Archive for September, 2020

ஸ்ரீ நாராயணீயம் – தஶகம் 68–ஸ்ரீ கோபிகா கீதம்–ஸ்ரீ கோபிகானாம் ஆஹ்லாத பிரகடனம் —

September 30, 2020

இந்த தசகம் முழுவதும் (ஸ்ரீ க்ருஷ்ணா) என்பதைச் சேர்த்தே சொல்ல வேண்டும்.
ஸ்ரீ பாகவதத்திலுள்ள கோபிகா கீதம் போல் பாட வேண்டும்.-அதே சந்தஸ்ஸில் இங்கும் உண்டு

தவ விலோகநாத்(க்ருஷ்ணா)கோபிகா ஜநா:
ப்ரமத ஸங்குலா: (க்ருஷ்ணா)பங்கஜேக்ஷண |
அம்ருத தாரயா(க்ருஷ்ணா) ஸம்ப்லுதா இவ
ஸ்திமிததாம் தது(க்ருஷ்ணா)ஸ்த்வத் புரோகதா: || 1||

தங்களை நேரில் கண்ட கோபியர்கள் அளவற்ற சந்தோஷத்தினால் திகைத்து நின்றனர்.
அமிர்த மழையால் நனைக்கப் பட்டவர்கள் போல் அசைவற்று நின்றனர்.

—————

ததநு காசந(க்ருஷ்ணா) த்வத் கராம்புஜம்
ஸபதி க்ருஹ்ணதீ(க்ருஷ்ணா) நிர்விஶங்கிதம் |
கநபயோதரே(க்ருஷ்ணா) ஸந்நிதாய ஸா
புலக ஸம்வ்ருதா(க்ருஷ்ணா) தஸ்துஷீ சிரம் || 2||

ஒரு கோபிகை, மயிர்க் கூச்சலுடன், உமது கையை எடுத்து, தனது மார்பில் வைத்துக்கொண்டு நின்றாள்.

———-

தவ விபோ(அ)பரா(க்ருஷ்ணா) கோமலம் புஜம்
நிஜ கலாந்தரே(க்ருஷ்ணா) பர்ய வேஷ்டயத் |
கல ஸமுத்கதம்(க்ருஷ்ணா) ப்ராண மாருதம்
ப்ரதி நிருந்ததீவ(க்ருஷ்ணா)அதி ஹர்ஷுலா || 3||

மற்றொருவள், உமது கையை எடுத்து, தன் மூச்சே நின்றுவிடும்படி தனது கழுத்தில் இறுகச் சுற்றிக் கொண்டாள்.

———

அபகத த்ரபா(க்ருஷ்ணா) காபி காமிநீ
தவ முகாம்புஜாத்(க்ருஷ்ணா) பூகசர்விதம் |
ப்ரதி க்ருஹய்ய தத்(க்ருஷ்ணா)வக்த்ர பங்கஜே
நிதததீ கதா(க்ருஷ்ணா) பூர்ணகாமதாம் || 4||

இன்னொரு கோபிகை, வெட்கத்தை விட்டு, உமது வாயிலிருந்து தாம்பூலத்தைப் பெற்று,
அதை உண்டு, அனைத்தையும் அடைந்து விட்டதாய் நினைத்தாள்.

————–

விகருணோ வநே(க்ருஷ்ணா) ஸம்விஹாய மாம்
அபகதோ(அ)ஸி கா(க்ருஷ்ணா) த்வாமிஹ ஸ்ப்ருஶேத் |
இதி ஸரோஷயா(க்ருஷ்ணா) தாவதேகயா
ஸஜல லோசநம்(க்ருஷ்ணா) வீக்ஷிதோ பவாந் || 5||

இரக்கமில்லாமல் என்னைக் காட்டில் விட்டு விட்டுச் சென்ற உன்னை யாரும் தொடமாட்டார்கள் என்று
ஒரு கோபிகை கண்ணில் நீர் வழிய-ப்ரணய ரோஷத்துடன் -கோபத்துடன் கூறினாள்.

————

இதி முதா(அ)(அ)குலைர்(க்ருஷ்ணா)வல்லவீ ஜநை:
ஸமமுபாகதோ(க்ருஷ்ணா) யாமுநே தடே |
ம்ருது குசாம்பரை: (க்ருஷ்ணா)கல்பிதாஸநே
குஸ்ருணபாஸுரே(க்ருஷ்ணா) பர்யஶோபதா: || 6||

ஆனந்தப் பரவசர்களாகி அக் கோபியர்கள், யமுனைக் கரையில் தமது மேலாக்கினால்
ஆசனம் செய்தார்கள். தாங்களும் அதில் அமர்ந்தீர்கள்.

———

கதி விதா க்ருபா(க்ருஷ்ணா) கே(அ)பி ஸர்வதோ
த்ருத தயோதயா: (க்ருஷ்ணா)கேசிதாஶ்ரிதே |
கதிசிதீ த்ருஶா(க்ருஷ்ணா) மாத்ருஶேஷ்வபீதி
அபிஹிதோ பவாந்(க்ருஷ்ணா) வல்லவீ ஜநை: || 7||

கருணை எத்தனை விதம்? சிலர் அனைவரிடத்திலும், சிலர் தன்னை அண்டியவர்களிடத்திலும் கருணை காட்டுகிறார்கள்.
சிலர், வீடு வாசலை விட்டு அண்டியவர்களிடத்திலும்கூட கருணையற்று இருக்கிறார்கள் என்று உம்மைப் பார்த்து கோபியர் கூறினர்.

———-

அயி குமாரிகா(ராதே) நைவ ஶங்க்யதாம்
கடிநதா மயி(ராதே) ப்ரேமகாதரே |
மயி து சேதஸோ(ராதே) வோ(அ)நுவ்ருத்தயே
க்ருதமிதம் மயா(க்ருஷ்ணா)இத்யூசிவாந் பவாந் || 8||

பெண்களே! கல் நெஞ்சம் படைத்தவன் என்று என்னை சந்தேகப்படாதீர்கள். உங்கள் அதிக அன்பினால் பயந்து,
உங்களுடைய மனம் என்னையே நாட வேண்டும் என்று நான் மறைந்து சென்றேன் என்று அவர்களிடம் கூறினீர்கள்.

அன்பு நிலைத்து இருக்க செய்த செயல்
விஸ்லேஷ விரஹம் அறிய வேண்டுமே

———–

அயி நிஶம்யதாம்(ராதே) ஜீவ வல்லபா:
ப்ரிய தமோ ஜன: (ராதே) நேத்ருஶோ மம |
ததிஹ ரம்யதாம்(ராதே) ரம்யயாமிநீஷு
அநுபரோதமிதி(க்ருஷ்ணா)ஆலபோ விபோ || 9||

உயிரினும் மேலான கோபியர்களே! உங்களைவிட என்னிடம் அன்பு கொண்டவர் எவரும் கிடையாது.
ஆகையால், நிலவொளி வீசும் இந்த இரவில், என்னுடன் தடையின்றி விளையாடுங்கள் என்று கூறினீர்.

————

இதி கிராதிகம்(க்ருஷ்ணா) மோதமேதுரை:
வ்ரஜ வதூ ஜநை: (க்ருஷ்ணா)ஸாகமாரமந் |
கலித கௌதுகோ(க்ருஷ்ணா) ராஸ கேலநே
குரு புரீ பதே(க்ருஷ்ணா) பாஹி மாம் கதாத் || 10||

தங்கள் வார்த்தையால் மிகுந்த ஆனந்தம் அடைந்த கோபியர்களுடன் யமுனைக் கரையில் விளையாடினீர்கள்.
குருவாயூரப்பா! தாங்கள் என்னை நோய்க் கூட்டத்திலிருந்து காத்து அருள வேண்டும்.

—————–——————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -67–ஸ்ரீ– கிருஷ்ண திரு தானம் -ததா புன ப்ரத்யஷீ பூய கோபிகா ப்ரீணனம்

September 30, 2020

ஸ்புரத் பரா நந்த ரஸாத் மகேந த்வயா சமா சாதித போக லீ லா
அஸீமம் ஆநந்த பரம் ப்ரபந்நா மஹாந்த மாபுர் மத மம்பு ஜாஷ்ய –1–

பரமானந்த ரூபியான தங்களுடன் காதல் லீலைகளில் மூழ்கி இருந்த கோபியர்கள்
அளவற்ற ஆனந்தம் அடைந்ததால் மிகுந்த கர்வம் கொண்டார்கள் -நமக்கு பாடம் புகற்றவே இந்த லீலை

———-

நிலீ யதே அசவ் மயி மய்ய மாயம் ரமா பதிர் விஸ்வ மநோபி ராம
இதி ஸ்ம ஸர்வா கலிதாபி மாநா நிரீஷ்ய கோவிந்த் திரோஹிதோ அபூ –2-

உலகிலேயே அழகான கண்ணன் என்னிடம் மட்டுமே அன்பு பூண்டு இருந்தான் என்று
ஒவ்வொரு கோபியரும் நினைத்தார்கள் –
அதனால் மிகவும் கர்வம் கொண்டவர் ஆனார்கள் –அத்தை அறிந்த கோவிந்தனான
தேவரீர் அந்த நொடியிலே மறைந்து போனீர்கள் –

————-

ராதா பிதாம் தாவத் அஜாத கர்வாம் அதி ப்ரியாம் கோப வதூம் முராரே
பவா நுபாதாய கதோ விதூரம் தயா ஸஹ ஸ்வைர விஹார காரீ –-3-

ராதை என்ற கோபி மட்டும் கர்வம் இல்லாமல் தங்கள் இடம் மிகுந்த அன்பு கொண்டாள் –
அவளை மட்டும் அழைத்துக் கொண்டு வெகு தூரம் சென்று அவளுடன் லீலா ரசம் அனுபவித்தீர் –

————

திரோ ஹிதே அத த்வயி ஜாத தாபா சமம் சமேதா கமலாய தாஷ்ய
வநே வநே த்வாம் பரி மார்க யந்த்யோ விஷாதம் ஆபுர் பகவன் னபாரம் –4-

தாங்கள் மறைந்ததால் கோபியர் மிகவும் துயரம் அடைந்தனர் -அனைவரும் ஓன்று கூடி
கானகம் முழுவதும் தங்களைத் தேடினார்கள் –
தாங்கள் கிடைக்காததால் வருத்தம் அடைந்தனர் –

———-

ஹா ஸூத ஹா சம்பக கர்ணி கார ஹா மல்லிகே மாலதி பால வல்ய
கிம் வீஷீதோநோ ஹ்ருதயைக சோர இத்யாதி தாஸ் த்வத் பிரவணா விலேபு –-5-

ஹா ஸூத-மா மரமே -செண்பக மரமே -கர்ணி கார மரமே – மல்லிகைக் கொடியே -மாலதியே –
இதயம் திருடிய கள்ளனான எங்கள் கண்ணனைக் கண்டீர்களா என்று மரங்களையும் கொடிகளையும் கேட்டு
கவலையுடன் புலம்பினார்கள் –

———-

நிரீ ஷிதோ அயம் சகி பங்க ஜாஷ புரோ மமேத் யாகுல மால பந்தீ
த்வாம் பாவநா சஷுஷி வீஷ்ய காசித் தாபம் ஸகீ நாம் த்வி குணீ சகார –6-

கோபிகை ஒருத்தி கற்பனையில் தங்களைக் கண்டு மற்ற கோபியர் இடம் கண்ணனை
நான் எதிரில் பார்த்தேன் என்று கூற
அத்தைக் கேட்ட மற்ற கோபியர்கள் அதிகம் துன்பம் அடைந்தார்கள் -பாவனா பிரகர்ஷம் ஒருத்திக்கு

—————

த்வ தாத்மிகாஸ்தா யமுனா தடாந்தே தவானு சக்ரு கில சேஷ்டிதாநி
விசித்ய பூயோ அபி ததைவ மாநாத் த்வயா விமுக்தாம் தத்ரு ஸூஸ் ச ராதாம் –7-

அவர்கள் எல்லாரும் எப்பொழுதும் தங்களையே நினைத்து தங்கள் சேஷ்டிதங்களைப்
பற்றியே பேசி வந்தார்கள் -அநு காரம் செய்து தரித்தார்கள்
அப்போது ராதையைத் தனியே கண்டனர் – அவளு-மாநாத்- கர்வம் கொண்டதால்
அவளையும் விட்டு மாயையால் மறைந்தீர்கள் –

——–

தத சமம் தா விபநே சமந்தாத் தமோ வாதாரவதி மார்க யந்த்ய
புனர் விமிஸ்ரா யமுனா தடாந்தே ப்ருசம் விலே புஸ் ச ஜகுர் குணாம்ஸ் தே –8-

அனைவரும் ராதையுடன் கூட இருட்டும் வரை கானகத்தில் தேடிமார்கள் –
மனம் கலங்கி மீண்டும் யமுனைக் கரைக்கு வந்து புலம்பினார்கள்
தங்களுடைய கல்யாண குணங்களை பாடினார்கள் -அவனைப்பற்றி பாட அவனே வருவான்

———

ததா வ்யதா சங்குல மானஸா நாம் வ்ரஜாங்க நாநாம் கருணைக ஸிந்தோ
ஜகத் த்ரயீ மோஹன மோஹ நாத்மா த்வம் ப்ராது ராஸீர் அயி மந்த ஹாஸீ--9-

கருணைக் கடலே துன்பம் அடைந்த மனத்தை உடைய கோபியரின் முன் மன்மதனையும்
மயங்கச் செய்யும் அழகுடன்-ஸாஷாத் மன்மத மன்மதன் அன்றோ –
மூ உலகங்களையும் மயக்கும் மந்த ஹாஸத்துடனும் தங்கள் தோன்றினீர்கள் –

——–

சந் நிக்த சந் தர்சன மாத்ம காந்தம் த்வாம் வீஷ்ய தன்வய ஸஹஸா ததா நீம்
கிம் கிம் ந சக்ரு பிரமதாதி பாராத் ச த்வம் கதாத் பாலய மாருதேச –10-

தங்களை நேரில் கண்ட அப் பெண்கள் மகிழ்ச்சியை வித விதமாக வெளிப்படுத்தினார்கள் –
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

கர்வம் வந்தால் மறைவான்
உணர்ந்தபின் தனித்தனியே அனுகரிக்க ராதையைக் கண்டார்கள் அடிச்சுவடு காணலாம்
அனைவரும் ஓன்று கூடி பாட அவனை அடையலாம்

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -66–ஸ்ரீ கோபீ ஜன ஆஹ்லாதனம் –

September 30, 2020

உபயாதா நாம் ஸூத்ருசாம் குஸூமாயுத பாண பாத விவசா நாம்
அபி வாஞ்சிதம் விதாதும் க்ருத மதிரபி தா ஜகாத வாம மிவ –1-

குஸூமாயுத-மலர்க்கணை -மன்மதன்

தங்கள் அருகே நின்ற கோபிமார்கள் மயங்கி நின்றார்கள் –
அவர்கள் விருப்பத்தைப் பற்றித் தெரிந்து இருந்தும் நேர் மாறாகப் பேசினீர்கள் –

————-

ககந கதம் முனி நிவஹம் ஸ்ரா வயிதும் ஐகித குல வதூ தர்மம்
தர்ம்யம் கலு தே வசனம் கர்ம துநோ நிர்மலஸ்ய விஸ்வாஸ்யம் –2-

வானத்தில் கூடி இருக்கும் முனிவர்களும் -உலக மக்களும் கேட்பதற்காக குடும்பப் பெண்களின்
தர்மத்தைப் பற்றி அப்பெண்களுக்கு எடுத்துக் கூறினீர்கள் –
தர்மம் நிறைந்த அச் சொற்களைக் கடைப் பிடிக்க வேண்டும் –
உம்முடைய செய்கைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது –நிர்மலஸ்ய–நீ எந்தச் செயல்கள் செய்தாலும் நிர்மலமாகுமே-அனைவரும் சரீர பூதர்களே

—————

ஆகர்ண்ய தே பிரதீ பாம் வாணீம் ஏணீ த்ருஸ பரம் தீநா
மா மா கருணா ஸிந்தோ பரி த்யஜேத் யதி சிரம் விலே புஸ் தா –3-

ஏணீ த்ருஸ–மான் போன்ற மருட்சி கொண்ட கண்கள் கொண்ட

நேர் மாறான தங்கள் வார்த்தைகளைக் கேட்ட கோபியர் மிகுந்த சோகம் அடைந்தனர் –
கருணைக் கடலே அடியோங்களைப் புறக் கணிக்காதீர்கள் என்று புலம்பினார்கள் –

————-

தாஸாம் ருதி தைர் லபிதை கருணா குல மாநஸோ முராரே த்வம்
தாபிஸ் சமம் ப்ரவ்ருத்தோ யமுனா புலி நேஷு காம ரபி ரந்தும் –-4-

அனுபவ உறுதி உள்ளதா சோதித்துப் பார்த்தான் முன்பு

முரனைக் கொன்றவன் அவர்கள் புலம்பிக் கொண்டு அழுவதைப் பார்த்த தாங்கள்
கருணை கொண்டீர்கள் –
யமுனைக் கரையில் மணல் குன்றுகளில் அவர்களுடன் விளையாடினீர்கள் –

———-

சந்த்ர கரஸ் யந்தல ஸத் ஸூந்தர யமுநா தடாந்த வீதீ ஷு
கோபீ ஜன உ த்தரீயைர் ஆபாதித ஸம்ஸ்தரோ ந்யஷீ தஸ் த்வம் –5-

நில ஒளி வீசும் யமுனைக் கரையில் மணல் குன்றுகளில் கோபிகள் மேல் ஆடையினால்
தங்களுக்கு ஆசனம் அமைத்தார்கள் -அதில் தங்கள் அமர்ந்தீர்கள் –

———

ஸூ மதுர நர்மாலபநை கர ஸம் க்ரஹனைஸ் ச சும்ப நோல்லாஸை
காடா லிங்கந சங்கைஸ் த்வம் அங்கநா லோகம் ஆகுலீ சக்ரு ஷே –6-

கைகளைப் பிடித்தும் முத்தம் இட்டும் கட்டி அணைத்தும் இனிமையைப் பேசியும்
அந்த கோபிகைகள் மனங்களை மயக்கி அவர்களை மகிழ்வித்தீர்கள் –

————

வாஸோ ஹரண திநே யத் வாஸோ ஹரணம் ப்ரதி ஸ்ருதம் தாஸாம்
ததபி விபோ ரஸ விவஸ ஸ்வாந்தா நாம் காந்த ஸூப்ருவாம் அத தா –7-

முன்பு ஆடைகளைக் கவர்ந்த போது தங்கள் கொடுத்த வாக்கின் படி தங்கள் செய்கையால்
மனம் கலங்கிய அந்தப் பெண்களின் ஆடைகளை மீண்டும் கவர்ந்தீர்கள் –

———

கந்த லித கர்ம லேஸம் குந்த ம்ருதுஸ் மேர வக்த்ர பாதோ ஜம்
நந்த ஸூத த்வாம் த்ரி ஜகத் ஸூந்தரம் உப கூஹ்ய நந்திதா பாலா –8-

நந்தனின் புத்திரனே குந்த மலர் போல் மந்தஹாசம் செய்தீர் -தாமரை போன்ற தங்கள் திரு முகம்
சிறு வியர்வைத் துளிகளால் நிறைந்து இருந்தது – மூ உலகிலும் அழகு வாய்ந்த தங்களை
அப் பெண்கள் ஆலிங்கனம் செய்து கொண்டார்கள் –புவந ஸூ ந்தரன் இவனே

————

விரஹேஷ் வங்கார மய ஸ்ருங்கார மயஸ் ச சங்கமே ஹி த்வம்
நிதார மங்கா ரமயஸ் தத்ர புனஸ் சங்கமே அபி சித்ரமிதம் –9-

தங்களைப் பிரியும் போது நெருப்பைப் போல் தாபம் அளிப்பவராயும் – சேரும் போது
ஸ்ருங்காரமாகவும் இருப்பீர்கள்
ஆனால் இப்போதோ சேர்க்கையிலும் அளவில்லாத ஆனந்தம் அளிப்பவராய் இருக்கிறீர்கள் -ஆச்சர்யம் –

அங்காரா மயம் கொள்ளிக்கட்டை

நிதார மங்கா ரமயஸ்-நிதாரம் அங்க அரமயஸ்–இயற்கையாகவே இருக்க கோபிகள் சங்கத்தால் ஆனந்தம் சொல்ல வேண்டுமோ

——–

ராதா துங்க பயோதர சாது பரீ ரம்ப லோலு பாத்மா நம்
ஆராதயே பவந்தம் பவன புராதீச சமய சகல கதான் –10-

உயர்ந்த கொங்கைகளை யுடைய ராதையைத் தழுவ எண்ணம் கொண்ட தங்களையே தொழுகிறேன்
அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பன்

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -65–கோபீனாம் பகவத் சமீபம்-

September 30, 2020

ஐந்து சதகம் இது தொடங்கி இங்கு
ராச பஞ்சகம் -29-அத்யாயம் தொடங்கி ஸ்ரீ மத் பாகவதம்

கோபீ ஜநாய கதிதம் நியமா வசாநே
மாரோத் சவம் த்வமத சாதியிதும் ப்ரவ்ருத்த
சாந்த்ரேண ஸாந்த்ர மஹஸா சிசி ரீக்ருதாஸே
ப்ரா பூரயோ முரலிகாம் யமுனா வநாந்தே –-1-

நியமா வசாநே–காத்யாயினி பூஜை முடிவில் தாங்கள் முன்பே கோபியர் இடம் கூறிய படியே
நில ஒளியில் —முரலிகாம் யமுனா வநாந்தே –யமுனைக் கரையில் குழலூதினீர்கள் –

பாவை நோன்பு –குறுந்திடை கூறை பரித்து-மாரோத் சவம் -காதல் உத்சவம் செய்வதாக வாக்கு

பக்தி ஸ்ரத்தை பெண் பால் இயற்கையாகவே அவர்களுக்கு -பிஞ்சாய்ப் பழுத்தாள்

சாந்த்ரேண ஸாந்த்ர மஹஸா-அடர்த்தியான அமுதைப் பொழியும் நிலவு ஒளியில்

சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்*  செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக* 
குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக்*  கோவிந்தன் குழல்கொடு ஊதின போது*
பறவையின் கணங்கள் கூடு துறந்து*  வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்* 
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்*  கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே.* 

ப்ராயஸ் ததா3ஹ்வாந விதவ்4 நியோக்தும் ப்ரக்3ருஹ்ய வேணும் ப்ரதிபந்ந தூ3த்யம் 
ந்யேவஷயத் குட்மலிதே ஸரிலம் பி3ம்பா3த4ேர ஸூசித சித்தராக (-ஸ்ரீ யாதவாப்யுதயம்–8-45)

தூது செய்யும் திறங்கொண்ட தன் குழலைக் கை யெடுத்துக் காதலரை அழைத்து வரும் காரியத்தில் விடுக்கத்
தன் காதலினை வெளிப் படுத்தும் கருத்துடனே செம் பவள அதரத்தை அழகுடனே அக் குழலில் வைத்தனனே !
தூது செய்யும் தன் புல்லாங்குழலை எடுத்து அவர் களை அழைக்கும் நோக்குைடையவனாகி தன் சித்தத்திலே உள்ள
ராகத்தை (காதலை ) தெரிவிப்பது போல் ராகமுள்ளதான ( சிவந்ததான) திருப்பவளத்தை மூடிக் கொண்டு அதில் அப்புல்லாங்குழலை அமத்தினான்.

—————-

ஸம் மூர்ச நாபிர் உதித ஸ்வர மண்டலாபி
ஸம் மூர்ச யந்தம் அகிலம் புவனாந்தராலம்
த்வத் வேணு நாத முப கர்ண்ய விபோ தருண்யஸ்
தத் சாத்ருசம் கமபி சித்த விமோஹ மாபு –2-

தங்கள் புல்லாங்குழலில் இருந்து கிளம்பிய ஏழு ஸ்வரங்களால் உண்டான நாதம்
உலகம் முழுவதையும் மயங்கச் செய்தது –
அதைக் கேட்ட கோபியர்களும் சொல்ல ஒண்ணாத மதி மயக்கம் கொண்டனர்-

புல்லாங்குழல் ஊதும் கண்ணன் -பாபங்கள் அனைத்துமே ஊதித் தள்ளுவான்

——-

தா கேஹ க்ருத்ய நிரதாஸ் தனய ப்ரஸக்தா
காந்தோப சேவந பராஸ் ச ஸரோரு ஹாஷ்யா
சர்வம் விஸ்ருஜ்ய முரளீ ரவ மோஹி தாஸ்தே
காந்தார தேசம் அயி காந்ததநோ சமேதா –3-

தா கேஹ க்ருத்ய நிரதாஸ்–வீட்டு வேளையில் ஈடு பட்டுக் கொண்டும் —தனய ப்ரஸக்தா-குழந்தைகளை கவனித்துக் கொண்டும்
காந்தோப சேவந பராஸ் ச-கணவனுக்கு பணிவிடை செய்து கொண்டும் இருந்த கோபிமார்கள்
தங்கள் குழலோசையைக் கேட்டதும் மனம் மயங்கி எல்லாவற்றையும் விட்டு விட்டு
உம்மைத் தேடி ஓடி வந்தார்கள் –

ராஸ லீலையில் திருமணமான  கோபிகளும் ஈடுபட்டார்கள்-அனைவருக்கும் அந்தராத்மா இவனே

கன்னிப்பெண்கள் –ஆன்மிகம் அறியாத மக்கள் –ஸரோரு ஹாஷ்யா–தாமரைக்கண்கள் கொண்ட பெண்கள்
திருமணமான பெண்கள் –முன்பே பக்குவம் அடைந்த
ராதை போல் கண்ணனே எல்லாம் -ஆராதிதோ -வார்த்தை பாகவதம் ராதை ஸூ சகம் –வழி வழி ஆட் செய்யும் பக்தர்கள்
மூவருக்கும் ஒரே மாதிரி பேர் ஆனந்தம்-

————–

காஸ்சிந் நிஜாங்க பரி பூஷண மாத தா நா
வேணு ப்ரணாத முப கர்ண்ய க்ருத அர்த்த பூஷா
த்வாம் ஆகதா நநு ததைவ விபூஷி தாப்ய
ஸ்தா ஏவ ஸம் ருரு சிரே தவ லோச நாய–4-

சில கோபியர் பாதி நகைகளைப் போட்டுக் கொண்டும் பாதி அலங்கரித்துக் கொண்டும் ஓடி வந்தார்கள் –
நன்கு அலங்கரித்துக் கொண்டவர்களை விட பாதி அலங்கரித்துக் கொண்டு வந்தவர்களே
தங்களுக்கு மிக அழகாகத் தெரிந்தனர் –

அர்த்த பூஷா–பாதி அலங்காரம் -பக்தியையே பார்ப்பவன் -உடல் அலங்காரம் பார்க்காதவன்

————-

ஹாரம் நிதம்ப புவி காசந தாரயந்தீ
காஞ்சீம் ச கண்ட புவி தேவ சமாகதா த்வாம்
ஹாரித்வம் ஆத்ம ஜக நஸ்ய முகுந்த துப்யம்
வ்யக்தம் பபாஷ இவம் முக்த முகீ விசேஷாத் –5-

ஒரு பெண் தன் கழுத்தில் ஒட்டியாணத்தையும் இடுப்பில் ஹாரத்தையும் மாற்றி அணிந்து கொண்டு வந்தாள்
அவள் தங்களோடு பேசியது மனதை மயக்கும் தன் இடை அழகைக் கூறுவது போல் தோன்றியது –

ஆத்ம ஜக நஸ்ய முகுந்த துப்யம்-இவனையே ஒட்டியாணம்
கூடாரை –சூடகமே -இத்யாதிகள் கண்ணனே சூடகமும் என்று சொல்ல வில்லையே-ஏவகார சீமாட்டி

————

காசித் குஸே புனர் அஸஞ்ஜித கஞ்சு லீகா
வ்யாமோஹத பரவ தூபிர் அலஷ்ய மாணா
த்வாம் ஆயயவ் நிருபம ப்ரணயாதி பார
ராஜ்ய அபிஷேக விதயே காலஸீத ரேவ –6-

மற்ற ஒரு பெண் அதிக அன்பினால் ரவிக்கை அணிய மறந்து மற்றவர்களுக்குத் தெரியாமல்
ஓடி வந்தாள் –அவள் ஓடி வந்து தங்களுக்கு அன்பு ஆகிற பாரத்தை அபிஷேகம் செய்ய
இரு குடங்களை எடுத்து வந்தது போலத் தோன்றியது –

சந்நியாசிகள் இன்றும் ராச லீலை பாராயணம் வைராக்யம் வளர
தெய்வீகமான ஸ்ருங்காரம் -கேட்க கேட்க உலகியல் காமம் போகுமே

———–

காஸ் சித் க்ருஹாத் கில நிரேதும் அபார யந்த்யஸ்
த்வாமேவ தேவ ஹ்ருதயே ஸூ த்ருடம் விபாவ்ய
தேஹம் விதூய பரசீத் ஸூக ரூப மேகம்
த்வாமா விசன் பரமிமா நநு தன்ய தன்யா –7-

கணவர்களாலும் வீட்டில் உள்ள வர்களாலும் தடுக்கப்பட்ட சில பெண்கள் தங்களை
மனதால் தியானம் செய்தார்கள் –
அவர்கள் உடலை விட்டு ஆனந்த வடிவமான உம்மை அடைந்தனர் –
அவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள் ஆனார்கள் –

சிந்தையந்தி போல் நிலப்படியிலே வினைகள் கழிந்து தேகம் விட்டு ஸ்ரீ வைகுண்டம் அடைந்தார்கள்

—————

ஜாராத்மநா ந பரமாத்ம தயா ஸ்ம ரந்த்யோ
நார்யோ கதா பரம ஹம்ஸ கதிம் ஷணேந
தம் த்வாம் ப்ரகாஸ பரமாத்ம தநும் கதஞ்சித்
சித்தே வஹந் தம்ருதம் அஸ்ரம்  அஸ்நு வீய –8-

அந்தப் பெண்கள் எவரும் தங்களைப் பரமாத்மா என நினைத்து வரவில்லை –
காதலனாகவே நினைத்து வந்தனர் –
ஆயினும் துறவிகள் அடையக் கூடிய முக்தியை நொடியில் அடைந்தனர் –
அடியேனும் அதே போல் பரமாத்ம ஸ்வரூபமான தங்களை
மனதில் தியானம் செய்து மோக்ஷத்தை அடைவேனோ –

————–

அப்யாகதாபி ரபிதோ வ்ரஜ ஸூந்தரீபிர்
முக்த ஸ்மிதார்த்ர வதந கருணா வலோகீ
நிஸ் ஸீம காந்தி ஜலதிஸ் த்வம வேஷ்ய மானோ
விஸ்வைக ஹ்ருத்ய ஹர மே பவநேச ரோகா ந் –9–

கருணா கடாக்ஷத்தாலும் மந்தஹாசத்தாலும் அழகாய் விளங்கும் தங்களைக் கோபிமார்கள்
பார்த்துக் கொண்டே இருந்தார்கள்
உலகோர் கண்ணையும் நெஞ்சையும் கவரும் தாங்கள் அடியேனை ரக்ஷித்து அருள வேணும் –

விஸ்வைக ஹ்ருத்ய-கண்டவர் மனம் வழங்கும் –உள்ளம் கவர்ந்த அமுதன் கொண்டல் வண்ணன்

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -64–ஸ்ரீ கோவிந்தா பட்டம் அபிஷேகம்-

September 30, 2020

பட்டாபிஷகம் இழந்த யதுகுலத்தில் -பிறந்தவன்
காம் விந்ததே பசுக்களைக் காத்தவன்
உப ஜாதி உபேந்த்ர வஜ்ர மீட்டர் சந்தஸ்

ஆலோக்ய சைல உத் தரணாதி ரூபம் ப்ரபாவம் உச்சைஸ் தவ கோப லோகா
விஸ்வேஸ்வரம் த்வாம் அபி மத்ய விஸ்வ நந்தம் பவஜ் ஜாதகம் அன்வ ப்ருஸ் சந் –1-

மலையைத் தூக்கியது முதலிய தங்கள் மஹிமையைப் பார்த்த கோபர்கள் தங்களை
உலகிற்கு எல்லாம் நாயகன் என்று உணர்ந்தனர் –
நந்தகோபன் இடம் தங்கள் ஜாதகத்தின் பலனைக் கேட்டார்கள் -பிறப்பின் ரஹஸ்யம்

————-

கர்கோதிதோ நிர் கதிதோ நிஜாய வர்காய தாதேந தவ ப்ரபாவ
பூர்வ அதிகஸ் த்வய் யநுராக ஏஷாம் ஐதிஷ்ட தாவத் பஹுமாந பார –2-

அவர்கள் இடம் நந்தகோபர் முன்பு கர்க்க முனிவர் கூறியவற்றைச் சொன்னார் –
அவர்கள் தங்கள் மேல் அன்பும் பாசமும் கொண்டனர் –

பிதராம் ரோசயமாஜ -அவன் தேர்ந்து இடத்து அவதரிக்கிறார்

———-

ததோ அவமாந உதித தத்த்வ போத ஸூராதி ராஜ ஸஹ திவ்ய கவ்யா
உபேத்ய துஷ்டாவ ச நஷ்ட கர்வ ஸ்ப்ருஷ்ட்வா பதாப்ஜம் மணி மௌலிநா தே –3-

தோல்வி அடைந்த இந்திரன் கர்வத்தை விட்டு தங்களைப் புகழ்ந்து ஸ்துதித்து
காமதேனுவைத் தங்களுக்குப் பரிசாக அளித்தான்

திவ்ய கவ்யா-அடியார்கள் மூலம் அவனை அடைய-காமதேனு மூலம் இந்திரன் கிட்டினான்-காமதேனுவின் வாலைப் பிடித்து வந்தான்

பதாப்ஜம் மணி மௌலிநா தே–திருமுடியை திருவடியில் வைத்தான் –

——————

ஸ்நேஹஸ் நுதைஸ் த்வாம் ஸூரபி பயோபிர்
கோவிந்த நாமாங்கிதம் அப்ய ஷிஞ்சித்
ஐராவதோ பாஹ்ருத திவ்ய கங்கா
பாதோபிர் இந்த்ரோ அபி ச ஜாத ஹர்ஷ-4-

காம் விந்தத்தி பசுக்களைக் காத்து கோவிந்த பட்டாபிஷேகம்
திவ்ய கங்கா–ஆகாச கங்கை தீர்த்தம்

காமதேனு என்ற அந்தப் பசு அன்பால் பொங்கிய பாலைச் சுரந்து தங்களுக்கு கோவிந்தன் என்ற
திரு நாமம் சூட்டி திரு அபிஷேகம் செய்தது –
இந்திரனும் ஐராவதம் கொண்டு வந்த கங்கா தீர்த்தம் கொண்டு திரு அபிஷேகம் செய்தான் –
தங்கள் திருவடித் தாமரைகளில் தலை வைத்து வணங்கினான் –

—————-

ஜகத் த்ரயே ஸே த்வயி கோகுலே ஸே ததா அபி ஷிக்தே சதி கோப வாட
நாகே அபி வைகுண்ட பதே அப்ய லப்யாம் ஸ்ரியம் ப்ரபேதே பவத ப்ரபாவாத்–5-

கோப வாட-ஆயர் பாடி
ஸ்ரியம் ப்ரபேதே பவத ப்ரபாவாத்-எங்கும் இல்லா செல்வம் -சீர் மல்கிற்றே -நீங்காத செல்வம் நிறைந்ததே

பல ஸ்ருதி ஸ்லோகம் இது

தங்களுக்கு கோவிந்தன் என்ற பட்டாபிஷேகம் செய்ததும் திரு ஆயர்பாடியில்
ஸ்ரீ வைகுண்டத்திலும் ஸ்வர்க்கத்தில் கிடைக்காத ஐஸ்வர்யம் நிறைந்தது –

ஆயர் –ஜீவர்
கல் மழை -தாப த்ரயம் –
கோவர்த்தன கிரி –குணங்கள் தான் கோவர்த்தனம் –பாஹி பாஹி -திருவடி பிடிக்க ரக்ஷிக்கப் படுகிறோம்
குணம் என்னும் குன்று ஏறி நின்றான் அந்தோ-ஸ்வரூபம் விட குண உபாஸ்யம் -ஆகவே அதற்குப் பூஜை பண்ணச் சொன்னான்

குன்று குடையாய் எடுத்தான் குணம் போற்றி

————

கோவிந்த பட்டாபிஷேகம் முடிந்த பின்பு
மேல் ஐந்து ஸ்லோகங்களும்
வருண லோகத்தில் இருந்து -நந்தகோபரை மீட்ட சரித்திரம்

கதா சிதந்தர்ய முநம் ப்ரபாதே ஸ்நாயன் பிதா வாருண பூருஷே ண
நீதஸ் தமா நேது மகா புரீம் த்வம் தாம் வாருணீம் காரண மர்த்ய ரூப –6-

ஒரு நாள் தங்கள் தந்தை ஏகாதசி விரதம் இருந்து துவாதசி விடியல் காலை என்று
நினைத்து இரவில் யமுனையில் நீராடினார்
வருணனின் வேலையாளாந ஒரு அசுரன் அவரை இழுத்துச் சென்றான்
உலகம் நன்மைக்காக திரு அவதாரம் செய்த தாங்கள் உடனே வருண லோகம் சென்றாய் –

—————

ச ஸம் பிரமம் தேந ஜலதி பேந பிர பூஜிதஸ் த்வம் ப்ரதி க்ருஹ்ய தாதம்
உபாகதஸ் தத் க்ஷண மாத்ம கேஹம் பிதா அவதத் தச் சரிதம் நிஜேப்ய –-7-

தங்களைக் கண்ட வருணன் பக்தியுடன் தொழுது தங்களுக்கு பூஜை செய்தான் –
அதே நொடியில் தாங்கள் நந்த கோபரை
அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றீர்கள்–நந்த கோபரும் தன் சுற்றத்தார் இடம்
அதைப் பற்றிக் கூறினார் —

———

ஹரிம் விநிஸ் சித்ய பவந்த மேதான் பகத் பதா லோகந பத்த த்ருஷ்ணாந்
நிரீஷ்ய விஷ்ணோ பரமம் பதம் தத் துராபம் அந்யைஸ் த்வம் அதீத்ரு சஸ்தான் –8-

ஆயர்கள் தங்களை ஸ்ரீ ஹரியே என்று நிச்சயித்து தங்கள் இருப்பிடமான ஸ்ரீ வைகுண்டத்தை
காண விரும்பினார்கள்
எங்கும் நிறைந்து இருக்கும் தாங்கள் அவர்களுக்கு ஸ்ரீ வைகுண்டத்தைக் காண்பித்து அருளினீர்களே –

——–

ஸ்புரத் பரா நந்த ரஸ ப்ரவாஹ ப்ர பூர்ண கைவல்ய மஹா பயோதவ்
சிரம் நிமக்நா கலு கோப ஸங்காஸ் த்வயைவ பூமன் புனருத்த்ரு தாஸ்தே –9-

ஸ்ரீ வைகுண்டத்தைக் கண்ட கோபர்கள் ஆனந்த நிலையை அடைந்து கைவல்யம் ஆகிற
மோக்ஷம் என்கிற சமுத்திரத்தில் மூழ்கினார்கள்
அவர்களை மீண்டும் உலக நிலைக்கு உணர்வு வரச் செய்து அழைத்து -வந்தீர்கள் –

ப்ர பூர்ண கைவல்ய மஹா பயோதவ்-கொள்ள மாளா இன்ப வெள்ளம்

——–

கர பத ரவ தேவம் தேவ குத்ராவதாரே நிஜ பதம் அந வாப்யம் தர்சிதம் பக்தி பாஜாம்
ததிஹ பஸூ பரூபீ த்வம் ஹி ஸாஷாத் பராத்ம பவன புர நிவாஸின் பாஹி மாமா மயேப்ய –10-இது மாலினி மீட்டர்

யாராலும் அடைய முடியாத ஸ்ரீ வைகுண்ட லோகத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல் காட்டி அருளினீர்கள் –
எந்த அவதாரத்தில் இல்லாத இடையன் வேஷம்
பூண்ட இந்த அவதாரத்தில் ப்ரத்யக்ஷமாக காட்டி அருளினீர்களே –
அடியேனை ஸ்ரீ குருவாயூரப்பா ரக்ஷித்து அருள வேணும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -63–ஸ்ரீ கோவர்தன உத்தாரணம்-

September 30, 2020

மாலினி -2-3-4-5-
துத்த விலம்பிதம் -1-6-7-8-9-10

வெண் கொற்றக்கொடை பரதன் கவிக்க பெருமாள் பட்டாபிஷேகம்
கோவிந்த பட்டாபிஷேகம் -கண்ணனே பிடிக்க
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி

தத் ருசிரே கில தத் க்ஷணம் அஷதஸ் தநித ஜ்ரும்பித கம்த திக் தடா
ஸூஷ மயா பவ தங்க துலாம் கதா வ்ரஜ பதோ பரி வாரி தராஸ் த்வயா –1-

பவ தங்க துலாம்-திருமேனி போல் -உன்னைப் போல் என்று சொல்லாமல்-ஸூஷ மயா
நிறத்தில்-ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து போல்

வாரி தராஸ்-தண்ணீர் தாங்கிய மேகம்

அப்பொழுது கோகுலத்திற்கு மேல் எங்கும் கரு மேகங்கள் சூழ்ந்தன. அந்த மேகங்கள் தங்களது
திருமேனியைப் போல் காணப் பட்டன. வானில் தொடர்ந்து உண்டான இடி முழக்கத்தால் அனைத்து
திசைகளும் நடுங்கின. -இவை யனைத்தையும் தாங்கள் பார்த்தீர்கள் அல்லவா?

———-

விபுல கரக மிஸ்ரைஸ் தோய தாரா நிபாதைர் திசி திஸி பஸூ பாநாம் மண்டலே தண்ட்ய மாநே
குபித ஹரி க்ருதாந்ந பாஹி பாஹி இதி தேஷாம் வசனம் அஜித ஸ்ர்ருண்வந் மாபிபீ தேத் யபாணீ –-2-

விபுல கரக மிஸ்ரைஸ் தோய–கடுங்கால் மாரி கல்லே பொழிய-கல் எடுத்து கல் மாரி

குபித ஹரி க்ருத -இங்கு ஹரி இந்திரன் -இந்திரன் கோபத்தால்

மாஸூச–ஆஜ்ஜை இதுவும் – ப்ரபன்னன் கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம்

எவராலும் வெல்லப்பட முடியாத பகவானே! பெரிய பெரிய ஆலங்கட்டியுடன் எங்கும் இடைவிடாது மழை கொட்டியது.
அதனால் துன்பமடைந்த கோபர்கள், கிருஷ்ணா! இந்திரனுடைய சினத்திலிருந்து எங்களைக் காப்பாற்று ! காப்பாற்று!’
என்று அலற, அவர்களது கூக்குரலைக் கேட்ட தாங்கள் பயப்படாதீர்கள்’ என்று அவர்களிடம் கூறினீர்கள்.

—————–

குல இஹ கலு கோத்ரோ தைவதம் கோத்ர சத்ரோர் விஹிதிம் இஹ ச ருந்த்யாத் கோ நுவ சம்சயோ அஸ்மின்
இதி ஸஹசித வாதீ தேவ கோவர்த்த நாத்ரிம் த்வரிம் உதமு மூலோ மூலதோ பால தோர்ப்யாம் –3-

குல தெய்வம் கோவர்த்தனம் கோத்ரம் –கோத்ர சத்ரு -இந்திரன் -குல தனம் -பசு

மலைகளைக்கு இறக்கை இருக்க வஜ்ராயுதத்தால் அறுத்த இந்திரன் கோத்ர சத்ரு ஆனான்

இந்த நம் கோகுலத்திற்கு (பசுக் கூட்டங்களையும், நம்மையும் காப்பாற்றும் ) தெய்வம் –
இந்த கோவர்த்தன மலை தான். மலைகளுக்குப் பகைவனான இந்திரனிடமிருந்து தோன்றும் நாசத்தை
இந்தத் தெய்வம் கட்டாயம் தடுக்கும். இதில் உங்களுக்கு ஏன் சந்தேகம்?’ என்று சிரித்துக் கொண்டே
கூறிய தாங்கள், கோவர்த்தன மலையைத் தங்களது இளங்கைகளால் அடியோடு பிடுங்கித் தூக்கினீர்கள்.

—————-

ததநு கிரி வரஸ்ய ப்ரோத்த்ரு தஸ்ய அஸ்ய தாவத் ஸிகதில ம்ருது தேசே தூரதோ வாரி தாபே
பரிகர பரி மிஸ்ரான் தேநு கோபாந் அதஸ்தாத் உப நித தத் அதத்தா ஹஸ்த பத்மேந சைலம் –-4-

அப்படி மேலே தூக்கப்பட்ட மலையின் கீழ்ப்பகுதியில் மணற்பாங்காகவும், மெதுவாகவும், பரவலாகவும் இருந்த
இடத்தில் கோபர்களைத் தங்களது உடைமைகளுடனும், பசுக்களுடனும் தங்கச் செய்து, தாங்கள் தங்களது
தாமரைக் கையால் மலையைத் தாங்கி நின்றீர்கள். மலை இருந்த இடத்தில் திட்டாக இருந்ததால்
மழை வெள்ளம் தொலைவிலேயே தடுக்கப்பட்டு விட்டது.

—————

பவதி வித்ருத சைலே பாலிகா பிர் வயஸ்யைர் அபி விஹித விலாஸம் கேலி லாபாதி லோலே
ஸவித மிலித தேநூர் ஏக ஹஸ்தேந கண்டூ யதி சதி பஸூ பாலாஸ் தோஷம் ஐஷந்த சர்வே -5-

தாங்கள் ஒரு கையால் மலையைத் தூக்கிக் கொண்டும், மற்றொரு கையால் அருகில் வந்த பசுக்களை
சொறிந்து கொடுத்துக் கொண்டும், இடைப் பெண்களுடனும், நண்பர்களுடனும் அபிநயத்துடன்
கேலிப் பேச்சுகள் பேசிக் கொண்டும் இருந்ததைக் கண்ட கோபர்கள் மிக்க மகிழ்ச்சி கொண்டனர்.

குணங்களையே குன்றாகக் காட்டி ரக்ஷிக்க நமக்கு கவலை ஏது -சிறுவர் போல் ஆனந்தமாக விளையாடலாம்

———–

அதி மஹான் கிரி ரேஷ து வாமகே கர சரோ ருஹி தம் தரதே சிரம்
கிமிதம் அத்புதம் அத்ரி பலம் ந்விதி த்வத் அவலோகிர் ஆகதி கோபகை -6-

வாமகே-இடது கையால் அநாயாஸேந  –

இம் மலையோ மிகப் பெரியதாக உள்ளது. கிருஷ்ணனோ தாமரைப் போன்ற தனது இடது கையினால்
அதை நெடு நேரமாகத் தாங்கி நிற்கிறான். இது என்ன வியப்பு! ஒருக்கால் இது மலையின்
மகிமையாக இருக்குமோ!’ என்று தங்களைப் பார்த்து கோபர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.

———–

அஹ ஹ தார்ஷ்ட்யம் அமுஷ்ய வதோர் கிரிம் வ்யதித பாஹுரசாவ் அவரோபயேத்
இதி ஹரிஸ் த்வயி பத்த விகர்ஹனோ திவஸ ஸப்தகம் உக்ரம் அவர்ஷயத் –7-

அஹ ஹ தார்ஷ்ட்யம்–ஐயோ எவ்வளவு கர்வம்

இதைக் கண்ட இந்திரன், ‘இந்தச் சிறுவனுக்குத் தான் எவ்வளவு துணிவு?
இவன் கை சோர்வுற்று (நிச்சயம்) மலையைக் கீழே போட்டு விடுவான் என்று கர்வத்தால் நினைத்துத்
தங்களிடத்தில் வெறுப்பு கொண்டு ஏழு நாட்கள் கடுமையாக மழை பெய்யச் செய்தான்

————–

அசலதி த்வயி தேவ பதாத் பதம் கலித ஸர்வ ஜலே ச கநோத் கரே
அபஹ்ருதே மருதா மருதாம் பதிஸ் த்வத் அபி சங்கித தீ சமுபாத்ரவத் — 8-

தேவ தேவனே! தாங்கள் (அவ் வேழு நாட்களும் ) – நின்ற இடத்திலிருந்து ஓர் அடி கூட நகராது இருக்கையில்
மழையெல்லாம் கொட்டித் தீர்ந்த மேகக் கூட்டங்கள் காற்றினால் – விரட்டி யடிக்கப் பட்டன.
அப்பொழுது வானவர் கோனான இந்திரன் தங்களிடம் பயந்து அங்கிருந்து ஓடி விட்டான்.

————–

சமம் உபே யுஷி வர்ஷ பரே ததா பஸூப தேநு குலே ச விநிர் கதே
புவி விபோ சமுபாஹித பூதர ப்ரமுதிதை பஸூபை பரி ரேபிஷே –9-

விபுவே! அந்த பெருத்த அடை மழை ஓய்ந்ததும் கோபர்களும், பசுக் கூட்டங்களும் – உணர்ந்து (அங்கிருந்து)
வெளியே வந்தனர். தாங்கள் அம் மலையை முன்பு போல் இருந்த இடத்திலேயே கீரிடம் வைத்தீர்கள்.
இதைக் கண்ட கோபர்கள் பெரு மகிழ்ச்சி கொண்டு தங்களைக் கட்டி அணைத்துக் கொண்டனர்.

—————

தரணி மேவ புரா த்ருதவாநஸி ஷிதி தரோத் தரணே தவ கஸ் ஸ்ரம
இதி நுதஸ் த்ரிதஸை கமலா பதே குரு புராலய பாலய மாம் கதாத் –10-

திருமகள் கேள்வனே! முன்பொரு சமயம் (வராஹ அவதாரத்தில்) தாங்கள் இப் பூமியையே தூக்கி இருக்கிறீர்கள்.
(அப்படி யிருக்க) இச் சிறிய மலையைத் தூக்குவதில் தங்களுக்கு என்ன கஷ்டம்?” என்று
த்ரிதஸை –தேவர்களனைவரும் தங்களைத் துதித்தனர்.
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேணும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -62–ஸ்ரீ கோவர்தன பலி-

September 30, 2020

சிகரணி -மீட்டர் இதில் -சிகரம் பற்றிய தசகம்

கதாசித் கோபாலான் விஹித மக சம்பார விபாவான்
நிரீஷ்ய த்வம் ஸுவ்ரே மகவ மதம் உத்த்வம் சிது மநா
விஜா நந்நப் யேதான் விநயம் ருது நந்தாதி பஸூபாந் 
அப்ருச்ச கோவா அயம் ஜனக பவதாம் உத்யம இதி –-1-

ஒரு முறை இடையர்கள் இந்திரனைப் பூஜிக்க பொருள்களைச் சேகரித்துக் கொண்டு இருந்தார்கள் –
தாங்கள்-மகவ மதம்- இந்திரனின் கர்வத்தை அடக்க திரு உள்ளம் கொண்டீர்கள்
தங்கள் தந்தையிடம் இந்த ஏற்பாடுகள் எதற்கு என்று அறியாதவர் போல் கேட்டீர்கள் –

பகவானது கருவியாக நினைக்காமல் கர்வி கொண்டு இருந்தான்

ஸுவ்ரே-வீரனே -பத பிரயோகம்–இவன் இங்கே இருக்க – -இந்திரனுக்கு விழா எடுப்பதா

உள்ளூவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிபவன்-விநயம் ருது-மெல்லிய குரலில் அறியாதவர் போல் கேட்டீர்கள் –

————–

பபாஷே நந்தஸ் த்வாம் ஸூத நநு விதேயோ மகவதோ
மகோ வர்ஷே வர்ஷே ஸூக யதி ச வர்ஷேண ப்ருதிவீம்
ந்ருணாம் வர்ஷா யத்தம் நிகில முப ஜீவ்யம் மஹி தலே
விசேஷா தஸ்மாகம் த்ருண சலில ஜீவாஹி பஸவ –2-

மகவதோ மகோ-இந்திரா விழா
வர்ஷே வர்ஷே–ஆண்டு தோறும் மழை -சிலேடையில்

நந்தனும் -மகனே இந்திரன் மழை பொழியச் செய்து நம் பூமியை செழிப்பாக வைக்கிறார் –
அதனால் அவருக்கு ஒவ் ஒரு வருஷமும் பூஜை செய்ய வேண்டும் –
அனைவரின் பிழைப்பும் மழை மூலம் ஏற்படுகிறது –
பசுக்களும் நீரையும் புல்லையும் நம்பி இருக்கின்றன -என்று கூறினார் –

நீர் வளம் நில வளம் பெருகினால் பால் வளம் பெருகும் -ஓங்கி இத்யாதி –நீங்காத செல்வம்

——-

இதி ஸ்ருத்வா வாசம் பிதுரயி பவாநாஹ ஸரஸம்
திக் ஏதந்நோ ஸத்யம் மகவ ஜநிதா வ்ருஷ்டிரிதி யத்
அத்ருஷ்டம் ஜீவாநாம் ஸ்ருஜதி கலு வ்ருஷ்டிம் சமுசிதாம்
மஹாரண்யே வ்ருஷா கிமவ பலி மிந்த்ராய தததே –3-

திக் -ஐயோ-அத்ருஷ்டம்-கண்ணுக்குத் தெரியாத வினைப் பயன்கள் -இந்திரன் கர்மத்துக்குத் தக்கபடி மழை பொழிய வைப்பவன் இவனே

அதிருஷ்டம் ஸத் புண்ய பாப ஜனகம் –கர்மங்கள் அடியாகவே -நல்லார் ஓருவர் உளரேல் அவர் பொருட்டு மழை பொழியுமே-

தந்தையின் சொல் கேட்டு -இந்திரனால் மழை கிடைக்கிறது என்பது உண்மை அல்ல –
நாம் முன் ஜென்மத்தில் செய்த தர்மத்தால் மழை பெய்கிறது -காட்டில் உள்ள மரங்கள்
இந்திரனுக்கு என்ன பூஜை செய்கின்றன என்று சாமர்த்தியத்தால் பதில் சொன்னீர் –

———–

இதம் தாவத் ஸத்யம் யதிஹ பசவோந குல தனம்
தத் ஆஜீவ்யா யாஸவ் பலிர் அசல பர்த்ரே சமுசித
ஸூரேப்யோ அப்யுத் க்ருஷ்டா நநு தரணி தேவா ஷிதி தலே
ததஸ்தே அப் யாராத்யா இதி ஜகதித த்வம் நிஜ ஐநான் –-4–

பசவோ ந குல தனம்–மாடு என்றாலே செல்வம்

பாகவதத்தில் மூன்று பக்தி -புல்லை பசுமாட்டுக்கு –தரணி தேவா-வேதம் வல்லார்-பூ ஸூரர் –நிலத்தேவர் -ததீயாராதனம் -மூன்றாவது கோவர்தனம் இங்கு இரண்டையும்

இந்தப் பசுக்கள் நம் இடையர்கள் சொத்து -அவர்களுக்கு புல்லும் நீரையும் கொடுப்பது கோவர்த்தன மலை –
அதனால் கோவர்த்தன மலைக்கும் தேவர்களை விடச் சிறந்த முனிவர்களுக்கும் பூஜை செய்ய வேண்டும் என்று கூறினீர் –

————–

பவத் வாஸம் ஸ்ருத்வா பஹு மதி யுதாஸ் தே அபி பஸூபா
த்வி ஜேந்த்ரா தர்சந்தோ பலி மததுர் உச்சை ஷிதி ப்ருதே
வ்யது ப்ரா தக்ஷிண்யம் ஸூ ப்ருஸ மநமந் நாதர யுதாஸ்
த்வம்  ஆதஸ் சைலாத்மா பலி மகிம்  ஆபீர புரத –5–

அதைக் கேட்ட இடையர்கள் முனிவர்களையும் கோவர்த்தன மலையையும் பூஜித்தனர் –
பிறகு ஷிதி ப்ருதே-மலையை வலம் வந்து நமஸ்கரித்தனர்
அனைத்து பூஜைகளையும் தாங்களே மலை வடிவில் ஏற்றுக் கொண்டீர் –

பூமியில் கால் பாவாத தேவர்கள்
இவனோ ஆஸ்ரித ஸ்பர்சம் பெற்ற த்ரவ்யத்தில் அபி நிவேசம் கொண்டுள்ளான்

அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளரும் அடங்கப்
பொட்ட துற்று மாரிப் பகை புணர்த்த பொரு மா கடல் வண்ணன் பொறுத்த மலை
வட்டத் தடம் கண் மடமான் கன்றினை வலை வாய் பற்றிக் கொண்டு குற மகளிர்
கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 5-1 –

———–

அவோசஸ் ச ஏவம் தான் கிமஹ விததம் மேனி கதிதம்
கிரீந்த்ரோ நன்வேஷ ஸ்வ பலிம் உ ப புங்க்தே ஸ்வ வபுஷா
அயம் கோத்ரோ கோத்ர த்விஷி ச குபிதே ரஷிது மலம்
ஸமஸ்தா நித் யுக்தா ஜஹ்ருஷுர் அகிலா கோகுல ஜூஷ –6

இடையர்கள் இடம் நான் சொன்னது போல் இம் மலை பூஜையை ஏற்றுக் கொண்டது -அதனால் இந்திரன்
கோபித்துக் கொண்டாலும் இம் மலையே நம் எல்லாரையும் ரக்ஷிக்கும் என்று கூறினீர்கள் –

இந்திரன் உங்கள் கையால் கொடுத்ததை முகம் மாற்றி வாங்கிக் கொள்வான்
இவனே கோவர்த்தனமாக கண்டு அருளினான்
மலைக்கு கோத்ரம் – –கோத்ர த்விஷி-எதிரியான இந்திரன் -மலைக்கு இறக்கைகளை முன் வெட்டினான்

—————–

பரி ப்ரீதா யாதா கலு பவதுபேதா வ்ரஜ ஜூ ஷோ
வ்ரஜம் யாவத் தாவன் நிஜம கவி பங்கம் நிச மயன்
பவந்தம் ஜாநன் நப் யதிக ரஜசாஅ அக்ராந்த ஹ்ருதயோ
ந ஸேஹே தேவேந்திரஸ் த்வ துபரசித ஆத்மோன் நதி ரபி –7-

அனைவரும் மகிச்சியுடன் வீடு சென்றனர் -தனக்குச் சேர வேண்டிய பூஜையில் இடையூறு
ஏற்டபட்டதைக் கேட்ட இந்திரன் கோபம் கொண்டான்
தங்களைப் பற்றியும் தங்களால் கிடைத்த பதவியைப் பற்றியும் அறிந்து இருந்தும்
மிகுந்த அஹங்காரத்தால் கோபம் அடைந்தான் —

—————

மனுஷ்யத்வம் யாதோ மது பிதபி தேவேஷ் வவி நயம்
விதத்தே சேன் நஷ்டஸ் த்ரித ச ஸதஸாம் கோ அபி மஹி மா
ததஸ் ச த்வம்சிஷ்யே பஸூப ஹத கஸ்ய ஸ்ரியமிதி
ப்ரவ்ருத்தஸ் த்வாம் ஜேதும் சகிலம் அகவா துர்மத நிதி –8-

மது பிதபி-மது சூதனனாய் இருந்தாலும்-இந்திரன் பிள்ளை அர்ஜுனன் இடம் அவதார ரஹஸ்யம்

நாராயணனே மானுஷ அவதாரம் எடுத்து இவ்வாறு செய்வது தேவர்களுக்கு ஒரு குறை அல்லவா –
இடையர்களின் சொத்துக்களை அழித்து நாசம் செய்கிறேன் என்று இந்திரன் ஆர்பரித்தான் –

———–

த்வத் ஆவாஸம் ஹந்தும் ப்ரலய ஜலதாந் அம்பர புவி
ப்ரஹிண்வந் பிப்ராண குலிச அயம் அப்ரே பகமந
ப்ரதஸ்தே அந்யைர் அந்தர் தஹந மரு தாத்யை விம்ஹசிதோ
பவன் மாயா நைவ த்ரி புவன பதே மோஹ யதிகம் –9-

ஐரா வதம் என்ற யானையின் மீது ஏறிக் கொண்டு வஜ்ராயுதத்தை எடுத்துக் கொண்டு
பிரளய காலத்து மேகங்களை உருவாக்கி இடையர்கள் இருப்பிடத்தை அழிக்கப் புறப்பட்டான்
பின் தொடர்ந்த அக்னி வாயு முதலிய மற்ற தேவர்கள் மனதிற்கும் பரிகசித்தார்கள் –
மூ உலகிற்கும் நாயகனே உமது மாயையை யாரால் வெல்ல முடியும் –

————

ஸூரேந்த்ர க்ருத்தஸ் சேத் த்விஜ கருணயா சைல க்ருபயா
அப் யநாதங்கோ அஸ்மாகம் நியத இதி விஸ்வாஸ்ய பஸூ பான்
அஹோ கிந் ந ஆயாதோ கிரி பிதிதி சஞ்சிந்த்ய நிவஸன்
மருத் கேஹா தீச பிரணுத முர வைரின் மம கதான் –-10-

இந்திரனால் நமக்கு ஒரு கெடுதலும் நேராது -முனிவர்களும் கோவர்த்தன மலையும் நிச்சயம்
நம்மை ரக்ஷிப்பார்கள் என்று இடையர்களுக்கு சமாதானம் கூறினீர்கள் –
இந்திரன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தீர்
முரனை நிரசித்த ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -61–விப்ர பத்னி -ரிஷி பத்னிகளை பூதராக்கி -அனுக்ரஹம் –

September 30, 2020

ததஸ் ச வ்ருந்தா வனதோ அதி தூரதோ
வனம் கதஸ் த்வம் கலு கோப கோகுலை
ஹ்ருதந்தரே பக்த தரத் விஜ அங்கநா
கதம்பக அநுக்ரஹண ஆக்ரஹம் வஹன் —1–வம்சத்தம் பா வகை -அனைத்து ஸ்லோகங்களும்

ததஸ் ச-அதற்குப் பின்பு -வஸ்தாபரணம் பண்ணிய பின்பு-பக்த விலோசனத்துக்கு போய் அநுக்ரஹித்த

ஒரு முறை தங்கள் இடத்தில் பக்தி கொண்ட பிராமணப் பெண்களை ஆசீர்வதிக்கும்
நோக்கத்துடன் தாங்கள் ஸ்ரீ ப்ருந்தா வனத்தில் இருந்து வெகு தூரத்தில் உள்ள காட்டுக்கு
பசுக்களுடனும் இடைச் சிறுவர்களுடனும் சென்றீர்கள் –

————

ததோ நிரீஷ்ய அசரணே வநாந்தரே
கிசோர லோகம் ஷுதிதம் த்ருஷாகுலம்
அதூரதோ யஜ்ஞ பரான் த்விஜான் ப்ரதி
வ்யஸர்ஐயோ தீதிவி யாசநாய தான் –2-

அசரணே-நிழலே இல்லாத

மனித நடமாட்டம் அற்ற அக் காட்டிலே சிறுவர்களும் பசுக்களும் ஷுதிதம்-பசியாலும் த்ருஷாகுலம்-தாகத்தாலும் வாடினர் –
அதைக் கண்ட தாங்கள் அருகே யாகம் செய்து கொண்டு இருக்கும் அந்தணர்கள் இடம்
உணவு கேட்கச் சொல்லி அச் சிறுவர்களை அனுப்பினீர்கள் –

————

கதேஷ் வதோதேஷ் வபிதாய தே அபிதாம்
குமாரகேஷ் வோதந யாசிஷு ப்ரபோ
ஸ்ருதி ஸ்திரா அப்யபி நின்யு ரஸ்ருதிம்
ந கிஞ்சி தூசுஸ் ச மஹீஸூ ரோத்தமா –-3-

அவர்கள் அந்தணர்கள் இடம் தம் பெயரைக் கூறி யாசித்தார்கள் – வேதம் அறிந்த அந்த
அந்தணர்கள் காது கேட்க்காதவர்கள் போல் பேசாது இருந்தார்கள் –

மஹீஸூ ரோத்தமா-பூ ஸூரர் -நிலத் தேவர்களில் உத்தமர்-மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் -வார்த்தையும் பேசாமல்

———–

அநாதராத் கிந்நதியோ ஹி பாலகா
சமா யயுர் யுக்தமிதம் ஹி யஜ் வஸூ
சிராத் அபக்தா கலு தே மஹீ ஸூரா
கதம் ஹி பக்தம் த்வயி தை ஸமர்ப்யதே —4-

அபக்தா-வேதம் அறிந்து வேதத்தின் சுவப்பயனை அறியாமல்
பக்தம் -உணவு -சிலேடை

உணவு கிடைக்காததால் சிறுவர்கள் வருந்தி திரும்பி வந்தார்கள் -உண்மையான பக்தி இல்லாத
அந்தணர்கள் எவ்வாறு தங்களுக்கு உணவைத் தர முன் வருவார்கள் –

———-

நிவேத யத்வம் க்ருஹிணீ ஜநாய மாம்
திசேயுர் அன்னம் கருணா குலா இமா
இதி ஸ்மிதார்த்ரம் பவதேரிதா கதா
ஸ்தே தாரகா தார ஜனம் யயாசிரே –5-

அந்தணர்கள் மனைவியர் இடம் நான் வந்து இருப்பதாகக் கூறி உணவு கேளுங்கோள் –
இரக்கம் மிகுந்த அவர்கள் அன்னம் கொடுப்பார்கள் என்று சிறுவர்கள் இடம் கூறினீர்கள் –
குழந்தைகளும் அந்தப் பெண்கள் இடம் உணவு கேட்டனர் –

————–

க்ருஹீத நாம்நி த்வயி ஸம் பிரம ஆகுலாஸ்
சதுர் விதம் போஜ்ய ரஸம் ப்ர க்ருஹ்யதா
சிரம் த்ருத த்வத் ப்ர விலோகந ஆக்ரஹா
ஸ்வ கைர் நிருத்தா அபி தூர்ண மாயயு –6-

சதுர் விதம்-பஷ்யம் போக்யம் லேகியம்-சோஷ்யம் – கடித்து -மென்னு – நக்கி -உறிஞ்சி உண்ணும் நான்கு விதம்

தங்கள் பெயரைக் கேட்டவுடன் நெடு நாட்களாகத் தங்களைக் காண விரும்பிய
அப் பெண்கள் ஆவலுடன் தங்களைக் காண வேணும் என்று
நான்கு விதமான அன்னங்களை எடுத்துக் கொண்டு வந்தார்கள் –
ஸ்வ கைர் நிருத்தா அபி-அவர்கள் கணவன்மார் தடுத்தும் கூட –தூர்ண மாயயு-வேகமாக தங்கள் இடம் வந்தார்கள் –

———–

வி லோல பிஞ்சம் சிகுரே கபோலயோ
ஸ முல்ல சத் குண்டலம் ஆர்த்ர மீஷிதே
நிதாய பாஹும் ஸூஹ்ரு தம்ச ஸீமநி
ஸ்திதம் பவந்தம் சம லோக யந்ததா –7-

தலையில் மயில் பீலி உடனும் ஒளி வீசும் குண்டலங்களுடனும் கருணை பொழியும் கடாக்ஷங்களுடனும்
ஸூஹ்ரு தம்ச ஸீமநி-நண்பனின் தோளில் கையை வைத்துக் கொண்டு இருக்கும் தாங்களை அப் பெண்கள் கண்டார்கள் –

————

ததா ச காசித் த்வத் உபாகம் உத்யதா
க்ருஹீத ஹஸ்தா தயிதேந யஜ்ஜ்வன
ததைவ சஞ்சின்த்ய பவந்தம் அஞ்ஜ சா
விவேச கைவல்ய மஹோ க்ருதின் யசவ் –8-

அவர்களில் ஒரு பெண்ணுக்கு அவளுடைய கணவன் தடுத்ததால் வர முடியவில்லை
அவள் அங்கேயே தங்களைத் த்யானம் செய்து தங்களுடன் கலந்து மோக்ஷம் அடைந்தாள் –
என்ன ஆச்சர்யம் –

கச்ச விஷம் புஞ்சவ -போய் விஷம் சாப்பிடும் -போல் இங்கு கைவல்யம் சரீர விமோகம் -சரீரத்தைத் தானே பிடித்தான் -ஆகவே மோக்ஷம் போனாள் என்பதே கைமுதிக நியாயார்த்தம்

தேகத்தை விட்டேனோ ரிஷி பத்னியைப்போல் -திருக்கோளூர் அம்மாள் வார்த்தை

———–

ஆதாய போஜ்ய அந்ய அனுக்ருஹ்யதா புன
ஸ்தவத் அங்க சங்க ஸ்ப்ருஹ யோஜ்ஐதீர் க்ருஹம்
விலோக்ய யஜ்ஞாய விஸர் ஜயந்நி மா
ஸ் சகர்த பர்த்ரு நபி தாஸ்வ கர்ஹாணான்–9-

அந்தணப் பெண்கள் அளித்த உணவை ஏற்று அவர்களை அனுக்ரஹித்தீர் -உம்முடைய சேவையை
விரும்பிய அவர்களை யாகத்துக்குச் செல்லும்படி உத்தரவிட்டு
அவர்கள் கணவர்களை அவர்கள் இடம் அன்புடன் இருக்கச் செய்தீர் –

சபரி விதுரர் ரிஷி பத்நிகளை பூதராக்கிய புண்டரீகாக்ஷனின் நெடு நோக்கு

கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே யென்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –12-6-

வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று பார்த்திருந்து-
நானே சென்று முறை கெடப் பற்றினேன் ஆகாமே பாருங்கோள்
என் செல்லாமை பரிஹரிக்கைக்கா அன்றிக்கே அவன் செல்லாமை பரிஹரிக்க போனேனாம் படி பண்ணப் பாருங்கோள் –

வேர்த்து –
பசுக்களைக் கொண்டு போனால் காதம் இரு காதம் அவ்வருகே கை கழிய விட்டு
அங்கே ரிஷிகளுடைய ஆஸ்ரமங்களிலே சேமம் -தளிகை -வேண்டிவிட்டு -அவர்கள் க்ரியா பிரதானராய் இருந்த வாறே
பத்நீ சாலைகளிலே வேண்டிப் போக விடும்
அவர்கள் சேமம் கொடுத்து விட்டால் அதின் வடிவு வரவு –பார்த்து திருமேனி எங்கும் வேர்த்துப் பசித்து தடுமாறி –

இதனால் வேண்டி அடிசில் ஆய்த்து
விரும்பி இட்ட சோறு –
பிரயோஜ நாந்தரர் இடும் அவற்றை குழியிலே கால் கழுவினாரோ பாதி யாகவாய்த்து கொள்வது –

பித்ருக்கள் நிமித்தமாக வரிக்கப் பட்டது போலே இல்லாமல் -தானும் விதி ப்ரேரிதனாகக் கொள்ளும் என்றபடி
பெரியாழ்வார் பெண் பிள்ளை இடுமது போலே –
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில்-நான் ஓன்று

நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -9-7–என்னுமா போலே
பெரியாழ்வார் மகளாய் இழந்து இராதே ஒரு பட்டை சோற்றை கொண்டு போயாகிலும் கிட்டுவோம் -என்கிறாள்-

நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –
பத்தம் -சமைத்த சோறு —
விலோசனம்
 -பார்வை-
(பிரசாதம் எதிர் பார்த்து இருக்கும் -என்றே சப்தார்த்தம் )
சோறு பார்த்து இருந்த இடமாய்த்து-
சோறு பார்த்து இருக்கும் இடத்திலே -என்றபடி

———–

நிரூப்ய தோஷம் நிஜம் அங்கநா ஐநே
விலோக்ய பக்திம் ச புனர் விசாரிபி
ப்ரபுத்த தத் த்வைஸ் த்வம் அபிஷ்டுதோத் விஜைர்
மருத் புராதீச நிருந்தி மே கதான் -10-

அவர்களும் தங்கள் தவறுகளை உணர்ந்து– தம் தம் மனைவியரின் பக்தியையும் உணர்ந்து
தங்களை ஸ்துதித்தனர்
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேணும் —

பக்தி -ஸ்ரத்தா -பெண் பால் ஸம்ஸ்க்ருதம் -ஆண்டாளுக்கு பெண்மை ஏறிட்டுக் கொள்ள வேண்டாமல் விஞ்சின பக்தி –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -60–கோபி வஸ்திர அபஹரணம்–

September 29, 2020

11 ஸ்லோகங்களும் வைத்தாளீயம் மீட்டர்

மதந ஆதுர சேதஸோ அன்வஹம் பவத் அங்கரி த்வய தாஸ்ய காம்யயா
யமுனா தட ஸீம்நி ஸைகதீம் தர லாஷ்யோ கிரிஜாம் சமார்சிசன் –-1-

மன்மதனால் கோபிகளின் மனம் சஞ்சலம் உற்றது -தங்களுக்கே சேவை செய்ய விரும்பி
யமுனா நதிக்கரையில் கூடி ஸைகதீம்-மணலால் பார்வதி தேவியைப் போன்ற பிம்பம் செய்து பூஜித்தனர் –

காத்யாயனி விரதம்

காத்யாயனி மஹாமாயே மஹாயோகிந்யதீஸ்வரி ।நந்தகோபசுதம் தேவி பதின் மே குரு தே । “ஓம் காத்யாயனி மஹாமாயே மஹாயோகிந்யாதீஷ்வரி!

பாடிப்பறை கொண்டு நாமம் பலவும் நவின்று

———-

தவ நாம கதா ரதா சமம் ஸூத்ருஸ ப்ராதர் உபாகதா நதீம்
உபஹார சதைர பூஜயன் தயிதோ நந்த ஸூதோ பவே திதி –2

ஸூத்ருஸ-அழகிய கண்கள் -கண்ணனையே கண்ணில் கொண்டவர்கள்-போதரிக்கண்ணினாய் –

ப்ராதர் உபாகதா நதீம்-நாட்காலே நீராடி

உபஹார சதை-மாலே மணிவண்ணா -உபகரணங்களைப் பிரார்த்தித்துப் பெற்றார்கள்

கோபிகள் தங்கள் திரு நாமத்தையும் தங்கள் கதைகளையும் கூறிக் கொண்டு யமுனா நதிக்கு வந்தார்கள் –
பிறகு நந்தகோபன் திருக்குமாரரான தாங்களே கணவனாக வர வேண்டும் என்று பூஜித்து வேண்டினர் –

——————-

இதி மாஸம் உபாஹித வ்ரதாஸ் தரலாஷீர் அபி வீஷ்யதா பவான்
கருண அம்ருதுலோ நதீ தடம் சமயாஸீத் ததனுக்ரஹேச்சயா –3-

இவ்வாறு ஒரு மாதம் விரதம் இருந்தார்கள் – தங்கள் அவர்கள் இடம் கருணை கொண்டு
அவர்களை ஆசீர்வதிக்க யமுனைக் கரைக்குச் சென்றீர்கள் –

விரஹ தாபம் ஒரு அளவு தணிக்க -குள்ளக்குளிர நீராடி –
பரதாழ்வான் -நந்திக்ராமம் -இருந்த பொழுது -சரயு நீராடியது போல் -அக்குளத்து மீன் –
கோபிகளைப் பிரிந்து கண்ணனுக்கே விரஹ தாபம் மிக்கு –அனைத்து கோபிகளையும் கண்டா மகிழ்ச்சி

————

நியம அவசிதவ் நிஜ அம்பரம் தடஸீமன் யவமுஸ்யதாஸ் ததா
யமுனா ஜல கேலந ஆகுலா புரதஸ் த்வாம் அவலோக்ய லஜ்ஜிதா –4–

வரதம் முடிந்ததும் கோபிகைகள் தங்கள் ஆடைகளைக் களைந்து கரையில் மேல்
வைத்து விட்டு யமுனையில் விளையாடத் தொடங்கினார்கள் –
அப்போது தங்களைக் கண்டு வெட்கப்பட்டனர் –

———–

த்ரபயா நமித ஆநநாஸ் வதோ வனிதாஸ் வம்பர ஜாலம் அந்திகே
நிஹிதம் பரி க்ருஹ்ய பூருஹோ விடபம் த்வம் தரஸா அதி ரூடவான் –5-

வெட்கத்துடன் தலை குனிந்து நின்ற அந்த கோபிகளின் ஆடைகளை எடுத்துக் கொண்டு
தாங்கள் அருகில் உள்ள மரத்தின் மேல் ஏறினீர்கள் –

————-

இஹ தாவது பேத்ய நீயதாம் வசனம் வஸூத்ருஸோ யதா யுதம்
இதி நர்ம ம்ருதுஸ்மிதே த்வயி ப்ருவதி வ்யா முமுஹே வதூ ஜனை –6-

பெண்களே இங்கு வந்து உங்கள் ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கோள் -என்று
புன் சிரிப்புடன் கூறினீர்கள் –
கோபிகள் வெட்கத்தினால் வெளியே வர முடியாமல் திகைத்தனர் –

————-

அயி ஜீவ சிரம் கிசோரநஸ் தவ தாஸீர வஸீ கரோஷி கிம்
ப்ரதிச அம்பரம

11 ஸ்லோகங்களும் வைத்தாளீயம் மீட்டர்

மதந ஆதுர சேதஸோ அன்வஹம் பவத் அங்கரி த்வய தாஸ்ய காம்யயா
யமுனா தட ஸீம்நி ஸைகதீம் தர லாஷ்யோ கிரிஜாம் சமார்சிசன் –-1-

மன்மதனால் கோபிகளின் மனம் சஞ்சலம் உற்றது -தங்களுக்கே சேவை செய்ய விரும்பி
யமுனா நதிக்கரையில் கூடி ஸைகதீம்-மணலால் பார்வதி தேவியைப் போன்ற பிம்பம் செய்து பூஜித்தனர் –

காத்யாயனி விரதம்

காத்யாயனி மஹாமாயே மஹாயோகிந்யதீஸ்வரி ।நந்தகோபசுதம் தேவி பதின் மே குரு தே । “ஓம் காத்யாயனி மஹாமாயே மஹாயோகிந்யாதீஷ்வரி!

பாடிப்பறை கொண்டு நாமம் பலவும் நவின்று

———-

தவ நாம கதா ரதா சமம் ஸூத்ருஸ ப்ராதர் உபாகதா நதீம்
உபஹார சதைர பூஜயன் தயிதோ நந்த ஸூதோ பவே திதி –2

ஸூத்ருஸ-அழகிய கண்கள் -கண்ணனையே கண்ணில் கொண்டவர்கள்-போதரிக்கண்ணினாய் –

ப்ராதர் உபாகதா நதீம்-நாட்காலே நீராடி

உபஹார சதை-மாலே மணிவண்ணா -உபகரணங்களைப் பிரார்த்தித்துப் பெற்றார்கள்

கோபிகள் தங்கள் திரு நாமத்தையும் தங்கள் கதைகளையும் கூறிக் கொண்டு யமுனா நதிக்கு வந்தார்கள் –
பிறகு நந்தகோபன் திருக்குமாரரான தாங்களே கணவனாக வர வேண்டும் என்று பூஜித்து வேண்டினர் –

——————-

இதி மாஸம் உபாஹித வ்ரதாஸ் தரலாஷீர் அபி வீஷ்யதா பவான்
கருண அம்ருதுலோ நதீ தடம் சமயாஸீத் ததனுக்ரஹேச்சயா –3-

இவ்வாறு ஒரு மாதம் விரதம் இருந்தார்கள் – தங்கள் அவர்கள் இடம் கருணை கொண்டு
அவர்களை ஆசீர்வதிக்க யமுனைக் கரைக்குச் சென்றீர்கள் –

விரஹ தாபம் ஒரு அளவு தணிக்க -குள்ளக்குளிர நீராடி –
பரதாழ்வான் -நந்திக்ராமம் -இருந்த பொழுது -சரயு நீராடியது போல் -அக்குளத்து மீன் –
கோபிகளைப் பிரிந்து கண்ணனுக்கே விரஹ தாபம் மிக்கு –அனைத்து கோபிகளையும் கண்டா மகிழ்ச்சி

————

நியம அவசிதவ் நிஜ அம்பரம் தடஸீமன் யவமுஸ்யதாஸ் ததா
யமுனா ஜல கேலந ஆகுலா புரதஸ் த்வாம் அவலோக்ய லஜ்ஜிதா –4–

வரதம் முடிந்ததும் கோபிகைகள் தங்கள் ஆடைகளைக் களைந்து கரையில் மேல்
வைத்து விட்டு யமுனையில் விளையாடத் தொடங்கினார்கள் –
அப்போது தங்களைக் கண்டு வெட்கப்பட்டனர் –

———–

த்ரபயா நமித ஆநநாஸ் வதோ வனிதாஸ் வம்பர ஜாலம் அந்திகே
நிஹிதம் பரி க்ருஹ்ய பூருஹோ விடபம் த்வம் தரஸா அதி ரூடவான் –5-

வெட்கத்துடன் தலை குனிந்து நின்ற அந்த கோபிகளின் ஆடைகளை எடுத்துக் கொண்டு
தாங்கள் அருகில் உள்ள மரத்தின் மேல் ஏறினீர்கள் –

————-

இஹ தாவது பேத்ய நீயதாம் வசனம் வஸூத்ருஸோ யதா யுதம்
இதி நர்ம ம்ருதுஸ்மிதே த்வயி ப்ருவதி வ்யா முமுஹே வதூ ஜனை –6-

பெண்களே இங்கு வந்து உங்கள் ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கோள் -என்று
புன் சிரிப்புடன் கூறினீர்கள் –
கோபிகள் வெட்கத்தினால் வெளியே வர முடியாமல் திகைத்தனர் –

————-

அயி ஜீவ சிரம் கிசோரநஸ் தவ தாஸீர வஸீ கரோஷி கிம்
ப்ரதிச அம்பரம் அம்புஜே ஷணே த்யுதி தஸ் த்வம் ஸ்மிதமேவ தத்தவான் –7-

செந்தாமரைக் கண்ணனே தங்களுக்கு சேவை செய்ய வந்த அடியோங்களை
இப்படி ஸ்ரமம் படுத்தலாமா –
எங்கள் ஆடையைக் கொடுத்து அருள வேண்டும் என்று வேண்டிய கோபிகளுக்கு
மந்தஹாசத்தையே பதிலாகத் தந்தீர்கள் –

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே—3-1-

காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி
வேலைப் பிடித்து என் ஐமார்களோட்டில் என்ன விளையாட்டோ
கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே
கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்—3-5-

அரையிலே ஒன்றைச் சாத்துவது –
தலையிலே ஒன்றைக் கட்டுவது –
உத்தரியமாக ஒன்றை இடுவதாக
இப்படி தன் திரு மேனிக்கு பரபாகமாம் படி நாநா வர்ணம் ஆனவற்றைக் கொண்டு அலங்கரித்து –
சேஷித்த வற்றை குருந்திலே இட்டு வைத்து –
கண்டி கோளே நமக்குத் தகுதியாய் இருந்த படி –
இத்தைக் கண்ட உங்களுக்கு வேண்ட வேண்டி இருந்ததோ -என்றான் –

கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்–
அழகியதாய் இருந்தது
நாங்கள் அவற்றை –கோலச் சிற்றாடைகளை -வேண்டுகிறோம் அல்லோம் –
குருந்திலே கிடக்கிறவற்றைத் தா -என்கிறார்கள் –

———

அதி ருஹ்ய தடம் க்ருதாஞ்ஐலீ பரி ஸூத்தா ஸ்வ கதீர் நிரீஷ்யதா
வசநான் யகிலான் யநுக்ரஹம் புனரேவம் கிரமப் யதா முதா--8-

அவர்கள் கரை ஏறி கை கூப்பி வணங்கினார்கள் -அதனால் ஆடை இல்லாமல்
குளித்த பாபம் நீங்கியவர்களாய் ஆனார்கள் –
தங்களையே சரண் அடைந்ததால் அவர்களுக்கு ஆடைகளையும் அளித்து
உபதேசமும் செய்து அருளினீர்கள் –

——–

விதிதம் நநுவோ மநீஷிதம் வதிதாரஸ் த்விஹ யோக்யமுத்தரம்
யமுனா புலிநே ச சந்திரிகா க்ஷணதா இத் யபலாஸ் த்வ மூசி வான் –9–

உங்கள் எண்ணத்தை அறிந்து கொண்டேன் -நதியின் மணல் குன்றுகளின் நிலா வெளிச்சத்துடன்
கூடிய இரவில் உங்களுக்கு வேண்டுவது கிடைக்கும் என்று அருளினீர் –

ராஸக்ரீடையே பலம்
ஸரத்கால சந்த்ர ஒளியில் –
இதுவே நோன்புக்கு பலம்-என்று அருளிச் செய்தாயே

————

உப கர்ண்ய பவன் முகஸ்யுதம் மது நிஷ்யந்தி வஸோ ம்ருகீத்ருச
ப்ரணயா தயி வீஷ்யதே வதநாப்ஜம் சநகைர் க்ருஹம் கதா –-10-

ம்ருகீத்ருச-மான் அன்றோ கண் தந்தது

தேனினும் இனிய தங்கள் சொற்களைக் கேட்ட கோபியர்கள் தங்கள் தாமரை
திரு முகத்தைத் திரும்பிப் பார்த்த படியே மெதுவே வீடு சென்றார்கள் –

——–

இதி நன்வ நுக்ருஹ்ய வல்லவீர் விபிநாந்தேஷு புநரேவ ஸஞ்சரன்
கருணா ஸிஸிரோ ஹரே ஹர த்வரயா மே சகல ஆமயா வலிம் –11-

இவ்வாறு அப் பெண்களுக்கு அனுக்ரஹம் செய்து காட்டில் திரிந்து மகிழ்ந்தீர் –
கருணை உள்ளம் கொண்ட ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை சீக்கிரம் ரக்ஷித்து அருள வேண்டும் –

நீராடும் பொழுது ஆடை இல்லாமல் கூடாது
ஜலதேவதையை அவமதிப்பதாகும்
அந்தக்குறையை -சின்ன தண்டம் -கொடுத்துத் திருத்திப் பணி கொள்ளுமவன்
பகவான் இடம் வெட்க்கப்படக் கூடாதே -அவன் உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் அறிபவன் அன்றோ –
ஸர்வேஸ்வரன் -ஸர்வ நியந்தா அன்றோ –
காமம் க்ரோதம் லோபம் அஹங்காரம் மமகாரம் –ஆடைகள் கூடாதே -தானே பலவந்தமாகப் பரித்து கைக் கொள்ளுமவன் -கரை ஏற்றுவான்

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ம் புஜே ஷணே த்யுதி தஸ் த்வம் ஸ்மிதமேவ தத்தவான் –7-

செந்தாமரைக் கண்ணனே தங்களுக்கு சேவை செய்ய வந்த அடியோங்களை
இப்படி ஸ்ரமம் படுத்தலாமா –
எங்கள் ஆடையைக் கொடுத்து அருள வேண்டும் என்று வேண்டிய கோபிகளுக்கு
மந்தஹாசத்தையே பதிலாகத் தந்தீர்கள் –

———

அதி ருஹ்ய தடம் க்ருதாஞ்ஐலீ பரி ஸூத்தா ஸ்வக தீர் நிரீஷ்ய தா
வசநான்ய கிலா ன் யநுக்ரஹம் புனரேவம் கி ரமப்யதா முதா–8-

அவர்கள் கரை ஏறி கை கூப்பி வணங்கினார்கள் -அதனால் ஆடை இல்லாமல்
குளித்த பாபம் நீங்கியவர்களாய் ஆனார்கள் –
தங்களையே சரண் அடைந்ததால் அவர்களுக்கு ஆடைகளையும் அளித்து
உபதேசமும் செய்து அருளினீர்கள் –

——–

விதிதம் தநு வோ மநீஷிதம் வதிதாரஸ் த்வி ஹ யோக்யமுத்தரம்
யமுனா புலிநே ச சந்திரிகா க்ஷண தா இத்ய பலாஸ் த்வ மூசி வான் –9–

உங்கள் எண்ணத்தை அறிந்து கொண்டேன் -நதியின் மணல் குன்றுகளின் நிலா வெளிச்சத்துடன்
கூடிய இரவில் உங்களுக்கு வேண்டுவது கிடைக்கும் என்று அருளினீர் –

உப கர்ண்ய பவன் முகஸ்யுதம் மது நிஷ்யந்தி வஸோ ம்ருகீத் ருச
ப்ரண யாதயி வீஷ்ய தே வத நாப் ஜம் சநகைர் க்ருஹம் கதா –10-

தேனினும் இனிய தங்கள் சொற்களைக் கேட்ட கோபியர்கள் தங்கள் தாமரை
திரு முகத்தைத் திரும்பிப் பார்த்த படியே மெதுவே வீடு சென்றார்கள் –

இதி நன்வ நுக் ருஹ்ய வல்ல வீர்விபி நாந்தே ஷு புரேவ ஸஞ்சரன்
கருணா ஸி ஸி ரோ ஹரே ஹர த்வரயா மே சகலா மயா வலிம் –11-

இவ்வாறு அப் பெண்களுக்கு அனுக்ரஹம் செய்து காட்டில் திரிந்து மகிழ்ந்தீர் –
கருணை உள்ளம் கொண்ட ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை சீக்கிரம் ரக்ஷித்து அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -59–திருக் குழல் ஓசை வர்ணனை -திரு வேணு கானம்-

September 29, 2020

முதல் ஒன்பது ஸ்லோகங்களும் ரஸோத்ததா மீட்டரிலும் நிகமன ஸ்லோகம் ஸாலினி மீட்டரிலும் அமைந்த தசகம்

த்வத் வபுர் நவ கலாய கோமலம் ப்ரேம தோஹநம் அசேஷ மோஹநம்
ப்ரஹ்ம தத்துவ பர சின் முதாத்மகம் வீஷ்ய சம்முமுஹுர் அந்வஹம் ஸ்த்ரிய –1-

காயாம்பூ போன்ற நிறமுள்ள தங்கள் திருமேனி அனைவரையும் ஆநந்திக்கச் செய்தது –
தங்களது நிரதிசய ஞான ஆனந்த ப்ரஹ்ம திவ்ய மங்கள விக்ரஹத்தைக் கண்ட கோபிமார்கள்மிகுந்த மோஹத்தை அடைந்தனர் –

அந்வஹம் –அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதன் அன்றோ

———————–

மன்மத உன்மதித மானசா க்ரமாத் த்வத் விலோக நரதாஸ் ததஸ் தத
கோபிகாஸ் தவ ந சேஹிரே ஹரே காநந உபகதி மப்யஹர் முகே –2-

தாங்களைக் காண்பதிலேயே விருப்பம் கொண்ட கோபிமார் மன்மதனால் தாக்கப்பட்ட
மனதை உடையவர்களாய் இருந்தார்கள் –
ஆகையால் காலையில் காட்டுக்கு மாடுகளை மேய்க்கப் கூடச் செல்லவில்லை –

அழகையே மத்தாக காதலைக் கடைந்து-ஹரே-உள்ளம் கவர் கள்வன்

திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -மாடு மேய்க்கப் போக வேண்டாம் கண்ணா

————–

நிர்கதே பவதி தத்த த்ருஷ்டயஸ் த்வத் கதேந மனசா ம்ருகேஷணா
வேணு நாதம் உப கர்ண்ய தூரதஸ் த்வத் விலாஸ கதயா அபி ரேமிரே –3–

தங்கள் மாடு மேய்க்கச் சென்ற போது தாங்கள் செல்லும் வழியையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள் –
தங்கள் திரு வடிவை மனதில் வைத்து வெகு தூரத்தில் இருந்து கேட்க்கும்
தங்கள் குழல் ஓசையைக் கேட்டு மகிழ்ந்தனர் –
தங்கள் விளையாட்டுக்களைப் பற்றிய கதைகளை பேசியே ஆனந்தித்தனர் –

நந்த கிராமம் -தவழ்ந்த பின்பு இடம் பெயர்ந்தார்கள் -இங்கு இருந்து தான் மதுரைக்கு போனான்
கோகுலம்-முதலில் கண்ணபிரான் வந்த இடம் – –
பிருந்தாவனம் -மாடு மேய்க்கப் போன இடம்
தத்த த்ருஷ்டயஸ் த்வத் கதேந மனசா ம்ருகேஷணா-மான் போன்றவர் கண்களும் உள்ளமும் உன் பின்னே வர-உடலை விட்டு உயிர் பிரிவதைத் தாங்களே பார்த்தார்கள் -நீ மாடு மேய்க்கப் போன போது-ராமர் விசுவாமித்திரர் உடன் செல்லும் பொழுது சக்ரவர்த்தி பார்த்தது போல்

ஆச்சார்யர் மூலமே அவனை அறியலாம் -புல்லாங்குழல் -அதே போல் -உபதேசம் கேட்டு அவன் அனுபவம் போல் வேணு நாதம் கேட்டு அவன் அனுபவம் கிட்டும்

————-

காந நாந்தம் இதவான் பவாநபி ஸ்நிக்த பாத பதலே மநோரமே
வ்யத்யயா கலித பாதம் ஆஸ்தித ப்ரத்யு பூரயத வேணு நாலிகாம் –4–

கானகம் சென்ற உடன் அழகு நிரம்பிய மரத்தடியில் திருவடிகளை மாற்றி நின்று
திருப் புல்லாங்குழலை ஊதினீர்கள் –

—————–

மார பாண துதகேசரீ குலம் நிர்விகார பஸூ பக்ஷி மண்டலம்
த்ரா வணம் ச த்ருஷதாமபி ப்ரபோ தாவகம் வ்யஜநி வேணு கூஜிதம் –5-

தங்கள் திருக் குழலின் இனிமையான ஓசை வானில் உள்ள அப்சரஸ் கூட்டங்களை மயங்கச் செய்தது –
பசுக்கள் பறவைகள் முதலியவை செயல் அற்று நின்றன –
கற்களையும் உருகச் செய்தது –

————-

வேணு ரந்தர தரல அங்குலீதலம் தால சஞ்சலித பாத பல்லவம்
தத் ஸ்திதம் தவ பரோக்ஷம் அப்யஹோ சம் விசிந்த்ய முமுஹுர் வ்ரஜாங்கநா –6–

கோபிகைகள் தொலைவில் இருந்தாலும் திருக் குழலின் மீது விளையாடும் தங்கள் விரல்களையும்
தாளம் இடும் தங்கள் திருப் பாதங்களையும் நினைத்து மெய் மறந்தனர் –

————–

நிர் விசங்க பவத் அங்க தர்ஸிநீ கேசரீ கக ம்ருகாந் பஸூ நபி
த்வத் பத பிரணயி காநநம் சதா தன்ய தன்யமிதி நன்வ மாநயன் –7-

தங்களைப் பார்க்கும் தேவப் பெண்டிரையும் மிருகங்களையும் பசுக்களையும் தங்கள்
சம்பந்தம் பெற்ற கானகத்தையும் மிக்க பேறு பெற்றவை என்று கோபிமார் எண்ணினார்கள்

—————

ஆபி பேயம்  அதராம்ருதம் கதா வேணு புக்த ரஸ சேஷம் ஏகதா
தூரதோ பத க்ருதம் துரா சயேத் யாகுலா முஹு ரிமா சமா முஹன் –8-

திருப் புல்லாங்குழல் அனுபவித்த தங்கள் அதர அம்ருதத்தின் மிச்சத்தை ஒரு தடவையாவது அனுபவிப்போமோ –
வெகு தூரத்தில் உள்ள கிடைக்காத இதைப் பற்றிய ஆசையே போதும் என்று ஏங்கித் தவித்தனர் –

கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ
திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே –7-1-

————-

ப்ரத்யஹம் ச புநர் இத்தம் அங்கநாஸ் சித்த யோநி ஜெனிதா தனுக்ரஹாத்
பத்த ராக விவசாஸ் த்வயி ப்ரபோ நித்யமாபுர் இஹ க்ருத்ய மூடதாம் –9–

இவ்வாறு தினமும் –சித்த யோநி-மன்மதனால் கோபிகைகள் மனம் கலக்கம் உற்றது – தங்கள் இடம் வைத்த
அன்பால் அவர்கள் தினமும் செய்யும் காரியங்களையும் அறியாதவர்களாக ஆனார்கள் –

——-

ராகஸ் தாவஜ் ஜாயதே ஹி ஸ்வபாவாந்
மோக்ஷ உபாயோ யத்நதஸ் யாந்த வா ஸ்யாத்
தாஸாம் த்வேகம் தத் த்வயம் லப்த மாஸீத்
பாக்யம் பாக்யம் பாஹி மாம் மாருதேச –10-

உலகில் எல்லாருக்கும் இயற்கையாவே ஆசை உண்டாகிறது -முயற்சியினால் மோக்ஷம்
உண்டாகலாம் அல்லது உண்டாகாமல் இருக்கலாம்
ஆனால் கோபிகைகளுக்கு இவ் விரண்டும் ஒன்றாகவே கிடைத்து விட்டது –
என்னே பாக்யம் -ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்