Archive for October, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-10-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 31, 2013

இப்படிப் பட்ட பகவானுடைய அனுபவமும்
மேல் கூறிய புருஷார்த்தங்களும் எல்லாம் கூடினாலும் –
தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன் –
என்கிறபடியே
பாகவதர்களுக்குப் பிரியமாக திருவாய் மொழி பாடி
அடிமை செய்யும் இதனோடு ஒக்குமோ -என்கிறார் –

—————————————————————————————————————————————————————–

வழி பட்டு ஓட அருள் பெற்று
மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி
வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில்
பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம்
நுகர்ச்சி உறுமோ முழுதுமே

—————————————————————————–

வழி பட்டு ஓட அருள் பெற்று
கைங்கர்யத்திலே நெறி பட்டுச் செல்லும்படி -அவன் பிரசாதத்தைப் பெற்று நித்ய கைங்கர்யம் பண்ணும் படியாக

மாயன்
ஸுந்தர்ய சீலாதிகளாலே ஆச்சர்ய பூதனானவன்
கோல மலர் அடிக்கீழ்
தர்ச நீயமான புஷ்பம் போலே இருந்துள்ள திருவடிகளின் கீழே
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி வெள்ளத்து –
ஆற்றுப் பெருக்கு போலே சுழித்து செல்லுகிற –
தேஜஸ் -ஒளி -தரங்களை -அலைகளை உடைத்தான பரம பதத்திலே –
அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோ மகாதமன
ஸ்வ யைவ ப்ரபயா ராஜன் துஷ்ப்ரேஷம் தேவதா நவை -பாரதம் -ஆரண்ய பர்வம் –
சூர்யன் அக்னி ஆகியவற்றின் ஒளிகளைக் கடந்துள்ள
ஒளியுடன் விளங்குகிற
மாகாத்மாவின் ஸ்ரீ மன் நாராயணன் உடைய ஸ்ரீ வைகுண்டம் -என்னக் கடவது -அன்றோ –
இன்புற்று இருந்தாலும் –
ஏஷக்யேவ ஆனந்தயாதி -தைத்ரியம்
என்று அவன் ஆனந்திப்பிக்க -ஆனந்த நிர்ப்பரனாய் இருந்தாலும்
முழுதுமே –
கீழ்ச் சொன்ன ஐஸ்வர் யாதிகளும் செல்வம் முதலானைவைகளும்
இதனோடு கூடப் பெற்றாலும்

இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து-
தாழ்வுக்கு எல்லையாம் படி கை கழிய போன சரீரத்தோடு பிறந்து –

தன் சீர் –
நித்ய ஸூரிகளும் குமுழி நீர் உண்ணும்
கல்யாண குணங்களை –

யான் கற்று –
நித்ய சம்சாரியாய்
அந்த குணங்களுக்கு அடைவு இல்லாத நான் அறிந்து –

மொழி பட்டு ஓடும் –
அவை உள் அடங்காமையாலே சொல்லாய் ப்ரவஹியா நின்றுள்ள -வெளிப்படுகின்ற

கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ –
திருவாய் மொழி யாகிற அமுதத்தை
அனுபவிக்கையோடு ஒக்குமோ –
சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும் முழுவதும்
அவன் அடியார் சிறு மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய
நறு மா விரை நாள் மலர் அடிக்கீழ் புகுதல் உறுமோ -என்றாரே மேல்
அதனை விட்டு
கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ முழுதும் -என்கிறாரே இங்கு
அதனை விட்டாராய் இருக்கிறதோ -என்னில் -விட்டிலர்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் -9-4-9-என்கையாலே
அவர்களுக்கு அடிமை செய்கிற படி –

தொண்டர்க்கு அமுது உண்ண
திருவாய் மொழி பாடி இங்கேயே
இதுவும் பாகவத கைங்கர்யம் தானே
மாயன் கோல மலர் அடி கீழ்
அழகு வெள்ளம் சுழி
ஆசை படாமல்
உடலினில் பிறந்து -தாழ்ந்த சரீரம்
தனது சீர் யான் கற்று
மொழி பட்டோடும் கவி அமுதும்
திருவாய் மொழி இதனால் பெற்றதோ
சௌந்தர்யம் சீலம் ஆச்சர்ய பூதன்
சுடர் ஜோதி வெள்ளம்
ஆற்று பேருக்கு போலே
சூர்யன் விட பிரகாசம்
அழகு வெள்ளம்
இன்புற்று இருந்தாலும்
அவன் ஆனந்திப்பிக்க ஆனந்தம் அடைந்தாலும்
முழுதும்
கீழ் சொப்ன்னவையும் சேர்ந்து
இங்கே பிறந்து
நித்யர் குமிழ் நீர் உண்ணும் சீர் கல்யாண குணங்களை
நான் அறிந்து
மொழி பட்டு ஓடும்
உள்ளடங்கா மல்
சொல்லாக பிரவிக்கிக்க
கவி அமுதம் –
தொண்டர்க்கு அமுது உண்ண –
இதுவும் பாகவதர் உகப்பதால் –
அடிமை பட்டு இருத்தல் ஆவது
அவர் மகிழும் படி திருவாய் மொழி பாடுவது
என்னை ஆண்டார் இங்கே திரிய –
விட்டிட்டு கவி அமுதம் சொல்கிறார் எதனால்
இதுவும் பாகவர் அடிமை என்பதால் தான் –

————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-10-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 31, 2013

ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உகப்பான கைங்கர்யம் கிடைக்குமாகில்
அவர்கள் சஞ்சரிப்பதனால் கொண்டாடத் தக்க தான இந்த உலகத்தில் இருப்பதே புருஷார்த்தம் -என்கிறார் –
அன்றிக்கே
மேல் பாசுரத்தில் சிறு மா மனிசர் -என்றீர்
இங்கே -என்றீர்
இது இருள் தரும் மா ஞாலம் அன்றோ
பகவத் கைங்கர்யத்தை வளர்க்கக் கூடியதான பகவானுடைய அனுபவம்
முற்றும் கிடைப்பது பரம பதத்தில் அன்றோ -என்னில்
அந்த அனுபவம் அவன் திருவருளால் கிடைக்குமாகில்
இங்கேயே வசித்தால் குற்றம் என் என்கிறது –

அங்குத்தை அனுபவத்துக்கும் அவன் திருவருள் அன்றோ காரணம் –
அது இங்கே கிட்டுமாகில் இங்கேயே வசிப்பதனால் குற்றம் என் என்கிறார் -என்றபடி-

——————————————————————————————————————————————————————————————-

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்
இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச்
செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய்
புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய்
வழி பட்டு ஓட அருளிலே

———————————————————————————————————————————————————————————

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் –
தண்மை -என் –

இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த –
மிக்க பரப்பை உடைத்தான பூமியை
பிரளய காலத்திலே வயிற்றிலே வைத்து நோக்கி
படைப்பு காலம் வந்த வாறே உமிழ்ந்த –

செங்கோ லத்த பவள வாய்ச் –
பிரளயத்திலே தள்ளினாலும் விட ஒண்ணாத திரு அதரத்தை உடையவன் –
சிவந்து அழகியதான பவளம் போலே இருக்கிற திரு அதரம் –

செந்தாமரைக் கண் என் அம்மான் –
என்னை நோக்காலே -உனக்கு ஜிதம் -எண்ணப் பண்ணினவன்
மேலே கூறிய குணத்தாலும் அழகாலும் என்னை எழுதிக் கொண்டவன் –

பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் –
பொங்கி எழா நின்றுள்ள கல்யாண குணங்கள்
வாயிலே உழவே –
ஆற்றுப் பெருக்கு போலே கிளர்த்தி உடைத்தாய்
புக்காரைக் கொண்டு கிளர வற்றான குணங்கள் ஆதலின்
பொங்கு ஏ ழ் -என்கிறது –
ஏ ழ் -எழுதல் -மேலே கிளர்தல் –
அன்றிக்கே –
பொங்கி கே ழ் என்று பிரித்து
பரந்து அழகான குணங்கள் -என்று பொருள் கூறலுமாம்
பொங்கி -பரந்து கே ழ் -அழகு –

புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
-எல்லா இந்திரியங்களையும் கொள்ளை கொள்ளத் தக்கதான
வடிவு என்மனத்திலே இருப்பதாய் –

அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் –
அந்த வடிவுக்கு தக்கதான மலர்கள் கையிலே உளவாய் –

வழி பட்டு ஓட அருளிலே –
நெறி பட்டு செல்லும் படி அருளப் பெறில்-என்றது
மனம் வாக்கு காயம் என்ன இம் மூன்றும் அவன் திருவடிகளிலே
எப்பொழுதும் அடிமை செய்யும்படி அவன் திரு வருளைப் பெற்றால் -என்றபடி –

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் –
பாகவதர்கள் உடைய ப்ரீத்தியின் உருவமான
பகவத் கைங்கர்யத்தை
அவன் திருவருளாலே இங்கே செய்யப் பெறில்
எனக்கு அதுவே பேறு -என்கிறார் –
திரிதந்தாகிலும் தேவபிரானுடை
கரிய கோலத் திரு உரு காண்பன் நான் –
ஆசார்ய ஹிருதயம் -அழும் தொழும் ஸ்நேக பாஷ்ய அஞ்சலியோடு –புலன் கொள் நித்தியா சத்ரு விசிதனம் –
என்ற ஸ்ரீ சூக்தி இங்கே அனுசந்தேயம்

 

ஜகத்தில் இருப்பே புருஷார்த்தம்
பாகவதர்கள் இங்கே இருக்க –
இங்கே இருந்தால் என்ன இழப்பு வரும்
மா நிலம் உண்டு உமிழ்ந்த –புகழை வாயாலே சொல்லி
கையில் புஷ்பத்துடன் -நெஞ்சால் நினைக்கும் படி
இருள் தருமா ஞாலம் அன்றோ
பாகவதர்கள் சந்தோஷிக்க பகவத் கைங்கர்யம்
அங்குத்தை அனுபவத்துக்கும் அவன் அனுக்ரகம் வேண்டும்
பிரளயத்தில் தள்ளினாலும் விட ஒண்ணாத அழகு
ஜிதம்
அழகாலும் குணத்தாலும் எழுதிக் கொண்டவன்
பொங்கு -குணம் முழுக்க வைக்கும்
அபஹாரம் கொள்ளும் வடிவு
வாக்கு நெஞ்சு கை முக் காரணங்களால் அடிமை செய்ய வாய்க்குமால்
பாகவத ப்ரீதி ரூபமான இந்த பகவத் கைங்கர்யம் பெறில் வேறு ஒன்றும் வேண்டாம்
இங்குத்தை இருப்பே அமையும் என்கிறார்
நேராகா பாகவதர்களை சொல்லா விடிலும்
இப்படி வியாக்யானம் கொண்டு அறிய முடிகிறதே

——————————————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-10-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 31, 2013

செல்வம் என்ன
கைவல்யம் என்ன
இவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாய்
உயர்ந்ததாய்
பகவல் லாபம் உண்டானாலும்
இங்கே இருந்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்கைக்கு அது ஒவ்வாது -என்கிறார்
உலகம் அளந்த பொன்னடிக்கு நல்ல ஸ்ரீ வைஷ்ணவர்கள் இங்கே இருந்து
என்னை அடிமை கொள்ளில் –
அதற்கு –
உலகம் அளந்தவன் திருவடிகளில் அடிமை தான்
உறாது -என்கிறார்-

—————————————————————————————————————————————————————————-

உறுமோ பாவியேனுக்கு
இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த
எம்   செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ்
புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார்
இங்கே திரியவே-

————————————————————————————————————————————————————————————–

உறுமோ பாவியேனுக்கு-
ஆத்தும அனுபவத்தையும் செல்வத்தையும் குறித்துச் சொன்ன வார்த்தையை
பகவத் விஷயத்திலும் சொல்லுகிறார் –
மேலே கூறியவை போன்று கழிக்க ஒண்ணாது –
புருஷார்த்ததின் எல்லை அல்லாமையாலே கழிக்க வேண்டும் -என்றது –
தள்ளவும் கொள்ளவும் ஒண்ணாத படியான பாவத்தைச் செய்தேன் -என்றபடி –
பாவியேன் –
முதல் நிலத்துக்கும்
முடிந்த நிலத்துக்கும்
வாசி சொல்ல வேண்டும்படியான பாபத்தைச் செய்தவன் –

இவ்வுலக மூன்றுமுடன் நிறைய –
சில ஏரிகள் வற்றிப் பாழாய்க் கிடக்க
நினைவு இன்றிக்கே மழை பெய்ய
நிறைந்து இருக்குமாறு போலே
தன வாசி அறியாதே மூன்று உலகங்களும்
ஒருக்காலே நிறையும் படி –

சிறுமா மேனி நிமிர்ந்த –
கண்களாலே முகந்து அனுபவிக்கா லாம்படி சிறுத்து
அழகுக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற
திரு மேனியை நிமிர்த்த –

எம் –
உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு -இரண்டாம் திருவந்தாதி -61- என்றபடியே
அடியார்கட்காக செய்த செயல் அன்றோ –

செந்தாமரைக் கண் திருக் குறளன் நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் –
மலர்த்து -செவ்வி -குளிர்த்திகளுக்கு
தாமரையை ஒப்பாக சொல்லலாம் படி இருக்கிற
கண் அழகை உடைய ஸ்ரீ வாமனனுடைய
அழகிய மிக்க வாசனையை உடைத்தான
நாட்ப்பூ போலே இருக்கிற திருவடிகளின் கீழே புகுதல் –
நறு மா விரை –
நன்றாய் மிக்க வாசனை –
நறு மா விரை நாண் மலரடி காணும்
இவருக்கு வேப்பங்குடி நீராய்
உறுமோ என்று கழிக்கிறது-என்றது
பகவத் விஷயத்திலே -வெளிறு கழிந்த பாகமான இது ஆயிற்று –
பரத்வம் முதலானவைகளை விட அதி சுலபமானது என்பதால் –
இவருக்கு பாகவத புருஷார்தத்தைப் பற்றிக் கழிக்க
வேண்டியது ஆகிறது –

அன்றி –
அவர்களைத் தவிர்ந்து –

அவன் அடியார் –
ஸ்ரீ வாமனனின் அழகிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
அவர்கள் ஆகிறார்
முன்னம் குறள் உருவாய் மூ அடி மண் கொண்டு அளந்த
மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன் -பெரிய திருமொழி -9-4-2-
என்று இருக்குமவர்கள் –

சிறுமா மனிசராய் –
வடிவு சிறுத்து பிரபாவம் பெருத்து இருக்குமவர்கள்
சிறுமை பெருமை யாகிற மாறுபட்ட இரண்டு தர்மங்கள்
ஒரு பொருளில் சேர்ந்து இருத்தல் எப்படி -என்று
பட்டர் இளமைப் பருவத்தில் ஆழ்வானைக் கேட்க
நம்மோடு ஒக்க -அன்னம் பானம் முதலானவைகள் தாரகம் -என்னலாய்
பகவத் விஷயத்தில் மூழ்கி இருக்கும் தன்மையைப் பார்த்தால்
நித்ய சூரிகளோடு ஒப்பார்கள் என்னலாய் இருக்கிற
முதலி ஆண்டான்
அருளாள பெருமாள் எம்பெருமானார் ஜீயர்
ஸ்ரீ கோவிந்த பெருமாள் -எம்பார்
இவர்கள் காண்-சிறு மா மனிசர்கள் -ஆகிறார் என்று பணித்தார் –

என்னை யாண்டார் –
என்னை அடிமை கொண்டவர்கள் –

இங்கே திரியவே –
என் கண் வட்டத்திலே சஞ்சரியா நிற்க
அன்றி -நறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் -பாவியேனுக்கு உறுமோ –
இவருடைய கண்ணி நுண் சிறு தாம்பு இருக்கிறபடி
ஸ்ரீ மதுர கவிகட்கும் அடி இது அன்றோ –
பொய் நின்ற ஞானம் தொடங்கி-முனியே நான்முகனே -என்ற திருவாய் மொழி முடிய
இவரைத் தொடர்ந்து பின் பற்றிய இடத்து
ஆழ்வார் தமக்கு பிரயோஜனமாக சொன்ன
பயிலும் சுடர் ஒளி –
நெடுமாற்கு அடிமை
என்னும் திருவாய் மொழி களையே தமக்கு தஞ்சமாக பற்றினார்-

எவை எங்களுடைய நல் ஒழுக்கம் களோ அவை கொள்ளத் தக்கவை -என்று
ஆச்சார்யன் சிஷ்யனுக்கு உபதேசிக்கிறார் -என்னக் கடவது அன்றோ –
யாநி அஸ்மாகம் ஸூ சரிதானி
தாநி த்வயா உபாச்யானி நோ இதராணி -தைத்ரியம் -போலே –

பகவல் லாபம் உண்டானாலும்
இங்கே இருந்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு செய்யும் அடிமைக்கு ஒவ்வாதே
உலகு அளந்த பொன்னடி –
சிறு மா மனிசரே என்னை ஆண்டார்
இங்கே திரியவே
குறளன் -அடியில் புகுதல் இன்றி –
கழிக்க இதுவும் ஒண்ணாதே
த்யாஜ்யம் இது இல்லை இருந்தாலும்
பிரதம அவதிக்கும் சரம அவதிக்கும்
உலக,ம் மூம்ன்றும் -வியாபித்து
ஏரிகள் வற்றி -மழையால் நிறையுமா போலே
மூன்று உலகும் வியாபித்து
சிரித்து வை லஷண்யம் உள்ள சிறு மா மேனி
என்னுடைய திருக் குறளன்
அடியாருக்கு உத்தேச்யம்
செந்தாமரை
விகாசம் போலே
நாள் பூ போலே திருவடி
நன்றாய் உள்ள பரிமளம் இவருக்கு வேப்பங்குடி
அசாரம் கழித்து-
அது இத்துடன் ஒவ்வாது
பகவத் விஷயம் கோது கழித்து
முன்னம் குறள் உருவாய்
வடிவு சிறுத்து கீர்த்தி மிக்கு
சிறு மா மனிசரே -பட்டர் கூரத் ஆழ்வான் -பால்யத்திலே
வ்ருத்த விசேஷணம்
அன்னம் தாரகாதி
ஆண்டான் அருளாள பெருமாள் எம்பெருமானார் எம்பார்
வடிவிலே சிறுத்து ஞானத்திலே பெருத்து உள்ளார்
அடிமை கொண்டார் இங்கே திரிய
இவருடைய கண்ணி நுண் திரு தாம்பு
மதுர கவிக்கு அடி இதுவே
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை தஞ்சமாக பற்றினார்
ஞானி செய்வதை பண்ணு -அவர்கள் உத்தேச்யமாக கொண்டதை
வேதத்தின் உட் பொருள் இந்த இரண்டும்
பொருள் மற்ற திருவாய்மொழி

———————————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-10-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 31, 2013

மேலே கூறிய செல்வத்தோடு
ஆத்ம அனுபவத்தைச் சேர்த்துத் தந்தாலும்
பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தல் ஆகிற
பேற்றுக்கு ஒவ்வாது –
என்கிறார்

———————————————————————————————————————————————-

வியன் மூ வுலகு பெறினும் போய்த்
தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி
அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார்
திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது
உறுமோ பாவியேனுக்கே

———————————————————————————————————————————————

வியன் மூ வுலகு பெறினும் –
பரந்து இருக்கின்ற மூன்று உலகங்களின் செல்வத்தையும்
என் ஒருவனுக்கே ஆக்கினாலும் –

போய்த் தானே தானே ஆனாலும் –
சம்சார சம்பந்தம் அற்றுப் போய்
கேவல ஆத்துமா அனுபவம் பண்ணப் பெற்றாலும் –
தானே தானே -என்ற அடுக்குத் தொடரால்
சம்சாரத்தில் புத்திரர் பௌத்திரர் முதலானவர்களும் தானுமாய்
வாழ்கின்ற வாழ்க்கையைத் தவிர்ந்து –
பரம பதத்தே போய் -நான் பரமாத்வாவுக்கு இன்யன் நான் பரமாத்மாவுக்கு இனியன்
என்று கழிக்கும் அத்தனையும் விட்டு
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத -தைத்ரியம் –
கேவலம் தானேயாகைத் தெரிவித்த படி –

புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ் –
மழை மேகம் போலே இருக்கிற திருமேனியைக் காட்டி
எல்லா உலகங்களையும் எழுதிக் கொண்டு இருக்கிறவனுடைய
சாத்தப் பட்ட பூக்களையும் வீரக் கழலையும் உடைய
திருவடிகளின் கீழே –
அழகு இல்லாதாவனாயினும் விட ஒண்ணாத சம்பந்தத்தை உடையவன்
ஆதலின் -அம்மான் -என்கிறது –

சயமே அடிமை தலை நின்றார் –
அடிமை செய்தலே பிரயோஜனமாக
எல்லா அடிமைகளும் செய்யுமவர்கள் –
அன்றிக்கே
அவனுடைய அழகிலே தோற்று எல்லா அடிமைகளையும் செய்யுமவர்கள் –
சாயம் -ஸ்வயம் அல்லது ஐயம் –

திருத்தாள் வணங்கி-
சரீரத்துக்கு வேறு பட்டதாய் –
நித்தியமான ஆத்துமாவை அடைவதில் காட்டிலும்
அவன் வடிவு அழகிலே தோற்று இருக்குமவர்கள்
வடிவில் ஒரு உறுப்பு அமையும் -என்கிறார் –

இம்மையே பயனே இன்பம் –
சரீரத்தை விட்டுச் சென்று அனுபவிக்கும் அது அன்றிக்கே
இந்த உலகத்தில் பிரயோஜன ரூபமான
சுகமாயிற்று நான் பெற்றது
ஒரு சாதனத்தைச் செய்ய
அச் சாதனத்தாலே கை புகுரும் -என்று நினைத்து இருத்தல் இல்லை
என்பார் -பெற்றது -என்கிறார் –

உறுமோ-
இதனோடு ஒக்குமோ –

பாவியேனுக்கே –
நிலை நின்ற புருஷார்த்தின் எல்லைக்கும்
புருஷார்த்தம் அல்லாத்தற்கும்
வாசி சொல்லும்படியான பாபத்தைச் செய்தவன்
பாபத்தைச் செய்தவன்-

பகவத் விஷயம் அனுபவம் அல்லாமையாலே
ஆத்துமா அனுபவம் புருஷார்த்தம் ஆக மாட்டாது
செல்வம் போலே நிலை அற்றது அல்லாமையாலே
நிலை நின்ற புருஷார்த்தம் ஆகும் என்றபடி

ஆத்ம அனுபவம் ஐஸ்வர் யதுடன் சேர்த்து கொடுத்தாலும்
இதுக்கு ஒவ்வாது என்கிறார் –
தானே தானாய் ஆனாலும் –
அடிமை தலை நின்றார் திருத் தாள் வணங்கி இம்மையே பயனே யான் பெற்றது
சுயமே அடிமை -சுயம் பிரயோஜனமாக செய்வார்
த்ரை லோகய ஐஸ்வர் யம் எனக்கே ஆக்கினாலும்
தானே தானே –
குழந்தை சம்சாரம் விட்டு
அஹம் அன்னம் அஹன் அன்னம் இல்லாமல்
புயல் மேகம் போலே திருமேனி
வீரக் கழல் திருவடி
விட ஒண்ணாத சம்பந்தம் பிராப்தன்
சுயமே -சுயம் பிரயோஜனமாக எல்லா அடிமை களும் செய்பவர்
ஜெயம் -சௌந்தர்யத்தில் தோற்று அடிமை செய்பவர்
பாகவதர் முழுக்க வேண்டாம்
அடியில் ஏக தேசம் போதும்
இம்மையே சரீரம் விட்டு அனுபவிக்க
தேகாந்தரே தேசாந்தரே இல்லை
சாதனம் செய்து காத்து இருக்க வேண்டாமல் –
இங்கேயே இப்பொழுதே நான் பெற்றது உறுமோ
இதுக்கும் அதுக்கும் வாசி சொல்ல வேண்டிய பாவம் –
பகவத் விஷயம் இல்லை அபிராப்தம்
சம்சாரம் விட நித்யம் -அஸ்திரம் இல்லை
இருந்தாலும் இதற்க்கு ஒவ்வாதே-

————————————————————————————————————————————————————————

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-10-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 31, 2013

நெடுமாற்கு அடிமை -பிரவேசம்
மேலிரண்டு திருவாய் மொழியிலுமாக
ஆத்மாவினுடைய அனன்யார்ஹ சேஷத்வம் சொல்லிற்று –
அதனால் அது பிறர்க்கும் உரித்து அன்று -உணர்வைப் பெற ஊர்ந்து இற ஏறி -என்று
தனக்கும் உரித்து அன்று -அருமாயன் பேரன்றி பேச்சு இலள்-
என்று ஆயிற்று சொல்லிற்று –
பிரணவத்தில் நடுப்பததாலும்
நமஸ் சப்தத்தாலும் சொன்ன அர்த்தமாயிற்று சொல்லி நின்றது –
அனன்யார்ஹ செஷத்வத்துக்கு எல்லை
அவன் அடியார்க்கு அடிமை ஆதல் அளவும் அன்றோ
அதனைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில் –
அவன் அடியாருக்கு கிரய விக்ரயங்கட்கு தகுதியான
அன்று தான்
அவனுக்கு அடிமைப் பட்ட நிலை நின்றதாவது –
எந்தம்மை விற்கவும் பெறுவார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-10-என்று இ றே
அன்றோ இருப்பது
தத் பக்தி நிக்ன மனஸாம் க்ரய விக்ர யார்ஹா -பிரமாணம்
இறைவன் மாட்டு அன்புடைய மனஸ் உடையவர்களுக்கு
விற்றற்கு உரியவன் -என்னக் கடவது இ றே –
அம்முணி ஆழ்வான் போசல ராஜ்யத்தின் நின்று வந்த நாளிலே
பட்டர் கண்டருளி
நீ ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போர அடிமை செய்து போந்தாய் –
என்று கேட்டோம் .
உன் தன்மைக்கு சேர -நெடுமாற்கு அடிமை -என்னும் திருவாய் மொழியைக் கேள் -என்று
அருளிச் செய்தாராம் –
ஈஸ்வரனுக்கு அடிமை என்று அறிந்த அன்று மயங்கி மீளவுமாம் –
அவன் அடியார்க்கு அடிமை ஆதல் அளவும் உணர்ந்தால் மீள வேண்டா அன்றோ –
செல்வமே புருஷார்த்தம் -என்று இருப்பார் –செல்வமே -என்றும் -வியன் மூ உலகு –
ஆத்மலாபம் புருஷார்த்தம் என்று இருப்பார் -தானே தானே யானாலும் –
பகவானுக்கு அடிமைப் பட்டு இருத்தல் புருஷார்த்தம் -உறுமோ பாவியேனுக்கு –
ஈச்வரனாய் ஆனந்த மயஎன்று இருக்கும் இருப்பு புருஷார்த்தம் -மூ உலகின் வீடு பேறு –
என்று இருப்பராய் அன்றோ இருக்கிறார்கள் –
இப்படிப் பட்ட புருஷார்த்தங்கள்
தனித் தனியும் -திரளவும் நான் பற்றின பாகவதர்களுக்கு
அடிமைப் பட்டு இருத்தல் ஆகிற புருஷார்ததோடு ஒவ்வாது
என்று எடுத்துக் கழிக்கவும் போராது –
இப்படி இருக்கிற இதுவே காலம் என்னும் ஒரு பொருள் உள்ளவரையிலும்
எனக்கும் என்னோடு சம்பந்தம் உடையாருக்கும் வாய்க்க வேண்டும்
என்று வேண்டிக் கொண்டு தலைக் கட்டுகிறார் –
பயிலும் சுடர் ஒளி-என்னும் திருவாய் மொழியைக் காட்டிலும்
இத் திருவாய் மொழி க்கு வாசி என்-என்னில்
பாகவதர்கள் இறையவர்கள் -என்றது அங்கு -எம்மை ஆளும் பரமர்களே –
பாகவதர்கள் இனியர் -என்கிறது இங்கு -வீடுமாறு எனபது என் வியன் மூ உலகு பெறினுமே –
கச்சதா மாதுல குலம் பரதேன ததா அநக
சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரச்க்ருத-அயோத்யா -1-1-
-ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானுக்கு ஆதல்
இவ் வாழ்வாருக்கு ஆதல் அன்றோ இவ் வர்த்தங்களில் ருசி உள்ளது –
நித்ய சத்ருக்ன -எப்பொழுதும் உட்பகைவர்களாய் உள்ள இந்திரியங்களை வென்றவர் -என்பதால்
பெருமாள் இனியர் -என்று அவன் பக்கல் கண் வையான்
என்று கூறப் பட்டது அன்றோ –

ஜீவாத்மா ஸ்வரூபம் காட்டிக் கொடுத்து
இருத்தும் வியந்து -சிறியேன் சிந்தையுள் -சொல்ல
நைச்சியம் செய்வாரோ
கண்கள் சிவந்து திருவாய்மொழி அருளி –
அந்த ஜீவாத்மா அனன்யார்கம் காட்டிக் கொடுத்தார்
அவனுக்கே -என்றால்
அவனால் அபிமானிக்கப் பட்ட பாகவதர்களுக்கு
அடிமை கிரஹணிக்கே -கடி மா மலர் பாவையோடு சாம்ய ஷட்கம் –
ஒருவனை ஒருவன் உகந்தான் ஆவது அவன் உகந்தாரை உகக்கை யாவது தானே
உற்றது உன் அடியார்க்கு அடிமை -நாம பதார்த்தம்
ஜீவாத்மா ஸ்வரூபம் -பயிலும் சுடர் ஒளி சொல்லி
நெடுமாற்கு அடிமை பல புருஷார்த்தம் -பிரகரணம்
பிறருக்கும் உரித்து அல்ல தனக்கும் உருத்து இல்லை
பிரணவத்தில் -உகாரம் -திரு மந்தரத்தில் நமஸ் -மத்யம பதங்களால் -சொல்லிற்றே
ததீய சேஷத்வம் எல்லை நிலம்
ததீயருக்கு கிரய விக்ரய அர்கமாகும் -நிலை கோல வேண்டும் –
பூர்ண உரிமை –
அனுபவ பாத்யை மட்டும் விற்கும் உரிமை இல்லை
அடியார்கள் என் தம்மை விற்கவும் பெறுவார் -பெரியாழ்வார்
அம்மணி ஆழ்வான்-கோய்சல ராஜ்ஜியம் கர்நாடகம் -மேல் நாடு தொண்டனூர் நம்பி
பாகவத சேஷத்வம் நிறைய
ஸ்ரீ வைஷ்ணவர் போர அனுபவித்து –
கோஷ்டியில் ஸ்ரீ பாத தீர்த்தம் -ஆத்மாவுக்கு விஷயம்
ஆழ்வார் ஆச்சார்யர் நினைத்து சேர்ப்பார்கள் –
குழந்தைக்கு கூட
உபநயனம் மட்டும் ஆகி இருக்க வேண்டும்
கரும்பு குடம் கொண்டு கோஷ்டி வட்டில் திருவாராதனம்
பெருமாள் போலே
உபதேச ரத்னா மாலை பொழுது சேர்ப்பார்கள் இன்றும்
தளிகை
ஸ்ரீ பாத வட்டில்லுக்கும் திருவாராதானம் உண்டே
ஈஸ்வர சேஷம் என்று அறிந்த அன்று பிரமம் ஏற்பட்டு மீளவுமாம்
ததீய சேஷத்வம் மீளுவது கஷ்டம்
லோகம் ஐஸ்வர்யம் கைவல்யம் பகவத் சேஷத்வம்
தனித் தனியாகவும் திரளவும் இதுக்கு எடுத்து களிக்கவும் ஈடாக இல்லை என்கிறார்
இதுவே கால தத்வம் உள்ள அளவ்வும்
தமக்கும் தம் உடைய சம்பந்திகளுக்கும்
நடக்க வேண்டும்
பாகவதர் சேஷி இறை என்றார் பயிலும் சுடர் ஒளி
இதில் இனியர்
சத்ருகன ஆழ்வான் போலே
இதில் ருசி -வருவது அருமை
தாழ்ந்தது காட்டி அவனை பற்ற சொல்லலாம்
அவன் உயர்ந்தாதாய் இருக்க அவனை விட்டு வருவது அரிதே
ஸ்வ தந்த்ரன்
கையைப் படித்து கார்யம் கொள்ளுமோபாதி
காலைப் பற்றி கார்யம் கொள்ளுகை
அனனகா -பாபம் இல்லாதவன் -பயிலும் சுடர் ஒளி
போக்யதையில் கை வையான் இதில் -நித்ய சத்ருகன -அவன் போக்யதை விட்டு அதை விட இனிமை இதில் –

 

—————————————————————————————————————————————————————————————————-

நெடுமாற்கு அடிமை செய்வன் போல்
அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள்
முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே
கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ
வியன் மூ வுலகு பெறினுமே-

————————————————————————————————————————————————

உலகத்தார் விரும்புகிற செல்வம் ஆகிய புருஷார்த்தமும்
நான் பற்றின புருஷார்த்ததோடு ஒவ்வாது -என்று
எடுத்துக் கழிக்கவும் போராது –
என்கிறார் –

நெடுமாற்கு –
நெடுமாலுக்கு -என்றபடி
மால் -என்றது பெரியோன் -என்றவாறு –
நெடுமையால் நினைக்கிறது அதில் பெருமையை –
அறப் பெரியோன் -என்றபடி
தாம் அடிமைத் தன்மையின் எல்லையைக் கணிசிக்கிறவர் ஆகையாலே
அவனுடைய இறைமைத் தன்மையின் எல்லையைப் பிடிக்கிறார் –
அன்றிக்கே
மால் -எனபது வ்யாமோகமாய்
மிக்க வ்யாமோகத்தை உடையவன் -என்னுதல் –
நெடுமையால் மிகுதியை நினைக்கிறது -என்றது
தன் அளவில் இன்றியே தன்னடியார் அளவிலே நிறுத்தும்படியான வியாமோகம் -என்றபடி –
அடியார்க்கு என்னை ஆட படுத்த விமலன் -என்னக் கடவது அன்றோ –

அடிமை செய்வன் போல் அவனைக் கருத –
அவனுக்கு அடிமை செய்வாரைப் போலே அவனை நினைக்க –
அன்புள்ளவர்களைப் போன்ற பாவனை யேயாய்
ஆராய்ந்தால் அது தானும் போட்கேன் -பொய்யன் –

வஞ்சித்து தடுமாற்றற்ற தீக் கதிகள் முற்றும் தவிர்ந்த-
தடுமாற்று அற்ற தீக்கதிகள் -முற்றும் -விஞ்சித்து -தவிர்ந்த –
ஒரு நல்ல கார்யத்தைச் செய்து
அது நின்று தடுக்குமது இல்லாமையாலே
தடுமாற்றம் அற்று வசிக்கிற அறிவின்மை
முதலானவைகள் முழுதும் வஞ்சித்துத் தவிர்ந்தன –
பகல் முழுதும் ஒரு சேர வசிக்க கடவோம் -என்று சொல்லி வைத்து
இரவு வந்தவாறே ஒரு காலத்திலே உண்டு வைத்து ஒக்க கிடந்தது
விளக்கை எரிய வைத்துப் போனது அறியாமே வஞ்சித்துப் போவாரைப் போலே
இனி அடிமை செய்ய வேண்டில் அவனை வஞ்சித்துக் கருத –
எனக் கூட்டி வஞ்சித்தலை
தமக்கு அடைமொழி ஆக்கலுமாம் –

முற்றும் தவிர்ந்த –
நாம் போக்கிக் கொள்ளும் அன்றே அன்றோ க்ரமத்தால் போக்க வேண்டுவது –
பக்திமானுடைய புண்ய பாபங்கள் அனைத்தும் அழிகின்றன –
ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மான ப்ரதூ யந்தே
ய ஏதத் ஏவம் வித்வான் அக்னிஹோத்ரம் ஜூஹோதி -சாந்தோக்யம் -5-24-3-
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுசா -ஸ்ரீ கீதை -18-66-
என்கிறபடி அன்றோ அவன் போக்கும் போது இருப்பது –

சதிர் நினைந்தால் –
அவன் திருவடிகளிலே குனிந்த அளவிலே
தீவினைகள் அடங்கலும் போன படியை நினைந்தால்
பேற்றுக்கு எல்லை யானாரை அன்றோ பற்ற அடுப்பது –

உறுவது பார்க்கில் அவன் அடியாரை அன்றோ பற்ற அடுப்பது –

கொடுமா வினையேன் –
ப்ரீதி தலை மண்டை இட்டுச் சொல்கிறார்
பாட்டுக் கேட்பார்
பாட்டு ஈடு படுதினவாறே -பாவியேன் -என்னுமாறு போலே –
அன்றிக்கே
முதன் முதலிலேயே -பொய் நின்ற ஞானமும் -தொடங்கி-
அவன் அடியாரைப் பெற்ற பெற்றிலேன் -என்பார்
பாவியேன் -என்கிறார் என்னலுமாம்

அவன் அடியார் அடியே கூடும் இது வல்லால் –
தன் திருவடிகளைப் பற்றினார் திறத்திலே அவன் மிக்க வ்யாமோகத்தைப்
பண்ணுவானே ஆனால் -அவன் விரும்பினாரை அன்றோ நமக்கும் பற்ற அடுப்பது -என்றபடி
அவ்வடியார்கள் கூட்டத்தில் அவர்களோடு ஒத்தவராய் இருப்பவர் அல்லர்
அவன் இறைவனாம்தன்மையில் முடிந்த நிலையில் நிற்குமா போலே
இவர் அடிமையின் தன்மையில் முடிந்த எல்லையில் நிற்கிறவர் ஆதலின்
அடியே -எனத் தேற்ற ஏகாரம் கொடுத்து ஓதுகிறார்
பிரிநிலை ஏகாரம் ஆகவுமாம் -என்றது

அவர்களோடு ஒப்பூண் உண்ண இருக்குமவர் அல்லர் –
அவர்கள் காலைப் பற்றுமவர் -என்றபடி –

வீடுமாறு -எனபது என் –
புறம்பு உண்டான விஷயத்திலே விடுவது பற்றுவது ஆனா செயலை
இவ்விஷயத்திலும் செய்யவோ –
அந்தோ -நான் பற்றின பேற்றுக்கு -நாலு மூன்று படி-ஐஸ்வர்யார்த்தி -கைவல்யார்த்தி -பகவத் லாபார்த்தி -மூவரையும் -கழித்து – கீழே நிற்கும் செல்வம் -இத்தோடு ஒவ்வாது
என்ன வேண்டுவதே -என்று -அந்தோ -என்கிறார் –

வியன் மூன்று உலகு பெறினும்
காடும் மலையுமான பாகங்களைத் திருத்தி
அனுபவ போக்யமாம் படி செய்து
மூன்று உலகங்களையும் எனக்கு கை யாதப்பு ஆக்கினாலும்
விடுமாறு எனபது என் அந்தோ
செல்வத்துக்கு உலகத்தாரால் விரும்பி போற்றப் பட்டு
ஏற்றுக் கொள்ளப் படுகின்ற தன்மை
உண்டாகையினால் அன்றோ உவமையாக எடுத்துச் சொல்வதற்கு
ஒண்ணததாய் இருக்கும்
இது நான் பற்றின பாகவதர்களுக்கு அடிமை என்பதனோடு ஒவ்வாது -என்ன வேண்டுகிறது-

எடுத்துக் களிக்கவும் ஒவ்வாதே
தகரம் -வைரம் போலே
கொடு மா வினையேன் –
பாகவத செஷத்வமும் -ஐஸ்வர் யமும் ஒப்பிட்டு சொல்ல வேண்டிய பாபம்
அந்தோ –
சொல்லியா தெரிய வேண்டும்
முன்னடியில் பகவான் பெருமை சொல்லி
அப்படிப் பட்டவன் அடியார்
அடிமை செய்வன் போல் அவனை கருதி வஞ்சித்து
தீக்கதிகள் தடுமாற வைக்கும் படி உள்ளவை போனதே
இந்த சதிர் -சாமர்த்தியம் நினைந்தால்
பாகவதர் -சொல்ல வேண்டாமே
நெடு மால் -பெரியான் -அகப் பெரியோன் -சேஷித்வத்தின் எல்லை பிடிக்கிறார்
இவர் செஷத்வத்தின் எல்லையில் நின்று
வியாமோகம் அன்பு
அடியார் அளவும் நிறுத்தும்படி
அடியார்க்கு என்னை ஆட்படுத்தும் விமலன் -இது தானே பெரிய உபகாரம்
மித்ரா பாவமேயாய்
போலியாய் –
பாவலா -பாவனை -போட்கன்
எல்லாம் போயின –
அவித்யாதிகள் அடங்க -தவிர்ந்தன
தவிர்ந்த படி என் என்னில்
வஞ்சித்து தவிர்ந்தன –
இரவில் கலந்து பிரிந்தவன் போலே போயின
அடிமை செய்பவன் போலே அவனை வஞ்சித்து
அவனே ஏமாறும் படி செய்து -வஞ்சித்து கருத
அவனே போக்கி மொத்தமாக போக்க
மொத்தம் தவிர்ந்தன
சர்வபாபேப்யோ மோஷ இஷ்யாமி
வேதமும் வேத வேத்யனும் சொல்லி
அவன் திரு வடிக்கே இதுவானால்
அவன் அடியார் பெருமை சொல்லி
கொடு மா வினையேன் -ஆனந்தத்தில்
பாட்டு கேட்டு பாவி கொன்றான் சொல்வது போலே
பாவி எனக்கு இந்த பாக்யமா
பிரதம அவதியில் இத்தை பற்ற வில்லை பாவி நிந்திதிதது கொள்கிறார் –
அவன் விரும்பிநாரை அன்றோ நாம் விரும்ப அடுப்பது
ஆஸ்ரித வ்யாமுக்தன்
அடியே -கூடும்
ஒப்பூண் உன்ன ஆசை கொள்ள வில்லை
அடியார்க்கு என்னை ஆட்படுத்த -சமமாக இல்லை
அடியே -அது ஒன்றே வேணும்
காலை பற்றுகிறார்
விடுமாறு எனபது என்
புறம்பு உண்டான சப்தாதி விஷயம் போலே இல்லை
அந்தோ –
ஐஸ்வர் யம் தகரம்
இது தங்கம்
ஒவ்வாது சொல்ல வேண்டி இருக்கிறதே அந்தோ
த்ரை லோக்யம் -காடு மேடு திருத்தி கொடுத்தாலும்
லோகம் பரிகிரகித்த காரணம் இவர் சொல்ல வேண்டி உள்ளதே –

—————————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-9-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 31, 2013

நிகமத்தில்
இப்பத்தைக் கற்றவர் ஸ்வரூபத்துக்கு தகுதியான
கைங்கர்யத்தைச் செய்யப் பெறுவர்

——————————————————————————————————————————————–

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்
நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்
தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை
ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார்
நெடுமாற்கு அடிமை செய்யவே

———————————————————————————————————————————————

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன் –
குறைவு அற்ற மூன்று உலகங்கட்கும் நேர்பட்ட நாயகன்
எந்த நாதனால் மூன்று உலகங்களும் நல்ல நாதனை
உடையவன ஆகுமோ -என்கிறபடியே
பாது காக்கப் படுகின்ற பொருள்களின் அளவு அன்றிக்கே
இருக்கிற
பாது காக்கின்ற தன்மையின் துடிப்பு
இதனால் நாயகன் படி சொல்லிற்று –
அந்த இராமன் தகுந்த நாதன் என்னுமா போலே
அடிமை நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் –
இதனால் இவர் படி சொல்கிறது –
அவன் இறைவனாம் தன்மைக்கு எல்லை ஆனால் போன்று
இவர் அடிமை யாம் தன்மைக்கு எல்லை யாம்படி –

சொல் நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும் நேர்பட்டார் –
அந்த தகுதியான நாயகனுக்கு
தகுதியான சொற்கள் வாய்ந்த
தமிழ் தொடை ஆயிரத்திலும்
இத் திருவாய்மொழி நேர் பட்டவர்கள் –

அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே –
நெடுமாற்கு அடிமை செய்ய நேர் பட்டார் –
இவர் பாசுரத்தை சொன்னவர்
இவர் செய்ய விரும்பிய கைங்கர்யத்திலே சேரப் பெறுவர் –
நேர் படுகை -சொல்லப் படுகை -சொல்லப் பட்டார் -என்றபடி –
ஆக
இப்பாட்டால்
சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும்
ஆத்ம ஸ்வரூபத்தையும்
இவற்றைச் சொல்லுகிற பிரபந்தத்தின் சிறப்பினையும்
இதனைக் கற்றவர்கள் பெரும் பேற்றின் சிறப்பினையும்
சொல்லிற்று ஆயிற்று —

நிகமத்தில்
ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யம் செய்யப் பெறுவார்
நேர்பட்ட -அனைத்துக்கும் நாயகன்
தொண்டர்க்கு -தொண்டர் -தாச தாச -சரமாவதி
கட்டளைப் பட்ட 1000 பாடல்கள்
அடிமை செய்ய நேர்பட்டவர்கள் அவர்
நாயகன் இவன் -ரஷ்யகத்தின் துடிப்பு -நாயகன் படி
ஆழ்வார் படி மேல் சொல்கிறது –
சேஷித்வம் எல்லை -அவன் -சேஷத்வம் எல்லை இவர்
பாகவத சேஷத்வம் சினை ஆறு பட்டுபோசிந்து
பட்டர் -திரு நறையூர் 100 பாசுரம் வரும் முன்
திரு நறையூர் தேனே -முன்னம் சொல்லி
அனுபவம் சினை ஆறு படுகிறது கிடாய்
பொசிந்து காட்டுமே வெள்ளம் வரும்முன்
சொல் நேர் பட்ட தமிழ் மாலை –
அவன் பெருமைக்கு தகுதியான இனிமையான மாலை
இவர் போலே கைங்கர்யம்
சர்வேஸ்வரன் ஸ்வரூபம்
ஸ்வ ஸ்வரூபம்
பிரபந்த வை லஷண்யம்
அப்யசிதார் பிராப்யம்
சொல்லி தலைக் கட்டுகிறார்

—————————————————————————————————————————————————-

கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன்
ஒரு மா கலவி யுரைப்பால் -திறமாக
அந்நியருக்காகாது அவன் தனக்கே யாகுமியிர்
அந்நிலையை யோரு நெடிதா

சாரம்
கருமால் திறத்து
ஒரு கன்னிகையாம் மாறன்
ஒரு மா கலவி உரைப்பாள்
ஒருவிதமாக தெரிவிக்க நினைக்கும் தோழி
அன்னியருக்கு ஆகாது ஆத்மா
இந்நிலையை தெளிவாக
அருளிச் செய்த மாறன் –

—————————————————————————————————————————————————————

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-9-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 31, 2013

நீ சொல்லுகிறவை எல்லாம் கிடக்க
இவளை அவனுக்கு கொடுக்க வேண்டியதற்கு
தக்கபடி சிறந்த காரணங்கள் உண்டாகில்
சொல்லிக் காணாய் –
என்று சொல்லுகிறாள்-

—————————————————————————————————————————————————–

அன்றி மற்றோர் உபாயம் என்
இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக்
கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை
குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம்
இவள் நேர் பட்டதே

——————————————————————————————————————————————–

அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல் –
வேறு மற்று ஓர் உபாயம் உண்டோ –
இவள் -அழகியதாய்
குழிந்த திருத் துழாய் நாறுகைக்கு –
இராச புத்திரனை அணையாதார்க்கு கோயில் சாந்து
நாறுகைக்கு விரகு உண்டோ –
என் உடம்பாதல்
உங்கள் உடம்பாதல்
திருத் துழாய் நாறுகின்றதோ –
அம்தண் துழாய் கமழ்தல் –என்கிறதற்கு –
அங்கீ காரத்துக்கு அறிகுறியாய் இருக்கிறது -எனபது
உள்ளுறை பொருள் -ஸ்வாபதேச பொருள்

குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி –
மலை போன்று சலிப்பிக்க ஒண்ணாததாய்
பெரு விலையனான ரத்னங்களால் செய்யப் பட்டு இருந்துள்ள
மாடங்களின் உடையவும் மாளிகைகளின் உடையவும்
காட்சிக்கு இனிய குழாம் களால் மிக்கு –
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர் நின்ற மாயப் பிரான் –
தெற்குத் திக்குக்கு திலகம் போலே இருக்கிற
குட்ட நாட்டுத் திருப் புலியூரில்
நின்று அருளின ஆச்சர்யத்தை உடையவன் -என்றது –
அவனுக்கு இவள் தக்கவள் அல்லள்-என்னும்படி அன்றோ
அவன் குணங்களால் மேம்பட்டு இருப்பது -என்றபடி –

திருவருளாம் இவள் நேர் பட்டதே –
இவள் நேர்பட்டது அவன் திருவருளாம் –
அன்றிக்கே
அன்றி மற்று ஓர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் -என்பதற்கு
அவன் திருவருளேயாம் -என்றாள்-
இதுவேயோ -வேறு அடையாளம் வேண்டோ -என்ன
அம் தண் துழாய் கமழ்தல் ஒழிய வேறு அடையாளம் உண்டோ -என்கிறாள்
என்று பொருள் கூறலுமாம்

அசாதாராண லஷனம் உண்டா
அற்று தீர்ந்தாளா
அங்கம் காட்டிக் கொடுக்குமே
திருத் துழாய் பரிமளம் வீச
ஸ்வாப தேசம் அங்கீகாரம் திருத் துழாய் கமழுதல் –

இவள் இடத்தில் அசாதாராண லஷணம் ஏதேனும் உண்டாகில் சொல் என்கிறாள் இதில் –
சம்பந்தம் உண்டானதுக்கு அடையாளம் உண்டா –
திருத் துழாய் மனம் கமழ்கிறதே-என்கிறாள் இதில் –
அன்றி மற்று ஓர் உபாயம் என்-வேறு யாருக்கும் கொடுக்க முடியாது
மண விலக்கு –
குன்றம் போன்ற மாளிகைகள்
தென் திசைக்கு திலகம் போலே -புரை =போலே
அவன் மாயப்பிரான் -ஆழ்வார் அருளிய திரு நாமமே
அற்புத நாராயணன் திருகடித்தான் –
அழகிய குளிர்ந்த துறுத் துழாய் -நாறுகிறதே
வேறு மற்று உபாயம் உண்டா
ராஜா புத்ரனை அணைத்தல் தான் கோயில் சாந்து மணம் வீசம்
என் உடம்பிளுமுங்கள் உடம்பிலும் மணம் வீச வில்லை
அங்கீகார சூசகம் இது -ஸ்வாபதேசம்
ஆத்ம சம்பந்தம் –
மலை போலே -ரத்னன்களால் செய்யப் பட்ட மாடங்கள் குழாம் மல்கி
குட்ட நாட்டு திருப் புலியூர் தென் திசை திலகம் போலே
அவனுக்கு இவள் போதுமா என்னும்படி இவன் கு ணாதிக்யம்
நின்ற மாயப்பிரான் –
அவன் திருவருளேயாம் –
வேறு மற்று உபாயம் இல்லை –

—————————————————————————————————————————————————————

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை -குத்து விளக்கு எரிய -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் –

October 31, 2013

அவதாரிகை –

இவள் திறக்கப் புக
நம்முடையாருக்கு இவள் திறக்க முற்பட்டாளாக ஒண்ணாது என்று இவளைத்
திறக்க ஒட்டாதே கட்டிக் கொடு கிடக்கிற
கிருஷ்ணனை எழுப்பி –

அங்கு மறுமாற்றம் கொள்ளாமையாலே மீளவும்-
அவளை உணர்த்துகைக்காக
அவளை எழுப்பு கிறார்கள் –

இத்தால்
ஆஸ்ரிதர்க்கு மாறி மாறி பரிகைக்கு-
என் அடியார் அது செய்யார் -என்னுமவனும்
ந கச்சின் ந அபராதி -என்னுமவலும்
இருவரும் உண்டு என்கை-

குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ யுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்

பதவுரை

குத்து விளக்கு–நிலை விளக்குளானவை
எரிய–(நாற்புரமும்) எரியா நிற்க,
கோடு கால் கட்டில் மேல்–யானைத் தந்தங்களினாற் செய்த கால்களை யுடைய கட்டிலிலே
மெத்தென்ற–மெத்தென்றிருக்குமதாயும்
பஞ்ச சயனத்தின் மேல் ஏறி–(அழகு, குளிர்த்தி மென்மை, பரிமளம், வெண்மை என்னும்)
ஐந்து குணங்களையுடைய துமான படுக்கையின் மீதேறி
கொத்து அலர் பூ குழல்–கொத்துக் கொத்தாக அலர்கின்ற பூக்களை யணிந்த கூந்தலை யுடையளான
நப்பின்னை–நப்பின்னைப் பிராட்டியினுடைய
கொங்கை–திருமுலைத் தடங்களை
மேல் வைத்து–தன் மேல் வைத்துக் கொண்டு
கிடந்த–பள்ளி கொள்கின்ற
மலர் மார்பா–அகன்ற திருமார்பை யுடைய பிரானே!
வாய் திறவாய்–வாய் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்
மை தட கண்ணினாய்–மையிட்டு அலங்கரிக்கப் பெற்றதும் விசாலமுமான கண்ணை யுடைய நப்பினாய்!
நீ–நீ
உன் மணாளனை–உனக்குக் கணவனான கண்ண பிரானை
எத்தனை போதும்–ஒரு நொடிப் பொழுதும்
துயில் எழ ஒட்டாய்–படுக்கையை விட்டு எழுந்திருக்க ஒட்டுகிறாயில்லை;’
எத்தனையேலும்–க்ஷண காலமும்
பிரிவு ஆற்ற கில்லாய்–(அவளைப்) பிரிந்து தரித்திருக்க மாட்டுகிறாயில்லை;’
ஆல்–ஆ! ஆ!!.
தகவு அன்று–நீ இப்படி இருப்பது உனக்குத்) தகுதியானது’
தத்துவம்–(இஃது) உண்மை’
ஏல் ஓர் எம் பாவாய்

குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
அர்த்திகள் வாசலிலே நிற்க ஒரு அனுபவம் உண்டோ -என்கிறார்கள் –
எங்களைப் போலே ஊர் இசைவும் வேண்டாதே
கீழ் வானம் வெள்ளென்றது என்ற பயமும் இன்றிக்கே
நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின் -என்று இருட்டு தேடவும் வேண்டாதே
பகலை இரவாக்கிக் கொண்டு
விளக்கிலே கிருஷ்ணன் முகத்தைப் பார்த்துக்கொண்டு
படுக்கையிலே கிடக்கப் பெறுவதே
இது என்ன ஐஸ்வர்யம் -என்கிறார்கள் –
இவள் அவனுக்கும் பிரகாசமான விளக்காய் இருக்க-ஓர் நிலை விளக்கு உண்டாவதே –

கோட்டுக் கால் கட்டின் மேல் –
குவலையா பீடத்தின் கொம்பைப் பறித்து கொண்டு வந்து செய்த கட்டில் இறே –
வீர பத்னி ஆகையாலே-இவளுக்கு இது அல்லது கண் உறங்காது –
எங்களைப் போலே ஸ்ரீ கிருஷ்ணனைத் தேடித் போக வேண்டாதே
உள்ளத்துக்குள் கூசாமல் கிடக்கப் பெறுவதே -இது என்ன பாக்கியம் –

மெத்தென்ற –
மதத்தை ஆகிலும்-கட்டில் -ஜாதி பேச்சு-
கிருஷ்ணனுக்காக ஆராதைகளாக வந்து
படுக்கையின் உள்மானம் புறமானம் கொண்டாடிக் கொண்டு படுக்கை பொருந்துவதே –
கண் உறங்குவதே

பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
பஞ்ச விதமான படுக்கையின் மேல் ஏறி -அதாவது
அழகு -குளிர்ச்சி -மார்த்த்வம் -பரிமளம் -தாவள்யம் -ஆக இவை
இவர்களுக்கு மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாய் இறே இருப்பது –
அஞ்சு உருவிட்டுச் செய்த படுக்கை -என்றுமாம் –
பஞ்சாலே செய்த படுக்கை என்னுமாம் –

மேலேறி -நாங்கள் மிதித்து ஏறினால் அன்றோ-நீ படுக்கையிலே ஏறுவது என்கை –

கொத்தலர் பூம் குழல் நப்பின்னை –
திருக் குழலில் ஸ்பர்சத்தாலே கொத்துக் கொத்தாக-அலரா நின்றுள்ள பூவை உடைத்தான குழல்-
காலம் அலர்த்துமா போலே-அவனோட்டை பிரணய கலகத்தால் அலருகை -வாசம் செய் பூம் குழலாள் இறே –

கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா –
கொங்கையைத் தன் மேலே வைத்துக் கிடக்கை –
கொங்கை மேல் தன்னை வைத்து கிடந்த என்னவுமாம் –
பிரணயம் இருக்குமாறு –
மலையை அண்டை கொண்டு ஜீவிப்பாரைப் போலே –
மலராள் தனத் துள்ளான் -என்னக் கடவது இறே —

மலர்மார்பா –
திரு முலைத் தடங்கள் உறுத்துகையாலே
அகன்று இருந்துள்ள மார்பு இவ் விக்ருதியால்
சதைக ரூப ரூபாயா -என்றதோடு விரோதியாதோ
என்னில் விரோதியாது
அது ஹேய குணங்கள் இல்லை என்கிறது
ஆஸ்ரித சம்ஸ்லேஷத்தில் அவிகாரித்வம் அவத்யம் இத்தனை இறே –

வாய் திறவாய் –
உன் கம்பீரமான மிடற்று ஓசையாலே
ஒரு வார்த்தை சொல்லாய்
தன்னால் அல்லது செல்லாதே
உன் புறப்பாடு பார்த்து இருக்கிற எங்களுக்கு
ஒரு வார்த்தையும் அரிதோ –
அவள் புறப்பட ஒட்டாள் ஆகில் -கிடந்த இடத்தே கிடந்தது
மாசுச என்ற உக்தி நேருகையும் அரிதோ –

மைத் தடங்கண்ணினாய் –
இவன் மறுமாற்றம் சொல்லப் புக –
நம்மை ஒழிய தாங்களே எழுப்புவதே என்று
கண்ணாலே வாய் வாய் என்று வாயை நெரித்தாள் –
அழகாலும் பரப்பாலும் கண்ணிலே அகப்பட்டவன்
அக்கடலை கரை கண்டால் இறே நம்மைப் பார்ப்பது-

மை இட்டு எழுதோம் -என்று இருக்கிற எங்களையும்
மை இடப் பண்ணினால் அன்றோ நீ கண்ணுக்கு மை இடுவது –
உன்னுடைய கண்ணில் அழகும் பெருமையும்
எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –
அது இழவுக்கு உடலாவதே –

நீ –
அவனைப் பெறுகைக்கு அடியான நீ-அவனை விலக்கக் கடவையோ –

உன் மணாளனை –
சர்வ ஸ்வாமி-என்கிற பொதுவே ஒழிய-உனக்கே ஸ்வம்மாய்
நீ புருவம் நெறித்த இடத்திலே கார்யம் செய்யும்படி பவ்யனாய் இருக்கும் இருப்பு
எங்களுக்கு உடல் என்று இருந்தோம்
அங்கன் இன்றிக்கே
இது உனக்கே சேஷம் என்று இருக்கிறோம் -என்கிறார்கள் –

எத்தனை போதும் பிரிவாற்றாயாகில் –
அது உன் குறையோ -அவனை ஷண காலமும் பிரிய மாட்டாத
உன்னுடைய பல ஹானியின் குறை அன்றோ –
அகலகில்லேன் இறையும் என்று ஷண கால விஸ்லேஷமும்
பொறுக்க மாட்டாமையாலே
அவனோட்டை நித்ய சம்யோகம் எங்களுடைய லாபத்துக்கு
உடலாகை ஒழிகை விபரீத பலம் ஆவதே –

தத்வம் அன்று தகவு –
தத்வம் -சத்யம்
தகவன்று -தர்மம் அன்று
எங்கள் அறியாமையில் சொல்லுகிறோம் அல்லோம் –
மெய்யே தர்மம் அன்று –

தகவு -தத்துவம் அன்று –
உனக்கு அவனில் வாசி இல்லை என்று இருக்கிறோம்

அதவா
தத்வமன்று
தத்வம் -ஸ்வரூபம் –
உன் ஸ்வரூபத்துக்கும் போராது –

தகவன்று –
உன்னுடைய ஸ்வ பாவத்துக்கும் போராது
உன்னுடைய புருஷகார பாவத்துக்கும் போராது
கிருபைக்கும் போராது –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-9-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 30, 2013

ஆசாரமே போருமோ
செய்கின்ற தொழிலை அறிவிக்கிற நூலைப் பார்த்து
அனுஷ்டானத்துக்கு வேண்டுவது
அறிந்து இருக்க ஒண்ணாதே –
எல்லா நூல்களையும் ஆராய்ந்தவரும்
எல்லா வேதங்களையும் ஆராய்ந்தவரும்
ஆன ஜனகர் -எனபது அன்றோ
இக்குடியில் உள்ளார் படி
மிதிலாதிபதிம் சூரம் ஜனகம் சத்ய விக்ரமம்
நிஷ்டிதம் சர்வ சாஸ்த்ரேஷூ சர்வ வேதேஷூ நிஷ்டிதம் -பால -13-21-
இதற்க்கு தக்க வேதார்த்த தத்வ ஞானம் உண்டாக வேணுமே என்ன –
அதற்கும் ஒரு குறை இல்லை -என்கிறாள் –

————————————————————————————————————————————————————–

பரவாள் இவள் நின்று இராப்பகல்
பனி நீர் நிறக் கண்ணபிரான்
விரவாரிசை மறை வேதியரொலி
வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந்தொறும்தாமரைக்கயம்
தீவிகை நின்றலரும்
புரவார் கழனிகள் சூழ்
திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே

———————————————————————————————————————————————–

பரவாள் இவள் நின்று இராப்பகல்
இவள் அடைவு கெட பேசா நின்றாள் –
இராப் பகல் பேசா நின்றாள் –
இவள் கலவிக்கு வேறு பிரமாணம் தேட வேண்டுமா –
இவள் வார்த்தையே அன்றோ பிரமாணம் –

பனி நீர் நிறக் கண்ணபிரான் –
குளிர்ந்த வடிவையும்
அப்படியே இருக்கும்சீலத்தையும்
உடையவள் –

விரவாரிசை மறை –
விரவு ஆர் இசை மறை –
எங்கும் ஒக்க பரம்பி மிக்கு இருந்துள்ள ஒலியை உடைத்தான வேதம் –
அன்றிக்கே
விரைவார் -எனபது பாடம் ஆயின்
விரை என்று இனிமையாய்
வார் -என்று அதில் மிகுதியாய்
இசைமறை என்று சாம வேதத்தை குறிக்கிறாள் -என்னுதல் –

வேதியரொலி-
வேத ஒளியும்
வேதார்த்தத்தை விசாரம் செய்கின்றவர்களின் ஒலியும்-

வேலையின் நின்று ஒலிப்ப –
கடல் ஒலியைக் காட்டிலும் நின்று ஒலிப்ப –

கரவார் தடந்தொறும் –
முதலை மிக்கு இருந்துள்ள பொய்கை தோறும் –

தாமரைக்கயம் தீவிகை நின்றலரும் –
தாமரையின் திரள் நிலை
விளக்குப் போலே அலர்ந்து நிற்கும் –

கயம் -பெருமை -அல்லது -திரள் –

புரவார் கழனிகள் சூழ் –
தலைத் தரப் பெருக்காய் -இருக்கிற வயல்கள் சூழ்ந்த –
பட்டர் -அவ் ஊரில் பிராமணர்கள் இறுத்து மாய்கிறார்கள் –
இவர் உஊருக்கு சிறப்பு சொல்லுகிறார் அன்றோ –
என்று அருளிச் செய்வர்

திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே பரவாள் இவள் நின்று இராப்பகல்
அவ் ஊரில் உள்ளார் உடைய வேத ஒலியும்
வேத விசாரம் செய்கின்ற ஆரவாரமும்
அவ் ஊரில் இனிமையுமே அன்றோ இவள்
அடைவு கெடச் சொல்லா நிற்பது-

பிரயோக வ்ருத்தி பார்த்து அனுஷ்டானம் மட்டும் போராதே
வேதார்த்த ஞானம் உண்டோ என்ன
சர்வ சாஸ்த்ரேஷூ நிஸ்திதம்-
அதுக்கும் குறை இல்லை என்கிறாள்
திருப் புலியூர் புகழே பேசி
இவளுக்தியே அன்றோ பிரமாணம்
வேத ஒலி எங்கும்பரவி
விரைவார் இனிமை சாம வேத ஒலி
வேத ஒலியும் வேதார்த்த விசார ஒலியும்
சமுத்ரம் ஒலி மிக்கு
குளம் -தாமரை பூத்தது
நெருப்பு போலே
கரவார் தடம் முதலைகள் மிக்கு உள்ள தாமரை கயம்
கயம் பெருமை திரள்
கழனிகள் சூழ்ந்து
பிராமணர் யாக யஞ்ஞம்
கடன் தீர்க்க –
தேவ கடன் அடைக்க யஞ்ஞம்
அத்யாயனம் ரிஷி கடன் அடைத்து
கஷ்டம் பட்டு செய்வதை ஊருக்கு அழகாக ஆழ்வார் சொல்லி பட்டர் அருளுவார்
போக்யதையே வாய் புலற்றிக் கொண்டு இருக்கிறாள் இவள் –

—————————————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-9-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 30, 2013

வெறும் காதல் மட்டும் இருந்தால் போராதே –
ஜனகர் முதலானோர் கர்மங்களைச் செய்ததனாலேயே
சித்தியை அடைந்தவர்கள் -என்னும்படி –
கர்மணைவ ஹி சம்சித்திம் ஆஸ்திதா ஜனகாதயா
லோக சங்கரஹ மேவாபி சம்பச்யன் கர்த்தும் அர்ஹசி-ஸ்ரீ கீதை -3-20-
அன்றோ இக்குடி இருப்பது –
ஆகையால் இதற்க்கு தக்க ஆசாரம் உண்டாக வேணுமே அவனுக்கு -என்ன
ஆனாள் அவ் உஊரில் உள்ளார் உடைய ஆசாரம் இருக்கிறபடி யைக் கேட்கலாகாதோ
என்கிறாள் –

——————————————————————————————————————————————————————–

மடவரல் அன்னை மீர்கட்கு
என் சொல்லிச் சொல்லுகேன் மல்லைச் செல்வ
வடமொழி மறை வாணர்
வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்
தண் திருப் புலியூர்
படவர வணையான் தன் நாமம் அல்லால்
பரவாள் இவளே

————————————————————————————————————————————————————–

மடவரல் –
மடம்வந்த படியை –
இவள் எனக்கு அடங்கி இருந்த படியை -என்றபடி –
அன்றிக்கே
மடம்-எனபது -பற்றிற்று விடாமை -என்னுதல் –

அன்னை மீர்கட்கு –
என் கையில் இவளைக் காட்டித் தந்து இருக்கிற உங்கட்கு –

என் சொல்லிச் சொல்லுகேன் –
இவள் என் வழி வருகின்றிலள் என்னவோ –
இவள் எனக்கு அடங்கினவள் -என்னவோ –

மல்லைச் செல்வவடமொழி மறை வாணர் வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய்-
எல்லை இல்லாத செல்வத்தை உடையராய் –
புராண இதிகாசங்களுக்கும் வேதத்துக்கும்
வியாசபாதம் செலுத்த வல்லரே இருக்கின்ற
பிராமணர்கள் உடைய யாகங்களிலே
நெய்யாலே ஒமம் செய்த நெருப்பில் உண்டான
செறிந்த புகையானது சென்று –

திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் –
ஒரு நிலையான தன்மையை உடைய
ஆகாயத்தில்
தேவ லோகத்தை மறைக்கும் –என்றது
ஸ்வர்க்க்கத்தில் உள்ளவர்களான தேவர்களை
தேவ மாதர்கள் முகம் கண்டு
அனுபவிக்க ஒட்டாமல் மறைக்கும் -என்றபடி –
அன்றிக்கே
போகத்துக்கு தனியாக திரை வழியா நின்றது என்றுமாம்-

தண் திருப் புலியூர் –
நான் கர்மத்தைச் செய்யேன் ஆயின் இந்த மனிதர்கள் கெட்டுப் போவார்கள் –
சங்கர சாதி உண்டாவதற்கும் காரணன் ஆவேன்
இந்த மக்களைக் கொன்றவ னாயும் ஆவேன் –
உத்சீதேயு இமே லோகா ந குர்யாம் கர்மசேத் அஹம்
சங்கரஸ்ய ஸ் கர்த்தா ச்யாம் உபஹன்யாம் இமா பிரஜா -ஸ்ரீ கீதை -3-24-
என்பதே அன்றோ அவன்படியும் –

பட அரவு அணையான் தன் பாதம் அல்லால் இவள் பரவாள் –
தன் ஸ்பர்சத்தாலே மலர்ந்த படத்தைஉடையவனான
திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக உடையவனுடைய
திரு நாமம் அல்லது வாய் புலற்று கின்றிலள் -என்றது
நான் அருகே இருக்க கலவிக் காலத்திலே படுக்கை அழகையே சொல்லி
வாய் புலற்றா நின்றாள் -என்றபடி –
என்னை ஒழிய வேறு ஒன்றிலும் செல்லுவதற்கு அறியாதவள் -என்பாள் -இவள் -என்கிறாள் –

கர்மாநுஷ்டானம் செய்தே
ஜனகர் மோஷம்
இக்குடிக்கு தக்க ஆசாரமுண்டோ என்கிறாள் –
ஆசாரம் உள்ள குலமா –
ஊரில் உள்ளார் ஆசாரம்
தலைவன் எப்படி இருப்பான்
ஹோம புகை வானை மறைக்கும் படி இருக்குமே
நாமம் ஒன்றையே பரவிக் கொண்டு
வடமொழி மறைவாணர்
மடவரல் பவ்யை ஆனவள்
மல்லைச்செல்வம்
நிரவதிக செல்வம் மீமிசை
உடையவர்கள் பிராமணர்கள்
வடமொழி வாணர்
மறை வாணர்
வியாசபதம் செலுத்து -விளக்கி
சம்ஸ்க்ருதம்
வேதம்
இரண்டுக்கும்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் –
வைமாநிகர் விமானத்தில் போவார் அபசரஸ் முகம் மறைக்கும்
பிரளயத்தில் வயிற்றில் மறைத்து கொள்வது போலே புகையும் மறைக்குமாம்
தோழிகள் நாங்கள் அருகே இருக்க
படுக்கை அழகாய் வாய் புலற்றா இருக்கிறாள்

———————————————————————————————————————————————————————

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.