Archive for July, 2026

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 5 –ஸூரி வைபவ பாதம்-5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ -முதல் பகுதி -ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 2, 2026

5 –ஸூரி வைபவ பாத, – 3 அதிகரணங்கள் இதில்-
5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –மொத்தம் 19-ஸூரணைகள்
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம்‌ 94–96—மொத்தம் -3- ஸூரணைகள்

5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்–முதல் பகுதி-39 – 49–மொத்தம் 11-ஸூரணைகள்

இனிமேல் –சந்தங்கள் ஆயிரம்-திருவாய்-10-9-11- –என்று திருவாய் மொழிக்கு சொன்ன வேதத்வத்தை சாதிக்கக் கோலி பிரதமம் ஏவம் விதமாய் இருப்பதொரு வேதம் உண்டோ என்கிற சங்கைக்கு பரிஹாரம் பண்ணுகிறார் மேல்-வேத அத்‌,யயந விதி, போலே இப் ப்ரப,ந்த,அத்‌,யயநமும்‌ விதி, என்பது, இதினுடைய அர்த்த, பரிஜ்ஞாநா பாவத்தில்‌ உத்பத்தி நிரூபிக்க வேணு மென்பதாய்க் கொண்டு வேதத்தோ டொக்கச்‌ சொல்லா நின்றீர்‌. இதுவும்‌ பிற்றை வேதமோ என்னில்‌ ; இதுவும் வேதம்‌; இது என்ன வேதம்‌ என்ன

எவ்வுலகத்து எவ்வெவையும் என்கையாலே வேதம் பஹு விதம்–சூரணை-39-

அதாவது
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வவையும் -திருவாய்-3-1-6–என்கையாலே வேதம் ஆனது
அத்யேதாக்கள் உடைய பேதத்தாலும் ,லோக பேதத்தாலும் பஹுவிதமாய் இருக்கும்
என்கை .. ஆகையால் அதிலே இதுவும் ஒரு விதம் என்ற கருத்து-

‘வேதா வா ஏதே । அநந்தா வை வேதா ச’” (யஜு. கா.) என்றும்‌, ‘“ஓதுவாரோத்தெல்லாம்‌ எவ்வுலகத் தெவ்வெவையும்‌”* (திருவா. 3 – 1- 6) என்றும்‌ சொல்லுகிறபடியே அத்‌யேதாக்களுடைய பேதத்தாலும்‌, லோக பேதத்‌தாலும்‌ வேதம்‌ ப,ஹு வித,ம்‌ என்கிறார் –

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6–ஓதுவார் என்கையாலே -அதிகாரி வைவித்யத்தைச் சொல்லுகிறது –-ருகாதி சதுர் வேதங்களும் அத்யேத்ரு பேதத்தாலே பிறந்த சாகா பேதங்களும் –ஊர்த்த லோகங்களில் உள்ளார் ஞானாதிகருமாய் -ஆயுஸ் சாலே அதிகருமாய் இருக்கையாலே அவர்களுக்கு அனுரூபமாக அவ்வோ லோகங்களிலும் இந்த பேதங்களும் உண்டு

ஆனால் ஏக பாஷையாய் இருக்க வேண்டாவோ ? சம்ஸ்க்ருதமும் த்ராவிடமுமாய் அன்யோன்யம் பேதித்து இரா நின்றதீ என்ன சொல்லுகிறது மேல்-ஆனால்‌ அது ஸம்ஸ்க்ருதமாய்‌, இது த்‌ராவிடமாய்ப்‌ பிரிந்திராறின்றதீ என்ன, சொல்லுகிறது மேல்‌.

இதில் சமஸ்க்ருதம் திராவிடம் என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே-சூரணை -40-

அதாவது
இப்படி பஹு விதமான இவ் வேதத்திலே சமஸ்க்ருத வேதம் திராவிட வேதம் என்கிற பிரிவு-சமஸ்க்ருதாம் சந்தன்னில் ருக் வேதம் ,யஜுர் வேதம் சாம வேதம், அதர்வண வேதம் ,என்கிற பிரிவு போலே என்கை ….-இத்தால் வேத ராசி ஒன்றாய் இருக்க செய்தே ,சமஸ்க்ருத பாஷா ரூபம் ஆனவது தன்னிலே ருகாதி ரூபேண பல படியாய் பிரிந்தால் போலே பாஷா பேதேநவும் இப்படி பிரிந்து இருக்கும் என்ற படி-(ஆதித்யருக்குள் அஹம் விஷ்ணு -ஏகாதச ருத்ரனுக்குள் சங்கரன் -அந்த கோஷ்ட்டிக்குள் –
நக்ஷத்திரங்களில் அஹம் – சந்திரன் -இல்லாத போதும் என்பதுக்கு த்ருஷ்டாந்தம் )

(இதில்‌) இந்த வேதத்தில்‌. (ஸம்ஸ்க்ருதம்‌ த்‌ராவிட,ம்‌ என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே என்று) வேதங்கள் தான்‌ ஒன்று போலேயோ மற்றது? ஸம்ஸ்க்ருத வேதந்தான்‌ ரூக்‌,யஜுஸ் ஸாம அத,ர்வணங்களாய்ப்‌ பிரிந்தாப் போலே வேதந்தான்‌ ஸம்ஸ்க்ருத ரூபமாயும்‌, த்‌ராவிட ரூபமாயும்‌ பிரிந்ததென்கிறார் –

அப்படி சொல்லலாமோ ? சமஸ்க்ருத பாஷை போலே திராவிட பாஷை அநாதி அன்றே –ஆகஸ்த்யம் அன்றோ இது ?என்ன சொல்லுகிறது மேல்-ஆனாலும்‌ அந்த ஸம்ஸ்க்ருத பாஷைதான்‌ அநாதியாயிரா நின்றதே என்ன-

செந்திறத்த தமிழ் என்கையாலே ஆகஸ்யமும் அநாதி-சூரணை -41-

அதாவது
செம் திறத்த தமிழ் ஓசை வட சொல் ஆகி-திரு நெடும் தாண்டகம் -4- – -என்று (ஓசை -சொல் என்ற அர்த்தத்தில் இங்கு -ஸ்தான பிரமாணத்தாலே) சமஸ்க்ருததோடே சஹபடிதமும் , ப்ரதமோக்தமும் ஆகையாலே அகஸ்த்ய பிரகாசிதமான மாத்ரம் கொண்டு ஆகஸ்த்யம் என்று சொல்லப் படுகிற
திராவிடமும் அநாதியாய் உள்ளது என்கை .-இத்தால் அநாதித்வம் சமஸ்க்ருத திராவிட சாதாரணம் என்றது ஆய்த்து-

செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி’ (திருநெடு. 4) என்று ஸம்ஸ்க்ருதத்தோடே ஸஹபடிக்குமிடத்தில்‌ ‘“செந்திறத்த தமிழோசை” என்றதுக்குப்‌ பின்பிறே “வட சொல்லாகி’” என்றது. ஆகையாலே இரண்டும்‌ அநாதி யிறே-

இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித் திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா அந்தணனை அந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே–4—சாஸ்திர வஸ்யர் உடைய (திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி,)ஸ்ருஷ்டியைச் சொல்லுகைக்காக சாஸ்திர ஸ்ருஷ்டியைச் சொல்லுகிறார் – திராவிட சம்ஸ்க்ருதங்களை ஸ்ருஷ்டித்து-ஆரியத்தைச் சொல்லி அதனுடைய சிதைவாகையாலே பின்னை தமிழைச் சொல்ல பிராப்தமாய் இருக்க – இத்தை பிரதமத்திலே உபாதானம் பண்ணிற்று —1-இது சர்வாதிகாரம் ஆகையாலும்-2-ஸ்வார்த்தத்தைச் செவ்வே பிரகாசிப்பிக்க கடவதாகையாலும்-3-தம் பாழி ( தம் துறை )யாகையாலும்-4-இன்னமும் அத்தோபாதி இதுவும் பிரமாணம் என்கைக்காக முற்பட அருளிச் செய்கிறார்-வேதங்கள் போலேயும் இதிஹாச புராணங்கள் போலேயும் அன்று இறே ஆழ்வார்கள் வார்த்தை – அனுஷ்டாவின் வார்த்தை இறே இது – (த்ரை குண்யா விஷயா வேதா )ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்ய தயா புகுரும் இத்தனை இறே இவர்கள் பக்கலில் –செந் திறத்த தமிழ் ஓசைதிறம் –கூறுபாடும்-பிரகாரமும் –-ஸ்வாரதத்தை செவ்வியதாக பிரகாசிப்பிக்கையே கூறான -த்ரமிட சப்தம்-உப ப்ரஹ்மண அபேஷை அற்று இருக்கை-
வேதங்களுக்கு உப ப்ரஹ்மண அபேஷை உண்டு இறே–‘ஈரத் தமிழ்‘ –-செவிக்கினிய செஞ்சொல்– ”செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய வோதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே” –வேதாந்த தேசிகன்–ஓசை -என்று பாட்டுக்கும் த்வனிக்கும் பெயர்-லஷணையால் சப்தத்தை சொல்கிறது -மேல் வடசொல் -என்கையாலே-வடசொல் -என்று சமஸ்க்ரதத்தை சொல்கிறது –சாஸ்த்ரத்தை ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது -பிரகாசிப்பிக்கை -(வெளியிட்டு அருளினான் ஆழ்வார்கள் மூலம் )

ஆனால் அந்த பாஷை அநாதி ஆகிறது ..-திருவாய் மொழிக்கு வேதத்வ பிரகாசமான வசனம் உண்டோ என்ன சொல்லுகிறது மேலே-ஆனால்‌ அந்த பாஷை அநாதி யாகிறது; திருவாய்மொழிக்கு வேதத்வ முண்டாக வேணுமென்கிற நிர்பந்த, முண்டோ என்னில்‌;

வட மொழி மறை என்றது தென் மொழி மறையை நினைத்து இறே-சூரணை -42-
(பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை என்றதால் நல்ல அரக்கன் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இருப்பதால் தானே இன சுட்டு அடை மொழி )

அதாவது
மறை-என்று கேவல வேத வாசி சப்தத்தாலே சொல்ல அமைந்து இருக்க –வட மொழி மறை -திருவாய் -8-9-8–என்று சமஸ்க்ருத வேதம் என்றது -திராவிட வேதம் உண்டு என்று நினைத்திறே என்கை
பிரதி கோடி இல்லாத போது இப்படி விசேஷிக்க வேண்டியது இல்லை இறே என்று கருத்து-

வேதம்‌ என்னாதே ஸம்ஸ்க்ருத வேதம்‌ என்கையாலே த்ராவிட, வேதமுமுண்டாக வேணுமென்கிறார்-

மடவரல் அன்னை மீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் மல்லைச் செல்வ
வடமொழி மறை வாணர் வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப் புலியூர்
படவர வணையான் தன் நாமம் அல்லால் பரவாள் இவளே–8-9-8—சம்ஸ்க்ருத பாஷையும் வேதங்களும் தாங்கள் இட்ட வழக்காய் வ்யாஸ பாதம் செலுத்த வல்ல ப்ராஹ்மணர் ஸமாராதன ரூபமான யாகங்களில் ஹோமம் பண்ணின நெய்யால் ஜ்வலித்த அக்னிகளினின்றும் புறப்பட்ட மிக்க புகையானது –

ஆனால் அந்த வேதத்துக்கு அங்க உபாங்கங்கள் உண்டானவோ பாதி இதுக்கும் அவை உண்டோ என்ன சொல்லுகிறது மேல்-அங்கோபாங்க ஸஹிதத்வம்‌ இதுக்குமுண்டோ என்ன, உண்டென்கிறார்‌ மேல்‌-

வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் ) அங்க உபாங்கங்கள் போலே இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன் மாலைகளும்- (இருமை -பெருமை -)-சூரணை-43-

அதாவது
ருகாதி வேத சதுஷ்டயத்துக்கும்-சீஷா வியாகரண நிருக்த சந்த கல்ப ஜோதிஷங்கள் ஆகிற ஆறு அங்கங்களும் மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராத் உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே-(ஆதி -ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் அர்த்த வேதம் தனுர் வேதம் )-இந்த திராவிட வேத சதுஷ்டயதுக்கும்-இரும் தமிழ் நூல் புலவன் நங்கை யாளன்–பெரிய திருமொழி -1-7-10- -என்று
ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற திராவிட வேத சாஸ்த்ரத்தை கரை கண்ட ஞான ஆதிக்கத்தை உடையரான திரு மங்கை ஆழ்வார் உடைய-கலியன் வாயொலி செய்த பனுவல் -பெரிய திருமொழி -1-4-10–என்று சாஸ்திர ரூபங்களான பிரபந்தங்கள் ஆறும்–மற்றை ஆழ்வார்கள் எண்மர் உடையவும் விலஷணமான பிர பந்தங்களும் என்கை ..-நன் மாலைகள் என்றது –நய நின்ற நன் மாலை -முதல் திருவந்தாதி -57–என்று முதல் ஆழ்வார் பிரபந்தத்தில் அருளிச் செய்தது எல்லா பிரபந்ததுக்கும் ஒக்கும் என்று நினைத்து .

1-பொய் நின்ற ஞானமும் -திருவிருத்தம் -1––இத்யாதியாலே ஸ்வரூப விரோதியாய் வந்தேறி யான தோஷங்களை முதல் அடியிலே பேசினால் போலே பிரதமத்திலே -வாடினேன் வாடி-பெரிய திருமொழி -1-1-1- -இத்யாதியாலே ஸ்வ ரூபத்துக்கு வந்தேறியான தோஷங்களை கண்டு நொந்து பேசுகையும்
2-பகவத் ப்ராவண்ய ப்ராசுர்யமும்-பத்துடை அடியவர்க்கு எளியவன் –எத்திறம் –ப்ராவண்ய ப்ராஸூர்யம் – உருகுமால் நெஞ்சம் கார் ஒக்கும் காட்கரை அப்பன் /முலையோ முழு முற்றும் போந்தில –பால்யாத் ப்ராவண்யம் -கணபுரம் கை தொழும் பிள்ளையை -பிறர் சொல்ல கேட்டு கை தொழும் இவள் -அருவி சோர் வேங்கடம் நீர் மலை உருகினாள் உள் மெலிந்தாள்
3-அதில் அர்ச்சாவதாரத்தில் ஊற்றமும்-செய்ய பரத்துவுமாய் –எய்துபவர்க்கு அர்ச்சாவதார எளிது -அவனாகும் நீள் கடல் வண்ணனே –-அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ-ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் – விபவம் பாடப் பிறந்தவர் அர்ச்சையை பாடுவது ஏற்றம் –
காரார் திருவேங்கடம் காணும் அளவும் போய்–ஆராமம் சூழ் /-மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே–ஏரார் முயல் வீட்டுக் காக்கை பின் போவதே
4-கலவியும் பிரிவும் மாறி மாறி வருகையும்-அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான் -ஆடி ஆடி அகம் கரைந்து –வாடி வாடி இவ்வாணுதலே /-கோவை வாயாள் பொருட்டு–பூசும் சாந்து என் நெஞ்சமே -ஹர்ஷம் மிக்கு -மண்ணை இருந்து துழாவி —-ஏறிய பித்தினோடு -மாயன் திறத்தனள் இத்திரு தேறியும் தேறாமல் /-யானும் ஏத்தி –ஏத்த ஏத்த எங்கு எய்தும் /ஒரு நாள் காண வாராயே–வருத்தம் -8-5-எல்லியும் காலையும் திருக்கடித்தானாம் தாயப்பத்தி விட்டு -ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காமல் சன்னிஹிதன் -மைந்தனும் வந்திலன் என் செய்கேன் -திருக்கண்ணபுர பாசுரம் -வருத்தம் சொல்லி ஆழ்வார் /8-5-வருந்தாது இரு மட நெஞ்சே ஆறாம் பத்தில் நம் மேல் வினைகள் வாரா -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூ ச – நேரான மொழி பெயர்ப்பு-சோகப்படாதே முதலில் சொல்லி –
5–அந்ய உபதேச பேச்சும்–ஆறு கிண்ணகம்-தாய் மகள் தோழி
6-அது தன்னில் ராத்ரி வ்யசனமும்-மடல் எடுக்க ஒட்டாமல் -ஊரெல்லாம் துஞ்சி பெண் பிறந்தார் பெரும் துயர் காண மாட்டாமல் -கண்ணனும் வாரானால் -காகுத்தனும் வாரானால் -காப்பார் யார் -நங்கள் அடிகள்-தோழியும் நானும் ஒழிய -வியக்தமாக தோழி பாசுரம் இல்லை ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செயலில் -கோழியும் கூவுகின்றதில்லையே -கூர் இருள் ஆயிற்றே
7-தூத ப்ரேஷணமும்-நான்கு தூது பதிகம் -அவ்வளவு தெம்பு இல்லையே ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு -நான்கு பாசுரங்களுக்கு பின்பே நேராக-ஓ மண் அளந்த தாடாளா -வரை எடுத்த தோளாளா –தண் குடந்தை நகராளா–மலையாள ஊட்டு இல்லையே
8-அநுகாரம்-கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -பதிகம் -ஜெகதாகாரம் –வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இட வகை கொள்வது யான் என்று பேசினாள்
9–மடல் எடுக்கை-மாசறு சோதி பதிகம் –/ஸ்ரீ சிறிய திருமடல் ஸ்ரீ பெரிய திரு மடல் -ஸ்ரீ திரு நறையூர் நம்பி மேல் –
10/11/12-தோழி தாய் மகள் என்னும் அவஸ்தை த்ர்யாபத்திகளும்-சாழல் பதிகம் அவ்யக்தம் தோழி பதிகம்-இவள் திறத்து இருவரும் –2-7-/-7-2-திருத்தாயார் பதிகங்கள் -திண்ணம் என் இள மான் புகுமூர் திருக்கோளூரே-உண்ணும் சோறு / கள்வன் கொல்-அவனூர் வினவி சென்றாள்-கரியான் ஒரு காளை வந்து–அணி யாலி புகுவார் கொலோ -கள்வன் கொல் பிராட்டி திருக்கோலம் இன்றும் சேவை உண்டே -பொன்னிவர் மேனி -நாள் வேதம் ஓதும் -அவர் நாகரீகர் செல்வர் பெரியர்-என்னையும் நோக்கி
அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகிறேன் –அச்சோ ஒருவர் அழகியவா -ஸுந்தர்யம் இங்கு -எங்கனே நீ லாவண்யம் அங்கு-இரண்டும் மகள் பாசுரங்கள்
13-இந்திரிய பய குரோசம் -ஐவர் திசை திசை எற்றி-
14-ஈஸ்வர ஸ்வாதந்த்ர்ய பயம் ,-அரவணை மேல் பள்ளி கொள்ளும் முகில் வண்ணனே அறையோ முறையோ ஸ்ரீ திருவிருத்தம் —தடுப்பார் இல்லாத நிரங்குச ஸ்வாதந்தர்யம் /-தெள்ளியீர்-கை வளை கொள்வது தக்கதோ -ஸ்ரீ நீல மேக பெருமாள் -நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்
15-அசக்ருத் பிரபத்தி கரணம்-ஐந்து தடவை-நோற்ற நாலும்–உலகுண்ட பெரு வாயா ஸ்ரீ நம்மாழ்வார் –பத்து தடவை இவர்–ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ திருவேங்கடமுடையான் -ஸ்ரீ அண்ணன் கோயில் -ஸ்ரீ திருவரங்கம் -ஸ்ரீ திரு விண்ணகர்–திரு நறையூர் இடர் கெடுத்த திருவாளர் –6-9-பாட்டு தோறும் திருப்பாத பிரஸ்தாபம் இங்கும் உலகுண்ட பெரு வாயா போலே–தேரெழுந்தூர் -திருக்குறுங்குடி மகள் பாவனையில் -9-5-/ 5-9 மானே நோக்கு அங்கு நாயகா பாவம் /
16-ஆர்த்தியின் உடைய கரை புரட்சிகளும்–மாலுக்கு ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி அங்கு -ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சி இவர் –
17-பர துக்க அசஹிஷ்ணுதையாலே பல காலும் ஹிதம் சொல்லுகையும்–தொடக்கமான கட்டளையாலே மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது ..-மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில் அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது ..ஆக –சீஷாயாம் வர்ண சிஷா பத சமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தஸ்
சந்தச் சிதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யோதிஷம் ரெங்கநாத ,கல்ப அனுஷ்டான
முக்தம் ஹ்யுசித கமிதயோர் நியாய மீமாம்ச யோஸ் ஸ்யாத் அர்த்த வ்யக்தி
புராண ஸ்ம்ருதிஷூ ததனுகாஸ் த்வாம் விசின் வந்தி வேதா -ஸ்ரீ ரெங்கராஜ உத்தர ஸ்தவம்-18- –என்கிற படியே அவை அந்த வேத சதுஷ்டயத்துக்கும் உபகார அங்கங்களாய் இருக்குமா போலே இவையும் கீழ் சொன்ன படியே இத வேத சதுஷ்டயத்துக்கும் உப அங்கங்களாய் இருக்கும் என்றது ஆய்த்து —

““அங்காநி வேதாஸ் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தர? ! புராணம்‌ த,ர்ம ஸாஸ்த்ரஞ்ச வித்‌,யா ஹ்யேதாஸ் சதுர்தஸ -என்கிறபடியே சதுர்தஸ வித்‌யாஸ்தாந வேதம் போல்‌ இங்கும்‌ இவருடைய ப்ரபந்தங்கள்‌ நாலும்‌ நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாய்‌, “இருந் தமிழ் நூற் புலவன் மங்கை யாளன்‌?” (திருமொழி 1 – 7 – 10) என்றும்‌, ““கலியன் வாயொலி செய்த பனுவல்‌ ” (திருமொழி 1 – 4 – 10) என்றும்‌ சொல்லுகிற திருமங்கை யாழ்வாருடைய ப்ரபந்தங்களாறும்‌, அங்கங்களினுடைய ஸ்தாநத்திலேயாய்‌, மற்றை எட்டு ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களும்‌ உபாங்கங்களா யிருக்கும் –

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10–ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற தமிழ் சாஸ்திர உக்தமான படியைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் –

வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே —1-4-10-

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன் மாலை கற்றேன் தொழுது —
—57-நிர் வசன ரூபமாக நின்ற நல்ல மாலை கொண்டு-நயம் நின்ற நன் மாலை -நயம் -அன்பும் மகிழ்ச்சியும் -திருமந்த்ரார்த்தை நயப்பிக்கையில் ஈடுபட்ட திவ்ய பிரபந்தம் என்றுமாம்-ஸாஸ்த்ர ரூபமாய் இருக்கும் விலக்ஷணமான மாலையைக் கொண்டு என்றுமாம்-நயப்புடைத்தாய் –அதி விலக்ஷணமான சப்தங்களாலே தொடுக்கப் பட்ட இப் பிரபந்த ரூபமான மாலையைக் கொண்டு உன்னை ஆஸ்ரயித்து உனக்கு வாசகமாய் திரு மந்திரம் என்று பிரசித்தமான சொல் தொடை

வித்யாந்தரங்களில் வேதத்துக்கு உண்டான ஆதிக்யம் இதுக்கும் உண்டோ என்ன சொல்லுகிறது மேல் -ஸகல வித்‌யைகளிலும்‌ வைத்துக் கொண்டு அங்கியான வேதம்‌ அதிகமாயன்றோ இருப்பது என்னில்‌,

சகல வித்யாதிக வேதம் போலே இதுவும் திவ்ய பிரபந்த பிரதானம்-..சூரணை -44 –

அதாவது
அங்கானி வேதாஸ் சத்வாரோ மீமாம்ச நியாய விஸ்தர புராணம் தர்ம சாஸ்த்ரஞ்ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச —என்று சக படிதமாய் இருக்க செய்தே ,ஸ்வ அங்கோ உபாங்களான சகல வித்யைகளிலும் ,ஸ்வ வைபவத்தால் மேலாய் இருக்கும் வேதம் போலே ஸ்ரீ திவ்ய பிரபந்தங்களிலும் சகபடிதமாய் இருக்க செய்தே ஸ்வ அங்க உபாங்களான சகல ஸ்ரீ திவ்ய பிரபந்தகளிலும் ஸ்வ வைபவத்தாலே இதுவும் மேலாய் இருக்கும் என்கை-

அந்த ஸகல வித்‌யைகளிலும்‌ அதிகமான வேதம்‌ ப்ரதாநமானாப் போலே இதுவும்‌ திவ்ய ப்ரபந்தங்களில்‌ ப்ரதாநமாயிருக்கும்‌.

ஆனால் அந்த வைபவத்துக்கு உடலான சாஸ்த்ரத்வ பாகவத ஜ்ஞாரூபவத்வ நிர்தோஷத்வ ஸ்ருதித்வ சத்யத்வ அநாதி நித்யத்வங்கள் இதுக்கும் உண்டோ என்ன சொல்லுகிறது மேல்-ஆனால்‌ வேதத்துக்குச்‌ சொல்லுகிற ”வேத ஸாஸ்த்ராத் பரம்‌ நாஸ்தி” (ஹரிவம்ஸே ) என்கிற ஸாஸ்த்ரத்வமும்‌, ““ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா” என்கிற பகவதாஜ்ஞா ரூபத்வமும்‌, ப்‌ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதத்வமும்‌, பூர்வ பூர்வோச்சாரண க்ரமத்தாலே உத்த ரோத்தரோச்சார்யமாணத்வம்‌, நித்யத்வம்‌, ஸத்யத்வம்‌ தொடக்கமான லக்ஷணங்கள்‌ இத்திருவாய்மொழிக்குமுண்டோ என்னில்‌, உண்டென்கிறார்‌-

வேத நூல் இரும் தமிழ் நூல்–ஆக்ஜை ஆணை வசையில் ஏதமில் சுருதி செவிக்கு இனிய ஓதுகின்றது உண்மை பொய்யில் பாடல் பண்டை நிற்கும் முந்தை அழிவில்லா என்னும் லஷணங்கள் ஒக்கும்-சூரணை -45-

அதாவது
வேத நூல் பிராயம் நூறு – திருமாலை -3- என்ற அத்தை வேத சாஸ்திரம் என்றால் போலே இத்தையும் –இரும் தமிழ் நூல் புலவன்-பெரிய திருமொழி -1-7-10–என்று பெரிய திராவிட சாஸ்திரம் என்கையாலும்
அத்தை — ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை ஆக்ஜை -பாஞ்சராத்ரம் –என்று பகவத் ஆக்ஜை ரூபமாக சொன்னால் போலே-இத்தை –ஆணை ஆயிரம் -திருவாய்-6-3-11–என்று தத் ஆக்ஜா ரூபமாக சொல்லுகையாலும் ,-அத்தை -வசையில் நான் மறை –பெரிய திருமொழி-5-3-2- என்று விப்ரலம்பாதி தோஷ ரகிதம் என்றால் போலே ,-இத்தையும் –ஏதமில் ஆயிரம்-திருவாய்-1-6-11- -என்று நிர்தோஷமாக சொல்லுகையாலும் ,-அத்தை-சுடர் மிகு சுருதி-திருவாய்-1-1-7- -என்று ஸ்ரூயதே இதி ஸ்ருதி -என்கிறபடியே பூர்வ பூர்வோச்சாரண கிரமத்திலே சரவண இந்திரியத்தாலே கிரகிக்க படுமதாய் சொன்னால் போலே , இத்தையும் –கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -திருவாய்-10-6-11 -என்று ஸ்ராவ்யமாய் சொல்லுகையாலும் ,-அத்தை –வேத நூல் ஓதுகின்றது உண்மை-திருச்சந்த -72- -என்று சொல்லும் அதில் ஒரு பொய் இல்லை என்றால் போலே ,-இத்தையும் –பொய்யில் பாடல்-திருவாய்-4-3-11–என்று அசத்திய கந்த ரகிதம் இல்லை என்கையாலும்,-அத்தை பண்டை நான்மறை -பெரிய திருமொழி-5-7-1–என்று அநாதியாகவும்-நிற்கும் நான்மறை-திருவாய்-6-5-4- -என்று -அநதினத்தவம்-அழிவில்லாததாகவும் சொன்னால் போலே இத்தையும் முந்தை ஆயிரம் -திருவாய்-6-5-11-அழிவில்லா ஆயிரம் -திருவாய்-9-7-11-என்று அநாதியாய் அழிவற்று இருக்குமதாய் சொல்லுகையாலும் இந்த லஷணங்கள் எல்லாம் இரண்டுக்கும் ஒக்கும் என்கை-

வேதநூல்‌?” (திருச்ச.72) என்றாப் போலே ““இருந்தமிழ்நூல்‌ ‘” (திருமொழி 1 – 7 – 10) என்று ஸாஸ்த்ரத்வமும்‌, ”ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா’” என்றாப்போலே ஆணை யாயிரத்து”” (திருவா. 6 – 3 – 11) என்று பகவதநுஸாஸந ரூபமாய்‌, “வசையில்‌ வேதம்‌”” (திருமொழி 5 – 3 – 2) என்றாப் போலே ““ஏதமிலாயிரம்‌” (திருவா. 1 – 0 – 11) என்று ப்‌ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதமாய்‌, “*சுடர் மிகு சுருதி”’ (திருவா. 1 – 1 – 7) என்றும்‌, *’செவிக்கினிய செஞ்சொல்‌?” (திருவா. 10 – 6 – 11) என்றும்‌ ஸ்ராவ்யமாய்‌, ““வேத நூலோதுகின்றதுண்மை?” (திருச்ச.72) என்றாப் போலே ‘“பொய்யில் பாடலாயிரம்‌”? (திருவா. 4 – 3 – 11) என்று இதில்‌ சொல்லுகிற அர்த்தங்களில்‌ ஒரு பொய்‌ இன்றியிலே இருப்பதாய்‌, ‘“பண்டைநான்மறை” (திருமொழி 5 – 7 – 3), “நிற்கும்‌ நான்மறை”! (திருவா. 6 – 5 – 4) என்றாப் போலே ‘‘முந்தை யாயிரம்‌’‘ (திருவா. 6 – 5 – 11) என்றும்‌, “அழிவில்லா ஆயிரம்‌”’ (திருவா. 9 – 7 – 11) என்றும்‌ ஆத்‌யந்த ரஹிதமாய்‌, அதிற் சொல்‌லுகிற லக்ஷணங்கள்‌ இதுக்குமுண்டென்கிறார் –

வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்ற விப்பதினை யாண்டு (நின்றதில் பதினை யாண்டு -என்றும் பாடம் )
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகர் உளானே–3—வேத சாஸ்த்ரா விரோதிநா -என்கிறபடியே
வேதமாகிற நூல் -வேதாக்ய சாஸ்திரம் -என்னக் கடவது இறே-நூல் -சாஸ்திரம்-அதவா வேதங்களும் நூல்களும் -என்னவுமாம் -வேதங்களும் வேதார்த்த ஞானம் உடைய புருஷர்கள் உடைய வசனங்களும் –

போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே –72–ஸ்ரீ பூமி சஹிதன் பிரம்மாவுக்கு உத்பாதகன் ப்ரஹ்ம உத்பன்னன் ருத்ரன் என்று வேதாக்ய சாஸ்திரம் ஓதுகிற அர்த்தமே சத்யம்-அதுக்கு புறம்பாக ஓர் அர்த்தம் சொல்லில் அது அசத்யம் – ஸூபர்ண வைகுண்ட சம்வாதே – யத்தத் பத்ம மபூத் பூர்வம் யத்ர ப்ரஹ்மா வ்யஜாயதே ப்ரஹ்மணச்சாபி சம்பூதச்சிவ இத்யவதார்யதாம் சிவாத் ஸ்கந்தஸ் சம்பபூவ ஏதத் ஸ்ர்ஷ்டி சதுஷ்டயம் –இத்யாதி –

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10–ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற தமிழ் சாஸ்திர உக்தமான படியைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் –

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்து
த் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-பீஷாஸ் மாத் வாதே பவதே -என்கிறபடியே ஆயிரத்திலும்-ஜெகன் நியமனத்தைச் சொன்ன –

வசையில் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த்
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2—விப்ரலம்பாதி தோஷ சம்பாவனை இல்லாத நாலு வேதத்தைக் கொடுத்துதாதா யதபூர்வ மகல்பயத்-என்று
முன்பு போலே இவற்றை உண்டாக்கு -என்று விட அவனும் வேதத்தை அசுரர்கள் கையில் பறிகொடுத்து
வேதா மே பரமஞ் சஷூர் வேதா மே பரமம் தனம் -என்று கண்ணும் கண்ண நீருமாய் நின்று கூப்பிட
அவன் பக்கலிலே கிருபையைப் பண்ணி  –

மாதவன் பால் சட கோபன் தீ தவம் இன்றி உரைத்த
ஏதமில் ஆயிரத்து இப் பத்து ஓத வல்லார் பிறவாரே–1-6-11-தீதாவது -தன் மேன்மையைப் பார்த்து எழ நிற்கை-அவமாவது -ஆஸ்ரயிக்கிறவனுடைய சிறுமை பார்த்து கையிடுகை –-இன்றியுரைத்த -இரண்டு குற்றமும் இல்லாமையைச் சொன்ன – ஏதமில் ஆயிரம் -லஷண ஹாநியால் வரும் குற்றம் இன்றிக்கே இருக்கை-

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7–முதல் பாட்டுத் தொடங்கிச் சொன்ன அர்த்தங்கள் எல்லாவற்றுக்கும் பிரமாணம் நிர்த்தோஷ ஸ்ருதி என்கிறது சுடர் மிகுகை யாவது -பௌருஷ்யத்வ நிபந்தனமான விப்ரலம்பாதி தோஷ ரஹிதமுமாய் பிரமாணாந்தரங்களைக் கொண்டு பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாகையாலே மிக்க தேஜச்சை யுடைத்தாகை-ஒருவரால் பண்ணப் பட்டது அன்றிக்கே என்றும் கேட்டே வருமதாகையாலே ஸ்ருதி என்கிறது –

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11–பாட்யே கே யே ச மதுரம் -என்கிறபடியே இசையோடு புணர்ப்புண்ட தமிழ்த்தொடை –நித்ய ஸூரிகள் இத்தைக் கேட்டால் பர்யாப்தர் ஆகார் -இப்பாடுகிறது உள்ளீடானவன் சீலத்தாலேயே என்னில் –பாசுரத்துக்காக என்கிறது –ஸம்ஸ்ரவே மதுரம் -என்கிறபடியே செவியே தொடங்கி ரசிக்கும்-செஞ்சொல்லே–-நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப் பட்ட சொல்லு –சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினால் -என்னா செந்தமிழ் பத்தும் என்றார் இறே –

போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே –
72-ஸ்ரீ பூமி சஹிதன் பிரம்மாவுக்கு உத்பாதகன் ப்ரஹ்ம உத்பன்னன் ருத்ரன் என்று வேதாக்ய சாஸ்திரம் ஓதுகிற அர்த்தமே சத்யம்-யல்லது இல்லை மற்றுரைக்கிலே — அதுக்கு புறம்பாக ஓர் அர்த்தம் சொல்லில் அது அசத்யம் –-ஸூபர்ண வைகுண்ட சம்வாதே – யத்தத் பத்ம மபூத் பூர்வம் யத்ர ப்ரஹ்மா வ்யஜாயதே ப்ரஹ்மணச்சாபி  சம்பூதச்சிவ இத்யவதார்யதாம் சிவாத் ஸ்கந்தஸ் சம்பபூவ ஏதத் ஸ்ர்ஷ்டி சதுஷ்டயம் -இத்யாதி –

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11-ஆழ்வார் பிரணயித்வ குண அனுசந்தானத்தாலே தரித்தவாறே ஊரும் தளிரும் முறியுமாயிற்று -அகாலப்பலிநோ வ்ருஷா
சிவந்த தாமரையை உடைய பழனங்களை உடைத்தாய் தெற்குத் திக்குக்கு ஸ்லாக்யமான திரு நகரியை உடைய ஆழ்வார்-ந தே வாக ந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி -என்கிறபடியே திருவாய் மொழி எல்லாவற்றுக்கும் ஆதல்-அவாப்த ஸமஸ்த காமன் ஒரு சம்சாரியினுடைய சத்தாதிகளே தனக்கு போக உபகரணமாக இருந்தான் -என்கிற பிரணயித்வத்தில் ஒரு பொய் இன்றிக்கே இருக்கிற பத்து என்னுதல் –

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும்  குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற  எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-1-பூர்வே பூர்வேப்யோ வச ஏத தூசு -என்கிறபடியே பூர்வ பூர்வ உச்சாரண க்ரமத்தைப் பற்ற உத்தர உத்தர உச்சாரணம்   ஆகையாலே புருஷ புத்தி அதீனம் ஆனால் வரக் கடவ தோஷங்கள் ஒன்றும் இல்லாத வேதங்களும் –

நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவு றாள்மலிந் தாள்கண் டீர்இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான்என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.–6-5-4-அபவ்ருஷேயமாய் நித்தியமான வேதங்கள் –

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11–பழையதான வேதார்த்தத்தை அருளிச் செய்கையாலே சர்வேஸ்வரன் இதர சஜாதீயன் ஆனால் போலே -வேதமும் தமிழாய் வந்து இவர் பக்கலிலே அவதரித்த படி-செவ்விய தமிழ் -பசும் தமிழ் -அர்த்தத்தை விசதமாகக் காட்டுவது -இப் பத்தை அப்யஸிக்க வல்லார் ஸ்ரீ யபதிக்கு அடிமை செய்வார்-

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11–கேட்டார்கள் நெஞ்சை ஒரு நாளும் விடாதே வர்த்திக்கிற இப்பத்து –இப்பாசுரத்தை கேட்டார்க்கு சம காலத்தில் போலே சர்வ காலமும் ரசம் பிறக்கும் படி யாய்த்து இருப்பது-

அந்த வேதம் போலே இதுவும் அஸ்ம்ருத கர்த்ருகமாய் இருக்க வேண்டாவோ ? ஸ்ரீ ஆழ்வார் இதுக்கு கர்த்தா என்கையாலே ,நித்யத்வ அபௌருஷேயத்வங்கள் கூடாதீ என்ன சொல்லுகிறது மேல்-ஆனால்‌ “சொல்லப்பட்ட ஆயிரத்துள்‌” (திருவா. 8 – 10 – 11) என்று இவர் தம்மாலே சொல்லப்பட்டது என்கிற இதில்‌ கர்த்ருத்வத்தால்‌ நித்யத்வ-அபெளருஷேயத்வ-ஹாநி வாராதோ என்னில்‌, வாராதென்கிறார்‌. அது என் போல வென்னில்‌-

சொல்லப் பட்ட என்ற இதில் கர்த்ருத்வம் ஸ்ம்ருதி அத்தை ஸ்வயம்பூ படைத்தான் என்றது போலே-சூரணை -46-

அதாவது
சடகோபன் சொல்லப் பட்ட ஆயிரம்–திருவாய்-8-10-11–என்று இதில் ஸ்ரீ ஆழ்வாருக்கு சொன்ன கர்த்ருத்வம்-அநாதி நிதனா ஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா -என்று-(அநாதி அநிதன -பண்டை நின்ற வேதத்தை ) ஸ்ம்ருதி அந்த வேதத்தை-( ஜகத்தை-) பிரம்மா சிருஷ்டித்தான் என்று சொன்னாவோ பாதி என்கை- ஸ்வயம்பு சிருஷ்டித்தான் என்னாதே–படைத்தான்-என்றது முன்னம் திசை முகனை தான் படைக்க மற்றவனும் முன்னம் படைத்தனன் நான் மறைகள்-பெரிய திருமடல்-10 -என்று ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் தர்சிப்பைக்காக .. அநாதி நிதானமான சந்தர்ப்பம் பிரம்மாவின் வாக்கில் நின்றும் ஆவிர்பவித்த மாத்ரம் கொண்டு ,பிரம்மாவுக்கு அதில் சொன்ன கர்த்ருத்வ உபாதி இதிலும் ஸ்ரீ ஆழ்வாருக்கு சொன்ன கர்த்ருத்வம் ஆகையால் இத்தால் ,இதன் நித்யத்வ அபௌருஷேயத்வ ஹானி வாராது என்று கருத்து-

முன்னம்‌ திசை முகனைத் தான்‌ படைக்க, மற்றவனும்‌ முன்னம்‌ படைத்தனன்‌ நான்மறைகள்‌”! (பெ.திருமடல்‌) என்றும்‌, ““அநாதி நிதாநா ஹ்யேஷா வாகுத்ஸ்ருஷ்டா ஸ்வயம்பு வா?‘ (பார-சபா ) என்றும்‌ சொல்லுகிறபடியே, ஸ்ம்ருதி, “ப்ரஹ்மா வேதங்களைப்‌ படைத்தான்‌ ‘ என்ற இடத்தில்‌, அந்த ப்‌,ரஹ்மாவால்‌ வந்த கர்த்ருத்வத்தால்‌ அவறறினுடைய நித்யத்வ-அபெளருஷேயத்வங்களுக்கு ஹாநி வாராதாப் போலே இதுக்கும்‌ நித்யத்வ அபெளருஷேயத்வ ஹாநி வாராது –

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-வேதம் போலே தான் தோன்றி அன்றிக்கே இருக்கை-பரத்வம் போலே வேதம்-அவதாரம் போலே திருவாய்மொழி –பிரமேய சரமம் -பிராமண சரமம் -பரத்வ பர முது வேதம் -அர்ச்சாவதாரங்களை திருவாய் மொழி சொல்லுமே —

மன்னிய தாமரை மா மலர்ப் பூ பூத்தம் மலர் மேல் —–9
முன்னம் திசை முகனைத் தான் படைக்க -மற்றவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம்மறை தான் –10—-அந்தச் சதுர முகனும் முன்பு உண்டாக்கின நான்மறைகள் என்றால் போலே இருக்கிறது-சர்வேஸ்வரன் இவ் வேத அஷர ராசியை-ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே முன்புத்தை ஆநு பூர்வியை ஸ்மரித்துச் சொல்லும் என்று வேதத்தின் உடைய அபௌ ருஷேயத்வம் சொல்லா நிற்க-இவன் சிருஷ்டித்தான் -என்னில் பிரமாண விருத்தமாம் இறே-
இனித் தானே-யோ ப்ரஹ்மாணம் விததாதி   பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்று சொல்லுகிற்றவற்றோடும் விரோதிக்கும் இறே-ஆனால் பின்னை என் சொல்லிற்று ஆகிற்றது  என்னில்
இன்னான் தன் பிதாவின் பக்கல் படைத்த த்ரவ்யம் இன்னதனை -என்னுமா போலே அந்த ப்ரஹ்மாவும் சர்வேஸ்வரன் பக்கல் அதிகரித்த நாலு வேதங்களும் -என்றபடி- பிறந்து படைத்தான் -என்னக் கடவது இறே பெற்றத்தை –

பூர்வ சந்தர்ப்ப பிரக்ரியை இவர் தர்சிப்பித்து பேசினதே உள்ளது என்னும் இடத்தை அறிவிக்கிறார் மேல்-

நால் வேதம் கண்ட புராண ரிஷி மந்த்ர தர்சிகளை போலே இவரையும் ரிஷி முனி கவி என்னும்-சூரணை -47-

அதாவது
நால் வேதம் கண்ட புராண ரிஷி–நால் வேதம் கண்டானே -பெரிய திருமொழி-8-10-1–என்னும் படி
ஈஸ்வரன் தான் அடியிலே செய்தால் போல் நாலு வேதங்களையும் சாஷாத் கரித்து அஷ்டா தச புராணம் கர்த்தா சத்யவதீ ஸுத-என்கிற படி அஷ்டாதச புராணங்கள் உடைய ஆநு பூர்வியையும் தர்சித்துச் சொன்ன வேத வியாச பகவானை சொல்லுகிறது-நால் வேதம் கண்டான் -என்கிற இடத்தில் ஸ்வேன ரூபேண நின்று தர்சித்தமை அன்றிக்கே வியாச ரூபேண நின்று தர்சித்தமை தன்னைச் சொல்லுகின்றது இவருக்கு கருத்தாகவுமாம் சங்கீர்ண புத்தயோ தேவா பிரம ருத்ர புரஸ்ஸர சரண்யம் சரணம் ஜக்மு நாராயண மநாமயம்..தைர் விக்ஜ்ஞாபித்த கார்யஸ்து பகவான் புருஷோத்தம அவதீர்னோ மகா யோகி சத்யவத்யாம் பராசராத் என்றும்-கிருஷ்ண த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயண பிரபும் -என்றும் பகவத் ஏவச அவதாரயா பகவான் தானாக சொல்லக் கடவதிறே..–இப்படி இருந்துள்ள ஸ்ரீ வேத வியாச பகவானை வேதங்களின் பூர்வ சித்த அனுபூர்வியை தர்சித்து சொன்ன படியாலே தர்சநாத் ருஷி மனந சீலோ முனி கவி கிராந்த தர்சீ-என்கிற வர்தங்களை நினைத்துக் கொண்டு-ஸ்ரூயதாம் சிம்ஹனா தோயம் ருஷேச்தச்ய மகாத்மனா தர்மேச அர்த்தேச கர்மே ச மோஷே ச பரதர்ஷப -என்றும்-ஏவம் விதம் பாரதம் து ப்ரோக்தம் ஏன மகாத்மனா சோயம் நாராயணஸ் சாஷாத் வியாச ரூபீ மகா முனி –என்றும் சஷால் லோகான் பாவ்யமான கவி முக்ய பராசர்ய-என்றும்
ருஷி முனி கவி என்றும் சொல்லிற்று இறே–மந்த்ர தர்சிகள் ஆனவர்களை பூர்வ ஸித்த சந்தர்ப்பத்தை
சாஷாத் கரித்து சொன்னவர்கள் என்னும் இடம் தோற்ற நம ருஷிப்யோ மந்த்ர க்ருத்ப்ய -என்றும்
பகவான் சௌனக முனி -என்றும் இத்யாதிகளாலே ருஷி முனி என்று சொல்லிற்று இறே .-இவர்கள் விஷயத்திலும் கவி சப்த பிரயோகம் உண்டாகில் வந்த ஸ்தலங்களிலே கண்டு கொள்வது -ஆக இப்படி இவர்களை சொன்னால் போலே த்ராவிடமான இதின் பூர்வ ஸித்த அனுபூர்வியை சாஷாத் கரித்து பேசின இவ் ஆழ்வாரையும் –-ருஷிம் சுஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம்
சகஸ்ர சாகாம் யோத்ரா ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம்
–என்றும்-சடகோபம் முனிம் வந்தே சடானாம் புத்தி தூஷகம் , அஞ்ஞானம் ஜ்ஞான ஜனகம் திந்திரிணீ மூல சம்ஸ்ரயம் -என்றும்-உலகம் படைத்தான் கவி யாயினேற்கு -திருவாய்-3-9-10–என்றும் முன்பு உண்டான சந்தர்ப்பத்தை தர்சிப்பித்து பேசினவர் என்னும் இடம் தோற்ற ருஷி என்றும் ,முனி என்றும் ,கவி என்றும் சொல்லும் என்கை 

”நால் வேதங் கண்டானே”’ (திருமொழி 8 – 10 – 1) என்கிறபடியே நாலு வேதங்களைக்‌ கரை கண்ட வர்களையும்‌ அஷ்டாதஸ புராண கர்த்தாக்‌களையும்‌ “*சதுர் வேத தர்ஸநாத்‌ ருஷி:‘” என்கிறபடியே ருஷிகளென்றும்‌, ”ஜிதந்தே”” இத்யாதி, ஜிதந்தா- மந்த்ர தர்ஸிகளான சவ்நகாதிகளை முனிகளென்றும்‌, இதிஹாஸ கர்த்தாக்களான ஸ்ரீ வால்மீகி பகவான் போல்வாரை கவிகளென்றும்‌ சொல்லுமாப் போலே இவரையும்‌ ““ருஷிம்‌ ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்த்வமிவோதிதம்‌ | ஸஹஸ்ர ஸாகாம்‌ யோ த்‌ராஷீத்‌, த்‌ராவிடீம்‌ ப்‌ரஹ்ம ஸம்ஹிதாம்‌” (பரா.௮.) என்றும்‌, ““ஸட,கோபமுநிம்‌ வந்தே, ஸடாநாம்‌ புத்‌தி தூஷகம்‌ | அஜ்ஞாநாம்‌ ஜ்ஞாந ஜநகம்‌ திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம்‌””’ (பரா. அ) என்றும்‌, “உலகம்‌ படைத்தான்‌ கவி” (திருவா. 3 – 9 – 10) என்றும்‌ சொல்லுகையாலே இவரையும்‌ ருஷி முனி கவி என்னும்‌ என்கிறார் –

வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம்
உண்டானே உன்னை உகந்து உகந்து உன் தனக்கே
தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம்
கண்டானே கண்ண புரத் துறை யம்மானே—8-10-1-
பிரளய காலத்திலே இவற்றின் உடைய ஆநு பூர்வியை ஸ்மரித்து இருந்து வெளி இடுகை -இறே இவற்றைக் காண்கை யாவது-நித்தியமான வேதத்தில் சாஷாத் காரத்துக்கு மேற்பட இல்லை இறே (ஆகவே படைத்தானே என்னாமல் -கண்டானே -சப்தங்கள் போனாலும் ஆனு பூர்வி அழியாதே )அன்றிக்கே பட்டர் அருளிச் செய்ததாக சிறியாத்தான் பணிக்கும் படி – இது கர்த்தரி அன்று -கர்மணி கிடாய் -என்று பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்னும் இடத்தை யாயிற்று வேதங்கள் வெளி இட்டது –

ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோதிதம் |
ஸஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் ||
–3-எந்த ஒரு முனிவர் – ஆயிரம் சாகைகள் உள்ள சாம வேதம் போலே ஆயிரம் பாசுரங்களை யுடையதான திராவிட ப்ரஹ்ம சம்ஹிதையை சாஷாத் கரித்தாரோ, ஸ்ரீ கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்து அவதரித்தது என்று சொல்லும்படியான அந்த ஸ்ரீ சடகோப முனிவரை ஸேவிக்கிறோம்!

சடகோப முநிம் வந்தே சடாநாம் புத்தி தூஷணம் |
அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம் திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம் ||–6
-குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் – தீய மனத்தவர்களுடைய தீய மனத்தை கெடுத்து – அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும் – அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து – ஸ்ரீ திருப்புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான – இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்!

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–
3-9-10-ஸ்ருஷ்டிகள் பலித்ததில்லை என்று கை வாங்காதே மிகவும் ஒருப்பட்டு லோகங்களை உண்டாக்கினான் கவி ஆயினேற்கு-கவியாயினுக்கு
அவன் ஸ்ருஷ்ட்டி பலித்து அநந்யார்ஹனான எனக்கு என்றும் -கால தத்வம் உள்ளதனையும் வேறு சிலருடைய கவியில் எனக்கு அந்வயம் உண்டாகி தகுமோ-வேறு சிலர்க்கு கவியாக நான் தகு வேனோ என்றுமாம்-இப்போது பகவத் குணங்களை பாடி மேலும் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத – ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பாடப் புகுகிற நான் வேறு சிலர்க்கு தகு வேனோ

இன்னமும் இதன் உடைய அநாதித்வ ஸூசுகமானது ஒன்றை தர்சிப்பிக்கிறார் மேலே-

படைத்தான் கவி என்ற போதே இதுவும் யதா பூர்வ கல்பனம் ஆமே-சூரணை -48-

அதாவது உலகம் படைத்தான் கவி –என்கையாலே ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் -என்கிற படியே
ஒருப் பட்டு மேன்மேலும் லோக சிருஷ்டியை பண்ணும் இடத்தில் ஸுூர்யா சந்திர மசவ் ததா எத பூர்வ மகல்பயத்––தைத்ரியம்-என்கிற படியே ஸ்ருஷ்ட்டி தோறும் சந்திர சூர்யாதி சகல பதார்த்தங்களையும்
யதா பூர்வ கல்பனமாய் வருமா போலே திராவிட வேதமான இப் பிரபந்தமும் ஸ்ருஷ்ட்டி தோறும் யதா பூர்வ கல்பனமாய் வரும் என்று தோன்றும் இறே
என்கை ..

‘ஒன்றி யொன்றி உலகம்‌ படைத்தான்‌ கவியாயினேற்கு’” (திருவா-3-9-10) என்று அடுத்தடுத்து ஜகத் ஸ்ருஷ்டியைப்‌ பண்ணினவனுக்குக்‌ கவி யானேன்‌ என்கையாலே “ஸுூர்யா சந்தரமஸெள ததா யத பூர்வ மகல்பயத்‌?” (தை. உ.) என்று ஸ்ருஷ்டி தோறும்‌ ஸூர்யா சந்த்‌ரமாக்கள்‌ உண்டானாப் போலே  ஸ்ருஷ்டி தோறும்‌ இந்த ப்ரபந்தமும்‌ உண்டென்னுமிடம்‌ தோற்றுகிறது. இத்தாலும்‌ இதினுடைய அநாதித்வம்‌ சொல்லுகிறது.

ஏவம் பூதமான இது பகவத் பிரசாதத்தாலே ஆழ்வாருக்கு சித்தித்து ,-ஆழ்வார் பிரசாத்தாலே இவ் அருகு உள்ளாருக்கு உப ஜீவ்யமாய் ,இவரை இட்டு நிரூபிக்கும் படியானமையை ச த்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார் மேல்-ஆனால்‌ அதிகாரிகள்‌ ஸம்ஹ்ருதராக வேதம்‌ நித்யமானபடி என்‌ என்னில்‌, ஸர்வஜ்ஞனான ஸர்வேஸ்வரன்‌ நித்யனாகையாலே அவன் திருவுள்ளத்திலே வாஸனை கிடந்து ஸூப்த ப்ரபுத்‌த, ந்யாயத்தாலே ஸம்ஹாராநந்தரம்‌ “யோ ப்‌,ரஹ்மாணம்‌ விததாதி பூர்வம்‌ யோ வை வேதாம்ஸ் ச பரஹிணோதி தஸ்மை” (ஸ்வே.6 – 18) என்கிறபடியே ப்‌,ரஹ்மாவை உண்டாக்கி, அநந்தரம்‌ அவனுக்கு வேத ப்ரதாநத்தைப் பண்ண, ஸர்வேஸ்வரனோடே அத்‌யயநம்‌ பண்ணின அந்த ப்‌ரஹ்மாவானவன்‌ ஜ்யேஷ்ட புத்ரனான ருத்‌ரன்‌ தொடக்கமானாரை ஒதுவித்தாப் போலே ஸர்வேஸ்வரன்‌ இந்த த்‌ராவிட வேத ஸம்ஸ்காரத்தைத்‌ திருவுள்ளத்திலே வைத்து இவரை ஓதுவிக்க, இவரும்‌ தம் பக்கலில்‌ க்ருதஜ்ஞரான ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை அத்‌யயநம்‌ பண்ணுவிக்க, இதுவும்‌ இவரை யிட்டு நிரூபிக்கும்படி யாய்த்து என்கிறார்‌-

உறக்கம் தலை கொண்ட பின்னை மறை நான்கும் உணர்ந்த தங்கள் அப்பனோடே ஓதின சந்த சதுமுகன் சலம் கலந்த வெண்புரி நூல் மானுரி திரி தந்து உண்ணும் காமன் உடல் இருக்கு இலங்கு
ஜ்யேஷ்ட புத்ராதிகளுக்கு மறை பயந்தாப் போலே-ஆதுமில் காலத்து எந்தையான வாய் முதல் அப்பன் பிரம குருவாய் இராப் பகல் முன் சொல்ல-கற்றனமே என்ற இவரும் நாவினால் நன்மையால் என்னும் ஓத வல்ல பிராக்களை கன்மின்கள் என்று சொல் பயிற்ற வேதம் ஓதுவார் ஒத்து ஆகையாலே ஆதர்வணாதிகள் போலே இதுவும் பேர் பெற்றது-சூரணை -49-

அதாவது
உன்னிய யோகத்து உறக்கம் தலை கொண்ட பின்னை-பெரிய திருமடல் -8- -என்கிற படியே சம்ஹ்ருதி சமயத்தில் நாம ரூப விவாகநர்ஹமாய் சதவஸ்தமாய் கிடந்த இத்தை ஸ்ருஷ்ட்டி காலம் வந்தவாறே
விபக்தம் ஆக்கி மகதாதி சகல தத்வங்களையும் அண்டத்தையும் சிருஷ்டித்து சதுர் முக சிருஷ்டிக்கு முன்னாக ஏகார்ணவத்திலே –இவை நல் வழியாய் கரை சேரும் விரகு ஏதோ -என்று அனுசந்திக்கை யாகிற யோக நித்தரை செய்த அனந்தரம்

உன்னிய யோகத் துறக்கம்‌ தலைக் கொண்ட பின்னை”’ (பெ. திருமடல்‌) என்கிறபடியே “ந ப்ரஹ்மா நேஸாநோ நேமே த்‌யாவாப்ரூதிவீ ந நக்ஷத்ராணி”’ (மஹோபநிஷத்‌) என்றும்‌, ““ப்ருதி வ்யப்ஸு ப்ரலீயதே” என்று தொடங்கி, “மஹாநவ்யக்தே லீயதே அவ்யக்தம் அஷரே லியதே அக்ஷரம்‌ தமஸி லீயதே தம? பரே தேவ ஏகீ பவதி” ‘(ஸு.உ.), “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்‌” (ம.உ.) என்றும்‌, ““ஒன்றுந் தேவுமுலகுமுயிரும்‌ மற்றும்‌ யாதுமில்லாவன்று”” (திருவா. 4 – 10 – 1) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸகல தத்த்வங்களும்‌ அவர் பக்கலிலே ஏகீபவித்து ‘அப்ரஜ்ஞாதமலக்ஷணம்‌”‘ (மநு. 1 – 5) என்கிறபடியே நாம ரூப விபாகா நர்ஹமாய்‌ அவனை யிட்டு நிரூபிக்க வேண்டும்படி அவனெருவனுமேயாய்‌ மேல்‌ ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே சேதநருடைய ரக்ஷண ப்ரகாரங்களைத்‌ திரு வுள்ளத்தோடே கூட்டுகிற தஸை யிறே ஸம்ஹாரமாவது.

தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்———6
என்னும் இவையே முலையா வடிவமைந்த
அன்ன நடைய வணங்கேய் அடி இணையைத்—————7
தன்னுடைய அம் கைகளால் தான் தடவத் தான் கிடந்ததோர்
உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட—————8தான் கிடந்து –-ஸ்வதஸ்   சர்வஞ்ஞானாய் -ஒன்றால் ஒரு காலுஷ்யம் இன்றிக்கே இருக்கக் கடவ அவன்-இவள் உடைய ஸ்பரசத்தாலே  வந்த ஸூகத்தாலே இரண்டும் அறியாதே கிடந்தது உறங்கா நிற்கும் –தோர் உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட பின்னை   – அல்லாதார்க்கு முன்பே தானே நெஞ்சு இருண்டு இருக்கும் இ றே
அதுக்கு மேலே கண்ணைச் செம்பளித்தவாறே புறம்பு பிரகாசிக்கிற இதுவும் போய் இருளும் இறே –
இவனுக்கு அங்கன் ஒன்றும் இன்றியே திருக் கண்களை செம்பளித்தால் அகவாயில்
பிரகாசிக்குமதுக்கு வர்த்தமானாய் இருக்கும் –உன்னுகை –அனுசந்திக்கை –யோகத் துறக்கம் –
ரஜஸ் தமஸ் ஸூ க்களால் அபி பூதனாய்உறங்குகிறான் -அன்று-உறங்குவான் போல் யோகு செய்த பெருமான்
-திரு வாய் மொழி -5-4-11-யோக நித்தரை இறே அவை நல் வழியாக கரை சேரும் வகையதோ -என்று ஜகத் ரஷண சிந்தை பண்ணிக் கொண்டாயிற்று கண் வளர்ந்து அருளுகிறது –

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்

குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1–தேவ ஜாதியும் அவர்களுக்கு இருப்பிடமான லோகங்களும் மனுஷ்யாதிகளான ஆத்மாக்களும் அண்டத்துக்கு அடியான மஹதாதிகளும் ஒன்றும் இல்லாத அன்று-ஒன்றும் தேவும் என்று தேவாதி காரியங்களுக்கு காரணத்திலே லயத்தை சொல்லுகிறது என்று ஒரு தமிழன் சொன்னான் அன்று,-கரண களேபரங்களை இழந்து அசித் விசிஷ்டமாய்க் கிடந்த அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்-சதுர்முகனோடு கூட தேவ ஜாதியையும் லோகங்களையும் மனுஷ்யாதி யாத்மாக்களையும் உண்டாக்கினான் – இவை அழிந்தது என்கிற இடத்தில் மஹதாதிகளையும் சொன்னார் –ஸ்ருஷ்டியில் ப்ரஹ்மா தொடக்கமாக சொன்னார் இதுக்கு கருத்து என் என்னில்-மஹதாதிகளிலே பரத்வ சங்கை பண்ணுவார் இல்லாமையால் பரத்வ சங்கை பண்ணுகிற இடமே பிடித்துச் சொல்லுகிறார் -அவர்கள் பக்கல் பரத்வத்தை கழிக்கைக்காக- சதுர்தச புவன சிரேஷ்டாவோடு -அவனாலே ஸ்ருஷ்டராய் நித்ய ஸ்ருஷ்டிக்கு கடவரான தச பிரஜாபதிகளோடு அவர்களுக்கு போக ஸ்தானமான லோகங்களோடு -அவர்களுக்கு குடி மக்களான மனுஷ்யாதிகளோடு வாசி அற படைத்தான்-போக மோக்ஷங்களை விளைத்து கொள்ளுகைக்காக கரணங்களைக் கொடுத்தான்

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11—நம்மால் கார்யம் இல்லாத இவர்களால் கார்யம் என் -என்று லோகத்தாரை விட்டு -இத்தசையை விளைத்தவன் இவ்வளவில் செய்வது என் -என்று அவளை அனுசந்தித்தார் –ஜகத் ரக்ஷணார்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின படியை அனுசந்தித்து –இப்போது வாராமையாலே வெறுத்தோம் அத்தனை -நம்முடைய ரக்ஷண சிந்தை பண்ணிக் கிடக்கிறன் நம்மைக் கை விடான் -என்று இம் மஹா குணத்தை அனுசந்தித்து தரிக்கிறார்-கண் வளருகை என்று ஒரு பேராய்-ஜகத் ரக்ஷண உபாய சிந்தை பண்ணுகிற சர்வேஸ்வரனை

உணர்ந்தாய் மறை நான்கும் -இரண்டாம் திருவந்தாதி -48–என்கிற படியே-ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே ,சம்ஸ்கார கதமாய் கிடந்த நாலு வேதங்களையும் ஆநு பூர்வி தப்பாத படி ஸ்மரித்த –திசை முகனார் தங்கள் அப்பன் -என்கிற படியே தனக்கு ஜநகனான சர்வேஸ்வரனோடே-
யோ வை வேதாம்ச ப்ரஹனோதி தஸ்மை –ஸ்வேதாஸ்வர உபநிஷத்–என்னும் படி ஓதின –
சந்த சது முகன் –பெரியாழ்வார் திருமொழி-2-5-8–என்கிற படி சந்தசை நிரூபகமாக உடைய சதுர் முகன் –சலம் கலந்த செஞ்சடை –திருச்சந்த –113-வெண் புரி நூல் மார்வன் -முதல் திருவந்தாதி -46- –மானுரிய தளம் உடையவர் –பெரிய திருமொழி-10-9-4-பிறர் மனை திரிந்து உண்ணும் -திருக் குறும் தாண்டகம் -19-
காமன் உடல் கொண்ட தவத்தார் -நான்முகன்-78- இருக்கிலங்கு திருமொழிவா எண் தோள் ஈசர் -பெரிய திருமொழி-6-6-8- என்று நித்ய ஸ்நான உபவீத கிருஷ்ணாஜினதரான-பிஷான போஜன -இந்திரிய ஜெய -சதா அத்யயன – பரத்வங்களான பிராமச்சர்ய லஷண யுக்தனாய் -ப்ரஹ்மண புத்ராயா சேஷ்டாய – என்கிற படியே தனக்கு ஜேஷ்ட புத்ரனான ருத்ரன் முதலானார்க்கும் – சரணாம் மறை பயந்த -முதல் திருவந்தாதி-60–என்கிற படியே புருஷார்த்த தத் உபாய ஞான சாதனமான வேதத்தை ஒதுவித்தாப் போலே —

பின்னை ஸம்ஹாராநந்தரம்‌ யோக, நித்‌ராஸமா ரூடனாய் ஸ்ருஷ்ட் யுந்முகனான காலத்தில்‌  ““உணர்ந்தாய்‌ மறை நான்கும்‌’” (இ.திருவ.48) என்கிறபடியே நாலு வேதங்களையும்‌ ஸ்மரித்த “திசை முகனார்‌ தங்களப்பன்‌” (திருமொழி 2 – 2- 7) என்கிறபடியே தனக்குப்‌ பிதாவான ஸர்வேஸ்வரனோடே அத்‌யயநம்‌ பண்ணின.–முன்புள்ளவையை யிறே அத்‌யயநம்‌ பண்ணலாவதும்‌-ஸ்மரிக்கலாவதும்‌- ”சந்தச் சதுமுகன்‌” (பெரியா. 2 – 5 8) என்கிறபடியே ப்‌,ரஹ்மாவானவன்‌ ”சலங் கலந்த செஞ்சடை”, (திருச்ச. 113) “வெண் புரிநூல் மார்வன்‌”’(மு.திரூவ. 46) , ““மானுரியதளுமுடையவர்‌‘ (திருமொழி 10 9 – 5) , ““பிறர் மனை திரி தந்துண்ணும்‌”’ (திருக்குறு. 19) , ““காமனுடல் கொண்ட தவத்தான்‌”’ (நா.திருவ.. 79) , ““இருக்கிலங்கு திருமொழி வாய்‌ எண்டோளீசர்‌”’ (திருமொழி 6 – 6 – 9) என்றும்‌, நித்ய ஸ்நாந யஜ்ஞோபவித க்ருஷ்ணாஜிந தாரணமும்‌, பிக்ஷாசரணமும்‌, ஜிதேந்த்‌ரியத்வமும்‌, ஸதா அத்‌யயந பரத்வமுமாகிற ப்‌ரஹ்மசர்ய லக்ஷணத்தை உடையனாய்‌, “ப்‌ரஹ்மண? புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய”’ என்கிறபடியே ஜ்யேஷ்ட புத்ரனான ருத்ரன் முதலானார்க்கு சரணா மறை பயந்த தாமரையான்‌’‘ (மூ.திருவ. 60) என்று புருஷார்த்த, தத் ஸாதந ஜ்ஞாந ஸாதநமான வேதத்தை ஓதுவித்தாப் போலே

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48–நாலு வகைப்பட்ட வேதங்களையும் ஸ்மரித்தாய்–பிரளய காலத்திலே இவை இழந்து கிடக்கிறபடி திரு உள்ளத்திலே பட்டு இவற்றை அடித் தொட்டும் யுண்டாக்க வேணும் என்று கோலி யருளி ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே மறந்தவன் நினைத்தால் போலே -உறங்கினவன் உணர்ந்தாப் போலே -மறைந்து கிடந்த வேதங்களையும் யுண்டாக்கினாய்–அந்த ஆனுபூர்வி தப்பாதபடி ஸ்மரிக்கையாலே- அபௌ ருஷேயத்வமும் நித்யத்வமும் எல்லாம் சித்தித்தது ஆய்த்து வேதத்துக்கு –வாக்யத்துக்கு பத நியதியோபாதியும் போருமாய்த்து -பதங்களில் வர்ண நியதியும் – வேதங்களும் தன்னோடு ஒக்க நித்யமாய்ப் பழையதாய் இருக்கையாலே பண்ணினான் என்னாதே உணர்ந்தான் என்கிறது-பூர்வே பூர்வேப்யோ வாச எத தூசு -காட்டகம் -3-9-50–உளன் சுடர் மிகு சுருதியுள் -என்றும் முது வேத முதல்வன் -திருவாய் 1-6-2- செப்பெட்டைக் கையிலே கொடுத்து நிதியைக் காட்டுமாப் போலே –

திங்களப்பு வானெரி காலாகித் திசை முகனார்
தங்களப்பன்
சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண்
தொங்கலப்பு நீண் முடியான் சூழ் கழல் சூட நின்ற
எங்களப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-7–கார்ய வர்க்கத்துக்கு உப லஷணமாக சந்திரனையும் காரணமான பூத பஞ்சகத்துக்கு உப லஷணமாக நாலையும் சொல்லி இவற்றுக்கு அந்தராத்மாவாய் நிற்கிறான் என்றபடி -சதுர் முகனுக்கும் ஜநகன் ஆனவன் –

உந்தி எழுந்த வுருவ மலர் தன்னில்
சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன்

கொந்தக் குழலை குறந்து புளி யட்டித்
தந்தத்தின் சீப்பால் குழல் வாராய் அக்காக்காய்
தாமோதரன் தன்  குழல் வாராய் அக்காக்காய் -2 5-8 – திரு நாபியிலே கிளர்ந்த அழகிய தாமரைப் பூவிலே உருவம்-அழகு –ஜகத் சிருஷ்டியில் வந்தால் தன்னோடு ஒக்க விகல்ப்பிக்கலாம்படி ஞான சக்திகளால் வந்த வைலஷண்யத்தை உடைய சதுர்முகனை சிருஷ்டித்தவன்-சந்தம் -அழகு–அன்றிக்கே
சந்தம் என்று சந்தஸை வேதத்தை தனக்கு நிரூபகமாக உடையவன் -என்னவுமாம்-

சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்டலைப்
புலன் கலங்க வுண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே –113-கங்கா ஜலத்தை சாகல்யேந  தன்னுள்ளே அடக்கினதாய் -சிவந்த சடையையும் -ஷீராப்தி சமுத்திதமான விஷத்தாலே கறுத்த கண்டத்தையும் உடைய ருத்ரன் –கங்கா தரத்வமும் -நீல கண்டத்வமும் -இவனுடைய சக்திக்கு ஸூசகமாய் இருக்கிறது –சிவந்த ஜடை என்கையாலே -இந்த சக்தி சாதித்துப் பெற்றது என்கைக்கு ஸூசகம் –இப்போது இவனுடைய சக்தி சொல்லுகிறது என் -என்னில் – குரு பாதக ஹேதுவாய் இருந்துள்ள இந்த துர்மாநத்துக்கு அடி இந்த சக்தி என்கைக்காக –சத் பிரக்ருதிகளுக்கு உண்டான சக்தி சாத்விகருக்கு நிழல் ஆமாப் போலே துர்மாநிகளுக்கு உண்டானது பிறர்க்கும் பாதகமாய் இறே இருப்பது –

பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார் –46-அழகிய ஸ்வரத்தை யுடைத்தான வேதத்தைத் தரித்துள்ள ப்ரஹ்மாவினுடைய தலையை ருத்ரன் அறுத்தான் ஆய்த்து-லோக குருவுமாய் தனக்குப் பிதாவுமான அவனுடைய சிரஸை இறே சேதித்தது   –வாமாங்குஷ்ட நகாக்ரேண சிந்னம் தஸ்ய சிரோ மயா -என்கிறபடியே – அவனும் கபாலீத்வம் பவிஷ்யசி -என்று சபிக்கப்ரஹ்ம ஹத்யையாலே அத்தலை யோட்டிலே சிரகாலம் பிஷை புக்குக் கொடு திரிந்தான் ஆய்த்து –வெண் புரி நூல் மார்பன் வினை தீர –
பிராயச்சித்த வேஷத்தோடு கூட சர்வேஸ்வரன் உடைய முன்னே வந்து தோற்றினான் ஆய்த்து –விநீத வேஷத்தோடு ப்ராயசித்தியான படி – மூலை யடியே திரிந்தார் பாதகிகள் ஆனவாறே முழுகித் திரியுமா போலே இவனும் தேவியும் சண்டேஸ்வரனும் அப்படியே-வினை தீர –என்கிற இத்தால் இவனுடைய கர்ம வஸ்யத்வமும் தான் பண்ணின கார்யம் தனக்குப் பரிஹரிக்கப் போகாமையும் சொல்லுகிறது
இத்தால் ஈஸ்வரத்வ சங்கை இல்லை -என்கிறது –

மல்கிய தோளும் மானுரியதளும் உடையவர் தமக்குமோர் பாகம்
நல்கிய நலமோ நரகனைத் தொலைத்த  கர தலத்தது அமைதியின் கருத்தோ
அல்லியங் கோதை யணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
சொல்லி யென் நம்பி இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே –10-9-4—பல தோள்களை உடையனாய் – மானுடைய தோல் என்னுதல் –அன்றிக்கே-மகானான ஆனையினுடைய தோலை உடையனாய் (மானுரியதளும்-மான் -மகான் -மான் யானை -இரண்டின் -உரி அதளும் )-தன் தபோ பலத்தாலே நான் கார்யம் கொள்ள வல்லேன் -என்று கொண்டு துர்மானத்தை உடையனாய் இருக்கிற ருத்ரனுக்கும் திரு மேனியிலே இடம் கொடுத்த சீலாதிசயத்தை நினைத்து இருக்கிறாயோ –

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை  திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர்
உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே -19–உளுத்து அளம் பற்றின சுவர் போலே
பொடி உதிருகிற தலையோட்டையைக் கையிலே ஏந்தி –முடை யடர்த்த சிரம் ஏந்தி -மூ வுலகும் பலி திரிவோன் -என்கிறபடியே நெடும் காலம் கையோட்டைக் கொண்டு திரிந்து இரந்து உண்டான் –வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில்
தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே
—1-5-8-)

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தான் குமை உணர்த்த
-வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78—மன்மதனுடைய உடலை நீறாக்கின தபஸ்ஸை யுடைய ருத்ரனுக்கு-மஹிஷியான உமையானவள் முறை மாறாடி அஞ்ஞான ஞாபனம் பண்ண-

முருக் கிலங்கு கனித் துவர் வாய் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச்  சென்று வென்றிச்
செருக் களத்து திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக் கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு  எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-8–வேதத்தில் ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளை உச்சரியா நின்றுள்ள வாயை உடையராய் எட்டுத் தோள்களையும் உடையராய் இருக்கிற தேவர்க்கு -(ருத்ரன் )-

சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு ———–60–எல்லாருக்கும் ஹிதத்தை சொல்லக் கடவதான வேதத்தை ஓதுவிக்கப் பட்ட ப்ரஹ்மாவோடு –-சரணா மறை பயந்த–என்றத்தை -அரணாய-என்றத்தோடே கூட்டி ஈஸ்வரனுக்கு விசேஷணம் ஆக்கவுமாம் –சரணா மறை பயந்த–அபிமத சித்திகளுக்கு அடைத்த உபாய பேதங்களை யுடைய வேதங்களை ஜகத்துக்கு ஓதுவிக்கும்-ப்ரஹ்ம விதாவான ப்ரஹ்மா மந்த்ர க்ருத் என்பது(ப்ரஹ்ம விதம் வர -ப்ரஹ்மத்தை அறிந்தவர்களின் ஸ்ரேஷ்டரான நான்முகன் )

ஆதுமில் காலத்து எந்தை-திருவாய் -3-3-4- –என்றும் –ஒன்றும் தேவும்-திருவாய் -4-10-1- -இத்யாதிப் படியே
ஒன்றும் இல்லாத சம்ஹார காலத்திலே-நாம ரூபங்களை இழந்தவோ பாதி-சத்தையும் இழந்து போகாமே எந்தையான முறையாலே தன் மேல் ஏறிட்டுக் கொண்டு நோக்கி-மீளவும் கரணாதிகளை தந்து , ஞான விகாசத்தை பண்ணின –வாய் முதல் அப்பன்-திருவாய் -7-9-3- -என்கிற வாய்த்த காரண பூதனான உபகாரகன்-பீதக வாடை பிரானார் பிரம குருவாக வந்து -பெரியாழ்வார் -5-2-8–என்கிற படியே தானே ஆசார்யனாய் –-இராப் பகல் ஓதுவித்து பெரியாழ்வார் -5-2-3–என்கிற படியே -திவாராத்ர விபாகம் அற-என் முன் சொல்லும் -திருவாய் -7-9-2–என்கிற படியே – முன் உருச் சொல்ல – திரு நாமச் சொல் கற்றனமே -திருவிருத்தம் -66–என்று அநூச்சாரணம் பண்ணினேன் என்று இப்படியே அவனோடு ஓதின இவரும்-

ஆதுமில்‌ காலத்தெந்தை”’ (திருவா. 3 – 4 – 4) என்கிறபடியே-சேதநாசேதநாத்மகமான ஸகல பதார்த்தங்களும்‌ வஸ்துத்வ-நாம பாக்த்வங்களை இழந்த காலத்தில்‌ இவற்றைத்‌ தன் பக்கலிலே ஏறிட்டுக் கொண்டு நோக்கி, “எந்தை” என்கிற படியே ஸ்வாமியா யிருக்கிறவன்‌. “என்‌ வாய் முதலப்பன்‌’‘ (திருவா. 7 – 9 – 3) எனக்கு வாய்த்த ப்ரதமோபகாரகன்‌ என்கிற. ““பீதகவாடைப் பிரானார்‌ பிரம குருவாகி’” (பெரியா. 5 – 2 – 8) என்கிறபடியே ஸர்வேஸ்வரன் தானே இவர் தமக்கு ஆசார்யனாய் வந்து ““எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகலோதுவித்து”’ (பெரியா. 5 – 2 – 3) என்கிறபடியே திவா ராத்ரமோதுவித்து. இப்படி ஓதுவிக்குமிடத்தில்‌ “என்‌ முன்‌ சொல்லும்‌ மூவுருவாம்‌ முதல்வனே”’(திருவா. 7 – 9 – 2) என்கிறபடியே ஈஸ்வரன்‌ முன்னுருச் சொல்ல, “’திருநாமச் சொல்‌ கற்றனமே” (திருவிரு. 64) என்று அநூச்சாரணம்‌ பண்ணினேன்‌ என்று அவனோடே ஓதின இவரும்‌.

சாதி மாணிக்கம் என்கோ! சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ! தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ! ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே.–3-4-4–எனக்கு ஒரு துணை அல்லாத சம்சார அவஸ்தையில் தன்னோடே உண்டான சம்பந்தத்தை அறிவித்தவன்-எனக்குத் தன்னைப் பெறுகைக்கு முதல் ஒன்றுமில்லாத காலத்திலே, தான் எந்தையான முறையை எனக்கு அறிவித்து, பின்பு ஒரு காலமும் நழுவ விடாதே பாதுகாத்து, இதுதான் என்பக்கல் ஒரு பிரயோஜனம் கொண்டன்றியே நிர்ஹேதுகமாகத் தன் பேறாகப் பாதுகாத்தவனை.

ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!
–7-9-3–என்னை உபகரணமாகக் கொண்டு -கர்த்தாவும் தானேயாய் -கர்மீபவிப்பானும் தானே யானான்-எனக்கு வாய்த்த -காரண பூதனான -உபகாரகனை-இனி ஒரு நாளும் மறக்க உபாயம் இல்லை-

ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -5- 2-8 –-ஸ்ரீ சர்வேஸ்வரத்வ சிஹ்னமுமாய் –
ஸ்ரீ புருஷோத்வ லஷணமுமாய் இருக்கும் திருப் பீதாம்பரத்தை உடைய சர்வேஸ்வரன்-ப்ரஹ்மத்தை உபதேசிக்கிறவன்-உத்பாதக ப்ரஹ்ம பித்ரோர் கரீயான் பிரமத பிதா –என்னக் கடவது இறே-ப்ரஹ்ம சப்தம் ஞான வாசி-ஈஸ்வரத் பிடார் கொண்டு திருத்த ஒண்ணாமல் ஆசார்யனாய் இறே திருத்துவது (மண் மிசை மாதவன் —-நண்ணறு ஞானம் தலைக்கொண்டது அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே )

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன் புல சேவை அதக்கி
கயிற்றும் அக்கும் ஆணி கழித்து காலிடை பாசம் கழற்றி
எயிற்றிடை மண் கொண்ட எந்தை யிராப் பகலா ஓதுவித்து என்னை
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே -5- 2-3 –பிரளய ஆவர்ணத்திலே அகப்பட்டு கிடக்கிற பூமியை எடுத்தால் போலே – சரீர வச்யனான என்னை எடுத்த ஸ்வாமி –திவா ராத்ர விபாகம் அற-சர்வ காலமும் -என்றபடி –என்னை சிஷிப்பித்து –அதாவது –கர்ப்ப வாசமும் —இந்திரிய வச்யத்வமும் –கர்ம வச்யத்வமும் –யம வச்யத்வமும் – த்யாஜ்யம் என்னும் அத்தை அறிவித்து-தன்னுடைய சர்வ சேஷித்வத்தையும் – நிரதிசய போக்யதையும் – தமக்கு சேஷத்வம் ஸ்வரூபம் என்னும் இடத்தையும் ஆய்த்து -ஒதுவித்து–இத்தை அனுஷ்டான பர்யந்தமாக்கி – செய்யேல் தீ வினை ( திருவாய் -2-9-3 ) -என்று-ஓதுவித்த பிரயோஜனம் பெற்ற படி – நித்ய கைங்கர்யம் கொள்ளக் கடவோம் -என்று திரு உள்ளத்தாலே அறுதி இட்டு -கொண்டபடி –

என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-
–அவன் முன்னே சந்தை இட பின்னே சொன்னேன் –தானே சொன்னான் ஆகில் ஸ்ரீ கீதை போலே வறமுறுகலாம் இறே –அது தானே ஏது போலே என்னில் த்ரி மூர்த்திகள் என்று தன்னையும் கூட எண்ணும் படி ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அடியானால் போலேயும் -ப்ரஹ்மாவை ஓதுவித்து தேவர்களுக்கு வெளிச்சிறப்பு பண்ணி அத்தை அவன் தலையிலே ஏறிட்டால் போலேயும் -ருத்ரனுக்கு அந்தராத்மாவாய் நின்று திரிபுர தஹனம் பண்ணி அவன் தலையிலே ஏறிட்டால் போலேயும் தானே காரியம் செய்து பிறர் கையிலே ப்ரஸித்தியை ஏறிடுகை பண்டே ஸ்வபாவம் என்கை –

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64–பூர்ண அனுபவம் பெறாமையாலே சத்தை கிடைக்கைக்காக அவன் திரு நாமத்தைச் சொல்லுகையை அப்யஸித்தோம் (இத்தனை ) என்றபடி-இல்லாமையால் கருக்காய் கடிப்பார் போல் ஆயிற்று- இவருடைய அபிநிவேசத்துக்கு திரு நாமம் –அவனைக் கண்ணாலே கண்டு கையாலே அணைக்க-ஆசைப்பட்டாருக்கு அவன் பேரைக் கொண்டு என் செய்வார்-அதிகாரம் இல்லை யாகிலும் திரு நாமம் மாத்ரம் சொன்னேன் – இத்தை வ்யாஜ்யமாக்கி நிர்ஹேதுகமாக கடாஷித்தான் என்றபடி –அவர்களைப் போல் பக்தி பரவசனாய் அனுபவிக்க பெறாமை இழந்தேன் என்றும் –அவர்கள் அனுபவிக்கும் விஷயத்தை கிட்டி அவத்யத்தை விளைத்தேன் என்றும் விஷாதத்திலே தாத்பர்யம்-

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்று தொடங்கி– குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவன் -என்று ஸ்வாச்சார்ய பிரேமத்தையும்-நன்மையால் மிக்க நான் மறை யாளர்கள் புன்மையாய் கருதும் படியான என்னை அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் -என்று க்ருதக்ஜைதையை முன்னிட்டு கொண்டு – ஓத வல்ல பிராக்கள்-திருவாய்-9-1-11- -என்று இத்தை அப்யசிக்க வல்ல உபகாரகர் என்னும் படி .. ஸ்ரத்தா பூர்வகமாக ஓதும் ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை-கன்மின்கள் என்று உம்மை யான் -என்கிற படியே -இத்தை அப்யசி யுங்கோள்–என்று சொல்லி ,-சொல் பயிற்றிய -திருவாய்-9-5-8–என்கிற படியே -இச் சப்தத்தை அப்யசிக்க-வேதமானது -ஓதுவார் ஒத்து -என்று அத்யேதாக்களை இட்டு நிரூபிக்கபடுமது ஆகையாலே ,ஆதர்வணம் ,தைத்ரியம் காண்வம் என்று பேர் பெற்றால் போலே , இவர் இதுக்கு பிரதமாத்யேதாவனது கொண்டு -இதுவும் சடகோபன் சொல் -திருவாய்–1-2-11–என்று பேர் பெற்றது என்கை

‘நாவினால்‌ நவிற்றின்பமெய்‌தினேன்‌”’ (க.நு.சி. 2) என்று தொடங்கி ““குருகூர் நம்பிப் பாவினின்னிசை பாடித் திரிவன்‌”” என்றும்‌, “நன்மையால்‌ மிக்க நான்மறையாளர்கள்‌ புன்மையாகக்‌ கருதுவரா”ம் படியான “என்னை ஆண்டிடும்‌ தன்மையான்‌ சடகோபன்‌’‘ (க.நு.சி,4) என்கிற ப்ரதிபத்தியை யுடைய *ஓத வல்ல பிராக்களான ஸ்ரீமதுரகவிகள் போல்வாரை ““கன்மின்களென்றும்மை யான்‌ கற்பியா வைத்த மாற்றம்‌” (திருவா, 6 – 8 – 6) என்கிறபடியே இப் ப்ரபந்தத்தை அப்‌யஸியுங்கோள்‌ என்று ““சொல் பயிற்றிய நல் வளமூட்டினீர்‌”” (திருவா. 9 – 5 – 8) என்கிறபடியே சொல்லிச்‌ சொல்லுவிக்க, வேதமானது “’ஓதுவாரோத்தெல்லாம்‌ ‘? (திருவா, 3 – 1 – 6) என்கிறபடியே அத்‌யேதாக்களை யிட்டு, அதர்வணமென்றும்‌, தைத்திரீயம்‌ என்றும்‌ பேர் பெற்றாப் போலே இதுவும்‌ “சட கோபன் சொல்‌”” என்கையாலே ‘திருவாய்மொழி’ என்று பேர் பெற்றது 

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே-9-1-11-–சம்சாரத்தின் தண்மையும்-ஈஸ்வரனே ப்ராப்ய ப்ராபகங்கள் என்றும் இறே இதில் சொல்லிற்று -இத்தை அப்யஸித்து நல்வழியே போமிது இறே உபகாரகராகை யாவது–அத்தை அப்யசிக்கைக்கு ஹேதுவான சரீர பரிக்ரஹம் பண்ணின காலமே பிடித்து நாதர் என்கிறார் –

என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லிச்
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6—நீங்கள் அபேக்ஷியாது இருக்க -நான் சொல்லுங்கோள் என்று -ரஷ்யங்களான உங்களை -ரஷகை யான நான் -கற்பித்து வைத்த மாற்றம் -தண்துழாய் நமக்கன்றி நல்கான்-என்கின்ற மாற்றத்தை என்னுதல் –இதுவோ தக்கவாறு என்று கற்பித்த மாற்றத்தை என்னுதல்–அவனுக்கு மறுமாற்றத்துக்கு அவகாசம் இல்லாத படி -கிட்டினால் -என்று இராதே -வழியே பிடித்து சொல்லிக் கொண்டு செல்லுங்கோள்-

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே
–9-5-8—தயிரும் பழம் சோறும் -பாலும் வெஞ்சோறும் அவ்வவ காலங்களுக்கு உசிதமாகத் தந்து திரு நாமங்களை கற்பித்ததற்கு பிரதியுபகாரம் பண்ணினி கோள்-நல்ல சம்பத்தை புஜிப்பித்தி கோள் -நான் காலம் தோறும் உங்களுடைய ரக்ஷணம் பண்ணிப் போந்தேன் -நீங்களும் இவ்விடங்களில் நலிந்து போந்தி கோளே-

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6-ஓதுவார் என்கையாலே -அதிகாரி வைவித்யத்தைச் சொல்லுகிறது – ருகாதி சதுர் வேதங்களும் அத்யேத்ரு பேதத்தாலே பிறந்த சாகா பேதங்களும் –ஆக அத்யேத்ரு பேதத்தால் சாகா பேதங்களாய்க் கொண்டு பிரி யுண்ட வேதங்கள் எல்லாம்

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11-ஹிதம் -நன்மை சொல்ல என்று இழிந்து அஹிதத்தை -தீமையைச் சொல்லுவான் ஒருவன் வார்த்தை அன்று; ஆப்த தமரானவர் வார்த்தை என்கை.

ஆக –அத்யயன -சூரணை-37-இத்யாதி வாக்யத்தில் சந்தங்கள் ஆயிரம் என்று பிரஸ்துதமான திரு வாய் மொழியின் வேதத்வத்தை –எவ்வுலகத்து -சூரணை -39 -இத்யாதி வாக்கியம் தொடங்கி இவ்வளவாக சாதித்தார் ஆய்த்து-

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 4-ஆசார பாதம்-4-ஸாஸ்த்ர தாத்பர்ய நிஷ்டாசாராதிகரணம்‌ -19-38-ஸூரணைகள் -ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 1, 2026

இனி மேல் இந்த சாஸ்திர நிஷ்டராயும்-தாத்பர்ய நிஷ்டராயும் இருக்கும் முமுஷுக்கள் படிகளைச் சொல்லுகிறது-இனி மேல்‌ ஸாஸ்த்ரோப லக்ஷிதமான பக்தி நிஷ்டனுடையவும்‌, தாத்பர்யோப லக்ஷிதமான பிரபத்தி நிஷ்டனுடையவும்‌ ப்ரதிபத்திகளைச்‌ சொல்லுகிறது 

சாஸ்திரிகள் தெப்பக் கரையரை போலே இரண்டையும் இடுக்கி பிறவிக் கடலை நீந்த -சாரஜ்ஞர் விட்டத்தில் இருப்பாரைப் போலே இரு கையும் விட்டு கரை குறுகும் காலம் எண்ணுவார்கள்-சூரணை-19-

அதாவது-ஆத்மா வா அரே த்ரஷ்டவ்யாஸ் ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாசி தவ்ய–ப்ருஹதாரண்யம் –
ஆத்மேத் யேவோபாசீத–ப்ருஹதாரண்யம் – ஒமித் யாத்மானாம் த்யாயத-முண்டகம் – என்று சம்சார நிவ்ருத்தி பூர்வக பகவத் பிராப்தி சாதனமாக பகவத் உபாசனத்தை விதித்து அம்ருதஸ் யைஷ சேது-முண்டகம் – பலமதே உபபத்தே-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-8– என்று பகவானே அதற்க்கு பல பிரதானனாகவும் சொல்லும் சாஸ்த்ரத்தில் நிஷ்டர் ஆனவர்கள்
ஆறு நீஞ்சுவார் தெப்பத்தை ஒரு கையிலே இடுக்கி தாங்களும் ஒரு கை துழாவுமா போலே
ஸ்வ யத்னமும் தத் சாத்திய பகவத் கிருபையும் ஆகிய உபயத்தையும் அவலம்பித்து கொண்டு -பிறவி கடல் நீந்துவார்க்கே -திருவாய் -2-8-1–என்கிற படியே சம்சார சாகரத்தை கடக்க தேட–ஸ்வ யத்ன நிஷேத பூர்வகமாக ஆத்மாவின் பகவத் ஏக உபாயத்தை பிரதி பாதிக்கிற சாஸ்திர சாரமான திரு மந்த்ரஜ்ஞர் ஆனவர்கள் ஓடம் ஏறினவர்கள் தீரகமனார்தமான ஸ்வ யத்னத்தையும் தெப்பத்தையும் கை விட்டு –கரை குறுவது எப்போது -என்று பார்த்து கொண்டு அதன் விட்டத்திலே இருக்குமா போலே சம்சார ஆர்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் விஷ்ணு போதம் விநாநாந்யத் கிஞ்சித் அஸ்தி பாராயணம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம்-என்கிற படியே அக்கரையும் இக்கரையும் ஊடுருவ நின்று சம்சார சமுத்ரத்தை கடத்தும்
வைகுந்தன் என்பதோர் தோணியை-நாச்சியார் -5–4– சம்சார நிஸ்தாரமாகப் பற்றி-தத் ஞான சக்தியாதி அனுசந்தானத்தாலும் ஸ்வ பாரதந்த்ர்யாதி அனுசந்தானத்தாலும் நிர் பரர் ஆகையாலே இரண்டு கையும் விடுமா போலே ஸ்வ யத்ன ரூப உபாசனாதியையும் தத் சாத்திய பகவத் கிருபையையும்
அவலம்பிக்கையை விட்டு கேவல பகவத் கிருபையே உத்தாரகம் என்று அத்யவசித்து
கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ
-திருவாய் -6–9–9 -என்றும்
ஆக்கை விடும் பொழுது எண்ணே–திருவாய் -1–2–9-என்று சொல்லுகிற படியே
பகவத் பிராப்தி ஆகிய கரையை குறுகைக்கு ஈடான கால சிந்தனை பண்ணா நிற்பார்கள் என்கை-இத்தால் சாஸ்த்ரஜ்ஞர் உடையவும் சாரஜ்ஞர் உடையவும் பிரபத்தி க்ரமம் சொல்லிற்று ஆயிற்று-

ஆறு நீஞ்ச வந்தவன்‌ தெப்பத்தை ஒரு கையிலே இடுக்கியும்‌, தானும்‌ ஓரு கையாலே நீஞ்சுமாப் போலே, பக்தி நிஷ்டனும்‌, ஸ்வ யத்நமும்‌ ஸ்வ யத்ந ஸாத்‌யமான பகவத் க்ருபையையுங் கொண்டு ”புணைவன்‌ பிறவிக் கடல்‌ நீந்துவார்க்கே”‘ (திருவாய்‌, 2 – 8 – 1) என்கிறபடியே ஸம்ஸார ஸாக,ரத்தைக்‌ கடக்கத்‌ தேடும்‌. (ஸாரஜ்ஞர்‌) தாத்பர்ய நிஷ்டரான ப்ரபந்நரானவர்கள்‌. (விட்டத்திலிருப்பாரைப்‌ போலே) ஆற்றின்‌ கரையேறிப்‌ போகிறவன்‌ அதில்‌ யத்நத்தில்‌ அந்வயமற்று விட்டத்திலிருக்குமாப் போலே ; ”விஷ்ணு போதம்‌ விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்‌?’ ( ) என்கிறபடியே அக்கரையோடு உருவ நின்று நடத்துகிற ‘*வைகுந்தனென்பதோர்‌ தோணி?” (நா. திரு. 5 – 4) என்கிற விஷ்ணு போதத்திலே இருந்து அவனுடைய ஜ்ஞாந ஸக்த்யாதி, கு,ணாநுபவத்தாலும்‌ ஸ்வ பாரதந்தர் யாநுஸந்தாநத்தாலும்‌ நிர்பரராய்‌ மேல்‌ உபாயதயா கர்த்தவ்ய மில்லாமையாலே, இரு கையும்‌ விட்டு – அசேதந க்ரியா கலாபத்தையும்‌ தத் ஸாத்‌யமான பகவத் க்ருபையையும்‌ விட்டு – கேவல பகவத் க்ருபையே தங்களுக்கு உத்தாரகம்‌ என்று அத்‌யவஸித்துக்‌ கரை குறுகும்‌ காலமெண்ணுவர்கள்‌.கூவிக் கொள்ளுங்கால மின்னம்‌ குறுகாதோ” (திருவாய்‌. 6 – 9-9) என்றும்‌, “ஆக்கை விடும் பொழுதெண்ணே’” (திருவாய்‌, 1 – 2 – 9) என்றும்‌ சொல்லுகிறபடியே ப்ராப்தியைச்‌ சிந்தித்திருப்பார்கள்‌,

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-–சம்சாரம் ஆகிறது ஒரு கடல் -அது நம்மால் கடக்க அரிது -ஒரு சர்வ சக்தியைப் பற்றி கடக்க வேணும் -என்று நினைப்பார்க்கு ப்ரதி பூவாய்த் தலைக்கு கட்டிக் கொடுக்கும் சர்வ பர நிர்வாஹகன் இறே– ப்ரதி பூ விஷ்ணு போதம் என்கையாலே தெப்பம் என்னவுமாம்

என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4—உகந்து அருளின நிலங்களிலே புக்கு அனுபவிக்கக் கோலி அங்கு அணைத்தல் வார்த்தை சொல்லுதல் செய்யக் காணாமையாலே அப்படிப் பரிமாறின அவதாரங்களிலே போய் அவை தீர்த்தம் பிரசாதித்து போகையாலே-பரத்வத்து அளவும் சென்று அவ்விருப்புத் தானும் பெரும் கடலுக்கு ஒரு மரத் தோணி போலே யாம்படியாக அபி நிவேசம் கரை புரண்டு அதனுடைய அலாபத்தாலே படுகிற அலமாப்பு இருக்கிறபடி –

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-
–வரையாதே எல்லார்க்கும் கொடுக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளில் -அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –விஷயாந்தர தர்சன மாத்திரத்திலே முடியும் படி யானாலும் அணித்தாகாதோ -தாவி வையம் கொண்ட -என்கிறது உபாய அம்சம் –தடந்தா மரைகள் -என்கிறது உபேய அம்சம் –கூவிக் கொள்ளும் காலம்-என்று தாம் சென்று காண்கை அன்றிக்கே தானே அழைத்துக் காட்டுகை முறையாகையாலே கிட்டும் பிரகாரம் சொல்லுகிறது-

ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே
–1-2-9—ஈச்வரோஹம் என்று இருக்கை தவிர்ந்து -அவனுக்குப் பிரகாரமாக அவன் அபிமானத்துக்கு உள்ளே அந்தர்பவிக்கவே-எல்லாம் விடும்
ஒடுங்கல் -ஒடுக்கத்தை பண்ணுமவை – ஆத்மாவுக்கு சங்கோசகங்களான அவித்யாதிகள் எல்லாம் போம் –ஒடுங்கல் -வந்தேறி யாய் -ஒடுங்கிக் கிடந்தவை என்னுமாம்-ஸ்வரூபாதி ரேகியாய் ஒடுங்கிக் கிடந்த அவித்யாதிகள் எல்லாம் போம்-எல்லாம் என்கையாலே -பஜன விரோதியோடு -பிராப்தி விரோதியோடு -வாசி அற சர்வமும் நசிக்கும் என்கிறது-பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே-
பின்பு சரீர அவசானமே விளம்பம் காமிநி தன் உடம்பில் அழுக்கைக் கழற்றி போகத்திலே அந்வயிக்க அவசர ப்ரதீஷியையாய் இருக்குமா போலே சரீர அவசானத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கை

இவர்களுக்கு இவ் ஆகாரங்கள் உண்டாகுகைக்கு அடி இன்னது என்கிறது-இவர்களுக்கு அவ்வதி,காரமுண்டாகைக்கு ஹேதுவான ஸ்வரூப ஜ்ஞாந தாரதம்யத்தைச்‌ சொல்லுகிறது

இவை ஸ்வரூபத்தை உணர்ந்து உணர்ந்து உணரவும் உணர்வைப் பெற ஊர மிக உணரவும் உண்டாம்-சூரணை -20-

அதாவது சாஸ்த்ரிகள் ஆனவர்களுக்கு-உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து
உருவியந்த இந் நிலைமை உணர்ந்து உணர்ந்து உணரிலும்
–திருவாய் -1-3-6- என்கிற படியே
ஆத்ம ஸ்வரூபத்தை ஜ்ஞப்த்தி மாத்ரம் அன்றிக்கே-நித்ய ஞான குணகமாய்-அந்த ஞானத்தாலே எங்கும் ஒக்க வியாபித்து-தேஹத்தில் காட்டில் வேறு பட்டு இருக்குமதாய்-அந்த ஜ்ஞாத்ருத்வ பலாயாத கர்த்ருத்வ போக்த்ருத்வ சஹிதமாய் பகவத் சேஷமாய் இருக்கும் என்று ஸ்ரவண மனனங்களாலே சாஷாத் கரிக்கவே ஸுவ யத்னத்தாலே சம்ஸார நிஸ்தரணம் பண்ண தேடுகை யாகிற இது உண்டாம்-சாரஞ்ஸ்தஞரானவர்களுக்கு ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை தர்சிப்பைக்கு உடலாக
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதே யாம் உணர்வை பெற ஊர்ந்து -திருவாய் -8–8–3-–என்கிற படியே வைஷயிக ஞானமும் பிராணனும் சரீரமும் மற்றும் பரிசேத்யமான பிராகிருதி விகாரங்களும் , பிரக்ருதியும் ஹேயம் என்னும் அறிவை பெரும் படி நிர்ஹேதுகமாக ஈஸ்வரன் நடத்த
மெய்ம்மையை மிக உணர்ந்து-திருமாலை -38 -என்கிறபடியே-ஆத்ம ஸ்வரூபத்தை-தேஹாதி விலக்ஷணமாய் ஞான ஆனந்த ஸ்வரூபமாய் ஞாத்ருவாதி குணகமாய் ததீய சேஷத்வ பர்யந்த தத் சேஷத்வ யுக்தமாய் தத் காஷ்டையான பார தந்த்ர்ய யோக்யதை ஏக வேஷமாய் இருக்கும் என்றே உணரவே ஸ்வ பரத்தை அவன் மேல் புகட்டு ஸ்வ யத்ன ரஹிதையராய் இருக்கிற இது உண்டாம் என்கை–இத்தால் இவர்கள் உடைய ஸ்வரூப ஜ்ஞான ஆகார தார தம்யமே கீழ் சொன்ன ஆகாரங்கள் இவர்களுக்கு உண்டாகுகைக்கு ஹேது என்றது ஆயிற்று-

(உணர்ந்துணர்ந்துணரவும்‌) ‘உணர்ந்துணர்ந்திழிந்தகன்று உயர்ந்து உருவியந்த இந் நிலைமை உணர்ந்துணர்ந்துணரிலும்‌’” (திருவாய்‌. 1 – 3 – 6) என்கிறபடியே ஆத்ம ஸ்வரூபத்தை ஜ்ஞப்தி மாத்ர மன்றிக்கே நித்ய ஜ்ஞாந குணகமாய்‌ தேஹேந்தரியாதி, விலக்ஷணனாகவும்‌, ஜ்ஞாதாவாகவும்‌, கர்த்தாவாகவும்‌ பகவச் சேஷமாகவும்‌ ஸ்ரவண மநநாதிகளாலே ஸாக்ஷாத்கரித்த ஸாஸ்த்ரிகளுக்கு அந்த வ்ருத்தி உண்டாம்‌. (உணர்வைப்‌ பெறவூர மிகவுணர்வுமுண்டாம்‌)‘உணர்வுமுயிருமுடம்பும்‌ மற்றுலப்பிலனவும்‌ பழுதேயாம்‌ உணர்வைப் பெறவூர்ந்து ” (திருவாய்‌. 8. 8.3) என்கிறபடியே தேஹேந்த்‌ரியாதிகளில்‌ வ்யாவ்ருத்தமான ஆத்ம ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கும்படி நிர்ஹேதுகமாக ஈஸ்வரன்‌ நடத்த “மெய்ம்மையை மிக வுணர்ந்து’‘ (திருமாலை 38) என்கிறபடியே ததீய ஸேஷத்வ பர்யந்தமாக உணர ப்ரபந்நனுக்கு இந்த ப்ரதிபத்தி உண்டாம் –

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும்
இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6–உணர்ந்து உணர்ந்து -ஞாத்ருத்வ ஸ்வபாவனாகையாலே என்றும் ஓக்க உணருகையே ஸ்வபாவமாக உடையனாய்
இழிந்து அகன்று உயர்ந்து -அந்த ஞானம் நிஷ்க்ருஷ்ட வேஷத்தில் அபரிச்சின்னமாகையாலே தத் த்வாரா பத்து திக்கிலும் வியாபித்து-உருவியந்த -உரு வியந்த -ரூப யோக்கியமான அசித்தில் காட்டில் வேறு பட்டு இருந்த -இயத்தால்-வேறுபாட்டால் விலக்ஷணமாய் இருத்தல்-இந் நிலைமை-இந்த ஆத்மாவின் நிலைமையை -இந்நிலைமை என்று யுக்த பிரகார வைலக்ஷண்யம் ஆத்மாவுக்கு ஒழிய இல்லை என்கிற ஸம்ப்ரதிபத்தியைச் சொல்லுகிறது –-உணர்ந்து உணர்ந்து உணரிலும் – ஸ்ரவணத்தாலே உணர்ந்து -அதுக்கு மேலே மனனத்தாலே உணர்ந்து -யோகத்தால் சாஷாத் கரித்து உணர்ந்தாலும்-இறை நிலை உணர்வு வரிது -சர்வேஸ்வரன் ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவே தன்னை மறைத்து நிற்கிற நிலை விவேகித்து அறிய அரிது–உயிர்காள்-சேதனர் ஆனபடியால் விவேகித்து அறியும் ஸ்வ பாவரானவர்களே-அரி அயன் அரன் என்னும் இவரை-அரி அயன் அரன் என்று பிரசித்த ரானவர்களை-உணர்ந்து உணர்ந்து –அவர்கள் குண விபூதியாதிகளை இட்டுப் பலகாலும் ஆராய்ந்து
உரைத்து உரைத்து –தத் ப்ரதிபாதகமான ப்ரமாணங்களையும் பலகாலும் வ்யவஹரித்துப் பார்த்துப் பார்த்து-மனப்பட்ட தொன்றே-நெஞ்சிலே ஈஸ்வரனாகப் பட்ட ஒரு வஸ்துவை – வ்யாஹரன் மாம் அநு ஸ்மரந்–என்கிறபடியே-உணர்ந்து உணர்ந்து -தத் குண விக்ரஹாதிகளைப் பலகாலும் அநு சந்தித்து
உரைத்து உரைத்து இறைஞ்சுமின் –தத் வாசகமான மந்த்ர நாமாதிகளைப் பலகாலும் வ்யவஹரித்து உபாசியுங்கோள் –

உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8
-8-3—உணர்வும்-வைஷயிக ஞானமும்
உயிரும்-பஞ்ச வ்ருத்தி பிராணனும் உடம்பும்-சரீரமும்-மற்று உலப்பினவும் -மற்றும் அபரிச்சேத்யமான மஹதாதி ப்ரக்ருதி விகாரங்களும் -ப்ரக்ருதியும்-பழுதேயாம்-உணர்வைப் பெற ஊர்ந்து–இவை ஹேயம் என்னும் அறிவை நான் பெறும்படி நடத்தி -தேரூர்ந்து என்னுமா போலே -இவை அபுருஷார்த்தம் என்னும் உணர்வு யுண்டு -மயர்வற்ற மதி -அத்தை நான் உடையேனாம் படி பண்ணி-இறவேறி-ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் அபுருஷார்த்தம் என்னும் அளவே அன்றிக்கே முடிய போய் -ஞானானந்த ஸ்வரூபனாய் -நித்யனாய் -ஸ்வதஸ் ஸூ கியாய் இருக்கிற அளவும் செல்ல அறிவித்து-யானும் தானாய் ஒழிந்தானே––அவ்வளவிலும் பர்யவசியாதே –என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்லலாம் படி தனக்கு பிரகார தயா சேஷம் என்னும் இடத்தைக் காட்டித் தந்தான் –அஹம் புத்தியும் அஹம் சப்தமும் தன்னளவும் செல்லும் படி பிரகார தைக வேஷமாய் இருக்கிறபடியைக் காட்டித் தந்தான் –தச்சப்தம் குண விசிஷ்ட வாசியானாவோ பாதி -த்வம் -சப்தமும் -அசித் விசிஷ்ட ஜீவ அந்தர்யாமி யாம் அளவும் காட்டக் கடவது இறே –

மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசறிந்து கொண்டு ஐம் புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே–38–மெய்ம்மையை மிக உணர்ந்து –மெய் -என்கிறது ஆத்மாவை –மெய் -எனபது ஆத்மாவைக் காட்டுமோ -என்னில் —சத்யஞ்சா ந்ர்தஞ்ச சத்ய மவபவத் -என்கிற ஸ்ருதி சாயையால் அருளிச் செய்கிறார் –-சத்ய சப்தம் அசத்திய வ்யாவர்த்தியை சொல்லுகிறது அன்று ஆத்ம ஸ்வரூபத்தின் நித்யதையைச் சொல்லுகிறது –மெய்ம்மை -என்று முழுச் சொல்லாய் – பிரத்யக் விஷயத்தைச் சொல்லுகிறது – கைம்மை பொய்ம்மை -என்னுமா போலே-ஆக மெய்ம்மை -என்று – மெய்யான தன்மை -என்றபடி –மிக உணர்ந்து –தேகமே ஆத்மா என்று இருக்கும் லோகாயதிகன் அளவன்றிக்கே –தேகாதிரிக்தமாய்-ஸூயமாய் இருக்கும் ஆத்மா என்னும் மீமாம்சகன் அளவன்றிக்கே-ஜ்ஞானம் ஆகந்துகம் -என்னும் வைசேஷிகன் அளவன்றிக்கே –1-ஸுவயம் பிரகாசனாய்-2-நித்யனாய்-3-ஜ்ஞான குணகனாய்-4-அணு வாய்-5-ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷமாய்-6-அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாக உணருகை –
அதாவது ஆத்மாவை உள்ளபடி உணருகை –ஆம் பரிசறிந்து கொண்டு--பிரக்ருத ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் -என்று அறிந்து மேலும் ஆத்மாவை உள்ளபடி உணர்ந்தால் – பின்னையும்-ஆம் பரிசு ஆவது –
கைங்கர்யமே யாய்த்து –-ஆம் பரிசு வர்த்திக்கும் படியை அறிந்து – ஆத்மா அபிமான ரூபமாக வாய்த்து வ்ருத்தி ஹேதுக்கள் தான் இருப்பது –தாசோஹம் -என்ற போது -கைங்கர்யமே வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –பிரகிருதி பிராக்ருதங்களில் சங்கோசம் போய் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால் சஹஜ கைங்கர்யமே இறே வ்ருத்தி ஹேதுவாவது –பிரகிருதி பிராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற ஜ்ஞானமும் –
ஆத்மா பகவத் பரதந்த்ரன் என்கிற ஜ்ஞானமும் பிராப்யம் கைங்கர்யம் என்கிற ஜ்ஞானமும் இறே சேதனனுக்கு வேண்டுவது –விடுவிக்கையும் பற்றுவிக்கையும் உபாய பூதனான ஈஸ்வரன் கார்யம் இறே –

ஆக-முனிவரை இடுக்கியும் -சூரணை -17 -என்று தொடங்கி இவ் வளைவாக சாஸ்திர தாத் பர்யங்களின்
விஷய பேதமும் அதிகாரி பேதமும் அவ் அதிகாரிகளின் பிரதி பத்தி பேதமும் அதுக்கு அடியான ஜ்ஞான ஆகார தார தம்யமும் சொல்லப் பட்டது-

ஸ்வரூப ஞானம் என்றும் ஸ்வரூப யாதாத்மா ஞானம் என்றும் ஆத்ம ஸ்வரூப விஷய ஞானத்திலே தார தம்யம் உண்டு இறே -அதில் பதிம் விச்வசஸ்ய-ஸ்ரீ புருஷ ஸூக்தம்- என்றும்-யஸ்யாஸ்மி என்றும்
நஹி விஜ்ஞாதர் விஜ்ஞாதேர் விபரிலோபோ வித்யதே ஞாநாத் யேவாயம்புருஷ -ப்ருஹதாரண்யம்-6-3-10–என்றும்-ஆத்மாவுக்கு பகவத் சேஷத்வத்தையும் ஜ்ஞாத்ருத்வத்தையும் சொல்லி-அந்த ஜ்ஞாத்ருத்வ கார்யமான போக்த்ருத்வ பிரயோஜனமாக-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண விபச்சிதா -தைத்ரியம் -என்று பகவத் அனுபவத்தையும் சொல்லுகிற சாஸ்திர முகத்தாலே ஸ்வரூபத்தை அறியும் அளவில் பகவத் சேஷத்வமும் பகவத் அனுபவ போக்த்ருத்வமும் இறே பிரகாசிப்பது-அந்த சாஸ்திர தாத் பர்யமான திரு மந்த்ரத்தில் உள் புக்கால் இறே பாரதந்திர போக்யதா ரூபமான ஸ்வரூப யாதாத்ம்யம் பிரகாசிப்பது-இதுவே ஸ்வரூப யாதாத்ம்யம் என்னும் இடத்தை அறிவிக்கிறார் மேல்-
(சேஷத்வம் -அகாரம்-லுப்த சதுர்த்தி -பரமாத்மாவுக்கே ஜீவாத்மா சேஷன் -சேஷத்வம் ஸ்வரூபம்-தாதரத்தே சதுர்த்தி- லுப்த சதுர்த்தி -போக்த்ருத்வம் மகாரம்-ஞாத்ருத்வம் -மன ஞானே–மன அவபோதனே-பாரதந்தர்யம் நம -போக்யதை-நாராயணாய நம -பிரார்த்தனா சதுர்த்தி இங்கு -அஹம் அன்னம் –அவன் -அந்நாதா –தட்டு மாறும் சீலம் காட்கரையிலே கொழிக்கும் சந்தன குசுமாதிகள் போலே நாராயணாய நம -என்றபடி )-இந்த ஸ்வரூப ஜ்ஞாநமும்‌ ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமுமாகிற இவை யிரண்டும்‌ தன்னிலொக்குமோ என்னில்‌ ; ஒவ்வாது என்கிறார்‌

சேஷத்வ போக்த்ருத்வங்கள்-போல் அன்றே-பாரதந்திர போக்யதைகள்--சூரணை -21 –

அதாவது –சேஷத்வம் ஆவது இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரம்-பாரதந்த்ர்யம் ஆவது சேஷிக்கு இஷ்டமான படியே விநியோகப் படுகை-கட்டிப் பொன் போலே சேஷத்வம்-பணிப் பொன் போலே பாரதந்த்ர்யம்-என்னக் கடவதிறே ஆகையால் சேஷ வஸ்துவை சேஷிக்கு இஷ்டமான படியே
விநியோகப் படுத்தும் அது பாரதந்த்ர்யம்
போக்த்ருத்வம் ஆவது ஜ்ஞாத்ருத்வ பலத்தாலே போக தசையிலே விளைகிற ரசங்களுக்கு தான் போக்தாவாகை-போக்யதை யாவது பதார்த்த கதமான ரச வர்ணாதிகள் போக்தாவுக்கு போக்யமாய் இருக்கும் போலே ஆத்ம கதமான ஜ்ஞானாதிகளும் ஈஸ்வரனுக்கே போக்யமாய் இருக்கை-ஆகையால் இஷ்ட விநியோக அர்ஹ மாத்ரமாய் சேஷத்வம் போல் அன்றே-இவ் வஸ்துவை சேஷிக்கு இஷ்டமான படி விநியோகப் படுத்தி கொடுக்கிற
பாரதந்த்ர்யம் போகத்தில் ஸ்வார்ததா புத்தி ஹேதுவான போக்த்ருத்வம் போல் அன்றே அந்த
போக்த்ருத்வத்தை சேஷி உடைய பிரிய உபயோகி ஆக்கிக் கொடுக்கிற போக்யதை
என்ற படி-

ஸேஷத்வமாவது – இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரம்‌. பாரதந்தர்யமாவது – அந்த ஸேஷ வஸ்துவை ஸேஷிக்கு இஷ்ட மானபடி விநியோகப் படுத்திக்‌ கொடுக்குமது. போக்த்ருத்வமாவது – ரஸாரஸங்‌களுக்குத்‌ தானே போக்தாவாகை. போக்‌யதையாவது – பதார்த்த, கதமான ரஸ வர்ணாதிகள்‌ போக்தாவுக்கே போக்‌யமா யிருக்குமாப் போலே ஆத்ம கதமான ஜ்ஞாநாதிகளும்‌ ஈஸ்வரனுக்கே போக்‌யமாயிருக்கை, ஆகையால்‌ இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரமான சேஷத்வம் போலே யன்றே, அத்தை இஷ்டமானபடி விநியோகப் படுத்திக்‌ கொடுக்கிற பாரதந்த்ர்யம்‌. ஸ்வ போகத்துக்கும்‌ ஹேதுவாயிருக்கிற போக்த்ருத்வம்‌ போலே யன்றே அந்த போக்த்ருத்வத்தை ஸேஷியினுடைய ப்ரியோப யோகி,யாக்கிக்‌ கொடுக்கிற போக்‌யதை.

இவ் அர்த்தத்தை ஸ்வரூப யாதாத்ம்ய பிரகாசமான திரு மந்த்ரத்திலே தர்சிப்பிக்கிறார்-

ஜ்ஞான சதுர்த்திகளின் மேலே இறே ஆநந்த ஷஷ்டிகளுக்கு உதயம்--சூரணை -22 –
(ஞான -மகாரம் -லுப்த சதுர்த்தி முன்னால்–போக்யதை -ஆனந்தம் -நாராயணாய அர்த்தம் -ஷ்ஷடி -நமஸ் -பாரதந்தர்யம் -சதுர்த்தி ஞானங்களுக்கு மேலே இறே ஷ்ஷடி ஆனந்தங்களுக்கு உதயம் என்று சொல்லாமல் —உத்கீத பிரணவத்தை பிரதமத்தில் மாறாடி-என்பதால் – அச்சு எழுத்து குறைவாக -அல்ப அக்ஷரம் பூர்வம் -என்பதாலும் -)

அதாவது ஆத்ம வாசியான ம காரத்திலே –மன – ஜ்ஞானே -என்கிற தாதுவிலே உதிதமாய்
போக்த்ருத்வ பிரகாசமாய் இருக்கிற ஜ்ஞானத்தின் மேலே இறே-அந்த மகார விவரண ரூபமாய் போக்யதா பிரகாசகமான சதுர்த்தியில்-ஆனந்தத்துக்கு உதயம்-பிரதம அஷரத்தில் சேஷத்வ வாசியான லுப்த சதுர்த்தியின் மேலே இறே பாரதந்த்ர்ய பிரகாசமான நமஸுக்கு உதயம் என்கை–இத்தால் ஆத்ம ஸ்வரூபத்தின் உடைய சேஷத்வ போக்த்ருத்வங்கள் உதித்து இருக்க செய்தே அதன் மேலே ஸ்வரூப யாதாத்ம்ய வேஷமாக உதித்தவை ஆகையாலே சேஷத்வ போக்த்ருத்வங்களில் -பாரதந்த்ர்ய போக்யதைகளுக்கு நெடு வாசி உண்டு என்றது ஆயிற்று–இந்த யோஜனைக்கு அல்பம் அனுபபத்தி உண்டு-ஷஷ்டி என்கிற இது -முக்ய விருத்தி யாலே ஆதல்-கௌன விருத்தியாலே ஆதல் நமஸை காட்டாமையாலே-ஷஷ்ட்யந்த பதம் என்கிறதை ஷஷ்டி என்று சொல்லிற்று ஆகாதோ என்னில்
அது சேராது –நமஸு இரண்டு பதம் ஆகையாலும் அதில் உத்தர பதமே ஷஷ்ட்யந்தம் ஆகையாலும் ..
ஆனால் செய்ய அடுப்பது என் என்னில் இன்னும் ஒரு யோஜனை சொல்லப் படுகிறது-
(ஞாத்ருத்வமும் போக்த்ருத்வமும் -தங்கள் விரோதிகளை -ஸ்வாதந்த்ரத்தையும் ஸ்வார்த்தத்தயா போக்த்ருத்வத்தையும் – உதிப்பத்தை சகிக்கும் -ஆனால் பின்பு தள்ளும் -ந -நிஷேதையாலே-
ஆகவே நமஸ் நாராயணாய நம என்று கூட்டி பொருள் என்றவாறே – சேஷத்வத்துக்கு மேலே ஸ்வாதந்தர்யம் உதிப்பதால் அது தாழ்வு –பாரதந்தர்யம் உயர்ந்தது என்றவாறு இத்தை விசாரிக்கவே ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீ மேல்கோட்டைக்கு எழுந்து அருளி ஸ்ரீ ஆய் ஸ்வாமிகளைக் கண்டு இருவரும் ஸ்ரீ திருக்குருகூருக்கு மீண்டார்கள் )அதாவது த்ருதிய அஷரத்திலே –மன -ஜ்ஞானே -என்கிற தாதுவிலே உதிதமாய் போக்த்ருத்வ பிரகாசமான ஜ்ஞானத்தின் மேலே இறே மகார விவரணமான சதுர்த்தியில்
சொல்லப் படுகிற போகத்தில் காகாஷி ந்யாயத்தாலே நமஸ் சப்தத்தாலே கழிக்க படுகிற ஸ்வ பிரயோஜனத்வ பிரயுக்தமான ஆனந்தத்துக்கு உதயம் பிரதம அஷரத்திலே சேஷத்வ வாசியான சதுர்த்தியின் மேலே இறே--நஜ்ஞாலே நிஷேதிக்க படுகிற ஸ்வ ரஷணே ஸ்வ பிரவ்ருத்தி ஹேது பூத
ஸ்வதந்த்ர்யா பிரகாசி யான ஷஷ்டிக்கு உதயம்
என்கை
இத்தால் சேஷத்வ பிரகாசமான சதுர்த்தியின் மேலே ஸ்வ ரக்ஷண ஹேது பூத ஸ்வதந்த்ர்ய வாசியான ஷஷ்டி உதிக்கையாலும் போக்த்ருத்வ பிரகாசமான ஜ்ஞானத்தின் மேலே போக ஸ்வார்ததா புத்தி மூலமான ஆனந்தம் உதிக்கை யாலும் சேஷத்வ போக்த்ருத்வங்கள் ஸ்வரூப விரோதி உதய சஹங்களாய் இருக்கும்-நமஸிலே பாரதந்த்ர்யம் உதித்த பின்பு ஸ்வ ரஷணே ஸ்வ யத்னம் நிவ்ருத்தம் ஆகையாலும் நமஸ் சப்த அனுக்ருஹீதையான-(நாராயணாயா நம )சரம சதுர்த்தியிலே ஈஸ்வரனுக்கு போக்யமாய் இருக்கையே ஆத்மாவுக்கு வேஷம் என்று தோற்றின பின்பு ஸ்வ பிரயோஜனம் நிவ்ருத்தம் ஆகையாலும் பாரதந்த்ர்ய போக்யதைகள் ஸ்வரூப விரோதி உதய சஹங்கள் அன்று .-ஆகையால் ஸ்வரூப விரோதி உதய சஹங்களான சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல அன்றே அத்தை சகியாத படி இருக்கும் பாரதந்த்ர்ய போக்யதைகள் என்றது ஆயிற்று-

ஆகையிறே போக்த்ருத்வ ப்ரகாஸகமாய்‌ “மந – ஜ்ஞாநே‘ என்கிற தாதுவிலே உதிதமான ஜ்ஞாநத்துக்கு மேலே அந்த மகார விவரண ரூபமாய்‌ போக்‌யதா ப்ரகாஸகமான சரம சதுர்த்தி யிலே ஆநந்தம்‌ உதித்ததும்‌, ஸேஷத்வ ப்ரகாஸகமான சதுர்த்தியின் மேலே பாரதந்த்ர்ய ப்ரகாஸகமான ஷஷ்டி, உதித்ததும்-

இப்படி ஸ்வரூப யாதாம்ய ஞான தசையில் தோற்றுகிற பாரதந்த்ர்யாதிகள் ஸ்வரூப ஞான தசையில் தோற்றுகிற சேஷத்வாதிகளை திரஸ் க்ருதமாக்கும் படி சொல்லுகிறது–இனிமேல்‌ இந்த ஸ்வரூப ஜ்ஞாநத்தினுடையவும்‌ ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தினுடையவும்‌ அத்யந்த வைஷம்யம்‌ சொல்லுகிறது

முளைத்து எழுந்த சூர்ய துல்ய யாதாத்ம்ய சரமம் விதியில் காணும் பிரதம மத்யம தசைகளை
பகல் விளக்கும் மின்மினியும் ஆக்கும்-
–சூரணை -23 –- (பகல் விளக்கு வீண் –மின்மினி அல்பம் என்றவாறு )

அதாவது–முளைத்து எழுந்த திங்கள் தானாய்-திரு நெடும் தாண்டகம் -1—என்றும்-யதா சூர்யஸ் ததா ஞானம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–5–62- என்றும் சொல்லப் பட்ட ஸ்வரூப சாஷத்கார ஞானத்தின் உடைய யாதம்ய அவஸ்தையான சரமம் என்று ஸ்வரூப யாதாம்ய வேஷமாக பின்பு சொன்ன பாரதந்த்ர்ய போக்யதைகளைச் சொல்லுகிறது-ஸ்வரூப சாஷாத் கார ஞானத்திற்கு சந்த்ரனை திருஷ்டாந்தமாக ஆழ்வார் அருளிச் செய்தது தமக்கு பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே அயத்ன சித்தம் ஆகையாலும் அந்த ஞானம் தான் ஆஹ்லாத கரமாய் இருக்கையிலுமாம் இறே-இங்கும் உணர்வை பெற மிக ஊர உணர்வும் உண்டாம் -சூரணை -20 என்று இந்த ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பகவத் பிரசாத லப்தமாக இறே சொல்லிற்று-யதா சூர்யா -என்கிற இதில் ஸ்வ யத்னத்தாலே வந்த க்லிஷ்டதை தோற்றிற்று ஆகிலும இவ் இடத்தில் அது அவிவஷிதம் ஞானத்தின் உடைய பிரகா அதிசயம் சொல்லுகிற மாத்திரமே அபேஷிதம்–ஏவம்பூதமாய் இருந்துள்ள சாஷாத் காரத்தின் உடைய ஞானத்தின் உடைய
யாதாத்ம அவஸ்தையிலே பிரகாசிக்கிற பாரதந்த்ர்ய போக்யதைகள் ஆகிற சரமங்கள் –
ஸ்வரூபத்தை உணர்ந்து உணர்ந்து உணரவும்
-சூரணை -20 -கீழ் சொன்ன ந்யாயத்தாலே – விதியிலே காண்பார்– திருக் குறும் தாண்டகம் -18–என்கிற படியே சாஸ்திர விதி பிரகாரேன ஸ்ரவண மனநாதிகளாலே தர்சிக்க படுகிற பிரதம தசையான சேஷத்வத்தையும் மத்யம தசையான போக்த்க்ருத்வத்தையும் – பகல் விளக்கும் மின் மினியும் போலே அப்ரயோஜனமாகவும் அல்ப பிரகாசமாகவும் பண்ணும் என்கை –பிரண வோதிதமான ஸ்வரூபத்தின் உடைய யாதாத்ம்ய யத்வேன மத்யம சரம பதங்களிலே பின்பு உதிக்கும் அவை ஆகையாலே ,பாரதந்த்ர்ய போக்யதைகளை சரமங்கள் என்கிறது பிரதம அஷரத்தில் சதுர்த்தியிலே பிரதம ஏவ சேஷத்வம் உதிக்கை யாலும்
அநந்தரம் தத் ஆஸ்ரய வாசியான சரம அஷரத்தில் உத்தர பத த்வயத்தில் பாரதந்த்ர்ய போக்யதை உதயத்துக்கு முன்னே நடுவே ஜ்ஞாத்ருத்வ பலாயாத போக்த்ருத்வம் உதிக்கை யாலும் சேஷத்வ போக்த்ருதவங்களை பிரதம மத்திய தசைகள் என்கிறது--ஆக இவ் வாக்யத்தால் ஸ்வ யதன ஸ்வ பிரயோஜன கந்த அசகங்களாய் ஸ்வ சேஷி போகாத்யந்த அனுகூலங்களாய்க் கொண்டு ஸ்வரூபத்தை நிறம் பெறுத்தும் இப் பாரதந்த்ர்ய போக்யதைகள் இவ் ஆகாரங்கள் இல்லாத சேஷத்வ போக்த்ருதவங்களை திரஸ் க்ருதமாக்கி தானே மேலாய் இருக்கும் என்ற தாயிற்று-

முளைத்தெழுந்த திங்கள் தானாய்‌’” (திருநெடு. 1) என்றும்‌, *‘யதா ஸுூர்யஸ் ததா ஜ்ஞாநம்‌”‘ (வி. பு. 6 – 5 – 62) என்றும்‌, ஆஹ்லாத கரனாயும்‌, அதி ப்ரகாஸ கனாயுமிருக்கிற சந்த்‌ராதித்யர்களை யாதாத்ம்ய சரமமான பாரதந்த்ர்ய போக்‌யதா ஜ்ஞாதங்களுக்கு த்ருஷ்டாந்தமாக்குகையாலே பகவத் ப்ரஸாத லப்‌தமாகையாலே அயத்ந ஸித்‌த,மாய்‌, அதி ப்ரகாஸகமுமான அத்யந்த பாரதந்த்ர்ய போக்‌யதா ஜ்ஞாநங்களில்‌ பாரதந்தர்யம்‌ ஸேஷத்வ லக்ஷணமான இஷ்ட விநியோக அர்ஹதையை ஸ்வயமேவ நிரவஹித்துத்‌ தலைக் கட்டுகையாலும்‌, போக்‌யதையானது அசித்‌ வ்யாவ்ருத்தி லக்ஷ்ண மாத்ரமான போக்தருத்வத்தை சேஷியினுடைய ப்ரியோபயோகி,யாக்கிக்‌ கொடுக்கையாலும்‌ விதியில்‌ காணும்‌ ப்ரதம மத்‌யம தஸைகளை ”விளக்கினை விதியில்‌ காண்பார்‌” (திருக்குறு. 18) என்கிறபடியே ஸாஸ்த்ர முக,த்தாலே வந்த ஸ்ரவண மநதநாதிகளால்‌ காணப்படுகிற ப்ரதம தஸையான ஸேஷத்வத்தையும்‌, மத்யம தஸையான போக்த்ருத்வத்தையும்‌, அந்த பாரதந்தர்ய போக்யதைகள்‌ பகல் விளக்கையும்‌ மின்மினியையும் போலே்‌ அப்ரயோஜகமாகவும்‌ அல்ப ப்ரகாஸகமாகவும்‌ பண்ணும்‌ என்கிறார் –

மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1—விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய் –என்று –மந்தவ்ய நிதித்த்யாசிதவ்ய த்ரஷடவ்ய -என்கிற மனந நிதித்யாசன தர்சனங்களைச் சொல்லுகிறது –ஸ்ரோதவ்ய -மந்தவ்ய – நிதித்யாஸி தவ்ய -த்ரஷ்டவ்ய-ப்ருஹதாரண்யம்–விளக்கொளியாய் -முளைத்து எழுந்த திங்கள் தானாய் )முளைத்து – பர்வதாக்ரத்திலே தோன்றின சந்தரனைப் போலே தீப த்ர்ஷ்டாந்தத்தால் சொன்ன ஸ்ரவண ஜ்ஞானத்தில் காட்டிலும் பிரகாச ரூபமான மனந தசையைச் சொன்னபடி –எழுந்து – பர்வதாக்ரத்தை விட்டு ஆகாசத்தில் எழுந்த சந்தரனைப் போலே மனந அவஸ்தையில் காட்டிலும் அதி பிரகாசமான அநவரத பாவனையைச் சொல்லிற்றாயிற்று-திங்கள் தானாய் – சாஷாத் காரத்தைச் சொல்லுகிறது –
எங்கனே என்னில் – தானான திங்கள் -என்று – ஆகந்துகமான களங்கம்- இன்றியே இருக்கிற சந்த்ரனைச் சொல்லுகையாலே ஆகந்துகமான களங்கம் -பூமியினுடைய சாயை பிரதிபலிக்கையாலே –
சந்த்ர பிரபா ஸ்தானத்திலே ஆத்மாவுக்கு பிரபா ரூபமான தர்ம பூத ஜ்ஞானம் – பிரகிருதி சம்சர்க்கம் நேராக அற்று நிஷ்க்ர்ஷ்டமான ஆத்ம வஸ்துவைச் சொன்னபடி –நிஷ்க்ர்ஷ்ட ஸ்வரூபத்தைக் கண்டால் இறே- சாஷாத்காரம் சித்தித்ததாவது – சாஷாத்கார விசிசிஷ்ட ஆத்மா -சாஷாத்காரம் தந்தவன் -என்று -பரமாத்மா சாஷாத்காரம் – சந்திர த்ர்ஷ்டாந்தத்தாலே – சதி ஆஹ்லாதே -என்கிறபடியே ஆஹ்லாத ரூபம் தோற்றுகைக்காகவும் பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே அனாயாச சித்தியால் வந்த அம்லானதை தோற்றுகைக்காவும்-சந்திரனை த்ருஷ்டாந்திக்கிறார் –யதா ஸூர்யஸ் ததா ஞானம் -என்று
ஸூர்யனை த்ருஷ்டாந்தித்தது சந்திரனுக்கு ஸ்வ யத்னத்தால் வந்த க்லிஷ்டதை தோற்றுக்கைக்காக 

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18–தைல தாரை போலே அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்தான ரூபமான பக்தியை பகவத் விஷயமாகப் பண்ணி-சுடர் விட்டு தோன்றலும் – இப்படி சுடர் விட்டு தோன்றும் ஜ்ஞானத்தாலே –வேதங்களாலே ஜோதி ரூபனாக பிரதிபாதிக்கப் பட்ட விளக்கை-சாஸ்த்ரங்களில் விதித்தபடியே உபாசித்து அவனைக் காண்பார் –என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –அதவா – இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே உபாசித்துக் காண்பாருக்கு காணலாம் -என்றுமாம் –அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி

இப்படி இருந்துள்ள ஸ்வரூப ஞானத்தையும் ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞானத்தை உடையவராய் சாஸ்த்ரிகள் -சூரணை -19 –இத்யாதி வாக்யத்தில் பிரவ்ருத்தி பரராயும் நிவ்ருத்தி பரராயும் சொல்லப் பட்ட அதிகாரிகளுக்கு பிரவர்த்த நிவர்தககங்கள் இன்னது என்கிறது மேல்-இந்நாலிலும்‌ வைத்துக் கொண்டு உபாஸகனுக்கு போக்த்ருத்வம்‌ உபாய ருப ப்ரவ்ருத்தி ஹேதுவாயிருக்கும்‌ ; ப்ரபந்தனுக்கு போக்‌யதை நிவருத்தி ஹேதுவாயிருக்கும்‌ என்கிறார்‌ மேல்‌

நாலில் ஓன்று பிரவர்தகம் ஓன்று நிவர்தகம்-சூரணை -24 –

அதாவது சேஷத்வ போக்த்க்ருத்வங்களும் பாரதந்திர போக்யதைகளும் ஆகிற நாலிலும் வைத்து கொண்டு சேஷத்வ போக்த்ருத்வங்களே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்று தர்சித்த சாஸ்த்ரஜ்ஞர்களை-
போக்த்ருத்வம் ஆனது போக்தாவனவன் போக்ய சித்திக்கு யத்னம் பண்ண வேண்டாவோ என்னும் நினைவாலே போக்ய பூத பகவத் விஷய லாப அர்த்தமான உபாய பிரவர்தியிலே மூள்விக்கும்--பாரதந்த்ர்ய போக்தைகளையே ஸ்வரூப யாதாம்ய வேஷம் என்று தர்சித்த சாரஜ்ஞரை
போக்யதை ஆனது -போக்தாவான ஈஸ்வரன் அன்றோ -ஸ்வ போக்யமான இவ் வஸ்துவை பெருகைக்கு யத்னம் பண்ணுவான் –தத் போக்ய பூதமான இவ் வஸ்துவுக்கு தல் லாபத்துக்கு யத்தனிக்க பிராப்தி இல்லை என்னும் நினைவாலே உபாய பிரவர்த்தியில் நின்று மீள்விக்கும் என்கை-

உபாயத்வ அனுசந்தானம் நிவர்த்தகம் – உபேயத்வ அனுசந்தானம் பிரவர்த்தகம் –ஸ்ரீ வசன பூஷணம் –சூர்ணிகை -87—உபாயம் -நினைக்க யத்னம் நீங்கும் –செய்யும் செயல்களில் உபாய பாவனை இல்லாமல் என்றும் -ஸாத்ய உபாயம் எண்ணியும் –உபேயம் புருஷார்த்தம் என்ற நினைவால் கைங்கர்யம் -அனைத்தையும் செய்ய வைக்கும் -ஸூ சரீர தியாக -ஸூ யத்னம் தானே –பாரதந்தர்ய தூஷணம் ஆகாதோ என்ன -உபாய அதிகாரிக்குத் தான் தூஷணம் -உபேய அதிகாரிக்கு இல்லை-பற்றுவது –கத்யார்த்தா புத்யர்த்தா மானஸ கார்யம் -பிரார்த்தனா மதி சரணாகதி – உபேய அதிகாரி வழு விலா அடிமை செய்ய வேண்டுமே -சென்றால் குடையாம் இத்யாதி-தோழி -தாயார் மகள் -சம்பந்தம் -தாயார் -உபேயத்தில் துணிவு தலை மகள் பாசுரம் –தூது விட்டது உபாயமாக என்று அஞ்சுவது தாயார் –ப்ராப்ய தவரையால் பண்ணலாமே –மோக்ஷ உபாயம் தப்பு கால விளம்பம் கூடாது என்பதற்காக பண்ணலாமே உபாயத்வ அநு சந்தானம் நிவர்த்தகம் -என்றது – வைதமாய் வரும் தசையில் -தேக த்யாக ரூப பிரவ்ருத்தியில் உபாயத்வ அநு சந்தானம் நடக்கையாலே -அவ் அனுசந்தானம் இவனை சாதனதயா சம் பிரதிபன்னமான இத் தேக த்யாக ரூப பிரவிருத்தியில் நின்று மீளுவிக்கும் -என்றபடி –
உபேயத்வ அநு சந்தானம் பிரவர்தகம் -என்றதுராக பிராப்தமாய் வரும் தசையில் -இவ் விஷயத்துக்கு ஹானி வரக் கண்டு இருப்பதில் -முடிகையே நல்லது என்று –தேகத் த்யாகம் தன்னை புருஷார்த்தமாக அநு சந்திக்கையாலே -அவ் அனுசந்தானம் இவனை அதிலே மூளுவிக்கும் என்றபடி —
அன்றிக்கே – வைதமாய் வரும் போது -பகவத் விஷயத்தில் உபாயத்வ அநு சந்தானம் இதுக்கு(தேகத் த்யாகத்துக்கு ) நிவர்தகமாம் – ராக பிராப்தமாய் வரும் போது-அவ் விஷயத்தில் உபேயயத்வ அனுசந்தானம் இதுக்கு பிரவர்தகமாம் என்னவுமாம் –

ஆனால் சேஷத்வ போக்த்க்ருத்வங்கள் இவர்களுக்கும் உண்டே-அவை செய்வது என்ன என்ன சொல்லுகிறது மேல்-ஆனால்‌ இந்த ஸேஷத்வ போக்த்ருத்வங்க ளிரண்டும்‌ இவனுக்குச்‌ செய்யும்படி என்‌ என்னில்‌ ; இவனுடைய வ்ருத்திக்கு அநு ரூபமாயிருக்கும்‌ . என்னுமிடத்தைச்‌ சொல்லுகிறது மேல்‌

முற்பாடர்க்கு க்ரிய அங்கம் ஆனவை இரண்டும் செயல் தீர்ந்தார் வ்ருத்தியிலே ஸ்வ நிர்பந்தம் அறுக்கும்-சூரணை-25 –

(கர்ம யோகத்துக்கு அங்கங்களே சேஷத்வமும் போக்த்ருத்வமும்-செய்த வேள்வியர் -செயல் தீர்ந்தார்
வ்ருத்தி -கைங்கர்யம்
போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில் கொழிக்கும்-அடுத்த திருவடியை நீட்டினாரே ஆழ்வார்-பேரக்குழந்தை காலை தாத்தா கன்னத்தில் அடித்துக் கொள்ளுமாறு –-ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ ராமானுஜர் ஐதிக்யமும் உண்டே-படியாய்க்கிடந்து பவளவாய் காண வேண்டுமே -எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் –-போக்த்ருவத்துக்கும் விநியோகம் உண்டே-அவன் அனுபவத்துக்கு உறுப்பாகும் -)அதாவது சாஸ்த்ரஜ்ஞர்கள் -என்று சொல்லப் பட்ட உபாசகருக்கு போக்த்க்ருத்வம் ஆனது போக்ய சித்திக்கு உடலான யத்னத்திலே மூட்டுகையாலும்-அது தான் ஆத்ம ஞான பூர்வகமாக யத்தனிக்க வேண்டுகையாலே சேஷத்வமும் அதுக்கு உறுப்பாகையாலும்-உபாசன பிரதம பாவியான -கர்மத்துக்கு உத்பத்தியிலே சக கரித்துக் கொண்டு தத் அங்கங்களாய் இருக்கிற அவை இரண்டும்
செயல் தீர சிந்தித்து வாழ்வார்-நான்முகன் -88- (போக்யம் என்று அறிந்து -சிந்தித்து செயல் தீர்ந்தார் -)-என்கிற படியே இவ் ஆத்மா செய்யக் கடவது ஒன்றும் இல்லை-எம்பெருமானே நிர்வாககன் -என்று அனுசந்தித்து உபாய ரூப ப்ரவர்தியிலே நிவ்ருத்தரான பிர பன்னருடைய கைங்கர்ய ரூப பிரவர்த்தியில் அவன் உகப்பை பின் செல்லும் அது ஒழிய தங்கள் நிர்பந்தத்தை தவிர்க்கும் என்கை-பரகத அதிசய ஆதான இச்சையா உபாதேயத்வ மேவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷ (-சேஷத்வ லக்ஷணம் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூக்திகள் )- என்கிற படியே –பரகத அதிசய கரத்தவ ரூபமான சேஷத்வம்
ஸ்வ ஆஸ்ரயா இச்சையா வரும் ஸ்வ நிர்பந்தத்தை தவிர்க்கும்
இறே–இனி போக்த்க்ருத்வம் ஸ்வ நிர்பந்தத்தை தவிர்க்கை யாவது பாரதந்த்ர்ய போக்யதா ஞானம் பிறந்தவன் உடைய போக்த்க்ருத்வம்
ஆகையாலே ,ஸ்வ ரசத்துக்கு உடல் அன்றிக்கே ,சேஷி ரசத்துக்கு உடலாய் இருக்கை.
.-ஆனந்தம் அவன் ப்ரீதியை துளிர் எழுப்ப – என்கிற படியே இவனுடைய போக்த்க்ருத்வம் சேஷியானவன் ப்ரீதிக்கு வர்தகமாய் இறே இருப்பது-ஆகை இறே –அஹம் அன்னம் அஹம் அன்னம் -தைத்ரியம்-என்று ஸ்வ போக்யதையை முன்னிட்டு சேஷியை உகப்பிக்க இழிந்தவன் அஹம் அந்நாத-தைத்ரியம் -என்று ஸ்வ போக்த்க்ருத்வத்தையும் புரஸ் கரிக்கிறது-இப்படி அல்லாத போது ஒரு சேதனனோடு அனுபவித்ததாய் இராது இறே-இவற்றை எல்லாத்தையும் உள் கொண்டு ஆய்த்து — வ்ருத்தியிலே ஸ்வ நிர்பந்தம் அறுக்கும் –என்று அருளி செய்தது-

‘முற்பாடர்‌’ என்று சொல்லப்‌பட்ட உபாஸகர்க்கு (க்ரியாங்க, மானவை, இரண்டும்‌) கர்மத்துக்கு, அங்கமான ஸேஷத்வ போக்த்ருத்வங்க ளிரண்டும்‌ ; கர்மத்துக்கு யோக்‌யதாபாதகங்களான ஸேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ ; இப்படி இருக்கிற இவற்றைச்‌ சொல்லுவான்‌ என்‌ என்னில்‌ ; போக்த்ருத்வமாவது – போக்‌ய ஸித்‌திக்கு அடியான யத்நத்திலே மூட்டுகையாலும்‌, ஸேஷத்வம்‌ அதில்‌ ஆத்ம ஜ்ஞாநம்‌ முன்னாக ப்ரவர்த்திக்க வேண்டுகையாலும்‌, அந்த சேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ ஸாதந ப்ரதம பாவியான கர்மத்தினுடைய உத்பத்தியிலே ஸஹ கரிக்கையாலும்‌ அவற்றை க்ரியாங்கம்‌ என்கிறது –
இப்படிப்பட்ட ஸேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ (செயல் தீரந்தார்‌ வ்ருத்தியில்‌) “செயல்‌ தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்‌”? (நா. திருவ. 88) என்கிறபடியே உபாய ரூப ப்ரவ்ருத்தியில்‌ ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே நிவ்ருத்தரான ப்ரபந்தருடைய, வ்ருத்தியில்‌ – கைங்கர்ய வ்ருத்தியிலே என்றபடி. (ஸ்வ நிர்பந்த, மறுக்கும்‌)-ஸ்வ போக்த்ருத்வ ப்ரதிபத்தியையும்‌, மதீயத்வ ப்ரதிபத்தியையும்‌ தவிர்க்கும்‌. எங்ஙனே என்னில்‌ ; இவனுடைய போக்த்ருத்வம்‌ அவனுடைய போகத்துக்கு வர்த்தகமாயிருக்கும்‌, * அஹமந்நம்‌ என்ற பின்பு ‘‘அஹமந்தாத.:” என்றது – போக்த்ருத்வமிறே, இப்படிச் சொல்லாத போது ஒரு சேதநனோடே அநுபவித்ததா யிராதிறே ; இவனுடைய ஸேஷத்வமும்‌ அத் தலைக்கு அதிஸய கரமாயிருக்கும்‌, “*பரகத-அதிஸய-ஆதநேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம்‌ ஸ ஸேஷ:”, ‘“யதேஷ்ட விநியோகர்ஹம்‌ ஸேஷ ஸப்தேந கத்‌யதே”, “ஈஸ்வரேண ஜகத் ஸர்வம்‌ யதேஷ்டம்‌ விநியுஜ்யதே” என்னக் கடவதிறே

போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும்–சூரணை -178-அதாவது
இப்படி போக்ய பூதரான ஆழ்வாருடன் கலந்து பரிமாறும் இடத்தில் – ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் –திருவாய்-9-6-7–என்றும் – ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -திருவாய்-9-6-9–என்றும் பேசும்படி அத் தலை இத் தலையாய் சேஷி சேஷ பாவம் மாறாடும் சீல குணம் –காட்கரையிலே கரை அழிக்கும்-அதாவது–திரு காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினை தொரு-திருவாய்-9-6-1- -என்று
வித்தராய்ப் பேசின திருகாட்கரையிலே கரை அழியப் பெருகும் என்கை — கரை அழிக்கும் என்கிறது -காட்கரை -என்கிற சமாதியாலே .–நம் கண்ணன் கள்வங்கள்-என்னில் முன்னம் பாரித்து என்னை முற்றம் பருகினான் –-கீழே என் உயிர் தான் உண்டான் -இங்கு பருகினான் -பெருமானுடைய உண்ணும் சோறு பருகும் நீர் இருக்கும் படி -தட்டு மாறும் சீலம் – ஆராவமுத ஆழ்வார் திருமழிசைப் பிரான் -அங்கும் தட்டு மாறிற்றே -)

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –4
-9-அநந்ய பிரயோஜனரும் – பிரயோஜனாந்தர பரரும்- அந்ய பரரும் கிடந்தது சஞ்சரியா நின்றால் ஒரு நினைவுற்று அசேதனவத் கிடக்க வேணும்-பார தந்த்ர்யத்துக்கு அசேதன சமாதியாகவும் வேணும் – அது புருஷார்த்தமாகைக்கு காணவும் வேணும்

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது ஓடி
அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது-88-ஆத்மா சரீரங்களை விட்டு பிராணன்களைக் கொண்டு யமபடராலே ப்ரேரிதனாய் போம் போது- ஆளிட்டு அந்தி தொழ ஒண்ணா தாப் போலே ஆஸ்ரிதரை ஆளிட்டு அழைத்துக் கொள்ளாதே- தானே ஓடி வந்து இவர்கள் தர்சனத்தாலே வந்த அறிவு கேடு முதலான துரிதங்களை எல்லாம் போக்குமவன் திரு நாமத்தை ப்ரீதியோடு சொல்லித் தனக்கு ஒரு சாத்யம் இல்லாத படி  அனுசந்தித்து வாழ்வாரே வாழ்வார்-செயல் என்று கர்மா ஆகவுமாம்
இவ்வாத்மா தான் செய்யக் கடவ ஷூத்ர சமயம் ஆகிற பந்தத்தை யுடையார் வாழ்வு வ்யர்த்தம்
துக்க ஹேதுவான அஹங்கார மமகார கர்ப்பமாகையாலே பந்தகமாய் ஷூத்ர மான கர்மாத் யுபாய பேதங்களைப் பற்றினார்க்கு ஒரு பிரயோஜனமும் இல்லை – அந்வய வ்யதி ரேகங்களாலே இவற்றுக்கு உபாயத்வம் முதலிலே இல்லை என்று உள்ளபடி யுணர்ந்து இருக்கும்-ஞானி நாமக் ரேசரர் ஆகையாலே
பந்தனையார் வாழ்வேல் பழுதென்று அவற்றில் ஒரு சரக்கற அருளிச் செய்கிறார் –
துக்க ஹேதுவான-அஹங்கார கர்ப்பம் ஆகையாலே பந்தகமாய்- ஷூத்ரமான கர்மாத் யுபாய பேதங்களைப் பற்றினார்க்கு
ஒரு பிரயோஜனமும் இல்லை –பகவத் ப்ரீதியே பலத்துக்கு உபாயம்-கண்டாகர்ணன் க்ஷத்ர பந்து பக்கலிலே பார்த்தோமே 

இந்த க்ரியா வ்ருத்தி சப்தங்களால் சொன்ன கர்ம கைங்கர்யங்கள் இவர்களுக்கு எதுக்கு அநுகுணமாய் இருக்கும் -இந்த க்ரியா வாசியான கர்மமும்‌ வ்ருத்தி வாசியான கைங்கர்யமும்‌ எதுக்கு அநுரு,ணமா யிருக்கு மென்னில்‌ மேல் சொல்லுகிறது-

கர்ம கைங்கர்யங்கள் சத்ய அசத்ய நித்ய அநித்திய வர்ண தாஸ்ய அனுகுணங்கள்-சூரணை -26 –(அதாவது கர்மம் அசத்யமாய்–அநித்யுமுமான வர்ணத்துக்கு அநுகுணமாய் இருக்கும்
கைங்கர்யம் சத்தியமாய் நித்யமுமான தாஸ்யத்துக்கு அநுகுணமாய் இருக்கும்
என்கை-)

வர்ணத்தை அசத்தியம் அநித்தியம் என்கிறது ஆத்மாவுக்கு உள்ள வேஷம் அல்லாமையாலே
சததைக ரூபம் அன்றிக்கே -ஔ பாதிகமுமாய் அநித்யமுமாய் நச்வரமான தேக அவதியாய் போருகையாலே
–தாஸ்யத்தை சத்யம் நித்யம் என்கிறது-திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் திருப்பல்லாண்டு -11– என்கிறபடியே ஆத்மாக்கு உள்ள வேஷம் ஆகையாலே சததைக ரூபமாய் யாவதாத்மா அனுவர்த்தி யாகையலே-வர்ண அனுகுணம் என்றது -வர்ணத்துக்கு சேர்ந்தது என்ற படி-
தாஸ்ய அனுகுணம் என்றதும் அப்படியே-தாஸ்யத்துக்கு சேர்ந்தது என்ற படி-(விசிஷ்ட வேஷத்தை பொறுத்தே இருக்கும் கர்மம் -அசத்திய அநித்ய வர்ணம்-கைங்கர்யம் நிஷ்க்ருஷ்ட வேஷம் பொறுத்தே இருக்கும் -சத்யமாயும் -நித்யமாயும் தாஸ்யம் திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -தாஸ்யம் பழைமை நித்யம் -அங்கும் உண்டே நிருபாதிகம் -சத்யம் )

இவை இரண்டிலும்‌ வைத்துக் கொண்டு எத்தை எதுக்கு அநுகுணம்‌ என்கிறதென்னில்‌ ; கர்மம்‌ அஸத்யமுமாய்‌, அநித்யமுமான வர்ணத்துக்கு அநு கு,ணமாயிருக்குமென்றும்‌, கைங்கர்யம்‌ ஸத்யமுமாய்‌ நித்யமுமான ஸ்வரூபத்திலே ஆகையாலே ஸத்யமுமாய்‌ நித்யமுமாயிருக்கும்

அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-திருமாலே – இவ்வாத்ம வஸ்து ஒரு மிதுன சேஷம் -என்று சேஷத்வ பிரதி சம்பந்தியை சொல்லுகிறார்கள்-இத்தால் மாதா பித்ர் சேஷத்வமும் -தேவதாந்தர சேஷத்வமும் கர்ம உபாதிகம் என்கை
அதவா-தேவரீருக்கு பிராட்டி நிரூபக பூதையாய் இருக்கிறாப் போலே எங்களுக்கும் தாஸ்யம்
நிரூபகம் என்கிறார்கள் -என்றுமாம் நானும் – பிரயோஜனாந்தர பரதையாலே அநாதி காலம் அன்யார்ஹனாய் போந்த நானும் – சேஷி பக்கல் பிரயோஜனாந்தரத்தை அபேஷிக்கை யாவது -பதிவ்ரதை பர்த்தாவின் பக்கலிலே வ்யபிசாரத்தை அபேஷித்தவோபாதி இறே –உனக்குப் பழ வடியேன் – உனக்கு சேஷித்வம் அநாதி யானவோபாதி எனக்கும் சேஷத்வம் அநாதி என்கை
உனக்கு – பிரயோஜனாந்தரத்தை அபேஷித்து திருவடிகளில் கிட்டினதுவே ஹேதுவாக அநந்ய
பிரயோஜநன் ஆக்க வல்ல உனக்கு-இந்த ஸ்வரூப ஞானம் எவ் வழியாலே பிறந்தது என்னில்
சகல வேதாந்த தாத்பர்யமான மந்திர ரஹச்யத்தாலே பிறந்தது என்கிறார் மேல்-

இவை இரண்டுக்கும் பிரேரகங்கள் எவை -இவை இரண்டுக்கும்‌ ப்ரேரகர்‌ ஆர்‌ என்னில்‌ -என்ன சொல்லுகிறது-

இவற்றுக்கு விதி ராகங்கள் பிரேரகங்கள்-சூரணை -27 –

அதாவது – யஜேத -யஜுர் வேதம்-ஜூஹுயாத்–கர்ம மீமாம்சை-இத்யாதி யான சாஸ்திர விதி கர்மத்துக்கு பிரேரகம் -அசேஷ சேஷ தைகரதி யாகிற ராகம் கைங்கர்யத்துக்கு பிரேரகம் என்கை .
(பிரேரகம் தூண்டுபவை-காதல் -நின் கண் வேட்கை எழுவிப்பேனே -இசைவித்து – ஒழிவிலா காலம் எல்லாம் வழு விலா அடிமை -அசேஷ -சேஷதைக ரதி ரூபம் நித்ய கிங்கரோ பவாமி -அனுபவம் -ப்ரீதியைத் தூண்ட -அது கைங்கர்யத்தில் தூண்டும்-அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம்-இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் -மூவாறு மோசம் மோகிக்கப் பண்ணுமே ) பகவத் அனுபவ ஜனித ப்ரீதி காரிதம் இறே கைங்கர்யம் .-உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் -திருவாய் -10-8-10–என்னக் கடவது இறே- (கிரமம் படி இல்லாமல் -பணி செய்து முதலில் பாதம் பெற்றது அப்புறம் -உபாசகருக்குத் தானே கிரமம் )

“இத,ம் குரு ‘, “அநேந யஜேத” என்றும்‌ சேதநனைக்‌ குறித்துச் சொல்லுகிற ஸாஸ்த்ர விதிகள்‌ கர்மத்துக்கு ப்ரேரகம்‌. பகவதநுபவ ஜநித ப்ரீதி கைங்கர்யத்துக்கு ப்ரேரகம்‌. ““உற்றேனுகந்து பணி செய்து” (திருவாய்‌. 10- 8 – 10)என்னக் கடவதிறே.

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்

கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே கிட்டிக் கொடு நின்றேன் –ப்ரீதி ப்ரேரிதனாயக் கொண்டு -திருவாய் மொழி பாடி -உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் – –சாதகமாய் மேல் -சாத்தியமாகச் சொல்லுகிறது அன்று -இரண்டும் ஏக காலத்திலே உள்ளதாகையாலே –ஈதே இன்னம் வேண்டுவது-இது தானே மாறி மாறி யாவதாத்ம பாவியாகச் செல்லுகை இறே –பு நரா வ்ருத்தி இன்றிக்கே ஒழிகை யாவது -மீளாது ஒழிகை -விதி போலே இருக்கிறதன்றே – எந்தாய்--இவ்வனுபவம் ஸ்வரூப அனுரூபம் என்கிறது –இத்தலைக்கு சேஷத்வமும் தேவர்க்கு சேஷித்வமும் இறே ஸ்வரூபம் -இவர் அபேக்ஷித்த படியே செய்கிறோம் என்ன -ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

இவற்றுக்கு ஆஸ்ரயம் யார் என்ன சொல்லுகிறது-இவற்றுக்கு ஆஸ்ரயம்‌ ஆர்‌ என்னில்‌

மண்டினாரும் மற்றையாரும் ஆஸ்ரயம்-சூரணை -28 –

அதாவது-கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டினார்-திருக் குறும் தாண்டகம் -19– என்று உகந்து அருளின நிலங்களிலே அத்ய அபிநிவிஷ்டராய் இருக்கிற பிர பின்னர்
கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயம்-விளக்கினை விதியின் காண்பார் மெய்மையைக் காண்கிற்பாரே -திருக் குறும் தாண்டகம்-18–என்று கீழில் பாட்டில் சொன்ன மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே -திருக் குறும் தாண்டகம் -19—மற்றையரான உபாசகர் கர்மத்துக்கு ஆஸ்ரயம் என்கை-(சாஸ்திரம் – –உபாசனம்-விளக்கினை விதியில் காணும் மற்றையரான உபாசகர் -கர்மத்துக்கு ஆஸ்ரயம்-சாஸ்த்ர தாத்பர்யம் -திருமந்திரம் —பிரபன்னர் -அர்ச்சாவதார திவ்ய மங்கள விக்ரஹ கைங்கர்யம் –என்றவாறு )இத்தால் கர்ம கர்த்தாக்களையும் கைங்கர்ய கர்த்தாக்களையும் சொல்லிற்று ஆய்த்து-

(மண்டினாரும்‌ மற்றையாரும்‌ ஆஸ்ரயம்‌)-“கண்டியூர்‌” (திருக்குறு. 19) இத்யாதி,. மண்டினார்‌ என்கிறது – உகந்தருளின நிலங்களிலே அத்யபிநிவிஷ்டராயிருக்கிற ப்ரபந்நரை ; மற்றையார்‌ என்கிறது – “விளக்கினை விதியில்‌ காண்பார்‌” (திருக்குறு. 18) என்கிற உபாஸகர்‌ என்று ப்ரஸித்‌தமிறே. இத்தால்‌ கர்மத்துக்கு ஆஸ்ரயம்‌ உபாஸகர்‌, கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயம்‌ ப்ரபந்நர்‌ என்றபடி-

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை  திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே -19-–அவன் உகந்து அருளின இத் திருப் பதிகளிலே நெஞ்சு மண்டினவர்கள் உய்யல் அல்லது அல்லாதார்க்கு உஜ்ஜீவிக்க விரகு உண்டோ –

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18--சாஸ்த்ரங்களில் விதித்தபடியே
உபாசித்து அவனைக் காண்பார் –என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி-

இவற்றுக்கு விஷயம் ஏது என்ன சொல்லுகிறது-இவற்றுக்கு விஷயம்‌ ஏதென்னில்‌ ;

அருள் முடிய நிறுத்தி அடைய நின்றதும் நல்லதோர் அருள் தன்னாலே நன்றும் எளியன் ஆகிறதும் விஷயம்-சூரணை -29 –

அதாவது-எத் தவம் செய்தாருக்கும் அருள் முடிவது ஆழியான் பால் -நான்முகன் 2–என்கிற படியே ஆஸ்ரயண பல சித்தி தன்னுடைய பிரசாதத்தாலே யாம்படி –-தன் மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக -திருவாய் -5-2-8–என்ற படியே தனக்கு தனுபூதரான தேவதைகளை நிறுத்தி –
அவரவர் விதி வழி அடைய நின்றனர் -திருவாய்-1-1-5–என்கிற படியே ஆஸ்ரயிக்கிற சேதனர் வித்யுக்த பிரகாரேன ஆஸ்ரயித்து பலம் பெரும் படி தேவதாந்தர்யாமியாய் நின்ற இடம் கர்மத்துக்கு விஷயம்நல்லதோர் அருள் தன்னாலே காட்டினான் திரு அரங்கம் -திருமாலை -10–என்றும்-கருத்துக்கு நன்றும் எளியனாய்-திருவாய்-3-6-11- -என்று சொல்லுகிறபடியே கேவல ஸுய க்ருபையாலே அத்யந்த சுலபனாய் கொண்டு அர்ச்சாவதாரமாய் நிற்கிற இடமே கைங்கர்யத்துக்கு விஷயம் என்கை-

”எத் தவம்‌ செய்தார்க்கும்‌ அருள் முடிவதாழியான்‌ பால்‌”: (நான்‌. திருவ. 2) என்றும்‌, “’நிறுத்தி நும்‌ உள்ளத்துக் கொள்ளும்‌ தெய்வங்களும்மை உய்யக் கொள்‌ மறுத்துமவனோடே கண்டீர்‌” (திருவாய்‌. 5 – 2- 7) என்றும்‌, ”அவரவர்‌ விதி வழி அடைய நின்றனரே” (திருவாய்‌. 1 – 1 – 5] என்றும்‌ சொல்லுகிறபடியே தேவதைகளுக்கு அந்தர்யாமியாய்க் கொண்டு நின்ற விடமும்‌, ”நல்லதோரருள் தன்னாலே காட்டினான்‌ திருவரங்கம்‌”? (திருமாலை 10) என்றும்‌, “கருத்துக்கு நன்றுமெளியன்‌”’ (திரு வாய்‌. 3 – 6 – 11) என்றும்‌ சொல்லுகிறபடியே அர்ச்சாவதாரமாய்க் கொண்டு நின்ற இடமும்‌. –

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத் தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2–எல்லா சாதன அனுஷ்டானம் பண்ணினவர்களுக்கும்
அவற்றுக்கும் பலம் சர்வேஸ்வரன் பக்கலில் நின்றும் என்கை-ஏழு ஏழு  படி இங்கனே தபஸ் ஸூ பண்ணினாருக்கும் எம்பெருமான் பிரசாதத்தால் அல்லது பல பர்யந்தமாய் முடியாது-

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே

கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7—உங்கள் நெஞ்சிலே நீங்கள் நிறுத்திக் கொள்ளுகிற தேவதைகள் –த்யேய வஸ்துக்களை நிறுத்துகையும் த்யாதாவுக்கே பரம் என்கை அங்குஷ்ட மாத்ர புருஷோமத்ய ஆத்மனி திஷ்ட்ட்தி-என்கிறவன் அவசர ப்ரதீஷனாய் நிற்கிறது அன்றே -யுக்த்யா ஆபாசங்களாலும் வசன ஆபாசங்களாலும் பொரி புறம் தடவி நிறுத்துகை –உங்களை உய்யக் கொள்ளும் இடத்தில் -ரஷிக்கும் போது தாங்கள் அக்ஷமர் ஆகையால் –பேணிலும் வரம் தர மிடிக்கில்லாத தேவரை -திருவில்லாத் தேவரை –மறுத்தும் அவனொடே கண்டீர் – மீண்டும் அவனோடே சேர்த்து -அவன் பிரசாதத்தாலே கிடீர் –நீங்கள் அவர்களை ஆஸ்ரயித்ததாலும் பலம் தருவான் அவனே –
பலமத-நஹி பாலன சாமர்த்த்யம் ருதே ஸர்வேச்வரீம் ஹரீம்
– இவர்களை ஆஸ்ரயிக்க வேறே ஒருவன் பலம் தருமது எங்கே கண்டோம் என்னில் –மார்க்கண்டேயனும் கரியே- ஸ்ரீ மார்க்கண்டேய பகவான் சாக்ஷி-

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே

மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8—ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசித கர்மங்களாலே சமாராதித்து ஸ்வ அபிலஷிதங்களை பெற்று உஜ்ஜீவிக்க-எவ் வுலகுக்குந் தன்மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக –-பின்ன ருசிகளான -அதிகாரிகளை யுடைத்தான சர்வ லோகங்களுக்கும் –தன் சரீர பூதரான தேவதைகளை சமாராத்யராக நிறுத்தினான் –ஈஸ்வரோஹம் என்று இருப்பார் தலை வணங்குகைக்காக நிறுத்தினான் –-அத் தெய்வ நாயகன் தானே-
ஆஸ்ரயிப்பார்களோடு ஆஸ்ரயணீயரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகன் அவன் தானே -சேதனருடைய குண அனுரூபமாக ஆராத்யராகவும் அபிமத பலப்ரதராம் படியும் பண்ணினான்

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே 
–1-1-5—அவரவர் இறையவர் அவ்வோ தேவதைகள்-குறைவிலர்
ஆஸ்ரயிக்கிற வர்களுடைய பலம் கொடுக்கைக்கு குறை யுடையவர் அல்லர்-இறையவர்-நிருபாதிக சர்வேஸ்வரன்-அவரவர் விதி வழி யடைய-ஆஸ்ரயிக்கிறவர்கள் வித்யுக்த பிரகாரத்தாலே ஆஸ்ரயிக்கவும்-ஆஸ்ரயணீயர் அவர்களுக்கு பல பிரதானத்துக்கு சக்தராகவும்-நின்றனரே அந்தராத்மதயா நின்றார்-

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டீரே நம்பிமீர்காள் கெருட வாகனும் நிற்கச்
சேட்டை தன் மடி யகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே–10—சத்வ பிரசுரராய் தன்னைப் பற்றும் அளவு உடையவர் அன்றிக்கே இருக்கும் ரஜஸ் தமஸ் பிரசுரர்க்கும் தேவதைகளை நாட்டினான் –
அதுக்கடி தன்னரசு போலே ஸ்வ தந்த்ரராய் மூலையடியே திரியப் புக்கவாறே ஸ்வ ஸ்வ குண அனுகூலமாக தேவதைகளை ஆஸ்ரயித்து பின்னை சேதனர் இறே – நம் வாசி அறிந்து -நம்மைப் பற்றுகிறார்கள் என்னும் நினைவாலே யாய்த்து தேவதைகளை நாட்டிற்று –உபக்நத்தை பெறாத கொடி போலே யாய்த்து ஈஸ்வரனுடைய ஆத்ம பாவத்தை ஒழியில் தேவதைகள் உடைய சத்தாதிகள் இருப்பது –சுள்ளிக் கால் நாட்டினால் போலே இருக்கிறது ஆய்த்து-நிறுத்தினான் தெய்வங்களாக -என்னக் கடவது இறே –நல்லதோர் அருள் தன்னாலே – தான் நினைத்த வழியே தன்னுடைய ஹிதம் அறிந்து போராதே
நோவு பட்டு இருந்தன ஆகாதே என்று கிருபை பண்ணினான் ஆய்த்து –நல்லதோர் அருள் –இவற்றின் உடைய கர்ம அனுகுணம் ஆதல் – ஆஸ்ரய அனுகுணம் ஆதல்-பண்ணும் அருள்போல் அன்றியே –க்ர்ப்பயா கேவலம் –என்கிறபடியே-இவற்றின் உடைய துர்கதியைக் கண்டு பண்ணும் அருள் –இவர்கள் தம் தாம் தசையை நினைந்து அனுசந்தித்து அதுக்கு அனுதபிக்கவும் அறியாதே இருக்கச் செய்தே பண்ணும் அருள் இறே-நல்லதோர் அருள் -என்கையாலே-கீழ் தேவதைகளை உண்டாக்கி வைத்ததும் அருளின் கார்யம் என்கிறது –நல்லதோர் அருள் தன்னாலே -காட்டினான் திருவரங்கம்--சிலர் எங்களுக்கு காட்ட வேண்டும் என்ன -காட்டுகை அன்றிக்கே முலைக் கடுப்பு தீர தரையிலே பீச்சுவாரைப் போலே தன் செல்லாமையினால் காட்டினான் ஆய்த்து –

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11–கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே அகவாயிலே மிகவும் பிரகாசிக்கிற படி – இவருக்கு எங்கும் இதுவே சம்ச்லேஷ விஸ்லேஷன்களுக்கு பிரயோஜம்-சம்ச்லேஷம் ஆகிறது -மானஸ அனுபவம் -விஸ்லேஷம் ஆகிறது -பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷையாலே மானஸ அனுபவத்துக்கு வரும் குலைதல்-மண் கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்-நித்ய ஸூரிகளுக்கு ஸூலபன் ஆனால் போலே-சம்சாரிகள் என்று வாசி வையாதே அர்ச்சாவதார முகத்தால் வந்து ஸூலபனானவனை-

இவ்வோ நிலைகளை விஷயமாக உடைத்தாய் ஆகையாலே கர்ம கைங்கர்யங்கள் இப்படி சொல்லப் பட்டன என்கிறார்-

இவற்றாலே சாதாரணம் அசாதாரணம் என்னும்–சூரணை -30 –

அதாவது-இப்படி தேவதா அந்தர்யாமியையும் அர்ச்சாவதார தையும் விஷயமாக உடைய இவ் ஆகாரங்களாலே சாதாரண விக்ரக விசிஷ்டனை விஷயமாக உடைய கர்மத்தை சாதாரணம் என்றும்
அசாதாரண விக்ரக விசிஷ்டனை விஷயமாக உடைய கைங்கர்யத்தை அசாதாரணம் என்றும் சொல்லும்
என்கை-

(இவற்றாலே) இந்த ப்ரமாண ப்ரகாரங்களாலே (ஸாதாரணம்‌ அஸாதாரணம்‌ என்னும்‌) ஸாதாரணமான்‌ விக்‌ரஹ விஸிஷ்டன்‌ கர்மத்துக்கு விஷயம்‌, அஸாதாரணமான விக்‌ரஹ விஸிஷ்டன்‌ கைங்கர்யத்துக்கு விஷயம்‌ என்று விஷய பேதத்தை அருளிச் செய்து, அதில்‌ அஸாதாரண விக்‌ரஹ விஷய கைங்கர்ய நிஷ்டன்‌ ஸாதாரண விக்ரஹ விஷயத்திலே ஸர்வ ஸாமாந்ய தயா கர்த்தவ்யமானவற்றில்‌ அந்வயியான்‌ என்கிறார் –

இவ் அசாதாரண சேவையிலே அதிகரித்தாருக்கு சாதாரணமான வதில் அந்யவம் தன்னடையே கழியும்படியை ச த்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார்-ஆனால்‌ பழையதாக அநுவர்த்தித்துப்‌ போந்ததுமாய்‌ வர்ணாத்‌,ய ஸாதாரணமுமான ஸத்‌வாரக விஷய ப்ரவ்ருத்தியை இப்போது இவனாலே விடப் போமோ என்னில்‌

ஜாதி ஆஸ்ரம தீஷைகளில் பேதிக்கும் தர்மங்கள் போலே அத்தாணி சேவகத்தில் பொதுவானது நழுவும்-சூரணை-31

(அசாதரண கைங்கர்யத்தில் இழியவே சாதாரணமான கர்மம் தன்னடையே கழியும் –-ஸ்ரீ லஷ்மணன் ஸ்ரீ ராம கைங்கர்யத்தில் இழியவே ஊர்மிளை உடன் கூடின தர்ம அனுஷ்டானம்
தன்னடையே கழிந்ததே –நற்செல்வன் தங்காய்-ஸ்ரீ ஆச்சார்ய கைங்கர்யத்தில் இழியவே பகவத் கைங்கர்யம் நழுவும் – ஸ்ரீ வடுக நம்பி பால் காய்ச்சி ஸ்ரீ நம் பெருமாள் சேவை விட்டாரே )-அதாவது
ஸ்வ கர்ம ப்ராஹ்மணஸ்ய -அத்யயனம் ,அத்யாபனம் ,யஜனம் யாஜனம் ,தானம் ப்ரதிக்ரஹணம்,
தாயாத்யம், சிலோஞ்ச்ச ,அந்யச்ச, அபரிக்ருஹீதம் , ஏதான் ஏவ ஷத்ரியஸ்ய அத்யாபன யாஜன பிரதிக்ரஹணாதி ,பரிஹார்யாணி ,தண்ட யுத்த தாதிகார , ஷத்ரியவத் வைச்யஸ்ய தண்ட யுத்த வர்ஜம் க்ருஷி கோரஷண வாணிஜ் யாதிகம் க்ராஹ்யம்–ஆபஸ்தம்ப ஸூத்ரம்
-என்கையாலே
அத்யயன அத்யாபன யஜன யாஜன தான பிரதிஹ்ருக -ரூப ஷட் கர்மமும் பிராமணனுக்கு கர்தவ்யமாய் ஷத்ரிய வைஸ்யர்களுக்கும் அத்யாபனாதி த்ரயம் ஒழிய அத்யயனாதி த்ரயமே கர்தவ்யமாய் , அவர்கள் தங்கள் உள்ளும் தண்ட யுத்தங்கள் ஷத்ரியனுக்கே அசாதாரணமாய் ,
க்ருஷி கோ ரக்ஷண வாணிஜ்யங்கள் வைஸ்யனுக்கு அசாதாரணமாய் , சுஸ்ருஷா சூத்ரச்ய இதரேஷாம் வர்ணானாம்-என்கையாலே சூத்ரனுக்கு திரை வர்ணிக ஸூஸ்ருஷையே தர்மமாய் ,
இப்படி தத் ஜாத்ய அனுகுணமாக ஒருவனுக்கு உபாதேயம் ஆனது ஒருவனுக்கு த்யாஜ்யமாக கொண்டு தர்மங்கள் பேதித்து இருக்கும் இறே-
–பிரமச்சாரியான தசையில் உபாதேயமான பிஷா சரண சமிதா தரணாதிகள் க்ருகஸ்தனான தசையில் த்யாஜ்யங்களாய் அக்னி கோத்ர அதிதி சத்காராதிகள் உபாதேயம் ஆகையாலும் வனஸ்தனான தசையில் – -சந்த்யஜ்ய க்ராம்யமாகாரம் சர்வஞ்சைவ பாரிசாதம்-என்கையாலே பூர்வ ஆஸ்ரமத்தில் உபாதேயமான க்ராம்யாகார பரிச்சதாதிகள் த்யாஜமாய் –
வசீத சர்வ சீரம் வா -என்று தொடங்கி சொல்லப் பட்ட சரம சீர வசனத்வ ஜடிலத்வ மச்முருச்லோம நகதாரண வன்ய ஆகாரங்கள் உபாதேயம் ஆகையாலும் சந்யாசியான தசையில் பூர்வ ஆஸ்ரம உபாதேயமான அக்நிஹோத்ர அதிதி சத்காராதிகளும் ஜடிலத்வாதிகளும் த்யாஜ்யமாய்
அநக்நிஸ் அநிகேதஸ் ஸ்யாத் -மனு ஸ்ம்ருதி -இத்யாதிப் படியே அனக்நித்வ அநிகேதத்வ
அசஹாயத்வாதிகளும் உபாதேயம் ஆகையாலும் ஆஸ்ரய தர்மம் பேதியா நின்றது இறே .-ஜியோஷிடோமாதிகளில் தீஷித்தவனுக்கு வர்ணத்ரைய ஆஸ்ரம சச்துஷ்டைய சாதாரணமாய்
அகரேண பிரத்யவா எதாய அவஸ்ய கர்தவ்யமாய் போரும் நித்ய கர்மம் அநனுஷ்டேயமாய்
ஜியோதிஷ்டோமாதி தர்மமே அனுஷ்டேயம் ஆகையாலே தீஷையிலே தர்மம் பேதித்து இருக்கும் இறே-ஆக இப்படி பிராமணாதி ஜாதிகளிலும் பிராமசார்யாதி ஆஸ்ரமங்களிலும் ஜியோதிஷ்டோமாதி தர்மாந்தர தீஷைகளிலும் பேதிக்கும் தர்மங்கள் போலே அசாதாரண விக்ரக சஹிதேஸ்வர விஷயம் ஆகையாலே அசாதாரணமாய் ,அத ஏவ –அத்தாணி சேவகம் –திருப்பல்லாண்டு -8- -என்று
அந்தரங்க சேவை யாகிற கைங்கர்யத்திலே அதிகரித்தவர்களுக்கு தேவதாந்த்ரி விஷயமாய் தத் சரீர பூத தேவதாத்வார தத் ஆராதனம் ஆகையாலே சாதாரணமாய் இருந்து உள்ள கர்மம் உறங்குவான் கை பிண்டம் போலே தன்னடைவே நழுவும் என்கை –இத்தால் வர்ணாஸ்ரம நிஷ்டர்க்கு தத் அதிகார அநுரூப தர்மம் ஒழிய அநுகுணமானது த்யாஜ்யதையா கழிக்கப் படுமா போலே ஸ்வரூப யாதாம்ய தர்சிகள் ஆனவர்களுக்கு தத் அநுரூப தர்மம் ஒழிய அனனுரூபமானது த்யாஜ்யமாய் தன்னடையே விட்டுக் கழியும் என்றது ஆயிற்று--இப்படி இருக்கச் செய்தே ,சிஷ்டர்கள் அனுஷ்டித்து போருகிறது –
ஸ்வ அனுஷ்டத்தை-அநநுஷ்டானத்தை – பின் சென்று லோகம் நசிக்க ஒண்ணாது என்று
ஆந்ரு சம்சயத்தாலே இறே-யதி ஹ்யஹம் ந வர்த்தேயம் ஜாது கரமண்ய தந்த்ரித மம வர்த்மாநுவர்த்தந்தே மனுஷ்யா பார்த்த ஸர்வஸ –ஸ்ரீ கீதை -23–உத் சீதே யுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம் சங்கரஸ்ய ச கர்த்தா ஸ்யாம் உபஹந்யாம் இமா பிரஜா –ஸ்ரீ கீதை -24- என்கிற படி பரார்தமாகவே இறே இவர்கள் அனுஷ்டிப்பது –(குல வர்ண ஆஸ்ரம தர்ம ஸங்க்ரஹம் ஆகாமைக்காக
-பரார்த்தம் பரனது ஆனந்தத்துக்கு என்றுமாம் )

ஜாதி த,ர்மமானது ஜாத்யந்தரத்திலே பேதிக்கக் கண்டோம்‌, கண்ட படி என்‌ என்னில்‌, யஜந-யாஜந-அத் யயந-அத்யாபந தாந ப்ரதி க்‌ரஹங்களாகிற ஷட் கர்மங்கள்‌ க்ஷத்ரியாதி,களில்‌ பேதியா நின்றன விறே –ஆஸ்ரம தர்மம்‌ ஆஸ்ரமாந்தரத்தில்‌ பேதியா நின்றது. இவை இத்தனையும்‌ பேதித்தாலும்‌ பேதியாத நித்ய தர்ம-நைமித்திக த,ர்மங்கள்‌ ஜ்யோதிஷ்டோமாதி, தீக்ஷைகளில்‌ பேதிக்குமாப் போலே ‘அத்தாணிச் சேவகமும்‌”’ (திருப்பல்‌. 8) என்கிற அந்தரங்க கைங்கர்யத்தில்‌ வர்ணாஸ்ரம ஸாதரண தர்மம்‌ தானே நழுவுமிறே-உறங்குகிறவன கையில்‌ எலுமிச்சம் பழம் போலே இது தனக்கு அவகாஸ மில்லை. இந்த த்‌ருஷ்டாந்த பலத்தாலே இவ் வதிகாரிக்கு அகரணே ப்ரத்யவாயமில்லை என்கிறது. கீழ்ச் சொன்னவை தன்னைப் போலே ; இப்படி இருக்கச் செய்தேயும்‌ ஸிஷ்டர்கள்‌ அநுஷ்டித்துப்‌ போருகிது ஆந்ரு ஸம்ஸ்யத்தாலே யிறே 

நெய்யிடை நல்லதோர் சோறு நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே –8-–அத்தாணி -என்று பிரியாமை –சேவகம் -என்று சேவை-ஐஸ்வர்யார்த்திக்கும் அநவரத பாவநையும் -அந்திம ச்ம்ர்த்தியும் அநந்ய பிரயோஜநோபாதி கர்த்தவ்யம் இறே–ஆனால் ஐஸ்வர்ய சாதனத்தையும் –தந்து -என்று பிரயோஜத்தோடு ஒக்க சொல்வான் என் என்னில் வெள்ளுயிர் ஆன பின்பு சொல்லுகிறார்கள் ஆகையாலே அந்த சாதனமும் ஸ்வயம் பிரயோஜனமாய் இறே இருப்பது -அநந்ய பிரயோஜனனுக்கு ஸ்வயம் பிரயோஜனமான சேவை சாதனமாக்கி கிடீர் ஷூத்தரமான ஐஸ்வர்யத்தை தந்தது என்கை

இந்த கைங்கர்ய நிஷ்டருக்கு கர்ம நிஷ்டரோடு சேர்த்தி இல்லாமையை சொல்லுகிறது மேல்-இனி கர்ம நிஷ்டனிற் காட்டில்‌ கைஙகர்ய நிஷ்ட,னுக்குள்ள வைஷம்யம்‌ சொல்லுகிறது-

சாதன சாத்தியங்களில் முதலும் முடிவும் வர்ண தர்மிகள் தாச வ்ருத்திகள் என்று துறை வேறு இடுவித்தது-சூரணை -32 –

(சாதனத்தில் முதல் வர்ண தர்மிகள் என்று துறை வேறு விடுவித்து -என்றும்-சாத்யத்தில் முடிவு தாச விருத்திகள் என்று துறை வேறு விடுவித்து -என்றும் பிரித்து பொருள்-சாதனம் -உபாசனம் முதல் படி- கர்ம யோகம் – வர்ண தர்மம் – பகவத் அனுபவம்- சாத்தியம் முடிவு தானே வ்ருத்தி கைங்கர்யம் முடிவு- தாஸ்யம் தானே சத்யம்- நித்யம்- அந்தரங்க அத்தாணிச் சேவகம்-இந்த உயர்ந்த நிலையைக் காட்டவே அது தன்னடையே கழியும் ) அதாவது சாதனத்தில் முதல் அடியான கர்மமும் முடிந்த நிலமான கைங்கர்யமும் -இந்த நெடு வாசி அறிந்தவர்களை நீங்கள் வர்ண தர்மிகள் ,நாங்கள் தாஸ வ்ருத்திகள் -என்று உறவு அறுத்து துறை வேறு இட்டு போகப் பண்ணிற்று என்கை
அதாவது – ஸ்ரீ திரு வயிந்திர புரத்திலே -ஸ்ரீ வில்லி புத்தூர் பகவர் -என்பார் ஒருவர்
எல்லாரும் ஒரு துறையில் அனுஷ்டானம் பண்ண ,தனியே ஒரு துறையில் அனுஷ்டானம்
பண்ணுவராய் -ஒரு நாள் அனுஷ்டானம் பண்ணி ,மீளா நிற்க செய்தே இருந்த பிராமணர் -ஜீயரே -எங்கள் துறையில் அனுஷ்டானம் பண்ண வாராது ஒழிகிறது என்-என்ன-விஷ்ணு தாஸா வயம் யூயம் ப்ராஹ்மணா வர்ண தர்மின–அஸ்மாகம் தாஸ வ்ருத்தினாம் யுஷ்மாகம் நாஸ்தி சங்கதி -என்று துறை வேற இட்டு போனார் ஆய்த்து-(அன்னைமீர் விடுமினோ போலே-ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ கோயிலில் உள்ள சம்சாரிகள் சென்ற பின்பே ஸ்ரீ கோயிலிலுக்குள் நுழைந்த ஐதிக்யம் ஸ்வார்த்தமான கைங்கர்யம் அங்கும் உபாசகனுக்கு -துளி ஸ்வாதந்தர்யம் ஒட்டிக் கொண்டு இருக்குமே- அவன் திரு உள்ளத்திலும் இவன் வந்த வழி பட்டு இருக்குமே )-

ஸாதநங்களில்‌ முதற் சொல்லுகிறது கர்மம்‌, கர்ம ஜ்ஞாந பக்திகளிறே ஸாதநங்கள்‌. ஸாத்‌யங்களில்‌ முடிவு கைங்கர்யம்‌பகவதநுபவம்‌, அநுபவ ஜநித ப்ரீதி, அநந்தரமிறே பீரீதி காரித கைங்கர்யம்‌, திருவயிந்திரபுரத்தில்‌ வில்லி புத்தூர்ப் பகவர்‌ என்பாரொருவர்‌ எல்லாரும்‌ ஒரு துறையிலே அநுஷ்டாநம்‌ பண்ண, தாம்‌ ஒரு துறையிலே அநுஷ்டாநம்‌ பண்ணுவாராய்‌, ஒருநாள்‌ அநுஷ்டாநம்‌ பண்ணி மீண்டெழுந்தருளா நிற்கச் செய்தே, இருந்த ப்‌ராஹ்மணர்‌ ‘ஏன்‌ ஜீயரே! எங்கள்‌ துறையில்‌ அநுஷ்டாநம்‌ பண்ண வாராதொழிவானென்‌’ என்ன, *’விஷணு தாஸா வயம்‌ யூயம்‌ ப்‌ராஹ்மணா வர்ண தர்மிண? ! அஸ்மாகம்‌ தாஸ விருத்தீநாம்‌ யுஷ்மாகம்‌ நாஸ்தி ஸங்கதி:’‘ என்று – ‘நீங்கள்‌ ப்‌ராஹ்மணார்‌, வர்ண தர்மிகள்‌; நாங்கள்‌ தாஸ வ்ருத்திகள்‌, கைங்கர்ய பரர்‌. ஆகையாலே உங்களோடே எங்களுக்கு அந்வயமில்லை” என்று துறை வேறிட்டுப் போனாரிறே

கீழ் –ஜாதியாதிகளில் பேதிக்கும் தர்மங்கள் போலே -சூரணை-31 என்ற இத்தாலே ஸூசிதமான அதிகார பேதத்துக்கும் துறை வேறு இட்டு போகும் படியான நெடு வாசிக்கும் பிரகாசகமான கர்ம கைங்கர்ய நிஷ்டர் இருவருக்கும் உண்டான ஜென்மாதி விசேஷத்தை தர்சிப்பதாக கோலி ,பிரதமம் ஜன்ம விசேஷத்தை சொல்லுகிறது மேல்-இனி மேல்‌ இவர்களிருவர்க்கும்‌ ஜந்ம நிருபக கூடஸ்தரிருக்கும்படி என்‌ என்ன; இவை இப்படிப் பட்டிருக்கும்‌ என்கிறார்‌-

வேத வித்துக்களும் மிக்க வேதியரும் சந்தஸாம் மாதாவாலும் அதுக்கும் தாயாய்த் தாயினும் ஆயின
செய்யும் அத்தாலும் பிறப்பிக்கும் அது இருவருக்கும் ஸ்ரேஷ்ட ஜன்மம் –சூரணை -33 –

அதாவது-யேச வேத விதோ விப்ர—பாரதம்-என்கிற வேத வித்துகிகளான பூர்வ பாக நிஷ்டர்
காயத்ரீம் சந்தசா மாதா – தைத்ரீயம் என்கிறபடி சந்தசுகளுக்கு மாதாவாய் இருக்கிற காயத்ரி உபதேசத்தாலே பிறப்பிக்கும் அது -கர்ம நிஷ்டருக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம் யேசாத் யாத்மவிதோ ஜனா -( ஏச அத்யாத்ம வித் )-பாரதம்-என்கிற மிக்க வேதியரான வேத தாத் பர்ய வித்துக்கள்-ரூசோ யஜூம்ஷி சாமானி ததைவா தர்வணா நிச சர்வம் அஷ்டாஷராந்தச்தம் யச்சன்யா தபி வாங்மயம் –என்று சகல வேத ஸங்க்ரஹம் ஆகையாலே அந்த காயத்ரிக்கும் மாத்ரு பூமியாய் – பெற்ற தாயினும் ஆயின செய்யும் –பெரிய திருமொழி -1-1-9-என்கிற படியே சரீர உத்பாதிகையான மாதா மாத்ரம் அன்றிக்கே
உஜ்ஜீவனத்துக்கு உறுப்பான ஞானத்தை உண்டாக்கும் திரு மந்த்ரத்தாலே பிறப்பிக்கும் அது கைங்கர்ய நிஷ்டருக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம் என்கை–சஹி வித்யாஸ் தம் ஜனயிதி தஸ் ஸ்ரேஷ்டம் ஜன்ம-ஆபஸ்தம்ப சூத்ரம் -என்கையாலே-கேவல ஜன்மம் என்னாதே ஸ்ரேஷ்ட ஜன்மம் என்கிறது ..-அது வர்ண அனுகுணமான விதி நிஷேதங்களுக்கும் தத் அநுரூப அனுஷ்டானந்தக்கும்-தத் அனுகுண பல பிராப்த்திக்கும் உறுப்பாகையாலே அவர்களுக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம் —இது ஸ்வரூப அனுரூபமான-( ஆத்ம ஸ்வரூபத்துக்கு இங்கு )- விதி நிஷேதங்களுக்கும் தத் அநுரூப அனுஷ்டானந்தக்கும்
தத் அநுரூப பல பிராப்த்திக்கும் உறுப்பாகையாலே இவர்களுக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம்-
(தாஸ்ய சத்யன் -சகல ஆகமங்களும் உன்னையே காட்டும்-அந்தராத்மதயா உபாசகன் – அவரவர் இறையவர் –விதி வழி அடைய நின்றனர் –-சகல பலாநாம் ப்ரசூதி தேசிகன் -சாஸ்த்ர தாத்பர்யத்தை பிடித்து தாஸ்யம் -அச்யுத சதகம் 17-20-ஸ்லோகத்தில்-இந்தக் கருத்தை அருளிச் செய்கிறார் )

 யே ச வேத விதோ விப்ரா” (பார. ஆர.) என்கிற. வேத வித்துக்கள்‌, ““காயத்ரீம்‌ சந்தஸாம்‌ மாதா’‘ என்கிற க,௱யத்ர் யுபதேஸத்தாலே பிறப்பிக்குமது கர்ம நிஷ்ட,னுக்கு ஸ்ரேஷ்ட ஜந்மம்‌; ‘“யே சாத்‌,யாத்ம விதோ ஜநா?” என்கிறபடியே மிக்க வேதியரான வேத தாத்பர்யம்‌ கைப்பட்டவர்கள்‌ ““ஸர்வ மஷ்டாக்ஷராந் தஸ்தம்‌”” (வ்ரு.ஹா. )என்கிறபடியே, அந்த காயத்ரி தனக்கும்‌ மாத்ரு ஸ்தாநமாய்‌, “பெற்ற தாயினுமாயின செய்யும்‌”‘ (திருமொழி–1– 1 – 9) என்கிறபடியே ஸரீரோத்பத்தி மாத்ர மன்றியிலே ஜ்ஞாந விகாஸத்‌தைப்‌ பண்ணிக் கொடுப்பதான திருமந்த்ரத்தாலே பிறப்பிக்குமது கைங்கர்ய நிஷ்டர்க்கு ஸ்ரேஷ்ட ஜந்மம்‌. “ஜந்மநா ஜாயதே ஸூத்‌ர? கர்மணா ஜாயதே த்‌விஜ? । வேதாப்‌,யாஸேந விப்ரத்வம்‌ ப்‌,ரஹ்ம வித்‌ ப்‌ராஹ்மணோ விது,” என்றும்‌, “ஸ ஹி வித்‌யாதஸ்‌“ தம்‌ ஜநயதி தச் ச்‌ரேஷ்ட,ம்‌ ஜந்ம” (ஆப.த.1 – 1 – 16) என்னக் கடவதிறே

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —9—மாதாவானவள் சரீரத்துக்கு உத்பாத யாம் அளவு இறே-ஆத்மாவுக்கு ஸ்வரூபமான ஜ்ஞான விகாசத்தை பிறப்பிப்பான் அவனே இறே-சரீரமே மாதாபிதரௌ ஜநயதே -என்று விரோதியான சரீரத்தை உத்பாதித்து விடும் அளவு இறே அவர்கள் செய்தது-சஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் -ஜ்ஞானப் ப்ரதன் அவன் இறே-

இப்படி ஸ்ரேஷ்ட ஜன்மாக்களான இருவருக்கும் நிரூபகங்கள்–இப்படி ஸ்ரேஷ்ட ஜந்மரான இருவர்க்கும்‌ நிரூபகம்‌ ஏதென்னில்‌- இன்னது என்கிறது-

அந்தணர் மறையோர் என்றும்–அடியார் தொண்டர் என்றும்–இவர்களுக்கு நிரூபகம்-சூரணை -34 –-

(அந்தணர் -ப்ராஹ்மண்யமும் மறையோர் -வைதிகத்வமும்-அடியார் -சேஷத்வம் அடிமைத்தனம் அறிந்தவர் -தொண்டர் -கிஞ்சித் கைங்கர்யம் செய்தவர் என்றவாறு – எது எது ஏன் பணி என்னாது அதுவே ஆட் செய்யும் ஈடு )-அதாவது-சாதி அந்தணர் -திருமாலை -43–துணை நூல் மார்வில் அந்தணர் -பெரிய திருமொழி -1-5-9–தீ யோம்பு கை மறையோர்-பெரிய திருமொழி -7-9-7–நந்தா வண் கை மறையோர்– -பெரிய திருமொழி -6-7-8- என்று விசேஷண பூத சரீரத்வாரா வந்த வர்ணமும் தத் பிரயுக்தமான வைதிகவத்மமும் அவர்களுக்கு நிரூபகம்-திருமால் அடியார்-திருவாய் -5-6-11-
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார்-பெருமாள் -1-10-திரு மாலுக்கு உரிய தொண்டர்-திருவாய் -6-9-11
திரு நாரணன் தொண்டர்-திருவாய் -3-7-4- என்று ஆத்மா வஸ்துவுக்கு ஞான ஆனந்தங்களில் காட்டிலும்
அந்தரங்க நிரூபகமான சேஷத்வம் தத் பிரயுக்த கிஞ்சித் கரத்வமும் இவர்களுக்கு நிரூபகம் என்கை-

“’துணை நூல்‌ மார்விலத்தணர்‌”” (திருமொழி 1 – 5 – 9) என்றும்‌, ”தீயோம்புகைமறையோர்‌’” (திருமொழி 7 – 9 – 7) என்றும்‌ சொல்லுகிற இவை கர்ம நிஷ்டரர்க்கு நிரூபகம்‌. “வேதார்த்த அநுஷ்டாந யோக்‌யர்‌ அந்தணர்‌” என்றும்‌, ‘வேதார்த்த அநுஷ்டாந பரர்‌ மறையோர்‌’ என்றும்‌ சொல்லக் கடவது. இனி, “அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌”” (பெரு. திரு 1 – 10) என்றும்‌, “’அக மகிமும்‌ தொண்டர்‌”” (பெரு.திரு 1 – 10) என்றும்‌ சொல்லுகிறபடியே கைங்கர்ய நிஷ்டனுக்கு நிரூபகம்‌ – அடியார்‌-கிஞ்சித்கார அர்ஹர்‌. தொண்டர்‌-கிஞ்சித்கார ஸ்வபாவர்

அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே43—சாதி அந்தணர்கள் –கீழ்ச் சொன்னவை ஷத்ரிய வைஸ்யர்களுக்கும் பொது விறே – அவ்வளவு அன்றியே ஜாத்யா பிராமணராய் இருக்கை –ஏலும் –கீழ்ச் சொன்னவை ஒருவருக்கும் சித்திக்கும் அது அல்ல –சித்திக்குமே யாகிலும் – வைஷ்ணவ நிந்தையில் வந்தால் இவை எல்லாம் அசத் சமம் என்கை – துர்மானோ பஹதர்க்கு அபசார ஹேதுவுமாய் – இவை இல்லாதார் தலை மேலே கால் இட்டு திரிகைக்கு உடலாம் இத்தனை –

தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும்
அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம்
வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய
தன்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-9–-கேவல ப்ராஹ்மணரும் –
வித்யா விநய சம்பந்நே ப்ராஹ்மனே -என்று பிரித்தார் இறே ஸ்ரீ பாஷ்ய காரர் 

சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்
மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ
தீ யோம்புகை  மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ வுன தடியார் மனத்தாயோ வறியேனே—7-9-7–எப்போதும்  ஒக்க அக்நி கார்யத்தில் அவஹிதராய்ப் போருகிற பிராமணர் உடைய

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக்
கந்தார் களிற்றுக் கழல் மன்னர்  கலங்கச் சங்கம் வாய் வைத்தான்
செந்தாமரை மேல் அயனோடு சிவனும்  அனைய பெருமையோர்
நந்தா  வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே –6-7-8—தனித் தனியே சிருஷ்டி சம்ஹாரத்துக்கு ஷமராய் ப்ரஹ்ம ருத்ரர்களில் காட்டில் ஏற்றமான ஔதார்யத்தை உடைய
பிராமணர்
நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11—இந்த லோகத்தில் எல்லாரும் கொண்டாடும் படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை யுடையராய் ஸ்ரீ லஷ்மீ பாதிக்கு அடியாரானவர்களை ஆராதிக்கப் பெறுவார்கள் -அவர்களுக்கு ஆராதனம் ஆகிறது இவர் அநு கரித்த இப் பாசுரத்தை சொல்லுகை-தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்மாலைகள் சொன்னேன் என்ன கடவது இ றே-இவர் இவ் வநுகாரத்தாலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ப்ரியகரர் ஆனால் போலே இது கற்றாரும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிரியமான வ்ருத்தியைப் பண்ணக் கடவர் என்கை-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10–பகவத் அனுபவத்தாலே நிரதிசய ஆனந்த உக்தரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ-

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்

தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11–ஸ்ரீ யபதிக்கு அசாதாரணமான தாஸ்யத்துக்கு பர்யவசான பூமியான ஆழ்வார் -இவருடைய அஹம் புத்தி இருக்கிற படி -பயிலும் சுடர் ஒளிக்கு பின்பு ததீய சேஷத்வ பர்யந்தமாயிற்று -இவருடைய அஹம் அர்த்தம் இருப்பது -இவ்வளவு வருகை இறே அநந்யார்ஹ சேஷம் ஆவது

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே
.–3-7-4–ஸ்ரீ மன் நாராயணன் –ஆபரணங்களில் அந்நிய தமமாய் இருக்கிறபடி லஷ்மீ சம்பந்தமும் ஆபரண சோபையினுடைய போக்யத்தையாலே சொல்லாது ஒழிய மாட்டார் அசங்க்யாதம் ஆகையால் பேச மாட்டார் –அந்த ஆபரண சேர்த்திக்கும் மிதுனத்துக்கும் தோற்று அடிமை புக்கவர்கள் அன்று அவர்கள் தோற்ற தோல்விக்கு அடிமை புக்கவர்கள் எனக்கு நிரந்தரமான ஜென்மத்தில் அவகாசம் தோறும் சேஷிகள் –

கேவலம் இவையோ நிரூபகம்-க்ராம குலாதி வியாபதேசங்களும் இல்லையோ —கர்ம கைங்கர்யங்களில்‌ நிஷ்டராயிருக்கும்‌ இருவர்க்கும்‌ வ்யபதேஸம்‌ ஏதென்னில்‌ — சொல்லுகிறது மேல்-

ஒரு தலையில் க்ராம குலாதி வியாபதேசம்-குலம் தரும் என்னும் மாசிற் குடி பழி என்று பதியாக கோயிலில் வாழும் என்பர்கள்-சூரணை -35 –

அதாவது
கர்ம நிஷ்டர் என்று சொல்லப் பட்ட ஒரு தலையில் சரீர அனுபந்திகளான க்ராம குலாதிகளை இட்டு
வியபதேசிக்கும் அந்த வியபதேசத்தை கைங்கர்ய நிஷ்டரான மற்றை தலையில் உள்ளவர்கள்
குலம் தரும் -பெரிய திருமொழி-1-1-9–என்கிற படியே திரு மந்திர சித்த பகவத் சம்பந்த ஜ்ஞான பிரயுக்தமாய் மாசில் குடி -மூன்றாம் திருவந்தாதி –10—என்று சேஷத்வ விரோதியான அஹங்காராதிகள் இல்லாமையாலே நிர் தோஷமாய் இருக்கிற இக் குலத்துக்கு -(கீழ் சொன்ன வியபதேசத்தை )அவத்ய கரம் என்று கருதி-வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள்–நாச்சியார் -8-9–
கோயிலில் வாழும் வைட்டணவன்—பெரியாழ்வார் 5-1-3–என்று பகவத் அன்வயம் உள்ள தேச சம்பந்தத்தை விட்டு வ்யவகரிப்பர்கள் என்கை .. இது பகவத் சம்பந்தத்தை இட்டு வ்யபதேசிக்கும் அதுக்கும் உப லஷணம்.(ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் –கதறுகின்றேன்) ஏகாந்தீ வ்யபேதேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதிபி விஷ்ணுனா
வ்யபேதேஷ்டவ்யஸ் தஸ்ய சர்வம் ச ஏவ ஹி—பரமைகாந்தி தர்மம்
-என்னக் கடவதிறே-

 கரம நிஷ்டரை க்ராம குலாதிகளாலே வ்யபதேஸிக்கக் கடவது; கைங்கர்ய நிஷ்டனுக்கு அந்த க்‌ராம குலாதிகளால்‌ வருகிற வ்யபதேஸம்‌ ”குலந் தரும்‌’” (திருமொழி 1 – 1 – 9) என்றும்‌, “மாசில்‌ குடிப்‌ பிறப்பு” (மூ.திருவ. 10)என்றும்‌ பகவத் ஸம்பந்த ஜ்ஞாநத்தாலே இதர வ்யாவ்ருத்தமான வைஷ்ணவ ஜாதீயனான இவனுக்கு அவத்‌யமாகையாலே நிரவத்‌யமான பகவத்‌ ஸம்பந்த ப்ராதாந்யமே தோற்றும்படியாக, ““வேங்கடத்தைப்‌ பதியாக வாழ்வீர்காள்‌” (நா.திரு.8 – 9) என்றும்‌, “கோயிலில்‌ வாழும்‌ வைட்டணவர்‌” (பெரியா.திரு. 5 – 1 .. 3) என்றும்‌ சொல்லுகிறபடியே பகவத் ஸம்பந்தமுள்ள தேஸத்தையிட்டும்‌, பகவத்‌ ஸம்பந்த தந் தன்னை யிட்டும்‌ வ்யபதேஸிக்கக் கடவது; “ஏகாந்த வ்யபதேஷ்டவ்யோ நைவ க்‌ராம குலாதி,பி। விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி நத்யாஸ் தஸ்யைவ நாமாதி, ப்ரவிஷ்டாயா யதார்ணவம்‌ ! ஸர்வாத்மநா ப்ரபந்தஸ்ய விஷ்ணு மேகாந்திநஸ் ததா”” என்னா நின்றதிறே –

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —9—ஜன்ம வருத்தங்களால் குறைய நின்றான் ஒருத்தனுக்கு பகவத் சம்பந்தம் உண்டானால் இவற்றால் உயர்ந்தான் ஒருத்தன் இவை இரண்டிலும் இவனுக்கு தாழ்வு உண்டாகவும் தான் உயர்ந்தான் ஆகவும் -நினைத்து இருக்கவும் கூட கூச வேண்டும்படி யாயிற்று பகவத் பிரபாவம் இருப்பது –
ஆனாலும் பெண் கொடுத்தல் கொள்ளுதல் செய்கிறார் இல்லை – அதுக்கடி ஜாதி நிபந்தனம் ஆகை
ஸ்லாகைக்கு நிபந்தனம் ஸ ஸ்லாக்யஸ் ஸ குணீ தந்யஸ் ஸகுலீந -என்னக் கடவது இறே –கண்ட தெல்லாம் தர்ம சந்தேஹம் பண்ணக் கடவ தர்ம புத்திரன் பகவத் ப்ரத்யாசத்தியாலும் அசரீரி வாக்யத்தாலும் விதுரரை ப்ரஹ்ம ரதத்தாலே சம்ஸ்காரம் பண்ணினான் இறே – ருஷிகள் தர்ம வ்யாதன் மாம்ஸ விக்ரயம் பண்ணி கை ஒழியும் தனையும் பார்த்து நின்று தர்ம சங்கங்கள் கேட்டுப் போனார்கள் இறே –இங்கன் அன்றாகில் பஞ்சம வேதமான மஹா பாரதத்திலே எழுதக் கூடாது இறே – கைசிக கதையிலே வந்தவாறே விலஷணனாய் இருப்பான் ஒரு ப்ரஹ்ம ராஜஸ் ஆசார வைகல்யத்துக்கு -பகவத் ஜ்ஞானம் உடையான் ஒரு பாடுவானாலே பரிஹாரம் இருந்தது இறே –ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராவணனைப் பார்த்து -பெருமாளை சரணம் புகு-என்று சொல்ல – த்வாந்துதிக்  குல பாம்ஸநம் -என்று -நீ இக்குடிக்கு உடல் அல்ல என்றான் இறே – ராவணனுக்கு வார்த்தை சொல்லும் இடத்தில் –நிசாசர -என்று அவனை ராஷசனாகவும் தான் அல்லனாகவும் சொன்னான் – இங்கனே அன்றிக்கே -ராஷசாநாம் பல அபலம் என்று பெருமாள் தாமும் அருளிச் செய்தார் –ஆகையாலே பகவத் சம்பந்தம் ஸ்பர்ச வேதியாய் இருந்தது –

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப் பிறப்பும்   மற்றவையும்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–மதிப்பும் –பராபிபாவன சாமர்த்தியமும் -ஐஸ்வர்யமும் -வடிவு அழகும் –குற்றம் அற்ற பிறப்பும் –குற்றம் அற்ற பகவத் ப்ரத்யாசத்தியால் வரும் ஆபி ஜாத்யமும்–-அநுக்தமான அவையும் -இவை எல்லாமான நன்மைகளும்-

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள்
பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9–ஏஷ ஹ்யேவா நந்தயாதி -தைத் ஆனந்த -7-என்கிறபடியே அவன் ஆனந்திப்பிக்க ஆனந்தித்து திரிகிறி கோள் அன்றோ நீங்கள்-ஒரு விபூதியாக  அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று களிக்குமா போலே நீங்களும் திரள் திரளாக வர்த்திக்கிறிகோள் அன்றோ-வந்தேறிகளாய் திருநாள் சேவித்து போவாரைப் போலே போராதே-
அங்கே நித்ய வாசம் பண்ணப் பெறுவதே நீங்கள்
 -சேறு தோய்ந்து கழுவினவர்கள் அன்றிக்கே –
முக்தரைப் போலே அன்றிக்கே – நித்ய சித்தரைப் போலே யாய்த்து –
அங்குத்தை வர்த்தநத்தை இறே வாழ்வாகச் சொல்லுகிறது-இரண்டு ஆற்றுக்கும் நடுவில் வாசம் போலே – நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -11-5- என்னக் கடவது இறே பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் -6-9-9- என்றும் –
புறத்து இட்டு இன்னம் கெடுப்பாயோ
 -6-9-8-என்றும் இதர விஷய ப்ராவண்யம் விநாச ஹேதுவாய் இருக்கும் – பகவத் ப்ராவண்யம் வாழ்வாய் இருக்கும்

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -5- 1-3 –வன்மை -மிடுக்கு-ஸ்ரீ கோயிலில் வாழும் என்று புறம்புள்ள அபிமானம் குலைகையாலும் தாம் அநந்ய பிரயோஜனர் ஆகையாலும் இவருடைய ராஜ குலம் இருக்கும் படிபவத் விஷய வாஸிந -(ஸ்ரீ ராமாயணம் ) இவற்றின் புறத்தான் என்று எண்ணானோ-(திரு விருத்தம் )என்று ஸ்ரீ பகவத் அபிமானம் உள்ள தேசத்தே கிடக்கை இறே தங்களுக்கு பேறாக நினைத்து இருப்பது-

ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகர் உளானே –29—வேறு எவ்வித யோக்யதையுமில்லாமற் போனாலும் ஸாளக்ராமம், கோயில் திருமலை, பெருமாள் கோயில் முதலிய திவ்யதேசங்களில் ஜந்மமாவது கிடைத்தால் அதைக் கொண்டு உய்வு பெறலாம்.-அப்படிப்பட்ட ஒரு தேசத்திலும் எனக்குப் பிறவி நேரவில்லையே!-திவ்யதேசத்தில் ஐந்மமில்லாவிடினும் உதரபோஷணார்த்தமாக ஏதாவது கொஞ்சம் க்ராம பூமிகள் ஏற்பட்டிருந்தால் அங்குப் போக வேண்டிய காலங்களில் யாத்ருச்சிகமாக இடையிலே ஒரு திவ்யதேவஸேவை கிடைக்கக்கூடும் அப்படிப்பட்ட ப்ரஸக்தி நேருவதற்கு ஒரு குழியளவு காணியுமில்லை யென்கிறார்.-இவையொன்றுமில்லையாகிலும் திவ்யதேசவாஸிகளோடு உறவு இருக்குமாகில் பந்து க்ருத்ய பரிபாலனத்துக்காகச் சிலகாலம் அங்குப்போகவும் அதடியாக பகவத்ஸேவை கிடைக்கவும் ப்ரஸக்தியுண்டு; அப்படிப்பட்ட உறவினர்களும் எனக்கில்லை.

இனி உபயர் உடையவும் கூடஸ்தரை சொல்லுகிறது-இனிமேல்‌ இருவருடையவும்‌ கூடஸ்தரைச்‌ சொல்லுகிறது-

விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்த்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள்-பிரபன்ன ஜன கூடஸ்த்தர் பராங்குச பரகால யதி வராதிகள் .-சூரணை -36-

அதாவது
அந்தணர் மறையோர் என்கிற பிராமணருக்கு கோத்ர கூடஸ்தர் பரசராதிகள்
கோத்ரமாவது-அபத்ய சந்ததி ( பிள்ளைப்பிறப்பின் சந்ததி ) – சந்ததிர் கோத்ர ஜனன குலம் அபிஜனம் அன்வயம் -பர்யாய சொற்கள் -அமரகோசம் -என்னக் கடவதிறே-அந்த கோத்ரம் தான் அநேகமாய் தத் தத் கூடஸ்தரான வசிஷ்ட காஸ்யப பரத்வாஜ வத்ஸ ப்ரப்ருதிகள் பலர் உண்டாகையாலே பராசராதிகள் என்கிறது .-சரண கூடஸ்தர் பாராசர்யாதிகள் —சரணங்கள் ஆனவை -வேத சாகைகள் தத் அத்யாதிகளையும் கௌணமாக சரண சப்தத்தாலே சொல்லக் கடவது .-சரண சப்த காடக காலாபாதி சாகா விசேஷஷு முக்ய தத்தத் யாயிஷு புருஷே ஷு கௌண-என்கையாலே இவ் இடத்தில் சாகைகளைச் சொல்லுகிறது ..சர்வ சாகைகளுக்கும் பிரதான பிரவர்தகன் பாராசர்யனாக இருக்க செய்தேயும் பின்பு தத் தத் சாகைகளுக்கு தனி தனி பிரவர்தகரான கடக லாப கண்வராதிகளும் உண்டாகையாலே பாராசர்யாதிகள் என்கிறது-சூத்ரம் ஆவது -கர்ம அனுஷ்டான பிரதி பாதகமான கல்பம் . சீஷாயாம் வர்ண சிஷா—ஸ்ரீ ரெங்கராஜ உத்தர சதகம் -18- -என்று தொடங்கி சொல்லி வருகிற அளவிலே கல்பேனுஷ்டானம் முக்தம் -என்றது இறே ..அது தானும் பலவாய் ,தத் தத் கர்த்தாக்கள் ஆன ஆபஸ்தம்ப ஆஸ்வலாயநாதிகளும் உண்டாகையாலே போதாயானாதிகள் என்கிறது . ஆக இவர்கள் விப்ரருக்கு கூடஸ்த புருஷர்கள் அடியார் தொண்டர் -என்கிற பிரபன்ன ஜனங்களுக்கு கூடஸ்தர்
பத்யு ஸ்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞய சம்பதம்
(மயர்வற மதிநலம் அருளப்பெற்றவருக்கு மொழி பெயர்ப்பு ) பிர பன்ன ஜன கூடஸ்தம் பிரபத்யே ஸ்ரீ பராங்குசம் -ஸ்ரீ பராங்குச அஷ்டகம் -4–. என்கிற நம் ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் தொடக்கமான எல்லா ஆழ்வார்களும் ,எம்பெருமானார் முதலிய ஆச்சார்யர்களும் என்கை .-கூடஸ்தர் ஆகிறார் –மூல பூதர் இறே-உபதேச அனுஷ்டானங்களாலே பிரபத்தி மார்க்கத்தை தலை பெருத்தி வளர்த்தவர்கள் ஆகையால் இவர்களை பிர பன்ன ஜன கூடஸ்தர்கள் என்கிறது –(ப்ரஹ்ம ஞானம் அளித்தவர் ஸ்ரீ நம்மாழ்வார் – கைங்கர்யம் செய்ய உணர்த்தியவர் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –ஆச்சார்ய அபிமானம் அனுஷ்டானம் ஸ்ரீ ராமானுஜர் )

முற்பட்ட ப்‌ராஹ்மணர்க்கு பராஸர(வ்யாஸ)வஸிஷ்டாதிகள்‌ கோத்ர குருக்களுமாய்‌- போதாயநாதிகள்‌ ஸூத்ர குருக்களுமாய்‌, (தத் தச் சரண- உபயங்‌களில்‌) பூர்வ பூர்வ புருஷர்கள்‌ கூடஸ்தருமாய்‌ இருப்பர்கள்‌. ப்ரபந்ந ஜந கூடஸ்த ர்‌ ““பத்யுஸ் ஸ்ரிய? ப்ரஸாதேந ப்ராப்த ஸார்வஜ்ஞ்ய ஸம்பதம்‌ ! ப்ரபந்ந ஜந கூடஸ்தம்‌ ப்ரபத்‌யே ஸ்ரீபராங்குஸம்‌?” (பரா.௮..] என்றும்‌, ‘‘ராமாநுஜாங்க்‌ரி ஸரணோஸ்மி குல ப்ரதீபஸ் த்வாஸீத்‌ ஸ யாமுந முநேஸ் ஸ ச நாத வம்ஸ்யச । வம்ஸ்ய? பராங்குஸ முநேஸ்ஸ ச ஸோபி தேவ்யா ததாஸஸ் தவேதி வரதாஸ்மி தவேக்ஷணீய?” (வரத.ஸ்தவே 102) என்றும்‌ சொல்லுகிறபடியே  நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்‌களும்‌, உடையவர்க்கு முன்பும்‌ பின்புமுள்ள ஆசார்யர்களும்‌ என்கிறார்

சீஷாயாம் வர்ண சிஷா பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்
சந்தஸ் சந்தஸ்திதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யவ்திஷம் ரங்க நாத
கல்பே அனுஷ்டானம் யுக்தம் ஹி உசிதகமிதயோ நியாய மீமாம்சயோ ஸ்யாத்
அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதிஷு தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா –18-கல்ப ஸூத்ரத்திலே வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டிய முறைமை சொல்லப் பட்டது

பத்யு: ச்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம் |
ப்ரபன்ன ஜன கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் ||-
-5-ஸ்ரீ திருமால் திருவருளால் – மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் – சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும் பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான – ஸ்ரீ நம்மாழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன்

ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ் –102–அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்-விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் – ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்-அந்த எம்பெருமானாரோ ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்
ராமானுஜரும் –தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்று உடையன் அன்றோ –அந்த ஆளவந்தார் தாமும் வித்யா அந் வயத்தாலும் குடல் துடைக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்-பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்ற குடல் துவக்கும் உண்டே–அந்த நாதமுனிகளும் நம்மாழ்வாருடைய வம்சத்தவர்
குருகையில் வந்த குல முனிவனுடைய குலக் கொழுந்து-ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திரு வாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்க்கு இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனி அன்றோ-அந்த ஆழ்வாரும் உனது பிராட்டிக்கு அடியவர்-ஆழ்வாரும் உனக்குப் படுக்கைப் பற்று அன்றோ – பங்கயத்தாள் திரு அருளும் கொண்டவர் அன்றோ–இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத் தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ–நிகமத்தில் தம்மைக் கடாக்ஷித்து அருள வேண்டுவது பேர் அருளாளனும் அவர்ஜநீயம் என்னும் இடத்தை மூதலிக்கிறார்

இனி இரண்டு தலைக்கும் பிராமணிய வைஷ்ணவத்ய சித்தி ஹேது நியமங்களை தர்சிப்பிகிறார் மேல்-இனிமேல்‌ விப்ரரூம்‌ ப்ரபந்நருமான இவர்களிருவர்க்கும்‌ ப்‌ராஹ்மண்ய ஸித்‌தி, ஹேது எது? வைஷ்ணவத்வ ஸித்‌தி, ஹேது ஏது? என்னச்‌ சொல்லுகிறார்‌ –

அத்யயன ஞான அனுஷ்டானங்களாலே பிராமண்யம் ஆகிறார் போலே சந்தங்கள் ஆயிரம் அறிய
கற்று வல்லார் ஆனால் வைஷ்ணவத்த ஸித்தி- சூரணை-37-
-(அத்யயனம் ஞானம் அனுஷ்டானம் மூன்றுக்கும் அறிய கற்று வல்லார் மூன்று சப்தங்கள் )

அதாவது
ஸ்வ அத்யாயோத்ய தவ்ய–என்கிற படியே – ப்ரதமம் வேதத்தை ஆச்சார்ய உச்சரண அனுச்சாரண முகேன அஷர ராசி க்ரஹணம் பண்ணுகை யாகிற அத்யயனத்தை பண்ணி மீமாம்ச ஸ்ரவணாதிகளாலே தத் அர்த்த ஞானம் பிறந்து தத் அனுரூபமான அனுஷ்டானமும் உண்டானால் பிராமண்யம் சித்திக்குமா போலே ,சந்தங்கள் ஆயிரம்–திருவாய்-10-9-11- என்ற படியே சந்தோ ரூபமாய் சகஸ்ர சாகையாய் இருக்கிற திருவாய் மொழியை-அறியக் கற்று வல்லார் வைட்டணவர்––திருவாய்-5-5-11-என்கிற படியே அத்யே தவ்யம் திவிஜ ஸ்ரேஷ்டை வேத ரூபம் இதம் க்ருதம்- என்கிற பிரகாரத்திலே ஆச்சர்ய உச்சாரண அனுசாரண முகேன அப்யசிக்கை யாகிற அத்யயனத்தை பண்ணி உபதேச முகத்தாலே தத் அர்த்த ஞானம் பிறந்து தத் அனுரூபமாக அனுஷ்ட்டிக்கவும் வல்லார் ஆனால் ஆய்த்து வைஷ்ணத்வம் சித்திப்பது என்கை –

அத்‌யயநமாவது – ஓதுகை. ஜ்ஞாநமாவது அதில்‌ அர்த்த பரிஜ்ஞாநம்‌. அநுஷ்டாநமாவது – அறிந்தபடியே அநுஷ்டிக்கை என்று இவற்றாலே ப்‌,ராஹ்மண்ய மாகிறாப் போலே, (சந்தங்களாயிரமும்‌) ““சந்தங்களாயிரத்திவை வல்லார்‌” (திருவா. 10 – 9 – 11) என்று சந்தோ ரூபமான ஆயிரத்தையும்‌, “அறியக்‌ கற்று வல்லார்‌ வைட்டணவர்‌”’ (திருவா. 5 – 5 – 11) என்கிறபடியே திருவாய்மொழி ஆயிரமும்‌ அத்‌யயநம் பண்ணி, ஆசார்ய முகத்தாலே அர்த்த ஸ்ரவணம் பண்ணி, அறிந்த படியே அநுஷ்டிக்கவும்‌ வல்லாரானாலாய்த்து வைஷ்ணவத்வம்‌ ஸித்‌தித்ததாவது. ‘ஸ்வாத்‌யாயோத்‌ யேதவ்ய?”‘ (தை. ஆ.2) என்கிற விதி போலே “அத்‌யேதவ்யம்‌ த்விஜ ஸ்ரேஷ்டை வேத ரூபமித,ம்‌ க்ருதம்‌?” என்று அந்த வேதாந்த தாத்பர்யமாய்‌, இந்த திராவிட வேதத்துக்கு உள்ளீடான பாகவத ஸேஷத்வ பர்யந்தமான பகவச்‌ சேஷத்வ பரிஜ்ஞாநா பாவத்தால்‌ ப்‌ராஹ்மண்ய ஸித்‌தியுமில்லை –

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-சந்தங்களை யுடைத்தான ஆயிரம் என்னுதல் -சந்தோ ரூபமான ஆயிரம் என்னுதல் -இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார் அத்தேசத்திலே பகவத் குண அனுபவம் பண்ணி -அதிலே வித்தராய் அதுக்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருக்குமவர்களைப் போலே யாவர் –

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-பரம பதத்திலும் அவதாரங்களிலும் திருக்குறுங்குடி நிலையிலே அழகாலும் சீலத்தாலும் உண்டான ஏற்றம் அறிந்து கற்க வல்லவர்கள் -குணாதிக்யம் இறே வஸ்துவுக்கு ஏற்றம் -வியக்தமாக கற்க வல்லார்கள் என்றுமாம்-மரு பூமியான சம்சாரத்திலே -உகந்து அருளினை ஏற்றம் அறியுமவர்கள் நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள்-

அந்த வேத அத்யயனாதிகள் உடையவர்களுக்கு இந்த வேத அத்யயனாதிகள் இல்லாத அளவில் வைஷ்ணத்வ அஸித்தி ஒழிய பிராமணிய ஹானி இல்லையே என்ன சொல்லுகிறது மேல் ..அவர்களுடைய உத்பத்தியும்‌ நிரூபிக்க வேணுமென்கிறார்‌–

இந்த உள் பொருள் கற்று உணர்ந்து மேலைத் தலை மறையோர் ஆகாதாரை அயல் சதுப் பேதிமார் என்று உத்பத்தி நிரூபிக்கும்-சூரணை -38-

அதாவது
மிக்க வேதியர் வேதத்தின் உள் பொருள் -கண்ணி நுண் – 9—என்று உபநிஷத் குஹ்யமான
இந்த திராவிட வேதார்த்தத்தை –கற்று உணர்ந்த மேலை தலை மறையோர்-முதல் திருவந்தாதி -66–என்கிற படியே-ஆச்சார்ய உபதேச முகேன கற்று அறிந்து உத்க்ருஷ்டரான-வேதாந்திகள் ஆகாதவரை –அயல் சதுப் பேதிமார் -திருமாலை -39-என்று — வேத அத்யயன பிரயோஜனம் ஈஸ்வரனை உள்ளபடி அறிந்து , ஸ்வரூப அனுரூபம் புருஷார்த்தம் கைங்கர்யம் என்று இருக்கையாய் இருக்கிற இந்த ஞான பாவத்தாலே ,நாலு வேதங்களையும் அதிகரிக்கச் செய்தே அந்த வேதத்தோடு தங்களுக்கு ஒட்டு இன்றி அதுக்கு அசலானவர்கள் என்று அறுதி இட்டு –-விஷ்ணு பக்தி விஹீநோய சர்வ சாஸ்த்ரார்த்த வேத்யபி
ப்ராஹ்மண்யம் தஸ்ய ந பவேத் தாஸ் யோத்பத்திர் நிரூப்யதாம்
-பாத்ம புராணம் –என்கிற படியே
இவர்கள் பிராமணர் அல்லர் என்று உத்பத்தி ஆராயப் படும் என்கை ..-யா புத்ர பிதரம் த்வேஷ்டிதம் வித்யா தந்த்யரேசதம் -யோ விஷ்ணும் சததம் த்வேஷ்டி தம் வித்யா தந்த்யரேசதம் –என்னக் கடவதிறே..

““மிக்க வேதியர்‌ வேதத்தினுட்பொருள்‌‘” (க.நு.சி. 9) என்று உபநிஷத்‌ குஹ்யமுமான இந்த த்‌ராவிட வேதத்தினுடைய ரஹஸ்யார்த்தத்தை, (கற்றுணர்ந்து மேலைத் தலைமறை யோராகாதாரை) ““வேட்பனவும்‌” (மு.திருவ.66) என்கிறபடியே கற்றுணர்ந்தும்‌ அநுஷ்டாந பரருமாகாதாரை ““அயல் சதுப்பேதிமார்கள்‌”” (திருமாலை 39) என்று அசலிட்டு உத்பத்தி நிரூபிக்கக் கடவதிறே. ‘‘ஓளபாஸநி ஸஹஸ்‌ரேப்‌யோ ஹ்யாஹிதாக்‌நிர் விஸிஷ்யதே | ஆஹிதாக்‌நி ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸோமயாஜி விஸிஷ்யதே | ஸோமயாஜி ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸத்ரயாஜி விஸிஷ்யதே ! ஸத்ரயாஜிஸ் ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸர்வவேதாந்த பாரக,ீ ! ஸர்வ வேதாந்த வித்கோட்யா விஷ்ணு ப,க்தோ விஸிஷ்யதே । விஷ்ணு ப,க்தி விஹீநோ யஸ் ஸர்வ ஸாஸ்த்ரார்த்த, வேத்‌,யபி ! ப்‌,ராஹ்மண்யம்‌ தஸ்ய ந பவேத்‌ தஸ்யோத் பத்திர் நிரூப்யதாம்‌ ‘ –(பாத்ம புராணம் –)என்னக் கடவதிறே –

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9–ப்ரமாண ஸ்ரேஷ்டமான வேதத்தை நிரூபகமாக உடையவர்கள் –உளன் சுடர் மிகு சுருதியுள் -என்று ஆழ்வார் அருளிச் செய்ய கேட்டிருக்கையாலே – அநேக சாக அத்யயனம் -பண்ணினவர்கள் என்றுமாம் –சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை – வேதாந்த ரஹஸ்யம் –ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வம் என்று இறே-வைதிக சாஸ்திரம் நிர்ணயித்தது-துர்க்ரஹமான இந்த ரஹஸ்யார்த்தத்தை கேட்பார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி –பாடி –
பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் -என்றும் –எம்மை யாளும் பரமர் -என்றும்-அருளிச் செய்தார் இறே-பகவத் சேஷத்வத்துக்கும் கூட மேட்டு மடையான என் நெஞ்சிலே இத்தை
ஸ்திரமாக்கினார் –-கல்லைத் துளைத்து அதிலே நீரை நிறுத்துவாரைப் போலே நிர் விவரமான என்  நெஞ்சுக்கும் இதுவே விஷயமாம் படி பண்ணினார்–இது இறே –என் தண்மையைப் பாராதே என் திறத்தே பண்ணின உபகாரம்

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——66–அறிவு தலைக் கட்டினவர்கள்-பாவன பிரகர்ஷத்தாலே சாஷாத் கரிப்பனவும்-அறிவு தலை நின்றேறி அறிந்தவர்கள் பாவனா பிரகர்ஷத்தாலே சாஷாத் கரிக்க ஆசைப் படுமதுவும் –

அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப் பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே–39–கைங்கர்யம் நமக்கு கர்த்தவ்யம் என்று இருக்கும் அவர்கள் அன்றிக்கே இருக்கை –கைங்கர்யம் ஆகிறது -சஹஜம் – அது ஒழியச் செல்லாது இருக்கை யாவது -பிராப்தம் – அது இன்றிக்கே இருக்குமவர்கள் –அடிமைக்கு அசலான சதுர் வேதிகளாய் இருப்பாரில் காட்டில் –வேதத்யயனம் -பண்ணுகிறதுக்கு பிரயோஜனம்-ஈஸ்வரனை உள்ளபடி அறிகையும்-தன்னை உள்ளபடி அறிகையும் – கைங்கர்யம் ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் என்று அறிகையும் -ஆய்த்து –அசல் ஆகையாவது – இந்த ஜ்ஞானத்துக்கு உடலாக வேத அத்யயனம் பண்ணுகிறோம் என்று அறியாது இருக்கை –-அத்யயன பலம் அர்த்த ஜ்ஞானம் என்று அறியாதவர்கள்-சதுர் வேதிகள் ஆனாலும் நிஷ் பிரயோஜனம் -என்கை –விஷ்ணு பக்தி விஹீ நோயஸ் சர்வ சாஸ்த்ரார்த்த வேத்யபி ப்ராஹ்மண்யம் தன் நபவேத் தச்யோத்பத்திர் நிரூப்யதாம் – என்னக் கடவது இறே –

ஆக கர்ம கைங்கர்யங்கள் -26-என்று தொடங்கி– இவ்வளவாக இரண்டும் இன்னத்துக்கு அனுகுணம் என்றும்-இவற்றுக்கு பிரேரக ஆஸ்ரய விஷய பேதங்களும் இவற்றின் சாதாரண அசாதாரணத்வமும்
அசாதாரண அன்வயத்தில் சாதாரண நிவ்ருத்தியும் , கைங்கர்ய நிஷ்டருக்கு கர்ம நிஷ்டரோடு பொருந்தாமையும்அதுக்கு அடியாக இருவருடைய ஜன்ம நிரூபக கூடஸ்த பேதங்களும் ,
இருவருக்கும் பிராமணிய வைஷணத்வ ஸித்தி ஹேதுக்களும் , திராவிட வேதார்த்த ஞான அபாவத்தில் ஸ்வாதீத வேதாநன்வயராய் நிஹீனத்வ புத்தயர்ஹராம் படியும் சொல்லிற்று-

சாஸ்த்ர சாஸ்த்ர தாரதம்ய பிரகரணம் முற்றிற்று

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்