‘கள்வா! எம்மையும் ஏழுல கும்நின்
உள்ளே தோற்றிய இறைவ!’ என்று
வெள்ளே றன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர் திகழல் பணிந்துஏத் துவரே.
பொ – ரை : வெண்மை நிறம் பொருந்திய இடபத்தை வாகனமாகவுடைய சிவனும் பிரமனும் இந்திரனும் மற்றைத் தேவர்களும், ‘கள்வனே! எங்களையும் மற்றை உலகங்ளையும் நின்னிடத்தினின்றும் தோன்றச்செய்த இறைவனே!’ என்று, கருடவாகனத்தையுடைய இறைவனுடைய திருவடிகளை வணங்கித் துதிப்பார்கள்.
வி-கு : ‘கள்வா, இறைவ’ என்பன விளிப்பெயர்கள். ‘என்று பணிந்து ஏத்துவர்,’ என முடிக்க. ஊர்தி – ஊர்கின்றவன்; ஆண்பாற் பெயர். இத்திருப்பாசுரத்தின் முதலிரண்டு அடிகளைப் பரிபாடல் மூன்றாம் பாட்டின் முதல் பதினாறு அடிகளோடு ஒப்பு நோக்கல் தகும்.
ஈடு : பத்தாம் பாட்டு. ‘இவ்வளவும் வர. நான் கூறிவந்த பரத்துவத்தை, நீங்கள் அடையத் தக்க தெய்வங்களாக நினைந்திருக்கிற அவர்களுடைய 3மேலெழுத்தைக் கொண்டாயினும் நம்புங்கோள்,’ என்கிறார்.
கள்வா – 1சர்வேஸ்வரன் பக்கலிலே வந்து வரம் கொள்கிற இடத்திலே, ‘தேவர் இன்னம் எனக்கு ஒரு வரம் தரவேண்டும்.; நீர் தந்த வரம் நிலை நிற்கும்படி என் பக்கலிலே வந்து ஒரு வரம் பெற்றுப் போகவேண்டும்,’ என்று வேண்டிக்கொள்ள ‘அப்படியே செய்கிறோம்’ என்று விட்டு, ‘உருக்குமிணிப் பிராட்டிக்கு ஒரு பிள்ளை வேண்டும்’ என்று சென்று நின்று, ‘நமோ கண்டாய கர்ணாய’ என்றாற்போல ஏத்த, 2‘பார்வதியோடு கூடிய சிவன், இருகைகளையும் குவித்துக்கொண்டு விஷ்ணுவைப் பார்த்து, விஷ்ணுவினுடைய பெருமையினைச் சொல்லுதற்குத் தொடங்கினான்’ என்கிற படியே, புறப்பட்டு, 3‘நீ கறுப்புடுத்துத் தாழ நின்ற நிலையிலே இச் செயலைச் செய்தால் இதனை நாட்டார் 4‘மெய்’ என்றிருப்பார்களோ? ‘கள்வா’ என்பர்கள். ஈண்டுக் களவாவது, தன் ஸ்தவதந்தர்யத்தை மறைத்துப் பரதந்திரனாய் நிற்கும் நிலை. கைலாச யாத்திரியிலே 5‘நமோ கண்டாய கர்ணாய நம:’ என்று துதி செய்த அறியாத வாயானபடியால் 6மீன் துடிக்கிறபடி பாராய்’ என்றான். 7‘நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த’ என்கிறபடியே, துதி செய்து நாத்தழும்புபட்டுக் கிடப்பது அவர்களுக்கு அன்றோ?
இவன் தாடி நின்ற நிலையும் துதி செய்த நிலையும் களவு என்னுமிடத்தை விளக்குகிறார் மேல்: எம்மையும் ஏழ் உலகும் நின் உள்ளே தோற்றிய, ‘நீ இவற்றைப் படைக்கின்ற காலத்தில்எங்களை முன்னே படைத்து, பின்னர் மற்றைப்பொருள்கள் எல்லாவற்றையும் படைத்தாய். இறைவ – இறைவனே!’ என்பார்கள். ‘இங்ஙனே சொல்லுகிறவர்கள்தாம் யார்? என்னில், வெள் ஏறன் நான்முகன் இந்திரன் வானவர் – சிவன் முதலானோர். ‘ஆயின், கடவுளை வணங்குகின்றவர்கள் வாகனத்தோடு வருதல் பொருந்துமோ?’ எனின்,இராஜசேவை செய்வார் தத்தமது அடையாளங்களோடே சட்டையும் பிரம்புமாய்ச் சேவிக்குமாறு போன்று, இவர்களும் தத்தம் அடையாளங்களோடே வந்து சேவிக்கிறார்கள். 1‘இரவியர் மணிநெடுந்தேரோடும் இவரோ? இறையவர் பதினொரு விடையரும் இவரோ?’ மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ?’ என்றார் தொண்டரடிப்பொடிகள். புள் ஊர்தி கழல் பணிந்து ஏத்துவர் – சர்வேஸ்வரன் பெரிய பிராட்டியாரும் தானுமாய் இருக்கிற இருப்பில் புக முடியாமையாலே, திருப்பாற்கடலுக்கு இவ்வருகே கூப்பிட்டால், இவர்கட்குக் காட்சி கொடுக்கைக்காகத் திருவடி திருத்தோளில் ஏறிப் புறப்படுவான், அப்பொழுது 2ஆட்டத்து வெளியில் யானைக்காலில் துகையுண்ணா நிற்பார்கள்.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply