம்பல்

விஸ்லேஷத்தில் மாலைப் பொழுதுக்கும் இருளுக்கும் தலைவியின் ஆற்றாத துயர் கண்டு தோழி இரங்கல்

விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே. 66–

விட வந்தகார வெம் பாலிற் –கொடிய நஞ்சு போன்ற இருட்டையுடைய இராக்காலமாகிய பகுதியிலே
வெம்மையை மெல்லியலுக்கு இடர் என்பதுடன் கூட்டிப்பொருள்
மெல்லியல் -காமன் கொடுமைக்கு ஆற்றாதாள்
பராங்குசர் -துன்பம் செய்யும் காமனை அடக்க வல்லார் என்றவாறு

—————

பொருள் -அகப் பொருள்
திணை –பாலைத் திணை
கிளவி –உடன் போக்கு -உட்பகுதி -தேற்றல்
துறை -தலைவிக்குத் தலைவன் தன் பதி அணுகினமை சாற்றல்

உடன் போக்கில் தலைவன் தலைவிக்குத் தன் நகர் அணிமை கூறல் –

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே. 67–

சரவாதம் -பாலை நிலம் -தடம் பணை -சோலை சூழ்ந்த வூர்
மருதம் தாண்டி விட்டோம்
ஓர் அம்பு போய் விழும் தூரத்தில் நாம் உள்ளோம் பைய நட

இது உருவக அணி

இடையில் எதிர்த்த சிம்மம் போன்றவற்றை அம்பால் எறிந்ததனை தலைவி அறிந்தவள் ஆகையால்
அம்பின் வீழ்ச்சியைக் குறித்து சரவாதம் என்கிறான்
தடம் பணை அருகில் இருப்பதாகக் கொண்டு இனி மருத நிலமே என்கிறான்

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —திரு விருத்தம் -26-பாசுரம் போல் இங்கு

————-

பொருள் -அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை –பா கொத்த சொல்லி பைந்தொடை பெறாள் -மேகத்தைத் தூது போக விடுத்தல்

பிரிவாற்றாது வருந்தும் தலைவி கார் கண்டு கலங்குதல் –

தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே. 68–

பனி தோய்ந்திடு மேகங்களே–விடாமல் மழை பெய்வதை மேற்கொண்டுள்ள ஆகாசத்தில் செல்லும் மேகங்களே
பனி -குளிர்ச்சியுமாம்
எனது ஆற்றாமையை ஆழ்வாருக்கு அறிவிப்பீர்
நீங்கள் இங்கே பொழிவதனால் பயனில்லை
அவருடைய மலையில் ஏறி மழை பெய்யத் தொடங்கினால் அவர் நும்மைக் கண்ட வுடன் விரஹ மேலீட்டால் தாமே என்னிடம் வந்து அணைவார்

விரஹ தாபத்தால் மேகக் கூட்டம் இவளுக்கு விஷங்கள் பருத்து உயர்ந்து வானில் பரவியது போல் உள்ளதே
அஷ்ட நாகங்கள் -வாசுகி -அநந்தன் -தக்ஷன் -சங்க பாலன் -குளிகன் -பதுமன் -மஹா பதுமன் -கார்க்கோடன் –
இவர்கள் காஸ்யப கத்ரு மக்கள்
ஆழ்வார் சூடிக் களைந்த வகுள மாலையே இவள் வெப்பம் தணிக்கும் –

—————-

பொருள் –அகப் பொருள்
திணை –முல்லை
கிளவி -வரை விடை வைத்துப் பொருள் வயிற் பிரிதல்
துறை -தலைவன் மேகம் தன்னொடும் சோகம் கொண்டு அவன் சொல்லல்

பொருள் வயில் பிரிந்து சென்று மீளும் தலைமகன் முகிலொடு கூறல் –

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே. 69–

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது –வழியிலே கண்டு வார்த்தை சொன்னேன் என்று நினைக்காமல்
நீங்கள்
மெய்யன் குருகூர்ப் பாகத்தை –திருவாய் மொழியை-பாகம் -சுவையை யுடைய திருவாய் மொழிக்குப் பண்பு ஆகு பெயர்
ஆற்றும் சொல்லாளைக் -ஒத்து இருக்கும் சொல்லை யுடைய எனது தலைவியை-அவள் சொற்களைக் கேட்டாலே உங்களுக்கு பெரும் பேறு கிட்டுமே
கண்ணீரின் துளி பரந்த மோகத்தை -கண்ணில் நின்று உண்டாக்கிய நீர்த்துளி மிக்குள்ள என் பால் எழுந்த காம விரஹத்தை
ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச் சோகத்தை ஆற்றிக் கொண்டே -அவள் மனதில் உண்டாக்கிய சோர்வை சாந்தப் படுத்திக் கொண்டு பிற்பாடு
துளித் தூவத் தொடங்குகவே–மழை பெய்ய ஆரம்பிப்பீர்களாக -பெரியதாக மழை பெய்வீர்களாகில் அவளுக்கு குளிரத் தொடங்கும் –

தலைவியின் மோகத்தை காலம் தாழ்த்தாது தணியுங்கோள் என்று மேகத்துக்கு கட்டளை

————

மதங்கு -மதங்கம் — மதங்கியார் -மண்டலம் சுற்றுதல் –

தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே. 70–

மதங்கம் -நாட்டியக்கலை -அக நிகழ்ச்சியை புற உறுப்புக்களால் வெளியிடுதல்
கூடு பாணி யின் இசையோடு முழவொடும் கூட்டித் தோடு சீர் அடி விழி மனம் கை கொடு சேர்த்தி ஆடல் -கம்பர்
இதன் அங்கங்கள் ஒன்பது
சுருதி பாட்டு தாளம் காலடி விழி மனம் கை சீர் தோடு -என்பன
சீர் -பிடிகளின் அமைப்பு -தோடு -அவர்களை வரிசைப்படுத்தி ஆடும் முறை
இங்கு மதங்கி– ஆழ்வார் அருளுக்குப் பாத்ரமான பாகவதர்
அவர் அழகு ஞான சம்ஸ்காரம் -ஆட்டம் -அனுஷ்டானம்
இவற்றைக் கண்டால் அகல ஒண்ணாது – மயங்கி ஈடுபடுவோம் –

————-

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே. 71–

பதிகம் அதிகம் -இரண்டிலும் ஓசை நயம் பற்றி க -யாவாகத் திரிந்தன
ஓங்கு ஒளி உள்ளிருட்டைப் போக்கி ஆத்ம ஞானத்தையே சொல்லும்
அந்தமில் ஒளி -மோக்ஷம்
பூசுரர்க்கே பிரிநிலை ஏவகாரம்

பொதியம் தருநதி–பொதிகை மலையில் அகஸ்தியர் இடம் இருந்து பிறந்த தமிழ் இலக்கணம் உலகை வாழ்விப்பது போல்
தாமிரபரணி நதியும் பொதிகை மலையில் இருந்து பிறந்து வாழ்விக்கிறது
பூ ஸுரர் -வேதப்பொருளைக் கண்டு மகிழ்பவர் அந்தணர் ஆதலால் அவரே தனது பெருமையை அறிய வல்லவர் என்றவாறு

————-

பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே. 72–

கண்டீர் -அடி தோறும் உறுதிப்பாட்டை வலியுறுத்தும்
கற்பகச் சோலை நம் ஆழ்வார் –
மித்யா வாதிகளுக்கு வாய்ப்பூட்டு போடுபவர்
மாயாவாதிகளான அருகருக்கு வெட்டரிவாள்
திவ்ய ஸ்வ மத அநுசாரி தொண்டர்களுக்கு கூடஸ்தர் -ஆள் படுத்தி அருளுபவர்
இவை எல்லாம் கண்டு அறிந்தீர்கள் அன்றோ

————

கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே. 73–

ஓயாமல் பருக வேண்டியதனால் முகந்து கொடு நிற்றும் என்கிறார்
விற்றல் -அடியாருக்கு அடியாராக்கி அருளுதல்
விலை கொள்ளுதல் -அவ்வடியாரையும் தம் அடியார் ஆக்குதல்
திருவாய் மொழியை வெள்ளமாக்கி அதற்கு ஏற்ப முழுவதும் உருவகம் செய்தலால் முற்று உருவக அணி

மாறன் அருளிச் செயல் வெள்ளப் பெருக்கே அஷ்டாங்க யோக சித்தி பெற வைக்கும்
1-நாள் தோறும் காதாரக் கேட்போம்
2-பருகிக் களிப்போம் -சுவைப்போம்
3-உள்ளத்தில் முற்றச் செய்வோம்
4-முழுவதும் விழும்படி கொட்டு விழுவித்து மகிழ்வோம்
5-அந்த வெள்ளத்தில் விழுந்து முழுகி விளையாடிக் களிப்போம்
6-அதை முகந்து மேலே கொட்டிக்கொண்டு வேறே எத்தாலும் பாதிக்கப்படாமல் இருப்போம்
7- அந்த வெள்ளத்திலே நீந்தி விளையாடிக் களிப்போம்
8- அவனுக்கே அற்றுத் தீர்ந்து ஆட் செய்து களிப்போம்
இது விசேஷ அஷ்டாங்க யோகமோ
மாறன் எம்மை வாங்கவும் விற்கவும் பெறுவர் என்று பறை சாற்றுவோம்

————–

பொருள் –அகப் பொருள்
திணை –உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி –இடத்தலைப்பாடு
துறை -கண் நயந்து உரைத்தல்

தலைவியின் கண் அழகு கண்டு வியந்த தலைவன் கூறுதல்

வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே. 74–

தலையின் அவயவங்கள் மலர் போல் தோன்றுவதால் -மலர் நிறைந்த கொம்பு என்கிறான்
கடலினும் பெரிய கண்கள் -கம்ப ராமாயணத்தில் உண்டே
இத்துறை முழுவதும் ஐய உவமை
மெய்ப்பாடு -பெருமிதம் -உவகையுமாம்
பயன் -கண் சிறப்பு உரைத்தல் ஹேதுவாக தலைவியைச் சார்தல்

முகம் கமலம் -கண் இணைகள் அதில் நீர் நிலைகள்
வதனம் மைதீர் கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள்
அன்றி சந்திரன் குறை யாகிய முயல் நீங்கி பூர்ண சந்திரன் இவள் முகத்தில் கள்ளமாகப் பரந்ததுவோ
அன்றி என் கள்ள மனம் தான் கறுப்பான கண்களாக இடம் கொண்டதோ -யான் அறியேன் –

————–

ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே. 75–

க்ஷேத்ர வாசமே உறுதி பயக்கும் உபாயமாகும்
ஆழ்வார் கடாக்ஷம் பெற பாக்யம் செய்து இருக்க வேண்டுமே
பெற்றால் தப்பான மயக்கங்கள் எல்லாம் தீரும் -கோணல் புத்தி போம் -கண் கூடாக தீவினைகள் போம்

திருக்கு அறும் –மாறுபாடுகள் நீங்கி விடும்
வாரும் என்பதற்கு நீங்கள் என்பதைத் தோன்றா எழுவாயாக்கிக் கொள்ள வேண்டும்
சொன்னேன் -தெளிவினால் வந்த கால வழு வமைதி

————–

பொருள் –அகப் பொருள்
திணை –மருதம்
கிளவி –பரத்தையில் பிரிவு
துறை –காமக்கிழத்தி மைந்தனை எடுத்தல்

அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே. 76–

அறு வகை சமயங்கள்
சவ்ரம் -வை நாயிகம் -சுப்ரமண்யம் -ஆக் நேயம் -வைஷ்ணவம் -பாசுபதம்
இவைகள் முறையே சூர்யன் -விநாயகர் -சுப்ரமணியன் -அக்னி -விஷ்ணு -சிவன் -அதி தெய்வங்கள்
சங்கர பாஸ்கர யாதவ பாட்ட பிரபாகர் தங்கள் மதம் என்றும் உண்டே
பொருவரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளீர்
இருவினையும் யுடையார் போல் அருந்தவறின்றி யற்றுவார்
திரு உறையும் மணி மார்பன் யுனக்கு என்னை செயற் பால
ஒரு வினையும் மறியார் போல் உறங்குதியால் உறங்காதாய்
ஆழ்வாரைச் சேர்ந்த நம்மை ஷூத்ர மார்க்கத்தில் நடப்பவர் தீண்டுவாரோ

கூற்று -காமக் கிழத்தி கூற்று
பயன் -காமக் கிழத்தி மகிழ்தல்

———-

தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே. 77–

ஆழ்வார் திவ்ய மங்கள திரு யருவோடே வாழ்ந்த காலத்தில் நான் பற்றிக் கொள்ளாத பிறவியோடே இருந்து கெட்டேனே –
அப்போதே அந்தத் திருவடிகளைப் பற்றி -அதையே சிந்தித்து உய்ந்து போகாமல் கெட்டேனே
அவர் பாவனப் படுத்தி என்னைத் தீ மனம் கெடுத்துபாவகன் -அக்னி -தூய்மைப்படுத்துவன் –
மருவித் தொழும் மனமும் தந்து அருளி இருப்பாரே

———–

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே. 78–

பாவகத்தால்–அம்சத்தினால்
கோவகத்தாற் கன்றி—-மேலான இடத்தை யுடையவர் -நித்ய ஸூரியான ஆழ்வாருக்கு அல்லாமல்

ஆழ்வார் 11 அவதாரம் –தானே தன்னைப் பாடிக் கொண்டார்
அவனைப் போலவே அநுகாரம் -கடல் ஞாலம் செய் தேனும் யானே என்னும் -உண்டே –

———–

குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே. 79–

இயலிசைக்கே–இலக்கணமும் பண்ணும் அமைந்த திவ்ய ப்ரபந்தங்களாலே —இயல் இசை -சினை ஆகுபெயர் –
மெய் கண்டு–ஆசிரியருக்கு கைங்கர்யங்கள் செய்து அவர் மூலம் திவ்ய ப்ரபந்தங்களில் தத்வ அர்த்தங்களையும் யதாவாகத் தெரிந்து கொண்டு

அருளிச் செயல்களை அறியாமல் அலகிடுதல் மெழுகிடுதல் கோலமிடுதல் செய்வார்களும்
அதிகார சம்பத்தி உண்டாகி மெய்யுணர்வு பெற்று உஜ்ஜீவனம் அடைவார்கள் அன்றோ
அதே போல் அடியேனும் ஆனேன் என்கிறார்

———–

பொருள் –அகப் புறப் பொருள்
திணை –கைக்கிளை
துறை -காட்சி ஆண்பால் கூற்று

தலை மகளைத் தலை மகன் கண்ணுற்று இஃது ஒரு வியப்பு என்றால் –
ஒரு தலைக் காமம்-கைக்கிளைத் திணையின் முதலான காட்சி என்னும் துறை இது

இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–80–

தனுவைப் பதித்து –இரண்டு விற்களை அமைத்து
முத்தங்குயிற்றி–முத்துக்களை பதித்து
கயலைக் கிடத்தி–இரண்டு கயல் மீன்களை வைத்து

களங்கம் துடைத்த மதி– முகத்துக்கும்
தனு -புருவத்துக்கும்
முத்துக்கள் -பற்களுக்கும்
கயல்கள் -கண்களுக்கும்
உவமை யாதலால் இவை அனைத்தும் உவமை ஆகு பெயர்கள்

பயன் -வியப்பினால் உள்ள மகிழ்ச்சி

கைக்கிளை அகத்துறை
திருக்குருகூரில் அவதரித்த சந்திரனே இவர் -களங்கம் அற்ற பூர்ண சந்திரன்
அப்ராக்ருதமான தெய்விக நிலை

————

இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே. 81–

இருப்பின் கிட்டத்திலும் வலியாரும்–இரும்புகள் உருக்குகின்ற உருக்குக் கிட்டானைக் காட்டிலும் வலிய நெஞ்சு உடையவரும்
ஓடைப் பழனத்திலும்–ஓடையாகிய பழனம் என்று கொண்டு இரு பெயர் ஒட்டு -நீண்ட வயல் என்ற பொருள் என்றுமாம்
இட்டத்திலும்–கருத்துக்களைச் சொல்லும் இடத்திலும்
பட்டத்திலும்-பட்டக் கால்களிலும் -தண்ணீர் பெருகும் காலத்தில் மட்டுமே ஏறிப் பாய்கிற மேட்டு நிலம்
ஏற்றத் தாழ்வு இல்லாமல் மீன்கள் பாய்தல் போல் ஆழ்வார் குண விசேஷத்தால் அறிந்தவரும் அறியாதவரும் கொடிய நெஞ்சுடையவரும் உருகுவார்கள் அன்றோ

திருக்குருகூர் வளம் பேசும் பாசுரம்
மனம் புத்தி செயல் எல்லாவற்றிலும் இரும்பு போல் வலிய நெஞ்சினாரையும் உருக வைக்கும் அருளிச் செயல்கள்

————

குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–

பெருந் தண் வகுள மணம் வேண்டும் –பெரிய குளிர்ந்த மகிழ மலரின் மணம் விரும்பி உறைகின்ற
தண் தெரியல் பெருமான் –குளிர்ந்த மாலையுடைய ஆழ்வாரது
செய்யுள் மா மணியின் கணம் –பாடல்களாகிய இரத்தினைக் கூட்டத்தை
வேண்டும் என்றறிவாரைக் –கற்க வேண்டும் என்று அன்புடன் படித்து அறிந்தவரை
கண்டால் –தர்சித்தால்
குணம் வேண்டுமே –அவர்களுக்கு நற் குணங்கள் வேண்டுமோ -வேண்டாமே
நற் குலம் வேண்டுமே -நல்ல குலமாக இருக்க வேண்டுமோ -வேண்டாமே
யக்குலத் தொழுக் காம்-அக் குலத்துக்கு உரிய நடையாகிய
பிணம் வேண்டுமே –பயன் அற்ற பிணம் போல்வதும் வேண்டுமோ -வேண்டாமே
செல்வப் பேய் வேண்டுமே -பொருளாகிய பிசாசுசம் வேண்டுமோ வேண்டாமே
ஆதலால்
சென்று கைத் தொழுமே–உடனே அருகில் சென்று கை கூப்பி வணங்குங்கள்
திருவாய் மொழியை அன்புடன் படிப்பவர்களைக் கண்டால் அவர்கள் குளம் இத்யாதிகளை பார்க்காமல் உடனே சென்று வணங்குங்கல்

குணம் குலம் ஒழுக்கம் செல்வம் அனைத்தையும் அருளும் ஆழ்வார் அருளிச் செயல்கள்
ஆழ்வார் அருளிச் செயல் அனுபவமே வேண்டும் என்று இருப்பாரே நாடிச் சென்று ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்போம்

————-

தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென் நாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே. 83–

கோ என்னும் எழுவாய் ஆம் என்னும் ஆக்கத்தைக் கொண்டு முடிந்தது

என்னைப் பிறப்பு அறுத்தான் -அவன் கீர்த்தியையே பாட வைத்து என் நா தழும்பு ஏறச் செய்தான்
மனம் மொழி செயல்கள் வேறே எங்கும் பட்டி மேயாதபடி தனக்கேயாம்படி நல் அருள் செய்தான்
குன்ற மாடத் திருக்குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்விலன் காண்மினே –

———–

பொருள் -அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
கிளவி –அறத்தொடு நிற்றல்
துறை –செவிலி நல் தாயத்து அறத்தொடு நிற்றல்

நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்

பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே. 84–

தாமிரபரணி நீர் ஆழ்வார் அருள் கரை கடந்து அலை வீசி ஸகல தாபங்களையும் குளிரச் செய்யுமே –
திருக்குருகூர் பெயர் கேட்ட மாத்ரத்திலே கண்கள் நீர் சொரிந்து உள்ளமும் உடலும் உருகுமே
மகிழ மலரை-மரத்தையே – சூடிக் கொள்ளப் பாரிக்கிறாள்

இப்படி அன்றி -உன் மக்கள் கருத்து இது -என்று வருவித்து முடிக்கவுமாம்

————-

பொருள் -அகப் பொருள்
திணை -உரிப்பொருளாற் பாலை
கிளவி –உடன் போக்கு
துறை -பாங்கி தலைவனை உடன் படுத்தல்

தலைவனை நோக்கித் தோழி தலை மகளை உடன் கொண்டு போகச் சொல்லுதல் –

கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற் கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே. 85–

ஒரு மணம்–பிரமம் -பிராசாபத்தியம் -ஆரிடம் -தெய்வம் –
காந்தர்வம் -அசுரம் இராக்கதம் பைசாசம் போன்ற
எட்டு வகை திருமணங்களில் இது காந்தர்வ மணம் ஆகும்-இவளைக் கைக் கொண்டு செல்வீராக

பாகவத நிஷ்டையில் ஆழ்ந்த –கொண்ட பெண்டிர் உடன் இல் வாழ்க்கையும் மெய்யுணர்வைத் தரும் –
அது ஆழ்வார் திருவடி பலத்தால் உண்டாகும்
நீரின் நிறை என்பதை ஒழுக்கத்தின் நிறை -கற்புடைமை -இரட்டுற மொழிதலாகும்
இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நிறை துணை
ஆழ்வார் திருவடி சம்பந்திகள் கைங்கர்ய ஸ்ரீ யில் ஈடுபடுத்தி உய்யச் செய்யும்
ஆழ்வார் அடியார்களான தேன் கிடைத்து அந்தமில் பேர் இன்ப பெரு வீட்டு இன்பமும் பெறப் பெறுவீர்

———–

கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே. 86–

குணம் -ஆழ்வார் அடியார்களின் -ஸ்வரூப ரூப சேஷ்டிதங்களுக்கும் உப லக்ஷணம்
நாட்டம் -ஆழ்வார் ஆச்சார்யர்கள் தனியன்கள் வாழித் திரு நாமங்கள் சொல்லி ஆனந்த அனுபவ பரிவாஹம்
ஆழ்வாரை அனுபவிக்கும் கூட்டங்களில் அனுபவ கண்ணீர் பெருகி ஓடக்கண்ட இந்த பேறு வீட்டின்பத்தையும் உறுதி செய்யுமே

————–

பொருள் -அகப் பொருள்
திணை –குறிஞ்சி
கிளவி –வரைவு முடுக்கம்
துறை –தினையொடு வெறுத்து வரைவு கடாதல்

பகல் குறியில் தலைமகனுடன் தலை மகளைச் சேர்த்து வைத்த தோழி
பின்பு தலைவன் சிறைப் புறமாக அவன் செவிப்படுமாறு தினையோடே வெறுத்து வரைவு கடாதல்

விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் கார்ப் புனமே. 87–

தென் பாலை வழி -யமபுரத்துக்குச் செல்லும் கொடிய வழி-கார்ப் புனமே–பெரிய தினைக் கொல்லையே
இங்குள்ள தினைப்புனமே எங்கள் வினைகளை அகற்ற வல்லதாய் இருக்குமே-

———–

தலைவன் வரும் புனல் கண்டு வருந்துதல் –

புனம் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே. 88–

முற்றிய விளைவை உடையவர் கொண்டு போனார்கள் -வெறும் கட்டையாக நீ அழிய வேண்டியது தான்
ஆழ்வார் திருவடி சம்பந்தத்தாலும் அருளிச் செயல்களின் உணர்வினாலும் வினை விளைவுகள் எல்லாமே அறுபட்டுப் போய் உடல் அழிந்து ஆத்மா உஜ்ஜீவனம் அடைவதைக் காட்டும்
புனம் பாழ் படுத்து என்று மறு பிறப்பு இல்லை என்றது
மனம் பாழ் படுத்தது என்றது உலக நினைவுக்கு சற்றும் இடம் இன்றிக்கே நெஞ்சு நிறையப் புகுந்தான்

திருமால் இருஞ்சோலை என்றேன் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் போலவே –
இங்கு புனம் என்றது வினை விளையும் இடமான உடலைச் சொன்னவாறு
ஏவினார் கலியார் நலிக என் தன் மேல் எங்கனே வாழுமாறு
ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா -பெரிய திருமொழி -1-6-8-
நின்றான் குன்று -அசலம் -உறுதியைச் சொன்னவாறு
எவ்வளவு தடைகள் இருந்தாலும் சலியாமல் கரை ஏற்றியே தீருவான்
கதிரும் இல்லாமல் என் தலைவியும் இல்லாமல் நீ பாழாகி விட்டாய் தினைப்புனமே -இனி நீ வாழ மாட்டாய் –

———-

பொருள் –அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -மையுறு கண்ணி கையற வெய்தக் கண்ட தோழி யுட்க்கொண்டு புலம்புதல்

பிரிவு ஆற்றாத தலைவி அன்றிலின் குரல் கேட்டு அயர்தல்–

தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே. 89–

தினை -மிகச் சிறிய –பனை -மிகப் பெரிய-கூவி என்னை நலியும் அன்றில் பறவைகளுக்கு இடம் கொடுக்கும் பனை அன்றோ
அன்றில் -பனை -மகிழ மலர் -இவை எல்லாம் காம உத்தீபனம் அன்றோ

————

பொருள் –அகப் பொருள்
திணை –குறிஞ்சி
கிளவி -பிரிவுழிக் கலங்கல்
துறை -கண் படை பெறாது கங்குல் நோதல்

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே. 90–

மூன்றையும் வேரினோடும் பறித்து–காமம் வெகுளி மயக்கம் -முக்குறும்பையும் ச வாசனமாகப் போக்கி அருளி
வகையாய் வருவன யாவையும் மாற்றி--ஆகாமிய சஞ்சித பிராரப்த கர்மங்கள் எல்லாவற்றையும் போக்கி அருளி

ஆழ்வார் திரு நாமம் -சடகோபன் -ஸக்ருத் உச்சாரணம் -ஒன்றே வினைகளைப் பாற்றி
முக் குறும்புகளையும் அறுத்து தாபத் த்ரயங்களையும் போக்கி அருளும்
சங்கீர்த்திய நாராயண ஸப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் ஸூ கினோ பவந்து –
மீண்டும் தீ வினைகள் புகா வண்ணம் அருளும்
காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள் மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -பெரிய திருவந்தாதி -22-
வினைகாள் உமக்கு இனி வேறு இடம் தேட வேண்டும் –பிள்ளை அந்தாதி –

————

பொருள் -அகப் பொருள்
திணை –உரிப்பொருளால் நெய்தல்
கிளவி –வரைவு கடாதல்
துறை –தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி செப்புதல்

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு பாங்கி இரங்குதல்

பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே. 91–

தலைவன் ஒரு புறமாக வரும் பொழுது அறியாதவள் பொல்லாத தலைவியின் விஸ்லேஷ விரஹ தாபத்தைத்
தோழி சொல்லுவதால் தலைவன் கேட்டு விரைந்து வருவான் ஆதலால் வரைவு கடாதல் கிளவியும் துறையும் ஆயிற்று

————-

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே. 92–

இருமையும் தீர்ந்த பிரான்--யானே என் தனதே என்று இருந்த அஹங்கார மமகாரங்களைப் போக்கி அருளிய ஆழ்வார்
தாவில் அரும் பொருள் –கெடாத அரிய செல்வமான பரம புருஷார்த்தம்
யான் எனது என்னும் செருக்கு அறுந்தாலே வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகுவோமே

கைங்கர்ய ரூபமாகவே கர்மங்களை செய்யவே பிறவி சக்கரம் ஒழியும் என்கிறார்

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-

————–

பொருள் –அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -இரவு உறு துயர இகுளைக் கூறல்

இருளுக்கு ஆற்றாத தலைவியைக் குறித்துத் தோழி இரங்குதல் –

அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. 93–

கரும்பு ஒக்கும்–கரும்பு போல் இனியது என்னாமல்-ஆழ்வார் அருளிச் செயல்கள் போல் கரும்பு இனியது என்கிறார்

ஆயிழை –வினைத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
துயரைச் செய்கின்ற இருளைத் துயர் என்றது குறிப்பு மொழி

————-

அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே. 94–

மோக்க மாலை–மோக்ஷ மாலை -திருவாய் மொழிக்கு திருநாமம் சாத்தி அருளுகிறார்

—————

தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. 95–

அருளிச் செய்சல்களைக் காதாலே கேட்பதுவும் -நாவால் பாடுவதும் -பொருள் அறிந்து இயங்கவதும் விட
வேறே சிறந்த தபஸ் உண்டோ

————

பொருள் –அகப் பொருள்
திணை –நெய்தல்
கிளவி –இடந்தலைப்பாடு
துறை -புகழ்தல்

தலைவன் தலைவியின் நோக்கினாலாய வருத்தம் கூறுதல்

உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே. 96–

உண்டாட் டியலும்–மகிழ்ச்சி கொண்டு திருக் கூத்துக்கள் மூன்றினையும் செய்து அருளிய
அல்லியம் –மல் –குடம் -என்னும் மூன்று திருக் கூத்துக்கள்
அல்லியம் -குவலயாபீடத்தின் தந்தங்களை முறித்த பொழுது ஆடிய கூத்து
மல் ஆடல் -மல்லர்களை முடித்து ஆடியது
குடம் -வாணாசுரனை வென்ற மகிழ்ச்சியால் தெருவில் குடக் கூத்து ஆடியது
இவை மூன்றும் புறக் கூத்துக்கள் –

திருமாலுக்கு அடிமை
பரத்வத்தில் விஷ்வக் சேனராக
இங்கு நம்மாழ்வாராக
ஆஸ்ரிதர்களுக்கு பரமாச்சார்யராக
திருச்செங்கண் -இத்தையே பெயராக திருச் செங்கணித்துறை
இங்கு துள்ளும் கயல்களும்  தன் பால் ஆதரம் வைக்கும் கமலச் செங்கண் அழகு அன்றோ

———–

பொருள் -அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -மாலை பெறாது வருந்திய தலைவி காதல் கைம்மிக்கு கையற யுரைத்தல்

பிரிவு ஆற்றாது வருந்தும் தலைவி இரங்கல் –

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே. 97–

காம நோய் கொண்டாருக்கு நிலவு வெயில் போல் சுடுமாதலால் தீ என்கிறார்
பேய்க்கு பனை மரத்தை உவமித்தார்
கரு நெடும் பனங்காடு முழுமையும் காலும் கையும் யுடையன போல்வன -கலிங்கத்துப் பரணி
மெய்ப்பாடு -அழுகை
பயன் -ஆற்றாமை நீங்குதல்

புலி புண்டரீகம் தாமரை லஷித லஷணம்

————

இதுவும் அது-பொருளும் திணையும் துறையும் கீழ் பாசுரம் போலவே –

வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு தட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே. 98–

கொடுங்கோகு தட்டி -வளைந்த தோள்களைத் தட்டிக் கொண்டு
சல்லம் புலி யிட்டு -முள்ளம்பன்றி போல் ஒத்து

தாயைப் புலி என்று அதற்கு ஏற்பப் பாய்கின்றது என்றதனால் உருவக அணி
விரஹம் கொண்டு கலங்கி விழுதலால் தாய் புலி போல் பாய்கின்றாள் எனவும்
அவள் வார்த்தை முள்ளம்பன்றி யுடைய முள் போல் தைக்கின்றது எனவும்
சந்திரனது நிலவைக் கண்டு அதுவும் விரஹத்தை அதிகரித்தலால் அதுவும் தோன்றிற்று என்று வருந்திக் கூறுகிறாள் –

———–

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே. 99–

நாற்று இட்டு நெல் பயன் கொள்ளுவது போல்
திருவாய் மொழி எனது மனத்தில் இருப்பதால் இப் பிறப்பால் இன்னும் வினைகளைச் சேர்க்க முடியாதே

திருவாய் மொழி அனுசந்தானம் என்னுள் நிறைந்து உள்ளதால் பிரமன் என்னை மீண்டும் படைக்க வல்லன் அல்லன் என்கிறார்

—————-

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள். 100–

மனை பெரும் செல்வம் வாழ்வு பசு பத்னி சுதன் ஆலயம் -சர்வமும் ஆழ்வாரே-மற்றை வாழ்வு -சுற்றத்தார் சேர்க்கை -எண் வகைப் போகம் தசாங்கம் போல்வன
மாதா பிதா யுவதியை தனய விபூதி -எல்லாம் எனக்கும் எனது சந்ததியாருக்கும் ஆழ்வாரே -ஆளவந்தார்

——–

மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே

மன்றே புகழும் மாறனை
மன்றே புகழும் மதுர கவிப் பெருமாள்
மன்றே புகழும் தென் தமிழ் தொடையில் ஒன்றே பதிகம்
மன்றே புகழும் பதிகம் யுரைத்தவன் பொன்னடி
மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல்
மாறனை முன் சென்றே மதுர கவிப் பெருமாள் –சாஷாத்தாக அனுபவிக்கப் பெற்றார் –முன் சென்று –
அவர் பொன்னடி உற்று நின்ற திரு வழுந்தூர் வள்ளல்
இவர் இடம் செய்த பிரபத்தி பலனாகவே உதித்த இப் பிரபந்தம் என்றபடி

கம்பன் பிறந்தவூர் காவேரி தங்குமூர்
கும்ப முனி சாபம் குலைந்தவூர் -செம் பதுமத்து
தாதகத்து நான் முகனும் தந்தையும் காணா நான் மறையை
ஓதுவித்து வாழும் அழுந்தூர்

இவர் காளி தேவிக்கு அடிமை செய்தவர் ஆதலால் அவளையே பந்தம் பிடிக்கச் சொல்லி கம்ப ராமாயணம் இயற்றினார்
ஒற்றியூர் காக்க யுறைகின்ற காளியே
வெற்றியூர் காகுத்தன் மெய்ச்சரிதை பற்றியே
நந்தன எழுதுதற்கு நல்லிரவில் மாணாக்கர்
பிந்தாமல் பந்தம் பிடி

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பூர்வ ஆச்சார்யர்களின் ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்துதி —

September 4, 2022

ஸ்ரீமத் பாகவதம்–

கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா
கசித் க்வசித் மகாபாகா த்ரமிடேஷூ சபூரிசா
தாம்ரபர்ணீ நதீ யத்ர கிருதமாலா பயகி தீ
காவேரீ ச மகாபாகா ப்ரதீசீ ச மகா நதீ –ஸ்ரீமத் பாகவதம்–என்று மகரிஷி அருளிச் செய்தான் –

ஸ்ரீமத்பாகவதம் 11ஆம் காண்டம் 5ம் அத்யாயத்தில் கரபஜன மஹரிஷி, நிமி மஹாராஜனுக்கு கலியுகத்தில்

எம்பெருமானின் வழிபாட்டுக்கு விரோதமாய் உள்ளவர்கள், அமைதியை இழந்தவர்கள்,

எம்பெருமானின் நாமங்கள், ரூபங்கள் மற்றும் அவனை அடைவதற்கான உபாயங்கள் ஆகியவற்றை போதனை செய்து வருகிறார்.

அப்பொழுது ஸாதிக்கிறார்:

க்ருதாதிஷு ப்ரஜா ராஜன் கலாவ் இச்சந்தி ஸம்பவம் |
கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண-பராயணா: |
க்வசித் க்வசின் மஹா-ராஜ த்ரவிடேஷு ச பூரிஷ: || 38.

தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்வினீ |
காவேரீ ச மஹா-புண்யா ப்ரதீசீ ச மஹாநதீ ||39.

யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஷ்வர |
ப்ராயோ பக்தா பகவதி வாஸுதேவே(அ)மலாஷயா: || 40

“அரசே! ஸத்ய யுகம் மற்றும் பிற யுகங்களின் வாசிகள் இந்தக் கலியுகத்தில் பிறவியெடுக்க மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
ஏனெனில் இந்த யுகத்தில் நாராயணின் பக்தர்கள் பலர் இருப்பார்கள்.
இவர்கள் பல்வேறு இடங்களில் தோன்றி ஹரியிடம் அளவில்லா பக்தி கொண்டிருப்பார்கள்.
வேந்தே! இவர்கள் பலவிடங்களில் தோன்றினாலும் குறிப்பாக வளங்கள் நிறைந்த த்ராவிட தேசத்தில் பாய்ந்தோடும் புண்ய நதிகளான
தாம்ரபர்ணி,
க்ருதமாலா,
பயஸ்வினி,
மிகவும் புண்யம் வாய்ந்த காவேரி,–கங்கையின் புனிதமாய காவிரி 

பிரதீசி,
மஹாநதி ஆகிய நதிகளின் கரைகளிலும்
மற்றும் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் கரைகளிலும் அநேகமான பேர்கள் தோன்றுவார்கள்.
அப்புண்ய நதிகளின் தீர்த்தத்தைப் பருகுபவர்கள்
வாசுதேவனின் பரம பக்தர்களாக இருப்பார்கள்” என்று தலைக் கட்டுகிறார்.

தாமிரபரணி – நம்மாழ்வார், மதுரகவிகள்
வைகை – பெரியாழ்வார், ஆண்டாள்
பாலாறு – பொய்கை, பேயாழ்வார்,பூதத்தாழ்வார்
பேரியாறு – திருமழிசை
காவிரி – தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்.

—————

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரமும் ஸ்ரீ திருவாய்மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தர மீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி
திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ர வாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்ய ஹ்ருதயத்திலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

———-

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள்–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள்–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்

ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள்–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவேங்கட மாலை-காப்பு -நம்மாழ்வாரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திரு அழகர் அந்தாதி–காப்பு –

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- திரு நூற்று எட்டு திருப்பதி அந்தாதி -காப்பு –

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- ஸ்ரீ ரங்க நாயகர் ஊஞ்சல் –காப்பு பாசுரமும் பாசுரம்–1

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –1-

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருப் பேரனாரான கோனேரி அப்பன் ஐயங்கார் அருளிய- ஸ்ரீ ரங்க நாயகி ஊஞ்சல் –காப்பு –

ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள்

ஸ்ரீ மணவாள மா முனிகள் ஸ்வாமிகள்

ஸ்ரீ ஜீயர் நாயனார் ஸ்வாமிகள்


ஸ்ரீ ஆளவந்தார்

ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க்ரஹம் |
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர: தம் வந்தே யாமுநாஹ்வயம் ||

யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும்
புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச்செய்தவருமான ஆளவந்தாரை வணங்குகிறேன்.

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: |
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: ||

ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.

ஸ்ரீ ப்ரஹ்ம ஜ்ஞானம் அதிக்ருதாதிகாரமாய் போகாமே சர்வாதிகரமாம் படி த்ராமிடியான ப்ரஹ்ம சம்ஹிதையை
மயர்வற மதி நலம் -என்கிற பக்தியாலே வாசிகமாக்கி
மரங்களும் இரங்கும் வகை என்கிற தம்முடைய ஆகர்ஷகமான ஈரச் சொல்லாலே அருளிச் செய்கையாலும்
பெரிய முதலியாருக்கு இந்த ஜ்ஞானத்துக்கு உபாதானம் ஆழ்வார் ஆகையாலும் அவர் திருவடிகளிலே விழுகிறார்

உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் -என்றும்
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள -என்றும்
எல்லாம் கண்ணன் -என்றும்
பெரிய முதலியாரையும் ஸ்ரீ பராசர பகவானையும் போலே கிருஷ்ண வித்தராய் இருக்கும் படியையும் நினைந்தது ஆழ்வார் திருவடிகளில் சரணம் புகுகிறார்

ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் ப்ராவண்யம் அடியாக பிறந்த ஜ்ஞாநத்தை
ஸ்ரீ ஆழ்வார் பிரசாதத்தாலெ பெற்று -தம் அளவிலே பர்யவசிக்கை அன்றிக்கே
பின்பு உள்ளார்க்கும் உபகாரமாம் படி
இந்த தர்சன ஸ்தாபகர் ஆனபடியாலும் –
ஸ்ரீ மணக்கால் நம்பி -பெரிய முதலியார் உடைய அர்த்தம் இது
உம்முடைய பேற்றுக்கு எல்லாம் அவருடைய திருவடிகளிலே சம்பந்தமே -என்கையாலும்
அவரை ஆஸ்ரயிக்கிறார்

இதை நினைத்து இறே ஸ்ரீ பட்டர் – ப்ரதமமபி குரும் நாத மீடே -என்றதும் .
வேத காரணமான பிரணவம் வேதாத் யந்தம் களிலே ஆனால் போலே –

இங்கும் ஆதி அந்தம் களிலே ஆசார்ய ஸ்துதி யாய் நடுவிலே பகவத் ஸ்தோத்ரம் ஆக இருக்கிறது –

இந்த ஜ்ஞானம் அதிக்ருதாதிகாரமாய்ப் போகாமே சர்வாதிகாரமாம் படி
த்ராவிடமான ப்ரஹ்ம சம்ஹிதையை
மயர்வற மதி நலம் அருளினான் -என்கிற பக்தியாலே வாசிதமாக்கி
மரங்களும் இரங்கும் வகை -திருவாய் மொழி -6-5-9-என்கிற
தம்முடைய ஆகர்ஷகமான ஈரச் சொல்லாலே அருளிச் செய்கையாலும்
பெரிய முதலியாருக்கு இந்த ஜ்ஞானத்துக்கு உத்பாதகம் ஆழ்வார் திருவடிகள் ஆகையாலும்
இவர் திருவடிகளிலே விழுகிறார் –

எத்திறம் -திருவாய்மொழி -1-3-1- என்றும்
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள -திருவாய்மொழி -5-10-3- என்றும்
எல்லாம் கண்ணன் -திருவாய்மொழி -6-7-1- -என்றும்
பெரிய முதலியாரையும்
ஸ்ரீ பராசர பகவானையும் போலே
கிருஷ்ண குணவித்தராய் இருக்கும் படியையும் நினைத்து
ஆழ்வார் திருவடிகளிலே சரணம் புகுகிறார் –

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மதநவ்யாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம்
ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –5-

மாதா –
உத்பத்திக்கு முன்னே வரம் கிடந்தது
பெருகைக்கு வருந்தி
பத்து மாசம் கர்ப்ப தாரணம் பண்ணி
பிரசவ வேதனையை அனுபவித்து
அஸூத்திகளையும் மதியாதே
பால்ய தசையிலே ஆதரித்து
பகவான் ஆனாலும் இவன் புருஷ பாஷணம் பண்ணப் பொறுத்து
அகல இசையாதே
அவன் பிரியத்தையே வேண்டும் –
மாதாவைப் போலே உபகாரகனாய் இருக்கை –

பிதா –
அவள் பாத்ர மாத்ரமாம் என்னும்படி
உத்பாதகனாய்
என்றும் ஒக்க ஹித பரனான பிதாவும்

யுவதயஸ் –
இருவரையும் மறந்து விரும்பும்
யுவதிகளைப் போலே நெஞ்சுக்கு இனியராய் இருக்கை

தனயா –
அவளுடைய யௌவனத்தை அழிய மாறிப் பெற்றவனாய்
பால்யத்தில் ஸூககரனாய்
பக்வ தசையில் ரஷகனாய்
ஆமுஷ்மிகத்தில் நிரய நிஸ்தாரகனான-புத் -என்னும் நரகத்தை -தாண்டுவிப்பவன் –
புத்ரனைப் போல் இருக்கை –

விபூதி –
விபவம் இல்லாத போது இவை எல்லாம் அசத் சமமாய் இருக்கையாலே
இவற்றை நன்றாக்கும் ஐஸ்வர்யம் போலே உத்தேச்யமாய் இருக்கை –

சர்வம் –
அனுக்தமான சர்வ போகங்களுமாய் இருக்கை –

யதேவ –
அவதாரண்த்தாலே –சேலேய் கண்ணியர்-திருவாய் மொழி -5-1-8-
என்று இருக்கும் ஆழ்வார் நினைவு இன்றி இருக்கை –

நியமேன
என்றும் ஒக்க அவருக்கு பிரியம் என்று போமது ஒழிய
ப்ராமாதிகமாகவும் புறம்பு போவது அன்றிக்கே இருக்கை –

மதநவ்யாநாம் –
வித்யயா ஜந்ம நா வா –என்று ஸூர்யன் வாயு இருவருக்கும் வித்யை ஜந்ம புத்திரன் தன்மை அடைந்த ஹனுமான் –
உபய சந்தான ஜாதருக்கும்

ஆத்யஸ்ய –
வைதிக சந்தானத்துக்கு பிரதம ஆசார்யராய் இருக்கை –

ந குலபதேர் –
ஸ்திரீக்கு பர்த்ரு குலம் போலே
கோத்ர ரிஷிகளும் அவரே என்கை –

வகுளாபி ராமம் –
திரு மகிழ மாலையாலே அலங்க்ருதமாய் உள்ளத்தை –
மகிழ் அலங்காரமான திருவடிகள்

இத்தாலே திருவடிகளில் பரிமளத்தாலே வந்த போக்யதையைச் சொல்லுகிறது –
நல்லடி மேல் அணி நறு துழாயை -திருவாய் மொழி -4-2-2-வ்யாவர்த்திக்கிறது –

ஸ்ரீ மத
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யோடே நித்ய சம்யுக்தமாய் இருக்கை –
அப்ர வீச்ச ததா வாக்யம் ஜாதக்ரோதா விபீஷண
அந்தரி ஷகதஸ் ஸ்ரீமான் ப்ராதரம் ராஷஸாதிபம் -யுத்த -16-17-
பரமாபதமா பன்னோ மனஸா சிந்தயத் ஹரிம்
ஸ து நாக வர ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-47-
சர்வ பரியகரஸ் தஸ்ய ராம ஸ்யாபி சரீரத
லஷ்மனோ லஷ்மி சம்பன்னோ பஹி ப்ராண இவாபர -பால -18-28-என்று
பகவத் பிரத்யாசத்தியை ஐஸ்வர்யமாக சொல்லக் கடவது இறே –
என்னுடைய சம்பத்துக்கு அடியான ஐஸ்வர்யத்தை உடையார் -என்றுமாம்

ததங்க்ரி யுகளம் –
அது -என்னும் அத்தனை ஒழிய
பேசி முடிக்க ஒண்ணாது -என்கை –

யுகளம் –
சேர்த்தியால் வந்த அழகை உடைத்தாய் இருக்கை –

ப்ரணமாமி மூர்த்நா
ஆழ்வார் உடைய திருவடிகளை நினைத்த வாறே
நம -என்று நிற்க மாட்டாதே
அவர் திருவடிகளிலே தலை சேர்க்கிறார் –

கீழ் உபகாரகரை ஆஸ்ரயித்த இத்தால் செய்தது
முமுஷூவுக்கு உபகாரகரே சேஷித்வ பிரதிபத்திக்கு விஷய பூதரும் ஸ்துத்யரும்
என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று

ஒருவருக்கு சேஷிகள் இருவராம் படி இருக்கை எங்கனே -என்னில்
ஸ்ருதி சேஷித்வம் யாகத்துக்கும் புரோடாசத்துக்கும் உண்டானால் போலே
ஈஸ்வரன் பிரதான சேஷியாய்
ததீயர் த்வார சேஷிகளாம் இடத்தில் விரோதம் இல்லை

அதவா
நிருபாதி சேஷி அவன்
தத் சம்பந்தம் அடியாக வந்தது ஆகையாலே பாகவத சேஷித்வம் சோபாதிகம் என்றுமாம் –

தமக்கு ஸ்தோத்ர ஆரம்ப ஹேதுவான
ஜ்ஞான பக்த்யாதிகள்
பிதா மஹோபாத்ததனம் -என்கைக்காக-

முதல் மூன்று ஸ்லோகத்தாலே
பெரிய முதலியார் உடைய ஜ்ஞான பக்த் யாதிக்யம் -சொன்னார்

நாலாம் ஸ்லோகத்தாலே -இவ் வர்த்தம் த்ரைவித்ய வ்ருத்தானுமதம் -அதாவது –
வைதிகரும் பெரியோருமான பராசரால் அனுமதிக்கப் பட்டது -என்கிறார் –

ஐஞ்சாம் ஸ்லோகத்தாலே இவருக்கு இந்த ஜ்ஞானம் ஆழ்வாராலே வந்தது -என்கிறார் –

மத் அன்வயாநாம் யதேவ நியமேன
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம்
ஆத்யஸ்ய ந குலபதே வகுளாபி ராமம்
ஸ்ரீ மத் அங்க்ரி யுகளம் மூர்த்நா ப்ரணமாமி -என்று
அந்வயம் –

(ஆத்யஸ்ய ந குலபதே-எங்கள் பிரபன்ன குடித் தலைவர் -விப்ரர்க்கு கோத்ர-சரண -ஸூத்ர கூடஸ்தர்
பராசர பாராசார்ய போதாய நாதிகள்–பிரபன்ன ஜன கூடஸ்தர் -பராங்குச பரகால யதிவராதிகள்-
ஆத்யஸ்ய ந குலபதே–ஸ்ரீ லஷ்மி நாதனை சொல்லி -ஸ்ரீ மத் அங்க்ரி யுகளம்-ஸ்ரீ சடகோபரை சொல்லிற்று என்றுமாம் –
நம்மாழ்வாரை சொல்லுவதே உசிதம் என்பது பூர்வர்கள் திரு உள்ளம் –
மத் அன்வயாநாம்-இவருக்கு முன்பு உள்ளோர்க்கும் பின்பு உள்ளோர்க்கும் -ஸ்ரீ வைஷ்ணவ சந்தானங்களுக்கு அனைவருக்கும்
ஆழ்வார் திருவடிகளே சர்வஸ்வம் -என்றதாயிற்று -வகுளாபி ராமம்–மகிழ் மாலை மார்பினன் -வகுளாபரணர்)

—————

ஸ்ரீ கூரத்தாழ்வான்

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

ஸ்ரீ மத் கூர குலாதீசம் ஸ்ரீ வத் சாங்கம் உபாஸ்மஹே
அக்ரயம் யதீந்திர சிஷ்யாணாம் ஆத்யம் வேதாந்த வேதிநாம்

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத் தாழ்வான்-

வாசா மகோசர மகா குண தேசிகாக்ர்யா கூராதி நாத  –

அர்வாஞ்சோ யத்பத சரசிஜத் வந்தவம் ஆஸ்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யா நவயம் உபகதா தேசிகாம் உக்திமாபு
சோயம் ராமானுஜ முநி ரபி ச்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் சம்பந்தாதம நுத கதம் வர்ண்யதே கூர நாத

மாறன் அடி பணிந்து உயந்த ராமானுஜன் திரு உள்ளம் உகக்கவும்
ஆழ்வாரை வணங்காமல் எம்பருமான் இடம் சென்றால் திருமுகம் பெறமாட்டாமையாலும்
இதிலும் அடுத்த ஸ்லோகத்தாலும் ஆழ்வாரைத் தொழுது இறைஞ்சுகிறார்

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் ––ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்–2-ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 1-

யாதொரு நம்மாழ்வார் திருவடி இணையானது பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ –
யாதொரு திருவடி இணையே சர்வகாலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமாக இருக்கின்றதோ
யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றும் இல்லாதவர்களுக்குத் தஞ்சமாக இருக்கின்றதோ
அப்படிப்பட்ட பரம பாவனமான நம்மாழ்வார் திருவடி இணையை ஆஸ்ரயிக்கக் கடவோம் –

தத் வகுளாபரண அங்க்ரி யுக்மம் –ஸம்ஸ்ரயேம–மகிழ் மாலை மார்பினன் -என்று தாமே
பேசிக் கொள்ளலாம் படி வகுளமாலையை நிரூபகமாக உடையவர்

யத்-த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம்
த்ரை வித்ய வ்ருத்தர் ஆகிறார் மதுரகவிகள் போல்வார்
மேவினேன் பொன்னடி மெய்ம்மையே
குருகூர் நம்பீ முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –
ப்ராவண்யம் உடையார் தம் தலைக்கு பூஷணமாக கொள்வர்
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே
அரசமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ண மாட்டேன் மற்ற அரசு தானே

இங்கு –த்ரை வித்ய வ்ருத்தம் -சப்தம்
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசனையே கருத்தில் கொண்டதாகும்
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்த
ராமானுஜன் போன்ற மஹ நீயர்கள் என்கை

சாத்விக ஜனஸ்ய-நித்யம் -யதேவ -சம்பத்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று -என்று அன்றோ
சாத்விகர்களது அத்யவசாயம்
லௌகீகர்கள் சம்பத்தாக நினைத்து இருக்கும் வஸ்து வஸ்து ஸ்திதியில் விபத்தமாய் இருக்கும்
உபய விபூதியும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யம் உடையவர் இட்ட வழக்காய் இருக்குமே
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேந மத் அந்வயா நாம் -என்று அருளிச் செய்த
ஆளவந்தார் போல்வாரை இங்கே சாத்விக ஜனம் என்கிறது

நித்யம்
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம்-என்னுமா போலே
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய
எம்பெருமான் தன்னாலும் திருத்த ஒண்ணாது என்று கைவிடப்பட்டவர்கள் அசரண்யர்
அவர்களையும் வலியப் பிடித்து இழுத்து –
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்வன் கேண்மினோ –இத்யாதிகளை உபதேசித்து
திருத்திப் பணி கொண்டவர் அன்றோ

புண்யம்
புநா தீதி புண்
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாய் நின்ற நிலையைப் போக்கி
சகல ஆத்மாக்களை பரிசுத்தமாக்க வல்லவை
புண்யம் ஸூந்தரம் -பர்யாயம் -அழகிய திருவடிகள் என்றுமாம் -என்றாலும் பாவனத்வத்திலே இங்கு நோக்கு

ஆக இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளை வணங்கின படி சொல்லிற்று ஆயிற்று

———————-

ஆழ்வாருக்கு மங்களா சாசனம் -கடலாக உருவகம் -நான்கு விசேஷணங்கள்
பயோநிதிக்கு இருக்கக் கடவ தன்மைகள் ஆழ்வார் இடம் குறைவற இருக்கும் படியை மூதலித்து அருளுகிறார்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிர் அச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர் அஸீம பூமா –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்–3-

பக்தியின் கனத்தினால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப்பட்ட சார பூதமான
ப்ரணயமாகிற தீர்த்தத்தினுடைய ப்ரவாஹத்தாலே
நவ ரஸ சமூகத்தால் நிறைந்ததாயும் வேதப்பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும்
எம்பெருமானுக்கு திவ்யமான ஸ்தானமாயும்
அளவில்லாப் பெருமையையும் உடைத்தாய் இருக்கிற நம்மாழ்வார் ஆகிற கடல் நெடு நாள் வாழ வேணும்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
கடலானது ரஸவ்க சப்த வாஸ்யமான ஜல பிரவாகத்தாலே பரிபூர்ணமாய் இருக்கும்
ஆழ்வாரோ சிருங்கார வீர கருணை அத்புத ஹாஸ்ய பய அநக ரௌத்ர பீபத்ச பக்தி ரசங்களாலே பரிபூர்ணராய் இரா நின்றார்
இவை விளைந்தமைக்கு நிதானம் விலக்ஷண பக்தி விசேஷத்தாலே ஆச்சர்யமான பாவ பந்தங்கள் உண்டாகி-
அவை பல தலைத்து நாநா ரஸ பரிபாகங்கள் ஆயின

பக்தி ப்ரபாவ
ஆழ்வார் பக்திக்கு ஒப்புச் சொலலாவது இல்லையே
காதல் கடல் புரைய விளைவித்த காரமார் மேனி -என்று முதலிலே கடல் போலதாய்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
அநந்தரம்
சூழ்ந்த அதனில் பெரிய என் அவா -என்று தத்வ த்ரயத்தையும் விளாக்குலை கொள்ள வல்லதாய்
ஆக இப்படி மென்மேலும் பெருகிச் செல்லும் பக்தி பிரபாவத்தாலே

பவத் அத்புத பாவ பந்த
உண்டான அத்புதமான பாவ பந்தங்களினாலே -அதாவது
அந்த பக்தி தானே சிருங்கார வ்ருத்தயா பரிணமித்து -தலைமகள் -தாய் -தோழி பாசுரங்களாக பேசும்படிக்கு ஈடான ஆச்சர்யமான பாவ பந்தங்கள்

சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
அப்படிப்பட்ட பாவ பந்தங்கள் ப்ரணய ரசத்தை வளரச் செய்யுமாயிற்று
உயர்வற உயர் நலம் உடையவன்
வீடுமின் முற்றவும்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
பிறவித்துயர் அற
பொரு மா நீள் படை –இத்யாதிகளில் சாதாரண பக்தி ரசம் விளங்கும்

அஞ்சிறைய மட நாராய்
மின்னிடை மடவார்கள்
வேய் மறு தோளிணை–இவற்றில் அன்றோ அத்புத பாவ பந்த சந்துஷித ப்ரணய சாரம் விளங்குவது
அப்படிப்பட்ட ப்ரணய மீதூர்ந்து வெளிவரும் ஸ்ரீ ஸூக்தி களில் நவ ரசமும் பொலிய நிற்கும் அன்றோ –

நவ ரசங்களுள் சிருங்காரம் வீரம் கருணம் அத்புதம் பயாநகம் சாந்தி ஆகிய பக்தி இந்த ரசங்கள்
ஓரோ திருவாய் மொழிகளிலே பிரதானமாகப் பொதிந்து இருக்கும்

மற்ற ஹாஸ்ய பீபீஸ்ய ரௌத்ர ரசங்கள் ஒரோ இடங்களிலே மறைய நின்று சிறிது சிறுது தலைக்கட்டி நிற்கும்
மின்னிடை மடவார்கள் -நங்கள் வரிவளை-வேய் மறு தோளிணை -முதலான திருவாய் மொழிகளில்
சிருங்கார ரசம் தலை எடுக்கும்

மாயா வாமனனே-புகழு நல் ஒருவன் -நல் குறைவும் செல்வமும் –இவற்றில் அத்புத ரசம் தலை எடுக்கும்
உண்ணிலாய ஐவரால் இத்யாதிகளில் பயாநக ரசம்

ஊரெல்லாம் துஞ்சி -வாயும் திரையுகளும் -ஆடியாடி யகம் கரைந்து இத்யாதிகளில் கருணரசம்

குரவை ஆய்ச்சியாரோடும் கோத்ததும் -வீற்று இருந்து ஏழு உலகும் -இத்யாதிகளில் வீர ரசம்

ஆக இங்கனே நாநா ரசங்கள் பொதிந்த ஸ்ரீ ஸூக்தி கள்-ரஸவ்க பரிபூர்ணராய் இருப்பார் ஆய்த்து ஆழ்வார் –

வேதார்த்த ரத்ன நிதிர்
கடல் ரத்நாகாரம் -பராங்குச பயோ நிதியும் -ஓதம் போல் கிளர் வேதம் என்றும் –
சுருதி சாகரம் என்றும் கடல் போன்ற சாஸ்திரங்களில் அல்ப சாரம் சாரம் சாரதமம் –
போக சார தமமாய் உள்ள அர்த்தங்கள் ரத்னமாகும்
த்ரை குண்யா விஷயங் வேதா -போல் இல்லாமல் மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
குருகூர் சடகோபன் சொன்ன சொற்களில் சாரதமமான அர்த்தங்களேயாய் இருக்கும் –
அப்படிப்பட்ட ரத்னங்களுக்கு நிதியாய் இருப்பர் ஆழ்வார்

அச்யுத திவ்ய தாம
மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு ஆலினிலைத் துயின்ற ஆழியான்
கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று –என்கிறபடியே
எம்பெருமானுக்கு திவ்ய ஆலயமாய் இருக்கும்
ஆழ்வாரும் அப்படியேயாய் இருப்பர்

கல்லும் கனை கடலும் வைகுண்ட வான் நாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்து அகம் -என்றும்
கொண்டல் வண்ணன் சுடர் முடியின் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே -என்றும்
ஆழ்வார் எம்பெருமானுக்கு நித்ய நிகேதனமாய் இருப்பவர் அன்றோ
இவையும் அவையும் -திருவாய் மொழியில் இத்தை விசத தமமாக காணலாமே

அஸீம பூமா-
ப்ருஹத்வம் என்கிறபடியே -ஆகாரத்தாலும் குணத்தாலும் த்வி விதமாய் இருக்குமே ப்ருஹத்வம்
பெரிய மலை -பெரிய குளம்-பெரிய மாளிகை –இவை ஆகாரத்தினால் ப்ருஹத்வம்
பெரிய மனுஷர் -குணங்களால் ப்ருஹத்வம்
இருவகையில் ஆகார ப்ரயுக்தம் கடலுக்கும் குண ப்ரயுக்தம் ஆழ்வாருக்கும் உண்டே
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
எல்லை காண ஒண்ணாத கிருபா குணம் ஒன்றின் பெருமையே போதுமே

ஆக நான்கு விசேஷணங்களால்
நம்மாழ்வாருக்கு கடலுக்கும் உள்ள சாதரம்யம் நிர்வஹிக்கப் பட்டதாயிற்று

இப்படிப்பட்ட
பராங்குச பயோதிர் –ஜீயாத் —
நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழ வேணும் -என்றதாயிற்று –

—————–

நாலாம் ஸ்லோகத்தாலே –இவ்வர்த்தம் த்ரைவித்ய வ்ருத்தாநுமதம் -என்கிறது –
அஞ்சாம் ஸ்லோகத்தாலே இந்த ஜ்ஞானம் இவர்க்கு ஆழ்வாரால் வந்தது என்கை –

அக்ர்யம் யதீந்திர சிஷ்யாணாம் ஆதயம் வேதாந்த வேதி நாம் -என்று ஆழ்வான் அக்ர கண்யர் ஆகையாலே –அஸ்மத் குரோர் என்றார் –
அப்படிப் பட்ட பாரதந்த்ர்யத்தை -இவ் வாத்ம வஸ்து அவர்க்கு சேஷம் ஆகில் அவருடைய விநியோக பிரகாரம் கொண்டு கார்யம் என்-என்றார் –
ஏவம் வித ஸ்வரூபர் ஆகையால் உடையவரும் -ஒரு மகள் தன்னை யுடையேன் -என்றார்
இப்படி ஸ்வாச்சார்ய விஷயத்தில் பாரதந்த்ர்யத்தாலும்
நான் பெற்ற யோகம் நாலூரானும் பெற வேணும் -என்று பிரார்திக்கையாலும்
சிஷ்யாச்சார்யா க்ரமத்துக்கு சீமா பூமி கூரத் ஆழ்வான் -என்றார்கள்
ஆச்சார்யா வர்வ விபவச்ய ச சிஷ்யஸ் வ்ருத்தேஸ் சீமேதி தேசிகவரை பரிதுஷ்யமாணம்-என்னக் கடவது இறே –
அத்தைப் பற்ற உடையவரும் –யத் சம்பந்தாத் –என்று பிரார்த்தித்து அருளினார்
நூற்றந்தாதியிலும் மொழியைக் கடக்கும் பெரும் புகழான் அடியாக விரும்பி அருளினார்
மற்றையரான இவ்வருகில் உள்ளாறும் அல்லா வழியைக் கடப்பது அவர்களாலே இறே
அவர்கள் தான் –யோ நித்யம் -த்ரைவித்யாதிகள் அடியாக அடியுடையராய் இருப்பார்கள்
மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
ராமானுஜ அங்க்ரி சரணஸ்மி இத்யாதி
மதுரகவிகள் அடிப்பாட்டில் நடக்கிற க்ருபாமாத்ரா பிரசன்னாச்சார்யர்கள் ஆழ்வார் அடியாய் இருப்பார்கள்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன பவதி -இத்யாதி
ஆரியர்காள் கூறும் -என்கிற எழுபத்து நான்கு முதலிகளும் உடையவர் அடியான ஆசார்யத்வம்
அதில் முக்கியம் ஆழ்வார் சம்பந்தம் –
பட்டர் அடியாக இறே அஷ்ட ஸ்லோகீ முகேன ரஹச்ய த்ரய அர்த்த சம்பந்தம் –
திருவாய்மொழியும் அடியாய் இருக்கும்
ஒன்பதினாயிரம் பன்னீராயிரத்தில் பர்யவசித்தது
பெரிய பட்டர் உடைய பிரசிஷ்யரான நம்பிள்ளை திருவடிகளிலே இறே நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் ஆஸ்ரயித்தது
அவரும் ராமானுஜ நாமா விறே
அஷ்டாஷர தீபிகை அவர் அடியாக இருக்கும்
நம்பிள்ளை குமாரரும் ராமானுஜன் இறே
அவரும் சார சங்க்ரஹம் அருளிச் செய்து அருளினார்
தத் வம்ச்யரும் கோயில் யுடையவருக்கு சிறிது கைங்கர்யங்களும் செய்தார்கள்
வடக்குத் திரு வீதிப் பிள்ளை குமாரரான பிள்ளை லோகாச்சார்யரும்
வகுள பூஷண சாஸ்திர சாரமான ஸ்ரீ வசன பூஷ்ணாதி ரகஸ்ய பிரபந்த கர்த்தாவாய்
தம்முடைய பிரதான சிஷ்யரான – கூர குலோத்தம தாசர் -என்று திரு நாமம் சாத்தினார்
என்னாரியனுக்காக எம்பெருமானாருக்காக -என்று இறே அக் கோஷ்டியில் பரிமாற்றம் இருப்பது –

—————

மாறன் அடி பணிந்து உயந்த ராமானுஜன் திரு உள்ளம் உகக்கவும்
ஆழ்வாரை வணங்காமல் எம்பருமான் இடம் சென்றால் திருமுகம் பெற மாட்டாமையாலும்
இதிலும் அடுத்த ஸ்லோகத்தாலும் ஆழ்வாரைத் தொழுது இறைஞ்சுகிறார்

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -2-ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 1-

யாதொரு நம்மாழ்வார் திருவடி இணையானது பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ –
யாதொரு திருவடி இணையே சர்வ காலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமாக இருக்கின்றதோ
யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றும் இல்லாதவர்களுக்குத் தஞ்சமாக இருக்கின்றதோ
அப்படிப்பட்ட பரம பாவனமான நம்மாழ்வார் திருவடி இணையை ஆஸ்ரயிக்கக் கடவோம் –

தத் வகுளாபரண அங்க்ரி யுக்மம் –ஸம்ஸ்ரயேம–மகிழ் மாலை மார்பினன் -என்று தாமே
பேசிக் கொள்ளலாம் படி வகுள மாலையை நிரூபகமாக உடையவர்

யத்-த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம்
த்ரை வித்ய வ்ருத்தர் ஆகிறார் மதுரகவிகள் போல்வார்
மேவினேன் பொன்னடி மெய்ம்மையே
குருகூர் நம்பீ முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –
ப்ராவண்யம் உடையார் தம் தலைக்கு பூஷணமாக கொள்வர்
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே
அரசமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ண மாட்டேன் மற்ற அரசு தானே
இங்கு –த்ரை வித்ய வ்ருத்தம் -சப்தம்–மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசனையே கருத்தில் கொண்டதாகும்
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்த
ராமானுஜன் போன்ற மஹ நீயர்கள் என்கை

சாத்விக ஜனஸ்ய-நித்யம் -யதேவ -சம்பத்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று -என்று அன்றோ
சாத்விகர்களது அத்யவசாயம்
லௌகீகர்கள் சம்பத்தாக நினைத்து இருக்கும் வஸ்து வஸ்து ஸ்திதியில் விபத்தமாய் இருக்கும்
உபய விபூதியும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யம் உடையவர் இட்ட வழக்காய் இருக்குமே
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேந மத் அந்வயா நாம் -என்று அருளிச் செய்த
ஆளவந்தார் போல்வாரை இங்கே சாத்விக ஜனம் என்கிறது

நித்யம்
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம்-என்னுமா போலே

யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய
எம்பெருமான் தன்னாலும் திருத்த ஒண்ணாது என்று கைவிடப்பட்டவர்கள்
அசரண்யர்
அவர்களையும் வலியப் பிடித்து இழுத்து –
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்வன் கேண்மினோ –இத்யாதிகளை உபதேசித்து
திருத்திப் பணி கொண்டவர் அன்றோ

புண்யம்
புநா தீதி புண்
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாய் நின்ற நிலையைப் போக்கி
சகல ஆத்மாக்களை பரிசுத்தமாக்க வல்லவை
புண்யம் ஸூந்தரம் -பர்யாயம் -அழகிய திருவடிகள் என்றுமாம் -என்றாலும் பாவனத்வத்திலே இங்கு நோக்கு

ஆக இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளை வணங்கின படி சொல்லிற்று ஆயிற்று

———————-

ஆழ்வாருக்கு மங்களா சாசனம் -கடலாக உருவகம் -நான்கு விசேஷணங்கள்
பயோ நிதிக்கு இருக்கக் கடவ தன்மைகள் ஆழ்வார் இடம் குறைவற இருக்கும் படியை மூதலித்து அருளுகிறார்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிர் அச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர் அஸீம பூமா –3-ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 2-

பக்தியின் கனத்தினால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப்பட்ட சார பூதமான
ப்ரணயமாகிற தீர்த்தத்தினுடைய ப்ரவாஹத்தாலே
நவ ரஸ சமூகத்தால் நிறைந்ததாயும் வேதப் பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும்
எம்பெருமானுக்கு திவ்யமான ஸ்தானமாயும்
அளவில்லாப் பெருமையையும் உடைத்தாய் இருக்கிற நம்மாழ்வார் ஆகிற கடல் நெடு நாள் வாழ வேணும்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
கடலானது ரஸவ்க சப்த வாஸ்யமான ஜல பிரவாகத்தாலே பரிபூர்ணமாய் இருக்கும்
ஆழ்வாரோ சிருங்கார வீர கருணை அத்புத ஹாஸ்ய பய அநக ரௌத்ர பீபத்ச பக்தி ரசங்களாலே பரிபூர்ணராய் இரா நின்றார்
இவை விளைந்தமைக்கு நிதானம் விலக்ஷண பக்தி விசேஷத்தாலே ஆச்சர்யமான பாவ பந்தங்கள் உண்டாகி-
அவை பல தலைத்து நாநா ரஸ பரிபாகங்கள் ஆயின

பக்தி ப்ரபாவ
ஆழ்வார் பக்திக்கு ஒப்புச் சொலலாவது இல்லையே
காதல் கடல் புரைய விளைவித்த காரமார் மேனி -என்று முதலிலே கடல் போலதாய்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
அநந்தரம்
சூழ்ந்த அதனில் பெரிய என் அவா -என்று தத்வ த்ரயத்தையும் விளாக்குலை கொள்ள வல்லதாய்
ஆக இப்படி மென்மேலும் பெருகிச் செல்லும் பக்தி பிரபாவத்தாலே

பவத் அத்புத பாவ பந்த
உண்டான அத்புதமான பாவ பந்தங்களினாலே -அதாவது
அந்த பக்தி தானே சிருங்கார வ்ருத்தயா பரிணமித்து -தலைமகள் -தாய் -தோழி பாசுரங்களாக பேசும்படிக்கு ஈடான ஆச்சர்யமான பாவ பந்தங்கள்

சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண–
அப்படிப்பட்ட பாவ பந்தங்கள் ப்ரணய ரசத்தை வளரச் செய்யுமாயிற்று
உயர்வற உயர் நலம் உடையவன்
வீடுமின் முற்றவும்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
பிறவித்துயர் அற
பொரு மா நீள் படை –இத்யாதிகளில் சாதாரண பக்தி ரசம் விளங்கும்
அஞ்சிறைய மட நாராய்
மின்னிடை மடவார்கள்
வேய் மறு தோளிணை–இவற்றில் அன்றோ அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சாரம் விளங்குவது
அப்படிப்பட்ட ப்ரணய மீதூர்ந்து வெளிவரும் ஸ்ரீ ஸூக்தி களில் நவ ரசமும் பொலிய நிற்கும் அன்றோ –
நவ ரசங்களுள் சிருங்காரம் வீரம் கருணம் அத்புதம் பயாநகம் சாந்தி ஆகிய பக்தி இந்த ரசங்கள்
ஓரோ திருவாய் மொழிகளிலே பிரதானமாகப் பொதிந்து இருக்கும்
மற்ற ஹாஸ்ய பீபீஸ்ய ரௌத்ர ரசங்கள் ஒரோ இடங்களிலே மறைய நின்று சிறிது சிறுது தலைக்கட்டி நிற்கும்
மின்னிடை மடவார்கள் -நங்கள் வரிவளை-வேய் மறு தோளிணை -முதலான திருவாய் மொழிகளில்
சிருங்கார ரசம் தலை எடுக்கும்
மாயா வாமனனே-புகழு நல் ஒருவன் -நல் குறைவும் செல்வமும் –இவற்றில் அத்புத ரசம் தலை எடுக்கும்
உண்ணிலாய ஐவரால் இத்யாதிகளில் பயாநக ரசம்
ஊரெல்லாம் துஞ்சி -வாயும் திரையுகளும் -ஆடியாடி யகம் கரைந்து இத்யாதிகளில் கருண ரசம்
குரவை ஆய்ச்சியாரோடும் கோத்ததும் -வீற்று இருந்து ஏழு உலகும் -இத்யாதிகளில் வீர ரசம்
ஆக இங்கனே நாநா ரசங்கள் பொதிந்த ஸ்ரீ ஸூக்திகள்-ரஸவ்க பரிபூர்ணராய் இருப்பார் ஆய்த்து ஆழ்வார் –

வேதார்த்த ரத்ன நிதிர்
கடல் ரத்நாகாரம் -பராங்குச பயோ நிதியும் -ஓதம் போல் கிளர் வேதம் என்றும் –
சுருதி சாகரம் என்றும் கடல் போன்ற சாஸ்திரங்களில் அல்ப சாரம் சாரம் சார தமம் –
போக சார தமமாய் உள்ள அர்த்தங்கள் ரத்னமாகும்
த்ரை குண்யா விஷயங் வேதா -போல் இல்லாமல் மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
குருகூர் சடகோபன் சொன்ன சொற்களில் சார தமமான அர்த்தங்களேயாய் இருக்கும் –
அப்படிப்பட்ட ரத்னங்களுக்கு நிதியாய் இருப்பர் ஆழ்வார்

அச்யுத திவ்ய தாம
மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு ஆலினிலைத் துயின்ற ஆழியான்
கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று –என்கிறபடியே
எம்பெருமானுக்கு திவ்ய ஆலயமாய் இருக்கும்
ஆழ்வாரும் அப்படியேயாய் இருப்பர்
கல்லும் கனை கடலும் வைகுண்ட வான் நாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்து அகம் -என்றும்
கொண்டல் வண்ணன் சுடர் முடியின் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே -என்றும்
ஆழ்வார் எம்பெருமானுக்கு நித்ய நிகேதனமாய் இருப்பவர் அன்றோ
இவையும் அவையும் -திருவாய் மொழியில் இத்தை விசத தமமாக காணலாமே

அஸீம பூமா-
ப்ருஹத்வம் என்கிறபடியே -ஆகாரத்தாலும் குணத்தாலும் த்வி விதமாய் இருக்குமே ப்ருஹத்வம்
பெரிய மலை -பெரிய குளம்-பெரிய மாளிகை –இவை ஆகாரத்தினால் ப்ருஹத்வம்
பெரிய மனுஷர் -குணங்களால் ப்ருஹத்வம்
இருவகையில் ஆகார ப்ரயுக்தம் கடலுக்கும் குண ப்ரயுக்தம் ஆழ்வாருக்கும் உண்டே
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
எல்லை காண ஒண்ணாத கிருபா குணம் ஒன்றின் பெருமையே போதுமே

ஆக நான்கு விசேஷணங்களால்
நம்மாழ்வாருக்கு கடலுக்கும் உள்ள சாதரம்யம் நிர்வஹிக்கப் பட்டதாயிற்று

இப்படிப்பட்ட
பராங்குச பயோதிர் –ஜீயாத் —
நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழ வேணும் -என்றதாயிற்று –

—————–

ஸ்ரீ பராசர பட்டர்
ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீவத் சாங்க ஸூதஸ் ஸ்ரீ மான் ஸ்ரேயசே மேஸ்து பூயஸே –ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த தனியன் –

ரிஷிம் ஜூஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம்
சஹஸ்ர சாகரம் ய அத்ராஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -1-6-ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 3

ய–யார் ஒரு நம்மாழ்வார்
சஹஸ்ர சாகரம் ய த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்-ஆயிரம் பாசுரங்களுடைய தமிழாலாகிய ஸ்ரீ திருவாய் மொழி
ஆகிற உப நிஷத்தை –ஒவ் ஒரு பாசுரமும் ஒரு சாகை தானே –
அத்ராஷீத் -சாஷாத்கரித்தாரோ-ஸ்ரீ எம்பெருமான் இவரைக் கொண்டு பிரவர்த்திப்பித்தான் என்றவாறு
இத்தால் ஸ்ரீ திருவாய் மொழியின் பிரவாஹதோ நித்யத்வம் காட்டப்படுகிறது
தம் -அப்படிப்பட்டவராய்
உதிதம் -உரு எடுத்து வந்த
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவ
ஸ்திதம்–ஸ்ரீ எம்பெருமான் திறத்து காதலின் உண்மை போன்றவரான
ரிஷிம் ஜூஷாமஹே –ஸ்ரீ நம்மாழ்வாரை சேவிக்கிறோம் –

எந்த ஒரு முனிவர் – ஆயிரம் சாகைகள் உள்ள சாம வேதம் போலே ஆயிரம் பாசுரங்களை யுடையதான-திராவிட ப்ரஹ்ம சம்ஹிதையை  சாஷாத்கரித்தாரோ,ஸ்ரீ கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்து அவதரித்தது என்று சொல்லும்படியான அந்த ஸ்ரீ சடகோப முனிவரை ஸேவிக்கிறோம்!

இத்தால் ஸ்ரீ பட்டருக்கு
ஸ்ரீ நம்மாழ்வார் இடத்திலும்
ஸ்ரீ திருவாய் மொழி இடத்திலும் அமைந்துள்ள
அத்புதமான பக்தி வை லக்ஷண்யம் அழகிதாகப் புலப்படும் –

ஆழ்வார் திறத்திலே பட்டருடைய ஈடுபாடு அபரிமிதம். அவருடைய
ஸ்ரீஸூக்திகளெல்லாம் ஒப்புயர்வற்று விளங்குவதன் காரணம் அவை அருளிச்
செயல் மணம் கமழ நிற்பதேயாம். நம்மாழ்வார்க்குத் துதியாக பட்டர் அருளிச்
செய்திருக்கும் ச்லோகமொன்று அத்விதீயமாய் விளங்கும்.அதாவது “ருஷிம் ஜீஷா
மஹே க்ருஷ்ண ருஷ்ணா தத்வமிவோதிதம், ஸஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷித்
த்ராவிடம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்” என்பது. “எம்பெருமான் விஷயமான ஆசைப்பெருக்கே ஆழ்வாராக வடிவெடுத்துவந்ததோ’ என்னலாம்படி பகவத்விஷயத்தில்அளவிறந்த காதல் கொண்டவரும் “த்ரமிடோபநிஷத்” என்னப்பட்ட திருவாய்மொழியை இந்த வுலகிலிருள் நீங்க வெளியிட்டருளினவருமான நம்மாழ்வாரைப் பணிவோம்” என்பது இதன் கருத்தாம். இதில் (சடகோபர் முதலியதிருநாமங்களையிடாமல் “ருஷிம் ” என்றே அருளிச்செய்தார். இதை யடியொற்றியே“நால்வேதம் கண்ட புராணரிஷி மந்த்ரதர்சிகளைப்போலே இவரையும் ரிஷி முனி கவி என்னும் “ என்கிற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்தி அவதரித்தது. வடமொழியினாலாகிய உபநிஷத்துக்களில் அநேக சாகாபேதங்கள் இருப்பதுபோல் த்ரமிடோபநிஷத்திலும் அநேக சாகாபேதங்களுண்டென்று காட்டவேண்டி “ஸஹஸ்ர
சாகாம்” என்றார். (ஒவ்வொரு பாசுரமும் ஒவ்வொரு சாகை என்று) அத்ரா த்’ என்றதனால் எம்பெருமான் சிலபல ரிஷிகளைக் கொண்டு சிலபல வேதச கைகளைப் ப்ரவர்த்திப்பித்தது போல ஸ்ரீசடகோப முனிவரைக் கொண்டு திருவாய்மொழியைப்ரவர்த்திப்பித் தானென்பது விளங்கும். இந்தச்லோகத்தில் ஆழ்வாரை எம்பெரு மான் திறத்துக் காதலின் உண்மை போன்றவர் (க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோ திதம்) என்று அருளியிருப்பதை யடியொற்றி “க்ருஷ்ண க்ருஷ்ணத்வைபாயநோத் பத்திகள் போலன்றே கருஷ்ண திருஷ்ணா தத்வ ஐந்மம்” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்தி அவதரித்திருப்பது அறிந்தின்புறத் தக்கது.

யத் கோ ஸஹரஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸசங்க சக்ர: |
யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய ||--ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 4-

சூர்யனுடைய ஆயிரம் கிரணங்கள் வெளி இருளைப் போக்குவது போலே யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் உடைய
ஆயிரம் பாசுரங்கள் சகல சேதனர்களுடையவும் அக விருளைத் தொலைக்கின்றனவோ,
சூர்யன் இடத்தில் ஸ்ரீ நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடி விளங்குவது போல்
அப்பெருமான் யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் இடத்தில் அவ்விதமாகவே உறைகின்றானோ,
வேத ப்ரதிபாத்யமான ஸூர்ய மண்டலத்தை அந்தணர்கள் வணங்குவது போலே யாவரொரு
ஸ்ரீ ஆழ்வார் யுடைய திவ்ய ஸ்தலம் செவிப் பட்ட யுடனே பரம பாகவதர்கள் கை கூப்பி வணங்குவார்களோ –
அப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வார் ஆகிற ஸூர்யனை வணங்குவோமாக!

கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண் பல் இலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேனுள் உள்ளானே” –
அப்படிப்பட்ட ஸ்ரீ எம்பெருமானைத் தம்மிடத்தே கொண்டவர் ஸ்ரீ நம்மாழ்வார்!

——————

மால் தன் பராங்கதி தந்து அடியேனை மருள் பிறவி
மாறு அன்பர் ஆன குழாத்துள் வைப்பான் தொல்லை வல் வினைக்கு ஓர்
மாறன் பாராமுகம் செய்யாமல் என் கண் மலர்க் கண் வைத்த
மாறன் பராங்குசன் வாழ்க என் நெஞ்சினும் வாக்கினுமே–ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி–5-

மால் தன் பராங்கதி -விஷ்ணு லோகம் ஆகிய ஸ்ரீ வைகுண்டம்
பிறவி மாறு அன்பர் -முக்தர்

———–

மறைப்பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பு அணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றி சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே –ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம்

திரு நா வென் மந்தரத்தால் -பாட பேதம்-

அளத்தற்கு அரிய பரப்புடைமை -இன் சுவை யுடைமை -எம்பெருமான் உறைவிடம் ஆதலால் மறையை பாற் கடலாக உருவகம் செய்து அருளுகிறார்
திரு -வேறு ஒன்றுக்கு இல்லாத மேன்மை -திரு நா வீறுடைய பிரான் போலே
கறை-நஞ்சினை யுடைய – -புள்ளி என்றுமாம்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் –

அம்பிலே சிலையை நாட்டி யமரர்க்கு யன்று யமுதம் ஈந்த
தம்பிரான் என்னத் தானும் தமிழிலே தாளை நாட்டிக்
கம்ப நாடுடைய வள்ளல் கவிச் சக்ரவர்த்தி பார் மேல்
அன்பு பா மாலையாலே நரர்க்கு இன்னமுதம் ஈந்தான்

————

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவேங்கட மாலை-காப்பு -நம்மாழ்வாரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

திண்பார் புகழும் திருவேங்கட மாலை
வெண்பா வானூரும் விளம்புதற்குக் கண் பாராய்
நாராயணா வடியேனாடும் தமிழ் வேதப்
பாராயணா சடகோபா –

நாராயணா
வடியேனாடும் -அடியேன் நாடும்
தமிழ் வேதப் பாராயணா சடகோபா
அடியேன் நாடும் -தமிழ் வேத பராயணத்துக்கும் சடகோபருக்கும் அடை மொழியாகக் கொள்ளலாம்
வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் –
பராயணம் = முழுவதும் -நாதனுக்கு நாலாயிரமும் அருளினவர் அன்றோ
திண்பார் புகழும் திருவேங்கட மாலை –
வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -உலக்குக்கு எல்லாம் தேசமாய்த் திகழும் மழைத் திரு வேங்கடம் –
வெண்பா வானூரும் விளம்புதற்குக் கண் பாராய் -வெண்பாவால் நூறும் விளம்புவதற்கு கிருபை செய்து அருளுவாய்-

———-

அங்கத் தமிழ் மறை ஆயிரம் பாடி அளித்து உலகோர்
தங்கட்கு வீடருளும் புருடோத்தமன் தண் வகுளத்
தொங்கற் பராங்குசன் தாளிணை மாலிருஞ்சோலை மலைச்
சங்கத் தமிழ் அழகர் அந்தாதி நடாத்தலைக் கொள்வனே –ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திரு அழகர் அந்தாதி–காப்பு –

அங்கத் தமிழ் மறை-ஆறு அங்கங்கள் கொண்ட திராவிட வேதங்கள் ஆயிரம் பாடி
அளித்து -மதுர கவிகள் -நாத முனி போன்றோர்களுக்கு உபதேச முகமாக அளித்து
உலகோர் தங்கட்கு வீடருளும் புருடோத்தமன் தண் வகுளத்
தொங்கற் பராங்குசன் தாளிணை-
புருஷ ச்ரேஷ்டர் -மகிழம் பூ மாலை தரித்த -நம்மாழ்வார் உடைய உபய பாதத்தை -வகுளாபரணர்
மாலிருஞ்சோலை மலைச் சங்கத் தமிழ் அழகர் அந்தாதி நடாத்தலைக் கொள்வனே –
தண் தமிழ் சங்கத் தனி இறைவனே -என்று தமிழ்ச் சங்கத் தலைவரான திருமால் இருஞ்சோலை அழகர் விஷயமான
அந்தாதி விக்னம் இல்லாமல் முடித்து தந்து அருளுமாறு தளை மேல் கொண்டு வணங்குவேன்
சங்கத்து அழகர் -திருப் பாஞ்ச ஜன்யம் தரித்த அழகர் என்றுமாம்
கிளர் ஒளி இளமை திருவாய் மொழியும் நம்மாழ்வார் திருவாய்மொழி விக்னம் இல்லாமல் நடாத்தி அருள
திருமால் இருஞ்சோலை விஷயமாக அருளிச் செய்தார் –

————-

பிறவாத பேறு பெறுதற்கு எஞ்ஞான்றும்
மறவா திறைஞ்சு என் மனனே துறவாளன்
வண் குருகூர் வாவி வழுதி வளநாடுடைய
தண் குருகூர் நம்பி திருத் தாள் –திரு நூற்று எட்டு திருப்பதி அந்தாதி -காப்பு –

புதுவை நகர்ப் பட்டர் பிரான் சரண்கள் போற்றி பொய்கை பூதன் பேயார் பாதம் போற்றி
சது மறைச் சொல் சடகோபன் சரணம் போற்றி தமிழ்ப் பாணன் தொண்டர் அடிப் பொடி தாள் போற்றி
முது புகழ் சேர் மழிசையர் கோன் பதங்கள் போற்றி முடிக் குல சேகரன் கலியன் கழல்கள் போற்றி
மதுர கவி எதிராசன் கூரத் தாழ்வான் வாழ்வான பட்டர் திருவடிகள் போற்றி —ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- ஸ்ரீ ரங்க நாயகர் ஊஞ்சல் –காப்பு –

திரு வாழ திரு ஆழி சங்கம் வாழ திரு அனந்தன் கருடன் சேனையர் கோன் வாழ
அருள் மாறன் முதலாம் ஆழ்வார்கள் வாழ அளவில் குணத்து எதிராசன் அடியார் வாழ
இரு நாலு திரு எழுத்தின் ஏற்றம் வாழ ஏழ் உலகும் நான் மறையும் இனிது வாழ
பெரு வாழ்வு தந்தருள் நம் பெருமாள் எங்கள் பெரிய பெருமாள் அரங்கர் ஆடீர் ஊசல் –1-

———

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –
அந்தாதி தொடையால் அமைந்த ஒன்பது கட்டளை கலித்துறை பாடல்கள் கொண்ட திவ்ய பிரபந்தம் –

பூ மான் பிறந்து சிறந்தது வேலை புவி படைத்த
கோ மான் பிறந்து சிறந்தது நான்மறை கூடல் சங்கம்
நா மான் பிறந்து சிறந்தது பண்டு எதிராசன் என்னும்
சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே –1-

வேலை-கடலானது
பூ மான் -பூவிலே எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மி
பிறந்து சிறந்தது -பெருமை உள்ளது
புவி படைத்த கோ மான் -புற்றில் இருந்து பூத்த-ஸ்ரீ பூமா தேவி உண்டாக்கிய ஸ்ரீ வால்மீகி பகவான்
பிறந்து சிறந்தது நான்மறை -வேத ப்ராஸேத ஸாதா ஸீத் ஸாஷாத் ராமாயணா மநா —
முனிவனைக் கோமான் என்றது வாக்கின் சீர்மையை நோக்கி -கோ வாக்கு -கோதா என்னுமா போலே –
நா மான் பிறந்து சிறந்தது கூடல் சங்கம் –நா வீறு படைத்த நம்மாழ்வார் -திரு அவதாரம் -மதுரை தமிழ் சங்கம் –
கண்ணன் கழலிணை -அடி பொறித்த முறியைச் சங்கப்பலகை தாங்கிய விருத்தாந்தம்
சேமம் குருகையோ –ஈ யாடுவதோ கருடர்க்கு எதிரே –
பண்டு -இங்கனம் வேலை -நான்மறை கூடல் சங்கம் -முதலியன சிறந்தன ஒவ்வொருவராலே பண்டு –
எதிராசன் என்னும் சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே -இவர் ஒருவரால் அம்மூன்றும் ஒரு சேரச் சிறப்புற்றதுடன்
சரணாகதியும் சரணாகதி ஸாஸ்த்ரமும் சிறந்த பிரபத்தி ஸாஸ்த்ர பலனும் ஸமஸ்த ஜகத்தும் உஜ்ஜீவிக்கும் படி இவரால் சிறப்புற்றது –
ஆதிசேஷன் அவதாரம் என்பதால் வேலை -திருப்பாற் கடல் சிறப்புற்றது
ஸ்ரீ பாஷ்யம் வேதாந்த சாரம் வேதாந்த ஸங்க்ரஹம் வேதாந்த தீபம் இவற்றால் நான்மறை சிறப்புற்றது
மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் என்பதால் கூடல் சங்கம் சிறப்புற்றது –

—————

முருகூரும் மகிழ் மாலை அணியும் மார்பன் முத்தமிழன் கவித்தலைவன் முனிவர் வேந்தன்
திருகூரு மனத்திருள் நீக்குதய பானு சி பராங்குச யோகி திரு நா வீறன்
அருகூருந் தண் பொருணை வழுதி நாடன் அக்கமலம் பாடினான் அன்ன மேறி
குருகூரன் சடகோபன் காரி மாறன் கோகனக மலரடியின் குணங்கள் போற்றி –ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருப் பேரனாரான கோனேரி அப்பன் ஐயங்கார் அருளிய- ஸ்ரீ ரங்க நாயகி ஊஞ்சல் –காப்பு –

—————

பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார்
தண் பொருநல் வரும் குருகேசன் விட்டு சித்தன்
துய்ய குலசேகரன் நம் பாண நாதன்
தொண்டர் அடிப்பொடி மழிசை வந்த சோதி
வையம் எல்லாம் மறை விளங்க வாள் வேல் ஏந்தும்
மங்கையர் கோன் என்று இவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே –1-

இன்பத்தில் இறைஞ்சுதல் இல் இசையும் பேற்றில்
இகழாத பல் உறவு இல் இராகம் மாற்றில்
தன் பற்றில் வினை விலக்கில் தகவோக்கத்தில்
தத்துவத்தில் உணர்த்துதலில் தன்மை யாக்கில்
அன்பர்க்கே அவதரிக்கும் மாயன் நிற்க
அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு
துன்பற்ற மதுர கவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே—2-

1–இன்பத்தில் -அண்ணிக்கும் அமுதூறும் என்னாவுக்கே -செல்வ நாரணன் என்ற சொல் கேட்டு -ஆழ்வார் பெற்ற இன்பம் இவருக்கு நம்பி என்றக்கால்
2–இறைஞ்சுதல்- இல் -அவரையே இறைஞ்சி -ரக்ஷகன் உபாய உபேயம் தேவு மற்று அறியேன் -மேவினேன் அவர் பொன்னடி மெய்மையே
மால் தனில் வேறு தெய்வம் உளதோ-கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் -என்றார் அவர்
3–இசையும் பேற்றில் –விரும்பி அடையும் புருஷார்த்தம் -தேவ பிரானுடை கரிய கோல திரு உருக் காண்பன் நான் -அவர் காண வாராய் என்று கதற
-பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆள் உரியவனாய் -அடியேன் பெற்ற நன்மையே இது –
4–இகழாத பல் உறவு இல் பழித்தல் -நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் -புன்மையாக் கருதுவர் ஆதலால் —
இகழ்வதே பற்றாசாக -பல் உருவு -அன்னையாய் அத்தனையாய் –என்னை ஆளுடைய நம்பி
5—இராகம் மாற்றில் –பற்று -தன் பக்கம் திருப்பி -மற்றை நம் காமங்கள் மாற்று –
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன்னர்
மாதரார் வலையில் பட்டு அழுந்துவேனை –தன் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன் அவன் –
6–தன் பற்றில் –ப்ரீதி கார்ய கைங்கர்யம் -கைவல்யம் குழியில் பற்று அற்று விழக் கூடாதே –
இறை பற்றி அற்றதில் பற்று அறுத்து – இன்று தொட்டு எழுமையும் தன் புகழ் பாட அருளி –
7–வினை விலக்கில்-காரி மாறப் பிரான் –கண்டு கொண்டு–
கண்டார் பின்பு கொண்டார் -கொண்ட வாறே -பண்டை வல்வினை -பாற்றி அருளினான் –
8–தகவோக்கத்தில் -ஓங்குதல் ஒக்கம்- வீங்குதல் வீக்கம் போலே- தகவினால் –
அரு மறை பொருளை அருளினான் -அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் –
9–தத்துவத்தில் உணர்த்துதலில் –மிக்க வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடினான் -நெஞ்சினுள் நிறுத்தினான் –
10–தன்மை யாக்கில் –மரங்களும் இரங்கும் வகை -ஊரும் நாடும் பேரும் பாடும் படி -ஆக்கி அருளினான் –
ஆக பத்து உபகாரங்கள் –

——–

4-யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம்
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் சடாரிம் தமுபாஸ்மஹே–யதிராஜ சப்ததி 

திரு மேனி மட்டும் இல்லை ஸ்ரீ ஸூக்திகளும் மகிழம் பூ மணக்கும் படி வெள்ளம் இட்டு வர வேதங்கள் ஒய்வு எடுத்து கொண்டபடி ஆயின –
அப்படிப் பட்ட நம் ஆழ்வாரை நாம் உபாசிப்போம்-

யஸ்ய சாரஸ்வதம் -வாக் தேவதா –
ஸ்ரோதோ -பிரவாஹம்
வகுளா மோத வாசிதம் -வகுளம் ஆமோத வாசித்தம்-மகிழம் பூ பரிமளம் நாள் கமழ் -மகிழ் மாலை மார்பினன் –
அஸ்மாத் குல தனம் போக்யம் – வண் குருகூர் நகரான
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் –அலம் போதுமானவை –விஸ்ரமம் ஒய்வு -தத்வ ஹித புருஷார்த்தம் -ஆழ்வார் நன்றாக வெளியிட சுருதிகள் ஒய்வு எடுத்தனவாம் –
சடாரிம் தமுபாஸ்மஹே -ப்ரீதி பூர்வகமாக த்யானம் செய்து அனுதியானம் உபாசனம் –

ஸம்ஸ்க்ருத வேதங்கள் தத்வ ஹித புருஷார்த்தங்களைத் தெளிய வெளியிடவேணுமென்று மிகவும் சிரமப்பட்டன .-ஆனால் சிரமத்திற்குத் தகுதியான பலன் கிடைக்கவில்லை. ‘அந்தோ! நமக்கு சரமமே மிக்கதே’ என்று அந்த வேதங்கள் விடாய்த்தனவாம். அந்த நிலைமையில்
மகிழ்மாலை மார்பினர் திருவவதரித்து ஈரச்சொற்களாலே வேதங்களுக்கு விவக்ஷிதமான பொருள்களைத் தெளிய வெளியிட்டமையாலே வேதங்களுக்கு உண்டா யிருந்த விடாய் தொலைந்ததாம். ‘வேதங்களே! பகவத் ஸ்ரூபரூபகுணவிபூதிகளை ப்ரதிபாதிக்கும் விஷயத்தில் நீங்கள் ஏதுக்கு வீணாகச்ர மப்படுகின்றீர்கள்? அந்தத் தொழிலை நான் வஹிக்கக்கடவேனாகையால் நீங்கள் இளைப்பாறலாம்’ என்று சொல்லி ஆழ்வார் திவ்யப்ரபந்தங்களை யருளிச் செய்வாராயினர் என்பதும் மேலெடுத்த யதிராஜ சப்ததி ஸூக்திக்குக் கருத்தாகும்.

———–


வர்ணஸ்தோமை: வகுள ஸுமந: வாஸநாம் உத்வஹந்தீம்
ஆம்நாயாநாம் ப்ரக்ருதிம் அபராம் ஸம்ஹிதாம் த்ருஷ்ட வந்தம்
பாதே நித்ய ப்ரணிஹித தியம் பாதுகே ரங்கபர்த்து:
த்வந் நாமாநம் முநிம் இஹ பஜே த்வாம் அஹம் ஸ்தோதுகாம:–-ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்–3-

வர்ணாஸ் தோமைர் -எழுத்துக்கு கூட்டங்கள்
வகுள ஸூமநோ வாசநா முத்வ ஹந்தீம் -மகிழம் பூ வாசனையை -தாங்கிக் கொண்டு உள்ளது -திருவாய் மொழியிலும் இருக்குமே
ஆம் நாயா நாம் ப்ரக்ருதிம் அ பராம் -வேதங்களின் மற்ற ஒரு வடிவமே திருவாய் மொழி
ஸம்ஹிதாம் த்ருஷ்ட வந்தம் -கண்டு பிடித்துக் கொடுத்து அருளியவர் -த்ருஷ்ட்டி பார்த்து –
நால் வேதம் கண்ட புராண ரிஷி மந்த்ர தர்சிகளைப் போல் இவரையும் ரிஷி முனி கவி என்னும் –ஆச்சார்ய ஹ்ருதயம் -47-
பாதே நித்ய ப்ரணிஹித தியம் பாதுகே ரங்க பர்த்து -ஸ்ரீ ரெங்க நாதனின் திருவடிகளில் நித்யம் வைக்கப்பட்ட
புத்தி உடைய நம்மாழ்வார்-நேரே கூப்பிட்டு அருளிச் செய்கிறார் –
த்வன் நாமா நம் முநி மிஹ பஜே த்வாமஹம் ஸ்தோதுகாம-உம்முடைய பெயரே -சடாரி -சடகோபன் -முனிவர் –
தமிழ் வேதம் வழங்கி மனன சீலர் -16 வருஷம் இடைவிடாமல் தியானித்து
இஹ- இப்பொழுது -நான் ஸ்துதி தொடங்கும் முன் உம்மை வணங்கி தொடங்குகிறேன் –

வேதம் தமிழ் செய்த மாறன் -ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய் மொழி அருளிச் செய்து
எக்காலமும் ஸ்ரீ ரங்க நாதனுடைய திருவடிகளையே நினைத்து கொண்டு இருந்தவர் ஆகிறார்
ஸ்ரீ பாதுகை – ஸ்ரீ சடாரி- நம்மாழ்வார் என்று அருளிச் செய்கிறார் –

திருவாய்மொழி என்பது தமிழ் வேதம்.எப்பொழுதும் ஸ்ரீரங்கநாதனுடைய திருவடியையே நினைத்துக் கொண்டிருந்த
நம்மாழ்வார் அந்த வேதத்தைக் கண்டு பிடித்தார்.
ஸ்ரீரங்கநாதன் பாதுகையென்று சொல்லப்பப்டுகிற அவரை
இந்த ஸ்தோத்ரம் விக்னமில்லாமல் முடிவதற்காக முதலில் த்யானிக்கிறேன்.

——————————

த்ரமிடோபநிஷந்நிவேஶஶூந்யாந்‌
அபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யந்‌ |
த்ருவமாவிஶதி ஸ்ம பாதுகாத்மா
ஶடகோப ஸ்வயமேவ மாநநீய: ॥ –ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸமாக்யாபத்ததி – 2

“எல்லாராலும் போற்றப்படுகின்ற ஸ்வாமி நம்மாழ்வார் அனைவரும் பெருமாளை அடைந்து உஜ்ஜீவிக்கவேண்டுமென்று
திருவுள்ளங்கொண்டு திருவாய்மொழியைத் தந்தருளினார்.
இருப்பினும் பலர் அத்திருவாய்மொழியைக் கற்று உபாஸிப்பதில்லை.
அப்படி கற்காதவர்களும் பெருமாளை அடைவதற்காக ஆழ்வார் தாமே பாதுகையாக அவதரித்து
அனைவரின் ஸிரஸ்ஸிலும் ஸ்ரீசடாரியாக ஸாதிக்கப்பெற்று,
அந்த ஸம்பந்தம் மூலமாக திவ்ய தம்பதிகளின் அநுகிரஹத்திற்குப் பாங்காக அனைவரையும் மாற்றியருளினார்.” என்று
ஆழ்வாரின் அருளிச்செயல்களை அறியாதவர்களும் உய்ய வேண்டுமென்று
அவர் ஸ்ரீசடாரியாகத் திருவவதரித்த வைபவத்தை நிர்தாரணம் பண்ணுகிறார் ஸ்வாமி தேசிகன்.

——————

க்ருதிந கமலா வாஸா காருண்ய ஏகாந்திந பஜே
தத் தே யத் ஸூக்தி ரூபேண த்ரிவேதீ சர்வ யோக்யதாம்—ஸ்ரீ தயா சதகம்–3-

தயா தேவியே நித்ய ஸூரிகளை ஆழ்வார்களாக அவதரிப்பித்து
அருளிச் செயல்களை அருளச் செய்வித்து
வேதாந்த பொருளை சர்வாதிகாரமாக அறியும் படி பண்ணி அருளினாள் –

மூன்று வேதங்களும் ஆழ்வார்களின் ப்ரபந்தங்கள் மூலமே அனைவரும் கற்கும் விதமாக அமைந்தன.
ஸ்ரீநிவாஸனின் தயை என்பதை மட்டுமே தங்கள் புகலிடம் என்று புகுந்த ஆழ்வார்களின் பிரபந்தங்களையே,
அந்தப் பிரபந்தங்களை அருளிச் செய்த ஆழ்வார்களையே நான் விடாமல் தொழுகிறேன்.

நித்ய ஸூரிகளின் அவதாரமாகவே ஆழ்வார்களை அவதரிக்கச் செய்து,
அவர்கள் மூலமாகவே வேதங்களைத் தமிழ்ப் படுத்தினாள்.
ஆழ்வார்கள் ஸ்ரீநிவாஸனின் தயை என்பதே வடிவெடுத்தது போன்றவர்கள் ஆவர்.

———-

முஹூர் நத்வா மூர்த்நா வி நதவிவி ப்ரஷமநே
ஷடாரே பாதாப்ஜே மதுர கவி தேவஸ்ய ஷரணே
இதம் யாசே வாசா அலக வகுளாளீ பரிகளத்
மதூளீ மாதுர்யம் மம வசன பங்க்யாம் ச திஷது–-ஸ்ரீ லோகாச்சார்ய பஞ்சாஷத்–4–

முஹூர் நத்வா மூர்த்நா வி நதவிவி ப்ரஷமநே –ஷடாரே பாதாப்ஜே மதுர கவி தேவஸ்ய ஷரணே –ஸமஸ்த வித பாபங்களையும் ஆஸ்ரிதர்க்குப் போக்கி அருளுபவர் –
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி நிலைகளான ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரே சரண் ஆவார் -அவர் திருவடிகளை மீண்டும் மீண்டும் அடியேன் தலையால் வணங்கி
இதம் யாசே வாசா அலக வகுளாளீ பரிகளத்-மதூளீ மாதுர்யம் மம வசன பங்க்யாம் ச திஷது-அவர் திரு முடியில் சாத்தி இருக்கும்
வகுள மாலை கந்தம் அடியேன் வாக்குக்கும் மொழிக்கும் மனம் அருளிச் செய்ய வேண்டி ஸ்துதிக்கிறேன் –

வகுளாபரணர் அன்றோ -அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே என்றவர் திருவடிகளை பற்றி தம் வாக்குக்கும் அமுதூட்ட சரண் அடைந்து பிரார்த்திக்கிறார்

—————————————————

அந்தமிலாப் பேரின்பம் அருந்த ஏற்கும்
அடியோமை அறிவுடனே என்றும் காத்து
முந்தை வினை நிரை வழியில் ஒழுகாது எம்மை
முன்னிலையாம் தேசிகர் தம் முன்னே சேர்த்து
மந்திரமும் மந்திரத்தின் வழியும் காட்டி
வழிப் படுத்தி வானேற்றி அடிமை கொள்ளத்
தந்தையென நின்ற தனித் திருமால் தாளில்
தலை வைத்தோம் சடகோபன் அருளினாலே–அம்ருதாஸ்வாதினி – 28

“எல்லையில்லா ஆனந்தத்தை அளிக்கும் மோக்ஷமென்னும் ஸாதனத்திற்குத் தகுதியாயுள்ள நம்மைக் காத்து,
ஸ்திரமான தர்ம பூத ஞானத்தைக் கொடுத்து எம்பெருமான் நம்மை ரஷித்தருளுகிறான்.
மேலும் அநாதியான கர்ம ஸம்பந்தத்தில் நம்மை அழுத்தாமல் நம்மைக் கரை சேர்ப்பதற்குப் ப்ரதானமான ஸ்தானத்தில் நிற்கின்ற
ஆசார்யர்களிடம் ஒரு ஸம்பந்தத்தை உண்டு பண்ணி, திருமந்திரம் முதலிய மந்திரத்தையும் அந்த மந்திரத்தில் சொல்லப்படும் ப்ரபத்தி என்னும் உபாயத்தையும்
அவ்வாசார்யன் மூலமாக நமக்கு உபதேஸித்தருளி அவ்வுபாயத்தை அனுஷ்டிக்கும்படி ஓர் தெளிவை ஏற்படுத்தி, நம்மை பரம பதத்தில் கொண்டு சேர்க்கிறான். பின்பு அங்கே நாம் செய்யும் கைங்கர்யங்களை ஏற்றுக் கொள்கிறான்.
இப்படி பலவிதமான மஹா உபகாரங்கள் செய்ய முற்படும் நிகரற்ற எம்பெருமான் நமக்குத் தந்தை என்னும் ஸ்தானத்தில் நிற்கின்றான்.
அப்பெருமானின் திருவடிகளில் நம்மாழ்வாருடைய அனுகிரஹத்தாலே தலை வணங்கப் பெற்றோம்.” என்று ஸாதிக்கிறார்.

—————-

பத்யு: ச்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம் |
ப்ரபன்ன ஜன கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் ||–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 5-

பத்யுச் ஸ்ரிய பிரசாதேன
ஸ்ரிய பத்யு பிரசாதேன –
திருமால் திருவருளால் –
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் –
பெரும் கேழலார் -ஒருங்கே -எங்கும் பக்க நோக்கம் அறியாமல் அன்றோ ஆழ்வார் மேலே –
பெரும் கண் புண்டரீகம் பிறழ வைத்து அருளினார்
பண்டை நாள் -உன் திருவருளும் பங்கயத்தாள் திரு அருளும் பெற்றவர் அன்றோ

ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம் –
சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும்-
அர்ச்சிராதி கதியையும் அன்றோ காட்டி அருளுகிறார்-ஞான பக்தி வைராக்யம் தானே சம்பத்து

ப்ரபன்ன ஜன கூடஸ்தம் –
பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான –
விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர்
பராசர பாராசர்யா போதாய நாதிகள்-
பிரபன்ன ஜன கூடஸ்தர்-மாதா பிதா இத்யாதி –
பராங்குச பரகால யதிவராதிகள் –ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்தி

ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் –
ஸ்ரீ நம் ஆழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன் –

ஸ்ரீ திருமால் திருவருளால் – மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் –
சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும் பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான –
ஸ்ரீ நம்மாழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன்

—————

சடகோப முநிம் வந்தே
சடாநாம் புத்தி தூஷணம் |
அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம்
திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம் ||--ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 6-

சடகோப முநிம் வந்தே –
ஸ்ரீ நம் ஆழ்வாரை வணங்குகின்றேன்

சடாநாம் புத்தி தூஷகம் –
குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் –
தீ மனத்தவர்களுடைய தீ மனத்தை கெடுத்து

அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம் –
அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும்
அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து –
தீ மனம் கெடுத்து மருவித் தொழும் மனம் தந்து உய்யப் புகும் ஆறு உபதேசம்
கரை ஏற்றுமவனுக்கும் நாலு ஆரும் அறிவிப்பார்

திந்த்ரிணீ மூல சம்ஸ்ரயம் –
ஸ்ரீ திருப் புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான –
இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட ஸ்ரீ நம் ஆழ்வாரை தொழுகிறேன் -என்கை-

குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் – தீய மனத்தவர்களுடைய தீய மனத்தை கெடுத்து –
அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும் – அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து –
ஸ்ரீ திருப்புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான –
இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்!

—————–

வகுளாபரணம் வந்தே ஜகதாபரணம் முநிம் |
ய: ச்ருதே ருத்தரம் பாகம் சக்ரே த்ராவிட பாஷயா ||–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 7-

வகுளா  பரணம் வந்தே ஜகதா பரணம் முநிம்
உலகுக்கு எல்லாம் அலங்கார பூதரான – ஸ்ரீ நம் ஆழ்வாரை –

யச் ஸ்ருதேருத்தரம் பாகம் சக்ரே திராவிட பாஷயா –
யாவரொரு ஆழ்வார் வேதத்தின் உத்தர காண்டம் ஆகிய உபநிஷத்தை
தமிழ் மொழியினால் வெளியிட்டு அருளினாரோ
அந்த ஸ்ரீ நம் ஆழ்வாரை வணங்குகின்றேன் –

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் பெய்தற்கு அருளினார் –
ச ப்ரஹ்ம ச சிவா சேந்த்ர –பரம ஸ்வ ராட் –அவனே அவனும் அவனும் அவனும்
சதேவ சோம்ய ஏகமேய அத்விதீயம் – வேர் முதலாய் வித்தாய் -த்ரிவித காரணம் –

“உலகுக்கு எல்லாம் அலங்கார பூதரான – ஸ்ரீ நம்மாழ்வாரை, யாவரொரு ஸ்ரீ ஆழ்வார் வேதத்தின்
உத்தர காண்டம் ஆகிய உபநிஷத்தை தமிழ் மொழியினால் வெளியிட்டு அருளினாரோ –
அந்த ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகின்றேன்”

—————

நமஜ்ஜனஸ்ய சித்த பித்தி, பக்தி சித்ர தூலிகா
பவார்ஹி வீர்ய பஞ்சநே, நரேந்த்ர மந்த்ர யந்த்ரனா |
ப்ரபன்ன லோக கைரவ, ப்ரஸந்ந சாரு சந்த்ரிகா
சடாரி ஹஸ்த முத்ரிகா, ஹடாத்கரோதுமே தம: | |–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் கடைசி ஸ்லோகம் 8-

நமத ஜநச்ய சித்த பித்தி பக்தி சித்ர தூலிகா-
தம்மை வணங்குமவர்களுடைய
ஹ்ருதயம் ஆகிற
சுவரிலே
பக்தியாகிற சித்திரத்தை எழுதும்
கருவியாகவும் –
காலை மாலை கமல மலர் இட்டு -இத்யாதி உபதேசித்து

பவாஹி வீர்ய பஞ்ஜநே நரேந்திர மந்திர யந்த்ரணா-
சம்சாரம் ஆகிற சர்ப்பத்தின் உடைய/-பாவ + அஹி-சம்சார பாம்பு –
வீர்யத்தைத் தணிக்கும் விஷயத்தில்
விஷ வைத்தியனுடைய-நரேந்திர -விஷ வைத்தியன்-மந்திர பிரயோகச் சிடிகை போன்றதையும்
நரகத்தை நகு நெஞ்சே -மாறன் சொல் நேராகவே விளையும் வீடு –
வழி நின்ற வல் வினை மாள்வித்து அழிவின்று ஆக்கம் தரும்

பிரபன்ன லோககைரவ பிரசன்ன சாரு சந்த்ரிகா –
பிரபன்ன ஜனங்கள் ஆகிற
ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல-கைரவம் -ஆம்பல்
அழகிய நிலாப் போன்றதையும் இருக்கிற –

சடாரி ஹஸ்த முத்ரிகா ஹடாத் துநோது மே தம –
ஸ்ரீ நம் ஆழ்வாருடைய திருக் கைத் தல முத்ரையானது-உபதேச முத்திரை
என்னுடைய அகவிருளை எப்படியாவது தொலைத்து அருள வேணும் —

ஸ்ரீ ஆழ்வாருடைய ஸ்ரீ ஹஸ்த முத்ரையை வர்ணிக்கும் ஸ்லோகம்
சம்சார போகி சந்தஷ்ட ஜீவா ஜீவாது
பக்த ஜனங்களின் பக்தியை ஊட்ட வல்லதாயும்
சம்சார ஸ்ப்ருஹதையை அறுக்க வல்லதாயும்
பிரபன்னர்களைப் பரமானந்த பரவசராக்க வல்லதாயும்–இரா நின்ற ஸ்ரீ ஆழ்வார் உடைய
ஸ்ரீ ஹஸ்த முத்தரை யானது
நம்முடைய அகவிருளை அகற்ற வேணும் -என்றார் ஆயிற்று –

தம்மை வணங்குபவர்களுடைய ஹ்ருதயம் ஆகிற சுவரிலே பக்தியாகிற சித்திரத்தை எழுதும் கருவியாகவும் –
காலை மாலை கமல மலர் இட்டு -இத்யாதி உபதேசித்து சம்சாரம் ஆகிற சர்ப்பத்தின் உடைய வீர்யத்தைத் தணிக்கும்
விஷயத்தில் விஷ வைத்தியனுடைய (நரேந்திர -விஷ வைத்தியன்) மந்திர பிரயோகச் சிடிகை போன்றதையும்
நரகத்தை நகு நெஞ்சே -மாறன் சொல் நேராகவே விளையும் வீடு –
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்று ஆக்கம் தரும்.

பிரபன்ன ஜனங்கள் ஆகிற ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல அழகிய நிலாப் போன்றதையும்
இருக்கிற ஸ்ரீ நம்மாழ்வாருடைய திருக் கைத்தல முத்ரையானது (உபதேச முத்திரை)
என்னுடைய அகவிருளை எப்படியாவது தொலைத்து போக்கி அருள வேணும்.

————

ஸ்லோகம் 9 (சில கோயில்களில் இந்த 9வது ஸ்லோகத்தையும் பெரியோர்கள் ஸேவிப்பர்)

வகுளாலங்க்ருதம் ஸ்ரீமச்சடகோப பதத்வயம் |
அஸ்மத்குல தனம் போக்யுமஸ்து மே மூர்த்நி பூஷணம் | |

மகிழ மலர்களினால் அலங்கரிக்கப் பட்டதும்
எமது குலச் செல்வமும்
பரம போக்யமுமான
ஸ்ரீ ஆழ்வார் திருவடி இணையானது
எனது சென்னிக்கு
அலங்காரம் ஆயிடுக-

——————–

ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா –பிரேம ஆவில ஆசய பராங்குச பாத பக்தம்
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாம்ஸ்ரிதா நாம் -ராமா நுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா –

ஶ்ரீமாத⁴வ அங்க்⁴ரி ஜலஜத்³வய நித்யஸேவா ப்ரேம ஆவில ஆஶய பராங்குஶ பாத³ ப⁴க்தம் – அழகு பொலிந்த எம்பெருமானது
திருவடித்தாமரையிணைகளை நிச்சலும் தொழுகையினாலுண்டான ப்ரேமத்தினால் கலங்கின திருவுள்ளமுடையவரான
நம்மாழ்வாருடைய திருவடிகளிலே அன்பு பூண்டவரும்,
ஆத்ம பத³ ஆஶ்ரிதாநாம் – தமது திருவடிகளைப் பணிந்தவர்களுக்கு,
காமாதி³ தோ³ஷஹரம் – காமம் முதலிய குற்றங்களைக் களைந்தொழிப்பவரும்,
யதிபதிம் – யதிகளுக்குத் தலைவருமான,
ராமாநுஜம் – எம்பெருமானாரை,
மூர்த்⁴நா ப்ரணமாமி – தலையால் வணங்குகின்றேன்.

இதில் முதல் ஶ்லோகத்தால், தொடங்கிய ஸ்தோத்ரம் நன்கு நிறைவேறும் பொருட்டு
ஆசார்யாபிவாதநரூபமான மங்களம் செய்யப்படுகிறது.

முதல் ஶ்லோகத்தில் எம்பெருமானாருடைய ஜ்ஞாநபூர்த்தியும்,
இரண்டாவது ஶ்லோகத்தில் அவருடைய அநுஷ்டாநபூர்த்தியும் பேசப்படுகிறது.

முதல் ஶ்லோகத்தில் திருவின் மணாளனான எம்பெருமனுடைய திருவடித்தாமரை யிணையில் செய்யத்தக்க
நித்யகைங்கர்யத்தில் உள்ள ப்ரேமத்தினாலே கலங்கின திருவுள்ளத்தையுடையவரான
நம்மாழ்வாருடைய திருவடிகளில் மிகுந்த பக்தியை யுடையவரும்,
தமது திருவடிகளை அடைந்தவர்களுடைய காமம் முதளான தோஷங்களைப் போக்கடிப்பவரும்,
யதிகளின் தலைவருமான எம்பெருமானாரைத் தலையால் வணங்குகிறேன் என்கிறார்.

ஸ்ரீரங்க3ராஜசரணாம்பு3ஜ ராஜஹம்ஸம்
ஸ்ரீமத்பராங்குS பதா3ம்பு3ஜப்4ருங்க3ராஜம் |
ஸ்ரீப4ட்டநாத2 பரகால முகா2ப்3ஜமித்ரம்
ஸ்ரீவத்ஸசிஹ்ந Sரணம் யதிராஜமீடே||–2-

ஶ்ரீரங்க³ராஜ சரண அம்பு³ஜ ராஜஹம்ஸம் – ஶ்ரீரங்கநாதனுடைய திருவடியாகிற தாமரையிலே ராஜஹம்ஸம் போன்று ஊன்றியிருப்பவரும்,
ஶ்ரீமத் பராங்குஶ பதா³ம்பு³ஜ ப்⁴ருʼங்க³ராஜம் – நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரைகளிலே வண்டுபோல் அமர்ந்திருப்பவரும்,
ஶ்ரீப⁴ட்டநாத² பரகாலமுக² அப்³ஜமித்ரம் – பெரியாழ்வார் திருமங்கையாழ்வார் முதலான ஆழ்வார்களாகிற
தாமரைப் பூக்களை விகாஸப் படுத்துவதில் ஸூர்யன் போன்றவரும்,
ஶ்ரீவத்ஸ சிஹ்ந ஶரணம் – கூரத்தாழ்வானுக்குத் தஞ்சமாயிருப்பவரும் (அல்லது) கூரத்தாழ்வானைத் திருவடிகளாக வுடையவருமான,
யதிராஜம் – எம்பெருமானாரை,
ஈடே³ – துதிக்கின்றேன்.

இரண்டாவது ஶ்லோகத்தில் பெரியபெருமாளுடைய திருவடித்தாமரைகளில் விளையாடும் உயர்ந்த அன்னப் பறவை போன்றவரும்,
நம்மாழ்வாருடைய திருவடித் தாமரைகளில் பொருந்திய வண்டு போன்றவரும்,
பெரியாழ்வார் மற்றும் பரகாலரான திருமங்கையாழ்வார் ஆகியோரின் முகத்தாமரையை மலரச் செய்யும் ஸூர்யன் போன்றவரும்,
ஆழ்வானுக்கு உபாயமாக விருப்பவருமான யதிராஜரைத் தொழுகிறேன் என்கிறார்.

மேலே மூன்று ஶ்லோகங்களாலே ப்ராப்ய ப்ரார்த்தனை செய்கிறார்.

————-

ஸ்ரீ சடகோப வாங்மயமான( தனியன் ) சதுர் வேதத்துக்கும் ஷட் அங்கங்களை அருளிச் செய்யும் படி
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அவதரித்து அருளின
திருக் கார்த்திகை திரு நஷத்ரத்தை பல காலும் (மாசம் தோறும் ) ஆதரிக்குமவர்களை
மங்களா சாசனம் பண்ணு என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த –  வீறுடைய
கார்த்திகையில்  கார்த்திகை  நாள் இன்று என்று காதலிப்பார்
வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து —-9-

அங்காநி
ஷட் த்ரவிட வேத சதுஷ்டஸ்ய கர்த்தும்
சடாரி கலி தத்த
யத் ஆவிர்பூத புவி
கார்த்திகை கிருத்திகாஸூ
தத் வைபவ பத பத்மம் உபைதி
சேதச

மாறன் பணித்த தமிழ் மறைக்கு-
சமஸ்க்ருத வேதம் போலே-தான் தோன்றியாய் -அடி யற்று இருக்கை அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் இடத்திலே அவதரித்த ஏற்றம் உண்டு இறே-திருவாய் மொழிக்கு –
வேத ப்ராசாதேசாதா சீத -என்னுமா போலே  –
(ஸ்வ மஹிமையால் தானே தன்னை ப்ரதிஷ்டை செய்தாலும் தாய் தந்தை தேர்ந்து எடுத்து
தொல்லை இன்பம் அருளுவான் இங்கேயே –
ம்ருத் கடம் வேதம் – போல் அன்றே -பொன் கடம் இவர் வாயனவாறே
எம்பெருமான் -பெருமாள் சக்ரவர்த்தி திருமகனாக அவதரிக்க வந்தால் போல் –
வேத புருஷன் -வால்மீகி க்கு பிள்ளை என்று பின் வந்தான் )

தமிழ் மறை -என்கையாலே
திராவிட ரூபமான வேதம் -என்கை –
ததும்  ஹ த்ரீன் கிரி ரூபா ந விஜ்ஞாதா ந சதர்சயாம் சகாயா தேஷாங்ம் ஹேயாகை கஸ்மான்
முஷ்டிநா ஆததே சஹோவாச பரத்வாஜே த்ர்யா மந்த்ர்ய வேதா வா  ஏதே
அநந்தா வை வேதோ -( காடகம் )-என்றும்
நமோ வாசே யசோதிதா யாசா நுதிதா தஸ்யை வாசே –
ஸ்வ சம்ஸ்க்ருத திராவிட வேத ஸூக்தி  -என்றும்
த்ராவிடீம்  ப்ரஹ்ம சம்ஹிதாம் ( பராங்குச அஷ்டகம் ) -என்றும்
அருளிச் செய்தார் இறே பட்டர் –
ஸ்ரீ ஆழ்வாரைக் கொண்டு ஈஸ்வரன் பிரவர்த்திப்பித்ததே ஹேதுவாக கொண்டு
இவராலே ப்ரநீதமானதாகச் சொல்லக் கடவது –

(எம்பெருமானார் தர்சனம் என்று பெயர் இட்டு -வளர்த்த செயலுக்காக போல்
இவர் நாவில் அமர்ந்து பாடுவித்தான் –
அநாதி -இவையும் வேதம் போல் -)

மங்கையர் கோன் ஆறங்கம் கூற அவதரித்த –
இப்படி இவராலே உண்டான திராவிட வேத சதுஷ்ட்யத்துக்கும்
ஸ்வ ஸூக்திகளான ஷட் பிரபந்தங்களை அருளிச் செய்யும் படி அவதரித்து அருளினார் இறே ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –
திரு விருத்தம் முதலான நம் ஆழ்வார் பிரபந்தங்கள் நாலுக்கும்
பெரிய திரு மொழி முதலான திருமங்கை ஆழ்வார் பிரபந்தங்கள் ஆறும் அங்கங்களாக இறே இருப்பது
அது திராவிட வேதம் ஆனால்
இதுவும் திராவிட ரூபமான அங்கங்கள் என்னக் குறை இல்லை இறே –
திருவாய் மொழியினுடைய வேதத்வத்தையும்
இதனுடைய அங்கத்வத்தையும் ஆச்சார்ய ஹிருதயத்தில் பரக்க உபபாதித்து அருளினார் இறே –

(வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் )
அங்க உபாங்கங்கள் போலே
இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும்-ஆச்சார்ய ஹிருதயம்-43-
இதுக்கு 17 வகைகளில் நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார் பாசுர ஒற்றுமைகள்
காட்டி அருளுகிறார் மா முனிகள்
மாசறு சோதி -இரண்டு பாசுரங்களில் நம்மாழ்வார் –
இவர் இரண்டு பிரபந்தங்கள் –
ஓ ஓ உலகின் இயல்பே ஈன்றோள் இருக்க மணை நீர் ஆட்டி -நம்மாழ்வார்
மை நின்ற -பெற்ற தாய் இருக்க -பத்து பிபாசுரம் விரித்து காட்டி
இப்படி அங்கி அங்கம் பாவம் – )

வீறுடைய கார்த்திகையில் கார்த்திகை நாள் –
இப்படியான ஏற்றத்தை யுடைத்தான-வேத வேதாங்க தத்வ ஜ்ஞானரான இவர் அவதரிக்கையாலே
அல்லாத திரு நஷத்ரங்களில் காட்டிலும் வீறு உடையதாய் யாய்த்து
கார்த்திகையில் கார்த்திகை தான் இருப்பது –
(அனைத்து ஆழ்வார்கள் திருவடி நிலை இவரே -அவரது அருளிச் செயல்கள் அனைத்தும் அறிந்தவர் இவரே )

இவர் தாம் ஸ்ரீ பராங்குச பரகாலாதிகள் என்னும் படி இறே பிரசித்தராய்ப் போருகிறது –
(கிருத்திகா பிரதமம் விசாகே உத்தமம் -வேதமும் இவர்களைச் சேர்த்தே சொல்லும் )
தாமும் -உம் அடியாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை-4-9-6 -என்று இறே அருளிச் செய்தது –
அது போலே யாய்த்து திரு நஷத்ரம் –
அதுக்கு மேலே
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடும் -தன்னேற்றம் உண்டே இவருக்கு –

இப்படி இவர் அடியாக யுண்டான அதிசயத்தை யுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்று என்று காதலிப்பார்-
இந் நாள்கள் இடையில்-இதுவும் ஒரு மதி நிறைந்த நந்நாள்-(திருப்பாவை -1-)உண்டாவதே என்று
இதன் வைபவத்தை   இடைவிடாமல்  அனுசந்தித்து
இதிலே அத்ய அபி நிவேசத்தைப் பண்ணி போந்து அருளுவார்கள் –
அவர்கள் ஆகிறார் -குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் ராமானுசன்- (ராமானுச 2 )-போல்வார்   –

அவர்கள் உடைய –
வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து –
அவர்கள் நமக்கு சேஷிகள் ஆகையால்
ஸ்வரூப பிராப்தமாய் -நிரதிசய போக்யமான திருவடிகளை –
போந்தது என்நெஞ்சு (ராமானுச -100)-என்னும் படி அதிலே அதி ப்ரவணமாய் போருகிற மனஸே
அச் செவ்வி மாறாமல் நித்யமாய்ச் செல்ல வேண்டும் என்று
மங்களா சாசனம் பண்ணி உன் ஸ்வரூபம் பெறப் பார்
இன்புறும் தொண்டர் செவ்வடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே( பெருமாள் 2-4-சேவடி -பாட பேதம் )-என்னக் கடவது இறே
வாய்க்கை -பொருந்துகை –

மலர்த் தாள்கள் –
மலர் போன்ற திருவடிகள் –
இத்தால் –
ஆச்சர்ய பாரதந்த்ரத்துக்கு அனுகூல வ்ருத்தி  செய்து போருகை ஸ்வரூபம் என்றது ஆயத்து –

இந்த ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திரு நஷத்ரத்தை
ஸ்ரீ திருக் கலிகன்றி தாசர் என்று திரு நாமத்தை யுடையராய்
சதிருடைய தமிழ் விரகராய்-
அருளிச் செயல் நாலாயிரம் பாட்டுக்கும் அர்த்த உபதேசம் பண்ணுமவராய்
போருகிற லோகாச்சார்யரான ஸ்ரீ நம் பிள்ளையும்
தத் வம்ச்யரும் மிகவும் பரிபாலித்து போருவர்கள் என்று பெரியோர்கள் அருளிச் செய்து போருவர்கள் –

ஸ்ரீ பிள்ளை ஆதரிக்கிறது ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் பிராவண்யத்தாலே   –
தத் வம்ச்யர் ஆதரிக்கிறது ஸ்ரீ பிள்ளையினுடைய திரு நஷத்ரமும் அது என்றாக வேணும் –

(அனந்தாழ்வான் சிஷ்யர் மதுரகவி தாசர் –
மாத பெயரும் நக்ஷத்ரமும் சேர்ந்தே இருப்பது கார்த்திகையில் கார்த்திகையும் -சித்திரையில் சித்ரையும் தானே )

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-

———————————————

அல்லாத ஸ்ரீ ஆழ்வார்களை எல்லாம் அவயவ பூதராய் யுடையராய் –
வேதாந்த அர்த்தங்களை எல்லாம் திருவாய் மொழி முகேன பிரகாசிப்பித்தது அருளி
ஸ்ரீ திரு நகரிக்கு நாதராய் இருந்துள்ள ஸ்ரீ நம்மாழ்வார்
திருவவதரித்து அருளின திரு விசாக திரு நஷத்ரத்தின்  வைபவத்தை
பூமியில் உண்டானவர்கள் எல்லாரும் அறியும்படி பிரசித்தமாக அருளிச் செய்கிறோம் -என்கிறார் –

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப்
பாரோர் அறியப் பகர்கின்றேன் –சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்  —14-

ஆழ்வார் ஆதி நாதன் தேவஸ்தானம் உபயமாக இருந்தாலும் இவருக்கே-
பெரியவருக்கே – விட்டுக் கொடுத்து அருளினான் –
ஏரார்ந்து -விசாகம் -வைகாசி -விசேஷணமாகக் கொண்டு வியாக்யானம் –

ஆஸ் யாமி
சாரு தர மாதவ மாச
விசாக நக்ஷத்ரம் -ராதா -அடுத்து அனு ராதா அனுஷம்
ஆவநி ஜன போதனாய
த்ருஷ்டும் த்ரயம் திராவிட
குருகேஸ்வரஸ் யஸ்ய
திவ்ய அவதார
சத்ய வாச

ஏரார் இத்யாதியால் –
கீழ் அடங்கலும் மாசங்கள் விச்சேதியாமல் அடைவே அருளிச் செய்து போந்தவர்
இப்போது பங்குனி மாசத்தில் ஆழ்வார்கள் அவதரணம் இல்லாமையாலும்
சித்திரை மாசத்திலே ஸ்ரீ மதுரகவிகள் ஆழ்வார் யுடையவும் ஸ்ரீ எம்பெருமானாருடையவும்
அவதாரம் உண்டே யாகிலும் ஸ்ரீ ஆழ்வார் பதின்மர் உடைய அவதார க்ரமத்தை அருளிச் செய்யப்
புகுமவர் ஆகையாலும் அவற்றை விட்டு வைத்து –
ஏரார் வைகாசி -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

(முதல் -20- பாசுரங்கள் பிரதம பர்வ ஆழ்வார் -20-29 -சரம பர்வத்தில் உள்ள
ஆண்டாள் -மதுரகவி ஆழ்வார் -எம்பெருமானார் -என்று முன்பே பேடிகா விபாகம் பார்த்தோம் )

(ராமானுஜ நூற்று அந்தாதியிலும் பேர் ஊர் சொல்லாத ஆழ்வார்கள் சொன்னபின்பு
ஆழ்வார்கள் -ரீதி மாற்றம் -அங்கும் உண்டே திருப்பாண் ஆழ்வார் திரு மழிசை ஆழ்வாருக்கு முன்னே
ஆச்சார்ய ஹ்ருதயம் -குணங்கள் -கோயில்-வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் –
திரு மலை -வாத்சல்யம் -நிகரில் பாசம் வைத்த வாத்சல்யம் உஜ்வலம் –
உபய பிரதானம் பரே சப்தம் பொலியும்
பர வ்யூஹ விபவ
வ்யூஹம் -கோயில்
திருமலை -அந்தர்யாமி
விபவம்-திருக்குறுங்குடி விபவ லாவண்யம் -வைஷ்ணவ வாமனத்திலே பூர்ணம்
பின்பு வான மா மலை தொடங்கி அர்ச்சை இந்த க்ரமம் – )

ஏரார் வைகாசி –
வைகாசி ஏரார்ந்து இருக்கை யாவது-மாதவ மாசம் ஆகையாலே புஷ்ப சமயமான அழகை யுடைத்தாகை –
திருவவதரித்து அருளின தேசம்  -கொத்தலர் பொழிலையும் குயில் நின்றார் பொழிலையும்
யுடைத்தாய் இருக்குமா போலே யாய்த்து –

ஏரார் வைகாசி விசாகம் –
என்று ஏராருகை விசாகத்துக்கு விசேஷணமாய்  ஆக்கவுமாம் –
அப்போது திரு விசாகத் திருநாள் என்னும் படி இறே இதன் அலங்கார அதிசயம் இருப்பது –
உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும் பாலும் பழமுமாக அமுது செய்து
பரிபாலநீயமான திவசமாய் இருக்கை –
அதாவது -பால் மாங்காய் அமுது செய்யப் பண்ணுகை –
(பால் மாங்காய் உத்சவம் கார்ப்பங்காடில் இன்றும் விசேஷம்
இல்லத்தில் விசாகம் தோறும் -செய்து அருள வேணும் )

இப்படியான இதனுடைய ஏற்றத்தை –
பாரோர் அறியப் பகர்கின்றேன் —
இருந்ததே குடியாக எல்லாரும் இவருடைய ஜன்மமான வைகாசி விசாகத்தை அறிந்து
உஜ்ஜீவிக்கும் படி சொல்லா நின்றேன் –
இத்தை ஒருவர் அபேஷித்து இருப்பார் இல்லாது இருக்கவும்
இவருடைய அபி நிவேச அதிசயம் பேசுவிக்கப் பேசுகிறபடி –

இனி இதுக்கு எல்லாம் அடி இன்னது என்கிறது –
சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள்  —
சீராரும் வேதம்-
வேதத்துக்கு சீரார்ந்து இருக்கை யாவது
அபௌருஷேயத்வாதிகளால்  வந்த பிராமண்ய ஸ்ரீயை யுடைத்தாகை-
சுடர் மிகு சுருதி -என்று இறே ஆழ்வார் அருளிச் செய்தது –

அன்றிக்கே –
ஸ்ரீ யபதியாய்-பர ப்ரஹ்ம வாச்யனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஸ்வரூப ரூப குணங்களை
உபபாதிப்பதான உத்தர பாகத்தை யாகவுமாம் –
யஸ்ருதே ருத்தரம் பாகம் சக்ரே திராவிட பாஷயா -( பராங்குச அஷ்டகம் )-என்னக் கடவது இறே –

வேதம் தமிழ் செய்த –
வேதம் தமிழ் செய்கை யாவது –
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை -(ராமானுஜ -18)-என்கிறபடியே
வேதமானால் அதிக்ருதாதி காரமாய் இருக்கும் ஆகையால்
அகில சேதனர்க்கும் அப்யசித்து உஜ்ஜீவிக்கை அரிது என்று
சர்வாதிகாரமாய்-சர்வ உபஜீவ்யமாய் இருக்கும் படி -திராவிட பாஷா ரூப சந்தர்ப்பத்தாலே
வேதார்த்தத்தை விசதீ கரித்து அருளிச் செய்தார் -என்கை –

(மேகம் பெருகின சமுத்ராம்பு போல் நூல் கடல் -பருகி சர்வருக்கு உப ஜீவ்யம் )
வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த  மாறன் சடகோபன்-(கண்ணி நுண் தனியன் ) -என்றும்
அருமறைகள் அந்தாதி செய்தான் -(திருவாய் தனியன் )-என்றும் சொல்லக் கடவது இறே –

மெய்யன் –
அருளிச் செய்தது எல்லாம் வேதார்த்தம் என்கைக்கு அடியான ஆப்தி இருக்கும் படி

எழில் குருகை நாதன் –
குருகூர்ச் சடகோபன் -என்னுமா போலே-இதுக்கு எல்லாம் அடி அவ் ஊரில் பிறப்பாய்த்து –
அவ் ஊரில் ஆதிப் பிரானான ஸ்ரீ ஆதி நாதனும் உண்டாய் இருக்கவும்
இவருடைய நாதத்வம் ஆய்த்து நடந்து செல்கிறது –
உபய பிரதானமான ஆகாரம் உண்டாய் இருக்கவும் இவருடைய நாதத்வத்தை யாய்த்து அவன் நடத்தின படி –
(ராஸக்ரீடையில் கண்ணனுக்கும் கோபிகளுக்கும் ஏற்றம் போல் இங்கும் உபயமாக இருந்தாலும் அவன் சங்கல்பம் இப்படியே )
நலனிடை யூர்தி பண்ணி வீடும் பெறுத்தித் தன் மூவுலகும் தரும் ஒரு நாயகம்-( 3-10-11) -என்று தாமே அருளிச் செய்தார் இறே –

எழில் குருகை –
நகர அலங்காரங்களை யுடைத்தாய் இருக்கை –
அதாவது
குன்றம் போல் மணி மாடங்களையும்-4-1-10
மாடலர் பொழில் களையும்  -3-4-
சேரத் தடங்களையும் -1-2-11
ஏர் வளங்களையும் –
யுடைத்தாய் இருக்கும் -என்கை –
கட்டெழில் தென் குருகூர்-6-6-11 என்னக் கடவது இறே –

அன்றிக்கே –
ஜகதாபரணரான வகுளாபரணர் திரு வவதரிக்கையாலே வந்த அழகாகவுமாம் –

அன்றிக்கே –
எழில் -ஸ்ரீ ஆழ்வாருக்கு விசேஷணமாய்
ஜ்ஞான பக்திகள் ஆகிற ஸ்ரீ வைஷ்ணவ அலங்காரங்களால் வந்த அழகைச் சொல்லிற்றாகவுமாம் –
(ஸ்ரீ வைஷ்ணவ அலங்காரம் -ஆத்ம பூஷணங்கள் -சூடகமே இத்யாதிகள் )

எழில் குருகை நாதன் அவதரித்த நாள்  —
ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே ஆக்க வல்லவர் திருவவதரித்த நாள் –
(ஸ்வேத தீப வாசிகளும் -அன்றோ -பொலிக பொலிக பொலிக -அவர்கள் ஸம்ருதியைக் கண்டு -)
சம்சாரத்தின் இடையில் தத் உத்தாரகரான ஸ்ரீ ஆழ்வார் அவதரித்தால் போலே யாய்த்து
இந் நாள்களின் இடையில்-இந்நாள் நமக்கு நேர்பட்டதும்-

(திருவாய் மொழிப் பிள்ளையும் வைகாசி விசாகம் -ஆகவே இத்தாலும் சீர்மை உண்டே )

ஆகையால் இந்த பரம ரஹஸ்யத்தை-பாரோர் அறியப் பகர்கின்றேன் -என்று
தம்முடைய பரம கிருபையினாலே வெளியிட்டு அருளினார் ஆய்த்து –

——————————————–

திரு வழுதி வள நாடன் -சிற்று அரசர் -அகஸ்தியர் போல்வாரை சந்தித்து –
துந்து மாறன் அரக்கனை வென்று அந்த அரசை ஆண்டவர்
இவர் திருக்குமாரர் -சக்ர பாணி
இவர் திருக்குமாரர்-அச்சுதர்
இவர் திருக்குமாரர்-பொற்காரியார்
இவர் திருக்குமாரர்-காரி
உடைய நங்கை -திரு வாழ் மார்பன் திருக்குமாரி
திருக்குறுங்குடி நம்பி -பிரார்த்தித்து -நம்மைப் போல் பிரதிமை இல்லை -நாமே வந்து பிறப்போம்
ப்ரமாதி வருஷம் -43 நாள் வெள்ளிக்கிழமை -கடக லக்கினம் திரு அவதாரம்
மாறி இருந்ததால் காரி மாறன்
சட வாயுவை கோபித்து -காலால் உதைத்து சடகோபர் சிறப்புப் பெயர்
புத்தி தூஷகம் -சடஜித்

கீழே பிரஸ்துதமான
1-ஸ்ரீ ஆழ்வார் யுடையவும்-
2-அவதரித்த தேச
3-காலங்களுடையவும்
4-அவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் யுடையவும்
அப்ரதிம வைபவத்தை ஸ்வ கதமாகப் பேசி அனுபவிக்கிறார் –

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்
உண்டோ சடகோபர்க்கு  ஒப்பு ஒருவர் -உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ
ஒரு பார் தனில் ஒக்கும் ஊர் –15-

தாரம் கிம் அஸ்தி வத
மாதவ மாதம்
ராதா துல்யம் கிம் அஸ்தி
கிம் அஸ்தி சடகோப சமண ஏக
கிம் திராவிட பிரபந்த சம
கிம் பட்டணம் குருகையா சமம் அஸ்தி லோகே

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்-
ஸ்ரீ சர்வேஸ்வரனும் அவன் விபூதியும் ஸ்ம்ருதமாம் படி
மங்களா சாசனம் பண்ணப் பிறந்த திரு விசாகத் திரு நாளுக்கு ஒப்பாவது ஒரு நாள் உண்டோ –
(பொலிக பொலிக பொலிக–கண்டோம் கண்டோம் கண்டோம் )

நீ பிறந்த திரு நந்நாள் -(பெரியாழ்வார் )-என்னும் படியான அந்நாளும்
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ ஜன்மமான இவர் அவதரித்த-இந்நாளுக்கு ஒப்பாக வற்றோ –
அங்கு அவன் பிறவியில் அக்ரூராதிகளான நால்வர் இருவர் இறே அனுகூலராய்த் திருந்தினது –
(விதுரர் மாலாகாரர் இத்யாதிகள் தானே பரம பாகவதர்கள் அங்கு
கிருஷ்ணா த்ருஷ்ணா -ஈடுபாடு -அவனுடைய என்றும் அவன் இடத்தில் என்றும் -)
இங்கு -தா நஹம் த்விஷத க்ரூரான் -என்று தொடங்கி-
ஷிபாமி -என்று அவன் கை விட்ட வர்களையும்
நின் கண் வேட்கை எழுவிப்பனே -என்னும்படி
இவர்களுக்கு அபி நிவேசத்தை யுண்டாக்கும் படி திரு வவதரித்த திவசம் இறே இது –
(நன்மையால் மிக்க நான் மறையார்கள் கை விட்டதே காரணமாக் கைக் கொண்டு அருளுபவர் அன்றோ இவர் )

உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் –
அவதாரமே தொடங்கி –
சடா நாம் புத்தி தூஷகராய் – ஸூ ஜ்ஞான கன பூரணராய் –
இருக்கிற இவருடைய ஜ்ஞான வைபவத்துக்கு சத்ருசம் ஆவர்களை சர்வ லோகத்திலும் தேடிப் பார்த்தாலும்
ஓர் ஒருவரைக் கேட்டோமோ –
(சேமம் குருகையோ இத்யாதி
அஞ்ஞர்-ஞானாதிகர் பக்தி பரவசர் -கரை ஏற்றும் அவனுக்கும் நாலு ஆறு அறிவிப்பவர் அன்றோ )

அன்ன பாநாதிகள் என்ன -(சம்சாரிகள்)
பக்வ -பலாதிகள் என்ன -(ரிஷிகள் முமுஷுக்கள் )
அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது -என்ன (நித்ய முக்தர்கள் )
இவற்றாலே தாரகாதிகளாம் படி இருக்கிற சம்சாரிகள் -தொடக்கமானார்
நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி –என்றும்
எல்லாம் கண்ணன் -என்றும் –
விண்ணுளாரிலும் சீரியராய் இருக்கிற இவருக்கு ஒப்பாக மாட்டார்கள் இறே –

நித்ய ஸூரிகள் ஒழிந்த மற்றையார்க்கு பல சாதன தேவதாந்தரங்களில்
இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும் படியாக இருக்கும் –
ஆச்சார்ய ஹிருதயத்திலே நாயனார் அருளிச் செய்தார் இறே –

அங்கன் இன்றிக்கே –
நித்ய ஸூரிகளுக்கு தெளி விசும்பு திரு நாடு என்னும் படி பகவத் அனுபவத்துக்கு பாங்காய் இறே அத்தேசம் இருப்பது –
இது -விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை -என்னும்படி –
(இங்கே கலங்குவாரும் கலங்கச் செய்வாரும் உண்டே
சுமுகன் -இத்யாதி விருத்தாந்தங்கள்
ஈட்டில் -சிவிகனைப் போல் வார்த்தை செய்த வினதை சிறுவன் -ஜெட்கா வண்டி காரன் -auto ஓட்டுவேன்
வார்த்தை இந்தக்காலம் போல் சொன்ன வார்த்தை -சிவிகை -எழுந்து அருள பண்ணும் வாஹனம் அன்று )
இருள் தரும் மா ஞாலம் ஆகையால் பகவத் அனுபவத்துக்கு மேட்டு மடையாய் இறே இருப்பது –
இப்படி இருக்கிற இஸ் சம்சாரத்தில் பகவத் அனுபவமே யாத்ரையாய் இருப்பார் இவர் ஒருவருமே இறே உள்ளது –
ஆகை இறே ஸூ துர்லபமும் ஆய்த்து-
(வாஸூ தேவ ஸர்வம் இதி மஹாத்மா ஸூ துர்லபம் )

மாறுளதோ இம் மண்ணின் மிசை-6-4- என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே-4-5- -என்றும் –
உபய விபூதியிலும் தமக்கு ஒப்பாவார் இல்லாமையை தம் திரு வாக்காலே அருளிச் செய்தார் இறே
இப்படி ஸ்ரீ சடகோபன் என்றால் எல்லார்க்கும் தலை மேலாராய்-
நாடடங்க கை அடங்கும்படி

மஹாத்மாவான இவர் அவதரித்த இம் மகா நஷத்ரத்துக்கும்
இவர்க்கு ஒப்பு இல்லா விட்டால்
இவருடைய வாங்மயமான திருவாய் மொழிக்கும்
இவர் திருவவதரித்த தேசத்துக்கும் ஒப்புத் தான் உண்டோ என்ன –
அதுவும் இல்லை -என்கிறார் –

உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்-
உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு-
திருமாலால் அருளப் பெற்றவராய்- ( 8-8-11)
திருமாலவன் கவி -(8-4-8-)யான இவர் –
சுழி பட்டோடும்-(8-10-5-) -என்னும்படியான அனுபவ பரிவாஹத்தாலே
அவாவில் அந்தாதிகளால் இவை யாயிரமும் -என்ன வேண்டும்படி
இவருடைய பக்தி பலாத்காரத்தாலே அவதரித்த திருவாய் மொழிக்கு –
தர்ம வீர்ய ஜ்ஞாநாதிகள் அடியாக யுண்டான ஹர்ஷ வசனங்களில்
அருளிச் செயலில் சாரமாய் இருக்கிற இதுக்கு ஒப்பாக வற்றோ –
(அவா உபாத்யாயர் -இவருடைய ஸ்ரீ – மைத்ரேய பகவான் அவா -பாவின் இன்னிசை பாடித் திரிவேனே )

இத்தை ஒழிந்தவை எல்லாம் கடலோசையோபாதி என்னக் கடவது இறே –
ஆகையாலே -அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான் (கண்ணி நுண் )-என்னும்படி
இவர் அருளாலே திருவவதரித்த இது அ சத்ருசமாய் இருக்கும் என்றபடி —

தென் குருகைக்கு உண்டோ ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்-
ஆழ்வாருக்கு ஒப்பு ஒருவரும் உபய விபூதியிலும் இல்லாதாப் போலே
இவ் ஊருக்கு ஒப்பாவது ஓர் ஊரும் இல்லை என்கை –
(இங்கு எச்சிலை வாரி உண்ட நாய்க்கும் அன்றோ பேறு கிட்டியது —
அவனை மகுடம் சாய்க்கும் வல்ல ஞானக் கடலே இந்த பேய்க்கும் அளிக்கலாகாதோ )
பதினெண் பூமியிலும் தேடித் பார்த்தாலும் திருக் குருகை வளம்பதிக்கு ஒப்பாவது ஒரு ஊர் உண்டோ –
உண்டாகில்-திருநாடு வாழி தென் குருகை வாழி -(இயல் சாத்து )-என்று அவன் நாட்டை ஒப்புச் சொல்லும் இத்தனை –
திரு நகரிக்கு ஒப்பாவது யுண்டோ வுலகில் –என்னக் கடவது இறே –
ஆற்றில் துறையில் ஊரில் உள்ள வைஷம்யம் வாசா மகோசரம் -என்று இறே அருளிச் செய்தது –
(கண்ணன் வியாசர் ஆழ்வார் -ஆறு -ஊர் -துறை -ஒன்பது விஷயங்கள் -நாயனார் )

தென் குருகை –
சம்சாரத்துக்கு ஆபரணமான ஊர் –
நல்லார் பலர் வாழும் குருகூர் (8-2-11)-என்றும் –
சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர் (3-1-11)-என்றும் -சொல்லும்படி –
பெரிய வண் குருக்கூரான ஸ்ரீ நகரி இறே –
அன்றிக்கே
தெற்குத் திக்கிலே யுண்டானது என்னவுமாம் –

இத்தால் –
திரு நஷத்த்ரத்தினுடையவும் –
திருவவதரித்த ஆழ்வார் யுடையவும் –
திருவாய் மொழியினுடையவும் –
திரு நகரியினுடையவும் –
உபமான ராஹித்யத்தால் வந்த ஆதிக்யத்தை உபபாதித்து அருளினார் ஆய்த்து –

இந்த விசாக நஷத்ரம் தான்
ராஜர்ஷிகளான இஷ்வாகுகளுடைய ருஷம் என்று இஷ்வாகு வம்ச பிரபாவஞ்ஞாராலே விவஷிதம் ஆகையாலும்
ருஷீம் ஜுஷாமஹே -என்னும் படி இவ் வாழ்வாருக்கும் அதுவே ஜன்ம நஷத்ரம் ஆய்த்து –

(சக்ரவர்த்தி திரு மகனே அருளிச் செய்தது -யுத்த காண்டம்
உத்தர பல்குணி -கிளம்பி -ஐந்து நாள் பிரயாணம் -பின்பு விசாகம் வருமே
யுத்த 4-49-/50–ராஜ ரிஷி திரிசங்கு ராஜ ரிஷி -இவர் வம்சம் -மஹாத்மநாம் நக்ஷத்ரம் விசாகே
உபத்திரம் இல்லாத விசாகம் நம் குலத்துக்கு -தொடங்குவோம் வெல்வோம் என்று அருளிச் செய்கிறார் –
திருவாய் மொழிப்பிள்ளையும் விசாகம் திரு அவதாரம்
பங்குனி விசாகம் -காஞ்சி விசாகம்
தை விசாகம் -வேளுக்குடி வரதாச்சார்யர் )

(திசை நிலைக் கட கரி செருக்குச் சிந்தின;
அசைவு இல வேலைகள், ஆர்க்க அஞ்சின;
விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன்
குசன்; நெடு மேருவும் குலுக்கம் உற்றதே. –9784.-
ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/36–இராவணன் வதைப் படலம்–81-

குசன்- அங்காரகன்; விசைகொடு – வேகமாய்; விசாகத்தை
நெருக்கி ஏறினன்- விசாக நட்சத்திரத்தில் நெருக்கிப் புகுந்தான்;
(என்று), திசை நிலை கடகரி- திசைகளில் நிற்கும் மதம் பொழி
திக்கு யானைகள் (எட்டும்) செருக்குச் சிந்தின- தம் மதச்
செருக்கு அற்றுப் போயின; வேலைகள்அசைவு இல- கடல்கள்
இயக்கமற்றன; ஆர்க்க அஞ்சின- ஒலிக்கப் பயந்தன; நெடு
மேருவும் – உயர்ந்த மேரு மலையும்; குலுக்கம் உற்றது –
நடுக்கம் கொண்டது.
போர்க்கோளாகிய அங்காரகன் இட்சுவாகு வமிசத்தாரின்
பிறப்பு நட்சத்திரமான விசாகத்தை நெருங்கினன் என்பது
கெட்ட அறிகுறியாகும்.)

—————

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—திருவாய் மொழி நூற்றந்தாதி -1-

வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப் பண்புடனே பாடி யருள் பத்து——2-

மாறன் தன் இன் சொல்லால் போம் நெடுகச் சென்ற பிறப்பாம் அஞ்சிறை—3-

மாறன் இங்கே நாயகனைத் தேடி மலங்கியதும் பத்தி வளம்—4-

தளர்வுற்று நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால் பாங்குடனே சேர்த்தான் பரிந்து—-5-

ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில் பேதையர்கள் தங்கள் பிறப்பு——6-

மாறன் பாதமே உற்ற துணை என்று உள்ளமே ஓடு –7-

நாடறிய ஒர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை—-8-

ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால் பொற்றாள் நம் சென்னி பொரும் –9-

திறமாகப் பார்த்துரை செய் மாறன் பதம் பணிக வென் சென்னி வாழ்த்திடுக வென்னுடைய வாய் —10-

அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன் செறிவாரை நோக்கும் திணிந்து –11-

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவரவர் அடிக்கே ஆங்கு அவர் பால் உற்றாரை மேலிடா தூன் —-12-

வானில் அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன் அடியார் உடன் நெஞ்சே ஆடு—13-

அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து துன்புற்றான் மாறன் அந்தோ —-14-

சந்தாபம் தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே வாய்ந்த வன்பை நாடோறும் வை—-15-

வைகுந்தன் வந்து கலந்ததற் பின் வாழ் மாறன் செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து -நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க வன்மை யடைந்தான் கேசவன்—16-

மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று நெஞ்சே அணை—17-

மிக மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே வீசு புகழ் எம்மா வீடு—-18-

வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி கீழ்மை யற்று நெஞ்சே கிளர் —19-

தளர்வறவே நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள் முன் செலுத்துவோம் எம்முடி—-20-

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன் அடிவாரம் தன்னில் அழகர் -வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படி கலனும் முற்றும் அனுபவித்தான் முன்—-21-

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன் இன்ன வளவென்ன எனக்கு அரிதாய்த் -தென்ன
கரணக் குறையின் கலக்கத்தை கண்ணன் ஒருமைப் படுத்தான் ஒழித்து——22-எனக்கு என்று தன்மையீ பாவத்தில் மா முனிகள் இத்தை அருளிச் செய்கிறார் –

வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன் பூங்கழலை நெஞ்சே புகழ்—23-

மகிழ் மாறன் எங்கும் அடிமை செய்ய இச்சித்து வாசிகமாய் அங்கு அடிமை செய்தான் மொய்ம்பால் —24-

அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும் -அன்பிலா மூடரை நிந்தித்தும் மொழிந்து அருளும்
மாறன் பால் தேடரிய பத்தி நெஞ்சே செய்—25-

இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான் பன்னு தமிழ் மாறன் பயின்று—-26-

இயல்வுடனே ஆளானார்க்குக் ஆளாகும் மாறன் அடி அதனில் ஆளாகார் சன்மம் முடியா——27-

ஓன்று ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப துன்னியதே மாறன் தன் சொல்—28-

என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர் மன்னருளால் மாறும் சன்மம்–29-

நாடொறும் இம்மையிலே ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை யுலகீர் நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்—-30-

மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே யினிதாம் பன்னியிவை மாறன் உரைப்பால் –31-

சால அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான் குருகூரில் வந்துதித்த கோ —32-

கழித்தடையைக் காட்டிக் கலந்த குணம் மாறன் வழுத்துதலால் வாழ்ந்துது இந்த மண் —33

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன் பெண்ணிலைமை யாய்க் காதல் பித்தேறி -எண்ணிடில் முன்
போலி முதலான பொருளை யவனாய் நினைந்து மேல் விழுந்தான் மையல் தனின் வீறு—-34-

தோற்ற வந்து நன்று கலக்கப் போற்றி நன்கு உகந்து வீறு உரைத்தான் சென்ற துயர் மாறன் தீர்ந்து —35-

அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு அறிவு பெற்றான் மாறன் சீலம்—-36-

சால வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு இருந்தனனே தென் குருகூர் ஏறு—-37-

ஏறு திருவுடையை ஈசன் உகப்புக்கு வேறுபடில் என்னுடைமை மிக்க வுயிர் -தேறுங்கால்
என் தனக்கும் வேண்டா வெனு மாறன் தாளை நெஞ்சே நம் தமக்குப் பேறாக நண்ணு —38-

தண்ணிமையைக் கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள் உண்டு நமக்கு உற்ற துணை யொன்று—39-

நன்றாக மூதலித்துப் பேசி யருள் மொய்ம் மகிழோன் தாள் தொழவே காதலிக்கும் என்னுடைய கை—40-

மெய்யான பேற்றை யுபகரித்த பேர் அருளின் தன்மைதனை போற்றினனே மாறன் பொலிந்து —–41-

உலகில் திருந்தார் தம்மைத் திருத்திய மாறன் சொல் மருந்தாகப் போகும் மனமாசு—42-

ஏசறவே மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான் உள் நடுங்கத் தான் பிறந்த ஊர்–43-

ஊர நினைந்த மடலூரவும் ஒண்ணாத படி கூரிருள் சேர் கங்குல் உடன் கூடி நின்று -பேராமல்
தீது செய்ய மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர் ஓதுவது இங்கு எங்கனயோ—-44-

உரு வெளிப்பாடா வுரைத்த தமிழ் மாறன் கருதும் அவர்க்கு இன்பக் கடல்—45-

திடமாக வாய்ந்து அவனாய்த் தான் பேசும் மாறன் உரையதனை ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார் –46-

சாற்றுகின்றேன் இங்கு என்னிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார் அங்கு அமரர்க்கு ஆராவமுது—-47-

தீராத ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான் மாசறு சீர் மாறன் எம்மான் —48-

மா நலத்தால் மாறன் திரு வல்ல வாழ் புகழ் போய் தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் -மேல் நலங்கித்
துன்புற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு பின் பிறக்க வேண்டா பிற—49-

சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன் வாய்ந்த பதத்தே மனமே வைகு–50-

காதலுடன் தூதுவிடும் காரி மாறன் கழலே மேதினியீர் நீர் வணங்குமின் —51-

உன்னுடனே கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே நாடோறும் நெஞ்சமே நல்கு—52-

எல்லை யறத் தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார் வானவர்க்கு வாய்த்த குரவர் —53-

என்றும் பரவு மனம் பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன் சொல் தேனில் நெஞ்சே துவள் —54-

துவளறவே முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்
மன்னு முவப்பால் வந்த மால்—55-

தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன் ஊனமறு சீர் நெஞ்சே உண்—56-

மண்ணுலகில் மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன் பொன்னடியே நந்தமக்குப் பொன்–57-

மன்னு திரு நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே நீடுலகீர் போய் வணங்கும் நீர்–58-

ஆராத காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை ஒதிடவே யுய்யும் யுலகு—59-

மலரடியே வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாளிணையே உன் சரணாய் நெஞ்சமே உள்—60-

ஓலமிட்ட இன் புகழ் சேர் மாறன் என குன்றி விடுமே பவக் கங்குல்—61-

என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர் மாறன் அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம்—62-

உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு அற்றவர்கள் தாம் ஆழியார் —63-

ஊழிலவை தன்னை யின்று போல் கண்டு தானுரைத்த மாறன் சொல் பன்னுவரே நல்லது கற்பார்——64-

உற்று உணர்ந்து மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்து உரைத்த மாறன் சொல் பண்ணில் இனிதான தமிழ்ப் பா –65-

தூ மனத்தால் நண்ணியவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட அண்ணலை நண்ணார் ஏழையர்–66-

ஆழு மனம் தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து –67-

வாய்ந்து நிற்கும் மாயன் வளமுரைத்த மாறனை நாம் ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று –68-

நன்று கவி பாட வெனக் கைம்மாறிலாமை பகர் மாறன் பாடு அணைவார்க்கு உண்டாம் இன்பம் —69-

துன்பமறக் கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே திண் திறலோர் யாவர்க்கும் தேவு —70-

யாவையும் தானாம் நிலையும் சங்கித்தவை தெளிந்த மாறன் பால் மா நிலத்தீர் நாங்கள் மனம் —-71-

தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான் அந்நிலையை யாய்ந்து உரைத்தான் அங்கு –72-

எங்கும் பரிவர் உளர் என்னப் பயம் தீர்ந்த மாறன் வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்–73-

பாரும் எனத் தானுகந்த மாறன் தாள் சார் நெஞ்சே சாராயேல் மானிடவரைச் சார்ந்து மாய்—74-

தூய புகழ் உற்ற சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல் அற்ற பொழுதானது எல்லியாம்–75-

நல்லவர்கள் மன்னு கடித் தானத்தே மாலிருக்கக் மாறன் கண்டு இந்நிலையைச் சொன்னான் இருந்து–76-

பொருந்தக் கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர் கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு –77-

தண்ணிது எனும் ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்து உரைத்தான் காரி மாறன் தன் கருத்து —78-

நிறமாக அன்னியருக்காகா தவன் தனக்கே யாகும் உயிர் இந்நிலையை யோரு நெடிதா –79-

அடிமை தனில் எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் அது கொல்லை நிலமான நிலை கொண்டு –80-

தொண்டருடன் சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்குமிதம் பார்க்கும் புகழ் மாறன் பண்டு –81-

நீ செய்தருள் என்றே யிரந்த சீர் மாறன் தாளிணையே உய்துனை என்று உள்ளமே ஓர்—82-

பேர் உறவைக் காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள் மாட்டி விடும் நம்மனத்து மை–83-

மெய்யான காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் பேர் ஓத வுய்யுமே இன்னுயிர்–84-

பின்னை யவன் தன்னை நினைவிப்ப வற்றால் தான் தளர்ந்த மாறன் அருள் உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்—85-

மருவுகின்ற இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல் என் நாச் சொல்லாது இருப்பது எங்கு—86-

எங்கும் உள்ள புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன் தாள் உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்–87-

அறப் பதறிப் செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன் மையலினால் செய்வது அறியாமல்—88-

ஆற்றாமை பேசி யலமந்த மாறன் அருள் மாற்றாகப் போகும் என் தன் மால்–89-

அவனைச் சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன் தாரானோ நம்தமக்குத் தாள் –90-

மீளுதலாம் ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் என ஏதம் உள்ளது எல்லாம் கெடும்—91-

படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர் விண் தனில் உள்ளோர் வியப்பவே—-92-

இன்னம் பூமியிலே வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –93-

சோராமல் கண்டுரைத்த மாறன் கழல் இணையே நாடோறும் கண்டு உகக்கும் என்னுடைய கண் –94-

மண்ணவர்க்குத் தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன் ஆன புகழ் சேர் தன்னருள்–95-

இரு விசும்பில் இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் —96-

வாஞ்சை தனில் விஞ்சுதலைக் கண்டவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட திண் திறல் மாறன் நம் திரு—97-

நீ இன்று என்பால் செய்வான் என் என்ன இடருற்று நின்றான் துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து —98-

அங்கு அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான் முடி மகிழ் சேர் ஞான முனி –99-

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100-

———

வ்ருஷ பேது விஸாகாயாம் குருகா புரி காரி ஜம்
பாண்ட்ய தேச கலோர் ஆதவ் சடாரிம் ஸைன்யபம் பஜே

————————————————————————————–———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம்மாழ்வார் வைபவம்–ஸ்ரீ திரு வைகாசி ஸ்ரீ திரு விசாக ஸ்ரீ திருநாள்–

June 13, 2022

உண்டோ வைகாசி விகாசத்துக்கு ஒப்பு ஒரு நாள்
உண்டோ சட்கோபார்க்கு ஒப்பு ஒருவர் உண்டோ
திருவாய் மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ
ஒரு பார் தனில் ஒக்குமூர் –

இன்று முதல் ஸ்ரீநம்மாழ்வார்
திரு அவதார உத்சவம்🙏

இன்று முதல்
ஸ்ரீ பார்த்தசாரதி வசந்த உத்சவம்

ஏழு நாள்கள் உத்சவம்
கடைசி நாளில் வாஸூ தேவ புரம் எழுந்து அருளுகிறார் 🙏

———-

ஸ்ரீ திரு வைகாசி ஸ்ரீ திரு விசாக ஸ்ரீ திருநாள்

திரு முளைச் சாற்று ஸ்ரீ கூரத்தாழ்வான் சந்நிதியில் இருந்து தேங்காய் வாங்கி வந்து
மாலை விருச்சிக லக்கினத்தில் 4.30-மணிக்கு மேல் 5-30-மணிக்குள் தேங்காய் சாற்றுதல்
மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் தங்க தோளுக்கு இனியான் –

முதல் உத்சவம் –
காலை 7.00 மணிக்கு மேல் 8-30 மணிக்குள் மிதுன லக்கினத்தில் துவஜாரோஹணம்
ஸ்ரீ அஹோபில மடத்தில் விடாயாற்று மண்டகப்படியும்
ஸ்ரீ திருக்குறுங்குடி மடத்தில் மண்டகப்படி -திரு மஞ்சனம் கோஷ்ட்டி

மாலை 6-00 மணிக்கு இந்திர விமானம்
உபாயம் -ஸ்ரீ அஹோபில மட ஜீயர் ஸ்வாமிகள்
ஸ்ரீ திருக்குறுங்குடி ஜீயர் ஸ்வாமிகள்

இரண்டாம் உத்சவம் –
காலை 6.30 மணிக்கு திரு வீதிப்புறப்பாடு
மாலை 6.00 மணிக்கு புஷ்ப்ப பல்லாக்கு
அலங்கார உபாயம் -ஸ்ரீ மத் ஆத்தான் வடக்கு திருமாளிகை ஆதீன சிஷ்யர்
திரு விழா உபயம் -திருக்குறுங்குடி ஜீயர் ஸ்வாமிகள்

மூன்றாம் உத்சவம்
காலை 6-30 மணிக்கு திரு வீதிப்புறப்பாடு
ஸ்ரீ வான மா மலை மடத்தில் விடாயாற்று
கிளி குறட்டில் திரு மஞ்சனம் கோஷ்ட்டி
மாலை 6.00 மணி புன்னை மர வாஹனம்

நான்காம் உத்சவம்
காலை 6.30 மணிக்கு திரு வீதிப்புறப்பாடு
கிளி குறட்டில் திரு மஞ்சனம்
மாலை 6.00 மணிக்கு -தங்கத் திருப்புளி வாஹனம்
உபயம் -ஸ்ரீ திருக்குறுங்குடி ஜீயர் ஸ்வாமிகள்

ஐந்தாம் திரு நாள்
ஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் மங்களா ஸாஸனம் -பூப்பந்தல் மண்டபம்
ஸ்ரீ நவ திருப்பதி எம்பெருமான்கள்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்
ஸ்ரீ உத்திராதி மண்டபத்தில் விடாயாற்று பந்தல் மண்டபக் குறட்டில் திருமஞ்சனம் கோஷ்ட்டி
இரவு ஒன்பது கருட ஸேவை
ஸ்ரீ கள்ளபிரான்
ஸ்ரீ காய்ச்சின வேந்தன்
ஸ்ரீ அரவிந்த லோசனன்-ஸ்ரீ தேவர் பிரான்
ஸ்ரீ வைத்த மா நிதி
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
ஸ்ரீ எம் இடர் கடிவான்
ஸ்ரீ மாயக்கூத்தன்
ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்

ஸ்ரீ நம்மாழ்வார் ஹம்ஸ வாஹனம்

ஆறாம் நாள்
மாலை தண்டியலில் திரு வீதிப்புறப்பாடு
ஸ்ரீ பராங்குச மண்டபத்தில் திருமஞ்சனம் கோஷ்ட்டி
மாலை 6.00 மணிக்கு யானை வாஹனம்

ஏழாம் நாள்
காலை 6.30 மணிக்கு திருவீதிப்புறப்பாடி
ஸ்ரீ உடையவர் சந்நிதிக்கு ஸ்ரீ நம்மாழ்வார் எழுந்து அருளி
சேர்த்தி திருமஞ்சனம்
மாலை திரு வீதிப்புறப்பாடு -வெள்ளி சந்த்ர பிரபை
உபயம் -ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள்
ஸ்ரீ ஆதி நாதர் ஆழ்வார் கைங்கர்ய சபா

எட்டாம் நாள்
காலை 7.00 மணிக்கு ஸ்ரீ அப்பன் சந்நிதிக்கு எழுந்து அருளி
மாலை ஸ்ரீ தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம்
இரவு கோயிலுக்கு எழுந்து அருளுதல்
8.00 மணிக்கு குதிரை வாஹனம்
உபயம் -ஸ்ரீ வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள்

ஒன்பதாம் நாள்
ஸ்ரீ கோரதம் காலை 7.00 மணிக்கு மேல் 8.00 மணிக்குள்
ஸ்ரீ கூரத்தாழ்வான் சந்நிதிக்கு எழுந்து அருளி மங்களா சாசனம் கோஷ்ட்டி
உபயம்-ஸ்ரீ ஆத்தான் கீழத் திரு மாளிகை ஸ்வாமிகள்
மாலை 45.00 மணிக்கு உத்திராதி மண்டபத்தில் திருமஞ்சனம் கோஷ்ட்டி
மாலை 6.00 மணிக்கு தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம்

பத்தாம் நாள் -ஸ்ரீ திரு விசாகம் ஸ்ரீ திரு நக்ஷத்ர திரு நாள்
காலை மாட வீதிப்புறப்பாடு
ஸ்ரீ சிங்கப்பெருமாள் சந்நிதியில் திருமஞ்சனம்
ஸ்ரீ தாமிர பரணி நதியில் தீர்த்த வாரி
சந்நிதிக்கு எழுந்து அருளி அட்ச்சதை ஆசீர்வாதம்
பெரிய சந்நிதிக்கு எழுந்து அருளி கோஷ்ட்டி தீர்த்த விநியோகம்
மாலை 6.00 மணிக்கு வெட்டி வேர் சப்பரம் -வெள்ளி தோளுக்கு இனியான்
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ உடையவர் கோஷ்ட்டியுடன்
உபயம் -ஸ்ரீ வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள்

அடுத்து ஐந்து நாள்கள் விடாயாற்று உத்சவம்
அதில் முதல் நாள் ஸ்ரீ மா முனிகள் சந்நிதிக்கு எழுந்து அருளி கந்தப்பொடி உத்சவம் -திருமஞ்சனம் -கோஷ்ட்டி –
நான்காம் நாள் -ஸ்ரீ அஹோபில மேடம்
ஐந்தாம் நாள் -ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரமம்

————-

நம்மாழ்வார் வைபவம்.
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேன மத் அந்வயாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ——பெரியமுதலியார்🙏

ஸ்ரீமதே சடகோபாய நம:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீமத் வரவரமுநயே நம:

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||🙏

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும், பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ, அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

ஶ்ரியப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்ய ப்ரபந்தங்கள். இதனை ஸ்ரீமத் வரவரமுனிகள் * அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார்.

இங்கு ஸ்ரீ பிள்ளைலோகஞ்சீயர் ஸ்வாமி வ்யாக்யானம் * செந்தமிழான செம்மை உடைத்தாகையாலே ஸர்வ ஸுலபமாய் ச்லாக்யமான த்ராவிட பாஷையாலே ஆய்த்து ஸர்வ வேதாந்த ஸாரங்களை ஸங்க்ரஹித்து இவர்கள் பண்ணிய தமிழ் என்னும்படி பண்ணியருளிற்று.

* மேலும் * செந்திறத்ததமிழோசை வடசொல்லாகி * என்று முதலாக எடுக்கலாம்படியிறே இதன் வைபவம் இருப்பது.

அதாவது நற்கலைகள் என்று தோஷமேயில்லாததான வேதமாய், அது தானும் முக்குணத்தின் வசப்பட்டவர்களுக்கு

அந்தந்த குணங்களுக்குத் தக்க சொல்லுமதாய் இருக்கும். அதன் ஸாரபாகத்தைச் செந்தமிழால் அளித்தவர்கள் ஆழ்வார்கள்.

இவர்களை * கோது இலவாம் ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார் பெரிய ஜீயர்.

கோதிலவாம் என்பதனை இரண்டு விதமாக அந்வயித்து (சேர்த்து), அருளிச் செயல்களுக்கும், ஆழ்வார்களுக்கும் விசேஷணம் காட்டியருளியுள்ளார் பிள்ளைலோகஞ்சீயர்.

கோதிலவாம் கலைகள் என்று கொண்டபோது, ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் கோது அற்றவைகள் என்று அருளினாராயிற்று,

இங்கு கோதாவது ..
(கோது – குற்றம்) கண்டவர்களையும் தோத்திரம் பண்ணுகை.

இதனை * அழுக்குடம்பு எச்சில் வாய் * என்று இகழ்ந்தார் கலிகன்றி.

அருளிச் செயல்கள் அனைத்தும், இந்த தோஷ கந்தமின்றியே இருக்கும் (தோஷமன்றி இருத்தல் அன்றிக்கே அதன் வாசனையும் கூட இல்லாதவாறு இருக்கை).

இதனை ஆசார்ய ஹ்ருதயத்திலே * ராமாயணம் நாராயண கதை என்று தொடங்கி * என்கிற சூர்ணிகையிலே விவரித்தருளினார் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். ஆகவேயிறே இது தன்னை * தீதிலந்தாதி *என்றார் ஆழ்வாரும்.

இனி *
கோதிலவாம்…. என்பதை ஆழ்வார்களிடத்து அந்வயிக்கும் பொழுது, ஜீவாத்மாவின் அத்யந்த பாரதந்த்ரயத்திற்குச் சேராத உபாயங்களில் கை வைக்காத ஏற்றம் பெற்ற ஆழ்வார்கள் என்றபடி. . .🙏🙏🙏🙏

———–

பெருமாள் திருமொழி…

அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவ பகை ஏறி அசுரர் தம்மை
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர் வர தான் தாமமேவி
சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னை
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி Object
இறைஞ்சுமினோ எப் பொழுதும் தொண்டீர்! நீரே.. 🙏

இளையபெருமாளை விட்டு பிரிந்ததனால் தரிக்கமாட்டாமல் மிகவும் க்லேஸமடைந்த இராமபிரான்
ராஜ்யத்தை விட்டு எழுந்தருளத் தொடங்கியபோது அயோத்யா நகரத்து உயிர்களெல்லாம் பெருமாளைச் சரணமடைந்து
தேவரீர் எங்குச் சென்றாலும் அடியோங்களையும் கூடவே அழைத்துக் கொண்டு செல்லவேண்டும் என்று பிரார்த்திக்க
ஸ்ரீராமன் அவர்களுடைய பக்திப்ரகர்ஷத்தைக் கண்டு அப்படியே ஆகட்டும் என்று அருளிச்செய்து,
அனைவரையும் தம்மைப் பின் தொடர்ந்து வருமாறு பணித்தருளிப் பிரயாணப்பட்டனர்.
அப்பொழுது அந்நகரத்திருந்த மனிதர்களேயன்றி விலங்கு பறவை புல் பூண்டு முதலிய அஃறிணை உயிர்களும்
அகமகிழ்ந்து பெருமாள் பின்சென்றன. இங்ஙனம் பலரும் புடைசூழ ஸ்ரீபகவான் ஸரயூநதியில் இறங்கித் தன்னடிச் சோதிக்கு
எழுந்தருளும்போது தம்மிடத்து இடையறாத அன்புகொண்டு பின்பற்றிச் சரயுவில் மூழ்கி உடம்பைத் துறந்த
எல்லாவுயிர்கட்கும் ப்ரஹ்மலோகத்துக்கு மேற்பட்டதாய் பரமபதம் போலவே
அபுநராவ்ருத்தியாகிற மேம்பாடுள்ள ஸாந்தாநிகமென்னும் உலகத்தை அளித்தனர்அளித்தனர். .🙏🙏


நம்மாழ்வார் வைபவம்

இவ்வாழ்வார்களில் தலைவர் நம்மாழ்வார். இவரே ஆழ்வார் கோஷ்டியிலும், ஆசார்யர்கள் கோஷ்டியிலும் அக்ரேஸர் ( முன்னே இருப்பவர்). * ப்ரபன்ன ஜன கூடஸ்த்தர் * என்று இவருக்குத் திருநாமம். ப்ரபன்னர்களான ஜனங்களுக்கு மூலபூதர் என்றபடி. இவரை வைத்துத் தான் ப்ரபத்தி மார்க்கம் நன்றாகப் பரவும்படிச் செய்தான் பகவான்.

* தேஹமே ஆத்மா * என்று கொண்டு * உண்டியே உடையே உகந்து ஓடும் * ஸம்ஸாரிகளுக்கும், தேஹம் வேறு ஆத்மா வேறு என்கிற ஜ்ஞானம் உள்ள மஹரிஷிகளுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும்.

அப்படிப்பட்ட மஹரிஷிகளுக்கும் ஆழ்வாருக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும்.

இவ்வாழ்வாரே ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்ய நிலையை (உள்ளதை உள்ளபடி உணரும் உண்மையான நிலை) அறிந்து அதனை தமது அருளிச் செயலில் அருளியும் அனுஷ்டித்தும் காட்டினார்.

இப்படிப்பட்ட ஆழ்வாரின் அருமையினையும், அவர் போன்ற அதிகாரிகள் கிடைப்பது அரிது என்பது தோற்றவும், கண்ணன் கீதையில் * வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸு துர்லப: * என்று கண்ணீரோடு அருளினான்.

ஸ்ரீமதே ராமானுஜாய நம:🙏🙏🙏🙏


இரண்டாம்-பத்து…..

கீழ்த்
திருவாய் மொழியில்..

நிஷ்கர்ஷிக்கப் பெற்ற பேற்றை பெறுவதற்கு திருமால் இரும் சோலையை ஆஸ்ரயிக்கிறார்
என்று எம்பெருமானார்க்கு முன்புள்ள முதலிகள் அருளிச் செய்யும் படி
அத்தை எம்பெருமானார் மேலும் இனிமை படுத்தி -அருளிச் செய்வர்
கீழ் ஒல்லை ஒல்லை -காலக் கழிவு செய்யேல் -என்று பகவத் கைங்கர்யத்தில் தமக்கு உண்டான பதற்றத்தை வெளியிட்டு அருள
அத்தைக் கண்ட எம்பெருமான் இவள் இந்த சரீரத்துடன் கைங்கர்யம் செய்ய துடிக்கிறார் என்று எண்ணி
அதற்கு ஏகாந்தமான ஸ்தலம் இந்நிலத்தில் ஏது என்று கடாஷித்து வருகையில்
வளரிளம் பொழில் சூழ் மாலிரும் சோலை யைக் கண்டு
ஆழ்வீர் உமக்கு முகம் தருகைக்கு இங்கே வந்து நின்றோம்
நீர் நினைத்த படி எல்லாம் அனுபவிக்கலாம் –
என்று தென் திருமலையைக் காட்டிக் கொடுத்து அருள
ஆழ்வாரும் அதை அனுசந்தித்து
எம்பெருமான் உபேயன் ஆனால் அவன் எழுந்து அருளி இருக்கும் இடமும் உபேயம் தானே
ஆகவே திருமலையோடு
அதனோடு சேர்ந்த தொரு மலையோடு
திருப்பதியோடு
போம் வழியோடு
போவோம்என்கிற அத்யாவசாயத்தோடு*
வாசி அற நமக்குஎல்லாம் பிராப்யமே -என்று கொண்டு அனுபவித்து இனியர் ஆகிறார் …..
என்று காட்டி அருளினார்…

வாயும் திரையுகளும்….
க்ஷணம் காலம் விச்லேஷம் பொறுக்க முடியாதவன் …

திண்ணன் வீடு..
மனுஷ்ய சஜாதீயனாய் திருவவதரிக்கச் செய்தே பரத்வம் பொழிய நிற்பவன்…

ஊனில்வாழ்உயிர்
மதுர பதார்த்தங்கள் எல்லாம் ஓன்று சேர்ந்தால் போல் போக்யன்….

ஆடி ஆடி அகங்குழைந்து…

ஆஸ்ரிதர்களின் துயர் தீர்க்கும் தன்மையன்…

அந்தாமத்தன்பு…
ஆஸ்ரிதர் உடன் சம்ச்லேஷித்து அத்தாலே ப்ரீதன் ஆனவன்….

வைகுந்தா…..
ஆஸ்ரிதர்கள் நம்மை விட்டால் ஏன் செய்வோம் அதி சங்கை தீர்த்தது…

கேசவன் தமர்….
ஆஸ்ரிதர் உடைய சம்பந்த சம்பந்திகளுக்கும் விஷயீ காரம் உண்டே…

அணைவது அரவணை மேல்…
மோஷம் அளிப்பவன்

எம்மா வீடு…
கைங்கர்ய பிரதிசம்பந்தி என்றது….
கிளரொளிஇளமை..
அழகிய திருப்பதியை உடையவன்….. …..
என்று அருளிச் செய்கிறார்….

(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி) 🙏🙏🙏🙏


மூன்றாம் பத்து -முதல் திருவாய்மொழி –

முடிச்சோதியாய்….

முதற்பத்தால், பகவத் கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்:
இரண்டாம்பத்தால், அந்தக் கைங்கரியத்தில் களை அறுத்தார்
களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கரியமானது பாகவத சேஷத்துவ பர்யந்தமான
பகவத் கைங்கரியம் என்கிறார் இம்மூன்றாம் பத்தால்.

பொருளென்றிவ் வுலகம் படைத்தவன் புகழ்மேல் மருளில் வண்குருகூர் வண்சடகோபன் என்று
அவனுடைய கல்யாண குணவிஷயமாக அஞ்ஞானம் இல்லை என்றார் ….
கீழில் திருவாய்மொழியில்:
அக்குணாதிக- அக் குணங்கள் நிறைந்திருக்கின்ற நற்குணக்கடலான – விஷயம் தன்னில்
ஓர் அஞ்ஞானம் அனுவர்த்திக்கிற –படியைச் சொல்லுகிறார் இத்திருவாய்மொழியில்.
‘ஆயின், இது முன்னர்க் கூறியதற்கு முரணாகாதோ?’ எனின்,
கீழ் கர்மங் காரணமாக வரக்கூடிய அஞ்ஞானம் இல்லை என்றார்;
இங்குத்தை அஞ்ஞானத்துக்கு அடி,
விஷய வைலக்ஷண்யமாயிருக்கும்.
நித்ய ஸூரிகளுக்கும் உள்ளதொரு சம்சயமாகும் இது.

ஆங்கார வாரம் அது கேட்டு அழலுமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி *யாங்காண
வல்லமே யல்லமே*
மா மலரான் வார் சடையான்
வல்லரே யல்லரே வாழ்த்து

ஸ்வரூப அனுபந்தியாய் – -ஸம்சயமாகையாலே
சொரூபமுள்ளதனையும் நிற்பதொன்றேயன்றோ –
ஆகவே இந்த அஞ்ஞானம் தியாஜ்யம் அன்றே-இது? ஆதலின், முரணாகாது.

கீழே திருவாய்மொழியில், திருமலையை அனுபவித்துக் கொண்டு வந்தவர்,
வடமாமலையுச்சியை*’ என்னுமாறு போன்று, திருமலையில்-
(ஏக தேசம் )– ஒரு பகுதி என்னலாம்படியாய்,
கற்பகத்தரு பல கிளைகளாய்ப் பணைத்துப் பூத்தாற்போன்று நிற்கிற அழகருடைய
ஸௌந்தர்யத்தை – அனுபவிக்கிறார் இத்திருவாய்மொழியில்.
அனுபவிக்கிறவர், வேதங்களோடு வைதிக புருஷர்களோடு பிரமன் சிவன் முதலானவர்களோடு வேற்றுமையறத் –
ஸ்வ யத்னத்தால் காணுமன்று காணவொண்ணாதபடி இருக்கிற இருப்பையும்,
அவன் தானே கொடுவந்து காட்டுமன்று –
ஜென்ம வ்ருத்தாதிகளால்
குறைய நின்றார்க்கும் காணலாயிருக்கிற இருப்பையும்-அனுசந்தித்து விஸ்மிதராகிறார் –ஈடு..


ஏன்றேன் அடிமை இழிந் தேன் பிறப்பிடும்பை ஆன்றேன் அமரர்க் கமராமை, – ஆன்றேன்கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு,மேலை இடநாடு காண இனி.

மஹோபநிஷத்தில் ஓதினகட்டளையிலே, பிரமன் சிவன் முதலான ஸகலப்ரபஞ்சங்கட்கும் காரணனான நாராயணனே பரதெய்வமென்று இப்பரபந்தத்தின் முதற்பாட்டில் பிரதிஜ்ஞை பண்ணி, ஸ்ருதி ஸ்மருதி இதிஹாஸம் முதலியவற்றாலும் தக்க நியாயங்களாலும் ச்ரியபதித்வம் முதலிய சின்னங்களாலும் அதை நெடுக உபபாதித்துக் கொண்டுவந்து, அடியில் பண்ணின பிரதிஜ்ஞைக்குத் தகுதியாக ஸ்ரீமந்நாராயண பரத்வத்தை நாட்டித்தலைக்கட்டுகிறார். ஆகவே, தேவதாந்தரங்களினிடத்து உண்டாகக்கூடிய பரத்வப்ரமத்தைத் தவிர்த்து ஸ்ரீமந்நாராயண னிடத்திலேயே பரத்வத்தை ஸ்தாபிப்பதே இப்பிரபந்தத்தின் முழுநோக்கு என்று அறியப்பட்டதாகும்….🙏

இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்

இனியறிந்தேன் எம்பெருமான். உன்னை – இனியறிந்தேன்

காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை

நாரணன்நீ நன்கறிந்தேன் நான்…

இப்பாட்டும் மேற்பாட்டும் சாத்துப்பாசுரங்கள்,

ஏன்றேனடிமை – அடிமையென்றால் மருந்துபோலே முகம்சுளிக்கும்படியிராதே “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி“ என்ற இளையபெருமாளைப்போலே உத்ஸாஹங்கொண்டு பாரிப்பவனாயினேன் என்கை.

இப்படியாகவே, அடிமைக்கு விரோதியாயிருந்த தாபத்ரயத்தில் நின்றும் விட்டு நீங்கப் பெற்றேனென்கிறார்

இழிந்தேன் பிறப்பிடும்பை என்பதனால் “மீட்சியின்றி வைகுந்தமாநகர் மற்றது கையதுவே“ என்றார்போலே பரமபதம் ஸித்தம் என்கிற உறுதியினால் இங்ஙனே யருளிச்செய்கிறார்.

அன்றியே “வைகுந்தமாகும் தம் மூரெல்லாம்“ என்றார்போலே தாமிருக்குமிடத்தையே பரமபதமாக அத்யவஸித்து அருளிச் செய்கிறாராகவுமாம்.

அமரர்க்கு அமராமை ஆன்றேன் – பிரமன் முதலிய தேவர்களும் என்னைக் கண்டால் கூசி அகலவேண்டும்படி பெரும்பதம் பெற்றேனென்கை.

(கடனாமித்தியாதி) கடன்பட்டதானது எப்படி அவசியம் தீர்த்தேயாக வேண்டுமோ அப்படி பண்ணின புண்ணியங்களுக்கு அவசியம் பலன் அநுபவித்தே தீரவேண்டுமிடமான ஸ்வர்க்கலோகம் “கடன்நாடு* எனப் படுகிறது.

புண்யபலன்களை யநுபவிக்குமிடமான சுவர்க்கத்தையும் புண்ணியம் திரட்டுமிடமான பூலோகத்தையும் வெறுத்து அனைத்துக்கும் மேற்பட்ட இடமாகிய திருநாட்டைச் சேர்வதற்குப் பாங்காகப் பரமபக்தி நிரம்பப் பெற்றேனென்றாராயிற்று.

(ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி)
🙏🙏🙏🙏


நம்மாழ்வார் வைபவம்……. 🙏

அருளிச் செயல் வைலக்ஷண்யம்

இங்ஙனம் ஏற்றம் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியானது அதிவிலக்ஷணமாயிருக்கும். இதனை * ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம் * என்று ஸுசிப்பித்தருளினார் ஸ்ரீமத் வரவரமுனிகள் அதாவது எம்பெருமானுடைய மயர்வற மதிநலம் ஆகிய அருள் கொண்டு அன்றோ ஆயிரம் இன்தமிழ் பாடினது.
இப்படி இருக்கும் இன்தமிழும் பகவதேகபரமாய் போக்யமுமாய் ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய் ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய் ஸம்ஸார விச்சேதமுமாய், சீக்ர பலப்ரதமுமாய் இருக்கை. இவையனைத்தும் பிள்ளைலோகஞ்சீயர் காட்டியருளிய விசேஷணங்கள்.

பகவதேகபரமாய் எம்பெருமானை மட்டுமே ப்ரதிபாதிக்கக் கூடியதாய். ஸ்ரீ ராமாயணம், மஹாபாரதம் ஆகியவை எம்பெருமானுடைய வைபவங்களை ப்ரதிபாதிக்க என்று தொடங்கி மற்றையவர்களைப் பற்றி பேசுவது போலன்றிக்கே,
மாற்றங்களாய்ந்து கொண்டு(6-8-11) என்று சொற்களை ஆராய்ந்தெடுத்து வேறு ப்ரஸ்தாவம் அன்றிக்கே எம்பெருமானையே விஷயமாகக் கொண்டது திருவாய்மொழி.

போக்யமுமாய் – ஸ்ரீமந்நாதமுனிகள் திருவாய்மொழிக்கு தனியன் இட்டருளும்பொழுது, முதலில் * பக்தாம்ருதம் என்கிறார். அதாவதுதிருவாய்மொழியை பக்தர்களுக்கு அம்ருதம் போன்றது என்கிறார். இதனால் இத்திருவாய்மொழியின் போக்யத்வம் நன்கு புலப்படும்.

பூஸுரர்களாகிற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமானது தொண்டர்க்கமுதம். * தொண்டர்க்கமுதுண்ணச் சொல்மாலைகள்

இங்கு ஸ்ரீ உ.வே. காஞ்சி ஸ்வாமியின் திவ்யார்த்த தீபிகை. ” இவ்வுலகில் கவிபாடினவர்கள் மற்றும்பலருமுண்டாகிலும், இப்படி தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்று * பேசினவர் பிறராருமிலர். தம்முடைய திருவாய்மொழி திருப்புளியாழ்வாரடியிலே சுவறிப் போகாமல் காருள்ளளவும் கடல்நிருள்ளளவும் வேதமுள்ளளவும் தேவகீதனுள்ளளவும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமாய்ப் பரமபோக்யமாய் விளங்கப்போகிறதென்பதை ஆழ்வார்கண்டறிந்து அருளிச்செய்தது அதிசயிக்கத்தக்கது.

திருவாய்மொழிக்குத் தனியனிடத்தொடங்கின ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கும்போதே பக்தாம்ருதம் என்றருளிச்செய்தது இந்தப் பாசுரத்தையுட்கொண்டேயாம்.

முதலிலேயே (1–5–11) பாலேய்தமிழர் இசைகாரர் பத்தர் பரவுமாயிரம் என்று அருளிச்செய்திருந்தாலும் தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்கிற இப்பாசுரம் இணையற்றது.”

இது இவ்வுலகில் உள்ளார்க்கும் மட்டுமன்றி வானவர்களான நித்ய ஸூரிகளுக்கும் பரம போக்யமாய்* இருக்கும்.

இதனை ஆழ்வார் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே என்றவிடத்தில் அருளினார்.

இத்திருவாய்மொழியினைக் கேட்டால் நித்யஸூரிகள் திருப்தி பெறமாட்டார்கள். மீளவும் சொல்ல வேண்டும் என்று சொல்லுவர்கள் என்றபடி.

ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய் – இதனால் அர்த்த பஞ்சகம் சொல்லப்பட்டது. அறிய வேண்டும் அர்த்தமெல்லாம் இதற்குள்ளே உண்டு – அதாவது அஞ்சர்த்தம் என்கிற முமுக்ஷுப்படி ஸூர்ணிகைகள் இங்கு நினைக்கத்தக்கன. மொழியைக் கடக்கும் பெரும் புகழையுடையவரான கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர், திருவாய்மொழி அறிவிக்கும் பொருளானது அர்த்த பஞ்சகமே என்பதை,

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்….

என்கிற தனியனினால் அருளிச்செய்கிறார். அதாவது மிக்க இறைநிலை என்பதினால் பரமாத்ம ஸ்வரூபமும் மெய்யாம் உயிர்நிலை என்பதினால் ஜீவாத்ம ஸ்வரூபமும், தக்க நெறி என்பதினால் உபாயஸ்வரூபமும் தடையாகித் தொக்கியலும் ஊழ்வினை என்பதினால் விரோதி ஸ்வரூபமும் வாழ்வினை என்பதினால் புருஷார்த்த ஸ்வரூபமும் அருளிச் செய்தாராயிற்று.

ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய் – இத்திருவாய்மொழியினை கேட்டதால் எம்பெருமான் தானே தனக்கு ப்ரீதி உள்ளடங்காமல் போக்கு வீடாகத் தென்னா தெனா என்று ஆனந்திக்கிறான் என்பதனை ஆழ்வார் தாமும் தென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே என்றருளினார்.

ஸம்ஸார விச்சேதமுமாய் – அளவு காண இயலாத ஸம்ஸாரத்தையும் * ஸம்ஸாரம் ஸாகரம் கோரம் என்றிருப்பதையும் வற்றச் செய்வதாய் இருப்பது திருவாய்மொழி. * ஆயிரத்துள் இப்பத்து அருளுடையவன்தாள் அணைவிக்கும் முடித்தே. (2-10-11) என்றாறிரே ஆழ்வார். ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களில் இப்பத்துப் பாசுரங்களே பாவங்களை ஒழித்து, எம்பெருமான் திருவடிகளில் சேர்ப்பிக்கும் என்றபடி
🙏🙏🙏🙏
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்திசை பாடி ஆடி யுழி தரக் கண்டோம் –5-2-1-
ஸ்ரீ வைஷ்ணவ சம்ருத்திக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார் இத் திருவாய் மொழியில்
சம்சாரம் பரம பதம் வாசி இன்றி ஒன்றும் தேவும் உபதேசத்தால் திருந்தின படி
ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ செய் கண்டு உகக்க நித்ய சூரிகள் இங்கே வர அவர்களுக்கு மங்களா சாசனம் என்பர் –
இந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ காண லோகாந்தரத்தில் நின்றும் வந்தவர்கட்கு மங்களா சாசனம் என்பதும் ஒரு நிர்வாஹம்
*அடிமை புக்காரையும்
ஆட்செய்வாரையும் காண* லோக -த்வீபாந்தரங்களில் -நின்றும் போந்த குழாங்களைக் கண்டு காப்பிட்டு.–நாயனார் –

————

பகவத் விஷயம்

இன்றளவும் திருவாய்மொழி காலக்ஷேபத்தை * பகவத் விஷயம்* என்றே வ்யவஹரிப்பர்கள் பூர்வர்கள். இதனாலே இதன் ஏற்றம் தெரிந்து கொள்ளலாம். அனைத்து ஶாஸ்த்ரங்களுமே எம்பெருமானை ப்ரதிபாதிக்கின்றன என்பது நமது ஸித்தாந்தத்தில் ஒப்புக் கொண்ட விஷயம்.

உபப்ருஹ்மணங்களான இதிஹாஸ புராணங்கள் இருக்கட்டும். பூர்வ மீமாம்ஸா ஶாஸ்த்ரமும் கூட எம்பெருமானுக்கு ஆராத்ய விஷயத்தைச் சொல்வதால் அதுவே விஷயம் என்பது நோக்கத்தக்கது.

இதனை ஸ்ரீவசன பூஷண வ்யாக்யானத்தில் ஸ்ரீமத்வரவரமுனிகள் ….. பூர்வோத்தர மீமாம்ஸைகளில்* அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா* என்றும் * அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா * என்றுமிறே உபக்ரமித்தது. ஆகையாலே பாகத்வயத்துக்கும் ப்ரதிபாத்யம் ஆராதநரூபமான கர்மமும், ஆராத்யவஸ்துவான ப்ரஹ்மமுமிறே…. *. விஷயம் இங்ஙனம் இருக்க திருவாய்மொழி காலக்ஷேபத்தை மாத்திரம் பகவத் விஷயம் என்று குறிப்பிடுவான் என் என்னில், திருவாய்மொழியில் உள்ள பகவதேகபரத்வம். இது கீழேயே நன்கு விளக்கப்பட்டது.

இங்கு எம்பெருமான் தானும் திருவாய்மொழியில் மகிழ்ந்து உறைகிறான் என்பதனை ஸ்ரீபராசரபட்டர் தம்முடைய ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலே

வடதலதேவகீ ஜடரவேதஶிர: கமலாஸ்தந ஶடகோபவாக்வபுஷி ரங்கக்ருஹே சயிதம்
வரதமுதாரதீர்க்கபுஜலோசநஸம்ஹநநம் புருஷமுபாஸிஷீய பரமம் ப்ரணதார்த்திஹரம் || ( பூர்வ சதகம் – 78)

என்ற ஸ்லோகத்தினால் அருளிச்செய்தார். எம்பெருமான் மகிழ்ந்து உறையும் இடங்களைக் குறிப்பிட்டு வருகையிலே ஆலிலை, தேவகீ பிராட்டியின் திருவயிறு, முதலானவற்றோடு ஆழ்வார் அருளிச்செயலான திருவாய்மொழியிலும் எம்பெருமான் ஆதரத்தோடு உறைகிறான் என்பது இதனால் கிடைக்கப்பெற்ற அர்த்தமாகும்.!

நாகணைமிசை நம்பிரான் சரணே சரண்

வேதாந்தத்திலே விதிக்கப்பட்ட உபாயங்கள் பக்தியும் ப்ரபத்தியும் ஆகும். அதில் இவ்வாழ்வார் அனுஷ்டித்தும், உபதேசித்தும் வைப்பது பகவானே உபாயம் என்பதாகும். இதனை ஆழ்வார் அனுஷ்டித்துக் காட்டிய இடங்கள்

நோற்ற நோன்பிலேன் (5-7-1) (பலமாகக் கைகூடுவதற்கு கர்ம யோகங்களை அநுஷ்டித்தேன் அல்லேன்.)
ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் (5-7-10) (என் ப்ராப்திக்கு வழியாக உன் திருவடிகளையே உபாயமாகத் தந்துவிட்டாய்)
கழல்களவையே சரணாகக் கொண்ட (5-8-11) (க்ருஷ்ணனுடைய திருவடிகளையே தனக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட சடகோபன்)
நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் (5-10-11) (திருவநந்தாழ்வான் மேல் திருக்கண்வளர்ந்தருளிய ஸ்வாமியானவன் திருவடிகளே நமக்கு உபாயம்.)
🙏🙏🙏🙏
வைகல் பூங்கழிவாய்………

.ஆழ்வார் நான்கு திருவாய் மொழிகளிலும் சரணாகதி பண்ணியும் பலிக்காதது
நமது பாக்யமே
மேலும் மேலும் திருவாய் மொழி கிடைக்கப் பெற்றோமே
உலகத்தை வாழ்விக்க திரு உள்ளம் பற்றியே சரணாகதியை நிஷ்பலமாக்கினான் –
உன்னை என்று கொல் சேர்வதுவே -என்றும்
உன்னை என்று தலைபெய்துவனே -என்றும்
உன்னை என்று கொல் கூடுவதே -என்றும்
பலகாலும் கதறி எம்பெருமான் பக்கலில் கடுக சேரப் பாரித்த ஆழ்வார்
திரு வண் வண்டூர் சந்நிதி பண்ணி இருக்கும் படியை நோக்கி
தாம் அங்கே சென்று சேர மாட்டாத தம் தசையை
அவ் வெம்பெருமானுக்கு தெரிவிக்கும்படி தூது விடுகிறார் –

அஞ்சிறைய மட நாராய்-வ்யூஹ நிலையில் தூது
இத்திரு வாய் மொழி வைகல் பூங்கழிவாய் – விபவத்தில் தூது
பொன்னுலகு ஆளீரோ– பரத்வத்திலும் அந்தர்யாமித்வத்திலும் தூது
எம் கானல் அகம் கழிவாய் -அர்ச்சாவதார தூது –

தம் பிழையும் சிறந்த செல்வமும் படைத்த பரப்பும்
தமரோட்டை வாசமும்
*மறப்பித்த
க்ஷமா தீக்ஷா ஸாரச்ய சௌந்தர்யங்களை
யுணர்த்தும்*
வ்யூஹ விபவ பரத்வத்வய அர்ச்சைகள்
தூது நாலுக்கும் விஷயம்–

இத் திருவாய் மொழி விபவத்தில் தூது என்பதை
வைகல் திரு வண் வண்டூர் வைகும் இராமனுக்கு -மணவாள மா முனி அருளிச் செய்கிறார்
திரு வண் வண்டூரில் தூது ஆனால் அர்ச்சாவதார தூது ஆகாதோ என்னில்
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே-10 பாசுரம்
அமைந்து இருக்கும் படியை- நோக்கி
அர்ச்சாவதார தூது வேறு ஒரு பதிகம் இருப்பதையும் நோக்கி
பூர்வர்கள் இவ்வாறு வகையிட்டு அருளினார்கள் –
🙏🙏🙏🙏


நம்மாழ்வார் உத்சவம்-7………………

.உண்ணிலாவிய ஐவரால்………….

ஸ்ரீ கீதாசார்யன்…….

தைவி ஹ்யேஷா குணமயீ மமமாயா துரத்யயா —மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே-
இந்த திருமுக பாசுரத்தில் நம்பிக்கையால் பெரிய பிராட்டியார் முன்னாக மாயாப்பிறவி மயர்வருத்து
நித்ய கைங்கர்ய சாம்ராஜ்யம் பெற திருவேங்கடமுடையான் திருவடிகளில் ஆர்த்தராய் சரணம் புகுந்தார்
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு முன்பே தேவர்கள் சரணாகதி பண்ணினதால் பெருமாள் அது பலிக்க வில்லை
ஆழ்வாருக்கு முன்பே சிலர் சரணா கதி பண்ணி இருப்பார் போலும்-அதனால் பலன் அளிக்க எம்பெருமான் தாழ்த்தான்…..
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பத்தலைச் சிறப்பப்
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி……..– –
முனிவர்கள் கூடி யதோ வாஸோ நிவர்த்தந்தே -திரும்பி வந்தன
உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை எல்லாம் செவ்வனே பேச வல்ல திவ்ய பிரபந்தம் திரு வவதரிக்க வேணும் -என்று பிரார்த்திக்க
திருவவதரித்த பின்பு
எம்பெருமானுக்கு மேலும் இன்னம் குணங்களும் விபூதிகளும் உண்டாக வேணும் -என்று நினைத்தார்களாம்
இத்தையே எண்ணாதனகள் எண்ணும் நன் முனிவர் –
அவனுடைய குண விபூதிகள் எல்லாம் கபளீ கரிக்கப் பட்டுவிட்டன – –
ஆக திருவாய்மொழி பாடி தலைக் கட்டி முடிக்க ஆழ்வாரை இன்னம் வைத்தான் ஆயிற்று
முன்னமே பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ என்று -வயிறு எரிந்தார்
இன்னம் அகற்றுமவற்றின் நடுவே இருத்தித் துடிக்க வைப்பது தருமமோ என்கிறார்
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்-என்கிறார் இதில் ஆறாம் பாட்டால் –
திருவுக்கும் திருவாகிய செல்வா -என்பதிலும்
மாற்றம் உள -என்பதிலும்
இரண்டு திரு மொழியாலும் மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த திருமங்கை ஆழ்வார்
இத் திருவாய் மொழியை விவரியா நிற்பர்-
முடியானே-யில் கரணங்களை உடைய இவருக்கு
இந்த்ரிய வச்யத்தை உண்டு என்னும் இடம்
கீழோடு விருத்தம் அன்றோ என்னில்,
அசல் அகம் நெருப்புப் பட்டு வேவா நின்றால்
தாம்தாம் அகம் பரிஹரியாது இருப்பார் இல்லை இ றே…
புற்றின் அருகே பழுதை கிடந்தாலும் சர்ப்பம் என்று புத்தி பண்ணி பிரமிக்கக் கடவதே இருக்கும் இ றே.
அங்குத்தைக்கும் இங்குத்தைக்கும் பொதுவான உடம்போடு இருக்கிற படியைக் கண்டார்..
நாட்டார் அடைய இந்த்ரிய வச்யராய் கிடந்து நோவு படுவதைக் கண்டார்.
இது நம்மளவில் வரில் செய்வது என்-என்று அஞ்சிக் கூப்பிடுகிறார் -ஈடு ஸ்ரீ ஸூக்திகள்-

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும்
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு என்னும் இரு நிலம் கை துழாவி இருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே –7-2-1-
[

கீழே ஆறாம் பத்தின் ஏற்றுத் திருவாய் மொழியில் பெரிய பிராட்டியார் முன்னிலையில் திருவேங்கடமுடையான் திருவடிகளில் சரணம் புக்கார்
எம்பெருமான் திருவடிகளில் நிற்கக் கண்டிலர்
மிக்க ஆர்த்தி உடன் புலியின் வாயில் அகப்பட்டால் போலே சப்தாதி விஷயங்களை நலிவதை வெளி இட்டார் கீழ் திருவாய் மொழியில்
இவர் ஆர்த்தியை அறியாதவன் அல்லன் எம்பெருமான்
நாலு நாள் நோவு பட்டாராகில் படுகிறார்
இவர் திவ்ய பிரபந்தம் கொண்டு நாட்டைத் திருத்தப் பார்த்தான்
இக்கோடு உலகில் இருப்பு நமக்கு பொருந்த வில்லையே
இந்நிலத்தில் இருப்பு பொருந்துவார் பலர் உண்டே அவர்களைக் கொண்டு திருத்தலாகாதா
இருப்பு பொருந்தாதாரைக் கொண்டே கார்யம் செய்ய திரு உள்ளம் பற்றினான்
இத்தால் நிலை கலங்கின ஆழ்வார் தாமான தன்மை இழந்தார்
திருத் தாயார் பாசுரமாக செல்கிறது இத் திருவாய்மொழி
திருத்தாயார் இவளை ஸ்ரீ ரெங்கநாதர் திருவடிகளிலே இட்டு வைத்துக் கொண்டு இருந்து -இவள்
அழுவது
தொழுவது
மோஹிப்பது
பிரலாபிப்பது
அடைவு கெடப் பேசுவது
நெடு மூச்செறிவது
அதுவும் மாட்டாது ஒழிவது
ச்ப்தையாய் இருப்பது
முதலியவற்றை ஒவ் ஒன்றாக எடுத்துச் சொல்லி
இவள் திறத்தில் நீர் என்ன செய்வதாக திரு உள்ளம் பற்றி இருக்கிறீர்
என்று கேட்கும் படியாக செல்கிறது –

நம்பிள்ளை ஈடு -திருத் தாயாரும் சர்வ பரங்களையும் அவர் தலையிலே பொகட்டு
பெண் பிள்ளையை திரு மணத் தூணுக்குள்ளே இட்டு
அவருடைய அசரண்ய சரண்யத்வாதி குணங்களை விண்ணப்பம் செய்யா நின்று கொண்டு
ஒரு கால நியதி யாதல்
ஒரு தேச நியதி யாதல்
அதிகாரி நியதி யாதல் அன்றிக்கே
சர்வ சமாஸ்ரயணீயராய் இருக்கிற படியை அனுசந்தித்து
தன் பெண் பிள்ளையினுடைய தசையை திரு உள்ளத்திலே
படுத்துகிறாள் இத் திருவாய் மொழியாலே

பட்டர் இத் திருவாய் மொழியை அருளிச் செய்யும் போதெல்லாம்
ஆழ்வாருக்கு ஓடுகிற தசை அறியாதே
அவருடைய பாவ வ்ருத்தியும் இன்றிக்கே
இருக்கிற நாம் என் சொல்கிறோம்
என்று திரு முடியிலே கையை வைத்துக் கொண்டு இருப்பர் –


ஆழ்வார் பிறருக்கு உபதேசிப்பதும் அர்ச்சாவதார எம்பெருமானைப் பற்றவே! இது செய்ய தாமரைக்கண்ணனாய் * பதிகந்தன்னில் ஸுஸ்பஷ்டம் இதனை ஸ்ரீமத்வரவரமுனிகள்* தம்முடைய திருவாய்மொழி நூற்றந்தாதியில்

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றிவற்றுள் *எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்*
பன்னு தமிழ் மாறன் பயின்று (26)-என்று ஸங்க்ரஹித்தார்.

இவ்விபூதியிலேயே கிட்டி ஆச்ரயிக்கும்படி ஸ்ரீ அர்ச்சாவதாரம் எளிது! கண்ணுக்குத் தோற்றும்படி நிற்கை அர்ச்சையிலேயிறே! ஆழ்வார் திருவுள்ளமான * நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள் கடல் வண்ணன் என்றத்தைப் ப்ரதிபாதிக்கும்படி….

இத்திருவாய்மொழி ப்ரவேசத்தில் பரமாசார்யரான ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள்.

* ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களினுடையவும் ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளடைய ஸ்வாதீநமாம்படி இருக்கிறவன், தன்னுடைய ஸ்வரூபஸ்தித்யாதிகள் ஆஶ்ரித அதீனமாம்படியாய் அவர்களுக்கு க்ருஹக்ஷேத்ராதிகளோபாதி கூறுகொள்ளலாம்படி நின்ற நிலையிறே * ….

இவன் ஏதேனும் ஒரு த்ரவ்யத்தையிட்டால் அத்தைத் திருவாய்ப்பாடியில் யசோதாதிகள் வெண்ணெயோபாதி விரும்பக்கடவனாய்,

இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு நிற்கிற இடமிறே அர்ச்சாவதாரமாவது. *

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

*புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம்* வகுளதரதாமேத்ய ஸ புந: |
*உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||*

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.

அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தர மீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது கீழ் உதாஹரித்த புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும். இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் (65) என்று காட்டியருளினார் ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார் …..

ஸ்வாமி வேதாந்தவாசிரியர் தம்முடைய திரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் இதனை
ஆதௌ ஶாரீரகார்த்தக்ரமமிஹ விஶதம்
விம்ஶதிர் வக்தி ஸாக்ரா ( 5 ) என்கிற ஶ்லோகத்தில் காட்டியருளினார்.

ஶாரீரகத்தின் அர்த்தங்களாவன முறையே அத்யாய-பாத முறைப்படி விஶதமாக முதல் இருபது (20) பாசுரங்களாலே சொல்லப்பட்டன என்று காட்டியருளினார். இதனையே விரிவாக எப்படி அந்த 20 பாசுரங்கள் காட்டுகின்றன என்பதனை ஸ்ரீபாஷ்ய த்ரமிடாகமாத்ய தசகத்வந்த்வ ஐககண்ட்யத்தில் வாதிகேஸரி மடத்தினை அலங்கரித்தருளின ஜீயர் ஸ்வாமி விசதமாகக் காட்டியருளியுள்ளார்.

இவையனைத்துக்கும் மூலம் ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள் அவர் தாமும் வீடுமின் ப்ரவேசத்தில் * .. தத்வபரமாயும், உபாஸநபரமாயுமிறே மோக்ஷ ஶாஸ்த்ரம்தான் இருப்பது; அதில் தத்வபரமாகச் சொல்ல வேண்டுவதெல்லாம் சொல்லிற்று கீழில் (உயர்வற பதிகத்தில்) திருவாய்மொழியில். உபாஸநபரமாகச் சொல்ல வேண்டுவமவற்றுக்கெல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத்திருவாய்மொழி. * என்றருளிசெய்துள்ளது நோக்கத்தக்கது….


திருவாய்மொழி எட்டாம் பத்து…….
அடியேனுள்ளான் உடலுள்ளான்……

ஸ்வாமி ராமானுசரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.

ஸ்வாமியின் கோஷ்டியில் ஒரு கேள்வி எழுந்தது. ஆத்மா ஆனந்தம் ஞானம் இவ்விரண்டின் இருப்பிடமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆத்மா ஈச்வரனுக்கு சேஷப்பட்டது என்றும் நிறுவப்பட்டுள்ளது. இவ்விரு அடையாளங்களினுள்ளும் ஆத்மாவுக்குப் ப்ரதானமானது எது?

இக்கேள்விக்கு விடையைத் தாம் நன்கறிந்திருப்பினும் இணையற்ற ஞானவிலாசமுள்ள தம் ஆசார்யர் திருக்கோஷ்டியூர் நம்பிகள் மூலமே இதை நிர்ணயிக்கத் திருவுள்ளம்பற்றிய எம்பெருமானார் இக்கேள்விக்கான விடைக்கு நம்பிகளின் அபார வாக் வைபவம் தேவை எனக்கருதினார். தமது மேன்மை மிக்க சீடர் கூரத்தாழ்வானைக் காலம் கருதி நம்பிகளிடம் இக்கேள்வியை விசாரிக்க அனுப்பினார்.

ஆழ்வானும் காலம் கருதி இக்கேள்வியை எழுப்ப நினைந்தபோது ஆறுமாசங்கள் கழிந்து, நம்பிகள், அடியேனுள்ளான் உடனுள்ளான் என்று சுருக்கமாக விடை தந்தார். இது திருவாய்மொழி எட்டாம் பத்து, எட்டாம் திருவாய்மொழியில் இரண்டாவது பாசுரத்தின் ஒரு பகுதியாகும்

ஆத்மாவுக்கான அடையாளங்களில் அது ஈச்வரனுக்கு சேஷப்பட்டிருப்பதே ப்ரதான அடையாளம் என்கிற அபிப்ராயத்தை இது உணர்த்தும். இது நம்பிகள் கூறியதில் அடியேன் என்கிற சொல்லினால் பெறப்படும் பொருளாகும்.

திரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்… 🙏🙏
[4:21 PM, 6/10/2022] +91 72995 10125: பாகவதசேஷத்வம்
அம்மணியாழ்வான் என்றொரு ஸ்ரீவைஷ்ணவர் பட்டரிடத்து தண்டன் சமர்ப்பித்து கேட்கின்றார் ‘அடியேனுக்கு தஞ்சமாயிருப்பதொரு அர்த்தம் பிரஸாதித்தருள வேணும்’ என்று!. பட்டர் ‘நெடுமாற்கடிமை’ என்ற பாசுரத்திற்கு அர்த்தம் கூறுகின்றார். மேலும், ”எம்பெருமானைப் பற்றி மட்டும் அறிந்தோமாயின் அந்த எம்பெருமானுக்கு அரைவயிறு மட்டும் நிரம்பியது போன்றதாகும். அவனது அடியார்களையும் அவர்களது வைபவங்களையும் உணர்ந்து அறிந்தோமாயின் அந்த எம்பெருமானுக்கு முழுவயிறும் நிரம்பியது போன்றதாகும்’ என்று பரம பாகவதோத்மர்களின் சிறப்பினைப் பற்றி விளக்குகின்றார்.
ந்யக்ரோத பீஜே வடவத் ப்ரணவே சப்தஜாலவத் !
ஸித்தே ததீயஸேஷத்வே ஸர்வாதாஸ் ஸம்பவந்திஹி !!
ஆலம் விதையில் ஆலமரம் போலவும், ப்ரணவத்தில் எல்லா சப்தங்கள் போலவும் பாகவத சேஷத்வம்
ஸித்திக்குமாயின் (அதில் அடங்கிய) எல்லாப் பொருள்களும் கிடைத்தனவாகின்றன.🙏🙏
நெடுமாற்கடிமை…….. ……
பகவத் கைங்கர்யம் தானும் எம்பெருமானோடு மட்டும் இல்லாமல்,
அவனது அடியார்கள் வரை போக வேண்டும் என்பதை நெடுமாற்க்கடிமை (8-10) பதிகத்தால் அருளிச் செய்தார்.
இதுவே பரம புருஷார்த்தம். அதிலும் இப்பதிகந்தன்னில் அவனது
தனிமாத் தெய்வமான எம்பெருமானின் அடியார்கள் திறத்தில் அடிமையாம் அளவன்றிக்கே
அவ்வடிமை நிலையில் எல்லை நிலம் என்று அனுஸந்தித்துக் காட்டுகிறார்.
சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள்
(ஸ்வயம் பிரயோஜநமாக கைங்கர்யத்தின் எல்லையிலே நிலை நின்ற அடியவர்களுடைய திருத்தாள்கள் வணங்கி)
அவனடியார் நனிமாக்கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே
(ஸ்ரீவைஷ்ணவர்களுடைய சேர்க்கையே எப்பொழுதும் வாய்க்க வேண்டும்)
கோதில் அடியார்தம் தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே!
* (கோதற்ற அடியார்க்கு அடிமையில் முடிந்த நிலமான வாய்ப்பே அடியேனுக்கு வாய்க்க வேணும்) இங்கு குறிக்கொள்ளத் தக்கது.🙏🙏🙏🙏


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே P.B.A- ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -91-100–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

May 31, 2022

அவதாரிகை

இப்படி கால விளம்பம் போறாது ஒழிந்தாலும்
அவன் தானே வந்து முகம் காட்ட வேண்டுகையாலே
பதறினாலும் பிரயோஜனம் இல்லை
அவன் தன் நினைவாலே இருக்கிற உமக்கு அவன் விபூதியைக் கண்டு கால ஷேபம் பண்ணி இருக்கக் குறை என் என்ன

ஆஸ்ரித வ்யாமுக்தனாய்

ஆபத் சகனாய்

ஸர்வஞ்ஞனானவனை ஒழிய என் நெஞ்சு வேறே ஒரு விஷயத்தை ஆதரியாது -என்கிறார் –

இப் பாட்டு தோழிக்குத் தலைவி தன் கற்புணர்த்தி அறத்தோடே நின்று உரைத்தல் ஆகவுமாம் –

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91 –

பாசுரம் -91-சுருங்கு உறி வெண்ணெய் தொடு உண்ட –
துறையடைவு–தலைவி தோழியிடம் தன் கற்பு உணர்த்தி அறத்தோடு நிற்றல் –

வார் கடா அருவி -8–4-

பதவுரை

சுருக்கு உறி வெண்ணெய்–சுருங்கக் கட்டப்பட்டுள்ள உறியிலே சேமித்து வைக்கப்பட்ட வெண்ணெய்யை
தொடு உண்ட–வஞ்சனையால் எடுத்து அமுது செய்த
கள்வனை–கள்ளத்தனமுடையவனும்
வையம் முற்றும்–உலக முழுவதையும்
இரு குறள் ஆகி–மிக்க வாமனவடிவ முடையனாகி
இசைய–(அவன் தானே தானம் பண்ணுவதற்கு) இசையும்படி
ஓர் மூ அடி வேண்டி–ஒரு மூன்றடி நிலத்தை யாசித்துக்கொண்டு
ஒருங்கு உறு உண்ட–ஒருசேர விடாமல் உட்கொண்ட
பெரு வயிற்றாளனை–பெரிய திருவயிற்றை யுடையவனும்
மாவலி மாட்டு–மஹாபலி சக்கரவர்த்தியினிடத்தில்
சென்ற–எழுந்தருளின
பெரு கிறியானை அல்லால்–மிக்க தந்திரமுடையவனுமான திருமாலை  யல்லாமல் (வேறொருத்தனை)
அடியேன் நெஞ்சம் பேணாது–(அவனுக்கே) அடிமையான எனது மனம் விரும்பாது.

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை
கள்ளக் கயிறு உருவிக் கட்டுகையால் சுருங்கின உறியிலே சேமித்து வைத்த வெண்ணெயைக் களவிலே புக்கு
அமுத செய்த க்ருத்ரிமனானவனை

இத்தால்
இச்சரீரமாகிற சிக்கத்திலே கட்டுண்ட நவநீத ப்ராயனான முமுஷு சேதனனைப்

பிறர் அறியாதபடி அபி நிவிஷ்டனாய் புஜிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது –

வையமுற்றும் ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை
இப்படி ஆஸ்ரிதர் உகந்த விஷயத்தை உகக்கும் அளவு அன்றிக்கே
ஸாமான்யமான ஜகத்துக்கு பிரளய ஆபத்து வந்தால் ஒன்றும் பிரி கதிர்ப் படாமல்
பசியர் யுண்டால் போலே மேல் விழுந்து திரு வயிற்றிலே வைத்து நோக்கும்படியான ரக்ஷகத்வ சக்தியின் மிகுதியை யுடையவனை –

(மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாறிலே கொழிக்கும் –(ஆச்சார்ய ஹிருதயம்-175)

மாவலி மாட்டு-இருங்குறளாகி இசைய வோர் மூவடி வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால்
மஹா பலி யருகே லோகத்தில் வாமன வேஷம் வளர்ந்து அருளின இடம் என்னும்படி மிக்க வாமனனாய்
அவன் தானே இசையும்படி அத்விதீயமான சிற்றடியாலே மூன்றடி வேண்டி அழகிய நடையிலே மதி மயங்கும்படி சென்ற
பெரிய நல் விரகை யுடையவனை ஒழிய

பெரும் கிறியாரை -என்றும் சொல்லுவார்

இத்தால்
தன்னுடைய வஸ்து பிறர் கொள்ளாமல் தன்னதே யாக்கிக் கொள்ளும் பேர் அறிவுடையவன் என்கை

அடியேன் நெஞ்சம் பேணலதே –
இந்த ஸ்வ பாவங்களால் அவனுக்கே சேஷமான நெஞ்சு
வேறே ஒரு விஷயத்தை ஆதரியாது

அறத்தொடு நிலை

தொடு உண்ட கள்வன் -என்கையாலே
புணர்ச்சி தோற்றிற்று

வையம் இத்யாதியாலே –
நீரிடை யுதவி தோற்றிற்று ( புனல் தரு புணர்ச்சி )

மாவலி மாட்டு -இத்யாதிகளாலே ‘தானே குறை நயந்து வரைந்து கொள்ளும் பேர் அறிவுடைமை தோற்றிற்று

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
இங்கே கிடந்தது -காலம் நெடிதாகா நின்றது குறுகா நின்றது என்று
ஆழங்கால் பட்டுக்கிடவாதே நாங்கள் கண்டீரே
புறம்புள்ள விஷயங்களாலே தரித்துக் காலம் நெடுகுதல் குறுகுதல் செய்யாதே ஸூகித்து இருக்கிறோம்
அப்படியே நீரும் பகவத் விஷயத்தில் நின்றும் மாறி நெஞ்சைப் புறம்பே வைக்கைக்குப் பார்த்தாலோ என்ன
அப்படிச் செய்யலாயிற்றே அதுக்கு ஈடாய் இருபத்தொரு நெஞ்சைப் பெற்றோமாகில்
என் நெஞ்சு அவனை ஒழிய வேறு ஓன்று அறியாது என்கிறார்
என் நெஞ்சு தன்னைப் புறம்பே வைக்கலாயிற்று இறே அவன் நவநீத ஸுர்யம் பண்ணானாகில்

வியாக்யானம்

சுருந்குறி வெண்ணெய்
கள்ளக் கயிறு உருவி வைத்த உறி யாயிற்று

வெண்ணெய் தொடு வுண்ட
வைத்த குறி அழியாமே வெண்ணெயைக் களவு கண்டு அமுது செய்த

கள்வனை
களவு தன்னை யாயிற்று களவு கண்டது ஆகிறது –

———————————————————————

அவதாரிகை

இப்படி அனுபவ அர்த்தமாக இவர் ஆதரித்த படியைக் கண்ட ஈஸ்வரன்
நம்மை அபேக்ஷித்தாருக்கு முகம் காட்டாது ஒழிவோமோ
தம் தம்முடைய அபிமத ஸித்தி யர்த்தமாக ப்ரயோஜனாந்தர பரரான தேவர்கள் அகப்பட அபேக்ஷிக்க

வந்து பிறந்து கார்யம் செய்து கொடுக்கிலோமோ என்று-தன் திரு உள்ளக் கருத்தை ஆவிஷ்கரிக்க

உன்னுடைய போக்யமான வடிவை அனுபவிக்க ஆசைப்படாதே

சத்ரு நிரஸனம் பண்ணித் தர வேணும் என்று அபேக்ஷிப்பதே என்று
அவர்களை பழித்து அருளிச் செய்கிறார்

இதுவும் நாயகி வினைத் தொழிலில் பிரியலுற்ற நாயகனைக் குறித்துக் காணலுற்றுக் கவர்ந்து உரைத்தல் ஆகவுமாம் –

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
தாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92-

பாசுரம் -92- பேண் நலம் இல்லா அரக்கர் –
துறையடைவு—தலைவனைக் குறித்து தலைவி இரங்குதல் –
ஆழி எழ -7–4-

பதவுரை

பேண் நலம் இல்லா (உன்னை) விரும்பிப் பக்திசெய்தலாகிய நற்குணமில்லாத
அரக்கர்–ராக்ஷஸர்களுடைய
முந்நீர பெரு பதி வாய்–கடலாகிய பெரு நீரணை யுடைய பெரிய மலையிடத்திலுள்ள
நீள் நகர்–பெரிய லங்காபுரியில்
நீள் எரி வைத்தருளாய்–தீப்த்த அக்னி பானம் -ஆகிற நெருப்பு -பெரிய நெருப்பை வைத்து அளித்தருள வேணும்
என்று–என்று சொல்லிப் பிரார்த்தித்து
நின்னை–உன்னை
விண்ணோர்–தேவர்கள்
வைகல்–நாள் தோறும்
மாலையும் காலையும்–இரண்டு சந்தி களிலும்
தான் நிலம் தோய்ந்து தொழுவர்–தங்கள் கால்கள் தரையிலே படும்படி வந்து வணங்குவர்;
(அவர்கள் அங்ஙனம் வணங்குதல் தங்கள் பகையைப் போக்குவிக்கும் பொருட்டே யன்றி)
நின் மூர்த்தி–உனது வடிவத்தின்
பல் கூற்றில்–பல அம்சங்களுள்
ஒன்று–ஒன்றையேனும்
காணலும் ஆம் கொல் என்றே–பார்க்க வேண்டுமென்றோ (அன்று என்றபடி.)

வியாக்யானம்

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று
உன் பக்கல் அனுவர்த்தனம் ஆகிற நலம் இல்லாத ராக்ஷஸருடைய
சமுத்ரமாகிற நீர் அரண் யுடைத்தான ஸூ வேலமாகிற பெரிய பர்வத ஸ்தானத்திலே
பெரிய ஓலக்கத்தை யுடைத்தான லங்கையாகிற படை வீட்டிலே
பட்டினி கிடக்கிற அக்னியானவன் பசி தீர்ந்து யுண்டு வளரும்படி ப்ரஷேபிக்க வேணும் என்று அபேக்ஷித்து

நின்னை
நிரதிசய போக்ய பூதனான உன்னை

விண்ணோர்
விலக்ஷண போகம் அறிந்து புஜிக்கிறாராக பாவித்து இருக்கிறவர்கள்

தாள் நிலந்தோய்ந்து தொழுவர்
நிலத்திலே தோய்ந்து தாள் தொழுவர் என்று ப்ரணாமத்தைக் காட்டுகிறது
தேவர்களாய் இருக்கச் செய்தே தங்கள் அர்த்தித்து
அத்தாலே
உத்தரம் தீர மா ஸாத்வ -யுத்த -17-10-என்று பூமியிலே கால் பொருந்தித் தொழுவர் என்றுமாம்

(வடக்குக்கரை அடைந்து -கிழக்குக்கரை இல்லாமல் -லங்கைக்கு வடக்கு தானே –
கால் பூமியிலே படாமல் இருந்தான் விபீஷணன் அங்கு
பொருந்தாமல் இருந்தான் -)

நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காண லுமாங்கொல் என்றே
இப்படி பரம உபாயமான பிரணிபாதாதிகளைப் பண்ணுகிறது நிரதிசய போக்யமாய் ஆஸ்ரித அர்த்தமாக
நீ பரிக்ரஹித்த நாநா வான விக்ரஹங்களிலே ஓர் அம்சத்தைக் காணலாம் என்றோ -அன்றிலே என்றபடி –

போகத்துக்கு ஆசைப்பட்டுக் காலிலே விழுந்தார்களை அறுக்கை தானே செய்யும் என்று கருத்து

வைகல் மாலையும் காலையுமே –
அஹோ ராத்ர விபாக யுக்தமான காலம் உள்ளதனையும் காணலுமாம் கொல் என்று அந்வயம் –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே -என்றார் கீழே
அளவுடைய அதிகாரி புருஷர்களாக தேவர்களுக்கு இதுவும் இன்றி ஒழிவதே என்கிறார்
என் தான்
அவர்களுக்கு வந்த குறை என் என்னில்
நாம் எல்லாவற்றையும் அழிய மாறிப் பெறக் கடவத்தையும் அழிவுக்கு இட்டு

வேறே சில ப்ரயோஜனங்களைக் கொள்ளா நின்றார்கள் இறே -என்கிறார் –

———

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

தன் நெஞ்சு வேறே ஒன்றை ஆதரியாது என்று அருளிச் செய்தார்
விண்ணோரும் என்னைப் போலே யாகாதே விருத்த ஸ்வபாவர் ஆவதே என்று

வெறுத்து அருளிச் செய்கிறார் இதில்

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் தாள் நிலந்தோய்ந்து தொழுவர்
ஸர்வ பூத ஸூஹ்ருத்தான உன்னையே விண்ணில் உள்ளவரான விலக்ஷண ஞான சக்திகரும்
இந்நிலம் நாம் கால் வைப்பதற்கு யோக்யம் அன்று என்று இருக்குமவராய்
ஸ்வ பிரார்த்தனைக்காக இந்நிலத்தில் கால் பதிய வைத்தவர்களாய்

நீணகர்
பஹு காலம் தொடங்கிக் கடல் சூழ்ந்த மஹா த்வீபத்தில் உண்டான இலங்கையில்

நீள் எரி
பஹு நாளாகப் பட்டினி இருக்கிற மஹா அக்னியை
சரமுகத்தால் பிரவேசிப்பிக்க அருள் செய்ய வேணும் என்று உன்னை பிரார்த்திப்பதே

வைகலும்
எப்போதும்

தொழுவர்
இதுக்காக உன்னைத் தொழவும் வேணுமே

நீள் நகருக்கு விசேஷணம்

பேணல் இத்யாதி
உன் விபூதியைப் பேணவும்
உன்னை அனுவர்த்திக்கவும் ஆகிற நன்மை இல்லாத ராக்ஷஸருடைய ஸமுத்ரமாகிற
முந்நீரை யுடைத்தான ஸூ வேலமாகிற பெரிய பர்வத ஸ்தானத்திலே இருக்கிற என்றபடி
இப்படி பர அநர்த்தத்துக்காக உன்னை விண்ணோர் தொழுவர் அத்தனை போக்கி

நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காண லுமாங்கொல் என்றே
மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரிய தரம் ரூபம் யதத்யத்புதம் -(சதுஸ் ஸ்லோஹி-4 ) -என்றபடியே
உனக்கு நிரதிசய ப்ரியமாய் எங்களுக்கு த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான பலவகைப்பட்ட
திவ்ய மங்கள விக்ரஹ பேதங்களில் ஒன்றை யாகிலும் காணலாமோ என்றே அல்லவே
ஊரைச் சுட்டுக் தர வேணும் என்றதற்காக அத்தனை

வைகல் மாலையும் காலையுமே –
சாயம் ப்ராதஸ் சமயங்களில் -புன புன தொழுவர் என்றபடி –

———————————————

அவதாரிகை

இப்படி ப்ரயோஜனாந்தர பரராய்ப் போருகிற அளவன்றியே ஸம்ஸாரிகள்

அஹோ ராத்ர விபாகத்தாலே காலம் கழிக்கிற படி கண்டு வைத்து
பகவத் விஷயத்தில் அந்வயியாதே இருப்பதே -என்று

அவர்கள் இழவுக்கு வெறுத்து அருளிச் செய்கிறார் –

வியாக்யானம் –

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – – -93 –

பாசுரம் –93-காலை வெய்யோற்கு முன் ஒட்டுக் கொடுத்த
துறையடைவு—இருளைக் கண்ட தலைவி -தோழி செவிலி தாயாரை வெறுத்தல் —
ஒரு நாயகமாய் -4–1-

பதவுரை

காலை–உதய காலத்தில்
வெய்யோற்கு முன்–ஸூர்யனாகிய சக்கரவர்த்திக்கு எதிரில்
ஒட்டுக் கொடுத்த–நிற்க மாட்டாமல் புறங்கொடுத்தோடுதலைச் செய்த
கங்குல குறும்பர்–இருளாகிய சிற்றரசர்கள்
மாலை–ஸாயங்காலத்திலே
வெய்யோன்–அந்த ஸூர்யனாகிய பேரரசன்
பட–அழிய-அஸ்தமிக்க
வையகம் பரவுவர்–(தாங்கள்) உலக முழுவம் பரவுவார்கள்;
அன்ன கண்டும்–அப்படிப்பட்ட தன்மையைப் பார்த்திருந்தும்.
காலை–காலத்திற்கு ஏற்றபடி
நல் ஞானம் துறை படிந்து ஆடி–நல்ல ஞானமாகிய துறையிலே இறங்கி மூழ்கி
(ஆச்சார்யர் கீழ் படிந்து -பகவத் பக்தியாகிய வெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபட்டு)
கண் போது செய்து–பக்தி பாரவஸ்யத்தாலே கண்களை மூடிக் கொண்டு-

(உலக விஷயத்தில் மொட்டு போல் பகவத் விஷயத்தில் மலர்ந்து)
மாலை–எம்பெருமானை
நல் நாவில் கொள்ளார்–(தங்களுடைய) நல்ல நாவினால் பெயர் கூறித் துதியார்;
அவன் மைபடி–அவனது கரிய திருமேனியை
நினையார்–நினைப்பதற்கு செய்யார்.

வியாக்யானம்

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
ப்ராத காலத்திலே ஆதித்யன் வருகிறான் என்று அவன் பிரதாபத்துக்கு அஞ்சி
ஏலக்கோலி ஓடிப்போன ராத்ரியாகிற குறும்பர்

மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்
சாயம் காலத்திலே அந்த பிரதா போத்தரனான ஆதித்யனானவன் அஸ்தமிக்க
லோகம் அடங்கப் பரம்பா நிற்பர்கள்

அன்ன கண்டும்
அப்படிக் கால பேதேந ப்ரகாஸ அந்தகாரங்கள் கலசி வருகிறபடி கண்டு இருக்கச் செய்தேயும்

காலை நன் ஞானத் துறை படிந்தாடிக்
ஸத்வ உத்தர காலத்திலே வைதிகமான அத்யாத்ம ஞானத்துக்குத் துறையான
ஆச்சார்ய விஷயத்தைப் பிராணாமம் பண்ணி
அவன் உபதேசத்தில் அவகாஹித்து

கண் போது செய்து
பாஹ்ய இந்த்ரியத்தைப் புறம்பு போகாதபடி மொட்டுவித்து

மாலை நல் நாவில் கொள்ளார்
ஆஸ்ரித வத்ஸலனான ஸர்வேஸ்வரனை ஸ்தோத்ரம் பண்ண இட்டுப் பிறந்த நாக்கிலே ஸ்வீ கரியார்கள்

நினையார் அவன் மைப்படியே –
அவனுடைய ஸ்யாமளமான திருமேனியை நெஞ்சுக்கு விஷயமன் ஆக்கார்கள்
இப்பொழுதைப் பழுதே போக்குவதே என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தேவர்கள் தான் ஓர் அபிமான விசேஷத்தாலே இருக்கிறார்கள்
அல்லாதாரோ தான் பகவத் போஜனம் பண்ணுகிறார்களோ
அவர் இவர் என்று விசேஷிக்கிறது என்
எல்லார்க்கும் புறம்பே யன்றோ போது போக்கு என்கிறார்

வியாக்யானம் –

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்-மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்
உத்பவ அபிபவ ரூபத்தாலே ஆதித்யன் இருளை மேலிடுவது
அந்த ராத்திரி ஆதித்யனை மேலிடுவதாய் இருக்கிற இத்தைக் கண்டு வைத்து

நந்தத்த யுதித ஆதித்யே -அயோத்யா -105-24
விடிந்தவாறே அபிமத விஷயங்களை புஜிக்கும் படி உபகரணங்களைத் தேடுகைக்கு ஈடான காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள்

நந்தத்த யஸ்தமிதே ரவவ்
அஸ்தமித்தவாறே இவற்றைக் கொண்டு பிறர் அறியாதபடி அவ்விஷயங்களை புஜிக்கும்படியான காலம் வந்தது என்று களிப்பார்கள்

ஆத்மந இத்யாதி
பகல் என்றும் இரவு என்றும் கூறிட்டுக் கொண்டு இங்கனே தந்தமுடைய ஆயுசை ஈர்க்கிறதோர் ஆயுதம்
சாலில் வார்த்த நீர் போல் நம் ஆயுஸ்ஸூ போகிறபடி படி என்று புத்தி பண்ணுகிறவர்கள் அல்லர்
சாவக்கடவராய் இருக்கிறவர்கள்
காலை -ப்ரபாத சமயத்திலே வெய்யோன் உண்டு ஆதித்யன்
அவனுக்கு முன்னோட்டுக் கொடுப்பர்கள் ஆயிற்று கங்குல் ஆகிற குறும்பர்
அவன் கிரணங்களைப் பரக்க விட ஓடா நிற்பர்கள் இறே
மாலையிலே பெரிய பிரதாபத்தை யுடைய ஆதித்யனை அழித்து அவன் ஆண்ட பரப்பை அடையக் கைக்கொள்வர்கள்
நித்ரையாலே பூமியாகப் பரவசமாம் படி பண்ணிக்கொடு வரும் இறே

அன்ன கண்டும்
அப்படியைக் கண்டு வைத்தும்
பகவத் விஷயம் ப்ரத்யக்ஷத்துக்கு விஷயம் அல்லாமையாலே தான் அறியாது ஒழிகிறார்கள்
இத்தினுடைய அவஸ்தையை ப்ரத்யஷியா நிற்கச் செய்தேயும் நெஞ்சில் படாது ஒழிவதே

காலை
ஸத்வ உத்தரமான காலத்திலே

நன் ஞானத்
ஞானம் ஆகிறது பகவத் விஷயத்தைப் பற்றி யல்லது நில்லாது
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -( முதல் திரு -67 ) என்னக் கடவது இறே
தத் ஞானம் அஞ்ஞானம் அதோ அந்யதுக்தம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-5-87 )
வித்யா அன்யா சில்ப நை புணம் –(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-41 )
புறம்பே ஒன்றைக் கற்றத் தோடு
துன்னம் பெய்யக் -கந்தை தைக்க -கற்றத்தோடு வாசி இல்லை இறே

துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் வன்மைப்படியே

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

நன்மை பெற வல்ல நாக்கால் அனுசந்திப்பதும் செய்யார்கள்
அவன் மை போன்ற திருமேனியை ஸாஸ்த்ரத்தில்
பஞ்சத்தாவிபக்த காலங்களில் ஸ்மரியார்கள்
யூகித்தார்த்த விபரீதமாய்
நந்தத்த் யுதித ஆதித்யே நந்தத்த் யஸ்தமிதே ரவவ் ஆத்மநோ நாவபுத் வந்தே மனுஷ்யா ஜீவிதா ஷயம் -அயோத்யா -105-24-

என்றபடியாய் இரா நின்றார்கள் என்கிறார்–

————————-

அவதாரிகை

மாலை நல் நாவில் கொள்ளார் -என்று நாட்டாரைப் பழித்தீர்
நீர் தாம் நம்மை யுள்ளபடி அறிந்து சொன்னீரே என்று ஈஸ்வர அபிப்ராயமாக
விலக்ஷணரான வைதிகர் அன்றோ அது செய்ய வல்லார்
நான் அவர்கள் போன வழியே போமவன் அன்றோ -என்று அருளிச் செய்கிறார் –

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — – 94-

பாசுரம் –94-மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் –
துறையடைவு–தலைவியைப் பார்த்த தோழன் தலைவனிடம் வியந்து பேசுதல் –
இருத்தும் வியந்து -8-7–

பதவுரை

மை படி மேனியும்–நீல நிறம் செறிந்த திருமேனியையும்
செம் தாமரை கண்ணும்–செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களையு முடைய
உன்–உனது
திரு அடி–திருவடித் தாமரை மலர்களை
வைத்திகரே–வைதிகர்கள் தாமே
மெய் படியால்–உண்மையான நெறியால்
சூடும்–தம் தலைமேற்கொண்டு வணங்கும்படியான
தகைமையினார்–தன்மை யுடையவர்கள்;
எப்படி ஊர் ஆ மிலைக்க குருடு ஆ மிலைக்கும் என்னும் அப்படி–எப்படி (வெளியில் மேய்ந்து மீண்டு) ஊர் வந்து சேர்ந்த
(கண் தெரியாத) பசுக்கள் (இடமறிந்து) கனைக்கக் குருட்டுப் பசுவும் கூடக் கனைக்கும்மென்று (உலகம்) சொல்லுமோ, அப்படியே
யானும் சொன்னேன்–யானும் உன்னைத் துதித்தேன்.
அடியேன் மற்று யாது என்பன்–அடியவனான நான் வேறு என்ன வென்று சொல்லுவேன்?

வியாக்யானம்

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்
அஞ்ஜனத்தின் வடிவு போலே இருக்கிற திருமேனியையும்
அதுக்குப் பரபாகமாய்ச் சிவந்த தாமரை போலே இருக்கிற திருக்கண்களையும்

வைதிகரே
நீல தோயத -தைத்ரியம் என்றும்
யதா கப்யாஸம் புண்டரீகம் -சாந்தோக்யம் என்றும்
திரு வடிவையும் திருக்கண்ணையும் வேதத்தில் சொல்லுகிறபடி அறியுமவர்களே

மெய்ப்படியால்
கேட்டார் வாய்க் கேட்கை அன்றிக்கே
மெய்யாகக் கண்டபடியாலே

உன் திருவடிச் சூடும் தகைமையினார்
பிராப்தமுமாய்
போக்யமுமான உன்னுடைய திருவடிகளை
சிரஸா வஹித்து அனுபவிக்கும் ஸ்வ பாவத்தை யுடையவர்கள்

எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
ஊர் அணைந்த ஆக்கள் கன்று நிலை கண்டு கனைக்க

கண்ணில்லாத ஆவும் அது கேட்டு ஒக்கக் கனைக்கும் என்று லோகம் யாதொருபடி சொல்லும்

அப்படி யானும் சொன்னேன்
அந்த ப்ரகாரத்திலே வேத வைதிக புருஷர்கள் சொன்ன பாசுரத்தைக் கேட்டு நானும் சொன்னேன்

அடியேன்
சொல்லுகைக்கு அடியான உறவையுடைய நான்

மற்று யாது என்பனே —
அல்லது என் ஞானத்தாலே கண்டு என் சக்தியாலே சொன்னேன் என்ன வல்லேனோ என்றார் ஆயிற்று

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
துர்மானத்தாலே இழப்பாரும்
அறிவு கேட்டாலே இழப்பாருமாகா நிற்பார்கள் என்றீர்
உமக்கு குறையில்லையே என்ன
எனக்கும் ஒரு குறை உண்டாக்கி வைத்தாய்
முன்னடி தோற்றாதபடி மயர்வற மதிநலம் அருளினாயே
பக்தி ரூபா பன்ன ஞானத்தை இறே அருளிற்று
அந்த பக்தி பாரவஸ்யத்தாலே ஒன்றும் சொல்ல மாட்டேன் என்னுதல்
வள வேழ் உலகில் படியே அயோக்யதா அனுசந்தானத்தாலே -1-5- ஒன்றும் சொல்ல மாட்டேன் என்னுதல்

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

குருட்டா மிலைக்கும் என்னும் அப்படி யானும் சொன்னேன்

அடியேன் மற்று யாது என்பனே
உனக்கே அடிமைப்பட்ட நான்
என்முன் சொல்லிச் சொல்லும் நான்
நீ சொல்லுவியாத மற்று எத்தைச் சொல்லுவேன் என்கிறார் –

————-

அவதாரிகை

ஊரா மிலைக்கக் குருட்டா மிலைக்கும் என்று கண்டவர்கள் சொன்ன பாசுரத்தைச் சொன்னேன் இத்தனை என்கிறீர்
கதாநுகதிகை யன்றி உமக்குத் தஞ்சமாக பகவத் விஷயத்தில் நீர் செய்த அம்சம் ஏது என்ன

அநாதியான சரீர ஸம்பந்தத்தாலே விஸ்லேஷித்துப் போகாத படி என்னை அங்கீ கரித்து அருள வேணும் என்று நிருபாதிக பந்துவான
ஸ்ரீ யபதியை ஆஸ்ரயித்து இருப்பன் என்று தம்முடைய பிரபத்தி நிஷ்டையை அருளிச் செய்கிறார் –

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 –

பாசுரம் –95-யாதானும் ஒரு ஆக்கையில் புக்கு —
துறையடைவு–தலைவி அறத்தோடு நிற்கத் துணிதல் –
திருமாலிருஞ்சோலை -10-8-

பதவுரை

உயிர்–உயிரானது
முன்னமே–நெடுநாளாகவே
மூது ஆவியில்–பழமையான (பலவகைப்) பிறப்புகளுள்-ஸூஷ்ம சரீரம் –
யாது ஆனும் ஓர் ஆக்கையில்–யாதாயினும் ஒரு சரீரத்தில்
புக்கு–பிரவேசித்து
அங்கு அவ்வுடம்பில்–ஆப்புண்டும்-பிராரப்த கர்மத்தால் அதிலே உழன்று -பந்தத்தில்
கட்டுப்பட்டு நின்றும்–ஆப்பு அவிழ்ந்தும்
(அங்கு நின்று) தொடர்ச்சி நீங்கியும் தடுமாறும்–நிலைமாறி அலையும் தன்மையுடையது ;
அதனால்–ஆதலால்-வாசனையால் -பதிவினால்
யாது ஆனும் பற்றி–எந்த விதத்தினாலாவது
நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்–(எம்பெருமானை விட்டு) விலகும்படியான கோட்பாட்டை நன்றாக விடுவிக்கக் கடவனான

கைவல்யமும் வீடே -நல் வீடு இல்லையே -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் வேண்டுமே
மாதாவினை–தாய் போன்றவனும்-ப்ரியபரனுமாய் –
பிதுவை–தந்தை போன்றவனுமான-ஹித பரனுமாய்
திருமாலை–ஸ்ரீமந்நாராயணனை
வணங்குவேன்–கரணமடைந்திருப்பேன்.

வியாக்யானம்

யாதானும்
முன்பு பரிக்ரஹித்த சரீரத்துக்கு ஜாதி நியமம் இல்லை
ஆஸ்ரய நியமம் இல்லை
கர்ம அனுரூபமாக உப பன்னமானது -என்கை

ஓர் ஆக்கையில்
பந்தகமாம் இடத்தில் கர்மத்துக்கும் தான் வேண்டும்படி அத்விதீயமாய் இருக்கை

ஆக்கை என்று
சரீரத்தைச் சொல்லுகையாலே
பந்தகத்வமே ஸ்வரூபமாய் இருக்கும் என்கை

புக்கு
சரீர பிரவேசம் சேதனனுக்கு வந்தேறி என்கிறது

அங்கு ஆப்புண்டும்
அந்த சரீரத்திலே அஹம் அபிமாநாதிகளைப் பண்ணி
போக ஆயதநத்வாதிகளாலே ஸக்தனாயும்

ஆப்பு அவிழ்ந்தும்
இஸ் சங்கம் நடவா நிற்கச் செய்தே பந்தக கர்ம விச்சேதத்தாலே சரீர விஸ்லேஷம் பிறந்தும் –

மூதாவியில் தடுமாறும்
இவனை விடாதே பழையதாய்ப் போருகையாலே முதிர்ந்து இருப்பதாய்
ப்ராணஸ் தேஜஸி -சாந்தோக்யம் என்று
ப்ராண ஆஸ்ரயம் ஆகையாலே ஆவி என்று சொல்லப்படுவதான ஸூஷ்ம சரீரத்தில் நின்று
ஸ்வர்க்க நரகங்களிலே யாத ஆயாதம் பண்ணித் தடுமாறா நிற்கும்

உயிர்
ஜீவனானது
முன்னமே –
இப்பிரக்ருதி ஸம்பந்தம் -அநாதி மாயயா ஸூப்த -மாண்டூக்ய காரிகா -என்கிறபடியே அநாதியாய் இருக்கும்

அதனால்
இப்படி இஸ் ஸம்ஸாரி சேதனனுக்கு சரீர ஸம்பந்தம் அநாதி ஆகையாலே

யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களிலே ஏதேனும் ஒன்றை அவலம்பித்து பகவத் விஷயத்தை விஸ்லேஷித்தே போரும்படியான
இஸ் ஸம்ஸாரி சேதனனுடைய ஸங்கல்பத்தை

நல் வீடு செய்யும்
நன்றாக புந ப்ரரோஹம் பிறவாதபடி விடுவிக்கக் கடவனான

மாதாவினைப் பிதுவை
பிரிய பரனுமாய்
ஹித பரனுமாய் உள்ளவனை

வத்சலனுமாய் ஸ்வாமியுமாய் யுள்ளவனை என்றுமாம்

திரு மாலை
அந்த வாத்சல்ய ஸ்வாமித்வங்களுக்கு ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்வத்தை யுடையவை
வாத்ஸாலும்மும் பந்தமும் தோற்றுவது புருஷகார பூதையான ஸ்ரீ லஷ்மீ ஸம்பந்தத்தாலே இறே
பிதா மாதா ச மாதவ -பாரதம் ஆரண்ய -189-
மாத்ருத்வ பித்ருத்வங்கள் விஸிஷ்ட விஷயம் என்றுமாம்
அதாவது
ஸ்புரத்தா ஹேதுவான விசேஷண ப்ரதாந் யத்தாலே மாத்ருத்வமும்
சத்தா ஹேதுவான விசேஷ்ய ப்ரதாந் யத்தாலே பித்ருத்வமும் என்றபடி

வணங்குவனே –
ஏவம் பூத விஷயத்தை ஆஸ்ரயித்து இருப்பன் என்று தம்முடைய ஸ்வ பாவ கதநம் பண்ணுகிறார்

கால ஷேப அர்த்தமாகவும் பிரபதனம் ஒழிய ப்ரவ்ருத்தி இல்லை என்று அருளிச் செய்தார் ஆகவுமாம் –

(வர்த்தமான பிரயோகம் வணங்கிக் கொண்டே இருக்க வேண்டுமே)

—————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

பக்தி பாரவஸ்யத்தாலே யாதல்
அயோக்யதா அநு சந்தானத்தாலே யாதல்
ஏதேனும் ஒருபடி கண்ணழிவு சொல்லிக் கை வாங்காமே
தன் பக்கலிலே ப்ராவண்ய அதிசயத்தை யுடையேனுமாய்
இதர விஷயங்களில் அருசி யுடையனுமாம் படி பண்ணின
மஹா உபகாரத்தை அனுசந்தித்து அவன் திருவடிகளிலே விழுகிறேன் என்கிறார்

இவ்விடத்தில் உருத்தோறும் குறியாக ஜீயர் அருளிச் செய்வதொரு வார்த்தை யுண்டு
பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே அங்கே ராமானுஜ தாசர் என்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்
திரு விருத்தம் அருளிச் செய்ய வேணும் -என்ன
நம்பெருமாளைப் பிரிந்த சோகத்தால் செவி சீ பாய்ந்து இருக்கையாலே நான் ஒன்றுக்கும் ஷமன் அல்லேன்
ஜீயர் நீர் சொல்லும் என்று அருளிச் செய்ய

ஜீயர் அருளிச் செய்து கொடு போகா நிற்க
வளவன் பல்லவதரையர் என்று திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தை யுடையார் ஒருவரும் அதை அனுசந்தித்திக் கொண்டு போந்தாராய்
அவர் இப்பாட்டு அளவிலே வந்தவாறே கண்ணும் கண்ண நீருமாய் புள கீக்ருத காத்ரருமாய் இருக்கிற இத்தைக் கண்டு
இப்பாட்டில் வார்த்தை சொல்லுவது இனி
ப்ரசங்க மாத்திரத்திலே வித்தரானீர் இது என் என்ன

நம்பி எனக்கு ஹிதம் அருளிச் செய்த அனந்தரத்திலே
எம்பெருமான் திரு முன்பே இப்பாட்டை நாள் தோறும் விண்ணப்பம் செய் -என்று அருளிச் செய்தார்
அத்தை இப்போது ஸ்மரித்தேன்-என்ன

அவர் இதுக்கு ஏதேனும் வார்த்தை அருளிச் செய்தது உண்டோ என்ன

எனக்கு அவை போகாது -இப்பாசுரத்தை நினைத்து இருப்பன் -என்றாராம்
நம்பி ஆதரித்த பாட்டாகாதே என்று இப்பாட்டை ஐந்தாறு நாழிகைப் போது கொண்டாடினாராம் –

வியாக்யானம்

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு
ஏதேனும் ஒரு சரீரத்தே பிரவேசித்து
அறவும் தண்ணிய ஸூகர ஜென்மத்தில் ஜனித்தாலும்
மமாயம் தேஹ -என்று கொண்டு
அதிலே அபிமானித்து
அங்கே உண்டானவற்றோடே சில ஸம்பந்த விசேஷங்களும் உண்டாய்
அவற்றை விட மாட்டாதேயுமாய்ப் போறா நிற்குமாயிற்று

ஆக்கை என்கையாலே
உபசயாத்மகம் என்று தோற்றுகிறது

புக்கு
சேதனனுக்கு அசித் சம்சர்க்கம் ஸ்வத உள்ளது அன்று -கர்ம நிபந்தனம் என்கை

அங்கு ஆப்புண்டும்
கர்ம வாஸனையாலே ருசி வாசனையாய்
அதிலே பத்தனாய் இருக்கும்
இது தண்ணிது என்று அறியா நிற்கச் செய்தேயும்
இத்தை விடில் செய்வது என் -என்று துணுக்குத்

——————–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

முமுஷுக்களான சிலர்
சம்சரண நிவர்த்தகன் படியையும்
எந்தக் கிரமத்தால் நாம் எத்தைச் செய்ய அவன் தன் நிவர்த்தகனாமது அத்தையும்
நமக்கு அவனோடு உண்டான சம்பந்தத்தையும் அருளிச் செய்யீர் என்ன
தாம் தத்வித ஜனதாதா பத்ம்யதா பன்னராய் நான் செய்யுமது இதுவே என்று

நம்மையும் இதில் அந்வயிப்பிக்க ஸித்த ஸாத்ய உபாயங்களை க்ரமத்தால் அருளிச் செய்கிறார் இதில் –

வியாக்யானம்

ஜீவ வர்க்கமானது அநாதியான ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலே யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு

அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும் மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே –
ஆப்பு அவிழ்தவன் ஸ்வதித அஹங்கார மமகார னானவன்

அதுக்கும் மேலே
மூதாவியில் உயிர்
அநாதியாய்ப் பழையதாக ஓட்டின் ப்ராணாதி வாயு ஸம் சக்த ஸூஷ்ம சரீரத்தால்
இந்த லியோக -லோகாந்தர -சஞ்சரண துக்க ஸூக அனுபவங்களால்
அலைச்சல் படும் ஜீவ வர்க்கமானது எல்லாம்

முன்னமே
யாவதாத்ம உபக்ரமாயே

அதனால்
ஏவம்பூத சக்ர ப்ரவ்ருத்தி மூல காரணமான அநாதி ப்ரக்ருதி சம்பந்தத்தால்

யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
அப்ராப்த விஷயங்களையும் கர்மங்களையும் அவலம்பித்து
ப்ராப்த விஷய கர்மங்களை விட்டுத் திரியும் விரதம்
நியமபூர்வ ப்ரவ்ருத்தியை
விவேக நிர்வேத விரக்தி பீதிகள் உள்ளவரில்

நல் வீடு
நிச்சேஷமாக நிவர்த்திப்பிக்க வல்லளான

மாதாவினைப்
வேரி மாறாத பூ மேல் இருக்கிற-4-5-11-ஜகன் மாதாவை

வணங்குவனே –
பகவத் வசீகரணத்துக்கு முன்பு புருஷகார வசீகரணத்தைச் செய்வேன்

தத் அநந்தரமே
பிதுவை திரு மாலை வணங்குவனே –
ஜகத் காரண பூதனான ஜகத் பிதாவை ஆத்ம வித்யா நிவர்த்தகையான தெருவில் மால் செய்யுமவனை
ஆத்ம ராஷா பர ஸமர்ப்பணத்தால் வசீகரிப்பேன் என்று
முமுஷு ஜனங்களால் வசீகரிக்க வேண்டிய க்ரமத்தை
தத்தாதாத்ம்யா புத்தியால் தாம் அனுஷ்டித்ததாக அருளிச் செய்தார் ஆயிற்று

இத்தால்
திருமாலே ஸித்த உபாயம் என்றும்
தத் வசீகரணமே ஸாத்ய உபாயம் என்றேனும்
அருளிச் செய்து
தத் அனுஷ்டான கிரமத்தை அருளிச் செய்தார் –

————————————

அவதாரிகை

இப்படி
விரோதி நிவர்த்தகத்வத்தையும்
பந்தத்தையும்
புருஷகார யோகத்தையும்
முன்னிட்டுத் தாம் ஆஸ்ரயித்த படியைச் சொல்லக்கேட்ட ஈஸ்வரன்
ஸம்ஸாரிகள் நாநா மத பேதங்களாலே நாநா தேவதைகளை ஆஸ்ரயித்து அநர்த்தப்பட்டுப் போகா நிற்க
நீர் நம்மை உறவு அறிந்து ஆஸ்ரயிக்கப் பெறுவதே
இனி உமக்கு நிரந்தர அனுபவமே க்ருத்யம்
நீர் செய்யப் பார்த்தது என் என்று
இவரைக் கொண்டு ஜகத்தைத் திருத்தப் பார்த்து இருக்கிறவன்
ஸா பிப்ராயமாக இவருக்கு கார்யம் செய்ய உத்யோகிப்பாரைப் போலே அருளிச் செய்ய
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே –திரு விருத்தம் -93- என்று
ஸம்ஸாரிகள் இழவுக்கு நொந்தவர் ஆகையாலே
நீ ப்ரவர்த்திப்பித்த பாஹ்ய மார்க்கத்தாலே உன் பக்கல் விமுகமான ஜகத்தை
உன் பக்கலிலே ப்ராவண்யம் உண்டாம்படி பண்ணக் கடவேன் என்று
ஈஸ்வரன் திரு உள்ளக் கருத்தைத் தாமே அருளிச் செய்கிறார் –

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – -96 –

பாசுரம் -96-வணங்கும் துறைகள் பல பல ஆக்கி –
துறையடைவு–தலைவி வெறி விலக்குவிக்க நினைத்தால் –
ஒன்றும் தேவும் -4-10-

பதவுரை

வணங்கும்–(தெய்வத்தை) வணங்குகிற
துறைகள் பலபல–வகைகள் பற்பலவற்றை-முதலில் மத உபதேஷ்டாக்கள் குருக்கள் -துறை –
ஆக்கி–உண்டாக்கி
மதி விகற்பால்–அறிவின் வேறுபாட்டால்
பிணங்கும்–(ஒன்றொடொன்று) மாறுபடுகிற
சமைய் பலபல–மதங்கள் பலவற்றையும்
ஆக்கி–உண்டாக்கி
அவை அவை தோறு–அந்தந்த மதங்கள் தோறும்
அணங்கும் பலபல–தெய்வங்கள் பற்பலவற்றையும்.
ஆக்கி–உண்டாக்கி
நின்மூர்த்தி–(இங்ஙனம்) உனது வடிவத்தைப் -சரீரத்தை -பரவச் செய்து வைத்துள்ளாய்-ஜகத் ஸர்வம் சரீரம் தே அங்க -அங்கீ பாவம்
இணங்கும் நின்னோரை இல்லாய்–உன்னோடு இணைத்துச் சொல்லத் தக்க உன் போல்வார் எவரையு மில்லாதவனே!-இணைவனாம் சத்ருஸ்த்தம் தோற்றி -முதல் -வைலக்ஷண்யம்
நின் கண்–உன்னிடத்திலேயே
வேட்கை–பக்தியை
எழுவிப்பன்–வளரச் செய்வேன்-

வியாக்யானம்

வணங்கும் துறைகள் பல பல வாக்கி
ஆஸ்ரயிக்கைக்கு இழியும் தீர்த்தங்களை நாநா விதமாக்கி
அதாவது
தத் தத் மத ப்ரவர்த்தக புருஷர்களைச் சொன்னபடி

மதி விகற்பால் பிணங்கும் சமயம் பல பல வாக்கி
பரஸ்பர விருத்தங்கள் ஆகையாலே மதி பேதம் பிறக்கையாலே

அந்யோன்யம் விவாத சீலமான ஸாங்கேதிக ஸித்தாந்தங்களையும் நாநா விதமாக்கி

அவை யவை தோறு அணங்கும் பல பல வாக்கி
அந்த ஸித்தாந்தங்கள் தோறும் ஆஸ்ரயணீயமான தேவதைகளையும் நாநா விதமாக்கி

பல பல என்ற
வீப்சையாலே அந்த தேவ ஜாதிகளுடைய
ஸ்வரூப பேதத்தையும்
அவாந்தர பேதத்தையும் நினைக்கிறது

நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
உன்னுடைய சரீரமானத்தை விஸ்தீர்ணமாக்கி வைத்தாய்

இணங்கு நின்னோரை இல்லாய்
இத் தேவ ஜாதிகளில் இணைத்துச் சொல்லலாம்படி உன் போல்வாரை உடையான் அல்லாதவனே

நின் கண் வேட்கை எழுவிப்பனே –
இப்படி ஸமாப்யதிக தரித்ரனாய்
ஸர்வ சரீரியான உன் பக்கலிலே அபிநிவேசத்தைப் பிறப்பிப்பன் –

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

உம்முடைய மநோ ரதங்கள் எல்லாம் கைபுகுந்து நம் பக்கல் உபகார ஸ்ம்ருதியாலே வணங்கும்படி யானீர் இறே
இனி உமக்கு ஒரு கர்தவ்ய அம்சம் இல்லையே என்ன
எனக்கு ஒரு கர்தவ்யம் உண்டு என்கிறார்
ஸம்ஸாரிகளையும் என் படி ஆக்கி யல்லது நான் ஓர் இடத்தில் இரேன் என்கிறார்
நீ கை விட்டால் உன் கார்யம் செய்யப்போந்த நானும் கை விடவோ
சித் சக்தியையும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தியையும் அடியிலே இவை அசித் கல்பமாய்க் கிடக்கிற சமயத்திலே
இவற்றினுடைய தய நீய தசையைக் கண்டு புருஷார்த்தத்தை இன்னது என்று அறிந்து
ருசித்துப் பற்றுகைக்கு ஈடாகக் கொடுத்து விட –

அவை தான் இதர விஷயங்களை ருசிக்கைக்கும் அதுக்கு ஈடாக ப்ரவர்த்திகைக்கும் பொதுவாகையாலே
கர்ம ப்ரவாஹம் அடியாக வந்த இத்தைக் கொண்டு இதர விஷயங்களிலே ஒழுக

நீயும் அனுமதி தானத்தைப் பண்ணி உதாசீனனாய் இருக்கையாலே

இவை ஸம்ஸரிக்கைக்கு ஈடாக ப்ரவர்த்திப்பித்தாய் நீ என்னலாம்படி இருந்தது
பிரஜை கிணற்றில் விழா நின்றால் வாங்காத தாயை தள்ளினாய் என்னக் கடவது இறே –

வியாக்யானம்

நாம் இவை ஸம்ஸரிக்கைக்கு ஈடாக ப்ரவர்த்திப்பிக்கை யாவது என் என்ன
வணங்கும் இத்யாதி
ரஜஸ் தமஸ்ஸூக்களை உடையவர்களாய் இறே புருஷர்கள் இருப்பது
அவ்வவ குண அனுகுணமாக ருசி பிறந்தால் அவ்வளவிலே ராஜஸராயும்

———

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
தன் மார்க்க ப்ரவர்த்தந பூஜா தத் விக்ரஹ ஸ்தாபன பஜ நாதிகளையும்
தத் தத் தேவதா விக்ரஹ துல்யத்வாதி பிரம விஷயமாம் படியான உன் திவ்ய மங்கள விக்ரஹங்களையும் எங்கும் வைத்தாய்

இணங்கு நின்னோரை இல்லாய்
உன் போல்வாரையும்
உன் ஸமர் அல்லாரையும் இல்லாத

நின் கண் வேட்கை எழுவிப்பனே –
இங்கனே உன் பிரகிருதி பரவசராய் உன் நிக்ரஹத்தால் தானே அந்நிய விஷய ப்ரவணர்க்கு
அடியேன் எங்கனே உன்னில் ப்ராவண்யத்தைப் பிறப்பிக்கக் கடவேன்
எங்கனே என்பது இதில் அர்த்த ஸித்தம் –

———

அவதாரிகை

நின் கண் வேட்கை எழுவிப்பனே -என்று ஜகத்தைத் திருத்துகையிலே இவர் ஒருப்பட்ட பிரகாரத்தைக் கண்ட பார்ஸ்வஸ்த்தர்
இவர் பகவத் அனுபவம் பண்ணப் பரகு பரகு என்னாதே ஜகத்திலே கண் வைக்கப் பெற்றோம் இறே என்று ஸந்துஷ்டாராக
அத்தைக் கண்டவர்
அஸ்திரமான ஸம்ஸாரத்தை அகலத் தேடுமது ஒழிய அநுபவத்திலே ப்ராவண்யம் உடையோருக்கு

அனுபாவ்ய விஷய பிரகாசம் ஸங்கோசிக்குமோ என்று அருளிச் செய்கிறார் –

(எம்பார் -இருளே காண வில்லையே என்றார் அன்றோ)

எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – – 97-

பாசுரம் -97-எழுவதுவும் மீண்டு படுவதும் பட்டு –
துறையடைவு–தலைவனைப் பிரிந்து தூக்கம் இல்லாமல் தலைவி வருந்துதல் –
பரிவதில் ஈசனை -1-6-

பதவுரை

எழுவதும்–ஸூர்யன் உதிப்பதையும்
மீண்டே படுவதும்–மறுபடி அஸ்தமிப்பதையும்.
பட்டு–இங்ஙனம் நிகழ்ந்து
எனை ஊழிகள்–எத்தனையோ காலங்கள்
போய் கழிதலும்–சென்று கழிவதையும்
கண்டு கண்டு–பார்த்துப் பார்த்து
எள்கல் அல்லால்–வருந்துதலே யல்லாமல்
இமையோர்க்கள் குழாம் -தேவர்கள் கூட்டம்–

தொழுவதும் வணங்குவதையும்–

சூழ்வதும் (பரிவாரமாகச், சூழ்ந்து கொள்வதையும்.
செய்–செய்யப் பெற்று
தொல்லை மாலை–ஆதியந்த மில்லாதவனான திருமாலை
கண் ஆர கண்டு–கண்கள் த்ருப்தியடைய ஸேவித்து
கழிவது ஓர் காதல் உற்றார்க்கும்–(அவன் பக்கல்) மிக்க தொரு வேட்கையைப் பொருந்தினவர்க்கும்

உம்மைத் தொகை -தோழி சொல்ல இவள் பதில் என்பது தேறும்
கண்கள் துஞ்சுதல்–கண்ணுறக்கம் கொள்ளுதல்
உண்டோ–உள்ளதோ? (இல்லை என்ற படி.)

வியாக்யானம்

எழுவதும்
உத்பன்னமான பிரகாரத்தையும்
மீண்டே படுவதும்
உத்பத்தி தசையிலே மற்றைப்படியே நசிக்கிற பிரகாரத்தையும்

படு எனை யூழிகள் போய்க் கழிவதும்
உத்பன்னமாய் அநேக காலம் சென்று முடிகிற பிரகாரத்தையும்

இங்கு பட்டு என்று
முத்துப் பட்டு என்னுமா போலே உத்பத்தியைச் சொல்லுகிறது

கண்டு கண்டு எள்கல் அல்லால்
இப்படி அல்ப கால உத்பத்தி விநாசத்தையும்
சிர கால உத்பத்தி விநாசத்தையும்
பிரதி க்ஷணம் அபரோக்ஷித்து நெகிழுமது ஒழிய

இமையோர்கள் குழாம் தொழுவதும் சூழ்வதும் செய்
அஸ்க்கலித (நழுவாத குறையாத )ஞானரான ஸூரிகளுடைய சங்கமானது
நித்ய அஞ்சலி பந்தத்தையும்
கைங்கர்ய பரராய்க் கொண்டு பரிசர ஸேவையையும் பண்ணா நிற்கிற

தொல்லை மாலைக்
இவ் வாத்மாவின் பக்கல் அநாதியான வாத்சல்யத்தை யுடையவனை

மால் என்று
பெரியவனாய் -ஸ்வாமித்வத்தைச் சொல்லிற்று ஆகவுமாம்

கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும்
கண்கள் நிறையும்படி அனுபவித்துக் காலம் கழியும்படி
அத்விதீயமான ஆசையிலே நின்றவர்களுக்கும்

உண்டோ கண்கள் துஞ்சுதலே –
அவன் பக்கல் வைத்த கண்கள் செம்பளிக்கைக்கு விரகுண்டோ

பகவத் அனுபவ அபிநிவிஷ்டரானார்க்கு ஞான ஸங்கோசம் பிறக்க விரகு இல்லை என்று கருத்து –

——————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

கண் உறங்கிற்றோ
பகவத் விஷயத்தில் கை வைத்தாரில் இதுக்கு முன் கண் உறங்கினார் உண்டு என்று கேட்டு அறிவார் உண்டோ

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

எஞ்ஞான்று தலைப்பெய்வன் என்பது தவிர்ந்து
ஸூக ஸூபத்தராய் இரீர் என்று பகவத் அபிப்ராயமாக
தெளி விசும்பில் உள்ள இமையோர்கட்க்கு எல்லாம் இதுவே ஸ்வ பாவமாய் இருக்க
அவர்களில் ஒருவரான எனக்கு அது உண்டோ என்கிற
அபிப்ராயத்தால் இவ்வர்த்தத்தை ஸ்வ ஸித்தாந்தஸ்த்தரிலும் அறிய அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம் –

எழுவதும்
ஆதித்யாதி கிரஹங்கள் உதிப்பதும்

மீண்டே
உதய கார்யம் கழிந்தவாறே

படுவதும்
அஸ்தமிப்பதும்

படு எனை யூழிகள் போய்க் கழிவதும்
சதுர் முகர் செத்து அநேக கல்பங்களாகக் காலம் கழிவதும்

கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
ஸதா பஸ்யந்தி ஸூரய-ருக்வேதம் -என்கிறபடியே
இதுகளை எல்லாம் அவரோக்ஷித்துக் கண்டு ஐயோ என்ற
ஆர்த்த ஹ்ருதயம் ஒழிய நித்ய ஸூரி சங்கத்துக்கு கண் துஞ்சுதல் உண்டோ என்று அந்வயம்

இமையோர்க்கு விசேஷணம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் -என்பது

தொல்லை மாலை
அநாதியாக த்ரிவித ஆத்ம வர்க்கத்தில்
ஆதேயத்வ சேஷத்வ ஸ்வா யத்த சத்தாஸ்தேம ப்ரயத்ன பலத்வங்களால்
ஸ்வ தேஹமாகவே விபூதி த்வயத்திலும் எப்போதும் மால் செய்யுமவனை ஸதா கண்டு கொண்டு
ஸ்வா பாவிக ஸர்வ ஸாஷாத் காரம் உள்ளவர்களாய் என்றபடி

கண்ணார
யாவத் தர்மபூத ஞான வியாப்தியும்

திவ்ய விக்ரஹங்களில்
தொழுவதும் -அடிமை செய்வதும்
நம புரஸ்தாதத ப்ருஷ்ட தஸ்தே -ஸ்ரீ கீதை -11-40-

சூழ்வதும்
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –திருப்பல்லாண்டு -12-
யேந யேந ததா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி -பரம ஸம்ஹிதை -என்றபடி செய்து கொண்டு

கழிவதோர் காதல் உற்றார்க்கு
காலம் கழியக் கழிய அத்விதீயமான அன்பும் ஆர்வமும் வளர்ந்து வருமவர் களானவர்களுக்கு

உண்டோ கண்கள் துஞ்சுதலே –
கண்கள் துஞ்சுதல் உண்டோ
அவர்களில் தலைவனான எனக்கு அது இல்லை என்பது கை முத்ய ஸித்தம் என்று அபிப்ரேதம்-

————–

அவதாரிகை

இப்படி அனுபாவ்யனான ஈஸ்வரனுடைய-1- மேன்மையிலும் -2-நீர்மையிலும் உண்டான

போக்யதை பரிச்சேதிக்க அரிது என்கிறார்

துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 –

பாசுரம் -98-துஞ்சா முனிவரும் அல்லாதாவரும் –
துறையடைவு-தலைவனது அருமையை தோழி கூறுதல் –
கெடுமிடராய-10-2-

பதவுரை

துஞ்சா முனிவரும்–கண்ணுறங்குதலில்லாத ரிஷிகளும்-ஸநகாதி முனிவர்கள் -ப்ரஹ்ம ஏக பாவனை
அல்லாதவரும்–தேவர்கள் முதலிய மற்றையோரும்
தொடர நின்று–பின்பற்றி வழிபட நிற்பவனும்
எஞ்சா பிறவி இடர் கடிவான்–(அடியார்களுடைய) குறைவற்ற -சுருக்கம் அற்ற -பிறப்புத் துன்பங்களைப் போக்கி யருளுபவனும்
தன் சார்வு இலாத–தன்னோடு இணைத்துச் சொல்லலாம் படி ஓர் உவமை பெறாத
தனிபெரும் மூர்த்தி தன்–ஒப்பற்ற சிறந்த ஸ்வரூபத்தை யுடையவனுமான எம்பெருமானது.
வெண்ணெய் ஊண் என்னும் ஈனம் சொல்–வெண்ணெய் உணவாயிற்றென்று சொல்லப்படுகிற இழி சொல்லுக்கு இடமான
மாயம்–ஆச்சரியம்
இமையோர் தமக்கும் மேலுலகத்தாருக்கும்–ஞான சங்கோசம் இல்லாத நித்ய ஸூரிகள்
செவ்வே நெஞ்சால் நினைப்பு அரிது–நன்றாய் மனத்தால் நினைப்பதற்கும் அருமையானதாம்.

செவ்வே நெஞ்சால்-திருட்டுக்கு உண்மையான -யதார்த்த ஆழ்ந்த ஞானம் கொண்ட நெஞ்சு-யோ வேத்தி தத்வதக

வியாக்யானம்

துஞ்சா முனிவரும்
முடிவில்லாத மனனத்தை யுடைய ஸநகாதிகளும்

அல்லாதவரும்
ஸ்வ அதிகார தத் பரரான ப்ரஹ்மாதிகளும்

தொடர நின்ற
தந்தாமுடைய அபிமத ஸித்தி யர்த்தமாக அனுவர்த்திக்க
அவர்களுக்குப் புருஷார்த்த ப்ரதனாய் நின்ற

எஞ்சாப் பிறவி இடர் கடிவான்
குன்றாது இருக்கிற சரீர ஸம்பந்த நிபந்தனை துக்கத்தைப் போக்குமவன்
சரீர ஸம்பந்தம் அறுக்கை ஈஸ்வரனுக்கு ஸ்வா பாவிக வேஷம்
அல்லாத புருஷார்த்தங்களை அபேக்ஷைக்கு ஈடாகக் கொடுக்கும் என்றபடி

இமையோர் தமக்கும் தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தராய் அபரிச்சின்ன ப்ரகாஸ யுக்தரான நித்ய ஸூரிகளுக்கும்
தன்னோடு சேர்த்தி சொல்ல ஒண்ணாதபடி அத்யந்த விலக்ஷணமாய்
த்ரிவித (கால தேச வஸ்து )பரிச்சேத ரஹிதமான ஸ்வரூபத்தை யுடையவன்

இவ் விடத்தில் மூர்த்தி என்று
ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது
ஸ்வாமித்வம் ஆகவுமாம்

(தன் சார்வு இல்லாத மூர்த்தி
தனி மூர்த்தி
பெரு மூர்த்தி)

தன் சால்வு -என்றபாடமாய்
தன்மை இல்லாத என்றுமாம்

தன் மாயம் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்
இப்படி பெரியனானவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதமானது
நேரே நெஞ்சால் பரிச்சேதித்து நினைக்கை அரிது

அவ் வாச்சர்யம் ஏது என்னில்
வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே –
வெண்ணெயை அமுது செய்தான் என்று சொல்லப்பட்ட அபக்ருஷ்ட வசனம்
இவ் வபதானத்திலும்
இவ் வபதான ப்ரஸம்ஸியான வசன ஸாரஸ்யம் தான் பரிச்சேதிக்க அரிது என்று கருத்து –

(அவனது சீற்றமும் அருள் தானே
எந்த குணமும் எந்த சேஷதீதமும் அவன் இடம் இருப்பது ஸ்ரேஷ்டம்)

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

ஸம்ஸாரிகளையும் என் படி ஆக்கக் கடவேன் என்றீர்
பகவத் விஷயத்தில் கை வைத்தார்க்குக் கண் உறக்கம் இல்லை என்றீர்
இப்படி கிடந்தது அலமாவாதே உம்முடைய பாழி யன்றோ கிருஷ்ண அவதாரம்
நவநீத ஸுர்ய விருத்தாந்தத்தை அனுசந்தித்து ஈடுபடுமவர் அன்றோ நீர்
ஆனபின்பு அத்தை அனுசந்திக்கப் பார்த்தாலோ என்ன
அல்லா இடங்களில் கரை மேலே யாகிலும் போகலாம்
இதில் இழிய என்றால் நினைக்கவும் போகாது
அதில் இழிவதில் கை வாங்கி இருக்கையை நன்று என்கிறார் –

வியாக்யானம்

துஞ்சா முனிவரும்
ஸம்ஸாரிகள் ஸப்தாதி விஷயங்களிலே உணர்ந்து இருக்குமா போலே
ஆத்ம விஷயத்திலும் ஈஸ்வர விஷயத்திலும் உணர்த்தியை உடையவர்களாய்
தமோ குண அபி பூதர் இன்றிக்கே இறே ஸநகாதிகள் இருப்பது
யா நிசா –ஸ்ரீ கீதை -2-69-
இவர்கள் தங்களை ஸர்வேஸ்வரன் ஸ்ருஷ்டிக்கைக்கு உடலாக உண்டாக்கி இருக்கச் செய்தேயும்
ஜன்மாந்தரத்தில் ஸூ ஹ்ருதத்தாலே ஸம்ஸாரத்தில் விரக்தராய் முமுஷுக்களாய் இருக்கிறபடியைக் கண்டு
இவர்கள் இதுக்கு ஆள் அல்லர்
இதுக்கு புறம்பே ஆள் தேடிக்கொள்ள வேணும் -என்னும்படி இருந்தவர்கள் இறே

அல்லாதவரும்
ஸூஹ்ருத தாரதம்யத்தாலே அவர்கள் போல் அன்றிக்கே
கர்ம பாவனையும் ப்ரஹ்ம பாவனையும் இரண்டும் கூடி இ ப்ரஹ்மாதிகள் இருப்பது

எஞ்சாப் பிறவி இடர் கடிவான்
ஒருகாலும் சுருங்கக் கடவது அன்றிக்கே முடிவு காண ஒண்ணாத படியாய்
அனாதையாய் வருகிற ஜென்ம பரம்பரையால் உண்டான இடரைத் தவிர்த்துக் கொள்ளுகைக்காக
துஞ்சா முனிவரும் அல்லாதவரும் எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

வியாக்யானம்

துஞ்சா முனிவரும்
இவ்வகண்ட காலத்தில் சிஷ்ய குரு பரம்பரா விச்சேதம் இல்லாமலே சாதன பக்தி யதிக்ருதரான ஸர்வரும்

அல்லாதவரும்
அப்படியே ஸாத்ய பக்தி க்ருதரான ஸர்வரும்

மற்றும் ஸ்ரோத ஸ்மார்த்த கர்மாதி க்ருதரும்

தொடர நின்ற எஞ்சாப் பிறவி இடர் கடிவான்
ஸம்ஸாரி ஆத்மாவைத் தொடர்ந்து நின்ற எண்ணப்படாத ஜன்ம பரம்பரைகளால் வந்த ஜரா மரணாதி துக்க பரம்பரையைக்

கடிவான்
நிச்சேஷமாக நிவர்த்திக்குமவன்

இமையோர் தமக்கும் தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி
நித்ய ஸூரிகளுக்கும் ஸ்வ விக்ரஹங்களால் தன் விக்ரஹங்களுக்குச் சேர்த்தி சொல்ல ஒண்ணாதபடி
அத்விதீயமான ஸ்வ பாவமுள்ள திவ்ய மங்கள விக்ரஹங்களையும்
அப்படியே அபரிச்சின்னமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுமுடையவன்

தன் மாயம் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்
மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாத் மாயிநம் து மஹேஸ்வம் -ஸ்வேதாஸ்வரம்
மயே த்யஷேண ப்ரக்ருதி ஸூயதே ஸ சதாசனம் -ஸ்ரீ கீதை -9-10-
ப்ரக்ருதிக்யா மயாக்யாதா வ்யக்தா வ்யக்த ஸ்வரூபிணி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-39-இத்யாதிகளில்
சொல்லப்பட்ட அவனுடைய ப்ரக்ருதி ஸ்வரூபாதிகள் தான் வாங் து மனஸ் பரிச்சேத்யமோ

நெஞ்சால் தான் இவ்வளவு என்று எண்ணப் போமோ
இனி அவன் ஸ்வரூபாதிகளையோ இவ்வளவு என்று எண்ணுவது
மூடர்காள் ஸ்ருதிகளாலும் யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ -தைத்ரியம் என்னப்பட்ட
அவன் ஆனந்தாதிகளில் நாம் அபரிச்சிந்ததையைச் சொல்ல வேணுமோ

வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே –
அவனுடைய ஒரு கிருஷ்ண அவதாரத்தில் ஒரு போதில் வெண்ணெய் யூண் தான் தத் காலகத்தில் சொன்ன ஹிதச் சொற்கள் தான்
பக்தர் நெஞ்சால் தான் நினைத்துத் தரிக்கப் போமோ
ஒவ்வொன்றில் -எண்ணானாய் என்னானாய் -திருநெடும் -10-என்று உருகினீராய் நீ மக்நராய்க் போக வேண்டாவோ -என்கிறார் –

——————-

அவதாரிகை

போக்யதையில் நவநீத ஸுர்ய அபதாநத்தில் காட்டில் இல்லை என்றீர்
ஸம்ஸார உத்தாரணத்துக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது இவ்விஷயத்தை என்ன
பிரஜை விழுந்த கிணற்றிலே ஒக்கக் குதித்து எடுக்கும் தாயைப் போலே

ப்ரளயம் கொண்ட பூமியை முழுகி எடுத்த மஹா உபகாரகனே என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்கிறார் –

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99-

பாசுரம் -99-ஈனச் சொல் ஆயினும் ஆக –
துறையடைவு–தலைவி தன் அன்புறுதியைத் தோழிக்கு கூறுதல் –
செஞ்சொல் கவிகாள் -10-7-

பதவுரை

ஈனம் சொல் ஆயினும் ஆக–(என்னுடைய ஸித்தாந்தம் சிலர்க்கு) -பிரயோஜனம் அல்லாத -இழி சொல்லாயினும் ஆகுக.;
எறி திரை வையம் முற்றம்–வீசுகிற அலைகளையுடைய பிரளய வெள்ளத்திலாழ்ந்த பூமி முழுவதையும்
ஏனத்து உரு ஆய் கிடந்த–பாதாளத்தில் இருந்தும் -வராஹ மூர்த்தியாய்க் கோட்டாற் குத்தி எடுத்து வந்த
பிரான்–தலைவனும்
இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும்–பெரிய கல்பவ்ருக்ஷங்கள் பொருந்திய ஸ்வர்க்கலோகத்திலுள்ள தேவர்கட்கும்
அல்லாதவர்க்கும்–அவர்களலல்லாத நித்ய ஸூரிகள் -மற்றும் மனிதர்கட்கும்
மற்று எல்லாயவர்க்கும்–மற்றுமுள்ள நரகர் முதலியோ ரெல்லோர்க்கும்
ஞானம்–அறிவைக் கொடுக்கிற
பிரானை அல்லால்–தலைவனுமாகிய எம்பெருமானையன்றி
நான் கண்ட நல்லது இல்லை–நான் அறிந்த நற்பொருள் வேறு இல்லை.

வியாக்யானம்

ஈனச் சொல்லாயினுமாக
நான் சொல்லுகிற பரமார்த்தம் விமுகரான ஸம்ஸாரிகள் ஏற்றுக் கொள்ளாதே இகழும்படி தண்ணிதான சொல்லாகிலுமாக
அர்த்த பவ்ருஷாதிகள் (சொத்து வீரம் )ரக்ஷகம் என்று நினைத்து இருக்கிற தேஹாத்ம அபிமானிகளுக்கு

ஸாஸ்த்ர கம்யமான பகவத் விஷயம் உத்தார ஹேது என்று உபதேசிக்கை
இகழுகைக்கு உறுப்பாம் என்று கருத்து –

எறி திரை வையம் முற்றும் ஏனத்துருவாய் யிடந்த பிரான்
எறிகிற திரையை யுடைத்தான ப்ரளயத்திலே பூமி எல்லாவற்றையும்

நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ ரூபத்தைப் பரிக்ரஹித்து
அண்ட கபாலத்தில் நின்றும் ஒட்டு விடுவித்து எடுத்த மஹா உபகாரகன்

இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும்
அபிமத பல பிரதத்வத்தாலே வந்த பெருமையை யுடைத்தான கற்பக வ்ருக்ஷங்களினுடைய

செறிவை யுடைத்தான சுவர்க்கத்தில் வாஸத்தை யுடைய தேவர்களுக்கும்

(எனக்கே தன்னைத் தந்த கற்பகம் இல்லையே இவை)

அல்லாதவர்க்கும்
அத் தேவ ஜாதி தானே உத்க்ருஷ்டம் என்னும்படியான மனுஷ்ய ஜாதீயருக்கும்

மற்று எல்லா யவர்க்கும்
இவர்களிலும் அபக்ருஷ்டரான திர்யக் ஸ்தாவர ஜாதி பேதங்களில் உள்ளார் எல்லாருக்கும்

ஞானப் பிரானை யல்லால் இல்லை
ஸ்திதே மனஸி -வராஹ சரம ஸ்லோகம் இத்யாதியாலே
உத்தாரக ஹேதுவான ஞானத்தை உபதேசித்த ஸ்வாமியை ஒழிய இல்லை

நான் கண்ட நல்லதுவே –
நான் அறுதியிட்டு நல்ல அர்த்தம் என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்தார் ஆயிற்று

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

பகவத் விஷயத்தில் நீர் இன்ன போது மோஹித்துக் கிடப்புதீர் என்று அறிகிறிலோம் -உம்மை விஸ்வஸிக்கப் போகிறது இல்லை
அத்ய ராஜ குலஸ் யாஸ்ய த்வததீனம் ஹி ஜீவிதம் புத்ர வ்யாதிர் நதே கச்சித் சரீரம் பரி பாததே -அயோத்யா -87-9-
ரஸவாதம் கீழ் போனால் போலே பரதாழ்வான் மோஹித்துக் கிடக்கத் திருத்தாய்மார் சொல்லுகிறார்கள் –
படைவீடாக உன்னைக் கொண்டு அன்றோ ஜீவிக்க இருக்கிறது
சக்கரவர்த்தியும் துஞ்சினான்
பெருமாள் காடேறப் போனார்
நீ இருந்தாய் என்று அன்றோ நாங்கள் இருப்பது
உன் முகத்தில் பையாப்புக் கண்டால் மீளுவர் என்னும் நசையாலே யன்றோ ஜீவித்துக் கிடக்கிறது
நீ இல்லை என்று அறிந்தால் இத் திக்கு என்று நோக்குவதோ
புத்ரேத்யாதி அபி வ்ருஷா -அயோத்யா -59-4-என்கிறபடியே படை வீட்டில் சுத்தாவரங்களும் கூட நோவு ஒன்றாய் இருக்கச் செய்தே
பிள்ளாய் உனக்கு நோவு என் என்று கேட்க வேண்டும்படி இறே சடக்கென மோஹித்து விழுந்தபடி
இப்படி ஸத் ப்ரக்ருதிகளாய் இருக்கையாலே இன்ன போது மொஹிப்பார் என்று தெரிகிறது இல்லை
ஸுலப்ய குணத்தை உபதேசிக்கப் புக்கு எத்திறம் என்று மோஹித்துக் கிடக்குமவர் இறே இவர்
ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்கப் புக்கால் பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண்ணும் கண்ணீருமாய்
(அத்தை இத்தை பரத்வத்தை ஸுலப்யத்தை ) ப்ரசங்கித்து சிதிலராய்க் கிடப்பர்
அத்தைக்கு கூரத்தாழ்வான் கண்டு -மஹா பாஷ்யம் கற்று சதுரஸ்ரமாக ஒன்றை நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே
பகவத் குண ப்ரசங்கத்திலே சிதிலராம்படி பிறந்த உம்முடைய ஜென்மம் ஒரு ஜென்மமே -என்று கொண்டாடினான்
ஆழ்வான் வீராணத்தில் ஒரு பெண் பிள்ளையை குடங்காலிட்டு
கள்வன் கொல் யான் அறியேன் -பெரிய திருமொழி -3-7-1- என்று சந்தையிட்டு மேலடி தோற்றாமல் மோஹித்தாராம்
இப்படிப்பட்டவர் இறே தன்னை வன்னெஞ்சராகச் சொல்லுகிறார்-
ஸ்வாமிகள் திருமழிசை தாஸரும் நஞ்சீயருமாகத் திருவாய் மொழி ஓதா நிற்க

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவனே
அவன் சரமத்தால் யுக்தார்த்த ஞானமே உங்களுக்கு மோக்ஷ உபாயத்தில் நல்லதும்
அவனை அல்லால் மற்றொரு ஸித்த உபாயமாவை இல்லை
அவனால் யுக்த உபாயம் அல்லது வேறொரு ஸாத்ய உபாயம் இல்லை
இது என் ஸித்தாந்தம் என்கிறார் –

—————————–

அவதாரிகை

இப்படி ஸர்வேஸ்வரன் திருச் செவி படும்படி(கேட்டு அருளாய் )
தத் விஷயத்திலும்
ததீய விஷயத்திலும்
தமக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தையும்
தத் விஸ்லேஷ ஹேதுவான தேச வாஸாதிகளால் உண்டான உத்வேக யோகத்தையும் வெளியிட்டு
இம் முகத்தாலே தம்முடைய விருத்த கீர்த்தனம் பண்ணின இப்பிரபந்தத்தில் அபி யுக்தரானவர்களுக்குப் பலம்
தாம் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அபேக்ஷித்த ஸம்ஸார நிவ்ருத்தி என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100-

பாசுரம் -100-நல்லார் நவில் குருகூர் நகரான் —
துறையடைவு–
முனியே நான்முகன் -10-10-

பதவுரை

நல்லார்–நல்ல குணங்களையும் நல்ல காரியங்களையுமுடையரான மஹான்கள்
நவில்–புகழ்ந்து கூறப்பெற்ற
குருகூர் நகரான்–திருக்குருகூரென்னும் திருப்பதியில் திருவவதரித்தவரும்.
திருமால்–லக்ஷ்மீபதியான எம்பெருமானது
திருபேர்–திருநாமங்களை
நல்லார்–பயின்றவரான அடியார்களுடைய
அடி–திருவடிகளாகிற
கண்ணி–பூமாலையை
சூடிய–தமது முடிக்கு அணியாகக் கொண்டவருமான
மாறன்–நம்மாழ்வார்
விண்ணப்பம் செய்த–(பகவத் ஸந்நிதாநத்திலே) விஜ்ஞாபநஞ்செய்த
சொல் ஆர் தொடையல்–சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை வடிவமான
இ நூறும்–இந்த நூறு பாசுரங்களையும்
வல்லார்–கற்று வல்லவர்கள்
பிறப்பு ஆம்–ஸம்ஸாரத்திற்குக் காரணமும் காரியமுமாகிய
பொல்லா அருவினை–ஆத்மாவை கெடுக்க வல்ல கொடியவையாய் போக்க முடியாதவையான அரியதான  ஊழ்வினைகளாகிற
மாயம் வல் சேறு அள்ளல்–ருசி வாசனைகளை பிறப்பித்து வஞ்சிக்குமதான  கொடிய சேற்றின் அடர்த்தியை யுடைய
பொய் நிலத்து–பொய்யாகிய பிரகிருதி மண்டலத்தில்
அழுந்தார்–அழுத்தமாட்டார்கள் (முக்தராகப் பெறுபவர்கள் என்றவாறு.)

வியாக்யானம்

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
நல்லார் ஆகிறார் ஆச்சார்ய விஷயத்திலே சேஷத்வ ரக்ஷகத்வாதிகளை ஏறிட்டு
ஈஸ்வரனை தத் ஸம்பந்த த்வாரா அனுபவித்துப் போரும் மதுரகவிகள் போல்வார்

அவர்களாலே நவிலப்பட்ட-ஸ்துதிக்கப்பட்ட -திருக்குருகூர் என்று
திரு நாமமான திரு நகரி யுடையவர்-

திரு மால் திருப் பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன்
ஸ்ரீ யபதிக்கு வாசகமான மூல மந்த்ர த்வயங்களில் அர்த்த அபி யுக்தரான பரம பாகவதருடைய திருவடிகள் ஆகிற
பூம் கொத்தை சிரஸா வஹித்துப் போருகிற ஆழ்வார்

இத்தால் -ஸஹோ வாஸ வ்யாஸ பாராசர்ய -யஜுர் என்றும்
வால்மீகிர் பகவான் ருஷி -பால -4-1- என்றும் சொல்லுமா போலே
விலக்ஷண பரிக்ரஹத்தையும்
ஜென்ம தேச பூர்த்தியையும்

வல்லார் அடிக்கண்ணி சூடிய என்று ஞானாதிக்யமும் சொல்லுகையாலே
பிரபந்த கர்த்தாவான ஆழ்வாருடைய ஆப்த தமத்வம் தோற்றிற்று

விண்ணப்பம் செய்த
என்று பாரதந்தர்யத்தாலே ஸ்வரூப ஞானம் ப்ரகாசிக்கையாலே
பிரம விப்ர லம்பாதி தோஷ ராஹித்யம் தோற்றிற்று –

சொல்லார் தொடையில்
என்று ஸப்த சந்தர்ப்பத்தை மாலாகாரம் ஆக்குகையாலே
இது கர்த்தவ்ய புத்த்யா செய்தது அன்று -கைங்கர்ய புத்த்யா செய்தது என்றபடி

இந்நூறும்
என்று இப்பாட்டுக்கள் நூறும் தனித்தனியே மாலா ரூபமாய்
பகவத் விஷயத்துக்கு சிரஸா வாஹ்யமாயும் ஹ்ருத்த்ய மாயும் இருக்கிற படி உகப்புக்கு விஷயம் என்றதாயிற்று –

வல்லார்
இப்பாட்டு நூற்றினுடையவும் பாவ கர்ப்பமான அர்த்தத்தை அனுசந்திக்க வல்லவர்கள்

அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே –
பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே –நிலத்து – அழுந்தார்
பிறப்பாலே உண்டாகக் கடவதாய் துக்க ஹேதுவாய் இருக்கிற
கடக்க அரிய கர்மத்தை யுடைத்தாய்
அறிந்தாலும் கால் வாங்க ஒண்ணாத படியான ஆச்சர்யத்தை யுடைத்தான
புத்ர தாராதி சங்கம் ஆகிற சிக்கென்ற சேற்றையும் கொண்டு முழுக்கும்படியான நரகம் ஆகிற அள்ளலை யுடைத்தாய்
அஸத்ய ஸப்த வாஸ்யமான ப்ரக்ருதி மண்டலத்தில் எழுந்தார்கள்

பொய்ந் நிலத்தில் அழுந்தாரே
என்று ஏகாரம் தேற்றம் ஆகவுமாம்

பொய்ந் நிலத்தே என்று ஈற்று அசையாகவுமாம்

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இப்பாட்டில் பிரபந்தம் கற்றாருடைய பேறு சொல்லுகிறது
பகவத ப்ரஸாத லப்த்த ஞானத்தை யுடையீருமாய்
இப்படி அறுதியிட்டுக் காண்கைக்கு ஈடான சக்தியை யுடையீருமாய் இருக்கையாலே நீர் இப்பேறு பெற்றீர்
உம்மைப் போலே ஞானம் இன்றிக்கே பாக்ய ஹீனராய்ப் பிற்பாடருமான ஸம்ஸாரிகள் செய்வது என் என்ன
அவர்களுக்கு என்னத்தனை ஞானம் இல்லையே யாகிலும் நான் சொன்ன இப்பாசுர மாத்ரத்தைச் சொல்ல வல்லாரும் எல்லாம்
நான் பெற்ற பேறு பெறுவார்கள் என்கிறார்

வியாக்யானம்

நல்லார் நவில்
லோகத்தில் சத்துக்கள் அடைய ஆழ்வார் ஆழ்வார் என்னும் அத்தனை
ராமோ ராமோ ராம -யுத்த -131-101-இதிவத்
ஸர்வதா பிகத ஸத்பி -பாலா -1-16-
பெருமாள் ஸ்ரமம் செய்து விட்டு ஒரு நிழலிலே இருந்த அளவிலே பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனரானவர்கள்

தங்களுக்கு உறுப்பானவை கற்கைக்காக வந்து படுகாடு கிடப்பர்கள்
ஸமுத்ர இவ ஸிந்துபி
இப்படிக் கிடக்கிறது இவர் குறை நிரப்புகைக்கோ என்னில் பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புகைக்கு அன்று இறே ஆறுகள் வந்து புகுருகிறது
நடுவு தரிப்பில்லாமை இத்தனை இறே
பேராளன் பேரோதும் பெரியோர் -பெரிய திரு -7-4-4-என்னுமா போலே இவர்களை நல்லார் என்னும் இத்தனை ஒழியப் பாசுரம் இடப்போகாது
இவர்கள் பேச்சுகளும் தலை மிக்கு இருக்கும்

திருமால் இத்யாதி
அவர்கள் அடைய ஆழ்வார் ஆழ்வார் என்னா நிற்கச் செய்தே
இவர் தாம் பயிலும் திருவுடையார் யாவரேலும் கண்டீர் –எம்மை ஆளும் பரமர் –3-7-1- என்னா நிற்பார்

ஸ்ரீ யபதியினுடைய திரு நாமங்களை சொல்லுகைக்கு அதிகாரம் உள்ளவர்களுடைய
திருவடிகளாகிற மாலையைச் சூடுகிற இத்தையே நிரூபகமாக யுடைய ஆழ்வார்

விண்ணப்பம் செய்த
அடியேன் செய்யும் விண்ணப்பமே -திருவிருத்தம் -1-என்று தொடங்கி
விண்ணப்பம் செய்த வார்த்தை யாயிற்று

சொல்லார் தொடையல்
ஆப்த வாக்கியம் என்று ஆதரிக்க வேண்டா
பாட்யே கேயே சதுரம் -பாலா -4-8- என்று இருக்கிற இதில்
ஸாரஸ்யத்துக்காக ஆதரிக்க வேண்டும்

இந்நூறும்
பாரதம் போலே பரந்து இருத்தல்
ப்ரணவம் போலே சுருங்கி இருத்தல் செய்யாதே நூறு பாட்டாய் ஞாதவ்ய அம்சம் அடைய உண்டாய் இருக்கை

வல்லார் அழுந்தார்
பலத்தை முற்படச் சொல்லுகிறார்

அது எங்கே என்னில்
பிறப்பாம்
ஜென்மம் ஆகிற

பொல்லா
ஞான ஆனந்த லக்ஷணமாய்
ஈஸ்வர சேஷமாய் இருக்கிற ஆத்ம வஸ்துவுக்கு அனுரூபம் அன்று இறே அசித் ஸம் சர்க்கம் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .