Archive for the ‘திரு வேங்கடம் உடையான்’ Category

ஸ்ரீ வேங்கடாசல மஹாத்ம்யம்-

October 23, 2025

புளிய மரம் செண்பக மரம் துவஜஸ்தம்பம் வல்லது பக்கமும் இடது பக்கமும் -பெருமாளும் பிராட்டிமாரும் வேடர்கள் வழிபட்டவை –
வராஹமூர்த்தி உத்சவம் ராமானுஜர் -ஐப்பசி திருவோணம் பிரதிஷ்டை செய்து அருளினவன் -அவதார உத்சவம் -வராஹ ஜெயந்தி -அத்யயன உத்சவம் ஒரு நாள் -மூன்று நாள்கள் இன்றும் நடக்கிறது
நாகாபரணமும் ராமானுஜர் சாத்தி அருளினார்
ஸ்ரீ பாத ரேணு ப்ரஸாதம் முக்கியம்

வழித்துணை நரஸிம்ஹர் திருக்கோயிலும் நடைபாதையில் உண்டாம்-

தேசிகேந்த்ரன் அப்பனுக்கு சங்காழி அளித்தவன் வாழியே -அமர்ந்த திருக்கோலம் திருமலையில் -சிஷ்யனாக அப்பன் நின்ற திருக்கோலம் -வேதார்த்த ஸங்க்ரஹம் -உபதேசித்து அருளினார் –

———-

10 புராணங்களில் திருமலையின் பெருமைகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அவை கீழ்காணுமாறு :

1) வராஹ புராணம் (புராணம்)
2) பாத்ம  புராணம் (புராணம்)
3) கருட புராணம் (புராணம்)
4) ப்ரம்மாண்ட புராணம் (புராணம்)
5) மார்கண்டேய புராணம் (புராணம்)
6) வாமன புராணம் (புராணம்)
7) ப்ரம்ம புராணம் (புராணம்)
8) ஸ்காந்த புராணம் (புராணம்)
9) ஆதித்ய புராணம் (உபபுராணம்)
10) பவிஷ்யோத்தர புராணம் (உபபுராணம்)

இவற்றோடு , மகாபாரதத்தின் 19 வது பர்வம் என்று போற்றப்படும் ஹரிவம்சத்திலும் திருமலையின் பெருமைகளை காணலாம்.

வேங்கடாசல  மாஹாத்ம்யத்தில் , வராஹ பெருமானின்  வைபவம், ஸ்ரீநிவாஸன்  திருவேங்கடத்தை வந்தடைந்தமை, அனைத்துலகிற்கும் தாயான பத்மாவதி ஸ்ரீநிவாஸனை திருக் கல்யாணம் செய்து கொண்டமை,  திருக் கோனேரியின் பெருமை, ஏனைய தீர்த்தங்களின் பெருமை மற்றும் வைஷ்ணவ லக்ஷணம் உள்ளிட்டவைகளை அனுபவிக்கலாம்-எம்பெருமானார் யாதவராஜனின்  சபையிலே திருமலையில் கோயில் கொண்டுள்ள தெய்வம் ஸ்ரீநிவாஸனே என்று நிரூபித்த அந்த சந்தர்ப்பத்திலும், மேலும் திருமலையப்பன் கோயில் திருப்பணிகளை சீர் திருத்தி நிர்வகித்த சந்தர்ப்பங்களிலும் , பல புராண ஸ்லோகங்களை மேற்கோள் காட்டியுள்ளார். ஆக , இவற்றையும் அறிந்து கொள்ளுதல்  இராமனுசனுடையார்களுக்கு இன்பம் பயக்க வல்லதே  ஆகும்.

ஸ்ரீ வேங்கடேச ப்ரீயதாம்-ஸ்ரீநிவாஸாய மங்களம்
ஸ்ரீ பாஷ்யகாரய மங்களம்

ஸ ஏஷ ஏவ புருஷ பஞ்சதா பஞ்சாத்மா -ஸ்ருதி -எல்லா உலகங்களுக்கும் காரண பூதனாய் இருக்கும் இப்பரம புருஷன் தான் பரம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமி அர்ச்சை முதலியவைகளாலும் விஷ்ணு புருஷன் ஸத்யன் அச்யுதன் அநிருத்தன் முதலியவைகளாலும் கூடி யிருக்கிறான்

அத்ப்ய: ப்ருதிவ்யை ரஸாத் ஸம்பூத்‌: – விச்வ கர்மண: – ஸமவர்த்தத – . தஸ்ய – , த்வஷ்டா – , ரூபம்‌ -விததத்‌ – தத்‌- , புருஷஸ்ய – , அகரே – விச்வம்‌ – ஆஜாநம்‌ -.அத்ப்ய: ஜலத்தினுடையவும்‌, ப்ருதிவ்யை – பூமினுடையவும்‌, ரஸாத் – ஸாரமான பாகத்‌தினால்‌, ஸம்பூத்‌: – உண்‌டான சிலையானது, விச்வ கர்மண: -நான்முகனால்‌, ஸமவர்த்தத – நன்றாக செய்யப்பட்டது. (நான்முகனின்‌ ஸங்கல்பத்தால்‌ பகவானின்‌ திவ்ய மங்கள விக்ரஹ மண்டப ப்ராகாராதிகளின்‌ நிர்மாணத்துக்கு உசிதமான சிலை (கல்லு)
உண்டாயிற்று – என்று – கருத்து.) தஸ்ய – அந்த சிலைக்கு , த்வஷ்டா – சிற்பி
யானவன்‌, ரூபம்‌ – கர சராணாதிகளோடு கூடிய மனேஹரமான விக்ரஹத்தை,
விததத்‌ – நிர்மித்தான்‌, தத்‌- அந்த நிர்மாணமானது , புருஷஸ்ய – பரம புருஷனுடைய, அகரே – உண்டாகப் போகும்‌. விச்வம்‌ – ப்ரஸித்தமான, ஆஜாநம்‌ – ஆவிர்பாவத்திற்கு காரணமாயிருக்கிறது

அஸ்ய ரூபம்‌ ஸந்த்ருசே ந திஷ்டதி கச்சித்‌ ஏநம்‌ சஷுஷா ந பஸ்யதி ஹ்ருதா மநீஷா மநஸா அபிக்லுப்த: யே விது: தே அம்ருதா –அஸ்ய – இந்த பகவானுக்கு, ரூபம்‌ – ரூபமானது, ஸந்த்ருசே – திருஷ்டி. விஷயமாய்‌, ந திஷ்டதி – இருப்பதில்லை, கச்சித்‌ – எவனும்‌, ஏநம்‌ – இவனை, சஷுஷா – கண்ணால்‌, ந பஸ்யதி – பார்க்க முடியாது . ஆகிலும்‌, ஹ்ருதா -ஸ்ருதி ப்ரமாணத்தாலும்‌, மநீஷா – மந்வாதி ஸம்ருதிகளாலும்‌, மநஸா – பார்கவாதி பகவச்‌ சாஸ்‌த்ரங்களாலும்‌, அபிக்லுப்த: – பிம்ப ரூபமாக. யே- எவர்கள்‌, விது: – தெரிந்து கொள்ளு கிறார்களோ, தே- அவர்கள்‌, அம்ருதா – மோக்ஷத்தை அடைவார்கள்‌,

வீர ஸுதஷ தேவகாம்‌: யுக்தக்ராவ; ஜாயதே-வீர -பகவான் அர்ச்சனாதிகளால்‌ ஆராதிக்கப்பட்டு, ஸுதஷ – பக்தர்களின்‌ அபிஷ்டங்களை அருளுமவனாய்‌, தேவகாம்‌: – கிரீடிக்க வேணுமென்ற திரு வுள்ளம் பற்றி, யுக்தக்ராவ; – சிலா மூர்த்தியாக, ஜாயதே – ஆகிறான்‌.

அச்மாணம்‌ ஆகணம்‌ ப்ரபத்யே”-அச்மாணம்‌ -சிலா மூர்த்தியான பகவானை -ஆகணம்‌ -சிற்பியினால் ஸாஸ்த்ர யுக்தமாகச் செய்யப்பட்டு -பகவத் ஸாஸ்த்ர விதிகளின்படி ப்ரதிஷ்டாதிகள் செய்யப்பட ப்ரபத்யே”-சரணம் புகுகிறேன்

அந்தஸ: ப்ரபாந்தம் மஹேசூராய விஷ்ணவே வ: த்யாய அர்ச்சத-அந்தஸ: – ஆஹாராதிகளால்‌ வ்ருத்தி யடையும்‌ கரண களேபரங்களை ஸ்ருஜித்து , ப்ரபாந்தம் -ரக்ஷிக்குமவனான. மஹேசூராய – ஸர்வ சக்தனான, விஷ்ணவே – பகவானை,
வ: – உங்களுக்கு, த்யாய – மோக்ஷ ப்ராப்‌திக்காக, அர்ச்சத – பூஜியுங்கள்‌,
என்று ருக் வேதத்தில்‌ சொல்லப்பட்டது

ஸ்ம்ருதிகளில்‌ :–” ஏதுத் ரூபம்‌ ப்ரதிஷ்‌டாப்ய சுத்தயா சிலயா ந்ருப “ -என்றும் *ஸுரூபாம்‌ ப்ரதிமாம்‌ விஷ்ணோ:-முதலான வாக்யங்களாலும்‌ விக்ரஹ ஆராதனம்‌ சொல்லப்பட்டுள்ளது -ப்ரவ: பரந்த மந்தஸோ அதிபாய தே” பக்த்யா பகவந்தம்‌ நாராயணம்‌ அர்ச்சயேத்‌–மன்மனா பவ மத் பக்தோ மத்யாஜி மாம்‌ நமஸ்குரூ”” என்னும்‌ ப்ரமாணங்கள்‌ *எம்பெருமானுடைய அர்ச்சநம் மிகவும்‌ உபாதேயம்‌’”–என்று ௮றுதி யிடுகின்‌றன.

ஹே அராயி காணே விகடே கிரிம்‌ கச்ச ஸதான்வே
ஸ்ரிம் பிடஸ்ய ஸத்வபி: தே அபிஷ்ட்வா சாதயாமஸி
.-என்று ருக்வேத்‌தில்‌ திருவேங்கடமும்‌, அதின்‌ ஸ்வாமியான ஸ்ரீநிவாஸனும்‌ வர்ணிக்கப்பட்டு இருக்கிறார்கள்‌.

ஏவம்‌ ஸ்ரீக்ருஷ்ண ருபேண க்ரீடிதோ வேங்கடாசலே
அரரயி காணே விகடே கிரிம்‌ கச்சே ” திஸ்தம்‌ விது:
ஸோ$யம்‌ வேதாமய? ஸாக்ஷாத்‌ கிரீச. பந்நகாசல-
-என்று வேங்கடாசல புராணத்தில்‌ இந்த அர்த்தம்‌ சொல்லப்‌ பட்டிருக்கிறது .

ஹே அராயி -ஏழையே
காணே -குருடனே
விகடே கிரிம்‌ -வேங்கடாசலத்தை
கச்ச -அடைவாயாக
ஸதான்வே-எப்‌பொழுதும்‌ ௮ந்வேஷணத்தைப் பண்ணும்‌ அவ்விடத்தைச்‌ சென்று,
அசஞ்சலமான த்யானத்தைப்‌ பண்ணுவாயாக,
ஸ்ரிம் பிடஸ்ய -ஸ்ரீ மஹாலஷ்மிக்கு இருப்பிடமாய் ஸ்ரீ நிவாசனுடைய
ஸத்வபி: -ஸாத்விக குணங்களான
தே பி -அந்த தயா வாத்சல்யத்தி கல்யாணம் குணங்களாலே
அபிஷ்ட்வா சாதயாமஸி.-உன் பாபங்களை நீக்கி பேரின்பத்தையும் அளிக்கிறோம்

அதோ யத்தாரு ப்லவதே ஸிந்தோ: பாரே ௮பூருஷம்‌,
ததராபஸ்வ துர்ஹண: தேந கச்ச பாஸ்தாம்‌.
(10-155-3) -என்னும்‌ ஸ்ருதிக்கு ஜகந் நாத க்ஷேத்ர பரமாக அர்த்தம்

ரயி: ககுத்மான்‌ விததத்வி நஷ்டம்‌ ரயிவத் விதானம்‌
தஸ்மை கருத்ரே விகடாய பித்ரே ஸ்வாஹா,
-என்னும் பராமாத்மிக–உபநிஷ்த்தில்‌ சொல்லப்பட்டிருக்கிறது
ரயி: -ஐஸ்வர்ய ஸ்வரூபனும்‌ (பெருஞ்செல்வ ஸ்வரூபன்‌-என்று கருத்து.)
ககுத்மான்‌ -வ்ருஷபாசலத்தில்‌ நித்ய வாஸம்‌ செய்யுமவனும்‌ (அல்லது சிறக்தவனலும்‌),
விததத்வி நஷ்டம்‌ –எல்லோருக்‌கும்‌ எல்லா வரங்களையும்‌ கொடுக்குமவனும்‌.
ரயிவத் விதானம்‌–ருக்‌- யஜுஸ்‌-ஸாம-அதர்வணங்களாகிற வேதங்களில்‌ (ஸத் புருஷர்களுக்கு ஸம்பத்‌ – வேதங்களே தான்‌ “ஸாஹி ஸ்ரீர் அம்ருசா ஸதாம்‌’” என்று
சொல்லப்‌ பட்டிருக்கிறது )ப்ரஸித்தனானவனும்‌,
தஸ்மை கருத்ரே -வ்ருஷபாசலத்தின்‌ அக்ரா பாகத்தில்‌ இருக்குமவனும்‌,
விகடாய -வேங்கடாசலத்தி லிருக்கும்‌ பெருமானுக்கு,
பித்ரே ஸ்வாஹா,-என் ஆத்மாவை ஸமர்ப்பிப்பேன்‌–

வராஹ புராணத்தில்‌–ஸர்வ பாபானி வேம்‌ ப்ராஹு:, கட தத்தாஹ உச்யதே
ஸர்வ பாபாபஹாரித்வாசத் வேங்கடாத்ரி ரீதிரித -என்று, வேம்‌”
என்ற சொல்லுக்கு எல்லாப்‌ பாபங்களும்‌”என்று பொருள்‌–என்றும்‌, * கட – சப்தத்திற்கு எரித்தல்‌ என்று
பொருள்‌ என்றும்‌, நிரூபிக்கப்பட்டு. யிருக்கிறது,

வாமன புராணத்தில்‌-வகாரோ அம்ருத பீஜம்‌ து , கட மைஸ்வர்ய முச்யதே ,
அம்ருசைஸ்வர்ய ஸங்கத்வாத்‌, வேங்கடாத்ரி ரிதி ஸ்ம்ரித..-
என்று. “வேம் ” என்ற சொல்லுக்கு * அம்ருதம்‌” என்றும்‌-௧ட– என்பதற்கு ஐஸ்வர்யம்‌” என்றும்‌ – பொருள்‌ கூறப்பட்டன.

ஸ்ரீநம்மாழ்வார்‌ -வேம் கடங்கள் என்னும்‌ பாசுரத்திலே கடங்கள் எல்லாம் – வேம்‌- தீயினில்‌ தூசாகும்‌ – என்று பொருள்‌ கூறினார்‌.-ஸ்ரீபகவத் ராமானுஜாசார்யர்‌, தமது ஸ்ரீபாஷ்ய மங்கள ஸ்லோகத்தில்‌ “** ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே ”’, என்று திருவேங்கடமுடையானைத்‌ தொழுவதுமன்றி, வேதார்த்த ஸங்க்ரஹத்தைத்‌ திரு வேங்கடமுடையான்‌ திருமுன்பே தான்‌ உபந்யஸித்தார்‌.
வேதாந்த தேசிகரும் தயா சதகத்தில் -“ப்ரபத்யே தம்‌ கிரிம்‌” என்று திருவேங்கடத்தையும் – கம ப்யந வதிம்‌ வந்தே கருணாவருணாலயம்‌”’… என்று திருவேங்கட முடையானையும்‌, ஸ்ரீ ஸ்துதியில்‌ தாயாரையும்‌ அடைக்கலம்‌ புகுந்தார்‌.அதிகார சங்கரஹத்‌தில்‌:–
கண்ணனடி யிணை யெமக்கு காட்டும்‌ வெற்புக்‌
கடுவினைய ரிருவினையுங் கடியும்‌ வெற்புத்
திண்ணமிது வீடென்னத் திகழும் வெற்புத்
தெளிந்த பெரும் தீர்த்தங்கள்‌ செறிந்த வெற்புப்‌
புண்ணியத்தின்‌ புகலிதெனப்‌ புகழும்‌ வெற்புப்‌
பொன்னுலகிற் போகமெல்லாம்‌ புணர்க்கும்‌ வெற்பு
விண்ணவரும்‌ மண்ணவரும்‌ விரும்பும்‌ வெற்பு
வேங்கடவெற்‌பென விளங்கும் வேத வெற்பே
–என்றும்‌ திருவேங்கடத்தைச்‌ சிறப்பித்துள்ளார்‌.

ஸாளுவ நரஸிம்ஹ ராஜாவுக்கு ஸேநா நாயகனா யிருந்த துளுவ நரசிங்கராயர்‌ 1487-ம்‌ வருஷத்தில்‌ கர்னாடக ராஜ்‌யாதிபதியானார்‌, இந்தத் துளுவ நரசிங்க தேவராயர்‌ ஆந்திர போஜ ராஜன்‌”! என்று புகழ் பெற்ற ஸ்ரீ கிருஷ்ண தேவராயருக்குத் தகப்பனார் –ஸ்ரீ கிருஷ்ண
தேவராயர்‌
திருவேங்கடமுடையானைத்‌ தனக்கு இஷ்ட தெய்வமாகச்‌ சொல்லிக்‌ கொண்டு, அவனைப்‌ பாட்டுடைத் தலைவனாக்‌கி பிரஸித்தமான * ஆமுக்தா மால்யதை ” என்னும்‌ ஆந்திர பிரபந்தத்தைத் திருவேங்கடமுடையானுக்கே உரிமை யாக்கினார்‌.

ஏறக்குறைய 6000 ஆண்டுகட்கு முன்னர்த்‌ தோன்றியதும் மிகப்‌ பழையதுமாகிய தொல்காப்‌பியம்‌’ என்னும்‌ இலக்கணத்திற்கு, ௮தன்‌ ஆசிரியராகிய தொல்காப்பியர்‌ காலத்தில் இருந்தவராகிய பனம்பரானுர்‌ என்பார்‌ சிறப்புப் பாயிரம்‌ அளித்துள்ளார் -அவர்‌ தமிழ்‌ காட்டிற்கு எல்லை கூறுங்கால்‌- வட வேங்கடம்‌ தென்குமரி‘” என்று வேங்கடத்தை வட எல்லையாகக் கூறியுள்ளார் -கடைச் சங்க நூல்களுள்‌ ஒன்றாகிய அகநானூற்றில் -இம்மலை, ்‌
கழல்புனை திருந்தடிக்‌ கள்வர்‌ கோமான்‌
மழபுலம்‌ வணக்கிய மாவண்‌ புல்லி
விழவுடை விழுச்சீர்‌ வேங்கடம்‌ பெரினும்‌
பழகுவ ராதலோ அரிது.
”-என்றும்‌,
வென்வேல்‌ திரையன்‌ வேங்கட நெடுவரை , ”என்றும்‌,
வினைநவில்‌ யானை விறற்போர்த் தொண்டையர்‌
இனமழை தவழும்‌ ஏற்றரு நெடுங்கோட்‌(டு)
ஒங்கு வெள்‌ ளருவி வேங்கடத் தும்பர்‌.
”-என்றும்‌,சிறப்பிக்கப்‌ பட்டுள்ளது

சிலப்பதிகாரம்‌, மாங்காட்டு மறையவன்‌ கூற்றாக
வீங்கு நீரருவி வேங்கட மென்னும்‌
ஒங்குயர்‌ மலயத்‌ துச்சி மீமிசை
விரி கதிர்‌ ஞாயிறும்‌ திங்களும்‌ விளங்கி
இருமருங் கோங்கிய விடை நிலைத்‌ தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்கு விற்‌ பூண்டு
கன்னிற மேகம்‌ நின்றது போலப்‌
பகை யணங்‌ காழியும்‌ பால் வெண்‌ சங்‌கமும்‌
தகை பெறு தாமரைக்‌ கையி நேந்தி
நலங்கிள ராரமார் விற்‌ பூண்டு
பொலம்பூ வாடையிற்‌ பொலிந்து தோன்றிய
செங்கண்‌ நெடியோன்‌ நின்ற வண்ணமும்‌.”
என, * வேங்கட மலையில்‌ எழுந்தருளிய பெருமான்‌–திருவாழித் திருச் சங்குகளைத் தரித்து முகில்‌ நிறத்தோடு விளங்கும்‌ திருமாலே ”என்பதை விளக்கமாகக்‌ கூறுகின்றது.

சமணப்‌ புலவராகிய * ஐயனாரிதனார்‌” என்பவர்‌, தாம்‌ எழுதிய-புறப் பொருள்‌ வெண்பா மாலையில் – புலவர் ஆற்றுப் படைக்கு மேற்‌கோளாக :
வெறி கொள்‌ அறை யருவி வேங்கடத்துச்‌ செல்லின்‌
நெறி கொள்‌ படிவத்தோய்‌ நீயும்‌ -பொறிகட்டு
இருளீயும்‌ ஞாலத் திடரெல்லாம்‌ நீங்க
௮ருளீயும்‌ ஆதி யவன்‌,
”-என்னும்‌ வெண்பாவில்‌ “: திருவேங்கடவன்‌ திருமாலே “என்று கூறிப்‌ போந்தார்‌.

வேங்கட நாதனை வேதாந்தக்‌ கூத்தனை
வேங்கடத்துள்ளே விளையாடும்‌ நந்தியை
வேங்கடம்‌ என்றே விரகறியாதவர்‌,”
-என்னும்‌ திருமூல நாயனார்‌ திருமந்திரத்தையும்‌,
அரியாரும்‌ பூம்பொழில்சூழ்‌ ஆமாத்தூரம்மான்‌
௮ரியாரும்‌ பாகத்‌தமுதன்‌-அரியாரும்‌
வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்‌
வேங்கடத்து நோயால்‌ விளிந்து
. ‘என வரும்‌ கபில தேவ நாயனார்‌ * சிவபெருமான்‌ திருவந்தாதியையும்‌ கொண்டு சைவருட்‌ சிலர்‌, திருவேங்கடமுடையான்‌ சிவபெருமானே” எனக்‌ கூற முற்படுவர்‌.அருணகிரிநாதர்‌, திருமலையில்‌ முருகப்‌ பெருமானைப்‌ பாடியிருக்‌கிறார்‌ என்றால்‌, ௮து திருவேங்கடமுடைய திரு மாலைக்‌ குறிப்பதன்று – திருமலைப்‌ பெருமையை அறிவிக்கும்‌ புராணத்தில்‌, * குமார தாரை ’ என்னுமிடத்தில்‌, முருகன்‌ திருமாலைக்‌ குறித்துத் தவம்‌ செய்து ௮ருள்‌ பெற்றமையால்‌ அங்கே யிருந்ததாகக் கூறப்படும்‌ ௮ம்‌முருகப் பிரானை யென்பது –* குமார தாரை என்னும்‌ பெயராலும்‌
௮மைவுடைத்தாதலின்‌, ௮த் திருப்புகழுக்‌ கரிய முருகன்‌, திருவேங்‌கட வள்ளலாகிய திருமால்‌ அல்லன்‌. என்பது போதரும்‌ ; வேதத்‌தில் யுவா குமார ” என்று திருமாலைக்‌ “குமரன்‌‘” என்னும்‌ சொல்‌லால்‌ கூறியிருத்தல்‌ அறிக. ஆழ்வார்களும்‌, பலவிடங்களில்‌, திருமாலைக் குமரன் என்றும் * இளையோன்‌ ‘ என்றும் அருளிச்‌ செய்திருத்தலும்‌
அறியத்தக்கது .

ஸ்தானோத்கர்ஷாத்‌ ஸூதீப்தம்‌, ச்ரம ஹர வபுஷம்‌, ஸ்வாங்க பர்யாப்பத
பூஷம்‌,
தேஜிஷ்டம்‌ நீசயோகாத்‌, ப்ரணமித புவனம்‌, பாவனம்‌ ஸந்நதானாம்‌ |
ப்ராப்த் யர்ஹ ஸ்தானம்‌, ௮ஹ: ப்ரசமன விஷயம்‌, பந்த விச்சேதி பாதம்‌,
பேஷே சீக்காரபியான க்ஷம சுபவஸதிம்‌, லம்பி தார்ச்சாபி முக்யம்‌ –த்ரவிடோபநீஷத்‌ தாத்பர்ய ரஈத்நாவஸி.

ஸ்தானோத்கர்ஷாத்‌ ஸூதீப்தம்‌, –திருமலையிலே நின்றும் அருளுகையாலே அளவில்லாத காந்தியை யுடையவனுமாய்
ச்ரம ஹர வபுஷம்‌, –காள மேகம் போலே கண்டார்க்கு ஸ்ரம ஹரமான வடிவழகை யுடையவனுமாய்
ஸ்வாங்க பர்யாப்பத பூஷம்‌, –தாமரை போன்ற தம்முடைய திருக்கண் மலர் முதலான அவயவங்களினாலே பூஷண யுக்தனுமாய்
தேஜிஷ்டம்‌ நீசயோகாத்‌, -அபகர்ஷத்தையும் அபூர்த்தியையுமுடைய தாழ்ந்தவர்களோடு சம்பந்திக்கையாலே மிகவும் விளங்குகிறவனாயும்
ப்ரணமித புவனம்‌, -எல்லா உலகங்களாலும் தொழப்படுகிறவனாகவும்
பாவனம்‌ ஸந்நதானாம்‌ |-வணங்குபவர்களை அவர்களது பிரதிபந்தகங்களைப் போக்கி பரிசுத்தமாக்குபவனாயும்
ப்ராப்த் யர்ஹ ஸ்தானம்‌, -மோக்ஷத்தை அளிக்க வல்ல இருப்பிடத்தை யுடையவனாயும்
௮ஹ: ப்ரசமன விஷயம்‌, –தன்னை அடைவதற்கு விரோதிகளைப் போக்க வல்ல திவ்ய தேசத்தை யுடையவனாயும்
பந்த விச்சேதி பாதம்‌,-ஜென்ம ஜரா மரணாதி வியாதிகளைப் போக்கவல்ல திருவடித் தாமரைகளை யுடையவனாயும்
சீக்காரபியான க்ஷம சுபவஸதிம்‌, —
மெள்ளப் போகிறோம் என்றும் இராதே தள்ளிக்கொண்டு முன்னே செல்ல வேண்டும்படியான திருமலையில் நித்யவாஸம் பண்ணுகிறவனாயும் இருக்கிற எம்பெருமானை
பேஜே -ஆழ்வார் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் -படியே நினைத்தபடியே உகப்போடே கண்டு அனுபவித்து அருளினார் –

ஆபத் சம் ரக்ஷணாத் அரி உபகரணத்தயா மேக சாம்யாதி பூம்னா
தீப்தி மத்வம் ஸ்வானாம் விச்வாஸ தானாத் ஸூர கண பஜ நாத்
திவ்ய தேச உபசத்தி பிராப்ய அப்ராப்யத்வ யோகாத் சத் பிரபத் தவ்ய பாவாத்
சர்வ வேதாந்த ஸூ பிரசித்தம் ஸ்ருதி சத விவஸிதம்

1-ஆபத் சம் ரக்ஷணாத் -உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!-பிரளய ஆபத்தில் உண்டு ரஷித்து-

2-அரி உபகரணத்தயா –சீறா எரியும் திரு நேமி வலவா! தெய்வக் கோமானே!

3-4-மேக சாம்யாதி பூம்னா –3/4 —வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!—
ஸாம்யம் –ஆதி–தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!-

5-தீப்தி மத்வம் –திரு மா மகள் கேள்வா!

6-ஸ்வானாம் விச்வாஸ தானாத்–புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒரு வில் வலவாவோ!

7-ஸூர கண பஜ நாத் -எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி

8-திவ்ய தேச உபசத்தி–செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!

9-பிராப்ய அப்ராப்யத்வ யோகாத்–நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!

10-சத் பிரபத் தவ்ய பாவாத் –வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே!–

சர்வ வேதாந்த ஸூ பிரசித்தம் -ஸ்ருதி சத விவஸிதம்-

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ மஹாலக்ஷ்மீ சதுர்விம்ʼஶதி நாமாவலி-ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி-

October 9, 2024

ஶ்ரீவேங்கடேஶமஹிஷீ மஹலக்ஷ்மீ ப்ரீத்யர்த²ம்ʼ
ஶ்ரீவேங்கடேஶமஹிஷீமஹாலக்ஷ்மீ சதுர்விம்ʼஶதி நாமபி⁴꞉
ஶ்ரீவேங்ககடேஶமஹிஷீ மஹாலக்ஷ்ம்யர்சனம்ʼ கரிஷ்யே ||

அஸ்ய ஶ்ரீமஹலக்ஷ்மீ சதுர்விம்ʼஶதிநாம மந்த்ரஸ்ய ப்³ரஹ்மா ருʼஷி꞉ .
அனுஷ்டுப் ச²ந்த³꞉ . ஶ்ரீமஹாலக்ஷ்மீர்தே³வதா .
ஶ்ரீவேங்கடேஶமஹிஷீமஹாலக்ஷ்மீப்ரீத்யர்தே⁴ ஜபே விநியோக³꞉ .

த்⁴யானம் 

ஈஶானாம்ʼ ஜக³தோஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம்ʼ ப்ரேயஸீம்ʼ
தத்³வக்ஷஸ்த²லநித்யவாஸரஸிகாம்ʼ தத்க்ஷாந்திஸம்ʼவர்தி⁴னீம் .
பத்³மாலங்க்ருʼதபாணிபல்லவயுகா³ம்ʼ பத்³மாஸனஸ்தா²ம்ʼ ஶ்ரியம்ʼ
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்வலாம்ʼ ப⁴க³வதீம்ʼ வந்தே³ ஜக³ன்மாதரம் ..

  1. ௐ ஶ்ரியை நம꞉
  2. ௐ லோக தா⁴த்ர்யை நம꞉
  3. ௐ ப்³ரஹ்ம மாத்ரே நம꞉
  4. ௐ பத்³ம நேத்ராயை நம꞉
  5. ௐ பத்³ம முக்²யை நம꞉
  6. ௐ ப்ரஸன்ன முக² பத்³மாயை நம꞉
  7. ௐ பத்³ம காந்த்யை நம꞉
  8. ௐ பி³ல்வ வனஸ்தா²யை நம꞉
  9. ௐ விஷ்ணு பத்ன்யை நம꞉
  10. ௐ விசித்ர க்ஷௌமதா⁴ரிண்யை நம꞉
  11. ௐ ப்ருʼது² ஶ்ரோண்யை நம꞉
  12. ௐ பக்வ பி³ல்வ ப²லா பீன துங்க³ஸ்த²ன்யை நம꞉
  13. ௐ ஸுரக்த பத்³ம பத்ராப⁴கர பாத³தலாயை நம꞉
  14. ௐ ஶுபா⁴யை நம꞉
  15. ௐ ஸரத்னாங்க³த³ கேயூர காஞ்ஜீ நூபுர ஶோபி⁴தாயை நம꞉
  16. ௐ யக்ஷ கர்த³ம ஸம்ʼலிப்த ஸர்வாங்கா³யை நம꞉
  17. ௐ கடகோஜ்ஜ்வலாயை நம꞉
  18. ௐ மாங்க³ல்யாப⁴ரணைஶ் சித்ரைர் முக்தாஹாரைர் விபூ⁴ஷிதாயை நம꞉
  19. ௐ தாடங்கைரவதம்ʼஸைஶ்ச ஶோப⁴மான முகா²ம்பு³ஜாயை நம꞉
  20. ௐ பத்³ம ஹஸ்தாயை நம꞉
  21. ௐ ஹரி வல்லபா⁴யை நம꞉
  22. ௐ ருʼக்³ யஜுஸ் ஸாம ரூபாயை நம꞉
  23. ௐ வித்³யாயை நம꞉
  24. ௐ அப்³தி⁴ஜாயை நம꞉

ஏவம்ʼ சதுர்விம்ʼஶதிநாமபி⁴꞉ பி³ல்வபத்ரைர்லக்ஷ்ம்யர்சனம்ʼ குர்யாத் .
ஸர்வாபீ⁴ஷ்டஸித்³தி⁴ர்ப⁴வதி ..

இதி மஹாலக்ஷ்மீ சதுர்விம்ʼஶதி நாமாவலி꞉ ||

————

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி-

சாஷாத் திருவானந்தாழ்வான் கபிலருக்கு உபதேசித்த நாமாவளி-

1-ஓம் வேங்கடேசாய ஸ்ரீ வேங்கடேசாய நம
2-ஓம் சேஷாத்ரி நிலயாய ஸ்ரீ வேங்கடேசாயா நம
3-வ்ருஷ த்ருக் கோசர ஸ்ரீ வேங்கடேசாயா நம —தர்மன் -மநு தவம் இருந்து வராஹப்பெருமாளை சாஷாத்காரித்த வ்ருத்தாந்தம்
4-ஓம் விஷ்ணவே ஸ்ரீ வேங்கடேசாய நம
5-ஓம் சதஞ்ஜந கிரீசாய ஸ்ரீ வேங்கடேசாயா நம
6-ஓம் வ்ருஷாத்ரி பதயே ஸ்ரீ வேங்கடேசாய நம
7-ஓம் மேரு புத்ர கிரீசாய ஸ்ரீ வேங்கடேசாய நம
8-ஓம் ஸரஸ் ஸ்வாமி தட்ஜூஜே ஸ்ரீ வேங்கடேசாய நம
9-குமார ஆகல்ப ஸேவ்யாயை ஸ்ரீ வேங்கடேசாயா நம -குமார தீர்த்தம்
10- வஜ்ரி த்ருக் விஷயா தயாய ஸ்ரீ வேங்கடேசாய நம

11-ஓம் ஸ்வர்க்லா ஸூ தந் யஸ்த ஸைநாபத்ய பராய ஸ்ரீ வேங்கடேசாய நம
12-ஓம் ஸ்ரீ ராமாய ஸ்ரீ வேங்கடேசாய நம
13-ஓம் பத்ம நாபாய ஸ்ரீ வேங்கடேசாயா நம
14-ஓம் ஸதா வாயுஸ் துதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
15-ஓம் த்யக்த வைகுண்ட லோகாய ஸ்ரீ வேங்கடேசாய நம
16-ஓம் கிரி குஞ்ஜ விஹாரிணே ஸ்ரீ வேங்கடேசாய நம
17- ஓம் ஹரி சந்தந கோத்ர ரேந்த்ர ஸ்வாமினே ஸ்ரீ வேங்கடேசாய நம
18-ஓம் சங்கரா ஜன்ய நேத்ர அப்ஜ விஷயாய ஸ்ரீ வேங்கடேசாய நம
19-ஓம் வஸூபரி சரத்ராத்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம
20-ஓம் கிருஷ்ணாய ஸ்ரீ வேங்கடேசாய நம

21-ஓம் அப்தி கந்யா பரிஷ்வக்த வக்ஷஸே ஸ்ரீ வேங்கடேசாய நம
22-ஓம் வேங்கடாய ஸ்ரீ வேங்கடேசாய நம
23-ஓம் ஸதகாதி மஹா யோகி பூஜிதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
24-ஓம் தேவஜித் ப்ரமுக அநந்த தைத்ய சங்க ப்ரணாஸிநே ஸ்ரீ வேங்கடேசாய நம
25-ஓம் ஸ்வேத த்வீப வசந் முக்த பூஜித அங்க்ரியாய ஸ்ரீ வேங்கடேசாய நம
26-ஓம் சேஷ பர்வத ரூபத்வ ப்ரகாஸந பராய ஸ்ரீ வேங்கடேசாய நம
27- ஓம் ஸாநுஸ்தாபித தார்ஷ்யாய ஸ்ரீ வேங்கடேசாய நம
28-ஓம் தார்ஷ்யாசல நிவாஸிநே ஸ்ரீ வேங்கடேசாய நம
29-ஓம் மாயாக டவிமாநாய ஸ்ரீ வேங்கடேசாய நம
30-ஓம் கருடஸ் கந்த வாஸிநே ஸ்ரீ வேங்கடேசாய நம

31-ஓம் அநந்த ஸிரஸே ஸ்ரீ வேங்கடேசாய நம
32-ஓம் அநந்தாஷ்யாய ஸ்ரீ வேங்கடேசாய நம
33-ஓம் அநந்த ஸரணாய ஸ்ரீ வேங்கடேசாய நம
34-ஓம் ஸ்ரீ ஸைல நிலயாய ஸ்ரீ வேங்கடேசாய நம
35-ஓம் தாமோதராய ஸ்ரீ வேங்கடேசாய நம
36-ஓம் நீல மேக நிபாய ஸ்ரீ வேங்கடேசாய நம
37-ஓம் ப்ரஹ்மாதி தேவ துர் தர்ச விஸ்வரூபாய ஸ்ரீ வேங்கடேசாய நம
38-ஓம் வைகுண்ட ஆகத ஸத்தேம விமாந அந்தர் கதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
39-ஓம் அகஸ்யாந் யர்த்திதா சேஷ ஜன த்ருக் கோஸராய ஸ்ரீ வேங்கடேசாய நம
40-ஓம் வாஸூ தேவாய ஸ்ரீ வேங்கடேசாய நம

41-ஓம் ஹரயே ஸ்ரீ வேங்கடேசாய நம
42-ஓம் தீர்த்த பஞ்சக வாஸிதே ஸ்ரீ வேங்கடேசாய நம
43-ஓம் வாம தேவ ப்ரியாய ஸ்ரீ வேங்கடேசாய நம
44-ஓம் ஜன கேஷ்ட ப்ரகாய ஸ்ரீ வேங்கடேசாய நம
45-ஓம் மார்க்கண்டேய மஹா நீர்த்த ஜாத புண்ய ப்ரதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
46-ஓம் வாக்பதி ப்ரஹ்ம தாத்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம
47-ஓம் சந்த்ர லாவண்ய தாயிநே ஸ்ரீ வேங்கடேசாய நம
48-ஓம் நாராயண நகேசாய ஸ்ரீ வேங்கடேசாய நம
49-ஓம் ப்ரஹ்ம க்ல்ப்தோத்ஸவாய ஸ்ரீ வேங்கடேசாய நம
50-ஓம் சங்க சக்ர வராநம் ரலஸத் கர தலாய ஸ்ரீ வேங்கடேசாய நம

51-ஓம் த்ரவங் குகமதா சக்த விக்ரஹாய ஸ்ரீ வேங்கடேசாய நம
52-ஓம் கோவாய ஸ்ரீ வேங்கடேசாய நம
53-ஓம் நித்ய யவ்வன மூர்த்தயே ஸ்ரீ வேங்கடேசாய நம
54-ஓம் அரர்த்தி தார்த ப்ரதாத்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம
55-ஓம் விஸ்வ நீரர்த்தாக ஹாரிணே ஸ்ரீ வேங்கடேசாய நம
56-ஓம் நீர்த்த ஸ்வாமி ஸரஸ் ஸ்நாத ஜநா பீஷ்ட ப்ரதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
57-ஓம் குமார தாரிகா வாஸஸ் கந்த அபீஷ்ட ப்ரதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
58-ஓம் ஜாநு தக்ந ஸம் பூத பேத்ரிண ஸ்ரீ வேங்கடேசாய நம
59-ஓம் கூர்ம மூர்த்யே ஸ்ரீ வேங்கடேசாய நம
60-ஓம் கிந் நரத்த்வ சபாந்த ப்ரதாத்ரே நம

61-ஓம் விமவே ஸ்ரீ வேங்கடேசாய நம
62-ஓம் வைகாநஸ முநி ஸ்ரேஷ்ட பூஜிதாயா ஸ்ரீ வேங்கடேசாய நம
63-ஓம் ஸிம்ஹாஸல நிவாஸாய ஸ்ரீ வேங்கடேசாய நம
64-ஓம் ஸ்ரீ மந் நாராயணாய ஸ்ரீ வேங்கடேசாய நம
65-ஓம் ஸத் பக்த நீல கண்டார்ஸயே ந்ருஸிம்ஹாய ஸ்ரீ வேங்கடேசாய நம
66-ஓம் குமுதா க்ஷண ஸ்ரேஷ்டஸை நாபத்ய ப்ரதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
67-ஓம் துர்மேத ப்ராண ஹர்த்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம
68-ஓம் ஸ்ரீ தராய ஸ்ரீ வேங்கடேசாய நம
69-ஓம் க்ஷத்ரியாந்த கராமாய ஸ்ரீ வேங்கடேசாய நம
70- ஓம் மத்ஸ்ய ரூபாய ஸ்ரீ வேங்கடேசாய நம

71-ஓம் பாண்ட வாரி ப்ரஹர்த்த்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம
72-ஓம் ஸ்ரீ கராய ஸ்ரீ வேங்கடேசாய நம
73-ஓம் உபத்யகா ப்ரதேசஸ்த சங்கரத் யாத மூர்த்யே ஸ்ரீ வேங்கடேசாய நம
74-ஓம் ருக்மா ரப்ஜ ஸரஸீ கூல லஷ்மீ க்ருத தபஸ்விநே ஸ்ரீ வேங்கடேசாய நம
75-ஓம் லஸல் லஷ்மீ கர அம்போஜகத் தகல் ஹரகஸ்ரஜே ஸ்ரீ வேங்கடேசாய நம
76-ஓம் ஸாளக்ராம நிவாஸாய ஸ்ரீ வேங்கடேசாய நம
77-ஓம் ஸூக த்ருக் கோஸராய ஸ்ரீ வேங்கடேசாய நம
78-ஓம் நாராயணாத்திதா சேஷ ஜன த்ருட் விஷயாய ஸ்ரீ வேங்கடேசாய நம
79-ஓம் ம்ருகயாரஸிகாய ஸ்ரீ வேங்கடேசாய நம
80-ஓம் வ்ருக்ஷ பாஸூர ஹாரிணே ஸ்ரீ வேங்கடேசாய நம

81-ஓம் அஞ்ஜநா கோத்ர பதயே ஸ்ரீ வேங்கடேசாய நம
82-ஓம் வ்ருஷபாசல வாஸிதே ஸ்ரீ வேங்கடேசாய நம
83-ஓம் அஞ்சநா ஸூத தாத்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம
84-ஓம் மாதவ யாக ஹாரிணே ஸ்ரீ வேங்கடேசாய நம
85-ஓம் ப்ரியங்கு ப்ரிய பஷயே ஸ்ரீ வேங்கடேசாய நம
86-ஓம் ஸ்வேத கேரல வராய ஸ்ரீ வேங்கடேசாய நம
87-ஓம் நீல தேனு பயோ தராஸே கதே ஹோத்பவாய ஸ்ரீ வேங்கடேசாய நம
88-ஓம் சங்கர ப்ரிய மித்ராய ஸ்ரீ வேங்கடேசாய நம
89-ஓம் சோள புத்ர ப்ரியாய ஸ்ரீ வேங்கடேசாய நம
90-ஓம் ஸூ தர்மிணீ ஸூ சைதந்ய ப்ரதாத்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம

91-ஓம் மதுகாதிதே ஸ்ரீ வேங்கடேசாய நம
92-ஓம் கிருஷ்ணக்ய விப்ர வேதாந்த தேசிகத்வ ப்ரதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
93-ஓம் வராஹாசல நாதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
94-ஓம் பல பத்ராய ஸ்ரீ வேங்கடேசாய நம
95-ஓம் த்ரிவிக்ரமாய ஸ்ரீ வேங்கடேசாய நம
96-ஓம் மஹதே ஸ்ரீ வேங்கடேசாய நம
97-ஓம் ஹ்ருஷீ கேஸாய ஸ்ரீ வேங்கடேசாய நம
98-ஓம் அச்சுதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
99-ஓம் நீலாத்ரி நிலயாய ஸ்ரீ வேங்கடேசாய நம
100-ஓம் ஷீராப்தி நாதாய ஸ்ரீ வேங்கடேசாய நம

101-ஓம் வைகுண்டாசல வாஸிநே ஸ்ரீ வேங்கடேசாய நம
102-ஓம் முகுந்தாய ஸ்ரீ வேங்கடேசாய நம
103-ஓம் அநந்தாய ஸ்ரீ வேங்கடேசாய நம
104-ஓம் விரிஞ்சப் யர்த்திதா நீத ஸுவ்ம்ய ரூபாய ஸ்ரீ வேங்கடேசாய நம
105-ஓம் ஸ்வர்ண முகரீஸ் நாத மநுஜ அபீஷ்ட தாயிநே ஸ்ரீ வேங்கடேசாய நம
106-ஓம் ஹலா யுத ஜகத் தீர்த்த ஸமஸ்த பல தாயிநே ஸ்ரீ வேங்கடேசாய நம
107-ஓம் கோவிந்தாய ஸ்ரீ வேங்கடேசாய நம
108-ஓம் ஸ்ரீ நிவாஸாய ஸ்ரீ வேங்கடேசாய நம

——————-

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி-

ஓம் வேங்கடேஶ ஸ்ரீ வேங்கடேஶ நம

ஓம் பயநாஶநாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யஜமாந ஸ்வரூபாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஹஸ்தந்யஸ்த  ஸுதர்ஶநாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரமாவதார மங்கேஶாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ணாகாரஜவ ஸுப்ரியாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யஜ்ஞேஶாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் கதிதாத்ரே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஜகதீவல்லபாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் வராய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரக்ஷஸ்ஸந்தோஹ ஸம்ஹர்த்ரே ஸ்ரீ வேங்கடேஶ நம: 20

ஓம் வர்சஸ்விநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரகுபுங்கவாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் தாநதர்மபராய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யாஜிநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் கநஶ்யாமள ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஹராதி ஸர்வதேவேட்யாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ராமாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யதுகுலாக்ரணயே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஸ்ரீநிவாஸாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் மஹாத்மநே ஸ்ரீ வேங்கடேஶ நம: 30

ஓம் தேஜஸ்விநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் தத்வ ஸந்நிதயே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் த்வமர்த்த லக்ஸ்ரீ வேங்கடேஶ நம
ஓம் பாவநாய ஸ்ரீ வேங்கடேஶ நம
ஓம் ஸர்வேஶாய ஸ்ரீ வேங்கடேஶநம:
ஓம் கமலாகாந்தாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் லக்ஷ்மீ ஸல்லாப ஸம்முகாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் சதுர்முக ப்ரதிஷ்டாத்ரே ஸ்ரீ வேங்கடேஶ நம: 40

ஓம் ராஜராஜ வரப்ரதாய ஸ்ரீ வேங்கடேஶநம:
ஓம் சதுர்வேத ஶிரோரத்நாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரமணாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நித்யவைபவாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் தாஸவர்க்க பரித்ராத்ரே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நாரதாதி முநிஸ்துத்யாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யாதவாசலவாஸிநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் கித்யத் பக்தார்தி பஞ்ஜநாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் லக்ஷ்மீப்ரஸாதகாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் விஷ்ணவே ஸ்ரீ வேங்கடேஶ நம: 50

ஓம் தேவேஶாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரம்ய விக்ரஹாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் மாதவாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் லோகநாதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் லாலிதாகில ஸேவகாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யக்ஷகந்தர்வ வரதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் குமாராய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் மாத்ருகார்ச்சிதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரட்த்பாலக போஷிணே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஶேஷஶைல க்ருதஸ்தலாய ஸ்ரீ வேங்கடேஶ நம: 60

ஓம் ஷாட்குண்ய பரிபூர்ணாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் த்வைததோஷ நிவாரணாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் திர்யக்ஜந்த் வர்ச்சிதாங்க்ரயே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நேத்ராநந்த கரோத்ஸவாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் த்வாதஶோத்தம லீலாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் தரித்ரஜந ரக்ஷகாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஶத்ரு க்ருத்யாதி பீதிக்நாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் புஜங்கஸயந ப்ரியாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஜாக்ரதே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரஹஸ்யாவாஸாய ஸ்ரீ வேங்கடேஶ நம: 70

ஓம் ஶிஷ்டபரிபாலகாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் வரேண்யாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் பூர்ணபோதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஜந்ம ஸம்ஸார பேஷஜாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் கார்த்திகேய வபுர்த்தாரிணே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யதிஶேகர பாவிதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நரகாதி பயத்வம்ஸிநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரதோத்ஸவ கலாதராய ஸ்ரீ வேங்கடேஶநம:
ஓம் லோகார்ச்சா முக்யமூர்த்தயே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் கேஶவாத் யவதாரவதே ஸ்ரீ வேங்கடேஶ நம: 80

ஓம் ஶாஸ்த்ர ஶ்ருதாநந்த லீலாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யமஶிக்ஷா நிபர்ஹணாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் மாநஸம்ரக்ஷண பராய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நேத்ரஹீநாக்ஷிதாயிநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் மதிஹீந மதிப்ரதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஹிரண்யதாந க்ராஹிணே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் மோஹஜால நிக்ருந்தநாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ததிலாஜாக்ஷதார்ச்யாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யாதுதாந  விநாஶநாய ஸ்ரீ வேங்கடேஶ நம: 90

ஓம் வேங்கடாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் தக்ஷிணாஸ்திதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஸாரபுஷ்கரிணிதீராய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ராத்ரௌ தேவகணார்ச்சிதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யத்நவத் பலஸந்த்தாத்ரே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஸ்ரீம்ஜபாத் தநவ்ருத்திக்ருதயாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் க்லீம்காரஜாபி காம்யார்த்த ப்ரதாந ஸதயாந்தராய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஸ்வஸர்வசித்தி ஸந்தாக்ரே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நமஸ்கர்த்து ரபீஷ்டதாய ஸ்ரீ வேங்கடேஶ நம: 100

ஓம் மோஹிதாகில லோகாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நாநாரூப வ்யவஸ்திதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ராஜீவலோசநாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யஜ்ஞவராஹாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் கணவேங்கடாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் தேஜோராஶீக்ஷணாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஸ்வாமிநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஹார்தா வித்யா நிவாரணாய ஸ்ரீ வேங்கடேஶ நம:  108

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி சமாப்தம்:

————–

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி

ஒவ்வொரு திருநாமத்திலும் ஸ்ரீ வேங்கடேசாய நம சேர்த்தே சொல்ல வேண்டுமாம்

ஓம் ஶ்ரீ வேங்கடேஶாய நம:
ஓம் ஶ்ரீனிவாஸாய நம:
ஓம் லக்ஷ்மீபதயே நம:
ஓம் அனாமயாய நம:
ஓம் அம்ருதாஶாய நம:
ஓம் ஜக³த்³வன்த்³யாய நம:
ஓம் கோ³வின்தா³ய நம:
ஓம் ஶாஶ்வதாய நம:
ஓம் ப்ரப⁴வே நம:
ஓம் ஶேஷாத்³ரினிலயாய நம: (1௦)

ஓம் தே³வாய நம:
ஓம் கேஶவாய நம:
ஓம் மது⁴ஸூத³னாய நம:
ஓம் அம்ருதாய நம:
ஓம் மாத⁴வாய நம:
ஓம் க்ருஷ்ணாய நம:
ஓம் ஶ்ரீஹரயே நம:
ஓம் ஜ்ஞானபஞ்ஜராய நம:
ஓம் ஶ்ரீவத்ஸவக்ஷஸே நம:
ஓம் ஸர்வேஶாய நம:

ஓம் கோ³பாலாய நம:
ஓம் புருஷோத்தமாய நம:
ஓம் கோ³பீஶ்வராய நம:
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம:
ஓம் வ்தெகுண்ட² பதயே நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் ஸுதா⁴தனவே நம:
ஓம் யாத³வேன்த்³ராய நம:
ஓம் நித்ய யௌவனரூபவதே நம:
ஓம் சதுர்வேதா³த்மகாய நம: (3௦)

ஓம் விஷ்ணவே நம:
ஓம் அச்யுதாய நம:
ஓம் பத்³மினீப்ரியாய நம:
ஓம் த⁴ராபதயே நம:
ஓம் ஸுரபதயே நம:
ஓம் நிர்மலாய நம:
ஓம் தே³வபூஜிதாய நம:
ஓம் சதுர்பு⁴ஜாய நம:
ஓம் சக்ரத⁴ராய நம:
ஓம் த்ரிதா⁴ம்னே நம: (4௦)

ஓம் த்ரிகு³ணாஶ்ரயாய நம:
ஓம் நிர்விகல்பாய நம:
ஓம் நிஷ்களங்காய நம:
ஓம் நிரான்தகாய நம:
ஓம் நிரஞ்ஜனாய நம:
ஓம் விராபா⁴ஸாய நம:
ஓம் நித்யத்ருப்தாய நம:
ஓம் நிர்கு³ணாய நம:
ஓம் நிருபத்³ரவாய நம:
ஓம் க³தா³த⁴ராய நம: (5௦)

ஓம் ஶார்-ங்க³பாணயே நம:
ஓம் நன்த³கினே நம:
ஓம் ஶங்க³தா⁴ரகாய நம:
ஓம் அனேகமூர்தயே நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் கடிஹஸ்தாய நம:
ஓம் வரப்ரதா³ய நம:
ஓம் அனேகாத்மனே நம:
ஓம் தீ³னப³ன்த⁴வே நம:
ஓம் ஆர்தலோகாப⁴யப்ரதா³ய நம: (6௦)

ஓம் ஆகாஶராஜவரதா³ய நம:
ஓம் யோகி³ஹ்ருத்பத்³மமன்தி³ராய நம:
ஓம் தா³மோத³ராய நம:
ஓம் ஜக³த்பாலாய நம:
ஓம் பாபக்⁴னாய நம:
ஓம் ப⁴க்தவத்ஸலாய நம:
ஓம் த்ரிவிக்ரமாய நம:
ஓம் ஶிம்ஶுமாராய நம:
ஓம் ஜடாமகுட ஶோபி⁴தாய நம:
ஓம் ஶங்க³மத்³யோல்லஸ-ன்மஞ்ஜுகிங்கிண்யாட்⁴யகரண்ட³காய நம: (7௦)

ஓம் நீலமோக⁴ஶ்யாம தனவே நம:
ஓம் பி³ல்வபத்ரார்சன ப்ரியாய நம:
ஓம் ஜக³த்³வ்யாபினே நம:
ஓம் ஜக³த்கர்த்ரே நம:
ஓம் ஜக³த்ஸாக்ஷிணே நம:
ஓம் ஜக³த்பதயே நம:
ஓம் சின்திதார்த²ப்ரதா³ய நம:
ஓம் ஜிஷ்ணவே நம:
ஓம் தா³ஶார்ஹாய நம:
ஓம் த³ஶரூபவதே நம: (8௦)

ஓம் தே³வகீ நன்த³னாய நம:
ஓம் ஶௌரயே நம:
ஓம் ஹயக்³ரீவாய நம:
ஓம் ஜனார்த³னாய நம:
ஓம் கன்யாஶ்ரவணதாரேஜ்யாய நம:
ஓம் பீதாம்ப³ரத⁴ராய நம:
ஓம் அனகா⁴ய நம:
ஓம் வனமாலினே நம:
ஓம் பத்³மனாபா⁴ய நம:
ஓம் ம்ருக³யாஸக்த மானஸாய நம: (9௦)

ஓம் அஶ்வாரூடா⁴ய நம:
ஓம் க²ட்³க³தா⁴ரிணே நம:
ஓம் த⁴னார்ஜன ஸமுத்ஸுகாய நம:
ஓம் க⁴னஸார லஸன்மத்⁴யகஸ்தூரீ திலகோஜ்ஜ்வலாய நம:
ஓம் ஸச்சிதானந்த³ரூபாய நம:
ஓம் ஜக³ன்மங்கள³ தா³யகாய நம:
ஓம் யஜ்ஞரூபாய நம:
ஓம் யஜ்ஞபோ⁴க்த்ரே நம:
ஓம் சின்மயாய நம:
ஓம் பரமேஶ்வராய நம: (1௦௦)

ஓம் பரமார்த²ப்ரதா³யகாய நம:
ஓம் ஶான்தாய நம:
ஓம் ஶ்ரீமதே நம:
ஓம் தோ³ர்த³ண்ட³ விக்ரமாய நம:
ஓம் பராத்பராய நம:
ஓம் பரஸ்மை ப்³ரஹ்மணே நம:
ஓம் ஶ்ரீவிப⁴வே நம:
ஓம் ஜக³தீ³ஶ்வராய நம: (1௦8)

இதி ஶ்ரீவேங்கடேஶ்வராஷ்டோத்தர ஶதனாமாவளி: ஸம்பூர்ண:

———

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி

ஒவ்வொரு திருநாமத்திலும் ஸ்ரீ வேங்கடேசாய நம சேர்த்தே சொல்ல வேண்டுமாம்

ஓம் ஓங்கார பரமார்த்தாய நம:  ஓம் நர நாராயணாத்மகாய நம:  ஓம் மோக்ஷலக்ஷ்மீ ப்ராணகாந்தாய நம:  ஓம் வேங்கடாஶல நாயகாய நம: ஓம் கருணாபூர்ண ஹ்ருதயாய நம: ஓம் டேங்காரஜப ஸௌக்யதாய நம:  ஓம் ஶாஸ்த்ர ப்ரமாண கம்யாய நம:  ஓம் யமாத்யஷ்டாங்க கோசராய நம:  ஓம் பக்தலோகைக வரதாய நம: ஓம் வரேண்யாய நம: 10

ஓம் பயநாஶநாய நம:  ஓம் யஜமாந ஸ்வரூபாய நம:  ஓம் ஹஸ்தந்யஸ்த  ஸுதர்ஶநாய நம:  ஓம் ரமாவதார மங்கேஶாய நம: ஓம் ணாகாரஜவ ஸுப்ரியாய நம: ஓம் யஜ்ஞேஶாய நம:  ஓம் கதிதாத்ரே நம:  ஓம் ஜகதீவல்லபாய நம:  ஓம் வராய நம: ஓம் ரக்ஷஸ்ஸந்தோஹ ஸம்ஹர்த்ரே நம: 20

ஓம் வர்சஸ்விநே நம:  ஓம் ரகுபுங்கவாய நம:  ஓம் தாநதர்மபராய நம:  ஓம் யாஜிநே நம: ஓம் கநஶ்யாமள நம: ஓம் ஹராதி ஸர்வதேவேட்யாய நம:  ஓம் ராமாய நம:  ஓம் யதுகுலாக்ரணயே நம:  ஓம் ஸ்ரீநிவாஸாய நம: ஓம் மஹாத்மநே நம: 30

ஓம் தேஜஸ்விநே நம:  ஓம் தத்வஸந்நிதயே நம:  ஓம் த்வமர்த்த லக்ஷ்ய ரூபாய  நம:  ஓம் ரூபவதே நம: ஓம் பாவநாய நம: ஓம் யஶஸே நம:  ஓம் ஸர்வேஶாய நம:  ஓம் கமலாகாந்தாய நம:  ஓம் லக்ஷ்மீ ஸல்லாப ஸம்முகாய நம: ஓம் சதுர்முக ப்ரதிஷ்டாத்ரே நம: 40

ஓம் ராஜராஜ வரப்ரதாய நம:  ஓம் சதுர்வேத ஶிரோரத்நாய நம:  ஓம் ரமணாய நம:  ஓம் நித்யவைபவாய நம: ஓம் தாஸவர்க்க பரித்ராத்ரே நம: ஓம் நாரதாதி முநிஸ்துத்யாய நம:  ஓம் யாதவாசலவாஸிநே நம:  ஓம் கித்யத் பக்தார்தி பஞ்ஜநாய நம:  ஓம் லக்ஷ்மீப்ரஸாதகாய நம: ஓம் விஷ்ணவே நம: 50

ஓம் தேவேஶாய நம:  ஓம் ரம்ய விக்ரஹாய நம:  ஓம் மாதவாய நம:  ஓம் லோகநாதாய நம: ஓம் லாலிதாகில ஸேவகாய நம: ஓம் யக்ஷகந்தர்வ வரதாய நம:  ஓம் குமாராய நம:  ஓம் மாத்ருகார்ச்சிதாய நம:  ஓம் ரட்த்பாலக போஷிணே நம: ஓம் ஶேஷஶைல க்ருதஸ்தலாய நம: 60

ஓம் ஷாட்குண்ய பரிபூர்ணாய நம:  ஓம் த்வைததோஷ நிவாரணாய நம:  ஓம் திர்யக்ஜந்த் வர்ச்சிதாங்க்ரயே நம:  ஓம் நேத்ராநந்த கரோத்ஸவாய நம: ஓம் த்வாதஶோத்தம லீலாய நம: ஓம் தரித்ரஜந ரக்ஷகாய நம:  ஓம் ஶத்ரு க்ருத்யாதி பீதிக்நாய நம:  ஓம் புஜங்கஸயந ப்ரியாய நம:  ஓம் ஜாக்ரதே நம: ஓம் ரஹஸ்யாவாஸாய நம: 70

ஓம் ஶிஷ்டபரிபாலகாய நம:  ஓம் வரேண்யாய நம:  ஓம் பூர்ணபோதாய நம:  ஓம் ஜந்ம ஸம்ஸார பேஷஜாய நம: ஓம் கார்த்திகேய வபுர்த்தாரிணே நம: ஓம் யதிஶேகர பாவிதாய நம:  ஓம் நரகாதி பயத்வம்ஸிநே நம:  ஓம் ரதோத்ஸவ கலாதராய நம:  ஓம் லோகார்ச்சா முக்யமூர்த்தயே நம: ஓம் கேஶவாத் யவதாரவதே நம: 80

ஓம் ஶாஸ்த்ர ஶ்ருதாநந்த லீலாய நம:  ஓம் யமஶிக்ஷா நிபர்ஹணாய நம:  ஓம் மாநஸம்ரக்ஷண பராய நம:  ஓம் இரிணாங்குர தாந்யதாய நம: ஓம் நேத்ரஹீநாக்ஷிதாயிநே நம: ஓம் மதிஹீந மதிப்ரதாய நம:  ஓம் ஹிரண்யதாந க்ராஹிணே நம:  ஓம் மோஹஜால நிக்ருந்தநாய நம:  ஓம் ததிலாஜாக்ஷதார்ச்யாய நம: ஓம் யாதுதாந  விநாஶநாய நம: 90

ஓம் யஜுர்வேத ஶிகாகம்யாய நம:  ஓம் வேங்கடாய நம:  ஓம் தக்ஷிணாஸ்திதாய நம:  ஓம் ஸாரபுஷ்கரிணிதீராய நம: ஓம் ராத்ரௌ தேவகணார்ச்சிதாய நம: ஓம் யத்நவத் பலஸந்த்தாத்ரே நம:  ஓம் ஸ்ரீம்ஜபாத் தநவ்ருத்திக்ருதயாய நம:  ஓம் க்லீம்காரஜாபி காம்யார்த்த ப்ரதாந ஸதயாந்தராய நம:  ஓம் ஸ்வஸர்வசித்தி ஸந்தாக்ரே நம: ஓம் நமஸ்கர்த்து ரபீஷ்டதாய நம: 100

ஓம் மோஹிதாகில லோகாய நம:  ஓம் நாநாரூப வ்யவஸ்திதாய நம:  ஓம் ராஜீவலோசநாய நம:  ஓம் யஜ்ஞவராஹாய நம: ஓம் கணவேங்கடாய நம: ஓம் தேஜோராஶீக்ஷணாய நம:  ஓம் ஸ்வாமிநே நம:  ஓம் ஹார்தா வித்யா நிவாரணாய நம:  108

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி சமாப்தம்:

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தரம்

ஸித்தா ஊசு:

பகவந் வேங்கடேஶஸ்ய நாம்நாமஷ்டோத்தரம் ஶதம்

அநுப்ரூஹி தயாஸிந்தோ க்ஷிப்ரஸித்திப்ரதம் ந்ருணாம்                                 1

நாரத உவாச:

ஸாவதாநேந மநஸா ஶ்ருண்வந்து ததிதம் ஶுபம்

ஜப்தம் வைகாநஶை: பூர்வம் ஸர்வ ஸௌபாக்ய வர்த்தநம்                            2

ஓங்கார பரமார்த்தஶ்ச நரநாராயணாத்மக:

மோக்ஷலக்ஷ்மீ ப்ராணகாந்தோ வேங்கடாசல நாயக:                                        3

கருணாபூர்ண ஹ்ருதய: டேங்காரஜப ஸௌக்யத:

ஶாஸ்த்ர ப்ரமாண கம்யஶ்ச யமாத்யஷ்டாங்க கோசர:                                               4

பக்த லோகைக வரதோ வரேண்யோ பயநாஶந:

யஜமாந ஸ்வரூபஶ்ச ஹஸ்தந்யஸ்த ஸுதர்ஶந:                                     5

ரமாவதார மங்கேஶோ ணாகாரஜப ஸுப்ரிய:

யஜ்ஞேஶோ கதிதாதா ச ஜகதீவல்லபோ வர:                                                        6

ரக்ஷஸ்ஸந்தோஹ ஸம்ஹர்தா வர்சஸ்வீ ரகுபுங்கவ:

தாந தர்மபரோ யாஜீ கநஶ்யாமள விக்ரஹ:                                                          7

ஹராதிஸர்வதேவேட்யோ ராமோ யதுகுலாக்ரணீ

ஸ்ரீநிவாஸோ மஹாத்ம ச தேஜஸ்வீ தத்வஸந்நிதி:                                              8

த்வமர்த்த லக்ஷ்யரூபஶ்ச ரூபவாந் பாவநோ யஶ:

ஸர்வேஶ: கமலாகாந்தோ லக்ஷ்மீஸல்லாப ஸம்முக:                                         9

சதுர்முக ப்ரதிஷ்ட்டாதா ராஜராஜ வரப்ரத:

சதுர்வேத ஶிரோரத்னம் ரமணோ நித்யவைபவ:                                                            10

தாஸவர்க பரித்ராதா நாரதாதி முநிஸ்துத:

யாதவாசலவாஸீ ச கித்யத் பக்தார்தி பஞ்ஜந:                                                      11

லக்ஷ்மீப்ரஸாதகோ விஷ்ணு: தேவேஶோ ரம்யவிக்ரஹ:

மாதவோ லோகநாதஶ்ச லாலி தாகில ஸேவக:                                                    12

யக்ஷகந்தர்வ வரத: குமாரோ மாத்ருகார்சித:

ரடத்பாலக போஷீ ச ஶேஷஶைல க்ருத ஸ்த்தல:                                     13

ஷாட்குண்ய பரிபூர்ணஶ்ச த்வைத தோஷ நிவாரண:

திர்யக்ஜந்த்வர் சிதாங்க்ரிஶ்ச நேத்ராநந்த கரோத்ஸவ:                                              14

த்வாதஶோத்தம லீலஶ்ச தரித்ர ஜநரக்ஷக:

ஶத்ருக்ருத்யாதி பீதிக்நோ புஜங்க ஶயநப்ரிய:                                                    15

ஜாக்ரத் ரஹஸ்யாவாஸஶ்ச ய்: ஶிஷ்ட பரிபாலக:

வரேண்ய: பூர்ணபோதஶ்ச ஜந்ம ஸம்ஸார பேஷஜம்                                         16

கார்த்திகேய வபுர்தாரீ யதிஶேகர பாவித:

நரகாதி பயத்வம்ஸீ ரதோத்ஸவ கலாதர:                                                               17

லோகார்சா முக்யமூர்திஶ்ச கேஶவாத்ய வதாரதாந்

ஶாஸ்த்ர ஶ்ருதாநந்த லீலோ யமஶிக்ஷா நிபர்ஹண:                                        18

மாநஶம்ரக்ஷணபர: இரிணாங்குர தாந்யத:

நேத்ரஹீநாக்ஷிதாயீ ச மதிஹீந மதிதப்ரத:                                                             19

ஹிரண்யதாந க்ராஹீச மோஹஜால நிக்ருந்தந:

ததிலாஜா க்ஷதார்ச்யஶ்ச யாதுதாந விநாஶந:                                                     20

யஜுர்வேத ஶிகா கம்யோ வேங்கடோ தக்ஷிணாஸ்த்தித:

ஸார புஷ்கரிணீ தீரோ ராத்ரௌ தேவகணார்ச்சித:                                           21

யத்நவத் பல ஸந்தாதா ஸ்ரீம்ஜபாத் தநவ்ருத்திக்ருத்

க்லீங்கார ஜாபீ காம்யார்த்த ப்ரதாந ஸதயாந்த்ர:                                                           22

ஸ்வ ஸர்வஸித்தி ஸந்தாதா நமஸ்கர்து ரபீஷ்டத:

மோஹிதாகில லோகஶ்ச நாநாரூப வ்யவஸ்த்தித:                                            23

ராஜீவ லோசநோ யஜ்ஞ வராஹோ கணவேங்கட:

தேஜோ ராஶீக்ஷணஸ் ஸ்வாமி ஹார்தாவித்யா நிவாரண:                              24

இதி ஸ்ரீவேங்கடேஶஸ்ய நாம்நா மஷ்டோத்தரம் ஶதம்

ப்ராத: ப்ராதஸ் ஸமுத்தாய ய: படேத் பக்திமாந் நர:                                           25

ஸர்வேஷ்டார்த்தா நவாப்னோதி வேங்கடேஶ ப்ரஸாதத:                                26

ஸ்ரீவேங்கடேஶ அஷ்டோத்தரம் ஸம்பூர்ணம்

—————

வ்ருஷசைலாதிப ஏவ தைவதம் ந

வ்ருஷபாத்ரீச்வர ஏவ தைவதம் ந
பணி சைலாதிப ஏவ தைவதம் ந

பகவான் வேங்கட ஏவ தைவதம் ந————————–11-

—————————————————-

வ்ருஷசைலம் -என்பதும்
வ்ருஷபாத்ரி -என்பதும்
பணி சைலம் -என்பதும்
பர்யாய நாமங்கள் ஆதலால்
எல்லாவற்றாலும்
திருமலை அப்பனே அடியேன் தொழும் தெய்வம்
என்றது ஆயிற்று

—————————————————————————————————————————————————————

ஸ்ரீ ஸ்ரீ நிவாச பர தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச பரமம் தனம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச குல தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீனிவாச பரமா கதிர் ந—12

ஸ்ரீ ஸ்ரீநிவாசன
நமக்கு பர தேவதையும்
பெரும் செல்வமும்
குல தேவதையும்
பரம கதியும்
ஆவான் -என்கிறார் ஆயிற்று-

—————-

ஆழ்வார் பாடல்களிலும், “வேங்கடத்தான், வேங்கடவன், வேங்கட வாணன், வேங்கடத்துள்ளான், வேங்கடத்து உறைவான், வேங்கடத்து நின்றான், வேங்கடமுடையான், வேங்கட நாடன், வேங்கடக் கோன், வேங்கட மேயோன், வேங்கடப் பொருப்பன், வேங்கட வெற்பன், வேங்கடாத்தரி, வேங்கட வேதியன், வேங்கடத்து ஆயன், வேங்கடத்து எந்தை, வேங்கடத்து அண்ணல், நீள் வேங்கடத்து எந்தை, திருமலையான், வட மாமலை உச்சி, நெடுவரை உச்சி மேலோன், நெடியோன்” என்ற பெயர்களே ஆளப் படுகின்றன. அந்த மலையும் கூட ஆழ்வார் பாடல்களில் வேங்கடம், வடமலை, திருமலை, அண்ணல் மலை என்றே அழைக்கப் படுகிறது.

வேங்கடத்து உறைவாருக்கு நம என்னலாம்

மூலவர் திருவேங்கடத்தான் பெரிய பெருமாள்
உத்சவர் -மலையப்பன் -மலை குனிய நின்றான்
உக்ர ஸ்ரீநிவாசன் -கௌசிக துவாதசி அன்று மட்டும் காலையில் 5-மணிக்கு புறப்பாடு -8 மணிக்குள் கர்ப்பக்ருஹத்துக்குத் திரும்பி விடுவாராம்
இவரே முன்பு உத்சவராக இருந்தாராம் -உக்ரத்தால் தீ விபத்துக்கள் வந்ததால் மலையப்பன் உத்சவர் செய்து வைத்தார்களாம்
சாந்தமான ஸ்வரூபம் ரூபம் இவருக்கு
போக ஸ்ரீநிவாசன் -சயன பேரர்

கொலு ஸ்ரீநிவாசன்

———-

வேங்கடாத்ரி சமம் ஸ்தானம் பிரம்மாண்டே நாஸ்தி கிஞ்சன;
வேங்கடேச ஸமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி.

ச்ரிய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                        1

லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே

சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்             2

ஸ்ரீவேங்கடாத்ரி  ச்ருங்காக்ர மங்களா பரணாங்க்ரியே

மங்களாநாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                   3

ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா சர்வசேதஸாம்

ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம்             4

நித்யாய நிரவத்யாய ஸத்யா நந்தசிதாத்மநே

ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                              5

ஸ்வதஸ் ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வசேஷிணே

ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்                                        6

ப்ரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய பரமாத்மநே

ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்                                      7

ஆகாரதத்வ மச்ராந்த மாத்ம நாம நுபச்யதாம்

அத்ருப்த்யம்ருத ரூபாய வேங்கடேசாய மங்கலம்                                   8

ப்ராயஸ் ஸ்வ சரணௌ பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா

க்ருபாய திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                                       9

தயாம்ருத்தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை:

அபாங்கை ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்                        10

ஸ்ரக்பூஷாம்பர ஹேதீதாம் ஸுஷமாவஹ மூர்த்தயே

ஸர்வார்த்தி ஸமநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்                            11

ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்                                            12

ஸ்ரீமத் ஸுந்தரஜாமாத்ரு முநிமா நஸவாஸிநே

ஸர்வலோகநிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                       13

மங்களாசாஸ நபரைர் மதாசார்ய புரோகமை:

ஸர்வைச்ச பூர்வை ராசார்யைஸ் ஸத்க்ருதாயாஸ்து மங்களம்          14

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்–ஸ்தோத்திரம்–பிரபத்தி–மங்களாசாசனம்–மூலமும் பொருளும் —ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி-

October 4, 2024

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் (29 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம் (11 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி (16 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச மங்களாசாசனம் (14 பாடல்கள்)
ஆகிய நான்கு பகுதிகள்

———–

பா எனில் வெளிச்சம். ப்ரபாதம் எனில் காலைப் பொழுது. சுப்ரபாதம் என்றால் இனிய காலைப் பொழுது என்று பொருள் படும். வடமொழியில் ஸூ எனும் எழுத்து ஒரு சொல்லுக்கு முன்னர் சேர்க்கப்பட்டால் உயர்ந்த பொருளைக் குறிக்கும்.
பாக்ஷிதம் – வார்த்தைகள், சுபாக்ஷிதம் – நல் வார்த்தைகள். கன்யா – பெண், சுகன்யா – நல்லப் பெண். இதுபோன்று சுப்ரபாதம் என்பது நல்ல இனிய காலைப் பொழுது என பொருள்படுகிறது.

கௌசல்யா ஸூப்ரஜா ராமாபூர்வா சந்த்யா ப்ரவத்தது’’ என்ற இந்த முதல் வரிகள் வால்மீகி ராமாயணத்திலிருந்து உருவப்பட்டது. அதாவது விஸ்வாமித்ரர் ராமனை எழுப்புகிறார்.

“கௌசல்யை புண்ணியம் செய்து பெற்ற ராமா அங்கே காட்டுப் பக்கம் அரக்கர்கள் அடாவடி செய்து தவ முனிவர்களுக்கு இடைஞ்சல் செய்கிறார்கள். நீ வந்து அவர்களை வீழ்த்து’ என ராமனை எழுப்பி அழைக்கிறார் விஸ்வாமித்ரர்.

முதலில் ராமனாக எழுப்பி
அடுத்து கோவிந்தன் கண்ணனாக பலதடவை எழுப்பி
மூன்றாவதாக பிராட்டியை எழுப்பி
அவளுடன் சேர்ந்து 4-29- ஸ்லோகங்கள்-

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்–1-

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு–2-

மாதஸ் சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்-3-

தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே-4-

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–5-

பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–6-

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–7-

உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–8-

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–9-

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–10-

யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–11-

பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–12-

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்–13–

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்-14–

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–15–

சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-16-

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–17–

ஸூர்யேந்து பவ்ம புத வாக்பதி காவ்ய சவ்ரி
ஸ்வர்பாநு கேது த்விஷத் பரிஷத் ப்ரதாநா
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாஸ தாஸ
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–18–

த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–19-

த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!–20-

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–21-

ஸ்ரீ பத்மநாப புரு÷ஷாத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-22–

கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-23–

மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்
ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–24–

ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்–25–

பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்–26–

பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–27–

லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–28–

இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே–29-

***

கமலா குசசூசுக குங்குமதோ நியதாருணிதாதுல நீலதநோ

கமலாயத லோசன லோகபதே விஜயீபவ வேங்கட சை’லபதே                       1

ஸ சதுர்முக ஷண்முக பஞ்சமுக ப்ரமுகாகில தைவத மௌளிமணே

ச’ரணாகத வத்ஸல ஸாரநிதே பரிபாலயமாம் வ்ருஷ சை’லபதே                 2

அதிவேலதயா தவதுர்விஷஹை: அனுவேல க்ருதை ரபராத ச’தை

பரிதம் த்வரிதம் வ்ருஷ சை’லபதே பரயா க்ருபயா பரிபாஹி ஹரே           3

அதிவேங்கட சை’லமுதாரமதே: ஜனதா பிமதாதிக தான தராத்

பரதேவதய கதிதாந்நிகமை: கமலாதயிதான ந பரம் கலயே                           4

கலவேணுரவாச’ கோபவதூ ச’தகோடி வ்ருதாத ஸ்மரகோடி ஸமாத்

ப்ரதிவல்லவிகாபிமதாத் ஸுகதாத் வஸுதேவஸுதாந் ந பரம் கலயே       5

அபிராம குணாகர தாச’ரதே ஜகதேக தநுர்தர தீரமதே

ரகுநாயக ராம ரமேச’ விபோ வரதோ பல தேவ தயாஜலதே                           6

அவநீதநயாகம நீயகரம் ரஜநீகரசாரு முகாம்புருஹம்

ரஜனீசரராஜ தமோமிஹிரம் மஹநீயமகம் ரகுராமமயே                                  7

ஸுமுகம் ஸுஹ்ருதம் ஸுலபம் ஸுகதம் ஸ்வநுஜஞ்ஞ ஸுகாய அமோகசரம்

அபஹாய ரகூத்வஹமன்யமஹம் ந கதஞ்சன கஞ்சன ஜாது பஜே                8

விநா வேங்கடேச’ம் ந நாதோ ந நாத: ஸதா வேங்கடேச’ம் ஸ்மராமி ஸ்மராமி –

ஹரே வேங்கடேச’ ப்ரஸீத ப்ரஸீத ப்ரியம் வேங்கடேச’ ப்ரயச்ச ப்ரயச்ச      –9

அஹம்தூரதஸ்தே பதாம்போஜயுக்ம ப்ரணாமேச்சயா (ஆ)கத்யஸேவாம் கரோமி —

ஸக்ருத்ஸேவயா  நித்யஸேவாபலம் த்வம் ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச’        -10

அஜ்ஞாநினா மயா தோஷான் அசேஷான் விஹிதான் ஹரே–11

க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் சே’ஷசை’ல சி’காமணே

***

ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி

ஈஶாநாம் ஜக³தோ(அ)ஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம் ப்ரேயஸீம்
தத்³வக்ஷ꞉ஸ்த²லநித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்திஸம்வர்தி⁴நீம் ।
பத்³மாலங்க்ருதபாணிபல்லவயுகா³ம் பத்³மாஸநஸ்தா²ம் ஶ்ரியம்
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்ஜ்வலாம் ப⁴க³வதீம் வந்தே³ ஜக³ந்மாதரம் ॥ 1 ॥

ஶ்ரீமந் க்ருபாஜலநிதே⁴ க்ருதஸர்வலோக
ஸர்வஜ்ஞ ஶக்த நதவத்ஸல ஸர்வஶேஷிந் ।
ஸ்வாமிந் ஸுஶீல ஸுலபா⁴ஶ்ரிதபாரிஜாத
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

ஆநூபுரார்பிதஸுஜாதஸுக³ந்தி⁴புஷ்ப-
-ஸௌரப்⁴யஸௌரப⁴கரௌ ஸமஸந்நிவேஶௌ ।
ஸௌம்யௌ ஸதா³நுப⁴வநே(அ)பி நவாநுபா⁴வ்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

ஸத்³யோவிகாஸிஸமுதி³த்வரஸாந்த்³ரராக³-
-ஸௌரப்⁴யநிர்ப⁴ரஸரோருஹஸாம்யவார்தாம் ।
ஸம்யக்ஷு ஸாஹஸபதே³ஷு விளேக²யந்தௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

ரேகா²மயத்⁴வஜஸுதா⁴கலஶாதபத்ர-
-வஜ்ராங்குஶாம்பு³ருஹகல்பகஶங்க²சக்ரை꞉ ।
ப⁴வ்யைரளங்க்ருததலௌ பரதத்த்வசிஹ்நை꞉
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

தாம்ரோத³ரத்³யுதிபராஜிதபத்³மராகௌ³
பா³ஹ்யைர்மஹோபி⁴ரபி⁴பூ⁴தமஹேந்த்³ரநீலௌ ।
உத்³யந்நகா²ம்ஶுபி⁴ருத³ஸ்தஶஶாங்கபா⁴ஸௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 6 ॥

ஸப்ரேமபீ⁴தி கமலாகரபல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவவாங்மநஸகோ³சரஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥

லக்ஷ்மீமஹீதத³நுரூபநிஜாநுபா⁴வ-
நீலாதி³தி³வ்யமஹிஷீகரபல்லவாநாம் ।
ஆருண்யஸங்க்ரமணத꞉ கில ஸாந்த்³ரராகௌ³
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 8 ॥

நித்யாந்நமத்³விதி⁴ஶிவாதி³கிரீடகோடி-
-ப்ரத்யுப்ததீ³ப்தநவரத்நமஹ꞉ப்ரரோஹை꞉ ।
நீராஜநாவிதி⁴முதா³ரமுபாத³தா⁴நௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 9 ॥

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

பார்தா²ய தத்ஸத்³ருஶஸாரதி²நா த்வயைவ
யௌ த³ர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி ।
பூ⁴யோ(அ)பி மஹ்யமிஹ தௌ கரத³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 11 ॥

மந்மூர்த்⁴நி காளியப²ணே விகடாடவீஷு
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ரே ஶிரஸி ஶ்ருதீநாம் ।
சித்தே(அ)ப்யநந்யமநஸாம் ஸமமாஹிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 12 ॥

அம்லாநஹ்ருஷ்யத³வநீதலகீர்ணபுஷ்பௌ
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ராப⁴ரணாயமாநௌ ।
ஆநந்தி³தாகி²லமநோநயநௌ தவைதௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 13 ॥

ப்ராய꞉ ப்ரபந்நஜநதாப்ரத²மாவகா³ஹ்யௌ
மாது꞉ ஸ்தநாவிவ ஶிஶோரம்ருதாயமாநௌ ।
ப்ராப்தௌ பரஸ்பரதுலாமதுலாந்தரௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 14 ॥

ஸத்த்வோத்தரை꞉ ஸததஸேவ்யபதா³ம்பு³ஜேந
ஸம்ஸாரதாரகத³யார்த்³ரத்³ருக³ஞ்சலேந ।
ஸௌம்யோபயந்த்ருமுநிநா மம த³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 15 ॥

ஶ்ரீஶ ஶ்ரியா க⁴டிகயா த்வது³பாயபா⁴வே
ப்ராப்யே த்வயி ஸ்வயமுபேயதயா ஸ்பு²ரந்த்யா ।
நித்யாஶ்ரிதாய நிரவத்³யகு³ணாய துப்⁴யம்
ஸ்யாம் கிங்கரோ வ்ருஷகி³ரீஶ ந ஜாது மஹ்யம் ॥ 16 ॥

இட் ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி ||

***

ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம்

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                        1

லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே

சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்             2

ஸ்ரீவேங்கடாத்ரி  ச்ருங்காக்ர மங்களா பரணாங்க்ரியே

மங்களாநாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                   3

ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா சர்வசேதஸாம்

ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம்             4

நித்யாய நிரவத்யாய ஸத்யா நந்தசிதாத்மநே

ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                              5

ஸ்வதஸ் ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வசேஷிணே

ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்                                        6

ப்ரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய பரமாத்மநே

ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்                                      7

ஆகால தத்வ மச்ராந்த மாத்ம நாம நுபச்யதாம்

அத்ருப்த்யம்ருத ரூபாய வேங்கடேசாய மங்கலம்                                   8

ப்ராயஸ் ஸ்வ சரணௌ பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா

க்ருபாய திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                                       9

தயாம்ருத்தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை:

அபாங்கை ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்                        10

ஸ்ரக்பூஷாம்பர ஹேதீதாம் ஸுஷமாவஹ மூர்த்தயே

ஸர்வார்த்தி ஸமநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்                            11

ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்                                            12

ஸ்ரீமத் ஸுந்தரஜாமாத்ரு முநிமா நஸவாஸிநே

ஸர்வலோகநிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                       13

மங்களாசாஸ நபரைர் மதாசார்ய புரோகமை:

ஸர்வைச்ச பூர்வை ராசார்யைஸ் ஸத்க்ருதாயாஸ்து மங்களம்          14

***

————-

ஸ்ரீ வேங்கடேஸ்வர சுப்ரபாதம் – 1
| கெளசல்யா சுப்ரஜா ராமா |
விடிகாலை சுமார் 3:00 மணி. கூட்டம் அதிகம் இல்லை!
குளிர் தென்றல் வீசுகிறது! சில பக்தர்கள் அங்கப் பிரதட்சிணம் செய்து முடிக்கிறார்கள்; இப்போது நாம் நிற்கும் இடம் திருமாமணி மண்டபம்!
இரண்டு பெரிய காண்டா மணிகள் வாசலுக்கு அருகே!
கருடன் நிற்கிறான். அவனுடன் சேர்ந்து நாமும் நிற்கிறோம்.
துவார பாலகர்கள் (ஜய விஜயர்கள்) இருபுறமும் காத்து நிற்கும் தங்க வாயில் (தெலுங்கில்: பங்காரு வாகிலி) மூடப்பட்டு உள்ளது.
அர்ச்சகரும், ஜீயரும் பூட்டின் சாவியை, துவார பாலகர்கள் அருகில் வைத்து, கதவைத் திறக்க அனுமதி பெறுகின்றனர்.
அன்னமாச்சார்யரின் பூபாள ராகப்பாடல் தெலுங்கில் இசைக்கப்படுகிறது; பின்னர் ஆழ்வாரின் ஈரத் தமிழில் திருப்பள்ளியெழுச்சி;
சுப்ரபாதம் எல்லாம் அப்பறம் தான்!
மணிகள் ஒலிக்கின்றன; பேரிகையும் ஊதுகோலும் சேர்ந்தே ஒலிக்கின்றன;
திருக்கதவம் திறக்கப்படுகிறது!
இருப்பினும் திரை போடப்பட்டுள்ளது!!
கோபூஜை முடிந்து, பசுவுடன், இடையனுக்குத் தான் முதல் தரிசனம் தருகிறான் வேங்கடவன்! அந்தணருக்கு அல்ல!
உள்ளே சயன மண்டபத்தில், தொட்டிலில் தூங்கும் போகஸ்ரீநிவாசனை எழுப்புகிறார்கள்;
அன்றைய நாளின் முதல் தரிசனமாக, சுப்ரபாத சேவை
என்கிற விஸ்வரூப தரிசனம்!
வெள்ளை ஆடையும், துளசி மாலை மட்டும் உடுத்தி இறைவன்!
மிகவும் எளியவனாக, கள்ளச் சிரிப்போடு காட்சி தருகிறான்.
தமிழில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளி
எழுச்சியும் பாடப்படுகிறது!
அனுதினமும்,
(மார்கழி மாதம் தவிர)
திருமாமணி மண்டபத்தில், துவார பாலகர்கள் முன்னே சுப்ரபாதம் ஓதப்படுகிறது.
எல்லா நாளுமே திருப்பாவை உண்டு தான்!
ஆனால், பிற நாட்களில், பூசையின் போது, தமிழ்/ வடமொழி, இரண்டுமே ஓதப்படும்!
மார்கழியில், வடமொழி தவிர்த்து, தமிழ் மட்டுமே! அதுவும் முதன் முதலிலேயே!
வாருங்கள் எல்லாரும் சொல்லத் தொடங்கலாம்…”கெளசல்யா சுப்ரஜா ராமா பூர்வா…”
கெளசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

(இரண்டு முறை)
கோசலை குமரா ஸ்ரீராமா பொழுது புலர்கின்றதே
தெய்வீகத் திருச்சடங்குகள் செய்ய எழுந்தருள் புருடோத்தமா…

கெளசல்யா சுப்ரஜா = கோசலை பெற்றெடுத்த திருமகனே!
விசுவாமித்திரரின் யாகத்தைக் காக்க இராமனும், இலக்குவனும் சென்ற போது, இள வயது; தாய் தந்தையரை முதல் முறையாகப் பிரிந்திருக்கும் நிலை; அதனால் தான் முதலில் தசரதன் அனுப்பத் தயங்கினான்; இதையெல்லாம் மனத்தில் நினைத்தார் முனிவர்; என்ன தோன்றியதோ அந்தக் கோபக்கார முனிவருக்கு! தாய் அன்பு காட்டத் தொடங்கி விட்டார்!
மிக்க வாஞ்சையுடன் ஒரு தாய் எழுப்புவது போல எழுப்புகிறார்;
ஆதி கவியான வால்மீகியின் இந்த ராமாயண சொற்றொடரைத் தான், பெரும்பாலும் எல்லாப் பெருமாள் சுப்ரபாதங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்!

ராம = ராமா
ராம என்பது சர்வ மங்களத்தைக் குறிக்கும் சொல்; ஈசனும் இந்த “ராம” என்பதையே மனத்துள் ஜபிப்பதாக சகஸ்ரநாமம் சொல்கிறது; (ஸ்ரீ ராம ராம ராமேதி…);
காசியில் மரிப்போர் காதுகளில் ஈசன் இதையே ஓதி நல்லுலகம் சேர்ப்பதாக ஐதீகம்.
“சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்”, என்று கம்பரும் பேசுகிறார்.

பூர்வா ஸந்த்யா = அதிகாலை, சிற்றஞ் சிறுகாலை
பிரம்ம முகூர்த்த வேளை என்பார்கள்; சூர்யோதயத்துக்கு இரண்டரை நாழிகை முன்பாக!
Approx 3:30-4:00; ஆன்மிகப் பணிகளுக்கு மிகவும் உன்னதமான வேளை இது!
ப்ரவர்த்ததே = தொடங்குகின்றதே
உத்திஷ்ட = எழுந்திரு
நர ஸார்தூல = நரர்களில் (மனிதர்களில்), புலியைப் போன்றவனே
ராமன் மனிதனாய் வாழ்ந்து காட்டிச் சென்றான்; சர்வ சக்தியுள்ள கடவுளாகத் தன்னை வெளிக் காட்டவில்லை.
கர்த்தவ்யம் = உன் கடமைகள்
தைவ மாஹ்நிகம் = தெய்வீகமானவை, அணிகலனாய் அமைபவை
உன் நித்யக் கடமைகள் நின்றால் உலகம் என்னவாகும்? அதனால் கடமையைக் காட்டி எழுப்புகிறார்!

——–

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு

(இரண்டு முறை)
எழுந்தருள் எழுந்தருள் கருடக்கொடி
ஏந்தும் கோவிந்தனே
எழுந்தருள் திருமகள் தலைவா
மூவுலகும் செழித்தோங்கவே
உத்திஷ்டோ உத்திஷ்ட = எழுந்திரு எழுந்திரு
சிறு பிள்ளை அல்லவா; அதான் இத்தனை முறை “உத்திஷ்ட” என்று சொல்ல வேண்டியுள்ளது போலும்! 🙂

கோவிந்த = கோவிந்தா
கோ+விந்தன்=உயிர்களாகிய பசுக்களைக் காப்பவன்; பெருமாளின் மிக முக்கியமான நாமங்களாவன: அச்சுதா, அனந்தா, கோவிந்தா!!
உத்திஷ்ட = எழுந்திரு
கருட த்வஜ = கருடக் கொடி உடையவனே
எம்பெருமானின் கொடியில் கூட கருடன் தான்; திருமலை பிரம்மோற்சவப் பதிவில் தான் பார்த்தோமே இந்தக் கொடியேற்றத்தை;
உத்திஷ்ட = எழுந்திரு
அட, மொத்தம் ஐந்து “உத்திஷ்ட”!
இன்னுமா எழவில்லை?

(நாம தான் கேள்வி நல்லா கேப்போமே; நாம் எழும் போது தானே கஷ்டம் தெரியும் :-)வீட்டில் அம்மா நம்மை எழுப்பும் போது “எழுந்திரு, எழுந்திரு” என்று எத்தனை முறை எழுப்புகிறார்கள்? நாம் எத்தனை முறை புரண்டு புரண்டு படுக்கிறோம்? நம் ராமன் எப்படி?
குழந்தைகள் பெரும்பாலும் எழுந்திருந்தாலும், மீண்டும் மீண்டும் கொஞ்சி அழைப்பதை விரும்புகிறார்கள்.
கமலா காந்தா = தாமரை மலரில் உள்ளவள் விரும்பும் நாயகனே
தாமரை மீது மலர்ந்து அருளும் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி! அலை மகளைக் காந்தம் போல் தன் பால் ஈர்ப்பவன் ஆயிற்றே! லட்சுமி காந்தன் என்று தானே அவன் பெயர்!
த்ரை லோக்யம் = மூன்று உலகுக்கும்(பூலோகம், புவர்லோகம், சுவர்கலோகம்)
மங்களம் குரு = மங்களம் கொடுக்க
ராம=மங்களம் என்று பார்த்தோம். அந்த மங்களத்தை, மகிழ்ச்சியை, ஆனந்தத்தை உலகுக்கு அளிப்பதே அவன் கடமை;
அதனால் தான் தனக்காக, தன் படிப்புக்காக எழச்சொல்லாது, உலக நலனுக்காக எழச் சொல்கிறார்.
இப்படிச் சொன்னால், அவனால் எழாமல்
இருக்க முடியாதல்லவா?:-)
தயா சிந்து நாயகா, வேங்கடவா, திருக்கண் மலர்க!

————

இப்போ அன்னையை எழுப்புவோம்!
அவள் எழுந்தவுடன் பாருங்கள், அவனும் கிடுகிடு என்று எழுந்து விடுவான்!
ஒரு வீட்டுக்கு மட்டும் அம்மாவான நம் தாயாருக்கே அவ்வளவு வேலைன்னா,
சகல உலகங்களுக்கும் அம்மா, ஜகன்மாதா எனப்படுபவள், அன்னை அலைமகளுக்கு எவ்வளவு வேலை இருக்கும்!
உலகக் குடும்பத்தின் ஆனந்தமே அவள் கையில் தானே உள்ளது!
மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்

மாத சமஸ்த ஜகதாம் = சகல உலகங்களுக்கும் தாயே, ஸ்ரீ மகா லக்ஷ்மி!
சமஸ்த ஜகங்களுக்கும் மாதா = ஜகன் மாதா! பூவுலக உயிர்கள், மனிதர் மட்டும் இல்லை; தேவர், கின்னரர், கிம்புருடர், நாகர், பாதாள உலகினர், அசுரர் என்று அனைத்து தரப்பினருக்கும் அவளே அன்னை; நரகாசுரனின் அன்னையும் அவள் தானே! குழந்தைகள் செய்யும் தவற்றை எல்லாம் பொறுத்தருள எம்பெருமானிடம் சதா சர்வ காலமும் முறையிட்டு, அவன் சினம் தணிக்கும் அன்புத் தாய் ஆயிற்றே! (என்ன செய்வது சில சமயம், அவளுக்கும் தர்மசங்கடங்கள், நம் போன்ற பிள்ளைகளால்:-)
மது கைடபாரே = மது, கைடபன் என்ற கொடியவரை அழித்து, (வேதம் மீட்ட) பெருமாள்
முன்னொரு நாள், பிரம்மனிடம் இருந்து வேதங்களைக் களவாடினர் மது மற்றும் கைடபன் என்ற அரக்கர்கள்; ஹயக்ரீவனாய் தோன்றி அவர்களை வதைத்து, உலகுக்கே ஞானத்தை மீட்டுத் தந்தான் இறைவன்; “ஞான ஆனந்த மயம் தேவம்” என்று கல்விக்கு அரசனாய் இன்றும் வணங்கப்படுகிறான் ஹயக்ரீவன்!
வக்ஷோ விஹாரிணி = அவன் திருமார்பில்(வக்ஷ ஸ்தலத்தில்) கொலு இருப்பவளே!
அந்த ஞான குருவான பெருமாளின், திருமார்பை அலங்கரிப்பவளே! அவனை விட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரியாதவளே! “அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்”, என்று முதலில் உன்னைச் சொல்லி விட்டுப், பின்னர் தானே அவனைச் சொல்கிறார்கள்! அவன் மார்பில் ஸ்ரீவத்ச மச்சமாய் இருக்கும் தாயே!
(வசந்த விகார் என்று சொல்வது போல, வக்ஷ விகார் = மார்பில் உறைபவள்)
மனோகர திவ்ய மூர்த்தே = அழகும் ஐசுவரியமும் நிறைந்தவளே!
மனோகரம் = மனத்தை லயிக்கச் செய்யும் அழகு! அழகு மட்டுமா? திவ்ய மூர்த்தி = திவ்யமான ஐசுவரியமும், குணநலன்களும் உடையவள் நம் அன்னை! சும்மாவா சொல்கிறார்கள், “அவள் மகாலட்சுமி போல” என்று!
ஸ்ரீ ஸ்வாமினி = சுவாமியின் இல்லத் தலைவியே!
தர்மன் ஒருவன் என்றால் உடன் சக தர்மினி; “பகவானே! பகவதியே!” என்று சொல்வது போல், சுவாமிக்கு சுவாமினி!வேங்கட வீட்டின் இல்லத்தரசி!
ச்ரித ஜன, ப்ரிய தான சீலே = நாடி வரும் அன்பருக்கு, அவர்கள் விரும்புவதை வாரி அளிக்கும் தூயவளே!
ச்ரித ஜனங்கள் = நாடி வரும் அன்பர்கள்; இவர்கள், தாயிடம் ஒடி வரும் குழந்தைகள் போல; பசுவிடம் ஒடி வரும் கன்றைப் போல!
ப்ரிய = விருப்பப்பட்டதெல்லாம்; தான சீல = வாரி வாரி தானம் கொடுக்கும் வள்ளல் போல!
தொலை தூரத்தில் கன்றைக் கண்ட பசுவுக்கு எப்படி பால் தானாக வழிகிறதோ, அதே போல் நாங்கள் உன் அருகில் வருவதற்கு முன்பே, எங்களுக்கு அருள் கொடுக்க எண்ணும் தாயே!
ஸ்ரீ வேங்கடேச தயிதே = திருவேங்கட நாதனின் தர்ம பத்தினியே
தவ சுப்ரபாதம் = இனிய பொழுதாய் விடிய,எங்கள் அம்மா, நீ கண் மலர்க

———

இரண்டு பாடல்கள், ஜகன் மாதா ஸ்ரீ மகாலக்ஷ்மியின் மீது!
தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே |
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே ||

தவ சுப்ரபாதம் = மங்களமான காலைப் பொழுதாக மலரட்டும்!
சுப்ரபாதம்=சு+பிரபாதம்=சுகமான காலை
அரவிந்த லோசனே = தாமரை போன்று
சிவந்த, குளிர்ந்த கண்களைக் கொண்டவளே
அரவிந்தம்=தாமரை; லோசனம்=கண்
தாமரையை எதற்குக் கண்களுக்குச் சொல்கிறார்கள்? காலையில் திறந்து இரவில் மூடிக்கொள்வதாலா? இருக்கலாம்!
ஆனால் இங்கு அன்னையின் கண்கள் தாமரைப்பூ போல் மெல்லிய சிகப்பு (pink) ; குளிர்ச்சி! தாமரைக்குப் பூங்கொத்து தேவையில்லை! ஒரு பூ போதும்.
அவ்வளவு தெய்வீக அழகு!
பவது பிரசன்ன முக = உன் முகம், எப்போதும் சிரித்த முகமாய் இருக்கும்
சந்திர மண்டலே = சந்திரனைப் போல் முகம் கொண்டவளே
“வதனமே சந்திர பிம்பமோ” என்று தானே ஒரு பிரபலமான பாடல்; சந்திரன் அமைதியாக ஒளிர்வான்; அது போல் அன்னையும் அடக்கமாக, அமைதியாக, இதழ்க் கோட்டோரம் ஒரு மெல்லிய புன்னகை பூத்து, சிரித்த முகமாய் இருக்கிறாள்!
அது சரி, அதான் காலை புலர்கின்றதே! இன்னும் சிறிது நேரத்தில் நிலவு போய் விடும் அல்லவா? கவலை வேண்டாம்! சூரியன் வந்தாலும் இந்த நிலா மறையாது! அன்னையின் முக நிலாவுக்கு தேய்வு தான் உண்டோ?
விதி சங்கர் இந்திர வனிதாபிர் = பிரம்மா (விதி), சங்கரன் (சிவபெருமான்), இந்திரன்
ஆகியோரின் மனைவியர் எல்லாம்
வனிதா=பெண்
விதியைத் தலையில் எழுதும் கடவுள் = பிரம்மன்; இவர் மனைவியான கலைமகளும் (சரஸ்வதியும்),
சங்கரன் = சிவபிரான்; ஈசனின் அன்பு மனைவி, அன்னை மலைமகளும் (பார்வதியும்),
இந்திரன் மனைவியான சசிதேவியும் (இந்திராணி),
அர்ச்சிதே = (உன்னை) அர்ச்சிக்கிறார்கள்.
அன்னைக்கும், மற்ற தெய்வங்களின் மனைவியருக்கும் அவ்வளவு தோழமை பாருங்கள்; விரும்பி நன்மொழிகளால் அர்ச்சனை செய்கிறார்கள்! அதுவும் நம் அன்னை யார்?
அண்ணனின் மனைவி என்பதால்,
பார்வதிக்கு அண்ணி;
கணவரின் (பிரம்மா) அம்மா என்பதால், சரஸ்வதிக்கு மாமி;
கணவரின் (இந்திரன்) தலைவர் என்பதால், சசிதேவிக்குத் தலைவி;
இப்படிப் பிறந்த வீடும், புகுந்த வீடும், எல்லாரும் அன்னை மகாலக்ஷ்மியிடம் அன்பு பாராட்டுகிறார்கள்!
விருஷ சைல நாத= விருஷபாசலம் என்னும் திருமலைக்கு நாதன்

மாத; சமஸ்த ஜகதாம்! கருணைக் கடல் அல்லவா அவள்!!
தயிதே, தயா நிதே = அவனின் விருப்பமான மனைவியே! தயா நிதியே!
தயிதே = Beloved; பெருமாளின் அன்பே ஆருயிரே! தயா+நிதி = கருணை+செல்வம். அன்னை கருணைச் செல்வமானவள்!
அவள் தானே எல்லாச் செல்வத்துக்கு அதிபதி! அவளே ஒரு செல்வமா?
ஆமாம்! காருண்ய லக்ஷ்மி! அஷ்ட லட்சுமிகளில் ஒருவள் காருண்ய லக்ஷ்மி.
எத்தனை செல்வம் வந்தாலும் போனாலும், இந்தக் காருண்யம் மட்டும் என்றும் நிலைத்து நிற்கும்!

————-

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

அத்ரி ஆதி சப்த ரிஷய = அத்ரி முதலான சப்த (ஏழு) ரிஷிகள்
பால் வெளியில் (Milky Way), துருவ நட்சத்திரத்தைச் சுற்றி இருப்பது சப்த ரிஷி மண்டலம் (Ursa Major).
சப்த ரிஷிகள், உலகின் ஆதி தாய் தந்தையர்கள் ஆவார்கள்.
இறைவனின் மூத்த குழந்தைகள் என்றும் சொல்லுவர். அந்த ஏழு பேர் யார் யார் என்ற பட்டியல் சில சமயம் மாறுபட்டாலும், பொதுவாக இவர்களே:
அத்ரி, பரத்வாஜர், கெளதமர், ஜமதக்னி, காஸ்யபர், வசிஷ்டர், விஸ்வாமித்ரர்
(அத்ரியும், வசிஷ்டரும் பெரும்பாலும் எல்லாப் பட்டியல்களிலும் இருப்பர்; வசிஷ்டரின் மனைவி அருந்ததியும் வான மண்டலத்தில் அவருடன் இருப்பதாக ஐதீகம். “அம்மி மிதித்து அருந்ததி பார்த்து” என்ற வழக்கமும் வந்தது)

சமுபாஸ்ய சந்த்யாம் = வரப்போகும், சந்தியா வந்தன பூசைகளுக்காக
அதிகாலை கொஞ்சம் கொஞ்சமாக புலரத் தொடங்குகிறது; சந்தி செய்யும் வேளையும் வந்து விட்டது.

ஆகாச சிந்து = ஆகாச கங்கை நீர்வீழ்ச்சி, தீர்த்தத்தில் இருந்து
ஆகாச கங்கை என்ற நீர்வீழ்ச்சி நீர் பாப விநாச தீர்த்தம் போலவே புனிதமானது; எம்பெருமான் தொடுத்த வில் அம்பினால் உருவானது;

கமலானி மனோகரானி = அழகான தாமரைப் பூக்களைக் கொண்டு வந்து உள்ளனர்
ஆகாச கங்கையில் மலர்ந்த அழகிய (மனோகரமான) தாமரைப் (கமலம்) பூக்களைக் கொண்டு வந்து உள்ளனர்

ஆதாய பாத யுகம் அர்ச்சயிதும் = (அவர்கள் கொண்டு வந்த மலர்களுடன்) பாதம் இரண்டையும் அர்ச்சிக்க
பாத யுகம் = இணை அடிகள் = இரண்டு திருப்பாதங்கள்.
மலர்ப் பாதங்களை, மலர்களால் அர்ச்சிக்க வந்துள்ளனர்;
இறைவனின் இணை அடிகளை பாத பத்மம் என்று சொல்லுவார்கள். ஏன்? தாமரை நீரில் மூழ்கவே மூழ்காது; நீரின் அளவுக்கு ஏற்ப அதுவும் உயர்ந்து கொண்டே இருக்கும். “நீர்அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்”; “வெள்ளத்து அனைய மலர் நீட்டம்” என்பன தமிழ்ப் பாடல்கள்.

அது போல் நாம் நம் புண்ணிய பாவக் கணக்குகளைக் கூட்டினாலும் சரி, குறைத்தாலும் சரி! அதற்காக அவன் பாதங்களை மறைத்து வைக்க மாட்டான்; புண்ணியமோ பாவமோ, எதைச் செய்தாலும் நம்மைக் கடைத்தேற்றுவதற்கு ஒரே வழி! எப்போதும் நன்கு தெரியும்படி, அடைக்கலம் புகும்படி, பாதங்களை மட்டுமாவது காட்டிக் கொண்டே இருப்பான்!
பற்றுவதும் பற்றாததும் நம் கையில் தான் இருக்கிறது! பெரும்பாலும் புண்ணியர்கள் பற்றிக் கொள்கிறார்கள்; பாவம் செய்தோர், காட்டினாலும் பற்ற மறுக்கிறார்கள்!

மற்ற திரு அவயங்கள் வேண்டுமானால் பக்திக்கு ஏற்றவாறு தோன்றும், மறையும்! கரங்கள் காக்கவும் செய்யும்; அம்பைத் தொடுத்து அழிக்கவும் செய்யும்!
ஆனால் திருப்பாதங்கள் அப்படி இல்லை! வாமன அவதாரத்தில் கூட சம்காரம்/அழிவு என்று இல்லாமல், மகாபலி தலை மேல் வைத்து காத்தது! ராமாவதாரத்தில் ராமனே உதவ முடியாமல் போன போது கூட, அவன் திருவடிப் பாதுகைகள் பரதனுக்கு உதவின! இந்தக் காலத்தில் நமக்கும் கோவில்களில் தலை மேல் சடாரியாக வைத்துக் காக்கப்படுகிறது!

பாதுகா சகஸ்ரம் என்ற ஒராயிரம் பாடல்கள் இந்தப் பாதுகைகள் மேல் உள்ளன! அவ்வளவு பெருமை மிக்க பாதங்களைத் தான் தினமும் திருநாமமாக நெற்றியில் அணிகின்றனர்!
இதற்கு ஊர்த்துவ புண்ட்ரம் என்று வடமொழிப் பெயர்! (புண்ட்ரம்/புண்டரீகம் = தாமரை)!
கொஞ்சு தமிழில் திருமண் காப்பு! இப்போது புரிகிறது அல்லவா ஏன் திருப்பாதங்களைத் தாமரையாகச் சொல்கிறார்கள் என்று!

ப்ரபந்நா = சரணம் அடைந்து, வந்துள்ளனர்.
அப்பேர்ப்பட்ட திருவடிகளில் சரணம் புக சப்த ரிஷிகளும் வந்துள்ளனர். ப்ரபத்தி என்றால் சரணாகதி; ப்ரபந்நன் என்றால் சரணாகதி செய்த ஜீவன். . “புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே”, என்பது ஆழ்வார் செய்யும் சரணாகதி!
அது போல ப்ரபந்நர்களான சப்த ரிஷிகளும் இங்கு பெருமாளைச் சேவிக்க வந்துள்ளார்

சேஷாத்ரி சேகர விபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே

சேஷன்= ஆதிசேஷன் என்ற பாம்பு! அத்ரி=மலை;
சேகரம்=உச்சி; விபோ = அரசன்;
சேஷ மலைச் சிகரத்துக்கு அரசன் திருவேங்கடநாதன்!
இனி வரும் ஒவ்வொரு சுலோகமும் இப்படித் தான் முடியப் போகிறது! ஏன்?
அப்படி என்ன சேஷனுக்கும், பெருமாளுக்கும் அவ்வளவு அன்னோன்யம்? பெருமாள் எங்கு சென்றாலும், அவனோடு திருமகள் நீங்காது இருக்கிறாள், சரி! ஒத்துக் கொள்ளலாம்!
இந்தத் சேஷன் தொண்டன் தானே! ஏன் எங்கு போனாலும் கூடவே ஒட்டிக் கொள்கிறான்?

திருமலையின் ஏழு முடிகளும் சேஷனின் தலைகள்; அந்த மலையே சேஷனின் உருவம் தான்! வளைந்து நெளிந்து பாம்பைப் போலவே தான் உள்ளது! அந்த சேஷ மலை, பக்தியாலும் பணிவாலும் குனிந்து நிற்க, அதன் மேல்
மலை குனிய நின்றான் பெருமாள்
என்று பெயர் பெற்று விளங்குகிறான் இந்தக் கலியுகத் தெய்வம்!
கல்வெட்டுகளிலும் மற்றும் பழந்தமிழ்ப் பாடல்களிலும் இந்தப் பெயர் சிறப்பாக வருகிறது!

தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!
இப்படி சேஷ மலையின் மீது சேஷாத்ரி நாதனாக நிற்கும் மலையப்பா! ….சுப்ரபாதம் = சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.

—————

பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்

சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

பஞ்சானன = ஐந்து முகங்கள் கொண்ட சிவ பெருமான்
சிவனாருக்கு வெளியில் தெரியக்கூடிய ஐந்து முகங்கள்; ஆறாம் முகம் யோக காலங்களில் மட்டும் வெளிப்படும். பெருமாளின் இருதயத்தில் “அஜபா” என்ற நடனம் புரிபவன் ஈசன். அந்த இதயலிங்கத்துக்குத் தான் இன்று திருவாரூர் ஆலயத்தில் வழிபாடு நடக்கிறது.

ஆப்ஜ பவ = தாமரை மேல் உள்ள பிரம்மா
ஆப்ஜ=தாமரை; தாமரைத் தலைவன் பிரம்மன் என்று பொருள்.
ஈசனைப் பஞ்சமுகன் என்று சொன்னது போல், இவரை நான்முகன் என்று சொல்லவில்லை பாருங்கள். ஏன்?
முகக் கணக்கால் விளைந்த பிணக்கால் – இவருக்கு ஐந்து முகம் போய் நான்முகம் ஆனது தனிக்கதை. அதனால் தான் செருக்கின் மூலமே வேண்டாம் என்று தாமரை நாயகன் என்று சொல்லிவிட்டார்.
தத்துவம் என்னவென்றால்: உயர் பொறுப்பில் உள்ளவர்கள், அந்தப் பொறுப்போடு கூடவே வரும் பெரும் அதிகாரம். அந்தப் போதையில் மூழ்கி விடாமல், தாமரை இலை மேல் நீராய் இருக்க வேண்டும் என்பதே.

சண்முக = ஆறுமுகக் கடவுள், முருகப் பெருமான்
முருகப்பெருமானுக்கும் எம்பெருமானுக்கும் அப்படி ஒரு உறவு, அன்னோன்யம் மால் மருகன் என்று பல இடங்களில் கொண்டாடப் படுகிறான்.

திருச்செந்தூரில் அசுர வதம் முடிந்து, சிவபெருமானை நோக்கித் தவக் கோலம் கொண்டான் முருகன். போர்க்கோலம் போய் இப்போது தவக்கோலம்.
எஞ்சியுள்ள சில அசுரர்களோ, அவர்கள் உறவினரோ, பழி வாங்கப் புறப்பட்டால்?
பார்த்தார் பெருமாள்! தியானத்தில் உள்ள மருகனைக் காக்கத் தானே கடலுக்கும் அவனுக்கும் நடுவில் பள்ளி கொண்டு விட்டார்!
குலசேகரப்பட்டினம் என்ற ஊர், திருச்செந்தூருக்கு மிக அருகில்! செந்தூர் ஆலயத்திலேயே பெருமாளுக்குத் தனிச் சந்நிதி இதனால் தான்!

வாசவ ஆத்யா = அமரர் தலைவன் இந்திரன் – இவர்கள் எல்லாரும்
(வாசவன்=இந்திரன்)

எல்லாம் சரி, இவர்கள் எல்லாரும் ஏன் ஒரே கூட்டமாக, இங்கு வந்துள்ளார்கள்?

த்ரைவிக்ரமாதி = திரிவிக்ரமன் – வாமனன் – உலகளந்த பெருமாள்!
திருக்கோவிலூர் -உலகளந்த பெருமாள் திருக்கோலம்.
அவதாரங்களிலேயே நடுநாயகமான அவதாரம். இதுவரை உள்ள ஒன்பதில், ஐந்தாம் அவதாரம் இந்த வாமன-திரிவிக்ரம அவதாரம்.
இதற்கு முன்பு விலங்குகள். இதற்குப் பின்பு மனிதர்கள் என்று பகுத்துக் காட்டும் அவதாரம்.
அப்படி நடுவிலே நின்ற நாயகன் திரிவிக்ரமப் பெருமாள்.

அழிவு, சம்காரம் என்பதே இல்லாத ஒரே அவதாரம் இது ஒன்று தான்!

திருக்குறளப்பன், இந்த முறை, திருவை மறைத்து விட்டு,
வெறும் குறளப்பனாக வந்தான்.
“தீக்குறளை சென்றோதோம்” என்று சொல் ஒரு சொல் பதிவில் வருகிறதே – அந்தக் “குறளை” அல்ல இது! இது குள்ள உருவாய் வந்த குறள்.
இந்த அவதாரத்தில் தான் பூமிக்கும் பல நன்மைகள் நடந்தன. அதில் மிக முக்கியமான ஒன்று, கங்கை ஆறு தோன்றியது!

முதல் பத்தில் = ஓங்கி உளகளந்த உத்தமன் பேர் பாடி
இரண்டாம் பத்தில் = அம்பரம் ஊடுஅறுத்து ஒங்கி உலகளந்த
மூன்றாம் பத்தில் = அன்றிவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி

என்று ஆண்டாளும் இவ்வாறே மூன்று முறை அவிர்ப்பாகம் அளிக்கின்றாள், வாமன மூர்த்திக்கு!

சரிதம் விபுதா ஸ்துவந்தி = அந்த வாமனச் சரிதத்தைச் சொல்லித், துயில் எழுப்ப வந்துள்ளனர்.
எப்பேர்ப்பட்ட பாவமாக இருந்தாலும் சரி, மனம் திருந்தும் எண்ணம் வந்தாலே போதும்! வாய் விட்டுக் கூறக்கூட வேண்டாம்! திருத்தி ஆட்கொள்ள திரிபுவனமும் கடந்து வருவான் என்பதைக் காட்டும் வாமன அவதாரம்.
அதனால் தான் பாவங்களை எரிக்கும் (வேங்+கடம்) மலை மேல் நிற்பவனுக்கு, இந்த அவதாரக் குறிப்பைச் சொல்லித் துயில் எழுப்புகின்றனர் சிவன், பிரம்மா, முருகன், இந்திரன் எல்லாரும்.

வாசர சுத்திமாராத் = அன்றைய நாள் கணக்கான பஞ்சாங்கத்தை
வாசரம்=நாள்; சோமவாசரம் என்றால் திங்கட்கிழமை. ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த நாளின் வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்று ஐந்து அங்கங்கள்.
இதை இறைவன் முன்னிலையில் ஒரு weather report (வானிலை அறிக்கை) போலப் படிப்பது இன்றும் திருமலையில் வழக்கம். பஞ்சாங்க சிரவணம் என்று பெயர்.

பாஷாபதி படதி = பல மொழிகளில் வல்லவரான பிரகஸ்பதி, படிக்கிறார்
பொதுவாக நாம் பேசும் போது கூட, “இவரு என்ன பெரிய பிரகஸ்பதியா?” என்று கேட்போம். அப்படி கல்வி கேள்விகளில் சிறந்தவர் இவர். அதனால் அவர் பாஷா பதி (மொழியின் பதி). தேவர்களின் குரு. இந்திரனுக்குத் தர்மத்தைச் சொல்லி அவனை நல்வழிப்படுத்துபவர்.

இப்படி எல்லாத் தெய்வங்களும் உன் சந்நிதிக்கு வந்துள்ளார்கள்.
சேஷாத்ரி சேகர விபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே, திருவேங்கடநாதா

தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்

—————–

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ = அழகாக மலரத் துவங்கியுள்ள தாமரை
இன்னும் சூரியன் உதிக்க வில்லை. இருப்பினும் தாமரை சற்றே மலரத் துவங்கியுள்ளது!
இது எப்படி?
இறைவன் திருமுகம் கோடி சூர்யப் பிரகாசம் அல்லவா? அவன் இன்னும் அரைகுறைத் தூக்கத்தில் உள்ளான்…அரைகுறை விழிப்பிலும் உள்ளான்.
அதனால் அவன் முகச் சூரியனைக் கண்டு, தாமரையும் அரைகுறை மலர்ச்சியில் உள்ளது! 🙂

நாரிகேள = தென்னை மரம்
பூ கத்ருமாதி சு மநோகர = மலையில் நீண்டு நிற்கும் அழகான
பாலிகாநாம் = பாளைக் கமுகு என்னும் பாக்கு மரங்கள்

ஆவாதி மந்த மநிலஸ் = இப்படி மெல்லிய தென்றல், இந்த மரங்களில் புகுந்து வீச
சக திவ்ய கந்தை = திவ்யமான நறு மணம், காலையில் எழும்புகின்றதே!

கமுகு, தென்னம் பாளைகள் பார்த்துள்ளீர்களா…?
இல்லை மலையாளத்து நண்பர் யாராவது இருந்தால் தெரியும்!
அந்தப் பாளைகளை விரித்தால், வீசும் பாருங்க ஒரு வாசம்….அவ்வளவு சுகந்தமா இருக்கும்.

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளி எழுச்சியில் வருவதை,
இங்கு அப்படியே காட்டுகிறார்,
சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
….
பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம்
 இதுவோ?

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!

—————–

உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

உந்மீல்ய நேத்ர = (நேத்ரம்=கண்); தங்கள் குட்டிக் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு
யுக முத்தம பஞ்ஜரஸ்தா = (பஞ்ஜரம்=கூண்டு); தங்கள் ஜோடிகளுடன், உயரமான கிளிக் கூண்டுக்குள்ளே அமர்ந்து கொண்டு……
தியாகராஜரும் “ஓங்கார பஞ்சர கீ” என்று முதல் பஞ்சரத்னக் கீர்த்தனையில் (ஜகதா என்று தொடங்கும் கீர்த்தனை) பாடுகிறார்.
நம் மனம் என்னும் கிளி, ஓங்காரக் கூண்டிலே ஒடுங்குவதாகப் பாடுகிறார்.

பாத்ரா வசிஷ்ட = பாத்திரங்களில் மீதி வைக்கப்பட்டுள்ள
கதலீ பல பாயசாநி = வாழைப் பழம் கொண்டு செய்யப்பட்ட பாயசத்தை புக்த்வா = சாப்பிடுகின்றன
ஒவ்வொரு நாள் இரவும், சுவாமிக்கு ஏகாந்த சேவை ஆகும் போது, வாழைப்பழங்கள்/முந்திரிகள் கலந்த பால் பாயசம் நிவேதனம் செய்வார்கள்.
பின்னரே போக ஸ்ரீநிவாசனை, சயன மண்டபத்தில், கட்டிலில் கிடத்தி, தூங்கப் பண்ணுவார்கள்.
திரை போட்ட பின்னர், அந்தக் கெட்டியான பாயசத்தை, நமக்கும் பிரசாதமாகத் தருவார்கள்…..இதையே கிளிகள் மறுநாள் காலையில் உண்கின்றன.
உடுத்துக் களைந்த பீதக ஆடை போல…அவன் உண்ட மிச்சத்தை, அவை உண்கின்றன!
சேஷத்தை (மிச்சத்தை) உண்டு, சேஷத்வம் பெறுகின்றன!

சலீலமத கேளி சுகா = (சுகம்=கிளி); மிக இன்பமாக விளையாடும் பச்சைக் கிளிகள்
படந்தி = உன் நாமங்களை பாடுகின்றன!
“கோவிந்தா, கோவிந்தா” என்று மதுரமாக கிளிகள் எல்லாம் கீச்கீச் என்று கொஞ்சினால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்!
வரிசையில் நிற்கும் அடியார்களுக்கு இதைக் கண்டால் கால்களும் கடுக்குமோ?

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.

———————–

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

தந்த்ரீ= தந்தி;ப்ரகர்ஷ = அடர்ந்து நீண்ட
நாரதர் தோளில் எப்போதும் தொங்குமே, அது ஒரு விசேட வீணை. அதற்கு மஹதி என்று பெயர்.
அப்போதே எளிதில் எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய (மொபைல்) வீணையைக் கையாண்டுள்ளார் பாருங்கள்! ஏன் ஊர் ஊராக எடுத்துச் செல்ல வேண்டும்?
எங்கும் ஒரு இடத்தில் நிலையாக இல்லாது……திரிந்து கொண்டே இருப்பது அவர் பெற்ற சாபம். அது தனிக் கதை! அதற்கு ஏற்றவாறு ஒரு இசைக் கருவி மஹதி!
இன்று நாம் கச்சேரிகளில் காணும் வீணையைத் தோளில் தொங்க விட்டுக் கொண்டு, நடமாட முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள்! 🙂
அடர்ந்து நீண்ட தந்தி உடைய அந்த வீணையில்…

மதுர ஸ்வநயா விபஞ்ச்யா = மதுரமான உன் நாமங்களை சொல்லிக் கொண்டு
பெருமாள் அழகன் என்பது அனைவரும் அறிந்ததே! அவன் திருநாமம் அவனை விடவும் அழகு, இனிமை! அதனால் தான் அது மதுரமான நாம சங்கீர்த்தனம்…
“நாராயண நாராயண ஜெய கோவிந்த ஹரே!” என்று தான் நாரதர் பொதுவாக மீட்டுவாராம்!

நாராயணா என்ற பெயரைக் கேட்டாலே எரிந்து விழும் இரணியகசிபு கூட, இதன் ராகத்தில் மயங்கினானாம்! நாராயண நாமத்தை வாய் விட்டுப் பாடினால் தானே அவன் வம்பு செய்வான்! பாடாமல், மீட்டினால்?
பாவம், நாரதர் தன் எதிரியின் திவ்ய மங்களத் திருநாமங்களைத் தான் பாடுகிறார் என்று அவனுக்கு தெரியாமால், ஆகா ஓகோ என்று ரசித்தானாம்:-)

காயத்ய நந்த சரிதம் =உன் சரிதத்தை, நந்த கிருஷ்ண சரிதத்தைக், கானம் பாடுகிறார்

தவ நாரதோபி= தவ ஒழுக்கத்தில் சிறந்த நாரத முனி!
நாரதர் சார்பு நிலைகள் எதுவும் அற்றவர். தேவர், அசுரர் என்று எல்லாரும் அவரை வரவேற்று உபசரிப்பார்கள்! தர்மம் தழைக்க, இறைவனின் திருவுள்ளப்படி காரியம் ஆற்றுபவர்!
கலகப் பிரியர் என்று உலகம் பழித்தாலும் புகழ்ந்தாலும், அந்தச் சாபத்தையும் வரமாக ஆக்கிக் கொண்டவர்! நாரதர் கலகம் நன்மையில் தானே முடியும்!

நாரதர் சிறந்த முருக பக்தர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
வள்ளித் திருமணத்தில் பெரும் பங்கு வகிப்பவர்! முருகனுக்கே அறிவுரை சொல்லி, காதல் திருமணம் தான் என்றாலும், வள்ளியின் பெற்றோருடைய ஆசி திருமணத்துக்குத் தேவை என்று வலியுறுத்துவார்.

அப்பேர்பட்ட மகரிஷி, கர்நாடக இசையின் ஆதி குரு,
இதோ…….திருமலையில், எம்பெருமான் சந்நிதி முன்பு, பங்காரு வாகிலி (தங்க வாயில்) நின்று கொண்டு, பூபாள ராகத்தில் கீர்த்தனை மீட்டி, திருப்பள்ளி எழுச்சி பாடுகிறார்!

பாஷா சமக்ரம் அசக்ருத் = முழு வாக்கியங்களை ஒரு முறை மட்டும் பாடி நிறுத்தி விடாது, தொடர்ந்து பாடி
தொடர்ந்து பாடுவது என்பது ஒரு cycle, சுழற்சி! ஓம் நமோ வேங்கடேசாய, என்று ஜபிப்பது போல!
காலையில் நம்மை எழுப்ப, நம் அம்மாவும், “எழுந்துருடா” என்று ஒரு முறை சொன்னால் வேலைக்கு ஆகுதா? தொடந்து ஜபம் செய்கிறார்களே, அது போலத் தான்! 🙂

கரசார ரம்யம் = இனிமையான, ரம்மியமான நாரத சங்கீர்த்தனம் கேட்கிறதே!

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!

—————-

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த = மகரந்த ரசத்தை அனுபவிக்கும் வண்டுகள் சிறைபட்டுக் கிடக்கின்றன
தாமரைப் பூ எவ்வளவு உத்தமமான காதலி! மாலை வேளை ஆனதும், சூரியக் காதலன் போய் விடுவான் என்று தெரிந்து, தானும் தன் இதழ்களை மூடிக் கொள்கிறாள்!
பாவம், இவர்கள் காதலின் ஆழத்தை அறியாத வண்டுகள்,
இன்பமாக தேன் குடித்துக் கொண்டு போதையில் இருக்கின்றன. தாமரை கூம்பிக் கொள்கிறது. உள்ளேயே மாட்டிக் கொண்டன வண்டுகள்!

இன்பம் என்று நினைத்த தேனே எமனாய் ஆகிவிட்டது வண்டுக்கு! இரவெல்லாம் தாமரைச் சிறைவாசம்!………………………………
அதே இன்பத் தேன் இப்போது கசக்க ஆரம்பித்து விட்டதோ வண்டுக்கு?
எப்போதடா பகல் வேளை வரும், எப்போது தாமரை விரியும், எப்போது மீண்டு வரலாம் என்று கணக்கு போடத் துவங்கி விட்டது வண்டு! – நம் ஆன்மாவும் இப்படித் தானோ?

ஜங்கார கீத நிநதைஸ், சக சேவநாய = ரீங்கார சப்தத்தை இனிய கீதம் போல் எழுப்புகின்றன. உன்னைச் சேவிக்கின்றன!
சிறைவாசத்தால் சித்தம் தெளிந்த வண்டு, உன்னை மனத்துக்குள்ளேயே சேவித்து, ரீங்கார கீதம் பாட….அதற்கும் ஒரு விடியல் பிறக்கிறது!

நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய = அந்தக் குளத்தில் (சரஸ்) இருக்கும் தாமரை (கமலம்), இதோ விரிகிறது….ஆன்மா விடுகிறது!
விடியல் கிடைக்கிறது, தாமரை விரிகிறது, சிறை ஒழிகிறது, வண்டு பறக்கிறது!

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்

————

யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

யோஷா கணேன = இளமையான பெண்கள் கூட்டம்;

கோசால யேஷூ, ததி மந்தன = கோ சாலை – பசுக்கள் வாழும் இடைச்சேரியில்  தங்கள் கை வளையல்கள் குலுங்கத் தயிர் கடைகிறார்கள்!
கடைவது பாலை! அப்படிக் கடைந்தால் வருவது தயிர்!
அப்படியிருக்க தயிர் கடைகிறார்கள் என்று எப்படிச் சொல்லலாம்?
பால் கடைகிறார்கள் என்று அல்லவா சொல்ல வேண்டும்? – இதற்கு ஒரு இலக்கணக் குறிப்பு கூட இருக்கு தமிழில்!

பெரிய கடலைக் கடைந்த போதே தாங்கி நின்ற பரம்பொருள், இன்று ஆயர் சேரியில், சிறிய தயிரைக் கடையும் போதும், தாங்கி நிற்கிறான்!

தீவ்ர கோஷா = தீவிரமான கோஷம் – தயிர் கடையும் பெரும் சப்தம் எழுகிறது!
சாதாரண தயிர் கடையும் விஷயம் – அது எப்படிப் பெரும் சத்தம் எழும்?
ஆய்ச்சியர் மத்தினால், ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?” என்ற ஆண்டாளின் பாசுரத்தை நினைவிற் கொள்ளுங்கள்!
விடியற் காலை; திருமலை மீது;
அப்போதெல்லாம் மலை மேல் ஆள் அரவம் அதிகம் இல்லை போலும்! அதனால் தான் தயிர் அரவம் அதிகம் கேட்கிறது!

கிராமத்தில் பெரிய பானைகளில் கடைவதைப் பார்த்திருந்தாலோ, கேட்டிருந்தாலோ தெரியும்! பெரிய பானையைத் தூணை ஒட்டி வைத்து,
தூணில் பெரிய மத்தை நாணல் கயிற்றினால் கட்டி, அதைக் கடையும் போது,
கர்..கர்…கர்ர்ர்….கர்ர்ர்ர் என்று பெரும் சத்தம் எழும்பும்…கேட்டு மகிழ்ந்துள்ளீர்களா?
(மிக்சியில் விப்பிங் ப்ளேடு போடு, விப் செய்தால் இதை விடச் சத்தம் கூடுதலாக வரும் என்று யாரோ சொல்வது காதில் விழுகிறதே:-)

ரோஷாத் கலிம் விததே = இந்தப் பெரும் ஒலி, எங்கும் பரவி எதிரொலிக்கிறது!
ககுபஸ்ச கும்பா = பானையின் ஒலி, மலையின் மேல் முழங்குகிறது!
பெருமாளே! இதைக் கேட்டுமா, நீ இன்னும் எழாமல் இருக்கிறாய்?

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!

————–

பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

பத்மேச மித்ர = தாமரைப் பூவின் (பத்மம்) நட்புக்குப் பாத்திரமான வண்டு

குவலயஸ்ய = குவளைப் பூ
கருநீல நிறத்தில் இருக்கும் குவளை மலர்! பார்ப்பதற்கு அதுவும் வண்டின் நிறம் போலவே உள்ளது! அதைப் பார்த்து வண்டு பொறாமை கொள்கிறது. பகைமை கொள்கிறது!
“எனக்குப் போட்டியாக, அதே நீலமா?” என்ற முணுமுணுப்பு…சிறிது நேரத்திலேயே ரீங்கார ஒலியாகி…பெரும் சப்தம்!

பேரீ நிநாத மிவ = பேரிகை (முரசு) கொட்டுவது போல
பீப்ரதி தீவ்ர நாதம் = பெரும் ஓசை, தீவிரமான நாத சத்தம்
வண்டுகள் எல்லாம் தங்கள் நீலமே, குவளையின் நீலத்தை விட அழகாக இருக்கிறது என்று பொறாமைக் கீதங்கள் பாடுகின்றன.
அடே நீல வண்ணா! பாவம் அவற்றுக்குத் தெரியவில்லை போலும்,
உன் நீலம் ஒன்றும் உலகத்தில் உள்ளது என்று! அந்த நீல மேக சியாமளத்தின் முன் வேறு எந்த நீலமும் நிற்க முடியுமா என்ன?

பெருமாளே! இன்னுமா எழவில்லை?
இனித் தான் எழுந்திராய்…ஈதென்ன பேர் உறக்கம்?
வண்டுகளுக்கும், தாமரைப் பூக்களுக்கும் நடக்கும் இந்த ஊடலைத் தீர்த்து வைக்கவாவது…சீக்கிரம் எழுந்திருப்பாயாக!

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.

—————

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ மந் = ஸ்ரீ(மகாலக்ஷ்மி); அவளின் மனத்துக்கு இனியவனே!
Sweet Heart-ன்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா? அதான் ஸ்ரீமன் 🙂
இந்த Sweet Heart-க்கு அப்படியே நேரான தமிழ்ப் பதத்தை ஆண்டாள் -மனத்துக்கு இனியான் என்கிறாள்-

அபீஷ்ட வரத = விருப்பங்களை நிறைவேற்றுபவனே!
அபீஷ்டம்=விருப்பம். நியாயமான நல்ல விருப்பங்கள். மற்றை நம் காமங்கள் அல்லாத விருப்பங்கள்…
இப்படி நம் ஆசை, விருப்பம், எண்ணங்களை எல்லாம் நிறைவேற்றி வைப்பவன் – வரம் தரும் வரதன் – நாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளுபவன்!

அகில லோக பந்தோ = எல்லா உலகத்துக்கும் உறவுக்காரனே
எல்லா உலகம் என்று ஏன் சொல்ல வேண்டும்?
தேவர்-அசுரர் என்றோ, மேலோர்-கீழோர் என்றோ, பணக்காரன்-ஏழை என்றோ, படித்தவர்-பாமரர் என்றோ, சாதி-மதம் என்றோ எந்தவொரு வேற்றுமையும் அவனுக்குக் கிடையாது!
வேற்றுமை நம்மிடத்தில் தான்! நாம் பார்க்கும் பார்வையில் தான்!
அவனோ கண்ணாடி போல!
எதுவாகப் பார்க்கிறோமோ, அதுவாகவே தெரிகிறான்! அகலில் அகலும்…அணுகில் அணுகும்…

ஸ்ரீ ஸ்ரீநிவாச = திரு-மாலே! ஸ்ரீநிவாசா
ஸ்ரீநிவாசன் என்பது மிகவும் முக்கியமான திருநாமம்..
பொதுவா அம்மாவுக்கு ஒரு பெயர் இருக்கும். அப்பாவுக்கு ஒரு பெயர் இருக்கும்! அம்மையப்பன் இருவருக்கும் சேர்த்து ஒரே பெயராக இருக்குமா? இருக்கே! அதுவே திரு-மால்! ஸ்ரீ-நிவாசன்!

“பிரம்மநி ஸ்ரீநிவாசே” என்பது இராமானுசரின் ஸ்ரீபாஷ்யம்!
பரப்பிரும்மம் (பரம்பொருள்) யார் என்றால், அது ஸ்ரீநிவாசன் தான் என்று அவர் நிர்ணயம் செய்கிறார்! அவர் மட்டுமில்லை!
ஆதிசங்கரர், மத்வர், வல்லபர் போன்ற பலப்பல ஆச்சாரியர்களும் வேறு வேறு மார்க்கங்களைக் காட்டினாலும், நாராயணனே பரப்பிரும்மம் என்று ஒருமுகமாகச் சொல்கிறார்கள்!
“நாராயண பரோ வக்யாத்” என்று தான் ஆதிசங்கரரின் பாஷ்யமே தொடங்குகிறது! “நாரயணஹ, பரஹ” என்று முத்தாய்ப்பாகச் சொல்கிறார்!

ஜகத் ஏக தயைக சிந்தோ = அனைத்து உலகுக்கும் கருணை சிந்துபவன் நீ ஒருவனே!
தயை=கருணை! தயா சிந்து=கருணைக் கடல்!
உலகத்துக்குக் கடல் தான் காப்பு! கடலில் நடக்கும் நிகழ்வுகளால் தான் உலகம் ஒரே சீராக இயங்குகிறது!
நீராரும் கடல் உடுத்த நில மடந்தை! விரிதிரை முந்நீர் உலகம் என்பதெல்லாம் தமிழ் இலக்கியம்! அதனால் தான் இறைவனைக் கடலாக உருவகிக்கிறோம்!
கடலில் இருந்து தோன்றியது எல்லாம் இறுதியில் கடலில் போய்த் தான் கலக்கிறது.
இறைவனோ கருணைக்கடல்! இருப்பதோ பாற்கடல்!

ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர = “ஸ்ரீ” என்று போற்றப்படும், அன்னை மகாலக்ஷ்மி உன் திருமார்பில் வசிக்கிறாள்

ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு வீடு (க்ருஹம்) எது?
உன் திருமார்பே அவள் வீடு! வலப்பக்க மார்புக்கு வக்ஷ ஸ்தலம் என்றே பெயர்! அதில் அவள் நீங்காது நித்ய வாசம் செய்கின்றாள்!
ஒரு நொடிப் பொழுதும் உன்னை விட்டுப் பிரிய மாட்டாள்! மஞ்சள் குங்கும பூஷிதையாக, நித்ய சுமங்கலியாக இருக்கிறாள்! அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!

அவள் எதற்கு திருமார்பில் போய் இருக்க வேன்டும்? அவளுக்கு வேறு இடம் கிடைக்க வில்லையா என்ன?
அடியவர்கள் வரும் போது, அவர்கள் புண்ணிய பாபக் கணக்குகளை இறைவன் பார்க்கத் தொடங்கினால் யாரேனும் மிஞ்சுவமா? அதனால் தான் அவன் இதயத்துக்கு அருகில் போய் உட்கார்ந்து கொண்டாள். நாம் அவனிடம் செல்லும் போது, நம் தவறுகள் எல்லாம் அவன் மனத்தில் உதிக்காதவாறு, அவனைக் குளிர்விக்கிறாள்!

திவ்ய மூர்த்தே = திவ்யமான அழகை உடைய தலைவா!
எத்தனையோ மூர்த்திகள் உலகில்! ராம மூர்த்தி, கிருஷ்ண மூர்த்தி, சுந்தர மூர்த்தி!
ஆனால் இவனோ திவ்ய மூர்த்தி! அழகே வெட்கப்படும் அழகன்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = அப்பா, திருவேங்கட மலைக்கு அதிபதியே
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுக!!

—————-

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி = ஸ்ரீ சுவாமியின் திருக் குளத்தில்
புஷ்கரிணி = குளம்; திருவேங்கடமுடையான் ஆலயத் திருக்குளத்துக்கு சுவாமி புஷ்கரிணி என்று பெயர். இதைக் குலசேகர ஆழ்வார் எவ்வளவு அழகா தமிழில் ஆக்குகிறார் பாருங்கள்!
சுவாமி+புஷ்கரிணி = கோன்+ஏரி = கோனேரி
கோனேரி ராஜபுரம் என்ற ஊர், தமிழ்நாட்டில் உண்டு.

பொதுவா வடமொழிச் சொற்களைத் தமிழில் ஆக்கும் போது, தமிழ்ப் பெயர் சற்று நீண்டு விடும் என்று சிலர் குறைபட்டுக் கொள்வார்கள்.
ஆனா இங்க பாருங்க…வடமொழியில் நீளமான பெயர்…ஆனால் தமிழில் ரத்தினச் சுருக்கமா “கோனேரி”.
வடமொழி-தமிழ் ஆக்கும் போது, நிறைய சொற்களுக்குக் கடினப்படுகிறீர்களா?
கவலைய விடுங்க! ஆழ்வார்களிடமும், குறிப்பா ஆண்டாளிடமும் தேடினாலே பாதிச் சொற்கள் கிடைத்து விடும்!

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே என்பது ஆழ்வார் பாசுரம்.
அதாச்சும் இறைவன் திருக்குளத்துக்கு அருகிலேயே வாழும் ஒரு கொக்காய் பிறந்தால் கூட பேரின்பம் தான் என்கிறார் ஆழ்வார்!
வைகுண்டத்தில் உள்ள விரஜா நதியே கோனேரி ஆனது என்பது தாத்பர்யம்.

கா அப்பு லவ, நிர்மலா அங்கா = கோனேரி நீரைத் தெளித்துக் கொண்டு, அகமும் புறமும் தூய்மை அடைந்து
அப்பு=நீர், லவ=கொஞ்சமாக
மலம் = குற்றம்/அழுக்கு; நிர்மலம் = குற்றமின்மை
அது சரி, கோயிலுக்குப் போகணும்னா கட்டாயம் குளிச்சிட்டுத் தான் போகணுமா?

பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆலயத்துக்குப் போனீங்கனா தெரியும். வடக்கத்திக்காரர்கள் அதுவும் குறிப்பா தாக்கூர்கள் கோயிலுக்குள் திபுதிபு-ன்னு ஒடி வருவாய்ங்க! சில பேர் கிட்ட வந்தா நாறும்! என்னைக்குக் குளிச்சானோ என்னமோ? 🙂
ஆனாப் பாருங்க! கோயிலில் வேற எந்த ஒரு வார்த்தையும் பேச மாட்டாங்க!
ஹே பாண்டுரங்கா, ஹே விட்டலா…ன்னு ஓடி வந்து பாண்டுரங்கன் காலில் விழுந்திடுவான்.

தீட்டு தீட்டு-ன்னு சொல்றாங்களே! அப்பிடி-ன்னா என்ன? – நம் ஐயன் வள்ளுவரும் சொல்கிறார்! கன்னடத்துக் கவி புரந்தரதாசரும் சொல்கிறார்!
குளிக்காம கோவிலுக்குப் போனா தீட்டு! – அது சரின்னே இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்! சரி, அங்கே போயி, கோவிலில் வம்பு பேசினா? – அதைக் காட்டிலும் இது தீட்டு! 🙂
கோவிலுக்கு மடியா போகணும் மடியாப் போகணும்-னு சொல்லிட்டு, அங்கு போய் வம்பு பேசினா? மடி மடின்னு, மடியே மடிந்து விடுகிறது! 🙂

சரி தீட்டாயிடிச்சு!…இதுக்கு எப்படி தீட்டு கழிக்கறது?
சும்மா தண்ணியில் ரெண்டு முக்கி முக்கி எழுந்துட்டா தீட்டு போயிடுமா? – இல்லவே இல்லை!
சிறப்புக் குளியல் செய்யணும்! அது என்ன சிறப்புக் குளியல்?
கோவிலில் அந்நிய வார்த்தைகளை விடுவது தான் சிறப்புக் குளியல்! உயர்ந்த ஸ்நானம், எல்லாம்!

அதைத் தான் புரந்தரதாசர், “தனுவு நீர் ஓளகத்தி பளவேனு, மனதல்லி திட பக்தி இல்லாத மனுஜனு!” என்கிறார். நம் ஐயன் வள்ளுவர் ஒரு படி மேலே போய் விடுகிறார்.
புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
திருக்குளத்தில், கங்கையில், காவிரியில், குமரியில், எங்கு குளித்தாலும்… குளிக்கும் போது புறத்தை மட்டும் தூய்மை செய்யாமல், அகத்தையும் சேர்த்துத் தான் தூய்மை செய்ய வேண்டும்!

சரி, புறத்துக்கு சோப்பு/ஷாம்பூ போடலாம்; சில பேர் பால், பயத்தமாவு கூட பயன்படுத்தறாங்க!
ஆனா அகத்துக்கு எது சோப்பு? – இறைவனின் திருநாமம் தான் அழுக்கு நாசினி, கிருமி நாசினி, எல்லாம்!
விடியற் காலை அங்கப் பிரதிட்சணம் செய்தவர்களுக்கும், மொட்டை போட்டுக் கொள்பவர்களுக்கும் இது நல்லாத் தெரியும்!
அதிகாலைக் குளிரில் நடுங்கிக் கொண்டே, திருமலைக் குளத்தில் ஒரு முங்கு, முங்கி எழுங்க!
அதுவும் மனதாரக் “கோவிந்தா கோவிந்தா” என்று சொல்லிக் கொண்டே எழுங்க!
குளிரில் உடம்பும் நடுங்கி,
உள்ளே உள்ள பாவங்களும் நடுங்கி விடாதா என்ன?

ச்ரேய ஆர்த்திநோ = பரிபூர்ணமான நலமுடன் வாழ வேண்டிக் கொண்டு ஆனந்தமும் நலமும் கிடைக்க வேண்டிக் கொண்டு,
ஆனந்த நிலையத்தில், யார் யார் எல்லாம் காத்திருக்கிறார்கள்?

ஹர, விரிஞ்சி, சனந்தன ஆத்யா = சிவன், பிரம்மன், சனந்தனர் முதலான மகரிஷிகள்
ஹரன் = சிவபெருமான்
விரிஞ்சி = பிரம்மன் (ஜனனி ஜனனி பாடலில் கூட ஹரி ஹர விரிஞ்சி-ன்னு ஒரு வரி வரும்) சனந்தன ஆத்யா = சனகாதி முனிவர்கள்;
சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நால்வரும் வயதில் இளைய ரிஷிகள். ஆனால் பக்தியும் ஞானமும் ஒருங்கே கைவரப் பெற்றவர்கள்!
இதில் சனத்குமாரர் கார்த்திகேயனான முருகப் பெருமானின் அம்சம் என்றும் சொல்லுவார்கள்.
இந்த 4 பேரால் தான்…நமக்கு 4 அவதாரங்கள் கிடைத்தது.

த்வாரே வசந்தி, = மகா துவாரம் என்னும் உன் ஆலய வாசலிலே நிற்கிறார்கள்.
(அப்போது சேனை முதலியாரின் தொண்டர்கள், தங்கள் கையில் உள்ள பொற் பிரம்பால், அனைவர் தலையின் மேலும், மெல்லிதாய் வைத்து, அனுகிரகம் செய்ய)

வர வேத்ர ஹத= பொற் பிரம்பால் தட்டி முறைப்படுத்த,

உத்தம அங்கா = அதனால் இன்னும் தூய்மை அடைகிறார்கள்!

வேத்ரம்=பிரம்பு; வர வேத்ரம்=பொற் பிரம்பு
அந்தக் காலத்தில் ஆசிரியர் என்றால் கையில என்ன இருக்கும்? – பிரம்பு!
யாராச்சும் பார்த்து இருக்கீங்களா? இல்லை அடி வாங்கித் தான் இருக்கீங்களா? 🙂
மாணவர்களை அவர் அடிக்கிறாரோ இல்லையோ, ஆனால் கையில் பிரம்புடன், வேட்டி-கோட்-தலைப்பாகை-குடை; வாயில் கணீரென்று தமிழ்ச் செய்யுள்…ஆகா! ஆகா!

பெருமாளின் படைகளுக்கு பிரதான தளபதியாய் இருப்பவர் விஷ்வக்சேனர்.
தமிழில் சேனை முதலியார் என்று போற்றுவார்கள்! விநாயகரைப் போலவே, வைணவ பூசைகளில் முதல் பூசை இவருக்குத் தான்! – இவர் தான் வைணவ சம்பிரதாயத்தில் முதல் ஆசிரியர்!
பெருமாள் தாயாருக்கு உபதேசிக்க, தாயார் நம் மீது உள்ள கருணையால் இவருக்கு உபதேசம் செய்து வைத்தார்! – இவரே தலைமை ஆசிரியர்! நம்மாழ்வாரின் குரு!

அந்தக் குருவின் கையில் பொற் பிரம்பு!
அந்தப் பிரம்பில் இருந்து எழும் இனிய நாதம்!…
என்னது பிரம்பில் இருந்து இசையா? நம்ப முடிய வில்லையா? பிரம்பைக் காற்றில் வீசிப் பாருங்க…தெரியும்! 🙂
மெல்லிசைக் கச்சேரிகளில், வாத்தியங்களுக்கு முன்பு நின்று கொண்டு ஒரு மனுஷர் கையில் பிரம்பை வைத்து அப்படியும் இப்படியும் ஆட்டுவார்! – music conductor

நாம் நினைப்போம் – இந்த மனுஷன் ஒன்னுமே செய்யாம, சும்மா பந்தா கட்டுகிறாரே என்று! ஆனால் அத்தனை வாத்தியங்களின் நாதமும் ஒருங்கே சுருதி சேர்ந்து ஒன்றாய் ஒலிக்கிறது என்றால், அதற்கு இவரே காரணம்.
அதே போலத் தான், உயிர்கள் எல்லாம் பல பாதைகளில் சென்றாலும்,
எம்பெருமானின் திருநாமம் என்னும் நாத இன்பத்தை எல்லா உயிர்களும் ஒருங்கே அடைய, பிரம்பை வீசுகிறார் விஷ்வக்சேனர்!

அவருடைய சேனைகள் கையிலும் பொற்பிரம்பு இருக்கிறது!….எதற்கு?
கோயிலுக்கு வருபவர்களை எல்லாம் அடித்து விளாசவா? இல்லையில்லை! 🙂

வானவர்களை எல்லாம் தலையில் பொற்பிரம்பால் தொட்டு, தரிசனத்துக்கு, ஒவ்வொருவராக அனுப்பி வைக்கிறார்கள்! அப்படி பிரம்போசையால் ஏற்படும் ஓங்காரம், யார் எந்த மன நிலையில் இருந்தாலும், அதை எல்லாம் விலக்கி,
பரம்பொருள் ஒருவனையே நெஞ்சில் நிறைத்து விடுகிறது! – ஆனாப் பாருங்க, வானவர்களுக்கு மட்டும் தான் இந்த “அடி”! நமக்கு இல்லை – ஏன் இப்படி? 🙂

தானம் தவம் செய்த முனிவர்கள், வானவர்கள் எல்லாரையும் கீழே இறக்குகிறார் பெருமாள்!
பாவங்கள் புரியும் நம்மையோ மேலே ஏற்றுகிறார்!

மேலோர் எல்லாரும் அவரவர் நிலையில் இருந்து கீழிறங்கி திருமலைக்கு வருகிறார்கள், பெருமாளின் திருமேனி செளந்தர்யம் என்னும் வடிவழகைச் சேவிக்க!
நாமோ, ஒன்றுமே செய்யாமல், மேலேறிச் செல்கிறோம், மேல்நிலையை அடைய! – இது தான் இறைவனின் கேழில் பரங்கருணை!

இப்பேர்ப்பட்ட எம்பெருமானைப் பார்த்துப் பார்த்து அனுபவிக்க வந்துள்ளார்கள்…
கயிலை நாதன் சிவபெருமான்
சத்யலோக நாதன் பிரம்மா
தமிழ்வேள் முருகப் பெருமான்
சனகாதி முனிவர்கள்
….
எல்லாரும் வந்து, பங்காரு வாகிலியில் உன்னைச் சேவிக்க நிற்கிறார்கள்!
ஆவல் மிகுதியால் எட்டி எட்டிப் பார்க்கிறார்கள்…
பெருமாளின் வடிவழகைக் அப்படியே கண்களால் உறிஞ்சிப் பருகுவதற்கு!

துவார பாலகர்கள், இவர்கள் ஆவலை எல்லாம் முறைப்படுத்தி,
ஓங்காரப் பிரம்போசையால் மனம் ஒன்றச் செய்து, தரிசனத்துக்கு வழிவகை செய்து வைக்க…
என் அப்பனே, திருவேங்கடமுடையானே…
சிவபெருமானின் அன்பை பெற்றுக் கொள்ளவும்,
சண்முகனின் அன்பைப் பெற்றுக் கொள்ளவும்,
பிரம்ம சனகாதிகள் அன்பைப் பெற்றுக் கொள்ளவும்…..சீக்கிரமாகத் திருப்பள்ளி எழுவாயே!

ஸ்ரீ வேங்கடாசல பதே = அப்பா, திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுக!!

————–

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

1. சேஷாசலம்
2. கருடாசலம்
3. வேங்கட மலை – வேங்கடாசலம் (அசலம்=மலை)
4. நாராயணாத்ரி (அத்ரி=மலை)
5. விருஷபாத்ரி
6. விருஷாத்ரி என்னும் வேதாத்ரி
7. அஞ்சனாத்ரி

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
= என்ற இந்த ஏழு மலைகளில்

1. சேஷாசலம் = ஆதிசேஷனே மலை ரூபமாய் பெருமாளைத் தாங்குவதாக ஐதீகம். அவன் ஏழு தலைகளே (ஏழு படங்களே) ஏழு மலைகள்.
அவன் உடல்=அகோபிலம்- நரசிம்மர் ஆலயம், வால்=ஸ்ரீசைலம்- மல்லிகார்ஜூன சிவாலயம்.
சேஷனையும் பெருமாளையும் பிரிக்கவே முடியாது. அப்படி ஒரு பந்தம்!
நின்றால் குடையாம், இருந்தால் சிங்காதனமாம், நடந்தால் மரவடியாம் என்பார்கள். தாயாரையும் பெருமாளையும் அப்படி ஒரு தாங்கு தாங்குபவன்.
அவனுக்குத் தெரியாமல், பெருமாளும் தாயாரும் தனித்துப் பேசக்கூட முடியுமோ என்னவோ? 🙂

குன்றின் மேல் கல்லாக நிற்கின்றாய் கண்ணா என்று பாடலில் வருமே! அது போல், கல்லாய் மாறிக், கலியுக வரதனாய் வேங்கடத்தில் நிற்க திருவுள்ளம் கொண்டான் இறைவன். அவன் குறிப்பறிந்து ஆதிசேடனும் உடனே கல்லாய், மலையாய் மாறிவிட்டான்.
எள் என்று நினைத்தான் பரமன். ஆனால் எண்ணெயாய் வந்து நின்றான் தொண்டன். இது தான் கைங்கர்ய லட்சணம் என்பார்கள் ஆசாரியர்கள்!

கைங்கர்யம் (தொண்டு) எப்படி செய்ய வேண்டும் என்றால் ஆதிசேடனைத் தான் கேட்க வேண்டும். அவன் தானே இளைய ஆழ்வாராய் (இலக்குவனாய்) வந்தது! அது போதாதென்று, கைங்கர்ய லட்சுமி முகத்தில் தவழ, இராமானுசராகவும், மணவாள மாமுனிகளாகவும் வந்தது!
திருமலையைப் பொறுத்தவரை பெருமாளுக்கும், ஏன் வராக சுவாமிக்கும் கூட சீனியர் நம்ம ஆதிசேடன்!

அதனால் தான் எல்லா வாகனங்களுக்கும் முதல் வாகனம் சேஷ வாகனம்! (பெத்த சேஷ வாகனம்). ஆழ்வார்கள் தங்கள் பாதம் சேஷன் மேல் பட்டு, மலை ஏறவும் அஞ்சினார்கள். “வெறும்” மலையைத் தொழுதாலே “பெரும்” பாவங்களும் தீரும் என்றார்கள்!
சேஷாசலம், சேஷமலை, சேஷாத்ரி, சேஷகிரி எல்லாமே நம்ம சேஷன் தான்!

2. கருடாசலம் = பெரிய திருவடி கருடன்! கருடனைப் பற்றி! அவன் பெயரில் உள்ள மலை தான் கருடாசலம், கருடாத்ரி, கருடமலை!
கருடன் தான் இந்த சேஷாசலத்தை, வைகுண்டத்தில் இருந்து திருமலையில் இறக்கியதாகத் தலபுராணம் பேசும்.

மேலும் கோவிலின் அருகில் உள்ள கோனேரியை (திருக்குளத்தை), கருடன் தான் வைகுண்டத்து விரஜா நதியில் இருந்து உருவாக்கினான்! பிரம்மோற்சவத்திலும் கருடனின் கொடி தான் முதலில் ஏற்றப்படுகிறது! கொடிமரத்தையும் (துவஜ ஸ்தம்பம்), கருட கம்பம் என்றே சொல்கிறார்கள்.

கருடனும், சேஷனும் உலகத்தைப் பொறுத்தவரை எதிரெதிர் நிலைகள் (Pair of Opposites) !
ஆனால் பாருங்கள், இறைவனிடத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து விடுகிறார்கள். இது தான் பெருமாளின் செளந்தர்ய செளபாக்கிய லட்சணம்.

குணங்களை எல்லாம் கடந்தவன், எதிரெதிர் குணங்களையும் எப்படி ஒன்றாக இணைத்துக் கொள்கிறான் பாருங்கள்! இது கண்ணனுக்குக் கை வந்த கலை அல்லவா?
(ஓரே டீமில் ஒரே மேலாளரின் கீழ், Tester-Developer / கணக்காளர்-தணிக்கையாளர், என்று oppositeகள் இருக்கும் சங்கடம், பாவம் அந்தந்த மேலாளர்களுக்குத் தான் தெரியும் 🙂
கண்ணன் தான் உலகத்தின் தலை சிறந்த மேலாளன் அல்லவா?

3. வேங்கடாசலம் – பிறவிக் கடன்களைத் தீர்க்கும் மலை வேங்கட மலை! இறைவனுக்கே இந்த மலையின் பெயரைத் தான் வழங்குகிறார்கள்! வேங்கடாசலபதி, வேங்கடமுடையான், வேங்கடேஸ்வரன், வேங்கடத்துறைவார், வேங்கடத்து அண்ணல்!
சென்று சேர் திரு வேங்கட மாமலை,
ஒன்றுமே தொழ நம் வினை ஒயுமே!
இந்த மலையின் மேல் தான், நாம் காணும் ஆலயம் அமைந்துள்ளது! ஆனந்த நிலைய விமானம் அமைந்துள்ள மலை என்பதால் ஆனந்தாத்ரி என்றும் வழங்கப்படும்!

4. நாராயணாத்ரி = அஷ்டாட்சரம் என்னும் திருவெட்டு எழுத்து “ஓம் நமோ நாராயணாய”!
அதன் பொருள் மிகவும் ஆழமானது. குருவின் வார்த்தையை மீறி, இராமானுசர் ஊருக்கே உபதேசம் செய்து வைத்தது! , பிரணவத்தை இந்த மந்திரத்தில் இருந்து பிரிக்கவே முடியாது! அப்படி ஓங்கார ஸ்வரூபமாக இருப்பது! மந்திரங்களுக்கு எல்லாம் மகா மந்திரம், மந்திர ராஜ பதம் = திருவெட்டெழுத்து!

இதை விளக்கி நிற்கும் கோலம் தான், திருமலை மேல் நாம் எல்லாரும் பார்த்து மனம் பறிகொடுக்கும் கோலம்! 
ஓம் நமோ நாராயணாய என்பதற்கு விளக்கமாகத் தான் வேங்கடவன் நிற்கிறான்!
அதனால் மலைக்கு ஒரு பெயர் நாராயணாத்ரி. நாராயண மலை!

5. விருஷபாத்ரி = விருஷபாசுரன் என்னும் அரக்கனுக்கு மாட்டுத் தலை. பாவம், ஆணவக் கொம்பும் முளைத்து விட்டது. அவன் பெருமாள், ஈஸ்வரன் இருவருக்குமே பக்தன் தான்! ஆனால் எல்லாரையும் அடக்கியவனுக்கு, இனி மேல் அடக்க யாரும் இல்லையே என்ற கவலை! நாரதர் தூண்டி விட, பெருமாளையே போருக்கு அழைக்கிறான்.

தான் வணங்கிய தெய்வம் என்பதைக் கூட மறக்கும் அளவுக்கு அதிகாரப் பேராசை, தோள் தினவு எடுக்கிறது! மல்லாண்ட திண் தோள் மணிவண்ணன் என்பதை மறந்து அகலக்கால் வைத்து விட்டான். அடிபட்டு மாண்டான்!
அணைத்துத் திருத்துதல் சரிவராத போது, அடித்துத் திருத்தும் தாய் போல், பழைய பக்தனை அடித்து வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டார். அவன் வேண்டுகோளுக்கு இணங்க, அவன் பெயரே அமைந்து விட்டது மலைக்கு! இது தான் நாம் தற்காலத்தில் முதலில் ஏறும் மலை!

6. விருஷாத்ரி = விருஷம் என்பதற்கு தர்மம் என்றும் பொருள் உண்டு! விருஷபம் (காளை) என்றும் பொருள் உண்டு. ஏற்கனவே விருஷபாத்ரியைப் பார்த்து விட்டோம்.
அதனால் இது விருஷாத்ரி தான்! மேலும் இதற்கு வேதாத்ரி என்ற இன்னொரு பெயரும் உண்டு! தர்மத்தைப் போதிக்கும் வேதங்கள் ஒலிக்கும் மலை. ஆதலால் இது தர்மாத்ரி, வேதாத்ரி, விருஷாத்ரி!

7. அஞ்சனாத்ரி = இந்த சுலோகத்தில், இம்மலை பற்றி நேரடியாகக் குறிப்பில்லை! ஆனால் “முக்யாம்” என்று வருகிறது! முக்யாம் என்றால் யார்? முக்யப் பிராணன் என்று கன்னடர்கள் ஒரு தெய்வத்துக்கு ஊரெங்கும் கோவில் கட்டுவார்கள்! முக்ய மந்திரியாய் இருப்பவன்!
யார் என்று தெரிகிறதா? – அனுமன்!

அவன் திருமலையில் தான் அஞ்சனைக்கும்-கேசரிவர்மனுக்கும், வாயுவின் அம்சமாகப் பிறந்தான்! அஞ்சனையின் புதல்வன் ஆஞ்சநேயன்! அஞ்சனாத்ரி! அஞ்சனை மலை!
அனுமனின் சொந்த ஊர் திருமலை திருப்பதி!

இப்படிக் கருடாத்ரி-அஞ்சனாத்ரி என்று பெரிய திருவடி-சிறிய திருவடி இருவருமே, திருமலையில் உள்ளார்கள்! பொதுவாக கருடன் சிலை மட்டும் தான் பெருமாளின் முன் கைகூப்பி இருக்கும்! இங்கு இருவருமே கைகூப்பி உள்ளார்கள்!
கோபுரத்துக்கு வெளியே “பெடி ஆஞ்சனேயர்” சன்னிதி உள்ளது. பெத்த ஆஞ்சநேயர் என்றும் அழைக்கிறார்கள். இவரும் கைகள் குவித்து கருடனைப் போலவே நிற்கிறார்.

அவர் கைகளில் பெடி என்னும் சங்கிலிக் கயிறு கட்டப்பட்டுள்ளது! தெய்வத்தை வணங்காமல், விளையாட்டும் துடுக்குமாய் திரிகிறானே என்று நினைத்தாள் அஞ்சனா தேவி; குழந்தையின் கைகளை வணங்குவது போல் குவிக்கச் சொல்லி, கட்டி விடுகிறாள்! அதுவே நாம் காணும் திருக்கோலம்!
நைவேத்தியம் கூட முதலில் வராகருக்கும், பின்னர் பெருமாளுக்கும் நடக்கிறது. அதன் பின், “குழந்தை” அனுமன் என்பதால் இவருக்கு எடுத்துக் கொண்டு ஓடி வருகிறார்கள். அதன் பின்னர் தான் பெருமாளுக்கே சாத்துமுறை, மற்ற பரிவாரத் தெய்வங்களுக்கு எல்லாம் நைவேத்தியம் நடக்கிறது!

ஆக்யாம் த்வதீய = உன்(த்வ) பாடல்களைப் பாடிக்கொண்டும், கதைகளைச் சொல்லிக் கொண்டும்

வசதே ரநிசம் வதந்தி = ஆங்காங்கு தங்கி, இளைப்பாறி, உன்னைப் பற்றியே பேசிக்கொண்டு மலையேறுகிறார்கள்

மலை ஏறும் போது, எப்படி ஏற வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லுறாங்க இந்தச் சுலோகத்தில்! பெருமாள் சன்னிதானத்தில் சினிமாக் கதைகள் பேசுவோமா? அதே போன்ற உணர்வுடன் தான் மலையும் ஏற வேண்டுமாம்!
வெறும் மலையாய் இருந்தால் வீட்டுக் கதைகள் பேசிக் கொண்டும், வம்பிழுத்துக் கொண்டும் ஏறலாம்! ஆனால் இது சாதாரணக் கல் மலையா? சாளக்கிராம மலை அல்லவா! பல யோகிகளும் சித்தர்களும் காவல் தெய்வங்களும் மலைமேல் யோக நிஷ்டையில் இருப்பதாக ஐதீகம்! அதான் இப்படி!

எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே என்கிறார் ஆழ்வார்!
இந்த மலையில் ஏதாச்சும் ஒன்னாய் நான் ஆக மாட்டேனா? என்று உருகுகிறார் என்றால், அது என்ன சும்மானாங்காட்டியும் மலையா? ஆதிசேஷனே ஆன மலை அல்லவா?
அதான் இத்தனை நியமங்கள்! இத்தனை விதிகள்!
வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ என்று ஆங்காங்கு தங்கி, இளைப்பாறி மலை ஏற வேண்டும்! அதுவே யாத்திரை!

நம் வீட்டுக்கு ஒரு அன்பானவர் வருகிறார் என்றால் வழக்கத்தை விடக் கொஞ்சம் சீக்கிரம் எழுந்து கொள்ள மாட்டோமா? அது போல் உன் அன்பான பக்தர்கள் எல்லாம் “ஆபத் பாந்தவா, அனாத ரட்சகா, கோவிந்தா கோவிந்தா” என்று பாடிக் கொண்டு வருகிறார்கள்! இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்களே தரிசனத்துக்கு! இன்னுமா உறக்கம்? எழுந்திரப்பா ஸ்ரீநிவாசா!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

————

சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

சேவாபரா = கைங்கர்ய செய்யும் சேவாபாரர்கள் எல்லாம் உன் சேவைக்கு காத்துள்ளனர்!
– யாரெல்லாம் காத்துள்ளனர்?
அஷ்ட திக் பாலகர்கள் என்று சொல்லப்படும் எண் திசைக் காவலர்கள்! இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திசை! வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் காணப்படும் இவர்களைப் பற்றிய குறிப்புகள்!
திருமலைக் கோவிலில் அமைந்தது போன்று வாஸ்து, உலகில் வேறு யார்க்கும் அமையுமா தெரியாது! அவ்வளவு கச்சிதம்!
பெருமாள் கலியுக வரதனாக, பூலோகத்தில் மலைக் குனிய நிற்கப் போகிறார் என்று ஆனது! உடனே, திசைக் காவலர்கள் எல்லாம் அவருடன் வந்து அந்தந்த இடங்களில் நின்று விட்டார்கள்! இப்படித் தெய்வங்களே வந்து திசையில் நின்று விட்டால் சொல்லவும் வேண்டுமோ?

உண்டியல் இருக்கும் இடம் = குபேர மூலை, வடக்கு!
மடப்பள்ளி = அக்னி மூலை, தென் கிழக்கு
திருமஞ்சனக் கிணறு = மேற்கு, வருண மூலை
குரு ராமானுசர் சன்னிதி = தெற்கு பார்த்து, குரு பகவான் ரூபமாய் உள்ளது!
ஆலயம் = கிழக்கு பார்த்து உள்ளது, இந்திர மூலை!
பெருமாளின் காலடியில் சந்திர கலை = சோதிடத்தில் சந்திர தோஷப் பரிகாரத் தலம்!
இப்படிப் பல பொருத்தங்கள் கச்சிதமாய் அமைந்து விட்டன.

சிவ = ஈசானன்
சுரேஷ = இந்திரன் (சுரர்களின்/தேவர்களின் ஈசன் = சுரேஷன்)
க்ருசானு =அக்னி
தர்ம ரக்ஷோ = யம தர்ம ராஜன்
அம்பு நாத = வருண தேவன் (அம்பு/அப்பு=நீர்)
பவமான = வாயு தேவன்
தனாதி நாதா = தனங்களின் தலைவன், குபேரன்

இந்திரன் = கிழக்கு
அக்னி = தென் கிழக்கு
யமன் = தெற்கு
நிருதி = தென் மேற்கு
வருணன் = மேற்கு
வாயு = வட மேற்கு
குபேரன் = வடக்கு
ஈசானன் = வட கிழக்கு

இப்படி எண் திசைக் காவலர்களும் நிற்கிறார்கள். ஆலயத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இந்த எட்டு பேருக்கும் அந்தந்த திசையில் பலி பீடங்கள் உள்ளன. சுவாமிக்கு நிவேதனம் செய்த பின்னர், இந்த அஷ்ட திக் பாலகருக்கும் அன்ன பலி சார்த்தப்படுகிறது! ஒவ்வொரு வீதியுலாவின் போதும் பெருமாள் அந்தந்த திசைகளில் (மொத்தம் எட்டு இடத்தில்) நிற்பார். அப்போது அவர்களுக்கும் சேர்த்தே ஆரத்தி காட்டப்படுகிறது! – இப்படி தன் பரிவாரங்களையும் அன்போடு அரவணைத்து நடத்தும் பேரரசனாக விளங்குகிறார் மலையப்பன்!

பத்தாஞ்ஜலி = கூப்பிய கரங்களை எடுக்காது, கூப்பியபடியே, அஞ்சலி செய்து கொண்டு
ப்ரவிலசந் = மிகவும் ஆனந்தமாக
நிஐ சீர்ஷ தேசா = பெருமைக்குரிய திசை/தேச அதிபதிகள் உன்னைச் சேவித்து மகிழக் காத்துள்ளனர். திசைகள் மட்டுமா சேவிக்கின்றன? நாட்டின் பலப்பல திசைகளில் இருந்து பல தரப்பட்ட மக்களும் அல்லவா குவிகிறார்கள், அவனின் திருமேனியைப் பருகவும், தரிசன செளபாக்கியத்தில் உருகவும் சதா சர்வ காலமும் வந்து கொண்டே இருக்கிறார்களே!
பஞ்சாபிலும் இருந்து வருவார்கள், அசாமிலும் இருந்து வருவார்கள்!
காஷ்மீரம், தில்லி என்று வடக்கும், கல்லிடைக்குறிச்சி தெற்கும் சமன்படும் இடம் அல்லவா திருமலை! வடக்கும் வாழ்கிறது; தெற்கும் வாழ்கிறது!!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

—————-

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

தாடீ ஷூதே = கோவிலின் வழித் தடத்தில் (ராஜ வீதிகளில்)
திசைக் காவலர்கள் போலவே, ஒவ்வொரு உயிரினத்தின் தலைமையும் அல்லவா தலைவனை வழிபடுகிறது!

விஹக ராஜ = பட்சி ராஜனாகிய கருடன்
மிருகாதி ராஜ = மிருக ராஜனாகிய சிங்கம்
நாகாதி ராஜ = நாக ராஜனாகிய சேஷன்
கஜ ராஜ = கஜ ராஜனாகிய கஜேந்திரன் (ஐராவதம்)
ஹயாதி ராஜ = குதிரை ராஜனாகிய உச்சைசிரவஸ்

இந்த ஐந்தும் பிரம்மோற்சவத்தில் வாகனங்களும் கூட!
பொதுவாக நடை அழகு, வடை அழகு, குடை அழகு என்பார்கள்!
திருவரங்கத்தில் நடை அழகும், திருப்பதியில் வடை அழகும், காஞ்சிபுரத்தில் குடை அழகும் பிரசித்தம்!

அது என்ன நடை அழகு?
சுவாமியை வாகனத்தில் எழுந்தருளப் பண்ணி, அவனைச் சுமந்து வருவோர்க்கு ஸ்ரீபாதம் தாங்கிகள் என்று பெயர்! இவர்கள் அந்தணர் குலம் மட்டும் அலலாது, பல குலமும் சேர்ந்தவர்கள்.
இவர்கள் பாதங்களை வீதிகளில் பெண்கள் நீரூற்றுவார்கள்! மலர் இடுவார்கள்!
திருவரங்கத்தில் இராமானுசர் கட்டளைப்படி, அர்ச்சகர் இவர்கள் அனைவரையும் வணங்கி, மாலை பரிவட்ட மரியாதைகள் செய்ய வேண்டும்! – இப்படியாக, பெருமாள் கோவில்களில் சாதிப் பாகுபாடுகள் என்பது காண்தலே அரிது!

இவ்வாறு பெருமாளைத் தூக்கி வரும் போது, ஒவ்வொரு சமயத்துக்கும் ஒரு நடை உள்ளது. அதற்கு ஏற்றாற் போல் தமிழ்ப் பாடல்களும், ராகங்களும் உள்ளன! அதை நாதசுரத்தில் வாசிக்கும் போது, அதுவும் மல்லாரியாக வாசிக்கும் போது, நாத்திகனும் நடனம் ஆடுவான்! அப்படி ஒரு இசை!

கருட சேவையின் போதும், ஆஸ்தானத்தின் போதும் கருட நடை – கருடத்வனி ராகம்! அப்படியே தொம் தொம் தொம்மென்று குதித்து பறப்பது போலவே இருக்கும்! மாலை ஆட, மலை ஆட, குடை ஆட, குணவன் ஆட…..அழகோ அழகு!
சுவாமிக்கும் தாயாருக்கும் நடக்கும் மட்டையடி ஊடல் சண்டையில் – சர்ப்ப நடை. பாம்பு ஊர்வது போல் சத்தமே இல்லாமல் போவான் கள்ளன்!

சித்திரை விழாக்களில் கம்பீரச் சிம்ம நடை! சிங்க நடை போட்டு, திருமலைச் சிகரத்தில் ஏறு!
மாலை உலாக்களில் கஜ நடை! எதையும் லேசாக எடுத்துக் கொள்ளும் யானையின் ஒய்யாரம்!
தேரின் போது அஸ்வ (குதிரை) நடை! ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்பது போல் டொக் டொக் என்று துள்ளல் நடை.

உன்றன் இந்த நடையழகைக் கண்டு, உன்னை உற்சவத்தில் அழகாகத் தூக்கிச் செல்லும் உரிமையை இன்னும் இன்னும் வேண்டுகிறார்கள்!
ஸ்வஸ்வ அதிகார = தங்கள் தங்கள் அதிகாரம், உரிமையை
மஹிமா அதிகம் = அதன் மகிமை அறிந்து, இன்னும் அதிகமாக
அர்தயந்தே = விரும்புகிறார்கள்
பட்சி, நாக, சிம்ம, கஜ, அஸ்வ ராஜர்கள்!
சிங்கத்துக்குத் தன் நடையே மறந்து போய், உன் நடையில் தன் நடையைக் கற்றுக் கொள்ள வந்துள்ளது! அதே போலத் தான் மற்ற மிருகங்களும்!
இப்படி நாலறிவு ஐந்தறிவு மிருகமெல்லாம் உன் வழி நடக்க முனையும் போது,
ஆறறிவு மனிதன் என்று தான் உன் வழியில் நடக்க கற்றுக்கொள்வானோ? – கருணை செய்யடா, கார்முகில் வண்ணா!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

————-

சூர்யேந்து பெளம புத வாக்பதி காவ்ய செளரி
ச்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா
த்வத் தாச தாச சரமாவதி தாச தாசா
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

நவக்கிரகங்கள் = ஒன்பது கோள்கள் முதலில் பட்டியல் போடுறாங்க
சூர்ய = சூர்யன் (ஞாயிறு)
இந்து = சந்திரன் (திங்கள்)
பெளம = செவ்வாய்
புத = புதன்
வாக்பதி = வாக்குக்கு அதிபதி பிரகஸ்பதி; அதாவது குரு (வியாழன்)
காவ்ய = காவியக் கவிதை வல்லுநர்; அதாவது சுக்கிரன் (வெள்ளி)
செளரி = சனி பகவான்
ச்வர்பானு = ராகு
கேது = கேது

திருமலையில் பெருமாளின் காலடியில் சந்திர கலை உள்ளது = சோதிடத்தில் சந்திர தோஷப் பரிகாரத் தலமாகத் திருப்பதி விளங்குகிறது!

பொதுவாக வைணவ ஆலயங்களில், நவக்கிரகங்களுக்குத் தனியாகச் சன்னிதி கிடையாது! (மதுரை கூடலழகர் ஆலயம், மற்றும் சில ஆலயங்கள் தவிர); இதனால் பெருமாள் கோவில்களில் நவக்கிரகங்களுக்கு மதிப்பில்லை என்று பொருளாகி விடாது! அங்கும் நவக்கிரகங்களைக் குறித்து பூசைகள் – பஞ்சாங்க ஸ்ரவணம், ஹோமம் எல்லாம் உண்டு தான்! சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூசையிலேயே நவக்கிரகங்களும் இடம் பெற்று விடும்!

வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும்!
பரிவார தேவதைகள், நித்ய சூரிகள் – இவர்களுக்கு எல்லாம் தனியாகச் சன்னிதி கிடையாது! இவர்கள் எல்லாம் பெருமாளின் இடத்திலேயே இருந்து கொண்டு, அவரை அரூபியாகச் சேவித்து இருப்பதாக ஐதீகம்! அவ்வளவு ஏன்? படைத்தலைவர் விஷ்வக்சேனர் (சேனை முதலியார்) க்குக் கூட எத்தனை ஆலயங்களில் தனியாகச் சன்னிதி இருக்கு?

ஆனால் அடியார்களுக்கும், ஆழ்வார் ஆசார்யர்களுக்கு மட்டும் சன்னிதி இருக்கும்! – இதுவே அடியவர் பெருமை!
பெருமாளின் அதிகாரிகளைக் காட்டிலும் அடியவர்களுக்கே களம் அமைத்துத் தரப்படுகிறது! ஏன்?
அதிகாரிகளை முன்னிறுத்தினால் சக்தியும் வலுவும் முன்னிறுத்தப்படும்! அடியவரை முன்னிறுத்தினால் அன்பும் பக்தியும் தானே வளரும்! – அதனால் தான் இது போன்றதொரு அமைப்பு!
பெருமாள் ஆலயங்களின் அமைப்பு ஒரு குடும்பம் வாழும் வீட்டைப் போன்றது! அங்கே தாய் தந்தை குழந்தைகளைத் தான் பிரதானமாகப் பார்க்கலாம்!

நவக்கிரகங்களும் இறைவனின் அதிகாரிகள்; அவரவர் கர்ம பலனை வழங்கும் அதிகாரிகள்!
அவர்களுக்கு உண்டான மரியாதையும், மதிப்பும், பூசனையும் உண்டு! ஆனால் வெளிப்படையாக முன்னிறுத்தப்படுவதில்லை! அவர்களுக்கும் சேர்த்து அவர்களையும் ஆண்டளக்கும் பெருமாளே முன்னிறுத்தப்படுகிறார்.
அவர் உருவத்திலேயே, இவர்களும் அடங்கி விடுகிறார்கள்! அவதாரங்களில் கூட, நவக்கிரக அம்சங்கள் உண்டு!
சூர்யன் = இராமன்
சந்திரன் = கண்ணன்
செவ்வாய் = நரசிம்மர்
புதன் = கல்கி
வியாழன் = வாமானர்
வெள்ளி = பரசுராமர்
சனி = கூர்மம்
ராகு = வராகம்
கேது = மச்சம்

அதே போல், 108 திவ்யதேசங்களில், ஒன்பது திவ்யதேசங்கள், நவக்கிரகத் தலங்களாகச் சொல்லப்படுகின்றன (திருநெல்வேலி-தூத்துக்குடியைச் சுற்றியுள்ள நவ திருப்பதிகள்)
சூர்யன் = திருவைகுண்டம்
சந்திரன் = திருவரகுணமங்கை
செவ்வாய் = திருக்கோளூர்
புதன் = திருப்புளிங்குடி
வியாழன் = திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)
வெள்ளி = திருப்பேறை
சனி = திருக்குளந்தை
ராகு = திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)
கேது =திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)

திவிஷத் பரிஷத் = தேவர்கள் கூட்டத்துக்கே
ப்ரதானா = முக்கியமாய், (அவர்களையே அடக்கும் சக்தி வாய்ந்த நவக்கிரகங்கள்)

தேவர்கள் கூட்டத்தில் ஒரு பகுதியாய் நவக்கிரகங்கள் இருந்தாலும், அவர்கள் பணி நிமித்தம் அந்த மாதிரி! கர்ம பலன்களைக் கொண்டு சென்று சேர்க்கும் அதிகாரிகளாக இருப்பதால் அவர்களுக்குப் பாரபட்சம் கிடையாது.
தேவர்களையே அடக்கும் வல்லமை பெற்றவர்கள். அதே சமயம், அசுரர்கள் எதிரிகளாக இருப்பதால், அவர்களுக்குப் பாரபட்சம் எல்லாம் காட்ட மாட்டார்கள் இந்த ஒன்பது பேரும்!

அப்பேர்பட்ட நவக்கிரகங்கள்,
த்வத் தாச தாச = உன்னுடைய அடியார்க்கு அடியார்களிடம்
சரமாவதி தாச தாசா = அடியார்களாக இருந்து சேவை செய்கிறார்கள்

இங்கு தான் அடியார்களின் பெருமை மின்னுகிறது!
இறைவனுக்குத் தானே அடியார்கள்? அடியார்களுக்கே எப்படி அடியார் இருப்பார்கள்?
அதாவது பழுத்த தொண்டர்கள், இறைவனைச் சக தொண்டர்களிட”மும்” காண்பது!
அப்படிக் காண்பதால் அடியார்க்கு அடியார் ஆவது! தொண்டர் அடிப்பொடி!
கைங்கர்யம் என்னும் திருத்தொண்டில், தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!

இறைவரோ தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

இப்படி இறைவனே தொண்டர்களின் உள்ளத்தில் ஒடுங்கி விடுவதால், தொண்டர்களுக்குத் தொண்டர்கள் ஆகின்றன நவக்கிரகங்கள்.
சரமாவதி தாஸ்யம் என்பார்கள்; அதனால் தான் சரமாவதி தாச தாசா என்கிறது ஸ்லோகம்.
நவக்கிரகங்களும் அடியார்களின் கர்ம பலனைக் கொடுக்கும் போதும், அவர்களின் பற்றற்ற நிலையினைப் பார்த்து, “பரிவுடனே” கொடுக்கின்றன!
எப்படிக் கொடுக்கின்றன? – சரமாவதி தாச தாசா என்று கொடுக்கின்றன.
ஒரு தாசன் எப்படிப் பணிந்து பக்தியுடன் கொடுப்பானோ, அப்படிக் கொடுக்கின்றன!
அடியார்க்கு அடியாராய், அவை நல்ல நல்ல நல்ல, என்று கொடுக்கின்றன!

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

என்ற சம்பந்தரின் கோளறு பதிகத்தையும், இந்த சுப்ரபாத ஸ்லோகத்தோடு எண்ணிப் பாருங்கள்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

—————–

த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

த்வத் பாத தூளி = உன் பாத தூளியை (திருமண்)
இறைவனின் பாத தூளி பற்றி பக்தி இலக்கியங்கள் பல கதைகளைப் பேசும்!
எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வச்சோம்…அப்படின்னு இந்தக் காலத்துல கூட பாட்டு போடறாங்க! 🙂
கடவுள் வாழ்த்து பற்றிச் சொல்ல வந்த திருவள்ளுவர் கூட, இறைவனை விட்டு விட்டு இறைவனின் பாதங்களைத் தான் பற்றிக் கொள்கிறார். முதல் அதிகாரத்திலேயே திருவடிகள் தான் எங்கும் நிறைந்திருக்கு!

வாலறிவன் “நற்றாள்” தொழாஅர் எனின்
மலர்மிசை ஏகினான் “மாணடி” சேர்ந்தார்
வேண்டுதல் வேண்டாமை “இலானடி” சேர்ந்தார்க்கு
தனக்குவமை இல்லாதான் “தாள்”சேர்ந்தார்க் கல்லால்
அறவாழி அந்தணன் “தாள்”சேர்ந்தார்க் கல்லால்
எண்குணத்தான் “தாளை” வணங்காத் தலை
நீந்தார் இறைவன் “அடி” சேராதார்.
……என்று திருக்குறளில் கூட எங்கு பார்த்தாலும் “திருவடிகள்” தான்!

வைணவத்தில் திருவடிகளுக்கு மிகப் பெரிய இடம் உண்டு. பல தத்துவங்களும் கதைகளும் உண்டு! பாதுகை ஏன் நாட்டை ஆண்டது என்பதற்கும் விளக்கம் உண்டு!
மற்ற சமயங்களிலும் இலக்கியங்களிலும் கூட இறைவனின் இணையடிகள் ஏத்தப்படுகிறது. ஈசன் எந்தை இணையடி நீழலே என்று அப்பர் சுவாமிகள் உருகுகிறார்!
ஆனால் அவை பெரும்பாலும் பாட்டோடும் கருத்தோடும் நின்று விடும்! – மக்களிடம் நேரடியாகச் சென்றடையும் வழிபாட்டு முறைகளில் திருவடிகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை!

ஆனால் வைணவத்தில் திருவடிகள், மக்களிடம் நேரடியாக முன்னிறுத்தப்படுகின்றன.
நெற்றியில் இட்டுக் கொள்ளும் நாமம் = திருவடி
கோவிலில் தலை மேல் வைக்கும் சடாரி = திருவடி
கருடன் = பெரிய திருவடி
அனுமன் = சிறிய திருவடி
திருவடி சம்பந்தம், பாதுகா சகஸ்ரம், பாத பூசை என்று திருவடி இல்லாத இடமே கிடையாது!

அது ஏன் திருவடிக்கு மட்டும் இவ்வளவு பெருமை?
கையைச் சொல்லலாமே! அது தானே அபயம் கொடுக்கிறது? – முகத்தைச் சொல்லலாமே! அது தானே நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது?
எதுக்குக் காலைச் சொல்லணும்? 

அந்தத் திருவடியின் அடியில் உள்ள கோடானுகோடி துகள்களில், ஒரு துகளாக இருக்க மாட்டோமா என்று எல்லாச் சமயத்து அன்பர்களுமே விரும்புகின்றார்கள்.
அந்தத் திருவடித் துகளைத் தான், அடியவர்கள் தங்கள் தலையின் மேல் சூடிக் கொள்கிறார்கள்! திருமண் என்று சிலாகித்துப் பேசுகிறார்கள்!

பரித ஸ்புரிதோ = தாங்கிக் கொண்டு, புல்லரித்துப் போய் நிற்கிறார்கள், அடியவர்கள்!
உத்தமாங்கா=
 உத்தம+அங்கா=உன் திருவடித் துகள் ஒன்றே அவர்கள் அங்கங்களை எல்லாம் சுத்தம் செய்து விட்டது!
பொதுவா மண்ணுன்னா அழுக்கு; நீருன்னா சுத்தம். ஆனாப் பாருங்க, திருவடித் துகளே அங்கங்களைச் சுத்தம் செய்து விட்டதாம்!
சைவத்திலும் கூட, குளிக்காமலேயே திருநீறு தரிக்கலாம் என்ற விதி இருக்கு!

சுவர்கா, அபவர்க நிரபேக்ஷ = சொர்க்கப் பதவி, மோட்ச நிலை – இவற்றில் கூட ஆசையில்லாமல்
நிஜா அந்தரங்கா = அந்தரங்க சுத்தியுடன் உன்னையே விரும்புகிறார்கள்
சேக்கிழார் சுவாமிகள் மிக அருமையாகச் சொல்லுவார் பெரிய புராணத்தில்! அது தான் அடியவர்களின் உண்மையான லட்சணம்!
கூடும் அன்பினால் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்!

அடியார்கள் சொர்க்கம், மோட்சம் இதன் மேல் கூட ரொம்ப விருப்பம் வைக்காமல், அவனையே விரும்பி நிற்கிறார்கள்!
அவனின் திருவுள்ள உகப்பிற்கு மட்டும் தான் தாங்கள் இருக்கிறோம் என்ற அன்பு நிலை அது! அதனால் அவர்கள் மோட்சம், பிறவா வரம் என்று தனியாக விரும்புவது எல்லாம் ஒன்றும் இல்லை!

சொர்க்கம்-நரகம் = அவரவர் செயல் வினைகளில், அவ்வப்போதே இன்ப துன்பங்கள் விளைந்து விடுகின்றன!
மோட்சம் = பிறவிச் சுழல்களில் சிக்காமல் பரமபதம் என்னும் மோட்சம் அடைந்து விட்டால், மீண்டும் வரவேண்டாம் அல்லவா?
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே! என்கிறார் நம்மாழ்வார்!
அப்பிடின்னா என்ன அர்த்தம்?

தேவர்களாகப் பிறந்தாலும் கூட, வைகுந்தம் செல்ல வேண்டும் என்றால், மனிதப் பிறவி எடுத்துத் தான் செல்ல முடியும்!
சரி, அப்படிச் சென்று விட்டால், மீண்டும் வராமல், ஜாலியா அங்கேயே இருக்கலாம் அல்லவா? – இப்படி எல்லாம் கணக்கு போடமாட்டார்களாம் அடியவர்கள்!
அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அவனின் திருவுள்ள உகப்பு ஒன்று தான்!

ஆழ்வார் ஏற்கனவே மோட்சம் அடைந்து வைகுந்தத்தில் தான் இருக்கிறார். ஆனால் இனி பிறவி இல்லை என்று அவர் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கிறாரா?
ஆதிசேஷன் பரமபதத்தில் நித்ய வாசம் செய்பவர். அவர் இராமானுசர், மணவாள மாமுனிகள் என்று அவதாரம் செய்து, மாறி மாறிப் பூமிக்கு வரவில்லையா?

மற்ற மண்ணுலக மக்கள் எல்லாரும் கடைத்தேறும் பொருட்டு, அடியவர்களை பூமிக்கு அனுப்பி அவதரி்ப்பிக்கின்றான் இறைவன்!
அடப் போங்க பெருமாளே, நானே படாத பாடுபட்டு மோட்ச பதவி வாங்கிக் கொண்டு வந்திருக்கேன்….என்னைப் போயி திரும்பிப் போகச் சொல்லுறீங்களேன்னு முரண்டு செய்வார்களா என்ன? 🙂

மற்ற அடியவர்களும், உயிர்களும் கடைத்தேறும் பொருட்டு, இறைவன் அனுப்பினால், அதுவும் அவர்களுக்கு மோட்சமே!
அதான் கூடும் அன்பினால், வீடும் வேண்டா விறலின் விளங்கினார்! – இறைத் தொண்டில் தன்னல தர்மத்தைக் காட்டிலும் பொதுநல தர்மம் தான் முன்னிற்கும்!

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் என்ற திருப்பாவை வாசகம் தான், இதன் பின்னே மறைந்துள்ள பொக்கிஷம்!
முப்பது நாளும் நோன்பு நோற்றுவிட்டு, கடைசி நாளில் மோட்சம் வேண்டாம் என்று சொல்லும் பைத்தியக்காரப் பெண்ணா ஆண்டாள்?
இற்றைப் பறை கொள்வாம் அன்று! காண் கோவிந்தா என்று ஆண்டாள் பறை வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள்! – பின்ன, என்ன தான் வேணுமாம்?

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது – உன் பணிகளுக்கு எங்களை ஆட்படுத்திக் கொள்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உற்றோமே ஆவோம் – பிறவிகள் பிறந்தாலும், உன் உள்ளத்து உகப்புக்கு மட்டும் நாங்க இருந்தாப் போதும் என்ற காதல் நெஞ்சம் தான்! அதுவே உண்மையான பக்தியின் சிகரம்! – நின் அருளே புரிந்து இருந்தேன், இனி என்ன திருக்குறிப்பே?

கல்ப ஆகம, ஆகலநயா = கல்பம் (யுகம்) ; ஒவ்வொரு நொடியும் ஒரு கல்பமாய் கழிகிறது அடியார்களுக்கு!
இறைவனை “எப்போதும்” கூடி இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் வாட்ட
ஆகுலதாம் லபந்தே = துன்பப்பட்டு இருக்கின்றார்கள்!

கல்பம்=4,320,000 ஆண்டுகள்! 4 யுகம் = 1 கல்பம்!
Time between creation and deluge…

இப்போது தெரிகிறது அல்லவா, தேவர்களைக் காட்டிலும், எதுக்கு அடியவர்களை உயர்வாகச் சொல்லுறாங்க-ன்னு! திருவேங்கடமுடையான் ஆலயத்தில் பெருமாளின் தரிசனத்துக்கு, நின்று கொண்டு இருக்காங்க! அடியார் இவர்களுக்கு அன்பு காட்டிட, வேங்கடவா எழுந்தருள்வாய்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

————

த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!

த்வத் கோபுராக்ர சிகராணி = உன் ஆலய கோபுரத்தின் சிகரத்தைக்
நிரீக்ஷ மாணா = கண்ணாரக் கண்டு

கோபுர தரிசனம், பாப விமோசனம்-னு சொல்லுவாங்க!
அப்படின்னா நான் கூடத் தான் தினப்படி கோபுரத்த பாக்கறேன். என் நண்பர் ஒருத்தர் நடத்தும் மதுபானக் கடை, கோபுரத்துக்கு எதுத்தாப்புல தான் இருக்கு! 🙂
அவருக்கும், எனக்கும் பாவ விமோசனம் ஆயிடுச்சா என்ன? – அதான் “கண்ணாரக் கண்டு” ன்னு சொல்லுறாங்க – கோபுரத்தைக் கோவிந்தனா பாக்கும் போது பாப விமோசனம்!

ஸ்வர்கா அபவர்க பதவீம் = சொர்க்கம் மற்றும் மோட்சப் பதவியைக் கூட விரும்பாமல்!
பரமாம் ச்ரயந்த= உத்தமமான உன் சேவையில், திருத் தொண்டில் மட்டும் ஈடுபாடு கொண்டுள்ளார்கள்!
சென்ற சுலோகத்திலேயே, இதுக்கு விளக்கம், பார்த்து விட்டோம்! தவத்தினால் அடைந்த பதவிகளைக் கூட இறைவனுக்காக உதறித் தள்ள தயாராய் இருப்பவர்கள் அடியார்கள்! சேவித்து இருப்பதுவே செவ்வடியார் செழுங்குணம்!

மர்த்யா மநுஷ்ய = அழியும் மானிடப் பிறவிகள் வாழும்
புவனே = பூவுலகில், பிறக்கத் தான்
மதிம் ஆச்ரயந்தே = அவர்கள் எண்ணம் போகின்றது

இப்படித் தொண்டு ஒன்றில் மட்டும் கருத்துடைய அடியவர்கள், உன் முகம் காண வந்திருக்காங்கப்பா! தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே! சீக்கிரம் எழுந்து, உன் குளிர்முகம் காட்டு!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

—————

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ பூமி நாயக = ஸ்ரீதேவியான திருமகளுக்கும், பூமிதேவியான மண்மகளுக்கும் நாயகனே!

தயாதி குண = கருணை (தயா) முதலிய சகல கல்யாண குணங்கள்
அம்ருத ஆப்தே = கொண்ட அமுதக் கடலே

திருவேங்கடமுடையான் சன்னிதியில் அவன் தனித்து நிற்பதாகத் தானே நம் கண்களுக்குத் தெரிகிறது? தாயார் சன்னிதியோ கீழ்த் திருப்பதியில் தானே உள்ளது! அப்படி இருக்க, எப்படி இப்படிப் பாடி வைத்தார்கள்?
கவனித்துப் பார்த்தால் தெரியும், அவன் திருமார்பில், ஸ்ரீ-பூமி தேவிகளும் எழுந்தருளி உள்ளார்கள். அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!

தயா தேவியும் உள்ளாள்! யார் இந்த தயா தேவி?
இறைவனின் கருணையை, தயைத் தான் இவ்வாறு உருவகித்துப் பாடுகிறார் வேதாந்த தேசிகர் என்னும் ஆசாரியர்!
இறைவன் எண்ண முடியாத குணங்களைக் கொண்டவன் தான் என்றாலும், அவனுக்குப் பொதுவாக எட்டு குணங்களைச் சொல்லுவார்கள்!
எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்று வள்ளுவரும் எண்குணத்தைச் சொல்லுகிறார்!

அந்த எண் குணங்களில் மிகவும் தலையாயது உயிர்களிடத்தில் பரம கருணை; தயை என்ற குணம்! தயா சிந்து என்று மோவாய்க் கட்டையில் உள்ள வடு
முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன் தமிழ்க் கடவுள் முருகன் என்றால்
தன்னை அடித்தாலும், அரவணைத்துக் காப்பவன் தான் தமிழ்க் கடவுள் திருமாலும்!!!
பக்தன் அடித்த வடுவை, மானம் போகுமே என்று மறைத்துக் கொள்ளாது, அன்புக்குச் சாட்சியாக இன்றும் மோவாயில் காட்டிக் கொண்டு நிற்கிறான் இறைவன்!
அதனால் தான் அவன் சிந்தும் தயையை அமுதக் கடல் என்று சொல்கிறார்!

தேவாதி தேவ = தேவாதி தேவனே! இமையோர் தலைவனே!
தேவர்களுக்கும் ஆதி அவன்! ஆதியாய் அநாதியாய் நின்றவன்! தேவர்களையும் கடந்தவன்! அசுரர்களையும் கடந்தவன்! அதனால் தேவ-ஆதிதேவன்!
இந்த சுலோகம் அப்படியே ஆழ்வார் பாசுரம்
திருமகள் தலைவனை, தேவதேவனை
இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்!

ஜகத் ஏக “சரண்ய மூர்த்தே = உலகம் முழுமைக்கும் நீ ஒருவனே சரண்யன் (ரட்சகன்)
சரண்யன் என்றால் என்ன-ன்னு முன்னரே பார்த்தோம்! உலகம் முழுமைக்கும் அவன் ஒருவனே சரண்யன்! ஒருவன்”ஏ” என்பதில் அந்த ஏகாரம் மிகவும் முக்கியமானது!
மாம் “ஏகம்” சரணம் வரஜ என்பது தான் கீதை காட்டும் சரம சுலோகம்! – அனைத்துக்கும் அவன் ஒருவனே சரண்யன்!
அசுரருக்கும் அவனே சரண்யன், தேவருக்கும் அவனே சரண்யன்!
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே என்பது வள்ளலார் வாக்கு!

ஸ்ரீமந் = லக்ஷ்மீகரமானவனே
அவன் பெருமையைச் சொல்லணும்னா கூட, அன்னையைத் தான் சொல்ல வேண்டி இருக்கு பாத்தீங்களா?
அழகானவனே-ன்னு சொல்லணும்னா லக்ஷ்மீகரமானவனே சொல்லணும்! கருணை உடையவனே-ன்னு சொல்லணும்னா கூட லக்ஷ்மீகரமானவனே தான் சொல்லணும்!

அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே = அனந்தன், கருடன் முதல் அனைவரும் உன் திருவடிகளை அர்ச்சிக்கிறார்கள்!
அவனை பரமபதம் என்று அழைக்கப்படும் வைகுண்டத்திலே, நித்ய வாசம் செய்யும் நித்ய சூரிகள் எல்லாம் சேவித்து இருக்கிறார்கள்!
அனந்தன் என்ற நாக வடிவானவனும், கருடன் என்ற பறவை வடிவானவனும் ஒருசேர அர்ச்சிக்கிறார்கள்!
இங்கு தான் சூட்சுமம்! நாகமும் கருடனும் ஒன்றொக்கொன்று எதிர் இயல்பு!

ஆனால் எப்படி இருவரும் பரமனுக்குப் பிரியமாய் அவன் திருத்தொண்டில் ஈடுபடுகிறார்கள்?
Pair of Opposites Concept is deeply rooted in Vaishnavite Mysticsm.
நாகன்-கருடன், சக்கரம்(ஒளி)-சங்கு(ஒலி), மனிதன்-மிருகம்…இன்னும் நிறைய எதிரெதிர் நிலைகள், இறைவன் முன்னிலையில் ஒன்றி விடுகின்றன!
அதே போல் தேவர்,அசுரர் பாகுபாடு எல்லாம் இறைவன் முன் நிற்காது! பக்தி ஒன்றே நிற்கும்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

————–

ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ பத்மநாப = நாபிக் கமலம் (தொப்புள் கொடியில்) தாமரைக் கொடியை உடையவனே, பத்மநாபா!

புருஷோத்தம = புருஷர்களில் உத்தமனே! புருடோத்தமா!
வாசுதேவ = வாசுதேவனே!

பத்மநாபன் = இது படைப்புத் தத்துவம்! இறைவன் தொப்புள் கொடியில் பிரம்மன் தோன்றி, அவன் வாயிலாக உயிர்கள் தோன்றின!
ஆக பெருமாளுக்கும் நமக்கும் தொப்புள் கொடி உறவு!
அந்தி போல் நிறத்தாடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்தின் உயிரே
என்பது திருப்பாணாழ்வார் வாக்கு!

புருஷோத்தமன் = ஆண்களில் எவனாச்சும் ஒருத்தன் உத்தமனா? வீட்டில் கேட்டுப் பாருங்க! இல்லைன்னு பதில் ஸ்ட்ராங்கா வரும்! 🙂 ஒரே ஒருவன் தான் உத்தமன்! யார் அவன்?
ஓங்கி உலகளந்த உத்தமன் – அவனே புருஷோத்தமன்!

வாசுதேவன் = பொதுவாக கண்ணனைத் தான் வாசுதேவ கிருஷ்ணன் என்று அறிவோம்! ஆனால் இந்த வாசுதேவன் என்னும் சொல், அவதாரங்களுக்கு எல்லாம் முனனரே, பரம்பொருளைக் குறிக்கும் சொல்! பரவாசுதேவன் என்று குறிப்பார்கள்!
எங்கும் வியாபித்து வாசம் செய்பவன் வாசுதேவன்!
ஸ்ரீ வாசுதேவ நமோஸ்துதே ஓம் நம இதி-ன்னு விஷ்ணு சகஸ்ரநாமத்திலும் பயின்று வரும்!
செங்கட் கருமேனி வாசு தேவனுடய,
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,
சங்கரையா. உஞ்செல்வம் சாலவ ழகியதே
– என்று வாசுதேவனை ஆண்டாளும் அழைக்கிறாள்!

வைகுண்ட = வைகுண்ட நாதா
மாதவ = மாதவா
ஜனார்த்தன = ஜனார்த்தனா
சக்ர பாணே = சக்கரத்தை ஏந்தியவனே

ஜனார்த்தன = ஜன + அர்த்தன = ஜனங்களால் தேடப்படும் அர்த்தம்/செல்வம்; அதாவது அனைத்து உலகங்களும் அடைய விரும்பும் ஒரே பொருள்! அதுவே ஜனார்த்தனம்!
சக்ர பாணி = சுதர்சனம் என்னும் சக்கரப் படையை ஏந்தியவனே!
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு என்று பெரியாழ்வார் சக்கரத்தை வாழ்த்துகிறார்!

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன = ஸ்ரீவத்சம் என்ற மச்சத்தை வல மார்பில் உடையவனே!
பெருமாளின் வலத் திருமார்பில் இருக்கும் மச்சத்துக்கு ஸ்ரீவத்சம் என்று பெயர்! தமிழில் திருமறு!
திருமறு மார்பன்! அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று சொன்னார்களே? இராமன் குழந்தையாய் இருக்கும் போது, சீதை எப்படி அவனுடன் ஓட்டி இருக்க முடியும்?
அது என்ன சும்மா வாய் வார்த்தைக்குச் சொல்லப்பட்டதா? இல்லையில்லை!

மகாலக்ஷ்மியாகிய திருமகளின் அம்சமாய் என்றும் அவனுடன் ஒட்டி இருப்பது இந்த மச்சம்!
அவதார காலங்களில், குழந்தையாய் இருக்கும் போதும் கூட, அவனுடன் ஒட்டி இருப்பது இந்த திருமறு தான்!
வாமன அவதாரத்தில் இந்த மச்சம் யார் கண்ணிலும் பட்டு விடக் கூடாதே என்று மான்தோலை இழுத்துப் போர்த்திக் கொண்டு வந்தான் வாமனன்!
இப்ப சொல்லுங்க! பெருமாளு மச்சம் உள்ள ஆளு தானே! 🙂
அவனை விட்டு ஒரு நொடிப்பொழுதும் பிரியாமல் இருக்கவே இப்படி ஒரு மச்சம்!! நல்ல பொண்டாட்டி, நல்ல புருஷன் போங்க! 🙂

சரணாகத பாரிஜாத= சரணம் அடைந்தார்க்கு பாரிஜாத மலர் போல் அருள் பொழிந்து குளிர்விப்பவனே!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

————-

கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

கந்தர்ப்ப = காதலின் தேவன், மன்மதன்
தர்ப்ப = அவனின் தற்பெருமையை
ஹர = விரட்டிடும்
சுந்தர திவ்ய மூர்த்தே = அழகும், புனிதமும் கொண்ட மூர்த்தியே, பெருமாளே!

மன்மதனை எரித்தவன் சிவபிரான்! அப்படிச் சிவனாரின் தவத்தையே கலைக்கும் அளவுக்கு தொழில் புரிந்த மன்மதன், தன் தொழிலையே மறந்து மயங்குகிறான் என்றால்?
எவரையும் தன் கரும்பு வில் பாணத்தால் மயங்கச் செய்பவன் என்ற அவனுடைய தற்பெருமை…ஒன்றுமில்லாமல் போகிறது! எதைப் பார்த்து?

திவ்ய தம்பதிகள் இருவரைப் பார்த்து!
அவர்களின் காதலும், அன்பும் கண்டு அவனே வெட்கி நிற்கிறான்!
மன்மத பாணம் பாய்ந்தால். கொஞ்ச நேரம் தான் மோகம் இருக்கும்!
ஆனால் இங்கு அவன் பாணத்தின் சக்தி, தூய்மையான காதல் முன் தலைகுனிந்து நிற்கிறது! ஏனாம்?
பெருமாள் உறக்கம் கலையாமல், தன் மனத்துக்கினிய மனையாள், மகாலக்ஷ்மியை அணைத்துக் கொண்டு, உறங்கிய வண்ணமே இருக்கிறான்!

இவர்கள் உறங்கும் அழகு,
கண்கள் மூடினாலும், ஒருவரை ஒருவர் உறக்கத்திலும் பார்த்துக் கொண்டிருக்கும் அழகு,
எனக்கு நீ, உனக்கு நான் என்னும் காதலின் அழகு,
சம்சார சாகரத்தைக் காதலினால் கடக்கலாம் என்று காட்டும் அழகு!

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்!

இவர்கள் அன்பைக் கண்டு மன்மதனே வாயடைத்துப் போய் நிற்கிறான்!
இப்படியும் ஒரு ஈடுபாடா? பின்னிப் பிணைதலா?
இது அன்பா? இல்லை மாரன் அம்பா?
மன்மத அம்பும் கூர் மழுங்கிப் போய் நிற்கும் மகோன்னத அன்பு!

காந்தா = மனத்துக்கினியவள், மகாலக்ஷ்மி தாயாரின்
குச = திருமார்போடு
ஆம்புருஹ குட்மல = தாமரைத் தண்டு போல
அணைத்துக் கொண்டு, இன்னும் உறக்கமா?

மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்றகு இல்லாயால்
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்!
உங்கள் காதலைப் பிறகு வைத்துக் கொள்ளுங்கள்! உங்க குழந்தைகள் எல்லாரும் கோவிலுக்கு வந்திருக்கோம்! முதலில் எங்களைக் கவனிங்க, என்று செல்லமாகச் சிணுங்கித் துயில் எழுப்புகிறார்கள்!

லோல த்ருஷ்டே = சிரிக்கும் குறும்புப் பார்வை கொண்டவனே

கல்யாண = மங்களகரமானவனே
நிர்மல = குறையொன்றும் இல்லாத கோவிந்தா
குணாகர = குணங்களின் உறைவிடமே
திவ்ய, கீர்த்தே = புனிதமானவனே, புகழ் ஓங்குபவனே!
துயில் களைக! எங்கள் துயர் களைக

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

—————

மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்
ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

1. மீன ஆக்ருதே = மீன வடிவம் – மச்சாவதாரம்
2. கமட = ஆமை – கூர்மாவதாரம்
3. கோல = பன்றி – வராக அவதாரம்
4. ந்ருசிம்ம = நரசிம்ம அவதாரம்
5. வர்ணிந் ஸ்வாமிந் = பிரம்மச்சாரி, பெரும் சுவாமியாய் – வாமன/திருவிக்ரம அவதாரம்

6. பரஸ் வத தபோதன = பரசு தாங்கும் தவமுனி – ப்ரசுராம அவதாரம்
7. ராமசந்திர = ராமாவதாரம்
8. சேஷாம்ச ராம = சேஷனின் அம்சமாய் ராமன் – பலராம அவதாரம்
9. யது-நந்தன = யது குலத் தோன்றல் – கிருஷ்ணாவதாரம்
10. கல்கி ரூப = கல்கி அவதாரம்

பத்து அவதாரங்களும் இந்த ஒரே சுலோகத்தில் வருகிறது! இப்படி அத்தனை அவதாரங்களின் சாரமாக நிற்கிறான் திருவேங்கட மாமலையில்!

ஒவ்வொரு அவதாரத்திலும் நோக்கம் என்ன? – தர்ம பரிபாலனம்! அறம் காத்தல்!
தன்னை வந்தடையும் வழியை உயிர்களுக்கு எளிதாகப் புரியுமாறு காட்டி அருளல்!
இதைத் தான் திருவேங்கடமுடையான் காட்டிக் கொண்டு நிற்கிறான்!


ஆலயத்தில் தரிசனம் செய்யும் போது பார்த்தால், அந்தச் சின்முத்திரைக் கோலம் புலப்படும்!

அதனால் தான் சுலோகத்தில் தசாவதாரங்களின் தொகுப்பாகத் திருமலை நாதனைச் சொல்கிறார்! கலியுக வைகுந்தம் என்று திருமலையும் போற்றப்படுகிறது!
இன்றும், ஆலயத்தில் தசாவதார ஆரத்தி பெருமாளுக்கு உண்டு! தசாவதாரங்களும் பொறித்த பெரிய தாம்பாளத் தட்டில் இந்த ஆரத்தியை எடுக்கிறார்கள்!

தசாவதாரத் தத்துவமே,
ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

———–

ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்

ஏலா லவங்க கனசார = ஏலக்காய், லவங்கம், பச்சைக் கர்ப்பூரம்
சுகந்தி தீர்த்தம் = இவற்றால் நறுமணம் கமழும் நன்னீர் (தீர்த்தம்)
தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்:
பச்சைக் கர்ப்பூரம்
ஏலக்காய், இலவங்கம்
ஜாதிக்காய், வெட்டிவேர்
மருத்துவ மரப்பட்டைகள்
சிறிது மஞ்சள்
எல்லாவற்றுக்கும் மேலாக, துளசி! – இவற்றினால் உண்டாகும் வாசம், நாத்திகரையும் தீர்த்தம் பருக வைக்கும்! 🙂
வாழாட்பட்டு நின்றீர் ஊள்ளீரேல், வந்து மண்ணும் மணமும் கொள்மின் என்கிறார் பெரியாழ்வார்! நீராட்டிய நீர் மட்டும் தான் தீர்த்தம் என்றில்லை! நீராட்டம் இல்லாத ஆலயங்களிலும் கூட வெறும் நீரைச் சேமித்து வைத்து தீர்த்தம் தருவது உண்டு!

எம்பெருமானுடைய திருமேனி சம்பந்தத்தால், வாசனை நீர், வாசவன் நீராக ஆகிறது.
தினமும் திருமஞ்சனம் நடக்காத கோயில்களில் கூட, சுவாமியின் திருப்பாதங்களுக்கு நீராட்டு உண்டு! அதை ஸ்ரீ பாத தீர்த்தம்-னு சொல்லுவாங்க!
மேலும் திருமஞ்சனம் செய்த பின், சுவாமியின் திருமேனியில் உள்ள ஈர ஆடையைக் களைந்து, கைகளில் சுற்றிக் கொண்டு, ஒவ்வொருவருக்கும் ஈரவாடைத் தீர்த்தம் தருவது வழக்கம்! உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை-ன்னு பெரியாழ்வார் பாசுரம்!

திவ்யம் வியத் சரிதி = அழகாக ஓடும் ஆற்று நீரை (ஆகாச கங்கை நீர் வீழ்ச்சியில் இருந்து)
ஹேம கடேஷூ பூர்ணம் = தங்கக் குடங்களில் முழுமையாக நிரப்பி,

ஆகாச கங்கை என்னும் அருவியில் இருந்து தான், திருவேங்கடமுடையானுக்கு திருமஞ்சன நீர் எடுக்கப்பட்டது!
இந்த நீர்க் கைங்கர்யம் செய்யுமாறு பெரிய திருமலை நம்பிகளை வேண்டிக் கேட்டுக் கொண்டார் இராமானுசர். மலர் கைங்கர்யத்துக்கு அனந்தாழ்வானை நியமித்து அருளினார்!

மிகவும் வயதான திருமலை நம்பிகளின் உடல் நலம் கருதி, இறைவனே வந்து திருவிளையாடல் செய்தான். பாபவிநாசம் என்னும் இன்னொரு தீர்த்தத்தைக் கோவிலுக்கு அருகிலேயே உண்டாக்கினான். இப்போது இங்கிருந்து தான் தீர்த்தம் எடுக்கிறார்கள்!
இன்றும் திருமலை நம்பிகளின் வம்சத்தவர், (தோழப்பர் என்று அழைக்கப்படுபவர்கள்) ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் அமுது உற்சவத்தின் போது, பழைய ஆகாச கங்கையில் இருந்து நீர் கொணர்ந்து சமர்ப்பணம் செய்கிறார்கள்!

அது தவிர, மோசமான வானிலை போன்ற சூழ்நிலைகளில், கோவிலின் உள்ளேயே உள்ள பொற்கிணற்றில் (பங்காரு பாவி) நீர் சேந்திக் கொள்வதுண்டு. Water Management என்னும் நீர் மேலாண்மை மாதிரி தான்! இந்தக் கிணற்றைத், தரிசனம் முடித்து விமானப் பிரகாரத்துக்கு வந்தவுடனேயே எதிரில் காணலாம்!

த்ருத் வாத்ய = வேகமாக எடுத்து வருகிறார்கள்
வைதிக சிகாமணய = வேத ஓதும் விற்பன்னர்கள்!
ப்ருஹ்ருஷ்டா = மகிழ்ச்சியுடன் (வந்து உன் சன்னிதியில் நிற்கும் அவர்களுக்கு)
திஷ்டந்தி = காத்திருந்து அருள் புரிவாய்!

இவ்வாறு பொற்குடங்களில் நீர் எடுத்து வரும் விற்பன்னர்கள், ஆலய வாசலுக்கு வேகமாக ஓடி வருகிறார்கள்! மலை இறக்கம் வேறு அல்லவா? தானாகவே அவர்களைத் தள்ளுகிறது!
அன்று முழுதும் அடியார்க்கு நல்லபடி தரிசனம் கிடைக்க வேண்டுமே! அதற்கு காலம் தாமதிக்காது, தீர்த்தம் கொணர்ந்தால் தானே முடியும்! அதனால் தான் இந்த ஓட்டமும் நடையும்!
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால், கதிரொளித் தீபம் கலசமுடன் ஏந்தி, கோவில் வாசலுக்கு குறித்த நேரத்தில் வந்து நிற்கின்றனர்!

அப்பா பெருமாளே, அவர்கள் வரத் தாமதம் ஆனாலும் ஆகலாம்; அதனால் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்று நீயும் சின்னக் குழந்தையைப் போலச் சேட்டை செய்யாதே!
அவர்கள் சொன்ன வண்ணம் சொன்ன நேரத்துக்கு வந்து விடுவார்கள்! போதும் தூக்கம்!
அவர்கள் வருகைக்காக நீ எழுந்து காத்திரு! – தீர்த்தம் வந்த அடுத்த விநாடி ஒரு கணமும் தாமதியாது, எழுந்து தயராகி விடு!
நாளெல்லாம் உன்னைக் காண அடியார்கள் கால் கடுத்து நிற்கிறார்கள்! நீ தாமதிக்கலாமா? தத்துவம் அன்று! தகவேலோ ரெம்பாவாய்!

வேங்கட பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

———

பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்

பாஸ்வான் உதேதி = கதிரவன் உதித்து விட்டான்!
விகசாநி சரோருகானி = மலர்ந்து விட்டன தாமரைகள்!

சம்பூரயந்தி நினதை = முழுமையாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது
ககுபோ விகங்கா = மலைப் பறவைகளின் ஒலி!
கீசு கீசு என்றும் ஆனைச்சாத்தன் கலந்து…
புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோவிலில்…என்ற திருப்பாவை வரிகள் அப்படியே நினைவுக்கு வருகின்றன!

ஸ்ரீவைஷ்ணவா = வைணவ அடியவர்கள்
சததம் அர்த்தித = என்றும் உன்னையே விரும்பிக் கொண்டு
மங்களா அஸ்தே = மங்களப் பொருட்களைக் கையில் தாங்கி நிற்கிறார்கள்!

தாமா ச்ரயந்தி = விடாப்பிடியாக இன்னும் தூக்கமா?
தவ வேங்கட சுப்ரபாதம் = திருவேங்கடமுடையானே, உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

———–

பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

பிரம்மா ஆதய = பிரம்மன் முதலான
சுரவரா = அமரர்கள்
ச மகர்ஷ யஸ்தே = இவர்களுடன் மகரிஷிகள்

சந்தஸ் சனந்தன = சந்தையாக வந்துள்ளனர், சனந்தனர் முதலான முனிவர்கள்
முகாஸ், தவ யோகி வர்யா = உன் கோயில் முகத் துவாரத்திலே, தவ யோகிகள் நிரம்பி உள்ளனர்!

தாமாந்திகே தவஹி = மின்னுகின்ற உயர்ந்த
மங்கள வஸ்து = மங்களப் பொருட்களை,
ஹஸ்தா = கையில் ஏந்தியுள்ளனர்.

எவை அந்த மங்கலப் பொருட்கள்? – நீர்க்குடம், தீபம், சாமரம், கண்ணாடி, வெண் துவராடை, துளசிதளம்!
காலையில் எழுந்தவுடன் மங்கலப் பொருட்களைப் பார்க்கும் வழக்கம் விஷூக் கனி என்று மலையாள மக்கள் கொண்டாடுவாங்க! ஆனா அது தமிழ் நாட்டு வழக்கம் தான்! எப்படி அதை நாம் தொலைத்தோம்-ன்னு தான் தெரியலை! 🙂

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் “கண்ணாடி” முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பனவாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ? – என்று இது அப்படியே திருப்பள்ளி எழுச்சியிலும் வருகிறது!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

———–

லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

லஷ்மீ நிவாச = திருமகள் வசிக்கும் பெருமானே
(அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைபவனே!)

நிர வத்ய குணைக சிந்தோ = குறையொன்றும் இல்லாத குணக் கடலே
(சிந்து=கடல்; நிர வத்ய குணக் கடல் = குறையொன்றுமில்லாத கல்யாண குணங்களின் கடல்! – இது அப்படியே ஒரு பாசுரம்! என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!)

சம்சார சாகர சமுத்தர = வாழ்க்கைப் பெருங் கடலில் (சம்சார சாகரம்)
அநைக சேதோ = (எங்களைக் கரையேற்றி விடும்) ஒரே அணை நீ தான்!


வேதாந்த வேத்ய = வேதாந்தங்களும் அறிய விரும்பும் ஞானப்பொருள், நீ!
நிஜ வைபவ = உண்மையான குணங்களைக் கொண்டவன் நீ! (எண்குணத்தான் – கல்யாண குணங்கள் கொண்டவன்)

பக்த போக்ய = பக்தர்களுக்குப் போகமாக இருப்பவன் நீ! அடியார்கள் இன்புற்று இருப்பது ஒன்றிலேயே இன்புற்று இருப்பவன் நீ!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திரு வேங்கடம் உடையானே,
தவ சுப்ரபாதம் = உனக்கும் அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

———-

இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே

இத்தம் = இப்படியாக
விருஷா சல பதே = விருஷ மலை எனப்படும் திருமலைக்கு அதிபதியான
திருவேங்கடமுடையான்
இக சுப்ரபாதம் = அவனின் இந்த சுப்ரபாதம்

யே மானவா = அனைத்து மக்களும்
ப்ரதி தினம் படிதும் = தினமும் படித்து
ப்ர-வ்ருத்தா = ஒழுகுவார்களே ஆனால்

தேஷாம் பிரபாத சமயே = தினமும் வைகறைப் பொழுதில்,
ஸ்மிருதி ரங்க பாஜாம் = எம்பெருமான் முன்னர், நினைந்து (ஸ்மிருதி), ஓதுவார் தமக்கு

பிரஜ்ஞாம் = சிதறாத மனம் (பிரக்ஞை) சித்திக்கும்!
பர ஆர்த்த சுலபாம் = உயர்ந்த செல்வமான (நித்ய விபூதி = வீடுபேறு), சுலபமாய்க் கிட்டும்!
பரமாம் பிரசுதே = பரமபதம் வாய்க்கும்! பரமபதம் வாய்க்கும்!

————-————-

கமலா குசசூசுக குங்குமதோ நியதாருணிதாதுல நீலதநோ

கமலாயத லோசன லோகபதே விஜயீபவ வேங்கட சை’லபதே –  1

கமலா குச சூசுக குங்குமதோ நியதாருணி தாதுல நீலத நோ-
பெரிய பிராட்டியார் யுடைய திரு முலைத் தடங்களில் அணிந்த குங்குமக்
குழம்பினால் எப்போதும் சிவப்புப் பெற்று ஒப்பற்று விளங்கா நின்ற நீல மேனியை யுடையாய் –
கொவ்வை வாய் மகளிர் கொங்கை குங்குமம் கழுவிப் போந்த தெய்வ நீர் கமழு நாங்கூர்

அகலகில்லேன் இறையும் என்று
அலர் மேல் மங்கை யுறை மார்பா –

இவளோடு கூடியே வஸ்துவிநிடைய உண்மை –
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தையும்
சேதனனுடைய அபராதத்தையும்
கண்டு அகல மாட்டாள் –
முமுஷுப்படி ஸ்ரீ ஸூ க்தி-அனுசந்தேயம் –

கமலாய தலோசன லோகபதே விஜயீ பவ வேங்கட சைலபதே –
கமலம் போன்றவையையும் ஆயதங்களையும் இருக்கும் திருக் கண்கள்
அரவிந்தம் போன்று நீண்ட கண்ணினாய்
உலகங்கட்கே எல்லாம் இறைவனே
திருவேங்கடமலைக்கு இறைவனே
நித்ய ஸ்ரீர்
நித்ய மங்களமாக விளங்குவாயாக –

——

ஸ சதுர்முக ஷண்முக பஞ்சமுக ப்ரமுகாகில தைவத மௌளிமணே

ச’ரணாகத வத்ஸல ஸாரநிதே பரிபாலயமாம் வ்ருஷ சை’லபதே   2

ஸ சதுர்முக ஷண்முக பஞ்ச முக பிரமுகாகில தைவத மௌலிமணே –
நான்முகக் கடவுளோடு கூடிய
ஸூ ப்ரம்மண்யன் சிவன் முதலான
சகல தெய்வங்களுக்கும் சிரோ பூஷணமாக விளங்குமவனே-
யாம் கடவுள் என்று இருக்கும் எவ்வுலகில் கடவுளர்க்கும்
ஆம் கடவுள் நீ –
ஷண்முக பஞ்ச முகர்களை சதுர்முகனோடு கூடி இருப்பவர்களாக சொன்னது சமுச்சய தாத்பர்யகம்
நோலாதாற்றேன் உனபாதம் காண வென்று நுண் உணர்வின் நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும்
இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே

சரணாகத வத்சல
அடி பணிந்தவர்கள் பக்கலிலே
வாத்சல்யம் யுடையவனே –
வாத்சல்யமே -நிகரில் புகழாய் -என்றதில் சூசகம் –
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதகங்கள் -குணங்கள்
வாத்சல்யம் – ஸ்வாமித்வம் -சௌசீல்யம் -சௌலப்யம்
ஆஸ்ரித கார்ய ஆபாதன்கள் -குணங்கள் –
ஞான பல சக்தி யாதிகள் –
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே -தனிப்பட கத்யத்தில் காட்டி அருளினார் –

சார நிதே
சிறந்த நிதி போன்றவனே –
சிறந்த நிதி
சாரமான குணங்களை கொண்டவன்

அள்ள அள்ள குறை இல்லாமல் அஷயமாய் இருக்குமே
மேல் மேலும் பெருகுமே
நிதியே திரு நீர் மலை நித்திலத் தொத்தே –
நிதியினைப் பவளத் தூணை
வைத்த மா நிதியம் மது சூதனன்
நிதி கண்ணுக்கு புலப்படாத படி போலே
இவனும் -இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
கரந்து எங்கும் பரந்துளன் –
கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவார்கள் என்று கண்ணுக்குத் தோற்றாத படி நின்று
என்று -ஸ்ரீ வசன பூஷன ஸூக்தி
கட்கிலியாய் இருப்பான் –
சில பாக்ய சாலிகளுக்கு புலப்படுவான் –
யானே தவம் செய்தேன்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன்
சித்த அஞ்சனம் அணிந்து கொண்டு பார்ப்பவர்களுக்கு நிதி தோன்றுமே

பரிபாலய மாம் வருஷ சைலபதே –
வ்ருஷபகிரி -என்னப் படுகிற திரு மலைக்கு இறைவனே
அடியேனைக் காத்து அருள வேணும்

———–

அதிவேலதயா தவதுர்விஷஹை: அனுவேல க்ருதை ரபராத ச’தை

பரிதம் த்வரிதம் வ்ருஷ சை’லபதே பரயா க்ருபயா பரிபாஹி ஹரே   3

திருமலை அப்பனே
கங்கு கரை இல்லாமையினாலே
தேவரீருக்கு சஹிக்க கூடாதவைகளையும்
ஷணம் தோறும் செய்யப் பட்டவையாயும் இருக்கின்ற
நூற்றுக் கணக்கான குற்றங்களினால் நிறைந்து இருக்கின்ற
அடியேனை பரம கிருபையாலே விரைந்து காத்தருள வேணும் –

வேலை -கரை – அநு வேலம் -ஷணம் தோறும்
பாப பூயிஷ்டதையைச் சொல்லிக் கொண்டு புகவே பரிஹாரம் பெறலாம்
அஸ்மத் தாதிகளின் அனுசந்தானத்திற்கு இறே பூர்வர்கள்
இங்கனே பணித்து வைத்தது –

———

அதிவேங்கட சை’லமுதாரமதே: ஜனதா பிமதாதிக தான தராத்

பரதேவதய கதிதாந்நிகமை: கமலாதயிதான ந பரம் கலயே     4

ஔதார்யம் மிக்க திரு உள்ளம் உடையவரும்
அவரவர்கள் விரும்புவதைக் காட்டிலும் அதிகமாக அளித்து அருள வல்ல
வேதங்களால் பர தெய்வமாக ஓதப்பட்ட ஸ்ரீ லஷ்மீ பதியை
காட்டிலும் வேறு ஒரு வஸ்துவை எண்ணு கின்றிலேன்

மற்றோர் தெய்வம் மதிக்கிலேன்
உதாரன் –என்னாமல் –உதார மதி -என்றது
இன்னமும் கொடுக்க வேணும் என்று இருக்கும் ஹிருதய வைசால்யத்தைப் பற்றி –
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ

ஜனத அபிமத அதிக தான ரதான்-என்றது
அர்த்தி தாரத்த பரி தான தீஷிதரான தேவப் பெருமாளில் காட்டில் வாசி சொன்னபடி –
நிகமை-வேதாந்தங்கள் என்ற விவஷையால்-

——————

கல வேணுரவாச’ கோபவதூ ச’தகோடி வ்ருதாத ஸ்மரகோடி ஸமாத்

ப்ரதிவல்லவிகாபிமதாத் ஸுகதாத் வஸுதேவஸுதாந் ந பரம் கலயே    5

இந்த ஸ்லோஹம் முதல் நான்கு ஸ்லோஹகங்களினால்
திருவேங்கடமுடையானை
கண்ணபிரானாகவும் இராமபிரானாகவும் கொண்டு ஏத்துகிறார்
இதல் கண்ண பிரானாக ஸ்துதிக்கிறார்
பொங்கு புள்ளின் வாய் பிளந்த புராணர் தம்மிடம் திருவேங்கடம்
கன்றிமாரி பொழிந்திடக் கடிதா நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திருவேங்கடம் -போலே
குரவை கோத்த குழகனை -சாஷாத் மன்மத அழகை முற்றூட்டாக கொடுத்த படி -சொல்கிறது ஸ்மர கோடி சமாத் -என்று

அதி மதுரமான வேணு நாதத்துக்கு பரவசப்பட்ட
ஆய்ச்சிகளின் திரளால் சூழப் பட்டவனும்
கோடிக் கணக்கான மன்மதர்களை ஒத்தவனும்
ஒவ் ஒரு ஆய்ச்சியும் நமக்கே கணவன் என்று அபிமானித்து இருக்கப் பெற்றவனும்
சாஷாத் தர்மியுமான
வாஸூ தேவனில் காட்டிலும்
வேறு ஒருவரை எண்ணு கின்றிலேன்

கருமலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக் கணித்து ஆங்கே ஒருத்தி தன்பால் மருவி மனம் வைத்து
மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்குப் பொய் குறித்து
புரிகுழல் மங்கை ஒருத்தி தன்னை புணர்த்தி –
என்பதையே பிரதி வல்லபி ச் அபிமதாத் –

ஸூஹ்ருதாத்
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம்
தர்மமே வடிவு எடுதவனாக
தர்ம ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவன்
தானே சர்வவ தர்மங்களையும் விட்டு
என்னைப் பற்று என்கையாலே
சாஷாத் தர்மம் தானே -என்கிறது -முமுஷூப்படி ஸ்ரீ ஸூ க்தி-

————————

அபிராம குணாகர தாச’ரதே ஜகதேக தநுர்தர தீரமதே

ரகுநாயக ராம ரமேச’ விபோ வரதோ பல தேவ தயாஜலதே      6

இந்த ஸ்லோஹம் முதல் மூன்று
ஸ்லோஹங்களாலும் சக்கரவர்த்தி திரு மகனாக அனுபவிக்கிறார் –
அபிராம குணாகர
திருக் கல்யாண குணங்களுக்கு பிறப்பிடம் ஆனவனே –
சூர்பணகை-தாரை -மண்டோதரி -போல்வாரும் புகழும்படி

தாசரதே
தசரதாத் மஜானாகத் தோன்றினவனே –
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம்
ஆத்மானம் மானுஷம் ராமம் தசரதாத் மாசம் –

ஜகத் ஏக தநுர்தர
உலகில் அத்விதீயனான வில்லாளியாய் விழங்கி-
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஒ –

தீரமதே
துணிவு வாய்ந்த திரு உள்ளம் யுடையவனே –
சலிப்பிக்க ஒண்ணாத ஆஸ்ரித ரஷண த்தில் உறைப்பைச் சொல்கிறது –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே
ஸ லஷ்மணாம் ந ஹி பிரதிஜ்ஞ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ரஹ்மனேப்யோ விசேஷத -என்றும்
மித்ரா பாவென சம்ப்ராப்தம் ந த்யஜெயம் கதஞ்சன -என்றும் காட்டி அருளினாரே

ரகுநாயக ராம ரமா ஈச விபோ வரதோ பவ தேவ தயா ஜலதே-
ரகுகுல திலகனே
இராமபிரானே
ஸ்ரீ லஷ்மீ பதியே
கருணைக் கடலே
திருவேங்கடமுடையானே
நீ
அடியேனுடைய அபேஷிதங்களை அளித்து அருள்பவனாக ஆக வேணும்-

—————————

அவநீதநயா கம நீயகரம் ரஜநீ கரசாரு முகாம்புருஹம்

ரஜனீசரராஜ தமோமிஹிரம் மஹநீயமகம் ரகுராமமயே        7

அவனி தனயா = பூமியின் மகள் (சீதை)
கமநீய கரம் = (அவள்) விரும்பும் கரங்களை உடையவனே!
ரஜநீ கர சாரு = (அவன்) கருத்த, கவர்ச்சியான
முக அம்புருஹம் = முகம் தாமரை போல இருக்கு!

ரஜநீ சர ராஜ = இருளில் நடமாடுபவர்களின் (அரக்கர்களின்) அரசன் (இராவணன்)
தமோ மிகிரம் = அவன் தமோ குணத்தைப் (கீழ்க் குணத்தை) போக்கியவன்!
மகநீயம் = மிகச் சிறந்தவன்!
அகம் ரகு-ராம மயே = என் இதயமே அந்த ரகு-ராகு-ராகவ மயமாய் இருக்கு!

அவநீ தனா கமநீயவரம்
பூமிப் பிராட்டியின் புதல்வியான சீதா பிராட்டி விரும்பத் தக்க மணவாளப் பிள்ளையும் –

ரஜநீ கர சாரு முக அப்ம்புருஹம்
அழகிய முகாரவிந்தத்தை யுடையவனும் –
சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும் எத்தனை செய்யிலும்
என் மகன் முகம் நேர் ஒவ்வாய் –

ரஜநீ சர ராஜ தமோ மிஹிரம்
ராஷ சேஸ்வரனான ராவணன் ஆகிற இருளை அகற்றும் ஸூர்யனும்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடும் சிலை வாய்ச் சரந்துறந்து குலம் களைந்து வென்றானை –

கமநீ யம் ரகுராமம் அஹம் அயே
விரும்பத் தக்க வடிவு படைத்தவனும்
ஆன ஸ்ரீ ராமபிரானை -திருவேங்கடமுடையானை
நான் அடைகிறேன்

அயே -அய பய கதௌ-என்ற தாதுவில் தேறின ரூபம் இது-

———————

ஸுமுகம் ஸுஹ்ருதம் ஸுலபம் ஸுகதம் ஸ்வநுஜஞ்ஞ ஸுகாய அமோகசரம்

அபஹாய ரகூத்வஹமன்யமஹம் ந கதஞ்சன கஞ்சன ஜாது பஜே      8

ஸூ முகம் –
தன்னளிவே வடிவு எடுத்தவனும்

ஸூஹ்ருதம் –
சர்வ பூத ஹூஹ்ருத்தானவனும்

ஸூலபம்-
நீசர்க்கும் எளியனானவனும்

ஸூகதம் –
இன்பம் அழிப்பவனும்

ஸூகுணம் –
நற் குணங்கள் அமைந்தவனும்

ச ஸூ ஜாய-
நல்ல தேவியை யுடையவனும் –

மமோக சரம் –
பழுது படாத அம்புகளை யுடையவனும்

அபஹாய ரகூத்வம் அநயம் அஹம் ந கதஞ்சன கதஞ்சன ஜாது பஜே
இராம பிரானைத் தவிர
வேறு எந்த தேவனையும்
ஒரு விதமாகவும்
ஒரு காலும்
சேவிக்க கில்லேன்

தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -என்றும்
கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ -என்றும்
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் -என்றும்
உள்ள பாசுரங்களை அடி ஒற்றி அருளிச் செய்த ஸ்லோஹம்-

———————

விநா வேங்கடேச’ம் ந நாதோ ந நாத: ஸதா வேங்கடேச’ம் ஸ்மராமி ஸ்மராமி –

ஹரே வேங்கடேச’ ப்ரஸீத ப்ரஸீத ப்ரியம் வேங்கடேச’ ப்ரயச்ச ப்ரயச்ச      –9

விநா வேங்கடேசம் ந நாதோ ந நாதோ
வேங்கடேசம் விநா நாதா ந நாத ந –
திருவேங்கடமுடையானைத் தவிர்ந்து
வேறொரு நாதன் இல்லை எனபது
சத்யம்

சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி –
திருவேங்கடமுடையானை
அனவரதமும்
நினைத்தபடியே இருக்கின்றேன் –

ஹரே வேங்கடேசம் ப்ரசீத பிரசீத-
சகல தாபங்களையும் ஹரிக்க வல்ல அப்பனே
திரு உள்ளம் மிகவும் உகந்து அருள வேணும் –

ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச
வேங்கடேச -ப்ரியம்-ப்ரயச்ச ப்ரயச்ச –
திருவேங்கடத்தானே
நன்மையைப் பயந்து அருளின படியே
இருக்க வேணும்

ஒவ் ஒரு பாதத்திலும் த்வ்ருத்திகள்
ஆதராதிசயத்தால் ஆனவை-

——————

அஹம்தூரதஸ்தே பதாம்போஜயுக்ம ப்ரணாமேச்சயா (ஆ)கத்யஸேவாம் கரோமி —

ஸக்ருத்ஸேவயா  நித்யஸேவாபலம் த்வம் ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச’        -10

பிரபோ வேங்கடேச
வேங்கடேச பிரபோ –
திருவேங்கடத்து எம்பெருமானே

அஹம் தூரதஸ் தே பதாம் போஜ யுகம ப்ரணாம இச்சயா ஆகத்ய சேவாம் கரோமி –
அஹம் தே பதாம் போஜ யுகம ப்ரணாம இச்சயா தூறத ஆகத்ய சேவாம் கரோமி –
அடியேன் உன்னுடைய இணைத் தாமரை அடிகளை
வணங்கும் விருப்பத்தினால்
தூர தேசத்தில் இருந்து வந்து
அத் திருவடிகளில் சேவை செய்கின்றேன் –

சக்ருத் சேவயா நித்ய சேவா பலம் தவம் ப்ரயச்ச ப்ரயச்ச
ஏதோ ஒருகால் செய்யும் சேவையினால்
நித்யமும் செவிப்பதனா ஆகும்
பலனை
நீ அவசியம் கொடுக்க வேணும்

அநந்ய பிரயோஜனமாக சேவிக்கும் அதிகாரிகள்
நித்ய சேவா பலம் ப்ரயச்ச -என்று
பலனை விரும்பக் கூடுமோ என்னில்
அத்தலையில் திரு உள்ள வுகப்பே யாயிற்று இங்கு பலனாக கருதப்படுவது

கதாஹ மைகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி சனாத ஜீவித -ஆளவந்தார்
ப்ரஹர்ஷயிஷ்யாமி -உயிரான ஸ்ரீ ஸூக்தியாகுமே-

—————————

அஜ்ஞாநினா மயா தோஷான் அசேஷான் விஹிதான் ஹரே–

க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் சே’ஷசை’ல சி’காமணே–11

சேஷசைலம் ஆகிற
திருவேங்கட மலை யுச்சியிலே
நீல மணி போல் விளங்கும்
எம்பெருமானே
அவிவேகியான அடியேன் செய்த குற்றங்களை எல்லாம்
நிர்ஹேதுக கிருபையினால்
ஷமித்து அருள வேண்டும் என்று
பிரார்த்திக்கிறார் ஆயிற்று-

***

ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி

ஈஶாநாம் ஜக³தோ(அ)ஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம் ப்ரேயஸீம்
தத்³வக்ஷ꞉ஸ்த²லநித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்திஸம்வர்தி⁴நீம் ।
பத்³மாலங்க்ருதபாணிபல்லவயுகா³ம் பத்³மாஸநஸ்தா²ம் ஶ்ரியம்
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்ஜ்வலாம் ப⁴க³வதீம் வந்தே³ ஜக³ந்மாதரம் ॥ 1 ॥

ஈசாநாம் ஜகதோச்ய வேங்கட பதேர்விஷ்ணோ பராம் ப்ரேயசீம்-

இவ் வுலகுக்கு எல்லாம் ஈஸ்வரியாகவும்
திருமலை யப்பானுக்கு பிராண வல்லபை யாயும் –
அஸ்யேசா நா ஜகதோ விஷ்ணு பத்நீ -ஸ்ருதி சாயையில் பணித்தது

தத் வஷஸ் ஸ்தல நித்ய வாச ரசிகாம் தத் ஷாந்தி சம்வர்த்திநீம் –
அவனது திரு மார்பிலேயே நித்ய வாசம் செய்வதில்
விருப்பம் யுடையவளாயும்
அவன் மார்பை விட்டுப் பரியில் இவ் வஷரம் விட்டுப் பிரிவது -ஸ்ரீ ஸூக்திக்கு சேர பணித்தது
அப்பெருமானுடைய ஷமா குணத்தை வளரச் செய்பவளாயும் –
புருஷகார பலத்தாலே ஸ்வா தந்த்ர்யம் தலை சாய்ந்தால்
தலை எடுக்கும் குணங்களை சொல்லுகிறது நாராயண பதம் -முமுஷூப்படி
அஸ்தி கர்மார்ஹா பலதே பத்யௌ க்ருத்யத்வயம் சரிய
நிக்ரகுஅத்வ வாரணம் காலே சத்துஷணம் அனுக்ரஹே -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூ க்தி

பத்ம அலங்க்ருத பாணி பல்லவ யுகாம் பத்மாஸ நஸ்தாம் ஸ்ரியம்
தாமரை மலரால் அலங்கரிக்கப் பட்டு
பல்லவம் போன்ற இரண்டு திருக் கைகளை யுடையவளாயும்
தாமரைத் தவிசில் வீற்று இருப்பவளாயும்
பத்ம பரியே பத்மிநி பத்மஹஸ்தே -இத்யாதிகளும் அனுசந்தேயம்

வாத்சல்யாதி குண உஜ்ஜ்வலாம் பகவதீம் வந்தே ஜகன் மாதரம்
வாத்சல்யம் முதலிய குணங்களால் திகழா நின்றவளாயும்
பரம பூஜ்யையாயும்
உலகுக்கு எல்லாம் தாயாயும்
இருக்கின்ற
அலர்மேல் மங்கைப் பிராட்டியை
அடியேன் வணங்குகின்றேன் –

சஹதர்ம சரிம் சௌ ரேஸ் சம்மந்த்ரித்த ஜகத்திதாம்
அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞ்ஞாத நிக்ரஹாம் -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூக்தி

ஆக
இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த பிராட்டியைத்
தொழுகின்றமை கூறி
ஸ்தோத்ரத்தை
தலைக் கட்டினார் ஆயிற்று –

அலர்மேல் மங்கை உறை மார்பன் அடி இணைகள் வாழியே

——–

ஶ்ரீமந் க்ருபாஜலநிதே⁴ க்ருதஸர்வலோக
ஸர்வஜ்ஞ ஶக்த நதவத்ஸல ஸர்வஶேஷிந் ।
ஸ்வாமிந் ஸுஶீல ஸுலபா⁴ஶ்ரிதபாரிஜாத
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

நாராயணனின் கல்யாண குணங்களை அடுக்கி அருளுகிறார் நேராக இதில்
சரண் அடைந்தவர் இடம் வாத்சல்ல்யம் வினத -நத வத்சல -தலை வணங்கியவர் அனைவருக்கும் ஸ்வாமித்வம் படைத்தவன்

சுலபன் திருவேம்கடத்தான்-பாரி ஜாதம் போல் கேட்பது அனைத்தையும் கொடுக்கும் –

எட்டு குணங்கள் -அடுக்குகிறார்-
ஆஸ்ரித சௌகர்யமான குணம் நான்கு -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் —

ஞான சக்தி பிராப்தி பூர்த்தி கார்யம் பண்ண -ஆக எட்டும்-

பயம் நீங்க -ஐயம் நீங்க -உயர்ந்தவன் அவன் தாழ்ந்தவன் நாம் –
குற்றமே குணமாக கொள்பவன்-வாத்சல்யன்-எதிர் குணம் பொறாமை-குணம் குற்றமாக கொள்வது அசூயை-அனசூயை-
அவளை பார்த்து பொறாமை பட முடியாத குணம் கொண்டவள் –வசிஷ்டர் நம்மை விட ஞானி சொல்லுவாமோ

செய்த குற்றம் நாற்றமாக கொள்ளும் -அச்சம் தவிர்க்க வாத்சல்யம் -அச்சம் போன பின்பு ஐயம் வர

சம்பந்தம் உணர்த்த -ஸவாமி–

ஸவாபம் ரசிக்க -நெருப்பு சுடுவது போல தண்ணீர் குளிர்வது போல் குற்றம் பொறுத்து ரஷிகிறான் கண்ணன் பதில் அர்ஜுனனுக்கு

ஸ்வாமி-சொத்து பாவம் – சொத்தை இழக்க மாட்டான் ஸ்வாமி –நாம் சொத்து ஆக இருக்க வேண்டும் -இதற்க்கு சம்மதித்தால் போதும்

ஸ்வாமி தன ஆச்சார்யர் பிள்ளைகளை திருத்திய ஐதீகம் போல்–இவரே தூர்த்த கோஷ்ட்டி நோக்கி காஷாய வேஷத்துடன் போக –

நீர் நம்மை விட்டாலும் நாம் விடேன் -காரேய் கருணை -அனைத்து உலகும் உய்ய வந்த எதிராஜர் –ஐயம் தவிர்த்து

அதிருப்தி பட -தேவ தேவனுக்கு பண்ணுவார்-
யானை மேல் சவாரி செய்பவர் யானைமேல் இருப்பவரை தான் ரஷிப்பார்-
தாழ்ந்தவர் இடம் கலக்க தேடி வருகிறான் சௌசீல்யம் –
ஏழை எதலன் கீழ் மகன் என்னாது –திருப்தியாக –
ஈசன் வானவர்க்கு என்றால் அது தேசமோ திரு வேம்கடத்தானுக்கு நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
என் கண் பாசம் வைத்த பரம் சுடர் –அவர்களுக்கு தலைவன் –
ஆழ்வார் இடம் பாசம் -கிடைக்க அரியவன் அருமை-இழந்தவர்க்கு இன்று கண்கள் காண்பதற்கு அரியனாய் –
இன்று அர்ச்சையாக -ஆட்சியில் தொடர்ச்சி நன்று -அறிக்கை விட்டு-அவதரித்து நாம் சொத்து –
சொல்லி கொண்டு-சரம ஸ்லோகம் சொல்லி -சௌலப்யம் காட்டி சேர்த்து கொள்கிறான்

ஆஸ்ரித சொவ்கர்யமான குணம் இவை நான்கும்

கார்யம் பண்ண ஞானம் -ஸ்ரீ வைகுந்தம் கொடுக்க சர்வக்ஜன் பாபம் தொலைத்து –

சக்தியும் வேண்டுமே சர்வ சக்தன்-அதீத ஞானமும் சக்தியும்

தொடர்பு -பிராப்தி -நமக்கு என்று -தாய் முலை பால் கொடுக்கும் -கன்று குட்டி தன பசுமாடு நோக்கி போகுமே அது போல்

பூர்த்தி இருக்கிறது -அடைய வேண்டியது ஒன்றும் இல்லாத பூரணன் -எதையும் எதிர் பார்க்காதவன்

ஐயோ ஏங்கும் கருணையும் உண்டே –க்ருபா சமுத்ரம்

ஆக ஒன்பது குணங்கள்

கிருபா ஜலநிதே /வாத்சல்யம்/ஸ்வாமின் /சுசீலா/சுலப /நான்கும் சொல்லி சரண் அடைந்து

ஸர்வஞ்ஞன்  சக்தி ஆஸ்ரித பாரிஜாத -வாரி வழங்குபவன்-பூர்த்தி சர்வ சேஷி-பிராப்தி உண்டு

அஞ்சேல் என்று தாங்கும் தாமரை அன்ன பொன்னார் அடிகள்- ஆங்கு வென் நகரத்து அழுந்தும் பொழுது —

சரித சர்வ லோக -அனைத்தையும் படைத்தவன்

ஸ்ரீமன் -பிராட்டி ஆனந்தத்துக்கு படைத்தவன்– மயில் தோகை –திரு முகம் தலை அசைத்து அங்கீகாரம்

அவள் தூண்டுதலின் பேரில் அவள் ஆனந்தத்துக்கு

ஜகம் சிருஷ்டிக்க சரணா கதியே பயன் -அதனால் இதை சொல்கிறார் இங்கு

சர்வ சேஷின்-கைங்கர்யம் கொள்

முகப்பே கூவி பணி கொள் –தாவி அளந்தான்-அவன் ஆனததுக்கு –
அவரே தீண்டி கேட்காமாலே -நன்றி அறிவிக்காமல் காலை தட்டி விட்டாலும் –
குழந்தை தாய் போல் –உறங்கும் பிரஜை முதுகில் கட்டி கொண்டு ஆனந்த படும் தாய் போல்

மோட்ஷம் கொடுப்பதும் அவனே -அதுவும் அவனது இன் அருளே –
சரண் சொல்ல வைப்பதுமட்டுமே நாம் செய்வதும் -அவன் அனுக்ரகத்தாலே

உன் ஆனந்ததுக்காகா  உன்னால் படைக்க பட்ட -உன் சொத்தை –
உன்னால் கொடுக்க பட்ட ஞானத்தால் உன்னால் கொடுக்க பட்ட நாவால் சரண் சொல்ல வைத்து —
உன் ஆனந்தத்துக்கு நீயே மோஷம் கொடுத்து உன் திரு அடிகளில் சேர்த்து கொண்டு-உலகம் சிருஷ்டிக்க இதுவே பலன்

படைப்புக்கும் பிராட்டி-சரணாகதி -கைங்கர்யம் மூன்றுக்கும் சம்பந்தம்

சரண் சகல பலனுக்கும் -கைங்கர்யம் தான் கேட்க வேண்டும்-ஏற்று கொள்ள வேண்டுமே

சர்வ சேஷி-அனைவரும் காத்து இருக்க –கொள்ளுகிற பாக்கியம் கிட்ட வேண்டும்

கிருபை கொண்டே படைக்கிறான் -ஈடு பிரவேசமும்

ஸ்ரீ ய பதியாய் –அவாப்த சமஸ்த காமனாய் -பூரணன்-எதையும் எதிர் பார்க்காமல்-
சமஸ்த கல்யாண குண பூரணன்/சர்வேஸ்வரன்-சம்பந்தம் நான்கும் சொல்லி –அது போல் இங்கும் —

கண்ணாய் ஏழு உலகுக்கு உயிராய எம் கார் வண்ணனை

விண்ணோர் தாம் பரவும் பொழில் வேம்கட வேதியனை

திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்

பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும்

படிக் கேழ் இல்லா பெருமானை பழனக் குருகூர் சடகோபன்

முடிப்பான் சொன்ன ஆயிரத்து திரு வேம்கடத்துக்கு இவை பத்தும்

பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே

அடியீர் வாழ்மின் கைங்கர்யம் ஏற்று கொள்கிறான்

——-

ஆநூபுரார்பிதஸுஜாதஸுக³ந்தி⁴புஷ்ப-
ஸௌரப்⁴யஸௌரப⁴கரௌ ஸமஸந்நிவேஶௌ ।
ஸௌம்யௌ ஸதா³நுப⁴வநே(அ)பி நவாநுபா⁴வ்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

திரு அடி பெருமை அடுத்து சொல்கிறார் இதில்

தோள்கள் இருந்து தொங்கும் திரு மாலை திரு முடி திரு தோள்கள் திரு அடி வரை உறவாடும் புஷ்ப மாலை

என்றும் என்றும் புதிதாக -சதா அனுபவத்துக்கு —
நூபுர கங்கை போல்-ஆ சேது ஹிமாசலம் வரை போல் ஆ நூபுர -ஜாதி மணம் கொண்ட புஷ்பம்

தோமாலை சேவை முக்கியம் திரு மலையில் —

குளிக்கிற ஆசார்யம் -பூப்புனை கன்னி புனிதன்-காப்பு நான் கட்ட -தீர்த்தம் ஆடி வந்தான்

தோள்களில் இருந்து தொங்கும் மாலை –மணம் ஆக இருக்க ஆசை கொண்டு தொங்குகிரதாம்–
சர்வ கந்தன் -அவன்-பரிமளம் கொடுக்கவும்–இரவல் வாங்கி கொள்கிறதாம் மணத்தை திரு அடிகளில் இருந்து -இணை தாமரை அடிகள்-சம சந்நிவேசம் -ஒன்றுக்கு ஓன்று இணை –திரு அடி சேவை கிடைப்பதே துர்லபம் –
நிஜ பாத சேவை-தன் உடைய பாத சேவை-மென்மை பரிமளம் உசத்தி போட்டி ஆசன பத்மதுக்கும் திரு அடி தாமரைக்கும் போட்டி
ஆள் கண்ட சமுத்ரம் -திரு அடி மலர்ந்து -தோத்தவர் ஜெயதிதவர் தாங்கி இருக்கும் –
மங்கள கரமான எப் பொழுதும் அனுபவிக்க -அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதன் –சதா அனுபவம்-நவ அனுபவம் –

புஷ்ப கைங்கர்யம் சிந்து பூ மகிழும் திரு வேம்கடம் –ஸூத்ரவதி உடன் வானவர் கோன் வந்து சேவை–
சிந்திக் கொண்டே இருக்கும் பூ-தானே விழுமாம் கூடையில்-சுமந்து மா மலர் நீர் சுமந்து —
வேம்கட வானர்க்கு  என்னை உய்த்திடுமின் -மத்தறு மலர் குறுக்க மலர்
செண்பக மல்லிகை உடன் என்பகர் பூ -செண்பகமாய் இருக்கும் நிலை ஆசை கொண்டார்

————-

ஸத்³யோவிகாஸிஸமுதி³த்வரஸாந்த்³ரராக³-
-ஸௌரப்⁴யநிர்ப⁴ரஸரோருஹஸாம்யவார்தாம் ।
ஸம்யக்ஷு ஸாஹஸபதே³ஷு விளேக²யந்தௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

சாகச செயல்-சத்யா விகாசம்-அப் பொழுதே மலர்ந்த சமு தித்வர -மேலும் மேலும் மலரும்

சிவந்த -மணம் நிறைந்த மலரோடு-அடை மொழி இவை எல்லாம் –மென்மை யான /நறு மணம் உடைய -அப் பொழுதே அலர்ந்த –

ஒப்புமை இட ஆசை கொண்டு–அடை மொழி சேர்த்து பிரயத்தனம்-அடாத செயல்-
சாகாச செயல்-சாம்ய வார்த்தை-பேச ஆரம்பித்ததும்

மிக உயர்ந்த சாகச பதேஷு-எழுதி வைத்து விலேகயந்தவ் -முரட்டு தனமான எழுத்து எழுத போனது
கட்டுரைக்கில் தாமரை-நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது

பொன்–நன் பொன் -சுட்டு உரைத்த -அடை மொழி ஏற்றி -சொல்லி ஒவ்வாது —
அது போல் தாமரைக்கு -இல்லாத உவமை உவமையாக சொல்வது

திரு அடி மோஷம் கொடுக்கும் -தாமரை கொடுக்காதே –
கைங்கர்யம் கொள்ளாது தாவி உலகம் அளக்காதே –முரட்டு உபமானம்

திரு கமல பாதம் பாவனம் போக்கியம் இரண்டும் –தாமரைக்கு இல்லை-
கண்டேன் கமல மலர் பாதம் கண்டேன் விண்டே ஒழிந்தன வினை –
காலை மாலை கமல மலர் இட்டு -திருஅடி சிவந்து போனதாம் மலர் இட்டதும்-மென்மை–
ஆயிரம் நாக்கு வாங்கி கொண்டு உன் பெருமை பாட முடியாது சொல்ல -பட்டர் —

———–

ரேகா²மயத்⁴வஜஸுதா⁴கலஶாதபத்ர-
-வஜ்ராங்குஶாம்பு³ருஹகல்பகஶங்க²சக்ரை꞉ ।
ப⁴வ்யைரளங்க்ருததலௌ பரதத்த்வசிஹ்நை꞉
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

இலச்சினை -லஷணம் சொல்கிறார்-

ஆள வந்தார் கதா புன  வஜ்ரா லாஞ்சனம் -ஸ்லோஹம் போல்

படிக்கு அளவாக நிமிர்ந்த பாத பங்கயமே தலைக்கு அணியாய்-

ரேகை வடிவான–ஒன்பது சொல்கிறார்-
கொடி-அமிர்த கலசம்-குடை-வஜ்ரம்-அம்குசம் -சங்கு -சக்கரம் -கல்பக

ஒரு காலில் சங்கு  ஒரு காலில் சக்கரம் -இலச்சினை பட நடந்து –

பரம புருஷன் அடையாளம் பரதத்வ சிஹ்நை-அலங்க்ருதம்-பவை-பவித்ரம்

கையினார் சுரி சங்கு அனல் ஆழியார்-பெரிய பெருமாளுக்கு இரண்டு திரு கைகள்-
காட்டவே கண்டார் -ரேகை சொல்கிறார் தேசிகன்

அதிதி தேவி-போல் கௌசல்யை சந்தோஷித்தாள்-வாமனனை பெற்றது போல் ராமனை பெற்று-
வஜ்ர பாணி-இந்த்ரனை சொல்லாமல் ரேகை பொருந்திய திரு கைகள்

————–

தாம்ரோத³ரத்³யுதிபராஜிதபத்³மராகௌ³
பா³ஹ்யைர்மஹோபி⁴ரபி⁴பூ⁴தமஹேந்த்³ரநீலௌ ।
உத்³யந்நகா²ம்ஶுபி⁴ருத³ஸ்தஶஶாங்கபா⁴ஸௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 6 ॥

சத்வம் ரஜஸ் தமஸ் தாண்டி வெளி திரு அடி நீல கல்லை வெல்லும் உள் திரு அடி தாமரையை வெல்லும்
நகம் -வரிசை-சந்த்ரனை வெல்லும் மூன்றையும் வெல்லும் திரு அடிகள் -தாம்ரம்-சிவந்த உதர -உள்
பாஹ்யர் -வெளி- இந்திர நீல ரத்னம் வென்றது

அகம் அம்சுபி -ஒளி சசாங்கம் சந்தரன் ஒளி தோற்றது —

சத்வம் வெள்ளை   வென்றது

கரு நீலம்

சிகப்பு

பிராக்ருத ரஜஸ் தமோ சத்வம் வென்றது –பூர்ண சந்தரன் -கருப்பு -இருக்கும் -களங்கம் இன்றி நகம்

சுத்த சத்வ மாயம் அப்ராக்ருத

கருப்பு கடல் நுரை போல் நக கணுக்கள்

பார் கடல் வெளுப்பு நீல கடல் போல் -திரு மேனி-

——————

ஸப்ரேமபீ⁴தி கமலாகரபல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவவாங்மநஸகோ³சரஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥

சாஸ்திரம்–சிஷ்டாசாரம் -பிரபத்யே -மனசில் உறுதி பாடு

உப அயதே சமீபத்தில் அழைத்து செல்லுவது-பலத்துக்கு அருகில் -உபாயம்

பல பிரத்வம் வேறு-பலம் கொடுப்பவன் பகவான் ஒருவனே

சித்த உபாயம் –நம் முயற்சி இன்றி -சித்தமாக இருக்கிறான் -உபாயமும் பிராப்யமும் அவன் திரு அடிகள்

மாம் ஏகம்-என் ஒருவனையே பற்ற அவன் சொல்ல திரு அடிகளை பற்றுகிறோம்  -இதுவே அனுஷ்டானம்

ஈஸ்வரேனே கை விட்டாலும் திண் கழலாக இவை கொடுக்கும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் ஏக சிந்தனையாய்

வந்து உன் அடி இணை அடைந்தேன் –
துத் சரனாரவிந்தே -துத் பாதாரவிந்த -அடி இணை வந்து அடைந்தேன் -அடிக் கீழ் அமர்ந்து

உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்

லோக விக்ராந்தவ் சரணவ் சரணம்

அவன் திரு உள்ளம் படி அனுஷ்டானம்

காலில் விழ சொல்ல மாட்டான்

மித்திரன் போல் கை பிடி -நண்பன் என்று பிராட்டி அருளியது போல்

பிரிந்த தசையிலும் உபதேசிகிறாள் -அரச மரியாதை -பெருமாள் திரு உள்ளம் அறிந்து உபதேசம்

அழைக்கின்ற அடி நாயேன் -உள்ளம் குழையும்-ஆழ்வார்

கோவில் மகா ஜனம் பட்டரை-லகு சம்ப்ரோஷனம் ஐதீகம்   திரு அடி பிடிக்க கூட யோக்யதை இல்லை

மாம் ஏகம்-திரு மார்பை காட்டி கண்ணன் சொல்கிறான்

பிரார்த்தனா மதி சரணாகதி —

குழந்தை தாய் முலையில் வாய் வைப்பது போல் திரு அடி பற்றி சரண்

சந்தரன் -சசாங்கம்-கருப்பு திட்டு முயல் வடிவில்-சச =முயல்-இதனால் அடையாளம்

களங்கம் தீர பத்து விரல்களில் கைங்கர்யம் -நிஷ் களங்கமாக –

திரு வேம்கடம்-மதி தவழ குடுமி மால் இரும் சோலை –

வைப்பன் மணி விளக்காம் மா மதியை-பூர்ண சந்த்ரனை-ஆகாசத்தில் மதி –
இங்கு மா மதி -மாலுக்கு என்று எப் பொழுதும் கை நீட்டும் யானை

வேடர்கள் இவற்றை பார்த்து -வில் எடுக்கும் மலை வேம்கடம்

பகர் அல்லை பகல் செய்-இரவை பகல் ஆக்கும் –

திருஅடி  நிச்சலும் பிடித்து விட பிராட்டி ஆசை –
சொரூபம் பார்த்து ஆசை –
குணம் பார்த்து அச்சம் -இரண்டும்

சேஷத்வம் பார்த்து -அவனுக்கு பெருமை சேர்க்க – பரகத அதிசய ஆதன –சு பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலன் –
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே பேசி செய்து நினைத்து –பயம் நீங்கும் –
இதனால் -நடந்த கால்கள் நொந்தவோ-பேசி வாழி கேசனே –கூசி பிடிக்கும் மெல் அடிகள் –

பாரதந்த்ர்யம்

திரு கைகளால் பிடித்தால் கன்னி சிவக்குமே அச்சம்-ஆசை வென்று-பிடிக்க –
சிகப்பே நம் சம்சாரம் கழித்து கொடுக்கும்

ச பிரேம பீதி-கமலா கர பல்லவம்-முகிழ் கொழுந்து போன்ற திரு கைகள் –காந்தி-ஈர்க்கும்

வாக்குக்கும் மனசுக்கும் எட்டாமல் இருக்கும் சொவ்குமார்யம் –

ரஷகன்-பார்த்து எழுப்ப -சொவ்குமார்யம் பார்த்து – அம கண் மா ஞாலம் கடாஷம் கேட்ட பின்பு ஆண்டாள்

மாரி மலை –இங்கனே போந்து அருளி–போற்றி அருளுகிறாள் அடுத்து —
வந்த திருஅடிகள் நொந்தனவோ அது போல்

அங்கும் இங்கும் வானவர் -உன்னை வேலை வாங்க -வருவார் செல்வார் –
சங்கு சுமந்து -மற்று அடியேன் உளன் ஆழ்வார்

சொரூப ரூபகுணம் வகை –மார்த்வம் சொவ்குமார்யம் இரண்டிலும் –
உள்ளத்திலும் உடம்பிலும் –விட்டு கொடுக்க மாட்டான்

சரண் அடைந்த நீசனான என்னையும் கொள்வான் -மறை முக அர்த்தம் –
பிரிந்து பல ஜன்மம் இருக்கிறோமே -கோடி காட்டினால் புரிந்து கொள்வான்

பிரிந்து கடினமாக ஆகுமே திரு அடியும் திரு உள்ளமும்

திரு ஆபரணம் பிராட்டிக்கு எங்கு சாத்தலாம் என்று தோழிமார் பார்த்தாலே கன்னி போகும் திரு மேனி சீதை பிராட்டிக்கு

நடந்து போனாலே பொன் துகள்கள் சிந்தி கொண்டே போகுமாம்

அவள் பெருமாளை தொட்டால் சிவக்கும் படியான மெல் அடிகள்

திரு காட்கரை -மருவிய மாயன்-ஆள் கொள்வான் ஒத்து என் உயிர்–ஆர் உயிர் பட்டது என் ஆர் உயிர் பட்டது –

ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன்

தெளிந்த என் சிந்தை -காய்சின வேந்தே -கூப்பிடு தூரம் –
ராமானுஜர் கேட்டு வியந்த ஐதீகம் –கூவுதல் வருவுதல் செய்யாயே அடியேன் பிடிக்க

பூமி பாலன் திரு அடிகளை தாயார் பிடித்து விட –
கொடு வினையேனும் மெல் அடியை பிடிக்க கூப்பாடு போடா கூடாதா -ஆழ்வார் கேட்கிறார்

திரு காட்கரையில் கொடுக்கிறேன் என்றான்-

வந்தான்-ஆழ்வாரை அமர சொன்னான்

நம் ஆசை ஆணை

முகம் கன்னி போக கூடாது என்று அமர

திருஅடி பற்றி விட

பாரதந்த்ர்யம் நினைவு வர -அவனுக்கு பிடித்த படி இருக்க வேண்டுமே

அடிமை  தனம் விட அவன் திருஉள்ளம் படி நடப்பதே முக்கியம்

அடுத்த காலை நீட்ட -மலர்ந்த திரு கண்கள்-கப்யாசம் புண்டரீக அஷணீ–

தேவரீர் சொத்து -அடியேனால் அடியேன் ஆத்மா சமர்பிக்க -அதுவும் உன் சொத்தே

பதக்கம் எடுத்து நாமே சமர்ப்பித்தது போல் –

இப்படி என்ன பண்ணுவது என்ற படி-தோள் களை ஆர தழுவி -அகவிலை செய்தனை —
சம்சாரம் கண்டு பயந்து பரந்யாசம் அதுவும் அவனது செய்ய வேண்டாம் எத்தை கொண்டு சமர்பித்து –
உணர்வினுள்ளே இருதினினே அதுவும் அவனது இன் அருளே –அதுபோல் பிராட்டியும் பிரீதி பீதி இரண்டும் கொண்டு –தயிர் கடையோசை நட்டுவாங்கம் கொண்டு கண்ணன் தாண்டவம் ஆட –
கீசு கீசு என்று -மத்தினால் ஓசை -கேட்டே -ஆடி ஆடி-சிவந்த திரு அடிகள் பிராட்டி திரு கைகளால் ஆசுவாச படத்த –
பட்டர்–பெருமாள் பிராட்டி  பெருமை மாறி மாறி  பேசுவது போல்–

தளிர் புரையும் திரு அடி என் தலை மேல் –
மின் உரு பொன் உரு பின் உரு -மூன்று தத்வமும் அவன் தானே ஆழ்வாரை கொண்டதும்
சருகாக இருந்த திரு அடி தளிர் விட -பக்த ஸ்பர்சத்தால் -புஷ்ப ஹாச மலர்ந்த திருஅடிகள்–
அபிலோசன உற்று நோக்கினாலே முத்தரை குத்தினால் போல் -சந்தனம் பூசி கொண்ட கண்ணனை பார்த்த
மதுரை பெண்களின் வேல் விழி கயல் விழி  மான் விழி திரு மார்பில் பதிந்தது போல்  —
கோபால  சூடா மணி –அழியாமல் சாந்தணி தோள் சதுரன் மலை– மல்லரை மாட்டிய தேவாதி தேவன் –
கொடுத்த பரிசு மாறாமல் இருந்தான் –

———-

லக்ஷ்மீமஹீதத³நுரூபநிஜாநுபா⁴வ-
நீலாதி³தி³வ்யமஹிஷீகரபல்லவாநாம் ।
ஆருண்யஸங்க்ரமணத꞉ கில ஸாந்த்³ரராகௌ³
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 8 ॥

மூன்று தேவிமாரை பற்றி இதில் அருளுகிறார்

மகா லஷ்மி மஹீ பூமி தேவி- நீளா தேவி -திரு மகள் மண் மகள் ஆய மகள்-சிகப்பு பச்சை ஊதா நிறம்

மூவரிந்தளிர் போன்ற திரு கைகள் -ஆருன்ய சிகப்பு -அருணோதயம் –
மகர சங்கராந்தி-சங்கரமணம் -ஒன்றுடன் ஓன்று சேர்ந்து –

இதன் சிகப்பு வீசி-கரு நீல திரு அடிகள் -சிகப்பு தொற்றி கொண்டு மாற சாந்த்ர ராகவ்-சிகப்பு ஏறி-

மையார் கரும் கண்ணி கமல மலர் மேல் செய்யாள் —
மதம் கொண்டு சிகப்ப-ஐஸ்வர்யா செருக்கால் குதறி சிவக்க -ராகம்-அடியார் பற்றுவார் என்ற ஆசை உடன் -கரிய வாகி புடை பெயர்ந்து  மிளிர்ந்து –நேர் எதிர் -கருப்பு திரு மேனி கண் சிவந்து இவருக்கு
அவளுக்கு சிவந்த திரு மேனி கரிய திரு கண்கள் –எதனால்-நடந்தது –
அது போல்–கண்களால்பார்க்க இவன் திரு மேனியில் ஏற இவன் சிவந்த கண்களால் பார்க்க அவள் திரு மேனி சிவப்பு –
அதற்க்கு இது இதற்க்கு அது –மாறுதலும் நித்யம்-அபிமத அநுரூப தாம்பத்யம் -திரு மகள் மண் மகள் ஆயர்மதா மகள் என்று இவர் மூவர் —
கூந்தல் மலர் மங்கைக்கும்  மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் —
வார்த்தை பார்த்து -மங்கை மடந்தை கொழுந்து -பெதும்பை பேர் இளம் பெண் மங்கை-பருவ நிலைகள்-

பின்னை கொல் நில மா  மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள் —
ஆழ்வாருக்கு ஒப்பு சொல்லு -கடி மா மலர் உடன் உள்ள சாம்யம்

அவளும் நின் ஆகத்து –இவளை சொல்லு-சாம்யம்-சொல்ல இவளுக்கு ஏற்றம்-
பூ மேல் இருக்கும் திரு -அத் திரு அவனை பற்றும் இத் திரு இருவரை பற்றும் –நடுவாக வீற்று இருக்கும் நாரணன் -ஸ்ரீ ரெங்க நேதா-தலைவன்-திரு அடி சிவக்க –
மௌலி சக்கரவர்த்தி கிரீட ரத்ன ஒளியாலா –அடியார் திரு உள்ளம் ஆசனமாக அமர்ந்ததாலா
ஆசையால் சிவந்த திரு உள்ளம்–கமலா கரேப்யே -மூன்றும் பட்டர் அருளியது போல் —

————

நித்யாந்நமத்³விதி⁴ஶிவாதி³கிரீடகோடி-
-ப்ரத்யுப்ததீ³ப்தநவரத்நமஹ꞉ப்ரரோஹை꞉ ।
நீராஜநாவிதி⁴முதா³ரமுபாத³தா⁴நௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 9 ॥

நித்யானவதி விதி பிரம்மா சிவன் இந்த்ரன் -போல்வார் கிரீடம் பட -ரத்னம் -தனுஷ்கோடி-ஒளி- கிரீட நுனி-ரத்ன கல்

கிரீடம் -மகுட -ஸூடவதம்சே மும் முடிக்கு பேர் அரசு–ஆதி ராஜ்ய ஜல்பிதா -பிதற்றுகிறதாம்-
யார் தலையில் உட்கார்ந்து இருக்கிறேனோ அவன் தான் ஜகத்துக்கு அதிபதி என்று சொல்லி கொண்டு—நீல கரு மேக சியாமளன் போல் உதய கிரிக்கு மேல் ஸூர்யன் போல் கிரீடம் -கோள் சொல்லி கொடுக்கும் அவனை —
எளியவன் வேஷம் போட்டு தேவாதி ராஜன் ஹஸ்த கிரிக்கு வர -கிரீடம் பராத் பரன் காட்டி கொடுக்கும் —
முத்து குடை தங்க குடை ரத்ன மேல் மூடி இருக்கும் -அபிமான பங்கமாய் சங்கம் இருப்பார் போல்-ஒளி மலர-திரு அடியில் பட்டு வளருமாம்-திரு அடிக்கு ஹாரத்தி காட்டுமாம் இந்த ஒளியால்-நீராஞ்சனம்-ஹாரத்தி-
வைகாசி விசாகம் தீர்த்தவாரி-ஆழ்வாரே இறங்கி-
மனோ ரதம் நிறைவேற்றுவார் நீராஞ்சனம் சேவித்து பெறலாம் -200  தேங்காய் மூடி விளக்காக இருக்கும் —
ஆழ்வார் மட்டும் குளிர்ந்து-பைம் கமலா தன் தெரியல்-ஆழ்வார் மாலை குளிர்ந்து இருக்கும்-அகிலாண்ட கோடி பிரம்மாண்ட கண் எச்சில் படாமல் ஹாரத்தி-திரு அந்தி காப்பு-திரு வெள்ளறை காப்பு இட்டார் பெரியாழ்வார்-
உபாதா தானவ்-ஏற்று கொள்ளும் திரு அடிகள் -மனு குல அரசர் -இஷ்வாகு திலீபன் தசரதன் பெருமாள்-பரம்பரை திரு ஆராதனம்
கிரீடம் -ராமனுக்கு சூட்டி பட்டாபிஷேகம்–நவ ரத்ன ஒளி பெரிய பெருமாள் திரு அடியில் காணலாம் இன்றும்-
அது போல் இவன் நின்று பெற்றார் அடியரோர்க்கு அகலாமோ –கிடந்ததோர் கிடந்த அழகுக்கு ஹாரத்தி

பெண் மீன் உருவம் பதிந்து இருக்குமாம்-கண் கிரீடத்தில் இருப்பது

அடுத்து அருளுகிறார்

உள் திருஅடி சேவை கிடைப்பது துர் லபம்

திரு கோளூரில் ஜன்னல் வழியாக சேவிக்கலாம்

————–

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

யாரும் பார்க்க முடியாத பரம பதம்-மாக வைகுந்தம் தெளி விசும்பு திரு நாடு-காண்பதற்கு
என் மகம் ஏக எண்ணும் ஆகம் சேர் நரசிங்கம் அதாகி ஓர் ஆகம் வள உகிரால் பிளந்தான் உறை
மா வைகுந்தம் காண மனம் ஏக எண்ணும் –

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்-

புண்ணில் புலி பெய்தால் போல் திரு அடியில் மது தாரை பொழியும் என்பர்–
அதை எங்கும் தேடி போக வேண்டாம் -இங்கே அழுந்த இருக்க திரு கை காட்டி காட்டுகிறான்

எந்த திரு அடிகளில் உயர்ந்த வேதாந்த புகழும் -மது பெருகும்-போக்யதை உள்ள திரு அடி-அனுபவ தக்க –
பெருமை இனிமை இரண்டும் உண்டு–பரம போக்கியம் –ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே
இங்கேயே இருகிறதே வலது திரு கைகளால் காட்டுகிறேர் -சரணம்-பிராப்யம் –
அனுபவிக்க தான் திரு அடி -உபாயமாக நாம் ஆக்கி கொண்டோம் -கரு முகை மாலையை சும்மாடு போல் உபயோகித்தோம் —
அனுபவிக்க கொடுத்ததை -விதி அற்று உபாயமாக ஆக்கி கொண்டோம்.-

———–

அடுத்து பார்தந்தன் தேர் முன் நின்று அருளியதை அபிநயம் காட்டிக் கொண்டு இருக்கிறீர்

பார்தா²ய தத்ஸத்³ருஶஸாரதி²நா த்வயைவ
யௌ த³ர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி ।
பூ⁴யோ(அ)பி மஹ்யமிஹ தௌ கரத³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 11 ॥

ஏற்ற சாரதி-பிடித்த -தேர் பாகன்-மாம் ஏகம் சரணம் விரஜ -என்று அருளியதை-

காலில் விழுந்தவரையும் கை பிடிக்கும் ஓங்கி உலகு அளந்த உத்தமன்-மறு படியும் திரு கைகளால் காட்ட பட்டன –
வலது திரு கையால் காட்டி கொண்டு இருகிறாய் –ஆர் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்-
சுட்டி காட்டுகிறாய் இது தான் என்று –தொட்டு காட்டுகிறார் –மாம்–மற்றவை விட்டு தன்னை

திரு மேனியில் எது -அதில் திரு அடி காட்டி மற்றவை விட்டு காட்டுகிறார்

சத்ருச சாரதி இவர் தான் -பார்த்த சாரதி-பார்த்தன் தன் தேரை ஊன்றான் –
தாழ்ந்த தஞ்சயனுக்கு -கர்மம் அறியாத -ஆகி-பஷ பாதமாக ஆகி –
மணி தின் தேர் உஊர்ந்தவன் -நர நாராயணனே அருஜுனன் கண்ணன்–ஆச்சர்ய சிஷ்ய பாவம் மாறி இருந்தார்கள்–

கருணனுக்கு பிடிக்காத சாரதி சத்யன்

சாமான்ய விசேஷ நியாயம்-மாம்-திரு அடி -காட்டி கொண்டு-
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் இடம் திரு அடி காட்டி கொண்டு இருக்கிறான்

———————

மந்மூர்த்⁴நி காளியப²ணே விகடாடவீஷு
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ரே ஶிரஸி ஶ்ருதீநாம் ।
சித்தே(அ)ப்யநந்யமநஸாம் ஸமமாஹிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 12 ॥

சௌசீல்யம் -கூராளும்–தனி உடம்பன்-விஸ்வ ரூபத்தில் அனைத்தையும் காட்டி

உயர்வு தாழ்வு இன்றி ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -உயர்வு தாழ்வு பாராமல் -அனைவருக்கும்-சேவை சாதிகிறாய்–

பரம பக்தர் பர வேதாந்தி பரம பாமரன்-அனைவர் தலையிலும் -லோக விக்ராந்த  சரணவ் –
உலகம் அளந்த பொன் அடி-

தாள் பரப்பி மண தாவிய ஈசன் இவனே–தாவி அன்று உலகம் எல்லாம் தளவிலா கொண்ட எந்தாய்

ஆவியே அமுதே -தொண்டர் அடி பொடி ஆழ்வார்

நீசன் விலகி போக -வெள்கி போய் விலவர சிரித்திட்டேனே-உள்ளுவார் உள்ளத்து எல்லாம் உறைகின்ற —
கோவர்த்தன கிரி கீழும் அனைவரும் பண்டித பாமர விவேகம் அற–

மன் மூர்த்னி- என் தலையில்– நீசன்-வேதாந்தம் மேலும் விளங்கி –
ஆனால் அவனோ தளிர் புரையும் திரு அடி ஆழ்வார் தலையை தீண்டிய பின்பு –

அவன் வைக்கும் இடம் ஏற்றம் பெறுகிறது-பண்பும் அவன் சம்பந்தம் பெற்று நல்ல பண்பாகும் ..
அடியேன் தலையில்-காளிங்கன் பாம்பின் தலையில்/தொல் கானம்-அடர்ந்த காட்டில்-ஸ்ரீ வேம்கடாத்ரி சிகரம்-ஸ்ருதி தலை வேதாந்தம் தலையில்-அநந்ய மனச படைத்தவர் அவனையே அவனுக்காகா நினைப்பவர் –
இங்கு எல்லாம் திரு அடி வைத்தவன் ஆறு இடங்கள்-துவய சப்தம் ஆறு என்பதால் –
என் தலை தொடக்கி அநந்ய சித்தம் -நீச நிலை தொடக்கி உயர்ந்த இடம் வரை-கூரத் ஆழ்வான் வரதராஜ ஸ்தவத்தில் அருளியது போல் –வேழ மலை மேல் இருப்பதா –  –
பக்தர் ஹிருதயம்-வேத சிரஸ் -கமல- தாமரை மேல் -நம் ஆழ்வார் திரு உள்ளத்திலா –
மந்த ஸ்மிதம்-ரோம ஹர்ஷம் வேழ மலை அழகால்-புது பொலிவால் –ராச கிரீடை கோபிகள் பூமி பார்த்து கேட்டார்கள் —
முதல் அடி பூ-கவிழ்த்து அலர்த்தி –ஒரு திருஅடி கீழும் ஓன்று மேலும் –

சௌசீல்யம்-அனைவரையும் சமம் –வாத மா மகன் மர்கடம்- விலங்கு மற்று ஓர் சாதி உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
திரு கண்ண புரம் திரு நறையூர் இரண்டுக்கும் நூறு பாசுரம் திரு அரங்கம் மட்டுமே ஒரே ஐம்பது பாசுரம் அருளி
திரு மங்கை ஆழ்வார் அத்வதீயம் திரு அரங்கம் காட்டி-வேருவாதால் வாய் வேறுவி வேம்கடமே வேங்கடமே என்கின்ற –
வாயு குமாரன்-மனிதன் மற்று ஓர் ஜாதி மர்கடம் சொல்லி-செருக்கு உள்ள குரங்கு என்பதால் வாய் குமரன் சொன்னார்

முலையோ முழு முற்றும் பொந்தில -கலையோ அறை இல்லை நாவோ குளறும் மிளிரும் கண்   –
கடல் வண்ணன் என்றோ விலையோ-சிறு பிராயம் அனைவரையும் சமமாக பார்க்கும் —

சைதன்யம் இருந்தும் தப்பு பண்ணி-இரு கால் மாடு போல்-அதனால் காளிங்கன் தேவலை —
ஸ்ரீ பாஷ்யம் கேட்டு தரை தட்டி இது போன்று புரிந்து கொண்டேன் சொன்ன ஐதீகம்-
அடுத்து வெம் கானம்-காலின்கனுக்கு சில அறிவு உண்டே -அதனால்-வெப்பம் குற்றம் இல்லை-
அடுத்து உயர்ந்த வேம்கடம்-உசத்தி- வேதாந்தம் முடியில்-திரு வேம்கடம் உயர்ந்தது என்று சொல்லியதால் —
அடுத்து அநந்ய மனச-சிஷ்ட பரிக்ரகம் பூர்வர் அனுஷ்டானம் வேண்டுமே -சகஸ்ர நாமம் ஏற்றம் –
வேதாந்தம்-பீஷ்மர் அறிந்த தர்மம்/வியாசர் -போல் இங்கும் அநந்ய மனஸ் ஏற்றம்

ஆழ்வார் திரு உள்ளம்-என் உச்சி உளானே–வந்து என் உச்சி உளானே–
முதலில் திரு வேம்கடம் வந்து-நின்று இருந்தால் கிளம்ப போகிறான்-மாரி மாறாத தன் அம் மலை-
தாமர பரணி நதி ஓடும்-கருணை வர்ஷம்–கமல கண்ணன் என் கண்ணின் உளான்–
திரு முடி தர்சனம் அங்கு தான்-பொலிந்து நின்ற பிரான் ஆழ்வார் திரு முடி மேல்-ஆதி  பிரான் நின்ற பெருமான்-
இருவரையும் மங்களாசாசனம் ஆழ்வார் பண்ணி கொண்டு –பட்டயம் வாசிப்பார்கள் உமக்காக தந்தோம்–கொண்ட கோவலன் விஷ்ணு சித்தன் மனத்தில் –பருபதத்து  கயல் பதித்த பாண்டியன் -மீன கொடி நாட்டியது போல்-
மலை கேட்காமல் மன்னன் வைத்தது போல்–காளியின் உச்சியில் நடனம் –பூத்த நீள் கடம்பேறி –
அவன் திரு அடி பட்டதும் பசக் பசக் பசுமை பெற்றதாம் -குரவை கூத்து குட கூத்து ராச கிரீடை –
பல வித நடனம்-போர் களமாக நிருத்தம் செய்தான் -காலால் காளியன் தலையில் மிதித்தது முதலா

பரல் கல் மேல் புளிதி சோர பெருமாள் நடந்தான் –மெல் அடி –
ஆழி அம் கையானை அம்மானை-அம்மனை தொடர்ந்து ஏத்தாமல் –ஆழ்வார் –
ராமானுஜர் அந்த இடத்தில் பக்கம் இருந்து தலையால் திரு அடி தாங்கி இருக்காமல் போனோமே

வியன் காண மரத்தின் நீழல்-கல் ஆணை மேல் துயில கற்றாயே காகுத்தா

காடு நடந்த பொன் அடி

கண்ணன் ஐந்து வயசில் மாடு மேய்க்க போனானே

குடையும் செருப்பும் கொடாமே காதில் திரி இட்டு தாமோதரனை –பசு மாடு தூசி படித்த குழல்-
பொன் தடுவுவது போல் -ப்ருந்தாவனந்த பண்டிதன்

நமக்கு நாதன் உடையவராக ஆக்குமே செடி கொடிகள் –வெம் கானம் போக்கினேனே

வேம்கட திரு மலை-க்ரீடாத்ரி விளையாட்டு மலை-ஸ்ரீ வைகுண்டமே ஆனந்த நிலைய விமானம் ஸ்வாமி புஷ்கரணி

வேம்கடத்து உச்சியில் கண்டு போய்-முதலில் திருஅடி பதிந்த இடம் சேவிக்க வேண்டும்

—————–

அம்லாந ஹ்ருஷ்ய த³வநீதல கீர்ணபுஷ்பௌ
ஶ்ரீவேங்கடாத்³ரி ஶிக²ராப⁴ரணாயமாநௌ ।
ஆநந்தி³தாகி²ல மநோநயநௌ தவைதௌ
ஶ்ரீவேங்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 13 ॥

ஸ்ரீ வேங்கடேசா -வாடா மலர்களாகத் தரை மேல் கிடக்கும் மற்ற மலர்களின் இடையே காணப்படுகின்றவையும்
திருவேங்கட மலைச்சிகரம் பெற்ற சிறந்த அணிகலன்களாக விளங்குபவையும்
சகல ஜீவன்களுடைய கண்களையும் மனங்களையும் களிப்படையச் செய்கின்றவையுமான
இந்த உன்னுடைய திருவடிகளே சரணம் என்று அடைகிறேன்

————

ப்ராய꞉ ப்ரபந்ந ஜநதா ப்ரத²மாவகா³ஹ்யௌ
மாது꞉ ஸ்தநாவிவ ஶிஶோரம்ருதாயமாநௌ ।
ப்ராப்தௌ பரஸ்பரதுலாமதுலாந்தரௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 14 ॥

ஸ்ரீ வேங்கடேசா -உன்னை வந்து அடைக்கலம் வந்து புகுந்த அநேகம் ஜனங்களுக்கு
முக்கியமாக அனுபவிக்கத்தக்க சொத்துப் போலே உள்ளவையும்
குழந்தைகளுக்குத் தாயின் மார்பகம் போல் அமுதாகின்றவையும்
ஒன்றுடன் ஓன்று இணையாக அமையப்பெற்றவையும்
தனக்கு நிகராக வேறே ஓன்று இல்லாதவையுமான
உனது திருவடிகளே சரண் என்று அடைகிறேன் –

—————

ஸத்த்வோத்தரை꞉ ஸததஸேவ்யபதா³ம்பு³ஜேந
ஸம்ஸாரதாரகத³யார்த்³ரத்³ருக³ஞ்சலேந ।
ஸௌம்யோபயந்த்ருமுநிநா மம த³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 15 ॥

ஸ்ரீ வேங்கடேசா நற்குணம் நிறைந்தவர்களால் ஸதா காலம் வணங்கத் தக்க பாத கமலங்களை யுடையவரும்
பிறவிக்கடலைத் தாண்ட உதவும் கருணையால் குளிர்ந்த
திருக்கண்களை யுடையவருமான
ஸ்ரீ மணவாள மா முனிகளால் எனக்கு காண்பிக்கப்பட்ட
எனது திருவடிகளே சரணாக அடைகிறேன் –

———

ஶ்ரீஶ ஶ்ரியா க⁴டிகயா த்வது³பாயபா⁴வே
ப்ராப்யே த்வயி ஸ்வயமுபேயதயா ஸ்பு²ரந்த்யா ।
நித்யாஶ்ரிதாய நிரவத்³யகு³ணாய துப்⁴யம்
ஸ்யாம் கிங்கரோ வ்ருஷகி³ரீஶ ந ஜாது மஹ்யம் ॥ 16 ॥

ஸ்ரீ விருக்ஷ மலைக்கு இறைவனே
ஸ்ரீ யப்பதியே
நீ இறங்கும் பொழுது நின் திருவருள் கிடைக்கும்படி செய்து அருளுபவளும்
பிறவிக்கடல் கடந்து நான் அடையத்தக்க பயனாக நீ மாறும் காலத்து உன்னுடன் சேர்த்து
வைத்தும் அருள்பவளுமான திருமகளால் அடையப்பட்டவனும்
குற்றமற்ற குணங்களை உடையவனுமான உனக்கு நான் பணி செய்வதையே விரும்புபவனே தவிர
என்னையே நான் பெரிது என்று எண்ணி எனக்கு -என்னுடைய ஆனந்துக்காகவே
பணி செய்வேனாக இருக்க மாட்டேன் –

இட் ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி ||

***

ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம்

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்     -1-

திருமகள் விரும்பும் நாதனும்
ஸர்வ மக்களுக்கும் நிதி போன்றவனும்
யாசிப்பவர்களுக்கு வரையாது வழங்கும் பொற் குவை போன்றவனும்
திருவேங்கட திருமலையில் நித்ய வாஸம் செய்து அருளுபனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு ஸர்வ மங்களங்களும் உண்டாகட்டும்

———

லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே

சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்             2

திருமகளும் வியந்து நோக்கத்தக்க அழகிய புருவங்கள் இணைந்து விளங்கும் திருக்கண்கள் யுடையவனும்
கண்ணாவான் மண்ணோர் விண்ணோர்க்கும் என்றபடியே
ஸகல லோகங்களுக்கும் கண் போன்றவனுமாகிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———-

ஸ்ரீவேங்கடாத்ரி  ச்ருங்காக்ர மங்களா பரணாங்க்ரியே

மங்களாநாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்    3-

திரு வேங்கட மலைச் சிகரத்துக்கு மங்கள திரு ஆபரணமாக விளங்குகின்ற திருவடிகளை யுடையவனும்
ஸர்வ மங்களங்களுக்கும் இருப்பிடமானவனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———–

ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா சர்வசேதஸாம்

ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம்             4

அங்கங்கள் யாவுமே அழகு என்னும் செல்வத்தால் அனைவருடைய உள்ளங்களையும்
எப்பொழுதுமே மயங்கிப்போய் இருக்கும்படிச் செய்யக் கூடிய அழகிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———————

நித்யாய நிரவத்யாய ஸத்யா நந்தசிதாத்மநே

ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்   5-

அழிவற்றவனும்
அழுக்கு அற்றவனும்
ஆனந்த ஸ்வரூபனும்
ஞான ஸ்வரூபனுமாக
எல்லார் உள்ளத்திலும் உயிராக விளங்கும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

————-

ஸ்வதஸ் ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வசேஷிணே

ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்        –6-

தானாகவே எல்லாமும் அறிந்தவனுக்கு
ஸர்வ சக்திகளும் பெற்றவனும்
ஸமஸ்த இதர வைலக்ஷணம் கொண்டவனும்
நல்ல ஒழுக்கம் உடையவனும்
எளிதில் சென்று அடையும்படி பின்னானார் வணங்கும் ஜோதியுமுமானவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

————–

ப்ரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய பரமாத்மநே

ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்      -7-

எங்கும் நிறைந்த பரம் பொருளும்
எண்ணியவை யாவையும் நிறைவேற்றி வைக்கக் கூடியவனுமான
பரமாத்மாவாகவும்
எல்லாமே தம் தம் பணிகளில் இயங்கக் காரணமாய் இருப்பவனுமான
பரதத்வ உண்மைப் பொருள் அனைத்திலும் உயர்ந்தவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

———–

ஆகால தத்வ மச்ராந்த மாத்ம நாம நுபச்யதாம்

அத்ருப்த்யம்ருத ரூபாய வேங்கடேசாய மங்கலம்    -8

காலம் உள்ளவரை அயராமல் ஸேவிக்கும் பக்தர்களுக்குத் திருப்தி அளிக்கக் கூடிய
ஆரா வமுதமாய் இருக்கக் கூடிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

————-

ப்ராயஸ் ஸ்வ சரணௌ பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா

க்ருபாய திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்     –9-

தனது திருவடிகளே சரணம் என்று சகல ஜீவன்களுக்கும்
தனது திருக்கரத்தால் அன்புடன் காட்டிக் கொடுத்து அருளும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

————

தயாம்ருத் தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை:

அபாங்கை ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்     -10-

கருணை என்னும் அமுதக்கடலினுடைய அலைகளைப் போலே
குளிர்ந்த திருக் கடைக் கண்களால் உலகத்தை நினைக்கின்ற
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

—————

ஸ்ரக்பூஷாம் பர ஹேதீதாம் ஸுஷமாவஹ மூர்த்தயே

ஸர்வார்த்தி ஸமநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்    –11

தான் அணியும் மாலைக்கும்
அணி மணிகள் உடை ஆயுதம் இவைகளுக்கும்
அழகை யுண்டு பண்ணி அருளும் திவ்ய மங்கள விக்ரஹம் உடையவனும்
சகல துக்கங்களையும் போக்கி அருள் செய்பவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

—————

ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்    12-

ஸ்ரீ வைகுண்டத்தில் பற்று நீங்கி
ஸ்ரீ ஸ்வாமி புஷ்கரணி தடாகத்தின் கரையில்
திருமகளோடு விளையாடி அருளும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

——–

ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே

ஸர்வலோக நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்     –13

ஸ்ரீ மணவாள மா முனிகள் போன்ற பக்தர்களின் திரு உள்ளங்களில் நித்ய வாஸம் செய்து அருள்பவனும்
எல்லா உலகங்களில் எல்லாப் பொருள்களிலும் கன்னுக்குத் தெரியாமல்
கரந்து எங்கும் பரந்துள்ளவனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

———–

மங்களாசாஸ நபரைர் மதாசார்ய புரோகமை:

ஸர்வைச்ச பூர்வை ராசார்யைஸ் ஸத்க்ருதாயாஸ்து மங்களம்    -14-

எம்பெருமானுக்கு மங்களங்கள் உண்டாகட்டும் என்று
என்னுடைய ஆச்சார்யர்களாலும்
மற்றும் உள்ள ஆச்சார்யர்களாலும்
பூஜிக்கப் பட்டவருமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

***

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் ஓங்கார பரமார்த்தாய நம:
ஓம் நர நாராயணாத்மகாய நம:
ஓம் மோக்ஷலக்ஷ்மீ ப்ராணகாந்தாய நம:
ஓம் வேங்கடாஶல நாயகாய நம:
ஓம் கருணாபூர்ண ஹ்ருதயாய நம:
ஓம் டேங்காரஜப ஸௌக்யதாய நம:
ஓம் ஶாஸ்த்ர ப்ரமாண கம்யாய நம:
ஓம் யமாத்யஷ்டாங்க கோசராய நம:
ஓம் பக்தலோகைக வரதாய நம:
ஓம் வரேண்யாய நம: 10

ஓம் பயநாஶநாய நம:
ஓம் யஜமாந ஸ்வரூபாய நம:
ஓம் ஹஸ்தந்யஸ்த  ஸுதர்ஶநாய நம:
ஓம் ரமாவதார மங்கேஶாய நம:
ஓம் ணாகாரஜவ ஸுப்ரியாய நம:
ஓம் யஜ்ஞேஶாய நம:
ஓம் கதிதாத்ரே நம:
ஓம் ஜகதீவல்லபாய நம:
ஓம் வராய நம:
ஓம் ரக்ஷஸ்ஸந்தோஹ ஸம்ஹர்த்ரே நம: 20

ஓம் வர்சஸ்விநே நம:
ஓம் ரகுபுங்கவாய நம:
ஓம் தாநதர்மபராய நம:
ஓம் யாஜிநே நம:
ஓம் கநஶ்யாமள நம:
ஓம் ஹராதி ஸர்வதேவேட்யாய நம:
ஓம் ராமாய நம:
ஓம் யதுகுலாக்ரணயே நம:
ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
ஓம் மஹாத்மநே நம: 30

ஓம் தேஜஸ்விநே நம:
ஓம் தத்வஸந்நிதயே நம:
ஓம் த்வமர்த்த லக்
ஓம் பாவநாய நம
ஓம் ஸர்வேஶாய நம:
ஓம் கமலாகாந்தாய நம:
ஓம் லக்ஷ்மீ ஸல்லாப ஸம்முகாய நம:
ஓம் சதுர்முக ப்ரதிஷ்டாத்ரே நம: 40

ஓம் ராஜராஜ வரப்ரதாய நம:
ஓம் சதுர்வேத ஶிரோரத்நாய நம:
ஓம் ரமணாய நம:
ஓம் நித்யவைபவாய நம:
ஓம் தாஸவர்க்க பரித்ராத்ரே நம:
ஓம் நாரதாதி முநிஸ்துத்யாய நம:
ஓம் யாதவாசலவாஸிநே நம:
ஓம் கித்யத் பக்தார்தி பஞ்ஜநாய நம:
ஓம் லக்ஷ்மீப்ரஸாதகாய நம:
ஓம் விஷ்ணவே நம: 50

ஓம் தேவேஶாய நம:
ஓம் ரம்ய விக்ரஹாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் லோகநாதாய நம:
ஓம் லாலிதாகில ஸேவகாய நம:
ஓம் யக்ஷகந்தர்வ வரதாய நம:
ஓம் குமாராய நம:
ஓம் மாத்ருகார்ச்சிதாய நம:
ஓம் ரட்த்பாலக போஷிணே நம:
ஓம் ஶேஷஶைல க்ருதஸ்தலாய நம: 60

ஓம் ஷாட்குண்ய பரிபூர்ணாய நம:
ஓம் த்வைததோஷ நிவாரணாய நம:
ஓம் திர்யக்ஜந்த் வர்ச்சிதாங்க்ரயே நம:
ஓம் நேத்ராநந்த கரோத்ஸவாய நம:
ஓம் த்வாதஶோத்தம லீலாய நம:
ஓம் தரித்ரஜந ரக்ஷகாய நம:
ஓம் ஶத்ரு க்ருத்யாதி பீதிக்நாய நம:
ஓம் புஜங்கஸயந ப்ரியாய நம:
ஓம் ஜாக்ரதே நம:
ஓம் ரஹஸ்யாவாஸாய நம: 70

ஓம் ஶிஷ்டபரிபாலகாய நம:
ஓம் வரேண்யாய நம:
ஓம் பூர்ணபோதாய நம:
ஓம் ஜந்ம ஸம்ஸார பேஷஜாய நம:
ஓம் கார்த்திகேய வபுர்த்தாரிணே நம:
ஓம் யதிஶேகர பாவிதாய நம:
ஓம் நரகாதி பயத்வம்ஸிநே நம:
ஓம் ரதோத்ஸவ கலாதராய நம:
ஓம் லோகார்ச்சா முக்யமூர்த்தயே நம:
ஓம் கேஶவாத் யவதாரவதே நம: 80

ஓம் ஶாஸ்த்ர ஶ்ருதாநந்த லீலாய நம:
ஓம் யமஶிக்ஷா நிபர்ஹணாய நம:
ஓம் மாநஸம்ரக்ஷண பராய நம:
ஓம் நேத்ரஹீநாக்ஷிதாயிநே நம:
ஓம் மதிஹீந மதிப்ரதாய நம:
ஓம் ஹிரண்யதாந க்ராஹிணே நம:
ஓம் மோஹஜால நிக்ருந்தநாய நம:
ஓம் ததிலாஜாக்ஷதார்ச்யாய நம:
ஓம் யாதுதாந  விநாஶநாய நம: 90

ஓம் வேங்கடாய நம:
ஓம் தக்ஷிணாஸ்திதாய நம:
ஓம் ஸாரபுஷ்கரிணிதீராய நம:
ஓம் ராத்ரௌ தேவகணார்ச்சிதாய நம:
ஓம் யத்நவத் பலஸந்த்தாத்ரே நம:
ஓம் ஸ்ரீம்ஜபாத் தநவ்ருத்திக்ருதயாய நம:
ஓம் க்லீம்காரஜாபி காம்யார்த்த ப்ரதாந ஸதயாந்தராய நம:
ஓம் ஸ்வஸர்வசித்தி ஸந்தாக்ரே நம:
ஓம் நமஸ்கர்த்து ரபீஷ்டதாய நம: 100

ஓம் மோஹிதாகில லோகாய நம:
ஓம் நாநாரூப வ்யவஸ்திதாய நம:
ஓம் ராஜீவலோசநாய நம:
ஓம் யஜ்ஞவராஹாய நம:
ஓம் கணவேங்கடாய நம:
ஓம் தேஜோராஶீக்ஷணாய நம:
ஓம் ஸ்வாமிநே நம:
ஓம் ஹார்தா வித்யா நிவாரணாய நம:  108

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி சமாப்தம்:

————–

வ்ருஷசைலாதிப ஏவ தைவதம் ந

வ்ருஷபாத்ரீச்வர ஏவ தைவதம் ந
பணி சைலாதிப ஏவ தைவதம் ந

பகவான் வேங்கட ஏவ தைவதம் ந————————–11-

—————————————————-

வ்ருஷசைலம் -என்பதும்
வ்ருஷபாத்ரி -என்பதும்
பணி சைலம் -என்பதும்
பர்யாய நாமங்கள் ஆதலால்
எல்லாவற்றாலும்
திருமலை அப்பனே அடியேன் தொழும் தெய்வம்
என்றது ஆயிற்று

—————————————————————————————————————————————————————

ஸ்ரீ ஸ்ரீ நிவாச பர தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச பரமம் தனம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச குல தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீனிவாச பரமா கதிர் ந—12

ஸ்ரீ ஸ்ரீநிவாசன
நமக்கு பர தேவதையும்
பெரும் செல்வமும்
குல தேவதையும்
பரம கதியும்
ஆவான் -என்கிறார் ஆயிற்று-

—————-

ஸ்ரீ   வேங்கடேச  ஸுப்ரபாதம் —தமிழில்

வந்துதித்தாய் ஸ்ரீ ராமா நீ கோசலை தன்  திருமகனாய்
சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளைச்
செந்திருக்கண்  அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்  [2] 1

எழுந்தருள்வாய் வெண்கருடக்  கொடியுடையாய்  எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் திருக்கமலை விழைமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்  [2]  2

போர்புரிந்து  மதுகைடைத் தமையழித்தான் உளத்துணியே
பாரனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே
பாரகத்தார் விழைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே
கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய் [2]  3

திங்கள் மொழி திருமுகத்தில் பொங்கும் அருள் புரிபவளே
இங்குக்கலை வாணியுடன் இந்திராணி அம்பிகையாம்
மங்கையர்கள் தொழுதேத்தும்  மாண்புடைய தனித்தலைவி
செங்கமல வேங்கடத்தான்  திருத்தேவி  எழுந்தருள்வாய்   4

தொலைவிடத்தும் பலவிடத்தும் சுழன்று திரி ஏழ்முனிவர்
சலித்தறியாத் தவமியற்றிச்  சந்தியா  வந்தனம் முடித்து
நிலைபெறு  நின் புகழ் சொல்லி நின்பாதம்  சேவிக்க
மலையடைந்து  காத்துளர்  காண் வேங்கடவா  எழுந்தருள்வாய்  5

ஆங்கந்த பிரம்மாவும் அறுமுகனும்  தேவர்களும்
ஓங்கி உலகங்களந்த உயர் கதைகள் பாடுகின்றார்
ஈங்கிந்த   யாழமுனி   பஞ்சாங்கம்   ஓதுகின்றார்
தீங்கவிகள்  செவிமடுக்க  வேங்கடவா  எழுந்தருள்வாய்   6

நன்  கமுகு  தென்னைகளில்  பாளை  மனம் மிகுந்தனவால்
பல்  வண்ண மொட்டுகள்  தாம் பணித்தேனோடு  அலர்ந்தனவால்
புல்லரிக்கும் மெல்லீர பூந்தென்றல் தவழ்கிறதால் 
எல்லாமும் அணிந்தருள  வேங்கடவா  எழுந்தருள்வாய்  7
நின் திருப்பேர்  பல கேட்டு  நின்னடியார்  மெய்மறக்க
நின் கோயில்  பைங்கிளிகள் தீங்கனியாம்  அமுதருந்தி
நின் திருப்பேர்   ஆயிரத்தால்  நெடும்  புகழை  விளக்கிடுமாய்
நின் செவியால் தீர்த்தருள  வேங்கடவா  எழுந்தருள்வாய்   8

எவ்விடத்தும்   நிலையாக  நின்றறியா    நாரதரும்
இவ்விடத்தும்   பெருமைகள்  தாம்  ஈர்ப்பதனால்   நிலைகொண்டார்
செவ்விய  தன்   வீணையில்  உன்  திருச்  சரிதை  மீட்டுகின்றார்
அவ்விசையை   கேட்டருள   வேங்கடவா   எழுந்தருள்வாய்    9

வெண்கமல  ஒன்மலர்கள்   விளைத்த  மது  மிக   அருந்தி
கண்  மயங்கி  மலர்  முகட்டுள்   காலைவரை  சிறைகிடந்த
வண்டினங்கள்   ரீங்கரித்தே   வந்தனவா   நினைத்  தொழவே
தண்ணருளால்   சேவைதர    வேங்கடவா    எழுந்தருள்வாய்   10

கனதனங்கள்    நிமிர்ந்த   செயற்   கைவலைகள்   ஒலியெழுப்ப
மன   மகிழ்ந்து  தயிர்கடையும்  மத்தொலியும்   திசை  ஒலியும்
சிறந்தனபோல்  எதிர்  ஒலிக்க   நெடுந்துதிகள்   முழங்கிடுமால்
நினைத்துவிதாம்   கேட்டிலையோ   வேங்கடவா   எழுந்தருள்வாய்   11

பெருமாள்   நின் திருநிறத்தை   பெற்றுளதாய்  குவளை   சொலும்
கருங்குவளை    காட்டிடையே   களித்துலவும்   வண்டுகள்  தாம்
பெருமாள்  நின் திருநிறத்தை    பெற்றுளம்   யாம்   பெறிதெனுமே
வருதரும்   பேர்   பகை   தவிர்க்க    வேங்கடவா   எழுந்தருள்வாய்   12

வேண்டுபவர்   வேண்டுவன   விழைந்தருளும்   பெருவரதா

மாண்புடையாள்   மலரமர்ந்தாள்   மகிழ்ந்துறையும்   திருமார்பா

ஈண்டுலக   மனைத்தினொடும்   இழைந்தமைந்த   உறவுளயோய்

காண்பரிய   கருணையனே   வேங்கடவா   எழுந்தருள்வாய்   [2]    13

மின்  தவழும்   சடையானும்   பிரம்மாவும்   சனந்தனரும்

இன்றுனது   கோலேறி   திருநீர்த்தம்  தலை  மூழ்கி

நின்னருளைப்   பெற  விழைந்தே   நெடுவாயில்   நிலைநின்றார்

நின்றவர்க்கும்   அருள்   பொழிய  வேங்கடவா   எழுந்தருள்வாய்   14

திருமலையாய்   சேடத்தாய்   கருடத்தாய்   வேங்கடத்தாய் 

திரு   நாராயண  மலையாய்  விருடபத்தாய்  இருடத்தாய் 

பெருமானே   எனப்புகழ்ந்து   தேவரெலாம்   திரண்டனர்காண் 

திரண்டுளரைப்  புரந்தருள  வேங்கடவா   எழுந்தருள்வாய்          15

அருளிடு  நின்  செயல்  முடிப்பான்   அட்டதிக்கு  பாலர்களாம் 

பெருநெறிய  அரன்   இந்திரன்  அக்னியான்  பேரியமன் 

வருணனொடு   நைருதியான்  வாயுவோடு   குபேரனும் 

நின்   திருவடிக்கு   காத்துளராய்  வேங்கடவா  எழுதருள்வாய்   16

திருமலைவாழ்   பெருமானே  திருஉலாவுக்கு  எழுகையில்  நின் 

கருட  நடை  சிம்ம  நடை   நாத  நடை  முதலாய  

திருநடைகள்   சிறப்புணர்ந்து   திருத்தமுற   கற்பதற்கு 

கருட  சிம்ம  நா  தருளான்  வேங்கடவா  எழுதருள்வாய்     17

சூரியனார்   சந்திரனார்   செவ்வாய்   புதன்   வியாழ

சீர்மிகுந்த   சுக்கிரனார்  சனி  ராகு   கேது  இவர்கள் 

ஆர்வமுடன்  நின்  தொண்டர்க்கு  அடித்தொண்டு  புரிந்துனது 

பேரருளைப்  பெற  நின்றார்  வேங்கடவா   எழுதருள்வாய்      18

நின்  முக்தி   விழையாமல்   நின்னையொன்றே   மிகவிழைந்து 

நின்  பாத  தூளிகலைத்  தம்  தலையில்   தான்  தரித்தோம் 

சென்றிடுவாய்   கலிமுடிந்தால்  இங்கிருந்தும்   பரமபதம் 

என்பதற்கே   அஞ்சினர்காண்   வேங்கடவா   எழுந்தருள்வாய்   19

எண்ணரிய   தவமியற்றிய   இன்சொர்க்கம்   முக்திபெறும் 

புண்ணியர்கள்  செல்வழி நின்புகழ்க்   கோயில்  கலசங்கள் 

கண்டனரே  நின்  கோயில்  காட்சிக்கே  பிறப்பெடுப்பார்  

புண்ணியனே  அவர்க்கருள   வேங்கடவா  எழுந்தருள்வாய்      20

மண்மகளின்   திருக்கேள்வா  மாக்கருணை  புனைக்  கடலே 

தின்புயத்துக்  கருடனுடன்   நாதனுமே   சரண்புகுந்தார் 

எண்ணரிய  தேவர்களின்  ஈடு  இணையில்  பெருந்தேவா 

மண்ணுலகோ  தனிப்  புகழே   வேங்கடவா  எழுந்தருள்வாய்   21

பத்மநாபா   புருடோத்தமா  வாசுதேவா  வைக்குண்டா 

சத்தியனே  மாதவனே  ஜனார்தனனே  சக்ரபாணி
வத்சலனே   பாரிஜாதப்   பெருமலர்   போலருல்பவனே
உத்தமனே   நித்தியனே  வேங்கடவா  எழுந்தருள்வாய்       22


திருமகள்  தன்   திருயணைப்பில்   திருத்துயில்  கொள்  திருஅழகா
திருவிழியால்  பெரு  உலகில்  அருள்  பொழியும்  பெருவரதா
திருவுடையாய்  தீக்குணத்தாய்   திருத்தூயாய்  திருப்புகழாய்
பெருவயிரத்  திருமுடியாய்   வேங்கடவா  எழுந்தருள்வாய்             23


மச்சநாதா   கூர்மநாதா   வராக  நாதா  நரசிம்ஹா
நச்சி வந்த  வாமனனே  பரசுராமா  ரகுராமா
மெச்சு  புகழ்  பலராமா  திருக்கண்ணா  கல்கியணே
இச்சகத்து   வைகுந்தா   வேங்கடவா  எழுந்தருள்வாய்       24


ஏல  முது  நடு   லவங்க   கணசார   மணங்கமழும்
சீலமிகு  தெய்வீக  திருதீர்த்தம்   தலை  சுமந்து
ஞாலமுய்ய   வேதமொழி  நவற்றுணர்ந்த வேதியர்கள்
கோலமிகு   கோயிலுற்றார்   வேங்கடவா  எழுந்தருள்வாய்     25


அருணனுந்தான்   வந்துதித்தான்   அலர்ந்தனவால்  தாமரைகள்
பெருவியப்பால்  புல்லினங்கள்   பெயர்ந்தெழுந்து   சிலம்பினகாண்
திருமார்பா   வைணவர்கள்   மங்கலங்கள்  நிற  மொழிந்தார்
அருள்  திருவே  அருள்விருந்தே   வேங்கடவா   எழுந்தருள்வாய்   26


நாமகள்தன்   நாயகனும்    தேவர்களும்   மங்கலமாம்
காமரியைக்    கண்ணாடித்   தாமரைகள்   சாமரங்கள்
பூமருது   பொன்  விளக்குப்  புகழ்  கொடிகள்   ஏந்தினர்காண்
தே  மரு   மலர்  மார்பா    வேங்கடவா  எழுந்தருள்வாய்             27


திருமார்பா  பெருங்குணங்கள்   சிறந்தோங்கப்   பொலிபவனே
பெரும்பிறவிக்   கருங்கடலின்   கரைபுனர்க்கும்  சேர்க்கும்  இணையே
ஒரு  வேதத்துட்  பொருளே  மயர்வு  அறியா   மதி   நலத்தார்
திரு  தீர்ப்புக்கு   உரியவனே  வேங்கடவா  எழுந்தருள்வாய்                    28


விழித்து  எழுந்தக்  காலையில்  இத்திருப்பள்ளியெழுச்சிதனை
விழைந்துணர்ந்து   படிப்பவரை  கேட்பவரை  நினைப்பவரை
வழுத்துகின்றார்   எவரவர்க்கு   வரங்களொடு  முக்தி  தர
எழுந்தருள்வாய்  எழுந்தருள்வாய்  வேங்கடவா  எழுந்தருள்வாய் [2]     29



                        ஸ்ரீ   வேங்கடேச   ஸ்தோத்ரம் 

மலர்  மேல்  உறை   மாதவி   மார்பகத்தே
குலவும்  ஒரு  குங்கும  நீலவனே
மலர்  தாமரை  கண்ணுடை  நாயகனே
நலமே பெற  காத்தருள்  வேங்கடவா  [2]    1

மறை   நான்முக   ஐமுக    ஆறுமுகப்
பெரியோர்களின்  சீர்மிகு   தலைமணியே
சரணாகதி  யென்பவர்க்க   ன்புறவே
பெரும்பேர்  நிதி  காத்தருள்  வேங்கடவா    2

பொது  எல்லைகள்  தாண்டிய  பாவமதை
நிதமே  புரிந்தின்னமும்  புரிவதிலே
அதிவேகமே  கொண்டுள   எங்களையே
இதமாகவே  காத்தருள்  வேங்கடவா           3

அருள்  நீ  வதில்   ஆர்வமாய்  நின்னடியார்
வரம்  வேண்டியதை  விட  ஈபவனே
பெரும்  நான்மறை  ஓதிடும்   ஓர்  பொருளே
திருமார்பனே   காத்தருள்  வேங்கடவா         4

நயம் சேர்  இசைக்குங்   குழல்  இன்னமுதால்
வயமாயிடு  கோபியர்  சூழ்பவனே
மயல்   காமனின்  பேரெழில்  கோடி  பெரும்
முயல்வே  யெமைக்  காத்தருள்   வேங்கடவா     5

பலர்   போற்றிடும்   பேரருள்  மூர்த்தியனே
நலமே  புனர்  சீதையின்  நாயகனே
தளிர்  மேனியனே  ஒரு  வில்லவனே
ஒளியே  எமைக்  காத்தருள்  வேங்கடவா      6

இருதாமரை  பூத்திடும்  சந்திரனாய்
திரு  சீதையின்  கேள்வனை  இன்றவனே
இருள்  ராவணனுக்கொரு  சூரியனே
சரணா  இனும்  காத்தருள்  வேங்கடவா    7

நெறியாரடையின்   உரை   எளியவனே
திருத்தாயினை   தேவியர்  பெற்றவனே
பிறர்  யாருடை  தாளையும்   வணங்கிலமே
பெரியோர்  ெயமைக்   காத்தருள்  வேங்கடவா   8

திருவேங்கடேசா   நாதனே    நாதன்   நீ
ஒரு  வேங்கடேசா    உன்னையே  எண்ணினும்
பெருவேங்கடேசா    நின்னையே  நின்னையே
அருள்  வேங்கடேசா  அருள்  வேங்கடவா  [2]     9

நெடுநாள்  வரை  யாம்  உனை   தொழுவதற்கே
முடியாமையால்  இன்றுனைத்  தொழப்  புரிந்தோம்
அடி  போற்றிடும்  நித்தியர்க்கருள்வது   போல்
அடியே  எமையும்   காத்தருள்  வேங்கடவா          10

அறியாமையால்  புரி  தீவினை  புரியாதுளத்  தர  நீக்கிடு
பொறுத்தே  அருள்  பொறுத்தே  அருள்  பெருமாமணி
                                      வேங்கடவா  [2]                 11



                ஸ்ரீ   வேங்கடேச   ப்ரபத்தி 


வேங்கடத்தான்  விரிமார்பில்   விழைந்தமர்ந்த  கருணையளே
பூங்கமலத்   தனிகரத்தாள்   பொறுமை  வளர்  பூதேவி
ஓங்கிய  சீர்  குணம்  ஒளிரும்  உயர்தனிப்பேர்   தவத்தாயே
வேங்கடத்தான்  திருத்தேவி  நின் பாதம்  சரண்  புகுந்தோம்  [2]      1

கருணையெனும்   திருக்கடலே  காத்தளிக்கப்  படைத்தவனே
பெருந்   தாயைப்பிரிந்தறியாப்   பெரியோனே  வல்லவனே
ஒரு முதல்வா  பாரிஜாத   உயர்மலரே  துயர்களையும்
திருவடிகள்   பற்றி  உய்ய   வேங்கடவா  சரண்  புகுந்தோம் [2]        2

ஒன்றுடனொன்று  ஒத்திணைந்த  ஒப்புயர்வில்  அடியவர்நான்
அன்று  முதல்  இன்று  வரை  அருளமுதாய்த்  தொழத்  தகுந்த
நன்மணங்கள்  வாய்  அவிழ்ந்த  நறுமலர்கள்  மிக  நிறைந்த
நின்னடிகள்   தஞ்சமென  வேங்கடவா  சரண்  புகுந்தோம்  [2]          3

அன்றலர்ந்த   மிகச்  சிவந்த   அருங்குலத்தில்  பறிபடாது
நின்றிருக்கும்  தாமரை  நின்  திருவடிக்கு  நிகராகும்
என்றுரைக்கும்  உறையும்  ஒரு  மிக  முரட்டு  கல்லுரையாய்
தென்படுமாறு   உளதடியை  வேங்கடவா  சரண்  புகுந்தோம்          4

கொடி  அமிர்த  திருகலசம்  கற்பதரு    தாமரைப்   பூ
நெடிய  குடை  சங்கு  சக்கரம்  வஜ்ரத்தோடு  அங்குசமாம்
அடையாள  ரேகைகள்  தான்  படர்ந்தமைந்த  நினது  திரு
அடியிணைகள்  பற்றி  நின்றே  வேங்கடவா  சரண்  புகுந்தோம்     5

உள்ளங்கால்  பேரொளிக்கு  பத்மராக  ரத்தினங்கள்
ஒல்லிய  சீர்  புரவடி  போல்  இந்த்ர   நீல  ரத்தினங்கள்
வெள்ளிய  நல்  நகங்களுக்கு   வெண்மதிகள்  தோற்றோட
உள்ளிவந்தோம்   நின்னடியை  வேங்கடவா  சரண்  புகுந்தோம்      6

வாக்கிற்கும்  மனத்திற்கும்  எட்டரிய  திருவடியை
பூக்கமலத்  திருத்  தேவி  தளிர்கரத்தால்   ஆசையுடன்
ஏற்புற்றே  வருடிடவும்  வாட்டமுறும்  மெல்லடியை
நோக்க  அருள்  பொழியடியை   வேங்கடவா  சரண்  புகுந்தோம்     7

மன  மகிழ்ந்து  திருமகளும்   மண்மகளும்   நப்பினையும்
நினைவிழந்து  துளிர்  தளிர்க்கும்  தன்  ரோஜா  திருக்கரத்தால்
தினம்வருட   அவர்   கரத்து   திருச்  சிவப்பு  தொற்றியதோ
எனச்  சிவந்த  நினதடியை   வேங்கடவா  சரண்  புகுந்தோம்          8

நினை  வணங்கு   சிவ   பெருமார்   நெடுமடியில்  நவரத்ன
மணிகளிடை    விதை   முளைபோல்   கதிர்  ஒளிகள்   கிளர்ந்தெழுமே
கணங்களென   கற்பூர  ஆர்த்தியென   மணி   ஒளியைத்
தினமேற்கும்  நினதடியை  வேங்கடவா  சரண்  புகுந்தோம்       9

எவ்வடிகள்   வேதமெலாம்   மிகப்   புகழும்   திருவடிகள்
எவ்வடிகள்   ஞானியர்க்கு  தேன்   பெருக்கும்   செவ்வடிகள்
எவ்வடிகள்  புகல்   என  நின்   மரக்கரந்தான்   கஷ்டடிகள்
அவ்வடியை   அடைந்துய்ய   வேங்கடவா  சரண்  புகுந்தோம்      10

தேர்  தட்டில்   பார்த்தனுக்குச்  சரண்   புகுவாய்   என  உரைத்து
நேர்த்தி  மிகக்  காட்டிய   எத்திருவடியோ    அவ்வடியே
கீர்த்திமிகு  வேங்கடத்தில்  வலக்  கரந்தான்  காட்டடிகாள்
பார்த்தனைப்   போல்   பயன்  பெறவே  வேங்கடவா  சரண்  புகுந்தோம்  11

உனை  நினைத்தே   உன்னிடத்தே   ஆள்பவர்  தம்   மனத்திடத்தும்
தினமலர்  தம்   போற்றுமறை  முடியிடத்தும்   வேங்கடத்தும்
எனது  பெரும்   தலையிடத்தும்  காளிங்கன்    தலையிடத்தும்
மனத்திடத்தும்  புகுமடியை   வேங்கடவா  சரண்  புகுந்தோம்            12

வாட்டமின்றி   தரை  நிறைய  மனமலர்கள்   சூழ்ந்தமய
நேட்டிய   பல  சிகரத்து   வேங்கடத்தின்  அணியாகி
நாட்டமுறு   மனமீர்த்து  நல்லடியார்க்கின்புணர்ந்து
வீட்டின்பம் தருமடியை  வேங்கடவா  சரண்  புகுந்தோம்         13

சரண்  புகுவார்  முதன்  முதலில்  அறிந்தறியக்   கற்றனவாய்
ஒரு  சிறுபை  குழவிக்கு  தாயருள்  போல்  அமைந்தனவாய்
பெரும்  அமுதாய்  வேறெதெற்கும்  ஒப்புமையை  ஒழித்தணவாய்
இருந்திருள்  நின்  அடிகளினை  வேங்கடவா  சரண்  புகுந்தோம்    14

தூய்மனத்துப்  பெருந்தகையோர்  தொழுதேத்தும்லர்தாளாய்
வாய்த்துளையிற்   பிறவியெனும்  பெருங்கடலைத்  தாண்ட  வைப்போர்
தாயனைய  மாமுனிவர்  எமக்குணர்த்தி    சரண்புகுவீர்
போய்  நின்ற  நினதடியை   வேங்கடவா  சரண்  புகுந்தோம்       15

சரண்   புகு   நின்   அடியவர்தம்   குறை  மறைத்து  நீயருளப்
பெருந்  துணைகள்  பல  புரிந்து  குற்றேவல்  கொண்டருளும்
திருத்தாய்வாள்   அருள்  மார்பா  உமக்கே  யாம்  ஆட்படுவோம்
திருவடிக்கே  பணிந்துய்வோம்  வேங்கடவா  சரண்  புகுந்தோம் [2]   16



                    ஸ்ரீ     வேங்கடேச   மங்களாசாஸனம் 

திருக்கேள்வா   மங்களங்கள்  பொழிபவனே   பொலிபவனே
பெரு   நெறியே  சீனிவாசா   வேங்கடவா   மங்களங்கள்  [2]     1

பெருந்தவத்தாய்    மைய்யலுறப்   பேருலகைப்   புரந்தருளும்
திருப்புருவ  அருள்  கண்ணா  வேங்கடவா  மங்களங்கள்             2

வேங்கடத்து   மலைப்பொலி  சேர்   விழையணியாம்  திருத்தாளாய்
ஓங்கிய  சீர்  மங்களத்தாய்    வேங்கடவா  மங்களங்கள்               3

எல்லோர்க்கும்   எப்பொழுதும்   எழில்  மயக்கும்   பணித்தருளும்
நல்லழகு   பெருமானே   வேங்கடவா  மங்களங்கள்                      4

அறிவறியாய்   குற்றமில்லாய்   மாற்றமில்லாய்   நிறைமகிழ்வே
எழில்   ஞான  உயிர்  முதலே   வேங்கடவா  மங்களங்கள்              5

எல்லாமும்  அறிந்தவனே  படைத்தவனே   ஆள்பவனே
நல்குணனே   எளிமையனே   வேங்கடவா  மங்களங்கள்             6

பரப்ரம்மா   பரமாத்மா   விழைந்தனர்கள்  பெற  அருளும்
பரம்  பொருளே   பரதத்வா   வேங்கடவா  மங்களங்கள்             7

தவமேனி   தனியழகைச்   சலிப்பின்றி   தியானிப்போர்
தெவிட்டாது   தூய்த்துணரும்   வேங்கடவா  மங்களங்கள்         8

சரண்  புகுவார்  மோட்சநிதி  தனதடியை  எனது   வலது
கரத்தானே   காட்டியருள்   வேங்கடவா  மங்களங்கள்                9

பெருங்   கருணைப்  பேரமுதப்   பெயராற்றின்   அலைகளெனும்
திருவிழியால்  துயர்  நீக்கும்   வேங்கடவா  மங்களங்கள்              10

திருமாலை  பட்டாடை   திரு  அணிகள்   பெருமை  பெற
வரு  பெறுவன்   துயர்  தணிக்கும்  வேங்கடவா  மங்களங்கள்       11

அருள்  பொழிய  வைகுந்தம்   தவிர்ந்தருளி  கோனேறி
திருக்  கரையில்  புணர்  தாடும்  வேங்கடவா  மங்களங்கள்   [2]     12

மணவாள   மாமுனிகள்   உளத்திருந்து   பேருலகக்
கணம்  புரந்து   களித்தருளும்  வேங்கடவா  மங்களங்கள்          13

ஈங்கெங்கள்   குருமுதலோர்   இயம்பியவள்   மங்களத்தாய்
ஓங்கி   உயர்   வேங்கடவா   உனக்கென்றும்   மங்களங்கள்       14

————

வேங்கடாத்ரி சமம் ஸ்தானம் பிரம்மாண்டே நாஸ்தி கிஞ்சன;
வேங்கடேச ஸமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருவேங்கட மஹாத்ம்யம்-ஸ்ரீ கண்ணன் அடியிணை எமக்கு காட்டும் வெற்பு–

September 3, 2024

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————-

கண்ணன் அடியிணை எமக்கு காட்டும் வெற்பு
கடு வினையர் இரு வினையும் கடியும் வெற்பு
திண்ணம் இது வீடு எனத் திகழும் வெற்பு
தெளிந்த பெரும் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு
புண்ணியத்தின் புகல் இது எனப் புகழும் வெற்பு
பொன் உலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
வேங்கட வெற்பு என விளங்கும் வேத வெற்பே
— ஸ்ரீ அதிகார சங்கிரகம் -43-

அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸ்தான்வே சிரிம் பீடஸ்ய ஸத்வபிஸ் தே பிஷ்ட்வா சாதயாமஸி –ரிக் வேதம்
மனிதா
நீ செல்வம் இல்லாதவனாகவோ
எதிர்காலம் பற்றிய பார்வை இல்லாதவனாகவோ
உலகியல் வாழ்க்கையில் தவிப்பவனாகவோ
சுற்று உள்ளாராம் ஒதுக்கப்பட்டவனாகவோ -இருக்கிறாயா
வருந்தாதே
அலர் மேல் மங்கை உறை மார்பனான திருவேங்கடமுடையானுடைய திருமலையைச் சென்று அடைவாய்
பக்தர்களோடு இணைந்து கோவிந்தா கோவிந்தா ஓலமிட்டு இந்த திருமலைக்குச் சென்றால் உன்னைக் காத்து அருளுவார்
திருப்பதி வந்தால் திருப்பம் வரும் அன்றோ

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-

வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6—

சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே.–3-3-7-

வேதாந்த விழுப்பொருளின் மேல் இருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனனே

கந்தனையும் சேனாபதி முதல்வனாகிய திருமலை அன்றோ

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

போக ஸ்ரீநிவாசன் -11 மாதங்களில் -சயனம் -நித்ய திருமஞ்சனம்
மார்கழி மாசம் மட்டுமே கண்ணனுக்கு ஆகும் இங்கு

கண்ணனுக்கு நேராகக் காட்டும் ஸ்ரீ வைகுண்டம்
வேதங்களே மலை
ஏழு காண்டங்கள் -ஏழு மலை –தேவர்கள் மிருகம் உருவம் எடுத்து இங்கு உலாவுகிறார்கள் -அன்னமாச்சார்யார்
பசுவும் கன்றுமாக பிரம்மனும் சிவனும் -பால் சொரிந்த வரலாறு -வேங்கடா சால மஹாத்ம்யம்

1-பிரபத்யே தம் கிரிம் ப்ராய ஸ்ரீ நிவாச அனுகம்பயா
இஷூ சார ஸ்ரவந்த்யா இவ யன்மூர்த்யா சர்க்கராயிதம் –

கருப்பஞ்சாறு போன்ற திருமலை -சக்கை கழிந்து மோஷைக ஹேது திருவங்கடமலை -ஸ்திரம்-
சம்சாரிகள் மேலே இரங்கி தானும் நடுங்குவதால் அனுகம்பா என்கிறார் –

ஞானம் இச்சா கிரியை –/கிருபையால் /நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேணுமே -சங்கல்ப அனுகுணம் /
தயை -பர துக்க துக்கித்தவம் / பர துக்க நிராகரண இச்சா-கிரியை -தேசிகன் /
தம் கிரிம் பிரபத்யே –ஸ்ரீ நிவாஸா அனுகாம்பாயா–உச்சைகி நீச வர நீர்மை ஸ்வபாவம் -தயா தேவி -ஈஷூ சாரம் -கரும்பு ரசம் –

ஸ்ரீநிவாஸனுடைய தயை என்பது கருப்பஞ் சாறாகப் பெருகி உள்ளது.
இது ஆறு போன்று ஓடிச் சென்று, சர்க்கரைக் கட்டி போன்று உறைந்து நின்றது.
இப்படிப்பட்ட சர்க்கரை மலையாகிய திருவேங்கடமலையை நான் சரணம் அடைகிறேன்.

ஸ்ரீநிவாஸனின் தயை என்ற குணம் செய்கின்ற செயலையே வேங்கடமலையும் செய்வதால்,
அந்தத் தயை குணமே திருவேங்கட மலையாக நின்றதோ என்று தோன்றுகிறது.

கரும்பின் சக்கைகளை நீக்கி விட்டுச் சாற்றை மட்டும் எடுத்துக் கொள்வது போல் –
ஸ்ரீநிவாஸனிடம் உள்ள “பாவங்களுக்குத் தண்டனை விதிப்பது” போன்ற செயல்களைத் தள்ளி விட்டு,
சாறு போன்ற தயை குணத்தை மட்டும் எடுத்துக் கொள்ளும்

இங்கு தயை குணத்தை, கல் போன்ற ஒரு மலையுடன் ஒப்பிட்டுக் கூறுவது எவ்வாறு பொருந்தும் என்ற கேள்வி எழலாம்.
இதற்குச் சமாதானம் – மலை எவ்விதம் அசையாமல் உள்ளதோ, அது போன்று நம்மிடம்
ஸ்ரீநிவாஸனின் தயை என்பது அசையாமல் உள்ளது என்று கருத்து.

இங்கு உள்ள ஆறு என்பது ஸ்ரீநிவாஸனின் தயையானது, ஆகாச கங்கை போன்ற திருமலையில் உள்ள
நதிகளைப் போன்று உள்ளதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

க்ருத யுகம் -நரசிம்மன்–த்ரேதா -சக்ரவர்த்தி திருமகன் -ராகவ ஸிம்ஹம் -த்வாபர -யாதவ ஸிம்ஹம் -கலவ் வேங்கட நாயகா -வேங்கட ஸிம்ஹம்-கீத உபதேசம்-சரம ஸ்லோக அபிநயம்-மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட பெருமாள்

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்
 திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-

யசோதாப் பிராட்டியே வகுள மாலிகை –
திருக்கல்யாணம் விபவ அவதாரத்தில் காணாத குறை தீர இங்கு கண்டாள்
கண்ணாக இருந்து– பார்வையும் அளித்து– கண்ணினால் பார்க்கப்படுபவனே அவனே –கண்ணன் பெயரை நிலை நிறுத்திக் கொள்கிறான்

நிர்வாஹகன்
மண்ணும் விண்ணும்உடன் உண்ட -கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே
மணியை வானவர் கண்ணனை -நிர்வாஹகன்
-கடாக்ஷ லேசத்தாலே நிர்வஹிக்கிறான் –

எங்கும் உளன் கண்ணன் -கண் -இடம் -ராஸலீலை -பிரம்மனின் அஹங்காரம் முடித்த விருத்தாந்தம் -ஆஸ்ரித பாரதந்த்ர்யம்–பிரதான கல்யாண குணம் -கையாளாய் -பவ்யனாய் –

திரு மறையோர் வாழும் திருவேங்கடம் -கம்பர்
அநந்தாழ்வான் இருந்தமையைக் காட்டி
ஆக இவர் பராசர பட்டர் சிஷ்யர்

திருமலை -சர்வாதிகாரம்
திருவேங்கமுடையான் -அதிகிருதா அதிகாரம்

கிருஷ்ண அவதாரத்தில், பகவான் தன்னுடைய திருக்கரங்களால் கோவர்த்தன மலையைத் தாங்கினார்.
தன்னை ஏந்திய கிருஷ்ணனை, தான் தாங்க வேண்டும் என விரும்பியதாம் கோவர்த்தன மலை.
அதன்படி இந்த கலியுகத்தில் திருப்பதி ஏழுமலையானை திருவேங்கட மலையாய் இருந்து தாங்கி நிற்பதாக புராணங்கள் சொல்கின்றன.
வேங்கடாத்ரி,
சேஷாத்ரி,
வேதாத்ரி,
கருடாத்ரி,
விருஷபாத்ரி,
அஞ்சனாத்ரி,
ஆனந்தாத்ரி எனும் ஏழு சிகரங்களுடன் வேங்கடமுடையானைத் தாங்கி நிற்கிறது, வேங்கட மலை.

வேங்கட மலை:
வேம் என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’.
பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர்.
இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

சேஷ மலை:
பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார்.
இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.

வேதமலை
வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.

கருட மலை:
இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார்.
அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.

விருஷப மலை:
விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான்.
அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.

அஞ்சன மலை:
ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள்.
அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.

ஆனந்த மலை:
ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார்.
இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர்.
இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.

ஒருமுறை பூமாதேவியைப் பாயாகச் சுருட்டி பாதாளத்தில் அடைத்து வைத்தான் இரண்யாட்சன் என்னும் அசுரன்.
திருமால் பூமாதேவியைக் காக்கும் பொருட்டு வராகமாக அவதரித்தார்.
பின்பு இரண்யாட்சனுடன் போரிட்டு அவனைக் கொன்று பூமாதேவியை மீட்டார்.
பூமித்தாயை தன் மடியில் தாங்கி வராக மூர்த்தியாய் தேவர்களுக்கு காட்சிக்கொடுத்தார்.
அப்போது பிரம்மதேவன் திருமாலை வேண்டி, ‘வராக மூர்த்தியாகியத் தாங்கள், கலியுக மக்களைக் காக்கும் பொருட்டு
திருவேங்கடத்தின் சேஷாத்ரி சிகரத்தில் எழுந்தருளவேண்டும்’ என்றார்.
அதன்படி வராகமூர்த்தி திருமலை எனும் திருவேங்கடத்தில் எழுந்தருளினார்.

திருவேங்கடம் என்பதற்கு இருவகை பொருளுண்டு.
ஒன்று தன்னை அண்டியவர்களுடைய பாவங்களை எரித்துவிடுதல்
மற்றொன்று தன்னை அண்டியவர்களுக்கு அழிவில்லாத ஐஸ்வரியங்களைத் தருதல் .
சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இத்தலத்தை திருவேங்கடம் என்றே குறிக்கின்றன.
திருமலையை மேல்திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.
திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என்பதால், இதற்கு ‘திருப்பதி’ என்ற பெயர் வந்தது.

கோவில் வரலாறு : தொண்டைமான் எனும் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன்
முதன் முதலாக கோவில், பிரகாரம் கட்டி தினசரி வழிபாட்டிற்கு வழிசெய்தான் எனக் கூறப்படுகிறது.
அவனைத் தொடர்ந்து பல சோழ மன்னர்கள் பல சேவைகளை செய்துள்ளனர்.
ஆனால் இன்றுள்ள வளங்களில் பெரும்பாலானவை விஜயநகர பேரரசுக் காலத்தில் வந்தவை.
கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்கு பலவசதிகளை செய்து கொடுத்து எக்கச்சக்கமான தங்க வைர ஆபரணங்களையும் பரிசளித்தார்.

1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம்
ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது.
1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது.
1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது.

————–—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருவேங்கடம்

March 24, 2024

மூலவர் -திருவேங்கடமுடையான் -ஸ்ரீ நிவாஸன் -நின்ற திருக் கோலம் –கிழக்கே திரு முகமண்டலம்
தாயார் -அலர் மேல் மங்கை -பத்மாவதித் தாயார்
விமானம் –ஆனந்த நிலய விமானம்
தீர்த்தம் -நித்ய புஷ்கரிணி -ஸ்வாமி புஷ்கரிணி -கோனேரி தீர்த்தம் –பாப விநாசினி –ஆகாச கங்கை –
மங்களா சாசனம் -பொய்கையாழ்வார் –பூதத்தார் –பேயார் –திரு மழிசையாழ்வார் –நம்மாழ்வார் –குலசேகராழ்வார்
–பெரியாழ்வார் –ஆண்டாள் –திருப் பாண் ஆழ்வார் –திரு மங்கை ஆழ்வார்

வராஹப் பெருமாள் ஹிரண்யாக்ஷனை முடித்து இங்கு ஒய்வு எடுத்த படியால் -இது ஆதி வராஹ க்ஷேத்ரம் –
ப்ருகு முனிவர் பெருமானைத் திரு மார்பில் உதைக்க லஷ்மி கோபப்பட்டு கோல்ஹா பூரில் த்வம் செய்யச் சென்றாள்-
திருமால் லஷ்மியை அடைய இங்கு வந்து த்வம் புரிந்தார் –
ஸ்வயம் வியக்த க்ஷேத்ரம் –
வ்ருஷாத்ரி –முதல் யுகம் /அஞ்சனாத்ரி / சேஷாத்ரி –வாயு -ஆதி சேஷன் / க்ரீடாத்ரி -விளையாட்டு
-நாராயணாத்ரி -கருடாத்ரி -/ வேங்கடாத்ரி -கலி யுகம்
ஆகாச ராஜன் சகோதரர் தொண்டைமான் சக்கரவர்த்தி
தாரிணி தேவி -ஆகாச ராஜன் மனைவி -பெயர் –
வகுள மாலிகை – இன்றும் மடப்பள்ளி நாச்சியார்
சுகாச்சார்யார் -திருச் சுகவனூர் –
10 புராணங்களில் ஸ்ரீ நிவாஸன் மஹாத்ம்யம் உண்டே-

மூலவர் ஸ்ரீ திருவேங்கடமுடையான், ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள்
கோலம் நின்ற, சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ மலையப்பஸ்வாமி, ஸ்ரீ கல்யாண வேங்கடவர், ஸ்ரீ போக ஸ்ரீநிவாசர்
தாயார் ஸ்ரீ அலர்மேல் மங்கை
தீர்த்தம் ஸ்ரீ ஸ்வாமி புஷ்கரணி, ஸ்ரீ சேஷாச்சல ஸ்வாமி புஷ்கரணி
விமானம் ஸ்ரீ ஆனந்த நிலைய விமானம்
மண்டலம் வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் ஆந்திரபிரதேசம்
அடிப்படை இடம் ஸ்ரீ திருப்பதி
நாமாவளி ஸ்ரீ அலர் மேல் மங்கைத் தாயார் ஸமேத ஸ்ரீ திருவேங்கட ஸ்வாமிநே நமஹ

————————-

ரிக்வேதம் போற்றும் திருவேங்கடம்

“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே, சிரிம்பிடஸ்ய ஸத்த்வபி:
தேபிஷ்ட்வா சாதயாமஸி” என்ற ரிக் வேத மந்திரம்
திருமலையைப் புகழ்கிறது. ஏழைகள், எதிர்காலம் பற்றிய அறிவில்லாதவர்கள், துன்பப்படுபவர்கள்,
சுற்றதாரின் ஆதரவு அற்றவர்கள் ஆகிய அனைவரும் பக்தர்களோடு இணைந்து
ஸ்ரீநிவாசன் திகழும் திருமலைக்குச் சென்று, அப்பெருமாளின் திரு வடிகளில் அடைக்கலம் புகுந்தால்
அவன் காத்தருள்வான் என்பது இம்மந்திரத்தின் பொருள்.

———————————

ஸ்ரீ பெரியாழ்வார் -7-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -16-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமழிசைப் பிரான் -15-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -61-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -52-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் பாசுரம் -9-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -19-பாசுரங்கள் மங்களாசாசனம்

மொத்தம் -202-பாசுரங்கள் மங்களாசாசனம்

———

ஸ்ரீ பெரியாழ்வார் -7-பாசுரங்கள் மங்களாசாசனம்

சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்-
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேம்கடம் வாணன் உன்னை விளிக்கின்ற
கைத் தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா -1 4-3 –

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியானே அச்சோ அச்சோ வேம்கட வாணனே அச்சோ அச்சோ -1-8-8- –

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
என் இலங்கு நாமத்து அளவும் அரசு என்ற
மின் இலங்கு ஆரற்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணற்க்கு ஓர் கோல் கொண்டு வா -2 6-9 –

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய்
பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் 2-7 3- –

போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
கோதுகுலமுடை குட்டனேயோ குன்று எடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே – 2-9 -6- –

கடியார் பொழில் வேம்கடவா கரும் போரேறே நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொள்ளாதே போனாய் மாலே
கடிய வெம் காநிடை கன்றின் பின் போன சிருக் குட்ட செம் கமல
வடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் -3 3-4 –

———–

ஸ்ரீ ஆண்டாள் -16-பாசுரங்கள் மங்களாசாசனம்

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –1-1-

மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு
முப்போது முன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து
வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும்
விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–1-3-

காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே-–4-2-

வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்–5-2-

விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்
தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திரு மாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே –8-1-

மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே
காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே—8-2-

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு
என்னகத் திளம் கொங்கை விரும்பித் தாம் நாடோறும்
பொன்னகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே –8-4-

வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறப் பொழிவீர் காள்
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே–8-5-

சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை
நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள்
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே–8-6-

சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள் வேங்கடத்துச்
செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள்
தங்கு மேல் என்னாவி தங்கும் என்றும் உரையீரே–8-7-

கார் காலத்து எழுகின்ற கார் முகில் காள் வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத் தெருக்கில் அம்பழ விலை போல் வீழ்வேனை
வார் காலத்தொரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே –8-8-

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-

நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே–8-10-

பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல்வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து
கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே –10-5-

மழையே மழையே மண் புறம் பேசி உள்ளாய் நின்ற
மெழுகூற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட
தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே–10-8-

————

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்

ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –4-1-

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்
மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே— 4-2-

பின் இட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும்
துன்னிட்டு புகல் அரிய வைகுண்ட நீள் வாசல்
மின் வட்ட சுடர் ஆழி வேம்கட கோன் தான் உமிழும்
பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே– 4-3-

ஒண் பவள வேலை வுலவு தண் பாற் கடலுள்
கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே –4-4-

கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே –4-5-

மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே –4-6-

வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் தம்
கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல்
கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே– 4-7-

பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெரு வேள்வி குறை முடிப்பான் மறை யானான்
வெறியார் தண்சோலை திருவேங்கட மலை மேல்
நெறியாய் கிடக்கும் நிலை வுடையேன் ஆவேனே– 4-8-

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9-

உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–

மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே 4-11-

————–

ஸ்ரீ திருமழிசைப் பிரான் -15-பாசுரங்கள் மங்களாசாசனம்

குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே -திருச்சந்தவிருத்தம்–48-

செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட வுயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று
எழுந்து இருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக் கொழும்
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –-திருச்சந்தவிருத்தம்60-

கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ –-திருச்சந்தவிருத்தம்-81-

குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்–நான்முகன் திருவந்தாதி 34-

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு -நான்முகன் திருவந்தாதி –39-

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்–நான்முகன் திருவந்தாதி 40-

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -நான்முகன் திருவந்தாதி -41-

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மை யால் -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு–நான்முகன் திருவந்தாதி 42–

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு–நான்முகன் திருவந்தாதி -43-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் திருவந்தாதி -44-

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு–நான்முகன் திருவந்தாதி -45-

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று -நான்முகன் திருவந்தாதி -46-

நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் –நான்முகன் திருவந்தாதி -47-

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் -வேங்கடமே
தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை-நான்முகன் திருவந்தாதி -48-

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து
வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-நான்முகன் திருவந்தாதி -90-

———————

ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–

————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -61-பாசுரங்கள் மங்களாசாசனம் –

கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே—–1-8-1-

பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2-

நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே —-1-8-3-

பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்தங்காயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெம் கோவலன்
ஏத்துவார் தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய வெம்பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-4-

வண் கையான வுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய வெம்பிரான்
திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-5-

எண் திசைகளும் ஏழு உலகமும் வாங்கிப் பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன் பான் மதிக்கிடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாய் அவன் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-6-

பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமுமிவை யாயினான்
பேருமாயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம்
காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோருமா முகில் தோய் தர
சேரும்வார் பொழில் சூழ் எழில் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-7-

அம்பர மனல் கால் நிலம் சலமாகி நின்ற வமரர் கோன்
வம்புலா மலர் மேல் மலி மட மங்கை தன் கொழுநன் அவன்
கொம்பின்னன விடை மடக் குற மாதர் நீளிதணம் தொறும்
செம்புனமவை காவல் கொள் திருவேம்கடம் அடை நெஞ்சே—1-8-8-

பேசுமின் திருநாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம்
வாச மா மலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக் கெல்லாம்
தேசமாய்த் திகழும் மலைத் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-9-

செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேம்கடத்துறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே-1-8-10-

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே—1-9-1-

மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-2-

கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோளொன்றி லாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர் குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-3-

குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன்
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-4-

எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்
துப்பா நின்னடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-5-

மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுளாவு மாகாசமுமாம்
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்
விண்ணார் நீள் சிகர விரையார் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-6-

தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயின பின் பிறர்க்கே வுழைத்து ஏழை யானேன்
கரிசேர் பூம் பொழில் சூழ் கனமா மலைவேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-7-

நோற்றேன் பல் பிறவி உன்னைக் காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம்பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-8-

பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-9-

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே—1-9-10-

கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா வடியேன் இடரைக் களையாயே–1-10-1–

இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர்
குலம் கெட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே–1-10-2-

நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மா மலை மேய
ஆராவமுதே அடியேற்கு அருளாயே–1-10-3-

உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக
கொண்டாய் குறளாய் நிலமீரடியாலே
விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே-1-10-4-

தூணாய தனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா வவுணனுடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மா மலை மேய
கோணா கணை யாய் குறிக்கொள் எனை நீயே-1-10-5-

மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை
மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய
என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே–1-10-6-

மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த
ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே திருவேங்கட மா மலை மேய
கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே–1-10-7-

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள்
வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே–1-10-8-

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே–1-10-9-

வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் வர் வானவர் ஆகுவர் தாமே–1-10-10-

வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து மாதவ
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை
கான வரிடு கார்கில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குற
ளான வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1-

உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை
மண் மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என்நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவனாயாக்ற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-2-

இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக்
கொண்டு போயிடவும் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
வண்டு வாழ் வட வேங்கடமலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-3-

பாவியாது செய்தாய் என்னெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை
மேவி யாட் கொண்டு போய் விசும்பேற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்கட மலை யாண்டு வானவர்
ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-4-

பொங்கு போதியும் பிண்டியும் உடைப் புத்தர் நோன்பியர் பள்ளியுள் ளுறை
தங்கள் தேவரும் தாங்களுமேயாக என்னெஞ்சம் என்பாய்
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்றருள்
அங்கணாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-5-

துவரி யாடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் நந்தி யுண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என்னெஞ்சம் என்பாய்
கவரி மாக் கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-6-

தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவாரலக்கண் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-7-

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்தே
என்னெஞ்சம் என்பாய் எனக்கு ஓன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-8-

கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்னெஞ்சம் என்பாய் துணிந்து கேள்
பாடி யாடிப் பலரும் பணிந்து ஏத்திக் காணகிலா
ஆடு தாமரை யோனும் ஈசனும் அமரர் கோனும் நின்றேதும் வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-9-

மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே—2-1-10-

அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை
மின் திகழ் குடுமி வேங்கடமலை மேல் மேவிய நல் வேத விளக்கைத்
தென் திசை திலதம் அனையவர் நாங்கைச் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-8-

வேடார் திருவேங்கடம் மேய விளக்கே
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்தாய்
பாடாவருவேன் வினையாயின பாற்றே –4-7-5-

வாம்பரி யுக மன்னர் தம் உயிர் செக ஐவர் கட்கு அரசளித்த
காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை யருள் எனக்கு
மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனி தேனது நுகர் திரு வெள்ளறை நின்றானே-5-3-4-

வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
மருவாள் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே–5-5-1-

சிந்தனையைத் தவநெறியைத் திருமாலைப் பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே-5-6-7-

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே -6-8-1-

ஆங்கு வென்னரகத்து அழுந்தும் போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தங்கு தாமரை யன்ன பொன்னாரடி எம்பிரானை யும்பர்க்கு அணியாய் நின்ற
வேங்கடத்தரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட
தீங்கரும்பினைத் தேனை நன்பாலினை யன்றி என் மனம் சிந்தை செய்யாதே —7-3-5-

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலி மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனிமா மதி யந்தவள்
மங்குலைச் சுடரை வடமா மலை யுச்சியைநச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப் பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-3-

அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ -8-2-3-

பண்ணுலா மென் மொழிப் பாவைமார் பணை முலை யணைது நாம் என்று
எண்ணுவார் எண்ணமது ஒழித்து நீ பிழைத்து உய்யக் கருதினாயேல்
விண்ணுளார் விண்ணின் மீதியன்ற வேங்கடதுளார் வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்ல வாழ் சொல்லுமால் வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-4-

வலம்புரி யாழியானை வரையார் திரடோளன் தன்னைப்
புலம் புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனைச்
சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்சோலை நின்ற
நலந்திகழ் நாரணனை நணுகும் கொல் என் நன்னுதலே –9-9-9-

பொன்னை மா மணியை யணி யார்ந்ததோர்
மின்னை வேங்கடத் துச்சியில் கண்டு போய்
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே—10-1-2-

சொல்லாய் பைங்கிளியே
சுடராழி வலனுயர்த்த
மல்லார் தோள் வட வேங்கடவனை வரச்
சொல்லாய் பைங்கிளியே —10-10-5-

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே–11-3-7-

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே –11-5-10-

நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய்
நிலாத் திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெக்கா வுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் யுலகமேத்தும்
காரகத்தாய் கார் வனாத்துள்ளாய் கள்வா
காமரு பூம் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே –

வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர்
மல்லையாய் மதிட்கச்சி யூராய் பேராய்
கொங்குத்தார் வளம் கொன்றை யலங்கல் மார்வன்
குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்
பங்கயத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
பனி வரையின் உச்சியாய் பவளவண்ணா
எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி
ஏழையேன் இனி இங்கனே உழி தருகிறேனே–9-

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்ற மரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே–16-

காரார் திருமேனி காணுமளவும் போய் சீரார் திருவேண்கடமே திருக்கோவலூரே –சிறிய திருமடல் – 69

என்னும் மலர்ப் பிறையாலேய்ந்த – மழைக் கூந்தல் தென்னனுயர் பொருப்பும் தெய்வ வட மலையும் –பெரிய திருமடல் – 6

தெந்தில்லைச் சித்திர கூடத்து என் செல்வனை மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை –பெரிய திருமடல் – 124

——————-

ஸ்ரீ நம்மாழ்வார் -52-பாசுரங்கள் மங்களாசாசனம்

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —திருவிருத்தம் -8-

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ ஆடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10-

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே – –31-

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – 50-

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60- –

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு அசுரைச் செற்ற
மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – – 67- –

உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
இறுகின்ற தாலிவாளகம் மெல்லாவி எரி கொள்ளவே – – -81 –

கண்ணாவான் என்றும், மண்ணோர் விண்ணோர்க்குத்
தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே–-திருவாய்மொழி – -1-8-3-

எந்தாய்!தண் திருவேங்கடத்துள் நின்றாய்! இலங்கை செற்றாய்! மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா!
கொந்து ஆர் தண் அம் துழாயினாய்! அமுதே! உன்னை என்னுள்ளே குழைந்த எம்
மைந்தா! வான்ஏறே! இனி எங்குப் போகின்றதே?–2-6-9-

போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர்
ஆகின்றாய்! உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே! பரமா! தண் வேங்கடம்
மேகின்றாய்! தண் துழாய் விரை நாறு கண்ணியனே!–2-6-10-

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலமுண்டவனை
ஆமோதரமறிய ஒருவர்க் கென்றெ தொழுமவர்கள்
தாமோதரனுருவாகிய சிவற்கும் திசைமுகற்கும்
ஆமோதரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே.–2-7-12-

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே–3-3-1-

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே–3-3-2-

அண்ணல் மாயன் அணி கொள் செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க் கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த் திரு வேங்கடத்து
எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே–3-3-3-

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என் கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே–3-3-4-

சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5-

வேங்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந்தார்கட்கே–3-3-6-

சுமந்து மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே–3-3-7-

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8–

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள் மலராம் அடித் தாமரை
வாயுள்ளும் மமனத்துள்ளும் வைப்பார்கட்கே–3-3-9-

வைத்த நாள் வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந் தடந் தாள்வரை–3-3-10-

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே–3-3-11-

வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப் படுவாரே–3-5-8-

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம் பெருமான் உளனாகவே–3-9-1-

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே–4-5-11-

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கரு நிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே–6-6-1-

சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு
செங் கனி வாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே–6-6-2-

நிறங் கரி யானுக்கு நீடுலகு உண்ட
திறங் கிளர் வாய்ச் சிறுக் கள்வ னவர்க்கு
கறங்கிய சக்கரக் கை யவனுக்கு என்
பிறங் கிருங் கூந்தல் இழந்தது பீடே–6-6-3-

பீடுடை நான் முகனைப் படைத்தானுக்கு
மாடுடை வையம் அளந்த மணாளற்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே–6-6-4-

பண் புடை வேதம் பயந்த பரனுக்கு
மண் புரை வையம் இடந்த வராகற்கு
தெண் புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே–6-6-5-

கற்பகக் காவன நற் பல தேளாற்கு
பொற் சுடர்க் குன்றன்ன பூத் தண் முடியற்கு
நற் பல தாமரை நாண் மலர்க் கையற்கு என்
விற் புருவக் கொடி தோற்றது மெய்யே–6-6-6-

மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு
பையரவின் அணைப் பள்ளியி னானுக்கு
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்குஎன்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.–6-6-7-

சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம் படப் பாலுண் பிரானுக்கு என்
வாசக் குழலி இழந்தது மாண்பே–6-6-8-

மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண் சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண் பெருந் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே–6-6-9-

பொற்பமை நீண் முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே–6-6-10-

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சடகோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்துஇப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே–6-6-11-

உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே–6-10-1-

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல் லசுரர் குல மெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திரு வேங்கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே–6-10-2-

வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திரு வேங்கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே–6-10-3-

ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திரு மா மகள் கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்து மாறு புணராயே–6-10-4-

புணரா நின்ற மரமேழ் அன்றெய்த ஒரு வில் வலவாவோ!
புணரேய் நின்ற மர மிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துன பாதம் சேர்வ தடியேன் எந் நாளே–6-10-5-

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இன மினமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந் நாள் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7-

நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங் கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8-

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந் தாமரைக் கட் செங்கனி வாய் நாற் றோளமுதே! என துயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே-6-10-9-

அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே!
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே–6-10-10-

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென் றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திரு வேங்கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே–6-10-11-

நங்கள் வரி வளை யாயங்களோ நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தட முலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-

இன்றிப் போக இரு வினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே–9-3-8-

மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

—————–

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசை திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர் -37–

ஊரும் வரியரவ மொண் குறவர் மால் யானை
பேர வெறிந்த பெரு மணியை காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர்
எம்மென்னு மால திடம் –38-

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடநதது கஞ்சனை முன்னஞ்ச கிடந்ததுவும்
நீரோத மா கடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது-39–

பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனந்துறந்த வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டஞ்சும் வேங்கடமே மேலசுரர்
கோன் வீழக் கண்டுகந்தான் குன்று -40—

உணர்வாரார் உன் பெருமை ஊழி தோறு ஊழி
உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் ——-68-

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் –76-

வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர் –77-

படையாரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம்
தொடையலோ டேந்திய தூபம் இடையிடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே லோரு நாள்
மானமாய வெய்தான் வரை -82-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் -99-

———————

ஸ்ரீ பூதத்தாழ்வார் பாசுரம் -9-பாசுரங்கள் மங்களாசாசனம் –

சென்றது இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது இராவணனைக் கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து –25-

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை—33–

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

—————————-

ஸ்ரீ பேயாழ்வார் -19-பாசுரங்கள் மங்களாசாசனம் –

மாற்பால் மனம் கழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து ——-14-

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார் ——–26–

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை —-30–

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன் —–39-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-

தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோருநாள்
மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-58-

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63-

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த
கள்ங்கனிக்கிக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-68-

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —–70-

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி -பிளிறி
விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–71-

குன்று ஒன்றினாய குற மகளிர் கோல் வளைக்கை
சென்று விளையாடும் திங்கழை போய் -வென்று
விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர் கோமான் இடம் —–72-

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி
வடமுக வேங்கடத்து மன்னும் -குட நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள நலம் ——73-

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு —–75-

முடிந்த பொழுதில் குறவாணர் ஏனம்
படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலோருநாள்
தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———-89-

வேங்கடமெனில் பாவங்களைச் சுட்டெரிக்கக் கூடியது என்ற பொருள்கொண்ட இத்தலத்தைப்பற்றி பிர்ம்மாண்ட புராணம், வராக புராணம்
ஸ்காந்த புராணம் பாத்ம புராணம், என்ற புராணங்கள் வாயிலாக அறியப்படுகிறது. எண்ணற்ற நூல்களில் இத்தலம் பற்றிய பல குறிப்புகள்
கிடைக்கிறது. எண்ணற்ற மொழிகளில் இத்தல வரலாறு எழுதப்பட்டுள்ளது.
எழுத்து வடிவம் பெறாமல் ஒலிவடிவிலேயே இன்றும் இருந்து கொண்டிருக்கும் சில மொழிகளில் எண்ணற்ற வருடங்கட்கு முன்னால் இப்பெருமானைக்
குறித்துச் செய்யப்பட்ட ஸ்தோத்திரங்கள் இன்னும் ஒலிவடிவாகவே தொடர்ந்து பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டு (ஸேவிக்கப்பட்டு) வருகிறது.

இத்தலம் பற்றி எழுதப்புகின் அல்லது அறியப்புகின் கிடைக்கின்ற ஆதாரங்களும், விவரங்களும் ஏராளம் ஏராளம்.

இத்திருமலைக்கு ஒவ்வொரு யுகத்திலும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியால் ஒவ்வொரு விசேடமான பெயர் வழங்கி வந்தது.
கிரேதாயுகத்தில்-கருடாத்ரி அல்லது கிரிடாத்திரி

திரேதாயுகத்தில்-வ்ருஷபாத்ரி

துவாபர யுகத்தில்-  அஞ்சனாத்ரி

கலியுகத்தில்-வேங்கடாத்ரி (வேங்கடாசலம்)

இத்திருமலையில் வைகுண்ட வாசனான ஸ்ரீனிவாசப் பெருமாள் மிகவும் விருப்பங்கொண்டு நேரில் வரவிரும்பி அவ்விதமே அவதார ரூபத்தில்
எழுந்தருளி வசித்துவருவதாகவும் கலியுகம் முடியும்வரை பக்தர்களின் குறை தீர்க்க இங்கேயே வசித்து வருகிறாரென்றும் அதன் காரணமாகவே முப்பத்து
முக்கோடி தேவர்களும் சகல ரிஷிகளும், இத்திருமலைமேல் வந்த எம்பெருமானைத் துதித்தவண்ணம் வாழ்ந்து வருகின்றனர்

7 பர்வதங்களான வெங்கடாத்ரி, சேஷாச்சலம், வேதாசலம், கருடாசலம் வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, அனந்தாத்ரி என்னும் பெயர்களுடன்
ஏழுமலையாக இலங்கிவரும் இத்திருமலையில் 7 மலைகட்கு மத்தியில் ஸ்ரீனிவாசன் எழுந்தருளியுள்ளார்.

ஸ்ரீனிவாசனாகப் பெருமாள் இங்கு எழுந்தருளுவதற்கு முன்பே வராக மூர்த்தியாக இவ்விடத்து எழுந்தருளி வராகரூபியாய் காட்சி தந்தருளினார்.
வராகச் சேத்திரம் என்றே ஒருகாலத்தில் இது புகழ்பெற்றிருந்தது. தற்போதும் இங்குள்ள ஸ்வாமி புஷ்கரிணிக்கு அருகில் அமைந்துள்ள ஆதிவராகரைச்
சேவித்தபின்பே ஸ்ரீனிவாசனைச் சேவிக்கச் செல்ல வேண்டுமென்பது நியதி.

பாண்டவர்களின் நாயகன் தர்மபுத்திரனான யுதிஷ்ட மகாராஜனின் ஆட்சிக்காலம் முடிவுற்றதும் இப்புவியில் கலியுகம் பிறக்கத் தொடங்கியது.
எங்கும் கலியின் கொடுமை தாங்கவொன்னாததாயிருந்தது. உலகம் நாளுக்கு நாள் அழிவை நோக்கிச் செல்வதைக் காணப்பொறாத முனிவர்கள், கலியின் கொடுமை குறைந்து உலக நன்மைக்காக காஷ்யப மகரிஷியின் தலைமையில் ஒரு பெரிய யாகம் நடத்திக்கொண்டிருந்த போது, அங்கு வந்த நாரதர் இந்த மகாயக்ஞத்தின் பயனை எந்த மூர்த்திக்கு அளிக்கப் போகிறீர்கள் என்று கேட்க அவர்களும் வழக்கப்படியான முறைப்படி பிரம்மா, விஷ்ணு ருத்ரன் என்னும் மும்மூர்த்திகட்குத்தான் வழங்கப்போகிறோம் என்று சொல்ல அதைக் கேட்ட நாரதர் மற்ற யுகங்களுக்குத்தான் அது பொருந்தும், கலியுகத்தில் மானிடர்களிடம் காணப்படும் சகல பாவங்களையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளும் மூர்த்தி யாரோ அவருக்குத்தான் தரவேண்டும் என்றார்.

இதைக்கேட்ட முனிவர்கள் மும்மூர்த்திகளில் மிகப் பொறுமைசாலி யார் என்பதைக் கண்டுபிடிக்கும் வல்லமை நம்மில் யாருக்குள்ளதென்று ஆராய
அனைவரும் ஒன்றுகூடி அந்த வல்லமை பிருகு மஹரிஷிக்குத்தான் உண்டு என்று தீர்மானித்து அவரையே மூவுலகுக்கும் அனுப்ப எண்ணினர். அவரும்
அதற்கு இசைந்தார்.

பிருகு முதலில் பிரம்மாவின் சத்திய லோகத்திற்கு வந்தார். அங்கு பிரம்மன் சரஸ்வதி தேவியுடன் ரிஷிகள் புடைசூழ கொலுவீற்றிருந்தார். தான்
வந்ததை பிரம்மன் கண்டும் காணாததுபோல் இருக்கிறான் என்று நினைத்த பிருகு பிரம்மதேவனுக்கு நேரில் வந்து கோபக்கனல் வீச நின்றார். அப்போதும்
பிரம்மன் இவன் நரன்தான் என்று எண்ணி அலட்சியப்பார்வை பார்த்து வரவேற்காது இருந்தார். இதனால் கோபத்தின் எல்லையை அடைந்த பிருகு ஏ
பிரம்மனே நீ வந்தோரை வரவேற்கும் பக்குவமறியாது, மமதை கொண்டுள்ளாய் எனவே உனக்கு பூலோகத்தில் இனிமேல் பூஜைகள் இருக்காது. கலியுகத்தில் உனக்கு பூவுலகில் கோவில்களும், வழிபாடுகளும் இல்லாமல் போகக்கடவது என்று சபித்துவிட்டு கைலாயத்திற்கு வந்தார்.

கைலாயத்தில் சிவன் உமையவளோடு அந்தப்புரத்தில் ஏகாந்தத்தில் தனித்திருக்க, சிவன் எதிரிலே சென்று நின்றார் தான் ஏகாந்தத்தில் இருக்கும்
வேலையில் அனுமதியின்றி உள்ளே நுழைந்த பிருகுவின் மீது தனது சூலாயுதத்தை ஏவினார். அதிலிருந்து தன்னைக் காத்துக்கொண்ட பிருகு இவன்
கோபக்காரன் அவன் அலட்சியக்காரன் இவ்விருவரும் பொறுமைசாலிகள் இல்லை யென்று தீர்மானித்ததோடு சிவனை நோக்கி என்போன்ற ரிஷிகள்
எந்த நேரத்தில் எந்த நிலையில் வந்தாலும் வரவேற்பதே உன்போன்றவர்களின் கடமை. அதைவிடுத்து என்மீது கோபம் கொண்டாய். எனவே கலியுகத்தில்
பூவுலகில் நீங்கள் இருவரும் (சிவன், உமை) சேர்ந்தது மாதிரியான கோவில்கள் இல்லாமல் போகக் கடவது என்று சபித்துவிட்டு வைகுண்டம் அடைந்தார்.

அங்கே திருமகள் பாதம் வருட அறிதுயிலமர்ந்த மணிவண்ணன் சற்றேனும் இவரை ஏறெடுத்து பார்க்கவில்லை. மஹாவிஷ்ணு திருமகளை
நோக்க திருமகள் மஹாவிஷ்ணுவை நோக்கி அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள் என்ற வண்ணமிருக்க வெகுநேரம் காத்திருந்தார்.
கொஞ்சமும் பயனில்லை. மற்றிரண்டுலோகங்களில் கிடைத்த மரியாதை கூட இங்கு இல்லை. மூம்மூர்த்திகளில் எவனுக்கும் பொறுமையில்லை என்று
எண்ணி மிகவும் வெகுண்டார். எனவே மிக விரைந்த நடையினராய் திருமாலை நோக்கிச் சென்றார். அப்போதும் அவர் திரும்பிப் பார்க்கவுமில்லை.
எனவே தனது காலால் திருமாலின் நெஞ்சில் எட்டி உதைத்தார் (கலியுகமல்லவா, அங்கிருந்து வந்த முனிவரல்லவா)

திடீரென்று அறிதுயில் களைந்த திருமால் அம்முனிவரின் பாதத்தைப் பற்றிக்கொண்டு ஐயோ பாறை போன்ற என் மார்பில் உதைத்த தங்கள் பாதங்கள் எப்படி நோகிறதோ என்று அந்தப்பாதத்தை  தமது இருகரங்களால் தாங்கி நீவி விட ஆரம்பித்தார்.

தன் தவற்றை உணர்ந்த பிருகு கண்களில் தாரை தாரையாக நீர்பெருக்கெடுக்க மன்றாடி மன்னிப்புக் கேட்டு மனம் பதைபதைக்கத் தான்
வந்த காரியத்தையும் தெரிவித்து விட்டு நடந்த உண்மைகளை நாவலந்தீ வினில் உரைக்க திரும்பலுற்றார்.

என்னதான் இருந்தாலும் தன்முன்னே தனது மணாளனை முனிவர் ஒருவர் உதைத்ததை பொறுக்கவியலாத மகாலட்சுமி வைகுண்டத்தைவிட்டு
விலகி பூவுலகுக்கு வந்து மறைந்திருந்து தவம் செய்து வரலாயினர். திருமகள் இல்லாத வைகுண்டம் களையிழந்தது. திருமாலுக்கு திருமகளின் பிரிவு
தாங்கவொன்னாத துயரைத் தந்தது. எனவே தாமும் பூலோகம் புகுந்து தம் மனதிற்கு ரம்மியமான சூழ்நிலையில் இலங்கிய திருமலையில் ஒரு
புளியமரத்தின் புற்றில் எழுந்தருளி வசித்து வரலாயினர்.

இஃதிவ்வாறிருக்க திரேதா யுகத்தில் குசத்துவசர் என்னும் மகரிஷியின் தபோ வலிமையால் திருமகள் அவருக்கு புத்திரியாக அவதரித்து வேத
அலங்கார ரூபத்துடன் சகல வேதங்களின் சாராம்சம் அறிந்த பேரொளியாய் வேதவல்லி (வேதவதி) என்ற பெயருடன் வளர்ந்துவரத் தக்க
பிராயத்தையடைந்த வேதவதிதான் ஸ்ரீவிஷ்ணுவுக்கே மாலையிட்டு அவனையே மணம் முடிக்க வேண்டும் அதற்கு மார்க்கமுண்டோ என்று தந்தையை வினவ அவரும் ஸ்ரீவிஷ்ணுவைக் குறித்தே தவமிருக்குமாறு சொல்ல வேதவதி விஷ்ணு தியானத்தில் ஆழ்ந்தார்.

திரேதாயுகத்தில் இராமவதாரத்தின்போது இராவணன் பஞ்சவடியிலிருந்து சீதா தேவியைத் தூக்கிச் செல்லும் போது வேதவதியுடன் சென்ற அக்னி
தேவன் ராவணனை நிறுத்தி ஏ, இராவணா நீ கொண்டு செல்லும் சீதை போலிச் சீதை உண்மையான சீதையை இதோ என்னிடம் ஒளித்து
வைத்தார்கள் நின் கோபத்திற்கு ஆளாகி பின்னால் துன்பப்படக்கூடாது என்பதற்காகவே உன்னிடம் உண்மையைக் கூறுகிறேன். இந்த உண்மைச்
சீதையை ஏற்றுக்கொள் என்று கூற அதை நம்பிய ராவணன் வேதவதியைக் கொண்டு செல்ல, உண்மைச் சீதை அக்னியிடம் சேர்ந்தாள்.

இராமன், இராவண வதம் முடித்து சீதையை அக்கினியில் இறக்க கற்புக்கரசிகளான இரண்டு சீதைகளையும் அக்கினிதேவன் இராமனிடம்
ஒப்படைக்க உண்மைச் சீதையை ஏற்றுக்கொண்ட இராமன், வேதவதியின் தவத்தை மெச்சி இந்த அவதாரத்தில்
நான் ஏகபத்தினி விரதன். எனவே கலியுகத்தில் யான் திருமகளை விடுத்து பூவுலக வாசம் செய்யும் போது நின்னை அடைவோம் என்று வரமீந்தார்.

அந்த வேதவதியே, கலியுகத்தில் சந்திரவம்சத்தைச் சார்ந்த ஆகாச ராஜன் என்னும் மன்னன். புத்திரப்பேறு வேண்டி செய்த புத்திர காமேஷ்டி
யாகத்தில் ஒரு பெண் மகவாகத் தோன்றி பத்மாவதி என்னும் பெயரில் அம்மன்னனிடம் வளர்ந்து வந்தாள்.

இஃதிவ்வாறிருக்க ஸ்ரீகிருஷ்ணவதாரத்தில் கண்ணனை யசோதை வளர்த்தாள். ஆயினும் கண்ணன் ருக்குமணியையும், சத்தியபாமாவையும்
திருமணம் செய்து கொண்ட சுப நிகழ்ச்சியை யசோதை காணவில்லை. தன் குழந்தையின் திருமணக் கோலத்தைக் காணமுடியவில்லையே என்ற
மனக்குறையை கலியுகத்தில் தீர்த்துவைப்பேன் என்று ஸ்ரீகிருஷ்ணன் தன் அன்னைக்கு ஆறுதல் வரம் தந்திருந்தார்.

இந்த யசோதையே வகுளமாலிகை என்ற பெயரில் திருமலையில் இருந்த வராக மூர்த்திக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். திருமலயில்
புளியமரத்தடியில் ஒரு புற்றில் எம்பெருமான் எழுந்தருளி நெடுநாள் அன்ன ஆகாரமின்றி இருக்க இந்நிலைகண்ட பிரம்மனும் சிவனும் தாங்களே முறையே
பசுவும் கன்றுமாக மாற பூமாதேவி ஒரு இடைக்குல பெண்ணாக அவதரித்து அந்த பசுவினையும் கன்றினையும் சோழ மன்னனிடம் விற்க, அவனதை
மந்தையில் சேர்க்க தினந்தோறும் பசுக்கூட்டம் மேய்ச்சலுக்குச் செல்லும் போது அந்த தெய்வப்பசு மட்டும் மந்தையிலிருந்து விலகி ஸ்ரீனிவாசன்
எழுந்தருளியுள்ள புற்றுக்கருகாமையிற் சென்று பாலைச் சொரிய தெய்வப்பசு பால் கொடுக்காமல் இருப்பதையறிந்த மன்னன் இதன் காரணத்தைக்
கண்டுபிடிக்குமாறு பசுமேய்ப்போரிடம் தெரிவிக்க தெய்வப்பசு புற்றருகே சென்று பால் சொரிவதைக் கண்டு ஆத்திரமுற்று தன் கையிலிருந்த
கோடாலியால் பசுவை வெட்ட எத்தனிக்க எம்பெருமான் லேசாக எழுந்திருக்க கோடாலி அவர் தலையில் பட்டு ரத்தம் சிந்த ஆரம்பிக்க பசுமேய்ப்பவன்
மூர்ச்சையாகி கீழே விழுந்தான்.

தெய்வப்பசு கண்ணீர் சிந்திய கோலத்துடன் சோழ மன்னனின் ஆராய்ச்சி மணியை அடிக்க என்னவென்று புரியாத மன்னன் பசுவினைப் பின்
தொடர்ந்து புற்றருகில் வரபசு மேய்ப்பவன் கீழே விழுந்துகிடப்பதையும், ரத்தம் கொட்டியிருப்பதையும் புற்றுக்குள் யாரோ இருப்பதையும் அறிந்து
தனது உடைவாளால் வெட்ட முயற்சிக்கும் வேளையில் எம்பெருமான் புற்றிலிருந்து முழுவதுமாக வெளிப்பட்டு பசுவைக்கொல்லவந்தவனைத் தடுத்து தானே பசுவைக் காப்பாற்றியதையும், ஏவலன் செய்த குற்றம் மன்னனையே சாருமாதலால் நீ பிசாசாக அலையக்கடவது
என்று ஸ்ரீனிவாசன் சாபமிட நிலையுணர்ந்த மன்னன் மன்னிப்புக்கேட்க நீ சில காலம் பிசாசாக அலைந்து பின்பு ஆகாசராஜன் என்னும் பெயரில் மன்னனாகத் திகழ்வாய் என்றும் அப்போது திருமகளே உனக்கு மகளாக வாய்த்து வளர்ந்துவர யாம் வந்து மணம்புரிவோம் என்று கூறி பசுமேய்ப்பவனையும் உயிர்ப்பித்தார்.

திருமலையில் புற்றில் நடந்த அதிசயத்தைச் செவியுற்ற வகுளமாலிகை ஸ்ரீனிவாசனை மகனாக வரித்து யசோதை கண்ணனை வளர்த்தவாறே
வளர்த்து வர ஒரு நாள் ஸ்ரீனிவாசன் வேட்டைக்குச் செல்லும் போது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பத்மாவதியைக் கண்டு இவளே
திருமகளென தனது வளர்ப்புத் தாயான வகுளமாலிகையிடம் தெரிவித்து ஆகாசராஜனிடம் பெண்கேட்டு அனுப்பிவைத்தார்.

ஆகாச ராஜனும் தனது மகள் மூலம் உண்மை நிலை உணர்ந்தும் மந்திரா லோசனைகளை செய்து மகவு தர இசைந்து மணநாள் குறித்து
திருமால் திருமகள் திருமணம் இதுவென உள்ளுணர்வால் உணர்ந்து வெகு விமரிசையாக இதுகாறும் யாரும் செய்திராவண்ணம் திருமணம் நடத்த எண்ணி அதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்ய பணம் பற்றாக்குறையாக இருக்க
குபேரனிடம் கடன் வாங்கி திருமலையில் திருமணம் நடத்தி வைத்ததாகவரலாறு.

வேதவதியான பத்மாவதியினை ஏற்று யசோதையான வகுளமாலிகையின் குறைதீர்த்த ஸ்ரீனிவாசன் ஏதோ மனக்கிலேசம் உள்ளவர் போலவே
தோற்றமளிக்க எம்பெருமானின் உளக்கிடைக்கையை அறிந்த பத்மாவதி, தாங்கள் வைகுண்டத்திலிருந்து வந்த திருமகளைத்தானே நினைத்துக்
கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க ஸ்ரீனிவாசன், ஆம் என்பது போல தலையசைக்க அவ்வாறாயின் போய் மகாலெட்சுமியை அழைத்து வாரும்
என்று அனுப்பிவைக்க திருமகள் லட்சுமி தேவியென பெயர்கொண்டு கோல்ஹாப்பூரில் (இங்கு லட்சுமி சேத்திரமுண்டு) இருப்பதை அறிந்து அங்கு
எழுந்தருள லட்சுமி தேவி ஹோல்காப்பூரில் இல்லாததைக் கண்டு மிகவும் வாடிய எம்பெருமாள் என் செய்வது என்று சிந்தித்திருக்கும் வேளையில்
கீழ்க்கண்டவாறு வானிலிருந்து அசரீரி ஒலித்தது.

பகவானே, இவ்வூருக்குத் தெற்கே ஓடும் கிருஷ்ணவேணி ஆற்றிலிருந்து 22 யோசனை தூரத்தில் பொன்முகலியென்று ஒரு நதி ஓடுகிறது. அதன்
அருகில் நின்று சுவர்க்க லோகத்தில் உள்ள ஆயிரம் இதழ் உடைய தாமரை மலரை வரவழைத்து ஒரு குளத்தில் அம்மலரை பிரதிஷ்டை செய்து அதன் நேர் கிழக்கில் சூரிய பகவானை பிரதிஷ்டை செய்து 12 வருட காலம் லட்சுமி மந்திரத்தை ஜெபித்து வந்தால்
திருமகளை அடையலாம் என்று கூறியதைக் கேட்டு, எம்பெருமான் வாயுபகவானை அழைத்து ஆயிரம் இதழ் தாமரையைக் கொண்டுவர உத்தரவிட
வாயும் அம்மலரைக் கொணர அசரீரி ஒலித்த வண்ணமே தவமிருக்க இம்மந்திரம் லட்சுமி தேவியை பிடித்து இழுத்தது.

அப்போதும் எம்பெருமானைச் சேர மனமில்லாத திருமகள் பரமபதத்தின் நித்ய சூரிகளை அழைத்து என் செய்வது என்று கேட்க தாயே
தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை, பிருகு மும்மூர்த்திகளில் யார் சாந்தவான் என்று அறியவே அவ்வண்ணம் செய்தான். சகல ஜீவாத்மாக்களுக்குத் தாயாக விளங்கும் தாங்கள் பிருகு முனிவனுக்கும் தாயன்றோ. அவன் உங்கள் குழந்தையல்லவா. குழந்தையின் குற்றங்களைத் தாய் பொருட்படுத்தலாமோ. பகவானின் தவம் வீணாகலாமோ. தாங்கள் எம்பெருமானைச் சேர்வதே அழகானதன்றோ என்று கூற மனந்தெளிந்த லட்சுமி தாமரை நாளத்தின் வழியே பிரவேசித்து பேரழகு பொருந்தி நிற்க, எம்பெருமான் களிபேருவகைகொண்டு ஏற்றுக்கொண்டார்.

பிருகு முனிவர் ஓடிவந்து பிராட்டியின் கால்களில் வீழ்ந்து மன்னிப்புக்கோரி கதற அருள்புன்னகை புரிந்த லட்சமி தேவி, குழந்தாய்
பிருகுவே உன்னிடம் ஒரு குற்றமுமில்லை எல்லாம் பகவானின் லீலைகள் என்று கூறியருள, ஸ்ரீனிவாசன் மகாலட்சுமியை அழைத்துக்கொண்டு
திருமலைக்கு வர வகுளமாலிகையும் பத்மாவதியும் எதிர் கொண்டழைக்க எம்பெருமான் ஸ்ரீனிவாசன் என்னும் திருநாமத்தோடு லட்சமி பத்மாவதி
சமேதராக திருமலையில் ஆனந்த நிலையத்தில் எழுந்தருளியதாக வரலாறு.

ஆதிவராஹ சேத்திரம் என்னும் இந்த திருவேங்கடம் மொத்தம் 3 பிரிவுகள் கொண்டது.

முதல் பிரிவு-திருப்பதி, இதனைக் கீழ்திருப்பதி எனவும் பகர்வர். இங்கு பெருமாள் சயன திருக்கோலம்.
மூலவர்-கோவிந்தராஜப்பெருமாள், கிழக்கு நோக்கிய புஜங்க சயனம்.

தாயார்- புண்டரீக வல்லி. இங்கு ஆண்டாள் உடையவருக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு.

இந்தக் கீழ்த்திருப்பதியில் உள்ள கோவிந்த ராஜப்பெருமாள் சன்னதி மிகவும் சக்திவாய்ந்ததாகும். முக்கியத்துவம் நிறைந்ததாகும். தில்லை
திருச்சித்ரகூட கோவிந்தராஜப் பெருமாள் சில காலம் இங்குவந்து இருந்த பின்னால் தில்லைக்கு சென்றுவிட அவர் நினைவாக இத்தலம்
தோற்றுவிக்கப்பட்டது.

2ம் பிரிவு திருமலை- இது மலைமேல் உள்ள கோவில்

மூலவர்-திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கிடாசலபதி. பாலாஜி, ஏழுமலையான் வேங்கடத்தான் என்று பல திருநாமங்கள். கிழக்குநோக்கி
நின்ற திருக்கோலம்.

உற்சவர்-  கல்யாண வெங்கடேஸ்வரர்.

தீர்த்தங்கள்- மொத்தம் 14 தீர்த்தங்கள்.

 1. சுவாமி புஷ்கரிணி     2. பாபவிநாசம்
3. ஆகாசகங்கை        4. கோனேரி
5. வைகுண்ட தீர்த்தம்   6. சக்ரதீர்த்தம்
7. ஜபாலி தீர்த்தம்      8. வகுள தீர்த்தம்
9. பாண்டவ தீர்த்தம்    10. இராமகிருஷ்ண தீர்த்தம்
11. தும்புரு தீர்த்தம்     12. சேஷ தீர்த்தம்
13. சுகஸந்தன தீர்த்தம்  14. மொர தீர்த்தம்.

இதில் மிகவும் முக்கியமான தீர்த்தங்கள் பற்றிய சிறப்பியல்புகள் தனியே தரப்பட்டுள்ளது.

விமானம்- ஆனந்த நிலைய விமானம்

காட்சி கண்டவர்கள்-  எண்ணற்ற ரிஷிகள், பிரம்மா, சிவன், ஆறுமுகன், தொண்டைமன்னன்.

3ம் பிரிவு-  திருச்சானூர். இதை அலமேலு மங்காபுரம் என்றும் கூறுவர்.
மூலவர்-    தாயார் தான் மூலவர். அலர்மேல்மங்கை பத்மாவதி என்னும்-திருநாமங்கள். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
தீர்த்தம்-    பத்ம ஸரோவரம்.
சிறப்புகள்     1. வேங்கடகிரி என்றும், சப்தகிரி என்றும் பல பெயர்களில்அழைக்கப்படும் இம்மலை 7 மலைகளால் ஆனது. சப்த என்பதற்கு 7 என்பது
பொருள். கிரி என்னும் சொல் மலைகளைக் குறிக்கும். எனவே சப்தகிரி என்றும் ஸப்த பர்வதங்கள் என்றும் இந்த மலை குறிக்கப்படுகிறது.

அந்த 7 மலைகள் எவையெனில்

1. வேங்கடாத்ரி-வேம் என்றால் பாவம். கட என்றால் நாசமாதல். எனவே பாவங்கள்
எல்லாம் நாசமாகும் இடம் என்று பொருள். வேங்கடம் என்ற சொல்லுக்கே
பாவங்களைச் சுட்டெரித்தல் என்ற பொருள் உண்டு. வேங்கடாத்ரி ஆயிற்று.
2. சேஷாத்ரி-ஆதிசேடனே இங்கு எம்பெருமானின் அவதாரத்தின் பொருட்டு மலை
உருவில் தோன்றியுள்ளான். எனவே சேஷாத்ரியாயிற்று.
3. வேதாத்ரி-   வேதங்கள் எல்லாம் மலை உருவில் ஸ்ரீனிவாசனை வழிபடுவதால்
வேதாத்ரி எனவும் வேதகிரி எனவும் வழங்கப்படுகிறது.
4. கருடாத்ரிதிருமாலின் வாகனமாகிய கருடன் இம்மலையை (எம்பெருமானின்
அவதாரத்தின் பொருட்டு) எடுத்துவந்து இவ்விடத்தில் வைத்ததால் கருடாத்ரி ஆனது.

5. விருஷபாத்தரிவிருஷபாசுரன் என்னும் அரக்கனுக்கு இம்மலையில் திருமால் மோட்சம்
அளித்தார். அவன் வேண்டுகோளுக்கிணங்க அவன் பெயராலேயே
விருஷபாத்ரி என மொழியப்படுவதாக ஐதீஹம்.
6. அஞ்சனாத்ரி     அனுமனின் தாய் அஞ்சனை. அவள் இந்த மலையிலே தவம் செய்தாள்.
மகப்பேறு வேண்டினாள். ஆதிவராஹ மூர்த்தியின் அருளால் ஆஞ்சநேயனைப் பெற்றாள். அஞ்சனை தவமியற்றியதைக்கொண்டு
அஞ்சனாத்ரி ஆயிற்று.
7. ஆனந்தாத்ரி     ஆதிசேடனும் வாயு தேவனும் தங்களில் யார் பலவான் என்பதைக்
காண்பிக்க தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு மேருமலையின் சிகரங்களை ஆளுக்கொன்றாகத் தகர்த்துக்கொண்டு இப்பெருமாள்
முன்னிலையில் வீழ்த்த, பலத்தில் இருவரும் சமமானவர்களே என்று பெருமாளின் திருவாக்கும் திருவருளும் பெற்று ஆனந்தமுற்றார்கள்.
ஆதலின் ஆனந்தாத்ரி ஆயிற்று.

திருவேங்கடம் என்பது புஷ்ப மண்டபமாகும்சிந்துபூமகிழ் திருவேங்கடம் என்பது நம்மாழ்வார் வாக்கு,
திருவரங்கத்திற்கு போக மண்டபம் என்றும் காஞ்சிபுரத்திற்கு தியாக மண்டபம் என்பதும் பெயர்.

தேனோங்கு நீழற் திருவேங்கடமென்றும்
வானோங்கு சோலை மலையென்றும் – தானோங்கு
தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ்
சொன்னார்க்கு உண்டோ துயர்–பாரதம் பாடிய பெருந்தேவனார்

குறும்பறுத்த நம்பி என்பவர் திருமலையில் மண்பாண்டங்கள் செய்து வாழ்ந்தவர். மண்பாண்டம் செய்யும்போது கையில் ஒட்டிக் கொண்டுள்ள
மண்ணினால் சிறுபுஷ்பங்கள் செய்து மானசீகமாய் வேங்கடவனுக்குச் சமர்ப்பித்து ஆராதனை செய்து வந்தார். இவரது காலத்தில் வாழ்ந்திருந்த
தொண்டை மன்னனும் வேங்கடவன் பால் மிக்க பக்தி பூண்டொழுகினான். இம்மன்னன் தங்கத்தால் புஷ்பங்கள் செய்து வேங்கடவனுக்கு சமர்ப்பித்து
வந்தான். ஒரு நாள் காலையில் இம்மன்னன் வேங்கடவனைத் தரிசிக்க சன்னதிக்குச் செல்லும்போது தான் சமர்ப்பித்த தங்கப் புஷ்பங்கள் யாவும்
சிதறுண்டு பூமியில் கிடப்பதையும் மண்புஷ்பங்கள் வேங்கடவனின் திருமேனியை அலங் கரிப்பதையும் கண்டு என்னவென்று விசாரிக்க குறும்பறுத்த நம்பிகள் சமர்ப்பிக்கும் புஷ்பங்கள் இவையென்று அறிந்து குறும்பறுத்த நம்பியின் பக்தி மேன்மையைக் கண்டு நம்பியைத் தொழுதுசென்றான் தொண்டை மன்னன்.

இவ்விதம் தன் மீது உண்மையான பக்தி கொண்டோரின் மேன்மையை வேங்கடவன் உலகறியச் செய்தான். பொய்யான பக்தியுடனும், ஆடம்பரமான
பக்தி வேஷத்தையும், சரணாகதித்துவம் இல்லாத நேரத்திற்கேற்றவாறு போடக் கூடிய பக்திவேஷத்தையும் உதாசீனப்படுத்தி தூயபக்தியில் நிறைந்த உள்ளம் கொண்ட பக்தர்களின் மேன்மையை உலகறியச் செய்துகொண்டே இருக்கிறான் வேங்கடவன்.

அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஸ்ரீஆதிவண் சடகோப தீந்தரமகாதேசிகன் என்னும் ஜீயர் திருமலைக்கு படிக்கட்டுகளை
முதன் முதலில் அமைத்தவர்.

மகாஞானிகளும், கள்ளங்கபடமற்ற பக்தர்களும் வந்து குவிந்து கொண்டே இருக்கும் இந்ததிருமலையில் தீர்த்த கைங்கர்யம் செய்து
கொண்டிருந்த திருமலை நம்பிகள் இராமானுஜருக்கு ராமாயண பாடம் கற்றுத் தந்தவர் ஆவார். மணவாள மாமுனிகளும் இங்கு பலமுறை
எழுந்தருளியுள்ளார்.

இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோத்ஸவம் காணக்கிடைப்பதரிது. பிரம்மனே இங்கு வந்து இந்த உற்சவத்தை நடத்தி
வைப்பதாக ஐதீஹம். இச்சமயத்தில் இங்கு வந்து வேங்கடவனைச் சேவிப்பவர்களின் சகல பாவங்களும் தொலைகின்றன என்று புராணங்கள்
அறுதியிடுகின்றன. இந்த உற்சவத்தின் போது திருமலை வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் பூண,

வண்ண வண்ண உடைகளில் பக்தர்கள் பஜனை செய்து ஆடியும் பாடியும் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

திருமலையானின் வலமார்பில் மகாலெட்சுமியும், இடமார்பில் பத்மாவதியும் உறைகின்றனர். பத்மாவதி தாயார்தான் திருச்சானூர் என்னும்
அலமேலுமங்கா புரத்திலிருந்து அருள்பாலிக்கிறார். திருமலைவந்தவர்கள் இங்கு பிராட்டியை வழிபட்டுச் சென்றால்தான் திருமலைப் பயணம்
பூர்த்தியடைவதாக ஐதீஹம். கார்த்திகை மாதம் சுக்லபட்ச பஞ்சமியில் இங்கு பிரம்மோத்சவம். இந்த உற்சவத்தின் கடைசி நாளன்று வேங்கடவன் கூரைச்
சேலை, ஆபரணங்கள் மலர்மாலைகள் ஆகியவற்றுடன் யானைமேல் மேளதாளத்துடன் வருவார். அவர் கொண்டு வந்த ஆடை அணிகலன்களை
பிராட்டி அணிந்துதான் கடைசி நாள் உற்சவன் நடைபெறுகிறது.
தொண்டைமான் கனவில் வந்து எம்பெருமான் கூறியதைப் போன்றே இக்கோவில் கட்டப்பட்டதென்பர். இங்குள்ள பத்ம ஸரோவரத்ர்த்தம் மிகவும்
பிரசித்தி வாய்ந்ததாகும். உலக நன்மைக்காக பிரம்மா இங்கு இரண்டு தீபங்களை ஏற்றிவைத்ததாகவும் அவைகள் இன்றும் பிரகாசிப்பதாயும் வரலாறு.

இங்கு செலுத்தப்படும் காணிக்கை அளவிட முடியாததாகும். பக்தர்கள் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல். லட்சலட்சமாக இங்குகொண்டு
வந்து குவிப்பர். இவருக்குத் தினசரி வருமானமே லட்சங்களைத் தாண்டும். அதேபோல் முடிக்காணிக்கையும் இங்கு நடைபெறுவது போல் உலகில் எங்கும்
நடைபெறுவது இல்லை. இங்கு தங்குவதற்கு தர்ம சத்திரங்களும், வாடகைக் சத்திரங்களும் ஏராளம். தற்போது இலவச ததியாரதனமும் நடைபெறுகிறது.
நினைத்தாலே இனிக்கும் திருப்பதி லட்டு இங்கு போல் வேறெங்கும் தெய்வச் சுவை ததும்ப அமைந்ததில்லை.

திருமலை வேங்கடவன் கோவில் திருச்சானூர் அலர்மேல் மங்கை கோவில் இரண்டினையும் தொண்டைமான் கட்டியதாக வரலாறு. இங்குள்ள
சுற்று மண்டபங்கள் யாக சாலை, கோபுரங்கள், தானியக் களஞ்சியம் கொடியேற்று மண்டபம் போன்றன தொண்டைமான் கட்டியதாகும். இங்கு
காணப்படும் கல்வெட்டுகளில் தொண்டைமானின் கட்டிடப்பணி குறிக்கப்பட்டுள்ளது. இன்றும் இத்தலத்தின் உட்புறச் சுவர்களில் மூல
ஸ்தானத்தைச் சுற்றிவரும் நடைபாதையிலும், மண்டபங்களைத் தாங்கி நிற்கும் தூண்களிலும் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. பண்டைய நாகரி
எழுத்துக்களினாலான கல்வெட்டுகளும், தமிழின் தற்போதைய எழுத்து முறை உருவாவதற்கு சமீப காலத்திற்கு முன் இருந்த தமிழ் எழுத்துக்களைக்
கொண்ட கல்வெட்டுக்களும் உள்ளன.

தொண்டைமான் இப்பெருமானிடம் மிக்க ஈடுபாட்டுடன் திகழ்ந்து சிறந்த பக்தி கொண்டிருந்தான். இவனைப் பகைவர்கள் சூழநின்று பொருதபோது
போரில் தோல்வி ஏற்படக்கூடிய சூழ்நிலையில் வேங்கடவனை வேண்ட வேங்கடவன் தனது சங்கு சக்கரங்களைத் தொண்டைமானுக்கு அளிக்க
போர்வென்ற தொண்டைமான் அதை பெருமாளுக்கு மீளச் சமர்ப்பித்து எனக்களித்த இவைகள் எனது கண்களுக்கு மட்டுமே தெரியவேண்டும் என்று
வேண்ட அவ்வண்ணமே பெருமாள் அருள்புரிந்ததாகவும் கூறுவர்.
இதேபோல் தொண்டைமானின் வாழ்க்கையில் பலமுறைகள் அதிசயத்தக்க நிகழ்வுகளை வேங்கடவன் நிகழ்த்திக் காட்டினார். நூல்கள் பலவற்றிலும்
தொண்டைமான் எனவும், தொண்டை மன்னன் எனவும் கூறப்பட்டுள்ளதேயன்றி மன்னனின் பெயர் குறிப்பிடப்பட வில்லை.

இராமானுஜர் தனது இளம் வயதில் இம்மலையைச் சேவிக்க வந்த போது மலையடிவாரத்திலேயே நின்று கொண்டு மலையின் மேல் வேங்கடவன்
இருப்பதால் தான் மிதித்து நடந்துவர விருப்பமில்லை என்று தெரிவித்ததாகவும்,
இவருக்காகவே இவரது தாய் மாமனாரான திருமலை நம்பிகள் மலைமேலிருந்து தினமும் இறங்கி வந்து இராமாயணம் கற்பித்ததாகவும் கூறுவர். பிற்காலத்தே வேங்கடவன் இராமானுஜரைத் திருமலைக்கு வருமாறு தெரிவித்ததின் அடிப்படையிலே இராமானுஜர் மலைமீது ஏறினார் என்றும் கூறுவர்.

இராமானுஜர் ஆதிசேடனாகையால் எம்பெருமான் திருவாசல் முன்பு நடந்து செல்வதற்கே மனம் ஒவ்வாதவராக இருந்தார் என்னும் கூற்று பல
இடங்களில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இளம்வயதில் இராமானுஜர் இக்கொள்கையின்றும் மாறுபடாதவராய் இருந்தார். இராமானுஜர்
திருக்கோட்டியூர் நம்பிகளிடம் திருமந்திரம் பயில வந்த காலை திருக்கோட்டியூரில் நம்பிகளின் திருமாளிகைக்கு வரும்பொழுது
திருக்கோட்டியூர் தலத்தின் மதிலருகே வந்தவுடன் மண்டி யிட்டு ஊர்ந்து சென்றே நம்பிகளின் வீட்டை அடைவார் என்றும் கூறப்படுவது. இங்கு ஓர்ந்து
நோக்கத் தக்கதாகும்.

இராமானுஜர் திருமலைக்கு வந்த போது இப்பெருமானின் கைகளில் சங்கு சக்கரங்கள் இல்லாததால் இத்தெய்வத்தைச் சிவன் என்றும், இந்து
மதத்தின் வேறு பிரிவுகளின் தெய்வமென்றும் பலவாறு கூறி நிற்க இதையறிந்த ராமானுஜர் தொண்டைமானின் வேண்டுகோளுக்கிணங்க மற்றவர்கட்கு
தெரியாமல் இருந்த சங்கு சக்கரங்களை யாவருங் காண அருள் வேண்டுமென்று வேங்கடவனை வேண்ட அவ்விதமே ஆயிற்றென்பர்.

இராமானுஜர் திருவேங்கடத்தில் சங்கு சக்கரங்கள் தோன்றக் காரணமாயிருந்தார். திருக்கோட்டியூரில் திருமந்திரம் உலகுக்குத் தோன்றக்
காரணமாயிருந்தார். திருவரங்கத்தில் கைங்கர்யம் உலகப் பிரசித்திபெறக் காரணமாயிருந்தார். மேலக்கோட்டை திருநாராயண புரத்தில் செல்லப்பிள்ளை
தோன்றக் காரணமாயிருந்தார். செல்லும் இடங்களிலெல்லாம் வைணவம் தழைத்தோங்க காரணமாயிருந்தார்

திருமலையில் இருந்து ஒரு சமயம் இராமானுஜர் இறங்கி வரும்போது எதிர்ப்பட்ட ஒரு மூதாட்டி இராமானுஜரைத் தடுத்து எனக்கு மோட்சம் கொடு
என்று கேட்க அது என்னால் முடியாதே என்று இராமானுஜர் கூற, உம்மால் முடியாதென்றால் பரவாயில்லை. இந்த மூதாட்டிக்கு மோட்சம் கொடுக்க கடவது
என்று ஒரு முறியில் எழுதியாவது கொடுமெனக் கேட்க. ராமானுஜர் ஒரு சிறிய ஓலையில் அவ்விதமே எழுதிக்கொடுக்க அதைப்பெற்ற மூதாட்டி, ராமானுஜரை வழிபட்டு சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று திருமலையில் மழை கொட்டி வெள்ளப் பெருக்கெடுக்க கைகளில் இராமானுஜர் எழுதிக்கொடுத்த ஓலையை இறுகப் பிடித்தவாறு சென்ற மூதாட்டி வெள்ளச் சூழலில் சிக்கி கைகளில் ஓலை பிடித்தவாறே திருநாடு புக்காள்.

அகத்தியர், வாயு, கபிலர் (இவர் சங்ககாலப் புலவர் அல்ல) சுகமுனிவர் என்னும் பல முனிவர்கள் தவமியற்றிய மலையாகும். இது.

தீர்த்த மகிமை மிக்க திருவேங்கடம்

திருமலை ஒரு பக்தி சேத்ரம். ஒரு முக்தி சேத்ரம், இதையெல்லாம் விட இதுஒரு மிகப்பெரிய தீர்த்த சேத்ரம் இங்கு 108 தீர்த்தங்கள் உண்டு என
புராண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அரூபமாக, பிரதயட்ச மாகாமல் இருக்கக் கூடிய தீர்த்தங்களும் ஆண்டுக்கொரு முறை இங்குவந்து கூடுகின்றன.
சில முக்கியமான தீர்த்தங்களை இங்கு வகைப்படுத்துகிறோம்.

1. குமார தாரிகை அல்லது குமார தீர்த்தம்

மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசிப்பௌர்ணமி) சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. மனதிற்கு
உற்சாகமும், உடலுக்கு இளமையும் தரும் இத்தீர்த்தத்தில் மூழ்குவோர் ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுகின்றனர்.

2. தும்புரு தீர்த்தம்

பகவானை நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர் வேங்கடத்தவனைக் குறித்து தவமியற்றிய இடத்திற்கருகில் இருப்பதால் தும்புரு
தீர்த்தம். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பௌர்ணமி) இதில் நீராடுவோருக்கு பரமபதம் உண்டு.

3. இராமகிருஷ்ண தீர்த்தம்

     தை மாதம் வரும் பௌர்ணமியில் இதில் நீராடினால் இகபரசுகம் இரண்டும் சித்திக்கும்.

4. ஆகாச கங்கை

     தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சகல பாபங்களையும் போக்கும் இத்தீர்த்தத்தின்
அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில்
வேங்கடவனுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்துக்கொண்டு நடந்தே வருவாராம்.
கோவிலிலிருந்து சுமார் 2 மைல் தூரம். எம்பெருமான் இவரது தீர்த்த கைங்கர்யத்தை மெச்சி காட்சி கொடுத்தார். சகல சித்திகளையும் அளிக்கும்
இத்தீர்த்தத்தில் சித்திரை மாதம் பௌர்ணமியன்று நீராடுவது மிக விசேடம்.

5. பாண்டு தீர்த்தம்

     வைகாசி மாதம் சுக்கிலபட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய் கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால் அதுபோழ்து இதில் நீராடுவோர் சகல
பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர்.

6. பாபவிநாசன தீர்த்தம்

இத்தீர்த்தம் இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. மிக்க சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம்
வளர்பிறை சப்தமி திதியும் உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய
தினத்தில் இதில் நீராடுவோர் பெறற்கரிய ஞானம் பெறுகின்றனர். பாவங்களினின்றும் விடுபடுகின்றனர்.

ஸ்வாமி புஷ்கரிணி

 தீர்த்தங்களின் அரசி என்று அழைக்கப்படுவதும் சரஸ்வதி தேவி தவமியற்றியதுமான ஸ்வாமி புஷ்கரிணிக்கு அருகாமையில்தான்
ஆதிவராஹமூர்த்தி எழுந்தருளியுள்ளார். மிக விசேஷமான தீர்த்தமிது.
மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூர்யோதயத்திற்கு 6 நாழிகை முன்பிருந்து சூர்யோதயத்திற்கு பிறகு 6 நாழிகை வரை இம்மலையில் உள்ள தீர்த்தங்கள் யாவும் இதில் கூடுகின்றன. அப்போது இதில் நீராடுவோர் பூவுலகில் சிறப்புடன் வாழ்ந்து இறுதியில் இறைவன் திருவடியிலும் எப்போதும் வீற்றிருக்கும் பேறுபெறுவர்.

வீங்கு நீர் அருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலயத்துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலை தானத்து
மின்னுக் கோடியுடுத்து விளங்குவிற்பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால் வெண்சங்கமும்
தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்–   என்கிறார் இளங்கோவடிகள்.

இறைவனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் பதின்மருள் ஒன்பதின்மரால் பாடப்பட்ட சிறப்பு வாய்ந்தது திருவேங்கடம். ஏதமில் ஆயிரம்’, ‘கெடலில் ஆயிரம்’, ‘பொய்யில் பாடல் ஆயிரம்’, ‘ஆணை ஆயிரம்’, ‘வழுவிலாத ஒண்தமிழ்கள் ஆயிரம்’, ‘அழிவில்லா ஆயிரம்’, ‘பொய்ம்மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன்’, ‘மெய்ந்நாவன் மெய்யடியான்’ என்பன போன்றவைகளால் ஆழ்வார்களுடைய ஸ்ரீ சூக்திகள் ‘வாய்மொழி’ என்பது பெறுதும்.

    ‘சித்த சித்தொ டீச னென்று செற்று கின்ற மூவகைத்
    தத்து வத்தின் முடிவு கண்ட சதுர்ம றைப்பு ரோகிதன்’–என்றார் வில்லிபுத்தூராழ்வார்.

    ‘நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக் கெல்லாம்
    ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே’

    ‘செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி’

    ‘இன்பப் பாவினை’

    ‘மன்னு மறைநான்கும் ஆனானை, புல்லாணித்
    தென்னன் தமிழை வடமொழியை’

    ‘அமரர்கள்தம் தலைவனை அந்தமிழ் இன்பப்
     பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள்
     பயிலரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
     கோவினை’

என்பன போன்ற வாய்மொழியின் பொருளை ஓலைப்புறத்தே கேட்டுப் போகாதே எல்லாரும் கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி அவ்விறைவன் வந்து நிற்கின்ற இடம் இத்திருமலை என்பதனை நாம் நினைவிற்கோடல் வேண்டும். பாஷைகளுக்கு எல்லை நிலம் அன்றோ திருவேங்கடம்?

திலகம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே!’
    குன்ற மேந்திக் குளிர்மழை காத்தவன்
    அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்
    சென்று சேர்திரு வேங்கட மாமலை
    ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே.’

    ‘சுமந்து மாமலர் நீர்சுடர் தூபங்கொண்டு
    அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
    நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்
    சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே.’

    ‘எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே.’

என்பன போன்ற திருவாய்மொழிகள் திருமலையின் சிறப்பினைக் கூறுவனவாம்.

பிற தமிழ் நூல்களும் உரைகளும் :

I

‘வடவேங்கடம் தென்குமரி
     ஆயிடைத்
     தமிழ்கூறும் நல்லுலகத்து’–என்பது தொல்காப்பியம்.

    ‘நீணிலம்கடந்தநெடுமுடி அண்ணலை நோக்கி உலகம் தவஞ்செய்து வீடு பெற்ற மலையாதலானும், எல்லாரானும் அறியப்படுதலானும், வேங்கடத்தை எல்லையாகக் கூறினார்,’ என்பது அச்சூத்திரப்பகுதிக்கு 1நச்சினார்க்கினியர் எழுதிய விசேடவுரை.

    ‘இனி, அவர், ‘தமிழ் நாட்டிற்கு வடக்கட்பிற எல்லையும் உளவாக, வேங்கடத்தை எல்லையாகக் கூறினார்,

வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
    ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
    விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
    இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து
    மின்னுக்கொடி உடுத்து விளங்குவிற் பூண்டு
    நன்னிற மேகம் நின்றது போலப்
    பகைஅணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
    தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
    நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
    பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
    செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்’–என இளங்கோவடிகள் -காடுகாண் காதை

‘வேங்கடம் குமரி தீம்புனற் பௌவமென்று
இந்நான் கெல்லை தமிழது வழக்கே.’–என்றார் சிகண்டியாசிரியர்.

    ‘வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும்
வேங்கடம் குமரி தீம்புனற் பௌவம்என்று
இந்நான் கெல்லை அகவயிற் கிடந்த
நூலதின் முறையே வாலிதின் விரிப்பின்’–என்றார் காக்கை பாடினியார்.

    ‘பனிபடு சோலை வேங்கடத் தும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும் நல்குவர்.’–அகநானூறு, செய். 211.

    ‘நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நன்னாட்டு’–என்றார் இளங்கோவடிகள்.–சிலப். வேனிற்காதை)

    ‘வடசொற்கும் தென்சொற்கும் வரம்பாகி
நான்மறையும் மற்றை நூலும்
இடைசொற்ற பொருட்கெல்லாம் எல்லையதாய்
நல்லறத்துக்கு ஈறாய் வேறு
புடைசுற்றும் துணையின்றிப் புகழ்பொதிந்த
மெய்யேபோற் பூத்து நின்ற
உடைசுற்றும் தண்சாரல் ஓங்கியவேங்
கடத்திற்சென்று உறுதிர் மாதோ.’–என்றார் கவிச்சக்கரவர்த்தி கம்பநாட்டாழ்வார்.–(நாடவிட்ட படலம். 29)

    அரவணைச்செல்வன் வாழும் அந்தமிழ் நிலத்தின் எல்லைத்
திருமலை 
கண்டு உணர்ந்தோர் செறிவினைத் தொடர்அ றுக்கும்
பெருமலை கண்டு இறைஞ்சிப் பிறங்குவெள் ளருவி தாழும்
பொருவறும் ஏம கூடப் பொருப்பினை இனிது கண்டான்.’–என்றார் துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர்.–(சீகாளத்திப் புராணம்)

    நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
நித்தம் தவம்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் 
இவற்றிடை யேபுகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.’–என்றார் பாரதியார்.

புடையது நெடுமால்வரைக் கப்புறம் புகினும்’ என்றார் ஆசிரியமாலையுடையார்.

    ‘வெறிகொள் அறைஅருவி வேங்கடத்துச் செல்லின்
நெறிகொள் படிவத்தோய் நீயும் – பொறிகட்கு
இருளீயும் ஞாலத்து இடரெல்லாம் நீங்க
அருளீயும் ஆழி யவன்.’–என்றார் ஐயனாரிதனார்.–(புறப்பொருள் வெண்பா மாலை)

    ‘தேனோங்கு நீழல் திருவேங் கடமென்றும்
வானோங்கு சோலை மலையென்றும் – தானோங்கு
தென்னரங்கம் என்றும் திருவத்தி யூரென்றும்
சொன்னவர்க்கும் உண்டோ துயர்?’–என்றார் பாரதம் பாடிய பெருந்தேவனார்.-(பெருந்தேவனார் பாரதம்)

    வலங்கொள் நேமி மழைநிற வானவன்
அலங்கு தாளிணை தாங்கிய அம்மலை
விலங்கும் வீடுறு கின்றன மெய்ந்நெறிப்
புலங்கொள் வார்கட் கனையது பொய்க்குமோ?’-என்றார் கவிச்சக்கரவர்த்தி கம்பநாட்டாழ்வார்.

    மற்றும், கம்பராமாயணம் நாட விட்ட படலத்தில், 27, 28, 29 ஆகிய மூன்று செய்யுள்களும், ஆறு செல் படலத்தில் 33,.34, 35, 37 ஆகிய நான்கு செய்யுள்களும் இத்திருமலையின் சிறப்பினையே கூறுவனவாம்.

    ‘உபசாந்த சித்த குருகுல பவபாண் டவர்க்கு வரதன்மை
யுருவோன் ப்ரசித்த நெடியவன் ருஷிகேசன்
உலகீன்ற பச்சை உமைஅணன் வடவேங் கடத்தி லுறைபவன்
உயர்ந்த சக்ர கரதலன் மருகோனே!’–என்றார் அருணகிரிநாதர்.-(திருப்புகழ். ‘இபமாந்தர் சக்ரபதி’ என்ற செய்யுள்.)

    தென்னாதெ னாஎன்று வண்டுமுரல் திருவேங்கடத்து
    என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே’

    ‘திணரார்மேகமெனக்களிறு சேரும் திருவேங் கடத்தானே!’-என்ற திருவாய் மொழியினையும்,

‘லக்ஷணோபேதமாய் இருப்பது ஒரு யானை நின்றவிடத்தே ஆயிரம் யானைகள் வந்து சேருமாதலின் ‘மழகளிற்றினம் சேர் 1என்கிறார். அங்கு நிற்கிறதும் ‘சோலை மழகளிறே ‘யன்றோ? இதனால், அங்குண்டான விலங்குகளும் ஓர் இனமாய் ஆயிற்று இருப்பது என்பதனைத் தெரிவித்தபடி,’ என்ற வியாக்கியானத்தையும் படிக்கும்போது,

     ‘புன்தலை மடப்பிடி இனையக் கன்றுதந்து
குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும்
கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன்’     -(புறம். 389)

    ‘வடவயின்
வேங்கடம் பயந்த வெண்கோட் டியானை’        (அகம். 27)

    ‘கறையடி மடப்பிடி கானத் தலறக்
களிற்றுக்கன் றொழித்த உவகையர் கலிசிறந்து
கருங்கால் மராத்துக் கொழுங்கொம்பு பிளந்து
நெடும்பொளி வெண்ணார் அழுந்துபடப் பூட்டி
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்
நறவுகொடை நல்லில் புதவுமுதல் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன்தலை நன்னாட்டு வேங்கடம்’–(அகம். 83)என்னும் பாடற்பகுதிகள் நினைவிற்கு வாராதிரா.

கோயில் திருமலை பெருமாள் கோயில் என்றும், போகமண்டபம் புஷ்பமண்டபம் தியானமண்டபம் என்றும், திருவரங்கத்திற்கு அடுத்தபடியாகத் திருவேங்கடத்தை வைத்து நம் வைணவப் பெருமக்கள் வழங்கி வருகின்றதனை நாம் பார்க்கின்றோம்.

    ‘விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசைச்
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
என்கண்காட் டென்றென் னுள்ளங் கவற்ற
வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்.’

என்று திவ்வியதேச யாத்திரை செய்யப் போந்த ஓர் அந்தணன் கூறுவதாக அவன் கூற்றில் வைத்து, மேலே கூறிய முறை பிறழாமல் தம் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுவதால், கோயில் திருமலை பெருமாள் கோயில் என்று வழங்கும் வழக்கு நம் தமிழ் நாட்டில் பண்டு தொட்டே வழங்கி வருகின்ற பெரு வழக்காகும் என்று தெளிதல் தகும்.

    ‘ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி
கன்றுபசி களைஇய பைங்கண் யானை
மூற்றா மூங்கில் முளைதருபு ஊட்டும்
வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை.’(அகம். 85)

    ‘வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்
இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு
ஓங்குவெள் ளருவி வேங்கடத் தும்பர்.’-(அகம். 213)

என்ற செய்யுட்பகுதிகளால் திருவேங்கடத்தைத் தொண்டைமான் சக்கரவர்த்தி ஆண்டு வந்தமை புலனாகின்றது. அவ்வரசர் பெருமான் திருவேங்கடமுடையானிடத்தில் ஈடுபட்டுப் பரமவைஷ்ணவனாய் ஒழுகி வந்தான் என்றும், அவனுக்குப் பகைவர்களால் துன்பம் நேர்ந்த காலத்துப் பக்தவத்சலனும் அடியார்க்கு எளியனுமான அப்பெருமான் தனது திருவாழி திருச்சங்குகளை விடுத்து அவனுக்கு நேர்ந்த துன்பத்தை நீக்கினான் என்றும், அது காரணமாகவே சில காலம் திருவாழி திருச்சங்குகள் இல்லாமலே இருந்தான் என்றும் வரலாறு கூறுகின்றது.

திவ்வியகவி பிள்ளைப் பெருமாளய்யங்காரும் தாம் பாடிய திருவேங்கடத்தந்தாதியில் இவ்வரலாற்றினையே அகப்பொருள் துறையில் அமைத்துத்

    ‘தனித்தொண்டை மானிலத் தேபுரி
வார்க்கருள் தாளுடையாய்!
தொனித்தொண்டை மான்நெடு வாய்பிளந்
தாய்!துங்க வேங்கடவா!
முனித்தொண்டை மான்கையில் சங்காழி
நல்கிஎன் மூரற்செவ்வாய்க்
கனித்தொண்டை மான்கையில் சங்காழி
கோடல் கருமம்அன்றே.’–என்று நயம்படப் பாடியிருத்தல் காணலாகும்.

தானே சரணமுமாய் தானே பலமுமாய்
தானே குறை முடிக்கும் தன்மையான் தேன் ஏய்
திருவேங்கடம் தொழுதேம் தீய விபூதிக்குள்
மருவேம் கடந்தனெம் இவ்வாழ்வு –96–

(இ – ள்.) தானே -, சரணமும் ஆய் – உபாயமாகியும்,
தானே -, பலமும் ஆய் – உபேயமாகியும்,
தானே குறை முடிக்கும் தன்மையான் – தானே (அடியார்களது) மனக்குறையைப் போக்கி
அவரெண்ணத்தை ஈடேற்றுந் தன்மையுடையவனாகியு மிருக்கின்ற திருவேங்கடமுடையானது,
தேன்ஏய் திருவேங்கடம் – தேன்நிறைந்த (பொழில்கள்சூழ்ந்த) திருவேங்கடமென்னுந் திவ்வியதலத்தை,
தொழுதேம் – வணங்கினோம்; (அதன்பயனாக),
தீய விபூதிக்குள் – கொடிய இந்தலீலாவிபூதியில்,
மருவேம் – இனிப் பொருந்த மாட்டோம்;
இ வாழ்வு – இந்த ஸாம்ஸாரிகவாழ்க்கையை,
கடந்தனெம் – இனிக் கடந்துவிட்டோம்; (எ – று.)

எம்பெருமான் தன்னைச் சேர்தற்குத் தானே உபாயமாகியும், அவ்வாறு சேர்ந்தால் பயனாகியும்,
அவ்வாறு சேரவொட்டாமல் குறுக்கேவருகின்ற விரோதிகளைப் போக்கிப் பயனளிப்பவனாகியும் நிற்பனென்று
அந்த எம்பெருமானது ஸ்வரூபத்தை முன்னிரண்டடிகளினால் விளக்கினார்.
இவ்வாறான எம்பெருமானைத் தாம் அடைக்கலமாகச் சேர்ந்ததனால், இனி, இந்தஸம்ஸார வாழ்க்கை யொழிந்து
இந்த லீலாவிபூதியைவிட்டு நித்யவிபூதியாகிய மோட்சத்தைச் சேர்தல் திண்ண மென்பதாம்.
த்ரிபாத்விபூதியைப்போலல்லாது பலவகைத்துன்பங்கட்கும் இடமாயிருத்தல்பற்றி, லீலாவிபூதியை ‘தீயவிபூதி’என்றார்.
கடந்தனெம் – தெளிவுபற்றி எதிர்காலத்தை இறந்தகாலத்தாற் கூறிய காலவழுவமைதி.

திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

* இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

* ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

* ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

* பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

* மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

* அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

* வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

* மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

* திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

* சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

* ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

* திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

* ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

* 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

—————————————————-——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவேங்கட மஹாத்ம்யம்-ஸ்ருதி ஸ்ம்ருதி பிரமாணங்கள் –

September 16, 2023

ஸ்ரீ ஸ்ருதிகளும் ஸ்ரீ அர்ச்சாவதாரமும்

ஸவா ஏஷ புருஷ : பஞ்ச,தர பஞ்சாத்மா ” என்று ஸ்ருதி-http://acharya.org/bk/pb/tkvns/tvumpu-tkvns.pdf

ஸவா ஏஷ புருஷ :-எல்லா உலகங்களுக்கும் காரண பூதனாய் இருக்கும் இந்தப் பரமாத்மா தான்
பஞ்ச,தர-பர ஸ்வரூபம்‌. -வ்யூஹ ஸ்வரூபம் -விபவ ஸ்வரூபம் -அந்தர்யாமி -அர்ச்சை

பஞ்சாத்மா -விஷ்ணு புருஷன் ஸத்யன் அச்யுதன் அநிருத்தன் என்ற ஐந்து வகைகளோடே விளங்குகிறான்

விக்ரஹ ஆராதனை பெருமையை வேதம்
“அத்ப்ய : ஸம்பூத ப்ருதிவ்யை ரஸாச்ச௪ விஸ்வ கர்மண ஸம வர்த்தத”
“அத்ப்ய : -ஜலத்தின் உடையவும்
ப்ருதிவ்யை–பூமியின் உடையவும்
ரஸாச்ச ௪’-ஸாரமான பாகத்தினால்
ஸம்பூத -உண்டான சிலையானது
விஸ்வ கர்மண -நான்முகனால்
ஸம வர்த்தத –நன்றாகச் செய்யப்பட்டது

நான்முகனின் ஸங்கல்பத்தினால் பகவானின் திவ்ய மங்கள விக்ரஹ மண்டப ப்ராகாராதிகளின்
நிர்மாணத்துக்கு உசிதமான சிலை கல்லு உண்டாயிற்று

தஸ்ய த்வஷ்டா ரூபம் விததத் தத் புருஷஸ்ய அகரே விஸ்வம் ஆஜாநம்

தஸ்ய -அந்த சிலைக்கு
த்வஷ்டா -சிற்பியானவன்
ரூபம் -கர சரணாதிகளோடு கூடிய மநோ ஹரமான விக்ரஹத்தை
விததத் -நிர்மித்தான்
தத் -அந்த நிர்மாணமானது
புருஷஸ்ய -பரம புருஷனுடைய
அகரே–உண்டாகப் போகும்
விஸ்வம் -பிரஸித்தமான
ஆஜாநம் –ஆவிர்பாவத்திற்கு காரணமாய் இருக்கிறது

அஸ்ய ரூபம்‌ ஸந் த்ருசே ந திஷ்டதி -கச்சித்‌ ஏநம்‌ சஷுஷா ந பஸ்யதி
ஆகிலும்‌,
ஹ்ருதா மநீஷா மநஸா அபிக்லுப்த: யே விது: தே அம்ருதா –

அஸ்ய – இந்த பகவானுக்கு,
ரூபம்‌ -ரூபமானது,
ஸந் த்ருசே – த்ருஷ்டி. விஷயமாய்‌,
ந திஷ்டதி – இருப்பது இல்லை,
கச்சித்‌ – எவனும்‌,
ஏநம்‌ – இவனை,
சஷுஷா – கண்ணால்‌,
ந பஸ்யதி – பார்க்க முடியாது
ஆகிலும்‌,
ஹ்ருதா – ஸ்ருதி ப்ரமாணத்தாலும்‌,
மநீஷா – மந் வாதி ஸ்ம்ருதிகளாலும்‌,
மநஸா – பார்கவாதி பகவச்‌ சாஸ்‌த்ரங்களாலும்‌,
அபிக்லுப்த: – பிம்ப ரூபமாக.
யே- எவர்கள்‌,
விது: – தெரிந்து கொள்ளு கிறார்களோ,
தே- அவர்கள்‌,
அம்ருதா – மோக்ஷத்தை அடைவார்கள்‌,

வீர கர்மண்ய: ஸுதஷ தேவநாம்‌: யுக்த க்ராவ; ஜாயதே

வீர – பகவான்‌,
கர்மண்ய: – அர்ச்சனாதிகளால்‌ ஆராதிக்கப் பட்டு,
ஸுதஷ – பக்தர்சளின்‌ அபிஷ்டங்களை அருளுமவனாய்‌,
தேவநாம்‌: -கிரீடிக்க வேணுமென்ற திரு வுள்ளம் பற்றி, யுக்த க்ராவ; – சிலா மூர்த்தியாக,
ஜாயதே – ஆகிறான்‌.

அஸ்மாணம்‌ ஆகணம்‌ பாபத்யே”–முதலான வாக்யங்களாலும்‌,
ஆகணம்‌ -சில்பியினால் ஸாஸ்த்ர யுக்தமாகச் செய்யப்பட்டு-பகவத் ஸாஸ்த்ரங்களின் விதியைக் கொண்டு ப்ரதிஷ்டாதிகளைச் செய்யப்பட்ட
அஸ்மாணம்‌ -சிலா மூர்த்தியான பகவானை
ப்ரபத்யே” -சரணம் புகுகிறேன் .

ஸ்ம்ருதிகளில்‌ :–
” ஏதத் ரூபம்‌ ப்ரதிஷ்‌டாப்ய ஸூத்தயா சிலயா ந் ருப
*ஸுரூபாம்‌ ப்ரதிமாம்‌ விஷ்ணோ:
முதலான வாக்யங்களாலும் விக்ரஹ ஆராதனம்‌ சொல்லப் பட்டுள்ளது

அந்த ஸ: பிரபாந்தம்‌ மஹே ஸூராய விஷ்ணவே வ: த்யாய அர்ச்சத –என்று ருக் வேதத்தில்‌ சொல்லப்பட்ட து

அந்த ஸ: – ஆஹாராதி களால்‌ வ்ருத்தி யடையும்‌ கரண களேபரங்களை ஸ்ருஜித்து ,
பிரபாந்தம்‌ -ரக்ஷிக்குமவனான
மஹே ஸூராய – ஸர்வ சக்தனான,
விஷ்ணவே – பகவானை ,
வ: – உங்களுக்கு,
த்யாய – மோஷ ப்ராப்‌திக்காக,
அர்ச்சத – பூஜியுங்கள்‌,

பக்த்யா பகவந்தம் நாராயணம் அர்ச்சயேத் -என்றும்
மன்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ் குரு -என்றும்
சொல்லும் பிரமாணங்கள் எம்பெருமானுடைய அர்ச்சனம் மிகவும் உபா தேயம் -என்று அறுதி இடுகின்றன –

—————-

ஸ்ரீ வேதமும்‌–,ஸ்ரீ திருவேங்கடமும்‌.

அராயி காணே விகடே கிரிம்‌ கச்ச ஸதான்வே
ஸ்ரீம் பிடஸ்ய ஸத்வபி: தே அபிஷ்ட்வா சாதயாமஸி.–என்று ருக் வேதத்‌தில்‌ திரு வேங்கடமும்‌,
அதன்‌ ஸ்வாமியான ஸ்ரீநிவாஸனும்‌ வர்ணிச்கப்பட்டு இருக்கிறார்கள்‌.

இந்த ஸூக்தத்திற்கு -—
ஹே அராயி – ஏழையே!
காணே – குருடனே
விகடே கிரிம்‌-:–வேங்கடாசலத்தை
கச்ச – அடைவாயாக.
ஸதான்வே – எப்‌ பொழுதும்‌ ௮ந் வேஷணத்தைப்பண்ணும்‌ அவ் விடத்தைச்‌ சென்று,
அசஞ்சலமான த்யானத்தைப்‌ பண்ணுவாயாக,
கிரிம் பிடஸ்ய -ஸ்ரீ மஹா லஷ்மிக்குப் பீடமான ஸ்ரீநிவாலனுடைய,
ஸத்வபி: – ஸாத்‌விக குணங்களான,-அடியார்கள் கூட்டமாக செல்லுங்கோள் -என்றுமாம்
தேபி: – அந்த தயா வாத் ஸல்யாதி கல்யாண குணங்களால்‌,
சாதயாமஸி – உன் பாபங்களை நீக்கி பேரின்பத்தைத்‌ தருகிறோம்‌. என்று அர்த்தம்‌.

அராயி -ஏழை மனிதனே
காணே -ஞானம் இல்லாமல் கஷ்டப்படுகிறாயா
விகடே -தாபத் த்ரயங்கள் மூலம் கஷ்டப்படுகிறாயா
ஸதான்வே-தடங்கலால் கஷ்டப்படுகிறாயா
கிரிம்‌ கச்ச -திருமலைக்கு போ -திருப்பதி வந்தால் திருப்பம் வரும்
ஸ்ரீம் பிடஸ்ய -அகலகில்லேன் இறையும் என்று அவள்
ஸத்வபி: -அடியார் கூட்டங்களுடன் சென்றால்
தே அபிஷ்ட்வா சாதயாமஸி-அவன் அருளுக்குப் பாத்திரம் ஆவீர்

———-

அதோ யத்தாரு ப்லவதே ஸிந்தோ: பாரே ௮பூருஷம்‌,
ததராபஸ்வ துர்ஹண: தேந கச்ச பாஸ்தாம்‌. (10-155-3)
என்னும்‌ ஸ்ருதிக்கு
ஜகந் நாத க்ஷேத்ர பரமாக அர்த்தம் உண்டே

மேலும்‌,
ஏவம்‌ ஸ்ரீ க்ருஷ்ண ருபேண கரீடிதோ வெங்கடாசலே
அராயி காணே விகடே கிரிம்‌ கச்சே ” திதம்‌ விது:
ஸோ$யம்‌ வேத மய? ஸாக்ஷாத்‌ கிரீச . பந் நகாசல.,
என்று வேங்கடாசல புராணத்தில்‌ இந்த அர்த்தம்‌ சொல்லப்‌ பட்டுள்ளது

ரயி: ககுத்மான்‌ விததத்வி நஷ்டம்‌ ரயிவத் விதானம்‌
தஸ்மை ககுத்ரே விகடாய பித்ரே ஸ்வாஹா,
என்று பராமாத்மிக–உபநிஷத்தில்‌ சொல்லப் பட்டு இருக்கிறது.

ரயி: -ஐஸ்வர்யம் மிக்க பெரும் செல்வனும்
ககுத்மான்‌ –வ்ருஷபாஸலத்தில் நித்ய வாஸம் செய்து அருளும் ஸ்ரேஷ்டமானவனும்
விததத்வி நஷ்டம்‌ -அனைவருக்கும் அபீஷ்ட ஸமஸ்த பலன்களையும் அளிப்பவனும்
ரயிவத் விதானம்‌-அந்தணர் மாடு எனப்படும் ருக் யஜுஸ் ஸாம அதர்வணங்கள் ஆகிற வேதங்களில் பிரசித்தமானவனும்
ககுத்ரே -வ்ருஷ பாசலத்தின் அக்ர பாகத்தில் இருப்பவனும்
விகடாய -வெங்கடாசகத்தில் இருக்கும் பெருமானுக்கு
தஸ்மை பித்ரே ஸ்வாஹா,–நான் ஆத்மாவை ஸமர்ப்பிக்கிறேன்

—————

ஸ்ரீ திருவேங்கடமும் புராணங்களும்

ஏவம்‌ ஸ்ரீக்ருஷ்ண ருபேண க்ரீடிதோ வேங்கடாசலே
அராயி/ காணே / விகடே கிரிம்‌ சச்சேதி தம்‌ விது:
ஏவம்‌ வேத மய ஸாக்ஷாத்‌ கிரீச: பந்நாகசல”‘ –புராண நிர்வசனம்

வராஹ புமாணத்தில்‌
ஸர்வ பாபானி வேம்‌ ப்ராஹு:, கட? தத்தாஹ உச்யதே .
ஸர்வ பாபாபஹாரித்வாசத் வேங்கடாத்ரி நிதீ ரித
வேம் எல்லாப் பாபங்களும்
கட -எரிக்கப்படும்

வாமன புராணத்தில்
வகாரோ அம்ருத பீஜம்‌ து , கட மைஸ்வர்ய முச்யதே ,
அம்ருத ஐஸ்வர்ய ஸங்கக்வாத்‌, வேங்கடாத்ரி ரிதி ஸ்ம்ரித..
என்று.
வேம் என்ற சொல்லுக்கு * அம்ருதம்‌” என்றும்‌
௧ட என்பதற்கு ஐஸ்வர்யம்‌” என்றும்‌ – பொருள்‌ கூறப்பட்டன.

நம்மாழ்வார்
வேங்கடங்கள் -கடங்கள் எல்லாம் வேம் -தீயினில் தூசாகும்

——————–

தொல் காப்பியத்தில் பனம்பாரனார் எழுதிய சிறப்புப் பாசுரத்தில்
வட வேங்கடம் தென் குமரி-என்றும்

அக நானூறில்
கழல்புனை திருந்தடிக்‌ கள்வர்‌ கோமான்‌
மழபுலம்‌ வணக்கிய மாவண்‌ புல்லி
விழவுடை விழுச்சீர்‌ வேங்கடம்‌ பெரினும்‌
பழகுவ ராதலோ அரிது.” –என்றும்

வென்வேல்‌ திரையன்‌ வேங்கட நெடு வரை , ” என்றும்‌,

வினைநவில்‌ யாளை விறற்போர்ச்‌ தொண்டையைர்‌
இனமழை தவழும்‌ ஏற்றரு நெடும்கோட்டு கெடுக்கோட்‌்(ட)
ஒங்கு வெள்‌ ளருவி வேங்கடத் தும்பர்‌.” -என்றும்

சிலப்பதிகாரத்தில்
வீங்கு நீரருவி வேங்கட மென்னும்‌
ஒங்குயர்‌ மலயத்‌ துச்சி மீமிசை
விரிகதிர்‌ ஞாயிறும்‌ திங்களும்‌ விளங்கி
இருமருங்கு ஓங்கிய விடைநிலைத்‌ தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற்‌ பூண்டு
கன்னிற மேகம்‌ நின்றது போலப்‌
பகையணங்‌ காழியும்‌ பால்வெண்‌ சம்கமும்‌
,தகைபெறு தாமரைக்‌ கையில் ஏந்தி
நலங் கிளர் அரா மார்விற்‌ பூண்டு
பொலம்பூ வாடையிற்‌ பொலிந்து தோன்றிய
செங்கண்‌ நெடியோன்‌ நின்ற வண்ணமும்‌.”

சமணப்‌ புலவராகிய * ஐயனாரிதனார்‌” என்பவர்‌, தாம்‌ எழுதிய
புறப்பொருள்‌ வெண்பா மாலையில் ,
வெறிகொள்‌ அறையருவி வேங்கடத்துச்‌ செல்லின்‌
நெறி கொள்‌ படிவத்தோய்‌ நீயும்‌ -பொறிகட்டு
இருளீயும்‌ ஞாலத்து இடரெல்லாம்‌ நீங்க
௮ருளீயும்‌ ஆழி யவன்‌,”
என்னும்‌ வெண்பாவில்‌ “: திரு வேங்கடவன் திருமாலே -என்று கூறிப் போந்தார்

———-

(ஆழ்வார்கள்‌. )
ஸ்ரீ பொய்கை யாழ்வார்‌:–. 10
ஸ்ரீ பூதத்தாழ்வார்‌ i— 9
ஸ்ரீ பேயாழ்வார்‌ :– 19
ஸ்ரீ திருமழிசை யாழ்வார்‌ :….- 14
ஈம்மாழ்வார்‌ :– 44
ஸ்ரீ பெரியாழ்வார்‌ 7
ஸ்ரீ ஆண்டாள்‌ :– 16
ஸ்ரீ குலசேகராழ்வார்‌ :– 11
ஸ்ரீ திருப்பாணாழ்வார்‌ — 2
ஸ்ரீ திருமங்கை யாழ்வார்‌ :- 63
மொத்தம்‌, 195

(திவ்ய ப்ரபந்தங்கள்‌)
திருப்பல்லாண்டு :–(பெரியாழ்வார்‌) –1
முதல்‌ திருவந்தாதி :-(பொய்கையாழ்வார்‌) 10
இரண்டாம் திருவந்தாதி (பூதத்தாழ்வார்‌) 9
மூன்றாம் திருவந்தாதி :–(பேயாழ்வார்‌) 19
நரன்காம் திருவந்தாதி :–(திருமழிசை யாழ்வார்‌, 12
திருச்சந்த விருத்தம்‌ :– »2
திருவிருத்தம்‌ —( நம்மாழ்வார்‌) 8
பாசுரங்கள்‌.
பெரிய திருவந்தாதி (ஸ்ரீ நம்மாழ்வார்‌) 1
திருவாய்மொழி :– 35
பெரியாழ்வார்‌ திருமொழி : (பெரியாழ்வார்‌) 7
நாச்சியார்‌ திருமொழி :– (ஸ்ரீ ஆண்டாள்‌) 15
பெருமாள்‌ திருமொழி :–(குலசேகராழ்வார்‌) 11
அமலனாதி பிரான்‌ :–(திருப்பாணாழ்வார்‌) 2
பெரிய திருமொழி :–(திருமங்கை யாழ்வார்‌) 55
திருக் குறும் தாண்டகம்‌ :– 1
திரு நெடும் தாண்டகம்‌ :-… 3
சிறிய திருமடல்‌. – 1
பெரிய திருமடல்‌ : -2
மொத்தம்‌, 195 பாசுரங்கள்‌.

———-

ஸ்ரீ திருவேங்கடமும் ஸ்ரீ பூர்வாச்சார்யர்களும்

ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-

இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .

இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயுர் வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

லீலையாக
அகில புவன -அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்
மணல் தூள்கள் கணக்கிட முடியாதது போலே -நட்ஷத்ரங்கள் உண்டே-அண்ட கடாகம் – பல உண்டே
எல்லா புவனங்களுக்கும்
லீலை -லோக வஸ்து லீலா கைவல்யம்
கிம் காரணம் –
சு கமயம் துக்க மயம்-நமக்காக செய்கிறானா – அவாப்த சமஸ்த காமன் -தனக்காக செய்கிறானா –
வியாச மகரிஷி லீலா வஸ்து கைவல்யம்
லீலா ஸுயம் பிரயோஜனம் –க்ரீடா லீலா ஸுயம் பிரயோஜன வியாபாரம்
குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடுவது போலே
பகவத் சாஷாத்காரம் அடைந்தால் தான் அறிவோம்
மம ப்ரஹ்மணி ஷேமுசி பக்தி பூர்வா பவது-ஸங்க்ரஹமாக அனைத்தையும் அருளுகிறார்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே –ஜகத் காரணத்வம் –உயர்வற உயர் நலம் உடையவன் -அர்த்த விசேஷம்
விநத -மதி நலம் அர்த்தம் -பக்தியால் சத்தை பெற்றமை
மதிநலம் எனக்கு அருளினன் இல்லாததால் முன்பு சத்தை இல்லாமையையை தெரிவித்து அருளினார்
பக்தி வந்த பின்பு என் மனனே என்று சத்தை வந்தமையை வெளியிட்டு அருளினார்
விவித பூத வ்ராத -சம்பந்த சம்பந்திகளுக்கும் பலம் உண்டு என்று அருளிச் செய்கிறார்
பொய் நின்ற –யாம் -என்றும் -கேசவன் தமர் –எமர் -என்றும் அருளிச் செய்தது போல் இங்கும்
ரக்ஷைக தீஷே -துயர் அறு சுடர் அடி -அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூப -பிரார்த்தித்தே பெற வேண்டும் என்று காட்டி அருளுகிறார்
ப்ரார்த்த நீயம் என்பதை ஆவ்ருத்தி ரஸ க்ருத -ஸூத்ரம்
ஜிஜ்ஞாஸா -இச்சிக்க வேண்டும்
நிதித்யாஸி தவ்ய-ஸ்ருதி அர்த்தம்

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது என்பதும் தெளிவு.

இவற்றில். ஸ்தேம எனும் சொல் பாதுகாத்தல், தொடர்ந்து வைத்திருத்தல் இரண்டையும் குறிக்கும்.
இதில் எம்பெருமானின் இயல்வாகிய லோக ரக்ஷணம் அடங்கும்.
இப்படி ரக்ஷணம் பற்றி ஏற்கெனவே தெரிவித்த ஸ்ரீ ஸ்வாமி மீண்டும்,
”விநத-விவித-பூத-வ்ராத ரக்ஷைக -தீக்ஷே” என்கிறார்
ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீநிவாசனின் முதல் குறிக்கோள் தன் அடியார் அனைவரையும் ரக்ஷிப்பதே.

ஸ்ரீ ஆழ்வார் திருவாய்மொழி 1-3-2ல் “எளி வரும் இயல்வினன்” பாசுரத்தில்
ஸ்ரீ எம்பெருமானின் குணாநுபவம் செய்கிறார். அவனது அளவற்ற அப்ராக்ருத கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.
மீண்டும் அவனது மோஷ ப்ரதத்வம் எனும் எக் காலத்தும் வீடு பேறளிக்கும் மஹா குணத்தை
“வீடாந் தெளிதரு நிலைமை அது ஒழிவிலன்” என்கிறார்.
முன்பே சொன்ன குணங்களோடு இதுவும் சேராதோ மீண்டும் சொல்வானென் என்று கேட்டதற்கு நம் பூர்வர்கள்,
மோஷ ப்ரதத்வம் ஸ்ரீ எம்பெருமானின் மிகத் தனித்ததொரு குண விசேஷம் என்பதால் இது புனருக்தியன்று என்றனர்.

அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்.
ஸ்ரீ ஸ்வாமி தேசிகனும் த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியில் திருவாய்மொழியின் பிரதம நோக்கு மோக்ஷ ப்ரதத்வமென்று சாதிக்கிறார்.
ஆகவே மோக்ஷப் ப்ரதத்வம் தனியே அனுபவித்தற்குரிய ஒரு குணாதிசயம் என்று தேறுகிறது.
இதிலிருந்து, “விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது.

ஸ்ரீபாஷ்ய பங்தியில் ஸ்ரீ ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,
“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

பக்தி -சாத்திய -சாதனா -இரண்டும் உண்டே-நான்கு விசேஷணங்கள்-ப்ரஹ்மணி
ஸ்ரீநிவாசே -நான்கு விசேஷணங்களோடு கூடிய பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்று பேசி
தனக்கு பக்தி ரூபாபன்ன ஞானத்தை பிரசாதிக்க வேண்டும் என்று இதிலே பிரார்த்திக்கிறார்.

வ்யாவர்த்திகம் இதர பின்ன -காட்ட விசேஷணங்கள் வேண்டுமே –
அகில புவந ஜன்ம ஸ்தேம பங் காதி லீலே
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலை பெருத்தலும் நீக்கலா அலகிலா விளையாட்டுடையார் என்று
ஆதி சப்தத்தால் மோக்ஷ பிரதன் பிரஹ்மமாகிற அந்த ஸ்ரீநிவாசன் என்பதை சேர்த்துச் சொல்கிறார்.

சமன்வயா அத்யாயம் -முதலில் –
அவிரோதயா அத்யாயம் -இரண்டாவது –
சாரார்தம் இந்த பாதம் காட்டுமே –

வினத-விவித- பூத-வ்ராத- ரக்ஷைக-தீக்ஷே

இந்த கூட்டுச்சொல்லின் நேர்பட்ட பொருள்தான் என்ன?
வினத=சமர்ப்பிக்கப்பட்ட
விவித=வெவ்வேறுபட்ட
பூத=உயிர் வாழிகள்-ஆத்மாக்கள்
வ்ராத=குழுக்கள்
ரக்ஷைக தீக்ஷா=இவற்றின் ரக்ஷணம் ஒன்றே குறிக்கோளாய் உள்ளவன்

பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்

ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரம பதம் அடைகிறது.

இவ் வர்த்தத்தை ஸ்ரீ ஆழ்வார்கள் “பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11),
“எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே” போன்ற பல இடங்களில் உணர்த்தியுள்ளனர்.

வினத விவித பூத வ்ராத ரஷகைத தீஷே
பூதம் -ஸ்தாவர ஜங்கமம்
வினத -நமஸ்காரம் சரணம்
விவித -அநேக விதங்கள் உண்டே

அபய பிரதான சாரம் –சரணகத வத்சலன் சரம ச்லோகார்த்தங்கள்
சுர நர திர்யக் ஸ்தாவர ரக்ஷண பிரதீக்ஷேனாய் உத்தியோகித்திருப்பவன் அவன்.
1.ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் – அஹம் ஸ்மராமி மத் பக்தம் –நயாமி பரமாமி கதம்
2.ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் – ந த்யஜேயம்
3.ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் – மோக்ஷ யிஷ்யாமி
என்று தன்னைத் துதிப்பவர்களை கைவிடாமல் கரையேற்றுகிறேன் என்பதான ரக்ஷண தீக்ஷை அவனுடையது.
சாதனா பல அத்யாய சாரம்
மேதா விலாசம் -இத்தால் அறியலாம் பிரதிபை யும் அறியலாம்

ஸ்ருதி ஸ்ரசி விவீப்தே –
வேதாந்தம் -வேத சித்தாந்தம் -ஸ்ருதி ஸிரசி-
வேத ஸிரோ பாகமான உபநிஷத்துக்களில் போரப் பொலிகின்றவன் அவன் என்பதும்
வேதம் அனைத்தும் பூர்வ பாகம் -பிரதான்யம் இல்லை சிலர் சொல்வார்கள் –
பிரமாணம் அதிலும் காட்டி ஸ்ரீ பாஷ்யம் அருளுகிறார்
வேதார்த்த சங்கரகம் வேதாந்தாரார்த்த சங்கரகம் பெயர் வைக்க வில்லை –
உபநிஷத் தனி வியாக்யானம் ராமானுஜர் செய்து அருள வில்லை
வேதார்த்த சந்க்ரகம் இதையும் சொல்லி அருளி –
தாத்பர்யம் முழுவதும் இதிலே அருளி இருக்கிறார் –
பிரஸ்தான த்ரயம் -அத்வைதிகள் கீதா உபநிஷத்-மூன்றும் சேர்ந்தே ஒரே பிரஸ்தானம்
கீதை ப்ரஹ்ம சூத்ரம் உபநிஷத் மூன்றும் ஒன்றே

ஸ்ரீநிவாச

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரங்களில் எங்குமே ப்ரஹ்ம லக்ஷ்மீ சம்பந்தம் குறிப்பிடப்படக் காணோம்.
ஆகிலும் ஸ்ரீ எம்பெருமானார் நூல் சுருக்கமே போலத் தோற்றும் முதல் ச்லோகத்திலேயே ஸ்ரீ எம்பெருமானை ஸ்ரீ நிவாசன் என்றார்.
இது ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லார்க்கும் மிக்கோனான எம்பெருமானை ஸ்ரீரிய:பதி என்றே கண்டதாலும்,
திரு இல்லாத் தேவரைத் தேரேன்மின் தேவு என்றதாலுமே ஆகும்.

பக்தி ரூபா சேமுஷீ பவது

ஞானியர்க்கு இது ஒரு விசித்திரமான ப்ரார்த்தனை.
ஸ்ரீனிவாசனைப் பற்றிய என் ஞானம் வளர்வதாக என்றோ
ஸ்ரீனிவாசனிடம் நான் பக்தியோடு இருப்பேனாக என்றோ கூறாது,
ஸ்ரீநிவாசனிடம் என் உணர்வு பக்தி ஆகக் கடவது என்று அருளுகிறார்.

ஸ்ரீ ஆழ்வாரின் “மதிநலம்” எனும் சொல்லின் நேர் மொழியாக்கமே எம்பெருமானாரின் “சேமுஷீ” .
அமரகோசம் நூலின்படி மதி சேமுஷீ இரண்டும் ஒரே பொருள் தரும் சொற்களாகும். நலம் என்பது பக்தி.
ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமான் தமக்குச் செய்த அருளால் ஞானம் பிறந்து அதனால் பக்தி பிறந்தது,
பக்தி என்பது ஸ்ரீ எம்பெருமானைப் பற்றிய ஞானம் என்கிறார்.
ஸ்ரீ ஆழ்வார் காட்டிய நெறியை ஸ்ரீ எம்பெருமானார் நன்கு பின்பற்றினார்.
அவர் உலகுக்கு ஒளிவழி காட்டினார், அவருக்கு வழிகாட்டினார் ஆழ்வார்.

எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸங்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குண கண
யவனவன்=புருஷோத்தமன்

தீப்தே -தீபம் காட்டும்-சாஸ்திர யோநித்வாத் – வேதைக சர்வைஸ்தி-அவனைக் காட்டும் பிரகாசிக்கும்
பிரகாசம் அவன்-நமக்கு உபநிஷத் காட்டுமே
விதீப்தே
ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே -ஸ்ரியபதித்வம்
ப்ரஹ்மணி- யௌகிகா ரூடிக அர்த்தம் -ஸ்ரீநிவாசன் திருமலை பெருமாளே குறிக்கும்
பிரஹ்மணி! ஸ்ரீநிவாஸே – அவனே ஸ்ரீநிவாஸ பர பிரஹ்மம் என்று
1. ஸ்ரீயப் பதித்தவம்;
2. ஸ்ருஷ்டி ஸ்திதி லயகாரகத்வம் ;
3. ஸர்வாத்ம ஸம்ரக்ஷகத்வம் ;
4. பிரஹ்மணத்வம்
இத்யாதி விசேஷண விசிஷ்ட பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்பதாக தொடக்கத்தேலேயே
குணாஸ்ரய உபய லிங்க விசேஷ விசிஷ்ய பிரஹ்ம தத்வத்தை பிரதி பாதித்து
அத்வைதிகளின் மிடற்றைப் பிடிக்கிறார் ஸ்வாமி.
ஐஸ்வர்யம் -உபய விபூதி நாதன் –

பரஸ்மின் –
உத்தேச விதய பாவம் -வார்த்தை மாற்றி
கரும்பு சாறு போலே –
ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே பரஸ்மின் -மூன்றையும் வைத்தே நிறைய விஷயங்கள்-பரம் ப்ரஹ்மா

பகவான்
ராமானுஜர் போதாயனர் -வால்மீகி பகவான்
பரஸ்மின் ஒருவனே
விசிஷ்டாத்வைதம் காட்டும் இந்த பாதம் –
ஐந்து விசேஷணங்கள் ஸ்ரீனிவாச பரஸ்மின் இரண்டையும் சேர்த்து-பக்தி ரூபாபன்ன ஞானம் கொடுக்கட்டும் என்று அருளுகிறார்

ஷேமுசி பவது – ஞானம் உண்டாகட்டும்
ஞானான் மோஷா உபநிஷத்
தமேவா வித்வான் அமிருதோ பவதி
ஞான மார்க்கம் -பக்தி மார்க்கம்
அவ்யக்த மார்க்கம் -நேதி நேதி மார்க்கம்
இது இல்லை இது சொல்லி சொல்லி -அவ்யக்த மார்க்கம் ஞான மார்க்கம்
பக்தி வ்யக்த மார்க்கம் -கீதை -அவ்யக்த மார்க்கம் துக்கம் விளைக்கும் –
பக்தி ரூபமான ஞானம் –
அவ்யக்த மார்க்கம் சாங்க்ய மார்க்கம்
பக்தி யோகம் யோகம் மார்க்கம் -யோக சாஸ்திரம்
பக்தி ரூபா ஷேமுசி -உண்டாகட்டும் -மம பவது

அத்வைதிம் -moniyisam -இல்லை நான்- dualisam
நிர் விசேஷ அத்வைதிம்
ச விசேஷ அத்வைதம் -விசிஷ்டாத்வைதம் பெயர் அப்புறம் வந்தது
வடுக நம்பி அஷ்டோத்ரா நாமாவளி -செய்யும் பொழுது -விசிஷ்டாத்வைத பாரக
நிர் விசேஷ ப்ரஹ்மம்-வஸ்து அத்வைதி
விசேஷம் சகிதம் ப்ரஹ்மம்
குண -விக்ரக- விபூதையக-
குணம் உள்ளதால் ஸ்தோத்ரம் செய்கிறோம்
ஸ்தோத்ரம் -குணி நிஷ்டா குண அதிதானம் –
குணி இடம் உள்ள குணங்களை சொல்வதே ஸ்தோத்ரம்
விக்ரகம் -ஆகாரம் உண்டே
விராகாரம் பர ப்ரஹ்மம் அத்வைதி
அதை இல்லை என்று நாம் சொல்ல வில்லை –
நிரகாரம் மட்டும் இல்லை -ஆகாரமும் உண்டு -நம் அபிப்ராயம்
த்யானம் தைல தாராவது அபிச்சின்ன ஸ்ம்ருதி சந்ததி -விக்ரகம் வேண்டுமே இதுக்கு
ஆலம்பனம் -அர்ச்சை -த்யானத்துக்கு-ஆலம்பனம் –
விபூதி -பூதிர் ஐஸ்வர் யம்-உபய விபூதி நாதன் –
மேலே highly evolved வைகுண்டம் – பிராமாணிகம் இவையும்

அத்வைதி எல்லாம் மித்யை
பாதோச்ய -திரிபாதி –
வைகுண்ட கத்யம் -தர்சனம் -பெற்று அருளி –
ஸ்தவ்ய ஸ்தவ பிரிய -ஸ்தோத்ரம் பண்ண – சேர்த்தி உள்ளதை காட்ட வியாஜ்யம்
என் கோயில் வலம் வந்தாய் –
தன்னுடைய அம்சம் தன்னிடம் சேர்ந்தால் மகிழ்வான்
அசித் அவிசிஷ்டா ஜந்து -பிரளயம் -dormant stage உபாசனம் செய்ய முடியாதே
ஜாத நிர்வேதம் கொண்டானாம்
கரண களேபரங்கள் கொடுத்து அருளி —

சித் அசித் -சரீரம் விசிஷ்டம் ப்ரஹ்ம ஏக மேவ அத்வதீயம் –
தத்வ த்ரயம் சித் அசித் ஈஸ்வர –
ஏக மேவ தத்வம்-ஸ்வதந்திர தத்வம் ஒன்றே விரோதம் இல்லையே இரண்டுக்கும்

அத்வைத பரமான மஹா வாக்கியங்கள் :

1. தத்வமஸி – சாந்தோக்கியம் .
2. அஹம் பிரஹ்மாஸ்மி – பிரஹதாரண்யம் .
3. பிரக்ஞானம் பிரஹ்ம .
4. அயமாத்மா பிரஹ்ம – மாண்டூக்யம்

விசிஷ்டாத்வைத பரமான வாக்கியம் :
1. போக்தா போக்யம் பிரேரிதாரம் ச மத்வா ஸர்வம் பிரோக்தம் திரிவிதம் பிரஹ்ம எதது – ஸ்வேதாஸ்வேத உபநிஷத்.

தத்வ த்ரயம் சொல்லும் போக்தா போக்யம் ப்ரேரிதா-ப்ரஹ்மமே மூன்று விதமாக

மங்கள ஸ்லோகம் -இவற்றை விவரிக்கிறதே
தடைகளை நீக்கி –நமஸ்கிரிய-வஸ்து நிர்த்தேசம் – ஆசீர் ரூபா மங்களம்-பக்தி ரூபாபன்ன ஞானம் பவதி –

அதா -சப்தம் ஓம்காரம் போலே முக்கியம்
சூத்திர கிரந்தங்கள் எல்லாம் அதா -சப்தத்தால் ஆரம்பிக்கும்
மங்களார்த்தம் -இதுவும்
நிகில சகல அகில பர்யாய-அகாரோ வாசுதேவச்தோ வாக்கியம்-அகாரம் -சப்தங்களுக்கு மூலம்
சகல -விட அகில -அனைத்தையும் குறிக்கும்
ஆதி -சப்தம் –மோஷ பிரதானம்-ஜென்மாதி சூத்ரம் விவரம் அப்புறம் வரும்
வினத -நமஸ்காரம் விசேஷண பிரபத்தி
விவித பூத -beings -நான்கு – தேவ மனுஷ்ய ஸ்தாவர ஜங்கம-சமூகம் – வ்யாஜ்யமாக சரணாகதி
ரஷைகத தீஷை -காக்கும் இயல்பினான் கண்ணன்
பிரகிருதி அம்சம் புருஷ அம்சம் இரண்டும் பிரதானம்
இடது வலது பக்கம்
பரமாத்மா -ஆண் –
ஸ்வாமித்வ சேஷத்வ -பும்சத்வம்
ஸ்திரீ ஸ்தானம் இதர சர்வம்
புருஷ சப்தம்
புருஷோத்தோம உத்தமன் பாகவதம்

ஸ ஏவ ஸ்ருஜ்யஸ் ஸ ச சர்க்க கர்த்தா -ஸ்ருஷ்டி ப்பவனும்-ஸ்ருஷ்டிக்கப் படுபவனும் அவனே
விசிஷ்டாத்வைதம்
விசிஷ்டஸ்ய அத்வைதம் -சேதன அசேதனங்கள் -சரீரம் -ஸூஷ்ம -ஸ்தூல -அவஸ்தைகளிலும்
பஹுஸ் யாம் ப்ரஜா யேவ
மத்தஸ் சர்வம்
அஹம் சர்வம்
மாநா தீநா மேய ஸித்தி
வேதாத் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி ந தைவம் கேஸவாத் பரம்

வேத வேத்ய பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத ப்ரா சேதஸா தா ஸீத் ஸாஷாத் ராமாயணாத் மநா
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள்

காரணத்வம்
அபாத்யத்வம்
உபாயத்வம்
உபேயத்வம்
நான்கையும் நான்கு அத்யாயங்களால் சாரீரிக மீமாம்ஸை சொல்லுமே

நலம் உடையவன் -காரணத்வத்துக்கு அஷிப்தங்களான கல்யாண குணங்கள்
உயர்வற -அபாத்யத்வம் -வருத்தம் அற்ற உயர்வு -லீலையாக அனைத்தும் செய்து அருளுபவர் -லோகவது லீலா கைவல்யம்
மயர்வு -ஜீவ ஸம்ஸார தோஷம்
மதி நலம் -பக்தி -உபாயம் மூன்றாம் அத்யாய கருத்து
அருளினான் -உப பத்தே -ஸித்த உபாயம்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -அர்ச்சிராதி கதிகள் ஸூசகம்
துயர் அறு -உத்தர பூர்வா கயோ –ஸூ த்ர அர்த்தம் அவித்யா நிவ்ருத்தி

சுடர் அடி தொழு -சம்பத்ய ஆவிர்பாவம் –

தே ந விநா த்ருணம் பிந சலதி –அவன் அன்றி ஒரு துரும்பும் அசையாது –
கர்த்தா காரயிதா ச ஸஹ -அவனே எல்லாம் செய்கிறவன் -செய்விக்கிறவன் –

ஆசீர்வாதம் -நிர்தேச ரூபம் -நமஸ்கார ரூபம் -மூன்றாலும் அருளிச் செய்கிறார்
அ இதி பகவதோ நாராயணஸ்யா பிரதமாபிதானம்
அகாரம் பிரயுஞ்ஞாநேன கின்நாம மங்களம் ந க்ருதம்
அகாரத்தோ விஷ்ணு ஜகத் உதய ரஷாப்ளய க்ருத்-பட்டர்
ப்ரபத்யே பிரணவாகாரம் பாஷ்யம் –

அகில புவன -அகாரமும்
உக்தம் -அத்யாயம் 3 பாதம்
சர்வம் சமஞ்ஜசம் – முடிவில் மகாரமும் அருளி உள்ளார்
ஆதி -மோஷ பிரதானம் -தனியாகவே அருளுவதால்
ஜகத் உத்பத்தி ஸ்திதி பிராணாச சம்சார விமோச நாதாய -போலேயும்
ஜகத் ஜன்ம ஸ்திதி த்வம்ச மகா நந்தைக ஹேதவே-போலேயும்
உத்பவ ஸ்திதி பிரளய சம்சார நிவர்த்த நைக ஹேது பூத -வேதார்த்த சந்க்ரகம் -போலேயும்
ஆதி -அந்த பிரவேச நியமனாதிகள் –
இதை ஸ்ரீ பாஷ்ய காரரே
ஜகத் உத்பத்தி ஸ்திதி சம்ஹார அந்த பிரவேச நியமனாதி லீலம் -என்று விவரித்து அருளிச் செய்கிறார்-

லீலா சப்தம் பரி பூரணன்
அப்ரமேய அநியோஜ்யச்ச யத்ர காமகாமோ வசீ மோததே பகவான் பூதை பால க்ரீட நகை இவ -மகா பாரதம்
லீலா நாம ஸுவயம் பிரயோஜனதயா அபிமத அநாயாச வியாபார
பஹுஸ்யாம் -உபாதான காரணத்வம்
லீலை -நிமித்த காரணத்வம்
விநத -விசேஷண நதா
வ்ராத -சமுதாயம் சமுகம் கூட்டம்
ஏக தீஷா-த்ருட வ்ரதம் -ரஷகம் -அநிஷ்ட நிவ்ருத்தம் இஷ்ட பிராப்தம்

முதல் அத்யாயம் -சமன்வய அத்யாயம் -இரண்டாவது அதிகரணம் -ஜன்மாத்யதிகரணம் -ஜன்ம ஸ்தேம பங்க –
லீலை -அவிரோதாத்யாயம்
முதல் பாதம் கடைசி அதிகரணம் -பிரயோஜனவத்வாதிகரணம் -லோகவத்து லீலா கைவல்யம் -ஸூத்ரம்
மூன்றாம் அத்யாயம் சாதனாத்யாயம் -விநத பதத்தால் ஸூசிப்பிக்கிறார்
ரஷா பதம் -கைங்கர்ய சாம்ராஜ்யம் அருளுவதை -நான்காம் அத்யாய சுருக்கம் அருளுகிறார்
ஜகத் காரண த்வ மோஷ பிரதத்வங்கள் -சத்ர சாமரங்கள் போலே பர ப்ரஹ்மத்துக்கு அசாதாரண சின்னங்கள்
ஸ்ருதி ஸிரசி -பிரமாணம் காட்டி அருளி
விதீப்தே -விசேஷண தீப்தத்வம் -பூர்வ பாகம் தேவாதி ரூபமாகவும் -ஸுவயம் நிரதிசய ஆனந்த மயன்
ப்ரஹ்மணி -சத் ப்ரஹ்மாதி சப்தங்களை குறிக்கும்
ஸ்ரீநிவாசே -விசேஷ பதம் -நாராயண ஆதி சப்தங்களை குறிக்கும்

பரஸ்மின் –பராதிகரணம் -3-2-7-சர்வ உத்க்ருஷ்டன்
உபய லிங்காதி கரணத்தில்
ந ஸ்தானதோபி பரஸ்ய உபய லிங்கம் சர்வத்ரஹி -3-2-11
ஸே மு ஷீ -உபாய ஸ்வரூபம் -சாமான்ய சப்தம்
பக்தி ரூபா -விசேஷ சப்தம்
பக்த்யா து அநந்யயா சக்ய
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்வேன பிரவேஷ்டும் ச பரந்தப
பர பக்திக்கு காரண பூதமாயும்
ஜ்ஞான தர்சனாதிகளுக்கு சாதனமான பக்தியும்
மம
அஹம் அஸ்மி அபராதானாம் ஆலயம் -ஸ்வாத்மானம்
பவது உண்டாகட்டும்

—————-

விஸ்வம் பரர் முனிவர் குருவித்துறை -ராமர் சுக்ரீவன் அங்கதன் ஆஞ்சநேயர் திரு உருவம் ஸ்வப்னத்தில் கண்டு –
சிற்பி மூலம் செய்து -திருவாராதனம் செய்து
அவற்றை திருமலை நம்பிக்கு இராமாயண காலஷேபம் அன்று கொடுக்க -அவர்களையே கர்ப்ப க்ருஹத்தில் ப்ரதிஷ்டை –
இதுக்காக திருமலைக்கு ஏறிச் சென்று
ஏழு திருமேனி -அங்கதன் சுக்ரீவன் விபீஷணன் -ராம சீதா லஷ்மணன் திருவடி
மடப்பள்ளியில் அங்கதன் சுக்ரீவன் விபீஷணன்
முன்பே திருவேங்கட அப்பனே கேட்க வந்தான் திருவடி நிலை திருமலைக்கு கீழ் பிரதிஷ்டை -ராமானுஜர்

அனந்தாழ்வான் -நீரே ஆண் பிள்ளை
யமுனைத் துறைவன் மண்டபம்
ராமானுஜர் புத்தேரி பொய்கை-
ராமானுஜர் நந்தவனம் -மூன்றையும் சமைத்து
அடியேன் மதுரகவி தாசன் இவர்கள் சிஷ்யர்கள் இன்றும் –
வேதார்த்த ஸங்க்ரஹம் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து காலக்ஷேப உபதேசம் —
ஆச்சார்ய பீடம் -ஸ்ரீ பாஷ்ய காரர் -அவர் திருவடிக் கீழே திருவடி நிலையாக திருவேங்கட அப்பனே
இருந்து கேட்டுக் கொண்டதாக ஐதிக்யம்

குணத்துக்காக சதகம் தயா சதகம்
பாதுகைக்காக சஹஸ்ரம் பாதுகா சஹஸ்ரம்
வெற்பு என்று வேங்கடம் பாடும் -பேயாழ்வார் -வெற்பு என்று பாடினேன் திருமழிசை
கண்ணன் அடி இணை எனக்கு காட்டும் வெற்பு -தேசிகன்
வேங்கட நாதனை வேதாந்த –வேங்கடத்துள்ளே விளையாடும் நந்தியை வேங்கடமே திரு மூலர் –
மலையும் தேசிகனும் பெருமாளும் அடி இணைக்கு ஒப்பு இல்லையே – வெற்பு இவற்றையே எனக்குக் காட்டும்
ராம ராவண யுத்தம் -அதுக்கு இணை இல்லையே
அடி இணை தானே கண்ணனைக் காட்டும் வெற்பு
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு
காம்பற தலை சிறைத்து -சரணாகதர்களுக்குகே காட்டிக் கொடுக்கிறான்

புரட்டாசி மாதம் முதல் நாள் மா முனிகள் திருமலைக்கு எழுந்து அருளிய நாள்

———-

கண்ணன் அடி இணை எமக்குக் காட்டும்‌ வெற்பு
கடுவினையர் இருவினையும் கடியும்‌ வெற்பு
திண்ணம் இது வீடு என்னத் திகழும்‌ வெற்பு
தெளிந்த பெரும் தீர்த்தங்கள் இரச. செறிந்த வெற்பு
புண்ணியத்தின்‌ புகல் இது எனப்‌ புகழும்‌ வெற்பு
பொன்னுலகில் போகமெல்லாம்‌ புணர்க்கும்‌ வெற்பு
விண்ணவரும்‌ மண்ணவரும்‌ விரும்பும்‌ வெற்பு
வேள்கடவெற்‌பு என விளங்கும் வெற்பே.

கண்ணன்
1-கருமை நிறம்
2-ஆகர்ஷகன்
3 கண் போல் நிர்வாஹகன் -கண்ணாவான் என்றும் மண்ணோர் வொன்னோர்க்கும் வேங்கட வெற்பனே
4-கண்ணாளன் -புருஷோத்தமன் -அனைவரும் ஸ்த்ரீ பேராயர்
5-ஆனந்தம் அளிப்பவன் -எள்ளோயில் மாயனை கண்ணனைத் தாள் பற்றி யான் ஒரு துக்கம்
6-மாயன் -கடல் மலி மாயப்பெருமான் கண்ணன்
7-கண்ணில் நிற்பவன் -கண்ணை விட்டு அகலாமல்
8-கண் அழகு -அணி கொள் செந்தாமரைக் கண்ணன்
9- யசோதை கல்யாண உத்சவம் சேவிக்காத குறை தீர்க்க நித்யம் கல்யாண உத்சவம் –
வகுள மாலிகை -மடப்பள்ளியில் இன்றும் சேவை -வேங்கட கிருஷ்ணன்-கண்ணனின் சரம ஸ்லோகம் காட்டி அருளும் திவ்ய மங்கள விக்ரஹம்
10-ஏழு நாள்கள் -கோவர்த்தனம் –பிரதியாக ஏழு மலையாக இவனைத்தாங்கி
திருக்கர ஸ்பர்ஸமும் திருவடி ஸ்பர்ஸமும்-கோவிந்தா கோஷம் இன்றும் உண்டே –
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் –பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை ஒன்றுமே தொழ கருவினை போகுமே
11-ராமனே கண்ணன்-ஸ்ரீ நிவாஸ ராகவன்
வீதி வாய் செல்லும் –யாவருக்கும் கண்ணன் என்றே -மிதிலை மக்களின் கண்களுக்கு உள்ளே பயணிக்கிறான் -கம்பர்
கண்ணில் நிற்பவன் -கண்ணன் -கமலக் கண்ணன் என் கண்ணில் உள்ளான்
12- குருவித்துறை விஸ்வம் பரர் -ஸ்ரீ இராமாயண பாராயண பலனாக பெற்ற ஸேவை -கனவில் காட்டக் கண்டு –
சிற்பி மூலம் செய்த உத்ஸவ மூர்த்திகள்-பிராட்டியுடன் லஷ்மணன் திருவடி கர்ப்பக க்ருஹம் -மடப்பள்ளியில் ஸுக்ரீவன் விபீஷணன் அங்கதன்
13-எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்த -இவனே நரஸிம்ஹன்
14-ஸ்ரீ நிவாஸ கல்யாணம் -ஸ்வாமிக்கு அமுது செய்ய நரஸிம்ஹர் -ஸ்ரேஷ்ட ஆச்சாரம் -அஹோபில நரஸிம்ஹரே இங்கும் சேவை

———————-

திருச் செண்பக மரத் திரு சுற்று -அனந்தாழ்வான் திருமலையில் இப்பொழுது நாம் காணும் வெளி மதிலைக் கட்டி வர
அங்கு செண்பக மரம் இருக்க -தொழுது மதிள் கட்டாமல் போக -மறு நாள் அந்த மரம் நகன்று வழி விட்டதாம்
வேங்கடேச இதிஹாச மாலை இத்தைச் சொல்லும்

பத்து வித கைங்கர்யங்கள் ராமானுஜர்
குருகாய் பிறப்பேனே –உறு மீன் வரும் அளவும் -வேத மந்திரங்களில் -ரிக் வேத மந்த்ரம் திருமலையைப் பாடியதாகக் காட்டி அருளினார்

மீனாக -அமுத வெள்ளத்தில் மூழ்கடிக்க திருமலையில் -திருப்பாவை நித்ய அனுசந்தானம்
வெள்ளிக்கிழமை திரு மஞ்சனம் நாச்சியார் திருமொழி அனுசந்தானம்

பொன் வட்டில் பிடிக்க -அணுக்க தொண்டர் -ஆழ்வார்கள் சந்நிதி

செண்மகம்-புஷ்ப கைங்கர்யம் -சிந்து பூ மகிழும் திரு வேங்கடம் -அனந்தாண் பிள்ளை-புஷ்ப மண்டபம் –
ராமானுஜர் பெயரால் தோட்டம் w -1 gate -ராமானுஜர் புத்தேரி -அனந்தஅன்பில்லை நிர்மாணம்  -பண்ண நினைத்து
கீழேயே இருந்து மங்களா ஸாஸனம் செய்துள்ளார்கள் ஆழ்வார்கள்
ஆதி சேஷன் வடிவம் மட்டுமே அல்ல -திரு மலை ஒன்றுமே தொழ வினை போகுமே -பகவான் வடிவம்
அடிவாரத்தில் பிரதிஷ்டை செய்து அருளினார்

தம்பகம் –புதர் –அடைக்கலம் – மதுரை அருகில் குருவித்துறை -விஸ்வம் பரர் -வம்சத்தார் இடம் ராமரே ராமானுஜர் இடம் எழுந்து அருளப் பண்ணிக் கொடுக்கச் சொல்ல-ராமர் லஷ்மணர் சீதை திருவடி -கர்ப்ப க்ருஹம் ப்ரதிஷ்டை-சுக்ரீவன் அங்கதன் விபீஷணன் -மடப்பள்ளியில் ப்ரதிஷ்டை
புனர்பூசம் புறப்பாடும்  சஹஸ்ர தீப சேவை இன்றும் சேவிக்கலாம்

பொற் குவடு -கல் பாறை கைங்கர்யம் -ஸ்ரீ ராமாயணம் திருமலை நம்பியிடம் புளிய மரத்தடியில் கேட்டு இருக்க
பச்சை கர்ப்பூரம் ஸர்வ கந்த வாசனை வர
மலையப்பனே புளிய மரத்தடிக்கு வந்து – ஸேவை சாதித்து -திருவடி பதித்து -துளஸி பூக்களையும்
ஸ்ரீ வாரி பாதம் ப்ரதிஷ்டை செய்து அருளினார்
மலைக்கு ஏற முடியாதார் ஸ்ரீ வாரி பாதம் சேவிக்க வசதியாக

காட்டாறு –பெரிய ஜீயர் திருமடம் நிறுவி கைங்கர்யம்

நெறி -பாதைக்கு விதிகள் -மாட வீதிகளில் காலனி வாகனங்கள் கூடாது
கைங்கர்ய பரர்கள் மட்டுமே திருமலையில் இருக்க வேண்டும்
மலம் இத்யாதி கூடாதே-கோயிலுக்குள்ளே இருக்கும் விதி முறைகள்

படியாய் கிடந்தது பவள வாய் காண்பேனே -பூக்கள் திருவேங்கடத்தானுக்கு மட்டுமே
அங்குள்ள-உணவு பிரசாதம் மட்டுமே-உகப்புக்காகவே அனைத்தும்

ஏதேனும் ஆவேனே -ஆச்சார்யராக இருக்கவே அவன் சங்கல்பம் -அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து
வேதார்த்த ஸங்க்ரஹம் அருளினார்
பாஷ்யகாரர் சந்நிதியும் -அங்கு -அமர்ந்த திருக் கோலம் -மலையப்பன் நின்ற திருக்கோலம்

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அலர் மேல் மங்கா சமேத ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்–ஸ்தோத்திரம்–பிரபத்தி–மங்களாசாசனம்–மூலமும் பொருளும் —

May 24, 2023

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் (29 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம் (11 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி (16 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச மங்களாசாசனம் (14 பாடல்கள்)
ஆகிய நான்கு பகுதிகள்

———–

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்–1-

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு–2-

மாதஸ் சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்-3-

தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே-4-

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–5-

பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–6-

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–7-

உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–8-

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–9-

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–10-

யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–11-

பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–12-

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்–13–

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்-14–

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–15–

சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-16-

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–17–

ஸூர்யேந்து பவ்ம புத வாக்பதி காவ்ய சவ்ரி
ஸ்வர்பாநு கேது த்விஷத் பரிஷத் ப்ரதாநா
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாஸ தாஸ
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–18–

த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–19-

த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!–20-

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–21-

ஸ்ரீ பத்மநாப புரு÷ஷாத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-22–

கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-23–

மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்
ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–24–

ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்–25–

பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்–26–

பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–27–

லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–28–

இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே–29-

***

ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்ரம்

கமலா குசசூசுக குங்குமதோ நியதாருணிதாதுல நீலதநோ

கமலாயத லோசன லோகபதே விஜயீபவ வேங்கட சை’லபதே                       1

ஸ சதுர்முக ஷண்முக பஞ்சமுக ப்ரமுகாகில தைவத மௌளிமணே

ச’ரணாகத வத்ஸல ஸாரநிதே பரிபாலயமாம் வ்ருஷ சை’லபதே                 2

அதிவேலதயா தவதுர்விஷஹை: அனுவேல க்ருதை ரபராத ச’தை

பரிதம் த்வரிதம் வ்ருஷ சை’லபதே பரயா க்ருபயா பரிபாஹி ஹரே           3

அதிவேங்கட சை’லமுதாரமதே: ஜனதா பிமதாதிக தான தராத்

பரதேவதய கதிதாந்நிகமை: கமலாதயிதான ந பரம் கலயே                           4

கலவேணுரவாச’ கோபவதூ ச’தகோடி வ்ருதாத ஸ்மரகோடி ஸமாத்

ப்ரதிவல்லவிகாபிமதாத் ஸுகதாத் வஸுதேவஸுதாந் ந பரம் கலயே       5

அபிராம குணாகர தாச’ரதே ஜகதேக தநுர்தர தீரமதே

ரகுநாயக ராம ரமேச’ விபோ வரதோ பல தேவ தயாஜலதே                           6

அவநீதநயாகம நீயகரம் ரஜநீகரசாரு முகாம்புருஹம்

ரஜனீசரராஜ தமோமிஹிரம் மஹநீயமகம் ரகுராமமயே                                  7

ஸுமுகம் ஸுஹ்ருதம் ஸுலபம் ஸுகதம் ஸ்வநுஜஞ்ஞ ஸுகாய அமோகசரம்

அபஹாய ரகூத்வஹமன்யமஹம் ந கதஞ்சன கஞ்சன ஜாது பஜே                8

விநா வேங்கடேச’ம் ந நாதோ ந நாத: ஸதா வேங்கடேச’ம் ஸ்மராமி ஸ்மராமி –

ஹரே வேங்கடேச’ ப்ரஸீத ப்ரஸீத ப்ரியம் வேங்கடேச’ ப்ரயச்ச ப்ரயச்ச      –9

அஹம்தூரதஸ்தே பதாம்போஜயுக்ம ப்ரணாமேச்சயா (ஆ)கத்யஸேவாம் கரோமி —

ஸக்ருத்ஸேவயா  நித்யஸேவாபலம் த்வம் ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச’        -10

அஜ்ஞாநினா மயா தோஷான் அசேஷான் விஹிதான் ஹரே–11

க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் சே’ஷசை’ல சி’காமணே

***

ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி

ஈஶாநாம் ஜக³தோ(அ)ஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம் ப்ரேயஸீம்
தத்³வக்ஷ꞉ஸ்த²லநித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்திஸம்வர்தி⁴நீம் ।
பத்³மாலங்க்ருதபாணிபல்லவயுகா³ம் பத்³மாஸநஸ்தா²ம் ஶ்ரியம்
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்ஜ்வலாம் ப⁴க³வதீம் வந்தே³ ஜக³ந்மாதரம் ॥ 1 ॥

ஶ்ரீமந் க்ருபாஜலநிதே⁴ க்ருதஸர்வலோக
ஸர்வஜ்ஞ ஶக்த நதவத்ஸல ஸர்வஶேஷிந் ।
ஸ்வாமிந் ஸுஶீல ஸுலபா⁴ஶ்ரிதபாரிஜாத
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

ஆநூபுரார்பிதஸுஜாதஸுக³ந்தி⁴புஷ்ப-
-ஸௌரப்⁴யஸௌரப⁴கரௌ ஸமஸந்நிவேஶௌ ।
ஸௌம்யௌ ஸதா³நுப⁴வநே(அ)பி நவாநுபா⁴வ்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

ஸத்³யோவிகாஸிஸமுதி³த்வரஸாந்த்³ரராக³-
-ஸௌரப்⁴யநிர்ப⁴ரஸரோருஹஸாம்யவார்தாம் ।
ஸம்யக்ஷு ஸாஹஸபதே³ஷு விளேக²யந்தௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

ரேகா²மயத்⁴வஜஸுதா⁴கலஶாதபத்ர-
-வஜ்ராங்குஶாம்பு³ருஹகல்பகஶங்க²சக்ரை꞉ ।
ப⁴வ்யைரளங்க்ருததலௌ பரதத்த்வசிஹ்நை꞉
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

தாம்ரோத³ரத்³யுதிபராஜிதபத்³மராகௌ³
பா³ஹ்யைர்மஹோபி⁴ரபி⁴பூ⁴தமஹேந்த்³ரநீலௌ ।
உத்³யந்நகா²ம்ஶுபி⁴ருத³ஸ்தஶஶாங்கபா⁴ஸௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 6 ॥

ஸப்ரேமபீ⁴தி கமலாகரபல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவவாங்மநஸகோ³சரஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥

லக்ஷ்மீமஹீதத³நுரூபநிஜாநுபா⁴வ-
நீலாதி³தி³வ்யமஹிஷீகரபல்லவாநாம் ।
ஆருண்யஸங்க்ரமணத꞉ கில ஸாந்த்³ரராகௌ³
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 8 ॥

நித்யாந்நமத்³விதி⁴ஶிவாதி³கிரீடகோடி-
-ப்ரத்யுப்ததீ³ப்தநவரத்நமஹ꞉ப்ரரோஹை꞉ ।
நீராஜநாவிதி⁴முதா³ரமுபாத³தா⁴நௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 9 ॥

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

பார்தா²ய தத்ஸத்³ருஶஸாரதி²நா த்வயைவ
யௌ த³ர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி ।
பூ⁴யோ(அ)பி மஹ்யமிஹ தௌ கரத³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 11 ॥

மந்மூர்த்⁴நி காளியப²ணே விகடாடவீஷு
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ரே ஶிரஸி ஶ்ருதீநாம் ।
சித்தே(அ)ப்யநந்யமநஸாம் ஸமமாஹிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 12 ॥

அம்லாநஹ்ருஷ்யத³வநீதலகீர்ணபுஷ்பௌ
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ராப⁴ரணாயமாநௌ ।
ஆநந்தி³தாகி²லமநோநயநௌ தவைதௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 13 ॥

ப்ராய꞉ ப்ரபந்நஜநதாப்ரத²மாவகா³ஹ்யௌ
மாது꞉ ஸ்தநாவிவ ஶிஶோரம்ருதாயமாநௌ ।
ப்ராப்தௌ பரஸ்பரதுலாமதுலாந்தரௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 14 ॥

ஸத்த்வோத்தரை꞉ ஸததஸேவ்யபதா³ம்பு³ஜேந
ஸம்ஸாரதாரகத³யார்த்³ரத்³ருக³ஞ்சலேந ।
ஸௌம்யோபயந்த்ருமுநிநா மம த³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 15 ॥

ஶ்ரீஶ ஶ்ரியா க⁴டிகயா த்வது³பாயபா⁴வே
ப்ராப்யே த்வயி ஸ்வயமுபேயதயா ஸ்பு²ரந்த்யா ।
நித்யாஶ்ரிதாய நிரவத்³யகு³ணாய துப்⁴யம்
ஸ்யாம் கிங்கரோ வ்ருஷகி³ரீஶ ந ஜாது மஹ்யம் ॥ 16 ॥

இட் ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி ||

***

ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம்

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                        1

லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே

சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்             2

ஸ்ரீவேங்கடாத்ரி  ச்ருங்காக்ர மங்களா பரணாங்க்ரியே

மங்களாநாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                   3

ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா சர்வசேதஸாம்

ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம்             4

நித்யாய நிரவத்யாய ஸத்யா நந்தசிதாத்மநே

ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                              5

ஸ்வதஸ் ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வசேஷிணே

ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்                                        6

ப்ரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய பரமாத்மநே

ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்                                      7

ஆகால தத்வ மச்ராந்த மாத்ம நாம நுபச்யதாம்

அத்ருப்த்யம்ருத ரூபாய வேங்கடேசாய மங்கலம்                                   8

ப்ராயஸ் ஸ்வ சரணௌ பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா

க்ருபாய திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                                       9

தயாம்ருத்தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை:

அபாங்கை ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்                        10

ஸ்ரக்பூஷாம்பர ஹேதீதாம் ஸுஷமாவஹ மூர்த்தயே

ஸர்வார்த்தி ஸமநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்                            11

ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்                                            12

ஸ்ரீமத் ஸுந்தரஜாமாத்ரு முநிமா நஸவாஸிநே

ஸர்வலோகநிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                       13

மங்களாசாஸ நபரைர் மதாசார்ய புரோகமை:

ஸர்வைச்ச பூர்வை ராசார்யைஸ் ஸத்க்ருதாயாஸ்து மங்களம்          14

***

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்-1-

கௌசல்யா தேவி திருக்குமாரா -ஸ்ரீ ராமா -புருஷோத்தமா –
காலைப் பொழுது புலர்கிறது –
நாம் செய்ய வேண்டிய நித்ய வர்ணாஸ்ரம கர்மங்களை செய்ய வேண்டும்
எழுந்திராய்

———-

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருட த்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரை லோக்யம் மங்களம் குரு–2-

ஆநிரை மேய்த்து மகிழ்பவனே
கருடக்கொடியை யுடையவனே
எழுந்திராய்
செந்தாமரையில் வளர் ஸ்ரீ லஷ்மீ தேவியின் நாயகனே
எழுந்திராய்
மூ உலகங்களிலும் -நித்ய முக்த பத்த -க்ருத்ய -அக்ருத்ய -க்ருத்யக்ருத்ய -ஸமஸ்த உலகங்களுக்கும்
நன்மைகள் -மங்களம் நிலவும்படியாகச் செய்வதற்காக
எழுந்திராய்

———-

மாதஸ் சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்–3-

ஸமஸ்த உலகங்களுக்கும் தாயைப் போன்றவளே
மது கைடபர் என்னும் அரக்கர்களை அளித்த ஸ்ரீ மஹா விஷ்ணுவின் திரு மார்பில் விளையாடுபவளே
மனம் கவரும் திவ்ய மங்கள விக்ரஹம் உடையவளே
தெய்வத் தாயே
ஆஸ்ரிதர்களின் ஸமஸ்த அபேக்ஷித்ங்களையும் அளித்து மகிழ்பவளே
ஸ்ரீ வெங்கடேசப்பெருமாளின் தயா தேவியே
உனக்கு நல்ல காலைப் பொழுதாகுக –

———-

தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே–4-

தாமரை மலர்களை போன்ற குளிர்ந்த திருக்கண்களை யுடையவளே
பூர்ண சந்திரன் போல் பொலியும் திரு முக விலாஸம் யுடையவளே
ப்ரஹ்மாதி தேவர்களின் பத்னிகளால் பூஜிக்கப்படுபவளே
கருணையின் உறைவிடம் போன்றவளே
விருஷாசல பதியான ஸ்ரீ திருவேங்கட நாதனின் அன்புக்கு உரியவளே
உனக்கு நல்ல காலைப் பொழுது ஆகுக

————–

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–5-

அத்ரி முதலான ஸப்த ரிஷிகளும் காலைக்கடன்களை ஸந்த்யாவந்தனாதி நித்ய கர்மங்களையும்
முடித்துக் கொண்டு நின் திருப்பாத கமலங்களை அரசிப்பதற்காக
மனத்தைக் கவரக் கூடிய ஆகாச கங்கையில் மலர்ந்த தாமரை மலர்களை
சேகரித்துக் கொண்டு வந்து நிற்கின்றனர்
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

—————

பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–6-

தேவர்களில் சிறந்த ப்ரஹ்மாதிகளும் சுப்பிரமணியனும் ஞானிகளுமானவர்கள்
ஓங்கி உலகளந்த சரித்திரங்கள் முதலான உனது திவ்ய சேஷ்டிதங்களைப் புகழ்ந்து நிற்கின்றனர்
பாஷா பதி -சொல்லுக்கு அரசனான -தேவ குருவாகிய ப்ரஹஸ்பதி
தூரத்தில் வணக்கத்துடன் நின்று கொண்டு நாட்களுக்குப் பறி ஸூத்தி அளிக்கக் கூடிய
பயன்களைக் கூறும் பஞ்சாங்கம் படிக்கிறார்
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–7-

சற்றே மலர்ந்த தாமரை மலர்கள் -தென்னை பாக்கு மரங்களின் மிகவும் மனத்தைக் கவரும்
இளம் பாளைகளுடைய திவ்யமான நறு மண வாசனையை எடுத்துக் கொண்டு
குளிர்ந்த காலைக் காற்று மெதுவாக வீசுகிறது
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–8–

இரு கண்களையும் திறந்து
கலசங்களில் வைக்கப்பட்டுள்ள வாழைப்பழம் பாயாசம் முதலிய சுவை அமுதுகளை புஜித்து விட்டு
சிறந்த கூண்டுகளில் இருப்பவையும்
கேளிக்கையான விளையாட்டு இன்பத்தை உண்டு பண்ணக் கூடியவையுமான
கிளிகள் மனக்களிப்புடன் உன்னுடைய திரு நாமங்களைப் பாடுகின்றன
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–9-

நல்ல தந்திகளை உடையபடியால் இனிய நாதமுடைய வீணையுடன் நாரதரும்
அழிவற்ற வனான உன்னுடைய திவ்ய சரிதங்களை
காவிய நயம் மிக்க மொழி வண்ணம் தோன்றும்படியாக
வேகமாக மீட்டிப் பாடுகிறார்
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–10-

இரவு முழுவதும் மகரந்த ரஸம் கலந்த தேனைப் பருகிவிட்டு ரீங்காரம் இடும் வண்டுகள்
அருகில் உள்ள பூம் புனல்களில் இருந்து தங்கள் மது அருந்திய தாமரை மலர்களின்
உள் புறத்தில் இருந்து வெளிப்பட்டு உன்னைத் தொழுவதற்காக வருகின்றன
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———–

யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–11-

இடையர்களின் குடிசைகளில் ஆய்ச்சிகள் மத்தினால் பானைகளில் சிறந்த தயிரைக் கடையும் போது
உண்டாகும் உரத்த ஒலியை எண் திசைகளும் பொறுக்க மாட்டாமல் எதிர் ஒலிக்கின்றன
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

——-

பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–12-

ஸூர்யனிடம் அன்புடைய தாமரை மலர்களில் தங்கி இருந்த வண்டினங்கள்
தங்களுடைய கருமையான அங்கங்களில் அழகினால் செருக்கடைந்து
கரிய நிறம் படைத்த பூக்களின் அழகை எதிர்பார்ப்பது போல் உரத்த ரீங்காரம் செய்வது முரசு கொட்டுவது போல் உள்ளது
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்–13-

திருமகள் கேள்வனே
பக்தர்கள் விரும்பிய பலன்களை அளிக்கும் பேர் அருளாளனே
ஸர்வ லோகத்தார்களுக்கும் ஸமஸ்த பந்துவாக உள்ளவனே
அழகிய ஸ்ரீ நிவாஸப் பெருமானே
உலகத்தோர் இடம் கருணை ஒன்றையே கொண்ட பெருமானே
இரண்டு தோள்களின் நடுவில் மஹா லஷ்மியின் வாஸஸ் ஸ்தானமாய் அமைந்த அழகிய திரு மார்பை யுடைய அழகிய பெருமானே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்–14-

அழகிய ஸ்வாமி புஷ்கரணியில் நீராடியதால் உள்ளும் புறமும் அழுக்கு நீங்கிய மேனி உடையவர்களாய்
உலகில் சிறந்து விளங்கும் மேன்மையை விரும்பும் அரனும் அயனும் ஸநகாதி முனிவர்களும்
உனது திருக்கோயிலின் வாசலிலே வாசல் காப்பவர்களால் அடி பட்ட சிற்பங்களுடன் காத்து நிற்கிறார்கள்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–15-

அழகிய
சேஷ மலை
கருட மலை
வேங்கட மலை
நாராயண மலை
விருக்ஷ மலை
என்று நீ வஸிக்கும் திருமலையின் முக்கியமான திரு நாமங்களை எப்பொழுதும் கூறியபடி
அத் தேவர்களும் ரிஷிகளும் ஸ்துதி பாடி நிற்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————

சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–16-

சிவ பெருமான்
தேவர்கள் தலைவனான இந்திரன்
அக்னி
எமன்
நிருதி
வர்ணன்
வாயு ன் குபேரன்
என்ற அஷ்ட திக் பாலர்களும் பக்தியுடன் கர மலர்கள் சிரம் மிசைக் கூப்பி
அஞ்சலி செய்தவர்களாய் உனது ஸேவைக்காகக் காத்து இருக்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–17-

புள்ளரையனான கருடனும்
மிருக ராஜாவான ஸிம்ஹமும்
நாக ராஜாவான ஆதி சேஷனும்
யானைகளுக்கு அரசனான ஐராவதமும்
குதிரைகளுக்கு அரசனான உச்சைஸ் சிரவஸூம்
உனது திருக்கோயில் நடை பாதைகளில் தம் தம் தகுதிக்கு ஏற்ற பெருமையைக் காட்டிலும்
அதிகமாக விரும்புபவர்களாய் உன்னைத் தரிசிக்க நான் முந்தி நீ முந்தி என்று
போட்டியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————

ஸூர்யேந்து பவ்ம புத வாக்பதி காவ்ய சவ்ரி
ஸ்வர்பாநு கேது த்விஷத் பரிஷத் ப்ரதாநா
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாஸ தாஸ
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–18–

ஸூர்யன்
ஸந்த்ரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
இராகு
கேது
என்று தேவ சபையில் முக்யம் பெற்ற வர்களான நவக்ரஹங்களும்
உன்னுடைய அடியார் அடியார் அடியார் என்று மிகவும் கீழ் நிலையில் உள்ள அடியவர்களாய் நிற்கும்
விருப்பம் யுடையவர்களாய் உனது திருக்கோயிலின் வாசலில் நிற்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———–

த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-19-

ஸூர்யன் முதலான நவக்ரஹ நாயகர்கள் உன்னுடைய திருப்பாத தூளிகள் பட்டு
நிறைந்து விளங்கும் சிரங்களை யுடையவர்களாய்
ஸ்வர்க்கம் மோக்ஷம் முதலான பேற்றுக்களையும் விரும்பாதவர்களாய்
இந்த யுக கல்பங்கள் முடிந்து விட்டால் தங்களுடைய வாழ்வு முடிந்து விடும் என்ற எண்ணத்தால்
மனம் கலங்கி நிற்கின்றனர்
அவ்வாறு வேறு கல்பம் வந்து விட்டால் உனது திருப்பாத ஸேவையை இழந்து
உனது திருப்பாத தூளியைத் தலையால் தரிக்கும் பாக்கியமும்
இழந்தே போவோமே என்ற பயத்துடன் இருக்கிறார்கள்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————

த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!-20-

உனது திருக்கோபுர முனையில் உள்ள கலசங்களைக் கண்டவுடன் வாழ்வின் இறுதி
லஷ்யமான ஸ்வர்க்கம் மோக்ஷம் பதவி அடைந்து மேல் உலகம் செல்பவர்களும்
அவ்வின்பங்களை வெறுத்தவர்களாய் மீண்டும் மனித லோகத்தில் வாழ்ந்து
உன்னைத் தரிசித்து இருப்பதையே விரும்புகின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————–

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–21-

திருமகள் நில மகள் நாயகனே
அருள் முதலான கல்யாண குணங்கள் எனும் அமுதம் விளையும் கடல் போன்றவனே
மனிதர்க்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவாதி தேவனே
சர்வ லோகங்களுக்கும் ஒரே புகலிடமாக விளங்குபவனே
பெருமானே
ஆதி சேஷன் கருடன் விஷ்வக் சேனர் போல்வரால் மலர்கள் தூவி
வானவர் வானவர் கோனுடன் சிந்து பூ மகிழும் அர்ச்சிக்கப்பட்ட திருவடிகள் யுடையவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————–

ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–22-

ஸ்ரீ பத்மநாப
புருஷோத்தம
வாசுதேவ
வைகுண்ட வாஸீ
மாதவ
ஜனார்த்தன
சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸம் என்னும் திரு மறு அடையாளம் சிஹ்னம் உள்ளவனே
சரணாகதர்களுக்கு பாரிஜாதம் போல் ஸமஸ்த அபீஷ்ட ப்ராதனானவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

—————

கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–23-

மன்மதனின் செருக்கை ஒடுக்கக் கூடிய மிக அழகிய திவ்ய மங்கள விக்ரஹம் கொண்டவனே
திருமகள் மருவும் ஆசை மிக்க திருக்கண்களை யுடையவனே
மங்கள கரமான குற்றம் அற்ற குணங்களுக்கு உறைவிடம் போன்றவனே
நல்ல பெருமை வாய்ந்த புகழை யுடையவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————–

மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்
ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–24-

ஸ்ரீ மத்ஸ்ய
ஸ்ரீ கூர்ம
ஸ்ரீ வராஹ நாயகனாக
ஸ்ரீ நரசிம்ஹ வபுவாக
ஸ்ரீ வாமனனாக
ஸ்ரீ பரசு ஏந்திய ரிஷி புத்திரனாக
ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனாக
ஸ்ரீ ஆதி சேஷ அம்சமான ஸ்ரீ பலராமனாக
யாதவ குலத்தில் உலகோர் அனைவரையும் மகிழ்விக்கும் ஸ்ரீ கிருஷ்ணனாக
திரு அவதரித்தவனே
ஸ்ரீ கல்கியாக திரு அவதரிக்கப் போகும் இறைவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———–

ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்–25-

ஏலக்காய் -லவங்கம் -பச்சைக் கற்பூரம் முதலியவற்றின் நறு மணம் கலந்ததும்
மிகச்சிறந்ததுமான ஆகாஸ கங்கையின் தீர்த்தத்தைத் தங்கக்குடங்களில்
நிரப்பிக் கொண்டு தங்கள் தலைகளில் சுமந்தபடி வைதிக நெறிகளில் சிறந்தவர்கள்
மன மகிழ்ச்சியுடன் உனது திருக்கோயில் திருவாசலில் இப்பொழுது நிற்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———-

பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்–26-

கதிரவன் குண திசைச் சிகரம் வந்து அணைந்தான்
மது விரிந்து ஒழுகின மா மலர்கள் எல்லாம் -கமல மலர்கள் விகசிக்கின்றன
ஸ்ரீ வைஷ்ணவ அடியார்கள் உனக்கு எப்பொழுதும் நன்மை தரும் மங்களங்களை வேண்டிக் கொண்டு
உன்னுடைய திருக்கோயில் திருவாசலை வந்து அடைகின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————–

பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–27-

ப்ரஹ்மாதி தேவ ஸ்ரேஷ்டர்களும்
மிகச் சிறந்த முனிவர்களும்
ஸாதுக்களான சநந்தர் முதலான யோகிகளும்
மங்கள உபகரணங்களைக் கையில் ஏந்திக் கொண்டு
உனது திருக்கோயில் திருவாசலிலே வந்து நிற்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

—————-

லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–28–

ஸ்ரீ லஷ்மீ தேவிக்கு நிவாஸமானவனே
குற்றம் அற்றவனே
நற்குண சாகரம் போன்றவனே
பிறவிக்கடலைக் கடக்க நிகரற்ற பாலம் போன்றவனே
வேத வேதாந்தங்களால் அறியத்தக்க உண்மையான சிறப்பை யுடையவனே
பக்தர்களுக்கு இனியவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

—————-

இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே–29-

இந்த வ்ருஷாசல நாதனான திருமலை நாதனைப் பற்றிய திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களை
தினம் தோறும் அதிகாலை வேளையில் பாராயணம் செய்பவர்கள்
தங்களைப் பற்றிய நினைவு துன்பம் அகன்றவர்களாய்
பரம் பொருளையே பரம புருஷார்த்தமாகக் கருதும் பரம பக்தர்கள்
மாத்ரமே அடையக்கூடிய நல்ல அறிவை -பர ஞானத்தை -அடைவார்கள் –

***

ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்ரம்

கமலா குசசூசுக குங்குமதோ நியதாருணிதாதுல நீலதநோ

கமலாயத லோசன லோகபதே விஜயீபவ வேங்கட சை’லபதே                       1

கமலா குச சூசுக குங்குமதோ நியதாருணி தாதுல நீலத நோ-
பெரிய பிராட்டியார் யுடைய திரு முலைத் தடங்களில் அணிந்த குங்குமக்
குழம்பினால் எப்போதும் சிவப்புப் பெற்று ஒப்பற்று விளங்கா நின்ற நீல மேனியை யுடையாய் –
கொவ்வை வாய் மகளிர் கொங்கை குங்குமம் கழுவிப் போந்த தெய்வ நீர் கமழு நாங்கூர்

அகலகில்லேன் இறையும் என்று
அலர் மேல் மங்கை யுறை மார்பா –

இவளோடு கூடியே வஸ்துவிநிடைய உண்மை –
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தையும்
சேதனனுடைய அபராதத்தையும்
கண்டு அகல மாட்டாள் –
முமுஷுப்படி ஸ்ரீ ஸூ க்தி-அனுசந்தேயம் –

கமலாய தலோசன லோகபதே விஜயீ பவ வேங்கட சைலபதே –
கமலம் போன்றவையையும் ஆயதங்களையும் இருக்கும் திருக் கண்கள்
அரவிந்தம் போன்று நீண்ட கண்ணினாய்
உலகங்கட்கே எல்லாம் இறைவனே
திருவேங்கடமலைக்கு இறைவனே
நித்ய ஸ்ரீர்
நித்ய மங்களமாக விளங்குவாயாக –

——

ஸ சதுர்முக ஷண்முக பஞ்சமுக ப்ரமுகாகில தைவத மௌளிமணே

ச’ரணாகத வத்ஸல ஸாரநிதே பரிபாலயமாம் வ்ருஷ சை’லபதே                 2

ஸ சதுர்முக ஷண்முக பஞ்ச முக பிரமுகாகில தைவத மௌலிமணே –
நான்முகக் கடவுளோடு கூடிய
ஸூ ப்ரம்மண்யன் சிவன் முதலான
சகல தெய்வங்களுக்கும் சிரோ பூஷணமாக விளங்குமவனே-
யாம் கடவுள் என்று இருக்கும் எவ்வுலகில் கடவுளர்க்கும்
ஆம் கடவுள் நீ –
ஷண்முக பஞ்ச முகர்களை சதுர்முகனோடு கூடி இருப்பவர்களாக சொன்னது சமுச்சய தாத்பர்யகம்
நோலாதாற்றேன் உனபாதம் காண வென்று நுண் உணர்வின் நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும்
இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே

சரணாகத வத்சல
அடி பணிந்தவர்கள் பக்கலிலே
வாத்சல்யம் யுடையவனே –
வாத்சல்யமே -நிகரில் புகழாய் -என்றதில் சூசகம் –
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதகங்கள் -குணங்கள்
வாத்சல்யம் – ஸ்வாமித்வம் -சௌசீல்யம் -சௌலப்யம்
ஆஸ்ரித கார்ய ஆபாதன்கள் -குணங்கள் –
ஞான பல சக்தி யாதிகள் –
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே -தனிப்பட கத்யத்தில் காட்டி அருளினார் –

சார நிதே
சிறந்த நிதி போன்றவனே –
சிறந்த நிதி
சாரமான குணங்களை கொண்டவன்

அள்ள அள்ள குறை இல்லாமல் அஷயமாய் இருக்குமே
மேல் மேலும் பெருகுமே
நிதியே திரு நீர் மலை நித்திலத் தொத்தே –
நிதியினைப் பவளத் தூணை
வைத்த மா நிதியம் மது சூதனன்
நிதி கண்ணுக்கு புலப்படாத படி போலே
இவனும் -இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
கரந்து எங்கும் பரந்துளன் –
கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவார்கள் என்று கண்ணுக்குத் தோற்றாத படி நின்று
என்று -ஸ்ரீ வசன பூஷன ஸூக்தி
கட்கிலியாய் இருப்பான் –
சில பாக்ய சாலிகளுக்கு புலப்படுவான் –
யானே தவம் செய்தேன்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன்
சித்த அஞ்சனம் அணிந்து கொண்டு பார்ப்பவர்களுக்கு நிதி தோன்றுமே

பரிபாலய மாம் வருஷ சைலபதே –
வ்ருஷபகிரி -என்னப் படுகிற திரு மலைக்கு இறைவனே
அடியேனைக் காத்து அருள வேணும்

———–

அதிவேலதயா தவதுர்விஷஹை: அனுவேல க்ருதை ரபராத ச’தை

பரிதம் த்வரிதம் வ்ருஷ சை’லபதே பரயா க்ருபயா பரிபாஹி ஹரே           3

திருமலை அப்பனே
கங்கு கரை இல்லாமையினாலே
தேவரீருக்கு சஹிக்க கூடாதவைகளையும்
ஷணம் தோறும் செய்யப் பட்டவையாயும் இருக்கின்ற
நூற்றுக் கணக்கான குற்றங்களினால் நிறைந்து இருக்கின்ற
அடியேனை பரம கிருபையாலே விரைந்து காத்தருள வேணும் –

வேலை -கரை – அநு வேலம் -ஷணம் தோறும்
பாப பூயிஷ்டதையைச் சொல்லிக் கொண்டு புகவே பரிஹாரம் பெறலாம்
அஸ்மத் தாதிகளின் அனுசந்தானத்திற்கு இறே பூர்வர்கள்
இங்கனே பணித்து வைத்தது –

———

அதிவேங்கட சை’லமுதாரமதே: ஜனதா பிமதாதிக தான தராத்

பரதேவதய கதிதாந்நிகமை: கமலாதயிதான ந பரம் கலயே                           4

ஔதார்யம் மிக்க திரு உள்ளம் உடையவரும்
அவரவர்கள் விரும்புவதைக் காட்டிலும் அதிகமாக அளித்து அருள வல்ல
வேதங்களால் பர தெய்வமாக ஓதப்பட்ட ஸ்ரீ லஷ்மீ பதியை
காட்டிலும் வேறு ஒரு வஸ்துவை எண்ணு கின்றிலேன்

மற்றோர் தெய்வம் மதிக்கிலேன்
உதாரன் –என்னாமல் –உதார மதி -என்றது
இன்னமும் கொடுக்க வேணும் என்று இருக்கும் ஹிருதய வைசால்யத்தைப் பற்றி –
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ

ஜனத அபிமத அதிக தான ரதான்-என்றது
அர்த்தி தாரத்த பரி தான தீஷிதரான தேவப் பெருமாளில் காட்டில் வாசி சொன்னபடி –
நிகமை-வேதாந்தங்கள் என்ற விவஷையால்-

——————

கல வேணுரவாச’ கோபவதூ ச’தகோடி வ்ருதாத ஸ்மரகோடி ஸமாத்

ப்ரதிவல்லவிகாபிமதாத் ஸுகதாத் வஸுதேவஸுதாந் ந பரம் கலயே       5

இந்த ஸ்லோஹம் முதல் நான்கு ஸ்லோஹகங்களினால்
திருவேங்கடமுடையானை
கண்ணபிரானாகவும் இராமபிரானாகவும் கொண்டு ஏத்துகிறார்
இதல் கண்ண பிரானாக ஸ்துதிக்கிறார்
பொங்கு புள்ளின் வாய் பிளந்த புராணர் தம்மிடம் திருவேங்கடம்
கன்றிமாரி பொழிந்திடக் கடிதா நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திருவேங்கடம் -போலே
குரவை கோத்த குழகனை -சாஷாத் மன்மத அழகை முற்றூட்டாக கொடுத்த படி -சொல்கிறது ஸ்மர கோடி சமாத் -என்று

அதி மதுரமான வேணு நாதத்துக்கு பரவசப்பட்ட
ஆய்ச்சிகளின் திரளால் சூழப் பட்டவனும்
கோடிக் கணக்கான மன்மதர்களை ஒத்தவனும்
ஒவ் ஒரு ஆய்ச்சியும் நமக்கே கணவன் என்று அபிமானித்து இருக்கப் பெற்றவனும்
சாஷாத் தர்மியுமான
வாஸூ தேவனில் காட்டிலும்
வேறு ஒருவரை எண்ணு கின்றிலேன்

கருமலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக் கணித்து ஆங்கே ஒருத்தி தன்பால் மருவி மனம் வைத்து
மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்குப் பொய் குறித்து
புரிகுழல் மங்கை ஒருத்தி தன்னை புணர்த்தி –
என்பதையே பிரதி வல்லபி ச் அபிமதாத் –

ஸூஹ்ருதாத்
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம்
தர்மமே வடிவு எடுதவனாக
தர்ம ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவன்
தானே சர்வவ தர்மங்களையும் விட்டு
என்னைப் பற்று என்கையாலே
சாஷாத் தர்மம் தானே -என்கிறது -முமுஷூப்படி ஸ்ரீ ஸூ க்தி-

————————

அபிராம குணாகர தாச’ரதே ஜகதேக தநுர்தர தீரமதே

ரகுநாயக ராம ரமேச’ விபோ வரதோ பல தேவ தயாஜலதே                           6

இந்த ஸ்லோஹம் முதல் மூன்று
ஸ்லோஹங்களாலும் சக்கரவர்த்தி திரு மகனாக அனுபவிக்கிறார் –
அபிராம குணாகர
திருக் கல்யாண குணங்களுக்கு பிறப்பிடம் ஆனவனே –
சூர்பணகை-தாரை -மண்டோதரி -போல்வாரும் புகழும்படி

தாசரதே
தசரதாத் மஜானாகத் தோன்றினவனே –
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம்
ஆத்மானம் மானுஷம் ராமம் தசரதாத் மாசம் –

ஜகத் ஏக தநுர்தர
உலகில் அத்விதீயனான வில்லாளியாய் விழங்கி-
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஒ –

தீரமதே
துணிவு வாய்ந்த திரு உள்ளம் யுடையவனே –
சலிப்பிக்க ஒண்ணாத ஆஸ்ரித ரஷண த்தில் உறைப்பைச் சொல்கிறது –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே
ஸ லஷ்மணாம் ந ஹி பிரதிஜ்ஞ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ரஹ்மனேப்யோ விசேஷத -என்றும்
மித்ரா பாவென சம்ப்ராப்தம் ந த்யஜெயம் கதஞ்சன -என்றும் காட்டி அருளினாரே

ரகுநாயக ராம ரமா ஈச விபோ வரதோ பவ தேவ தயா ஜலதே-
ரகுகுல திலகனே
இராமபிரானே
ஸ்ரீ லஷ்மீ பதியே
கருணைக் கடலே
திருவேங்கடமுடையானே
நீ
அடியேனுடைய அபேஷிதங்களை அளித்து அருள்பவனாக ஆக வேணும்-

—————————

அவநீதநயாகம நீயகரம் ரஜநீகரசாரு முகாம்புருஹம்

ரஜனீசரராஜ தமோமிஹிரம் மஹநீயமகம் ரகுராமமயே                                  7

அவநீ தனா கமநீயவரம்
பூமிப் பிராட்டியின் புதல்வியான சீதா பிராட்டி விரும்பத் தக்க மணவாளப் பிள்ளையும் –

ரஜநீ கர சாரு முக அப்ம்புருஹம்
அழகிய முகாரவிந்தத்தை யுடையவனும் –
சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும் எத்தனை செய்யிலும்
என் மகன் முகம் நேர் ஒவ்வாய் –

ரஜநீ சர ராஜ தமோ மிஹிரம்
ராஷ சேஸ்வரனான ராவணன் ஆகிற இருளை அகற்றும் ஸூர்யனும்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடும் சிலை வாய்ச் சரந்துறந்து குலம் களைந்து வென்றானை –

கமநீ யம் ரகுராமம் அஹம் அயே
விரும்பத் தக்க வடிவு படைத்தவனும்
ஆன ஸ்ரீ ராமபிரானை -திருவேங்கடமுடையானை
நான் அடைகிறேன்

அயே -அய பய கதௌ-என்ற தாதுவில் தேறின ரூபம் இது-

———————

ஸுமுகம் ஸுஹ்ருதம் ஸுலபம் ஸுகதம் ஸ்வநுஜஞ்ஞ ஸுகாய அமோகசரம்

அபஹாய ரகூத்வஹமன்யமஹம் ந கதஞ்சன கஞ்சன ஜாது பஜே                8

ஸூ முகம் –
தன்னளிவே வடிவு எடுத்தவனும்

ஸூஹ்ருதம் –
சர்வ பூத ஹூஹ்ருத்தானவனும்

ஸூலபம்-
நீசர்க்கும் எளியனானவனும்

ஸூகதம் –
இன்பம் அழிப்பவனும்

ஸூகுணம் –
நற் குணங்கள் அமைந்தவனும்

ச ஸூ ஜாய-
நல்ல தேவியை யுடையவனும் –

மமோக சரம் –
பழுது படாத அம்புகளை யுடையவனும்

அபஹாய ரகூத்வம் அநயம் அஹம் ந கதஞ்சன கதஞ்சன ஜாது பஜே
இராம பிரானைத் தவிர
வேறு எந்த தேவனையும்
ஒரு விதமாகவும்
ஒரு காலும்
சேவிக்க கில்லேன்

தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -என்றும்
கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ -என்றும்
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் -என்றும்
உள்ள பாசுரங்களை அடி ஒற்றி அருளிச் செய்த ஸ்லோஹம்-

———————

விநா வேங்கடேச’ம் ந நாதோ ந நாத: ஸதா வேங்கடேச’ம் ஸ்மராமி ஸ்மராமி –

ஹரே வேங்கடேச’ ப்ரஸீத ப்ரஸீத ப்ரியம் வேங்கடேச’ ப்ரயச்ச ப்ரயச்ச      –9

விநா வேங்கடேசம் ந நாதோ ந நாதோ
வேங்கடேசம் விநா நாதா ந நாத ந –
திருவேங்கடமுடையானைத் தவிர்ந்து
வேறொரு நாதன் இல்லை எனபது
சத்யம்

சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி –
திருவேங்கடமுடையானை
அனவரதமும்
நினைத்தபடியே இருக்கின்றேன் –

ஹரே வேங்கடேசம் ப்ரசீத பிரசீத-
சகல தாபங்களையும் ஹரிக்க வல்ல அப்பனே
திரு உள்ளம் மிகவும் உகந்து அருள வேணும் –

ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச
வேங்கடேச -ப்ரியம்-ப்ரயச்ச ப்ரயச்ச –
திருவேங்கடத்தானே
நன்மையைப் பயந்து அருளின படியே
இருக்க வேணும்

ஒவ் ஒரு பாதத்திலும் த்வ்ருத்திகள்
ஆதராதிசயத்தால் ஆனவை-

——————

அஹம்தூரதஸ்தே பதாம்போஜயுக்ம ப்ரணாமேச்சயா (ஆ)கத்யஸேவாம் கரோமி —

ஸக்ருத்ஸேவயா  நித்யஸேவாபலம் த்வம் ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச’        -10

பிரபோ வேங்கடேச
வேங்கடேச பிரபோ –
திருவேங்கடத்து எம்பெருமானே

அஹம் தூரதஸ் தே பதாம் போஜ யுகம ப்ரணாம இச்சயா ஆகத்ய சேவாம் கரோமி –
அஹம் தே பதாம் போஜ யுகம ப்ரணாம இச்சயா தூறத ஆகத்ய சேவாம் கரோமி –
அடியேன் உன்னுடைய இணைத் தாமரை அடிகளை
வணங்கும் விருப்பத்தினால்
தூர தேசத்தில் இருந்து வந்து
அத் திருவடிகளில் சேவை செய்கின்றேன் –

சக்ருத் சேவயா நித்ய சேவா பலம் தவம் ப்ரயச்ச ப்ரயச்ச
ஏதோ ஒருகால் செய்யும் சேவையினால்
நித்யமும் செவிப்பதனா ஆகும்
பலனை
நீ அவசியம் கொடுக்க வேணும்

அநந்ய பிரயோஜனமாக சேவிக்கும் அதிகாரிகள்
நித்ய சேவா பலம் ப்ரயச்ச -என்று
பலனை விரும்பக் கூடுமோ என்னில்
அத்தலையில் திரு உள்ள வுகப்பே யாயிற்று இங்கு பலனாக கருதப்படுவது

கதாஹ மைகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி சனாத ஜீவித -ஆளவந்தார்
ப்ரஹர்ஷயிஷ்யாமி -உயிரான ஸ்ரீ ஸூக்தியாகுமே-

—————————

அஜ்ஞாநினா மயா தோஷான் அசேஷான் விஹிதான் ஹரே–11

க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் சே’ஷசை’ல சி’காமணே

சேஷசைலம் ஆகிற
திருவேங்கட மலை யுச்சியிலே
நீல மணி போல் விளங்கும்
எம்பெருமானே
அவிவேகியான அடியேன் செய்த குற்றங்களை எல்லாம்
நிர்ஹேதுக கிருபையினால்
ஷமித்து அருள வேண்டும் என்று
பிரார்த்திக்கிறார் ஆயிற்று-

***

ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி

ஈஶாநாம் ஜக³தோ(அ)ஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம் ப்ரேயஸீம்
தத்³வக்ஷ꞉ஸ்த²லநித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்திஸம்வர்தி⁴நீம் ।
பத்³மாலங்க்ருதபாணிபல்லவயுகா³ம் பத்³மாஸநஸ்தா²ம் ஶ்ரியம்
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்ஜ்வலாம் ப⁴க³வதீம் வந்தே³ ஜக³ந்மாதரம் ॥ 1 ॥

ஈசாநாம் ஜகதோச்ய வேங்கட பதேர்விஷ்ணோ பராம் ப்ரேயசீம்-

இவ் வுலகுக்கு எல்லாம் ஈஸ்வரியாகவும்
திருமலை யப்பானுக்கு பிராண வல்லபை யாயும் –
அஸ்யேசா நா ஜகதோ விஷ்ணு பத்நீ -ஸ்ருதி சாயையில் பணித்தது

தத் வஷஸ் ஸ்தல நித்ய வாச ரசிகாம் தத் ஷாந்தி சம்வர்த்திநீம் –
அவனது திரு மார்பிலேயே நித்ய வாசம் செய்வதில்
விருப்பம் யுடையவளாயும்
அவன் மார்பை விட்டுப் பரியில் இவ் வஷரம் விட்டுப் பிரிவது -ஸ்ரீ ஸூக்திக்கு சேர பணித்தது
அப்பெருமானுடைய ஷமா குணத்தை வளரச் செய்பவளாயும் –
புருஷகார பலத்தாலே ஸ்வா தந்த்ர்யம் தலை சாய்ந்தால்
தலை எடுக்கும் குணங்களை சொல்லுகிறது நாராயண பதம் -முமுஷூப்படி
அஸ்தி கர்மார்ஹா பலதே பத்யௌ க்ருத்யத்வயம் சரிய
நிக்ரகுஅத்வ வாரணம் காலே சத்துஷணம் அனுக்ரஹே -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூ க்தி

பத்ம அலங்க்ருத பாணி பல்லவ யுகாம் பத்மாஸ நஸ்தாம் ஸ்ரியம்
தாமரை மலரால் அலங்கரிக்கப் பட்டு
பல்லவம் போன்ற இரண்டு திருக் கைகளை யுடையவளாயும்
தாமரைத் தவிசில் வீற்று இருப்பவளாயும்
பத்ம பரியே பத்மிநி பத்மஹஸ்தே -இத்யாதிகளும் அனுசந்தேயம்

வாத்சல்யாதி குண உஜ்ஜ்வலாம் பகவதீம் வந்தே ஜகன் மாதரம்
வாத்சல்யம் முதலிய குணங்களால் திகழா நின்றவளாயும்
பரம பூஜ்யையாயும்
உலகுக்கு எல்லாம் தாயாயும்
இருக்கின்ற
அலர்மேல் மங்கைப் பிராட்டியை
அடியேன் வணங்குகின்றேன் –

சஹதர்ம சரிம் சௌ ரேஸ் சம்மந்த்ரித்த ஜகத்திதாம்
அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞ்ஞாத நிக்ரஹாம் -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூக்தி

ஆக
இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த பிராட்டியைத்
தொழுகின்றமை கூறி
ஸ்தோத்ரத்தை
தலைக் கட்டினார் ஆயிற்று –

அலர்மேல் மங்கை உறை மார்பன் அடி இணைகள் வாழியே

——–

ஶ்ரீமந் க்ருபாஜலநிதே⁴ க்ருதஸர்வலோக
ஸர்வஜ்ஞ ஶக்த நதவத்ஸல ஸர்வஶேஷிந் ।
ஸ்வாமிந் ஸுஶீல ஸுலபா⁴ஶ்ரிதபாரிஜாத
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

நாராயணனின் கல்யாண குணங்களை அடுக்கி அருளுகிறார் நேராக இதில்
சரண் அடைந்தவர் இடம் வாத்சல்ல்யம் வினத -நத வத்சல -தலை வணங்கியவர் அனைவருக்கும் ஸ்வாமித்வம் படைத்தவன்

சுலபன் திருவேம்கடத்தான்-பாரி ஜாதம் போல் கேட்பது அனைத்தையும் கொடுக்கும் –
எட்டு குணங்கள் -அடுக்குகிறார்-
ஆஸ்ரித சௌகர்யமான குணம் நான்கு -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் —
ஞான சக்தி பிராப்தி பூர்த்தி கார்யம் பண்ண -ஆக எட்டும்-
பயம் நீங்க -ஐயம் நீங்க -உயர்ந்தவன் அவன் தாழ்ந்தவன் நாம் –
குற்றமே குணமாக கொள்பவன்-வாத்சல்யன்-எதிர் குணம் பொறாமை-குணம் குற்றமாக கொள்வது அசூயை-அனசூயை-
அவளை பார்த்து பொறாமை பட முடியாத குணம் கொண்டவள் –வசிஷ்டர் நம்மை விட ஞானி சொல்லுவாமோ
செய்த குற்றம் நாற்றமாக கொள்ளும் -அச்சம் தவிர்க்க வாத்சல்யம் -அச்சம் போன பின்பு ஐயம் வர
சம்பந்தம் உணர்த்த -ஸவாமி–

ஸவாபம் ரசிக்க -நெருப்பு சுடுவது போல தண்ணீர் குளிர்வது போல் குற்றம் பொறுத்து ரஷிகிறான் கண்ணன் பதில் அர்ஜுனனுக்கு

ஸ்வாமி-சொத்து பாவம் – சொத்தை இழக்க மாட்டான் ஸ்வாமி –நாம் சொத்து ஆக இருக்க வேண்டும் -இதற்க்கு சம்மதித்தால் போதும்

ஸ்வாமி தன ஆச்சார்யர் பிள்ளைகளை திருத்திய ஐதீகம் போல்–இவரே தூர்த்த கோஷ்ட்டி நோக்கி காஷாய வேஷத்துடன் போக –
நீர் நம்மை விட்டாலும் நாம் விடேன் -காரேய் கருணை -அனைத்து உலகும் உய்ய வந்த எதிராஜர் –ஐயம் தவிர்த்து
அதிருப்தி பட -தேவ தேவனுக்கு பண்ணுவார்-
யானை மேல் சவாரி செய்பவர் யானைமேல் இருப்பவரை தான் ரஷிப்பார்-
தாழ்ந்தவர் இடம் கலக்க தேடி வருகிறான் சௌசீல்யம் –
ஏழை எதலன் கீழ் மகன் என்னாது –திருப்தியாக –
ஈசன் வானவர்க்கு என்றால் அது தேசமோ திரு வேம்கடத்தானுக்கு நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
என் கண் பாசம் வைத்த பரம் சுடர் –அவர்களுக்கு தலைவன் –
ஆழ்வார் இடம் பாசம் -கிடைக்க அரியவன் அருமை-இழந்தவர்க்கு இன்று கண்கள் காண்பதற்கு அரியனாய் –
இன்று அர்ச்சையாக -ஆட்சியில் தொடர்ச்சி நன்று -அறிக்கை விட்டு-அவதரித்து நாம் சொத்து –
சொல்லி கொண்டு-சரம ஸ்லோகம் சொல்லி -சௌலப்யம் காட்டி சேர்த்து கொள்கிறான்

ஆஸ்ரித சொவ்கர்யமான குணம் இவை நான்கும்
கார்யம் பண்ண ஞானம் -ஸ்ரீ வைகுந்தம் கொடுக்க சர்வக்ஜன் பாபம் தொலைத்து –
சக்தியும் வேண்டுமே சர்வ சக்தன்-அதீத ஞானமும் சக்தியும்
தொடர்பு -பிராப்தி -நமக்கு என்று -தாய் முலை பால் கொடுக்கும் -கன்று குட்டி தன பசுமாடு நோக்கி போகுமே அது போல்
பூர்த்தி இருக்கிறது -அடைய வேண்டியது ஒன்றும் இல்லாத பூரணன் -எதையும் எதிர் பார்க்காதவன்
ஐயோ ஏங்கும் கருணையும் உண்டே –க்ருபா சமுத்ரம்
ஆக ஒன்பது குணங்கள்
கிருபா ஜலநிதே /வாத்சல்யம்/ஸ்வாமின் /சுசீலா/சுலப /நான்கும் சொல்லி சரண் அடைந்து

ஸர்வஞ்ஞன்  சக்தி ஆஸ்ரித பாரிஜாத -வாரி வழங்குபவன்-பூர்த்தி சர்வ சேஷி-பிராப்தி உண்டு

அஞ்சேல் என்று தாங்கும் தாமரை அன்ன பொன்னார் அடிகள்- ஆங்கு வென் நகரத்து அழுந்தும் பொழுது —
சரித சர்வ லோக -அனைத்தையும் படைத்தவன்
ஸ்ரீமன் -பிராட்டி ஆனந்தத்துக்கு படைத்தவன்– மயில் தோகை –திரு முகம் தலை அசைத்து அங்கீகாரம்
அவள் தூண்டுதலின் பேரில் அவள் ஆனந்தத்துக்கு
ஜகம் சிருஷ்டிக்க சரணா கதியே பயன் -அதனால் இதை சொல்கிறார் இங்கு
சர்வ சேஷின்-கைங்கர்யம் கொள்
முகப்பே கூவி பணி கொள் –தாவி அளந்தான்-அவன் ஆனததுக்கு –
அவரே தீண்டி கேட்காமாலே -நன்றி அறிவிக்காமல் காலை தட்டி விட்டாலும் –
குழந்தை தாய் போல் –உறங்கும் பிரஜை முதுகில் கட்டி கொண்டு ஆனந்த படும் தாய் போல்
மோட்ஷம் கொடுப்பதும் அவனே -அதுவும் அவனது இன் அருளே –
சரண் சொல்ல வைப்பதுமட்டுமே நாம் செய்வதும் -அவன் அனுக்ரகத்தாலே
உன் ஆனந்ததுக்காகா  உன்னால் படைக்க பட்ட -உன் சொத்தை –
உன்னால் கொடுக்க பட்ட ஞானத்தால் உன்னால் கொடுக்க பட்ட நாவால் சரண் சொல்ல வைத்து —
உன் ஆனந்தத்துக்கு நீயே மோஷம் கொடுத்து உன் திரு அடிகளில் சேர்த்து கொண்டு-உலகம் சிருஷ்டிக்க இதுவே பலன்

படைப்புக்கும் பிராட்டி-சரணாகதி -கைங்கர்யம் மூன்றுக்கும் சம்பந்தம்
சரண் சகல பலனுக்கும் -கைங்கர்யம் தான் கேட்க வேண்டும்-ஏற்று கொள்ள வேண்டுமே
சர்வ சேஷி-அனைவரும் காத்து இருக்க –கொள்ளுகிற பாக்கியம் கிட்ட வேண்டும்
கிருபை கொண்டே படைக்கிறான் -ஈடு பிரவேசமும்
ஸ்ரீ ய பதியாய் –அவாப்த சமஸ்த காமனாய் -பூரணன்-எதையும் எதிர் பார்க்காமல்-
சமஸ்த கல்யாண குண பூரணன்/சர்வேஸ்வரன்-சம்பந்தம் நான்கும் சொல்லி –அது போல் இங்கும் —
கண்ணாய் ஏழு உலகுக்கு உயிராய எம் கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேம்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்

பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும்
படிக் கேழ் இல்லா பெருமானை பழனக் குருகூர் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்து திரு வேம்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே
அடியீர் வாழ்மின் கைங்கர்யம் ஏற்று கொள்கிறான்
——-

ஆநூபுரார்பிதஸுஜாதஸுக³ந்தி⁴புஷ்ப-
ஸௌரப்⁴யஸௌரப⁴கரௌ ஸமஸந்நிவேஶௌ ।
ஸௌம்யௌ ஸதா³நுப⁴வநே(அ)பி நவாநுபா⁴வ்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

திரு அடி பெருமை அடுத்து சொல்கிறார் இதில்
தோள்கள் இருந்து தொங்கும் திரு மாலை திரு முடி திரு தோள்கள் திரு அடி வரை உறவாடும் புஷ்ப மாலை
என்றும் என்றும் புதிதாக -சதா அனுபவத்துக்கு —
நூபுர கங்கை போல்-ஆ சேது ஹிமாசலம் வரை போல் ஆ நூபுர -ஜாதி மணம் கொண்ட புஷ்பம்

தோமாலை சேவை முக்கியம் திரு மலையில் —

குளிக்கிற ஆசார்யம் -பூப்புனை கன்னி புனிதன்-காப்பு நான் கட்ட -தீர்த்தம் ஆடி வந்தான்

தோள்களில் இருந்து தொங்கும் மாலை –மணம் ஆக இருக்க ஆசை கொண்டு தொங்குகிரதாம்–
சர்வ கந்தன் -அவன்-பரிமளம் கொடுக்கவும்–இரவல் வாங்கி கொள்கிறதாம் மணத்தை திரு அடிகளில் இருந்து -இணை தாமரை அடிகள்-சம சந்நிவேசம் -ஒன்றுக்கு ஓன்று இணை –திரு அடி சேவை கிடைப்பதே துர்லபம் –
நிஜ பாத சேவை-தன் உடைய பாத சேவை-மென்மை பரிமளம் உசத்தி போட்டி ஆசன பத்மதுக்கும் திரு அடி தாமரைக்கும் போட்டி
ஆள் கண்ட சமுத்ரம் -திரு அடி மலர்ந்து -தோத்தவர் ஜெயதிதவர் தாங்கி இருக்கும் –
மங்கள கரமான எப் பொழுதும் அனுபவிக்க -அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதன் –சதா அனுபவம்-நவ அனுபவம் –
புஷ்ப கைங்கர்யம் சிந்து பூ மகிழும் திரு வேம்கடம் –ஸூத்ரவதி உடன் வானவர் கோன் வந்து சேவை–
சிந்திக் கொண்டே இருக்கும் பூ-தானே விழுமாம் கூடையில்-சுமந்து மா மலர் நீர் சுமந்து —
வேம்கட வானர்க்கு  என்னை உய்த்திடுமின் -மத்தறு மலர் குறுக்க மலர்
செண்பக மல்லிகை உடன் என்பகர் பூ -செண்பகமாய் இருக்கும் நிலை ஆசை கொண்டார்
————-

ஸத்³யோவிகாஸிஸமுதி³த்வரஸாந்த்³ரராக³-
-ஸௌரப்⁴யநிர்ப⁴ரஸரோருஹஸாம்யவார்தாம் ।
ஸம்யக்ஷு ஸாஹஸபதே³ஷு விளேக²யந்தௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

சாகச செயல்-சத்யா விகாசம்-அப் பொழுதே மலர்ந்த சமு தித்வர -மேலும் மேலும் மலரும்
சிவந்த -மணம் நிறைந்த மலரோடு-அடை மொழி இவை எல்லாம் –மென்மை யான /நறு மணம் உடைய -அப் பொழுதே அலர்ந்த –
ஒப்புமை இட ஆசை கொண்டு–அடை மொழி சேர்த்து பிரயத்தனம்-அடாத செயல்-
சாகாச செயல்-சாம்ய வார்த்தை-பேச ஆரம்பித்ததும்
மிக உயர்ந்த சாகச பதேஷு-எழுதி வைத்து விலேகயந்தவ் -முரட்டு தனமான எழுத்து எழுத போனது
கட்டுரைக்கில் தாமரை-நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது

பொன்–நன் பொன் -சுட்டு உரைத்த -அடை மொழி ஏற்றி -சொல்லி ஒவ்வாது —
அது போல் தாமரைக்கு -இல்லாத உவமை உவமையாக சொல்வது
திரு அடி மோஷம் கொடுக்கும் -தாமரை கொடுக்காதே –
கைங்கர்யம் கொள்ளாது தாவி உலகம் அளக்காதே –முரட்டு உபமானம்
திரு கமல பாதம் பாவனம் போக்கியம் இரண்டும் –தாமரைக்கு இல்லை-
கண்டேன் கமல மலர் பாதம் கண்டேன் விண்டே ஒழிந்தன வினை –
காலை மாலை கமல மலர் இட்டு -திருஅடி சிவந்து போனதாம் மலர் இட்டதும்-மென்மை–
ஆயிரம் நாக்கு வாங்கி கொண்டு உன் பெருமை பாட முடியாது சொல்ல -பட்டர் —

———–

ரேகா²மயத்⁴வஜஸுதா⁴கலஶாதபத்ர-
-வஜ்ராங்குஶாம்பு³ருஹகல்பகஶங்க²சக்ரை꞉ ।
ப⁴வ்யைரளங்க்ருததலௌ பரதத்த்வசிஹ்நை꞉
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

இலச்சினை -லஷணம் சொல்கிறார்-
ஆள வந்தார் கதா புன  வஜ்ரா லாஞ்சனம் -ஸ்லோஹம் போல்
படிக்கு அளவாக நிமிர்ந்த பாத பங்கயமே தலைக்கு அணியாய்-
ரேகை வடிவான–ஒன்பது சொல்கிறார்-
கொடி-அமிர்த கலசம்-குடை-வஜ்ரம்-அம்குசம் -சங்கு -சக்கரம் -கல்பக
ஒரு காலில் சங்கு  ஒரு காலில் சக்கரம் -இலச்சினை பட நடந்து –
பரம புருஷன் அடையாளம் பரதத்வ சிஹ்நை-அலங்க்ருதம்-பவை-பவித்ரம்
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார்-பெரிய பெருமாளுக்கு இரண்டு திரு கைகள்-
காட்டவே கண்டார் -ரேகை சொல்கிறார் தேசிகன்
அதிதி தேவி-போல் கௌசல்யை சந்தோஷித்தாள்-வாமனனை பெற்றது போல் ராமனை பெற்று-
வஜ்ர பாணி-இந்த்ரனை சொல்லாமல் ரேகை பொருந்திய திரு கைகள்
————–

தாம்ரோத³ரத்³யுதிபராஜிதபத்³மராகௌ³
பா³ஹ்யைர்மஹோபி⁴ரபி⁴பூ⁴தமஹேந்த்³ரநீலௌ ।
உத்³யந்நகா²ம்ஶுபி⁴ருத³ஸ்தஶஶாங்கபா⁴ஸௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 6 ॥

சத்வம் ரஜஸ் தமஸ் தாண்டி வெளி திரு அடி நீல கல்லை வெல்லும் உள் திரு அடி தாமரையை வெல்லும்
நகம் -வரிசை-சந்த்ரனை வெல்லும் மூன்றையும் வெல்லும் திரு அடிகள் -தாம்ரம்-சிவந்த உதர -உள்
பாஹ்யர் -வெளி- இந்திர நீல ரத்னம் வென்றது
அகம் அம்சுபி -ஒளி சசாங்கம் சந்தரன் ஒளி தோற்றது —
சத்வம் வெள்ளை   வென்றது
கரு நீலம்
சிகப்பு
பிராக்ருத ரஜஸ் தமோ சத்வம் வென்றது –பூர்ண சந்தரன் -கருப்பு -இருக்கும் -களங்கம் இன்றி நகம்
சுத்த சத்வ மாயம் அப்ராக்ருத
கருப்பு கடல் நுரை போல் நக கணுக்கள்
பார் கடல் வெளுப்பு நீல கடல் போல் -திரு மேனி-

——————

ஸப்ரேமபீ⁴தி கமலாகரபல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவவாங்மநஸகோ³சரஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥

சாஸ்திரம்–சிஷ்டாசாரம் -பிரபத்யே -மனசில் உறுதி பாடு
உப அயதே சமீபத்தில் அழைத்து செல்லுவது-பலத்துக்கு அருகில் -உபாயம்
பல பிரத்வம் வேறு-பலம் கொடுப்பவன் பகவான் ஒருவனே
சித்த உபாயம் –நம் முயற்சி இன்றி -சித்தமாக இருக்கிறான் -உபாயமும் பிராப்யமும் அவன் திரு அடிகள்
மாம் ஏகம்-என் ஒருவனையே பற்ற அவன் சொல்ல திரு அடிகளை பற்றுகிறோம்  -இதுவே அனுஷ்டானம்
ஈஸ்வரேனே கை விட்டாலும் திண் கழலாக இவை கொடுக்கும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் ஏக சிந்தனையாய்
வந்து உன் அடி இணை அடைந்தேன் –
துத் சரனாரவிந்தே -துத் பாதாரவிந்த -அடி இணை வந்து அடைந்தேன் -அடிக் கீழ் அமர்ந்து
உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்

லோக விக்ராந்தவ் சரணவ் சரணம்

அவன் திரு உள்ளம் படி அனுஷ்டானம்
காலில் விழ சொல்ல மாட்டான்
மித்திரன் போல் கை பிடி -நண்பன் என்று பிராட்டி அருளியது போல்
பிரிந்த தசையிலும் உபதேசிகிறாள் -அரச மரியாதை -பெருமாள் திரு உள்ளம் அறிந்து உபதேசம்
அழைக்கின்ற அடி நாயேன் -உள்ளம் குழையும்-ஆழ்வார்
கோவில் மகா ஜனம் பட்டரை-லகு சம்ப்ரோஷனம் ஐதீகம்   திரு அடி பிடிக்க கூட யோக்யதை இல்லை
மாம் ஏகம்-திரு மார்பை காட்டி கண்ணன் சொல்கிறான்
பிரார்த்தனா மதி சரணாகதி —

குழந்தை தாய் முலையில் வாய் வைப்பது போல் திரு அடி பற்றி சரண்

சந்தரன் -சசாங்கம்-கருப்பு திட்டு முயல் வடிவில்-சச =முயல்-இதனால் அடையாளம்
களங்கம் தீர பத்து விரல்களில் கைங்கர்யம் -நிஷ் களங்கமாக –
திரு வேம்கடம்-மதி தவழ குடுமி மால் இரும் சோலை –
வைப்பன் மணி விளக்காம் மா மதியை-பூர்ண சந்த்ரனை-ஆகாசத்தில் மதி –
இங்கு மா மதி -மாலுக்கு என்று எப் பொழுதும் கை நீட்டும் யானை
வேடர்கள் இவற்றை பார்த்து -வில் எடுக்கும் மலை வேம்கடம்
பகர் அல்லை பகல் செய்-இரவை பகல் ஆக்கும் –
திருஅடி  நிச்சலும் பிடித்து விட பிராட்டி ஆசை –
சொரூபம் பார்த்து ஆசை –
குணம் பார்த்து அச்சம் -இரண்டும்
சேஷத்வம் பார்த்து -அவனுக்கு பெருமை சேர்க்க – பரகத அதிசய ஆதன –சு பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலன் –
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே பேசி செய்து நினைத்து –பயம் நீங்கும் –
இதனால் -நடந்த கால்கள் நொந்தவோ-பேசி வாழி கேசனே –கூசி பிடிக்கும் மெல் அடிகள் –
பாரதந்த்ர்யம்
திரு கைகளால் பிடித்தால் கன்னி சிவக்குமே அச்சம்-ஆசை வென்று-பிடிக்க –
சிகப்பே நம் சம்சாரம் கழித்து கொடுக்கும்
ச பிரேம பீதி-கமலா கர பல்லவம்-முகிழ் கொழுந்து போன்ற திரு கைகள் –காந்தி-ஈர்க்கும்

வாக்குக்கும் மனசுக்கும் எட்டாமல் இருக்கும் சொவ்குமார்யம் –

ரஷகன்-பார்த்து எழுப்ப -சொவ்குமார்யம் பார்த்து – அம கண் மா ஞாலம் கடாஷம் கேட்ட பின்பு ஆண்டாள்
மாரி மலை –இங்கனே போந்து அருளி–போற்றி அருளுகிறாள் அடுத்து —
வந்த திருஅடிகள் நொந்தனவோ அது போல்
அங்கும் இங்கும் வானவர் -உன்னை வேலை வாங்க -வருவார் செல்வார் –
சங்கு சுமந்து -மற்று அடியேன் உளன் ஆழ்வார்
சொரூப ரூபகுணம் வகை –மார்த்வம் சொவ்குமார்யம் இரண்டிலும் –
உள்ளத்திலும் உடம்பிலும் –விட்டு கொடுக்க மாட்டான்
சரண் அடைந்த நீசனான என்னையும் கொள்வான் -மறை முக அர்த்தம் –
பிரிந்து பல ஜன்மம் இருக்கிறோமே -கோடி காட்டினால் புரிந்து கொள்வான்
பிரிந்து கடினமாக ஆகுமே திரு அடியும் திரு உள்ளமும்
திரு ஆபரணம் பிராட்டிக்கு எங்கு சாத்தலாம் என்று தோழிமார் பார்த்தாலே கன்னி போகும் திரு மேனி சீதை பிராட்டிக்கு
நடந்து போனாலே பொன் துகள்கள் சிந்தி கொண்டே போகுமாம்
அவள் பெருமாளை தொட்டால் சிவக்கும் படியான மெல் அடிகள்
திரு காட்கரை -மருவிய மாயன்-ஆள் கொள்வான் ஒத்து என் உயிர்–ஆர் உயிர் பட்டது என் ஆர் உயிர் பட்டது –
ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன்
தெளிந்த என் சிந்தை -காய்சின வேந்தே -கூப்பிடு தூரம் –
ராமானுஜர் கேட்டு வியந்த ஐதீகம் –கூவுதல் வருவுதல் செய்யாயே அடியேன் பிடிக்க
பூமி பாலன் திரு அடிகளை தாயார் பிடித்து விட –
கொடு வினையேனும் மெல் அடியை பிடிக்க கூப்பாடு போடா கூடாதா -ஆழ்வார் கேட்கிறார்

திரு காட்கரையில் கொடுக்கிறேன் என்றான்-
வந்தான்-ஆழ்வாரை அமர சொன்னான்
நம் ஆசை ஆணை
முகம் கன்னி போக கூடாது என்று அமர
திருஅடி பற்றி விட
பாரதந்த்ர்யம் நினைவு வர -அவனுக்கு பிடித்த படி இருக்க வேண்டுமே
அடிமை  தனம் விட அவன் திருஉள்ளம் படி நடப்பதே முக்கியம்
அடுத்த காலை நீட்ட -மலர்ந்த திரு கண்கள்-கப்யாசம் புண்டரீக அஷணீ–
தேவரீர் சொத்து -அடியேனால் அடியேன் ஆத்மா சமர்பிக்க -அதுவும் உன் சொத்தே
பதக்கம் எடுத்து நாமே சமர்ப்பித்தது போல் –
இப்படி என்ன பண்ணுவது என்ற படி-தோள் களை ஆர தழுவி -அகவிலை செய்தனை —
சம்சாரம் கண்டு பயந்து பரந்யாசம் அதுவும் அவனது செய்ய வேண்டாம் எத்தை கொண்டு சமர்பித்து –
உணர்வினுள்ளே இருதினினே அதுவும் அவனது இன் அருளே –அதுபோல் பிராட்டியும் பிரீதி பீதி இரண்டும் கொண்டு –தயிர் கடையோசை நட்டுவாங்கம் கொண்டு கண்ணன் தாண்டவம் ஆட –
கீசு கீசு என்று -மத்தினால் ஓசை -கேட்டே -ஆடி ஆடி-சிவந்த திரு அடிகள் பிராட்டி திரு கைகளால் ஆசுவாச படத்த –
பட்டர்–பெருமாள் பிராட்டி  பெருமை மாறி மாறி  பேசுவது போல்–

தளிர் புரையும் திரு அடி என் தலை மேல் –
மின் உரு பொன் உரு பின் உரு -மூன்று தத்வமும் அவன் தானே ஆழ்வாரை கொண்டதும்
சருகாக இருந்த திரு அடி தளிர் விட -பக்த ஸ்பர்சத்தால் -புஷ்ப ஹாச மலர்ந்த திருஅடிகள்–
அபிலோசன உற்று நோக்கினாலே முத்தரை குத்தினால் போல் -சந்தனம் பூசி கொண்ட கண்ணனை பார்த்த
மதுரை பெண்களின் வேல் விழி கயல் விழி  மான் விழி திரு மார்பில் பதிந்தது போல்  —
கோபால  சூடா மணி –அழியாமல் சாந்தணி தோள் சதுரன் மலை– மல்லரை மாட்டிய தேவாதி தேவன் –
கொடுத்த பரிசு மாறாமல் இருந்தான் –

———-

லக்ஷ்மீமஹீதத³நுரூபநிஜாநுபா⁴வ-
நீலாதி³தி³வ்யமஹிஷீகரபல்லவாநாம் ।
ஆருண்யஸங்க்ரமணத꞉ கில ஸாந்த்³ரராகௌ³
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 8 ॥

மூன்று தேவிமாரை பற்றி இதில் அருளுகிறார்

மகா லஷ்மி மஹீ பூமி தேவி- நீளா தேவி -திரு மகள் மண் மகள் ஆய மகள்-சிகப்பு பச்சை ஊதா நிறம்
மூவரிந்தளிர் போன்ற திரு கைகள் -ஆருன்ய சிகப்பு -அருணோதயம் –
மகர சங்கராந்தி-சங்கரமணம் -ஒன்றுடன் ஓன்று சேர்ந்து –
இதன் சிகப்பு வீசி-கரு நீல திரு அடிகள் -சிகப்பு தொற்றி கொண்டு மாற சாந்த்ர ராகவ்-சிகப்பு ஏறி-
மையார் கரும் கண்ணி கமல மலர் மேல் செய்யாள் —
மதம் கொண்டு சிகப்ப-ஐஸ்வர்யா செருக்கால் குதறி சிவக்க -ராகம்-அடியார் பற்றுவார் என்ற ஆசை உடன் -கரிய வாகி புடை பெயர்ந்து  மிளிர்ந்து –நேர் எதிர் -கருப்பு திரு மேனி கண் சிவந்து இவருக்கு
அவளுக்கு சிவந்த திரு மேனி கரிய திரு கண்கள் –எதனால்-நடந்தது –
அது போல்–கண்களால்பார்க்க இவன் திரு மேனியில் ஏற இவன் சிவந்த கண்களால் பார்க்க அவள் திரு மேனி சிவப்பு –
அதற்க்கு இது இதற்க்கு அது –மாறுதலும் நித்யம்-அபிமத அநுரூப தாம்பத்யம் -திரு மகள் மண் மகள் ஆயர்மதா மகள் என்று இவர் மூவர் —
கூந்தல் மலர் மங்கைக்கும்  மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் —
வார்த்தை பார்த்து -மங்கை மடந்தை கொழுந்து -பெதும்பை பேர் இளம் பெண் மங்கை-பருவ நிலைகள்-

பின்னை கொல் நில மா  மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள் —
ஆழ்வாருக்கு ஒப்பு சொல்லு -கடி மா மலர் உடன் உள்ள சாம்யம்
அவளும் நின் ஆகத்து –இவளை சொல்லு-சாம்யம்-சொல்ல இவளுக்கு ஏற்றம்-
பூ மேல் இருக்கும் திரு -அத் திரு அவனை பற்றும் இத் திரு இருவரை பற்றும் –நடுவாக வீற்று இருக்கும் நாரணன் -ஸ்ரீ ரெங்க நேதா-தலைவன்-திரு அடி சிவக்க –
மௌலி சக்கரவர்த்தி கிரீட ரத்ன ஒளியாலா –அடியார் திரு உள்ளம் ஆசனமாக அமர்ந்ததாலா
ஆசையால் சிவந்த திரு உள்ளம்–கமலா கரேப்யே -மூன்றும் பட்டர் அருளியது போல் —

————

நித்யாந்நமத்³விதி⁴ஶிவாதி³கிரீடகோடி-
-ப்ரத்யுப்ததீ³ப்தநவரத்நமஹ꞉ப்ரரோஹை꞉ ।
நீராஜநாவிதி⁴முதா³ரமுபாத³தா⁴நௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 9 ॥

நித்யானவதி விதி பிரம்மா சிவன் இந்த்ரன் -போல்வார் கிரீடம் பட -ரத்னம் -தனுஷ்கோடி-ஒளி- கிரீட நுனி-ரத்ன கல்

கிரீடம் -மகுட -ஸூடவதம்சே மும் முடிக்கு பேர் அரசு–ஆதி ராஜ்ய ஜல்பிதா -பிதற்றுகிறதாம்-
யார் தலையில் உட்கார்ந்து இருக்கிறேனோ அவன் தான் ஜகத்துக்கு அதிபதி என்று சொல்லி கொண்டு—நீல கரு மேக சியாமளன் போல் உதய கிரிக்கு மேல் ஸூர்யன் போல் கிரீடம் -கோள் சொல்லி கொடுக்கும் அவனை —
எளியவன் வேஷம் போட்டு தேவாதி ராஜன் ஹஸ்த கிரிக்கு வர -கிரீடம் பராத் பரன் காட்டி கொடுக்கும் —
முத்து குடை தங்க குடை ரத்ன மேல் மூடி இருக்கும் -அபிமான பங்கமாய் சங்கம் இருப்பார் போல்-ஒளி மலர-திரு அடியில் பட்டு வளருமாம்-திரு அடிக்கு ஹாரத்தி காட்டுமாம் இந்த ஒளியால்-நீராஞ்சனம்-ஹாரத்தி-
வைகாசி விசாகம் தீர்த்தவாரி-ஆழ்வாரே இறங்கி-
மனோ ரதம் நிறைவேற்றுவார் நீராஞ்சனம் சேவித்து பெறலாம் -200  தேங்காய் மூடி விளக்காக இருக்கும் —
ஆழ்வார் மட்டும் குளிர்ந்து-பைம் கமலா தன் தெரியல்-ஆழ்வார் மாலை குளிர்ந்து இருக்கும்-அகிலாண்ட கோடி பிரம்மாண்ட கண் எச்சில் படாமல் ஹாரத்தி-திரு அந்தி காப்பு-திரு வெள்ளறை காப்பு இட்டார் பெரியாழ்வார்-
உபாதா தானவ்-ஏற்று கொள்ளும் திரு அடிகள் -மனு குல அரசர் -இஷ்வாகு திலீபன் தசரதன் பெருமாள்-பரம்பரை திரு ஆராதனம்
கிரீடம் -ராமனுக்கு சூட்டி பட்டாபிஷேகம்–நவ ரத்ன ஒளி பெரிய பெருமாள் திரு அடியில் காணலாம் இன்றும்-
அது போல் இவன் நின்று பெற்றார் அடியரோர்க்கு அகலாமோ –கிடந்ததோர் கிடந்த அழகுக்கு ஹாரத்தி

பெண் மீன் உருவம் பதிந்து இருக்குமாம்-கண் கிரீடத்தில் இருப்பது
அடுத்து அருளுகிறார்
உள் திருஅடி சேவை கிடைப்பது துர் லபம்
திரு கோளூரில் ஜன்னல் வழியாக சேவிக்கலாம்

————–

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

யாரும் பார்க்க முடியாத பரம பதம்-மாக வைகுந்தம் தெளி விசும்பு திரு நாடு-காண்பதற்கு
என் மகம் ஏக எண்ணும் ஆகம் சேர் நரசிங்கம் அதாகி ஓர் ஆகம் வள உகிரால் பிளந்தான் உறை
மா வைகுந்தம் காண மனம் ஏக எண்ணும் –

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்-

புண்ணில் புலி பெய்தால் போல் திரு அடியில் மது தாரை பொழியும் என்பர்–
அதை எங்கும் தேடி போக வேண்டாம் -இங்கே அழுந்த இருக்க திரு கை காட்டி காட்டுகிறான்

எந்த திரு அடிகளில் உயர்ந்த வேதாந்த புகழும் -மது பெருகும்-போக்யதை உள்ள திரு அடி-அனுபவ தக்க –
பெருமை இனிமை இரண்டும் உண்டு–பரம போக்கியம் –ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே
இங்கேயே இருகிறதே வலது திரு கைகளால் காட்டுகிறேர் -சரணம்-பிராப்யம் –
அனுபவிக்க தான் திரு அடி -உபாயமாக நாம் ஆக்கி கொண்டோம் -கரு முகை மாலையை சும்மாடு போல் உபயோகித்தோம் —
அனுபவிக்க கொடுத்ததை -விதி அற்று உபாயமாக ஆக்கி கொண்டோம்.-

———–

அடுத்து பார்தந்தன் தேர் முன் நின்று அருளியதை அபிநயம் காட்டிக் கொண்டு இருக்கிறீர்

பார்தா²ய தத்ஸத்³ருஶஸாரதி²நா த்வயைவ
யௌ த³ர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி ।
பூ⁴யோ(அ)பி மஹ்யமிஹ தௌ கரத³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 11 ॥

ஏற்ற சாரதி-பிடித்த -தேர் பாகன்-மாம் ஏகம் சரணம் விரஜ -என்று அருளியதை-
காலில் விழுந்தவரையும் கை பிடிக்கும் ஓங்கி உலகு அளந்த உத்தமன்-மறு படியும் திரு கைகளால் காட்ட பட்டன –
வலது திரு கையால் காட்டி கொண்டு இருகிறாய் –ஆர் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்-
சுட்டி காட்டுகிறாய் இது தான் என்று –தொட்டு காட்டுகிறார் –மாம்–மற்றவை விட்டு தன்னை

திரு மேனியில் எது -அதில் திரு அடி காட்டி மற்றவை விட்டு காட்டுகிறார்
சத்ருச சாரதி இவர் தான் -பார்த்த சாரதி-பார்த்தன் தன் தேரை ஊன்றான் –
தாழ்ந்த தஞ்சயனுக்கு -கர்மம் அறியாத -ஆகி-பஷ பாதமாக ஆகி –
மணி தின் தேர் உஊர்ந்தவன் -நர நாராயணனே அருஜுனன் கண்ணன்–ஆச்சர்ய சிஷ்ய பாவம் மாறி இருந்தார்கள்–
கருணனுக்கு பிடிக்காத சாரதி சத்யன்
சாமான்ய விசேஷ நியாயம்-மாம்-திரு அடி -காட்டி கொண்டு-
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் இடம் திரு அடி காட்டி கொண்டு இருக்கிறான்
———————

மந்மூர்த்⁴நி காளியப²ணே விகடாடவீஷு
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ரே ஶிரஸி ஶ்ருதீநாம் ।
சித்தே(அ)ப்யநந்யமநஸாம் ஸமமாஹிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 12 ॥

சௌசீல்யம் -கூராளும்–தனி உடம்பன்-விஸ்வ ரூபத்தில் அனைத்தையும் காட்டி

உயர்வு தாழ்வு இன்றி ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -உயர்வு தாழ்வு பாராமல் -அனைவருக்கும்-சேவை சாதிகிறாய்–

பரம பக்தர் பர வேதாந்தி பரம பாமரன்-அனைவர் தலையிலும் -லோக விக்ராந்த  சரணவ் –
உலகம் அளந்த பொன் அடி-

தாள் பரப்பி மண தாவிய ஈசன் இவனே–தாவி அன்று உலகம் எல்லாம் தளவிலா கொண்ட எந்தாய்

ஆவியே அமுதே -தொண்டர் அடி பொடி ஆழ்வார்

நீசன் விலகி போக -வெள்கி போய் விலவர சிரித்திட்டேனே-உள்ளுவார் உள்ளத்து எல்லாம் உறைகின்ற —
கோவர்த்தன கிரி கீழும் அனைவரும் பண்டித பாமர விவேகம் அற–
மன் மூர்த்னி- என் தலையில்– நீசன்-வேதாந்தம் மேலும் விளங்கி –
ஆனால் அவனோ தளிர் புரையும் திரு அடி ஆழ்வார் தலையை தீண்டிய பின்பு –
அவன் வைக்கும் இடம் ஏற்றம் பெறுகிறது-பண்பும் அவன் சம்பந்தம் பெற்று நல்ல பண்பாகும் ..
அடியேன் தலையில்-காளிங்கன் பாம்பின் தலையில்/தொல் கானம்-அடர்ந்த காட்டில்-ஸ்ரீ வேம்கடாத்ரி சிகரம்-ஸ்ருதி தலை வேதாந்தம் தலையில்-அநந்ய மனச படைத்தவர் அவனையே அவனுக்காகா நினைப்பவர் –
இங்கு எல்லாம் திரு அடி வைத்தவன் ஆறு இடங்கள்-துவய சப்தம் ஆறு என்பதால் –
என் தலை தொடக்கி அநந்ய சித்தம் -நீச நிலை தொடக்கி உயர்ந்த இடம் வரை-கூரத் ஆழ்வான் வரதராஜ ஸ்தவத்தில் அருளியது போல் –வேழ மலை மேல் இருப்பதா –  –
பக்தர் ஹிருதயம்-வேத சிரஸ் -கமல- தாமரை மேல் -நம் ஆழ்வார் திரு உள்ளத்திலா –
மந்த ஸ்மிதம்-ரோம ஹர்ஷம் வேழ மலை அழகால்-புது பொலிவால் –ராச கிரீடை கோபிகள் பூமி பார்த்து கேட்டார்கள் —
முதல் அடி பூ-கவிழ்த்து அலர்த்தி –ஒரு திருஅடி கீழும் ஓன்று மேலும் –

சௌசீல்யம்-அனைவரையும் சமம் –வாத மா மகன் மர்கடம்- விலங்கு மற்று ஓர் சாதி உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
திரு கண்ண புரம் திரு நறையூர் இரண்டுக்கும் நூறு பாசுரம் திரு அரங்கம் மட்டுமே ஒரே ஐம்பது பாசுரம் அருளி
திரு மங்கை ஆழ்வார் அத்வதீயம் திரு அரங்கம் காட்டி-வேருவாதால் வாய் வேறுவி வேம்கடமே வேங்கடமே என்கின்ற –
வாயு குமாரன்-மனிதன் மற்று ஓர் ஜாதி மர்கடம் சொல்லி-செருக்கு உள்ள குரங்கு என்பதால் வாய் குமரன் சொன்னார்
முலையோ முழு முற்றும் பொந்தில -கலையோ அறை இல்லை நாவோ குளறும் மிளிரும் கண்   –
கடல் வண்ணன் என்றோ விலையோ-சிறு பிராயம் அனைவரையும் சமமாக பார்க்கும் —
சைதன்யம் இருந்தும் தப்பு பண்ணி-இரு கால் மாடு போல்-அதனால் காளிங்கன் தேவலை —
ஸ்ரீ பாஷ்யம் கேட்டு தரை தட்டி இது போன்று புரிந்து கொண்டேன் சொன்ன ஐதீகம்-
அடுத்து வெம் கானம்-காலின்கனுக்கு சில அறிவு உண்டே -அதனால்-வெப்பம் குற்றம் இல்லை-
அடுத்து உயர்ந்த வேம்கடம்-உசத்தி- வேதாந்தம் முடியில்-திரு வேம்கடம் உயர்ந்தது என்று சொல்லியதால் —
அடுத்து அநந்ய மனச-சிஷ்ட பரிக்ரகம் பூர்வர் அனுஷ்டானம் வேண்டுமே -சகஸ்ர நாமம் ஏற்றம் –
வேதாந்தம்-பீஷ்மர் அறிந்த தர்மம்/வியாசர் -போல் இங்கும் அநந்ய மனஸ் ஏற்றம்

ஆழ்வார் திரு உள்ளம்-என் உச்சி உளானே–வந்து என் உச்சி உளானே–
முதலில் திரு வேம்கடம் வந்து-நின்று இருந்தால் கிளம்ப போகிறான்-மாரி மாறாத தன் அம் மலை-
தாமர பரணி நதி ஓடும்-கருணை வர்ஷம்–கமல கண்ணன் என் கண்ணின் உளான்–
திரு முடி தர்சனம் அங்கு தான்-பொலிந்து நின்ற பிரான் ஆழ்வார் திரு முடி மேல்-ஆதி  பிரான் நின்ற பெருமான்-
இருவரையும் மங்களாசாசனம் ஆழ்வார் பண்ணி கொண்டு –பட்டயம் வாசிப்பார்கள் உமக்காக தந்தோம்–கொண்ட கோவலன் விஷ்ணு சித்தன் மனத்தில் –பருபதத்து  கயல் பதித்த பாண்டியன் -மீன கொடி நாட்டியது போல்-
மலை கேட்காமல் மன்னன் வைத்தது போல்–காளியின் உச்சியில் நடனம் –பூத்த நீள் கடம்பேறி –
அவன் திரு அடி பட்டதும் பசக் பசக் பசுமை பெற்றதாம் -குரவை கூத்து குட கூத்து ராச கிரீடை –
பல வித நடனம்-போர் களமாக நிருத்தம் செய்தான் -காலால் காளியன் தலையில் மிதித்தது முதலா
பரல் கல் மேல் புளிதி சோர பெருமாள் நடந்தான் –மெல் அடி –
ஆழி அம் கையானை அம்மானை-அம்மனை தொடர்ந்து ஏத்தாமல் –ஆழ்வார் –
ராமானுஜர் அந்த இடத்தில் பக்கம் இருந்து தலையால் திரு அடி தாங்கி இருக்காமல் போனோமே

வியன் காண மரத்தின் நீழல்-கல் ஆணை மேல் துயில கற்றாயே காகுத்தா
காடு நடந்த பொன் அடி
கண்ணன் ஐந்து வயசில் மாடு மேய்க்க போனானே
குடையும் செருப்பும் கொடாமே காதில் திரி இட்டு தாமோதரனை –பசு மாடு தூசி படித்த குழல்-
பொன் தடுவுவது போல் -ப்ருந்தாவனந்த பண்டிதன்
நமக்கு நாதன் உடையவராக ஆக்குமே செடி கொடிகள் –வெம் கானம் போக்கினேனே
வேம்கட திரு மலை-க்ரீடாத்ரி விளையாட்டு மலை-ஸ்ரீ வைகுண்டமே ஆனந்த நிலைய விமானம் ஸ்வாமி புஷ்கரணி
வேம்கடத்து உச்சியில் கண்டு போய்-முதலில் திருஅடி பதிந்த இடம் சேவிக்க வேண்டும்

—————–

அம்லாந ஹ்ருஷ்ய த³வநீதல கீர்ணபுஷ்பௌ
ஶ்ரீவேங்கடாத்³ரி ஶிக²ராப⁴ரணாயமாநௌ ।
ஆநந்தி³தாகி²ல மநோநயநௌ தவைதௌ
ஶ்ரீவேங்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 13 ॥

ஸ்ரீ வேங்கடேசா -வாடா மலர்களாகத் தரை மேல் கிடக்கும் மற்ற மலர்களின் இடையே காணப்படுகின்றவையும்
திருவேங்கட மலைச்சிகரம் பெற்ற சிறந்த அணிகலன்களாக விளங்குபவையும்
சகல ஜீவன்களுடைய கண்களையும் மனங்களையும் களிப்படையச் செய்கின்றவையுமான
இந்த உன்னுடைய திருவடிகளே சரணம் என்று அடைகிறேன்

————

ப்ராய꞉ ப்ரபந்ந ஜநதா ப்ரத²மாவகா³ஹ்யௌ
மாது꞉ ஸ்தநாவிவ ஶிஶோரம்ருதாயமாநௌ ।
ப்ராப்தௌ பரஸ்பரதுலாமதுலாந்தரௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 14 ॥

ஸ்ரீ வேங்கடேசா -உன்னை வந்து அடைக்கலம் வந்து புகுந்த அநேகம் ஜனங்களுக்கு
முக்கியமாக அனுபவிக்கத்தக்க சொத்துப் போலே உள்ளவையும்
குழந்தைகளுக்குத் தாயின் மார்பகம் போல் அமுதாகின்றவையும்
ஒன்றுடன் ஓன்று இணையாக அமையப்பெற்றவையும்
தனக்கு நிகராக வேறே ஓன்று இல்லாதவையுமான
உனது திருவடிகளே சரண் என்று அடைகிறேன் –

—————

ஸத்த்வோத்தரை꞉ ஸததஸேவ்யபதா³ம்பு³ஜேந
ஸம்ஸாரதாரகத³யார்த்³ரத்³ருக³ஞ்சலேந ।
ஸௌம்யோபயந்த்ருமுநிநா மம த³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 15 ॥

ஸ்ரீ வேங்கடேசா நற்குணம் நிறைந்தவர்களால் ஸதா காலம் வணங்கத் தக்க பாத கமலங்களை யுடையவரும்
பிறவிக்கடலைத் தாண்ட உதவும் கருணையால் குளிர்ந்த
திருக்கண்களை யுடையவருமான
ஸ்ரீ மணவாள மா முனிகளால் எனக்கு காண்பிக்கப்பட்ட
எனது திருவடிகளே சரணாக அடைகிறேன் –

———

ஶ்ரீஶ ஶ்ரியா க⁴டிகயா த்வது³பாயபா⁴வே
ப்ராப்யே த்வயி ஸ்வயமுபேயதயா ஸ்பு²ரந்த்யா ।
நித்யாஶ்ரிதாய நிரவத்³யகு³ணாய துப்⁴யம்
ஸ்யாம் கிங்கரோ வ்ருஷகி³ரீஶ ந ஜாது மஹ்யம் ॥ 16 ॥

ஸ்ரீ விருக்ஷ மலைக்கு இறைவனே
ஸ்ரீ யப்பதியே
நீ இறங்கும் பொழுது நின் திருவருள் கிடைக்கும்படி செய்து அருளுபவளும்
பிறவிக்கடல் கடந்து நான் அடையத்தக்க பயனாக நீ மாறும் காலத்து உன்னுடன் சேர்த்து
வைத்தும் அருள்பவளுமான திருமகளால் அடையப்பட்டவனும்
குற்றமற்ற குணங்களை உடையவனுமான உனக்கு நான் பணி செய்வதையே விரும்புபவனே தவிர
என்னையே நான் பெரிது என்று எண்ணி எனக்கு -என்னுடைய ஆனந்துக்காகவே
பணி செய்வேனாக இருக்க மாட்டேன் –

இட் ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி ||

***

ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம்

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்     -1-

திருமகள் விரும்பும் நாதனும்
ஸர்வ மக்களுக்கும் நிதி போன்றவனும்
யாசிப்பவர்களுக்கு வரையாது வழங்கும் பொற் குவை போன்றவனும்
திருவேங்கட திருமலையில் நித்ய வாஸம் செய்து அருளுபனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு ஸர்வ மங்களங்களும் உண்டாகட்டும்

———

லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே

சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்             2

திருமகளும் வியந்து நோக்கத்தக்க அழகிய புருவங்கள் இணைந்து விளங்கும் திருக்கண்கள் யுடையவனும்
கண்ணாவான் மண்ணோர் விண்ணோர்க்கும் என்றபடியே
ஸகல லோகங்களுக்கும் கண் போன்றவனுமாகிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———-

ஸ்ரீவேங்கடாத்ரி  ச்ருங்காக்ர மங்களா பரணாங்க்ரியே

மங்களாநாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்    3-

திரு வேங்கட மலைச் சிகரத்துக்கு மங்கள திரு ஆபரணமாக விளங்குகின்ற திருவடிகளை யுடையவனும்
ஸர்வ மங்களங்களுக்கும் இருப்பிடமானவனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———–

ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா சர்வசேதஸாம்

ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம்             4

அங்கங்கள் யாவுமே அழகு என்னும் செல்வத்தால் அனைவருடைய உள்ளங்களையும்
எப்பொழுதுமே மயங்கிப்போய் இருக்கும்படிச் செய்யக் கூடிய அழகிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———————

நித்யாய நிரவத்யாய ஸத்யா நந்தசிதாத்மநே

ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்   5-

அழிவற்றவனும்
அழுக்கு அற்றவனும்
ஆனந்த ஸ்வரூபனும்
ஞான ஸ்வரூபனுமாக
எல்லார் உள்ளத்திலும் உயிராக விளங்கும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

————-

ஸ்வதஸ் ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வசேஷிணே

ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்        –6-

தானாகவே எல்லாமும் அறிந்தவனுக்கு
ஸர்வ சக்திகளும் பெற்றவனும்
ஸமஸ்த இதர வைலக்ஷணம் கொண்டவனும்
நல்ல ஒழுக்கம் உடையவனும்
எளிதில் சென்று அடையும்படி பின்னானார் வணங்கும் ஜோதியுமுமானவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

————–

ப்ரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய பரமாத்மநே

ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்      -7-

எங்கும் நிறைந்த பரம் பொருளும்
எண்ணியவை யாவையும் நிறைவேற்றி வைக்கக் கூடியவனுமான
பரமாத்மாவாகவும்
எல்லாமே தம் தம் பணிகளில் இயங்கக் காரணமாய் இருப்பவனுமான
பரதத்வ உண்மைப் பொருள் அனைத்திலும் உயர்ந்தவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

———–

ஆகால தத்வ மச்ராந்த மாத்ம நாம நுபச்யதாம்

அத்ருப்த்யம்ருத ரூபாய வேங்கடேசாய மங்கலம்    -8

காலம் உள்ளவரை அயராமல் ஸேவிக்கும் பக்தர்களுக்குத் திருப்தி அளிக்கக் கூடிய
ஆரா வமுதமாய் இருக்கக் கூடிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

————-

ப்ராயஸ் ஸ்வ சரணௌ பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா

க்ருபாய திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்     –9-

தனது திருவடிகளே சரணம் என்று சகல ஜீவன்களுக்கும்
தனது திருக்கரத்தால் அன்புடன் காட்டிக் கொடுத்து அருளும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

————

தயாம்ருத் தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை:

அபாங்கை ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்     -10-

கருணை என்னும் அமுதக்கடலினுடைய அலைகளைப் போலே
குளிர்ந்த திருக் கடைக் கண்களால் உலகத்தை நினைக்கின்ற
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

—————

ஸ்ரக்பூஷாம் பர ஹேதீதாம் ஸுஷமாவஹ மூர்த்தயே

ஸர்வார்த்தி ஸமநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்    –11

தான் அணியும் மாலைக்கும்
அணி மணிகள் உடை ஆயுதம் இவைகளுக்கும்
அழகை யுண்டு பண்ணி அருளும் திவ்ய மங்கள விக்ரஹம் உடையவனும்
சகல துக்கங்களையும் போக்கி அருள் செய்பவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

—————

ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்    12-

ஸ்ரீ வைகுண்டத்தில் பற்று நீங்கி
ஸ்ரீ ஸ்வாமி புஷ்கரணி தடாகத்தின் கரையில்
திருமகளோடு விளையாடி அருளும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

——–

ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே

ஸர்வலோக நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்     –13

ஸ்ரீ மணவாள மா முனிகள் போன்ற பக்தர்களின் திரு உள்ளங்களில் நித்ய வாஸம் செய்து அருள்பவனும்
எல்லா உலகங்களில் எல்லாப் பொருள்களிலும் கன்னுக்குத் தெரியாமல்
கரந்து எங்கும் பரந்துள்ளவனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

———–

மங்களாசாஸ நபரைர் மதாசார்ய புரோகமை:

ஸர்வைச்ச பூர்வை ராசார்யைஸ் ஸத்க்ருதாயாஸ்து மங்களம்    -14-

எம்பெருமானுக்கு மங்களங்கள் உண்டாகட்டும் என்று
என்னுடைய ஆச்சார்யர்களாலும்
மற்றும் உள்ள ஆச்சார்யர்களாலும்
பூஜிக்கப் பட்டவருமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

***

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் ஓங்கார பரமார்த்தாய நம:
ஓம் நர நாராயணாத்மகாய நம:
ஓம் மோக்ஷலக்ஷ்மீ ப்ராணகாந்தாய நம:
ஓம் வேங்கடாஶல நாயகாய நம:
ஓம் கருணாபூர்ண ஹ்ருதயாய நம:
ஓம் டேங்காரஜப ஸௌக்யதாய நம:
ஓம் ஶாஸ்த்ர ப்ரமாண கம்யாய நம:
ஓம் யமாத்யஷ்டாங்க கோசராய நம:
ஓம் பக்தலோகைக வரதாய நம:
ஓம் வரேண்யாய நம: 10

ஓம் பயநாஶநாய நம:
ஓம் யஜமாந ஸ்வரூபாய நம:
ஓம் ஹஸ்தந்யஸ்த  ஸுதர்ஶநாய நம:
ஓம் ரமாவதார மங்கேஶாய நம:
ஓம் ணாகாரஜவ ஸுப்ரியாய நம:
ஓம் யஜ்ஞேஶாய நம:
ஓம் கதிதாத்ரே நம:
ஓம் ஜகதீவல்லபாய நம:
ஓம் வராய நம:
ஓம் ரக்ஷஸ்ஸந்தோஹ ஸம்ஹர்த்ரே நம: 20

ஓம் வர்சஸ்விநே நம:
ஓம் ரகுபுங்கவாய நம:
ஓம் தாநதர்மபராய நம:
ஓம் யாஜிநே நம:
ஓம் கநஶ்யாமள நம:
ஓம் ஹராதி ஸர்வதேவேட்யாய நம:
ஓம் ராமாய நம:
ஓம் யதுகுலாக்ரணயே நம:
ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
ஓம் மஹாத்மநே நம: 30

ஓம் தேஜஸ்விநே நம:
ஓம் தத்வஸந்நிதயே நம:
ஓம் த்வமர்த்த லக்
ஓம் பாவநாய நம
ஓம் ஸர்வேஶாய நம:
ஓம் கமலாகாந்தாய நம:
ஓம் லக்ஷ்மீ ஸல்லாப ஸம்முகாய நம:
ஓம் சதுர்முக ப்ரதிஷ்டாத்ரே நம: 40

ஓம் ராஜராஜ வரப்ரதாய நம:
ஓம் சதுர்வேத ஶிரோரத்நாய நம:
ஓம் ரமணாய நம:
ஓம் நித்யவைபவாய நம:
ஓம் தாஸவர்க்க பரித்ராத்ரே நம:
ஓம் நாரதாதி முநிஸ்துத்யாய நம:
ஓம் யாதவாசலவாஸிநே நம:
ஓம் கித்யத் பக்தார்தி பஞ்ஜநாய நம:
ஓம் லக்ஷ்மீப்ரஸாதகாய நம:
ஓம் விஷ்ணவே நம: 50

ஓம் தேவேஶாய நம:
ஓம் ரம்ய விக்ரஹாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் லோகநாதாய நம:
ஓம் லாலிதாகில ஸேவகாய நம:
ஓம் யக்ஷகந்தர்வ வரதாய நம:
ஓம் குமாராய நம:
ஓம் மாத்ருகார்ச்சிதாய நம:
ஓம் ரட்த்பாலக போஷிணே நம:
ஓம் ஶேஷஶைல க்ருதஸ்தலாய நம: 60

ஓம் ஷாட்குண்ய பரிபூர்ணாய நம:
ஓம் த்வைததோஷ நிவாரணாய நம:
ஓம் திர்யக்ஜந்த் வர்ச்சிதாங்க்ரயே நம:
ஓம் நேத்ராநந்த கரோத்ஸவாய நம:
ஓம் த்வாதஶோத்தம லீலாய நம:
ஓம் தரித்ரஜந ரக்ஷகாய நம:
ஓம் ஶத்ரு க்ருத்யாதி பீதிக்நாய நம:
ஓம் புஜங்கஸயந ப்ரியாய நம:
ஓம் ஜாக்ரதே நம:
ஓம் ரஹஸ்யாவாஸாய நம: 70

ஓம் ஶிஷ்டபரிபாலகாய நம:
ஓம் வரேண்யாய நம:
ஓம் பூர்ணபோதாய நம:
ஓம் ஜந்ம ஸம்ஸார பேஷஜாய நம:
ஓம் கார்த்திகேய வபுர்த்தாரிணே நம:
ஓம் யதிஶேகர பாவிதாய நம:
ஓம் நரகாதி பயத்வம்ஸிநே நம:
ஓம் ரதோத்ஸவ கலாதராய நம:
ஓம் லோகார்ச்சா முக்யமூர்த்தயே நம:
ஓம் கேஶவாத் யவதாரவதே நம: 80

ஓம் ஶாஸ்த்ர ஶ்ருதாநந்த லீலாய நம:
ஓம் யமஶிக்ஷா நிபர்ஹணாய நம:
ஓம் மாநஸம்ரக்ஷண பராய நம:
ஓம் நேத்ரஹீநாக்ஷிதாயிநே நம:
ஓம் மதிஹீந மதிப்ரதாய நம:
ஓம் ஹிரண்யதாந க்ராஹிணே நம:
ஓம் மோஹஜால நிக்ருந்தநாய நம:
ஓம் ததிலாஜாக்ஷதார்ச்யாய நம:
ஓம் யாதுதாந  விநாஶநாய நம: 90

ஓம் வேங்கடாய நம:
ஓம் தக்ஷிணாஸ்திதாய நம:
ஓம் ஸாரபுஷ்கரிணிதீராய நம:
ஓம் ராத்ரௌ தேவகணார்ச்சிதாய நம:
ஓம் யத்நவத் பலஸந்த்தாத்ரே நம:
ஓம் ஸ்ரீம்ஜபாத் தநவ்ருத்திக்ருதயாய நம:
ஓம் க்லீம்காரஜாபி காம்யார்த்த ப்ரதாந ஸதயாந்தராய நம:
ஓம் ஸ்வஸர்வசித்தி ஸந்தாக்ரே நம:
ஓம் நமஸ்கர்த்து ரபீஷ்டதாய நம: 100

ஓம் மோஹிதாகில லோகாய நம:
ஓம் நாநாரூப வ்யவஸ்திதாய நம:
ஓம் ராஜீவலோசநாய நம:
ஓம் யஜ்ஞவராஹாய நம:
ஓம் கணவேங்கடாய நம:
ஓம் தேஜோராஶீக்ஷணாய நம:
ஓம் ஸ்வாமிநே நம:
ஓம் ஹார்தா வித்யா நிவாரணாய நம:  108

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி சமாப்தம்:

————–

வ்ருஷசைலாதிப ஏவ தைவதம் ந

வ்ருஷபாத்ரீச்வர ஏவ தைவதம் ந
பணி சைலாதிப ஏவ தைவதம் ந

பகவான் வேங்கட ஏவ தைவதம் ந————————–11-

—————————————————-

வ்ருஷசைலம் -என்பதும்
வ்ருஷபாத்ரி -என்பதும்
பணி சைலம் -என்பதும்
பர்யாய நாமங்கள் ஆதலால்
எல்லாவற்றாலும்
திருமலை அப்பனே அடியேன் தொழும் தெய்வம்
என்றது ஆயிற்று

—————————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ ஸ்ரீ நிவாச பர தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச பரமம் தனம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச குல தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீனிவாச பரமா கதிர் ந—12

ஸ்ரீ ஸ்ரீநிவாசன
நமக்கு பர தேவதையும்
பெரும் செல்வமும்
குல தேவதையும்
பரம கதியும்
ஆவான் -என்கிறார் ஆயிற்று-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ வேங்கடேச பாகவதம் -ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் அனுபவிக்கும் ஸ்ரீ திருவேங்கடம் —

March 17, 2023
ஸ்ரீ வேங்கடேச த்வாதச நாம ஸ்தோத்திரம்‌ 

வேங்கடேசோ வாஸுதேவ: வாரிஜாஸன வந்தித: 
ஸ்வாமி புஷ்கரிணீவாஸ: சங்கசக்ர கதாதர: 
பீதாம்பரதரோ தேவ: கருடாரூட ஸோபித: 
விஸ்வாத்மா விஸ்வலோகேச: விஜயோ வேங்கடேஸ்வர: 
(வாரிஜாஸன வந்தித: தாமரைமலரை ஆசனமாகக்‌ கொண்ட பிரம்மனால்‌ வணங்கப்பட்டவனே.) 
ஏதத்‌ த்வாதஸ நாமானி த்ரிஸந்த்யம்‌ ய: படேன்‌ நர: 
ஸர்வபாப வினிர்முக்தோ விஷ்ணோஸ்ஸாயுஜ்ய மாப்னுயாத்‌. 
-----------

1. பொய்கையார்‌ பாஞ்சசன்னியம்‌ (சங்கு) 
2. பூதத்தார்‌ கெளமோத$ (கதாயுதம்‌] 
3. பேயார்‌ நாந்தகம்‌ (வாள்‌) 
4-திருமழிசையார்‌ சுதர்சனம்‌ (சக்கரம்‌) 
5. சடகோபர்‌ விஷ்வக்சேனர்‌ (சேனை முதலி) 
6. மதுரகவி வைநதேயர்‌ (கருடன்‌) 
7. குலசேகரர்‌ கெளஸ்துபம்‌ (மணி) 
8. விஷ்ணுசித்தர்‌ கருடன்‌ (வாகனம்‌) 
9. ஆண்டாள்‌ பூமாதேவி (பிராட்டி) 
10. தொண்டரடிப்பொடி வைஜயந்தி (வனமாலை) 
11, திருப்பாணர்‌ ஸ்ரீ வத்ஸம்‌ (மருவு) 
12. திருமங்கை மன்னன்‌ சார்ங்கம்‌ (வில்‌).
----------
பொய்கையாழ்வார்‌ 
1. வேங்கடமே! வானோர்‌. மனச்சுடரைத்‌ தாண்டும்‌ மலை --26-
2. வேங்கடமே! வெண்சங்கம்‌ ஊதியவாய்‌ மரல்‌ உகந்த ஊர்‌, --57
3. வேங்கடமே! மேலகரர்‌ எம்மென்னும்‌ மாலது இடம்‌--36-
4. வேங்கடமே! பேரோத வண்ணர்‌ பெரிது (நின்றதுவும்‌], --39
5. வேங்கடமே! மேலசுரர்‌ கோன்‌ வீழக்‌ கண்டு உகந்தான்‌ குன்று --40-
6. வேங்கடமே! மேலொருநாள்‌ மான்மாய எய்தான்‌ வரை 

வேங்கடத்தாய்‌! நால்வேதப்‌ பண்ணகத்தாய்‌. 
விண்‌ கொடுக்கும்‌ மண்ணளந்த சீரான்‌ திருவேங்கடம்‌. 
வேங்கடமும்‌ நின்றான்‌ என்றால்‌ கெடுமாம்‌ இடர்‌. 
வேங்கடத்து மேயானும்‌ உள்ளத்தின்‌ உள்ளானென்று ஓர்‌. 
வேங்கடத்தான்‌ முன்னொரு நாள்‌ மாவாய்‌ பிளந்த மகன்‌. 
வேங்கடவனையே! வாய்திறங்கள்‌ சொல்லும்‌ வகை. 
வேங்கடத்தான்‌ விண்ணோர்‌ முடி தோயும்‌ பாதத்தான்‌. 
வேங்கடமென்று உளங்கோயில்‌ உள்ளம்‌ வைத்து உள்ளினேன்‌. 

வகையறு நுண்கேள்வி வாய்வார்கள்‌ நாளும்‌ 
புகை விளக்கும்‌ பூம்புனலும்‌ ஏந்தி - திசை திசையின்‌. 
வேதியர்கள்‌ சென்று இறைஞ்சும்‌ வேங்கடமே! வெண்சங்கம்‌ 
ஊதியவாய்‌ மால்‌ உகந்த ஊர்‌.

இப்பாசுரம்‌ ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதக்‌ காட்சிகளைக்‌  கண்முன்‌ கொண்டுவந்து நிறுத்துகிறது. 
ஆழ்வார்கள்‌ காலத்தில்‌  இவ்விதமே திருமலையில்‌ சுப்ரபாதம்‌, தோமாலை சேவை, 
அர்ச்சனை போன்றவை நடந்தன போலும்‌. 
பொய்கையாரின்‌  பாசுரத்தை ஒட்டியே ஸ்ரீ. வேங்கடேச சுப்ரபாதத்திலும்‌ ஒரு 
சுலோகம்‌ அமைந்திருக்கிறது: 

**ஏலாலவங்க கநஸார சுகந்த தீர்த்தம்‌ திவ்யம்‌ வியத்ஸரிதி ஹேமகடேஷு பூர்ணம்‌ 
தருத்வாத்ய வைதிக சிகாமணய: ப்ரஹ்ருஷ்டா: திஷ்டந்தி வேங்கடபதேர்‌ தவ சுப்ரபாதம்‌'* 
இதன்‌ தமிழாக்கம்‌: 

“ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்‌ 
சீலமிகு தெய்வீக திருதீர்த்தம்‌ தலை சுமந்து 
ஞாலமுய்ய வேதமொழி நவற்றுணர்ந்த வேதியர்கள்‌ 
கோலமிகு கோயிலுற்றார்‌, வேங்கடவா எழுந்தருள்வாய்‌! 

உலகளந்த மாயர்‌' என்பது ஏழுமலையானுக்குச்‌  சிறப்பாகப்‌ பொருந்துகிறது. 
'*தாள்‌ பரப்பி மண்தாவிய ஈசன்‌:'  என்று நம்மாழ்வார்‌ திருவேங்கடவனைப்‌ பாடியுள்ளார்‌. 
எல்லோரையும்‌ திருவடியின்‌ கீழிட்டுக்கொண்டும்‌, கானமும்‌ வானரமும்‌ ஆனவற்றுக்கும்‌ முகங்கொடுத்துக்‌ கொண்டும்‌ 
திருமலைமீது நிற்கிறபடியால்‌ திருவேங்கடமுடையானை  உலகளந்த பெருமானாகச்‌ சொல்லப்‌ பொருத்தமுண்டென்பர்‌  ஆசிரியர்கள்‌. ்‌ 

எம்பெருமான்‌ உலகமளக்க திரிவிக்ரமனாக வளர்ந்தபோது, 
அவன்‌ திருமேனிபோல்‌ அவன்‌ திருக்கைகளிலிருந்த ஆயதங்கள்‌ 
ஜந்தும்‌ தங்கள்‌ குணங்களோடு இருமேனிக்குத்‌ தகுமாறு வளர்ந்து  அழகாய்‌ விளங்கின என்றபடி, 

உலகளந்த சோர்வு தீரப்‌ பாற்கடலில்‌ . படுத்திருக்கிறான்‌. 
இளைப்பாறியதும்‌,  திருவேங்கடத்திற்கு வந்து நின்று கொண்டிருக்கிறான்‌! 

தீக்கனல்‌ பறக்கும்‌ சக்கரம்‌, வெப்பம்‌ வீசும்‌ “வெய்ய' கதை, சார்ங்கம்‌; உஷ்ணமும்‌, ஒளியும்‌ உமிழும்‌ 'வெஞ்சுடர்‌' வாள்‌; 
இவற்றிற்கும்‌ வேங்கடத்திற்கும்‌ சூடான பொருத்தமுண்டு. 
“வேம்‌”  என்றால்‌ வெப்பமான, கொளுத்துகின்ற; 
'கடம்‌' என்றால்‌ பாலை,  நீரற்ற மலைப்பிரதேசம்‌. 
*வேங்கடம்‌' என்பது மலைமீது  குளிர்ச்சியாக இருப்பினும்‌, கீழே கடும்‌ வெயில்‌ கொளுத்தும்‌ 
வறண்ட  மலைக்கூட்டங்கள்‌ன உள்ள நிலப்பகுதியில்‌  அமைந்துள்ளது. 
எனவே வேங்கடமும்‌ ஐம்படைகளைப்‌  போன்றே வெப்பம்‌ மிகுந்தது. 
அதே சமயத்தில்‌ மேகம்‌ நிறைந்த  திருமலையுச்சி, பாற்கடலைப்‌ போல்‌ குளிர்ந்திருக்கிறது! 
திருமாலின்‌ வெஞ்சுடர்‌ வாளாகிய பேயாழ்வார்‌ இந்த ஐம்படைப்‌ பாசுரத்தை, “பயிலும்‌ சுடர்‌ ஒளி மூர்த்தி'யாகிய வேங்கடநாதனுக்கு 
முற்றும்‌ பொருந்தும்‌ விதத்திலேயே அமைத்துள்ளார்‌! 
---------
பூதத்தாழ்வார்‌ 
7. வேங்கடமே! விண்ணவர் தம்‌ வாயோங்கு தொல்புகழான்‌ வந்து--25-
8. வேங்கடமே! பன்னாள்‌ பயின்றது மணிதிகழும்‌ வண்தடக்கை--40-
8. வேங்கடமே! யாம்‌ விரும்பும்‌ வெற்பு 
வேங்கடவன்‌ மலரடிக்கே செல்ல அணி வேங்கடவன்‌ பேராய்ந்து. 
திருவேங்கடம்‌ கண்டீர்‌! வான்கலந்த வண்ணன்‌ வரை. 

பேயாழ்வார்‌ 
10, வேங்கடமே! மேலொரு நாள்‌ மண்‌ கோட்டுக்‌ கொண்டான்‌ மலை. --45
11-வேங்கடமே! மேலொரு நாள்‌ மண்மதியில்‌ கொண்டுகந்தான்‌ வாழ்வு. --50-
12. வேங்கடமே! மேல்நாள்‌ விளங்கனிக்குக்‌ கன்றெறிந்தான்‌ வெற்பு.--68
13-. வேங்கடமே! மேல்நாள்‌ குழக்கன்று கொண்டு எறிந்தான்‌ --குன்று. --71
14. வேங்கடமே! மேலை இளங்குமரர்‌ கோமான்‌ இடம்‌. --78
15. வேங்கடமே! மேலொருநாள்‌ தீங்குழல்‌ வாய்வைத்தான்‌  சிலம்பு.--88-
நால்பால்‌ வேதத்தான்‌ வேங்கடத்தான்‌. 
வேங்கடம்‌ என்‌ சிந்தை அனந்தன்‌ இறைபாடியாய இவை. 
வேங்கடமும்‌ இடமாகக்‌ கொண்டார்‌ கோபாலகன்‌. 
வேங்கடத்தான்‌ உள்ளத்தின்‌ உள்ளே உளன்‌. 

திருமழிசையாழ்வார்‌. 
18-வேங்கடமே! வானோர்க்கும்‌ மண்ணோர்க்கும்‌ வைப்பு. --நான்முகன் -45
19- வேங்கடமே! நாடு வளைத்து ஆடுதுமேல்‌ நன்று. 
20. வேங்கடமே! விண்ணோர்‌ தொழுவதும்‌ மெய்ம்மையால்‌ 
21. வேங்கடமே! மெய்வினை நோய்‌ தீர்ப்பதுவும்‌. 
22. வேங்கடமே! வானவரைக்‌ காப்பான்‌ மலை.
சென்று வணங்குமினோ சேணுயர்‌ 
வேங்கடமும்‌ தாம்‌ கடவார்‌ தண்துழாயார்‌.

வேங்கடத்தான்‌ மண்ணொடுங்கத்தான்‌ ௮ளந்த மன்‌ :
.பண்டெல்லாம்‌ வேங்கடம்‌ பாற்கடல்‌ வைகுந்தம்‌.
வேங்கடம்‌ தன்‌ குடங்கை நீரேற்றான்‌ தாழ்வு.

வேங்கடம்‌ பாடும்‌ மால்கிடந்த நீள்கடல்‌ புகும்‌.

வேங்கடவனையே கண்டு வணங்கும்‌ களிறு.

வேங்கடத்து நின்றான்‌ குரைகழலே கூறுவதே நலம்‌.

28. வேங்கடத்துள்‌ நின்று குடந்தையுள்‌ கடந்த மாலும்‌  அல்லையே? 
24. வேங்கடம்‌ மாலபதமே அடைந்து நாளும்‌ உய்ம்மினோ. 
24, வெறுப்பனோ வேங்கடத்து மேயானை. 
23. அழைப்பன்‌ திருவேங்கடத்தானைக்‌ காண. 
26. வேங்கடம்‌ பாடினேன்‌ வீடாக்கி நிற்கின்றேன்‌. 
27. வேங்கடவா! என்னுள்ளம்‌ புகுந்தாய்‌ திருவேங்கடமதனைச்‌ சென்று. 
சென்று வணங்குமினோ சேணுயர்‌ வேங்கடத்தை. 
வேங்கடத்தானை கங்குல்‌ புகுந்தார்கள்‌ காப்பணிவான்‌ 
போம்‌! குமரன்‌ நிற்கும்‌ பொழில்‌ வேங்கடமலைக்கே! 
கானமும்‌ வானரமும்‌ வேடும்‌ உடை வேங்கடம்‌. 
விண்ணாள வேண்டுவார்‌ வேங்கடத்தான்‌ பால்‌ வைத்தாரே பன் மலர்கள்‌.
நம்மாழ்வார்‌ 
23. வேங்கடமே! அருமா மாயத்து எனதுயிரே! எனதுடலே! --10-7-6-

-----------

அருள்‌ மிகுத்ததொரு வடிவாய்க்‌ கச்சிதன்னில்‌ 
ஐப்பசி மாதத்‌ திருவோணத்து நாளில்‌ 
பொருள்‌ மிகுத்த மறை விளங்கப்‌ புவியோர்‌ உய்யப்‌ 
பொய்கைதனில்‌ வந்து உதித்த புனிதா! முன்னாள்‌- 
இருளதனில்‌ தண்கோவல்‌ இடைகழிச்‌ சென்று 
இருவருடன்‌ நிற்கவும்‌ மால்‌ இடை நெருக்கத்‌ 
திருவிளக்காம்‌ எனும்‌ வையந்தகளி நூறாம்‌ 
செழும்பொருளை எனக்கு அருள்‌ செய்திருந்த நீயே. (பிரபந்த சாரம்‌, 8) 

மாமயிலைப்‌ பதியதனில்‌ துலா மாதத்தில்‌ 
வரும்‌ சதயத்து அவதரித்துக்‌ கோவலூரில்‌ 
தூமுனிவர்‌ இருவருடன்‌ துலங்க நின்று 
துன்னிய பேரிருள்‌ நீங்கச்‌ சோதி தோன்ற 
சேமமுடன்‌ நெடுமாலைக்‌ காணப்‌ புக்குத்‌ 
திருக்கண்டேன்‌ என உரைத்த தேவே! உன்றன்‌- 
பாமருவு தமிழ்மாலை நூறு பாட்டும்‌ ்‌ 
பழவடியேனுக்கு அருள்செய்‌ பரம நீயே, (பிரபந்த சாரம்‌, 4)
திருக்கோவலூர்‌ இடைகழியில்‌ முதலாழ்வார்கள்‌ ஏற்றிய  ஞானத்தமிழ்‌ விளக்கின்‌ ஒளியில்‌ ஈடுபட்டு அவர்களை ஸ்ரீதேசிகன்‌ 
புகழ்ந்தருனின பாசுரமாவது: 

““பாட்டுக்குரிய பழையவர்‌ மூவரைப்‌ பண்டொருகால்‌ 
மாட்டுக்கு அருள்தருமாயன்‌ மலிந்து வருத்துதலால்‌ 
நாட்டுக்கு இருள்செக நான்மறை அந்தி நடைவிளங்க 
வீட்டுக்கு இடைகழிக்கே வெளிகாட்டும்‌ இம்மெய்விளக்கே'”,
சகல வேதங்களின்‌ சாரமானது வேதமாதா எனப்படும்‌ காயத்ரீ  மந்திரம்‌. 
அதற்கும்‌ தாயாயிருப்பது திருவெட்டெழுத்தாகிய  நாராயண மந்திரம்‌. 
அதற்கும்‌ மூலமாயிருப்பது 'ஓம்‌' என்னும்‌ பிரணவ மந்திரம்‌. 


“நான்மறை அந்தி நடை விளங்க” 
முதலாழ்வார்கள்‌ அருளிச்செய்த திருவந்தாதிகளின்‌ முதற்‌ பாசுரங்களை, காயத்ரீ,  எட்டெழுத்து, 
பிரணவ மந்திரங்களை உள்ளடக்கிபவைகளாக  . 
மேற்கூறிய  மந்திரங்கள்‌ அனைத்தும்‌ மூன்று பதங்களாகப்‌ பிரியக்‌  கூடியவையாதலால்‌, 
ஒவ்வொரு ஆழ்வார்‌ பாசுரமும்‌ ஒரு  பதத்தைக்‌ கூறுவதாக, 8ழ்க்கண்டவாறு பொருள்‌ கூறப்படும்‌: 

ஆழ்வார்‌... பொய்கையார்‌ பூதத்தார்‌ பேயார்‌ 
பாசுரம்‌ வையந்தகளி அன்பேதகளி திருக்கண்டேன்‌ 
பிரணவம்‌ ௮. உ ம 
உலகம்‌ பூ: புவ: ஸுவ: 
வேதம்‌ ர்க்‌ யசார்‌ சாம 
சாதனை ச்ரவணம்‌ மனனம்‌ சாட்க்ஷாத்காரம்‌ 
பக்திநிலை பரபக்தி பரஞானம்‌ பரமபக்தி 
திருமந்திரம்‌ ஓம்‌ நமோ நாராயணாய 
வேங்கடேச ஓம்‌ நமோ வேங்கடேசாய 

மந்திரம்‌ ்‌ 
காயத்ரீ தத்‌ ஸவிதுர்‌ பர்கோ தயோயோந:  வரேண்யம்‌ தேவஸ்ய ப்ரசோதயாத்‌ 
தீமஹி நாராயண நாராயணாய வாச்தேவாய தன்னோ  காயத்ரீ வித்மஹே தீமஹி விஷ்ணு ப்ரசோதயாத்‌ 

ஓம்‌' என்பதை தமிழில்‌ 'வோம்‌' என்று எழுதினாலும்‌  உச்சரிப்பு அநேகமாக ஒன்றே; 
“வையம்‌' என்பதை“வோம்‌”  என்பதன்‌ தரிபாகக்‌ கொள்ளலாம்‌.
ஒங்காரத்திலிருந்து பிறந்ததே வையம்‌ (உலகம்‌).
வையம்‌' என்கிற சொல்‌ வைகுந்தம்‌, வேங்கடேசன்‌  என்பவை போலவே வகாரத்தில்‌ துவங்குகிறது. 
பொய்கையார்‌  வேங்கடேச பக்தராகையால்‌ வகாரத்தை முதலிட்டுப்‌ பாடினார்‌ 

**வையம்‌' என்றால்‌ உலகம்‌, பூவுலகு என்று பொருள்‌.
ருக்‌  வேதத்திலிருந்து பூ: என்னும்‌ சப்த விசேஷம்‌ தோன்றியது என்பர்‌. 
எனவே வையந்தகளி ருக்‌ வேதம்‌, பூ: இரண்டையும்‌ குறிப்பதாகக்‌  கொள்ளலாம்‌.
ஓம்‌" என்கிற ப்ரணவம்‌ ௮, ௨, ம என்று விரியும்‌. 
வையம்‌,  வார்கடல்‌, வெய்ய கதிரோன்‌ போன்ற ஸ்தூலப்‌  பொருட்களடங்கிய சகல ஐகத்துக்கும்‌ காரணன்‌: நாராயணன்‌.
“சூட்டினேன்‌' என்பதில்‌ 'நான்‌' என்னும்‌ சொல்‌  மறைந்துள்ளது; “நான்‌ சூட்டினேன்‌' என்று கூறத்‌ தேவையில்லை.
“நான்‌” என்று கூறும்‌ மகாரப்‌ பொருளான  ஜீவாத்மா, அகாரப்‌ பொருளான நாராயணனுக்கு அடிமை என்கிற 
சேஷத்வத்தை ''சுடராழியான்‌ அடிக்கே சூட்டினேன்‌'' என்பது  கூறுகிறது. 
ப்ரணவத்திலுள்ள உகாரம்‌ ஏவகாரம்‌, தமிழில்‌ “ஏ:  என்பது போன்றது. ''நாராயணனுக்கே நான்‌ அடிமை” என்பதே 
௮, ௪, ம என்று விரியும்‌ ஓங்காரத்தின்‌ உட்பொருள்‌. இதையே 
வையந்தகளி கூறுகிறது. ஏவகாரம்‌ “அடிக்கே! என்பதில்‌ உள்ளது. 

**இடராழி நீங்குக!” என்பது வேங்கட பதத்தின்‌  பொருளை நேரடியாக விளக்குகிறது. 
வேம்‌ * கடம்‌ - வேங்கடம்‌. -வேம்‌ - எரிக்கப்படுகின்ற, நீக்கப்படுகின்ற, கடம்‌ - பாவங்கள்‌, 
இடராழி. இடராழியை நீக்குவது வேங்கடம்‌. 

'"இடராழி நீங்குக”! என்பது வேங்கட பதத்தின்‌ பொருளாக  அமைந்திருப்பதால்‌, 
சுடராழியான்‌ அடியை, திருவேங்கடவனின்‌  அடியாகக்‌ கொள்ளத்‌ தடையில்லை. 
உலகனைத்தையும்‌ தன்‌  அடிக்குள்‌ வைத்துத்‌ திருமலையில்‌ நிற்பதால்‌ திருவேங்கடவனின்‌  திருவடிக்குத்‌ தனிச்சிறப்புண்டு.
நம்மாழ்வாரும்‌ 
'“திருவேங்கடத்தானே! புகலொன்றில்லா அடியேன்‌ உன்‌ அடிக்8ழ்‌  அமர்ந்து புகுந்தேனே”" என்
ஏழுமலையானின்‌  திருவடிகளிலேயே சரணமடைகிறார்‌. 
“வேங்கடவன்‌  திருமலையை விரும்புமவன்‌ வாழியே!”', என்கிறது பொய்கையாழ்வாரின்‌ வாழித்திருநாமம்‌.
ஸ்ரவணம்‌ கீர்த்தனம்‌ விஷ்ணோ: ஸ்மரணம்‌ பாதசேவனம்‌ 
அர்ச்சனம்‌ வந்தனம்‌ தாஸ்யம்‌ ஸக்யம்‌ ஆத்மநிவேதனம்‌. 

வையந்தகளி, அன்பேதகளி என்னும்‌ முதலிரண்டு  ஆழ்வார்களின்‌ பாசுரங்கள்‌ பிரகலாதன்‌ கூறும்‌ ஒன்பதுவித பக்தி 
சாதனைகளைக்‌ குறிப்பிடுகின்றன; 
''திருக்கண்டேன்‌'' என்னும்‌  மூன்றாவது ஆழ்வாரின்‌ பாசுரம்‌ பகவானை நேரில்‌ கண்ட  பேரின்ப நிலையை விவரிக்கிறது. 

““வையந்தகளி'* பாசுரத்தில்‌ 
'“சொன்மாலை'' என்பது  விஷ்ணோ: ஸ்ரவணம்‌ (பகவானைப்‌ பற்றிக்‌ கேட்டல்‌), கீர்த்தனம்‌ 
(அவன்‌ புகழ்‌ பாடுதல்‌); ''சுடராழியான்‌ அடிக்கே சூட்டினேன்‌'' என்பது ஸ்மரணம்‌ (பகவானை சதா நினைவு கூறுதல்‌); 
“அடிக்கே” என்பது வந்தனம்‌, தாஸ்யம்‌ (அடிமையாய்‌ இருத்தல்‌), பாதஸேவனம்‌; 
சொன்மாலை சூட்டினேன்‌ என்பது அர்ச்சனம்‌ (பூஜித்தல்‌); . ்‌ 
காயத்ரீ மந்திரம்‌: 
ஓம்‌ பூர்புவஸ்ஸுவ:  தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌ 
பர்கோ தேவஸ்ய தீமஹி  தியோ யோ ந: ப்ரசோதயாத்‌. 

பூ: புவ: ஸுவ: ஆகிய மூன்று சொற்கள்‌ பூலோகம்‌, புவர்லோகம்‌, சுவர்க்கம்‌ ஆகிய மூவுலகங்கள்‌. 
ய: (யோ) - யார்‌; ந: - நம்முடைய; திய: - அறிவை; 
ப்ரசோதயாத்‌ - தூண்டுகிறாரோ; தத்‌ - அந்த; தேவஸ்ய - 
சுடருடைய; ஸவிதுர்‌ - கடவுளின்‌; வரேண்யம்‌ - மேலாண, பர்க: 
- ஒளியை; தீமஹி: - தியானிப்போமாக. 

காயத்ரீமின்‌ பொருள்‌: 
யார்‌ நம்‌ அறிவைத்‌ தூண்டுகிறாரோ, அந்த சுடர்வீசும்‌ கடவுளின்‌ மேலான ஒளியைத்‌ தியானிப்போமாக. 

பிரம்ம காயத்ரீ அல்லது சூரிய காயத்ரீ எனப்படும்‌ இதுவே 
பல்லாயிரம்‌ ஆண்டுகளாக பாரத நாட்டின்‌ தேயப்‌  பிரார்த்தனையாக இருந்து வருகிறது. 
இதற்கு ரிஷி விசுவாமித்திரர்‌; 
தேவதை, ஸவிதா (சூரியன்‌, பரமாத்மா). 
தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌: 1 

வையந்தகளியில்‌ பொய்கையாழ்வார்‌ “ஸவிதா'' என்பதை  நேரடியாகத்‌ தமிழில்‌ 'கதிரோன்‌' என்று குறிப்பிட்டுள்ளதால்‌, 
இப்பாசுரம்‌ காயத்ரீ மந்திரத்தின்‌ முதற்பதத்தை விளக்குவதாகக்‌ கொள்ளலாம்‌.
'“தேவஸ்ய ஸவிதுர்‌”! (சுடருடைய கடவுளின்‌) என காயத்ரீயில்‌ வருவதை ஆழ்வார்‌. சுடர்‌ ஆழியான்‌! எனக்‌ கூறுவதோடு ஒப்பிடலாம்‌. 
'*தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌'' என்பதே ரிக்வேதமானது. 

விஷ்ணுகாயத்ரீ: மிகவும்‌ பிரசித்தி பெற்ற காயத்ரீ மந்திரத்தையொட்டி, 
பற்பல இந்துமத தெய்வங்களுக்கும்‌ உரிய காயத்ரீ மந்திரங்கள்‌ தோன்றின. 
மஹா நாராயண உபநிஷதத்தில்‌ விஷ்ணுவிற்குத்‌ தரப்பட்டுள்ள நாராயாண காயத்ரீ இது: 
நாராயணாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்‌” 
பொகுள்‌: நாராயணனை அறிவோமாக, அதற்காக, வாசுதேவனை தியானிப்போமாக, 
அந்த தியானத்தில்‌, விஷ்ணு நம்மைத்‌ தூண்டுவாராக. 
' நாராயணாய வித்மஹே: உலகனர்‌ நாராயணனை அறிந்து உய்வடைய வேண்டுமென்றே 
பொய்கையார்‌ 'வையந்தகளி' என்று தொடங்கி நூறு பாசுரங்கள்‌ அருளிச்‌ செய்தார்‌. 
'“சுடராழியான்‌ அடிக்கே சூட்டினேன்‌ சொன்மாலை” என்கிற அடியில்‌ 
'*நாராயணனை அறிவோமாக'' என்னும்‌ ஆழ்வாரின்‌ நோக்கம்‌ தெரிகிறது. 
வையந்தகளியின்‌ இயற்கை வர்ணனை: காயத்ரீ மந்திரம்‌ சூரியோதம்‌, உச்சி, அஸ்தமனம்‌ ஆகிய மூன்று சந்தி காலங்களிலும்‌ ஜபிக்கப்படும்‌. 
பொய்கையார்‌ வைணவத்தின்‌ விடிவெள்ளி போன்றவர்‌. 
வையந்தகளி சூரியோதயத்தை வர்ணிப்பதுபோல்‌ அமைந்துள்ளது. 
திருவேங்கடமுடையானே, * வேங்கடகிருஷ்ணன்‌, பார்த்தஸாரதி என்கிற திருநாமங்களுடன்‌ எழுந்தருளியிருக்கும்‌ திவ்விய தேசம்‌, 
சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி. 
முதலாழ்வார்கள்‌ மூவரும்‌: திருமழிசையாழ்வாருடன்‌ இங்கு வந்து எம்பெருமானை சேவித்ததாகக்‌ கூறுவர்‌. 
திருவல்லிக்கேணியில்‌ புகழ்பெற்ற மெரீனா கடற்கரையில்‌  
விடிகாலை, சூரியன்‌ உதயமாகும்‌ நேரம்‌. நம்‌ காலடியில்‌ கடல்மண்‌, வையம்‌, பூமி. சற்று நிமிர்ந்து பார்த்தால்‌ 
வார்கடல்‌, விரித்து, அலைபாயும்‌ சமுத்திரம்‌. கடல்பரப்பின்‌ எல்லை வளைந்து தென்படுகிறது. 
மெதுவாக சூரியன்‌, இளஞ்சிவப்பு நிறத்துடன்‌, கடலின்‌ மறுகோடியில்‌ எழுகிறது. 
' இந்த அற்புதமான இயற்கைக்‌ காட்சியைத்தான்‌ ஆழ்வார்‌ சிறந்த உவமையாகப்‌ பயன்படுத்தியுள்ளார்‌.

நம்‌ காலுக்கடியிலுள்ள பூமி, மண்ணாலான அகல்‌ விளக்கைப்‌  போலுள்ளது; 
அதற்கு மேலேயுள்ள கடல்‌, உருக்கிய நெய்போல்‌  இளமஞ்சள்‌ நிறத்துடன்‌ காணப்படுகிறது. 
அதற்கும்‌ மேலே, உதய  சூரியன்‌ விளக்கைப்போல்‌ ஒளி வீசுகிறது. 
இந்த இயற்கைக்‌  காட்சியில்‌ ஒன்று கவனிக்க வேண்டும்‌, திரி இல்லை!
எனவே  ““வையந்தகளி'' பாசுரத்திலும்‌ திரி இல்லை; 
ஆனால்‌ அடுத்து  பூதத்தார்‌ பாடிய ''அன்பே தகளி'' பாசுரத்தில்‌ இரி உண்டு|
எனவே 
““வையந்தகளி'' விடிகாலையில்‌ செய்யப்படும்‌ சந்தியாவந்தனம்‌ போன்றது. 

காயத்ரீ மந்திரத்தின்‌ ரிஷியான விசுவாமித்திரரே  பாலசூரியனைப்‌ போன்ற ஸ்ரீ ராமச்சந்திரனை, 
'“கெளசல்யா  சுப்ரஜா ராம, பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே'* (கோசலையின்‌ உத்தம 
புத்திரனான ராமனே! கிழக்கில்‌ சூரியன்‌ உதயமாகிவிட்டது) என்று எழுப்பியதாக வால்மீகி ராமாயணம்‌ கூறுகிறது. 
உலகிற்கு காயத்ரீயை உபதேசித்த விசுவாமித்திர ரிஷியே, ஸ்ரீ வேங்கடேச  சுப்ரபாதத்தின்‌ முதலடியையும்‌ நமக்கு வழங்கியிருக்கிறார்‌! 

தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ அருளிச்‌ செய்த  திருப்பள்ளியெழுச்சியும்‌-- 

“கதிரவன்‌ குணதிசைச்‌ சிகரம்‌ வந்து அணைந்தான்‌ 
கன இருள்‌ அகன்றது காலையம்பொழுதாய்‌'' 
என்று சூரியோதய வர்ணனையுடன்‌ துவங்குவதும்‌ இங்கு  ஒப்பு நோக்கத்தக்கது. 

“பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே'' என்பதை ''வையந்தகளியா,  வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன்‌ விளக்காக”! என்றும்‌; 
**கெளசல்யா சுப்ரஜா ராம'' என்பதை ''செய்ய சுடராழியான்‌'"  என்றும்‌ ஆழ்வார்‌. அருளிச்‌ செய்திருப்பதாகக்‌ கொள்ளலாம்‌. 
வையந்தகளி ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதமாகி விடுகிறது!
----------------
இந்த (பொய்கையாரின்‌ வையந்தகளி] பாசுரத்தின்‌  மகிமையால்‌ அந்த இடைகழியில்‌ பளிச்சென்று ஏதோ ஒரு திரை 
விலகி எப்படியோ ஒளியும்‌ வந்து விடுகின்றது. புறத்தே கவிந்து  கிடக்கும்‌ இருளும்‌ நீங்கி விடுகின்றது. 
அதே சமயத்தில்‌  பூதத்தாழ்வாரும்‌ ஞான விளக்கொன்றை ஏற்றுகின்றார்‌. 
அன்பை  அகலாகவும்‌, பொங்கி வரும்‌ ஆர்வத்தை நெய்யாகவும்‌,  
சிந்தையைத்‌ திரியாகவும்‌ கொண்டு ஞான விளக்கை ஏற்றுகின்றார்‌ பூதத்தார்‌.
இந்த விளக்கினால்‌ அகத்தே மண்டிக்கிடந்த உள்‌  இருட்டும்‌ நீங்கி விடுகின்றது. 

உடனே அந்தப்‌ பேயாழ்வார்‌  நான்காவது ஆளைக்‌ கண்டுபிடித்து விடுகின்றார்‌. 

“அன்பே தகளி”” விளக்குபவை: ்‌ 
௮ன்பேதகளி, உகாரம்‌, நமோ (நம: பதம்‌), “பர்கோ 
தேவஸ்ய தீமஹி'' என்டுற காயத்ரீ மந்திரத்தின்‌ இரண்டாவதுபதம்‌, 
வாசுதேவாய தீமஹி என்னும்‌ பதம்‌ ஆகியவற்றை விளக்குவதாகக் கொள்ளலாம்.

அன்பே தகளியில்‌, ஆழ்வார்‌ ''நாரணற்கு'' என்று  கூறியிருப்பதை ''நாராயணனுக்கே, நாராயணனுக்கு மட்டுமே”! 
என்று பொருள்‌ கொள்ளவேண்டும்‌. 
எனவே அன்பேதகளி, உகார  பத அர்த்தத்தை விளக்குகிறது எனலாம்‌. உகாரத்தால்‌  அந்நியசேஷத்வம்‌ கழிக்கப்படுகிறது. 

லக்ஷ்மியை நாராயணன்‌ திருமார்பில்‌ தரிக்கிறான்‌. பிராட்டிக்கு  “உ என்று திருநாமம்‌. 
'*நாரணற்கு!' என்பதால்‌ பிராட்டிக்கும்‌  சேர்த்தே ஞானத்தமிழ்‌ பாடியிருக்கிறார்‌ பூதத்தார்‌

அடுத்துப்‌ பாடிய பேயாழ்வார்‌ “'திருக்கண்டேன்‌'"  (லக்ஷ்மிப்‌ பிராட்டியைக்‌ கண்டேன்‌) என்றே துவங்குவதால்‌ இது  உறுதியாகிறது. 

நம: பதம்‌: 
“ஓம்‌ நமோ நாராயணாய”, ஓம்‌ நமோ வேங்கடேசாய”  என்னும்‌ மந்திரங்களின்‌ இரண்டாவது பதம்‌. 
ம: என்றால்‌ எனது”!  என்கிற மமகாரம்‌, ஆத்மா தனக்குரியது என்னும்‌ செருக்கு. 
“ந!  என்றால்‌ '“இல்லை”"', மமகாரத்தை இல்லை என்கிறது. 
அகங்கார, மமகாரங்களே (யான்‌, , எனது என்னும்‌ செருக்கு) ஆத்மாவுக்கு  விரோதி, 

அன்பே தகளியில்‌, **நாரணற்கு ஞானத்தமிழ்‌ புரிந்த நான்‌”! 
என்று வருவதால்‌ நான்‌, எனது என்பதெல்லாம்‌ நாராயணனுக்கே அடிமை என்பது தெளிவாகிறது.
இது நம: பதார்த்தமாக உள்ளது  எனலாம்‌
நமப்பதம்‌ சப்தத்தாலும்‌, அர்த்தத்தாலும்‌ உபாயத்தை  அறிவிக்கிறது. நாராயணனே உபாயம்‌ என்பது இதன்‌ பொருள்‌. 
இது ஸ்வசேஷத்தையும்‌, பகவத்‌ சேஷத்வத்வத்துக்கு இசையாமையையும்‌ கழிக்கறது

அன்பேதகளியில்‌, ஞானச்சுடர்‌ : தேவஸ்ய, ஒளியுடைய; 
நாரணற்கு - .ஸவிது:, கடவுளின்‌; விளக்கேற்றிய - பர்‌க;, ஒளியை. 

“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக 
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி'” 
என்னும்‌ முதலிரண்டு அடிகள்‌ - தீமஹி, தியானிப்போமாக என்று 
நேரடியாகப்‌ பொருள்படுவது இன்புறத்தக்கது. 

“பர்கோ தேவஸ்ய தீமஹி'' என்பதன்‌ விளக்கமாகவே 
"அன்பே தகளி'' அமைந்திருக்கிறது என்றால்‌ மிகையாகாது. 

வாசுதேவாய தீமஹி: 
இது விஷ்ணு காயத்ரீபின்‌ இரண்டாவது பதம்‌. 
*'வாசுதேவனை தியானிப்போமாக”* என்று பொருள்‌. 
மஹாநாராயண உபநிஷத்தில்‌ வரும்‌ நாராயண காயத்ரீக்கு  உரையெழுதிய பட்டபாஸ்கரர்‌, “வாசுதேவன்‌” என்பதற்கு 
“எல்லா ஜீவராசிகளிலும்‌ அந்தர்யாமியாக வசிப்பவன்‌'” என்று பொருள்‌ கூறுகிறார்‌. 

அன்பேத்களியில்‌, பூதத்தாழ்வார்‌ தமது இதயக் குகையிலே  அந்தர்யாமியாக எழுந்தருளியிருக்கும்‌ வாசுதேவனையே 
தியானித்து, ஞானச்சுடர்‌ விளக்கேற்றினார்‌ என்க. 


பிரகலாதன்‌ விவரிக்கும்‌ பக்து சாதனைகள்‌: 
வையந்தகளியில்‌ ''சுடராழியானடிக்கே சூட்டினேன்‌''  என்றார்‌. திருவடியைப்‌ பேசியதால்‌ இது தாஸ்யம்‌ ஆயிற்று. 
அன்பேதகளியில்‌, :*நாரணற்கு'' என்றுள்ளது, திருவடி கூறப்படவில்லை. 
மற்றும்‌, அன்பு, ஆர்வம்‌, இன்புருகு சிந்தை ஆகிய சொற்கள்‌ 'ஸக்யம்‌'' (பகவானிடம்‌ நட்பு) என்னும்‌ 
நெருங்கிய உறவைக்‌ கூறுவது போலுள்ளன. 
''நன்புருக'' என்பது  ஞானமய்மான ஆத்மா பகவதனுபவத்தில்‌ உருகுவதைக்‌ குறிப்பிடுவதால்‌, இது ''ஆத்ம நிவேதனம்‌”” ஆயிற்று. 

எனவே வையந்தகளி பிரகலாதன்‌ கூறும்‌ சாதனைகளில்‌ முதல்‌ ஏழையும்‌, 
௮ன்பேதகளி கடைசி இரண்டையும்‌ பற்றிப்‌ பேசுகின்றன. 

ஞானச்சுடர்‌ விளக்கேற்றினேன்‌ நாரணற்கு: -இதற்குப்‌ ''ப்ரபந்தரக்ஷை'' உரை: 
நாரணன்‌ விஷயமான விளக்கு நாராயண சப்தத்தின்‌ பொருளான அவனது ஸ்வரூப 
ரூப குண விபவாதிகளிலெங்கும்‌ பரவுகின்றது பற்றி ''ஞானச்சுடர்‌ விளக்கு" என்றது. 
ஞானச்சுடர்‌ என்பதற்கு ப்ரஞானமென்ற  விளக்கு என்ற பொருள்‌ முன்னோர்‌ இசைந்ததன்று. 
பர ஞானம்‌  நாரணனின்‌ அனுக்ரஹத்தாலே தானே வருவதாம்‌. அதை ஏற்றுவது  வேறொருவராகார்‌. 
அதற்கு வேண்டும்‌ பரபக்தியை ஏற்றுகிறார்‌ 
எல்லார்‌ நெஞ்சிலும்‌ ஆழ்வார்‌. “*ஏற்றினேன்‌'' என்று இறந்த  காலமாக ப்ரபந்தத்தன்‌ தொடக்கத்திலேயே அருளினது 
ப்ரபந்தத்தை எம்பெருமான்‌ நன்கு முடித்தருள்வது திண்ணமெனக்‌  கண்டதனால்‌ என்க. 

பொய்கையாரின்‌ '*வையந்தகளி”' பாசுரமும்‌, பூதத்தாரின்‌  “அன்பே தகளி'' பாசுரமும்‌ 
தகளி, நெய்‌, விளக்கு ஆகியவற்றுடன்‌  பக்தர்களுக்குக்‌ கலங்கரை விளக்கம்‌ போல்‌ வழிகாட்டுகின்றன. 
இவ்விரண்டு ஒளிவீசும்‌ பாசுரங்களையும்‌ இங்கே ஒப்பு நோக்குவோம்‌. 

வையந்தகளி: அன்பேதகளி: 

1. புறவிளக்கு; சூரியனை விளக்காக்கியது--அக விளக்கு; ஆத்மாவை விளக்காக்கியது
2. புறவிருளைக்‌ களைகிறது. ௮௧ இருளை அற்றுவறைது. 
3. திரி இல்லாமலே சிந்தையையே திரியாகத்‌ விளக்கேற்றினார்‌! திரித்து விளக்கேற்றினார்‌! 
4. மறைமுகமாக -ஆழியான்‌'' என்றார்‌.பரபக்தியைக்‌ கூறுகிறது;  ''சுடர்‌ நேரடியாக '“நாரணற்கு”* -பரஞானத்தைக்‌ கூறுகிறது;
எனவே அடிக்கே! என்றார்‌. 
தமிழ்‌ பற்றிப்‌ பேசவில்லை. 
“ஞானச்சுடர்‌' என்றார்‌. 
“'ஞானத்தமிழ்‌'' என்று  தமிழ்த்தாய்‌ வாழ்த்தாகவும்‌  துவங்கினார்‌. 

பேயாழ்வாரின்‌ “திருக்கண்டேன்‌”! 
பூதத்தாழ்வார்‌. ''அன்பேதகளி'' என்று தொடங்கி நூறு பாசுரங்கள்‌ பாடி முடித்ததும்‌, 
மூன்றாவது ஆழ்வாராகிய பேயார்‌ “*“திருக்கண்டேன்‌'' என்று கம்பீரமாகத்‌ துவங்கப்‌ பாடலானார்‌: 
திருக்கண்டேன்‌ பொன்மேனி கண்டேன்‌ திகழும்‌ 
அருக்கன்‌ அணிநிறமும்‌ கண்டேன்‌ - செருக்கிளரும்‌ 
பொன்னாழி கண்டேன்‌ புரிசங்கம்‌ கைக்கண்டேன்‌ 
என்னாழி வண்ணன்பால்‌ இன்று. 
திரு - ஸ்ரீ, மஹாலட்சுமி, பெரியபிராட்டியார்‌; அருக்கன்‌ - சூரியன்‌; செரு - போர்‌; கிளரும்‌ - கிளம்பும்‌; 
ஆழி - சுதர்சனச்‌ சக்கரம்‌; புரிசங்கம்‌ - வலம்புரிச்‌: சங்கு, பாஞ்சசன்னியம்‌; 
ஆழி வண்ணன்‌ - கடல்நிறக்கடவுள்‌, விஷ்ணு. 

என்னுடைய கடல் வண்ணனான ஸ்ரீநிவாஸனிடம்‌ இன்றைய தினம்‌ பெரிய பிராட்டியாரை சேவிக்கலானேன்‌. 
பொன்னிறமான  திருமேனியைக்‌ கண்டேன்‌. பிரகாசிக்கும்‌ சூரியன்‌ போன்ற அழகிய நிறத்தையும்‌ கண்டேன்‌. 
போர்க்களத்தில்‌  சீறி யெழுந்து  செயல்படும்‌ அழகிய சுதர்சனச்‌ சக்கரத்தையும்‌ கண்டேன்‌. 
மற்ற  திருக்கையில்‌ வலம்புரிச்‌ சங்கையும்‌ சேவிக்கப்‌ பெற்றேன்‌. 

எல்லா உலகங்களும்‌ சரீரமாகக்‌ கொண்ட பெருமானைக்‌  காணும்‌ காட்சியிலே எல்லாவற்றையும்‌ கண்ட ஆழ்வார்‌ அன்பின்‌ 
மிகுதியாலே அவனுடைய பெருமைக்குக்‌ காரணமான சிலவற்றை “அது கண்டேன்‌, இது கண்டேன்‌'' என்கிறார்‌. 

பேயாழ்வார்‌ முதன்‌ முதலாகப்‌ பெரிய பிராட்டியாரின்‌ ௮ருள்‌  வடிவத்தைக்‌ காண்கின்றார்‌; 
பொன்மேனியையுடைய அன்னையாருடன்‌ கூடிய எம்பெருமானின்‌ மரகதத்‌ திருமேனி 
இப்போது பொன்மேனியாகவே காட்சியளிக்கிறது. 
மரகத மலையில்‌ உதித்து ஒளிவீசி வரும்‌ இளஞாயிறு போலத்தோன்றி 
இருவரது ஒளியையும்‌ -- பொன்‌ ஒளியும்‌, மரகத ஒளியும்‌ கலந்து 
ஒளிர்கின்ற அந்தக்‌ கலப்பு ஒளியையும்‌ -- காண்கின்றார்‌; 
'திகழும்‌  அருக்கன்‌ ௮ணிநிறமும்‌ கண்டேன்‌! என்பதால்‌ இது பெறப்படுகின்றது. 
'*இருவர்‌ சேர்த்தியால்‌ பிறந்த முதாய சோபை”! என்பது பெரியவாச்சான்‌ பிள்ளையின்‌ வியாக்கியான விளக்கம்‌. 

“திருக்கண்டேன்‌' விளக்குபவை: 
மகாரம்‌, ஸுவர்லோகம்‌, சாமவேதம்‌, காரண சீரம்‌,  சத்துவகுணம்‌, சாட்க்ஷாத்காரம்‌, ஆனந்தம்‌, ஈசுவரன்‌,  புருஷார்த்தம்‌, 
“தியோ யோ ந; ப்ரசோதயாத்‌'' என்னும்‌ காயத்ரீ  மந்திரத்தின்‌ மூன்றாவது பதம்‌, 
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்‌, 
நாராயணாய, வேங்கடேசாய. 
மகாரம்‌: 

௮, ௨, ம்‌ என்று பிரியும்‌ 'ஒம்‌' என்கிற பிரணவ மந்திரத்தின்‌ 
மூன்றாவது எழுத்து. மகாரம்‌ “மந” என்ற தாதுவிலே தோன்றியது. 
இதற்கு ஞானம்‌ என்று அர்த்தம்‌. இதனால்‌ ஆத்மா ஞானமயமானது என்றதாயிற்று. 
“மநு” என்ற தாதுவும்‌ மகாரத்துக்குக்‌ காரணம்‌. இதற்கு அறிதல்‌ என்று பொருள்‌. 
மகாரம்‌ இருபத்தைந்தாம்‌ எழுத்து. இதனால்‌ இருபத்து நான்கு  தத்வங்களான ப்ரக்ருதியைக்‌ காட்டிலும்‌, 
இருபத்தைந்தாம்‌  தத்வமான ஆத்மா வேறுபட்டவன்‌; ஆனந்தமயமானவன்‌ என்பது  பெறப்படும்‌. 

"திருக் கண்டேன்‌' பாசுரம்‌ ஜீவாத்மா (இங்கே ஆழ்வார்‌) பரம  புருஷார்த்தமாகிய பகவதனுபவத்தை நேரடியாக அறிந்து, 
ஆனந்தமடைவதாகக்‌ கூறுவதால்‌, மகாரத்தை விளக்குவதாயிற்று. 

சாமவேதம்‌, ஸுவர்லோகம்‌: 
சாமவேதத்திலிருந்து ஸ்வ: என்னும்‌ சப்த விசேஷம்‌ பிறந்தது. 
ஸுவ: என்பது சுவர்க்க லோகம்‌. 
எண்ணத்தைக்‌ கடவுள்பால்‌  செலுத்துவதே சுவர்க்க லோகமாகிறது. 
ஸ்ரீமந்நாராயணனை  தரிசிப்பதே நிலையான சொர்க்க அனுபவம்‌. 'திருக்கண்டேன்‌: இதையே விவரிக்கிறது. 
வைகுண்ட ஏகாதசியன்று பெருமாளைக்‌  காணச்‌ செல்லும்‌ வழி '*சொர்க்கவாசல்‌'” எனப்படுவதை நாம்‌  அறிவோம்‌. 

சத்துவ குணம்‌ மேலோங்கிய நிலையிலேயே ஸமாதி  நிலையை மனம்‌ அடைந்து, ஜகத்காரணனாகிய ஈசுவரனைக்‌ 
கண்டு, பரமானந்தம்‌ அடைய முடியும்‌. இதுவே பகவத்‌  சாட்க்ஷாத்காரம்‌, மோட்சம்‌ என்கிற புருஷார்த்தம்‌. 
“திருக்கண்டேன்‌'பாகரம்‌ சத்துவகுணம்‌, காரணம்‌, சாட்க்ஷாத்காரம்‌ (நேரில்‌ இறைவனைக்‌ காணுதல்‌), 
ஆனந்தம்‌, ஈசுவரன்‌, புருஷார்த்தம்‌ ஆகியவற்றின்‌ விளக்கமாகவே அமைந்திருக்கிறது 
என்பது நன்கு விளங்குகிறது. 


தியோ யோ ந: ப்ரசோதயாத்‌: 
“யார்‌ நம்முடைய அறிவைத்‌ தூண்டுகிறாரோ'' என்னும்‌  பொருளுடைய காயத்ரீ மந்திரத்தின்‌ மூன்றாவது பதம்‌. 

தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்‌: 
அந்த தியானத்தில்‌; ந: - நம்மை; விஷ்ணு, ப்ரசோதயாத்‌ -  தூண்டுவாராக
இது விஷ்ணு காயத்ரீ மந்திரத்தின்‌ மூன்றாவது பதம்‌. 

ஈசுவரனாகிய மகாவிஷ்ணு பக்தனுக்கு இரங்கி, அவனது அறிவைத்‌ தூண்டி, அருள்‌ புரிந்தால்தான்‌, 
எம்பெருமானுடைய  திருக்காட்சி கிட்டும்‌. இவ்விதமே ஆழ்வார்‌ பகவதனுபவம்‌ பெற்று 'திருக்கண்டேன்‌' பாடினார்‌ என்க. 

நாராயணாய, வேங்கடேசாய: 
“ஓம்‌ நமோ நாராயணாய,:'' “ஓம்‌ நமோ வேங்கடேசாய* என்னும்‌ மந்திரங்களின்‌ கடைப்பதம்‌. 
நாராயண - நார * அயந.  “நார! என்றால்‌ அழியாத பொருள்களின்‌ கூட்டம்‌; 
அயந -  ஆதாரம்‌. நாரங்களுக்கெல்லாம்‌ அந்தர்யாமியாய்‌ வியாபித்து  ஆதாரமாய்‌ இருப்பவன்‌ நாராயணன்‌. 
நாராயணாய என்பது  நான்காம்‌ வேற்றுமை, பிரார்த்தனைப்‌ பொருளில்‌ வந்தது. 

“ஓம்‌ நமோ நாராயணாய”' :என்னும்‌ திருமந்திரம்‌ 
**சர்வகாரணனாய்‌ சர்வரக்ஷகனான எம்பெருமானுக்கே  உரியவனான நான்‌ சர்வசேஷியான அந்நாராயணனுக்கே எல்லா 
அடிமைகளையும்‌ செய்யப்‌ பெற வேணும்‌'' என்று பொருள்படும்‌  பிரார்த்தனை. ்‌ 

“திருக்கண்டேன்‌' பாசுரம்‌ நாராயணன்‌, பக்தர்களுக்கு  எளியவனாய்‌ தன்னை வெளிப்படுத்திக்‌ காட்டுவதை விவரிக்கும்‌ 
வகையில்‌ அமைந்துள்ளதால்‌ '*'நாராயணாய”'' என்பதன்‌  விளக்கமாக, உள்ளது எனலாம்‌. 

திரு - அலர்மேல்‌ மங்கை, மகாலட்சுமி, ஸீ 
ஆழிவண்ணன்பால்‌ - கடல்வண்ணக்‌ கடவுளிடம்‌; கண்டேன்‌ என்பதால்‌ ::ஸ்ரீநிவாஸனைக்‌ கண்டேன்‌'”  
ஸ்ரீமந்நாராயணன்‌  செளலப்யனாய்‌ நமக்கெல்லாம்‌ மிக எளியவனாகக்‌ காட்டிக்  கொடுக்கும்‌ அர்ச்சை நிலையே ஸ்ரீ வேங்கடேசன்‌. 
எனவே ஸ்ரீநிவாஸ பத விளக்கமாக “*“திருக்கண்டேன்‌'' அமைந்துள்ளது. 

விஷ்ணுவின்‌ ஐவகை நிலைகள்‌: 
உலகங்களை நிர்ஹிக்கும்‌ பொருட்டு, ஸ்ரீமந்நாராயணன்‌ 
பரத்வம்‌, வியூகம்‌, விபவம்‌, அந்தர்யாமித்வம்‌, அர்ச்சாவதாரம்‌  என்று ஐவகை நிலைகளில்‌ எழுந்தருளியிருக்கிறான்‌. , 
““திருக்கண்டேன்‌'* பாசுரத்தில்‌ பேயாழ்வார்‌ ஐந்து முறை *“கண்டேன்‌'' என்று பேசியிருப்பதால்‌, 
எம்பெருமானின்‌ ஐவகை  நிலைகளையுமே கண்டிருப்பார்‌ என்றே தோன்றுகிறது. 
கீழ்ப் பாசுரங்களில்‌ ஆழ்வார்‌ எம்பெருமானின்‌ ஐவகை  நிலைகளையும்‌ பன்முறை பேசியிருப்பதும்‌ இங்கு நினைவு கூறத்தக்கது. 
திருவேங்கடத்தை மங்களாசாஸனம்‌ செய்யும்‌ ஒரு  பாசுரத்தில்‌ பேயாழ்வார்‌ எம்பெருமானின்‌ ஐந்து நிலைகளையும்‌ குறிப்பிடுகிறார்‌. 

பாற்கடலும்‌ வேங்கடமும்‌ பாம்பும்‌ பனிவிசும்பும்‌ 
நூற்கடலும்‌ நுண்ணூல தாமரைமேல்‌ - பாற்பட்‌ 
டிருந்தார்‌ மனமும்‌ இடமாகக்‌ கொண்டான்‌ 
குருந்தொசித்த கோபாலகன்‌. 

பாற்கடல்‌ - திருப்பாற்கடல்‌ - வியூக நிலை. 
வேங்கடம்‌ - அர்ச்சாவதார நிலை.  
பனிவிசும்பு - வைகுந்தம்‌ - பரத்வ நிலை, 
மனம்‌ - அந்தர்யாமித்வ நிலை. 
கோபாலகன்‌ - விபவம்‌ (அவதார நிலை). 
எனவே '“திருக்கண்டேன்‌” பாசுரமும்‌ விஷ்ணுவின்‌ ஐந்து  நிலைகளையும்‌ கூறுவதாகக்‌ 8&ழே காண்போம்‌: 

திருக்கண்டேன்‌: . 
திரு நாட்டில்‌ (வைகுந்தத்தில்‌) திருமகளுடன்‌ திருமால்‌ திரு மா மணி மண்டபத்தில்‌ எழுந்தருளியிருப்பதைக்‌ கண்டேன்‌; -பரத்வநிலை. 
பொன்மேனி கண்டேன்‌: 
பொன்‌ . ஆபரணங்களால்‌ அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ  வேங்கடாசலபதியின்‌ திருமேனியைக்‌ கண்டேன்‌; அர்ச்சாவதார நிலை. 
ஸ்ரீயின்‌ சேர்த்தியாலும்‌ பொன்மேனி எனலாம்‌. 
அருக்கன்‌ அணிநிறமும்‌ கண்டேன்‌: 
சர்வ வியாபியாகிய சூரியனின்‌ அழகிய ஏழு நிறங்களைக்‌  கண்டேன்‌; எல்லா உயிர்களிலும்‌ சூரிய நாராயணன்‌ 
வியாபித்திருக்கும்‌ அந்தர்யாமித்வ நிலை. 
பொன்னாழி கண்டேன்‌... என்னாழி வண்ணன்பால்‌ இன்று: 
ஆழி - சக்கரம்‌, கடல்‌; கடல்‌ வண்ணனைக்‌ கண்டதாகக்‌  கூறுவதால்‌, திருப்பாற்கடல்‌ நாதனைக்‌ குறிக்கிறது.
இது வியூக நிலை. 
புரிசங்கங்‌ கைக்கண்டேன்‌: 
பாஞ்சசன்னியம்‌ ஊதிய பார்த்தஸாரதியைக்‌ கண்டேன்‌. --அவதார நிலை. 

த்வய மந்திரம்‌ அல்லது மந்த்ர ரத்னம்‌: 
ஸ்ரீமந்‌ நாராயண சரணெள சரணம்‌ ப்ரபத்யே; 
ஸ்ரீமதே நாராயணாய நம:'' 
என்பதே ஸ்ரீவைஷ்ணவத்தில்‌ பிரசித்தி பெற்ற துவயமந்திரம்‌. 
இரண்டு வாக்கியங்களால்‌ ஆன துவயத்தை ஆசாரியர்கள்‌ அனைவரும்‌ ஆதரித்து, மந்த்ர ரத்னம்‌ என்று பாராட்டினர்‌, 

ஸ்ரீ என்றால்‌ திரு, மகாலட்சுமி, பெரிய பிராட்டியார்‌. எனவே  “'ஸ்ரீயுடன்‌ கூடிய நாராயணனின்‌ திருவடிகளையே சரணமாகப்‌  பற்றுகிறேன்‌; 
ஸ்ரீபுடன்‌ கூடிய நாராயணனுக்கே தொண்டு செய்ய  விரும்பி, வணங்குகிறேன்‌! என்பதே துவயத்தின்‌ பொருள்‌.
பூர்வ (முதல்‌) வாக்கியம்‌ உபாயம்‌ (வழி) எது என்பதையும்‌, உத்தர (இரண்டாவது) வாக்கியம்‌ உபேயம்‌, ப்ராப்யம்‌ (குறிக்கோள்‌) 
என்ன என்பதையும்‌ காட்டுகின்றன. 

த்வயத்தின்‌ மகிமை 
ஸ்ரீ என்னும்‌ மகாலட்சுமித்‌ தாயார்‌ அனைத்து ஜீவர்களுக்கும்‌ அன்னை, கருணையே வடிவானவள்‌, பக்தர்களுக்கு உடனே 
மனமிரங்கி, அருள்புரியும்படி, நாராயணனிடம்‌ புருஷகாரம்‌ (சிபாரிசு) செய்பவள்‌. 
பிராட்டியை முன்னிட்டுச்‌ சரசணடைவதே, சுலபமாக உய்வடைய வழி. பிராட்டியே உபாயம்‌ (வழி), பிராட்டியே உபேயம்‌ 
(குறிக்கோள்‌). எனவே இவளை 'புருஷகார பூதை' என்பர்‌. 

திருவந்தாதிகள்‌ துவய மந்திர சாரமானவை 
முதலாழ்வார்களின்‌ முதற்பாசுரங்கள்‌ 8ழ்க்கண்டவாறு துவய மந்திர சாரமானவை: 
ஆழ்வார்‌ பேயார்‌ பூதத்தார்‌ பொய்கையார்‌ 
பாசுரம்‌ திருக்கண்டேன்‌ அன்பேதகளி வையந்தகளி 
ஆழ்வார்‌ திரு நாரணற்கு அடிக்கே சூட்டினேன்‌ 
வாக்கு 
பூர்வ ஸ்ரீமந்‌ நாராயண  சரணெள சரணம்‌ 
வாக்கியம்‌ ப்ரபத்யே 
உத்தர ஸ்ரீமதே நாராயணாய நம 
வாக்கியம்‌ 

திருக்கண்டேன்‌ பாசுரத்தில்‌ வரும்‌ “திரு”, ஸ்ரீமந்‌, ஸ்ரீமதே என்பதையும்‌; 
அன்பேதகளியில்‌ வரும்‌ 'நாரணற்குஷ்‌ நாராயண, நாராயணாய என்பதையும்‌; 
வையந்தகளியில்‌ வரும்‌ 'அடிக்கே சூட்டினேன்‌' என்பது 'சரணெள (அடிகளை) சரணம்‌ ப்ரபத்யே", 
நம: என்பதையும்‌ குறிக்கும்‌ வகையில்‌ அமைந்துள்ளன. 
எனவே  மூன்று இரத்தினங்கள்‌ போன்ற இப்பாசுரங்களிலும்‌, மந்திர இரத்தினமான துவயம்‌ பரிமளிக்கறது! 

இதைத்‌ தவிர முதலாழ்வார்கள்‌ பற்பல பாசுரங்களில்‌ “திரு” என்று ஸ்ரீயுடன்‌ சேர்த்தே ஸ்ரீநிவாஸனைப்‌ பாடியிருக்கிறார்கள்‌. 
ஸ்ரீநிவாஸன்‌ துவயமந்திர வடிவினன்‌ 
திருமலைக்‌ கோயிலில்‌ பிராட்டிக்குத்‌ தனி சன்னிதி  கிடையாது.
ஸ்ரீநிவாஸனின்‌ திருமார்பிலேயே அலர்மேல்‌ மங்கைத்‌ தாயார்‌ நித்தியவாசம்‌ செய்கிறாள்‌. 
திருமலையப்பன்‌ அம்மையப்பன்‌! இதனால்தான்‌ இவனை வழிபடுபவர்களுக்கு, 
கைம்மேல்‌ பலன்‌ உடனடியாகக்‌ இடைத்துவிடுகிறது! 

ஸ்ரீதிவாஸனை 'பாலாஜி' (பாலா என்பது தாயாரின்‌ திருநாமம்‌) என்றாலே வடநாட்டில்‌ தெரியும்‌. அர்ச்சாவதார ரத்தினமான 
வேங்கடரத்தினம்‌ மந்திர ரத்தினமான துவயவடிவினன்‌ என்பதை ஆழ்வார்‌. ரத்தினங்கள்‌ மூவரும்‌ நன்கு அறிந்திருந்தனர்‌! 
ஸ்ரீநிவாஸன்‌ சிறப்பாக துவயமந்திரம்‌ பொலியும்‌ திருவடிவம்‌ கொண்டவன்‌ என்பதாலேயே முதலாழ்வார்கள்‌ விஷ்ணுவின்‌ 
அர்ச்சை நிலையில்‌ இவனுக்கே முதலிடம்‌ கொடுத்துப்‌ பாடியிருக்கிறார்கள்‌. ! 

---------------

பரபக்தி, பரஞானம்‌, பரமபக்தி: 
பொய்கையாரின்‌ ''வையந்தகளி'" என்று தொடங்கும்‌ முதல்‌  திருவந்தாதி பரபக்தியையும்‌; 
பூதத்தாரின்‌ “அன்பே தகளி” எனத்துவங்கும்‌ இரண்டாம்‌ திருவந்தாதி பரஞானத்தையும்‌; 
பேயாழ்வாரின்‌ ''திருக்கண்டேன்‌'' என்று துவங்கும்‌ மூன்றாம்‌ திருவந்தாதி பரமபக்தியையும்‌ சொல்வதாக சிலர்‌ கொள்வர்‌. 

“பரபக்தி' என்பது எம்பெருமானை நேரில்‌ காணவேண்டும்‌ என்கிற ஆவல்‌; 
அவனை நேரில்‌ காணல்‌ 'பரஞானம்‌
பின்பு மேன்மேலும்‌ இடையறாது அனுபவிக்க வேண்டும்‌ என்னும்‌ ஆவல்‌ 'பரமபக்தி', 

இவற்றை மற்றொரு விதமாகவும்‌ பண்டைய ஆசிரியர்கள்‌ விளக்குவர்‌: 
எம்பெருமானோடு கலந்தபோது ஸூகிக்கும்படியாகவும்‌,  பிரிந்தபோது துக்கிக்கும்படியாகவும்‌ இருக்கும்‌ நிலை 'பரபக்தி". 
எம்பெருமானுடைய முழுநிறைவு நேர்காட்சி “பரஞானம்‌”. 
அவனுடைய அனுபவம்‌ பெறாவிடில்‌ தீரைவிட்டுப்‌ பிரிந்த மீன்போல மூச்சு அடங்கும்படி இருத்தல்‌ 'பரமபக்தி", 


முதலாழ்வார்களும்‌, நமது நிலையும்‌ 
பரபக்தி, பரஞானம்‌, பரமபக்தி ஆகிய மூன்று நிலைகளையும்‌ 
முதலாழ்வார்கள்‌ மட்டுமின்றி திருவேங்கடமுடையானின்‌ 
பக்தர்கள்‌ அனைவருமே தகுதிக்கேற்றபடி  சிறிதளவாவது அனுபவிக்கிறார்கள்‌ எனலாம்‌! 

சம்சார வாழ்க்கையில்‌ உழன்று கொண்டிருந்தாலும்‌,  திருமலையின்‌ பெருமையையும்‌, ஏழுமலையானின்‌ 
மஹிமையையும்‌ பூர்வ ஜன்ம புண்ணியத்தால்‌ நாம்‌ கேட்கிறோம்‌. 
பூலோக வைகுந்தமாகிய திருமலைக்குச்‌ சென்று ஸ்ரீநிவாஸனை தரிசிக்க வேண்டும்‌ என்கிற ஆவல்‌ நமக்கு எழ, 
“'திருவேங்கடம்‌  அடை நெஞ்சமே!" என்று திருமங்கையாழ்வாரைப்‌ போல்‌ 
உற்சாகத்துடன்‌ கிளம்புகிறோம்‌. இது லேசான பரபக்தி! 

பிறகு திருமலைக்குச்‌ சென்று, எப்படியாவது முண்டியடித்துக்‌  கொண்டு, ஸ்ரீவேங்கடேசனை நொடிப் பொழுதாவது நேரில்‌ 
காண்கிறோம்‌. இது லேசான பரஞானம்‌! 

ஆயினும்‌ திருவேங்கடமுடையானை ஒருமுறை காண்பது  திருப்தியளிப்பதில்லை. பின்பு மேன்மேலும்‌ அவனை 
இடையறாது கண்டு அனுபவிக்க வேண்டும்‌ என்கற ஆவல்‌  எழுகிறது. இது லேசான பரமபக்தி! 

---------------

ஞானம்‌, பக்தி, சாக்ஷாத்காரம்‌ (இறைக்காட்சி) 

மூன்று திருவந்தாதிகளும்‌ முறையே ஞான, பக்தி, சாக்ஷத்காரங்களைப்‌ பற்றியவை என்று பெரியவாச்சான்‌ பிள்ளை 
அருளிச்‌ செய்திருக்கிறார்‌. 
“ஞானச்சுடர்‌' என்பதற்கு  "பரமபக்தியாகிற விளக்கு” என்றது அவருரை. 
மூன்றாம்‌ திருவந்தாதி அவதாரிகையிலும்‌--- 
*"ஞானத்தைச்‌ சொல்லுகிறது வைசந்தகளி; ஞான  விபாகமான பக்தியைச்‌ சொல்லுகிறது அன்பே தகளி. 
பக்தியாலே  சாக்ஷாத்கரித்த படி  சொல்லுகிறது இதில்‌ (திருக்கண்டேன்‌)'* என  அவர் தாமே அருளியுள்ளார்‌. 
 
இங்ஙனம்‌ ஞான, பக்தி, ஸாக்ஷாத்காரங்களை இவர்கள்‌ அருளிச்‌ செய்கிறார்கள்‌ என்றதைக்‌ கொண்டு, 
““பொய்கையாழ்வாருக்கு சாஸ்திர ஞானம்‌ மட்டுமே யுள்ளது. 
பூதத்தாழ்வாருக்கு அத்துடன்‌ பக்தியும்‌ சேர்ந்தது. 
பேயாழ்வாரே  சாசக்ஷாத்காரம்‌ செய்தவர்‌' என்ற பாகுபாடு கொள்ள வேண்டா. 
மூவரும்‌ மூன்றுமுள்ளவராயினும்‌, அம்மூன்றும்‌ முறையே வரவேண்டியவை யாகையாலே தமக்கு அம்முறையை அறிவிக்கக்‌ 
கருதி, அவரவர்‌ அடைவதாக அவற்றை அருளினார்கள்‌ என்பதே தத்துவம்‌. 

திரிவிக்ரமன்‌ திருவடியினின்று பெருகிய கங்கை மூன்றாகப்‌  பிரிந்தது போல்‌, அவன்‌ விஷயமான இவர்களின்‌ ப்ரபந்தம்‌ மூன்று 
பிரிவுற்றதென்றார்‌ ஸ்ரீதேசிகள்‌. 

இப்ரபந்தக்‌ கர்த்தாக்கள்‌ மூவராயினும்‌ பொருள்‌ ஒற்றுமை  பற்றி இம்மூன்றும்‌ ஒரு ப்ரபந்தமாகவே அமைகிறது. 
ஒரு  வ்யாகரணத்திற்குப்‌ பாணிநீ, காத்யாயனர்‌, பதஞ்சலி ஆடிய மூவரும்‌ கர்த்தாக்கள்‌ ஆனாப்போலே, 
இப்ரபந்தங்களுக்கும்‌  இம்முனிவர்‌ மூவரும்‌ கர்த்தாக்கள்‌ என்று உரையாசிரியர்‌  துள்ளார்‌. 
வேங்கடவன்தமர்‌ ஏற்றிய வேதவிளக்கு: 

முதலாழ்வார்கள்‌ ஸ்ரீநிவாஸப்‌ பிரியர்களாகையால்‌ அவர்களை 'வேங்கடவன் தமர்‌' எனலாம்‌. 
அவர்கள்‌ ஏற்றிய 
வையந்தகளி, அன்பேதகளி விளக்குகள்‌ ''நான்மறை அந்தி நடை விளங்கச்‌'' செய்வதால்‌ வேதவிளக்குகள்‌ ஆயின. - 
திருமலைக்கே வேதகிரி: என்றொரு பெயருண்டு. 
'“வேங்கட  வெற்பென விளங்கும்‌ வேதவெற்பே”' (வெற்பு - மலை) என்று  ஸ்ரீ தேசிகனும்‌ அருளிச் செய்தார்‌. 

திருவேங்கடவனையே ''உணர்வாரார்‌ உன்‌ பெருமை... வேங்கடத்தாய்‌! நால்வேதப்‌ பண்ணகத்தாய்‌!'' என்று ஸ்ரீ 
பொய்கையாரும்‌, 
“வேதத்தான்‌ வேங்கடத்தான்‌ விண்ணோர்‌ முடிதோயும்‌ பாதத்தான்‌ பாதம்‌ பயின்று'” என்று பூதத்தாரும்‌, 
பேயாரும்‌ பாடியுள்ளனர்‌. வேதகிரி என்னும்‌ ்‌ குன்றின்‌ மேலிட்ட வேத விளக்கே வேங்கடவன்‌. 

இவற்றைக்‌ கருதியே இங்கே, ''வேங்கடவன் தமர்‌ ஏத்திய  வேத விளக்கு'' என்னும்‌ தலைப்பு அமைந்தது! 

வானரம்‌ வணங்கும்‌ வேங்கடம்‌ 

சமீப காலம்வரை, திருமலை என்றாலே வேங்கடேச பக்தர்களுக்கு அங்கே குரங்குகள்‌ செய்யும்‌ அட்டகாசங்களே 
நினைவுக்கு வரும்‌! வானர சேஷ்டைகளை நினைத்தே திருப்பாணாழ்வார்‌ 'மந்திபாய்‌ வடவேங்கடமாமலை' என்று 
மங்களாசாஸனம்‌ செய்திருக்கிறார்‌ போலிருக்கிறது. 
குரங்குகள்‌  ஏழுமலையில்‌ குதித்துக்‌ களிப்பூட்டிய காலம்‌ இன்று அநேகமாக மலையேறிவிட்டது எனலாம்‌. 
குரங்குகளுக்கு பதில்‌ குடில்களே திருமலையில்‌ எங்கும்‌ தென்படுகின்றன. ' 


பிள்ளைப்பெருமாள்‌ அய்யங்கார்‌ பதினேழாவது 
நூற்றாண்டில்‌ வாழ்ந்தவர்‌. மாபெரும்‌ ரங்கநாத பக்தரான இவர்‌ 
திருவரங்கக்‌ கலம்பகம்‌, திருவரங்கத்து அந்தாதி, திருவரங்கத்து  மாலை என்கற சிறந்த நூல்களை இயற்றினார்‌. 
திருவேங்கடவன்‌  இவர்‌ கனவில்‌ தோன்றித்‌ தன்னையும்‌ பாடும்படி கட்டளையிட, 
அய்யங்கார்‌. ''அரங்களைப்‌ பாடிய வாயால்‌ குரங்கனைப்‌  பாடுவேடீனோ?'” என்று அட்சியம்‌ செய்தார்‌. 
இதனால்‌ கோபம்‌  கொண்ட ஸ்ரீநிவாஸப்‌ பெருமாள்‌, 'கண்டமாலை' என்னும்‌ கொடிய நோயை விளைவிக்க, 
அய்யங்கார்‌ வேங்கடவளைப்‌  பாடியதாக வரலாறு. 
இவர்‌ 'திவ்விய கவி: எனப்படுவர்‌; 
இவர்‌ இயற்றிய எட்டு நூல்கள்‌ 'அஷ்டப்பிரபந்தம்‌' எனப்படும்‌. 

'குரங்கன்‌' என்றே வேங்கடவனை அலட்சியம்‌ செய்த திவ்வியகவி, அதற்குப்‌ பரிகாரமாக வேங்கடத்துக்‌ குரங்குகளையே 
பாடி, வானத்தை வரம்பாக உடையது திருமலை என்று போற்றியுள்ளார்‌. அற்புதமான கவிதை, 
'கவி' என்று ஆண்‌ குரங்கிற்குத்‌ தமிழில்‌ பெயரும்‌ உண்டு; 'கபி' என்னும்‌ வடசொல்‌, 
கவி என்றாகும்‌. 

"திருவேங்கடத்து மாலை” என்னும்‌ - நூலில்‌ பிள்ளைப்‌ பெருமாள்‌ அய்யங்கார்‌ காட்டும்‌ வேங்கடக்‌ காட்சிகளைக்‌ காண்போம்‌. 


“மண்மூலம்‌ தா என்று மந்திகடுவற்குரைப்ப  விண்மூலம்‌ கேட்டேங்கும்‌ வேங்கடமே.” (25) 

மண்மூலம்‌ - கிழங்கு; விண்மூலம்‌ - மூல நட்சத்திரம்‌; மந்தி - 
பெண்குரங்கு. கடுவன்‌ - ஆண்சுரங்கு. 

திருமலையில்‌ வாழும்‌ பெண்குரங்கு, தன்‌ காதலனிடம்‌ 
““மண்மூலம்‌ தா!” என்று கேட்கிறது. அதாவது, 
*“மண்ணிலிருக்கும்‌ கிழங்கை அகழ்ந்தெடுத்து, எனக்கு உணவாகக்‌ கொடு'' என்கிறது. 
இதை “விண்மூலம்‌', வானத்திலுள்ள மூல  நட்சத்திரம்‌ கேட்டு, தன்னைத்தான்‌ மந்தி பிடித்துக்‌ கொடுக்கச்‌ 
சொல்வதாக நினைத்து, பயத்தால்‌ நடுங்குகிறது. 

திவ்விய கவியின்‌ வருணனை, திவ்வியமான வருணனை! 
மூல நட்சத்திரத்தின்‌ வரை உயர்ந்து வானளாவ நிற்கிறது  திருமலை. எனவேதான்‌ குரங்கு கேட்பது நட்சத்திரத்திற்குத்‌ 
தெளிவாகக்‌ கேட்டு விடுகிறது. 'ஆண்மூலம்‌ அரசாளும்‌” என்பர்‌, 
ஆண்‌ குரங்கு மூல நட்சத்திரத்தில்‌ அவதரித்தது போலும்‌! 
வேங்கடத்துக்‌ கடுவன்‌ நட்சத்திர நாயகர்களான தேவகணங்களும்‌ 
அஞ்சத்தக்க அசாத்திய வலிமை படைத்தது என்பதும்‌ தெரிகிறது! 

மாம்பழம்‌ போல்‌ தித்திக்கும்‌ இன்னொரு திருமலைக் காட்சியையும்‌ திவ்விய கவி உட்டியுள்ளார்‌: 

"*வாவு கவின்‌ மந்தி நுகர்‌ மாங்கனிக்குக்‌ கற்பகத்தின்‌  மேவு கவி கைநீட்டும்‌ வேங்கடமே: (42 

வாவு .- தாலிச்செல்லும்‌; கவின்‌ - அழகிய; மேவு - பொருந்திய; கவி - கபி, ஆண்குரங்கு. 

திருவேங்கடத்தில்‌ பெண்‌ குரங்கு மாமரத்தில்‌ பழுத்துத்‌ தொங்கும்‌ தேமாங்கனியைப்‌ பறித்து, தாவிச்‌ செல்கின்றது. 
இதை  தேவலோகத்தில்‌ கற்பகத்‌ தருவில்‌ உட்கார்ந்திருக்கும்‌ ஆண்குரங்கு  பார்த்துவிடுகிறது; 
தனக்குத்‌ தருமாறு அங்கேயி௫ந்து கையை நீட்டுகின்றது! 

கவி இங்கே மறைமுகமாகக்‌ கூறுவது: திருமலை, தேவலோகம்‌ வரை உயர்ந்து நிற்கிறது. 
கற்பக மரத்தின்‌  பழத்தைவிட, வேங்கடத்தில்‌ மந்தி பறித்த மாம்பழம்‌ சுவையானது, பரம போக்யமானது. 
எனவே தேவலோகத்தையும்‌ விட உயர்ந்தது பூலோக வைகுண்டமாகய திருமலை. 


“குரங்கன்‌” என்று ஏழுமலையானை இகழ்ந்தவர்‌, அவன்‌ அருளைப்‌ பெற்றதும்‌, அரங்கனை விடவும்‌ உயர்வாகப்‌ புகழ்ந்து 
பாடிவிட்டார்‌ போல்‌ தோன்றுகிறது. 'வானர வம்பன்‌” என்பது போல்‌ வேங்கடவனை நிந்தனை செய்த பிள்ளைப்பெருமாள்‌ 
அய்யங்கார்‌ [வான வரம்பன்‌' ஆகவே அவனை வந்தனையும்‌ செய்து விடுகிறார்‌! அரங்கனுக்கும்‌, வேங்கடவனுக்கும்‌ இடையே 
மூர்த்தபேதம்‌ இல்லை என்பதை நேரடியாக உணர்ந்தவர்‌ நம்‌ திவ்விய கவி, 


அய்யங்காரின்‌ இவவிய கவிதை மாந்தோப்பில்‌ இரண்டு மாங்கனிகளைப்‌ பறித்துச்‌ சுவைத்த நம்முடைய 'மனம்‌ என்னும்‌ 
மாயக்குரங்கு' அடுத்து ஆழ்வார்களின்‌ பக்திப்பூங்காவில்‌ தாவிக்‌ குதிக்கிறது! 
பக்தி ரசம்‌ சொட்டும்‌ ஞானப்பழங்கள்‌ நாலாயிரத்தின்‌ ஜன்மபூமிக்கு அல்லவா வந்துவிட்டோம்‌? 
வந்த இடத்தில்‌ வேண்டிய சரக்கிற்குப்‌ .பஞ்சமேயில்லை என்பதை அறிந்து, 
இதற்குமுன்‌ ஆடிய களைப்புத்‌ நீர, நம்‌ மனக்குரங்கு சற்றே  கண்ணயர்கிறது, 
பூதத் திருவடி என்னும்‌ கற்பக மரத்தின்‌ இளையில்‌. பளபளவென்று பொழுதும்‌ புலர்ந்து விடுகிறது. 
இனி: நம்‌  மனக்குரங்கு என்ன செய்ய வேண்டும்‌ என்பதை பூதத்தாழ்வாரே கூறுகிறார்‌. 
ஆழ்வார்‌ கூறுவதிலிருந்து நாம்‌ வந்திருக்கும்‌ இடம்‌ திருமலையே என்பதையும்‌ தெரிந்து இன்புருகு சிந்தையராகிறோம்‌! 
ஸ்ரீ பூதத்தாழ்வார்‌ 
போது' அறிந்து வானரங்கள்‌ பூஞ்சுனை புக்‌(கு) ஆங்கு அலர்ந்த 
போது” அரிந்து கொண்டு ஏத்தும்‌ போ(து) உள்ளம்‌ - போதும்‌ 
மணி வேங்‌ கடவன்‌ மலரடிக்கே செல்ல 
அணி வேங்‌ கடவன்‌ பேர்‌ ஆய்ந்து. (72) 

போது" - விடியற்காலம்‌, பொழுது; போது” - மலர்‌; அரிந்து -கொய்து; போதுள்ளம்‌ உள்ளமே போ, புறப்படு; .பேர்‌ - திருநாமம்‌. 

திருமலைக்‌ குரங்குகள்‌ பொழுது விடிந்ததை அறிந்து, சுவாமி புஷ்கரிணி, பாபநாசம்‌ அருவி, பூஞ்சுனைகள்‌ போன்ற 
தீர்த்தங்களில்‌ புகுந்து நீராடும்‌. அப்போதே நீர்நிலைகளில்‌ அன்றலர்ந்த புத்தம்புதிய பூக்களைப்‌: பறித்துக்கொண்டு ஸ்ரீ 
ஸ்ரீ வேங்கடேசனுக்கு சமர்ப்பித்துத்‌ துதி செய்யும்‌. 
என்‌ மனமென்னும்‌  மாயக்குரங்கே! நீயும்‌ புறப்படுவாய்‌. உலகத்திற்கு மணிமகுடம்‌ வைத்ததுபோல்‌ திகழும்‌ திருமலையிலுள்ள 
ஸ்ரீ வேங்கடேசனின்‌  சஹஸ்ரநாமங்களை ஓதிக்கொண்டு, ' திருவேங்கடவனுடைய 
திருவடித்‌ தாமரைகளிலே சென்று சேரும்படியாக பூக்களை  சமர்ப்பிக்கக்‌ கடவாய்‌! 

திருமலை வானரங்கள்‌ அதிகாலையில்‌ ஏழுமலையானை  வணங்க நிகழ்த்தும்‌ ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாத சேவையை ஆழ்வார்‌ 
அழகாகப்‌ பாடியுள்ளார்‌. 
ஆஞ்சநேயர்‌ அவதரித்த அஞ்சனாத்ரி ஏழுமலைகளில்‌ ஒன்று. சமீபத்தில்‌ இம்மலைமீது அனுமாருக்குப்‌ 
பெரிய சிலை வைக்கப்பட்டிருக்கிறது. எனவே அஞ்சனாத்ரி  வானரங்கள்‌ சிறிய திருவடியாகிய அனுமன்‌ அடிச்சுவட்டில்‌ 
வேங்கடராமனை வழிபடுவதில்‌ ஆச்சரியம்‌ ஒன்றுமில்லை. 
ஆழ்வார்‌ அருளியபடியே, இன்று ஸ்ரீ வேங்கடேசன்‌ சன்னிதிக்கு நேர்‌ எதிரே, கோயிலுக்கு வெளியில்‌, ஆஞ்சநேயரே 
கைகூப்பியபடி காட்சியளிக்கிறார்‌. 
அலைபாயும்‌ நம்‌ மனக்குரங்கிற்கு ஆழ்வார்‌ சிறந்த உபதேசம்‌  செய்துள்ளார்‌. திருப்பதிக்குச்‌ சென்றுதான்‌ திருவேங்கடவனை 
சேவிக்க முடியும்‌ என்பதில்லை. தாம்‌ எங்கிருந்தாலும்‌, காலையில்‌ நீராடி, சுப்ரபாதம்‌ முதலிய துதிபாடி, மானசீகமாகவே பகவான்‌ 
திருவடிகளில்‌: புஷ்பாஞ்சலி செய்து அவனை தியானிக்கலாம்‌. 
இத்தகைய மானசீக பூஜையும்‌, ஜபமுமே மிகச்  சிறந்தன என்று  சாஸ்திரங்கள்‌ அனைத்துமே கூறுகின்றன. 
அடுத்து பேயாழ்வார்‌ இரண்டு அற்புதமான திருமலை வானரக்‌ காட்சிகளைக்‌ கண்முன்‌ கொண்டு வந்து நிறுத்துகிறார்‌. 
இவையே திவ்விய கவியின்‌ மேற்கூறிய பாடல்களுக்கு முன்னோடியாக அமைந்தவை. 
இப்பொழுது பூதத்தாழ்வார்‌  என்னும்‌ மாமரத்திலிருந்து நம்முடைய மனக்குரங்கு, பாய்ந்து 
**பிடித்தாலும்‌ பிடித்தான்‌, புளியங்கொம்பாய்ப்‌ பிடித்தான்‌'' என்று 
சொல்வார்களே, அதுபோலப்‌ பேயாழ்வார்‌ என்னும்‌ ஆன்மீகப்‌ புளியம்கொம்பைப்‌ பிடித்து விடுகிறது! 

தெளிந்த சிலாதலத்தின்‌ மேல்‌ இருந்த மந்தி 
அளிந்த கடுவனையே நோக்கி - விளங்கிய
வெண்மதியம்‌ தா என்னும்‌ வேங்கடமே! மேலொரு நாள்‌ . 
மண்மதியில்‌ கொண்டு உகந்தான்‌ வாழ்வு. (58) 

தெளிந்த - பளபளப்பான; சிலாதலம்‌ - கற்பாறையின்‌ தலம்‌, இங்கே படிகப்பாறை; மந்தி '- பெண்குரங்கு; 
அளிந்த - அன்புடைய; கடுவன்‌ - ஆண்‌ குரங்கு; மதியம்‌ - சந்திரன்‌; 
மண்‌ மதியில்‌ கொண்டு - பூமியை புத்தி சாதுர்யத்தினால்‌  ஏற்றுக்கொண்டு. 

பளபளப்பான படிகப்பாறையின்‌ மீது உட்கார்ந்திருக்கும்‌ பெண்குரங்கு, தன்னிடம்‌ காதல்‌ கொண்ட ஆண்‌ குரங்கை நோக்கி 
“ஒளி வீசும்‌ வெண்மையான பூர்ணசந்திரனைத்‌ தா!'' என்று கேட்குமிடமே வேங்கடம்‌." 
முன்னொரு காலத்தில்‌, மூன்றடி  மண்ணை புத்திசாதுர்யத்துடன்‌ கேட்டு, மகாபலிச்‌ சக்கரவர்த்தியிடமிருந்து அதை இன்னும்‌ 
அதிசாமர்த்தியமாக உலகங்களையே மூன்றடியால்‌ அளந்து எடுத்துக்கொண்டு திருப்தியடைந்த உலகளந்தப்‌ பெருமாள்‌ வாழுமிடம்‌ இது! 
 
மந்திக்குச்‌ சந்திரன்‌ எதற்காகா கண்ணாடி போல்‌  பளபளப்பான வஸ்து என்றால்‌ குரங்குக்கு அதில்‌ ப்ரீதி (பிரியம்‌) 
உண்டாவது இயற்கை, 'விளங்கிய வெண்மதியம்‌' என்ற அடைமொழியின்‌ கருத்தைப்‌ பெரிய வாச்சான்பிள்ளை கூறினது - 
**சந்திரனுடைய மேற்புற மாகையினாலே களங்கமற்று  உஜ்வலமாயிருந்துள்ள சந்திரமண்டலத்தை'* என்றவாறு. 
திருமலை சந்திரமண்டலத்திற்கு மேல்‌ வளர்ந்திருப்பது என்றபடி. 
அளிந்த - ப்ரணயகலஹம்‌ (ஊடல்‌) நீங்கத்தான்‌ ஏதேனும்‌ செய்ய விரும்பியது ஆண்குரங்கு
மதியின்‌ கொண்டு - கேட்டதிலும்‌ சாதுர்யம்‌, கொண்ட வகையிலும்‌ சாதுர்யம்‌. ' 

வெண்மதியம்‌ தா: 
ஆஞ்சநேயர்‌ அஞ்சனாத்ரி என்னும்‌ திருமலையின்‌ மீது பிறந்தவுடனேயே சூரியனைப்‌ பழம்‌ என்று நினைத்து 
அதைப்பிடிக்க ஆகாயத்தில்‌ தாவினார்‌. திருமலையில்‌ பிறப்பவர்களின்‌ ஆற்றல்‌ அத்தகையது. 
“நீயும்‌ அதே மலையில்‌ பிறந்து, அதன்‌ மீதே வாழ்கிறாய்‌. அனுமனைப்போல்‌ சூரியனைப்பிடிக்கும்‌ சக்தி இல்லாவிட்டாலும்‌, 
உன்னால்‌  குறைந்தபட்சம்‌ வெகு அருகிலுள்ள சந்திரனையாவது பிடித்துத்‌ தர முடியாதா?” என்று 
ஆண்குரங்கற்கு பலப்பரீட்சை வைக்கிறது மந்தி, இதைக்கேட்ட சந்திரன்‌ நடுங்குகிறான்‌, 
'*குரங்கு: கையில்‌  கிடைத்த பூமாலைபோல நம்‌ கதியும்‌ அதோகதி ஆகிவிடுமோ?” 
என்று பயந்து. திருமலையின்‌ உயர்வும்‌, மகத்துவமும்‌ அத்தகையது! 

“வெண்‌ மதியம்‌ தா” என்னும்‌ பேயாழ்வாரின்‌ கருத்தை ' மூலமாகக்‌ கொண்டே, பிள்ளைப்பெருமாள்‌ அய்யங்காரும்‌, 
“மண்மூலம்‌ தா என்று மந்தி கடுவற்குரைப்ப 
விண்மூலம்‌ கேட்டேங்கும்‌ வேங்கடமே'' --என்று பாடினார்‌. 

திருமலையின்‌ குரங்குகளுக்கே சந்திரனையும்‌, மூலநட்சத்திரத்தையும்‌ பிடித்துத்‌ தரும்‌ ஆற்றல்‌ உண்டென்றால்‌, 
அங்கெழுந்தருளியிருக்கும்‌ வேங்கடவனுக்கு எத்தகைய சர்வசக்தி இருக்க வேண்டும்‌? 
எல்லா உலகங்களையும்‌ காலால்‌ அளந்து “மண்‌ மதியில்‌ கொண்டு உகந்தான்‌!! ஆகத்தானே அவன்‌ இருக்கமுடியும்‌? 
இவ்விதமே அற்புதமாகப்‌ , பாசுரத்தை முடித்திருக்கிறார்‌. பேயார்‌!
அனுமார்‌ ஒரே தாவலாக இலங்கையைத்‌ தாண்டியதுபோல, மந்தி, கடுவன்‌ காட்சியை 
விவரித்த ஆழ்வாரின்‌ மனம்‌ ஒரே அடியில்‌ மலையுச்சிக்குப்‌ போய்த்‌ திருவேங்கடமுடையானையே சிக்கெனப்‌ பிடித்து விடுறைது
சந்திரனையும்‌, சூரியனையும்‌ பிடித்து என்ன பயன்‌? 
இவையனைத்தையும்‌ படைத்த ஏழுமலையானின்‌ திருவடிகளைப்‌ பிடிப்பதுதானே பிறவிப்பயன்‌? 
இதை ஆழ்வார்களைப்போல்‌ செய்கிறவர்களே வாழ்வில்‌ உகப்படைவர்‌ என்பது 'உகந்தான்‌ 
வாழ்வு" என்பதிலிருந்து அறியக்கடக்கிறது. 
மண்மதியிற்‌  கொண்டுகந்தான்‌ வாழ்வு - திருமலையப்பனின்‌ திருவடி மண்ணை 
மதியிற்‌ கொண்டு உகப்பவர்களின்‌ வாழ்வே வாழ்வு. 

கண்ணாடிபோல்‌ மின்னும்‌ வெண்ணிலாவில்‌ தன்னுடைய முகத்தழகைப்‌ பார்த்துக்‌ கொள்ள விரும்பி ''வெண்மதியம்‌ தா”! 
என்று குரங்கு கேட்டதை மேற்பாசுரத்தில்‌ கண்டோம்‌. 
கண்ணாடிபோல்‌ முகம்‌ காட்டும்‌ நீர்நிலையில்‌ தன்‌ முகத்தை  ஆண்குரங்கு பார்த்தால்‌ என்ன செய்யும்‌? 
இதைக்‌ கீழ்ப் பாசுரத்தில்‌ ஆழ்வார்‌ பாடுகிறார்‌--ஸ்ரீ பேயாழ்வார்‌ 

பார்த்த கடுவன்‌ சுனைநீர்‌ நிழல்‌ கண்டு 
பேர்த்து ஓர்‌ கடுவன்‌ எனப்பேர்ந்து - கார்த்த 
களங்கனிக்குக்‌ கைநீட்டும்‌ வேங்கடமே! மேனாள்‌ 
விளங்கனிக்குக்‌ கன்று எறிந்தான்‌ வெற்பு (68) 

பேர்த்து - அப்புறப்படுத்த முயன்று; பேர்ந்து - தானே அசைந்து; கார்த்த - கரிய; களங்கனி - களாக்காய்‌, பழம்‌; 
மேனாள்‌ - மேல்‌ நாள்‌, முன்னொரு நாள்‌; விளங்கனி - விளீஈம்பழம்‌; 
கன்று - இங்கு சன்று வடிவில்‌ வந்த வத்ஸாசுரன்‌; வெற்பு - மலை. 

திருவேங்கடமலையிலுள்ள சுனைநீரில்‌ ஓர்‌ ஆண்‌ குரங்கு தன்னுடைய நிழல்‌ தெரிவதைப்‌ பார்த்து, அதைத்‌ தன்‌ எல்லையில்‌ 
புகுந்து ஆக்கிரமிக்க முயலும்‌ இன்னொரு ஆண்குரங்கு என்று நினைத்துத்‌ துரத்தியடிக்க முயல்கிறது! பயனில்லாமல்‌ போகவே 
தானே அங்கிருந்து நகர்ந்து விடுகிறது. அப்பொழுது ஓர்‌ களாப்பழம்‌ நேரிலோ, நீரில்‌ நிழலாகவோ தோன்ற அதைப்‌ 
பறிப்பதற்குக்‌ கடுவன்‌ தன்‌ கையை நீட்டுகிறது. முன்னொரு காலத்தில்‌ விளாம்பழத்தைப்‌ பறிப்பதற்காக, வத்ஸாசுரன்‌ என்கிற 
'கன்றை விட்டெறிந்த கிருஷ்ணனுடைய மலை இது. 
திருமலைச்‌ சுளைநீர்‌ பளிங்குபோல்‌ முகம்‌ காட்டுமளவிற்கு சுத்தமானது. அதில்‌ தத்ரூபமாகத்‌ தெரிந்த தன்‌ உருவத்தைப்‌ பார்த்த 
ஆண்குரங்கு பிரமித்துவிட்டது. . களங்கனியைப்‌ பறிக்கக்‌ கைநீட்டிய குரங்கை விவரித்த ஆழ்வாருக்கு உடனே, கன்று 
வடிவில்‌ தன்னைக்‌ கொல்வதற்கு வந்த வத்ஸாசுரனை எறியக்‌ கைநீட்டிய கண்ணனின்‌ நினைவு வந்து விடுறது. 
விளங்களிக்குக்‌ கன்று எறிந்தான்‌ வெற்பு: 
அசுராவேசங்கொண்டு, கோபர்களைக்‌ கொல்லக்‌ காத்திருந்த விளம்பழங்களை வீழ்த்தினான்‌; அதற்காக கன்று வடிவில்‌ வந்து 
ஒளிந்து கொண்டிருந்த வத்ஸாசுரனை, எறிதடியாக, மலைப்பிஞ்சாகப்‌ பயன்படுத்தினான்‌ கிருஷ்ணன்‌, ஒரே கல்லில்‌ 
இரண்டு மாங்காய்‌ அடிப்பதுபோல! விளங்கனியை அடித்த வேங்கடகிருஷ்ணனுக்குக்‌ களங்கனி பிரியமென்று நினைத்தே 
திருமலைக்‌ கடுவன்‌ அதைப்‌ பறிக்கக்‌ கைநீட்டியது போலும்‌! 

பேயாழ்வாரின்‌ பாசுரத்திலுள்ள சிறந்த கருத்தைக்‌ கைநீட்டிப்‌ பறித்துக்‌ கொள்கிறார்‌ திவ்விய கவி பிள்ளைப்பெருமாள்‌ 
அய்யங்கார்‌. பறித்தவா்‌-- 
“*வாவு கவின்‌ மந்தி நுகர்‌ மாங்கனிக்குக்‌ கற்பகத்தின்‌ 
மேவு கவி கைநீட்டும்‌ வேங்கடமே” --என்று தம்முடைய கவித் திறத்தையும்‌ சேர்த்தே பாடுூறார்‌. 
------------

வேடர்‌ வில்வளைக்கும்‌ வேங்கடம்‌ 
வேடர்‌ என்பவர்கள்‌ காட்டிலே வேட்டையாடியே பிழைப்பவர்கள்‌. குறவர்‌ எனப்படுபவர்கள்‌ இவர்களை விடச்‌ 
சற்று நாட்டுடன்‌ அதிகத்‌ தொடர்பு உடையவர்கள்‌ எனலாம்‌. 
குறவர்கள்‌ தினைப்பயிரிடுவது, பிரம்பு அறுத்துக்‌ கூடைகள்‌ பின்னுவது, மலையில்‌ கிடைக்கும்‌ தேன்‌, கழங்கு போன்றவற்றை 
விற்பது ஆகியவற்றைச்‌ செய்து பிழைப்பர்‌. 
வேடர்களும்‌,  குறவர்களும்‌ வேங்கடத்தில்‌ வில்‌ வளைத்த காட்சிகளை ஆழ்வார்கள்‌ பாடியிருக்கின்றனர்‌. 

மலையும்‌, மலைசார்ந்த இடமும்‌ தமிழில்‌ 'குறிஞ்சி' என வழங்கப்படும்‌. எனவே வேங்கடம்‌ குறிஞ்சி நிலத்தைச்‌ சேர்ந்தது. 
“இத்தகைய இடத்தின்‌ கருப்பொருளாகிய குறவர்‌, யானை, குரங்கு, பாம்பு போன்றவற்றை ஆழ்வார்கள்‌ குறிப்பிட்டுச்‌ 
சொல்லும்‌ அழகு அவர்களுடைய கவித்திறனைக்‌ காட்டுவதுடன்‌ நம்மையும்‌ கவிதை அநுபவத்தின்‌ கொடு முடிக்குக்‌ கொண்டு 
செலுத்துகின்றது”,  
பொய்கையாழ்வார்‌ ஒரு பாசுரத்தில்‌ வேங்கடமலையின்‌ குறவர்‌, யானை, பாம்பு ஆகியவற்றை இணைத்துப்‌ பாடுறார்‌, 
இப்பாட்டில்‌ பேசப்படும்‌ பொருட்கள்‌ யாவுமே திருமாலுடன்‌ விசேஷத்‌ தொடர்பு கொண்டவை என்பதும்‌ இதன்‌ சிறப்பு. 

ஊரும்‌ வரியரவம்‌ ஒண்குறவர்‌ மால்யானை 
பேர எறிந்த பெருமணியை - காருடைய 
மின்னென்று புற்றடையும்‌ வேங்கடமே! மேலகரர்‌ 
எம்மென்னும்‌. மாலது இடம்‌. (ஸ்ரீ பொய்கையாழ்வார்‌ -38) 

ஊரும்‌ - ஊர்ந்து செல்லும்‌; வரி - கோடு; அரவம்‌ - பாம்பு; மால்‌ யானை - பெரிய யானை; ஒண்‌ - அழகிய, சிறப்பு வாய்ந்த; 
மணி - மாணிக்கம்‌; கார்‌ - மேகம்‌; மின்‌ - மின்னல்‌; எம்மென்னும்‌ * எம்முடையது என்று கொண்டாடும்‌; மாலது - திருமாலுடைய. 

திருவேங்கடம்‌ என்னும்‌ திவ்ய தேசத்தில்‌ வாழ்வதால்‌ சிறப்புடைய குறவர்கள்‌ தங்கள்‌ இனைப்புளங்களில்‌ பட்டி மேயும்‌ 
யானையைத்‌ துரத்துவதற்காகப்‌ பரண்களில்‌ இருந்தபடியே பெரிய, பெரிய மாணிக்கக்‌ கட்டிகளை அதன்மேல்‌ வீசுகின்றனர்‌. 
அப்பொழுது அங்கு ஊர்ந்து சென்று கொண்டிருக்கும்‌ மலைப் பாம்புகள்‌ யானை மீது பொழியும்‌ மாணிக்க மழையைக்‌ காண்கின்றன; 
யானையை மேகமாகவும்‌, இரத்தினங்களை மின்னல்களாகவும்‌ எண்ணி மயங்குகின்றன. 
மின்னலுடன்‌  இடிதோன்றும்‌ என்று மிரண்டு, பாம்புகள்‌ தங்கள்‌ புற்றுக்களில்‌ புகுந்து கொள்கின்றன. 

ஒண்குறவர்‌ எறிந்த பெருமணி; 
திருமலை வேங்கடேசனிடமிருந்து எந்நேரமும்‌ மகத்தான ஆன்மீக அலைகள்‌ எழுந்து உலகெங்கும்‌ பரவுகின்றன. 
இங்கே பூசிப்பவர்‌, தியானிப்பவர்‌, வாழ்பவர்‌ அனைவருமே தங்களை யறியாமல்‌ இதனால்‌ உயர்ந்த மனநிலைகளை அடைந்து, 
ஆனந்தத்தை அனுபவிக்கின்றனர்‌. அத்தகைய ஆனந்த நிலையம்‌ இது. இத்தகைய சக்திவாய்ந்த திவ்ய தேசத்தில்‌ தொடர்ந்து 
வாழ்வதால்‌, அங்குள்ள குறவர்களும்‌ சத்துவ குணம்‌ மேலோங்கியவர்களாக ஆகி விடுகின்றனர்‌. 
விலை மதிக்க முடியாத மாணிக்கங்களும்‌, இரத்தினங்களும்‌ அவர்களுக்கு சற்றும்‌ இலட்சியமில்லை! 
யானையை அடிப்பதற்கு கற்களுக்கு பதில்‌  மாணிக்கக்‌ கட்டிகளையே உபயோகிக்கின்றனர்‌. 
சமயக் குரவர்களையும்‌ - விஞ்சிவிடுவர்‌  போலிருக்கிறதே. நம்‌ திருமலைக் குறவர்கள்‌! 
எனவே ஆழ்வார்‌ இவர்களை 'ஒண்குறவர்‌' எனகிறார்‌. ஒண்‌ - ஒளிவீசும்‌. மகா தேஜஸ்‌ வீசும்‌ குறவர்கள்‌ இவர்கள்‌. 
கிருஷ்ணன்‌. தங்களிடையே அவதரித்ததால்‌ சிறப்புற்ற ''அறிவொன்றும்‌ இல்லாத ஆய்க்குலத்து'' கோபர்களைப்‌ போன்றே, 
ஸ்ரீ வேங்கடாசலபதி  திருமலைக்‌ குறவர்களிடையே குறிஞ்சி நிலத்‌ தலைவனாக உறைவதால்‌ இவர்களும்‌ ஆழ்வாரால்‌ உயர்வாகப்‌ 
பேசப்படுகன்றனர்‌. 
“ஓண் குறவர்‌' என்பது அழகிய  குறவர்கள்‌, சிறந்த குறவர்கள்‌ என்று பொருள்படும்‌. 
“ஒண்மையாவது இவர்கள்‌ பாட்டன்‌-பூட்டனிலே ஒருத்தன்‌ பூமியிலே இறங்கினான்‌ என்றும்‌ 
பழியின்றிக்கே இருக்கை” என்பது வியாக்கியானம்‌. 
அஃதாவது, 
வழி வழியாகத்‌ திருப்பதி மலையை விட்டுக்‌ 8ழே இறங்காமல்‌ அங்கேயே பெயராது வாழும்‌ சிறப்பு அந்தக்‌ குறவர்கட்கே உரியது 
என்று கூறி ஆழ்வாரின்‌ கருத்தை விளக்குவர்‌ பெரியவாச்சான்‌ பிள்ளை. 
அக்குறவர்கள்‌ கற்களுடன்‌ மாணிக்கக்‌ கற்களையும்‌ எறிவர்‌ என்பது வெறும்‌ உயர்வு நவிற்சியன்று; 
அவர்களுடைய மதிப்பிட்டில்‌ கல்லும்‌, மாணிக்கமும்‌ ஒன்றே என்பது குறிப்பு. 

பெகுமணி: 
பெரிய மாணிக்கம்‌. குறவர்கள்‌ வீரியெறியும்‌ இது, திருவேங்கடவனுக்கும்‌ பொருந்தும்‌. கருநிறம்‌, 
விலைமதிப்பின்மை, ஒளிவீசுதல்‌, பெறுவதற்கு அருமை போன்ற தன்மைகள்‌ கொண்டதால்‌ எம்பெருமானுக்கு மாணிக்கத்தை 
உவமையாகக்‌ கூறுதல்‌ மரபு. 
'அண்ணல்‌ மாயன்‌' என்று தொடங்கும்‌ பாசுரத்தில்‌ (3-3-3) நம்மாழ்வார்‌ திருவேங்கடவனை 
“கண்ணன்‌ செங்களனிவாய்க்‌ கருமாணிக்கம்‌”* என்று குறிப்பிடுகிறார்‌. 
திருமலைக்கும்‌ 'சிந்தாமணிகிரி' என்கிற  மணியான  திருநாமமுண்டு. 
வேண்டியதைத்‌ தருபவர்‌ திருமலையாழ்வார்‌! மணிவண்ணனுக்கு ஏற்ற மணிமலை! 

மால் யானை: 
மால்‌ - இங்கு, *பெரிய' என்று பொருள்படும்‌. மற்றபடி “மால்‌' என்றால்‌ திருமால்‌. இதற்கு வ்யாமோகமே (பிரேமையே) 
வடிவானவன்‌, தன்னை ஆச்ரமித்தவர்கள்‌ (பற்றியவர்கள்‌) விஷயத்தில்‌ பெரும்‌ பித்தன்‌, பக்தவத்ஸலன்‌ என்று பொருள்‌. 
இவ்விதமே யானையும்‌ தன்னைப்‌ பற்றிய பாகன்‌ முதவியோரிடத்திலே மிகுந்த அன்பு செலுத்தும்‌; இத்துடன்‌ 
கருநிறம்‌, நெடிய உருவம்‌, காண்பவர்க்கு எப்பொழுதும்‌ களிப்பூட்டுதல்‌ போன்றவற்றால்‌ .. யானையைத்‌ திருமாலுக்கு 
உவமை கூறுவதும்‌ மரபாகிறது. எனவே ஆழ்வார்‌ மால்‌, பானை ஆகியே இரு பதங்களையுமே சேர்த்து அர்த்தபுஷ்டியாக 
“மால்யானை' என்று அழகுற அமைத்திருப்பது, கற்கக்‌ கற்க களிப்பூட்டுகின்றது! 

ஊரும்‌ வரி அரவம்‌: 
சளர்ந்து செல்லும்‌, கோடுகளை உடைய பாம்பு. இதற்கும்‌ திருமலைக்கும்‌ நிறைய சம்பந்தம்‌ உண்டு. திருமலையே 
ஆதிசேஷன்‌, அரவணை என்பர்‌. எனவே திருமலையாழ்வார்க்கு அரவகிரி, சேஷகிரி, சேஷாத்ரி என்ற திருநாமங்களுண்டு. 
சேஷாசலத்தின்‌ மீது பேருந்தில்‌ நாம்‌ ஊர்ந்து செல்லும்போது, பாதையும்‌ 'ஊரும்‌ வரி அரவம்‌' போன்றே வளைந்து, வளைந்து 
செல்கிறது! போகும்‌ வழி 'ஊரும்‌ வரி அரவம்‌' என்றால்‌, போகும்‌ ஊரும்‌ அரவ கிரி. 

காருடைய மின்‌: 
யானையைக்‌ கார்மேகமென்றும்‌, குறவர்கள்‌ அதைத்‌ துரத்த வீசிய மணியின்‌ ஒளியை மின்னலென்றும்‌ நினைத்து பயந்து 
பாம்பு புற்றை அடைகிறது. யானை, மேகம்‌, மணி ஆகிய மூன்றுமே திருமாலுக்கு உவமைகளாகக்‌ கூறப்படுபவை; 
மூன்றையும்‌ ஒரே இடத்தில்‌ ஒன்றாகக்‌ கண்டு மயங்குகிறது அரவம்‌. மயக்குபவன்‌ மாயோன்‌, திருமால்‌; அவனுக்கு 
உவமையாகக்‌ கூறப்படும்‌ பொருள்களும்‌ இவ்விதமே மயக்கும்‌ தன்மையுடைன போலும்‌! மேகங்கள்‌ எப்பொழுதும்‌ தவழ்ந்து 
கொண்டிருப்பது திருமலை; அதன்‌ மீது மேக வண்ணனாகிய வேங்கடவன்‌ நின்று கொண்டிருப்பது பொருத்தமே! 
இவனுக்கு  ஸ்ரீ ஆண்டாள்‌ மேகவிடுதூதும்‌ அருளிச்‌ செய்துள்ளாள்‌. 

மின்னலைப்‌ போல்‌ ஒளிர்பவள்‌ பொன்னிறமுடைய மகாலட்சுமி. கார்மேகத்தினிடையே மின்னல்‌ ஜொலிப்பது 
போல, பிராட்டியுடன்‌ கூடிய “அலர்மேல்‌ மங்கையுறை மார்பன்‌: திகழ்வதை, 'திருக்கண்டேன்‌, பொன்மேனி கண்டேன்‌' என்று 
பேயாழ்வார்‌ பாடியுள்ளார்‌. 
எனவே 'காருடைய மின்‌' என்பது ஸ்ரீதரன்‌, : மாதவன்‌, லட்சுமி நாராயணன்‌, ஸீதாராமன்‌, 
ராதாகிருஷ்ணன்‌, ஸ்ரீநிவாஸன்‌ போன்ற பிராட்டியுடன்‌ கூடிய  திருமாலைக்‌ குறிக்கிறது. ்‌ 

புற்றடையும்‌ வேங்கடமே! 

**காருடைய மின்‌'' என்று பயந்து திருமலையில்‌ பரம்பு மாத்திரமா புற்றை அடைந்தது? 
மின்னல்‌ போல்‌ ஒளிரும்‌  திருமகளைப்‌ பிரிந்த, கார்மேக வண்ணனாய. வைகுந்தவாசனும்‌ 
அல்லவா சேஷாசலத்தில்‌ பிரம்மதேவனால்‌ படைக்கப்பட்ட திந்திரினி (புளிய] மரத்தின்‌ 8ழிருந்த புற்றை அடைந்ததாக ஸ்ரீ 
வேங்கடேச புராணம்‌ கூறுகிறது! 

இரத்தினத்தைக்‌ கண்டு பயந்து திருமலையில்‌ பாம்பு  புற்றையடைந்தது. 
ரத்னாகரன்‌ என்கிற வேடன்‌ நாரதரிடம்‌ மந்திரம்‌ பெற்று, தன்னைச்‌ சுற்றிலும்‌ எறும்புப்‌ புற்று எழும்படி தவம்‌ 
செய்ததால்‌ *வால்மீகி' என்று பெயரடைந்ததாக வரலாறு கூறுகிறது. 
வால்மீகி முனிவருக்கு ஏதாவது கைம்மாறாக இராமபிரான்‌ செய்ய வேண்டாமா? ஒருவன்‌ செய்ததை அப்படியே 
செய்வது, முன்‌ செய்தவனுக்குப்‌ பெருமையைக்‌ கூட்டும்‌. எனவே பார்த்தார்‌ பெருமாள்‌. நாமும்‌ வால்மீகியைப்‌ போல்‌ சிறிது காலம்‌ 
புற்றுக்குள்‌ கிடப்போம்‌ என்றெண்ணிப்‌ புற்றடைந்தார்‌ வேங்கடத்தில்‌. 
எம்பெருமானைப்‌ பின்பற்றியே நாமும்‌ புற்றுக்குள்‌ எறும்புகள்‌ ஆயிரக்கணக்கில்‌ செல்வது போல, வேங்கட மலைமீது 
சளர்ந்து செல்கிறோம்‌. 

மேலசுரர்‌ எம்மென்னும்‌ மாலது இடம்‌: 
மேல - மேம்பட்டவர்களான, சுரர்‌ - தேவர்கள்‌, நித்யஸூரிகள்‌. 
இவர்களெல்லாம்‌ “ஸ்ரீநிவாஸன்‌ எங்களுடையவன்‌'' என்று  அபிமானித்துக்‌ கொண்டாடும்‌ இடமே திருமலை, 
இது போலவே  நம்மில்‌ பலரும்‌ கொண்டாடுகிறோம்‌ என்பதே கஷ்டகாலமான 
இந்தக்‌ கலியில்‌ நாம்‌ செய்யும்‌ நல்ல காரியங்களில்‌ சிறந்தது;  தவறாமல்‌ பலன்‌ தருவது; 
“மேலசுரர்‌ எம்மென்னும்‌ மாலது இடம்‌”  என்பது இன்றும்‌ உண்மை; நித்ய ஸூரிகளே திருமலையில்‌ பற்பல 
வடிவங்களையெடுத்து உலவுகின்றனர்‌ என்று பெரியோர்‌ பணிப்பர்‌. 

திருவேங்கடத்தில்‌ வாழும்‌ குறவர்‌, அரவம்‌, யானை, அதன் மேல்‌ எறியும்‌ மணி யாவும்‌ பெருமானைப் போல்‌ 
சிறப்புடையன” என்கிறார்‌ ஆழ்வார்‌. 
திருவேங்கட மலையே நித்யஸூரி ' நிர்வாஹகனான எம்பெருமான்‌ திருவுள்ளம்‌ உவந்து எழுந்தருளியிருக்கும்‌ இடம்‌ என்றார்‌. 
திவ்யதேசங்களிலுள்ள சராசரங்கள்‌ (அசையும்‌, அசையாப்‌ பொருட்கள்‌) முற்றும்‌ மெய்யன்பர்கட்கு உத்தேச்யமாய்‌ 
(உகந்தவையாய்‌) இருக்கும்‌. ஸ்ரீ குலசேகர ஆழ்வார்‌ தம்முடைய "பிரபந்தத்தலே நான்காம்‌ திருமொழியிலே 
''வேங்கடத்துக்‌ கோனேரி வாழும்‌ குருகாய்ப்‌ பிறப்பேனே'' என்று தொடங்கித்‌, 
திருமலையில்‌ பலவகைப்‌ பிறவி பிறக்க குதூஹலித்து, 
கடைசியாக “திருவேங்கடம்‌ என்னும்‌ எம்பெருமான்‌ பொன்மலைமேல்‌ ஏதேனும்‌ ஆவேனே”! என்று தலைக்கட்டுகிறார்‌. 
அதற்கேற்ப, இக் குலசேகர ஆழ்வாரைப்‌ போன்ற ஆர்வம்‌ உடைய . மஹான்‌௧ளே திருமலையில்‌ 
பாம்பாகவும்‌, -குறவராகவும்‌, யானையாகவும்‌, புற்றாகவும்‌ பிறந்திருப்பார்கள்‌ ஆகையாலே அப்பொருள்களையும்‌ 
எம்பெருமானைப்‌ போலவே உத்தேச்யமாகக்‌ கொண்ட இவ்வாழ்வார்‌ இப்பாசுரத்தாலே தம்முடைய எண்ணத்தை வெளியிடுகிறார்‌ என்க. 

திருமலை கோபர்களாகிய குறவர்கள்‌ தினைப்புனம்‌ காப்பதை பொய்கைப்‌ பிரான்‌ பாடிவிட்டார்‌ 
நாம்‌ திருவேங்கடத்தின்‌ கோபிகைகளான குறமகளிர்‌ 'பெளர்ணமி நிலவில்‌ பனிவிழும்‌ இரவில்‌' . விளையாடுவதைப்‌ பாடுவோம்‌” 
என்று அருளிச்‌ செய்கிறார்‌ ஸ்ரீ பேயாழ்வார்‌: 

குன்று ஒன்றினாய குறமகளிர்‌ கோல்‌ வளைக்கை 
சென்று விளையாடும்‌ தீங்கழைபோய்‌ - வென்று 
விளங்குமதி கோள்விடுக்கும்‌ வேங்கடமே! மேலை 
இளங்குமரர்‌ கோமான்‌ இடம்‌. (ஸ்ரீ பேயாழ்வார்‌ -72) 
குன்று : இங்கே, திருமலை; கழை - மூங்கில்‌; மதி - சந்திரன்‌; கோள்‌ - ராகு; மேலை - மேலான பரமபதத்திஜிருக்கும்‌; 
இளங்குமரர்‌ - பிராயம்‌ எப்போதும்‌ இருபத்தைந்தேயுள்ள  நித்ப ஸூரிகள்‌; கோமான்‌ - தலைவன்‌. 

திருமலையிலேயே என்றும்‌ வசிப்பவர்கள்‌ அழகிய வளைகளை யணிந்த கைகளை யுடைய குறத்திகள்‌. 
இவர்கள்‌  அழகிய மூங்கில்கள்‌ வளரும்‌ இடத்திற்குப்‌ போய்‌ விளையாட்டாக. ஏறி அவற்றை வளைப்பர்‌; 
அதனால்‌ சந்திர மண்டலம்‌ வரை ஓங்கி வளர்ந்த மூங்கில்கள்‌ அசைந்து, சந்திரனைப்‌ பீடித்திருக்கும்‌ 
ராகுவை வென்று அப்புறப்படுத்தி, அதை கரகணத்தினின்று விடுவித்து, மீண்டும்‌ முழு நிலவாக பிரகாசிக்கச்‌ செய்யும்‌. 
இத்தகைய வேங்கடமே, நித்ய யுவர்களாகவே இருக்கும்‌ நித்ய ஸூரிகளின்‌ தலைவனான ஸ்ரீவேங்கடாசலபதியின்‌ உறைவிடம்‌. 

திருமலையை விட்டு ஒரு நொடிப்பொழுதும்‌  இழிந்தாலும்‌ குலப்‌பழியாம்‌ என்று திருமலையை விடாதே அங்கே 
நித்தியவாஸம்‌ பண்ணுகின்ற குறத்திகள்‌ அவர்கள்‌ ஊஞ்சலாடுகை முதலான விளையாடல்களுக்காக ' மூங்கில்‌ மரங்களிலே 
ஏறியிருப்பதுண்டு. அப்படிப்பட்ட மூங்கில்களானவை, சந்திரனை க்ரஹிக்கின்ற ராகுவைக்‌ குத்தி அப்புறப்படுத்தி அச்சந்திரனை 
மகழ்விக்கின்றனவாம்‌. 

இப்பாட்டுக்கு மற்றும்‌ பல வகையாகப்‌ பொருள்‌ கூறுவர்‌. 
விளையாடுகின்ற. குறத்திகளின்‌ கோல்‌ வளைக்கையானது சென்று நல்ல மூங்கிற்செறிவை நீக்கி, 
சந்திரன்‌ இங்கு புகப்பெறாமையால்‌ பெற்றிருந்த இடரை நீக்கும்‌ என்றுமாம்‌. 
அன்றியே 
குறத்திகளின்‌  வளைகளின்‌ ஒளியானது சந்திர ஒளி புகுரப்பெறாத மூங்கிலிருளை 
அகற்றி, வெளிச்சமாக்்‌க, சந்திரன்‌ மருவையும்‌ போக்கும்‌ என்றுமாம்‌. 

மேலையிளங்குமரர்‌: 
நித்ய ஸூரிகள்‌, என்றும்‌ பன்னிரண்டு வயது வாய்ந்திருப்பர்‌  எனவும்‌ கூறுவர்‌. 

ஆழ்பொகுள்‌: 

சந்திர மண்டலம்‌ வரை உயர்ந்தது திருமலை என்றார்‌. 
சந்திரனின்‌ கஷ்டத்தை நீக்கு, அதைக்‌ கவ்விக்கொண்டிருந்த இராகுவை விரட்டியடித்து அபாயத்திலிருந்து திருமலை 
காக்கிறது. இதனால்‌ பக்தர்களை அபாயத்திலிருந்து விடுவித்து விளங்கச்‌ செய்வதும்‌ திருமலையே என்பது கூறப்பட்டது. 

திருமலைக்‌ குறவர்களைப்‌: பற்றிய மற்றொரு பேயாழ்வார்‌ பாசுரம்‌: , 

முடிந்த பொழுதில்‌ குறவாணர்‌ ஏனம்‌ 
படிந்து உழுசால்‌ பைந்தினைகள்‌ வித்த - தடிந்து எழுந்த 
'வேய்ங்கழை போய்‌ விண்‌ திறக்கும்‌ வேங்கடமே! மேலொருநாள்‌ 
தீங்குழல்‌ வாய்வைத்தான்‌ சிலம்பு. (89) 

முடிந்த பொழுதில்‌ - ஆயுட்காலம்‌ முடிந்த நிலையிலுள்ள; குறவாணர்‌ - குறசாதியர்‌, குறவர்‌ தலைவர்கள்‌; ஏனம்‌ - பன்றி; 
படிந்து உழு - தோண்டி உழுத; சால்‌ - கட்டியுதிர்ந்து பதமான மண்ணிலே; வித்த - விதைக்க; வேய்ங்கழை - மூங்கில்‌ தடிகள்‌; 
சிலம்பு - மலை. 
 
மரணமடையும்‌ நிலையிலுள்ள இழவர்களான குறவர்‌ தலைவர்கள்‌ திருமலையில்‌ புதிய தனை விதைகளை 
விதைக்கின்றனர்‌. எங்கே எனில்‌, காட்டுப்பன்றிகள்‌ தங்கள்‌ செருக்காலே மூங்கில்கள்‌ வேரோடு விழும்படி 
கோரைப்பற்களினால்‌ மண்ணை அகழ்ந்து உழுத நிலங்களிலே! 
இங்ஙனம்‌ அறுபட்டாலும்‌, நிலத்தின்‌ வளத்தாலும்‌, திருமலையின்‌ மஹிமையாலும்‌ மூங்கிற்‌ கழைகள்‌ மீண்டும்‌ தடித்து வளர்ந்து, 
ஆகாயத்தைப்‌ பிளந்து நிற்கின்றன வேங்கடத்தில்‌. 
முன்பொரு நாள்‌ மதுரமான புல்லாங்குழலைத்‌ தன்‌ பவளச்செவ்வாயில்‌ வைத்து ஊதிய கண்ணபிரானுடைய திருமலை இது! 

திருவேங்கடமலையில்‌ வாழும்‌ குறவர்களோடும்‌, திருவேங்கடமுடையானோடும்‌ . வாசியறத்‌ தமக்கு 
விருப்பமாயிருத்தலை விளக்குகிறார்‌ ஆழ்வார்‌. 
திருமலையின்‌ நிலவளத்தையும்‌, ஒக்கத்தையும்‌ (உயரத்தையும்‌) ஒரு சமத்காரமாகப்‌ பேசுகிறார்‌. இதில்‌. 
தேன்‌ -இரட்டுதல்‌, வேட்டையாடி மிருகங்களைப்‌ பிடித்து வருதல்‌ முதலியன குறவர்களின்‌ தொழிலாகும்‌; 
இத்தொழில்கள்‌ நல்ல வயதிலுள்ள குறவர்கட்குச்‌ செய்ய இயலுமேபன்றி, இழக்குறவர்கட்குச்‌ செய்ய இயலா. 
ஆகவே அவர்கள்‌ இருஷியினால்‌ (உழவினால்‌) ஜீவிக்கப்‌ பார்ப்பார்கள்‌; அது தன்னிலும்‌ தாங்களே உழுது பயிரிடுதலும்‌ அவர்கட்கு இயலாது. 
கலப்பை பிடித்து உழமாட்டாத 'முடிந்த பொழுதில்‌ குறவாணர்‌: ஆதலால்‌, வயதான குறவர்கள்‌ தாங்கள்‌ பூமியைப்‌ பதம்‌ செய்ய 
முடியாதவர்களானாலும்‌ பன்றிகள்‌ வேருணவுக்காகப்‌ பூமியை எங்கும்‌ தோண்டுவதால்‌- அதுவே பண்சால்‌ உழுத பூமிபோல்‌ 
பண்பட அனுகூலமாகிறது. ஆங்காங்குள்ள மூங்கில்களும்‌ வேர்‌ அறுக்கப்பட்டு விழுந்துவிடுகன்றன.
இனி அங்கு. மூங்கில்‌  வளராதென வைத்து, அவர்கள்‌ விதைக்கிறார்கள்‌. 
ஆயினும்‌ பூமியின்‌ வளத்தால்‌ அறுக்கப்பட்டு விழுந்த மூங்கில்களும்‌ வானளாவ வளர்கின்றன. இங்ஙனம்‌ ஸாரமான திருமலையே 
திருமாலின்மலை என்றபடி. 

தீங்குழல்‌: 
குறவர்களும்‌ பன்றிகளும்‌ சுயநலம்‌ கருதி மூங்கில்களை முறித்தாலும்‌ அவை வானளாவ வளர்கின்றன. அதற்கு 
வேங்கடத்தில்‌ இருத்தலே காரணம்‌. வேங்கடமுடையான்‌ வேய்ங்குழல்‌ ஊதுகின்றவனாகையால்‌ அவன்‌ திருமேனி 
ஸம்பந்தம்‌ பெற்ற புல்லாங்குழலின்‌ சு௫தியிற்‌ பிறந்த மூங்கில்களுக்கு உண்டாம்‌ நீங்கெல்லாம்‌ தானே முடிகிறது. 
ஆக எம்பெருமானை ஆச்ரயித்தாரை (பற்றியவரைச்‌) சார்ந்தார்க்கு அயலார்‌ அபகாரம்‌ செய்ய இயலாது என்றதாயிற்று. 
திருவேங்கடத்தில்‌ மூங்கில்‌ வளர்வது கரத தமாவ தாம்‌ வளர்ந்தது போலவே! 

தீங்குழல்‌ வாய் வைத்தான்‌ சிலம்பு: 
கோவர்த்தன மலையின்‌ அருகே இருந்துத்‌ தீங்குழல்‌ ஊதி கோபிகளையும்‌,. கோக்கள்‌ (பசுக்கள்‌), மிருகங்கள்‌, செடி கொடி 
மரங்கள்‌, கந்தர்வர்‌ முதலானோரான எல்லாப்‌ பிராணிகளையும்‌ தனக்கு வசமாக்கிக்‌ கொண்ட எம்பெருமான்‌ 
சதையின்‌ முடிவிலே, ஆயுள்‌ முடிவுக்குள்ளே முடிந்தபோது நாம்‌ அவனை ஆச்ரயிருக்க 
வேண்டுமென்று உபதேசித்தருளின பொருளை இப்போதும்‌ அர்ச்சையில்‌ விளக்குவது திருவேங்கடம்‌, ஆகையால்‌ அதுவே 
அவனது மலையாம்‌. 

குறவர்களும்‌, பன்றிகளும்‌ வெட்டித்தள்ளினாலும்‌, திருமலை மூங்கில்கள்‌ கிருஷ்ணனுக்குக்‌ குழல்‌ தந்த புண்ணியத்தால்‌ ஓங்கி 
வளர்கின்றன; காற்றிலே அசைந்து 'ஊய்‌, ஊய்‌' என்று ஓசை எழுப்புகின்றன. ''புல்லாங்குழல்‌ கொடுத்த மூங்கில்களே, எங்கள்‌ 
புருஷோத்தமன்‌ புகழ்‌ பாடுங்களேன்‌'' என்பது போல்‌ மதுரகீதம்‌  பாடுகின்றன! முன்பொரு நாள்‌ மதுரமாக தையைப்‌ பாடிய 
வேணுகோபாலனே திருமலையில்‌ ஸ்ரீநிவாஸனாக நிற்பதால்‌ 
அவனே இவ்விதம்‌ வேணுகானம்‌ செய்கிறானோ, என்று. நாம்‌ சற்று அசந்து விடுகிறோம்‌. 

இப்பாசுரம்‌ மூன்று அவதாரங்களை நினைவூட்டுகிறது. 
“ஏனம்‌ (பன்றி) படிந்துழுசால்‌' என்பது முன்பு ஆதிவராகப்‌ பெருமாள்‌ நிலத்தை அகழ்ந்தெடுத்ததை நினைவுறுத்துகிறது. 
இவர்‌ திருமலையில்‌ சுவாமி புஷ்கரிணி தீர்த்தக்கரையில்‌ எழுந்தருளியிருப்பதால்‌ திருமலைக்கு 'வராக கிரி! என்றொரு 
பெய்ருமுண்டு. இத்தகைய வராக க்ஷேத்திரத்தில்‌, காட்டுப்பன்றிகள்‌ தங்கள்‌ செருக்கால்‌ மூங்கில்கள்‌ சரியும்படி 
நிலத்தை உழுவது எவ்வளவு பொருத்தமாகறது!
மூங்கில்கள்‌ மீண்டும்‌ வானளாவ வளர்வது, உலகளந்த திரிவிக்கிரமனை நினைவூட்டுகிறது. 
வானையே அளப்பதுபோல்‌ உயர்ந்த மலையில்‌ நிற்பதால்‌, தருவேங்கடவனைத்‌ திரிவிக்ரமன்‌ என்பது பொருந்தும்‌ 
என்று பணிப்பர்‌ பெரியோர்‌. இதுவே இருஷ்ணாவதாரத்தில்‌ குழல்‌ ஊதியவனின்‌ மலையுமாகும்‌. 

அடுத்து, திருமழிசையாழ்வார்‌ திருமலை வேடர்களையும்‌, குறவர்களையும்‌ பாடும்‌ இரு பாசுரங்களைக்‌ காண்போம்‌.
இவர்‌  பார்க்கவ முனிவருக்கு மகனாய்‌ அவதரித்து, பிரம்பு அறுக்கும்‌ குறவர்‌ சாதியிற்‌ வளர்ந்தவர்‌ என்று கூறுவர்‌. 

வைப்பன்‌ மணிவிளக்கா மாமதியை மாலுக்கு என்று 
எப்பொழுதும்‌ கைநீட்டும்‌ யானையை - எப்பரடும்‌ 
வேடு வளைக்கக்‌ குறவர்‌ வில்லெடுக்கும்‌ ,வேங்கடமே! 
நாடு வளைத்து ஆடுதுமேல்‌ நன்று. --ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ 

வேடு - வேடர்‌; நாடு - நாட்டு மக்கள்‌; வளைத்து ஆடுதுமேல்‌ - பிரதட்சிணம்‌ செய்து வணங்குதல்‌. 
 
“சிறந்த சந்திரனைத்‌ திருவேங்கடமுடையானுக்கு மங்களதீபமாக சன்னிதியில்‌ வைப்பேனாக'' என்றெண்ணித்‌ 
திருமலை யானை அதைப்‌ பிடிப்பதற்கு எப்போதும்‌ துதிக்கையை உயரத் தூக்கியபடியே உள்ளது. 
பானையைப்‌ பிடிக்க வேடர்கள்‌ அதை நாற்புறமும்‌ சுற்றி வளைத்துக்‌ கொள்கிறார்கள்‌.
அங்குள்ள குறவர்கள்‌ யானையைக்‌ காக்க வேடர்களை எதிர்த்து (வேடர்களுடன்‌ சேர்ந்து யானையை அடிக்க, என்றும்‌ கூறுவர்‌) 
வில்லை எடுப்பர்‌. தாட்டு மக்கள்‌ அனைவரும்‌ அத்திருமலையைச்‌ சூழ்ந்து, பிரதட்சிணம்‌ செய்து வணங்குவது நன்று. 

திருமலை சந்திரமண்டலத்தை எட்டியிருக்கிறதென்று அதன்‌ ஓக்கம்‌ (உயரம்‌, பெருமை) வெளியிடப்பட்டதாம்‌.
இதனால்‌, மலைகளில்‌ சந்திரன்‌ மிக்க ஸமீபத்தில்‌ இருப்பதாகக்‌ காணும்‌ மலைப்பிராணிகள்‌ அவனைக்‌ கைக்கொள்ள விரும்பி பல 
முயற்சிகள்‌ செய்வது இயல்பு. 
யாளை சந்திரனைப்‌ பிடிக்க முயற்சி செய்வது வெளிக்குத்‌ தெரியுமேயன்றி இன்ன காரியத்திற்காக 
அதனைப்‌ பிடிக்க முயல்கிறது என்பது தெரியமாட்டாதே; 
திருமலையப்பனுக்கு நந்தாவிளக்காக வைப்பதற்குப்‌ பிடிக்க முயல்கிறதென்று ஆழ்வார்‌ எங்ஙனே அறிந்தார்‌? : என்று சிலர்‌ கேட்கக்கூடும்‌; 
திருமலையில்‌ பிறக்கப்பெற்ற பெருமையினால்‌ அவ்யானைக்கு இப்படிப்பட்ட நற்கருத்தே இருக்கத்தகும்‌ என்று 
திருவுள்ளம்‌ பற்றினர்‌ என்க. 
அன்றியும்‌ “*வாயுந்திரையுகளும்‌'* என்கிற திருவாய்மொழியிற்படியே, பிறர்‌ செய்யும்‌ காரியங்களை 
எல்லாம்‌ தாம்‌ செய்யும்‌ காரியங்கள்போல்‌ பகவத்‌ விஷய ப்ராவண்யத்தால்‌ செய்வனவாகவே கொள்வது மெய்யன்பர்களின்‌ வழக்கமாகும்‌. 
ஆழ்வார்‌ சந்திரனைப்‌ பார்க்கும்போது '“இவன்‌ திருவேங்கடமுடையானுக்கு நந்தாவிளக்காக அமையத்தகும்‌"” 
என்று தோற்றவே, இத்தோற்றமே அவ்விடத்து யானைக்கும்‌ இருந்ததாகக்‌ கொண்டு கூறுதல்‌ பொருந்தியதே. . 

இங்கு (திருமலையில்‌, எல்லாம்‌ எம்பெருமானின்‌ கைங்கர்யத்தில்‌ ஈடுபட்டவை. யானை சந்திரனைக்‌ கண்டு 
கைநீட்டுவது, அதை நந்தாவிளக்காக நம்‌ திருமாலுக்கு அமைக்கலாம்‌ என்கிற நோக்கத்தினால்‌. “இப்படி 
கைங்கர்யபரமான ' யானையை ஏன்‌ வில்லெடுத்து வருத்துகின்றனர்‌. அது நன்றோ?” என்னில்‌ - 
யானைப்பிடிக்க  வளைத்து வரும்‌ வேடரை விலக்கக்‌ குறவர்‌ வில்லெடுக்கன்றனர்‌ என்க. 
அப்போது பாகவத விரோதிகளை வெல்ல முயல்வது என்ற நன்மையாம்‌. 
அங்குள்ள வேடர்கள்‌ மட்டும்‌ அவ்வாறு நடப்பரோ என்னில்‌, அவர்கள்‌ புறம்புள்ளவரே, அங்குள்ளவரல்லர்‌ என்க. 
இனி வேடர்களும்‌, குறவர்களும்‌ யானையைப்‌ பிடிக்கின்றனர்‌ என்றே கொண்டாலும்‌, யானை சந்திரனை இந்த நோக்கத்துடன்‌ 
பார்க்கிறது என்பதை அவர்‌ அறியார்‌. யானையைப்‌ பிடித்து வசப்படுத்தினால்‌ எம்பெருமான்‌ ஸன்னிதியில்‌ கைங்கர்யத்திற்கு 
அதைப்‌ பயன்படுத்தலாம்‌ என்பது அவர்கள்‌ கருத்து எனலாம்‌. 
நித்ய விபூதியிற்போலே திருமலையிலுள்ள ஜங்கம ஸ்தாவர பூதங்கள்‌ (செடி கொடி, விலங்குகள்‌) எல்லாம்‌ திருமாலின்‌ 
விபூதியாய்‌ அவனது கைங்கர்யத்திலே ஈடுபட்டவை என்று அதன்‌ பெருமையை (இப்பாகரத்தில்‌) அனுபவித்து, (அடுத்த பாட்டில்‌) 
வேங்கடமே ஸர்வோத்க்ருஷ்டம்‌ (அனைத்திலும்‌ சிறந்த புண்ணியத்தலம்‌) என்கிறார்‌. 
: 
“விலங்குகளும்‌ கிட்டி அடிமை செய்யும்‌ திருமலையை நாட்டார்‌ சுற்றி வலம்‌ வந்து வணங்குவார்கள்‌ எனில்‌ நலமாம்‌'* என்றார்‌. 

“வெண்‌ மதியம்‌ தா!” என்று மந்தி கடுவனைக்‌ கேட்டதை பேயாழ்வார்‌, பாடினார்‌. 
இதை கஜேந்திர ஆழ்வார்‌ பரம்பரையில்‌ பிறந்த திருமலை யானை கேட்டு விட்டது. 
““பெண்‌ குரங்கின்‌ பேச்சைக்கேட்டு, ஆண்‌ குரங்கு குரங்குத்தனமாக எதையாவது செய்துவிடப்‌ போகிறதே! 
இத்தனை அழகிய முழுநிலவு குரங்கு கையில்‌ கிடைத்த பூமாலையின்‌ துர்கதியை ௮டைவதார? அதற்கு 
முன்‌ நாமே சந்திரனைப்‌ பறித்து ஸ்ரீ வேங்கடாசலபதிக்கு மணிவிளக்காய்‌ வைப்போம்‌!'” என்று திருமலை தும்பிக்கை 
ஆழ்வார்‌ அவசர அவசரமாகக்‌ கையை நீட்டுகிறார்‌. 
பெளர்ணமி இருமாலை பூஜிப்பதற்குச்‌ சிறந்த நாள்‌, "மார்கழித்‌ இங்கள்‌ மதி நிறைந்த தன்னாள்‌'' என்றே திருப்பாவை துவங்குகிறது. 
நம்மாழ்வார்‌ வைகாசி விசாகத்திலும்‌, திருமங்கையாழ்வார்‌ கார்த்திகை கார்த்திகையிலும்‌, பெளர்ணமி திதியில்‌ அவதரித்தனர்‌. 
''சரி, நம்மால்‌ ஆன பெளர்ணமி பூஜையைப்‌ பெருமாளுக்குச்‌ செய்வோம்‌!” என்று நினைத்தே 
திருமலை கஜேந்திரர்‌ சந்திரனைப்‌ பிடிக்க முயல்கிறார்‌. 

யானை துதிக்கையைத்‌ தூக்குவது வணங்குவது  போலிருக்கும்‌; துதிக்கும்‌ கையே துதிக்கை. '*மாலுக்கென்று 
எப்பொழுதும்‌ கைநீட்டும்‌ யானை' என்பதால்‌ திருமலை. யானை எப்பொழுதும்‌ துதிக்கையைத்‌ தூக்கி ஏழுமலையானை ஏத்தித்‌ 
துதித்தே நிற்கும்‌ என்பது தெரிகிறது. ஆபத்துக்‌ காலத்தில்‌ “ஆதிமூலமே” என்று அலறிய பாகவத புராணத்து கஜேந்திரனை 
விடவும்‌ பக்தியிற்‌ சிறந்தது நான்முகன்‌ திருவந்தாதி' திவ்வியப்‌ பிரபந்த யானை!
''சந்திரன்‌ திருமலைக்கு நேரே எப்பொழுது வரும்‌? வந்தவுடன்‌ 'லபக்‌'கென்று பிடித்து மணிவிளக்காய்‌  வைத்து விடுவோம்‌,'' என்று நினைத்தே, தயார்நிலையில்‌ 
எப்பொழுதும்‌ துதிக்கை தூக்கியபடியே இருக்கிறார்‌. சில யோகியர்‌ மன வலிமையை வளர்த்துக்‌ கொள்ள, பகவானை 
நினைத்தே எப்பொழுதும்‌ கைதூக்கியபடி இருப்பர்‌; சிலர்‌ எப்பொழுதும்‌ நின்றுகொண்டே இருப்பர்‌. நம்‌ திருமலை 
கஜேந்திரயோகி இத்தகையவரே. வேடர்கள்‌ தம்மைச்‌ சூழ்ந்து கொண்டது, குறவர்கள்‌ வில்லை எடுப்பது ஒன்றுமே தெரியாமல்‌ 
கருமமே கண்ணாக இருக்கிறார்‌. “கை கூப்பிய நிலையிலேயே ஆழ்வார்களும்‌, ஆசார்யர்களும்‌ எழுந்தருளியிருக்கின்றனர்‌. நமக்கு 
இருப்பதோ ஒரே ஒரு கை. நம்மால்‌ கைகூப்ப இயலாது. எனவே கைதூக்கிய  நிலையிலேயே நிற்போம்‌'' என்றிருக்கிறார்‌. 

நாடு வளைத்து ஆடுமேல்‌ தன்று: 
நாட்டிலுள்ளவர்கள்‌ திருமலையை வலம்‌ வந்து, திருவேங்கடமுடையானைக்‌ குறித்து கீதங்கள்‌ பாடியும்‌, ஆடியும்‌ 
தொழுவது நாட்டிற்கும்‌ நல்லது, வீட்டிற்கும்‌ நல்லது என்றார்‌ ஆழ்வார்‌. ஏழு மலைகளும்‌ பரந்து கிடப்பதால்‌, 
கிரிப்பிரதட்சிணெமாக வலம்‌ வருதல்‌ கருடாழ்வாருக்கே இயலும்‌. 
ஏழு மலைகளையும்‌ நடந்து ஏறுவதே வலம்‌ வருதலாகக்‌ கொள்ளலாம்‌. திருமலையைப்‌ பொறுத்தவரையில்‌, 
கிரிப்பிரவேசமே கிரிப்பிரதட்சிணம்‌. 'நாடு வளைத்து' என்று ஆழ்வார்‌. அன்று அருளியபடியே, திருமலையைச்‌ சுற்றிய 
காடுகளெல்லாம்‌ மாயமாய்‌ நிறைந்து, மக்கள்‌ வாழும்‌ நாடாக  விட்டதை இன்று காண்கிறோம்‌! திருமலையை' நாடு வளைத்து வருகிறது. ்‌ 

நன்‌ மணிவண்ணன்‌ ஊர்‌ ஆளியும்‌ கோளரியும்‌ 
பொன்மணியும்‌ முத்தமும்‌ பூமரமும்‌ - பன்மணி நீர்‌ 
ஓடு பொருது உருளும்‌ கானமும்‌ வானரமும்‌ 
வேடும்‌ உடை வேங்கடம்‌. (-ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ 47) 

ஆளி - யாளி, கோளரி - கோள்‌ -* அரி; கோள்‌ - பலம்‌, மிடுக்கு; அரி - சிங்கம்‌. 
நீரோடு என்பது “நீர்‌ ஓடு என்று இங்கு பிரித்து எழுதப்பட்டது. வேடு - வேடர்‌ இனம்‌ 
 
யாளி என்ற மிருகங்களும்‌, பலமுள்ள சிங்கங்களும்‌, பொன்னும்‌, மாணிக்கங்களும்‌, முத்துக்களும்‌, பூத்த மரங்களும்‌, 
பலவகைப்பட்ட ரத்தினங்கள்‌ அருவி நீருடன்‌ கலந்து உருண்டு விழும்‌ காடுகளும்‌, வானரங்களும்‌, வேடர்‌ இனங்களும்‌ உடையது வேங்கடம்‌
இதுவே நீலமணிவண்ணனாகிய திருமாலின்‌ நல்ல திவ்ய தேசம்‌. 

““ஸர்வேச்வரன்‌ உகப்பது திருமலை. ௮வன்‌ உறையும்‌ திவ்ய தேசத்திலுள்ள சேதன அசேதனங்களும்‌ (உயிருள்ள, உயிரற்ற 
பொருட்கள்‌) அவன்‌ விரும்புவன; அவை நித்யஸூரிகளே”' என்று அம்மலையை மண்டி அநுபவிக்கிறார்‌ ஆழ்வார்‌.  

நித்பஸூரிகளே எம்பெருமான்‌ எழுந்தருளியிருக்கும்‌ திருமலைக்கேற்ப பல உருவங்களை எடுத்துக்கொண்டு அதனைச்‌ 
சிறப்பித்து வருகின்றனர்‌. ஆகையால்‌ திருமலை பரமபதத்திற்குக்‌ குறைந்ததன்று. பரமபதத்தில்‌ யாளி, மணி, மரம்‌, வானரமென்றாற்‌ 
போன்றவைகள்‌ இருக்குமாயினும்‌ வேடர்‌, குறவர்‌ போன்றோர்‌ இடைப்பதரிது. வேடுமுடையதானபடியாலே வேங்கடத்திற்கு 
ஏற்றமுண்டு. மணிவண்ணனும்‌ லீலாவிபூதியில்‌ உள்ளாருக்கும்‌ சுலபனாயிருந்து தனது மணிவண்ணத்தன்மை, அதாவது மணி 
முன்றானையிலே முடிக்கப்பட்டு அடக்கப்படுமாப்‌ போலே எல்லோருக்கும்‌ எளிதில்‌ இடைக்கப்படுகின்றமை தெரியும்படி 
இங்கே விளங்குகிறான்‌. ஆகவே இதுவே அவனுக்கு நல்ல ஊர்‌. 
இனி நாம்‌ பரமபதத்தை எவ்வாறு நினைக்க வேண்டும்‌ எனில்‌, 
இராமன்‌ அரண்யத்திற்கு எழுந்தருவின பிறகு அயோத்தியை எவ்வாறு பாவிக்க வேண்டுமென்று இலக்குமணனுக்கு அவரது 
தாய்‌ உபதேசித்தாள்‌ என்பதை நினைக்க. 

நன்மணி: 
நல்‌ என்பதை மணியோடு சேர்ப்பதை விட ஊரோடு சேர்ப்பது நலம்‌. 
ஊர்‌: 
திருமலையைக்‌ காடென்று நினைக்கலாகாது, ஊரேயாம்‌ அது. பலவகை விவேகிகள்‌ நிறைந்த இடத்தைக்‌ 
காடென்னலாமோ?  ஆளிகள்‌, ஆள்கின்ற நித்யஸூரிகள்‌; கோளரிகள்‌, நரசிங்க மூர்த்தியைப்‌ போன்றவர்கள்‌. இப்படி எல்லாம்‌ சிறந்தவை. 

வேங்கடம்‌: 
பாபம்‌ கழிந்தாரைப்‌ பெறுவது பரமபதம்‌. பாபிகளின்‌ பாபத்தையும்‌ போக்குவது இது. 
எனவே பரமபதத்தையும்‌ விட உயர்ந்தது வேங்கடம்‌. 
“இராமன்‌ இருக்குமிடம்‌ அயோத்தி என்பதுபோல்‌ பரமபதநாதன்‌ இக்கலியுகத்தில்‌ உஈச்‌ஈமிடமான திருவேங்கூமே பரமபதம்‌. 

“வேடும்‌ உடை வேங்கடம்‌”: என்று பாசுரத்தை ஆழ்வார்‌ முடித்திருப்பதை ஒட்டியே நம்‌ தலைப்பும்‌ அமைந்தது; 
நாம்‌ இதுவரை கண்ட திருமலை வேடர்‌, குறவர்‌ காட்சிகளும்‌ முடிகிறது! 
முன்பொருநாள்‌ ஒரு வேடுவன்‌ பறவை என்று நினைத்து வில்லை வளைத்து அம்பை எய்ய, அது திருவடிகளில்‌ 
தோய்ந்ததால்‌ கிருஷ்ணாவதாரம்‌ முடிவுற்றது. 
திருவடிகளில்‌ அம்பு தோய்ந்ததால்‌ மறைந்தவன்‌ மீண்டும்‌ அர்ச்சையாகத்‌ தோன்றியதால்‌, அவனுடைய திருவடிகள்‌ தோய்ந்த மலை எது? 
வேடர்‌ வில்‌ வளைக்கும்‌ வேங்கடம்‌, கானமும்‌, வானரமும்‌, வேடும்‌ உடை வேங்கடம்‌-

----------------

வேழம்‌ வழிபடும்‌ வேங்கடம்‌ 
வேங்கடத்தை மங்களாசாஸனம்‌ செய்த முதலாழ்வார்கள்‌, 
அதன்‌ யானைக்காட்சிகளை மிக அற்புதமாக வர்ணித்துள்ளனர்‌. 
பொய்கையாழ்வார்‌ காட்டும்‌ யானைக்காட்சி இது: 

பெருவில்‌ பகழிக்‌ குறவர்‌ கைச்‌ செந்தீ 
வெருவிப்‌ புனந்‌ துறந்த வேழம்‌ இருவிசும்பில்‌ 
மீன்நீழக்‌ கண்டஞ்சும்‌ வேங்கடமே! மேலசுரர்‌ 
கோன்வீழக்‌ கண்டுகந்தான்‌ குன்று (ஸ்ரீ பொய்கையாழ்வார்‌ -40) 

பகழி - அம்பு; செந்தீ - வட்டி; புனம்‌ - கொல்லை, வயல்‌; வேழம்‌ - யானை, விசும்பு - ஆகாயம்‌; மேல்‌ - முன்னொரு 
காலத்தில்‌; அசுரர்‌ கோன்‌ - இரணியன்‌; குன்று - திருமலை; 

பெரிய வில்லையும்‌, அம்புகளையும்‌ உடைய குறவர்கள்‌, கொளுத்திய தீவட்டியையும்‌ ' கையிலேந்திக்‌ கொண்டு, 
இனைப்புனத்தில்‌ பட்டி மேயும்‌ யானையை கட்டித்‌ துரத்துகிறார்கள்‌. இதனால்‌ பயந்த யானை வயலைவிட்டு 
ஓடுகிறது. அப்பொழுது ஆகாயத்திலிருந்து அகஸ்மாத்தாக ஒரு எரிநட்சத்திரம்‌ மிகுந்த ஒளியுடன்‌ யானைக்குமுன்‌ விழுகிறது. 
இருதலைக்‌ கொள்ளி எறும்புபோல்‌, யானை செய்வதறியாது திகைத்து, அஞ்சி நிற்கிறது, திருமலையில்‌. 

இந்த வேங்கடமே, முன்னொரு காலத்தில்‌ அசுரர்‌ அரசனாகிய இரண்யகசிபுவைக்‌ கொன்று, (தன்னுடைய பக்தனாக 
பிரகலாதனைத்‌ துன்புறுத்திய விரோதி தொலைந்தான்‌) என்று மகிழ்ந்த நரசிம்ம மூர்த்தபினுடைய மலை. ்‌ 
தன்னுடைய பக்தர்களின்‌ விரோதிகளை அழித்து, அவர்களைக்‌ காக்கும்‌ பொருட்டே ஸ்ரீ வேங்கடேசப்‌ பெருமாள்‌ 
திருமலையில்‌ எழுந்தருளியிருக்கிறான்‌ என்கிறார்‌. 

தீவட்டி தடியர்களின்‌ மிரட்டலாலும்‌, எரிநட்சத்திரம்‌ தன்‌ பாதையில்‌ விழுந்ததாலும்‌, யானை பயந்தது போலவே பக்தனும்‌ 
இவ்வுலகில்‌ பலவித பிரச்சனைகளில்‌ சிக்கி கதிகலங்குவதுண்டு. 
இவ்விதமே மகாபத்தனாகிய பிரகலாதனும்‌, பாகவத விரோதியான இரணியகசிபுவினால்‌ பலவித இன்னல்களுக்கு இரையானான்‌. 
“அன்று நீ பிரகலாதனை, நரசிம்மமாக அவதரித்துக்‌ காத்தது போதாது; இன்றும்‌ பக்தர்கள்‌ 
துன்பமடையும்போது அவர்களைக்‌ காப்பது உன்‌ கடமை'' என்று ஏழுமலையானுக்கு ஆழ்வார்‌ நினைவூட்டுகிறார்‌. 

"ஞானத்‌ தமிழ்‌ புரிந்த நான்‌” என்றே பாடத்‌ தொடங்கிய இரண்டாவது ஆழ்வாராகிய தவத்திரு பூதத்தடிகள்‌,
“யானே தவஞ்செய்தேன்‌; யானே தவமுடையேன்‌; யானே பெருந்தமிழன்‌!" 
என்று மும்முறை ஒரு பாசுரத்தில்‌ மீண்டும்‌”தம்மைக்‌ குறித்து பெருமிதம்‌ கொள்கிறார்‌. 
கஜேந்திரனை முதலையின்‌ வாயிலிருந்து... விடுவித்த ஸ்ரீ வேங்கடேசனுக்கு அடிமை பூண்டு, திருமலையில்‌ 
புஷ்பகைங்கர்யம்‌ செய்தது குறித்தே விளைந்த பெருமிதம்‌ இது என்பது இதற்கு முந்தைய பாசுரத்திலிருந்து தெரிய வருகிறது. 

இதைக்கேட்ட வேங்கடேசப்‌ பெருமாள்‌ ஆழ்வாரை நோக்கு, “'நீர்‌ நல்ல பெருந்தமிழர்‌ என்பதை நாடு நகரமும்‌ நன்கறிய ஒரு கவி 
சொல்லும்‌, பார்ப்போம்‌!”” என்கிறார்‌. உடனே நம்‌ பெருந்தமிழர்‌ திருவேங்கடத்தைக்‌ குறித்து அற்புதமாக ஒரு யானைப்‌ 
பாசுரத்தைப்‌ பாடித்‌ தம்‌ கைவரிசையைக்‌ காட்டுகிறார்‌. 
“*யானே, யானே, யானே!'' என்று பெருமைப்பட்டவர்‌ ** 
யானை! என்று கீழ்க்காணும்‌ பாசுரத்தில்‌ யானையைக்‌ காட்டி நம்மை மகிழ்விக்கிறார்‌: 

பெருகு மதவேழம்‌ மாப்பிடிக்கு முன்‌ நின்‌(று) 
இருகண்‌ இனமூங்கில்‌ வாங்கி - அருகிருந்த 
தேன்‌ கலந்து நீட்டும்‌ திருவேங்கடம்‌ கண்டீர்‌ 
வான்‌ கலந்த வண்ணன்‌ வரை", (75) 

வேழம்‌ - ஆண்‌ யானை; பிடி - பெண்‌ யானை; வரை - மலை. 

பெருகுகின்ற மதநீரையுடைய ஆண்‌ யானை, தனது சிறந்த பெண்‌ யானைக்கு முன்நின்று, இரண்டே கணுக்களையுடைய 
இளம்‌ மூங்கில்‌ குருத்தைப்‌ பறித்து, அதை அருகிலிருந்த தேனடையில்‌ தோய்த்துத்‌ தேனுடன்‌ கலந்து நீட்டுகின்றது 
திருவேங்கடமலையில்‌. நீலமேக சியாமளனாகிய ஸ்ரீநிவாஸன்‌ நித்யவாசம்‌ செய்யும்‌ திருமலையல்லவா இது! 
ஏற்கனவே மதம்‌ பிடித்து, திருமலையில்‌ செருக்கித்‌ திரிகின்றது வேழம்‌. அழகான பெண்‌ யானையைக்‌ கண்டதும்‌, 
காதல்‌ ரசம்‌ வேறு அதன்‌ தலைக்கேறி விடுகிறது! உடனே பிடிக்குப்‌ பிடித்தமான இனிய உணவை அதற்குத்‌ தந்து, அதனைக்‌ கவர நினைக்கிறது. 
'*இதயத்தில்‌ இடம்‌ பிடிக்கும்‌ வழி, வயிற்றின்‌ வழியாகவே செல்கிறது"' என்கிற உண்மையை நன்கு தெரிந்து வைத்திருக்கிறது வேங்கடத்து. வேழம்‌. 
உடனே பசுமையான இளம்‌ மூங்கில்‌ குருத்தைப்‌ பிடுங்கித்‌ தேனிலே தோய்த்து, 
“குளோப்‌ ஜாமுனை' ஊட்டுவதைப்போல்‌, பேடையின்‌ வாயில்‌ ஊட்டுகிறது! முதலில்‌ தேன்‌ உணவு; அடுத்துத்‌ தேன்‌ நிலவு. 

“இலக்கிய ரசம்‌' என்னும்‌ இளம்‌ மூங்கில்‌ குருத்திலே, “பக்தி ரசம்‌” என்கற தேனைக்‌ குழைத்து நம்‌ வாயிலும்‌ ஊட்டிவிடுகிறார்‌ 
பூதத்தார்‌] ஆழ்வார்‌ நமக்குப்‌ படைக்கும்‌ ஆரா அமுது இது. 
“தேனும்‌ பாலும்‌ கன்னலும்‌ ௮முதுமாகி'' ஆராவமுதனாகிய திருவேங்கடமுடையான்‌ அன்பர்களின்‌ இதயங்களிலே தித்திப்பது 
போலவே, வேங்கடப்பிடிக்கும்‌, திருமலையாழ்வார்‌ விளைவித்த மூங்கில்‌ 'ரஸகுல்லா” தித்திக்கிறது;
நமக்கும்‌ பெருந்தமிழரின்‌ பாசுரம்‌ திருப்பதி லட்டு போல்‌ தித்திக்கிறது! 

திருமலையிலுள்ள விலங்குகளும்‌ தம்முடைய காப்பை நோக்கி வாழும்‌ பேட்டிற்கு ஆதாரம்‌ காட்டுவதால்‌, பிராட்டியோடு 
உறையும்‌ பெருமான்‌ நம்மிடம்‌ ஆதாரங்கொண்டு காப்பான்‌ என்பது ஆழ்பொருள்‌. 
எம்பெருமான்‌ பிராட்டியை உவப்பிக்கும்படியைக்‌ கூறுதல்‌ இதற்கு உள்ளுறைப்‌ பொருள்‌. 

எம்பெருமானார்‌ (ஸ்ரீ ராமானுஜர்‌) திருமலைக்கு எழுந்தருளி, த்வயத்தின்‌ பொருளைத்‌ திருமத்திரத்தோடும்‌ சரம 
ஸ்லோகத்தோடும்‌ சேர்த்து இனிமைப்படுத்தி உபந்யஸித்தருளினபோது, அனந்தாழ்வான்‌ இப்பாசுரத்தை ஸ்வாமி பரமாக நிர்வஹித்தருளினார்‌. 

திருமந்திரம்‌, துவயம்‌, சரமஸ்லோகம்‌: 
இப்பாசுரத்தில்‌, இளமூங்கில்‌ - 'ஓம்‌ நமோ நாராயணாய: என்கிற திருமந்திரம்‌. 
'ஓம்‌' என்பது பிரணவம்‌ எனப்படும்‌. ப்ர  நவம்‌ - ப்ரணவம்‌, எப்பொழுதும்‌ புதிதானது, இளமையானது என்று பொருள்‌. 
இங்கே 'இள' என்பது பிரணவத்தைக்‌ குறிக்கும்‌. 
மூங்கில்‌ கிருஷ்ணாவதாரத்தில்‌ புல்லாங்குழல்‌ கொடுத்தது; எனவே நாராயணனைக்‌ குறிக்கும்‌. 
'வேங்கடவன்‌ 'ஓம்‌ நமோ நாராயணாய என்கிற திருமந்திர வடிவினன்‌; 
இளமூங்கில்‌ குழல்‌  ஊதிய கிருஷ்ணாவதாரக்‌ கூறுடையவன்‌. தருபூலையில்‌ விளைந்த 
இளமூங்கில்‌ இங்கே வேங்கடவனையே சிறப்பாகக்‌ குறிக்கும்‌. 
திருமந்திரம்‌ வைணவர்களுக்கு இயல்பானது; எனவே இளமூங்கில்‌ "இயல்‌ தமிழ்‌" ஆகிறது! 

இருகண்‌ - துவயம்‌. 
“ஸ்ரீமந்‌ நாராயண சரணெள சரணம்‌ ப்ரபத்யே; ஸ்ரீமதே நாராயணாய , நம:' என்பதே இரண்டு அடிகளையுடைய துவய மந்திரம்‌.
எனவே இங்கு இளமூங்கிலில்‌ உள்ள இரண்டு கணுக்கள்‌ துவயத்தைக்‌ குறிக்கும்‌
ஆண்‌ யானை பெண்‌ யானைக்கு இருகண்‌ இளமூங்கில்‌' சத்துணவை அன்புடன்‌ ஊட்டுவது போலவே, துவய மந்திரத்தை வைகுந்தத்தில்‌ 
முதன்முதலாக ஸ்ரீமந்‌ நாராயணன்‌, மகாலட்சுமிப்‌ பிராட்டீயாருக்கு உபதேசித்து, ஊட்டி உவந்தான்‌. 
ஆண்‌ யானையை எம்பெருமானுக்கு உவமையாகக்‌ கூறுதல்‌ மரபு; எனவே பெண்‌ யானை பிராட்டிக்கு உவமையானது; 
உவகை ஊட்டும்‌ உவமை! 
அலர்மேல்‌ மங்கையுறை மார்பினன்‌. ஆகையாலே நம்‌ ஸ்ரீநிவாஸன்‌ துவயமந்திர வடிவினன்‌ ஆகிறான்‌. 
இருவர்‌  இணைந்து இசைத்ததால்‌, 'இருகண்‌' இசைத்தமிழே!
இருகண்‌ இளமூங்கிலின்‌ குழலோசையுடன்‌, இலக்குமி-நாராயணன்‌ இருவரும்‌ இணைந்து இசைத்த இன்னிசை விருந்தே துவயம்‌. 

தேன்‌ கலந்து - சரம ஸ்லோகத்தைக்‌ கலந்து. ““ஸர்வதர்மான்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ”' (அனைத்து தர்மங்களையும்‌ 
கைவிட்டு, என்னையே சரணடை) என்னும்‌ கீதையின்‌ சுலோகம்‌ இது. சரம ஸ்லோகம்‌, மிகவும்‌ சுலபமான இறுதி ௨பாயத்தைக்‌ 
கூறுவதால்‌ பக்தர்களுக்குத்‌ தேன்‌ போன்றது, எனவே இதைத்‌ “தேன்‌' என்றார்‌. 
'மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ (என்னையே சரணம்‌ அடை) என்பதையே வேங்கட கிருஷ்ணன்‌ தனது வலது 
திருக்கையால்‌, திருவடிகளைக்‌ காட்டி, நமக்கு உபதசித்துக்‌ கொண்டிருக்கிறான்‌. இதை நாடகமாகவே நடித்து, அபிநயமும்‌ 
பிடித்துக்‌ காட்டுவதால்‌ ஏழுமலையான்‌ சரம சுலோக ச8ரனே ஆகி, அசல்‌ பார்த்தசாரதியையும்‌ அசத்திவிடுகிறான்‌! எனவே 'தேன்‌ 
கலந்த' ஆழ்வார்‌ பாசுரம்‌ தேன்போன்ற நாடகத்தமிழ்‌ ஆகவே தித்திக்கிறது. 
திரு.மலையில்‌ ஸ்ரீராமானுஜர்‌ உபதேசம்‌: 
திருமலையில்‌ திரிந்த ஆண்‌ யானை, பேடைக்கு 'இருகண்‌ இளமூங்கில்‌ தேன்‌ கலந்து' ஊட்டியது.
அதுபோலவே, ஸ்ரீராமானுஜர்‌. திருமலையில்‌ அனந்தாழ்வான்‌ முதலிய சீடர்களுக்குத்‌ திருமந்திரம்‌, துவயம்‌, சரமஸ்லோகம்‌ ஆகிய 
மூன்றையும்‌ குழைத்துத்‌ தாயினும்‌ சாலப்‌ பரிந்து ஊட்டினார்‌ என்பதை அறிகிறோம்‌. 

பெருந்தமிழரின்‌ பெருந்தன்மை: 
திருமந்திரம்‌, துவயம்‌, சரமஸ்லோகம்‌ ஆகியவை சம்ஸ்‌கிருதத்தில்‌ அமைந்தவை. ஞானத்தமிழ்‌ புரிந்த 
பூதத்தாழ்வாரோ, 'பெருந்தமிழன்‌ யானே! யானே! யானே! என்று மும்முறை ஒரே பாசுரத்தில்‌ பெருமிதத்துடன்‌ மார்தட்டியவர்‌. 
பார்த்தார்‌ ஆழ்வார்‌. மூன்று சம்ஸ்கிருத மந்திரங்களையும்‌ முறையே 'இளமூங்கில்‌' இயல்‌ தமிழ்‌; 'இருகண்‌' இசைத்‌ தமிழ்‌; 
“தேன்‌ கலந்த நாடகத்‌ தமிழ்‌ என்று உள்ஞ்றைப்‌ பொருளாகவே வைத்துப்‌ பாடிவிட்டார்‌. மூன்று தமிழையும்‌ ஒரே பாசுரத்தில்‌ 
ஒன்றாகக்‌ குழைத்து, அலர்மேல்‌ மங்கைத்‌ தாயினும்‌ சாலப்‌ பரிந்து நமக்கு ஊட்டும்‌ இவரல்லவோ முத்தமிழ்‌ வித்தகர்‌, 
ஸர்வமந்த்ர ஸ்வதந்த்ரர்‌! ஸ்ரீராமானுஜர்‌ இருமலையில்‌ அன்று ஏீடர்களுக்கு மட்டுமே புகட்டியதை, ஆழ்வார்‌ இன்றும்‌ தமிழர்கள்‌ 
அனைவருக்கும்‌ ஊட்டிக்‌ கொண்டிருப்பதால்‌, இதைப்‌ *பெருந்தமிழரின்‌ பெருந்தன்மை' என்றோம்‌. 

வேங்கடத்தில்‌ மதவேழம்‌ மாப்பிடியோடு கூடி, தேன்‌ கலந்த இளமூங்கில்‌ ஊட்டியதைப்‌ பாடினார்‌ பூதத்தார்‌;
கூடியதைப்‌  பாடிவிட்டார்‌, நாம்‌ ஊடியதைப்‌ பாடுவோம்‌ என்று பேயாழ்வார்‌ அருளிச்‌ செய்துள்ளார்‌. 

புரிந்து மதவேழம்‌ மாப்பிடியோடு ஊடி 
திரிந்து சினத்தால்‌ பொருது - விரிந்தசீர்‌ 
வெண்கோட்டு முத்து உதிர்க்கும்‌ வேங்கடமே! மேலொருநாள்‌ 
மண்கோட்டுக்‌ கொண்டான்‌ மலை. (ஸ்ரீபேயாழ்வார்‌ -45). 

வேழம்‌ - ஆண்யானை, பிடி - பெண்யானை; புரிந்து - கூடி, கலந்து; கோடு - யானை, பன்றிகளின்‌ தந்தம்‌; 'விரிந்த சர்‌ - வீரச்ரீ நிறைந்த. 

மதம்‌ பிடித்த ஆண்‌ யானை பெண்‌ யானையுடன்‌ கூடி, பின்பு கலகம்‌ ஏற்பட்டதால்‌ ஊடி அதனைப்‌ பிரிந்து சென்றது. அதனால்‌ 
ஏற்பட்ட கோபத்திற்குப்‌ போக்குவீடாக வேழம்‌ அங்குமிங்கும்‌  திரிந்து கோபத்தினால்‌  மணிப்பாறைகளில்‌ மோதி, 
வீர ஸ்ரீயையுடைய தனது வெண்மையான தந்தங்களிலிருந்து முத்துக்களை உதிர்க்கறது. 
இந்தத்‌ திருவேங்கடமே முன்னொரு காலத்தில்‌, தன்னுடைய கோரைப்பல்லினால்‌ பூமியை அகழ்ந்தெடுத்த ஆதிவராகப்‌ பெருமாளின்‌ மலை. 
பொருது: 
போர்‌ செய்து; திருமலையிலுள்ள பளிங்குப் பாறைகளிலே யானை தன்‌ நிழலைக்‌ கண்டு, எதிர்யானையென்று பிரமித்து 
அதனோடே போர்‌ செய்கின்றதாகவும்‌ கொள்ளலாம்‌. 
திருமலையிலே ஸ்ரீ வேங்கடேச அவதாரத்திற்கு முன்பே ஆதிவராகர்‌ சுவாமி புஷ்கரணியின்‌ கரையில்‌ ததால்‌ பல 
மங்களாசாஸனம்‌ செய்கிறார்‌. 

எம்பெருமானைப்‌ பெறுவதற்கு எங்கோ போக வேண்டுமென்று நினைக்க வேண்டா. திருவேங்கடமே அவனது திருமலையாம்‌. 
மதயானைகள்‌ நிறைந்த மாமலை அது. யானை பெண்யானையோடு கலந்திருந்தபோது ஏதோ கலஹம்‌ ஏற்பட 
அதனால்‌ விட்டுப்பிரிந்து அந்தக்கோபம்‌ தாங்காது மதத்தினால்‌, செய்வது தெரியாமல்‌ மலைப்பாறைகளில்‌ தந்தங்களால்‌ குத்திப்‌ 
போர்புரிய அப்போது ச்ரேஷ்டமான அதன்‌ தந்தங்களில்‌ உண்டான முத்துக்கள்‌ 8ழே கண்டவிடத்தில்‌ சிதறி விழுகின்றன. 
இத்தகைய  வேங்கடமே முன்‌ பூமியைக்‌ இடந்தெடுத்த ஆதி வராஹமூர்த்தி பூதேவியோடு உல்லாசமாய்‌ வஸிக்கப்‌ பரமபதத்தினின்று 
கொணர்ந்த திருமலையாம்‌. 
முதலீரடிகளாலே தன்னை அண்டி சிற்சில பலன்களை அபேகூஷிப்பார்க்கு (வேண்டுவோர்க்கு) 
எம்பெருமான்‌ அதனையளித்து அதில்‌ வைராக்யம்‌ வர வழியும்‌ ஏற்படுத்துவதும்‌, 
“விரிந்தசீர்‌  - முத்துதிர்க்கும்‌' என்றதால்‌ அப்படிப்பட்டவன்‌ சேகரித்த பணத்தையும்‌ விடுவதும்‌ சொன்னதாம்‌. 
இதனால்‌ அர்த்தகாமங்களை த்யாகம்‌ செய்வித்து வினைகளைப்‌ போக்கும்‌ ௮ம்மலை என்றபடி. 

இப்படி தந்தங்களினின்று முத்து உதிர்த்து, அர்த்த காமங்களை விட்டொழிக்கின்றது வேங்கடத்து வேழம்‌. 
வேங்கடவன்‌ அதனுடைய வினைகளைப்‌ போக்கி, நற்புத்தியளிக்கிறான்‌. 
களிறு  கஜேந்திரனைப்‌ போலவே ஸ்ரீ வேங்கடேசனைக்‌ கண்டு வணங்குகிறது. இக்காட்சியை அடுத்து அருளிச்‌ செய்கிறார்‌. 

புகுமதத்தால்‌ வாய்பூசிக்‌ கீழ்தாழ்ந்து அருவி 
உகுமதத்தால்‌ கால்கழுவிக்‌ கையால்‌ - மிகுமதத்தேன்‌ 
விண்டமலர்‌ கொண்டு விறல்‌ வேங்கடவனையே 
கண்டு வணங்கும்‌ களிறு. --ஸ்ரீ பேயாழ்வார்‌ -

புகு - வாயில்‌ புகும்‌; வாய்‌ பூசி.- கொப்பளித்து; உகு - பெருகிற; மிகு. மதத்தேன்‌ - மிகுந்த மதத்தை விளைவிக்கக்கூடிய 
தேன்‌; விண்ட - மலர்ந்த; விறல்‌ - வீரம்‌, வெற்றி மிடுக்கு; களிறு -ஆண்‌ யானை. 

திருமலையிலுள்ள ஆண்‌ யானை, தன்‌ மத்தகத்தினின்றும்‌, கன்னங்களினின்றும்‌ வாயில்‌ புகும்‌ மதஜலத்தால்‌ வாய்‌ 
கொப்பளித்து, ஆசமனஞ்செய்கறது. மேலிருந்து கீழ்வரை அருவிபோல்‌ பெருகும்‌ மதநீரினால்‌ கால்களையும்‌ கழுவிச்‌ சுத்தம்‌ 
செய்துகொள்கிறது. மிகுந்த மதத்தை (களிப்பை) உண்டாக்கக்கூடிய தேன்‌ நிறைந்ததும்‌, அப்பொழுதே 
மலர்ந்ததுமான பூவைத்‌ துதிக்கையில்‌ எடுத்துக்கொண்டு, வெற்றி மிடுக்கு நிறைந்த ஸ்ரீ வேங்கடாசலபதியை, சேவித்து வணங்குகின்றது. 

பெருமானை அண்டுவதற்குத்‌ தகுதி வேண்டாமோ? எனில்‌, 
விலங்குகளும்‌ கூட அவனை எளிதில்‌ பற்றித்‌ தொண்டு செய்கின்றன என்கிறார்‌, 

திருமலையில்‌ மதயானைகள்‌ தாமரைப்‌ பூக்களைப்‌ பறித்து  அப்பன்‌ திருவடிகளில்‌ சமர்ப்பித்து வணங்குகிறபடியை ஒரு 
சமத்காரம்‌ பொலியப்‌ பேசுகிறார்‌. எம்பெருமான்‌ ஸந்நிதியில்‌ தொண்டு செய்யப்போமவர்கள்‌ வாயைக்‌ கொப்பளித்துக்‌ 
கைகால்களை சுத்தி செய்துகொண்டு, புஷ்பங்களை எடுத்துக்கொண்டு போவது வழக்கம்‌. 
இவ்வாசாரம்‌ சாஸ்த்ரவச்யர்களான மானிட சாதியர்க்கு மாத்திரமல்ல, 
இருமலையிலுள்ள அஃறிணைப்‌ பொருள்கட்கும்‌ கோல்விழுக்காட்டிலே அமைந்திருக்கின்றது என்றார்‌. 

விறல்‌ வேங்கடவன்‌: 
இங்ஙனே திருமலையிலுள்ள திர்யக்‌ ஜந்துக்களும்‌ தன்னை வணங்குமாறு ஜ்ஞாநத்தைக்‌ , கொடுக்க சக்தனான 
திருவேங்கடமுடையான்‌ என்ப. 

விறல்‌ வேங்கடவனையே -- விறல்‌ - வெற்றியுடைய; ““மோக்ஷ்பர்யந்தமான பலன்‌ அளிக்கும்‌ 
திருவேங்கடமுடையானிடம்‌ பாரமை காந்த்யம்‌ (இது ஈசுவரனையே உபாயமாகப்‌ பற்றி, ஆசாரியன்‌ சொல்படி நடக்கும்‌ 
மிகவுயர்ந்த பக்தனின்‌ நிலை) கொள்கிறது களிறு. 
திர்யக்குகளும்‌  திருவேங்கடமுடையானை ஆசாரத்துடன்‌ தொழ முயன்று வருகின்றன என்றால்‌ அவனுடைய வெற்றியை என்னவென்று சொல்வது? 
வேங்கடம்‌ வெற்றி பெறும்‌ ஸ்தானம்‌ என்று ஸ்ரீ 
தேசிகனும்‌ அருளிச்‌ செய்தார்‌. வல்வினைகள்‌ போர்புரிய அவற்றை 
மாய்க்க ப்ரயாஸப்பட்டு (பாடுபட்டு) கருணை என்ற கவசமணிந்து 
கையும்‌ வில்லுமாய்‌ வெற்றி பெறுமிடமான வேங்கடமேறி அருளினான்‌ சார்ங்கமேந்தும்‌ திருமால்‌ என்றாரே". 

“சுவாமி புஷ்கரிணிப்‌ பொய்கையிலே நீராடி, தேன்‌ சொட்டும்‌ மலரைத்‌ துதிக்கையில்‌ எடுத்துக்கொண்டு யானை 
திருவேங்கடவனை வணங்குகிறது”! என்னும்‌ இப்பாசுரம்‌ நமக்கு உடனே கஜலட்சுமியைக்‌ கண்முன்‌ கொண்டு வந்து நிறுத்துகிறது. 
இரண்டு கைகளில்‌ தாமரைப்‌ பூக்களையேந்தி, ஒரு பொய்கை நீரில்‌ விரிந்த ஆயிரம்‌ இதழ்களுடைய தாமரையின்மீது மகாலட்சுமிப்‌ 
பிராட்டி, அலர்மேல்‌ மங்கையாக நின்று கொண்டிருக்கிறாள்‌, ஸ்ரீ வேங்கடேசனைப்‌ போலவே அவளுடைய முன்‌ வலதுகரம்‌ 
அபயஹஸ்தமாக விளங்குகிறது; தங்கக்‌ கையினாலே பொற்காசுகளை பக்தர்களுக்கு அள்ளி வீசிக்‌ கொண்டிருக்கிறாள்‌ 
அன்னை! இரண்டு பக்கங்களிலும்‌ இரண்டு யானைகள்‌ உயரத்தூக்கிய துதிக்கையில்‌ தாமரையை ஏந்திக்கொண்டு, 
இலட்சுமிக்கு சமர்ப்பிக்க, நீரில்‌ வந்து கொண்டிருக்கின்றன. 
சாதாரணமாக மலர்மகள்‌ இவ்விதமே சித்தரிக்கப்படுகிறாள்‌. யானைகளின்‌ நெற்றியில்‌ மகாலட்சுமி வாசம்‌ செய்வதாகக்‌ கூறுவர்‌. 
இவ்வாறு கஜங்களால்‌ தொழப்படுவதால்‌, அலர்மேல்‌ மங்கைத்‌ தாயார்‌ 'கஜலட்சுமி' என்றும்‌ அழைக்கப்படுவாள்‌. 

திருமலை கஜேந்திரன்‌ அலர்மேல்‌ மங்கையை வணங்காமல்‌ ஸ்ரீநிவாஸனையே தொழுவது ஏன்‌? பிராட்டிக்குத்‌ திருமலையில்‌ 
கோயில்‌ இல்லை. “அகலகில்லேன்‌ இறையும்‌' என்று ஸ்ரீநிவாஸனின்‌ திருமார்பிலேயே மகாலட்சுமி வாசம்‌ செய்வதால்‌, 
அப்பன்‌ 'அலர்மேல்‌ மங்கையுறை மார்பன்‌' என்றே பிரசித்தமானான்‌. திருமலை கஜேந்திர ஆழ்வார்‌ இவ்வளவையும்‌ 
தெரிந்து, வைத்திருக்கிறார்‌! யானை புத்திசாலி அல்லவா? 

“வேழம்‌: வழிபடும்‌ வேங்கடம்‌' என்று பேயாழ்வார்‌. காட்டும்‌ இந்த கஜேந்திர ஆழ்வாரை நினைத்தே தலைப்பும்‌ இங்கே சூட்டினோம்‌. 
மனிதர்களில்‌ சிலர்‌ கடவுள்‌ இல்லை: என்று வணங்காமுடிகளாகத்‌ திரிவதைப்‌ போலவே, இருமலையிலும்‌ 
யானைகள்‌ திரிந்ததுண்டு. இவைகளின்‌ முடிவு பரிதாபகரமானது! 
இதிலூட்டும்‌ யானைக் காட்சி ஒன்றைக்‌ கண்முன்‌ கொண்டு வந்து நிறுத்தி, கீழ்ப்பாசுரத்தில்‌ நம்மை அசத்திவிடுகிறார்‌ ஆழ்வார்‌! 

களிறு முகில்குத்தக்‌.கை எடுத்து ஓடி 
"ஒளிறு மருப்பு ஒசிகை யாளி- பிளிறி 
விழக்‌ கொன்று நின்று அதிரும்‌ வேங்கடமே! மேனாள்‌ 
குழக்கன்று கொண்டு எறிந்தான்‌ குன்று (ஸ்ரீ பேயாழ்வார்‌ )

களிறு - யானை; முகில்‌ - மேகம்‌; கை - துதிக்கை; ஒளிறு ஒளிரும்‌, ஒளிவீசும்‌; மருப்பு - கொம்பு, தந்தம்‌; 
ஓசிகை - ஒடிக்கின்ற கை; பிளிறி - யானை வாய்விட்டு அலறி; அதிரும்‌ - பெருமுழக்கம்‌ செய்யும்‌; 
மேனாள்‌ - மேல்‌ நாள்‌, முன்னொரு காலம்‌; குழக்கன்று - இளம்‌ கன்று, இங்கு வத்ஸாசுரன்‌. 

திருவேங்கடமலையில்‌ யானையானது தனது துதிக்கையைத்‌ தூக்கிக்கொண்டு, வேசுமாக ஓடி, மதயானை போலெழுந்த 
மேகங்களைக்‌ குத்துகிறது. இதைக்‌ கண்ட யாளியானது அந்த யானையின்‌ ஒளிவீசும்‌ தந்தங்களைக்‌ கையினால்‌ முறிக்கிறது; 
யானையை அங்கேயே வாய்விட்டு அலறி விழும்படிக்‌ கொன்றும்‌ விடுகிறது. பிறகு யாளிஅங்கேயே நின்று கொன்டு பெருமுழக்கம்‌ செய்கிறது. 
முன்னொரு காலத்தில்‌ இளங்கன்றின்‌ வடிவெடுத்துக்‌ கொண்டு தன்னைக்‌ கொல்ல வந்த வத்ஸாசுரனை எறிதடியாகக்‌ 
கொண்டு, விளாம்பழ வடிவிலிருந்த கபித்தாசுரனின்‌ மீது எறிந்து, இரண்டு அசுரர்களையும்‌ கொன்ற: ஸ்ரீ கிருஷ்ணன்‌ நித்யவாசம்‌ 
செய்வது திருமலையாகும்‌. 

யாளி - சிங்கத்தைப்‌ போல்‌ வலிய மிருகம்‌; இதன்‌ சிற்பங்களைக்‌ கோயில்களில்‌ காணலாம்‌. இப்படி ஒரு மிருகம்‌ 
இருந்ததா, கவிஞர்களின்‌ கற்பனையா என்று தெரியவில்லை. இங்கே 'யாளி' என்பதை சிங்கம்‌ என்றும்‌ கொள்ளலாம்‌. 

“மதயானை போலெழுந்த மாமுகில்காள்‌!"! '*கரிய மாமுகற்‌ படலங்கள்‌ கடந்தவை முழங்கிடக்‌ களிறென்று”” என்றும்‌ 
சொல்லுகிறபடியே யானைக்கும்‌, மேகத்திற்கும்‌ ஒப்புமை பிரஸித்தம்‌. ஆகவே திருமலையிலுள்ள யானையானது 
மலைமுகட்டில்‌ படிந்திருந்த மேகத்தை எதிரியானதொரு 
"யானையென்று மயங்கிப்‌ பெரிய வேகத்தோடே சென்று துதிக்கையினால்‌ குத்த, இதனை ஒரு யாளி கண்டு 'இக்களிற்றுக்கு 
இவ்வளவு மதமா?! என்று சினந்து ஓடி வந்து ௮வ்‌ யானையின்‌ மேற்‌ பாய்ந்து அதன்‌ கொம்பை முறித்தெறிந்து அது வாய்விட்டு 
அலறிக்கொண்டு விழும்படியாகக்‌ கொலையுஞ்‌ செய்து, அவ்வளவிலும்‌ சீற்றம்‌ தணியாமையாலே அவ்விடத்திலேயே 
நின்று மற்றுள்ள மிருகங்களும்‌ மண்ணுண்ணும்படியாக கர்ஜிக்கின்றதாம்‌ திருமலையில்‌. 
பாசுரத்தின்‌ உட்ககுத்து: 
 “தனது அன்பர்களின்‌ விரோதிகளைப்‌ போக்கும்‌ பெருமான்‌ உறையும்‌ திருவேங்கட மலையில்‌ விலங்குகளும்‌ இதே 
இயல்புடையன”' என்கிறார்‌. 
அண்டினவரின்‌ தாபத்தைப்‌ போக்கித்‌ திருமால்‌: போல்‌ விளங்கும்‌ முகிலை மதம்‌ பிடித்த யானையானது தனக்குத்‌ 
துதிக்கை, எம்பெருமானைத்‌ துதித்துத்‌ தொழ ஏற்பட்டதென எண்ணாமே உதறித்தள்ள வாய்த்ததாக வைத்து ஓடி அதனால்‌ 
குத்தும்போது, முகில்‌ வண்ணனைப்‌ போன்ற முகிலை விரோதிக்கும்‌ அதை மருப்பொசிக்க (தந்தத்தை ஓடிக்கக்‌) 
கையோங்கி விரைந்து வந்து அது கூச்சலிட்டு விழுந்தழியும்படி கொன்று நின்று யாளியானது, விரோதிகளை வெல்லவே 
ஏற்பட்டது வேங்கடமென மீண்டும்‌ முழங்கி வரும்‌. 
௮சுரனாய்‌ வேற்றுருவம்‌ கொண்டு தீங்கிழைக்க வருமவரைக்‌ கொல்லும்‌ கண்ணனுக்கு மேக மண்டலமளாவிய இம்மலையே தகுமான 
திருப்பதி யென்றபடி. 
மேகமண்டலம்‌ அளாவியது மலையென்றார்‌. ஆச்ரித விரோதிகளைக்‌ (ஆச்ரிதர்‌ - பக்தர்‌] கொல்வது கூறப்பட்டது. 

திருமலையில்‌ திருமாலிடம்‌ பக்தி பூணாமல்‌ திரிந்த யானையை யாளி அடித்துக்‌ கொன்றதைக்‌ கண்டோம்‌. 
இது பேயாழ்வார்‌ நீட்டிய சொல்லோவியம்‌. இதையே தூக்கி சாப்பிட்டு விடும்‌ காட்சியைத்‌ திருமழிசையாழ்வார்‌ சித்தரிக்கிறார்‌! 
குருவை மிஞ்சிய சிஷ்யர்‌ போலும்‌! திருமலையில்‌ யானைகளை அப்படியே சுளையாக விழுங்கி ஏப்பம்‌ விடும்‌ பிரம்மாண்டமான 
மலைப்பாம்புகள்‌ உண்டு என்றார்‌. பயந்து விடாதீர்கள்‌. இந்நாளில்‌ அப்படி எதுவும்‌ இருப்பதாகத்‌ தெரியவில்லை! 
மனிதனே இன்று உலகிலுள்ள விலங்குகளையெல்லாம்‌ சீக்கிரம்‌ முடித்து விடுவான்‌ போலிருக்கிறது; பயப்பட வேண்டியது அவையே! 

அழைப்பன்‌ திருவேங்கடத்தானைக்‌ காண 
இழைப்பன்‌ திருக்கூடல்‌ கூட -- மழைப்பேர்‌ 
அருவி. மணிவரன்றி வந்து இழிய யானை 
வெருவி அரவு ஒடுங்கும்‌ வெற்பு --ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ 

வரன்றி வந்து இழிய - திரட்டிக்‌ கொண்டு வந்து விழ; வெருவி - பயந்து; அரவு - பாம்பு; வெற்பு - மலை. 

திருவேங்கடத்தானைக்‌ காண விரும்பி நான்‌ வாய்விட்டு அழைக்கிறேன்‌. மழைபோல்‌ பொழியும்‌ பெரிய அருவிகள்‌ 
அங்குமிங்கும்‌ கிடக்கும்‌ இரத்தினங்களைத்‌ திரட்டிக்கொண்டு வந்து திருமலையில்‌ விழுகின்றன. 
இரத்தினங்கள்‌ வீசும்‌ ஒளியை அக்னிப்பிழம்பாக நினைத்து யானைகள்‌ பயந்து ஓடுகின்றன; 
மலைப்பாம்புகள்‌ அதை மின்னல்‌ என்று நினைத்து மயங்கி புற்றுக்குள்‌ ஒடுங்கிக்‌ கொள்கின்றன. 
இத்தகைய திருமலை சென்று சேரவேண்டுமென்று விரும்பி நான்‌ 'திருக்கூடல்‌' என்றும்‌ சகுனம்‌ இழைத்துப்‌ பார்க்கிறேன்‌. . 
திருக்கூடல்‌ இழைப்பன்‌: 
கூடல்‌ இழைத்தலாவது, ஒரு பெரிய வட்டம்‌ வரைந்து, அதற்குள்‌ சுழி சுழியாக முழுவதும்‌ எழுத வேண்டும்‌. 
பிறகு அவற்றை இரண்டிரண்டாகக்‌ கூட்டி மீதமில்லாமல்‌ இருந்தால்‌ வேண்டியது நடக்கும்‌; 
இல்லாவிடில்‌ கூடாது என்று அறிவது 
பழந்தமிழர்‌ சகுனம்‌ பார்க்கும்‌ வகைகளில்‌ ஒன்று. சுழிகளை சுழிக்கும்போதே சாமர்த்தியமாக முன்கூட்டியே எண்ணிக்கையைக்‌ 
கூட்டி, இரட்டைப்‌ படையில்‌ முடியுமாறு பார்த்துக்‌ கொள்ளக்கூடாது! 
இது கூடல்‌, கூடல்‌ இழைத்தல்‌, கூடல்‌ வளைத்தல்‌, கூடற்குறி என வழங்கப்படும்‌. 

கூடலிழைத்தல்‌ பெண்டிர்க்கே உரியதென்றும்‌, இங்கு ““இழைப்பன்‌ திருக்கூடல்‌”! என்று ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தது 
நாயகி ஸமாதியில்‌ என்றும்‌ அழகிய மணவாளச்சீயர்‌ அருளிச்செய்வர்‌. 

பின்னடிகட்கு இரண்டு வகையாகக்‌ கருத்துரைக்கலாம்‌.... 
அருவிகளில்‌ விழுந்த ரத்னங்களைக்‌ கண்ட யானைகள்‌ ''இவை கொள்ளிவட்டம்‌'” என்று ப்ரமித்து ஓடப்புக்கவாறே 
மலைப்பாம்பின்‌ வாயிலே விழும்படியாயின எனவுமாம்‌. 
சில மலைப்பாம்புகள்‌ யானையைப்‌ பார்த்து ௮ஞ்சி ஒடுங்கி ஓடிப்போய்விடும்‌ என்றும்‌, 
பல மலைப்பாம்புகள்‌ யானையை அணுகி விழுங்கி விடுமென்றும்‌ தமிழ்‌ நூல்களால்‌ தெரிகிறது. 

“திரையன்‌ பாட்டு' என்ற ஓர்‌ பழைய நூலில்‌-- 
“கடுங்கண்‌ யானை நெடுங்கை சேர்த்தி 
திடங்கொண்டறைதல்‌ திண்ணமென்றஞ்சிப்‌ 
படங்கொள்‌ பாம்பும்‌ விடரகம்புகூஉம்‌ 
தடங்கொள்‌ உச்சித்‌ தாழ்வரையடுக்கத்து' என்றதனால்‌ மலைப்பாம்பு யானையைக்‌ கண்டு அஞ்சி ஒளிக்கும்‌ என்பது தெரிகின்றது. 

சிறிய கண்ணையுடைய யானை தனது நீண்ட துதிக்கையால்‌ பலமாக அறைந்து விடுவது நிச்சயம்‌ என்று பயந்து, படமெடுக்கும்‌ 
பாம்பு, மலைச்சரிவிலுள்ள புற்றில்‌ புகுந்து கொள்ளும்‌. 
*இடிகொள்‌ வேழத்தை எயிற்றொடும்‌ எடுத்துடன்‌ விழுங்கும்‌ 
கடியமாசுணம்‌ கற்றறிந்தவர்‌ என அடங்கிச்‌ 
சடைகொள்‌ சென்னியர்‌ தாழ்விலர்‌ தாமித்தேறப்‌ 
படிகடாமெனத்‌ தாழ்வரை கிடப்பன பாராய்‌” -என்ற கம்பராமாயணப்‌. பாட்டிலிருந்து மலைப்பாம்பு யானையை விழுங்கும்‌ எனத்‌ தெரிகிறது. 

கம்பர்‌ பாடலின்‌ கருத்து: 

இடிபோல்‌ முழங்கும்‌ யானையை தந்தத்துடன்‌ எடுத்து, உடனடியாக மலைப்பாம்பு விழுங்கிவிடும்‌. இருப்பினும்‌ அது 
சடைமுடி தரித்த முனிவர்களைக்‌ கண்டதும்‌ கற்றறிந்தவர்களைப்போல அடங்கி, அவர்கள்‌ தன்னை மிதித்து 
மலையேறுவதற்கு ஏற்றபடி, மலைச்சரிவில்‌ படிபோல்‌ படுத்துக்கொள்கிறது. 

மிகவும்‌ அற்புதமான சொல்லோவியத்தைக்‌ கவிச்சக்கரவர்த்தி தீட்டியுள்ளார்‌. முதலாழ்வார்களைப்‌ போன்ற மகான்களின்‌ 
முன்னிலையில்‌ யானையை விழுங்கும்‌ பாம்பும்‌ சாதுவாக விடுகிறது! சத்சங்கம்‌ அத்தனை மகத்துவம்‌ வாய்ந்தது. 
“'படியாய்க்‌ இடந்து உன்‌ பவளவாய்‌ காண்பேனே! என்று திருமலையில்‌ படியாகக்‌ இடந்து வேங்கடவனின்‌ பவளவாய்‌ காண விரும்பிய 
குலசேகர ஆழ்வாரைப்‌ போல, கம்பநாடரின்‌ மலைப்பாம்பு, 
முனிவர்களும்‌, அடியார்களும்‌ கிடந்து இயங்கும்‌ படியாகவே, சாஷ்டாங்கமாகத்‌ தரையில்‌ படுத்துவிடுகிறது. 

**யானையைக்‌ கண்டு மலைப்பாம்பு அஞ்சும்‌!" என்று “திரையன்‌ பாட்டுப்‌' பாடிய புலவர்‌; 
''யானையை அது .விழுங்கி விடும்‌!” என்று பாடிய கவிச்சக்கரவர்த்தி கம்பர்‌; 
இருவரையுமே  சேர்த்து விழுங்கிவிடும்‌ அளவிற்குக்‌ கவித்திறம்‌ படைத்த 
தெய்வப்புலவர்‌ நம்‌ திருமழிசைப்‌ பிரான்‌ என்பது இப்பாசுரத்திலிருந்து தெரிகிறது. எப்படி என்‌ன்‌றீர்களா? 
குறள்‌ போல்‌ அமைந்துள்ள கடைசி இரண்டு அடிகளைப்‌ பாருங்கள்‌-- 

“அருவி மணிவரன்றி வந்து இழிய யானை 
வெருவி அரவு ஒடுங்கும்‌ வெற்பு'” என்கிறார்‌. 
இங்கே ''யானை வெருவி அரவு ஒடுங்கும்‌ வெற்பு” என்பதற்கு இரண்டு விதமாகப்‌ பொருள்‌ கூறலாம்‌: 

௮] யானையைக்‌ கண்டு, (அல்லது அருவி அடித்து வரும்‌ இரத்தினத்தை மின்னல்‌ என நினைத்து] பாம்பு ஒடுங்கும்‌ 
திருமலை. இதுவே திரையன்பாட்டின்‌ கருத்து. 

ஆ] அருவி அடித்து வரும்‌ இரத்தினங்களைக்‌ கொள்ளிக்கட்டைகள்‌ என்று நினைத்து ஒடும்‌ யானை, 
மலைப்பாம்பின்‌ வாயிலே புகுந்து ஒடுங்கி, அடங்கும்‌ திருமலை. 
இதுவே கம்பன்‌ கூறிய கருத்து. ்‌ 

இப்படி இருபுலவர்களும்‌ . விரித்துக்கறிய இருவேறு கருத்துக்களை ஒரேயடியாக ஈரடிகளில்‌ ஒடுக்கி விடுகிறார்‌ திருமழிசையார்‌! 

இயற்கை என்னும்‌ இங்கரும்பை ஆராய்ந்து எடுத்து, கவித்திறன்‌ என்னும்‌ உருளையால்‌ ௮தை நெருக்கிச்‌ சாறு பிழிந்து, 
அதில்‌ பக்திரசம்‌ என்னும்‌ பனிக்கட்டியையும்‌ சேர்த்து, உலக ஆசை என்னும்‌ தாகம்‌ தணிய நமக்குத்‌ தருகின்றனர்‌ இன்கவி பாடிய 
இப்பரம கவிகள்‌! 
 
“இயற்கையை நாம்‌ காண்பது ஒரு வகை. நம்‌ மனத்தில்‌ அஃது ஒருவித சலனத்தையும்‌ ஏற்படுத்துவதில்லை. 
அது கவிஞர்களிடம்‌ பல்வேறு வித சலனங்களை ஏற்படுத்தப்‌ பல்வேறு கற்பனைக்‌ காட்சிகளைப்‌ படைக்கத்‌ தூண்டுகின்றது. 
கவிஞர்கள்‌ பக்தர்களாக இருப்பின்‌ அவர்கள்‌ பிறிதோர்‌ உலகத்தையே படைத்து விடுகின்றனர்‌; 
அதில்‌ தத்துவக்‌ கருத்துக்களையும்‌ மிளிரச்‌ செய்து விடுகின்றனர்‌. 
இவை இயற்கையைத்‌ துய்ப்பவர்கட்கு எழிலைக்‌ காட்டி மகழ்விக்கன்றன; முருகுணர்ச்சியையும்‌ தூண்டுகின்றன. 
பக்திக்கண்‌ கொண்டு நோக்குபவர்கட்கு பரவசத்தை ஏற்படுத்திப்‌ பரமனின்‌ விசுவரூப தரிசனத்தையே காட்டி விடுகின்றது. 
இத்தகைய பாசுரங்களைப்‌ படித்து அநுபவிக்கக்‌ கற்றுக்கொள்ளாவிடில்‌ நமக்கு இவ்வுலகில்‌ ஆறுதல்‌ 
அளிக்கும்‌ பொருளே இல்லை என்று ஆகிவிடும்‌'". 

------------

முதலாழ்வார்கள்‌ கண்ட திருமலை 
சித்‌, அசித்‌, ஈசுவரன்‌ என்று மூவகைப்பட்ட வைணவத்‌ தீத்துவம்‌ 'தத்துவத்‌ திரயம்‌' (திரயம்‌ - மூன்று) எனப்படும்‌. 
சித்‌ (உயிருள்ள ஜீவராசிகள்‌), அசித்‌ (ஜடப்பொருள்‌) ஆகிய இரண்டும்‌ ஈசுவரனுக்கு உடல்‌ என்பர்‌; 
இந்த உறவு 'சரீர - சரீரி பாவனை! எனப்படும்‌. அசித்தும்‌ பகவான்‌ படைப்பாதலால்‌ அதுவும்‌ வழிபாட்டிற்குரியது. 

திருமலையின்‌ நாம்‌ கண்ட வானரங்கள்‌, யானைகள்‌, வேடர்கள்‌, குறவர்கள்‌ 'சித்‌' வகையைச்‌ சேர்ந்தவர்‌. 
மலை 'அசித்‌” ஆகும்‌. வைகுந்தத்திலிருந்த கருடாசலமே கருடபகவானால்‌ ஸ்ரீமத்நாராயணன்‌ ஆணைப்படி கொண்டு வரப்பட்டு பூவுலகில்‌ 
வைக்கப்பட்டதால்‌, இருமலை கருடாசலம்‌' எனப்படும்‌. 
ஆதிசேஷனே சேஷகிரியாசு எழுந்தருளியிருப்பதாகக்‌ கூறுவர்‌, 
ஏழுமலை வெறும்‌ கல்‌ அல்ல; எம்பெருமானின்‌ சத்துவகுணமே இறுகத்‌  திருமலையானது எனலாம்‌. 
எனவே வேங்கடம்‌ 'திருமலையாழ்வார்‌' என்றே போற்றப்படும்‌. 
மிகவும்‌ பிரசித்தி பெற்ற இந்த ஆழ்வார்‌ ஏகப்பட்ட திருநாமங்களுடன்‌ எழுந்தருளியிருக்கிறார்‌. 
சிந்தாமணகிரி, 
ஞானகிரி, 
வேங்கடகிரி, 
ஸ்ரீனிவாச கிரி, 
தீர்த்தகிரி, 
சுவர்ணகிரி, 
ஸ்ரீசைலகிரி, 
ஆனந்தகிரி, 
நாராயணகிரி, 
வைகுந்தகிரி, 
வேதகிரி, 
யமகிரி, 
சிம்மகிரி, 
வராககிரி, 
நீலகிரி என்றும்‌, 
சேஷசைலம்‌, 
கருடாசலம்‌, 
வேங்கடாசலம்‌, 
சேஷாசலம்‌ என்றும்‌; 
வேங்கடாத்ரி, 
நாராயணாத்ரி, 
விருஷபாத்ரி, 
விருஷாத்ரி, 
அஞ்சநாத்ரி, 
சேஷாத்ரி, 
ஆநந்தாத்ரி, என்றும்‌ அழைக்கப்படும்‌ ஏழுமலை. 
இருப்பினும்‌ 
வேங்கடம்‌, திருமலை ஆகிய திருநாமங்களே இதற்கு சாதாரணமாக வழங்கப்படும்‌. 

“சென்று சேர்திரு வேங்கடமாமலை 
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே”” என்று நம்மாழ்வார்‌ இருமலையை மங்களாசாஸனம்‌ செய்திருக்கிறார்‌. 
திருமலையாழ்வாரை வணங்கினாலே  நம்முடைய பாவவினைகள்‌ அழிந்து விடும்‌. 
முதல்‌ நான்கு  ஆழ்வார்கள்‌. திருமலையைக்‌ குறித்துப்‌ பாடியுள்ள சில பாசுரங்களை இங்கு காண்போம்‌. 

எழுவார்‌ விடைகொள்வார்‌ ஈன்துழாயானை 
வழுவா வகை நினைந்து வைகல்‌ - தொழுவார்‌ 
வினைச்சுடரை நந்துவிக்கும்‌ வேங்கடமே! வானோர்‌ 
மனச்சுடரைத்‌ தூண்டும்‌ மலை. (-ஸ்ரீ பொய்கையாழ்வார்‌ -மு.தி. 26) 

வழுவா வகை - பிரியாமல்‌ இருக்க வகை; வைகல்‌ - இனந்தோறும்‌; நந்துவிக்கும்‌ - அணைக்கும்‌, அழிக்கும்‌; 
மனச்சுடர்‌  திருவுள்ளமாகிய விளக்கு. 

சிலர்‌ (எழுவார்‌) செல்வம்‌ வேண்டி ஏழுமலையானை வணங்குவர்‌; 
சிலர்‌ (விடை கொள்வார்‌) கைவல்யம்‌ (மோட்சம்‌) வேண்டி, அதைப்‌ பெற்றதும்‌ அவனை விட்டுப்‌ பிரிவர்‌; 
ஆயினும்‌ பக்தர்கள்‌ இனிய துழாய்‌ (துளசி) மாலைகளணிந்த ஸ்ரீவேங்கடாசலபதியை என்றும்‌ பிரியாமலிருக்க விரும்பி 
௮வனை நாள்தோறும்‌ தொழுவார்கள்‌. அவரவர்களது பாவவினைகளாகிய தீயை ௮ணைக்கக்கூடியது வேங்கடம்‌. 
நித்யஸூரிகளுடைய திருவுள்ளமாகிய விளக்கைத்‌ தூண்டி விளங்கச்‌ செய்வதும்‌ திருமலையே. 
அவதாரத்திற்குப்‌ பிற்பட்டவர்களாகய நாம்‌ தொழுது உய்யுமாறு திருமலையிலே பெருமான்‌ உறைந்துள்ளான்‌. 

கீழ்ப்பல பாசுரங்களில்‌ விபவாவதார சேஷ்டிதங்களை (செயல்களைப்‌) பேசி அநுபவித்த ஆழ்வார்‌, என்றைக்கோ கழிந்த 
அவ்வவதாரங்களின்‌ திருக்குணங்கள்‌ இன்றைக்கும்‌ நன்கு விளங்குமாறு, பின்னானார்‌ (பின்‌ தோன்றியவர்கள்‌) வணங்கும்‌ 
சோதியாக சேவை சாதித்து அருள்கின்ற அர்ச்சாவதாரங்களையும்‌ அனுபவிக்க ஆசை கொண்டு, 
'*தென்னனுயர்‌ பொருப்பும்‌ தெய்வவடமலையும்‌'' என்னும்‌ இரண்டு திருமலைகளுள்‌ 
திருவேங்கடமலையிலே திருவுள்ளஞ்சென்று அவ்விடத்தைப்‌ பேசி அனுபவிக்கிறார்‌ இப்பாட்டில்‌. 
எம்பெருமானிலுங்காட்டில்‌ எம்பெருமானோடு சம்பந்தம்‌ பெற்ற பொருள்களே பரம 
உத்தேச்யமென்று கொள்ளுகிறவர்கள்‌ ஆகையாலே, 
திருவேங்கடமுடையான்‌ வரையில்‌ போகாமல்‌, அவனுடைய சம்பந்தம்‌ பெற்றதான திருமலையோடே தின்று அனுபவிக்கிறார்‌. 

எழுவார்‌: 
இங்கு 'எங்களுக்கு ஐச்வர்யத்தைத்‌ தரவேணும்‌'” என்று பிரார்த்தித்து அது கைப்பட்டதும்‌ எம்பெருமானைவிட்டு எழுந்து 
போகிறவர்கள்‌ என்றாவது, ஐச்வர்யம்‌ வேணுமென்று மேலே மேலே பிரார்த்திக்குமவர்கள்‌ என்றாவது கொள்க. 
இவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது ஐச்வார்ய ப்ராப்திக்கு 
விரோதியான பாவங்களைத்‌ தொலைத்து ஐச்வர்ய விருப்பத்தை நிறைவேற்றுகை. 

விடைகொள்வார்‌ என்றால்‌ விட்டு நீங்குகிறவர்கள்‌ என்கை; 
ஸந்தர்ப்பம்‌ நோக்கி இங்கே கைவல்யார்த்திகளைச்‌ சொல்லுகிறது. 
அவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது ்‌ 
ஆத்மானுபவத்திற்கு விரோதியான பாவங்களைத்‌ தொலைத்துக்‌ கைவல்யாநுபவத்தை நிறைவேற்றுகை. 

ஈன்துழாயானை வழுவாவகை நினைந்து வைகல்‌ தொழுவார்‌ 
ப்ரமைகாத்துகளான பகவத்பக்தர்கள்‌; 
அவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது மாறிமாறிப்‌ பலபிறப்பும்‌ 
பிறக்கும்படியான தீவினைகளைத்‌ தொலைத்து முத்தியளிக்கை 

ஆக வேண்டுவோர்‌ வேண்டினபடியே அநிஷ்ட நிவருத்தியையும்‌ (வேண்டாததை விலக்கியும்‌) இஷ்டப்ராப்தியையும்‌ 
செய்விக்கவல்லது திருவேங்கடம்‌ என்றதாயிற்று. 

வானோர்‌ மனச்சுடரைத்‌ தூண்டும்‌ மலை: 
ஒரு நெருப்பை அணைக்கும்‌; ஒரு நெருப்பை அபிவிருத்தி செய்யும்‌ என்று சமத்காரமாக அருளிச்‌ செய்கிறார்‌. 
வானோர்‌ மனச்சுடரைத்‌ தூண்டுகையாவது - பரமபதத்திலே பரத்வகுணத்தை அனுபவித்துக்‌ கொண்டிருக்கிற நித்யஸூரிகளை, 
இங்கு. வந்து ஸெளலப்ய, ஸெளரில்யாதி குணங்களை அனுபவிக்குமாறு  உத்ஸாஹமூட்டுதலாம்‌. 

நெறியார்‌ குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து 
அறியாது இளங்கிரி என்றெண்ணி - பிரியாது 
பூங்கொடிகள்‌ வைகும்‌ பொருபுனற்‌ குன்றென்னும்‌ 
வேங்கடமே! யாம்‌ விரும்பும்‌ வெற்பு, (-ஸ்ரீ பூதத்தாழ்வார்‌ -இ.தி. 53) 

நெறி - வழி, பாதை; நெறியார்‌ - திருமலை வழியிலே இருப்பவர்கள்‌; குழற்கற்றை - சடைமுடி; இளங்கிரி - சிறியமலை; 
வைகும்‌ - படரும்‌; பொருபுனல்‌ - அலையெறியும்‌ அருவி; வெற்பு ” மலை. 

திருமலைக்குச்‌ செல்லும்‌ வழியில்‌ தவம்‌ செய்யும்‌ தவசியர்களது சடைமுடிக்கற்றைகள்‌ முன்புறம்‌ உயர்ந்தும்‌, 
பின்னே முதுகுப்புறம்‌ தாழ்ந்தும்‌ இருக்கின்றன. மனிதன்‌ என்று அறியாமல்‌, சிறிய மலை என்றெண்ணி, அவ்விடம்‌ விட்டுப்‌ 
பிரியாமல்‌ பூங்கொடிகள்‌ அவர்கள்‌ மீதே படர்கின்றன. 
அலையெறிகின்ற அருவிகளையுடைய “திருமலை” என்று புகழ்பெற்ற வேங்கடமே நாம்‌ விரும்பும்‌ மலையாகும்‌. 

திருவேங்கடமலையை ஒரு சமத்காரம்‌ பொலிய வருணிக்கிறார்‌. திருமலை யாத்திரை வருகின்ற மஹான்கள்‌ பலர்‌ 
“வெறியார்‌ தண்சோலைத்‌ திருவேங்கடமலைமேல்‌ நெறியாங்க்‌ கிடக்கும்‌ நிலையுடையேன்‌ ஆவேனே! என்று ஸ்ரீ குலசேகரப்‌ 
பெருமாள்‌ விரும்பினபடியே, திருமலை ஏறும்‌ வழியிலே மிக்க ஆதாரம்‌ வைத்து, திருமலை மேலே சென்று வாழ்வநிற்காட்டிலும்‌ 
திருமலை வழியிற்‌ கிடப்பதையே பரம உத்தேச்யமாகக்‌ கொண்டு அவ்வழியிலே' :வீற்றிருந்து எம்பெருமானைச்‌ சிந்தை செய்கின்றனர்‌. 
அப்போது மூச்சுவிடுதல்‌, உடம்பு அசைத்தல்‌ முதலியன ஒன்றுஞ்செய்யாதே, வால்மீகி ' முதலிய 
மஹரிஷிகளைப்போலே யோகநிலையில்‌ ஆழ்ந்து கிடக்கின்றனர்‌. 
அன்னவர்களது கூந்தல்‌ கற்றையானது முன்னின்று பின்‌ தாழ்ந்திருப்பதைக்‌ கண்ட பூங்கொடிகளானவை 'சில மனிதர்கள்‌ 
வீற்றிருக்கின்றார்கள்‌' என்றும்‌ அவர்களுடைய குழல்கற்றை தாழ்ந்திருக்கின்றது' என்றும்‌ தெரிந்து கொள்ளாமல்‌, “இவை 
சிறுமலைகள்‌' என்றெண்ணி அவற்றின்‌ மேலே படர்கின்றனவாம்‌. 
படர்ந்து, வால்மீகி முனிவர்மீது புற்று மூடினாற்போலே இந்த பக்தர்களின்‌ மேலும்‌ பூங்கொடிகள்‌ படர்ந்திருப்பது அற்புதமான 
ஒரு காட்சியாய்‌ அமைந்தது. இப்படிப்பட்ட காட்சிக்கு இடமான திருமலையே நாம்‌ விரும்பத்தக்க மலையாம்‌ - என்றாயிற்று. 

வெற்பென்று வேங்கடம்‌ பாடும்‌ வியன்துழாய்‌ 
கற்பென்று சூடும்‌ கருங்குழல்மேல்‌ - மற்பொன்ற 
நீண்டதோள்‌ மால்கிடந்த நீள்கடல்‌ நீராடுவான்‌ 
பூண்டநாள்‌ எல்லாம்‌ புகும்‌. (ஸ்ரீ பேயாழ்வார்‌ -மூ. தி, 69) 

வியன்துழாய்‌ - வியக்கத்தக்க துளசி; மற்பொன்ற - மல்‌ பொன்ற, மல்லர்கள்‌ அழியும்படியான; மால்‌ - திருமால்‌; நீள்கடல்‌ -திருப்பாற்கடல்‌. 

ஆழ்வார்‌ ஒரு தலைவி நிலையை அடைந்து பாடுவது முதலிய செயல்களை அவளது திருத்தாயார்‌ கூறுவதாக இச்செய்யுள்‌ 
அமைந்துள்ளது. இது தாய்ப்பாசுரம்‌ என்பர்‌. 

என்‌ மகளானவள்‌ ஏதேனும்‌ ஒரு மலையைப்‌ பற்றிய பேச்சு நேர்ந்தாலும்‌, திருவேங்கட மலையைப்‌ பற்றிப்‌ பாடுகிறாள்‌. தனது 
கற்புக்குத்‌ தகுந்ததென்று வியக்கத்தக்க துளசியைத்‌ தனது கருங்கூந்தலில்‌ சூடிக்கொள்கிறொள்‌. மல்லர்கள்‌ அழியும்படியான 
நீண்ட தோள்களையுடைய திருமால்‌ பள்ளிகொண்டுள்ள பரந்த திருப்பாற்கடலிலே நீராடுவதற்காக விடிந்த விடிவுகள்‌ தோறும்‌ புறப்படுகின்றாள்‌. 

இப்பாசரத்தில்‌ 'கற்பென்று” பாதிவ்ரத்யத்தையும்‌, 
கருங்குழல்‌” என்று பெண்ணின்‌ கூந்தலையும்‌ கூறுவதால்‌, 
'என்‌ மகள்‌' என்று ஒரு பெண்ணை எழுவாயாகக்‌ கொள்ள வேண்டும்‌. 
மற்பொன்ற: 
மல்லர்களையழித்த; கடலில்‌ புகுந்து மதுகைடபர்‌ என்னும்‌ அசுரர்களைக்‌ கொன்றதையும்‌, கிருஷ்ணாவதாரத்தில்‌ சாணூரன்‌, 
முஷ்டிகளன்‌ என்கிற மல்லர்களை அழித்ததையும்‌ கூறுகிறார்‌. 

பூண்ட நாள்‌ எல்லாம்‌: 
பூண்ட - பூட்டிய) சூரியனுடைய தேரிலே குதிரையைப்‌ பூட்டிய நாள்‌ எல்லாம்‌' என்கிறபடியே, “விடிந்த விடிவுகள்‌ 
தோறும்‌' என்று பொருள்பட்டது. 

எம்பெருமானை அனுபவித்தல்‌ பல வகைப்பட்டிருக்கும்‌: 
அவனுடைய திருநாமங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌, திருக்கல்யாண குணங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌, 
திவ்யசேஷ்டிதங்களை (அவதாரச்‌ செயல்களைச்‌) சொல்லி அனுபவித்தல்‌, வடிவழகை வருணித்து அனுபவித்தல்‌, 
அவனுகந்தருளிய திவ்ய தேசங்களின்‌ வளங்களைப்‌ பேசி அனுபவித்தல்‌, ௮ங்கே அபிமானமுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களின்‌ 
பெருமையைப்‌ பேசி அனுபவித்தல்‌ என்று இப்படிப்‌ பலவகைப்பட்டிருக்கும்‌ பகவதனுபவம்‌. 

இவ் வகைகளில்‌ பரம விலக்ஷ்ணமான மற்றொரு வகையுமுண்டு: அதாவது - தாமான தன்மையை (ஆண்மையை/ 
விட்டுப்‌ பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக்கொண்டு வேற்றுவாயாலே பேசி அனுபவித்தல்‌ (இது அந்யாபதேசம்‌ 
எனப்படும்‌). இப்படி அனுபவிக்கும்‌ இறத்தில்‌ தாய்ப்பாசுரம்‌, தோழிப்பாசுரம்‌, மகள்‌ பாசுரம்‌ என்று மூன்று வகுப்புகளுண்டு. 
இவை நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்களது அருளிச்செயல்களில்‌ (பாட்டுகளில்‌) விசேஷமாக வரும்‌. 
முதலாழ்வார்களின்‌ திருவந்தாதிகளில்‌ ஸ்திரீபாவனையினாற்‌ பேசும்‌ பாசுரம்‌ வருவதில்லை. 
ச்ருங்கார ரஸத்தின்‌ ஸம்பந்தம்‌ சிறிதுமின்றியே கேவலம்‌ சுத்த பக்திரஸமாகவே பாசுரங்கள்‌ அருளிச்செய்தவர்கள்‌ முதலாழ்வார்கள்‌. 
ஆயினும்‌ இப்பாசுரம்‌ ஒன்று தாய்வார்த்தையாகச்‌ செல்லுகிறது. பேயாழ்வாராகிய 
பெண்பிள்ளையின்‌ நிலைமையை அவளைப்‌ பெற்று வளர்த்த திருத்தாயார்‌ பேசுவதாக அமைக்கப்பட்ட பாசுரம்‌ இது. 
“என்னுடைய மகளானவள்‌'' என்ற எழுவாய்‌ இதில்‌ இல்லையாதலால்‌ கற்பித்துக்கொள்ள வேண்டும்‌. 

இப்பிரபந்தத்தில்‌ அந்யாபதேசப்‌ பாசுரம்‌ வேறொன்றும்‌ இல்லாதிருக்க இஃ்தொன்றை மாத்திரம்‌ இங்ஙனே 
தாய்ப்பாசுரமாகக்‌ கொள்ளுதல்‌ சிறவாதென்றும்‌, “என்‌ மகள்‌” என்ற எழுவாய்‌ இல்லாமையாலும்‌ இவ்வர்த்தம்‌ உசிதமன்று என்றும்‌ 
சிலர்‌ நினைக்கக்‌ கூடுமாதலால்‌ இப்பாசுரத்திற்கு வேறுவகையான நிர்வாஹமும்‌ பூர்வர்கள்‌ அருளிச்‌ செய்துள்ளனர்‌. 

எங்ஙனே எனில்‌: ''பாடும்‌, சூடும்‌, புகும்‌! என்ற வினைமுற்றுக்களை முன்னிலையில்‌ வந்தனவாகக்‌ கொண்டு, 
**உலகத்தவர்களே! நீங்கள்‌ ஏதாவதொரு மலையைப்‌ பாடவேண்டில்‌ திருவேங்கடமலையைப்‌ பாடுங்கள்‌; 
ஏதேனும்‌ ஒரு மலரைக்‌ குழலில்‌ சூடவேண்டில்‌ திருத்துழாய்‌ மலரைச்‌ சூடிக்கொள்வதே சேஷத்வத்திற்கு உரியதென்று கொண்டு 
அதனைச்‌ சூடுங்கள்‌; நீராடுவதற்குத்‌ திருப்பாற்கடலிலே சென்று புகுங்கள்‌'' என்பதாக. 

இங்கே பெரியவாச்சான்‌ பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி காண்மின்‌: '*இப்பிரகரணத்தில்‌ (பிரபந்தத்தில்‌) கீமும்‌ மேலும்‌ 
அந்யாபதேசமின்றிக்கே யிருக்க இப்பாட்டொன்றும்‌ இப்படிக்‌ கொள்ளுகிறதென்னென்று நிர்வஹிப்பர்கள்‌... 
திருமலையைப்‌ பாடுங்கோள்‌... திருத்துழாயைச்‌ சூடுங்கோள்‌... விரோதி நிரஸத சீலனானவன்‌ கிடந்த திருப்பாற்கடலிலே முழுகுங்கோள்‌'' என்று. 
திருவேங்கடத்தின்‌ புகழைப்பாடியும்‌, துளசியைப்‌ போற்றிச்‌ சூடியும்‌ வந்தால்‌, நாம்‌ திருப்பாற்கடலிலே நித்யம்‌ நீராடலாம்‌; 
நிச்சயம்‌ வைகுந்தம்‌ புகுவோம்‌ என்பது குறிப்பு ... 

வெற்பென்று வேங்கடம்‌ பாடினேன்‌ வீடாக்கி 
நிற்கின்றேன்‌ நின்று நினைக்கின்றேன்‌ - கற்கின்ற 
நூல்வலையில்‌. பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்‌ 
கால்வலையில்‌ பட்டிருந்தேன்‌ காண்‌ (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா. தி, 40), 
வீடு - மோட்சம்‌; நூல்வலை - வேதங்களாகிய வலை; நூலாட்டி - வேதமாகிய நூலில்‌ போற்றப்படும்‌ லட்சுமி; 
கேள்வனார்‌ - கணவர்‌, இங்கே திருமால்‌. 
 
மலைகளின்‌ பெயர்களைச்‌ சொல்லி வருகையில்‌, தற்செயலாக வேங்கடமலை என்றேன்‌; இதன்‌ பலனாகவே 
மோட்சம்‌ நிச்சயம்‌ என்றுணர்ந்து நிற்கின்றேன்‌... “*நாம்‌ சொன்ன சிறிய சொல்லுக்குப்‌ பெரிய பேறு கிடைத்த பாக்கியம்‌ 
எத்தகையது!” என்று நினைத்து, வியந்து, மலைத்துப்‌ போனேன்‌! 
ஓதப்படுகின்ற வேத சாஸ்திரங்களாகிய வலையில்‌ அகப்பட்டிருக்கும்‌ லக்ஷ்மீநாதனின்‌ திருவடிகளாகிய வலையில்‌ 
அகப்பட்டு நிலைத்து நிற்கின்றேன்‌. 

"மலை' என்று வருகிற பெயர்களையெல்லாம்‌ அடுக்காகச்‌ சொல்லுவோம்‌ என்று விநோதமாக முயற்சி செய்து 'பசுமலை, 
குருவிமலை' என்று பலவற்றையும்‌ சொல்லி வருகிற அடைவிலே, என்னையும்‌ அறியாமல்‌ 'திருவேங்கடமலை' என்று 
என்‌ வாயில்‌ வந்துவிட்டது; இவ்வளவையே கொண்டு எம்பெருமான்‌ என்னைத்‌ திருவேங்கடம்‌ பாடினவனாகக்‌ கணக்கு 
செய்து கொண்டான்‌ என்பது இதன்‌ கருத்து. 

நின்று நினைக்கின்றேன்‌: 
நாம்‌ புத்திபூர்வமாக ஒரு நல்ல சொல்லும்‌ சொல்லாது இருக்கவும்‌, எம்பெருமான்‌ தானே மடிமாங்காயிட்டுத்‌ திருவுள்ளம்‌ 
பற்றுகிற இது என்ன ஆச்சரியம்‌! என்று இதனையே அநுஸந்தித்து ஈடுபட்டு நின்றேன்‌ என்கை. 
கால்வலையிற்‌ பட்டிருந்தேன்‌? 
மூன்றாமடியில்‌ சாஸ்திரங்களை எம்பெருமானுக்கு வலையாகவும்‌, ஈற்றடியில்‌ அவ்வெம்பெருமான்‌ திருவடிகளைத்‌ 
தமக்கு வலையாகவும்‌ அருளிச்‌ செய்தார்‌. எம்பெருமானை சாஸ்திரங்களிலிருந்து எப்படிப்‌ பிரிக்க முடியாதோ அப்படியே 
என்னை அப்பெருமான்‌ திருவடிகளிலிருந்து பிரிக்கமுடியாது என்றவாறு. 
எம்பெருமான்‌ ஒரு வலையில்‌ அகப்பட்டான்‌, -நானொரு வலையில்‌ அகப்பட்டேன்‌ என்று சமத்காரமாகச்‌ சொல்லுகிறபடி. 

வேதங்களையும்‌, ஸ்ம்ருதி இதிகாச புராணங்களையும்‌ சம்பிரதாயமாக ஓதும்‌ முறையைப்‌ பின்பற்றி ஆராய்ந்தபோது, 
எம்பெருமானும்‌, பெரிய பிராட்டியும்‌ (லட்சுமியும்‌) இருவரும்‌ நமக்குத்‌ தெய்வம்‌ என்ற தெளிவு உண்டாயிற்று... சரணாகதரைக்‌ 
காப்பதாகக்‌ கூறி ௮வன்‌ அதுபடி நடக்கவில்லையாகில்‌ நூலாட்டி (லட்சுமி) அந்நூல்களே  * எதற்கென்று கேள்வனை 
(ஸ்ரீநிவாஸனைக்‌) கேட்பாள்‌. ்‌ 
ஏதோ வெற்பொன்றைப்‌ பாட நினைத்த போதும்‌ அவனது வேங்கடத்தைப்‌ பாடும்படியாயிற்று, அதனால்‌ அதை எனக்கு 
வீடாக்கினான்‌. அதே மோட்சத்தானம்‌. இப்படி எனக்கு வாய்த்ததற்கு யானே வியந்து அசையாது நின்று என்ன 
வாத்ஸல்யமென விசாரியா நின்றேன்‌ (ஆராய்ந்தேன்‌). இனி நிலைத்து நின்று இடையூறின்றி வேங்கடத்தையே தியானிக்கவும்‌ 
வாய்த்தது என்றபடி. 
இங்கே பாடுதல்‌, நிற்றல்‌, நினைத்தல்‌ என்று வாக்கு, காயம்‌, மனோரூப முக்கரணங்களின்‌ வியாபாரங்கள்‌ 
(செய்கைகள்‌) மொழியப்‌ பெற்றன. 

வேங்கடமே விண்ணோர்‌ தொழுவதும்‌ மெய்ம்மையால்‌ 
வேங்கடமே மெய்வினை நோய்‌ தீர்ப்பதுவும்‌ - வேங்கடமே 
தானவரை வீழத்தன்‌ ஆழிப்படைதொட்டு 
வானவரைக்‌ காப்பான்‌ மலை, (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா. தி. 48) 

மெய்ம்மையால்‌ - உண்மையான பக்தியுடனே; மெய்வினை நோய்‌ - முன்பிறவியில்‌ செய்த பாவவினைகளால்‌ உடலை வருத்தும்‌ நோய்‌; 
தானவர்‌ - அசுரர்கள்‌; ஆழிப்படை - சக்கராயுதம்‌; வானவர்‌ - தேவர்கள்‌. 

நித்யஸூரிகளால்‌ உண்மையான பக்தியூடனே தொழப்படுவது வேங்கடமே. 
பாவ வினைகளால்‌ விளைந்து உடலை வருத்தும்‌ கர்மவியாதிகளைத்‌ தீர்ப்பதும்‌ வேங்கடமே. 
அசுரர்கள்‌ அழியும்படி, சக்கராயுதத்தை ஏவி, தேவர்களைக்‌ காத்தருளும்‌ பெருமானுடைய திருமலையும்‌ வேங்கடமே. 
வேங்கடமே விண்ணோர்‌ தொழுவதும்‌: விண்ணோர்‌ வைகுந்தத்திலிருக்கும்‌ முக்தர்களும்‌, நித்யஸூரிகளும்‌. 

 “ஸதா பச்யந்தி ஸூரய:'” என்கிறபடியே நித்யஸூரிகள்‌ 
பரமபதத்திலே எம்பெருமானை இடைவிடாது அநுபவிக்கப்பெற்றாலும்‌, அங்கே பரத்வத்துக்கு உரிய மேன்மைக்‌ 
குணங்களை அநுபவிக்கலாகுமேயன்றி ஸெளலப்ய (எளிதில்‌ அணுகும்‌ தன்மை) ஸெளரில்யங்களுக்குப்‌ (வேறுபாடின்றிப்‌ 
பழகும்‌ தன்மை) பாங்கான எளிமைக்‌ குணங்களை இத்நிலத்திலே வந்து அநுபவிக்க வேண்டியிருப்பதால்‌ அந்த லோதி குணங்களை 
அநுபவிப்பதற்காகத்‌ திருமலையில்‌ வந்து தொழும்படியைக்‌ கூறுவது முதலடி. 

வேங்கடமே மெய்வினை நோய்‌ நீர்ப்பதுவும்‌: 
இது 'வேங்கடம்‌' என்பதற்கு விளக்கம்‌. வேம்‌ - பாவம்‌; கடம்‌ - எரித்தல்‌. 
தேவர்களுக்கு அசுரர்களால்‌ .நேரும்‌ துன்பங்களைத்‌ திருவாழியால்‌ (சக்கரத்தால்‌ தொலைத்துக்‌ காத்தருளும்‌ எம்பெருமான்‌,
அப்படியே நம்‌ போன்ற பக்தர்களுடைய துன்பங்களையும்‌ துடைக்கவே எழுந்தருளியிருக்கும்‌ இடம்‌ திருமலை என்பன பின்னடிகள்‌. 

“'வேங்கட அம்ருத பீஜம்‌ கடமைச்வர்யம்‌ உச்யதே'' என்றபடி வேங்கடம்‌ என்ற சொல்லுக்கு மோட்சம்‌, ஐச்வர்யம்‌ இரண்டுமான 
மலையென்ற பொருளுமுண்டு. மோட்சமென்பதற்கு ஏற்ப விண்ணோர்‌ தொழுகின்றனர்‌. 
ஐச்வர்யம்‌ என்பதற்கிணங்க வானவர்‌ வணங்குகின்றனர்‌. 
வினைகளை எரிப்பதால்‌ வேங்கடம்‌ என்ற பொருளைக்‌ கருதி அனைவரும்‌ இதனையே வணங்கி 
எல்லாத்‌ துயரங்களையும்‌ தீர்த்துக்கொள்வது கண்கூடு. 
ஆகவே எல்லாவற்றிற்கும்‌ மேலானது. இவ்வாறு வேங்கடம்‌ என்ற சொல்லின்‌ பொருளைக்‌ கருதி மூன்றுதரம்‌ வேங்கடமென்றது. 

-----------
 
முதலாழ்வார்கள்‌ கண்ட திருவேங்கடவன்‌ 

முதலாழ்வார்கள்‌ மாபெரும்‌ வேங்கடேச பக்தர்கள்‌ என்பது அவர்கள்‌ பாடிய திருவந்தாதியிகளிலிருந்து நன்கு 
வெளிப்படுகிறது. மொத்தம்‌ 300 பாசுரங்களில்‌, இவர்கள்‌ வேங்கடவனைக்‌ குறித்துப்‌ பாடியவை 39;
ஸ்ரீ ரங்கநாதனைக்‌ குறித்தவை 7; 
திருமழிசையாழ்வார்‌ சரிசமமாகவே, முறையே 15,  பாடல்களைப்‌ பாடியுள்ளார்‌; 
இந்நால்வரும்‌ வேங்கடவனைப்‌ பாடிய பாசுரங்களில்‌ சிலவற்றை இங்கு காண்போம்‌. 

உணர்வாரார்‌ உன்பெருமை? ஊழிதோறு ஊழி 
உணர்வாரார்‌ உன்‌ உருவம்‌ தன்னை? உணர்வாரார்‌? 
விண்ணகத்தாய்‌! மண்ணகத்தாய்‌! வேங்கடத்தாய்‌! நால்வேதப்‌ 
பண்ணகத்தாய்‌! நீ கிடந்தபால்‌. (ஸ்ரீ பொய்கையாழ்வார்‌ )

உணர்வாரார்‌ - உணரக்கூடியவர்‌ யார்‌? ஊழி - பிரளயம்‌, காலவெள்ளம்‌; விண்ணகம்‌ - வைகுந்தம்‌. 

வைகுண்டத்தில்‌ இருப்பவனே! மண்ணுலகில்‌ அவதரித்தவனே! வேங்கடத்தில்‌ நின்று அருள்பவனே! 
ஸ்வரப்ரதானமான நான்கு வேதங்களின்‌ பண்கள்‌ மயமானவனே! 
உன்‌ பெருமையை ழி முதல்‌ அடுத்த ஊழிவரை காலமெல்லாம்‌ ஆராய்ந்தாலும்‌ யார்‌ அறியவல்லார்‌? உனது திவ்யாத்ம 
சொரூபத்தைத்தான்‌ யார்‌ அறியவல்லார்‌? நீ திருப்பாற்கடலில்‌ பாம்பணைமேல்‌ கிடக்கும்‌ நிலையைத்தான்‌ யார்‌ அறியவல்லார்? 

“திருமாலை அறிவதே அறிவு!" என்று கீழ்ப்பாட்டில்‌ அருளிச்செய்த ஆழ்வார்‌ ௮றிவுக்கு எல்லைநிலம்‌ எம்பெருமான்‌ 
அல்லது இல்லை என்னும்படி இருந்தாலும்‌, அவன்‌ தன்மை அறிவார்தான்‌ இல்லை என்று இப்பாட்டில்‌ அருளிச்செய்கிறார்‌. 
இவ்வாறிருப்பது வஸ்துவின்‌ (திருவேங்கடவனின்‌) சுபாவமே ஒழிய, அறிவின்‌ குறைவன்று என்பதும்‌ அறியத்தக்கது. 
*'உணர்வாரார்‌?'” என்ற வினாவினால்‌ ஸர்வஜ்ஞனான உன்னாலும்‌ உன்‌ தன்மை அறியமுடியாது என்பதும்‌ காட்டப்படும்‌.
''தனக்கும்‌ தன்‌ தன்மை அறிவரியான்‌'' என்றார்‌ நம்மாழ்வாரும்‌. 

உளதென்று இறுமாவார்‌ உண்டு இல்லை என்று 
தளர்தல்‌ அதன்‌ அருகுஞ்சாரார்‌ - அளவரிய 
வேதத்தான்‌ வேங்கடத்தான்‌ விண்ணோர்‌' முடிதோயும்‌ 
பாதத்தான்‌ பாதம்‌ பயின்று. (ஸ்ரீ பூதத்தாழ்வார்‌ -இ.தி. 45) 

உளது என்று - செல்வம்‌, பகவானை வழிபடும்‌ பேறு தமக்கு உள்ளது என்று; இறுமாவார்‌ - கர்வம்‌ கொள்ளமாட்டார்‌; 
விண்ணோர்‌ - நித்யஸூரிகள்‌; பயின்று - பழக. 

அளவிட முடியாதபடி அனந்தமாயுள்ள வேதங்களால்‌ போற்றப்படும்‌ திருவேங்கடமுடையான்‌, நித்யஸூரிகளது 
தலைமுடிகள்‌ படியும்படி பணியப்பெற்ற திருவடிகளை யுடையவன்‌. ஸ்ரீவேங்கடாசலபதியினுடைய பாதங்களை 
வணங்கிப்‌ பழகிய பக்தர்கள்‌ தமக்குச்‌ செல்வமோ, அவனை வணங்கும்‌ 'பேறோ உள்ளதென்று கர்வம்‌ கொள்ளமாட்டார்கள்‌; 
அவை நேற்று இருந்து இன்று இல்லையென்னும்படி அழிந்தன” என்னும்‌ மனத்தளர்ச்சியின்‌ பக்கமே செல்லமாட்டார்கள்‌. 
வேங்கடேச பக்தர்கள்‌ தம்முடைய பணம்‌, பதவி பறிபோனாலும்‌, மனம்‌ தளர்ந்து அவனைத்‌ தொழுவதைக்‌ கைவிட 
மாட்டார்கள்‌; ''ஸ்ரீ வேங்கடேச சரணெள சரணம்‌ ப்ரபத்யே” (ஸ்ரீ வேங்கடேசனின்‌ இரண்டு திருவடிகளையும்‌ சரணடைகிறேன்‌) 
என்றே எப்பொழுதும்‌ இருப்பார்கள்‌. 
இத்தகைய ''ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி,” 'வேங்கடத்தான்‌ விண்ணோர்‌ முடிதோயும்‌ பாதத்தான்‌ 
பாதம்‌ பயின்று என்பதனால்‌ கூறப்பட்டது. 
வேங்கடத்தான்‌ பாதத்தான்‌ - ஸ்ரீ வேங்கடேச சரணெள; பாதம்‌ பயின்று - சரணம்‌ 
ப்ரபத்யே, சரணமாகப்‌ பற்றுகிறேன்‌. 
எனவே இப்பாசுரம்‌ ஸ்ரீ வேங்கடேசப்‌ பிரபத்திக்கு இலக்கணம்‌ கூறுகிறது. 

உளதென்று இறுமாவார்‌ உண்டில்லை என்று: 
இதற்கு இருவிதமாகப்‌ பொருள்‌ கூறப்படுகிறது; 
செல்வத்தைக்‌ குறித்துச்‌ செருக்கடைதல்‌; நித்யஸூரிகள்‌ முடி. தோயும்‌ 
ஸ்ரீ வேங்கடேசனின்‌ பக்தர்கள்‌ நாம்‌ என்று பெருமைப்படுதல்‌ என்று. 

பாகவதர்களின்‌ பெருமையைப்‌ பேசுகிறார்‌. 
எம்பெருமானுடைய திருவடிகளிற்‌ பழகுகின்ற பாகவதர்கள்‌ செல்வம்‌ படைத்தாலும்‌ செருக்குக்‌ கொள்ள மாட்டார்கள்‌; இருந்த 
செல்வம்‌ அழிந்து போனாலும்‌, “ஐயோ! ஏழைமை வந்துவிட்டதே!'' என்று சிறிதும்‌ தளர்ச்சியடைய மாட்டார்கள்‌. 
களிப்பும்‌ கவர்வுமற்று' என்ற பாசுரத்திற்‌ சொன்னபடி லாபநஷ்டங்களில்‌ , ஒருபடிப்பட்ட சிந்தை உடையராயிருப்பர்‌. 
““முனியார்‌ துயரங்கள்‌ முந்திலும்‌, இன்பங்கள்‌ மொய்த்திடினும்‌ கனியார்‌... எங்கள்‌ இராமாதுசனை வந்தெய்தினர்‌'' (இராமாநுச 
நூற்றந்தாதி, 17) என்ற ஸ்ரீராமாநுஜபக்தனைப்‌ போன்றிருப்பர்‌ பகவத்பக்தர்களும்‌. 

தாழ்சடையும்‌ நீள்முடியும்‌ ஒண்மழுவும்‌ சக்கரமும்‌ 
சூழவும்‌ பொன்நாணும்‌ தோன்றுமால்‌ - சூழும்‌ 
திரண்டருவி பாயும்‌ திருமலைமேல்‌ எந்தைக்கு 
இரண்டுருவும்‌ ஒன்றாய்‌ இசைந்து (ஸ்ரீ பேயாழ்வார்‌ -மூ.தி. 63) 

தாழ்சடை, ஒண்மழு, சூழ்‌ அரவு - சிவனுக்குரியவை. 
நீள்முடி, சக்கரம்‌, பொன்‌ நாண்‌ - விஷ்ணுவுக்குரியவை. 

தாழ்ந்த சடாமுடியும்‌, நீண்ட மகுடமும்‌; அழகிய மழுவாயுதமும்‌, சக்கரமும்‌; சுற்றிலும்‌ அணிந்துள்ள 
நாகாபரணமும்‌, பொன்‌ அரைநாணும்‌; நாற்புறமும்‌ அருவிகள்‌ இரண்டு பாயும்‌ திருமலைமேல்‌ எழுந்தருளியிருக்கும்‌ எந்தை ஸ்ரீ 
வேங்கடேசனுக்கு இவ்விதம்‌ சிவன்‌, விஷ்ணு ஆகிய இருவரின்‌ உருவமும்‌ ஒரே வடிவமாக அமைந்து விளங்குகிறது; என்ன ஆச்சரியம்‌! 

இப்பாசுரத்திற்கு அவரவர்கள்‌ விருப்பப்படி பலவாறாகப்‌ பொருள்‌ கூறுவர்‌. சைவர்கள்‌ சங்கர - நாராயணனைக்‌ கூறுவதாகக்‌ 
கொள்வர்‌. இதையொட்டியே சைவ - வைணவர்களுக்கிடையே திருமலை யாருடையது என்று ஒரு பிரச்னை ஏற்பட்டதாகவும்‌, 
ஸ்ரீ ராமானுஜர்‌ அது வைணவருடையதே என்று நிலைநாட்டியதாகவும்‌ வரலாறு கூறுகிறது. ஸ்ரீ ராமானுஜர்‌ ஸ்ரீ 
வேங்கடேசன்‌ சன்னிதியில்‌ பலர்‌ காண சங்கு, சக்கரமும்‌, சிவனுக்குரிய ஒண்மழுவும்‌, திரிசூலமும்‌ வைத்து, எவையேனும்‌ * 
ஒன்றை ஏற்றுப்‌ பிரச்னையை தீர்த்து வைக்கும்படி இறைவனை வேண்டி, இரவில்‌ கதவை மூடினார்‌. மறுநாள்‌ 
திருவேங்கடமுடையான்‌ சங்கு, சக்கரங்களுடன்‌ காட்சி தந்ததாகக்‌ கூறுவர்‌. 

வேங்கடவன்‌ நாகத்தை அணிந்திருப்பது வாஸ்தவமே. 
எம்பெருமானின்‌ க்ரீடத்துக்குக் கீழ்  காணப்படும்‌ நீண்ட ரேகையைச்‌ தாழ்சடையாக்‌. கொள்வது கற்பனை என்பர்‌ வைணவர்‌. 
இப்பாசுரத்தையே இடைச்செருகல்‌, பேயாழ்வார்‌ பாடியதாக இருக்க முடியாது என்றே சிலர்‌ கூறுவர்‌. 

இது எங்நனமிருப்பினும்‌ பேயாழ்வார்‌ சைவ வைணவ சமரச  நோக்கு உடையவர்‌ என்பதற்கு இப்பாசுரம்‌ சான்றாக அமைகறது. 
இருப்பினும்‌ இவர்‌ திருமாலே முழுமுதற்‌ கடவுள்‌ என்று  கொண்டு, சைவராக இருந்த திருமழிசையாரை வாதத்தில்‌ வென்று 
வைணவராக்கனவர்‌ என்பதையும்‌ நினைவுகூர வேண்டும்‌. 

இன்று அவைதீக சமயங்களின்‌ தீவிரப்‌ பிரசாரத்தினாலும்‌, மதமாற்று முயற்சிகளாலும்‌ வைதீக மதங்களான சைவத்திற்கும்‌ 
வைணவத்திற்கும்‌ இடையே முன்பொரு காலம்‌ நிலவிய பூசல்களும்‌, வாக்குவாதங்களும்‌ , மறைந்து சமரச நோக்கே 
மிகுந்திருப்பது மூழ்ச்சிக்குரிய விஷயமாகும்‌, 
ஸ்ரீ வேங்கடேஸ்வரன்‌ என்று சைவர்களாலும்‌, ஸ்ரீநிவாஸன்‌ என்று வைணவர்களாலும்‌, 'பாலாஜி' என்று சாக்தர்களாலும்‌ மற்றும்‌ 
அவைதீக சமயத்தினராலும்‌ கூட வணங்கப்படும்‌ கண்கண்ட தெய்வமாகத்‌ திருவேங்கடமுடையான்‌ திகழ்கின்றது கண்கூடு, 

சென்று வணங்குமினோ சேணுயர்‌ வேங்கடத்தை: 
நின்று வினைகெடுக்கும்‌ நீர்மையால்‌ - என்றும்‌ 
கடிக்கமல நான்முகனும்‌ கண்மூன்றத்தானும்‌ 
அடிக்கமலம்‌ இட்டேத்தும்‌ அங்கு (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா.தி. 42) 

சேண்‌ - உயர்ந்த; சேணுயர்‌ - மிகவுயர்ந்த; நீர்மை - இயல்பு, சுபாவம்‌; கடி - வாசனை மிகுந்த; கமலம்‌ - தாமரை; 
நான்முகன்‌ பிரம்மா) கண்மூன்றத்தான்‌ - முக்கண்ணன்‌, சிவன்‌. 
 
(அன்பர்களே!) மிகவும்‌ உயர்ந்த வேங்கடத்தைச்‌ சென்று வணங்குங்கள்‌! அத்திருமலை, இயல்பாகவே பாவங்களை நின்று போக்குவது. 
அங்கு பரிமளம்‌ மிக்க தாமரையில்‌ பிறந்த பிரம்மனும்‌, முக்கண்ணனாகிய சிவனும்‌, என்றும்‌ ஸ்ரீ வேங்கடாசலபதியினுடைய திருவடிகளில்‌, 
தாமரைப்‌ பூக்களை சமர்ப்பித்து, துதித்துக்கொண்டிருப்பர்‌. வேங்கடத்தை நின்று வினைகெடுக்கும்‌ நீர்மையால்‌: 

வேம்‌ - பாவங்கள்‌, வினை. கடம்‌ - எரிப்பது, கெடுக்கும்‌; “வேங்கடம்‌” என்பதற்குப்‌ பொருள்‌ கூறியிருக்கிறார்‌. 
“வெங்கொடும்‌ பாவங்களெல்லாம்‌ வெந்திடச்‌ செய்வதால்‌ 
நல்மங்கலம்‌ பொருந்துஞ்சர்‌ வேங்கடமலையானதென்று -என்கிறது ஒரு புராணச்‌ செய்யுள்‌. 

பிரம்மாதி தேவர்களே “புஷ்பமண்டபம்‌' என்றே புகழ்பெற்ற பொன்மலையில்‌ ஸ்ரீ வேங்கடேசனது திருவடிகளில்‌ புஷ்பாஞ்சலி 
செய்து, தங்கள்‌ அதிகாரத்தைப்‌ பெற்றிருக்கின்றனர்‌. நீங்களும்‌ அவ்விதமே செய்து உய்வடைவுங்கள்‌ என்று உபதேசிக்கிறார்‌. 
சமரச . நோக்குடைய பேயாழ்வாரைப் போல்‌ அல்லாது, திருமழிசையார்‌ வீரவைணவர்‌ என்பதும்‌ இதிலிருந்து தெரிகிறது. 

முதலாழ்வார்கள்‌ வாழித்‌ திருநாமங்கள்‌ (அப்பிள்ளை திருவாய்மலர்ந்தருளியது) 

அரசனுக்குப்‌ பிரஜைகள்‌ ''வாழ்க, வாழ்க!”” என்று வாழ்த்து தெரிவிப்பது போலவே, இறைவனுக்கும்‌, மெய்யடியார்களுக்கும்‌ 
வாழ்த்துக்கூறுவது மரபாகும்‌. வைணவத்தில்‌ ஆழ்வார்களுக்கும்‌, ஆசாரியர்களுக்கும்‌ இவ்விதம்‌ வாழித்‌ திருநாமங்கள்‌ கூறுவது 
வழக்கில்‌ உள்ளது. முதலாழ்வார்களைக்‌ குறித்த இந்நூல்‌ அவர்களுடைய வாழித்‌ திருநாமங்களுடன்‌ நிறைவடைகறது. 

செய்ய துலா ஓணத்தில்‌ செகத்துதித்தான்‌ வாழியே
திருக்கச்சி மாநகரம்‌ செழிக்க வந்தோன்‌ வாழியே 
வையந்தகளி நூறும்‌ வகுத்து உரைத்தான்‌ வாழியே 
வனசமலர்க்‌ கருவதனில்‌ வந்தமைந்தான்‌ வாழியே 
வெய்யகதிரோன்‌ தன்னை விளக்கிட்டான்‌ வாழியே 
வேங்கடவர்‌ திருமலையை விரும்புமவன்‌ வாழியே 
பொய்கைமுனி வடிவழகும்‌ பொற்பதமும்‌ வாழியே 
பொன்முடியும்‌ திருமுகமும்‌ பூதலத்தில்‌ வாழியே. 

அன்பேதகளி நூறும்‌ அருளினான்‌ வாழியே 
ஐப்பசியில்‌ அவிட்டத்தில்‌ அவதரித்தான்‌ வாழியே 
நன்புகழ்சேர்‌ குருக்கத்தி நாண்மலரோன்‌ வாழியே 
நல்ல திருக்கடன்மல்லை நாதனார்‌ வாழியே 
இன்புருகு சிந்தை திரியிட்ட பிரான்‌ வாழியே 
எழில்‌ ஞானச்சுடர்‌ விளக்கேற்றினான்‌ வாழியே 
பொன்புரையும்‌ திருவரங்கர்‌ புகழுரைப்போன்‌ வாழியே 
பூதத்தார்‌ தாளிணை இப்பூதலத்தில்‌ வாழியே 

திருக்கண்டேன்‌ என நூறும்‌ செப்பினான்‌ வாழியே 
சிறந்த ஐப்பசியில்‌ சதயம்‌ செனித்த வள்ளல்‌ வாழியே 
மருக்கமழும்‌ மயிலைநகர்‌ வாழ வந்தோன்‌ வாழியே 
மலர்க்கரிய நெய்தல்தனில்‌ வந்துதித்தான்‌ வாழியே 
நெருக்கிடவே இடைகழியில்‌ நின்ற செல்வன்‌ வாழியே 
நேமிசங்கன்‌ வடிவழகை நெஞ்சில்‌ வைப்போன்‌ வாழியே 
பெருக்கமுடன்‌ திருமழிசைப்பிரான்‌ தொழுவோன்‌ வாழியே 
பேயாழ்வார்‌ தாளிணையிப்‌ பெருநிலத்தில்‌ வாழியே. 

“ஸ்ரீவேங்கடேச பாகவதம்‌" என்னும்‌ இந்தப்‌ புத்தகத்திலுள்ள குற்றம்‌, குறைகளைப்‌ பொறுத்து அருளும்படி, 
திருவேங்கடமுடையானை வேண்டிக்‌ கொள்வதோடு நூல்‌ நிறைவடைகிறது;  

ஸ்ரீவேங்கடேச நத்தம்‌ 
அஞ்ஞானினா மயா தோஷான்‌ அசேஷான்‌ விஹிதான்‌ ஹரே 
ச்ஷமஸ்வத்வம்‌ க்ஷமஸ்வத்வம்‌ சேஷசைல சிகாமணே 
அறியாமையால்‌ புரி தீவினை புரியாதுளத்‌ தற நீக்கிடு! 
பொறுத்தே அருள்‌! பொறுத்தே அருள்‌! பெருமாமணி வேங்கடவா! 

--------
சுதர்சனச்‌ சக்கரம்‌, பாஞ்சசன்னியம்‌, என்கிற திருச்சங்கு, சார்ங்கம்‌  என்கிற வில்‌ ஆகிய திருமாலின்‌ முப்படைகளை 
ஆண்டாள்‌  மின்னல்‌, இடி, மழையின்‌ வேகம்‌ ஆகியவற்றுக்கு உவமைகளாகச்‌  சொல்கிறாள்‌. 
திருக்கோவலூர்‌ மழையோ, எம்பெருமானுடைய  முப்படைகளின்‌ அவதாரங்களாகிய முதலாழ்வார்கள்‌ மீதே தன்‌ 
கை வரிசையைக்‌ காட்டியது! 
பாஞ்சசன்னியப்‌ பொய்கையார்‌;  கதாயுத பூதத்தார்‌; நாந்தகப்‌ பேயார்‌ ஆூய மூவரும்‌ 
அடைமழையில்‌ சிக்கியபோது, ஆண்டாள்‌ மார்கழி. நீராடி மூழ்ந்ததைப்போல்‌ ஆனந்தப்பட்டார்களோ என்னவோ 
தெரியாது; ஆயினும்‌ மழையில்‌ ஒதுங்குவதற்கு ஒரு புகலிடம்‌ தேடி, இருளில்‌ அலைந்தனர்‌. 

தங்களுடைய உலகநிலையைப்‌ பற்றிய  நினைவேயில்லாமல்‌, ஒருவரையொருவர்‌ விசாரித்து அறிந்து 
கொண்டு, திருமால்‌ பெருமையைப்‌ பேசி ம$ழ்ந்த வண்ணம்‌  இருந்தனர்‌. இத்தகைய இறையன்பர்கள்‌-- 

“செங்கண்‌ திருமுகத்துச்‌ செல்வத்‌ திருமாலால்‌ எங்கும்‌ திருவருள்‌ பெற்று இன்புறுவர்‌' 
என்று கோதை பலசுருதியாகப்‌ பாடியுள்ளாள்‌. 
எனவே இவர்கள்‌  மத்தியில்‌ திருமாலும்‌ வந்து சேர்ந்ததில்‌ ஆச்சரியமில்லை. 

இடைகழி அவ்வளவு சிறியது! ஸ்ரீ  வேங்கடாசலபதியை சேவிக்கும்போது இங்ஙனமே பக்தர்கள்‌ 
இன்று நெருக்கமாக நிற்க நேரிடுகிறது. நெரிசலுக்குப்‌ பிறகே  தரிசனம்‌! 
முதலாழ்வார்களும்‌ எம்பெருமானை இவ்விதமே  அனுபவித்தனர்‌. 

திருமாலின்‌ நான்கு அர்ச்சை நிலைக்‌ கோலங்களைப்‌  பொய்கையாழ்வார்‌ 
''நின்றான்‌ இருந்தான்‌ கிடந்தான்‌ நடந்தானே'"  என்று பாடியுள்ளார்‌. 
திருப்பதி கோவிந்தராஜப்‌ பெருமாள்‌  மேற்கொண்டுள்ளது கிடந்த கோலம்‌; 
திருமலை ஆதிவராக மூர்த்தி இருந்த (அமர்ந்த) கோலத்தில்‌ சேவை சாதிக்கிறார்‌. 
திருமலை வேங்கடவன்‌ ஏற்றுள்ளது நின்ற நிலை. 
இம்மூன்று நிலைகளையும்‌  தொடர்ந்து இடைகழியில்‌ ஆழ்வார்களும்‌ மேற்கொள்ள நேரிட்டது அதிசயிக்கத்தக்கது! 
முதலில்‌ பொய்கையார்‌ கடந்தார்‌; 
பூதத்தார்‌ வந்ததும்‌ இருவரும்‌ இருந்தனர்‌; 
மூன்றாமவர்‌ வந்ததும்‌  மூவரும்‌ நின்றனர்‌. 
திருக்கோவலூரில்‌ திரிவிக்கிரமன்‌ உலகளந்த நிலையில்‌ இருப்பது “நடந்த கோலம்‌' எனப்படும்‌. 
பெயருக்கேற்றவாறே கோவலூரில்‌ எம்பெருமான்‌ நடந்தே வந்து  ஆழ்வார்களுக்குத்‌ தெரியாமல்‌ அவர்கள்‌ மத்தியிலே புகுந்தான்‌ 
பொய்கைப்பிரான்‌ முதல்‌ திருவந்தாதி 85-ஆவது பாசுரத்தில்‌ 
இடைகழியில்‌ புகுந்து நெருக்கிய இறைவனைப்‌ பாடியுள்ளார்‌: 

“நீயுந்‌ திருமகளும்‌ நின்றாயால்‌ குன்றெடுத்துப்‌ 
பாயும்‌ பனி மறைத்த பண்பாளா!- வாசல்‌ 
கடை கழியா, உள்புகாக்‌ காமர்பூங்‌ கோவல்‌ 
இடைகழியே பற்றியினி.'” (86)
முந்தைய பாசுரத்தில்‌ ஆழ்வார்‌ தமது திருவுள்ளத்தைக்‌ குறித்து, “பெருமானை அனுபவிக்கவில்லையே”” என்று கூற 
திருமால்‌ பிராட்டியுடன்‌ இவர்‌ இருந்த: இடைகழிக்கே வந்து நின்றான்‌. 
எம்பெருமான்‌ அலர்மேல்‌ மங்கையுறை மார்பனாகப்‌  பிராட்டியுடன்‌ நின்ற கோலத்தில்‌ வந்திருந்ததால்‌, வந்தவன்‌ 
வேங்கடவனே எனக்கொள்ளலாம்‌.
பக்தர்களுடன்‌ கலந்த மகிழ்ச்சியால்‌ திருமால்‌ இடைகழியில்‌ நின்றான்‌. 
''காமுகர்கள்‌ உகந்த விஷயத்தினுடைய கண்வட்டம்‌  விட்டுப்‌ போக மாட்டாதாப்‌ போலே”! என்பார்‌ உரையாசிரியர்‌. 

முதலாழ்வார்கள்‌ சந்தித்து, திருமாலைக்‌ கண்டு அருந்தமிழில்‌ 
அந்தாதி பாடியதை, வில்லிப்புத்தூராரின்‌ திருமகனார்‌ வரந்தருவார்‌  இங்ஙனம்‌ போற்றிப்‌ புகழ்வர்‌: 
*பாவரும்‌ தமிழால்‌ பேர்பெறு பனுவல்‌ 
பாவலர்‌ பாதிநாள்‌ இரவில்‌ 
மூவரும்‌ நெருக்கி மொழிவிளக்கு ஏற்றி 
முகுந்தனைத்‌ தொழுத நன்னாடு” 

திருக்கோவலூரை மங்களாசாஸனம்‌ செய்யும்‌ ஒரு பெரிய திருமொழிப்பாசுரம்‌ முதலாழ்வார்களைக்‌ குறிப்பிடுவதாக 
திருமங்கையாழ்வார்‌  பாடிய ''தாங்கரும்‌ போர்‌'" என்று தொடங்கும்‌ பாசுரத்திலுள்ள  சில வரிகள்‌ இவை. 

“அடியவர்க்கு ஆரமுதம்‌ ஆனான்‌ தன்னை... 
குழாவரி வண்டு இசைபாடும்‌ பாடல்‌ கேட்டு 
தீங்கரும்பு கண்வளரும்‌ கழனி சூழ்ந்த 
திருக்கோவலூர்‌ அதனுள்‌ கண்டேன்‌ நானே! (210.4) 

அடியவாககு ஆரமுதம அனான: 
அடியவர்கள்‌ என்றது முதலாழ்வார்களை. அவர்கட்கு 
“தேனும்‌ பாலும்‌ கன்னலும்‌ அமுதுமாகத்‌: தித்தித்தவன்‌  இத்தலத்து எம்பிரான்‌.  திருக்கோவலூர்‌ திங்கரும்பு: 

இங்கு தீங்கரும்பாகச்‌ சொன்னது திருக்கோவலூர்‌ திரிவிக்ரமப்‌  பெருமாளை. 
குழாவரி வண்டிசை பாடும்‌ பாடலாவது, (முதலாழ்வார்கள்‌ பாடிய மூன்று திருவந்தாதிகள்‌. 
இந்த அந்தாதி  இசை கேட்டு, திருக்கோவலூர்‌ தீங்கரும்பாகிய  திருவேங்கடமுடையான்‌ கண்ணுறங்குமாம்‌. 
முதலாழ்வார்கள்‌  பாடிய அந்தாதிகளில்‌ மிக அதிகமாகத்‌ திருவேங்கடவன்‌  திருநாமமே அடி.படுவதால்‌ 
இங்ஙனம்‌ கொள்ளத்‌ தடையில்லை. 
வண்டுகளை மூன்று ஆழ்வார்களாகக்‌ கொள்ளலாம்‌. 

ஸ்ரீ வேதாந்த தேசிகர்‌ அருளிச்‌ செய்த '“தேஹளீச ஸ்துதி  ஏழாவது சுலோகத்தில்‌ 
முதல்‌ மூன்று ஆழ்வார்களைக்‌ கரும்பு  பிழியும்‌ சர்க்கரை ஆலையின்‌ மூன்று உருளைகளாகவும்‌, 
அவர்களால்‌ நெருக்கப்பட்ட திருமாலைத்‌ தீங்கரும்பாகவும்‌, 
எம்பெருமானின்‌ செளலப்ய குணத்தைச்‌ சாறாகவும்‌ கூறப்பட்டிருக்கிறது. 
இந்த அற்புதமான உவழைக்கு மேற்கூறிய 
திருமங்கையாழ்வார்‌. பாசுரம்‌ அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும்‌ 
 
கண்ணன்‌ அடியினை எமக்குக்‌ காட்டும்‌ வெற்பு 
கடுவினையரிரு வினையும்‌ கடியும்‌ வெற்பு 
திண்ணமிது வீடென்னத்‌ திகழும்‌ வெற்பு 
தெளிந்த பெருந்தீர்த்தங்கள்‌ செறிந்த வெற்பு 
புண்ணியத்தின்‌ புகலிதெனப்‌ புகழும்‌ வெற்பு 
பொன்னுலகிற்‌ போகமெலாம்‌ புணர்க்கும்‌ வெற்பு 
விண்ணவரும்‌ மண்ணவரும்‌ விரும்பும்‌ வெற்பு 
வேங்கடவெற்பென விளங்கும்‌ வேத வெற்பே. --ஸ்ரீ வேதாந்த தேசிகர்‌ அருளிச்‌ செய்தது
----------------------------------------

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவேங்கடேச மஹாத்ம்யம் –ஸ்ரீ மதி விஸாலாட்சி ரமணன் அம்மாள் தொகுத்து அருளியது —

February 24, 2023

ஸ்ரீ வேங்கடேச புராணம்

த்ரை லோக்யம் கிம் சிரேஷ்ட ஸ்தலம் வால்மீகி நாரதர் இடம் வாமன புராணம்
சங்கர ஸ்கந்த -இதே கேள்வி உத்தம ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தலம் -பிரகலாதன் அம்பரீஷன் -வழியில்
அம்பரீஷ வனம் இங்கும் உண்டே
விஷ்ணுவே திருமலை வடிவம்ன் -தபஸ்
அகஸ்தியர் உபாசிட்டவசுக்கு உபதேசம் -சார்ங்கம் ஏந்திய வாசுதேவனுக்கு உகந்த
வராஹ புராணம்
ரிஷிகள் வியாசர் -அதி ப்ரேசியமான ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம்
பூமி தேவி வராஹ –
ஸ்ரீ வேண்டடேசன் வாசுதேவா ஆலயம்
பாத்திமா புராணம்
நாராயணன் ஆவிபிரபாவம் செய்த திருமலை
கருட புராணம்
அருந்ததிக்கு வசிஷ்டர் -நித்ய விபூதி விடவும் ஸூர்ய மண்டலம் விடவும் ஸ்வேதா தீபம் விட இங்கு உகந்து
ப்ருஹ்மாண்ட மாண்ட ப்ருகுவுக்கு நாரதர்புண்ய க்ஷேத்ரம் -ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாய
ரிக் வேதம் -அராயி காணே விகடே கிரீம் கச்ச யவிஷ்யோத்தர புராணம் 14-21) 6160. சொல்லப்பட்ட இயரிய திருமலையே …ஸ்ரீம் பீடன் -வேதமே சொல்லுமே

ரிக் வேதத்தில் உள்ள,
“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே
சிரிம்பிடஸ்ய ஸத்வபி: தே பிஷ்ட்வா சாதயாமஸி”என்ற மந்திரம்,
“மனிதா! நீ செல்வமில்லாதவனாகவோ, எதிர்காலம் பற்றிய பார்வை இல்லாதவனாகவோ, உலகியல் வாழ்க்கையில் தவிப்பவனாகவோ,
சுற்றி உள்ளவர்களால் ஒதுக்கப்படுபவனாகவோ இருக்கிறாயா? வருந்தாதே!
அலர்மேல் மங்கைத் தாயாரைத் திருமார்பில் கொண்ட திருவேங்கடமுடையானின் மலையைச் சென்று அடைவாயாக!
பக்தர்களோடு இணைந்து கோவிந்தா! கோவிந்தா! என கோஷம் இட்டபடி அந்தப் பெருமாளிடம் சென்றால்,
அவர் உன்னைக் காப்பார்! திருப்பதி வந்தால் திருப்பம் வரும்!” என்று சொல்கிறது.

ரிக்வேதம் போற்றும் திருவேங்கடம்

“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே, சிரிம்பிடஸ்ய ஸத்த்வபி: தேபிஷ்ட்வா சாதயாமஸி” என்ற ரிக் வேத மந்திரம் திருமலையைப் புகழ்கிறது. ஏழைகள், எதிர்காலம் பற்றிய அறிவில்லாதவர்கள், துன்பப்படுபவர்கள், சுற்றதாரின் ஆதரவுஅற்றவர்கள் ஆகிய அனைவரும் பக்தர்களோடு இணைந்து ஸ்ரீநிவாசன் திகழும் திருமலைக்குச் சென்று, அப்பெருமாளின் திரு வடிகளில் அடைக்கலம் புகுந்தால் அவன் காத்தருள்வான் என்பது இம்மந்திரத்தின் பொருள்.

சிலப்பதிகாரத்தில் திருமலை

சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் காடு காண் படலத்தில் திருமலையைப் புகழ்ந்து இளங்கோவடிகள் பாடியுள்ளார். வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலயத்து உச்சி மீமிசை என்று அப்பாடல் தொடங்குகிறது.

திருமலை ஸ்ரீநிவாசன், முதலில் அங்கே அவதாரம் செய்தபோது விபவ அவதாரமாகத் தோன்றி, பத்மாவதியை மணம் புரிந்து, அதன் பின் அர்ச்சாவதார நிலைக்கு மாறிக் கோயில் கொண்டவர். விபவம், அர்ச்சை ஆகிய இருநிலைகளும் இணைந்திருப்பது ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கே உண்டான தனிச்சிறப்பு.

திருமலை கோயிலில் ஒரு மண்வெட்டி திருமலையப்பனுக்கான புஷ்பங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமாநுஜரின் சீடரான அனந்தாழ்வான் அமைத்த நந்தவனத்தில் இருந்துதான் இன்றளவும் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு சமயம் திருமலையப்பனே சிறுவன் வடிவில் அனந்தாழ்வானுடன் லீலை புரியச் சென்றான். அப்போது அந்தச் சிறுவனைத் தன் மண்வெட்டியால் அனந்தாழ்வான் அடித்தார். சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் பெருகி வந்தது. அத்துடன் அச்சிறுவன் ஓட, அவனை அனந்தாழ்வான் துரத்தி வந்தார்.

மலையப்பனின் கருவறைக்குச் சென்று அச்சிறுவன் மறைந்து போனான். வந்தவன் மலையப்பனே என உணர்ந்தார் அனந்தாழ்வான். மலையப்பனின் தாடையிலிருந்து ரத்தம் வந்தபடியால், அவ்விடத்தில் பச்சைக் கற்பூரம் வைக்கப்பட்டது. அதனால் தான் இன்றளவும் மலையப்ப சுவாமியின் தாடையில் பச்சைக் கற்பூரம் இருப்பதைக் காணமுடிகிறது. பெருமாளை அடிப்பதற்கு அனந்தாழ்வான் பயன்படுத்திய மண்வெட்டி இன்றளவும் சந்நதி நுழைவாயிலில் பராமரிக்கப் பட்டு வருகின்றது.

திருமலையில் உள்ள ராமாநுஜர் சந்நதியில் ராமாநுஜர் பெருமாளுக்குக் குருவாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே சீடனாகப் பெருமாள் நிற்பதாக ஐதீகம். அதனால் தான் அமர்ந்திருக்கும் ராமாநுஜருக்கு எதிரே நின்றிருக்கும் பெருமாளின் திருவடிச் சுவடுகள் மட்டும் இருப்பதைக் காணலாம். பெருமாளுக்குச் சங்கு சக்கரங்கள் தந்தபடியாலும், வேதார்த்த சங்கிரகத்தை உபதேசம் செய்தபடியாலும், பெருமாள் தனக்குக் குருவாக ராமாநுஜரை அங்கீகரித்தார்.

திருமலையில் கோயில் கொண்டிருக்கும் நரசிம்மர் நிவாசனால் பூஜிக்கப்பட்டவர். ஸ்ரீநிவாச கல்யாணம் நடைபெறுவதற்கு முன் இந்த நரசிம்மரைப் பூஜித்து, அவருக்குப் பிரசாதங்களை நிவேதனம் செய்துவிட்டுத்தான் பத்மாவதியை மணந்துகொள்ளச் சென்றார் ஸ்ரீநிவாசன்.

விமான வேங்கடேசன்

பொன்மயமான ஆனந்த நிலைய விமானத்தின் வடக்குப் பகுதியில் விமான வேங்கடேச னாகப் பெருமாள் காட்சிஅளிக்கிறார். முன்பு ஒரு பொய்கைக் கரையில் கஜேந்திரன் என்ற யானை துயருற்றபோது அதைக் காத்த பெருமாள், சுவாமி புஷ்கரிணிக் கரையிலும் அப்படி அடியார்களின் குரல் ஏதும் கேட்டால், உடனே ஓடோடிச் சென்று காக்க வேண்டும் என்ற எண்ணத்திலே விமான வேங்கடேசனாக, விமானத்தின் மேல் தயார் நிலையில் காத்திருக்கிறார்.

தெய்வீக மலை

‘கட்டெதுர வைகுண்டமு’ என்ற கீர்த்தனையில், திருமலையில் உள்ள ஒவ்வொன்றுமே தெய்வீகமானது என்று அன்னமாச்சாரியார் பாடியுள்ளார். வைகுண்ட லோகமே திருமலை, வேதங்களே அதன் பாறைகள், பிரம்மா உள்ளிட்ட தேவர்களின் லோகங்கள் இம்மலையின் நான்கு மூலைகள், தேவர்களே இம்மலையில் வாழும் உயிரினங்கள் என்றெல்லாம் கொண்டாடியிருக்கிறார் அன்னமாச்சாரியார்.

வேங்கடம் என்றால் என்ன?

வடமொழியில் வேம் என்றால் பாபம், கடம் என்றால் போக்குவது. வேங்கடம் என்றால் பாபத்தைப் போக்குவது என்று வடமொழியில் பொருள்படும். தமிழில் வேம் என்றால் போக்குவது, கடம் என்றால் பாபம். எனவே தமிழிலும் வேங்கடம் என்றால் பாபத்தைப் போக்குவது என்றே பொருள்படும். நம் அனைத்துப் பாபங்களையும் தீர்க்கவல்ல மலை திருவேங்கட மலை.

ஒலியும் ஒளியும்

ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச என்பது கீதையில் கண்ணன் கூறிய சரம ஸ்லோகம் ஆகும். அதாவது, இறைவனை அடைவதற்கான மார்க்கங்களாகப் பிற தர்மங்களை எண்ணாமல், இறைவனே அவனை அடைவதற்கான வழியாவான் என்பதை உணர்ந்து, அவன் திருவடிகளை அடைக்கலமாக நாம் பற்றினால், அவன் நம்மை அனைத்துப் பாபங்களில் இருந்தும் போக்கி, நமக்கு முக்தி அளிப்பான் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

ஒலி வடிவில் உள்ள இந்த சுலோகத்தின் ஒளி வடிவமாகத் திருமலையப்பன் திகழ்கிறார். அவரது வலக்கரத்தைத் திருவடிகளை நோக்கிக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுமாறு அறிவுறுத்து கிறார். இடக்கரத்தைத் தொடை அருகே வைத்துக் கொண்டு, அவ்வாறு நாம் அடைக்கலம் புகுந்தால், பிறவிப் பெருங்கடலை நம் தொடை அளவுவறச் செய்வதாக உறுதி அளிக்கிறார்.

சுக்ரீவன் கூற்று சீதையைத் தேடுவதற்காக வானர வீரர்களை ஏவிய சுக்ரீவன், “வடசொற்கும் தென்சொற்கும் வரம்பிற்றாய் நான்மறையும் மற்றை நாலும் இடைசொற் பொருட்கெல்லாம் எல்லையதாய் நல்லறத்துக் கீறாய வேறு புடைசுற்றுந் துணையின்றிப் புகழ்பதிந்த மெய்யேபோல் பூத்துநின்ற வடைகற்றுந் தண்சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்றடைதீர் மாதோ தோடுறு மால்வரை அதனைக் குறுகுதிரேலும் நெடிய கொடுமை நீங்கி வீடுறுதிர் ஆதலினான் விலங்குதிர் அப்புறத்து நீர்” என்று அவர்களைப் பார்த்துச் சொல்வதாகக் கம்பன் பாடுகிறான்.

அதாவது, “திருமலையில் மட்டும் சீதையைத் தேடாதீர்கள். ஏனெனில், அங்கே சில காலம் இருந்தாலே நீங்கள் பாபம் நீங்கி முக்தி அடைந்து விடுவீர்கள். நீங்கள் எல்லோரும் முக்திக்குச் சென்று விட்டால் அதன் பின் யார் சீதையைத் தேடுவது எனவே திருமலையைத் தவிர்த்த பிற இடங்களில் மட்டும் சீதையைத் தேடுங்கள்!” என்று அறிவுறுத்துகிறான் சுக்ரீவன்.

கோவர்த்தன மலையே திருமலை

கண்ணன் ஏழு நாட்கள் கோவர்த்தன மலையைத் தாங்கிப் பிடித்து ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்தான் என்பதை நாம் அறிவோம். அந்த மலை கண்ணனுக்குக் கைம்மாறு செய்ய விழைந்ததாம். அதனால் அந்த கோவர்த்தன மலையே திருமலையில் ஏழு மலைகளாக மாறியது என்றும், தன்னை ஏழு நாட்கள் சுமந்த கண்ணனை ஏழு மலைகளாக மாறிக் காலந்தோறும் அது தாங்கி நிற்கிறது என்றும் சொல்வார்கள்.

கலியுக வைகுண்டம்

வைகுண்ட லோகத்தில் உள்ள திருமாலை நேரில் சென்று தரிசிக்கும் பேறு பெறாதவர்களுக்கு இந்தக் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக, கலியுக வரதனாகத் திருமலையப்பன் தரிசனம் தருவதால், திருமலையைக் கலியுக வைகுண்டம் என்று சொல்வார்கள்.

யசோதையே வகுளமாலிகை

கண்ணனின் வளர்ப்புத் தாயான யசோதையால், கண்ணன் செய்து கொண்ட பதினாறாயிரத்து நூற்றெட்டுத் திருமணங்களில் ஒன்றைக் கூடக் காண இயலவில்லை. அதை எண்ணி அவள் வருந்திய நிலையில், அந்த யசோதையையே வகுளமாலிகையாகத் திருமலையில் பிறக்க வைத்தார் திருமால். வகுளமாலிகை ஸ்ரீநிவாசனுக்கும் பத்மாவதிக்கும் திருமணத்தை ஏற்பாடு செய்து, தானே முன்நின்று நடத்தி வைத்துக் கண்ணாரக் கண்டு களித்தாள்.

வேதவதியே பத்மாவதி

திருமாலை மணக்க விரும்பிக் கடுந்தவம்புரிந்து வந்தாள் வேதவதி என்ற பெண். ராமாயணக் காலத்தில் ராவணன் சீதையை அபகரிக்க வந்தபோது, சீதையை அக்னி லோகத்துக்குப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டு, போலிச்சீதையாக இந்த வேதவதி வந்து ராவணனுடன் சென்றதாகப் பாத்ம புராணம் போன்ற நூல்கள் சொல்கின்றன. அந்த வேதவதிக்கு அருள்புரிய நினைத்தார் திருமால். அதனால் தான் அந்த வேதவதியைப் பத்மாவதியாகத் திருமலையில் அவதரிக்க வைத்து, தானே ஸ்ரீநிவாசனாக வந்து அவளை மணந்து கொண்டார்.

வேங்கடேச சுப்பிரபாதம்

மணவாள மாமுனிகளின் சீடரான பிரதிவாதி பயங்கரம் அண்ணா என்பவர் திருவேங்கடமுடையானுக்காக வேங்கடேச சுப்பிரபாதம் இயற்றினார். ராமனுக்குச் சுப்பிரபாதம் பாடும் விதமாக விசுவாமித்திரர் கூறிய,கௌசல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர சார்தூல கர்தவ்யம் தைவம் ஆஹ்நிகம்என்ற ஸ்லோகத்தையே முதல் ஸ்லோகமாகக் கொண்டு, மேலே வேங்கடேசனின் சுப்பிரபாதம் இயற்றப்பட்டது.

திருமலையப்பன் நெற்றியில் இருப்பது என்ன?

திருமலையப்பன் நெற்றியில் அணிந்திருக்கும் திருமண் காப்புக்கு ஸ்ரீபாத ரேணு என்று பெயர். இறைவனின் பாதத்தூளியை நாம் நெற்றியில் திலகமாக அணிகிறோம். பக்தர்கள் மேல் பேரன்பு கொண்ட திருவேங்கடமுடையான், தன் பக்தர்களின் பாதத்தூளியைத் தன் நெற்றியில் திருமண் காப்பாக அணிகிறானாம்.

அதனால் தான் ஸ்ரீபாத ரேணு – அடியார்களின் பாதத் தூளி எனத் திருமலையப்பனின் திருமண் காப்பை அழைக்கிறார்கள்.

திருப்பதி மலையின் அடிவாரத்திற்கு அலிபிரி என்று பெயர்

——————————————————————————

ஸ்ரீநிவாச புராணம் என்று தனியாக எதுவும் இல்லை. பதினெட்டுப் புராணங்களில் வேங்கடேசரின் லீலைகள் பன்னிரண்டு புராணங்களில் காணப்படுகின்றன. அவற்றை எல்லாம் தொகுத்து திருவேங்கட மஹாத்மியம் என்ற பெயரில் ஒன்று சேர்த்துள்ளார்கள். திருமலையில் கிடைத்த கல்வெட்டு ஒன்று கி பி 1491 ஜூன் மாதம் 27ம் தேதி பாஸிந்தி வேங்கடதுறைவார் தாம் தொகுத்த திரு வேங்கட மஹாத்ம்யத்தை விண்ணப்பம் செய்ததாகக் காணப்படுகிறது. 1884 ல் இது தெலுங்கு புத்தகமாக தேவஸ்தானத்தரால் வெளியிடப்பட்டது 1896ல் இரண்டாவது பதிப்பும் 1928 ல் மூன்றாவது பதிப்பும் வெளி வந்தன.

க்ருதேது நரசிம்ஹோபூ4த்
த்ரேதாயாம் ரகு4 நந்தன:
த்3வாபரே வாஸு தே3வஸ்ச
கலௌ வேங்கட நாயக:–(ஆதித்ய புராணம்)

கிருத யுகத்தில் நரசிம்ஹராக இருந்தவரே, திரேதா யுகத்தில் ரகுநந்தனராக அவதரித்தார்.

அவரே துவாபரயுகத்தில் வாசுதேவர் ஆனார்.அவரே கலியுகத்தில் வேங்கடநாயகர் ஆனார்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் நமோ நாராயணாய

சூத முனிவர்

நைமிசாரண்யம் சிறந்த தபோவனம்; –நிமிஷம் வீணாகாமல் நடக்கும் அங்கு,

பகவத் தியானமும், பகவத் சர்ச்சைகளும், அகத்தை வென்ற முனிவர்கள் இடையே!

சூத முனிவரைக் கேட்டனர் பிற முனிவர்கள்,
“பூதலத்தில் ஆதி நாராயணனுக்கு உகந்த இடம், பகவான் நிகழ்த்திய லீலா விநோதங்கள் என்னும்
மகாத்மியத்தைக் கேட்க வேண்டும் செவிகள் குளிர!”

அன்புடன் அளித்த வேண்டுகோளை ஏற்றார்
என்றும் இறைவன் புகழ் பேச விரும்பும் சூதர்.

“கணக்கில் அடங்காது நாரயணனின் லீலைகள், வணக்கத்துக்குரிய சேஷாசலத்தில் நடந்தவை.

வராக கல்பத்தில் நிகழ்த்திய அற்புதங்களை ஒரு புராணமாக உரைக்கின்றேன் எனத் தொடங்கினார்.

ஸ்வேத வராஹம்

ஓராயிரம் சதுர் யுகங்கள் பிரமனின் ஒரு பகல்; ஓராயிரம் சதுர் யுகங்கள் பிரமனின் ஒரு இரவு.

பிரமனின் ஒருநாள் பொழுது நீளும் நமக்கு இரண்டாயிரம் சதுர் யுகங்களாக பூவுலகில்!

ஒரு நாள் முடிந்ததும் எரிப்பான் சூரியன்; ஒரு துளி மழை விழாது பூமியின் பரப்பில்!

முன்னமேயே இதை அறிந்த முனிவர்கள் சென்று அடைக்கலம் புகுவர் ஞான வுலகில்

மரம், செடி, கொடி, ஜீவராசிகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடும் அதீதஉஷ்ணத்தில். தொடர்ந்து வீசும் காற்று பல ஆண்டுகளுக்கு.

அடர்ந்த மேகத்திறள் உருவாகும் வானில். கொட்டும் கனமழை பூமியின் மேற்பரப்பு அதிர; கெட்டிப்பட்டு பூமி பதிந்துவிடும் பாதாளத்தில்!

பொங்கி எழுகின்ற ஜலப் பிரவாகத்தால் தாங்கும் நீர் மகர லோகம் வரையிலும்! வடியாது நீர் பிரமனின் இரவு முடியும் வரை

படைப்பைத் தொடங்க வேண்டும் மீண்டும்!

வெள்ளைப் பன்றி உருவெடுப்பார் விஷ்ணு; வெள்ளத்தில் தேடிச் செல்வார் பூவுலகினை. பாய் போலச் சுருட்டி ஒளித்து வைத்திருப்பான்
பாதாளத்தில் பூமியை அரக்கன் ஹிரண்யாக்ஷன்.

தரணியை வெளிக் கொணரும் முன்பு வராஹம் ஹிரண்யாக்ஷனை வெற்றி கொள்ள வேண்டும்!

தொடங்கும் துவந்த யுத்தம் இருவரிடையே! தொடரும் துவந்த யுத்தம் வெகு நீண்டகாலம்!

கூரிய நகங்களாலும், கோரைப் பற்களாலும் கிழித்து அரக்கனை அழித்து விடும் வராஹம்.

ஜலத்தில் கலந்து விடும் பெருகும் குருதி நதி ஜலப்ரவாஹம் ஆகிவிடும் செந்நீராக அப்போது!

கிரீடாசலம்

ஞான லோகத்தில், தியானத்தில் இருந்த, மோன முனிவர்கள் அறிந்தனர் இதனை.

தரணியைத் தன் முகத்தில் தாங்கி வந்தார் வராஹ பெருமான் நீரிலிருந்து வெளியே. ஸ்தாபித்தார் பூலோகத்தை முன்போலவே;
ஸ்தாபித்தார் சாகரங்களை முன்போலவே.

சிருஷ்டியைத் தொடங்கினான் பிரம்மதேவன் சிருஷ்டித்தான் சூரிய, சந்திரர்களை முதலில்.

பிற ஜீவராசிகளையும் படைத்தான் பின்னர் பிரம்மதேவன் சரியான வரிசைக் கிரமத்தில்.

பூலோகத்தை மீட்ட வராஹ பெருமான் பூவுலகிலேயே தங்கிவிட விழைந்தார்.

கருடனைப் பணித்தார், “வைகுந்தம் செல்க! பிரியமான கிரீடாச்சலத்தைக் கொணர்க!”

வைகுந்தம் விரைந்தான் உடனே கருடன்; வைக்கும் இடத்தையும் தேர்வு செய்தார்!

கோமதி நதிக்குத் தெற்கேயும், மற்றும் கீழ்க்கடலுக்கு மேற்கேயும் அமைந்தது. நாராயண கிரியே ஆகும் கிரீடாசலம்!
நவரத்தினங்கள் நிரம்பிய சிகரங்கள்!

காய் கனி, மூலிகைகளால் நிறைந்தது; கந்தம் கமழும் மலர்களால் நிறைந்தது;

ஒலிக்கும் பறவைகளின் பாடல் கொண்டது ஒலிக்கும் சுனைகள் நீரோடைகள் கொண்டது.

தேர்வு செய்த இடத்தில் மலையை வைக்கப் பார்மீது ஆதிசேஷன் படுத்ததுபோல இருந்தது.

இருந்தது ஸ்வாமி புஷ்கரிணி என்னும் தடாகம், கிரிகளின் இடையே மற்றும் தருக்களின் நடுவே.

நவரத்தினங்கள் இழைத்த தூண்கள் தாங்கிட நடுநாயகமாக அமைந்து இருந்தது விமானம்.

அழகிய மண்டபங்களோடு கூடிய விமானம் அமைந்தது ஸ்வாமி புஷ்கரிணிக் கரையில்.

எழுந்தருளினார் வராஹ பெருமான் – தாம் விழைந்தபடி பூவுலகில், விமானத்தின் கீழ்.

ஸ்துதி

வராஹ பெருமான் பூமியில் தங்கிவிட்டதால் வந்து பூமியில் துதித்தனர் வானவர், முனிவர், இந்திரன், பிரமன், துவாதச ஆதித்யர்கள்,
ருத்திரர், தேவர், வசுக்கள், திக்பாலகர்கள், கந்தருவர், சப்த ரிஷிகள், மருத் கணங்கள்!
வந்தவர் விண்ணப்பித்தனர் பெருமானிடம்,

“தரணியைப் பாதாளத்தில் ஒளித்து வைத்த ஹிரண்யாக்ஷனை சம்ஹரித்தீர்கள் போரில். ப்ரபாவமும், தோற்றமும் மாறவேயில்லை!
பக்தருக்கு அருள வேண்டும் இன்முகத்துடன்.’ மாற்றிக் கொண்டார் பெருமான் சிரித்தபடியே,
தோற்றத்தையும், தன் முக விலாசத்தையும்!

அழகிய வலிய புஜங்கள் ஒரு நான்குடனும்; அழகிய இருதேவியர் தன் இருமருங்கிலும்,.

கருணை பொழியும் கமலக் கண்களுடனும்; கருத்தைக் கவரும் ஒளிரும் வடிவத்துடனும்; கிரீடாச்சலத்தில் விளங்கும் வராஹ பெருமான்
நிறைவேற்றுகிறார் பக்தரின் கோரிக்கைகளை.

வெள்ளைப் பன்றி வடிவெடுத்ததால் – ஸ்வேத வராஹ கல்பம் என்ற பெயர் வழங்கலாயிற்று.

நாரதர்

கலியுகத்தில் நிகழ்த்தினர் மாபெரும் யாகம் காசியபர் முதலிய முனிபுங்கவர்கள் சேர்ந்து. வேதகோஷம் ஓங்கி ஒலித்தது யாகசாலையில்
தேவரிஷி நாரதர் வந்தார் அந்த யாகசாலைக்கு. “அவிர் பாகம் அளிக்கப் போவது யாருக்கு?” என ஆர்வத்துடன் கேட்டார் முனிவர்களை நாரதர்.

“இன்னமும் முடிவு செய்யவில்லை அதனை இருக்கிறதே காலஅவகாசம் அதற்கு” என்றனர்.

“சத்துவ குணமே முக்குணங்களில் உத்தமம்; சத்துவ குணம் கொண்டவரைக் கண்டறிந்து, பூர்த்தி செய்யுங்கள் உங்கள் யாகத்தை ” என்று
பற்ற வைத்தார் நாரதர் கலஹம் நடப்பதற்கு.

“இறைவன் குணத்தை ஆராயும் அளவிற்குத் திறமை உள்ளவர் யார் உள்ளார் உலகினில்?”

தேர்வு செய்தனர் பிருகுவை பிற முனிவர்கள்;
தேர்வு செய்யவேண்டும் அவர் சத்துவ குணனை. சத்திய லோகம் சென்றார் பிருகு முனிவர்;
பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார் பிரம்மன். சாவித்திரி, காயத்திரி தேவியருடன் இருந்தனர்
சரஸ்வதி தேவியும், திக்பாலகர்களும் குழுமி!

நின்று கொண்டே இருந்தார் பிருகு – அவரைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை பிரம்மன்!

‘எத்தனை நேரம் தான் நிற்பது?” என்று எண்ணிச் சத்தம் இன்றி அமர்ந்துவிட்டார் பிருகு முனிவர்.

அனுமதி பெறாமலேயே அமர்ந்த முனிவரை அலட்சியம் செய்தார் பிரம்ம தேவன் சபையில்!

முனிவரை அலட்சியம் செய்த பிரம்மனுக்குக் கனிவான சத்துவகுணம் இல்லவே இல்லை

ஈசனும், உமையும்

பிரம்மனின் போக்குப் பிடிக்காத பிருகு பிரம்மலோகத்தை விட்டுச் சென்றார். அடுத்துச் சென்றார் கயிலை மலைக்கு;
அங்கும் ஆனார் சிவபூஜையில் கரடியாக!

தனிமையில் இனிமை கண்டிருந்தவரின் தனிமையைக் குலைத்தார் பிருகுமுனிவர்.

கவனம் வேறிடத்தில் இருந்ததால் ஈசன் கவனிக்கவில்லை முனி பிருகுவின் வரவை.

பெண்ணுக்கு உண்டு அதிக உள்ளுணர்வு; கண்டு விட்டாள் உமை முனிவர் வரவை.

விலகிச் செல்லுமாறு ஈசனுக்குணர்த்த விலகிச் செல்லாமல் நின்று கொண்டிருந்த, முனிவர் மேல் கொண்டான் சீற்றம் சிவன்;
முனிவரும்கொண்டார் சீற்றம் சிவனிடம்.

தேடி வந்தவரைக் காக்க வைத்தது ஒன்று; தேடி வந்தவரை வரவேற்காதது இரண்டு; நாடி வந்த காரணத்தை வினவாதது மூன்று;
நாடி வந்தவரிடம் சினம் கொள்வது நான்கு!

தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்த சிவபெருமான் மேல் சீற்றம் பொங்கியது.

கோபத்தின் மிகுதியால் பிருகு முனிவர் சாபத்தை அளித்தார் சிவ பெருமானுக்கு,

“உலகில் இனிக் கிடையாது உனக்கு உருவ வழிபாடு என்ற ஒன்று!” என்றார்

நின்றுவிட்டது சிவனுக்கு உருவ வழிபாடு! இன்றும் எங்கும் நடப்பது லிங்க வழிபாடே.

சத்துவ குணம் இல்லாதவன் சிவன் என பிருகு உத்தம குணனைத் தேடினார் வைகுந்தத்தில்.

நாரணன்

கைலாசம் விடுத்த பின்பு பிருகு முனிவர் வைகுந்த நாதனைச் சோதிக்க விரைந்தார்.

ஆனந்தமாகச சயனித்திருந்தார் நாரணன் ஆதிசேஷன் மீது; லக்ஷ்மி பாதங்களை வருட.

தேவியின் பணிவிடையில் மெய்மறந்திருந்த நாதன் உணரவில்லை பிருகுவின் வருகையை.

‘வேஷம் போடுகிறான் மாயவன் – இவன் வேஷத்தைக் கலைக்கிறேன் இப்போதே!’

இரண்டு இடங்களில் அலட்சியம் செய்தனர் இங்கும் அதுவே தொடருகின்றதே!’ என்று நாரணன் மார்பில் ஓங்கி உதைத்தார் பிருகு,
“நாடகம் போதும் கண்டும் காணாதது போல!”

உதைத்த காலைப் பற்றினார் நாரயணன், உதைத்த போதும் சினம் கொள்ளவில்லை.

“கால் வலித்திருக்குமே முனிவரே! ” எனக் கால் வலி போக அழுத்திவிட்டார் பாதத்தை.

“தூக்க மயக்கத்தில் இருந்து விட்டேன் நான்! துயர் அடைந்தீரோ என்னை உதைத்தால்?”

முனிவருகு ஏற்பட்ட திகைப்பு அளவற்றது!
‘கனிவுக்கும் ஓர் எல்லையே இல்லையோ? உதைத்த காலைச் சபித்திருக்க வேண்டும்
உதைத்த காலை உபசரிக்கிறாரே!’ என்று

“கண்டு கொண்டேன் நான் சத்துவ குணனை கண்டு கொண்டேன் நான் உத்தம குணனை!” பாதங்களில் விழுந்து வணங்கினார் முனிவர்.
பாதகத்தை மன்னிக்க வேண்டினார் முனிவர்.

யாகசாலை திரும்பினர் வெற்றியுடன் – மூன்று லோகத்திலும் சத்துவ குணனை கண்டறிந்ததால்.

லக்ஷ்மியின் கோபம்

ஏகாந்தமாக இருந்த வேளையில் உள்ளே வேகமாக வந்ததோடு நிற்கவில்லை பிருகு!

உதைத்தார் தன் இருப்பிடமான மார்பினை. உதைத்த காலுக்கு நாரணனின் உபசாரம் வேறு. வெகுண்டு எழுந்தாள் அமர்ந்த நிலையில் இருந்து.
வெலவெலத்துப் போனார் நாரணன் அதுகண்டு

பதறிய விஷ்ணு சாந்தப்படுத்தினார் லக்ஷ்மியை. உதறித் தள்ளினாள் கோபம் குறையாத லக்ஷ்மி.

‘அசுத்தம் செய்தான் என் இருப்பிடத்தை பிருகு! அதற்கு அவனைக் கொண்டாடினீர்கள்!” என்றாள்

“அவமதிக்கும் எண்ணம் இல்லை பிருகுவுக்கு! அதீத பக்தி தந்த உரிமையில் உதைத்தான்” என,

“பக்தன் அவன் என்றால் பக்தையே நானும். பக்தன் ஒரு பக்தையை அவமதிக்கலாமா?

வாசஸ்தலம் களங்கப் பட்டது பிருகுவால் வசிக்க முடியாது மீண்டும் அங்கு என்னால்.” எத்தனை சொல்லியும் கேட்கவில்லை அவள்.
“என்னிருப்பிடத்தை உதைத்தான்! ” என்றாள்

வைகுந்தம் விடுத்தாள் லக்ஷ்மிதேவி உடனே. வையகம் அடைந்தாள் தவக் கோலம் பூண்டிட. கரவீரபுரம் சென்று அடைந்தாள் – அங்கு
பரந்தாமனின் பாதங்களை தியானித்தாள்

எப்படி இருக்குமோ லக்ஷ்மி இல்லாத இடம் அப்படியே இருந்தது வைகுந்தம் இப்போது. சோபை மறைந்தது; சோகம் நிறைந்தது;
சூனியமாக இருந்தது காணும் இடங்கள்!

வைகுண்டம் விடுத்தான் நாரணனும்; வையகம் அடைந்தான் நாரணனும் ;

சேஷாச்சலம் இருந்தது கரவீரபுரத்தின் அருகே; சேஷாச்சலத்தைத் தேர்வு செய்தார் நாரணன்.

எறும்புப் புற்று

நாற்புறங்களிலும் மலைச் சிகரங்கள்; ஊற்றெடுத்து ஓடும் இனிய சுனைகள்; சலசலத்து ஓடும் அழகிய சிற்றோடைகள்;
கலகலப்பால் மகிழ்வூட்டும் பறவையினங்கள்;

பள்ளத்தாக்குகள் மலைகளின் இடையிடையில்; உள்ளம் கொள்ளை கொள்ளும் இயற்கையெழில்;

தெளிந்த நீர்த் தடாகத்தைக் கண்டார் நாரணன்; விளங்கிய ஆலயத்தையும் கண்டார் நாரணன்;

அழகிய மண்டபங்கள், விமானம் கொண்ட, ஆதி வராஹ மூர்த்தியின் அழகிய ஆலயம்.

தடாகத்தில் நீராடி வராஹப் பெருமானிடம் தங்குவதற்கு அனுமதி வேண்டினார் நாரணன்;

“எங்கு விருப்பமோ அங்கு தங்கலாம்!”எனத் தங்கு தடையின்றி அனுமதித்தார் வராஹர்.

“தங்குவேன் இங்கேயே கலியுகம் முழுவதும். தடாகத்தில் நீராடித் தங்களைத் தொழுத பிறகே

இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் என்னையும் இங்கே தொழ வரவேண்டும் இனிமேல்” என்றார்.

நாரணன் சேஷாசலம் சென்றதை அறிந்து நாரணனைத் தேடி ஓடினான் பிரம்மதேவன்.

பிரிவுத்துயர் தாங்காமல் வருந்தி நாரணன் திரிவதைக் கண்டு வருந்தினான் பிரமன்.

வெட்ட வெளியில், கட்டாந்தரையில், படுத்து உறங்கினார் வைகுந்தவாசன்.

அமைக்க விரும்பினான் இருப்பிடம் ஒன்றை; அமைத்தான் நிழல் தரும் புளிய மரத்தினை.

அமைத்தான் அதன் கீழ் எறும்புப் புற்றினை; அமைத்தான் இறங்கிச் செல்லப் படிக்கட்டு.

அமைத்தான் வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய மண்டபத்தினை புற்றினுள் பிரமன்.

இடைப் பெண்

நாரணனுக்குப் பிடித்திருந்தது புதிய மண்டபம்; நிரந்தரமாகத் தங்க விரும்பினான் அங்கேயே.

‘வைகுந்தம் விடுத்து விண்ணிலிருந்து நாரணன் வையகம் வந்ததை அறிவிக்க வேண்டும் உடனே’. கைலாசநாதனிடம் விரைந்து சென்றான் பிரம்மன்.
“சேஷாச்சலத்தில் உள்ளான் நாரணன்” என்றான்;

நாரணனுக்கு உதவிட ஆவல் கொண்டனர், பிரம்மனும், பிரானும் விரைந்தனர் வையகம்.

சிறு பிணக்கினால் நாரணனிடமிருந்து பிரிந்து சென்ற லக்ஷ்மியிடம் சென்றனர்.

கரவீரபுரம் வந்த பரமேச்வரன், பிரம்மனை வரவேற்றாள் லக்ஷ்மிதேவி மனமுவந்து.

“தாங்கள் பிரிந்து வந்து விட்டதால் நாரணன் தானும் வந்து விட்டார் இப்போது வையகம்.

அனாதை போல அலைந்து திரிகின்றார் வனாந்தரங்களிலும், மலைச்சரிவுகளிலும்!

வராஹ பெருமான் கோவில் தடாகத்தருகே இருப்பிடம் ஒன்றை அமைத்துவிட்டேன்.

ஆகாரத்துக்குச் செய்ய வேண்டும் ஒரு ஏற்பாடு. அரனும், நானும் வைத்துள்ளோம் ஒரு திட்டம்.

மாறிவிடுவோம் நாங்கள் இருவரும் உடனே மடி சுரக்கும் ஜாதிப் பசுவாகவும், கன்றாகவும்!

தடை சொல்லாமல் தாங்களும் உதவ வேண்டும்; இடைப் பெண்ணாக மாறிவிட வேண்டும் நீங்கள்.

சேஷாசலத்தின் அருகே சந்திரகிரியை ஆளும் சோழ ராஜனிடம் விற்று விடுங்கள் எங்களை!”

சந்திரகிரியை நோக்கிப் புறப்பட்டாள் லக்ஷ்மி தேவி, விந்தையான பசு, கன்றுடன் இடைப்பெண்ணாக மாறி.

பசுவின் மாயம்

கரவீர புரத்திலிருந்து புறப்பட்ட இம்மூவரும் விரைவாகச் சென்றடைந்தனர் சந்திரகிரியை.

கன்றையும், பசுவையும் விற்க வந்ததாக நின்ற காவலரிடம் கூறினாள் இடைச்சி.

கொழுகொழு பசுவும், மொழுமொழு கன்றும், அழகால் கவர்ந்தன காவலரின் உள்ளங்களை! அறிவித்தனர் அதை அரசனிடம் சென்று;
தருவித்தான் அவன் அவர்களைத் அருகே.

பளபளப்போடும், சுழிகளோடும் கூடிய பசுவும், கன்றும் கவர்ந்தன அரசனை.

அரசிக்கும் பிடித்துவிட்டது அவற்றை, பராமரித்தாள் தன் கவனத்தில் வைத்து.

இடையன் செல்வான் தினமும் மலைக்கு, விடியற் காலையில் பசுக்களை மேய்க்க.

அரண்மனை திரும்புவான் அன்றாடமும். ஆவினத்துடன், ஆதவன் மறையும் முன்.

மலைக்குச் சென்றபின் பசுவும், கன்றும், மலைச் சரிவில் ஒதுங்கிவிடும் தனியாக.

இடையனின் தலை மறைந்த உடனே எடுக்கும் ஓட்டம் சேஷாச்சலத்துக்கு.

புற்றின் மேல் நின்று பசு பால் பொழிய புற்றினுள்ளே பசியாறுவான் நாரணன்.

திரும்பக் கலந்துவிடும் பிற மாடுகளுடன்! அறியவில்லை இடையன் இம் மாயத்தை!

பசுவைக் கறந்தாள் ராணியே சுயமாக; பசு பால் தரவில்லை ராணிக்குச் சரியாக.

அதிக உணவு அளித்தாள் பசுவுக்கு எனினும் அதிகப் பால் கரக்கவில்லை அந்த மாயப் பசு!

பரந்தாமன்

அரசி சந்தேகித்தாள் அப்பாவி இடையனை,
‘கறந்து குடிக்கின்றனோ வருகின்ற வழியில்?’“மடி பெரிதாக இருக்கிறது பசுவுக்கு – ஆனால்
அடி தட்டுகிறது கறக்கும் பால் விந்தையாக!

கூறு உண்மையை என்ன நடக்கிறது?” அதட்ட ,“அறியேன் நான் ஒரு பாவமும் ” என அழுதான்.

“ஜாக்கிரதை நாளைக்குக் தரவேண்டும் பால்!” எச்சரித்தாள் இடையனைச் சந்திரகிரி அரசி.

இத்தனை ஆண்டுகள் பெறாத அவப் பெயரை பெற்றுத் தந்துவிட்டன இந்தப் பசுவும் கன்றும்.

நம்பவில்லை அந்தப் பசுவை இடையன் சற்றும், ‘ஓம்புகிறதோ பழைய எஜமானுக்குப் பால் தந்து?’ கண் இமைக்காமல் கண்காணித்தான் மறுநாள்;
நண்பகலில் பிரிந்து ஓடின அப் பசுவும், கன்றும். ஓடின சேஷாசலத்தின் மலைச் சரிவுகளில்,
ஓடினான் துரத்திய இடையன் கோடரியுடன்!

புற்றை அடைந்ததும் நின்று விட்டன அங்கு. புற்றின் உள்ளே சுரந்தது மொத்தப் பாலையும்!

கோபம் கொண்டான் இடையன் – ‘அரசியின் நோகும் சொற்களை நான் கேட்டது இதனால்’.

பாய்ந்தான் பசு மீது கோடரியை ஓங்கியபடி; பாய்ந்து வெளிவந்தார் புற்றிலிருந்த நாரணன்.

விழுந்தது வெட்டு நாரணன் நெற்றியில் பிளந்த நெற்றியிலிருந்து பீறிட்டது ரத்தம்!

நனைந்தன பசுவும், கன்றும் ரத்தத்தில்! நினைவிழந்தான் இடையன் அச்சத்தில்!

சோழராஜன்

ரத்தக் கறையுடன் ஓடிவந்தன பசுவும், கன்றும்! சித்தம் குழம்பியது அரண்மனைக் காவலருக்கு!

‘துஷ்ட மிருகங்கள் சேதம் விளைவித்தனவா? கஷ்ட காலம் காணவில்லை இடையனையும்!

யார் யாருக்கு என்னென்ன நிகழ்ந்தனவோ? யாருக்குத் தெரியும்?’ அரசனிடம் ஓடினர்.

வாசலுக்கு விரைந்தான் அரசன் – ஆனால் வழக்கத்துக்கு மாறாகக் குழம்பியது மனம்.

வாலைச் சுழற்றிய பசு ஓடியது தெருவில். வரச் சொல்லுகிறது எனத் தெரிந்து விட்டது.

“செல்லுங்கள் பசுவைத் தொடர்ந்து நீங்கள்! சொல்லுங்கள் அங்கு கண்டதை இங்கு வந்து!”

ஆயுதங்களுடன் விரைந்தனர் காவலர்கள்; அடைந்தனர் புற்று இருக்கும் இடத்தினை.

இடையன் மூர்ச்சித்து விழுந்து கிடந்தான்; கிடந்தது அவன் அருகே ரத்தக் கோடாரி!

கசிந்தது ரத்தம் புற்றின் துவாரத்தில்! வசித்த நாகம் வெட்டுண்டு விட்டதோ?

விரைந்து சென்று கூறினார் அரசனிடம் விரைந்து வந்தான் அரசன் பல்லக்கில்

‘நிகழ்ந்துள்ளது அசாதாரண சம்பவம் ஒன்று ! நிகழ்ந்து விட்டதோ தெய்வக் குற்றம் இன்று?’

தெய்வத்தை எண்ணி தியனித்தான் மன்னன்; “தெளிவாக்குவாய் நிகழ்ந்தவற்றை நீ எனக்கு!

பிழை செய்யப் பட்டிருந்தால் மனமுவந்து பிராயச் சித்தம் செய்கின்றேன் பாவத்துக்கு!”

நாரணன் சாபம்

கோபத்தோடு எழுந்தார் நாரணன் புற்றிலிருந்து கோடரி பிளந்த நெற்றியில் வழிந்தது ரத்தம்!

தரையில் விழுந்து நமஸ்கரித்தான் அரசன், “உரையுங்கள் தேவதேவா! நிகழ்ந்தது என்ன?”

கண்ணீர் விட்டுக் கதறினான் சோழராஜன், செந்நீர் வழிய நின்றிருந்த நாரணனிடம்.

“வைகுந்தம் விடுத்து வையகம் வந்த பின்னர் வாழ்ந்து வருகின்றேன் நான் இந்தப் புற்றில்!

தெய்வப் பசு வந்து சுரக்கும் பாலை எனக்காக; செய்வது ஏதென்று அறியவில்லை இடையன்.

கோடரியால் தாக்க வந்தான் பசுவினை – எனக்குக்கோடரி வெட்டு அடாத செயலைத் தடுத்ததற்கு!”

“ஏய்க்கிறது பசு என்று எண்ணினான் அவன், துய்க்கிறது இறைவன் என்று அறியவில்லை!

சாந்த மூர்த்தியான தாங்கள் கோபம் விடுத்துச் சாந்தம் அடைய வேண்டும் லோக ரக்ஷகா!”

“புற்றில் பால் சுரந்த உடனேயே அவனது சிற்றறிவுக்கு எட்டி இருக்கவேண்டும் இது!

புற்றில் உள்ளது ஏதோ விசேஷம் என்பது. குற்றமே இடையன் கோடரியை வீசினது!”

அத்தனின் உக்கிரம் குறையவில்லை – மன்னன் எத்தனை கெஞ்சினாலும் மாறவில்லை கோபம்!

“குடிமக்கள் செய்யும் பாவம் சேரும் சென்று, குடிமக்களை ஆளும் அரசனையே என்றும்!

யோசியாமல் இடையன் செய்த தவற்றுக்குப் பைசாசமாக மாறித் திரிவாய் நீ வனங்களில்!”

சாபம் இட்டார் அப்பாவிச் சோழமன்னனுக்குச் சாந்த மூர்த்தியாகிய சத்துவ குண நாரணன்.

சாப விமோசனம்

“பிரஜைகளின் தவறுகள் சேரும் அரசனையே! குறைப் படவில்லை கிடைத்த சாபத்துக்கு நான்.

கூறுவீர் சாப விமோசனம் என்ன என்பதை; கூறுவீர் சாபவிமோசனம் பெறும் வழியை!”

“திரிவாய் பிசாசாக மாறி மிகுந்த ஆயுளில்; பெறுவாய் பெருமை நீ அடுத்த பிறவியில்.

பிறப்பாய் சுதர்மன் மகன் ஆகாச ராஜனாக, பிறப்பாள் என் மனைவி உந்தன் மகளாக.

நற்கதி அடைவீர் நீயும், உன் வம்சத்தினரும்; கற்பகாலம் விளங்கும் புகழுடன் உன் பெயர்.”

“சாபமா இது? அரிய வரம் அல்லவோ இது? கோபத்தின் பரிசாகக் கிடைத்தவை இவை!

வைகுந்தவாசனை அடைவேன் மருமகனாக! வைபவ லக்ஷ்மியை அடைவேன் என் மகளாக!

மன்னித்து விடுங்கள் இடையனின் குற்றதை; புன்செயல் புரிந்தான் மதியற்ற மடையன்.”

மயங்கிய இடையன் விழித்துக் கொண்டான் தயங்கித் தயங்கி எழுவதற்கு முயன்றான்.

கண்கள் தெரியவில்லை; பார்வை போய்விட்டது! கண்ணீர் வழிய அழுதான் “ஆண்டவனே!” என்று.

“தண்டனை அனுபவிப்பான் சிறிது காலம் கண் மூடித்தனமான செயல் செய்ததற்கு.

நித்தியவாசனாக அமர்வேன் நான் இங்கு; எத்தினம் இவன் என்னிடம் வருவானோ,

கிடைக்கும் கண் பார்வை மீண்டும் அன்று. கிடைக்கும் வைகுந்தம் பாவத்தை வென்று!

விண்ணுலகு விட்டு பூமிக்கு வந்தபின் கண்டீர்கள் என்னை இந்தக் கோலத்தில்.

இதே கோலத்தில் தங்குவேன் இங்கே!” அதே நொடியில் அந்தர் தியானமானார்.

பைசாச உருவம் தாங்கினான் சோழ ராஜன்; வைகுந்தவாசன் மேல் செய்தான் தியானம்.

வகுள மாலிகை

விடை பெற்றுச் சென்று விட்டாள் லக்ஷ்மி! இடையன் பிளந்தான் நெற்றியைத் தாக்கி!

பிருஹஸ்பதி வந்தார் நாரணனைக் காண; வருந்தினார் நாரணன் படும் துயர் கண்டு.

“கசிகின்றதே நிற்காமல் இன்னமும் உதிரம்! கசியும் காண்போர்கள் கண்களிலும் உதிரம்!

சேஷாச்சலத்தில் இல்லாத மூலிகைகளா? ஈசா! தாங்கள் அறியாத வைத்தியமா?” என

மூலிகையைத் தேடிச் சென்ற நாரணனை – வகுள மாலிகை என்னும் மாது சிரோன்மணி கண்டார்.

ஆதி வராஹரிடம் அதீத பக்தி கொண்டிருந்த அகவை மிகுந்த ஒரு கண்ணியப் பெண்மணி.

பிளந்த நெற்றியிலிருந்து வழிந்த ரத்தம் பிளந்தது அவள் நெஞ்சத்தைத் துயரால்.

கொய்து கொண்டிருந்த மலர்களை விடுத்துத் தொய்ந்து நடந்திருந்த நாரணனிடம் வந்தாள்.

“யாரப்பா நீ? அலைகிறாய் ரத்தக் காயத்துடன் ! யாரும் இல்லையா உன்னைக் கவனிப்பதற்கு?”

கிழித்துத் துடைத்தாள் சேலைத் தலைப்பால்; பிழிந்து கட்டினாள் மூலிகையின் சாற்றால்.

கள்வர்கள் வழிமறித்துத் தாக்கினார்களா கூறு? காயம் வந்த மாயம் என்ன சொல்லு!” என்றாள்.

“அம்மா! யாரும் இல்லாத அநாதை நான் அழைப்பர் என்னை ஸ்ரீனிவாசன் என்று.

பசுவைத் தாக்க முயன்றான் ஒரு பாதகன்; பசுவைக் காத்தேன்; விழுந்தது ஒரு வெட்டு!”

இதயத்தைத் தொட்டது “அம்மா!” என்னும் சொல்! இவளும் யாருமில்லாத ஓர் அநாதை அல்லவா?

ஆனந்தக் கண்ணீருடன் நாரணனை அவள் நோக்க, அகக்கண்கள் திறந்து கொண்டன அதே நொடியில்!

‘தன் எதிரே நிற்பது ஸ்ரீனிவாசன் அல்லவே! தன் எதிரே நிற்பது ஸ்ரீ கிருஷ்ணன் அல்லவா?’

கண் இமைக்கும் நேரத்தில் கண்ட ஒரு காட்சி கண் முன் கொண்டு வந்தது பூர்வ ஜென்மத்தை!

யசோதை

கலியுகம் பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது. காலில் அம்பு தைத்திருந்தது கிருஷ்ணனுக்கு!

செயல் புரிந்தது ராமாவதாரத்தில் – ஆனால் செயல் பலன் தந்தது கிருஷ்ணாவதாரத்தில்!

வாலியோடு சுக்ரீவன் புரிந்த துவந்த யுத்தத்தில், வாலியைக் கொன்றான் மறைந்திருந்த ஸ்ரீ ராமன்.

கோபம் கொண்ட வாலி ராமச்சந்திரனுக்குச் சாபம் அளித்தான் தன் உயிர் பிரியும் முன்பு.

“மறைந்திருந்து வீழ்த்தினாய் ராமா நீ என்னை! மறைந்திருந்து வீழ்த்துவான் ஒருவன் உன்னை!”

தனிமையில் வனத்தில் அமர்ந்திருந்த கண்ணனின் இனிய பாதங்களை ஒரு பறவை என எண்ணினான்.

அம்பு எய்தான் வேடன் சாபத்தை நிறைவேற்ற. அன்பு கொண்டவர்கள் துடித்தனர் இதைக் கண்டு .

“வைகுந்தம் திரும்புகின்றேன் நான் – நீங்களும் மெய்யுருவம் அடையலாம் முன் போலவே!

சேஷாச்சலத்தில் உறைவேன் நான் கலியுகத்தில். சென்று காத்திருங்கள் என் வருகைக்கு!” என்றான்

விடுத்தனர் கோபியர் தங்கள் மாய உருவங்களை. எடுத்தனர் முன் போல் தம் பழைய உருவங்களை.

“எப்போதும் உன் அன்னையாகும் பாக்கியத்தைத் தப்பாமல் எனக்குத் தரவேண்டும் என் கண்ணா!”

யசோதை வேண்டினாள் கண்களில் அருவியுடன், யசோதைக்கு அருளினான் அவள் கேட்ட வரத்தை.

வகுள மாலிகையாகக் காத்திருப்பாய் அம்மா! வெகு விரைவில் வருவேன் சேஷாச்சலத்துக்கு.”

இருவரும் ஒருவரே!

கண நேரத்தில் உணர்ந்தாள் தான் யாரென! “கண்ணா! ” என அணைத்ததாள் அன்புடன்!

“அநாதைகள் அல்ல இனி நாம் என் மகனே! அநாதி காலமாக உள்ளது நமது உறவு!” என

அழைத்துச் சென்றாள் இனிக்கும் ஓடைக்கு; பழுத்த கனிகளைப் பறித்து உண்ணத் தந்தாள்.

“இனிமேல் இருந்துவிடு நீ என்னுடனேயே! தனியாக முன்போல் தவிக்க வேண்டாம்!”

“வந்து பார் நான் தாங்கும் இடத்தை!” என்று சிந்தை மகிழ்ந்து அழைத்தார் ஸ்ரீநிவாசன்

புற்றுக்கு அழைத்துச் சென்றார் அவளை; புற்றினுள் காட்டினர் தம் இருப்பிடத்தை!

வராஹ பெருமானை வணங்கச் சென்றாள், வகுள மாலிகை தினமும் செய்வது போல.

“வழக்கதை விடத் தாமதமாக வந்துள்ளாய்! வழக்கத்தை விட நீ ஆனந்தமாக உள்ளாய்!”

வம்புக்கு இழுத்தார் அந்த வகுள மாலிகையை, அன்புடன் அவள் தொழும் வராஹ பெருமான்!

ஸ்ரீனிவாசன் கதையைக் கூறினாள் அவள்.
“ஸ்ரீனிவாசன் வேறு,  நான் வேறு அல்ல!

அங்கே அவனுக்கு நீ செய்யும் தொண்டு இங்கே எனக்கு இனி வந்து சேர்ந்து விடும்.

கவனிப்பாய் நீ ஸ்ரீனிவாசனின் தேவைகளை. கலியுக முடிவில் சேர்வாய் என் பாதங்களை!”

ஆகாச ராஜன்

திரிந்தான் பைசாச உருவில் சோழராஜன்; பிறந்தான் பூவுலக வாழ்வை நீத்த பிறகு, நாராயண புரத்தை ஆண்டு கொண்டிருந்த
நல்ல மன்னன் சுதர்மனின் முதல் மகனாக. ஆகாச ராஜன் என்ற பெயரை வைத்தனர். அன்புடன் அவனைப் பேணி வளர்த்தனர்.

பிறகு பிறந்தது இன்னொரு ஆண் மகவு; பெயர் விளங்கியது தொண்டைமான் என. ஒற்றுமையாக வளர்ந்தனர் இருவரும்;
போற்றினர் அனைவரும் இருவரையும்.

சுதர்மன் விரும்பினான் வனவாசம் செல்ல; சுபமாக மணிமுடி தரித்தான் ஆகாசராஜன்.

இளவரசுப் பட்டம் கிட்டியது இளையவனுக்கு;  இருவரும் ஏற்றனர் தந்தையின் விருப்பத்தை.

உயர்குலப் பெண்களை மணந்து கொண்டனர்; பெயர் விளங்கும்படி நிர்வகித்தனர் நாட்டினை.

உருண்டோடின வருடங்கள் ஒவ்வொன்றாக, பெருகின வளமும், நலமும் அந்த நாட்டில்.

ஆனந்தம் கொண்டிருந்தனர் அனைவருமே ஆகாச ராஜன் என்னும் மன்னனைத் தவிர!

குழந்தை ஒன்று இல்லை கொஞ்சுவதற்கு! குழந்தை ஒன்றில்லை முத்தாடுவதற்கு!

“இப்பிறவியில் செய்யவில்லை ஒரு பாதகம்; முற்பிறவியில் செய்ததை யாம் அறிகிலோம்.

குலகுரு சுகர் அறிவார் மூன்று காலத்தையும். குலகுரு கூறுவார் நல்வழி ஒன்றை நமக்கு!”

அரசி ஆலோனை கூறினாள் அரசனுக்கு; அரசன் அழைத்து வரச் சொன்னான் சுகரை.

பல்லக்குச் சென்றது சுகரை அழைத்துவர, சொல்லுக்கு வல்லவர் சுகர் அங்கு வந்தார்.

மரப் பேழை

பல்லக்கில் வந்த குலகுரு சுகரை ஆகாசராஜன் உள்ளன்போடு வரவேற்றான் அரசியுடன் சென்று.

‘அழைத்த காரணம் என்ன அரசே?” என வினவ, “விழைகின்றோம் மழலைச் செல்வத்தை யாம்!

பலன் தரவில்லை புரிந்த தான தருமங்கள்; பலன் தரும் வழியைக் கூறவேண்டும் தங்கள்!”

“புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் – உனக்கு உத்திரவாதமாகப் பிறக்கும் குழந்தை!” என

“பொய்க்காது பெரியோரின் ஆசி மொழிகள்; செய்வோம் யாகத்தைத் தங்கள் ஆசியுடன்!”

குறித்தனர் நல்ல நாள் ஒன்றை யாகத்துக்கு; குவித்தனர் யாகப் பொருட்களைக் கொணர்ந்து.

குழுமினர் வேத விற்பன்னர்கள் யாகம் புரிந்திட அழைப்புகள் சென்றன அருமை நண்பர்களுக்கு!

உழுதான் ஆகாச ராஜன் அந்த யாக பூமியை, தொழுத பின்பு இறையையும், குருவையும்.

வேத கோஷம் செய்தனர் வேத விற்பன்னர்கள். கீத நாதம் ஒலித்தனர் இசை விற்பன்னர்கள்.

நிலத்தை உழுத ஆகாச ராஜனின் கலப்பை நின்று விட்டது ஓரிடத்துக்கு வந்தவுடன்.

அழுத்தி உழுதவுடன் எழுந்தது ஒரு சப்தம்; ஆழத்தில் கலப்பையைத் தடுத்தது எதுவோ!

தோண்டினர் காவலர் நிலத்தை விரைந்து; கண்டனர் அழகிய ஒரு மரப் பேழையை!

பேழை வந்தது அரசனிடம் பத்திரமாக! பேழை வீசியது ஓர் அரிய நறுமணத்தை.

பத்மாவதி

தென்றல் தழுவிச் சென்றது குளிர்ச்சியாக! தெளித்தது வானம் நன்னீர்த் துளிகளை!

பூமியை உழுத ஜனகனுக்குச் சீதையைப் போல, பூமியை உழுத மன்னனுக்கு கிடைத்தது என்ன?

பேழையைச் சமர்பித்தான் மன்னன் குருவிடம்; பேழையைத் திறந்தார் ஆர்வத்துடன் குலகுரு.

ஆயிரக் கணக்கான தாமரை இதழ்களில் ஆனந்தமாக சயனித்திருந்தாள் குழந்தை!

பெருகியது கண்ணீர் பெருகிய உவகையால்! பரிவுடன் வணங்கினான் குருவின் பாதங்களை!

ஆகாசத்தில் இருந்து ஒலித்தது ஓர் அசரீரி.“ஆகாச ராஜன்! பூர்வ ஜன்ம புண்ணியம் இது.

பூர்த்தியடைந்தது உன் நித்திய கோரிக்கை. புத்திரி கிடைத்தாள் உன் மனக் குறை தீர!”

மார்புறத் தழுவினான் மலர்க் குழந்தையை! ஆர்வத்துடன் அடைந்தான் அரண்மனையை.

பெயர் இட்டான் குழந்தைக்கு பத்மாவதி என. பெயர்க் காரணம் தாமரையிதழ்களில் சயனம்.

நடத்தினான் தான தருமங்கள் நாடெங்கும்; நடத்தினான் பூஜைகள் ஆலயங்கள் எங்கும்.

தன் வீட்டிலேயே தேவி வந்து பிறந்ததுபோல தன்னிறைவு அடைந்தனர் ஒவ்வொருவரும்.

நாரதர்

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்;
நற்குணங்கள் அனைத்தின் ஓர் இருப்பிடம்.

நந்த வனத்தில் தோழியாரோடு ஆனந்தமாகப்
பந்து விளையாடுகையில் வந்தார் ஒரு கிழவர்.

வயது முதிர்ந்த கிழவராக வந்த நாரதர்
“பயத்தை விட்டுவிட்டு வா இங்கே!” என,

தயங்கினாள் பத்மாவதி அவரை அறியாது!
“தயக்கம் வேண்டாம் நான் அந்நியனல்ல!

கைரேகை கண்டு சொல்லுவேன் பலன்
தையல் உந்தன் எதிர் காலத்தைப் பற்றி!”

நீட்டினாள் தன் இடக் கரத்தை பத்மாவதி
நீட்டிய கரத்தைப் பிடித்து நோக்கினார் அவர்.

“தெய்வாம்சம் பொருந்திய கை கூறுகிறது!
வைகுந்த வாசனை நீ மணக்கப் போகிறாய்!”

“அத்தனை பாக்கியமா எனக்கு?” வியந்தாள்!
அவள் கண்டாள் நாரத முனிவரை எதிரில்.

“அறிவிக்கவே வந்தேன் உனக்கு நான் இன்று !
அறிவாய் உன் கணவன் வைகுந்தவாசன் என்று!”

ஆட்டத்தில் செல்லவில்லை அவள் மனம்;
நாட்டம் கொண்டு விட்டது பரந்தாமனிடம்!

நிறைத்தாள் உள்ளம் முழுவதும் நாரணனை.
உரைத்தாள் உள்ளன்போடு “நாராயணா!” என்று!

“பருவ வயதில் உனக்கு இத்தனை பக்தியா?” என
அருமைத் தோழிகள் கேலி செய்தனர் அவளை!

கேட்டாள் நாராயணன் செய்த லீலைகளை.
கண்டாள் நாராயணனின் திவ்விய ரூபத்தை.

உரைத்தாள் நாராயணின் திவ்ய நாமங்களை.
பணிந்தாள் நாராயணின் திவ்ய விக்ரஹத்தை.

வைகுந்தவாசனை மணக்கும் சுபவேளைக்குத்
தையல் காத்திருந்தாள் மிக்க ஆர்வத்துடன்.

11a. சந்திப்பு

உலவின துஷ்ட மிருகங்கள் தம் இஷ்டம் போல!
நிலவியது ஆபத்து வனத்தில் வசிப்பவர்களுக்கு!

சுனை அருகே வசிப்பவர்களுக்கு பிராண அபாயம்,
சுனையில் நீர் பருகும் சாது பிராணிகளுக்கும் கூட.

“வேட்டைக்குப் போகின்றேன் அம்மா – விலங்குகளின்
கொட்டத்தை அடக்குவதற்கு!” என்றான் ஸ்ரீனிவாசன்.

காட்டை விட்டு வெளியே வந்து திரிபவைகளைக்
காட்டுக்குள் விரட்டினான் அவற்றை அச்சுறுத்தி.

துவம்சம் செய்து கொண்டிருந்தது ஒரு மத யானை!
துரத்தியவுடன் ஓடியது காட்டை விட்டு வெளியே.

வெளியறியது அது சேஷாச்சலத்தை விட்டு விட்டு!
வெறி கொண்ட யானையை விடலாகாது அன்றோ?

நாரயணபுரத்தை நோக்கி ஓடியது மத யானை.
நாராயணனும் துரத்திச் சென்றான் யானையை.

நுழைந்தது ஆகாசராஜனின் உத்தியான வனத்தில்!
‘இழைக்குமோ ஆபத்து அங்கிருந்த பெண்களுக்கு?’

அம்பினால் அடித்தான் அந்த மத யானையை.
தும்பிக்கையைத் தூக்கிப் பிளிறிவிட்டு ஓடியது.

யானை சென்றபின் அழைத்தனர் பத்மாவதியை,
“யானை வந்துள்ளது, திரும்புவோம் அரண்மனை!”

யானையை விரட்டிய நாரணன் வந்தான் அங்கே.
யானை சென்று விட்டது; இருந்தனர் அப் பெண்கள்.

மற்ற பெண்களிடையே இருந்தாள் பத்மாவதி
மணிகளிடையே ஜொலிக்கும் வைரம் போல.

முககாந்தி ஈர்த்தது இரும்பைக் காந்தம் போல.
முன்னேறினான் பெண்கள் கூட்டத்தை நோக்கி.

11b. “வாசுதேவன் நானே!”

அந்நிய ஆடவனைக் கண்டதும் தோழியர்
சொன்னார்கள், “திரும்பிச் செல்வோம்!” என.

“தெரிந்து கொண்டு வாருங்கள் அவன் யார் என!”
“யார் நீங்கள்? இங்கு என்ன வேலை? கூறுவீர்!”

நடந்தான் ஸ்ரீநிவாசன் பத்மாவதியை நோக்கி
தடுக்க முடியவில்லை தோழிப் பெண்களால்!

“ஆடவருக்கு நுழைய அனுமதி இல்லையா?
அறியாமல் வந்து நுழைந்து விட்டேன் இங்கு!

கண்டேன் வனத்தில் மத யானை ஒன்றை!
கண்டதும் யானை ஓடலானது வேகமாக!

காட்டுக்குள் செல்லவில்லை அந்த யானை;
நாட்டுக்குள் நுழைந்தது; நந்தவனம் வந்தது !

கன்னியரைத் துன்புறுத்துமோ என்று அஞ்சி
கணை ஒன்றை எய்து விரட்டினேன் அதை.

பூரணச் சந்திரன் போன்ற முகம் கொண்ட
ஆரணங்குடன் பேச விரும்பி வந்தேன்.”

“யானை திரிந்தால் தெரிந்திருக்கும் எமக்கும்!
யார் நீர்? எதற்கு வந்துள்ளீர்? உண்மை கூறும்.”

“வசிப்பது சேஷாச்சலம்; சிந்து புத்திரர் குலம்;
வசுதேவர் தந்தையார்; தேவகி தாயார் ஆவார்.

பஞ்ச பாண்டவர்களுக்கு ஆப்த நண்பன் நான்;
கொஞ்சப் பெயர்களா நான் சொல்லுவதற்கு?”

“பித்தம் தலைக்கு ஏறி விட்டது உமக்கு!
வைத்தியரைப் போய்ப் பாரும் உடனே!

உத்தியான வனத்தில் பெண்களிடம் வந்து
எத்தன் வேடமா போடுகின்றீர்கள் நீங்கள்?

பைத்தியக்காரன்! யசோதை கிருஷ்ணனாம்!
வைத்தியம் செய்து கொள்ளும் விரைவாக.

ஜோலியைப் பார்த்துக் கொண்டு செல்வீர்!”
கேலி பேசினார் பத்மாவதியின் தோழியர்.

11c. சினம் பெருகியது

“அரசகுமாரி தங்களைப் பற்றிய விவரங்கள்
அனைத்தும் அறிய வேண்டும் நான் இப்போது.”

“தாராளமாகத் தெரிந்து கொள்ளுங்கள் ஐயா!
நாராயணபுர மன்னன் ஆகாசராஜனின் மகள்.

பத்மாவதி என்பெயர், தாரணி தேவி என் தாய்;
அத்திரி கோத்திரம், நாங்கள் சந்திர வம்சம்.

உத்தியான வனம் உண்டானது எனக்காக.
இத்தனை விவரங்கள் போதுமா உமக்கு?”

“என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்!
என்னை மணந்து கொள்ள உனக்கு விருப்பமா?”

கோபம் வந்து விட்டது இளவரசி பத்மாவதிக்கு!
கோபம் கொண்டனர் பத்மாவதியின் தோழியரும்.

“அத்து மீறிப் பேசவேண்டாம் பித்துப் பிடித்த ஐயா!
பத்திரம் இவள் அரசகுமாரி, நினைவிருக்கட்டும்!”

“கன்னி பெண்ணை நான் மணக்க விரும்புவதில்
என்ன தவறு எனத் தெரியவில்லையே!” என்றான்.

பல்லைக் கடித்தாள், கண்களை உருட்டினாள்,
தொல்லை தரும் மனிதனுடன் என்ன பேச்சு?

வைகுந்தவாசனை வரித்த என்னை ஒரு
வழிப் போக்கன் மணக்க விரும்புவதா?

சினம் தலைக்கு ஏறியது பத்மாவதிக்கு
மனம் அவனைத் தண்டிக்க விரும்பியது.

“அனுமதி இல்லாத இந்த இடத்துக்கு வந்து
அத்து மீறி நுழைந்தது உம் முதல் தவறு!

தனித்து இருக்கும் இளம் பெண்களிடம்
தவறாகப் பேசுவது இரண்டாவது தவறு.

கன்னிப் பெண் இவள் என்று அறிந்திருந்தும்
கண்ணியம் இன்றிப் பேசுவது மூன்றாவது.

சுய உணர்வு இல்லை போலும் உமக்கு!
மயக்கத்தில் பேசுகின்றீர் போலும் நீர்!

தயவு செய்து சென்று விடுங்கள் உடனே!
பயம் இல்லையா அரசனின் கோபத்துக்கு?”

விடாக் கண்டன் கொடாக் கண்டன் கதையானது!
இடத்தைக் காலி செய்ய மறுத்தான் ஸ்ரீநிவாசன்!

1d. மோதலும், காதலும்!

“எந்த விதத்தில் குறைந்துவிட்டேன் பெண்ணே?
என்னை மணக்கப் புண்ணியம் பண்ண வேண்டும்!”

“அம்பு எய்து மதயானையை விரட்டிய பின்பும்
வம்பு செய்து எம்மைத் துன்புறுத்துவது ஏனோ?”

“போகாவிட்டால் என்ன செய்ய முடியும் உன்னால்?”
“போகாவிட்டால் உங்கள் உயிரை வாங்கிவிடுவேன்!”

“உயிருக்கு அதிபதியான என் உயிரையா?”என்றான்.
“பயித்தியத்தை அடித்து விரட்டிவிடுங்கள்!” என்றாள்.

சொல்லடிகள் பட்டு நின்றிருந்த ஸ்ரீனிவாசனுக்குக்
கல்லடிகள் கொடுக்கலாயினர் தோழிப் பெண்கள்.

காயம் பட்டது சில கற்கள் தாக்கி – எனினும்
நியாயம் கேட்க நிற்கவில்லை ஸ்ரீநிவாசன்!

மோதல் ஏற்படும் இருவர் சந்தித்தவுடனே!
காதல் ஆகிவிடும் பின்னர் சிந்தித்தவுடனே!

அடித்து விரட்டச் சொன்ன பத்மாவதியை
அடித்து விட்டன மன்மதனின் பாணங்கள்.

நாரணன் வெளியேறிய பின்னர் உலகம் தன்
பூரணத்துவம் இழந்தது போல் தோன்றியது.

உலகமே இருண்டது போலத் தோன்றியது
கலகமே நிறைந்த மனதின் நினைவுகளால்!

பாலும் கசந்தது; பஞ்சணை வருத்தியது;
கோலம் மாறியது; பசலை நோய் படர்ந்தது.

“மந்திரம் போட்டுவிட்டானோ அந்தத்
தந்திரம் அறிந்த வம்புக்கார வாலிபன்?

உற்சாகமாகச் சண்டையிட்டாள் அவனுடன்!
உற்சாகம் இழந்து ஆளே மாறிப் போய்விட்டாள்.

ரதத்தில் ஏற்றி அமர்த்தினர் பத்மாவதியை;
ரதம் விரைந்தது மன்னனின் மாளிகைக்கு.

11e. காதல் நோய்

அந்தப்புரம் சென்று வணங்கினர் அரசியை
அரண்மனை திரும்பிய உடன் தோழிகள்

வாடிய முகங்கள்; வாயடைத்த பெண்கள்;
தேடினாலும் காணவில்லை பத்மாவதியை!

“அன்னியன் ஒருவன் நுழைந்து விட்டான்
அரண்மனை உத்தியான வனத்தில் இன்று!

மதயானையைத் துரத்தி வந்தானாம் அங்கு.
மதயானை ஓடிவிட்டது அவன் பாணத்துக்கு!

வம்பு செய்து பேசினான் பத்மாவதியிடம்;
கம்பு கொண்டு புடையாமல் கல் எறிந்தோம்.

நழுவினான் கழுவும் மீனில் நழுவும் மீனாக!
இழந்துவிட்டாள் இவள் தன் உற்சாகத்தை!

மகளைத் தேடி ஓடினள் அரசி அந்தப்புரத்தில்.
மகளோ வெட்டவெளியை வெறித்திருந்தாள்!

‘கெடுதலே நினையாத நான் இன்று மட்டும்
கொடூரமாக ஏன் நடந்து கொண்டு விட்டேன் ?

அடி பலமாகப் பட்டிருக்குமோ என்னவோ?
துடிப்பான இளைஞன்! பயித்தியம் அல்ல!’

அன்னை வந்ததையும் கவனிக்கவில்லை;
சொன்ன சொற்களையும் கவனிக்கவில்லை!

திருஷ்டி கழித்தாள் அரசி பத்மாவதிக்கு!
திரு நீறு பூசினாள் அரசி பத்மாவதிக்கு!

உணவு இறங்கவில்லை பத்மாவதிக்கு!
உறக்கமும் பிடிக்கவில்லை பத்மாவதிக்கு.

குலகுரு சுகர் வந்தார், அறிவுரைகள் தந்தார்;
“மலர்வனம் அருகேயே அகத்தியர் ஆசிரமம்!

பரமசிவன் அபிஷேக நீரைக் கொண்டுவந்து
அரசகுமாரி மேல் தெளித்தால் குணமாகும்!”

பதினோரு வேத விற்பன்னர்கள் சென்றனர்,
பரமசிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்ய!

12. பத்மாவதி யார்?

விடியலில் எழும் ஸ்ரீனிவாசன் அன்று
வெகுநேரம் வரையிலும் எழவில்லை.

வேட்டையாடின களைப்பு என்று எண்ணி
விட்டு விட்டாள் அவனை வகுளமாலிகை.

விழித்துக் கொண்டு விருதாகப் படுத்திருந்தான்;
எழுப்பினாலும் எழவில்லை மஞ்சத்திலிருந்து.

என்ன நடந்தது என்று பலவாறாகக் கேட்டும்,
என்ன நடந்தது என்று சொல்லவே இல்லை.

“எவள் மீதாவது மோஹம் கொண்டாயா?” என,
“எப்படிக் கண்டு பிடித்தீர்கள் அம்மா?” என்றான்!

“நீராடி உணவருந்திய பின் கூறு என்னிடம்,
நீ கண்ட பெண்ணைப் பற்றிய விவரங்களை!”

“காட்டில் வேட்டையாடும் போது நான் கண்டேன்
காட்டு யானை ஒன்று மதம்கொண்டு திரிவதை!

மனிதர்களுக்குத் தீங்கு செய்யுமோ என்றஞ்சி
கனத்த காட்டுக்குள் விரட்டி விட முயன்றேன்.

மலைச் சரிவில் இறங்கி ஓடியது மதயானை.
மலர் வனம் ஒன்றில் புகுந்தது அம்மதயானை.

நாராயண புரத்தை ஆட்சி செய்யும் மன்னன்
ஆகாசராஜனின் விசேஷ மலர்வனமாம் அது.

மன்னன் மகள் இருந்தாள் தன் தோழியருடன்;
மனதைப் பறிகொடுத்துவிட்டேன் கண்டவுடன்!

விருப்பத்தைத் தெரிவித்தேன் நான் அவளிடம்;
விரட்டி விட்டாள் என்னைக் கல்லால் அடித்து .

எங்கெங்கு நோக்கிலும் தெரிவது அவள் முகமே!
எங்கள் திருமணம் நடக்குமா அம்மா?” என்றான்.

“மணம் செய்ய விரும்புகிறாய் பத்மாவதியை.
குணம் கொண்டவளா உனக்கு ஏற்றவாறு?”

“அறியமாட்டாய் நீ அவள் யார் என்பதை!
அறிவேன் நான்! கூறுவேன் உனக்கும்!”

13a. வேதவதி

திரேதா யுகத்தில் இலங்கேஸ்வரன்
திரிலோக சஞ்சாரம் செய்து வந்தான்.

இமாலயச் சாரலில் கண்டு மோஹித்தான்
அமானுஷ்ய அழகுடைய ஒரு சுந்தரியை.

வேதவதி என்ற அந்தக் கன்னிகைக்கு
வேதவாக்கு ஆகும் தந்தையின் சொல்.

மகாவிஷ்ணுவை வரித்தாள் தன் மணாளனாக;
ஹிமாச்சலத்தில் செய்து வந்தாள் கடும் தவம்.

நெருங்கினான் வேதவதியை இலங்கேஸ்வரன்.
விரும்பினான் அவள் அழகை அனுபவிப்பதற்கு!

“பரந்தாமனை வரித்துவிட்டேன் மணாளனாக!
பர புருஷர்களுக்கு இடமில்லை மனதில்” என்றாள்.

“பரந்தாமனுக்கு இளைத்தவனோ இந்த ராவணன்?
பரம சுகமாக வாழலாம் என்னை மணந்துகொண்டு!”

வேதவதி ஏற்கவில்லை இந்தக் கோரிக்கையை.
வேண்டாம் என்றால் விடுபவனா இராவணன்?

தலைக்கு ஏறிவிட்ட மோக வேகத்தில் – அவள்
தலை மயிரைப் பற்றிக் கொண்டு சூளுரைத்தான்.

“அடையாமல் ஓய மாட்டேன் நான் விரும்பியதை!”
அடிபட்ட பெண் நாகமாக மாறிவிட்டாள் வேதவதி.

“கேசத்தைத் தீண்டி அதை மாசு படுத்திவிட்டாய்!
கேசவனுக்கு உகந்தது அல்ல அது இனிமேலும்!”

திட மனத்தோடு தவம் புரிந்துவந்த வேதவதியின்
இடக்கையே மாறி விட்டது ஒரு கூரிய கத்தியாக!

கேசத்தையே துண்டித்து விட்டாள் இடக் கையால்!
மோசமான எண்ணத்தை அது மாற்றிவிடவில்லை.

திடுக்கிட்டான் ராவணன்; மனம் தளரவில்லை;
தடுத்ததால் மேன்மேலும் வளர்ந்தது காம ஜுரம்.

13b. வேதவதியின் சாபம்

அண்டம் குலுங்க நகைத்தான் ராவணன்;
கொண்டது விடா முதலையும், மூர்க்கனும்!

“மந்திர, தந்திரப் பிரயோகங்கள் என்னிடத்திலா ?
தந்திரங்களில் பெயர் போனவன் இந்த ராவணன் !”

மீண்டும் நெருங்கினான் வேதவதியை ராவணன்;
மீண்டும் தியானித்தாள் வேதவதி பரந்தாமனை;

வேதவதி ஒரு புனிதவதி அதனால் அங்கு
வேகமாக வளர்ந்தது அக்கினி ஒரு தடுப்பாக.

திகு திகு என்று எரியத் தொடங்கியது அது
திகில் அடைந்த அபலையைக் காப்பதற்கு.

வரவழைத்தான் ராவணன் வஜ்ஜிராயுதத்தை.
எரியும் தீயை அணைக்க முயன்றான் அவன்.

‘கற்பைக் காத்துக் கொள்ள இருக்கும் ஒரே வழி
கயவன் தொடுமுன் உயிரை விடுவதே ஆகும்!’

“காமத்தால் கண்ணிழந்து விட்ட அரக்கனே!
காமம் நிறைவேற அனுமதிக்க மாட்டேன்!

விடுவேன் என்னுயிரை எரியும் தீயில் குதித்து;
விடாது என்றும் இந்தப் பாவம் உன் குலத்தை!

பழி தீர்க்கும் உன்னை என்றாவது ஒருநாள்!
அழிவாய் நீயும், உன் குலமும் பெண்ணால்!”

சாபம் இட்டாள்; குதித்தாள் அந்த நெருப்பில்
சாபம் வீண் போகவில்லை பலித்தது பிறகு.

சீதையிடம் கொண்ட விபரீத மோஹமே
சீரழித்துவிட்டது அவன் வம்சத்தினையே1

13c. இரண்டு சீதைகள்

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை எனத்
தன்னாட்டை விடுத்துக் கனகம் ஏகினான்

தம்பியுடனும், சீதையுடனும் ஸ்ரீ ராமன்.
தங்கினர் பஞ்சவடியில் அமைதியுடன்.

தையல் சீதையைத் தாக்கினாள் – ராமனிடம்
மையல் கொண்டுவிட்ட அரக்கி சூர்ப்பனகை.

காது, மூக்கு அறுபட்டு அலறி ஓடிச் சென்று
ஓதினாள் சீதையின் அழகை ராவணனிடம்.

காமம் கொண்டான் கண்டிராத சீதைமீது!
ஏமாற்றினான் ஒரு மாய மானை அனுப்பி!

அப்புறப்படுத்தினான் ராம, லக்ஷ்மணர்களை.
அபகரித்தான் சீதையைப் பர்ணசாலையுடன்.

“அபாயம் நேரக் கூடாது சீதைக்கு!” என்று
உபாயம் ஒன்று. செய்தான் அக்கினிதேவன்

வேதவதியுடன் வந்தான் விரைந்து வெளியில்!
வேகமான ராவணனை மறித்தான் வழியில்!

“உண்மை சீதை இருக்கிறாள் என்னிடம்;
உன்னிடம் இருப்பவள் ஒரு மாயச் சீதை.

எடுத்துச் செல் இந்த உண்மை சீதையை!
விடுத்துச் செல் அந்த மாயச் சீதையை!”

நம்பினான் அக்கினியின் சொற்களை ராவணன்;
அம்பென விரைந்தான் வேதவதியுடன் இலங்கை.

சீதையை விட்டு விட்டான் அக்கினிதேவனிடம்;
சீதையை விட்டான் ஸ்வாஹாவிடம் அக்கினி.

ராவணன் அழிந்தபின் அக்கினிப் பரீட்சை
ராமன் செய்யச் சொன்னன் வேதவதியிடம்.

வலம் வந்தாள் அக்கினியை மூன்று முறை;
வணங்கினாள் ராமனை; இறங்கினாள் தீயில்!

வெளிப்பட்டார் அக்கணமே அக்கினி தேவன்!
வெளிப்பட்டனர் அவருடன் இரண்டு சீதைகள்!

13d. ஏக பத்தினி விரதம்

“இருவரையும் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான்.
ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை என்பேன்.

“இவர் தங்கள் தேவி சீதா பிராட்டியார்;
இவர் வேதவதி என்னும் பிராட்டியார் .

வேதவதியே ராவணனின் சிறையிலிருந்தவர்;
தேவன் விஷ்ணுவை மணாளனாக வரித்தவர்.

இமயத்தில் நிஷ்டையில் இருக்கும் வேளை,
இராவணன் கண்டு மோஹித்தான் இவளை.

பலவந்தம் செய்ய நெருங்கினான் இவளை;
பயந்து தீயினில் குதித்துவிட்டாள் இவள்.

பத்திரமாக ஒப்படைத்தேன் என் மனைவியிடம்
தந்திரமாக மீட்டோம் சீதா தேவியைப் பின்னர்.

இருவருமே தங்களுக்கு உரியவர்கள் தாம்!
இருவரையும் ஏற்க வேண்டும் தங்கள்!” என;

சீதையும் கூறினாள் ராமனிடம் சென்று
“வேதவதி துன்புற்று என்னைக் காத்தாள்.

தாமதம் இன்றி ஏற்றுக் கொள்வீர் அவளை!”
ராமன் ஏற்கவில்லை இந்த வேண்டுகோளை.

“ஏக பத்தினி விரதம் பூண்டுள்ளதை அறிவாய்
ஏற்றுக் கொள்ள முடியாது இவளை இப்போது!

கலியுகத்தில் வசிப்பேன் சேஷாச்சலத்தில்,
கலியுகத்தில் மணப்பேன் நான் வேதவதியை.

ஆகாசராஜன் மகள் பத்மாவதி ஆவாள் – இவள்.
அரும் தவம் பலித்து என்னையும் மணப்பாள்!”

14a. சிவ ஆராதனை

“வேதவதியே இப்போது பத்மாவதி – அதனால்
வேண்டுமென்றே விலகிச் சென்றாள் லக்ஷ்மி.”

மன்னனைச் சந்திக்கச் சென்றாள் வகுளமாலிகை;
அன்னையுடன் சற்று வழி நடந்தான் சீனிவாசன்.

மாலை மங்கியது நகரை நெருங்குகையில்;
கோலாகல ஆராதனைகளின் ஒலி கேட்டது

அருகிலே இருந்த அகத்தியரின் ஆசிரமத்தில்;
விரும்பிக் கலந்து கொண்டாள் பூஜைகளில்!

விரைந்து சென்று நகரை அடைந்தாலும்
இரவில் மன்னனைக் காண முடியாதே!

வேதபாராயணம் தொடர்ந்து நடந்தது;
வேத வல்லுனர் செய்தனர் அபிஷேகம்.

விமரிசையாக நடந்தன பூஜைகள்.
வந்த காரியத்தில் வெற்றி நிச்சயம்!

“ஆராதனைக்குக் காரணம் என்ன?” என
“நாரயணபுரி இளவரசிக்காக நடக்கிறது.

உற்சாகம் இழந்து விட்டாளாம் திடீரென்று!
உறங்குவதும், உண்பதும் இல்லையாம்!”

‘காதல் வயப்பட்டுள்ளாள் பத்மாவதி தேவி!
காதலுக்கு வைத்தியம் கல்யாணம் அன்றோ?’

பூஜை முடிந்தது பொழுது புலருகையில்!
பூஜைப் பிரசாதமும், தீர்த்தமும் சென்றன.

வகுள மாலிகையும் சென்றாள் அவற்றுடன்
வெகு விரைவாக மன்னனைக் கண்டு பேசிட!

14b. குறத்தி வந்தாள்!

அன்னையுடன் வழி நடந்த ஸ்ரீனிவாசனுக்குப்
பின்னர் இருப்புக் கொள்ளவில்லை தனியே.

‘சென்ற காரியம் வெற்றி அடையுமா? அன்னை
வென்று திரும்புவாளா? அல்லது தோற்பாளா?’

தோற்று விடும் எண்ணமே தோற்றுவித்தது
தேற்ற இயலாத மனக்கவலையை நெஞ்சில்.

தன் பங்குக்கும் செய்ய வேண்டும் ஏதாவது,
தன் விருப்பம் தடையின்றி நிறைவேறிட.

மாறினான் நகரின் எல்லையை அடைந்ததும்,
குறி சொல்லும் அழகிய குறத்தியாக அவன்!

“சொல்வேன் உள்ளபடி மூன்று காலத்தையும்!
வெல்வேன் உங்கள் எல்லா தோஷங்களையும்!”

குறத்தியை அழைத்து வரச் சொன்னாள் அரசி.
குறத்தியை அழைத்து வந்தனர் தோழியர்கள்.

“குறி சொல்வதில் நீ திறமைசாலியாமே!
குறி சொல்கிறாயா அரசகுமாரிக்கு?” என,

“நான் சொல்வது ஒன்றும் இல்லை தாயே!
நாவில் அமர்பவன் செந்தில் ஆண்டவன்!

அழையுங்கள் உங்கள் அரசகுமாரியை!”
“குழந்தையின் கைபார்த்துக் குறி சொல்!”

நாணத்துடன் வந்து அமர்ந்தாள் பத்மாவதி;
காணத் தந்தாள் தன் இடக்கரத்தை நீட்டி.

வெள்ளிப் பூண் போட்ட குழலால் தடவிய
கள்ளக் குறத்தியும் குறி சொல்லலானாள்!

14c. குறத்தி சொன்ன குறி

“குல தெய்வம் யார் கூறுங்கள் அரசி” எனவும்,
“குல தெய்வம் சேஷாத்ரி வாசனே!” என்றாள்.

“சேஷாத்ரி வாசன் உள்ளான் உங்கள் முன்பு!
பேசுவது அவனே என் நாவிலிருந்து இப்போது!

மலர் வனத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு
மகள் சந்தித்தது அந்த சேஷாத்ரி வாசனையே!

மணக்கக் கேட்டான் இவளிடம் சம்மதம்;
பிணங்கிக் கொண்டு அடித்தாள் கல்லால்!

புறப்பட்டுப் போகுமுன் அவன் இவளுடைய
புறக் கண்களுக்கும் காட்சி அளித்துள்ளான்!

ஆகிவிட்டாள் அவன் நினைவால் இங்ஙனம்.
ஆகிவிடுவாள் சஹஜமாக, அவனை மணந்தால்.

விட்டு விட்டால் இவளை இப்படியே – இவள்
விட்டு விடுவாள் தன் உயிரையே ஏக்கத்தில்!”

யாரும் பேசவில்லை இதைக் கேட்ட பின்னர்.
யாரும் நம்பவில்லை குறத்தியின் குறியை!

“பகவானை மணப்பது நடக்கும் காரியமா?
பகவானிடம் மணம் பேசுவதும் சாத்தியமா?”

“மனதைப் பறி கொடுத்தவனே அனுப்புவான்;
மணம் பேசி முடிக்கத் தகுந்த நபரை!” என்றாள்.

பொற்காசுகளை அளித்தாள் அரசி குறத்திக்கு,
“நற்காரியம் நடப்பதே போதும் எனக்கு!” என்று

விடை பெற்றுச் சென்றவள் குறத்தி – ஆனால்
வீட்டைச் சென்று அடைந்தவன் ஸ்ரீனிவாசன்.

15a. அன்னையர் சந்திப்பு

விடியலுக்குக் காத்திருந்தாள் தரணி தேவி.
விடிந்தவுடன் விடியும் சில பிரச்சனைகள்.

வந்தனர் அந்தணர் சிவன் ஆலயத்திலிருந்து;
தந்தனர் அபிஷேகத் தீர்த்தப் பிரசாதங்கள்.

அழகிய கோலமிட்ட மணையில் அமர்த்தி,
அழகி பத்மாவதிக்குச் செய்தனர் அபிஷேகம்.

முழங்கின எங்கும் மங்கல வாத்தியங்கள்;
வழங்கினர் பரிசுகள் அங்கு வந்தவர்களுக்கு.

“சேஷாச்சலத்தில் இருந்து வந்துள்ள மாது
பேச விரும்புகிறார் அரசி தரணி தேவியிடம்”

வந்தவர், திருமணம் பேச வந்தவர் தான் என்று
அந்த மாதை அழைத்து வந்தனர் அரசியிடம்.

“சேஷாச்சலம் என் ஊர், வகுளமாலிகை என் பேர்;
பேச வேண்டும் அரசகுமாரியைப் பற்றி ” என்றார்.

“காத்திருக்கிறேன் உங்களிடம் பேசுவதற்கு – எதிர்
பார்த்திருந்தேன் உங்கள் இனிய வருகைக்கு!

குறத்தி வந்தாள் அரண்மனைக்கு நேற்று மாலை;
குறி சொன்னாள் சேஷாத்ரி வாசனைக் குறித்து.

உத்தியானவனத்தில் என் பெண்ணைக் கண்டானாம்;
பத்மாவதியிடம் மையல் கொண்டானாம்!” என்றாள்.

“குறத்தி சொல்லியது முற்றிலும் உண்மையே,
குமாரத்தியுடன் மணம் பேசவே வந்துள்ளேன்.

அனுப்பியவன் மகன் சேஷாச்சலம் ஸ்ரீனிவாசன்;
அனுமதி வேண்டும் இத் திருமணம் நடப்பதற்கு!”

பிள்ளையைப் பற்றிய விவரங்களைக் கேட்டு
கொள்ளை மகிழ்ச்சி கொண்டாள் தரணி தேவி.

அரண்மனையில் தங்க வைத்தாள் அந்த மாதை.
அரசனிடம் விரைந்தாள் செய்தி சொல்வதற்கு.

15b. திருமணப் பேச்சு

“உத்தமமானதே இந்த சம்பந்தம் என் ராணி!
பத்மாவதி யாரென்பதை மறந்து விடாதே நீ!

மஹாலக்ஷ்மியின் அம்சமே நம் பத்மாவதி;
மஹாவிஷ்ணுவை மனத்தால் வரித்தவள்.

சம்மதம் பெறுவோம் நமது குலகுருவிடம்;
சம்மதம் தருவோம் பின் அந்த மாதரசியிடம்.”

தொண்டைமானை அழைத்தான் ஆகாசராஜன்,
விண்டான் நடந்துள்ள நிகழ்ச்சிகளை எல்லாம்.

“கேட்போம் குலகுருவிடம் அவரது அபிப்ராயம்;
கேட்போம் நலம் விரும்பும் பிரதானிகளிடமும்.”

குலகுருவுக்குக் குதூகலம் கொப்பளித்தது!
“குமாரத்தியை மணம் செய் ஸ்ரீநிவாசனுக்கு!

வம்சம் அடைந்துவிடும் நற்கதியினை;
அம்சம் ஸ்ரீநிவாசன் மஹாவிஷ்ணுவின்.

வைகுந்தவாசனை அடைவதற்கு மருமகனாக,
வெகுபுண்ணியம் செய்தாய் முற்பிறவியில்!

நிலத்தில் கிடைத்தவள் நிலமகளே அல்லவா?
நிலமகள் மணாளன் அலைகடல் துயில்பவன்!”

பிரதானிகள் ஏற்றனர் இதனை மனமார.
பிரபுக்களும் ஏற்றனர் இதனை மனமார.

ஆடிப் பாடத் தொடங்கினாள் பத்மாவதி!
ஆனந்த வெள்ளத்தில் வகுள மாலிகை.

நிலவியது மகிழ்ச்சி அந்த அரண்மனையில்;
நிலவியது அமைதி பெற்றோரின் மனத்தில்.

பொன்னும், மணியும் அள்ளித் தந்தாள் அரசி.
“பின்னர் வரும் திருமணவோலை!” என்றாள்.

ஆசிகள் தந்தாள் பத்மாவதியை முத்தமிட்டு;
ஆவலுடன் காத்திருப்பான் ஸ்ரீநிவாசன் என;

அவசரமாகத் திரும்பினாள் வகுள மாலிகை;
அரசனும், அரசியும் வந்து வழியனுப்பினர்.

16. சுகரின் செய்தி

நாட்குறிப்புக்களைக் கொண்டு ஆராய்ந்து
நாளைத் தேர்வு செய்தனர் திருமணத்துக்கு.

மஞ்சள் தடவிய ஓலையில் எழுதினார்
மணப் பத்திரிக்கையை குலகுரு சுகர்.

வைத்தனர் திருமண ஓலையை பவ்யமாக
சந்தனப் பேழையில் அரசனும், அரசியும்.

மங்கல வாத்தியம் முழங்க ஓலையுடன்
அங்கிருந்து சென்றார் பல்லக்கில் சுகர்.

வகுள மாலிகையைக் கண்டவுடன் அவளை
வரவேற்றான் ஸ்ரீனிவாசன் ஆர்வத்தோடு வந்து.

“விருப்பம் நிறைவேறியது உன் மனம் போல.
திருமணத்துக்குக் கிடைத்து விட்டது சம்மதம்.

விவரித்தாள் முதல் நாள் நடந்த நிகழ்வுகளை.
அவளருகே அமர்ந்து ரசித்தான் ஸ்ரீனிவாசன்.

அகத்தியர் ஆசிரமத்தில் ஆலயம் சென்றது;
அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டது;

அரசி தரணி தேவியை சந்தித்துப் பேசியது;
அரசனிடம்  பேசி அவன் அனுமதி பெற்றது;

பிரபுக்கள் மனம் மகிழ்ந்து சம்மதம் தந்தது ;
பிரதானிகள் மனம் மகிழ்ந்து சம்மதித்தது;

குறத்தி ஒருத்தி வந்து சொன்ன செய்திகள்;
குடி மக்களிடம் காணப்பட்ட மன மகிழ்ச்சி;

நகரத்தின் எல்லைவரை வந்து தன்னை
நட்புடன் வழியனுப்பிய அரசன், அரசியர்;

வகுள மாலிகையைப் பேசச் சொல்லி விட்டு
வெகு சுவாரசியமாகக் கேட்டான் ஸ்ரீனிவாசன்.

17a. பணம் தேவை!

பல்லக்குத் தூக்கிகளின் அரவம் கேட்டது;
பல்லக்கில் வருவது யாராக இருக்கும் ?

நெருங்கி அருகில் வந்து நின்றது பல்லக்கு;
இறங்கினார் சுகமுனிவர் பல்லக்கிலிருந்து.

மேனி சிலிர்க்கத் தொழுது வணங்கிய பின்,
ஸ்ரீனிவாசனிடம் சமர்ப்பித்தார் பேழையை.

“பத்மாவதியின் மணம் பற்றிப் பேச வேண்டும்.”
உத்தம முனிவரை வரவேற்றான் ஸ்ரீனிவாசன்.

பாத பூஜை செய்தான் முனிவருக்கு – பின்னர்
ஆதரவுடன் அழைத்துச் சென்றான் புற்றுக்கு.

மண நாள் பூரண சம்மதமே மணமகனுக்கு!
மன மகிழ்வோடு திரும்பினார் சுகர் மறுநாள்.

“பெரிய இடத்தில் நிச்சயித்துள்ளோம் பெண்ணை.
சரியான அந்தஸ்துடன் செல்ல வேண்டும் அங்கு!”

ஆதிசேஷனையும், பிரம்மனையும் நினைத்ததும்
ஆதிசேஷனும், பிரம்மனும் வந்து தோன்றினார்கள்.

“சித்திரை சுத்தத் திரயோதசியில் என் திருமணம்;
உத்தம மணப்பெண் இளவரசி பத்மாவதி தேவி.

முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள்
தப்பாமல் வரவேண்டும் என் திருமணம் காண.

துரிதமாகச் செயல் படவேண்டும் நீங்கள்,
விரைந்து மணநாள் நெருங்கி வருவதால்!”

“கூட்டம் சேர்ப்பது எங்கள் வேலை – ஆனால்
வாட்டம் அடைகிறோம் பணம் இல்லாததால்!

லக்ஷ்மி இல்லாத இடத்தைச் செல்வம் – அ
லட்சியம் செய்வது நாம் அறிந்தது தானே!”

17b. குபேரன்

“பெறுவோம் குபேரனிடமிருந்து கடனாக;
திருப்புவோம் அதை வட்டியும், முதலுமாக!”

அழைக்கப்பட்டான் குபேரன் சேஷாச்சலத்துக்கு;
அடைந்தான் குபேரன் உடனேயே சேஷாச்சலம்.

திருமணச் செலவுக்குக் கடன் கேட்டான் பிரமன்;
திருப்பித் தருவதாக வாக்களித்தான் பிரம்ம தேவன்.

ஒரு கோடியே பதினான்கு லக்ஷம் பொற்காசுகள்!
ஒரு வருடத்திய வட்டி ஒரு லக்ஷம் பொற்காசுகள்!

“தந்து விடுவோம் வட்டியை பிரதி வருடமும்!
தந்து விடுவோம் கடனைக் கலியுக முடிவில்!”

எழுதினான் பிரமன் கடன் பத்திரத்தை – கை
எழுத்திட்டான் ஸ்ரீனிவாசன் கடன் பத்திரத்தில்.

கையெழுத்திட்டான் பிரமன் ஒரு சாட்சியாக;
கையெழுத்திட்டன இரு மரங்கள் சாட்சிகளாக.

தொடங்கின ஏற்பாடுகள் கடன் கிடைத்தவுடனே.
மடங்கல்கள் சென்றன தேவர், முனிவர்களுக்கு.

தங்கும் ஏற்பாடுகள் செய்தனர் அதிதிகளுக்கு.
தருக்கள் குலுங்கின காய், கனிகள் நிறைந்து.

சிவன், உமை அடைந்தனர் சேஷாச்சலத்தை.
சிவ கணங்கள் தொடர்ந்தன நந்தி தேவனை.

அளித்தான் குபேரன் பட்டுப் பீதாம்பரங்களை;
அளித்தான் குபேரன் நவரத்ன ஆபரணங்களை.

ஸ்ரீனிவாச கல்யாணம் காண வந்து குழுமினர்;
இனிமையான சூழ்நிலை நிலவியது அங்கே.

17c. முதல் உரிமை

மணமகனைப் புனித நீராட்டுவதற்கு
முன் வந்தனர் முதல் உரிமை கோரி!

வகுள மாலிகை முதல் உரிமை கோர,
வெகு நயமாகக் கூறினார் ஸ்ரீனிவாசன்;

“லக்ஷ்மிக்கு முதலுரிமை மறவாதீர்!”
“லக்ஷ்மி வருவாளா திருமணத்துக்கு?”

“கரவீரபுரத்திலிருக்கும் லக்ஷ்மியை
வரவழைக்க ஒரு வழி கூறுகிறேன்.

உடல் நலமில்லை எனக்கு என்றால்,
உடன் ஓடி வருவாள் லக்ஷ்மிதேவி!”

கதிரவனை அனுப்பினர் கரவீரபுரத்துக்கு;
கதிரவன் செய்தி சொன்னான் லக்ஷ்மிக்கு.

“வைகுந்தம் விட்டு நீங்கள் வந்ததால்,
வையகம் வந்துள்ளார் ஸ்ரீனிவாசரும்.

உடல் நிலை பாதிக்கப் பட்டுள்ளது தேவி!
தடை சொல்லாமல் வரவேண்டும் தாயே!”

கரவீரபுரத்திலிருந்து லக்ஷ்மி புறப்பட்டதும்,
பிரமனும், சிவபிரானும் கைலாகு கொடுக்க;

நலிவுற்றவன் போல நடித்தான் ஸ்ரீனிவாசன்
பொலிவிழந்து உடல் நலம் குன்றியவனாக!

“ராமாவதாரத்தில் தந்த வரம் நினைவுள்ளதா?”
“ஆமாம் ஸ்வாமி! நினைவுள்ளது நன்கு எனக்கு!

வேதவதியை ஏற்றுக் கொள்ளச் சொன்னேன்;
வேளை வந்ததும் ஏற்றுக் கொள்வேன் என்றீர்!”

“வேளை வந்து விட்டது தேவி இப்போது!
வேதவதியே ஆவாள் இளவரசி பத்மாவதி!

சித்திரை சுத்தத் திரயோதசியில் திருமணம்;
உத்தேசித்தேன் உன்னை இங்கு வரவழைக்க.”

ஆனந்தம் அடைந்தாள் லக்ஷ்மி இது கேட்டு.
அனைவரும் சென்றனர் ஸ்ரீநிவாசன் புற்றுக்கு.

18a. புறப்பாடு

நாராயண புரத்துக்குச் செல்லும் துடிப்பு
நாட்காலையிலேயே துவங்கி விட்டது.

அலங்கரித்துக் கொண்டனர் அழகாக – பிறர்
அலங்கரித்துக் கொள்ள உதவிகள் செய்தனர்.

சரசர என்றன புத்தம் புதிய பட்டாடைகள்;
கலகல என்றது மகிழ்ச்சியின் வெளிப்பாடு.

புனித நீரால் ஸ்ரீநிவாசனுக்கு அபிஷேகத்தை
இனிதே தொடங்கி வைத்தாள் லக்ஷ்மி தேவி.

பட்டுப் பீதாம்பரம் அணிந்தான் ஸ்ரீநிவாசன்;
இட்டாள் லக்ஷ்மி அவன் நெற்றியில் திலகம்.

வைத்தாள் திருஷ்டிப் பொட்டை அன்னை – அணி
வித்தாள் ரத்தின ஆபரணங்களைப் பார்வதி தேவி.

அழகுக்கு அழகு கூட்டினர் தேவர்கள் ஒன்றுகூடி,
அணிவித்தனர் பல வண்ண மலர் மாலைகளை.

கொட்டிக் கிடந்தன உணவுப் பொருட்கள்;
அட்டில் பணியோ அக்னி தேவனுடையது!

பாத்திரங்கள் இல்லை சமையல் செய்வதற்கு!
தீர்த்தங்கள் மாறின சமையல் பாத்திரங்களாக!

முனிவர்கள் தேர்ந்தெடுத்தனர் சமதளத்தை;
இனிய கோலங்கள் வரைந்தனர் பெண்கள்.

சங்கல்பம் செய்தான் மணையில் அமர்ந்து;
சமீ விருக்ஷமே தன் குலதெய்வம் என்றான்.

சுவாமி புஷ்கரிணியில் ஸ்தாபித்தான் அந்தச்
சமீ விருக்ஷத்தின் ஒரு கிளையை உடைத்து.

பகலுணவைத் தயார் செய்துவிட்டான் அக்னி.
பரிமாறினான் நரசிம்மருக்கு நிவேதனம் செய்து.

பரிமளச் சந்தனம், தாம்பூலம், புஷ்பம் இதைப்
பரிவுடன் அளித்தனர் வந்திருந்த அதிதிகளுக்கு.

நாராயணபுரம் புறப்பட்டனர் உணவு உண்டபின்;
ஏராளமான வாஹனங்கள் காத்திருந்தன அங்கே.

ஆரோஹணித்தனர் ஸ்ரீனிவாசன் கருடன் மீதும் ,
பிரமன் அன்னத்தின் மீதும், சிவன் நந்தியின் மீதும் .

கரிகள், பரிகள், ரதங்களில் அமர்ந்து கொண்டு
உரிமையுடன் சென்றனர் நாராயணபுரத்துக்கு.

18b. சுகரின் உபசரிப்பு

சுகமாக அடைந்தனர் பத்ம தீர்த்தத்தை;
சுகமுனிவரின் ஆசிரமம் இருந்தது அங்கு.

பூரண கும்பத்துடன் காத்திருந்தார் முனிவர்,
பூரண மகிழ்ச்சியுடன் ஒரு சிறு இடைவேளை.

பாத பூஜை செய்தார்; வலம் வந்தார் சுகர்
பரம பக்தியுடன் மணமகன் ஸ்ரீனிவாசனை.

“மணக் கோலத்தில் உம்மைக் காண்பதற்கு
மாதவம் செய்திருப்பேன் முற் பிறவியில்.

இளைப்பாறி விட்டுச் செல்ல வேண்டும்;
களைப்பு மாறும் வரை இங்கு தங்கி விட்டு.

உபசரித்துப் பெற வேண்டும் ஆனந்தம்!
உபசார வார்த்தையல்ல உண்மையே!”

“இத்தனை பேர்களை உபசரிப்பதா எனச்
சிந்தனை செய்கின்றேன் நான் முனிவரே!”

“ஈரேழு உலகங்களும் ஒன்றாகி ஒளிந்து
இருப்பது உமக்குள் அல்லவா நாராயணா?

ஒரு கவளம் தாங்கள் உண்ட மாத்திரத்தில்
ஒரு புவனம் முழுவதும் திருப்தி அடையுமே!”

பர்ணசாலைக்குச் சென்றான் முனிவருடன்,
பாலும், பழமும் உண்டான் ஸ்ரீனிவாசன்.

திருப்தி அடைந்தார் சுகர் அவன் உண்பது கண்டு.
திருப்தி அடைந்தனர் அதிதிகள் உண்டது போல .

பிரயாணம் தொடங்கியது கலகலப்பாக,
நாராயணபுரத்தை நோக்கி மறுபடியும்.

19a. மணவிழா

எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர் – நகர
எல்லையை மணமகன் குழுவினர் அடைந்ததும்.

எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர் – அதைச்
சொல்லக் கேட்ட ஆகாச ராஜனும், தரணி தேவியும்.

‘எதிர் கொண்டழைக்க வேண்டும் நாமே சென்று
இதர பிரதானிகள் அமைச்சர்களுடன் இன்று!”

பட்டத்து யானை நின்றது தயாராக – ரத்தினப்
பட்டத்தை அணிந்திருந்தது பெரிய நெற்றியில்.

தந்த நுனிகளில் துலங்கின தங்கக் குமிழிகள்.
தந்தனர் யானையிடம் ரோஜாமலர் மாலையை.

ஆகாசராஜன், தரணி தேவி அமர்ந்தனர் – யானை
அம்பாரியில் மணப் பெண் பத்மாவதியுடன்.

இசைக் குழுவினர் நடந்தனர் யானை முன்னால்;
இளம் பெண்கள் தொடர்ந்தனர் யானை பின்னால்.

மலர்கள், சந்தனம், பன்னீர் இவை சொரிந்து
மலர்ந்த முகத்தோடு மணமகனை வரவேற்க;

ஒலித்தது மணமகன் குழுவின் ஆரவாரம்!
தலை நிமிரவில்லை மணமகள் நாணத்தால்!

பூரண கும்பத்துடன் வரவேற்றான் மன்னன்
நாரணன் கோஷ்டியைத் திருமணத்துக்கு.

ஒலித்தது வெற்றி கோஷம் “ஜெயா விஜயீ பவ!”
தெளித்தனர் நறுமண மலர்களை நாட்டு மக்கள்.

வலம் வந்தது பகவானைப் பட்டத்து யானை;
தலையால் வணங்கித் தந்தது ரோஜா மாலை.

வெகு நாணத்துடன் முன் வந்தாள் பத்மாவதி;
வகுள மாலிகையும் முன் வந்தாள் குழுவிலிருந்து.

“பத்மாவதியை ஏற்றுக் கொள்ளுங்கள்!” என்றதும்
“உத்தமியை நீ  ஏற்பாய்!” என்றாள் வகுளமாலிகை.

19b. மாலை மாற்று

கருடனிலிருந்து இறங்கினான் ஸ்ரீனிவாசன்
கறுத்த மேனியில் ரத்தின மாலைகள் புரள.

அணிவித்தாள் மலர்மாலையைப் பத்மாவதி.
அணிவித்தான் மலர்மாலையை ஸ்ரீனிவாசன்.

பத்மாவதியின் கரம் பற்றி ரதம் ஏறியதும்
கூத்தாடினார் ஆனந்தத்தில் அனைவரும்.

வைகுந்தமாக மாறி இருந்தது நாராயணபுரம்.
வெகு நேர்த்தியான வளைவுகள், பந்தல்கள் !

வண்ணக் கோலங்களுடன், பூரண கும்பங்கள்;
பெண்கள் எடுத்தனர் ஆரத்தி வழி நெடுகிலும்!

நின்றான் மலர்த் தட்டுடன் ஆகாச ராஜன்;
நின்றாள் தீர்த்தக் குடத்துடன் தரணி தேவி.

வசுதானா என்னும் பட்டத்து இளவரசன்
வாசனை வீசும் சந்தனத்துடன் நின்றான்.

ஆகாச ராஜன் செய்தான் பாத பூஜை – பின்
அழைத்துச் சென்றான் தன் அரண்மனைக்கு.

கூடாரம் அமைத்திருந்தனர் தங்குவதற்கு,
கூட வந்தவர்களுக்குத் தனித் தனியாக!

நகரம் ஜொலித்தது ஜகஜ் ஜோதியாக!
பகலா? இரவா? பேதம் தெரியவில்லை.

ஆகாரம் வந்தது தங்கியிருந்த இடத்துக்கு;
ஆகாச ராஜன் உயர்வாக உபசரித்தான்.

மற்றவர் உண்டனர் அரண்மனை முற்றத்தில்;
குற்றம் சொல்ல முடியாத இனிய உபசரிப்பு!

இரவில் நடந்தது அப்சரசுகளின் நாட்டியம்;
இதுவரை கண்டதில்லை மனிதர் எவருமே!

உறங்கவில்லை எவருமே அன்று இரவு;
உற்சாகமாகக் காத்திருந்தனர் விடியலுக்கு.

20a. திருமணம்

நீராடிப் புத்தாடை அணிந்தனர் விடியற்காலை;
நடக்க விருந்த திருமணத்தால் மிக உற்சாகம்.

கண்ணைப் பறிக்கும் ஜரிகைப் பீதாம்பரத்தைப்
பெண்ணைப் பெற்ற மன்னன் அனுப்பினான்.

ஆபரணங்களை அணிவித்தனர் லக்ஷ்மி, உமை!
ஆணழகன் ஸ்ரீனிவாசன் ஆனார் மணமகனாக!

வாசனைத் திரவிய நீரில் குளிக்க வைத்தபின்
வாரி ஜடை போட்டனர் பத்மாவதி தேவிக்கு.

வைத்திருந்த புஷ்பங்களின் பாரத்தினால்
வைத்திருந்தாள் தன் தலையைத் தாழ்த்தி!

தான் தன் மணநாளன்று அணிந்தவற்றை
தன் மகளுக்கு அணிவித்தாள் தரணி தேவி.

நெருங்கி விட்டது சுப முஹூர்த்த வேளை;
நெருங்கினர் மணமண்டபத்தை அனைவரும்.

இந்திரன் வெண்கொற்றக் குடை தாங்க,
அந்த நிழலில் நடந்தான் ஸ்ரீனிவாசன்.

அளித்தான் தொண்டைமான் மலர்மாலை;
அணிவித்தாள் ஸ்ரீநிவாசனுக்குப் பத்மாவதி.

ஊஞ்சல் பாடினர் வாணியும், லக்ஷ்மியும்;
ஊஞ்சல் ஆடினர் ஒய்யாரமாக மணமக்கள்.

திருஷ்டி கழித்தபின் சென்றனர் மண்டபம்,
திருஷ்டி படும் மணமக்களைக் கண்டால்!

வைதீகக் காரியங்கள் செய்தார் வசிஷ்டர்;
வேத கோஷம் முழங்க மாங்கல்ய தாரணம்!

அன்னையர் இருவரும் தழுவி மகிழ்ந்தனர்;
ஆனந்த வெள்ளத்தில் மன்னன் ஆகாச ராஜன்!

வரிசைகள் வந்து சேர்ந்தன கூடாரத்துக்கு;
பரிசுகள் வழங்கினர் வந்த விருந்தினர்களுக்கு.

20b. பிரியாவிடை

நடந்தது திருமணம் நான்கு நாட்களுக்கு;
முடிந்ததும் திரும்பவேண்டும் தத்தம் இல்லம்.

விடை பெற்றனர் மணமக்கள் எல்லோரிடமும்;
மடை திறந்து பாய்ந்தது அரசியின் கண்ணீர்.

வகுள மாலிகை தேற்றினாள் தரணி தேவியை,
“வெகு தூரம் செல்லப் போவதில்லையே!” என்று.

“எப்படியும் கணவன் வீடு செல்ல வேண்டியவள்!
எப்போது வேண்டுமானாலும் காண முடியுமே!”

கணவன் வீட்டில் நடந்துகொள்ள வேண்டிய
கண்ணியத்தை எடுத்துரைத்தாள் அன்னை.

ஆகாச ராஜன் தன் மனம் திறந்து பேசினான்
பூலோக நாதன் மருமகன் ஸ்ரீனிவாசனிடம்.

“செல்லமாக வளர்ந்து விட்டாள் பத்மாவதி!
சொல்ல முடியாது பொறுப்பு உள்ளதாக.

தெரியாமல் அவள் தவறு செய்துவிட்டால்
பெரிய மனதுடன் அவளை மன்னிக்க வேண்டும் .

அம்மையாரிடம் நான் சொன்னதும் இதுவே;
தம்பதிகள் இனிதே வாழவேண்டும்!” என்றான்

வரிசைகள் வந்து இறங்கின வரிசையாக.
“வரம் தருவேன் கேளுங்கள்” என்றான்.

“ஒன்று தான் வரம் வேண்டும் எமக்கு;
என்றுமே உம்மை மறவாது இருப்பது!”

“மறக்கவே மாட்டீர்கள் என்னை எவருமே!
சிறப்பாகக் குடி இருப்பேன் உம் சிந்தையில்!”

சேஷாசலம் சென்றனர் மணமகன் குழுவினர்;
ஆகாச ராஜனும், தரணியும் உடன் சென்றனர்.

21a. பிரியா விடை

ஆகாசராஜன், தரணி தேவி திரும்பிப்
போகாமல் உடன் சென்றனர் வெகுதூரம்.

ஸ்ரீநிவாசன் சொன்னான் பத்மாவதியிடம்,
“இனிமையாகப் பேசித் திருப்பி அனுப்பி விடு!”

தேற்றினாள் பத்மாவதி தாய் தந்தையரை,
“ஏற்க வேண்டும் தவிர்க்க இயலாத பிரிவை!”

சேஷாச்சலம் செல்லவில்லை ஸ்ரீனிவாசன்;
சென்றனர் அகத்தியரின் ஆசிரமத்துக்கு.

சுவர்ணமுகி நதித் தீரத்தை அடைந்தனர்;
பர்ணசாலை அமைத்தனர் மணமக்களுக்கு.

இந்திராதி தேவர்கள் திரும்பிச் சென்றனர்;
தந்தார் பிரமன் பொன்னும் மணியும் பரிசாக!

கரவீர புரம் திரும்பினாள் லக்ஷ்மி தேவி;
தர விரும்பினாள் தடையில்லாத ஆனந்தம்.

ஆடிப் பாடிக்காலம் கழித்தனர் மணமக்கள்;
ஓடை நீரில்  விளையாடினர் மணமக்கள்.

மலருடன் சென்று ஆராதித்தாள் வராஹரை
மறவாமல் அனுதினம் தாய் வகுளமாலிகை.

மலர் சூட்டி அலங்கரித்தனர் பத்மாவதியை
மாலை வேளைகளில் முனிவர் மனைவிகள்.

குதிரை வீரன் விரைந்து வந்தான் ஒருநாள்;
அதிர வைக்கும் செய்தி ஒன்று சொன்னான்.

“அரசன் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது
அரசியார் அனுப்பினார் செய்தி தெரிவிக்க.”

ரதம் தயாரானது பயணத்துக்கு – இருவரும்
விரைந்தனர் உடன் நாராயண புரத்துக்கு.

22. விண்ணுலக வாழ்வு

சயனித்து இருந்தான் ஆகாசராஜன் மஞ்சத்தில்;
சோகமே வடிவாக தரணி தேவி அருகினில்!

இளவரசனும், இளவல் தொண்டைமானும்
இருந்தனர் கால் மாட்டில் அமர்ந்தபடி.

மகளைக் கண்டதும் மகிழ்ச்சி அடைந்தான்;
மருமகனைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்தான்.

ஒப்படைத்தான் இளவரசனை ஸ்ரீநிவாசனிடம்;
ஒப்புக் கொள்ளச் செய்தான் அரசன் தன் அரசி

தரணியின் உடன்கட்டை ஏறும் முடிவினை.
தரணி வாழ்வினைத் துறந்தான் அந்த மன்னன்.

சுகர் செய்வித்தார் இறுதிச் சடங்குகள்
சிதை மூட்டினான் இளவரசன் வசுதானன்.

சர்வாலங்கார பூஷிதையாக தரணி தேவி
சுற்றி வந்தாள் எரியும் சிதையை மும்முறை.

தீயினில் புகுந்து விட்டாள் ஒரு நொடியில்!
தீ எரிந்தது கொழுந்து விட்டு வானளவாக!

வந்து இறங்கியது விண்ணிலிருந்து விமானம்;
வந்தனர் வெளியே திவ்ய சரீரத்துடன் இருவரும்.

ஆகாசராஜனும், தரணி தேவியும் அமர்ந்ததும்
வேகமாக விண்ணில் பறந்து மறைந்தது அது!

23a. சிங்காதனம்

வசுதானனுக்கு முடிசூட்டினான் ஸ்ரீநிவாசன்;
வசுதானனுக்கு உதவிடத் தொண்டைமான்!

திரும்பினர் அகத்தியரின் ஆசிரமத்துக்கு;
திரும்பியது இயல்பு நிலை மனதில் மெல்ல.

தொண்டைமான் எதிர்த்தான் புதிய அரசனை!
“பண்டைக் காலத்தின்  இளவரசன் நானே!” என்று.

“தந்தைக்குப் பின் தனயன் ஆளவேண்டும்!” என்ற
தன் கட்சியை எடுத்து உரைத்தான் வசுதானன்.

பூசல் தொடங்கியது மிகச் சிறிய அளவில்;
பூசல் பெருகி விட்டது வெகு விரைவில்.

பிரதானிகளின் துணையோடு தொண்டைமான்
அரசன் வசுதானனைஅழிக்க விரும்பினான்.

உதவி கோரினான் தொண்டைமான் ஸ்ரீநிவாசனிடம்;
மதி இழந்தவனிடம் பேசி  என்ன பயன் விளையும்?

அளித்தான் அவனுக்குத் தன் சங்குச் சக்கரங்களை!
களித்தான் தொண்டைமான் தான் வென்றது போல.

செய்தி அறிந்ததும் பதறி ஓடி வந்தான் அங்கு
செய்வது அறியாத வசுதானன் ஸ்ரீநிவாசனிடம்.

“என்னைக் கொல்ல எண்ணும் சித்தப்பாவுக்கு
எந்தை போன்ற உங்கள் உதவி தேவையா?

பாசமே இல்லையா பத்மாவதி அக்கா! நான்
மோசம் போவதில் உனக்குச் சம்மதமா?”

தேற்றினான் ஸ்ரீநிவாசன் மைத்துனனை,
“தோற்றுப் போவான்; கவலைப் படாதே!

ஆயுதங்கள் உள்ளன அவனிடம் ஆனால்
ஆதரித்துப் போரிடுவேன் உன் பக்கம் நான்.

சமரசம் பேசு முதலில். சண்டையைத் தவிர்!”
சமரசத்துக்கு ஒப்பவில்லை தொண்டைமான்!

23b. சண்டை

அமைதியை விரும்பியது ஸ்ரீனிவாசன் மட்டுமே!
ஆகாயக் கோட்டை காட்டினான் தொண்டைமான்!

நாரணனின் சங்கும், சக்கரமும் கிடைத்ததும்
நாராயாணபுர சிங்காதனம் கிடைத்தது போல!

சமரசத்துக்குத் தயாராக இல்லை அவன்;
சமருக்குத் தயார் ஆனான் படை திரட்டி.

சிற்றப்பன் போருக்குத் தயார் ஆனதால்,
சிறப்பாகத் தயார் ஆனான் வசுதானனும்.

செய்தி அனுப்பினான் ஸ்ரீநிவாசனுக்கு;
செய்தி வந்ததும் சென்றான் களத்துக்கு.

“உயிர் சேதம் சம்மதமா?” என்றாள் பத்மாவதி
“உயிர் சேதம் தவிர்க்கவே செல்கிறேன் நான்!”

நிலமை தலைகீழாக இருந்தது அங்கு!
நிகழவில்லை சமரசம் நினைத்தபடி!

சொன்னபடித் தலைமை தாங்கினான்
மன்னன் வசுதானன் படைக்கு ஸ்ரீநிவாசன்

யுத்தத்தில் உயிர் சேதத்தைத் தவிர்க்க
யுக்தி ஒன்று செய்தான் யுத்தகளத்தில்.

தொண்டைமான் முன் ஸ்ரீநிவாசன் செல்லத்
தொண்டைமான் எய்தான் மார்பில் ஓர் அம்பு

மயங்கிச் சாய்ந்து விட்டான் ரதத்திலேயே!
தயங்கிச் சண்டையை நிறுத்தினான் எதிரி!

ஆசிரமத்தை எட்டியது போர்ச் செய்தி
“பேசி நிறுத்துவேன் போரை!” என்று கூறி

முனிவருடன் கிளம்பினாள் பத்மாவதி
தனி ஒருவளாகப் போரை நிறுத்துவதற்கு.

23c. சமரசம்

“அடிபட்டு மயங்கி விட்டான் ஸ்ரீநிவாசன்!”
துடித்து விட்டாள் பத்மாவதி செய்தி கேட்டு.

கதறி அழுதபடி ஓடி வந்தாள் அவனிடம்,
பதறிய அவன் கேட்டான், “ஏன் வந்தாய்?”

“சமரசம் பேச வந்தார் தேவியார் – தாங்கள்
சமரில் அடிபட்டது கேட்டு துடித்து விட்டார்.”

அகத்தியர் இடைமறித்துக் கூறினார் – ஆனால்
“அதற்கு இடமே இல்லை!” என்றான் அவன்.

“இருவரையும் வரவழையுங்கள் என்னிடம்;
இருவருக்கும் செய்கிறேன் நான் சமரசம்”

அகத்தியர் அழைத்து வந்தார் இருவரையும்;
அகத்தீ கண்களில் வெளிவந்தது பத்மாவதிக்கு!

“அழிவதென முடிவு செய்து விட்டீர்களா?
பழி பாவத்துக்கும் அஞ்சுவது இல்லையா?”

“இளவரசுப் பட்டம் காட்டினார் என் அண்ணா!
இது உனக்கு நினைவு இல்லையா பெண்ணே ?”

“அரசனாக்கினார் என்னை ஸ்ரீநிவாசனே!
தர வேண்டாமா நாம் அதற்கு மதிப்பு ?”

“சமரஸத்துக்கு ஏற்பாடு செய்வார் இவர்;
சம்மதமா இருவருக்கும் கூறுங்கள்!” என

“தந்தைக்குப் பின் அவர் இடத்தில் நாங்கள்
எந்தையாகக் கருதுவது இவரைத் தானே!”

“நாட்டை இரு சம பாகங்கள் ஆக்குவோம்
நாட்டை ஆள வேண்டும் இருவரும் நட்புடன்!’

இருவரும் ஏற்றனர் இந்த முடிவினை;
இரண்டாக்கப் பட்டது அந்த ராஜ்ஜியம்.

தொண்டை நாடு தொண்டைமானுக்கு!
சோழ நாடு கிடைத்தது வசுதானனுக்கு!

நிலைமையைச் சீர் செய்து திரும்பினர்
நிம்மதியாக அகத்தியருடன் அவர்கள்.

24a. ஆலயம்

தொண்டைமான் காண வந்தான் ஸ்ரீநிவாசனை;
கொண்டு வந்தான் ஏராளமான பரிசுகளை.

” ஒன்றும் குறை இல்லை இந்த ஆசிரமத்தில்;
என்ன செய்வேன் பரிசுகளை வைத்துக் கொண்டு?”

“எண்ணியிருந்தேன் அண்ணன் மருமகன் என்று!
உண்மை ஸ்வரூபத்தை உணர்ந்தேன் இன்று!”

“அன்னிய இடத்தில் எத்தனை காலம்?
பொன்னும் மணியும் தர வேண்டாம்

தங்குமிடம் ஒன்று அமைத்துத் தரலாமே;
எங்களுக்கு அது தனியிடம் என்று ஆகுமே!”

“எங்கே எப்படி அமைக்க வேண்டும்;
தாங்கள் கோடி காட்டினாலே போதும்!”

மாலையில் சென்றனர் மீண்டும் புற்றுக்கு.
“ஆலயம் நிர்மாணிப்பாய் இந்த இடத்தில்!

புற்று உள்ள இடத்தில் வேண்டும் கர்ப்பக்கிரகம்
சுற்றிலும் எழுப்ப வேண்டும் மதில் சுவர்களை.

வைகுந்த வாசல் வேண்டும் இடையில்;
இரண்டாம் பிராகாரத்தில் வேண்டியவை

மடைப் பள்ளியும், கல்யாண மண்டபமும்,
மணக்கும் திரவியசாலையும், பள்ளி அறையும்.

இருக்க வேண்டும் மூன்றாவது பிராகாரத்தில்
உக்கிராண அறைகள், ஆஸ்தான மண்டபங்கள்.

வேண்டும் அழகிய ஏழு வாயில்கள்;
வேண்டும் அழகிய இரு கோபுரங்கள்;

வேண்டும் ஒரு கோபுரம் நுழை வாயிலில்;
வேண்டும் ஒரு கோபுரம் பிராகார வாயிலில்;

வேண்டும் பலி பீடமும், துவஜ ஸ்தம்பமும்!”
தொண்டைமான் நினைவில் கொண்டான்.

24b. ரங்கதாஸன்

தோட்டத்தில் இருந்தது ஒரு கிணறு,
“தோண்டியவன் நீயே முற்பிறப்பில்!”

வைகாநஸன் ஒரு முனிவர் சோழநாட்டில்;
வைத்தார் தணியாத ஆசையை மனத்தில்.

வைகுந்தனைக் கிருஷ்ணணாகக் காணக்
கைக்கொண்டார் கடுமையான தவநெறி.

தவம் செய்தார் கனி, கிழங்குகள் உண்டு!
தவம் செய்தார் தழை, சருகுகள் உண்டு!

தவம் செய்தார் உணவே உண்ணாமல்;
தவம் செய்தார் காற்றை சுவாசித்து!

கண் எதிரே தோன்றினான் வைகுந்தன்
“கண்ணனாகக் காட்சி தர வேண்டும்” என,

“ஸ்ரீநிவாசனை ஆராதித்து வந்தால்
இனிதே நிறைவேறும் உம் விருப்பம்!”

கால் நடையாகச் சென்றார் சேஷாசலம்;
கண்டார் வழியில் பக்தன் ரங்கதாஸனை.

உடன் நடந்தான் முனிவருடன் அவன்;
“கேட்டான் எதற்கு சேஷாசலத்துக்கு?”

“கிருஷ்ணாவதாரத்தில் செய்தான் லீலைகள்;
கிருஷ்ணனைக் காணக் கடும் தவம் செய்தேன்.

சேஷாசலம் ஸ்ரீநிவாசனை ஆராதித்தால்
பேஷாக நிறைவேறுமாம் என் கோரிக்கை”

முனிவருடன்  நடப்பது நல்லதாகி விட்டது!
இனிக்கும் கண்ணனைத் தரிசிக்கலாமே!

“அனாதை என்னைப் பணியாளாக எற்பீர்.
அநேக சேவைகள் செய்து உதவுவேன்!”

சேஷாசலத்தைச் அடைத்தனர் இருவரும்
வாசஸ்தலம் ஸ்வாமி பூஷ்கரிணீ அருகே.

தினமும் ஆராதித்தனர் பகவானை – ரங்கன்
முனிவருக்குப் பணிவிடைகள் செய்தான்.

வனத்துக்குச் சென்று மலர் கொய்தவன்
நந்தவனம் ஒன்று அமைக்க விரும்பினான்.

முனிவரிடம் விண்ணப்பித்தான் ரங்கன்;
கனிவுடன் பாராட்டி முனிவரும் உதவினார்.

உருவானது அழகிய நந்தவனம் அங்கே!
இருவாக்ஷி, சம்பங்கி, ஜாதி, முல்லை

மல்லிகை, அலரி, மந்தாரை என்று
மலர்கள் பூத்துக் குலுங்கின விரைவில்.

நறுமணம் நிறைத்தது நாற்றிசைகளை;
நிறங்கள் மயக்கின காண்பவர் கண்களை!

விடியலில் நீராடி மலர் கொய்து வருவான்;
செடிகளுக்கு நீரூற்ற வெட்டுவித்தான் கிணறு.

மலர் பறிக்கச் சென்ற ரங்கதாசன் ஒருநாள்,
மனத்தை மயக்கும் காட்சியைக் கண்டான்!

திவ்விய தேஜசுடன் சென்றான் கந்தர்வன்,
திவ்விய அழகு வாய்ந்த தன் மனைவியுடன்.

ஆகாய மார்க்கமாகச் சென்றவர் கண்டனர்
ஆதி வராஹமூர்த்தி ஆலயத்தை அங்கே.

ஸ்வாமி பூஷ்கரிணீயில் புனித நீராடி
ஸ்வாமி தரிசனம் செய்ய விரும்பினர்.

கந்தர்வனும், மனைவியும் நீராடுவது கண்டு
வந்த வேலையை மறந்து போனான் ரங்கன்.

சௌந்தரியத்தில் மனம் பறி போனதால்
செல்லவில்லை மலர் கொய்து ஆசிரமம்.

கரையேறி, ஆலயத்தில் தொழுது, கண்ணுக்கு
மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான்!

24d. தவறும் தண்டனையும்

வானில் பறந்து மறைந்தனர் கந்தருவர்;
வந்தது சுய நினைவு ரங்கதாஸனுக்கு.

‘மலர் கொய்ய வந்தவன் அதைச் செய்யாமல்
மனதை அலைய விட்டு விட்டேனே அந்தோ!

கெடுத்தேனே பூஜையை அநாவசியமாக;
காக்க வைத்தேனே முனிவரை இதுவரை!

உல்லாசமாக வேடிக்கை பார்த்து நின்று
உபாஸனையில் தடங்கல் செய்தேனே!’

பதறியது உடல் செய்த தவற்றை எண்ணி;
பறித்துக் கொண்டு ஓடினான் மலர்களை!

உக்கிர மூர்த்தியாக மாறி இருந்தார் முனிவர்;
சிக்கெனக் காலைப் பற்றிக் கொண்டான் ரங்கன்.

“பாதகம் செய்துவிட்டேன் மன்னியுங்கள்!”
“தாமதம் ஏன் எனச் சொல்லு நீ முதலில்!”

“மாயைக்கு அடிமை ஆகிவிட்டேன் நான்!
மனதைத் தறிகெட்டு அலைய விட்டேன்!”

ஸ்ரீநிவாசன் தோன்றினார் அவர்கள் முன்பு;
சேவித்தான் ரங்கதாசன் விழுந்து விழுந்து.

“தவறு செய்தவன் தண்டனை அடைவான்;
தவறு தான் என் பூஜையைத் தாமதம் செய்தது!

சுதன்மனின் இளைய மகனாகப் பிறந்து பல
சோதனைகளை அனுபவி அடுத்த பிறவியில்!”

“பாதங்களை அடைய விரும்பியவனுக்குச்
சோதனைகளை அனுபவிக்கும் சாபமா?”என

“செய்த தவம் வீண் போகாது ஒரு நாளும்;
செய்தாய் தாமதம் பகவத் பூஜையில் – அது

செய்யும் சற்றுத் தாமதம் விரத பூர்த்தியில்;
எய்துவாய் எண்ணிய பேற்றைத் தாமதமாக!

மன்னன் மகனாகப் பிறந்து ஆள்வாய்
தொண்டை நாட்டை உன் குடைக் கீழ்.

அழைத்து வருவேன் நானே உன்னை இங்கு;
ஆலயம் எழுப்பச் செய்வேன் இதே இடத்தில்!”

25a. ஆனந்த நிலயம்

“ரங்க தாஸனாக இருந்தவனும் நீயே!
இங்கு கிணறு வெட்டுவித்தவனும் நீயே!

சாபம் காரணமாக நின்றுவிட்ட பணியைத்
தாபம் தீரத் தொடருவாய் இந்தப் பிறவியில்!”

தொண்டைமான் தொடங்கினான் ஆலயப் பணியை;
கொண்டு வந்து குவித்தான் கற்களைப் பாறைகளை!

வண்டி வண்டியாக வந்தன மரங்கள்,
சுண்ணம்பு, பிற தேவையான பொருட்கள்.

பாறைகளைச் செதுக்கினார் சிற்பிகள் தொடர்ந்து;
யாரும் ஊர் திரும்பவில்லை பணி முடியும் வரை!

சிற்பிகள் உழைத்தனர் உற்சாகத்துடன்
புற்று இருந்த இடத்தில் கர்ப்ப கிரகம்!

வைகுந்த வாசல் அமைந்தது அதன் வாயிலில்
எழுந்தது முதல் பிராகாரத்தைச் சுற்றி மதில்!

பள்ளியறை, மடைப்பள்ளி, திரவிய சாலை;
கல்யாண மண்டபம், உக்கிராண அறைகள்.

பலிபீடம், துவஜஸ்தம்பம், கோரியாவாறு;
ஆஸ்தான மண்டபங்கள், கோரியாவாறு;

உயர்ந்த கோபுரம் விளங்கியது வாயிலில்;
உச்சி வரையில் உயர்ந்த வேலைப்பாடுகள்.

கண் கவர் தூண்கள்; பாறைகளால் தளம்;
கண் கவர் விமானம் கர்ப்பகிரகத்தின் மேல்.

சந்தித்துக் கூறினான் ஸ்ரீநிவாசனிடம் சென்று,
“சந்தோஷத்துடன் ஏற்று அருள வேண்டும்!”

25b. சிலாரூபம்

நெருங்கியது சுபதினம் ஆலயம் புகுவதற்கு;
ததும்பியது குதூகலம் அகத்தியர் ஆசிரமத்தில்.

வந்து குவிந்தனர் இந்திராதி தேவர்கள் அங்கே;
சொந்தமாக ஏற்பாடுகளைக் கவனித்தார் பிரமன்.

வந்து சேர்ந்தனர் வசுதானனும், தொண்டைமானும்;
வந்து சேர்ந்தனர் அனைவரும் ஆனந்த நிலயம்.

ரதத்தில் வந்தனர் ஸ்ரீநிவாசனும் பத்மாவதியும்;
ரதத்தை ஓட்டினார் சுயமாக பிரம்மதேவன்.

கண்ணைப் பறித்தன வண்ணக் கோலங்கள்
மண்ணைத் தெளித்திருந்தனர் பன்னீரால்.

தோரணங்கள் தொங்கின பார்த்த இடம் எல்லாம்!
பூரணத் திருப்தி ஸ்ரீநிவாசன் உள்ளத்தில் நிலவ;

ஆனந்தம் பொங்கியது பத்மாவதி மனதில்!
ஆனந்த நிலயம் ஆனது விமானத்தின் பெயர்.

ஹோமகுண்டத்தை வளர்த்தான் பிரமன்;
வேத காரியங்களை முடித்தான் பிரமன்.

விமானத்தின் கீழ் நின்றான் ஸ்ரீநிவாசன்-
விரும்பி அமர்த்தினான் தேவியை மார்பில்!

வலது கரம் காட்டியது ஒரு திருவடியை;
இடது கரம் மடங்கியது முழங்கால் அருகில்!

“ஆகும் பாதம் வைகுந்தமாக பக்தருக்கு.
ஆகும் சம்சாரம் முழங்கால் அளவு நீராக!”

பிரமன் பணிந்து வணங்கி வேண்டினான்,
“பிரபு தங்க வேண்டும் இங்கு கலியுகத்தில்!”

“பூலோக வைகுந்தம் ஆகவேண்டும் இது – நான்
சிலா ரூபத்தில் இருப்பேன் ஆனந்த நிலயத்தில்!”

தூண்டா விளக்குகளை ஏற்றினான் பிரமன்!
ஆண்டாண்டு காலமாகப் பிரகாசிக்கின்றன.

சுபதினம் ஆனது முதல் பிரம்மோத்சவமாக;
சிலா உருவெடுத்து நிற்கின்றான் ஸ்ரீநிவாசன்!

25c. பிரம்மோத்ஸவம்

பிரமன் தெரிவித்தான் தொண்டைமானுக்கு
பிரம்மோத்ஸவத்துக்கான பல விவரங்களை.

பொன்னும், மணியும் வாரித் தந்தான் – அவன்
முன் வந்தான் உற்சாகமாக உற்சவம் நடத்த.

செய்தி பரவியது நான்கு திசைகளிலும்;
எய்தினர் உவகை செய்தியைக் கேட்டவர்.

குவிந்தனர் ஜனங்கள்; உருவாகின வீதிகள்;
குழுமினர் தேவர்கள்; உருவாகின கூடாரங்கள்!

காணக் கிடைக்காத காட்சிகள் கிடைத்தன.
காணிக்கை அளித்தனர் தம் சக்திக்கு ஏற்ப.

திருவிழா நடந்தது வெகு கோலாகலமாக.
திரும்பினர் தம் இருப்பிடம் குதூகலமாக.

தொண்டைமானுக்குப் பிரிய மனம் இல்லை.
“தொண்டை நாட்டை மறந்து விடாதே நீ!

தொண்டு புரியவேண்டும் உன் மக்களுக்கு.
மீண்டும் வருவாய் மோக்ஷம் அடைவதற்கு.

தொண்டை நாட்டை ஆட்சிசெய் அதுவரையில்!”
தொண்டைநாடு திரும்பினான் தொண்டைமான்.

26a. கிருஷ்ண சர்மா

கூர்மன் விரும்பினான் கங்கையில் நீராட.
ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமா?

நிறைவேறவில்லை ஒருநாளும் கோரிக்கை;
நீத்து விட்டான் உலக வாழ்வையே ஒருநாள்.

கிருஷ்ண சர்மா கூர்மனின் மகன் ஆவான்;
விரும்பினான் தந்தையின் கனவை நனவாக்க.

‘இறந்தார் தந்தை ஆசை நிறைவேறாமல்!
கரைக்க வேண்டும் அஸ்தியை கங்கையில்.’

குடும்பத்தோடு புறப்பட்டான் காசி நகருக்கு.
தடங்கல் மேல் தடங்கல்கள் வந்து சேர்ந்தன.

அடைந்திருந்தான் அப்போது தொண்டை நாட்டை.
அதிசயித்தான் தொண்டைமான் புகழைக் கேட்டு.

தோன்றியது ஒரு எண்ணம் அவன் மனத்தில்.
மூன்று மாதக் குழந்தையை, மனைவியை,

மன்னன் பாதுகாப்பில் விட்டுச் சென்றால்
முன்னேற முடியும் தனியாளாக, வேகமாக.

தொண்டைமானைச் சந்தித்தான் கிருஷ்ண சர்மா.
ஒண்ட ஓரிடம் தந்து பாதுகாக்க வேண்டினான்.

“காசி செல்ல ஆசைப்பட்டார் என் தந்தையார்.
தாசில் பண்ண ஆசை இருந்தால் மட்டும் போதுமா?

கைக் குழந்தையை, மனைவியைப் பாதுகாத்து
கை கொடுத்து உதவிட யாருமில்லை அரசே!

இளம் குழந்தையை, இளைய மனைவியைத்
தளிர் போலப் பாதுகாப்பீரா நான் வரும் வரை?”

தொண்டைமான் அளித்தான் சம்மதம் – உடனே
தொண்டைமானிடம் விடுத்தான் குடும்பத்தை.

மனப் பளு அகன்றவனாக விரைந்தான்
மகனின் கடமையைச் செய்யக் காசிநகர்.

26b. பட்டினிச் சாவு!

தொண்டைமான் சுயமாக கவனித்தான்
தன்னிடம் ஒப்படைக்கப் பட்டவர்களை.

ஏற்பாடு செய்தான் தனி வீடு ஒன்றை;
ஏற்படுத்தினான் சகல வசதிகளையும்.

பொருட்களைக் கொண்டு குவித்தான் – பிறர்
நெருங்க வண்ணம் பூட்டினான் கதவுகளை.

அடிக்கடி விசாரித்தான் முதலில் சில நாட்கள்;
அடியோடு மறந்து விட்டான் அதன் பின்னர்.

அரசனே கவனித்து வந்ததால் வேறு எவரும்
அக்கறை எடுக்கவில்லை மறந்தே விட்டனர்!

குந்தித் தின்றால் குன்றும் மாளும் அன்றோ?
முந்தி சேமித்த உணவுப் பொருட்கள் தீர்ந்தன!

பூட்டி இருந்ததால் செல்ல முடியவில்லை வெளியே!
மாட்டிக் கொண்டனர் பொறியில் இரு எலிகள் போல.

பட்டினி கிடந்தனர் தாயும் சேயும் பல நாட்கள்!
விட்டனர் தம் இன்னுயிரை ஒருவர் பின் ஒருவராக.

காசியிலிருந்து திரும்பினான் கிருஷ்ண சர்மா;
காசித் தீர்த்தம் அளித்தான் தொண்டைமானுக்கு.

“யாத்திரை இனிதே முடிந்தது உங்கள் தயவால்!
பத்திரமாக உள்ளனரா என் மனைவியும், மகனும் ?

திடுக்கிட்டான் தொண்டைமான் இது கேட்டு
நடுக்கம் எடுத்தது அவர்களை நினைத்ததும்!

“சிரம பரிஹாரம் செய்யுங்கள் – அவர்களைச்
சிறிது நேரத்தில் வரவழைக்கிறேன் இங்கு.”

மகனிடம் தந்தான் அந்த வீட்டுச் சாவியை.
ரகசியமாகப் பார்த்து விட்டு வரச் சொன்னான்.

26c. சரணாகதி

ஆடிப் போய்விட்டான் தொண்டைமான் மகன்
ஆவி பிரிந்த உடல்களை அங்கு கண்டவுடன்.

ஓடினான் தந்தையிடம் மிகுந்த துயருடன்,
“தேடி வந்தது நம்மை பிரம்மஹத்தி தோஷம்.

இறந்து விட்டனர் இருவரும் பட்டினியால்
மறந்தே போய் விட்டோம் நாம் அவர்களை.

களங்கம் ஏற்பட்டுவிட்டதே நல்ல பெயருக்கு!
விளங்குமா இதைச் சொன்னால் யாருக்காவது?”

மீண்டும் வந்தான் கிருஷ்ண சர்மா – “நான் காண
வேண்டும் என் மனைவியை, மகனை!”என்றான்.

“ஆலயம் சென்றுள்ளனர் இந்த அந்தப்புர மகளிர்.
அவர்களுடன் சென்றுள்ளனர் இவர்கள் இருவரும்!

இரண்டு நாட்களில் திரும்ப வந்துவிடுவார்கள்.
இருங்கள் நீங்கள் அரண்மனையில் அதுவரை.”

கிருஷ்ண சர்மா நிம்மதியாகச் சென்றுவிட்டான்;
கிருஷ்ண சர்மாவுக்கு உண்மை தெரிந்துவிட்டால்?

‘ஸ்ரீனிவாசனே என்னைக் காக்க முடியும் இப்போது!’
ஸ்ரீனிவாசனை விரைந்து சென்று சரணடைந்தான்.

பாதங்களைப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டான்.
” பாதி இரவில் வந்து கண்ணீர் விடுவது ஏன்?” என

“வாக்குத் தந்தால் விடுவேன் பாதங்களை அன்றிச்
சாக்குச் சொன்னால் விடுவேன் என் உயிரையே!”

“உனக்கு வந்த இடர் என்னுடையது அல்லவா?
என்னிடம் கூறுவாய் நடந்தது என்னவென்று!”

ஆதியோடு அந்தமாக உரைத்தான் அனைத்தையும்;
“பாதிப்பு அடைந்தவனுக்கு என்ன பதில் சொல்வேன்?”

26d. விஸ்வரூபம்

” இந்த முறை உதவுகிறேன் தொண்டைமான்
இன்னொரு முறை நடக்கக் கூடாது இது போல!

உடல்களைக் கொண்டு வா என் சன்னதிக்கு!” என
உடல்களைக் கொண்டு கிடத்தினான் சன்னதியில்.

“உயிர்ப்பித்துத் தருவாய் மீண்டும் ஸ்ரீனிவாசா!
உயிர்ப் பிச்சை தருவாய் குற்றவாளி எனக்கும்!”

பாத்திரத்தில் இருந்து பகவான் எடுத்துத் தெளித்த
தீர்த்தத்தினால் உயிர் பெற்றனர் தாயும், சேயும்.

எழுந்தனர் தூக்கத்தில் இருந்து எழுவது போல;
விழுந்தனர் வியப்புக் கடலில் அதைக் கண்டவர்.

“பட்டினியால் மெலிந்து நலிந்த மகன் இப்போது
பட்டொளி வீசி ஜொலிப்பது எப்படி?” என்றாள்.

“சரணடைந்தேன் ஸ்ரீனிவாசநிடம் நான் – அவன்
அரவணைத்து உயிர்ப்பித்தான் தன் கருணையால்!”

அவளும் தொழுதாள் பகவான் பாதங்களை;
“அருளுங்கள் என்றும் குறையாத பக்தியை!”

“நித்திய வாசம் செய்வேன் நாடி வருபவருக்கு!
சத்தியமாக உதவுவேன் தேடி வருபவர்களுக்கு!”

பகவான் மார்பில் தோன்றி மறைந்தன – ஈரேழு
லோகங்கள் பதினான்கும், கடல்கள் ஏழும்!

அழைத்து வந்தனர் கிருஷ்ண சர்மாவை அங்கு,
அடைந்தான் ஆச்சரியம் அவர்களைக் கண்டு.

‘இத்தனை வனப்புள்ளவளா என் மனைவி?
இத்தனை தேஜஸ் உடையவனா என் மகன்?’

“மறுபிறவி எடுத்து வந்துள்ள்ளோம் நாங்கள்!
மறவோம் என்றும் ஸ்ரீனிவாசன் கருணையை!”

விளங்கவில்லை ஒன்றும் கிருஷ்ண சர்மாவுக்கு;
விளக்கினான் அனைத்தையும் தொண்டைமான்.

ஊர் திரும்பும் அந்தணனுக்கு அளித்தான் அவன்
சீர் போலப் பொன்னும், மணியும், பல பரிசுகளும்.

27a. மண் பூக்கள்

முதிர்ந்து விட்டது வயது தொண்டைமானுக்கு;
முன்போல் சுமக்க முடியவில்லை ராஜ்யபாரம்.

நாடியது மனம் ஸ்ரீநிவாசனுடன் இருப்பதையே;
தேடின கண்கள் ஸ்ரீனிவாசனின் திருவுருவத்தையே!

முடி சூட்டினான் மகனுக்கு அடுத்த மன்னனாக;
விடை பெற்றான் அன்பு மனைவியிடமிருந்து.

ஆனந்த நிலையத்தில் மிகுந்த ஆர்வத்துடன்
ஆராதனை, பூஜைகள் செய்தான் ஸ்ரீநிவாசனுக்கு.

மாறுபாடு தெரிந்தது ஸ்ரீனிவாசனிடம் – அவன்
வேறுபட்டு நின்றான் கற்சிலையாக இப்போது.

அளவளாவுவான் முன்பு அழைத்த போதெல்லாம்;
அழைத்த போதிலும் வருவதே இல்லை இப்போது.

“பிழை என்ன செய்துவிட்டேன் ஸ்ரீனிவாசா? கூறும்
அழைத்தாலும் நீங்கள் வாராததின் காரணம் எனக்கு!

பக்தியில் குறை ஏற்பட்டு விட்டதா கூறுவீர்!
பழிகளில் இருந்து காத்தீரே முன்பெல்லாம்!”

கல்லாகவே நின்றான் ஸ்ரீனிவாசன் அப்போதும்;
சொல்லொன்றும் கூறவே இல்லை இப்போதும்.

அர்ச்சனை செய்தான் அன்றலர்ந்த மலர்களால்;
அடையவில்லை அவை இறைவன் பாதங்களை!

மண்ணால் செய்யப்பட மணமற்ற மலர்களே
அண்ணலின் இரு பாதங்களை அலங்கரித்தன!

“மணம் வீசும் புது மலர்களை நிராகரித்து விட்டு
மணமில்லாத மண்மலர்களை நீங்கள் ஏற்பது ஏன் ”

பாதங்களைப் பற்றிக் கொண்டு படுத்து விட்டான்!
“பாராமுகம் ஏன்?” என அழுதான், எழவே இல்லை.

மனம் இளகிவிட்டது ஸ்ரீநிவாசனுக்கு – வாய் திறந்து
“இனிப் போதும் நீ அழுதது எழுந்திரு!” என்றான்.

27b. பீமாவரம் பீமன்

“மௌனம் கழிய இத்தனை நேரமா உமக்கு?”என,
“சௌகரியமாக நீ வாழலாம் உன் அரண்மனையில்!

வருத்திக் கொள்கிறாய் அனாவசியமாக உன்னையும்;
வருத்துகின்றாய் அனாவசியமாக என்னையும்!” என்றான்

“வெறுப்பு ஏற்பட்டுவிட்டது உலக வாழ்வில் எனக்கு;
நறுமண மலர்களால் நான் அர்ச்சிக்கின்றேன் – ஆனால்

மணம் வீசும் என் மலர்களை நீங்கள் ஏற்பதில்லை;
மணமற்ற மண் மலர்களை நீங்கள் ஏற்கின்றீர்கள்!

குறை ஏற்பட்டு விட்டதா என்னுடைய பக்தியில் ?
குறை ஏற்பட்டதா என்னுடைய ஆராதனையில் ?

ஆனந்த நிலையத்தை அமைத்திட உழைத்தேன்;
அடுத்த சேவையைச் சிந்தித்துக் கொண்டுள்ளேன்!

பக்தி நிலவுகிறது என் மூச்சுக் காற்றில் கலந்து;
பக்தியை வெளிப்படுத்த முடியுமா இதை விட?”

கலகலவென நகைத்தான் ஸ்ரீனிவாசன் இப்போது;
“கலப்படம் இல்லாதது உன் பக்தி என்று அறிவேன்!

இருக்கின்றது உன்னுடைய மனதில் ஓர் இறுமாப்பு;
‘இவை அனைத்தும் செய்தவன் நானே!’ என்ற கருத்து.

ஆணவம் அகன்றால் மட்டுமே ஐக்கியம் சித்திக்கும்.
காண விரும்பினால் உடனே செல்வாய் பீமாவரம்!

மயங்காமல் கண்டால் மனதுக்குத் தெரியும்
குயவனும், மனைவியும் கொண்டுள்ள பக்தி!”

தொண்டைமான் சென்றான் பீமாவரத்துக்கு;
கண்டு கொண்டான் குயவன் பீமன் வீட்டை.

ஏழ்மை நிலையைக் கண்டு அதிர்ந்து போனான்.
‘தாழ்மையையே விரும்புகின்றான் ஸ்ரீனிவாசன்.

எளிமையையே விரும்புகின்றான் ஸ்ரீனிவாசன்
வலிமையைக் காட்டுபவர்களை அல்லவே அல்ல!’

27d. விமானம்

பீமன் மனைவி கழுவினாள் அன்புடன்
பகவான் திருப் பாதங்களை நீரினால்.

பரப்பி இருந்தது குடிசையில் மண்.
பரப்பினர் அதன் மேல் ஒரு பாயை.

அமர்ந்தான் ஸ்ரீனிவாசன் அதன் மேல்,
அழகிய மணை மேல் அமர்வது போல்.

இரவு உணவு வெறும் கூழும், உப்பும்.
இருப்பதை மிக விரும்பிக் குடித்தார்.

‘எளியவருக்குஎளியவன் இறைவன்!’
என்பது எத்தனை பெரிய உண்மை!

விமானம் இறங்கியது விண்ணிலிருந்து;
விண்ணில் பறந்தான் கருடன் உடனே.

பத்மாவதி வந்தாள் கருடன் மீதேறி.
பகவானுடன் இணையாக நின்றாள்.

ஆசி பெற்ற பீமனும், மனைவியும்
அதிசய விமானம் ஏறிச் சென்றனர்!

“நான், எனது என்பதை ஒழித்தேன்!
நாயேனுக்கும் அருள்வீர் பரமபதம்!”

இறங்கியது ஒரு தங்கவிமானம் தரையில்;
பறந்தது தொண்டைமானுடன் விரைவில்.

27d. விமானம்

பீமன் மனைவி கழுவினாள் அன்புடன்
பகவான் திருப் பாதங்களை நீரினால்.

பரப்பி இருந்தது குடிசையில் மண்.
பரப்பினர் அதன் மேல் ஒரு பாயை.

அமர்ந்தான் ஸ்ரீனிவாசன் அதன் மேல்,
அழகிய மணை மேல் அமர்வது போல்.

இரவு உணவு வெறும் கூழும், உப்பும்.
இருப்பதை மிக விரும்பிக் குடித்தார்.

‘எளியவருக்குஎளியவன் இறைவன்!’
என்பது எத்தனை பெரிய உண்மை!

விமானம் இறங்கியது விண்ணிலிருந்து;
விண்ணில் பறந்தான் கருடன் உடனே.

பத்மாவதி வந்தாள் கருடன் மீதேறி.
பகவானுடன் இணையாக நின்றாள்.

ஆசி பெற்ற பீமனும், மனைவியும்
அதிசய விமானம் ஏறிச் சென்றனர்!

“நான், எனது என்பதை ஒழித்தேன்!
நாயேனுக்கும் அருள்வீர் பரமபதம்!”

இறங்கியது ஒரு தங்கவிமானம் தரையில்;
பறந்தது தொண்டைமானுடன் விரைவில்.

28a. வட்டி கட்ட வழி?

ஆனந்தமாக இருந்தான் ஸ்ரீனிவாசன்,
ஆனந்த நிலயத்தில் பத்மாவதியுடன்.

பக்தர்கள் தேடி வந்தனர் பகவானை;
சக்திக்கு ஏற்பக் காணிக்கை அளித்தனர்.

மகிழ்வுடன் பகவான் இருந்த போதிலும்,
நெகிழ்வுடன் நினைப்பதுண்டு லக்ஷ்மியை!

‘உற்சாகம் குன்றி பகவான் இருப்பதற்கு
உபசரணையில் உள்ள குறைபாடுகளோ?’

பத்மாவதி ஆலோசிப்பதுண்டு அடிக்கடி;
பகவானிடம் கேட்டுவிட்டாள் நேரடியாக.

“சுகமாக இருப்பதை விட்டு அடிக்கடி நீங்கள்
சோகமாகி விடுவதன் காரணம் கூறுங்கள்!”

“லக்ஷ்மி என்னைப் பிரிந்ததனால் வாழ்க்கை
லக்ஷ்யம் இழந்ததைப் போல ஆகிவிட்டது.

திருமணச் செலவுக்கு வாங்கினேன் கடன்;
திருப்பித் தர வேண்டும் கலியுக முடிவில்.

வட்டி கட்ட வேண்டும் வருடா வருடம்
கட்ட வில்லை வட்டி ஒரு வருடம் கூட.

லக்ஷ்மி மீண்டும் என்னிடம் வந்தால் தான்
லக்ஷணமாகும் நம் வாழ்க்கை!” என்றான்.

“லக்ஷ்மி வருவதில் தடை என்ன சுவாமி?”
“லக்ஷ்மி உனக்குப் போட்டி அல்லவா?”என,

“இந்த வாழ்க்கையே லக்ஷ்மி தந்தது!
அந்த லக்ஷ்மியை நான் வெறுப்பேனா?

அழைத்து வருவோம் நாம் சென்று!” என்றாள்.
“அழைத்து வருவேன் நான் சென்று!” என்றான்.

வகுள மாலிகை துணையானாள் அவளுக்கு.
பகவான் மட்டும் சென்றார் கரவீரபுரத்துக்கு.

28b. பத்ம ஸரோவர்

பகவான் கரவீரபுரம் வருகின்றான் என்றதும்,
பாதாள லோகம் சென்று விட்டாள் லக்ஷ்மி!

கபில முனிவரைக் கண்டாள் லக்ஷ்மி தேவி;
கபில முனிவர் வரவேற்றார் அங்கே தங்கிவிட!

எந்த இடமானால் என்ன பகவானைத் தியானிக்க?
அந்த இடத்திலே தங்கிவிட்டாள் லக்ஷ்மி தேவி.

கரவீரபுரம் அடைந்த ஸ்ரீனிவாசன் கண்டது எது?
வெறிச்சோடிக் கிடந்த தேவியின் இருப்பிடத்தை.

கடுமையான தவம் மேற்கொண்டு விட்டாளா?
காடுகளில் தேடி அலைந்தான் லக்ஷ்மி தேவியை.

திருவுருவத்தின் அருகே அமர்ந்தான் ஸ்ரீனிவாசன்;
தியானம் செய்தான் தன் லக்ஷ்மி தேவியின் மீது.

பத்து ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன – ஆனால்
பார்க்க முடியவில்லை பகவானால் லக்ஷ்மியை!

அசரீரி ஒன்று பேசியது ஆகாயத்தில் இருந்து,
“வசப்படமாட்டாள் லக்ஷ்மி உன் தியானத்துக்கு!

ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரினை
அமைப்பாய் பத்ம ஸரோவர் என்ற பொய்கையில்.

கிழக்கில் இருந்து சூரியன் ஒளி வீசும் பொழுது,
அழகிய தாமரையில் உன் தேவி தோன்றுவாள்!”

அடைந்தான் சுவர்ணமுகி தீரத்தை ஸ்ரீனிவாசன்.
அனுப்பினான் வாயு தேவனை இந்திர லோகம்.

பறித்து வந்தான் இந்திரனின் அனுமதியோடு
அரிய தாமரை மலர் ஒன்றை வாயுதேவன்.

ஆயிரம் இதழ்த் தாமரையை ஸ்தாபித்தான்;
ஆயிரம் இதழ்த் தாமரை மீது தியானித்தான்.

29a. அப்சரஸ்

நாட்கள் உருண்டு ஓடின – பகவானின் தவம்
நாளுக்கு நாள் தீவிரம் அடைந்தது மேலும்!

பத்ம தீர்த்தத்தின் கரையில் ஒருவன் அமர்ந்து
உக்கிர தவம் செய்வது ஒரு செய்தியானது!

பூலோகத்தில் தவம் நடந்தால் ஆபத்து நிகழும்
தேவலோகத்தை ஆளும் இந்திரனின் பதவிக்கு.

தவத்தைக் குலைத்துக் கலைப்பதற்கு இந்திரன்
தேவ மகளிரை அனுப்பினான் பூலோகத்திற்கு.

பூலோகப் பெண்களைப் போல மாறிவிட்டனர்.
பூஜைக்கு உதவி செய்திட விரும்பி வந்தனர்.

தடை சொல்லவில்லை பகவான் அவர்களிடம்;
நடை பெறவில்லை அவர்கள் விரும்பியதும்!

நெருங்க வில்லை பகவான் அந்த சுந்தரிகளை!
நெருங்கவும் விடவில்லை அந்த சுந்தரிகளை!

அடுத்த திட்டத்தினை அமல்படுத்தினர்அப்சரஸ்.
அடுத்து அடுத்துப் பாடினர் இனிய பாடல்களை!

அர்ப்பணித்தான் அந்தப் பாடல்களை லக்ஷ்மிக்கு;
கற்பனை பலிக்கவில்லை பெண்கள் எண்ணியபடி.

மாலைகளை அணிவிக்க வந்தனர் பகவானுக்கு;
மாலைகளை அணிவித்தான் அவன் தாமரைக்கு!

“நாட்டியம் செய்யலாமே நீங்கள்!” என்று சொல்லப்
போட்டி போட்டுக் கொண்டு இனிய நடனம் ஆடினர்.

மேனி எழிலை வெளிப்படுத்தினர் ஆடும் போது;
பேணினான் பிரம்மச்சரியத்தை பகவான் நன்கு!

கற்பனையில் உருவான அழகிய பெண்ணை
கண்முன் கொண்டு வந்து நிறுத்தினான் பகவான்

‘படைக்கும் சக்தி படைத்த இவன் மனிதன் அல்ல!’
மடை திறந்தது போல எல்லாம் நினவு வந்தது!

இந்திரன் தந்தான் வாயுவிடம் தாமரை மலரை;
இந்தத் தாமரை மலரே அவன் தந்த மலர் என்று!

விழுந்து வணங்கினர் பகவான் பாதங்களில்;
அழுதும், தொழுதும், கேட்டனர் மன்னிப்பு.

“செய்ய வந்தீர்கள் உங்களுக்கு இட்ட ஆணையை;
எய்தவன் இருக்க அம்பை நான் நோக மாட்டேன்!”

தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடியவர்கள்
அப்போதே சென்றனர் இந்திரனின் சபைக்கு.

29b. பத்மாவதியின் கனவு

“அழிவுக்கு ஆளாகாமல் வந்துள்ளோம்!
பழிச் செயலைச் செய்திருந்த போதும்!”

கூறினர் பூலோகத்தில் நடந்தவற்றை;
மாறினான் இந்திரன் அதைக் கேட்டதும்.

ஓடினான் பத்மஸரோவருக்கு உடனே;
தேடினான் தவம் செய்யும் பகவானை.

விடவில்லை பற்றிய பாதங்களை அவன்;
எழவில்லை மன்னித்தேன் என்னும் வரை!

“தவறு ஒன்றும் நிகழவில்லை இந்திரா!
தவத்தில் திருப்தி செய்தோம் லக்ஷ்மியை.

மனம் உருகி வருந்திடும் ஒருவருக்கு
மன்னிப்பு உண்டு நிச்சயம்!” என்றான்.

இந்திரன் திரும்பினான் தன் இந்திரலோகம்.
சொந்த சிருஷ்டியான தேவதையிடம் அவன்

“வன தேவதையாக இருந்து காப்பாற்றுவாய்
தினமும் தேடி வரும் பக்தர்களை!” என்றான்.

தவம் தொடர்ந்தது மீண்டும் நெடுங்காலம்;
தவத்துக்கு இரங்கி வரவே இல்லை லக்ஷ்மி.

இருபத்து இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன;
வருத்தத்தில் மூழ்கியிருந்தாள் பத்மாவதி.

‘லக்ஷ்மியுடனேயே தங்கி விட்டாரா அவர்?
லக்ஷ்மியைத் தேடித் திரிகின்றாரா அவர்?

கண்டு பிடிக்கவே முடியாதபடி எங்கோ
கண் காணாது ஒளிந்து இருக்கின்றாளா?’

இரவு முழுவதும் உறங்கவில்லை அவள்;
துறவுக் கோலத்தில் கனவினில் கண்டாள்

விடியற்காலை நேரத்தில் ஸ்ரீனிவாசனை!
இடி விழுந்தது போலாகிவிட்டது உள்ளம்!

வகுள மாலிகையிடம் கூறினாள் கனவை;
வெகுவாகத் துயருற்றாள் அதை எண்ணி!

30a. தீப லக்ஷ்மி

மன நிம்மதி இழந்து விட்டாள் லக்ஷ்மி;
மனம் கலங்கியது நடப்பதைக் கண்டு.

‘கபிலரின் ஆசிரமத்தில் தங்கிவிட்டால்
கரவீர புரத்திலிருந்து திரும்பி விடுவான்!’

எண்ணிய எண்ணம் தவறானது – கணவன்
பண்ணுகின்றான் தவம் பத்ம ஸரோவரில்.

கூறினாள் மனக் கவலையைக் கபிலரிடம்;
கோரினார் கபிலர் பிரிந்து வந்த காரணத்தை.

“வாசஸ்தலத்தைக் களங்கம் செய்த பிறகு
வசிக்க முடியுமா மீண்டும் என்னால் அங்கு?”

“மகன் போன்றவன் அல்லவா பிருகு ருஷி ?
மகனிடம் கோபம் கொள்ளலாமா ஒரு தாய்?

கணவனைப் பிரிந்து தனியே வரலாமா?
கணவனைத் தவத்தில் தவிக்க விடலாமா?

பாராமுகம் செய்வது தகுமா தேவி – இங்கு
யாராவது மகிழ்ச்சியாக உள்ளார்களா?

தவிக்கின்றீர்கள் நீங்கள் தனிமையில்;
தவிக்கின்றான் பகவான் தவம் செய்து;

தவிக்கின்றாள் பத்மாவதி கவைலையில்;
தவிப்பினால் விளைந்த நன்மை என்ன?

மலரில் சென்று எழுந்தருள்வீர் தாயே!
பல காலம் செய்த தவம் பலிக்கட்டும்!”

தீபச் சுடர் உருவில் தோன்றி பகவானின்
தாபம் தீர்த்தாள் தாமரையில் லக்ஷ்மி.

தேவி தோன்றியவுடன் பிரகாசித்தது
கோடி சூரிய ஒளியுடன் தாமரை மலர்.

நிஷ்டை கலைந்து எழுந்தான் பகவான்;
இஷ்டத்துடன் நோக்கினான் லக்ஷ்மியை.

30b. பிணக்குத் தீர்ந்தது!

தாமரையில் மகாலக்ஷ்மி தோன்றியதும்
தாமதமின்றி விரைந்து வந்தனர் தேவர்.

பிரிந்தவர் சேரும் வைபவத்தைக் காணப்
பெரிய பாக்கியம் செய்திருக்க வேண்டுமே!

தேவர்கள் துதித்தனர் தேவியைப் பலவாறு;
தேவி இறங்கவில்லை தாமரையை விட்டு.

பிருகுவிடம் பேசினார் ஈசன் தனிமையில்,
“பிரிவுக்குக் காரண கர்த்தா நீரே அல்லவா?

தேவியிடம் சென்று மன்னிப்புக் கேட்பீர்!” என,
தேவியிடம் சென்று பிருகு கேட்டார் மன்னிப்பு.

சாந்தம் அடைந்து இறங்கினாள் லக்ஷ்மி தேவி.
சந்தனம் பூசினாள் பகவான் வக்ஷஸ்தலத்தில்.

வணங்கினாள் அவனை மண்டியிட்டு – அவளைப்
பிணக்குத் தீர்ந்து மார்பில் அமர்த்தினான் அவன்.

கந்தருவர் இசையுடன் கலந்து மலர் சொரிந்திட,
துந்துபி முழங்கியது எண் திசைகளிலும் பரவி.

அப்சரஸ் விண்ணில் ஆடினர் ஆனந்த நடனம்.
அருளினார் பகவான் உலகுக்குச் சிறந்த வரம்.

“கார்த்திகை மாத சுத்த பஞ்சமியில் – பத்ம
தீர்த்தத்தில் நீராடுபவருக்கு சகல சம்பத்து.”

அனைவரும் அடைந்தனர் சேஷாசலம் ;
அனைவரையும் வரவேற்றாள் பத்மாவதி/

ஆரத்தி எடுத்தாள்; திருஷ்டி கழித்தாள் அவள்;
ஆனந்தத்தில் தத்தளித்தாள் வகுள மாலிகை!

31a. ஆனந்தம் ஆனந்தம்!

ஆனந்த மயமாக மாறிவிட்டது அங்கே
ஆனந்த நிலயத்தில் மூவரின் வாழ்க்கை.

சக்களத்திகள் போல இருக்கவில்லை – இரு
சஹோதரிகள் போல அன்பு செலுத்தினர்.

பரம சந்தோஷம் பக்த கோடிகளுக்கு;
வரம் அளிக்க இருந்தனர் மூவர் என்று!

தனிமையில் கூறினான் லக்ஷ்மியிடம்,
ஸ்ரீனிவாசன் குபேரனின் கடனைப் பற்றி.

“வட்டி கட்ட ஒப்புக் கொண்டேன் நான்
வட்டி கட்ட வில்லை ஒரு முறை கூட.

பழிக்கு ஆளாகி விடுவேனே – நான்
இழிச் சொற்களைக் கேட்க நேருமோ?

உதவ முடியும் உன்னால் எனக்கு!
அதுவும் மிக எளிதான் முறையில்!

உன்னைத் தேடி வரும் பக்தருக்கு வழங்கு
பொன்னையும், பொருளையும் வாரி வாரி.

என்னைத் தேடி வருபவர்கள் அளிப்பர் – அந்தப்
பொன்னையும், பொருளையும் காணிக்கையாக!”

புறப்பட்டாள் லக்ஷ்மி தேவி கேட்ட உடனே,
“நிறைவேற வேண்டும் நம் நோக்கம் சுவாமி!

தனியே இருக்க வேண்டும் நான் – நம்முடைய
பணிகள் சரிவர நடை பெறுவதற்கு!” என்றாள்.

பாதாள லோகம் சென்றாள் லக்ஷ்மி
பகவானுக்கு உதவத் தயார் ஆனாள்.

“நினைத்த காரியம் இனிதாக நடைபெறப்
புனிதப் படுத்திக் கொள்ள வேண்டும் நான்.”

பகவன் பாடு மீண்டும் திண்டாட்டம்
பாதாள லோகத்தில் லக்ஷ்மி தவத்தில்

பூலோகத்தில் வந்து நிலை பெற்றால் தான்
ஆலோசிக்க முடியும் குபேரன் வட்டியை!

31b. மீண்டும் தவம்

சென்றான் ஸ்ரீனிவாசன் பாதாள லோகம்;
நின்றான் தியானம் செய்த லக்ஷ்மி முன்பு.

கண்டாள் லக்ஷ்மி அகக்கண்களில் அவனை;
காணவில்லை அவள் புறக்கண்கள் அவனை.

“தரிசனம் தந்தீர்கள் எனக்கு – ஆனால்
அரிதாகி மீண்டும் மறைந்து விட்டீர்கள்.”

கலைந்து விட்டது உன் தவம் லக்ஷ்மி!
வேலைகள் அநேகம் காத்திருக்கின்றன.

தடைபட்டுள்ளன அவை உன் தவத்தால்;
உடைபடும் தடை நீ பூலோகம் சென்றால்!

சுகரின் ஆசிரமத்தில் காத்திருக்கின்றது,
சுகமான ராஜ போகம் உனக்கு!” என்றான்.

ஆதிசேஷனை தியானித்தாள் லக்ஷ்மி;
ஆதிசேஷன் வந்து வணங்கி நின்றான்.

“சேர வேண்டும் சுகரின் ஆசிரமத்தை!”
தேர் நின்றது வெள்ளைப் பரிகள் பூட்டி!

ஏறி அமர்ந்தாள் அழகிய ரதத்தினில்,
அரிய ஆபரணங்கள் அணிந்த லக்ஷ்மி.

ரதத்துடன் தேவியைத் தலையில் தாங்கி,
வேகத்துடன் வெளிப்பட்டான் ஆதிசேஷன்.

சாயாசுகர் கண்டார் மஹாலக்ஷ்மியை,
“சரணம் சரணம் லோக மாதா!” என்றார்.

31c. சாயா சுகர்

சுகர் விரும்பினார் சாயுஜ்ய முக்தியை;
சுகர் எழும்பினார் தம் யோகசக்தியால்.

தடுத்தான் சூரியன் சுகரின் பிரயாணத்தை;
விடுத்தான் சுகரிடம் கேள்விக் கணைகளை.

“முன்னோர்கள் பூவுலகில் வாழ்ந்திருக்க,
முன்பாக சாயுஜ்யம் அடைய முடியுமா?

அருகதை இல்லை உமக்கு சாஸ்திரப்படி,
அறிந்திருப்பீர் இதனை நீரும் முன்பாகவே!

கிருஹஸ்தாஸ்ரமத்தை ஏற்க வேண்டும்;
பிறக்க வேண்டும் புத்திரர்கள், சந்ததியினர்;

பிரம்மஞானி ஆவது அதற்கும் பின்பு;
அரிய சாயுஜ்யம் அதற்கும் பின்பு என்று.”

“மனிதனுக்குத் தேவை நான்கு ஆசிரமங்கள்;
முனிவனுக்குத் தேவை இல்லை ஆசிரமங்கள்;

நீர்க்குமிழி போன்றது வாழ்க்கை என்று
நீத்து விடுகிறோம் அதை முற்றிலுமாக.

அடைய முடியுமா ஞான மார்க்கத்தை என
விடை அறிய விரும்பினேன் தந்தையிடம்.

அனுப்பினார் என்னை ஜனக ராஜனிடம்,
வனப்புடன் விளக்கினார் ஜனகர் எனக்கு.

பக்குவம் அடையாதவனுக்குத் தேவை இவை;
பக்குவம் அடைந்தவனுக்கு அல்ல என்பாதை.”

“விதிகளைக் கூறுபவர்களே தாம் கூறிய
விதிகளை உடைக்கவில்லை முனிவரே!

விஷ்ணு, பிரமதேவன், வசிஷ்டர், சக்தி,
பராசரர், வியாசர், நீர் ஒரு வம்சத்தினர்.

தேவை ஒரு சந்ததி சேவை செய்திட;
தோற்றுவித்தால் உமக்கு சாயுஜ்யம்!”

31d. சூரியனும், சுகரும்.

சக்தியினால் தோற்றுவித்தார் மானசீக புத்திரனை,
யுக்தியுடன் நிறுத்தினார் அவனை சூரியனின் முன்பு.

சாயாசுகர் வணங்கிய பின் கேட்டார் சுகரிடம்,
“மாயையால் என்னைத் தோற்றுவித்தது ஏன்?”

“கங்கைக் கரையில் வசிக்கும் என் தந்தைக்குத்
தங்கு தடையின்றி சேவை செய்து வருவாய்!”

வியாசருக்குப் பணிவிடை செய்வதற்குச்
சாயாசுகர் வசித்தார் சுவர்ண முகி தீரத்தில்.

கவர்ந்தது சுகரின் அறிவாற்றல் சூரியனை;
கதிரவன் கேட்டான் புதிர் போலச் சுகரிடம்,

தத்துவம் என்ன உள்ளது என் உருவில்?”
“சித்தத்துக்கு எட்டிய வரை கூறுகின்றேன்,

உண்டாயிற்று பிரணவம் நாரணனிடம்;
உண்டாயிற்று ஆகாசம் பிரணவத்திடம்;

உண்டாயிற்று வாயு ஆகாசத்திடம்;
உண்டாயிற்று அக்னி இவைகளிடம்.

வாயுவும், ஆகாசமும் கலந்த போது
வியாபித்தது அக்னி தோன்றிப் பரவி.

பிரளயம் தோன்றியது ஜல வடிவத்தில்!
பிரளய ஜலம் தோற்றுவித்தது பலப்பல

தங்க நிறம் கொண்ட ஒளிக் கிரணங்களை;
தங்க நிற ஒளிக்கிரணங்கள் ஆயின சூரியனாக!

அண்ட சராசரம் தோன்றியது அதிலிருந்து!
கொண்டிருந்தது வாழ வைக்கும் சக்தியை.

அசையும் அசையாப் பொருட்கள் வாழ
அவசியம் ஆனது அந்த சூரியனின் சக்தி.

சூரிய சக்தியால் மனிதன் பிறக்கிறான்;
சூரிய சக்தியால் மனிதன் வாழ்கிறான்.

அவன் சக்தி அடைகின்றது மீண்டும்
அதே சூரியனை ஒளிக்கிரணம் வழியே!”

அனுமதித்தான் சூரியன் சுகர் செல்வதற்கு;
வியந்தான் சுகரின் அறிவாற்றல் கண்டு!

சுக க்ஷேத்ரம்

போற்றினார் லக்ஷ்மியை சாயா சுகர்; போற்றினர் லக்ஷ்மியை மும்மூர்த்திகள்;

போற்றினர் லக்ஷ்மியைத் தேவ கந்தர்வர்கள்; போற்றினர் லக்ஷ்மியை முனி புங்கவர்கள்.

பிரமன் வேண்டினான் லக்ஷ்மி தேவியிடம், “தர வேண்டும் பத்ம தீர்த்தத்தில் நீராடினால் அஷ்ட ஐஸ்வரியங்களையும் அள்ளி அள்ளி!
கஷ்டங்கள் எல்லாம் தொலைய வேண்டும்!

ஆலயம் அமைக்கும் எண்ணம் கொண்டேன்; அனுமதி வேண்டும் அதை இங்கு அமைக்க”.

“சுக க்ஷேத்திரத்தை விடுத்தது என்னுடன் சேஷாச்சலம் நீயும் வரவேண்டும் தேவி” பகவான் கூறினான் லக்ஷ்மி தேவியிடம்,

பகவானுக்கு பதில் அளித்தாள் லக்ஷ்மி.

“சுக க்ஷேத்திரத்தில் இருக்க விருப்பம்; இக பரம் தர வேண்டும் என் பக்தருக்கு!”

விசுவகர்மா அமைத்தான் ஆலயத்தை! விசுவாசி சாயா சுகர் ஆராதனைகளை!

“செல்வதை வாரி வாரி வழங்குவாய் நீ! செல்வர் என்னை வந்து தொழுத பின்பே.”

“கார்த்திகை மாதம் சுக்கில பஞ்சமியன்று காத்திருப்பேன் தங்கள் மாலை, சேலைக்கு!

மறக்காமல் தர வேண்டும் ஆண்டுதோறும்!” இறைவனிடம் வேண்டினாள் லக்ஷ்மி தேவி.

சுக க்ஷேத்திரத்தில் குடி கொண்டாள் லக்ஷ்மி; சேஷாச்சலத்தில் குடி கொண்டான் பகவான்.

மலர்ந்த தாமரை மேல் தோன்றியவளை அலர்மேல் மங்கை என அழைக்கின்றனர்.

——————

ஸ்ரீ  வேங்கடேச புராணம் முற்றுப் பெற்றது.

சுபம், சுகம், சாந்தி நிலவட்டும் எங்கும்!

————-

தீர்த்த மஹிமை

தீர்த்தமாட விரும்பினான் ஓரந்தணன்;
யாத்திரை நீளும் நெடுங் காலம் என்று

உற்றார் உறவினரிடம் விடை பெற்றுப்
பிற்பாடு யாத்திரை செல்வது வழக்கம்.

கனவிலே தோன்றினார் மஹாவிஷ்ணு!
“கருதுகின்றாய் அகல தீர்த்த யாத்திரை!

புஷ்கர சைலம் என்பது சேஷாச்சலம்;
புனித தீர்த்தங்கள் பதினேழு உள்ளன.

புவனமெங்கும் உள்ள தீர்த்தங்கள் – அப்
புண்ணிய தீர்த்தங்களிலும் உள்ளன!

சகல பாவங்களிலிருந்து விடுதலையும்,
சகல சம்பத்துக்களும் கிடைப்பது உறுதி.

நாடெங்கும் அலைந்து திரிய வேண்டாம்.
நாடுவாய் நீ சேஷாச்சலத்தை!” என்றார்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது – மேலும்
பலன் இரண்டுக்கும் ஒரு போலானது.

பதினேழு தீர்த்தங்களிலும் சென்று நீராடிப்
பரம பாவனம் அடைந்தார் அந்த அந்தணர்.

02. சேஷாச்சலம்

நாரதர் சென்றார் திருப்பாற் கடலுக்கு;
நாரணனைத் தேவியருடன் தரிசித்தார்.

ஒளிர்ந்தது கௌஸ்துபம் மார்பினில்;
மிளிர்ந்தன நாரணனின் பஞ்சாயுதங்கள்.

“பூலோகத்தில் நான் திருவிளையாடல்
புரிவதற்கு ஏற்ற இடத்தைக் கூறு!” என்று

நாரணன் கேட்டான் நாரத முனிவரிடம்,
நாரதர் விண்ணப்பித்தார் நாரணனிடம்.

‘கங்க தீரத்துக்குத் தெற்கே உள்ளது
தண்டகாரண்யம் என்னும் ஓர் இடம்.

விண்ணோரும் மண்ணோரும் வந்து
தெண்டனிடத் தகுந்த இடம் ஆகும்”.

தேவருஷி சென்றதும் நாரணன் – ஆதி
சேஷனுக்கு ஆணை இட்டார் இங்கனம்.

“மலை உருக் கொள்வாய் நீ அனந்தா!
சில காலம் தங்குவேன் பூவுலகினில் !”

“மலையாக மாறுகிறேன் ஆணைப்படி.
மலை மீது எழுந்தருளும் தேவியருடன்!

இருப்பிடம் ஆகவேண்டும் என் தலை;
திருவடிகள் பதித்து நின்றிட வேண்டும்.

புண்ணிய தீர்த்தங்கள் பலவற்றையும்
என்னிடம் நீங்கள் உருவாக்க வேண்டும்!”

அருள் செய்தான் நாரணன் அவ்வாறே;
திருப் பாற்கடல் விடுத்தான் அனந்தன்.

மலையானான் தண்டகாரண்யத்தில்;
தலை ஆனது திரு வேங்கடாச்சலமாக.

உடல் ஆகிவிட்டது அகோபிலமாக;
முடிவில் வால் ஆனது ஸ்ரீ சைலமாக.

அனந்தன் பூமியில் மலை ஆனபோது;
அருந்தவம் தொடங்கியது அவன் மீது.

வேங்கடேசனாகக் காட்சி தந்தருளினார்
வேங்கடமலையில் குடிகொண்ட நாரணன்

03. நாராயணாத்ரி

நாராயண முனிவர் ஒரு நல்ல தபஸ்வி.
நாராயணனைத் தேடியலைந்தார் எங்கும்.

காட்சி தரவில்லை நாராயணன் அவருக்கு
மாட்சிமை பொருந்திய தவம் செய்வித்திட.

பிரம்மனைக் குறித்துத் தவம் செய்தார்.
பிரம்மன் கேட்டான்,” என்ன வரம் தேவை?”

“நாரணனைத் தரிசிக்கத் தவம் செய்தேன்.
காரணம் என்னவோ காண முடியவில்லை!

காணும் வழியினைக் கூறுங்கள் சுவாமி!
காணும் பாக்கியத்தை அருளுங்கள் சுவாமி!”

“கோனேரிக் கரையிலே சேஷாச்சலத்திலே
கோவில் கொண்டுள்ளார் ஸ்ரீமன் நாராயணன்.

தவம் செய்வீர் நீர் சேஷாச்சலம் சென்று!
தவமும் பலிக்கும்; தரிசனமும் கிடைக்கும்”

சேஷாச்சலம் அடைந்தார் முனிபுங்கவர்;
செய்தார் கடும் தவம் பன்னெடுங் காலம்!

தேவியுடன் காட்சி தந்தான் நாரயணன்;
“தேவை எதுவோ கூறுங்கள்!” என்றான்.

“தரிசனம் வேண்டித் திரிந்தேன் – எங்கும்
தரிசனம் கிடைக்காமல் தவித்தேன் நான்.

பிரம்மன் கூறினார் இங்கு தவம் புரியுமாறு,
அரிய தரிசனம் பெற்றேன் உமது அருளால்!

முனிவர்களுக்கே கடினமான இத் தவத்தை
மனிதர்கள் செய்வது எங்கனம் சாத்தியம் ?

புனிதத் தலத்திலேயே தங்கி வசிப்பீர்!
மனிதர்களுக்கும் ஆசிகள் வழங்குவீர்!

என் பெயரால் விளங்க வேண்டும் – நீர்
எனக்கு தரிசனம் தந்த இந்த இடம்” என,

“நிறைவேற்றுவேன் உம் கோரிக்கையை.
நித்தியவாசம் செய்வேன் இந்தத் தலத்தில்.

தீரும் வரும் அடியவர் குறைகள் எல்லாம்!
பேரும் விளங்கும் நாராயணாத்திரி என்று!”

04. ரிஷபாத்ரி

வேட்டைக்குச் செல்ல விழைந்தான் ஸ்ரீனிவாசன்;
காட்டுக்குச் செல்லத் தயாராயினர் படைவீரர்கள்.

சேனைத் தலைவன் தலைமையில் வந்தனர்,
சேஷாத்திரி வாசனைத் தொடர்ந்து வீரர்கள்.

வேட்டை ஆடினர் வெகுநேரம் மிருகங்களை;
வேட்கை மிகுந்தது நீர் பருகித் தாகம் தீர்ந்திட.

அழகிய சோலை ஒன்று தென்பட்டது அங்கு;
தழுவியது வீசிய குளிர்ந்த தென்றல் காற்று.

ரிஷபன் என்னும் அசுரனின் சோலை அது;
ரிஷபன் தடுத்தான் அதில் நுழைந்த வீரர்களை.

அரச குமாரன் என்று எண்ணினான் பகவானை;
பரந்தாமனையும் அச்சுறுத்தினான் அசுரன் ரிஷபன்!

“சம்பரா! இவனுக்குப் பதில் கூறு!” என்று சொல்ல
சம்பரன் தயாரானான் ரிஷபனுடன் போர் புரிய.

சிவ பக்தி மிகுந்தவன் அசுரன் ரிஷபன் – எனவே
தேக சக்தியும் மிகுந்தவன் அசுரன் ரிஷபன் !

நொடியில் அடித்து வீழ்த்தினான் சம்பரனை;
அடுத்து ஓடி வந்தான் ஸ்ரீனிவாசனை நோக்கி!

சரங்களைப் பொழிந்தான் சேனை நாயகன்;
சரங்கள் தடுத்தன அசுரனைச் சுவராக மாறி!

கரங்களாலே உடைத்தான் சுவற்றை அசுரன்,
பரபரவென்று முன்னேறினான் அசுரன் ரிஷபன்

அஸ்திரங்களை ஏவினான் அசுரன் ரிஷபன்;
அஸ்திரங்களை ஏவினான் சேனை நாயகன்!

06. அஞ்சனாத்ரி

திரேதா யுகத்தில் கடும் தவம் செய்தான்,
பரமசிவனைக் குறித்துக் கேசரி என்பவன்.

“வேண்டும் வரம் யாது?” என்று கேட்க
வேண்டினான் கேசரி இந்த வரத்தினை.

“எவராலும் வெல்ல முடியாத பலத்துடன்,
என்றும் வாழ்ந்திருக்கும் மகன் வேண்டும்!”

“புதல்வி தான் பிறப்பாள் உமக்கு – அந்தப்
புதல்விக்குப் பிறப்பான் நீர் கோரும் மகன்!”

அஞ்சனை அவதரித்தாள் அந்தக் கேசரிக்கு;
அருமை பெருமையாக அவளை வளர்த்தான்.

வானரத் தலைவன் விரும்பிக் கேட்டதால்,
வானரனுக்கு அவளை மணம் செய்வித்தான்.

குறை இருந்தது புத்திரன் இல்லையென்று!
குறத்தி போல் வந்தாள் தருமதேவதை அங்கே.

“வேங்கடம் சென்று தவம் செய்தால் – மனம்
வேண்டியபடிப் பிறப்பான் நல்ல மகன்!” என

அனுமதி பெற்றாள் தன் கணவனிடமிருந்து,
அடைந்தாள் வேங்கட மலையைச் சென்று.

ஆகாய கங்கையில் நீராடினாள் – பின்பு
அமர்ந்தாள் அஞ்சனைஅரும் தவம் புரிந்திட.

காற்றை மட்டுமே உட்கொண்டாள் – அவள்
மற்றவற்றைத் துறந்தாள் முற்றிலுமாக!

அஞ்சனை தவத்துக்கு இரங்கினான் வாயு;
கொஞ்சமேனும் தானும் உதவ நினைத்தான்.

கனிந்த பழத்தைக் கரத்தில் கொண்டு போட,
இனிய பிரசாதமாக அதைத் தினமும் புசிப்பாள்.

07. அஞ்சனாத்ரி

வந்தனர் அங்கே சிவனும், உமையும்.
கண்டனர் மந்திகள் கூடிக் களிப்பதை!

இன்புற விரும்பினர் தாமும் அவ்விதமே ;
இருவரும் மாறினர் இரண்டு மந்திகளாக!

பரம சிவனிடம் வெளிப்பட்ட தேஜசைப்
பிரசாதமாகத் தந்துவிட்டான் வாயு அன்று!

கனி என்று எண்ணிப் புசித்துவிட்டாள்!
கனி அல்ல அது; சிவனுடைய தேஜஸ்!

அசரீரி கேட்டது அஞ்சனைக்கு அப்போது;
“அசாதரணமான மகன் பிறப்பான் உனக்கு!

மகேஸ்வரனின் ஒரு அருட் பிரசாதமாக;
மகா பலவானாக; ஒரு மகா பண்டிதனாக;

மகா பக்தனாக, ஒரு சிரஞ்சீவியாக!” என்று.
மன நிம்மதி கொண்டாள் தேவி அஞ்சனை.

வானர உருவில் வந்து பிறந்தான் ஒரு மகன்,
வானில் பாய்ந்து சென்று விளையாடினான்!

கனி எனக் கருதினான் செங்கதிரவனை!
இனித்துச் சுவைக்கப் பறிக்கச் சென்றான்.

தடுத்தான் பிரம்மாஸ்திரத்தால் பிரமன்;
தரையில் விழுந்தான் மயங்கிய குழந்தை!

அஞ்சனையின் கண்ணீருக்கு அளவில்லை.
அஞ்சி ஓடி வந்தனர் தேவர்கள் அவர்களிடம்.

“பாலகனுக்கு இல்லை என்றுமே ஆபத்து!
பாலகனுக்கு இல்லை என்றுமே மரணம்!”

தேவ கானமும், சாஸ்திர ஞானமும் தந்து,
தேஹ வலிமை, தொண்டு மனப்பான்மை,

வாக்கில் சாதுர்யம், மனதில் பூரண பக்தி,
திக்கெட்டும் பரவிய புகழ், அஷ்டசித்திகள்;

அனைத்தும் தந்தனர் அஞ்சனை மகனுக்கு;
“இனி ஒருவர் இணையாகார் இவனுக்கு!

புனிதத் தலம் விளங்கிடும் இப் புவனத்தில்
இனி அஞ்சனாத்ரி என்று உன் பெயரால்!”

08. மாதவன்

நந்தனத்தில் வாழ்ந்து வந்தான்,
அந்தணன் புரந்தரன் என்பவன்.

நன்கு தேர்ந்தவன் கல்வி, கேள்வியில்;
நல்ல மகன் இருந்தான் மாதவன் என்று.

தந்தையைப் போல உத்தமன் அவன்,
சந்திரரேகை அன்பு கொண்ட மனைவி.

தீர்த்த யாத்திரை சென்றனர் இருவரும்;
தீர்த்தமாடித் தரிசித்தனர் இறைவனை.

தங்கி இருந்தாள் மனைவி தடாக்கரையில்,
தான் மட்டும் சென்றான் கனிகள் கொணர!

புல்லறுக்க வந்த புலைச்சியைக் கண்டு,
மெல்ல அவளைத் தன் வசப்படுத்தினான்!

உடன் வந்த மனைவியை மறந்து விட்டுத்
தொடர்ந்து போனான் புலைச்சி குடிசைக்கு.

அந்தணன் தான் என்பதை மறந்து விட்டான் ;
சொந்த குல ஆசாரத்தைத் துறந்து விட்டான்;

வழிப்பறிக் கொள்ளைகள் செய்தான் – பின்பு
வழிப்பறியே வாழ்வாதாரம் ஆகி விட்டது!

காலம் செல்லக் கட்டுத் தளர்ந்தது மேனி;
காமக் களியாட்டம் கிழவனாக்கி விட்டது.

வழிப்பறி செய்ய உடல் வலிமை இல்லை;
வழியில் வந்த அவள் வழியோடு போனாள்!

09. வேங்கடம்

தனியனாக ஆகி விட்டான் மாதவன்;
தன் நிலைமைக்கு மிக வருந்தினான்.

மனைவியிடம் செல்லவும் வழியில்லை
தனியே தவிக்க விட்டு விட்டு வந்ததால்!

நோய் வாய்ப்பட்டு அவளிடம் செல்வது
நேர்மை அல்ல என்பதை உணர்ந்தான்.

ஊர் ஊராகச் சுற்றி அலைந்து திரிந்தான்!
தீர்மானம் என்று எதுவும் இல்லை மனதில்!

சேஷாச்சலத்தை அடைந்தான் – ஆதி
சேஷனே அங்கு மலையாகக் கிடந்தான்.

பாவங்கள் தீரப் பிரார்த்தனை செய்தான்;
பாவனமாகிடப் பிரார்த்தனை செய்தான்;

காலடி வைத்தவுடன் அவனை எரித்தான்,
கால் முதல் தலை வரை அக்னி தேவன் .

பாவங்கள் எரிந்து சாம்பல் ஆனதும்,
பார்ப்பவர் வியக்கும் தேஜஸ் வந்தது.

வணங்கினர் அவனைக் கண்ட பேர்கள்,
வணங்கினர் அவனை முனிபுங்கவர்கள்.

கருணை எரித்தது பாவக் குவியலை;
கருணை அளித்தது புனிதமான உடலை!

வேங்கடம் என்றால் பாவத்தை எரிப்பது;
வேங்கடம் எரிக்கும் பக்தனின் பாவத்தை!

மாதவனின் பாவத்தை எரித்தது முதல்
மறு பெயர் பெற்றது வேங்கடகிரி என.

10. நாக கன்னிகை

சோழ ராஜன் சென்றான் வேட்டைக்கு,
சேஷாச்சலத்தை அடைந்தான் திரிந்து.

பிரிந்து விட்டான் படை வீரரிடமிருந்து;
மறந்து விட்டான் வெளிச்செல்லும் வழி!

தட்டு தடுமாறி வெளிவர முயன்றவன்
பட்டு ரோஜாப் பெண்ணைக் கண்டான்!

மலரே மலர்களைக் கொய்யுமா என்ன?
மலர் மங்கை மலர்கள் கொய்திருந்தாள்!

மையல் வசப் பட்டான் சோழ மன்னன்
தையலின் லாவண்யத்தைக் கண்டதும்.

“கொடிய விலங்குகள் திரியும் வனத்தில்
கொடி இடையாள் நீ என்ன செய்கிறாய்?

நீ யார்? எந்த ஊர்? என்ன பேர்? ” என
நீளமாக அடுக்கினான் கேள்விகளை.

“நாகர் குலத்தைச் சேர்ந்தவள் நான்
நாகர்களின் வேந்தன் என் தந்தை! ”

“மணம் செய்து கொள்கிறாயா என்னை?
மனம் பறி போய்விட்டது கண்டவுடன்!”

“நற்குணங்கள் பொருந்திய மன்னனைக்
கற்பு மணம் புரிய வேண்டுமாம் நான்!

தந்தையிடம் நீர் பேசினால் நடக்கும்
தடைகள் இல்லாமல் நம் திருமணம்! ”

“நாக லோகம் செல்ல நேரம் இல்லை!
காம வேதனை தாங்க முடியவில்லை!

கந்தர்வ விவாஹம் செய்து கொள்வோம்;
தந்தையிடம் சொல் திரும்பச் சென்றபின்.”

காமவசப் பட்டிருந்தாள் நாககன்னிகை;
தாமதம் இன்றிக் கந்தர்வ விவாஹம்!

ஆனந்த வெள்ளத்தில் நீந்தினர் பல நாள்;
அவரவர் வீட்டுக்குச் சென்றனர் ஒரு நாள்.

11. யுவராஜன்

பாதாள லோகம் சென்ற நாக கன்னிகை
பூலோகத்தில் நடந்ததைச் சொன்னாள்.

மணந்தாள் அவள் சோழ மன்னனை என
மகிழ்ந்தான் தந்தை மன்னன் தனுசன்.

கந்தர்வ விவாஹத்தின் பலன் கர்ப்பம்!
சுந்தரனான ஆண் மகவு ஒன்று பிறந்தது.

பிறந்த நேரமும், அவன் தோற்றமும்,
சிறந்த அரசனுக்கு மட்டுமே உரியவை.

கண்ணும் கருத்துமாக வளர்த்தனர் அவனை;
கண்மணி வளர்ந்தான் கண்களைக் கவரும்படி.

“என் தந்தை யார்?” எனக் கேட்டான் தாயை.
“உன் தந்தை சோழ மன்னர்!” என்றாள் தாய்.

தந்தையைக் காண விரும்பினான் அவன்;
தடை சொல்லாமல் அனுப்பினர் அவனை.

சோழ மன்னனை வந்து வணங்க – மன்னன்
” தோழமையோடு கேட்டான் நீ யார்?” என.

“வந்தீர்கள் நீங்கள் சேஷாச்சலம் வேட்டையாட;
தந்தீர்கள் கந்தர்வ மணம் அன்னை நாககன்னிக்கு!”

அகன்ற ஆகாயத்தில் எழுந்தது ஓர் அசரீரி ;
“புகன்றது உண்மையே! இவன் உன் மகன்!

ஸ்ரீனிவாசனுக்குத் தொண்டுகள் புரிவான்;
மேதினியில் அழியாத புகழ் அடைவான்!”

அணைத்துக் கொண்டான் அருமை மகனை;
வினவினான் அன்னை, பாட்டனைப் பற்றி .

முதுமை எய்தி விட்டான் சோழ மன்னன்;
புதிய மன்னன் ஆனான் நாககன்னி மகன்.

நாடினான் நாட்டு மக்களின் நன்மைகளை,
நாற்றிசையும் அவன் புகழ் பரவி விரவியது

12. அபூர்வக் கனவு

இடையர்கள் கண்டனர் மன்னனை;
இயம்பினர் வியத்தகு நிகழ்ச்சிகளை.

“வேங்கட மலையினில் வாழ்பவர்கள் நாங்கள்;
தங்களுக்குப் பால் குடங்கள் எடுத்து வருவோம்.

வழியில் உள்ள புற்றின் அருகே வந்ததும்
வழிந்தோடுகிறது பால் குடங்கள் உடைந்து!

தினமும் நிகழ்கிறது இது போலவே மன்னா!
இனம் புரியவில்லை இதன் காரணம் எமக்கு!”

விந்தையாக இருந்தது சோழ மன்னனுக்கு;
“இந்த நிகழ்வைக் கண்டு பிடிப்பேன் நான்!”

கனவு கண்டான் மன்னன் அன்றிரவு;
கருமை நிற அழகன் ஒருவன் வந்தான்.

கையில் வில்,  மார்பில் பெண் உருவம்;
“கையுடன் அழைத்து வரச் சொன்னார்

சேஷகிரி ஸ்ரீனிவாசன் தங்களை!” என்றான்.
பேசாமல் அவன் பின் சென்றான் மன்னன்.

சேஷகிரியை அடைந்தனர் இருவரும் – வி
சேஷமான நவரத்தினம் மின்னும் மண்டபம்!

சங்குடன் சக்கரம், மகர குண்டலங்கள்;
பொங்கும் அழகுடைய தேவியர் மூவர்;

கோடி சூரியப் பிரகாசத்துடன் நாரயணன்;
தேடி வந்து கண்ட காட்சியில் உருகினான்!

அள்ள அள்ளக் குறையாத ஆனந்தம்;
மெல்ல மெல்ல மறைந்தது அக்காட்சி.

கனவு என்றே நம்ப முடியவில்லை அவனால்;
நனவு போலவே இருந்தது விழித்த பின்னரும்.

சபா மண்டபத்தில் உரைத்தான் தன் கனவை,
“அபாரமான கனவின் பொருள் என்ன?” என,

ஆழமாகச் சிந்தித்தனர் விசுவாச மந்திரிகள்;
சோழ மன்னனிடம் கூறினர் சிந்தனைகளை.

13. வேடுவன்

“இடையர்கள் குடம் உடைவதற்கும், கனவுக்கும்,
தொடர்பு உள்ளது இதில் ஐயம் இல்லை மன்னா!

புற்றிலே உள்ளாரா ஸ்ரீநிவாசன் என்று அறியப்
புற்றுக்குச் செய்வோம் பால்குடம் அபிஷேகம்.

இறைவன் வெளிப்பட்டால் பொருள் விளங்கும்
சிறந்த ஆலயம் கட்டுவிக்க விழைகின்றான் என.”

வேடன் வந்தான் வேந்தனிடம் சேதி சொல்ல.
வேடனின் சேதியைக் கேட்கும் ஆவல் மீறியது!

“புங்கம் விதையை உண்கின்றோம் மாவாக்கி;
எங்கிருந்தோ வருகிறது வெள்ளைஆண் பன்றி.

தின்றுவிட்டுப் போய் விடுகிறது புங்கம் மாவை!
இன்று காவல் வைத்துச் சென்றேன் என் மகனை.

உண்டான் அவன் புங்கம் மாவை வெண்ணையுடன்!
கண்டதும் என் கோபம் எல்லை மீறியது – அவனிடம்

‘பன்றி தின்கிறது என்று உன்னைக் காவல் வைத்தால்
பன்றிக்குப் பதிலாக நீயே தின்கின்றாயா?’ என்றேன்.

கொடுவாளை ஓங்கியபடிப் பாய்ந்த போது – என்னை
நடுங்க வைத்தது இடி போன்று முழங்கிய கர்ஜனை.

‘உண்டார் பரந்தாமன் உங்கள் புங்கம் மாவை,
வெண்ணை கலந்து உங்கள் மகன் உருவினில்!

நேராகச் சென்று கூறு இதை உன் மன்னனிடம்;
வேறு கனவு கண்டிருப்பான் உன் மன்னனும் கூட.’

விளங்கவில்லை என் அறிவுக்கு எதுவுமே மன்னா!
விளம்ப வந்தேன் விவரங்களை உமக்கு!” என்றான்.

“வேடன் கூறுவதற்கும், கண்ட கனவுக்கும், இடையர்
குடம் உடைவதற்கும் தொடர்பு உள்ளது உறுதியாக!”

ஆராய விரும்பினான் திருமலைக்குச் சென்று;
பிரதானி, மந்திரிகளுடன் சென்றான் புற்றுக்கு.

வேடன் ஓடி வந்தான்; சொன்னான் மன்னனிடம்,
“கூட வந்தால் காட்டுவேன் வெள்ளைப் பன்றியை!”

4. ஆலயங்கள்

வேடுவனைப் பின் தொடர்ந்தனர் அனைவரும்;
ஓடத் தொடங்கியது பன்றி இருந்த புதரை விட்டு.

வளைந்து, நெளிந்து, புகுந்தோடி வெள்ளைப் பன்றி
நுழைந்து, மறைந்தது ஒரு புற்றுக்குள் திடீரென்று!

“மன்னா! நாங்கள் சொன்ன புற்றும் இதுவே தான்!” என்று
சொன்னார்கள் இடையர்கள் சோழ மன்னனிடம் அப்போது.

“ஹிரண்யாக்ஷன் பூமியை ஒளித்து வைத்த போது,
தரணியைக் காக்க வந்த வெள்ளைப் பன்றி இதுவே!

புற்றின் அடியில் இருக்க வேண்டும் பகவான் – நாம்
புற்றைத் தோண்டினால் தெரியும் உண்மை!” என்ற

வேடனைக் கடிந்து கொண்டான் சோழ வேந்தன்;
“வேறு வழியில் வெளிப்படுத்துவோம் இறைவனை!”

பால் குடங்கள் வந்து குவிந்தன அங்கே உடனே!
பால் அபிஷேகம் செய்தான் சோழமன்னன் புற்றுக்கு.

கரைந்தது புற்று; கண்டனர் அதன் உள்ளே
இருந்தது ஆதி வராஹரின் அழகிய உருவம்!

பரவசம் அடைந்துக் கை தொழுது நின்றிருந்த
அரசனிடம் கூறினார் ஆதி வராஹப் பெருமான்.

“சுவாமி புஷ்கரிணியின் அருகே பகவான்
ஸ்ரீனிவாசன் உள்ளான் புளிய மரத்தின் கீழ்!

பூலோகம் வந்துள்ளான் பக்தருக்கு அருள;
புற்று மூடி விட்டது முழந்தாள் வரையில்!

ஆலயம் எழுப்பி ஆராதிப்பாய் ஸ்ரீனிவாசனை.
ஆலயம் எழுப்பு எனக்கும் மேற்குக் கரையில்.”

சென்றனர் அனைவரும் சுவாமி புஷ்கரிணி;
கண்டனர் ஸ்ரீனிவாசனைப் புளிய மரத்தடியில்.

புற்றுக் கரைந்து போனது பால் அபிஷேகத்தால்.
பூரணம் ஆனது பகவானின் திவ்விய தரிசனம்!

“திருமலையில் என்றும் இருந்திட வேண்டும்!”
திரும்பத் திரும்ப வேண்டினான் சோழ மன்னன்.

“திருக் கோவில்கள் அமைத்துத் திருப்பணி செய் !
தினமும் மூன்று காலமும் ஆராதனைகள் செய்!”

கண் கவர் ஆலயங்களை விரைந்து எழுப்பினான்.
விண்ணோரும், மண்ணோரும் வந்து தொழுதனர்

15. ஆதிசேஷன்

சேஷன்:

‘சயனிக்கின்றான் என் மேல் பகவான்;
தயங்காமல் தாங்குகிறேன் உலகினை.

பாக்கியசாலி என் போல் யார் உளர்?
பகவானிடம் நெருங்கிப் பழகுவதற்கு!’

கர்வம் தலை தூக்கியது மனத்தில்,
சர்வம் தனக்குத் தாழ்ந்தவை என்று.

வந்தான் வாயுதேவன் தரிசனத்துக்கு;
“இந்த நேரத்தில் இல்லை தரிசனம்.

ஏகாந்தத்தில் உள்ளார் இறைவன்;
போகவிட மாட்டேன் காண்பதற்கு!”

காற்று:

“என்னைத் தடுக்க முடியுமா உன்னால்?
எங்கும் நிறைந்திருக்கும் காற்று நான்!”

சேஷன்:

“விரிகிறேன் பாயாக இறைவனுக்கு;
விரிகிறேன் குடையாக இறைவனுக்கு!

ஈடு எவர் பக்தி செய்வதில் எனக்கு?
ஈடு எவர் சேவை செய்வதில் எனக்கு?”

காற்று:

“ஆதாரம் அனைத்துக்கும் காற்று!
அதிகம் என் ஞானம், பக்தி, சக்தி.

பணியாள் நீ; சுதந்திரன் நான்;
உணர்ந்து கொள் வேறுபாட்டை!”

சேஷன் வெகுண்டான் இது கேட்டு!
“சோதிப்போம் யார் பலசாலி என்று!”

உரைத்தனர் இருவரும் தமது கட்சியை;
உன்னினார் இறைவன் மமதையை நீக்க.

6. கர்வ பங்கம்

 

“தொண்டாற்றும் எனக்குச் சக்தி இல்லையாம்!
கொண்டாடுகின்றனர் அனைவருமே என்னை!”

“உனக்கு என்று சக்தி இல்லை அனந்தா – ஆனால்
தனக்கு என்று சக்தி உள்ளவன் வாயு தேவன்.

அனைத்து உயிர்களுக்கும் ஜீவாதாரம் வாயு;
அனைத்து இடங்களிலும் வியாபித்துள்ளான்.

சக்தி அதிகம் உடையவன் வாயு தேவனே!
சந்தேகம் வேண்டாம் உண்மையும் இதுவே!”

“சோதித்துப் பார்க்கலாம் இந்த உண்மையை;
பாதிக்காது நம்மை பலப் பரீட்சை!” என்றான்.

“மேருவை நான் கட்டிக் கொள்கிறேன் – வாயு
வேருடன் பெயர்க்கட்டும் முடிந்தால் அதனை.”

அழுத்திக் கட்டிக் கொண்டான மேரு மலையை,
ஆதிசேஷன் தன் பலத்தை ஒன்றாகத் திரட்டி.

வாயு தேவன் முயன்றான் நகர்த்துவதற்கு;
வாயு தேவனின் முயற்சி வெற்றி பெற்றது.

வேருடன் பெயர்க்கப் பட்டது மேரு மலை!
வேறு இடத்தில் பறந்து சென்று விழுந்தது!

விழுந்த இடம் சுவர்ணமுகி தீர்த்தம் – அங்கு
விழுந்த சேஷன் மலையாகக் கிடக்கின்றான்!

சேஷகிரி ஆகிவிட்டது அந்த மலை – அதன் பின்
சேஷனின் கர்வம் சென்ற இடம் தெரியவில்லை.

நீராடினான் கோனேரித் தீர்த்தத்தில் ஆதிசேஷன்,
நாக தீர்த்தத்தை அடைந்தான் பிறகு சென்று.

தவம் செய்தான் தீவிரமாக நாராயணன் மீது;
தவம் பலித்து நாராயணன் தரிசனம் தந்தான்.

“மன்னித்து எழுந்தருள வேண்டும் என் மீது;
மக்களுக்கு என்றும் அருள் புரிய வேண்டும்;”

கோனேரியில் எழுந்தருளினான் ஸ்ரீநிவாசன்;
கோரிக்கையை நிறைவேற்றுகிறான் இன்றும்!

17. சரஸ்வதியின் தவம்

“புண்ணிய தீர்த்தங்கள் அனைத்திலும்
புனிதமானவள் ஆக வேண்டும் நான்”

நதி வடிவாகி தியானித்தாள் சரஸ்வதி;
விதி விளையாடியது அவள் தவத்தில்.

புலஸ்தியர் வந்தார் சரஸ்வதி தேவியிடம்;
புலஸ்தியர் தன்னுடைய மகன் என்பதால்

உபசரிக்கவில்லை சரஸ்வதி சரியாக,
அபசாரமாகக் கருதிவிட்டார் முனிவர்.

“எல்லாத் தீர்த்தங்களிலும் சிறந்ததாகும்
பொல்லாத கனவு இல்லாது போகட்டும்.

அறிந்தவர்கள் அனைவரும் கூறுவர்,
திரிபதகைத்  தீர்த்தமே சிறந்தது என!”

தடையானான் மகனே தவத்துக்கு;
உடைந்து போனாள் சரஸ்வதி தேவி.

“பரந்தாமனுக்கு எதிரியாக அசுரனாகப்
பிறவி எடுப்பாய் நீ!” என்று சபித்தாள்.

“சாப விமோசனம் எப்போது?” என்று
சாந்தம் அடைந்த புலஸ்தியர் கேட்டார்.

“ராமனாக அவதரிப்பார் நாரணன் – நீ
ராவணன் தம்பி விபீஷணன் ஆவாய்!

இறைவனின் நட்புக் கிடைக்கும் – அதனால்
சிரஞ்சீவியாக இருப்பாய் உலகில் என்றும்!”

கருடாரூடராக வந்தார் நாராயணன்;
“சிறந்த தீர்த்தமாக அனுகிரஹியுங்கள்!”

“புலஸ்தியர் சாபத்தால் கிடைக்காது அது!
புஷ்கரிணியாக வேங்கடத்தில் இருந்து வா!

லக்ஷ்மியும் நானும் வாசம் செய்வோம் – ஒரு
லக்ஷியத்துடன் உன் தீர்த்தக் கரையினில்!

நீராடுவர் பக்தர்கள் தனுர் மாதத்தில்,
சூரியோதயத்தில், சுக்கில துவாதசியில்.

பாவங்கள் தீர்க்கும் புஷ்கரிணியாகிப்
பாரினில் நீ விரும்பும் புகழ் பெறுவாய்!”

வேங்கடத்தில் ஸ்வாமி புஷ்கரிணியாகி
வேண்டிய மகிமைகள் பெற்றாள் சரஸ்வதி.

18. தேக காந்தி

வாயுதேவன் விரும்பினான் மனதார
வாசுதேவன் போன்ற தேக காந்தியை.

ஆயிரம் தேவ வருடங்கள் செய்தான்
அரும் தவம் அறிதுயில் பிரான் மீது.

காட்சி தந்தார் பகவான் – பின்னர்
கனிவுடன் கூறினார் ஓர் உபாயம்.

“வேங்கட மலையில் குமார தாரிகையில்
முங்கி எழுந்து ஆராதிப்பாய் என்னை!”

வாயுதேவன் அடைந்தான் வேங்கடம்;
வாசுதேவனை ஆராதனை செய்தான்;

வேங்கட மலையில் குமார தாரிகையில்
முங்கிப் புனித நீராடித் தூயவனான பின்.

தவத்துக்கு மெச்சிக் காட்சி தந்தார்;
தயவுடன் அருளினார் தேக காந்தியை.

வியப்பு அடைத்தனர் கண்ட பேர்கள்
வாயுவின் ஒளிரும் தேக காந்தியால்!

பிரமன், மகேசன் முதலியோரும்
பிரமிக்கத் தக்க காந்தி பெற்றனர்,

வாயுதேவன் செய்தது போலவே
வாசுதேவனை ஆராதனை செய்து.

19. அகஸ்தியர்

அரியதொரு தவம் செய்தார் அகத்திய முனிவர்
கரிய நிறக் கண்ணனைப் பொதிகையில் காண.

பிரத்தியக்ஷம் ஆனார் பிரம்ம தேவன் அங்கே.
“பரந்தாமனைக் காணச் செல்வீர் சேஷகிரி!”

வேங்கடத்தை அடைந்து தவம் செய்கையில்
ஓங்கி ஒலித்தது விண்ணில் ஓர் அசரீரி.

“திருமலையில் உள்ளன நீராடுவதற்கு
திவ்விய தீர்த்தங்கள் ஆயிரத்து எட்டு!

மூல மந்திரத்தை உச்சரித்து நீராடி விட்டு
மலையின் மகிமை கூறி வலம் வருவாய்!

தவம் செய்தால் தவறாமல் கிடைக்கும்
பவம் ஒழிக்கும் பரந்தாமனின் தரிசனம்!”

ஆயிரத்தெட்டு தீர்த்தங்களிலும் நீராடி,
வாயால் மூல மந்திரத்தை உச்சரித்து;

வலம் வந்தார் அகத்தியர் திருமலையை;
தவம் செய்தார் பரந்தாமனைக் குறித்து.

சுவாமி புஷ்கரிணி அருகே பெற்றார்,
சுவாமி தரிசனம் லக்ஷ்மி சமேதராக!

20. சங்கன்

சூரிய வம்சத்தின் ஓரரசன் சங்கன்,
கோரினான் இறைவன் தரிசனத்தை.

கேட்டான் வசிஷ்ட முனிவரிடம் சென்று,
“நாட்டம் கொண்டேன் இறை தரிசனத்தில்!

தேட்டம் இல்லை தவம் செய்யும் இடம்;
வாட்டம் அடையாது தரிசிக்க உதவுவீர்.”

“சுவர்ணமுகி தீரத்தில் அமைந்துள்ளது
சேஷாச்சலம் என்னும் வேங்கடமலை.

முனிவர்கள் செய்தனர் அங்கே தவம்
புனிதன் நாராயணனின் தரிசனம் பெற.

பரம சிவன் உள்ளான் அடிவாரத்தில்;
பரந்தாமன் உள்ளான் மலையுச்சியில்.

விண்ணோர், மண்ணோர் தொழுவர்
கண்ணனை ஸ்ரீனிவாசனாக அங்கே.

பர்ணசாலை அமைத்துத் துதித்தான்,
சுவர்ண முகி தீரத்தில் வாயு தேவன்.

வந்தார் வயோதிகர் ஒருவர் அங்கு.
வாயுவின் தவத்தை மெச்சினார் .

வந்தவர் இறைவனோ என ஐயுற்றுத்
தங்க வைத்தான் சதுர்மாச விரதத்தில்.

திருவுருவைக் காட்டினார் வாயுவுக்கு,
விரதத்தைப் பூர்த்தி செய்ய உதவினர்.

கற்பத்தின் முடிவில் குழுமுவர் முனிவர்
சக்கர தீர்த்தத்தில்!” என்றார் சுக முனிவர்.

“மலையை வலம் வந்து ஞானயோகம் செய்.
அலைமகளுடன் தரிசிக்கலாம் நாரணனை!”

சங்கன் செய்தான் அவர் கூறியவாறு;
சங்கன் முன் தோன்றினான் நாரணன்.

“சந்திரன் சூரியன் உள்ள வரையில்
சன்னதி கொள்வீர் திருமலையில்!”

“சகலரும் வணங்கி அர்ச்சிக்கும்படி
சமைப்பாய் என் உருவத்தை இங்கு!”

ஆராதித்தான் திருவுருவை அமைத்து;
மாறாத பரமபதம் அடைந்தான் பிறகு.

21. பசு நெய் விளக்கு

அந்தணன் ஒருவன் விஷ்ணு சர்மன்,
சொந்த குல ஆசாரத்தை மறந்தான்.

இன்பம் தூய்த்தான் பல பெண்களுடன் கூடி;
இன்பம் தூய்த்தான் குரு பத்தினியைக் கூடி!

பாவம் பற்றியது முதுமையுடன் கூடி;
நோய் வாய்ப்பட்டான் மனது மிக வாடி.

வெறுத்தனர் அவனை உற்றார், உறவினர்;
துரத்தினர் வீட்டை விட்டு, ஊரை விட்டு!

ஓடிச் சென்றான் காட்டுப் பிரதேசத்துக்கு;
வாடி விழுந்து விட்டான் நாடிகள் தளர்ந்து.

கடித்துத் தின்றன நாய்களும், நரிகளும்;
துடி துடித்து இறந்தான் விஷ்ணு சர்மன்.

“குரு பத்தினியைக் கூடியவன் இவன்;
குருத் துரோகம் செய்தவன் இவன்!”

கூசியது இதைக் கேட்ட யமதர்மன் உடல்;
ஏசியபடி அனுப்பி விட்டான் நரகத்துக்கு.

வேத நாமன் விஷ்ணு சர்மனின் மகன்;
‘ வேத குலத்தில் பிறந்தார் என் தந்தை.

பேதம் பாராமல் செய்தார் பாவங்கள்;
வேதனையோடு துறந்தார் உடலை.

நற்கதி கிடைக்காது; நரகமே கதி !’
நன்கு அறிந்திருந்தான் வேத நாமன்.

“பாவம் தீர்த்து நற்கதி தர வேண்டும்;’
தேவனைப் பிரார்த்தித்து ஏற்றினான்

பசு நெய் விளக்குகளை ஸ்ரீநிவாசனுக்கு;
நசித்தது விஷ்ணு சர்மன் செய்த பாவம்!

முற்றிலும் பாவங்கள் நீஙகிய பின்னர்,
நற்கதி அடைந்து சென்றான் வைகுந்தம்.

22. அவிர் பாகம்

வையகத்தில் நடந்தான் லக்ஷ்மியுடன்,
வைகுந்தவாசன் இயற்கையை ரசித்தபடி.

சேஷாச்சலத்தின் மலைச் சரிவுகளில் யாகம்
செய்து கொண்டிருந்தனர் முனி புங்கவர்கள்.

திருமலையில் செய்யும் யாகமும், தவமும்,
ஒரு குறைவும் இன்றி நிறைவேறும் அல்லவா?

அரசன் என எண்ணிய முனிவர் இறைவனை,
வரவேற்று அளித்தனர் பாலும், பழங்களும்.

பீதாம்பரம், இரத்தின ஹாரம் அணிந்தவன்
சாதாரண மனிதனாக இருக்க முடியாதே!

“எந்த நாட்டு அரசர்? தங்கள் பெயர் என்ன?
இங்கு வந்த காரணம் கூறுங்கள்!” என்றனர்.

“அரசனும் அல்ல, நான் அந்தணனும் அல்ல;
ஆசாரம், ஜாதி, குலம், கோத்திரம் இல்லை!

தந்தையும் இல்லை, தாயும் இல்லை எனக்கு!
எந்த தேசமும் என் தேசமே! எப்போதுமே!

எங்கும் இருப்பவன், எல்லாம் என் ரூபம்;
எத்தனை பெயர்கள், அத்தனை குணங்கள்!”

‘மனநிலை சரியாக இல்லையோ இவருக்கு?’
முனிவர்கள் தொடர்ந்தனர் தம் ஹோமத்தை.

மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்கையில்,
வந்தன இரு கரங்கள் அவிர் பாகம் பெற்றிட.

அக்கினியின் நடுவில் கரங்களை நீட்டி – அச்
சக்கரவர்த்தி பெற்றார் முனிவரின் ஹவிசை!

சங்குச் சக்கரதாரியாகக் காட்சி அளித்தார்;
அங்கு வந்திருந்தவர் ஸ்ரீனிவாசன் அல்லவா?

23. குமார தாரிகை

அழகிய இளைஞனாக மாறிய ஸ்ரீனிவாசன்
ஆடித் திரிந்தார் மலைச் சரிவில் ஒருநாள்.

வந்து கொண்டிருந்தார் அந்தணர் ஒருவர்,
வயது முதிர்ந்தவர் தன்னந் தனியாளாக!

கூனி விட்ட முதுகு; வலுவிழந்த கால்கள்,
பனி மறைக்கும் கண்கள், பசியுடன் தாகம்!

துணைக்கு வந்த மகனைத் தேடிக் கொண்டு,
‘ துணைக்கு வந்தவன் எங்கே போய்விட்டான்?

தண்ணீர் எடுக்கச் சென்றவன் வரவில்லையா?’
கண்ணீருடன் தேடிக் கொண்டிருந்தார் அவனை!

முள்ளிலும், கல்லிலும் அவர் நடப்பது கண்டு,
உள்ளம் வெண்ணையானது ஸ்ரீனிவாசனுக்கு!

“இறைவா! ஏன் நான் உயிரோடு உள்ளேன்?
இருக்கிறேன் ஒரு பாரமாக மற்றவர்களுக்கு!

வாட்டி வதைக்கின்றது முதுமையில் வறுமை.
வாழ்வதால் ஒரு பயன் இல்லையே இனி நான்”

மெள்ளத் தடவினான் முதுகை ஸ்ரீனிவாசன்,
“துள்ளும் இளமையோடு இருக்க விருப்பமா?”

“கேலி செய்கிறாயா தம்பி கிழவன் என்னை? என்
வேலைகளைச் செய்ய முடிந்தாலே போதுமே!

சேவை செய்வேன் இறைவனுக்கு முடிந்தவரை,
தேவை இல்லை துள்ளும் இளமை !” என்றார்.

“சுனைக்கு அழைத்துப் போகிறேன் முதலில்;
நனைத்தால் குறையும் உடலின் உஷ்ணம்.”

நீரில் முங்கி எழுந்தவர் மாறி விட்டிருந்தார்!
நிமிர்ந்து விட்ட முதுகு; இறுகிய தசைகள்!

நூறு வயது குறைந்து விட்டது – பதி
னாறு வயது வாலிபனாக மாற்றியது!

காணோம் கரையில் இருந்த இளைஞனை;
நாரணன் காட்சி தந்தான் புன் முறுவலுடன்.

“நித்திய கர்மங்களைச் செய்வீர் முன்போல்.”
பக்தியுடன் விழுந்தார் கால்களில் அந்தணர்.

முதியவரை இளையவராக ஆக்கிய சுனைக்குப்
புதிய பெயர் கிடைத்தது குமார தாரிகை என்று!

24. சங்கனன்

சங்கனன் ஆண்டு வந்தான் காம்போஜ நாட்டில்
சங்காச்யம் என்னும் நகரைக் கீர்த்தியுடன்.

கர்வம் மிகுந்து விட்டது பராக்கிரமத்தால்;
தர்மம் குறைந்து நலிந்து மெலிந்து விட்டது.

புண்ணியம் குறையலானது சங்கனனுக்கு
கண்ணியம் குறையலானது சங்கனனுக்கு.

விலகி விட்டனனர் பாதுகாத்த வீரர்கள்;
விலை போயினர் மறைந்திருந்த எதிரிக்கு.

வழக்கம் போலப் பழகவில்லை பிரதானிகள்;
குழப்பம் மேலிட்டது; குறைந்தது அவன் மதிப்பு.

அவதிப் பட்டனர் அவன் நாட்டு மக்கள்;
அவன் மேல் விழுந்தது அந்தப் பழியும்!

ஆட்சியைக் கைப் பற்ற முயன்றனர்;
மாட்சிமை இல்லை அவர்களை அடக்க.

உயிருக்கு ஆபத்து என்ற நிலை உருவாக
எவருக்கும் தெரியாமல் தப்பி ஓடினான்!

பட்டத்து ராணியுடனும் இன்னமும் தன்
கட்டளைக்குப் பணியும் அமைச்சருடன்.

சேது கரையைச் சென்று அடைந்தனர்.
வேதனை தீரும் ராமேஸ்வரம் சென்றால்.

கடல் நீராடினான் சேதுவில் சங்கனன்
உடன் சென்று தரிசித்தான் இராமநாதரை.

அடைந்தான் சுவர்ணமுகி தீர்த்தத்தை!
விழைந்தான் வேங்கடத்தில் தவம் புரிய!

வட பகுதியைத் தேர்ந்தெடுத்தான் சங்கனன்;
“விட நேர்ந்த்தது நற்பணிகளைச் செருக்கால்.

அரியணையும் துறந்து அஞ்சி வாழ்கிறேன்!
சரியாகுமா மீண்டும் முன்போல இந்த நிலை?

நாட்டை அடைந்து ஆட்சி செய்வேனோ?
காட்டிலேயே காலத்தைக் கழிப்பேனோ?”

25. சங்கனன்

அன்றிரவு தூங்கும் போது குரல் கேட்டது,
நின்று தேடியும் காணவில்லை எவரையும்!

விண்ணில் இருந்து ஒலித்தது அந்தக் குரல்,
எண்ணங்களை அறிந்தது போலப் பேசியது!

“வடக்கே உள்ளது வேங்கடம் எனும் திருமலை;
தடாகம் உள்ளது சுவாமி பூஷ்கரிணி என்பது.

தடாகக் கரையில் உள்ளது எறும்புப் புற்று;
தடாகத்தில் நீராடி விடாமல் துதித்து வா!”

வேங்கட மலையில் தடாகத்தை அடைந்தனர்;
தங்குவதற்குக் குடில் அமைத்தனர் புற்றருகே.

மூன்று வேளை நீராடினான் பூஷ்கரிணியில்-மனம்
ஊன்றித் தொழுதான் பகவானை நாள் முழுவதும்.

சுவாமி மனம் கனிவதற்கு ஆறு மாதமானது!
சுவாமி பூஷ்கரிணியில் தோன்றியது ஓர் ஒளி!

ரத்தின மயமான விமானத்தில் இருந்தனர்
யத்தனம் பலித்திட நாரணனும் தேவியரும்.

குழுமினர் தேவர்கள், துதித்தனர் முனிவர்;
ஆடினர் தேவ மகளிர்; பாடினர் கந்தருவர்.

புல்லரித்தது சங்கனனின் உடல் மகிழ்வால்,
சொல்லைக் கேட்டதும் துள்ளியது மனம்!

“உன் நாடு திரும்பும் நேரம் வந்தது!
உன் ஆட்சி திரும்பும் நேரம் வந்தது!”

சங்காச்யத்தில் சங்கடமான குழப்பம்;
சங்கனன் ஆட்சியே மேல் என்றானது!

தங்களுக்கே அரசபதவி வேண்டும் என்று
தானைத் தலைவர்கள் போட்டி இட்டனர்.

வேங்கட நாதன் அருள் பெற்ற மன்னன்
சங்கனன் திரும்பி வருவதை அறிந்தனர்.

குடிமக்கள் போர்க் கொடி தூக்கினர்;
பிடிவாதமாக அதிகாரிகளைச் சாடினர்!

சிற்றரசர்கள் ஆதரித்தனர் அரசனையே;
முற்றிலும் தோற்று விட்டனர் அதிகாரிகள்.

நாட்டை விட்டு ஓடிவிட்டனர் காட்டுக்கு;
நாட்டை மீட்டு ஆட்சி செய்தான் சங்கனன்.

வேங்கட நாதனின் பேரருளே அவனுக்குச்
சங்கடம் தீர்த்தது; ராஜ்ஜியம் அளித்தது.

26. ஆத்மா ராமன் (1)

விந்தியப் பிரதேசத்தில் வாழ்ந்த
அந்தணரின் மகன் ஆத்மா ராமன்.

தெய்வ பக்தி மிகுந்தவன் – எனவே
தெய்வ அருள் பெற்று இருந்தான.

வேத, வேதாந்தங்களைக் கற்றவன்;
பேதமின்றி மதித்தனர் அனைவரும்.

மறைந்து போனார் அவன் தந்தை – ஆனான்!
பெரும் செல்வத்துக்கு புது அதிபதியாக!

பணம் வந்ததும் முழுதும் மாறி விட்டான்;
குணத்தை முற்றிலும் இழந்து விட்டான்.

குல ஆசாரங்களைத் துறந்து விட்டான்;
குல தெய்வத்தையும் மறந்து விட்டான்.

தலைக்கு ஏறியது செல்வச் செருக்கு;
விலைக்கு வாங்கினான் இன்பத்தை.

“குந்தி தின்றால் குன்றும் மாளும்” அல்லவா?
குறைந்தும், மறைந்தும் போனது செல்வம்!

பணம் போனவுடன் போயிற்று கௌரவம்!
குணம் என்றோ போய்விட்டது அல்லவா?

ஒதுக்கி வைத்தனர் வறுமை வந்தவுடன்;
மதிக்கவில்லை குலத்தைச் சேர்ந்தவர்கள்.

“குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பு!”
பலவித பரிஹாசங்களைக் கேட்டு நொந்தான்.

நட்பு என்று சொல்ல யாரும் இல்லை!
நாணம் வந்தது உறவினரைக் காண.

ஊரை விட்டே வெளியேறி விட்டான்;
ஊர் ஊராக அலைந்து திரிந்தான் அவன்.

கால்போன திசையில் நடந்து சென்றவன்
கலியுக வரதனின் திருமலை அடைந்தான்.

27. ஆத்மா ராமன் (2)

பாவங்கள் தீரும் தாபங்கள் மாறும் என,
பகவானை ஆராதித்தான் திருமலையில்.

கபில தீர்த்தத்தில் நீராடினான் முதலில்,
கபிலேஸ்வரரைத் தரிசித்தான் கண்குளிர.

தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடினான்;
தீர்ந்தன அவன் பாவச்சுமைகள் அவற்றில்.

சுவாமி புஷ்கரிணியை நோக்கிச் சென்றான்.
சுவாமி தரிசனம் செய்தது போல மகிழ்ந்தான்.

கோடி சூரியப் பிரகாசத்துடன் ஒரு குஹையில்
தேடினாலும் கிடைக்காத சனத்குமாரர் இருந்தார்.

வலம் வந்து நமஸ்கரித்தான் அவரை – தன்
வளம் குன்றிவிட்ட பின்புலத்தைக் கூறினான்.

“முற்பிறவியில் நான் செய்த பாவம் என்ன?
முக்காலமும் அறிந்த நீர் சொல்லுங்கள்!” என,

“தான தர்மங்களை இகழ்ந்து பேசினாய்;
தானம் பெறுபவர், தருபவர் இருவரையும்.

நல்ல செயல்களைத் தடுத்தாய் – போனாய்
பொல்லாத வழிகளில் நன்னெறி தவறி!

தந்தையின் புண்ணியம் காத்தது உன்னை!
தந்தை சென்ற பின்னர் பற்றின பாவங்கள்.”

“வியாதியஸ்தனுக்கு வைத்தியன் போலவும்,
வறியவனுக்குக் கிடைத்த புதையல் போலவும்,

காயும் பயிருக்குப் பெய்யும் மழை போலவும்,
தீயோன் எனக்குக் கிடைத்துள்ளீர்கள் நீங்கள்.

இன்னல்கள் தீர வழி கூறுங்கள் சுவாமி!
இனியும் என்னால் தாள முடியாது சுவாமி!”

28. ஆத்மா ராமன் (3)

“ஒரு வழி இருக்கிறது இன்னல் தீர்ந்திட,
திருமகள் கருணையைப் பெறுவது அது!

திருமால் மார்பில் உறைபவள் அவள்,
திருவென்னும் செல்வத்துக்கு அதிபதி!

பூரணச் சந்திரன் போன்ற முகத்தினள்;
கருணையே வடிவாகிக் காக்க வந்தவள்,

வியூக லக்ஷ்மியாக இருந்து தருவாள்,
விஜயம், புகழ், செல்வம் இவை நமக்கு.

முற்பிறப்பில் செய்த பாவங்கள் தீர்ந்திட
பொற் பதங்களைச் சிக்கெனப் பற்றுவாய்!

தாமரை மலரில் அமர்ந்து கொண்டு அவள்
தங்குகிறாள் வேங்கட நாதனின் மார்பில்.”

லக்ஷ்மியின் திருமந்திரத்தை உபதேசித்தார்.
லக்ஷியத்துடன் அவனை ஜபிக்கச் சொன்னார்.

பய பக்தியுடன் பெற்றான் உபதேசம்-அதை
சுய புத்தி மாறாமல் நடந்தான் உச்சரித்து.

சுவாமி புஷ்கரிணியை அடைவதற்குள்
சுலபமாகி விட்டது அந்த மந்திர ஜபம்.

அனைத்துத் தீர்த்தங்களிலும் மேலான
அந்தத் தீர்த்தத்திலும் நீராடினான் அவன்.

அரிய காட்சி தெரிந்தது அருகே வனத்தில்.
அழகிய விமானத்துடன் ஆலயம் ஒன்று.

மண்டபத்தில் குழுமி இருந்தனர் தேவர்;
கண்டான் ஆலயத்தில் அற்புத தரிசனம்.

சங்கு, சக்கரம், கிரீட, குண்டலங்களுடன்
வேங்கடேசன் இருந்தார் தேவியர்களோடு.

கண் கொள்ளாக் காட்சியில் மெய் சிலிர்த்து
தெண்டனிட்டவன் இருந்தான் தடாகம் அருகே!

குறைவற்ற செல்வம் தேடி வந்தது அவனை!
நிறைவான வாழ்க்கை வாழ்ந்தான் நெடுநாள்.

29. சக்கர ராஜன்

துஷ்டர்கள் சாது ஜனங்களுக்கு நானாவிதக்
கஷ்டங்கள் தந்தனர் முன்பொரு சமயம்.

அசுரர்கள் தபஸ்விக்களின் கர்மங்களைப்
பிசுபிசுக்கச் செய்து துன்புறுத்தி வந்தனர்.

முனிவர்கள் குழுமினர் சேஷாச்சலத்தில்;
கனிவுடன் காட்சி தந்தார் ஸ்ரீனிவாசன்.

துயரப் பட்டியலைக கேட்ட ஸ்ரீனிவாசன்,
அயரவில்லை அதனைக் கேட்டுச் சற்றும்!

“நிர்பயமாகத் தொடருங்கள் பணிகளை;
அபயம் அளிப்பான் இனிச் சக்கர ராஜன்!”

அனல் விழிகளுடன் அவன் வீசிய சக்கரம்
அழகிய ராஜகுமாரனாக உருவெடுத்தது.

“எட்டுத் திசைகளிலும் சென்று வேரறுப்பாய்
துஷ்டர்களைக் கூண்டோடு!” உத்தரவிட்டார்.

பெற்றான் சக்கர வேந்தன் என்ற பெயரை;
பெற்றான் அழகிய ரதத்தை மானசீகமாக.

பெற்றான் வலிய கரங்கள் ஓராயிரம்!
பெற்றான் அரிய ஆயுதங்கள் ஓராயிரம்!

கிழக்குப் பக்கம் சென்றான் அவன் முதலில்;
அழித்தான் துஷ்டரைக் கேசிமலைக் காட்டில்.

தென் கிழக்குப் பக்கம் சென்றான் அடுத்து;
தேடி துவம்சம் செய்தான் துஷ்டர்களை!

தெற்கு நோக்கிச் சென்றான் சக்ரராஜன்;
துடிப்புடன் எதிர்த்து வந்தனர் அவனை

உக்கிராங்கன், அங்கன், புளிந்தன், காலகன்
முக்தாயிகன் என்ற ஐந்து அரக்கர்கள்.

சதுரங்க சேனையுடன் வந்தவர் கண்டனர்
எதிரில் வருபவன் தன்னந்தனியன் என்பதை!

நகைத்தனர் சக்கர ராஜனைக் கண்டு!
பகைவர் வந்து சூழ்ந்தனர் ஒன்று சேர்ந்து!

30. அயி சிரசன்

ஐந்து அசுரர்கள் சூழ்ந்தனர் படையுடன்
அஞ்சா நெஞ்சன் சக்கர வேந்தனை!

ஆயிரம் கரங்களால் எய்தான் பாணங்களை;
ஆயிரம் பாணங்களை விலக்கினான் போரில்.

சக்கரம் போலவே சுற்றிச் சுழன்றான்;
சக்கராஜன் போரிட்டான் அசுரருடன்!

போரினைத் தொடர்ந்தனர் வெகுநேரம்;
சூரியனை மறைத்தது பரவிய புழுதி.

கரங்களால் பொழிந்த சர மழையால்
சிரங்களை அறுத்தான் சக்கர ராஜன்!

அயசிரசன் ஆவான் ஐவரின் தலைவன்;
ஐயுற்றான் ஐவரின் அழிவைக் கேட்டு.

“அழிப்பேன் சக்கரனை!” சபதம் இட்டவன்
அழிவது கண்டான் தன் எஞ்சிய படையும்!

வளைத்துக் கொள்ள ஆணையிட்டான்;
அழிக்கும் அஸ்திரத்தையும் விடுத்தான்.

ஆக்னேய அஸ்திரம் விடுத்தான் சக்கர ராஜன்
அக்னிக்கு முன்னால் நிற்க முடியுமா எதுவும்?

அக்னி அஸ்திரம் அழித்தது பாணத்தை;
அக்னி அஸ்திரம் அழித்து அயசிரசனை!

“யமனிடம் அனுப்புவேன் அவனை!” என்று
போர்க்களம் சூளுரைத்து வந்த அயசிரசன்,

யமனிடம் சென்று விட்டான் தான் அவனே
போர்க்களம் வந்து நாழிகைப் பொழுதில்!

தெற்கு திசையில் அழித்தான் துஷ்டர்களை;
தென் மேற்கிலும் அழித்தான் துஷ்டர்களை;

மேற்கு திசை நோக்கிச் சென்றான்,
மேற்கொண்டு அசுரரை அழிப்பதற்கு!

31. வனகர்த்தன்

மேற்கில் வசித்தான் அசுரன் வனகர்த்தன்,
மேற்கொண்டான் தவம் சிவனைக் குறித்து.

“பிறக்க வேண்டும் புஜபலம் மிகுந்த ஒரு மகன்;
சிறக்க வேண்டும் மூவுலகங்களையும் வென்று!”

காலம் கடந்தது; காட்சி தரவில்லை சிவபிரான்,
ஞாலம் வெல்லும் மகனை விரும்பிய அசுரனுக்கு.

தலையை அறுத்து அக்கினியில் இடும் போது,
பலியைத் தடுத்துத் தரிசனம் தந்தான் சிவன்.

“மனிதரும் தேவரும் வெல்ல முடியாத – வீர
மகன் பிறக்க அருள் புரிவீர்!” என்றான் இவன்.

பெருமிதம் கொண்டான் மகன் பிறந்ததும்;
செருக்கு மிகுந்துவிடத் துன்புறுத்தலானான்.

சாதுகளைத் தாக்கினான் ஈவு இரக்கமின்றி.
பேதமின்றிச் சேதப்படுத்தினான் முனிவரை.

சக்கர ராஜனை எதிர்க்க அனுப்பினான் – ஒரு
சதுரங்க சேனையைத் திரட்டி வனகர்த்தன்.

நெருப்பில் வீழ்ந்த விட்டில்கள் ஆயினர்.
நெருங்க முடியவில்லை சக்கர ராஜனை.

படை அழிந்து விட்டது என்று கேட்டதும்
மடை திறந்து கோபம் பெருக்கெடுத்தது.

ஜ்வால பாதனை அனுப்பினான் போருக்கு.
ஜெயிக்க முடியாத மகனே ஜ்வால பாதன்!

அரசகுமாரன் என்று எண்ணினான் பகைவனை.
அறியவில்லை அவன் சுதர்சனத்தின் உருவென!

அஸ்திரங்கள் பாய்ந்தன இரு திசைகளிலும்;
அஸ்திரங்கள் மாய்ந்தன தாக்கிக் கொண்டபின்.

சக்கர ராஜனின் அஸ்திரம் விரைந்து சென்றது;
மிக்க பலத்துடன் ஜ்வால பாதனை நெருங்கியது.

மாயையால் மறைந்துவிட முயன்ற அசுரனை
மாய்த்தது பாய்ந்து தாக்கிய சக்கரனின் பாணம்!

திரட்டி வந்தான் போரில் சிதறி ஓடிய வீரர்களை.
மரித்தான் தொடர்ந்து நடந்த போரில் வனகர்த்தன்.

32. பேரண்டவன்

வடதிசையில் வாழ்ந்தான் அரக்கன் பேரண்டவன்;
வெடவெடக்கும் அண்ட சராசரம் பேர் கேட்டவுடன்!

பிரம்மாண்டமான சேனை வெள்ளத்துடன் வந்ததும்,
பெருமானை தியானித்தான் சக்கர ராஜன் ஒரு கணம்.

அசுர சேனைக்கு இணையான அரிய சேனை ஒன்று
அதே கணத்தில் தோன்றியது ஆயுதங்களுடன் அங்கு.

கொடிய யுத்தம் தொடங்கி நடந்தது உடனே – போரில்
மடிந்தனர் எண்ணற்ற வீரர்கள் இரு சேனைகளிலும்.

வெற்றியும், தோல்வியும் இன்றி நீண்ட போரில்
வெறி கொண்ட அசுரர்களின் கை ஓங்கலானது.

சக்கர ராஜனின் படை வீரர்கள் பின் வங்கலாயினர்;
மிக்க சினம் கொண்டு அவன் செய்தான் ஹூங்காரம்.

சினத்தில் தோன்றினான் தேவ புருஷன் பாவகன்!
“சின்னா பின்னம் செய்வாய் அசுரர்களை!” என

பாவகன் தலைமையில் பொருதனர் மீண்டும்;
பாய்ந்து முன்னேறிய சக்கர ராஜனின் வீரர்கள்.

பாவகன் மீது பாய்ந்தனர் அசுரர்கள் இப்போது!
பாவகன் எய்தான் மயக்கும் மோகன அஸ்திரம்!

மறந்தனர் தம்மையே; துறந்தனர் போரையே;
எறிந்தனர் ஆயுதங்களை; மறிந்தனர் நிலத்தில்!

பேரண்டவன் எய்தான் ஹாஹாகாரம் செய்தபடி
மோகன அஸ்திரத்தை வெல்லும் ஞான அஸ்திரம்.

தூக்கத்தில் இருந்து எழுபவர்போல மீண்டும்
எழுந்து தாக்கினர் ஆயுதங்களால் அசுரர்கள்.

எய்தான் பாவகன் தன் கிரௌஞ்ச வாளியை!
எய்தான் பேரண்டவன் பைசாச அஸ்திரத்தை!

இரண்டும் தாக்கின அசுரர்கள் படையினையே!
பேரண்டவன் எய்தான் பிரமன் தந்த சூலாயுதம்!

வாயு அஸ்திரத்தை எடுத்து விடுத்தான் பாவகன்;
வாயு அஸ்திரம் வாயுவென விரைந்து சென்றது.

வாரிச் சுருட்டிப் பாய்போல எறிந்தது அசுரனை!
நேரில் பார்த்தவர் வீழ்ந்தனர் வியப்புக் கடலில்!

மண்டை உடைந்து மடிந்தான் அசுரன் பேரண்டவன்;
சண்டை முடிந்து திரும்பி விட்டான் சக்கர ராஜன்.

இனிதாக ஆணைகளை நிறைவேற்றிய பின்னர்
இணைந்தான் ஸ்ரீனிவாசனின் சக்கரத்தில் மீண்டும்.

வேறு புராணங்களில் காணப்பட்ட சில கதைகளின் தொகுதி முற்றியது.

பொங்குக மங்களம்!!! தங்குக எங்கும்!!!

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அரவின் அணையான் தான் ஸ்ரீ திருவேங்கடத்தான் என்று ஸ்ரீ ஆழ்வார்கள் அனுபவித்த படி –

April 19, 2022

ஸ்ரீ திருவோணத் திரு விழாவில் அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை–தர்மி ஐக்கியம்

திருவோணத் திருவிழவில் –
விசேஷித்து திரு நஷத்ரம் சொல்லாத இடத்துக்கு எல்லாம் இதுவே திரு நஷத்ரமாக கடவது –
திருவோணம் என்கிறது ஜன்ம நஷத்ரம் என்னில் -உகவாதார் அறிந்து அபிசரிப்பர்கள் என்று
அஞ்சி -திருவோணம் என்கிற திரு நாளிலே என்று மறைத்து சொல்லுகிறார்

——–

திருவோணத் திரு விழவில் படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே –தர்மி ஐக்கியம்

திருவோணத் திரு விழவில் –
ஏவின கார்யத்தை குறை யறச் செய்த அளவிலும் பர்யாப்தி பிறவாமையாலே
திருவவதரித்து அருளின திருவோணம் ஆகிற மங்கள திவசத்திலே என்ன தீங்கு
வருகிறதோ என்று மங்களா சாசனம் பண்ணி வர்த்திக்குமவர்கள்
படுத்த இத்யாதி –
அதிலும் பர்யாப்தி பிறவாமையாலே
திரு வநந்தாழ்வான் மேலே சாய்ந்த போதை அழகுக்கு கண் எச்சில் வாராமைக்கு
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் -படுக்கப்பட்டு ஸ்வ சம்ச்லேஷத்தாலே விகசிதமாக
நின்றுள்ள பணைத்தை உடையனாய் -மென்மை -குளிர்த்தி -நாற்றம் என்கிறவற்றை
பிரக்ர்தியாக உடைய திரு வநந்தாழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளுகிற
அழகுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் -ஸ்வதஸ் சர்வஞ்ஞனையும் மயங்கப்
பண்ணும் படுக்கை -அவன் ஸ்வ ஸ்பர்சத்தாலே விக்ர்தனாகப் பண்ணும்
இவனுடைய வடிவும் -அவனுடைய வடிவும் -கிடந்ததோர் கிடக்கை -என்கிறபடியே
பரிச்சேதிக்க ஒண்ணாத அழகு இ றே கண் வளர்ந்து அருளுகிற போதை அழகு –
ஒரு வெள்ளி மலையிலே காள மேகம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிற போதை-பரபாக ரசத்தை அனுசந்தித்தால் மங்களா சாசனம் ஒழியச் செல்லுமோ என்கிறார்கள்

————

நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே–நாச்சியார் –8-10-

நாகத்தின் அணையானை நன்னுதலாள்
நீங்கள் செய்து அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது –
அத் தலையில் ஒரு குறையும் இல்லை
நம் வரவுக்கு உறுப்பாக படுக்கை படுத்து சாய்ந்து கிடந்தான்-வேங்கடக் கோன் என்கையாலே

நன்னுதலாள்
அப் படுக்கையிலே துகைத்து ஏறத் தகும் அவயவ சோபை உடையவள்

நயந்து உரை செய்-
ஆசைப் பட்டுச் சொன்ன விண்ணப்பம்

மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
ராமாவதாரத்தில் ஐந்தர வியாகரண பண்டிதனைத் தூதாக விட்டது
இங்கே திருமலையிலே மேகங்களை தூதாக விடா நின்றாள்
இதுவே வாசி
அங்கு நின்று வந்தாரையே விடுகை இரண்டு இடத்திலும் ஒக்கும்
அவ் வதாரத்தில் பிற்  பாடர்க்கு இழக்க வேண்டாத படி -திருமலையிலே வந்து தூது விடுவார் ஆரோ என்று
அவசரம் பார்த்து இரா நின்றான் யாய்த்து –

———–

செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட வுயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று
எழுந்து இருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக் கொழும்
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –-திருச்சந்தவிருத்தம் –60-

——-

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——அமலனாதிபிரான்–1-

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே––அமலனாதிபிரான்–3

பைத்த பாம்பணையான் திருவேம்கடம் -திருவாய் மொழி -3-3-10-

உலகம் அளந்த பொன்னடியே அடைந்து –திரு வரங்கத்து அம்மானே -5-8-9-

உலகம் அளந்து –அரங்கத்தம்மான் -என்கிறார் –

அன்று ஞாலம் அளந்த பிரான் சென்று சேர் திருவேங்கடம் –திருவேங்கடமுடையான் திருவடிகளை அடைய பாரிக்கும் ஸூரிகளும்
எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு-என்று பிரார்த்திக்க –
தாள் பரப்பி மண் தாவிய ஈசன் -பூமியை அடைய தன் திருவடிகளால் ஆக்கிரமித்து
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -என்று தனது திருக்கையாலே
உலகம் அளந்த பொன்னடியைக் காட்டி -தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடம் –
அவன் தானும் இங்கே கண் வளர்ந்து அருளும் பெரிய பெருமாள் -நீள் மதிள் அரங்கம்
என்று திருப் பாண் ஆழ்வார் அருளிச் செய்ததை கேட்டு திரு மங்கை ஆழ்வார் திரு மதிள் செய்து அருளியது –

திருப் பாண் ஆழ்வார் பாசுரம் ஒட்டியே துளங்கு பாசுரத்தில் திரு வேங்கடமுடையான் சரித்ரத்தை கூறி
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே -என்று
திருவரங்கன் திருவடிகளை சரணாக பற்றுகிறார் -இருவரும் கார்த்திகை மாதத்தில் அவதரித்த சேர்த்தியும் உண்டு இறே –
திரு நஷத்ரங்களும் அடுத்து அடுத்து நஷத்ரங்கள் இறே-

கட்டு எழில் சோலை நல் வேங்கட வாணனை -கட்டு எழில் தென் குருகூர் சடகோபன் சொல்
கட்டு எழில் ஆயிரம் -என்றும் -முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம் -என்றும் –
இறே நம் ஆழ்வாரும் அருளிச் செய்கிறார் –

திரு வேங்கடத்து என்னானை –உளனாகவே என்னாவில் இன் கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் -என்றார் ஆழ்வார் –

வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்
ஈன்ற முதல் தாய் சடகோபன் -என்றார் ஸ்ரீ பராசர பட்டர் –

பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2-

பள்ளியாவது பாற்கடல் அரங்கம் –நாடொறும் தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே -1-8-2-

எண் திசைகளும் ஏழு உலகமும் வாங்கிப் பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன் பான் மதிக்கிடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாய் அவன் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-6-

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-

நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மா மலை மேய
ஆராவமுதே அடியேற்கு அருளாயே–1-10-3-

உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக
கொண்டாய் குறளாய் நிலமீரடியாலே
விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே-1-10-4-

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10–

மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-

மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை
மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய
என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே–1-10-6-

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம் பெருமான் உளனாகவே–3-9-1-

திருவேங்கடவன் வடவானை -திருவரங்கன் குடபாலானை -இருவரும் ஒருவரே –

திருவுடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் -2-7-2-

நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேங்கத்து எந்தாய் -2-7-3-

குலமுடைக் கோவிந்தா கோவிந்தா -இவனே திருவேங்கடத்தான் -என்று அழைத்தக்கால்
நலமுடை நாரணன் -இவனே ஜகந்நாதன் -பெரிய பெருமாளானார்-நம்மன்னை நரகம் புகாள்-4-6-5-

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன் அன்றோ திருவேங்கடமுடையான் –
திருவாளர் திருப்பதியே திருவரங்கம் – 4-8-10-

சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் உலகு தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா -5–4–1-
கொண்டல் வண்ணன் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுது அன்றோ – அமலனாதி -10-

நல் வேங்கடத்துள் நின்ற அழகப்பிரானார் -11-8-
நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர்-11-10-

விரையார் பொழில் வேங்கடவன் -நிமலன் நின்மலன் -நீதி வானவன் -நீள் மதிள் அரங்கத்தம்மான் -அமலனாதி -1-

மந்தி பாய் வட வேங்கட மா மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்-அமலனாதி –3-

பள்ளியாவது பாற்கடல் அரங்கம் –நாடொறும் தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே –பெரிய திருமொழி -1-8-2 —

வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
மருவாள் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே–5-5-1-

வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும்-9-
சேலுகளும் வயல்புடை சூழ் திருவரங்கத்தம்மானைச் சிந்தை செய்த -10-

சிந்தனையைத் தவநெறியைத் திருமாலைப் பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே-5-6-7-

துளங்கு நீண்முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழுடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்தவாறு அடியேன் அறிந்து
உலகம் அளந்த பொன்னடியே யடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-9-

வம்பார் புனல் காவிரி அரங்கமாளி என்னாளி விண்ணாளி–தாமரைக் கண்ணனுக்கு அன்றி
என் மனம் தாழ்ந்து நில்லாதே -7-3-4-
உம்பர்க்கு அணியாய் நின்ற வேங்கடத்து அரியை –தீம் கரும்பினை தேனை
நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே -5-

அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ -8-2-3-

புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகரில் முனிவனை–
கனை கழல் காணும் கொலோ கயல் கண் எம் காரிகையே -9-9-2-
பொழில் வேங்கட வேதியனை நணுகும் கொல் என் நன்னுதலே -9-9-9-

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே–11-3-7-

—————————–

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற மெய்ம்மையை விரிந்த சோலை
வியன் திருவரங்கம் மேய செம்மையைக் கருமை தன்னைத்
திருமலை ஒருவனையானை தன்மையை நினைவார் என் தன் தலை மிசை மன்னுவாரே–திருக் குறும் தாண்டகம் -7-

உலகம் ஏத்தும் தென்னானாய் வடவானாய் குடபாலனாய் குண பாலமதயானாய்–திரு நெடும் தாண்டகம் -9-

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்ற மரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே–16-

உலகமுண்ட பெருவாயா–திருவேங்கடத்தானே –உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து
என் பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கமூர் என்று போயினாரே-24-

—————————————————-

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-

—————–

என் அமுதம் கார்முகில் போலும் வேங்கட நல் வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரன் -திருவாய்மொழி -2-7-11-

—————————————————-

வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர் –-ஸ்ரீ பொய்கை ஆழ்வார்–77-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் –ஸ்ரீ பொய்கை ஆழ்வார்–99-

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ——இரண்டாம் திருவந்தாதி——-28-

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —இரண்டாம் திருவந்தாதி–46-

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார் ——மூன்றாம் திருவந்தாதி–26–

கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –